கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரவிந்தம் (வ. இராசையா நினைவுமலர்)

Page 1

|
இராசையா - நினைவுமலர்

Page 2
இாவக /خ -- கொழும்புதி
அமிழ்ச் சங்கம்
25 3 - 2007
 


Page 3

LDեմi Elլ
2고, 1 ||, || |}
உதிர்வு . . 2, 27
திதி வெண்பா
ஆண்டு வியவதனி லானதொரு மாசியிலே பூண்ட அமாவாசைப் பூண்திதியில் - நீண்டபுகழ் தேடியடைந்த திருவார்வ ராசையா
நாடினார் ஈசன் கழல்.

Page 4

சிவமயம்
பஞ்சபுராணம்
தேவாரம்
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிளவேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.
திருவாசகம்
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு வான் ஆகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
திருவிசைப்பா இடர்கெடுத் தென்னை யாண்டு கொண் டென்னுள்
இருட்பிழம்பற வெறிந்தெழுந்த சுடர்மணி விளக்கினுள் ளொளி விளங்குந்
தூயநற் சோதியுட் சோதீ அடல் விடைப்பாகா அம்பலக் கூத்தா
அயனொடு மாலறியாமைப் படரொளி பரப்பிப் பரந்து நின்றாயைத் ,
தொண்டனேன் பணியுமா பணியே.

Page 5
திருப்பல்லாண்டு
மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடி யார்கள் விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்துங் குடிகுடி
யீசற்காட் செய்ம்மின் குழாம்புகுந் தண்டங் கடந்த பொருளனா
வில்லதேபூர் ஆனந்த வெள்ளப் பொருள் பண்டு மின்று மின்று முள்ள
பொருளென்றே பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் ஆதியாய் நடுவுமாகி அளவிலா அளவுமாகிச் சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகி பேதியா ஏகமாகிப் பெண்ணுமாய் ஆணுமாகிப் போதியாய் நிற்குந்தில்லைப் பொதுநடம் போற்றிபோற்றி.
g
இறைவனது வியாபகம்
தீயினுள் தெறல் நீ, பூவினுள் நாற்றம் நீ, கல்லினுள் மணியும் நீ, சொல்லினுள் வாய்மை நீ, அறத்தினுள் அன்பு நீ, மறத்தினுள் மைந்து நீ, வேதத்து மறை நீ, பூதத்து முதலும் நீ, வெஞ்சுடர்ஒளியும் நீ, திங்களும் அளியும் நீ, அனைத்தும் நீ, அனைத்தின் உட்பொருளும் நீ
- பரிபாடல்
g

மானுடநேயக் கலை இலக்கியவாதி gymeosum LDIT6noyfr
திரு. நீர்வை பொன்னையன்
விபவி மாற்றுக் கலாசார மையம்
தமிழகத்தில் கலை இலக்கிய இரசனையை மேம்படுத்திய மேதை டி. கே. சிதம்பரநாத முதலியார். அதனால்தான் அவர் இரசிகமணி டி.கே.சி. என்று அழைக்கப்பட்டார். ஈழத்துக் குரும்பசிட்டி கனகசெந்திநாதன், இரசனையை அடிநாதமாகக் கொண்ட நவீன இலக்கிய விமர்சனத்தை ஆரம் பிரித்து முன்னெடுத்துச் சென்றார். இதனால் அவருக்கு இரசிகமணி கனகசெந்திநாதன் என்று மகுடம் சூட்டப்பட்டது. இரசிகமணி கனக செந்திநாதனைத் தொடர்ந்து ஈழத்தில் கலை இலக்கியத் துறையில் இராசையா மாஸ்ரர் அவர்கள் இரசனை விமர்சனத்தை மையமாகக் கொண்டு கலை இலக்கியத்தை மேம்படுத்த முனைந்தார்.
நமது நாட்டில் சமூக உணர்வுடைய மனிதநேயர்களை, கர்ம வீரர்களை, அறிவு ஜீவிகளை, நற்பிரஜைகளை உருவாக்க வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் பணியாற்றிய ஒரு உன்னதமான ஆசிரிய பரம்பரை முன்பு இருந்தது. ஆனால் இன்று பணம் பண்ணவேண்டும் என்ற பேராசையுடன் ரியூஷன் கடை களுக்கு ஆலாய்ப் பறக்கின்ற ஆசிரியர்களைப் பெரும்பான்மை யாகக் கொண்ட பரம்பரைதான் உள்ளது. குறிப்பாக, வடபகுதி யில் அன்று ஸ்கந்தவரோதயா ஒறேற்ரர் சுப்ரமணியம், கொக்குவில் இந்து ஹன்டி பேரின்பநாயகம், பரமேஸ்வரா சிவபாதசுந்தரம், ஹாட்லி பூரணம்பிள்ளை, யாழ் இந்துக் கல்லூரி கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் போன்ற ஆசான்கள் கல்வித்துறையில் சேவை புரிந்து சமூக உணர்வுடைய அறிவு ஜீவிகளையும்
3

Page 6
நற்பிரஜைகளையும் உருவாக்கியுள்ளார்கள். அதேவேளை பண்டிதமணி கணபதிப்பிள்ளை, சிவப்பிரகாசம், நீர்வேலி துரைசிங்கம் பண்டிதர், கோவை பஞ்சாட்சரசர்மா, பண்டிதர் வீரகத்தி போன்றவர்கள் புத்தூக்கமுள்ள சமூக உணர்வுள்ள மனிதநேய ஆசிரிய பரம்பரையை உருவாக்கினார்கள். இந்த வழித்தோன்றல்களில் ஒருவர்தான் ஆசான் இராசையா. இவர் கொழும்பு கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ற் கல்லூரியில் முப்பத்துநான்கு வருடங்கள் தொடர்ந்து சிறப்புடன் சேவையாற்றி சமூக உணர்வுள்ள பல நற்பிரஜைகளையும் கலை இலக்கிய வாதிகளையும் உருவாக்கியுள்ளார். இவரை எல்லோரும் மாஸ்ரர் இராசையா என்றுதான் வாஞ்சையுடனும் அன்புரிமையோடும் அழைப்பர்.
இராசையா மாஸ்ரர் அவர்கள் சமூக உணர்வுடையவர்; மனித நேயம்மிக்கவர். இவருக்குப் பூப்போன்ற மென்மையான உள்ளம். அன்பு, பண்பு, பாசம், நேசம், நிதானம், அமைதி போன்ற குணநலன்கள் கொண்ட ஒரு மனிதாபிமானி.
“மனிதன், மனிதனே மாநிலத்தில் மகத்தான படைப்பு.
மனித சக்திக்கு அப்பாற்பட்ட எந்தக் கற்பனையையும் நான் நம்பத் தயாரில்லை.
மனித சக்திக்கு அப்பால் உலகில் எதையும் நான் நம்பத் தயாரில்லை.”
இவ்வாறு மனித மாண்பைப் பற்றிப் போற்றிப் பாராட்டியவன் உலகின் தலைசிறந்த முற்போக்கு எழுத்தாளன் மார்க்சிம்கார்க்கி. இராசையாமாஸ்ரர்அவர்களும் மனிதநேயம் மிக்கவர். மனிதனை மதிப்பவர். எல்லோருடனும் இனிமையாகப் பழகுபவர். உரை யாடும்போதும் மென்மையாகத்தான் உரையாடுவார். அவரது எழுத்திலும் செயலிலும் மென்மை மிளிரும். அவருக்கு விரோதியோ எதிரியோ கிடையாது. அப்படி யாராவது ஒர் எதிரி இருப்பானாகில் நிச்சயம் அவன் ஒரு மனநோயாளியாகத்தானிருப் 66T. அவர் மனிதர் எல்லோரையும் மனமார நேசிப்பவர். அவர்חנL ஆன்மிகவாதி. ஆனால் மதவாதியல்ல. அவருக்கு சடங்கு சம்பிர தாயங்கள், பூசை புனஸ்காரங்களில் நம்பிக்கை கிடையாது. அதை
4

அவர் கடைப்பிடிப்பவருமல்லர். அவர் நாஸ்திகருமல்லர். மனிதனை நேசித்து அவனை பூரண மனிதனாக உருவாக்க வேண்டும், சேவை செய்யவேண்டும் என்பதுதான் அவரது கொள்கை.
இராசையா மாஸ்ரர் ஒர் கர்மவீரர். அவர் இலங்கை வானொலி யில் ஒலிபரப்புத்துறையில் இருபது வருடங்களுக்கு மேலாகச் சேவையாற்றி சிறந்த வானொலிக் கலைஞர்களை உருவாக்கி யுள்ளார். அவர் குழந்தையுள்ளம் படைத்தவர். அதனால்தான் அவர் சிறுவர்களுக்கான“சண்டியன் ஓநாய்”, “சந்தனக் கிண்ணம்”, “புதிய பூக்கள்’ ஆகிய மூன்று சிறந்த நூல்களைப் படைத்துள்ளார். அத்துடன் எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் ஐம்பது திருக்குறள்களை அடிநாதமாகக் கொண்டு ஐம்பது கட்டுரை களைக் கொண்ட ஒரு நூலையும் உருவாக்கியுள்ளார். மேலும் இலங்கையில் சிறந்த இளம் சிறுகதைப் படைபாளிகளை உருவாக்கும் உன்னத நோக்குடன் 'தகவம் இலக்கிய அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்புமூலம் சிறுகதைத் தேர்வுகளை நடத்தி சிறந்த படைப்புக்களுக்கு பரிசில்கள் வழங்கியதுடன் இப்படைப்புக்களைக் கொண்ட “தகவம் சிறுகதைகள்’ என்று இரு தொகுதிகளை அவர் வெளியிட்டுள்ளார்.
சிறந்த கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் அவர் ஆர்வத்துடன் பங்குபற்றுவார். இவை பற்றி ஆக்கபூர்வமான இரசனை விமர்சனங்களை பத்திரிகைகளுக்கு எழுதுவார். அதேவேளை விபவி மாற்றுக் கலாசார மையத்துடன் அவருக்கு நெருங்கிய ஈடுபாடு உண்டு. 1996 ஆம் ஆண்டிலிருந்து இராசையா மாஸ்ரர் விபவியின் கலை இலக்கியச் செயல்பாடுகளில் மிகவும் ஆர்வத் துடனும் உற்சாகத்துடனும் பங்குபற்றி வந்துள்ளார். விபவியி னால் நடத்தப்பட்ட நூல் வெளியீடுகள், நூல் ஆய்வரங்குகள், இலக்கியக் கருத்தரங்குகள், இலக்கியச் செயலமர்வுகள், எழுத்தாளர்களுக்கான இலக்கியப் போட்டிகள், ஆண்டுதோறும் நடத்தப்பட்ட சுதந்திர இலக்கிய விழாக்கள் ஆகியவற்றை நடத்து வதற்கான தமது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி வந்ததுமல்லாமல் இந்நிகழ்ச்சிகளில் தாமும் நேரடியாக உற்சாகத் துடன் பங்குபற்றி வந்துள்ளார்.

Page 7
இராசையா மாஸ்ரர் அவர்கள் விபவியினால் நடத்தப்பட்ட வெளிக்கள நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியுள்ளார். குறிப்பாக அனுராதபுரம், புத்தளம், சிலாபம், பொலநறுவை, களுத்துறை, அளுத்கம ஆகிய பிரதேசங்களிலுள்ள கிராமங்களில் அமைந்துள்ள பின்தங்கிய தமிழ் பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்களுக்கு கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய துறைகளில் விபவியினால் நடத்தப்பட்ட செயலமர்வுகளில் அவர்கள் வளப்பகிர்வாளராகப் பங்குபற்றி பெரும் பணியாற்றியுள்ளார். அது மாத்திரமல்ல இச்செயலமர்வுகளில் பங்குபற்றும் மாணவ மாணவியர்களுக்கு வழங்குவதற்கு கவிதை சம்பந்தமான கையேடுகளைத் தாமே தயாரித்து வழங்குவார்.
இலங்கையில் சிறுகதைத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இரண்டரை வருடத்துக்கு மேலாக விபவியினால் மாதாமாதம் நடத்தப்பட்ட சிறுகதை மேம்பாட்டு அரங்கிற்கான திட்டத்தை வகுப்பதிலும் அதை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதிலும் இராசையா மாஸ்ரர் ஆற்றிய பங்கு அளப்பரியது. அது மாத்திர மல்ல ஆண்டுதோறும் விபவியினால் நடத்தப்பட்ட எழுத்தாளர் களுக்கான படைப்பிலக்கியப் போட்டிகளுக்கான படைப் பிலக்கியப் போட்டிகளுக்கு வருகின்ற கவிதை, சிறுகதைப் படைப்புக்களை மதிப்பீடு செய்து, விருதுகளுக்கும் பரிசுகளுக்கு மான படைப்புக்களைத் தெரிவுசெய்யும் மதிப்பீட்டுக் குழுக்களில் ஒரு உறுப்பினராகச் செயலாற்றி மதிப்பீட்டுக் குழு அறிக்கையை யும் தயாரித்து வழங்குவார். மேலும் விபவியினால் மாதாந்தம் வெளியிடப்பட்ட செய்தி மடல் ஒரு இலக்கிய சஞ்சிகையாக மலர்வதற்கு இராசையா மாஸ்ரர் ஆற்றிய பங்கு அளப்பரியது.
விபவி கலாசார மையத்திற்கும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் இராசையா மாஸ்ரர் ஆற்றிய அளப்பரிய சேவையைப் பாராட்டு முகமாக, 2005ஆம் ஆண்டு விபவியினால் நடத்தப்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கான படைப்பிலக்கியப் போட்டியின் விருது வழங்கும் விழாவிற்கு இராசையா மாஸ்ரர் அவர்கள் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டு கெளரவிக்கப் பட்டார்.
“மனிதனது உடமைகளில் சிறந்தது அவனது வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான் வாழமுடியும். காலமெல்லாம்
6

குறிக்கோளில்லாமல் பாழாக்கிவிட்டேனே என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பளிக்காத வகையில் அவன் சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக வாழவேண்டும்.” t
அமரர் இராசையா மாஸ்ரர் அவர்கள் மனித குலத்தின் மேம் பாட்டுக்காகத் தமது வாழ்வை இறுதிவரை சீராகப் பயன்படுத்தி யுள்ளார். சிறியோரிலிருந்து பெரியோர்வரை அவர்களது விடுதலைக்கான ஆயுதமாகத் தமது பேனாவை அவர் எதுவித ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாக, நிதானத்துடன் கலை இலக்கியத் துறையில் பயன்படுத்தியுள்ளார். இராசையா மாஸ்ரர் அவர்கள் நிறைவான பூரணத்துவமான ஒரு வாழ்வை வாழ்ந்துள்ளார்.

Page 8
கவிதை வரிகளில் கரைந்து ஒய்ந்த தீபம் - இராசையா மாஸ்டர்
வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தன்
கலை இலக்கியங்களில் தீராத ஈடுபாடு கொண்டவரும் கலைஞர்களிலும் படைப்பாளிகளிலும் ஆராத அன்பும் பாசமும் கொண்வருமான இராசையா மாஸ்டர் அவர்களின் திடீர் மறைவானது கலை இலக்கிய உலகிற்கு ஈடுசெய்யமுடியாத அளப்பரிய இழப்பாகும். 1919ம் ஆண்டில் பிறந்த அவர் சென்ற 17-02-07 அன்று இரவு அமைதியாக இறைவனடி சேர்ந்தபோது, தனது குடும்பத்திற்கும் தான் வாழ்ந்த சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய கடமைகளையெல்லாம் திருப்தியாக நிறைவு செய்த நிலையில் பூரண மனிதனாகவே மறைந்தார். நன்கு கனிந்த பழம் தானே கிளையிலிருந்து நெகிழ்ந்து நழுவி உதிர்ந்ததுபோலானதே அவரது வாழ்வும் மரணமுமாகும்.
சிறுவர் இலக்கியம், சிறுகதை, விமர்சனம், கவிதை என இலக்கியத்தின் விரிந்த பரப்பளவை தனது ஆழமும் நிதானமும் கொண்ட வீச்சலையால் அநாயாசமாகக் கடந்து சென்ற அவர் இவற்றிக்காக வானொலி, தினசரிகள், சஞ்சிகைகள், இலக்கிய மேடைகள் எனச் சகல ஊடகங்களையும் செம்மையாகப் பயன் படுத்திய ஒருவராவார். அமைதியான உருவம், மென்மையான குரல், எவரையும் புண்படுத்தாத தேர்ந்தெடுத்த சொற்கள் என உயர் பண்புகளும் நளினமும் நிறைந்தவர், அவர். ஆயினும் இவற்றின் பின்னே ஒழுங்கும் கட்டுப்பாடும் கொள்கையில் ஈடாத பற்றுறுதி யும் கொண்ட திடமான மனம் இருந்தது. இவற்றை அவர் தலைமை தாங்கும் கூட்டங்களில் துல்லியமாக உணர்ந்துகொள்ள முடியும்.
இலக்கியத்தின் குழு அரசியலும் முதுகு சொறிதலும் புறம் கூறலும் அவருக்கு ஏற்புடையன அல்ல. தற்புகழ்ச்சியும் தன்னை
8

முதன்மைப்படுத்தலும் அவர் அறியாதவை. அத்தோடு தன்னை மற்றவர்கள் புகழ்வதையும் தனக்கு மற்றவர்கள் நன்றி சொல்வதை யும் என்றுமே ஏற்பதில்லை. ‘என் கடமையை தான் செய்கிறேன் அதற்கு ஏன் நன்றியும் புகழ்ச்சியும்’ என எப்பொழுதுமே தட்டிக் கழித்துவிடுவதே அவர் பண்பாகும்.
புனித பெனடிக்ற் கல்லூரியில் தொடர்ந்து 34ஆண்டுகள் கடமை யாற்றிய அவர், பண்பும் கல்வியறிவும் நிறைந்த ஒரு மாணவர் சமுதாயத்தை கட்டியெழுப்பினார். பிரபல தொழிலதிபர் திரு. தெ.ஈஸ்வரன், மட்டக்களப்பின் சமூக சேவகர் திரு. பத்மநாதன் போன்ற பலர் இவர் வழிகாட்டலில் செழுமையுற்றவர்களே. ஆசிரியராகக் கடமை ஏற்பதற்கு முன்னர் வீரகேசரி நிறுவனத்தில் அவர் சிலகாலம் பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை வானொலியில் இளைஞர் மன்றம், சிறுவர் மலர் போன்ற நிகழ்ச்சிகளை மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தயாரித்து அளித்து வந்திருக்கிறார். அக்காலங்களில் இவர் வானொலி அண்ணா ஆகவும் வானொலிமாமா ஆகவும் இளைய தலைமுறை யினரிடம் மிகவும் பிரசித்தமாயிருந்ததோடு இவர்களிடையே யான குடும்ப உறவு போன்ற நெருக்கமும் பாசப் பிணைப்பும் சிறந்த நிகழ்ச்சிகளைத் தயாரிக்கவும் துணைநின்றன. சிறந்த தமிழ் உச்சரிப்பு, உணர்வுகளுக்கு ஏற்ப குரலில் ஏற்றத்தாழ்வு, சொற் களை மென்று விழுங்காத தெளிவான பேச்சு போன்றவற்றை பதியச் அவர் அந்த வளரும் கலைஞர்களிடம் பதியச் செய்தார். தமிழை எப்படியும் பேசலாம் என்ற நிலையை மாற்றி, தமிழை இப்படித்தான் பேசவேண்டும் என்று கற்றுத் தந்தவர் அவர், என திரு. ராகுலன் தனது இரங்கலுரையின் போது கண்ணிர் மல்க நன்றியுணர்வுடன் கூறியது நினைவுக்கு வருகிறது. புகழ்பெற்ற வானொலிக் கலைஞர்களான போல் அன்ரனி, ஜோர்ஜ் சந்திரசேகரன், அப்துல் ஹமீது, கலாவதி போன்ற பலரும் இவரால் செதுக்கி உருவாக்கப்பட்டவர்கள் என்பதை மறக்க (UpbL q- u u FIg5I.
இலக்கியத்தைப் பொறுத்தவரையில் பலதுறை ஆற்றல்மிக்க வராயிருந்த போதும் சிறுவர் இலக்கியமே இவரது அதிக அக்கறைக்குரியதாக இருந்தது. தினக்குரலின் சிறுவர் பகுதியை
9

Page 9
நீண்டகாலம் தொகுத்து அளித்துக்கொண்டிருந்தார். “சண்டியன் ஒநாய்”, “புதிய பூக்கள்”, “சந்தனக் கிண்ணம்” ஆகியன இவர் ஆக்கிய சிறுவர் இலக்கிய நூல்களாகும். 50 குறள்களை அடிப் படையாகக் கொண்டு, வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டும் “குறள்வழி வாழ்வு’ என்ற அவரது நூலும் பல்தரப்பட்டவர் களுக்கும் பயனளிக்கக்கூடிய படைப்பாகும். தேசிய சாஹித்திய விருது, வடகிழக்கு மாகாணசபைப் பரிசு, யாழ் இலக்கியப் பேரவைப் பரிசு ஆகியன இவரைத் தேடி வந்து கொளரவித்தன. ஆயினும் இவரது படைப்புகளில் பெருந்தொகையானவை இன்னமும் தொகுத்து நூலாக வெளியிடப்படாமை துரதிஷ்டமே யாகும்.
தமிழ் வளரவேண்டும், தமிழ் இலக்கியம் செழுமை பெற வேண்டும் என்பதில் தணியாத தாகம் கொண்ட இவர் ஆற்றலும் வீச்சும் கொண்ட புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாக வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு உழைப்பதில் முன்னின்ற தும் குறிப்பிடத்தக்கது. விபவி மாற்றுக் கலாசார மையத்தினால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இளம் படைப்பாளி களுக்காக நடாத்தப்பட்ட பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கியுள்ளார். கூச்சமும் தயக்கமும் கொண்ட இளம் படைப்பாளிகளை, புரிந்துணர்வோடு அணுகி, தனது இன்முகத்தாலும் மென்மொழிகளாலும் கவர்ந்துகொண் டார். இலக்கியத்தின் பல்வேறு துறைசார்ந்த படைப்புகளையும் தேடிப்பிடித்து நிதானமாகப் படிக்கும் இரசனை உணர்வுள்ள, தரமான வாசகர் இவர். அதேநேரம் செய்நேர்த்தியும் கலாபூர்வமான படைப்பாற்றல் திறனும் கொண்ட எழுத்தாளரும் ஆவர். இவற்றின் அனுபவங்கள் கைகோர்த்து வர இவர் ஆற்றும் உரைகளும் செய்முறைப் பயிற்சிகளும் இளம் படைப்பாளி களைக் கவர்ந்ததோடு அவர்கள் படைப்புலகில் சரியான பாதையில் பயணிக்கவும் உறுதுணையாயிருந்தன. அப் பயிற்சிப் பட்டறைகளுக்கான கையேடுகளைத் தயாரிப்பதிலும் இராசையா மாஸ்டர் பெரும்பங்காற்றியுள்ளார்.
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்றது"தகவம்’ என்ற அமைப்பை தனியொருவனாக ஒரு சில நெருங்கிய நண்பர்களின் உதவியோடு கொண்டு நடாத்தியதாகும். தகவம் இலங்கையின்
10

சிறுகதைத்துறையின் செழுமைக்கும் வளர்ச்சிக்கும் பெரும்பங் காற்றியுள்ளது. இலங்கையில் வெளியாகும் சிறுகதைகள் அனைத் தையும் படித்துத் தரம் பிரித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பதும் பின் வருட முடிவில் அனைத்தையும் ஆய்ந்து சிறந்த கதைகளுக்குப் பரிசளிப்பதும் தகவத்தின் பணியாக இருந்தன. “தகவம் பரிசுச்சிறுகதைகள்’ என இவற்றைத் தொகுத்து இரண்டு வருடங்களுக்கொருமுறை நூலாக வெளியிடவும் செய்தார். இவ்வாறு இரண்டு தொகுதிகள் வெளிவந்தன. பின்பு நாட்டு நிலைமைகளால் இதனைத் தொடர முடியாது போயிற்று.
மொட்டவிழ்க்கும் புதுமலர் போன்ற மென்மையும் கள்ளங் கபட மற்ற தூய உள்ளமும் கொண்டவர் மாஸ்டர். அவரது உள்ளத்தைப் போலவே அவரணியும் ஆடைகளும் தூய்மையும் நேர்த்தியும் மென்நிறங்களும் கொண்டவை. எழுதும்போது எழுத்துக்கள் தனித்தனியே வெண்முத்துக்கள் போன்று அழகாக, உறுப்பு நேர்த்தியுடன் அமைந்து வரும் அச்சுப் போன்ற கையெழுத்து.
இராசையா மாஸ்டருடன் எனக்கு 25 வருடங்களுக்கு மேலான தொடர்பு இருக்கிறது. எனக்கு எந்தளவு அவர்மேல் மதிப்பும் மரியாதையும் இருக்கிறதோ அதற்குமேல் அவர் என்னிடம் அன்பு வைத்திருந்தார். 2005, 2006 ஆம் ஆண்டுகளில் நான் தொழில் ரீதியாக யாழ் சென்றிருந்தபோது அப்பொழுது வெளியாகியிருந்த “குறள் வழி வாழ்வு’ என்ற தனது நூலுக்கு ஒரு அறிமுகவுரை எழுதித் தருமாறு கேட்டிருந்தார். எழுதுவதற்குரிய நேரமோ சூழ்நிலையோ இருக்கவில்லை. ஆயினும் அவரது நூலை ரசித்துப் படித்துக் கட்டுரை எழுதினேன். நான் அங்கிருந்தபோது எதுவுமே எழுதமுடிந்ததில்லை. ஆயினும் அந்த இருவருட காலத்தில் நான் எழுதிய ஒரே கட்டுரை அவரது நூல் பற்றியதே என்பதை இன்று நினைத்துப் பார்க்கும்போது மனம் நிறைவடைகிறது.
அண்மையில் அவரும் நானும் இணைந்து ஒரு இலக்கியப் பணியில் ஈடுபட நேர்ந்தது. எமது நண்பரான நீர்வை பொன்னையன் தனது சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த தொகுப்பை வெளியிட எண்ணியிருந்தார். கதைகளைத் தேர்ந்தெடுக்கும்

Page 10
பொறுப்பை எங்களிடம் கொடுத்திருந்தார். ஒருவர்க்கொருவர் கருத்துக்களைப் பரிமாறாது தனித்தனியே தேர்ந்தெடுத்தபோது எனது தெரிவுகள் பெரும்பாலும் மாஸ்டருடைய தெரிவுகளை ஒத்திருந்ததைக் கண்ட போது மனம் சந்தோஷமடைந்தது. ரசனையில் ஆவது மாஸ்டரை நெருங்கிவர முடிந்ததே என்ற சுயதிருப்தியில் ஏற்பட்ட சந்தோஷம் அது.
அப்பொழுது நீர்வை எங்கள்மீது மேலும் ஒரு பொறுப்பைச் சுமத்தினார். இருவரும் இணைந்து அந்நூலுக்கு ஒரு முன்னுரை எழுதவேண்டும் என்பதே அது. நான் சில குறிப்புகள் தயாரித் தேன். அதேபோல இராசையா மாஸ்டரும் சில குறிப்புகளைத் தயாரித்தார். இவருவரும் இக் குறிப்புகளுடன் அவரது இல்லத்தில் சந்தித்து முன்னுரையை எவ்வாறு எழுதவேண்டும் என்பது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுத்தோம். தனக்கு எழுதுவது சற்றுச் சிரமமாக இருப்பதால் அக் குறிப்புகளை வைத்துக் கட்டுரையை எழுதிமுடிக்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டார். ஓரிரு நாட்களுக்குள் எழுதி முடித்து அவரது பார்வைக்கும் திருத்தங்களுக்கும் எனக் கொடுக்க முயன்றபோது அவர் நோயுற்று “டெல்மன் ஆஸ்பத்திரியில்’ என்ற செய்தியை நீர்வை தந்தார். சென்று பார்த்தபோது மிகுந்த களைப்பாக இருந்தார். இந்நேரத்தில் அவருக்குச் சிரமம் கொடுக்கக்கூடாது என்ற காரணத்தால் கட்டுரையை அவர் பார்வைக்குக் கொடுக்க வில்லை.
ஒரளவு குணமடைந்து வீடு சென்றார். வீட்டிற்குச் சென்று நலம் விசாரிக்கவேண்டும் என்று தோன்றியது. ஆயினும் இயலா திருப்பவருக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்ற தயக்கம் தடுத்தது. எனவே 'வரலாமா?’ என விசாரித்துவிட்டே சென்றேன். என்னைக் கண்டதும் மகிழ்ந்தார். கைகளையும் பற்றிக் கொண்டார். நான் கேட்டுவிட்டுச் சென்றதை நினைவுகூர்ந்து “டொக்டர் வந்து எங்களைப் பார்ப்பதில் எங்களுக்கு என்ன கஷ்டம் சந்தோஷமல்லோர்’ என்று கூறியது இன்னும் என் காதில் ரீங்காரித்துக்கொண்டே இருக்கிறது.
அதற்குப் பின் பல தடவைகள் நண்பனாகவும் வைத்திய ரீதியிலும் அவரைச் சென்று பார்க்க நேர்ந்தது. ஆயினும் அவரைக்
2

காப்பாற்ற முடியவில்லை. காலமாவதற்கு முதல்நாள் சற்றுத் தெளிந்திருந்தார். இதைக் கண்டு அவரது உறவினர்கள் போலவே நானும் குதூகலித்தேன். மகள் வசந்தியை மஹாகவியின் கவிதை வரிகளை வாசிக்கச்சொல்லிக் கேட்டு மகிந்தார். ‘அடுத்த தலைமுறையினருக்கு இவற்றைக் கொண்டு செல்லுங்கள்’ என்று கோரிக்கை, தீனமாக அதேநேரம் தெளிவாக ஒலித்தது. அடுத்த நாள் மனைவி, மகள், மருமகன், மகன், பேரக்குழந்தைகள் கூடியிருந்த நிலையில் அவர் தனது வீட்டிலேயே மீளாத துயிலில் ஆழ்ந்தார்.
தமிழையும் இலக்கியத்தையும் இரு கண்களாக நேசித்த, அவற்றிற்காக வாழ்ந்த அந்த இனிய உயிரானது செறிந்த கவிதை வரிகளில் தன்னைப் பூரண்மாகக் கரைத்து மகிழ்ந்து மறைந்தது.
13

Page 11
முதுசொம்
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
இன்றைய மனித வாழ்வியலில் தேடல்' என்பது இன்றியமை யாத ஒன்றாக விளங்குகிறது. மனிதனின் பிறப்புக்கும் இறப்புக் கும் இடையே வாழும் வாழ்க்கையை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. அதற்கு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கருவிக்கையாட்சிகளும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையும் தோன்றியுள்ளது. மனிதனின் தேடல்களை இவற்றால் முழுமையாக அடையமுடியாத ஒரு குறைபாடும் உள்ளத்தை நெருடுகிறது. இவ்வேளையில் தான் எமது 'முதுசொம்' பற்றிய நினைவு நெஞ்சில் நிழலாடுகிறது. இச்சொல்லின் பயன்பாட்டை நாம் கைவிட்டுவிட்டதையும் உணரமுடிகிறது. 'முதுசொம்' என்ற சொல் 'முதுபொருள் எனப் படும். இவ்விளக்கத்தை யாழ்ப்பாண அகராதியில் இருந்து பெற்றுச் சென்னைத் தமிழ்ப் பேரகராதி (TAMIL LEXICON P.3265) வடமொழியில் இது பிதிரார்ச்சிதச் சொத்து என அழைக்கப்பட்ட தையும் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே எமது தலைமுறையினர் எமக்கெனத் தந்திருக்கும் ‘முதுசொம் தான் எம்மை வாழ்விக்கும் என்பதையும் நாம் நன்குணரவேண்டும்.
எமது 'முதுசொம்’ என்ன என்பதை எம்மோடு நாம் வாழுங் காலத்திலேயே வாழ்ந்து எம்மை விட்டுப் பிரியும் முதியவர்களின் இழப்பிலேதான் நன்கு உணர்ந்து கொள்ளமுடியும், உறவு, நட்பு, கேண்மை, தொடர்பாடல் என்ற நிலைகளுக்கு அப்பால் அம் முதியவர்களின் வாழ்வியல் எம்மை வழிநடத்தும் பயிற்சிக் களமாக அமைந்ததையும் விளங்கிக்கொள்ளும் வேளையும் இதுவே. முதுசொம்’ என்று நாம் அவர்களை நினைந்து வாழும்போது எமது வாழ்க்கையும் ஒரு இலக்குடன் செல்லும்,
14

