கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (வீ. சின்னத்தம்பி)

Page 1

பாரதிநேசன் சின்னத்தம்பி
னைவு மலர்
கசிஸமே மறமலரே ஸ் கண்ட தத்துவத்தை - யேற்றி கமனும் அணிகலனால்
செய்து கொழியால் திரிபுக்கு கள் வைத்து கற்ற ஏழைகளைப் க் காத்து த்தில் இருந்தவற்குத் வ ஊட்டி வந்த எதிரிகளைத் பில் வீழ்த்தி கட்டும் புதுப்புரட்சி ம நோக்கி ட்டும் புது உலகம்
சொன்ன கதிரே செங் கொடியே
னே தூய சிலமே மறமலரே
il D.L60LD
காண்டு போற்றுவதற்குப்
இன்று வின் கவிக்குத்தான் புண்டு
- சுபத்திரன்

Page 2
நினைவு மலர்க்குழு:
க. சிவபாலு க. கந்தசாமி வீ. கனகசபை ஜானகி பாலகிருஷ்ணன்
நினைவு மலர் பதிப்பு
இடம்: ஒன்ராறியோ, கனடா திகதி: ஜூலை 14, 2001
பதிப்பு: றோயல் கிரபிக் ஸ்தாபனத்தினர் (Royal Graphic Inc.)

பொருளடக்கம்
: . . . T V M அண்ணல்வழி தொடர்ந்திடுவோம் ஆட்சி காண்ப்ேரி?h
சின்னத்தம்பியின் சிந்தனைத் தெளிவு
என்றைக்கும் எமக்கு வழிகாட்டும்! " வீ. தனபாலசிங்கம்.- , 7
மணிவிழாக் காலத்தில் துணைவியூர்க் கேசவனுக்குத்
தம்பி அளித்த பேட்டி. 13
தம்பி ஒரு கலங்கரை விளக்கு!
க. கந்தசாமி. 21
அவன்வழி மலர வைப்போம் பொதுவுடமைச் சமுதாயம்
த. சிவபாலு. 29
பாசம் நிறைந்த அண்ணர் பெருமலையாய் சரிந்தார்
வி. கனகசபை.31...........................ھ எமது மைத்துனர் 'தம்பிமாமா'
ஜானகி பாலகிருஷ்ணன்.டி.டி.பி.சி.38 ཅས་བོད་ སྡ༤༧ − சமூக சேவையாளர் வீ. சின்னத்தம்பிக்கானதில் *
s Z.ܢܘ ܗܝ t மணிவிழா பற்றி. ...............་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ཚེས་་་ 8 - 88 08 47 எழுத்தாளர் பாரதிநேசன் வீ. சின்னத்தம்பிக்கான
(R 6î bni. .................”...ီ....ဂီဂိုးဂဲ........ 64 பாராட்டு விழா பற்றி :ر S సా9 பிக்கிங் பிரதிநிதி சீனாத்தம்பியின் உலக்த் தமிழாராய்ச்சி
மாநாட்டில் வரவேற்பு பற்றி. 67
தோழர் வீ. சின்னத்தம்பி மறைவைத் தொடர்ந்து. 68
பீக்கிங் சின்னத்தம்பி
அதிவண, கலாநிதி எஸ். ஜெபநேசன். 80

Page 3
அன்புத்தோழர் 'தம்பி"
β5 1ρ7ήά5β. , 82
சிந்தனையால் மிக உயர்ந்தோன்
மா. பொன்னுசாமி. 84
நெஞ்சில் நிறைந்த நண்பர் சின்னத்தம்பி
திரு. திருமதி அருமைலிங்கம். 85
மானிடம் போற்றிய பாரதிநேசன்
செ. யோகநாதன். 86
அமரர் வீ. சின்னத்தம்பியின் ஆக்கங்களும்
L16δ)LIII 3565ίρ , 90
ஓ கனடா! கலைந்த கனவு
கலாநிதி பார்வதி கந்தசாமி. 96
கம்யூனிஸ்ட் பிரகடனம் வரலாறாகி விடவில்லை
வி சின்னத்தம்பி. 102
ஒக்டோபர் புரட்சியில் மலர்ந்த சோவியத் யூனியன்
சிதைந்தது ஏன்? வி சின்னத்தம்பி. 109

அண்ணல்வழி தொடர்ந்திடுவோம் ஆட்சி காணர்போம்! இனவாதப் பெருவெள்ளம் தன்னில் மூழ்கி
இலட்சியத்தைக் கோட்டைவிட்ட இடது சாரிக் கனவான்கள் பலரிந்த நாட்டில் உண்டு
கொலைக்களத்தில் உயிர்போக்க நேர்ந்திட்டாலும் தனதாவி உள்ளவரை கொண்ட கொள்கை
தளராது நின்ற சின்னத் தம்பி மக்கள் மனங்களிலே குடிகொண்டான் வாழ்க நாமம்!
சமதர்ம அமைப்பொன்றே பொருளா தாரச்
சகதியிலே புரளுகின்ற இந்த நாட்டை எமனாக வதைக்கின்ற பிரச்சினைகள்
எல்லாமே தீரவழி என்ற கொள்கை இமையளவும் விலகாது இறக்கும் வரை A.
இனவாதத் துக்கெதிராய் போர்தொ டுத்த எமதன்பன் தோழர்தம்பி வழியில் நின்று
இன்பபுரி ஆக்கிடுவோம் இலங்கை நாட்டை
புரட்சிகர அரசியலை விட்டுப் பூர்ஷ்வா
ஏற்ற பொது வுடமைக் கட்சி
வரட்டுவா தங்களுடன் முரண டைந்து
வளர்ந்துவரும் மாசேதுங் கொள்கை தன்னை
பரப்பவெண்ணி பீக்கிங்வா னொலியி னுடே
பார்முற்றுங் கேட்டிடவே குரல் கொடுத்த
தரமுடைய மார்க்சிஸ்ட்டு சின்னத் தம்பி
தந்தகொள்கை தொடர்ந்திடுவோம் புரட்சிகாண்போம்
தொழிலாளிப் பத்திரிகை ஆசிரி யனாகத்
தொடுத்திட்ட போரினால் ஆட்சி யாளர் விழிபிதுங்க வைத்துப்பின் புதிய பாதை'
வழியாகத் தொழிலாள வர்க்கம் தன்னை விழத்தெழச் செய்துதினக் குரலில் கொள்கை
வழுவாத தோழர்களின் வாழ்க்கை தந்து அழியாத சேவைசெய்த சின்னத்தம்பி
மனங்களிலே குடிகொண்டான் அவரின்சேவை மறவாது சமதர்ம வழியில் செல்வோம்
* யதார்த்தனர்.

Page 4

எனது கண்ணில் "பாரதிநேசன்" பாததையும் அவரையும் பொறுத்தவரை, III பட்டப்பட்டிருக்க வேண்டிய |பரோ ரா" என்னாபு 1ாாாாயு எனதும்
ாது குடும்பங்காளப் பொறுத்தவரை, பாரதியின் "கன்னன்' நாம் பாரதியின் புதுமைப்பெண்ணின் இலக்கணத்திற்கு இலக்கியம் ஆகவேண்டுமென ஆசைப்பட்டு பானை பிடித்து உதாரணமானவர். பாரதி சொன்ன
தேடிச் சோறு நிதம் நின்று - பல சின்னஞ் சிறு கதைகள் பேசும் வேடிக்கை மனிதரைப் போலன்றி கடைசிவரை தன்னளவிற் பயனுடைய காரியம் செய்து வாழ்ந்தவா.
- ராணி சின்னத்தம்பி -

Page 5

.
முன்னுரை கவிஞன் பாரதிக்கு ஓர் ஆசை இருந்தது. தமது பாடல்களை சித்திரங்களுடன் பதிப்பிக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. அவருடைய ஆசை இன்றுவரை நிறைவேற்றி வைக்கப்படவில்லை. சிறந்த கவிஞன் மட்டுமல்ல, ஒரு சிறந்த முன்னோடியான பல சாதனைகளைப் படைத்த பத்திரிகையாளனுமான பாரதியாருக்கு அந்த ஆசை இருந்தது நியாயமே என்று பாரதிநேசன் வீ. சின்னத்தம்பி, 'பத்திரிகையாளார்களுக்கு ஒரு பாரதியார்” என்ற தலைப்பில் ”காலமும் கருத்தும்” பகுதியில் புதினன் என்ற பெயரில் தினக்குரல் பத்திரிகையில் எழுதியுள்ளார். பத்திரிகைகளில் சித்திரங்கள் கார்ட்டூன்களைப் பதித்தும் வேறு பல புதுமைகளைப் புகுத்தியும் மகாகவி பாரதியார் தமிழ்ப்பத்திரிகை உலகில் ஒரு முன்னோடியாக விளங்கினார். அக்கால தரமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு இணையாகத் தமிழிலும் பத்திரிகைகள் வெளிவர வேண்டும் என்று அடங்காத ஆசை கொண்டு ஆயராது உழைத்தார் என்றும் கூறியிருந்தார்.
பாரதியாரின் ஆசையை இன்றுவரை நிறைவேற்றாதது உலகளாவ வாழும் தமிழ் மக்கள் அவருக்கிழைத்த அநீதியே!
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற்றே எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம் எனும் பாரதி பாடலுக்கேற்ப பாரதியாரையும் அவரது கவிதை களையும் மையமாக வைத்தும், பாடல்களைப் பயன்படுத்தியும் திரைப்படங்கள் எடுத்து தமிழர்கள் எட்டுத்திசைகளிலுமிருந்து Iெள் சேர்த்தனரேயல்லாது, மேற்கத்தைய ஆங்கிலேய நாடுகளில் வllது, தொழில் நுட்பம் கைவசமிருந்திருந்தும், அதில் பல தமிழl Mததேlதிருந்தும் பாரதியின் ஆசையை பூர்த்தி செய்யாது
GJIT 60) er i Irelberfluubl u JITLJI) (160Tb6d6M).
பாரதிக்கு இழைத்த அநீதியை இன்று ஈடு செய்ய முடியாவிடினும், இனிமேலாவது எமக்கு வேண்டியவருக்கு, எமது வாழ்க்கையில் ஈடேற காரணியாக இருந்தவர்க்கு, சமூகத்தில் பயனுள்ளவர்களாக இருந்தவர்க்கு அவர்கள் விருப்பம் தெரிவித்திருந்திருக்காத போதிலும் அவர்களுக்குப் பொருத்தமான பதிப்புகளை செய்ய முன்வந்ததன் விளைவே இம்மலராகும். பாரதிநேசன் வீ. சின்னத்தம்பியின் நினைவு மலர் பதிப்பு நியாயமானதும், அவசியமானதும், அத்துடன் அதைச் செய்வது எமது கடமையுமாகும்.
பாரதிநேசன் வீ. சின்னத்தம்பியின் நினைவு மலர் சிறிது வேறுபட்டே பதிக்கப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் அவர் l

Page 6
மனித நேயமிக்கவராகவும், பல சிறந்த குணங்களையும் பண்புகளையும் பெற்றிருந்தவராகவும், தனித்துவம் வாய்ந்தவராகவும் இருந்து, சமூகத்தில் நன்கு இணைந்து பலருக்கும் ஒரு வழி காட்டியாக வாழ்ந்தும் வந்ததேயாகும். அதைவிட, அவரது அரசியல் கொள்கைகள், ஈடுபாடுகளினால் ஆற்றிய அரும்பெரும் சேவைகள், பத்திரிகையாளனாகவும், எழுத்தாளனாகவும் சமைத்த படைப்புக்கள், ஆற்றிய பணிகள் அளப்பில. மேலும் ஒரு அன்பான, பாசமுள்ள குடும்ப அங்கத்தினராக, உறவினராக, உற்ற நண்பராக, கடமை உணர்வுள்ள சமூக சேவையாளனாக பலரையும் கவர்ந்திருக்கிறார். அத்தனையையும் நினைவுபடுத்த கிடைக் கப் பெற்ற விஷயதானங்கள் பல. இவற்றையெல்லாம் ஒன்றுதிரட்டி ஒருங்கிணைத்து சமர்ப்பிக்கையில் மலர் வித்தியாசமாகவே அமைந்தது.
இம்மலரைப் பற்றி இரு முக்கியமான விடயங்கள் குறிப்பிடப்பட வேண்டியன. முதலாவதாக ”ஆறின கஞ்சி பழங்கஞ்சி' ஆகிவிடக்கூடாதே என்று கால நெருக்கடி காரணமாக துணைவியர் ராணியின் பொன்னான சிறுகுறிப்பைத் தவிர மனைவி மக்களிடமிருந்து வேறு கட்டுரைகள் பெறமுடியாமற் போனது மனவருத்தமே. இன்னோர் சந்தர்ப் பத்தில் அது ஈடு செய்யப்படும் என்ற நம்பிக்கையில், அவ்வெற்றிடங்களுடன் மலர் பூர்த்தியாகியுள்ளது. இரண்டாவதாக பாரதிநேசன் வீ. சின்னத்தம்பியின் ஒவ்வோர் காலகட்டத்திலும் அவருடன் தொடர்பு கொண்டு இணைந்து வாழ்ந்த அல்லது செயற்பட்ட வேறுபட்ட பலரின் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டு அவையாவும் ஒருவகையில் வீ. சின்னத்தம்பியின் வாழ்க்கையை பிரதிபலிப்பதால், மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை எழுதுவதை தவிர்ப்பதற்காகவும், எமது வாசகர்கள் அவற்றை ஒருங்கிணைத்து வாழ்க்கை வரலாற்றைக் கிரகித்துக் கொள்வார்கள் என்பதாலும் வாழ்க்கை வரலாறு என்று தனியே ஒரு கட்டுரை தர வேண்டிய அவசியமேற்படவில்லை.
அமரர் வீ. சின்னத்தம்பியின் ஓரிரு ஆக்கங்களையும் படைப்புகளையும்தான் இந் நினைவுமலரில் பிரசுரிக்கவும் குறிப்பிடவும் முடிந்தது. வருங்காலத்தில் அவற்றில் கைவசம் இருக்கும் ஒரு சிலவற்றையேனும் தனிப்பிரசுரமாகப் படைக்க நினைவு மலர்க்குழு ஆவல் கொண்டுள்ளது. தங்களதும் அமரரின் தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் உதவியுடன் அதை சாத்தியமாக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
ஜானகி பாலகிருவர்ணனர்

அணிந்துரை மகாகவி பாரதி மீது அதீதமான பற்றுக் கொண்டு தன்னை “பாரதிநேசன்’ என்று அழைத்துக் கொண்ட அமரர் வீ. சின்னத்தம்பி அவர்கள் தான் இறக்கும் வரை உண்மையான கம்யூனிஸ்டாக வாழ்ந்து முடித்தவர் என்பதினை அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஊடகவியலாளர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நினைவு மலர் இதனையே மேலும் தெளிவுபடுத்துகின்றது. கூர்மையான சிந்தனையாளர்கள் தத்துவம் பற்றிய எண்ணங்களையே கொண்டிருப்பார்கள் என்ற வகையில் கம்யூனிச சித்தாந்தத்தினை மனதார ஏற்றுக்கொண்டு அதுபற்றியே சிந்தித்து தன்பேச்சிலும், எழுத்திலும் நெறிப்படுத்திய ஒரு தெளிந்த சிந்தனைவாதியாக இவர் விளங்கியுள்ளார்.
கார்ல்மாக்ஸ் எழுதிய வறுமையின் தத்துவம்’ என்ற நூலுக்கு மறுப்பாக ‘தத்துவத்தின் வறுமை’ என்ற நூல் எழுதப்பட்டதினை நினைவு கூர்ந்தால் புதுமையான சிந்தனைகள் ஒரு புறத்திலும் அதனை மறுப்பவர்கள் இன்னொரு புறத்திலுமாக பல்வேறு சித்தாந்தங்கள் தோன்றுவதும் மறைவதும் காலத்தின் சில தேவைகள். தர்க்கரீதியான சிந்தனையாளர்கள் உருவாகும் போது அறிவியல் கால்கள் சற்று வியாபித்தும் செல்லலாம். இந்த நிலையில் மனித இனத்திற்கு புதிய விளக்கம் அளித்து நின்றது “கம்யூனிசம்’ என்ற பொதுவுடமைக் கோட்பாடு. சிந்தனையை அறிவுபூர்வமாக மாற்றியும், அரசியலை விஞ்ஞானமாக மாற்றியும் விட்டுள்ள இக்கோட்பாட்டின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்த பாரதிநேசன் இறுதிவரை அதிலிருந்து நெறிதவறவில்லை என்பது புலனாகின்றது.
இந் நினைவுமலர் ஒரு கொள்கைவாதி ஒருவருக்காக மலர்ந்துள்ளது. நிறைவுமலராகியுள்ள இம்மலரில் பல்வேறு தகுதியுள்ளவர்கள், உறவினர்கள் ஆக்கங்களை அளித்துள்ளனர். சில ஏற்கனவே அவருக்காக எழுதப்பெற்றவை, சில உறவுசார்ந்த கருத்துக்கள். அனைத்தும் தொகுக்கப்படும் போதுதான் பாரதிநேசன் வீ. சின்னத்தம்பியின் வியாபகத்தன்மை நமக்கு புலனாகின்றது.
“மாக்சியமே மறமலரே” என்ற அற்புதமான கவியுடன் மலர்கின்றது இந்நினைவுமலர். இதில் குறிப்பிடப்பட்ட “மாக்சியமே மறமலரே அறிவே உம்மை பாக் கொண்டு போற்றுவதற்கும் பாரில் இன்று மாஓவின் கவிக்குத்தான் சக்தியுண்டு.” என்ற அடிகளில் கம்யூனிச சித்தாந்தத்தின் அடிநாதம் காட்டப்படுகிறது. இதனையடுத்து யதார்த்தன் இயற்றியுள்ள மரபுக் கவிதையில் “அழியாத சேவை செய்த சின்னத்தம்பி மனங்களிலே குடிகொண்டான்’ என்று முடிக்கும் போது மிகமிக உயர்ந்து நிற்கிறார் பாரதிநேசன். தன் கணவர்
3

Page 7
பற்றி ராணி சின்னத்தம்பி கூறும் அடிகள் கண்களை பனிக்க வைப்பவை. “மீட்டப்படவேண்டியிருந்த நல்லதோர் வீணை’ என்று பாரதியின் வரிகளில் கணவனை நினைவு கூர்ந்துள்ளார். சின்னத்தம்பியை நேசித்த ராணியின் பல்வேறு கூற்றுக்கள் சுருக்கமானதெனினும் ஆழம் நிறைந்தவை.
முன்னுரையில் வீ. சின்னத்தம்பி பற்றி சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. பாரதியுடன் அவருக்கிருந்த ஈடுபாடு எவ்வாறு பொதுவுடமைச் சித்தாந்தத்திற்கு தூண்டப்பட்டதென்பதனையும் பல்வேறு நிலைகளில் ஏன் நினைவு கூரப்படத்தக்கவர் என்பதற்கும் விளக்கம் கூறப்பட்டுள்ளது. இவரது சொந்தப்படைப்புக்கள் சிலவே இதில் இடம்பெறுகின்றதெனவும் ஏனையோரது படைப்புக்கள் கூடுதலாக தொகுக் கப்பட்டுள்ளதென்பதனையும் தெளிவு படுத்துகின்றது.
தினக்குரல் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் இவரைப்பற்றி தெளிவான கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார். தான் வரித்துக்கொண்ட கொள்கைக்காக வாழ்ந்த பாரதிநேசனின் வாழ்வு முழுமைபற்றி இக்கட்டுரை காட்டுகின்றது. 19 வயது முதல் இறக்கும் வரை ஒரு கம்யூனிஸ்டாக வாழ்ந்த இவரது வாழ்வு, கார்த்திகேசன் மாஸ்ரரின் மூத்தமகளான ராணியை திருமணம் செய்தமை, பீக்கிங் வானொலியில் 16 வருடங்கள் சேவை செய்தமை, 40 வருடங்களாக எழுத்துலக சேவை செய்தமை, தம்பி, தோழர்தம்பி, கரவைத்தம்பி, ஈழத்தம்பி, புதினன், புதினப்பிரியன், கண்ணம்மா, ஆனந்த், சீனாராணி, பாரதிநேசன் போன்ற புனைபெயர்களில் சிந்தனைகளை வெளியிட்டமை, பலஅறிஞர்களுடன் செவ்வி கண்டமை என்பவை பற்றியெல்லாம் எழுதி இறுதியில் இவர் ஒரு ‘மனிதநேயன்’ என்று முடிக்கின்றார். பயன் உள்ள அர்த்தம் பொதிந்த, ஆழமான கட்டுரை இதுவாகின்றது. சின்னத்தம்பியின் முழுமையான வாழ்வியல் இங்கு தெரிகின்றது.
தொடர்ந்து இடம்பெறும் சில செவ்விகள் இவரது கருத்துப் பரிமாற்றத்தின் ஆளுமையை புலப்படுத்துவன. இவரது கொள்கைப்பிடிப்பு இன்றும் நம்மை வியக்க வைக்கின்றது. “வீசி ஒரு நல்ல கலங்கரை விளக்கு’ என்ற கருத்துப்பட கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது. 1951 முதல் இவரது வாழ்வு பற்றிய ஆரம்பக் குறிப்புக்கள், இவரது ஆற்றல்கள் பற்றி ஆரம்பித்து சாதிஒழிப்பு பற்றிய இவரது மன ஆதங்கம் பற்றி விளக்கி, 1956ல் கொழும்பு சென்றவேளையில் ‘தேசாபிமானி’ பத்திரிகையில் கம்யூனிஸ்ட் எழுத்தாளராக மாறியமைபற்றி கூறி 1966-1982 வரை 16 ஆண்டுகள் சீனாவில் ஒலிபரப்புத் துறையில் ஈடுபட்டுள்ள தன்மைபற்றி விளக்கி மாவோவின் கலாச்சாரப் புரட்சியில் மனதினை
4.

ஈடுபடுத்தி மனம் தளராது இறுதிவரை கம்யூனிச சித்தாந்தத் திற்காகவே வாழ்ந்த விதம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் ஒரு ஆவணமான கட்டுரையாக உள்ளது.
மேலதிகமாக சில கட்டுரைகள் அவரது குடும் ப உறவினர்களால் தயார் செய்யப்பட்டு இம்மலரில் இடம்பெற்றுள்ளன. இவரது தம்பி கனகசபை அவர்கள் தனது அண்ணரின் பெருமைகளை உணர்வுபூர்வமாக தனது கட்டுரையில் எழுதியுள்ளார். ஆரம்பகாலம் முதல் இன்றுவரையுள்ள ஒரு தனிநபர் வரலாற்றுக் கதையாக இது இடம்பெற்றுள்ளது. ஜானகி பாலகிருஷ்ணன் அவர்கள் தனது மைத்துனர் “தம்பி மாமா” ஆனது எப்படி என்று தனது கட்டுரையில் எழுதியுள்ளார். சின்னத்தம்பி எப்படி எல்லோரையும் ஈர்த்துக் கொண்டிருந்தார் என்பதினை இக்கட்டுரை புலப்படுத்துகின்றது. தனது சகோதரி ராணியை திருமணம் செய்த மைத்துனரைப் புரிந்து கொண்டுள்ளார். அவரது பாசம் பற்றியும் விளக்கியுள்ளார். ‘பூரணமான மனிதன்’ என்று இவரைக் குறிப்பிட்டு தன் உணர்வினை புலப்படுத்தியுள்ளார். *·
வீசி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் ஒன்று இம்மலரில் இடம்பெற்றுள்ளது. அதில்கூட தனது அரசியல் உணர்வினையே குறிப்பிட்டுள்ளார். தினக்குரல் கட்டுரை விபரம், மணிவிழா விபரம் upb Bings “Analytical articles on Marxism and its impact on human thought and actions may be useful° 616öI[m] (5n[0], 9[ig56).j60)J. இலட்சியத்தினை வடித்துள்ளார்.
பல்வேறு அறிக்கைகள், வாழ்த்துக்கள், கண்ணிர் அஞ்சலிகள் இம்மலரில் இவரின் பெருமைகளைப் புலப்படுத்த உதவியுள்ளன. வட்டுக்கோட்டையில் நடைபெற்ற இவரது மணிவிழாவில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் வருகை தந்துள்ளனர். அனைவரும் இவரது மனிதாபிமானம், கொள்கைப்பற்று, எழுத்துலகம் பற்றியெல்லாம் விதந்துரைத்ததுடன் வாழ்த்தியும் சென்றனர். இவர் காலம்சென்ற வேளையில் பத்திரிகைகள் பல இவரது சிறப்புக்கள் பற்றி கட்டுரைகளை எழுதின. குறிப்பாக இவரது உறுப்புக்களை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தியாகம் செய்த விதம் பற்றி எழுதியிருந்தன.
தென்னிந்திய திருச்சபை ஆயர் அதிவண. கலாநிதி எஸ். ஜெபநேசன் பீக்கிங் சின்னத்தம்பி’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையும் இதில் இடம்பெற்றுள்ளது. அதில் சின்னத்தம்பியின் ஆங்கிலப்புலமை, பாரதிக்கு நேசனான விதம், எழுத்தாளரான விதம் பற்றியெல்லாம் மனம் திறந்து கூறியுள்ளார். “நெஞ்சம் நிறைந்த நண்பர்’ என்று கூறி பெருமைப்படுத்தியும் உள்ளார்.

Page 8
இலங்கையில் வெளிவந்த சகல தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளிலும் பல புனைபெயர்களில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதிய சின்னத்தம்பியின் திறன் கொண்ட பல கட்டுரை விபரங்கள் தினக்குரல் பத்திரிகையில் வெளியிடப் பட்டுள்ளன. பல்வேறு துறைகளிலும் இவரது தலைப்புக்கள் அமைந்திருந்தன. அதுவும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. இவரது இரண்டு நூல்கள் குறிப்பிடத்தக்கவை. 'ஓ கனடா, 'மக்கள் நேசன் கார்த்திகேசன் மாஸ்ரர் என்பனவே அவை. இதில் ஓ கனடா என்ற நெடுங்கதை பற்றி கலாநிதி பார்வதி கந்தசாமி தனது கட்டுரையில் முக்கிய சில குறிப்புக்களை வழங்கியுள்ளார். சமூக உளவியல் துறையில் ஆளுமையுள்ள இவரின் பார்வையில் இந்நூலில் யதார்த்தம் உண்டு. கனடாவில் உள்ளோர் வாசிக்க வேண்டிய தேவை உண்டு. முக்கிய கதாபாத்திரமான தம்பிராசா குடும்பம் கனடாவுக்கு வர எடுக்கும் முயற்சிகள், இறுதியில் விசா கிடைக்காமல் போய்விடுவதால் ஏற்படுகின்ற தாக்கம் பற்றி குறிப்பிட்டு நாட்டுச் சூழ்நிலையால் ஏற்படும் அனர்த்தம், பாதிப்பு பற்றி விளக்கியுள்ளார். -
தினக்குரல் பத்திரிகையில் வீசி எழுதிய பெறுமதி வாய்ந்த கட்டுரை ஒன்றினை மீள்பதிப்பு செய்துள்ளனர். 1848ல் கார்ல் மாக்சினால் வெளியிடப்பட்ட “கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகடனம்” என்ற நூல்பற்றிய கட்டுரை இதுவாகும். ஜேர்மன் மொழியில் வெளிவந்து ஆங்கிலத்திற்கு மாற்றமடைந்த இந்நூல் கருத்துக்கள் மனித சிந்தனையில் ஒரு புரட்சியை உண்டுபண்ணியிருந்தது. அரசியல் ஆவணமான இவரது கட்டுரையில் பாரதியின் பல பாடல்களை புகுத்தியிருந்தார். கம்யூனிசத்தில் ஏற்பட்ட திரிபுவாதக்கருத்துக்களை கூறி எப்படியும் முதலாளித்துவத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்கம் ஒன்றுபடும் என்ற கருத்தினையும் கூறியுள்ளார்.
தி.மு.க பாதிப்பாலும் பாரதி மீது ஏற்பட்ட பற்றாலும் கம்யூனிஸ்டாக மாறி உலகம் முழுவதும் தன் வியாபகமான சிந்தனையை படரவிட்ட பாரதிநேசன் வீ. சின்னத்தம்பியின் நினைவுமலருக்கு அணிந்துரை வழங்க கிடைத்தமை நான் செய்த பாக்கியமாகும். எம்மிடையே வாழ்ந்து காட்டிய வீசி யின் திறன்கள் எம்மை என்றும் வியப்பில் ஆழ்த்துபவை. இந்நூலில் உள்ள ஒவ்வொரு வரிகளும் புடம்போடப்பட்ட ஜீவவரிகள்
இம்மலரை திறம்பட வெளியிட்டு மேலும் சிந்திக்கத் தூண்டிய நூல் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.
அன்புடன் எஸ். பத்மநாதனர் "சிந்தனைப்பூக்கள்’ ஆசிரியர்
6

சின்னத்தம்பியின் சிந்தனைத் தெளிவு என்றைக்கும் எமக்கு வழிகாட்டும் !
'பழைய பாலங்கள் ஒவ்வொன்றாக அழிந்து கொண்டு போகின்றன. சண்ணின் மறைவுடன் எனது வாழ்க்கையின் முக்கிய பகுதியின் சாட்சியமும் மறைந்துவிட்டது. நினைவூட்ட இனியார் உண்டு?”
இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தை முன்னெடுப்பதற்காக தங்களது வாழ்நாளை அர்ப்பணித்துச் செயற்பட்ட இரண்டாவது தலைமுறை இடதுசாரி வழிகாட்டிகளில் ஒருவரான வீ. சின்னத்தம்பி மறைந்து இன்றுடன் சரியாக ஒரு மாதம் உருண்டோடிவிட்டது.
வட்டுக்கோட்டையில் திருஞானசம்பந்தர் வீதியில் அவரது இல்லத்தில் ஒரு மாதத்திற்கு முன்னர் சம்பவித்த மரணம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் எஞ்சியிருந்த ஒரு சில நேர்மையான சமதர்மவாதிகளில் ஒருவரை எம்மிடம் இருந்து அபகரித்துச் சென்றுவிட்டது.
முன்னுதாரணமாக வாழ்ந்த மனிதன் உலகிலே கம்யூனிஸம் கல்லறைக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்று அதன் விரோதிகள் எக்காளமிட்டுக் கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், தனது இலட்சிய வாழ்வில் தான் வரித்துக் கொண்ட கோட்பாட்டில் இருந்து சற்றேனும் பிசகாது செயலாலும் சொல்லாலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஒரு மனிதனாக இன்று சின்னத்தம்பி அவர்கள் எம்மால் நினைவுகூரப்படுகின்றார்.
தான்பின்பற்றிய அரசியல் கோட்பாட்டையும் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் வேறுபடுத்திப் பார்க்காமல், உண்மையான சமதர்மவாதிக்கு இரண்டுமே பிரித்துப் பார்க்க முடியாதவை என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் இறுதி மூச்சுவரை வாழ்ந்து காட்டியவர் சின்னத்தம்பி.
இன்று எத்தனையோ இடதுசாரி புத்திஜீவிகள் தடம்மாறிப் போய் விட்டதைக் காண்கின்றோம். இத்தகையவர்கள் தங்களின் சமகால நிலைப்பாட்டுக்கு நவீனத்துவ ரீதியான விளக்கங்களையும் நாக் கூசாமல் தருகின்றார்கள். இவர்களைப் போல் சின்னத்தம்பி நவீனத்துவ ரீதியில் ஒருபோதுமே மாசடையவில்லை. இளமைப் பருவத்தில் இருந்த முற்போக்கான கருத்துக்களின் பால் ஈர்க்கப்பட்ட சின்னத்தம்பி அவர்கள், அன்றைய காலகட்டத்தில் அதாவது 1940 களின் பிற்பகுதியில் இருந்து மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறத்தொடங்கிய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை வரித்துக்கொண்டார்.

Page 9
ஆரம்பகால கட்டத்தில் இலங்கையில் கம்யூனிஸ்ட் இயக்கம் பாராளுமன்ற அரசியலை அடியொற்றியதாகவே செயற்பட்டு வந்தது. வாழ்வின் பல்வேறு அம்சங்களிலும் வைதீகத் தன்மை கொண்டிருந்த வடமராட்சியின் கரவெட்டி - கட்டைவேலி விவசாயக் கிராமத்தில் சின்னத்தம்பி பலவிதமான நெருக்கடிகளுக்கும் மத்தியில் தனது முற்போக்கு இயக்க வாழ்க்கையைத் தொடங்கினார்.
பருத்தித்துறைத் தொகுதியின் கம்யூனிஸ்ட் எம்.பி.யாக பொன். கந்தையா தெரிவாகுவதற்காக - அதாவது தமிழன் ஒருவன் சந்திர மண்டலத்துக்குச் சென்றதை ஒத்த நிகழ்வுபோன்ற தென்று வர்ணிக்கப்பட்ட - அந்த நிகழ்வுக்காக பாடுபட்ட இளைஞர் அணியில் சின்னத்தம்பி முன்னோடியாக திகழ்ந்தார். ஆனால், 1960களின் ஆரம்பத்தில் சர்வதேச ரீதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பாரதூரமான தத்துவார்த்தப் பிரிவினையின் போது பாராளுமன்ற அரசியலைத் துறந்து, சண்முகதாசன் தலைமையில் நாட்டில் ஊற்றெடுத்த மாவோவாத கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிரமான பங்காளியாவதற்கு சின்னத்தம்பி தயங்கவில்லை.
1958ஆம் ஆண்டு தொடக்கம் - அதாவது தனது 19வயதில் இருந்து - 1966 வரை கொழும்பில் அரசாங்கமின்சாரத் திணைக் களத்தில் லிகிதராகப் பணியாற்றிய சின்னத்தம்பி, அப்போது சீனாவில் பிரவாகமெடுத்த மகத்தான பாட்டாளி வர்க்க கலாசாரப் புரட்சியின் போது பீக்கிங் வானொலியின் தமிழ்ச் சேவையில் கடமையாற்றக் கிடைத்த சந்தர்ப்பத்துக்காக அரச உத்தியோகத்தையும் துறந்து (அன்று சின்னத்தம்பியின் ஊர்ச் சூழலைப் பொறுத்தவரை அரச பதவியைத் துறப்பதென்பது தற்கொலைக்குச் சமமானதென்று கருதப்படும் விடயமாகும்) சீனா சென்றார்.
பீக்கிங்கில் அயல்மொழிப் பதிப்பகத்தில் பணியாற்றிய ராணி ரத்தினதேவியை (கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் மூத்த மகள்) திருமணம் செய்த சின்னத்தம்பி, சீனாவிலேயே தொடர்ந்திருந்து கஷடப்படாமல் வாழ்ந்திருக்க முடியும்.
ஆனால், மாவோசேதுங்கின் மறைவையடுத்து - 1976 க்குப் பின்னர் - சீனாவில் ஏற்பட்ட கம்யூனிஸ்ட் பிறழ்வுவாத அரசியல் மாற்றங்கள் காரணமாக அங்கு தொடர்ந்து பணிபுரிய அவர் விரும்பவில்லை. குடும்பத்துடன் நாடு திரும்பினார்.
கொழும்பு திரும்பிய சின்னத்தம்பியவர்கள், தனது முன்னைய சிங்கள இடதுசாரிச் சகோதரர்களையெல்லாம் சந்தித்த போது பலர் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுத் தரமுடியும் என்று அவரிடம் கூறினர். குறிப்பாக எஸ்.டி. பண்டாரநாயக்காவை இவர் சந்தித்தவேளை அவர், அநுரா பண்டாரநாயக்காவிடம் கூறி அவரது தாய்மாமனின் கட்டுப்பாட்டில் உள்ள உபாலி பத்திரிகை
8

நிறுவனத்தில் வேலை பெற்றுத்தர முடியும் என்று கூறியிருந்தார். ஆனால், அத்தகையதொரு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பாத சின்னத்தம்பி யாழ்ப்பாணத்துக்கே சென்றுவிட்டார்.
கட்சி பலவீனமடைந்தாலும் அவர் தளரவில்லை
சீனாவுக் குச் சின்னத் தம் பி செல்வதற்கு முன்னர் சண்முகதாசனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி கொண்டிருந்த செல்வாக்கும் பலமான நிலையும் அவர் சீனாவில் இருந்து திரும்பியவேளையில் இருக்கவில்லை. பல்வேறு சீரழிவுச் சக்திகளின் கைங்கரியங்களினால் கட்சி பின்னடைவைக் கண்டது.
இந்த நிலைமைகள் எல்லாம் சின்னத்தம்பிக்கு பெரும் கவலையை அளித்தன. எனினும், அவர் தனது இலட்சியம் என்று வரித்துக் கொண்ட மார்க்ஸிஸக் கோட்பாடுகளில் இருந்து ஒருபோதும் பிறழ்ந்ததில்லை. சீனா செல்வதற்கு முன்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடுகளில் தொழிற்சங்கவாதியாக, இளைஞர் அணியின் தீவிர உறுப்பினராக, பத்திரிகையாளனாக, விமர்சனக் கட்டுரையாளராக, பலமுனைப் பங்களிப்புக்களைச் செய்த அவர், பின்னர் நாடு திரும்பியதும், கூடுதலான காலகட்டத்தை எழுத்துத் துறைக்கே அர்ப்பணித்தார்.
சின்னத்தம்பி என்றுமே தனது எழுத்தும் செயலும் தான்கொண்ட கொள்கையை முன்னெடுப்பதற்கான பங்களிப்பைச் செய்வனவாக அமையவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். இறுதியில் அவர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலகட்டத்தில் அச்சமூகத்தினால் எதிர்நோக்கப்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும் வெளியுலகுக்கு எடுத்தியம்புவதற்காக தனது எழுத் தாற் றலை முழுமையாகப் பயன்படுத் தரினார் . “எழுத்துலகவாசிக்கு ஓய்வு என்பது ஒரு போதும் இருக்கமுடியாது." எழுதும் தாகம் அத்தகையது. உடலில் வலு இருக்கும் வரை உள்ளத்தில் கருத்துக்கள் உதித்துக் கொண்டிருக்கும் வரை, கரங்கள் எழுதத் துடிக்கும். பத்திரிகைகள், சஞ்சிகைளின் உலகம் பரந்து விசாலமானது. அதைப்போலவே பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் பல வகைப்பட்டவர்கள். அநேகமாக ஒவ்வொருவரிடமும் தனித்த சிறப்பியல்புகள் காணப்படும். என்னுடைய எழுத்துலக வாழ்க்கை பிரதானமாக கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்புடையது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு உறுப்பினர் என்றவகையில்தான் நான் இலக்கியத்தை, எழுத்தை, பத்தரிகைகளை அணுகினேன். ஏறக்குறைய 40 ஆண்டு கால எனது எழுத்துலக வாழ்க்கையில் அற்புதமான எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் நான் கண்டிருக்கின்றேன்’- ‘ஒரு கம்யூனிஸ்டின் எழுத்துலக அனுபவம்' என்ற தலைப்பில் சின்னத்தம்பி 9

