கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவயோகசுவாமிகள்

Page 1


Page 2

சிவயோகசுவாமிகள்
அன்பர்களின் அனுபவம்
சிவயோகர் சுவாமிகளின் திருவடி நம்பிக்கைப் பொறுப்பு

Page 3
முதற்பதிப்பு
பதிப்புரிமை
போஷகர்
பதிப்பாசிரியர்
பதிப்பகம்
TRUST A/C NO
ஆவணித் திங்கள் 1998.
சிவயோகர் சுவாமிகள் திருவடி நம்பிக்கை பொறுப்பு
கட்டிடக்கலைஞர். மு. கிருஷ்ணபிள்ளை 15, வாலுகாறாம வீதி
கொழும்பு 00300
E-mail: krishesri.lankanet
கலாநிதி. விமலா கிருஷ்ணபிள்ளை
யுனி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட், கொழும்பு - 13.
9 6GB : Rs. 175 /= 0.616fb|TG : US $ 10
67001 19503, BANK OF CEYLON, SECOND BRANCHKOLLUPITIYA, COLOMBO-00300,
SRI LANKA.
* இந்த நூலின் விற்பனையால் வரும் நிதியானது,
"சிவயோகர் சுவாமிகள் திருவடி நம்பிக்கைப் பொறுப்பு,”
அலுவலகம் மேலும் நூல்களை வெளியிடுவதற்குப் பயன்படுத்தப்படும்

பொருளடக்கம்
சிவயோகசுவாமிகளின் படம்
திருவடி வாழ்க
செல்லப்பாச்சுவாமிகளின் படம்
மகா வாக்கியம் குவாய் ஆதீனத் துறவிகளின் படம் Message form Satguru Sivaya Subramuniya Swami சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் வாழ்த்துச் செய்தி
பதிப்புரை
சிவயோகசுவாமிகளின் திருச்சரிதச் சுருக்கம் தென்தமிழ்ப் பயனாயுள்ள தேவாரம் சுவாமிகள் செய்த சில அருட் செயல்கள் யாழ்ப்பாணத்து ஜோதி நான் சந்தித்த மாபெரும் ஆத்மீகத் தலைவர் ஓம் சற்குரு பரமாத்மனே நம:
புரியாத புதிராய்த் தோன்றாத் துணையாய் நின்ற சக்தி யோகர்சாமியும் நானும் V− யோக ஞான குரவர் விட்டகுறை தொட்டகுறை தொடருதப்பா, குருநாதா என்னை எனக்கு அறிவித்தான் எங்கள் குருநாதன் ஈழவள நாட்டின் ஞானமலை தவத்திரு சிவயோக சுவாமிகள் சற்குரு தரிசனம் சகல பாக்கியம் மூதாதைமார் காட்டிவைத்த குலகுருநாதன் யோகசுவாமிகள் - ஒரு கிறீஸ்தவ ரசனை ஏழு வயதில் சுவாமிகளின் அருள் பெற்ற சம்பவம்
III
VII
IX
XI
XII
12
19
24
27
31
53
79
90
19
124
137
140
157
160

Page 4
குரு பக்தியே பெரும் பேறு
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியேங்ளுக்கே 189
சிந்தனைப் பெருக்கில் சிவயோக சுவாமிகள் யோகசுவாமிகளின் திருமுறைப் பற்று பன்னிரு திருமுறை பாரெல்லாம் பரவட்டும் எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவான் ஈசன் என் மனக்கோயிலில் யோகசுவாமிகள் சுவாமிகளைப் பற்றிய தொடர்பு அடியாரும் அடியேனும் வருவிருந்திற்கு முன்னறிவிப்பு யோகசுவாமிகளுக்கு அஞ்சலி என் கண்கண்ட தெய்வம் அற்புதமான முதற் தரிசனமும் அனுபவமும் யாழ்ப்பாணத்துச் சிவயோகசுவாமிகள் திருமுறையின் அற்புத சக்தி சுவாமி நினைவுகள் யாழ்ப்பாணத்து பூீரீ யோகசுவாமிகள் சுவாமிகளது அருள் தாயினும் நல்ல தலைவன் நான் கண்ட யோகசுவாமி நான் கணட அற்புத யோகர் எனை ஆண்ட தெய்வம் குருநாதன் அருள் யோகசுவாமிகள் - நாமென்ன கொடுமை செய்தோம் யோகர்சுவாமிகள் சரணம் அத்துவிதப் பொருள் காப்பாம்
195
202
204
205
207
25
221 226
229
248
250
261
265
268
272
277
279
285
29.
294
298
300
302
304


Page 5
*冠

திருவடி வாழ்க
அகரமாம் எழுத்துப்போல அனைத்தினுங் கலந்துநின்றே இகபரம் இரண்டுமீந்த எழிற்குரு திருத்தாள் வாழ்க.
ஆணுமாய்ப் பெண்ணுமாகி அன்னையும் பிதாவுமாகிக் காணவே என்முன்வந்த கழலடி யென்றும் வாழ்க.
இருவினை நீக்கியெம்மை இன்பமாம் நிலத்தில் வைக்கத் திருவுருத் தாங்கிவந்த செல்வநின் திருத்தாள் வாழ்க.
ஈன்றிடு தந்தைதாயோ டெய்திய சுற்றமாகித் தோன்றிய குருவுமான துணைவநின் திருத்தாள் வாழ்க.
உணர்ந்தார்க்கு முணரவொண்ணா ஒருவனே என்போல்வந்து குணங்காட்டி ஆண்டுகொண்ட குருவின் சீர்ப்பாதம் வாழ்க.
ஊசிமே னுனியினின்றே உக்கிர தவத்தையாற்றும் மாசில்மா தவருங்காணா மலர்ப்பதம் மனத்தில் வாழ்க.
என்னைநீ வேறாயெண்ணி இடர்ப்பட வேண்டாமென்று தன்னைத்தந் தாண்டுகொண்ட சற்குரு தாள்கள் வாழ்க.
ஏதுமொன் றறநில்லென்றே யெனக்குநல் லருளைத்தந்த தீதிலாத் தேசிகன்றன் திருவடி வாழ்க! வாழ்க!
நற்கிந்தனை.
III

Page 6

செல்லப்பாச்சுவாமிகள்

Page 7

மகாவாக்கியம்
ஒரு பொல்லாப்பு மில்லை என்னுமொருமொழியால் உள்ளம்
உருகாதோ வென்றன் உயிரே பராபரமே
எப்பவோ முடிந்தது என எந்தை குருநாதன் செப்புந் திருவாக்கின் சீர்தருவாய் பராபரமே
நாமறியோம் என்றுமுன்னாள் நல்லுரில் சொன்னமொழி நாமறிந் துய்யவரம் நல்காய் பராபரமே
ஆரறிவார் என்று முன்னாள் ஆசா னுரைத்தசொல்லின்
சீரறியச் செய்வாய் சிவமே பராபரமே
அப்படியே யுள்ளது என அன்றாசான் சொன்னமொழி இப்படியில் யானறிய இரங்காய் பராபரமே
என்றுநீ யன்றுநாம் என்னுந் திருவாக்கைக் கண்டுதொண்டு செய்யக் கருணைசெய்வாய் பராபரமே
அஞ்செழுத்ததை நெஞ்சில் அழுத்தா தழுத்திநிற்கக் கஞ்ச மலரடியைக் காட்டாய் பராபரமே
பஞ்சப் புலன்வழிபோய்ப் பாரி லலையாமல் செஞ்சரணே தஞ்சமெனச் செய்வாய்ப் பராபரமே
கட்டுப்படா மனத்தைக் கட்டத் திருவருளை இட்டமுடன் நீதாராய் எந்தாய் பராபரமே
ஊனா யுயிராய் உடலாயென் னுட்கலந்த தேனா ரமுதே தீங்கரும்பே பராபரமே
ஒருதெய்வம் ஒருலகம் உண்மை முழுதுமென்னும் திருவருளில் நிற்கவருள் செய்வாய் பராபரமே
நற்கிந்தனை.
VII

Page 8


Page 9
Aum Namah Sivaya
MESSAGE FORM SATGURU SIVAYA SUBRAMUNIYA SWAMI
Satguru Siva Yogaswami, spiritual preceptor of Sri Lanka's over two million Hindus, was born and lived at a very important time in the lives of his devotees. He changed the hearts and minds and, therefore, the history of the people of this island nation. He was and still is their spiritual advisor, their counselor and their hope for a new a wonderfully rewarding future. Read these pages and be inspired by a life Well lived and an attainment well attained and made use of, selflessly, for the benefit of all whom he loved and cherished most dearly.
Take joy in invoking his presence and, therefore, Siva's divine presence into your life through Sivayogaswamighal Anparghalin Anupavam. For we who knew him know this as fact; there is no difference between the true Sivaguru and Siva Himself.
S S SSL S LS SL S LS LS SL SLS S S S S LS SL SS SL SL SL L LSS SL L L S S LL S SL L SS S S SL S S SLL 0L S LLL C LLL
16.05.1998
Satguru Sivaya Subramuniyaswami Kaui Aadheenam, 107, Kaholalele Road, Kapaa, HAWAII

ஓம் நமசிவாய
சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் வாழ்த்தச் செய்தி
சற்குரு சிவயோகசுவாமிகள், ஒரு முக்கிய காலகட்டத்தில் இருபது இலட்சத்திற்கு மேற்பட்ட இலங்கை வாழ் இந்துக்களின் ஆன்மீக குருவாகத் தோன்றினார். இலங்கைத் தீவகத்தில் வாழும் மக்களின் உள்ளங்களிலும், சிந்தனைப்போக்கிலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். அன்றும் இன்றும் அவர்களின் சற்குருவாகவும், ஆலோசகராகவும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு நம்பிக் கையூட்டும் ஞானச்சுடரொளியர்கவும் அமைந்துள்ளார். சுவாமிகள் உன்னதமான தன்னலம் அற்ற வாழ்க்கை வாழ்ந்து, தன் அன்புக்குரியோரை ஆதரித்து, அரவணைத்து வந்தமையை இந்நூலை வாசித்து அறிந்து எழுச்சி பெறுங்கள். ‘சிவயோகசுவாமிகள் அன்பர்களின் அனுபவம்.” என்னும் இந்த நூலின் மூலம் சுவாமிகளின் சந்நிதானத்தையும், சிவனுடைய திவ்விய பிரசன்னத்தையும் பெற்று ஆனந்தம் அடையுங்கள். உன்னத சிவகுருவிற்கும், சிவனுக்கும் பேதமில்லை என்ற உண்மையைச் சிவயோகசுவாமிகளின் மெய் அடியார்கள் உணர்வார்கள்.
சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி
குவாய் ஆதீனம் 16-05-98
மொழிபெயர்ப்பு
ΧΙ

Page 10
2.
சிவமயம்
ஓம் சிவசிவ சிவனடி துணை ஒம் ஓம் சிவசிவ கணபதி துணை ஒம் ஓம் சிவசிவ சிவகுரு துணை ஒம் ஓம் சிவசிவ அடியார் துணை ஒம்
நற்கிந்தனை.
பதிப்புரை
எம்மை இன்பமாம் நிலத்தில் வைக்கத் திருவுருத் தாங்கி வந்த நின் திருத்தாள் வழிக/
நற்கிந்தனை
சிவயோகசுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் எம்மவரோடு ஒருவராய் வாழ்ந்து வந்தது நாம் பெற்ற பெரும் பேறாகும். அவரின் திருப்பாதச் சுவடுகள் பதிந்த மண்ணில் உலாவப் பெற்றோம். அவரின் திரு வார்த்தைகளை உடனிருந்து காது குளிரக் கேட்கும் பேறு பெற்றோம். அவரின் அன்பிற்கும், ஆசிக்கும், வழிநடத்தலுக்கும் பாத்திரமாகி வாழ்வு பெற்றோம். இனி இந்த யுகத்தில் இவ்வாறான ஒரு மகான் எம் மத்தியில் தோன்றுவாரோ யாம் அறியோம்.
"மர நிழலும் அன்பர் உள்ளங்களுமே எமக்கு உகந்த உறைவிடம்” எனச் சுவாமிகள் கூறியுள்ளார். அவ்வாறே அன்பர்களின் உள்ளங்களில் சுவாமியின் நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளன.
XII

அவர்கள் பெற்ற பல அரிய அனுபவங்கள், வருங்காலச் சந்ததியினருக்கும் பயன்படும் முகமாகத் தெளிவாக எழுதித் தந்துள்ளனர். அன்பர்களின் அனுபவங்கள் சத்சங்கமாக அமைவதோடு எம்மைச் சுவாமிகள் வாழ்ந்த காலத்திற்கும் அழைத்துச் செல்லுகின்றன.
ஸ் படிக மணிகளின் பணி முகங்கள் பல்வேறு வண்ணங்களைப் பிரதிபலிப்பது போல் அன்பர்களின் பன் முகப்பட்ட இவ்வனுபவங்கள் யோகர்சுவாமிகளுடைய அருளையும், ஆற்றலையும், தெய்வீகத்தையும் நன்கு புலப்படுத்துகின்றன.
நோயாளிக்கு நோயினுக்கு ஏற்ற மருந்தை வைத்தியர் அளிப்பது போல், அவரவர் மனப்பரிபாகம், சூழல், சந்தர்ப்பத்திற்கு ஏற்பச் சுவாமிகள் வழிகாட்டி அருளினார். "ஒவ்வொருவரும் தனக்குத் தனக்கு உகந்த பாதையைத் தேடிக்கொள்ள வேண்டும், எவர் எதைச் சொன்னாலும், சாத்திரம் எதனைச் சொன்னாலும், தன அனுபவத்தோடு ஒப்பிட்டு அனுபவமே சரி எனக் கொள்ளவேணடும்.” என்பது சுவாமிகளின் வாக்கு.
அன்பர்கள் சிலர் இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டதும் எம்மறிவுக்கு எட்டாதவையுமான அனுபவங்கள் சிலவற்றை எழுதியுள்ளனர். இக்கட்டுரைகளில் தொனிக்கும் கருத்துக்களுக்கு அவ் அன்பர்களே பொறுப்பாக உள்ளனர். சிவயோகசுவாமிகள் தம்காலத்தில் இத்தகைய சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை சற்றேனும் விரும்பினர் அல்லர்.
சிவயோகசுவாமிகளின் அடியாரான சிவதொண்டன், செங்கலடி, மேற்கூறிய கருத்தினை வலியுறுத்தும் வண்ணம் சில
அறிவுரைகளைக் கூறியுள்ளனர். அவற்றை ஈண்டு தருவாம்.
XIII

Page 11
"உலகமோர் மயக்கத் தோற்றமே, உலகம் ஓர் மயக்கத்தோற்றமெனில் உலகில் விளையும் சித்துக்களை எண்ணெண்டது? சித்துக்களையும் செப்டிவித்தையே எண்பது தக்கது. எனினும் பெரும் அறிவாளிகளையும் மயக்கும் ஒன்றாகவேயுள்ளது. இதனை நாம் அழுத்திக்கூறுவதன் நோக்கமென்னவெனில் சிவஞானியரின் ஏற்றத்தைச் சித்துக்களைக் கொண்டு மதிப்பிடுதல் முறையணறு என்பதை உணர்த்துதற்கே. சிவஞானியரைப் போற்றுகின்றோம் என்ற நினைவில் அவர் பற்றிய சித்துக்களைக் கூறுவது விரும்பத்தக்கதன்று.
சிவஞானியது முன்னிலையிலே சித்துக்கள் தாமாக விளைவது வேறுவிடயம். அது சிவஞானசம்பந்தமுற்ற அருளாளர்களின் இயலிப்ான அருட்பெருக்கால் சங்கற்பமின்றி நிகழ்வது. இவ்வாறு நிகழ்வனவற்றைத் திருவருளிற் சாட்டி விட்டுச் சாட்சியாயிருப்பதே சிவஞானியரின் அடக்கமுடைமையாகும். ஆதலினாலே சிவஞானியரை நாடுவோர் கித்துக்களை நாடாது முத்தி நாட்டம் கொள்வதே முறைமையாம். வேணடுவார் வேணடுவதை ஈயவல்ல சிவஞானியரது முன்னிலையிலே ஆகவேண்டிய யாவும் ஆகுதல் ஒருதலை, ஆயினும் தவச்சுவை நாடி நற்றவத்தோரைப் புற்றுதலே நல்லோர் கடன். இம்மையேதரும் சேறும்கூறையும் ஏத்தலாம் இடர்கெடலுமாம் அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யதும் ஐயுறவில்லையே' எனும் கந்தரமொழியே எங்கள் குருநாதனது அடியார்க்கு ஏற்ற தாரகமாம்".
இக்கட்டுரைகளை எமக்கு எழுதிச் வளங்கிய அன்பர்களுக்கு மனம் கனிந்த நன்றிகள் உரித்தாகுக. யோகசுவாமிகளின் அருளும், ஆசியும் உங்களுக்கு என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று அவரின் திருவடிகளை வேண்டி நிற்போமாக.
XIV

இத்தகைய அனுபவங்களை மேலும் அன்பர்கள் எழுதியனுப்பினால் அடுத்த பதிப்பில் அவை இடம் பெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
“சிவயோகசுவாமிகள் அன்பர்களின் அனுபவம்” என்ற தலைப்பிலே நூல்வடிவாக கொண்ட இக் கட்டுரைத் தொகுப்பினைச் சிவயோகசுவாமிகளின் திருவடிக்குச் சமர்ப்பித்து வாசகர்களுக்கு அளிக்கின்றோம்.
"எல்லோரும் வழிகA இன்பமே சூழ்க!”
பதிப்பாசிரியர் கலாநிதி திருமதி விமலா கிருஷ்ணபிள்ளை விரிவுரையாளர், கல்விப் பீடம் கொழும்புப் பல்கலைக்கழகம்.
米 米 米 米 米 米
XIII

Page 12

சிவயோகசுவாமிகளின் திருச்சரிதச் சுருக்கம்
ஒப்புயர்வற்ற உன்னத ஞானியாகிய யோகர்சுவாமிகள் இலங்கையின் வட பகுதியில் தொன்மை மிகு கந்தக்கோட்டம் என விளங்கிய மாவிட்டபுரத்திலே சைவ வேளாள குலத்தில் அம்பலவாணர் என்பவருக்கும் சின்னாச்சியம்மையாருக்கும் 1872ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி அவிட்ட நட்சத்திரத்தில் தவப்புதல்வராகத் தோற்றினார். பெற்றோர் சூட்டிய இயற்பெயர் சதாசிவம், இளமையிலேயே துறவு மனப்பான்மை இவருக்கு மேலோங்கிக் காணப்பட்டது.
ஆன்மீக நாட்டம் கொண்ட இவர் யோகர், யோகநாதன் எனவும் அழைக்கப்பெற்றார். ஞானப் பேரொளியாக விளங்கிய நல்லூர் முருகன் கோவில் தேரடியில், செல்லப்பா சுவாமிகளால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சரணாகதி அடைந்தார். குருவின் வழிகாட்டலின்படி கடும் சாதனைகளோடு தவமியற்றி, திருவருளும் குருவருளும் பெற்று ஞானியானார்.
ஆசான் அருளால் ஆசானாகிய யோகரைச் சதாசிவஞான தேசிகனை “யோகர்சுவாமிகள” என மக்கள் போற்றிவந்தனர். சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கொழும்புத்துறை என்னும் ஊரில், ஒரு சிறு குடிசையில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து, அவரை நாடிவந்த மக்களின் அல்லல்களைத் தீர்த்து, ஆன்மீக அறிவையும் ஊட்டிவந்தார். பல்வகைப் பட்ட மக்கள் இக் குடிசையை நாடி வந்தனர். சுவாமிகளுக்குப் பல அருளாற்றல்களும் சித்திகளும் கைவரப்பட்டிருந்ததால் அவரின் அகக் காட்சியிலிருந்து எவரும் எதையும் மறைக்க முடியவில்லை. அவர் தனது ஆற்றல்களை அன்பர்கள் விளம்பரப் படுத்தி அதற்கு முக்கியத்துவமளிப்பதை முற்றாக விரும்பவில்லை.

Page 13
“இங்கு நான் ஒரு குறையும் வைக்கவில்லை” எனத் திருவாய் மலர்ந்து, 1964ம் ஆண்டு பங்குனி மாதம் ஆயிலிய நட்சத்திரத்தில் மகாசமாதி எய்தினார். அவருடைய விருப்பத்தின் படி, அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. அவரின் அஸ்தி கொழும்புத்துறை ஆச்சிரமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. திருவடி வழிபாடு, திருமுறை ஒதுதல், சிவதொண்டு, சிவதியானம், சைவ உணவுப் பழக்கம் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு அடியார்களை ஊக்குவித்துத் தானும் அவற்றைக் கடைப்பிடித்தார்.
யோகசுவாமிகள் அருளிய திருப்பாடல்கள் தொகுக்கப் பட்டு நற்கிந்தனை” என நூல் வடிவில் தமிழிலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் வெளிவந்துள்ளன. சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் வண்ணார்பண்ணையில் “சிவதொண்டன் நிலையத்தை அன்பர்கள் மூலம் ஸ்தாபித்து, “சிவதொண்டன்" என்னும் மாத இதழையும் தொடக்கி வைத்தார். மேலும் மட்டக்களப்பில் உள்ள செங்கலடியில் “சிவதொண்டன்’ நிலையம் அம்ைய அருள் செய்தார்.
யோகசுவாமி வாழ்ந்த காலத்தில், அவருடைய அடியாரான மார்க்கண்டு சுவாமிகளைக் கைதடி ஆச்சிரமத்தில் வசிப்பதற்கு வழி செய்தார். யோகர்சுவாமிகளின் மற்றுமொரு சீடரான செல்லத்துரை சுவாமிகள், யாழ்ப்பாணச் சிவதொண்டன் நிலையத்தையும் செங்கலடிச் சிவதொண்டன் நிலையத்தையும் பராமரித்து வருகிறார். சாந்தாசுவாமிகள் என்ற தீட்சாநாமத்தை யோகர்சுவாமிகளிடம் பெற்ற கெளரவ சோல்பரிப் பிரபுவின் புதல்வரான ஏள் (Earl) இராம்ஸ்போதம் என்பவர் இங்கிலாந்தில் சிவதொண்டாற்றி வருகிறார்.
இன்று பிரசித்திபெற்று விளங்கும் ஹாவாய் குருதேவ் சிவாய சுப்பிரமுனியசுவாமிகளும் யோகசுவாமிகளின் சீடரேயாவார். இவர்
2

பல துறவிகளுடன் ஹாவாயில் ஆச்சிரமம் அமைத்து வாழ்வதோடு உலகின் பல பாகங்களிலும் வாழும் இந்து மக்களுக்கும் சமயப் பிரசாரம் புரிகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சுவாமிகளின் முயற்சியால் ஹாவாயிலேயே சுயம்புலிங்கத்தை மூலமூர்த்தியாகக் கொண்ட சன்மார்க்க இறைவன் கோவில் ஒன்று உருவாகின்றது.
மகான்கள் மறைவதில்லை, சிவயோக சுவாமிகளின் அருளாற்றல் எங்கும் பரந்துள்ளது. இலங்கையிலும் உலகின் பல பாகங்களிலும், வாழும் யோகசுவாமிகளின் அன்பர்கள் அவர் காட்டிய வழியில் நின்று, தாம் வாழும் இடங்களில் எல்லாம் சிவதொண்டாற்றி வருகின்றனர்.
“ஆதியந்த மில்லா அப்பனுக்கு மங்களம் சோதிவடிவாயுள்ள சுவாமிகளுக்கு மங்களம் ”
நற்கிந்தனை
Lų62 izulróflifluuif
米 米 米 米 米 米

Page 14
தென்தமிழ்ப் பயனாயுள்ள தேவாரம்
தேவாரம் தமிழ் வேதம்:
சிவபிரானால் அருளப்பெற்ற வேத சிவாகமங்களே சைவ சமயிகளது முதனூல்கள். வேதசிவாகமங்கள் வடமொழியிலுள்ளன. இவற்றை அனைவரும் ஒதியுணர்தலியலாது. ஆதலினாலே சிவபிரான் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் ஆதிய சற்குரவர்களை அதிட்டித்துநின்று வேதம் தமிழ் செய்தனர். தமிழ் வேதமான தேவாரம் பதிவாக்கே யென்பது. "எனதுரை தனதுரையாக என்னைக் கெனடுதனி இன்றமிழ் செய்வித்தானி” ஆதிய அகச்சான்றுகளாலும் துணியப் பெறும்.
வடமொழி வேதத்திற் போலவே தென் தமிழ் வேதத்திலும் அஞ்செழுத்து மந்திரம் இருதயத் தானமாக அமைந்திருக்கிறது. வடமொழி வேதத்தின் நடுவணதாகிய யசுர் வேதத்திலே நடுக்காண்டத்தின் நடுச்சாகையின் நடுவில் நமசிவாய எனும் பஞ்சாக்சரம் ஒளிர்கிறது. அவ்வாறே தமிழ் வேதத்தின் நடுவேயுள்ள அப்பர் தேவாரத்தின் நடுவனாகிய ஐந்தாந் திருமுறையினது நடுத்திருப்பதிகத்தின் நடுப்பாடலில் சிவாய எனும் முத்தி பஞ்சாக்கரம் ஒளிர்கிறது.
“விண்ணி னார்பணிந் தேத்தவியப்புறும் மணிணி னார்மற வதுதி வாயவென் றெணணி னார்க்கிட மாழிைல் வானகம் Léoofsoof? னாரவர் பாலைத்துறை யரே”
Aj-Af-6
வடமொழி வேத மந்திரங்கள் நம, ஸ்வதா, ஸ்வாகா, வஷட், ஹும், வெளஷட், பட் எனும் ஏழு முடிவுகளைக் கொண்டமைவன.

இந்த ஏழுகோடி மந்திரவகை போன்றே தேவாரமும் ஏழு திருமுறைகளாக வகைசெய்யப் பெற்றுள்ளது. இஃது, "துண்ணுவகை ஏழாகத் தொகுத்துச் செய்தான் தூயமனு எழுகோடி எண்ப துண்னி” எனும் உமாபதி சிவனார் வாக்கால் துணியப்படும்.
தேவாரம் பொருள்
1. தேவாரம் என்பதைத் தேவு+ஆரம், தே+ஆரம் என்றவாறு பிரித்துத் தேவர்களுக்குச் சூட்டும் பாமாலை எனப் பொருள் கொள்வதுண்டு. இறைவற்குச் சூட்டுவதற்கு பூமாலையிலும் ஆரா அன்பினிற் குழைத்த சொன்மாலை சிறப்புடையதே
I தேவாரம் எனப்பிரித்து (வாரம்-அன்பு)தேவிடத்தில் வாரப்பாட்டை ஏற்படுத்துவது, தேவுக்கு வாரப்பாடானது என்ற பொருளையும் கொள்வர்.
"கடகு மிக்க அர்ச்ச8ை7 4 Tட்டேயாகும். ஆதலால் எம்மைச் சொற்றமிழர் பாடுக” எனப் பிரானார் வனறொனடர்க்கு அருளினாராதலால் இறைவுற்குத் தேவாரப் பாடலிடத்து மிக்க வாரப்பாடுளதென்பது தெளியப்படும். தேவாரம் பாடுமிடத்துப் பக்தி மேலிடுவதாலே இறைவனிடத்து அணியினைப் பெருக்குவது எண்டதும் பொருந்துவதே.
I. தேவாரம் எனப் பிரித்து (வாரம் - இசைப்பாடல்) சாமகானப் பிரியரான சிவபிரானை வழிபாடு செய்தற்கேற்ற பண்ணார்ந்த பாடல் எனப் பொருள் கூறுதலும் உண்டு.
IV வாரம் என்பதற்கு உரிமை எனும் பொருள் கொண்டு பிற தேவர்களல்லாது சிவபிரானுக்கே உரிமையுடைய சிவ தோத்திரம் என்றோர் பொருள் கொள்ளலும் பொருந்துவதே.
5

Page 15
தேவாரம் நுதலிய பொருள்:
வேதப் பொருளெதுவோ அந்த வேதவிழுப்பொருளே தமிழ் வேதமாய தேவாரப்பொருளுமாம். மெய்யியலின் கொடுமுடியென அறிவோர் போற்றும் சைவசித்தாந்த சாத்திரத்தில் வடித்தெடுத்து வைத்திருக்கும் பொருள் தேவாரமெங்ங்ணும் பரந்து செறிந்து கிடக்கின்றது என்றலும் அமையும். இஃது உமாபதிசிவாச்சாரியார் இயற்றி அருளிய திருவருட்பயன் என்னும் சாத்திர நூலாலும் அவர் தேவாரத்தினின்றும் திரட்டியருளிய அருள்முறைத் திரட்டினாலும் நன்கு துணியப்படும். திருவருட்பயனைப் பதிமுதுநிலை ஆதிய பத்து அதிகாரங்களில் இயற்றிய உமாபதி சிவனார் அப்பத்து அதிகாரங்களின் வைப்பொழுங்கில் தேவாரத் திருப்பதிகங்கள் பத்தினைத் தெரிந்து அருள்முறைத்திரட்டாக அருளினார். இவற்றால் சித்தாந்த சாத்திரச் செம்பொருளுக்கு இலக்கியமாயிருப்பது தேவாரத்திருமுறை என்பதை உமாபதிசிவனார் உணர்த்திவைத்துள்ளார். ஆதலினால் சைவசித்தாந்த சாத்திரத்திலே இறை, உயிர், தளை, உயிர் தளையினின்று விடுபட அருளும் அருள், திருமேனி தாங்கி எழுந்தருளும் அருளுருவாம் குருமூர்த்தி, குருபரன் உணர்த்தும் அஞ்செழுத்துண்மை ஆதிய சாதனைகள், இச்சாதனைகளால் அணையும் இன்பம், அனைந்தோரியல்பு என்றவாறாக வகைசெய்து வைக்கப் பெற்றிருக்கும் பொருள் தேவாரத்தில் ஆழ்ந்தகன்றோங்கிக் கிடக்கின்றது என அமையும். இப் பொருள் பண்ணார்ந்த பாக்களில், உள்ளத்திற் பதியும் வண்ணம் தெள்ளத் தெளிவாய்க் கூறப்பெற்றிருக்கும் முறையில், தேவாரம் வேதத்திலும் விழுமியதென்றோர் கருத்தும் அவ்வப்போது கூறப்பெற்று வந்திருக்கிறது. வடமொழி மறையில் மறைவாகவே உள்ள உண்மை, தென் தமிழ் வேதத்தில் தெளிபொருளாய் வெளியாயிருப்பது ஒருதலை. இவ்வகையிலே வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம் என்பது போல் வேதத்தெளிவு தேவாரம் என்பதும் பொருந்துவதே. மொழியின் முதன்மையான பயன்பாடு உண்மை
6

யுணர்ச்சிக்கு உபகரணமாயிருத்தலே. உண்மையுணர்ச்சிக்கு உதவும் வகையில் தென்தமிழ் செழுமையடைந்திருப்பது தேவாரத்திலேயாதலால் தேவாரத்தைத் தென்தமிழ்ப் பயனாயுள்ள தேவாரம் எனப் போற்றுதல் தகுவதாகும்.
தேவாரம் சிவனாரின் மந்திரருபம்:
“பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி " "எணனும் எழுத்துஞ் சொல்லானாய் பேற்றி “பாட்டான நல்ல தொடையே போற்றி?
என்றாங்கு தேவாரப் பண், இசை, எழுத்து, சொல், பா, பதிகம் எங்ங்னும் சிவனாரின் செறிவுள்ளது. சிவபிரானார் தேவார அக்கரம் தோறும் அமர்ந்துள்ளார். ஆதலாலே தேவாரத்தைச் சிவபிரானின் மந்திரளுபமெனக் கொண்டாடல் தகும். கோயில்களிலே பிரதிட்டை செய்யும் திருமேனிகள் வேதமந்திரத்தினால் உருவேற்றிய பின்னரே திருவுறுகின்றன. தேவாரமோ இயல்பிலேயே திருவுடைய சிவரூபமாக உள்ளது. ஆதலினால் தேவாரத்தைக் கோயில்களில் வைத்து வழிபாடாற்றுவதும் யானைமேலேற்றி வீதியுலாக் காண்பதும் வழக்காறாயிருந்தது.
தேவாரத்தின் மந்திர சக்தி:
தேவாரப்பதிகங்கள் ஆணையிற் கிழந்த மந்திரங்கள். ஆணை யென்பது திருவருட் சக்தியின் ஆற்றலாகும். ஆதலினால் தேவாரப்பதிகங்களின் அருளாற்றல் அவை மலர்ந்த அக்கணத்திலேயே தெரியலாயிற்று. “வாழ்க அந்தணர்” எனும் திருப்பாசுரம் பாடி வைகையில் ஏடிட, ஏடு எதிரேறிச் சென்றது. மந்திரமாவது நீறு பாடித் திருநீறு பூசப் பாண்டியன் வெப்புநோய் தீர்ந்தது. இவ்வருளாற்றல் தீயின் வெம்மை போன்று தேவாரப் பதிகங்களின் நீங்கா இயல்பாக உள்ளது. யாரேனும் ஒருவர்
7

Page 16
முறைப்படி ஒதுவாராயின் அவ்வருளாற்றல் என்றும் வெளிப்படும். "பேயடையா பிரிவெய்தும் பிள்ளைமினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவ ரையுறவேணர் டாவொன்றும்”
என்றவாறுள்ள திருஞானசம்பந்தப் பெருமானின் திருவெண்காட்டுத் திருப்பதிகத்தைத் திருவெண்காட்டுத் தலத்திற்குச் சென்று அத்தலத்து முக்குளநீரில் மூழ்கிக் காதலித்தோதியவர் 'பிள்ளையினோடுள்ள நின்ைவாயினவே பெறுவர்” என அப்பதிக்த்திலுள்ளவாறே பிள்ளைவரம் பெற்றனர். ஆதலால் தேவாரங்கள் மனதினில் நினைத்து வாயினாற் பாடுவோரைக் காப்பாற்றும் மந்திரங்கள் என்பதில் ஐயுறவு கொள்ள வேண்டியதில்லை. வேத மந்திரங்களிலே, இன்ன மந்திரத்தை இன்னவாறோதி இன்னபலன் பெறலாம். எனும் இரகசியமுணர்ந்தோர் அன்னவாறோதிப் பலன் பெறுதல் கண்கூடு. அவ்வண்ணமே தமிழ் வேதங்களிலும் வேண்டிய வேண்டியவாறு எய்துதற்கான மந்திரங்கள் நிறைந்துள்ளன. அம்மந்திரங்கள் இன்ன இன்ன தென்பதையறிந்து உரிய முறைப்படி ஓதி யாரும் பலனுறலாம். திருஞானசம்பந்தப் பிள்ளையாரும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும் பாடிய திருக்கடைக் காப்புச் செய்யுள்களிலே திருப்பதிகப் பலன் கூறப்பெற்றிருக்கின்றன. "வானில் அரசாள்வர் ஆணை நமதே பரகதி பெறலாமே, அடையா வினையே, வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம் நிலையாக முன் ஏறுவர் நிலமிசை நிலையிலரே, பந்த பாசமறுக்க வல்லார்களே”என்றவாறு ஆணைநமதென்ற பெருமானின் (சம்பந்தப் பிள்ளையார்) திருக்கடைக் காப்புச் செய்யுள்கள் சிலவற்றிலே உள. இம்மைப் பிறப்பில் வினைத் துன்பங்களின் நீங்கி அம்மையில் பரகதி பெறுதற்கேற்ற மந்திரங்கள் பல தேவாரங்களில் உள.

தேவாரத்தை ஒதும் முறை:
நிறை மொழி மாந்தரான தேவார முதலிகள் அருளாணையால் வெளிப்படுத்திச் சொன்ன மறைமொழிகளே தேவார மந்திரங்களாம்; அவற்றை ஒதும் முறைப்படி ஒதுதல் வேண்டும். முதலில் இம் மந்திரங்களை உற்றுளி உதவும் உயிரனையோரைப் போல் மதித்து "உன்னைப் போலொருவருளரோ எமக்கே” என்ற கெளரவத்துடன் காதலித்தல் வேண்டும். இத்தகைய காதலுடன் ஒதுதலையே "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஒதுவார்” என நம்மார் பலரும் அறிந்துள்ள பஞ்சாக்கரப் பதிகமொழி கூறுகிறது. இத்தகைய ஆராக் காதலுடன் “கிழக்கு முகமாகவேனும் வடக்கு முகமாகவேனும் உட்கார்ந்து விநாயகரைத் தியானித்து, சிவபெருமானையும் உமாபிராட்டியாரையும் சமயபரமாசாரிய சுவாமிகள் நால்வரையும் திருத்தொண்டர்சீர் பரவுவாராகிய சேக்கிழார் நாயனாரையும் சிந்தித்து ஒவ்வொரு திருப்பாட்டின் முதலிலும் முடிவிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லுக." எனச் சுவாமி நாதபண்டிதர் தேவாரம் ஒதும் முறைபற்றிக் கூறுவார். இஃது திருவருளையும், குருவருளையும் முன்னிட்டுத் தூயோமாய்ச் செய்யும் ஒரு கைங்கர்யம் என்பதையே உணர்த்தும். திருச்சிற்றம்பலம் எனக் கூறுவதன் நுட்பத்தை அழகரடிகள் என்பார் மேல்வருமாறு கூறி விளக்கியுள்ளார்.
"திருச்சிற்றம்பலம் என்பது உலகத்தில் வெளிப்புறத்தில் நடு இடமாகிய சிதம்பரத்தைக் குறிப்பிடுவது போல உடம்பின் உட்புறத்தின் நடு இடமாகிய இதயத்தையும் அதோடு தொடர்புடைய நடு நாடியையும் குறிப்பிடுகின்றது. எனவே திருச்சிற்றம்பலம் என்றுஉணர்ந்து சொல்லும் பொழுது நம் உணர்வு இதயம், நடுநாடி அதன் வழியே மூளை ஆகிய இடங்களுக்குப் போய்ச் செழுமை பெறுகின்றது. அதன் பயனாக நன்கு பாடவும் பாடியதை மேன் மேல் உணரவும் முடிகிறது. எனவே திருச்சிற்றம்பலம்
9

Page 17
என்று சொல்லி உணர்ச்சியை ஒருமுகப்படுத்திக் கொண்டும் செழுமையாக்கிக் கொண்டும் பதிகத்தைத் தொடங்க வேண்டும்"
வேதமந்திரத்தைச் சத்தத்தோடு ஒதுதற்குரிய நுட்பமான நியதிகள் உள்ளது போலத் தமிழ் வேதத்தை ஒதுதற்குரிய பண்முறை உளது. அப்பண்முறைப்படி ஒதுதலே முறையாம்.
மந்திரங்களில் ஒரக்கரமேனும் பிழைப்பின் மந்திரம் மாறுபாடாக முடியுமாதலால் தேவாரங்களை எழுத்துப்பிழையின்றி ஒதுதல் வேண்டும். எல்லாவற்றிலும் மேலாகச் சிவசிந்தையுடன் ஓதவேண்டும் என்பதே நெஞ்சிற் பதிக்க வேண்டியதாம்.
எங்கள் சுவாமிகளின் தேவாரப் பற்று
எங்கள் சுவாமிக்குத் தேவாரங்கள் பல மனனமாய் இருந்தன. சிவதொண்டன் நிலையத்தினர் திரட்டி வெளியிட்ட சைவத் திருமுறைத் திரட்டிலுள்ள தேவாரம் பலவும் சுவாமிகள் தம் நினைவிலிருந்து அவ்வப்போது பாடியனவாகும். தாமும் முதலி மூவர்கள் அருளிச் செய்தது போன்ற திருப்பாட்டுக்கள் பலவற்றைப் பாடியுள்ளார். "மற்றுப்பற்றெனக் கின்றி” எனும் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் போன்றதோர் திருப்பதிகமும், அப்பரடிகள் அருளிச்செய்த திருத்தாண்டகங்களுக்கு இணையான தாணி டகப் பாடல்களும் இதற்குச் சில எடுத்துக்காட்டுகளாகும். பாவமைப்பில் மாத்திரமன்றி அருளாற்றலிலும் மூவர் தேவாரங்களுடன் இயைந்து நடக்கும் பெற்றியனவாக யோகசுவாமிகளது தமிழ் வேத மந்திரம்களுள. இவற்றிலுள்ள ஓர் திருத்தாண்டகம் முதன் முதல் சிவதொண்டன் ஏட்டில் வெளிவந்த வேளையில் அதனைப் படித்துத் திளைத்த களிப்பில் பேராசிரியர் D.M.P.மகாதேவன் அவர்கள் ஆகாசவாணியில் ஒருரை நிகழ்த்தியமையும் ஈண்டுக்குறிப்பிடத் தக்கதாகும். சம்பந்தப் பெருமான்
O

அருளிய "இடரினும் தளரினும்" எனும் பொற்கிளி பெற்ற திருப்பதிகத்திற்கு இன்றும் அச்சக்தியுள தென்பதை உணர்த்தத் தமது திருமுன்னிலையில் இடரினும் தளரினும் பாடியிருந்த நாகலிங்கப் பரதேசியாருக்குப் பொன் கிடைத்ததோர் அற்புதச் சான்று காட்டியதும் குறிப்பிடத் தக்கதே.
துன்பம்நும்மைத் தொழாதநாள்க னெண்டாரும் இன்பம்நூம்மை ஏத்துநாள்க ளெண்பாரும் நும்பினெம்மை நுளையப்பணியேனென் 'பாரும் அண்பனாரூராதிரைநாளா எதுவணணம்.”
சிவதொண்டன் செங்கலடி
3ද ප්ද 2ද 3: 3ද 3k
ஓங்கா ரத்தி லுதித்த துலகெலாம் ஓங்கா ரத்தில் நிலைத்த துலகெலாம் ஓங்கா ரத்தி லொடுங்கு முலகெலாம் ஓங்கா ரத்தி லுறுதி சிவாயவே
நற்கிந்தனை
11

Page 18
சுவாமிகள் செய்த சில அருட் செயல்கள்
யோக சுவாமிகள் ஓர் அபூர்வ சக்திவாய்ந்த சிவயோகியாவார். இவரின் பெருமை அறிவார் மிகச்சிலர் என்றே கூறலாம். இவர்தம் பெருமையை ஓரளவுக்கு அறிந்தவர்களுள்ளும் தனித்தனி இரண்டொரு சம்பவங்கள் மட்டுமேயன்றி எல்லாச் சம்பவங்களையும் அறிந்தவர் எவருமிலர். தமது யோகசக்தியை உபயோகித்துக் காட்ட்ச் சற்றேனும் விரும்பாத இவர் மிக அருமையாக, மிக மிக இரகசியமாகவே அன்பர் சிலருக்கு ஏற்பட்ட தீரா இன்னல் சிலவற்றைக் களைதற்காக அச்சக்தியை உபயோகித்தனர். இவர் எவரும் அறியாமல் ஆங்காங்கு அன்பர் சிலருக்குச் செய்துதவிய அற்புதங்கள் சிலவற்றை ஈண்டு வரைவாம்.
இவ்வற்புதங்களை அறிவதனால் அன்பர்களுக்கு அன்பு மேலும் மேலும் பெருகிவரும். அருள் செறியும், தெய்வம் உண்டென்னும் சித்தம் உறுதியாகும் இவ்வுறுதி பெற்றவர் வேண்டுவனவற்றை விமலன் ஈவது திணிணம். தீவிர பக்குவமுடையார்க்கும் உயர்ந்த நிலைகளை உற்ற பெரியோர்க்கும் இவை நற்பொழுதுபோக்காகும். அறிவிற் குறைந்த சாதகர்கட்கும் ஏனையோர்க்கும் இவை அருள் ஊற்றாகும்.
இவைகள் இயற்கை நியதிக்கு மாறாகும் என்றும் விஞ்ஞானத்திற்கு ஒவ்வாதனவென்றும் எண்ணுதல் அறியாமையே. ஏனெனில் உலகின் கண் நிகழ்கின்ற யாவும் ஏதோ ஒரு நியதிக்கு உட்பட்டே நடைபெறுகின்றன. விஞ்ஞானமும் காணமுடியாத சக்தி உள்ளது. அதை மெய்ஞ்ஞானத்தாலேயே அறியலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சந்திரனுக்கு மனிதன் யாத்திரை செய்யக் கூடுமென்று அறிவோமாயின் எம்மைப் பைத்தியக்காரர்
12

அல்லது மூடநம்பிக்கை யுடையவர் என்றே கூறிவிடுவார்கள். ஆனால் இன்றோ அது சாத்தியமே யென்று கூறுவதோடமையாது யாத்திரையைச் செய்யவும் துணிந்துள்ளனர். ஆகவே சாதாரண பெளதீக விடயங்களே ஒரு காலத்தில் மூடநம்பிக்கையென்றிருந்து, காலவளவில் மாற்றமடைந்து சரியான உண்மையாக மாறுமாயின், ஆன்ம தத்துவத்தை அறிந்தவர்களுக்கு அவை எத்துணை அற்பச் செயல்களாகின்றன! பூதஞானம் விஞ்ஞானத்தினால் அறியப்படுவது போன்று விஞ்ஞானமும் மெய்ஞ் ஞானத்தினாலேயே அறியுந் தந்திரமானது.
ஆகவே ஈண்டு கூறும் அற்புதச்செயல்கள் தற்கால விஞ்ஞானத்திற்கு முரணாயினும் மெய்ஞானிகட்கு என்றும் மாறுபட்டனவாகா என்பதை யாவரும் அறிய வேண்டும்.
மழை பெய்வித்தமை:
சில ஆண்டுகளுக்கு முன் வன்னிநாட்டிற் கமம் செய்விக்கும் ஒரன்பர் சுவாமிகளிடம் வந்தபோது காலமழையின்றிக் கமக்காரர் கஷ்டப்படுகின்றனர் என்று உரைத்தாராம். முளைத்த பயிரெல்லாம் வாடிவதங்கி இருப்பதாலும் அந்நிலை நீடித்தால் அவ்வருட விளைவே இல்லாது போய்விடும் என்று மிகுந்த வருத்தத்துடன் கூறினாராம். அந்த நேரத்தில் அவ்வாச்சிரமத்தினுள் வேறொரு அன்பர் கந்தபுராண படனம் செய்துகொண்டிருந்தார்.
சுவாமி வந்தவரிடம், "நீங்கள் கடவுள் நம்பிக்கையை இழந்து விட்டீர்கள்? யான் என்ன கடவுளா?” எனப் பலவாறு ஏசி அவரை அனுப்பிவிட்டார். அடுத்தநாளும் அதே நேரம் புராணபடனம் உள்ளே நடைபெறச் சுவாமிகள் ஆச்சிரம முற்றத்தில் சடையை விரித்துக் கங்கையைத் தாங்கிய சிவபெருமான் கோலத்தில் நின்று வானத்தைப் பார்த்து மூன்று தரம் இடியேறு போல் சத்தமிட்டார். பின்பு புராணம்
13

Page 19
படிப்பவர்களைப் பார்த்து, “இவன் விசரன் இதற்கெல்லாம் நீங்கள் பயப்படவேண்டாம்” என்றாராம். ஐந்து நிமிடங்கள் ஆகவில்லை. மழை 'சோ' வெனக் கொட்டியது. அனேக நாட்களாக மழையின்றி இருந்த பூமிக்குப் புதையல் கிடைத்தது, போலாயிற்று. அம் மழை வன்னிப்பகுதியிலும் பெய்து வளப்பஞ் செய்தது.
சுவாமிகள் பாடிய
'நல்லமழை பெய்யாதோ நாடு சிறவாதோ எல்லவரும் இன்புற்று வழ7ரோ - நல்லூரான் ஆசனாய் வந்தே அடியேனை ஆண்டுகொண்டான் பேசானு பூதியென் பேறு"
என்னும் நற்சிந்தனைப் பாடலைப் பாராயணஞ் செய்து மழையில்லாக் குறை தீர்க்கப்பட்டது.
தூய சோதி
சில காலத்துக்கு முன் ஈழநாட்டிலும் தமிழகத்திலும் பெரும் புகழ் பெற்றுத்திகழ்ந்த ஓர் சமயப் பிரசாரகராக பூரீ சங்கர சுப்பையர் என்னும் பெரியார் இருந்தார். இவர் தமிழ கத்திலும் ஈழத்திலும் உள்ஐஎல்லாச் சிவதலங்களுக்கும் யாத்திரை செய்து இடையறாது சிவனிடியையே சிந்தித்த பெரியாராவார். கதாப்பிரசங்கம் செய்யும் போது தம்மையே மறந்து பக்திப்பரவசமாகக் காணப்படுவதோடு பிரசங்கம் கேட்போரையும் அந்நிலைக்கு உயர்த்தும் ஆற்றல் பெற்ற ஒரு துறவியாவார். தென்னாட்டில் பெரும் புகழ் பெற்று "ராஜயோகி’ எனத் திகழ்ந்த இப் பெரியார் திருவாலங்காட்டுத் தலத்தீசனுக்குத் தேர்த்திருப்பணி செய்வதற்காக எங்கும் சென்று பொருள் ஈட்டினார். அக்காலத்தில் இவர் ஈழம் ஈன்ற திருவாசக மணியெனத் திகழ்ந்தாரென்பர்.
14

ஒருமுறை தாய் நாட்டைவிட்டுச் சேய்நாட்டின் தலைநகரான கொழும்புப் பட்டினத்திற்கு வந்து தமது சமயப்பணியில் ஈடுபட்டிருந்த இவருக்கு யாழ்ப்பாணத்து மக்களும் உரிய சன்மானம் செய்ய விளைந்து நேர்முகமாக இவரிடம் தகுதிவாய்ந்த சில பிரமுகர்களை அனுப்பி யாழ்ப்பாணத்திற்கு வரும்படி அழைத்தனர். அவ்வழைப்பிற்கிணங்கி அவரும் மற்றும் பிரமுகர்களும் புகைவண்டி மூலம் பிரயாணஞ்செய்து கொண்டிருக்கும் போது மாங்குளத்தில் பூீரீ சங்கர சுப்பையர் ஏனையோரைப் பார்த்து, மேல் வருமாறு கூறினார் “ஓர் சோதி தெரிகிறது. இவ்விடத்திலிருந்தே இப் புகைவண்டியுள் ஏறிவிட்டது. எங்களோடு தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றது” என்றாராம். நாவற்குழி நிலையத்தை அடைந்ததும் “அச் சோதி இறங்குகின்றது” என்று கூறிக்கொண்டு தாமும் துள்ளிக் குதித்துக் கீழே இறங்கிவிட்டார். அந்த வேளையில் அந்நிலையத்தில் மாபெரும் தவவடிவமொன்று இறங்கியதைக் கூடவந்தவர் கண்டனர். அவ்வடிவம் எங்கள் யோகசுவாமிகளாகும்.
யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்தில் பூரீ சங்கர சுப்பையரைட் பார்ப்பதற்கும் வரவேற்று மாலையணிவதற்கும் என்று நூற்றுக்கணக்கான மக்கள் காத்து நின்றனர். கூட்டத்திற்கு ஒழுங்குகள் செய்த இடத்தில் மக்கள் பெருவாரியாகக் கூடி வரவை எதிர்பார்த்திருந்தனர்.
பூg சங்கர சுப்பையர் அத்தவவடிவைப் பின்தொடர்ந்து சென்று வணங்கவேண்டுமென்று பேரார்வத்துடன் கூறியதும் கூட்டி வந்தவர்கள் திகைப்புற்று யாழ்ப்பாண நிலையத்திலிருக்கும் நிலைமையைக் கூறிப் பிரயாணத்தைத் தொடரும் படி வேண்டினர். அதற்கு அவர் தான் அத்தவவடிவத்தைத் தரிசித்து வணங்கிய பின்பே தாகசாந்தியைத் தானும் செய்வேன் என்று விரதஞ் செய்து கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வந்து தமது கூட்ட அலுவல்களை
5

Page 20
முடித்துக் கொண்டு அக்காலத்தில் யோக சுவாமிகள் தமது ஆச்சிரமமாகக் கொண்டிருந்த இடமாகிய அரியாலைக்குச் சென்று அவர் திருவடிகளில் சாஷ்டாங்கமாகப் பணிந்து, "இதுகாலவரை யான் யாத்திரை செய்த எத்திருத்தலத்திலும் எய்தாத இன்பத்தை இத்திருத்தலத்தில் யான் இன்று எய்துகிறேன்” என்று மொழிந்தனர். அப்போது சுவாமிகள் திருவாய் மலர்ந்து, “போதும் போதும்! இனி விடு, சமுத்திரங்கள் எல்லாம் தீாண்டிவிட்டாய். இன்னுமிருப்பன சிற்றாறுகள் தானே. இவற்றைத்தாண்டுவது இனி உனக்குச் சிரமமாகுமா?” என்றனர்.
இச்சம்பவம் நடைபெற்ற பின்பே யாழ்ப்பாண நாட்டிலும் இவ்விதமான பெரும் மகான் நடமாடுகின்றார் என்பதைப் பலர் அறிந்தனர்.
யோகசுவாமிகள் கொழும்புத்துறை ஆச்சிரமத்தில் சுற்றுப்புறங்களைக் கூட்டித் தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கையில் ஒரு சில வெளியூர்க் காரர்கள் அவரைப் பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். சுவாமிகள் அவர்களைக் கண்டதும் வேலையை இடையிலேயே நிறுத்திவிட்டுப் படலையைத் திறப்பதற்காக Gurgio IITsi og GiglossT60ii.6L, “I am doing a coolies job. Why have you come to see a coolie?" 6Tsip Gls Toi GOTITii. 356i உட்பொருள் யாதெனில் யான் ஒரு ஆத்மீக சுத்தீகரன், மனித சமுதாயத்திற்கிடையே ஆத்மீக உணர்வுகளை மறைத்திருக்கும் அழுக்குகளை நீக்குபவன் என்பதேயாகும். உள் மண்டபத்திற்குள் வந்தவர்களை அழைத்துச் சென்று உட்கார வைத்தார். தாமும் கால்களை மடக்கி உட்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.
தியான நிலையிலிருந்து உணர்வு நிலைக்குத் திரும்பியதும் தம்மைச் சுற்றிச் சூழ்ந்திருப்பவர்கள் மீது பார்வையைச் செலுத்தினார்.
6

அங்கு வந்திருந்தவருள் ஒருவர் தீபத்தை ஏற்றி வைத்து, மலர்களை நிலத்திலே வைத்துவிட்டு நெடுஞ்சாண்கிடையாக சுவாமிகளின் முன் பாதங்களை முத்தமிட்டவாறு வீழ்ந்து வணங்கினார்.
சுவாமிகள் திடீரென பலத்த சத்தத்துடன் பின்வருமாறு (pyridioTIvi. "Bloody fool, this is not an altar; are you worshipping me or are you worshipping yourself? do you think that you can find God by worshipping another?” gol6hing) fa) 35L606).56fs) நாகரீகமற்ற, குழந்தைத் தனமான பேச்சுவழக்கில் சுவாமிகள் பேசுவதுணி டு. அவ்வடியவர்களின் செயல்முறைகளை ஏற்றுக்கொள்ளாத வகையில் தமது கைகளை உயர்த்தியவாறு சுவாமிகள் அவரது இதயத்திற்கு நேராக சுட்டிக் காட்டி,"look!it is here! God is here it is here” 6Tsiploys6flojuGifoTrii. 3,6056.u தான் நற்சிந்தனையில் பின்வருமாறு உபதேசித்தார்.
"...உண்ணுள்ளே தெய்வீகத் தன்மையை உணர். நீயே உனக்குத் தலைவன். நீயே உன்னை நடத்துபவன். நீயே உலகத்திற்குச் சக்கராதிபதி இந்தத் தூய எண்ணத்தை மறந்தால் இறப்புப் பிறப்பாகிய சமுத்திரத்தில் கிடந்து திக்குமுக்குப்படுவாய் எழுந்திரு, விழித்துக்கொள் உன்னை இனியொன்றும் வெற்றியெடுக்க முடியாது. விளக்கு எரிய வேண்டுமாயின் திரியும் எணர்ணெயும் வேண்டும். நீ பிரகாசமடைய வேணடினால் ஓம்தத்சத், என உணர்ச்சியோடு பிரார்த்தனை செய்.”
குருநாதர் செல்லப்பாச் சுவாமிகள் நோய்வாய்ப் பட்டிருந்த காலத்தில் அவரைப் பார்ப்பதற்காக யோக சுவாமிகள் சென்றிருந்தார். ஆனால் செல்லப்பா சுவாமிகளோ, “இங்கு நீ ஏன் வரவேண்டும்? இங்கு பார்ப்பதற்கு என்ன இருக்கின்றது. என்னை உன்னிற்
17

Page 21
காண்" என்று கூறித் திரும்பி விட்டார். இவ்வாறாக ஆசானும் சீடனும் ஆன்ம ஞானிகளாக சுடர்விட்டுப் பிரகாசித்தார்கள்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனத் தமது மெய்ஞ்ஞான உணர்வுகளை எல்லாம் திரட்டி நற்சிந்தனைகளாக நமக்குக் கொடுத்திருக்கிறார் யோக சுவாமிகள்.
சுவாமிகள் தமது அடியவர்கள் இருக்கும் இடமெங்கும் சென்று நல்லுபதேசம் செய்து, அவர்களுடன் தியானத்தில் ஆழ்ந்து, சாதனைகளிலும் போதனைகளிலும் ஈடுபட்டுத் தம் வாழ்நாளை அர்ப்பணித்து 24-03-1964 மகா சமாதி எய்தினார்கள்.
சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள்
குவாய் ஆதீனத்திலிருந்து அனுப்பிய கட்டுரையின் சாராம்சம்.
நன்றி
சிவதொணடன் மலர் குரல் 4 ஒலி 2 *
米 米 米 米 米 米
சிவதொண்டு செய்வார்க்குச் சாந்தம் பொறுமையுண்டு சிவதொண்டு செய்வார்க்குச் திரிகால வுணர்ச்சியுண்டு சிவதொண்டு செய்வார்க்குத் தீயபிணி நோயில்லை சிவதொண்டு செய்வார்கள் தெய்வமே போல்வார்
நற்கிந்தனை
18

யாழ்ப்பாணத்த ஜோதி
1933ம் ஆண்டு கோடை காலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த யூரீமத் சுவாமி விபுலானந்தாஜி மகராஜ் அப்பதவி விலகி மீண்டும் இராமகிருஷ்ண மிஷன் கல்வி அமைப்பிற்குத் தலைவராகப் பதவியேற்க, அப்போது தான் இலங்கை வந்துள்ள போது அவரும் நானும் காலையில் மட்டக்களப்பிலிருந்து கிளம்பி பிய இரண்டு மணி அளவில் மாகோ சந்திப் புகையிரதத் தரிப்பு நிலையத்தில் நின்றுகொண்டிருந்தோம். அனுராதபுரத்திற்குப் போவதற்கு, கொழும்பிலிருந்து வரும் புகையிரதத்தை எதிர்பார்த்திருந்தோம். நாங்கள் இருவரும் நடந்து கொண்டே பல விடயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் திடீரெனச் சுவாமி விபுலானந்தாஜி “அதோ வருகிறார் புகழ்மிக்க யோகர் சுவாமிகள்” என எனக்குக் கூறிய படி ஒரு வயதான சுவாமிகளிடம் விரைந்து சென்றார். மதிப்பிற்குரிய பெரியார் சுவாமிகளிடம் துணிகொண்ட ஒரு சிறு பொட்டலமும் ஒரு புத்தகமும் கையில் இருந்தன. அவ்விடத்தில் இவரைக்கண்ட ஆச்சரியத்தில் மூழ்கி நின்ற சுவாமிகள் முன்னிலையில் சுவாமி விபுலானந்தாஜி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். பின்னர் இருவரும் சம்பாசணையில் இறங்கி விட்டார்கள். அவரது சம்பாசணை அனுராதபுரத்திலிருந்து புகையிரத நிலையத்தில் நாம் இறங்கும்வரை நீடித்தது. அப்பால் சுவாமிகள் யாழ்ப்பாணம் நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தார். இருவரும் உரையாடியபோது இடையிடையே மதிப்புக் குரிய சுவாமிகள் தமிழில் பாடல்களைப்பாடினார். திடீரென அவர் "நீ (சுவாமி விபுலானந்தாஜியை நோக்கி) ஒரு கறுப்புப் பாம்பு, நான் ஒரு சிவப்புப்பாம்பு” என்றார். பாம்பு என்றதன் அர்த்தம் யோகநிலை அதாவது நாம் இருவரும் தெய்வீகத்தை உணருவதற்கு முயன்று நிற்கும் உண்மையான சாதனையாளர். நாம் இதுவரையிலும் மதிப்புக்குரிய பெரியார் யோகாசுவாமிகளது உடலமைப்பையும் சிந்தனைச் செறிவையும் அவதானித்தபடி இருந்தேன். அவரது உடம்பு, சிறப்பாக அவரது
19

Page 22
வெளித் தோல் உத்தரகாணிடநிஷிகேஷ், உத்தரகாசி, ஹரித்துவாரிலுள்ள ஆத்மிக தலைவர்களுள் ஒருவராய் யூரீமத் சுவாமி மதுரதாஸ்ஜியினுடைய சருமத்தை ஒத்ததாக இருப்பதை உணர்ந்தேன். இவரை நான் ஹரித்துவரிலுள்ள கன்கால் எனுமிடத்தில் ஏறத்தாள 44 ஆண்டுகளுக்கு முன்னர் சந்திக்கும் பெரும் பாக்கியத்தைப் பெற்றிருந்தேன். ஆத்மீக சக்தியில் மதிப்பிற்குரிய யோகசுவாமிகள் மிகவும் உன்னதமான உயர் நிலையில் சென்று கொண்டிருப்பவர் போல எனக்குத்தென்பட்டது. அவரது முதல் தரிசனம் எனக்குச் சொல்லமுடியாத ஒர் பதிவினை என் சிரத்தையில் ஏற்படுத்திவிட்டது.
ஒரு பத்தாண்டுகள் இலங்கையில் இருந்துவிட்டு நான் இந்தியாவிற்கு மாற்றலாகிச் சென்றுவிட்டேன். மீண்டும் 1951ல் நான் இலங்கை செல்ல நேர்ந்தது. இம்முறை இலங்கையில் நிற்கும் காலம் மிகக் குறுகியதாக இருந்தது. எமது மிஷன் சேவைக்காக நான் இடையிடையே யாழ்ப்பாணம் போகவேண்டி நேர்ந்தது. இலங்கையைவிட்டுப் போவதற்கு முன்னதாகச் சில அடியார்களுடன் நான் இரணடாவது முறையாக யாழ்ப்பாணம் சென்று இப்பெரியாரைக்கண்டு, அவருக்குப் போய்வாறேன் எனக்கூறி விடைபெறவும், உத்தர கண்ட பிரதேசத்திலே தவநிலையை மேற்கொள்ள நான் சித்தமாகி இருந்ததால் அவரிடம் ஆசி மொழி பெறவுமாக யாழ்ப்பாணம் சென்றேன். அடியார்களும் நானும் அவரது ஆச்சிரமக்குடிசையில் இருந்தோம். சுவாமிகள் சிலவேளை ஆங்கிலத்திலும் சில வேளை தமிழிலும் பேசிக்கொண்டே இருந்தார். நான் அவரிடம் எதுவும் வினாவவில்லை. ஆனால் விசேடமாக எனக்குரியதானவற்றையெல்லாம் நான் நன்கு உணர்ந்துகொண்டேன். அவர் கூறியவற்றில் பூரணமான திருப்தி அடைந்தவராக நான் கொழும்பு வந்து சேர்ந்தேன். தொலைவிலிருந்து கூட ஒருவரது சிந்தனையைச் சுவாமிகள் அறிந்து கொள்கிறார் என்பது சொல்லாமலேயே விளங்கும்.
20