காலம் தந்த 'முதுசொம் எம் கையை விட்டுப் போனதே என்று கலங்கிச் சோர்ந்துவிடாமல் மீண்டும் தொடங்கும் மிடுக்குடன் நாம் வாழ்வின் செல்நெறியைத் திட்டமிடும் ஒரு புதிய ஆற்றலைப் பெறமுடியும். எம்மை உருவாக்கி எம்மைச் சார்ந்து நின்று பக்கபலமாய் நின்ற அத்தகைய முதுமை ஒன்றை இனம் கண்டால் அதுபற்றி அடுத்த தலைமுறையினர்க்கும் அறிமுகம் செய்யவேண்டிய பணியும் எம்முடையதே. அவர்களால் நாம் பெற்ற நன்மையை மற்றவரும் உணரவைக்கவேண்டும். நீத்தார் பற்றிய நயப்பு காலம் எமக்குத் தந்திருக்கும் காத்திரமான ஒரு பணியாகும்.
இத்தகைய எண்ணங்களை நாம் கல்வியால் பெறும் வாய்ப்பைப் பெற முடிந்தாலும் எமது வாழ்வில் அத்தகைய பட்டறிவை, எம்மைச்சார்ந்தவர் ஒருவரைக் காலத்தின் கட்டாயத் தால் பிரியும்போதுதான் மிகத்துல்லியமாக உணரமுடிகின்றது. அண்மையில் காலமான ஆசிரியர் திரு.வ. இராசையாவின் வாழ்வியவில் ஏற்பட்ட தொடர்புகளை எல்லாம் மீள நினைந்து நிற்கும் வேளையில் இவ்வெண்ணங்களில் தெளிவும் கூர்மையும் ஏற்பட்டது. அவரது முதல் அறிமுகம், தொடர்பு, உறவுநிலை, வழிகாட்டும் நிலை, உரையாடிக்களித்த கணப்போதுகள், இலக்கியச் சிந்தனைகள், விமர்சன விளக்கங்கள் என நீண்டு கொண்டே போகும் அந்த நினைவுகளை மனச்சிமிழில் மறைத்து வைக்காமல் எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது. அத்தகைய பகிர்வினால் ஏற்படும் பலம்தான் முதுசொம்' என்பது புலனாகின்றது.
இந்தப் பகிர்வு காலங்காலமாக நடைபெற்று வந்துள்ளதையும் நமது தமிழிலக்கியங்கள் காட்டுகின்றன. அண்மையில் படித்த ஒரு பாடல் எனக்கு இதனை நன்கு உணர்த்தியது. நல்லவர்களோடு நட்புக்கொள்பவர் பெறும் பெரும்பயனை அது விளக்கிக் கூறியுள்ளது. நான்கு அடிகளில் அமைந்த பாடல் அடக்கியுள்ள செய்தி முதுசொம்' ஆன ஆசிரியரைப் பற்றி இன்னும் பலரோடு பகிரப் பயன்படும்.
“ஒண்கதிர் வான்மதியஞ் சேர்தலால் ஓங்கிய அங்கண் விசும்பின் முயலுந் தொழப்படுஉங் குன்றிய சீர்மைய ராயினுஞ் சீர் பெறுவர் குன்றன்னார் கேண்மை கொளின்.” (நாலடியார் : 176)
15

Page 12
ஒள்ளிப கதிரைபுடைய வெண்ணிலவைச் சேர்தலால் உயர்ந்த அழகிய விசும்பில் உள்ள முயலும் தொழப்படுகின்றது. அதுபோல தாழ்ந்த சீர்மையராக இருப்பவரும் மலைபோன்ற அறிவுடைய நல்லாரோடு நெருங்கிய நட்புக் கொள்வாராயின் சீர்மை பெறுவர் என்பது இப் பாடல் பதிவு செய்துள்ள கருத்தாகும். வானத்து நிலவை வணங்கும் நடைமுறை நம்ம வரிடையே பண்டு தொட்டு இருந்து வந்துள்ளது. ஏனெனில் காலத்தின் கடப்பை மனிதனுக்கு உணர்த்தும் இயற்கைச் சக்திகளில் திங்களும் ஒன்றாக விளங்கியது. அதனுடைய வளர்ச்சியும் தேய்வும் நாட்காட்டி இல்லாத காலத்தில் மனிதனுக்கு நாளின் கடப்பை உணர்த்திற்று. இதனால் மனிதன் திங்களைக் காலம் உணர்த்தும் பேராற்றல் களில் ஒன்றாக இனங்கண்டு அதை வழிபடலானான். திங்களில் காணப்படும் களங்கத்தை அதனுள் முயல் இருப்பதாகக் கூறும் கவிமரபு ஒன்று இருந்ததைப் பண்டைய இலக்கியமான கலித்தொகைச் செய்யுள் (144) ஆவணப்படுத்தியுள்ளது.
"திங்களுள் தோன்றி இருந்த குறுமுயால்" என்ற பாடலடி இதற்குச் சான்றாகவுள்ளது. இன்றுவரை இக்கவிமரபு பேணப்படுவதை நாம் காண்லாம். குறைபாடுடைய வரானாலும் கேண்மையுடையவரானால் எல்லோரும் மதிக்கும் தகைமையைப் பெறுவர். அறிவுடைய ஆன்றோரது தொடர்பு பற்றி விளக்கும் இப்பாடலின் பொருளை நாம் விளங்கிக்கொள்ள திரு.வ. இராசையாவின் வழிகாட்டலாலும் நட்பினாலும் இன்று உயர்ந்து நிற்பவர் சான்றாகவுள்ளனர். குடும்பத்தவருக்கு ஒரு தந்தை, நண்பர்க்கு ஒரு இனிய தோழன், மாணவர்களுக்கு ஒரு நல்லாசிரியன், இலக்கிய வேட்கையாளருக்கு ஒரு தெளிவு தரும் கவிஞன், விமர்சனம் வேண்டுவோர்க்கு ஒரு நடுநிலையாளன் எனப் பலருக்கும் பயன்படப் பணி செய்த அந்த மனிதரின் வாழ்நாள் முடிந்தது என்று சொல்வதற்கில்லை. திங்களைத் தொழுவது போல அவருடைய நினைவும் வாழ்வியலும் உள்ளத்தால் தொழப்பட வேண்டியவை.
எழுத்தினால் பிறரோடு தொடர்புற்று வாழும் இலக்கியத் தொடர்பாளர்கள் - வரிசையில் தனக்கென ஒரு செல்நெறியைக் கொண்டிருந்தவர் தகவம் இராசையா ஆனார். இதற்கும் மேலாக அவர் செய்த வாய்மொழித் தொடர்பாடலால் வானொலி
配

中umU(funrm렉트rm3 rloggg gönuugg日os ng 'lılışılsēņķī),
| ||

Page 13

அண்ணாவாக, வானொலிமாமாவாக வாழும் வாழ்வு பெற்றவர். அவரை நான் முதலில் 'வானொலி மாமாவாகவே பேராசிரியர் க. கைலாசபதியால் தொடர்புறும் வாய்ப்புக் கிடைத்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இளந்தலைமுறை யினர்களின் பேச்சாற்றலையும் இலக்கிய உணர்வுகளையும் நெறிப்படுத்தும் ஒரு உன்னத பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்பணியால் அவர் சமூகத்திற்குத் தந்த ஆக்க இலக்கியகாரர் களையும் அறிவிப்பாளர்களையும் பேச்சாளர்களையும் காணும் போது வானத்து நிலவின் ஒளியால் பலர்பெறும் நற்பயனை நன்கறிய முடிகிறது.
மனித வாழ்க்கையில் ஒருவருடைய கடமை என்ன என்பதை இன்று பலர் உணராதிருக்கின்றனர். தன்னைப் பற்றி மட்டுமே எண்ணிவாழும் இயல்பு மனித வாழ்வன்று. பலருக்கும் பயன்பட வாழவேண்டும் என்ற ஒரு இலக்கு அதற்கு உண்டு. நமது முன்னோர் இந்த இலக்கையே வாழ்க்கையின் அடித்தளமாக்கி வாழ்ந்தனர். அந்த அடித்தளத்தின் மேல் நின்று எதையும் எதிர் கொள்ளும் ஆற்றலைக் கல்வியால் பெறமுடியும். தனக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு சோர்ந்து விடாமல் தன் பணியை நிறைவாகவும் ஒழுங்காகவும் செய்யவேண்டும் என்ற ஒரு கற்பித்தல் நெறியை மரபாக்கி வாழ்ந்தவர் திரு.வ. இராசையா. நட்போடு சுற்றந்தழுவி வாழும் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல் களையும் முரண்பாடுகளையும் கல்வியால் வெல்லமுடியும். அதனை இன்றைய தலைமுறையினர் இன்னும் உணராதுள்ளனர். ஆனால் திரு.வ. இராசையாவின் மூச்சும், பேச்சும், எழுத்தும் செயற்பாடும் ஏறக்குறைய அரைநூற்றாண்டுகளுக்கு முன்னரேயே இப்பணியில் முழுமையாகத் தோய்ந்து விட்டதை இன்று உணரமுடிகிறது. அந்த அரைநூற்றாண்டில் அவரது இலட்சிய வாழ்க்கைக்கு மறையாக நின்று வேண்டுவன ஆற்றிய அவர் இல்லாளின் இணைந்த கேண்மையும் என்றும் நெஞ்சில் கோலப் புள்ளியாக நிற்பதை நேரில் கண்ட என்போன்றோர் நன்கறிவர். ஒரு நல்லாண்மகனின் கடமைகளுக்கு உறுதுணையாக நிற்கும் வாழ்க்கைத் துணையை வள்ளுவர் போற்றினார். ஆனால் நாலடியாரோ அதைச் சொல்லாமல் சிறப்பித்து நிற்பதை இங்கு குறிப்பிடலாம். திருமதி. பூரணம் இராசையாவின் பணி அத்தகையதே. தன்னை மறைத்து தன் கணவனின் இலக்கை
17

Page 14
மட்டும் நிறைவேற்ற அவர் நின்ற கணங்களை நான் கண்டபோது குடும்ப உறவின் கேண்மை நிலையை உணர்ந்து கொண்டேன். “அழல்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம் நிழல் மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழமரம்போற். பல்லீர் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன்." வெம்மை மிகுந்த கோடை காலத்தில் தம்மை அடைந்தவர்க் கெல்லாம் நிழல் தரும் மரம்போலக் கற்றவரெல்லாம் பயன்பெற வாழ்வதற்கு ஆண்மகன் தன்னை வருத்தும் வேளையில் நல்ல துணையாகச் செயற்பட்ட மனையாளின் கடன் அவனைச் சமூகத்தில் நல்லாண்மகனாகப் போற்றவைத்தது. நல்லாசிரிய னாக, சிறந்த இலக்கியவாதியாகப் பயன் தரும் பழமரமாக என்றும் நிலைத்திருக்க இல்லத்திலே இருந்து பணிசெய்த அவர் மனைவியின் அருகாமை இறப்புவரை இணைந்திருந்தது. குடும்ப வாழ்விலும் மக்கள் உள்ளத்திலும் ‘முதுசொம் என்ற நினைப்பை என்றும் நிலைக்க வைப்பதும் இத்தகைய இல்லாளின் ப்னி யாகும். சுற்றந்தழுவுதல் என்ற இல்வாழ்வானின் கடமையை இடையூறு இன்றி ஆற்றும் அரிய மனையாள் இன்று அவர் நினைவைச் சுமந்து வாழும் நிலையில் பழமரம் தேடும் பறவை போல் எல்லோரும் திரு. இராசையாவை மறக்காமல் போற்றவும் மனைவி பணி செய்வதையும் நன்கு உணரமுடிகின்றது. இது வாழ்வியலில் எமக்கு ஒரு முதுசொம். அதை அடுத்த தலைமுறை யும் உணரப் பணிசெய்வோம்.
இனி இழப்பதற்கு எம்மிடம் எதுவும் இல்லை இருக்கும் முதுபொருள் 'முதுசொம்' ஒன்றே போதும் நினைவைச் சுமந்து வாழும்போது இறந்தவர் உடல் மட்டும் தான் மறையும். உயிர் எம்மோடு ஒன்றிவிடும். நினைவுகளைப் பகிரும் வாழவியல்தான் இன்று தேவை. அந்தவகையில் நாம் யாரையும் இழப்பதில்லை. நினைத்து வாழும் நிலையில்தான் உள்ளோம். முதுசொம்’ ஒன்றை நாம் பெற்று இருப்பதை எமது அடுத்த தலைமுறையினர் உணரவும் மரணம் மனிதனைச் சிந்திக்க வைப்பதையும் எமது அநுபவத்தில் உணரும்போது பிரிந்தவர் என்று யாரையும் எம்மால் பிரித்து நோக்கமுடியாது. நினைவுச் சிமிழில் மணக்கும் சந்தனம் தான் எங்கும் மணம் பரப்ப எம் உள்ளமும் நிறைவெய்திவிடும். "
8

ST. BENEDICT'S COLLEGE, COLOMBO-13, SRI LANKA.
Phone : 431025
Message from Bro. Director
My predecessors, Reverend Brothers Luke, Austin, Oliver, Lawrence, Alban, Flavian, Edward, Victor, Calixtus, Benildus and Modestus have had the highest, regard and respect for Mr. V. Rasiah. He had served under them and from all what I have gathered from the records left behind, he belonged to that brand of Benedictine Teachers who could well be described as the pillars of St. Benedict's.
Apart from the grand job of teaching that he did in College, his exertions in the field of Tamil Broadcasting and Tamil Literature brought the College within the focus and admiration of those interested in the whole Island.
They that instruct many unto justice shall shine as stars. Mr. V. Rasiah was one such luminous star in the educational firmament.
May his Soul rest in perfect peace is our eternal prayer for this really great man.
REV.BRO. GRANVILLE PERERAF.S.C.
ORECTOR S, BENEDCT'S COLLEGE COLOMEBO 13.
I9

Page 15
என்றும் உங்கள் ஆசி வேண்டி
திரு. தெ. ஈஸ்வரன் மொரிஷியசுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி
அன்புள்ள மாஸ்டர் இராசையாவுக்கு,
பூதவுடல் நீத்த நீங்கள் இறைவனடி சேர்ந்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. வாழ்நாள் முழுவதும், இப்படித்தான் வாழ வேண்டுமென்று எங்களுக்கு ஒர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினிர்கள்.
கண்கள் ஒரத்திலிருந்து ஓடி வரும் கண்ணிரை ஒதுக்கிவிட்டு இம்மடலை எழுத முற்படுகிறேன். மாஸ்டர் இன்று நான் எழுதும் எழுத்தும் பேச்சும் நீங்கள் தந்தவைதானே ஒரு சிற்பி சிறு உளி கொண்டு சிலை செதுக்குவது போலல்லவா, நான்காம் வகுப் பிலும் ஐந்தாம் வகுப்பிலும் என்னைச் செதுக்கினிர்கள்! நலமெது, தீங்கெது என்று தெரியாத வயது. எங்கள் முகம் வாடாமல் அல்லவோ பாடம் நடத்தினிர்கள் வெள்ளை மனத்து ஏந்தலே! வெண்கட்டியையும் பேனாவையும் தானே உங்கள் கைகள் பிடித்தன. எட்டாம் வகுப்பிலே தடயம் பதித்த பிரம்படி வாங்கிய ஞாபகம் உண்டு. பாடம் எழுதாத போதும்கூட அழப்பண்ணும் வார்த்தைகளை நீங்கள் சொல்லவில்லையே!
ஆசானே! நீங்கள் சுகவீனமுற்று வீட்டிலிருந்தது அறியேன். தெரிந்தால் மட்டும் என்ன, காலனை என்னால் கட்டியா போட்டிருக்கமுடியும். இல்லை! ஒரு நப்பாசை. இன்னுமொரு முறை, ஒரே முறை கடைசியாக உங்கள் காலைத்தொட்டுக் கண்ணில் ஒற்றி ஓர் ஆசி வாங்கியிருப்பேனே! என் தலையைத் தொட்டு வாழ்த்தியிருப்பீர்கள். அது குண்டு துளைக்காத கவசமாக அல்லவா என்னை காத்து நிற்கும்!
20

ஒரு நாள் நீங்கள் எழுதிய குழந்தை இலக்கியப் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் பேசும்படி அழைத்திருந்தீர் கள். நான் வந்தேன், பேசினேன். நன்றிக்கடன் சிறிது தீர்த்தேனோ என நினைத்தேன்.
வீட்டிலே மனைவி சொன்னாள், “இன்னமும் உங்கள் ஆசான் உங்களை இவ் விழாவுக்கு அழைத்து பெருமைப்படுத்திக் கொண்டல்லா இருக்கிறார்கள்” என்று. ஆம், விழாவில் பங்கேற்றுப் பெருமையுற்றது நான். கடன் தீர்க்கவில்லை, இன்னும் அதிகமாக கடன்பட்டேன் என்றுணர்ந்தேன்.
ஆழ்வார் சொன்னதுபோல் “மெய் இல் வாழ்கையை மெய் எனக் கொள்ளும் இவ்வையகம் தன்னொடும் கூடிலன் யான்’ என எண்ணி இவ்வுலகை நீத்தீர்களா?
"படி சார்ந்த வாழ்க்கையே நினைப்பதல்லால் பொன்னம்பலவர் அடி சார்ந்து வாழ நினைப்பாரில்லையே” என்ற பட்டினத்துப் பிள்ளையின் வரிகள் ஏற்படுத்திய ஏக்கத்தில் காலனைக் கூவி அழைத்தீர்களா?
மனிதன் மறைவான்.
தெய்வம் ..?
கேட்க மாட்டேன். ஏனெனில், என்றும் உங்கள் ஆசி எனக்கு உண்டு.
2.

Page 16
குழந்தை மனங்கொண்ட குழந்தைக் கவிஞன்
வைத்திய கலாநிதி ஜின்னாவுற் வடிரிபுத்தீன்
எண்பத்து ஏழாண்டு உலக வாழ்வின்
இன்பங்கள் அத்தனையுங் கண்டு வென்ற
பண்பாளன் இராசையா பூவின் வாழ்வைப்
பிரிந்துடலம் நீத்திறைபால் சென்றடைந்தார்
புண்ணுண்ட நெஞ்சங்கள் ஒன்றி ரண்டோ
பிரிவெண்ணிச் சோராத பேர்களுண்டோ
கண்ணுள்ளே வாழ்வதுபோல் இருக்கு தையோ காலனுக்கு வந்ததென்ன கேட தாமோ.
இலக்கியவான் பரப்பினிலே இரவி போன்றும்
ஏற்றமிகு மாந்தருள்ளே இமயம் போன்றும் தலைக்குமரனாகநின்று அரசோச் சித்தம்
சாதனைகள் பலவற்றால் நிலைபே றெய்தி உலைக்களத்தில் போட்டெடுத்த பொன்ஆம் போன்றே
ஊர்போற்றும் உத்தமனாய்வாழ்ந்து நின்றாய் நிலைத்ததிந்த மாநிலத்தில் யாருண் டாமோ
நித்தியனின் விதியென்றால் செய்வதென்னே.
தானுயர்ந்தால் அதுவொன்றே போது மென்று
திருப்திகொண்டு பிறருயற்சி தனைத்தடுத்து
கானுயிர்தம் மனங்கொண்டோர் வாழும் மண்ணில்
கற்றவருள் கற்றோனாய் பிறரும் வாழ

வாணாளை அர்ப்பணித்தாய் ஐயா! நீயோ
வாழுபவர் நெஞ்சத்துள் வாழுகின்றாய்
தூணாகத் தனித்துநின்று "தகவம்” தன்னைத்
தாங்கியவன் தமிழ்ப்பணியின் சிகரம் போன்றே.
“வானொலியின் மாமா நீ சிறார்களுக்கு
வளந்தோர்க்கு "மாஸ்டர் எம் போன்றோ ருக்கு ஞானகுரு வழிநடத்தும் முதன்மை யாளன்
நலம்பேணும் தலைவன்நற் குடும்பத்தார்க்கு மாணவர்க்கு நல்லாசான் மதிமிக் கோரின்
மனத்துவந்த நண்பன்மற் றனைத்துப் பேர்க்கும் காணுங்கால் கைகூப்பி வணக்கம் செப்பக்
கூடுமொரு கண்ணியவான் கடவுட் பேறே.
அதரங்கள் ஒன்றிய புன் சிரிப்பு ஒன்றே
அடையாளங் காட்டுகின்ற அறிவிப் பாகும் உதிருகின்ற வார்த்தைப்பூ ஒவ்வொன்றிற்கும்
உயிரிருக்கும் போலிபதர்ச் சொத்தை காணா பதிக்கின்ற பதம்எறும்பின் உயிரைக் கூடப்
பறிக்காதே ஐயாவெண் சங்குந் தோற்கும் அதிதூய மனமுனக்கு ஆண்ட வன்றன்
அருட்கொடையோ அகலாய்எம் நெஞ்சி ருந்தே.
உயிர்தாங்கி இருந்தவுடல் ஒன்றித் தீயின்
உணவாகிப் போனாலும் உன்பேர் என்றும் பயிராகி வளருகின்ற பாத்தியத்தைப்
பெற்றதன்றோ பூவுள்ள வரையும் ஐயா செயலற்றுப் போகும்வரை உடலம் யார்க்கும்
தோள்தாங்கும் துணையாக நிமிர்ந்தே நின்றாய் அயராது தமிழ்த்தொண்டு செய்த வுன்னை
அன்னைதமிழ் மறவாளே நிலைத்து வாழ்வாய்.

Page 17
கதையெழுதும் கதைஞர்களின் கதைகள் தேர்ந்து
கதைகளுக்காய்ப் பரிசளித்துப் பதிவுஞ் செய்து கதையென்னும் நவீனதமிழ் இலக்கியத்தைக்
காலூன்றச் செய்தவன்நீ சிறுவருக்கும் கதையோடு கவிதைகளும் எழுதி வாழ்ந்த
காலத்தில் பிறரையும்தம் வழியில் தூண்டி கதையோடு கவியெழுத வைத்தாய் நானுன்
காலடியைத் தொடர்ந்தவன்நீமன்னன் போல்வாய்.
வாரிசென்று உனக்குண்டு தமிழைச் செய்ய
வந்தமருமகன்மகளும் தொடரு வார்கள் ஊரறியப் புகழ்கொள்வார் உன்னைப் போன்றே
உவந்துதமிழ்ப் புலம்போற்றும் முதுசொம் அஃதால் பேரறியாய் என்றிருந்தேன் எனைய ஹிந்தென்
படைப்புகளைப் போற்றினைநீ பாலர் பாடல் சேர்ந்தகோவைத் தமிழுக்கும் வாழ்வளித்தாய்
செய்நன்றி கொல்லேன்நான் என்னுள் வாழ்வாய்.
24
 

மானுடத்தின் குறியீடாக விளங்கிய ஒரு மாமனிதன் - தகவம் இராசையா பற்றிய ஒரு சிறு குறிப்பு
பேராசிரியர் கா. சிவத்தம்பி
இராசையா மாஸ்டரை என்னால் இனிமேல் பார்க்கமுடியாது என்ற எண்ணத்தின் உண்மை நெஞ்சைப் பிறாண்டி எடுக்கிறது.
கடந்த 3, 4 வருடங்களாக எனது சுகவீனம் காரணமாக எனது வெளிநிலை அசைவியக்கங்கள் குறையத்தொடங்கியதன் பின்னர் நான் நண்பர்கள் பலருடனும் நான் விரும்பும் பலருடனும் ஒரு மானசீகத் தொடர்பு நிலையிலேயே வாழ்ந்து வருகிறேன். சிலருடன் எப்பொழுதாவது சில தொடர்புகள் ஏற்படுவதுண்டு. ஆனால் பலரைப் பொறுத்தவரையில் அவர்கள் இருக்கின்றார் கள்', 'அவர்களுக்கு என்னைப் பற்றிய சிரத்தையுண்டு’, எனக்கும் அவர்களைப் பற்றிய ஆர்வமுண்டு என்ற அடிப்படையில் ஒரு மனோநிலை உணர்வினை ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டிருக் கிறேன்.
அவர்களின் இருப்புப் பற்றிய சந்தேகங்களுக்கு இடமில்லை. முதுமை ஏற்படுத்தும் தேவையா அல்லது தண்டனையா என்பது கூட எனக்குத் தெரியாது. ஆனால் இதுதான் உண்மை. . .
இராசையாமாஸ்டருடன் இத்தகைய ஓர் உறவில்தான் நானிருக் கிறேன். அந்த உறவுக்குக் காரணம், அவர் மேற்கொண்டிருந்த செய்பணியாகும். அதற்கும் மேலாக அவரது ஆளுமை. தகவம் மேற்கொண்டு வந்த பணியினைப் பலரறிவோம். கரையின் அலையோசைகளற்ற கடலின் ஆழத்தை நினைவுறுத்துகின்ற பணி அது. வெளிவந்த சிறுகதைகளை எடுத்துக்காட்டும் முறைமையி னுாடாகவே தரநிர்ணயம் ஒன்றையும் செய்துவந்தார்.
இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் தகவம் வழங்கிய தரவுகளைப் பற்றி சர்ச்சைகள் எதுவும் இருக்கவில்லை. மாறாக அங்கீகாரத்துக்கான முத்திரையாகவே அது மதிக்கப்பட்டது.
25

Page 18
எழுத்தாளர்களையும் பார்க்க தங்களை எழுத்தாளர்களாகக் கருதிக் கொள்பவர்களே அதிகமாக தெரியப்படும் சூழலில் இத்துணை ஏற்புணர்வுடன் நிகழ்ந்து வந்தவை ஓர் இலக்கிய ஆச்சரியமே. இதற்குக் காரணம் இராசையா மாஸ்டரின் ஆளுமை யும் அவரது அடிப்படை நேர்மை பற்றி எல்லோரிடத்திலுமிருந்த நல்லபிப்பிராயமுமே ஆகும்.
கருத்துநிலை அடிப்படைகளிலே பலத்த வாத விவாதங் களுக்குப் பழக்கப்பட்டுப்போன இலக்கியக்காரர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் தகவம் செய்தபணி சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு நின்றது.
நண்பர் இராசையாவை எனக்கு நீண்டகாலமாகத் தெரியும். பெனடிக் கல்லூரியில் அவரிடம் படித்த பல மாணவர்கள் என்னோடு ஊடாடியுள்ளனர். அந்த மாணவர்கள் தங்கள் ஆசிரியர் பற்றி கேலி, சிரிப்புக்குச் சிறிதும் இடமில்லாத வகையிலே பேசுவார்கள். நண்பர் இராசையா பற்றிய அவரது மாணவர்களின் குறிப்புக்கள் ஆசிரிய கெளரவத்துக்கான வரைகோடுகளாக அமையும்.
பின்னர் அவரது குடும்ப நிலையிலும் அவரை அறியும் வாய்ப்புக் கிட்டியது. அவரது மருமகன் தயாபரனை தெரிந்திருந் தேன். அவரது திருமணம் காதல் திருமணமாகும். அந்த இணை விலே சீரும் சிறப்பும் செம்மையும் நிறைவுமுண்டு. இந்தப் பண்பு வெளிப்பாடு இராசையா மாஸ்டரின் குடும்பத்தின் ஜீவஊற்று என்று கருதுகின்றேன். குறைவற்ற மனத்தினராகிய அவர் நிறைவுற வாழ்ந்தார். அந்த வாழ்க்கைச் செம்மையும் முழுமையும் என்னை அவரது ‘விசிறி ஆக்கிற்று. அவர் இருக்கும்பொழுது அவரிடத்து நேரடியாக இதனைச் சொல்லமுடியவில்லை. இப்போது அதனை நான் சொல்லாமல் விடவும் கூடாது. ஆழமான நேர்மையும் அமைதியான கண்ணோட்டமும் திடமான கருத்துநிலை விசுவாசமும் மனிதர்களின் மானுடச் சிறப்பைத் தவறாது வெளிக்கொணரும். நண்பர் இராசையாவின் மரணம் உண்மையில் அந்த மானுட உணர்வுக்கேற்பட்ட நலிவு என்றே கருதுகின்றேன்.
பண்புடையார் பட்டுண்டு உலகம்; அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன்
w---bar
26

தொழுதகை மாண்பினர்
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
ஒரு நாள் மாலைநேரம் தகவம் வ. இராசையா வீட்டில் நான் அவருடன் இருந்தேன். அப்பொழுது ஓர் உயரமான மனிதர் வெண்மையான நீண்ட காற்சட்டையும் சேர்ட்டும் அணிந்தவராக வந்தார். தலை சுத்தமான வெண்மை. வந்தவர், திரு. இராசையா அவர்களுடைய காலிலே சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார். இப்படியான காட்சியை இக்காலத்திலே மிக அரிதாகத்தான் காணமுடியும். இந்த அரிய காட்சியைக் கண்டு என் உள்ளம் பூரித்தது. கற்ற மாணவனில் ஒழுகலாறும் கற்பித்த ஆசிரியரின் மேன்மையும் எப்படிப்பட்டன என்பதை அக்காட்சி உணர்த்த லாயிற்று.
தகவம் வ. இராசையா என்னுடைய உறவினர். ஆனால் நாங்கள் எல்லோரும் உறவுப்பெயரை விடுத்து “மாஸ்டர்’ என்று கூறுவதிலேயே சுகம் கண்டோம். அவரை ஓர் எழுத்தாளராகவும் ஊடகவியலாளராகவும் பலரும் இனங்கண்ட போதிலும் அவருடைய "மாஸ்டர் மேன்மையினைத் தரிசித்துக் கூறும் சில பெரியவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தெ. ஈஸ்வரன், க. பத்மநாதன், ரெஜினோல்ட் வேதநாயகம் என்று பெயர்களை அடுக்கிக்கொண்டு போகலாம். ஏதோ வகையிலே தம் மாணவர்களிலே அழுத்தமான செல்வாக்கினைச் செலுத்தி யவர் "மாஸ்டர்”. ஆசிரியப்பணி எவ்வளவு சுகமுடையது, பலமுடையது, பயனுடையது என்பதனை இந்த மாணவர் களுடைய சொற்களாலே உணரக்கூடியதாயுள்ளது.
ஆசிரியர் ஒருவர் மலைபோலவும் மலர்போலவும் இருக்க வேண்டுமென நன்னூல் ஆசிரியருக்கு இலக்கணம் கூறுகின்றது.
27

Page 19
மலை எத்தனையோ பலன்களைக் கொடுக்கவல்லது. இவ்வாறு நிமிர்ந்து உயர்ந்து பயன்தரக்கூடிய ஆசிரியர் பூவைப்போல மென்மையாகவும் இருக்கவேண்டியவராவர். இராசையா மாஸ்டர் இந்த இலக்கணத்துக்கு இலக்கியமாகவுள்ளார். இத்தகைய நிமிர்வும் மென்மையும் அவருடைய இலக்கிய, ஊடகவியல் ஆளுமையிலே செல்வாக்குச் செலுத்தியமை வியப்பல்ல.
மலர் போன்ற அந்த நெஞ்சினுள்ளே மூர்க்கமான கோபமுமிருந் தது. “பாதகம் செய்பவரைக் கண்டால் அவரை மோதி மிதித்து விடு பாப்பா என்று பாரதி கூறியதைப் போல் பாதகச் செயல் கண்டு கொதிப்படைபவர் "மாஸ்டர்". இவற்றுக்கு மேலாக “தமிழ்ப் பிழை” காணுமிடத்து அவருக்கு ஏற்படும் சினம் சொல்லாலே வடிக்கமுடியாதது. 1958 முதல் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் “இளைஞர் மன்றம்”, “சிறுவர் மலர்” முதலிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வந்தார். இந்நிகழ்ச்சிகளிலே பங்குபற்றிய சிறுவர்களும் இளைஞர் களும் இன்று பெரியவர்களாக நல்ல மதிப்புக்குரியவர்களாக விளங்குகின்றனர். இராசையா மாஸ்டருடைய திறமையினையும் அன்பினையும் பரிவினையும் இவர்களிற் சிலர் வாய்விட்டுக் கூறியதை நான் கேட்டுள்ளேன். தமிழ்மொழியைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு நல்ல பயிற்சியினைத் தங்களுக்கு அவர் தந்ததாக அவர்கள் கூறினர்.
இராசையா மாஸ்டர் கடைசியாக எழுதியது ஓர் அணிந்துரை யாகும். அருட்கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மா அவர்களின் 87ஆவது அகவை நிறைவுக்குக் காணிக்கையாக வழங்க மனோன்மணி எழுதிய பண்டைத்தமிழர் வாழ்வியற் கோலங்கள்: சமயம் என்னும் நூலுக்கே அவர் அணிந்துரை வழங்கினார். அதனைக் கண்ணாலே அச்சிலே பார்ப்பதற்கு முன்னர் அவசர அவசரமாகப் பயணமாகிவிட்டார். இவருடைய எழுத்துலக வாழ்வின் நிறைவாக அமைவது, குறள்வழி வாழ்வு என்னும் நூல். கனடா சைவசித்தாந்தப் பெருமன்றம் வெளியிடும் அன்பு நெறி இதழிலே தொடராக வெளிவந்த கட்டுரைகளிற் சிலவே இந்நூலாக வெளிவந்தது. ஒழுக்கமான வாழ்வு, உண்மையே பேசுதல், புரிந்துணர்வு,
28

அழகினை இரசித்தல் என்னும் நற்பண்புகளையுடைய அவர் திருக்குறளிலே ஈடுபட்டதும் அதனை வாழ்வுக்கு உரைகல்லாகப் பயன்படுத்தி எழுதியதும் வியப்பல்ல.
“உரையும் பாட்டும் உடையோர் சிலரே மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே” என்று ஒரு புறநானூற்றுப் புலவன் பாடுகிறான். உரையினாலும் பாட்டினாலும் புகழப்படுபவர் இந்த உலகில் சிலரே ஆவர். பல்லாயிரக்கணக்கான ஏனையோர் தாமரை இலைகளைப்போல பெருமளவிலே தோன்றி வாடி உதிர்ந்து போவனபோல் மாய்ந்து விடுவர். அவர்களை எவரும் புகழ்ந்து பாடுவதில்லை.
இராசையா மாஸ்டர் உரையும் பாட்டும் உடையவராக ஆகியுள்ளார். அவருடைய இனிய இலக்கிய நெஞ்சம் சிவகாமி உடனுறை ஆடவல்லானுடைய தாமரைத் தாள்களிலே அமைதியுற்றிருக்க வேண்டி இந்த எழுத்தினை நிறைவு செய்கிறேன்.
29

Page 20
நினைவுகளில் உனைக் காண்போம்
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
பூப்போன்ற புன்னகையும் பொன்போன்ற நன்மனதும் பார்ப்போர் மனதில் பதியும்படி வாழ்ந்த மூத்ததமிழ் அறிஞ! புத்தகத்தினுள்ளே புதைந்து தினமிருந்த
வித்தகனே. . . நாவல், கவிதை, சிறுகதைகள் நாடகங்கள்,
யத்வையுமே தேடிப்படிக்கும் திறனுடையோய், போலி, நடிப்பு, புலுடா வீண் சோலிகளோ யாவும் உமைச் சொந்தம் கொண்டாடவில்லை. உண்மை வழிநடந்த உத்தமனே! மானுடத்தின் மேன்மையினை மனதாரப் பேணினையே, நீ மிதித்த புல்கூடச் சாகாது, மீண்டும் தளிர்த்து புத்துயிர்ப்பாய் மேலெழும்பும், மகன்மாருள் மூத்தவனாய் - உன் மருமகனை நீ நேசித்த பான்மை கண்டு உந்தன் பண்பை வியந்தவன் நான்,
30

பேரக் குழந்தைகளைப் பேணி அரவணைத்து ஆராத காதலுடன் அன்பூட்டி வாழ்ந்தவனே, நாம் படிக்கும் புத்தகம்நீ - அதில் ஓரெழுத்தைக் கூட ஒதுக்க முடியாது,
L fTG6Q)fT595 L 5B5fTUL நீதி நெறிக்கதைகள் நித்திலப் “பூம்” பாட்டுக்கள் ஒதி உணர வைத்த உயர்ந்த எழுத்தாளா, பேச்சினிலே மென்மையுள்ள பெரியதொரு நிறைகுடம்நீ, உற்றவர்கள், நண்பர், உறவினர்கள் எவரையுமே மனம்நோக வைக்காத மாண்புகண்டு நான் மகிழ்வேன், ஆழக் கடலாய் Κ அனிமதியுடனே இருந்து வாழப் பயின்ற வல்லாளா, மெல்ல எழுந்து வந்து மேனி புளகமுற நல்வார்த்தை சொல்லி நம்மை யெல்லாம் வரவேற்ற நாள்கள் இனிவருமா? அன்போடழைத்து, அறிவுரைகள் கூறியெமை வாசல்வரை வந்து வழியனுப்பி வைக்கின்ற தயாவான தண்ணளியைத் தாம்மறப்பதெப்படியோ? போய்வருக ஐயா! உன் பொன்னுடல் இல்லாவிடினும், உன்னை, நீள நினைந்திருப்போம் - அந்த நினைவுகளில் உனைக்காண்போம்.
3.

