கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருநாவுக்கரசு நாயனார் புராணம்

Page 1
بیf
frr:or:୫ୋଲିs: §:
திருச்சி திருநாவுக்கர புரா6
领 屬
ఆక్తి
ஆ
ශි. யாழ்ப்பாணத்
9) (p65s
செய்
+
ஒ
" வெளி இழநீ ஆறுமுகநாவலர் சைவ அறக்கட் 24, மாலைக்கட்டித் தெரு
பதிப்பு 19
உரிமையுடையது
སྤྱི་
זה
.
s
-
歌
 
 
 

றம்பலம் சு நாயனூர் RPKPTD
塾
து நல்லூர் வலரவர்கள்
岳曼l
濠
懿
एतावता
*。
*
பீடு : 懿 ப்பிரகாச வித்தியாசாலை 3 L605T 羲 கு, சிதம் பரம்- 608 001
sis). 56 e. 2-OO ချို့မြွ၆
ரி
F్క
筠
#ಣ್ಯೀತ್ವ
|2&જ 7C:7

Page 2


Page 3

6. திருச்சிற்றம்பலம்
பாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலரவர்கள் செய்தது
வெளியீடு W நீ ஆறுமுகழநீநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை 24, மாலைக்கட்டித்தெரு சிதம்பரம் - 608 001 பதிப்பு 1986 விலை
உரிமையுட்ையது es. 2-OO

Page 4
நூல் பற்றிய விவரங்கள்
பெயர்: திருநாவுக்கரசு நாயனர் புராணம்
(பெரியபுராண வசனத்தின் பகுதி)
ஆசிரியர் : யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுகநாவலரவர்கள் பதிப்பு எண் ஒன்று
பதிப்பு ஆண்டு : 1986
பக்கங்கள் : 40
அச்சிட்ட நூல் எண்ணிக்கை 1000
Gíðav : e5. 2-OO
அறங்காவலர் : தவத்திரு குன்றக்குடி அடிகளாரி அவர்கள்:
பதிப்பித்தது : பூரீ ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச
வித்தியாசாலை அறக்கட்டளை, சிதம்பரம்
பதிப்பு உரிமையுடையது
நூல் கிடைக்குமிடங்கள்
பூரீ ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை
24, மாலைக்கட்டித்தெரு சிதம்பரம்- 608 001 2 பூரீ ஆறுமுக நாவலர் வித்தியா நுபாலன அச்சகம்
25. தங்கசாலைத்தெரு சென்னை - 600 079 அச்சிட்டோர் : பூஞரீ வேலன் பிரஸ், சிதம்பரம்

முகவுரை
உலகில் தோன்றிய சமயங்களெல்லாம் மக்களிடம் தோன்றும் குறைகளைக் களைந்து, வாழ்க்கை முறைகளை நெறிப்படுத்தும் நோக்கங்கொண்டவை. இவற்றில் மிகவும் தொன்மை வாய்ந்த சமயமாகக் கருதப்படுவது சைவ சமயம், ஒரு காலத்தில் சைவசமயமும் அதன்வழி சிவ வழிபாடும் இந்தியநாடு முழுவதும் பரவி இருந்தன.
சைவ சமயம் செழித்து வளர்ந்தோங்கியிருந்த காலம் பன்னிரு திருமுறை ஆசிரியர்கள் காலமாகிய கி.பி. 5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை என்பது திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் பேராசிரியர் கலைமாமணி புலவர் திரு. க. வெள்ளவாரணனார் அவர்கள் சுருத்தாகும். அப்போது நாட்டில் பக்திவெள்ளம் பெருக் கெடுத்து, எழுதுமறைகள் பல தோன்றின. சிவத் தொண்டர்கள் பலர் தோன்றி சிவத்தலங்களுக்குச் சென்று திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் இறைவனை இனிய எளிய தமிழ்ச்சொற்களால் பாடி வழிபட்டனர். திருநீற்றின் பெருமையையும் திருவைந்தெழுத்தின் வல்லமையையும் வலியுறுத்தி மக்களை சைவசமயத்தில் ஈடுபடச் செய்து இறையருள் பெறச்செய்தனர். அவர்கள் இயற்றிய தெய்வ மணங்கமழும் அப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளாக வகுக்கப்பட்டன். இவை சமய நூல்கம் மட்டுமல்லாமல் இலக்கியச் ச்ெ றிவும், வரலாற்று உண்மை களும், இசைநுணுக்கங்களும் நிறைந்த்வை,
அன்பு நெறியில் வாழ்ந்து, சிவத்தொண்டில் உறுதியாக நின்று, சிவபரம்பொருளுக்கே தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்ட சிவனடியார்களின் வரலாறுகளை தெய்வநலஞ்சான்ற சேக்கிழார் நாயனார் பன்னிரண்டாம்

Page 5
ν
திருமுறையாகிய திருத்தொண்டர் புராணமெனும் பெரிய புராணத்தில் விளக்குகிருர். அப்பெரும்புராணம் 5276 செய்யுட்களைக்கொண்டது. இவற்றில் நமது நாயன்மார் கள் நால்வரில் 4,5,6,ஆம் திருமுறைகளை அருளிச்செய்த திருநாவுக்கரசு நாயனுர் புராணத்தை 429 செய்யுட்களால் பாடிப் பரவுகிறார் சேக்கிழார் நாயனார்.
'பார்வாழத் திருவீதிப்பணி செய்து
பணிந்தேத்திப் பரவிச் செல்வார்’ என்று பெரியபுராணம் பேசும் திருநாவுக்கரசுநாயனரின் புராணம் சமய தொண்டு செய்ய வேண்டும் என்ற கொள்கையை உணர்வோடு தன்னலமற்று வலியுறுத்து வதாகும்.
கற்றோரும் மற்றோருமாகிய யாவருக்கும் எளிதே பயன்படும் பொருட்டு, இப்பெரியபுராணத்தை, அழகிய உரைநடையில் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுகநாவலர் அவர்கள் 1852ஆம் ஆண்டில் அச்சிட்டு வெளியிட்டார். அதில் காணப்படும் திருநாவுக்கரசுநாயனார் புராணம் தனி நூலாக இப்போது சிதம்பரம் ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளையால் தனி நூலாக பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
சைவப்பெருமக்கள் தேவாரம் பாடிய திருநாவுக்கரசு நாயனாருடைய அருள் வரலாற்றைப் படித்துப் பயன் பெற வேண்டும்; பெரியபுராண மூலநூலைப் படித்தின்புறு வதற்கும் இறையருளைப் பெருவதற்கும் இந்நூல் தூண்டு கோலாக அமைய வேண்டுமென்பது அறக்கட்டளையின் நோக்கங்கள்.
சிதம்பரம் க. சுவாமிநாதன் l5-3-86 அறக்கட்டளைச் செயலாளர்

திருநாவுக்கரசுநாயனுர் புராணம்
போற்று திரு வா மூரில் வேளான் டொன்மைப்
பொருவில் குறுக் கையரதிபர் புகழ ஞர்பான் மாற்றருமன் பினிற்றிலக வதியா மாது
வந்துதித்த பின்புமரு னிக்கி யாருந் தோற்றியமண் சமயமுறு துயர நீங்கத்
துணைவரரு டரவந்த சூலை நோயாற் பாற்றருநீ ஸ்ரிடரெய்திப் பாடலிபுத் திரத்திற்
பாழியொழித் தரனதிகைப் பதியில் வந்தார். வந்துதமக் கையரளுளா னிறு சாத்தி
வண்டமிழா னேய்தீர்ந்து வாக்கின் மன்னுய் வெந்தபொடி விடம்வேழம் வேலை நீந்தி
வியன் சூலங் கொடியிடபம் விளங்கச் சாத்தி யந்தமிலப் பூதிமக னரவு மாற்றி
யருட்காசு பெற்றுமறை யடைப்பு நீக்கிப் புந்திமகிழ்ந் தையாற்றிற் கயிலை கண்டு
பூம்புகலூ ரான்பாதம் பொருந்தி ஞரே,
திருமுனைப்பாடி நாட்டிலே, திருவாமூரிலே, வேளாளர் குலத்திலே, குறுக்கையர் குடியிலே, புகழனர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் மனைவியார் பெயர் மாதினியார். அம்மாதினியார் வயிற்றிலே திலகவதியார் என்கிற புத்திரி யார் பிறந்தார். அவர் பிறந்து சில வருஷஞ்சென்றபின், சைவசமயம் அபிவிருத்தியாகும்படி மருணிக்கியார் என் கின்ற புத்திரர் அவதரித்தார். அவருக்குத் தந்தையார்

Page 6
உரிய பருவத்திலே வித்தியாரம்பஞ்செய்வித்தார். மருணிக்கி யார், தந்தை யாருக்குப் பெருமகிழ்ச்சியுண்டாகும்படி, பல கலைகளையுங் கிரமமாகக் கற்று வல்லவராயினர்.
திலகவதியாருக்குப் பன்னிரண்டு வயசு ஆன பொழுது, அப்புகழஞர் மரபிற்கு ஒத்த மரபினையுடையவரும், சிவ பத்தியிலே சிறந்தவரும் , இராஜாவிடத்தில் சேஞதிபதியா யுள்ளவருமாகிய கலிப்பகை யார் என்பவர், அப்புகழஞரிடத் திலே சிலமுதியோர்களை அனுப்பி, திலகவதியாருக்குந் தமக் கும் மணம் பேசுவித்தார். புகழஞர் அதற்கு இசைந்தமை கண்டு,அம்முதியோர்கள் மீண்டு சென்று, கலிப்பகையாருக் குத் தெரிவித்தார்கள். கலிப்பகையார் தாம் விவாகஞ்செய் தற்குமுன் தம்முடைய அரசனது ஆஞ்ஞையினலே சேனைக ளோடும் சில நாளிலே அவன் பகைஞராகிய வடதேசத் தரசரிருக்குமிடத்தைச் சேர்ந்து அவர்களோடு நெடுநாள் யுத்தஞ்செய்தார். அங்கே அப்படி நிகழுங்காலத்திலே இங்கே புகழஞர் தேகவியோகம் அடைந்தார். அப் பொழுது அவர் மனைவியராகிய மாதினியார் சககமனஞ் செய்தார். அவர்கள் பிள்ளையாகிய திலகவதியாரும் LD(D5 fைக்கியாரும், சுற்றத்தார்களோடு மிக மனக் கவலையுற்று, சுற்றத்தாருள் அறிவால் அமைந்த பெரியோர்கள் ஒருவாறு தேற்றத் தேறி, தந்தை தாயர்களுக்குச் செய்யவேண்டும் அந்தியகருமங்களை முடித்தார்கள்,
இங்கே இப்படி நிகழ, அங்கே கலிப்பகையார் யுத்த களத்திலே தம்முடைய பூதவுடம்பை விட்டுப் புகழுடம் பைப் பெற்றுக்கொண்டார். அந்தச் சமாசாரந் திலகவதி யாருக்குச் செவிப்புலப்பட அவர் ‘என்னுடைய பிதா மாதாக்கள் என்னை அவருக்கு மணஞ்செய்துகொடுக்க உடன் பட்டிருந்தமையால், இவ்வுயிர் அவருக்கே உரியது. ஆத