கொழும்பில் புதிதாக அமைக்கப்பட்ட சர்வதேச கலாசார நிலையத்தின் திறப்பு விழாலிற்கு 1962ஆம் ஆண்டு நான் சென்றிருந்தேன். 1982ஆம் ஆண்டு யூன் மாதம் 16ஆம் நாள் சனிக்கிழமை சுவாமி பிரேமாத்மானந்தாஜியும் நானும் காலையில் கொழும்பிலிருந்து கிளம்பி அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்தோம். வடஇலங்கையில் குறுகிய நாட்கள் நின்றபோது சிவதொண்டன் நிலையத்தில் தங்கியிருந்தோம். அன்று பின்னேரம் சாப்பாட்டை முடித்துக்கொண்டு இருவரும் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது மதிப்பிற்குரிய யோகர்சுவாமிகள் அங்கு வந்திருப்பதாகவும் எம்மைச் சந்திப்பதற்காக வெளியே வாகனத்தில் இருக்கின்றார் என்ற செய்தி எமக்குக் கிட்டியது. நாமிருவரும் அவரைச் சந்திக்க வெளியே வந்தோம். ஒரு சில நிமிட சம்பாசணையின் பின்னர் எம்மை வாகனத்திற்குள் ஏறும்படி பணித்து, அவரது சிஷ்யராக இருந்த மேன்மை தங்கிய திரு. ராம்ஸ்போதம் (பின்னர் பூரீமத்சாந்தசுவாமி எனக்குருப்பட்டம் பெற்றவர், இலங்கையின் இளைப்பாறிய ஆளுநர் நாயகம் சோல்பரி பிரபுவின் மகன்) சுவாமிகளின் வழிகாட்டலின்படி தவஞ் செய்து கொண்டிருக்கும் இடத்திற்கு எம்மை அழைத்துச் சென்றார். அங்கு சிறிது வேளை தங்கிப் பின்னர் நாமெல்லோரும் சுவாமிகளது ஆச்சிரமத்தை அடைந்தோம். மாலை வரை அவர் ஆத்மீகத்தைபற்றி உபந்யாசம் செய்தார். மறுநாள் அதாவது 1982 யூன் 17சனிக்கிழமை மாலை நாம் மீண்டும் அவரது ஆச்சிரமத்திற்குச் சென்றோம். ஒரு மணித்தியாலம் வரை அவருடன் அங்கிருந்தோம். அதுவே எனது இறுதிச்சந்திப்பு, அதன்பின்னர் நான் அவரைக் காணவில்லை. நான் அவரிடமிருந்து பிரியாவிடை கோரும் போது சுவாமிகள் என்னை நோக்கித் திரும்பியவாறு, நான் எதுவுமே கேளாதிருந்தபோது "நீ ஒரு பணக்காரன், நீ ஒரு பணக்காரன்” என்று கூறினார். “எனக்கு உலகியற் செல்வம் வேண்டாம்” என்றேன். ஆனால் அவர் எதுவித பதிலும் தராதபடி மெளனமாக இருந்தார். அவரது வாசகத்திலிருந்து உட்பொருளை என்னால் விளங்கிக்
21

Page 23
கொள்ள முடிந்தது. இந்தியாவில் எங்கோ ஒரு இடத்தில் எனக்குண்டான சில அனுபவங்கள் பற்றியதாகும்.
1964ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24ஆம் திகதி அவரது மறைவினால் யாழ் நங்கை மிகப்பெரிய ஞானியையும், என்னே! நண்பனையும், தத்துவ ஞானியையும், வழிகாட்டியையும் இழந்து விட்டாள். பல ஆண்டுகளாக இத்தீவில் யாழ் தமிழர்கள், சிங்கப்பூர், மலேசியா நாட்டுத் தமிழர்கள் அனைவரும் இப்பெரியாரிடமிருந்து நிறைந்த உற்சாகத்தைப் பெற்றுள்ளார்கள். அவருடைய அமைதியான ஆறுதல் வார்த்தைகளால், கஷ்டம், இன்னல் உற்றவேளை சாந்த நிலையைப் பெற்றுள்ளார்கள். அங்கலாய்ப்பும் இருண்ட நிலையும் ஏற்பட்ட போது ஒளியையும் ஞான அறிவையும் பெற்றுனர். சீர உடம்புடன் அவர் இங்கு இல்லையானாலும் அவரது ஆத்மா எதிர்காலச் சந்ததியினையும் தன்வயப்படுத்தி உற்சாக மூட்டும்,
அவரது காலடியிலிருக்கும் பாக்கியம் பெற்றவர்களும், அவருடன் தொடர்பு கொண்டவர்களும் அவரது இனிய அனுபவங்களை எழுத்தில் எழுதி வைப்பார்கள் எனப் பெரிதும் நாம் விழைகின்றோம். அப்போதுதான் எதிர்காலத்தில் தோன்றுபவர்கள் இந்த உயர்ந்த ஆத்மீக அருட்டலின் தாற்பரியத்தையும் பண்புமிக்க உபதேசங்களையும், அறிவுரைகளையும் அறிந்து, பெரிதும் பயனடைவார்கள்.
பகவான் யூரீ இராமகிருஷ்ணர் கூறுவதாவது "சர்வ பூதே பிரக்ம தர்ஷன ஹோலோ ஸேஸ ஸாதனா- சகல ஜீவன்களிலும் பிரம்மத்தைக் காண்பதே சாதனையின் முடிவு. எமக்கு முன்னால் 1954ல் அவர் கூறியது, “கடவுள் உன்னுள் இருக்கிறார், கடவுள் அவனுள் இருக்கிறார், அவளுள் இருக்கிறார், ஆகவே கடவுளை எல்லா ஜீவன்களிலும் காண். வேறு எல்லா எண்ணங்களையும் அகற்றிவிடு” எனும் போது அவர் எத்தகைய வார்ப்பில்
22

உருவாக்கப்பட்டவர் என்பதை முழுமையாக என்னால் உணர முடிந்தது.
நான் இலங்கைத்தீவில் இருந்த போது பல மதத்தவர்கள், பதவியிலிருந்தவர்கள், வாழ்க்கையில் பல்வேறு தரப்பட்டவர்கள் என, எண்ணிக்கையற்ற மக்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருந்தன. சுவாமிகள் இலங்கையின் பெரிய ஆத்மீகப் பெரியார்களுள் ஒருவராக எனக்குத்தென்பட்டார். அவரை யாழ்ப்பாணத்து ஒளி எனவும் யாழ்ப்பாணத்து ஜோதி எனவும் அழைக்கலாம். ஆத்மீக ஞானத்தையும் அன்பையும் அடையவேண்டுமென அவாவுற்றிருக்கும் ஆத்மாக்களை ஒளியூட்டுவதற்காக அவரது அருள் பிரவாகம் நீடித்து நிலைப்பதாக.
சுவாமி அசங்கானந்தா
பூர இராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமம்
பேலுர் வடக்கு கல்கத்தா
நன்றி சிவதொண்டன் சிறப்பு மலர் 29-1965, ஆங்கில மொழி வெளியீடு
62d A62/uiztly
米 水 来 米 米 米
ஒருவ னாலே உலக முதித்தது ஒருவ னாலே உலகம் நிலைத்தது
ஒருவ னாலே உலகம் ஒடுங்கிடும் ஒருவ னேயென் உயிர்த்துணை யாமே
நற்கிந்தனை
23

Page 24
நான் சந்தித்த மாபெரும் ஆத்மீகத் தலைவர்
இலண்டன் பயணமாவதற்கு முன்தினம் என்னை ஆசீர்வதித்த இந்தப் பெரியாரை நான் பெளத்தன் என்ற தோரணையில் எண்ணும் போது சிரத்தை பற்றிய புத்தபகவானின் உபதேசங்களே எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றன. எனது மாபெரும் குருவாகிய யோகர் சுவாமிகளைக் கண்டு உரையாட வேண்டும் என்ற எனது நெடுநாளைய அவா கிட்டத் தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்பாகத் தான் நிறைவேறியது. எனது யாழ்ப்பாணத்துச் சட்டப்படிப்பு மாணவர்கள் மூலம் நான் இவரைப் பற்றிக் கேள்விப் பட்ட காலம் முதல் இப் பெரியாரது தரிசனத்தைக் காண்பதற்காக யாழ்ப்பாணம் போக வேண்டும் என்று எண்ணினேன்.
நான் அவரைப் பார்ப்பதற்காக முதன் முறை சென்ற போது அவரது இருப்பிடம் பற்றிய விபரம் எனக்குத் தெரியாது, நான் சென்ற வழியில் சந்தித்த பலரை அவரது ஆச்சிரமம் எங்குள்ளது என்று விசாரித்துச் சென்றேன். கடைசியில் அப் பெரிய முனிவர் வாழும் இடமாகிய கொழும்புத் துறையை அடைந்தேன். அவர் முற்றத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்து "திகிரி திஸ்ஸாநாயக்க மே வறேங் (இங்கே வாy என்று சிங்களத்தில் அழைத்தார். எனக்குச் சிறிது அச்சமாக இருந்தது. என்றாலும் உள்ளே செல்வதற்கு தயங்கிக் கொள்ளவில்லை. நான் அவரை வணங்கிவிட்டு ஒரு புறமாக உட்கார்ந்தேன். "சும்மா இரு” என்றார். சாதாரண கருத்தில் சாவகாசமாக இருத்தல் ஆகும். இதன் கருத்து இடையறாத “சிரத்தையுடன்” இருத்தல் ஆகும். மேலும் அவர் என்னை உள்ளே (அகத்துள்) பார்க்கும் படி பணித்தார். சுவாமிகள் அடிக்கடி கூறுவார் “இறைவனின் பரலோகம் உனக்குள்ளேயே இருக்கிறது” என்று.
24

எனது குருவான யோகசுவாமிகளை, உண்மையாக, ஆத்மீகத்தின் கோபுரமாக விளங்குபவருக்கு, எனது மரியாதையைச் சமர்ப்பிப்பதற்காக, நான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் யாழ்ப்பாணம் போவதென்ற உறுதி கொண்டிருந்தேன். அவரது வாழ்க்கை அத்துடன் மிகவும் எளிமை வாய்ந்ததாகவும் இருந்தது. அவரிடம் மிகவும் உன்னதமான பிறர் உணர்வுகளைக் கண்டறியும் சக்தி இருந்தது. ஏனெனில் தன்னிடம் வருபவர்கள் எந்த நோக்குடன் வருகிறார்கள் என்பதை அவர்களுக்கு அறிய வைத்து, அவர்களைத் திணறவைக்கச் செய்துள்ளார். உடற்துன்பம் அடைந்தவர்களானாலென்ன, கவலையால் பாதிக்கப்பட்டோரானா லென்ன எல்லோருக்கும், ஆறுதல் மொழி அத்துடன் ஆசியும் . அவரிடம் உண டு. திரும் புகையில் அனைவரும் தெளிந்தவர்களாகவே காணப்படுவார்கள்.
அவர் மக்களிடம் அன்பாக நடந்து கொள்வது போலவே சில வேளைகளில் சிலருக்கு அவர் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடன் மிகவும் கடிந்து பேசியதும் உண்டு. அவர் மக்களை அன்பாகவும் அதே வேளை கடிந்தும் அவர்களுக்கு அறிவை ஊட்டியுள்ளார். இத்தகைய தொடர்புகள் தான் எமக்கு வலுவைத் தருகின்றன. சுவாமிகள் ஞானப் பாதையில் மிக உயர் நிலையை அடைந்துள்ளார். அந்த உயர் நிலையின் உயரம் மிகக் கீழே நிற்கும் என்னால் கூறிவிட முடியாது. இது வெகு தொலைவில் நிற்கும் மலை உச்சியின் உயரத்தைக் கணிக்க முற்படுவது போலாகும். யோகசுவாமிகள் எனது வாழ்க்கைப் பாங்கினை வெகுவாக மாற்றிவிட்டார்.
அவர் உயிர்நீத்து மகா சமாதிநிலையை அடைந்த அன்று நான் அவரைக் கனவில் கண்டேன். உண்மையில் அவருடன் எனக்கு ஒரு நெருங்கிய இணைப்பு காணப்பட்டது. அவர் தனது
25

Page 25
பெளதீக உடலை நீத்த போதும் அவர் எம்முடனேயே இருக்கிறார். அவர் நிச்சயம் எமக்கு அருள் புரிவார். அவர் காட்டிய வழியே பின் தொடர்ந்து செல்ல எமக்குச் சக்தியிருப்பதாக!
பூனி திக்கிரி பணடாதிளப்ளநாயக்க காரியதரிசி இலண்டன் புத்தவிகாரை
நன்றி சிவத்தொண்டன் சிறப்பு மலர் 29- 1965 ஆங்கில மொழி வெளியீடு
GlotA62 ruizzly
米 米 米 米 米 米
நாம் கடவுளை உள்ளத்தில் வளர்க்கிறோம் நாம் அவருடைய தாய். நமக்கு மவருக்குமொரு குறைவில்லை நம்மை அவர் பிரிய முடியாது. முழுவதும் உண்மை.
நற்கிந்தனை
26

ஓம் சற்குரு பரமாத்மனே நம:
கண்டேன் யோகர்பிரான் கழலடிகள் கொட்டடியில் கண்டேன் கருணைபொழி களிபெருகு விழிமலர்கள் கண்டேன் கனல்பெருகு கவலையழி திருமுகமும் கண்டேன் குருஉருவம் கவலையெலாம் கழிந்தனவே.
கன்னிப் பருவமதில் கருத்துத் தெளிவு தந்தான் கல்விக்கணிகலனாய் காவல் திறமும் வைத்தான் எண்ணில் பேராசை இல்லாமல் ஆக்கி வைத்தான் கண்ணில் படுவதெல்லாம் கடவுள் காட்சி என்றான.
கதலிப் பழம்தந்து கவிதைக் கரு வைத்தான் புவியில் பொய்வாழ்வு போயகல விதிசெய்தான். நாமொன்றும் அறியோமென்றான் நல்லதே உலகமென்றான் எப்பவோ முடிந்ததென்றான் முழுதும் உண்மையென்றான்
பாசப்படுகுழியில் மாளாமே மீட்டு வைத்தான் நேசப்பெருக்கோடு நேர்வழியே நாடவிட்டான் தாசர்தமர் தொண்டடிமை தந்தென்னை உய்யக்கொண்டான் பேசவொண்ணாப் பெரும்புகழோன் பெம்மான் சிவயோகன்.
நீவேறு நான்வேறு தோற்றங்கள் இல்லையென்றான் காலமே சொல்லுமென்றான் கசாப்புக்கடைக் காரனென்றான் விலைமதிப்புச் செய்வேனென்றான் வெளியிலே சொல்லேன் என்றான் அண்ணலவன் சொன்னதெல்லாம் அன்புதரு சுகமன்றோ.
27

Page 26
சமஸ்கிருதம் படி என்றான் சகலநலன் கூடுமென்றான் வெள்ளைச் சீலைக்குப் பூப்போட்ட மாதிரி என்றான் சும்மா இருப்பதுவே சுத்தகக மார்க்கமென்றான் இம்மாநிலந்தாங்கும் எழிலார் குருவடிவே யோககுரு.
ஒளவையைப் போல் எழுதென்றான் அதுவே உன் வழி என்றான் பொல்லாப்பொன்றும் இல்லை புவிவாழ்வு பெரும் பரிசென்றான் பழுதநியாப் பக்திகொண்டு பாரில் உறவாடச் செய்தான் எழுதரிய பெருஞ்செல்வன் எங்கள் யோககுரு.
இல்லறத்தை நல்லறமாய் இயற்றுவதே முறையென்றான் இல்லறத்தில் பயிலுவது சிவயோகத் தவம் என்றான் தொல்லைகள் தீர்ப்பதற்குத் தொப்பையப்பன் துணை என்றான் எல்லையிலாப் பெருநிதியே தொண்டும் துறவும் என்றான்.
எட்டாதோ ஞானக்கனி என்றேங்கி இருக்கையில் கிட்டேதான் கிடக்குதென்றான் கிளரும் வழிதேடல் என்றான் கட்டோடு கட்டாகக் கிடக்கும் கருமலை அறுத்தான் விட்டோடும் விதிமுடித்தான் வீட்டின்பம் கூடுமென்றான்.
என்னப்பன் எங்கள் குரு எங்கும் நிறைந்திருப்பன் எண்ணப் பெருக்கறுப்பன் இதயம் உருக வைப்பன் பண்ணப் பெருந்தொழில்கள் பார்த்துப் பெருக்கிடுவன் விண்ணமுதம் துய்த்துநிற்கும் வீரனே யோககுரு.
செல்லப்பன் தந்த செல்வம் சீர்பெருக்க வந்த தெய்வம் அல்லற்படுமெம்மை எடுத்தணைக்க வந்த அப்பன் சொல்லில் வடிக்கவொண்ணாத் திருவெல்லாம் தந்த வள்ளல் அல்லும் பகலும் எம்மைக் காத்து நிற்கும் குருவடிவம்.
28

யோககுரு தரிசனத்தால் யோகமெலாம் சேர்ந்ததுண்டு மாயவலை அறுந்ததுண்டு மாதவமும் பலித்ததுண்டு போகவாழ்வு போனதுண்டு யோகவாழ்வு வந்ததுண்டு காயநிலை கண்டதுண்டு காரி:சித்தி பெற்றதுண்டு.
சிவதொண்டன் சிவதொண்டு சீர்பெருகி நிலைக்கட்டும் அவமெல்லாம் அழியட்டும் அருட்சோதி பரவட்டும் அருள்ஞானம் உதிக்கட்டும் அழகுதமிழ் உயரட்டும் குரு அருள் குவியலிலே குவலயம் திழைக்கட்டும்.
திக்கெட்டும் பரவட்டும் குரு யோகர் உபதேசம் இக்கட்டெலாம் நீங்கித்தமிழர் இன்புற்று வாழட்டும் பக்கபலம் குரு பக்தி பரமனருள் பரிமளங்கள் பெருகட்டும் மிக்க குரு பரம்பரையின் மோனமொழி முழங்கட்டும்.
படலையெலாம் சுடலையான பழிபாவம் தொலையட்டும் விடலைகளின் தியாகமெலாம் மேதினியில் மிளிரட்டும் தொடருமின்னல் தொலையட்டும் தூயநெறி துலங்கட்டும் கடவுளருட் கொடைகளெலாம் காசினியில் நிறையட்டும்.
அன்புருவம் அவனுருவம் அவனியெலாம் தொழுமுருவம் என்புருகும் இன்னுருவம் இங்கிதம்சேர் எழிலுருவம் துன்பறுக்கும் துணையுருவம் தூயமனம் நிறையுருவம் மன்பதையின் மதியுருவம் மாண்புமிகு தவ உருவம்.
அந்திரட்டி செய்துவிட்டான் அறிவிலிகள் பரம்பரைக்கு அந்தரங்கச் சேதி சொன்னான் அன்புருகும் அறிஞர்கட்கு சுந்தரத் தமிழ் தந்தான் திருமந்திரத் திறன் விளக்கி எந்தைபிரான் யோககுரு என்றுமெங்கள் துணையானான்.
29

Page 27
யோககுரு பதம்போற்றி யோகர் பரம்பரை போற்றி யோககுரு செல்லப்ப சுவாமி திருத்தாள் போற்றி யோகர்தரு நற்சிந்தனை லோகமெலாம் பரப்புமன்பர் சேவைநலத் திறம் போற்றி போற்றுதும் எம் பரனடியே.
ஓம் தத் சத்
திருமதி செல்வம் கல்யாணசுந்தரம்
ck Xe X >k >k xk
தெய்வத்தை நம்பு. முழுமனத் தோடு நம் பு: உலகில் உனக்கினியதெனத் தோன்றும் எவற்றிலும் இனியதாக நினை. அதைவிட வேறில்லை என்று நினை. இருக்கும் போதும் நிற்கும்போதும், நடக்கும் போதும், கிடக்கும் போதும் நினை. உனது நரம்பிலும் தசையிலும் இரத்தத்திலுந் தெய்வமென்னும் நினைவே நிறைவதாக, நானில்லை, கடவுளே இருக்கிறாரென எண்ணு கடவுளைக் கும்பிடுதலே வாழ்வின் இலக்காக வைத்துக்கொள். எவன் எதை நினைக்கிறானோ அவன் அதுவாகிறான். கடவுளை உனது உள்ளத்தில் வைத்து வளர்ப்பாயாக. எல்லாம் அவருடைய செலாகுக. ஈற்றில் எல்லாம் அவனாகவே காணப்படும்.
சுவாமிகள் அருள் மொழி
30

புரியாத புதிராய் தோன்றாத் தணையாய் நின்ற சக்தி
இந்த ஆத்மாவிற்குச் (ஆத்மா தங்கிய உடலுக்கு) சூட்டப்பட்ட பெயர் பூரீமதி சீமாட்டி தேவி. இந்த ஆத்மா உலகிற்கு வர ஆயத்தமான போது அதற்கும் சுவாமிகளுக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? அதிசயம் ஆனால் உண்மை. எனது பெற்றோர், சுவாமிகளால் அன்பாக “வேலா” என்றும் "தெய்வம்” என்றும் அழைக்கப்படும் திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகள் பேராதனையில் இருந்தபோது சுவாமிகளது தொடர்பு ஏற்பட்டது. சுவாமிகள் அடிக்கடி பேராதனைக்கு வந்து போவதுண்டு. அத்தகைய ஒரு வருகையின் போது தான் 1931ல் அவர் “சீமாட்டி” வரப்போறாள் என்று கூறிச் சென்றார். தொடர்ந்துதான் என் தாய் கருவுற்றாள். ஏலவே, இரு ஆணி குழந்தைகளை இழந்து, இரு பெணிகளைப் பெற்றவர்களுக்கு இது ஆண்குழந்தையாக வரவேண்டும் என்ற ஆவல் இருந்த போதும், சுவாமிகள் கூறியபடி பெண்ணாகப் பிறந்தேன். அதனால் இவ்வுடம்பு அப் பெயரைப்பெற்றது. ஓரிரு மாதங்களில் சுவாமி வந்த போது அவர் பாதங்களில் வைக்கப்பட்டேன். அவர் தன்னிருகரங்களாலும் தூக்கி மடியில் வைத்து சீமாட்டி வந்துவிட்டாயா?” என்று கூறி மேலும் கீழுமாகத் தூக்கி ஆட்டிவிட்டுக் கொடுத்தாராம். மேலும் கீழுமாகவே இவ்வோடம் வாழ்க்கை நதியில் சென்றது.
சுவாமிகளுடன் முதற் தொடர்பு என, எனக்கு ஞாபகமிருப்பது முதன் முதல் புகைப்படமெடுத்த வரலாறாகும். சிறு வயதில் மிகத் துடியாட்டமாக இருந்ததால் ஒருமுறை சுவாமிகள் வருகை தந்த போது நான் அழுதுகொண்டு அமைதியற்ற நிலையில் இருந்தேன். அப்போது வயது ஆறு.
31 .

Page 28
1937 இருக்கும். அவ்வமைதியின்மைக்குக் காரணம் யாதென்று அவர் தகப்பனாரைக் கேட்டபோது கோபம் மேலிடவே மெளனமாக இருந்தார் தந்தை. ஆனால் நானோ மிக விரைவாகவும் உறுதியாகவும் உரிமையோடும் அவரிடம் சென்று என் தந்தையார் குடும்பத்தில் எல்லோரையும் புகைப்படமெடுத்து வைத்திருக்கிறார். என்னை மட்டும் எடுக்கவில்லை என்று மூட்டிவைத்தேன். காரணம் என்ன என்று சுவாமி கேட்டபோது கூசாமலே நான் "நல்ல சட்டை இல்லை” என்று முணுங் கினேன். அவர் எனினை அமைதியாக்கிவிட்டு வெளியே போய்விட்டார். அவர் போனபின் தந்தையார் தனது கோபத்தையும் வெறுப்பையும் வார்த்தைகளில் முடித்துவிட்டார். இரு நாட்களின் பின்னர் என் தந்தையாரைச் சுவாமிகள் அழைத்து என்னைப்புகைப்படம் எடுக்கும் படி உத்தரவிட்டு எனது கையில் ஒரு பொட்டலத்தையும் தந்தார். என்னே அவர் கருணை! இன்று நினைத்தாலும் கண்கள் பனித்து நீர் உகுக்கின்றன. பட்டு றோசா வர்ணத்தில் சதுரம் சதுரமாக பொன் கம்பி ஓடிய பட்டுச் சட்டை ஒன்றும், ஒலிவ் பச்சையில் வட்டம் வட்டமாக தங்கப் பட்டுநூல் இழையோடிய ஒரு பட்டுச்சட்டையும் இருந்தன.
1938 இல் எனக்கு ஏடு தொடக்க வேண்டும் என்று என் பெற்றோர் என்னைக் கொழும்புத்துறைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் ஆச்சிரமத்தில் சுவாமிகளில்லை. மிக்க கவலையுடன் வினாவிய போது அவர் நண்பர் சண்முகம் வீட்டிலுள்ளார் எனக் கூறினார்கள். உடனே அங்கு சென்றோம். அப்பொழுது தான் காலைப் போசனத்திற்காக வாழையிலையில் இடியப்பமும் தாழிதச் சொதியும் பரிமாறப்பட்டு, சுவாமிகள் ஆசனத்தில் அமரப்போகும் வேளை எங்களைக் கண்டதும் நோக்கம் விளங்கிய அவர் “வாடி வா சீமாட்டி! என்ன படிக்க வந்தாயா வா வா” என்று என்னைத் தனதருகில் அழைத்தார். சின்னப்பிள்ளை பயமறியா நிலை. பக்கத்தில்
32

ஓடிப்போய் நின்றேன். ஐயாவுடன் ஏதேதோ பேசினார். ஆனால் அவர் கை இடியப்பத்தை நன்கு குழைத்தபடி இருந்தது. “சரி நாங்கள் படிப்பம்” என்று எனது வலது கையைப் பிடித்து விரல்களை விரித்து அந்தச் சின்ன உள்ளங்கையில் ஒரு சிறு உருளை இடியப்பத்தை வைத்து “சொல்லடி ‘அ’னா” என்றார். நான் சொன்னேன். “சாப்பிடு” என்றார். ஐயா அம்மாவையும் சுவாமியையும் பார்த்தபோது மூவருமே தலையசைத்தார்கள். வாயில் போட்டு லபக் என்று விழுங்கிவிட்டேன். (ஆ என்ன சுவை இன்றும் சொதி வைக்கிறேன் ஆனால் ஏனோ அத்தகைய சுவையை இன்றும் பெறவில்லை.) அடுத்த சிறு உருணி டையை உள்ளங்கையில் வைத்தார். “சொல்லு ஒன்றுமொன்றும் இரண்டு.” சொன்னேன். “சாப்பிடு” என்றார். சந்தோஷத்தோடு வாயில் போட்டேன். எல்லோரும் சிரிக்கும் சப்தமும் கேட்டது. “சாப்பிட்டியா?” மூன்றாவது உருண்டை வைக்கப்பட்டது. என்னை அறியாமலே நானும் சிரித்துத் துள்ளிவிட்டேன். ‘வஞ்சகம் செய்யக்கூடாது. வெள்ளைக்காரன் பாஷையும் படிக்க வேண்டும் A,B,C" என்றார். சொன்னேன். 'ஆ இனிப் போதும்” என்றுகூறித் தான் சாப்பிடத் தொடங்கினார். இது மறக்கமுடியாத ஒரு சம்பவம்.
இதன் பின்னர் சுவாமி கண்டிக்கு அடிக்கடி வருவார், போவார். தங்கியிருக்கும் நாட்களில் எனது சகோதரிகளைக் கொண்டு சிவதொண்டன் பத்திரிகைக்குப் பாட்டு, விடயங்கள் எழுதிவிப்பார். கலாநிலைய வெளியீட்டிற்குக் குன்றுடையான் சரித்திரம் எழுதிவிப்பார். வாசிக்கச் சொல்லுவார். எனக்கு என் பாடங்களை மேற்பார்வை செய்வார். சுவாமிகள் பெரும்பாலும் சாய்மணை நாற்காலியில் சரிந்து படுத்திருப்பார். அவரின் உடம்பு சற்று நீர் கொண்ட மேனி. ஒவ்வொரு பிரம்பு இழைகளுக்கு மத்தியிலுள்ள வட்டவடிவமான ஓட்டையினூடாக அவர் பின் முதுகுச் சதை பப்படம் போல் பொங்கிப் பொங்கித் தெரியும். நானும் விளையாட யாருமில்லாததால்
33

Page 29
மெதுவாக ஒசைப்படாது சுவாமியின் சாய்மணை நாற்காலிக்குப் பின்புறம் போயிருந்து ஒவ்வொரு ஒட்டையிலிருந்தும் வெளிக்கிளம்பி நிற்கும் சதையை விரலால் உள்ளமர்த்தி விளையாடுவேன். அவர் யோக நித்திரையிலிருப்பது எனக்குத் தெரியாது. சில வேளைகளில் “எடியே ஒடடி ஒடடி” என்று விரட்டுவார். அவருக்கு என் விளையாட்டு வேதனையாகவும் குழப்பமாகவும் இருந்துள்ளது. இவரது சத்தத்தைக் கேட்டு எனது தகப்பனார் வந்து என்னை இழுத்துக் கொண்டுபோய் நல்ல அடியும் ஏச்சும் தருவார். அப்பொழுது ஒன்றும் உணரும் பக்குவத்தில் நான் இல்லை. ஆனால் பின்னர் வாழ்வில் ஒவ்வொரு மனத்தாக்கல், துன்பம், வேதனை இடையிடும் பொழுதெல்லாம் இவையனைத்தும் நான் அந்தப் பெரியாரது அமைதியைக் குலைத்ததற்காக எனக்கு வரும் தண்டனைகளா? என எண்ணி மனம் மிக வெதும்புவதுண்டு. ஆனால் சுவாமி எவ்வேளையும் கோபித்துத் தள்ளியது கிடையாது.
எனக்கு ஏடுதொடக்கிய போது சுவாமி எனது தந்தைக்குக் கூறியது “வேலுப்பிள்ளை உன்னிடம் கடைசி செப்புக்காசு இருக்கும்வரை இவளைப் படிப்பித்துப் போடு” என்பதாகும். இதனால் தகப்பனார் எனது கல்வியில் மிகக் கவனமெடுத்தார். எனது விளையாட்டு வேளைகளெல்லாம் புராணங்கள், வரலாறுகள் என்று வாசிக்கும் வேளையாகும் போது தகப்பனாரில் ஒருவித எரிச்சல் கோபம் வெறுப்பு ஏற்பட்டது. ஆனால் அவையெல்லாம் எனது பிற்கால வாழ்க்கைக்கு எத்தனை துணை புரிந்ததென நினைக்கும் போது கவலையாக இருக்கிறது. அவரைத் தேவையில்லாது வெறுத்துள்ளேன்.
1943இல் நான் பாடசாலையில் ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்தோம். சுவாமிகள் உடுவில் வீட்டிற்கும் அடிக்கடி வந்து தங்கிப் போவார்.
34

அப்போது வீட்டில் ஆடுகள் மாடுகள் பட்டியில் நின்றன. சுவாமிக்கு அவற்றுடன் உரையாடுவது ஒரு பொழுதுபோக்கு. பனையோலை வெட்டிவந்து விட்டால் எல்லோருடனும் கூடியிருந்து ஒலை கிழிப்பார். "சும்மா இருந்தால் சோறாகுமா? வாடா சுப்பா காலாட்ட” என்று சொல்லி நாட்டுப்பாடல்கள், தான் இயற்றிய நற்சிந்தனைப் பாடல்கள் பாடி ஒலை கிழிப்பார். வண்டில் விட்டு வந்தவரும் சேர்ந்திருந்து ஒலை வாருவார்கள். அவர் கையால் கிழித்த ஒலைகளை மென்று, தின்ன அந்தப் பசுக்கள் ஆடுகள் கொடுத்துவைத்தவை.
இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் தான் நாமும் கொழும்பிற்குப் புறப்பட ஆயத்தமாகி இருந்தோம். சுவாமி வந்தார். "கொழும்புப் பயணம் எத்தனை நாள்?” என்றார். ஒரு கிழமை என்று அறிந்ததும் நீங்கள் வரும்வரை நான் வீட்டிற்குக் காவற்காரன் என்று சொல்லி சாய்மணையில் இருந்துவிட்டார். “எடுத்த பயணத்தை மேற்கொள்ளலாம்” என்று ஆணை பிறந்தது. என்னை அழைத்தார். “ஏன் கொழும்புக்குப் போகிறாய்?" என்று கேட்டார். நான் கொழும்பில் மிருகக்காட்சிச்சாலை, நூதனசாலை, துறைமுகம் இவற்றைப்பார்க்கப் போவதாகக் கூறினேன். "நீ எவ்வளவு காசு வைத்திருக்கிறாய்?” என்றார். பெற்றோர் எமக்குக் கையில் பணம் கொடுக்கும் வழக்கமில்லை. நான் கையை விரித்து இல்லை என்று தலையாட்டினேன். கருணைக்கடலின் அன்பு தான் என்னே! மடியை விரித்தார். ஒரு ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய புத்தம் புதிய 25 ரூபாய் பெறுமதியான புத்தகக் கட்டு ஒன்று எடுத்து என்னிடம் நீட்டினார். “இந்தா இதைக் கொண்டுபோய் செலவு செய்” என் கண்கள் குளமாகின. அக்காலத்து இருபத்தைந்து ரூபாய் எத்தனை பெறுமதி வாய்ந்தது. அம்மா அதை என்னிடமிருந்து பெற்றுப் பெட்டிக்குள் பூட்டி வைத்தா. அதுவே எனது பெயரில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட சேமிப்புப் புத்தகத்தின் முதலீடாக அமைந்தது.
35

Page 30
எங்கள் வீட்டுத் தலைவாசலில் , சுவாமிகளது சாய்மணையருகில் இருந்த மேசைமேல் ஒரு பேழை இருந்தது. அழகான தாமரைத் தடாகம் அன்னம், பூ, பூமொட்டுக்கள் இவையடங்கிய புடைப்பு அலங்காரம் கொண்ட பேழை. இதற்குள் ஒரு மண்ணினால் செய்து, வர்ணம் பூசப்பட்ட பிள்ளையார் சிலை இருந்தது. இதற்குத் தினமும் பூ, பூமாலை சூட்டுவோம், சாம்பிராணிக் குச்சியும் கொழுத்துவோம். இடையிடையே பட்டுச் சாத்துவோம். சுவாமிக்கு இப்பிள்ளையாரில் ஒரு தனி விருப்பம். வரும்போதெல்லாம் அவருக்குப் பாட்டுப் பாடுவார், கதைப்பார்.
சுவாமிகள் வந்து தங்கியிருந்த போது ஒரு நாள் என் சிறிய தாயார் (அப்பொழுது கர்ப்பிணியாக இருந்தார்) சுவாமியை வணங்கி நின்றார். சுவாமிகள்:-
வேத நாயகர யோக நாயகா ஞான நாயகா லோக நாயகா
என்ற பாட்டைப் பாடினார். பின்னர் “என்ன குறைபட்டுக் கொண்டிருக்கின்றாய்? இந்தா பிடி” எனக்கூறி ஒரு ரூபாய் குத்தியை அவர் நின்ற இடத்திற்கு எறிந்தார். சின்னம்மா பக்குவமாக ஏந்திக் கொண்டார். தனது நகைப் பெட்டிக்குள் பவுத்திரமாக வைத்தார் காலம் ஓடியது. எனது சிறிய தாயார் படிப் படியாக உயர்ந்து இன்று சீரும் சிறப்பும் மிக்க கோடீஸ்வரியாகத் திகழ்கின்றார். ஆனால் எனக்கு எப்பொழுதும் ஒரு சலனம் ஏற்படுவதுண்டு. ஒரு ரூபாய் குத்தி பெற்றவர் கோடீஸ்வரி, இருபத்தைந்துரூபாய் பெற்ற நான், ஏன் பெயரளவில் மட்டும் சீமாட்டி? ஏன் எனது கையில் செல்வம் நிற்பதில்லை? இதைப் பலரிடமும் கேட்ட போது ஒருவரது மறுமொழி மட்டும் எனக்கு நம்பத் தக்கதாக இருக்கிறது. சுவாமி ஒரு ரூபாவை இந்தா என்று கொடுத்தார். அதைச் சேமிக்கும்
36

நோக்கம். இருபத்தைந்து ரூபாவைச் செலவு செய் என்றுதானே தந்தார். இதனால் உமக்குச் செலவு தான் அதிகம் செலவழி என்பதே கருத்து. உண்மை. இருபத்தைந்து போல் எத்தனையோ இருபத்தைந்து மடங்கு பணத்தை என் கைகளால் நான் எனது பிள்ளைகளின் கல்விக்காக விநியோகித்தேனேயொழிய சேர்த்து வைக்க என்னால் முடியவில்லை.
1948 அக்காலத்து எஸ். எஸ். ஸி. பரீட்சையில் சித்தியெய்திய செய்தியைச் சுவாமிக்கு அறியப்படுத்த ஆவலோடு போனேன். "சந்தோஷம் , என்ன செய்யப் போகிறாய்?" என்றார். படிக்கப்போகிறேன்" என்றேன். படி, படி, படி, என்றார். சுவாமிகளது அனுசரணை கிடைத்ததில் வெகு சந்தோஷம். வீட்டிற்கு வந்ததும் ன் தந்தையார் “சுவாமி என்ன சொன்னார்” என்று கேட்டார். ஏன் டி படி படி என்றார். அப்ப நீங்கள் தடுக்க முடியாது. நான் மேலே படிக்கப் போகிறேன்” என்று மிடுக்காகவே சொன்னேன். பற்றோர் மேற்படிப்பிற்குச் செலவு செய்ய இயலுமா என்பதை ான் சற்றும் சிந்திக்கவில்லை. "சுவாமி சொன்னது உனக்கு விளங்கவில்லை” என்றார் தந்தை. "நல்லாய் விளங்கினது ஐயா A/L;inter BA” என்றேன். “இல்லை பிள்ளை இங்கே வா அவரின் சிந்தனையில் படி - திடமாக ஒன்றன் மேல் ஒன்றாகக் கற்றுக்கொள், |ւIգ - ஒவ்வொரு படிக்கட்டாக உயர்வு பெறு, - குறுக்கு வழியில் உயர்வைத் தேடாதே, படி - புத்தகத்திற்கு உறை போட்டால் அது வீங்கியிருக்கும். அதைப் பதமாக்க நாம் படிய வைக்கின்றோம். பாரம் வைத்து ஒழுங்காக்குகின்றோம். அது போல எத்தகைய உயர்ந்த நிலை உனக்கு வந்தாலும் வீக்கம் கொள்ளாது, கற்ற அனுபவம், பக்தி, அடக்கமுடைமை எனும் பாரத்தினால் நீ உன்னைப் படியவைத்து பக்குவப்படுத்திக் கொள் என்பது தான். இதனை ஒரு தாரக மந்திரமாக உனது அடி மனதில் படிய வை” என்றார். அன்று அவர் தந்த அவ் உபதேசம்
37

Page 31
காலப் போக்கில் பலவிதமான தத்துவக் கருத்துக்களையும் இலகுவில் உணர்ந்து பெரிய ஞானிகள் யோகிகளது உபதேசங்களையும் சுலபமாகக் கைப்பற்றிக் கொள்ளப் பெரிதும் துணையாக இருக்கின்றது. இக்கால வேளையில் தான் தந்தையார் தனது அனுபவங்களைப் பற்றி எனக்கு எடுத்துக் கூறிச் சுவாமிகளது அரிய தன்மைகளைப் புரிய வைத்தார். அவர் சுவாமிகளை 1926ம் ஆண்டளவில் சந்தித்தார்.
சுவாமிகளைச் சந்திப்பதற்காக அதிகாலையில் எழுந்து குளித்துப் பழம், பாக்கு, வெற்றிலை சகிதம் கொழும்புத்துறைக்குப் போயிருக்கிறார்கள். அமைதியாக இருந்த அக் குடிசைக்குள் இவர்கள் மெதுவாகச் சென்று உட்கார்ந்து கொண்டார்கள் அப்பொழுது “ஆர் அங்கே” என்று சுவாமிகள் கேட்கத் தந்தையோ “சுவாமி” என்றிருக்கின்றார். “ஆர் என்றால் சுவாமி என்கிறீர் பேரில்லையோ?” என்று அதட்டியிருக்கிறார். இவர்கள் மெளனமாய் நிற்கவும் அவர் சிறு குப்பிவிளக்குடன் வெளியே வந்து “நீங்கள் வந்து ஒருமணிநேரம் ஆகிவிட்டது. இந்த ஒருமணிநேரமும் செய்ததுதான் தவம். இது போல எப்போதும் கும்பிடுங்கள். ஒ குறையுமில்லை. சரி போங்கள்” என்று சொல்லியிருக்கிறார்கள் என்றாலும் கொண்டு சென்ற உபசாரத் தட்டை அவர் பாதங்களில் வைக்கவும் அவருக்குக் கோபம் வந்து விட்டது. “இங்கே ஐயர் இல்லை பூசை செய்து எடுத்துத் தர, எடுத்துப் போ” என்று சொல்லவும் இவர்கள் பயந்து போய் நின்றிருக்கின்றார்கள். சுவாமி விட்ட பாடில்லை. "எடுத்துக் கொண்டு வெளியே போ இங்கு நிற்க வேண்டாம்” என்று தொடர்ந்து முழங்கினாராம். பயம், மனக் குழப்பம், கவலை எல்லாம் உள்ளத்தில் உருவெடுக்க இவர்கள் தட்டத்தைத் தூக்கிக் கொண்டு வணிடியை நோக்கிப் போய்விட்டார்கள். அதிசயமாக “இங்கே வா’ என்ற சுவாமிகள் குரல் கேட்டதாம். தந்தைக்குக் கோபம் உச்சநிலையில் இருந்ததாலி
38

மனதுக்குள் நான் வரமாட்டேன் நீர் வந்து என்னைக் காணும் என்று கறுவிக் கொண்டு வாகனத்தில் ஏறிவிட்டார். வாகனத்தின் அருகில் நின்ற என் தாயை நோக்கி சுவாமிகள் அந்தப் பழங்களை மருதடிப் பிள்ளையார் கோவிலுக்குக் கொண்டுபோய் அருச்சனை செய்யும் படி கூறியுள்ளார். வண்டியில் இருவருக்கும் தர்க்கம் நடந்திருக்கின்றது. சுவாமிபற்றியும் அவர் சொன்னவை பற்றியும், ஈற்றில் கோயிலுக்குச் சென்று வந்துவிட்டார்கள்.
நான்கு நாள் லீவில் யாழ் வந்த தந்தையார் மறுநாளே கிளம்பிவிட்டார். புகையிரத நிலையத்திற்குப் போய்க்கொண்டிருந்த வண்டி மருதனார்மடச் சந்தியை அணுகியதும் அங்கு சுவாமிகள் நிற்பதை என் தாயார் கணிடு அவரை வணங்கும் படி கூறியிருக்கிறார். அவர் உள்ளத்தில் என்ன தோன்றியதோ, அவர் சட்டென்று இறங்கிச் சுவாமிகளை விழுந்து வணங்கவும் சுவாமிகள் "நீ நினைத்தபடி உன்னைத் தேடி வந்தேன். எழும்பு” என்று கூறி அவர் மனத்தை ஆறுதல் பண்ணினார். “தொடர்ந்து பணி செய் விளங்குகிறதா? இட்டகட்டளையைச் செய். நான் இட்ட கட்டளையைச் செய்து முடித்தாயா?” என்று கேட்டிருக்கிறார். செய்ததாகத் தந்தை சொல்லவும் “சரி இங்கேயும் வந்தேன் நீங்கள் போகும் ஊருக்கும் வருவேன். சுகமாய்ப் போய் வாருங்கள்” என்று கூறி வழியனுப்பியிருக்கிறார். இத் தொடர்பு, பின் சுவாமிகள் அடிக்கடி பேராதனை கண்டி ஆகிய இடங்களுக்கு என் தந்தையாரை நாடிச் செல்ல வழிவகுத்தது.
சுவாமியின் தொடர்பு கிடைப்பதற்கு முன் சுப்பிரமணிய சுவாமி என்ற பெரியாரின் தொடர்பு தந்தைக்குக் கிட்டியிருந்தது. அவருக்குக் குளிக்க வசதிசெய்து, ஆடை அலம்பி, பூசைத் திரவியம் சேர்த்துக் கொடுத்து பூசையில் கலந்து கொண்டு சில நாட்கள் சந்தோஷமாக இருந்திருக்கிறார். இப்போது
39

Page 32
யோகசுவாமிகளையும் அவர் ஸ்தானத்தில் எண்ணி மகிழ்ந்திருந்த வேளை சுவாமிகளே தந்தையாரிடம் போயுள்ளார். அது மட்டுமல்ல போனதும் “சுப்பிரமணிய சுவாமியும் நானும் ஒன்று என்பதில் உனக்கு ஏன் சந்தேகம்? நீ அவருக்குச் செய்தது போல இன்று எனக்குச் செய்” எனவும் தந்தையார் அசந்து போனார். உடனடியாகவே சுவாமிக்குக் குளிக்க வார்த்துச் செய்ய வேண்டியதெல்லாம் செய்து பாதபூசையும் பண்ணினார். சுவாமிகள் யோகநித்திரையிலிருந்து விழித்ததும் “இனிமேல் இவ்வித சேட்டை வேண்டாம்” என்று கூறினாராம். தந்தையாருக்கு இன்னுமோர் வேடிக்கை நடந்துளது. அதனைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார். இவர்களுக்கு இரு ஆண்குழந்தைகள் பிறந்து இறந்து விட்டார்கள். கவலை தான். இதையறிந்த ஒரு சிங் கள நண பர் சிவனொளிபாதமலைக்குச் சென்று தரிசித்து நேர்த்திவைத்தால் ஆண்குழந்தை பிறக்கும் எனவும், எல்லோருமாகப் போவதற்கு எண்ணிப் போகும் நாளும் வந்தது. அன்று திடீரென சுவாமியும் வந்திறங்கி விட்டாராம். வந்தவர் சிவனொளிபாத மலைக்குச் செல்லும் வழியில் அங்கு தங்கியதாகக் கூறினாராம். இவர்களுக்கு ஒரே சந்தோஷம் சுவாமியுடன் சேர்ந்து போகலாம் என்று அவதி அவதியாகச் சாப்பாட்டை முடித்துக் கொண்டனர். வண்டி வந்ததும், தாங்களும் அன்று சிவனொளி பாதமலைக்குச் செல்ல உத்தேசித்திருந்ததைச் சொன்னார்கள். இது அரிய சந்தர்ப்பம் என எண்ணி ஒரு நிமிடம் தான் குதூகலம், சுவாமிகள் “சிவனொளிபாதம் கண்டீர்களா?” என்று கேட்டதும் பதில் சொல்லாது நின்றிருக்கிறார். “இந்தப் பாதங்களில் விழுந்து கும்பிடுங்கள். இது தான் சிவனொளி பாதம் அங்கும் இங்கும் எங்கும் அவன் தான்" என்று சற்று உரத்த குரலில் சொல்லவும் ஒரே சாஷ்டாங்கமாக நிலத்தில் வீழ்ந்துவிட்டார் தந்தையார். சிவனொளிபாத மலைப் பயணம் நின்றுவிட்டது. ஆனாலும் சுவாமிகள் ஆசி உள்ளத்தில் உவகைகொடுத்துள்ளது.
40

மேலும் ஒரு சம்பவத்தைத் தந்தையார் நினைவு கூர்ந்து கூறினார். இது பெரிய அதிசயம். கூட்டுக் குடும்பமாக இருப்பதற்கு வசதியில்லை. ஒரு சிறுவீடு தனிவீடாகவும் இருந்தால் எல்லாம் வசதி என்ற வேண்டுகோளை அம்மா தந்தைக்கு எடுத்தியம்பியுள்ளார் கடிதம் மூலம். தந்தையிடம் பணவசதியிருக்கவில்லை. அவர் அம்மாவைச் சுவாமியிடம் போய்த் தரிசித்து வரும் படி எழுதியுள்ளார். அம்மா சுவாமிகளிடம் போனபோது சுவாமிகளுடன் ஒரு சன்னியாசியும் இருந்திருக்கிறார். சுவாமிகள் அம்மாவிடம் “ஞானம் பெற்று வீடு பெற முயல்பவர்கள் என்ன செய்ய வேண்டும்;? என்று வினாவினாராம். “சுவாமி ஏழைக் கென்ன தெரியும். ஆனால் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று அப் படிகளைத் தாண்டிப் போனால் முத்திகிடைக்குமென்று ஞான நூல்கள் கூறுவதாகச் சொல்லுகிறார்கள்“என்று பாதி பயம் பாதி ஐயம் மேலிடச் சொன்னாராம். சுவாமிகள் சன்னியாசியைப் பார்த்து “ஒருவர் வீடு கட்டுவதென்றால் என்ன செய்ய வேண்டும்? “ என்று வினாவினார். "நிலம் வேண்டும். வீடு கட்ட வேண்டிய கல், மண், சீமெந்து பெற்றுக் கட்டடம் அமைத்துப் பின் மரவேலை செய்து முடிக்க வேண்டியது தானே” என்றிருக்கிறார் சன்னியாசி. உடனே அம்மையாரைப் பார்த்து “சரி போய் வா’ என்று அனுப்பிவிட்டார். அவரின் உள்ளம் என்ன நிலைப் பட்டுதோ? யார் அறிவார்? பணம் இல்லை. ஆகவே சகலதும் மறந்தாகி விட்டது. 1930ம் ஆண்டு ஒரு நாள் சுவாமிகள் திடீரெனத் தோன்றினார். "வீடு கட்டப் போவதாகக் கேள்விப்பட்டேன் கட்டி முடிந்ததா?” என்ற வினாவை எழுப்பினார். தந்தையாருக்குத் தூக்கிவாரிப் போட்டது. மெளனமாகவே இல்லையென்றிருக்கிறார். சுவாமிகள் மடியை அவிழ்த்து ஐந்து ரூபாவை எடுத்து “இந்தா இப்பவே யாழ்ப்பாணம் போய் நாளைக்கே வீட்டு வேலையைப் பார்."என்று கூறினார். ஐயன் பேச்சுப் பொய்யாகுமா? ஏழுமாதங்களில் உடுவிலில் உள்ள “திருநிலையம்” வீடு பூர்த்தியாகி விட்டது.
41

Page 33
இதன் பின் தான் பெரும் விளையாட்டு. பல நண்பர்கள் பணம் கொடுத்து உதவியுள்ளார்கள். ஆனால் தந்தையின் வேலை பொறுத்த வேளையில் தடைப்பட்டது. வேலையில்லை என்றறிந்ததும் பணம் கொடுத்தவர்கள் நெருங்கினார்கள். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் பண்டாரி என்ற மாதிரி பணமில்லை என்றிருந்த என்னைச் சுவாமிகள் தூண்டி இப்ப வீடு கட்டியாயிற்று. ஆனால் கடன் கட்டி முடிக்க வழியில்லையே என்று மனம் கலங்கி நின்ற வேளை சுவாமிகள் அங்கு வந்துவிட்டார். வரும் பொழுதே "இரத்தினபுரியிலிருந்து கடிதம் வந்ததா?" என்றபடி வந்தாராம். இல்லை எனவும் நாளை கடிதம் வரும் என்றார். மறுநாள் கடிதம் வந்தது. அதில் ரூபா 500 இருந்ததாம். கடன் ஒரு பகுதி தீர்ந்தது. ஆனால் அனுப்பியவர்கள் யாரென்றே தெரியவில்லை. சில நாட்களின் பின் இரத்தினபுரிப் பெரியார் வந்தார். தாம் சுவாமிகள் கட்டளையை நிறைவேற்றியதாகக் கூறித் தன்னையும் அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் தந்தையாரின் கடன் விபரம் கேட்டு அத்தனைக்கும் ஒரு பெரிய காசோலை எழுதிக் கொடுத்தாராம். (அவர் கடனை என் தந்தை தீர்க்கப் பல காலம் எடுத்தது. ஆனால் அவரோ ஊர் நடுவே இருக்கும் பெருங்கிணறு போன்ற கொடைவள்ளல் அவர் நட்பு எம் வாழ்க்கையை உயர்த்தியது என்றால் மிகையாகாது.)
சில மாதங்களின் பின் தந்தைக்கு வேலை கிடைத்தது. கொடுக்கப்பட்ட வீடு நல்ல வசதியாக இருந்தும் சமையல் அறைக்கு அருகில் மலசல கூடம் அமைந்தது அருவருப்பாக இருந்தது. சற்றுத் தூரத்தே ஒரு மலசல கூடம் அமைத்துத் தரும்படி தோட்டத் துரையை இவர் கேட்டிருக்கிறார். துரை அதற்கு இணங்கவில்லை. இதனால் இந்த இடம் வேண்டாம் வேறு வேலை தேடிப் போவோமா? என்ன, என்று அங்கலாய்த்த வேளை சுவாமிகள் அங்கு போயிருக்கிறார். விடயம் அறிந்த சுவாமிகள் தனது நண்பர்
42

ஒவசியர் கந்தையா என்பவரை அழைத்து வரும்படி தந்தையாரைப் பணித்தார். ஒவசியர் ஒரு இரவிலேயே தனது ஆட்களைக் கொண்டு ஒரு மலசல கூடம் அமைத்து விட்டார். ஆனால் தந்தைக்கோ துரை என்ன சொல்லப் போகிறார் என்று ஒரே பீதி, அதற்குச் சுவாமிகள் அருமையான ஆறுதல் கூறினார் என்று அவர் கூறியதை அற்புதமாகக் கூறுவார் தந்தை. “கறுத்துப் புறப்பட்ட சூரனை வெட்டிக், கனைகடலை வறுத்துக், கிரியைப் பொடி செய்து, அமரர் சிறை விடுத்த நல்லூரான் கிருபை, ஒன்றுக்கும் அஞ்சாதே" இது தான் அந்த வாசகம். பத்து ஆண்டுகள் இங்கு இருந்திருக்கின்றார். அதே துரை, ஒவ்வொரு மாதமும் சுவாமிகள் வந்து போயிருக்கிறார். எதுவித கலக்கமும் ஏற்படவில்லை. இந்த இடம் தான் இன்று பேராதனைப் பல்கலைக் கழகமமைந்துள்ள இடம் துரை வீடுகளெல்லாம் தரைமட்டமாக்கப்பட்டு விட்டது. சுவாமிகள் இருந்த வீடு இன்றும் உள்ளது. (இக் காலகட்டத்தில் தான் நான் உருவாகினேன். எனது இளமைக் காலமும் இங்கு ஆனந்தமாகக் கழிந்தது. எனது சகோதரிகளின் படிப்பிற்காகத் தாயார் உடுவில் வந்து விட்டார். தந்தை தனியாகவே பேராதனையில் வேலு என்ற வேலையாளுடன் தங்கியிருந்தார். (அவ்வேளை நடந்த ஒரு அற்புதச் சம்பவம்) தந்தைக்குச் சிறிது நோய் ஏற்பட்டது. ஒரு பெளத்த சன்னியாசியிடம் மருந்தும் குடிநீர்ச் சிட்டையையும் பெற்று வந்து மேசைமேல் வைத்து விட்டு வேலைத் தளத்திற்குச் சென்று விட்டார். சுவாமிகள் வந்து பார்த்தார். எடுக்க வேண்டாமென்று சொல்லித் திரு. கதிரவேற்பிள்ளை (கஸ்தூரியார்) அவருக்கு கடிதம் எழுதினார்.
பேராதனை.
15, 12. 1933
குப்பையைக் கிழறினேன் குன்றாமணி கணடேன் அப்பணு மம்மையு மவவுழி யிருந்தனர்
43

Page 34
செப்ப வரியது தேவரு மறியார் முப்புர மெரித்த முதல்வன7 ணையே
முச்சந்திக்குப்பையிலேமுடங்கிப்படுத்துக்கொள் அச்சமு மில்லை அபாயமு மில்லை இச்செய் தியறி வாரெவ ராமினும் பச்ச முடைய பரனா குவரே
காண்மே லாகிக் கமணஞ் செய்வார் மாண்போல் கணினியர் மயக்கிற் போகார் ஆண்முது கேறு மப்ப 7ைானை நான்சொன்ன வாசகம் நாடிநீ L/76 தம்பி கதிரவேலு தயவு செய்து .20ம் ..20ம் .யத்து நாட்களுக்குரிய . சூரணமும் அனுப்பிவைக்கவும்.
இப்படிக்கு என்றும் மறவாதவன.
மருந்து வந்தது. முதற் குடிநீரை சுவாமிகள் உட்கொண்டாராம். குளிசையையும் எடுத்தாராம். 13 நாட்கள் பத்தியமாய் இருந்தாராம். அதன் பின் தந்தை சுகமடைந்தார். அந்நோய் அவர் வாழ்நாளில் மேலும் அவரை அணுகாது போய்விட்டது.
ஒருமுறை ஹப்புத்தளைக்குச் சென்றிருக்கிறார் சுவாமிகள். அங்கிருந்து தந்தையாருக்கு ஒரு அருமையான கடிதம் எழுதியுள்ளார்.
கண்ணைக் கவரும் காட்சியால் மாண்ட விணனைத் தோண்டும் மலைகள் விளங்கும்
44

எனணிக்கையில்லாப் பேரா தனையில் நணணி வாழும் வேலவா/ இன்று மான் புணர்ணிய பூமி எனப்புகல் இந்தியா செல்லு கின்றேனுனைத் தெய்வம் காக்கும் கல்லுங் கரையக் கவிமழை சொரிகுதி வெல்லுவாய் மாயை வீடுனக் காகும் அல்லு மெல்லியு மேகனை வணங்குதி எல்லாம்வரும் இடர்தனைக் களைந்து ஈண்டு வாழுதி தொடர7 துன்னைத் தொல்வினை யாமே.
இங்ங்ணம் யோகத்தகப்பனார்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் என் தந்தைக்கு மயக்கம் வந்தது. எழுந்திருக்க முடியாத நிலையில் இருந்த போது தோட்டத்துரை ஒரு டாக்டரை அழைத்து வந்து மருந்து கொடுப்பித்தார். ஆனால் தெளிவு நிலைவரவில்லை. பொழுது விடிந்த போது சுவாமிகள் அங்கு வந்துவிட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து அவர் கொண்டு வந்த மருந்தைக் கொடுத்தார். “சிவாய நம” எனக் கூறித் தலையைத் தடவி விட்டார். மறுநாள் “எழுந்திரு. இதோ சிதம்பர தரிசனம் பார்” எனக் கூறி நடனமாடத் தொடங்கினார். அந்த நடனத்தின் தாற்பரியத்தை சொல்லால் வருணிக்க முடியாது என்றார் தந்தை. தாளம், லயம், அபிநயம், அதிர்வு, பாவம் எல்லாமே அதிஅற்புதமாக இருந்ததாம். ஒவ்வொரு அசைவிலுமுள்ள இறுக்கமான பிடி தோற்றம், கண்களில் பாவம், கருணை அப்பப்பா! அற்புதம்! சுவாமிகள் இந்த நடனத்தை எவ்வாறு கற்றுள்ளாரோ? அது பெரும் இரகசியமாகவே இருந்தது. அறியமுடியாததொன்றாய் இருந்தது. தந்தையார் பார்த்துப் பிரமித்துப் போய் விட்டார். அடுத்தநாள் தான் கொண்டுவந்த மருந்தை மீண்டும் கொடுத்தார். தந்தையார் பூரண குணமடைந்தார். அதுவே மிருத்யுஞ்ஜய நடனம்
45

Page 35
எனப் பின்பு ஒரு அன்பர் டாக்டர் இராமநாதன் அவர்கள் கூற அறிந்தார். தந்தையாரின் கருத்துப்படி சுவாமிகள் தனது தத்தை நீக்கி ஆயுளை நீடித்துள்ளார் என்பதாகும். இவ்வாறு இன்னும் பல சுவையான நிகழ்வுகளைக் கூறுவார். சுவாமிகள் தனக்கிட்ட கட்டளை எனக் கூறி 1943ம் ஆண்டு எழுதிய கடிதத்தைக் காட்டினார். "இதில் எழுதியுள்ளது தான் நான் உனக்குச் செய்யும் உபதேசம். இதைக் கடைப்பிடித்தொழுகி வா அங்கு தெய்வம் இங்கே தெய்வம் அவர் பெரியார் இவர் பெரியார் என்று அலையாமல் ஒன்றியிருந்து ஒன்றைப்பற்றி ஒன்றாகி வாழ்
"அன்புசால் வேலநா னறைகுவ கேணிமதி எண்பு நெக்குருக விறைவற் பணிந்து அன்னை தந்தையர்க் காம்பணியாற்றி முன்பின் பிறந்தார் தம்மைப் பேணி இன்சொற் புகன்று இழிதொழில் களைந்து தன்போலயலவர் தம்மைப் பேணி மெய்மை பேசி மேதினி வழிவு பொய்யென வெணினிப் புரைதீர் மனத்தனாய் வையகம் தன்னில் வழிகுதி உய்யா வனமென வுலகினை மதித்தே ..”
இப்படித் தொடர்கிறது. பேராதனைத் தெருவோரமாகக் கமுக மரங்கள் காய்த்துக் குலுங்கி நின்றன. சுவாமிகளுடன் தந்தையார் உலாவச் சென்று கொண்டிருந்தார். அப்போது சுவாமிகள் திடீரென ஒரு இடத்தில் நின்று கைகளைக் கூப்பிக் கும்பிட்டார். நீயும் கும்பிடு என்றதும் இவரும் கும்பிட்டார். ஏன் கும்பிட்டாய்? இது சுவாமியின் கேள்வி. பயத்துடன் தந்தையார் சுவாமி சொன்னதால் Deeg என்று இழுத்தார். சுவாமிகள் சிரித்துக் கொண்டே இந்தக் கமுக மரத்தில் நான் நெடுமாலைக் கண்டு கும்பிட்டேன். சடத்திலும்
46

சிவத்தை அறிவால் காண்பது தான் சாயுச்சியம் என்றார். பச்சைப் பசேல் என நெடிது வளர்ந்த கமுகமரங்களில் மஞ்சள் செவ்விளநீர் நிறக் காய்கள் அவருக்குத் திருமாலை நினைவுபடுத்தின. என்ன விந்தை இயற்கையில் நாம் இறைவனைக் காணாது எத்தனை காலம் வீணே கழிக்கிறோம்.ஒரு முறை சுவாமிகள் காசிக்குப் போயிருந்தார். அப்போது அவர் தந்தையாருக்கு ஒரு கடிதம் எழுதினார்,
தேடித் திரிந்து காசிக்கு வந்து கண்டேன், விசுவநாதனை என்னுள். வாடித்திரிந்து வருந்த வேண்டாம். தேடிய யூடு காலுக்குள்ளே என்ற தெவிட்டா வாசகமொன்றுண்டு. இவ்விடத்திலும் மனிதர்களெல்லாம் எங்களைப் போலே தானிருக்கிறார்கள்: நூதனமான காரணமொன்றும் பூதலமீதில்லவே இல்லை. இருந்த இருக்கிற இருக்கும் யாழ்ப்பாணத்தா ரெல்லாருக்குமாகக் கருமாதிகளெல்லாஞ் செய்து முடிந்து விட்டன. இனிமே லுங்களுக் கியைந்தபடி அன்பாக உலகில் நடந்து ஆண்டவன் அடிக்கீழ் அமர்ந்து வாழ்க.
30-11-40
இவற்றையெல்லாம் அறிந்து நான் பெருமிதப்பட்டுக்
கொண்டேன்.
1958 நான் B. A. சித்தியடைந்து விட்டேன். அதைச் சுவாமிகளுக்குச் சொல்ல மிக ஆர்வத்துடன் சென்றேன். சுவாமி என்னைப் பாராட்டுவார், நான் மகிழ்ச்சிக் கடலில் நீந்துவேன், சொன்னபடி செய்தாய், கெட்டிக்காரி என்பார். என் கற்பனை வளர்ந்தது. சுவாமி கேட்கும் வரை நான் வாய் திறக்கவில்லை. சுவாமிக்கு அதிர்ச்சியாக இருக்க வேணுமே! “என்ன வந்தது” என்றார். அதை எதிர்பார்த்திருந்த நான் சட்டென்று ‘நான் B.A. பாஸ்” என்றேன். (நான் எப்பொழுதும் கொஞ்சம் துடியாட்டம் தான்) 'நீ பாஸ் பண்ணினால் என்ன கீஸ் பண்ணினாலென்ன"
47

Page 36
என்று படக் கென அலட்சியமாகச் சுவாமி சொன்னது, மலையுச்சியிலிருந்து ஆதாள பாதாளத்திற்குத் தள்ளுப்பட்டது போல இருந்தது. எல்லாமே இருண்டு விட்டது போல இருந்தது. நான் ஏன் வந்தேன். சே வீட்டில் இருந்திருக்கலாம். எழுந்து ஓடவேண்டும் போல் இருந்தது. குனிந்த தலை நிமிராது இருந்தேன். இருபது நிமிடங்கள் - ஏதேதோ கதைத்தனர். என் உடம்பு மட்டும் அதிலிருந்தது. ஆனால் என் உள்ளமோ விம்மி விம்மி அழுதபடியே எங்கோ ஒரு மூலையில் இருப்பது போன்ற உணர்ச்சி. சுவாமிக்கு விளங்காதா என்ன? ஒரு புத்தகம் எடுத்தார். Phychology Magazine அது. அதில் ஒரு பக்கத்தை வாசிக்கச் சொன்னார். உண்மையில் மிக வெறுப்புடன் தான் நான் வாசித்தது. “சரி போதும் . ம் . போய் உளவியல், தத்துவம் படி” என்றார். விட்டது போதும் என்று வெளியே வந்து விட்டேன்.
சுவாமிக்கு ஏன் நான் பாஸ் என்றது பிடிக்கவில்லை? நான் என்றது பிடிக்கவில்லையா என்ன? பெருங்குழப்பமாகவே கவலையுடன் வந்துவிட்டோம். அதன் பின்பு தந்தையார் திருவருட்பயன் மற்றும் தத்துவ நுல்களை எனக்குக் கற்பித்தார். எனக்கு வேலை கிடைத்தது. என்ன இருந்த போதிலும் நான் சுவாமிகளை மறக்கவில்லை. எனது சம்பளத்தில் ஒரு பங்கை சுவாமிக்கு எடுத்து வைத்து வேஷ்டி, சால்வை, பழம், கற்கண்டு இவையெல்லாம் எடுத்துக் கொண்டு சுவாமியிடம் போனேன்.
அங்கு எதிர்பாராத விதமாகப் பெருங்கூட்டம் இருந்தது. இம்முறை நான் பேசாமடந்தையாக இருந்து விடவேண்டும் என்று திடசங்கல்ப்பத்துடன் இருந்தேன். ஏலவே பல பொருட்கள் அவர் முன் வைக்கப்பட்டிருந்தன. இவற்றையும் வாங்கி முன்வைத்தார். பின்னர் சிறு பொழுதில் சங்கீத ஆசிரியர் ஒருவர் வந்தார். “வாப்பா வா உன்னைத்தானே எதிர்பார்த்து இருக்கிறோம்” என்றார். அவர்
48

இருந்ததும், "இஞ்சரப்பா துரை, இன்று வித்தியாரம்பம் இந்தச் சங்கீதம் படிப்பதற்கு முதலில் ஆரம்பிக்கும் ஒரு பாட்டை நீ ஆரம்பித்து வை நாங்கள் பாடுவம்” என்றார். மாஸ்டர் “வாதாபி கணபதே பதீம் பதீம்” என்றார். சுவாமி பாடினார். பின் எல்லோரும் பாடுங்கோ, நான் வாய் திறக்கவில்லை, "உனக்குத்தான் வித்தியாரம்பம் பாடு பாடு” என்றார். எனக்கு வியர்த்துக் கொட்டியது. சுவாமிக்கு எப்படித் தெரிந்தது நான் பெற்றோரிடம் சங்கீதம் படிக்க வேண்டும் என்று கேட்டது, கூடவே வீணையொன்று வாங்கியது? ஆச்சரிய மேலீட்டால் வாய் திறந்தேன். பாடி முடிந்தது.
“தானத்தில் சிறந்தது கல்வித் தானம்” என்றார். “அதனிலும் சிறந்தது சொர்ணதானம்” வைத்திருந்த காசை எல்லோருக்கும் பங்கிட்டார். “அதனிலும் சிறந்தது வஸ்திரதானம்” என்றபடி அவருக்கு கொண்டுபோய் வைத்த வேஷ்டியை எடுத்து "பிரம்மணோ தானம்” எனக் கூறி அங்கு வரவளைக்கப்பட்டிருந்த பிராமணப் பையனுக்கு வீசியெறிந்தார். ஒரு வினாடியில் எனக்கு மனம் கொதித்தது. சுவாமிக்குக் கொண்டுவர இவர் ஏன் ஏற்கவில்லை? நான் ஒன்றும் வெளிக்காட்டவில்லை. மீண்டும் சுவாமிகள் கல்வித்தானம், சொர்ணதானம், வஸ்திரதானம், பிரம்மணோ தானம் என்று சொல்லிச் சிரித்தார். அச்சிரிப்பு என்னை என்னவோ செய்தது. மீண்டும் மீண்டும் அதைச் சொல்ல வைத்தது. ஈற்றில், இன்று நான் படித்தது இவையாகும். இதில் ஏதோ விடயம் இருக்கிறது உண்மை. இவற்றையே பின்னர் என் வாழ்வில் இலட்சியமாக ஏற்றுக்கொண்டேன்.
இந்தக் காலகட்டத்தின் பின் சுவாமிகள் வெளியே திரிந்து நடமாடுவதைக் குறைத்துக் கொண்டார். எனக்குத் தான் திருமணம் செய்து வைப்பதாகக் கூறிக் கொள்வார். ஆனால் காலம் போவது என் பெற்றோருக்கு வேதனையாகிவிட்டது. எப்படியோ அவருக்குத்
49

Page 37
தெரியாமலே ஒரு மணப்பேச்சு முற்றாகிய பின் சுவாமியிடம் மெதுவாகக் கூறினார்கள். சுவாமிகள் மெளனமாக இருந்துவிட்டார். பின் ஒரு பையில் அரிசி காய் கறிகளை வைத்து எடுத்து வந்து, யூதாக்கலத்திற்கு இதைச் சமைத்துக் கொடு, நான் தந்த பங்கு” என்று சொல்லிவிட்டு மீண்டும் மெளனியாகிவிட்டார். ஏன்? திருமணம் முடிந்து நாங்கள் சென்றோம். “ஆற்றங்கரையில் அரசும், அரசறிய வீற்றிருந்த வாழ்வு” என்று கூறினார். எனக்கு எல்லாமே புதிராக இருந்தது. நான் குழந்தையாக இருந்தபோது ஒரு பாட்டாவாக, பிள்ளையாக இருந்தபோது ஒரு ஆசானாக, கற்று முழுமையடைந்தபோது ஒரு ஆலோசகனாக, குருவாக இருந்தவர் இப்பொழுது மெளனியாக, குதூகலம் அற்றவராக, தூரத்து நிற்பவராக எனக்கு ஏன் காட்சி கொடுக்க வேண்டும்? அன்பு, பந்தம், பாசம் எல்லாமே விலகிப் போவது போன்ற உணர்வு. இருந்தாலும், “போட்டு வா, எல்லாம் சரி” இதுபோல ஏதோ சொன்னார்.
உத்தியோகம் இல்லறம் இரண்டினாலும் எற்றுப்பட்ட வேளையில் தான் யாழ் பல்கலைக்கழகம் இந்துநாகரிக டிப்ளோமா பாடநெறியைத் தொடக்கியது. இந்த முதலாண்டு மாணவிகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டேன். இங்குதான் தத்துவத்தின் பக்குவங்களை பாடர்தியாகக் கற்றுப் பட்டம் பெற வாய்ப்புக் கிடைத்தது. சித்தியடைந்த செய்தியைக் கூறுவதற்குச் சுவாமிகள் இல்லை. தத்துவம் படி என்றார். உளவியல் படி என்றார். அப்படியாயின் அடுத்து? கல்வி டிப்ளொமா பரீட்சைக்குத் தெரிவுசெய்யப் பட்டபோது உளவியல் கற்கைநெறி, வழிகாட்டல் உளவியல் நெறி, இவற்றைப் படிக்க முடிந்தது. சுவாமிகள் கூறியது எதுவும் வீண்போகவில்லை.