Page 21
ஆத்ம சாந்திப் பிரார்த்தனை உரை
அமரர் உயர்திரு வல்லிபுரம் இராசையா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
சமீபத்தில் இறைவனடி சேர்ந்தவர் அமரர் வல்லிபுரம் இராசையா அவர்கள். யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பலகாலம் கொழும்பை வதிவிட மாகக் கொண்டு வாழ்ந்தவர். சிறந்த ஆசிரியராகவும் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் வரவேற்கத்தக்க பேச்சாளராகவும் இவருடைய வாழ்க்கை கழிந்தது. இன்றைய இளைஞர்கள் பலர் இவர் குரலை அறிந்திருக்கமாட்டார்கள். ஆனால் கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஓயாது ஒலித்தது இவருடைய குரல்,"வானொலிமாமா" என்று பலரும் மெச்சிப் புகழ்ந்தார்கள். அத்துடன் கனடா விலிருந்து வெளிவரும் "அன்புநெறி சஞ்சிகையில் இவர் எழுதிய கட்டுரைகளை என்போன்றார் பலர் வாசித்து மகிழ்ச்சியடைந்
தனர்.
அமரர் இராசையாவின் குடும்பம் எங்கள் குடும்பத்தோடு மிகவும் தொடர்பு கொண்டது. இவருடைய பாரியார் கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரியில் என்னோடு கல்வி கற்பித்தவர். தொடர்ந்து எனது சகோதரியோடு அதே பாடசாலையில் கல்வி கற்பித்தமையினால் எங்கள் குடும்பத் தொடர்பு இன்று வரை நீடித்து நிற்கிறது. அமரத்துவமடைந்த பெரியார் இராசையா அவர்களின் மறைவுச் செய்தி பத்திரிகை மூலமும் வானொலி மூலமும் அறிந்து நான் பெரிதும் வருத்தமுற்றேன். நிலையில்லாத இந்தச் சரீரம் என்றோ ஒரு நாள் மறைவது நிச்சயம்தானே. இந்த உண்மையை நினைக்கும்பொழுது மனம் சிறிது ஆறுதல் அடை கிறது. அன்னாரின் ஆத்மா அமைதியடைய எல்லாம் வல்ல துர்க்காதேவியைப் பிரார்த்தித்து அமைகின்றேன்.

■
ாரதியுடன் ாா பார்த்தசாரதி "If I III Ti T.
ாரித் I GOLIC) *
LIII HII JJ || 4 ill IEናû11 கிய மன்ற, முத p இல்க் தமிழ் bற் கல்லு கற கல: பெனடி чг. III,

Page 22

உளத்தால் உயர்ந்த உத்தமன்
கம்பவாரிதி இ. ஜெயராஜ்
கொழும்புக் கம்பன் கழகம்
ஈழத்தமிழ் உலகில் இன்னுமொரு இழப்பு. சகம் போற்ற (போற்றி) வாழ்ந்த ஒரு சான்றோன், நிறைவுற்று நிலங்கடந்தான் R கண்களில் கருணை நிழல்.
வார்த்தைகளில் மெளனச்சாயல்.
செயல்களில் அதிரா அறம்.
மனத்தினில் நிறை அன்பு.
இவையே அவர் வடிவு. எவரையும் புன்னகையால் வரவேற்கும் புனிதன். எழுத்தைத் தன்புகழின் அடையாளமாய் ஆக்காமல், சந்ததியின் தலையெழுத்தாய் ஆக்க நினைத்தவன். பகை இவர்க்குப் பகை. அன்பால் அனைவரையும் ஈர்த்த அற்புதன். ஒழுக்கத்தை வாழ்விலும் வாக்கிலும் எழுத்திலும் பேணிய பெரியோன். தக்கார்தாம் என்பதை எச்சங்களின் ஏற்றத்தால் நிரூபித்தவன். ஏணியாய் இருந்த ஏற்றமிகு ஆசிரியன். தன்னில் ஏறி உயர்ந்தாரின் ஏற்றத்தை, தன் ஏற்றமாய் உணர்ந்து உவந்த சான்றோன். தன் ஏற்றங் கருதி பொய்ம்மையை அங்கீகரியாத புனிதன். ஏதிலார் தரம் உயர்த்த எப்போதும் நினைந்தவன். தவ்த்தின் தந்தை. புறம் புறந்திரிந்து கலைஞர்களைக் கைபிடித்து உயர்த்திய கண்ணியன்.

Page 23
கணவனாய், தந்தையாய், மாமனாய், பேரனாய் இல்லத்திலும், ஆசிரியனாய், எழுத்தாளனாய், ஒலிபரப்பாளனாய் சமூகத்திலும், தன் கடமைகளைச் சரிவரச் செய்து ஆன்று, அவிந்து, அடங்கிய சான்றோன்.
அவ் உத்தமனின் இழப்பால் உலகம் சோர்ந்தது. இல்லம் வாடிற்று. இலக்கிய உலகம் நெறி செய்யும் ஒரு நேர்மையாளனை இழந்தது. இழப்பு ஈடு செய்ய முடியாததே! w ஆனாலும் காலம் அனைத்தையும் நிரப்பும் சக்திகொண்டது. அறம் தன்னை இயற்ற, உலகில் உயர்ந்தோரைத் தொடரச் செய்யும். அத் தொடர்ச்சி இராசையா மாஸ்டரின் குடும்பத்தின் உள்ளேயே
ஆக, என்னை வாழ்விக்கும் கம்பநாட்டாழ்வான் திருவடி பணிந்து பிரார்த்திக்கிறேன்.
“இன்பமே எந்நாளுந் துன்பமில்லை”
 

அமரர் சிவத்தமிழறிஞர், நல்லாசிரியர் திரு.வ. இராசையா அவர்கள்
திரு. தி. விசுவலிங்கம்
நிர்வாக ஆசிரியர், 'அன்பு நெறி தலைவர், சைவ சித்தாந்த மன்றம், கனடா
தமிழறிஞர், கவிஞர், நல்லாசிரியர் சிவத்திரு.வ. இராசையா அவர்கள் 17.02.2007 சனிக்கிழமை இரவு 9.50 மணியளவில் கொழும்பில் அவரது இல்லத்தில் தமது எண்பத்தாறாவது அகவையில் சிவபதப்பேறு பெற்றார் என்ற செய்தி அறிந்து அவரின் ஆன்ம முத்தி வேண்டி வழிபாடு செய்தோம். அவரின் மறைவு அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமன்றி சைவத்தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். ஆசிரியர் அவர்கள் கனடா சைவசித்தாந்த மன்றம் மாதந்தோறும் வெளியிட்டு வரும் "அன்பு நெறி" சஞ்சிகையின் சிறப்பாசிரியர்களில் ஒருவராக இருந்து அரும்பணி ஆற்றி வந்தவர்.
ஆசிரியர் அவர்கள், மருதானை சாஹிரா கல்லூரியில் ஒரு வருட காலம் பணி ஆற்றிய பின்னர், கொட்டாஞ்சேனை புனித பெனெடிக்ற் கல்லூரியில் முப்பத்துநான்கு வருடங்களுக்கு மேலாக ஆசிரியப் பணி ஆற்றினார். பாலபண்டிதர் பரீட்சையிலும் சித்தியடைந்தார். புனித பெனெடிக்ற் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்றத்தின் அமைப்பாளராகவும் முதன்மை அமைப்பாளராகவும் நூல்நிலையத் தமிழ்ப் பிரிவு நிர்வாகியாகவும் பல ஆண்டுகள் பொறுப்பாக இருந்து சிறப்பாகத் தொண்டாற்றினார்.
அவர், தம்மிடம் கற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களைத் தமிழில் பேச்சாற்றல், எழுத்தாற்றல், வாதத்திறன் கொண்டவர் களாக ஆக்கி உள்ளார். இன்றும் அம் மாணவர்கள் பலதுறைகளில் சிறப்புப்பெற்று பல நாடுகளில் வாழ்ந்தாலும் அவரை நன்றி யோடு நினைவுகூர்வதை நான் அறிவேன். நானும் அவருடன் பதினாறு ஆண்டுகள் சக ஆசிரியனாகப் புனித பெனெடிக்ற் கல்லூரியில் கற்பித்தேன்.

Page 24
அவருடன் ஈடுபட்டு கல்லூரியின் தமிழ் மன்றத்திலும் நூல் நிலையப் பணிகளிலும் தொண்டாற்றினேன். அக்காலத்தில் அவரை நன்கு அறிந்து கொண்டேன். எங்களிடம் இனிய நட்புறவு ஏற்பட்டது. அமரர் நல்லாசிரியர்; இலக்கிய விமர்சகர்; இலக்கிய ரசிகர்; இலக்கியப் படைப்பாளர்; இனிய பண்புகள் கொண்டவர்; பழகுவதற்கு எளிமையானவர்; அமைதியானவர்; கடமையில் கட்டுப்பாடும் கண்ணியமும் உடையவர்; தெளிவான சிந்தனை யாளர்; சமூக, சமய சேவையாளர்; மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
புனித பெனடிக்ற் கல்லூரியில் ஆசிரியராக இருந்த காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப் பாளராகப் பொறுப்பேற்று “வானொலி அண்ணாவாக” இளைஞர் மன்றம், “வானொலி மாமாவாக” சிறுவர் மலர், கல்வி ஒலிபரப் பில் ஒரு பகுதி ஆகியவற்றை நடத்தி வந்தார். இலக்கிய நண்பர் களுடன் சேர்ந்து தமிழ்க் கலைஞர் வட்டம் (தகவம்) என்னும் இலக்கிய அமைப்பை (1972இல்) நிறுவி நடத்தி வந்தார்.
இவர் "சண்டியன் ஒநாய்”, “சந்தனக் கிண்ணம்”, “புதிய பூக்கள்” ஆகிய சிறுவர்களுக்கான கவிதை நூல்களை ஆக்கியுள்ளார். இவற்றிற்கு யாழ் இலக்கிய பேரவையின் பரிசு, வடக்கு கிழக்கு மாகாண அரசின் பரிசு, இலங்கை அரசின் இலக்கிய விருது என்பன கிடைத்துள்ளன.
அன்பு நெறி சிறப்பாசிரியராக பல அரிய கட்டுரைகளை கிரமம்ாக அன்புநெறிக்கு எழுதி வந்தார். அன்புநெறி ஐந்தாண்டு நிறைவு கண்டபொழுது, ஐந்தாண்டுகளும் வெளிவந்திருந்த அறுபது இதழ்கள் பற்றிய ஆய்வு விமர்சனம் ஒன்றினை மிகவும் நடுநிலையாக இருந்து எழுதி, அதன் வளர்ச்சிப் பாதைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். திருக்குறளில் தொடராக எழுத விரும்பி மாதந்தோறும் “திருக்குறள் கூறும் சைவநெறி” என்ற தலைப்பில் எழுதி வந்தார். இக் கட்டுரைகள் அன்பு நெறியிலே வெளிவந்து கொண்டிருக்கையில், வாசகர்களின் பெருவரவேற் பைப் பெற்றிருந்தன. அவற்றில் ஐம்பது கட்டுரைகளை மாத்திரம் தெரிவுசெய்து “குறள் வழி வாழ்வு” என்ற தலைப்பில் நூலாக்கி, அதனை ஏப்பிரல் 2005 இல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்
36

வெளியீடு செய்தார். இனிய தமிழ்நடையிலே அமைந்திருப்ப தோடு ஆழ்ந்த வாழ்வியல் கருத்துக்களையும் கொண்டது இந்நூல்.
எனது மகன் செல்வன் விசுவபாரதிக்கும் செல்வி யசோதா வீரசிங்கத்துக்கும் கொழும்பில் திருநெறிய தமிழ் முறையில் யூன் 2001 இல் திருமண எழுத்து நடைபெற்றபோது ஆசிரியர் அவர்கள் கலந்து வாழ்த்துரை வழங்கி, திருநெறிய தமிழ் முறையில் வாழ்வியல் சடங்குகள் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்திப் பாராட்டி, உளமார வாழ்த்தினார். அவர், தமிழும் திருமுறைகளும் தமிழ் மக்கள் மத்தியில் வாழ்வியல் மற்றும் துறைகளிலும் மேலோங்கி விளங்கவேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டிருந்த பெருமகனாவார்.
அமரர் அசிரியர் அவர்கள் வளர்த்தெடுத்த புனித பெனடிக்ற் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் கடந்த 2006 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அதனது அறுபது ஆண்டு நிறைவு விழாவான வைர (மணி) விழாவைக் கொண்டாடியது. அவ்விழாவில் பிரதம விருந்தினராக ஆசிரியர் திரு. வ. இராசையா அவர்களும் அவரின் துணைவியார் திருமதி. பூரணம் இராசையா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஆயிரம் பிறை கண்டு அறத்தின் இயல்போடு சேர்ந்த இல்வாழ்க்கை வாழ்ந்த பெருமைக்குரியவர் ஆசிரியர் இராசையா அவர்கள். அவரின் வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் ஆசிரியை திருமதி பூரணம் இராசையா அவர்கள். م•
மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை என்ற குறளுக்கமைய நற்குணங்களும் நற்பண்பும் நிறைந்த அவரது துணைவியார் கணவனுடைய விருப்பத்திற்கேற்ப அளவறிந்து நடந்து பெருமை தேடிக் கொடுத்துள்ளார். இவர்கள் இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு மனோரஞ்சன், வசந்தி, திருமாவளவன் ஆகிய நன்மக்களைப் பெற்றெடுத்து, அவர்கட் குரிய கல்வியைப் புகட்டுவித்து அவர்களின் நல்வாழ்வைக் காணும் பேறுபெற்றார். LSSSSSSSSSS
இந்த உலகத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் மறைவது உறுதி.
மறைந்தவர்கள் எல்லோரும் விரைவில் மறக்கப்பட்டும்
37

Page 25
விடுகிறார்கள். ஆனால் அவர்களிற் சிலர் மறவாமல் உள்ளத்தில் இருத்தி நினைத்துப் பார்க்கத்தக்கவர்களாக விளங்குகிறார்கள். அப்படி நினைத்துப் பார்க்கத்தக்க ஒருவர் ஆசிரியர் சிவத்தமிழ் அறிஞர் சிவத்திரு வ. இராசையா அவர்கள்!
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். என்ற அய்யன் திருவள்ளுவனார் திருக்குறள்களுக்கு அமைய ஆசிரியர் இராசையா அவர்கள் மறைந்தும் மறையாது கலங்கரை விளக்காக ஒளி தந்து கொண்டிருப்பார்.
நல்லாசிரியப் பெரியார் சிவத்திரு வ. இராசையா அவர்களின் ஆன்மா சிவனார் திருவடியில் பேரின்பம் துய்க்கத் திருவருளை வேண்டியும் குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள் ஆறுதல் அடையவும் சிவபெருமான் திருவருளை வேண்டி வழிபடுவோமாக.
சிவ சிவ சிவ
 

எனது ஆப்த நண்பன்!
திரு. செ. நடராசா மூத்த எழுத்தாளர், ஓய்வு பெற்ற ஆசிரியர்
எனது ஆப்த நண்பர் இராசையா அவர்கள் காலமானார் என்ற செய்தியைப் பத்திரிகையில் படித்து அதிர்ச்சியடைந்தேன். அவரைக் காணவேண்டும் பேசவேண்டும் என்று ஆவலாக இருந்த என்னை அந்தச் செய்தி முடக்கிவிட்டது.
திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்தில் முப்பத்தி யேழில் எஸ்.எஸ்.சி. படிக்கச் சென்ற எனக்கு முதன்முதலில் அறிமுகமானவர் அமரர் இராசையா அவர்கள். எனது விபரத்தைத் தெரிந்து கொண்டபின் என்னைத் தன் பக்கலில் அமர்த்திக் கொண்டார். அதன் பின்னர் படிப்படியாக நண்பர்களானோம். வகுப்பில் கற்கும் கல்வியைத் தவிர ஏனைய கலைத்துறைகளிலும் எம்மிருவருக்குமிருந்த ஈடுபாடே நமது நட்புக்கு அடிநாதமாக இருந்தது. அக்காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த ஆனந்தவிகடன், கலைமகள் முதலிய பத்திரிகைகளை நாமிருவரும் மாறிமாறி விரும்பிக் கற்போம். கலைமகள் பத்திரிகை, இலக்கியத்தை நம்மிருவர் உள்ளங்களிலும் ஆழப் புதைத்தது. விகடன், நகைச் சுவையை வளர்த்துக் களிப்பூட்டிற்று. கல்கி, மாயாவி, நாடோடி, துமிலன், எஸ்.வி.வி, பரதன் போன்றவர்களின் கதைகள், நகைச் சுவைக் கட்டுரைகள் எம்மை மிகவும் கவர்ந்தன.
கதைகளை இரசிப்பதிலும் திறனாய்வு செய்வதிலும் வல்லவர் அமரர் இராசையா அவர்கள். என்னுடனும் வாதிப்பார். நான் பேசாமலிருந்தால், “என்ன பேசாமலிருக்கிறீர்கள்?’ என என்னைச் சீண்டுவார். “உங்கள் அபிப்பிராயந்தான் எனது அபிப்பிராயமும்” எனக் கூறினால், “இனி மூன்றாம் ஆளைத்தான் எமது இலக்கியத் திறனாய்வுகளுக்குத் தேட வேண்டும்” என்று கூறிச் சிரிப்பார்.
39

Page 26
பள்ளிக்கூடம் மதியம் இரண்டு மணிக்கு மூடப்படும் என்றாலும் நான் அவர் வீடுவரை எனது துவிச்சக்கர வண்டியை உருட்டிக் கொண்டு அவருடன் பேசிக்கொண்டே வருவேன். பேச்சுக்கள் அனைத்தும் இலக்கியக் கூட்டுக்குள்தான் உலவும்.
பரீட்சையில் சித்தியடைந்ததும் எங்கள் திசை மாறிவிட்டது. இதயம் மட்டும் எப்பொழுது சந்திப்போம் என ஏங்கிற்று.
சில வருடங்களின் பின்னர் அவர் குரலை இலங்கை வானொலி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அறிந்து அவருக்குக் கடிதம் எழுதினேன். தந்தியிலும் வேகமாகப் பதில் கடிதம் வந்தது.
அவரின்கடிதம் என் இதயத்துடிப்புப் போலிருந்தது மறுபடியும் நாம் இணைந்தோம்! நாம் நமது துறவுக் காலத்தில் புரிந்த இலக்கியப் பணிகளை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டோம்!
நாங்கள் இருவருமே இலக்கியப் பித்தர்கள். கேட்பானேன்! சிறுகதைகள் பற்றியும் வேறு இலக்கிய வடிவங்கள் பற்றியும் பேசுவோம். அடிக்கடி சந்திக்காவிட்டாலும் கடிதமூலம் அடிக்கடி சந்திப்போம். அமரர் இராசையா அவர்கள் எழுதிய சிறுவர் நூல்களை எனக்கு அனுப்பி வைப்பார். அமரர் அவர்கள் தகவம் மூலம் ஆற்றிய இலக்கியத் திறனாய்வுப் பணியை யாரும் மறக்கமுடியாது.
எனது “நகைச்சுவைக் கதம்பம்” என்னும் நூலுக்கு அணிந்துரை வழங்கி அமரர் கெளரவித்தமையை எப்படி மறப்பேன்!
இளமையிலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபாடுகொண்டு அமரர் இராசையா அவர்களும் நானும் வாழ்ந்து வந்தோம். எனது ஆப்த நண்பனின் பிரிவு என்னை மிகவும் வாட்டுகிறது.
அமரர் இராசையாவின் "குறள்வழி வாழ்வு” நூலைக்கற்று அமைதி பெறலாமென எண்ணுகிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் அவரைப் பிரிந்து துயருறும்
அனைவரது துயரத்தையும் ஆற்றி அருளுவாரென்ற நம்பிக்கை யுடன் பிராத்திக்கிறேன்.

A RESPECTED GURU
Mr. C. Pathmanathan
It was the second half of the 1940s. The Director of St. Benedict's was Reverend Brother Luke and the Principal of the Primary was Reverend Brother Lawrence. A smart young man in immaculate white national dress was seen striding into the upper primary classes to teach Tamil. At first sight, we of the lower primary, were deeply impressed by the new teacher's striking personality and deportment. After two years we had the opportunity of learning our Tamil under him. Thus began an association that lasted till 1959. As a student we observed that he was a cut above all the other vernacular teachers who donned the national dress. Soft spoken and mild mannered he captured the heart and minds of his students with his well-planned and well-delivered lessons. His writing on the blackboard resembled a string of pearls and we used to persuade the Board monitor' to delay wiping off his impeccable handwriting. I cannot recall even a single incidenfofindiscipline during his periods of teaching. Needless to say he never, ever resorted to corporal punishment. Later when we went up to the higher forms, vidwans and pandits took over the subject but our respect and admiration for this gentleman never diminished. His latent talents in the field of Tamil Literature and broadcasting came to light when we were not directly under him. But as Moderator of the Tamil Literary Union and House Master he proved his worth as an able organizer and guide. He understood the over enthusiasm and exuberance of teenagers and diverted their misguided views and opinions correctly.
After my stint in the University I had the opportunity of being his colleague in 1960 in which capacity I continued for twenty years. My hero-worship of the man continued. The authorities who discontinued veteran teachers once they reached sixty years made an exception in the case of this man which speaks volumes of the great regard and respect they had for him. .
That was Mr V. Rasiah - a model of decorum and pedagogy
41

Page 27
மரபு வழித் தமிழ் புலமையாளர் அமரர் வ. இராசையா
திரு. தெளிவத்தை ஜோசப்
மலையக எழுத்தாளர் மன்றம்
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம், கல்வியாளர்கள் மத்தியில் கூட ஈழத்து இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தாத காலமாகவே இருந்தது. இலக்கியக்கல்வி முக்கியத்துவம் பெற்றிராத காலம் அது.
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் இலக்கிய ஈடுபாடு கொண்டதன் பின் இந்த நிலைமைகள் வெகுவாகவும் விரை வாகவும் மாற்றம் கொள்ளத் தொடங்கின.
பழந்தமிழ் இலக்கியம் முதல் ஈழத்து இலக்கியம், நவீன இலக்கியம் போன்றவைகள் ஒரு இலக்கியப் பிரக்ஞையுடன், இலக்கிய ரசனை உணர்வுடன் கற்பிக்கப்பட்டன.
பண்டிதமணி, திருநெல்வேலி சைவ ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளராகப் பதவி ஏற்றதனால் ஆசிரியப் பயிற்சி பெற வந்த தமிழாசிரியர்கள் இலக்கியத்தில் நாட்டம் கொள்ள, இலக்கியத்தை ரசிக்க, இலக்கிய ரசனையில் ஈடுபட வழி சமைத்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள திருநெல்வேலியில் 22, 11. 1919 இல் பிறந்தவர் வ. இராசையா அவர்கள்.
ஈழத்துச் சிறுகதை மூலவர் சம்பந்தனும் சம்பந்தரின் மாணவரும் மறுமலர்ச்சிப் படைப்பாளருமான இராஜநாயகனும்கூட இதே யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் கள்தான். (சம்பந்தன் 1913 இராஜநாயகன் 1926)
திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடங்கிய திரு.இராசையா ஈழத்துத் தமிழ் சட்டம்பி மார்களின் தலைமைச் சட்டம்பியார் என்று பெயர் பெற்ற
42

பண்டிதமணியவர்களின் மாணவர்களாயிருந்து பின் ஆசிரியர் களானவர்களிடம் கல்விகற்கும் வாய்ப்பும் பாக்கியமும் பெற்றவர்.
பாடசாலைக் கல்வியை எஸ்.எஸ்.சி. யுடன் முடித்துக்கொண்டு ஆசிரியப் பயிற்சிக்காகக் கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்தார். (1942)
இதே கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில்தான் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையும் சேர்ந்து (1927) பயிற்சி பெற்று வெளியேறி திருநெல்வேலி சைவ ஆசிரியக் கலாசாலை யில் விரிவுரையாளராகப் பதவி ஏற்றார் (1929) என்பதையும் ஒரு தகவலுக்காக நாம் குறித்துக் கொள்ளலாம்.
1944 இல் ஆசிரியப் பயிற்சி முடித்து வெளியேறிய இவர் கொழும்பு வந்து சில காலத்தின் பின் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ற் கல்லூரியில் ஆசிரியப் பணியேற்றார் (1946).
தனது பாடசாலை நாட்களிலேயே கல்வியுடன் இலக்கியத்தை யும் கலந்தே கற்ற வாய்ப்பின் காரணமாக அவருடைய இலக்கிய செயற்பாடுகளுக்கான ஆரம்பமும் ஒரு மெளனம் நிறைந்த தவத்துடன் அவருள் கனன்று கொண்டே இருந்திருக்கிறது.
ஈழகேசரி, வீரகேசரி என்று கட்டுரைகளும் சிறுகதைகளும் எழுத ஆரம்பித்து, சென் பெனடிக்ற் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்றம் அமைத்து, வானொலி அண்ணாவாக, வானொலி மாமாவாக சிறுவர்களையும் இளைஞர்களையும் கலையார்வம் மிக்கவர் களாக உருவாக்கப் பணிபுரிந்து, சிறுவர் இலக்கியத்துறை வளர்ச்சி யுறாமல் கிடக்கும் நிலை கண்டு அத்துறையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு சண்டியன் ஓநாய்; சந்தனக்கிண்ணம்; புதிய பூக்கள் ஆகிய குழந்தை இலக்கிய நூல்களை வெளியிட்டு, ஒரு குழந்தைக் கவிஞராகப் பரிணமித்து, குறள்வழி வாழ்வு (2005) என்னும் கட்டுரைத் தொகுதி மூலம் காட்டும் இலக்கிய ஆளுமை என்று ஒவ்வொன்றும் அவருள் விதைக்கப்பட்ட இலக்கிய வித்துக்களின் மேற்கிளம்பல்களே.
இத்தனை இலக்கியப் பணிகளின் மத்தியிலும் ஒரு சிகரமாக உயர்ந்து நிற்கும் பணியாக நான் கருதுவது அவரால் உருவாக்கப் பட்ட தகவம்' என்னும் தமிழ் கதைஞர் வட்டம் அமைப்பின் பணிகளும் இலக்கியச் செயற்பாடுகளுமே ஆகும்.
43

Page 28
சென்னையில் இருந்து செயற்பட்ட இலக்கியச் சிந்தனை அமைப்பு மாதந்தோறும் வெளிவரும் பத்திரிகை, சஞ்சிகைக் கதைகளை வாசித்து அந்த மாதத்தின் அத்தனை கதைகளுள்ளும் சிறந்த கதையாக ஒன்றைத் தெரிவு செய்யும். அப்படித் தெரிவு செய்யப்படும் 12 சிறுகதைகளை இலக்கியச் சிந்தனை ஒரு நூலாக வெளியிடும்.
ஈழத்தைப் பொறுத்தவரை தகவம் ஒரு முன்னோடி அமைப்பு. மாதந்தோறும் என்றில்லாமல் மூன்று மாதத்துக்கு ஒரு தடவை, என்று காலாண்டுக்கான சிறந்த கதை ஒன்றைத் தெரிவு செய்யும். ஆண்டுக்கு 3 கதைகள் கிடைக்கும்.
1975 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவம் அமைப்பு 1979 வரையிலான காலத்தில் தெரிவுசெய்யப்பட்ட 12 சிறுகதைகளை தகவம் பரிசுக்கதைகள் தொகுதி 1 என்றும் 1982 வரை தெரிவு செய்யப்பட்ட 12 சிறுகதைகளை தகவம் பரிசுக் கதைகள் தொகுதி II என்றும் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளது.
பழையவர்கள், புதியவர்கள் என்றும் ஈழத்தின் பல பிரதேசங் களை பிரநிதித்துவப்படுத்துகிறவர்கள் என்றும் 24 படைப்பாளர் கள் இவ்விரு தொகுதிகள் மூலம் கனம் பண்ணப்படுகின்றனர்.
எழுத்தாளர்களின் படைப்புக்கள் அது வெளிவந்த பத்திரிகை களுடன் காணாமல் போய்விடும் நடைமுறைத் தவறுகளிலிருந்து பாதுகாக்கப்படும் ஒரு இலக்கியப் பெரும் பணியாக திரு. இராசையா அவர்களின் இத்தகவம் பணியினை நான் காண்கிறேன்.
சிறுகதைகளை வாசித்தல், சேகரித்து மற்றவர்களை வாசிக்கச் செய்தல், அவை பற்றிப் பேசுதல், விமர்சித்தல் குறைநிறை கண்டு தெரிவுசெய்தல் போன்ற செயற்பாடுகள் படைப்பிலக்கியத்தின் வளர்ச்சிமீது அவர் கொண்டிருந்த பற்றுதலையும் அக்கறையையும் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன.
1983 இன் இனக்கலவரம் தகவம் அமைப்பின் சிறுகதைத் தெரிவுப் பணிகளை வெகுவாக முடக்கி விட்டுள்ளது.
இருப்பினும் 1979இலிருந்து 1985வரையிலான காலப் பகுதியில் வெளியிடப்பட்ட ஈழத்து நாவல்களுள் சிறந்தவற்றிற்கு தகவம் பரிசளித்து உற்சாகப்படுத்தியுள்ளது.
44

குருதி மலை - தி. ஞானசேகரன்
அடிமைகள் - கே. டானியல் இனிப் படமாட்டேன் - சி.வி. வேலுப்பிள்ளை ஒரு தனிவீடு - மு. தளையசிங்கம் கிடுகுவேலி - செங்கை ஆழியான்
சுந்தரியின் முகங்கள் - செ. யோகநாதன் ஆகிய நாவல்களுக்கே தகவம் பரிசளித்தது.
இலங்கைத் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் என்னும் பொருளில் ஒரு முழுநாள் கருத்தரங்கினையும் தகவம் திருமறைக்கலாமன்றத் துடன் இணைந்து 1997 மார்ச்சில் நடத்தியது.
இலங்கைத் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் பற்றியதான இக் கருத்தரங்கு நான்கு அமர்வுகளாக இடம்பெற்றது.
முதல் அரங்கு இராசையா அவர்கள் தலைமையில் நடந்தது. பேராசிரியர் சிவத்தம்பியும் மாத்தளை கார்த்திகேசுவும் உரையாற் றினர்.
அரங்கு இரண்டு பேராசிரியர் கா. சிவத்தம்பி தலைமையில் நடந்தது. வடக்கின் சிறுகதை பற்றி மு. பொன்னம்பலமும் கிழக்கிலங்கை சிறுகதை பற்றி செ. யோகராசாவும் மலையகச் சிறுகதைகள் பற்றி தெளிவத்தை ஜோசப்பும் தென்னிலங்கைச் சிறுகதைகள் பற்றி ஏ. இக்பாலும் உரையாற்றினர்.
அமர்வு மூன்று க. சண்முகலிங்கம் அவர்களின் தலைமையில் நடந்தது. நந்தினி சேவியர் உரையாற்றினார்.
அமர்வு நான்கு தெ. மதுசூதனன் தலைமையில் நடந்தது. இலங்கைத் தமிழ்ச் சிறுகதைக் களம் எதிர்நோக்கும் சவால்களும் பிரச்சினைகளும் பற்றிய ஒரு பன்முகக் கருத்தாடலாக இவ்வமர்வு இடம்பெற்றது. திரு. மு. தயாபரனின் நன்றியுரையுடன் இலங்கைத் தமிழ்ச்சிறுகதைகள் பற்றிய இந்த ஒருநாள் கருத்தரங்கு முடிவுற்றது.
அமரர் திரு. இராசையா அவர்கள் மிகவும் ஆவலுடனும் எதிர்பார்ப்புக்களுடன் முன்னெடுத்த தகவம் அமைப்பின் செயற் பாடுகள் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து தொடங்கப்படல் வேண்டும். தொடரவேண்டும். −
45