லால் இவ்வுயிரை அவருயிரோடும் இசைவிப்பேன்" என்று சாவத்துணிந்தார். அது கண்ட மருணிக்கியார் வந்து அத் திலகவதியாருடைய இரண்டுபாதங்களிலும் விழுந்து அழுது "அடியேன் நம்முடைய பிதாமாதாக்கள் இறந்தபின்னும் உம்மையே அவர்களாகப் பாவித்துப் பூசிக்கலாம் என்றன்ருே உயிர்வைத்துக்கொண்டிருக்கின்றேன். அடியேனைத் தனியே கைவிட்டிறப்பீராயின், அடியேன் உமக்கு முன்னமே இறந்துவிடுவேன்’ என்றர். திலக்வதியார் அதைக்கேட்டு, தம்பியார் உயிரோடு இருக்கவேண்டும் என்னும் ஆசையால் தமது கருத்தைத் தடுத்து உயிர்தாங்கி; வேருெருவரையும் விவாகஞ்செய்துகொள்ளாமல், சீவகாருண் ணியம் உள்ளவ ராகி, வீட்டிலே தவஞ்செய்து கொண்டிருந்தார்.
மருணிக்கியார் யாக்கை நிலையாமையையும் செல்வநிலை யாமையையும் நினைந்து தருமஞ்செய்ய விரும்பி, அன்புடனே திரவியங்களைச் செலவழித்து, அறச்சாலைகளையும் தண்ணீர்ப் பந்தர்களையும் அமைத்தார். சோலேகளை வைப்பித்தார்; குளங் களைத் தோண்டுவித்தார்; விருந்தினரை உபசரித்தார்; புல வர்களுக்குக் கனகமாரிபொழிந்தார். பிரபஞ்சவாழ்வினது அநித்தியத்துவத்தை அறிந்து இல்வாழ்க்கையிலே புகாமல் எல்லாவற்றையும் துறந்தார். எல்லாச் சமயங்களுள்ளும் சற் சமயம் இது என்று அறியுமறிவு அவருக்குத் தலைப்பட வில்லை. அவர் பாடலிபுத்திரம் என்னும் நகரத்திற் சென்று, சமணர்களுடைய பள்ளியையடைந்து, அங்குள்ள சமணர்களுடைய போதனுசத்தியினலே, அவர்கள் அநுட் டிக்கின்ற ஆருகதசமயமே முத்தியை அடைதற்குத் தகுந்த நெறியன்று துணிந்து, அந்தச்சமயத்திலே பிரவேசித் தார். பிரவேசித்த அம்மருணிக்கியார் அந்தச் சமணசமய நூல்களெல்லாவற்றையும் கற்று, அவைகளிலே மகாபாண்

Page 7
8
டித்தியம் உடையராயினர். அது கண்ட சமணர்கள் அவ ருக்குத் தருமசேனர் என்று பெயரிட்டு, அவரைத் தங்கள் மதாசாரியராகக்கொண்டு வழிப்பட்டார்கள். அவர் தமது வித்தியா சாமர்த்தியத்தினலே பெளத்தர்களை வாதிலே வென்று புகழ் பெற்று, ஆருகத சமயாசாரியர்களுக்குள்ளே சிரேஷ்டராய் இருந்தார். அது நிற்க.
திருவாமூரிலே இருந்த திலகவதியார் சிவபெருமானிடத் திலே பத்திமிகுந்து, சிவபுண்ணியங்கள் செய்ய விரும்பி கெடிலநதிக்கு வடகரையில் இருக்கின்ற திருவதிகைவிரட் டானம் என்னுந் திருப்பதியிற்சென்று பரமசிவனை வணங்கி, சிவசின்னங்களைத் தரித்து, தினந்தோறும் சூரி யோதயத்துக்கு முன்னே திருக்கோயிலின் உள்ளும் புறமும் திருவலகிடுதல், கோமயத்தினலே மெழுகுதல், திருநந்தன வனங்களிற் சென்று புஷ்பங்களைப் பறித்துக்கொண்டு வந்து திருமாலை தொடுத்துச் சுவாமிக்கு சாத்தக்கொடுத்தல் முதலாகிய சிவபுண்ணியங்களைச்செய்து வந்தார். செய்துவரு நாளிலே, தம்முடைய தம்பியாராகிய மருணிக்கியாா கபட மார்க்கமாகிய ஆருகதத்திலே பிரவேசித்தமையை நினைந்து, துக்கசாகரத்தில் அமிழ்ந்தி, வீரட்டானேசுரரை வணங்கி, 'சர்வாபீஷ்டவரதரே! தேவரீர் அடியேனை ஆட்கொள்பவர் என்பது சத்தியமாயின், தவமென்று சொல்லிப் பாயை இடுக்கித் தலைமயிரைத் பறித்தெறிந்துவிட்டு நின்று கொண்டேஉண்கின்ற சமணர்களுடைய கபடமார்க்கமாகிய படுகுழிலே விழுந்த தமியேனுடைய தம்பியை அதிணின் றும் தூக்கிக் காப்பாற்றியருளல் வேண்டும்’ என்று பல முறை விண்ணப்பஞ்செய்தார்.பரமசிவன் திலகவதியாருக்குக் சொப்பனத்திலே தோன்றி, "தபோதனியே! நீ உன் மனக் கவலையை ஒழி. உன்னுடைய தம்பி துறவியாகி

நம்மை அடையும்பொருட்டுப் பூர்வசன்மத்திலே தவஞ் செய்திருக்கின்றன். அந்தத் தவத்திற் சிறிது வழுவுற்றதி னலே அந்நிய மதத்திலே பிரவேசித்தான். இனி அவனைச் சூலைநோயினல் வருத்தி ஆட்கொள்வோம்” என்று சொல்லி மறைந்தருளினர்.
பரமசிவன் திருவாய்மலர்ந்தருளியபடியே, அவருடைய திருவருளினலே, தருமசேன ருடைய வயிற்றிலே கொடிய சூலைநோய் உண்டாகிக் குடலைக் குடைதலுற்றது. அதனல் அவர் வருந்தி நடுக்கமுற்று சமண்பாழியறையில் விழுந்தார். தமக்குக் கைவந்த சமணசமய மந்திரோச்சாரணத்தால் தடுக்கவும், அச்சூலைநோய் தடைப்படாமல் மேற்கொண் டது. மேற்கொள்ளவே, சர்ப்பவிஷந் தலைக்கொண்டாற் போல மயங்கி மூர்ச்சை அடைந்தார். அது கண்ட சமணர் பலர் வந்து கூடி, ‘இந்தச் சூலைநோய்போலக் கொடிய நோய் முன்னெருபோதும் கண்டறியோம் இதற்கு யாது செய்வோம்” என்று துக்கமுற்று,பின் கமண்டலத்தில் இருக் கின்ற ஜலத்தை அபிமந்திரித்துக் குடிப்பித்தார்கள். அத னலே தணியாமையால், மயிற்பீலிகொண்டு காலளவுந் தடவினர்கள். அதினுலுந் தணியாமல், சூலைநோய், முன்னி லும், அதிகப்பட, தருமசேனர் அதைச் சகிக்கலாற்ருதவ ராய்த் துன்பப்பட்டார். சமணர்கள் அதுகண்டு "ஐயோ! இதற்கு நாம் யாது செய்வோம்’ என்று மனங்கலங்கி, இந் நோயை நீக்குதற்கு நாம் வல்லமல்லேம்’ என்று சொல்லிக் கொண்டு, அவரைக் கைவிட்டுப் போயிஞர்கள். பின் தரும சேனர் தம்முடைய சகோதரியாராகிய திலகவதியாரை நினைந்து, அவரே தமக்கு உதவிசெய்ய வல்லார் எனத் துணிந்து, தம்முடைய சமாசாரத்தை அவருக்கு உணர்த்தும் பொருட்டு, தம்முடைய பாகுகனை அவரிடத்துக்கு அனுப்

Page 8
10
பினர். அப்பாகுகன் திருவதிகையிற்சென்று, அத்திலகவதி யாரை ஒரு திருநந்தவனத்துக்குச் சமீபத்திலே கண்டு வணங்கி, “நான் உம்முடைய தம்பியார் ஏவலினல் இவ் விடத்துக்குவந்தேன்’ என்று சொல்ல; திலகவதியார் “தம்பியாருக்கு யாதாயினும் தீங்கு உண்டா” என்ருர், அதற்கு அவன் ‘ஆம்! அவர் கொடிய சூலைநோயினல் மிக வருந்துகின்ருர், சமணர்களெல்லாரும் அந்நோயைத் தீர்த் தற்கு வன்மையின்மையால், அவளைக் கைவிட்டு விட்டார் கள். அவர் அது கண்டு, என்னை நோக்கி, அந்தச் சமாசாரத்தைச் சகோதரியாராகிய உமக்குத் தெரிவித்து, தாம் உய்யும் நெறியைக் கேட்டுக் சொண்டு இரவிலே தம்மிடத்து வரும் பொருட்டு என்னை ஏவினுர்’ என்ருன் . திலகவதியார் “பதிதராகிய சமணர்களுடைய பள்ளிக்கு நான் வரேன். இதைத் தம்பிக்குச் சொல்லு’ என்ருர் . அது கேட்ட பாகுகன் மீண்டு தருமசேன ரிடத்திற்சென்று அதைத் தெரிவிக்க; தருமசேனர் “இனி இதற்கு யாது செய்வேன்’ என்று சோகித்தார்.
அப்பொழுது சிவபெருமானுடைய திருவருள் கூடுத லால்" மருணிக்கியார் இந்தத்துர்ச்சமயமாகிய ஆருகதமார்க் கப் பிரவேசத்தால் என்னை வருத்தும் இந்நோய் நீங்கும்படி, சற்சமயமாகிய சைவசமயத்தை அநுட்டிக்கின்ற திலகவதி யாருடைய திருவடிகளை அடைவேன்’ என்று கருதினர். அக் கருத்துப் பிடித்தெழுப்ப எழுந்து, சமணர்களுடைய ஸ்தா னத்தைக் கடந்து, உடுத்த பாயையும் உறியில் உற்ற கமண் டலத்தையும் மயிற்பீலியையு நீக்கி வஸ்திரந்தரித்து, தமக் குப் பற்றுக்கோடாகக் கைதந்து வருகின்றவர்களைப் பற்றிக் கொண்டு, ஒருவருங் காணுதபடி இரவிலே ஆருகதமார்க்கப் பிரவேசத்தால் தமக்குக் கிடைத்தவைகளில் சூலைநோய்

1
ஒன்றுமாத்திரம் உடன் ருெடர, திருவதிகையிற்சென்று திலகவதியாருடைய திருமடத்தை, அடைந்து, அவருடைய திருவடிகளை நமஸ்கரித்து, “நமது குலத்தார் செய்த தவப்பயனெல்லாம் திரண்டு ஒரு வடிவெடுத்தாற்போலும் அம்மே! அடியேன் கொடிய சூலை நோயைச் சகிக்கலாற் ருமையால், உம்மையே கதியென்று அடைந்தேன். இனித் தமியேன் உய்ந்து கரையேறும் வழியை அருளிச்செய்யும்’ என்று விண்ணப்பஞ்செய்து, பாதத்திலே விழுந்து அயர்ந் தார். திலகவதியார் தம்பியாரை நோக்கி தமக்குச் சொட் பனத்திலே பரமசிவன் அருளிச்செய்தபடி முடித்ததை நினைந்து.மனங்கசிந்துருகிக் கடவுளை அஞ்சலிசெய்துகொண்டு ‘அறியாமையினலே பரசமயப்படுகுழியில் விழுந்து கொடுந் துயரத்தை அனுவிக்கின்ற தம்பியாரே! எழுந்திரும்’ என்ருர், தம்பியர் சூலைநோயுடன் நடுக்கமுற்று எழுந்து, அஞ்சலிசெய்தார். திலகவதியார் “இது பரமசிவனுடைய திருவருளே; தம்முடைய திருவடிகளையடைந்த மெய்யன்பர் களுக்கு இன்னருள்புரியும் . அக்கடவுளையே வணங்கி அவருக்கே திருத்தொண்டு செய்யும்” என உபதேசித்தார். உடனே மருணிக்கியார் அவ்வுபதேசத்தை ஏற்றுக்கொண்டு, வணங்கி நிற்க, திலகவதியார் திருவருளை நினைந்து, அவருக்கு விபூதியை பூஞரீ பஞ்சா கூடிரத்தை ஒதிக்கொடுத்தார். மருணிக்கியார் மிகுந்த ஆசையோடு வணங்கி,அவ்விபூதியை வாங்கி, சரீரமுழுதிலும் அணிந்துகொண்டார்.
திலகவதியார் திருப்பள்ளியெழுச்சியிலே, திருவலகும் திருமெழுக்குத்தோண்டியும் எடுத்துக்கொண்டு, திருக் கோயிலுக்குத் தம்பியாரை அழைத்துக்கொண்டுபோஞர். மருணிக்கியார் வீரட்டானே சுரரைப் பிரதசுஷ்ணஞ் செய்து சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்று,