ஒரு முறை 1934ல் பேராதனைத் தோட்ட அலுவலகத்திற்குத் துரை காரில் வந்துகொண்டிருந்தார். நடுப்பாதையில் நான் இருந்து சிறு கற்களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தேன் கற்பனையாக. கார் கோண் அடித்தும் நான் அசையவில்லையாம். துரை காரை விட்டு இறங்கிவந்து பார்த்தாராம். அதற்கும் அசையவில்லை. என்னைத் தூக்கி அப்பால் வைத்துவிட்டு Stubbon creature என்று கூறி இச்சம்பவத்தை எனது தகப்பனாரிடம் கூறவே வீட்டில் பெரிய கலாட்டா. இதைக் கண்ட சுவாமிகள் மறுநாள் துரையிடம் “You have disturbed her-concentration. Sure she is stubborn in many Ways” என்றார். இதன் பின் என்னை ஒரு பிடிவாதக் காரியாகவே பலர் கருதமுற்பட்டனர். ஆனால் அது உளரீதியான ஒரு தாக்கத்தை உண்டுபண்ணி தியானம், விரதம், கொள்கை, பற்றுக்கோடு, செயற்பாடு, முயற்சி இவற்றிலெல்லாம் உறுதிப்பாட்டுடன் நிலைத்து நிற்க ஒரு திடசித்தத்தை என்னுள் உருவாக்கியது. இந்த உறுதிப்பாட்டின் வெற்றியை நான் பல சந்தர்ப்பங்களில் அனுபவிக்கும்போதெல்லாம் சுவாமிகளது நினைவு எனக்கு வரும். இவற்றையெல்லாம் நான் உடனுக்குடன் சுவாமிகளுக்குத் தியானத்தின் மூலம் சமர்ப்பித்து வைப்பேன்.
சுவாமிகள் அதிகாலையில் நித்திரை விட்டு எழும்பிவிடுவார். பின்புற வேட்டியை உயர்த்தி இடதுகையால் பின்புறமாக அமர்த்திவிட்டுத் தோளில் சால்வையையும் போட்டுக் கொண்டு பனிப்புகை படர்ந்துள்ள பூந்தோட்டத்தில் நடைபோடுவார். இயற்கை எழிலை இரசிப்பார். (பேராதனையில்) சில வேளைகளில் தேவாரம் பாடுவார். பெரிதும் விரும்பிப் படிக்கும் தேவாரம், நன்றுடையானை தீயதில்லானை நரைவெள்ளேறு .என்பதாகும். வேடிக்கையாகவே அவர் சொல்லி முடிக்க நான் அவர் சொன்னதைச் சொல்வேன். சில வேளைகளில் நின்று ரசித்துச் சிரிப்பார். சில வேளைகளில் ஏசிக்கலைத்து விடுவார். ஒருவேளை நான் பகிடி பண்ணுவதாக
51

Page 38
அவர் நினைத்தோ தெரியவில்லை. காலப் போக்கில் அவரைக் காண்பதற்கே நெஞ்சு நடுங்கும் நிலை கூட ஏற்பட்டது. மற்றவர்கள் பயப்படுத்தி. என்னைப் பொறுத்தமட்டில் அவர் ஆழமானவர். அந்த ஆழத்தை எம்மால் கற்பனை செய்து பார்க்க இயலாது சிந்தித்தும் விளங்கவில்லை. பெரியார்கள் எப்பொழுதுமே மறைபொருளாக இருந்துவிடுவர். இன்னும் எத்தனை, அனுபவங்களை எதிர்நோக்கி இந்த ஆத்மா இருக்கின்றதோ, அறியேன். எல்லாம் அவன் செயல்.
திருமதி. யூரீமதி சீமாட்டி தேவி குமாரசுவாமி.
米 米 米 米 米 米
இறைவனிடத்திலேயே எல்லாந் தோன்றி, எல்லாம் நிலைபெற்று, எல்லாம் ஒடுங்குகின்றன, ஆகையால் யாதொரு பொல்லாப்புமில்லை, திருவடிசேர மனம் பரிசுத்தமாயிருந்தாற் போதும்.
சுவாமிகள் அருள் மொழி
52

யோகர்சாமியும் நானும்
அரிது அரிது மானிட ஜென்மம் கிடைப்பது அரிது. அதுவும் கூன், குருடு, நீங்கிப் பிறத்தல் அரிது. என்பது பெரியோர்வாக்கு. ஏதோ பூர்வ புண்ணிய வசத்தால், பிறந்து விட்டாலும், வெற்றி கிட்டுவது அவன் அருளில் தான் உள்ளது. மாயை வசப்பட்ட ஜீவான்மாக்கள், அறியாமையால் படும்பாட்டைக் கருணாமூர்த்தியான குருதான் தீர்க்க முடியும். குரு தரிசனம் கிடைக்காவிட்டால் பிறப்பை அறுக்கத் தெரியாமல் எண்ணற்ற பிறவிகள் எடுக்க வேண்டி வரும்.
என்றைக்கு நாம் நமது ஆறாம் அறிவைக்கொண்டு, இந்த மானிட ஜென்மத்தின், இரகசிய வரலாற்றைநான் யார்?என்று தொடங்கித் தொடரும் பல கேள்விகளுக்கு மறுமொழி தேட, ஆரம்பிக்கிறோமோ அன்றைக்கே பிறவியின்பலன் கிடைக்கத் தொடங்கிவிடும். சொந்தக்காரன் வந்துகையைப் பிடித்து விட்டான் போல் அறிவோம் என் கதையிலும் இதே அனுபவத்தைத்தான் எழுதச் சொல்லி ஆண்டவன் கட்டளை இட்டான் போல் தோன்றுகிறது.
அம்மாவின் அன்பை உணராத ஜென்மம் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அப்பன் மறைந்தாலும் அம்மாவின் தரிசனம் நிச்சயம் பிள்ளைக்குக் கிடைத்தே தீரும் தாய் பிள்ளையை விட்டு இறந்தால் இத்தகையஅனுபவம்கிடைக்காத ஜீவன் இருக்கமுடியாது. ஆனால் இந்தத் தாயன்பும் உண்மையான குருவின் கருணைக்கு ஈடாகாது. இந்தக் கருணை இலகுவில் கிடைக்காது. அதற்குத் தகுதி வேண்டும்.
53

Page 39
தகுதி லட்சணம் இன்னதென்று வரையறுக்க முடியாது. ஏனென்றால் அது அனந்தம் அதோடு என்னதான் நாம நன்மை செய்தாலும் ஆண்டவன் அருள்தான் நம்மைத் தகுதியுள்ளவனாகத் தேர்ந்தெடுக்கும் இந்த முறையில் அம்மையும் அப்பனும் சேர்ந்து ஓர் உருவாய், குருவாய் வந்து என்னை வலிய வந்து ஆட்கொண்ட தெய்வமே யோகர்சாமி. அவர் என்னைத் தேடி வந்து, அறிவுரைகள் தந்து, புத்தகங்கள் தந்து, படிப்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை அறிவுறுத்தினார். நான் திருவடிகளில் வணங்கி, என் அனுபவத்தை என் சுவாமியின் கதையை எழுதத் தொடங்குகின்றேன்.
இலட்சம் பிறவிகளின் பயனாய் வந்த இந்த ஜென்மத்தில, என்னேடு கூடி வந்த பிராரப்தமி, சஞ்சிதம், ஆகாமியம் ஆகிய பந்த பாச வினைகளையும், கஷ்டங்களையும் கதிரவனைக் கண்ட பனி போல் மறைந்திட அருளிய யோகர்சாமியே சரணம் ஜயா சரணம் நீயில்லாம்ல நானில்லை, நானில்லாமல் நீயில்லை என்ற உணர்ச்சியை என்னுள் புகுத்தி ஆடிய நாடகத்தை, உன் கட்டளைப் படி மறந்தது போக, நினைவில் இருக்கிறவற்றை சாமி உன் அருளால் எழுதுகிறேன். தவறுகள் ஏதாவது நடந்தால் என் பக்திக்கு என்றும் குரல் கொடுத்த தெய்வமே குருநாதரே, மன்னித்தருளவும்.
1924ம் ஆண்டு கார்த்திகை மாதம் 29ம் திகதியன்று, யாழ்ப்பாணம் இணுவில் ஆஸ்பத்திரியில் பிறந்தேன். ம்ே நாள், நானும் அம்மாவும் படுத்திருந்த அறைக்கு முன்பாக, எங்கிருந்தோ ஒரு தோகைமயில் வந்து நின்றதாம். தன் விருப்பப்படி, கொஞ்ச நேரம் தோகையை விரித்து ஆடிற்றாம். எங்களைப் பார்க்க வந்திருந்த என் பேத்தியார், அரிசியோ நெல்லோ போட, அதைச் சாப்பிட்டு விட்டுப் பறந்து போய்விட்டதாம். இந்த மயிலுக்கும் யோகர் சாமிக்கும் தொடர்பு உள்ளது என்பதை, பின்பு நான் ஒரு
54

நாள் கண்ட கனவின் மூலம் அறிந்து கொண்டேன். எனக்கு வயது 15 இருக்கும் போது தான் மேற்கூறிய சம்பவத்தைக் கூறினார்கள். எது எப்படி இருந்தாலும், என் இளமைக் காலம் நன்றாக நினைவிருக்கின்றது.
பள்ளிக்கூடம் சென்று படித்துக் கொண்டிருந்த காலம். எனக்கு அப்ப வயது 15 இருக்கும். விதிவசமாய் என் கையில் பட்டினத்தார் புத்தகம் கிடைத்தது. மிக ஆவலோடு அதைத் திருப்பித் திருப்பி வாசித்தேன். விளங்கியது பாதி விளங்காதது பாதியாக எனது மனம் குழப்பமடைந்தது. யாரிடம் விளக்கம் கேட்கலாம் எனறால் ஒருவரும் இல்லை. என் குடும்பத்தார் அந்தப் புத்தகத்தை வைத்துவிட்டுப் பள்ளிக்கூடப் பாடத்தைப் படிஎன்றார்கள். எனக்கோ பட்டினத்தார் எழுதியது தான் முதல் அறியவேணும் போல் இருந்தது.
அந்த நேரம் எனக்குத் தோற்றியதெல்லாம் நேரத்தை வீணாக்க வேண்டாம் சீவிய காலமோ கொஞ்சம் அதற்குள் ஆண்டவனைக் கண்டுகொள், காலம் தாழ்த்தாதே
விட்டு விடப் போகுது உயிர் விட்டவுடனேயே உடலைச் சுட்டு விடப் போகிறார் சுற்றத்தார் பட்டது படடென்னேரமும் சிவனைப் போற்றுங்கள் ஏற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம்
என்ற பட்டினத்தார் பாடிய பாட்டும், அவருடைய உணர்ச்சி
மிக்க வசனங்களும் தான். எனவே என் கேள்விகளுக்கு, மறுமெழி தர யாரும் இல்லை என்றதால் நானே காரியத்தில் இறங்கினேன்.
55

Page 40
என் பாட்டனாரின் மூக்குக் கண்ணாடியால் வெகுதூரம் பார்க்கலாம் என்ற எண்ணம் நினைவுக்கு வந்தது. இரவில் எல்லோரும் படுத்த பின்பு, நான் அந்தக் கண்ணாடியைப் போட்டு வானத்தில் தெரிகிற தூரம் மட்டும்பார்த்தேன். கடவுளை எங்கும் தேடினேன். துருவித் துருவிப் பார்த்தேன். கடவுள் எங்கே இருக்கின்றார்? சைவ வினாவிடையில் கடவுள் எங்கும் உள்ளார், எங்கும் நிறைந்தவர், என்றால், என் கண்களுக்கு ஏன் தெரியவில்லை? என்பது தான் என்னுடைய முதல் கேள்வி,ஒருவரும் எனக்குத் திருப்தியாக மறுமொழி தரவில்லை.
ஒருநாள் நான், படுக்கும் முனி, என்னுடைய வருங்காலம் என்ன மாதிரி? என்று அறியவேணும் என்று மனதில் எண்ணிக்கொண்டு, கடவுள்இருக்கிறார் என்று நம்பிக் கண்ணுக்குத் தெரியாத கடவுளிடம் மறுமொழியை எதிர்பார்த்துப் படுத்துவிட்டேன். கனவில, நானும் என் மாமாவும் ஒரு காவி வஸ்திரம் அணிந்த சுவாமியுடன, வெகு தூரம் பள்ளம், மேடு, மலை, காடு எல்லாம் தாண்டி, ஒரு குகை போல் இருந்த இடத்தில் 3 பேரும் போய் இருக்கக் கண்டேன். அதாவது என் மனம் ஏதோ திட்டம் போட்டு நடத்துகிறது. வெளி மனதுக்கு ஒன்றும் விளங்கவில்லை. 15 வயதில் இந்தக் கனாவுக்கு ஒரு விளக்கமும் புரியவில்லை. இருந்த இடம் “பாயசல் குடா” என்பது சுவாமியுடைய பெயரா, அல்லது இடத்தின் பெயரா எனறு தெரியவில்லை. கனவு அப்படியே நினைவில் இருக்கிறது. என் விருப்பம் எப்படியாகிலும் கடவுளைக் காணவேணும். முறை தான் தெரியவில்லை, வழியும் தெரியவில்லை. என்ன செய்ய? இந்த நேரம் அம்மாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தன. ஒன்று 28ம் நாள் இறந்து விட்டது. மற்றையது ம்ே மாசத்தில் போய் விட்டது.
56

இந்த நாட்களில் யோகர்சாமி திருநெல்வேலி றோட்டால் போனபொழுது, என் சிறிய தகப்பனாரைக் கண்டு ‘வா வீட்டிற்குப் போவோம்’ என்று சொல்லி வீட்டிற்கு வந்தார். அவரைக் கண்டதும் எல்லோரும் பதட்டப்படுகிறார்கள். நானும் மிக ஆவலோடு, ஏதோ சொந்தம் வந்தது போலச் சாமியை என் மனத்துள் கணக்கிட்டேன். ஏதோ கதைத்தார். வேதாந்தமா சித்தாந்தமா என்றும் தெரியவில்லை. சிரித்துக் கொண்டே கதைத்தார். பானம் ஏதொ அருந்திவிட்டுப் போய் விட்டார். ஆனால் என்னுடைய மாயைத் திரையைக் கொஞ்சம் கிழித்து விட்டுப் போயிருக்கிறார். அதன் பலனாக என்னுடைய ஆத்மாவின் கேள்விக்கு, இவர் தான் பதில் சொல்ல முடியும், என்ற ஒரு நம்பிக்கையும், இனம் காண முடியாத ஒரு பட்சமும், சந்தோஷமும், என்னுள் துளிர்ந்ததை உணர்ந்தேன்.
நானும் ஏழெட்டுப் பிள்ளைகளும், இராமநாதன் கல்லூரிக்கு ஒரு குதிரை வண்டியில், நித்தம் போய் வந்து கொண்டிருந்தோம். Pre Matric வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் காங்கேசன்துறை றோட்டில், கொக்குவில் சந்தியில், நாங்கள் திருநெல்வேலிக்குத் திரும்பும் போது, நான் யோகர்சாமியை இரண்டாம் முறையாகக் கண்டேன். சந்தோஷத்தில், எனக்கே விளங்காத ஒரு உணர்ச்சி வசப்பட்டுக் குதிரை வண்டியை நிறுத்தச் சொன்னேன். யோகர்சாமியையும் ஏற்றிக் கொண்டு போவோம் என்று மற்றவர்களையும் சம்மதிக்க வைத்தேன். ஆச்சரியம் என்ன என்றால், தனக்குத் தான் வண்டியை நிற்பாட்டினோம் என்று பக்கத்தில் வந்து நின்றார் யாராலும் அளக்க முடியாத அந்தப் பெருமான். நாங்கள் நெருக்கியிருந்து அவருக்கும் இடம் ஆயத்தப் படுத்த, அவர் உள்ளே என்னைப் பார்த்து விட்டு, மேலே இருந்த வண்டிக்காரன் ஆசனத்தில், சாரதிக்குப் பக்கத்தில் அமர்ந்து கொணடார். வண்டி திருநெல்வேலிக்குச் செல்கின்றது. காரில் வந்தவர்களும், மற்றவர்களும் இந்தக் காட்சியைக் கண்டு,
57

Page 41
கைகூப்பிக் கும்பிட்டுக் கொண்டே போனார்கள். திருநெல்வேலிச் சந்தி மட்டும், சாமி வந்து, சக்கடத்தார் வீட்டு ஒழுங்கையில் இறங்கினார். உள்ளே என்னைப் பார்த்து நீ வீட்டை போ நான் வாறன்’ என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். குதிரை வண்டி நகர்ந்தது. ஆனால் என் மனம் சாமி எப்ப வருவார் என்ற சிந்தனையுடன் வீடு போய்ச் சேர்ந்தேன். அம்மாவிடம் நடந்ததைச் சொல்லி மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தேன்.
அடுத்த கிழமை போல் ஒரு நாள் “தங்கச்சி தங்கச்சி” என்ற கூப்பிட்ட சத்தம் கேட்டுப் போய்ப் பார்த்தேன். நம்ப முடியவில்லை. எப்படி வர்ணிப்பது? தேடக் கிடைக்காத மகான் யோகர்சாமி, என் வீடு தேடி, வீட்டு வாசலில்,என்னைத் தேடி வந்து, என் கண் முன்னே நிற்கின்றார். இந்தச் சந்தோஷ உணர்ச்சியை, எப்படித்தான், யாரால் அளந்து சொல்ல முடியும்? என்னை மறந்து, திகைப்பில், செய்வது அறியாது நின்றேன். “தங்கச்சி செம்பும் தண்ணீரும் கொண்டு வா” என்ற வசனம் தட்டி எழுப்பியது. நான் ஓடிப்போய் செம்பும் தண்ணீரும் கொண்டு வந்து கொடுத்தேன். வாங்கிக் கால்களைக் கழுவிக் கொண்டே கதைத்தார். எல்லாம் முத்துக்கள். என்னுடைய 15 வயதுக்கு விளங்காத முத்துக்கள். கதைத்துக் கொண்டே வீட்டினுள் ஒரு ஆசனத்தில் வந்துஅமர்ந்தார். அவர் பேசிய அறிவுரைகள் அத்தனையும் என்ஆத்மாவில் பதித்து வைத்திருப்பார் என்பது என் நம்பிக்கை. ‘தங்கச்சிமெத்த நல்ல உலகம் வாழத் தெரிய வேணும் எப்பவோ முடிந்த காரியம் ஒரு பொல்லாப்பும் இல்லை சும்மா இரு கேட்குதே” என்று நித்தமும் சொல்வார்.
என் குடும்பத்தவருக்கும் அவரவருக்கு ஏற்ற அறிவுரைகள் சொல்லுவார். எல்லோரும் சுற்றிவரப் பயத்துடன் நிற்போம். நாங்கள் செய்த புண்ணியம், அந்த வீட்டிற்கு ஒரு கிழமைக்கு 2 தரம்
58

வீதம் 4 வருடங்கள் வந்து கொண்டே இருந்தார். இந்தப் பழக்கத்தில் சாமியிடம் எனக்கு ஒரு கிட்டிய சொந்தத்திலும் மேலாகப் பட்சம் ஏற்பட்டு விட்டது. அவ்வளவு அன்போடு எங்களை வளர்த்தார். என்னை இனி ஆங்கிலம் படிக்கப் போக வேண்டாமென்று வீட்டிலிருந்து தமிழைப் படிக்கச் சொன்னார். அவர் சொன்னால் மறுப்பேது? வீட்டில் நின்றுவிட்டேன். பாலபண்டிதர் படிக்கச் சொல்லிப் புத்தகமும் கொண்டுவந்து தந்தார். உயிரெழுத்து மெய்யெழுத்து என்னவென்றே தெரியாமல் இலக்கியம் மட்டும் படித்துப் போதிய புள்ளி எடுத்துச் சோதனை சித்தி பெறும் கெட்டித்தனம் அது. எனவே இந்த நிலையில் இருந்த நான் பாலபண்டிதர் படித்துச் சித்தி பெற்றுப் பண்டிதரும் படித்து முடித்து விட்டேன். ஆனால் சோதனை செய்ய இரண்டு மாதம் இருக்கும் போது விவாகம் நடந்தது. சாமி பாடுபட்டதெல்லாம் கொஞ்சக்காலம் அவ்வளவுடன் தடைப்பட்டு நின்றது.
நான் பாலபண்டிதர் படித்துக் கொண்டிருந்த பொழுது சாமி எனக்குப் பாடம் சொல்லித் தருவதற்காக ஒரு பண்டிதரை ஒழுங்கு பண்ணி, வீட்டிற்கு வந்து படிப்பிக்கும் படி செய்தார். ஒரு கிழமைக்கு இரண்டு தரம் பண்டிதர் வந்து சொல்லித்தருவார். சாமியும் இடைக்கிடை என்னை சோதித்துக் கொள்வார். இது ஒரு பக்கம் இருக்க, விவேகானந்தரின் புத்தகத்தையும், எனக்குக் கொண்டுவந்து தந்து வாசிக்கும் படி தொடக்கி வைத்த புத்தகம் முதலாவது பகுதி. ஆனால் நான் பின்பு எட்டுப் பகுதி முழுதும் சந்தேகமில்லாமல் படிக்க முடிந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம். என் தகப்பனார் அப்போது சிங்கப்பூரில் இருந்தார். சண்டைக் காலம். கடிதப் போக்குவரத்து இல்லாத காலம்.அம்மாவும் பிள்ளைகளும் தனிய இருந்தோம். தகப்பனாருடைய தகப்பனாரும், சிறிய தகப்பனாரும் எங்களோடு உதவியாக, ஒன்றாக இருந்தனர். 4 வருடமாகச்சாமியும் எங்களை வந்து ஆசி கூறியது
59

Page 42
மட்டுமல்லாமல் ஆத்மாவை அறியவும் வழியைக் காட்டினார். திருமுருகாற்றுப்படை முழுதும் பாடமாக்கச் சொன்னார். சிவபுராணம் நித்தம் படிக்க வேணும். இப்படிப் பல புத்தகங்கள் படிக்க ஊக்குவிப்பார். இப்படியே உபதேசமும், புத்தகப் படிப்பும், பாடமாக்கியவற்றைச் சாமிக்கு ஒப்பிக்கிறதுமாகச் சந்தோஷமாகக் காலம் கழிந்தது. VSA
ஒரு நாள் சாமி வந்து கதைத்துக் கொண்டிருந்த பொழுது அம்மாவும், சிறிய தகப்பனாரும் என்னைக் கூப்பிட்டுக் காசு ரூபா 150, (புத்தம்புது ரூபா புத்தகம்) தந்து சாமியிடம் கொடுக்கச் சொன்னார்கள். சொன்னதைச் செய்யும் வயது தானே. நான் கொண்டு வந்து சாமியிடம் கொடுத்தேன். உடனே ஏதோ கோபத்துடன் “என்ன இதெல்லாம் கொண்டு போ கொண்டு போ” என்று சொல்லிக் கலைத்தார். எனக்கு ஒரே துக்கம், பயம், ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து, வீச்சல் எடுத்து அழவைத்து விட்டது. நான் அழுதேன். தாங்க முடியாமல் மனம் வெடித்து அழுதேன். சாமி “இங்கே வா. இதற்கு ஏன் அழுகிறாய். விவேகானந்தருடைய புத்தகத்தை வாசி" என்றார். அவர் முன்னால் பாய் விரித்து, அதில் உட்கார்ந்து வாசிக்கத் தொடங்கினேன். ஒரு மணித்தியாலம் நான் வாசித்தும் ஒரு பக்கமும் முடியவில்லை. அழுது கண்ணீர் ஊற்றிக் கொண்டே வாசித்தேன். ஆண்டவன் மனித ரூபத்தில் வந்த கருணையங் கடல் அல்லவா? என்னைத் தேடி வந்து, அன்போடு, கருணையோடு, பொறுப்பு எடுக்க வந்தவர் என்னை அழ விடுவாரா? “இனிப் போதும் நிறுத்து தங்கச்சி. போய் அதை எடுத்துக் கொண்டு வா” என்றார். அந்த வார்த்தை என்ன குளிர்ச்சியாக இருந்ததுதுள்ளி ஓடிப்போய் அந்தக் காசை எடுத்ததுக் கொண்டு வந்து கொடுத்தேன். மடியில் வைத்தார். என்னைப் பார்த்து 'சரி தானே இனிச் சிரி தங்கச்சி சந்தோஷம் தானே” என்று சொல்லிப் போனார்.
60

சிறிய தகப்பனாருடன் போகும் வழியில் “அவள் நல்லாய் அழுது போட்டாள் கத்தரிக்காய் நெய்யில் பொரித்துக் கொடுங்கோ’ என்று சாமி சொன்னாராம். இந்தளவு கருணை யாருக்குத்தான் வரும். இதை உணர்ந்தவர்களுக்குத் தானே அதன் பெருமை தெரியும். அன்று தொட்டு இன்று வரையும், இந்தக் கருணையின் பெருமையைத் தான் முனிவர்களும், ஞானிகளும், அளக்கவும் சொல்லவும் அளவுகோல் இல்லாமல் திண்டாடியிருக்கின்றார்கள். எனவே மெளனமாய் இருந்து விட்டார்கள். இதற்கு மெளனம் தான் விடை. ஒன்றில் மெளனம் என்பார்கள் அல்லது சொல்லத்தான் வேண்டுமென்றால், அது ஐந்து புலன்களுக்கும் மனதிற்கும் அப்பாற்பட்டது எனறு மழுப்பி விடுவார்கள்.
எங்கள் வீட்டிற்குச் சாமி வரும்போதெல்லாம் அம்மா அவருக்கு மிகவும் பிடித்தமான புளுக்கொடியல் மாவுடன் தேங்காயப்பூவையும், சீனியும் அல்லது சர்க்கரையும் கலந்து, குழைத்து உருண்டைகளாகக் கொடுத்தால் சாப்பிடுவார். மிச்சம் பிரசாதம் எங்களுக்கும் கிடைக்கும். நல்ல பால் தேத்தண்ணிரும் தான் குடித்துவிட்டு மிச்சம் தருவார். நாங்கள் அதை அம்ருதம் கலந்த தீர்த்தமாய் அருந்துவோம். அரை மணித்தியாலம் ஒரு மணித்தியாலம் என்று இருப்பார். பலவிதமான அறிவுரைகள், அவரவருக்கு ஏற்றதாக எடுத்துச் சொல்லுவார். விவேகானந்தரின் புத்தகத்தை என்னை வாசிக்கச் சொல்லுவார். கடவுள் எங்கே என்று தேடிய எனக்கு விளக்கம் கொடுக்க வந்தவரல்லவுர? மானசதீட்சை, நயனதீட்சை எல்லாம் தந்து எங்களை வளர்த்தார். ஒவ்வொரு நாளும் சாமி வந்து இருந்தவுடன், அம்மா முதலில் போய் காலடியில் விழுந்து தொட்டுக் கும்பிடுவா. எங்களையும் கும்பிடச் சொன்னதும் நான் காலைத் தொடாமல், சும்மா விழுந்து கும்பிட்டு விட்டு வந்து விடுவேன். பயம் தான். யார் யோகர்சாமியைப் பற்றிக் கதைத்தாலும் நடுங்குவார்கள். பயத்தில் அவர் பேசாத
61

Page 43
பேச்செல்லாம் பேசிக் கலைத்து விடுவாராம். அவருடைய பளிங்கு போன்ற உள்ளம், கெட்டசகவாசம் உள்ளவர்களைக் கிட்டநெருங்க விடுவதில்லையாம். ஆனால் பேச்சையும் ஆசீர்வாதமாக எடுத்து அவரைத் தொடர்ந்தவர்களும் உண்டு. ஆனால் என்னை என்றைக்கும் ஒரு செல்லப்பிள்ளையாகத் தான் பாவித்தார்.
ஒரு நாள் வழக்கம் போல் விவேகானந்தருடைய புத்தகத்தை வாசிக்கச் சொன்னார். நின்றபடியே வாசித்தேன். இருக்கச் சொன்னால் தான் இருப்போம். வாசிக்கும் போது நடுவில் குழப்பிக் குழப்பிக் கேள்விகள் கேட்பார். மறுமொழி சொல்லிக் கொண்டே வந்தேன். இருந்தாப் போல் ஒன்றும் தெரியவில்லை. மயக்கமாக வந்தது. சாமி கதிரையில், ஒரு ஆறு அடி மட்டில் தள்ளி இருந்தவர்உடனே 'ஆ ஆ என்னது” என்று சொல்லிக் கொண்டேவந்து எனது வலது கையைப் பிடித்து "அப்படியே இரு” என்றார். இருந்தேன் ஒரு நிமிடம் தான், நான் திரும்பவும் எழும்பிவிட்டேன். தொடர்ந்து வாசித்தேன். என்னுடைய சீவியத்தில் ஒரு நாளும் இப்படி மயக்கமடையவில்லை. என்னுடைய விளக்கத்தின்படி, சாமிஎனக்குப் பூரணதீட்சை தருவதற்காக இந்தச் சம்பவத்தை நடத்தியிருப்பார். சாமி என்னை எவ்வளவு கவனமாக வளர்த்திருக்கிறார் என்பது காலம் போகப் போகத்தான் விளங்கியது.
வீட்டிற்கு வீடு வாசற்படி என்பது எல்லோரும் அறிந்ததே. வீட்டிற்கு வீடு சண்டை சச்சரவு சகஜம் என்றும் தெரியும். நான் வழக்கமாய் வீட்டு வேலைகள் எல்லாம் செய்து முடித்து விட்டுத் தான், சாமி, கோயில், அபிஷேகம், திருவிழா என்று செல்வேன். இப்படி இருந்தும் வீட்டில் சச்சரவு சில வேளைகளில் எழுவதுண்டு. ஒரு நாள் கவலை கொஞ்சம் கூடிவிட்டது. உடனே சாமியிடம் போவோம் என்று போனோம். சாமி சுகமில்லாமல் கட்டிலில் இருந்த காலம் அது. நான் அறைக்குள் போன போது, காலை நிலத்தில்
62

வைத்துக் கொண்டிருந்தார். சாமியைக் கண்டதும், மனம் வெடித்து அழுதுகொண்டே அவருடைய காலடியில் விழுந்தேன்.
உடனே அவருடைய வாயிலிருந்து மந்திரமாக, மறுமொழியாக, கவலை தீர்க்கும் மருந்தாகத் திருவாசகம் ஒன்று ஒலித்தது. இந்த நேரத்துக்குப் பொருத்தமாக வசனம் வேறெங்கும் தேடியும் இதைப்போல் கிடைக்காது. முத்தாக வாயிலிருந்து வந்தது இது தான்.
முத்தி நெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பக்திநெறியறிவித்துப் பழவினைகள்பறும்வணணஞர் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையானட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே
என்று பாடி முடிக்கும் வரை நான் அவருடைய காலடியில் கிடந்தேன். பாடி முடித்ததும் "எழும்பு எழும்பு தங்கச்சி, அந்தத் தீபத்தில் கற்பூரத்தைப்போட்டுக் கொழுத்து” என்று பஞ்சாலாத்தி தீபத்தைக் காட்டினார். உடனே சிவபுராணம் பாடத் தொடங்கினார். 'நமச்சிவாய வாழ்க’ என்று தொடங்கி "பல்லோரும் ஏத்தப் பணிந்து” என்று முடியுமட்டும் நான் கற்பூரத்தை ஐந்து தீபத்திலும் போட்டு என் கவலைகளை எரித்துக் கொண்டிருந்தேன். சாமி பாடிக் கொண்டே இருந்தார். நானும் தீபம் எரிந்து முடியும் வரை காத்திருந்தேன். சாமி தியானத்திலிருந்தார். நான் அவரைப் பார்த்தபடியே இருந்தேன். தியானம் முடிந்ததும் நல்ல வேதாந்தக் கருத்துக்களைச் சொல்லி உற்சாகமூட்டி “சரி போயிற்று வா தங்கச்சி” என்று அன்போடு வழியனுப்பினார். சுகமில்லாத நேரமும் எவ்வளவு கருணையை மற்றவர்களுக்காகக் கொட்டிய பெருமானைப் பிரிந்து போக மனமில்லாமல் வீடு திரும்பினேன். இந்தச் சம்பவத்தின் பின் யாராவது கடவுள் வணக்கத்திற்குக்
63

Page 44
குறை கூறுபவர்களை, முத்தி நெறி அறியாத மூடர் என்று நினைத்து ஆறுதல் அடைவேன்.
என் தகப்பனார் எப்பவும் எந்தச் சந்தர்ப்பத்திலும் நேர்மைகடைப்பிடித்தார். இந்த உலக வாழ்க்கையில் அப்படி வாழ்வது மிகக் கஷ்டம் என்பதை நானும் என்னுடைய அனுபவத்தில் அறிந்து கொண்டேன். அப்படிக் கடமையைச் சரிவரச் செய்தபடியால், அவருக்கு ஏதொ சிறியதோ பெரியதோ "நான் என்ற ஆணவம்” இருந்திருக்கலாம். திரிகாலமும் அறிந்த சாமிக்கு சகலமும் தெரியும் தானே. ஒரு நாள் தகப்பனார், ஒரு செம்பில் காய்ச்சிய பால் சாமிக்குக் கொண்டு போயிருக்கிறார். ஆனால் சாமி அந்த நேரம் எங்கோ போய்விட்டார். தகப்பனார் சாமி வரும்வரை காத்திராமல், செம்பையும் பாலையும் அங்கே வைத்துவிட்டு, வீட்டுக்கு வந்துவிட்டார். தன்னோடு சாமி விளையாடுகிறார் என்று எங்களுக்குச் சொன்னார். பிறகு மற்றக் கிழமை அளவில் கொழுக்கட்டை செய்து கொண்டு அம்மாவும் பிள்ளைகளுமாகச் சென்றோம். அங்கு வழக்கம் போல் முதல் தகப்பனார், பின்னால் அம்மா, நாங்கள் என்று வரிசையில் போனோம். சாமி தன்னுடைய இருக்கையில் அமைதியாக நாடகத்தை நடத்த ஆயத்தமாக இருக்கிறார் என்று தெரிந்தது.
தகப்பனார் கதவடியில் சென்றதும் ஒரே கோபமாக, உரத்த குரலில் “ஆர் அது? அங்கே நில்” என்றார் அன்றைக்குத் தான் அவருடைய கோபமான சத்தத்தைக் கேட்டேன். நானும் பயந்து விட்டேன். தகப்பனார் கதவடியில் வெளியில் நின்றுவிட்டார். சாமி விடவில்லை. "யாரென்று கேட்டால் மறுமொழி சொல்வது தானே' என்றார். தொனி குறையவில்லை. தகப்பனார் பதிவாக "நான் தான் சின்னத்தம்பி’ என்றார். சாமி கேட்டார் “சின்னத்தம்பி என்றால் ஆற்றை சின்னத்தம்பி” என்றார். தகப்பனார் மறுமொழி சொல்லச்
64

சொல்ல, அவரும் வெட்டி வெட்டிச் சம்பாஷணை தொடர்கிறது. நான் உடனே தகப்பனாருக்கு முன்னால் சென்று "நாங்கள் தான் சாமி” என்றேன். சிரித்து விட்டு “ஆ தங்கச்சியே வாருங்கோ வாருங்கோ, எல்லாரும் இருங்கோ” என்று ஒன்றும் தெரியாத மாதிரி நடிக்கிறார். பிறகு சந்தோஷமாகக் கதைத்து, கொழுக்கட்டையும் வேறு பிரசாதமும் எல்லோருக்கும் கொடுத்து எங்களை வழி அனுப்பினார்.இது எல்லாம் அவருடைய விளையாட்டு. அப்படி அவரோடு பழகியவர்களுக்குத் தான் அவருடைய நாடகங்களும் நடிப்பும் விளங்கும். அவருக்கு இது பொழுது போக்கு. ஆனால் எங்களுக்கு அதை உள்ளதை உள்ளபடி அறியமுடியுமானால் இன்பம், அல்லது திண்டாட்டம் தான். சாமியிடம் பேச்சு வேண்டித் திருத்தப்பட்டவர்களும் அநேகம் என்று அறிந்தேன்.
ஒரு நாள் சாமி வீட்டுக்கு வந்த பொழுது கதைத்துக் கொண்டிருந்தார். மழை பெய்யத் தொடங்கியது. வெகுநேரமாகியும் விடவில்லை. சாய்மான நாற்காலியில் பேசாமல் தியானத்தில் படுத்திருந்தார். சிறிது நேரத்தில் மழை விட்டது. சந்தோஷமாகக் கதைத்து விட்டுப் போய்விட்டார்.
நான் பாலபண்டிதர் சோதனை முதல் தரம் சித்திபெறவில்லை. ஆனால் சாமி பண்டிதர் பாடத்தையும் தொடக்கிச் சிவதொண்டன் நிலையத்திற்குக் கிட்ட இருந்த ஒரு அன்பரின் வீட்டில் போய் படிக்க ஒழுங்கு பண்ணினார். காலையில் போய் படித்துவிட்டுப், பகல் சாப்பாடும் அவர்கள் வீட்டில் சாப்பிட்டுப், பின்னேரமும் படித்து விட்டு வீடு திரும்புவேன். ஒரு கிழமைக்கு 2 தரம் போய் வந்தேன். இடையில் பாலபண்டிதர் சோதனை எடுத்துச் சித்தி பெற்றேன். 2 மாதம் பண்டிதர் சோதனை இருக்கும் பொழுது விவாகம் நடந்தது. சண்டைக் காலம், சிங்கப்பூரில் இருந்த என் தகப்பனாரும் ஊருக்கு
65

Page 45
வந்தார். சாமியுடைய வருகை இந்தளவில் நின்றுவிட்டது. நானும் கொழும்புக்குப் போய்விட்டேன். நிச்சயமாக இந்தக் குடும்ப நாடகம் பிடித்ததோ, பிடிக்கவில்லையோ என்றதல்ல பிரச்சனை. என்னுடைய துக்கமெல்லாம், இவ்வளவு காலமும் சாமி தேடி வந்து செய்தவற்றையும் மறந்து சாமியையும் மறந்து விட்டேன். கொஞ்சம் கூட நினைவில் இல்லை. ஆனால் முருகனை ஒரு காலமும் மறக்கவில்லை. குடும்பத்தில் மனக்கசப்பு வரும் வேளையில் முருகனை வருந்தி வருந்திக் கூப்பிடுவேன். இப்படியே கொஞ்ச வருடங்கள் மாயமாய் மறைந்தன. ஏதோ புண்ணிய வசத்தால் யாழ்ப்பாணம் விடுதலைக்கு வரும் போது யோகர் சாமியைப் போய்க் கும்பிடுவோம்.
ஒரு முறை விடுதலைக்கு யாழ்ப்பாணம் போயிருந்த பொழுது ஒரு பின்னேரம் “தங்கச்சி தங்கச்சி” என்று கூப்பிட்டுக் கொண்டு வீட்டிற்கு வந்தார் சாமி. நான் திகைத்துப் போனேன். நான் மறந்தாலும் சாமி என்னை மறக்கவில்லை. அது தான் உண்மை என்பதை அறியாதது என் குற்றம் தான்.
குடும்பத்தில் பிள்ளைகளின் வேலைகளிலும், வீட்டுவேலை, சமுதாயக் கொண்டாட்டங்கள், அனைத்தும் தன் மாயத்தைக் காட்டி மயக்கி ஏதோ இந்திரபுரியில் இருப்பது போல் போக்குக் காட்டின. யோகர் சாமியின் படம் கூட என்னிடம் இருக்கவில்லை. அவ்வளவு மும்முரமாகக் குடும்ப வணிடியில் போய்க் கொண்டிருந்தேன். ஒரு முறை யாழ்ப்பாணம் விடுதலைக்குப் போய் இருந்த பொழுது டாக்டர் பசுபதி வீட்டிற்குப் போனேன். அப்பொழுது அங்கே சாமியுடைய படத்தைக் கண்டதும் நினைவு வந்தது. தன்னிடம் வேறு படம் இருப்பதாகக் கூறி ஒரு படம் எனக்குத் தந்தார்கள். அதைக் கொண்டு போய்க் கண்ணாடி போட்டு சாமிப்படங்களுடன் வைத்துக் கும்பிடத் தொடங்கினேன். அன்று
66

தொடக்கம் இன்று வரைக்கும் சாமி என்னை மறக்க விடவில்லை. பிள்ளைகளுடன் குடும்பமாகஒரு 12 வருடம் தான் கொழும்பு, கண்டி என்று சீவியம் நடந்தது. பிறகு 1958ல் யாழ்ப்பாணம் வந்து திருநெல்வேலியில் வீடும் கட்டி, சந்தோஷமாக ஊரோடு இருந்தேன்.
நல்ல காலம் சுவாமியுடைய நினைவு மனதில் கூடிய இடத்தைப் பிடித்துக் கொண்டது. இடைக்கிடை சாமியைப் போய்த் தரிசித்து வருவது வழக்கமாகி விட்டது. கொழும்புத்துறை ஆச்சிரமம் தான் அவர் விரும்பி அதிக காலம் இருந்த இடம் என்று நினைக்கின்றேன். ஆனால் அவர் முற்றும் துறந்த துறவி என்றாலும் மக்கள் மத்தியில், புளியம் பழமும் ஒடும் மாதிரி இருந்தார். காலையில் வெளிக்கிட்டால் யார் யாருக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ, அவர்களுக்குச் சாப்பாடு கொடுக்கும் புண்ணியமும் தரிசனமும் கிடைக்கும். பின்னேரம் தான் ஆச்சிரமம் திரும்புவாராம்.
இந்த நாட்களில் சிவதொண்டன் கட்டடத்திலும் ஒரு சம்பவம் நடந்தது. வழக்கமாய் ஏதாவது கவலை வந்தால், கொழும்புத்துறை ஆச்சிரமத்துக்குப் போய், சாமி உயிருடன் இருக்கும் பொழுதும் சரி, பரமபதம் அடைந்த பிறகும் சரி, கொஞ்ச நேரம் இருந்து கும்பிட்டு, மனம் நிம்மதியாக வீடு திரும்புவேன். ஒரு முறை கொழும்புத்துறை ஆச்சிரமத்திற்குப் போக, அங்கு சாமி இல்லை. சிவதொண்டன் நிலையத்தில் இருக்கிறார் என்று சொன்னார்கள். சாமியைக் காணாமல் வீடு திரும்ப மனமில்லை. எனவே நேரே சிவதொண்டன் நிலயத்திற்குச் சென்றோம்.
67

Page 46
நான் அங்கு போனது மிகக் குறைவு. அங்கு போனதும் எங்கும் நிசப்தம் நிலவிற்று. அன்பர்கள் கூட்டம் கூட்டமாக, அங்கும் இங்குமாக வரிசையில் இருந்தனர். நானும் ஒரு இடத்தில் இருந்தேன். அறைக்குள் இருந்து சாமியுடைய சத்தம் அழுதுகொண்டே கதைப்பது கேட்டது. உற்றுக் கேட்டேன். “ஏன்ரா இப்படிச் செய்கிறாய் நான் வரமாட்டேன் போ. எவ்வளவு காலம் நான் சொல்கிறேன், ஏன்ரா கேட்கிறாயில்லை” என்று ஒரு தாய், தன் நெறி தப்பிய பிள்ளைக்கு, எவ்வளவு உருக்கமுடன், உணர்ச்சியுடன், அழுது அழுது புத்தி சொல்லுவாளோ, அப்படி இருந்தது , அந்த உருக்கம், அன்பு, உரிமை, கவலை, எல்லாம் சேர்ந்து ஒலித்தது அவர் குரல். இன்னுமொரு குரல் "இனிமேல் நான் செய்யவில்லை, நீங்கள் ஆச்சிரமத்துக்கு வாங்கோ” என்று பயபக்தியுடன் மறுமொழி சொல்வது கேட்டது. நான் என்ன சங்கதி என்று மற்றவர்களிடம் கேட்டேன். அவர்கள் ஒரு அன்பர், சாமி சொல்லியும் கேட்காமல் மது பாவித்தார் என்றும்சாமி அங்கிருக்காமல், கோபமாக இங்கே வந்தார் என்றும், இதை அறிந்து அன்பர் தான் திருந்துவதாகச் சொல்லி சாமியை வரும்படி அழைக்கிறார் என்றும் அறிந்தேன். சாமியுடைய கவலை என் கவலையாக உணர்ந்தேன். என் மனதில், அந்தக் குரல் இன்னும் பதிந்திருக்கின்றது. ஒரு விதமாய் இருவரும் ஒரு முற்றுக்கு வந்து, அன்பர் போய் விட்டார். எல்லாரும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. நான் உள்ளே போய்ச் சாமியைப் பார்ப்போமென்று எட்டிப் பார்த்தேன். கண்டதும் உடனே எல்லாம் மறந்து “தங்கச்சி வா, வா, இருங்கோ” என்று அன்போடு வரவேற்றார். வழக்கம் போல் அறிவுரையும் ஆசியும் பெற்று வீடு திரும்பினோம். பிழை செய்யாதவர் இந்த உலகில் ஒருவரும் இல்லை. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் தான், குருவே தலையிட்டு, உரிமையுடன் திருத்தி, ஆசீர்வதித்து, நல்ல வழியில் செல்ல வைப்பது கிடைக்கும். ܗܝ

இன்னுமொரு அன்பர் சிறு வயது முதல் சாமியிடம் நல்ல பக்தியும் பயமும் உடையவர். ஆனால் கதைத்த பழக்கம் இல்லை. வெளிநாட்டிலிருந்து வந்தார். சாமியிடம் நான் அவரைக் கூட்டிக் கொண்டு போனேன். அவர் மனத்தில் தன்னை ஆசீர்வாதம் செய்ய வேண்டுமென்று மானசீகமாக நினைத்துக் கொண்டு வந்தார். கால் கழுவி அறைக்குள் சென்றோம். வழக்கம் போல் நான் முதல் காலடியில் விழுந்து கும்பிட்டேன். அன்பர் கும்பிட்டுக் கால்களைத் தொட யோசிக்கவும் சாமி கால்களை இழுத்து மேலே கட்டிலில் போட்டுவிட்டாராம். கொடுத்து வைத்தது. அவ்வளவு தான் என்று குறைப்பட்டார் அந்த அன்பர்.
சில சமயம் பிள்ளைகளையும் ஆச்சிரமத்திற்குக் கூட்டிக்கொண்டு போவோம். அப்போது நாங்கள் ஒவ்வொருவரும் உணர்ச்சிவசப்பட்டு சாமியையும் பார்த்தபடி, என்ன செய்கிறார், என்ன சொல்கிறார், என்ற சிந்தனையில் மூழ்கிப் போயிருப்போம். பிள்ளைகளும் தங்களுடைய பிராரப்தம் காரணமாகவே, அவர்களுடைய செயல் இருக்கும் என்பதைப் புரிய வேண்டும். ஒரு பிள்ளை சாமியின் முன்னால் அமர்ந்து எப்போ வாழைப்பழப் பிரசாதம் தருவார் என்று பார்த்துக் கொண்டிருக்கும். மற்றப்பிள்ளை வெளியில் நல்ல மணல் இருக்கிறது அதில் விளையாடுவோம் என்று விளையாடியது. வயது வந்த பின்புதான் இந்தச் சம்பவங்களைப் பற்றிக் கதைத்துக் கொணடார்கள். எது எப்படி இருந்தாலும் சாமி எல்லாரையும் ஒரு மாதிரித்தான் பார்த்திருப்பார்.
மகனிடம், யோகர் சாமியிடம் போன போது உனக்கு எப்படி இருந்தது என்று கேட்டேன். தான் எனக்குப் பக்கத்தில் இருந்து, நாங்கள் என்ன கதைக்கிறோம் என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தாராம். பயமும் இருந்ததாம். மற்றப்பிள்ளை தான் சாமி சொல்லிய வசனங்களைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்தாராம்.
69

Page 47
அதாவது “எப்பவோ முடிந்த காரியம் என்றால் என்ன? ஒரு பொல்லாப்பும் இல்லை” முதலிய வசனங்களில் பொதிந்த உட் கருத்தை அறிய முற்பட்டாராம். ஆராய்ச்சி தேவைதான். ஆனால் ஆராய்ச்சி, சலசலப்பில் தான் முடியும். மெளனத்தில் தான் எல்லாம் விளங்கும்.
சாமி பரம பதமடைந்து விட்டார் என்றதும் போனேன். என்னைக் கண்டதும் “தங்கச்சி” என்று சிரித்துக் கதைத்து என்னை வாழ வைத்தவர், என்ன இப்படிப் படுத்திருக்கிறார்? இப்படியே உடம்பு மறைந்து விட்டால் என்னத்தைப் பார்ப்பது? யாரிடம் கேட்பது என்ற எண்ண அலைகள் பாய்ந்தன. என்னையும் அறியாமல் அவருடைய காலடியிலிருந்து அழுதேன். துக்கம், கவலை தீருமட்டும் அழுதேன். மற்றவர்கள், தங்கள் துக்கத்தை அடக்கிக் கொண்டு வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தனர். எனக்குச் செல்லப்பிள்ளைக்கு நகர முடியவில்லை. இறுதிக் கிரியைகள் முடிந்தன. ஊாவலத்தில் நானும் கலந்து கொண்டேன் சந்தனக் கட்டை நெருப்பில் அவருடைய ஸ்தூல உடம்பு எரிந்து கொண்டிருந்தது. நானும் எனக்குக் கிடைத்த சந்தனக் கட்டையை நெருப்பில் போட்டேன். உடம்பு போய்விட்டது. ஆனால் சாமி என் உள்ளே இருக்கிறார், காப்பாற்றுவார் என்ற எண்ணத்துடன் காலச் சக்கரம் ஓடிக்கொண்டிருந்தது.
இவ்வளவு காலமும் சாமி என்னை வலிய வந்து தேர்ந்தெடுத்து பண்டிதர் வரை படிப்பித்து, இலக்கியமும் இலக்கணமும் விளங்க வைத்தார். இன்னும் சொல்லப் போனால் சாமியுடைய அரவணைப்பில் ஆனந்தமாகச் சொன்னவற்றைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல் பாடமாக்கி வைத்திருந்தேன். மெய்ஞ்ஞானம் விளங்கவில்லை. நாரதர் முதலானோர் கூட விஞ்ஞானம் அத்தனையும் படித்தும் மெய்ஞ்ஞானம் விளங்குவதற்கு,
70

ரிஷிகளான, குருவைத் தேடினால் நாங்கள் எம்மாத்திரம்? எனவே தீட்சை கொடுத்து மெய்ஞானம் படிப்பதற்கு, சாமி இன்னுமொரு குருவை அனுப்பி வைத்தார் போல் தோன்றுகிறது. நல்லூர் முருகன் திருவிழாவில் தற்செயலாக அவரைக் கண்டேன். அவர் வீட்டிற்கு வந்து அறிவுரைகள் தந்தார். பல விதமான ஆரம்பப் புத்தகங்கள் தந்தார். எல்லாவற்றையும் ஆவலுடன் வாசித்தேன். இப்போது தான் மெய்ஞானம் புரியத் தொடங்கியது. தீட்சையின் பின்பு மந்திர ஜெபம் முறைப்படி கொஞ்சக் காலம் செய்தேன். அறிவு விரியத் தொடங்கியது. அனுபவமும் நிறையக் கிடைத்தன. நான் போகும் வழி சரியா, பிழையா என்பதை அவ்வப்போது சந்திக்கும் ஞானிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேனி. “அவனன்றி அணுவும் அசையது அவனருளாலலே அவன் தாள் வணங்கி” என்ற கூற்றின் படி, கடவுளிடம் அளவு கடந்த பயபக்தி உண்டாகியது. வீட்டு வேலைகள் பிள்ளைகளுடைய வேலைகள் எல்லாம் செய்து கொண்டே கடவுள் வணக்கமும், ஆராய்ச்சியும் தீவிரமாகச் செய்தேன். மிகத் தீவிரமாகத் தீட்சை மந்திரம் ஜெபித்தேன். நான் விரும்பிய தெய்வம் முருகன். அவன் நாமம் கற்கண்டு போல் இனித்தது. இந்த நாட்களில், யோகர் சாமியுடைய உருவம் மனத்தில் இல்லை. நாமஜபம் தீவிரமாகச் செய்த நாட்களில், பலவிதமான காட்சிகள், தியானத்தில் காண ஆரம்பித்தேன். இரவில் நித்தம் காட்சிகள் சர்வசாதாரணமாக வளர்ந்தன. முருகனைக் காண வேணும் என்ற பக்தியும், பிடிவாதமும் தீவிரமாக இருந்தது. மனம் ஒரு முகமாக முருகனைக் காண வேண்டியது.
ஒரு நாள் இரவு வழக்கமான காட்சிகள் வந்தன. இருந்தாப்போல் நினைவிலேயே இல்லாது மறந்து போன யோகர் சாமி பெலத்துச் சிரித்துக் கொண்டு ஒரு சின்னக் குன்றின் மேல் காட்சி அளித்தார். நான் திகைப்படைந்தேன். என்ன நடக்கின்றது என்று விளங்கவில்லை. யோகர் சாமியார் மறைந்தார். அடுத்து
71

Page 48
நல்லூர் முருகன் கோவில் கோபுரமும், அதிலுள்ள பொம்மைகளும் கண் சிமிட்டின. அதன் பின்பு கொஞ்ச நேரம் நான் கண்டவற்றையும் அனுபவித்தவற்றையும் சொல்லில் விளக்க முடியாது. ஆனால் அவ்வளவும் என் மனத்திரையில் அப்படியே இன்றைக்கும் பதிந்திருக்கின்றன. பயங்கரம் ஒரு பக்கம், ஆனந்தம், திகைப்பு எல்லாம் சேர்ந்திருந்தன. உடம்பு முழுதும் விறைத்துப் போய் விட்டது. அசைய முடியவில்லை. எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ? யோகர் சாமிக்குத் தான் தெரியும். பல சாமிமாருடன் இந்த அனுபவத்தைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் எத்தனையோ லட்சம் பிறவிகளில் செய்த புண்ணியத்தால் தான் இந்த அனுபவம் கிடைக்கும் என்று சென்னார்கள். அத்தோடு என்னை எந்த நிலைக்கும் மூளையைப் பாதித்திருக்கலாம் என்றும் அறிந்தேன். யோகர் சாமி தான் என்னை இந்த நிலையிலும் காப்பாற்றி இருக்கிறார் என்று நிச்சயம் நான் நம்பலாம். இந்த அனுபவத்தை அனுபவித்தவர்கள், அதைப்பற்றி எழுதிய புத்தகங்களையும் வாசித்திருக்கிறேன். ஒரே மாதிரி எல்லாருடையதும் இல்லை. சிறு சிறு வித்தியாசங்கள் உண்டு. எனக்குக் கஷ்டம் வராமல் தடுத்த யோகர் சாமியை எப்படி வாழ்த்துவேன். சுவாமி வேறு நான் வேறு இல்லை என்ற உணர்மை புரிந்தது.
ஒரு நாள் சாமி வந்து பால் கொணிடு வந்து தரச்சொன்னதாகக் கனவு கண்டேன். விடிய் எழும்பி இந்தக் கனவு உண்மையோ பிரமையோ என்று நிச்சயம் செய்ய முடியவில்லை. சரி, பாலைக் கொண்டு ஆச்சிரமத்துக்கு வருகிறேன். ஆனால் நீங்கள் உண்மையாகத் தான் சொன்னதாய் இருந்தால் எனக்கு அத்தாட்சி காட்ட வேண்டும் என்று மனதில் நினைத்த படி பின்னேரம் கற்கண்டு போட்டுப் பாலைக் காய்ச்சி தூக்குச் செம்பில் ஊற்றிக்கொண்டு போனோம். சாமி பரம பதமடைந்த பின்னர் தான் இந்தச் சம்பவம் நடந்தது. சாமி பரம பதமடைந்த பின்பு வழக்கமாக
72