Page 29
தன்னை மறைத்துக் கொண்டே வாழ்ந்து 17, 2. 2007 இல் அமரர் ஆகிவிட்ட இவருடைய பல்துறை ஆளுமைகளும் செயற்பாடு களும் வெளிக்கொண்டு வரப்படல் வேண்டும்.
இவரைப் பற்றிய எழுத்துக்கள் மிகவும் குறைவே. ஞானம் சஞ்சிகையில் த. சிவசுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை மட்டுமே இப்போதைக்கு இவர் பற்றிய சில தகவல் களைக் கூறுவதாக அமைகிறது.
தன்னைப்பற்றி எதுவுமே கூறி வைக்க விரும்பாத இப்பெரியார் பற்றிய செய்திகள், தகவல்கள், வாழ்க்கைக் குறிப்புகள், அனுபவங்கள், இத்தியாதிகளை ஒவ்வொன்றாக சிறுகச்சிறுக அப்போதைக்கப்போது கிடைக்கும்போதெல்லாம் சேகரித்தல், வெளிக்கொண்டு வருதல் போன்ற பணிகளில் கவனம் கொள்ள வேண்டும்.
ஓர் அர்ப்பணிப்புடன் ஈடுபடவேண்டும்.
46
 

رشک سے پہ زحیح م9یع
* مسسی موقع n%لاڑ2
கலாநிதி செங்கை ஆழியான் க. குணராசா
யாழ் இலக்கிய வட்டம்
அமரர் வ. இராசையாவின் எளிமையான தோற்றம் என் கண்கள் முன் நிழலாடுகின்றது. எனது மணிவிழாவின்போது வெளியிடத் தவறிய “செங்கை ஆழியான் வாழ்வும் படைப்புக்களும்” என்ற மணிவிழா மலரை, எனது 65 ஆவது அகவையில் விழா எடுத்து கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில், 31ஆம் திகதி டிசம்பர் 2006, ஞாயிற்றுக் கிழமை நண்பர் டொமினிக் ஜீவாவும் நண்பர்களும் முழுமூச்சாக முன்னின்று வெளியிட்டு வைத்தனர். அதனை இங்கு முதன்மையாக் குறிப்பிடுவது என் நோக்கமன்று. இந்தக் கூட்டம் தான் மூதறிஞர் அமரர் வ. இராசையா கலந்து கொண்ட நிறைவுக் கூட்டம் என்பதுதான் என் விழிகளில் நீரைச் சொரிய வைக்கின்றது. . தள்ளாத முதுமையில், கைத்தாங்கலோடு சலிக்காது கலந்து கொண்டு என்னைச் சிறப்பித்த, மகிழ்வித்த பெரும் கருணையை என்னவென்பேன்? மங்கல விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைக்குமாறு கோரியபோது கால்கள் சோர்ந்தாலும் மறுக்காது எழுந்து வந்து விளக்கேற்றி வாழ்த்திய பெரும் அன்பை என்னவென்பேன்?
அமரர் வ. இராசையாவுக்கு இச்சமூகத்தில் பல்பரிமாணத் தோற்றங்கள் உள்ளன. தமிழ் அறிஞர், மூதறிஞர், குறள் அறிஞர், சிறுகதை எழுத்தாளர், விமர்சகர், நல்லிலக்கியச் சுவைஞர், புனைகதை ஊக்குவிப்பாள்ர், சிறுவர் கதைஞர், சிறுவர் கவிஞர், வானொலி அண்ணா, வானொலி மாமா மற்றும் இனியதொரு கணவர், அன்பான தந்தை, பாசமான தாத்தா, எழுத்தாளர்களுக்கு நல்லதோர் வழிகாட்டி எனப் பல இனிய தோற்றங்களை அவர் கொண்டிருந்தார். இவை அனைத்திலும் மிக உயர்ந்த பண்பாக
47

Page 30
எனக்குத் தெரிவது எழுத்தாளர்களுக்கு நல்லதொரு வழிகாட்டி என்ற வடிவந்தான். எழுத்தாளர்கள் எல்லாருக்கும் அவர்களின் மனம் நோகாமல் அவர் உரையாடும் அழகு வேறெவருக்கும் வராது. இரசிகமணி கனக செந்திநாதனுக்குப் பின்னர் தகவம் இராசையாவிடம்தான் அவ்வாறான இனிய சுபாவத்தைக் கண்டேன். எனது இலக்கியப் பணிகளை நேரிலும் கடிதங்கள் மூலமும் நெறிப்படுத்தியவர் அவர். அவர் எழுதிய இனிய வாழ்த்துக் கடிதங்கள் இன்றும் என்னிடமுள்ளன.
ஒரு கடிதம் இப்படியாக அமைகின்றது. "நீங்கள் மல்லிகை 34ஆம் ஆண்டு மலரில் எழுதியுள்ள ஈழத்துத் தமிழிலக்கியத்தில் ஈழகேசரியின் பங்களிப்பு' என்னும் கட்டுரையை ஆர்வத்துடன் படித்தேன். நமது நவீன படைப்பிலக்கியத் துறையில் ஆரம்ப காலத்துட் புகுந்து வலம்வந்து தரிசனம் செய்துகொண்ட மன நிறைவு எனக்கு ஏற்பட்டது. ஈழகேசரி எங்களது படைப்பிலக் கியத் துறையின் நாற்றுமேடை, ஈழகேசரிக் காலந்தான் நமது படைப்பிலக்கியத்தின் பிள்ளைப் பருவம். இதனை ஈழத்து இன்றைய தமிழிலக்கியப் படைப்பாளிகளில் எத்தனைபேர் அறிந்துள்ளார்களோ தெரியாது. ஈழகேசரியின் மறைவுடனே இந்த வரலாறும் மங்கி மறைந்து போகக்கூடிய அபாயம் இருந்தது. அந்தக் கொடுமை நிகழாமல் நீங்கள் காத்துள்ளிர்கள். இதனைத் தான் காலத்தாற் செய்த நன்றி என்று திருவள்ளுவர் அருமையாக உணர்ந்து சொல்லியிருக்கிறார்." என்று இக்கடிதம் நீள்கின்றது.
இன்னொரு கடிதம் இவ்வாறுள்ளது. "சிரித்திரன் சுந்தர் தனது சஞ்சிகையின் ஒவ்வொரு வருட இதழ்களையும் தனித்தனி தொகுதியாக பைண்ட் செய்து வைத்திருந்தார். ஏறக்குறைய 30 தொகுதிகள். அந்தப் புத்தகங்களில் ஒன்றேனும் இப்பொழுது அவரது குடும்பத்தினரின் வசம் இல்லை. அந்தப் பிரதிகள் எங்கே இருக்கும் என்பது எவருக்குந் தெரியவில்லை. தொலைந்துபோன இந்தச் சிரித்திரன் தொகுதிகளைத் தேடி எடுப்பதற்கு நீங்கள் ஏதாவது செய்யமுடியுமானால் அது நமது தமிழிலக்கியத் துறைக்கே செய்த ஒரு பணியாக அமையும். உங்களால்தான் இது சாத்தியமாகும். காலஞ்சென்ற சுந்தர் இத்தொகுதிகளிலேயே தான் இப்போது வாழ்கிறார். இத்தொகுதிகளின் இழப்பு அவருக்கு உண்மையான மரணம் ஆகிவிடும் அல்லவா" என ஆதங்கத்துடன் அக்கடிதம் முடிகின்றது.
վ:

粤
இனிப் படமாட்டேன்' நாவலுக்கான தகவத்தின் பரிசுச் சான்றிதழை திருமதி
வி. வேலுப்பிள்ளைக்கு வழங்குகையில்

Page 31

அவரின் இக்கடிதம் சிரித்திரன் இதழ்களைத் தேடிப்பிடிக்கும் ஆவலை எனக்குத் தோற்றுவித்தது. என்னிடமிருந்த இதழ்களுடன் நூல்நிலையங்களிலும் நண்பர்களிடமும் ஒவ்வொரு இதழ்களாகச் சிலவற்றினைப் பெற்று “சிரித்திரன் சுந்தரின் நானும் எனது கார்டுனும்” என்ற தொகுப்பை மல்லிகைப் பந்தல் மூலம் வெளி யிட்டேன். அவரின் ஊக்குதலின் விளைவாகச் “சிரித்திரன் சிறுகதைகள்' என்ற தொகுதியையும் வெளியிடலாம் என்றிருக் கின்றேன். நமது இலக்கிய இருப்புக்களைப் பேணி எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கவேண்டும் என்பதில் அமரர் இராசையா வுக்கு இருந்த ஆர்வம் மதிப்பிட முடியாதது.
ஈழத்து இலக்கியத்தின் அத்திவாரமாக அமைந்த ஈழகேசரிச் சஞ்சிகையில் அன்னாருக்கு இருந்த ஆர்வம் நியாயமானது. ஏனெனில், ஈழகேசரி இளைஞர் பகுதியில் தான் இராசையாவின் ஆரம்ப எழுத்துக்கள் வெளிவந்துள்ளன. அக்காலப்பகுதியில் ஈழகேசரியில் அவருடன் மூதறிஞர் வரதர், அ.செ. முருகானந்தன், அ.ந. கந்தசாமி மற்றும் அமரர் இராசையாவின் நண்பர் விவியன் நமசிவாயம் ஆகியோர் தமது எழுத்துக்களை அரங்கேற்றி வந்தனர். ஈழகேசரியின் இளைஞர் பகுதியில் எழுதிய இவர்கள் அனைவரும் பின்னர் சிறுகதை எழுத்தாளர்களாக உருவாகினர். மூதறிஞர் வரதர், அமரர்கள் அ.செ.மு., அ.ந. கந்தசாமி ஆகியோர் நாடறிந்த படைப்பாளிகள். விவியன் நமசிவாயம், ச. நமசிவாயம் என்ற பெயரில் சில சிறுகதைகளை ஈழகேசரியில் எழுதியுள்ளார். அதே வரிசையில் நமது இராசையாவும் சளைத்தவரல்லர். ஈழகேசரியில் ஒரு சிறுகதையும் வீரகேசரியில் எட்டுச் சிறுகதை களும் எழுதியுள்ளார். அன்னாரின் பிற்கால வாழ்வில் சிறுவர் இலக்கிய வளர்ச்சி பற்றிய சிந்தனை ஆழப் பதிந்ததால் தொடர்ந்து சிறுகதைத் துறையில் ஈடுபடமுடியவில்லை. நல்லதொரு சிறுகதைப் படைப்பாளியை புனைகதைத்துறை இழந்தது. ஆனால் நல்லதொரு சிறுவர் இலக்கியப் படைப்பாளியைப் பெற்றுக்கொண்டது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 1919இல் பிறந்த அமரர் வ. இராசையாவுக்குச் சிறுகதைத்துறையிலிருந்த ஆர்வமும் ஆவலும் கடைசிவரை நிலைத்திருந்தது. மிகச் சிறந்ததொரு சிறுகதைச் சுவைஞராக அவர் இருந்தார். அதனால் 1974 களில்
49

Page 32
தமிழ் கதைஞர் வட்டம் (தகவம்) என்றொரு இலக்கிய அமைப் பினை வேல்அமுதனுடன் இணைந்து உருவாக்கி, ஒவ்வொரு மாதத்திலும் ஈழத்துப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளியான மிகச்சிறந்த சிறுகதைகளுக்கு பணப் பரிசு வழங்கி வந்தார். தகவம் மதிப்பினையும் பரிசினையும் பெறுவதைத் தக்க கணிப்பாக ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்கள் கருதியிருந்தனர். அவ்வாறு மாதாந்தக் கணிப்புக்குள்ளான சிறுகதைகளைத் தொகுத்து "தகவம் சிறுகதைகள்” என இரண்டு தொகுதிகளும் வெளிவந்தன. ஈழத்து இலக்கியத்தின் துரதிர்ஷ்டம் தகவம் அமைப்பிலிருந்து வேல்அமுதன் விலகிப் போனமை என நான் கருதுகின்றேன். அவ்வாறான பிரிவிற்குக் காரணங்கள் பலவாக இருந்தாலும் இப்பிரிவின் பின்னரும் இராசையா ஈழத்து இலக்கியத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவராக இறுதிவரை இருந்துள்ளார். ஆனால் ஈழத்து இலக்கியத்தில் இராசையாவுடன் இணைந்து ஆரம்பத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த குரும்பசிட்டி வேல்அமுதன் தன் பொழுதில் சிறிதளவு நேரத்தை யும் இன்று பகிர்ந்துகொள்ள முடியாதவராகி விட்டமை, ஈழத்து இலக்கியத்திற்கு உந்துதல் தந்த குரும்பசிட்டி மண்ணின் இலக்கியச் சிந்தனை குறைந்து வருவதுதான் காரணமா?
மூதறிஞர் வ. இராசையாவின் தமிழறிவு பட்டை தீட்டப்பட்ட வைரத்தைப் போன்றது. அவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை யின் சிறந்த மாணாக்கர்களான பண்டிதர் துரைசிங்கம், பண்டிதர் தம்பையா ஆகியோரிடம் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியா சாலையில் தமிழ் கற்றார். கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இளமுருகனார் போன்றோரிடம் தொடர்ந்து கல்வி கற்றுப் பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளிவந்தார். அதனால் அவருடைய எழுத்தில் செம்மையும் தெளிவும் இருந்தன. 1946 இல் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கிய இராசையா அவர்கள் 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். அவருடைய எளிமையும் இனிமையுமான தமிழ் நடைக்கு அவர் எழுதிய "குறள்வழி வாழ்வு” என்ற நூல் தக்க உதாரணமாகும். குறள் குறித்து அவர் எழுதிய 50 கட்டுரைகள் இந்நூலில் இடம் பிடித்துள்ளன.
ஈழகேச்ரி காலத்தில் இருந்தே சிறுவர் இலக்கியத்தில் ஆறாத பிடிப்பு வ. இராசையாவுக்கு இருந்துள்ளது. அதனால் சிறுவர் களுக்கு ஏற்ற நூல்களை ஆக்குவதிலும் வெளியிடுவதிலும்
50

ஆர்வமாகக் கடசிவரை இருந்துள்ளார். 1992இல் "சண்டியன் ஒநாய்” என்ற கதையைக் கவிதையாகவும் 1995 இல் “சந்தனக் கிண்ணம்” என்ற சிறுவர் கவிதை நூலையும் அண்மையில் “புதிய பூக்கள்” என்ற கவிதை நூலையும் வெளியிட்டுள்ளார். பலருடைய வற்புறுத்தலின் பின்னரே தனது சிறுவர்க்கான கவிதைகளை நூலுருவில் வெளியிட முன்வந்தார். "சண்டியன் ஓநாய்” இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசையும் வடக்கு கிழக்கு மாகாண சபையின் பரிசினையும் பெற்றுக்கொண்டது. “சந்தனக் கிண்ணம்” வெளிவந்த ஆண்டிற்கான இலங்கை சாகித்ய மண்டலப் பரிசினைச் சுவீகரித்துக் கொண்டது. இந்நூல்களின் சிறப்புகளை ஆராய்வதாயின் அது ஒரு தனிக் கட்டுரையாக நீண்டு விடும். இன்று சிறுவர் இலக்கியத்தில் ஈடுபட்டுழைக்கும் எழுத்தாளர்கள் இவரின் மேற்குறிப்பிட்ட நூல்களை வரிக்குவரி கற்கவேண்டும். சிறுவர் இலக்கியத்திற்கான சொற்களின் தேர்வைப் புரிந்து கொள்ளலாம். வானொலியில் ஆரம்பத்தில் 'வானொலி அண்ணாவாகவும் பின்னர் வானொலி மாமா' வாகவும் அமரர் வ. இராசையா சிறுவர் நிகழ்ச்சிகளை 20 வருடங்களுக்கு மேலாக நடாத்தி வந்துள்ளார். ‘வாசிப்பு - சிந்தனை - கற்பனை - எழுத்து’ என்ற இலக்கில் சிறுவர்களை இவற்றின் மூலம் உருவாக்கினார்.
நிறைவாக ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு தமிழறிஞர், தகவம் வ. இராசையாவின் மரணம் பெரும் இழப்பையும் இலகுவில் பிறரால் நிரப்பமுடியாத இடைவெளியையும் ஏற்படுத்தியுள்ளது. நல்லதோர் இலக்கிய வழிகாட்டியையும் சிறுவர் இலக்கியப் படைப்பாளியையும் இழந்துவிட்டோம்.
5I

Page 33
அண்ணா! எமை வளர்த்த ஏந்தலே
திரு. எம்.கே. ராகுலன்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவை அனைத்தையும்
எமது வாழ்க்கையுடன் பின்னிப் பிணைத்த பெருமகன், இராசையா மாஸ்டர்
எதையும் எப்படியும் செய்யலாம் என்றில்லாமல் இப்படித்தான் செய்யவேண்டும் என எமக்குக் கோடிட்டுக் காட்டிய கோமகன், இராசையா மாஸ்டர்
திறமைகளை இனங்கண்டு வெளிச்சத்தில் நிறுத்த திறவுகோலான திருமகன், இராசையா மாஸ்டர்
கெட்டிக்காரர்களைத் தட்டிவிடாமல் கட்டிப் பிடித்துத் தட்டிக் கொடுத்த தமிழ்மகன், இராசையா மாஸ்டர்
அன்புள்ள வானொலி அண்ணா நான் பேசும் தமிழ் நீங்கள் போட்ட பிச்சை
உங்கள் நினைவுடன் இளைஞர் மன்றத் தம்பி எம். கே. ராகுலன்
52

“பிதாமகர்
திரு. கே.ஆர். டேவிட்
மூத்த எழுத்தாளர்
மTசிமாதம், இருபதாம் திகதி பிற்பகல் ஐந்துமணிக்கு மேலிருக்கும்,
பொரளை, கனத்தை இந்துமயானம்.
எத்தனையோ மாணவர்களைத் தன் இதயத்தில் சுமந்த நல்லாசான் இராசையா என்ற மனிதனின் பூதவுடல் அடங்கிய பேழையை சென். பெனடிக்ற் கல்லூரி மாணவர்கள் சுமந்து வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து ஆசிரியர்கள். நண்பர்கள்.
தனியொருவனாக நின்று எல்லோரையும் அவர் சுமந்தார். இன்று எல்லோரும் சேர்ந்து அவரைச் சுமக்கின்றனர். நரம்புகள் சிலிர்த்து. உரோமங்கள் புல்லரிக்கின்றன.
மயானம் - சகல மனிதர்களினதும் இறுதித்தரிப்பிடம்!
அமரர் இராசையா அவர்களை இறுதியாகத் தரிசிப்பதற்காக பேழையின் மூடி திறக்கப்படுகின்றது.
எனது கண்மணிகள். நத்தை வேகத்தில் அவர்மீது ஊர்ந்து வருகின்றன. பொன்னிற மேனி. உதிர்ந்த பின்பும், மலர்ந்த முகம். தமிழ் மரபு பிசகாத உடை.
இறுதி நேரத்திற்கூட மகாகவி அவர்களின் கவிதைகளை ஆய்வு செய்ததாக அவரது மகள் வசந்தி கூறிக்கொண்டது. எனது செவிப்பறையில் இலேசாக ஒலிக்கின்றது. கூர்மையான அந்தக் கண்மணிகள். மூடப்பட்ட இமைதோற் புரையினுள் புதைந்து கிடக்கின்றன. வலிமைமிக்க அந்தக் கரங்கள் செயலிழந்து
53

Page 34
கிடக்கின்றன. இறுதித் தரிசனம்...! எனது கண்மணிகள் ஆவலாதிப்படுகின்றன.!
மயானத்தில் உடல்களைத் தகனம் செய்யும் அந்த மின்சூளின் இரும்புக் கதவுகளை அங்குள்ள ஊழியன் திறக்கின்றான்.
அந்த ஊழியனின் கண்களுக்கு. உயிரற்ற உடல்களெல்லாம் பிணங்கள் தான். அவனுக்கு அமரர் இராசையா அவர்களைத் தெரிந்திருந்தால். தயங்கியிருப்பான்..!
அமரர் இராசையா அவர்களின் பூதவுடல் அடங்கிய பேழை மூடப்பட்டு அந்த மின்சார சூளுக்குள் பேழை செலுத்தப்பட்டு கதவுகள் பூட்டப்படுகின்றன.
மருமகனுக்குள் மகனான தயாபரன் உரிமை கலந்த வேதனை யுடன் அந்த மின்சூளின் மின் இணைப்பை இயக்குகிறான்.
குறள்வழி வாழ்ந்த அமரர் இராசையா அவர்களின் பூவுலக வாழ்க்கையின் இறுதி வரியின் முற்றுப்புள்ளி...!
ஒரு காவியத்தின் நிறைவு. அதேநேரம்
பல்துறை ஆளுமைமிக்க அந்த மனிதனின் வரலாற்று வாழ்வுக்கான முதற்புள்ளியும் ஜனனிக்கின்றது. இது காலத்தின் பிரசவம், வரலாற்று வாழ்வுக்கான பிரவேசம்!
எனது நெஞ்சுக்கூடு ஒரு மின்சூளாகி. அனல் தெறிக்க. அந்த அனலுக்குள் அவர் நமக்காகவும் இந்த மண்ணுக்காகவும் விட்டுச் சென்ற மனிதம் அவிந்து துடிக்கின்றது.!
நான் அங்கிருந்து நகர்ந்து. சிறிய அந்தப் புற்றரையில் நிற்கின்றேன். என்னோடு நண்பன் மதுசூதனனும் கதிகலங்கி நிற்கின்றான்.
இராசையா என்ற அந்த மனிதனைப் பற்றிய எனது மனப்பதிவுப் பக்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் விரிகின்றன.
ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குமுன்.
கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் தமிழ் கதைஞர் வட்டம் (தகவம்) நடத்திய ஐந்து ஆண்டுகளின் சிறுகதைத்தேர்வில் பரிசு பெற்றவர் களுக்கான பரிசளிப்பு வைபவம்.
54

அன்றுதான் நான் இராசையா அவர்களைச் சந்தித்தேன். 'நீர்மட்டம் வைத்த நிதானத்தில் அவர் நின்றார்.
“தகவத்தின் "பிதாமகர் அவர்தான்" அவரைச் சுட்டிக்காட்டி எனது நண்பன் கூறுகிறான்.
“ஐயா. உங்களால் இவ்வளவு தூரம் எப்படிச் செயற்பட முடிகின்றது” என்னையும் மீறி, நான் கேட்கிறேன். அவர் சிரிக்கிறார். கள்ளம் கபடமற்ற குழந்தையின் சிரிப்பு. “தகவமும் எனக்கொரு பிள்ளை இப்படித்தான் அவர் கூறினார்! இப்போதும் எனது செவிப்பறையில் கேட்கின்றது.
தலையை நிமிர்த்தி வானத்தை நோக்கி உயர்ந்திருக்கும் அந்த மின்சூளின் புகைக்கூட்டைப் பார்க்கிறேன். புகைவர ஆரம்பிக் கின்றது.!
நானும் நண்பன் மதுசூதனும் புறப்படுகிறோம்!

Page 35
என்றென்றும் வாழ்வார்
கவிஞர் ஏ. இக்பால்
நோகாமல் நுணுகி நோக்கும் நூற்றிறமை நுண்ணறிவுடைய மேதையிவர் சீராகப் பணி செய்த சிறப்புகளால் சிறந்திலங்கும் ஆசிரிய திலகமிவர் மேலாகச் சிந்தித்துச் சிறுவர் பயன் மேன்மைபெற உழைத்தபெரும் வல்லோனிவர் யாரவரே இராசையா மாஸ்டரவர்
யாவரது மனதுள்ளும் வாழ்பவரே!
எவர்குறையும் எப்பொழுதும் எவ்விடத்தும் இதுகால வரையவரே கண்டறியார் கவருகின்ற மென்மைமிகு செய்கையினால் கவர்ச்சிநிறைப் பேச்சுதிர்த்துச் சிரித்திடுவார் இவரெவரின் மனம்நோக வைத்ததில்லை இதனாலே யாவரையும் இணைத்து நின்றார் மற்றவரை நிந்திக்கா வாழ்ந்த தினால் மகிமையுடன் அவர்குடும்பம் வாழ்தல் கண்டோம்!
தகவ மெனும் மேன்மைமிகு அமைப்பையாக்கி தலைசிறந்த இலக்கிய ஆய்வுக்கானார்
மிகச் சிறந்த சிறுவர்பாடல் நூல்கள் யாத்து
மேன்மைமிகு இடத்தினையே பெற்று நின்றார்!
56

அகம்நிறைந்த அற்புதங்கள் வானொலியில் அள்ளியள்ளிக் காற்றிடையே தந்து நின்றார் புகழிவரைப் பிடித்து நின்றும் அதனைப் பெறும் புகழ் விரும்பியாக யிவர் இருந்ததில்லை!
அவரிணைப்பில் எத்தனையோ போட்டிகளின் அறுவடைகள் செய்த பெரும் அநுபவத்தால் அவரிரக்கம் அவர்பொறுமை அவர்கருத்து அளப்பரிய அநுபவங்கள் எனக்கு முண்டு இவர்பெருமை குறள்வழியின் வாழ்வினிலே இருந்ததையே கண்டிருப்பர் மாநிலத்தார் தவப்பெருமை கொண்ட இராசையா மாஸ்டர்
தகைமையுடன் எம்மனத்துள் என்றும் வாழ்வார்!
57

Page 36
நானிலம் போற்றும் நல்லறிஞர்
திரு. த. சிவசுப்பிரமணியம்
இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை
Fழமண் பல நல்லறிஞர்களைத் தந்து பெருமை கொண்டு
நிற்கிறது. மனிதப் பிறவியின் விழுமிய நோக்கங்கள் தோல்வி காணாத வகையில் காக்கவல்ல நல்லறிஞர்கள் காலத்துக்குக்காலம் தோன்றிச் சமுதாயத்தைச் செப்பனிட்டு வந்துள்ளார்கள். அத்தகைய அடிச்சுவட்டில் தோன்றிற் புகழொடு தோன்றிய பெரியார் வ. இராசையா அவர்களைப் பற்றி இங்கு நோக்கும் போது குறுகிய எல்லைக் கோடுகளைத் தகர்த்து, வீசும் மென்காற்றுப்போல், பொழியும் வான்மழைபோல் எவர்க்கும் நலன்மிகு மனிதனாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர். அச்செம்மல் ஆற்றிய பணிகள் பல. அவர் வெற்றிடத்தை நிரப்ப முடியாத நிலை. பல்முகப் பரிமாணங்கள் ஊடாக மாணவ சமுதாயத்தையும் ஈழத்து இலக்கியத்தையும் கலைகளையும் தனது ஆளுமைக்குள் தடம் பதித்துச் சென்றவர். குறள்வழி வாழ்வு வாழ்ந்தவர்.
ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு
அத்தகைய பேரறிவாளனாகத் திகழ்ந்த அறிஞர் பெருந்தகை
தனது “குறள்வழி வாழ்வு” என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடு கின்றார். “தமிழுக்கும் தமிழினத்திற்கும் அறிவுப் பலத்தையும் அழியாத பெருமையையும் தந்துகொண்டிருக்கும் நூல் திருக்குறள். இந்நூல் நமது சிந்தனையை நெறிப்படுத்தி வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளி.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி; அல்ல மற்றுப் பிற
58

மனிதனை 'மனிதன்” என்று இனங்காட்டி நிற்பது இந்தக் குண இயல்பே. உண்மை, அடக்கம், பொறுமை, பணிவு, இன்சொல் என இந்தக் குணஇயல்பு பலப்பலவாக விரியும். இவை எல்லாம் மானுட விழுமியங்கள். மானிடம் அணிந்துகொள்ள வேண்டிய அணிகலன்கள். இவற்றுள் பணிவும் இன்சொல்லும்தான் மனித னுக்கு ஏற்ற மிகச்சிறந்த அணிகள் - பெறுமதிமிக்க அணிகள்.” குறள்வழி வாழ்ந்து, புன்சிரிப்புத் தவழும் முகத்துடன் இன்சொல் லால் எல்லோரையும் தன்பால் ஈர்த்தெடுத்து தன் நற்குண இயல்பை வெளிக்காட்டி வாழ்ந்து காட்டியவர் பெரியார் வ. இராசையா என்று துணிந்து கூறலாம். மக்கள் மனங்களில் அந்த அளவுக்கு நீங்காத இடத்தை அவர் பெற்றுள்ளார்.
பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள ஈடுபாடு போல் நவீன இலக்கியங்களிலும் நாட்டம் கொண்டவராக இருந்துள்ளார். 1974ஆம் ஆண்டு தகவம் (தமிழ்க் கதைஞர் வட்டம்) என்னும் இலக்கிய அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகச் செயற் பட்டுள்ளார். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்படும் சிறுகதைகளை விமர்சனம் செய்து அவற்றில் சிறந்தனவற்றுக்குப் பரிசில்களும் வழங்கியுள்ளார்கள். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நல்ல பணியை மேற்கொள்வதற்கு உந்து சக்தியாகச் செயற்பட்டுள்ளார். மேலும் விபவி மாற்றுக் கலாசார மையம் நடாத்திய மேம்பாட்டரங்கை மூன்று வருடகாலம் தொடர்ந்து நடாத்தி நெறிப்படுத்தியுள்ளார். இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை நடாத்துகின்ற ஆய்வரங்குகள், நூல் வெளியீடுகள் போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றுவதுடன் தன் ஆணித்தரமான கருத்துக்களையும் முன்நிறுத்திச் சொல்லிவந்தார். அவருடைய இலக்கியப் பங்களிப்பு பரந்து விரிந்து காணப்பட்ட மைக்கு மேற்கூறியவை சிறு உதாரணங்களாகும்.
சிறுவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவரான நல்லாசான், அப்பிஞ்சு உள்ளங்களுக்கு சிறுவயதிலிருந்தே நல்வழிப்படுத்தும் ஆக்கத் திறனை அறிவிக்கும் நோக்கில் சிறுவர் இலக்கியங்களைப் படைத்தார். “சண்டியன் ஓநாய்”, “சந்தனக் கிண்ணம்”, “புதிய பூக்கள் ஆகிய மூன்று ஆக்கங்களும் பெரியார் இராசையாவின் நாமத்தை என்றும் சொல்லி நிற்கும்.
59

Page 37
இரசிகமணி கனக செந்திநாதனுக்குப் பிறகு தமிழ் இலக்கிய இரசனையாளராக நின்று விமர்சனத்துறையில் நடுநிலையாளர் என்ற மதிப்புடன் இலக்கியப் படைப்புகளை நோக்கிய செம்மல். ஆற்றல்மிக்க படைப்பாளியாகவும் இலக்கிய உலகில் வலம் வந்தார்.
இலங்கை வானொலியில் பல ஆண்டுகளாக வானொலி அண்ணாவாக இளைஞர் மன்ற நிகழ்ச்சிகளை சிறப்பான முறையில் நடாத்திவந்தார். வானொலி மாமா'வாக இருந்து சிறுவர் மலர் நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் செய்துவந்தார். வானொலியில் கடமையாற்றிய தனது பாலிய நண்பன் விவியன் நவசிவாயத்தின்மேல் நல்மதிப்பு வைத்திருந்தார்.
வீரகேசரிப் பத்திரிகையில் ஒப்புநோக்காளராக ஒன்றரை வருடகாலம் பணியாற்றியுள்ளார். தினக்குரல் பத்திரிகையில் சிறுவர் மஞ்சரிப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்து பயன்தரும் ஆக்கங்களை வெளிக்கொணர்ந்தார்.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் படித்து, பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக வெளிவந்தார். ஆசிரியத் தொழிலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகிய நல்லாசான் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் (சென் பெனடிக்ற்) கல்லூரியில் ஆசிரியராக தொடர்ந்து 34 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றார். நல் மாணாக்கர் பரம்பரையை உருவாக்கிய பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார்.
நேர்மைக்கு இலக்கணமாக வாழ்ந்த பெரியார் இராசையா அவர்கள்“மனிதனுக்கு மனச்சாட்சி இருக்கவேண்டும். பொய்யை வெறுக்கின்றதாகிய பண்பு இருக்கவேண்டும். மனச்சாட்சியைத் தனது நெஞ்சில் வைத்து பூஜிக்காதவன் மனிதனே அல்ல" என்று கூறி திருவள்ளுவர் குறளுக்கு இலக்கணமாக நானிலம் போற்றும் மனிதனாக அதிலும் நல்லறிஞராக வாழ்ந்துகாட்டி, இன்றும் எங்கள் மனங்களிலே கலங்கரை விளக்காகப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்.

மனிதரைக் காண்கிறேன்
திரு. சோ. தேவராஜா
தேசியக் கலை இலக்கியப் பேரவை
எழுத்ாளர் வ. இராசையா அவர்கள் சமகால நுகர்வியல் சமூகத்தில் மனிதராகத் தோன்றுகிறார். அதிலும் நல்ல மனிதராகத் தெரிகிறார். தனது இல் வாழ்க்கையைக் கடந்து இவ் வாழ்க்கை யென்று பொதுமையறம் பூணுகின்றார். புகழை விதைத்து புகழை அறுக்கும் குறுநலப் புத்திக்காரருக்கப்பால் அறத்தை விதைத்து புகழைப் பெறும் அவரது வாழ்வு எனும் புத்தகத்தின் கதாமாந்தராக அவரே ஆகிவிட்டார் எனலாம்.
குறள்வழி வாழ்வே அவரது இலட்சியமானது. “அறத்தால் வருவதே இன்பம். அது அன்பு, அடக்கம், நல்லொழுக்கம், மானுட நேயம் முதலிய உன்னத பண்புகளால் அது வளம் பெற்றதாக இருத்தல் வேண்டும்” என்பது அவரது வாழ்வின் இன்பச் சுவையாகும்.
‘பணிவும் இன்சொல்லுந்தான் மனிதனுக்கு ஏற்ற மிகச்சிறந்த அணிகள்.” "அகந்தை கலவாத பணிவு, வன்மை கலவாத இன்சொல் இவை இரண்டும் இரட்டைப் பிள்ளைகள் என்பது வள்ளுவர் மூலம் அவர் கற்றது. ‘பணிவு என்பது அறியாமையின் வெளிப்பாடு அல்ல. இயலாமையின் செயற்பாடும் அல்ல, அது நமது அறிவினது மனப்பக்குவத்தின் வெளிப்பாடு' என்று அவர் கசடறக் கற்றார். கற்றபின் அதற்குத் தக நின்றார். சொல்லும் செயலும் ஒன்றான வாழ்வாய் மிளிர்ந்தது.
மனச்சுத்தம் சொற்கத்தம் ஆகிய இரண்டும் இணையும்போதே செயலும் சுத்தமானதாக நடுவுநிலைமை பொருந்தியதாக அமை யும். மனமும் சொல்லும் செயலும் ஒரு முகமாகி நடுவுநிலைமை யில் நிற்கும்போது வாழ்க்கையில் செப்பம் ஏற்படுகிறது. நடுவுநிலை தவறாதவன் மறைந்த பின்பும் அவனது நற்பெயர்
6.