Page 10
அவர்கள் எனக்கு அனுப்பி வைத்த 34 பக்கக் கட்டுரையின் முன்னுரையில் இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
காலம்சென்ற பேராசிரியர் க. கைலாசபதியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த சின்னத்தம்பி, அவரைப் பற்றி குறிப்பிடுகையில், "அவர் எல்லாவற்றையும் படிப்பார். ஒரு சிறந்தபத்திரிகை ஆசிரியர் என்றவகையில் தனது அபிப்பிராயத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுதுவார். மற்றவர் சொல்ல நினைப்பதை விரைவில் ஊகித்தறியும் கூர்மதி உடைய அவர், மற்றவர்களைப் பாராட்டத் தயங்க மாட்டார். அதில் கருமித்தனம் காட்டமாட்டார். பத்திரிகை உலகத்திலும் எழுத்துலகத்திலும் இருப்பவர்கள் கைலாசபதியின் இந்தப் பண்புகளைப் பயின்று கொள்ள வேண்டும் என்று நான் கருதுகின்றேன்” என்று எழுதியிருந்தார்.
தனது எழுத்துலக நினைவுக்குறிப்பு என்ற வகையில் சின்னத்தம்பி இறுதிக்காலத்தில் எழுதி அனுப்பிய இக்கட்டுரையை அவரின் நினைவாக நூலுருவில் வெளியிட்டு, அவரின் எழுத்துலக வாழ்வுக்கு அச்சு ஆதாரமொன்றை மக்கள்முன் சமர்ப்பித்து பொருத்தமான அஞ்சலியைச் செய்ய முடியாததொரு துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துரதிர்ஷ்டவசமான நிலை என் வாழ்நாளில் என்றுமே மறக்கப்படமுடியாது. இது குறித்து எதிர்காலத்தில் விளக்கமாகக் கூறுவதற்கு அல்லது எழுதுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமாக இருந்தால், நான் எதை மனதில் வைத்துக் கொண்டு இதைக் கூறுகின்றேன் என்பதை ஏனையவர்களால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
தேசாபிமானி எழுத்துப்பட்டறை 1958 இல் கொழும்புக்குச் சென்றதும் ஓரிரு ஆண்டுகளில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வார ஏடான 'தேசாபிமானி' யின் ஆசிரியர் குழுவில் சேர்க்கப்பட்ட சின்னத்தம்பி தனது எழுத்துப்பட்டறை அப்பத்திரிகைதான் என்று அடிக்கடி கூறுவார். இயக்கத்தில் தோன்றியதத்துவார்த்தப் பிளவு இலங்கையிலும் எதிரொலிக்கத் தொடங்கியபோது கட்சியின் வாலிபர் சம்மேளனத்தினால் வெளியிடப்பட்ட 'யுவசக்தி'யில் பணியாற்றிய சின்னத்தம்பி “தொழிலாளி' பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இணைந்து கொண்டார். இத்தொடர்பு தனது வாழ்க்கைப் பாதையை அர்த்தம் பொதிந்த முறையில் வளப்படுத்தியதாக தனது இறுதிக் காலங்களில் எனக்கு எழுதிய கடிதங்களில் சின்னத்தம்பி பல சந்தர்ப்பங்களில் விளக்கமாக குறிப்பிட்டிருந்தார்.
சண்குறித்து . இலங்கையில் கம்யூனிஸ் ட் இயக்கம் துடிப் புடன் செயற்பட்டகால கட்டத்தில் சணமுகதாசனுடன் பணியாற்றியவர்
O

என்பதால் அவரின் வாழ்க்கைக் குறிப்புகளை விசேடமாக நினைவூட்டக்கூடிய நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுமாறு சின்னத்தம்பியை நான் கேட்டபோது ஒரு சில தினங்களிலேயே “A Few Episodes from Shan’s Life” 6T6örp 5606) JLS6) 6T(p5 அனுப்பியிருந்தார். அதுவும் பிரசுரத்திற்காகக் காத்திருக்கிறது.
தம்பி, தோழர்தம்பி, கரவைத்தம்பி, ஈழத்தம்பி, புதினன், புதினப் பிரியன், கண்ணம்மா, ஆனந்த், சீனாராணி, பாரதிநேசன் எனப் பல புனைபெயர்களில் நூற்றுக் கணக்கான கட்டுரைகளையும், நேர்காணல்களையும் பத்திகளையும் பத்திரிகைகளில் எழுதிக் குவித்த சின்னத்தம்பி, பின்னர் 1989-1990களில் யாழ்நகரில் 'உதயன்' பத்திரிகை ஆசிரிய பீடத்திலும் பணிபுரிந்தார். 1995இல் இடம் பெற்ற 'மாபெரும் இடப்பெயர்வுக்குப் பின்னர் சின்னத்தம்பியின் அப்பணியும் தவிர்க்கமுடியாத வகையில் முடிவுக்குவந்தது.
பின்னரான காலகட்டத்தில், தினக்குரல் பத்திரிகையிலேயே சின்னத்தம்பி பல கட்டுரைகளையும் பத்திகளையும் எழுதினார். யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் அனுபவித்து வருகின்ற சொல்லொணா கஷடங்களை உலகுக்கு வெளிக்கொணர வேண்டும் என்பதும் கம்யூனிஸ தத்தவம் இன்றும்கூட உலகமக்களின் மேம்பாடுகளுக்கு வழிகாட்ட வல்லது என்பதை வலியுறுத்துவதுமே இவரின் இறுதிக்கால எழுத்துப்பணியின் கருவூலமாக விளங்கியது. சின்னத்தம்பி அவர்களுடனான தொடர்பு எனக்கு வாழ்வின் செல்திசையைத் (sense of direction) தீர்மானிப்பதற்கு வெகுவாக உதவியது. வீரகேசரி ஆசிரிய பீடத்தில் நான் பணியாற்றிய காலத்தில் -1980களின் நடுப்பகுதியில் - எனக்கு அரசாங்க ஆசிரியர் உத்தியோகம் கிடைத்தபோது எனது எதிர்காலம் குறித்துத் தீர்மானிக்க நான் இருவரை நாடினேன். ஒருவர் சண்முகதாசன், மற்றவர் சின்னத்தம் பி. இருவருமே எனது எதிர்காலத்தை தீர்மானிப்பதென்பது முற்றிலும் என்னைப் பொறுத்தவிடயம் என்று கூறினாலும் நான் பத்திரிகைத்துறையில் தொடர்ந்து இருப்பதையே உள்ளூர விரும்பினர்.
அரசாங்க உத்தியோகம் என்பது ‘ஆண்டவன் கொடுப்பது என்ற கரவெட்டிக்கே இயல்பான சிந்தனையில் திளைத்த குடும் பங்களைச் சேர்ந்த எம்போன்றவர்களுக்கு எதிர்காலம் குறித்துத் தீர்மானிப்பதில் இருக்கக்கூடிய சூழ்நிலைச் சிக்கல்கள் புரிந்து கொள்ளக் கூடியவையே.
வட்டுக்கோட்டையில் இருந்துவந்த கடிதம் வட்டுக்கோட்டையில் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. 'எந்தத் தொழிலைச் செய்வது என்று என்னிடம் கேட்டிருந்தாய்,
11

Page 11
அது உன்னைப்பொறுத்தவிடயம், எனினும், பாரதியின் பாடலொ ன்றின் முதலிரு வரிகளை எழுதுகிறேன். அப்பாடலை முழுமை யாக அறிந்து உன் எதிர்காலத்தைப் பற்றித் தீர்மானித்துக்கொள்' என்று சின்னத்தம்பி எழுதியிருந்தார்.
தேடிச் சோறு நிதம் தின்று. பல சின்னச்சிறுகதைகள் பேசி. இதுதான் அவர் எனக்கு நினைவூட்ட விரும்பிய பாடலின் இருவரிகள். நான் ஏதோ ஒருவகையில வித்தியாசமானவனாக' இருக்க வேண்டும் என்று அவர் விரும்புவதை என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்குப்பிறகு நான் திரும்பிப்பார்க்க வேயில்லை. நமக்குத் தொழில் பத்திரிகைத் துறையாகிவிட்டது. இந்தத் துறையில் சமூகநலன் சார்ந்த நோக்குடன் செயற்பட்ட சகலருமே மக்களால் நன்கு மதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று சின்னத்தம்பி அடிக்கடி கூறும் அறிவுரைகள் எனக்கு பலவிதங்களில் வழிகாட்டியாக அமைந்திருக்கின்றன. கொள்கை பிழைத்தால் திறமையும் பறந்துவிடும் என்பது சின்னத்தம்பியின் உறுதியான நம்பிக்கை. இது ஒருபோதுமே பொய்க்கவில்லை.
தனிமனிதனின் பொருளாதார மேம்பாடே வாழ்வின் வெற்றி என்ற வக்கரித்த சிந்தனையில் சிக்கி உழலும் சிறுமதியினர் அதிகரித்துக் காணப்படும் இன்றைய உலகில் இறுதிவரை தன்னை சமூகத்தின் நலனுக்காக அர்ப்பணித்துச் செயற்பட்ட சின்னத்தம்பி ஒரு உதாரனபுருஷர்.
அவரது மேன்மை சின்னத்தம்பியின் மறைவின் பின்னர் இளைய மகளுடன் கொழும்பு திரும்பிய மனைவி ராணிரத்தினதேவியைச் சந்தித்தேன். மரணவீட்டிற்கு வந்தவர்கள் இத்தகையதொரு "பெரியமனிதருடன்’ நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்களே எமக்கு இப்போதுதானே புரிகிறது என்று தன்னிடம் கூறியதாக அவர் சொன்னார். இதுதான் சின்னத்தம்பியின் மேன்மை. வெளிப்பகடு காட்டுவதில் வல்லவர்களே பெரியவர்களாக "காட்சிதரும் இன்றைய சமூகத்தில் இத்தகைய ஒரு மனிதநேயன் அமைதியாக சமூகத்தின் மேம்பாட்டுக்காக பாடுபட்டுழைத்தார்; எழுதினார். அவரது எளிமையான வாழ்வே பலருக்கு வழிகாட்டும் ஒரு கலங்கரை விளக்கு. அவரது சிந்தனைத் தெளிவு என்றென்றும் எம்மை வழி நடத்திக் கொண்டிருக்கும்.
வீ. தனபாலசிங்கம் செய்தி ஆசிரியர் (தினக்குரல்), கொழும்பு (3d 17, 2OO1
12

மணிவிழாக் காலத்தில் தணைவியூர்க் கேசவனுக்குத் தம்பி அளித்த பேட்டி .
கம்யூனிஸ்டாக வாழ்ந்தார் இறுதிவரை இளமை உணர்வோடு இருந்தார்!
“ஆரம்ப நாட்களில் நான் திராவிட முன்னேற்றக்கழக கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு அக்கொள்கைகளின் தீவிர ஆதரவாளனாக இருந்தேன். ஆரம்பத்தில் என்னை தி.மு.க காரன் என்றுதான் அழைப்பார்கள்’. , *
"பொனி கந்தையாவினதும் தோழர்களினதும் செயற்பாடுகள் குறிப்பாக, தோழர் வீ பொன்னம்பலத்துடன் எனக்கு ஏற்பட்டபழக்கம், அதுவும் அவரோடு ஒரு சந்தர்ப்பத்தில் காரிற்குள் இடம் பெற்ற உரையாடல் என்பன என்னை கம்யூனிஸக் கொள்கைகளின் பால் ஈர்த்து 'கம்யூனிஸ்ட் ஆக்கின”.
"நாங்கள் எதை இலட்சியமாகக் கொண்டோமோ, அது சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் சரிந்து விழுந்து விட்டதோ என்ற பயம் பலருக்கு உண்டு. ஆனால், அந்த இலட்சியம் உலக மக்களின் விமோசனத்துக்கான சரியான பாதை என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை”
இலங்கை இடதுசாரி இயக்கத்தின் இரண்டாவது தலைமுறை முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பாரதிநேசன் வீ. சின்னத்தம்பி இவ்வாறு உறுதியுடன் தெரிவித்திருக்கிறார்.
'தம்பி’ என்று அவரது தோழர்களினால் வாஞ்சையுடன் அழைக்கப்படுகின்ற சின்னத்தம்பிக்கு வட்டுக்கோட்டைவாழ் மக்கள் மணிவிழாவொன்றை எடுத்துக் கெளரவிப்பதை முன்னிட்டு அவரைப் பேட்டி கண்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கம்யூனிஸ இலட்சியம் தோற்றுவிடாது மீண்டும் புதிய உத்வேகம் பெற்று வளரும் என்று கூறும் சின்னத்தம்பி வடமராட்சியின் கரவெட்டியில் கட்டைவேலி கிராமத்தில் பிறந்தவர். தற்போது வட்டுக்கோட்டையில் வசித்துவரும் அவர் இடது சாரி இயக்க ஈடுபாடுகளுக்குப் புறம்பாக, ஒரு சிறந்த எழுத்தாளராக, பத்திரிகையாளராக மிளிர்பவர்.
13

Page 12
தினகரன், வீரகேசரி, ஈழநாடு, முரசொலி, த ஐலண்ட், லங்கா கார்டியன், தினமணிக்கதிர், கலைக்கதிர், உதயன், தினக்குரல் போன்ற பல பத்திரிகைகளில் பல பயனுறு கட்டுரைகளை, எழுதிவந்திருக்கும் சின்னத்தம்பி, கம்யூனிஸ்ட் கட்சியின் பத் தரிரிகைகள் பல வற்றில் தனது முத் தரைகளை அக்காலகட்டத்தில் பதித்திருக்கிறார்.
சீனாவில் பாட்டாளி வர்க்க கலாச்சாரப் புரட்சிக் காலத்தில் பீக்கிங் வானொலி' யில் 16 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். தனது வாழ் நாளில் பீக்கிங் வானொலி காலகட்டத்தை மிகவும் பயனுடையதாகக் கருதும் சின்னத்தம்பி, அண்மைக்காலமாக, தினக்குரல் ஞாயிறு இதழ்களில் யாழ்ப்பாணத்தில் இன்று பாரதிநேசன் சின்னத்தம்பி பேட்டிகள் என்ற மகுடத்தில் குடாநாட்டின் இன்றைய வாழ் நிலைமைகளை உணர்த்தும் நோக்குடன் 25க்கும் அதிகமான முக்கியஸ்தர்களைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார். தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருக்கிறார்.
கம்யூனிஸ்ட் கொள்கையின்பால் தனக்கு இளமைக் காலத்தில் இருந்த அதே பற்றும் உறுதிப்பாடும் இன்னமும் அதேபோலவே இருக்கின்றது என்றும், இளமையுணர்வு தன்னிடம் இன்னமும் இருக்கின்றது என்றும் கூறும் சின்னத்தம்பியை அவரது வட்டுக்கோட்டை இல்லத்தில் பேட்டிகண்ட போது இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமானநேரம் ஆர்வத்தோடும் தன்னடக்கத்தோடும் பல கருத்துக்களை அவர் வெளியிட்டார்.
'தம்பியுடனான பேட்டி'யைக் கேள்வி பதில் வடிவில் கீழே தருகின்றேன். w
令 உங்களது சிறுபராயம், கல்வி என்பனபற்றி.? எனக்கு சுமார் எட்டு வயதிலேயே தி.மு.க. இலக்கியங்களைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து பொன். கந்தையா அவர்களின் வருகை, அவரின் கம்யூனிஸ்ட் பிரசாரம் என்பன அறிவு ரீதியான அலை ஒன்றை எம் மத்தியில் ஏற்படுத்தியது. வாசிகசாலைகள் அன்று வாசிப்பிடமாகவும் அறிவு தேடும் இடமாகவும் பெரும் உதவியாற்றின. இவ்விடத்தில் திரு இருதயக் கல்லுாரி, ஹாட்லிக்கல்லூரி ஆகியனவற்றின் எனது ஆசிரியர்கள் பற்றியும் குறிப்பிட வேண்டும். பலர் இருந்தாலும் பண்டிதர் க. சச்சிதானந்தம் போன்றோரது இலக்கியரசனைமிக்க கல்வி
14

புகட்டலினால் மொழிக் கல்வி மீது ஆர்வம் ஏற்பட்டது. ஆசிரியர்களினதும் மூத்தோரினதும் பாராட்டுக்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தின. அந்த வகையில் ராஜேந்திரம் மாஸ்ரர், குணநாயகம் மாஸ்ரர் போன்றோரைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
(X உங்கள் வாழ்க்கையின் ‘திருப்பு மையங்கள்
எனக் குறிப்பிடக்கூடிய சம்பவங்கள் ஏதாவது
g) 6on வடமராட்சிக்கு பொன்.கந்தையாவினதும் தோழர்களினதும் வருகை, அவர்களது செயற்பாடுகள் என்பன ஏற்படுத்திய புதிய அலை, அப்பொழுது இருந்த "சாதிப்பிரச்சினை" என்னில் ஏற்படுத்திய தாக்கம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவை உண்மையில் எனது
வாழ்க்கைப் பாதையில் செல்வாக்குச் செலுத்தின.
நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட். * ஏன் நீங்கள் 'கம்யூனிஸ்ட்” ஆகினிகள்?
ஆரம்பநாட்களில் நான் ஒரு தி.மு.க.காரன். அப்படித்தான் ஆரம்பத்தில் என்னை அழைப்பார்கள். பொன். கந்தையாவினதும் தோழர்களினதும் செயற்பாடுகள், குறிப்பாக தோழர் வீ. பொன்னம்பலத்தினோடு ஏற்பட்ட பழக்கம், அவரோடு ‘காரிற்குள் இடம் பெற்ற உரையாடல்கள் என்பன என்னை 'கம்யூனிஸக் கொள்கைகளின் பால் கவர்ந்து 'கம்யூனிஸ்ட் ஆக்கின.
(X- * கம்யூனிஸ்ட்” s' f வாழ்க்கையினுTரு
நீங்கள் சமூகத்திற்காகச் சாதித்தவை பற்றிச் சற்றுக் கூறுங்களேன். . .
சுரண்டலில்லாத, அடக்குமுறையற்ற சமூகத்தை உருவாக்கும் இலட்சியத்தோடேயே 'கம்யூனிஸ்ட்' கட்சியில் சேர்ந்தோம். அதற்காகவே உழைத்தோம் உழைப்பாளி மக்களை மனிதராக்கியது 'கம்யூனிஸ்ட் கட்சியாகும். பாட்டாளிகள் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறார்களாயின் அதில் கட்சியின் பங்கை நிராகரிக்கமுடியாது. இத்தகைய கட்சியின் செயற்பாடுகளுக்கு கம்யூனிஸ்ட்டுக்களின் செயற்பாடுகளுக்கு இயன்ற அளவு உழைத்துள்ளேன். குறிப்பாகப் பத்திரிகைத்துறையில் மும்முரமாக ஈடுபட்டு கட்சிக் கொள்கைகளையும் செயற்பாடுகளையும் பிரசாரப்படுத்துவதில் உழைத்தேன். அந்நாட்களில் நான் ஒரு உற்சாகமான கட்சி
15

Page 13
& கம்யூனிஸ்டுக்களின் அல்லது கம்யூனிஸத்தின்
இன்றைய நிலைபற்றித் தங்களது கருத்து என்ன? மிகவும் வேதனையானது. நாங்கள் எதை இலட்சியமாகக் கொண்டோமோ, அது சோவியத் யூனியன் வீழ்ச்சியுடன் சரிந்துவிழுந்து விட்டதோ, என்ற பயம் பலருக்கு உண்டு. ஆனால் அந்த இலட்சியம் உலக மக்களின் விமோசனத்திற்கான சரியானபாதை, என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
* அந்த இலட்சியத்தைச் சுருக்கமாகக்கூறுங்களேன்?
உழைப்பாளி மக்கள் சகல உரிமைகளும் பெற ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதன் மூலம் ஏற்படும் மாற்றத்தின் ஊடாக மனித குலம் முழுவதற்கும் விமோசனம் கிடைக்கக் கூடிய சுரண்டலற்ற சமூக அமைப்பு ஏற்பட வேண்டும். இதையே 'பாட்டாளி வர்க்க ஆட்சி', 'பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என எங்களுடைய மொழியில் கூறுவோம்.
(X இவ்விலட்சியம் இன்று தோற்று விட்டது தானே..?
இல்லை. இல்லவே இல்லை. (அவசரமாக மறுக்கிறார்) 'கம்யூனிஸ இலட்சியம்' தோற்று விட்டது என நான் நினைக்க இல்லை. அது தோற்காது. மாக்ஸிய இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு பாரிசில் 1871 ஆம் ஆண்டு முதலாவது தொழிலாளர் அரசு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் எழுபது நாட்களுக்குள்ளேயே இம்முயற்சி இரத்த வெள்ளத்திற்குள் மூழ்கடிக்கப்பட்டது. "பாரிஸ் கம்யூன்” என்று இது அழைக்கப்படுகிறது. பின்னர் 1917 இல் ஏற்பட்ட ரஷ்ய ஒக்டோபர் சோஸலிசப் புரட்சிமூலம் ஏற்பட்ட தொழிலாளர் அரசு சுமார் எழுபது ஆண்டுகள் வரை நின்று பிடித்து சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் இல்லாமற் போய்விட்டது. ஆனாலும், இவ்விலட்சியம் தொடர்ந்து வாழ்கிறது. இனி மீண்டும் புதிய நிலைமைகளில் புதிய வேகம் பெற்று வளரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
«Х• எழுத்துத் துறையால் குறிப்பாகப் பத்திரிகைத்
துறையால் நீங்கள்கவரப்பட்டது பற்றி.? நான் ஒரு பஞ்சத்தாண்டி. அப்படித்தான் நான் என்னைக் கருதுகிறேன். கம்யூனிஸ் இயக்க வேலைகளுக்காகவே
16

பெரும்பாலும் எழுத்துத் துறையில் ஈடுபட்டேன். முன்னர் குறிப்பிட்டதைப்போல இயற்கையான தமிழார்வம் இருந்தது. அத்துடன் எனது எழுத்துக்களை அச்சில் காணும் ஆர்வமும் இல்லாமல் இல்லை. இவை இத்துறையின்பால் என்னைக் கொண்டு வந்தன எனலாம். முதன் முதலில் ‘சுதந்திரன்’ பத்திரிகையின் மாணவர் பகுதியிலேயே எனது ஆக்கம் வெளியாயிற்று. இது உற்சாகத்தைத் தந்தது. யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலும் பல எழுத்தாளர்களோடு தொடர்பு ஏற்பட்டது. அ.ந.கந்தசாமி, சில்லையூர் செல்வராசன், கே. எஸ். சிவிகுமாரன், தருமு சிவராமு போன்ற எங்கள் அரசியலனி சாராதோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்களும் கிடைத்தன. அன்றைய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்த பிரபலமான எழுத்தாளர்கள் அனைவரும் எனது தமிழையும் எழுத்துத் திறனையும் வளர்க்க உதவினார்கள். இப்பட்டியல் மிக நீளமானது. எனினும் ஒரே ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிடுகிறேன் எச். எம். பி. முகைதீன். இவரே தொழிலாளியினதும் “தேசாபிமானி'யினதும் ஆசிரியராக இருந்தவர். பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் க. கைலாசபதி ஆகியோருடன் கட்சிப்பணி காரணமாக ஏற்பட்ட உறவுகளும் இத்துறைகளில் என்னை வளர்க்க உதவின.
ళ "பீக்கிங்வானொலி"யின் தமிழ்ப்பகுதியில் சுமார் 16 ஆண்டுகள் பணியாற்றியுள்ளளிர்கள் என அறிகிறோம். அங்கு நீங்களாற்றிய பணிகள் பற்றிக் கூறுங்களேன்.? பீக்கிங் வானொலிக்கு, சண்முகதாசன் தலைமையிலான 'கம்யூனிஸ்ட் கட்சியினால் அனுப்பப்பட்ட நான், அங்கு தமிழ்மொழி ஆசிரியராகவும், ஒலிபரப்பாளராகவும் கடமையாற்றினேன். ஒலிபரப்பிற்கான தமிழ்மொழி கற்பிப்பதும் எனது பணியாக இருந்தது. என்னைத் தவிர அங்கு வேலை செய்த அனைவரும் கற்ற சில நண்பர்களே. சீனவானொலி மூலம் தமிழ் மொழியை ஒலிக்கச்செய்வதில் எனது பங்கை ஆற்றினேன். அத்தோடு "பீக்கிங்' வானொலியின் சிங்களஒலிபரப்பு ஆரம்பிக்கப் பட்டபோது அதற்கு ஆலோசனை வழங்கி உதவி புரியும் பணியும் எனக்குக் கிடைத்தது.
17

Page 14
* பீக் கிங் வாழ்க் கை தனிப்பட்ட முறையில்
உங்களுக்கு எப்படி இருந்தது?
முக்கியமானதாகவே இருந்தது அந்தப் பதினாறு ஆண்டுகளையும் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் பயனுள்ள காலமாகவே கருதுகின்றேன். சீனாவில் பாட்டாளிவர்க்க கலாச்சாரப் புரட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தகாலம் முழுவதும் நான் அங்கு வாழ்ந்தேன். எனது அறிவைப் பெருக்குவதற்குப் பீக்கிங் வாழ்க்கை மிகவும் உதவியது. அத்தோடு மிகமுக்கியமான விடயம் ஒன்றும் நடந்தது. என் துணைவி ராணிரத்தினதேவியை அங்குதான் சந்தித்துத் திருமணம் செய்து இரண்டு புத்திரிகளையும் பெற்றுக் கொண்டேன். அவர் பீக்கிங் அயல் மொழிப் பதிப்பகத்தின் தமிழ்ப்பகுதியில் பணியாற்ற வந்திருந்தார். அத்தமிழ்ப் பகுதி, பலநுால்களைத் தமிழில் வெளியிட்டது. எமது புத்திரிகள் சீனோதயாவும், சிறீஉதயாவும் சீனாவில் தான் பிறந்தார்கள். ராணி பீக்கிங் அயல்மொழிப்பதிப்பகத்தில் வேலைசெய்ய 1968இல் வந்திருந்தார். இப்பகுதி பல தமிழ் நூல்களையும் வெளியிட்டது. எமது அரசியல் ஆசானும் மக்கள் இதயங்களைக் கவர்ந்தவரும் கம்யூனிஸ்ட் தலைவருமான கார்த்திகேசன் மாஸ்ரரின் மகளாக ராணி அமைந்ததில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் இந்தப் பீக்கிங் வாழ்க்கைக்கும் ஒரு மறுபக்கம் உண்டு. சீனாவில் வாழ்ந்த ஒரு தமிழ்க்குடும்பம் நாங்கள்தான். சீனாவில் கல்வி பயில வந்த மாணாக்கர்கள், தூதரகத்தைச் சேர்ந்த யோகேந்திரா துரைசாமி குடும்பம், பின்னர் மகேந்திரன் குடும்பம் தவிர கிட்டத்தட்ட துறவிகள் போல் பதினாறு ஆண்டுகள் அஞ்ஞாதவாசம் புரிந்துள்ளோம். இதனால் எனக்கு இலங்கையில் நண்பர்கள் இல்லாமல் போய்விட்டதை எனது வாழ்க்கையில் பேரிழப்பாக நான் கருதுகின்றேன். இப்போதைய எனது நண்பர்கள் எல்லோரும் பிக்கிங் வாழ்க்கைக்குப் பிறகு 1982இற்குப் பிறகு தேடிக் கொண்டவர்களேயாவர்.
18

(X So si as si 6 Tij) &ë 60) 5uf65 5356aqtë Qeve ai ri 4 etj.
வகித்தவர்கள் என்று எவரையும் கருதுகிறீர்களா? எண்ணற்றோர் உண்டு. தோழர்களாகவும், நண்பர்களாகவும் என்னைக் கம்யூனிஸ்ட் கட்சியில் உத்தியோக பூர்வமாக 1958 இல் இணைத்த கண்டியைச் சேர்ந்த டபிள்யூ.எம்.பி. அபொன்சோ என்ற சிங்களத் தோழரை இன்றும் நினைக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் ஆசானாகவும், தலைவராகவும் இருந்த காலஞ்சென்ற சண்முகதாசன் (சண்) என்னுடைய வழிகாட்டிகளில் சிறப்பானவரும் எமது குடும்பத்தின் அன்பான நண்பருமாக விளங்கினார். என்னுடைய ஊரைச் சேர்ந்த சண்ணின் மனைவி காலஞ்சென்ற பரமேஸ்வரி எமக்குப் புரிந்த உதவிகளையும் நினைவில் வைத்திருக்கின்றேன். *jör.
ぐ கட்சிக்காரன், எழுத்தாளணி, பத்திரிகையாளன், ஒலிபரப்பாளன் என பல பங்குகளைச் சுமந்து இருந்கின்றீர்கள். இதில் உங்களால் விரும்பப்படுவதாக எதனைக் குறிப்பிடலாம்? நான் அடிப்படையில் ஒரு கட்சிக்காரன். அதாவது ஒரு 'கம்யூனிஸ்ட் ஆதரவாளன். எனது மற்ற நடவடிக்கைகள் எல்லாம் இந்தவிடயத்தில் ஆதரவாக இருக்கவேண்டும் என விரும்புபவன். ஆனால் ஒரு பத்திரிகையாளன் என்ற பெயரைப் பெற்றுக் கொள்ள நான் இளம் வயதிலிருந்தே பாடுபட்டேன். ஒரு நல்ல எழுத்தாளனாக இன்றும் ஆசை உண்டு.
(X- இன்று மணிவிழாக் கண்ட நிலையில் தங்களின்
கடந்தகால வாழ்க்கை பற்றி என்ன கருதுகிறீர்கள்?
அடிக்கடி எனது பிள்ளைகள் கேட்பார்கள் அப்பா உங்களுக்கு சந்தோஷமான அல்லது துக்கமான விடயம் என்ன? என்று. அப்படியொன்றும் எனக்கு இல்லையென்றே கூறுவேன். ஏனென்றால் வாழ்க்கையென்பது தனிப்பட்ட வாழ்க்கையாயினும் சரி சமூக வாழ்க்கையாயினும் சரி அது ஒரு தியாகப்போராட்டம்' என்ற கருத்தை உறுதியாக நம்புகிறேன். அத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைக்கு விசுவாசமாக இருப்பது, என்னுடைய நெஞ்சில் மிகவும் ஊறிய விடயமாகும். இதைப்பற்றி நான் என்னையே பாராட்டிக் கொள்வதுண்டு. இவ்வகையில் பார்க்கும் போது இதுகாலவரை பயனுள்ள வாழ்க்கை ஒன்றை வாழ்ந்த திருப்தி எனக்கு ஏற்படுகிறது.
19

Page 15
* எதிர்கால திட்டங்கள் பற்றி..?
இன்னும் இளமையான உணர்வு என்னிடம் இருக்கிறது. சூழல் கள் மாறினாலும் சுறுசுறுப்பாக கம்யூனிஸ் ட் இலட்சியத்திற்காக வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஓரளவிற்குச் செய்தும் வருகின்றேன். பத்திரிகைத்துறை என்னை வாசிக்கவும், யோசிக்கவும், எழுதவும், சில செயற்பாடுகளில் ஈடுபடவும் உதவுகின்றது. உதவும் எனவும் நினைக்கின்றேன். எதிர்காலத்தில் பலவற்றைச் செய்யவேண்டும் என விரும்புகின்றேன். சொல்வதிலும் பார்க்கச் செய்வது நல்லதுதானே.
0x- இருபத்தோராம் நூற்றாண்டு பிறந்துள்ளது, எதிர்காலம்
எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
இன்று உலக மயமாக்கம், திறந்த பொருளாதாரம் என்ற நிலைப்பாடுகளே மேலோங்கி இருக்கின்றன. இதனால் இன்று மனித வாழ்க்கைப் பெறுமானம் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. பணம்தான் வாழ்க்கை என்றாகிவிட்டது. ஆனால், இது இப்படியே இருந்துவிடாது. வாழ்க்கைப் பெறுமானங்கள் மதிக்கப்படும் காலம் வந்தேயாகும்.
Ο
Ο நிறைவாக, வழமையான ஆனால் தவிர்க்க முடியாத
கேள்வி. நீங்கள் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர் என்ற வகையில் இன்று பேனாபிடிக்கத் தொடங்கி இருக்கும் இளம் பத் திரிகையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கூறுகின்ற செய்தி என்ன? அறிவுரை கூற நானொன்றும் அறிஞன் அல்ல. இருந்தும், எனது அனுபவங்களினுாடு சிலவற்றைக் கூறலாம், வாசிப்புப் பழக்கம் என்பது மிகவும் முக்கியமானது. எழுத்தாளராக, பத்திரிகையாளராக விரும்புபவர்கள் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். அதே போல பிறருடன் கலந்துரையாடல்களிலும் கருத்துப் பரிமாற்றங்களிலும் ஈடுபடுதலும் அவசியமானது. எழுத்தென்பது பயிற்சியும் நேர்மையும் அறிவும் இருந்தால் தன்பாட்டில் வரும். அத்தோடு எழுதுவதற்கு நோக்கம் இருத்தல் வேண்டும். சமுதாயப் பொறுப்பு இருக்க வேண்டும். "நான் சமுதாயத்திற்குப் பொறுப்பானவன்", என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும். பேனாவைத் துஷபிரயோகம் செய்யக்கூடாது. இவை முன்னேற்றத்திற்கு உதவக் கூடியன.
20

தம்பி ஒரு கலங்கரை விளக்கு
வீரகத்தி சின்னத்தம்பி அவர்கள் தனது இலட்சியத்துக்கான சொல்லுடனும் செயலுடனும் தன் உயிர் நீங்கும்வரை வாழ்ந்தார். அவர் உடல் யாழ் மருத்துவ பீடத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டு கற்றற் சாதனம் ஆனதும், அவரது கண்கள் வேறு இருவருக்கு பார்வை அளிக்கத் தானம் செய்ததும் அவரது வாழ்வின் சிறப்பை, கொண்ட கொள்கையினின்றும் பிறழா மனத் திடத்தை எடுத்துக் காட்டுகின்றது. இது யாழ்ப்பாணத்து மக்கள் சாதாரணமாகச் செய்யக்கூடிய ஒரு விடயமல்ல. கம்யூனிச தோழர்களுக்கு முன்னுதாரணமானவர்; அவர் சமுதாயத்தின் ஓர் ஒளிவிளக்காகும்.
சின்னத்தம்பி அன்பர்கள், நண்பர்கள், தோழர்கள் அனைவராலும் “தம்பி” என்றே அழைக்கப்பட்டார். தம்பியுடன் பழகிய எவரும் தம்பியின் அன்பான பண்பையும், ஆதரவு நல்கும் இயல்பையும், நேசம் கொள்ளும் நெஞ்சத்தையும் உணரத் தவறியதில்லை.
தம்பியின் இலட்சியம் “சோசலிச சமுதாயம்' அதை அடைவதற்காக, எழுத்தாளனாக, வானொலி ஒலிபரப்பாளனாக, பத்திரிகையாளனாக, இலக்கியவாதியாக வாழ்ந்தார். இவை யாவற்றிலும் பாட்டாளி வர்க்கத்தின் குரலே அவரின் நாதம். தம்பி’ ‘புதினன்' 'பாரதிநேசன்' போன்ற புனைபெயர்களில் அவரின் ஆக்கங்கள் வந்துள்ளன.
இவரது பாடசாலைக் கல்வி ஆரம்பமானது கரவை மாணிக்கவாசர் வித்தியாலயத்தில். இவ்வித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த ‘சித்தமணியகாரன் ஞாபகார்த்த விழாக்களில், பேச்சு, நடிப்பு, பாட்டுப் போட்டிகளில் பல பரிசில்களைப் பெற்றார். 1951ம் ஆண்டு நடைபெற்ற விழாவில் இவர் இரட்டைவேடம் தரித்து நடித்த காட்சி, பலராலும் பாராட்டப்பட்டது. இதற்காக விசேட பரிசிலும் வழங்கப்பட்டது. இப் பராயத்திலேயே இவருக்கு பாரதியார் பாடல்கள் பல மனப்படமாகிவிட்டன. பாரதியாரின் புது நெறிப்பாடல்களை உணர்வோடும் பண்ணோடும் பலர் கேட்கப் பாடுவார். தனது பெற்றோர், உறவினர், மத்தியில் பாரதியார் பாடல்களை அபிநயத்துடன் பாடிக்காட்டுவதில் இவர் பெரும் உவகை கொண்டார்.
21

Page 16
மகாகவி பாரதியாரின் புரட்சிக் கவிதைகளாலும் அறிஞர் அண்ணாத்துரை ஆகியோரின் திராவிட முன்னேற்றக் கழக சீர்திருத்தக் கருத்துக்களாலும் கவரப்பட்ட சின்னத்தம்பியின் சிந்தனைகள் விமர்சனப் பாங்காக விரிவடையத் தொடங்கின. இவரது வாலிபப்பராயத்தில் கரவையம்பதியில் அவர் கண்முன்னே இடம்பெற்ற:
9 கலட்டியில் முப்பத்தி நான்கு வீடுகள் தீக்கிரை
• தளவில் தண்ணிர் கிணற்றில் விஷம் ஊற்றப்பட்டது
• வளர்மதி வாசிகசாலைக்கு தீவைப்பு
• கரவெட்டி கிழக்கில் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் கற்பழிப்பு
• கந்தையா பாடசாலைக்குத் தீ வைப்பு
• ஆயிரமாயிரம் புகையிலைக் கன்றுகள் பிடுங்கி வீசப்பட்டன போன்ற பல நிகழ்வுகள் தம்பியின் மனதைத் துளைக்கத் தொடங்கின. 'உயர் சாதி’ எனப்படுவோரால் சிறுபான்மையினராக தாழ்த்தப்பட்டோர் என்று கூறப்பட்ட தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப் பட்ட இன்னல்கள், தொல்லைகள் யாவும் தம்பியின் உளத்தின் உறுத்தல்களாக, உளத் தூண்டல்களாக அவரின் சிந்தனையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தின.
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் எனப் பாடித்திரிந்த தம்பியில் இவ்வூரில் இடம்பெற்ற அட்டகாசங்களும், அட்டூழியங்களும், இச்சமுதாய அமைப்பை மாற்றவேண்டும் என்ற மனப்பாங்கை ஏற்படுத்தின. தாழ்த்தப்பட்ட', 'ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான நூல்களை வாசிக்தத் தொடங்கினார். இவர்களின் விடுதலைக்காக முன்னின்ற முற்போக்காளருடன் உறவுகள் தொடர்புகள் கொள்ளத் தொடங்கினார். இதன் வழி கம்யூனிச இயக்கத்தில் இணைந்துகொண்டார். அக்காலகட்டத்தில் கம்யூனிஸ்ட்டாக ஊரில் உலாவுவது ஆபத்தானது. தாழ்த்தப்பட்டோரை ஒடுக்கிய அதே கைகள் கம்யூனிஸ்ட்டுகளையும் தாக்கின. நெஞ்சில் உரத்தோடும் நேர்மைத் திறனோடும் பஞ்சமர் மத்தியில் இயங்கினார்.
பாதகம் செய்வோரைக் கண்டால் நாம் பயங்கொள்ளலாகாது!
22

