கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரைநிமிட நேரம்

Page 1


Page 2

அரை நிமிட நேரம்
- கட்டுரைகள் -
திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
ബ:
பாரதி பதிப்பகம், 430, காங்கேசந்துறை வீதி, цлтфйцлтатb.
முநீலங்கா.

Page 3
ഉ_ിഞ്ഞഥ
வெளியீடு:
முதற்பதிப்பு:
அச்சுப்பதிப்பு:
பக்கங்கள்:
விலை:
அரை நிமிட நேரம் -கட்டுரைகள் -
திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
ஆசிரியருக்கு
பாரதி பதிப்பகம்,
430, காங்கேசந்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
2005 godi
Flygf ginalisih
88-12 s 100
ரூபா. 18000

இடள்ளே), KO () p
Z
MO
A.
73.
M2.
മൃത്ര ക്രിബ്) 2. ബല്യു
ഷ്ടത്തുലി) ക്നിബ
൧൬് ദൃക്സര
ബ്ലേ ലേത്തതല്പു
ബ്ലേ ബ്ലേ ഒഴ്ത്ത് ഒരബദ്വൃത്ത ത്ത് ബ്
രൈ ബ്ലേ ത്തുല്ക്കുത്ത സ്ഥ ബേ
മഴ്ത്ത മരമല്ല ലേഘെര്?
ല്യു.ജന്ത്ര
ഞ്ചല്ക്ക് ത്രൂ
@cത്മ്യമത്തെത്തുമ) പ്രൂ @്തുഞ്ചസ്തു ശ്ലഞ്ഞി ബ്ലേ
ബ്ലു ഖ്മ ബ്ലൂ ബ്ലe
O
O4.
O6
O
12
8
21
24
24
27
38
41

Page 4
/6; മരിസ്ത്രജ്ഞ് ശല്ക്കു ഖല്ക്ക് 44
/6, 2, ബജ്ര ൈയ്ത് ക്രമത്ത്. 47
7 ബ്ലേശ് (ഗ്ലൂ ബ്ലേ 49
/6, ൬ല് മറ്റ്ലെ ശ്രിത്രണ്യത്ത് 52
/ട്ര ബ്ലൂസ്മെത്ഥത് 55
£മ ലേഴ്സു ഖ്,ബ് S8
2Z ബാബ) യ്പൂ മബത്രമേ ̄ 60
ee ഖഴ്ത്ത് മതത് 63
28 ജ്ര.ര് (് (ത്രണ 67
á, ള, മഞ്ഞ് ഒമ്ലല് ക്രിത്രസ്മെ 69
るあ മ്മത്രമ മതഗ്രമ ഗ്ലൂരബര് 73
£6, ശ്രബഭ്രൂണു് ബ്ദ്രമാണു) 76
2. ഗ്ലൂ ശ്രഖസ്തുതല് മൂല 79
28. ലല്ക്ക് ബല്യു 81
£ട2, ബബ് ബ 84
8O ക്രമത്രത്ത്്യത്ത് ശ്ലല് 87

பதிப்புறை தமிழ் பெண் எழுத்தாளர்களுள் சிலாகித்துக் கூறக்கூடிய நிலையில் தன் நிலையை உயர்த்திக் கொண்டவர் திருமதி சி.யோகேஸ்வரி அவர்கள். ஆக்க இலக்கியப் பணியில் அவர் நாலு தசாப்தங்களைக் கடந்துவிட்டார்.
வடமொழிச் சிறப்புப் பட்டதாரியான இவர் பல்கலைக்கழகக் கல்வியின் அறுவடையாக இந் நூலை வெளிக்கொணரும் அதேவேளை அவரது சிந்தனை வளர்ச்சியின் வெளிப்பாடும் ஆங்காங்கே மிளிர்கின்றது. Y.
ஆக்க இலக்கியத் துறையில் அவர்பெற்ற அநுபவத்தின் அறுவடையாக கட்டுரை இலக்கியத் திலும் ஒருவகை நனைவோடை உத்தி முறைமை சில இடங்களில் மிளிர்கின்றது. இது அவரது ஆக்க இலக்கிய ஈடுபாட்டின் ஒருவகை வெளிப்பாடே.
தமிழ் ஆக்க இலக்கியத்துறைக்கு நிறையவே அணி செய்த நூலாசிரியர் கட்டுரை இலக்கியத்திலும் அவ்வாறு மிளிர்வார் என்பது புலனாகின்றது. அவர் பணி சிறக்கட்டும்.
பாரதி பதிப்பகம், இ. சங்கர் 40, காங்கேசந்துறை வீதி,
Ipilaib.

Page 5
அணிந்துறை
கோப்பாயைச் சேர்ந்த திருமதி யோகேஸ்வரி சிவப்பரிரகாசம் அவர்கள் ஈழத்தின் பெண் எழுத்தாளர் களில் குறிப்பரிடத்தக்க ஒருவராவார். இவர் ஞானச் சுடரில் வெளிவந்த தன்னுடைய முப்பது படைப் புக்களை ஒருசேரத் தொகுத்து நூலாக வெளி யிடுகின்றார். இந்நூலுக்கு அணிந்துரை எழுதுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசத்தினுடைய இந்நூலில் அடங்கியுள்ள படைப்புக்களை மூன்று விதமாக வகை செய்யலாம் போலத் தெரிகிறது.
96.06(U1660.
1) சுயவிசாரணை சார்ந்தவை 2) இறைபெருமை பேசுபவை 8) மரணம் மற்றும் இறுதிநிலை பற்றியவை.
இவ்வமைப்பரிலே இவரது படைப்புக்கள் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளமையை நாம் அவதானிக்க sustab.
மனம், மனம் சார்ந்த உரையாடல் என அமை கின்ற முதல்வகைப் படைப்புக்கள் சுயவிசாரணை களாக அமைகின்றன. "மனம்” எப்படியெல்லாம் மனிதனை ஆட்டுவிக்கின்றது என்பதையும், அவ்வலை
ii

களைக் கட்டுப்படுத்த மனிதன் படுகின்ற அவஸ்தை களையும் இவை பேசுகின்றன. மது, போதைவஸ்து, சிகெரெட் என்பவற்றிற்கு மனம் அடிமைப்பட்டு உழல்வதையும் அதிலிருந்து விடுபடத் துடிப்பதாகவும் இவை அமைந்துள்ளன. ஆத்மார்த்தப் பண்பு மிகுந்த இப்படைப்புக்கள் சுயவிசாரணைகளாக, சுய புலம்பல் களாக, கழிவிரக்க வெளிப்பாடுகளாக, இன்னொரு வகையில் தாழ்வியல் மனோபாவங்களாகக் கூட வெளிப்பட்டுள்ளன. தீய பழக்கங்களிலிருந்து விடுபட ஏங்கும் அதே வேளை மனமானது புகழ், பணம் என இனினொரு பக்கம் சார்ந்து செல்வதையும், அது இவற்றினும் மோசமான விளைவுகளைத் தரும் என்றும் இப் படைப்புக்கள் பேசுகின்றன. அவ்வ கையில் தனக்குத் தானே செய்யும் எச்சரிக்கைகளாக ஆசை வலையுள் அகப்பட்டு உழல்கின்ற மனதினைக் கடிவாளமிட்டு ஒரு நிலைப்படுத்திக் கட்டுக்குள் கொண்டு வரத்துடிக்கும் மனித உணர்வுச் சித்திரங் களாக இப் படைப்புக்கள் அமைந்துள்ளமையினைக் காண முடிகின்றது.
"இறை" பற்றிய கருத்தியல் வெளிப்பாடு இரண்டாவது வகை சார்ந்து வருகின்றன. தத்தித் தாவும் மனதை ஒரு நிலைப்படுத்த தன்னிலும் மேலான இலட்சியப் பொருளை இலக்கு நிலையாகக் கொள்ளும் தனிமையாக இதனை நாம் கருதிக் கொள்ளலாம். குறிப்பாக “குமரக் கடவுளின்" பெரு மையே இங்கு முதனிமைப் படுத்தப்பட்டுள்ளது

Page 6
நூலினுடைய முதன்மைச் சுழற்சிக்கு திருமுறைகளும், இதர அருட்பாக்களும் கைகொடுத்து நிற்கின்றன. தேவையான இடங்களில் புராணக் கதைகளும் ஐதீகக் கதைகளும் பொருத்தமுறக் கையாளப்பட் டுள்ளன. "இந்த மனித சரீரம் எமக்குக் கிடைத்தது முத்தி இன்பம் பெறும் பொருட்டேயாம்" எனும் நாவலர் பெருமானுடைய கூற்றை உள்வாங்கியவையாக இவை உள்ளமை தனிச்சிறப்பாகும்.
மரணம், இறுதிநிலை, வாழ்வியல் போன்ற வற்றைப் பேசும் படைப்புக்கள் மூன்றாம் வகையைச் சார்ந்தவையாக உள்ளன. வாழ்வியற் தளத்தில் நாள், கோள் வினை என அமைகின்ற அம்சங்கள் பற்றிய கருத்தியல்களும் மரணம் பற்றிய விசார வெளிப் பாடுகளையும் முன்னிறுத்தி இவற்றினின்று விடுபட ஒரேவழி இறையடி பற்றுதல் அதுவே இறுதி நிலை என்பதை வலியுறுத்துவனவாக இப்பகுதியில் அமைந் துள்ள படைப்புக்கள் காணப்படுகின்றன.
இப்படைப்புக்கள் சிறுவர் முதல் முதியவர் வரை யாவரும் விளங்கிப் பயனுறத் தக்கனவாகவும், எளிய மொழிப் பிரயோகங்களினூடே பெருந்தத்துவார்த்த கருத்தியல் வெளிப்பாடுகளை வெளிக்கொணர்வன வாகவும்அமைந்துள்ளன. குறிப்பாக இன்றைய உலகில் முதன்மைப்படுத்தப்பட்டுவரும் உளவியல் குறித்த கருத்தாடல்கள் இங்கு தன்னனுபவ வெளிப் பாட்டு உணர்வுத் தளங்களினூடாக வெளிப்பட் டுள்ளமை முக்கிய அம்சமாகும். இப்படைப்புக்கள்
iv

பல்வேறு தளங்களினூடு வெளிப்பட்டாலும் இவற் றின் அடிப்படைகளாக அறமும், இறைபற்றிய சிந்தனைகளுமே அமைந்துள்ளன. பெரும்பாலான நூல்கள் அறத்தை மட்டும் முதன்மைப்படுத்துவன வாகவே உள்ளன. ஆனால் திருமதி யோகேஸ்வரி சிவப்பரிரகாசத்தினது இந்நூல் அறத்தை ஆதார சுருதியாகக் கொண்டு, மனிதனை வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி சமைப்பதாக அமைந்துள்ளது.
தரவுகளைச் சீராகத் தொகுத்து, அவற்றை வகைப்படுத்தி அவற்றினூடாக அரியபல கருத் துக்களை இந்நூலாசிரியர் வெளிக்கொணர்ந்துள் ளமையானது அவருடைய ஆழமான வாசிப்பினையும் ஆய்ந்தறி திறத்தினையும் புலப்படுத்துவதாக உள்ளது. இந்து அறம், மற்றும் இறை பற்றிய தேடல்களுக்கு இந்நூல் ஒரு அடிப்படையான நூலாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்துசமயம், இந்துநாகரி கத்தைப் பல்வேறு நிலைகளிலும் கற்று வருகின்ற மாணவர்களுக்கு இந்நூல் கைநூலாக அமையக்கூடிய சிறப்பைப் பெற்றுள்ளது.
இந்நூலாசிரியர் முயன்றுழைத்து மேலும் பல அரிய நூல்களைப் படைத்தளிக்க வேண்டும். அதன் மூலம் பிறந்த மண்ணிற்குப் புகழ் சேர்த்துத் தரவேண் டும் என வாழ்த்துகின்றேன்.
இந்துநாகரிகத்துறை, திருமதி சுகந்தினி சிறீமுரளிதரன் யாழ. பலகலைககழகம. சிரேஷ்ட விரிவுரையாளர்

Page 7
என்னுறை
மனதைக் கட்டுப்படுத்தி இறைவனது பாதார விந்தங்களைத் தியானிக்கவேண்டும்" என்று நினைத் தாலும் அதைச் சாதிக்க முடியாத ஏக்கம் எனக் கிருக்கிறது. முதலிலே மனதைக் கட்டுப்படுத்துவது பற்றி என் மனதிற்கு நான் கூற நினைத்தவற்றை "ஒருகணம் உன்னோடு” என்ற தலைப்பரில் சந்நிதி யான் ஆச்சிரம சைவ, கலை, பண்பாட்டுப் பேரவை யினால் வெளியிடப்படும் "ஞானச்சுடர்" மலரில் தொடர்ந்து எழுதினேன். 2002ம் ஆண்டு வெளி வந்த மலர்களிலேயே இக்கட்டுரைகள் வெளிவந்தன.
2003ம் ஆண்டு, சரணகமலங்களை அரைநிமிட நேரம் தியானிக்க முடியாத சடகசட மூடமட்டி மனத்தை மாதமொரு முறையேனும் இறைவனது பாதங்களைச் சிந்திக்கவைக்க முயன்றேன். அதற்காக "அரை நிமிட நேரம்” என்னும் தலைப்பரில் முருகப் பெருமானின் பொற்பதங்களைப் பற்றிப் பாடும் பாட லொன்றை எடுத்து, அதுபற்றிய சிறு கட்டுரை யொன்றை மாதந்தோறும் எழுதினேன்.
கட்டுரைகள் எழுதுமளவிற்குச் சமயஞானமோ
தமிழறிவோ எனக்குக் கிடையாது. ஆனால் ஒவ்
வொரு மாத இதழுக்கும் எழுதவேண்டுமென்ற
தேடலில் எனக்குப் பெரும்பயனர் கிடைத்தது. சமய
V1

நூல்களைக் கற்க முனைவதும் சமயசம்பந்தமான விடயங்களைச் சில நிமிடங்களேனும் சிந்திப்பதும் நற்பயன் நல்குமல்லவா?
இந்த அவசரயுகத்தில் வாசிப்பதற்கேற்ற சிறிய கட்டுரைகளை எழுதுவதே நல்லதெனக் கருதியதனால் அனைத்துக் கட்டுரைகளையும் சிறியனவாகவே எழுதி னேனர்.
போரினி காரணமாக எனது ஆக்கங்கள் பல அழிந்துவிட்டன. அவற்றை நூலுருவில் வெளியிட் டால் நாட்டினர் எங்கோ ஒரு மூலையிலே யாரோ ஒருவரிடமேனும் நூலின் பிரதி இருந்து, எனது ஆக்கங்கள் மீளக்கிடைக்குமெனக் கருதி நான் எனது ஆக்கங்களை இயன்றவரை அச்சேற்ற முயன்று வருகின்றேனர்.
இக்கட்டுரைகளையும் அவ்வாறு தொகுக்க முற் பட்டவேளை, மேலும் சில கட்டுரைகளை எழுதி ஞானச்சுடரில் வெளிவந்த கட்டுரைகளுடன் சேர்த் துத் தொகுத்துள்ளேன்.
இத்தொகுதிக்கு அணிந்துரை எழுதித்தருமாறு கேட்டதும் தன் வேலைப்பழுவின் மத்தியிலும் மறுக்காது எழுதி வழங்கிய, யாழ் பல்கழைக்கழக இந்து நாகரிகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. சுகந்தினி சிறீமுரளிதரன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
vii.

Page 8
"சுதந்திரன்" பத்திரிகையின் சிறுவர் பகுதியான “வளர்மதியில்" நான் எழுதிவந்த காலம் முதல், எனது எழுத்துக் களுக்கு ஊக்கமளித்து வந்த பாரதிபதிப்பக உரிமையாளர் திரு. இ.சங்கர் அவர்கள் பதிப்புரையை வழங்கியுள்ளார். எனது கோரிக்கையை ஏற்று நூவை அச்சேற்றி, வெளியிட்டு, பதிப் புரையையும் வழங்கிய அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நூலை அச்சிடுவதற்கு உதவிய அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.
மயூரம்" திருமதி. யோகேஸ்வரி கோப்பாய்விதற்கு சிவப்பிரகாசம் 605.iii.iii.
viii

95 bakarbi aldreba TATUb nanoa
Dனமே, நீ எங்கிருக்கிறாய்? உன்னை ஒரு கணம் என்முன் நிறுத்தி உன்னோடு பேச நான் விரும்புகின்றேன்.
விருப்பம். ஆசை. இவையெல்லாம் உன் செயல்கள் தானே? என்னை ஒவ்வொரு கணமும் உன் கட்டுப்பாட்டினுள்ளே வைத்திருக்கும் உன்னை நான் ஒரு கணமேனும் சந்தித்தேயாக வேண்டும்.
என் அறிவு மீண்டும் மீண்டும் இடித் துரைத்து, வலியுறுத்தியவற்றையே ஒரு கணத்தில் தவிடுபொடியாக்கிவிட்டு, உன் விருப்பிற்கு என்னை அடிமையாக்கி விடுகிறாயே, நீ எங்கிருக்கிறாய்?
நான் உன் பிடியிலிருந்து விடுபடவேண்டும் அதுகுறித்து உனக்குச் சிலவற்றைச் சொல்லியாக வேண்டும்.
எனக்குப் பலநோய்கள் இவற்றிற்குக்
காரணமே உன் துாண்டுதலால் நான் நடந்து கொண்ட முறைகள்தானென்கிறார் வைத்தியர். அவர்
O

Page 9
ஆறு மாதங்களாக எனக்கு அறிவுரை கூறுகிறார். ஆனால் அத்தனை அறிவுரைகளையும் மறக்க வைத்து, அவர் விதித்த கட்டுப்பாடுகளையெல்லாம் தகர்த்துவிட்டு,"இன்று மட்டும்" என்று கூறிக்கொண்டு மது அருந்துகின்றேன். புகை பிடிக்கின்றேன். ஏன் இனிப்பைக்கூட என்னால் தவிர்க்க முடியவில்லை.
"இன்றுமட்டும்" என்று கூறி ஆறு மாதங் களாக அவற்றைத் தவிர்க்க முடியாமல் தத்தளிக் கின்றேன். இதற்குக் காரணம் நீதான்.
உன்னைக் கட்டுப்படுத்தும் திறன் எனக்குக் கைவர மறுக்கிறது. உன்விருப்பின் வழியே வெகு இலகுவாக இழுபட்டுச் செல்லும் இந்நிலை மாறவேண்டும். எனக்குக் கேடு விளைவிப்பவையே எனக்கு உவப்பாக இருக்கும் நிலையை மாற்றிவிடு.
இவை தீயவை எனக்கருதி அவற்றைத் தவிர்க்கும் மனஉறுதியை ஏற்படுத்துவதென நான் தீர்மானித்து விட்டேன். அதற்கு உன்னை ஒருநிலைப் படுத்தவேண்டும். நீயோ வேதாளமாக முருங்கை மரமேறுகிறாயே! என் பிடியிலிருந்து விலகி நீயோடிச் செல்வதை நிறுத்தியேயாக வேண்டும். அப்படியில் லாவிட்டால் நான்தான் தீமையடைகிறேன்.
எனக்குத் தீமை பயப்பவற்றை நான் தவிர்த்தேயாவேன். இனிமேல் உன்பிடியுள், உனது ஆசை வலையுள், அகப்படவே மாட்டேன். இது உறுதி is
O2:

உன்னைப பிடித்து என்முன் நிறுத்தி, நீ புரிந்துகொள்ள வேண்டியவற்றை - உணர்ந்து கொள்ள வேண்டியவற்றை - உனக்கு உணர்த்தி (3u JulG66õt.
உன்னை எப்படிக் கட்டிற்குள் கொண்டு வருவது?
(9.... . . . . .
உன்னை ஆண்டவனின் அடியிற் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அவனில் இலயித்து
விட்டால் உன் ஆட்டங்களெல்லாம் ஓய்ந்துவிடும்.
ஆம் அதுதான் ஒரேவழி. O
O3

Page 10
அரனடியில் ஐக்கியப்படு
Q9 மனமே, நான் உன்னை அந்த ஆண்ட வனின் அடியினைகளிற் பிணைத்துவிட முடிவு செய்தேன். அப்படிச் செய்தாலன்றி உன்னை வசப் படுத்த முடியாதென்பதை நான் புரிந்து கொண் டேன். இல்லாவிடின் நீ என்னை வசப்படுத்தி நினைத் தவாறெல்லாம் ஆட்டுவிக்கும் நிலையே தொடரும்.
ஆனால் உன்னை ஒரு நிலைப்படுத்துவது அத்தனை சுலபமாகத் தெரியவில்லையே.
இறைவன் சந்நிதியில் அமர்ந்து, உன்னை ஒரு நிமிட நேரம் அவனுடன் ஐக்கியப்படுத்தி விடலாமென முயன்றால் அது முடியாது போகிறதே. அவனிடம் இலயிக்க முடியாமல் எங்கெல்லாமோ ஓடிவிடுகிறாய்.
எப்படித்தான் ஒரு கணத்தில் பக்கத்தி லிருந்து பல்லாயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் வரை உன்னால் சஞ்சரிக்க முடிகிறதோ தெரிய வில்லை. அதே போல் கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலமெனும் முக்காலங்களின் நிகழ்வுகளுக் கும் தாவும் உன்னால் ஒரு கணமேனும் ஆண்ட வனிடத்தில் தரிக்க முடியவில்லையே.
O4

இப்படிப் பறப்பதால் நீ திறமைசாலி யாகிவிட முடியாது. இறுதியில் என்ன கண்டாய்? தாவித்தாவி, பறந்து பறந்து தேடியலைந்ததால் எந்தப் பயனுமே காணவில்லை. காணமாட்டாய்.
இதையேன் நீ புரிந்து கொள்ளமாட்டாம லிருக்கிறாய்? நிம்மதி, சாந்தி இவற்றையெல்லாம் இழந்து, நான் தவிப்பதற்கு இதுவல்லவா காரணம்.
எனக்கு நிம்மதியும் சாந்தியும் வேண்டும். அதற்கு நீ ஆண்டவனுடன் ஐக்கியப்பட வேண்டும்.
அதிகம் வேண்டாம். முதலில் ஒரு நிமிடம் அவனடியே தஞ்சமென்று இருந்துவிடு. அந்த ஒரு நிமிட சுகம் உன்னைப் படிப்படியாக அவனது
வயப்படுத்திவிடும்.
நீ அவனடியில் ஐக்கியப்படவே அந்தக் கடவுள் உன்னுள் புகுந்து அங்கே உறைந்து விடுவான். அதுதான் இந்த ஆன்மா தேடும் பேறு. நித்தியானந்த நிலை.
அதற்காக இன்று முதல் இதனைச்செய்.
ஓரிடத்திலே அமர்ந்து நான் இறைவனை வணங்கும்போது ஒரு கணநேரம் எல்லாவற்றையும் விட்டு, அவனடியில் நீ நிலைக்க வேண்டும். இது தினமும் நடக்க வேண்டும் செய்வாயா?
O
OS

Page 11
ஆசைகள் ஆகாது
Dனமே, உனக்கு இவ்வளவு ஆசை ஆகாது. ஆண்டவனின் அடியிணையில் அரைக்கணம் நிலைக்க மறுக்கும் நீ, பணம் என்றதும் எப்படிப் பறக்கிறாய்?
பணம் வேண்டும். பணமிருந்தால் எதனையும் சாதிக்கலாமென நம்பும் நீ அது வேண்டுமென்று எவ்வளவு ஆசைப்படுகிறாய்.
"பணத்தினால் பலரும் தாம் நினைத்ததைச் சாதிக்கிறார்கள்: உண்மையையும் நேர்மையையும் கூட விலைக்கு வாங்குகிறார்கள்" என நீ நினைக் கிறாய்.
ஆனால் பராபரத்தை விடப் பணம் பெரிதோ, சக்தி வாய்ந்ததோ அன்று. இதை உணர்வதுதான் உனக்குப் பெரிய கஷ்டமாக இருக்கிறது.
இந்த யுத்த பூமியில் முதல் நாளிருந்த மாடிவீடுகள் அடுத்த நாள் மண்மேடாவதையும், சேர்த்த பொருள் சிதைந்து போவதையும் கண் கூடாகப் பார்க்கிறாய். இந்த நிமிடம் அதிகாரம் செலுத்தும் பணக்காரன் மறுநிமிடம் மரணத்தைத் தழுவிக்கொள்ள அவனது பணம் யாருக்கோவாகிப் போகிறது.
O6

இதையெல்லாம் பார்த்த பின்னும் பணத்தினால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை உன்னால் மாற்றமுடியவில்லை. உனக்கு எப்படி இந்த உண் மையைப் புரியவைக்கலாம்
மண், பெண், பொன் இந்த முன்று ஆசைகளும் எம்மைப் படாதபாடுபடுத்தும், அந்த ஆசைகளை அறுப்பது - ஆணிவேருடன் முழுமையாக அகற்றுவது முடியாத காரியம் என்பார்கள். உன்னுள்ளே குடி புகுந்துள்ள இந்த ஆசைகளை அடியோடு அகற் றியே ஆகவேண்டும்.
இந்த மாயைகளின் பின் அலையப் போகி றாயா? இவை உன்னுள்ளே குடிபுகுந்ததும் உன்னி டமிருந்த நற்குணங்களெல்லாம் வெளியேறி விட்டனவே! அதுகூட உனக்குப் புரியவில்லையா? பணத்திற்காக, பக்கத்திலுள்ள காணிக்காகப் பொய்யுரைக்கிறாய். உற்ற நண்பனுக்குக்கூடக் கேடு விளைவிக்கிறாய். பெற்றதாயிடம்கூடக் கரவும் வஞ்ச கமுமாகப் பழகுகிறாய். நம்பிக்கைத் துரோக மிழைக்கிறாய். மனிதப் பண்புகளை ஒவ்வொன்றாகக் கைவிட்டு மிருகமாகி விடுகிறாய். இது தவறு என்று உனக்குப் புரியவில்லையா?
மிருகமாக நீ மாறிய பின் தரப்படும் மதிப் பினாலும் மரியாதையினாலும் என்ன பயன்? அவை முகத்திற்கு முன் கிடைக்கும் மரியாதையே தவிர உண்மையானவையல்ல,நீ அந்தப்பக்கம் போனதும், அரைக் கணத்தில் அந்த மரியாதை காட்டியவனே தூற்றுவான். மனப்பூர்வமாகக் காட்டப்படும் மரி யாதைதான் காலங்காலமாக நிலைத்திருக்கும்.
ο7

Page 12
நீ ஆசைப்படும் பொருட்களெல்லாம் மாயத் தோற்றங்களே. நிலையானவையல்ல. இருப்பது போலத் தோன்றி இல்லாது போய்விடும்.
இவற்றின்மீது ஆசை வைத்து என்ன பயன் கண்டாய். துன்பங்களும், தொல்லைகளும், பிரச்ச னைகளும்தான் கிடைத்துள்ளன. சிந்தித்துப் பார். இவற்றில் ஆசை கொள்ளாவிட்டால் , தேடி அலையா விட்டால் எவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பாய் வேண்டாம் இந்த ஆசைகள்.
இந்த ஆசைகளை விட என்ன செய்யவேண்டும் தெரியுமா? பற்றற்றான் பற்றினைப் பற்ற வேண்டும். ஆம் ஆண்டவனிடம் நீ பற்றுவைக்கப் பழகு அவனடி யில் முழுமையாகச் சரணடை. அது ஒன்றே உன்னை ஈடேற்றும்.
O
o8

eanLib gul.rep
Dனமே நீ இத்தனை மகிழ்ச்சியடைவது சரி தானா? காலையில் கையிலெடுத்த புதினத்தாள் களிலெல்லாம் உன் படங்கள். நீ செய்த தானதருமம் பற்றி பத்திரிகைகளும் வானொலியும் புகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதனாலல்லவா இவ்வளவு மகிழ்ச்சி
நீ ஏழைகளுக்கு உதவவேண்டுமென்றா தான தருமம் செய்கிறாய்? இல்லையே. இந்தப் புகழ் கிடைக்க வெண்டுமென்பதற்காகத் தானே தான தருமம் செய்கிறாய்? உன் தந்தை உன்னை நம்பி, தான் நோயுற்ற போது தன் சொத்து முழுவதையும் உன் பெயருக்கு மாற்றிவிட்டார். நீ உன் தம்பியை யும் தங்கையையும் ஏமாற்றி அவர்களின் அத்தனை சொத்தையும் அபகரித்துக் கொண்டாய். அவர்கள் கஷ்டப்பட்டு கண்ணிர் விடுகையில், நீ அவர்களது சொத்தில் தானதருமம் செய்து, புகழ் தேடுகின்றாய். நீ செய்வது புகழுக்குரியதா?
நீ புகழக் கூடியதைச் செய்து புகழைப் பெற்றாலும் பரவாயில்லை. எவ்வளவு அநீதியையும் குற்றங்களையும் செய்து கொண்டு நல்லவனாக
09

Page 13
நடிக்கிறாய் ஊருக்கு நீ வேடம் போடலாம். ஆனால் உனக்கே நீ பொய்யனாக, சுயஉருவை மறைப் பவனாக இருக்கிறாயே மற்றவர்களுக்கும் உனக் கும் நீ பொய் வேடம் போடுவதை இன்று முதல் நிறுத்து.
உன்னை நீயே ஆராய்ந்து பார். பெயருக்காக, புகழுக்காக, பட்டத்திற்காக, பதவிக்காக நீ செய்யும் குற்றங்களை மறைப்பதற்காகத் தானே கொடை யாளி வேடம் போட்டு ஏமாற்றுகின்றாய்.
"இல்லை" யென்று மற்றவர்களுக்கு நீ கூற லாம். உனக்கே நீகூறமுடியுமா?
ஆனால் நீ செய்த ஒவ்வொரு குற்றமும் சரி யென்று நீ கருதுகின்றாய்.
உன் நண்பனின் மனைவி யாருடனோ உரை யாடிக் கொண்டிருந்ததைக் கண்டுவிட்டு நண்பனிடம் அவளைப் பற்றி தப்பும் தவறுமாகக் கூறினாய், அல்ல, அல்ல, கோள்முட்டினாய்.
இல்லையென்கிறாயா? அப்படியென்றால் நண்பன் மேலுள்ள அக்கறையினால் கூறினேனென் aélgDITuHT?
அந்தப்பெண் உரையாடுவதை நீ மூன்று
தடவைகள் கண்டிருக்கிறாய். ஆனால் அவர்கள்
எதுபற்றி உரையாடினார்களென்பது உனக்
குத்தெரியாது. நீ அதைக் கேட்கவில்லை. ஆனால்
அவள் மீது அபாண்டப்பழி சுமத்தி விட்டாய்.
சிந்தித்துப்பார். உனக்கு அந்த அன்பான தம்பதிகள்
. Ο

மீது உன்னையறியாமலே பொறாமை ஏற்பட்டி ருக்கிறது. அல்லது அவர்களை வேதனைப்படுத்தி வேடிக்கை பார்க்க வேண்டுமென்ற கொடுர புத்தி ஏற்பட்டிருக்கிறது. அதனாலே தான் இப்படி நடந்து கொண்டிருக்கிறாய். ஆனால் உன் நண்பனின் மனைவியின் கெட்ட நடத்தைபற்றி அவனுக்குக் கூறவேண்டிய உன் கடமையைச் செய்ததாக நீ சொல்கிறாய். நீ செய்தது மிகப்பெரிய தவறு.
இப்படி நீ செய்த தவறுகளும் குற்றங்களும் ஆயிரமாயிரம், அவற்றைச் செய்யும் நீ புகழுக்கும் ஆசைப்படுகிறாய். அந்தப் புகழைக் கேட்டு மகிழ உனக்கென்ன தகுதி இருக்கிறது? முதலில் நீ திருந்துவதற்கு ஆரம்பி படிப்படியாக மனிதனாக வாவது வாழ்வதற்கு முற்படு. செய்வாயா?
Ο

Page 14
போதையூமடும் புகழ்
Dனமே, உனக்குப் பல்லாயிரம் தடவை பதியு மாறு கூற முயன்றும் "நான் தோல்வியுறுகின்றேனோ?" என்றோர் ஐயம் எழுகின்றது. நீ இந்தப் போதைகளி லிருந்து விடுபட முடியாது அவற்றுள் மூழ்கிக் கிடக்கிறாய்.
என்ன கூறுகிறாய்? நீ போதைப் பொருட்களை ஒதுக்கிவிட்டாயா? என்னென்ன பொருட்கள்? சிகரெட் முதலான புகைக்கும் பொருட்கள், மது, போதைவஸ்துப் பொருட்கள்.
ஓ! இவற்றையா ஒதுக்கி விட்டாய்? ஆனால் இவற்றை விட மோசமான போதையில் மூழ்கி, அதற்காக எந்தப் பாதகமும் செய்யத்தயாராக இருக்கிறாய். என்ன புரியாதது போல் நிற்கிறாய்? இந்தப் பணம், பதவி, அதிகாரம், புகழ் இப்படி எவ்வளவு போதையூட்டுவன உள்ளன.
புகழ் கூடவா இந்தவரிசையில் சேர்கிறது? என மலைத்து நிற்கிறாயா?
"புகழ் பற்றி வள்ளுவரே பேசுகிறாரே, நீயென்ன அதை போதைவஸ்து ஆக்குகிறாய்?" என்று கேட் apTurt?
2.

நீ வாழ்வாங்கு வாழவேண்டும், உன் சிறப் பாலும், உன்சிறந்த செயல்களாலும், திறமையாலும் புகழ் தானாகவே பரவவேண்டும். அந்தப் புகழைப் பற்றித்தான் வள்ளுவர் கூறினார்.
ஆனால் நீ தேடும் புகழ், உன்சிறப்பால் உன்னைத் தேடி வந்த புகழல்லவே. புகழைத் தேடி நீயாக ஓடுகிறாய். அதைப் பெறுவதற்காக உன்னைப் பற்றி நீயே புகழ்ந்து கொள்கிறாய். அது பரவாயில்லை. ஆனால் தவறுகள், குற்றங்கள் எல்லாவற்றையும் மறைத்து விடுகிறாய்.
சாதாரணமாக மறைத்தால் பரவாயில்லை, பழி பாவத்தை யார் மேலோ போட்டுவிட்டு, அவர்களைக் குற்றவாளி ஆக்கிவிடுகிறாய். அது எவ்வளவு தவறு?
அதுமட்டுமா? இந்தப் புகழ்தேடும் ஆசையால் பதவிகளைத் தேடுகிறாய். அதிகாரத்தை நாடு கிறாய். அதற்காக மிக இழிவான காரியங்களைக் கூடச் செய்துவிட்டு நல்லவனாகவும், வல்லவனா கவும் நடிக்கிறாய். இப்படிப்பட்ட புகழ் ஒரு போதை வஸ்து என்று நான் சொல்வது தவறல்லவே!
போதையூட்டும் பொருளொன்றிற்காகவும், அப் போதைப் பொருளின் வயப்பட்டும் ஒருவன் எப்படியெல்லாம் நெறிதவறிப்போய்ப், பழிபாதகம் செய்கிறானோ, அப்படியெல்லாம் செய்து நீ புகழ் Gg5 GBosniaviComr? G36i6ooiLTub.
13s

Page 15
நீ நல்லதைச் செய். உனக்குச்சரியென்று படுவதைச் செய். அதற்குப் பலனை எதிர்பார்க் காதே. இது கஷ்டமான ஒன்றுதான். எனினும் அதற்கு நீ பயின்று கொள். முயற்சி செய்து பயின்று கொள்.
புகழ் உன்னைத்தேடி வந்தாலும், உன்னைக் கணத்திற்குக் கணம் வழிநடத்தும் ஆண்டவனுக்குத் தான் அது உரியதென்பதை உணர்ந்துகொள். அதன் வயப்பட்டு அதைத்தேடி அதற்காக அலைய முற்படாதே.
உன்னை நீ இறைவனிடம் ஒப்படைத்திருக் கிறாய். நீ செய்தாலும் செயலெல்லாம் அவனுடை யது. அதன் பயன்கூட அவனுடையதே. அதை உணர்ந்துகொள்.
O
14s

வரeடுக் கெளரவத்தால் பயன் என்?
Dனமே, ஏனின்று வேதனையில் வெதும்பிப் போய்க் கிடக்கிறாய்?
ஓ காலையில் நடந்த நிகழ்ச்சிதான் காரணமா? உன்னை அந்தக்காவலன் தடுத்து, விசாரித்து, நடந்து செல்லுமாறு கூறிவிட்டான். அவன் எல்லோ ரிடமும் நடப்பது போல் நடக்காது, உனக்குத் தனி மரியாதை தந்திருக்கவேண்டுமென நீ எதிர்பார்த் தாய்.
ஆம். நீஅப்படி எதிர்பார்த்ததாலேயே உனக்கு வேதனை ஏற்பட்டிருக்கிறது.
உனக்கு ஏன் மரியாதைதரப்படவேண்டுமென நீ எதிர்பார்க்கிறாய்?
நீ படித்துப் பட்டம் பெற்றவன். சிறந்த அறிவாளி என மதிக்கப்படுபவன்.
நீ பெரும் பதவி வகிப்பவன்.
நீ பெரும் பணக்காரன். உனக்கு ஊரில் பெரு மதிப்பு. ஆகவே உனக்கு மரியாதை தரப்பட வேண்டுமென்று நீ எதிர்பார்க்கிறாய்.
IS