Page 38
நின்று நிலைக்கும்’ என்ற அவரின் எழுத்தே அவரது வாழ்க்கைக் கும் பொருத்தமுடையது.
நாவுக்கு ஒரு காவல் போடவேண்டும் என்பது அவரது கொள்கை. அறிவு என்பதே அதன் காவலன். அவனை அங்கே நிறுத்தி வைத்து, “நான் விரும்பாததை எனது நாக்கு பேசக் கூடாது” என்று அவர் நாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
“தக்க சமயத்தில் சாகத் தெரிந்தோர்க்கே, ஒக்க புகழ் வந்துறும்” என சில்லையூர் செல்வராசன் குறிப்பிட்டது வ.இராசையா விற்கும் பொருந்தும்.
ஈழகேசரி’ பத்திரிகையில் தனது எழுத்துக்களை மாணவப் பருவத்தில் எழுதத் தொடங்கியவர். “தமிழ் கதைஞர் வட்டம்” என்ற தகவம் என்னும் அமைப்பை வேல்அமுதனுடன் இணைந்து ஆரம்பித்தார். அதன் மூலம் இலங்கைப் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் வெளிவந்த சிறுகதைகளைத் தெரிவுசெய்து வாசித்து, விமர்சித்து சிறந்த கதைகளுக்கான பரிசுகளை அனுப்பி வைத்து எழுத்தாளர்களை ஊக்குவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனையில் சென். பெனடிக்ற் கல்லூரியில் ஆசிரிய ராக முப்பத்துமூன்று ஆண்டுகள் பணி புரிந்தார். அதேசமயம் இலங்கை வானொலியில் வானொலி அண்ணாவாகவும் வானொலி மாமாவாகவும் இருபது வருடங்கள் பல இளம் ஊடகவியலாளர்களை, நடிகர்களை, பேச்சாளர்களை, எழுத்தாளர் களை உருவாக்கினார்.
இவரிடம் பயின்று வளர்ந்த பிரபலம் வாய்ந்த ஊடகவியலாளர் கள், நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எனப் பலரின் ஆளுமையிலிருந்து வ.இ.யின் ஆளுமைப் பரப்பைப் புரிந்துகொள்ளலாம்.
தன்னடக்கம், அமைதி, பிரச்சாரமின்றிப் பணிசெய்து கிடப்பது இவரின் நடத்தைக் கோலமாகும். இவரது இக் குணத்தினைப் பயன்படுத்தி ஏனைய எழுத்தாளர் பலரும் இலக்கிய ஆக்க முயற்சிகளிலும் இலக்கிய இயக்க நடவடிக்கைகளிலும் இவரின் சேவையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
தான் சஞ்சிகைகளில், பத்திரிகைகளில் வாசிக்கும் கதைகள், கட்டுரைகள் பற்றிதானாகவே பத்திரிகைகளுக்கு எழுதுவார். அது பற்றி அந்த எழுத்தாளருக்கும் அறிவிப்பார். அந்த விடயதானத்தில்
62

உள்ள சரி என்று தான் கருதுவதை அப்படியே வெளிப்படையாகச் சிலாகிப்பார். அவற்றில் ஏதேனும் தனக்குப் புரியவில்லை யென்றால் விளக்கம் கேட்டுக்கொள்வார். அந்த எழுத்தாளர் இளையவரோ மூத்தவரோ என்ற பேதம் இருக்காது.
வ. இ. சிறுகதைகள் எழுதியுள்ளார். அவற்றை ஆய்வுகள் செய்துள்ளார். சுவைஞனாக, நல்ல ஒர் ரசிகனாக அவற்றை அனுபவித்துமுள்ளார். எழுத்தாளரை ஊக்குவிப்பது அவரது இயல்பான சுபாவமாக இருந்தது.
சமூகக் கொடுமைகளைக் கண்டு அவற்றை எதிர்கொண்டு போராடி மாற்றுவது என்பதில் அவருக்கு அக்கறை கிடையா விடினும் 'உலகத்தோடு ஒட்டி ஒழுகல் என்ற வள்ளுவ வாக்கினை தன் வாழ்வின் நடைமுறையாக்கிக் கொண்டுள்ளார்.
தனி மனிதர்களைப் பண்பாட்டு ரீதியில் மாற்றுவதெனில் வளர்ந்தவர்களைக் காட்டிலும் பிள்ளைகளை மாற்றுவது சுலபம் எனக் கருதினார் போலும். எனவேதான் ‘சந்தனக் கிண்ணம்”, “சண்டியன் ஓநாய்”, “பூதிய பூக்கள்” எனப் பிள்ளைகளுக்கான நூல்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டியுள்ளார்.
பிள்ளைகளுக்கு அவர்களின் நடத்தை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை "உனக்கு நல்லது” என்ற கவிதைகளில் எடுத்துக் கூறுகிறார். புத்தகமே தனது தோழன் என்று வ.இ. பிரகடனம் செய்கிறார். பாரதி மீது கொண்ட பற்று இவரது பிள்ளைப் பாடலில் ‘எங்கள் பாரதி” என உருக்கொள்கிறது. தேனி என்ற கவிதையில் வ.இ. யின் போராட்டக் குணாம்சம் வெளிப்படு வதைக் காணலாம்.
'மனிதனைத் தேடுகிறேன்’ என்று சோக்கிரதீஸ் பகலிலே விளக்குடன் திரிந்ததை பாட்டிலே எழுதி இறுதியில்; கண்டனன்! மனிதனைக் கண்டு கொண்டேன்! காலமெல்லாம் தேடிக் கண்டு கொண்டேன் உண்டு நல் உயர் அறம் உலகில் இந்த உத்தமன் உருவிலே எனக் குதித்தார் என்று மனிதனைக் கண்ட புளகாங்கிதத்தை பாட்டாக வடித்தார் அல்லவா! எனவே நாமும் வ. இராசையா அவர்களை வாசகத்தி லேயே வாழ்த்தி வழியனுப்பி வைப்பதில் நிறைவடைவோம்.
கண்டனன்! மனிதனைக் கண்டு கொண்டேன்! காலமெல்லாம் தேடிக் கண்டு கொண்டேன்
63

Page 39
இலக்கியவாதிகளை
இதயசுத்தியுடன் நேசித்த பெரியார் வ. இராசையா
வைத்திய கலாநிதி தி. ஞானசேகரன்
ஆசிரியர் "ஞானம்" சஞ்சிகை
முத்த எழுத்தாளர், நல்லாசான், தமிழ் அறிஞர் வ. இராசையா அவர்கள் வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து 17.02.2007 அன்று தமது 86வது வயதில் வாழ்வினை நிறைவு செய்துகொண்டார்.
ஈழத்து இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் நேசிக்கும் அவரது பண்பு காரணமாகவே அவருக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. எனது மலையக நாவலான "குருதிமலை" 1980இல் வெளிவந்தபோது அதனை விதந்து பாராட்டியதோடு அந்த நாவல் தொடர்பான ஆக்கபூர்வமான ஒரு விமர்சனத்தையும் திரு. இராசையா எழுதி எனக்கு அனுப்பியிருந்தார். முகப் பழக்கம் எதுவுமற்ற நிலையில் அப்போது அவர் எழுதி அனுப்பிய விமர்சனம் அவரிடம் எனக்கு ஓர் உயரிய மதிப்பை ஏற்படுத்தியது. ஈழத்து இலக்கியத்தின்மேல் அவர் கொண்டுள்ள நேசிப்பினை அந்தக் கடிதம் எனக்கு உணர்த்தியது.
அக்காலகட்டத்தில் "தகவம்' என்ற இலக்கிய அமைப்பு ஒவ்வொரு மாதமும் வெளிவந்த சிறந்த சிறுகதைகளைத் தேர்ந் தெடுத்து பரிசு வழங்கிக் கெளரவிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது. எனது நாவல் "குருதி மலை" வெளிவந்தபோது, அதுவரை காலமும் சிறுகதைகளுக்கே பரிசுகள் வழங்கிவந்த திசுவம் எனது நாவலுக்கும் பரிசு வழங்க முடிவுசெய்தது. அது தொடர்பாக எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் வ. இராசையா ஒப்பமிட்டிருந்தார். அப்போதுதான் தகவம் அமைப்பில் அவர் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியவந்தது. அப்பரிசினைப் பெறுவதற்கு நான் கொழும்புக்கு வந்தபோது தான் திரு. இராசையா அவர்களை நேரில் சந்தித்தேன். அன்று முதல் நான் கொழும்புக்கு வருகின்ற வேளைகளில் திரு. இராசையாவைச்

ஞானம் இலக்கியப் பண்னை விழாவின்போது

Page 40

சந்தித்து இலக்கியம் தொடர்பாகக் கலந்துரையாடத் தவறுவ தில்லை. எனது நூல்கள் வெளிவரும் போதெல்லாம் அவருக்கும் ஒரு பிரதியை அனுப்பி வைப்பேன். அது தொடர்பான விமர்சனங் களை அவர் எழுதியனுப்புவார்.
சிறந்த படைப்புகளைப் பாராட்ட வேண்டும், எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற அவரது உயரிய எண்ணம் அவர்மேல் பல எழுத்தாளர்கள் மதிப்பு வைக்கக் காரணமாய் அமைந்தது.
தகவம் அமைப்பின் சிறப்பினையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும். அக்காலகட்டத்தில் குழு மனப்பான்மையுடன் இயங்கிவந்த விமர்சகர்களால் கண்டு கொள்ளப்படாத பல படைப்புகள், தகவம் அமைப்பின் நடுநிலமைத் தேர்வில் பரிசு பெற்றன. அப்படைப்புகளை எழுதிய எழுத்தாளர்கள் கெளரவிக் கப்பட்டார்கள். தகவம் அமைப்பினால் கெளரவிக்கப்படுவது பெரும் தகைமையாக அக்காலத்தில் கருதப்பட்டது.
திரு. இராசையா அவர்கள் 33வருடங்கள் ஆசிரியப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இதன் காரணமாகவே ஒரு பெரிய மாணாக்கர் பரம்பரையை உருவாக்க அவரால் முடிந்தது. அவரது மாணாக்கர் பலர் இன்று உயரிய பதவிகளில் இருக்கிறார்கள். தனது அன்பாலும் அரவணைப்பாலும் மாணவர்களை நெறிப்படுத்திய பான்மையினால் அவர்கள் தமது குருவின் மேல் பெருமதிப்பு வைத்துள்ளார்கள். சில வருடங்களுக்கு முன்னர் அவரது நூல் வெளியீட்டு விழாவொன்றில் அவரது மாணவர்கள் பலர், உயர் பதவியில் உள்ளவர்கள் அவரது காலில் வீழ்ந்து வணங்கி ஆசி பெற்றதைக் காணக்கூடியதாக இருந்தது. நல்லாசானாக இருந்து தனது கல்விப் பங்களிப்பை ஆற்றிய பெருமைக்குரியவர் திரு. இராசையா அவர்கள்.
ஈழகேசரியில் எழுதிய சிறுகதை ஒன்றின் மூலம் இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்த திரு. இராசையா சிறுவர் இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். “புதிய பூக்கள்” என்ற அவரது சிறுவர் கவிதை நூல் பெரியவர்களும் படித்துப் பயன்பெறக்கூடயதாக வெளிவந்துள்ளது.
கனடா சைவசித்தாந்த மன்றம் வெளியிடும் “அன்வு நெறி' என்ற மாத இதழின் சிறப்பாசிரியர்களில் ஒருவராக இருந்து “திருக்குறள்
65

Page 41
கூறும் சைவநெறி” என்ற தலைப்பில் தொடராக எழுதிய கட்டுரைகள் "குறள்வழி வாழ்வு” என்ற தலைப்பில் 2005 இல் நூலாக வெளிவந்துள்ளன.
ஒலிபரப்புத் துறையில் ஏறத்தாழ இருபது வருட அனுபவம் பெற்ற திரு. இராசையா அவர்கள் தயாரித்து அளித்த நிகழ்ச்சிகள் மூலம் 15-20 வயதுக்குட்பட்ட பல இளைஞர்கள் நாடகம், பேச்சு, விவாதம் ஆகியவற்றில் தேர்ச்சிபெற்றனர்.
“ஞானம்' சஞ்சிகையின் முதலாவது இதழ் தொடக்கம் 80ஆவது இதழ்வரை ஒவ்வொரு மாதமும் அதனை வாசித்து குறைநிறை களைச் சுட்டிக்காட்டி அபிப்பிராயம் கூறுவார்.
50ஆவது இதழ் வெளிவந்தபோது அதுவரை வெளிவந்த ஞானம் இதழ்கள் பற்றிய ஓர் ஒட்டுமொத்தமான விமர்சனத்தை அந்த இதழில் எழுதியிருந்தார். ஞானம் சஞ்சிகையின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறைகாட்டி அவ்வப்போது ஆலோசனைகள் கூறுவார்.
கொழும்பில் நடைபெறும் ஞானம் இலக்கியப் பண்ணையின் விழாக்களில் அவர் தவறாது பங்கு கொள்வார். மங்கல விளக் கேற்றி விழாவை ஆரம்பித்து வைப்பார். 23.12.2005 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ஞானம் கலை இலக்கியப் பண்ணையின் ஏற்பாட்டில் “சிறைப்பட்டிருத்தல்” சிறுகதைத் தொகுதி வெளியீடும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. அப்போது திரு. இராசையா உடல் தளர்ந்திருந்தார். அவரைச் சிரமப்படுத்தக் கூடாது என எண்ணி அந்த விழாவுக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை. ஆனாலும் நான் சற்றும் எதிர்பார்க்காத வாறு அவர் அந்த விழாவுக்கு வருகை தந்தார். அவரை அணைத்தபடி அழைத்துச்சென்று மங்கல விளக்கேற்ற வைத்தமை எனது நெஞ்சில் அழியா நினைவாகப் பதிந்திருக்கிறது. உடல் நலமற்ற நிலையிலும் இலக்கிய நிகழ்வில் பங்குபற்ற வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் கடைசிவரை இருந்தது.
திரு. இராசையா மிகுந்த சாந்தகுணம் படைத்தவர். எல்லோரிட மும் அன்பாகவும் பண்பாகவும் பழகுபவர். எவர் மனதையும் புண்படுத்தாதவர். இதயசுத்தியுடன் இலக்கியத்தை, மக்களை நேசித்தவர். அவரைப் போன்ற ஒரு பெரியாருடன் உறவாடக் கிடைத்தது பெரும் பாக்கியம் என்றே நான் கருதுகிறேன்.
66

தகவம் வ. இராசையா மறைவும் அவரது பணிகளும்
தேடலகம்’ என். செல்வராஜா
நூலகர், இலண்டன்
இலங்கையின் கலை இலக்கியத்துறையின் வளர்ச்சிக்கு தமது பங்களிப்பை நல்கிய, நல்கிவரும் அமைப்புக்கள் பற்றி அன்றாடம் நாம் ஊடகங்களின் வாயிலாகவும் இலக்கியக் கட்டுரைகளின் வாயிலாகவும் அறிந்து வருகின்றோம். இத்தகைய இலக்கிய அமைப்புகளைவிட எந்தவொரு அமைப்பின் கட்டுப் பாடுகளுக்குக் கீழும் இயங்காத தனிமனித முயற்சிகளும் ஈழத்தின் கலை இலக்கிய வளர்ச்சிக்கு அன்றுதொட்டு இன்றுவரை பாரிய பங்களிப்பினை வழங்கி வந்துள்ளதையும் இலக்கிய உலகம் தன் வரலாற்றில் பதிவு செய்தே செல்லும் என்பது நியதியாகும். விளம்பரம் நாடாத அத்தகைய தனிமனிதர்களை அவர்களின் பணிகளின்து வாயிலாகவே நாம் தனித்துவமாக இனம்காண வேண்டியுள்ளது. இலக்கிய அமைப்புகளால் செய்யமுடியாது போன பல விடயங்களைத் தனித்தும் தம்முடன் இணைந்த ஒரு சில நண்பர்களுடனும் கூட்டுச்சேர்ந்து ஒரு குழு நிலையில் நின்று சாதித்த பல மனிதர்களின் செயற்பாடுகளைத் தேடிப்பெற்றுப் பதிய வேண்டியது எம்முன்னுள்ள கடமையாகும். அந்த வகையில் உங்களுடன் நான் இன்றைய நிகழ்ச்சியில் ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கிய உலகம் மறந்துவிடக்கூடாத ஒருவரைப் பற்றி சில விபரங்களைப் பரிமாறிக்கொள்ள விரும்புகின்றேன்.
தகவம் என்ற ஒரு இலக்கிய அமைப்பைப் பற்றி நேயர்களில் ஒரு சிலராவது அறிந்திருப்பீர்கள். 1974ஆம் ஆண்டு தமிழ் கதைஞர் வட்டம் என்றொரு சிறு அமைப்பாக சில நலன் விரும்பிகளால் இது உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக வ. இராசையா என்பவரும் செயலாளராக வேல் அமுதன் என்பவரும் செயற் பட்டார்கள். பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்படும்
67

Page 42
கதைகளை இவர்கள் சேகரித்து, ஒரு விமர்சகர் குழுவிடம் காலாண்டுக்கொருமுறை வழங்கி, அவற்றை விமர்சித்து அவற்றில் சிறந்த கதைகளைத் தெரிவுசெய்து 25 ரூபா பணப் பரிசிலையும் அக்கதைஞர்களுக்கு தமது சொந்த உழைப்பிலிருந்து வழங்கி, படைப்பாளிக்கு உற்சாகமூட்டினார்கள். அக்கால கட்டத்தில் வீரகேசரி, தினகரன், சுடர், சிரித்திரன், மல்லிகை, ஈழநாடு ஆகியவற்றில் வெளியான சிறுகதைகள் பரிசுக்குரியன வாகத் தேர்வுசெய்யப்பட்டன. எவ்வித இலக்கிய அமைப்புகளும் இதில் சம்பந்தப்படாதமையால், நல்ல கதைகளைத் தேர்வதில் பாரபட்சம் காட்டப்படவேண்டிய நிர்ப்பந்தமோ அழுத்தங்களோ எதுவும் தகவம் தேர்வுக்குழுவினரிடம் இருக்கவில்லை. இந்தச் செயற்பாடானது இன்றும் இலக்கியக் கட்டுரைகளில் அவ்வப் போது பதிவுபெற்றுள்ளது.
இப்படியாக பரிசு வழங்கப்பெற்ற கதைகள் பின்னர் 1987ஆம் ஆண்டில் தகவம் பரிசுக்கதைகள் தொகுதி - 1 என்ற நூலுருவில் யாழ்ப்பாணத்திலிருந்து விஜயா அச்சகத்தின் வாயிலாக 146 பக்கத்தில் அச்சிட்டும் வெளியிடப்பட்டது. தமிழ்க் கதைஞர் வட்டத்தினரால் அவ்வாறு 1975 முதல் 1979 முதற் காலாண்டு முடியவுள்ள காலப் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கியப் படைப்புக்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருந்தன. இதில் தெணியான், ஆனந்தபைரவி, க. சட்டநாதன், ந. சண்முகரத்தினம், கே.ஆர். டேவிட், மாத்தளை வடிவேலன், பரிபூரணன், அன்ரனி மனோகரன், சொக்கன் ஆகியவர்களுடைய 12 சிறுகதைகள் அடங்கியிருந்தன.
தகவம் குழுவினரின் முயற்சியின் வெற்றியின் காரணமாக மீண்டும் ஒரு பரிசுக் கதைத்தொகுதி தகவம் பரிசுக் கதைகள் தொகுதி - 11 என்ற பெயரில் தகவம் நூல் வெளியீட்டுக்குழு சார்பாக, மாத்தளை கார்த்திகேசு அவர்களால் மீண்டும் யாழ்ப்பாணம் நியூ ஈரா பப்ளிக்கேஷன்ஸ் நிறுவனத்தின் வாயிலாக 1990 இல் 176 பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது. 1979 முதல் 1982 வரையுள்ள காலப்பகுதியில் ஈழத்து ஊடகங்களில் பிரசுரமான சிறுகதைகளில் பரிசுக்கெனத் தேர்ந்த மேலும் 12 கதைகளின் தொகுப்பாக இது அமைந்தது. இத்தொகுதியில் காவலூர் எஸ். ஜெகந்நாதன், கே. ஆர். டேவிட், எம். எல். எம். மன்சூர்,
68

மாத்தளை சோமு, வ. அ. இராசரத்தினம், எஸ். முத்து குணரத்தினம், செங்கை ஆழியான், ரதி கந்தசாமி, வடகோவை வரதராஜன் ஆகியோரின் கதைகளும் இக்கதைகள் பற்றி கலாநிதி க. அருணாசலம் அவர்கள் எழுதிய பொதுவானதொரு மதிப்பீடும் இடம்பெற்றிருந்தன.
நான் இங்கு குறிப்பிட்ட தகவம் அமைப்பின் முதுகெலும்பாக இருந்து செயற்பட்ட ஒருவர் பற்றியே இன்றைய காலைக் கலசத்தில் உரையாற்றவுள்ளேன். அவரே தமிழ்க் கதைஞர் வட்டத்தினை 1974இல் தாபித்ததுடன் அதன் இயக்கத்தின் பின்புல மாக நின்று ஈழத்து கலை இலக்கிய வளர்ச்சிக்கு விளம்பரம் தேடாது தனிமனித இலக்கிய யாகம் புரிந்த வல்லிபுரம் இராசையா அவர்கள்.
கடந்த 17ஆம் திகதி கொழும்பில் தனது 86ஆவது வயதில் அமரத்துவமடைந்த அமரர் வ. இராசையா அவர்களை கடந்த 2005ஆம் ஆண்டு அவரது இல்லத்தில் அதிர்ஷ்டவசமாகச் சந்திக்க நேர்ந்தமையால் அவரது பணிகள் பற்றி ஆழமாக அறிந்து கொள்ளவும் ஆச்சரியப்படவும் முடிந்தது.
நூல்தேட்டம் மூன்றாவது தொகுதியின் வெளியீட்டு நிகழ்வு தொடர்பாக 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொழும்பில் தங்கியிருந்த வேளையில் தற்போது வெள்ளவத்தையில் வசிக்கும் ஈழத்துப் படைப்பாளியான நீர்வை பொன்னையன் அவர்கள், பெரியார் வ. இராசையா என்னைச் சந்திக்க விரும்புவதாகக் குறிப்பிட்டு என்னை அவரது இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். நடைதளர்ந்து வயது முதிர்ந்த நிலையிலும் என்னை மிகுந்த அன்புடன் உபசரித்துத் தன் வாழ்நாட் சேகரிப்புகளான நூல் களையும் ஆவணங்களையும் ஆர்வத்துடன் காட்டினார். ஈழத்துத் தமிழ் நூல்களை பட்டியலிடும் ஒரு பணியினை இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளராக முன்னர் இருந்த திரு. சண்முகலிங்கம் அவர்களின் ஆலோசனையின் பேரில் பல காலத்திற்கு முன்னர் ஒரு திட்டத்தை இலங்கையில் தொடங்கிய தாகவும் தனக்கு வழங்கப்பட்ட விருப்பத்துக்குரிய பகுதி சிறுவர் நூல்கள் பற்றிய தகவல் சேகரிப்பு என்றும் குறிப்பிட்டார். இந்த பட்டியலாக்கத் தொகுப்பு முயற்சிகள் துறைவாரியாக வேறும்
69

Page 43
சிலருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் அது பற்றி எவரும் பின்னாளில் அக்கறை எடுக்கத் தவறிவிட்டதாகவும் மனம் வருந்தினார். இப்பணியைப் பற்றி அறியாமலேயே அதே பணியை ஆரவாரமெதுவுமின்றி நூல்தேட்டத்தின் வாயிலாக நான் செய்துகொண்டிருப்பதால் என்னைத் தான் சந்திக்க விரும்பிய தாகவும் அப்பெரியார் தெரிவித்தார். என்னைச் சந்தித்ததன் மூலம் தனது சிறுவர் இலக்கியப் பட்டியலாக்கப் பணி வீணாகி விடவில்லை என்றும் ஏதோ ஒரு வகையில் அது என் மூலம் தொடரப் போகிறது என்றும் மகிழ்ச்சி தெரிவித்ததுடன் நில்லாது, தான் பல்வேறு நூலகங்களுக்கும் சென்று நூற்பட்டியலாக்க அட்டைகளில் எழுதிச் சேகரித்து வைத்த சிறுவர் நூல்கள் பற்றிய குறிப்புகளை என்னிடமே ஒப்படைத்து எனது பணியினைத் தொடர்ந்து செய்ய மனமாராவாழ்த்தி விடை தந்தார்.
இத்தகைய அன்புள்ளம் கொண்ட அப்பெரியார் 17.02.2007 அன்று மறைந்துவிட்ட செய்தியை கடந்தவாரம் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்கள் என்னிடம் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் வல்லிபுரம்- ஆச்சிமுத்து தம்பதியினருக்கு மகனாக 22.11.1919 இல் பிறந்த இராசையா, திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையில் தனது ஆரம்பக் கல்வியை மேற்கொண்டார். பண்டிதமணியிடம் கற்றுத்தேர்ந்த சிறந்த மாணாக்கர்களாகிய நீர்வேலி பண்டிதர் துரைசிங்கம், பண்டிதர் தம்பையா போன்றோரிடம் இவர் ஆரம்பக் கல்வியை கற்றுத்தேறும் அரிய வாய்ப்பினைப் பெற்றிருந்தார். அன்று, வளரும் பயிராக அவர்களிடம் அவர் கற்ற தமிழ்க்கல்வி பின்னாளில் தமிழ் இலக்கியங்களில் அவரைப் பரிச்சயம்கொள்ள வைத்தது.
பின்னாளில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சேர்ந்த வ. இராசையா விரிவுரையாளர்களாகவிருந்த வி. செல்வநாயகம், பண்டிதர் மகாலிங்கம், இளமுருகனார் போன்றோரிடம் கலாசாலைக் கல்வியைக் கற்றுத் தேர்ந்தார். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக வெளியேறிய இவர் ஆசிரியர் தொழில் பெற ஒன்றரை வருடங்கள் காத்திருக்க நேர்ந்தது.
70

அக்காலகட்டத்தில் வீரகேசரி பத்திரிகையில் ஒப்புநோக்காள ராகவும் இவர் பணியாற்றியிருந்தார். அப்போது கே. வி. எஸ். வாஸ், ஹரன் போன்ற ஜாம்பவான்கள் வீரகேசரியில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அக்கால அவகாசத்தில் இவர் ஆங்கிலக் கல்வியிலும் பாண்டித்தியம் பெற்றார். 1946இல் இவர் விரும்பிய ஆசிரியத் தொழில் இவருக்குக் கிட்டியது. Kotahena St. Benedicts College என வழங்கப்படும் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியில் இவருக்கு முதல் நியமனம் கிடைத்தது. அன்று தொடங்கி 33 ஆண்டுகள் அக்கல்லூரியிலே ஆசிரியராக இருந்து ஒய்வு பெற்றவர் நல்லாசான் இராசையா அவர்கள். அவரது மாணவர்களாக இருந்து வெளியேறிய பலர் இன்று கொழும்பிலும் பிற இடங்களிலும் நல்ல பதவிகளில் இருந்து இறுதிவரை அவரது மாணாக்கர் பரம்பரையாகப் பெருமை சேர்த்து வருகின்றனர். தான் ஒய்வுபெறும் வரை சென். பெனடிக்ட் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்ற அமைப்பாளராகவும் இவர் இருந்து மாணவர் களிடையே தமிழ் உணர்வையும் இலக்கிய உணர்வையும் ஊட்டி மகிழ்ந்தார். இந்தத் தமிழ் இலக்கிய மன்றத்தின் வாயிலாக வருடாவருடம் இலக்கிய விழாக்களை ஒழுங்குசெய்து மாணவ சமுதாயத்தை தலைமைத்துவப் பயிற்சிகளிலும் கலை இலக்கிய இயக்கங்களிலும் ஈடுபடுத்தி மகிழ்ந்தார்.
ஈழத்தின் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈழகேசரிக் காலம் என்றொன்று உண்டு. நா. பொன்னையா அவர்கள் தாபித்த ஈழகேசரியில் சோ. சிவபாதசுந்தரனார் பணியாற்றிய காலத்தில் ஈழகேசரி இளைஞர் மன்றம் என்ற பெயரில் மன்றம் அமைத்து, வளரும் இளம் எழுத்தாளர்களை எழுத ஊக்குவித்து அவர்களுக்கு எழுத்துலகில் தடம் பதிக்க ஒரு வாய்ப்பளித்திருந்தார். அ.ந. கந்தசாமி, வரதர், அ.செ. முருகானந்தன், விவியன் நமசிவாயம், வ. இராசையா போன்றோர் ஈழகேசரி இளைஞர் மன்றம் அடையாளம் காட்டிய படைப்பாளிகளாவர்.
ஈழகேசரி இளைஞர் மன்றத்தின் வாயிலாக வ. இராசையா அவர்கள் தொடர்ந்தும் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் என எழுதிக்கொண்டிருந்தார். ஈழகேசரி இளைஞர் மன்றத்தின் முதலாம் ஆண்டு நிறைவுச் சிறப்புமலரில் அவரது கட்டுரை ஒன்றும் சிறுகதை ஒன்றும் பிரசுரமாகியிருக்கின்றன. இவை எதுவும் தனியான நூலுருவில் வந்ததாகத் தகவல் இல்லை.
7.