நாங்கள் ஆச்சிரமம் சென்றால், படலையைத் திறந்து, வாசலில் இருக்கும் நீரில் கால் கழுவி, வீட்டுக்காரர் திருநாவுக்கரசுவிடம் ஆச்சிரமத் திறப்பை வாங்கித் திறந்து, விளக்கும் ஏற்றிப்பூவைத்து, வணங்கி விட்டுத், திறப்பை ஆச்சிரமம் பூட்டிய பின் அவர்களிடம் கொடுத்து விட்டுத் தான் வீடு திரும்புவோம்.
அன்று என்ன நடந்தது? நான் படலையைத் திறந்தவுடன், திருநாவுக்கரசு ஆச்சிரம விறாந்தையில் சிரித்த முகத்துடன் நின்று "வாருங்கோ வாருங்கோ” என்று வரவேற்றார். நான் கேட்டபடி சாமி என்னை வரவேற்கிறார் என்று விளங்கியது. திகைப்புடன் பூசைச் சாமான்களுடன் அறைக்குள் சென்றோம். சாமி உயிருடன் இருந்த காலத்தில் பூசை அறை எப்படி இருந்ததோ, அப்படி எனக்குக் காட்சியளித்தது. திருநாவுக்கரசு, பழத்தையும், தூக்குச் செம்பையும் வாங்கினார். பழத்தைப் படைத்தார். தூக்குச் செம்பின் மூடியைத் திறந்து வைத்தார். கற்பூரம் போட்டுப் பஞ்சாராத்தி காட்டிய பின் வைத்தார். நான் முழுத் திருப்தியுடன் தீபத்தில் கற்பூரம் முடிய முடிய எரித்தக் கொண்டே சிவபுராணம் LffL) முடித்தேன். வேறு தேவாரங்களும் பாடி முடித்தேன். அவ்வளவு நேரமும் திருநாவுக்கரசு எங்களுடன் நின்றார். திரும்பவும் திருநாவுக்கரசு பஞ்சாலாத்தி காட்டி எங்களிடம் தந்தார். வீட்டிலிருந்து 2 பேணிகள் எடுப்பித்து அதில் பாலை ஊற்றி எங்கள் இருவருக்கும் குடிக்கும் படி தந்தார். குடித்தோம். பிரசாதமாகக் கொஞ்சப் பழமும், தீர்த்தமாகச் செம்பும் பாலும் தந்து, "இனிப் போட்டு வாருங்கோ’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தார். இப்படியும் நடக்குமா என்று ஆச்சரியப் படுபவர்களும் உலகத்திலிருப்பர். அவர்களுக்கு "கேளுங்கள் கொடுக்கப் படும் தட்டுங்கள் திறக்கப் படும்” என்ற வாசகங்கள் விளங்காமலே போய் விடும். இப்படியே ஒவ்வொரு சம்பவமும் என் மனத்தில் பதிந்து விட்டன. நன்றியாக அவர் உருவம் என் நெஞ்சில் பதித்திருக்கின்றேன்.
73

Page 49
மேற் கூறிய சம்பவம் போல் நான் இங்கிலாந்தில் இருந்த பொழுது இன்னுமொரு சம்பவம் நிகழ்ந்தது. யோகர் சாமியுடைய குருபூசை விம்பிள்டன் பிள்ளையார் கோவிலில் செய்யப் போவதாக ஒரு அன்பர் சொன்னார். நான் கோவிலுக்கு வர வசதி இல்லை என்ற படியால் பின்னேரம் அங்கே போன பொழுது கணவனும் மனைவியும் கதவைத் திறந்தார்கள். நாங்கள் உள்ளே போனதும் அன்பர் சொன்னார் “நீங்கள் இன்றைக்குப் பிரசாதம் எடுக்கத் தானே வந்தீர்கள். அப்ப முதலில் சாமியறைக்கு மேல் வீட்டிற்குப் போங்கோ என்றார். நாங்கள் மேலே போனோம். சாமியறைக்கதவு திறந்திருந்தது சாமி உயிருடன் இருந்த பொழுது பாவித்த அங்கவஸ்திரம் முதலி சகல சாமான்களும் அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சாமியுடைய படங்களும் தெய்வங்களின் படங்களும் அழகாக அடுக்கியிருந்தன. பால், பழங்கள், தண்ணீர், பிரசாதம் எல்லாம் இருந்தன. ஊதுபத்தியும் கம கம என மணம் பரப்பியது. ஒரு பூசைக்கு வேண்டிய சகல சாமான்களும் அங்கு இருந்தன. சாமி அங்கு இல்லை என்று சொல்ல முடியாமல் அவருடைய சாந்தி, நிறைந்த அருளை வீசிக்கொண்டிருந்தது. அன்பர் வந்து பார்த்து விட்டுக் கீழே போய்விட்டார். என்னுடன் வந்த தம்பியும் நானும் கொஞ்ச நேரம் இருந்து கும்பிட்டோம். அப்போது சாமியுடைய படமொன்றைத் தம்பிக்குக் காட்டி, அன்பர் எனக்குத் தந்தால் சந்தோஷம் என்று சொன்னேன். ஆனால் கேட்க மனம் வரவில்லை. தம்பியும் கீழே போய் விட்டார். நான் தனிமையில் சிவபுராணம் பாடினேன். பின்பு நற்சிந்தனைப் புத்தகத்தை எடுத்து எனக்கு என்ன மறுமொழி தருகிறீர்கள் என்று நினைத்துக் கொண்டு புத்தகத்தை விரித்தேன். சாமி தந்த மறுமொழி இது தான்.
கருத்திலிருக்கும் கதிர்காமத்தோனை வருத்தமுற்றேன் தேடுகின்றாய்-திருத்தியுடன் சித்தமிகைநித்தம் திகழொளியைக் கணடுருகி முத்தென வாழ முயல்,
74

இந்தப் பாட்டை ஒரு கடதாசியில் எழுதிக்கொண்டு கீழ் வீட்டிற்கு வந்தேன். w
அன்பர் திகைப்புடன் தம்பியுடன் கதைத்துக் கொண்டிருந்தார்.என்ன சங்கதி என்று கேட்டேன். அவர் சொன்னது இது தான். தான் அந்த வீடு கட்டி 3 வருடங்கள் ஆகின்றன. வீடு குடிபுகுந்த பொழுது மேள வாத்தியங்களுடன் மங்களகரமாக சாமியுடைய படமும், சகல சாமான்களும் எடுத்து வந்ததும், பிறகு பிராமணர் பூசை வைத்ததும், அன்று தொடக்கம் இன்று வரை தானும் மனைவியும் சேர்ந்து காலை, மாலை பூசை செய்தல், முடிந்ததும், விளக்கும் அணைத்து. எடுக்கிறவற்றை எடுத்துக், கதவும் பூட்டிக் கொண்டு வருவது தான் வழக்கம். ஒரு நாள் ஒரு நேரம் தானும் கதவு பூட்டாமல் இறங்கி வரவில்லை. இன்றைக்கு என்ன நடந்தது? சாமி உங்களுக்கு விசேஷமாக வரவேற்பு அளித்திருக்கிறார். உங்களோடு வந்திடுவாரோ என்று கூடத் தோன்றுகின்றது, என்று பயபக்தியுடன் சொன்னார். சாமியுடன் பழகியவர்களுக்கு இந்த விதமான சம்பவங்கள் எல்லாம் பழக்கப்பட்டுப் போய்விடும் என்றேன். யாழ்ப்பாணத்தில் கனவில் சாமி பால் கேட்டதும், நான் அதைக் கொண்டுபோக, என் விருப்பத்தின் படி தான் அங்கு இருக்கிறார் போல் நாடகம் நடித்ததையும் நான் சொன்னேன். சாமியை முழுதும் நம்பி இருக்கும் அன்பர்களுக்கு ஒரு குறையும் இல்லை "வருவது எல்லாம் வந்தே ஏகுக கருதுப எல்லாம் கருதித் தீருக”என்று சாமி சொன்னது போல் நாம் இருந்தால் சாமி எங்களுக்கு நடப்பதெல்லாம் நாடகமாக்கித் தானும் எங்களோடு சேர்ந்து நடித்து முடித்து விடுவார்.
அன்பர் தான் சாமியை முச்சக்கர வண்டியில் வைத்து வெகு தூரம் வரை, வெகு காலமாகத், தள்ளிய பாக்கியம் பெற்றவர்
75

Page 50
என்றும் தன்னைக் கொண்டு சாமி பல வேலைகளும் செய்வித்தார் என்றும் சொன்னார். அவ்வளவு கூடப் பழகிய அன்பினால் சாமி பாவித்த பல பொருட்களும் தான் சாமியறையில் வைத்து வணங்குவதாகச் சொன்னார்.
நான் அன்று அன்பரோடு வரும் வழியில் எல்லாரையும் ஆட்டிப்படைக்கும் பணத்தின் சிந்தனை வந்தது. நாம் தெய்வத்துக்கு ஒரு சதம் கொடுத்தாலும், அது பெருகிப் பல லட்சமாக வரும் என்பது உண்மை தானே. அப்ப நான் சாமிக்குக் கொடுத்த காசும் எப்பவோ பெருகி எனக்குக் கிடைக்கும் தானே என்று எங்களைக் கெடுக்கும் சிந்தனை வந்தது. அன்பருடைய கதையைக் கேட்டுக் கொண்டிருக்க இதற்கும் எனக்குச் சாமி மறுமொழி தந்தார். அன்பர் சொன்னார். சாமி பல தடவைகளில் தங்களிடம் கட்டுக் கட்டாகப் பணம் கொடுத்து மாவடியில் எரிக்கச் சொல்வாராம். சில வேளைகளில் யாரோ ஒரு வயது போன மூதாட்டிக்கு மட்டும் கொஞ்சக் காசு அனுப்புவாராம். மிச்சமெல்லாம் தீயில் சங்கமம் என்றார். இப்படி சாமி என்றைக்கும் எங்கள் கேள்விக்கு மறுமொழி கொடுத்து விடுவார் தக்க தருணத்தில்.
இந்தச் சம்பவங்களோடு இன்னுமொன்று நடந்தது. நான் யாழ்ப்பாணத்திலிருந்து யோகர் சாமியுடைய படத்தை இங்கிலாந்து போகும் பொழுது கொண்டு போகவில்லை. கும்பிட்ட படத்தை வீட்டிலிருந்து எடுக்கிறதும் நல்லதில்லை என்ற படியால் கொண்டு போகவில்லை. ஒரு சின்னப் படம் ஒன்று தான் கொண்டு போகக் கிடைத்தது. அதை வைத்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தேன். அன்பர் வீட்டில் சாமியின் பல படங்களைக் கணடதும் ஆசை வந்துவிட்டது. அன்பர் வீட்டுச் சாமியறையில் நான் தம்பியிடம் சொன்னதும் அந்த ஆசை தான். மறு நாள் தம்பி வீட்டிற்கு வரும்போது நான் அன்பர் வீட்டில் காட்டிய படம் போன்று ஒன்று
76

கொண்டு வந்து தந்தார். நான் திகைத்துப் போனேன். அதே படம். ஒரு வித்தியாசமும் இல்லை. ஆனால் தம்பியுடைய வீட்டிலும் அதே போன்று ஒன்று இருந்தது எனக்குத் தெரியும். வீட்டில் படத்தைத் தான் எனக்குக் கொண்டு வந்ததா என்று கேட்டேன். இல்லை என்றார். அப்ப என்ன நடந்தது என்றால், 12 வருடங்கள் முன்பு, தான் யாழ்ப்பாணம் வந்த பொழுது ‘செல்லம் புகைப்பட மாளிகையில் 2 ஒரே மாதிரியான யோகர் சாமியுடைய படங்கள் வாங்கிக் கொண்டு போனவராம். ஒன்று வீட்டில் சாமிப்படங்களுடன் வைத்தார். மற்றது, எனக்குக் கொண்டு வந்தது, 12 வருடங்களாக அலுவலக மேசை லாச்சியிலிருந்ததாம். இப்ப அந்தப் படத்தை எனக்குக் கொண்டு வந்து தந்தாராம்.
இதன் மூலம் சாமி சொன்ன “எப்பவோ முடிந்த காரியம்”
என்பதின் தத்துவத்தை விளங்கலாம். இதன் படி சாமி, 12 வருடத்திற்கு முன்பே திட்டம் தீட்டி விட்டார். நான் 12 வருடத்தில் இங்கிலாந்து போகப் போகிறேன். சாமியுடைய படம் இல்லையே என்று ஆசைப் படப் போகிறேன். அதுவும் அன்பருடைய சாமியறையில் கண்டு ஆசைப்படப் போகிறேன். நல்ல காரியம், ஆதலால் தான் அந்த ஆசையைப் பூர்த்தி செய்ய வேணும் என்று திட்டத்தின் படி 12 வருடம் லாச்சியில் காத்துக் கொண்டு இருந்திருக்கின்றார். அந்தப் படம் நான் அமெரிக்கா போனால் என்ன, கனடா போனால் என்ன. யாழ்ப்பாணம் போனால் என்ன, நான் போகும் இடமெல்லாம் வருகிறார். நாங்கள் மேலெழுந்த வாரியாக ஒரு காரியத்தையும் கணக்கிட முடியாது. அதில் பயனில்லை. எந்தச் சின்னக் காரியத்தையும் ஆழ்ந்து நோக்கி ஆராய்ந்து அறிகிற அறிவு தான் சிறந்தது. இப்படியே எவ்வளவோ சம்பவங்கள் எனக்கும் சாமிக்கும் இடையில் நடந்திருக்கின்றன. ஆனால் நினைவில் இருந்தவற்றை எல்லாம் எழுதிவிட்டேன்.
இந்தக் கட்டுரை எழுத வைத்ததும் யோகர் சாமி தான். நான் கல்யாணம் செய்து ஐம்பது வருடம் பூர்த்தியான அன்று
77

Page 51
காலையில் ஒரு கனவு கண்டேன். எவ்வளவோ காலமாகச் சாமியை நான் கனவில் காணவில்லை. அன்று கண்ட கனவு என்னவென்றால், எனக்குப் பக்கத்தில் சாமி படுத்து நல்ல நித்திரையில் இருக்கிறார். நான் சாமியைத் தட்டி எழுப்புகின்றேன். ‘சாமி எழும்புங்கோ, ஏதோ பத்திரிகையிலோ என்னத்திலோ, என்னவோ எழுதட்டாம். என்ன சாமி எழுதுகிறது, என்ன செய்ய” என்று கேட்கிறேன்? கனவு முடிந்து நானும் எழும்பி விட்டேன். நான் என்னத்தை எழுதப் போகிறேன் என்று ஒன்றும் விளங்கவில்லை. இப்ப ஐம்பத்தொன்று வருடம் முடிந்த காலத்தில், என்னைப் போன கிழமை ஒரு அன்பர் என்னிடம் “யோகர் சாமியுடன் உங்களுடைய அனுபவங்களை எழுதித் தாருங்கோ ஒரு புத்தகம் அடிக்கப் போகிறோம்” என்றார். சாமி கனவில் எனக்கு என்னத்தைப் புரிய வைத்தார் என்று விளங்குகிறது. இது எனக்கும் பழகிப் போய் விட்டது. சாமி எனக்குத் தந்த இந்த மானிட உடம்பான கருவியைச் சாமி தான் பாவிக்கட்டும் என்று கொடுத்துச் சரணாகதி அடைந்து விட்டேன். என்ன நடந்தாலும் சாமிதான் பொறுப்பு. நான் முந்திச் சொன்ன மாதிரி சாமி உள் மனதிலிருந்து தீட்டிய திட்டம் நிச்சயமாக நடக்கிறது. ஆனால் வெளி மனது பிராப்தத்தின் படியே சலனப் பட்டு நாடகம் ஆடுகின்றது. இவை இரண்டுக்கும் அப்பால் நான் என்ற பொருள் சாட்சியாக, மனச்சாட்சியாக அசையாமல் இருக்க முயல்கிறது. இந்த முயற்சி வெற்றி பெறுவது அந்தப் பிரமத்தின் கையில் உள்ளது, என்பதை உணர்வாய்ப் பெறின்.
ஓம் சாந்தி சாந்தி சந்தி
திருமதி பத்மா நடராஜ7
米 米 米 米 米 米
இரவும் பகலும் வந்து போவது போல் இண்டதுன்பங்கள்வந்து போகட்டும். பயப்படாதே.
சுவாமிகள் அருள்மொழி
78

யோக ஞான குரவர்
இலங்கை பண்டைய புராண இதிகாசங்களோடு தொடர்பு உள்ளது. கடல் கொண்ட தென் நிலப்பரப்பில் எஞ்சியுள்ளதுமாகும். இதனைத் திருமூலர் சிவபூமி என்பர். வியாசமுனிவர் இலங்கை வந்ததாக முன்னேசுர வரலாறும், நகுலமுனிவர் இங்கு தவம் செய்தாரென நகுலேசுர வரலாறும் கூறும். குளக்கோட்டன் காலத்திலும் யாழ் அரசர் காலத்திலும் அருளாளர் இந் நாட்டில் இருந்துள்ளனர். இவ்வாறு பண்டைய அருளாளர் மரபில் வந்தவர் யோக சுவாமிகள். இவர் இந்நாட்டு அருளாளர்களுள் மிக உயர்நிலை பெற்று விளங்குகிறார். உலக ஞான குரவர்களுள் ஒருவர்.
யோக சுவாமிகள் சிவ உருவினர். தவ வாழ்வினர். அவரது சொற்கள் அனைத்தும் அருளுரைகள். மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களை மெய்நெறியில் வழிப்படுத்தியவர். ஐரோப்பிய இனத்தவர் ஆட்சியினால் வந்த தாக்கங்களில் இருந்து சைவநெறியைப் பாதுகாத்து அதன் சரியை கிரியைப் படிமுறைகளை வளர்த்து எழுச்சியூட்டியவர் ஆறுமுகநாவலர். யோகசுவாமிகள் சைவநெறியின் யோக ஞானப் படிமுறைகளை வளர்த்து மக்களை வழிப்படுத்தினார். இவர் பெரும் சித்தர். பெரும் ஞானி. சமய குரவர்களுக்குப் பின் மேற்கு நாகரிகத்திலிரிருந்து சிவநெறியைக் காப்பாற்றியவர்.
யோகசுவாமிகள் தம்மை வெளிப்படுத்தாமல் வாழ்ந்தவர். எனினும் அவரது அருளாற்றலை அனைவரும் அறிந்திருந்தனர். அவர் அன்பர்களுக்கு அருளிய அருளுரைகள் உலகினை வழிப்படுத்தும் உயர்மொழிகள். அவர் செய்த அருட்செயல்கள் பல உள்ளன. இவற்றை அன்பர்களிடம் கேட்டலும் அன்பர்களுக்குச் சொல்வதும் இவற்றை நினைத்தலும் பெரும் பயன் தருவன.
79

Page 52
இளமைக் காலத்தில் யோகசுவாமிகளைப் பற்றிப் பலர் சொல்லக் கேட்டுள்ளேன். எமது வதிவிடம் அருட்தலம் ஒன்றின் அயலில் இருந்ததாலும் அத்தல நிகழ்வுகளிலும் பணிகளிலும் பங்குபற்றியதாலும் சமய ஆத்மீக ஆர்வம் இருந்தது. ஆசிரியர் ஆனதும் சுவாமிகளைத் தரிசிக்க எண்ணினேன். தரிசிக்கச் செல்பவர்களை ஏசுவார் எனச் சிலர் கூறியதனால் அவரிடம் செல்லவில்லை.
எம்மூர்ப்பிரதான வீதிவழியே சில நேரம் நடந்து செல்வார் சிலநேரம் வண்டியில் செல்வார். நாள் தோறும் காலை வேளை மருதனார்மடம் வைரவ கோவில் முன்பாக நிற்பார். முன்பாக உள்ள தேநீர்ச்சாலையிலிருந்து தேநீர் வரும். இது அவரது அன்பர் செல்லர் அப்புவின் ஒழுங்கு. தேநீர் அருந்திய பின் சுன்னாகம் நோக்கிச் செல்வார். மாலை வேளை யாழ்ப்பாணம் நோக்கிச் செல்வார்.
ஒருநாள் காலை சுவாமிகள் தேநீர்ச்சாலையின் முன் நின்றார். வைரவகோவில் முன்பாக யான் நின்றேன். சுவாமிகள் மெல்ல நடந்து என்னிடம் வந்தார், "நீர் உபாத்தியாரோ?” எனக் கேட்டார். "ஆம்" என்றேன். நல்லது எனச் சொல்லிவிட்டுச் சென்றார். சுவாமிகளிடம் யான் செல்லாமல் சுவாமிகளை என்னிடம் வரச்செய்தேனே என மனம் என்னை உறுத்தியது. சுவாமிகளிடம் செல்லும் படி செல்லர் அப்புவும் என்னை ஊக்குவித்தார். இவர் சுவாமிகளின் தொண்டர், எமக்கு உறவினர். மருதனார்மடம் காலைநேரச் சந்தையில் தரகராகக் கடமை ஆற்றியவர். நாள் தோறும் காய்கறிகளோடு கொழும்புத்துறை சென்று சுவாமிகளைத் தரிசித்து வருபவர்.
கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரமத்தை நிறுவியவரும் எமக்கு ஓரளவு உறவினருமான வடிவேல் சுவாமிகள் இளமை முதல்
80

சமய ஆத்மீக சமூகப் பணிகளிலும், அரசியற் பணியிலும் என்னை வழிப்படுத்தியவர். ஒருநாள் இவர் என்னை அழைத்துக் கொண்டு வண்ணைச் சிவன் கோவிலுக்கு அருகில் இருந்த எஸ். ஆர். என்பவர் அறையின் முன் சென்றார். யோக சுவாமிகள் வெளியே வந்து, "இவருக்கு இங்கு பணிகள் பல இருக்கின்றன. இவரைக் கிளிநொச்சிக்கு அழைத்துச்செல்ல வேண்டாம்.” என வடிவேல் சுவாமிகளிடம் கூறினார். “எனக்கும் இவை தெரியும். சுவாமிகளைத் தரிசிக்க அழைத்து வந்தேன்,' என வடிவேற் சுவாமிகள் தெரிவித்தார். கிளிநொச்சி ஆச்சிரமத்திற்கு என்னை அழைத்துச் செல்லும் நோக்கம் வடிவேற் சுவாமிக்கு இருந்தது.
யோகசுவாமிகள் இந்த அறையில் பகல் வேளைகளில் தங்கியிருந்தார். சில நாள் சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றேன். முதல் நாள் சென்றபோது “செல்வநாயகம் பெரிய மனிதன். மற்றவர்கள் இவரைப் போல் இல்லை," எனக் கூறினார். ஆத்மீக ஆர்வத்தால் சென்ற எனக்கு இவ்வாறு அரசியல் தொடர்பாகத் தெரிவித்தது ஓர் ஆச்சரியமாக இருந்தது. இதனைச் சுவாமிகளின் அன்பரும் எமது உறவினருமான செல்லர் அப்புவிடம் கூறினேன். சுவாமிகளுக்கு எல்லாம் தெரியும். உமக்குத் தேவையானவற்றைக் கூறினார் எனத் தெரிவித்தார். மேற்கூறியவாறு சுவாமிகள் என்னிடம் கூறியது அப்போது அரசியற் கருமங்களில் யான் தீவிரமாக ஈடுபட்டு இருந்தமையால் ஆகும்.
சுவாமி சச்சிதானந்தர், வைத்தீசுவர வித்தியாலயத்தில் யோகாசன வகுப்பு நடத்தினார். அதற்குச் சென்ற யான் எஸ். ஆர். அறையில் யோகசுவாமிகளைத் தரிசிக்கச் சென்றேன். அப்போது எமது ஊரவரும் அன்பருமாகிய சோ. பரமசாமி அங்கு இருந்தார். இவர் நாள்தோறும் அங்கு சுவாமிகளுக்கு உதவி புரிபவர். யோகாசன வகுப்பிற்கு வந்ததாகச் சுவாமிகளிடம் தெரிவித்தேன்.
81

Page 53
கல்கி இதழில் யோகாசனம் பற்றி எழுதியவர் இருக்கிறாரா? எனக் கேட்டார். அவர் இறந்துவிட்டார் எனக் கூறினேன். கடவுளை அடைய இது பயன்படாது என்பதை அறிவுறுத்தினார். இவ்வகுப்புச் செல்லும் நேரத்தைச் சுவாமியிடம் முன்பே சொன்னேன். உரையாடல் தொடர்ந்து நடந்தது. திடீரென நேரம் வந்துவிட்டது. நேரத்தைப் பாரும் என்றார். மணிக்கூட்டில் சரியாக இருந்தது. மணிக்கூட்டைப் பாராமல் சுவாமிகள் தெரிவித்தது எனக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
வேறொரு நாள் சுவாமிகளிடம் சென்றேன். “பெரும் பதவியில் உள்ள ஒருவர் வந்து சிதம்பரம் செல்வதாகத் தெரிவித்தார். நல்லது போய் வாரும் எனச் சொன்னேன். கடவுள் இங்கேயும் இருக்கிறார் இதனை அவரிடம் சொன்னால் அவர் என்னைத் தவறாக நினைப்பார்”. எனச் சுவாமிகள் என்னிடம் கூறினார். இன்னொருநாள் சுவாமிகளிடம் சென்றேன். அன்பர் ஒருவர் சுவாமிகளிடம் விடைபெற்றுச் சென்றார். “இவர் இந்தியாவில் பல ஆண்டுகள் ஆச்சிரமம் ஒன்றில் இருந்தவர். மனம் அமைதிபெறவில்லை. மன அமைதி இல்லாவிடில் ஏனையவற்றால் பயனில்லை. உமக்கு இருக்கின்ற மன உணர்வு இவரிடம் இல்லை” எனத் தெரிவித்தார்.
ஒரு நாள் சுவாமியிடம் சென்ற போது ‘இனி மேல் தமிழருக்கு உத்தியோகம் இல்லை. விவசாயமும் கைத்தொழிலும் தான்” எனத் தெரிவித்து இதற்கு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார். “கிளிநொச்சி வன்னிப்பகுதிகளில் குடியேற வேண்டும். விவசாயம் கைத்தொழில்களை அங்கு தொடங்க வேண்டும்” என்றேன். “நல்ல திட்டம் தான். இதனைப் பலருக்கும் சொல்ல வேண்டும்” எனச் சொல்லி என்னையும் அழைத்துக் கொண்டு பூீரீலங்கா புத்தகசாலை அதிபரிடம் போய் “நானும் இந்த ஆசிரியரும் சேர்ந்து இன்று பெரிய திட்டம் போட்டிருக்கின்றோம்" எனக் கூறினார்.
82

"சுவாமிகள் போட்ட திட்டம் நடக்கும் தான்ே” என யூரீலங்கா புத்தகசாலை அதிபர் கூறினார்.
பின்பு என்னையும் அழைத்துக் கொண்டு அறைக்கு வந்தார். “எப்போது தொடங்குவோம்? நீரும் வரவேண்டும்” எனக் கேட்டார். “இப்போதே தொடங்குவோம்’ என்றேன். “சில ஆண்டுகள் போகட்டும். நீர் ஓய்வு பெற்று வந்து உதவலாம். நீர் உமது பணத்தில் வாழ்ந்து தான் தொண்டு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். இதன் பின் என் வாழ்வில் சுவாமிகள் தெரிவித்தபடி பின்பற்றிப் பணிகள் செய்து வந்துள்ளேன்.
இது நிகழ்ந்தது 1950 ஆம் ஆண்டளவிலாகும். அப்போது ஐ. தே. கட்சி ஆட்சி நடைபெற்றது. இனப்பிரச்சனை அதிக அளவு இல்லை. அதனால் சுவாமிகள் சொன்னதை என் மனம் ஒப்பவில்லை. சில ஆண்டுகளின் பின் நாட்டின் நிலை மாற்றமடைந்தது. இப்போதைய நிலையில் சுவாமிகள் முன்பு கூறியவை சரியானவை என உணர்ந்தேன்.
இதற்குச் சில ஆண்டுகளின் பின் அறிஞர்கள் சிலர் ஈழத்துப் பொருளாதார அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டனர். கிளிநொச்சிப் பிரதேசத்தில் விவசாயக் குடியேற்ற அபிவிருத்திக்கும் வடபகுதியில் புதிய கைத்தொழில்களைத் தொடங்கவும் முயற்சி செய்தனர். யானும் இதில் பங்குபற்றினேன். சிவதொண்டன் நிலையமும் வன்னியில் ஒரு நிலையத்தை அமைக்க முயற்சிசெய்து பின்பு அது சுவாமிகளின் ஆசியோடு வாழைச்சேனையில் அமையலாயிற்று. பல அமைப்புக்கள் பல் வேறு இடங்களில் அபிவிருத்தி நிலையங்களை அமைத்தன. இவை சுவாமிகள் என்னிடம் தெரிவித்த தீர்க்க தரிசன உரையை நினைவுறுத்தின.
83

Page 54
ஒரு முறை பொதுத் தருமப்பணிகள் செய்வது பற்றி என்னிடம் கேட்டார். சில கோவிற் பணிகள் பணம் படைத்தவர்களால் நடைபெறுகின்றன. எமது அயலில் உள்ள கோவிற் பணிகள் வாரந்தோறும் மக்கள் வழங்கும் பிடியரிசியினால் நடைபெறுவதாகத் தெரிவித்தேன். பணம் படைத்தவர்களிடம் பெரும் பணம் பெற்றுப் பொதுப் பணி செய்வதிலும் பார்க்க ஏழைகளிடம் சிறுதொகை பெற்றுப் பொதுப்பணி செய்வதே நல்லது. இத் தருமப்பணி நிலைத்து நிற்கும் எனக் கூறினார். தமிழ்சங்கக் கட்டிட வேலை தொடங்கியபோது சுவாமிகள் முன்பு கூறியவற்றை நினைவு கூர்ந்து சிறு தொகைகளைப் பெற்றோம். வெள்ளவத்தை நெசவு ஆலைத் தொழிலாளர் 1 ரூபா, 2 ரூபா ஆகச் சேர்த்து உதவினர். மிகச் சிறு தொகையைப் பேருவகையோடு ஏற்றோம். 1983 இல் தலைநகரில் பல வீடுகள், நிறுவனங்கள், கடைகள் பெருஞ்சேதமுற்றன. தமிழ்ச்சங்க நிலையம் பாதிப்புறாமல் தப்பியது. சுவாமிகள் என்னிடம் தெரிவித்த அருளுரையை அப்போது உணர்ந்தேன்.
பின் சுவாமிகள் சிவன் கோயில் அயலில் உள்ள அறையில் தங்குவதை விட்டுக் கொழும்புத்துறை ஆச்சிரமத்தில் இருப்பதாக அறிந்து அங்கு சென்று தரித்து வந்தேன். ஒருநாள், "இங்கு சிலர் தங்களை விற்றுவிட்டார்கள் நீர் உன்னை விற்றுவிட்டீரா விற்கவில்லையா” எனக் கேட்டார். விற்பது புறநோக்கிலும் அகநோக்கிலும் இருவகைப் பொருள் தரும். இவ்வினாவிற்குத் தகுந்த பதில் சொல்வது கடினம். எனினும் விற்கவில்லை எனக் கூறினேன். இனி உம்மை வில்லும் எனக் கூறினார். இதன் உட்பொருளை இதுவரை அறியேன். பிறரிடம் கேட்டதும் இல்லை.
ஒருநாள், "இந்த உலகம் கடவுளின் அற்புதமான படைப்பு. சூரியன் தன் வேலை செய்கிறது. காற்று முதலிய ஐம்பூதங்களும் தத்தம் வேலைகளைச் செய்கின்றன. நல்ல உலகம். நாங்களும்
84

எங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும்” எனக் கூறினார். இன்னொரு முறை "கடவுள் எல்லாரிடமும் இருக்கின்றார். என்னிடம் இருக்கும் கடவுள் உம்மிடமும் இருக்கின்றார். நான் கூடுதலாக நினைக்கின்றேன். நீர் இவ்வாறு நினைப்பதில்லை. இதுதான் வேறுபாடு” எனத் தெரிவித்தார்.
ஒருமுறை ஓர் அம்மையார் வந்து சுவாமிகளோடு தமது குடும்ப விபரங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த அம்மையார் சுவாமியின் ஓர் அன்பராக இருக்கவேண்டும். அதனால் சுவாமி அவைகனைப் பொறுமையாகக் கேட்டுத் தம் அறிவுரைகளை இடையிடையே சொன்னார். ஆத்மீக விடயங்களைச் சுவாமியிடம் சொல்லாமல் இந்த அம்மையார் தம் குடும்ப விடயங்களைச் சொல்கிறாரே என எண்ணினேன். அம்மையார் போனபின் "அன்பர்கள் பலரும் என்னிடம் வருகின்றார்கள் அவர்கள் சொல்வதைக்கேட்டு அவர்களுக்குத் தக்க அறிவுரை சொல்ல வேண்டும். இல்லாவிடில் அவர்களுக்கு மன ஆறுதல் வராது” என எனக்குத் தெரிவித்தார். இது என் மனதில் எண்ணியதற்குப் பதில் என உணர்ந்தேன். பிறர் மனதில் நினைப்பவைகளை உடனே அறியும் அற்புத ஆற்றல் சுவாமிகளிடம் இருந்தது என்பதையும் அறிந்தேன்.
எல்லோருக்கும் கொடுத்து உதவிசெய்யும். உமக்கென எதுவும் வைத்திருக்க வேண்டாம். இனி உமக்குப் பிறப்பு இல்லை என ஒருநாள் சுவாமிகள் என்னிடம் தெரிவித்தார். முன்பு பணத்தில் ஓரளவு சிக்கனம் உள்ளவன். இதன் பின் இந்நிலையை மாற்றினேன். எல்லோருக்கும் கொடுத்து உதவினேன். கொடுத்த பணத்தை திரும்பப் பெறும் எண்ணத்தையும் விட்டேன். எனது பொருள், உடல், உயிர் இறைவனுக்கு உரியன ஆயின. இதனால் எனது தேவைகள் சிலவற்றிற்கு இறைவன் உதவினான். சுவாமிகள் தெரிவித்தபடி இனி எனக்குப் பிறவி இல்லை என்பதற்கான நிலை எனக்கு இருக்கின்றதா என எண்ணுகின்றேன்.
85

Page 55
சுவாமிகளின் ஆச்சிரம நிலையத்தில் சுவாமிகளோடு உரையாடிக்கொண்டிருந்த போது மாலை வேளை ஆயிற்று. உள் தியான அறை விளக்கையும் வெளி அறை விளக்கையும் ஏற்றும் படி கூறினார். ஒரு குச்சியால் இரு விளக்குகளையும் ஏற்றும்படி கூறினார். அங்கு பல தீப்பெட்டிகள் இருந்தன. எனினும் இவ்வாறு ஏன் சுவாமி கூறுகின்றார் என நினைத்துக் கொண்டு அவ்வாறு செய்தேன். பொருளாதாரம் எனப் பலர் அதிக அளவு திட்டமிட்டுள்ளார்கள். பொருளாதாரத்திற்கு இதுதான் மூலம். எதனையும் வீண்விரயம் செய்யாமல் இருப்பின் பொருளாதாரம் வளரும் எனத் தெரிவித்தார். அதுமுதல் பொருள்களை வீண்விரயமாக்காமல் நடந்து கொண்டேன். விளக்கு ஏற்றும் போது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி நின்று ஏற்ற எண்ணி அவ்வாறு செய்தேன். கடவுள் எல்லாத்திசைகளிலும் இருக்கின்றார் ஆதலால் இவைகளுக்குத் திசைபார்க்க வேண்டியதில்லை எனக் கூறினார். திசை பற்றி யான் எண்ணியதை அறிந்தே இவ்வாறு சுவாமிகள் தெரிவித்தர்.
வெளி நாடுகளில் இருந்து வரும் சமய ஆத்மீகப் பெரியார்களைப் பற்றிச் சுவாமிகள் என்னோடு உரையாடினார். வருபவர்களின் உண்மை நிலை அறியாது அதிக மதிப்பு இங்குள்ள சிலர் கொடுத்திருக்கின்றார்கள். மகான்களை மதிப்பீடு செய்ய இங்கு உள்ளவர்களுக்குத் தெரியாது. அறிஞர்கள் ஞானிகள் இங்கும் இருந்திருக்கின்றார்கள். பற்றற்ற ஞான குரவராக இருந்தாராயினும் தாம் பிறந்த நாட்டில் அவர் வைத்திருந்த உயர் சிந்தனையை உணர்ந்தேன். இத்தகைய உயர் சிந்தனையாலேயே ஞானசம்பந்தர் தன்னை காழி ஞானசம்பந்தன் எனவும் சுந்தரமூர்த்தியார் தன்னை ஆரூரான் எனவும் மணிவாசகர் இறைவனைப் பாண்டிநாட்டான் எனவும் அருளினார்.
ஆச்சிரமத்திற்குச் சென்ற நாட்களில் எனக்கு அங்கு திருநாவுக்கரசு வீட்டிலிருந்து பால் தரும்படி செய்தார். அங்கு
86

வந்த சிலருக்கு என்னை அறிமுகம் செய்தார். மாலை நேரங்களில் அவர் வளர்த்த பசு வருகிறதோ எனப் பார்க்கச் சொல்லுவார். சுவாமிகள் உடல் பாதிப்புற்றிருந்த போது அங்கு சென்று சுவாமிகளைத் தரிசித்தேன்.
ஆசிரிய இடமாற்றத்தால் கொழும்பு வந்து தமிழ்ச் சங்தத்தில் இருந்தேன். ஒருநாள் சுவாமிகள் காட்சிதந்து இனிமேல் இங்கு உம்மோடு இருக்கவந்துள்ளேன் எனத்தெரிவித்தார். இதற்குச் சில மாதங்களின் பின் இத் தாபனத்தின் செயலாளர் ஆனேன். பல ஆண்டுகள் தக்கபயன்பாடு இல்லாமல் இருந்த அங்கு பலமாடிக் கட்டிடங்கள் அமையவும் பயனுள்ள பல துறைப் பணிகள் நடைபெறவும் இந்நாட்டிலும் உலகிலும் தொடர்பு பெறவும் இப் பொறுப்பு உதவியாயிற்று. சுவாமிகள் தெரிவித்தபடி எமது வேதனத்தைப் பயன்படுத்தி இப்பணிகளைச் செய்தேன். எதிர்பாராத இடையூறுகள் சில இங்கு எனக்கு ஏற்பட்டன. மிகவேதனையுற்றேன். நீங்கள் அருளியபடி பணிகள் செய்து வருகின்றேன். சிலர் எனக்கு மிக இடர்கள் செய்கின்றனர் எனச் சுவாமியிடம் முறையிட்டு வந்தேன். காவாயில் உள்ள சுவாமியின் சீடரிடமிருந்து ஆசிகள் கிடைத்தன. சுவாமிகளின் அருள் பெற்ற அம்மையாரதும் அவரோடு சேர்ந்தவர்களதும் உதவிகள் கிடைத்தன. எமக்கு ஏற்பட்ட இடர்கள் அனைத்தும் அகன்றன.
பெரிய புராணத்தில் சேக்கிழார் சுவாமிகள் திருத்தொண்டர்கள் பற்றிச் சொல்லிய இயல்புகள் அனைத்தும் யோகசுவாமிகளிடம் காணலாம். சுவாமிகள் அவதார புருடர். எல்லாம் கடந்த ஞானி. எனினும் சிவநெறியினதும், திருமுறைகள், திருமந்திரம், சித்தர்பாடல்கள், புராணங்களினதும், இச் சிவபூமியினதும் உயர்வுநிலை அறிந்து இவை வளரவும் நிலைபெறவும் வழிவகுத்துள்ளார். சிவம் சிவநெறி என்னும் சொற்களின் உட்பொருள் உணராமல் மேற்குலகத் தொடர்பினால் வந்த சொற்களை
87

Page 56
உபயோகித்துவரும் உலகிற்கு இச் சொற்களின் உயர்வை அறிவுறுத்தற்காகவே சுவாமிகளின் ஆசிபெற்றுத் தொடங்கிய திங்களிதழுக்குச் சிவதொண்டன் எனவும் நிலையத்திற்குச் சிவதொண்டன் நிலையம் எனவும் பெயர்களை வழங்கியதோடு தாம் அருளிய நற்சிந்தனைப் பாடல்களிலும் உரைநடைகளிலும் சிவம் சிவனடியார் என்னும் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, ஆகியவற்றிற்கும் சுவாமிகள் ஊக்கந்தந்தார். பூநகரி அரிசனர் நால்வரை நால்வர் பெருமக்கள் எனச் சொல்லிச் சிவதொண்டன் நிலையப் பூசையில் பங்குபற்றச் செய்தார்.
இந்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆத்மீக ஞானிகளைத் தேடி இந்தியாவிற்குப் பலர் செல்வது வழக்கம். இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆத்மீக ஞானிகள் இங்கு வந்து சுவாமிகளின் ஆசியும் பயனும் பெற்றமையும், மேற்குலக அறிஞர்கள் சுவாமியின் சீடர்களாகியமையும் சுவாமிகளின் உலகளாவிய அருளாற்றலை உணர்த்துகின்றன. பகவான் இராமகிருஷ்ணரின் சனாதனதர்மக் கோட்பாடுகளைச் சுவாமி விவேகானந்தர் மேற்குலகிற்குப் பரப்பி அதற்கான அமைப்புக்களையும் ஏற்படுத்தினார். இதே போல் யோக சுவாமிகளின் சிவநெறிக் கோட்பாடுகளைச் சுவாமிகளின் மேற்குலகச் சீடர்கள் மேற்குலகில் பரப்புவதோடு இதற்கான உலக அமைப்புக் களையும் ஏற்படுத்தியுள்ளனர். சுவாமிகள் ஈழ நாட்டின் ஆத்மீக ஞான வளத்தை உலகிற்கு உணர்த்தியதோடு உலகில் இந் நாட்டிற்குப் பெருமை பெற்றுத் தந்துள்ளார்.
யோக குரவர் சிவநெறியை நிலைநிறுத்த அவதரித்த மகான். முன்னைய சித்தர்கள், சமயகுரவர்கள், அருட்பெரியார்கள் பாடல்களைப் போலச் சுவாமிகள் அருளிய நற்சிந்தனைப்பாடல்கள் சுவாமிகள் தந்த ஞானக்கருவூலம் ஆகும். சிவதொண்டன் இதழ், சிவதொண்டன் நிலையம், நற்சிந்தனைப் பாடல்கள் உலகினை
88

நெறிப்படுத்தவும் உலகிற்குப் பயன் தருதற்கும் உதவியாக உள்ளன. இந் நாட்டில் இடர்கள் ஏற்பட்டபோது கந்தபுராணம், கந்தர்கலிவெண்பா ஆகியவற்றைப் படிக்கும் படி சுவாமிகள் அறிவுறுத்தினார். பொருளுணராமல் வேற்றுமொழிப் பாடல்களைப் படிப்பதிலும் பொருளுணர்ந்த சுவாமிகளின் தமிழ்மொழிப் பாடல்களைப் படிப்பது அதி அருளாற்றலையும் மிகமேலான பயனையும் தரும். இவரது பாடல்கள் திருமந்திரம் போல மந்திரங்கள். இவரது உரைநடைகள் மறைமொழிகள்.
சுவாமிகளின் அளவிடற்கரிய அருளாற்றல்களை உணர்த்தும் செய்திகள் நிகழ்வுகள் பல உள்ளன. யோகசுவாமிகளின் பெரும் அருளாற்றலைப் பலர் இன்றும் உணர்ந்திலர். அவரது அருளாற்றலை நன்கு உணர்ந்தவர்களும் அவரது அருளாற்றலை நன்கு பயன்படுத்திலர். ஒவ்வொருவர் வீட்டிலும் அவரது நற்சிந்தனை நூல் இருத்தல் வேண்டும். நாள் தோறும் அப் பாடல்களை ஒதுதல் வேண்டும். அதனால் வாழ்வு வளம் பெறும். இம்மை மறுமைப் பயன்கள் அனைத்தும் பெறலாம். நாடும் உலகும் இடர்கள் நீங்கி நலம் அனைத்தும் வளரும். யோக குரவரின் சிவநெறி உலகனைத்தும் பரவுக.
ஓம் தத் சத் ஓம்
சுவாமிகளின் அடியவன் தமிழவேள்
米 米 米 米 米 米
சிவதொண்டு செய்வார் தீநெறிச் செல்லார் சிவதொண்டு செய்வார் புலனைந்தும் வெல்வார் சிவதொண்டு செய்வ்ர் பிறன்பொருள் வெஃகார் சிவதொண்டு செய்வார் சிவமே யாவர்
நற்கிந்தனை
89

Page 57
விட்டகுறை தொட்டகுறை தொடருதப்பா, குருநாதா!
“சித்தி பெறலாம், திருவெல்லாம் சேரலாம் பக்தியின்றேல் என்ன பலன் இவற்றால்? “
மேற்குறிப்பிட்ட சொற்கள் பக்தியின் அளப்பரிய ஆன்மீக சக்தியின் பெருமையைக் கூறும் எங்கள் குருவும் தெய்வமுமாகிய சிவயோக சுவாமிகளின் அருள் வாக்கு. பல கோடி ஆன்மாக்களெல்லாம், "ஒன்றே" எனவும், “சீவனே சிவன;” எனவும்,
“ஒன்றாய் இரண்டாகி ஒரு மூன்றாய் நான்கைந்தாய் நின்ற பராடரத்தைத் - தங்கமே/
"நீ யென்றுணர்ந்திடடி".
எனவும், அருள் உரைகள் பலவற்றைத் தமது "நற்சிந்தனைப்” பாடல்கள் மூலம் தந்து முத்திசேரும் மார்க்கத்தை நமக்கு “முதுசொம்” ஆகத் தந்து, இன்றும் அருள் பாலித்து எங்கள் உயிர்க்குயிராய், உலகம் முழுவதும் வியாபித்து நிற்கும் வித்தகச்சித்தராம் சிவயோகசுவாமிகளைப் பற்றிப் பல பக்தர்கள் தாம் அறிந்தவை, தெரிந்தவை, அனுபவித்தவைகளைப் பற்றி எழுதத் திருவருள் கிருபை கூரும் இச்சந்தர்ப்பத்தில், இராமபிரானுக்குத் தன் பக்திக் கேற்ப உதவமுற்பட்ட சிறிய பிராணியாகிய அணிலைப் போல் இச் சிறியேனும் இறையருளால் குருவருள் சிவயோக சுவாமிகள் மூலம் கிடைத்த பல்லாண்டுகால அனுபவங்களைக் குறிப்பிட முயற்சிக்கிறேன்.

சிவயோகசுவாமிகள் துதி
தேகம் விடு முன்பே தேடரிய தெய்வத்தைத் தேடிக் கணடு கொணட திருவே/ எம் செல்வமே, சிவயோகா உணக்கபயம், ஞானக் கடலை, ஞானியர்கள் தம்மலையை ஞாலமெல்லாம் நிறை கிணறநற்கற்றை காலமெல்லாம் நிலைத்திருக்கும் கணிஅமுதை/ கற்கணடை/ ஞானக் கணி கொண்டு காணிரே7/ உத்தமரே அணிதிரள்வீர் உலகோர்க்கும் உரைத்திடுவீர் உலகறிய இலங்குகிற இலங்கையெனும் நன்நாட்டில் ஆணடவனே வந்துதித்தான் அதிசயங்கள் பல புரிந்தாண்; யாழி நகராம் நல்லூரில் யோகரென்ற நாமமுடன் நம்மவரை ஈடேற்ற, ஈய்ந்திட்டான் சிந்தனைக்கு விருந்தாய, சிறப்புமிகு "நற்கிந்தனை” எனும் அளப்பரிய ஆண்மீக “அருட்கனிகள்” எனக்கூறி ஏற்றுவீர்/ போற்றுவீர்/ என்றென்றும் நித்தியரே நீர்
"இருவினை சேராதீசன் திருவடி சேர்வார் தம்மைக் குருவருள் கொண்டார் தம்மைத் திருவருள் சேரும் மெய்யே”
சிவயோகசுவாமிகள்
9

Page 58
1936ம் ஆண்டு எனக்கு ஏழு வயது நடந்து கொண்டிருந்த காலம். தகப்பனார் இலங்கையின், மேல் மாகாணத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவர் யாழ்ப்பாணம் வரும் போது சிவயோகசுவாமிகளைத் தரிசிக்கச் செல்வது வழக்கம். அந்த வருஷம் முதன் முதலாக என்னையும் சுவாமிகளைத் தரிசிக்க வரும்படி தந்தையார் கூறவே நானும் ஸ்நானம் செய்து தோய்த்துக் காய்ந்த வேட்டியும் இடுப்புக்கு ஒரு கதர் சால்வைத்துண்டும் வேட்டிக்கு மேல் கட்டிக் கொண்டு வீயூதி அணிந்து சந்தனப் பொட்டும் நெற்றியிலும், உடம்பில், நெஞ்சில் இருபக்கங்களிலும், இரு கைகளில் மேலிருந்து கீழாகவும் பூசிக் கொண்டு தகப்பனாருடன் புறப்பட்டேன். என் தந்தையார் தாம்பாளத்தில் கப்பல் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு தேங்காய், கற்கண்டு, விளைவு கற்பூரம், சாம்பிராணிக் குச்சிகள் சகிதம் தன் குருவைத் தரிசிக்கப் புறப்பட்டு, சுவாமிகளின் கொட்டில் இருக்கும் வளவை அண்மிக்கு முன்பதாகவே எனக்கு விபரித்தார்:-
“தம்பி, சுவாமிகள் சில சமயம் எங்களை ஏசித் துரத்தவும் கூடும், நீ பயப்படக் கூடாது. அவர் முன்பாக விழுந்து நமஸ்கரித்து எழுந்து நிற்க வேணும். சுவாமிகள் சொல்லுமட்டும் நீ உட்காரப்படாது.” இந்தப் புத்திமதிகள் புகட்டப் பட்டு சென்றுகொண்டிருந்த நாங்கள் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் சிவயோகசுவாமிகளின் வாசஸ்தலமாகிய கிடுகால் வேயப்பட்ட கொட்டில் அமைக்கப்பட்டிருந்த காணியின் படலையைத் திறந்து உட் சென்று அங்கு கட்டப்பட்டிருந்த தண்ணிர்த்தொட்டியில் நீர் மொண்டு எங்கள் கை கால்களையும் கழுவித் தாம்பாளத்தில் உள்ள பொருட்களுக்கும் தண்ணீர் தெளித்துக் கொண்டு சுமார் இருபது யார் தூரத்தில் எங்களை நோக்கிய வண்ணம் அடியார்கள் புடைசூழ வீற்றிருந்த வரும் வெணி முடி, வெணி தாடி, வெள்ளைவேஷ்டியும் சால்வையும் உடுத்தி நெற்றியில் வீயூதி
92

திணித்து அணிந்திருந்த அம்மகானின் திருவுருவத்தைக் கண்டது தான் தாமதம், காந்தத்தால் கவர்ந்து இழுக்கப்படும் இரும்புகள் போல் என் கால்கள் இரண்டும் அத் திரு உருவை நோக்கி ஓட ஆரம்பித்தன. அந்த நிகழ்ச்சி இன்று எழுபதாவது வயதை அண்மித்துக்கொண்டிருக்கும் அடியேனின் மனக்கண்முன் இன்று நடந்த சம்பவம் போல் மிகவும் துலக்கமாகப் பதிந்து பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. சுவாமிகளைப் பற்றி நினைக்கும் தோறும் என் மனம் அன்றைய வேகத்திலும் பார்க்க, இரவு பகல் பாராமல் அவருடன் நிலைத்து இருக்கும் நிலையில் என்னையறியாமலே பித்துப் பிடித்தவன் போல் என் உள்ளமும் சிந்தனையும் சதா சிவயோகசுவாமிகளின் நினைவிலேயே உள்ளன.
விவாக மாகி மனைவி மக்களுடன் வாழி நீது கொண்டிருக்கும் எனக்கு இவ்வுலகில் மிக நெருக்கமான வஸ்து சுவாமிகளேயாவார். இறைவன் அறிந்த உண்மை இதுவாகும். தந்தை தாயினும் மேலாக அன்பு காட்டி அடியேனை வழிநடத்தும் ஆத்மா ஒன்று சதா அழிவில்லா வஸ்துவாக, பிரம்மத்துடன் இரண்டறக் கலந்த, தன் தன்மையைப் பல தடவைகளில் எனக்கும் தனது வேறு பல அடியார்களுக்கும் நிரூபித்துக் காட்டி வழிநடாத்திக் கொண்டிருக்கும் பரம வஸ்துவின் பெயர் தான் “சிவயோகசுவாமிகள்”
கடவுள் மனிதனாக அவதரித்த நிலையைப் பல சமயங்களும் கூறுகின்றன. நாஸ்திகச் சிந்தனையுடன் ஊனக் கண்களால் உற்றுப் பார்த்தாலும் உடம்புள் வதியும் தெய்வத்தையோ அத் தெய்வம் செய்யவல்ல அற்புதச் சித்துக்களையோ அப்பேர்ப்பட்ட அஞ்ஞான மனித பிண்டத்தால் ஊகித்தும் பார்க்க முடியாது.
புதுமைக்கு மேல் புதுமைகள் செய்தும் இறந்தவர்களை உயிர்ப்பித்தும், நரியைப் பரியாக்கியும் பின் அதே பரிகளை
93

Page 59
நரிகளாக்கியும் திருவிளையாடல்கள் நடாத்தியது எல்லாம் செய்ய வல்ல சித்தராம், சித்தருட் சித்தராகிய சிவபெருமானின் சித்து விளையாட்டுக்களில் அஞ்ஞானிகளும் பெரும்பாலான விஞ்ஞானிகளும் அவநம்பிககை கொண்டு, ஏளனம் செய்யும் காலங்களில் அவ்வப்போது இறை அருள் சமய குரவர்கள் மூலமும், யோகிகள், ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் மூலமும், உலக மக்களின் இறை நம்பிக்கை மழுங்காமல் என்றும் அணையாத ஒளியே போல் சதா பிரகாசிக்கும் வண்ணம் பரம்பொருள் ஆன்மாக்கள் மீது கிருபை கூர்ந்து திருவிளையாடல்களை அவ்வப்போது புரிகின்றது.
அந்த வகையில் பரம் பொருளால் படைக்கப்பட்டு இலங்கையிலுள்ளோருக்கும் விசேடமாக யாழ்மாவட்டம் முதலாய பிரதேசங்களில் தன் ஞான ஒளி பரப்பி, பக்தர்களைப் பரமன் பாதம் இழுத்து ஈடேற்றிக்கொண்டிருக்கும் பரம வஸ்துவின் பெயர் தான் “சிவயோக சுவாமிகள்” என்பதாகும். சைவம் தழைக்க சமய தொண்டாற்றிப் பக்திமார்க்க மூலம் தேவார திருவாசகங்கள் பாடிய நாயன்மார்களும் மக்களின் ஆன்மீக ஈடேற்றத்திற்காக இடையிடையே புதுமைகள் பல செய்து காட்டி, தெய்வம் என்று, ஒன்று, உள்ளது. அதன் அற்புதச் சித்துக்கள், திருவிளையாடல்களை நாங்கள் செய்வது போல் நீங்களும் பெற்றும் செய்தும் பேரின்பப் பெருவாழ்வும், பேறும் அடையலாமென்பதை நிரூபித்துள்ளனர்.
நமது சிவயோக சுவாமிகளும் இறைபக்தி என்ற விளக்கு மங்கும் ஒரு கால கட்டத்தில் தன் இடையறாத் தியானங்களாலும் நற் சிந்தனை என்று நாமமிடப்பட்ட திருப்பாடல்கள், உரைநடைப்பகுதியெனினும் வசன நடைகள் முதலிய அறிவுரைகளினாலும் முழு மனுக்குலத்துக்குமே ஆன்மீக ஆசானாய்,
94

சீவன் முத்தராய் வாழ்ந்து, துரிய நிலை எய்தி, என்றும் இறை சக்தியுடன் இரண்டறக் கலந்து அன்றும் இன்றும் என்றும் வழிகாட்டும் வல்லமையுடைய ஆன்மீக மகா மகோ மகேசனாகத்திகழ்கின்றார். அடியேனை அம்மகான் ஆட்கொண்ட சில சம்பவங்களை வாசகர்களின் மனச்சாட்சிக்கு அர்ப்பணமாகத் தருகின்றேன்.
அந்த 1936ம் ஆண்டு அடியேனை ஆட்கொண்ட நாள் ஒரு வெள்ளிக்கிழமை சாயந்தரமாகும். சுவாமிகளை விழுந்து வணங்கி எழுந்து நின்ற ஏழுவயதுச் சிறுவனாகிய இவ்வடியேனைச் சுவாமிகள் உற்றுநோக்கினார்கள். எனக்குள் ஒரு தெளிவு வரப்பெற்றேன். எனக்கு அருகே வந்து சுவாமிகளை வணங்கி எழுந்து நின்ற என் தந்தையாரை நோக்கி, “எடேய், சுவாமிகள் சில சமயம் எங்களை ஏசித்துரத்தவும் கூடும். நீ பயப்படக் கூடாது. என்று பொடியனுக்குப் போதித்துக்கொண்டு வந்தனி என்ன? சொல்லடா உண்மையை” என்று அதட்டினார்கள். தகப்பனார் மெளனமாக நின்றதைப் பார்த்த சுவாமிகள் “பொடியன் சின்னப்பிள்ளை. பொய் சொல்ல மாட்டான். அவனைக் கேட்கிறேன்," என்று சொன்னதும் நான் “ஓம் சுவாமி அப்பா அப்படித்தான் சொன்னவர்” என றேனர். உடனே சுவாமிகள் சிரித்து கீ கொணி டு, "உண்மைசொல்லுகின்றவன்கள் எல்லாம் என்ரை பிள்ளைகள். நீ இரடா இங்கு எங்களுடன், உவன் போகட்டும், பிள்ளையார் கோவிலுக்கு” என்று சொல்லிய படியே “ஏனடா நிற்கிறாய் இன்னும் இங்கே, போடா போடா பிள்ளையாரிட்டை. உன்ரை பாவ மூட்டைகளைக் கொழுத்தடா. விளைவுகற்பூரத்தைப் பெரிய தட்டிலே போட்டுக் கொழுத்தி, கற்பூரம் எரிந்து ஒழியும் தனைக்கும் பிள்ளையாருக்கு முன்னாலே போடடா தோப்புக்கரணம்” என்று அதட்டி அனுப்பிவிட்டார்கள்.
95

Page 60
அதன் பின் என்னை நோக்கிய சுவாமிகள் “எடே தம்பி தாடியைப் பார்த்தியேடா. ஆசை ஒழியும் தனைக்கும் தாடி வளர்க்கக் கூடாது. என்று குருநாதன் செல்லப்பன் சொன்னவர். நீ தெரியாமல் தாடியை வளர்த்துப் போடாதே தாடி வளர்த்து, ஆசையையும் வளர்த்து உலகத்தை ஏமாற்றுகிறார்கள் கனபேர். நான் சொன்னது உனக்கு விளங்கிச்சிதே?” என்று கேட்டார்கள். நான் “ஓம் சுவாமி” என்று பதில் அளித்தேன். எனது கண்களைச் சற்று உற்றுப்பார்த்த பின் “எடேய் தம்பி, உனக்கு ஞாபகமிருக்குதே, எத்தனையோ காலத்துக்கு முன்னம் நானும், நீயும் கூத்தாடியது? “ அதற்கு நான் புன்முறுவலுடன், “ஓம் சுவாமி” என்று பதிலளித்த அந்தக் கணமே சுவாமிகளைச் சூழ இருந்த எல்லோரும் என்னைப் பார்த்து ஒரு பரிதாபகரமான ஏளனச்சிரிப்புச் சிரித்தார்கள். உடனே சுவாமிகள் அவர்களை நோக்கி, “பொடியனைப் பகிடி பண்ண வேண்டாம். அவன் உண்மையைத் தான் சொன்னான். நான் கேட்ட காரணம், என்னுடைய பார்வை அவனிலே பயன் பட்டிருக்கா என்று பார்க்கத் தான், “ என்று கூறிய சுவாமிகள் ஒரு தெய்வக் கலைவந்தவர் போல் தான் உட்கார்ந்திருந்த நிலையை விட்டுத் திடீரென எழுந்து “ஓம் நமசிவாய, சிவாய நம ஓம் " என்று திரும்பத் திரும்பக் கூறிய வண்ணம் தனது வலது கால் நிலத்தில் ஊன்றிய வண்ணம் இடது காலை மடக்கி நடராச நடன பாவனையில் தன் கரங்களை, விரல்கள் பின்னிய பாவனையில் தன் தலைக்கு மேல் வைத்து திருநடனமாடினார்கள். ஏதோ ஓர் அற்புத தெய்வீக சக்தியால் உந்தப் பெற்றுச் சுவாமிகளைச் சூழ இருந்த நாங்களும் எழுந்து நின்று ஒற்றைக்காலில் தொங்கித் தொங்கி ஆடலானோம். இந் நிகழ்வு ஐந்து, ஆறு நிமிடங்கள் இடம் பெற்றது. அப்போது சுவாமிகளின் கொட்டிலுக்குப் பதிலாக செப்புத் தகடுகளால் வேயப்பட்ட முகடு போட்ட ஒரு பெரிய மண்டபம் எங்களுக்குத் தோற்றமானது.
96

நடனம் ஒழிந்த பின் சுவாமிகளும் அவர்களுடைய கொட்டிலில் வைக்கப்பட்டிருந்த பூரண கும்பத்தை நோக்கிய வண்ணம் தியானம் செய்யும் நிலையில் உட்கார்ந்தார்கள், எங்களையும் அமரும் படி கையால் சைகை செய்தார்கள். நாமனைவரும் சுவாமிகளைக் கைகூப்பி வணங்கி அவர் அருகே அமர்ந்தோம்.
சுவாமிகளின் சொற்படி பிள்ளையார் கோவிலுக்குச் சென்றிருந்த என் தகப்பனார் “அரகர மகா தேவ” “அரகர மகா தேவ” என்றும் “ஓம் நம சிவாய” “சிவாய நம ஓம் " என்றும் தொடர்ச்சியாக மாறி மாறிக் கூறிய வண்ணம் சுவாமிகளை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். வந்தவர் தாம்பாளத்தையும், பழங்கள், கற்கண்டு முதலியவற்றையும் நிலத்தில் வைத்துவிட்டு விழுந்து சுவாமிகளை வணங்கி எழுந்தார்கள். எழுந்த எனது தந்தையாரது பெயரைச் சொல்லிய சுவாமிகள் மேலும் கூறினார்கள் “நீ பிள்ளையார் கோவிலிலே சிதம்பர யாத்திரை செய்ய வேணும் என்று நினைத்தாயல்லவா? அதற்கு இன்னும் நாலு வருஷங்கள் இருக்கு. இவனையும் கூட்டிக்கொண்டு வா’ என்று தன் கையால் என்னையும் சுட்டிக் காட்டிய பின் மேலும் கூறினார்கள் ‘நானும் அங்கே நிற்பேன். “ என்பதாக.
மேலும் கூறினார்கள் "நாங்கள் எல்லோரும் இப்ப சற்று முன்னதாகத் தான் சிதம்பர தரிசனம் கண்டு உட்கார்ந்திருக்கிறோம். அது எப்பவோ முடிந்த காரியம்“ என்று கூறிப் பின்பு கூறினார்கள் " தின்னப் பொசிப்புள்ளவர்களுக்கு திண்ணைக் கப்பிலே தேன், நீயும் உன்னுடைய பாவமூட்டையைப் பிள்ளையாருக்கு முன்னாலே கொழுத்தி எரிக்கிற வேலையில் ஈடுபட்டாய். இன்னும் மலை மலையாய் இருக்குதடா உன்னுடைய பாவமூட்டைகள். இராப் பகலாக “ஓம் நம சிவாய” “சிவாய நம ஓம் " என்று சொல்லு.
97