Page 9
2
அவருடைய திருவருளினலே தமிழ்ச்செய்யுள் பாடுஞ் சத்தி உண்டாகப்பெற்று, தம்முடைய சூலைநோய் நீங்கும் பொருட் டும், பிற்காலத்திலே அன்போடு ஒதுகின்ற யாவருடைய துன்பமும் நீங்கும் பொருட்டும், சிவபெருமான் மேல் “கூற்ரு 'யினவாறு விலக்ககிலீர்” என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினர். உடனே சூலைநோய் நீங்கிற்று. அப்பொழுது மருணிக்கியார் தமக்கு உயிரையுந் தந்து முத்திநெறியையுந் தந்த சிவபெருமானுடைய திருவருளாகிய கடலில் அமிழ்ந்தி, திருமேனி முழுதிலும் உரோமாஞ்சங்கொள்ள, இரண்டு கண்ணினின்றும் ஆனந்தபாஷ்பஞ்சொரிய, நிலத்திலே விழுந்து புரண்டு, "சமணசமயப் படுகுழியிலே விழுந்து எழுமாறு அறியாது மயங்கிய பாவியேன் சிவபெருமா னுடைய திருவடியை அடைதலாகிய இந்தப் பேரின் பவாழ் வைப் பெறும்படிசெய்த சூலைநோய்க்கு என்ன பிரதியுப காரஞ் செய்வேன்” என்ருர். இப்படி நிகழும்பொழுது, வீரட்டானே சுரருடைய திருவருளினல் “நீ அற்புத சின்மய மதுரமாகிய தேவாரப்பதிகத்தைப் பாடின படியால் உனக்கு நாவுக்கரசு என்னும் பெயரே சத்தலோகங் களினும்வழங்குக” என்று சமஸ்தருக்கும் ஒரு வியப்புத் தோன்றும் படி ஒரு அசரீரிவாக்கு ஆகாயத்திலே தோன் றிற்று. அதைக் கேட்ட திருநாவுக்கரசு நாயனர் ‘சிவ பெருமான் இத்தனை நெடுங்காலமாகத் தம்மை நிந்தித்த சிறியேனுக்கு இந்தப் பெருவாழ்வைத் தந்தருளினுரே” என்று களி கூர்ந்து, அத்தன்மையனுகிய இராவணனுக்கு அருளிய கருணையின் மெய்த்தன்மையை அறிந்து துதிப்பதையே மேற்கொண்டு,வணங்கினர். ‘திருநாவுக்கரசு நாயனர் சமண சமயம் பொய்மார்க்கம் என்பது யாவருக்கும் புலப்படும்படி சைவசமயத்திலே பிரவேசித்து அருள் பெற்றபடியால்

13
உலகம் உய்ந்தது உய்ந்தது” என்று சொல்லி திருவதிகையி லுள்ள சமஸ் த சனங்களும் களிப்புற்றர்கள். திருநாவுக்கரசு நாயனர் மனம் வாக்குக்காயம் என்னுந் திரிகரணங்களாலும் திருத்தொண்டு செய்யவேண்டும் என்னும் ஆசை மிகுதலால் சிவசின்னங்களைத் தரித்துக்கொண்டு, தியான மருவுணர்வும் தடையின்றி யெழுகின்ற துதிரூபமாகிய வாசகமும் உழ வாரப்பணிவிடையும் உடையராயினர். திலகவதியாரி தம்முடைய வேண்டுகோளின்படி சிவபெருமான் தம்முடைய தம்பியா ரை ஆட்கொண்ட பெருங் கருணைத்திறத்தை நினைந்து மகிழ்ந்து வணங்கினர்.
இந்தச் சமாசாரத்தைப் பாடலிபுத்திரத்தில் இருக் கின்ற சமணர்கள் கேள்வியுற்று, பொருமை கொண்டு; "மாறுபட்ட பல சமயங்களையும் வாதில் வென்று நமது சம யத்தை ஸ்தாபித்த தருமசேனர் தமக்கு வந்த சூலைநோய் இங்கே ஒருவராலும் நீங்காமையால் உய்யும் நெறியை நாடித் திருவதிகையிற்சென்று, முன்போலச் சைவத்திலே பிரேவசித்து, அந்நோய் நீங்கி உய்ந்துவிட்டார். இனி நமது "சமயம் அழிந்தது” அழிந்தது என்று துக்கித்து, தலையும் பீலியுந் தாழ ஓரிடத்திலே ஒருங்கு கூடினர்கள். கூடிய சமணர்கள் “தருமசேனருக்கு வந்த சூலைநோய் நம்மொரு வராலும் நீங்காமல் சைவசமயப்பிரவேசத்தால் நீங்கிவிட்ட உண்மையை தம்முடைய அரசன் அறிந்தானுகில், நம்மேற் கோபங்கொண்டு, தானுஞ் சைவனகி, நம்முடைய விருத்தி யையும் தவிர்ப்பான். இனி இதற்கு யாது செய்வோம்’ என்று சொல்லித் தங்களுள்ளே ஆலோசித்து வஞ்சனை யாகிய ஒருபாயத்தைத் தெரிந்துகொண்டு, பல்லவராஜ னுடைய நகரத்திற் சென்று, அரமனையினுள்ளே புகுந்து, அவ்வரசனை நோக்கி, “மகாராஜாவே! எங்களெல்லாருக்குந்

Page 10
14
தலைவராய் இருந்த தருமசேனர், தம்முடைய ககோதரியா ராகிய திலகவதியார் சைவசமயத்திலே நிற்கின்றபடியால் தாமும் அவர்போல எக விரும்பி, தமக்கு சூலைநோய் வந்த தாகக்காட்டி, அது நம்மாலே தீர்ந்திலது என்று அவரிடத் திற்சென்று, முன்போலச் சைவசமயத்திலே பிரவேசித்து, நம்முடைய கடவுளை நிந்தை செய்தனர்” என்று சொன்னர் கள். உடனே பல்லவராஜன் கோபங்கொண்டு, “இதற்கு யாது செய்யலாம்’ என்ருன் . அதுகேட்ட சமணர்கள் *உத்தமமாகிய நமது சமயமகிமையைக் கெடுத்து உம் முடைய ஆஞ்ஞையையுங் கடந்த அந்தத் தருமசேனரை நீர் அழைப்பித்துத் தண்டிக்கவேண்டும்” என்ருர்கள். அப் பொழுது அரசன் மந்திரிமாரை நோக்கி. 'இம்முனிவர் களாற் கட்டப்பட்ட தீயோனைப் பிடித்துக்கொண்டு வாருங்
கள்’ என்று ஆஞ்ஞாபித்தான்.
உடனே மந்திரிமார் சேனைகளோடு போய், திருவதி கையை அடைந்து, திருநாவுக்கரசு நாயனரிடத்திற்சென்று “எங்கள் அரசன் இன்றைக்கு உம்மை அழைத்துக்கொண்டு வரும்படி எங்களை அனுப்பினன். வாரும்” என்ருர்கள். அது கேட்ட திருநாவுக்கரசுநாயனர் ‘நாமார்க்குங் குடியல் லோம்" என்னும் மறுமாற்றத் திருத்தாண்டகத்தைப்பாடி "நாம் நீங்கள் அழைத்தபடியே வரக்கடவேமல்லேம்’ என்ருர், அதுகேட்ட மந்திரிமார்கள் அவரை வணங்கிப் பிரார்த்தித்து அழைக்க, “அவர் அடியேனுக்கு வரும் அபாயங்களுக்கெல்லாம் சிவபெருமான் இருக்கின்ருர்’ என்று போதற்கு உடன்பட்டார். அவர்கள் அழைத்துக்கொண்டு போய், அரசனெதிர் சென்று அறிவித்தார்கள். அரசன் அதைக்கேட்டு, பக்கத்திலிருந்த சமணர்கனை நோக்கி; ‘இனி இவனுக்கு யாதுசெய்வோம்” என்று கேட்க, சமணர்கள்

5
"நீற்றறையில் இடல்வேண்டும்” என்ருர்கள். அரசன் சமீபத் தில் நின்ற ஏவலாளர்களை நோக்கி, இவனை இவர்கள் சொல்லியபடியே செய்யுங்கள்’’ என்று ஆஞ்ஞாபிக்க அவர் கள் அந்நாயனரைச் சூட்டினையுடைய நீற்றறையினுள்ளே விட்டுக் கதவைப் பூட்டினுர்கள். திருநாவுக்கரசு நாயனுர் பரமசிவனுடைய திருவடி நிழலைத் தலைக்கொண்டு *சிவனடியார்களுக்கு இவ்வுலகத்திலே துன்பம் வருவ துண்டோ’ என்று அக்கடவுளைத் தியானித்து “மாசில் வீணையு LDT8ko மதியமும்" என்னுந் திருக்குகுறுந் தொகையைப் பாடித் தொழுது கொண்டு, அந்த நீற்றறை யினுள்ளே எழுந்தருளியிருந்தார். அந்நாயனூர் சிவபெரு மானுடைய திருவடி நீழலாகப்பாவித்த அந்நீற்றை வீணு கானமும் சந்திரனும் தென்றலும் இளவேனிலும் பொய்கை யும் போலக் குளிர்ந்தது.
ஏழுநாட் சென்றபின், பல்லவராஜன் சமணர்களை அழைத்து, “நீற்றறையைத் திறந்து பாருங்கள்’ என்று சொல்ல;அவர்கள் நீற்றறையைத் திறந்து நாயனர் யாதொரு ஊனமும் இன்றிக் களிப்புற்றிருத்தலைக் கண்டு, ஆச்சரிய மடைந்து, அரசனிடத்திற் சென்று, ‘‘அவன் முன்னே நம் முடைய சமயத்தில் இருந்து செய்த மந்திரசாதகத்தினுலே வேவாமற் பிழைத்துக்கொண்டான். இனி அவனுக்கு நஞ்சு மஊட்டுவதே தகும்’ என்ருர்கள். அரசன் ‘அப்படியே செய் யுங்கள்” என்று சொல்ல; அவர்கள் நாயனருக்கு நஞ்சுகலந்த பாற்சோற்றை உண்ணக்கொடுத்தார்கள். நாயனுர், அவர்க ளுடைய வஞ்சனையை அறிந்து, “நஞ்சை அமுதாகக் கொண்ட கடவுளுடைய அடியார்களுக்கு நஞ்சும் அமுதாம்’ என்று, நஞ்சுகலந்த அந்தப்பாற்சோற்றை உண்டு இருந் தார். சமணர்கள் அதைக்கண்டு, ‘இவனுக்கு நஞ்சும்

Page 11
16
அமுதமாயிற்று. இவ்விடத்திலே இவன் பிழைப்பாளுகில் நமக்கெல்லாம் நாசமுண்டாகும்’ என்று பயந்து, அரச னிடத்திற்சென்று, "நாம் நஞ்சைச் சோற்றிலே கலந்து உண்பித்தும், நம்முடையசமய நூல்களிலே சுற்றுக்கொண்ட மந்திரவலினயிலே பிழைத்துவிட்டான். அவன் இறவா திருப்பானகில், எங்கள் உயிரும் உம்முடைய அரசாட்சியும் நீங்குவது திடம்’ என்ருர்கள்.
அரசன் அதைக்கேட்டு, ‘இனி அவனைக்கொல்லுதற்கு, உபாயம் யாது” என்று கேட்க: சமணர்கள் “உம்முடைய யானையை அவனுக்கு எதிரே விடுவதே உபாயம்’ என்ருர் கள். அரசனும் அப்படிச் செய்யும் பொருட்டு ஆஞ்ஞாபிக்க; துஷ்டர்களாகிய சைனர்கள் நாயனருக்கு எதிரே யானையைக் கொண்டுவந்து விட்டார்கள். நாயனர் சிறிதும் பயமின்றி, சிவபெருமானுடைய திருவடிகளைச் சிந்தித்து, அவ்யானையை நோக்கி, ‘சுண்ணவெண் சந்தனச் சாந்தும்" என்று திருப்பதிகமெடுத்து, திருப்பாட்டிறுதி தோறும் 'கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்கா - மஞ்சுவ தியாதொன்று மில்லை யஞ்ச வருவது மில்லை" என்று பாடியருளினர். யானையானது அந்நாயனுரை வலஞ்செய்து, எதிராக நிலத்திலே தாழ்ந்து இறைஞ்சி எழுந்து அப்புறம் போக; அதன்மேலிருந்த பாகர்கள் அதனை அங்குசத்தினலே குத்தித்திருப்பி அவரைக் கொல்லவேண்டும் என்கின்ற குறிப்பைச் காட்டினர்கள். அது அப்படிச் செய்யாமல், துதிக்கையினுல் அவர்களை எடுத்து வீசிக்கொன்றுவிட்டு, வெவ்வேறிடங்களிலுள்ள சமணர்களைத் தேடித்தேடி ஒடி, அவர்களைத் தள்ளி மிதித்துக் கிழித்தெறிந்து கொன்று, அந்நகரத்தில் உள்ளவர்களெல்லாரும் கலங்கும்படி அரசனுக்கு ஆகுலத்தை விளைவித்தது,