மோதி மிதித்திடு!
அவர் முகத்தில் உமிழ்ந்திடு! என்னும் வீறுகொண்ட உணர்வு மேலோங்க சமூக சேவையில் ஈடுபட்டார். சிறுவயதில் சமய அநுட்டானம் பெற்று வெள்ளிதோறும் “வெல்லன் பிள்ளையார் கோவில் தரிசனம், ஞாயிறுதோறும் வல்லிபுர ஆழ்வார் கோயில் வணக்கம், கோயில் உற்சவ காலங்களில் விரதம் அநுட்டித்துத் திருத்தொண்டுகள் செய்துவந்த சின்னத்தம்பி சமயப் பற்று அறுந்து, கடவுள் நம்பிக்கை இழந்து, நாஸ்திகனானது இவரது பெற்றோருக்கும், உற்றோருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஊர்ப் போக்கோடு வாழ்ந்து, கல்வி கற்று உயர்ந்த உத்தியோகம் பெற்று உயர்ந்தோனாக வருவான் என்றிருந்த பெற்றோர் மனதில் கேள்விக் குறிகள் பல எழத்தொடங்கின. எனினும் அவரின் அறிவிலும், ஆற்றல் திறனிலும் துணிச்சலிலும் பெருமை கொண்டனர்.
பல்கலைக்கழகத் தேர்வுப்பரீட்சைக்கெனப் படித்துக் கொண்டிருந்த சின்னத்தம்பி எழுதுவினைஞர் போட்டிப் பரீட்சையில் தெரிவானதால் 1956ம் ஆண்டு படிப்பை நிறுத்திவிட்டு, கொழும்பு சென்றார். கொழும் பில் மிக எளிமையான வாழ்வைக் கடைக்கொண்ட சின்னத்தம்பி தனது அலுவலக வேலைகள் முடிந்ததும் கட்சி வேலைகளிலும், தொழிற்சங்கவேலைகளிலும் ஈடுபட்டார். “தேசாபிமானி” “யுவசக்தி” ஆகிய கம்யூனிஸ்ட் பத்திரிகைகளிலும் வேலை செய்துவந்தார்.
இக்காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் அடிப்படைத்
தத்துவமும் வேலைத்திட்டமும் மீண்டும் விவாத அரங்கிற்கு வரத் தொடங்கியது. கால்மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் ஆகியோரால் உருவாக்கப்பட்டு உயிரூட்டம் பெற்ற 'பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் பற்றிய விளக்கங்கள் வேறுபடத்தொடங்கின. சர்வதேச மட்டத்திலும், தேசிய மட்டங்களிலும் தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தின் போக்குகள் பற்றிய விமர்சனங்கள் தோன்றின. தேசிய மட்டத்தில், அடக்கியொடுக்கப்பட்ட தொழிலாளர், விவசாய மக்களின் உணர்வு பூர்வமான வர்க்கப் போராட்டமே முதலாளித்துவ ஆட்சியை முறியடித்து பாட்டாளி வர்க்க ஆட்சியை நிலை நாட்டும் என்ற கோட்பாட்டில் நம்பிக்கை இழந்தோர் மீண்டும் தோன்றத் தொடங்கினர். நமது தேசிய மட்டத்திலும் வர்க்கப் புரட்சிக்கும், பலாத்காரத்திற்கும் மாறாக பாராளுமன்ற மார்க்கத்தையும், சமாதான மாற்றத்தையும் முன்வைத்தனர்.
23

Page 17
தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தில் நம்பிக்கை இழந்தோர் தேர்தல் களை நாடி வோட்டுக் களைத் தேடி ஈற்றில் பெரும்பான்மையான சிங்கள இனவாதத்திற்கு இரையானார்கள், தலதா மாளிகைக்கு யாத்திரை செய்தார்கள். இறுதியில் கெளதமயுத்தரில் “சரணம்” அடைந்தார்கள்.
"ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசின் கீழ் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர் விவசாயிகள் தொடர்ந்து நடத்தும் வர்க்கப் போராட்டமே முதலாளிய மீட்பைத்தடுக்கும். உருவான சோசலிஸ அமைப்பைப் பராமரிக்கும்” என்ற லெனினின் கூற்றை மறைத்து, திரிபுபடுத்தி, குருஷேவ் சோவியத் நாட்டை முதலாளித்துவ பாதையில் இட்டுச் செல்ல வழிவகுத்தார். அதே வேளை உதட்டில் சோசலிசத்தையும் செயலில் முதலாளியத்தையும் கொண்ட குழுவினர் சீனாவில் முதலாளியத்தின் மீட்சிக்கு அடிகோலத் தொடங்கினர்.
இத்தத்துவார்த்தப் போராட்ட காலத்தில் பாட்டாளிவர்க்க உணர்வோடு பாட்டாளி வர்க்கப் புத்திஜீவியான தோழர் நா. சண்முகதாசனின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சீனசார்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தத்துவார்த்த ரீதியிலும் போராட்ட முறையிலும் இன, மொழி பேதங்களுக்க அப்பாற்பட்ட வர்க்கப் போராட்ட மார்க்கத்திலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்டார் என்பதில் ஐயம் எதுவும் இல்லை. பலவருடங்களாகக் கம்யூனிஸ்ட் கட்சிக்காகவே உழைத்தார்.
இக்காலகட்டத்தில் தம்பி, பல மார்க்சிஸ் புத்திஜீவிகளைத் தனது நண்பர்களாக்கிக் கொண்டார். பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி, நீர்வை பொன்னையன், குமாரலிங்கம், வெலிவிற்ற, யாப்பா, முகைதீன் ஆகியோர் எனது மனதில் வரும் சிலராகும். இவருக்கு உற்றதோழர்களாகவும் நண்பர்களாகவும் பலர் இருந்தனர்.
அறுபதாம் ஆண்டுகளில் தேசிய விடுதலை இயக்கங்கள் வலுப்பெறத் தொடங்கின. காலனித்துவ, நவகாலனித்துவ ஆட்சிகளினின்றும் விடுதலைக்காகப் போராடின. லத்தீன் அமெரிக்க, தென்னாசிய, ஆபிரிக்க நாடுகள் வெளிநாட்டு ஆதிக்கங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டங்களை ஆரம்பித்தன. வியட்நாம், கம்போடியா, லாவோஸ் முதலிய நாடுகளில் விடுதலைப்போர்கள் ஆரம்பிக்கப்பட்டன. உக்கிரமாகின நாடுகள் அமெரிக்க பொருளாதரச் சுரண்டலிலிருந்து மீளப்போர் செய்தன.
24

இக் காலகட்டத்தில் அமெரிக்காவின் உண்மையான ற ருவத்தை உலக மக்களுக்கு வெளிப்படுத்தி, அமெரிக்கா ஒரு "காகிதப் புலியே” என்று விளக்கி, அதனின்றும் விடுதலைபெறப் போராடிய இயக்கங்களுக்கு ஆதரவு அளித்தது 'செஞ்சீனா சுருங்கக் கூறின், சீனா சர்வதேச மட்டத்தில் தொழிலாளர் விடுதலைக்காகப் போராடத் தொடங்கியது. இக் காலகட்டத்தில் சீனாவிலிருந்து பல மொழிகளில் அரசியல், கலை, இலக்கிய நூல்களை வெளியிட வேண்டிய தேவை செஞ்சீனாவிற்கு ஏற்றபட்டது. அப்பணியின் ஒரு பங்கினைச் செய்வதற்காகவே தம்பி சீனா சென்றார். அங்கு தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும், பீக்கிங் வானொலியில் தமிழ் ஒலிபரப்பாளராகவும் 1966 தொடக்கம் 1982 இல் நாடு திரும்பும்வரை 16 ஆண்டுகள் சேவை செய்தார். இக்காலகட்டம் சீனாவின் பொற்காலம் என்றே வர்ணிக்கப் படுகின்றது. சீனப் பெரும் புரட்சியின் பின்னர் மாவோவின் வழிகாட்டலில் இடம் பெற்ற மாபெரும் கலாச்சாரப் புரட்சிக் காலத்திலும் பின்னர் மரஒவின் மறைவின் பின்னரான முதலாளித்துவ, திரிபுவாத காலகட்டத்திலும் தம்பி அங்கு சேவை செய்தார். மாஒவின் கருத்துக்கள் வலுவிழந்து செயலற்றனவாக மாற்றங்களைக் கொண்ட சீனத்தில் தம்பியின் மனம் சொல்லொணத் துன்பங்களைக் கண்டது.
“பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் வர்க்கப் போராட்டம் முடிந்துவிட்டது என்பதைக் குறிக்கவில்லை. ஆனால் அதைப் புதிய வடிவங்களில் தொடர்ந்து நடத்துதலாகும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது பாட்டாளி வர்க்கம் நடாத்தும் வர்க்கப் போராட்டமாகும். தோல்வியடைந்த, ஆனால் அழிந்துவிடாத முதலாளித்துவத்தை எதிர்ப்பை இன்னும் கைவிட்டுவிடாமல், மேலும் ஆழப்படுத்தியுள்ள முதலாளித்துவத்தை எதிர்த்து அரச அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ள பாட்டாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப் போராட்டமே” என்ற லெனினின் கருத்து மாஒவின் மறைவின் பின்னர் சீனாவில் ஏற்கப்படவில்லை. “அனுபவம் சிறந்த ஆசான்” என்னும் மேற்கோட்பாட்டிற்கு ஏற்ப, அவர் எத்தகைய நேரடியான அனுபவங்களைப் பெற்றிருப்பார் என்பது தெளிவு. ஆனால் அவரின் அனுபவங்கள் அனைத்தையும் பூரணமாகப் பகிர்ந்து கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை எமது சமுதாயத்தில் காலத்திற்குக் காலம் தூபமிட்டு வளர்க்கப்பட்ட தனிச் சிங்கள வாதமும் அதற்கெதிராக தோற்றமெடுத்த இன, மொழிப் போராட்டங்களும் திசைதிருப்பிவிட்டன. மக்களின் கவனம்
25

Page 18
திசைதிருப்பப்பட்டதும் அவரது கருத்துக்களை முழுமையாக வெளிப்படுத்த முடியாத இயல்பைத் தோற்றுவித்தமை காலத்தின் நியதியே.
“ஐரோப்பாவில் நடைபெற்ற முதலாளியப் புரட்சிகள் ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருந்தன. நிலப் பிரபுத்துவும் தூக்கியெறி யப்பட்ட பின்னர் நிலப் பிரபுத்துவ மீட்சி பல முறை நிகழ்ந்தன. அதிர்ஷ்டம் மாறி மாறி அடித்தது. இத்தகைய பின்னடைவு சோசலிஸ் சமூகங்களிலும் சாத்தியமாகும். எடுத்துக்காட்டாக யூகோஸ்லாவியா தன் இயல்பை மாற்றிக் கொண்டு திருத்தல் வாதமாக மாறி விட்டது. தொழிலாளர்-விவசாயிகள் நாடு பிற்போக்கான தேசியவாத சக்திகளால் ஆளப்படும் நாடாக மாறிவிட்டது. வர்க்கப் போராட்டத்தின் இருப்பை நாம் அங்கீகரிக்க வேண்டும். பிற்போக்கு வர்க்கங்களின் மீட்சிக்குரிய சாத்தியம் உண்டு என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்” என மாஒ கூறினார். புரட்சிக்குப் பிந்திய சீனத்தில் பிற்போக்கு வர்க்கங்களின் மிச்ச சொச்சங்கள் இருக்கிறதென்றும், அவர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறனர் என்றும் மாஒ கட்சியினரை எச்சரித்தார். அவர்கள் பொதுவுடமைக் கட்சிக்குள்ளே முதலாளியப் பாதைக்கு இட்டுச் செல்லும் சிந்தனையாளர்களாக இருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார். நிலைமைகள் சாதகமாகக் கனிந்தவுடனே இவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி பாட்டாளி வர்க்க சர்வாரகாரத்தை முதலாளி வர்க்க சர்வாதிகாரமாக மாற்றிவிடுவர் என்றும் மாஓ முன்னுணர்ந்து கூறினார்.
சோசலிஸ் சமூதாயத்தில் முதலாளிய மீட்சிக்கான அபாயத்தை வலியுறுத்திய தலைவர் மாஓவின் கருத்துக்கள் மறுக்கப்பட்டு நவீன கருத்துக்களை முன்வைத்து, சீனாவை முதலாளிய பாதைக்கு வித்திட்டதைக் கண்டுணர்நத சின்னத்தம்பி, சீனாவை விட்டு வெளியேறினார்.
எனினும் "புரட்சியை நேசிக்கும் மக்களால் முதலாளியம் மீண்டும் தூக்கியெறியப்படும் - அடுத்த பரம்பரையினரான நம் பேரக்குழந்தைகள் புரட்சியில் உறுதியாக எழுந்து நின்று தம் தந்தையரைத் தூக்கி எறிவர்” என்ற மாஓவின் கூற்றில் நம்பிக்கை வைத்து நாடு திரும்பினார்.
தம்பி நாடு திரும்பியபோது இலங்கையின் அரசியல் நிலைமையும் படுமோசமாக இருந்தது. இனவாதம் அதன் உச்சக்
26

கட்டத்தை அடைந்திருந்தது. டி.எஸ். சேனநாயக்கா காலம் தொடக்கம் பண்டார நாயக்காக்கள் காலம்வரை இலங்கை அரசுகள் தமிழர்களுக்குத் திட்டமிட்டுச் செய்த, மலை நாட்டுத் தமிழர்களுக்குப் பிரஜா உரிமை அற்றவர்களாக்கல், சிங்கள மக்களைத் திட்டமிட்டுத் தமிழ் பிரதேசங்களில் குடியேற்றல், கல்வியில் தரப்படுத்தல், தமிழர்களுக்கு எதிராகத் தூண்டப்பட்டுத் தூபமிடப்பட்ட இனக்கலவரங்கள், கொலைகள், இராணுவ நடவடிக்கைகள், போர்கள் அனைத்தும் இலங்கை அரசின் இன மேலாதிக்கத்திற்கான இனவாதமாகும். இவற்றினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வெவ்வேறு அணிகளில் சேர்ந்து தமிழ் மக்களை இந்த அடக்குமுறையிலிருந்து விடுதலை அடையச் செய்யப் போராடத் தொடங்கினார்கள். படிப்படியாக இது தனித் தமிழினத்தின் போராகிவிட்டது. இக்காலகட்டத்தில் பாட்டாளிமக்கள் புரட்சிக்கான கருத்துக்கள் தாக்கம் பெறவில்லை. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இடதுசாரி இயக்கங்கள் இயங்க இயலாமலும் போய்விட்டது. அரசின் சிங்கள இனவாதமும் அதற்கெதிராக, தமிழ் மக்களின் இன எதிர்ப்புமே மேலோங்கிற்று, அரசின் வன்செயல்களும், இராணுவ நடவடிக்கைகளும் அதற்கு மறுதலிப்பாக தமிழீழ விடுதலைப் போராட்டமுமே வளரத் தொடங்கின. இதனால் பாட்டாளி மக்களின் குரல் ஓங்க முடியவில்லை. மார்க்சிஸ், லெனினிஸ், மாஒசேதுங்கின் சிந்தனைகள் வளர சாதகமான நிலைமை இல்லாது போய்விட்டது. பேர்மிங்காம் பாட்டாளி வர்க்க இசைக்குழுவினர் பாடிய
நமது தேசம் வலிமையானது
நமது தேசம் இளமையானது
அவனது,
மகோன்னதமான பாடல்கள்
இன்னும் இசைக்கப்படவே இல்லை
ஏமாற்றுதலிலிருந்து
வெறுங் கோவத்திலிருந்து
கொலைகாரர்களிட மிருந்து
கொலைத் தண்டனையிலிருந்து
மக்கட் பதர்களிலிருந்து
சந்தேகத்திலிருந்து
நமது பாடல்
விடுபட்டு மீண்டும் வரும்
27

Page 19
என்னும் கிளாரியனின் பாட்டாளிவர்க்க விடுதலைக்கான கீதம் தரும் மனந்தளரா நம்பிக்கையோடு தம்பி தனது பணியைத் தொடர்ந்தார். ஈழத்தில் மக்கள் படும் துயரங்கள், வேதனைகள், கஷடங்களைக் கண்டறிந்த தம்பியின் பொன்னான மனது அவர்களுக்காக வேதனைப்பட்டது. தினம் தினம் நெருடிக் கொண்டிருக்கும் கொடுவினைகள் மக்களைப் பீடித்திருக்கும் பயங்கரமான நிலைமைகளிலிருந்து விடுதலையடைய மக்களின் சிந்தனா சக்தியைத் தூண்டுவதே அவரது பாரிய பணியாகக் காணப்பட்டது. பாட்டாளி மக்களின் தோழனான அவர் பாமர மக்கள் உய்த்துணரக்கூடிய வகை இலக்கியப் படைப்புக்களினால் அவர்களிடம் விளிப்புணர்வைத் தூண்டும் முயற்சியினைக் கைக்கொண்டு வந்தார். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களைக் கண்டு துக்கித்து மனக்கண்முன்னே குருதி பெருக உணர்வலைகளில் தத்தளித்ததன் விளைவே அவரது உடல் நிலை நலிவடையக் காரணமானது.
பழகியோரைப் பரவசப்படுத்தும் பண்பாளனான தம்பியுடன் சேர்ந்தவர்கள் அனைவருமே அவரது மனதைப் புரிந்துகொள்வர். இளகிய மனம் படைத்த தம்பியின் பிரிவு மிகுந்த வேதனையைத் தருவது இயல்பே. அவருடன் பழகிய இனிய நினைவுகள் கண்ணிர்ப்பிரவாகமாக கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மடை திறந்த வெள்ளமாகப் பீறிட்டுப் பாய்கின்றது. அவருடன் பழகிய எமக்கு இந்தநிலையாயின் அவரது அருமை மனைவி, பிள்ளைகளின் துயரம் சொல்லும் தரமன்றோ! ராணி ரத்தினதேவி உண்மையிலேயே அவரது இதயம்கவர்ந்தவர்தான். இலட்சியத் தம்பதிகளாக தாம்கொண்ட கொள்கைக்காக தியாகங்களைச் செய்து தம்மை அர்ப்பணித்த குடும்பத்தினர். அவர்களின் வாழ்க்கைப் பாதை எமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்!
க. கந்தசாமி
28

அவன்வழி மலர வைப்போம் மொதவுடமைச் சமுதாயம்
பாட்டாளி படும்பாட்டைப் பார்த்துமாங்கே
வீறுகொண்டெழுந்தே சாய்த்தார் பாராண்ட நயவஞ்சக ஏகாதிபத்தியம் மாழ
பாமரரை உய்விக்கும் மார்க்ஸிசத்தை பாட்டாளி குருதிச் சேற்றில் உவகையாக
இன்பம் காணும் முதலாளி வர்க்கம் சாய பார்வியக்கும் ஒக்டோபர் புரட்சிக் கீற்றில்
இன்மனதைப் பறிகொடுத்தி மாமனிதன்!
அடக்குமுறை ஒடுக்குமுறை நலிந்தே ப்ோக
அடகுவைத்த ஏகாதி பத்தியம் மாழ அண்டமெலாம் சமதர்மப் பெருவெள்ளம்,
அருவியாகப் பாய்ந்தோட வழி சமைக்க அன்புடனே தொழிலாளர் நலன் காக்க
அன்புத் தம்பி சித்தம் கொண்டே லெனின் கொள்கைத் திறன் காத்து
அகலும் வரை உழைத்த மாமனிதன்!
மார்க்ஸிய கொள்கைக்காக சாகும்வரை பலபணிகள்
மாய்ந்தே செய்த மாமனிதன் இவனன்றோ மார்தட்டி எம்மவர்க்கும் கொள்கை தந்தோன்
மானிலத்துத் துன்பங்கள் தனதேயாக வரித்தே மாவோவின் வழி வந்த கலாச்சாரப் புரட்சி
மாமனிதன் இவன் பார்த்தே கருத்துான்றி மானிடனே கேண்மின் என இடித்துரைத்தோன் மாநிலம் போற்று கின்ற சின்னத்தம்பி!
மாஞாலம் உய்ய விதைத்த வித்து தன் வாழ்வில்
மாசின்றி கடைத்தேறி வந்தோன் தம்பி மாவோவின் சமதர்ம நெறி என்றே வாழ்வை ஆக்கி
தொழிலாளி ஆசிரியனாய் வீதியிலே வினியோகித்து புதியபாதை எமக்கென்றும் வழி சமைக்கக் கருத்தாய்
புத்தாக்கம் தற்றுணிவில் தந்து நின்றோன் புதுமை காண விரைந்து நின்றோன் சமுதாயச்
சீரழிவைச் சாடிநின்ற மாமனிதன் தம்பியன்றோ!
29

Page 20
வானொலியில் தமிழிழினிலே சமதர்மம்
வாயார உரைத்தே சீனதேச பீக்கிங் வானொலியில் பதினாறாண்டு காலம்
சுரண்டலில்லா சமுதாயம் மலரவேண்டி சாமானியர் சரித்திரங்கள் படைக்கும்
சமதர்மம் அல்லும்பகல் விதைத்தே சாய்ந்திருந்த கொள்கை வழி வாழ்ந்த செம்மல்
மாமனிதன் சின்னத்தம்பி நாமம் வாழ்க!
மாமேரு சாய்ந்த செய்திப் புயலாக
சார்மன்னன் வீழ்ந்த வெற்றி பார்போற்ற இசைத்தென்றல் தந்த
பாவேந்தன் பாரதியின் அடிமையாளன் பாரதிநேசன் என நாமம் கொண்டே
பொதுவுடமைக் கொள்கை விட்டோர் பார்த்தே சாடி சலிப்பின்றித் தன்கொள்கை
தனிவழியாய்க் கொண்ட மாமனிதன்!
இலட்சியங்கள் உதட்டினிலே அங்கொன்றும்
இங்கொன்றும் பிதற்றும் பித்தலாட்ட பிசாசு இலங்கை தன்னில் இலட்சியமே என்உடலம்
உள்ளவரை உழைப்பேன் என்றே உறுதிபட வாழ்ந்த மாமனிதா உன் உறுதி
எம்மவர்க்குப் படிப்பினையே காண்பார் உறுதிபட வாழும் வழி பொதுவுடமைச் சமுதாயமே
உடும்புப்பிடி கொள்கை கொண்ட மாமனிதன்!
மரணங்கள் மலிந்து விட்ட மானிலத்தில்
மாசின்றி நின்றாய் குருதி ஆற்றில் மரணவேதனையே தினம் கொண்டார் உணர
மாக்ஸிசம் விதைத்தே வந்தாய் என்றும் மானிடரே உணர்ந்தே உந்தன் கொள்கை வழி
மானிலத்தே பொதுவுடமைக் கொள்கை மலரவைத்தே பார்த்திடுவார் உறுதி கொள்வாய்
மானிடரை உணரவைத்த மாமனிதன் நீயே!
த. சிவபாலு
30

பாசம் நிறைந்த அணினர் பெருமலையாய் சரிந்தார்
எமது தாய், தந்தையர் பத்தினி, வீரகத்தியும், அவர்களது மூத்த வழியினரும் அன்பும், பண்பும், நேர்மையும், கடின உழைப்பும் உள்ளவர்களாய், அயலவர்கள், சுற்றத்தார்களால் மதிக்கப்பட வாழ்ந்தார்கள். குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்த எனது அண்ணர் சின்னத்தம்பி சுற்றத்தார்களுக்கும் அயலவர்களுக்கும் செல்லத்தம்பியாக விளங்கினார். எமது அண்ணரும் நல்ல குணங்களைப் பெற்று பண்பாளனாக ஸ்வரும் போற்றும் வகையில் வளர்ந்து வந்தார்.
எமது குடும்பத்தின் பிரதான தொழில் விவசாயம். கரவெட்டி கிழக்கின் மண்வளமும் நீர்வசதியும் விவசாயத்தை தொழிலாகக் கொண்டவர்களுக்கு ஒரு சவாலாகவே இருந்தது. இதன் காரணமாக எமது பெற்றோர் விளைநிலங்களில் அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது. தொழில் வசதிக்காக ஊரின் எல்லையில் இருந்த எமது இல்லத்திலிருந்து அண்ணர் பாடசாலைக்கு நீண்டதூரம் நடந்து சென்றார். எமது தாய்வழி பேரன், பேத்தியரான கதிர்காமுவும், வள்ளிப்பிள்ளையும் எமது அண்ணருக்கு கல் விக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். எமது அண்ணர் மிகவும் அறிவாற்றலும், புத்தி கூர்மை உள்ளவராயும் இருந்தார். இதை கருத்திற் கொண்டு கற்பித்த ஆசிரியர் ஒருவர் தான் எமது அண்ணரை பொறுப்பு எடுத்து மேற்படிப்பு வரையும் கற்பித்து விடுவதாக அனுமதி கேட்டு முன்வந்தாராம் என்றும் எமது தந்தையார் கூறினார். எமது அண்ணர் நன்கு கற்க வேண்டுமென எமது தந்தையாரே அவரை அவ்வவ் வகுப்பிற்கேற்ப வெவ்வேறு பாடசாலைகளில் பிரவேசங்களை எடுத்துக் கொடுத்தார். அண்ணர் படிக்கும் பொழுதே அரசியல் சிந்தனையில் ஈடுபட்டிருந்ததனால், ஹாட்லிக் கல்லூரியில் படிக்கும் போது மதிய உணவிற்காக கொடுத்துவிட்ட பணத்தை தான் சாப்பிடாமல் பத்திரிகை வாங்கி வாசித்தார் என, எங்கள் பேத்தியார் அக் காலத்தில் கூறிக் கவலைப்பட்டார்.
எமது அண்ணருக்கு அடுத்ததாக கண்ணம்மா, இலட்சுமி என்ற இரு அன்புத் தங்கைகளும், அதன் பின்பு கனகசபை, இராசரத்தினம் என்று இரு அன்புத் தம்பிகளும் பிறந்தோம். அண்ணருக்கும் கனகசபையாகிய எனக்கும் 42வருடங்கள் வயதில்த்
31

Page 21
வித்தியாசம், நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது அவர் அன்பாக பாடசாலைக்கோ வேறு இடங்களுக்கோ என்னை அழைத்துச் செல்லும்போது அவரது சினேகிதர்கள் சின்னத்தம்பியும் அவரது சின்னத்தம்பியும் வருகிறார்கள் என்று வாஞ்சையுடன் சீண்டுவது இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது. எமது அண்னர் வீட்டில், பல பாடல்கள் கொண்ட புத்தகங்களை மிகவும் உற்சாகத்துடன் உரத்த சத்தத்தில் படிப்பார். பாரதியார் பாடல்களைத்தான் அப்படியாக ரசித்து அனுபவித்து படித்திருக்கிறார் என்பதை இப்பொழுதுதான் உணர்கிறேன். இவரின் கொள்கைக்கு ஒத்தவர்கள் நண்பர்களாக இருந்ததோடு கருத்திலும் கொள்கையிலும் வேறுபட்டவர்களும் நண்பர்களாக இருந்தார்கள் அவரது மேம்பட்ட குணநலன்களினால்தான் அது சாத்தியமாயிற்று என்பது நன்கு புலனாகிறது.
எமது குடும்ப பொருளாதார நிலையினாலும், குடும்பம் வளர்ந்ததனாலும் பொறுப்புக்களை நன்கு உணர்ந்த மூத்த புதல்வனாகையால், திறமையிருந்தும் பல்கலைக்கழகம் சென்று மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முன்னரே, எமது அன்னர் அந்நாள் ஹாட்லிக் கல்லூரி அதிபர், காலஞ் சென்ற திரு. பூரணம்பிள்ளை அவர்களின் ஆலோசனைப்படி வேலையொன்றை பொறுப்பேற்று, கொழும்பிற்கு பயணமானார். அதன்பின் 1966ம் ஆண்டு அவரது அரசியற் குருக்களில் ஒருவரும், முன்னாள் சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி பொதுக் காரியதரிசியுமான காலஞ்சென்ற திரு. சண்முகதாசனும், கட்சி அங்கத்தினரினதும் தெரிவில், பீக்கிங் வானொலியில் பணியாற்ற சீனாவிற்கு சென்றார். 1969ம் ஆண்டிலும் அதற்கு முன்பொரு தடவையும் விடுமுறையில் சீனாவிலிருந்து வந்திருந்தார். இந்த இடைக்காலத்தில் அவரது மூத்த தங்கை கண்ணம்மாவின் திருமணம் நடந்தேறியது.
சீனா திரும்பி சென்ற அண்ணர், தை மாதம் 30ம் திகதி 1970ம் ஆண்டு அந்நாட்டு வழமைப்படி அண்ணி ராணியை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். மார்கழி மாதம் 19ம் திகதி, 1970 இல் பெற்றெடுத்த பெண் குழந்தைக்கு சீனோதயா (சீனா உதயா) என்று பெயர் சூட்டினார்கள். எதையும் காரணத்துடனும் அர்த்தத்துடனும் சிந்தித்துச் செயற்படும் எமது அண்ணரும் அவருக்கேற்ற அண்ணியாரும் சீனாவில் பிறந்த காரணத்தினால், அப் பெயரை சூட்டியதாக விளக்கியிருந்தார்கள், சினோதயா
32

2.

Page 22
FRERAS KEEZj
闇
T
RINN
மணிவிழாவில் தாயார், மனைவி, மக்கள், மருமகனுடன்
 
 

விரகத்தி, கார்த்திகேசன் இரு குடும்பத்தினர்க்கும் பிறந்த முதல் பேத்தி, மிகவும் அருமை பெருமையாக விளங்கினார். அதைத் தொடர்ந்து அவர்கள் விடுமுறை விஜயம், சீனப் பொம்மை போல் அழகிலும், குழந்தையானாலும் சீமாட்டி போல் பேச்சிலும் (தமிழ், சீனம் இரு மொழிகளிலும்) இருந்த சீனோதயாவை மையமாக வைத்தே அமைந்திருந்தது. இரு குடும்பத்தினர்க்கும் அது பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, சிறு குழந்தையான சினோதயா தனது தந்தை, தாயாரைப் போலவே எல்லோருடனும் அன்பாகப் பழகியதும், பேசியதும் சுற்றத்தார், அயலவர்களைக் கவர்ந்ததும் ஆயுளுக்கும் மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருந்தது. அவர்கள் குடும்பம் ஒருதடவை சீனாவில் ஏற்பட்ட பூமி நடுக்கம் அனுபவத்திற்கும் உள்ளாகியது.
அதன் பின்பு 1974ம் ஆண்டு மார்கழி மாதம் 17ம் திகதி சிறிஉதயா பிறந்தார். அவரும் சீனாவில் பிறந்திருந்தாலும், தாம் பிறந்து வளர்ந்த நாட்டை நினைவுகூர பெற்றேர் அவ்வாறு பெயர் சூட்டினார்கள். சிறீஉதயாவும் தனது அக்காவிற்கு சோடை போகாமலும், தனது அப்பாவைப் போல் பாட்டுகள், நடனங்களிலும், சித்திரம் வரைவதிலும் திறமையாக இருந்தார்.
பிக்கிங் வானொலியில் கடமையாற்றிய போது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு 1981ம் ஆண்டு பீக்கிங் பிரதிநிதியாக அவரது பாரியாருடன் வரவேற்கப் பட்டு, மாநாட்டிலி உரையுமாற்றினார். அது எமது தந்தையாருக்கு மிகவும் பூரிப்பை ஏற்படுத்தியதல்லாமல் அதிகப்படியாகவே அதையிட்டு எல்லோருக்கும் தம்பட்டம் அடித்தார் என்றாலும் மிகையாகாது. அன்ைனர் இலங்கையிலும் சீனாவிலும் சேவையாற்றிய வேளையில் எமது கரவெட்டியிலுள்ள வீட்டை கட்டி முடிக்கவும், தனது தங்கையினரின் திருமணத்திற்கும், தம்பியரின் கல்விக்கும் உதவியாக இருந்தார்.
இரண்டாவது தங்கை இலட்சுமி 1979ம் ஆண்டு திருமணம் செய்தார். மூத்த தம்பியாகிய நான் இவரின் உதவியால் படித்து, நிலஅளவையாளரானேன். இலங்கை, புறூனாய் (Brunai) ஆகிய இடங்களில் கடமையாற்றி, 1980ல் திருமணம் செய்து, தற்போது கனடாவிற்கு குடும்பத்துடன் குடிவந்துள்ளேன்.
கடைசித்தம்பி இராசரத்தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்று விஞ்ஞானப் பட்டதாரியானார். இவர் கடைசித் தம்பியாதலால் அண்ணருக்கு இவர் மேல் அலாதிப் பிரியம்.
35

Page 23
தம்பியின் போக்குகளைப் பார்த்து ரசிப்பார். தம்பி இராசரத்தினமும் எம்மைப் போலல்லாது சிறிது வேறுபட்டேயிருந்தார். இவர் கண்டி மாவட்டத்திலுள்ள மாவனெல்ல ஸாகிராக் கல்லூரியில் ஆசிரியராகத் தொழில் புரிந்து, தற்போது அதே மாவட்டத்தில் சேவைக்காலப் பயிற்சி ஆலோசகராகப் பணிபுரிகிறார். எந்த சகோதர, சகோதரியினது திருமணத்திலும் பங்குபற்ற முடியாத அண்ணர், ஏற்கனவே சீனாத்தொழிலை கைவிட்டு நிரந்தரமாக இலங்கை வந்து சேர்ந்ததனால், 1985ம் ஆண்டில் நடைபெற்ற தம்பி இராசரத்தினத்தின் திருமணத்தை குடும்ப சமேதராக முன்னின்று நடத்தி வைத்தார்.
1976ம் ஆண்டில் எமது அண்ணர் சீனாத்தொழிலை தொடர, அவரது மனைவி ராணியும் குழந்தைகளும், நீண்டகால திட்டங்களுடன் அனைவரும் இலங்கையில் வாழ்க்கையை தொடர என்று, அண்ணி ராணியின் சொந்த ஊரான வட்டுக்கோட்டையில் வந்து தற்காலிகமாகத் தங்கினார்கள். இந்த இடைக்காலத்தில் அண்ணி ராணியின் தந்தை மு. கார்த்திகேசன் காலமானார். இந்தச் சம்பவமும், இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வேறு நிகழ்ச்சிகளும் அண்ணரின் வாழக்கையின் சில திருப்பு முனைகளை ஏற்படுத்தின.
ஏற்கனவே சீன அரசியலில் ஏற்பட்ட, அவரால் ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களும், அண்ணி ராணியினதும், அவர்களினதும் குடும்பச் சூழலும், தான் நிரந்தரமாக நாடு திரும்பும் வேளை வெகு தூரத்தில் இல்லை என்று எண்ண வைத்து, ஏற்கனவே மேற்கொண்ட சில விஜயங்களின் போது அண்ணி ராணியின் உறவினர்களின் அன்பைப் பெற்றிருந்ததாலும் தன்னிடமிருந்த சிறிய சேமிப்பில் தனது குடும்பத்திற்கென வட்டுக்கோட்டையிலேயே வீடொன்றை வாங்கினார். அதைத் தொடர்ந்தும் ஓரிரு தடவை சீன விஜயம் செய்து தொழில் பார்த்து, 1982ம் ஆண்டு அத்தொழிலை கைவிட்டு வட்டுக்கோட்டையில் நிரந்தரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். V
வட்டுக்கோட்டையில் வாழ்ந்தாலும் அவர் சொந்த ஊரான கரவெட்டியையோ, உறவினர்களையோ, அயலவர்களையோ நண்பர்களையோ மறக்கவில்லை. எல்லோாருடனும் அன்பாகப் பழகுவார். இடையிடையே ஒவ்வொருவரினதும் பிரிவும் ஏற்படும் போது தாங்க முடியாது மனம் நெகிழ்ந்து கண்ணிர் விடுவார். தனது அன்புச் சகோதரி கண்ணம்மாவிற்கும் அவர் கணவர்
36

செல்லத்துரைக்கும் வெகுகாலத்தின் பின்புதான் ஒரு மகன், சிரீராம் பிறந்தான். அதையொட்டி எவ்வளவு மகிழ்ச்சியடைந்தாரோ, அதேயளவு எமது தந்தை வீரகத்தி 1985ம் ஆண்டு காலமாகும் போதும், எமது சகோதரி இலட்சுமியின் கணவர் இராசதுரை அண்மையில் காலமாகும் போதும் துயருற்றார்.
நீண்ட காலத்தின் பின் கனடாவிலிருந்து எனது மனைவி யோகேஸ்வரி, புதல்வியர் அனுஷா, நர்மதா ஆகியோருடன் சென்று பார்த்து வந்தது எனக்கு ஒரு மன நிறைவைத் தந்தது. அதுவே எனது புதல்வியருக்கு வளர்ந்ததன் பின்பு அம் மாமனிதரை சந்திக்க கிடைத்த ஒரே அரிய வாய்ப்பாகும். அவருக்கு சகோதரி இலட்சுமியால் விதுரன், பாமா என்று இரு மருமக்களும், தம்பி இராசரத்தினம், ராஜினி தம்பதியினரால் கிருஷிகா, ஆர்த்திகா என்று இரு பெறாமகள்மாரும் உள்ளனர்.
அவருக்கெடுத்த 60வது ஆண்டு மணிவிழாவில் கலந்து கொண்டு, தன் மகனை கற்றறிந்தி பெரியோர்கள் கெளரவப்படுத்தியதைப் பார்த்தும், கேட்டும் எமது தாயார் மகிழ்வில் பூரிப்படைந்தார். ஆனால் மகிழ்ச்சி நிலைக்கவில்லை. எம்மைப் பொறுத்த வரையில், பெருமலையே சரிந்து விட்டது. இவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
அண்ணி ராணி சமூக அபிவிருத்தி பணியாளராக கடமையாற்றி, தற்போது திட்டமிடல் அதிகாரியாக சங்கானை உதவி அரசாங்க அதிகாரி செயலகத்தில் பணியாற்றி வருகிறார். மூத்த புதல்வி சீனோதயா யாழ். மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று யாழ். வைத்தியசாலையில் கடமையாற்றி வருகிறார். அவர் தன்னோடு யாழ். மருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்றவரும் அவருடன் கடமையாற்றுபவருமான திருகோணமலையைச் சேர்ந்த குணரட்ணம் என்பவரை இவ்வாண்டு கடந்த மாசி மாதம் 10ம் திகதி திருமணம் புரிந்தார். புதல்வி சிறீஉதயா, முன்பு கொழும்பில் கல்வி கற்று, தற்போது இங்கிலாந்திற்கு கணக்காளராகக் கற்க சென்றிருக்கிறார். இவர்களை எமது அண்ணரின் இழப்பு பெரிதும் பாதித்திருக்கும். அதேவேளை அவர் விட்டுச் சென்ற தடயங்கள் மிகவும் பெருமை தரக் கூடியன. அவையே அவர்களுக்கு மன ஆறுதலை அளிக்க முடியும்.
எமது அண்ணரின் இனிய நினைவே எம் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்.
வி. கனகசபை, சகோதரனர்
37