Page 61
இந்தப் பொடியனுக்கும் அப்படிச் சொல்லச் சொல்லு. அது பெரிய மந்திரம். மறந்து போகாதே. நான் இங்கு இருந்த படியே எல்லாம் பார்ப்பேன். உன்னுடைய கற்கண்டுக்கு இப்ப வேலை வரப் போகுது. "இந்தா திருநாவுக்கரசு நீ எழும்பி இந்தக் கற்கண்டுக் கட்டிகளைக் கொஞ்சம் பொடியாக்கு என்றார்கள். திருநாவுக்கரசு என்ற அந்த அடியாரும் உடனே எழுந்து, குனிந்து தட்டத்திலுள்ள கற்கண்டுகளில் அரைவாசியை ஒரு சிறிய பனை ஓலைப் பெட்டிக்குள் வைத்து கத்தியின் அடிப் பக்கத்தால் மெதுவாக இடித்துப் பொடியாக்கினார். சுவாமிகள் கூறிய பிரகாரம் ஒரு அடியார் பெரிய செம்பு ஒன்று நிரம்பக் காச்சிய பால் கொண்டு வந்து சுவாமிகளின் முன் வைத்து நமஸ்கரித்து எழுந்து நின்றார்கள். நீயும் கணக்காய்த் தான் கொண்டுவந்திருக்கிறாய். உவன் திருநாவுக்கரசு பெரிய சாஸ்திரி என்னடா ஏழுபேர் தானே. நாங்கள் எல்லோருமாக இருக்கின்றோம். நீ எதற்காகப் பதினொரு வெள்ளிக் “கப் " கழுவுகிறாய் என்று கேட்க அப்ப சொன்னவன் அவை எல்லாவற்றிற்கும் ஆட்கள் வருவினம் என்று. பால் கொண்டுவந்த நீ ஒரு ஆள் தானே வந்தாய். இவனுடைய கணக்கு இன்றைக்கு பிழைக்கப் போகுதோ என்று கூறிக் கொண்டிருக்க தங்கள் மகனையும் அழைத்துக் கொண்டு தாயும், தகப்பனுமாக மூவர் “சுவாமி” என்ற வார்த்தைகளுடன் சுவாமிகளுககு முன்பாகச் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கி, எழுந்து நின்றனர். அவர்களை அமரும் படி சைகை காட்டிய சுவாமிகள் திருநாவுக்கரசு என்ற அடியாருக்குக் கூறினார்கள். “இன்றைக்கு இனி ஒருவரும் வரமாட்டார்கள்.'பிள்ளையார் அனுப்பிய கப்பல் வாழைப்பழத்தில் எல்லோருக்கும் ஒவ்வொன்று கொடுத்துப், பொடி செய்த கற்கண்டையும் கப்களிலும் பகிர்ந்து போட்டுப் பாலை ஊற்றிப் பரிமாறும் படி, “சரி எல்லோரும் குடியுங்கோ” என்று கூறிய சுவாமிகள் மேலும் கதைக்கத் தொடங்கினார்கள். "ஒவ்வொரு மனிதனும் தெய்வமடா, அப்பா சாப்பாடு தான் வித்தியாசம். சில
98

தெய்வங்களுக்குப் பால், பழம், தயிர், மோர் வேணும். வேறு சில தெய்வங்களுக்குச் சாதம், பச்சரிசிச் சாதம், பருப்பு, நெய், பொரியல், மற்றும் கறிவகை வேணும், சில தெய்வங்களுக்குக் கள்ளு, சாராயம், கஞ்சா, அபின் முதலியன வேணும். இதற்கு மேல் கற்பூரம் சாம்பிராணி விரும்பும் தெய்வங்களும் உண்டு. ஆனால் சாராயம், கஞ்சா, அபின், விரும்புகின்ற தெய்வங்களுக்குச், சுருட்டு, சிக்ரெட், பீடி முதலியன தான் பிடிக்கும் என்று கூறினார்கள்."இதைக் கேட்டவுடன் சிரிப்புத் தாங்கமுடியாமல் சிலர் குடித்துக் கொண்டிருந்த பாலில் ஒரு பகுதியைத் தங்கள் வஸ்திரத்தில் விழும்படியாகச் சிரித்து வெளித்தள்ளினர். நல்லகாலமப்பா பால் கொண்டுவந்தவர் புகைப்பதற்கு ஒன்றும் கொண்டு வரவில்லை. திருநாவுக்கரசு உன்னிலும் பார்க்கப் பெரிய சாஸ்திரியடா பால் கொண்டு வந்தவர். புரைக்கடித்த மாதிரிக்குப் புகைத்தலும் பிடித்திருந்தா எல்லோரு தியானத்திலிருக்காமலே ஒரு செக்கனுக்காவது சித்தாகா வெளியைக் கண்டு வந்திருப்பினம்."
“சரி சரி எல்லோரும் பாலைக் குடித்து முடியுங்கோ. பழத்தை வீட்டுக்குக் கொண்டுபோய் அங்கு உள்ளவர்களுடன் பகிர்ந்து சாப்பிடுங்கள்” என்று கூறிய பின் எல்லோருக்கும் சொன்னார்கள் “ஓம் நம சிவாய” “சிவாய நம ஓம் “என்று நீங்கள் அடிக்கடி சொல்ல வேணும். நான் இங்கிருந்த படியே எல்லாவற்றையும் அவதானிப்பேன். இப்படிக் கூறிய சுவாமிகள் சடுதியாக எழுந்து "அங்கும், இங்கும், எங்கும் நான், அதனை அறியும் விசரன் நான் “என்று திரும்பத் திரும்பக் கூறினார்கள். வந்தவர்களுள் ஒருவர் உபாத்தியார். அவரை நோக்கிச் சுவாமிகள் கேட்டார்கள் "சட்டம்பியாருக்கு இதன் உட்கருத்துத் தெரியுமோ?” என்று. உபாத்தியாரும், “ஆன்மாவானது தன் பிராரத்துவ வினைகளுக் கேற்ப வெவ்வேறு அந்தஸ்தில் மனிதரூபம் எடுத்து இயங்குகின்றது. உதாரணமாக ஒரே ஆத்மாவே அரசனாகவும், ஆண்டியாகவும்,
99

Page 62
நடிகனாகவும் இன்னும் வெவ்வேறு கருமங்கள் செய்பவனோ, செய்பவளோ ஆகவும், ஏன் திருடனாகவும், விரும்பத் தகாத இன்னும் வெவ்வேறு தொழில்கள் புரிபவராகவும் இயங்குகிறது” என்று விளக்க எத்தனித்தார். சுவாமிகள் உபாத்தியாரை நோக்கி, “அதற்கு எத்தனையோ அர்த்தங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் தத்தமது மனப் பக்குவ நிலைக்கு அமைய விளக்கம் கொடுப்பார்கள். கடவுள் என்னும் சர்வ வியாபக வஸ்துவை விபரிக்கும் படி கேட்டால் அனேகரின் மறுமொழி, யானையைத் தடவி விடை பகர்ந்த குருடர்களை ஒத்ததாயிருக்கும். யானையின் காலைத் தடவிய குருடனின் விளக்கம் வேறு, வாலைத் தடவியவனின் விளக்கம் வேறு, வயிற்றைத் தடவியவனின் விளக்கம் வேறு. ஆனால் முழு யானையையும் தடவப் பலன் கிடைத்தவனின் விளக்கம் வேறு காணும் உபாத்தியாரே” என்று கூறிய பின் உபாத்தியாரே, பஞ்ச பூதங்களையும் நாங்கள் சேர்த்து சிந்திக்கப் பழக ஒவ்வொரு படி ஆன்மீகத்தில் உயரலாம். அடுத்த முறை வாரும் ஆறுதலாய் உதைப் பற்றிக் கதைப்போம் என்று உபாத்தியாருக்கு விடைகொடுத்து அனுப்பிய பின் சுவாமிகளைக் கும்பிட்டு வணங்கிய எல்லோரையும் சுவாமிகளும் கும்பிட்டு மேலும் கதைக்கத் தொடங்கினார்கள். உங்களுடைய உடம்பையல்ல நான் கும்பிட்டது. உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வம் இருக்கிறது. அந்தத் தெய்வத்தையே நான் வணங்கினேன் என்று விளக்கம் கொடுத்தார்கள்.
சுவாமிகள் செய்த பல அற்புதங்களையும், சித்துக்களையும் அடியேனும் சுவாமிகளின் தொண்டர்கள், அடியார்கள், சீடர்கள் ஆகியோரும் பல தடவைகளில் கண்டும் அனுபவித்தும் எங்கள் குரு பக்தியையும், விசுவாசத்தையும் மென்மேலும் விருத்தி செய்ய இறையருள் உதவியதை அடியார்களாகிய நாம் அனைவரும் அறிவோம்.
100

சுவாமிகள் தேகம், நீக்கு முன் செய்த அற்புதச் சித்துக்கள், தான் தேகத்துடன் வாழும் போதே தனது சீடரான மார்க்கண்டு சுவாமிகள் மூலம் செய்வித்த பலப் பல புதுமைகளை எழுதில் கண்வளவோ காலம் பிடிக்கும். ஆயினும் ஆணித்தரமாகச் சிலவற்றை விபரித்து மனிதரூபத்தில் நடமாடிய தெய்வீக ஆத்மாக்கள் தான் சிவயோக சுவாமிகளாயினும் சரி, அவரது குருநாதனாகிய செல்லப்பா சுவாமிகளாயினும் சரி, சிவயோகசுவாமிகளது பிரதம சீடராகிய கைதடியூர் மார்க்கண்டு சுவாமி என்ற நாமம் பெற்ற ஜீவன் முத்தர் நிலையடைந்து விளம்பரங்கள் ஏதும் விரும்பாமல் இறக்கும் தறுவாயிலுள்ள அடியார் ஒருவரின் நோயைத் தானே தன் உடம்பில் கடுத்து இரு வாரங்களாக தண்ணிர் தவிர வேறு எவ்வித ஆகாரமும் உட்கொள்ளாது தனது தியான முதிர்ச்சியாலும் யோக சித்தி வல்லமையினாலும் இந்த அடியானை வாழவைத்த மகாரிஷி அனைய மார்க்கண்டு சுவாமிகளும் தனது குருவான யோகர் சுவாமிகளின் மகிமையை என் மனதில் ஆழமாகப் பதியச் செய்துள்ளார்கள்.
சிவயோக சுவாமிகள் செய்த அருளாற்றல் சிலவற்றை யான் வாசகர்களின் விசுவாசத்தைப் பெருக்கும் நோக்குடன் நேரில் கண்டவைகளையும், அனுபவித்து ஆழ்ந்த நம்பிக்கையும் பக்தியும் கொள்வதற்கு அத்திவாரமாக இருந்தவைகளையும் ஜீவன் முத்தராய் வாழ்ந்து இன்றும் ஆன்மீக நிலையில் பல அடியார்களது ஆன்மாக்களுக்கு அருள் பாலித்துக் கொணடிருக்கும் அம்மகான்களது ஆன்மீக நிலையைப் பற்றி அடியேனின் சிற்றறிவுக் கேற்ப எழுத முயலுவதில் அடியேன் அம்மகான்களுக்குச் செலுத்த வேண்டிய ஆன்மீக நன்றிக்கடனைச் சொற்பமாவது செலுத்த எத்தனிக்கிறேன்.
சுவாமிகளைத் தரிசித்த பின் நாமிருவரும் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் எனது தகப்பனார் என்னை நோக்கி, "நீ
101

Page 63
கேட்டாய் தானே. சுவாமிகள் நான் உன்னைக் கூட்டிக்கொண்டு அவரிடம் போகும் வழியில் உனக்குச் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் வார்த்தை தவறாமல் விசாரித்தாரல்லவா? மகனே" அவர் பெரும் சித்தர். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப் பட்டு வியாபாரத்தில் நஷ்டப்பட்டவனாய்க் கதிர்காமத் தல யாத்திரை செய்த ஒரு வருஷம் அங்கு ஒரு பண்டாரம் சொன்னார் ‘ஆடிக்கும் கார்த்திகைத் தீபத்திற்குமாக இருமுறை கதிர்காமம் வந்தால் போதாதடா. கந்தன் நல்லூரிலும் இருக்கிறான்டா. யோகர் என்ற ஞானியும் அங்கு உள்ளான். அவன் காலடியில் விழுந்து கும்பிட்டால் உன் கவலைகள் எல்லாம் போகும். அப்பனே, பண்டாரம் தானே சொல்லுகிறார் என்று அசட்டையாயிருந்து விடாதே உற்றார் உறவினரைப் பார்க்க யாழ்ப்பாணம் போகும் போது நல்லூரானையும் கொழும்புத்துறையானையும் போய்க் கும்பிட மறவாதே. உற்றார் உறவினர் யாவரிலும் பார்க்க உனக்கு நல்லூரான் யோகன் மூலம் தனி யோகம் வரச் செய்வான். இந்தப் புனிதமான மாணிக்க கங்கை சாட்சியாக நீ நல்லாய் இருக்கப் போகிறாய். நான் சொன்னபடி செய்யப்பா’ என்று கூறிய பண்டாரத்தை அந்த வருஷம் ஆடித் திருவிழா ஒழியும் வரைக்கும் கதிர்காமத்தில் தங்கியிருந்த என் தகப்பனார் எவ்வளவோ தேடியும் பின்னர் பண்டாரத்தைக் காணவேயில்லை. ஈற்றில் முருகனே பண்டார வேடத்தில் தோன்றியுள்ளார் என்பதை உணர்ந்து தினமும் காலையில் பூசை தொடங்கும் முன்னரே முருகன் கோவிலைச் சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்து விரதம் அனுஷ்டித்து தீர்த்தத் திருவிழா ஒழிந்ததும் நேரே யாழ்ப்பாணம் சென்றுள்ளார். என் தகப்பனார் வீட்டுக்கும் செல்லாமல் முதலில் நல்லூர் முருகனிடமும் அதன் பின் கொழும்புத்துறையில் ஆச்சிரமம் அமைத்துக் கொட்டிலில் வாழ்ந்து தியான வாழ்வு நடாத்திய சிவயோகரின் காலடிகளில் தஞ்சம் என விழுந்தார். சிவயோக சுவாமிகள் தந்தையாரை நோக்கி, “பண்டாரம் என்னை விசரன் என்று சொல்ல மறந்து போனான்.
102

எனக்கும் விசர். என்ரை அப்பன் செல்லப்பனுக்கும் விசர், நாங்கள் எல்லாம் விசர்க் கூட்டமடா. நீயும் விசர்க் கூட்டத்தில் சேர விரும்பினால் இடைக்கிடை வந்து போ” உன்ரை வியாபாரத்தையும் பார்க்க வேணும். நீ குடும்பஸ்தன். பெண்சாதி பிள்ளைகளைப் பராமரிப்பது தான் உன்னுடைய முதற் கடமை. அவர்களை ஒருவழிப் படுத்திப் பின் நீ முருகனோட நின்றால் என்ன? யோகனோட நின்றால் என்ன?. கடவுள் எல்லாவற்றையும் செய்விப்பார். நீ சாட்சியாகப் பார்த்துக்கொண்டிரு. பண்டாரம் தானே சொல்லிப் போட்டுது. நீ நல்லாயிருப்பாயென்று. நீயும் தானே திருவிழா நாட்கள் பூராவும் கதிர்காமத்திலே தேடிப்பார்த்தாய், பண்டாரத்தைக் கண்டாயா? இப்ப பாரடா பண்டாரத்தை என்று தனது வலது கரத்தால் எனது தகப்பனாரின் கண்களுக்கு முன்னால் திரைநீக்கம் செய்யுமாப் போல் ஒரு அசைவை சுவாமிகள் செய்ததுமே, சுவாமிகள் இருந்த இடத்தில் கதிர்காமத்தில் தகப்பனார் பார்த்த பண்டாரம் சிரிப்புடன் உட்கார்ந்திருப்பதைக் கண்ட தகப்பனார் உடனடியாக நிலத்தில் விழுந்து நமஸ்கரித்து எழுந்து பார்த்த பொழுது அதே இடத்தில் சிவயோக சுவாமிகள் இருப்பதைக் கண்டார். அதன் பின் அடித்தாலென்ன, உதைத்தாலென்ன, ஏசிப் பேசிக் காறி உமிழ்ந்தாலென்ன, மீண்டும் மீண்டும் தன் எசமானிடம் வாலைக் குழைந்து கொண்டு மன்றாடும் நாயைப் போல் என் தகப்பனார் தன் குருநாதனாம் சிவயோக சுவாமிகளில் மாறாப் பக்தியும் விசுவாசமும் பூண்டிருந்தார் என்பதை எழுதவும் வேண்டுமோ? வாழையடி வாழையென வந்த எங்கள் குடும்பத்தினரின் குருபக்தி, விசுவாசம் வீண்போகவில்லை. எல்லாம் அறியவல்ல குருநாதனும் பக்திச் சுடர் மங்காமல் அருள் பாலித்து எங்கள் பக்தியை வளர்த்து வருகிறார்கள் எனக் கூறுவது ஆன்மீக ரீதியிலாகும். ஆன்மீகம் அறிந்த மெய்யடியார்கள், அன்பர்கள் ஆகியோர் நன்கு அறிவார்கள் ஆத்மா அழியாப் பொருள் என்ற உண்மையை.
103

Page 64
பல வருடங்களுக்கு முன் சுவாமி தேகம் விடு முன் செய்த பல அற்புதங்களையும் அவரது சீடராகிய கைதடியூர் மார்க்கண்டு சுவாமிகள் செய்த பல புதுமைகளைப் பற்றிக் கூறும் முன் ஆன்மீக ரீதியிலும் குருநாதனுடைய ஆன்மா மிகவும் வலிமையுடன், அவரை வேண்டி மன்றாடும். அன்பர்களின் மனக் கவலை, உடல் நோய்கள் ஆகியவற்றை இப்பவும் தீர்க்கிறார்கள் என்பதற்கு அடியேன் 1991ம் ஆண்டில் சலரோக வியாதியால் பீடிக்கப்பட்டு வைத்திய நிபுணர் முழுக்காலுமே கணுக்காலுக்குக் கீழ் கழட்டி (Amputation) செய்ய வேணும் என்ற நேரத்தில் நோயாளியாகிய நான் என் குருநாதனாம் யோகர்சுவாமிகளுக்கு ஒரு பூரண கும்பம் வைத்து இதய சுத்தியுடன், அவரின் உதவியை இரந்து மன்றாடினேன். சந்தர்ப்பம் சூழ்நிலையும் தக்க அளவிற்குக் குருநாதனை வேண்டி அழுது இறைஞ்சுவதற்குத் தோதாய் அமைந்தன. பிள்ளைகளின் கல்வி நலியாமல் நடைபெறும் பொருட்டு எனது மனைவி மேல் மாகாணத்தில் உள்ள எங்கள் வீட்டிற்குச் சென்றிருந்த காலம் அது. வேறு ஒரு தொழில் காரணமாக நான் யாழ்மாவட்டத்திற்குத் தெற்கே வன்னிப்பகுதியில் தங்கியிருந்த காலம். பகலில் வேலையாட்களும், சில நண்பர்களும் வந்து போவார்கள். அழுகிக் கொண்டு போகும் கால் விரலுக்கு மருந்து கட்ட வருபவரும் "சுணங்காமல் யாழ்ப்பாணம் சென்று உடனடியாக கணுக்காலுடன் சத்திர சிகிச்சை செய்து வியாதியைக் கட்டுப்படுத்தினாலே மாறும், அல்லது உங்கள் உயிருக்கு ஆபத்து” என்று தெட்டத் தெளிவாகக் கூறிப் போய் விட்டார்.
அந்த நாட்களில் நான் இருந்த வன்னிப் பிரதேசத்தில் புதினப்பத்திரிகைகள் கிடைப்பதில்லை. அப்படிப்பிரயத்தனப்பட்டு வாங்குவதற்கும் நாலு கட்டை தூரம் பிரயாணம் செய்ய வேண்டும். பல காலமாகவே சிவயோக சுவாமிகளின் நற்சிந்தனைப் பாடல்களையும் அப் புஸ்தகத்திலுள்ள உரைநடைப் பகுதித் திரட்டு,
104

திருமுகங்கள் ஆகியவற்றை வாசிக்கும் போது சுவாமிகளுடன் இருப்பதாகிய பேரானந்த உணர்ச்சி ஏற்படுவது வழக்கம். மணித்தியாலக் கணக்கில் பசித்திருந்தும், தனித்திருந்தும் விழித்திருந்தும் நற்சிந்தனைப் பாடல்கள் படிக்கும் பழக்கம் என் வாழ்வில் நன்கு வேரூன்றிவிட்ட காலம் அது.
தூக்குத் தீர்க்கப்பட்டவனைப் போல் மருந்து கட்டி வைத்தியம் செய்தவர் தனது இறுதி முற்றைக் கூறிவிட்டார். நானோ பயப்படவில்லை. மார்க்கண்டு சுவாமிகளை அடிக்கடி தரிசித்த ஈராண்டு காலத்தில் அவர்கள், “சுவாமிகள் கூறிய நான் யார்?” என்னும் சுவாமிகளுடைய திருமுகத்திலுள்ள விளக்கத்தைத் திரும்பத் திரும்பப் படித்து விளங்கிக் கொள்ளும் படி கூறியதுமல்லாமல் மார்க்கண்டு சுவாமிகள் தேகம் விடு முன்பே அடியேனுக்கும், சாந்த சுவாமி என்ற நாமமுள்ள பக்தர் ஒருவருக்கும் நெற்றிக் கண்ணைக் காட்டித் தான் சிவபெருமானின் அம்சமே என்பதை எங்களுக்கு விளக்கியுள்ளார். அவ்வளவு புதுமைகள் எல்லாம் காட்டப்பட்டு ஓரளவுக்கு ஆட்கொள்ளப்பட்ட ஆத்மாவுக்கு மரண பயம் ஏற்பட முடியுமா? உடம்பு அழியுமே ஒழிய ஆத்மா ஒருநாளும் அழியாது. என்ற ஆசானின் உரை என் சிந்தனையில் சூரியனைப் போல் பிரகாசிக்கின்ற போது மரண பயம் எப்படி உண்டாகும்? உண்மையைக் கூறின் பற்றற்று வாழும் நிலையில் பயிற்சி பெற்ற எனக்குப் பாசங்கள் குறைவு. என் குடும்பக் கடமைகள் எல்லாம் செய்தாகி விட்டன. பிள்ளைகள் மனைவி ஆகிய பந்தங்களிலிருந்தும் ஆத்ம ரீதியாக விடுபட்டு ஓடும் புளியம் பழமும் போல வாழ்க்கை நடாத்தி, தியான ஈடுபாடுகளிலும் காலத்தைக் கழித்தும் சனமருள் சாத்திரமருள் ஆகிய மாயையின் பிடியிலிருந்து 1979ம் ஆண்டிலேயே மார்க்கண்டு சுவாமிகளின், கிருபையால் விடுபட்டு விட்ட உணர்வு
இன்றும் என் மனதில் உண்டு.
105

Page 65
பூரண கும்பம் வைத்துக் குத்து விளக்கேற்றிக் குருநாதனைத் தியானித்து, மார்க்கண்டன் சிவலிங்கத்தைப் பற்றிய மாதிரிக் கும்பம் வைத்திருந்த குடத்தை இரு கையாலும் கட்டிப் பிடித்த வண்ணம் குருநாதா உன்னால் முடியும் என் நோயைக் குணமாக்க, அப்பா குருநாதா ஒன்றில் சுகத்தைத் தாருமப்பா அல்லது என் ஆத்மாவை உடம்பை விட்டு நாளை மத்தியானத்திற்கு முன் எடுத்துக் கொள்ளும். அப்பா, குருநாதா என்று கேட்டு, பூரண கும்பத்தைக் கட்டிப்பிடித்த வண்ணம் சுய நினைவு அற்றவனாய் மயங்கிச் சாய்ந்து விட்டேன். மறுநாள் காலை சேவல் கூவும் சத்தத்துடன் விழித்தெழுந்து கை கால் முகம் கழுவிக் காலைக் கடன் முடித்துத் தேநீர் தயாரிக்கும் போது வைத்தியசாலைக்குப் போகும் வழியில் என்னையும் பார்த்து மருந்து கட்டிப் போவதற்காகத் தான் வந்ததாகக் கூறிக் கொண்டு தனது சைக்கிளிலிருந்து இறங்கினார் அந்த மனிதர். நான் உங்களைச் சுணக்கவில்லை. தேநீர் பின்பு குடிக்கலாம். இப்போ மருந்தைக் கட்டுவோம் என்று கதிரையில் உட்கார்ந்தபடி காலை அவர் பக்கமாக நீட்டினேன். அழுகிக் கொண்டு போயிருந்த விரலைச் சுற்றி மருந்து கட்டப்பட்ட துணியை அவர் கத்தரிக் கோலால் வெட்டி மெதுவாகச் சுழற்றிச் சுழற்றி அவிழ்த்தார். "இது என்னையா இது? விரலைப் பாருங்கோவேன். ஒரு சிதலும் துணியிலே இல்லை. விரல் சதையும் சிவந்து புண் காயப் போகுமாப் போல் தெரியுது”, என்றார் அந்த மனிதர்.
நானும் நேற்றிரவு தான் பெரியவரிடம் சரணடைந்த விபரத்தை விளக்கமாய்க் கூறிப்பூரண கும்பம் வைத்திருந்ததையும் அவருக்குக் காட்டினேன். ஐயா இது புதுமையில் புதுமை. நான் எத்தனையோ ஆட்களுக்கு இந்தக் கிழமை முழுக்கச் சொல்லிப் போட்டேன். இன்னார் யாழ்ப்பாணப் பெரியாஸ் பத்திரிக்குப் போய்க் கணைக்காலோடே கழட்டா விட்டால் கட்டாயம் அவர் ஏற்பு
106

வந்து அந்த உலகம் போய்விடுவார் என்று. இப்ப பார்த்தால் உங்கடை யோகர் சுவாமிகள் லேசானவரில்லை என்பது இப்பதானே எனக்கு விளங்குது. உண்மையிலே ஐயா, இது புதுமையிற் புதுமை என்று தான் நான் சொல்ல வேணும் என்று கூறித் தன்னிடமிருந்த ஏதோ பவுடர் ஒன்றைத் தூவிப் புண்ணைக் கட்டி, தானும் ஆஸ்பத்திரிக்குத் தொழில் பார்க்கப் போவதாகக் கூறித் தனது சைக்கிளில் பிரயாணமானார்.
"நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி - கிளியே! இரவு பகல் காணேனெடி”
என்று சுவாமிகளின் பாடல்கள் ஐந்தில் முதலாவது பாடல் தொடங்குகிறது. சுவாமிகள் நல்லூரான் திருவடி என்று குறிப்பிட்டது ஒன்றில் நல்லூர் முருகப் பெருமானின் திருவடிகளை அல்லது தன் குருநாதனாகிய செல்லப்பா சுவாமிகளின் பாதமலர்களையே என்று தான் நாம் ஊகிக்க வேண்டியிருக்கிறது. இச் சிறியேன் குருபக்தியுடன் நல்லூரான் திருவடி எனக் கொள்வதும் போற்றுவதும் என் குருநாதன சிவயோக சுவாமிகளின் திருவடிகளையே யாகும்.
1941ம் ஆண்டு ஆனி உத்தரத் தேர்த்திருவிழாவைச் சிதம்பரத்தில் தரிசிப்பதற்காகத் தகப்பனாரும் நானும் இந்தியா சென்றிருந்தோம். அதிகாலை ஐந்துமணிக்கெல்லாம் நடேசப் பொருமான் தேருக்கு வரும் பவனி ஆரம்பித்தது. நானும் தகப்பனாரும் நின்ற இடத்தில் அவ்வளவு சன நெருக்கமில்லை. ஆனால் தகப்பனார் சடுதியாய் நிலத்தில் முகம் குப்புற விழுந்ததைப் பார்த்துப் பன்னிரண்டு வயது நிரம்பப் பெறாத இளைஞனாகிய
107

Page 66
நான் குனிந்து எனது தகப்பனாரை உயர்த்தி எழுந்திருக்க உதவ எத்தனித்த போது என் தந்தையார் தம்பி யோகர் சுவாமியடா நீயும் என்னைப் போல் விழுந்து கும்பிடடா என்றார். சுவாமிகளின் பாதங்களைப் பார்த்துக் கொண்டே நானும் நிலத்தில் வீழ்ந்து சாஸ்டாங்கமாக வணங்கினேன்.
இந் நிகழ்வைப் பற்றி நான் மார்க்கண்டு சுவாமிகளை நன்கு பழகிய பின் 1979ம் ஆண்டில் அந்த ஞானியருக்கு எழுதிய மடல் ஒன்றில் கீழே குறிப்பிடும் வரிகளால் விபரித்தேன்:-
“ஏதோ சொல்கிறது எப்பொழுதும்சொல்கிறது யாதோ யான் சொல்வேன் நம் ஞானியருக்கு அன்றொரு நாள் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஒன்றில் ஆனி உத்தரத்தில் அடியனையும் அப்பனையும் ஆட்கொண்ட ஆசான் தில்லை நடேசன், வந்தான் யோகர் சுவாமி என்ற ரூபவடிவெடுத்து"
நான்கு வருடங்களுக்கு முன் தனது கொழும்புத் துறை ஆசசிரமத்தில் சுவாமிகள் கூறிய வார்த்தைகள் நிறைவேறின. நானும் வருவேன் என்று பகர்ந்ததும் பலித்ததை அடியார்களாகிய நாமிருவரும் உணர்ந்து கொண்டோம். ་ ༈ །
சுவாமிகளை நமஸ்கரித்து வணங்கி எழுந்து நின்ற எங்கள் இருவரையும் பார்த்துச் சுவாமிகள் நீங்கள் இருவரும் இன்று சாயந்தரம் ஐந்து மணிக்கு ஞானப்பிரகாசர் மடத்தில் லந்து சந்தியுங்கள் என்று கூறி உலா வந்து கொண்டிருந்த தில்லை நடேசரின் விக்கிரகப் பக்கமாகச் சென்றார்கள்.
08

நான் சிறு பையனாயிருந்த காரணத்தால் சனநெரிசலைத் தவிர்த்து ஆட்கள் குறைந்த இடத்திலிருந்து நடேசப் பெருமான் தேருக்கு வரும் காட்சியைக் கண்டு களிக்க இடம் மாறினோம். இலங்கையில் இந்துக் கோவில்களில் நான் கண்டிராத காட்சி ஒன்றைக் கண்டேன். சிதம்பரத்தில் தேர்த்திருவிழாவிலன்று நிர்வாண சுவாமிகள் சிலர் நடேசப் பெருமான் தேருக்கு வரும் காட்சியைக் காண வந்திருந்தார்கள். அவர்கள் கெளdனம் அணிவதில்லை. குளிப்பு முழுக்கிலும் அக்கறை செலுத்துவதில்லை. இதன் காரணமாக அவர்களின் தலை முடி திரண்டு ஒட்டிச் சடையுள்ளதாய் யோகியர் ஞானியர் போல் காட்சியளிப்பர்.
நாம் சென்றிருந்த 1941ம் ஆண்டு இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம். பிரித்தானிய சட்டப்படி பகிரங்கமான இடங்களில் யாரும் நிர்வாணமாக நடமாடக் கூடாது. ஆதலால் இந் நிர்வாண சுவாமிகள் தங்கள் இடுப்பில் மெர்த்தமான இரும்புச் சங்கிலியைக் கட்டி இடுப்பிலிருந்து முழங்காலைத் தொடுமளவுக்கு இரும்புச் சங்கிலிகளைத் தோரணம் சோடிக்குமாப் போல் சுற்றிக் கொழுவி தங்கள் மானத்தைக் காப்பாற்றிக்கொண்டு நடந்து திரிவார்கள். அவர்கள் உறங்குவதும் அந்தச் சங்கிலிகளை அணிந்த வண்ணமே. யானை வரும் பின்னே மணிய்ோசை வரும் முன்னே என்பது பழமொழி. இந்த நிர்வாண சுவாமிகளும் வரும் பொழுதே அக்கம் பக்கமெல்லாம் அவர்களது இரும்புச் சங்கிலிக் கோர்வை அசைந்து உராய்கிற சத்தம் ஏனையோரை அவர்களுக்கு வழி விலகச் செய்யும்.
காலையில் குருநாதன் இட்ட கட்டளைப்படி தகப்பனாரும் நானும் முந்திரிகைப்பழம், கற்கண்டு, விளைவுகற்பூரம், நறுமணம் பொருந்திய திறம் சந்தனக் குச்சிகள் எல்லாம் கொண்டு சாயந்தரம் ஐந்து மணிக்குச் சற்று முன்னதாகவே குருநீாதன் தங்கியிருக்கும்
109

Page 67
ஞானப்பிரகாசர் மடம் சென்று குருநாதனாம் சிவயோக சுவாமிகளின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி எழுந்து நின்றோம். எங்களை உட்காரும்படி சுவாமிகள் சைகை காட்டினார்கள். நாங்கள் உட்கார்ந்தது தான் தாமதம், "உனக்கு நாமார்க்கும் குடியல்லோம் தெரியும் தானே அதைப் படி என்றார்கள்”. நானும் ஓம் சுவாமி என்று சொல்லிக் கொண்டு படிக்கத் தொடங்கினேன். நான் படித்து முடிந்ததும் எனது தகப்பனாரை நோக்கி உவனுக்கு இலண்டனுக்குப் போகவேண்டிய பலன் இருக்குது. இப்ப படிக்கிற கிராமப் பள்ளிக் கூடத்திலேயே தொடர்ந்தானென்றால் இங்கிலீஸ் பாடம் கஸ்டம் கொடுக்கத் தொடங்கும். உனக்கு புறபெசர் சுந்தரலிங்கம் பழக்கம் தானே. அவரிட்டைச் சொன்னால் விசயம் கெதியாய் முடியும். FatherPeter பிள்ளைக்கு மட்டுமல்ல இங்கிலாந்து, இராசாவின் மகளுக்கே மத்ஸ் (கணிதம்) படிப்பித்த மகா விண்ணனடா அந்த மனிதன். உங்களுக்கு மாத்திரமல்ல ஆருக்கும் சரி ஆசையோட உதவி செய்கிற மனிதன். அவருக்கு I.C.S CCS எல்லாம் ஒரு தூசு. நீ கட்டாயம் பொடியனைக் கொழும்புப் பள்ளிக் கூடத்திற்கு வருகிற வருஷத்திலிருந்து மாற்றிப் போடு. சுவாமிகள் இதனைச் சொன்னதும் எனது தந்தையார் எழுந்து சுவாமிகளை வணங்கிக் கொண்டு கூறினார், சுவாமி கொழும்புக்கு படிக்க விடவென்றால் என்னால ஏலும் ஆனால் இங்கிலாந்துக்கு அனுப்ப அவ்வளவு நிதி வசதி என்னிடம் இல்லை சுவாமி” என்றார்கள். சுவாமிகளின் முகத்தில் கோபத் தோற்றம் உண்டானது. எழுந்தார் சுவாமிகள். தன் வலது கையை அடிக்க ஓங்குமாப் போல ஓங்கிக் கொண்டு என்னடா நான் பொய்யேடா சொல்லுகிறேன். இன்னும் ஒரு வருஷத்தாலே ஆகாசத்தாலே கொட்டப் போகுதடா பொடியன் லண்டனுக்குப் போகும் போது என்னையும் சந்தித்துக் கொண்டு போகச் சொல்லடா என்று கூறிய சுவாமிகள் என்னிடம் சொன்னார்கள் இப்ப படிக்கிற பள்ளிக் கூடத்திலே இந்ந வருஷக் கடைசியில் உனக்கு டபிள் புறொமோசன் (double promotion)
10

கிடைக்கும். அங்கேயே அந்த வகுப்பையும் படித்துப் போட்டுப் பிறகு கொழும்பிலே படிக்கலாம் என்றார்கள். சுவாமிகள் கூறியவை எல்லாம் காலக்கிரமத்தில் ஒப்பேறின.
1942ம் ஆண்டு ஈஸ்தர் ஞாயிறு தினத்தன்று யப்பானிய போர் விமானங்கள் கொழும்புத் துறைமுகத்தைக் குண்டுபோட்டுத் தாக்கின. கொழும்பு வியாபாரிகள் இன்சூரன்ஸ் பாதுகாப்பு இல்லாமல் வியாபாரம் நடத்திக் கொண்டிருந்த காலம் அது. முதல் தாக்குதல் ஒழிந்த அக் கணமே மக்களும் வியாபாரிகளும் நகர்ப்புறத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
பல காலம் வியாபாரம் செய்து விருத்தியடைந்து பத்திற்கும் மேல் சொந்தக் கட்டிடங்களும் வியாபாரக் கடைகளும் வைத்திருந்த என் தகப்பனாரை நாடிக் கொழும்பிலுள்ள பெரும் பெரும் இந்திய வர்த்தகர்களெல்லாம் எங்கள் பொருட்களை ஏற்றுக் கொண்டு ஆறு மாத தவணைச் செக் (காசோலை) தாருங்கள் என்று அழாக் குறையாக மன்றாடுமளவிற்குச் சிவயோக சுவாமிகள் சிதம்பரத்தில் ஞானப்பிரகாசர் மடத்தில் அருளிய வாக்குப் பலிக்கவே செய்தது. பல லட்சம் ரூபா லாபமும் கிட்டியது. இலண்டன் பிரயாணமும் சில வருஷங்களின் பின்னர் கைகூடியது. அவசரமாக ஆகாய விமானத்தில் என் இன பந்துக்களுக்குப் பயணம் சொல்லி அன்று சாயந்தரமே பலாலியிலிருந்து புறப்படவேண்டியிருந்ததால் கொழும்புத் துறைக்குச் சென்று சுவாமிகளைகத் தரிசித்து ஆசிபெற முடியவில்லையே என்று மனம் வருந்திய நேரத்தில் யாழ்ப்பாணம் பெரிய கடை வீதியில் என் முதுகில் ஒரு அடி விழுந்தது. அடித்தவரும் இது தாண்டா உனக்குத் தீஷை என்று கூறிக் கொண்டே அடித்தார். திரும்பிய நான் குருநாதனைக் கண்ணுற்று அதே நிமிடத்தில் றோட்டில் சாஸ்டாங்கமாக அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினேன்.
111

Page 68
“என்ன கஷ்டங்கள் வந்தாலும் கடவுளை நம்பு, சனமருள் சாத்திரமருள் எல்லாம் வீண் என்று உணருவாய். போய் வா” என்று கூறிப் பக்கத்திலே றிக்ஷோ வைத்துக்கொண்டிருந்த ஒரு மனிதரிடம் இவனைக் கொண்டு போய் பலாலிக்குப் பிளேனில் ஏறப் போகிறவர்கள் நிற்கிற இடத்தில் விடு. அவன் படிக்கிற பொடியன். ஒரு ரூபா தருவான். படிக்கிற பொடியனிடம் நீ அதிகம் வேண்டக் கூடாது என்று கூறி அனுப்பிவிட்டார்கள்.
“போதனையிலும் சாதனையே சிறந்தது.” என்று சுவாமிகள் தன் அடியார்களுக்கு அடிக்கடி உபதேசிப்பார்கள். “இந்த உடம்பு வேறு ஆத்மா வேறு என்பதை நீங்கள் நன்றாய் உணர்ந்து கொள்ள வேண்டும் “ என்று தமது அடியானுக்குப் போதிக்கும் அதே நேரத்தில் மிகவும் நாசுக்காகச் சுவாமிகள் கூறுவார்கள் "இஞ்சை பாரப்பா நான் உடம்பு வேறு ஆத்மா வேறு என்று சொன்னதற்காக உடம்பை அலட்சியம் செய்யக் கூடாது. உடம்பு தான் இந்த ஆத்மாவைக் கொண்ட ஆலய தரிசனம், தலயாத்திரை தீர்த்த யாத்திரை எல்லாம் செய்வதற்கு உதவும் வாகனம்.” தன் உடம்பைச் சுட்டிக்காட்டி 'இதுதான் கார் இதை எப்பவும் நல்ல கொண்டிசனிலை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள்.
“கார் வேறு அதற்குள் பிரயாணம் செய்பவன் வேறு என்பதையும் நன்கு உணரவேண்டும்” என்றும் சுவாமிகள் கூறுவார்கள். தொடக்கத்தில் சிறு பராயக்குழந்தை காரில் பிரயாணம் செய்யுமாப் போல் அதை விட்டு இறங்காமல் அதற்குள்ளேயே பவுத்திரமாய் இருந்து பிரயாணம் செய்தல். கார் நின்றால் சிறு பிள்ளையும் அதற்குள்ளேயே இருந்து விடும். குழந்தையின் நன்மைக்காகக் கார்க் கதவுகளை மூடி, கணக் காய்க் காற்றுவரக்கூடிய மாதிரி கதவில் உள்ள கண்ணாடி யன்னல்களை
12

உயர்த்தி வைத்துக்கொண்டு பிரயாணம் செய்தல். இந்தக் கார்ப் பிரயாணத்திற்கும் யோகமுறை, ஆன்ம ஈடேற்றம் ஆகியவற்றிற்கும் ஒருவிதத் தொடர்பு இருக்கிறது என்பதை நாங்கள் நாளடைவில் அறிவோம். அதாவது, குழந்தைப் பருவம் நீங்கி கார்ப்பிரயாணத்தில் நன்கு பரீட்சைப் பட்டவன் காரைத் தான் நினைத்த இடத்தில் நிறுதி திவிட்டு, காரிலிருந்தும் இறங் கிதி தானி பார்க்கவேண்டியவர்களையோ, அல்லது தான் கவனிக்க வேண்டிய முக்கிய காரியங்களையோ செய்து முடித்து, பின் விரும்பினால் காரில் ஏறியும் வீட்டிற்கு வரலாம் அல்லது கார் இல்லாமலும் வீட்டிற்கு வரலாம். உலகத்தவர்களுக்கும், ஞானிக்கும் கன வித்தியாசமில்லை. ஞானியும் பார்வைக்கு உலகத்தவன் போல் தான் இருப்பான். பரிபூரண ஞானி, வேடமொன்றும் போடமாட்டான். தன் அனுபவங்கள் மூலமாகத் தான் சடப்பொருள் அல்ல, சித்துப்பொருள் எனத் தெளிந்து தன் அன்பர்கள், பக்தர்கள், சிஷ்யர்கள் மூலம் இந்த உண்மையை உலகத்தவர்களும் உணரச் செய்வான். உலகத்தவனின் வீடு வேறு; ஞானியின் வீடு வேறு. வீடுபேறு எய்திய ஞானி இறைவனே போலாவான். எல்லாம் செய்யவல்ல தெய்வம் வேறு, வீடுபேறு எய்திய ஞானி வேறல்ல. சீவன் முத்தனாய் நடமாடும் தெய்வமாய், அடியார்களுக்கு அடியனாய், சிவமாய், சீவனுள் கலந்து சித்து விளையாடும் செல்வனாய்த் திகழும் தனித்துவமுள்ள பரம வஸ்துவாகவே உண்மைப் பக்தன் தன் குருவைக் கண்டு, அனுபவித்துச் சதாபேரானந்தத்தைச் சுகித்துக்கொண்டிருக்கிறான். குருவேறு தான் வேறு என்ற நிலையில் உண்மைப் பக்தன் வாழ்வதில்லை. வீடு பேறு பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளைத் தவிர, பொன்னோ, பொருளோ, போகமோ, புகழோ உண்மை ஞானியின் நோக்கமன்று, இகழ்ச்சி, புகழ்ச்சி இவையே மாயை இவற்றை இனம் கண்டு, சதா இறை சிந்தனையில் மூழ்கி ஏனையோருக்கும் தனது நற்சிந்தனைப் பாடல்கள், வசன நடைமுறைகள் ஆகியவற்றை ஆன்மீக முதுசொம் ஆக நமக்கு அள்ளித்தந்த ஞான வள்ளலின் நன்கொடையாம்
113

Page 69
"நற்சிந்தனை", ஞாலம் உள்ள மட்டும் தமிழ் கூறு நல்லுலகத்திற்குத் தனி ஞானப் பொக்கிஷமாய்த் திகழும் என்பது சிவயோகசுவாமிகளின் அடியார்களது அழியாத நம்பிக்கையும் யாராலும் மறுக்கமுடியாத உண்மையுமாகும்.
ஆத்மீக ரீதியில், சிவயோகசுவாமிகளிடம் பூரண சரணாகதியடைந்தவரும், தான் தேகம் விடும் முன்னரே சீவன் முத்தர் நிலை எய்தி, திரிகால உணர்ச்சி பெற்றுச் சிவயோக சுவாமிகளது சகல வல்லமைகளும் இறையருளால் கிடைக்கப்பட்டவரும், ஆயுள் நீடித்தல், ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் தோன்றி அருள் புரிதல், ஆபத்துக்களிலிருந்தும் மரணப் பிடியிலிருந்தும் அடியார்களைக் காத்தல் முதலிய இன்னேரன்ன அற்புதங்கள் புரிந்தவர் தான் சிவயோகசுவாமிகளின் பிரதம சீடர்களுள் ஒருவராகிய கைதடியில் தென்னோலைக் கொட்டில் ஒன்றில் வாழ்ந்து இறைவனதும், சிவயோகசுவாமிகளதும், ஆத்மீக ஒளி பரப்பிய புண்ணிய புருடர் மார்க்கண்டு சுவாமிகள் என்னும் மகாஞானி. ஒரு கணப்பொழுதில் தன் பார்வையால் பக்தர்களின் பாவப்பிணி, போக்கவல்ல தவ வலிமையுள்ள வள்ளல். பிராரத்துவவினை, சஞ்சித வினை ஆகியன எஞ்சிநிற்கும் நிலையில் துறவறத்துள் புகும் பாக்கியம் பெற்று, சிவயோக சுவாமிகளின் சீடனாம் பெரும் பேறு பெற்ற மார்க்கண்டு சுவாமிகள், பக்குவ நிலை அதாவது உடல் அனுபவம் உயிர் அனுபவமாகாமல் இருக்கும் நிலை எய்தி, தான் பிறக்கும் போது கொண்டு வந்த பிராரத்துவ வினையை மாத்திரமன்று தன் பக்தர்களின் பிரார்த்த வினை, அதாவது பிராரத்துவ வினையையும் நோய்கள் மூலம் தானே அனுபவித்து அகற்றவல்ல அருளாளனாய்த் திகழ்ந்த திவ்விய ஆத்மாவே கைதடியில் வாழ்ந்தவரும் சிவயோகசுவாமிகளின் சீடருமாகிய எஸ். மார்க்கண்டு சுவாமிகள். அப்புண்ணிய புருடரின் காலடியில் கனகாலம் அடியேன் என் பிராரத்துவ வினையின் பெரும் பகுதியைப் போக்கும் தனிப் பேறு குருவருளாற் கிட்டியது.
14

வாந்திபேதி நோயால் வாடி வருந்தி, வாழ்வே அழியும் தறுவாயில் ஆஸ்பத்திரியில் உயிருக்காகப் போராடிய என் மூத்த மகனை மரணப்பிடியிலிருந்தும் நீக்கி, பூரண சுகமும் நல்லாசியும் தந்து வாழ்வளித்த வள்ளலை நான் நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பதை இறைவனுடன் இரண்டறக் கலந்த நிலையில் வாழும் அந்தப் பரமவஸ்துவாம் என் குருநாதர் நன்கு அறிவார்.
அன்பர்களே ஆண்டவனிடத்தில் அதிகம் அதிகம் அன்பும் விசுவாசமும் வைத்து உங்கள் ஆத்மீக வாழ்க்கையை வளம் பெறச் செய்யுங்கள். இறையருளால் குருவருளும் கட்டாயம் கைகூடும். குருவருளும் திருவருளும் குறைவின்றி உங்கள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.
மார்க்கணிடு சுவாமிகள் மற்றைய அன்பர்களுக்கும் அடியார்களுக்கும் பயன்படக் கூடிய ஆன்மீக அறிவுரைகளைத் தந்துள்ளார்கள்.
1. குருவின் பார்வையால் பல பாவங்களும்
தோஷங்களும் நீங்கி ஆன்மீக வளர்ச்சியுண்டாகும்.
2. குருவின் ஸ்பரிசத்தால் அதாவது குரு நம் தேகத்தைத்
தொடுவதால் சீடனுக்கு எவ்வளவோ ஆன்ம பலமும் பக்தி விருத்தியும் உண்டாகும்.
3. ஆன்மீக அருள் கிடைக்கப் பட்ட சீடனுக்குக் குரு
நினைக்க எல்லாம் நடக்கும்.
4. கடவுளைக் கும்பிடும் போது அது வேணும் இது வேணும் என்று கேட்காமல் அன்புக்காக வேண்டிக் கும்பிடல் வேண்டும்.
115

Page 70
இதுவே அன்பனின் குறிக்கோளாக அமைய வேண்டும். வேண்டத் தக்கதறிபவராகிய இறைவன் உரிய காலத்தில் பக்தன் தனக்காகவேனும் அன்றேல் தன்னைநாடிய அன்பர்க்காகவேனும், உயிர்ப்பிச்சை கேட்பினும், அதையும் தருவான். ஆங்கிலத்தில் ஆன்மீகச்சொல் ஒன்று உளது. அதாவது, ‘IMMEDIACYOFGOD’, அக்கணமே ஒப்பேற்றும் ஆண்டவனின் அருட்கடாட்சம் பல பக்தர்களும் அடியார்களும் தம் வாழ்வில் இறைவனின் இத்தன்மைய அருட்கடாட்சம் கிடைக்கப்பெற்றுத் தம் மனத்தே இறைவனின் மீளா அடிமையாகும் பேரின் பப் பெறுபேற்றைச் சதா சுகித்துக்கொண்டே மற்றவர்களையும் ஈடேற்றிய வண்ணம், தேகம் நீத்த பின்பும் நிரந்தரராய் ஆன்மீக ரீதியில் அடியார்களுக்கும் அன்பர்களுக்கும் சதா அருள்பாலித்த வண்ணம் உள்ளனர்.
சிவயோக சுவாமிகள் தன்னிடம் வரும் அடியார்களுக்குக் கூறியது: “ஒரு பெரிய சீமானிடம் போய் ஒரு பணம் இரண்டு பணமா கேட்கிறது? நாமெல்லோரும் மானிடராய்ப் பிறந்த நோக்கம் ஒரு பெரும் பிணியைத் துப்பரவாய்த் தீர்க்கவேயாகும். அந்த வேலையில் அதிகம் அக்கறை செலுத்தினால், அக்கரை சேரலாம்.
“ஒரு கோடீஸ்வரனிடம் பிச்சை கேட்பவன், ஒரு பணம், இரண்டு பணமா கேட்பது? என வினாவிய சிவயோக சுவாமிகளஞக்கு, மார் கீ கணிடு சுவாமிகள் அருளிய வார்த்தைகளையே இங்கு குறிப்பிடுகிறேன். “கோடானு கோடி சீவராசிகளையும் காத்தும் படைத்தும், கரந்தும், அநுக்கிரகித்தும் ஆட்சி செய்யும் கடவுள் என்ற நாமமுள்ள அந்தக் கோடானு கோடி கோடிஸ்வரனாகிய பரமவஸ்துவிடம் பணம் கேட்பானேன்? சீவனே சிவனானதேவா இந்தப் பிணத்திற்குச் சீவன் (உயிர்) என்ற பெரும் பணப்பிச்சை தாருமப்பா, என்று உண்மைப் பக்தன் கேட்க
116

நினைக்கும் அக்கணமே அப்பிணம் உயிர் பெறும்.” என்று பகர்ந்து அத்தகைய பக்தனே ஞானியாகவும், யோகியாகவும், ரிசியாகவும் நடமாடும் ஆத்மா என்பது ஆத்மீக துறையில் ஈடுபாடுடையோர் ஏற்றுக் கொள்ளும் உண்மையாகும். தெய்வீக யோகியராகவும் சித்தர்களாகவும் இன்றும் ஆத்மீக நிலையில் சதா சிரஞ்சீவிகளாய்த் திகழும் செல்லப்பா சுவாமிகள், சிவயோகசுவாமிகள், மார்க்கண்டு பேரளவில் மூவரே யாயினும் ஆன்மீக ரீதியில் திரிகாலம் உணர்ந்த ஒரே ஒரு பரிசுத்த ஆன்மா என்பது இவ்வடியேனினதும் சுவாமிகளின் ஏனைய பக்தர்தளினதும் பூரணவிசுவாசமும்
நம்பிக்கையுமாகும்.
அணுக்குண்டுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு அல்லோல கல்லோலப்படும் பயப்பீதி சூழ்ந்திருக்கும் இன்றைய இந்தியா, பாகிஸ்தான் முதலிய நாட்டவருக்கும், முழுமானிடத்துக்குமே நம்குருநாதன் சிவயோக சுவாமிகள் போதித்து, விளக்கம் கொடுத்து, விட்டுச்சென்ற உண்மையாவது "நீ உடம்பன்று, மணமன்று புத்தியன்று, சித்தமன்று, நீ ஆத்மா. ஆத்மா ஒருநாளும் அழியாது” குரநாதனின் அன்பர்களும், அடியார்கள் யாவரும் அறிந்த பேருண்மையாதெனின் எந்த ஒரு அணுக்குண்டாலும் அசைக்கவோ, துளைக்கவோ முடியாததும், என்றும் அழியாமல் நிரந்தரமாய் நிலைத்திருத்கும் பரமவஸ்துவின் பெயர்தான் ஆத்மா.
"வானகம், மணனகம வந்து தாழநத7டினும்
தானவனானோண் சஞ்சல மடையான்".
-சிவயோகசுவாமிகள்
117

Page 71
ஒரு மை மனம் படைத்த வுத் தமதி துறவி இருமையுமளிக்கும் இறைவன் திருவடி அந்தியுஞ் சந்தியுமகலாது போற்றிப்பந்தித்து நின்ற பாவம் போக்குதி நிந்திப்பார்களை நேசத்தால் வெல்லுதி சந்தேகமில்லை
நீ நித்தியன், நிணக்கயல் கற்பனை, நீ நிராமயன் நினைப்பொழிந்து வாழுதி
ஓம் தத் சத் ஓம்.
ஓம் சாந்தி, சந்தி/ சாந்தி//
வாழ்க குரநாதன் நாமம். சிவயோகசுவாமிகளின் அடியான்
米 米 米 米 米 米
அஞ்சுவ தியாதொன்றுமில்லை, அஞ்சு வருவதியா தொன்றுமில்லை யென்னு மான்றோர் மெய்ம்மொழி நம்மைப் பிறப்பாகிய கடலைக் கடப்பிக்குந் தெப்பம், இதைத் துணையாகக் கொண்ட வெமக்கென்னகுறை? ஆதலால் நிறைந்த மனத்துடன் இந்தப் பெரும் பிரயாணத்தைச் செய்வோமாக.
காவமிகள் அருள்மொழி
118

என்னை எனக்கு அறிவித்தான் எங்கள் குருநாதன்
யாழ் குடாநாட்டில் ஒரு சிஷ்ய பரம்பரை தலைமுறை தலைமுறையாக இருந்து வந்தது. அத்தலைமுறையில் வந்தவருள் ஒருவர் கொழும்புத்துறை யோகசுவாமியவர்கள். 1941ம் ஆண்டு நான் கொழும்பு சர்வகலாசாலை மாணவனாக இருந்தபொழுது ஒரு நாள் ஒரு வாகனத்தில் யோகசுவாமிகளும் அடியேனும் அருகில் இருந்து போகும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுது சுவாமியவர்கள் என் முதுகில் தட்டி ஆங்கிலத்தில் "Be Brave Depend on Your Selfyou are Pure" என்று கூறினார்.
அன்று தொடக்கம் நான் சுவாமிபால் ஈர்க்கப்பட்டேன். காலையிலும் மாலையிலும் பிராணாயாமம், தியானம் முதலியவற்றை அப்பியாசிக்க விருப்பம் கொண்டு ஆரம்பித்தேன். சுவாமி கொழும்புக்கு வந்த வேளையில் அவரை இரண்டாம் முறை சந்தித்தேன். அப்பொழுது சுவாமி “எனக்கும் உனக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது பார்த்தாயா? நான் விளையாட்டாய்ச் சொன்னேன் நீ நம்பிவிட்டாய்” என்றார். நான் பல்கலைக்கழகத்தை விட்டு சட்டக்கல்லூரி மாணவனாக இருக்கும் பொழுது ஒரு நாள் சொப்பனத்தில் சிவனுடைய சின்னம் ஒன்று காட்டப்பட்டு என் இருதய ஸ்தானத்திலிருந்து அதன் மத்திக்கு ஒரு ஒளிக்கதிர் செல்வது போலக் காட்சிதரப்பட்டது. இது குருநாதன் கொழும்பில் நிற்கும் பொழுது நடந்த சம்பவம். அடுத்த நாட் தொடக்கம் அப்படித்தரப்பட்ட சிவசின்னத்தின் மேல் நீண்ட நேரம் தியானம் செய்ய ஆரம்பித்தேன். ஒரு நாள் நான் நினைத்துத் தியானம் செய்த சின்னம் என்னை அணுகி எனக்குள் மறைந்தது. அப்பொழுது எஞ்சியிருந்தது இறைவன்மேல் நான் கொண்ட பக்தியின் தியானம் மட்டுமே. இதன் பின்னர் குருவின் தியானம் கைகூட இறைபக்தியில் மாத்திரமே நெடுநேரம் தியானிக்கும் ஆற்றல் கிடைத்தது. எனவே
119

Page 72
புறத்தியானத்திலிருந்து அகத்தியானத்திற்கும் உருவழிபாட்டிலிருந்து அருவ வழிபாட்டிற்கும் துவைத வழிபாட்டிலிருந்து அத்வைத வழிபாட்டிற்கும் வரும் வாய்ப்புக் கிடைத்தது.
இவ்வாறு தியானம் செய்துகொண்டு போகும் வேளையில் 1946ம் ஆண்டு கார்த்திகை விளக்கீட்டன்று நீண்டநேரத் தியானத்தின் பின் என் கால்கள் தானாகவே நடக்க ஆரம்பித்தன. கைகள் தன்பாட்டில் வேலை செய்யவாரம்பித்தன. வாய் தானாகவே கதைக்கவும் பாடவும் தொடங்கியது. கண்கள் தன் பாட்டில் பார்த்தன. காதுக்குள் சத்தங்கள் கேட்டன. உடனே எனக்குள் என்னுள் ஒரு சக்தி நின்று என் கட்டுபாடின்றி என்னை இயக்குவது போல் இருந்தது. உடனே அச்சத்தால் என் குருநாதனின் உதவியை நாடி அன்றிரவே புகைவண்டியில் யாழ்ப்பாணம் சென்றேன். நேராக குருநாதனின் கொழும்புத்துறை ஆச்சிரமத்தை அடைந்தேன்.
அப்பொழுது அவர் அங்கு இருக்கவில்லை. ஆனால் நான் அவர் வருகைக்காகப் பகல் முழுவதும் காத்திருந்தேன். குருநாதன் மாலையில் இருப்பிடம் வந்தார். அவரைக் கண்டதும் காலடியில் வீழ்ந்து வணங்கினேன். குருநாதன் "உனக்கு இவ்வளவு வெள்ளென வந்திருக்கப்படாது. படிக்கக் கஷ்டப்படப்போகிறாய்” என்று கூறி என்னை வெளித் திண்ணையில் இருக்கச் சொல்லிவிட்டுக் கொட்டிலுக்குள் சென்று யோகத்தில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் எனது வலது கை முஷ்டியாகப் பிடிக்கப்பட்டு வாயை அடையவும், வாய் மோன முத்திரை செய்யவும் கையும் வாயும் இயங்கப் பட்டன. அதன் பின்னர் "உனக்கு ஒரு குறையுமில்லை” என்னும் வாக்கியம் என் கண்டத்துக்குள் சொல்லப்பட்டது. சிறிது நேரத்தின் பின் குருநாதன் "நீ போய் வா கடவுள் உன்னோடு இருக்கிறார். ஒன்றுக்கும் பயப்பட வேண்டியதில்லை. மூன்று நாள் கழித்து கொழும்புக்குப் போ”
120

என்றார். குருநாதன் என்னோடு இருக்கிறார் ஒரு பயமுமில்லை என்ற துணிவு வந்தது. அவரை மீண்டும் அட்டாங்கமாக வணங்கி வீடு திரும்பினேன். என்ன ஆச்சரியம் கால்கள் தன் பாட்டில் விரைவாக நடக்கத் தொடங்கின. வாயும் மேற்கூறிய மோன முத்திரை செய்தது. நான் வீடு சென்ற பின் குருநாதன் ஆறு மைல் தூரத்திலிருந்து கொண்டு எனக்குள்ளே கேட்க எனது கண்டத்துக்குள் “அரியானை அந்தணர் தம் சிந்தையானை” 'திருவே என செல்வமே” என்ற திருத்தாண்டகங்களைப் பாடிக் கொண்டிருந்தார். நான் கேட்டு ஆனந்தித் தேனி. அதுவுமல்லாமல் நானும் அவருடன் சேர்ந்து பாடினேன். தூரத்திலிருந்து கொண்டே தன் சீடர்களைக் கவனிக்கவும் அவர்களை இயக்குவிக்கவும் குருநாதன் ஆற்றல் படைத்தவராய் இருந்தார். அந்த முறையில் குருநாதன் எனக்கும் யோகம் பழக்கினார். கொழும்பிலிருந்தும் குருநாதருடன் தொடர்பு கொள்ளத் தக்கதாக இருந்தது. எனவே விருப்பம் முழுவதும் சுவாமி அனுப்பும் வாக்கியங்களைக் கேட்பதிலும் நான் சொற்களைத் தாரணை செய்து சுவாமிக்கு அனுப்புவதிலும் சென்றது. அதனால் படிப்பைச் சிறிது காலம் பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும் குருநாதனைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படவே திரும்பவும் யாழ்ப்பாணம் சென்றேன். வீட்டிலிருந்து குருநாதருடன் மேற்கூறிய வகையில் தொடர்பு கொண்டேன். குருநாதனின் வந்துவிட்டுப் போ என்னும் வாக்கியம் எனக்குள் கேட்க அனுப்பப்பட்டது. அன்று பின்னேரம் சுவாமியின் கொழும்புத்துறை ஆச்சிரமத்திற்குச் சென்றேன். குருநாதனும் சொன்னபடி அங்கிருந்தார். நான் அவரை அட்டாங்கமாக வணங்கி அவருடைய குடிலுக்குள் சுகாசனத்தில் அமர்ந்தேன். அவரும் சிறிது நேரத்தில் தியானத்தில் ஆழ்ந்தார். சிறிது நேரத்தில் என் குண்டலினி சக்தி என்னுடைய சுழுமுனை நாடிக்குள் மேல்
121

Page 73
எழுவதை உணர்ந்தேன். குண்டலினி ஒவ்வொரு சக்கரத்தையும் ஊடுருவும் போது சிறிது நேரம் அச்சக்கரத்தில் நின்று "அருவாய வல்வினை நோய் அடையா வண்ணம்” என்னும் மந்திரத்தை எனக்குள் கேட்க எனக்குள் புகுத்தி அச்சக்கரத்தில் தாரனை செய்தார். இவ்வாறாக குண்டலினி சக்தி ஆறு ஆதாரங்களையும் தொட்டு சகஸ்தரளத்தை அடைந்தது. நானும் சமாதி நிலையை அடைந்தேன். சிறிது நேரத்தின் பின் சுவாமியின் அருளால் சமாதிநிலை கலைந்து கணிணைத் திறந்தேன். சுவாமி முன்னிலையில் திருநாவுக்கரசர் என்பவர் சிவபுராணம் சொல்லிக் கொண்டிருந்தார். அடியார்களும் வந்து வணங்கத் தொடங்கினார்கள். சுவாமி என்னை நோக்கி “நீ வா” என்று சொல்லி ஒரு பழத்தை என் கையில் கொடுத்தார். நானும் அவரை வணங்கி வித்தை கற்ற பெரும் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினேன்.
இவ்வாறு தியானத்தைக் கிரமமாக ஒவ்வொரு சக்கரங்களிலும் சுவாமியுடன் சேர்ந்தும் தனிப்பட்ட முறையிலும் செய்துகொண்டு வந்தேன். சிறிது காலம் செல்லத் திரும்பவும் சுவாமியைச் சந்திக்க நேர்ந்தது. சுவாமி என்னை நோக்கிக் "கடவுள் நெடுக எங்களைப் பிடிக்க விடப்படாது. எங்கள் தேவைக்கு நாங்கள் அவரைப் பிடிப்பது” என்று கூறி முதுகெலும்பினுள் உள்ள சூக்கும நாடியில் இருக்கும் ஆதாரங்களில் ஒரே நிலையில் நின்ற என்னை முன்னுக்கு வரப்பண்ணி வெளி மனத்தையும் வெளிப்பார்வையையும் வெளிக்கேள்வியையும் தந்து “தியான நேரத்தில் உள்நாடியில் நிற்கலாம் ஆனால் வேலை நேரத்தில் வெளிமனதுக்கு வந்து புத்தகத்தைக் கவனிக்க வேண்டும்.” என்று கூறி “இனி நீ வரலாம்” என்று ஒரு பழத்தை எடுத்துத் தந்தார். நானும் குருநாதரை வணங்கி விடை பெற்றேன்.
122