17
அவ்யானைக்குத் தப்பிய சமணர்களெல்லாரும் மான மழிந்து மயங்கி மனம் வருந்தி, அரசனையடைந்து, "தரும சேனன் நம்முடைய சமயநூல்களிலே கற்றுக்கொண்ட மந் திரத்தின் பலத்தினலே நாங்கள் விட்ட யானையைக் கொண்டே எங்கள் வலிமைச் சிதைத்தான்’ என்று சொல்லிப் புலம்பினர்கள். அரசன் கோபங்கொண்டு, “இனி அவனுக்கு யாது செய்யவேண்டும்’ என்று கேட்க: சமணர் கள் ‘அவனைக் கல்லோடு சேர்த்துக் கயிற்றினலே கட்டிக் கடலிலே தள்ளவேண்டும்” என்ருர்கள். அரசன் கொலைத் தொழில் செய்வோரைநோக்கி, “தருமசேனனை காவ லோடு கொண்டுபோய், ஒரு கல்லோடு சேர்த்துக் கயிற்றி ஞலே கட்டி ஒரு படகில் ஏற்றி, சமுத்திரத்திலே விழும்படி தள்ளிவிடுங்கள்’ என்று ஆஞ்ஞாபித்தான். கொலைத் தொழில் செய்வோர் அதைக்கேட்டு, சமணர்களும் உடன் செல்ல, அச்சஞ் சிறிதுமில்லாத திருநாவுக்கரசுநாயனரைக் கொண்டுபோய், அரசன் சொல்லியபடியே கடலிலே தள்ளி விட்டுத் திரும்பினுர்கள்.
சமுத்திரத்திலே தள்ளிவிடப்பட்ட திருநாவுக்கரசு நாய ஞர் "அடியேனுக்கு, யாது நிகழினும் நிகழுக. அடியேன் எம்பெருமானேத் தோத்திரம் பண்ணுவேன்’ என்று நினைந்து, 'சொற்றுணை வேதியன்" என்னும் நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் பாட, சமுத்திரத்திலே கல்லானது நாயனர் மேற்பக்கத்திலிருக்கத் தெப்பமாய் மிதந்தது. கட்டிய கயிருே அறுந்து போயிற்று. வருணபகவான் கல்லே சிவிகையாக அந்நாயனரைத் தாங்கிக் கொண்டு திருப் பாதிரிப்புலியூர் என்னுஞ் சிவஸ்தலத்தின் பக்கத்திலே சேர்த்தான். நாயனர், அந்தத் திருப்பதியினின்றும் அரகர வென்னு மோசையுடன் தம்மை எதிர்கொண்டு சிவனடியார்

Page 12
8
களோடு ஆலயத்திற்சென்று, சுவாமியை வணங்கி, “ஈன்ருளுமாய்" என்னுந் திருப்பதிகம் பாடிக்கொண்டு, அங்கே சில நாள் எழுந்தருளியிருந்தார்.
பின் திருவதிகை வீரட்டானே சுரரைத் தரிசிக்கவேண் டும் என்னும் பேராசையினல் அவ்விடத்தினின்றும் பிரஸ் தானமாகி, திருமாணிகுழியையும் திருத்தினை நகரையும் வணங்கிக்கொண்டு, திருக்கெடிலநதியைக் கடந்து சென்ருர் . அந்நாயனுர் சமணர்கள் செய்த இடர்களனைத்தையும்ஜயித்து வருதலைக் கேள்வியுற்ற திருவதிகைவாசிகள் சமஸ் தரும் அவ்வூரை மிக அலங்கரித்து, மங்கல வாத்தியங்கள் முழங்க அவரை எதிர்கொண்டு நமஸ்கரித்தார்கள். விபூதியை உத் தூளனஞ்செய்த திருமேனியையும் தாழ்வடத்தையும் சிவ னுடைய திருவடிகளை மறவாத சிந்தையையும் ஆனந்தபாஷ் பம் பொழிகின்ற கண்களையும் திருப்பதிகங்கள் தோன்று கின்ற திருவாயையுமுடைய நாயனர், தம்மைஎதிர்கொண்ட சனங்களோடு ஆலயத்திற் சென்று, சுவாமியை வ7ைங்கி: ‘வெறிவிரவு கூவிளம்" என்னும் ஏழைத் திருத்தாண்ட சத்தை எடுத்து ' ஏழையேனுன் பண்டிகழ்ந்தவாறே" என்று பாடினுர்.
நாயனர் வீரட்டானே சுரர் மேலே பின்னும் பல திருப் பதிகங்களைப் பாடிப் பணி செய்து கொண்டிருக்கு நாளிலே சமணர்களுடைய துர்ப்போதனைக்கு இசைந்து தீங்கு செய்து கொண்டிருந்த பல்லவராஜன் அத்திருவதிகையிலே
வந்து, நாயனரை வணங்கி, சைவசமயத்திலே பிரவேசித் தான். சமணசமயம் பொய்யென்றும் சைவசமயமே மெய் யென்றும் அறிந்துகொண்ட காடவனென்பவனும் பாடலி புத்திரத்திலிருந்த சமணருடைய பள்ளிகளையும் பாழிகளை

19
யும் இடித்து, அவைகளின் கற்களைத் திருவதிகையிலே கொண்டு வந்து, பரமசிவனுக்குக் குணதரவீச்சரம் என்னுங் கோயிலைக் காட்டினன்.
அந்நாட்களிலே திருநாவுக்கரசுநாயனர் சிவஸ்தலங்கள் பலவற்றிற்குஞ் சென்று சுவாமிதரிசனஞ்செய்து திருப்பதி கம் பாடவிரும்பி, அவ்விடத்தினின்று நீங்கி, திருவெண் ணெய்நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவலூர் முதலிய திருப்பதிகளை வணங்கிப் பதிகம் பாடிக்கொண்டு, பெண்ணு கடத்திற்சென்று திருத்தூங்கானைமாடமென்னும் ஆலயத் திற் பிரவேசித்து, சுவாமியை வணங்கி, ‘சுவாமி! அடியேன் இழிவினையுடைய சமணசமயத் தொடக்குண்டு வருந்திய இத்தேகத்துடனே உயிர் வாழ்தற்குத் தரியேன். அடி யேன் தரிக்கும்பொருட்டுத் தேவரீருடைய இலச்சினை* யாகிய சூலத்தையும் இடபத்தையும் அடியேன்மேற் பொறித்தருள வேண்டும்’ என்னுங் கருத்தால் ‘பொன்ஞர் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்’ என்னும் திருப் பதிகம் பாடிஞர். உடனே பரமசிவனுடைய திருவருளினுல் ஒரு சிவபூதம். மற்ருெருவருக்குந் தெரியாதபடி அவ்வாகீச ருடைய திருத்தோளிலே சூலக்குறியையும் இடபக்குறியை யும் பொறித்தது. நாயனர் தம்முடைய திருத்தோளிலே பொறிக்கப்பட்ட இலக்சினைகளைக் கண்டு மனமகிழ்ந்து, திரு வருளை நினைந்து கண்ணிர் சொரிய விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். அவர் அந்தஸ்தலத்தில் இருக்கின்ற நாளிலே திருவரத்துறைக்கும் திருமுதுகுன்றுக்கும் போய், சுவாமி கரிசனஞ்செய்து, திருப்பதிகம் பாடி, கிழக்கே நிவாக்க,ை யின் வழியாக நடந்து, சிதம்பரத்திலே சென்று, கனகசபை
"இலச்சினை -முத்திரை

Page 13
20
யிலே ஆனந்ததாண்டவஞ் செய்தருளுகின்றசபாநாயகரைத் தரிசித்து விழுந்து நமஸ்கரித்து எழுந்து, இரண்டு  ைக்களும் சிரசின் மேலேறிக்குவிய, இரண்டு கண்ணினின்றும் ஆனந்த பாஷ் பஞ்சொரிய, அக்கினியிற்பட்ட வெண்ணெய்போல மனங்கசிந்துருகுக, “என்று வந்தாய்’ என்னுந் திருக்குறிப் போடு நிருத்தஞ்செய்கின்ற சுவாமியுடைய திருநயனத் திணின்றும் பொழிகின்ற திருவருளாலாகிய ஆனந்தமேலிட்டி ஞலே "கருநட்டகண்டனை' என்னுந் திருவிருத்தமும் *பத்தணுய்ப் பாடமாட்டேன்" என்னுந் திருநேரிசையும் பாடினர். அவர் சுவாமிதரிசனம் பண்ணி. திருக்கோயிற்றிரு முற்றத்தினும் திருவீதிகளினும் உழவாரப்பணி செய்து கொண்டு சிலநாள் அங்கே எழுந்தருளியிருந்தார். அப் பொழுது "அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்" என்னுந் திருக்குறுந்தொகை பாடினர். பின் திருவேட் களத்துக்குச் சென்று, சுவாமிதரிசனஞ்செய்து திருப்பதிகம் பாடி, திருக்கழிப்பாலேயை அடைந்து சுவாமிதரிசனஞ் செய்து, திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு, சிலநாள் அங்கே இருந்தார். பின் அவ்விடத்தினின்றும் நீங்கி, வழியிலே “பனைக்கை மும்மத வேழ முரித்தவன்" என்று எடுத்து 'அம்பலக் கூத்தனைத் - தினத்த னைப்பொழுதும்மறந் துய் வணுே" என்னுந் திருக்குறுந்தொகை பாடிக்கொண்டு. சிதம்பரத்தை அடைந்து, “அரியான யந்தணர்தஞ் சிந்தையானை' என்னும் பெரிய திருத்தாண்டகம் பாடிக் கொண்டு திருக்கோயிலிற் சென்று, சபாநாதரைத் தரிசித்து வணங்கி, 'செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா வெறிக்கும்” என்னுந் திருநேரிசை பாடிஞர்.
திருநாவுக்கரசு நாயனர் அங்கே பாடற்ருெண்டும் உழ வாரத்தொண்டுஞ் செய்துகொண்டிருக்குநாளில், ஒருநாள், சீர்காழியிலே பரமசிவனது திருவருளினுல் உமாதேவியார்