Page 24
எமது மைத்துனர் 'தம்பிமாமா'
மைத் துனர், மாமா என்றதும் முறைப் பெண்ணைக் கட்டிக்கொண்டவர் என்று பலருக்கும் எண்ணத் தோன்றும். இதற்கான சரியான விளக்கத்தை வாசகர்களுக்கு அளிக்காமல், கட்டுரையை மேலும் தொடர்வதில் அர்த்தமில்லை.
அரசியல் கட்சித் தொடர்புகளினால் வீசின்னத்தம்பி சீனாத்தம்பியாகும் வரை எமது தந்தையார் மு.கார்த்திகேசனுக்கு ஏற்கனவே நீண்டகாலப் பரிச்சயமானவர். ஆனால் எனது மூத்த சகோதரி ராணி மொழிபெயர்ப்பாளராக சீனாவிற்கு சென்ற பின்னர்தான், வீசின்னத்தம்பி சக இலங்கையர் "தம்பி" யாக கடித மூலம் எமது ஏனைய குடும்பத்தினர்க்கு அறிமுகமானார். அவர் ஒருதடவை சீனாவிலிருந்து விடுமுறையில் வந்திருந்தபோது, எமது இல்லத்திற்கு விஜயம் செய்தார். அவ்வேளை எமது பால்ய சகோதரி, சுமதி சிறுபிள்ளையாதலால் அவளுக்கு சீனாத்தம்பி "தம்பிமாமா" என்று அறிமுகப்படுத்தப்பட்டார். எமது வீட்டில் ஏற்கனவே, எமது தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரன், கணேஷ்வரன் எமது தந்தையாலும் அதனைத் தொடர்ந்து வயதுபேதமின்றி யாபேராலும் "தம்பி" என்று அழைக்கப்பட்டதால், இந்தத் தம்பியை அந்தத் தம்பியிடமிருந்து வேறுபடுத்த, நாமும் பால்ய சகோதரி, சுமதி போலவே வயதுபேதமின்றி "தம்பிமாமா" என்று நேரடியாக அழைக்காவிட்டாலும், சீனாத்தம்பியை "தம்பிமாமா" என்று குறிப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோம். தம்பிமாமாவின் அந்த விஜயம் விஷயத்துடன்தான் என்று நாம் புரிந்து கொள்ள அதிக காலம் எடுக்கவில்லை. அதே "தம்பிமாமா" சீனாவில் எமது மூத்த சகோதரி ராணியை கைபிடித்து, எமக்கு மைத்துனரானார். ஆனால் தம்பியோடு ஒட்டிக்கொண்ட மாமாவை நாம் கைவிடவில்லை. தம்பிமாமாவை திருமணம் செய்ததால் எமது அக்கா ராணிமாமி ஆகிவிடுவாவோ என்று எமக்குள் கேலியாகப் பேசிச் சிரித்திருக்கிறோம். இதுதான் கம்யூனிஸ்ட் மு.கார்த்திகேசன் குடும்பத்தின் மாமா-மைத்துனர் கதை.
38

எமது குடும்பத்தைப் பொறுத்தவரை "மாமா"என்ற பதம் சரியாக உறவுமுறையைக் குறிப்பிடாத போதும், பெயரளவில் இல்லாமல் அது அன்புடன் கலந்த மரியாதைக் குரிய இலக்கணமாகவே இருந்தது என்பதில் ஐயமில்லை. அதற்கேற்ப தம்பிமாமாவும் கார்த்திகேசன் குடும்பத்தில் அன்பைச் செலுத்தினார் என்று நிச்சயமாகக் கூறமுடியும். எமது சகோதரி, ராணியை திருமணம் செய்த பின்பு, அவரது சகோதர, சகோதரிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து பத்தாக அதிகரித்தது என்பது உண்மை. அதிகரித்த அறுவரில் ஐவர் ராணியின் ஒரே சகோதரன், அப்புவும் (ஜெகதீசன்), நான்கு இளைய சகோதரிகள் சின்னராசு (மனோரஞ்சிதம்), ஜோதி (ஜீவஜோதி), கிளி (ஜானகி), சுமதி ஆகியோராவோம். ஆறாவது நபர், எமது தந்தையின் இளைய சகோதரி, மணி (ரட்ணவதி), எமது வயதொத்தவர் இளமையில் இருந்தே எம்முடன் கூட்டுக் குடும்பமாகச் சேர்ந்து வாழ்ந்தவர்.
தம்பிமாமா எமது குடும்பத்தின் மேல் வைத்த அன்பினதும் பாசத்தினதும் சாட்சிகள் பல. இளைய சகோதரி சுமதியை "தம்பிமாமா" என்று அழைக்க வைத்ததிலிருந்து தொடங்கி, எமது மூத்த சகோதரி ராணி தனது இளைய சகோதரிகளின் மேற்படிப்பிற்குத் தந்த ஆதரவிற்கு அனுசரணையாக இருந்ததோடு தானும் உதவியாக இருந்தார். அவர்களது குடும்பம் இருமகள்மாருடன் பெருத்துச் சென்ற போதும் எங்களையும் குடும்பமாகவே கருதி எம் அனைவர் மேலும் தொடர்ந்தும் அன்பு செலுத்தி, வேண்டிய பொருட்கள், உதவிகளைச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
இவற்றிற்கும் மேலாக எமது தந்தையார் இறந்தபோது, எனது சகோதரி ராணியும் அவரது குழந்தைகள் இருவரும் வட்டுக்கோட்டையில் வாழ்ந்தனர். அப்பொழுது தம்பிமாமா மொழிபெயர்ப்புக் கடமையைத் தொடர்ந்து செய்து கொண்டு சீனாவில் இருந்தார். எமது தந்தை கார்த்திகேசன் இறந்த செய்தி கேட்டு விண்வேகத்தில் வந்திறங்கியதும், பயணநேரத்தின் பொழுது விட்ட கண்ணிரால் தோய்ந்த கைகுட்டை நிரம்பிய பயணப்பையுடன் வந்து சேர்ந்ததும் ஒரு அசாதாரண அன்பையே வெளிப்படுத்தியது. எமது வலது குறைந்த சகோதரன் அப்பு இன்று உயிருடன் இல்லை. அப்போது எமது தந்தையை "ஐயா" "ஐயா" என்று அழைத்த
39

Page 25
அப்பு, அவர் இறப்பின் Lsl6Í "g5LÓ Lílossud T" "தம்பிமாமா" என்று வாய் ஓயாது அழைக்கும் வண்ணம் அப்பு மேல் தம்பிமாமா அன்பைச் செலுத்தினார். எமது ச கோ த ர னு க கு மட்டுமன்றி அனைத்து சகோதரர்கட்கும் எமது தந்தை இருந்த இடத்தை நிரப்பினார் என்று கூறினால் மிகையாகாது.
தம்பிமாமா எமது |* கார்த்திகேசன்,ஜெகதீசன்,வீரகத்தி | தந்தை (3LD 6ö வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் "மக்கள் நேசன் கார்த்திகேசன்" என்ற பிரசுர வடிவத்தில் வெளிவந்ததை யாவரும் அறிவர். அந்தவேளையில் அப்படைப்பிற்கு எம்மால் பொருளுதவி நல்கும் வாய்ப்புக் கூட கிடைக்கவில்லை. எமது வலது குறைந்த சகோதரன், அப்புவிற்கும், எமது தாயாரிற்கும் சேவைகள் பல செய்தார். அண்மையில் காலஞ்சென்ற எமது தாயாரின் நினைவாக மனதைத் தொடும் கட்டுரையொன்றை மகளிர் தினத்தையொட்டி எழுதிப் பிரசுரித்தார். தம்பிமாமாவின் இறுதிக் காலங்களில் எமது தந்தையின் இன்னோர் சகோதரியான திலகவதி மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கான பராமரிப்புச் சேவைகள் பல புரிந்து கொண்டிருந்தார். இப்படி தம்பிமாமாவின் ‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’.
அவரது பாசக்கரம் எமது குடும்பத்தையும் கடந்து எமது உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், ஊரவர்கள் என்று நீண்டு கொண்டே போயிற்று. புகுந்த வீட்டிற்குப் பெருமை தேடித் தருவது பெண்களுக்கு மாத்திரமே உரித்தானதல்ல, ஆண்களுக்கும் பொருந்தும் என்று நடந்தார் போலும். அது அவரது இறுதிக்காலத்திற்கு சற்று முன்பாக வட்டுக்கோட்டையில் பலரது
40
 

பாராட்டுக்களுடன் அவருக்கென நடாத்தப்பட்ட மணிவிழா மூலம் நிரூபணம் ஆகியது. அவரது மறைவு எமது உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், ஊரவர்கள் அனைவருக்கும் தமது குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்டது போன்ற உணர்வையே ஏற்படுத்தியது.
தம்பிமாமாவின் நல்ல பண்பான குணாதிசயங்களுக்கு வித்திட்டவர் அவரது தந்தையும் தாயும் என்று அவர் தந்தை தாயாருடனும் உடன்பிறந்தவர்களுடனும் பழகிப் பார்த்தவர்களுக்கு நன்கு புரிந்துவிடும். அந்த நல்ல பண்பான குணாதிசயங்களைப் பெற்றதுடன் "பொறுமை" எனும் போற்றப்படக் கூடிய குணத்தை அதிகமாகவே கொண்டிருந்தார். தான் மட்டுமல்ல, சூழ இருப்பவர்களையும் பதட்டப்படாமல் பொறுமையாகச் சிந்தித்து காரியங்களை ஆற்றும்படி கேட்டுக்கொள்வார். அவரது ஆழ்ந்த சிந்தனையும், பொறுமையுடனும் காரிய நோக்கத்துடனும் செயலாற்றும் வல்லமையும், எவரையும் மகிழ்வுடனும் புன்னகையுடனும் வரவேற்று மகிழ்விக்கும் தன்மையும், பிறர் புண்படாமல் பேசும் பக்குவமும் ஒருங்கு கூடி மக்கள் அனைவரையும் கவர்ந்தது நியாயமே. மற்றவர்க்குப் புத்தி புகட்டுவதில் ஒரு ஆசானைப் போல் விளங்கினார்.
தம்பிமாமாவின் இழப்பு எமது குடும்பத்தினருக்கு ஒரு சகோதரனை, ஒரு தந்தையை, ஒரு ஆசானை இழந்ததற்குச் சமானமாகும். அவரை இழந்ததையிட்டு மனம் வருந்துவதை விட்டு, பலராலும் மெச்சப்படும் ஒரு மனிதன் எமது குடும்பத்தில் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டார் என்றும், தனது நல்லியல்புகளினால் எமது வாழ்க்கையிலும் மேம்பாட்டை ஏற்படுத்தினார் என்றும் எண்ணி மகிழவும், பெருமைப்படவுமே பிரியப்படுகிறேன். தம்பிமாமா மற்றவர்க்குப் பயன்படுமென தனது கண்களைத் தானமாக வழங்க ஒத்துக்கொண்டதும், யாழ் மருத்துவக் கல்லூரிக்கு தனது உடலைப் பரிசோதனைக்குக் கொடுக்க ஏற்பாடு செய்ததும், ஆச்சரியத்தைத் தரவில்லை. ஏனென்றால் அவரது நல்ல குணாதிசியங்களுடன், அவர் முன்மாதிரியாக நடப்பவர், முன்னேற்பாடாக நன்கு திட்டமிட்டு காரியங்களை ஆற்றும் வல்லமை படைத்தவர். சமூக வாழ்க்கைக்கு எதுவெல்லாம் அத்தியாவசியம், நன்மை பயக்கும்
41

Page 26
என்று அறிந்து செயலாற்றுபவர் ஆதலால், இந்த ஏற்பாடும் அது போல் ஒன்றாகவே கருதப்படும். ஆனால் துணிந்து அதிகம் யாரும் முன்வராத ஒன்றை செய்ததனால் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.
அவரின் திட்டமிட்டு காரியங்களை ஆற்றும் திறன் அறிந்து, தம்பிமாமாவின் உதவியுடன் அடுத்த வருடம் எமது தந்தை மு. கார்த்தகேசனின் இருபத்துஐந்தாவது (25) ஆண்டு நினைவு தின மலரொன்று வெளியிட அவரையும் எனது சகோதரி ராணியையும் கனடா வரவழைக்க என்று, எனது விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தேன். அவரும் உடனடியாக நாம் விரும்பினாலும் தம்நிலையில் கனடா வருவது எவ்வளவு சாத்தியம் என்று கூறமுடியாமல் இருக்கிறதென்றும், எண்ணிய முயற்சிக்குக் கைகொடுக்கும் வகையில் எவ்வாறெல்லாம் அதைச் செய்யலாம் என்று பல குறிப்புகள் எழுதி அனுப்பியிருந்தார். அவர் காட்டிய ஆர்வத்திலிருந்து அவரது ஈடுபாடும் ஒத்துழைப்பும் எவ்வாறு இருந்திருக்கும் என்று எனக்கு நன்கு புலனாகியது. அது இனிமேல் கிடையாதே என்பது வருத்தம்தான்.
அது மாத்திரமல்ல "ஓ கனடா" வை படைத்த தம்பிமாமா இந்கு வந்திருந்தால் நிச்சயம் இந்நாட்டு அரசியலை நன்கு புரிந்து தெட்டத்தெளிவாக ஜனரஞ்சகமான முறையில் எம்மக்கள் மனதை தொடக்கூடியதாகவும் சிந்தனையை ஊட்டக்கூடியதாகவும் பல கட்டுரைகள் எழுதியிருப்பார். அது எமக்குக் கிடைக்காமல் போனது பற்றியும் மனம் வருந்துகிறேன்.
தம்பிமாமா இன்னும் உயிருடன் இருந்திருந்தால் நாம் பயனடைந்திருப்போம். அவர் ஏற்கனவே பல சேவைகளையும் செய்து பூரணமான தனது வாழ்வை மேலும் சேவைகள் செய்து மெருகூட்டியிருந்திருப்பார். அவர் போல் அதிகம் பேர் பிறப்பதுமில்லை, பிறந்தவர்கள் நீண்டகாலம் வாழ்வதுமில்லை. இழப்பு நம் அனைவருக்கும்தான். அந்தக் கனவான் பெருமையை எமக்கு விட்டு சென்றிருக்கிறார். இந்த நிறைவான நினைவே தம்பிமாமாவின் தாயாரான பத்தினி அம்மாவிற்கும், உடன்
42

பிறந்தோர்க்கும், மனைவியான எமது சகோதரி ராணிக்கும், புத்திரிகள் சீனோதயா, சிறீஉதயா ஆகியோருக்கும் வாழ்க்கையில் பக்கபலமாக இனிமேல் இருக்கும் என்று நம்புகிறேன்.
எமது குடும்பத்தில் அந்நாள் சமூக விதிப்படி தந்தை எனும் ஒரே காரணத்திற்காக எம் அனைவருக்கும் எமது தந்தையார் மேல் இருந்த பயம் கலந்த அன்பினாலும் மரியாதையினாலும் நாம் எவ்வேளையிலும் அவருடன் சகஜமாக உரையாடியதுமில்லை, குறிப்பாக அரசியல் விடயங்கள் பற்றி பேசியதுமில்லை. ஆனால் தம்பிமாமா எமது தந்தையைப் போல் மரியாதையை சம்பாதித்திருந்தும் வயதில் இளையவர் என்ற காரணத்தினால் ஓரளவு சில விடயங்களைப் பற்றி பேசவும் கருத்துக்களைப் பரிமாறவும் சந்தர்ப்பம் கிடைத்தது. இருந்த போதும் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த எமது குடும்பத்தில் அச்சூழலை மிகவும் வாய்ப்பாக அமைத்துக் கொள்ள முடியாமல் குடும்பப் பொறுப்புகள் தலைதுாக்கி நின்றன. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முடியாமல் போனது மிகவும் மனவருத்தமான விடயமே. எமது தந்தை, தம்பிமாமா ஆகியோரின் மறைவின் பினனர்தான் எவ்வாறான அரும்பெரும் பொக்கிஷங்களை அவற்றின் பயனை முற்றுமுழுதாக அனுபவிக்காமல் இழந்து விட்டோமே என்று எண்ணத் தோன்றுகிறது. இருப்பினும் அவர்களால் ஏனையோர் பெற்ற பயன்களே அந்த இழப்பிற்கு ஈடு என்று மனம் ஆறுதலடையும். இருப்பினும் எம்போன்றவள் வருங்காலங்களில் எம் உற்றார், உறவினர், நண்பர்கள் சிறப்புக்களை அறிந்தும் உணர்ந்தும் அவ்வப்போது செயற்படுவது, மனவருத்தத்தை அகற்றுவது மட்டுமல்லாமல் ஒரு சிறந்த மனிதரின் வாழ்க்கையையும் பூரணமாக்கி எமது வாழ்க்கையிலும் நிறைவையேற்படுத்தும்.
மு. கார்த்திகேசனர் குரும்பம் சார்பாக
புதல்வி ஜானகி பாலகிருவர்ணனர்
43

Page 27
,孕 وخمسح . خصصے میرے لھستےمحسلم
ء طے صے ص 2ے سے تک -- قمح
മീe eഭ -- Ž“ من • مجمے کو ہم یہ خبر مجھ/,
سم22
ፉ . سک محی 4 یا محصہ تر سمجبر 2-ef'അഭ سے مجھ محمسمہ سم ശ= گسیمیایسه
--് 3-7 ,4-------އިލް ޕްޕް,"2ތ T"
ഗി-4-ൽ ശില്പ മ MsAge ,4އبم/
w ح We /که عمور - صمصر سمسxaoodAe 4އمي
آسس ہتھہ حصہ نے محسوس
Sampanthar Veethy Vaddu South, Vaddukoddai 13-3-2000
Dear Kili,
We received your letters of Feb. 21 and Feb. 25. Thank you very much. We are delighted over your loving sentiments
expressed in the letters.................
44

About our life here: nothing seems to be changing. We are surrounded and haunted by insecurity in every respect. Anything may happen anytime.
Rani is cycling day in day out to Sandilipay Divisional Secretary's Office and at times to Jaffna town. Healthwise she is OK but gets tired easily. She studies a lot, preparing to any eventuality of a higher administrative post Our cooking is mostly done in the mornings with myself doing the major part of the work. Rani acca (Kunchachi's daughter) brings us morning meals.
As for myself I am quite active inspite of my diabetes and heart ailment. I am somewhat careful about my diet, eating less and using less sugar. The Mani Vizha celebration was really a grand affair. No one, not even the organizers expected such a success. It was an occasion of a grand gathering of writers, university intellectuals and all types of my admirers from all walks of life. I am writing this not out of pride but with a feeling that Service to people and love of people will be appreciated even though belatedly. I am for ever indebted to the organizers of this celebration.
It was followed by another felicitation meeting at Jaffna town, where my friends praised me sky high. Karaveddy people are planning another one, I understand.
As Professor Sanmugathas remarked in the ManiVizha meeting, "Thamby won't be cheated and get conceited by these praises'. But these sentiments expressed the hope the people have on me and make me more prudent. I must exert myself all the time to lead a life useful to others. My friends expect much from me, especially at a time like this. I feel that my responsibilities are greater now.
I hope that you will understand me and not take this as Vain boasting. I am only showing my feelings with one who is nearer to us.
I continue to write articles and interviews to Thinakkural. I have to read and discuss a lot for this purpose. I am also invited for Seminars and lectures. Knowing my limits, I prepare well for these. This practice has given me good results. People
45

Page 28
thirsting for knowledge and rational thinking find them useful. Reading and reasonable knowledge of English are helping me a lot in my endeavours.
Aunt Thilagavathy is still bed-ridden. Her bone fracture is cured........
Sino will be completing her course this year and there won't be much difficulty job-wise. ......
Sri's stay with us was a wonderful occasion........ We are happy that your friends and you are planning to remember Karthigesan master. As time passes on his image and his fame is grounding further and further. I don't know whether Sumathy or Sri send you the cutting of my article for March 8 International Women's Day wherein I made a special reference to your mother. I'll be glad to visit Canada for such an occasion (Karthi's rememberance), but the hurdles are not a few. For both of us to leave the home - this is one of the problems, let us see.
In case you are preparing a booklet in his memory, have you got the articles written about him in Sri Lankan papers after his death? If not you may make an effort to do so. My book is with you, I hope. Plan well and prepare a useful book. Deeply researched history of the left movement in Sri Lanka, history of the workers' struggles in Sri Lanka and even history of the Communist movement in Canada and trade union movement in Canada will be useful. The booklet should anyway take readers to broader horizons. Karthi's dedication to serve the people, his life sacrifices, his deep humanism, his simplicity, his family life should be reflected in the articles. Analytical articles on Marxism and its impact on human thought and actions may be useful. Articles with facts and figures regarding emigrant people all Over the world and Canada may be useful. These are only my suggestions, for your consideration.
Please convey my love to Jothy, Mani and Appan and write to us more often.
Yours affectionately, V. Sinnathamby
46

சமூக சேவையாளர் வீசின்னத்தம்பிக்கான மணிவிழா பற்றி.
'வட்டுக்கோட்டையில் தம்பிக்கு மணிவிழா' "இடதுசாரி பிரமுகருக்கு நாளை மணிவிழா' ‘மூத்த பத்திரிகையாளருக்கு நாளை மணிவிழா'
என்று பல தலைப்புகளில் பத்திரிகை மாறி பத்திரிகையாக இலங்கை இடதுசாரி இயக்கத்தில் நீண்டகாலம் பங்கு கொண்டவரும், மூத்த பத்திரிகையாளரும், முற்போக்கு எழுத்தாளருமான வீ. சின்னத்தம்பி (பாரதிநேசன்) அவர்கட்கு வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியில் மணிவிழா எடுக்கப்படும் எனும் செய்தியை பரபரப்பாக மக்களுக்கு அறியப்படுத்தினார்கள்.
அமரர் வீ. சின்னத்தம்பியின் மணிவிழாவும் எழுத்தாளர் ஒன்று கூடலும் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 23ம் திகதி, 2000 ஆண்டு நடைபெற்றது. விழாவின் தலைவர் தொடங்கி ஆசியுரை, வாழ்த்துரை வழங்குவோர் ஈறாக ஏற்கனவே அட்டவணைப்படுத்தி செய்திகள் யாவும் அறியத்தந்தன. மணிவிழா நிகழ்ச்சி நிரலும் ஏனைய விடயங்களும் இத்துடன் தரப்பட்டுள்ளன.
மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான
திரு.வி.சின்னத்தம்பி அவர்களின்
மணி விழாவும்
எழுத்தாளர் ஒன்று கூடலும்
56)b: 23-01-2000
ஞாயிறு மு.ப. 9.00 மணி
இடம்: வட்டு. மத்தியகல்லூரி
தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
47

Page 29
மணி விழா நிகழ்வுகள்
தலைவர்: திரு. சி. சபாநாதன் அவர்கள் ஆசியுரை: திரு. து. வைத்திலிங்கம்
(மேலதிக அரசாங்க அதிபர்) கலாநிதி. க. குணராசா (செங்கை ஆழியான்) (பதிவாளர்இ யாழ். பல்கலைக் கழகம்) வாழ்த்துரைகள்:
பேராசிரியர் நா. சுப்பிரமணியன் (தமிழ்த்துறை யாழ். பல்கலைக் கழகம்)
கலாநிதி எஸ். சிவலிங்கராஜா (தலைவர், தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம்)
திரு. கா. சந்திரராசா (பிரதேச செயலர் வலி மேற்கு)
திரு.ம. கானமயில்நாதன் (பிரதம ஆசிரியர் "உதயன் சஞ்சீவி")
திரு ந. சிவபாதம் (புத்தொளி)
திரு க. குணேந்திரதாசன் (திட்ட இணைப்பாளர். போருட், யாழ் மேற்கு)
திரு. இ. தவராஜா (தலைவர், அரசாங்க எழுதுவினைஞர் சங்கம், யாழ்ப்பாணம்)
திரு. முருகவேள் (ஒய்வு பெற்ற அதிபர்)
வாழ்த்துக் கவிகள்: கவிஞர் ஜெ.கி. ஜெயசீலன்
மதுரகவி காரை எம்.பி. அருளானந்தம்
கெளரவம்: துணைவியூர் கேசவன் பதிலுரை: "விழா நாயகன்"
48

ஆய்வரங்கு
*தமிழ்மொழி கற்பித்தலில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்”
தலைவர்: பேராசிரியர் அ. சண்முகதாஸ்
(பீடாதிபதி உயர்மட்டப் படிப்புக்கள் பீடம் யாழ். பல்கலைக் கழகம்)
ஆய்வுரைகள்
கலாநிதி சபா. ஜெயராஜா (தலைவர். நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கல்வியற்துறை யாழ். பல்கலைக்கழகம்)
கலாநிதி நா. தணிகாசலம்பிள்ளை (மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் யாழ் மாவட்டம்)
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் (வருகை விரிவுரையாளர், பல்கலைக்கழகம் ஜப்பான்)
திரு.செ.திருநாவுக்கரசு M.A. (விரிவுரையாளர், ஆசிரியர் கலாசாலை கோப்பாய்)
திரு பொ. அருந்தவநாதன் B.A. (Hons) (விரிவுரையாளர், யாழ்ப்பாணக்கல்லூரி)
கலந்துரையாடல்
இங்ங்ணம் விழாக் குழுவினர்
49

Page 30
பத்திரிகையாளர் திரு வீ. சின்னத்தம்பி அவர்களின்
வாழ்வுக் குறிப்புக்கள் பிறப்பு 25.05.1939 இடம்: கரவெட்டி, வடமராட்சி கல்வி: திரு. இருதயக் கல்லூரி, விக்னேஸ்வராக்கல்லூரி
ஹாட்லிக் கல்லூரி. முக்கியபணிகள்:
• “கம்யூனிஸ்ட்" இயக்கவாதி தொழிற்சங்கவாதி
• பத்திரிகையாளர் 1958-1963 ஆசிரியர்குழுவில் “தேசாபிமானி"
(கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகை) 1962-1964 ஆசிரியர் "யுவசக்தி" (கம்யூனிஸ்ட் கட்சி
வாலிபர் சங்க இதழ) 1963-1966 ஆசிரியர் குழுவில் "தொழிலாளி" (கம்யூனிஸ்ட்
கட்சி சண் பிரிவு) 1982-1983 ஆசிரியர் "மக்கள் இலக்கியம்" (மாதஇதழ்) 1986- இணையாசியர் திருஞானசம்பந்த வித்தியாசாலை
மணிவிழா மலர் 1987-1995 உதவி ஆசிரியர் "உதயன்” பத்திரிகை எழுத்தாளர், கட்டுரை எழுத்தாளர் 1960-1961 Tribune 1966-1982 தினகரன் (ஈழத்தம்பி என்ற புனைபெயரில்) 1982-1995 வீரகேசரி (புதினப்பிரியன்), ஈழநாடு, முரசொலி,
Island, Lanka Guardian, Hot Spring 1996 - இன்றுவரை தினக்குரல் (பாரதிநேசன், புதினன்)
‘கலைக்கதிர்', 'தினமணிக்கதிர்', ‘நவீனம்", “g5Lóp(ypogaja”, “Malayan Bulletin” (3L JT6öAmg60 ஒலிபரப்பாளர் / ஆசிரியர் 1966-1982 பீக்கிங் வானொலியின் தமிழ்ப் பகுதியில் எழுத்தாளர்: " மக்கள் நேசன் கார்த்திகேசன் மாஸ்ரர்
"ஓ கனடா (நாவல்) 9 மொழி பெயர்ப்பாளர் - கம்யூனிஸ்ட் கட்சி, பீக்கிங்
வானொலியின் தமிழ்ப் பகுதி 9 1981 - 5வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்
துணைவியாரோடு பங்கேற்பு
50

அமரரின் மணிவிழாவைக் காணும் அரிய வாய்ப்பினை அவரது தாயாரும், மனைவி மக்களும், மற்றும் சில குடும்ப அங்கத்தினருமே பெற்றிருந்தனர். அவ் வாய்ப்பினை பெற்றவரில் அவரது சகோதரி கண்ணம்மாவின் பதினைந்து வயதான புதல்வன் சிறீராமும் ஒருவர். அவ்விழாவின் நேர்முக வர்ணனையை சுவாரசியமாக அடுத்த நாளே எழுதி கடிதமூலம் விழாவிற்கு வரமுடியாது போன கொழும்பில் இருக்கும் இளைய மாமாவின் குடும்பத்தினருக்கும் தனது ஒன்றுவிட்ட சகோதரனுக்கும் அனுப்பி வைத்தார். பையனின் எழுத்து நடை மூத்த மாமாவிற்கு சோடை போகாதவர் போலவும் வருங்காலத்தில் அவரது இடத்தைப் பிடிக்க முயற்சிப்பவரும் போலவுமுளது. அத்துடன் அன்பும் மாமாவின் பெருமை கண்ட மகிழ்ச்சியும் தென்பட்ட அவரது கடிதத்தின் சுருக்கம் பின்வருமாறு தரப்பட்டுள்ளது: వీ
Periyathoddam
Karaveddy East
Kara veddy
00. 01. 24
அன்புள்ள மாமா, மாமி கிருவுரி ஆர்த்தி, அண்ணா அறிவது, நாம் நலம். உங்கள் நலமறிய ஆவல். நான் வட்டுக்கோட்டையில் மாமா விட்டிலிருந்து இரவு 900 மணிக்கு இதை எழுதுகிறேன் பக்கத்தில் றேடியோ பாடிக்கொண்டிருக்கிறது. மாமா முன்னால் இருக்கின்றார். அக்கா பக்கத்திலிருக்கிறா முத்த மாமியும், சிறீ மச்சியும் சாப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாமாவின் மணிவிழாவிற்கு வந்து தங்கியிருக்க மற்றைய எல்லோரும் திரும்பி விட்டனர், நாங்கள் எல்லோரும் ஒரு வானில் வந்தோம் நான், அக்கா, அம்மா, அண்ணாம்மா, அம்மம்மா மற்றும் பலர் நாங்கள் வட்டு மத்திய கல்லூரியில் வந்து இறங்கிய பின் மிகவும் அழகுற சோடிக்கப்பட்ட மணிவிழா கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம், நாங்கள் சென்று இருந்தபின் மணிவிழா மண்டபத்திற்கு மாமா, மாமி சினோ மச்சி, சிறி மச்சி குணரட்னம் அண்ணா உட்பட பல விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர்.
5.

Page 31
கூட்டத்தில் அம்மம்மா, மாமி விழாநாயகனான மாமா உட்பட பலர் மேடையில் கமரமாக காட்சியளித்தனர். பேராசிரியர் சண்முகதாஸ் அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், மற்றும் பல பெரிய பிரமுகர்கள், எழுத்தாளர்கள் என்று பலர் மேடையில் அமர்ந்திருந்தனர். முதலாவதாக விழாவின் நாயகனான மாமாவைப் பற்றி விழாவின் தலைவர் புகழாரங்கள் கூறினார். பின்பு மற்றும் பலர் முத்த பத்திரிகையாளன் எனவும், எழுத்தாளர் எனவும், தொழிற்சங்கவாதி எனவும், அரசியற்காரன் எனவும் விழாநாயகனான முத்த மாமாவின் பெருமைகளை பற்றி விளாசித் தள்ளினார்கள் அவர் மானிடநேயம் மிக்கவர் என்றும் சிறந்த பண்பாளர் என்றும் பாராட்டினார்கள்.
பின்பு விழா நாயகன் தனது பதிலுரையை கூற வரும்போது க?ருஷ்ணாழி வார் நூற்றாணர்டு விழாச் சபையரினர் சார்பாக ஆறுமுகண்ணையும், பூபாலசிங்கம் புத்தகசாலை சார்பாக ஒருவரும், வட்டு இந்து விழாச்சபையினர் சார்பாக ஒருவரும் விழாநாயகனுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். மேலும் நான், வட்டு மத்திய கல்லூரி மாணவர்கள் உட்பட மற்றும் பெரிய பிரமுகர்கள் விழாநாயகனுக்கு மாலை அணிவித்து கெளரவித்தோம். மொத்தமாக 30 மாலைகள் போடப்பட்டன. முத்தமாமா இவ்வளவு மாலைகளாலும் தலை முடப்பட்டு காணப்பட்டார். உடனேயே சினோ மச்சி கீழேயிருந்து ஓடிப் போய் சிலவற்றை கழற்றிவிட்டு உதவினார். அதற்குப்பின் விழா நாயகன் தனது பதிலுரையை ஆனந்தக்கண்ணிருடன் ஆற்றினார்.
அதைத் தொடர்ந்து கலைப்பீடாதிபதி சண்முகதாஸ் தலைமையில் தமிழ் கற்பித்தலில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி ஆய்வரங்கு நடைபெற்றது. ஆய்வரங்கு முடிந்ததும் விழா நடைபெற்ற பாடசாலையிலே Lunch (Bl-sizg5/.
முத்தமாமாவின் மணிவிழா மிகவும் சிறப்பாக நடந்தேறியது. நாம் அவ்வளவு சிறப்பாக நடக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
இப்படிக்கு, உங்கள் மருமகன், தம்பி &#ImîTITLb
52

அன்பு மருமகனின் விமர்சனம் அவ்வாறிருக்க, விழாவினைத் தொடர்ந்து பத்திரிகை விமர்சனங்களும் ஒன்றுக்கு சளைக்காமல் மற்றது என்று வெளிவந்தன. "சமகால நிகழ்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்” என 27-01-2000 உதயன், (யாழ்ப்பாணம்) பத்திரிகை விமர்சிக்க, ‘சின்னத்தம்பியின் எழுத்தில் நீதியும் நயமும் இணைந்திருக்கும்’ என்று தினக்குரல் அதேநாள் விமர்சனம் அளித்தது. விமர்சனம் யாவும் பின்வருவனவற்றை அடக்கியதாயிருந்தன.
மேலதிக அரசாங்க அதிபர் தன்து ஆசியுரையில் "இவர் சமகால நிகழ்வுகளைக் கட்டுரை வடிவத்தில் வெளிப்படுத்திய சிறந்த கட்டுரையாளர். அத்துடன் கல்விமான்களையும் கலைஞர்களையும் பேட்டி காண்பதில் சிறந்தவர்” என்றும் மேலும் ஆசியுரையில் சமூக நலனுக்காகவும் வறிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்த சமூக சேவையாளர் சின்னத் தம்பி என்றும் கூறி அவரது சமூகப் பணியும் , பத்திரிகைத்துறை சேவையும் மேன்மேலும் தொடர வாழ்த்தினார்.
“முதுபெரும் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சின்னத்தம்பி தான் சார்ந்த அரசியல் கொள்கையில் நிலையாக நிற்பவர். கலாரசனையுடன் தன் எழுத்துக்களை முன்னெடுத்துச் செல்பவர். எப்போதும் நியாயத்தை வலியுறுத்தவதுடன் சொல்லில், செயலில், எழுத்தில் எப்போதும் உண்மை பேசுபவர்” என்று கூறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியரும் தமிழ் இலக்கிய விமர்சகருமான பேராசிரியர். என். சுப்பிரமணிய ஐயர் வாழ்த்துரை வழங்கினார். சின்னத்தம்பியிடம் எப்போதும் தளராத உள்ளமும், மேலும் மேலும் முயற்சிக்கும் குணமும் அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. இன்றைக்கும் தனக்கென ஒரு வாசகர் பரம்பரையை உருவாக்கியது அவரது லட்சியத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி என பாராட்டினார்.
பேராசிரியர் கூறியதை நிரூபிப்பது போல சின்னத்தம்பிதான் பாரதிநேசன் என்று அறியாமலே, அவரது எழுத்தால் கவரப்பட்டு,
53

Page 32
பின்னர் அவரது அன்புக்கு அடிமையானார் என்றார் வலிகாமம் மேற்கு பிரதேசசபைச் செயலாளர் சந்திரராசா, புத்தொளி ந. சிவபாதம் சின்னத்தம்பியின் எழுத்துக்கள் என்னைக் கவர்ந்தவை. அவர் தன்னை உள்ளத்தால் கவர்ந்ததோடு எல்லோரையும் தம் புன்னகையால், கொள்கையால், பேச்சால், எழுத்தால் கவர்ந்து எல்லோர் மனதிலும் நிறைந்துள்ளார் என்று கூறி வாழ்த்தினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் கலாநிதி கந்தையா குணராஜா “சின்னத்தம்பி நல்ல எழுத்தாளர் என்பதை "ஓ கனடா என்ற நாவலே வெளிக்காட்டியது. ஒருவேளை அவர் தொடர்ந்து நாவல்களை எழுதி வந்திருந்தால் நிச்சயமாக சில ஜனரஞ்சகமான எழுத்தாளர்களையே தள்ளி வைத்திருப்பார். அவரது எழுத்தில் நீதியும், நயமும் ஊரும் பாவும் போல் கண்ணுக்குத் தெரியாமல் அமையும். சித்திர வேலைப்பாட்டுடன் கூடிய வணி னப் பட்டா டையாக அவரது எழுத்து அமைந்திருப்பதைக் கண்டிருக்கிறேன்” என்று புகழாரம் சூட்டினார்.
தொழிற்சங்கவாதி இ. தவராசா "ஆரம்பகாலம் முதல் மார்க்சிஸ் சிந்தனையால் கவரப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடி வந்தவர் சின்னத்தம்பி. முதலாளித்துவக் கொள்கையை இன்றுவரை எதிர்த்துப் போராடுவது அவரது இரத்தத்தில் ஊறியதாகும். அவரது வாழ்வின் பெரும்பகுதி பல இடர்கள் மத்தியிலும் தான் கொண்ட இலட்சியத்துக்காக உழைப்பதாக அமைந்தது” என்றார். அவருக்கு மணிவிழா எடுத்தது சாலப் பொருத்தமானதும் அது தமது கடமையும் எனக் கூறினார்.
மணிவிழாவையொட்டி எட்டுத்திக்கிலிருந்தும் வாழ்த்துரைகளும்
வாழ்த்துப்பாக்களும் வந்து குவிந்தன. அவற்றுள் ஒரு சில இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
54

‘மணிவிழா கானுந் தம்பியின் ‘மணியான காலந்” தொடர்ந்திடுக
'தம்பிககு மணிவிழா "செய்தியெட்டுத் திக்குமெட்டக் கொட்டுமுரசே,
செய்தி பல திக்கெட்டு மெட்டதன்பேனாவாற் போர்புரிந்த தோழர் தம்பிக்கின்று ‘மணிவிழா'; அதனாலிச் செய்தியெட்டுத்திக்குமெட்ட கொட்டுமுரசே
புகழ்பூத்த கரவை மண்ணிற் பிறந்து தவழ்ந்து
ஈழத்தில் சீனத் திருநாட்டில் சேவை பல புரிந்து "கொமியழனிசக் கொள்கையொடு செழுந் தமிழிற்காய் உழைத்து நிறைபணிபல புரிந்துயர்ந்து,
இன்று
'மணிவிழா'க் காணும் “சின்னத்தம்பிப்” பெருமகனே;
நும் பணி சிறந்து மிகவுயர்ந்து, நிறை புகழ் நிறைந்து நீவீர் வளமொடு நீடுவாழ்க;
இதயத்தால் கனிந்து நிறையருளைப் பணிந்து சிறியேன் யான் வாழ்த்துதிர்த்தேன்; இதயமது வாழ்த்திதனை யேற்று நீரும் இனிமையால் மகிழ்ந்து இவ்வையகத்தே நிலைத்து நீடுவாழ்க;
55