இதன் பின் திரும்பவும் என் சட்டப்படிப்பை தொடர்ந்து செய்ய திருவருள் கைகூடியது. பரீட்சையிலும் சித்தியடைந்தேன். சில காலத்தின் பின் திரும்பவும் குருநாதனைச் சந்தித்தேன். “கடவுள் உன்னோடு தான்” என்று கூறினார். இது நடந்தது 1949ம் ஆண்டளவில். இன்னுமொரு பத்து வருடம் குருநாதரோடு கூடி மேலும் ஞானத்தைப் பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இக்காலத்தில் எந்தெந்த ஆதாரங்களைக் கொண்டு எந்தெந்த கன்மேந்திரியம், ஞானேந்திரியம் அந்தக் கரணங்கள் ஆகியவற்றை இயக்கலாம் என்பதை அறிந்தேன். ஒரு சித்தரிடம் அப்படி அவை இயங்கும் பொழுது அதை எப்படித் தடுக்கலாம் என்று கற்கும் வாய்புக் கிடைத்தது. அப்படிக் கன்மேந்திரியங்கள் ஞானேந்திரியங்கள் அந்தக் கரணங்கள் ஆகியவை இயங்குவதை நிற்பாட்டினால் சுத்தசைதன்யமாகிய தன்மையை அறியலாம்.
தத்துவமசி
“ஒரு பொல்லாப்புமில்லை ஒரு குறையுமில்லை எப்பவோ முடிந்த காரியம்”
குருநாதன் தாள் வாழ்க!
ம. நாகரத்தினம் சட்டத்தரணி
米米米米米米
சிவபக்தி யாலே சிந்தை குவிந்தது சிவபக்தி யாலே சிந்தை தெளிந்தது சிவபக்தி யாலே சிந்தை யிறந்தது சிவபக்தி யாலே சீவன் முத்தியே
நற்கிந்தனை
123

Page 74
ஈழவள நாட்டின் ஞானமலை தவத்திரு சிவயோக சுவாமிகள்
தூலமாயும் சூக்குமமாயும் இருந்து அருள்மழை பெய்யும் ஞானமலை தவத்திரு சிவயோக சுவாமிகளை இன்றைய சூழ்நிலையில் மட்டுமல்ல என்றுமே வணங்குதல் வேண்டும். வணங்கிப் பெருவாழ்வு பெறுதலே சைவசமய மக்களின்
முக்கியகடமையாகும்
இப்பரந்த நிலவுலகில் இலங்கை மிகமிகச் சிறிய தீவு. என்றாலும் இலங்கையின் பெருமையையும் அதன் அழகையும் அகில உலகுமட்டுமல்ல தேவர் உலகும் ஒரு காலத்தில் போற்றிப் புகழச் சிவயோக சுவாமிகளே காரணமாகும். சிவயோகசுவாமிகள் கடல் கடந்து மேலைத் தேசங்களுக்குச் செல்லவில்லை யெனினும் சுவாமிகளின் அருட்பிரகாசம் மாபெரும் சாகசம் போன்று வெளிநாடெங்கும் பரவுதற்குச் சிவயோக சுவாமிகள் இன்றும் ஞான பானுவாக சூக்கும சரீரத்தோடு வானத்திலிருந்து அருள்பாலிக்கின்றார்.
சுவாமிகள் ஈழத்துச் சித்தர்கள் வரிசையில் ஒருவர் என்பதை நாம் மறக்கக் கூடாது. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சித்தர்கள் கடையிற் சுவாமிகள், செல்லப்பாச் சுவாமிகள், சிவயோகசுவாமிகள்
என்போராவார்கள்.
சித்தர்கள் என்றால் என்ன? இதற்கு இலகுவில் விடைகாணிபது அரிதாகும். அதேபோல் சித்தராகுவதும் இலகுவானதன்று.
சித்தர்கள் என்ற சொல்லுக்கு ஆன்மீக வாழ்வில் சித்திபெற்றவர்கள், அதாவது இந்த உடம்புடன் வாழும் போதே
124

பேரின்பமாகிய வீட்டு நெறியை அடைந்தவர்கள் என்பது பொருள். “சித்தன் போக்கு சிவன் போக்கு” என்று ஒரு பழமொழியுமுண்டு. எல்லாம் வல்ல சிவபெருமானும் கூடச் சித்தராக இருந்தார் என்பதைப் பலபுராணங்களில் காண்கிறோம்.
அதுபோலச் சிவயோக சுவாமிகளும் சித்தராக இருந்து பக்தர்களின் துயர்களைத் துடைத்த செய்திகளை நாம் எமது கண்முன்னே காணும் பாக்கியம் கிடைத்தது. சுவாமிகள் பன்னிரு திருமுறைகளில் நல்ல ஈடுபாடும் நம்பிக்கையும் உள்ளவர். இக்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி மிகுந்நமையால் வைத்திய வசதிகள் மிகுதியாக இருப்பதைக் காண்கிறோம். பணவசதி படைத்தவர்கள் தமது சரீரத்தில் பிணிகண்டால் வைத்தியர்கள் மூலம் நோயைத் தீர்த்துக் கொள்வதைக் காண்கின்றோம்.
புராண காலத்திலும் அதற்கு முந்திய காலங்களிலும் இன்று போல் வைத்திய வசதிகள் இருக்கவில்லை. எனினும் சித்த வைத்தியங்கள் இருந்தன. கடவுள் நம்பிக்கையுடன் மூலிகைகள் மூலம் தவிர்க்க முடியாத கொடிய நோய்களை நீக்கினதாகப் பல சான்றுகள் உள்ளன.
திருமுறைகள் ஓதுவதன் மூலமும் உடற்பிணி உளப்பிணி பகைமை முதலியனவற்றை நீக்கினார்கள். கடவுளின் அசையாத நம்பிக்கை மூலம் ஆன்மீக வாழ்வைக் குருவருள் மூலம் பெற்ற நிகழ்ச்சிகளைச் சிவயோகசுவாமிகள் மூலம் காணமுடிகின்றது.
பல வருடங்களின் முன் தெல்லிப்பளையில் வடலிக் கூடலில் யூரீ துர்க்கையம்பாள் ஆலயம் இருந்தது. பல பக்தர்கள் அவ்வாலயம் சென்று நம்பிக்கையுடன் வழிபட்டு வந்தனர். யூரீ துர்க்காதேவியின் அருள் வெள்ளம் வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனால் பல
125

Page 75
பக்தர்கள் ஒன்றுகூடி ஆலயத்தைப் புனருத்தாரணம செய்ய விரும்பினார்கள். ஆலய வேலைகள் வேகமாக நிகழ்ந்துகொண்டிருந்தன. சிவயோகசுவாமிகள் அவ்வாலயத்திற்குக் காரில் போய் வணங்கி வருவது வழக்கம். ஆலய புனருத்தாரண வேலைகள் நடப்பதையும் அந்த வேலைகளில் செல்வி அப்பாக்குட்டி தங்கம்மா ஈடுபட்டிருப்பதையும் அவதானித்த சுவாமிகள் பன்னிருதிருமுறைகள் முற்றோதல் வருடாவருடம் நிகழ்த்தி வந்தால் இவ்வாலயம் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல அகில உலகச் சைவமக்களாலும் வணங்கப் படும் என்று கூறினார்.
அம்மையார், சுவாமிகளின் அருள்வாக்கைப் பொன்னே போற் போற்றி, அதனை நடைமுறையில் செயற்படுத்தத் தம் பணத்திலே ஞானசுரபி என்ற மண்டபம் நிறுவி. ஒவ்வொரு சித்திரைச் சதயத்திலும் பன்னிரு திருமுறைகள் பண்வைப்பு முறைப்படி படிக்கத் தொடங்கி ஆடிச் சோதியில் பூரணப்படுத்திவிடுவர். பன்னிரு திருமுறைகள் படித்த சிவனடியார்களை உலா வரச் செய்வார். அதன் பிரதிபலிப்பாக யூரீ துர்க்கையம்பாளின் ஆலயம் மிகுந்த சிற்பக்கோபுர வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. அதனை விட இன்று பிரபல்யமாகத் துலங்கியும் வருகின்றது.
சுவாமிகளது ஆச்சிரமம் கொழும்புத்துறையில் “திருநாவுக்கரசு” என்ற பக்தரின் வளவில் அமைந்திருந்தது. சுவாமிகளைத் தரிசிக்கப் பல அடியார்கள் வருவதுண்டு. அடியேனும் செல்வேன். அக்காலத்தில் அடியேன் சீனியர் வகுப்புப் படித்துச் சித்தியடைந்துள்ளேன்.
எனது தாயார்மறைந்து விட்டார். எனது சகோதரர் ஒருவர் இருந்தார். என்னிலும் பார்க்க ஆறுவயது குறைந்தவர். கணிதம் செய்வதில் வல்லவர். தமிழ்மொழி அவ்வளவு திறமையாகச்
26

செய்யமாட்டார். வயது பதினாறு இருக்கும். சிவதொண்டன் நிலையத்தில் அடியார்களுக்குச் சிவதொணி டு செய்துகொண்டிருந்தார். வறுமைக் கோட்டின் கீழ் நாம் இருந்தாலும், வறுமையிற் செம்மையும் சிவபக்தியில் முழுமிையான நம்பிக்கையும் உடையவர்களாக எங்கள் குடும்பம் இருந்தது.
1948ம் ஆண்டு தொடக்கம் கிறிஸ்தவர்கள் வறுமைக் கோட்டில் இருப்பவர்கட்குக் கல்வி வசதி செய்து கொடுப்பார்கள். என்னையும் கிறிஸ்தவ மதத்தில் சேரும் படி வற்புறுத்தினார்கள். எமது சமயம் உண்மைச் சமயம் கிறிஸ்தவம் பொய், நான் சேர முடியாது என்று கூறிவிட்டேன்.
1956 என்று நினைக்கிறேன். சுவாமிகளின் சிவதொண்டன் நிலையத்தில் என் சகோதரர் தொடர்பு வைத்தார். எமக்கும் அதன் பயனால் சுவாமிகளைத் தரிசிக்கின்ற பெரும் பேறு கிடைத்தது.
1956ம் ஆண்டு அடியேன் காரைநகர் வர்தாப் பாடசாலையில் கல்வி படிப்பித்துக் கொண்டிருந்தேன். ஏதோ இறையருள் போலும் சைவசமய ஈடுபாடு இருந்தமையால், பாடசாலையில் படிக்கின்ற காலத்தில் இருந்து வாசிக்கும் நாவன்மை, பேசும் நாவன்மை, எழுதும் வன்மை இருந்தது.
அக்காலம் இருபத்தைந்து வயது இருக்கும். சிவதொண்டனில் ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் அந்தர்யோகம் நடப்பது வழக்கமாக இருந்தது. அடியேன் அதிகாலையில் எழுந்து நீராடி சமய அனுட்டான விதிகளை முடித்து விட்டுக் காரைநகரில் இருந்து பேருந்தில் வருவது வழக்கம்
127

Page 76
அடியேனிடம் சில பழக்க வழக்கம் இருந்தது. இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது. புறச் சமயத்தவரைப் பழிப்பதும், சாதிசமயம் பார்ப்பதுமாக இருந்தேன். இளமைத் துடிப்போ அறியேன். இதைவிட நகைகளாக, சிவசின்னங்களை விருப்புடன் அணிந்திருந்தேன். தூய வெண்மையான ஆடை அணிபவள், வெண்மையான ஆடைபோல் என் மனமும் இருக்கின்றது என்று பறைசாற்றுவது போல நினைப்பு.
ஒரு நாள் அதிகாலை அதாவது காரைநகரிலிருந்து காலை நாலரைமணிக்குப் புறப்படும் பேரூந்திற்காக ஆலடிக்கு வந்தேன். என்னுடைய சரீரம் பருத்தமையால் நடை பறியவில்லை. இதனால் நாலரைமணி பஸ்சைத் தவற விட்டு விட்டேன். ஐந்தரை மணி பஸ்சில் ஏறினேன். பஸ்சில் சீற் கிடைத்தது இருந்தேன். ஏதோ மிகவும் சிறிய காலம் தொடக்கம் திருவைந்தெழுத்தைத் துணையாகத் தியானிப்பது வழக்கம். உண்மையாகப் பெண்கள் தனித்துப் பயணம் செய்வது அச்சத்திற்குரிய செயற்பாடு. தனிய இளம் பெண்களைக் கண்டால் இளைஞர் பல்லைக் காட்ட, முதியோர் சுரண்டும் பழக்கம் தொடர்கதையாக மனிதசமூகத்தில் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே.
யாரும் அதாவது பெண்ணோ ஆணோ என்னில் முட்டப்படாது என்று இறைவனை வேண்டித் திருவைந்தெழுத்தை நாவில் தழும்பேறத் தியானித்து ஜெபிப்பேன். அன்றும் அப்படித்தான் இருபத்திரண்டு வயதிருக்கும் ஒரு இளம் மாது மிகமிகச் சிறிய குழநீதை யுடனி அநீத பஸ் சில ஏறினாள் . சிறுமி நோய்வாய்ப்பட்டிருந்தது. தாயையும் குழந்தையையும் பார்த்த போது அவர்கள் வறுமைக் கோட்டில் வாழ்வதாகவே தெரிந்தது. கீழ்சாதியினர் என்று அவளின் உடுப்பும் நடைமுறையும் கட்டியம் கூறியது.
128

எனது அருகில் வந்து குழந்தையைப் பிடிக்கும் படி குழந்தையை என்னிடம் நீட்டினாள். எனக்கு அருவருப்பும் சினமும் ஏற்பட்டது. குழந்தையை மடியில் வைத்திருந்தால் எனது வெண்மையான ஆடை அழுக்காகி விடுமல்லவா. குழந்தையைப் பிடிக்காமல் விட்டால் ஆண்டவனும் கோபிப்பான். அதனால் நான் எழுந்து அவளை இருக்க விட்டேன். இது சித்தம் கேணியில் காலை ஆறுமணியில் நடந்த நிகழ்ச்சி.
சிவதொண்டன் நிலையம் வந்து விட்டேன். கால்களைக் கழுவிய பின், அன்றைய மகேஸ்வர பூசைக்காகக் காய்கறிகளைத் தொணிடர்கள் நறுக்கிக்கொண்டிருந்தார்கள். அடியேனும் நறுக்கிக்கொண்டிருந்த போது சுவாமிகள் சிவதொண்டன் வெளிப்புறக் கேற்றடியில் (படலை) காரில் இருப்பதாகச் செய்தி வரவும், அடியேன் சுவாமிகளைத் தரிசித்து நல்ல அருள் வாக்குப் பெறுவதற்காக அருகில் ஓடிச்சென்று நின்றேன்.
சுவாமிகளின் திருவாயில் இருந்து மலர்ந்த சொற்கள் எம்மை அப்படியே மலைக்கச் செய்து விட்டன. “என்னடி சாதியா பார்க்கிறாய் சாதி எங்கே இருக்கிறது. யோசி போடி போ” என்று கூறினார்.
வாழ்க்கையின் ஆரம்பத்தில் முளைவிட்ட சாதி சமய முரண்பாடு விருட்சமாகி எம்மை ஆட்கொள்ள விடாது தடைசெய்து விட்டார்.
சுவாமிகளின் அருள் வேதவாக்கு அடியேனைச் சிந்தனையில் ஆழ்த்திவிட்டது. சிந்திக்கத் தொடங்கினேன். கல்வி ஏட்டுச் சுரைக்காயாக இருக்கக் கூடாது. செயலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது சுவாமிகளின் வாக்கிலிருந்து உணர முடிந்தது.
129

Page 77
“சாதிகள் இல்லையடி பாப்பா” என்பது பாரதியாரின் பாடல். “இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்’ என்பது ஒளவையாரின் செம்மையான அருள் மொழி. “அந்தணர் என்போர் அறவோர். மற்றெவிவுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலால்” என்பதும் “வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு’ என்பதும் வள்ளுவர் வாக்கு. என்பவற்றைச் சிந்தித்தேன். அன்றே சாதி மத வேறுபாடுகளை வேருடன் விட்டொழித்தேன்.
அடிக்கடி சுவாமிகளைத் தரிசிக்கக் கொழும்புத்துறை செல்வது வழக்கம். சுவாமிகள் இருப்பார்கள். பக்தர்கள் திருமுறைகளைப் பண்ணுடன் படிப்பார்கள். மனிதர்களின் பகைமை உடற்பிணி தீர “வேயுறு தோழிபங்கன்” என்ற பதிகம் உருக்கமாகப் பாடுவார்கள். பல பக்தர்கள் எந்த நேரமும் சுவாமிகளைச் சூழ்ந்திருப்பார்கள். தம் குறைகளைக் குறைவில்லா நிறைவாகிய சிவயோகசுவாமிகளிடம் கூறுவார்கள். அழுவார்கள். அடியேன் எமது குறைகளைச் சுவாமிகளிடம் கூற அஞ்சுவேன். இளம் வயதல்லவா? நமக்கு ஒரு குறை, கல்வியை நன்கு கற்க வேண்டும். மேதையாக விளங்க வேண்டும் என்பதாகும்.
அக்காலத்தில் பெண்களை மக்கள் அதிகமாகக் கற்க விடுவதில்லை. ஒன்று வறுமையாக இருந்தது. இரண்டாவது பெண்கள் கல்விகற்கும் போதே காதல் மூலம் கணவனைத் தேடிப் பின் அபலையாகி அலைவது. இன்னொரு காரணம் பெண்களிற் சிலரில் கல்விச் செருக்குக் கூடிவிட்டால் திருமணம் செய்து கொடுப்பது அரிது. பெண்கள் தனித்து வாழ்வதை அக்காலப் பெற்றோர் விரும்புவதில்லை.
நான் வசித்த கிராமமாகிய குப்பிளானில் பெண்கள் படிப்பது குறைவு. வசதியான ஒரு சில பெண்களே கல்வி கற்றனர். ஏதோ
30

அடியேன் கல்வி கற்பதற்குரிய காலத்தில் கல்வி கற்கச் சில தடைகள் இருக்கத்தான் செய்தன. ஞாபகசக்தி மிக மிகக் குறைவாக இருந்தாலும் படிக்கவேண்டுமென்ற ஆவல் கூடிக் கொண்டுதான் இருந்தது. காரைநகரில் ஆசிரியைச் சேவையில் இருக்கும் காலத்தில் பிரவேச பண்டிதர் பால பண்டிதர் படித்தேன். எனினும் இந்தியா சென்று புலவர் படிக்க ஆவலாக இருந்தது. பணவசதி வேண்டுமல்லவா எமது ஆவலைப்பூர்த்திசெய்ய யாருமே இல்லை. ஏதோ வயது ஏறிக்கொண்டு போகிறது. கலியாணம் கட்டிக் கொடுத்துவிடு. கிழட்டு வயதிலும் உன்னுடைய மகளுக்குப் படிப்பெதற்கு, படிக்கிற வயதா என்ற கிண்டலாக அயலவர்கள் எமது தந்தையிடம் கூறுவார்கள்.
எமக்கு இது பெரிய தலையிடி மட்டுமல்ல பெரும் கவலை. அடக்கமுடியாத அழுகை, எனக்கு யார் கைகொடுப்பார்கள்? எமது வறுமைக்கோட்டின் காரணமாக உறவினர் தூரவிலகினர். தாயார் உயிருடன் இருக்கும் வரை ஒருசிலர் உறவுமுறை கொண்டாடுவார்கள். தாயார் மறைந்த பின் எனக்கு உற்ற துணையாக எனது சகோதரர் எஸ்.எஸ். ந. ரத்தினம் அவர்கள் மட்டும் தான். அவர் சிறு பிள்ளை, “அக்கா எனக்கு வேலை கிடைத்தால் உன்னாவலைக் கட்டாயம் பூர்த்தி செய்வேன். இது சுவாமியின் கட்டளை” யென்று எமக்கு ஆறுதல் கூறுவார் .
இந்த இக்கட்டான நிலையை அடியேன் யாரிடம் கூறுவேன். சுவாமிகளிடம் மானசிகமாக முறையிடுவேன். நல்லூர்த் தேரடியில் போய்த் தியானம் இருப்பேன். இந்த நிலையில் ஒரு நாள் சுவாமிகளிடம் போனேன். பல பக்தர்கள் சூழ இருந்து திருமுறை பாடினார்கள். ஒரு பக்தர் தன் பெண் குமராக இருக்கிறாள் திருமணம் செய்து கொடுக்க என்னிடம் பொருள் வசதியில்லை
131

Page 78
வயதும் ஏறிக்கொண்டே போகின்றது என்று கூறியவர் வாய்விட்டு அழுதார். சுவாமிகள் “அழுவதில் யாதும் பயனுமில்லை இடரினும் தளரினும் என்ற தேவாரத்தைப் பண்ணுடன் இறைவனை நினைந்து பாடு” என்றார்.
இத் திருப்பதிகத்தைத் திருஞானசம்பந்த மூர்த்திநாயனார் தனது தந்தை சிவபாதவிருதையர் யாகம் செய்யப் பொருள் வேண்டிச், சிவபெருமானை நினைத்து பாடினார். சிவபெருமான் திருவருள் கூர்ந்து பொற்கிளி கொடுத்தாரெனச் சேக்கிழார் பெரியபுராணத்தில் பாடியுள்ளார்.
அந்தப் பக்தரும் கேட்போரின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் சொரிய, இடரினும் தளரினும்’ என்ற பதிகம் முழுதும் பாடினார், பாடல் முடிய காரில் தனவான் ஒருவர் குடும்ப சமேதராய் வந்தார். அவர் சுவாமிகளிடம் மூன்று பவுண் கட்டிகள் கொடுத்தார். சுவாமிகள் அந்தப் பவுண் கட்டிகளில் இரண்டை, இடரினும் தளரினும்’ என்ற பதிகம் பாடிய பக்தரிடம் கொடுத்து இனிமேல் உன் கஷ்டம் நீங்கியது என்றார்.
எனது திருமணம் பற்றிய ஏக்கம் தந்தைக்கு இருந்தது. தள்ளாத வயதில் தள்ளாடித் தள்ளாடித் தன் குறைகளை அக்காலச் சிவதொண்டனின் தொண்டர்கட்கு கூறிக் கண்கலங்கினார். அவர்களில் ஒரு சிலர் எமது தந்தையின் இரக்க வேண்டுதலுக்குச் செவிமடுத்தனர். இக்காலகட்டத்தில் எனது ஒரே தம்பி மலைநாட்டில் ஆசிரியராகப் பதவியேற்று அங்கு போய்விட்டார்.
என்னிடம் திருமணம் பற்றிய செய்திகள் எதுவும் கூறாது ஒழுங்கு செய்தபின் விடயத்தை வெளியிட்டனர். நான் இதற்கு உடனும் ஒப்புக்கொள்ளவில்லை. சுவாமியை மனதில் நன்கு
132

தியானித்தேன். இரண்டு வாரத்தின் பின் முடிவு சொல்வதாகக் கூறினேன்.
இறைவனே இதென்ன சோதனை. நான் கல்வியை அதாவது சிறப்பான தமிழைக் கற்க நினைத்தால் நரக வாழ்வைக் காட்டுவதா. குமுறிக் குமுறி அழுதேன். உறங்கிவிட்டேன்.
நல்ல உறக்கத்தில் அதிசயக் கனவு கண்டேன். சிவயோக சுவாமிகள் கோவண உடையுடன், கோவளக் கடற்கரைக்குப் பவனி வருகிறார். என்ற செய்தியறிந்து, பாடசாலைப் பெரிய பாதைப் படலையில் மேசையில் நிறைகுடம், பழம் குத்துவிளக்கு முதலியன வைத்து சுவாமிகளை வரவேற்க வணக்கத்துடன் நிற்கிறேன்.
சுவாமிகள் பல்லக்கில் கோவண ஆடையுடன் வருகின்றார். பல்லக்கிலும் பூரண கும்பம் காணப்படுகின்றது. சுவாமிகள் அருகில் வந்ததும் பல்லக்கில் இருந்த பூரண கும்பத்தைத் தன் திருவடிகளால் உதைத்துக் கீழே தள்ளி, உனக்கு இனிமேல் திருமணம் இல்லை யென்றார். சுவாமி இப்பிறவியல்ல எடுக்கும் பிறவிகள் தோறும் சிவபெருமானின் திருவடிகளில் என் மனம் பதிய வேண்டும் திருமணம் எப்பிறவியிலும் வேண்டாம் என்று கூறினேன். சுவாமிகள் கீழே குதித்தார். நான் வைத்த நிறைகுடத்தையும் தூக்கி யெறிந்தார்.
அந்தளவில் கணிகளை விழித் தேனி . வாய் திருவைந்தெழுத்தை ஓதிக் கொண்டது. திருமணமே வேண்டாம். எனக்குத் தருகின்ற காணியை விற்றுப் படிப்பித்தால் போதுமெனத் தந்தையுடன் அடம் பிடித்தேன்.
தந்தையாரும் சிவபக்தர் அதிகம் படிப்பு வாசிப்பு ஞானம் இல்லையென்றாலும் அக்காலத்தில் குப்பிளான் காசிவாசி செந்தில்
133

Page 79
நாத ஐயரிடம் தனது இளமைக் காலத்தில் புராணங்கள் இதிகாசங்கள் கேட்டுக் கேள்வி ஞானம் படைத்தவர். எனினும் நான் திருமணம் செய்ய வேண்டுமென்ற ஆவல் தூண்டிய வண்ணம் தந்தையார் சுவாமிகளிடம் சென்றார். சுவாமிகள் என்னைப் படிக்க அனுப்பச் சொன்னார். அவள் கல்வியைப் பதியாக வரித்துக் கொண்டாள் அவளின் ஆவலைப் பூர்த்தி செய்யெனப் பணித்தார்.
எனக்கு ஒரே சந்தோஷம். விடுமுறைக்காகச் சகோதரர் ஊர் வந்தார். ஒரு நாள் நானும் சகோதரர், தந்தையார், எனது பெரியதாயார் மாலை நேரத்தில் சுவாமிகளிடம் சென்றோம். பல பக்தர்கள் சுவாமிகளைக் குழுமி இருந்தார்கள். சுவாமிகள் அருளுரை வழங்கினார்கள். அடியேன் ஆவலுடள் சுவாமிகளை வீழ்ந்து கும்பிட்டேன். வலமாக வந்தேன். பழக்கவழக்கம் தெரியாதவர் போல அச் சூழ்நிலையில், எனது அற்புதக் கணவால் நடந்து கொண்டேன். எடியே மனிதரை மனிதர் வணங்கலாமா? உன்னைக் கும்பிடப் பலருண்டு என்றார்.
நான் திகைத்து விட்டேன். எல்லோரும் என்னை ஒரு மாதிரி நிமிர்ந்து பார்த்தார்கள். இது சுவாமிகளின் கிண்டலோ என்று நினைத்தேன் பயம் ஆட்கொண்டது. வெளித்திண்ணையில் வந்து இருந்துவிட்டேன்.
அப்போது ஒரு பக்தர் நெஸ்கோப்பி, மிகப் பெரிய சுடுதண்ணிப்போத்தலில் கொண்டுவந்தார். சுவாமிகளே முதன் முதலாக அக் கோப்பியை ஒரு சில்வர் பாத்திரத்தில் ஊற்றித் தன் திருக்கரத்தால் தந்தார். பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர். எனக்கு ஏற்பட்ட ஆனந்த மகிழ்ச்சிக்கு அழவேயில்லை.
34

சுவாமிகள் எனது சகோதரரை நோக்கி, உனது அக்காவையும், தந்தையையும் கைவிடாதே என்று பணித்தார். சகோதரர் தனது இளம் வயதில் சுவாமிகளுடன் பக்தியாய் இருந்து தவத்திரு செல்லத்துரை சுவாமிகளிடம் படித்து ஆசிரியரானவர்.
1960ம் ஆண்டு அடியேன் சுவாமிகளின் அருளால் அணிணாமலைப் பல்கலைக்கழகம் சென்றேன். புலவர் வகுப்பிலிருந்து படித்தேன். அடியேன் சிவபக்தியுடையவள். அதனால் காலை மாலை அனுட்டானம் பார்ப்பது வழக்கம். சிவ மந்திரங்களுடன் சுவாமிகளின் பெயரையும் ஜெபிப்பேன். சுவாமிகளின் அருளால் புலவர் பயிற்சி முடிந்தது. விசேட சித்தியுமடைந்தேன். சுவாமிகளும் சமாதியடைந்து விட்டார். என்னை ஆழ்ந்த துக்கத்தில் அச்செய்தி ஆழ்த்திவிட்டது. தொடர்ந்து ஊனுடல் தந்த தந்தையாரும் மறைந்தார்.
சுவாமிகளை இன மத பேதமின்றிப் பல பக்தர்கள் 60ம் ஆண்டிற்கு முன் தரிசிக்க வருவார்கள். சிங்களவர் முஸ்லிம் என்ற இன மொழிப் பாகுபாடு அன்று இருக்கவில்லை. சுவாமிகளின் கொழும்புத்துறை ஆச்சிரம வெளிப்புறக் கேற்றடியில் இருந்து, சிங்களப் பக்தர் ஒருவர் தட்டத்தில் பழம் கற்பூரம் வெற்றிலை பாக்கு சாம்பிராணிக் குச்சி ஏந்திய வண்ணம் முழங்காலால் நடந்து வந்து தரிசித்ததை அடியேன் காண முடிந்தது. அந்தளவு பக்தி அவரிடம் இருந்தது. “போடா போ இனி உங்களுக்கு நல்ல காலம்” என்றார் சுவாமிகள், சுவாமிகளின் வாக்கு இன்று சிங்கள மக்களைப் பல படி உயரச் செய்து விட்டது.
சுவாமிகளின் பூதவுடல் மறைந்து விட்டது. சூக்கும உடலுடன் அருள்மழை பொழிந்து பொழிந்து கொண்டே இருக்கிறார். அடியேன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செல்லும் போது அடியேனுக்கு வயது இருபத்தொன்பது. புலவர் பயிற்சி முடிய வயது முப்பத்திமூன்றாகும்.
135

Page 80
இன்று வயது அறுபத்தேழு எனது அறுபதாம் வயது தொடக்கம் சுவாமிகளின் அருளினால் வட இந்தியா தொடக்கம் கன்னியாகுமரி சபரிமலை வரை யாத்திரை செய்து வருகின்றேன். பக்தர்கள் என் பாதம் தொட்டு வணங்குவார்கள். சுவாமிகளின் வாக்கை நினைத்தேன். சுவாமிகள் அடியேனது வாழ்க்கை எப்படி அமையுமென்று தீர்க்கதரிசியாக ஞான திருஷ்டியால் அறிந்து கூறினார். அஞ்ஞானத்தில் மூழ்கிய அடியேன் சுவாமிகள் கிண்டலாகக் கூறுவதாக நினைத்தது எவ்வளவு தவறு ஆகும்.
அடியேன் பிறந்த பலன் எதுவோ அறியேன். அடியேனின் இருபத்தைந்தாவது வயதில் சுவாமிகளை முதன் முதலாகத் தரிசித்தேன். முப்பதாவது வயது வரை அடிக்கடி தரிசிக்கும் வாய்ப்பு இருந்தது.
சுவாமிகள் மறைந்த பின் பல பல சுவாமிகளைத் தரிசிப்பேன் பூரண திருப்தி கிடைப்பதில்லை. இந்தியாவில் நான்கு வருடம் தொடர்ச்சியாக இருந்தேன். பல சுவாமிகளைத் தரிசித்தேன். இந்த ஆண்டும் 1998 இந்தியா சென்றேன். பல தலங்கள் தீர்த்தங்கள் தரிசித்தேன். ஆனால் அடியேனின் மனம் மகாசமாதியடைந்த தவத்திரு சிவயோகசுவாமிகளின் திருவடிகளின் நிழலில் ஒடுங்குவது போன்ற பூரண திருப்தியாக இருக்கின்றது.
சுவாமிகளின் நற்சிந்தனை ஒரு ஞானக்களஞ்சியம். நற்சிந்தனையின் ஒவ்வொரு பாடலின் ஒவ்வோர் வரியும் ஆன்ம ஈடேற்றம் காட்டும் ஞான ஒளிப்பாதையாகும் என்பது அடியேனது துணிவும் நம்பிக்கையுமாகும்.
பூனி விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி குப்பிளாண் ஏழாலை,
136

சற்குரு தரிசனம் சகல பாக்கியம்
எனது தாய்மாமனாகிய வழக்கறிஞர் K.சோமசுந்தரம் அவர்கள் நல்லூரைச் சேர்ந்தவர். யோகசுவாமிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவரது அடியாராகவே வாழ்ந்தவர். அடிக்கடி சுவாமிகளது கொழும்புத்துறை ஆச்சிரமத்திற்குச் செல்வார். 1930ம் ஆண்டு இறுதிப் பகுதியில் ஒரு நாள் இவர் சுவாமிகளைச் சந்திக்கச் சென்றார். ஆச்சிரமத்தில் ஒரு சில அன்பர்கள் கூடியிருந்தார்கள். சுவாமிகள் எனது மாமனாரைத் திடீரென அழைத்து “குடைச்சாமி சுகமாக இருக்கிறாரா? எனக் கேட்டு அவரைப் பார்த்து வரும்படி கூறினார். நேரமோ நள்ளிரவை அணிமித்துக் கொணி டிருந்தது. அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் அக் கட்டளை சிந்திக்கக் கூடியதொன்றாக அமைந்து விட்டது. அன்று மாமனார் தனது காரில் போகவில்லை. அதுவும் ஏன் இந்த நேரத்தில் சுவாமிகள் குடைச்சாமியை விசாரிக்கச் சொல்லுகிறார் என்ற வினாவும் அவரது மனதில் கிலேசத்தை உண்டுபண்ணிவிட்டது. சுவாமிகளது கட்டளையை மேற்கொண்டு குடைச்சாமியைப் பார்க்கச் சென்றார். குடைச்சாமி சுகமாக இருக்கக் காணப்பட்டார். அவரிடம் மாமனார் தான் சென்ற விடயத்தை விளக்கினார். அப்பொழுது குடைச்சாமியார் அந் நேரத்தில் நடந்த சம்பவத்தை மாமாவுக்குக் கூறினார்.
அவர் கூறியதாவது "தான் காரில் கல்லுண்டாய் வழியாக வந்த சமயம் கார் அதிவேகமாகத் தெருவழியே இருட்டில் சென்றதாம். வேகமாகச் செல்லும் கார் திடீரென ஒரு வினாடி நேரத்தில் ஒரு பெரிய மரத்துடன் மோதப்போகிறதே என நினைத்த மாத்திரத்தில் அதிசயமான பெரிய ஒளி பொருந்திய கையொன்று காருக்கும் மரத்திற்கும் இடையில் தென்பட்டு, மயிரிடைவெளியில் பயங்கரமான மோதலை அத்தனிமையான இடத்தில் தவிர்த்து
137

Page 81
விட்டதாம். இதனால் நான் சுகமாக இருக்கிறேன்” என்பதாகும். எனது மாமனார் வாயடைத்தநிலையில் தனது குரு யோகசுவாமிகளுக்கு மனத்தில் நன்றி செலுத்தி நின்றார். ஏனெனில் காரின் சாரதி மாமனாரின் மகன் குமாரசாமிதான், அந்தக் காரில் வழமை போல குடைச்சாமியாரை அன்றும் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார்
எனது தந்தையார் கண்டியில், உத்தியோகம் புரிந்த காலத்தில் எனது தாயாரும் அவர் கூடவே இருந்தார். சுவாமிகள் கண்டி வரும்போது எமது பெற்றோருடன் தங்குவதுமுண்டு. ஒருமுறை வருகைதந்திருந்த சமயத்தில் தாயார் சுவாமிகளுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தார். திடீரென அவருக்கு ஒரு எண்ணம் உதித்தது. பரிமாறும் கறிக்குத் தான் உப்புப் போட மறந்ததை தாயார் தயக்கத்துடன் “சுவாமி இந்தக் கறிக்கு உப்பு இல்லை” என்று கூறினார். சுவாமிகள் பரிமாறப்பட்ட அந்தக் கறியைத் தொட்டு நாக்கில் வைத்துச் சுவைத்துப் பார்த்து விட்டு “உப்பு இதில் இருக்கிறது சாப்பிட்டுப் பார்” என்றார். மிகவும் மனக் குழப்பத்துடன் தாயார் ருசித்துப் பார்த்தார். என்ன ஆச்சரியம் அதில் உப்பு இருக்கத்தான் செய்தது.
எனது மூத்த சகோதரி கனகாம்பிகையின் திருமணம் 1943ல் ஓரளவு நிச்சயப்படுத்தப்பட்டிருந்த சமயம், தாயார் சகோதரி சகிதம் ஆச்சிரமத்திற்குச் சென்றிருந்தார். சுவாமி தரிசனத்தின் பின் புறப்படும் போது சுவாமிகள் “கானா, சினா, குனா” அதாவது க, சி, கு என்றார். இதன் கருத்து கனகாம்பிகை, சிவசுந்தரம், குடும்பம் எனத் தெரியவந்தது. அர்த்தம் புரிந்த தாயார் மிக்க மகிழ்ச்சியடைந்தார். க’ சகோதரியின் பெயரையும் ‘சி’ கணவரின் பெயரையும் ‘கு’ குடும்பத்தையும் குறித்தது.
38

எனது இரண்டாவது சகோதரிக்கு வரன் தேடும் காலத்தில் அவரைச் சுவாமிகளிடம் அழைத்துச் சென்றார் என் தாயார். சுவாமிகள் உரையாடிவிட்டுச் சொன்ன பதில் “ஆமப்பூட்டு பக்கத்திலிருக்க ஏன் ஊர் எங்கும் தேடுகிறாய்?" என்பதாகும். ஞானிகள் கூற்று வீண்போவதுமில்லை, அர்த்தமில்லாது போவதுமில்லை. அவற்றில் உட்பொருள் ஆழமாக இருக்கும். என்ன நடந்தது? பக்கத்து வீட்டு மணமகனே சகோதரியைப் பெண் கேட்டு வந்தார்! தாயார் தூரப் போகவேண்டிய சந்தர்ப்பம் வரவில்லை சுவாமிகளது வாய்மொழியின் அர்த்தத்தை மிக இலகுவில் புரிந்து கொண்டோம்
திருமதி , இராஜேஸ் பரமகுரு
米 米 米 米 米 米
சிவத்தியானம் செய் செய் செய்! சிவமே நாமெனல் மெய் மெய் மெய்! அவனி யனைத்தும் பொய், பொய், பொய்! அதனை யறிந்து உய், உய், உய்!
நற்கிந்தனை
139سبم

Page 82
மூதாதைமார் காட்டிவைத்த குலகுருநாதன்
“முன்னை வினையெல்லாம் முடித்தாணட தெய்வம் மூதாதைமார் எனக்குக் காட்டிவைத்த தெய்வம்”
நற்கிந்தனை
குருபதத்தை வணங்கி வந்த குலத்தில் பிறந்தமையால் நான் சிறுமியாக இருந்த காலத்திலேயே சிவயோக சுவாமிகளின் திருத்தோற்றத்தைத் தரிசிக்கும் பேறு பெற்றேன். “தெளிவு குருவின் திருமேனி காணல்” என ஞானப் பேரொளி பொலியும் திருமுகமும், தெய்வீகக் கனல் வீசும் கண்களும், கோதி முடித்த வெண்நிறக் கேசமுமி, வெண்நரைத் தாடியும், திருநீறு ஒளிரும் நெற்றியும், இடுப்பைச் சுற்றிக் கட்டிய தூய வெண்ணிற வேட்டியுமாக, கம்பீரமான நிமிர்ந்த நடையுடன், பண்டைத் தமிழ் மாமுனியெனத் தோற்றிய சிவயோக சுவாமிகளைக் கணி டோர்க்குக்
குறைவுமுண்டோ?
சிவமும், சிவம் ஈன்ற தமிழும், செழித்து விளங்க, நல்ல சிவனடியார் வாழ்ந்த யாழ்ப்பாண நாட்டில் எமது குலத்தவர் சைவத்தையும் தமிழையும் இரு கண்ணளெனப் போற்றி வாழ்ந்து வந்தனர். இதன் பயனாக சற்குரு செல்லப்பா சுவாமிகளும், அவரது அதி உத்தம சீடரான ஞான குரு சிவயோகசுவாமிகளும் எம்மிடையே வாழ்ந்து எமக்குக் குலகுருவாக விளங்கினார்கள். இங்ங்ணம் இவர்கள் எமக்குக் குலகுருவாக வாய்த்தமையை எண்ணும் தோறும் என்னுள்ளம் உவகை கொள்கிறது.
எனது குலதெய்வமான முருகனை வணங்கி, குலகுருவான சிவயோகசுவாமிகளுடைய திருவடிகளை நெஞ்சில் பதித்து எமது குலத்தவரும் யானும் அவரிடத்துப் பெற்ற அனுபவங்களை
40

எழுத்தில் வடிக்க முற்பட்டுள்ளேன். யோகசுவாமிகளினது அருட் கணி சார்த்தல் பல தலைமுறைகளாக எமது குடும்பத்தினருக்குக் கிடைத்தது நாம் பெற்ற பெரும் பேறெனலாம். இத்தகைய ஞானியர் தொடர்பு கொண்ட குடும்பச் சூழலிலே, கடவுளில் அசையா நம்பிக்கை கொண்ட அன்னையாருக்கு நான் மகளாகப் பிறப்பதற்குத் திருவருளும் குருவருளும் கிடைக்கப் பெற்றேன். இதனால் எங்கள் குலகுருவாகிய யோகர்சுவாமிகள், நாம் உலகத் துன்பங்களால் பெரிதும் பாதிக்கப்படாமல், ஆறுதலையும் மனோ பலத்தையும் அன்று போல் இன்றும் அருளி வருகின்றார். பொருந்திய வல்வினை போக்கும் மருந்து எனத்தேற்றி
எண்னை வளர்த்தார் என்னோடிருக்கிறார்.
செல்லையாபிள்ளை என்ற பெயருடைய எனது தாய்வழிப் பாட்டனாருக்குச் சற்குரு செல்லப்பாச் சுவாமிகள் குலகுருவாக விளங்கினார். பாட்டனார் ஆகிய செல்லையாபிள்ளை என்பவர் யாழ்ப்பாணத்தில் சப்பல் தெருவில் வசித்து வந்தார். யோகர் சுவாமியின் குருவாகிய செல்லப்பாச்சுவாமிகள் பாட்டனாருடைய வீட்டிற்கு வந்து போவது வழக்கம். சில வேளைகளில் அன்புடன் அளிக்கும் உணவையும் ஏற்றுக்கொள்வார். செல்லப்பா சுவாமிகளின் தோற்றத்தை எனது அன்னை வர்ணித்தது ஞாபகத்தில் உள்ளது. செல்லப்பா சுவாமிகள் கறுத்த மேனியர். கந்தை அணிபவர். சற்று மிதந்த பற்களை உடையவர். பெரும்பாலான யாழ்ப்பாணத்து மக்களால் ‘விசரன்’ எனக் கருதப்பட்டவர். பாட்டனாருக்கு நான்கு பெண் பிள்ளைகள், ஒன்றின் பின் ஒன்றாகப் பிறந்து விட்டன. தனக்கு ஈமைக்கிரியைகள் செய்ய ஆண்குழந்தை இல்லையே என்ற கவலை பாட்டனாரை வெகுவாக வருத்தியது. வழக்கம்போல் செல்லப்பாச் சுவாமிகள் அங்கு வந்து ஒரு வாங்கின் மேல் அமர்ந்தார். பாட்டனார் விழுந்து கும்பிட்டு சுவாமிகளின் இரு கால்களையும் இறுகப் பற்றிப்பிடித்து “சுவாமி ஆண்பிள்ளை பிறக்க வரம் அருள
141

Page 83
வேண்டும், அல்லது இந்தப் பிடியை விடமாட்டேன்’ எனக் கூறி விடாப் பிடியாகப் பிடித்துக்கொண்டார். செல்லப்பா சுவாமிகள் “செல்லையா உனக்கு ஆண்குழந்தை கட்டாயமாகப் பிறக்கும், விடு விடு” எனக் கூறி எழுந்து சென்றுவிட்டார். சுவாமிகளின் வாக்கின் படி அடுத்த ஆண்டு ஒரு ஆண் மகன் பிறந்தது.
அக் காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ், ஆங்கிலக் கல்விக்காகக் கிறிஸ்துவ பாடசாலைகளை நாடிய மாணவர்களுள் பெரும்பாலானோர் மதமாற்றத்திற்கு உள்ளானார்கள். இருந்தும் எனது தாயாரும் அவருடைய சகோதர சகோதரிகளும் இம் மத மாற்றத்திலிருந்து தப்பியது செல்லப்பா சுவாமிகளின் அருள் என, பாட்டனார் பல முறை கூறியுள்ளார்.
செல்லப்பா சுவாமிகளின் சமாதியின் பின், அவரது சீடரான யோகர்சாமிகளுடன் பாட்டனாருக்குப் பரிச்சயம் ஏற்பட்டதில் வியப்பில்லை. இதன் பின் யோகர்சுவாமிகள் எமது வீட்டிற்கு வந்து போவது வழக்கம். பாட்டனார் ஐப்பசி வெள்ளி போன்ற விரதங்கள் அனுஷ்டித்து, கந்தபுராணம் நித்தியம் பாராயணம் செய்து திருவருள் பெற்றவர். ஒரு சித்திரைப் பெளர்ணமியன்று விரதம் முடிந்தபின் நோய்வாய்ப் பட்டு வருத்தம் கடுமையாகிப் படுத்திருந்தார். அந்திய காலம் நெருங்கிவிட்டதென அறிந்த அவருடைய பிள்ளைகளும், உறவினர்களும் வீடு வந்து சேர்ந்தனர். 1939ம் ஆண்டு மே மாதம், பொழுது மங்கும் வேளையில் குறிப்பிடத்தக்க ஒரு சம்பவம் நடந்தது. அதாவது பாட்டனார் தன் பிள்ளைகளை அருகில் அழைத்துத் தேவாரம் பாடும்படி பணித்தார். பின்னர் வீட்டில் உள்ள அத்தனை மின்சார விளக்குகளையும் ஏற்றும் படியும், தனது கட்டில் அருகில் இருந்த பிரம்பு நாற்காலி ஒன்றிற்கு வெள்ளைத் துணி ஒன்று விரிக்கும் படியும் கூறினார். இந்த நேரம் கேற் Gate திறக்கும் சத்தம் கேட்டது. உரத்த குரலில்
142

“சின்னத்தம்பி” என்று பாட்டனாரைச் செல்லப் பெயரால் அழைத்துக் கொண்டு யோகர்சுவாமிகள் நேரே படுக்கை அறைக்குப் போனார். இவரைக் கண்ட பாட்டி இடைமறித்து விழுந்து கும்பிட்டு அழுதார். சுவாமி அதைச் சட்டை செய்யாமல் நேரே கட்டிலருகே சென்றுவிட்டார்.
சாமியைக் கண்டதும் செல்லையாபிள்ளை எழும்ப எத்தனித்தார். சுவாமிகள் அவருடைய கூப்பிய இரு கரங்களையும் தன் இரு கரங்களாலும் பற்றித் தன் நெஞ்சில் பதிய வைத்தார். பின் அருகில் சங்கினுள் வைத்திருந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிவிட்டார். பின்பு துணிவிரித்த கதிரையில் அமர்ந்து, சுவாமிகள் தான் இயற்றிய நற்சிந்தனைப் பாடல் ஒன்றைப் பாடினார்:-
"சந்தம் பொறுமை அன்பு தாம் கொண்ட அடியார் மாய்ந்து போகா வண்ணம் அருள் தரும் ஒருவனைக் காந்தள் முல்லை மல்லிகை ஏந்தி இருக்கும் நல்ல இலங்கையில் கணிடேன் ”
என்று பாடிவிட்டு யாதொன்றும் பேசாமல் சென்றுவிட்டார். அடுத்தநாள் அந்திப் பொழுதளவில் பாட்டனார் முருகனின் திருநாமமான "கதிர வேலி, கதிர வேல், கதிர வேல்;” என உச்சரித்துக் கொண்டு அடங்கிவிட்டார். யோகர்சுவாமிகள் அத்தருணம் வீட்டினுள் புகுந்து இறுதியாக நற்கதி அருளிச் சென்றமை வியப்புக்குரியதே. மறுநாள் காலை, வரம் கேட்டுப் பெற்ற மகன் ஈமக்கிரியைகளைச் சிறப்பாகச் செய்து முடித்தார். யோகர் சுவாமிகள் செல்லையாபிள்ளை சிவபதம் அடைந்த தினத்தன்று, குடும்பத்தினருக்கு இரங்கற்பா ஒன்று எழுதி அனுப்பி வைத்தார். அது பின்வருமாறு :-
143

Page 84
1 6 1939
சொப்பன வழிவு சுகந்தருமோ வெனச் சொல்வது போல் இப்புவி வழிவினிற் சொக்கா திருந்திடலின்ப மன்றோ எப்படியும் பிறப்போரிறப்பர் பாரதில் இயற்கை இரவி தப்பித மின்றி யுதித்தளப்தமிட்டது சான்றிதற்கே.
மாயன் பிரமன் மணி யாரு மிந்திரன் மாதிரத்தோர் ஆயும் விதியிலிறந்தனர் செல்லைய அணணலுமோ தோயும் நதிச் சடையானடி சேர்ந்தனர் சுற்றமனை யாளும் மக்களுந் துயரினி நீங்கிச் சந்தோஷியுமே *
*இவ் இரங்கற்பா நற்கிந்தனையில் இடம்பெறவில்லை
மேற்கூறிய விபரங்கள் யாவும் எனது தாயார் மூலம் அறிந்தேன். பாட்டனாரின் அடியொற்றி எனது தாயார், உறவினர்களாகிய சிறியதாயார், மாமனார் ஆகியோர் சிவயோகசுவாமிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள். எனது சிறியதாயார், சிறியதந்தையார், மாமனார் ஆகியோர் சுவாமிகளின் மிக நெருங்கிய அன்பர்கள். சுவாமிகளின் ஆச்சிரமத்துக்கு அருகில் வாழ்வதற்காகக் கொழும்புத்துறையில் குடி யேறினார்கள். சிறியதாயார் தான் சுவாமியிடம் பெற்ற அனுபவங்களை தனது நாட்குறிப்பில் குறித்து வைத்துள்ளார். “தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்” எனக் கூறிச் சுவாமிகளின் திருவாக்கியங்களை எனக்குப் பலமுறை விளக்கியுமுள்ளார். இவற்றில் யாவருக்கும் வழிகாட்டக்கூடிய வாக்கியங்கள் சிலவற்றைத் தருகிறேன்.
'அடித்தளம் பிறளாதே' எனச் சுவாமி அடிக்கடி கூறுவார். நாம் பிறந்து வளர்ந்த பாரம்பரிய சமய நெறியிலிருந்து விலகலாகாதே என்பதை இதன் மூலம் சுவாமிகள் வலியுறுத்துகிறார்.
144

‘விரயம் செய்யாதே' என்ற சுவாமியின் வாக்கை, உலகப்பொருட்களை, செல்வத்தை, வீணாகச் செலவு செய்யாதே எனக் கொள்ளலாமெனிலும், இங்கு சுவாமி கருதியது ஆன்மீக சக்தியை விரயம் செய்யாதே என்பதே. அரும் பாடுபட்டு ஈட்டிய ஆன்மீகப் பொக்கிஷத்தை அகங்காரம், கோபம், பொறாமை போன்றவற்றால் இழந்து விடாதே என்பதே.
"ஞானக்கடை வை’ இது சிறந்த கல்விமானான பல கல்விப் பணிகளை ஆற்றிய சிறியதாயாருக்குக், குறிப்பாக மேலும் வித்தியாதானம் செய்யும்படி ஊக்குவித்ததாகக் கூறியது எனக் கருதலாம்.
ஒரு நாள் சுவாமி சிறியதாயாருடைய கொழும்புத் துறை வீட்டில் தங்கிவருவதற்காகச் சக்கர வண்டியில் சென்றார். அப்பொழுது அவர் சுகமில்லாமல் இருந்த அந்திம காலம். அவரை வரவேற்பதற்கு வாசலில் கும்பம் வைத்து, நிலப்பாவாடை விரித்து ஆயத்தமாக இருந்தனர். வீட்டு கேற்றில் "ஓம்" என்று பொறிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த சுவாமிகள் "In the beginning was the word. The word is truth." 6T60) JingboTIri. fairly 5'96) இருந்த பூக்களை எடுத்துக் கைகளை உயர்த்தி தன் தலையில் போட்டு "I am the truth" என்றார். மூன்று நாட்கள் தங்கிவிட்டு மூன்றாவது நாள் ஆச்சிரமத்திற்குப் போய்விட்டார். தங்கிய அறை அப்படியே புனிதமாக இருந்தது.
சிவயோக சுவாமிகளின் அந்திம காலத்தில் எனது சிறிய தாயாரும் சிறிய தகப்பனாரும் சுவாமியின் ஆச்சிரமத்தில் இரவு பகலெனப் பாராது சுவாமிகளுடன் பல மணி நேரத்தைக் கழித்தார்கள். அத்தருணம் சுவாமிகள் கூறியவற்றிச் சிலவற்றை நான் இங்கு எழுதுகிறேன். சுவாமி சமாதியடைய முன்பான 1964 மாசி கடைசி
145

Page 85
சிவராத்திரியன்று சுவாமியின் ஆச்சிரமத்தில் இரவுப்பொழுது சுவாமிகள் நடுநிசியில் கட்டிலில் எழும்பி இருந்து, உரத்த குரலில் “கட்டிடங்கள் எல்லாம் இடிந்து விழுகிறது. கோயில்கள் எல்லாம் இடிந்து கொட்டுகிறது.” எனக் கூறி மேலும் "தையல் நாயகித் தாயே இந்த யாழ்ப்பாண மக்களுக்கு அரை வயிற்றுக் கஞ்சிக்காவது வழி வைத்துவிடு” என உருக்கமான உரத்த குரலில் தையல்நாயகித் தாயிடம் திரும்பத் திரும்ப வேண்டினார். பிற்காலத்தில் நடந்து வரும் சம்பவங்கள் சுவாமியுடைய கருணையையும் தீர்க்க தரிசனத்தையும் புலப்படுத்துகிறது. சுவாமி சமாதியடைய முன் கடைசி வார்த்தையாக ‘எல்லாம் சரி” என்று கூறியதாகவும் எனக்குச் சொன்னார்.
எனது மாமனாரும் அவர் யோகர்சாமியுடன் பெற்ற சில அனுபவங்களைக் கூறியுள்ளார். ஒருமுறை சுவாமி மாமனாருடைய வீட்டிற்கு வந்த பொழுது நேராகப் பூசை அறைக்குச் சென்று அங்கு தெய்வங்களுடன் வைத்திருந்த தனது படத்திற்குத் தானே ஒரு வெள்ளை நிறப் பூவை எடுத்து வைத்தார். இதன் அர்த்தம் ஒருவருக்கும் தெளிவாக விளங்கவில்லை. சுவாமிக்குத் தான் வெளிச்சம்.
1961ம் ஆண்டில் மாசி மாதம் யாழ்ப்பாணம் கச்சேரி முன்பாக, பாராளுமன்ற உறுப்பினர்களும் பொதுசனமும் சத்தியாக்கிரகம் நடத்தினர். அவ்வழியாகச் சுவாமி எனது மாமனாருடைய காரில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் சத்தியாக்கிரகம் செய்தவர்களைப் பொலிசார் அடித்துத் துன்புறுத்துவதை அறிந்ததும் அவ்வழி செல்லாமல் முச்சந்தியிலேயே “காரைத் திருப்பு இந்தக் கண்ணுறாவிகளை என்னால் பார்க்க முடியாது. இதற்கு ஒரு விளையாட்டுச் செய்ய வேண்டும்” எனக் கூறியதும், மாமனார் வேறு வழியில் காரைத் திருப்பிக் கொண்டு போனார். அந்தக் கருணையுள்ள மகான் என்ன எண்ணினாரோ யாம் அறியோம்.
146

அந்தக் காலத்தில் பிறிதோர் சம்பவத்தையும் தான் கண்ணுற்றதாகக் கூறினார். கரம்பன் பாராளுமன்ற உறுப்பினர் 500 பேருடன் சத்தியாக்கிரகம் செய்யக் கச்சேரிக்கு வரும் வழியில் முச்சந்தியில் சுவாமியைக் கண்டனர். அவர்கள் எல்லோரும் சுவாமியுடைய பாதத்தில் விழுந்து கும்பிட்டனர்.
அடியார்கள் எட்டுத் திக்கும் பாதயாத்திரை சென்று ஆச்சிரமத்தில் கூடிய போது சுவாமி “எட்டுத் திக்கும் கட்டிவிட்டேன். உங்களை அவன் ஒன்றும் செய்ய முடியாது.” எனக் கூறியருளினார். இப்படியே சுவாமி தக்க தருணத்தில் ஆறுதல் கொடுத்து வந்திருக்கிறார்.
இது வரை நான் எனது சிறியதாயாரினதும் மாமனாரினதும் அனுபவங்களைக் கூறினேன். இனி எனது தாயாரினதும் எனது சொந்த அனுபவங்களையும் கூற விரும்புகின்றேன்.
எனது தாயார் முருகப்பெருமானில் இடையறா அன்பு கொண்டு முருகன் பாடல்களையும் நற்சிந்தனைப் பாடல்களையும் தமது இனிய குரலிலே, வாத்தியக் கருவிகளோடு பாடும் பழக்கமுடையவர். இங்ங்ணம் இவர் பாடும் பாடல்களின் பொருள் நான் சிறுமியாக இருந்த போதே எனது அடி மனத்தில் நன்கு வேரூன்றிப் பதிந்தது. எனது தாயார் பாடும் பாடல்களே எனக்கு முருகன் மீதும் யோகசுவாமிகள் மீதும் பக்தியை ஏற்படுத்தியவெனக் கூறில் மிகையில்லை. முருகன் பாடல்களில் என்னை மிகக் கவர்ந்த பாடல்
". . . . . . இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன் கை வேல்”
147

Page 86
தம்பி முறையான ஒருவருக்கு யோகர்சுவாமி,“காயமே கோவில் கடிமன மடிமை” என அடியெடுத்து எழுதிக் கொடுத்த பாட்டைப் பிரதிசெய்து தனது இனிய குரலில் எப்பொழுதும் பாடிக்கொண்டிருப்பார். இப் பாடல் இப்பொழுது நற்கிந்தனையில் பக்கம் 250 இல் இடம்பெற்றுள்ளது. அப்பாடலில் வரும் "உடல் பொருள் ஆவி உன் அடைக்கலம்" "ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்ற வரிகள் எனது உள்ளத்திலே நன்கு ஆழமாகப் பதிந்தது. மேலும் எனது தாயார் யோகர் சுவாமிகளைப் பற்றியும் தனக்குத் தெரிந்தவற்றை எனக்குக் கூறி வைத்தார்.
எனது அன்னையாருடன் நான் சுவாமிகளைத் தரிசிக்கச் செல்லும் போதெல்லாம், சுவாமியின் பாதங்களை நான் பற்றி வணங்குவதற்கு என் அன்னை தடைவிதித்திருந்தார். ஆகவே சாதாரண பாத நமஸ்காரம் செய்வதை வழக்கமாகக் கொண்டேன். இவ்வாறு தடை விதித்ததால் சுவாமிகளது பாதாரவிந்தங்களை அவ்வேளை பற்றிச் சரணாகதி அடையும் வாய்ப்பினை நான் இழந்து விட்டேனோ என இப்போது சிந்திக்கிறேன்.
இவ்வாறு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தாயாருடனும், சிறியதாயாருடனும், சகோதரங்களுடனும் சிறுவயதில் சுவாமிகளைச் சென்று தரிசித்துள்ளேன். சகோதரியுடன் ஒரு முறை சென்ற பொழுது, “உனது பெயர் என்ன?” எனச் சுவாமிகள் அவளைக் கேட்டார். “உஷா சாமி” என்றார். சுவாமி அதற்கு, “அதென்ன உஷாவும் குஷாவும் நீதான் இப்படிப்பட்ட பெயரை வைத்திருக்க வேணும்” என்று சிறியதாயாரை நோக்கிக் கடிந்தார். உண்மையில் எங்கள் யாவருக்கும் சிறியதாயார் தான் பெயர் வைப்பதில் முன்னிற்பவர். இனி அவளைச் “சிவமலர்” என்று கூப்பிடுங்கள். என்று சுவாமி கூறினார்.
148

சகோதரன் கருணானந்தன் மருத்துவக்கல்லூரி புகுமுன்னர் சுவாமியின் ஆசி பெறச் சென்ற போது “டாக்டர் கருணானந்த சஞ்சீவி” என ஆசி வழங்கினார்.
பின்பு ஒரு தடவை நானும் எனது சிநேகிதியுடன் பாதயாத் திரையாகச் சுவாமியிடம் செல் வோம் என்று பட்டினத்திலிருந்து கொழும்புத்துறை ஆச்சிரமத்திற்குச் சென்றோம். அங்கு சிநேகிதி சுவாமியைக் கண்டதும் விம்மி விம்மி அழுதார். “ஏன் பேய்மாதிரி அழுகிறாய்.” என்று கருணையுடன் கடிந்தார். பின்பு என்னைச் சுட்டிக் காட்டி “அவள் நல்ல பிள்ளை பார், சும்மா இருக்கிறாள்” என்றார். அந்த வார்த்தைகள் எனக்குக் குளிர்ச்சியாக இருந்தன. இவ்வாறு சிநேகிதிகளுடன் சுவாமிகளைத் தரிசித்ததற்குப் பின்னும் பல முறை சென்றுள்ளேன்.
ஒரு முறை அவரின் முன்னிலையில் மெளனமாக அமர்ந்திருந்தேன். சுவாமிகள் என்னை உற்று நோக்கி இரு வார்த்தைகளை மொழிந்தார். அதைக் கேட்டதும் கடவுளின் மேல் எனது நம்பிக்கை திடமாக உள்ளதா எனச் சோதித்துப் பார்க்கிறார் என எண்ணிப் பதில் போசாமல் அமர்ந்திருந்தேன். இப்பொழுது அவர் கூறியது சங்கேத மொழி எனவும் அதன் அர்த்தத்தை அப்பொழுது முற்றாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை உணர்கிறேன். அவ்வாக்கியத்தின் ஆழ்ந்த கருத்து இன்றும் மறைபொருளாகவே உள்ளது.
இவ்வாறு இருக்கையில் எனக்குத் திருமணம் தாமதிக்கிறது என்பது எனது பெற்றோரின் பெரும் கவலை. எனது தாயார் யோகசுவாமிகளிடம் காட்டிய பற்றுப் போன்று எனது தந்தையார் யோகசுவாமிகளிடம் பற்றுக் காட்டவில்லை. அல்லல்கள் கவலைகளைத் தீர்க்க என் அன்னை நல்லூர்
149