2
(ரைானப்பாலை ஊட்ட உண்டு வேதார்த்தங்களைத் தமிழிலே தேவாரமாகப் பாடியருளுகின்ற திருஞானசம்பந்தமூர்த்தி நாயனருடைய மகிமையை அடியார்கள் சொல்லக் கேள்வி யுற்று, அவருடைய திருவடிகளை வணங்கல்வேண்டும் என்னும் ஆசைமிகுதியினுல், சபாநாயகரைத் தொழுது அநுமதி பெற்றுக்கொண்டு புறப்பட்டு, திருவீதியிலே அங்கப்பிரகூழினஞ்செய்து; அத்திருப்பதியின் எல்லையைக் கடந்து, திருநாரையூரைப் பணிந்து பாடி, சீர்காழிக்குச் சமீபித்தார். திருஞானசம்பந்தமூர்த்திநாயனர் சீர்காழிக் குத் திருநாவுக்கரசுநாயனர் வருதலேக்கேள்வியுற்று, அத்தி யந்த ஆசையோடு அடியார்கள் பக்கத்திலே சூழ அவரை எதிர்கொண்டார்.திருநாவுக்கர சுநாயனர் திருஞானசம்பந்த eழர்த்திநாயனுருடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரிக்க அவர் தம்முடைய திருக்கரங்களினுல் இவருடைய திருக் கரங்களைப் பிடித்து எடுத்து, தாமும் அஞ்சலிசெய்து, "அப்பரே" என்ருர், அதற்குத் திருநாவுக்கரசு நாயனுர் 'அடியேன்" என்ருர். அவ்விருவரும் தாங்கள் ஒருவரை ஒருவர் காணப்பெற்றதனுல் மிக மனமகிழ்ந்து ஆலயத்திற் சென்று, சுவாமியை வலங்கொண்டு நமஸ்கரித்து எழுந்தார் கள். திருஞானசம்பந்தமூர்த்திநாயனுர் அப்பமூர்த்தியை நோக்கி, ‘அப்பரே! உம்முடைய சுவாமியைப் பாடும்’ என்று சொல்ல, இவர் திருப்பதிகம் பாடி திருஞானசம்பந்த மூர்த்திநாயனருடைய திருமடத்திற் சென்று, அவரோடு அளவளாவிப் பலநாள் இருந்தார்.
ஒருநாள் திருநாவுக்கரசுநாயனர் சோழமண்டலத்தி லுள்ள் சிவஸ்தலங்களெல்லாவற்றையும் வணங்கவேண்டும் என்று தமது திருவுள்ளத்தே தோன்றிய ஆசையைத் திரு ஞானசம்பந்தமூர்த்திநாயனருக்கு விண்ணப்பஞ் செய்து,

Page 14
22
அவரோடும், திருக்கோலக்காவிற்குச் சென்று சுவாமி தரிசனம் பண்ணினுர், திருஞானசம்பந்தமூர்த்திநாயஞர் அவ்விடத்தினின்றும் மீண்டருளினர். அப்பமூர்த்தி திருக் கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடுர், திருக்குறுக்கை, திருநின்றியூர், திருநனிபள்ளி முதலிய ஸ்தலங்களை வணங் கிக்கொண்டு, காவேரியாற்றின் இருகரைவழியாகிவஞ் சென்று, திருச்செம்பொன்பள்ளி, திருமயிலாடுதுறை, திருத் துருத்தி, திருவேள்விக்குடி, திருவெதிர்கொள்பாடி, திருக் கோடிகா, திருவாவடுதுறை, திருவிடைமருதூர், திருநாகேச் சரம், திருப்பழையாறை என்கின்ற ஸ்தலங்களைப் பணிந்து பாடி, திருச்சத்திமுற்றத்தை அடைந்தார். அங்கே சுவாமி தரிசனஞ்செய்து 'கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்ப தன்முன்-பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை' என்னுந் திருப்பதிகம் பாடவும்: பரமசிவன் "நல்லூருக்கு வா வா” என்றுஅருளிச்செய்தார். அப்பமூர்த்தி திருநல்லூரிலே சென்று, சுவாமியை வணங்கி எழுந்தார். எழும் பொழுது, சுவாமி "உன்னுடைய நினைப்பை முடிக்கின்ருேம்” என்று சொல்லி தம்முடைய திருவடிகளை சிரசின்மேலே சூட்டியருளினர். அப்ப மூர்த்தி "நினைந்துருகு மடியாரை" என்று திருத் தாண்டகமெடுத்து, திருப்பாட்டிறுதிதோறும் 'திருவடி யென் றலைமேல் வைத்தார் கல்லூரெம் பெருமானுர் கல்ல வாறே" என்று பாடியருளினர். இன்னுந் திருப்பதி கங்கள் பாடிக் கொண்டு, சிலநாள் அங்கிருந்தார். இருக்கு நாட்களிலே, திருக்கருகாவூர், திருவாவூர், திருப்பாலைத் துறை முதலாகிய ஸ்தலங்களுக்குப் போய், சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு திருநல்லூருக்குத் திரும்பிவிடுவார்.

23
சில நாட் சென்றபின், அப்பமூர்த்தி திருநல்லூரி னின்றும் நீங்கி, திருப்பழனத்தை வணங்கிக்கொண்டு, திங்க ளூரின் வழியாகச் சென்ருர் . செல்லும்பொழுது, அவ் வூரிலே அப்பூதியடிகளுயனர் என்பவர் தம்முடைய புத்திரர் *ளுக்குத் திருநாவுக்கரசு என்னும் பெயரைத் தரித்தும் தம்முடைய அன்ன சத்திரம் கிணறு குளம் தண்ணிர்ப்பந்தல் முதலியவற்றிலும் தனித்தனியே “இது திருநாவுக்கரசு நாயஞருடையது” என்று தீட்டியுமிருத்தலைக் கேள்வியுற்று அவருடைய வீட்டுக்கு எழுந்தருளினர். அப்பூதிநாயஞர் அப்பமூர்த்தியைத் தம்முடைய மனைவியார் புத்திரர் முதலாயினரோடும் வணங்கி,அங்கே திருவமுது செய்யும்படி பிரார்த்தித்து, அதற்கு அந்நாயனூர் உடன்பட்டது கண்டு, அமுது சமைப்பித்து, தமது புத்திரராகிய மூத்த திருநாவுக் கரசை நோக்கி, “தோட்டத்திற் சென்று வாழைக்குருத்து அரிந்து கொண்டுவா’ என்று சொல்லியனுப்பினர். அவர் விரைந்து வாழைக்குருத்து அரியப் புகுந்தபொழுது, ஒரு பாம்பு அவரைத் தீண்டிற்று. அதை அவர் பேணுமல், அப்பமூர்த்தி திருவமுது செய்யும்படி குருத்தை அரிந்து கொண்டு, விரைவிலே திரும்பிவந்து, விஷந் தலைக்கொள்கை யால் மயக்கமடைந்து, வாழைக்குருத்தைத் தம்முடைய தாயார் கையிலே கொடுத்துவிட்டு, கீழேவிழுந்து இறந்தார். அதுகண்டு, அப்பூதிநாயனரும், அவர் மனைவியாரும், "ஐயோ! இனி நாயனர் திருவமுது செய்யாரே” என்று துக்கித்து, சவத்தை மறைத்து வைத்து சிறிதுந் தடுமாற்ற மின்றி அப்பமூர்த்தியிடத்திற்சென்று, “சுவாமீ! எழுந்து வந்துதிருவமுது செய்தருளல் வேண்டும்” என்று பிரார்த்தித் தார்கள். அப்பமூர்த்தி அங்கு நிகழ்ந்த உண்மையைத் திருவருளினல் அறிந்துகொண்டு, அவர்களுடைய அன்பை

Page 15
24
நினைந்து திருவருள் சுரந்து, சவத்தைச் சிவாலயத்தின் முன் கொணர்வித்து “ஒன்றுகொலா மவர்சிந்தை” என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினர். உடனே அப்புத் திரர் உணர்வு பெற்று எழுந்தார். அப்பூதிநாயனர் தம்முடைய புத்திரரி பிழைத்ததைக்கண்டும்,அதைக்குறித்துச் சந்தோஷி யாமல், அப்பமூர்த்தி திருவமுது செய்யாதிருந்தமையைக் குறித்துத் துக்கித்து வருந்தினர். அவ்வருத்தத்தை நீக்கும் பொருட்டு, அப்பமூர்த்தி அவருடைய வீட்டிற்சென்று, திருவமுது செய்து, அங்கே எழுந்தருளியிருந்தார். சில நாட்சென்றபின், திங்களூரினின்றும் நீங்கி, திருப்பழனத் திற்குப் போய், சுவாமி தரிசனஞ்செய்து, 'சொன்மாலை பயில்கின்ற” என்னுந் திருப்பதிகம் பாடினர். அத்திரு' பதிகத்திலே அப்பூதிநாயனரை *அழலோம்பு மப்பூதி குஞ்சிப்பூவாய் நின்றசேவடியாய்" எனச் சிறப்பித் தருளிர்ை. அங்கே எழுந்தருளியிருக்கு நாளிலே, திருச் சோற்றுத்துறை முதலாகிய ஸ்தலங்களுக்கும் போய் வருவார்.
வெகுநாட்சென்றபின் அப்பமூர்த்தி திருநல்லூருக்குச் சென்று, சிலநாள் அங்கே வசித்து, பின் திருவாரூருக்குப் போகக் கருதி, அதனை நீங்கி, பழையாறை, திருவலஞ்சுழி கும்பகோணம், நாலூர், திருச்சேறை, திருக்குடவாயில், திரு நறையூர், திருவாஞ்சியம், பெருவேளூர், திருவிளமர் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு; திருவாரூரை அடைந்து சுவாமி தரிசனஞ்செய்து திருப்பதிகங்கள் பாடிக்கொண்டிருந் தார். ஒரு திருப்பதிகத்திலே, நமிநந்தியடிகள் நீரிஞல் விளக் கேற்றினமையைச் சிறப்பித்துப் பாடினர். அந்தத் திருப் பதியில் இருக்கின்ற அரனெறி யென்னும் ஆலபத்தையும்

25
ഖഞ്ഞ ചെ திருப்பதிகம் பாடினர். அங்கிருக்கு நீாட்களிலே, திருவலிவலம், கீழ்வேளூர், கன்ருப்பூர் என்னும் ஸ்தலங் களுக்கும் போய், திருப்பதிகம் பாடிக்கொண்டு, அவ்விடத் திற்குத் திரும்பிவிட்டார். திருவாதிரை நகடித்திரத்திலே வீதிவிடங்கப்பெருமாளுடைய திருவிழாவை அடியார் களுடன் சேவித்து, மகிழ்ந்து இருந்தார். அந்நாட்களிலே திருப்புகலூருக்குப் போம்படி கருதி, திருவாரூரினின்றும் நீங்கி, பல தலங்களையும் பணிந்து சென்ருர், அந்நாளிலே திருஞானசம்பந்தமூர்த்திநாயனூர் திருப்புகலூருக்கு வந்து சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு முருகநாயனருடைய திரு மடத்தில் எழுந்தருளியிருந்தார். ஒருநாள் அப்பமூர்த்தி திருவாரூரினின்றும் திருப்புகலூரை நோக்கி, எழுந்தருளி வருகின்ருர் என்று கேள்வியுற்று, அடியார் கூட்டத்தோடுஞ் சென்று, அவரை எதிர்கொண்டார். அப்பமூர்த்தி திரு ஞானசம்பந்தமூர்த்திநாயனரை வணங்க, திருஞானசம்பந்த மூர்த்திநாயனரும் அப்பமூர்த்தியை வணங்கி, ‘அப்பரே நீர் வரும் நாளிலே திருவாரூரிலே நடந்த பெருமையைச் சொல்லும்” என்றர். அப்பமூர்த்தி திருவாதிரைச்சிறப்பை *முத்துவிதான மணிப்பொற்கவரி” என்னுந் திருப்பதி கத்தினலே சொல்லியருளினர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயஞர் அதைக்கேட்டு, நான் திருவாரூருக்குப் போய் சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு இவ்விடத்திற்கு வரு வேன்’ என்று சொல்லித் திருவாரூருக்கு எழுந்தருள;அப்ப் மூர்த்தி திருப்புகலூருக்கு வந்து சுவாமிதரிசனஞ்செய்து திருப்பதிகம் பாடிக்கொண்டிருந்தார்.திருச்செங்காட் டங்குடி திருநள்ளாறு, சாத்தமங்கை, திருமருகல் என்னுந் தலங்க ளுக்குப் போய்த் தரிசனஞ்செய்துகொண்டு, திருப்புகலூருக் குத் திரும்பினர். சிலநாட் சென்றபின், திருஞானசம்பந்த