Page 16
மதிப்பு, மரியாதை, புகழ் எல்லாமே ஒரு வட்டத் திற்குள் அடங்கிவிடுவதை நீஉணரவில்லையா?
கல்வியால் மேம்பட்டவனாகக் கணிக்கப்படும் ஒருவன், அந்த மேம்பாட்டைப் புரிந்தவர்களின் வட்டத்திலேயே மதிக்கப்படுகிறான். ஒரலுவலகத் தில் பெரும் பதவி வகிப்பவன் அது சார்ந்தவர் களாலேயே மதிக்கப்படுகிறான். ஏன் தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்று கூறிய புகழ்படைத்த வனையே அறியாதவர்கள் பல்லாயிரம் பேரிருக் கிறார்கள். அப்படியிருக்கும் போது, நீ உன்னைச் சகலரும் மதிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது எவ்வளவு மடமை
உன்னிடமுள்ள திறமையை, பெருமையை, உன் அருமையை நீயேன் கவனத்திலெடுக்கிறாய்? அதை மற்றவர்கள் பார்த்து உன்னை மதிக்கலாம். மதிக் காமல் விடலாம். இந்த மதிப்பெல்லாம் எத்தனை காலத்திற்கு?
உன் திறமையை நீ பயன்படுத்தி இந்தச் சமூக த்திற்கு உதவவேண்டும். பணம் உன் தேவைக்கும் உன் குடும்பத் தேவைக்கும் மேலாக இருந்தால் அதைக்கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். உன் பதவி நீ பணிபுரிவதற்காகத் தரப் பட்டது.
இதையே புரிந்துகொள்ள முடியாத உனக்கு, என்ன மதிப்பும் மரியாதையும் வேண்டிக்கிடக்கிறது?
6

உன்னிடம் மரியாதை தரப்பட முடியாத எத்தனை விடயங்கள் மண்டிக்கிடக்கின்றன. அவற்றை ஒவ் வொன்றாகப் பார்க்கத் தொடங்கினாயானால் இந்த மதிப்பு மரியாதைக்கெல்லாம் நீ அருகதையற்ற வனென்று புரிந்து கொள்வாய்.
அதுமட்டுமல்ல, பதவியிலிருக்கும் போதும் பண மிருக்கும்போதும் பணிவு காட்டுபவர்கள், பல்லைக் காட்டுபவர்கள், பந்தம் பிடிப்பவர்கள், உறவும் நட்பும் பாராட்டுபவர்கள், பதவியிலிருந்து இறங் கியதும், பணமிழந்து நிற்கும்போது அதே போன்றி ருக்கமாட்டர்கள். இந்தப் பொய்யான மரியாதைக் காகவா ஏங்கித்தவிக்கிறாய்? இவை நிலை யற்றவை. அவற்றை இழக்கும் போது நீ தாக்குப் பிடிக்க வேண்டுமே. அதற்கு உன்னைத் தயா ராக்கு.
மனமே, இவற்றின் பொய்ம்மையை, நிலையா மையை நீ நன்றாகப் புரிந்துகொள். நீயிருக்கும் பதவியில் சுமார் முப்பது வருடங்களுக்கு முன் இருந்தவரைப் பற்றிக் கேட்டுப்பார், உன்னைச் சுற் றியிருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு அவரின் பெயர் கூடத் தெரிந்திருக்காது.
அதன் பின்னாவது இந்தத் தேவையற்ற வரட்டுக் கெளரவங்களுக்கு ஆசைப்படுவதைத் தவிர்ப் LITu IT?
O
I

Page 17
நல்லனவற்றைச் செய்
Dனமே, எத்தனை எத்தனையோ நல்ல கருமங்களை இந்த உலகில் செய்யப்போவதாக நீ கூறினாய். அவை அனைத்தையும் செய்து முடித்து விட்டாயா? இல்லாவிட்டால் ஒன்றிரண்டையாவது செய்து விட்டாயா? இல்லையே.
அதைவிடுத்து நீ உன் சுயநலத்தில், மாய மயக்கத்தில் ஆழ்ந்து விட்டாய்.
மாணிக்கவாசகப் பெருந்தகையின் திருவெம் பாவையில் * நாளை வந்துங்களை நானே எழுப் புவன்’ என்றவள் உறக்கத்தின் பிடியினின்று விடுபட முடியாநிலை விபரிக்கப்படுகிறதே. அது உன்னைப் பற்றித்தான் கூறுகிறது.
மற்றவர்களைத் துயிலெழுப்ப நீ புறப் படாவிட்டாற் பரவாயில்லை, நீயாவது துயிலெழு, இந்த மாயையின் பிடியில் கட்டுண்டு கிடப்பது மிகுந்த சுகமாக, பேரின்பமாகத் தோன்றும்.
போர்வைக்குள் சுருண்டு, இதமாகத் தூங் கும்போது, எழுப்புபவரைக் கண்டால் எரிச்சல் கூடவரும். எழ மனம் இடங் கொடுக்காது. இந்த சுகத்தை ஏன் இழக்க வேண்டு மென்று கேட்டு அது பிடிவாதம் பிடிக்கும்.
8

அந்த உறக்கம், தேவையற்றது. ஆண்ட வனிடம் செல்வதைத் தடுத்து, அந்தப்பரமானந் தத்தை அனுபவிப்பதற்கு இடையூறாக நிற்பது.
அந்த மாயையின் பிடியிலிருந்து விடுபட உனக்கு விருப்பம் வராது. உனக்குப் போலியான இன்பத்தைத் தந்து, அது தன் பிடியுள் உன்னை வைத்துக்கொள்ள முற்படும்.
நடுநடுங்க வைக்கும் குளில் வெளியே வந்து சுனையில் நீராடி இறைவனை வணங்கவென, அந்தப் போர்வையுள் புதைந்து உறங்கும் உறக்கத் தினின்று விடுபட்டு வந்து விட்டால் அதுவே உனது வெற்றியின் முதற்படி.
இறைவனை அடைவதென்பது சுலபமான தல்ல. ஆனால் அவனை அடைய வேண்டு மென்ற மனவிருப்போடு முதற்படியை அடைந்துவிட்டால் அது அத்தனை கஷ்டமானதுமல்ல.
உன்னை முதற்படிக்கு அழைத்துச் செல் வதற்கு என்னால் முடியவில்லையே.
அகம்பாவம் பிடித்தவனாகவல்லவா இருக் கிறாய். "அஹம்"என்ற வடமொழிச் சொல்லுக்கு "நான்" என்பது பொருள். 'மம' என்றால் எனது என்று பொருள். அஹங்கார மமகாரத்தை விட்டொழிக்க வேண்டுமென்று வேதநூல்கள் போதிக்கின்றன.
19

Page 18
ஆனால் நியோ "நான் செய்தேன்" என்று மார்தட்டிக்கொள்கிறாய். "என்னுடையது" என்று எல்லாவற்றையும் சொந்தம் பாராட்டிக் கொள்கிறாய்.
நீ செய்ய நினைத்தவை பல நிறை வேறாது போய்விட்டதே. செய்தவை எல்லாம் உன்னால் செய் யப்பட்டதென்றால் சிலவற்றை ஏன் செய்ய முடி யாமற் போயிற்று?
அடுத்த கணங்கூட மரணம் வரலாம். அப் போது"இந்த உடல் உன்னுடையதல்ல" என்றாகி விடும். அதன் பின்னர் மற்றவை யாருடையதாக இருக்கும்.
எனவே இருக்கும் காலத்தில் இயன்றவரை
நல்லவற்றைச் செய்வதற்கு இன்றே தொடங்கு.
O
2O

பணத்திற்காகப் பாவம் செய்யாதே
Dனமே, பற்றற்றானிடம் பற்றுவை" என எத்தனை முறை கூறியும் உன்பற்று பணத்திடந் தானேயுள்
எாது.
பணம் உலகவாழ்விற்குத் தேவைதான். நீ வியர்வை சிந்தி உழைத்து அதற்குத் தேவையான பணத்தைச் சேர்த்துக்கொள். ஆனால் அப்படி உழைப்பவனிடமிருந்து அரக்கத்தனமாக நீ பணத்தை அள்ளிக்கொள்கிறாயே. அது எவ்வளவு தவறு தெரியுமா?
"நானும் வியாபாரந்தானே செய்கிறேன்" என்று கூறுவாய். மனிதரின் உடல்நலனைக் கெடுக்கும் பொருட்களையும், உள நலனைப் பாதிக்கும் வஸ்து க்களையும் மனித குலத்தையே பூண்டோடு அழிக் கும் எத்தனையோ குடும்பங்களின் நாசத்திற்குக் காரணமாகக் கூடிய பொருட்களையும் வியாபாரஞ் செய்து பொருளிட்டுவதை உழைத்துச் சம்பா திப்பதென்று கூறமுடியுமா? அத்தகைய வியாபாரங் களால் மிகப்பெரும் இலாபமீட்டி நிறையச் சம்பாதிக்கலாம்.
2.

Page 19
ஆனால் இந்தச் சமுதாயத்தைச் சி கடுத்து அழிப்பதற்கு நீ காரணமாகிறாய். எத்தகைய ஒரு மாபெரும் பாவகாரியத்தைச் செய்கிறாய். நாள் முழுவதும் வியர்வை சிந்தி உழைத்தவனின் பணத்தை மிகச் சுலபமாகப் பறித்துவிடுகிறாய். இது எவ்வளவு தவறு! இதை ஏன் உணர மறுக்கிறாய்?
ஒன்றை நீ உணரும் காலம் வரும். நமது பாவச் செயல்களின் பயன் நமக்குக் கிடைத்தேதீரும். தீமையைச் செய்து நன்மையைப் பெறமுடியாது.
நமது கர்மப்பயன்களை பிராரப்தம்,ஆகாமியம், சஞ்சிதம் என்று மூன்றாக வகைப்படுத்தியுள்ளனர். நாம் முற்பிறவிகளிலே செய்த கருமங்களின் பயன் பிராரப்தம், இந்தப் பிறவியில் செய்தது ஆகாமியம், நாம் அனுபவித்து எஞ்சியது சஞ்சிதம்.
நாம் முற்பிறவியிலே செய்தவையும் எம்மைத் தொடர்ந்துவர, இப்பிறவியிலே செய்தவையும் தொடரப் போகின்றன. எனவே நல்லதையே செய். பணம் வேண்டுமென்று தீயதைச் செய்யாதே.
"முற்பிறவி, மறுபிறவி என்பதெல்லாம் பொய். செய்த பாவ, புண்ணியம் தொடருமென்பதெல்லாம் கட்டுக்கதை. பணமிருந்தால் இந்த உலகத்திலே எதையும் செய்யலாம் " என்கிறாயா?
சகோதரராகப் பிறந்த இவரில் ஒருவர் எதைச் செய்தாலும் நல்லதாக நடந்து, சீரும் சிறப்புமாக வாழ, மற்றவர் செய்ததெல்லாம் நஷ்டமாகி, கஷ்டப் பட்டே வாழ்வதைக் காண்கிறோமே. இதற்கு என்ன
22

காரணம்? முற்பிறவிப் பாவ, புண்ணியங்கள் தான் காரணமாக உள்ளன. எனவே இவையெல்லாம் கட்டுக்கதையென அசட்டை செய்யமுடியாது.
எந்தப் பாதகச் செயலைச் செய்தென்றாலும் பணத்தைச் சேர்த்தால் போதுமென்று நினைக்காதே. உன்னைச் செம்மைப்படுத்தி நல்லவனாக்கிக் கொண்டால் மட்டுமே ஆண்டவனின் திருவடிகளிலே ஐக்கியப்படுவதற்கு ஏற்றவனாக உன்னை மாற்றிக் கொள்ளமுடியும். எனவே இனியேனும் உன்னை மாற்றிக்கொள். இன்றுவரை செய்தவை தகாதவை என்று உணர். அந்தத்தவறுகளுக்குப் பிராயச்சித் தமாக நன்மைகளைச் செய். இன்றுமுதல் திருந்தி வாழ்வதென்று உறுதியெடுத்துக்கொள்.
O
23

Page 20
பணத்தால் பாவம் போகுமா?
Dனமே, நல்லவற்றைத் திரும்பத் திரும்பக் கூறி னாலும் கேட்டு, மறக்கின்றாயே. இன்னும் உன் பணத்தாசை, அந்தஸ்து ஆசை, பதவி ஆசை முதலிய எதுவுமே அகலவில்லையே. நீ நியாயமாக உழைத்து, சேவைகள் செய்து, தியாகங்கள் புரிந்து, உன் பணியாலும் திறமையாலும் அவற்றை அடைந் தால் பரவாயில்லை.
உன் ஆசை உலகிற்கு நன்மை செய்யும். நீ செய்யும் சேவைக்காகவும் திறமைக்காகவும் உழைப் பிற்காகவும் உன்னைத் தேடி வரவேண்டியவற்றை நீ நாடிச் செல்வது உலகிற்கு நன்மை பயக்குமெனின் ஓரளவு ஏற்கலாம்.
ஆனால் இவற்றிற்கு ஆசைப்படாமலே, சேவை செய்வதுதான் ஓர் உத்தம மனிதனின் இயல்பு. சரி அதை விட்டு, பதவியோ அந்தஸ்தோ கிடைக்க வேண்டுமென்பதற்காக நீநல்லவற்றைச் செய்தாலும் நீ படிப்படியாக முன்னேறி உத்தமனாவாய் என நம்பலாம்.
நீயோ தீய வழியிலல்லவா இவற்றை அடைய
முற்படுகிறாய். நேர்வழியிலே செல்வதைவிட
குறுக்குவழி சுலபமானதாகத் தோன்றலாம். ஆனால்
24

அது ஆபத்தைத் தருவதாகவே இருக்கும். இன்று இப்படிப் போய் காலை இழந்த பலரைப் பார்த்தி ருப்பாயே. அப்படித்தான் நீ இறைவன் பாதங்களை அடையும் தகுதியையே இழக்கப்போகிறாய்.
சேர்த்த பணத்திலே ஒரு பகுதியை இறைவ னுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும் என்று நினைக் கிறாயா? உன்னைப்போல் பணத்தாசை கொண்ட வனா இறைவன்? பணத்தைச் செலவு செய்து பாவத்தைக் கழுவ முடியாது.
நீ செய்வது தவறென்று உணர்ந்து திருந்தினால் உன் அன்பையும் பக்தியையும் அவன் ஏற்றுக் கொள்ளக்கூடும். பாவத்தைச் செய்து கொண்டே பணத்தைக் கொடுத்து அவனை வாங்கிவிட முடி
ԱIT5l.
நீயே சிந்தித்துப்பார். உனக்குக் கிடைக்க வேண் டியதுதான் உனக்குக் கிடைக்கும். அதை எத்தனை பேர் வந்து தடுத்தும் நிறுத்தமுடியாது. உனக்குக் கிடைக்காது போகவேண்டியதை நீ எவ்வளவு முயன் றும் பெறமுடியாது. உனது முயற்சிகள் ஏதோ வகை யிலே தவறிக்கொண்டிருக்கும்.
மனதில் பக்தியில்லாமலும் செய்த பாவங்களை உணர்ந்து திருந்தாமலும் கோவிலும் கோபுரங் களும் நிர்மாணித்தோ, அபிஷேகங்களும் பூசை களும் செய்தோ, தானங்கள் புரிந்தோ பிராயச் சித்தஞ் செய்துவிடமுடியாது.
2S

Page 21
அப்படியிருந்தும் நீ பணத்திற்காகவும், பதவிக் காகவும் இவ்வளவு பாவங்களையும் செய்யலாமா? சற்றே சிந்தித்துப்பார்.
தூய்மையான அன்பு நிறைந்த உள்ளத்தையே இறைவன் விரும்புவான். இவ்வளவு அழுக்குகள் மண்டிக்கிடக்கும் உனது மனத்திலே இறைவன் வந்து குடியிருப்பானா? உன் பணத்தால் அந்த அழுக்கை அகற்றவியலுமா? அல்லது உனது பதவியும் அந்தஸ்தும் அதைப் போக்கி ஆண்ட வனை இழுத்துவந்து உள்ளத்தில் குடியிருத்துமா?
எதுவும் நடக்காது. நீ தான் உன்னைத் தூய்மையானவனாக்கி, இறைவனை அடைய முயல வேண்டும். உடனடியாக அதனைத் தொடங்கு.
O
28

நன்நெறி ஒழுகு
Dனமே, நான் சொல்வதைக் கேள். இப்படித் தறிகெட்டு ஓடாதே, உன் செயற்பாடுகளுக்கு இடை யூறாக இருப்பவர்களைத் தீர்த்துவிடுவது என்று திட்டந் திட்டுகிறாயே. இது எத்தகைய பெருங் குற்றமென்று நீசிந்தித்துப்பார்க்கவில்லையா?
மனிதப்பிறவி கிடைத்தற்கரியது. இறைவன் மனிதனை அற்புதமாகப் படைத்திருக்கின்றான். அந்த மனிதனை அழிப்பது எவ்வளவு அநீதி? அவனை அழித்துவிட்டு இன்னொருவனை உருவாக்க உன் னால் இயலுமா?
உன்னை நீயே கொல்வதற்குக்கூட உனக்கு அதிகாரங்கிடையாது. கொலை செய்த தவறுக் குங்கூட மரணதண்னை கொடுக்கக்கூடாது என்று மனிதநேயங் கொண்டோர் கூறுகின்றனர். ஆனால் இன்று சற்றுந்தயங்காமல் கொலை செய்யும் மனோபாவம் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம்.
"அவன் தீயவன். அவனைக் கொன்று விட்டேன்" என்று இலகுவாகக் கூறுவாய்,
"பாம்பு விஷமுள்ளதென்பதால் கொன்று விட்டேன்" என்று மனிதன் கூறுகிறான். பாம்பிடம் கேட்டால் என்ன கூறுந்தெரியுமா?
27