Page 33
மணியான காலம் விடைபெற்றுப் போன பின்பே பல 'மணிவிழாக்கள் மாண்புறுவதுண்டு;
தம் பணிகளில்
சேவையில் விடை பெற்றுத் தம்மை விடுவித்து "ஈசிச் சியரில்' 'லேசியாய் அமர்பவர்க்கே பொதுவாக
‘மணி விழா' வாய்ப்பதுண்டு;
ஆனால் இவ்விழாஅத்தன்மை விடுத்து புத்துணர்ச்சிமிகுவிளைஞராம் சின்னத்தம்பியர்க் காயிற்று;
அவரின் ‘மணியானகாலம்' இன்னும் தொடர்கிறது. தொடரட்டும்
இளமையுணர்வு, இனிமையுணர்வு, இணையற்ற துடிப்புணர்வு, அத்தனையும் இன்றும் என்றும் இவரிடம் நடைபயிலும்
"கொம்பனியால் இறங்கியொரு இளசின் கையிற் கிடைத்த “Honda Hero” (8UT6) இந்தக் ‘Hero கைப் பேனாவும் 6ifful DITu
வித்தை பலகாட்டி வேகமொடு விரையும் தன் தடம் பதித்தவாறே;
56

‘உழைப்பேன். எம் இலட்சியம் உயர்வதற்காய் அன்று இன்றும் உறுதியாய் உரைத்துழைக்குமிந்த இளைஞனின் 'மணிவிழா மாண்புற மகிழ்வுடனே வாழ்த்துரைப்பேன்;
தொடர்ந்தும் புத்துணர்வுடனேயுழைத்து இலட்சியச்சிகரம் தொடுக நிறைந்த பணியாற்றியென்றும் புகழுடனே நீடுவாழ்க!
sk 来 本 冰
ஆறுமுகசாமி போல 'தம்பியர்க்கும் அறுமுகமாம் ஆம்;
மனமுவந்தேற்ற கொள்கைக்காயுழைத்துப் பணியாற்ற சேர்ந்த கூட்டத்தால் 'கம்யூனிசக் கட்சிக்காரரானார்';
தம் தடம் பதிக்க 'எண்ண விதைவிதைத்துப் புதுவறுவடையைச் சேர்த்தெடுக்கப் பத்திரிகையின் பாலிணைந்து பத்திரிகையாளரானார்';
"பீக்கிங்' வானலையில் தமிழலைகள் சிதறிவரக் காரணமாய்ச் சிலகாலமிருந்ததினால் 'ஒலிபரப்பாளரானார்
அரியபல கருத்துக்களை அன்னிய மொழியிலிருந்து பெயர்த்து
57

Page 34
தமிழிலதைச் சொன்னதினால் "மொழிபெயர்ப்பாளரானார்';
உள்ளத்து நினைவுகளை யெழுத்தில் வடித்தெடுத்துப்பல கட்டுரையும் படைப்பதோடு "ஓ கனடா" எனுமொரு நெடுங் கதையும் தந்ததினால் ‘எழுத்தாளரானார்’
பாட்டாளி மக்களுயரப் பல பணிகள் புரிந்ததனால்; துயர்கண்டு விரைந்தெங்கும் துயர்துடைப்புச் செய்வதனால்; கேட்டவர்க்கு கேட்டபோது உதவியாய் அமைவதனால்; சொல்வதற்கு முடியாப்பல வேவைகளைச் செய்ததனால்; “சமூகசேவையாளரானார்’
ஆம் ஆறுமுகசாமி போலே சின்னத்தம்பியர்க்கும் அறுமுகமாம்;
முகந்தானோ! இல்லை அவனைப்போலே இவர்க்கும் பலபெயராம்;
பாரதியை நேசித்து 'பாரதிநேசனானார்’ புதினங்கள் தந்ததினால்ப் புதினன்' ஆனார் புதினத்தை விரும்பிப் புதினப்பிரியனானார்’ கட்சியில் தோழர்கட்கு அன்புத் 'தம்பியானார் இப்படியாய்
இவர்க்கும் பல பெயராம்
58

ஆம் ஆறுமுகசாமி போலே இவர்க்கும் அறுமுகமாம்; பலபெயராம்
பகையழித்து வெற்றிகொள்ளும் திருக்கரத்து 'வேல்' போலே இவர்கரத்தில் 'பேனா' வெற்றிபல குவிக்குது இவர்கரத்துப் 'பேனா';
வெற்றிபல குவித்து இங்கு பணிபல ஆற்றி மாண்புற்று ‘மணிவிழா'க் காணுமுங்கள் மணியான காலந் தொடர்ந்திடுக;
நிறை செல்வம் பெற்று ஆரோக்கியமாய் நீடு வாழ்ந்திடுக;
ஓய்ந்திடாதும் பேனா விரைந்துபல பலபதிவுகளைத் தந்திடுக;
அல்லலுறும் அவனிக்காய் நிறைந்த சேவைபல ஆற்றிடுக;
பார்போற்ற பணிபல நிறைந்து வாழ்ந்திடுக;
இதயத்தால் வாழ்த்துகிறேன் இன்புற்று நிறைவோடு நீடு வாழ்க!
பணிவோரு
துணைவியூர் கேசவனர்
23-01-2000
59

Page 35
மூத்த எழுத்தாளர் திரு.வி.சின்னத்தம்பி மன நிறைவு வாழ்த்த
கரவெட்டி விளை நிலத்தில் அறிவுக்கதிரீன்ற அன்ப பெருகட்டும் புகழின்தொடர், பேணட்டும் அறிவுலகம் நெறியொன்றின் வழிசென்று வெறிகொண்ட பற்றால் அறநன்று இதுவென்று ஆரவாரிப்போம் எங்களன்பன் மெலியாரை வலியார் இரையாகக் கொள்கின்ற நெறிதன்னை எதிர்நின்று சமராடும் குழுக்கள் வழிசென்று மனசாட்சி சரியென்று சொல்ல நடைகண்டு பூரித்த நல்ல எழுத்தாளன் வயதிங்கு மணிவிழா அளவென்று கேள்வி வடிவத்திற் பொன்விழா போலிருக்கக் காண்போம் எழுத்தாளன், ஆசிரியன், பீக்கிங்கில், தமிழில் வானொலியின் வழியான சொல்நெறிகள் சொல்வார் அறிவுசார் துறையெது அங்கிவர் பங்குண்டு அதிலுமோர் அழகுண்டு அது இவர் முத்திரை மணிவிழா நாயகா தொடரட்டும் தொண்டு
எம்மிதய வாழ்த்து, வணக்கம், பாராட்டுக்கள்
கரவை நாடக கவிமணி
எம்.வி. கிருவர்ணாழ்வார் 23-01-2000 நூற்றாண்டு விழாச் சபையினர்
60

மணி விழா
23. O. 20 OO மூத்தபத்திரிகையாளரும் எழுத்தாளருமான உயர் திரு வீ. சின்னதம்பி அவர்களின் மணிவிழாவின் போது வட்டுக்கோட்டை அஞ்சலகத்தார் வாசித்தளித்த பாமாலை
காலமெல்லாம் தமிழ்வாழ ஒளிகொடுத்த கலங்கரைவிளக்கே கரவை மண் பெற்றெடுத்த கம்யூனிஸ்ட் - தம்பியே காலமகன் தேவைதனை கண்ணியமாய்க் கொண்டவனே கம்யூனிஸத்தின் கரங்களுக்கு வலுகொடுத்த வல்லவனே தொழிலாளி உரிமைக்காய் தொழிற்சங்க வாதியாய் பத்திரிகை சுதந்திரத்தின் நேர்மை மிகு பத்திரிகையாளனாய் பாரினிலே சேவை செய்த பாரதி நேசனே பல்லாண்டு வாழி வாழி
தரணியிலே தமிழ் விளங்க தன்னிகள் இல்லா எழுத்தாளனாய் மொழிபெயர்ப்பாளராய் ஒலிபரப்பாளராய் பத்திரிகை ஆசானாய் புனைபெயரில் புகழ்விரும்பா சேவை செய்த - புதினனே இல்லறத்தில் இணைந்து இணையினைக் கைப்பிடித்து இணைந்தே தமிழுக்காய் சேவைதனை செவ்வனே செய்திட்டிர் காாத்தியின் மருகனாய் கண்ணியமாய் உழைத்த கம்யூனிஸத்தின் தம்பியே நீவிர் காலமெல்லாம் பல்லாண்டு வாழி வாழி
பத்திரிகை சஞ்சிகை நாவல் இலக்கியங்கள் நற்றமிழில்
படைத்த நம்மவர் தம்பியின் நல்லதோர் பணி நம்மண்ணில்
தொடரவேண்டும் தன்னிகள் இல்லா தமிழ் சிறக்க தம்பியும் வாழவேண்டும் எண்ணில்லா இலக்கியங்கள் எத்தனையோ எம்மண்ணில் எழுத வேண்டும் அத்தனையும் எம் மண்ணில் உருவாக அண்ணல் அவர் ஆண்டவனின் அருள்பெற்று அல்லலின்றி பல்லாண்டு பல்லாண்டு வாழி
வாழ்க வளமுடன் என வாழ்த்தும்
அஞ்சல் அதிபரும் 23-O-2OOO உதவி தபால் அதிபரும் *a வட்டுக்கோட்டை உப தபால் அதிபர்களும் ஊழியர்களும்!
61

Page 36
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு
வடக்கு கிழக்கு மாகாணம்,
திருகோணமலை
2000.01.31.
திரு. வி. சின்னத்தம்பி,
அன்பின் சின்னா தங்களுடைய மணிவிழா பற்றின செய்தியினை பத்திரிகை வாயிலாக அறிந்தபோது பெரிதும் ஆனந்தம் அடைந்தேன். அதற்கு மேலாக உங்களது துடிப்புக்கால புகைப்படத்தினை பத்திரிகையில் பார்த்தபோதுதான் எதற்கும் அசையாத ராணி சின்னாவை தழுவிக்கொண்டதன் காரணம் எனக்குப் புரிந்தது.
எது எவ்வாறாக இருந்தபோதும் இலங்கையரின் பொதுஉடமைவாதிகளைப் பற்றி கதைக்கின்றபோது அக்காலத்தில் இருந்து இன்றுவரை கார்த்தியை முன்னுதாரணமாகக் கூறுவர். அவருடையே வாழ்க் கை முறையே பொதுஉடமைக் கொள்கைகளை பரப்பி நின்றது. அந்த வகையில் அரசியல் கட்சி சம்பந்தமான கருத்து பேதங்கள் ஏற்பட்டாலும் பொதுஉடமைவாதி கார்த்தியின் மருமகன் சின்னாவும் பொதுஉடமைவாதி என்பதே உங்களுடைய கடந்தகால செயற்பாடுகளின் ஊடாக நிரூபித்தும், தொடர்ந்தும் நிரூபித்தும் வருகின்றீர்கள்.
பொதுசன வாழ்க்கையில் பலபேர் பல்வேறுவிதமாக வர்ணிக்கப்படுகிறார்கள், போற்றப்படுகின்றார்கள். அதீத மனிதன் எனப் புகழப்படுகின்றார்கள். அதற்கு அவர்களது பொருளாதர அந்தஸ்தே பெரும்பாலும் காரணமாக அமைந்துவிடுகின்றது. பணம் இல்லாதவன் பிணம் என்று பொதுவாகக் கருதும் எமது சமூகம் ஒரு மனிதனை பணத்தில் அடிப்படையில் வைத்தே நிறுத்துப் பார்க்கும் தன்மை கொண்டதனால் சமூகத்துரோகிகளும், சிலவேளைகளில் உயர்ஆத்மாக்களாக மாறிவருகின்றனர். பணப்
62

பொருளாதாரக் கொள்கை மக்களிடையே வலுவுற்று இருக்கும்வரை இப்போலித் தன்மையில் இருந்து நாம் விலகி விடமுடியாது.
இந்த சமூகத்தின் பொதுவான தன்மையின் மத்தியிலும் உண்மையான ஒருவரை இனங்கண்டு அவருக்கு மணிவிழா எடுக்க முன்வந்த அந்த அன்பு உள்ளங்களை மனதாரப் பாராட்டுகிறேன்.
உங்களின் மணிவிழா ஊடாக இளமையின் ஊக்கங்கள் எல்லாம் தூக்கங்களாக மாறிவிடும் என்ற பொதுக்கருத்து பிழையானது என்பதை இவ்விழாக் குழுவினர் எடுத்துக் கூறியுள்ளார்கள்.
இளமைக்காலத்தில் சமுதாய மாற்றத்திற்கு மாக்சிய விஞ்ஞானத்தின் ஊடாக மார்க்கம் கண்டு பிடிக்கலாம் என்று துடித்த ஒருவன் அதே துடிப்போடு அகவை அறுபதிலும் செயற்படுவதை உங்களிடம் கண்டேன்.
இம் மணிவிழாவின் போது என்னால் பங்கு பற்ற முடியாமை கவலையைத் தருகின்றது. இருந்த போதும் பவள விழாவில் தன்னும் பங்குபற்றி கருத்துக் கூற சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒத்தளமாக அமைந்துள்ளது.
இப்படிக்கு, தோழர் தேவதாஸ்
63

Page 37
எழுத்தாளர் பாரதிநேசன் வீ. சின்னத்தம்பிக்கான பாராட்டு விழா பற்றி. மணிவிழாவைத் தொடர்ந்து ஒரு சில நாட்களில் யாழ். எழுத்தாளர் ஒன்றியம் பாரதிநேசன் வீ. சின்னத்தம்பியை கெளரவித்து பாராட்டு விழா ஒன்றை நடாத்தினார்கள். பாராட்டு விழா விபரமும், அவ்விழாவைத் தொடர்ந்து வந்த பத்திரிகை விமர்சனங்களின் தலைப்புகளும் சுருக்கமும் பின்வருமாறு: பாராட்டு விழா மூத்த பத்திரிகையாளரும் பிரபல எழுத்தாளரும் ஆகிய திரு. பாரதிநேசன் சி. சின்னத்தம்பி அவர்களது பாராட்டு விழா
இடம் : எழுத்தாளர் ஒன்றியம் ஆரியகுளச் சத்திக்கு அருகாமை காலம் : 06.02-2000 காலை 9-30 மணி தலைவர்: திரு. க. குணேந்திரதாசன் அவர்கள்
(போருட் திட்ட இணைப்பாளர்) சிறப்புரைகள் 1. திரு.சோ. கிருஸ்ணராசா அவர்கள்
(பேராசிரியர், யாழ் பல்கலைக்கழகம்) 2. திரு. இ. தவராஜா அவர்கள்
(தலைவர், அரசாங்க இலிகிதர் சேவைச் சங்கம், uuTpÜLIT600TLb) 3. திரு. கா. நடராசா அவர்கள்
(அதிபர் யா/ பண்ணாகம் மெய்கண்டான் ம.வி) 4. திரு.எஸ். சிவஞானம் அவர்கள்
(கூட்டுறவாளர்) 5. திரு.பெ. கனகரட்ணம் அவர்கள்
(பொது முகாமையாளர் சங்கானை ப.நோ.கூ.சங்கம்) 6. திரு.ம. சண்முகம் அவர்கள்
(தபாலதிபர் வட்டுக்கோட்டை) 7. திரு.வி. என். மூர்த்தி அவர்கள்
(போருட் நிறுவனம்) 8. திரு. சொ. சிவபாலன் அவர்கள்
(வங்கி ஊழியர் சங்கம்)
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
2ம் குறுக்குத்தெரு சமூக சூழல் பாதுகாப்பு
யாழ்ப்பாணம் நிறுவனம்
O1-02-2000
64

பாரதிநேசனின் கருத்துக்களில் உண்மையும் நேர்மையும் கரும்பொருளாக இருக்கும் 10.02.2000 தினக்குரல் இலட்சியப் பற்றினால் தாண்வரித்த கொள்கையை
விடாது வாழ்ந்தார்
13.02.2000 வலம்புரி
யாழ்ப்பாணத்தை வாழ்விக்க முடியும் என்ற நம்பிக்கை
தரும் எழுத்துக்கள்
24.02.2000 உதயன் (யாழ்ப்பாணம்)
“தான் கொண்ட இலட்சியத்தை என்றைக்குமே விட்டுக் கொடுக்காமல் சமுதாயத்தில் மட்டுமல்ல உலக மக்களிடமும் முன்னெடுத்துச் சென்று சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றி கண்டவர் பாரதிநேசன் சின்னத்தம்பி இன்றைக்கு சமூக மட்டத்தில் அவரது மக்களால் மணிவிழா எடுப்பதும் பாராட்டப்படுவதும் வழக்கம். ஆனால், பாரதிநேசன் உலக சமுதாயத்திலே மாறுதல்களை ஏற்படுத்த முனைந்தமையால் அவருக்குப் பாராட்டு எடுப்பது சாலப் பொருந்தும்.” என்று யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் சோ. கிருஸ்ணராசா தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய க. குணேந்திரதாசன், பாரதிநேசன் ஒரு ஆற்றல் மிக்க பத்திரிகையாளர், எழுத்தாளர், ஒரு கம்யூனிஸ்ட், இத்தனைக்கும் மேலாக தான் சார்ந்த பாட்டாளி வர்க்கத்தின் குரலை எங்கும் எப்போதும் ஒலிக்கச் செய்பவர். கருத்துக்களில் உண்மையும் நேர்மையும் கரும்பொருளாக இருக்கும். மக்களை நேசிக்கும் உன்னதமான மனிதர்.
தனது எழுத்தாற்றலால் பல்வேறு துறைகளிலும் தான் பெற்ற அறிவை மார்க்சிய கருத்துக்களை மக்களுக்குத் தந்து அனைத்து மக்களும் சமத்துவம் மிக்கவர்களாக விளங்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தையுடன் வாழும் ஒரு மனிதர் அவர். பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தம்மை அர்ப்பணித்த பத்திரிகையாளரான அவர் இனவாத அடிப்படையினால் மார்க்சியவாதிகளிடையே பிளவு ஏற்பட்டபோதும் சர்வதேச ரீதியாக அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும் என்று பணியாற்றியவர். சிறந்த எழுத்தாளராக, பத்திரிகையாளராக அவரது பணிகள் தொடர வேண்டும்” என்றார். இலங்கை வங்கி ஊழியர் சங்க பிரமுகர் சோ. சிவபாலன் உரையாற்றுகையில் “கொண்ட கொள்கை மாறாமல், முகம்
65

Page 38
சுளிக்காமல், வாழ்க்கை வசதிகளை எதிர்பார்க்காமல், இன்றுவரை தன்னை ஒரு 'கம்யூனிஸ்ட்' என்று அடையாளம் காட்டி செயற்படுபவர் பாரதிநேசன். முரண்பாடுகளை நட்புரீதியாக அணுகுபவர். அது அவருடைய மனப்பாங்கு. அப்படியான ஒருவருக்குப் பாராட்டு தேவையில்லை. ஆனால், நாம் அவரது குணஇயல்புகளை ஆராய்வதற்குப் பாராட்டு அவசியம்” என்றார். “பத்திரிகைத் தொழிலைச் சமுதாயக் கடமையாகக் கருதிச் செயற்பட்ட சின்னத் தம்பி அவர்களின் எழுத்துக்கள் யாழ்ப்பாணத்தை மீண்டும் வாழ்விக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுகின்றன. சமூக அரசியல் விமர்சனம் பேட்டிகள் போன்ற எழுத்துக்களில் மட்டுமன்றி இலக்கிய வடிவிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்திய மூத்த எழுத்தாளரான அவரது கருத்துக்கள் மற்றும் சமூகத்தை நோக்கிய பார்வை என்பன முக்கியத்துவம் மிக்கன. சிறந்த பத்திரிகையாளரான சிவநாயகம் அவர்களின் பாராட்டைப் பெற்ற இவர், உத்தியோகம், பத்திரிகைத்துறை, சீனாவில் பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றை நூலாக வெளியிட வேண்டும்” என்று பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலய அதிபர் கா. நடராசா கூறினார்.
அரசாங்க லிகிதர் சேவைச் சங்க தலைவர் இ. தவராஜா பேசுகையில் “மூத்த பத்திரிகையாளராக விளங்கும் அவர் தொழிற்சங்கப் பட்டறையின் விளை நிலம், மார்க்சியவாதிகளிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்ட சமயம் சண்முகதாசனோடு இணைந்து சரியான பாதை எது என்பதை வலியுறுத்தியவர். வருமானத்தைக் கருதாது தான் பற்றிக்கொண்ட சித்தாந்தத்தின் உயர்ந்த கருத்துக்களால் சமூகத்தில் விழிப்புணர்வைத் தோற்றுவித்தவர். அவர் சமூக மாற்றம் உணர்வின் அடிப்படையில் உள்ளது. அந்த மாற்றம் ஏற்படும் போதுதான் உலகம் மாறும் என்ற சிந்தனையுடன் செயற்பட்டவர். அவரது பணிகள் கனதியானவை” என்றார்.
“தாயகம்” பத்திரிகை ஆசிரியர் எஸ். தணிகாசலம், இந்து இளைஞர் மன்றத் தலைவர் கே. தனபாலன் மற்றும் நிகழ்ச்சி நிரல் பட்டியலில் அனைவரும் தத்தம் பாராட்டுரைகளை வழங்கினர். விழாநாயகன் பாரதிநேசன் சின்னத்தம்பி பதிலுரை ஆற்றுகையில் இந்நிகழ்ச்சியை தோழர் சண்முகதாசனின் நினைவு வைபவமாக நினைவு உரையாற்றினார்.
66

பீக்கிங் பிரதிநிதி சீனாத்தம்பியின் உலகத்
தமிழாராய்ச்சி மாநாட்டில் வரவேற்பு பற்றி.
சீன வானொலி தமிழ்ப்பகுதி ஒலிபரப்பு மதுரையில் நடைபெறும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருக்கும் வீ. சின்னத்தம்பியும் திருமதி. ராணி சின்னத்தம்பியும் விமான நிலையத்தில் மாலை சூட்டி வரவேற்கப்பட்டனர். இந்த மாநாட்டின் அமைப்பாளர்களாலும் சென்னைப் பல்கலைக் கழகப் பொருளாதாரத்துறையை சேர்ந்தவர்களாலும் அவர்கள் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.
திரு. சின்னத்தம்பி “சீனாவில் தமிழ்” என்ற பொருள்பற்றி உரையாற்றவிருக்கின்றார். இன்னும் சென்னை, மதுரை, பெங்களுர் போன்ற இடங்களில் சில கருத்தரங்குகளிலும் உரையாடல்களிலும் கலந்து கொள்ள இவர்கள் இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தொடர்ந்து “மக்கள் சீனாவில் வாழும் ஒரே தமிழ்க் குடும்பம்” என்று தினகரன், ஞாயிறு பெப்ரவரி 8, 1981ல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள்.
சீனாவில் வசிக்கும் சின்னத்தம்பி அளித்த விசேட பேட்டியில் “தமிழின் புகழ் மணம் உலகெங்கணும் வீசுகிறது” என்று கூறி மாநாட்டிற்கு சீனாவிலிருந்து வந்த வேறு தமிழ் கற்ற இரு சீனரையும் அறிமுகம் செய்து வைத்தார். ஒருவர் பீக்கிங் விசேட பல்கலைக் கழகத்தில் தமிழைக் கற்று, பீக்கிங் வானொலியில் கடமையாற்ற சீன மொழியிலிருந்து தமிழை மொழிபெயர்த்தும், இலக்கிய நூல்களை தமிழிலிருந்து சீனத்தில் மொழிபெயர்த்தும் தமிழினதும் தமிழ் இலக்கியத்தினதும் மகிமை பற்றி சீன மக்களுக்கு அறிமுகம் செய்பவர் என்றும், அத்துடன் தமிழ் ஆய்வுக்குழு ஒன்றை நடத்துபவர் என்று அறிமுகம் செய்தார். மற்றவர் பீக்கிங் அயல்மொழிப் பதிப்பகத்தின் தமிழ்ப் பகுதியில் கடமையாற்றி, தென் ஆசிய ஆய்வுக்கழகத்தை சேர்ந்தவர், தென்னாசிய கலை, ஆய்வுக்கழகத்தை சேர்ந்தவர், தென்னாசிய கலை, கலாச்சார, இலக்கிய மேம்பாட்டிற்கு உறுதுணை புரிந்தவர் என்றும் அறிமுகம் செய்தார்.
சீனர்கள் இருவரும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் பெருமளவிலான ஒழுங்குகளைக் கண்டும், அதில் பங்கு கொண்டதாலும் மகிழ்ச்சிப் பூரிப்பில் மயங்கிவிட்டனர் என்றும், இவர்களது விஜயத்தினால் இந்திய-சீன உறவில் ஒரு முக்கிய கலாச்சார தொடர்பு ஏற்படும் என்பதில் ஐயமில்லை என்றும் கூறினார்.
இவ் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் கழத்தில் நடைபெற்றது.

Page 39
தோழர் வீ. சின்னத்தம்பி மறைவைத் தொடர்ந்து.
தனக்கென மட்டுமல்லாமல் பிறர்க்கெனவும் வாழும் ஒரு பரிபூரண வாழ்க்கையை நோக்காக கொண்டு செய்யும் பணியே கடன் என்று சேவைகள் பல ஆற்றி, அதன் பயனாக பாராட்டுக்களைப் பெற்று புகழாரங்களை சூடிக்கொண்ட தோழர் வீ. சின்னத்தம்பி கடந்த சித்திரை மாதம் 17ம் திகதி, 2001 ஆண்டு காலமானார். அவர் காலமான செய்தி காட்டுத்தீ போல் வெகு வேகமாகவே அகிலமெங்கும் பரவ செய்திகளும் அஞ்சலிகளும் குவிந்தன. அவற்றுள் சிலவற்றின் சுருக்கம் பின்வருமாறு: பாரதிநேசன் காலமானார் மூத்த இடதுசாரிப்பிரமுகரும் பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பாரதி நேசன் (சின்னத்தம்பி) காலமானார். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் பீக்கிங் வானொலி செய்தியாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். இவரது இறுதிக் கிரியைகள் இன்று அவரது வீட்டில் நடைபெறும்.
18.04.2001,வலம்புரி (6)
‘மாரதிநேசன்’ காலமானார் இலங்கையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை முன்னெடுப்பதற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துச் செயற்பட்ட இரண்டாவது தலைமுறை இடதுசாரி முக்கியஸ்தர்களில் ஒருவரும் பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வீ சின்னத்தம்பி (பாரதிநேசன்) நேற்று செவ்வாய்க்கிழமை காலை வட்டுக்கோட்டையில் தனது 62வது வயதில் காலமானார்.
தான் கொண்ட கொள்கையில் இருந்து இறக்கும் வரை வழுவாது வாழ்ந்து வந்த சின்னத்தம்பி, அவரது இயக்கத்தினரால் "தோழர் தம்பி’ என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்டு வந்தார்.
பெரும்பான்மையினச் சகோதரர்கள் மத்தியில் பரந்தளவு தொடர்புகளைக் கொண்ட சின்னத்தம்பி இறுதி மூச்சு வரை தனது கம்யூனிச அரசியல் கோட்பாடுகளை விட்டு வழுவாது வாழ்ந்தவர். அவரது இழப்பு இலங்கையின் முற்போக்கு இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.
18.04.2001, தினக்குரல்
68

பீக்கிங் வானொலி முன்னாள் ஒலிபரப்பாளர் காலமானார்.
அண்மைக்காலமாக நோய் வாய்ப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் வீடு திரும்பிய சில நாட்களில் மரணமாகியள்ளார்.
காலம் சென்ற கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் மாஸ்டரின் புதல்வி ராணிரத்தினதேவியை சீனாவில் வைத்து கரம் பிடித்த சின்னத்தம்பிக்கு சீனோதயா, பூரீஉதயா என்ற இரு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
18.04.2001, வீரகேசரி
மூத்த பத்திரிகையாளர் சின்னத்தம்பியின் கணிகள் தானம், பூதவுடல் மருத்துவபீடத்திற்கு
மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளரும், சமதர்ம வாதியுமான வீ சின்னத்தம்பி தமது 62வது வயதில் நேற்று காலமானார். அவரது விருப்பப்படி இரண்டு கண்களும் தானம் செய்யப்பட்டதோடு, பூதவுடல் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு ஒப்படைக்கப்பட்டது. இறுதிவரை தன்னை கம்யூனிஸ்ட் இயக்கவாதியாக இனங்காட்டிக் கொண்ட இவர் தொழிற் சங்கவாதியும் கலை இலக்கியவாதியுமாவார்.
சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த இவர் நேற்றுக் காலை வட்டுக்கோட்டையிலுள்ள தனது இல்லத்தில் காலமானார்.
18.04.2001, உதயன் (யாழ்ப்பாணம்)
வட்டுக்கோட்டையில் கறுப்புக்கொடிகள்
மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளரும், வானொலி ஒலிபரப்பாளரும், சமதர்மவாதியுமான வீ. சின்னத்தம்பியின் (பாரதிநேசன்) மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வட்டுக்கோட்டைப் பகுதியில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டன.
கண்ணிர் அஞ்சலி பிரசுரங்களும் வெளியிடப்பட்டன. அவரது பூதவுடலுக்கு கல்விமான்கள், பத்திரிகையாளர்கள், தொழிற் சங்கவாதிகள், வர்த்தகர்கள், மாணவர்கள் உட்பட பெரும் திரளானவர்கள் தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
19.04.2001, தினக்குரல்
69

Page 40
தயர்பகிர்வும் அஞ்சலியும் அமரர் வீ. சின்னத்தம்பி அவர்கள் (மூத்த மத்திரிகையாளர், பவள விழா மலராசிரியர்
வட்டு. மத்திய கல்லூரி) அன்னாரின் மறைவையிட்டு நாம் ஆழ்ந்த மனவேதனையும் அதிர்ச்சியுமடைகின்றோம். அவரது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருடன் நாமும் எமது துயரைப் பகிர்ந்து கொள்வதோடு எமது அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
18.04.2001, உதயன் (யாழ்) வட்டு. மத்திய கல்லூரி
பவள விழா சபை
எமது இதய அஞ்சலி கலைஆர்வம்மிக்கவரும், கொள்கைவாதியும், பல்துறை சாதனையாளரும், எமது சமூகமேம்பாட்டுச் செயற்பாடுகளில் அக்கறையுடையவுருமான
மக்கள் தோழர் வி. சின்னத்தம்பி அவர்கள் மறைவிற்கு எமது அஞ்சலி உரித்தாகட்டும். அன்னாரின் ஆத்மா சாந்திக்காக வேண்டுதல் செய்வோமாக.
இங்ங்ணம் பணிப்பாளர், பணியாளர் கட்டைவேலி-நெல்லியடி கரவெட்டி: ப.நோ.கூ.சங்கம் 18.04.2001, வலம்புரி
கண்ணிர் அஞ்சலி
சமதர்மக் கொள்கையை தாரக மந்திரமாகக் கொண்டு, அவ்வழியே வாழ்ந்திட்ட செம்மலும், பிரபல கலைஇலக்கிய வாதியும், பத்திரிகையாளருமான
அமரர் வி. சின்னத்தம்பி (பாரதிநேசன்)
அவர்கள் மறைவையிட்டு எமது இதயபூர்வமான அஞ்சலியைச்
செலுத்துகின்றோம்.
18.04.2001, பூபாலசிங்கம் புத்தகசாலை உதயன் (யாழ்ப்பாணம்) யாழ்ப்பாணம்-கொழும்பு
70

மறைந்த சின்னத்தம்பியின் கணிகளால் இருவர் வாழ்வில் ஒளி வடமராட்சி
காலம் சென்ற பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வீ. சின்னத்தம்பியின் கண்களில் ஒன்று நேற்று கண்பார்வை குறைந்த ஒருவருக்கு யாழ். வைத்தியசாலையில் வைத்து பொருத்தப்பட்டுள்ளது.
மற் றைய கண் ணை இன்று வியாழக் கழமை இன்னொருவருக்கு பொருத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளன. சின்னத்தம்பி மரணமடைவதற்கு முன்னர் தனது கண்கள் இரண்டையும் யாழ் போதனா வைத்தியசாலைக்கும் தனது உடலை யாழ். மருத்துவக் கல்லூரிக்கும் வழங்குமாறு குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தார்.
இதேவேளை இவரின் மறைவையடுத்து வட்டுக்கோட்டையில் உள்ள இவரின் இல் லத்துக்கு இடதுசாரி பிரமுகர்கள், கல்விமான்கள், பல்கலைக் கழக மாணவர், உறவினர் பெருமளவில் நேற்றுச் சென்று தமது அனுதாபங்களை தெரிவித்தனர்.
18.04.2001, வீரகேசரி
பத்திரிகையாளரின் கணி கோண்டாவில்வாசி ஒருவருக்கு
மூத்த பத் தரிரிகையாளரும் எழுத்தாளருமான வீ. சின்னத்தம்பியின் கண்களில் ஒன்று சத்திரசிகிச்சை மூலம் கண்தெரியாதிருந்த ஒருவருக்கு பொருத்தப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் மூளை மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட 38 வயது கோண்டாவில் வாசி ஒருவர் வலது கண் பார்வை பாதிக் கப்பட்டிருந்தார். இவருக்கே பத்திரிகையாளர் வீ. சின்னத்தம்பியின் தானமாக வழங்கப்பட்ட ஒரு கண் பொருத்தப்பட்டது.
மற்றைய கண் இன்று இன்னொருவருக்கு சத்திரசிகிச்சை மூலம் பொருத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர். க. குகதாசன் இந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டார்.
19.04.2001, உதயன் (யாழ்ப்பாணம்)
71

Page 41
பத்திரிகையாளரின் 2வது கணி யாழ். மாநகர சபை ஊழியருக்கு
மூத்த பத்திரிகையாளரும் சமதர்மவாதியுமான வீ. சின்னத்தம்பியின் இரண்டாவது கண்ணும் சத்திரசிகிச்சை மூலம் கண் தெரியாதிருந்த மற்றொருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
கடந்த வருடம் மார்ச் மாதம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயம் வண்டு தாக்கி 21 வயது இளைஞன் இடது கண் பார்வையிழந்தருந்தார். அவருக்கே வீ சின்னத்தம்பியின் இரண்டாவது கண்ணை சத்திரசிகிச்சை மூலம் கண்சிகிச்சை நிபுணர் டாக்டர். க. குகதாசன் பொருத்தினார். இந்த இளைஞன் யாழ். மாநகர சபையின் நீர் வழங்கல் பிரிவில் கடமையாற்றி வருகிறார்.
20.04.2001, உதயன் (யாழ்ப்பாணம்)
அமரரான முற்போக்காளர் வீ. சிண்னத்தம்பியின் கணிகளும் உடலும் தானம் செய்யப்பட்டன
20.04.2001 உதயன் (கனடா)
கனடா நாட்டு ஏனைய தமிழ் பத்திரிகைகளும், வானொலிகளும், வேறு நாட்டு தமிழ் பத்திரிகைகள்
வானொலிகளும் அமரர் வீ சின்னத்தம்பியின் மறைவையொட்டிய செய்திகளைப் பரப்பின.
72

அஞ்சலிக் கூட்ட அறிவித்தல்
28-04-2001, உதயன் (யாழ்ப்பாணம்)
(இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடியும்) பிரபல தொழிற்சங்கவாதியும்
மூத்த பத்திரிகையாளனும் பிரபல எழுத்தாளரும் எமது மன்றத்தின் தலைவருமாகிய
தோழர் வி. சின்னத்தம்பி (பாரதிநேசன்) அவர்களின்
அஞ்சலிக் கூட்டம்
இடம் : வட்டு. மத்திய கல்லுாரி ஆரம்ப பாடசாலை
காலம் : நாளை (29.04.2001) ஞாயிறு பி.ப. 2.00 மணி
தலைவர் : தோழர் கா. நடராசா
(இலங்கை ஆசிரியர் சங்கம்)
இந் நிகழ்வில் அன்னாரின் தோழர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள், உறவினர்கள் அனைவரையும் பங்கேற்குமாறு வேண்டுகின்றோம்
GFu6)T6Tf /சமூக ஜனநாயக மன்றம் ܢܠ
73

Page 42
தோழர் வீ. சின்னத்தம்பி அவர்களுக்கு, செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம்!
தோழர் வி. சின்னத்தம்பி அவர்களின் திடீர் மறைவு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவர் தனது இளவயது முதல் உழைக்கும் மக்கள் விடுதலையையும், சிறுபான்மை இனங்களின் சமத்துவத்தையும், சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை சங்கமமாக்கியவர். தனது இறுதி மூச்சுவரை தன்னை ஒரு கம்யூனிஸ்டாக இனம் காட்டியதன் மூலம் பெருமைப்பட்டவர்.
உலக தொழிலாளர், விவசாயிகள், உழைக்கும் மக்களின் உன்னத தத்துவமான மாக்சிய லெனினிய தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் அறிவும் கொண்டிருந்ததுடன் அவற்றை மக்கள் மயமாக மாற்றுவதிலும் பகிரங்கப்படுத்துவதிலும் தனது வாழ்நாள் பூராவையும், தனது ஆற்றலையும் அர்ப்பணித்தவர்.
இலங்கையில் தொழிலாளர், விவசாயிகள், உழைக்கும் மக்களின் அரசை முதலாளித் துவ அமைப்பிற்கும் சர்வாதிகாரத்திற்கும் மாற்றாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் சோசலிச சமூக அமைப்பையும் ஏற்படுத்தும் நோக்குடன், முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயக மாயையை அம்பலப்படுத்தி தீவிர அரசியலிலும் தமிழ், சிங்கள, தொழிலாளர், விவசாயிகள் உழைக்கும் மக்களின் ஐக்கியத்தை ஏற்படுத்துவதில்தான் புரட்சி பெரிதும் தங்கியுள்ளது என்பதை உணர்ந்து செயல்பட்டவர்.
அண்மைக்காலத்தில் தமிழ் சிங்கள தொழிலாளர்களிடையே பிரிவினையே ஏற்படுத்தும் யுத்தம் தலைவிரித்தாடுகின்றமையை கண்டு இவர் பெரிதும் மனம் வெதும்பினார். உழைக்கும் மக்கள் இனவாத சக்திக்குள் செல்வதை கண்டு இலங்கைப் புரட்சி பல ஆண்டுகள் பின்தள்ளப்பட்டுள்ளதையும், தொழிலாளவர்க்க இயக்கத்தில் குறுகிய தேசியவாதம் தலை தூக்குவதையோ அல்லது குறுகிய தேசியவாதத்திற்கு அடிபணிந்து சேவகம்
74