Page 16
26
மூர்த்திநாயனர் திருவாரூரினின்றும் நீங்கி, திருப்புகலூருக்கு எழுந்தருளி வந்தார். அப்பமூர்த்தி அவரை எதிர்கொண்டு அழைத்து வந்து, முருகநாயனருடைய திருமடத்தில் அவ ரோடும் எழுந்தருளியிருந்தார். இருக்குநாளிலே, சிறுத் தொண்டநாயனரும், திருநீலநக்கநாயனரும் அவர்களிடத் திற்கு வந்து, அவர்களோடு இருந்தார்கள்.
சிலநாளாயினபின், திருஞானசம்பந்தமூர்த்திநாயனரும் அப்பமூர்த்தியும் திருப்புகலூரினின்றும் நீங்கி, திருநீலநக்க நாயனரும் சிறுத்தொண்டநாயனரும் 7 முருகநாயஞரும் மற்றையடியார்களும் அநுமதிபெற்றுக் கொண்டு போய்விட திருவம்பர் என்னுந்தலத்தை அடைந்து வணங்கி, திருக் கடவூரிற்சென்று வீரட்டானே சுரரைப் பணிந்து, குங்குவியக் கலயநாயனுரால் அவருடைய திருமடத்திலே திருவமுது செய்விக்கப்பட்டு; திருக்கடவூர்மயானத்தையும் வணங்கி, திருவாக்கூர் முதலிய திருப்பதிகளைத் தரிசித்து, திருவீழி மிழலையை அடைந்து சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு அங்கே எழுந்தருளியிருந்தார்கள். சிலநாட்சென்றபின், மழையின்மையாலும் காவேரிப்பெருக்கு இன்மையாலும் பஞ்சம் உண்டாக; அதனுல் உயிர்களெல்லாம் வருத்த முற்றன. அக்காலத்திலே பரமசிவன் திருஞானசம்பந்த மூர்த்திநாயனருக்கும் திருநாவுக்கரசு நாயனருக்குந் தோன்றி 'காலபேதத்தினலே நீங்கள் மனவாட்டம் அடையீர்களாயி னும் ,உங்களை வழிபடுகின்ற அடியார்களுக்குக் கொடுக்கும் பொருட்டு, நாம் உங்களுக்குப் படிக்காசு தருகின்ருேம்” என்று திருவாய்மலர்ந்து, திருக்கோயிலின் கிழக்குப்பீடத் திலும் மேற்குபீடத்திலும், தினந்தோறும் படிக்காசு வைத்தருளினர். அவ்வடியார்களிருவரும் தாங்கள் பெற்ற படிக்காசுகளை அனுப்பிப் பண்டங்கள் வாங்குவித்து, அமுது

27
சமைப்பித்து, "சிவனடியார்கள் எல்லாரும் வந்து போசன பண்ணக்கடவர்கள்’ என்று இரண்டு காலங்களினும் பறை சாற்றித் தெரிவித்து, அன்னமிட்டார்கள். திருஞான சம்பந்தமூர்த்திநாயனர் தாம் பரமசிவனுக்குக் குமாரராகை யாலும் பாடற்ருெண்டு மாத்திரஞ் செய்கையாலும் தாம் பெற்ற படிக்காசை வட்டங்கொடுத்து மாற்றப்பெற்ருர், அப்பமூர்த்தியோ, தாம் அக்கடவுளுக்கு அடியராகை யாலும், பாடற்ருெண்டோடும் கைத்தொண்டுஞ் செய்கை யாலும், தாம்பெற்றபடிக்காசை வட்டங்கொடாது மாற்றப் பெற்றர். இவருடைய திருமடங்களினும், நாடோறுஞ் சிவனடியாரிகள் போசனம் பண்ணி மகிழ்ந்திருக்குங் காலத் திலே, எங்கும் மழை பெய்து, தானிய முதலியவைகள் மிக விளைந்தமையால் பஞ்சம் நீங்கிற்று,
திருஞானசம்பந்தமூர்த்திநாயனுரும், திருநாவுக்கரசு நாயனுரும் திருவீழிமிழலையினின்றும் நீங்கி, திருவாஞ்சிய முதலிய ஸ்தலங்களை வணங்கிக்கொண்டு, வேதாரணியத்தை அடைந்து, ஆலயத்திலே பிரவேசித்து வலஞ்செய்து, வேதங்கள் அருசித்துத் திருக்காப்புச்செய்த அந்நாண் முதல் இந்நாள்வரைக்கும் அடைக்கப்பட்டே யிருக்கின்ற திருக்கதவுக்கு முன் வந்து, வேதங்களாலே திருக்காப்புச் செய்யப்பட்ட அத்திருக்கதவை அடியார்கள் நீக்கப்பெருமை யினுல் வேருேர் பக்கத்திலே ஓர் வாயிலிட்டு அதன்வழியே செல்கிள்ளுர்கள் என்பதைக் கேட்டறிந்தார்கள். திருஞான சம்பந்தமூர்த்திநாயனுர் அப்பமூர்த்தியை நோக்கி "அப்பரே! நாம் எப்படியும் சுவாமியை அபிமுகத்திருவாயில் வழியே சென்று தரிசிக்கவேண்டும். ஆதலால் இந்தத் திருக்கதவு திறக்கப்படும் பொருட்டு நீரே திருப்பதிகம் Lurr Gub” என்ருர், அப்பமூர்த்தி 'பண்ணினேர்மொழி

Page 17
28
யாள்” என்னுந் திருப்பதிகத்தைக் கதவு திறக்கப்படும் பொருட்டுப் பாட, அது திறக்கப்படாமல் தாழ்த்தது. அது கண்டு "இரக்கமொன்றிலீர்” என்று திருக்கடைக்காப்பிலே பாடி வணங்கினர். உடனே வேதாரணியேசுரருடைய திருவருளினுலே திருக்கதவு திறக்கப்பட்டது. அப்பொழுது நாயன்மாரிருவரும் விழுந்து நமஸ்கரித்தார்கள் அடியார் ளெல்லாரும் ஆனந்தகோஷஞ்செய்தார்சள். நாயன்மரிரு வரும் பேரின்பவெள்ளத்தில் அமிழ்ந்தி எழுந்து, உள்ளே புகுந்து, சுவாமி தரிசனஞ்செய்து, திருப்பதிகங்கள் பாடி அரிதில் வெளியே வந்தார்கள். அப்போது திருநாவுக்கரசு நாயனுர் திருஞானசம்பந்தமூர்த்திநாயனரை நோக்கி, ‘சுவாமியுடைய திருவருளினலே இந்தத்திருக்கதவு திறக் கப்பட்டும் அடைக்கப்பட்டும் என்றும் வழங்கும்பொருட்டு தேவரீர் இது அடைக்கப்படும்படி திருப்பதிகம் பாடியருளும்’ என்றர்.திருஞானசம்பந்தமூர்த்திநாயனர் திருப்பதிகத்திலே முதற்பாட்டுப் பாடிய மாத்திரத்திலே திருக்கதவு அடைக் கப்பட்டது. அது கண்டு, நாயன்மாரிருவரும் திருவருளை வியந்து களிப்புற்று வணங்கிஞர்கள். திருஞானசம்பந்த மூர்த்திநாயனர் தாம் எடுத்த திருப்பதிகத்தை முடித்தருளி னர். அன்று தொடுத்து அந்தத் திருக்கதவு திறத்தலும் அடைத்தலுமாகிய வழக்கம் என்றும் நிகழ்ந்தது. அங்கே நிகழ்ந்த அற்புதத்தைக் கண்ட அடியார்களெல்லாரும் ஆச் சரியங்கொண்டு, உரோமாஞ்சக்கொள்ள, சொரிய, நாயன்மாரிருவருடைய திருவடிகளிலும் விழுந்து நமஸ்கரித்தார்கள்.
நாயன்மாரிருவரும் திருமடத்தை அடைந்தபின்,
திருநாவுக்கரசுநாயனர், தாந்திருப்பதிகம் முழுவதும் பாடிய பின்னே திருக்கதவு திறந்த அருமையையும் திருஞான

29
சம்பந்தமூர்த்திநாயனர் முதற்பாட்டைப் பாடினவுடனே கதவு அடைத்த எளிமையையும் நினைந்து, " சுவாமியுடைய திருவுள்ளம் இதுவென்று அறியமாட்டாமல் அயர்கின் றேன்” என்று கவன்று, மிக அஞ்சி, திருமடத்தில் ஒரு பக் கத்திலே போய், வேதாரணியேசுரருடைய திருவடிகளைச் சிந்தித்துக்கொண்டு அருநித்திரை செய்தார். அப்பொழுது பரமசிவன் அவரிடத்திற்சென்று, “நாம் வாய்மூரில் இருப் போம். அவ்விடத்திற்குத் தொடர்ந்து வா’ என்று அரு ளிச்செய்தார். அப்பமூர்த்தி,
‘எங்கே யென்னை யிருந்திடங் தேடிக்கொண்
டங்கே வந்தடை யாள மருளினுர் தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வஞ ரங்கே வாவென் றுபோனு ரதென்கொலோ’
என்னுந் திருப்பதிகம் பாடிக்கொண்டு எழுந்து, வேதாரண் யத்தினின்றும் புறப்பட்டு, விரைந்து போக; சுவாமி அவ ருக்கு முன்னகத்தாம் அவருக்கு முன் காட்டியருளிய திருக் கோலத்தோடும் நடந்தருளினர். நெடும்பொழுது பரமசிவ னுக்குப் பின்னகச்செல்கின்ற அப்பமூர்த்தி அவரைச் சமீ பிக்கப்பெற்றிலர். சுவாமி சமீபத்திலே காட்சி கொடுப்பவர் போல ஒரு திருக்கோயிலை எதிரே காண்பித்து, அதனுள்ளே புகுந்தருள அப்பமூர்த்தியும் அவ்விடத்திலே விரைந்து தொடர்ந்தார். திருஞானசம்பந்தமூர்த்திநாயனரும் அப்ப மூர்த்தி திருவாய்மூருக்குப் போகின்றர் என்று கேள்வியுற்று வந்து சேர்ந்தார். அப்பமூர்த்தி சுவாமி மறைந்தமையைக் குறித்துத் துக்கித்து, "அடியார்களிற் சிறந்த திருஞானசம்ப பந்தமூர்த்திநாயனரே திறக்கவேண்டும் என்பதை நினையா மல் திறந்து குற்றஞ்செய்த சிறியேனுக்கு ஒளிக்கலாம். ஒரு

Page 18
30
திருப்பதிகத்தின் முதற்பாட்டாலேயே திருக்கதவை அடைப்பித்த திருஞானசம்பந்தமூர்த்திநாயனர் இங்கே வந் திருக்கின் ருர். அவருக்கு எப்படி ஒளிக்கலாம்” என்ருர் உடனே பரமசிவன் திருஞானசம்பந்தமூர்த்திநாயனருக்குக் காட்சிகொடுத்தருளினர். திருஞானசம்பந்தமூர்த்திநாயஞர் தரிசித்து ஸ்தோத்திரம்பண்ணி, அப்பமூர்த்தியுங்காணும்படி காட்ட, அப்பமூர்த்தியும் தரிசித்து "பாடவடியார் பரவக் கண்டேன்” என்னுந் திருப்பதிகம் பாடினர். சுவாமி அத் திருப்பதிகத்தை ஏற்றுக் கொண்டு எழுந்தருள; நாயன்மா ரீருவரும் திருவாய்மூரை அடைந்து, சுவாமிதரிசனஞ்செய்து கொண்டு சிலநாள் அங்கிருந்த பின் வேதாரணியத்துக்குத் திரும்பிவந்து, அங்கே சுவாமி தரிசனஞ் செய்துகொண் டிருந்தார்கள்.
இருக்கு நாளிலே, திருஞானசம்பந்தமூர்த்திநாயனர் மதுரையில் இருக்கின்ற பாண்டியனுடைய மனைவியாராகிய மங்கையர்க்கரசியாரும் மந்திரியாராகிய குலச்சிறை
நாயனரும் அனுப்பிய தூதர்களாலே பாண்டிநாட்டில்ே ஆருகதசமயம் பரம்டச் சைவம் குன்றிய சமாசாரத்தைக் கேள்வியுற்று, சமணர்களைவென்று சை வஸ்தாபன்ஞ் செய் யும் பொருட்டு, அவ்விடத்திற்குச் செல்ல எழுந்தார். அப் பொழுது திருநாவுக்கரசு நாயனுர் சமணர்களுடைய கொடுமையை நினைந்து, மதுரைக்குப் போகாதிருக்கும்படி திருஞானசம்மந்தமூர்த்திநாயனுரைத் தடுக்க திருஞான சம்பந்தமூர்த்திநாயனர் அதற்கு இசையாமல் பாண்டி நாட்டுக்கு எழுந்தருளினர்.
திருநாவுக்கரசுநாயனுர் வேதாரணியத்திலே சிலநாள் இருந்து,பின் அதனை நீங்கி, திருநாகைக்காரோணம் முதலிய ஸ்தலங்களை வணங்கிக்கெண்டு, திருவீழிமிழலையை அடைந்து, சிலநாள் அங்கிருந்து, பின் திருவாவடுதுறையிற்