Page 22
நான் எனக்குத் தீங்கு செய்ய வந்தவனை மட்டுமே விஷமேறும் வகையில் கடிக்கிறேன். ஆனால் மனிதன் தனக்குத் தீங்கு செய்யாத போது கூடக் கொன்று விடுகின்றான். நான் கடிப்பது ஒன்றை மட்டுமே செய்கின்றேன். தெரியுமா? " என்று அது கேட்கும் நீதீயவன்" என்று கருதியவனிடம் கேட்டால் தான் உனது கெட்ட தன்மைகள் எவையென்று தெரியும்.
அதுமட்டுமல்ல. எந்த ஒரு மனிதனிடமும் ஒரு நல்ல தன்மை இருக்கும். அதை இனங்கண்டு வளர்த் தெடுத்தால் அவன் அந்தவகையில் நல்லவனாகத் திகழ்வான்.
நீ மற்றவனிடமுள்ள குறைகளைத் தேடி அலை யாதே. அவனிடம் குறை கண்டால் திருத்த முயல். ஆனால் அவனை அழிக்க முயலாதே. அந்த உரிமை உனக்கு இல்லை.
உன்னை நன்னெறிப்படுத்தி இறவனடி சேரத் தயாராகு.
புன்னெறி அதனிற் செல்லும்
போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி ஒழுகச் செய்து
நவையறு காட்சி நல்கி என்னையும் அடியனாக்கி
இருவினை நீக்கியாண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல்
பாத பங்கயங்கள் போற்றி.
28

அரைநிமிட நேரம்
நேரம் எமது வாழ்க்கையில் முக்கியமான ஒன்று. அதை இழந்தால் மீளப்பெற முடியாது. இதை நம்மில் பலரும் உணர்ந்துகொள்வதில்லை. நாம் வாழும் காலம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதில் இழந்த நேரம் இழந்ததுதான்.
சிலர் ஒவ்வொரு கணத்தையும் பொன்னாக்கு கிறார்கள். சிலர் அதனை வீணாக்குகிறார்கள். திட்டமிட்டு அதனைப் பயன்படுத்துவோருமிருக் கிறார்கள். போகிற போக்கில் எதையாவது செய்து நேரத்தைச் செலவிடுவோருமிருக்கிறார்கள்.
நமக்குத் தேவையானவற்றைச் சேகரிப்பதற் கென நாம் பலவகையில் நேரத்தைப் பயன்படுத்து கின்றோம். ஒவ்வொருவருக்கும் தேவை வேறுபடும். பணம், புகழ், கல்வி என்பன போன்ற பல தேவைகள் எமக்குண்டு. இவற்றைத் தேடுவதற்காக நாம் நேரத் தைத் தேடுகிறோம்.
நேரத்தோடு போராடி அவசரப்படும் வாழ்வு நம்மில் பெரும்பாலானோருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி அவஸ்தைப்பட வைக்கிறது.
29

Page 23
எத்தனையோ தேவைகளுக்காக நேரத்தைப் பயன்படுத்தும் நாம், ஆத்மீக முன்னேற்றத்திற் காகவும், மன அமைதிக்காகவும், இறைவனைத் தியானிக்க சிறிது நேரத்தை ஒதுக்கவேண்டுமென் பதை சிந்திப்பதேயில்லை.
இறைவனது திருவடிகளிலே மனம் பதித்து, சிறிதுநேரம் அப்பொற்பதங்களைத் தியானிப் பதனால் மனம் பல நன்மைகளைப் பெறுகிறது. முக்கியமாக அதற்குத் தேவையான நிம்மதி கிடைக் கிறது. ஆன்ம ஈடேற்றத்திற்கும் அது வழியமைக் கிறது.
பிறவிப்பெருங்கடலை நீந்த இறைவனடி சேர வேண்டுமென்பார் வள்ளுவப் பெருந்தகை. பிறவி யைப் பிணியென்றும் கூறுவர். அந்தப்பிணி தீர்ப் பவையும் இறைவனது திருவடிகளே என்பர்.
நான், எனது என்னும் அஹங்கார மகாரங்களும் நம்மைப் பீடித்துள்ள நோய்களே. இவற்றைத் தீர்ப்பவையும் இறைவனது பதமலர்களே.
விநாயகர் ஓங்கார ஸ்வரூபமாக இருக்கிறார். துதிக்கையில் மோதகத்துடன் காட்சிதரும் அவரது முகத்தோற்றம் ஓம் என்னும் பிரணவ உருவைக் காட்டி, மூலப்பொருளை உணர்த்தி இருக்கிறது. அத்தகைய பிரணவருபனான ஒப்பற்ற கணபதியின் பாதாரவிந்தங்கள் ஆங்காரப்பிணிதீர்க்கும் மருந் தாகும்.
30

"ஓங்கார முலத் தொருவன் இருபாதம்
ஆங்காரந் தீர்க்கும் மருந்து"
அத்தகைய அருமருந்தாகிய சரணங்களைத் தியானிக்க நேரமொதுக்கவேண்டியது அத்தியாவ சியமாகும்.
நேரத்தை ஒதுக்கினாலும் பதமலர்களில் ஒன் றித்து, தியானிக்க இந்த மனதினால் இயல வில்லையே. இது மந்தியாய் அலைகிறதே, ஏனை யோரது மனங்கள் எப்படியென்பதை யானறியேன். ஆனால் என் மனம் குரங்காகத் தானிருக்கிறது.
சரணகமலாலயத்தை அரைநிமிட நேரமட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத
சடகசட முடமட்டி பவவினையி லேசனித்த
தமியன்மிடி யால்மயக்க முறுவேனோ.
"திருப்புகழின் இந்த அடிகள் எனக்காகவே பாடப்பட்டவையோ?"என்று ஐயுறச் செய்யுமளவிற்கு அமைந்துள்ளதைக் கண்டு நான் நாளும் வியப்பது 6p60DLD.
சடகசட முட மட்டி"
விஞ்ஞானத்தின் வியத்தகு சாதனைகளால் புறத்தை மட்டுமன்றி, உடலின் உட்புறத்தையும் காணக்கூடியநிலை வந்துள்ளபோதும் இவ்வளவு தத்துருபமாக என்னைக் காண இந்த வரிகளை விட எதுவுமே உதவவில்லையென்றுதான் நான் கருதுகின்றேன்.
3I agai

Page 24
இன்று எத்தனை பிரச்சனைகளும் துன்பங்களும் என்னை வாட்டியெடுக்கின்றன. உடலை வருத்தும் இன்னல்களும் நோய்களும் ஒருபுறம். மனதை வருத் தும் பிரச்சனைகளும் மனவேதனைகளும் மறுபுறம், பாலைவனத்தில் அகப்பட்டது போன்ற வேதனை என்னை வாட்டும் போது அந்தப் பாதகமலங்கள் இங்கே தான் இருக்கின்றன.
சரவணனின் சரணகமலங்கள் எண்ணும் போதே இனிமைதரும் தன்மைகொண்டவை. அந்தச் சர ணங்கள், கமலங்களாகத் தோன்றுகின்றன. தோற்ற தில், மட்டும் செங்கமலங்களென்றல்ல. இயல்பிலும் அவை கமலங்களே. குளிர்மையும் மென்மையும் அழகுடன் இணைந்துள்ள அந்தச் சரண கமலங்கள் நான் சரணடைவதற்கென்றே தயாராகக் காத்திருக் கின்றன.
நான் சரணடையும் போது அவற்றை என்மனம் அடையும் வேளையிலேயே, அவை என் மனதுள் இடங்கொண்டுவிடுகின்றன. அப்படி அவை இந்த வேதனையில் வேகும் மனதுள்ளே புகுந்திருக்கும் போது மென்மையும் தண்மையுமாக அத்தனை வேதனைகளையும் மறையச் செய்து விடுகின்றன.
அதுமட்டுமல்ல அந்தச் சரணகமலங்கள் என் ஆன்மாவை லயப்படுத்தும், ஆலயமுமாகும். அந்த ஆலயத்துள் மனதை லயப்படுத்தி மனதினுள் சரணகமலாலயத்தை நிறுவி, அனைத்துத் துன்பங் களிலிருந்தும் விட்டு விடுதலையாக வழியிருந்தும், அதைவிடுத்து துன்பங்களிலேயே கிடந்து வேதனைப் படும் என்னை என்னென்பது?
32

லெளகிகத்தை விட்டுவெளியேற என்னால் முடியவில்லை. மலங்களும் மாயையும் என்னை விட்டகலாததால் அந்த ஆசைகளால் ஆகர்ஷிக்கப் பட்டுக்கிடக்கிறேன். வெயிலில் செல்லும் வேளை ஒரு மரநிழலில் சிலநிமிடங்கள் ஒதுங்குவதில் 6006PuIT?
ஐந்து நிமிடங்களோ பத்து நிமிடங்களோ அப் போது நிழலில் ஒதுங்கத் தயாராக இருக்கும் நான், இந்த வேதனையிலிருந்து ஒரு நிமிடமாவது விலகி நிற்கக்கூடாதா? அந்தச் சரணகமலாலயத்தைச் சரணடையக்கூடாதா? அப்படிச் செய்யாதிருப்பது எவ்வளவு பேதமை
சரி ஒரு நிமிடங்கூட வேண்டாம். அரை நிமிடநேரம் - முப்பது கணங்கள் - மட்டுமாவது அந்தச் சரணகமலாலயத்தைத் தியானித்தேயாக வேண்டும்.
அந்தக் கணங்கள், அந்த அரைநிமிடம், என் னைப் படிப்படியாக முன்னேற்றும், அந்த சரணக மலாலயத்துள் ஐக்கியப்பட வழிவகுக்கும். எனவே அரை நிமிடநேரமாவது அவனது பாத கமலங்களைத் தியானிக்கவேண்டும்.
அதன் பொருட்டு இறவனின் திருப்பாதங்களைப் பாடும் பாடல்களைத் தேடியெடுத்து, அதனைப் பற்றிச் சிந்தித்து ஆண்டவனது அடியிணைகளில் மனம் பதிப்பது ஒரு நல்ல மார்க்கமாகும்.
O)
33

Page 25
இடரினும் தளரினும் தொழுவேன்
இறைவனது பாதாரவிந்தங்களை அரை நிமிட நேரங்கூட தியானிக்க முடியாத பலருள்ளனர். அதேவேளை எந்தப் பிரச்சனைகளிடையேயும் அவற்றைப் பொருட்படுத்தாது அவனடிகளைத் தொழுது வருவோருமுள்ளனர். அப்படி வணங்கும் மனப்பக்குவம் எல்லோருக்குங் கைகூடாது.
துன்பங்கள் வரும்போதுதான் நாம் அதிக மாக இறைவனை நினைத்து வேண்டுகின்றோம். மகிழ்ச்சி நிறைந்த காலத்தைவிட கவலை நிரம் பிய காலத்திலேயே இறைசிந்தனை ஓங்குகின்றது.
அதேவேளை அத்துன்பம் தொடருமாயின் "நாம் வணங்கியும் துன்பம் நீங்கவில்லையே" என்ற ஆதங்கமும் ஏற்படும். இந்த மனத்தளர்வும் தொடரும் துன்பத்தினால் தோன்றும் வேதனையுமாக "இறைவனை வணங்குவதனால் பயனில்லை" என்ற முடிவுக்கு வரவைக்கும்.
எமக்கு நோய் ஏற்பட்டால் அதைத் தீர்க்கு மாறு இறைவனை இறைஞ்சி நிற்கிறோம். எமது வினைப்பயனால் வரும் துன்பங்களும் நோயும் உடனடியாக மறைந்து விடாது.
34

நாம் செய்த வினைகளின் பயன் எத்த கையது என்பதைப் பொறுத்தே நாம் அதனை அனுபவிக்கின்றோம். தற்செயலாகச் செய்யும் தவறுக்கும் திட்டமிட்டுச் செய்யும் கொலைக்கும் வேறுபாடுண்டு. அதே போன்ற வேறுபாடு வினை களின் பயன்களுக்குமுண்டு. வினைப் பயனாலேயே எமக்கு நன்மையும் தீமையும் இன்பமும் துன்பமும் வருகின்றன. அதுவே எமக்கேற்படும் துன்ப துயரங் களும், நோயும் உடனே போய்விடுவதற்கும் நீண்டு நிலைப்பதற்கும் காரணமாகிறது.
ஆனால் எமக்கேற்பட்ட நோய் நீடிக்கும் போது இறைவன் மேலிருந்த நம்பிக்கை குறைந்து போகிறது. சிலவேளை இல்லாதும் போய் விடுகின் றது. அதன்பின் கோவிலுக்குப் போகாமலும் இறை வனை வழிபடாமலும் விடுவோருமுள்ளனர். அதற்குக் காரணம் நாம் செய்த வினைப்பயனென் பதை நாம் உணரவேண்டும்.
"தன்னை வணங்குவோரின் துயரை இறைவன் ஏன் தீர்க்கக்கூடாது?" என்று நாம் நினைக்கலாம். கொடிய பாவங்களைச் செய்துவிட்டு, இறைவனுக்குப் பாலாபிஷேகமும் அருச்சனையும் செய்து, அதிலிருந்து மீளலாமென்றால் கையூட்டுப் பெறும் காவல்துறை அதிகாரிக்கு ஒப்பானவனாக இறைவன் இருக்க வேண்டும். இறைவன் அத்தகை யவனல்லன்.
"இறைவன் வினைப்பயனால் வரும் துன்பத் தைத் தீர்க்கவே மாட்டான்" என்றும் கூற முடியாது. தன்மேல் அதீத பக்தி கொண்டவர்களுக்கு அவன்
35

Page 26
அற்புதங்கள் நிகழ்த்தித் துன்பதுயரங்களைப் போக் கியுள்ளான்.
அத்தகைய பக்தர்கள் எந்தத் துன்பத்திலும் கொடிய நோய் வந்துற்று நீடிக்கினும் அவனது பதமலர்களை வணங்கி வருவர்.
இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே.
என்று ஆளுடையபிள்ளை தேவாரத்திலே தனது இந்த நிலையைத் தெளிவாக விளக்கி யுள்ளார்.
இறைவன் இரக்கமற்றவனென நாம் நினைக்கக் கூடாது. பாற்கடலில் அமுதொடு கலந் திருந்த நஞ்சை எடுத்து உட்கொண்டவன் அவன்.
பாற்கடலைக் கடைந்து அதிலெழுந்த அமு ஆத்தை உண்பதற்குத் தேவர்களும் அசுரர்களும் போட்டிபோட்ட கதை நாமறிந்தது. அமுதம் கிடைத் தால் அதையுண்ண எல்லோருமே விரும்புவார்கள். கிடைத்தற்கரியது அமுதம், அதையுண்டால் மரண மின்றி வாழலாம். இங்கோ அதனோடு ஆலகால விடம் கலந்துகிடக்கிறது. அனல் போற்கிடக்கிறது. உண்ணக்கூடத் தேவையில்லை. தொட்டாலே கொன்று விடும் விஷம் அது. அதில் அமுதை யல்லவா எடுத்து உண்ண வேண்டும்? அதைவிடுத்து அந்த ஆலகால விடத்தை அள்ளி உண்டான்
36

சிவபிரான். மற்றவர்கள் அமுதத்தை உண்ண வேண்டுமென்பதற்காக அதனை எடுத்து உண்ட நீலகண்டன் பக்தர்களை நிச்சயம் கைவிடமாட்டான் என்பதை வலியுறுத்தப்போலும் சங்கரனின் அந்த அற்புதச் செயலைக் கூறி, அவனை அழைத்து, இத்தேவாரத்தை ஞானசம்பந்தப் பெருமான் பாடியுள்ளார்.
இடரும் நோயும் தொடர்கின்றதென்று கவ லைப்படாதீர்கள். நீலகண்டன் நன்மையே செய்வான். அவன் கழல்களை இடையறாது தொழுது வாருங்கள் என்பதையும் இத்தேவாரம் எமக்கு கூறாமல் கூறு கிறது.
O
ך3

Page 27
DGOGWTHI நீழலின் @druນີ້
66 -
மெக்குத் துன்பம் நீடித்துவரும்போதும் இறை வனது திருவடிகளில் மனம் பதித்து வணங்கினால்
துன்பம் நீங்குமா? " எனச் சிலர் ஐயுறலாம்.
இறைவனது மென்மலர்ப் பாதங்களின் அருமையை உணரும் பக்குவமேற்பட்டால் எந்தக் கஷ்டமும் எமக்குத் தோன்றாது போய்விடும்.
திருநாவுக்கரசு நாயனாரை நீற்றறையில் அடைத்து விடுகிறார்கள். அதனை நினைத்துப் பார்க்கும்போதே எம்மால் தாங்க முடியாத வேத னையை உணர முடிகிறது. ஆனால் அவர் இந்தக் காலத்து குளிரூட்டப்பட்ட அறை தோற்கக்கூடிய ஓர் அறையில் இருக்கும் உணர்வுடன் ஈசன் பாதத்திலே ஒன்றிக் கிடந்தார். w
மாசில் வீணையும் மாலை மதியமும் விசு தென்றலும் வீங்கிளவேனிலும் முசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே.
என்று சுண்ணாம்புச் சூளையுள்ளிருந்து அப்பர் பாடினார்.
38

சிறந்த வீணை வித்துவான் இசைத்த குற்ற மேயற்ற வீணாகானத்தை அனுபவித்துக் கொண்டு, இளவேனிற்காலத்து மாலைப் பொழுதில் குளிர் நிலவின் ஒளியிலே தென்றல் மென்மையாக வருடி இதமளிக்க , பொய்கைக் கரையிலிருந்தால் எவ்வ ளவு இன்பமாக இருக்கும் அந்தப் பொய்கையில் வண்டுகள் ரீங்கரிக்கின்றன. ஏன்? அல்லியும் தாம ரையும் நிறைந்துள்ளதால் தேனுண்ண வண்டுகள் வந்திருக்க வேண்டும். எமது தந்தையாகிய ஈசனின் இணையடிகளின் நிழல் இப்படிப் பட்ட இன்பமய மானதாகச் சுகந்தந்துகொண்டிருக்கிறது.
அப்பரடிகள் தன் அப்பனின் அடியிணை களில் மனமொன்றிக் கிடந்ததனால், அவர் இறை வனின் பாதமலர்களின் சுகத்தையே அனுபவித்துக் கொண்டிருந்தார். நீற்றறையின் வெம்மையை அவர் உணரவில்லை. அதன் நடுவில் மிகுந்த சுகமாக அமர்ந்திருந்துவிட்டு வெளியே வந்தார்.
நாமும் இறைவனது திருவடிகளிலே மனதை நிறுத்தி அவற்றிலே ஒன்றித்துக் கிடந்தால் உலகின் மாயவாழ்வில் எமக்கு வந்துறும் துன்பங்களை உணரமாட்டோம். எந்த இடருக்கும் அஞ்சாதவர்க ளாக மாறிவிடுவோம்.
நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்
நரகத்தி லிடர்படோம் நடலையில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை
39

Page 28
தாமார்க்கும் குடியல்லாந் தன்மையான
சங்கரநற் சங்கவெண் குழையோர் காதில்
கோமாற்கே நாமென்றும் மீளாவாளாய்
கொய்மலர்ச் சேவடியினையே குறுகினோமே.
என்று பாடும் நெஞ்சம் கொண்டவர்களாகிவிடுவோம். நமனுக்கும் அஞ்சாத அஞ்சாமையைப் பெற சிவபெ ருமானுக்கு ஆட்பட வேண்டும். அதுவும் மீளா ஆளாய் அந்தக் கொய்மலர்ச் சேவடிகளை அடைய வேண்டும்.
நாம் பாடசாலை, பணியகம், பொழுதுபோக்கும் இடங்கள் முதலிய பல இடங்களுக்குச் செல்கின் றோம். அவ்விடங்களிலிருந்து பின்னர் திரும்பிவிடு கின்றோம். ஏன் இந்த உலகிற்கு வந்த நாமும் திரும்பிச் சென்றுவிடுகின்றோமே, இறைவனது மலரடிகளை அடைந்துவிட்டு இவ்வாறு திரும்பக் கூடாது. அவனுக்கு ஆட்பட்டால் மீள முடியாது. அப்படி மீளாது சேவடிகளைச் சேர்வோமானால் இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
40

பற்று விட்டு பதம் பற்றுக
ஆன்மாவைப் பற்றும் பாசமுந்தான்
பிணைத்து வைத்துப் படாதபாடு படுத்துகின்றன. இவையில்லாது போய்விட்டால் ஆன்மா ஈடேற்றங் கண்டுவிடும்.
பற்றறுப்பது சுலபமான காரியமல்ல " உலகப் பொருட்களில் பற்றுவைத்து என்னபயன்? ஒரு நாள் இறக்கப்போகிறோம். அதன்பின் நாம் பற்றுவைத் துள்ளவை அனைத்துமே எம்முடையவையாக இல்லாது போய்விடும் எனவே இவற்றில் பற்று வைக்காதீர்கள்" என்று பேசலாம். பற்றை விடுவது பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் பற்றை அறுத்தெறிய எம்மால் முடியாது.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு.
என்று வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார் ஏனைய பற்றுகளை விடுவதற்கு இறைவன் மேல் பற்று வைக்க வேண்டுமென்கிறார்
எமக்குத் தொல்லைதரும் பற்றுகள் இறைவ னிடம் பற்றுவைக்க எம்மை விடுவதில்லை. பக்குவப் பட்ட ஆன்மாக்களினாலேயே இந்தச் சாதனையைச் சாதிக்க முடிகிறது.
4.