Page 87
முருகனை, கதிர்காமக் கந்தனை, அன்றேல் யோகசுவாமிகளை நாடிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பலர் யோகர்சுவாமிகள் சாத்திரம் சொல்வார் என நினைத்து அவரை அணுகுவதுணி டு. எனது தாயார் அத்தகைய மனப்பான்மையோடு செல்லாமல் தன் கவலையைத் தீர்க்க ஒரு சித்திரை வருடப்பிறப்பன்று காலை, சிறிய தாயாரையும் என்னையும் அழைத்துக் கொண்டு சுவாமியிடம் சென்றார். தாம்பாளத்தில் பூசைப் பொருட்களுடன் காசும் வைத்து எடுத்துச் சென்றோம். ஆச்சிரமத்தில் வெளி விறாந்தையில் நின்ற சுவாமியின் பாதங்களில் வைத்து வணங்கினோம். பணத்தைத் திருப்பி எடுக்கும் படி சொன்னார். பின்பு என்னைப் பார்த்து “இந்த வருஷம் நடக்கும்” என்றார். நாங்கள் வணங்கி வீடு திரும்பி விட்டோம். தாயாரின் வேண்டுதல் யாதெனக் கூறாமலே சுவாமி விடை கூறி விட்டார்.
இதன் பின்பு சுவாமி எனது கனவில் தோன்றினார். தோற்றம் என்னவென்றால், சுவாமிகள் ஒரு பீடம் போன்ற ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் இன்னொரு இளைஞர் வேட்டி அணிந்து, கைகளைக் கட்டிக் கொண்டு நின்றார். அவருடைய உயரமும் தோற்றமும் முகச்சாடையும் அன்று தான் முதன் முதலாக நான் கண்டேன். பின்னர் கனவில் கண்டவர் தான் என் வருங்காலக் கணவராக வந்து அமைந்தமை, புதுமையும் சுவாமியின் அருளும் தான். சுவாமிகள் என்னை அழைத்து மூன்று சோற்று உருண்டைகளை, எனக்கு உண்ணுமாறு தந்தார். நான் உண்டேன். அடுத்த கிழமை போல் எனது சிறிய தாயார் வீட்டிந்கு வந்து “அக்கா உங்களுக்கு யோகர்சுவாமிகள் ஒரு சாதகம் அனுப்பியிருக்கிறார்.” என்று சொல்லி என் தாயாரிடம் கொடுத்தார். அதன் அர்த்தம் என்னவென்றால் சுவாமியின் அருளால் கிடைத்தது என்பதையே குறித்தது. “அந்தவாக்கும் பொய்த்துப் போகுமோ?”
150

சாதகங்கள் பொருந்தின, திருமணமும் முற்றாகியது. சுவாமிகள் தந்த மூன்று உருண்டைகளும் பின்னர் எனக்குக் கிடைத்த மூன்று பிள்ளைகளாய் இருக்கலாம் என்று நம்பினேன்.
எனது கணவரின் தகப்பனார் மலேசியாவில் தொழில் புரிந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து போகும் போது சுவாமியைத் தரிசித்துச் செல்வார். முதல் முறை பயணத்தில் தரிசிக்கச் சென்ற போது சுவாமிகள் ஆசி கூறிச் சந்தோசமாய் போய் வருமாறு வழி அனுப்பினார். அங்கு சென்று சீரும் சிறப்புடனும் வாழ்ந்தார். இரண்டாம் முறையாக 1930ம் ஆண்டளவில் சுவாமியிடம் விடைபெறச் சென்றபோது சுவாமிகள் அவரை வரவேற்கவும் இல்லை ஆசிகூறவும் இல்லை. அவர் மனக்கவலையுடன் பயணம் சென்றார். அம்முறை மலேசியாவில் இரண்டாம் உலகமகாயுத்ததின் போது யப்பானிய ஆட்சியின்கீழ் LᏗ6uᏪ இன்னல்களை அனுபவித்து சந்தேகத்தின்பேரில் சிறையிலும் வைக்கப்பட்டார்.
விவாகம் நடக்க இரண்டு வருடம் முன்பாக எனது கணவர் அவருடைய சிநேகிதனையும் அழைத்துக் கொண்டு தாம்பாளத்தில் பழம் முதலிய பூசனைப் பொருள்களுடன் யோகர் சுவாமியிடம் சென்றார். சுவாமிகள் தான்யாரென விசாரியாதபடியால் அவர்க்குத் தன்னைப் பற்றி ஒன்றும் தெரியாது என்ற எண்ணம் மனதில் தோன்றியது. அவ்வேளை சுவாமிகள் அவரை நோக்கி “உன் ஊரில் வசிக்கும் Justice நடராசாவின் மனைவி சுகமாக இருக்கிறாரா?” என விசாரித்தார். சுவாமிகள் எல்லாவற்றையும் அறிந்தவர் என்பதைக் கணவர் உணர்ந்தார். சிநேகிதன் சுவாமியிடம் என் கணவரைக் குறித்து, பின்வருமாறு கூறினார். “சுவாமி இவர் வெளியூரில் படித்துவிட்டு வந்திருக்கிறார். இவர் தொடர்ந்து வெளியூர் வாசமா அல்லது இங்கே தான் இருப்பதா என்று யோசிக்கிறார்”
51

Page 88
என்று சொன்னார். அதற்குச் சுவாமி என் கணவரை உற்றுப் பார்த்து விட்டு “அவனுக்கு எங்கே போகவேணும் என்ன செய்ய வேணும் என்று தெரியும் அவனுக்குச் சொல்லத் தேவையில்லை’ என்றார். இதுவே என் கணவருக்குச் சுவாமியின் முதல் தரிசனம்.
இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் 1958ல் நடந்த இனக்கலவரத்தால் வீடு வாசல், உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் மலைநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் நாங்கள் தாயாரின் தம்பிமுறையான ஒருவரின் வீட்டில் வாடகைக்கிருந்தோம். ஆகவே திருமணத்தை எங்கே நடாத்துவதென்ற பிரச்சினை எழுந்தது. மாப்பிளை வீட்டாருக்குக் கோயில் மண்டபத்தில் திருமணம் வைப்பதில் விருப்பமிருக்கவில்லை. வீடோ வாடகை வீடு; எனவே இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கும் சுவாமியிடம் ஆசீர்வாதம் பெறுவதற்குமாக, பூசனைப் பொருட்களுடன் நானும் தாயாரும் சென்றோம்.
தாயார் சுவாமிகளிடம் கலியாணம் எங்கு வைப்பது என்று கேட்டதற்குச் சுவாமி “இப்ப நீ வசிப்பது தம்பி முறையுள்ளவருடைய வீடுதானே, வீட்டை வெள்ளையடித்து, கிணற்றை இறைத்து அங்கேயே வைக்கலாம்.” என்றார். தட்டிலிருந்த தேங்காயை எடுத்து என்னிடம் தந்து “கத்தியால் பாதியாக உடை” என்றார். நான் அதை உடைக்கையில் சரி பாதியாக வருமோ என்ற பயத்தில், அங்கு வழமையாக இருப்பவர் ஒருவரிடம் தேங்காயைக் கொடுத்தேன். அவர் வழமையாக அவ்விடத்தில் தேங்காய்கள் உடைப்பவராய் இருந்தபோதிலும், நான் கொடுத்த தேங்காய் தாறு மாறாக உடைந்தது. சுவாமி என்னைப் பார்த்து “உன்னை உடைக்கச் சொல்ல நீ ஏன் அவரிடம் கொடுத்தாய்” என்றார். நான் பேசாது நின்றேன். அப்பொழுது
152

சுவாமி "உனது கல்யாணத்தன்று மகாபாரத யுத்தம் நடக்கப் போகிறது. சகுனிகளும், கூனிகளும் வரப் போகிறார்கள்?’ எனக் கூறினார். அவர் சொன்னது போலவே எனது கல்யாணத்தன்று சம்பவங்கள் நடந்தன. திருமணம் முடிந்த பின்பு எனது கணவரும் நானும் ஆசீர்வாதம் பெறுவதற்காகச் சுவாமியிடம் சென்றோம்.
“எந்நாளும் நல்லூரை வலம் வந்தால் இடர்கள் எல்லாம் போமே” என்ற யோகர்சாமியின் வாக்கின் படி 1962ம் ஆண்டு ஓர் அபூர்வ அனுபவம் எனக்குக் கிட்டியது. கந்தசட்டி விரதநாட்களில் நல்லூர்த் தேரடியைச் சுற்றி வலம் வரும் பொழுது வில்வமரத்தடியில் ஒரு வயோதிபச்சாமியார் இருந்தார். என்னைக் கண்டதும் ஒரு கறுப்பு நூலைத் தந்து உன்னுடைய மூத்தகுழந்தை, மகனுக்கு ஆபத்து இதைக் கையில் கட்டிவிடு என்றார். வீட்டிற்கு வந்ததும் அவ்வாறு நானும் செய்தேன். அன்றே வீட்டிலிருந்த குழந்தை பெரும் ஆபத்திலிருந்து உயிர் தப்பினார். அந்தச் சாமியாரை அதற்கு முன்பும் பின்பும் ஒரு நாளும் கண்டதில்லை.
திருமணத்தின் பின் மூன்று வருடங்களாக சுவாமியைத் தரிசிக்கவில்லை. 1963ம் ஆண்டு யாழ்ப்பாணம் நான் சென்ற பொழுது, தனியாகச் சுவாமியைத் தரிசிக்கக் சென்றேன். அவருடைய நலிவுற்ற தோற்றத்தைக் கண்டதும் ஐயோ! எப்டியிருந்த சுவாமி இப்படிப் போய்விட்டாரே என்று எண்ணி மனதினுள் பரிதாபப் பட்டேன். அப்பொழுது சாமி கட்டிலில் கால்களைத் தொங்கப் போட்டுக் கைகளைக் கட்டிலில் ஊன்றி மேலாக நிமிர்ந்து அமர்ந்து இருந்தார். அவருடைய ஒளிவீசும் கண்களால் என்னை உற்று நோக்கினார். ஒன்றும் பேசவில்லை. நான் விழுந்து வணங்கிவிட்டு வந்து விட்டேன். அந்தச் சம்பவத்தை நினைக்கும் பொழுது ‘தேகமே நான்’ என்னும் பாவத்துடன் வாழும் நான், ‘சுவாமியும் தேகம், என எண்ணி அவருடைய ஞானசொரூபத்தை மறந்து,
153

Page 89
தேகநிலையைப் பற்றி கவலைப்பட்டது மடமையானது என்பதை இப்பொழுது உணர்கிறேன்.
எனக்குத் திருமணம் ஆகிக் குழந்தைகளும் பிறந்தன. சம்சார சாகரத்தில் மூழ்கிய பின் யோகர்சாமியின் நினைவு பலகாலம் இல்லாமல் என் வாழ்க்கை போய்க்கொண்டு இருந்தது. அப்படி இருப்பினும் நான் திருத்தலங்களுக்கு யாத்திரை சென்று தீர்த்தங்களாடி, வேறு பல சாதுக்களையும் தரிசிக்கும் பேறு பெற்றேன். சமூகத் தொண்டுகளிலும் ஈடுபட்டேன். பல ஆண்டுகள் கடந்தன, எப்படி இருப்பினும் முன்புபோல் என் மனதில் நிறைவோ நிம்மதியோ ஏற்படவில்லை.
யோகர் சுவாமிகள் எனது மருள் கடிந்து ஆட்கொள்ளத் திருவுள்ளம் கொண்டு, 1978ம் ஆண்டு எனது கனவிலும் நனவிலும் திருக்காட்சி தந்து திருவார்த்தைகள் அருளினார். உள்ளத்தின் இருள் துரந்து, உள்ளத்தே எழுகின்ற ஞாயிறே போல, நெறியறியாது தடுமாறித் தவித்த எனக்கு வழிகாட்டியானார். நான் மறந்தேன் எனினும் என்னை மறவாக் குருவடிவம் சுவாமிகள்.
இதன் பின் சுவாமியின் உருவம் எனது புறக்கண்களுக்கு மறைந்ததேயன்றி மனக்கண்களுக்கு மறையவில்லை. அவரின் தோற்றமும் நாதமும் கனவில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. சுவாமிகள் கூறிய திரு வாக்கியங்கள்- “குருவருள் கொண்டோர்
99 g,
தம்மைத் திருவருள் சேரும்”“ஒன்றைப் பிடித்தோருக்கு உண்மை வசப்படும்.” “நான் எனது அற்றநிலையே திருவடி” என்பன என் உள்ளத்துள் பதிந்துள்ளன. என் வாட்டமெல்லாம் தவிர்த்துக் குற்றமும் குணமாகக் கொண்டு ஆட்கொண்ட குருவே சிவயோக சுவாமிகள்.
154

யோகர் சுவாமிகள் சில வேளைகளில் தமது அணுக்கத் தொண்டர்களுக்கு இறைவனின் உத்தரவுடன் உறுதி மொழி கூறுவது வழக்கம், தமது ஆச்சிரமத்தில் உள்ளவர்களுக்கு, சமாதியடையச் சில நாட்களுக்கு முன் சுவாமிகள் "நான் என்னுடைய அன்பர்கள் ஒருவரையும் நிராகரித்துப் பாதை அருகில் விட்டு விட்டுப் போகவில்லை. நான் செல்வதற்கு ஆயத்தம் செய்கிறேன். செய்யக கூடிய யாவற்றையும் செய்து விட்டேன. ஒவ்வொருவருடைய தேவையின் படி என்ன என்ன செய்ய வேணுமோ அதைச் செய்து விட்டேன்” என உறுதி மொழி கூறினார் என்பதை எனது சிறியதாயார் எனக்குக் கூறியுள்ளார்.
யோகசுவாமிகள் எழுதிய திருமுகமும் இக் கருத்தினையே குறிப்பிடுகிறது. அத்திருமுகம் பின்வருமாறு:-
"அதோ! பார். நான் சொன்ன ஆறு ஓடுகிறது. என்னவோ சொல்லிக்கொணடு ஓடுகிறது. என்ன? விடு விடு என்று சொல்லிக் கொணடு ஓடுகிறது. ஏன்? நான் உற்பத்தியான இடத்திற்குப் போகப் போகிறேன் எணறு, எதிர்ப்படும் மிருகங்களையும், மரங்களையும், கற்களையும் வாரிக் கொண்டு செல்லுகின்றது. இப்படி இருக்க, பக்கத்திலிருந்து வரும் சிறு அருவிகள், "நாங்களும் வருகிறோம், எங்களை விட்டுவிட்டுப் போகாதே நாங்களும் உங்கள் இரத்தமல்லவா?” என்று விரைவாய் வந்து கலந்து விட்டன. ஒன்று சேர்ந்து கடவுளைத் தேடும் அடியார்கள் ஒரே எணனமாகத் தேடுவது போல ஆறும் ஓடிக கொணடிருக்கிறது.”
சிவயோகசுவாமிகள் எங்கள் யாவருக்குமென விட்டுப் போன முதுசத்தை வருங்காலச் சந்ததியினரும் பயனடையும் பொருட்டுப் பாதுகாக்க வேண்டும். யாழ்ப்பாண ஜோதியாகத் தோன்றி
155

Page 90
உலகெங்கும் அருள் ஒளி பரப்பி வரும் சுவாமிகள் காட்டிய நெறியில் நின்று அவரின் திருக்குறிப்பை நாம் நிறைவேற்றக் கடமைப் பட்டுள்ளோம்.
அடியா ருள்ளக் கமலத்தே யணையா தெரியும்
ZO60of%27ara Ga முடியா முதலே முக்கணணா மூவர் போற்றும்
முழுமுதலே முடியாப் பிறவிக் கடலிடத்தே மூழ்கா தென்னை
யாணடுகொள்வாய்
அடியே னுன்றன் குஷ்யன்றோ அரசே யுனக்கே
யடைக்கலமே
நற்கிந்தனை
"சிவஞான குரு யோகர் சுவாமிகள்
செங்கமலப் பாதம் பேற்றி”
தூய சற்குரு நாதரின் இணையடி மறவாத அடியாள்
米 米 米 米 米 米
அப்பனும் அம்மையுஞ் சிவமே அரிய சகோதரருஞ் சிவமே ஒப்பில் மனைவியுஞ் சிவமே ஒதரும் மைந்தரும் சிவமே செப்பில் அரசருஞ் சிவமே தேவாதி தேவருஞ் சிவமே இப்புவி யெல்லாஞ் சிவமே என்னை யாண்டதுஞ் சிவமே
நற்கிந்தனை.
56

யோகசுவாமிகள் ~ ஒரு கிறிஸ்தவ ரசனை
1962ம் ஆண்டு மாசி மாதம் 24ம் திகதி தான் நான் முதன் முதலாக இந்தப் பெரியாரைச் சந்திக்கச் சென்றேன். இவரிடம் நான் கேட்பதற்கு எதுவித தேவையும் இருக்கவில்லை. அவரைச் சோதிக்கும் எண்ணமுமில்லை. அந்தத் தெய்வீக ஒளியிலே சற்றுத் தோய்ந்து கொள்ள வேண்டும் என்பது தான் என் விருப்பம். அவரைக் காண்பதற்குப் போகுமுன்னர் அரச அப்புக்காத்தாக இருந்த திரு ஆனந்தா பெரேராவினது குறிப்பு ஒன்றை வாசித்திருந்தேன். அதில் சுவாமிகள் கூறிய வார்த்தைகள் சில என்னைக் கவர்ந்திருந்தன. அதாவது "நேரம் குறுகியது ஆனால் விடயமோ பரந்தது. என்பதாகும். இக் கூற்று எனது சிந்தனையில் உருண்டோடிய வண்ணம் இந்த ஒளிநிறைந்த தோற்றத்தை இறைவன் கருணையில் திளைத்த இந்த உரு, எல்லாச் சமயங்களிலுமுள்ள ஆணி பெணி அனைவரையும் உயர்த்துவதற்காகச் சாதாரண மக்கள் வாழ்நிலைக்கு இறங்கி வந்துள்ள சக்தியைத் தன்னகத்தே கொண்டுள்ள அந்தச் சிறிய இல்லத்தை அடைந்தேன்.
எனது பெயரைக் குறிப்பிட்ட போது அவர் என்னை அபயம் எனக் கூறி வரவேற்றார். இதன் கருத்து நான் உன்னை அபாயத்திலிருந்தும் அழிவிலிருந்தும் கவனத்துடன் பாதுகாத்துக் கொள்வேன் என்பதாகும். பொய்மையான உலகிலிருந்து உண்மையான நிஜ அடிப்படை அமைவுகளைக் கொண்ட உலகிற்கு வந்து விட்டதாக உடனடியாகவே உணரப் பெற்றேன்.
அடுத்து வாழ்க்கையின் ஒருமைப்பாடு என்ற விடயத்திற்கு வந்தார். "எல்லா உயிர்களும் ஒன்று, இனம், சாதி, சமயம் என்றில்லை.
157

Page 91
எல்லாச் சமயங்களும் ஒரே இலக்கிற்குத் தான் எம்மைச் சேர்ப்பிக்கின்றது. அதாவது மோட்சம்” பின்னர் "நேரம் குறுகியது. விடயமோ பரந்தது. அதுதான் நான் ஆனந்த பெரேராவுக்குச் சொன்னது” என்றார். ஒரு வினாடி நான் திகைத்துப் போனேன். எண்ண அலைகள் ஒருவரிலிருந்து இன்னொருவருக்குப் பரிமாற்றம் செய்யப்படும் பிரபஞ்சத்தின் சிந்தையில் ஒரு பகுதியே எனது சிந்தை என்று எண்ணிய போது நான் அவருக்கு அண்மித்திருப்பது போன்று உணரப் பெற்றேன்.
சுவாமி தொடர்ந்தார்- 'நானே நீ நீயே நான். நீர் ஒரு சிங்களவராக இருக்கலாம். நான் ஒரு தமிழனாக இருக்கலாம். ஆனால் ஆத்மீக நிலையை அடைதலைப் பற்றிய நிலையில் எல்லா உயிர் வாழ் ஜீவராசிகளும் சமமே. இறைவன் முன்பு எல்லோரும் சமன். அதனால் தான் புத்தபிரான் அகிம்சைக் கோட்பாட்டைப் போதித்துள்ளார். நீர் ஒருவரைத் துன்புறுத்தின்ராயின் நீர் உம்மையே துன்புறுத்தியதாகும்.” “உமக்கு நிச்சயமாக ஒரு நல்ல பிரகாசமான எதிர்காலம் உண்டு. உம்மில் நம்பிக்கை வையும். தியாகம் செய்யாமல் எந்தப் பெரிய காரியத்தையும் ஆற்ற முடியாது. நீர் எந்தக் காரியத்தையும் தூயமனத்துடன் ஆற்றுவீராயின் உமது வாழ்வில் மகிழ்ச்சிப் பேற்றையே அறுவடை செய்ய முடியும். இறைவன் நாமத்தினால் நான் உம்மை ஆசீர்வதிக்கின்றேன்” என்று கூறி முடித்தார்
ஆலயம் என்பது கோட்பாடுகளில் அல்ல, கொள்கைகளில் அல்ல, மேல்மட்டத்திலான தாக்கங்களிலல்ல என்ற உணர்வுடன் நாணி வீடு திருமி பினேனி . சமயமானது இருதிதல் நடைமுறைப்படுத்தல் ஆகுதல் - அதுவாதல். அதுவே உணர்தல் 9-60of 60LD60LL 9,556) -965h. "Religion is being and becoming it is realization"
158

யோகசுவாமிகளின் வாழ்க்கை மூலமும் அவரது பாடல்கள் மூலமும் மக்களிடையே இறைவன் ஞானத்தைப் பிறப்பிக்கிறார் என்ற உண்மையை காலம் தான் உணர்த்திநிற்கும்.
பூனி கி. பி. எம் அபயசேகரா
நன்றி சிவத்தொண்டன் சிறப்பு மலர் 29 -1965 ஆங்கில மொழி வெளியீடு மொழிபெயர்ப்பு
米 米 米 米 米 米
தொண்டுசெய் வாருக் குண்டே ஞானம் தொண்டுசெய் வாருக் குண்டே மோன்ம் தொண்டுசெய் வாருக் குண்டே தானம் தொண்டுசெய்வாருக் குண்டே கானம்
நற்கிந்தனை
159

Page 92
ஏழு வயதில் சுவாமிகளின் அருள் பெற்ற சம்பவம்
என்னுடைய பெற்றோர் மலேசியாவில் வேலையாக இருந்தப்டியால் என்னை எனது பாட்டன் பாட்டியுடன் விட்டு விட்டுப் போய் விட்டார்கள். எனக்கு நாக்கு நுனியில் ஒரு புளுமேச்சல் போல் இருந்த வருத்தத்தின் காரணமாக வேதனைப்பட்டேன். இதனைச் சகிக்கமுடியாது எனது பாட்டி சுவாமியிடம் சொல்லி முறையிட்டார். அவரின் ஆச்சிரமம் எனது தங்கச்சியின் வீடு இருந்த இடத்திற்கு அருகில் இருந்தது. பாட்டியார் “சுவாமி இந்தப் பிள்ளையின் தாயும் தகப்பனும் பிற நாட்டில். நாங்கள் இந்தப் பிள்ளையின் வருத்தத்துக்கு ஆங்கில முறை, ஆயுள் வேத முறை மருந்து கொடுத்தும் ஒரு சுகமும் இல்லை” என்று கூறினார். அதற்கு சுவாமி "அப்படியா” என்று சொன்னார் ஒளிய வேறு கதையொன்றும் சொல்லவில்லை.
சுவாமியார் ஒவ்வொரு நாளும் விடிய, கால் நடையாக, அரியாலை நோக்கி புறப்படுவது வழக்கம். எனக்கு அவரைக் கண்டால் பயம். கிட்டப் போக மாட்டேன். தூரத்தில் கண்டாலும் ஓடி விடுவேன். என்னுடைய வீட்டிற்கும் நான் படித்த பள்ளிக் கூடத்திற்கும் 25 யார் தூரம். சுவாமியின் ஆச்சிரமத்திற்கும் பள்ளிக்கூடத்திற்கும் 5 யார் தூரமும் இல்லை. ஒரு நாள் நான் பள்ளிக்கூடம் வரும் போது சுவாமியின் ஆச்சிரமத்தின் படலையைத் துறந்து சுவாமி வெளிப்பட்டு இருவரும் குறுக்கே சந்தித்தோம். எனக்கு ஓடுவதற்கு முடியவில்லை. உடன் "வாயைத் துறவடா” என்று பணித்தார். துறந்ததும் வாய்க்குள் துப்பவா, என்று கேட்டார். நான் அதற்கு ஒரு பதிலும் கூறாது நின்றேன். உடன் சுவாமி சொன்னார், "உனது வாய்க்குள் துப்பக் கூடாது ஊதி
160

விடுகிறேன்” என்று சொல்லி மூன்று தரம் ஊதி விட்டார். அன்றுடன் மாறியது வருத்தம்.
இன்று மட்டும் அதாவது 77 வருஷம் கழிந்தும் ஒரு தரமாவது வருத்தம் தரவில்லை என்றால் சுவாமியின் சக்தி. அவரின் மகிமை அறிந்தோர் சிலர் தான் இன்று இருக்கிறார்கள்.
(7. A6/ugiélours/, நன்றி. “சிவயோக மலர்' யூரீ சிவயோக சுவாமிகள் 125வது ஜெயந்தி விழா சிவதொண்டன் நிலையம் - கனடா - 1997
米米米米米米
அஞ்சாதே அஞ்சாதே பஞ்சாய்ப் பறக்கும் பாவம் பஞ்சாட்சரத்தை நெஞ்சில் துஞ்சாமலே செபி
நற்கிந்தனை.
பஞ்சம் படைவந்த போது - வேல் வேல் பரமன் திருப்பெயர் தப்பாமல் ஒது நஞ்சைப்போல் பிறன்பொருள் எண்ணு - வேல் வேல் நாங்கள் சிவமென நாளும்நீ நண்ணு
நற்கிந்தனை.
161

Page 93
குரு பக்தியே பெரும் பேறு
சொல்லச் சொல்லச் சுவைக்குமே/ எணர்ண எணனச் சுவைக்குமே/ நினைக்க நினைக்கச் சுவைக்குமே! என்னப்பன் யோகப்பன் திருநாமம்/
“எம்பெருமான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாமே மறப்பேனடி கிளியே” யாழ்ப்பாணத்து மாமுனிவர் சிவயோகசுவாமிகள் என்னுடன் கூடிப்பழகியதால் நான் பெற்ற அனுபவங்களைப் பற்றிச் சிறிது கூற விரும்புகிறேன். நான் இளமைப் பருவத்தில் குருபக்தி நிறைய உடையவனாக இருந்தேன். எனது ஊர் சோழியபுரம், சுழிபுரம் என வழங்கப்படுகிறது. அங்கு சிறந்த கோயில்கள் சுப்பிரமணியர் கோயில், பறாளப் முருகமூர்த்தி கோயில் எனப் பல உண்டு. பெற்றோர் சிறந்த முருக பக்தர். தவறாது முருக விரதங்களை அனுட்டிப்பவர். இதனால் எமக்கு முருகன் மீது மிகுந்த பற்று இருந்தது. நான் பன்னிரண்டு வயதிலேயே கந்தசட்டி விரதம் ஆரம்பித்தேன்.
நான் ஆங்கிலக் கல்வி கற்கப் பாடசாலைக்குச் சென்ற போது அங்கு நான் சந்தித்த அதிபர் பூரீமான் சபாரத்தினசிங்கியாவார். அவருக்கு நான் முதன்மாணாக்கனாகத் திகழ்ந்தேன். யூரீமான் சபாரத்தினசிங்கியவர்கள் சிறந்த முருக பக்தர். சிவயோக சுவாமிகளது சீடர். அக்காலத்தில் அவர் சிவதொண்டன் பத்திரிகைக்குப் பல கட்டுரைகள், பாட்டுக்கள் எழுதிவந்தார். தாம் எழுதிய கட்டுரைகளை எனக்குக் காட்டுவார். நான் அதனைப் படித்துச் சுவைத்துக் கலந்துரையாடுவேன். அவர் ஒரு முறை என்னை யோகசுவாமிகளிடம் செல்லும்படி கூறினார்.
162

நான் எஸ்.எஸ்.ஸி பரீட்சை சித்தியடைந்ததும் ஆங்கில உபாத்தியார் பதவியை ஏற்றேன். அப்பொழுது எனது தலைமை ஆசிரியர் திரு. முருகேசுவாகும். அவர் யோகசுவாமிகளைப் பெரிதும் விரும்பினார்கள். என்னை ஒரு முறை அழைத்து, “நீர் காணும் யோகசுவாமிகளைச் சந்திக்க வேண்டும். உம்மில் ஏதோ இருக்கிறது. அதைத் தட்டி எழுப்புவதற்கு அவர் தான் சரி” என்று கூறினார். பெரியார் வாழ்த்துப் பெற்று 1949ல் ஐப்பசி மாதம் சிவயோக சுவாமிகளைச் சந்திக்கச் சென்றேன். போகும் போது ஒரு அப்பிள் பழம் எடுத்துச் சென்றேன். அவர் அங்கு இல்லை. பின்னேரம் 4 மணி இருக்கும் நான் அந்த அப்பிள் பழத்தைக் கொட்டிலின் வாசற்படியில் வைத்து வணங்கிய பின் வந்து விட்டேன்.
அடுத்த கிழமை போகும் போது திராட்சைப் பழம் வாங்கிச் சென்றேன். முதன் முதலில் பெரியாரை வணங்கும் முறையும் எனக்குத் தெரியாது. நான் துவிச்சக்கர வண்டியில் சென்றேன். சைக்கிளை நிற்பாட்டி விட்டு உள்ளே சென்றேன். அந்தக் கொட்டில் வாசலில், கொழும்புத்துறை ஆச்சிரம வாசலில், அவர் இருந்து வாசித்துக்கொண்டிருந்தார். அவரை விழுந்து வணங்க வேண்டும் என்பது எனக்குத் தெரியாது. அவர் என்னை வரவேற்று என்னைத் தனக்கு முன்பாக இருக்கும் படி சொன்னார். என்னைப் பார்த்தார். பார்த்த பின் "உனது பெயர்? ஊர்? என்ன செய்கிறாய்?” என்று கேட்டார். அவை வழமையாகக் கேட்கும் கேள்விகள். கேட்ட பின் தனது கையிலிருந்த புத்தகத்தைக் கொடுத்தார். அது பகவத் கீதை ஆங்கிலப் பதிப்பு. அதனை வாசிக்கும் படி சொன்னார். வாசித்துக்கொண்டிருக்கையிலேயே அதனை என்னிடமிருந்து எடுத்துக் கொண்டார். பின்பு அவர் என்னைக் கேட்ட கேள்வி 'நீ என்ன பாஸ் பண்ணி இருக்கிறாய்?" என்பதாகும். நான் சீனியர் பாஸ் பண்ணி விட்டதாகச் சொன்னேன். அப்போது அவர் “ஆ? நீ சீனியர் பாஸ் பண்ணிவிட்டாயா? அப்பொழுது ஜூனியர்?” என்றார்
163

Page 94
நான் நினைத்தேன் சுவாமிக்கு ஜூனியர், சீனியர் என்பதன் வித்தியாசம் தெரியவில்லைப் போலும் என்று. அதனால் “ஜூனியர் பாஸ் பண்ணிய பின்னரே சீனியர் பாஸ் பண்ண வேண்டும். நான் ஜூனியர் பாஸ் பண்ணியிருக்கிறேன்” என்றேன். 'ஆ ஜூனியர் பாஸ் பண்ணி விட்டாயா?” ஜூனியர் என்றதும் அவரது முகத்தில் ஒரு பிரகாசம் ஏற்பட்டது.
சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டடா? சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டடா?
சத்தத்திலே அவர் என்னுள் சிவம் இருப்பதைக் கண்டார். "நீ இரண்டும் பாஸ் பண்ணிவிட்டாய்? ஜூனியர் சீனியர், சீனியர் ஜூனியர், ஜூனியர் சீனியர்” திருப்பித் திருப்பிச் சொன்னார். இதன் அர்த்தம் எனக்குத் துப்பரவாகத் தெரியவில்லை. அவர் என்னை வழியனுப்பி வைத்தார்கள். நான் எனது பாடசாலை அதிபர் முருகேசருக்கு இதனைச் சொன்னேன். அவர் படித்தவர் பண்டிதர் விவேகி. “சுவாமி உன்னைப் பகிடி பணிணி இப்படியோ சொல்லுகிறது. ஜூனியர் சீனியர், சீனியர் ஜூனியர்” என்று கூறினார்.
பின்னர் இதனை நான் எனது நண்பரும் ஆசிரியருமான திரு. சபாரத்தினசிங்கியவர்களிடம் கூறினேன். அவரும் இதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர் சிரித்துவிட்டு என்ன காணும் இது என்று சொல்லிப் பகிடி பண்ணி விட்டார்கள். நானும் யாரைக் கண்டாலும், சிறப்பாகச் சுவாமிகளது அடியார்களைக் கண்டால் இக் கதையைச் சொல்வேன். ஒருவரும் இதற்கு அர்த்தம் கண்டு பிடிக்கவில்லை. சுவாமிகளின் தனிப்பட்ட விசேட அடியாராகிய Dr.கனகரத்தினமிடமும் கேட்டேன். அவர் 'தம்பி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. சுவாமிகள் பேசுவதெல்லாம் பரிபாஷை, விளங்காத பாஷை” என்று ஏதோ சொன்னார். இதற்கிடையில் நான்
164

சுவாமிகளிடம் அடிக்கடி போவது வழக்கம். ஆனால் அந்த ஜுனியர் சீனியர் என்பதன் அர்த்தம் விளங்கவில்லை.
இதற்குப் பின் ஒரு சம்பவம். எனது கலியாணம் மத்தியானம் ஒரு மணிக்குத் தீர்மானிக்கப் பட்டது. 1953 ஆவணிக் கடைசி நாள், நாங்கள் கூறைச் சீலை தாலிக்கொடி வாங்குவதற்கு யாழ்ப்பாணம் பெரியகடைக்குச் சென்றோம். எனக்குத் தாலி கூறை வாங்குவதில் அக்கறையாக இல்லை. சுவாமிக்குச் சொல்ல வேண்டும் அவரைக் காணவேணி டும் என்பதில் தான் அக் கறை. மற்றவர்களுக்குச் சொல்லுவதற்கு நேரமில்லை. சுவாமிகளுக்கு மட்டும் சொன்னால் எல்லோருக்கும் சொன்னதற்குச்சரி. சாமியை நினைத்துக் கொண்டே போனேன். நான் எப்ப சுவாமிகளை நினைக்கிறேனோ அவ்வேளை சுவாமிகள் தோற்றமளிப்ப துண்டு. இவ்வாறு இதயத்தில் எண்ணியபடி இருக்கையில் சுவாமிகள் தென்பட்டார். பூரீலங்கா புத்தகசாலைக்கு முன்னால் உள்ள கட்டிடத்தில் இருந்தார். அவருடன் பல அடியார்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் சென்றதும் அவர்கள் பேச்சுக்களையெல்லாம் நிற்பாட்டினார்கள். என்னைப் பார்த்து "உனக்கு என்ன பெயர்? என்ன விசேஷம்” என்றார். "நான் நவரத்தினம், எனக்குச் சுவாமி இன்றைக்குக் கலியாணம்” என்றேன். "ஓ! மிச்சம் சந்தோஷம். நவரத்தினம் பெயர் ஒன்பது வாயில். ஒன்றும் யோசிக்காதே! நீ போய்க் கலியாணத்தைச் செய். நல்லாய் இருப்பாய்” என்று ஆசீர்வாதம் செய்தார். அதே போலக் கலியாணம் முடிந்தது. 2 ஆண் குழந்தைகளும் 3 பெண்களும் இருக்கிறார்கள்.
1958ம் ஆண்டு கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளின் பின்னர் மட்டக்களப்பிற்கு ஒரு உல்லாசப்பிரயாணம் மேற்கொண்டு செங்கலடியில் தங்கினேன். தங்கிய இடம் ஒரு நகைக்கடை,
165

Page 95
செட்டிமார்கள் நடத்துவது. செட்டிமார்களுடன் சுவாமிகளைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தேன். எனது பழக்கம் எங்கு சென்றாலும் சுவாமிகளைப் பற்றிக் கதைப்பது. இவ்வாறுகதைத்துக் கொண்டிருக்கும் பொழுது அவர் “அதோ பாருங்கள் அங்கிருக்கிறார் ஒரு வெள்ளை வேட்டிக்காரர், மொட்டையர், அவரும் சுவாமிகளது அடியார். அவருடன் கதையுங்கள்” என்றார். நான் அவரிடம் சென்று அவருடன் உரையாடும் பொழுது எனது முதல் அனுபவத்தைச் சொல்லி சுவாமிகளது ஜூனியர் சீனியர் கதையையும் கூறினேன். அவருக்கு அளவுகடந்த ஓர் ஆச்சரியம் ஏற்பட்டது. “அப்படியா அவர் வாழ்த்தினார்?’ என்று கேட்டார். இவர் பெயர் சிவசுப்பிரமணியம். “எனக்கு ஒன்றும் புரியவில்லை. இது நடந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. பலரிடம் இதன் விளக்கம் கேட்டேன். ஒருவரும் அர்த்தம் சொல்லவில்லை” என்றேன். அவர் "9 -gi G6 (5 simple LITCUth. You near to God. See near to God. 951576i அவர் சொன்னதன் விளக்கம். கடவுள் உன்னுள்ளே இருக்கிறார், தட்டிப் பார்” என்றார். எனக்கு நல்ல ஆனந்தம்! இதற்குப் பின் நான் சுவாமியை அடிக்கடி சந்திக்கப் போவது வழக்கம். இந்த ஜூனியர் சீனியர் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்திருக்கும் நாட்களில் ஒரு நாள் நல்லூருக்குச் சென்றேன். அப்போது நான் அரசாங்கத்தில் கடமையாற்றி வந்தேன். சைக்கிளில் போனேன். கால்சட்டை கோற் அணிந்திருந்தேன். அதனால் கோயில் உட்பக்கம் போகக் கூச்சமாக இருந்தது. பயமாகவும் இருந்தது. எனவே வெளியே நின்று கும்பிடுவோமென எண்ணிக் கால் கழுவிவிட்டு வாசலில் வந்து நின்று மூலத்தானம் வெகு தொலைவில் இருக்கின்றபடியால் அது தெரியவில்லை. எப்படியும் விழுந்து கும்பிடுவோமென விழுந்து கும்பிட்டேன்.
“வீதியில் வந்து விழுந்து கும்பிட்டால் வில்லங்கமெல்லாம் நில்லாமல் போமே!” என நினைத்தேன். கும்பிட்டு எழுந்து பார்த்த
166

போது மூலத்தானத்தில் இருக்கும் இரண்டு மயில்களும் எனக்குத் தெரியக் கூடியதாக நின்றன. கொடித்தம்பத்திற்கு முன்னுக்கு வடிவாகத் தெரியக் கூடியதாக நின்றன. ஜூனியர் சீனியர் சம்பவத்தின் பின் இதுவே முதலாவது சம்பவம்.
இரண்டாவது சம்பவம், யாழ்ப்பாணத்தில் பல சிவன் கோவில்கள் இருக்கின்றன. அதில் அதி விசேடமானது வல்வெட்டித்துறை சிவன் கோவில் ஆகும். அதற்குக் கும்பாபிஷேகம் நடக்க இருந்தது. அக்கும்பாபிஷேகத்திற்கு என்னையும் அழைத்திருந்தார்கள், ஏன் என்றால் அக் கும்பாபிஷேகத்திற்கு நாள் வைத்துக் கொடுத்திருந்தேன். யாழ்ப்பாணத்தில் காலை ஐந்து மணிக்குப் புறப்பட்டேன். ஆறுமணிக்குக் கும்பாபிஷேகம். நான் போன போது கும்பாபிஷேகம் முடிந்து விட்டது. கோவிலைச் சுற்றிவந்து வாசலில் நின்றேன். மூலத்தானத்திலிருந்து ஒரு மின் ஈர்ப்பு Electric current என்னை இழுத்தது. காந்தத்தைக் காந்தம் ஈர்ப்பது போல என் இதயத்தையும் ஈர்த்தது. வெகுநேரம் நின்றேன். அது என்னை இழுத்தபடி இருந்தது. எப்படி நான் வீடு வந்தேன் என்றே விளங்கவில்லை. வெறும் கையுடனே போனேன் அருச்சனையும் பண்ணவில்லை அப்படியே வீடு வந்து சேர்ந்தேன்.
எனது மூன்றாவது அனுபவம். ஒரு நாள் எனது ஆப்தநண்பன் திரு PR. சிற்றம்பலம் Solicitor General என்னைக் கொழும்பிலிருந்து சிலாபத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தமது தொழில் அலுவலாகப் போக வேண்டி யிருந்ததால் அவர் என்னை முன்னீஸ்வரத்தில் விட்டு விட்டு தான் அரை மணித்தியாலத்தில் வந்துவிடுவதாகக் கூறிப் போய் விட்டார். கோவில் வாசலைக் கண்டதும் எனக்குச் சந்தோசம். மாலை 4 மணியிருக்கும். நான் கோவிலுக்குள் போகவில்லை. காரணம் கால் சட்டை
167

Page 96
போட்டிருந்தேன். அங்கு சனக்கூட்டமில்லை. வாசலிலே நின்றேன். மூலத்தானத்துக் கதவு திறந்திருந்தது. சிவலிங்க மூலத்தானம் நன்கு தெரிந்தது. வல்வெட்டித்துறைச் சிவன் கோவிலில் நிகழ்ந்தது போல அதே காந்தசக்தி என்னை ஈர்த்தது. அரை மணித்தியாலம் அதே இடத்தில் நின்றேன். வேறு இடம் போகத் தெரியாததால் என்னை அழைத்துச் சென்றவர் வரும் வரை நின்று, வந்ததும் அவருடன் திரும்பினோம்.
எனக்குச் செல்வச் சந்நதி முருகன் மீது அக்காலத்தில் பக்தியிருந்தது. அடிக்கடி சந்நதிக்குப் போவதும் வழக்கம். அங்கு கடமையாற்றியபடியால் உத்தியோகரீதியிலும், வெள்ளிக் கிழமைகளிலும் தவறாது போவேன்.
ஒரு நாள் நான் கொழும்பிலிருந்த போது செல்வச்சந்நதி வாசலில் நிற்பது போன்ற ஒரு காட்சி தென்பட்டது. மூலத்தானத்தில் இருக்கும் வேல் அப்படியே வந்து எனக்குக் காட்சி கொடுத்தது. பல கோடி சூரியப்பிரகாசம் போன்று அந்த வேல் பளிச்சென்று ஒளி வீசியது. அப்பொழுது பல பெரியார்கள் அங்கு நிற்பது போல இருந்தது. அவர்கள் இதனைக் காணவில்லையே என்று கவலைப்பட்டேன். உடனேயும் அத்திருத்தலத்து இரு பூசாரிகள் ஒருவர் திரு.செல்வநாயகம் மற்றவர் திரு. பொன்னுத்துரை அப்புக்காத்து அவர்கள் இருவரும் என் தோளில் கையை வைத்து நீங்கள் இந்த ஏழாம் திருவிழாவைச் செய்யுங்கள் என்றார்கள். நான் அதற்குப் பதிலாகத் தேர்த்திருவிழாவைச் செய்வதாகக் கூறினேன். ஏனென்றால் அதில் பலர் சேர்ந்து செய்யலாம். அவ்வளவு தான் கனவு. N
நான் உடனே பூசாரியார் செல்வநாயகக்குருக்களிடம் சென்று முருகன் என்னை ஏழாம் திருவிழா செய்யும்படி கேட்டார். ஆனால்
168

நான் தேர்த்திருவிழா செய்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இது என்ன? என்று கேட்டேன். இதற்குப் பூசாரி இந்த ஏழாம் திருவிழா செய்தவர்கள் இப்ப அதைக் கைவிட்டு விட்டார்கள். அதனால் தான் முருகன் உங்களை அந்தத் திருவிழாவைச் செய்யும்படி கேட்டிருக்கிறார். நீங்கள் அதைச் செய்யுங்கள் என்றார். இது ஒரு வேத வாக்கெனக் கொண்டு அன்று முதல் இன்றுவரை கடந்த 30 ஆண்டுகளாகச் செய்து கொண்டு வருகிறேன்.
சுவாமிகளைச் சந்திக்கும் நாட்களில் ஒரு பொழுது போக்காக நான் சோதிடம் படிக்கும் வழக்கம் இருந்தது. 17- 18 வயதில் இருந்தே பலன் சொல்லத் தொடங்கிவிட்டேன். எப்படிச் சொன்னேனோ தெரியாது. அக்காலத்தில் யாராயினும் வந்து, குழந்தைக்குச் சுகமில்லை எப்போது மாறும்? என்று கேட்டால் திகதியும் நேரமும் கூடச் சொல்லக்கூடிய ஆற்றல் எனக்கிருந்தது. இப்படி இருக்கும் காலத்தில் ஒரு நாள் ஒரு கனவு தென்பட்டது. யோகசுவாமிகள் தோன்றி எனக்கொரு பேனாவைத் தந்தார்கள். அப்பேனா தந்ததற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு விளங்கவில்லை. சுவாமிகளது அடியார்கள் பக்தர்கள் எல்லோரிடமும் கேட்டேன். பல பல கேள்விகள் கேட்டும் ஒருவரும் திருப்தியான பதில் தரவில்லை. ஈற்றில் சுவாமிகளிடமே கேட்பது என்று அவரின் ஆச்சிரமத்திற்குச் சென்றேன். போகும் வழியில் யாழ்ப்பாணத்து மாடி வீட்டின் முன்னால் ஒரு Morris காரில் சுவாமி மாத்திரம் முன் ஆசனத்தில் இருப்பதைக் கண்டேன். எனக்கோ மிகுந்த சந்தோஷம். என்னைப்பார்த்து நீ யார்? ஊரென்ன? பெயரென்ன? வழமையான கேள்விகளையெல்லாம் கேட்டார். பின்னர் என்ன வேண்டுமென்றார். "சுவாமி நான் ஒரு கனவு கண்டேன் அக்கனவில் நீங்கள் எனக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகத் தந்தீர்கள். இதுபற்றிப் பலரையும் கேட்டேன். ஒருவரும் தக்க பதிலளிக்காததால் உங்களிடமே கேட்டு அறிந்து போக வந்தேன்” என்றேன். நீ
169

Page 97
ஏதும் எழுத்து வேலை செய்கிறாயா?” என்று கேட்டார். இல்லை என்றேன். "நீ ஏதும் படிக்கிறாயா?” இல்லை படிப்பு எல்லாம் முடிந்து விட்டது என்றேன். பல கேள்விகளைக் கேட்டார். ஆனால் நான் அதற்குத் திருப்தியாகப் பதில் சொல்லவில்லை. அதன் பின் அவர் "நான் உனக்குப் பேனை தந்தது சந்தோஷம் தானே நல்லதுக்குத் தான் தந்தேன் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டார். "ஆமாம் ஆமாம்” என்று எனது சந்தோசத்தை வெளிப்படுத்தினேன். 'பிறகு ஏன் கவலை? நீ போ” என்றார். உண்மையாக நடந்தது என்ன?
எனக்கு ஒரு சினேகிதர் இருந்தார் அவர் பெயர் திரு அழகரெத்தினம், அவர் கொழும்பில் வேலை செய்பவர். நான் யாழ்ப்பாணத்தில் வேலை. அவரிடம் நான் சோதிடம் பற்றிக் கருத்துப் பரிமாறுவேன். அவருக்கும் அதனால் சோதிடத்தில் நல்ல நம்பிக்கை ஏற்பட்டது. இருவரும் கடிதத் தொடர்பு வைத்துக் கொண்டோம். நான் செய்த ஆராய்வுகளை அவருக்கு அனுப்புவேன். அவர் செய்தவற்றை எனக்கு அனுப்புவார். அவர் விடும் பிழைகளை நான் திருத்துவேன். நான் விடுவனவற்றை அவர் திருத்துவார். நாங்கள் இருவரும் இப்படித்தான் படித்தோம். சோதிடத்திற்கு எனக்குக் குரு இல்லை. சுவாமி தந்த பேனாவால் தான் எழுதினேன் போல் தெரிந்தது. சுவாமியையும் அடிக்கடி போய்ச் சந்திப்பேன்.
எனது இரண்டாவது ஆண்பிள்ளை பிறந்தது ஒரு வினோதம். அது பிறந்த போதே அதற்கு Hernia வருத்தம். அடிக்கடி பரியாரி வீடு போகநேர்ந்தது. ஆசுப்பத்திரியில் காட்டிய போது, அப்பொழுது ஒன்றும் செய்ய இயலாது. ஐந்து வயதின் பின் கொண்டு வரும்படி சொன்னார்கள். சில வேளைகளில் அந்த இடத்தில் வீக்கம் வரும். மருந்து தந்தார்கள். 1958 தை மாதம் 3ஆம் திகதி பிறந்தது. 1959இல் சுவாமிகளிடம் காட்டிப் பார்ப்போம்.
170

அவர் தொட்டால் சில வேளை சுகமாகும். என்றெண்ணிக் குழந்தையுடன் காலை 5 மணியளவில் சுவாமியின் ஆச்சிரமத்திற்குப் போனோம். சுவாமிகள் வழமையாக இருக்குமிடத்திலில்லை. சொற்ப வேளையில் கையலம்பிக் கொண்டு வந்தார். வந்ததும் பெரிதாகப் பேசிவிட்டார். அவர் என்னை ஒரு போதும் பேசியதில்லை. எப்போதும் நன்கு வரவேற்பார். 49 திலிருந்து 64 வரை தவறாமல் ஒவ்வொருமாதமும் சந்திப்பேன். ஒருபோதும் பேசவில்லை. இம்முறை கடுமையாகப் பேசிவிட்டார். கொண்டுசென்ற பழம் பாக்கு வெற்றிலை எல்லாம் கலைத்துவிட்டு வீட்டிற்குப் போகும்படி சொல்லிவிட்டார். நாங்கள் கார் நின்ற இடத்திற்கு வந்த போது அவரும் அவ்விடத்திற்கு வந்தார். ஏதோ பேசினார். நாங்கள் கும்பிட்டு விட்டு வந்துவிட்டோம். பெரிய கவலைதான். சுவாமியைப் பார்க்கப் போகும் வேளை ஒரு நோக்கத்துடன் போகக் கூடாது. நான் செய்தது குற்றம் தான். என் பிள்ளையின் நோயைத் தீர்த்து விடும்படி எண்ணிப் போனேன். அது தவறுதான். இருநாட்களின் பின் பிள்ளையைப் பரியாரியார் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. தோளில் குழந்தையைப் போட்டுக்கொண்டு மனோகரா படமாளிகைக்கு முன்னால் உள்ள பிள்ளையார் கோவில் வழியாக பரியாரியார் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். Dr. சண்முகரத்தினம் என்பவர் ஈழநாட்டுக் கட்டிடத்திலே இருந்தார். பிள்ளையார் கோவில் வாசலடியில் சுவாமிகள் கமக்கட்டில் ஒரு குடையும் கொண்டு வருவதைக் கண்டேன். வீதியில் பல பெண்கள் வந்து அவரை விழுந்து வணங்கினார்கள். அவர்களைப் பார்த்து சுவாமிகள் "நீங்கள் ஏன் என்னைக் கும்பிடுகிறீர்கள்? உங்களைப் போலத்தான் நானும். உனது கண்ணைப் பார். எனது கண்ணைப் பார். உனது செவியைப் பார். எனது செவியைப் பார்” என்று பலதையும் ஒப்பிட்டுப் பேசிக்கொண்டே போனார். நான் இதுதான் தருணம் என்று எண்ணிக் கிட்டப் போனேன். என்னை நிமிர்ந்து பார்த்தார். "நவரத்தினம் எங்கே போகிறாய்?" என்று கேட்டார்.
71

Page 98
"சுவாமி பிள்ளைக்கு வருத்தம். அடிக்கடி சுகமில்லாமல் வருகின்றது. பரியாரியார் வீட்டிற்குக் கொண்டுபோகின்றேன்” என்றேன். உடனே அவர் கஸ்தூரியார் வீட்டிற்குக் கொண்டுபோகுமாறு கூறினார். நான் வழமையாக Dr. சண்முகரத்தினத்திடம் காட்டுவது என்றதும் "அதுதான் நல்லது அதுதான் நல்லது” என்று சொல்லி முதுகில் மூன்று முறை அடித்தார். அன்று தொட்டு இன்று வரை 38 வருடம் அந்தப் பிள்ளைக்கு வருத்தம் வரவில்லை! சொல்லச் சொல்லச் சுவைக்குமே எங்கள் யோகநாதன் நாமம்
1958ம் ஆண்டு Dr.H.W.தம்பையா QCஅவர்கள் சுவாமியைச் சந்திக்க வேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அவரது பிறந்த நாள் May 28th சுவாமியிடம் என்னைக் கூட்டிச்செல்லும்படி கேட்டார். இரவு ஏழு மணியிருக்கும் நாங்கள் சென்றோம். (அவர் அப்பொழுது உதவி கொமிஷனராகக் கடமை புரிந்தவர். ஒரு கவலை அவருக்கு அப்பதவி நிரந்தரமாகக் கிடைக்குமா என்று) அவர் சுவாமிக்கு முன்னால் விழுந்து வணங்கியதை நான் என்றும் மறக்கமாட்டேன். அட்டாங்கநமஸ்காரம் செய்தார். அவரது மனைவியும் வணங்கினார். நானும் வணங்கினேன். அதன் பின் சுவாமிகள் கதைக்கத் தொடங்கினார். இடையில் சோதிடத்தைப் பற்றிய கதையும் வந்தது. ஏனெனில் அந்தக் காலத்தில் Mrதணிகாசலம் என்று கைநிபுண சாஸ்திரி ஒருவர் இருந்தார். அவர் நோய் வாய்ப்பட்டு கொழும்பு ஆஸ் பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அதைப்பற்றிக் கதைத்த போது சுவாமிகள் “இந்தக் கிரகங்கள் சுழன்று சுழன்று கெதி கெதியாக ஊருகின்ற மாதிரி சோதிடர்களது மூளைக்கும் கிரகங்கள் எல்லாம் சுழன்று கடைசியில் மூளைக் கோளாறில் தான் சாகிறது” என்றார். கதையும் முடிந்தது. பின் தம்பையா விழுந்து வணங்கினார். அப்பொழுது 56). Tifs6ir "5th-60) -uIII, 5th-60 I-LT, 5LissouT- All right
reservedதம்பையா எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன”
172

6TGilprit. Goisfifs) 6 lig5. All right reserved 6Tsiprisi) 6TGisor? என்று என்னைக் கேட்டார். உங்களுக்கு இனி என்ன கவலை, எல்லாம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் நிரந்தரப் பதவியில் இருப்பீர்கள் என்று பதிலளித்தேன். அதே போன்று அவர் Justice 955 (3(big) (),60Létis Supreme court Judge, Psunie Judge 6T60Ti பெரிய பதவிகளில் எல்லாம் கடமையாற்றினார். அன்று சுவாமிகளைச் சந்தித்த போது பால் தேநீர் தந்தார்கள். அங்கிருந்ததோ சாதாரண சபை அல்ல. 10 - 15 பேர் ஒரு திருச்சபையாக இருந்தது. எல்லோருக்கும் தேநீர் கொடுக்கும் படி சுவாமியின் கட்டளை. அதனால் கொஞ்சம் ஒரு சொட்டுத் தான் கிடைத்தது. “தீர்த்தோம், தீர்த்தம்” என்று வர்ணித்தார்கள்.
எனக்குச் சோதிடத்திற்குக் குரு யோகசுவாமிகள் தான். எல்லாவற்றிற்கும் அவர் தான். அவர் தான் ஆத்ம குருவும் கூட. அவர் பேனாவைத் தந்து சோதிடத்தைக் கற்க எழுத வழிகாட்டினார். அழகரத்தினம் அவர்கள் என்னிலும் பார்க்க சோதிடத்தில் அறிவு பெற்றவர். 1960ம் ஆண்டு என் நண்பர் அழகரத்தினம் தனது தாயாருக்கு முதுகெலும்பில் நோய் கண்டு அதற்குச் சத்திரச் சிகிச்சை கொழும்பில் செய்ய வேண்டியிருக்கிறதென்றும் அது மிகப் பயங்கரமான ஆப்பிரேசன் என்றும் டாக்டர் சொன்னதால் உயிர் ஆபத்து ஏற்படலாமோ எனப் பயந்து செய்வதறியாது திகைத்து நின்றார். நான் அவருக்கு உடனே சுவாமிகளிடம் சென்று ஆசீர்வாதம் பெற்றுப் பின் ஆவன செய்யலாம் என்று சொல்லி அவரை அங்கு அழைத்துச் சென்றேன். சுவாமிகள் சந்நிதானத்தை அடைந்ததும் நான் முன்னர் சென்று சுவாமிகளுக்கு முன் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி அவர் சமீபமாக இருந்தேன். தொடர்ந்து நண்பரும் அவர் முன் வீழ்ந்து வணங்கி எழுந்தார். எழும்பும் போதே சுவாமிகள் அவரது தோள்களைத் தன் கையினால் அமர்த்தி அவரைத் தன் பக்கத்தில் அமருமாறு பணித்தார்.
173

Page 99
வழக்கமான வேறொரு கேள்விகளும் கேட்காது "உனக்கென்ன பிரச்சினை சொல்லு" என்றார். நண்பர் தன் பிரச்சினையைச் சொன்னார். அப்பொழுது நிகழ்ந்த சம்பாசனை பின்வருமாறு:
சுவாமி- இங்கு யாழிப்பாண ஆளப்பத்திரியில் சோதித்து
சத்திரச் சிகிச்சை செய்யச் சொன்ன டாக்டர் யார்?
A56øøjzuli:--- L/7øśLíf 6vaišomów filiumf
ഖസ്ഥി- கொழும்பில் பார்க்கப் போகிற டாக்டர் பெயர் என்ன?
நணபர்- டாக்டர் இராசநாயகம்
சுவாமி- இவன் டாக்டர் சேக்ஸ்பியர் வெட்டச் சொல்லுகிறான். அவன் டாக்டர் இராசநாயகம் கட்டச் சொல்லவாண் நீ LuuuzizuL/Tuoaný 6a5/76Øoi@96żmuiloš (65/7Gøøř@ Ghur,
என்று சொல்லிச் சுவாமிகள் நண்பரின் முதுகில் இரு தரம் தட்டி மனதிற்குத் தைரியம் ஊட்டி எங்களுக்கு விடை தந்தார். நாங்கள் சுவாமிகளை வணங்கி விடைபெற்று எங்கள் இல்லிடம் சேர்ந்தோம். பின்னர் இரண்டு மூன்று கிழமைகளில் நண்பரிடம் இருந்து இது விஷயமாக விபரமான கடிதம் ஒன்று கிடைத்தது. அதன் பின்னர் நேரிலும் வந்து எமக்கு நடந்த சமாச்சாரங்களை எல்லாம் அவர் விபரமாகச் சொன்னார்.
அதாவது அவரின் தாயார் உடனடியாகக் கொழும்பு பெரிய ஆஸ்பத்திரிக்கு அரச சேவை மூலம் கொண்டு செல்லப் பட்டு டாக்டர் இராசநாயகத்தின் மேற்பார்வையிலுள்ள வாட்டில் அனுமதிக்கப் பட்டார். அங்கு இராசநாயகம் அவர்கள் யாழ் வைத்தியசாலை அறிக்கையின் படி ஆப்பிரேசன் அடுத்த நாள் செய்ய வேண்டும் என்று கூறிச் சம்மதப் பத்திரம் ஒன்றில் நண்பரின் கையெழுத்தையும் பெற்றுக்கொண்டனர். குறிப்பிட்ட ஆப்பிரேசன் தினத்தன்று காலை நண்பர் ஆப்பிரேசன் செய்து முடிந்திருக்கும் என்று கருதி
174

வேண்டிய பரிகாரங்களுடன் அங்கு சென்று பார்த்த போது தாயார் கட்டிலில் உசாராக இருந்து தாதியுடன் கதைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு நடந்ததென்ன என்று வினவினார். அதற்கு அவர் தாயார், டாக்டர் மீளவும் பரிசோதனை செய்து ஆப்பிரேசன் தேவையில்லை என்றும் ஒரு மேலங்கி உலோகப் பூட்டுக்களுடன் செய்து முதுகெலும்பை நிமிர்த்திக் கட்டி விடவேண்டும் என்று சொன்னதாகச் சொன்னார்
நண்பருக்கு மெய் சிலிர்த்தது. கொழும்பு டாக்டர் கட்ட வேண்டும் என்று சொல்லுவான் என்று சுவாமிகள் ஏலவே சொல்லியிருந்தது அவரின் ஞாபகத்திற்கு வந்தது. வியப்பும் ஆனந்தமும் மேலிட அன்று இரவிரவாக ஒரு நீண்ட கடிதத்தில் எனக்கு நடந்தவற்றை விபரமாக எழுதித் தன் மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவருடைய அம்மா, டாக்டர் இராசநாயகம் வழங்கிய உடுப்பைக் கட்டிக் கொண்டு இருந்துவரக் காலகதியில் நோய் பூரணமாக மாறிவிட்டது. அதன் பின்னர் இருபத்தைந்து வருட காலம் சுகமாய் இருந்து 1986ம் ஆண்டளவிற்தான் இயற்கை எய்தினர்.
இதில் ஒரு அற்புதம் என்னவென்றால் சுவாமிகள் “நீ பயப்படாமல் கொண்டு போய்க் கொண்டு வா” என்று சொல்லி நண்பரின் முதுகில் இரண்டு தடவை தட்டின போது "டெலிபதிக் எலக்ரோணிக் ஸ்பரிஸம் இருக்கிறதே அது தான் அவரின் அம்மாவின் முதுகுக் கூனை நிமிர்த்தி விட்டது. கொழும்புப் பரிசோதனை நேரம் முதுகெலும்பு நேர்ப்பட்டு விட்டது.
இரண்டாவது முறையாக நாங்கள் மீண்டும் போனோம். நான் இருப்பது வண்ணார்பண்ணை. சுவாமிகள் கொழும்புத்துறை. மூன்று மைல் தூரம் தானே. இருவரும் சைக்கிளில் போனோம்.
175

Page 100
சுவாமி அழகரத்தினத்தைப் பார்த்து “நீ உனது ஓய்வு நேரத்தை எப்படிக் கழிக்கிறாய்?” என்று கேட்டார். அழகரத்தினம் தான் சோதிடம் பார்ப்பதாகவும் அதுவே அவரது Hobby என்றும் சொன்னார். சுவாமிகள் “அதையெல்லாவற்றையும் விட்டு விடு. கடவுள் ஒருத்தர் இருக்கிறார். அவரில் நம்பிக்கை வை. உதையெல்லாம் விடு” என்றார். சுவாமி சொற்படியே அவர் சோதிடம் பார்ப்பதைக் கைவிட்டு, கடவுள் நம்பிக்கை கொண்டு பக்தனாகி வந்து கோயில் முதலாளியாக இருந்து பல சைவ சமய நுல்களையும், நுல்களுக்கு விமர்சனங்களையும் எழுதிக் கொண்டு இன்னமும் இருக்கிறார். நான் சோதிடம் படிப்பதாக சுவாமிகளிடம் ஒருபோதும் சொன்னதில்லை. ஏனெனில் நீ அதை விடு கடவுளை நம்பியிரு என அழகரத்தினத்திற்குக் கூறியது போல எனக்கும் சொல்லிவிடுவாரோ என்ற பயம்.
ஆனால் 1964ஆம் ஆண்டு நான் சுவாமிகளைச் சந்திக்கச் சென்றேன். காலை பத்து மணியிருக்கும். சுவாமிகளுக்குச் சுகமில்லை. அப்பொழுது தான் எழும்பி இருக்கிறார். முகம் கழுவத் தண்ணீர் கொடுத்தார்கள். அப்போது அவரது முகம் பளிச்சென்று ஒளிமிக்கதாகப் பிரகாசித்தது. எங்கள் எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தார்கள். அதைப்பார்க்க ஒரு மகாசபை போலிருந்தது. அதிலிருந்து சாப்பிட்ட இன்பம் இதுவரை காலமும் எங்கும் பெறவில்லை. மகேஸ்வர பூசை போலிருந்தது. சுவாமியும் சேர்ந்து சாப்பிட்டார். பின்னர் விடை தந்தார். நானும் கும்பிட்டு விட்டு வெளியே சைக்கிள் இருக்கும் இடத்திற்கு வரவும் ஒரு சத்தம் எனக்குக் கேட்டது. “சாத்திரியார் போறார்.” வெகு தெளிவாகக் கேட்டது. நான் ஒருபோதும் எனது சாத்திரத்தைப் பற்றி அவருக்குச் சொல்லவில்லை. ஆனால் அவர் தான் குரு எனக்கு.
ஒரு நாள் நல்ல கனவொன்று கண்டேன். சுவாமிகள் தேவலோகமோ அதற்கு அப்பாற்பட்ட உலகில் இருக்கிறார் போலத்
176