Page 44
சிறுவர் இலக்கியத்தில் இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவரது மூன்று சிறுவர் இலக்கியங்கள் 1992-1998 காலப்பகுதியில் அடுத்தடுத்து நூலுருவில் வெளிவந்துள்ளன. சண்டியன் ஒநாய் : கவிதையில் கதைகள் என்ற சிறுவர் நூல் வ. இராசையா அவர்களின் முதலாவது நூலாகக் கருதுகின்றேன். கோப்பாய் அரவிந்தம் வெளியீட்டகத்தினால் மே 1992 இல் வெளியிடப்பட்ட இந்நூல் கொழும்பு 11, மெய்கண்டான் அச்சகத் தில் வண்ணப்படங்களுடன் அச்சிடப்பட்டிருந்தது. வ. இராசையா அவர்கள் எழுதிய 10 சிறுவர் கதைகள் தவம், லலிதா, சாமி ஆகியோரின் வண்ணச் சித்திரங்களுடன் இந்நூலில் தொகுக்கப் பட்டிருந்தன. வேடிக்கை, நகைச்சுவை, அறிவுத் தேடல் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய கவிதை வடிவில் அமைந்த இக் கதைகள் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டிருந்தன. இந்நூல் யாழ் இலக்கியப் பேரவையின் பரிசையும் வடக்கு-கிழக்கு மாகாணசபையின் விருதையும் பெற்றிருந்தது. சந்தனக் கிண்ணம் என்ற நூல் வ. இராசையா அவர்களின் இரண்டாவது நூலாகும். கோப்பாய் அரவிந்தம் வெளியீட்டகம் இந்நூலையும் வெளியிட்டிருந்தது. ஏப்ரல் 1995 இல் வெளியான இந்தச் சிறுவர் நூலும் மெய்கண்டான் அச்சகத்தினரால் வண்ணப் படங்களுடன் அச்சிடப்பட்டிருந்தது. ஐந்து முதல் எட்டு வயதுக்கிடைப்பட்டவர்களை மனதில் இருத்தி உருவாக்கப்பட்ட கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றிருந்தன. விஞ்ஞானம், ஒழுக்கம், நற்பண்புகள், அறிவுத் தேடல், நகைச்சுவை, இயற் கையை நயத்தல் எனச் சிறுவர்களுக்குப் பயன்படும் பல்வேறு கருப்பொருட்களைக் கொண்ட 35 தலைப்புக்களில் அமைந்த கவிதைகள் இதில் அடங்கியிருந்தன. சாமி, லலிதா ஆகியோரின் வண்ணப்படங்கள் கவிதைகளுக்கு மெருகூட்டியிருந்தன. இந்நூல் இலங்கை அரசின் இலக்கிய விருதினைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. புதிய பூக்கள் என்ற தலைப்பிலான இவரது மூன்றாவது நூலும் முன்னைய வெளியீட்டாளர்களால் ஜூன் 1998 இல் கொழும்பு மெய்கண்டான் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டிருந்தது. ஓவியங்களும் புகைப்படங்களும் கொண்ட கலவையில் 25
72

தலைப்புக்களில் கவிதைக் கொத்துக்கள் இந்நூலில் காணப் பட்டன. சிறுவர் விரும்பும் விடயங்கள் அவர்கள் சுவைக்கும் சந்தங்களிலேயே உருவாகியிருந்தன. சந்திராவின் ஓவியங்கள் நூலுக்கு மேலும் மெருகூட்டின.
அமரர் வ. இராசையா அவர்கள் இறுதியாக வெளியிட்ட நூல் குறள்வழி வாழ்வு என்பதாகும். கொழும்பு அரவிந்தம் வெளியீட்ட கத்தினால் ஏப்ரல் 2005இல் இந்நூல் வெளியிடப்பட்டது. 50 திருக்குறள் கட்டுரைகள் உள்ளடக்கிய நூல் இதுவாகும் இக்கட்டுரைகள் கனடாவின் சைவசித்தாந்த மன்ற வெளியீடான அன்பு நெறி மாசிகையில் தொடராக வெளிவந்தவை. திருக்குறளுள் பொதிந்துள்ள சிந்தனைக் கருக்களை ஏற்ற இடங் களில் சமகால எடுத்துக்காட்டுகளுடன் இந்நூலில் அமரர் இராசையா விளக்கியிருந்தார். குறிப்பாக குறள்களின் சொற்பதங் களில் பதம் மாற்றி, விரிந்த பொருளில் குறளின் உட்பொருளை இவர் மெருகூட்டித் தந்திருப்பது சிறப்பாக உள்ளது என விமர்சகர்கள் பத்திரிகைகளில் தம் கருத்துக்களை வழங்கியிருந் தார்கள். பண்டைய இலக்கிய நூலின் வாழ்வியற் பண்புகளை வருங்காலச் சந்ததியினரும் படித்துப் பயன்பெறும் வகையில் நூலாக்கித் தந்த அமரர் வல்லிபுரம் இராசையாவிடம் இன்னும் பல நூல்களுக்கான கருக்களும் தகவல்களும் கொட்டிக்கிடந்த போதிலும் அவற்றை ஏனோ அவரால் நூலுருவில் கொண்வர முடியவில்லை.
விபவி கலாசார மையம் என்றவோர் அமைப்பு இலங்கையில் இயங்குகின்றது. இந்த மையம் நடத்தி வந்த மேம்பாட்டரங் கினை மூன்று வருடகாலம் தொடர்ந்து நடத்தி இவர் நெறிப் படுத்தியிருந்தார். தினகரன், வீரகேசரி, தினக்குரல், சஞ்சீவி ஆகிய பத்திரிகைகளில் வாராவாரம் வெளிவரும் சிறுகதைகளைத் தேர்ந்து விபவி கலாசார மையம் நடத்திய ஆய்வுகளில் அமரர் இராசையா அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டார். விபவி கலாசார மையத்தினால் சுதந்திர இலக்கிய விழாப் படைப்புகளின் நடுவர் மதிப்பீட்டுக் குழுவில் இடம்பெற்று மூன்று வருடங்களாகத் தீவிர பங்காற்றியிருக்கிறார். ஈழத்து சமகால தமிழ் இலக்கியம் என்ற தலைப்பில் விபவி மையத்தால் தொகுக்கப்பட்டு நுகேகொடையிலுள்ள அவர்களின் மத்திய
73

Page 45
நிலையத்தால் ஜூன் 1998இல் வெளியிடப்பட்ட ஒரு நூல் பற்றிய குறிப்பினையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும்.
தேவகெளரி எழுதிய 60க்குப் பின் ஈழத்துத் தமிழ் இலக்கியத் தில் பெண் எழுத்தாளர்களின் பங்கு மு. பொன்னம்பலம் எழுதிய ஈழத்தில் தமிழ் இலக்கியமும் நவீன போக்குகளும், திக்கவல்லை கமால் எழுதிய முற்போக்கு இலக்கியம் முகம் கொடுக்கும் சித்தாந்த நெருக்கடிகளும் ஆற்றவேண்டிய பணிகளும், தெளிவத்தை ஜோசப் எழுதிய ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் மலையக எழுத்தாளர்களின் பங்கு ஆகிய 5 முக்கிய ஆய்வுக் கட்டுரைகளை ஈழத்து சமகால தமிழ் இலக்கியம் என்ற இத் தொகுப்பு நூலில் வ. இராசையா அவர்கள்தலைமையேற்ற விபவி மையத்தின் மேம்பாட்டரங்கின் மூலம் வெளியிடமுடிந்தது.
இலக்கியத்துறைக்கு இணையாக அமரர் வல்லிபுரம் இராசையா அவர்கள் இலங்கை வானொலியிலும் பெரும் பங்காற்றி யிருந்தார். 1960ஆம் ஆண்டு தொடக்கம் 1972ஆம் ஆண்டு வரை வானொலி அண்ணாவாக வளரிளம் பருவ இளைஞர்களின் மனதில் குடிகொண்டிருந்தார். நாடகம், பேச்சு, விவாதம் ஆகிய சுவையான விறுவிறுப்பான நிகழ்வுகளின்மூலம் இலங்கை வானொலி இளைஞர் நிகழ்ச்சிகளை விறுவிறுப்பாக்கி களைகட்டச் செய்தார். இதன்மூலம் தனது பாடசலையின் மாணாக்கர்களிடம் மட்டுமன்றி நாடளாவிய ரீதியிலும் மாணவர் சமூகத்திடம் தன் குரல் வளத்தாலும் கலை இலக்கிய அறிவு வளத்தாலும் தனது இருப்பை வானொலி அண்ணாவாகப் பதிய வைத்தார். தனது வானொலி நாடகங்களில் பங்கேற்ற இளைஞர் களான பீ. எச். அப்துல் ஹமீது, போல் அன்ரனி, எம்.கே. இராகுலன், ரொபட் வேதநாயகம், ரெஜினோல்ட் வேதநாயகம், கே. சந்திரசேகரன் ஆகியோர் பின்னாளில் பெயர்பெற்ற கலைஞர்களாக மாறியதைப் பெருமையுடன் நினைவுகூருவ துண்டு என்று அமரர் வ. இராசையா அவர்கள் பற்றி திரு. த. சிவசுப்பிரமணியம் அவர்கள் ஞானம் சஞ்சிகையின் கட்டுரை யொன்றில் குறிப்பிட்டுள்ளார். வாழும்போதே கெளரவிக்கும் முயற்சியாக ஞானம் சஞ்சிகை கொழும்பில் தனது 71ஆவது இதழில் ஏப்ரல் 2006 இல் அமரர் இராசையா அவர்களின் புகைப்படத்தை மேலட்டையில் பிரசுரித்து, அட்டைப்பட அதிதியாகவும் கெளரவித்திருந்தது.
74

ஒலிபரப்புத் துறையில் சுமார் 20 ஆண்டுகால அனுபவம் பெற்ற இராசையா அவர்கள் இலங்கை வானொலியில் நீண்டகாலப் பாரம்பரியம்மிக்க சிறுவர் மலர் நிகழ்ச்சியில் வானொலி மாமா வாகவும் பணியாற்றியிருக்கிறார்.
தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்ற ஆசிரியை பூரணம் இராசையாவுடன் குறள்வழி வாழ்வை வாழ்ந்து மறைந்த அமரர் இராசையா அவர்களின் மலரும் நினைவுகளுடன் நிறைவு செய்கின்றேன்.
(இலண்டனில் இருந்து இயங்கும் ஐ.பி.சீ. அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சர்வதேச ஒலிபரப்பில், “காலைக் கலசம்’ நிகழ்ச்சியில், ‘இலக்கியத் தகவல் திரட்டு’ என்ற பகுதியில் 25.02.2007 அன்று ஒலிபரப்பான நிகழ்ச்சியின் எழுத்துப் பிரதி)
75

Page 46
Nobility sat on him like Unruffled Weather - Rasiah Master
Mr. K.S. Sivakumaran
Nobility sat on the late V. Rasiah, a revered teacher and a conformist literary critic, like unruffled weatherfor decades both in Yaalpaanam and Colombo. He died on February 21, 2007 at the ripe age of 86 having lived a contented and disciplined life. He was a retired trained teacher having been the master at St. Benedict's College in Kotanchenai (Kotahena). Some of his faithful students turned out to be distinguished citizens in public life. They include well known broadcasters, business tycoons, legal luminaries, administrators, trilingual translators and the like. But there were many admirers like me who respected him for his impartiality in his studied observations and a positive attitude, and the spirit of encouraging others. He had a Smile that was coming from the bottom of his heart showing his clean persona.
Mr. Rasiah earned island wide notice when he compiled and presented a well-meant Children's programme for the Thamil Service of the Sri Lanka Broadcasting Corporation for a long period a few decades ago. He was popularly dubbed as Radio Maama'. There were other Radio Maamas as well over the years beginning with the legendary Saravanamuttu Maama.
But the respected teacher and a person who loved children, he knew how to handle children of all ages within 12 years with the understanding of their individual psyche and most of all identifying the really talented among them and polishing their outputs.
As a literary critic discerning real talent, he ventured to reckon them and gave away prizes to them in his setup known as "Thahavam"
76

annually. This is good enough evidence for his love of letters and the creators. What characterizes his kind of literary criticism was the accent on good taste and his primary concern for social consciousness. He was a progressive thinker without shouting indigestible slogans. Judging from his time one was surprised that he was an amalgam of both Tradition and Modernity. His writing, analysis and speeches showed ample evidence. w
I was privileged to have addressed audiences with my reviews of books under his distinguished chairmanship. The loss we all have encountered on his demise would not be short-lived, it would linger long.
The late writer also produced a fine set of books for children written with an insight of understanding the child's mind.
Profusely illustrating in colour and telling stories that the young mind would absorb in an atmosphere of the contemporary conditioning, his books also instilled ethical values in an unpretentious way.
His latest book was stories based on the couplets in Thirukkural, the Post-Sangam period (3rd century - 6th century A.D.) classic by Thiruvalluvar. This effort was at once imparting the essence of the maxims in Thirukkural and also narrating interesting stories that both young and old would love to read. That is both the writer's art and a representation of the authors concern for the absorption of noble qualities that the humankind should cultivate for a better society. The late Mr Rasiah was evidently a social-conscious writer. He was above partisan attitudes and singularly balanced in his views. That was one of his strengths.
The poet in him outlives his earthly life. My deepest sympathies to his beloved spouse who is also a retired teacher, her sons, her daughter Vasanthi and her husband Thayaparan, who are already established avant-garde critics of he younger generation and other relatives.
Oam Shanthi.
77

Page 47
அமைதியே உருவான gymeOsuurt LDIT6inoLir
திருமதி. அன்னலட்சுமி இராசதுரை
ஆசிரியபீடம், வீரகேசரி
Tெழுத்தாளர் வ. இராசையா அவர்களைக் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நான் அறிவேன். ஆசிரியரான அவர்
இராசையா மாஸ்டர் என்றே பெரிதும் அறியப்பட்டவர்.
கொழும்பு சென்ற் பெனடிக்ட் கல்லூரியில் கற்பித்துக் கொண்டிருந்த அவர் தமது பாடசாலையின் ஒரு நிகழ்வில் இளம் பத்திரிகையாளரான என்னை வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவ்விதமே சென்றேன். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களுக்கு வந்து பரிசுகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஒரு பாடசாலை மாணவியின் குணமே மாறாமல் இருந்த என்னிடம் வந்து மாஸ்டர் அவ்விதம் கேட்டுக் கொண்டது வியப்பாகவும் இருந்தது. எனினும் அவர் வற்புறுத்தி அவ்விதமே செய்யவைத்தார்.
இந்நிகழ்ச்சி நினைவுக்கு வரும்போதெல்லாம் மாஸ்டரும் நினைவுக்கு வருவார். இராசையா மாஸ்டரை நினைக்கின்ற எவருக்கும் அவரது அமைதியான சுபாவமும் புன்சிரிப்புந்தான் முன்வந்து நிற்கும். தமிழ்க் கதைகள் வட்டம் என்றோர் இலக்கிய அமைப்பு சிலகாலம் சுறுசுறுப்பாக செயற்பட்டது பலருக்கும் தெரிந்த விடயம். இதன் தலைவராக இராசையா மாஸ்டரும் செயலாளராக வேலமுதனும் செயற்பட்டுக் கொண்டிருந்த அவ்வேளை கூட்டங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. இக்கூட்டங் களில் பெரும்பாலும் கலந்து கொள்வதால் மாஸ்டரையும் அவரது குடும்பத்தினரையும் அறிந்துள்ளேன்.
ஓர் ஆசிரியராகக் கடமையாற்றிய அனுபவமும் சிறுவர்களுக் கான வானொலி நிகழ்ச்சியை நீண்டகாலம் நடத்தியதன் மூலம் சிறுவர் உலகத்துடன் கொண்டிருந்த பரிச்சயமும் அவரை சிறுவர்
78

இலக்கிய நூல்களை ஆக்கும் முயற்சிக்குத் தூண்டின. இந்தவகை யில் உருவானவையே "சண்டியன் ஒநாய்”, “சந்தனக் கிண்ணம்”, “புதிய பூக்கள்” என்னும் சிறுவர் நூல்களாகும்.
இவற்றுள் ஒரு நூலின் வெளியீட்டு விழாவில் அறிமுக உரை யாற்றுமாறு மாஸ்டர் கேட்டுக்கொண்டதால், அதில் பங்கு கொண்டேன்.
இவற்றினை அடுத்து அவர் வெளியிட்ட நூல் “குறள்வழி வாழ்வு” என்பதாகும். இதன் வெளியீட்டு விழாவை 2005ஆம் ஆண்டில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடத்தியபோதும் என்னையும் ஒரு பேச்சாளராக அவர் அழைத்திருந்தமை, மாஸ்டர் என்மீது கொண்டிருந்த அன்பின்பாற்பட்டது என்றே நான் கருதுகின்றேன்.
திருக்குறள் எவ்விதம் அருமையானதோ அவ்விதம் வ. இராசையா அவர்களது “குறள்வழி வாழ்வு” இலகு தமிழில் மக்களுக்கு வள்ளுவரின் அறக்கருத்துகளை ஊட்டவல்லது என்ற வகையில் சிறப்பானது. அதன் பொருட்டு அவர் எடுத்தாண்டிருக் கும் மொழிநடையும் நயக்கத்தக்கது.
அவரது பரந்த அறிவினதும் அனுபவத்தினதும் பாற்பட்டு இத்தகைய முயற்சிகளை மேலும் மேற்கொள்ளவேண்டும் என நான் உரையாற்றும்போது அன்புடன் கேட்டுக்கொண்டேன்.
அவ்விழாவில் அவரது பழைய மாணவர்களான தெ. ஈஸ்வரன் அவர்களும் (மொரீஷியஸ் நாட்டுக்கான இலக்கைத்தூதுவர்) எஸ். தில்லைநடராஜா அவர்களும் விசேட விருந்தினர்களாக அழைக் கப்பட்டிருந்தனர். மேடையில் அவர்கள் தமது குருவுக்கு காட்டிய மதிப்பும் அளித்த கெளரவமும், அவரிடம் கல்விகற்ற மாணவர் சமுதாயம் காட்டும் அன்புக்கும் மரியாதைக்கும் எடுத்துக்காட்டு எனலாம். ஒரு நல்லாசானுக்கு இதுவோர் சிறந்த பேறாகும்.
குறள்வழி வாழ்வு நூல் வெளியீட்டு விழா முடிவுற்றபின்னர், மாஸ்டரும் அவரது அன்பான மனைவியாரும் அன்பு மகளும் வந்து என்னுடன் அன்புடன் கலந்துரையாடி நன்றி கூறினார்கள். அன்றுதான் நான் மாஸ்டருடன் இறுதியாகக் கதைத்தேன் என நினைக்கின்றேன்.
அர்ப்பணிப்புடன் ஆசிரியத்தொழிலைப் புரிந்து, ஆத்மார்த்த மாக தமது இலக்கியப் பணியை ஆற்றி, அன்பான மனைவி மக்களுடன் நிறைவான இல்லற வாழ்வினை வாழ்ந்து, தமது எண்பத்தாறாம் அகவையில் இவ்வுலக வாழ்வை நீத்த அன்னாரது ஆத்மா சாந்தியுற எல்லாம்வல்ல இறைவன் அருள்பாலிப்பாராக.
79

Page 48
\
නැණස පතුවු රාසයියා ගුරු පියා සමරමු ,
දෙනගම සිරිවර්ධන
අප අතරින් සඳහටම වියෝ වූ වීරාසයියා මහතා දමිළ භාෂා සාහිතාප ගුරුවරයකු, ගුවන් විදුලි වැඩසටහන් නිෂ්පාදකයකු, ගත්කරුවකු, ළමා සාහිත්‍යකරුවෙකු, නාට්‍ය පිටපත් රචකයෙකු සහ සාහිතාප විචාරකයෙකු ද ලෙස ඉමහත් සේවයක් කළේයි.
වීරාසයියා ඉපදුණේ 1919 නොවැම්බර් මස 22 වැනිදා යාපනේ තිරුනෙල්වේලි ගමේ යි. ඔහුගේ පියා වල්ලඅප්පරී. අම්මා ආච්චිමුත්තුයි. ගමේ මුත්තු තම්බි විදුහලේ බාලාථශයේ සිට ජෝපජය පාඨශාලා සහතික පත්‍ර විභාගය දක්වා ඉගෙනගත් ඔහු පාසලේ බිත්ති පුවත් වලට සහ සගරාවලට කුඩා ලිපි ලිවීයි. ඔහුට ඒ බිත්ති පුවත්පත් වල සහ සගරාවල සංස්කාරක තනතුරු ද ලැබිණි.
ජෝපෂඨ පාඨමශාලා සහතික පත්‍ර විභාගය සමත්වීමෙන් පසු කොjපායි ගුරු අභාපාස විදුහලට ඇතුළු වූ රාසයියා තෙවසරක් එහි පුහුණු ව ලැබීයි. පුහුණුවෙන් පසු ගුරු තනතුරු ලබා දීම රජයෙන් වසර කීපයක සිට නතර කොට තිබුණු හෙයින් රාසයියා 1942 දී "වීරකේසරී’ පුවත්පතේ කර්තෘ මණඩලයට බැඳුණි.
වීරකේසරි පුවත්පතේ පළවූ ඔහුගේ කෙටි කතා නිසා රාසයියා ජනප්‍රිය දෙමළ ලේඛකයෙකු බවට පත් වියී. අවට ජීවත්වන මිනිසුන් දෙස සුපරීක්ෂාකාරීව සිටි රාසයියා ඔවුන් ගේ ජීවිත ගැඹුරෙන් අවබෝධ කරගත් ආකාරය ඔහුගේ කෙටි කතාවලින් හෙළි වියි. ඔහු ඉතා සියුම් ලෙස ජන ජීවිතය ස්පර්ශකරන ලේඛකයෙකු ලෙස විචාරකයෝ පිළිගත්හී, එහෙත්, ඔහුගෙන් ලියැවුණේ කෙටි කතා දහයක් පමණි.
1946 දී ඔහු කොටහේනේ 'ශාන්ත බෙනඩික්' විදුහලේ උප ගුරුවරයෙක් වියි. 1979 වන තුරු ඔහු එහි අඛණඩව සේවය කළේයි.
80

ගුරු වෘත්තිය නිසා ඔහුට ළමා ලෝකය හඳුනා ගැනීමට හැකි වියි. ළමා හදවත් තුළට පිවිස ඒවා උතුම් ගුණ දහම්වලින් පුරවාලීමට සාහිතාප තරම් වැදගත් දෙයක් තවත් නැතැයි සිතු ඔහු ළමා කවි ලියන්නට පටන් ගත්තේ යී ඒවා පුවත්පත් වල පළ කළේයි.
1960 දී ගුවන් විදුලි සේවයට සම්බන්ධවූ ඔහු දෙමළ අයංශයේ වැඩ සටහන් නිෂ්පාදකයෙක් වියි. ළමයින් හා යෙ0වනයන් සඳහා විවිධ වැඩසටහන් ගුවන් විදුලියෙන් පුචාරය කළ ඔහු දෙමළ සාහිතාප සංගමය පිහිටුවා සාහිත්‍ය නිර්මාණයට සහ සාහිත්‍ය සේවයට ජනතාව යොමු කළේයි.
ඔහුගේ ගුවන් විදුලි ළමා වැඩසටහන් වලට සහභාගීවූ ළමයින්ගෙන් බොහෝ දෙනෙක් පසු කලෙක දිවයිනේ ප්‍රකට කලාකරුවෝ වූහී, බී.එච්. අබ්දුල් හමීඩ්, විමල් සොක්කනාදන්, රොබට් වේදනායගම්, රෙජිනොල්ඩ් වේදනායගම්, කේචන්ද්‍රසේගරන්, එමී.කේ. රාහුලන්, කලාවතී සින්නසාමි, ජවහර් පුනාන්දු, පෝල් ඇන්ටනි ඔවුන්ගෙන් කීප දෙනෙකි.
ඔහුගේ ලේඛන බොහෝ තැන්වල විසිරී තිබුණ ද 1992 වන තුරු ඔහුගෙන් පොතක් පළවුයේ නැතී 1992 දී 'චණඩියන් ඕනායි’ (චන්ඩි වෘකයා) නමින් ළමා සාහිතාප ග්‍රන්ථයක් පළ වියි. යාපනයේ සාහිතාප සභාවේ සහ උතුරු නැගෙනහිර පළාත් සභාවේ සම්මාන වලට මෙම කෘතිය පාත්‍ර වියි.
ඔහුගේ දෙවෙනි කෘතිය "සන්දන කින්නම්' (සඳුන් පාත්‍රය) පළ වූයේ 1995 දීයී. මේ කෘතියට රාජ්‍ය සාහිතාප සම්මානය හිමිවියි. යහපත තුළට ළමයින් පිවිසෙන අයුරින් මෙහි හැම ළමා ගීයක්ම ලියැවී තිබේ.
“පුදිය පුක්කල්” (අලුත් මල් ගොඩක්) ඔහුගේ තෙවෙනි නිර්මාණය විද්‍යාපාව හා සෞන්දර්ය මුසු කැරුණු කලා කෘතියකි. එය 1998 දී පළවියි.
1979 දී ගුරු වෘත්තියෙන් රාසයියා විශුබාම ලැබුව ද ඔහුගේ සිතෙහි වූ ගුරුවරයා විශුබාම නො ලැබීයි. විශුනාමිකයෙකු වශයෙන් පාසල් දරුවන් අවනත කිරීම ඔහුට අපහසු වියී. ඒ නිසා ම ඔහු ළමා සාහිත්‍යය වැඩසටහන් සඳහා කැපවියි. 1982 දී යාපනයේ කෝපායි පුදේශයේ ගෙයක් තනවා එහි පදිංචි වූ ඔහුට කාවාප ශාස්ත්‍ර විනෝදයෙන් ගෙවීමට ඉඩ ලැබුණේ සුළු කලෙකි.
8.

Page 49
ජනවාර්ගික ගැටුම උගුවීම නිසා යාපනේ ජීවත්වීම ඔහුට අපහසු වියි. 1990 දී යාපනයේ යුද ගිනි දැල් අතරින් ඔහු කොළඹට ආවේයි. ඔහුගේ අතිවිශාල පුස්තකාලය ගෙන ඒම අපහසු වියි. කොළඹට එද්දී රාසයියාගේ සියලු නිර්මාණ අත්පිටපත් අතුරුදහන් වියි.
ලංකාවේ පුවත්පත් වල දෙමළ බසින් පළවන කෙටි කතාවලින් හොඳම කතා තුනක් තෙමසකට වරක් තෝරා ඒවා ලියූ ලේඛකයින්ට තැගි පිරිනැමීමේ වාපාපාරයක් රාසයියා මෙහෙයවීයි. අලුත් දෙමළ ලේඛකයින්ට දිරි දීමට මෙම වැඩසටහන අරඹන ලදී. අවුරුදු තුනකට වරක් හොඳම කෙටි කතා දොළහක් තෝරා ඒවා පොතක් වශයෙන් පළ කරන ලදී. එබඳු කෙටි කතා සංග්‍රහ දෙකක් දැනට පළවී තිබේ.
විභවි සංස්කෘතික මධ්‍යස්ථානය සමග ඉතා සමීප සම්බන්ධයක් පැවත්වූ වී. රාසයියා ස්වාධීන සාහිත්‍ය උළෙල සඳහා සම්මානනීය දෙමළ ආධුනික ලේඛණ ලේඛිකාවන් ඇගැයීමේ ඇගැයීම් මණඩලයේ සාමාජිකයෙකු ලෙස වසර හයකට ආසන්න කාලයක් අගනා සේවයක් ඉටු කළේයි.
තමා වසර 33ක් උගැන්වූ ශාන්ත බෙනඩික්ට් විදුහලේ දෙමළ සාහිත්‍ය සංගමයේ සංවිධායකයෙකු ලෙස ක්‍රියා කරමින් 1965 සිට වාර්ෂිකව සාහිත්‍ය උත්සව පැවැත්වීමට සිසුන් දිරි ගැන්වීයි.
සුභාෂිතයට සම කළ හැකි වසර 2500ක් පැරණි දෙමළ ගුන්ථයකි තිරුක්කුරලී. මෙම ශාස්ත්‍රීය ග්‍රන්ථය පදනම් කරගෙන 'කුරල් වළි වාල්වූ” (කුරල් මාවතේ ජීවිතය) නම් ග්‍රන්ථය 2005 දී පළවියි. මෙම ග්‍රන්ථයේ අඩංගු ලිපිවලින් ලිපි පනහක් කැනඩාවේ දී ප්‍රකාශයට පත්වන 'අන්බු නෙරි” (කරුණා මාවත) සගරාවේ පළවියි.
මෙබඳු ගේෂ්ඨ ගුරු පියෙකු වූ රාසයියා මහතා සඳහටම අප අතරින් වෙන්ව ගිය ද ඔහු විසින් දෙමළ භාෂාවට හා සාහිත්‍යයට කළ සේවය සදා අමරණීය වේ.

பாலர் விரும்பும் பாவலர்
வைத்திய கலாநிதி த. கைலாயர் (கயிலை)
பாலரை நேசித்தார் பெரியார் இராசையா பாடல்கள் பலகதைகள் படைத்திட்டார் அவர்கட்கு நீங்களும் இனிவரும் பிள்ளைகளும் அறிந்திடவே பாங்குடன் பகர்வேன்நான் பாவலரின் கதையினையே!
மாஸ்டரென அழைப்பாரே அன்றைய நண்பர்கள் மதிப்புடனே நினைப்பாரே பாரெங்கும் அன்பர்கள் உதிட்டிரராய் உலவிட்டார் விமர்சன அரங்கிலே அதிட்டமாய் பெற்றிட்டார் அன்புடை நெஞ்சினையே!
வானொலி மாமாவாக வடிவான கதைசொன்னார் வானொலி அண்ணாவாய் வாலிபரை வளர்த்திட்டார் தேனமுதாய் பாலருக்குத் தினக்குரலில் எழுதிட்டார் தீந்தமிழும் நிலைத்திடவே திறனுடனே உழைத்திட்டார்!
பாலருக்காய் சொரிந்தவையோ ‘புதிய பூக்களாம்! ‘சந்தனக் கிண்ணம் நல்ல சண்டியன் ஓநாய்' மெத்தெனப் படித்திட நல் முத்துக்கள் இவையே அத்தனையிலும் மூழ்கிச் சுவைப்பீர் இளசுகளே!
முதிர்ந்தோர்க்கு எழுதிடவே ஆயிரமாம் பேனாக்கள் மதலைகள் படைப்பினிலோ மனங்கொண்டோர் - ஒரு சிலரே சிலருக்குள் முதன்மை சீர்மிகு இராசையாவே! பாலருக்காய்ப் படைப்பீரே பாவலரின் சுவட்டினிலே!

Page 50
எழுத்தறிவித்தவன் இறைவனாவான்
திரு. செ. செந்திலீஸ்வரன்
தலைமை நிறைவேற்று அதிகாரி, பிறன்டிக்ஸ் அப்பறல்ஸ் லிமிடெட்
எனது பெருமதிப்பிற்குரிய ஆசானும் தமிழ் இலக்கிய ஆர்வலருமான அமரர் திருவாளர் வ. இராசையா அவர்களிடம் பரிசுத்த சூசையப்பர் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவன் என்கிற வகையிலே அவருடனான எனது நினைவுகளை மீட்டுப் பார்க்கின்றேன். பல ஆசிரியர்கள் எமக்குக் கல்வி கற்பித்திருக் கிறார்கள். ஆனால் சிலரே எம்மனதில் நிலைத்து நிற்கிறார்கள். அந்த வகையில் எம் நினைவில் என்றும் நிலைத்தவர் எங்கள் ஆசிரியர் வ. இராசையா.
இனிமையாகப் பேசுவார். எவருடனும் கோபப்படமாட் டார். எதிர்க்கருத்துக் கொண்டவர்களையும் இதமாகப் பேசி இணைய வைப் பார். அவரது தமிழார்வம் என்னை என்றுமே வியக்க வைத்துள்ளது. தமிழ் எழுத்துக்களை வரன்முறையுடன் எழுத வைப்பதிலும் சரி, தமிழ்ச் சொற்களைப் பிழையின்றி உச்சரிக்க வைப்பதிலும் சரி தனக்கு முழுத் திருப்தி ஏற்படும்வரை மாணவர் களைப் பயிற்றுவதில் அவர்களின் சிரத்தையும் விடாமுயற்சியும் அளவிடமுடியாதன.
தமிழ் இலக்கியப் பாடங்களையும் கவிதைகளையும் சுவைபட எடுத்து இயம்புவதில் அவர்களுக்கு உரிய தனித்துவமே எம்மை யெல்லாம் இலக்கியப் பாடங்களின்பால் ஈர்ப்பும் ஆர்வமும் கொள்ள வைத்தது என்றால் அது மிகையாகாது.
கற்றோரை மதிக்கின்ற பண்பு எல்லோருடனும் அன்பாகப் பழகும் தன்மை, எவர் மனமும் நோகாதபடி உரையாடுகின்ற இலாவகம், மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற மனப்போக்கு ஆகிய நற்பண்புகள் வாய்க்கப் பெற்றவர் ஆசிரியர் அவர்கள்.
84

அவர்களின் அறிவுரைகளும் போதன்ைகளும் இளவயதிலேயே நற்பண்புகளையும் நல்ல கலாசார விழுமியங்களையும் வளர்த்துக் கொள்ள எமக்குப் பெரிதும் உதவியாக இருந்தன. குறிப்பாக மாணவர்களிடையேயுள்ள திறமையை இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் கைதேர்ந்தவர் ஆசிரியர் வ. இராசையா அவர்கள். \
நமது கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் ஒரு வயதுக் குழந்தை யாகத் தவழ்ந்தபோது அதனை ஏனைய தமிழ் ஆசிரியர்களுடன் தத்தெடுத்து வளர்த்து 35 வருட நிறைவு எய்தும்வரை அதன் மேம் பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அயராது உழைத்த அந்த மாமனிதரின் சேவை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தொன்று.
முத்தமிழ்ப் போதகரான ஆசிரியர் அவர்கள் சரித்திர, சமுக நாடகங்களை எழுதி, நெறிப்படுத்தி எந்தவித முன்அனுபவமும் இல்லாத மாணவர்களை நன்கு பயிற்றுவித்து அரங்கேற்றினார். கல்லூரிக் கலை விழா, பேச்சுப் போட்டி, பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி எல்லாவற்றையும் முன்னின்று நடத்தினார்.
1971களில் நான் தமிழ் இலக்கிய மன்றத் தலைவராகச் செயலாற்றிய போது மன்றத்தின் 25ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி வெள்ளி விழாவினைக் கொண்டாட நாம் எடுத்த முயற்சிகளையும் அவை சார்ந்த நிகழ்வுகளையும் ஒரு கணம் பின்னோக்கி நினைத்துப் பார்க்கின்றேன்.
கொழும்புப் பாடசாலைகளுக்கிடையே வாக்குவல்லபப் போட்டியொன்றினை ஏற்பாடு செய்தபோது முன்னணியிலுள்ள ஏழு கல்லூரிகள் இப்போட்டியில் பங்குபற்றி சிறப்பித்தன. கொழும்பு நகரக் கல்லூரிகளில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் இணைந்த “தமிழ் இலக்கிய ஒன்றியம்’ ஒன்று உருவாதல் வேண்டுமென்ற ஆலோசனைக்கு நமது மன்றம் ஆதரவளித்து எட்டுக்கல்லூரிகள் பங்கேற்ற அந்த கூட்டுக் கல்லூரி தமிழ் மன்றத்தில் நமது மன்ற மும் ஒன்றாகத் திகழ்ந்தது. இதன் ஆக்கபூர்வமான வளர்ச்சியில் பின்னணியில் செயற்பட்டவர் ஆசிரியர் வ. இராசையா அவர்களே!

Page 51
மன்றத்தின் வெள்ளிவிழா ஏற்பாட்டிற்கான செலவுகளைச் சமாளிக்க நிறைகுடம்’ என்றொரு படத்தை நிதி உதவிக் காட்சியாக திரையிடச் செய்ய ஆலோசனை தந்ததிலிருந்து விழாவில் நடைபெற்ற சகல நிகழ்ச்சிகளையும் மேடையெற்ற உதவியதுவரை ஆசிரியர் அவர்களின் பங்களிப்பும் ஆலோசனை களும் விழா சிறப்புற நடந்தேறியதற்கு மூல காரணமாயின.
இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் அண்மையில் நடைபெற்ற தமிழ் இலக்கிய மன்ற வைர விழாவில் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் ஆசிரியர் வ. இராசையா அவர்களைப் பிரதம அதிதியாக வரவழைத்து ஊர்வலமாக, நாதஸ்வர இசை முழங்க, அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்துச்சென்று கெளரவித்த நிகழ்வு வெகுபொருத்தமானது ஆகும்.
அன்றைய நிகழ்வு ஒரு வரலாற்றுப் பதிவாக நிலைத்து, எமது கல்லூரிக்கு என்றும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை!
எழுத்துத்துறையில் தன்னை ஈடுபடுத்திய எமது ஆசான் அவர்கள் பல நூல்களையும் வெளியிட்டவராவார். இலங்கை வானொலியில் அவர் நடத்திய நிகழ்ச்சிகளில் எமது கல்லூரி மாணவர்கள் பங்கேற்று புடம்போட்டதங்கமாகப் பொலிந்தனர். எம் நெஞ்சங்களில் தமிழை ஆழ விதைத்திட்டவர் இறைபதம் அடைந்த ஆசிரியர் வ. இராசையா அவர்கள். மானசீகமாக, அமரரின் பாதம் தொட்டு எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்பது முற்றிலும் உண்மையே என்று என் கண்ணிர்அஞ்சலியைச் செலுத்துகின்றேன்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
-booo-o-
86

அமரர் வ. இ. யின் ஆக்கங்களிலிருந்து.