Page 29
"வேறு பற்றுகளில்லாமல் உனது பாதங்க ளிலேயே மனதைப் பதிய வைத்தேன், இனிப் பிறவாத தன்மையை அடைந்துவிட்டேன், இறைவா உன்னை நான் மறந்தாலும் எனது நா "நமசிவாய" என்று கூறும். என்னும் நிலையிலிருந்து
மற்றுப் பற்றெனக் கின்றிநின்திருப் பாத மேமனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந்தேன்இ னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன் கற்ற வர்தொழுதேத்துஞ் சீர்க்கரை
யூரிற் பாண்டிக் கொடுமுடி நற்ற வாஉனை நான்ம றக்கினும் சொல்லும் நாநமச்சி வாயவே.
என்று பாடுகின்றார் சுந்தரமூர்த்தி நாயனார், அவரது மனப்பக்குவம் கைவரப் பெற்றவர் எல்லாப் பற்றுக்களையும் துறந்து, இறைவனது பாதாரவிந்த ங்களிலேயே மனமொன்றிக் கிடக்கமுடியும். அவரு டைய மனம் இறைவனது பாதங்களையே பற்றி நிற்கும்போது அவனை மறக்கமுடியுமா? முடியாதே. அப்படி மறக்க நேரிட்டாலும் இடையறாது நமச்சி வாய" என்று கூறிக்கொண்டிருக்கும் நா தொடர்ந்து அந்த ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொல்லிக் கொண் டிருக்கும்.
இவ்வாறு இறைவனுடன் ஒன்றிக்கும் பேறு பெற்றவர் மீண்டும் பிறக்கவே வேண்டியதில்லை. அவர் இறைவனது பதங்களுடன் ஒன்றிவிடும் மாபெரும் பேறைப் பெற்றுவிடுவார். இதனாலேயே சிவபுராணம்,
42

*பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள்
வெல்க” என்றும் மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி?
என்றும் இறைவனது சேவடிகளைப் போற்றுகிறது.
இறைவனது திருப்பாதங்களில் மனம் பதித்து வழிபட்ட தம்பிரான் தோழரும் " இனிய் பிறவாத தன்மை வந்தெய்தினேன்" என்று பாடுகின்றார் இறை வனின் அடியிணைகளில் ஒன்றிவிடுவோர் மீண்டும் பிறவாத தன்மையைப் பெறுவர் என்பது உறுதி.
Ο
43

Page 30
பொன்னடிகள் கண்டின்று வீருற்றேன்
இறைவனை வணங்கும் போது அவனது அருமை பெருமைகளையும் அவனது நாமங்க ளையும் கூறி வழிபடுகின்றோம். கோவிலிலே அருச்சனை செய்யும் போதும் இதையே செய்கின் றோம்.
இறைவனது பல்வேறு அங்கங்களையும் வர்ணித்து வணங்கினாலும் வழிபாட்டின் போது அவனது பாதாரவிந்தங்களை அடையவேண்டுமென் றே அனைவரும் வேண்டிநிற்பதை நாம் காணலாம்.
மணிவாசகப் பெருந்தகை, நாம் அருளிச்செய்த சிவபுராணத்தைப் பொருளுணர்ந்து ஒதுவோர் சிவ பிரானின் திருவடிகளை அடைவர் எனக் கூறுவார்.
*சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தினுள்ளார் சிவனடிக்கிழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து”
என்று சிவபுராணத்தின் நூற்பயன் கூறுவதைக் காணலாம்.
இவ்வாறு பயன் நல்கும் சிவபுராணத்திலே இறைவனைப் பலவாறு போற்றித்துதிக்கிறார் திரு வாதவூரடிகள். அப்படிப் போற்றும் போது முதலிலே
44

நாதனின் தாள்களையே வாழ்த்தியும் போற்றியும் ஏத்துவதைக் காணலாம்.
"தீவினைகள் செய்த நான் எண்ணுவதற்கே எட்டாத, எழில் நிறைந்த கழல்களை வணங்கி, உனது பெருமைகளைப் புகழும் வகையறியேன். எல்லாப்பிறப்பும் பிறந்து, இளைத்து, உனது பொன் னடிகள் கண்டதனால் இன்று வீடுபேறடைந்தேன்" என மாணிக்க வாசகர் பாடிப் பாடிப் பணிகின்றார்.
"பொன்னடிகள் கண்டின்று விடுற்றேன். "
என்பார்
“பொல்லா வினையேன் எல்லாப்பிறப்பும் பிறந் திளைந்தேன். இன்று வீடுற்றேன்” என அவர் கூறுவன வற்றைச் சேர்த்துப் பார்த்தால் பொன்னடிகளைக் கண்டதனால் வினையிலிருந்தும் பிறவிப் பிணியி லிருந்தும் விடுபட்டேன் என்று கூறுவதாகக் கொள் 6776)ITLb.
வீடுபேறு, முக்தி ஆகிய சொற்கள் தமிழிலும் வடமொழியிலும் “விடுபடுதல்” என்ற கருத்தினையே கொண்டுள்ளன
சிவபுராணத்தை ஒதும்போது இறைவனது திருப் பாதங்களின் பெருமையை நன்குனர்ந்து, அவற்றைப் போற்றி வணங்கக்கூடியதாகவிருப்பதை எவருமே உணரலாம்.
45

Page 31
இறைவன் மணிவாசகரின் மனத்திலிருந்து கண்ணிமைக்கும் பொழுதுகூட நீங்கியதில்லை.
நமச்சிவாய வாழ்கநாதன்தாள் வாழ்க இமைப் பொழுது மென்னெஞ்சில் நீங்காதான்
தாள் வாழ்க என சிவபுராணத்தை அவர் ஆரம்பித்துவைக் கிறார்.
அவ்வாறு தொடங்கி சிவபுராணத்தை ஓதி முடியும்வரையெனினும் இறைவனது தாள்களை மனதிலிருத்தி பக்தியோடு துதிப்போமாயின் இறைவனது அடியினைகளைச் சென்று சேரும் பேறு பெறுவோம்.
O
46

உனகழல் நெஞ்சினுள் இனிதாய்
இறைவனது திருவடிகள் பற்றியும் அவற்றின் அழகு பற்றியும் மென்மை பற்றியும் மேன்மை பற்றியும் அடியவர்கள் எப்படி எப்படி யெல்லாமோ பாடியுள்ளனர்.
அந்த மென்மலர் சேவடிகளைத் தியானித்து வணங்குவதால் கிட்டும் பேறுகள் பல. அதனாற் கிடைக்காத பேறு எதுவுமேயில்லை.
இதைவிட மற்றொரு சுகமும் இப்படித்தி யானிப்பதால் கிடைக்கும். ஆண்டவனது பாதார விந்தங்களையே தியானித்து அதில் ஒன்றித்து விடும் போது அவை எம் மனதினுட் புகுந்துவிடுகின்றன.
ஒரு மென்மையான, தண்மையான, அழகிய, சுகந்தம் வீசும், இனிய பொருள் மனதினுள் இருந் தால் எவ்வளவு இதமாக இருக்கும் அந்த அனுபவத்தை எவ்வாறு விவரிப்பது? அதை விவரிக்க முடியாது. அப்படி அனுபவிக்கும் பேறு ஒன்றே போதுமானது. அதைவிடப் பெரிதாக என்ன இருக்கிறது?
குபேரனது நண்பனே, நன்மை செய்பவனே, சூலத்தைக் கையிலே ஏந்தியவனே, அழிவற்றவனே,
47

Page 32
சிவனே, நல்ல பொற்துாண்போல் என்னைத் தாங்கிப் பற்றுக்கோடாயிருப்பவனே, கற்பகத் தளிரே மூன்று கண்களையுடைய கரும்பு போன்ற இனிய வனே, தூய்மையானவனே விநாயகனுக்கும் முருகனுக்கும் தந்தையே பொன்னம்பலத்தில் ஆடும் தேவர் தலைவ, தொண்டனாகிய நான் உன் திருவடிகள் இரண்டையும் எனது நெஞ்சினுள்ளே இனிமையாக அனுபவிக்குமாறு நீதிருவருள் புரிவாயாக.
தனதன்நல் தோழா, சங்கரா, சூல
பாணியே, தானுவே, சிவனே, கனகநல் தாணே, கற்பகக் கொழுந்தே,
கண்கள் முன்றுடையதோர் கரும்பே, அனகனே குமர விநாயக கணக
அம்பலத்து அமரசேகரனே, உனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத் தொண்டனேன் நுகருமா நுகரே என்று திருமாளிதைத்தேவர் திருவிசைப்பா பாடலில் அரனின் அடியிணைகளை நெஞ்சினுள் வைத்து நுகரும் இனிய அனுபவத்தை வேண்டிப் பாடியுள்ளார்.
இனிமையான அனுபவத்தை நினைந்து, அதை நல்கும் பாதாரவிந்தங்களை உடையவனிடம், அந்த அருமையான நுகரும் பேறை வேண்டும் போது அவனை அவர் எவ்வாறெல்லாம் கூறி அழைத் துள்ளாரென்பதிலிருந்தே அவர் கேட்கும் வரம் எவ்வ ளவு அருமையானது என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது.
நாமும் இந்தத் திருவிசைப்பாவைப் பாடிப்பாடி இறைவனது கழல்களை உள்ளத்தினுட் பதித்து இனிமையான அனுபவத்தை நுகர்வோமாக. O
48

சேவடிக் கீழ் அறிவு பெற்றேன்
கிற்றும் கேட்டும் அனுபவத்தினாலும் நாம் அறிவைப் பெறுகின்றோம். இவ்வாறு கல்வியறிவும் கேள்வியறிவும் பட்டறிவும் பெற்ற அறிஞர்களை நாம் பாராட்டிப் போற்றுகின்றோம்.
இறைவனது திருவடிகளைத் தொழாவிடின் இவ்வாறு பெறும் அறிவினாலும் உண்மையான பயன்கிட்ட வில்லையென்றே கூறவேண்டும்.
கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழா ரெனின்
என்று வள்ளுவரும் இக்கருத்தினையே கூறுகின்றார்.
சிவபெருமானது பதங்களை வழிபட்டு அவற்றை அடைந்தோர் பிறவிப் பிணியறுந்து போக முத்தியின்பத்தை அடைகின்றனர். பிறவிப்பிணியை அகற்றவும் வீடுபேற்றை அளிக்கவும் சிற்றறிவினால் முடியாது அதற்குப் பேரறிவு வேண்டும்.
இப்பேரறிவை எவ்வாறு பெறலாம்? இறை வனது அருளினாலேயே அதனைப் பெறமுடியும். சாதாரணமான நூல்களைக் கற்றோ, கல்வியறி வினாலோ அதனைப் பெறமுடியாது. இறைவனது
49

Page 33
பாதங்களைப் பற்றும்போது இப்பேரறிவு கிட்டும் பேற்றினை அடையலாம்.
உண்மைப்பொருளை உணரும் பேரறிவைப் பெறுவது இலகுவானதல்ல. அதை எல்லோரும் பெற்றுவிடவும் முடியாது. அவ்வறிவைப் பெற்று விட்டால் அது பெரும்பேறாகும்.
சேந்தனார் சிவலோகநாயகனின் சேவடிக் கீழ் யாரும் பெறாத இப்பேரறிவைப் பெற்றார். திருப் பல்லாண்டில் இந்தப் பேற்றினைப் மண்ணும் விண்ணும் அறியும் வண்ணம்
சீரும் திருவும் பொலியச்
சிவலோகநாயகன் சேவடிக்கிழ் ஆரும் பெறாத அறிவு
பெற்றேன் பெற்றதார் பெறுவார் உலகில் ஊரும் உலகும் கழற
2 GS உமை மணவாளனுக் (கு) ஆம் பாரும் விசும்பும் அறியும்
பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
என்று சேந்தனார் பாடியுவகையுறுகின்றார்.
சீரும் திருவும் பொலிய" எனப்பாடியுள்ளதை நாம் பலவாறு நயக்கலாம். சிவலோக நாயகன் சேவடிக் கீழ் சீரும் திருவும் பொலிய இருந்து அறிவு பெற்றார் என்றும் கொள்ளலாம். பெற்ற அறிவால் சீரும் திருவும் பொலியுமென்றும் கொள்ளலாம்.
SO

சீரும் திருவும் என்றதும் எமக்கு லெளகிக வாழ்வில் கிட்டும் பொன், பொருளும் அதனாற் பெறும் சீருமே மனதிலே தோன்றும், ஆனால் இங்கு சேந்தனார் அதனைக் கருதியிருக்க மாட்டாரென்பது திண்ணம், திருவருட் செல்வமும் அதனாலடையும் சீரும் பொலிய" என்று கருதியே அவர் பாடி யிருப்பார்.
“அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் யூரியார் கண்ணும் உள”
என்று திருவள்ளுவரும் அருட்செல்வத்தின் பெருமை யைக் கூறியுள்ளார். இழிந்தவர்களிடத்திலும் பொருட் செல்வம் இருக்கும்.அதனால் அருட் செல்வமே செல்வங்களுள் சிறந்தது என்பது வள்ளுவரின் கருத்து. அத்தகைய அருட்செல்வமும் அதனால் பெற்ற சீரும் பொலிய இறைவன் திருவடியில் சேந்தனார் ஆரும் பெறாத பேரறிவு பெற்றார்.
நாமும் சிவபெருமானது சேவடிகளை அடைந் தோமானால் பேரறிவைப் பெற்று திருவருட் செல்வமும் சீரும் பொலியச் சிறந்து வாழ்வோம் அந்தப் பேரறிவைப் பெறுவதற்காக அவனது திருவடிகளில் மனம் பதித்து தியானித்து வணங்கி அவற்றை அடையவேண்டும்.
O
SI

Page 34
அடியின் கீழிருக்க அருள் தாராய்
இறைவன் எமக்கு முன் தோன்றி " உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டால் ஒவ்வொருவரும் எதையெதையோவெல்லாம் கேட்பார்கள். எமக்குத் தான் எத்தனையோ தேவைகள் உள்ளனவே. ஒன்றா இரண்டா?
நாம் கேட்கும் அத்தனை பொருட்களும் எமது உலகியல் தேவைகளுக்கு வேண்டியவை யாகவிருக்கும். இன்றோ நாளையோ அழிந்து போகப்போகின்றவையாக அவை இருக்கும். எமது ஆன்ம ஈடேற்றத்திற்கான எதையாவது வேண்டிப் பெறும் எண்ணம் யாருக்காவது தோன்றினால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.
காரைக்கால்லம்மையார் எவற்றையெல்லாம் கேட்டார் தெரியுமா? முதலிலே அவர் பிறவா மையைக் கேட்டார். பிறவிப்பெருந் துன்பம் இல்லாது தொலைந்து விட்டால் முத்தியின்பம் சித்தித்து விடுமே. அதனாலேதான் அவர் முதலிலே பிறவா மையை வேண்டினார்.
எங்கள் வினைப்பயன்கள் எம்மைத் தொட ரும்வரை அவற்றை அனுபவிக்க நாம் பிறப்
52

பெடுத்தாக வேண்டும். ஆன்மா பக்குவமடையும் வரை பிறவியிலிருந்து தப்பிவிட முடியாது. அம்மை யாருக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் தோன்றியது. அவ்வளவு சுலபமாக எனக்குப் பிறவாமை கிடைத்து விடுமா? " என்று சிந்தித்தார். அதனால் 'சரி மீண்டும் பிறக்க நேருமேயானால் உன்னை மறவாமை வேண்டும்" என்று இறைவனிடம் இறைஞ்சுகின்றார்.
எமக்குத் துன்பம் வரும்போதுதான் இறை வனுடைய நினைவு வரும். மகிழ்ச்சியாக இருக்கும் போது இறைவனை மறந்து விடுவோம். அது மட்டுமல்ல இறைவனை அறவே மறந்துவிடுவோரு முள்ளனர்.
மருணிக்கியார் சிவபெருமானை மறந்து சமண சமயத்தைப் பின்பற்றி வாழ்ந்தபோதுதான் சூலை நோயை ஏற்படுத்தி இறைவன் அவரை ஆட்கொண்டார். ஆட்கொள்ளக்கூடிய பக்குவ மடைந்த, திருநாவுக்கரசரே இறைவனை மறந் திருக்கிறார்.
"இறைவனை மறந்திருக்கும் நிலையேற் பட்டால் அது எவ்வளவு வேதனைக்குரியது" என்று காரைக்காலம்மையார் சிந்தித்தார். இறைவனை மறந்திருக்கும் ஒரு நிலை தனக்கு ஏற்படக் கூடாது என்று தீர்மானித்தார்.
இறைவனை மறவாதிருந்தால் அதன் பயனாக அவனது திருவடியை அடையும் பேறு கிட்டும். இறைவனது பாதக்கமலங்களில் ஒன்றி விட்டால் முத்திப்பேறு கிட்டும்.
S3