31
சென்று, சுவாமிதரிசனம் பண்ணி, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனருக்கு ஒரு திருப்பதிகத்தின் பொருட்டு ஆயிரஞ்செம் பொன் கொடுத் கருளிய திறத்தை "மாயிருஞாலமெல்லாம்’ என்னுந் திருப்பதிகத்தினலே புகழ்ந்துபாடி, பாழையாறை யிற் சென்ருர். அங்கே வடதளி என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற சிவலிங்கப்பெருமானைச் சமணர்கள் மறைத்து திருத்தலைக் கேள்வியுற்று, சமீபமாகிய ஓரிடத்திற்சென்று திருவமுதுசெய்யாமல் சுவாமியை தியானித்து, ‘சுவாமீ! அடியேன் தேவரீருடைய திருவுருவைக்கண்டு வணங்கியன் றிப் போ கேன். அந்தத்திருவுருவை மறைத்த சமணர்க ளுடைய செய்கையைக் கெடுத்தருளும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். சிவபெருமான் அரசனுக்குத் சொப்பனத் திலே தோன்றி, “நாம் சமணர்களால் மறைக்கப்பட்டிருக் கின்ருேம். நாவுக்கரசன் நம்மை வெளிப்படக்கண்டு கும்பிடவேண்டும் என்று சிந்தித்துக்கொண்டிருக்கின்ருன், நீ அந்தச் சமணர்களை அழித்து நமக்கு ஆலயஞ் செய்யவேண் டும்” என்று அருளிச்செய்து, தாம் இருக்கின்ற இடத்தின் அடையாளங்களைத் தெரிவித்து, மறைந்தருளினர். அரசன் விழித்தெழுந்து ஆச்சரியமடைந்து, மந்திரிமாரோடும் விரை விலே திருக்கோயிலிற்சென்று சுவாமி அருளிச்செய்த அடையாளத்தின் வழி கண்டு, சமணர்கள் செய்த வஞ் சனையை உணர்ந்து, அப்பமூர்த்தியை வணங்கி, அந்தச் சமணர்களை யானைகளாலே மிதிப்பித்துக் கொன்று, பரமசிவ னுக்கு விமானஞ்செய்து, நிபந்தங்கள் அமைத்தான். அப்பமூர்த்தி உள்ளே புகுந்து, சுவாமியைத் தரிசித்து,
'தலையெலாம் பறிக் குஞ்சமண் கையரு ணிலையி னன்மறைத் தான்மறைக் கொண்ணுமே யலையி ஞர்பொழி லாறை வடதளி நிலையி ஞனடி யேநினைந் துய்ம்மினே என்னுந் திருப்பதிகம் பாடி சிலநாள் அங்கிருந்தார்.

Page 19
32
பின் அவ்விடத்தினின்றும் நீங்கி, திருவானைக்கா, *றும்பியூர், திருச்சிராப்பள்ளி, கற்குடி, திருப்பராய்த்துறை என்னுந் தலங்களை வணங்கிக்கொண்டு, திருப்பைஞ்ஞீலியை நோக்கிச்சென்ருர், செல்லும் வழியிலே, பசியினலும் தாகத் திலுைம் மிக வருந்தி இளைத்தார். இளைத்தும், சித்தமலை யாமல் நடக்க, பாமசிவன் அவருடைய வருத்தத்தை நீக்கும் பொருட்டு வழியிலே ஒரு சோலையையும் குளத்தையும் உண் டாக்கி, ஒருபிராமணவடிவங்கொண்டு பொதி சோறுவைத்துக் கொண்டிருந்தார். திருநாவுக்கரசுநாயனர் தமக்குச் சமீபத் தில் வந்தவுடனே ஐயர் அவரை நோக்கி, "நீர் வழிநடந்து மிக இளைத்துப்போனிர். என்னிடதிலே பொதிசோறு இருக் கின்றது. புசித்து இந்தக் குளத்திலே சலபபானம் பண்ணி இளைப்பு நீங்கிக்கொண்டு போம்” என்று சொல்லிப், பொதி சோற்றைக் கொடுத்தார். அப்பமூர்த்தி அதை வாங்கிப் புசித்துச் சலபானம் பண்ணிக்கொண்டு இளைப்பு நீங்கி இருந்தார், சுவாமி அவரை நோக்கி “நீர் எங்கே போகின் மீர்” என்று கேட்க; வாகீசர் "நான் திருப்பைஞ்ஞீலிக்குப் போகின்றேன்” என்று சொல்லிப் போஞர். சிவபிரான் “நானும் அங்கே தான் போகின்றேன் என்று சொல்லி, அவருடனே கூடிச்சென்று, திருப்பைஞ்ஞீலியைச் சமீபித்த வுடனே மறைந்தருளினர். அப்பமூர்த்தி அதுகண்டு திரு வருளை வியந்து, கண்ணிர் பொழிந்தழுது விழுந்து நமஸ் கரித்து, எழுந்து, ஆலயத்திற் சென்று சுவாமியை வணங்கி. திருப்பதிக ம பாடி,கைத்தொண்டு செய்துகொண்டிருந்தார். சிலநாளாயின பின், அவ்விடத்தினின்றும் நீங்கி,திருவண்ணு மலைக்குச் சென்று சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு, தொண்டைநாட்டை அடைந்து, திருவோத்தூரை வணங்கிக் கொண்டு, காஞ்சிபுரத்திற்சென்று திருவேகம்பம், திருக் கச்சிமயானம், திருமேற்றளி, திரு மாற்பேறு என்னுந் தலங்

33
களை வணங்கிக்கொண்டு, சிலநாள் அங்கிருந்தார். பின் அங்குநின்றும் புறப்பட்டு, திருக்கழுக்குன்று, திருவான்மி யூர், திருமயிலாப்பூர், திருவொற்றியூர், திருப்பாசூர், திரு வாலங்காடு, திருக்காரிக்கரை என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு, தென் கைலாசமாகிய திருக்காளத்திமலையை அடைந்தார். அங்கே பொன்முகலியிலே ஸ்நானஞ்செய்து கொண்டு, மலையின் மேல் ஏறி, சுவாமியை வணங்கித் திருப் பதிகம்பாடி, அவருடைய வலப்பக்கத்திலே நிற்கின்ற கண் ணப்பநாயனருடைய திருவடிகளை வணங்கி, சிலநாள் அந்த ஸ்தலத்திலே வசித்தார்.
பின் உத்தரகைலாசத்திலே பரமசிவன் வீற்றிருக்கின்ற திருக்கோலத்தைத் தரிசிக்க விரும்பி, திருக்காளத்தி மலையி னின்று நீங்கி, உத்தரதிசையிலிருக்கின்ற திருப்பருப் பதத்தை அடைந்து வணங்கி, திருப்பதிகம் பாடிச்சென்று, காசியை வணங்கிக்கொண்டு, அதற்கு அப்பால் இருக்கின்ற கற்சுரத்திலே சாகமூலபலங்கள் புசித்தலையும் ஒழிந்து, திருக்கைலாச தரிசனஞ் செய்யல் வேண்டும் மென்னும் பேராசையாய் இராப்பகல் விடாது நடந்தார். அதனல் அவருடைய பாதங்கள் பரடுவரைக்குந் தேய்ந்தன. தேய்ந் தும், ஆசை மேலீட்டினுல் தம்முடைய இரண்டு கைகளையும் ஆதரவாகக்கொண்டு தாவிச்சென்றார். அந்தக்கைகளும் மணிக்கட்டு அசைந்து கரைந்து சிதைந்தன. பின்னும் ஆசை சிறிதுங் குன்றுதலின்றி மேலிடுதலால் கொடிய நெருப்பை யொத்த வெவ்விய பருக்கைக் கற்கள் பொருந்திய மார்க் கத்தில் மார்பினுல் நகர்ந்து போயினுர், மார்பும் தசை நைந்து சிந்த, எலும்புகளும் முறியலுற்றன. பின் புரண்டு புரண்டு போயினர். அதனுல் தேகமுழுதும் அரைய,நாயனர் திருக்கைலாச கிரியினிடத்தே பதிந்த அன்பின் உறுதியினுல்

Page 20
34.
மெல்ல நகருதற்கு முயன்றும், கூடாமையால் வழியிலே கிடந்தார். அப்பொழுது பரமசிவன் அப்பமூர்த்தியை மீளவும் தமிழ்நாட்டிற் செலுத்தி அந்நாட்டிலுள்ளோர் உய்யும்பொருட்டுத் தமிழ்வேதமாகிய தேவாரம் பாடுவித் தற்கும், அவ்வப்பமூர்த்தியுடைய கருத்தையும் மாறின்றி முடித்தற்கும், திருவுளங்கொண்டு, அவ்விடத்தில் ஒரு தடா கத்தை உண்டாக்கி, ஒரு முனிவர் வடிவங்கொண்டு, அந்நாய ணுருக்கு முன் வந்து நின்று, “நீர் அங்கங்கள் எல்லாம் அழிந்துபோக வருத்தத்தோடும் இந்தக்கொடிய காட்டில் எதன்பொருட்டு வந்தீர்’ என்று கேட்டார் அப்பமூர்த்தி மரவுரியாடையையும் யஞ்ஞோபவிதத்தையும் சடைமுடியை யும் விபூதிதாரணத்தையுமுடைய அந்த முனிவரைக் கண்ட பொழுதே பேசுதற்கு அற்பசத்தியுண்டாக, அவரை நோக்கி, "முனிவரே! நமது கடவுளாகிய பரமசிவன் உத்தர கைலாசத்திலே உமாதேவிசமேதராய் வீற்றிருக்கின்ற திருக் கோலத்தைத் தரிசித்து வணங்கும்பொருட்டு விரும்பி வந்தேன்’ என்ருர், அதற்கு முனிவர் ‘தேவர்களாலும் அடையப்படுதற்கு அரிதாகிய திருக்கைலாசகிரி மனிதர் களால் அடையப்படுதற்கு எளிதா! நீர் இந்தக் கொடுஞ் சுரத்திலே வந்து என்செய்தீர்!இனித் திரும்பிவிடுதலே உத்த மம்” என்ருர். உடனே அப்பமூர்த்தி ‘திருக்கைலாசகிரியில் இருக்கின்ற சிவபெருமானுடைய திருக்கோலத்தைத் தரிசித் தன்றி அநித்தியமாகிய இந்தத் தேகத்தைக் கொண்டு திரும் பேன்’ என்று மறுத்தார். சுவாமி அவருடைய துணிவைக் கண்டு மறைந்தருளி ஆகாயத்தில் அசரீரியாகி நின்று *நாவுக்கரசனே எழுந்திரு” என்ருர் . உடனே அப்ப மூர்த்தி அழிந்த உறுப்புக்களெல்லாம் முன்போல நிரம்பப் பெற்றுச் சிறந்த திருமேனியோடும் எழுந்து, “சுவாமீ! தேவரீர் திருக்கைலாசகிரியில் எழுந்தளியிருககின்ற திருக்