Page 52

சந்தனக் கிண்ணம்
குருவி அம்மா
குருவி ஒன்று மல்லிகைக் கொடியில் வந்து இருந்தது.
கொத்த ஏதும் தா என்று கொஞ்சிக் கொஞ்சிக் கேட்டது.
குறுணல் அரிசி தூவினேன். கொத்திக் கொண்டு பறந்தது. கூட்டில் இருக்கும் குஞ்சுக்குக் கொடுப்பதற்கு விரைந்தது.
ஐஞ்சு குஞ்சு கூட்டிலே. ஐஞ்சும் பிஞ்சுக் குஞ்சுகள்! கொஞ்சம் உணவு பிந்தினால் கூச்சல் போடும் குழந்தைகள்!
அம்மாக் குருவி வந்ததும் ஐஞ்சும் வாயைத் திறந்தன. முதலில் திறந்த வாயிலே குருவி உணவை வைத்தது.
குருவி மீண்டும் வந்தது. குறுணல் கொத்திச் சென்றது. குஞ்சு ஒன்றின் வாயிலே ஊட்டி விட்டு மீண்டது.
வந்து வந்து குறுணலை வாயில் அம்மாக் குருவியார் கொத்திக் கொத்திக் கொண்டுபோய்க் கொடுத்துப் பசியைப் போக்கினார்.
குறுணல் தின்ற குஞ்சுகள் வயிறு நிரம்பி விட்டதால் கூச்சல் போட்டுக் குதித்தன; குருவி அம்மா சிரித்தது!
89

Page 53
நான் செல்லப்பிள்ளை
அம்மா மடியில் இருந்து நான் ஆசைக் கதைகள் பேசுவேன். அப்பா முதுகில் ஏறிநான் ஆனை ஓட்டிக் காட்டுவேன்.
பாட்டி மடியில் கிடந்துநான் பாட்டும் கதையும் சொல்லுவேன். தாத்தா தோளில் ஏறிநான் தாளக் காவடி ஆடுவேன்.
மாமா நெஞ்சில் ஏறிநான் நல்லாய்க் குஸ்தி போடுவேன். அத்தை மடியில் படுத்துநான் மெத்தை என்று தூங்குவேன்.
90
 

சின்னப் பாப்பா தூங்குகிறான்
எங்கள் வீட்டுச் சின்னப் பாப்பா ஏணையில் கிடந்து தூங்குகிறான். இடைக்கிடை ஏதோ கனவுகள் கண்டு இனிதாய் மெல்லச் சிரிக்கின்றான்.
※※ 岑岑
குயிலே குயிலே கூவாதே! குழந்தையின் துயிலைக் குழப்பாதே!
காக்கா காக்கா கத்தாதே! கண்மணி கனவைக் கலைக்காதே!
பிள்ளைக் கிளியே பேசாதே! பிள்ளையை எழுப்பிப் போடாதே!
சிட்டே கிட்டச் செல்லாதே! செவியில் ஏதும் சொல்லாதே!
காற்றே! பெலமாய் வீசாதே! கண்ணன் இமையைத் திறவாதே!
மயிலே! தோகையை விரிக்காதே! மண்நிலம் அதிரக் குதிக்காதே!
米米·米米
எங்கள் வீட்டுச் சின்னப் பாப்பா ஏணையில் கிடந்து தூங்குகிறான்! இங்கே யாரும் சத்தம் செய்து இவனை எழுப்பக் கூடாது!
a-we-Mir
91

Page 54
அப்பளப் பொரியல்
அப்பளம் பொரிக்கிறா(ர்) அம்மா - ஓடி அக்காவும் தம்பியும் வாங்கோ! இப்பவே ஒவ்வொன்று கேட்போம், - பின்பு இன்னொன்று சோற்றுடன் தின்போம்.
அடுப்பிலே சட்டியை வைத்து - அம்மா அளவாக எண்ணெயை விட்டு கொதித்ததும் அப்பளம் போட்டா(ர்), - உடனே பொம் என்று பந்துபோல் ஆச்சு!
கமகம வாசனை வருகுது! - தொட்டால் கையிலே நல்லாகச் சுடுகுது! மெதுவாகத் தூக்கடா தம்பீர் - கீழே விழுந்தால் நொருங்கியே போகும்!
சப்பினால் மொரமொரச் சத்தம்! - ஆகா! நாவுக்கு ருசியாய் இருக்கு! கொஞ்சமாய்க் கொஞ்சமாய்ப் பிய்த்து - பல்லால் கொறித்துச் சுவைத்து நாம் தின்போம்!
அம்மாவின் வாயிலும் கொஞ்சம் - வைத்து அணைத்தொரு முத்தமும் தருவோம்! அப்பாவும் இங்குதான் வாறார், - ஐயே! அவருக்கும் அப்பளம் ஆசை
-us-008-ta
92

முறுக்கு
முறுக்கு நல்ல முறுக்கு
மொரமொரத்த முறுக்கு நறுக்கு நொறுக்கு என்றே
நாங்கள் தின்னும் முறுக்கு.
சிறுத்த சிறுத்த கம்பியாய்ப்
பிழிந்து கொதித்த எண்ணெயில் முறுக விட்டுச் சுட்டதால்
முறுக்கு வந்த முறுக்கிது.
வட்ட வட்ட முறுக்குகள்
அத்தை சுட்டு வைத்தனள் தொட்டுக் கேட்ட போதவள் தூக்கி இரண்டு தந்தனள்.
உளுத்தம் மாவில் செய்தது. உள்ளே கிடந்து கடிபட வறுத்த எள்ளும் போட்டது!
வாய்க்கு நல்லாய் இருக்குது.
கடித்துக் கடித்துப் பார்க்கிறேன்.
பொடித்துப் பொடித்துப் போகுது பொடித்த முறுக்கை நாவிலே
சுவைத்துச் சுவைத்துச் தின்கிறேன்.
-o-MXbo
93

Page 55
வீரசூரப் பம்பரம்
சின்ன, வண்ணப் பம்பரம்!
சிவப்பு மூக்குப் பம்பரம்!
அப்பா தந்த பம்பரம்!
அருமை யான பம்பரம்!
அண்ணன் பெற்ற பம்பரம்
ஆடத் தெரியாப்பம்பரம்!
தங்கை பெற்ற பம்பரம்
ததிங்கி ணத்தோம் பம்பரம்!
எந்தன் குஞ்சுப் பம்பரம்
எதற்கும் அஞ்சாப் பம்பரம்! முந்தி ஓடி அவைகளை
முட்டி விழுத்தும் பம்பரம்!
ஊசி போன்ற மூக்கினால்
உழுது செல்லும் பம்பரம்! மூசி மூசி நிலத்துடன்
மோதித்துள்ளும் பம்பரம்!
அந்தம் இன்றி நீண்ட நேரம் ஆடும் எந்தன் பம்பரம்!
இந்தப் பூமி சுழலுதாமே!
இதனைப் போலச் சுழலுமோ!
பம்பரங்கள் ஆட்டலாம்
பந்தயங்கள் வைக்கலாம்
உங்களுக்கு விருப்பமா?
ஒடி இங்கே வாருங்கள்!

தாத்தா பள்ளிக்குப் போனார்
என்னைப் போலே தாத்தாவும் சின்னப் பிள்ளையாய் இருந்தாராம்! தண்ணீர்ப் போத்தல் பையோடு w பாலர் பள்ளிக்குப் போனாராம்!
முதல்நாள் வகுப்பில் போனவுடன் முழிசி முழிசி நின்றாராம்! அம்மா வெளியே வரும்போது அவரும் ஓடி வந்தாராம்!
உள்ளே போகச் சொல்லியதும்
ஓவென்று கத்தி அழுதாராம்! . "பள்ளிக் கூடம் கூடாது;
படிக்க மாட்டேன்’ என்றாராம்!
சொன்னது ஒன்றும் கேளாமல் ஒலம் வைக்கத் தொடங்கியதால் அம்மா மிட்டாய் கொடுத்தாளாம் அதன்பின் அழுகையை விட்டாராம்!
ஐயே! வெட்கம்! தாத்தாவும் பள்ளிக்குப் போக அழுதாரே! நானோ முதல் நாள் அழவில்லை! நல்லவன்(ள்) என்ற பேரெடுத்தேன்!
95

Page 56
சந்தனக் கிண்ணம்
வான நடுவில் சந்திரன் வழியுதங்கே சந்தனம்! ஊரில் எங்கும் வாசனை உவகை பொங்கும் பூசனை!
மலர்கள் விரிய வானிலே நிலவு பொழியப் பூமியில்
இரவு முழுதும் திருவிழா! எல்லோருக்கும் பொதுவிழா!
முகிலில் நிலவு ஒளித்திடும் நொடியில் வந்து வெளிப்படும்! இனிய ஒளியை விரித்திடும்! எம்மைப் பார்த்துச் சிரித்திடும்!
சிறுவர் நிலவிற் கூடுவோம்! இனிமை கனியப் பாடுவோம்! குறும்பு செய்து ஆடுவோம்! கும்மாளங்கள் போடுவோம்!
 

அன்பு மழை
கடவுளைத் தினமும் தொழுகின்றேன். கற்றவர் பெரியவர்; மதிக்கின்றேன். கடமைகள் செய்து முடிக்கின்றேன். காலையில் எழுந்து படிக்கின்றேன்.
சோம்பலும் பயமும் எனக்கில்லை. ஊக்கமும் உயர்வும் எனக்கெல்லை. பண்பில் பெரிதாய் மலர்ந்திடுவேன். பலரும் புகழ வளர்ந்திடுவேன்.
அறிவைத் தேடிப் பெற்றிடுவேன். அழகிய குறளும் கற்றிடுவேன். தமிழ்மொழி எனது விழியாகும். தாய்போற் காப்பதென் தொழிலாகும்.
அணைத்துக் கொள்கிறார் என் அம்மா அறிவுரை சொல்கிறார் என் அப்பா. வீட்டில் எனக்கு அன்பு மழை! நெஞ்சில் பொழியும் இன்ப மழை!
97

Page 57
பாப்பாவுக்குப் பல்லு முளைத்தது
பல்லு முளைத்தது - சின்னப் பல்லு முளைத்தது! எனது தங்கை பாப்பாவுக்குப் பல்லு முளைத்தது! முல்லை மொட்டுப்போல் - பிஞ்சு முல்லை மொட்டுப்போல் செல்லத் தங்கை சிவந்த வாயில் பல்லு முளைத்தது! விரலை விட்டுநான் - பல்லை மெல்லத் தடவினேன் விரலை நல்லாய்க் கடித்து விட்டாள் விறைத்துப் போச்சுது!
சின்னக் கொழுக்கட்டை - சின்னப் பல்லுக் கொழுக்கட்டை பயறு சர்க்கரை போட்டு நாங்கள் அவிக்கப் போகிறோம்!
சுளகின் நடுவிலே - இவளைப் பொம்மை போல்வைத்து கொழுக்கட் டையை அள்ளித் தலையில் கொட்டப் போகிறோம்.
பல்லு வந்தாலும் - பாப்பா மெல்ல மாட்டாளாம்! நல்லாய்ப் போச்சு கொழுக்கட்டையை நாங்கள் தின்னுவோம்! பாப்பா, பாப்பாதங்கைச்சி! பல்லைக் கொஞ்சம் காட்டம்மா பசையும் பிறஷ"ம் நான்தாறேன்; காலையில் நல்லாய்த் தீட்டம்மா.

கும்மாளம்
செய்தி என்ன? செய்தி என்ன? செய்தி சொல்லுங்கோ! தேசம் சுற்றி வந்த ராஜா, செய்தி சொல்லுங்கோ
விட்டிற் பூச்சி விளக்கைப் பார்த்து ஆசைப் பட்டதாம்! கிட்டச் சென்று தொட்டுப் பார்த்துச் சுட்டுச் கொண்டதாம்!
காகக் கூட்டில் குயிலி அம்மா முட்டை இட்டாளாம்! காகம் மாமி அடை கிடந்து குஞ்சைத் தந்தாளாம்!
கொம்பன் எருமை குளத்து நீரில் குளிக்கப் போனதாம்! கொள்ளைச் சேற்றைப் பூசிக் கொண்டு திரும்பி வந்ததாம்!
மரத்துக் கொப்பில் மேல்கீழ் ஆக வெளவால் தொங்குமாம்! “மனிதன் போறான் தலைகீழ் ஆக” என்று சொல்லுமாம்!
அருமைத் தங்கை அண்ணாவுக்குப் பாடம் சொல்வாளாம்! “ஐஞ்சும்மூன்றும் பத்து” என்று அழுத்திச் சொல்வாளாம்! மிட்டாய் தின்னும் நோஞ்சான் இப்போ(து) சிரிப்ப தில்லையாம்! பல்லுச் சூத்தை என்று வாயைத் திறப்பதில்லையாம்!
பிச்சை வாங்க வந்த ஊமை, நாயைக் கண்டானாம்! “பிடித்துக் கொள்ளு நாயை' என்று உரத்துச் சொன்னானாம்!
பாலுக்குள்ளே நீரைக் கலந்து தாமன் விற்பானாம்! மழையில் மாடு நனைந்த தென்று சாட்டுச் சொல்வானாம்!
செய்தி என்ன? செய்தி என்ன? செய்தி சொல்லுங்கோ தேசம் சுற்றி வந்த ராஜா, செய்தி சொல்லுங்கோ
99

Page 58
புதிய பூக்கள்
பூனைக் குட்டீ, பள்ளிக்கு வா
பூனைக்குட்டீ, பூனைக் குட்டீ, பள்ளிக்கு வருவாயா?
புத்தகம் பென்சில் வாங்கித் தந்தால்
பாடம் படிப்பாயா?
நானும் நீயும் ஒன்றாய்ச் சேர்ந்து பள்ளிக்குப் போய் வரலாம்.
நண்பர்களுடனே கூடி யிருந்து பாடம் படித்திடலாம்.
தாளம் போட்டுத் தோழர்களோடு
பாட்டுப் பாடிடலாம்.
வேடம் போட்டு மேளம் அடித்து மேடையில் ஆடிடலாம்.
ரீச்சர் வந்ததும் எழுந்து நின்று
வணக்கம் நீ சொன்னால் சிரிப்பார் ரீச்சர் உன்னைத் தடவிச்
செல்லக் கதைசொல்வார்!
எத்தனை எத்தனை கதைகள் சொல்வார்
எங்கள் ஆசிரியர்!
எல்லாம் புதுசு சின்னக் கதைகள் கேட்டால் இனிக்குமடா!
பாலைக் குடித்து மூலையில் கிடந்து
பகலில் தூங்காதே!
காலையில் என்னுடன் பள்ளிக்கு வந்திடு;
கள்ளம் பண்ணாதே!
100

தேனி
ஆறு கோண அறைகள் கொண்ட அழகு வீடு கட்டுவோம்.
நூறு நூறு தோழர் நாங்கள்
கூடி அங்கு வாழுவோம்.
மரத்துப் பொந்தில், உயர்ந்த கிளையில்,
மலையின் பாறை இடுக்கிலே
அரசு வைத்து உரிமை யோடு
ஆட்சி செய்து வருகிறோம்.
வேலை செய்யச் சோம்பல் கொள்ளும்
வீணர் அல்லர் நாங்களே!
காலை தொட்டு மாலை வரையும் கடுமை யாக உழைப்பவர்.
தூரமான இடங்களுக்கும்
தேனைத் தேடிச் செல்லுவோம்.
ஊரடங்க உள்ள பூவில்
உறவு கொண்டு மகிழுவோம்.
பூவில் நின்று பூவினுக்குப்
பொன் சுமந்து செல்கிறோம்.
கூலி யாகத் தேனை வாங்கிக்
கொண்டு வந்து சேர்க்கிறோம்.
மாரிக் கால உணவுக் காகத்
தேனை நாங்கள் சேமிப்போம்.
ஊரில் விலையை ஏற்றி விற்று
உடைமை சேர்க்க அல்லவே!
IO

Page 59
தீயை மூட்டி நம்மை ஒட்டித்
தேனை யாரும் திருடினால்
வாயைப் பிளந்து நின்றி டாமல்
கடித்துக் கடித்து விரட்டுவோம்!
கூட்டைக் கொளுத்தி நம்மைக் கொன்று
கொள்ளையடிக்கும் கயவரை
காட்டு மிருகம் என்றே நாங்கள்
கணித்து வைத்திருக்கிறோம்!
எந்த நாளும் சுறுசுறுப்பு;
இடையறாத முயற்சிகள்!
வந்து எங்கள் கூட்டைப் பார்த்து
வாழும் வழியைப் பழகுங்கள்!
awan)SO46-aasa
102
 

வானில் ஒரு பவனி
மேகம் மேகம் வானம் முழுதும்
மேகக் கூட்டம்! பார்த்தாயா!
ஆகா! ஆகா! ஆனைகள் போல் அவை
அசையும் அழகைக் கண்டாயா!
கடலின் நீரில் பிறந்த மேகம்
காற்றில் சவாரி செய்கிறது! உடலும் கறுத்து உப்பிப் பருத்து r உயர எழுந்து வருகிறது!
வானம் ஊதிய பெரிய பலூன்கள்! வயிறு பெருத்த பூதங்கள்! எரியும் மலைகள் காண்டா மிருகம்!
இப்படி எத்தனை உருவங்கள்! சூரியத் தேவன்தூரிகை கொண்டு ஒவியம் அங்கே தீட்டுகிறான்! வெள்ளி உருக்கி அள்ளி எடுத்து
மேக விளிம்பில் பூசுகிறான்!
மேகம் திரண்டு மின்னிச் சிரித்து
வானிலல பவனி வருகையிலே தாகம் தணிந்து பூமி செழிக்கத்
தன்னை மழையாய்த் தருகிறது!
உருவம் கரிய நிறம் என்றாலும்
உள்ளம் அதற்கு வெள்ளையடா! உயர்ந்தோர் தாழ்ந்தோர் எல்லோருக்கும்
ஒன்றாய் மழையைப் பெய்யுமடா! ஒன்றினை ஒன்று மோதி விலக்கி
ஒடும் மேகம், மலைமேலே சென்று படுத்தும் உருண்டு புரண்டும்
சிறுவர் போலே விளையாடும்!
IO3

Page 60
எங்கள் பாரதி
பாரதி எங்கள் கவிஞர். - புதுமைப் பாடல்கள் பாடிய முதல்வர். மாகவி என்றே நாங்கள் - புகழ்ந்து வாழ்த்தும் செந்தமிழ் வேந்தர்.
மக்களை நேசித்த மனிதர். - பாரதி மடமையைக் கோபித்த கவிஞர். புத்தம் புதிதாய் வாழ்வு - இங்கே பூத்திடப் பாடிய புலவர்.
தமிழின் அருமையைச் சொன்னார். - பாரதத் தாயின் பெருமையைச் சொன்னார். உழைப்பே உயர்ந்தது என்றார். - பாரதி ஒற்றுமை அவசியம் என்றார்.
புதுவித மாகிய கவிதை! - உணர்ச்சி பொங்கி வழிந்திடத் தந்தார்! விதம்வித மாய் அவை சுவைக்கும்! - இசைத்தால் விட முடியாமல் இழுக்கும்!
-o-o-o-en
O4
 

எனது தோழன்
எனக்கொரு தோழன் இருக்கின்றான் - அவன் என்னுடன் ஒன்றாய் வசிக்கின்றான். தனக்கொரு பயனும் கருதாமல் - பல நன்மை எனக்குப் புரிகின்றான்.
தனிமையில் இருக்கும் போதினிலே - எனது தனிமையைப் போக்க வந்திடுவான். இனிக்க இனிக்கக் கதைசொல்லி - அதிலே
என்னை மறக்கச் செய்திடுவான்.
உலகப் பெரியார் வரலாறும் - அவர்கள் உலகிற் புரிந்த சேவைகளும் பலவாய் எடுத்துக் கூறிடுவான். - அவற்றின் பண்பை உயர்த்திப் பேசிடுவான்.
கவிதை சுவைக்கப் பழக்குகிறான். - பெரிய கணக்கென்றாலும் விளக்குகிறான். புவியியல் முதலாம் விஞ்ஞானம் - நான் புதிதாய்ப் படிக்க உதவுகிறான்.
சித்திரம் நன்றாய்த் தீட்டுகிறான் - அதிலே செய்தியை எளிதாய்க் காட்டுகிறான்.
எத்தனை திறமைகள் இவனுக்கு ஐயோ! எப்படி இவற்றைக் கற்றானோ!
கல்வியிற் சிறந்த பெற்றோர்கள் - அறிவுக் கடலாய் இவனை ஆக்கினராம்! ‘நல்லவன், வல்லவன் எனஊரார் - கூறி
நன்கு மதித்து வைத்தனராம்!
IO5

Page 61
காலையில் விழித்து எழுந்தவுடன் - எனது கண்கள் தேடுவ(து) இவனைத்தான். மாலையில் என்கண் தூங்கும்வரை - எனது மனது படிவதும் இவனில்தான்!
“உன்தன் தோழன் பெயரென்ன? - அதனை உரைப்பாய்” என்றா கேட்கின்றீர்? இந்தப் பெரிய உலகினிலே - அதுவோ எங்கும் தெரிந்த பெயர்தானே!
‘புத்தகம்' - இவனது பெயராகும்! - எனக்குப் புத்தியில் இனிக்கும் உறவாகும். வித்தகன் இவனது தோழமையை - நான் விடவே மாட்டேன் வாழ்ைேகயிலே
106
 

புதுவித மனிதர்
நாங்கள் புதுவித மனிதகுலம்! இயந்திர வடிவில் பிறந்த இனம்!
றோபோ என்பது எங்கள் பெயர். மின்வலு - அதவே எங்கள் உயிர்.
இரத்தமும் தசையும் எமக்கில்லை! இருதயம் என்பதும் எமக்கில்லை! கணினி என்கிற பெயரினிலே அதிசய மூளை நமக்குண்டு!
கணினிகள் தருகிற வேலைகளைக்
கச்சித மாய் நாம் செய்கின்றோம்!
இரும்பைக் கடைந்து வெட்டுகிறோம்! எரி வாயுவினால் ஒட்டுகிறோம்!
அழகாய் வர்ணம் தீட்டுகிறோம்! ஆணிகள் எடுத்துப் பூட்டுகிறோம்!
பிளாஸ்ரிக் பொருள்கள் ஆக்குகிறோம்!
வேண்டாப் பொருள்களை நீக்குகிறோம்!
பொருள்களைச் சரையாய்ச் சுற்றுகிறோம்! பொதிகளை வண்டியில் ஏற்றுகிறோம்!
களைப்பும் சோர்வும் இல்லாமல் உழைக்கும் மனிதர் நாங்கள்தான்!
O7

Page 62
பலூன், பலூன்
பலூன், பலூன், பலூன்! பலூன், பலூன், பலூன்!
தம்பி ஓடி வாருங்கோ. தங்கை ஓடி வாருங்கோ. பாப்பா வோடு வாருங்கோ. பலூன் எல்லாம் பாருங்கோ!
கொத்துக் கொத்தாய் இருக்குது. குலை குலையாய் இருக்குது. எத்தனையோ நிறங்களில் இங்கே யிருந்து சிரிக்குது!
பச்சை, மஞ்சள், நீலமா? பட்டு ரத்த வண்ணமா? எந்த வண்ணம் வேண்டுமோ, இங்கே நீங்கள் எடுக்கலாம்!
பாம்பு பலூன் வேண்டுமா? பானை பலூன் வேண்டுமா? காம்பு நீண்ட வத்தகை கத்த ரிக்காய் வேண்டுமா?
ஊதி ஊதிப் பாருங்கோ உயர வீசிப் பாருங்கோ! மோதி மோதி அடியுங்கோ! முடிந்த பின்பு உடையுங்கோ!
பலூன், பலூன், பலூன்! பலூன், பலூன், பலூன்! பாலர்களே ஓடி வந்து பலூன் வாங்குங்கோ
08

சண்டியன் ஒநாய்
நரி நண்பன்
கந்தர் வீட்டு வீமன்நாய்
காட்டுப் பக்கம் போயிற்று.
அங்கே கண்ட நரியொன்றை
அருமை நண்பன் ஆக்கிற்று.
நரியார் தமது நண்பனுக்கு
நண்டும் மீனும் கொண்டுவந்து
பெரிதாய் விருந்து வைத்தங்கே
பேசிச் சிரித்து மகிழ்ந்தாராம்.
காட்டு நரியின் விருந்துண்ட
களிப்பில் வீமன், நரியைத் தன்
வீட்டுக்(கு) ஒருநாள் வருமாறு
விருப்பத்துடனே அழைத்திட்டார்.
பூரணை நிலவு நாளொன்றில்,
ஊரார் உறங்கிய வேளையிலே
நாயார் சென்று கூட்டிவர
நரியார் வந்தார் நாட்டுக்கு.
தோட்டம், வீடு முழுவதையும்
சுற்றி வீமன் காட்டியபின்
கூட்டில் இருந்த கோழியொன்றைக் குள்ள நரிக்கு விருந்திட்டார்.
கோழி யிறைச்சியைத் தின்றவுடன்
குஷி பிறந்தது நரியார்க்கு
நீளமாகக் குரலெடுத்து
நிலவிற் பாடத் தொடங்கிவிட்டார்!
109

Page 63
ஊளைச் சத்தம் கேட்டதனால்
உறக்கம் கலைந்த ஊரவர்கள்
சூழ வந்து நரியாரைத்
துடிக்கப்பதைக்க அடித்தார்கள்!
நரிக்கு வீசிய தடியொன்றால்
நாய்க்கும் ஒருகால் முடமாச்சு!
சிறியோர் மூடர் நட்பாலே
தீமை வந்து சேர்ந்திடுமே!
O
 

மாங்காய் தின்னி மாப்பிள்ளை
காட்டில் நடக்குது கலியாணம் - அங்கே
கமகம வாசனைப் பலகாரம்!
பாட்டுகள் கூத்துகள் பிரமாதம்! - மரத்துப் பந்தல்கள் எல்லாம் அலங்காரம்!
‘வானரவாலன் மாப்பிள்ளையும் - அழகிய
‘மந்திகள் செல்வி மணமகளும்
யானையின் மேலே ஊர்வலமாம்! - போகும்
வழிவழி எல்லாம் தோரணமாம்!
தரிகிட தரிகிட தரிகிடதோம்! பன்றி
தவிலை அடித்து முழக்குகிறார்!
பீபிப் பீபிபி பிப்பிப்பீ - கரடி
குழலை உயர்த்தி ஊதுகிறார்!
பாட்டும் கூத்தும் ஒருபக்கம் - இடையே
பட்டாசு வெடியின் பெருஞ்சத்தம்!
ஊர்வலம் மரங்களின் ஊடாக - அழகாய்
ஊர்ந்து மெல்லச் செல்கிறது.
ஆனையின் முதுகில் ஜோராக - பெண்ணுடன்
அமர்ந்து வருகிற மாப்பிள்ளை பாதையின் ஓரத்து மாமரத்தில் - தனது
பார்வையைக் கொஞ்சம் விட்டாரே! கொப்புகள் நிறைய மாங்காய்கள்! - பெரிய
குலைகுலை யாக மாங்காய்கள்! சப்பித்தின்ன வேண்டுமென்று - வாயில்
தண்ணிர் ஊறத் தொடங்கியது.
111.

Page 64
மாப்பிள்ளை என்பதை மறந்திட்டார் - உடனே
மரத்தில் தாவிப் பாய்ந்திட்டார் சாப்பிடப் பதமாய் நாலைந்து - புளிப்புக்
காய்கள் பிடுங்கி வந்திட்டார். மாங்காய் ஒன்றைத் தான்கடித்து - பின்பு மணமகனிடத்துக் கொடுத்திட்டார் "சோக்காய் இருக்கு" என்று சொல்லி - மந்தி சுவைத்துச் சுவைத்துத் தின்றாளே! மாப்பிளை, பொம்பிளை ஒன்றாகப் - பிஞ்சு
மாங்காய் கடித்துத் தின்னுவதை போட்டோக் கலைஞர் கங்காரு - உடனே
புகைப்படம் ஆக்கிக் கொண்டாராம்!
 

酶 சென். பெனடிக்ற் கல்லூரித் தமிழ் இலக்கிய மன்ற வைரவிழாவில் பிரதம அதிதியாக
செப்டெம்பர் 2006 இல் .

Page 65

Igo-sumpolttoulosIỆırıpıştıī£rystwo sɔsom ufigo yasal 1,91||TŶ otrosso

Page 66

குறள்வழி வாழ்வு
மாற்றுயர்ந்த அணிகள்
மக்கள், தாங்கள் அழகாக இருக்கவேண்டும் என்று விரும்பு கிறார்கள். இதனால் தமக்கு இயலும் அளவுக்கு நவநவமான ஆடை ஆபரணங்களை, அழகுச் சாதனங்களைத் தரித்து தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள். இவ்வாறு மக்கள் செய்து கொள்ளும் அலங்காரம் நிறைவானதா என்று நோக்கும்போது "அப்படி இல்லை; இது செய்து கொள்ளவேண்டிய அலங் காரத்தின் பாதி அளவுதானும் இல்லை! குறிப்பிடத்தக்க அணிகள் விடுபட்டுப் போகின்றன. முக்கியமாக இரண்டு அணிகள்” என்கிறார் ஒரு சிறந்த அழகு ரசிகர். அவர் வேறு யாரும் அல்லர்; திருவள்ளுவர்தான்! அவரது மதிப்பீடு என்ன?
அழகு என்றால் அது உடலுக்கு உரிய அழகு மாத்திரம் அல்லவே. உடல் என்பது “மனிதன்” என்பதன் ஒரு பாதிதான். இதற்கு அப்பால் அவனது குணஇயல்பு என்னும் மறு பாதி இருக்கிறதே! அதன் அழகையும் நாம் நோக்க வேண்டும். உடல் நமது கண்ணுக்குப் புலப்படும் பொருள். குணஇயல்பு நமது சிந்தனைக்கு மாத்திரமே தெரியும் பகுதி முன்னையதிலும் பார்க்க மிகவும் மேலான அங்கம் இது.
மனிதனை “மனிதன்” என்று இனங்காட்டி நிற்பது இந்தக் குண இயல்பே. உண்மை, அடக்கம், பொறுமை, பணிவு, இன்சொல் என இந்தக் குண இயல்பு பலப்பலவாக விரியும். இவை எல்லாம் மானுட விழுமியங்கள். மானுடம் அணிந்துகொள்ள வேண்டிய அணிகலன்கள். இவற்றுள் ‘பணிவும் இன்சொல்லும் தான் மனித னுக்கு ஏற்ற மிகச்சிறந்த அணிகள் - பெறுமதிமிக்க அணிகள்” என்கிறார். திருவள்ளுவர்.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்றுப் பிற. (95) என்பது அவரது வாக்கு.
பணிதல் என்றால் தாழ்ந்து நிற்றல், அடங்கிப் போதல் என்று நமக்குப் புரிகிறது. அப்படியானால் ஒவ்வொருவரும் மற்ற

Page 67
ஒவ்வொருவருக்கும் தாழ்ந்து, அடங்கி நடந்து கொண்டே இருக்கவேண்டுமா? இது வாழ்க்கை நடைமுறைக்குப் பொருந்தி வருமா? இந்தச் சந்தேகம் இயல்பாகவே மக்களது மனத்தில் தோன்றத்தான் செய்யும்.
பணிதல் என்பது மனிதன் என்னும் சடப்பொருளுக்கு அடங்கிப் போதல் அல்ல. அவனுள் சூக்குமமாய் இருக்கும் குணநலத்துக்கு - அவனது அறிவுக்கு - அனுபவத்துக்கு - நல்லொழுக்கத்துக்கு - ஞானத்துக்கு - சமுதாய நீதிக்கு - நீதியின் ஆணைக்கு பணிந்து கொள்ளுதல் ஆகும். உலகில் முழுமை பெற்ற மானுடனாக யாரும் இல்லை. ஒவ்வொரு விடயத்திலே ஒவ்வொருவர் மேம்பட்டிருப் பார்கள்; ஒவ்வொரு எல்லையை எட்டியிருப்பார்கள். அந்த ஆளுமைகளுக்கு நாம் பணிதல் வேண்டும்; மரியாதை செலுத்து தல் வேண்டும்.
பணிவு என்பது அறியாமையின் வெளிப்பாடு அல்ல; இயலாமையின் செயற்பாடும் அல்ல; அது நமது அறிவினது, மனப்பக்குவத்தினது வெளிப்பாடு! வயலிலே விளைந்து, முற்றியிருக்கும் நெற்கதிர்தான் தலைகுனிந்து நிற்கிறது. "பணிவுடையவராக நடந்து கொள்ளுதல் எல்லாருக்கும் நல்லது” என்கிறார் திருவள்ளுவர். “பணிந்து நடப்பதால் நாம் எதையும் இழந்து விடுவதில்லை” என்கிறது ஒரு சீனப் பழமொழி.
பணிவும் இன்சொல்லும் இரட்டைப் பிள்ளைகள். இவற்றுள் ஒன்று இருக்கும் இடத்தில் மற்றதும் இருக்கும் - இருக்க வேண்டும். மற்றையவர்கள் கேட்டுச் சந்தோஷப்படவேண்டும் என்பதற்காக அவர்களுக்குக் கூறுகின்ற போலி வார்த்தை இன்சொல் ஆக மாட் டாது. அது வெறும் முகஸ்துதி. ஒரு வகைப் பொய்! இன்சொல் நமது நெஞ்சினுள் பிறந்து, மலர்ந்த முகத்திலே தவழ்ந்து, நாவிலே நடந்து, கேட்பவரது உள்ளத்திலே சென்று விளையாடுவது.
அகந்தை கலவாத பணிவு, வன்மை கலவாத இன்சொல் ஆகிய
இவை இரண்டும் மாற்றுயர்ந்த அணிகள் இவற்றுக்கு வேறு எந்த அணிகளும் ஈடு ஆகமாட்டா!
14