Page 35
"எனவே மீண்டும் பிறப்புண்டேல் உன்னை மறவாமை வேண்டும்" என்று வேண்டுகின்றார்.
உலகியல் பொருட்களைக் கேட்கும்போது நாம் திருப்தியடையாது மேலும் மேலும் கேட்பது போல அம்மையாரும் அத்துடன் திருப்திப்படாது "இன்னும் வேண்டும்" என்று கேட்கிறார். 'நீ ஆடும் போது நான் மகிழ்ந்து பாடிக்கொண்டு உனது திருவடிகளின் கீழிருக்க வேண்டும்" என்னும் வேண்டு கோள்தான் அவர் மேலும் ஆவல்கொண்டு கேட்ட தாகும்.
நடேசப்பெருமானின் ஆடல் இந்த உலக இயக்கத்திற்கே காரணமானது. அத்தகைய ஆட லைத் தரிசித்துக் கொண்டிருக்கும் போது பேரா னந்தம் பெருகும். அந்த மகிழ்விலே இறைவனைப் பாடித் துதிக்கத் தோன்றும், அரனின் அடியிணை களின் கீழிருந்து மகிழ்ந்து பாடித் துதித்துக்கொண் டிருந்தால் அதுவே வீடுபேறல்லவா?
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின்
வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டே
லுன்னை யென்றும் மறவாமை வேண்டுமின்னும் வேண்டும் நான்
மகிழ்ந்துபாடி அறவா நீயாடும் போதுன்னடியின்கீழ்
இருக்கவென்றார். என்ற காரைக்காலம்மையாரின் வேண்டு கோளைக் கூறும் புராணம் நாம் சிந்தித்து வழிப் படவும் வழிபடவும் வழிகாட்டும் ஒன்றாகும். O
54

சென்னியது திருவடித்தாமரை
அபிராமிப்பட்டர் தம்மை ஆட்கொண்ட அபிராமி அன்னையைப் போற்றிப் பாடிய அபிராமி அந்தாதிப் பாடல்களைப் படிக்கும் போது அம்மை தன் பாதகமலங்களை அவரது தலைமேல் வைத்து ஆட்கொண்டதாக அவர் பாடியுள்ளதைக் காணலாம்.
உலக ஆசைகளில் வசப்பட்டு கூற்றுவனின் பாசத்தில் அகப்படவிருந்த பட்டரிடம் வலிய வந்து, பாதத்தைத் தலைமேல் வைத்து அவரை ஆட்கொள் கிறாள் அபிராமி அன்னை, அப்போது அவருக்கு எப்படியிருந்ததுதெரியுமா?நறுமணம் வீசும் தாமரை மலரைத் தலையிலே சூட்டியது போன்று அவருக் கிருந்தது.
ஆசைக் கடலில் அகப்பட்டு, அருள் அற்ற
அந்தகன்கைப் பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின்
பாதம் எனும் வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு
கொண்ட நேசத்தை என்சொல்லுவேன் ஈசர் பாகத்து
நேரிழையே. என்று பட்டர் பாடி உருகிநிற்பதைக் காண லாம்.
S5

Page 36
அன்னையின் நேசத்தை வியந்தவர் மற்றொரு பாடலில் "மனமே புண்ணியம் செய்தோமே" என்று அன்னை அவரை ஆட்கொண்டது பற்றி மகிழ்வடை கின்றார், அம்மை மட்டுமல்ல அப்பனும் சேர்ந்து வந்து, தமது அடியார்களின் மத்தியிலே அவரை இருக்கச் செய்து தலைமேல் தாமரைப் பதத்தைப் பதித்தார்.
புண் ணியம் செய்தனமே மனமே புதுப்
பூங்குவளைக் கண்ணியும், செய்ய கணவரும் கூடி, நம்,
காரணத்தால்
நண்ணி இங்கேவந்து, தம்அடி யார்கள் நடு
இருக்கப் பண்ணி, நம் சென்னியின்மேல் பத்மபாதம்
பதித்திடவே.
என்ற பாடலிலும் பட்டர் தமது தலைமேல் பதமலர் சூட்டித் தம்மை ஆட்கொண்டதாகக் கூறுகிறார்.
அபிராமித்தாயின் பாதாரவிந்தம் தம் தலை மேல் பதிந்து அங்கேயே இருக்கும் உணர்வுடன் பட்டர் பாடல்களைப் பாடுவதைக் காணலாம். மற்றோர் பாடலிலே “அந்தரி பாதம் என் சென்னியதே" என்று பாடும் அவர் தொடர்ந்துவரும் பாடலிலே *சென்னியது உன்பொன் திருவடித் தாமரை” என்று பாடிச் செல்கின்றார்.
56

அன்னையின் திருவடிக் கமலங்கள் தன் சிரசின் மேல் பதிந்தபடியே இருப்பதாக அவர் உணர்ந் ததாலேயே இப்படி மீண்டும் மீண்டும் பாடியிருக்க வேண்டும்.
அபிராமி அந்தாதியிலே தேவியின் சேவடி களை வணங்குவதாலும் அவற்றைச் சேர்வதாலும் பெறும் பயன்களையும் பலபாடல்களிலே அவர் விபரித்துள்ளார். உதாரணமாக இரவும் பகலும் அவற்றை வணங்கினால் முத்திக்கு வழியமைக்கும் தவநெறியும் சிவலோகத்தையடைந்து பெறும் முத்தியும் கிடைக்குமென ஒரு பாடலியே வலியுறுத் தியுள்ளார்.
சொல்லும் பொருளும் எனநடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே, நின்புது மலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.
என்பது அப்பாடல்
இவ்வாறு பல பாடல்களிலே தன்னை ஆட் கொண்ட அபிராமித் தாயின் பொற்பாத கமலங்கள்
பற்றியும் அவற்றின் பெருமை பற்றியும் அவர் LITIquisitónitif.
O
57

Page 37
esLIrfiċiSTLI GfLGODLALJoos
குறிஞ்சித் தெய்வமாகக் குமரனைக் கொண் டாடுவது தமிழர் மரபு. ஈழமணித் திருநாட்டில் கதிர் காமத்திலே மலைமீது கோவில் கொண்டு, அனைவருக்கும் அருள் வழங்கி நிற்கின்றான் முருகன். அவன் அங்கு குடிகொண்டதாலே சீரும் சிறப்பும் திகழுமிடமாகக் கதிர்காமம் ஆகிவிட்டது.
ஞானச்சுடரான, அழகுத் தெய்வமான, அருட் சோதியான கந்தன் வீற்றிருப்பதால் கதிர்காம மலைச் சிகரமே சோதிமயமாகி விட்டது. சோதி மயமான அந்தக் கதிர்காமச் சிகரத்தில் நெடுவே லொடு நிற்கும் முருகனிடம் பக்தி கொண்டு துதிப் போர் பல்லாயிரக் கணக்கானவர்கள். அன்று முதல் இன்று வரை இவ்வாறு தன்னை நம்பி வழிபட்ட பக்தர்களுக்கு எத்தனை அற்புதங்கள் செய்து அருள் பாலித்திருப்பான் அந்தக் கதிர்காமக் கந்தனென்பது எமக்குத் தெரியாதது.
தங்கள் குறைகளையும், துயர்களையும், வேத னைகளையும் தீர்க்குமாறு வேண்டித் துதித்துச் சென்றவர்களுக்கு அவற்றைத் தீர்த்து, அருள்பாலிப் பான் கார்த்திகேயன். ஒவ்வொருவரது குறை தீர்த்த கதையும் ஓர் அற்புத நிகழ்வாகவிருக்கும். அத்தனை அற்புதங்களையும் கண்டவரோ கேட்டவரோ இருக்க
s8

முடியாது. அந்தச் செவ்வேள் செய்த அற்புதங்கள் பலகோடியாகும்.
அத்தகைய வேலவனின் திருப்பாதங்களைக் கும்பிடும் பேறுபெற்றால் எவ்வளவு அதிர்ஷ்டம் ஆனால் அந்தப் பேறு பெறவேண்டுமென நம்மில் எத்தனை பேர் மனப்பூர்வமாக அவாவுறுகின்றோம்? கதிர்காமத்திற்குப் போக எல்லோருக்கும் விருப் பமே. அது அந்த வேலவனின் திருப்பாதங்களை அரைநிமிட நேரமாவது தியானித்து உயர்வு பெறுவ தற்காகவோ? என்றால் அது ஐயமே.
ஆனால் அந்த நெடுவேலோன் திருப்பாதங் களைக் கும்பிட்டால் நமது குறைகள் திரும். துய ரங்கள் போகும். அற்புதங்கள் நிகழும். இவற்றுடன் இவற்றிற்கு மேலானதொன்றையும் அடையலாம். அதுவும் எளிதாக அடையலாம். ஆம் எல்லாவற் றிற்கும் மேலானதான பேரின்ப வீட்டினை எளிதாக அடைந்து விடலாம். எத்தனையோ பிறவிகளெ டுத்தும் பிறவிப்பிணியொழிந்து வீட்டின்பம் பெறுவது மிகக் கடினம். ஆனால் * கதிர்காமக் கந்தனின் திருப் பாதங்களைக் கும்பிட்டால் மிக எளிதாக அந்த வீட் டின்பம் கிடைத்துவிடும்.” என்று கதிர்காமப் புராணத்
தில் உயர்திரு. சி. நாகலிங்கம்பிள்ளை கூறுகிறார்.
சீர்திகழுங் கதிர்காமச் சோதிமலைச் சிகரமீது பார்திகழு மற்புதங்கள் பலகோடி செய்தருளுங் கூர்திகழு நெடுவேலோன் திருப்பாதங்கும்பிடுவோர் நேர்திகழும் பேரின்ப வீடடைத லெளிதாமே.
- கதிர்காமப்புராணம்.
எனவே அவனது திருப்பாதங் கும்பிட வாரீர்.
m O
59

Page 38
கல் மேல் அரவிந்தம் மலருமோ?
மெது மனம் எப்படிப்பட்டது? மிகவும் மென்மை யானது எனத்தான் நாம் நினைத்துக் கொண்டிருக் கிறோம். அனிச்சமலர் போன்று ஒரு சுடுசொல் செவியில் கேட்டதுமே வேதனையிலே துவண்டு விடுகிறதே என்று எமது மனதைப்பற்றி நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்
ஆனால் சிறிது சிந்தித்துப் பார்த்தால் எமது மனம் கல் என்றும் தோன்றும், கல்லென்று சாதாரணமாகக் கூறிவிடமுடியாது. கருங்கற் பாறையென்று கூடக் கூறமுடியாதளவு அதை விடவும் கடினமான ஒன்றா கத்தானிருக்க வேண்டும்.
இந்த மனந்தானே எத்தனையோ பேருக்கு எவ்வளவோ தீங்குகளைத் திட்டந்தீட்டி செய்விக் கின்றது. அவர்கள் வேதனைப்படும் போது சற்றும் இரங்காதது மட்டுமல்ல, அந்த வேதனையைக்கண்டு மகிழவுஞ் செய்கிறது.
மற்றவர் சீரும் சிறப்புமாக, பெயரும் புகழுமாக இருந்தால் அதைக்கண்டு பொறாமைப்பட்டு அவர் களது உயர்வை ஒழித்துவிட எப்படியெல்லாம் திட்டம் வகுத்து செயற்பட வைக்கிறது.
60

வகைவகையான எத்தனை தீய குணங்களின் கூட்டுக்கலவையான எமது மனம் இறுகி வலிமை யான பாறாங்கல்லாக இருக்கிறது. இந்த மனதை மென்மையானது என்று எப்படிச் சொல்வது?
இந்தக் கல்மனதில் என்ன விளையும்? கல்லிலே விதை விதைத்தால் முளைக்குமா? இந்த மனதிலே நல்லது எதுவும் முளைவிடாது. ஆனால் அந்தக் கல்மனதிலே தாமரை மலர வேண்டுமென்று எனக் கோர் ஆசை.
இதென்ன பைத்தியக் காரத்தனம்? தண்ணிலல் லவா தாமரை மலரும் அப்படிப்பட்ட தாமரை கல்லிலே மலர்வதாவது" என்று எனது ஆசையைக் கேட்டுச் சிரிப்பீர்கள்.
நீங்கள் சிரிக்கலாம். ஆனால் நான் ஆசைப் படுவது உண்மை. அதுவும் மிகவும் அழகான அரவிந்தம் மலர வேண்டும். மலருமா?
திணியான மனோசிலை மீதுனதாள் அணியார் அரவிந்தம் அரும்புமதோ?
(கந்தர் அநுபூதி)
கல்லைக் கனிய வைத்தால் அரவிந்தம் அங்கு மலரலாம். எப்படிக்கனிய வைப்பது? அதனை திண்மையானதாக்கிய அழுக்குகள் அத்தனையை யும் அகற்றினால் உள்ளக்கமலம் வெள்ளைக் கமல மாகுமே.
6.

Page 39
அது நடைபெறக்கூடியதா? தீயகுணங்களை மிகவும் சுலபமாக விட்டுவிட முடியுமானால் இந்த உலகம் இப்படியிருக்காதே ஒவ்வொருவரையும் இலகுவில் நல்லவராக்கி இந்தப் பூவுலகை ஆனந்த மயமாக்கி விடலாமே.
அதைவிட மற்றொரு வழியுமிருக்கிறது. முருகா, நான் கல்லிலே அரவிந்தம் நடவில்லை. என் மனமாகிய கல்லிலே உன் பதங்களான அணியார் அரவிந்தம் மலர வேண்டுமென்றுதான் ஆசைப் படுகிறேன்.
அரைநிமிட நேரமேனும் உனது தாள்களில் இலயிக்க மறுக்கும் சடகசட முட மட்டி மனந்தான் என்னுடையது. அந்தத் திண்மையான மனக் கல்லில் உன் பாதாரவிந்தம் அரும்பினால் அந்தக் கணமே அதில் திரண்டு கிடக்கும் தீமைகளெல்லாம் மறைந்துவிட அது தண்மையும் மென்மையும் வெண் மையும் கொண்டதாக மாறி விடுமே, நான்” என்ற ஒன்றே இல்லாது போய்விடுமே. அந்தப் பேரானந்த நிலைக்கு ஆசைப்படுவதில் என்ன தவறு? முருகா, என் ஆசை நிறைவேறுமா? எனது கல்மனத்திலே
உன் பாதாரவிந்தம் மலர்வதெப்போது?
O
62

விழிக்குத் துணை
இம்பொறிகளுள் ஒன்று கண். ஆண்டவனின் அற்புதமான படைப்பு இந்த விழி அது இல்லா விட்டால் உலகம் எமக்கு இருண்டு விடுகிறது. எதையும் காணமுடியாத நிலையில் பெரியதோர் இழப்பை நாம் உணர்கிறோம்.
இறைவன் எமக்குத் தந்த விழிகளால் நாம் எத்த னையோ காட்சிகளைக் கண்டு இன்புறுகின்றோம்; மயங்குகின்றோம். அதேவேளை சில காட்சிகள் எம்மைக் கலங்கவும் வைக்கின்றன.
கலங்கவைத்த காட்சிகள் எம்மை மகிழ வைப் பவையாய் மாறச் செய்ய வேண்டுமென எம்மில் பெரும்பாலானோர் எண்ணுவதில்லை. உதாரணமாக பசியால் வாடும் ஒருவனையோ ஒரு பிராணியையோ கண்டால் பசி தீர்த்து மகிழ்வான ஒரு காட்சியைக் காண நாம் முயல்வதில்லை.
இறைவன் ஒன்றிற்கு இரண்டு கண்களை எமக்குத் தந்தது அதிகமாகப் பார்த்துப் பயன் பெறவேண்டு மென்பதற்காகவே" என்று பெரியோர் கூறுவர். அப் படிப் பயன் பெறுவோர் நம்மில் எத்தனை பேர்?
63 =

Page 40
எம் கண்கள் காணும் காட்சிகளால் மனம் இன்புற மட்டுமாசெய்கிறது? அழகான பெண்ணைக் கண்டால் இக்கண்கள் எங்கெங்கெல்லாம் மேய் கின்றன. அதன் பயனாக மனதிலேற்படும் விகாரங் களினால் கற்பழிப்பு, கொலை என்னும் பாதகச் செயல்கள் நடைபெறவும் இக்கண்களே காரணமா கின்றன.
இனிமையான காட்சிகளைக் காண்பதால் மட்டுமா மனம் மகிழ்கிறது? கோணலான கோளாறான மனங்கள், சித்திரவதை செய்துபடும் அவலங் களையும் வேதனைகளையும் கண்டும் கொலை செய்தபின் அக்கோரக் காட்சியைக் கண்டுங்கூட மகிழ்கின்றன.
அற்புதமாக ஆக்கப்பட்டு எமக்கு அருளப்பட்ட கண்கள் இப்படியெல்லாம் வக்கிர மனங்களுக்குத் துணைபோய் கேடுகெட்டுப் போகவிடலாமா? அப்படி அவை தடம் மாற விடாது காக்கப்பட வேண்டும்.
நீசத்தனங்களுக்குத் துணை போகாமல் அக்கண் களைத் தடுத்து தெய்வீகக் காட்சிகளில் திளைக்க வைக்க வேண்டும். அதன் பயனால் மனம் இறை தியானத்தில் ஈடுபடவேண்டும்.
புலன்களின் வழிச்சென்று மாயைவலைப்பட்டு, பிறவிப்பிணியால் பீடிக்கப்பட்டு, வேதனைப்படாது, இறைவன்பால் பக்தி கொண்டு பிறவிப் பிணியறுக்க கட்புலன், வழியமைக்க வேண்டும். கண்கள் காணும்
64