செய்வதையே அவர் முழுமூச்சுடன் எதிர்த்ததுடன் இவ்வாறான போக்குகளிற்கு எதிராக போராட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
காலத்திற்கு காலம், சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் இனவாதம் திரிபுவாதம் சீர்திருத்தவாதம் போன்ற பிறழ்வுகள் தோன்றியதையும் அவற்றிற்கெதிரான போராட்டம் நடத்த வேண்டியதன் அவசியத்தை அவர் எப்போதும் வலியுறுத்தி வந்ததுடன் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கோட்பாட்டை முன்நிலைப்படுத்தினார்.
இனவாத யுத்தம் ஏழை உழைக்கும் மக்களை அடிமைப் படுத்துவதற்காகவும் ஆளும் வர்க்கத்தினராலும் முதலாளித்துவ சக்திகளாலும் தமது செல்வத்தையும் அதிகாரத்தையும் வலுப்படுத்துவதற்காகவும், இனவாதப் போர்வையில் நடாத்தப் படுகின்றதேயன்றி இது ஒருபோதும் உழைக்கும் மக்களின் விடிவிற்கு வழிவகுக்கப்போவது இல்லை என்பதை உறுதியாக நம்பினார்.
எனவே அவர் தமது இறுதிமூச்சு வரை வாழ்ந்த இலட்சியங்களுக்காக போராடுவதே நாம் அவருக்கு செய்யும் இறுதி அஞ்சலியாகும்.
தோழர் சின்னத்தம்பியின் பெயரும் புகழும் நீடித்து நிலைக்கும்.
தொழிலாளர் விவசாயிகள் உழைக்கும் மக்கள் ஐக்கியம் நீடு வாழ்க!
பாட்டாளிவர்க்க சர்வதேசியம் நீடு வாழ்க!
மாக்சியம் லெனினியம் நீடு வாழ்க!!1
இநப்தானம்
சமூக ஜனநாயக மண்றம்
75

Page 43
கணர்னிர் அஞ்சலி
பிறப்பு இறப்பு 25 17
05 O4
1939 2001
அமரர் உயர்திரு. வி.சின்னத்தம்பி அவர்கள் (மூத்த பத்திரிகையாளர்)
சின்னத்தம்பியண்ணை! சீக்கிரமே நீர் எம்மிடம் விடைபெற்றதென்ன? மானுடமிங்கே உம் சேவைக்காக? நீரெங்கே? நாம்தேடி களைத்தோமையா? சிந்தனையைத் தூண்டிவிடும் உம்மெழுத்து இனிநாம் எங்கே காண்போம்? அறிவைக் கிளறிவிடும் உம் பேச்சு இனியார் கேட்பார்? சமதர்மதத்துவத்தை உயிராக நேசித்தவரே உலகமேங்க எங்குசென்றீர் உம் எழுத்தின் உம் பணியின் வீரியம் நித்தியனாய் உம்மை வாழவைக்கும்
வட்ரு இந்து வாலிபர் சங்கம் வட்ருக்கோட்டை
76
 

பிரிவுத்துயர் பகிர்வு
பிறப்பு இறப்பு 25 17
05 O4
1939 2001
அமரர் உயர் திரு. வீ. சின்னத்தம்பி (மூத்த பத்திரிகையாளர், பவளவிழா மலராசிரியர் வட்டு மத்தியகல்ஹாரி) அன்பின் வடிவமே ஆற்றலின் உறைவிடமே செயற்றிறனின் நிலைக்களமே "இல்லாது" போனாயோ! யாரறிவோம்?
அன்பாகக் கலகலத்து இனிக்க இனிக்கப் பேசி 8,60)LDussibilé சுகமருளும் சுந்தர மனிதனே! எங்கு காண்போம்?
"மானுடத்தை" நேசித்த “மானுடனே" மாண்புடனே நீ வாழ்ந்த வாழ்வு முடிந்ததுவோ? காலனுக் கென்ன அவசரமோ உம்மிடத்தில்? நொடிப்பொழுதில் மறைந்ததென்ன? LD38ğé(g5LDT gD Lib gB6TLDLib எம் கல்லூரி
வட்டுக்கோட்டை வட்ருமத்திய கல்லூரி 17042001 பவளவிழாச்சபை
77

Page 44
அஞ்சலியில் அமுலான ஆலோசனை யாழ்ப்பாணத்தில் ஆள் உதவியற்று வெளியே செல்வோர் வழியில் பயணக் களைப்பால் மயங்கி விழுவதும் மரணமடைவதும் சகஜமாகிவிட்டது. அதனைக் கருத்திற் கொண்டு அமரர் வீ. சின்னத்தம்பி தன் நண்பர் ஒருவருக்கு கூறிய ஆலோசனை அமரரின் அஞ்சலிக் கூட்டத்தன்று இவ்வட்டை வடிவத்தில் செயற்படுத்தப்பட்டது.
தசாவதானி சரவணமுத்து ஆறுமுகம் (1900 - 2000) பிறந்த நூற்றாண்டு நினைவு இலவச வெளியீடு நோயாளர் அடையாள அட்டை வீட்டை விட்டு வெளியே செல்லும் போதெல்லாம் இந்த அட்டையை உங்களுடன் கொண்டு செல்லுங்கள். நீங்கள் சுயநினைவை இழக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், அவ்வேளையில் ஒவ்வாத பொருட்கள், மருந்துகள் போன்றவை உங்களுக்கு ஊட்டப்படும் ஆபத்துத் தவிர்க்கப்படவும், உரிய சிகிச்சை அளிக்கப்படவும் இந்த அட்டை பேருதவி புரியும்.
பெயர் ஒவ்வாத மருந்துகள்:
விலாசம்
நோய்
சிகிச்சை பெறும் வைத்தியசாலை: அவசர வேளைகளில் தொடர்பு.
S LSSL LS S S S S S S S S S LS LS LS LS SL S S S S S S S S S S S S S LSS LSL LSL LSL S SS SS SSL SS SLSS SLSS SLSS கொள்ள வேண்டியவர்:
மிகுசிகிச்சையக (கிளினிக்) ΘLu f: ,
பதிவு இலக்கம். 656)|TFub: ..
உபயோகிக்கும் மருந்துகள்: I .
......................................... தொலைநகல் இலக்கம் .
78
 
 

அஞ்சலிக் கூட்ட விமர்சனம்
தினக்குரல் 03-05-2001 மார்க்சிச கொள்கை உறுதிப்பாட்டுடன் இரதிவரை போராடியவர் சின்னத்தம்பி வட்டுக்கோட்டை அஞ்சலிக் கூட்டத்தில் புகழாரம்
சமதர்ம கொள்கையை இறுதிவரை பிறழாமல் கடைபிடித்து வந்தவர் மத்திரிகையாளர் சிண்னத்தம்பி மறைவுக்கு அனுதாபம்
(வடமராட்சி, தென்மராட்சி) யாழ்குடாநாட்டின் மூத்த பத்தரிகையாளர்களில் ஒருவரும், பிரபல எழுத்தாளரும், கலை இலக்கியவாதியும், சமதர்மவாதியுமான வீ. சின்னத்தம்பியின் திடீர் மறைவு குறித்து வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. -
சாதாரண குடும்பத்தில் பிறந்து கல்வி கற்கும் போதே சமதர்மக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்து அக்கட்சி உடைந்த போதிலும் இறுதிவரை தன் வாழ்நாளில் சமதர்மக் கொள்கைகளைப் பின்பற்றியதுடன் சொந்த வாழ்க்கையிலும் பிறழாது கடைபிடித்து வந்தார். தேசாபிமானி, யுவசக்தி, தொழிலாளி ஆகிய கம்யூனிஸ்ட் பத்தரிகைகளின் ஆசிரியராகவும் மக்கள் இலக்கியம் போன்ற கலை இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருந்து வந்துள்ளார்.
பீக்கிங் வானொலியில் 16 வருடங்கள் மொழிபரப்பாளர், ஒலிபரப்பாளர், செய்தி ஆசிரியர் என்று இவர் பணியாற்றிய காலத்தில் பீக்கிங் வானொலியின் தமிழ் ஒலிபரப்பு உலகெலாம் வாழும் தமிழ் மக்களிடையே மிகப்பிரபலம் பெற்றுத்திகழ்ந்தது என்றால் மிகையாகாது.
இலங்கையிலும் பல பத்திரிகை நிறுவனங்களில் சேவையாளனாகவும் பத்தி எழுத்தாளராகவும் இறக்கும் வரையில் கடமை புரிந்துள்ளார்.
மிக அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பல்வேறுதுறை சார்ந்த விவகாரங்களைக் கொண்ட யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைபரத்தை பாரதிநேசன் என்ற புனைபெயரில் யதார்த்தமாக எழுதி வந்துள்ளார்.
யதார்த்தத்துடன் சாதாரண மக்களின் குரலாக பிரதிபலித்து வந்த அமரர் சின்னத்தம்பி மறைவு பத்திரிகை, கலை இலக்கிய உலகுக்கு பேரிழப்பாகும்.
2004.2001, வீரகேசரி
79

Page 45
பீக்கிங் சின்னத்தம்பி
பீக்கிங் சின்னத்தம்பி என்று பலராலும் அறியப்பட்ட பாரதிநேசன் சின்னத்தம்பியை கலாச்சாரப் பாலைவனமாகிக் கொண்டு வரும் யாழ்ப்பாணத்தின் ஒரு பசுஞ்சோலையாகக் கண்டேன்.
சின்னத்தம்பி ஒரு சிறந்த அறிஞர். அரசியல் பொருளாதாரம், கலை, தமிழ் இலக்கியம், வரலாறு சகலவற்றிலுமே பரந்த அறிவு வாய்க்கப் பெற்றிருந்த அவர் மிகவும் எளிமையானவர். பழகுவதற்கு இனிமையானவர். மகாகவி பாரதிமீது சின்னத்தம்பிக்கு உயிர். அதன் காரணத்தால் தனக்கு பாரதிநேசன் என்ற புனைபெயரையும் சூட்டிக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிதாமகள்களில் ஒருவராக விளங்கிய கார்த்திகேசன் மாஸ்டரின் சிரேஷ்ட புத்திரி ராணிரத்தினதேவியை கரம் பிடித்த சின்னத்தம்பி இறுதி மூச்சுவரை உண்மையான மார்க்சியவாதியாக வாழ்ந்து வந்தார்.
சின்னத்தம்பியுடன் உறவாடுவதற்கும் ஆலோசனைகளைப் பெறுவதற்கும் யாழ்ப்பாணத்தின் நாலா திக்குகளிலும் இருந்தும் பெரியவர்களும் வாலிபர்களும் அவர் வீட்டில் கூடுவர். சகலரையுமே எப்போதும் உபசரித்து அருமையான கருத்துக்களை சின்னத்தம்பி வழங்குவார்.
நீண்டகாலம் பீக்கிங் நகரில் வாழ்ந்ததால் “பீக்கிங் சின்னத்தம்பி’ என்பது அவருக்கு காரணக்குறிப்பெயர் ஆயிற்று. ஆங்கிலப் புலமை வாய்க்கப்பெற்ற சின்னத்தம்பி இறுதிவரை பத்திரிகைகள், சஞ்சிகைகளில் தனது ஆக்கங்கள் மூலம் மகத்தான பங்களிப்பைச் செய்தார். வட்டுக்கோட்டையில் அவரை சின்னத்தம்பி என்று சொல் லத் தேவையில்லை. பீக் கிங் என்றாலே இங்கு சின்னத்தம்பியையே குறித்தது.
சின்னத்தம்பி மறைந்து விட்டாரா? இல்லை மக்கள் உள்ளங்களில், மாணவர்கள் உள்ளங்களில், பத்திரிகையாளர் உள்ளங்களில், பாட்டாளிகளின் உள்ளங்களில் குறிப்பாக வட்டுக்கோட்டைவாழ் மக்களின் உள்ளங்களில் அவர் மறையாமல் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார். சின்னத்தம்பி எப்பொழுதுமே மனமகிழ்ச்சியுடனேயே வாழ்ந்து வந்தார். அவருக்குப் பல பிரச்சினைகள் இருந்தன. இருதய நோய் அவரைப் பயமுறுத்திக் கொண்டேயிருந்தது. நாட்டின் சீர்கேடுகள் அவருக்குக் கஷ்டங்களைக்
80

கொடுத்தன. ஆனால், அவர் உணர்ச்சிவசப்பட்டதனையோ, சீறிச் சினந்ததையோ நான் காணவில்லை.
ஒரு சிறந்த ஞானியின் மனோபாவத்தையும், மனத் தெளிவையும் நான் சின்னத்தம்பியிடம் கண்டுகொண்டேன். யாழ் நகரில் 'உதயன்' பத்திரிகைக் காரியாலயத்தில் பணியாற்றிவிட்டு துவிச்சக்கரவண்டியிலேயே திரும்பிவருவார். நான் வட்டுக்கோட்டை செட்டியார் மடம் வீதியில் உலா சென்று திரும்பும்போது அவரும் அந்த வீதியால் திரும்பிக் கொண்டிருப்பார். இருவரும் யாழ்ப்பாணக் கல்லூரி வரைக்கும் பேசிக் கொண்டே செல்வோம்.
ஆஹா, எத்தனை உன்னதமான கருத்துக்களையும், சிந்தனைகளையும் உதிர்த்துக்கொண்டே நடப்பார் சின்னத்தம்பி. பெரும்பாலும் அரசியலும் இலக்கியமுமே அவருக்குப் பிடித்தமான விடயங்கள்.
ஒரு தடவை மகாகவி பாரதியாரைப்பற்றி பேச்சு வந்தது. பாரதியார் எவ்வளவு பரந்த மனப்பான்மை கொண்டவர். ஒரு இந்து, இயேசுவையும் அல்லாவையும் பாடுவதென்றால் எவ்வளவு உயர்ந்த உள்ளம் என்று பாரதிநேசன் சொன்னார்.
யாழ்ப்பாணக் கல்லூரியிலே ஒருதடவை பாரதி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்விழாவில் ஒரு பட்டி மன்றம் பாரதியின் கவிதைகளிலே விஞ்சி நிற்பது தமிழ் உணர்வா? தேசிய உணர்வா! என்பதே பொருள். தலைமை வித்துவான் க.ந. வேலன், கம்பன் கழகம் இ. ஜெயராஜ், ஈழத்துச் சிவானந்தன் ஆகியோர் பட்டிமன்றத்தில் கலந்து கொண்டனர்.
பாரதிநேசனாகிய சின்னத்தம்பிக்கு இந்தப் பட்டிமன்றம் பிடிக்கவில்லை. பாரதியைக் கூறுபோடாமல் முழுமையாகப் பார்த்து ரசியுங்கள் என்று "உதயன்' பத்திரிகையிலே ஒரு கட்டுரையை அவர் எழுதினார். சின்னத்தம்பியின் அக்கருத்து சரிபோலவே எனக்குப் படுகிறது. பாரதிதாசன் கவிதைகளை இலக்கியமாகவே கருத முடியாது என்றார் அவர். அதில் என்ன கவித்துவம் இருக்கிறதோ தெரியவில்லை என்று என்னிடம் பலதடவைகள் சின்னத்தம்பி கூறியிருக்கிறார். நான் அவரிடம் விவாதம் செய்யத் துணியவில்லை. அமைதியாகக் கேட்டுக்கொள்வேன்.
கால நீரோட்டம் விரைந்து ஓடியது. சின்னத்தம்பியின் உடல் நிலையும் மிகவும் பலவீனமடைந்தது. ஆனால் அவர் புகைபிடித்தலை நிறுத்தவேயில்லை. அது அவருடைய இருதய
81

Page 46
நோயை மேலும் கடுமைப்படுத்தியது. ஆனால் சின்னத்தம்பி எழுதிக்கொண்டேயிருந்தார்.
சின்னத்தம்பியுடைய இரு புதல்விகளும் எனது மாணவிகளாக இருந்தனர். இருவரும் தந்தையாரின் தனித்துவமான சிந்தனைப் போக்கையும் புத்திக் கூர்மையையும் பெற்றிருந்தனர்.
யாழ்ப்பாணத்தின் நெருக்கடி மிக்க சூழ்நிலையின் மத்தியிலும் கூட "ஓ கனடா" என்ற நாவலையும், "மக்கள் நேசன் கார்த்திகேசன்' என்ற நூலையும் எழுதி சின்னத்தம்பி எமக்களித்த பனுவல்களை மறக்க முடியுமா? எம் உள்ளங்களில் அவர் என்றுமே வாழுவார்.
தினக்குரல் அதிவன கலாநிதி எஸ். ஜெயநேசனர் ஆயர் தென்னிந்திய திருச்சபை
அன்புத்தோழர் 'தம்பி"
நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலும் இன்னும் வாழப்போகும் காலங்களிலும் எத்தனை எத்தனையோ பேர்களோடு பழகுகின்றோம். பெற்றெடுத்த தாய், தந்தையர், சகோதர சகோதரிகள், பிள்ளைகள், நண்பர்கள், தோழர்கள், உறவினர்கள் என்று சொல்லில் அடங்காதோர். இவர்களில் என் நெஞ்சைவிட்டு அகலாத தோழர்களில் முக்கியமானவர்களில் ஒருவர்தான் எங்கள் தம்பி இவரை யாழ்ப்பாணம் கம்யூனிஸ்ட் கட்சிக் காரியாலயத்திலும் பின்னர் கொழும்பு காரியாலயத்திலும் பலமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தொழிலாளி பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்தார். அவர் மற்றவர்களுடன் பழகும் போது மிக இனிமையுடன் பழகுவார். சிரித்துக் கொண்டே பேசுவார். அவர் ஓர் இலங்கையனாக வாழ்ந்தார். இன, மத, சாதி வெறிகளை வெறுத்தார். அதற்கு எதிராக தனது பேனாவைப் பயன்படுத்தினார்.
இலங்கையில் சமதர்ம சமுதாயம் உருவாக வேண்டும் என ஆசைப்பட்ட அவருடன் ஒரு காலத்தில் மிக நெருக்கமாக கட்சியில் வேலை செய்த ரோகண விஜயவீர கட்சியில் இருக்கும்போது தமிழர்களுக்கு விரோதமாகவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் கருத்துகளைக் கூறியபோது அவருடன் தம்பி அவர்கள் முரண்பட்டார். தமிழ்த் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் முழுச் சிங்கள மக்களும் தமிழர்களின்
82

விரோதிகள் என்று சொல்லி இன வெறிப் பிரசாரம் செய்து தேர்தலில் வென்று ஆசனங்களைக் கைப்பற்றியதும் தென் இலங்கையில் தமிழ் விரோத இன வெறியாக்கிய தலைமைகளின் அரசுக்கு முரண் கொடுத்து ஆட்சியிலும் பங்கு பற்றி அற்ப சலுகைக்காக தமிழரினதும் தொழிலாளரினதும் உரிமைகளைக் காட்டிக் கொடுத்ததையும் வன்மையாகக் கண்டித்து எழுதுவார்.
அவர் சீனா சென்று சீனா வானொலியில் தமிழ் மொழி பெயர்ப்பாளராக கடமை ஆற்றிக் கொண்டிருந்தபோது எனது பெரும் மதிப்புக்குரிய தோழர் கார்த்திகேயன் மாஸ்ரரினது மூத்த புதல்வியைத் திருமணம் செய்து கொண்டதாக அறிந்தேன். அதன் பிற்பாடு அவர் யாழ்ப்பாணம் வந்து யாழ் பிரதேசக் கமிட்டியில் அங்கம் வகுத்து செயல்பட்டார். அப்போது பல இடதுசாரி தலைவர்களும் தொண்டர்களும் இனவெறிபிடித்த அரசுடனும் அமைப்புக்களுடனும் அங்கம் வகுப்பதைக் கண்டு மனம் உடைந்து போனார். இனவிரோதம் கூர்மை அடைந்து இலங்கை அரசு ஒர் இனத்தின் பிரதிநிதியாக செயல் படுவதையும் தமிழ் மக்களை ஈவிரக்கம் இன்றி குண்டுகள் போட்டு கொல்வதையும் கண்ட அவர் அதற்கு எதிராக ஆயுதம் ஏந்தி அந்த அற்ப சலுகைக்காகவும் ஆசைப்படாது விடுதலை ஒன்றே தமது இலட்சியம் என்ற தியாகத்துடன் போராடும் போராளிகளை உளமார வாழ்த்தினார்.
அவர் ஓர் பகுத்தறிவுவாதி. கற்பனைக் கதைகளை இதிகாசங்களை புளுகுகளை வெறுத்தார். பரிணாமத்துவத்தை நம்பினார். மாக்சியம் லெனினிசம் மாசேதுங்கின் கொள்கையின் அடிப்படையில் நாடு விடுதலை பெற்றால்தான் நாட்டில் உள்ள முழு மக்களுக்கும் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்பதை அடிக்கடி கூறுவார். அவரது கடைசி ஆசையான தனது உறுப்புகள் சிலவற்றை யாழ். வைத்தியசாலைக்கும் தனது உடலை யாழ் பல்கலைக் கழகத்திற்கும் கொடுக்கும்படி எழுதிவைத்து சென்றதையும் அவரது பகுத்தறிவு உணர்வு பாடமாக எடுத்துக்காட்டுகிறது. அவரது கொள்கைகள் என்று இலங்கையில் உருவாகிறதோ அன்றுதான் இலங்கைவாழ் முழு மக்களுக்கும் விமோசனம் கிடைக்கும் என நம்பும்
தோழமையுடனர்
é25. IDTifáés
83

Page 47
சிந்தனையால் மிக உயர்ந்தோன்!
திரு. சின்னத்தம்பியின் மறைவு ஒரு நிரப்ப முடியாத இடைவெளியை ஏற்படுத்தியது. கம்யூனிச வாதியாக, உதயன் பத்திரிகை ஆசிரியராக, சமூக சேவகனாக, மனிதாபிமானியாக இவர் ஆற்றிய பணிகள் என்றும் மக்களால் நினைவு கூரத்தக்கவை ஆகும். இவரது மனிதப் பண்பும் மனிதநேயமும் எல்லோரையும் கவர்ந்தது.
தோன்றிற் புகழொடு தோன்றுக - அஃதில7ர் தோன்றலிற் றோன்றாமை நன்று என்று வள்ளுவர் வாக்கின் முன்னடி அமரர் சின்னத்தம்பி என்றால் மிகையாகாது. அன்னாரின் இல்லற வாழ்வ மிகவும் சிறப்பாக தெய்வந் தொழாஅற் கொழுநன் தொழுதெழுவான் பெய்யெனப் பெய்யும் மழை என்பதற்கேற்ப இனியதாக அமைந்தது. இவருக்கு மனைவியாக வட்டுக்கோட்டை மக்கள் நேசன் கம்யூனிசவாதி கார்த்திகேசன் ஆசிரியர் அவர்களின் புத்திரி ராணிரத்தினதேவியை திருமணம்புரிந்து, அருமை முத்துக்களாக சீனோதயா, சிறீஉதயா ஆகிய பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்.
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - அவையத்து முந்தி இருக்கச் செயல் என்னும் வள்ளுவர் வாக்கிற்கு இணங்கத் தமது தகுதிக்கேற்ப எல்லோரையும் உயர் கல்விவரை கற்பித்தார்.
மூத்த மகளான சீே னாதயா (மருத்துவர்), இளையவர் சிறீஉதயா (உயர் கல்வி மாணவி). இவர் தனது வாழ்க்கையில் பதினைந்து வருடங்கள் சீன தேசத்தில் வாழ்ந்து அவர்களுடைய நடைமுறை பழக்க வழக்கங்கள் கற்று எல்லோருக்கும் உரைத்தவர். மக்கள் சேவையே மகேசன் சேவை எனப் போற்றி வாழ்ந்த பெருமகன் திடீரென எம்மை விட்டு மறைந்து விட்டார்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும் பெருமை யடைத்திவ் உலகு
மா. பொனர்னுச்சாமி முன்னாள் கிராமசபை உபதலைவர்(சுழிபுரம்) சமாதான நீதவான் (தற்போது டென்மார்க்கில் வாழ்பவர்)
84

நெஞ்சில் நிறைந்த நண்பர் சின்னத்தம்பி
காலஞ்சென்ற நண்பர் சினனத்தம்பிக்கு 1987ம் ஆண்டிலிருந்து நான் அறிமுகமானேன். அன்று தொடக்கம் நாம் எமது கிராமத்தை விட்டு வெளியேறும் வரை மிகவும் அன்னியோன்ய மான நண்பர்களாகவே இருந்தோம். தம்பியும் நானும் 1987ம் ஆண்டிலிருந்து ஒரே பத்திரிகை நிறுவனத்தில் கடமையாற்றினோம். காண்போரைத் தன்பால் ஈர்க்கக்கூடிய தோற்றமும் வாக்குச் சாதுரியமும் உள்ளவர். ஆரம்பத்தில் நானும் தம்பியும் மட்டுமே நண்பர்களாக இருந்தாலும் 1995ம் ஆண்டளவில் நமது இரு குடும்பமும் மிகவும் நெருங்கிய குடும்ப நண்பர்களாகி விட்டோம்.
வட்டுக்கோட்டை எமது அயல்க்கிராமமாக இருந்ததால் ஓய்வு நேரத்தில் நாங்கள் தம்பி குடும்பத்தைச் சந்தித்து எமது நட்பை வளர்த்துக் கொண்டோம். அவர்களும் வட்டுக்கோட்டையிலிருந்து பொன்னாலைக்குச் செல்லும் வழியில் எங்கள் வீட்டிற்கு வந்து இளைப்பாறியே செல்வார்கள். தம்பிக்கு தனதுஎழுத்து அனுபவம், பற்றிக் கதைப்பதென்றால் அலாதிப்பிரியம். நேரம் போவது தெரியாமல் இருந்து கதைப்பார். அவர் எத்தனை மணித்தியாலம் இருந்து கதைத்தாலும் இன்னும் இருந்து கதைக்க மாட்டாரோ என்று ஆவலாகவே இருக்கும். அவ்வளவு சுவாரசியமாகவே கதைப்பார். கடைசியாக நாம் கிராமத்தை விட்டுக் கொழும்புக்குப் போகப்போவதாகச் சொன்னபோது ஒரு நோட்டுப் புத்தகத்தைத் தந்து “கூடிய சீக்கிரத்தில் நானும் சில அலுவலாக கொழும்புக்கு வரும்போது உங்களைச் சந்திப்பேன்" என்றவர் துரதிஷ்டவசமாக அவரை எங்களால் சந்திக்கவே முடியவில்லை. நாங்களும் கனடாவிற்கு வந்த பிறகும் அவருடன் கடிதத்தொடர்பு வைத்திருந்தோம், வாசிக்க சுவையான கடிதங்கள் எழுதுவார். கடைசியாக அவர் எழுதிய கடிதத்தில் தனக்கு நடந்த மணிவிழா கொண்டாட்டம் பற்றிய ஒரு துண்டுப்பிரசுரமும், மணிவிழா நடந்த விதம் பற்றிய சிறு விளக்கமும் எழுதியிருந்தார். அவர் கடைசியாக எழுதிய கடிதமும் அவர் தந்த நோட்டுப் புத்தகமும் இன்னும் எம்மிடம் பத்திரமாகவே இருக்கிறது.
அவர் மறைந்து விட்டாலும் அவரது அன்பு நிறைந்த நட்பு
எம்மோடு என்றும் நினைவில் நிற்கும். அவரது பிரிவால் துயருறும் அவரது அன்பு மனைவி, பிள்ளைகள், துன்பத்தில் நாமும் இணைந்து கொள்வோம்.
அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக.
திரு.திருமதி.அருமைலிங்கம்
Afff 85

Page 48
மானிடம் போற்றிய பாரதிநேசன்
தனது கடைசிமூச்சு வரை ஒரு பொதுவுடமை வாதியாக வாழ்ந்து மறைந்தவர் பாரதிநேசன் சின்னத்தம்பி. பொதுவுடமை இயக்கத்தவர்களாலும் முற்போக்காளர்களாலும் மிகுந்த பிரியத்தோடு மதிக்கப்பட்டவர். இப்போது இலேசாக கண்களை மூடிக்கொண்டு அவரை யோசிக்கின்ற வேளையிலும் வசீகரமான புன்னகையுடனான அவரது முகம் பளிச்சென்று தெரிகிறது மானசீகத்திலே,
அற்புதமான புன்னகை அது. சிரிக்கும் கண்கள், சிரிக்கின்ற இதழ்கள் இவையெல்லாம் கலந்த முகத்தின் புன்னகை. இது உள்ளத்தின் ஒளியினால் மலருகின்ற உண்மையான சிரிப்பு பேசுகின்றவர்களைக் கலந்து கவர்ந்து ஆட்கொள்ளுகின்ற இனிமையான ஆளுமை.
இரண்டு தலைமுறைக் காலங்களுக்கு முன்னே தான் நான் முதலிலே தோழர் சின்னத்தம்பியை கொழும்பு மின்சாரசபையின் அருகே சந்தித்தேன். அவரை முதலில் சந்தித்து சில நிமிஷங்களே பேசியவேளையும், அந்த இளமையின் கம்பீரமான புன்னகை என்னை மிகவும் வசீகரித்தது.
பின்னர் 1966இல் சந்தித்தோம். சித்தாந்த ரீதியாக பொதுவுடமை இயக்கம் பிளவுபட்டு, உலகின் எல்லாநாடுகளிலும் அது எதிரொலித்தது, இலங்கையிலுந்தான். யாழப்பாணம் ஸ்ரான்லி வீதி கட்சி அலுவலகத்தில் தோழர்கள் மு. கார்த்திகேசன், வி. ஏ. கந்தசாமி, கே. ஏ.சுப்பிரமணியம், நீர்வை பொன்னையன், கே. டானியல், குமாரசாமி இன்னும் பல தோழர்கள் ஒன்றாயிருந்து போஸ்டர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். அங்கு நின்ற சுறுசுறுப்பான தோழர்களில் தோழர் சின்னத்தம்பியையும் ஒருவராகக் கண்டேன். கையிலே நிறையபொதுவுடமை சித்தாந்த நூல்களை வைத்திருந்தார்.
பீக்கிங் வானொலியில் அப்போது மாதகல் வ. கந்தசாமி தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தார். கட்சியினர் என்னை அங்கே அனுப்ப முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். தூதுவராலயம் சென்று நேர்முகப் பரீட்சை, குரல்
86

பொருத்தத் தேர்வு முடிந்து, கடவுச்சீட்டும் எடுத்தாயிற்று. இவ்வேளையிலே எனக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனமும் கிடைத்தது. நான் கவலைப்பட்டேன். கட்சிவேலையைப் பார்த்துக் கொண்டே இங்கே இருக்கலாம் என முடிவு செய்தேன், எனது இடத்திற்குப் போவதற்கு இன்னொருவரைத் தெரிவு செய்து அனுப்புவதற்குக் கட்சி முடிவுசெய்தது. இந்த வேளையிலும் தோழர் சின்னத்தம்பியைச் சந்திக்க நேர்ந்தது.
அந்த நாட்கள் எனக்குப் பயன் அளித்தவை. பல பிரசுரங்கள் அவள் மூலம் எனக்குக் கிடைத்தன. அவை எனக்குப் பெரிதும் விளக்கம் பெற உதவின. தோழர் கே. டானியலும் இந்த வேளையிலேதான் எனக்கு மிகவும் நெருக்கமானவரானார். என்னைப்போலவே சின்னத்தம்பியும் இவர்களோடு நெருக்கமும் தோழமையும் கொண்டிருந்தார்.
தோழர் கார்த்திகேசன், எல்லாத் தோழர்க்ளோடும் அளவற்ற பாசம் கொண்டு சமமாகப் பழகும் மேன்மையான மனிதராக இருந்தார். தோழர்கள் சீனிவாசகம், எஸ். டி. நாகரத்தினம் ஆகியோரது கட்சிவேலைகள் அப்போது இளந்தோழர்களை மிகச்சுறுசுறுப்பாக இயங்கச் செய்தன. இவ்வேளையிலோ சி.கா. செந்திவேல், துரைரத்தினம், நீர்வை பொன்னையன் போன்றோர் கட்சியின் பல தளங்களில் இயங்கினார். இவர்களை எல்லாம் ஆதர்சமாகக் கொண்டு உழைத்தவர் சின்னத்தம்பி,
இவ்வேளையை இலங்கைப் பொதுவுடமை இயக்கத்தின் பொற்காலம் என்று கூறலாம். தோழர் சண்முகதாசன் கட்சியினர் சித்தாந்த அறிவில் தேர்ந்து அரசியல் போதம் பெற்றிருக்க வேண்டும் என்பதில் கூடிய கவனம் செலுத்தினார். அரசியல் வகுப்புகள் ஒழுங்காக நடத்தப்பட்டன. குறிப்பாக மாஒவின் ஆக்கங்கள் மொழிபெயர்க்கப்படலாயின. இதிலோ தோழர் சின்னத்தம்பியின் ஆர்வமான பங்களிப்பு இருந்தது. -
பேராசிரியர் கைலாசபதியினால் அறிஞர் ராகுல் ய சாங்கிருத்தியாயனின் நூல்கள் சின்னத்தம்பி, என்னைப் போன்றோருக்கு அறிமுகமாயின. இலங்கையில் சிறிது காலம் வாழ்ந்த பேராசிரியரான ராகுல்யசாங்கிருத்தியாயனைச் சந்திக்காமற் போய் விட்டோமே என்று தோழர் சின்னத்தம் பி கூறிக் கவலைப்பட்டிருக்கிறார்.
87

Page 49
படிப்பிலும், படித்தோரோடு பேசுவதிலும் தோழர் சின்னத்தம்பி காட்டிய ஆர்வம் சொல்லுக் கடங்காதது. அவர் தனது கொள்கையிலே கொண்ட அழுத்தமான பிடிப்பு அவரது வீச்சான தர்க்கங்களிலே ஆழமாகத் தொனித்தது. இன்னும் சொன்னால், பலவேளைகளிலே இளைஞருக்கேயுரிய மூர்க்கமான விவாதம், கொள்கை முரணுள்ளோருக்கு அவர்களை அறியாத அச்சத்தைக்கொடுக்கும். இதை இன்றும் மனப்பதிவிலிருந்து பக்கம் பக்கமாக மீட்டெடுக்க முடிகின்றது. உற்சாகமான தர்க்கவாதி
96).T.
எனக்குக் கிடைக்காத வாய்ப்பு தோழர் சின்னத்தம்பிக்கு கிடைத்தது. மக்கள் சீனக் குடியரசுக்கு அவர் சென்று வானொலியில் பணியாற்றினார். தோழர் கார்த்திகேசனின் மகள் ராணியை அவர் திருமணம் செய்து கொண்டார். இந்தக் காலப்பகுதியின் பின்னர் தோழர் சின்னத்தம்பியைக் காண எனக்கு வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால், அடிக்கடி பல தோழர்களோடு தோழர் சின்னத்தம்பியும் எனது நினைவிலே வருவார்.
தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் 'தினக்குரலில்வரும் பாரதிநேசன் சின்னத்தம்பியின் பேட்டிகள், கட்டுரைகளைப் படிப்பேன். அந்தக் கட்டுரையின் குரலை முன்னர் எங்கேயோ கேட்டதுபோல மனம் உணர்வு கொள்ளும், திருப்தி அடையும். அந்த எழுத்துக்களைத் தொடர்ந்து சிந்திக்கும். தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பிய பின்னர், தோழரும், பாரதிநேசனும் ஒருவரே என அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். யாழ்ப்பாணம் சென்றதும் நான் சந்திக்க விரும்பிய முதல் பத்துப்பேரில் தோழர் சின்னத்தம்பியும் ஒருவராக இருந்தார். அது பொய்யாய், கனவாய், பழங்கதையாகப் போய்விட்டதென்பது பெரியதொரு சோகமே.
தற்செயலாக கொழும்பிலே இராணியையும் அவரது சகோதரியையும் சந்திக்க நேர்ந்தது மறக்கமுடியாத சந்திப்பு. ஆபிரிக்க நாடான உகண்டாவில் கருத்தரங்கிற்குச் செல்ல அவர் வந்திருந்தார். அப்போது ஆர்வத்தோடு தோழரைப் பற்றி விசாரித்தேன். படிப்பிலும், பேச்சிலும், எழுத்திலும் பொதுவுடமையை அடிச்சரடாகக் கொண்ட கணவனைப் பற்றியும் பலவேளைகளில் அவர் நண்பர்களோடு பேசியது குறித்தும் சொன்னார். எனது விசாரிப்பையும், அன்பையும் தோழருக்குக் கூறும்படி சொன்னேன்.
88

இதன்பிறகு வேதனைதரும் அவரது மரணச் செய்திதான் கேட்க நேர்ந்தது.
சோவியத் ரஷ்யாவின் உடைவு பல பொதுவுடமை யாளர்களைச் சோர் வும் துயரமும் கொள்ளச் செய்தது. இந்தப்பின்னடைவை, பொதுவுடமையின் வீழ்ச்சி என்று பல அறிவாளிகள் நிறுவ முயன்றனர். பிற்போக்குவாதிகளிடம் பணம் பெற்ற பல சந்தர்ப்பவாதிகள், தாங்கள் பொதுவுடமையாளர்கள், ஆனால், பொதுவுடமை தோற்றுவிட்து என்று வரட்டுத்தனமாக எழுதினர். தோழர் சின்னத்தம்பி ஒரு விஞ்ஞானத்துவம் என்றும் தோற்கமுடியாது, இது ஒரு பின்னடைவே என்ற கருத்தினை அழுத்தமாக முன்வைத்தார். கடைசி நாட்களில் இயக்கமாக இல்லாத உதிரி ஆளாக அவர் ஆக்கப்பட்டபோதிலும் அவரது பொதுவுடமைக் கருத்துப் பின்பற்றுதலை எவரும் மறுதலிக்க
(ԼՔԼԳեւ IT35l. t
‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்' என்றான் மகாகவி பாரதி. பாரதிநேசனான சின்னத்தம்பியும் அப்படியே வாழ்ந்தார். நிறையவே எழுதினார். அவை அதிர்க்குரலாக இருந்தன. பல விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். உதாரணத்திற்கு ஆடைத்தொழிற்சாலைகளில் பெண்கள் சுரண்டப்படுவதைப் பற்றிய கட்டுரை. சிறந்தவர்களை நேர்காணல்களால் கொண்டு வந்தார்.
அவர் மானிட நேயர், உழைப்பவர்களின் அடித்தட்டு, மக்களின் நண்பர். அதனால்தான் அவர் பிரிவுத்துயர் பலரைக் கலங்க வைத்தது. சுற்றுப்புறங்களெல்லாம் கறுப்புக்கொடிகளாய்ப் பறக்கச் செய்து, கவலைக்குள்ளாக்கிற்று.
செ.யோகநாதன் தினக்குரல், 18.04.2001
நினைவு மலர் வெளியீடு கொழும்பில் நடாத்தப்பட்டது
சிறீலங்கா தொலைக்காட்சி தமிழ்ப்பகுதியும் செய்திகள் பரப்பியன
89