35
கோலத்தை அடியேன் தரிசித்து வணங்கும்பொருட்டு அருள்செய்யும்” என்று பிரார்த்தித்து, நமஸ்காரம்பண்ணி குர்ை அப்பொழுது பரமசிவன் “நீ இந்தத் தடாகத்திலே முழுகித் திருவையாற்றை அடைந்து, நம்மைக் கைலாச கிரியில் வீற்றிருந்தபடி அந்த ஸ்தலத்திலே தரிசித்து வணங்கு” என்று பணித்தருளினர்.
அப்பமுர்த்தி அப்பணியைச் சிரமேற்கொண்டு, பூரிபஞ் சாக்ஷரத்தை ஒதி, தடாகத்திலே முழுகி, திருவையாற்றி லிருக்கின்ற ஓர் வாவியின் மேலே தோன்றிக் கரையிலேறி வழியிலே அந்தத் திருப்பதியிலுள்ள சராசரங்கள் தங்கள் தங்கள் துணையோடும் பொலிதலை கண்டு, அவைகளைச் சிவமும் சத்தியுமாகப் பார்த்து வணங்கிக்கொண்டு, ஆலயத் துக்கு முன்னே சென்ருர். அவ்வாலயம் திருக்கைலாசகிரி யாக, அதனிடத்தே, வேதங்களும் சிவாகமங்களும் இரு பக்கத்திலும் வாழ்த்தவும், தும்புரு நாரதரென்னும் இருவ ரும் யாழ் வாசிக்கவும், பிரம்ம விஷ்ணுக்களிருவரும் வஸ்தி திரத்தை ஒதுக்கி வாயைக் கையினலே பொத்திக்கொண்டு ஒதுங்கி நின்று தத்தங்குறைகளைச் சொல்லவும், பூதகணங் கள் கடைதோறும் காக்கவும், தேவர் சித்தர் அசுரர் சாரணர் காந்தருவர் கின்னரர் இயக்கர் விஞ்சையர் முதலர் கிய கணத்தவர்கள் துதிக்கவும், திருநந்திதேவர் கையிலே பிரம்பைத் தரித்துக்கொண்டு பணிசெய்யவும், காருண்ணிய ஸ்வரூபியாகிய சிவபெருமான் ஒரு திவ்வியாசனத்தின் மேலே அநந்தகோடி சூரியபிரகாசத்தோடும் பார்வதி சமேதராய் வீற்றிருந்தருளினர். அப்படியிருத்தலை அப்ப மூர்த்தி கண்டமாத்திரத்திலே விழுந்து நமஸ்கரித்து உரை தடுமாற, உரோமஞ்சிலிர்ப்ப, ஆனந்தவருவி சொரிய, கரை யிறந்த அருட்பெருங்கடலிலே அன்புநதி ஈர்த்துச்செல்ல,

Page 21
36
மிதந்துபோய், தெவிட்டுதலில்லாத அளவிறந்த சிவானந்தா மிர்தத்தைப் பருகி, சந்நிதானத்திலே ஆனந்தக்கூத்தாடித் திருத்தாண்டகங்கள் பாடினர். திருக்கைலாசபதியாகிய கடவுள் தம்முடைய திருக்கோ லத்தை இப்படி அப்பமூர்த் திக்குத் தரிசிப்பித்து, பின் மறைந்தருள அவ்வப்பமூர்த்தி மனம் வருந்தி, பின் ஒருவாறு தெளிந்து, தாம் முன் கண்ட வண்ணம், “மாதர்ப் பிறைக்கண்ணி யானை' என்னுந் திருப் பதிகம் பாடி, பின்னும் பலவகைத் திருப்பதிகங்கள் பாடிக் கொண்டு அந்தத்திருப்பதியில் இருந்தார்.
சிலநாட்சென்றபின், திருவையாற்றினின்றும் நீங்கி, நெய்த்தானம், மழபாடி முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு, திருப்பூந்துருத்தியை அடைந்து சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகங்கள் பாடி, அங்கே ஒரு திருமடங்கட்டு வித்து, பல்வகைத் தாண்டகம், தனித்திருத்தாண்டகம், அடைவுத்திருத்தாண்டகம், திருவங்கமாலை முதலிய திருப் பதிகங்களைப் பாடிக்கொண்டிருந்தார். இருக்கும்பொழுது பாண்டிநாட்டிற்சென்று சமணர்களை வாதில் வென்று சைவ ஸ்தாபனம் பண்ணிப் பாண்டியராஜனுடைய கூனை நிமிர்த் தருளிய திருஞானசம்பந்தமூர்த்திநாயனர் அந்நாட்டினின்று நீங்கி, சோழமண்டலத்தை அடைந்து அப்பமூர்த்தி திருப் பூந்துருத்தியிலிருத்தலைக் கேள்வியுற்று, அதற்குச் சமீபத் திலே வந்தருளினர். அதை அப்பமூர்த்தி அறிந்து மன மகிழ்ந்து, அவரை எதிர்கொண்டு வணங்கும்படி சென்று, அவர் வரும் எல்லையை அடைந்து, திருச்சின்னத்தின் ஓசை யைக் கேட்டு அவரைத் தரிசிக்கும்படி சூழ்ந்த அடியார்க ளுடைய நெருக்கத்தினலே தம்மை ஒருவரும் இன்னு ரென்று அறியாதபடி உட்புகுந்து, அவர் ஏறிவரும் முத்துச் சிவிகையைத் தாங்குகின்றவர்களோடு தாமும் ஒருவராய்த்

37
தாங்கிக்கொண்டு வந்தார். திருஞானசம்பந்தமூரித்தி நாயனர் திருப்பூந்துருத்திக்கு மிகச் சமீபித்தவுடனே "அப்பர் எங்குற்ருர்’ என்று வினவ, அதைக் கேட்ட அப்ப மூர்த்தி"அடியேன் தேவரீரைத்தாங்கிவரும் பெருவாழ்வைப் மெற்று இங்குற்றேன்’ என்ருர், உடனே திருஞானசம்பந்த மூர்த்திநாயனர் அதிசீக்கிரஞ் சிவிகையினின்றும் இறங்கி மனப்பதைப்போடு அப்பமூர்த்தியை வணங்க, இவரும்" தம்மை அவர் வணங்குவதற்குமுன் தாம் அவரை வணங்க; அதுகண்ட அடியார்களெல்லாரும்-வணங்கி,ஆனந்தகோஷஞ் செய்தார்கள். திருஞானசம்பந்தமூர்த்திநாயனர் வாகீச ரோடும் திருபூந்துருத்தியிற்சென்று, சுவாமிதரிசனஞ் செய்துகொண்டிருந்தார். திருஞானசம்பந்தமூர்த்திநாயனர் தாம் பாண்டிநாட்டிற்சென்று, சமணர்களை வாதில் வென்ற தையும், பாண்டியனுடைய கூனை நிமிர்த்ததையும், அந்நா டெங்கும் விபூதியை வளர்த்ததையும், பாண்டிமாதேவியா ராகிய மங்கையர்க்கரசியார் மந்திரியாராகிய குலச்சிறை நாயஞர் என்கின்ற இருவருடைய பெருமையையும், வாகீசருக்குச் சொல்லியருளினர். வாகீசர் தாந்தொண்டை நாட்டுக்குச் சென்று அங்குள்ள சிவஸ்தலங்களை வணங்கி யதைத் திருஞானசம்பந்தமூர்த்திநாயனருச்குச் சொல்லி யருளினர்.
திருஞானசம்பந்தமூர்த்திநாயனுர்தொண்டைநாட்டுக்கு யாத்திரைசெய்ய விரும்பித் திருப்பூந்துருத்தியினின்றும் புறப்பட வாகீசர் பாண்டிநாட்டுக்கு யாத்திரைசெய்ய, விரும்பிப் புறப்பட்டு, அப்பாண்டிநாட்டை அடைந்து திருப்புத்தூரை வணங்கிக்கொண்டு, மதுரையிற்சென்று சுவாமிதரிசனஞ்செய்து திருப்பதிகம் பாடி, பாண்டிமாதேவி யாரும் கூனிமிர்ந்த பாண்டியரும் குலச்சிறைநாயனரும்

Page 22
38
வனங்கித் துதிக்கச் சிலநாள் அங்கிருந்தார். பின் மது ரையை நீங்கி, திருப்பூவணம், இராமேச்சரம், திருநெல் வேலி, திருக்கானப்பேர் முதலாகிய ஸ்தலங்களை வணங்கிக் கொண்டு சோழமண்டலத்துக்குத் திரும்பி வந்து, திருப் புகலுரரை அடைந்தார்.
திருப்புகலூரிலே தினந்தோறும் சுவாமி தரிசனம்பண்ணி திருமுன்றிலிலே கைத்தொண்டு செய்துகொண்டிருந்தார் இருக்கு நாட்களிலே, நின்றதிருத்தாண்டகம், தனித்திருத் தாண்டகம், கூேடித்திரக்கோவை, குறைந்ததிருநேரிசை தனித்திருநேரிசை, நினைந்ததிருநேரிசை, ஆருயிர்த்திரு விருத்தம், தசபுராணத்தடைவு, பாவநாசப்பதிகம், சரக் கரைத் திருவிருத்தம் முதலிய திருப்பதிகங்களைப் பாடினர். பரமசிவன் அந்நாயனருடைய வைராக்கியத்தை யாவருக் கும் காட்டுதற்குத் திருவுளங்கொண்டு, அவர் திருமுன்றி லிலேகைத்தொண்டுசெய்யும்பொழுது உழைவாரம் நுழைந்த விடங்களெங்கும் பொன்னும் நவரத்தினங்களும் பிரகாசித் துக் கிடக்கும்படி அருள்செய்தார். நாயனர் அவைகளைக் கண்டு, அவைகளை அங்கே கிடக்கின்ற பருக்கைக்கற்களோடு சமமாக எண்ணி உழைவாரத்தில் ஏந்திக் குளத்திலே விழ எறிந்துவிட்டார்.
பின்பு கடவுளுடைய திருவருளினல் அரம்பையர்கள் சுவர்க்கத்தினின்றும் இறங்கி வந்து,நாயனுர் திருமுன்னின்று இசைபாடியும், கூத்தாடியும் அவர்மேற் பூக்களைப் பொழிந் தும், அவரை அணைபவர்கள்போலச் சமீபித்தும், அளசம் அவிழ இடைநுடங்க ஒடியும், திரும்பியும், வஸ்திரம் அசையநின்றும், இப்படி அவரை மோகிப்பித்தற்கு யத் தினஞ் செய்தார்கள். செய்தும், சிவபிரானுடைய திருவரு ளையே முன்னிட்டு ஒழுகுகின்ற வாகீசர் தம்முடைய சித்த

39
நிலை சிறிதும் வேறுபடாதபடி, தாஞ்செய்யுந் திருப்பணி யிலே உறுதிகொண்டு, இருவினை முதலியவைகனை முன் னிலைப்படுத்தி "நான் திருவாரூரில் வீற்றிருக்கின்ற சுவா மிக்கு ஆளானேன். உங்களாலே நான் ஆட்டுண்ணேன். நீங்கள் என்னை அலையன்மின்’ என்னுங்கருத்தால், "பொய்ம் மாயப் பெருங்கடலில்" என்னுந் திருத்தாண்டகத்தைப் பாடினர். அரம்பையர்கள் தங்கள் கருத்து முற்ருமையால், அவரை நமஸ்கரித்துக்கொண்டு போய்விட்டார்கள். இந்த நிலைமையைச் சமஸ்தலோகத்தார்களும் அறிந்து துதிக்க லுற்ருர்கள்.
வாகீசர், புகலூரர் என்னை இனிச்சேவடிக்கீழிருத்திடும் என்று எழுகின்ற ஞானத்தினுல் திருவிருத்தங்கள் பலவற் றைப் பாடி,ஒரு சித்திரை மாசத்திலே சதயநசவுத்திரத்திலே “எண்ணுகே னென்சொல்லி யெண்ணு கேனே' என்று திருத் தாண்டகமெடுத்துத் திருப்பாட்டிடிலுகி தோறும் உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே" என்று பாடி,சிவபெருமானுடைய திருவடியை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்
abdewbawamo

Page 23


Page 24


Page 25

|-
|