காட்சி மனதைப் பக்குவப்படுத்தி இறை தியா னத்தில் ஈடுபடவைத்து முத்திக்கு மூலகாரணமாக அமையும் போது கண்கள் முத்திக்கு வித்தாக LDMTgpub.
இப்படி அந்த விழிகள் மாறுவதற்கு விழிக்குத் துணையாக அந்தச் சரவணனின் இருபதங்கள் இருந் தால் மட்டுமே இயலும், முருகனின் பதங்களைக் காணும் கண்கள் பேறுபெற்றவை. எவ்வளவு இனி மையான காட்சி அவை மலர்ப் பதங்கள். மலரென் றால் அழகும் நறுமணமும் மென்மையுமாகக் காட்சி தரும். அந்த மலரினத்திலும் இத்தன்மைகள் கூடியும் குறைந்தும் வேறுபட்டுமிருப்பதுண்டல்லவா? ரோஜா விலேயே எத்தனை வர்ணங்களும் வகைகளும் காணப்படுகின்றன மல்லிகை இனங்களிடையே நறு மணத்தில் வேறுபாடுண்டல்லவா? மென்மையுங்கூட மலருக்கு மலர் வேறுபடும். அனிச்சம் பூப்போன்ற மென்மையுமுனடு.
இந்தப் பதங்களை மலர்ப்பதம் என்று கூறும் போது அவற்றின் மென்மை சரியாகப் புலப்பட வில்லை. மென்மலர்ப்பாதங்கள் என்று கூறும் போது தான் எம் கண் கண்டதை வாயால் ஓரள வேனும் புலப்படுத்த முடிகின்றது. ஆனால் அக்காட்சி விவரிக்க முடியாத ஒன்றுதான். திரு” என்று கூறினால் அவற்றின், பெருமை, அருமை, அழகு, ஒப்பற்ற தன்மை எனபன போன்றவற்றை மேலும் சிறிதளவு புலப்படுத்தலாம். இதனாலேதான்
65

Page 41
* விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்" என்று கந்தரலங்காரம் இயன்றவரை எமக்குப் புரியவைக்க முயல்கிறது.
இந்த அற்புதமான விழிகளைக் காத்து வழிநடத்த அந்த முருகனின் திருமென்மலர்ப்பாதங்கள் துணை யாக இருக்க வேண்டும். அந்த இனிய தெய்வீகக் காட்சியில் விழிகள் ஈடுபட்டால் அவ்விழிகள் முத்திக்கு வித்தாக ஆகிவிடும். நமது விழிகளுக்கும் இப்பேறு கிட்ட வேண்டும்.
Ο
66

சுழலுடன் சேர்த்துக் காத்தருள்
உலக வாழ்க்கையின் இறுதிப்படிகளை எட்டிப்
பிடிக்கும் காலத்தில், நடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்த்தால் எமக்கு எத்தனை உறவுகள்
குழந்தைப் பருவத்தில் பெற்றோர், சகோதரர், பின் மனைவி அல்லது கணவன் அதன் பின் பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள், அயல வர்கள் என்று பலர் எமக்குத் துணையாகத் தோன் றிய காலங்களெல்லாம் கடந்துவிட்டன.
இப்போது சிந்தித்தால் எந்தத்துணையுமில்லாத தொரு நிலையிலே தான் நாமிருக்கிறோமென்பது புரியும். எவரும் எமக்குத் துணையென்று கருத முடியாதென்பது இதுவரை அனுபவித்த பல்வேறு அனுபவங்களால் மனத்திற்கு மிகத் துல்லியமாகத் தெரிகின்றது.
நாம் மரணிக்கும் காலம்வரை கூட பல்வேறு பட்ட காரணங்களினாலே எம்முடன் துணைவர முடியாத நிலையிலே தான் நம் உறவினர்கள் உள்ளனர். நாமும் யாருக்கும் துணையாயிருக்க முடிவதில்லை.
ך6

Page 42
எந்த உறவோ, எந்தத்துணையோ எமக்கில்லை என்பது புரியும்போதுதான், மனம் பதைபதைக்கும். ஒரு பற்றுக் கோட்டிற்காக ஏங்கி நிற்கும்.
இப்போது தான் இறைவனின் எண்ணம் வரு கிறது. அந்த மயில்வாகனனை மனம் அழைக் கின்றது. தாவிப் படருவதற்குப் பற்று கோடாக ஒரு கொம்பும் கிடையாத தனித்த கொடி போலவே, துணையேதுமில்லாத இந்தப் பாவிமனம் தள்ளாடி வாடிப், பதைபதைக்கின்றது. மயூரவாகனா, உனது செந்தாமரைப் பாதங்களுடன் எம்மைச் சேர்த்துக் காத்தருள் செய் ஐயனே. எமக்கு உண்மையான துணை உன் பாதகமலங்கள் தானே"
காவிக்கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்த ருளாய். தூவிக்குலமயில் வாகனனே துணையேது மின்றித் தாவிப்படரக்கொழு கொம்பில்லாத தனிக்கொடி போல் பாவித்தனி மனந்தள்ளாடி வாடிப்பதைக்கின்றதே.
(கந்தரலங்காரம்)
என்று நினைந்து, இந்த வேளையிலேதான் கந்தனின் பாதக்கமலங்களைத் தேடிப்பற்றும் எண் ணம் பிறக்கிறது.
இன்றேனும் இந்த எண்ணம் வந்ததற்குக்
கந்தனின் அருளன்றோ காரணமாகியது.
O
8

உனை வழிபட அருள்வாய்
ன்ெனைச் சுற்றி எத்தனை உறவுகள் எவ் வளவு உடைமைகள்
அன்பான மனைவி, கொஞ்சிக் குலாவும் பிள்ளைகள், அன்பு மிக்க உறவினர்கள், உற்ற நண்பர்கள் என இவர்கள் எல்லோரும் என்னைச்சூழ இருக்கும் என் உறவுகளாக உள்ளனர். அவர்கள் என்மேல் மிகுந்த அன்பு கொண்டவர்கள். அந்தப் பாசத்திற்கு நான் கட்டுப்பட்டவன்.
நான் என் விருப்பத்திற்கேற்றவாறு எவ்வளவோ திட்டமிட்டு, மிகவும் சிறப்பாக இந்த வீட்டைக் கட்டினேன். இது என்னுடைய வீடு. இதைவிட்டு வேறெங்கும் செல்ல என்னாலியலாது. அந்த வீட்டின்மேல் அந்த அளவிற்கு அளவுகடந்த பற்று வைத்திருக்கிறேன்.
நான் பிறந்து வளர்ந்த ஊர். இது இவ்வளவு காலமும் நான் வாழ்ந்த ஊர். என்னுடைய ஊர். இந்த ஊரென்றால் எனக்கு மிகவும் விருப்பம். இதன் மேல் நான் வைத்திருக்கும் பற்று அளப்பரியது.
இந்த நாடு என்னுடைய நாடு. வற்றாத வளங் கொண்ட எனது நாட்டை நான் மிகமிக நேசிக் கின்றேன்.
69

Page 43
எனது நாடு, எனது ஊர், எனது வீடு, எனது உறவுகள் என்னும் இவற்றிலெல்லாம் நான் வைத்திருக்கும் பற்று எத்தகையது என்பதை நான் விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. அவற்றில் நான் கொண்டுள்ள பற்று மாற்றற்கரியது. என்னு டையது என்னும்போது என்னையறியாமலே 6905 பற்றும் பந்தமும் ஏற்பட்டுவிடுகின்றன.
இது மாற்றுவதற்கு மிகவும் கடினமான பற்று வடமொழியில் “அஹம்" என்றால் நான் என்றும் "மம" என்றால் எனது என்றும் கருத்தாகும். அகங்காரம், மமகாரம் இரண்டும் எம்மை விட்டுப் போக வேண்டுமென்று தத்துவ நூல்கள் கூறுகின்றன. அதாவது நான், எனது என்னும் முனைப்புக்கள் எம்மை விட்டகலவேண்டும் என்பதாகும். நான் யார்?" என்பதே சரியாகத்தெரியாத நான் என்னைப் பற்றி எப்படியெல்லாம் பெருமைப்பட்டுக்கொள் கிறேன். நான் பெரிய பதவியிலிருப்பவன்" நான் பட்டங்கள் பெற்றவன்" நான் பணக்காரன்" இவ்வாறு ஏதேதோ என்னைப் பற்றிக் கூறிக்கொள்கின்றேன். ஆனால் நான் எந்தக் கணமும் சவமாகி விடலாம் என்பதை மட்டும் மறந்து விடுகிறேன்.
'எனது எனது" என்று எத்தனையோ பொருள்க ளையும் மனிதர்களையும் கூறிக்கொள்கிறேன். ஆனால் அவை எத்தனை கணங்கள் என்னு டையதாக இருக்கப் போகின்றன என்பது இந்தக் கணத்தில் எனக்குத் தெரியாது. இன்னும் எவ்வளவு
7ο

காலத்தில் அவை மறையப்போகின்றன என்பதும் தெரியாது. ஆம்! “எனது எனது என்று நான் கூறிக் கொண்டிருப்பவை நிலையற்றவை. இவையனைத் தையும் புரியாது மமகாரம் மனதுள்ளே கிடந்து எவ்வளவு ஆட்டம் போடுகின்றது! இவை எமக் குரியவை அல்லவென நான் உணரும் வரை அவை எல்லாம் எனது என்றே மனது மகிழும்.
என்று ‘அவை என்னுடயவை” என்று எண்ணுவது தவறு என்று புரிந்து கொள்கிறேனோ அன்றுதான் அப்படி மகிழாது என்னால் இருக்கமுடியும். புரிந்து கொள்வதால் மட்டும் இந்தக் தெளிவு ஏற்படுமென்று கூறமுடியாது. பற்றறுக்கும் ஒருநிலை ஏற்பட வேண்டும். அல்லது இந்தப் பற்றும் பாசமும் எம்மை விட்டுப்போகாது.
அந்த இறைவனின் அடியினைகளை வழிபட் டால் இப்பற்று எம்மை விட்டுப்போகும் எனப் பெரியோர் கூறுவர். பற்றற்றான் மேல்பற்று வைத் தால் ஏனைய பற்றுகள் விட்டுப்போகும் என்பார் வள்ளுவர்.
பற்றற்றவன் மேல் பற்றுவைக்கவும் எமது பற்றை அறுக்கவும் இறைவனது மலரடிகளை வழிபட அவனே அருள் செய்யவேண்டும்.
வளம் நிறைந்த எனது நாடும் மலையும் எனது
ஊரும் நானிருந்த வீடும் எனது இளமயும் மனை
வியும் நான் கொஞ்சிய பிள்ளைகளும் எனது உறவும்
குறித்து மகிழ்ச்சியடையாது உன்னை வழிபட,
அருள்செய் என்று வேண்டுகிறார் அருணகிரிநாதன்
1ך

Page 44
முருகனது தண்டையணிந்த சிவந்த திருப்பதங்களை அவர் எண்ணித் துதிக்கிறார்.
இருந்த விடும் கொஞ்சிய சிறுவரும் உறுகேளும் இசைந்த ஆரும் பெண்டிரும் இளமையும் வளமேவும் விரிந்த நாடும் குன்றமும் நிகரென மகிழாதே விளங்கு தீபங் கொண்டுனை வழிபட அருள்வாயே குருந்லேறும் கொண்டலின் வடிவினன் மருகோனே குரங்கு லாவும் குன்றுறை குறமகள் மணவாளா திருந்த வேதம் தண்டமிழ் தெரிதரு புலவோனே சிவந்த காலும் தன்டையுமழகிய பெருமானே.
(திருப்புகழ்)
அருணகிரிநாதர் வேண்டிக்கொண்டது போன்று நாமும் முருகனது தண்டையணி சேவடிகளை வணங்கி எங்களுடையவை என நாம் எண்ணியுள் ளவற்றின் மேல் எமக்குள்ள பற்றினை விட வேலவ னிடமே வேண்டி வழிபடவேண்டும்.
O
2ך

தமரும் தனமும் அயலாக
ஒருவருக்கு சீரும் செல்வமும் பதவியுமிருந்தால் உறவுகள் ஏராளம். சுற்றிச் சுழன்று எப்படியோ ஓர் உறவு முறையுடன் எதிரே வந்து அளவளாவுவோர் பலர்.
'நீங்கள் எப்படி எனக்கு உறவு? " என்று அந்தப் பெரிய மனிதர் கேட்டால் பதில் கூறக் கஷ்டப்படுவர்.
உங்கள் அண்ணாவின் மனைவியின் அக்காவின் மருமகளின் தம்பியின் மனைவியின்." இப்படிச் சுற்றி வரும் ஒரு சுற்றத்தவராக அவர் இருப்பார்.
பதவி, அந்தஸ்து, செல்வம் எல்லாவற்றையும் விட்டால் எத்தனை உண்மையான உறவுகள் எஞ்சுமோ?
இதனாலே தான் செல்வத்தைத் தேடி அலைகி றோம். எந்த நீசத்தனத்தையும் செய்து பொருள் தேட வேண்டுமென அங்கலாய்க்கின்றோம்.
பதவியையும் அந்தஸ்தையும் விட்டுவிடத் தயங் குகின்றோம்.
பொய்யான இந்த உறவுகள் பகரும் இந்தப் பொய்யான புகழுரைகளில் மயங்கிக் கிடப்பது எத்தனை மடமை
73

Page 45
நாம் தேடியேயாக வேண்டும் என்று அவாவுடன் தேடிய செல்வமும், வீடும் காணி பூமியும், விடவே கூடாது என்று எம்முடன் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் பதவியும் அந்தஸ்தும் ஒருநாள் எமக்கு அயலாகி விடும்.
அந்தக் கொடிய மரணம் எம்மைச் சுற்றிப் பிணைக்கத் தான் போகிறது.
கூற்றுவன் வந்து பாசக்கயிற்றை வீசுவதாகக் கூறுகிறார்களே. அந்த மரணத்தின் பிடியில் நாம் சிக்கியேயாக வேண்டும். கூற்றுவன் கொடியவன். அவன் இரக்கமற்றவன். நாம் கெஞ்சியோ, மன்றா டியோ, அவனது பாசக்கயிற்றினின்று தப்பமுடியாது.
அந்த வேளை உறவும், இருந்த இல்லமும் தேடிச் சேர்த்த இனிமையான செல்வமும் அனைத் தும் விலக, நாம் தனியாக நிற்க நேரும்,
அந்த வேளை எமக்குத் துணையாக இருக்கப் போவது அந்த முருகனது திருவடிகள் தான். அதை உணர்ந்து அந்தத் திருவடிகளே துணையெனக் கொள்வது அவ்வளவு சுலபமல்ல.
அது சுலபமென்றால் அந்தத் திருவடிகளைத் தேட மறந்து பொன், பொருள், போகம், பதவி, உறவுகள் என்பவற்றில் மோகங்கொண்டுழல் G56) in LDIT?
எனவே திருவடிகளைத் துணையெனக் கொள்ள
இந்தச் சிற்றறிவுடைய எம்மாலியலாது. அதற்குப்
74

பேரறிவு வேண்டும். அந்த அறிவையும் அந்த ஞானக் குமரனே எமக்கு அருள வேண்டும். இதனையே
* பிரான் அருள் உண்டெனில் உண்டுநன்ஞானம்” எனத் திருமந்திரத்திலே திருமூலரும் வலியுறுத் துகிறார்.
இறைவனின் அருளாலேயே அவனது பாதக் கமலங்களை நமக்குத் துணையாகக் கொள்ளும் பேரறிவு கிட்டும். திருப்புகழைப் பாடிப்பாடி அந்த அருளை நாம் தேடிக்கொள்ள வேண்டும்.
தமரு மமரும் மனையுமினிய
தனமு மரசும் அயலாகத் தறுகண் மறலி முடுகுகயிறு
தலையை வளைய எறியாதே கமல விமல மரகத மணி
கனக மருவும் இருபாதம் கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு தரவேணும்
(திருப்புகழ்)
O
5ך

Page 46
காலனெனை அணுகாமல்
ஒரு குழந்தை பிறந்ததும் அதன் எதிர்காலம் பற்றி, அதன் வாழ்க்கையில் என்னென்ன நடைபெறப் போகின்றது என்பது பற்றியெல்லாம் நாம் பலவற் றையும் கூறுகின்றோம். இவற்றுள் சில நடக்கலாம், சில நடக்காது போகலாம்.
ஆனால் அதன் வாழ்வில் ஒன்று மட்டும் நிச்சய மாக நடைபெறும். அதுதான் மரணம்,
இந்த மரணம் எமது வாழ்வில் நிச்சயமாக நடைபெறும் என்று தெரிந்தும் நாம் அதை மறந்து விடுகிறோம். நாம் இங்கு நிலைத்து வாழப்போகின் றோமென்ற எண்ணத்துடன் மரணத்தை மறந்து வாழ்கின்றோம்
மரணம் எப்படிப்பட்டது? எப்படி நாம் மரணிக்கப் போகின்றோம்?
இது பற்றிப் பலரும் பலதும் கூறுகின்றனர். இந்த உடல் சடலமாகும் நேரம் ஏற்படும் அனுபவம் எப்படியிருக்குமென்பது எமக்குத் தெரியாவிட்டாலும் அந்த மரணத்தைச் சந்திக்க நம்மிற் பெரும் பாலானோர் பயப்படுகின்றோம்.
76

முதுமை, நோய் ஆகியவற்றின் பிடியிற் சிக்கி வேதனைப்பட்டு மரணத்தைத் தழுவுவோரையே நாம் பெரும்பாலும் காண்கின்றோம். மரணத்தின் பின் உற்றார், உறவினர் உடமை அனைத்தையும் பிரிய நேருமென்பதால் அதனை ஒருவரும் விரும்புவ தில்லை மரணத்தின் பின் நரகத்திற்குப் போக நேரலாம் வேதனைப்பட நேரலாம்" என்பன போன்ற பயமும் மரணபயத்தை ஏற்படுத்துகிறது. இவை போன்ற காரணங்களில்லாவிட்டால் மரணம் மகிழ்ச் சிகரமாக வரவேற்கப்பட்டிருக்கலாம்.
உதாரணமாக மேலைத்தேய நாடுகளில் நாம் வாழச்செல்லும் போது மொழி, கலாசாரம், கால நிலை போன்ற பல்வேறு வேறுபாடுகளால் மிகவும் சிரமப்படுகிறோம். அவமரியாதைகளைக் கூடச் சந்திக்கின்றோம். எனினும் நாம் அங்கு போய் வாழ விரும்புகின்றோம். ஏன் அப்படியிருக்கின்றோம்? எமது நாட்டின் நிதி நிலையை நாம் முன்னேற்றா ததால், வெளிநாட்டுப் பணத்தை எமது நாட்டுப் பணமாக மாற்றும் போது அதிக பணத்தைப் பெறுகின்றோம். அங்கு நாம் படும் அல்லல்களை எமது நாட்டிலுள்ள உறவினர்களுக்குத் தெரிவிப்ப தில்லை. "எமது நாடு சிறந்ததல்ல" என்றொரு தாழ் வுணர்ச்சியும் எமக்கிருக்கிறது. இவற்றினைப் போன்ற காரணங்களால் மேற்குலக நாடுகளுக்குச் சென்று வாழ்வது சுவர்க்கமென நினைக்கின்றோம்
இந்த மேலைநாட்டு வாழ்க்கை பற்றிய கற்பனை போன்ற ஓர் இனிய கற்பனை மரணத்தின் பின் எம் דך