Page 50
அமரர் வீ. சின்னத்தம்பியின் ஆக்கங்களும் படைப்புகளும்
சிந்தனையைத் தூண்டிவிடும், உயிர்துடிப்புள்ள ஆக்கங்களும் படைப்புகளும் அமரர் வீ சின்னத்தம்பியின் புகழை ஓங்கச் செய்தன. அவை ஒரு நீண்ட பட்டியலே. கவர்ச்சியான தலைப்புகள்தான் மக்களை ஈர்க்கும் என்று பத்திரிகை உலகம் அதற்கேற்ப மாறியிருக்கும் வேளையிலும் விஷயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் அதேவேளை கலாரசனையுடனும் தலைப்புகளைக் கொடுத்து வாசகர்களைக் கவர்ந்திருந்தார் 'பாரதிநேசன்’ வீ. சின்னத்தம்பி. அவர் எழுத்துக்கள் பாரதிநேசன், புதினன், புதினப்பிரியன், தம்பி, ஈழத்தம்பி, கரவைத்தமபி, சீனாத்தம்பி, ஆனந் என்றெல்லாம் பல புனை பெயர்களில், ஏன் தனது சகோதரி 'கண்ணம்மா’ பெயரிலும், தனது மனைவி பெயரில் 'சீனாராணி என்றெல்லாம் புனை பெயர்களில் எழுதியருக்கிறார். பெயரை மாற்றினாரே தவிர தனது கொள்கையையோ, எழுத்தின் தரத்தையோ, கருத்தாழத்தையோ மாற்றவில்லை. வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு விடயங்களை எழுத முனைந்தாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. நிச்சயமாகக் கூடியவரை ஒரு தீவிர கம்யூனிஸ்டாக அரசியற் கருத்துக்களை தெரிவிக்கும் போது வீ. சின்னத்தம்பியாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவர் எழுத்துக்களை ஏற்று பிரசுரித்த பத்திரிகைகள் ஏராளம். அவை முற்றுமுழுதாக சீனசார்பு கம்யூனஸ்ட் கட்சி அரசியல் பத்திரிகைகளான யுவசக்தி, தேசாபிமானி, தொழிலாளியிலிருந்து தினசரி அல்லது வாரப்பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன், ஈழநாடு, உதயன் (யாழ்ப்பாணம்), தினக்குரல், முரசொலி எனும் தமிழ் பத்திரிகைகளாகவும் டெயிலி நியூஸ், லங்கா கார்டியன், ஜலன்ட் எனும் ஆங்கில பத்திரிகைகளாகவும், மக்கள் இலக்கியம் எனும் மாத கலை இலக்கிய சஞ்சிகையாகவும் பலதரப்பட்டிருந்தன. அவர் சில பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தது மட்டுமல்லாமல், ஒரு சில பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியள்ளார். ஆக்கங்கள் சில, 'ஓ கனடா நாவல் உட்பட தனியாகவும் பிரசுரமாயின.
அவரது எழுத்துக்கள் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்காகவும், அனைத்து மக்களை ஈடுபடுத்தியும் படைக்கப்பட்டன. பெண்கள், மாணவர், குழந்தைகள், தொழிலாளர், விவசாயிகள், உத்தியோகஸ்தர், தொழிலதிபர், அரசியல்வாதி, எழுத்தாளர்,
90

நடிகர், வேறுநாட்டவர் என்று யாரையும் தவிர்க்காமல் யாவரையும் உள்ளடக்கியே அவரது ஆக்கங்கள் இருந்தது மட்டுமல்லாமல், வாசகர்கள் அனைவரும் எந்தவொரு கட்டுரையையோ நாவலையோ ஆர்வத்துடன் படிக்கக் கூடியதாக ஜனரஞ்சகமாகவும் சுவாரசியமாகவும் இருந்தன.
ஆக்கங்கள் படைப்புகள் பட்டியலின் ஒருபகுதி கீழே தரப்பட்டுள்ளது:
காலமும் கருத்தும் (வாராந்தம் தினக்குரல் பத்திரிகையில் புதினன் என்ற பெயரில்)
பத்தரிகையாளருக்கு ஒரு பாரதி மகாகவியும் நடிகர்திலகமும் சொற்பொழிவுகளும் பண்பாடும் இவளே நல்ல பெண்மணி காவியமான திரைப்படங்கள்
- சார்லி சாப்ளின் e எத்தனை ஆயிரம் துயர்கள்
- மூடநம்பிக்கைகள் பணத்தின் ஆட்சி இது ஒரு மேதினச் சிந்தனை அலைகளில் அடிபடும் அப்பாவிகள்
- LT6
‘றவுன்ட் அப் சீற் பிடிக்கும் வேதனை கந்தையாவை மறந்தது ஏனோ? இதுவும் ஒரு அடிப்படைத் தேவை ஆடுபவனும் ஆடவைப்பவனும் நிலைமாற வழியில்லையா? கிரிக்கெட்டின் மேலாதிக்கம் நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கு குடாநாட்டில் இடம் பெற்ற நூல் திருட்டு யாழ்ப்பாணத்தின் சகஜமற்ற சகஜம் காலத்தின் கோலம் வேதனையிலிருந்து ஒரு போதனை தருமர் இழைத்த தவறு ஜெயகாந்தனின் முற்போக்கு இலக்கிய வேடதாரிகள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்
91

Page 51
இடையில் அணு ஆயுத யுத்தம் ஏற்பட்டால் ஆயத மோதல்களும் பெண்களும் திறந்த பொருளாதாரத் திருவிளையாடல் பச்சை வண்ண சமுதாயம் 2. சிறையோ சிறை பகிடி வதைக்கு எதிரான குரல் ரஷ்யாவில் மூடநம்பிக்கைகள் இப்படியும் ஒரு மனிதனா? கார்த்திகேசன் மாஸ்டர் வெள்ளை மாளிகையின் கறுப்புப்பக்கம் அமெரிக்க யாழ்ப்பாண மனிதர் பொன்விழாவும் மனித வளமும் புலம்பெயர்ந்த இலக்கியம் கைலாசபதி அரங்கில் ஒரு இலக்கிய விழா வேலணை மக்களின் ஒன்று கூடல் நிக்கொலஸ்சும் லெனினும்
இன்றைய யாழ்ப்பாணம் (தினக்குரல் பத்திரிகையில்
பாரதிநேசன் சின்னத்தம்பியின் நேர்காணல்கள்)
கவிதையின் வளர்ச்சியைப் பாதிக்கும் அம்சங்களில் முக்கியமானது திறனாய்வாளர்களின் அறியாமை (கவிஞர் இ. முருகையன்)
பட்ட கடனை திருப்பிக் கட்ட முடியவில்லை புதிய கடனைப் பெறவும் முடியவில்லை (மில்க் வைற் கனகராசா)
நவீன சிந்தனைகளுடன் புதிய நூற்றாண்டில் காலடி வைக்க நாமும் ஒரு கருவியாக இருக்க வேண்டும் (பூபாலசிங்கம் புத்தகசாலை முகாமையாளர்)
அழிவையும் இடர்களையும் சந்தித்த போதிலும் யாழ்ப்பாண மக்கள் சேமிப்பை மறந்து விடவில்லை (Halton National Savings Bank, (p5T60LDustentif)
போர்ச்சுவடுகள் மாறாத நிலையில் தற்காலிக கொட்டகையில்
இயங்கும் பிரபல பாடசாலைகள் (மத்திய கல்லூரி அதிபர் இராசதுரை)
92

கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு போதனை செய்ய நான் விரும்பவில்லை (கலாநிதி போட்டர்)
புலம்பெயர்ந்துறைபவரின் இலக்கியங்கள் யாழ். மக்களின் வாழ்வை பிரதிபலித்து தாக்கத்தை ஏற்படுத்துமென்று கூறமுடியாது. நம்மவரின் வெளிநாட்டு வாழ்வியல் அனுபவங்கள் யாழ்ப்பாணத்தில் வாழும் மக்களின் மனவிரிவுக்குத் துணைபுரியலாம் (பேராசிரியர் சுப்பிரமணியன்)
தமிழ் மாணவர் தக்க கல்வியை பெறுவதற்கு உரிய வகையில் ஆசிரியர் இன்றில்லை (புத்தொளி சிவபாதம்)
ஆணாதிக்கவாதிகளுக்கு கவசமாகப் போயிருக்கும் 'நல்ல மனைவி நல்ல குடும்பப் பெண்' (சரோஜா சிவச்சந்திரன்)
கொள்கை இல்லாதவன் பேனா பிடிக்கக் கிடாது (தெணியான்)
பத்திரிகையாளர் வேலையை தொழிலாகச் செய்தால் சம்பளம் மாத்திரமே கிடைக்கும் ஆனால் அத்துறையில் முன்னேற முடியாது. காதில் கேட்டதையெல்லாம் செய்தியாக்காதே (கதிர்)
யாழ்ப்பாண மாணவர்கள் மத்தியில் குறைந்துவரும் தமிழ் மொழியறிவு (கடம்பேசுவரன்)
அல்லற்பட்டு ஆற்றாது கண்ணி வடிக்கும் வன்னி மக்களுக்கே நமது உதவி இன்று அதிகமாகத்தேவை (கலாநிதி எஸ். ஜெபநேசன்)
தொழில் நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க எவருமே முன்வருவதாக இல்லை (திரு. புவனேசன்)
யாழ்ப்பாணத் திருமணங்களில் சாதகம் மாத்திரம் பார்க்கின்ற நிலை உருவாகும் (செங்கையாழியான்)
யாழ் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக 7 கோடி ரூபா
கடனுதவி வழங்க ஏற்பாடு (வடவலய உதவிப் பொது முகாமையாளர் திருநாவுக்கரசு)
93

Page 52
உயிர் நுட்பத்தை வளர்ப்பதன் மூலமாகவே விவசாயம் கைத்தொழில் விருத்தி சாத்தியம் - 1 யாழ். பல்கலைக்கழகத்தில் மட்டுமே உயிர்நுட்பவியல் கற்கைநெறி உள்ளது - 2 (யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியர் பாலசுப்பிரமணியம்)
பொய் கெட்டு மெய்யானார் மாண்பு (மு. டானியல்)
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் போருட் பணிகளைப் பாதித்துள்ளதா? (குணேந்திரதாசன்)
தீராத விஷத்தையும் தீர்க்க வல்ல விஷக்கடி வைத்தியர் (கொட்டடி சிற்றம்பலம்)
ஒரு புலனால் கிரகிக்கப்படும் வானொலி நாடகம் எல்லாப் புலன்களுக்கும் விருந்தளிக்க வேண்டும் (அராலியூர் சுந்தரம்பிள்ளை)
வடக்கு-கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறை பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்குகிறது - 1 தமிழ்ப் பாடசாலை பிள்ளைகளுக்கு யுத்தத்தால் ஏற்பட்டுள்ள பலத்த உளவியல் தாக்கங்கள் - 2 (திவகலாலா)
மாணவர் நலன் கருதி கூட்டுறவுப் புத்தகசாலை (கார்த்திகேசு நடராசா)
கல்வித்துறையில் ஒரு புரட்சி (கார்த்திகேசு நடராசா)
நமது சமூகத்தின் கல்வித்தரம் சீரழிந்து கொண்டு செல்கிறது, யுத்த சூழ்நிலைகளால் கற்காதோர் தொகை மிக அதிகமாகியள்ளது (வடகிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் கந்தசாமி)
கல்விப்பயிர் வளர்த்த அதிபர்கள் வரிசையில்
ஒரு கல்லூரி அதிபர் அதன் மன்னன் (அதிபர் பூரணம்பிள்ளை)
94

திறமை மிகு தலைமை ஆசான்! நிறைவான அரசியல்வாதி! சிறப்பான கல்விமான்! (முக்கோண பரிமாணத்தில் அதிபர் ஒறேற்றர்)
குளிர்காலம் வந்தால் இளவேனில் தூரத்தில் இருக்க முடியாது (எம். எஸ். சீனித்தம்பி)
கல்வியை வளர்க்க இன்று நாம் பல்வேறுவித பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியள்ளது (வி. சிவஞானபோதன்)
கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் சம்பந்தமான கட்டுரைகள் (வீ. சின்னத்தம்பியாக)
கம்யூனிஸ்ட் பிரகடனம் வரலாறாகி விடவில்லை
ஒக்டோபர் புரட்சியில் மலர்ந்த சோவியத் யூனியன் சிதைந்தது ஏன்?
Should Progressive Mankind Mourn the Death of Soviet Union?
வடக்கில் சகல துறைகளிலும் ஏகபோக ஆதிக்கத்தைக் கொண்ட வளவுகாரர்கள், இனப்பிரச்சனை தொடர்பான தீர்மானம் எடுப்பதில் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய கந்தையா
தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் சண் முன்வைத்துப் போராடிய கருத்துக்களை இன்று வரலாறு சரியென நிருபித்து நிற்கிறது
Shanmugathasan, crusador against inequality
தொழிலாளர் பற்றி (வி. சின்னத்தம்பியாக)
கட்டுநாயக்க ஆடைத்தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்களின் கதை
சர்வதேசரீதியில் தொழிற்சங்க இயக்கம்
95

Page 53
ஓ கனடா! கலைந்த கனவு
தம்பி என அனைவராலும் அன்பாக அழைக்கப்படுகின்ற சீனாச் சின்னத்தம்பியின் ‘ஓ கனடா’ என்ற நாவல் கனடாவில் வாழும் தமிழர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய ஒன்று. நம்பிக்கை இழந்து தாயகத்திலே தத்தளிக்கும் தமிழ் மக்களின் காத்திருப்புக்களையும், மேற்குலகின் உந்துதல்களும் சவால்களும் எம்மவர் களை ஆட் டிப் படைப் பதையும் , அதகார அடாவடித்தனங்களுடனான இனவாதக் கறைபடிந்த வரலாற்றைச் சுமந்து கொண்டு வாழ்க்கையைப் பெரும் சவாலாகக் கொண்டு மக்கள் வாழ்வதையும் வடிவமைத்திருக்கும் யதார்த்த இலக்கியம் இது.
முருகேசு என்ற கமக்காரர் தன் மகன் தம்பிராசா வெள்ளை ரெளசரும் சேட்டும் அணியும் ஓர் அரசாங்க உத்தியோகத்தன் ஆவதற்காகக் ஹாட்லி என்ற மத்தியதர - உயர் மத்தியதர வர்க்கத்தினரின் கல்லூரிக்குச் செல்ல வைப்பதற்கு அரும்பாடு படுகின்றார். எழுதுவினைஞனான தம்பிராசா கொழும்பில் 'சமறி" வாழ்க்கை வாழ்ந்து தனிச் சிங்களச்சட்டம்' அமுலுக்கு வந்தபோது வேலையை உதறி எறிந்துவிட்டு இளைப்பாறி, கணக்கெழுதும் யாழ்ப்பாணக் கடைச் சிப்பந்தியாகின்றார். விரிவுரையாளராக்கிய தம்பி சிவராசா கனடாவிற்குப் படிக்கச் சென்று வெள்ளைப் பெண்ணைக் கைப்பிடித்து யாழ்ப்பாணம் சென்று வருகின்றார். போர்க்காலக் கெடுபிடிகளால் கொழும்புப் பயணம், பாஸ்போட் கொழும்பில் எடுப்பதில் உள்ள இன்னல்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார். போரின் தாக்கங்கள் அவரது குடும்பத்தை வெகுவாகப் பாதிக்கின்றது. மருமகன் கால் இழக்கின்றார். தம்பி சிவராசா கனடாவிற்கு ஸ்பொன்சர் செய்தபோது அதுபற்றியும் கனடா போவது பற்றியும் எழுந்த மனப்போராட்டங்கள் பற்றித் துல்லியமாகக் காட்டி விசாவுக்காக ஏங்கி அது கிடைக்க முன்னரே மகனுக்காக, பிறந்த மண்ணின் வேரை அறுக்க முயன்றும் இறுதியில் மகனை இழந்து தவிக்கும் தம்பிராசாவுக்கு கனடா விசா வந்தும் பயனற்றதாகின்றது. இதுதான் "ஓ கனடா என்ற நாவலின் கரு.
தமிழ் மக்களின் துயரம் நாளொரு வண்ணமாக வடிவெடுத்து கறை படிந்த துன்பக் கேணியாகி விட்டது. தமிழ் மக்களின் துயரம் எனும் அருவிகள் குருதிபடிந்து செந்நிறமாக ஓடிக் குருதிக் கேணியில் சங்கமித்து உறைந்து விடுகின்றன. துயர் படிந்த வரலாற்றுத் தடங்கள் சிறுகதைகள், நாவல்களில் சமகாலப் பதிவுகளாகக் கிடப்பவை. தம்பி தான் வாழ்ந்த சூழலில் நடந்த நிகழ்வுகளை அனுபவ உணர்வாக ஓ கனடா என்ற நாவலின்
96

மூலம் “நாட்டில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் அடிக்கடி தம்பிராசா குடும்பத்தையும் மென்னியைப் பிடித்துத் திருகின’ என எம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்.
ஒரு மானுட வினை நிகழ்ச்சி இலக்கியப் படைப்புக்கு ஆதாரமாகின்றது என்று கூறுவர். ஆனால் தம்பியினுடைய படைப்பில் ஒரு மானுட வினை நிகழ்வு அல்ல. பல்வேறு வினைகள் ஒன்றித்தனவாகவே 'ஓ கனடா என்ற நாவல் அமைக்கப்பட்டுள்ளது. உலக இயற்கை நிகழ்வு இலக்கிய நிகழ்வாக மாறி, பின்னர் இயற்கை நிகழ்வுடன் தொடர்பு கொள்கின்றது. நாவலின் தோற்றம் வாழ்வியல் அநுபவங்கள் படைப்பாளியின் ஆற்றலுடன் தொடர்புடையது. வாசகள்களின் தேவைகளும் நாடு நடைமுறையால் வேறுபடும்போது நாவலின் பொருளும் வேறுபாடுகளை வேண்டி நிற்கும். படைப்போன், படையல், வாசகன் என்ற முக்கூட்டு இணைப்பு நாவலின் வெற்றிக்கு அவசியமானது. مح۔
தம்பியின் நாவல் உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு. போராட்டக் காலகட்டத்தில் எழுந்த இலக்கியம் ஆதலால் இலக்கியத்தின் அழகியல் எதிர்பார்ப்பு அர்த்தமற்றது. படைப்பாளியின் புலன் எல்லாம் அன்றாட வாழ்வியல் அனர்த்தங்களில் ஈடுபட்டு தனது வாழ்க்கையையே கொண்டு செல்ல முடியாதிருக்கும்போது மானிடம் உயிர்ப்பு அற்று பிணமாகி விடுகின்ற சூழலில் கற்பனை - அழகியல் கற்பிதங்கள் உயிரற்றவையாகின்றமையை உலக இலக்கியங்களுக்குப் பொதுமையானவையாகக் காணலாம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் நினைவுகளைச் சுமந்து கொண்டிருந்த தம்பி பொது வேலைநிறுத்தத்தில் தம்பிராசாவைக் கலந்துகொள்ள வைத்து, தியாகி கந்தசாமியின் இழப்பினுடே தொழிலாளர் பெற்ற வெற்றி மூலம் தொழிலாள வர்க்கத்திற்கான ஒற்றுமைப் பலத்தை நாவல் ஊடாகக் கட்டி எழுப்புகின்றார். தொழிற்சங்க உணர்வு, இன உணர்வுகளை விளக்குகின்றார். சாதாரண எழுதுவினைஞராக இருந்த ஒரு தமிழனின் கதையாகவும் அக்கதையூடாக 1947 முதல் தமிழர்களுக்கு நடந்த அநீதிகளைத் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றார். தம்பிராசாவும் அவரது குடும்பமும் போர்ச் சூழலில் வாழ்க்கையை ஒட்டுவதில் உள்ள கஷ்டங்களைத் தனது வாழ்க்கைச் சூழலில் வைத்து எழுதியுள்ளார் தம்பி.
கொழும்பில் எழுதுவினைஞராக வாழ்க்கையைத் தொடங்கிய தம்பியின் கதையாகவே கதையின் பெரும்பகுதி செல்கின்றது. “சிங்களம் மட்டும்” என்ற சட்டத்தினால் பாதிக்கப்பட்ட தம்பிராசாக்கள் பலர் தேசியம் என்ற அடிப்படையில் “அப்பே
97

Page 54
ஆண்டுவ’ கூறி, ஆண்ட பரம்பரைகளின் வாரிசுகளாக காரியாலயங்களில் வேலை செய்யாமலே சம்பளம் எடுக்கும் பரம்பரையினர் “சிங்களம் மாத்திரம்” என்ற சட்டத்தின் பின்னர் உருவாகி விட்டதாகப் பொறுப்பற்ற நடவடிக்கைகளின் ஆரம்பத்தைத் தம்பி சாடுகின்றார்.
அச்சமும் நானும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்று கூறுகிறார் தொல்காப்பியர். ஆனால், 1958லிருந்து தமிழ் ஆண்கள் கொழும்பில் வேலை செய்யும் இடங்களிலும் அச்சம், நாண், மடன் கடைப்பிடிப்பதைத் தம்பியின் நாவலில் காணலாம். “ஒழுங்கும் கட்டுப்பாடும் மெல்ல மெல்லக் கண் முன்னாலேயே சிதைய ஆரம்பித்தன” தேசியத்தில் தோன்ற ஆரம்பித்த நச்சுக் கிருமிகள் விதேசியத்தின் நல்ல அம்சங்களில். ஊடுருவத் தொடங்கின. படிப்படியாக இவர்களுடன் எப்படி வேலை செய்வது என்ற எண்ணம் அவருள் வளர்ந்தது. 56க்குப் பிந்திய ஆண்டுகளில். அறியாமலேயே இனவாத நச்சு விதை தூவப்பட்டு விட்டது.”
தமிழ் இளைஞர்களையும் வைத்திருப்பது பெண்பிள்ளையை வைத்திருப்பதைவிடக் கடினமானது எனவும் மடியில் கைக் குண்டை வைத்திருப்பதற்குச் சமம் எனவும் கூறுகின்றார். பாதுபாப்பு என்பது அச்சுறுத்தலான ஒன்று. அது வீடாகவோ, கொழும்பு வழியாகவோ, ஊர்வழியாகவோ, காட்டுவழியாகவோ, அரச புகை வண்டியாகவோ இருக்கலாம். “இந்தச் சனியன் பிடித்த சண்டை இல்லாவிட்டால் எங்கடை நாட்டைப்போல ஒரு நாடும் இருக்க மாட்டாது” என பாதுகாப்புக்கு இருக்கும் அச்சுறுத்ததல்களைக் காட்டுகின்றார்.
சாதியம் பற்றி தம்பி இங்கே பேசவில்லை. ஆனால் வர்க்க வேறுபாட்டினால் தம்பிராசா குடும்பம் படும் அவலம் சித்தரிக்கப் பட்ட போதும் யாழ்பபாணச் சாதி அமைப்பாலும் யாழ்ப்பாண வர்க்க வேறுபாடுகளாலும் போர்ச் சூழலில் பாதிக்கப்பட்ட மக்களில் ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றிய தரிசனம் நாவலில் வெகுவாகச் சித்திரிக்கப்படாமை ஏன் என்ற கேள்வியை கம்யூனிச சித்தாந்தத்தை நன்றாகப் படித்து இறுதிவரை கம்யூனிஸ்ட் ஆகவே வாழ்ந்த தம்பியிடம் கேட்காமல் இருக்க முடியாது போர்ச் சூழலில், அகதிகளாக அந்தரித்து ஓடிக்கொண்டிருந்த யாழ்ப்பாண மக்களை மையமாகக் கொண்ட நாவலில் “அகதிகள்” என்ற ஒருமைப்பாட்டில் சாதி-வர்க்க வக்கிரத்தின் அடாவடித்தனம் எத்தகைய உருவம் எடுத்திருந்தது என்பதைக் காண்பதில் தம்பியின் நாவல் முனைப்பாக ஈடுபடாமை ஏமாற்றத்தைத் தருகின்றது. எனினும், “பரீட்சைப் பத்திரத்தை நிரப்பும் போது எல்லாம் தந்தையின் "தொழில்' 'கமம்"
98

என எழுதும் போதெல்லாம் தம்பிராசா மனம் பெரும் வெட்கத்தால் வேதனையடையும்' எனக் கூறுவதன் மூலம் வர்க்கத்தின் தாக்கம் தெரிகிறது.
சமூகத்தில் சாதாரண நிகழ்வாக நடைபெறுபவை குடும்பத்தில் அன்புப் பிணைப்பை நிலைநாட்டும் நடவடிக்கைகள். “ஒவ்வொரு சனிக்கிழமையும் வழிய வழிய நல்லெண்ணை பூசி, அரப்பு எலுமிச்சங்காய் போட்டு முழுக வார்த்து’ இரசம் குடிக்கத்தந்து. சரக்கரைத்த மீன் அல்லது இறால் கறியுடன் சோறு தந்ததையும். கடும் இரவு வேளையில் சலக்கடுப்பு வந்தபோதெல்லாம், அலுப்பென்று பாராமல் கூட வந்து மலசலம் கழிக்க சீறாமல் சினக்காமல் கூட வந்ததையும். யுகம் யுகமாகத் தாய் தந்தையர் பிள்ளைகளுக்குச் செய்து வரும் இந்தச் சேவைகளை நினைத்தார்’ இவை புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள குழந்தைப் பாதுகாப்பு, காப்பக அதிகாரத்தினர் அறியவேண்டிய தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்கள். முழுக்கிராமமும் ஒரு பிள்ளையை வளர்க்கும் ஆபிரிக்கக் கலாச்சாரம் போன்றதே கிழக்கத்தைய, தெற்காசியக் கலாச்சாரங்களும்.
சமூகத்தின் மரபுகளையும், அதீத மூட நம்பிக்கைகளையும் காட்டி மக்களின் மன ஏக்கங்களுக்கான வடிகால்களாக அவற்றைக் காட்டுகின்றார். தம்பி சிவராசா மூலம் கனடா போன்ற மேற்கு நாடுகளில் புலம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கை அவலங்களைச் சித்தரிக்கின்றார். “ஆட்சி அதிகாரத்திலும் அரசாங்கப் பதவிகளிலும் ஆங்கில இனத்தைச் சேர்ந்தவர்களே மேலோங்கிய நிலையில் இருக்கிறார்கள். அங்கே நிலவும் இனப்பாகுபாடு எமது நாட்டிலுள்ளது போல நிர்வாணமானதாகவும், கொடியதாகவும் இல்லாதபோதும், மிகவும் நாசூக்கான வடிவத்தில் செயல்படத்தான் செய்தது” என மறைவாகத் தனக்குள்ளே பல கதைகள் பேசி இயங்கும் இனத்துவேசத்தைச் சாடுகின்றார். இலங்கையில் பல்கலைக் கழக விரிவுரையாளராக இருந்த சிவராசா கனடாவில் அவல வாழ்வை நிகழ்த்தி மரியன் என்ற வெள்ளைப் பெண்ணின் சந்திப்பின் மூலம் வங்கியின் சாதாரண ஊழியராக ஆகின்றார். யாரையாவது தெரிந்துகொண்டால் தான் வேலையைப் பெறமுடியும் என்பதில் இலங்கைக்கும் கனடாவுக்கும் வேறுபாடு இல்லை என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.
இலங்கையர் வெளிநாடுகளில் தம்மை அடையாளம்காட்ட எடுக்கும் பகீரதப் பிரயத்தனங்கள் பற்றியும், தம்மை வேரூன்ற வைப்பதற்கான ஆரம்ப முயற்சியாக குடிவரவுத் திணைக்களத்தால் ஆக்கப்பட்ட அகதிச்சபையின் அகதி அங்கீகாரம் கிடைப்பதற்காகச் சொல்லும் “அண்டப் புளுகுகளையும் பச்சைப் பொய்களையும்
99

Page 55
கேட்டுக் கேட்டு அவரது (சிவராசாவினது) காது புளித்து விட்டது. போலிப் பாஸ்ப்போட்டுக்கள். பொய் அத்தாட்சிப் பத்ததிரங்கள், இல்லாத வர்த்தகநிறுவனங்களின் சான்றிதள்கள், திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட பத்திரிகை மரண அறிவித்தல்கள் - இவற்றைக் கண்டு, தமிழரின் நிலையை நினைத்து சிவராசாவின் உள்ளம் விம்முவது” படித்த பட்டத்திற்கேற்ற வேலை செய்யாததால் அவர்கள் மனங்களில் ஏற்படும்தாக்கம் பற்றிய உணர்வுகள் தம்பியின் மனம் என்ற ஆஞ்ஞனேயர் குரங்கனார் ஊடாக கனடா வருகின்றது.
பெண்களின் வாழ்வியற் பிரச்சினைகள் பற்றித் தம்பி தெளிவான கருத்தியலை வளர்த்திருந்தார், பெண் சகோதரிகள், மனைவியின் சகோதரிகளுடன் வாழ்ந்த அநுபவமும் தனது பிள்ளைகளான சீனோதயா, சிறிஉதயா என்ற பெண்களை வளர்த்த அநுபவ அறிவினுாடாகவும் மார்க்சியத் தத்துவ அடிப்படையில் பெண்கள் பற்றிய தம்பியின் பார்வை மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று. பாரதிநேசன் எனத் தன்னை அடையாளப் படுத்தும் தம்பி பாரதியின் பெண்விடுதலைக் கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டமை வியப்புக்குரிய ஒன்றல்ல.
“சிவகாமி, எல்லோருக்கும் சாப்பாட்டைப் பரிமாறி முடித்துவிட்டுக் கடைசியாகவே சாப்பிடுவார். இது என்றும் மாறாத நியதியாகவே இருந்தது”. “காலை ஐந்து மணிக்கு எழுந்து வீட்டைத் துப்பரவு செய்கிறீர்கள். இப்படியே நாள்கணக்காக, மாதக்கணக்காக, ஏன் வருடக் கணக்காக நீங்கள் செய்கிறீர்கள்” எனத் தம்பி மரியன் மூலம் கேட்பதிலிருந்து வீட்டுவேலையை ஒரு வேலையாக எடுக்காத சமூகத்தில் வாழும் சிவகாமி மரியன் என்ற கனடியப் பெண்ணிடம் கனடாவில் இருக்கும் ஆண்-பெண் பால் பிரிவின் ஏற்றத் தாழ்வுகளைக் கேட்டு அறிகின்றார். “திருமணம் செய்து இரண்டு மூன்று குழந்தைகளைப் பெற்றபின் தகப்பன், தாயை விவாகரத்துச் செய்துவிட்டுச் சென்று இன்னும் இளமையான பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது சர்வ சாதாரணமாகி உள்ளது. பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் முழுப்பொறுப்பையும் தாயாகிய பெண்ணே சுமக்க வேணடியுள்ளது. இதற்கு அஞ்சிப் பல கனடாப்பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார்கள்.”
“பெண் ஜன்மத்தைப் பாழாக்கிக் கொண்டு பெண்மாதிரி இருப்பதைக் காட்டிலும் எப்பொழுதுமே கல்லாக இருப்பதில் எனக்குப் பரமானந்தம்” என அகலிகை என்ற பாத்திரத்தினூடாகக் “கோதைத் தீவு” என்னும் நூலில் வா. ரா. அகலிகையைப் பேசவைக்கிறார். தம்பியும் மரியன் மூலம் வெள்ளைப் பெண்ணாக
100

இருந்தாலென்ன கருப்புப்பெண்ணாக இருந்தாலென்ன “பெண்கள்” சர்வதேச ரீதியில் இரண்டாந்தரப் பிரசைகளாகவே நடாத்தப் படுகின்றனர். வீட்டுவேலையின் 70 வீதத்தையும் பெற்றோருக்குரிய வேலையின் 60 வீதத்தையும் தங்கள் கடமையாகப் பெண்கள் கொள்கிறார்கள் எனப் பாஷன் சஞ்சிகைகளில் பெண்கள் முன்னணியில் நிற்கும் பிரஞ்சு நாட்டின் கணிப்பீடு கூறுகின்றது.
சீதனம், சந்தேகப்பிராணிகளாக எண்ணுதல், குடும்பத்தில் தீர்மானம் எடுக்க முடியாமை போன்றவை பெண்களின் அவலங்களின் பிரதிபலிப்புக்கள். அணு அணுவாக அவலங்களைச் சுமந்து தம்மை வருத்தும் பெண்களையே முதலாளித்துவ சமூகங்கள் ஆதரிக்கின்றன. ஆணும் பெண்ணும் இணைந்து அரசியல், குல, மத ஆணதிகாரங்களை உடைத்தெறிவதற்கு முனையும் பொழுதுதான் பெண்விடுதலை கிடைக்கும், இது வெறும் சாத்வீகப் போராட்டத்தாலோ, கறுவாக்காட்டு " . கறுவாக்காடு சார முயலும் பெண்ணியவாதிகளாலோ முதலாளித்துவ அபிலாசைகளைப் புடம்போட்டு வளர்த்துக் கொண்டு, பெண்ணியம் பேச முயலும் கனடாப் பெண் அமைப்புக்களாலோ இதனைச் சாதிக்க முடியாது. உழைக்கும் பெண்களின் உழைப்பு பெண்ணிய விடுதலைக்கு முக்கியமானது. சாதியம் - இனத்துவேசம் அற்ற பெண்விடுதலையை முன்னோக்கிய கோட்பாடு தம்பியை ஈர்ப்பதைக் 35|T600T6)TLb.
மொழிக் கட்டுமானம் நாவலில் நன்கு பேணப்படுகின்றது. யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழ் நன்றாகக் கையாளப்படுகின்ற போதும் சில சமயங்களில், இலக்கியத் தமிழ் உரையாடலில் புகுந்து விடுகின்றது. கற்பனை வளம் மிக்க மொழிப் புனைவு நாவலை உயிரோட்டமானதாக ஆக்க ஏதுவாக்கி இருக்கலாம். நாவல் பல எழுதாத பரிச்சயத்தால் கற்பனைத் திறனையும் அழகியலையும் தம்பி நாவலில் புகுத்தாமைக்கான காரணங்களாகலாம். மிக எளிமையான நடையைக் கையாளுகின்றார்.
கனடா வாழ்வு பற்றிக் கொழும்பில் மொட்டேல்களில் நின்றுகொண்டு டொலர்களைக் கரியாக்கிக் கொண்டு அந்தரத்தில் கனவு காணும் ஈழத்தவரால் வாசிக்கப்படவேண்டிய நாவல் இது. அடையாளங்களைக் காட்ட முடியாமல் தத்தளிக்கும் புலம் பெயர்ந்த தமிழரும் வாசிக்க வேண்டியது. தமிழர் வரலாற்றுப் பதிவேடுகளில் ஒன்றாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய நாவல் இது என்பது மிகையான கூற்றல்ல.
கலாநிதி பார்வதி கந்தசாமி
101

Page 56
கம்யூனிஸ்ட் பிரகடனம் வரலாறாகி விடவில்லை (கார்ல்மாக்ஸின் 180வது பிறந்ததினத்தை முன்னிட்டு தினக்குரல் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை)
“கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகடனம்’ என்ற நூல் வெளியிடப்பட்டு இப்பொழுது 150 ஆண்டுகள் கடந்து விட்டன. 1848 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் இந்நூல் வெளியாகியது. மாபெரும் பாட்டாளி வர்க்க ஆசான்களான கார்ல்மாக்ஸ் என்ற ஜேர்மன் நாட்டவரும் பிரெடெரிக் ஏங்கல்ஸ் என்ற இங்கிலாந்து நாட்டவரும் இந்நூலைக் கூட்டாக எழுதினார்கள். இந் நூலின் முதல் பதிப்பு ஜேர்மன் மொழியில் வெளிவந்தது. விஞ்ஞான பூர்வமான கம்யூனிஸத்தின் மாபெரும் வேலைத்திட்ட ஆவணமாக “கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகடனம்” அமைந்தது.
இந்தச் சிறிய நூல் எத்தனை எத்தனையோ தொகுதிகளுக்குச் சமமானது. இன்றுவரை நாகரிக உலகின் அனைத்து ஸ்தாபனரீதியாகத் திரண்ட, போராடும் பாட்டாளி வர்க்கத்திற்கு இந்த நூலின் எழுச்சி ஊக்கமளித்து வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது” என்று மாபெரும் லெனின் அது பற்றிக் குறிப்பிட்டது இன்றைக்கும் பொருத்தமாகவே உள்ளது.
மேதாவிலாசத்தின் தெளிவுடனும் விவேக ஒளியுடனும் உறுதியான பொருள் முதல்வாதம் என்ற புதிய உலகக் கண்ணோட்டத்தையும் வர்க்கப் போராட்டத் தத்துவத்தையும் புதிய கம்யூனிஸ சமுதாயத்தின் சிருஷ்டிகர்த்தாவாக இருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரத்தையும் இந்தப் படைப்பு எடுத்துரைக்கிறது.
“கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகடனம்” செறிவான, மிகவும் ஆற்றலான உள்ளடக்கம் உடையதோர் நூலாகும். மாக்சிஸ்லெனினிஸ் இலக்கியக் களஞ்சியத்தில் 'பிரகடனம்” மிகமுக்கியமானதோர் நூலாகும்.
பிரகடனம் விஞ்ஞான பூர்வமான சோஷலிசத்தின் பிறப்புப் பத்திரமாகும். கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டமாகும். பிரகடனம் மனிதகுலம் கண்ட மாபெரும் பிரச்சார பிரசுரமாகும். தோன்றிய 150 ஆண்டு காலத்தில் உலகரீதியாக பிரகடனம் ஆற்றியுள்ள பங்குடன் வேறு எந்தப் பிரச்சராப் பிரசுரத்தையும் ஒப்பிட முடியாது. பிரகடனம் உலகளாவிய ரீதியில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியதோர் நூலாகும்.
102