மனத்தின் சமநிலை
நீதியை ஒரு தேவதையாக உருவகித்து அமைக்கப்பட்டுள்ள சித்திரத்தை அல்லது உருவச்சிலயை நீதி மன்றங்களிலே நாம் காண்கிறோம். அந்தத் தேவதையின் கையில் தராசு இருக்கிறது. தராசு நீதியின் சின்னம். பொருள்களை நிறுக்கும் போது தராசினது முள் நடுவில் நிமிர்ந்து நிற்றல் வேண்டும். அந்த நிலை பக்கம் சாராமையைக் காட்டுகிறது; நேர்மையைக் குறிக்கின்றது. இந்த நேர்மை மனித வாழ்விலும் பேணப்பட வேண்டும் என்கிறார், வள்ளுவர் பெருமான்.
நமது செயற்பாடுகளுக்கு எல்லாம் சூத்திரதாரியாக இருப்பது எங்களது மனம். தராசினது முள் அசைவதைப்போல நமது மனமும் அசையக்கூடியது. மனத்தை அசையச் செய்பவை எங்களுக்கு உள்ள பற்றுக்கள். மனிதன் ஒவ்வொருவனுக்கும் மற்றைய மனிதர் நண்பராக அல்லது பகைவராக அல்லது நொதுமலராக இருக்கிறார்கள். இந்தத் தொடர்புநிலைக்கு ஏற்றவாறு மனிதனது உணர்வுகளில் மாறத்தக்கவை மாறுகின்றன. விருப்பு வெறுப்புகள் என்னும் இந்த வெள்ளத்தோடுதான் பொதுவாக எல்லா மனிதரும் போய்க்கொண்டிருக்கிறோம். இந்தப் போக்கிலே நாம் நேர்மை தவறி விடக்கூடிய அபாயம் இருக்கின்றது. தனக்கு ஒரு நியாயம், தன் பகைவனுக்கு இன்னொரு நியாயம், பொதுநிலையினருக்கு ஏனோதானோ என்று வேறு ஒரு நியாயம் எனச் செயற்பட நேரிடுகிறது.
நமது மனம் நேர்மை தவறுவதற்கு நமக்குள் பதுங்கியிருக்கும் சுயநலமே முக்கிய காரணி. நாங்கள் எந்த விடயத்தைப் பற்றிச் சிந்திக்கும்போதும் இந்தச் சுயநலம் அதற்குள்ளே வந்து நுழைந்து கொள்கிறது. "அப்போது இந்த விடயத்தில் எனக்கு என்ன பயன் கிட்டும்? நன்மையா? தீமையா?” என்று எண்ணத் தொடங்கி விடுகிறோம். இந்த நிலையில் மனத்தின் நடுவுநிலை போய்விடு கிறது. நாம் அறியாமலே நமது மனத்தில் ஏற்படும் ஒரு மாயம் இது. வெகு சாதாரணமாக எங்களுக்குள் பலர் இந்த மாயத்தில் சிக்கி விடுகிறார்கள். இந்த இருளில் சிக்காது வெளிச்சத்துக்கு வந்து

Page 68
விடுவதற்கு ஒரு சிலருக்கு மாத்திரமே முடிகிறது. அவர்கள் சான்றோர்கள்.
பொருள்களை நிறுப்பதன் முன்பு தராசினது முள் சரியான நிலையில் நிற்கிறதா என்று பார்த்துக் கொள்வது முக்கியம். முள் சரியாக நிற்கவில்லையென்றால் பொருள்களைச் சரியாக நிறுத்து அறிய முடியாது. இவ்வாறே எந்தவொரு விடயத்தையும் சீர் தூக்கிப் பார்ப்பதன் முன்னர் நமது மனத்தைச் சமநிலையில் - நடுவுநிலையில் - வைத்துக்கொள்ளல் வேண்டும்.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்(கு) அணி. (118)
தான் சமமாக நின்று பின் தன்னிடத்து வைக்கப்பட்ட பொருளின் பாரத்தைச் சரிவரக் காட்டுகின்ற தராசு போல, மனத்தில் சமநிலை யாக நின்று ஒரு பக்கம் சாயாது உண்மையை உரைத்தல் வேண்டும்; இது உயர்ந்தோருக்கு அழகாகும்.
குடும்பப் பிணக்குகள், சொத்துரிமை சார்ந்த முரண்பாடுகள், ஊர்ப்பொதுத் தகராறுகள் முதலியவை வாழ்விலே தோன்றுகின்ற போது பெரியவர்கள் அவற்றைத் தீர்த்து வைக்கிறார்கள். ஆயினும் இவற்றில் எட்டப்படும் தீர்வுகளிற் பல பின்பு சரிந்து விடுகின்றன. இதற்குக் காரணம் அத்தீர்வுகளில் எங்கோ ஓரிடத்தில் நடுவு நிலைமை பேணப்படாமையேயாகும்.
எங்களுடைய சொல்லுக்குப் பலம் தருவது அதில் உள்ள நேர்மை. சொல்லுக்கு நன்மதிப்புத் தருவதும் அதில் உள்ள நேர்மையே. நேர்மையோடு பொருந்திய சொல்லே சமுதாயத்தில் செல்லும் சொல். மற்றைய சொல் செல்லாத சொல். மனச்சுத்தம், சொற்சுத்தம் ஆகிய இரண்டும் இணையும்போதே நமது செயலும் சுத்தமானதாக நடுவுநிலைமை பொருந்தியதாக அமையும்.
மனமும் சொல்லும் செயலும் ஒருமுகமாகி நடுவுநிலைமையில் நிற்கும்போது வாழ்க்கையில் செப்பம் ஏற்படுகிறது. அந்த வாழ்க்கை தெளிவானதாக நிம்மதியுடையதாக பீடும் பெருமை யும் பொருந்தியதாக உயர்கிறது! இத்தகைய வாழ்வைக் கேடுகள் வந்து சூழ்வது இல்லை! நடுவுநிலை தவறாதவன் மறைந்த பின்பும் அவனது நற்பெயர் நின்று நிலைக்கும்.
II6

அகத்துய்மை
நமது உடல் ஒவ்வொரு கணமும் அசுத்தமடைந்து கொண்டே யிருக்கிறது. வியர்வை, தூசு, புகை, மற்றும் சிதிலங்கள் என எத்தனையோ வேண்டாத பொருள்கள் உடலில் ஒட்டிக்கொள்ளு கின்றன. இவை தவிர எண்ணிறந்த நோய்க் கிருமிகளும் வந்து படிகின்றன. இது எங்களுக்குத் தெரிகிறது. அதனால் நமது உடம்பை அடிக்கடி துடைக்கிறோம்; கழுவுகிறோம்.
நாங்கள் உடலின் வெளிப்புறத்தை மாத்திரம் துப்பரவு செய்து கொண்டால் போதுமா? அதன் அகத்தை - அதாவது நமது உள்ளத்தைத் துப்புரவு செய்யவேண்டாமா? நம்மில் பலருடைய உள்ளம் திறக்காத வீடுபோல மூடிக்கிடக்கிறது. அதனைத் திறந்து எப்படியிருக்கிறது என்று பார்க்கவேண்டும்; அங்கே தேடுதல் நடத்தவேண்டும்.
எங்களுக்கு யார்மேலாவது பொறாமை உண்டா? வெறுப்பு உண்டா? பகைமை உண்டா? நாங்கள் பிறர்பொருளுக்கு ஆசைப்படுகிறோமா? பிறருக்குக் கேடு விளைவிக்கிறோமா? இந்தச் சரக்குகளையெல்லாம் இங்கே வைத்திருக்கிறோமா? - என்று பற்பல வினாக்களை, நம்மிடம் நாமே கேட்டுக்கொண்டே, தேடுதல் நடத்தவேண்டும்! இப்படிச் செய்தால் அந்த உள்ளத்திலே கிடக்கும் குப்பைகள் கண்ணிற்படும். பலவிதமான பூச்சிகளும் கிருமிகளும் அரவங்களும் அங்கு உறைந்திருப்பது தெரியவரும்.
இது ஒரு புதுமையான துப்புரவுப் பணிதான் ‘உள்ளம் பெரும் கோயில்’ என்று திருமூலர் சொன்னார். அந்த உள்ளத்தில் நாங்கள் செய்யவேண்டிய திருப்பணி, இது.
இந்தக் குப்பைகள், அழுக்குகள் எல்லாம் எங்களது உள்ளத்துள் எவ்வாறு புகுந்தன? வீட்டினுள்ளே விளக்கு ஏற்றி வைத்தால் அங்கே நச்சுப் பூச்சிகள் வரமாட்டா. சேருகின்றதுரசிதுரும்புகளை வெளிச்சத்தில் கண்டு அவற்றை அகற்றி விடலாம். வீட்டைப் போலவே நமது உள்ளத்திலும் நாம் பிரகாசமான ஒரு விளக்கு ஏற்றிவைக்க வேண்டும்! அது என்ன விளக்கு? வாய்மை என்னும் விளக்கு என்கிறார் திருவள்ளுவர்.
II 7

Page 69
வாய்மைக்கு - உண்மைக்கு - எதிர் பொய்ம்மை. மனிதன் செய்கின்ற கேடுகளுக்கு எல்லாம் துணையாக நிற்கின்ற ஒரு பொல்லாத கூட்டாளி, பொய்ம்மை! ஒரு மனிதன் ஒரு களவு செய்துவிட்டால், அவன் அதிலிருந்து தப்புவதற்குப் பொய் சொல்லுகிறான். கொலை புரிந்தால் அதை மறைக்கப் பொய் சொல்லுகிறான். இவ்வாறு ஒவ்வொரு தீமையிலிருந்து விடு படவும் பொய்யைத் துணைக்கு அழைக்கிறான், மனிதன்.
வாள் எடுத்துச் சண்டை செய்கிறவன் தனது கையிலே ஒரு கேடயம் வைத்துக்கொள்கிறான். தன்னை அவன் பாதுகாப்பதற் கும் அதேவேளை பகைவனை வாளால் தாக்குவதற்கும் அந்தக் கேடயம் பயன்படுகிறது. தீயவழிப்பட்ட மனிதனுக்குப் பொய் என்பதும் ஒரு கேடயம்தான்! பொய்யைத் துணையாக வைத்துக் கொண்டு அவன் தான் செய்யும் கேடுகளை எல்லாம் அதனால் மறைத்துக்கொள்கிறான். இவ்வகையில் தனது உள்ளத்திலே குப்பைகளைக் குவித்துக் கொள்கிறான்.
பொய்ம்மையால் வரும் மனமாசுகளைக் கழுவுவது வாய்மை. தூய்மை செய்யும் வாய்மையிருக்க, மனிதன் ஏன் பொய் பேசவேண்டும்! “உண்மை சொல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தான்?” என்று பட்டினத்தடிகள் இறைவனிடம் கேட்கின்றார்.
ஒருவனது உடம்பினது தூய்மை நீரினால் உண்டாகும்; உள்ளத்தினது தூய்மை அவன் பேசுகிற வாய்மையால் அறியப்படும்.
புறம்தூய்மை நீரான் அமையும், அகம்தூய்மை வாய்மையாற் காணப் படும் (298)
வாய்மையே பேசவேண்டும் என்று ஒருவர் உறுதி பூண்டால் தமது நடத்தைகள் பற்றிய ஓர் எச்சரிக்கை உணர்வு அவரிடம் தோன்றும். அவருடைய தன்மான உணர்வு விழித்துக் கொள்ளும்; உள்ளத்திலே கள்ளம் கபடம் முதலிய மாசுகள் நீங்கி, நம்பிக் கையும் துணிவும் மகிழ்வும் மலரும்.
I8

அறிவு ஒளி
நமது சூழலில் உள்ள பொருள்களைக் கண்டு கொள்வதற்கு ஒளி வேண்டும். ஒளி அவற்றில் படுவதனால் அவற்றின் இருப்பையும் இயல்புகளையும் காண்கிறோம். இந்த ஒளி நமது கண்ணுக்கு வழி காட்டுகின்ற ஒளி. இவ்வாறே நமது மனதுக்கு வழிகாட்டுகின்ற அறிவு என்னும் ஒளியும் இருக்கின்றது. இது நமக்கு உள்ளே ஏற்றி வைக்கவேண்டிய ஒளி.
நமக்குப் புறத்தே ஒளி இல்லாவிட்டால் கண் திசை அறிய மாட் டாது திகைக்கும். மனிதன் செயல் பிழைத்து வழிதவறி அவலப் படுவான். அறிவு என்னும் ஒளி இல்லாதபோது அங்கே மனித மனம் தடுமாறும். சிந்தனை மழுங்கும். செயற்பாடுகள் குழம்பும். விருப்பு, வெறுப்பு, சீற்றம், பொறாமை முதலிய உணர்வுகள் அடிக்கடி தலைதூக்கி மனத்தைத் தமது வசப்படுத்திக்கொள்ளும். மனிதன் இவற்றிலிருந்து விடுபட்டு நேரிய வழியில் செல்லவேண்டும்.
மனம் எப்பொழுதும் தன்செயலாக நேரிய வழியில் செயற்படும் என்று எதிர்பார்க்கமுடியாது. வண்டியை இழுக்கும் குதிரைக்கு ஒரு சாரதி வேண்டும். அதனைச் சரியான பாதையில் செலுத்து வதற்கு. இவ்வாறே மனத்துக்கும் ஒரு சாரதி தேவை. அந்தச் சாரதிதான் அறிவு. மனிதன் மனம்போன போக்கெல்லாம் போய் இடறி விழாமல் பார்த்துக் கொள்ளுகின்ற சாரதி, அறிவு. குதிரை, தான் விரும்புகிற பாதையில் வண்டியை இழுத்துச் செல்ல விடக்கூடாது. சாரதி காட்டுகிற வழியிலேயே அது செல்ல வேண்டும். அறிவு செலுத்துகிற பாதையிலேதான் மனமும் செல்லவேண்டும்.
தீமைகளிலிருந்து விலகி நன்மைகளை மட்டுமே தழுவிக் கொள்ளுமாறு அறிவு மனத்தைத் தூண்டுகிறது.
சென்ற இடத்தாற் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு (422)
II9

Page 70
கல்வியும் கேள்வியும் மற்றும் அனுபவங்களும் அறிவின் ஊற்றுக்கள். இன்றைய உலகில் இவை பெருகியுள்ளன. கல்வி வசதிகள் விரிவடைந்துள்ளன. அவ்வாறே கேள்வி மூலம் அறிவு தேடக்கூடிய வாய்ப்புகளும் அதிகரித்திருக்கின்றன. பத்திரிகை கள், சஞ்சிகைகள், ஒலிபரப்புகள், ஒளிபரப்புகள், இணையங்கள் எனப் பலப்பல. அறிவும் அனுபவமும் பெற்றவர்களது உரை களைக் கேட்கவும் அவர்களுடன் ஊடாடவும் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. இவ் வகையில் அறிவு அலைகள் வந்து மனிதனை இடையறாது மோதிக் கொண்டிருக்கக் காண்கிறோம். அறிவுத் துறையில் இருக்கின்ற இந்தத் திணறல் நிலையிலிருந்து மனிதன் விடுபடவேண்டும்.
இவ்விடயத்தில் மற்றுமோர் குழப்பமும் உண்டு. நாம் அறிவு என்று கொள்வனவற்றுள் எது நல்லது; எது தீயது; எது நமக்கு வேண்டியது; எது வேண்டாதது என்னும் ஐயம் ஏற்படுகின்றது. நமது அறிவுத் தேடலில் எழக்கூடிய இந்த ஐயங்களை நீக்குவதற் கும் தெளிவு பெறுவதற்கும் வழி என்ன? அவ்வழி நம்மிடமே இருக்கிறது என்கிறார் திருவள்ளுவர்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (423)
அறிவுரைகள் நல்லவர்களிடமிருந்தும் வரலாம்; தீயவர்களிடம் இருந்தும் வரலாம். கற்றோரிடமிருந்தும் வரலாம்; மற்றோரிடம் இருந்தும் வரலாம். அவை எவரிடமிருந்து வந்தாலும் எந்தப் பொருள் பற்றியதாயினும் அவற்றை அப்படியே உள்வாங்கிக் கொள்ளாதே. அவற்றை ஒரு கணம் பரிசீலனை செய்து அவற்றின் மெய்யான தன்மைகளைக் கண்டுகொள், என்று திருவள்ளுவர் வழி காட்டுகிறார். ஆம்! அறிவின் மெய்யான தன்மையை உன்னிடமுள்ள அறிவையே உரைகல்லாகக் கொண்டு அறிந்து கொள் என்கிறார்.
அறிவுடையோர் தமது இறந்தகாலச் செயற்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்ப்பார்கள். நிகழ்காலப் போக்கினைக் கூர்ந்து நோக்குவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக எதிர்காலத்தில்
வரப்போவதைப் பற்றியும் முன்கூட்டியே உய்த்துணரக் கூடியவர்
I2O

களாயும் இருப்பர். இவற்றுள் பின்னே வரப்போவதை முன்னாலேயே ஊகிக்கும் திறன் மிகவும் முக்கியமானதாகும். இந்த அறிவினால் இனி வரக்கூடிய இடர்களைத் தவிர்க்கவும் நன்மைகளைப் பேணவும் முடிகிறது. இவ்வகையில் அறிவுள்ள வரது வாழ்வின் செல்நெறி செப்பம் அடைகிறது. வருங்காலத்தின் ஒவ்வொரு துளி வாழ்விலும் கேடுகள் விலக்கப்பட்டு நன்மைகள் சேர்க்கப்படுகின்றன. பின்னர் வரப்போவதை முன்னதாகவே அறிந்து காக்கும் அறிவுடையோர்க்கு அவர்கள் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
அறிவு நமக்கு வாழ்விலே இறுதிவரையும் துணையாக நிற்கும் காவல் ஆகும்.
2

Page 71
பகற்குருடர்
பேகன் மயிலுக்குப் போர்வை அளித்து நடுக்கம் தீர்த்த பெருமிதக் காட்சியை புலவர் அழகனார் மனத்திலே வைத்து தூசி துடைத்துப் பூசி மினுக்கி உருட்டிப் புரட்டி ஒப்பனை செய்தார். இன்றைய மனிதனின் இரும்பு மனத்தை கருணை வறட்சியைக் கசவஞ்சித்தனத்தை நொருக்குவேன் இந்தக் குண்டினால் என்று நிமிர்ந்து அமர்ந்து பார்வையைக் குத்தி, எதுகையை மோனையை இழுத்து வந்து, கற்பனைப் பானையுள் கைவிட்டுத்துளாவி தன்மனக் குகையில் விரிந்தஅக் காட்சியை கவிதையில் வடிக்கும் முயற்சியில் முனைந்தார். தெருவோரத்து வாசல் திண்ணையில் கசமுசா என்று ஏதோ சத்தம். இருமல்; முனகல்; “இதென்ன தலையிடி" எரிச்ச லோடு எட்டிப் பார்த்தார். இரண்டு கிழடுகள்; குடங்கிய கட்டைகள்
மார்கழிப் பணிக்கு ஒதுக்கிடம் இதுவா! சீச்சீர் பெரிய கரைச்சலாய்ப் போச்சு! புறுபுறுத்(து) எழுந்து உள்ளே போனார். ஒருவாளி தண்ணிர்தூக்கி வந்து திண்ணை முழுதும் செழிக்க ஊற்றினார்! உட்கிய உள்ளம் கிழிபடும் ஒசை உருவம் இரண்டு இருளை அறுத்து மெள்ள நடந்து கரையும் காட்சி! சள்ளை தீர்ந்தது; சனியன் தொலைந்தது!
பேகன் மயிலுக்குப் போர்வை அளித்து நடுக்கம் தீர்த்த பெருமிதக் காட்சியில் மீண்டும் அழகனார் புகுந்து லயித்தார்!
122

LD6Dir
விடிந்தும் விடியாத காலைப்பொழுது. அவர் கதவைத் திறந்துகொண்டு முற்றத்துக்கு வந்தார். அங்குள்ள பூந்தோட்டத் தில் அவருடைய பார்வை எதையோ தேடி ஓடியது. அந்த ரோஜா மலரைக் கண்டதும் அந்தப் பார்வை அதை அப்படியே கட்டித் தழுவிக்கொண்டது. கட்டவிழ்ந்து கொண்டிருந்த ஒரு புதிய மலர். அதன் இதழ் என்னும் கண்ணிமைகள் துடித்தன. அந்த மலர் விடியலின் அழகை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது! அதன் லாவண்யம் அவரைத் தன்பால் ஈர்க்க, அவர் மெல்ல அதனை அணுகினார். V
செதுக்கிவிட்டது போன்ற இதழ்கள். அந்த இதழ்களிலே படர்ந்திருந்த மெல்லிய செவ்வண்ணம். அந்த வண்ணத்தில் ததும்பிய மோகனம்! அதிலே பொங்கிவந்த இளமை புதுமை! அவரது கைவிரல்கள் அந்த மலரின் இதழ் ஒன்றைத் தொட்டு மெல்ல வருடின. ஆகா! இது ஒரு அழகுக் கடல்! இந்த அழகு வெள்ளத்திலே இந்த மலருக்கு ஒரு வாழ்வு பிறந்திருக்கிறது! ஆம்; வாழ்வு அழகியது! எங்கள் வாழ்வும் அழகியது! எல்லாரது வாழ்வும் அழகியது!
வானார்ந்த மலைகள்! பாய்ந்து வரும் நதிகள் மழை முகில்கள்! அலை கடல்கள் அடர்ந்த வனங்கள்! வனவிலங்குகள்! - இப்படி எத்தனை எத்தனை அற்புதங்கள் இயற்கை வடிவமைத்த கோலங்கள் - இந்த உலகிலே!
மனிதன் என்றொரு படைப்பு. அதன் அகத்திலும் புறத்திலும் அழகுகள். அன்பும் அருளும் சுரப்பதற்கு உள்ளம். நீதியும் நேர்மையும் நிலைப்பதற்கு நெஞ்சம். அறிவும் தெளிவும் வளர்வதற்குச் சிந்தனை பால்யத்தின் பரிமளிப்பு இளமையின் செழுமை! முதுமையின் கனிவு. இந்த அழகுகளின் உறவும் மனித உணர்வுகளின் சங்கமமும் அற்புதமானவை! மனித குலத்தின் பல்லினத் தன்மையும் வேறுபட்ட ரசனையும் கவர்ச்சியானவை! ஆகா! இந்த உலக வாழ்க்கை எவ்வளவு ரம்மியமானது.
23

Page 72
அவருடைய எண்ணங்கள் விரிந்துகொண்டே சென்றன. அப்பொழுது அந்த மலரின் நறுமணம் காற்றில் மிதந்து வந்தது. அவர் அந்த வாசனையின் சுகத்தை ரசித்தார்'மலரானது மணத்தை விரித்து மகிழ்வூட்டுகிறது. வண்ணப்பூச்சி முதலாம் உயிரினங் களைத் தன்பால் ஈர்க்கிறது. இவ்வாறே நமது வாழ்வில் உயர்ந்த பண்புகள் விரியவேண்டும். அயலவரை-ஊரவரை - உலகத்த வரை மகிழ்விக்க வேண்டும். இது மானிட வாழ்வின் மகத்தான பயன் அல்லவோ”
அவர் ரோஜா மலரின் மணத்தின் சுகத்தில் லயித்து நின்றபோது, அங்கே ஒரு வண்ணப்பூச்சி வந்தது; தாழ்ந்து சென்று மலரை முத்தமிட்டது. அதன் புதுநறையை உறிஞ்சிக்கொண்டு பொட்டெனப் பறந்தது. சில தேனிக்களும் அங்கே வந்து சேர்ந்தன. அந்த மலரது மகரந்தத்தை தமது உடலெல்லாம் பூசிக்கொண்டு புறப்பட்டன.
மலருக்கு முன்பின் தெரியாத பூச்சிகள், ஈக்கள் அவற்றுடன் இந்த மலர் உறவுகொண்டாடி, விருந்தோம்பி அனுப்புகிறது! அந்த ஈக்களோ இந்த மலரின் மகரந்தத்தை எடுத்துச் செல்கின்றன, மற்றொரு மலரில் சேர்ப்பதற்காக, உபகாரம்; பிரதி உபகாரம்; அரவணைப்பு: உபசரிப்பு! இவையெல்லாம் இந்த மலர்களின் வாழ்விலுமா! “மனிதா, இவற்றையெல்லாம் பார்! அன்பு செய்; மற்றவர்களை அரவணைத்து வாழ் உதவி செய்” என்று இந்த மலர் எங்களுக்குப் போதிக்கிறதா? அவருடைய சிந்தனை கிளர்ந்தது.
அன்று பகல் முழுதும் கடுமையான வெய்யில். அத்துடன் சற்றுப் பலமான காற்று. அந்த மலரைப் பற்றிய ஒரு தவிப்பு அவருடைய மனத்திலே ஏற்பட்டிருந்தது. மீண்டும் அவர் அந்த மலரைப் பார்க்கச் சென்றார். காலையில் கிண்ணம்போல இருந்த மலர், இப்பொழுது சற்றே சோர்ந்து காணப்பட்டது. ஆயினும் அதன் புன்னகை - அது குறையவில்லை!
“மலரே! உன்னை வெய்யில் வாட்டிவிட்டதோ? காற்று அலைத்து விட்டதோ? உனது மடியில் நீவைத்திருந்த நீர் முத்தை நீ இழந்து விட்டாயா? ஆயினும், நீ உன் பொலிவை இழக்கவில்லை. நறுமணத்தை இழக்கவில்லை. வாழ்விலே
24

இருளும் ஒளியும் மாறிமாறி வரும். இன்பமும் துன்பமும் கலந்திருக்கும். இவற்றை எதிர்கொள்ளும் திறமை நமக்கு வேண்டும். துன்பத்தைக் கண்டு துவளாத மனஉறுதி, இன்பத் திலே முழுகி இறுமாப்புக் கொள்ளாத மனப்பக்குவம் - இவையே வாழ்வின் வெற்றியின் இரகசியம். மலரே இது உனக்குத் தெரிந்திருக்கிறது. நீ ஒரு ஞானி.” `y
இந்த ரோஜா மலருக்கு ஒரு பக்கத்தே மற்றொரு மலர் இருந்தது. மூன்று நாள்களின் முன்பு மலர்ந்த பூ அது. வாழ்க்கையின் நிறை வைக் கண்டு விட்ட களிப்பு அதன் தோற்றத்தில்
காணப்பட்டது.
இன்னொரு பக்கத்தே கொழுகொழு என்று வளர்ந்த ஒரு மொட்டு - மலரும் பருவத்துப் பேரரும்பு. “நான் நாளை மலரப் போகிறேன்” என்று சொல்லாமற் சொல்லிக்கொண்டு நின்றது
ه{PH5ک
இன்றைய மலரும், முன்னைய மலரும் இந்த மொட்டும் ஒரு சேர நின்றன. இவை மலரின் மூன்று சந்ததிகள். வாழ்க்கையின் வற்றாத உயிரோட்டம் அவற்றிடையே ஊடுருவி நின்றதை அவர் கண்டார்.
“வாழ்க்கை பிரமாண்டமானது. அதன் பரிமளிப்பு மகத்தானது” - அவருடைய உதடுகள் மெல்ல உச்சரித்தன. அவருடைய உள்ளங்கைகள் இரண்டும் முன்சென்று அந்த ரோஜா மலரைத் தழுவிக்கொண்டன. அவர் முகம் தாழ்த்தி அந்த அழகிய மலரை - இல்லை, வாழ்க்கையை முத்தமிட்டார்.
25

Page 73
கீர்த்தனைகள்
LT_G 8ഖഞ്ഞGb
ராகம் : மோஹனம் தாளம் : ஆதி
Luéსéა68l
பாட்டுக்கள் நான்பாடல் வேண்டும் - அந்தப் பாட்டினால் உலகெலாம் நலமெய்தல் வேண்டும்
(பாட்டு)
அனுபல்லவி காட்டிலே பாய்கின்ற நதிபோல் - இன்பக் கற்பனை, வெள்ளமாய்க் கரைபுரளல் வேண்டும்
(பாட்டு)
சரணங்கள்
உலகார்ந்த மானிடக் குலமே, உன்தன் உணர்வெனும் அலைகளை அடிநாத மாக்கி கலையெனும் வீணையை மீட்டி - எந்தக் காலத்தையும் வென்று நிலைநிற்ப தான
(பாட்டு)
உழைக்கின்ற கைகளின் வலுவும் - வாழ்வை உயர்த்திடும் அறிவியற் புதுமையின் புகழும் தழைக்கின்ற நீதியின் திறனும் - வீர சங்கநாதம்செய்து'எங்கும் உரைத்திடும்
(பாட்டு)
தென்றலே எந்தன் கவிதையில் வீசு - (நறும்) தேறலே நீவந்து பாவிலே ஊறு எரிகின்ற மலையே நீ, சீறு - ஈனச் சிறுமையை என்பாடல் மோதிடும்போது
(பாட்டு)
I26

மானுடம் வாழ
ராகம் : ஹம்சத்வனி தாளம் : ஆதி
usoeu6i
மானுடம் வாழவொரு புதுநீதி வேண்டும் மனதுகொள் மனிதா மனதுகொள் மனிதா
சரணங்கள்
வானத்து ஒளிவெள்ளம் எங்கெங்கும் பாயும்
மழைவந்து எல்லோர்தம் மனைதோறும் பெய்யும்
மோனத்திலே இறைவன் சொல்லாமற் சொல்லும்
முடிவான இவ்வுண்மை புரியாத(து) ஏனோ -
மனிதா, புரியாத(து) ஏனோ!
சிறுகுருவி ஆசையால் நெல்சேர்ப்பதில்லை தின்னாத ஊனெலாம் அரிகாப்பதில்லை நுகராத பொருளெலாம் சமுதாயக் கொள்ளை உயிர்வாழ்வு பலபேர்க்கு இதனாலே தொல்லை
மனிதா, இதனாலே தொல்லை!
உழைப்பாளர் தம்முடைய நோதல்கள் தீர்ந்து ஒளியேறி அவர்வாழ்வு வளமாதல் வேண்டும் உழையாமை தவிசேறி வளமாக வாழும் உதவாத சமுதாயம் இலதாதல் வேண்டும்.
மனிதா, இலதாதல் வேண்டும்.
mis-Xbox
27

Page 74
குழந்தை
Jrras Lb : assiou umrstof தாளம் : ஆதி
எங்கள் வீட்டில் ஒரு குழந்தை இன்பக் காவியம் படைக்கின்றான்.
மாவின் தளிரால் உடல்செய்து - நீல மாணிக்க ஒளியால் விழிசெய்து பாவின் சுவையால் மொழிசெய்து - அந்தப் பரமன் அமைத்த சிறுபொம்மை
(எங்கள்)
பஞ்சுக் காலால் அவன் நடந்தால் - அதிலே பரதம் பயின்று வருகிறது. பிஞ்சுக் கையால் நமைத்தொட்டால் - எங்கள் நெஞ்சில் போதை நிறைகிறது.
(எங்கள்)
கையால் ஓங்கி அடிக்கின்றான் - நம்மைக் காலால் ஏறிமிதிக்கின்றான். பொல்லாப் பயலவன்; ஆனாலும் - வீட்டார் புகழ்ந்தே அவனைக் கொஞ்சுகிறார்.
(எங்கள்)
குமுதம் நெகிழ்ந்து சிரிக்கின்றான் - அங்கே கொள்ளை நளினம் சுரக்கின்றான். அமுதம் கலந்து உரைக்கின்றான் - நமக்கு ஆனந்த வலையை விரிக்கின்றான்
(எங்கள்)
ஆயிரம் குறும்பு குழப்படிகள் - சேர அத்தனையும்செய்து செய்தெங்கள் ஆசைக் கனவாம் ஊஞ்சலிலே - என்றும் ஆடுகிறான் இந்த அழகுநிலா
(எங்கள்)
28,

மாமணியைத் தோற்றோம் துவண்டோம்!
நண்பராய் . . .
போற்றினிர் புகழ்ந்து சாற்றினீர் அஞ்சலி துயர் தணிந்தோம்
உறவினராய் . . .
உண்டி கொடுத்தீர் உறுதுணையாய் நின்றீர் உளம் நெகிழ்ந்தோம்
ஊடகங்களாய் . . .
ஏத்தினீர் எழுத்தில் ஒலியில் ஒளியில் உருகி நின்றோம்.
மாணவராய் . .
தோளில் சுமந்தீர் பூக்கள் சொரிந்தீர் பீடு கொண்டோம்
நல்லிதயங்களாய் . . .
நெஞ்சச் சிமிழ் திறந்து நினைவு மலருக்கு ஆக்கங்கள் தந்தீர் அன்பில் கரைந்தோம்
கடன்பட்டோம்
கரையிலாக் கடன்பட்டோம்
நன்றியுடன் பணிந்திட்டோம்!
- குடும்பத்தினர்
I29

Page 75
அமரர் வ. இராசையா வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு - 22. 11. 1919
நெல்வேலி, யாழ்ப்பாணம் திருநெ ԼՔ
தந்தை - வல்லியப்பர் தாயார் - ஆச்சிமுத்து
சகோதரர் - வேலுப்பிள்ளை சகோதரி - மாணிக்கம்
மனைவி - பூரணம்
பிள்ளைகள் - மனோரஞ்சன்
வசந்தி திருமாவளவன்
குடும்பம்
இராசையா + பூரணம்
மனோரஞ்சன் + ஜயந்தி திருமாவளவன் + பாலசீலி
அகல்யா மதுமிதா சித்தரஞ்சன் வசந்தி + தயாபரன்
ஆதவன்
பூரீரமணன்
யதுகுலன்
IBO


Page 76
இE தோழ m.
என்றுே 6)footo துட
புவியெங்கும்
リcm cm○cmm、子。
 

显巫山mó) வழிகனை
குறுகிற கல்விதயம்ே
வாழ்கின்ற வழிதவறிப் அடுகிறது கேட்கின்றதா ?
இருக்கின்ற மகத்திலே தேடிவங்து GGGS 약- 5
கலும் குழுவேன்டும்!