Page 47
நிலை பற்றியும் இருந்திருக்குமானால் நாம் அந்த மரணத்தை விரும்பி எதிர்நோக்கியிருக்கக் கூடும்.
ஆனால் இன்று மரணத்தைச் சந்திக்காதிருக்கவே நாம் விரும்புகின்றோம். மரணமில்லாப் பெருவாழ்வு பெற ஆசைப்படுகிறோம்.
இந்த மரணமில்லாப் பெருவாழ்வு எப்படி எமக் குக் கிட்டும்? அந்த ஆண்டவனது அடியிணைகளில் ஒன்றித்துவிடும் போது அப்பேரின்பப் பெருவாழ் வைப் பெறுகின்றோம். சரணகமலாலயத்தை அரை நிமிடங்கூடத்தியானிக்க முடியாவிடின் அது சாத்தி uLILIDIT65Tg5.
இறைவனது அருள் பெற்று, அவனது பாதார விந்தங்களை வழிபடும் பேறுபெற்றுவிட்டோமானால் காலன் எம்மை அணுகமாட்டான். காலனின் பாசக் கயிற்றுள் வீழ்ந்து மரணம் வந்தால் மீண்டும் பிறப்பு வரும், பிறப்பு வந்தால் மீண்டும் மரணம் வரும். இவற்றிற்கு அப்பாற்பட்டு இறைவனது பாதபங்க யங்களில் ஐக்கியப்படும் நாளிலேயே காலன் எம்மை அணுகமாட்டான். இதனாலேயே அருணகிரி
நாதா.
கால னெனை யணுை காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே.
என முருகனிடம் வேண்டி நிற்கின்றார். நாமும் அவ்வாறே திருப்புகழைப் பாடிப்பாடி அந்தக் குமரே சனிடம் வேண்டிக் காலனணுகாத நிலை பெறுவோ DE5. O
78

பிறப்பறுக்க திருவடியைப் பற்றி
* Dரணமே என்னை அணுகாதே’ என்று தான் நாம் கேட்டுக்கொள்கிறோம். மரணம் அணுகாத பெருவாழ்வு பெற இறைவனை நாம் எல்லோருமே வேண்டுகின்றோமென்று கூறமுடியாது. மரணம் வரக் கூடாதென வேண்டும் நாம் மரணமில்லாது வாழ அந்த இறைவனது திருவடியில் ஐக்கியப்பட வேண்டுமென உணர்வதில்லை. அதற்காக அவனி டம் யாசித்து நிற்பதுமில்லை. அரைநிமிடமேனும் அவனது திருவடியைத் தியானிப்பதுமில்லை.
மரணம் எம்மை அணுகாதுவிட ஐயன் முருக னின் திருவடியில் ஒன்றித்துவிட்டால் போதுமே.
மரணத்தின்போது இந்த உடல் அழிவுறும். அந்தத் திருவடியில் ஐக்கியப்பட்டு விட்டால் ஆன்மா பேரானந்த நிலையடையும்.
*நான் பிரம்மமாயிருக்கின்றேன்” என்னும் உணர்வுபெற்று இரண்டற்று ஒன்றாகி விடும் பேரின்ப நிலை அது.
எனவே மரணம் வருவதும் வராததும் பற்றிக் கவலைப்படாது அந்தப் பேரானந்தப் பெருவாழ் வைப் பெற்றிடவே நாம் வேண்டுதல் செய்ய வேண்டும். அதைப் பெற்றுவிட்டால் மீண்டும் பிறப்பு 6) Jirgil,
79

Page 48
மரணம் வேண்டாம்" என்று கூறுவது போல பிறப்பு வேண்டாமென" வேண்டுவோருமுளர், அவர்கள் பிறப்பினால் வரும் துன்பங்களை அறிந் தவர்கள். பிறவிப் பிணி பற்றி உணர்ந்தவர்கள்.
காரைக்கால் அம்மையார்கூட ‘பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னையென்றும் மறவாமை வேண்டும்” என்று வேண்டினார்.
பிறந்தால் ஒரு நாள் மரணம் வரும். அதன் பின் பிறப்பு வரும். பிறவிப் பெருங்கடலில் அலை யுண்டு தத்தளிக்க நேரும்.
எனவே பிறவாமலே இறைவனது திருவடியை அடைந்துவிடுவது சிறந்ததாகும்.
செஞ்சுடர் வேலோனின் திருவடியைப் பற்றித் தொழுது பிறவியை அறுத்து, பரமுத்தி பெற அந்த வேலவன்தான் அருள்தர வேண்டும். திருவடியைப் பற்றித் தொழுவதற்கு தமிழ் கற்க வேண்டும். அதுவும் சாதாரணமான தமிழ் அல்ல, எமது தமிழ் இறைவனது அருள்தரச் செய்ய வல்லது. அதனால் சிறப்பாகத் திகழ்வது. அப்படித் திகழும் தமிழில் பாடல்கள் பாடி, திருவடியைப் பற்றித் தொழ வேண்டும். அதனால் பிறவியறுத்து பரமுத்தியடைய முருகன் அருள் நல்குவான்.
திருப்புகழைப் பாடப்பாட திருமுருகன் அருள் தருவானென்பது திண்ணம்.
திகழ் தமிழ் கற்றுச் சொற்கள் பயிற்றித் திருவடியைப் பற்றித் தொழுதுற்றுச் செனன மறுக்கைக்குப் பரமுத்திக் கருள் தாராய்.
- திருப்புகழ் டு
8O

பக்தர் பொற்புரைக்க
ஆறுமுகனின் மலர்ப்பதத்தைத் துதிக்கும் பேறும் அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஒரு நிமிட நேரங்கூட தியானிக்க முடியாத முடர்கள் நாம். ஆனால் அந்தப் பொற்பதத்தினைத் துதிக்கும் பக்தர்கள் பேறு பெற்றவர்கள்.
எம்மால் திருமுருகனின் பதத்தைத்தான் தியானிக்க முடியவில்லை. அவனது பக்தர்களைப் பற்றியாவது சிந்திக்கலாமல்லவா? அந்த அடியவர் களது பெருமையையாவது பேசி வியந்து நெக்குருகி நிற்கலாமல்லவா?
பெரியது எதுவெனக் கூற வந்த ஒளவையார். இறைவன் தொண்டரது உள்ளத்துள் ஒடுங்கி விடுவதனனால் தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்று கூறியுள்ளார்.
"பெரியது கேட்கின் தனிநெடுவெலோய்" என வேலனை விளித்து ஒளவையார் இவ்வாறு பாடியுள் ளது அனைவரும் அறிந்ததாகும், இறைவன் அடிய வரது உள்ளத்துள் உறைகின்றான் தொண்டரது உள்ளக் கமலத்தையே உவந்து வேண்டுகின்றான்" என்றெல்லாம் பலரும் பலவாறு இக்கருத்தை வலி யுறுத்தியுள்ளனர்.
8.

Page 49
இறைவனது அடியார்களுக்குத் தொண்டு செய் வது இறைவனுக்குத் தொண்டு செய்வதை யொத்த தெனப் பணி செய்த காலம் இன்று மாறி விட்டது. மீண்டும் அந்த எண்ணம் எம்மிடையே தோன்ற வேண்டும்.
பொற்பத்தினைத் துதிக்கும் பக்தர் நற்கதிய டைவர். இறைவனது திருவடியை அட்ைவர். அத்த கைய பக்தர்களின் சிறப்பை உரைக்கும் போதே நாம் நெக்குருகி நிற்க வேண்டும். பக்தி நிறைந்த அவர்களைப் பற்றி அறியும் போது அந்தப் பக்தி மயம் எம்மையும் நெக்குருகச் செய்ய வேண்டும். ஆனால் அப்படிப் பக்தர்களது புகழ்பேசி நெக்குருகி நிற்கவும் எமக்குத் தெரியவில்லையே இவற்றை அறியாத நாம் எப்படிக் கடைத்தேறப் போகின் றோம்?
பெரியோர்களையும், இறைவனது அடியார் களையும் மதித்து, பணிந்து வணங்க வேண்டும். அவர்கள் நமது கண்கண்ட தெய்வங்கள் என்பதை உணர வேண்டும். அவர்களைக் கண்டால் இறைவ னைக் கண்ட பரவசம் ஏற்பட வேண்டும்.
காலை முதல் மாலை வரை எவ்வளவு நேரத்தை பேசுவதில் செலவிடுகின்றோம் பயனற்றவையைப் பேசுவதால் எத்தனையோ பேரைத் துன்பப்பட வைக் கின்றோம். நாமும் பிரச்சனைகளையும் வேதனை களையும் வீண் பேச்சினால் ஏற்படுத்திக் கொள் கின்றோம்.
82

பேசுவதனால் நற்பயன் ஏற்படக்கூடிய விடயங் களைப் பேச இனியாவது நாம் பழகிக்கொள்ள வேண்டும். இறைவனது பொன்னடிகளைத் துதித்து அதனால் நற்பதமடைந்த பக்தர்களின் சிறப்பைப் பேசினால் நமது மனங்களும் பக்குவமடையும். எம் உள்ளங்களும் இறைவனது திருவடிகளிலிடுபாடு கொண்டு அவற்றை வழிபட ஆரம்பிக்கும். ஆனால் நாம் அப்படிப் பேச அறியாது போனதை அருணகிரி நாதர் திருப்புகழில் பின்வருமாறு கூறுகிறார்.
பொற்பதத்தி னைத்துதித்து நற்பதத்தி லுற்ற பத்தர் பொற்புரைத்து நெக்குருக வறியாதே.
இன்று முதல் இறைபக்தர்களின் புகழைப் பேச வும் அவர்களைப் பேணிப் பணியவும் தொடங்கு வதென உறுதிபூணுவோம். நிகழ்காலத் தவறுகளைத் திருத்தி எதிர்காலத்திலாவது பெரியோரை மதித்து வாழப் பழகுவோம். நல்ல பண்புகளை நம்முள் வளர்த்துக்கொள்வோம்.
O
83

Page 50
விமலமாம் சரணம்
குமரனது திருவடிகள் எப்படியிருக்கும்? அந்தத் திருவடிகளைப் பலவாறு வணங்கும் பக்தர்களாலே கூட அவற்றின் அழகையும் தன்மையையும் விவரிக்க முடிவதில்லை.
மாரனையே இகழுமளவிற்கு அழகுடையவன் என்பதாலேயே குமாரன், குமரன் என்ற பெயர்கள் முருகனுக்கு ஏற்பட்ட தென்பார்கள். வடமொழியில் முருகனின் தோற்றத்தை * குமாரசம்பவம்” என்னும் காவியமாகக் காளிதாசர் படைத்துள்ளார். இக்கா வியத்திற்கு வியாக்கியானம் எழுதும் பொழுதே மேற் கூறியவாறு எழுதியுள்ளனர்.
மன்மதனையே இகழும் அழகுடைய குமரனின் பாதபங்கயங்களின் அழகைக் கூற முடியுமா?*அழகு" என்று ஒருமுறை கூறி அவற்றின் அழகை விளங்க வைக்க முடியாது, ஆயிரங்கோடி அழகுகள் ஒன்று திரண்டன. அவ்வளவும் அனைவரும் விரும்பும் அழகுகள். எல்லா அழகையும் விரும்பமுடியுமா? நாகபாம்பும் அழகுதான் அதன் அழகைக் கண்டால் பயமல்லவா வருகிறது? அதுபோலல்லாது இங்கு ஒன்றுதிரண்ட அழகுகள் அனைவரும் விரும்பும் அழகுகள். அப்படி அவை ஒன்று திரண்டு சென்றும் அவனது சரணாரவிந்தங்களின் அழகுக்கு ஈடாக முடியவில்லை.
84

அந்தச் சரணகமலங்கள் அழகியவை மட்டுமல்ல. சரணடைந்தவர்களுக்கு வீடுபேற்றையே அருளக் 3l?u 1606).
ஆயிரம் கோடி காமர் அழகெலாம்
திரண்டு ஒன்று ஆகி மேயின எனினும் செவ்வேள் விமலாம்
சரணந் தன்னின் தாயநல் எழிலுக்கு ஆற்றாது என்றிடின்
இனைய தொல்லோன் மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார்
வகுக்க வல்லார்?
என்ற கந்தபுராணப் பாடலில் தூயநல் எழில் கொண்ட விமலமாம் சரணம் என்று போற்றுவ திலிருந்து முருகனின் அழகிய பாதாரவிந்தங்களின் பெருமை நமக்குப் புரிகிறது.
ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்களாற் பீடிக்கப்பட்ட ஆன்மா அவற்றிலிருந்து விடுபடுவது அத்தனை சுலபமல்ல. அதனாலேயே இந்த மனம் அந்தச் சரணங்களிலே சரணாகதி அடைய முடியாது தத்தளிக்கிறது.
விமலம் என்றால் இந்த மலங்களெல்லாம் அற்றது என்று பொருள். இறைவன் மலங்களற்ற வனாகையால் விமலன். ஆனால் இங்கு அவனது சரண கமலங்கள் 'விமலமாம் சரணம்” என்று கூறப் படுகின்றன.
85

Page 51
திருப்பாதங்கள் மலமற்றவையென்று கூறியா தெரியவேண்டும்? ஆகவே இங்கு 'விமலம்’ என்று கூறியதற்கு வேறோர் உட்பொருள் இருக்க வேண்டும்.
இந்தச் சரணாரவிந்தங்கள் அதை நினைத் தவர்களது மலங்களையே நீக்கவல்லவை அல்ல வா? மலங்களை நீக்கவல்ல திருப்பாதப் போது களை விமலம்' என்று போற்றுவது சாலப் பொருத்த шотбот(35.
எம்மைச் சூழ்ந்துள்ள மலங்களைப் போக்கி ஆட்கொள்ள வல்லவனாகிய சரவணனின் சரணார விந்தங்களை நாம் நினைந்துருகித் துதிப்பது அத்தியாவசியமென்று சொல்லித்தான் புரிய வேண்டு மென்றில்லை.
ஆனால் எமக்கு எத்தனையோ அத்தியாவசிய வேலைகள், செய்ய வேண்டியவையாய்க் குவிந்து கிடக்கின்றன. அவற்றைச் செய்வதற்காகப் போகின்ற அவசரத்தில் கோவிலைக்கூட கும்பிட நேரமிருப் பதில்லை. கோவிலைத் தாண்டியதும் எதிர்ப் படும் காவலரணில் மட்டும் பல நிமிடங்கள் காத்திருக்க எமக்கு நேரமிருக்கும். இந்த மனோ நிலையை நாம்
மாற்றவேண்டும்.
அரை நிமிடமாவது அந்த விமலமாம் சரணந் தன்னைத் தினமும் மனமுருகித் துதிப்போம் என்று நாம் ஒரு தீர்மானத்தை இன்று முதல் எடுத்துக்
Gastóir(86 IITLDITas
86 O

குமரேசர் தாள் தோன்றின்
ஒரு கருமத்தைச் செய்யும் போது, நல்ல நாளும் நல்ல நேரமும் பார்த்துச் செய்கின்றோம். அப்படிச் செய்யாவிடின் 'அக்கருமம் சரிவர அமை யாது போய்விடுமோ"? என எண்ணிக் கவலைப்
படுகின்றோம்.
நமக்கு நன்றும் தீதும் வரும் போது நாம் செய்த நல்வினை தீவினைகளின் பயனாலேயே அப்படி நடந்ததென நம்புகிறோம். கஷ்டப்படும்போது முன் செய்த தீவினை இப்படித்துன்புறுத்துவதாக எண்ணி மறுகுகின்றோம். நன்மைகள் நடக்கும் போது நாம் செய்த புண்ணியம் இப்படி நடக்க வைத்திருக்கிறது என மகிழ்கிறோம்.
அது மட்டுமல்ல சோதிடரிடம் சென்று கிரங் களின் நிலையைப் பார்த்து அந்தக்கோள்களின் செயற்பாட்டால் நன்மையும் தீமையும் நடப்பதாகக் கருதுகிறோம்.'எனக்கு அட்டமத்திலே சனி, அதுதான் இவ்வளவு கஷ்டப்படுகிறேன்" என்று கூறுவோரை நாம் கண்டிருக்கிறோம் இவ்வாறு கிரங்களை நன்மைக்கும் தீமைக்கும் காரணமாகக் கூறுகிறோம்.
87

Page 52
நாளும் கோளும் நம் வினையும் கஷ்டத்தையும் துக்கத்தையுமே தருகின்றன. ஆனால் இந்தக் கூற்றுவன் இருக்கிறானே. அவன் உயிரைக் கவர்ந்து மரணத் தையல்லவா தந்துவிடுகிறான். எம்மைக் கொன்று விடும் கூற்றுவன் மிகவும் கொடியவன்.
எமது வாழ்வில் இந்த நாள், கோள், வினைப் பயன், கூற்றுவன் என்பன இல்லாமலே போய் விட்டால் எவ்வளவு நன்றாகவிருக்கும்!
அப்படி அவை செயலற்றுப் போகவும் ஒரு வழி உள்ளது. அந்த முருகப்பெருமானின் சிலம்பும் தண்டையும் அணிந்த பாதகமலங்கள் எம்முன் தோன்றினால் இவை என்ன செய்ய முடியும்? அப்படியே செயலிழந்தவையாய் அப்போது அவை LDnsis),6lb.
நாள்என் செய்யும் வினை தான் என்செயும்எனை
நாடிவந்த கோள்என் செயும்கொடுங் கூற்றென் செயும்கும ரேசர்இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும்
சண்முகமும் தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து
தோன்றிடினே. குமரேசர் எமக்குமுன் வந்து தோன்ற வேண்டு மெனின் அவனது சிலம்பும் சதங்கையும் தண்டை யுமனிந்த சரணகமலங்களை அரைநிமிடமல்ல நாளும் பொழுதும் தியானிக்க எமது முட மனங் களைப் பழக்கி வழிபட்டு வரவேண்டும். O
88


Page 53