பிரகடனம் என்பது உண்மையில் மாக்சிஸத்தின் பொழிப்பு ஆகும். பிரகடனத்தின் 40-50 பக்கங்களில் முழு மார்க்சிஸமுமே அடங்கி இருக்கிறது.
பிரகடனம் என்ற நூல் பூராவும் வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணோட்டம் இழையோடுகிறது. வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணேணாட்டத்தைப் புரிந்து கொள்ள உதவும் தலை சிறந்த பகுதிகள் பிரகடனத்தில் உள்ளன.
பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்துக்கு வழிகாட்டி பாட்டாளி வர்க்தகத்தின் இலட்சியத்தை அடையப்பெறுவதற்காகவே பிரகடனம் எழுதப்பட்டது. இந்தப் படைப்பின் முக்கியத்துவம் அதில் தான் இருக்கிறது. Y
பிரகடனத்தின் தோற்றம் கம்யூனிஸ்ட் லீக் என்று அழைக்கப்பட்ட தொழிலாளர்களின் இரகசிய சர்வதேசிய சங்கம் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரை கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவ, நடைமுறைவேலைத்திட்டம் ஒன்றைப் பிரசுரத்துக்காக எழுதும்படி கேட்டுக்கொண்டது. 1847 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டனில் நடை பெற்ற லீக்கின் மாநாடு ஒன்றில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன் பிரகாரமே, மார்க்ஸ"ம், ஏங்கல்ஸ"ம் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகடனத்தை எழுதினார்கள் 1848 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் பிரான்சில் நடைபெற்ற புரட்சிக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் இந்நூல் முதலில் ஜேர்மன் மொழியில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1850 ஆம் ஆண்டு லண்டனில் வெளியிடப்பட்டது. 1848 ஆம் ஆண்டிலேயே பிரகடனம் பிரெஞ்சு, போலந்து, இத்தாலி, டென்மார்க், சுவீடன் முதலிய ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
கம்யூனிஸப் பிரகடனம் நவீன முதலாளித்தவ சொத்து முறைக்கு தவிர்க்கமுடியாதபடி அழிவு காத்திருக்கிறது என்பதனைப் பிரகடனம் செய்யும் நோக்கத்துடனேயே எழுதப்பட்டது என்று ஏங்கல்ஸ் 1890 ஆம் ஆண்டு வெளியான ஜேர்மன் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
பிரகடனத்துக்கும் சொந்தமான வரலாறு ஒன்று உண்டு. தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சியுடன் பிரகடனம் வரவேற்புப் பெற்றது. தொழிலாளர் இயக்கம் தொய்வுகண்ட வேளைகளில் பிரகடனமும் பின்னணிக்குத் தள்ளப்பட்டது: '
O3

Page 57
“ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பிரகடனத்தின் வரலாறு 1848 ஆம் ஆண்டு முதலான நவீன தொழிலாளர் வர்க்க இயக்கத்தைப் பிரதிபலிக்கிறது. பிரகடனமே சந்தேகத்திற்கிடமின்றி தற்பொழுது மிகவும் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளதும் சகல சோசலிஸ் இலக்கியத்தினதும். சர்வதேசிய ரீதியான அம்சமும் ஆகும். அது சைபீரியா முதல் கலிபோர்னியா வரையான சகல நாடுகளினதும் இலட் சோபலட் சம் தொழிலாளர் களின் பொதுவான வேலைத்திட்டமாகும்”. மேற்குறிப்பிட்ட முன்னுரையில் ஏங்கல்ஸ் இப்படி எழுதியிருந்தார்.
கம்யூனிஸப் பிரகடனம் என்றது ஏன்?
இந்தப் பிரகடனத்தைச் சோசலிஸப் பிரகடனம் என்று கூறாமல் கம்யூனிஸப் பிரகடனம் என்று தாம் ஏன் பெயரிட்டார்கள் என்பதற்கு ஏங்கல் ஸ் தரும் விளக்கமும் இந்த முன்னுரையில் அமைந்திருக்கிறது.
பிரகடனம் தோன்றிய காலத்தில் நாம் அதை ஒரு சோசலிஸப் பிரகடனம் என்று அழைத்திருக்க முடியாது. 1847 இல் இரண்டு வகையான ஆட்கள் சோசலிஸ்டுக்களாகக் கருதப்பட்டனர். ஒரு புறத்தில் பல்வேறு கற்பனாவாத (UTOPIAN) அமைப்புக்களின் ஆதரவாளர்கள் இருந்தனர். குறிப்பாக, இங்கிலாந்தில் ஓவெனைப்(OWEN) பின்பற்றுவோர், பிரான்சில் போறியெறிஸ்ரைப் (FOURIERIST) பின்பற்றுவோர். இந்த இரண்டு பகுதியினரும் சிறு குழுக்களாகக் குறைந்து இறந்து பட்டுக்கொண்டிருந்தார்கள்.
மறுபுறத்தில் பல்வகைப் போலி ஆசாமிகள் இருந்தார்கள். இவர்கள் பல்வேறு சஞ்சீவிகள் மூலம், பல்வகை ஒட்டு வேலைகள் மூலமும் சமூக அவலங்களை அழித்தொழிக்க விரும்பினார்கள். இவர்கள் மூலதனத்தையும் இலாபத்தையும் சற்றும் பாதிக்காமலும் இதைச் செய்ய விரும்பினார்கள். இந்த இரண்டு பகுதியினரும் தொழிலாளர் இயக்கத்துக்கு வெளியே நின்றார்கள். 'கல்விபெற்ற" வர்க்கங்களின் ஆதரவையே நாடினார்கள். ஆனால் சமுதாயம் தீவிரமாகப் புனரமைக்கப்படவேண்டும் என்று கோரிய தொழிலாளி வர்க்கத்தின் பகுதியினர் வெறும் அரசியல் புரட்சிகள் போதாது என்று திடமாக நம்பி தம்மை “கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொண்டனர். அது இன்னமும் அவசரமாகச் செய்யப்பட்ட உள்ளுணர்வு ஊக்கத்தால் செய்யப்பட்ட அடிக்கடி கரடு முரடான
104

கம்யூனிஸமே ஆகும். 1847 இல் சோசலிஸம் என்பது ஒரு பூர்ஸ்வா இயக்கத்தையும் கம்யூனிஸம் என்பது ஒரு தொழிலாளி வர்க்க இயக்கதையும் குறித்தது.
ஐரோப்பாவில் சோசலிஸம் என்பது குறைந்த பட்சம் மதிப்புள்ளதாக இருந்தது. கம்யூனிஸம் அதற்கு எதிர்மாறாக (மதிப்பற்றதாக) இருந்தது. "தொழிலாளர்களின் விமோசனம் தொழிலாளி வர்க்கத்தின் செயலாகவே இருக்கவேண்டும்” என்ற கருத்தில் நூல்கள் அப்பொழுதே உறுதியாக இருந்தபடியால் இந்த இரண்டு பெயர்களில் எதைத் தெரிவு செய்வது என்பதில் எமக்கு எந்தத் தயக்கமும் இருந்திருக்கமுடியாது. பின்னர் அதை நிராகரிக்கவும் எமக்கு ஒருபோதும் தோன்றியதும் இல்லை.”
பிரகடனம் பற்றிய ஏங்கல்ஸின் கூற்று இக்காலத்துக்கும் எவ்வளவு பொருத்தமானதாக உள்ளது. போலி சோசலிஸ்ட்டுக்களை நோக்கி மார்க்ஸ"ம் ஏங்கல்ஸ"ம் அன்று எய்த அம்பு இன்றும் வீறுடன் குத்துகின்றது.
பிரகடனம் காலாவதியாகி விட்டதா?
முற்போக்கான விஷயங்கள் வரும்போதெல்லாம் அவை காலாவதியாகி விட்டன என்று காலத்துக்குக் காலம் கூறுவது எப்பொழுதும் பிற்போக்குவாதிகளின் பண்பாகியுள்ளது. சோஷலிஸம் காலாவதியாகிவிட்டது, கம்யூனிஸம் காலாவதியாகி விட்டது என்பதுபோல கம்யூனிஸப் பிரகடனமும் காலாவதி ஆகிவிட்டது என்று கூறுவோர் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். பைபிளோ, குரானோ, திருக்குறளோ காலாவதி ஆகுவதில்லை. கம்யூனிஸப் பிரகடனம்தான் இவர்களுக்குக் காலாவதி ஆகும்.
கம்யூனிஸப் பிரகடனம் இன்னும் வரலாறாகிவிடவில்லை. இன்றும் அது செல்லுபடியாகும். பிரகடனத்தின் பிரதான பகுதிகள் இன்றைய காலத்துக்காக ஏற்படுத்தப்பட்டவை.
உலகத்தில் இன்னமும் முதலாளித்துவ உற்பத்தி முறையும் முதலாளி வர்க்கமும் தான் ஆட்சி புரிகின்றன. இதை ஒட்டி எழுந்த பிரகடனத்தின் சிந்தனை ஒட்டம் எவ்வாறு வலுவிழந்துவிடும்?
"மக்கள் முதலாளித்துவம்” “சோஷல் கூட்டாளித்தன்மை” இத்தகைய மாயப் பேச்சுக்கள் முதாளித்துவத்தின் ஆட்சியை மூடி மறைக்க முடியாது.
105

Page 58
உழைப்பாளி மக்கள் இந்தப் பேச்சுகளால் ஏமாந்து போகாமல் இருக்க பிரகடனம் அவர்களின் கரங்களில் இருக்கவேண்டும், அவர்களுடைய இதயங்களை இறுகப் பற்றவேண்டும்.
முதலாளித்துவ சமுதாயத்தின் அடிப்படை இயல்பையும், புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் அடிப்படை இயல்பையும் நன்கு அறிந்து புரிந்து கொள்ளப் பிரகடனம் துணைபுரிகிறது.
உள்ளடக்கம்
பிரகடனம் 4 அத்தியாயங்களைக் கொண்டது முதலாளிகளும் பாட்டாளிகளும், பாட்டாளிகளும் கம்யூனிஸ்ட்டுக்களும், சோஷலிஸ் கம்யூனிஸ் இலக்கியம், பல்வேறு எதிர்க் கட்சிகளுடன் கம்யூனிஸ்ட்டுக்களின் உறவு என்பன அவையாகும்.
“முன்னர் நிலவிய சமுதாயம் அனைத்தினதும் வரலாறு ஆகும் ” என்ற வசனத்துடன் முதல் அத்தியாம் ஆரம்பிக்கின்றது.
முதலாளித்துவ சமுதாயத்தின் இரண்டு பெரும் வர்க்கங்கள், அவற்றின் இயல்பு, அவற்றின் வளர்ச்சி முதலியன முதலாவது அத்தியாயத்தில் எடுத்துக் கூறப்படுகின்றன. முதலாளிகளும் பாட்டாளிகளும் ஆகிய இரண்டு வர்க்கங்களும் ஜன்மப் பகைமை நிலையில் உள்ளன. இந்த ஜன்மப் பகைமை என்ற விஷயத்தைப் பாட்டாளிகள் புரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் அதற்கு ஏற்ப செயற்படமுடியும். இந்த முரண்பாடு சந்து செய்யமுடியாதது.
பிரகடனத்தின் முதலாவது அத்தியாயத்தில் இந்த வர்க்க முரண்பாடு பற்றியும் முழு மனிதகுல வரலாற்றிலும் ஏற்பட்ட வர்க்கப்போராட்டம் பற்றியும் செறிவான முறையில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
1887 ஆம் ஆண்டில் ஏங்கல்ஸ் மிகவும் முக்கியமான அடிக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். வர்க்க சமுதாயத்துக்கு முன்னர் பூர்வீக கம்யூனிஸக் காலம் ஒன்று இருந்தது. அதில் சிறுகூட்டம் மக்கள் வேட்டையாடி வாழ்ந்தனர். நிலம் பொதுவுடமை முறையில் இருந்தது என்று அவர் எழுதியிருந்தார். "தனது குடும்பமும் தனியுடைமையும் அரசும்” என்ற நூலில் இந்தப் பூர்வீகக் கம்யூனிஸம் பற்றி எழுதியுள்ளார்.
இதனால் வர்க்க சமுதாயம் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது என்ற விஷயம் இல்லாது போய்விடாது.
106

நவீன முதலாளி வர்க்கம் பற்றிய பிரகடனத்தின் மதிப்பீடு வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்துக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு ஆகும்.
"நவீன முதலாளி வர்க்கம் நீண்டகால வளர்ச்சியினதும், உற்பத்தியினதும், உற்பத்தி முறையிலும் பரிமாற்றத்திலும் ஏற்பட்ட தொடரான புரட்சிகளினதும் விளை பொருளாகும்” என்று பிரகடனம் கூறுகின்றது. உற்பத்தி முறையில் ஏற்பட்ட வளர்ச்சி எப்படி வர்க்கங்களின் வளர்ச்சியிலும் உருவாக்கத்திலும் இசைவான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது இதன் மூலம் கூறப்படுகின்றது.
"நவீன அரசின் நிர்வாகிகள் முழு முதலாளிவர்க்கத்தினதும் பொது விவகாரங்களை நிர்வகிக்கும் கமிட்டியே ஆவர்” என்ற பிரகடனத்தின் வாசகம் முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் முகமூடிகளைக் கிழித்தெறிகிறது. முதலாளி வர்க்கம் பற்றிப் பிரகடனம் கூறுபவை இன்றைக்கும் பொருத்தமானவையே.
"முன்னர் கெளரவிக்கப்பட்டு பயபக்தியுடன் மதிக்கப்பட்ட சகல தொழில்களினதும் மாய ஒளி வட்டத்தை முதலாளி வர்க்கம் அழித்துவிட்டது. முதலாளி வர்க்கம் குடும்பத்தின் உணர்ச்சி மூடுதிரையைக் கிழித்தெறிந்து குடும்ப உறவுகளை வெறும் பண உறவுகள் ஆக்கி உள்ளது.
முதலாளித்துவத்தின் சாதனைகளையும் பிரகடனம் கூறத்தவறவில்லை. மனித நடவடிக்கை மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை முதலாளித்துவம் தான் முதலில் காட்டியது. எகிப்தின் பிரமிட்டுக்கள், ரோமாபுரியின் புராதன கட்டிடங்கள், கோதிக் சேர்ச்சுகள் ஆகியவற்றை மிகவும் விஞ்சிய அற்புதங்களை அது புரிந்துள்ளது எனவும் முந்திய சகல வெளிநடப்புகளையும் சிலுவை யுத்தங்களையும் மறைக்கக் கூடிய படையெடுப்புக்களை அது நடத்தியுள்ளது எனவும் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.
இதை மார்க்ஸ"ம் ஏங்கல்சும் 1847 இல் எழுதினார்கள். அடுத்த 20 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிகள் அனைத்தையும் இது தொட்டுக் காட்டுகின்றது. சில குறிப்பிட்ட நிலைமைகளில் முதலாளி வர்க்கத்திடமிருந்து சில விஷயங்களைக் கறந்தெடுக்க முடியும் என்று மார்க்ஸ"ம் ஏங்கல்ஸ"ம் கருதினார்கள். தொழிற்சங்கம் பற்றிய விவாதத்தில் அவர்கள் இதைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
107

Page 59
ஆனால், மார்க்ஸ் எப்பொழுதும் கூறினார் "இந்த வழியில் தமது வர்க்க நிலைமையை மாற்றலாம் என்று தொழிலாளர் நினைத்து ஏமாறக்கூடாது' வர்க்க நிலைமையை மாற்றுவதற்கு, அவர்கள் தாம் வென்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, பாட்டாளி வர் க்கப் புரட்சிக்காக அதனைச் சேமித்து வைத் து முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியின் மிகவும் பொதுவான கட்டங்களை நாம் எடுத்துரைக்கும் போது இன்றுள்ள சமுதாயத்தில் ஏறக்குறைய மறைமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்நாட்டு யுத்தத்தைப் பற்றியும் இந்த யுத்தம் பகிரங்கப் புரட்சியாக வெடித்து முதலாளி வர்க்கத்தை வன்முறையால் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் மேலாண்மைக்கான அத்திவாரத்தை இடுவது பற்றியும் ஆராய்ந்தோம்.
பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை பாட்டாளி வர்க்கமே பாடுபட்டுப் பெறவேண்டும் என்பது இதில் முதன்முதலாகத் தெளிவாக முன்வைக்கப்பட்டது. “பாட்டாளி வர்க்கத்தின் மேலாண்மை” என்று இங்கு கூறப்படுவது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையே ஆகும்.
பிரகடனத்தின் 2வது அத்தியாயத்தில் பாட்டாளிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவு பற்றி எடுத்தாளப்படுகிறது.
கம் யூனிஸ் டுக் கள் முழுப் பாட்டாளிகளுடனும் பின்னிப்பிணைந்திருக்க வேண்டும். முழுப்பாட்டாளி வர்க்கமும் ஓர் அரசியல் ஸ்தாபனத்தில் ஒன்றுதிரண்டு தமது ஐக்கியத்தைக் காட்டவேண்டும், ஐக்கியம் இன்றேல் வெற்றி சாத்தியம் இல்லை என்பதாகும் அது.
முதலாளித்துவத்தின் திறந்த பொருளாதாரம் எனும் அலை வாரியடிக்கும் இக்காலத்தில் கம்யூனிஸ்ட் பிரகடனம்போன்ற மார்க்சிஸத் தொன்னூல்களைப் படிப்பதன் மூலமே நாம் இந்த அலையில் அடிபடாமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும். வீ - சினினத்தம்பி
08

ஒக்டோபர் புரட்சியில் மலர்ந்த சோவியத் யூனியன் சிதைந்தது ஏன்? ஒக்டோபர் புரட்சியென்றால் 1917 ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டில் நடைபெற்ற புரட்சியைத்தான் குறிக்கும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் நிகழ்ந்த புரட்சி இது.
இந்தப் புரட்சியின் விளைவாக சோவியத் யூனியன் என்று அழைக்கப்பட்ட சோவியத் சோசலிசக் குடியரசுகள் என்ற நாடு தோற்றம் பெற்றது. இந்த நாட்டின் தோற்றத்துடன் உலகின் முதலாவது தொழிலாளர் விவசாயிகள் குடியரசு தோன்றியது.
19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாகி வளர்ந்த மாக்சிஸத் தத்துவத்துக்கு உடல் அமைத்த ரஷ்யாவின் 1917 ஒக்டோபர் புரட்சி மனிதகுல வரலாற்றையே மாற்றி அமைத்தது. ரஷ்ய ஒக்டோபர் புரட்சிக்குப்பின்னர் உலகம் இனிமேலும் பழைய உலகமாக இருக்கவில்லை. மகாகவி பாரதியார் புதிய ரஷ்யா' என்ற தமது பாடலில் கூர்மையான பார்வையுடன் இப்புரட்சியின் சிறப்புக்களை எடுத்துக் கூறியுள்ளார்.
ஒக்டோபர் புரட்சி நடந்தேறிய ரஷ்ய நாடு பழம் பெரும் கலாச்சாரம் படைத்ததோர் நாடு. பாதி கிழக்கு ஐரோப்பிய நாடாகவும் பாதி ஆசிய நாடாகவும் அமைந்த பழைய ரஷ்யா கொடுங்கோன்மை மிக்க சார் மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக ரோமனோவ்சார் மன்னர்களின் ஆட்சி அங்கு நிலவியது.
சார் மன்னனின் ஆட்சியைப் பற்றி எமது மகாகவி பாரதியார், “இரணியன் போல் அரசாண்ட கொடுங்கோலன்
ஜாரெனும் பேரிசைந்த பாவி சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும்
சான்றோரும், தருமந் தன்னைத் திரணமெனக் கருதி விட்டான் ஜார்முடன்,
பொய் சூது தீமையெலாம் அரணியத்தில் பாம்புகள் போல் மலிந்து வளர்ந்
தோங்கினவே அந்தநாட்டில்
உழுது விதைத் தறுப்பாருக் குணவில்லை,
பிணிகள் பல உண்டு, பொய்யைத்
109

Page 60
தொழுதடிமை செய்வோர்க்குச் செல்வங்க
ளுண்டு, உண்மை சொல்வோர்க் கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு
தூக்குண்டே யிறப்பதுண்டு
முழுதுமொரு பேய்வனமாம் சிவேரியிலே
ஆவிகெட முடிவதுண்டு
இம்மென்றால் சிறைவாசம, ஏனென்றால்
வனவாசம் இவ்வா றங்கே செம்மையெல்லாம் பாழாகிக் கொடுமையே
அறமாகித் தீர்ந்தபோதில்.”
என்று பாடினார். பாரதியார் 1919 இல் எழுதிய இக்கவிதை 1917க்கு முந்திய ரஷ்யாவின் நிலைமையினைக் காட்டுகின்றது.
இத்தகைய ரஷ்யாவில் விமோசனம் பெற மக்கள் இடைவிடாது போராடினார்கள். குறிப்பாக இளைஞர்கள் பல்வேறு வழிமுறைகளைத் தேடி அவற்றை அமுலாக்க முனைந்தார்கள்.
மாக்சியத்தின் வெற்றி
இந்த வழிமுறைகளில் மாக்சிய வழிமுறையும் ஒன்றாகும். மாக்சியம் என்பது 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜேர்மனிய நாட்டு அரசியல் ஞானியான கார்ல் மாக்ஸ் என்பவரின் கொள்கைகளைக் குறிக்கின்றது. இங்கிலாந்தில் வாழ்ந்து அங்கேயே மரணமடைந்த கார்ல்மாக்ஸ் தமது ஆங்கிலேய நண்பரான பிரடெறிக் ஏங்கல்ஸ் என்பவருடன் இணைந்து “கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகடனம்” என்ற நூலை 1848 ஆம் ஆண்டு எழுதினார்.
“கம்யூனிஸம் என்ற ஆவித்தோற்றம் ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகின்றது” என்ற வாக்கியத்துடன் இந்த நூல் ஆரம்பமாகின்றது.
“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுவீர். எமக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை, எமது அடிமைத் தழையைத் தவிர” என்று இந்த நூல் கூறியது.
ரஷ்யாவில் மார்க்ஸியத் தத்துவத்தை லெனின் பரப்பினார். லெனினுடைய கட்சிக்கு போல்ஷிவிக் கட்சி என்று பெயர். அதுதான் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி.
110

1917 இல் ரஷ்யக் கம்யுனிஸ்ட் கட்சி கால் நூற்றாண்டுக்கு மேலான காலம் நடத்தி வந்த புரட்சிப் போராட்டம் வெற்றி பெற்றது.
இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்து விட்டான்
ஜாரரசன் இவனைச் சூழ்ந்து சமயமுறைப் படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்.
புயற்காற்றுச் சூறை தன்னில் திமுதிமென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போலே! 1917 மார்ச் மாதத்தில் ரஷ்யாவின் பல இடங்களிலும் வேலை நிறுத்தங்களும் கலகங்களும் குழப்பங்களும் ஏற்பட்டன. மார்ச் 15 ஆம் திகதி பிற்றோகிராட் (பின்னர் லெனின்கிராட்) நகரத்தில் தொழிலாளர் சோவியத்து ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. சார் மன்னன் நிக்கோலாஸ் பதவி துறக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.
1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் திகதி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சேனை அதிகாரத்தைக் கைப்பற்றியது. கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. லெனின் அதன் பிரதமராக இருந்தார்.
“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றில் எழுந்தது பார், குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார், அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்றார்” இவ்வாறு மகாகவி பாரதியார் இந்த மாற்றத்தைப் பாராட்டினார்.
ஒக்டோபர் புரட்சியின் சாதனைகள் ரஷ்ய ஒக்டோபர் புரட்சி உலக வரலாற்றில் மிகவும் முக்கியமானதோர் நிகழ்ச்சியாகும்.
இப்புரட்சி முதலாவதாக பொதுமக்களை முன்னிலைப்படுத்தி மேன்நிலைப் படுத்தியது. மன்னராட்சிகளின் முடிவுக்கும் மக்களாட்சிகளின் மலர்வுக்கும் வழிகோலியது, உழைப்பாளி
111

Page 61
மக்களையும், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களையும், தேசங்களையும் விடுதலைப் பாதையில் இட்டுச் சென்றது.
இப்புரட்சியின் விளைவாகத் தோன்றிய சோஷலிச சோவியத் குடியரசுகளின் யூனியன் அடிமைச் சங்கிலிகளை அறுக்கப் போராடும் உலகமக்கள் அனைவருக்கும் ஊக்கமும் உதவியும் அளித்தது.
15 குடியரசுகளைத் தன்னுள் அடக்கிய சோவியத் யூனியன் சோஷலிசத்தின் சார்பில் நின்று, முதலில் பிரிட்டன் தலைமையிலான உலக முதலாளித்துவத்துக்கும் பின்னர் அமெரிக்கா தலைமையிலான உலக ஏகாதிபத்பதியத்துக்கும் எதிராகப் போராடியது.
சோவியத் யூனியன் என்பது ஒரு நாடு மட்டுமல்ல, ஓர் இலட்சியமும் ஆகும்.
இப்பொழுது சோவியத் யூனியன் என்ற நாடு இல்லாது செய்யப்பட்டுள்ளது. ஆனால் சோவியத் யூனியன் என்ற நாமம் பிரதிநிதித்துவம் செய்த அந்த இலட்சியம் ஒழிந்து விட்டதா? இல்லவே இல்லை.
மாக்சியம் முதலில் செயன்முறைப் படுத்தப்பட்ட களமாக சோவியத் யூனியன் விளங்கியது. முதலாவது தொழிலாளர் விவசாயிகள் அரசு அங்குதான் தோன்றியது.
சோவியத் யூனியன் நிலவிய காலத்தில் அது ரஷ்யாவின் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பல அருஞ்செயல்களை ஆற்றியுள்ளது.
ரஷ்யாவில் கல்வி அறிவின்மையைப் போக்குவதிலும், பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதிலும், சகல மக்களுக்கும் அடிப்படைத் தேவைகளை வழங்குவதிலும், ஆண்-பெண் சமத்துவத்தை ஏற்படுத்துவதிலும். ஆண்டான் அடிமை முறையை ஒழிப்பதிலும், உழைப்பாளிகளுக்கு மதிப்பை அழித்தும் சிறுபான்மை இனமக்களை அடக்கி ஒடுக்கிச் சுரண்டுவதை எதிர்ப்பதிலும், இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஹிட்லருக்கு எதிராகப் போராடி அவனைத் தோற்கடிப்பதிலும், பின்னர் ஏகாதிபத்திய அமெரிக்காவின் உலகம் பரந்த அட்டூழியங்களையும் ஆக்கிரமிப்புக்களையும் எதிர்த்துப் போராடி உலக மக்களுக்கு உதவுவதிலும் விஞ்ஞான தொழில் நுட்ப ஆராய்ச்சிகளிலும் அண்டவெளிப் பயணப் பரிசோதனைகளிலும் சோவியத் யூனியன் அளப்பரிய சாதனைகளை ஆற்றியுள்ளது.
112

சமத்துவம், சுதந்திரம், விடுதலை ஆகியவற்றின் இன்னொரு பெயராக ஆதர்சமாக சோவியத் யூனியன் விளங்கியது.
சோவியத் யூனியன் ஏன் சிதைந்தது? ஒக்டோபர் புரட்சியில் மலர்ந்த சோவியத் யூனியன் என்ற மலர்த் தோட்டம் ஏன் சிதைந்து சின்னாபின்னமாகியது?
உலகம் ஓர் அர்த்தத்தில் எப்பொழுதும் பிரிந்துதான் இருக்கிறது. உலகத்தில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான போராட்டமும் நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான போராட்டமும் தொடர்ந்து நடைபெறுகிறது.
மாக்சிஸ்டுகள் தத்துவரீதியில் மக்களை இரண்டாகப் பிரித்துள்ளனர். ஒன்று பெரும்பான்மையான உழைப்பாளி மக்கள்." மற்றது சிறுபான்மையான முதலாளிகள்.
அவர்கள் தம்மை எப்படி அழைத்தாலும் இன்று சோவியத் யூனியனின் பிரிந்த நாடுகளில் ஆட்சிபுரிவோர், அதிகாரத்தில் உள்ளோர் யார்?
உழைப்பாளி மக்களின் பிரதிநிதிகள் அல்ல. அவர்களுக்கு எதிரானவர்கள் தான்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் (சண்டே ஒப்சேவராக இருக்கலாம்) சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் தனது கோணத்திலிருந்து இதனை ஆராய்ந்து விளக்கியுள்ளார்.
ரஷ்ய சீர் திருத்தங்களின் நாயகனான மிக்கேல் கோர்பச்சேவை 1977 ஆம் ஆண்டின் தன்னுடன் ஒப்பிட்டுள்ளார். தான் எப்படி இலங்கையின் கூட்டு முயற்சிகளையும் நாட்டு முயற்சிகளையும் தனியார் மயமாக்கும் பாதையைத் திறந்து விட்டாரோ அதுபோலவே கோர்ப்பச்சேவும் சோவியத் யூனியனில் கம்யூனிஸத்தை நீக்குவதில் தனது பிறெஸ் றோய்க்கா (PRESTROIKA) 66mö Gb 6mb (GLASS NOST) ஆகியவற்றின் மூலம் பணியாற்றியுள்ளார் என்று ஜே.ஆர். குறிப்பிட்டார்.
உழைப்பாளி மக்களின் அரசான ஆரம்பகால சோவியத் யூனியன் 60 ஆம் ஆண்டுகளின் ஆரம்பம் முதல் குருசோவின் தலைமையில் மார்க்சியம் அல்லாத வழியில் செல்லத் தலைப்பட்டது. உள்நாட்டுத் தொழிற்துறை, விவசாயம்
113

Page 62
ஆகியவற்றில் முதலாளித்துவக் கொள்கைகளைப் புகுத்தியது, வெளிநாட்டு ரீதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் போட்டியாக ஓர் ஏகாதிபத்திப நாடாக வளர்ந்தது. ஹங்கேரி, செக்கோஸ் லாவாக்கியா, போலந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுக்ளின் மீது படையெடுத்தது, மற்ற சோஷலிஸ் நாடுகளைச் சுரண்டியது. தனது போலி வேஷத்தைக் காட்டி ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளை ஏமாற்றியது.
சோவியத் யூனியனின் மறைவுக்கு அகக் காரணங்களும் உண்டு. புறக் காரணங்களும் உண்டு.
சோவியத் யூனியனின் ஆட்சியாளர்கள் ஆரம்பகால புரட்சி உத்வேகத்தை இழந்து சலுகை பெற்றதோர் வர்க்கமாக உயர்ந்து நாட்டின் பொதுமக்களின் நலன்களை உதாசீனம் செய்தார்கள்.
கட்சித் தலைவர்கள் ஹோட்டல்களில் விருந்துண்டு 'எயர் கொண்டிஷன் கார்களில் பயணம் சென்று மாளிகைகளில் வாழ, சாதாரண பொதுமக்கள் மாறாத கியூவரிசைகளில் நின்ற பொருள் வாங்கி நெருக்கமான மாடிக்கட்டிடங்களில் வாழும் நிலைமை சோவியத் யூனியனிலும் ஏற்பட்டது.
தலைவர்களுக்கும் மக்களுக்குமிடையே பெரும் இடைவெளி ஏற்பட்டது. சோஷலிசத்தின் ஜனநாயக அம்சம் மறக்கப்பட்டு அதிகார அம்சம் மட்டும் மேற்கொள்ளப்பட்டது. சர்வாதிகாரமே மிஞ்சி நின்றது. இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்' நிலைமை மீண்டும் ஏற்பட்டது.
ராணுவச் செலவினங்களில் பெரும் பணம் ஒதுக்கப்பட்டபடியால் மக்களுக்குத் தேவையான பொருள்களின் உற்பத்தி மந்தநிலையை அடைந்தது.
முதலாளித்துவ உலகின் செல்வாக்கின் கீழ் மேன்மேலும் விழுந்த ரஷ்ய மக்களை சோஷலிச சோவியத் யூனியனின் அக, புற எதிரிகள் திறம்படப் பயன்படுத்தினார்கள். முதல் சோஷலிச நாடான சோவியத் யூனியனுக்கு எப்பொழுதும் குழிபறித்துக் கொண்டேயிருந்தது உலக ஏகாதிபத்தியம். நவீன முதலாளித்துவம் கிட்டத்தட்ட 300 ஆண்டு கால வரலாறு உடையது. சோஷலிசத்தின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்கு உட்பட்டதே.
உலக முதலாளித்துவம் வன்முறை, மென் முறை இரண்டையும் பயன்படுத்தி சோஷலிச சோவியத் யூனியனுக்கு எதிராகப் போர் தொடுத்து அதனைத் தோற்கடித்துள்ளது.
14

நித்திய ஒளி
ஆனால் சோவியத் யூனியன் மறைவால் 1917 ஒக்டோபர்
புரட்சி உலகில் பரப்பிய ஒளிக்கதிர்கள் மங்கி மறைந்து
விடவில்லை.
உலக நிகழ்ச்சியான ஒக்டோபர் புரட்சி அளித்த உந்துதலில்
பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளின் கீழிருந்த காலனிகள்
போராட்டங்களை நடத்தி விடுதலை பெற்றன.
ஒக்டோபர் புரட்சியின் நேரடி விளைவாகவே மனிதகுலத்தின் கால்வாசி மக்கள் வாழும் சீனதேசத்தில் மாசேதுங் தலைமையில் மக்கள் புரட்சி ஏற்பட்டு 1949 இல் சீன மக்கள் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.
ரஷ்யப் புரட்சியால் ஏற்பட்ட ரஷ்ய தொழிலாளர் - விவசாயிகள் அரசு உலக உழைப்பாளி மக்களினதும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களினதும் தேசங்களினதும் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்து வரலாற்றில் முன்காணாத புதுமைகளைப் புகுத்தியது.
இந்தப் புரட்சிகர நிலைமைகளைச் சமாளிக்க ஏகாதிபத்திய நாடுகளும் உழைப்பாளிகளுக்குச் சலுகைகளை வழங்க நேரிட்டது. இன்று உலகில் உழைப்பாளி மக்கள் பெற்ற உரிமைகள், சலுகைகள் அனைத்தும் மாக்ஸிசத்துடனும், ஒக்டோபர் புரட்சியுடனும் சோஷலிஸ் சோவியத் யூனியனுடனும் இணைந்து பிணைந்தவை. பிரிக்கப்பட முடியாதவை.
சோவியத் யூனியனின் மறைவுடன் மாக்சிஸத் தத்துவம் மறைந்துவிட்டது. சோஷலிசம் காற்றோடு பறந்துவிட்டது என்ற எண்ணத்தை ஏற்படுத்த முயற்சிப்போர் நீண்டகாலம் இந்த அனர்த்தத்தை அனுபவிக்க முடியாது. பாட்டாளி வர்க்கப் போராட்டங்கள் மீண்டும் உலகில் ஏற்பட்டு முதலாளித்துவ உலகின் அமைதியைக் குலைக்கப் போவது திண்ணம்.
‘உலகம் இரண்டு முகாம்களாகப் பிரிந்திருக்கின்றது. ஒன்று பாட்டாளி வர்க்கம் தலைமையிலான முகாம், மற்றது முதலாளித்துவம் தலைமையிலான முகாம்’ என்ற வர்க்கப் பார்வையை உலகிற்களித்த ரஷ்ய ஒக்டோபர் புரட்சியின் ஒளி நித்தியமாக உலகிற்கு வழிகாட்டும்.
வி . சினினத்தம்பரி
15

Page 63
தோழமை நிறைந்த உளமார்ந்த நன்றிகள் அனைவர்க்கும்.
இந்த நினைவு மலர் வெளியீடு வைபவம் நிறைவேற கைதந்த அனைத்து தோழர்கள், நண்பர்கள், சுற்றத்தார் அனைவருக்கும் தோழமை நிறைந்த நன்றிகள்
மலருக்கு அணிந்துரை, கட்டுரைகள், கவிதைகள் போன்ற ஆக்கங்கள் தந்துதவிய அனைவர்க்கும் நன்றிகள்
மலருக்கு பெருமளவில் விஷயதானங்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக இருந்த பத்திரிகைகள், வேறு ஊடகங்கள், நிறுவனங்கள், சபைகள் அனைவர்க்கும் தோழமை நிறைந்த நன்றிகள் பல.
இந்த வைபவம் சிறப்புற மண்டபம் தந்துதவிய ஸ்காபரோ விலேஜ் கொமியூனிடி சென்ரர் நிர்வாகத்தினர்க்கு எமது உளமார்ந்த நன்றிகள்
கொள்கையை எடுத்தியம்பும் அழகான முகப்புடன், இந் நினைவு மலரை அச்சிட்டுத் தந்த றோயல் கிரடபிக் ஸ்தாபனத்தாருக்கு நன்றிகள் பல.
இவ் வைபவம் பற்றி பிரச்சாரம் செய்துதவிய பத்திரிகைகள், வானொலிகள், வேறு ஊடகங்கள் அனைவர்க்கும் தோழமை நிறைந்த நன்றிகள் பல
ஒலி, மேடை அமைப்பு ஒருங்கமைய உதவி நல்கியவர்கள், படப்பிடிப்பாளர்கள், வீடியோ படப்பிடிப்பாளர்கள் அனைவர்க்கும் நன்றிகள் பல.
வைபவத்திற்கு வருகை தந்து சிறப்பேற்றி உற்சாகமுட்டிய அனைத்து தோழர்கள், நண்பர்கள், சுற்றத்தார் அனைவருக்கும் தோழமை நிறைந்த நன்றிகள்
“நினைவு. மலர்க்
நி “幻 臀 (35(ԼՔ
116


Page 64
தான் கொண்ட இலட்சியத் வாழ்ந்த தோழர் வீ. சி அனைவராலும் அன்பாக அ சித்தாந்தமே உலக மக்களி என்பதில் உறுதியான ந சுரண்டல் எனும் வினை விளையும் அரிவாளால் அ கொண்டு உழைத்தவர் முறைகளையும் வன்மைய
சீனக் கலாச்சாரப் புர 6) ITG) 60ft 6, 2alt LTEL u வீ. பொன்னம்பலத்தின் பொ தி.மு.க விலிருந்து தன் பாதையில் தன்னைப் புனரு தொடர்ந்து தோழர்கள்
ஆகியோரிடம் கம்யூனிச
தந்தையாகக் கொண்டு ஆ வாழ்க்கைப் பெறுமானங்கள் ஒன்று வரும் எனப் போ அறைகூவி நின்றார். பொ: கொண்டிருந்த அசையாத வைத்தது போல அவ தமிழீழ மருத்துவ மா6
ஆக்கப்பட்டமையாகும்! உடமைவாதிகள் தோன் “ஆங்கோர் ஏழைக்கு” இட

நதை இறுதிவரை கைவிடாது ன்னத்தம்பி, "தம்பி’ என ழைக்கப்பட்ட தம்பி கம்யூனிச ன் விமோசனத்துக்கான பாதை நம்பிக்கை கொண்டிருந்தார். ' ாயை பொதுவுடமை காண றுத்தெறிய புதிய உத்வேகம் சகலவிதமான அடக்கு Tகக் கண்டித்தவர்.
ட்சியில் பீக் கிங் தமிழ் ங்கு கொண்டார். தோழர் ாதுவுடமை அறிவுபூட்டல்களால் னை விடுவித்து கம்யூனிச த்தாரனம் செய்து கொண்டார். கந்தையா, சண்முகதாசன் சித்தாந்தங்களை மாஓவைத் ழமாகப் படித்துக் கொண்டார். ளை மக்கள் மதிக்கும் காலம் ராட்ட காலத்தில் ஈழத்தில் துமைக் கோட்பாட்டில் தம்பி த நம்பிக்கைக்குச் சிகரம் ரது கண்களும் உடலும் னவர்களுக்குப் பொதுமை தம்பி போலப் பல பொது றினால் தமிழர் மத்தியில்
மில்லை.