தெரிகிறது. பக்தர் கூட்டம் பெரிது. கந்தபுராண படனம் நடக்கிறது. நானும் இருக்கிறேன். என்கையில் கந்தபுராணமும் இருக்கிறது. யாரோ பாடலைப் படிக்க சுவாமிகள் பயன் சொல்லுகிறார்கள். ஒரு பாட்டைப் படிக்கச் சுவாமிகள் தனக்குப் பயன் சொல்லத் தெரியவில்லை என்கிறார். எல்லோரும் ஆச்சரியப் படுகிறார்கள். அடுத்த பாட்டைப் படிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் சுவாமி எனது கையிலிருந்த புத்தகத்தை வாங்கினார். வாங்கின பொழுது நிமிர்ந்து பார்த்தார். “ஆ1 நவரத்தினம் உன்னைக் கனநாள் காணவில்லை" நான் சிறிது காலம் கொழும்புத்துறையில் நடக்கின்ற மாதாந்த ஆயிலிய பூசைக்குப் போகவில்லை. நான் போகாதது குறை என்று எனக்கு விளங்கியது. உடனே அவர் சொன்னார் “நீ இனி ஓடி ஆடித் திரியவேண்டியதில்லை. நீ ஒரு இடத்திலிருக்க
எல்லா நாட்டவரும் உன்னைத் தேடி வருவார்கள்.” என்றார்.
எனது வேலை கிராம முன்னேற்ற உத்தியோகத்தர். ஒவ் வொரு கிராமம் கிராமமாகப் பொதுமக்களுக்கு, கஷ்டப்பட்டவர்களுக்கு சமூக சேவை செய்தல், சுவாமிகள் இதனைச் சொன்ன போது எனக்கு வயது 43. நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். 45 வயதில் சுவாமிகள் சொன்னது அத்தனையும் நிறைவேறியது. இப்பொழுது எனக்கு வயது 71. எல்லாரும் தேடித் தேடி வருகிறார்கள். நான் 45 வயதில் அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றுச் சோதிடத்தைத் தொழிலாகக் கொண்டேன். பிறநாடுகளிலெல்லாம் பலர் கேள்விப்பட்டு என்னைப் பலரும் தேடி வந்தார்கள். நான் வீடு வீடாகப் போக வேண்டியதில்லை. என்னே அவர் பெருமை! “சொல்லச் சொல்லச் சுவைக்குமே செல்லப்பன் யோகப்பன் குருநாதன் திருநாமம்’
இப்படி இருக்கும் நாளில் கொழும்பில் பெரிய அரசியல் வாதி ஒருவர் இருந்தார். அவர் பெயர் J. R. ஜெயவர்த்தனா. அவர்
177

Page 101
என்னைப் பார்க்கவேண்டுமென்று கூறியுள்ளார். Dr H. W. தம்பையாவிடம் கூறி என்னை அழைத்திருந்தார். அவருக்குத் தான் இலங்கையின் தலைவராக வரவேண்டுமென்ற ஆசை. நான் அவரைச் சந்திப்பதற்கு இசைந்தேன். சந்திக்க முதல் நான் பொறளையில் இருந்தேன். அன்றிரவு ஒரு கெட்ட கனவு கண்டேன். ஒரு ஆபத்து வரப்போகின்றது என்று அக்கனவின் விளக்கம் எனக்குத் தோற்றியது. பெரிதும் கவலைப்பட்டேன். நாளைக்கு இப் பெரியாரைச் சந்திக்கப் போகிறேன் இது என்ன என்று எழுந்து சுவாமிகளைக் கும்பிட்டு விட்டு மீண்டும் புரண்டு படுத்துவிட்டேன். சிறிது வேளையில் அயர்ந்து விட்டேன்.
அப்பொழுது ஒரு கனவு தோன்றியது. கண்கொள்ளாக் காட்சி. ஒரு நெல்வயலுக்கூடாகச் செல்லுகிறேன். காணியில் நிறையத் தண்ணிர் நிற்கிறது. பள்ளத்தில் இரண்டு மாத நெற்பயிர் வளர்ந்துகொண்டிருக்கிறது. வயல் வரம்பூடாக நடந்து ஒரு திட்டிக்கு வருகிறேன். ஒரு பெரிய பழுத்த மரம் தோன்றுகிறது. அதனை உற்றுப் பார்த்தேன். அம்மரத்தில் சுவாமிகள் தோற்றமளிக்கிறார். அவரது தோற்றம் ஒரு 1000 வயசுடைய மனிதனுக்கு எப்படித் தோற்றமளிக்குமோ அது போல இருந்தது. கிட்ட நெருங்கிப் பார்த்தேன். அவர் வாய் திறந்து பேசுகிறார். "உனக்கு ஏதாவது கெட்ட கனவுகள், கஷ்டங்கள் வந்தால் நீ இதைப் படி” என்று சொல்லிப் போக்குவாய், சொற்கள் விளங்கவில்லை ஆனால் "கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி கப்பிய கரிமுகன் அடி பேணி” என்ற பிள்ளையார் பாடலை அவர் சொல்ல நானும் படித்தேன். எனக்கு இத் திருப்புகழ் பாடமென்று சொல்லி நான் முழுவதையும் படித்தேன். அவ்வளவு தான் கனவு முடிந்தது. எனக்கு நல்ல துணிவு பிறந்தது. சுவாமியின் அருள் பெற்றுவிட்டேன். இனி எந்த விசனமும் வராது என்று எண்ணிக் கொண்டேன். திரு. J. R. ஜெயவர்த்தனாவுடன் சந்திப்பு
178

நேரம் இரவு 11 மணியாகும். என்னை அழைக்கவந்தவர்களுடன் நான் சென்றேன். அவருடைய தோற்றத்திற்கும் அந்தஸ்திற்கும் நான் சிறுவன். அவர் தனக்குச் சோதிடத்தில் நம்பிக்கையில்லை யென்றும் தனக்குப் பிறந்த திகதி செம்மையாகத் தெரியாது என்றும் எனக்குச் சொன்னார். உங்கள் சாதகம் என்னிடமுண்டு என்றேன். அவர் மனைவியாரும் அருகில் இருந்தார். அவர் தனக்குச் சோதிடத்தில் நம்பிக்கையில்லை என்று தாறுமாறாகச் சொல்லிய பின் "அடுத்த மாதம் என்ன நடக்கப் போகிறது என்று சொல்லும்” என்றார். 1971ம் ஆண்டு, இந்த ஆண்டு இந்த் நாட்டில் கஷ்டம் வரும் பெரும் அழிவு ஏற்படும். ஆனால் இந்த அரசாங்கத்திற்கு மட்டும் அழிவில்லை என்றேன்.” அதற்கு அவர் சொன்ன பதில் “உமக்கு ஒரு சோதிடமும் தெரியாது நீர் போகலாம்.” என்னைக் கூட்டிச்சென்றவர்களுக்குச் சிறிது மனவேதனையாக இருந்தது. நான் கொண்டு சென்ற சாதகக் கொப்பியில் நீங்கள் உயர்ந்த பதவியை அடைவீர்கள். 1977ஆம் ஆண்டு Feb மாதம் அந்தப் பதவியில் அமர்த்தப்படுவீர்கள் என்று எழுதிக் கொடுத்தேன். அதை வாங்கிப் பார்த்து விட்டு மனைவியிடம் கொடுத்தார். என்னை ஒரு தூசாகக் கருதிவிட்டார். எழுதிக் கொடுத்த பலன் அப்படியே நடந்தது. அவர்கள் 1977இல் பிரதமமந்திரி, ஜனாதிபதியானார். சுவாமி எனக்குத் தந்த அருள். நான் யாழ்ப்பாணத்திலிருந்து இவரைத் தேடி வந்தனான். என்னை மதியாதது மட்டுமல்ல. ஒரு சதமும் கூலியும் கூடத் தரவில்லை. கூட்டிச் சென்றவர்களுக்கு மனவேதனையாக இருந்தது. என்னை ஒரு மாதிரிப் பார்த்தார்கள். JBIT6 "This is not the first time I metaperson like this" 6T6ig). GlyT66s.76i. அவர்கள் சிரித்தார்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். இப்படிப் பலரைக் கண்டிருக்கிறேன் என்று சொன்னேன்.
நான் சுவாமிகளின் நற்சிந்தனைப் பாடல்களில் அவர் தனது குரு செல்லப்பரைப் பற்றிப் பாடிய பாடல்களைப் பெரிதும் விரும்பிப்
179

Page 102
படிப்பேன். இப்படிப் படித்துக் கொண்ட நாட்களில் ஒரு நாள் சுவாமிகள் கனவில் வந்தார்கள். தனிய வரவில்லை. செல்லப்பா சுவாமிகளையும் கூட்டிக் கொண்டு வந்தார்கள். நான் அன்று வீட்டில் விருந்தினர்கள் வருவார்கள் என்று அவர்களுக்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தேன். முதலில் வந்தவர் யோகசுவாமிகள். பின்னால் வந்தவர் செல்லப்பாசுவாமிகள். அவரை விட்டு விட்டு யோகசுவாமிகள் போய்விட்டார்கள். செல்லப்பா சுவாமிகள் கிட்ட வந்தார்கள். கறுத்த மேனியர் என்று இவரைப் பற்றிச் சுவாமிகள் பாடிய பாடல்கள் எனக்கு ஞாபகம் வந்தது.
எனக்குச் சுவாமிகளிடமிருந்த அன்பால் நான் அவரைக் காண அடிக்கடி செல்வதுண்டு. ஒரு நாள் கே.கே.எஸ் (காங்கேசன்துறை) வீதியில் பூணூலங்கா புத்தகசாலையின் முன் கட்டிடத்திலிருந்தார்கள். நான் போய் விழுந்து கும்பிட்டேன். அவர் என்னைப் பார்த்து "உனக்கு அப்பா இருக்கிறாரா? அம்மா?" என்று கேட்டார். இருக்கிறார்கள் என்றேன். “பிள்ளைகள்?’ ‘ஆம் என்றேன். “ஆண்? பெண்?’ ‘ஆம்’ என்றேன். ‘அண்ணன் தங்கை” ‘ஆம்’ என்றேன். இப்படிக் கேள்வி மேல் கேள்வி கேட்க நாம் ஆம் என்றேன். "உனக்கு ஒருகுறையுமில்லை. மாமா மாமி, அப்பா அம்மா, ஆண்பிள்ளை பெண்பிள்ளை எல்லாமிருக்கு உனக்கு ஒரு குறையுமில்லை போட்டு வா” என்று வாழ்த்தி அனுப்பினார்.
நான் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் போது எனது தொழிலில் நான் பிழை ஏற்படுத்திவிட்டதாக யாரோ எனக்கெதிராக ஒரு முறைப்பாட்டை அனுப்பிவிட்டார்கள். அதற்கு விளக்கம் தரும்படி அழைக்கப் பட்டேன். போனேன். உயர் அதிகாரி பல கேள்விகளைக் கேட்டுவிட்டு அனுப்பிவிட்டார். “சாட்சி வரும் நீர் போம்” என்றார். நான் இதற்கு என்ன பதில் சொல்ல? இதற்குப் பதில் சுவாமிகள் தான். நான் குற்றவாளி இல்லை என்று எண்ணிக்
180

கொண்டு போனேன். மறுநாட்காலை வெள்ளிக்கிழமை. 8 மணி சுவாமிகளைக் காணச் சென்றேன். வாசலில் போய் இறங்கிய பொழுது சுவாமிகள் ஒரு A 40 காரில் பின் சீற்றில் வலது புறமாக இருப்பதைக் கண்டேன். என்னைக் கண்டதும் சுவாமிகள் காரை நிற்பாட்டும்படி சாரதிக்குச் சொன்னார். என்னைக் கிட்ட வரும்படி கை காட்டினார். சென்றேன். தொப்பியைக் கையிலெடுத்துக் கொண்டு கும்பிட்டேன். என்ன பெயர்? நவரத்தினம் எங்கு வேலை செய்கிறாய்? கோண்டாவிலில் என்று கேள்விகள் கேட்டபின் தனது வலது கையைத் தூக்கி என்தலையில் வைத்து ஆசீர்வதித்து “Plane (Paint) வேண்டுமென்று கேளாதை. அது வந்து இறங்க இடமில்லை" என்று வாழ்த்தி அனுப்பினார். உண்மையாக நடந்தது என்ன? வழக்கு நடக்கவில்லை என்னே பெருமை!
சுவாமி தனது பாடல்களில் கடவுள் உள்ளே இருக்கிறார் என்று கூறியுள்ளதை நான் படிப்பேன். படிப்பதெல்லாம் இதயத்துக்குள் தான் படிப்பது. சுவாமியை இதயத்துக்குள் தான் காண்பது. எல்லோரும் glpLDITS, Very deep into my heart and searched for the Divine தாம் சுவாமிகளுடன் கதைக்கவில்லையே என்பார்கள். நான் அங்கு அவரைக் கண்டேன். வழக்கமாக எனது முருகபக்தியினாலே
குன்றம் எறிந்ததுவும் குன்றப் போர் செய்ததுவும் அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் இன்று எண்ணைக் கைவிடாது நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும் கைய்விடா வீரன் கைவேல்
என்ற பாடலைப் படிப்பேன். அப்பாடல் எனக்கு மிகவும் விருப்பமான பாடல். அப்பாடலை ஆழமாக உள்ளத்தில் வைத்து
181

Page 103
எண்ணிய போது எப்போதும் முருகன் தோன்றுவார். அன்றும் தோன்றினார். எனக்கு இந்தப் பாடல் அவ்வளவு விருப்பமில்லை. “எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ சிந்தாகுலமானவை தீர்த்து எனையாள் கந்தா கதிர்வேலவனே உமையாள் மைந்தா குமர7 மறைநாயகனே". இதைப் படி என்றார். அடுத்த பாடல் அவர் கூறியது “அமரும் பதிகேள்” என்றதாகும். உள்ளியங்கும் தெய்வத்தைக் கண்டேன்!
பெரும்பாலும் நான் நினைக்கும் போது சுவாமிகள் தோன்றுவது வழக்கம். யாழ் முத்தவெளியில் வலம்புரி என்ற பெயர் கொண்ட ஒருவன் இடது பக்கமாகச் சுழன்று நூறு மணித்தியாலங்கள் சைக்கிள் ஓடுகிறான் என்று பலரும் போய்ப் பார்வையிட்டார்கள். நானும் எட்டிப் பார்த்துவிட்டு வரும் வழியில் சுவாமி தென்பட்டார். வழக்கமான வினாக்கள் வினாவினார். சுவாமிகள் இப்படிக் கேட்பது என்னில் ஏதாவது முன்னேற்றமிருக்கிறதா எனப் பரிசோதிப்பது போல இருந்தது. வலம்புரியைப் பற்றிச் சொல்லி அதைப் பார்த்து விட்டு வருவதாகவும் அவன் அவ்வாறு செய்வதன் அர்த்தம் என்னவாயிருக்கும் என்று சுவாமியைக் கேட்ட போது அவர் கூறியது நான் செய்த கர்மத்திற்கு இப்படிப் போகிறேன். நீசெய்த கர்மத்திற்கு இப்படிப் போகிறாய், அவன் செய்ததற்கு அப்படிப் போகிறான் என்றார். சில நாட்களில் நான் அறிந்தது வியக்கவைத்தது. வலம்புரி அதே சைக்கிளிலிருந்து விழுந்து மாண்டுவிட்டான் என்பதாகும்.
யோகசுவாமிகளைப் பற்றி Dr.க.கனகரத்தினம் அவர்கள் பல சுவாரஸ்யமான கதைகளை எனக்குக் கூறியுள்ளார். DF கனகரத்தினம் திருநெல்வேலியில் வாழ்ந்தவர். உண்மை, நேர்மை முதலாய சிறந்த நற்குணங்கள் நிரம்பப் பெற்றவர். சுவாமிகளது பக்தன். அவருடைய அனுபவத்தில் கண்டறிந்த கதைகள் இவை. ஒரு நாள்
182

யோகசுவாமிகள் மத்தியான வேளை வெய்யிலில் நடந்து சென்றுகொண்டிருந்தாராம். வெய்யிலோ கடும் வெய்யில். தாங்க முடியாது. நடந்து செல்லுகையில் "Come down" என்று கத்தினாராம். என்ன வினோதம், சில வினாடிகளில் பொல பொல என மழை பெய்ய, அவர் மழையிலிருந்து தப்புவதற்கு ஒரு மரநிழலை நாடினாராம். இதைச் சொல்லி மகிழ்ந்தார் Dr. மேலும் 1958ம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் தோன்றியது. தமிழ் மக்கள் பெரும் இன்னலுக்குட்பட்டார்கள். பேரிழப்புக்கள் ஏற்பட்டன. இவற்றையெல்லாம் அன்பர்கள் சுவாமிக்கு அப்போதைக்கப்போது கூறுவார்கள். எல்லாவற்றையும் செவிமடுத்துவிட்டு ஒரு நாள் “யேசு நாதர் சொல்லுகிறார் செய்த பாவத்திற்கு மன்னிப்பு உண்டு என்று. ஆனால் புத்தன் சொல்லுகிறான் செய்த பாவத்திற்கு மன்னிப்பு இல்லையென்று.” என்று சொல்லித் தன் துடையில் அடித்தாராம். அதன் அர்த்தம் எவருக்குமே விளங்கவில்லை. ஆனால் ஒரு வருடத்தில் இனக்கலவரத்தைத் தூண்டிய அரசியல்வாதி, தமிழ்க் கோவிலில் பூசை செய்து நின்ற பிராமணியை எரித்தார்களே! அதற்கெல்லாம் தலைவராக, காரண கர்த்தாவாகிய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Dr கூறிய இன்னுமோர் வினோதமான கதை. சுவாமியின் ஆச்சிரமத்தில் பல பக்தர்கள் கூடிவிட்டார்கள். மேலும் பலர் வந்தவண்ணமிருந்தார்கள். சுவாமிகள் கதைத்துக் கொண்டிருந்தவர் திடீரென 10 மணியளவில் தியானத்தில் இறங்கிவிட்டார். எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணியளவில் அவர் கண்விழித்தார். விழித்ததும் எத்தனை மணியென்று கேட்டாராம். “சுவாமிகள் இரண்டு மணி’ என்று ஒருவர் கூற 'ஆ இரண்டு மணியாச்சே? நீங்கள் ஒருவரும் சாப்பிடவில்லையா? பட்டினியாய் இருக்கிறீர்களா? இது என்ன வினோதம் எங்கெல்லாமோ அன்னதானம் சொர்ணதானம் நடக்கின்றது. நீங்கள் எல்லாம்
183

Page 104
பட்டினியாயிருக்கிறீர்களே!” என்று சொல்லித் தனது துடையில் ஒரு அடி அடித்தாராம். அவ்வேளை படலையருகில் ஒரு கார் வந்து நின்றதாம். அதில் வந்தவர் அங்கிருந்த அடியார்கள் அனைவருக்கும் போதிய அளவு உணவும் வாழையிலையும் கொண்டு வந்தார். சுவாமியின் கட்டளைப்படி வாழையிலை பரப்பிச் சாப்பாடு பரிமாறினார். எல்லோரும் உணவு உண்டார்கள். சுவாமியும் இருந்து சாப்பிட்டார். பின்னர் எல்லோரும் போய்விட்டார்கள்.
அந்தச் சபையிலிருந்து சாப்பிட்ட ஒருவர் அன்று மாலை யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்குச் செல்ல வேண்டி யிருந்தது. அவர் அங்கு நின்ற போது கொழும்பிலிருந்து வந்த புகைவண்டி வந்து நின்றது. நின்றதும் அன்று மதியபோசனம் வந்து பரிமாறியவர் வண்டியிலிருந்தும் இறங்குவதைக் கண்டார். ஆச்சரிய மேலீட்டால் “எப்போது யாழ் வந்தீர்கள்” என்று இவர் வினாவ, அவர் தான் காலையில் கொழும்பிலிருந்து வெளிக்கிட்ட வண்டியில் ஏறி இப்ப தான் யாழ் வந்து சேருவதாகப் பதிலளித்தார். ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியமடைந்த இந்த நபர் தனது அதிசயத்தைத் தன் நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லி வியந்தார். பின் மறுநாள் இவ்வதிசயத்தைச் சுவாமிகளிடம் சொல்ல ஆர்வம் கொண்டு ஓடிச் சென்றார். அவர் போன வேளை சுவாமிகள் வெளித்திண்ணையிலிருந்தார். இவர் படலையைத் திறக்கவும் டேய் டேய் ! உன்ர வாயைப் பொத்திக்கொண்டிருக்க மாட்டியே? என்று கடிந்தாராம். இக்கதையை Dr. கனகரத்தினம் இரசித்து இரசித்து சொல்லி மகிழ்வார். Dr கனகரத்தினம் தனது 99 ஆவது வயதில் இறைவனடி சேரும் வரை சுவாமிகளது அன்பான எண்ணங்களைத் தியானித்து இருப்பார். அவர் சுவாமிகளது சீடனாக மட்டும் இருக்கவில்லை. அவர் நோயுற்ற வேளை ஒரு தாதியாகவும், வைத்தியராகவும் சுவாமிகளுக்குப் பணிவிடையாற்றியவர்.
184

பக்தரது உள்ளத் துடிப்பை நன்கு அறிந்தவர் சுவாமிகள். ஒரு நாள் ஒரு பக்தர் சுவாமிகளிடம் சென்றிருந்தார். வழமையாக மாலை வேளைகளில் பக்தர்கள் கூடுவார்கள். இவரைக் கண்டதும் சுவாமிகள் அவர் எங்கிருந்து வருவதாக வினாவினார். அவர் மானிப்பாய் என்றதும் “ஆனைக்கோட்டை தாண்டித்தானே மானிப்பாய் போகவேண்டும்?' என்று சுவாமி கேட்டாராம். "ஆம்" என்றதும், ஆனைக்கோட்டையில் இன்ன இடத்தில் இன்ன வீட்டில் ஒரு மனுசி அழுதுகொண்டிருக்கு. ஏனென்றால் அவளின் கணவன் இறந்து விட்டான். தன்னைப் பார்க்க ஒருவருமில்லை என்று அழுதுகொண்டிருக்கு. அவளிடம் போய்ச் சொல்லு உன்னுடைய அழுகை இங்கு கேட்டதாம். ஒருகுறையுமில்லை. வாழ்நாள் முழுவதும் சந்தோசமாய் இருப்பாய் என்று சொன்னாராம். பக்தனும் சுவாமி இட்ட கட்டளையை நிறைவேற்றினார். இத்தகைய பேறு யாருக்குக் கிடைக்கும்?
எங்கள் வீட்டில் மெல்பேனில் மாதந்தோறும் ஆயிலிய பூசை செய்வது வழக்கம் 1995இல் மிக விமரிசையாகக் கொண்டாடினோம். அப்பொழுது அங்கு ஒரு அவுஸ்திரேலியர் வந்து கலந்து கொண்டார். அவர் சுவாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளார். அவரும் அப் பூசைக்கு வந்திருந்தார். என்னைக் கண்டு நீங்கள் எவ்விடத்திலிருந்து வந்துள்ளீர் எனக் கேட்டார். நான் பூரீலங்கா யாழ்ப்பாணம் என்றேன். உடனே அவர் தனது கையிலிருந்த மணிப்பேசைத் திறந்து ஒரு படத்தைக் காட்டி இவரைத் தெரியுமா என்றார். அது சுவாமிகளது படம். நான் எனது கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த பதக்கத்தைக் காட்டவும் அவர் அசந்து போனார். அவரது நண்பர் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறார். இருவரும் பூசையில் கலந்து கொண்டார்கள். அடுத்தநாள் சுவாமிகள் பூசையறையில் தோற்றமளித்தார். ஒவ்வொருவருக்கும் பரிசில்கள் வழங்கினார். அடியார்கள் ஆச்சரியப் பட்டு நிற்க அவர் வாரி
185

Page 105
வாரிக் கொடுக்கிறார். எனக்கும் கிடைத்தது. நான் அவுஸ்திரேலிய நண்பரை விசாரித்தபோது தனக்கு 5000 ஐயாயிரம் டொலர் கிடைத்ததாகவும் இனத்தவர்களுக்கும் பரிசு கிடைத்திருப்பதாகக் கூறினார். இந்தச் சம்பவத்தின் பின் நான் அவுஸ்திரேலியாவில் ஒரு சிவத்தொண்டன் நிலையம் அமைப்பித்தேன். 1997இல் முதலாவது ஆயிலிய பூசையில் பலர் கலந்து கொண்டார்கள். இவர்களுக்குக் கிடைத்த பேறுகள் சொல்லில் அடங்காது.
செப்டெம்பர் 5 ம் நாள் 1995இல் சிவாய சுப்பிரமணிய சுவாமிகள் இங்கு வந்து ஒரு திருவடிப் பூசை நடந்தது. அந்தத் திருவடியை வைத்து நாங்கள் அதற்கு அபிடேகம் பூசை செய்வது வழக்கம். 1997ம் ஆண்டு பங்குனி ஆயிலிய பூசையில் ஒரு கஷ்டப் பட்ட எஞ்ஜினியரின் மருமகனுக்கு அடுத்தவாரம் வேலை பறிமுதலாகும் நிலையில் இருந்தது. அவரை அம்முறைப் பூசையை நடத்தும் படி சொல்லவும் அவர் சகல ஆயத்தங்களுடனும் வந்து நல்ல முறையில் பூசை செய்தார். அதற்குச் சுவாமிகள் பரிசு கொடுத்தார். அவர் வேலை பறிபோகவில்லை. அதிலும் திறமையான வேலை வேறொரு இடத்தில் வழங்கப்பட்டது.
அவுஸ்திரேலிய சிவதொண்டன் நிலையத்தில் மூலத்தானத்தில் சுவாமிகளது நல்ல படம் ஒன்று வைக்கவேண்டுமென்று ஆசைப்பட்டேன். யாழ்ப்பாணத்திலுள்ள சுவாமிகள் தியானநிலைப் படத்தை நான் தேர்ந்தேன். அதைப் பெருப்பித்து வைக்கலாமென்று படத்தொழில் செய்பவரிடம் கொடுத்து வந்தேன். அவர் செய்வதாகக் கூறியும் செய்யவில்லை. திடீரென சுவாமிகள் தோன்றினார். பேரப்பிள்ளையை ஆசீர்வதித்துப் பின்தான் கையை நீட்டுகிறார். அவர் தோற்றம் அவர் ஆசுப்பத்திரியில் இருந்து ஆச்சிரமத்திற்கு வந்தது போன்றதாக இருந்தது. பிள்ளையை அணைக்கின்றார். நாங்கள் அவுஸ்திரேலியாவில் இத்தகைய கட்டிடம் அமைத்தது
186

எமது பிள்ளைகள் மேல்நாட்டு நாகரிகத்தில் வீழ்ந்து விடாது எமது பண்பாட்டுச் சூழலில் வாழ்வதற்கேயாகும். மறுநாள் படக்காரனிடம் படம் தயாரா என்று கேட்டேன். அவன் அந்தப் படம் பெருப்பிக்க இயலாது இருக்கிறது என்று கூறிவிட்டான். அதனால் நான் சுவாமிகள் கட்டிலிலிருந்த படத்தைக் கொடுத்தேன். அதுதான் இப்பொழுது நாம் வைத்து வணங்கும் படம். இங்கு நிலையத்தில் பல அதிசயங்கள் நிகழுகின்றன. ஒரு யாழ் தமிழ் எஞ்ஜினியர் இங்கு வந்து 10 - 12 வருட காலமாக நிரந்தர தொழிலில்லாது Social Security grant எடுத்துக்கொண்டு இருந்தார். நிலையம் ஆரம்பித்த பின் எனக்கு அறிமுகமானார். அவரது மனைவி என்னிடம் முறையிட்டார். கணவர் ஒரு கிறிஸ்தவனாக மதம் மாறப் போகிறார். விரக்திமனப்பான்மை மாறாதிருக்கப் புத்திசொல்லுங்கள் என்றாள். நான் அவரிடம் கேட்ட போது அவர் தனக்குச் சைவ மதம் பற்றி அவ்வளவு தெரியாதென்றும், கடவுளைக் கும்பிட்டு ஒரு லாபமுமில்லை என்றும் தெரிவித்தார். சமயம் மாறினால் தொழில் வருமா என்று கேட்டுவிட்டு சிவாய சுப்பிரமணிய சுவாமிகள் எழுதிய 3C5 Lig55/556ir Dancing with Siva, Loving Ganesha அவரிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். வாசித்து விட்டு வந்து தான் மனம் மாறிவிட்டதாகவும், சைவசமயம் பற்றி விளங்கிக் கொண்டதாகவும் கூறினார்.
தொடர்ந்து நான் அவரை அடுத்த திருவடிப் பூசை செய்யும் படி சொன்னேன். அவர் மிகவம் பக்தியுடன் வேண்டிய பொருட்களெல்லாம் கொண்டு வந்து பூசை செய்தார். என்ன ஆச்சரியம் 48 ஆயிரம் டொலர் சம்பளத்தில் அவருக்கு நிரந்தரமான வேலையும் கிடைத்தது.
ஒரு பெண் சங்கீத வித்துவாட்டி வந்தார். ஒவ்வொரு பூசையிலும் பாடும்படி கேட்டேன் அவர் ஒருமுறை வந்து “கூவு
187

Page 106
கிளியே” என்ற பாட்டை உள்ளம் உருகப் பாடினார். பின்னர் அடுத்ததாகச் சிவராத்திரிக்கு வருவதாகக் கூறிப் போனார். வரவில்லை. விசாரித்த போது அவர் தொலைபேசியில் ஒரு வேலைவாய்ப்பைப் பற்றிக் கேட்டிருக்கிறார். தொலைபேசியிலேயே பதில் அவரை அழைத்தது. பயிற்சியுடன் நல்ல வேலையும் கிடைத்தது!
எங்கள் நிலையதி தைக் கூட்டித் துப் பரவாக வைத்திருப்பதற்கு ஒரு பெண்ணை நியமித்தோம். அவர் பூரீலங்கா பறங்கிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இரண்டு கிழமை வேலை செய்தால் 30 டொலர் கொடுப்போம். இரண்டு கிழமை தான் வேலை செய்தார். அடுத்துத் தான் வரப்போவதில்லை என்று அறிவித்தார். காரணம் கேட்டபோது தனக்கு ஒருகிழமைக்கு 710 டொலர் சம்பளத்தில் வேலை கிடைத்ததாகச் சொன்னார்! எங்கள் யோகநாதன் எல்லோருக்கும் பரிசு வழங்கினார் என்னே அவர் பெருமை!
கணிணே நீ உறங்கு உறங்கு/ கார் வணிணா நீ உறங்கு/ எணணேன் பிறதெய்வம் என் இதயத்தே நீ உறங்கு!
பணடிற் டாக்டர் K.N. நவரட்ணம்
ஒருவனைக் கூடாதவன் என்று நினைக்கும் நினைவே நினைப்பவனுக்கு நஞ்சாகும்
சுவாமிகள் அருள்மொழி
188

தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியேங்களுக்கே
"உன்னை ஒன்றும், ஒன்றும் செய்யாது: போ” என்பது கொலம்பகம் வாழ் சிவயோக முனிவராம் குருபரன், அன்றெனக்களித்த திருவருள் அமுதம். நாயடியேனது சிற்றில்லத்தில் நயினா நகர் நாகராசராஜேஸ்வரி, தனது வாகனங்களுள் ஒன்றாகிய நாகத்தையும் குடியிருக்கச் செய்தாள். பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பர். இந்த அடிமைக்கு அவ்வித நடுக்கமோ பயமோ ஏற்படவில்லை. அவைகளைப் பிடித்து ஒரு போத்தலில் விட்டு மூடித் தூரத்தே காட்டில் கொண்டுபோய் விட்டு வருவது வழக்கம்.
1962ம் ஆண்டு புரட்டாசி மாதம் யாழ்ப்பாணம் வந்து கடமைகளைப் பார்த்துவிட்டு இரவு பதினொரு மணியளவில் வீட்டுக்குப் போனேன். எனது மாமியார் வீட்டு வாசலில் ஒரு பாம்பைக் கண்டு அடித்து விட்டார் என எமது பத்தினியார் கதறினார். அடித்ததனால் உண்டான பாபமும் சாபமும் யாருக்கு, என ஏசினேன். எங்கு இருந்து வந்தது, எனக் கேட்டேன். வீட்டிற்குள் நெல் மூடைகள் இருக்கு மிடத்திலிருந்து, வந்தது என்றார்கள். மூட்டைகளுக்கு மேல் சில சாக்குகள் போடப்பட்டிருந்தன. அவற்றை எடுத்து உதறினேன். மூன்று நாலு நாக பாம்புக்குட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாகப் படம் எடுத்து ஆடின. எல்லோரும் உள்ளே வந்து பார்த்ததும் பயந்து வெளியே ஓடிவிட்டார்கள். மனைவி வெளியே போய் மயங்கி வீழ்ந்து விட்டார். நான் ஒரு மின்சூளையை ஒரு கையில் பிடித்தபடி மறுகையால் நீளமான தடியால் மேலே இருந்த மற்றச் சாக்குகளையும் தள்ளினேன். அதிலும் ஜந்து ஆறு நாகங்கள் இருந்தன. மனம் கலங்கிற்று. மெய் சிலிர்த்தது. தெய்வத்துணையன்றி வேறுதுணையில்லை.
189

Page 107
எல்லாம் படமெடுத்து ஆடின. சங்கு சக்கரம் இருக்கக் கண்டோம். பயம் மேலிட்டது. வியர்வை ஊற்றெடுத்தது. நாகேஸ்வரியே வா. நாகராஜேஸ்வரியே வா. நல்லூர் வேலவா வா. கேதீஸ்வரப் பெருமானே இங்கு வாருங்கள், துணை புரியுங்கள். நாங்கள் செய்த குற்றம் என்ன? இங்கு ஏன் வந்தீர்கள்?” என்று கண்ணிர் ஆறாய்ப் பெருகக் குருபரனை நினைத்து வருந்தினேன். நாகங்களைப் பார்த்து, "நான் உங்கள் ஒருவரையும் தீண்டமாட்டேன். நீங்களும் எங்கள் ஒருவரையும் தீண்டக்கூடாது” என்று விண்ணப்பித்து அவைகளைப் பிடித்துக் காட்டில் கொண்டுபோய் விட எண்ணினேன்.
அயலவர் பலரும் கூடிவிட்டனர். பெட்டகத்தின் கீழ் ஒரு புற்றிருந்தது. அப் புற்றை, ஒரு பேணியால் மூடிப் பாரம் வைத்தேன். மனைவி களைதெளிந்து, எண் சொற்படி சிறு தடிகளும் போத்தல்களும் தந்தார். அத் தடிகளால் குட்டிகளைப் போத்தில்களுக்குள் புக விட்டு மூடினேன். பெரிய தகரமும் கிடைத்தது. கையிலிருந்த தடியைக்காட்டி "இது வேல். ஒன்றும் செய்யக் கூடாது. போத்தலுட் புகுந்துவிட வேண்டும்” என்று படமெடுத்து ஆடியவைகளின் தலையில் அமர்த்திப் போத்தலை நீட்டினேன். போத்தலில் புகுந்தன. இரண்டு நாகங்கள் சீறிக்கொண்டு தடியையும் கொத்திக் கொண்டு கைப் பெருவிரலை உரோஞ்சிக் கொண்டு பாய்ந்தன. “சிவசிவா,” என்று கூறிக் கொண்டு நனைந்த உடுப்புடன் வெளியே ஓடாமல், கதவைச் சாத்தினேன். "ஐயோ கதவைத் திறவுங்கள்,” என்று வீட்டார் அழுதனர். கடவுளை மனதில் இருத்திக் கொண்டே இத்தனையையும் செய்தேன். தவறிய பாம்புகளையும் பிடித்துப் போத்தலில் விட்டு எல்லோரையும் பெரிய தகரம் ஒன்றில் போட்டேன். இவைகளைப் பிடிக்கும் போது தாய்ப்பாம்பு வந்து விடுமோ என்ற பயம் இருந்தது. இவ்வண்ணம் நடைபெறுகையில் அடியேனுடைய நாலு குழந்தைகளும் முறையே
90

ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு வயசுடையவர்கள், வீட்டுவிறாந்தையில் துயில்கிறார்கள். நேரமும் இரவு 3 மணியாய் விட்டது. இறைவனை நினைத்து நினைத்து உருகி உருகி அழுதவண்ணம் நித்திரையாய் விட்டேன்.
நாலரை மணியளவில் ஏதோ கையில் ஊர்ந்தது போல் இருந்தது, கையை உதறினேன். எழுந்தேன்: விளக்கைத் தூண்டினேன். தேவாரம் படித்தேன். அயலவர்களும் வந்து கூடினர். நிலமும் வெளித்துவிட்டது. விறாந்தையிலிருந்த பன்னாங்குத் தட்டியைத் தூக்கினார்கள். மேல் தட்டியில் ஒரு பாம்பு இருந்து பாய்ந்து கிடுகுக் கட்டுக்குள் புகுந்தது. அதையும் ஒருவாறு பிடித்து முன் விட்ட தகரத்திற்குள் விட்டு மூடினோம். பின்னரும் வீட்டிற்குள் பாம்புகள். அவற்றையும் பிடித்தோம். வீட்டின் பின்புறமாகச் சீமெந்து வெறும் பைகள் கிடந்தன. அவற்றுள் சில பாம்புகள் இருந்து படம் எடுத்தாடின. கணேசு என்பவரை ஒரு பாம்பு துரத்திற்று. அதனையும் பிடித்தோம். மண் வீடு. சுவரில் வெடிப்பு இருந்தது. அதனுள் ஒரு பாம்பு இருக்கக்கண்டு சுவரை உடைத்தார்கள். பாம்புகள் இருந்தன. அடியாமல் தடுத்தேன். என்னைப் பேசினார்கள். களைப்பால் அடிக்கடி தண்ணீர் பருகினேன். மறுநாளும் இரவாகிவிட்டது. அன்று முழுவதும் சாப்பாடின்றிக் கழித்தேன். பிடித்த பாம்புகளைக் காட்டிற் கொண்டுபோய்விட ஒரு காரை விடும்படி கேட்டேன், மறுத்து விட்டார்கள். கண்ணாடிப் பெட்டியை எனது சைக்கிளில் வைத்துக் கட்டினேன். என் மீது கருணை கொண்ட ஒரு ஆசிரியர் மாத்திரம் எனது கஷ்டங்களைக் கண்டு பக்க உதவியாக நின்றார். அவரும் இரவு ஒன்பது மணியளவில் என்னுடன் சைக்கிளில் காட்டுக்கு வந்தார். ‘நாலு ஐந்து மைல் தூரம் சென்று அராலிக் காட்டில் அவைகளைத் திறந்து போகுமாறு கூறினேன். அவை ஓடிவிட்டன. இரவு நேரம் பதினொரு மணி வீடு வந்து சேர்ந்தோம். அடுத்தநாள் என்
19

Page 108
குறையை யாருக்குச் சொல் வேனி என எணணிக் கொழும்புத்துறைக்குச் சென்றேன். V
கையில் ஓர் கையுறைப் பொருளையும் கொண்டு பிய. 3 மணிக்கு ஆச்சிரம வாயிலை அடைந்தேன். கண்ணிர் பெருக உள்ளம் உருக வாயிலில் நின்றேன். சுவாமி திருக்கரத்தால் இடம் காட்டப் போய் அமர்ந்தேன். “வீட்டுக்குள்ளே சர்ப்பங்கள் சுவாமீ" என்றதும் அழுகை மேலிட்டது. விம்மி விம்மி அழுதேன். சுவாமி கண்களை மூடியிருந்து படுக்கையில் இருந்தபடியே வலது திருக்கரத்தை உயர்த்தி நாலு விரல்களையும் மடக்கி, ஆள்காட்டிவிரலை மாத்திரம் வளைத்தபடி திருக்கணிகளை விழித்து, திருக்கரத்தை அங்குமிங்கும் அசைத்து “போ வெளியே, வெளிக்கிடு, வெளிக்கிடு, பொழுது பட முன்னர் போய்விடு, போய்விடு” என்று கூறி வடகிழக்கே பார்த்தபடி மீண்டும் “சேட்டை விடாதே வெளிக்கிடு இப்ப ரெலிபோன் பண்ணுவேன், இப்ப பிடித்து கொடுப் பேணி” என பெரும் சதி தம் போட்டுச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். கையும் ஆடினபடியே இருந்தது. “என்னைப் போல் நீ ஒருத்தன். உன்னைப்போல் நான் ஒருத்தன். சேட்டை விடாதே, வெளிக்கிடு. இப்ப பிடித்துக் கொடுப்பேன்." என்று எங்கேயோ பார்த்துக்கொண்டு சொன்னார். அவ் வேளையில், "நாம் எழும்பிக் கும்பிடுவோம் சுவாமிகள் ஏதும் சொல்வார்கள்,” என்ற நினைவுடன் எழும்பினேன். எழுந்து நிமிர முன் சுவாமிகள் என்னை இருக்குமாறு கூறி, "நான் அங்கே கதைத்துவிட்டு வருகிறேன்” எனக் கூற, மனத்தெம்புடன் இருந்தேன். பின்னர், “இத்தன் பிள்ளையார் கோயிலுக்குப் (வீட்டில் இருந்து 200 யார் தூரத்தில் இருக்கும்) போ போ” என்று உரத்துக் கூறினார்கள். கூறியவுடன், என் பக்கம் திரும்பி "பயப்படாதே, கொஞ்சம் பொறுத்திரு. சூரியனைக் கும்பிடு” என்றார் மனத்தினுள்ளே,
92

“பெருமானே! தேவரீர் அல்லால் தஞ்சம் இல்லை", என்றேன். சுவாமி அவர்களும் அப்போது, “உன்னை ஒன்றும், ஒன்றும் செய்யாது போ” என்றார். உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகப் புறப்பட்டேன். சுவாமிகள் மறுமுறையும், உரத்த குரலில் ‘போய்விடவேண்டும் போ, போ,’ என்றார். நாலு மணியளவில் வீட்டிற்குப் புறப்பட்டேன். ஆச்சிரமத்திற்கும் எனது புளியங்கூடல் வீட்டிற்கும் 18மைல் தூரம் இருக்கும். போகும் வழியில் எனது உறவினர் வந்து, “வேறு வீட்டில் குடியிருங்கள். அங்கு போக வேண்டாம்” என்றார்கள். திரு யோக குருபரன் திருவிளையாடலைக் கூறி இனிப் பாம்பு போய்விடும். அதிலிருந்து வேறு வீடு பார்ப்போம் என்றேன்.
“முன்னர் வீட்டிற்குள் இருந்த புற்றொன்றை மூடினேன் அல்லவா? மூடிய தகரம் விலக்கப்பட்டுக் கிடந்தது. என்ன செய்தி? என்று மனைவியைக் கேட்க, "நான் ஒன்றும் அறியேன். ஒருவரும் உள்ளே போகவில்லை,” என்றார். சுவாமிகள் “போ, போ,’ என்று சொன்னதும் மூடிய தகரம் விலகி மண்கட்டிகள் ஐந்து துண்டுகளாக வெடித்ததும் பாம்புகளும் வெளிக்கிட்டுப் போய்விட்டன, என உணர்ந்தேன். சுவாமிகள் சொற்படி அன்றுதொடக்கம் சிவபுராணம் படித்து வருகிறேன்.
ஐந்து ஆறு மாதங்களின் பின் குடும்ப சமேதராகச் சுவாமிகளிடம் சென்றோம். அங்கு சுவாமியைச் சுற்றி அரைவட்டமாக பலர் அமர்ந்து இருந்தனர், சுவாமியின் உத்தரவுடன் நாங்களும் அங்கு அமர்ந்தோம். சுவாமிகள் வரிசையாக ஒவ்வொருவராகச் சுட்டி 'நீ எந்த ஊர்?’ என்று வினாவிக்கொண்டு வந்தார். என்னையும் பார்த்து "நீ எந்த ஊர்? என்றார். “புளியங்கூடல்,” என்றேன். சிறிது நேரம் கழித்து, "நீ எந்த ஊர்?” என்று மறுமுறையும் கேட்டார். 'நாரந்தனை” என்று சொல்ல, "பாம்பு பிறகும் வந்ததா?” என்று
193

Page 109
கேட்டார். அடியேன், “வரவில்லை சுவாமி, வரவில்லை” என்றேன். பின்னர் மூன்றாம்முறையாக அடியேனை உற்று பார்த்து திருக்கரத்தை நீட்டி “நீ, நீ எந்த ஊர்?. "அடியேன் புளியங்கூடலும் அல்ல நாரந்தனையும் அல்ல நித்தியன் என்றேன்” சுவாமிகள் அடைந்த ஆனந்த பரவசநிலையை உணர்ந்தேன்.
வீடு செல்ல விடைதந்தார். வணங்கி விடைபெற்று வீடு சேர்ந்தோம். 1983ம் ஆண்டு நம்வினை வயத்தால் அவ்வீடு மாறி இப்போது வேறு வீட்டில் வசித்து வருகிறோம். குருபரன் இன்றும். தோன்றாத் துணையாய் இருந்து வருகிறார்.
வாழ்க குருபரன் வழிக திருவடி. வாழ்க
f52/65/76ooft f : S.K. L/7ové/77706ooflu/zó
ck k >k k >k k
சாங்காலம் வந்தால் திகைக்க வேண்டாம் வாங்கலாம் வாசியில் தூங்க வேண்டாம் பாங்காக வாழ விரும்ப வேண்டாம் வேங்ககைப் புலிவந்தா லோட வேண்டாம் ஆங்கென்றும் ஈங்கென்றும் அலைய வேண்டாம் போங்காலம் வந்தால் புலம்ப வேண்டாம்
நற்கிந்தனை.
194

சிந்தனைப் பெருக்கில் சிவயோக சுவாமிகள்
எனது சிறிய தாயார் திருமதி பூவதி இராசரத்தினம் ஆவார். யாழ்ப்பாணத்தில் மருதனாமடத்தை அடுத்த உடுவில் என்னும் கிராமத்தில் அம்பலவாணர் பொன்னம்பலம் அவர்கள் வாழ்ந்தார். அவர் பர்மா நாட்டில் பொறியியலானராகக் கடமையாற்றியபோது அவருக்கு வழங்கப்பட்ட கெளரவப் பட்டம் “றாவோ சாகிப்” அதனால் இவரை றாவோ சாகிப் பொன்னம்பலம் என அழைப்பர். இவரது புத்திரி பூவதி மிகவும் கெளரவமாகவே வளர்க்கப் பட்டார். இவர் 17.08.1902 ஆம் ஆண்டு பிறந்தவர். யாழ்ப்பாணத்தில் மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் கல்லூரி ஆரம்பித்த காலத்திலேயே கல்வி கற்கத் தொடங்கியவர். 1923ல் கேம்பிரிஜ் சீனியர் பரீட்சை சித்தியெய்தி அப்பாடசாலையிலேயே ஆசிரியராகவும் கடமையாற்றியவர். இவரைப் பற்றி அறிமுகப்படுத்த வேண்டிய காரணம் என்னவெனில் இவரே எனக்கு யோகசுவாமிகளது அற்புதங்களைப் பற்றிக் கூறியவர்.
சுவாமிகள் மருதனார்மடச் சந்தியில் வைரவகோயிலுக்கு முன்பாக இருந்த கடையொன்றிற்கு அடிக்கடி செல்பவர். ஆனால் எனது சிறிய தாயாரது இல்லமும் பக்கதில் இருந்தமையால் போலும் அவர் சுவாமிகளுடன் மிகவும் அன்புடன் பழக வாய்ப்பெய்தியது. எனது சிறிய தாயார் 1930ம் ஆண்டு திருமணம் செய்தார். இவருக்கு இரு ஆண்குழந்தைகள் பிறந்தனர். ஆனால் பெண்குழந்தை இல்லை என்ற பெரும் கவலை அவரது மனதை வாட்டிய வண்ணமிருந்தது. இக்காலத்தில் அவருக்குச் சுவாமிகளது தொடர்பு கிட்டியிருக்க வேணும். தனது வரலாற்றைக் கூறும் போது எனது சிறியதாயார் சுவாமிகளைப் பற்றி மிகவும் அற்புதமாகப் பேசுவார். அவரது உள்ளம் இரக்கமுடையது. தூய்மையானது.
195

Page 110
எப்பொழுதும் இதயம் பரிசுத்தமாய் இருக்க வேண்டும். எனத் தன்னுடன் பழகிவருபவர்களுக்கு அழுத்திக் கூறுவார்.
சுவாமிகளிடம் ஒரு முறை இவர் போயிருக்கிறார். அப்போது தனது மனதி திலிருந்த குறையைச் சுவாமிகளிடமி வெளிப்படுத்தியிருக்கிறார். இது கிட்டத்தட்ட 1940ம் ஆண்டளவிலாகும். சுவாமிகள் அவரைப் பார்த்து “ஏன் பெண்பிள்ளை இல்லையென்று கவலைப் படுகிறாய்? உனது குறை நல்லபடியாய்த் தீரும்” என்று சொன்னாராம். சிறியதாயார் மிகவும் மகிழ்ச்சியுற்றிருந்தார். சிலநாட்களின் பின்னர் எனது தாய் தந்தையர் இருவருமே நோய்வாய்ப் பட்டனர். இதனைக் கேள்வியுற்ற சிற்றன்னை என் பெற்றோரைப் பார்ப்பதற்குச் சென்றிருந்தார். சகோதரியைக் கண்டதும் மிக மகிழ்ச்சியுற்று, அவரை அருகில் அழைத்து சிறுமியாக இருந்த என்னை அவர் கையில் கொடுத்து என்னைப் பராமரிக்குமாறு வேண்டினார். சிற்றன்னைக்கு ஒரே சந்தோஷம். உடனேயே தனது சம்மதத்தைத் தெரிவித்து விட்டார். அன்றிலிருந்து நான் எனது சிறிய தாயாருடனேயே இருந்து வளர்ந்து வரலானேன். இக்காலத்தில் நான் கண்டுகொண்டதொன்று என்னவெனில் எனது சிறிய தாயார் யோகசுவாமிகள் மேல் மிகுந்த பக்தியும் மதிப்பும் கொண்டிருந்தமையாகும். அவரைக் கடவுள் போல் போற்றி வந்தார். அவருடைய அனுமதியின்றி எக்கருமத்தையும் செய்ய முற்பட மாட்டார். சுவாமிகளும் என் சிறியதாயார் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அப்பொழுது நான் எனது சிறிய தாயாருடன் கொழும்பு வீட்டில் 19, gவிக்கிரம றோட் (தற்போதய 1. B. C. றோட் ) வசித்து வந்தேன். சுவாமிகள் இங்கு வருகை தருவது வழக்கம். இதனால் சுவாமிகளைக் கண்டு பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இது திருவருட் பேறே எனக் கொண்டேன். இதனால் எனது ஈடுபாடுகளும் அதிகரித்தன.
196

இக்காலகட்டங்களில் தான் எனது சிறிய தாயார் சுவாமிகள் பற்றி வருவோருக்கு எடுத்துக் கூறுவார். அவர் கூறியவற்றிலிருந்து சில நினைவுத்துளிகளை இங்கு சமர்ப்பிக்கின்றேன். ஒரு தடவை தான் (எனது சிறிய தாயார்) சுவாமிகளின் பாதயாத்திரையில் கலந்து கொள்ளச் சென்ற பொழுது ஒரு தூக்குச் சட்டியில் சாதம் கொண்டு சென்றாராம். ஆச்சிரமத்தை அடைந்ததும் அங்கு பல பக்தர்கள் குழுமியிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அவ்வேளை சுவாமிகள் இவர் கொண்டு சென்ற சாதத்தை அங்கு கூடியிருந்த பக்தர் குழாத்துக்குப் பகிர்ந்து கொடுக்கும் படி கூறினார். அப்பொழுது இவர் சிறு பாத்திரத்தில் உள்ள சாதத்தை எப்படி இப் பெரும் குழாத்திற்குப் பங்குபோடுவது என்று எண்ணியவராய் நடுக்கமும் கொண்டு சுவாமிகள் கட்டளையை நிறைவேற்றும் நோக்குடன் பகிரத் தொடங்கினாராம். என்ன ஆச்சரியம் எடுக்க எடுக்கக் குறையாமலிருந்தது. பெரும் அதிசயமாயிற்று எல்லோரும் வியந்தனர்!
யாழ்ப்பாணத்தில் மழை இல்லாது பூமி வரண்டு போனது. இதைக் கண்ட சுன்னாகத்து மக்கள் சந்தைக்கு அருகாமையில் கூடி வழிபாடு ஆற்றிக் கொடும்பாவி கட்டி இழுத்து அக்காலத்து வழமையை நடத்தினர். அவ்வேளை யோகசுவாமிகள் அவ்வழி வந்துள்ளார். மக்கள் அவரைக் கண்டதும் அவரிடம் மிகவும் மனம் நொந்து தமது கவலையை வெளிப்படுத்தினர். சுவாமி தமது சடையை விரித்து ஒற்றைக் காலில் நின்று அம்பலக்கூத்தாடினாராம். தொடர்ந்து மழை கொட்டு கொட்டெனக் கொட்டியதைத் தான் கண்ணுற்றதாகக் கூறினார்.
ஒருநாள் பக்தர்கள் சுவாமியின் சிவதொண்டன் நிலையத்தில் சமையல் செய்துகொண்டிருந்தார்கள். சுவாமிகள் அங்கு வந்து சமைப்பது போதாதென்றும், மேலும் கூடுதலாகச் சமைக்கும் படியும்
197

Page 111
கட்டளையிட்டார். உணவு வீணாகப் போகப் போகிறதென அங்கிருந்தவர்கள் தமக்குள் பேசிக்கொண்டனர். உணவு உண்ண ஆரம்பிக்கும் வேளை கொழும்பிலிருந்து இரு பஸ்ஸில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முன்அறிவித்தல் ஏதுமின்றி அங்கு வந்து சேர்ந்தார்கள் சமையல் செய்தவர்கள் அசந்து போனார்கள்!
சுவாமிகள் தம்மிடம் ஆலோசனை கேட்கச்செல்வோருக்கு ஏற்றவாறு தகுந்த பதிலைக் கூறுவார். ஒருமுறை எனது சிறியதாயார் சுவாமியை அணுகித் தான் துறவறம் பூணப் பெரிதும் விரும்புவதாகக் கூறினார். அதற்குப் பதிலாகச் சுவாமிகள் கொடுத்த விடை “நீ எடுத்த காவடியை பக்குவமாய் ஆடிமுடித்து இறக்கிவை” என்பதாகும். இன்னொரு சந்தர்ப்பத்தில் “இனி உனக்குப் பிறவியில்லை அப்படிப் பிறந்தாலும் எனது தொண்டு செய்யவே வருவாய்” என்றாராம். எனது சிறியதாயார் துறவு மனப்பாங்குடன் தானதருமங்கள் பல ஆற்றி பூரண வாழ்வு வாழ்ந்து 21.12.1995 சிவபதம் அடைந்தார்.
நைந்து நைந்துருகி நமனை வெல்வார் சிவனடியார்கள்
நற்கிந்தனை
எமக்கும் சுவாமிகளுடன் தொடர்பு ஏற்பட்டதால் சில அனுபவங்கள் உண்டு. அவற்றையும் தருகிறேன். எனது கணவர் எம் விவாகத்திற்கு முன்னர் சுவாமிகளுடன் எத்தகைய தொடர்பும் இல்லாதவர். சுவாமி பணக்காரரை ஆதரிப்பவர் என்றும், தாம் விரும்பாதவர்களை கடும் வார்த்தைகளால் கண்டிப்பார் என்றும், தான் பலர் சொல்லக் கேள்விப் பட்டதாகக் கூறுவார்.
ஒரு நாள் எனது விருப்பத்திற்கிணங்கச் சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றோம். சுவாமிகள் எம்மை மிகவும் அன்பாகவும்
198

ஆதரவுடனும் வரவேற்று நிலத்தில் அமரும் படி கூறினார். பின்னர் அங்கிருந்த அடியார் ஒருவரைச் சிவபுராணம் படிக்கும் படி பணித்தார். அவர் பாடி முடிந்ததும் எனது கணவரை நோக்கித் 'தம்பி என்ன வேலை பார்க்கிறாய்?" என்ன சம்பளம் கிடைக்கிறது என்றெல்லாம் விசாரித்தார். இவற்றிற்குப் பதில் கொடுத்ததும் ‘நல்ல சம்பளம் நல்ல சம்பளம்” என்று சொன்னார். சுவாமிகள் இம்முதற் சந்திப்பில் இத்தகைய வினாக்களைக் கேட்டு இத்தகைய விடையையும் தந்து இருந்தால் வியப்பில்லை. ஆனால் அவர் நாம் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் இதே கேள்வியைக் கேட்டு அதே பதிலையும் தருவதுதான் பெரும் ஆச்சரியமாக இருந்தது. சுவாமிகள் அன்று எம்முடன் நடந்து கொண்ட முறையும், கலந்துரையாடலில் அவர் தேர்ந்து எடுத்துரைத்த வசனங்களும் எம்மைப் பெரிதும் ஈர்த்துவிட்டன. சுவாமிகளது எளிய கோலம், அவரது பாங்கு, அவர் பாவனை, அவர் உட்கொள்ளும் உணவு போன்றவற்றைக் கண்டதும், இவர் பணக்காரரை மாத்திரம் ஆதரிப்பவர் என்று மற்றவர்கள் கூறும் கூற்று ஏற்கக்கூடியதன்று, அதற்கு ஆதாரமில்லை என்று என் கணவர் ஏற்றுக்கொண்டார். அன்றுமுதல் யாழ்ப்பாணம் செல்லும் ஒவ்வொருதடவையும் நாம் சுவாமிகளைச் சந்திப்பது வழக்கமாகிவிட்டது.
இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் சுவாமி தேவார பாராயணம் எல்லாம் முடித்துக்கொண்ட பின்னர் “யேசு கிறிஸ்துவுக்குக் கோபம் வருவதுண்டு” என்றார். ஏன் இங்ங்ணம் கூறினார் என நான் சிந்தித்தேன். எனது கணவருக்குக் கோபம் வருகிறது. இதற்குச் சுவாமிகள் ஏதும் பரிகாரம் செய்யமாட்டாரோ என்று நான் எண்ணியபடி சென்றதற்கு விடை தந்துவிட்டார் என ஒருவர் இதற்கு விளக்கம் தந்தார்.
99

Page 112
1960 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வேலை சம்பந்தமாக நாம் யாழ்ப்பாணம் சென்றிருந்தோம். தேர்தல் வேலை முடிந்ததும் சுவாமிகளைச் சந்திக்கச் சென்றோம். அன்று எம்முடன் நன்றாகவே உரையாடினார். நாம் விடைபெற்று வாகனத்திற்குத் திரும்பும் வேளை அவரும் எம்முடன் வந்து வாகனத்தின் கதவையும் திறந்து எம்மையும் ஏறவிட்டு வாகனம் கிளம்பும் போது சொன்னார் “கல்லுக் கில்லு அடித்துக் கஷ்டம் கொடுக்கும் கவனமாக வாகனத்தைச் செலுத்தச் சொல்லவும்” அவர் சொற்படி நாம் மிகவும் அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்தினோம். நாம் சென்ற பாதை எமக்கு மிகவும் பழக்கமானதொன்று. அப்படி இருந்தும் அன்று நாம் திசைமாறிச் சிறிது தூரம் சென்றுவிட்டோம். அதன் பின்புதான் நாம் வழிமாறி வந்துவிட்டது விளங்கியது. அங்கு ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இடையன் மட்டுமே தென்பட்டான். அவனிடம் விசாரித்தபோது அப்பாதை பிழையானது என்றும் நாம் அவன் காட்டிய கற்பாறை வழி சென்றால் சரியான பாதைக்கு வந்துவிடலாம் என்றும் அறிந்தோம். அவன் காட்டிய அக் கற்பாறை வழி மிகவும் கவனமாகவே வண்டியைச் செலுத்தினோம். அப்படி இருந்தும் என்ன? ஒரு கல் பறந்து தாக்கிப் பெற்றோல் தாங்கியில் சிறிது துவாரத்தை ஏற்படுத்திவிட்டது. அதனூடாகப் பெற்றோல் கசிந்து வெளியேறி வாகனம் ஓடமுடியாத நிலைக்கு வந்துவிட்டது. கடவுள் கிருபையால் அவ்வேளை ஒருவர் வந்தார். அவரது உதவியுடன் நாம் பயணத்தைத் தொடரக்கூடியதாக இருந்தது.
சுவாமிகள் எம்முடன் வாழ்ந்த இறுதி நாட்களில் நோய்வாய்ப்பட்டிருந்தமையினால் அடிக்கடி வெளியே போவதை நிறுத்திக் கொண்டார். சுவாமிகள் இப்படி இருக்கும் போதும் கூட, சனங்கள் அவரைச் சும்மா இருக்க விடுகிறார்கள் இல்லை என்று எனது சிறிய தாயார் மனம் நொந்து கொள்வார். எனது
200

கணவருக்குச் சுவாமியைச் சந்தித்து அவருடன் பேசியும் அவர் மற்றவர்களுடன் உரையாடுவதைக் கேட்டுக்கொள்ளவும் பெரிதும் விருப்பமுற்றிருந்த போதிலும் எனது சிறிய தாயார் கூறியதைக் கேட்ட பின் சுவாமியைத் தரிசிக்கப் போவதில்லை.
ஒரு நாள் திரு. இராசரத்தினம் அவர்கள் காரில் வெளியே போகும் போது எனது கணவரையும் துணையாகக் கூட்டிச்சென்றார். அவர்கள் சண்டிலிப்பாயில் வசிக்கும் திருமதி. செல்வராஜா வீட்டிற்குச் சென்றிருந்த வேளை சுவாமிகள் கணக்காளர் சச்சிதானந்தம் அவர்களது வாகனத்தில் இருந்தபடியே எனது கணவரைப் பார்த்து “வாறியோ போவோம்” என்று கேட்டிருக்கிறார். எனது கணவர் இதைக் கேட்டுத் திகைத்துப் போனார். சுவாமிகள் இவருடன் பேசுவதை நிறுத்தி விட்டு திருமதி செல்வராஜா அவர்களுடன் பேச்சைத் தொடர்ந்தார். அவ்வேளை சுவாமிகளது கண்களுக்குப் படாதபடி என் கணவர் தன் பர்ஸில் பணமிருக்கிறதா என்று தன் கையை விட்டுப் பார்த்திருக்கிறார். சற்று நேரத்தின் பின் சுவாமிகள் எனது கணவர் பக்கம் திரும்பி “என்ன சொல்லுகிறீர் தம்பி” என்று கேட்டாராம். அதற்கு என் கணவர் ‘ஆம் சுவாமி எனப் பதிலளிக்கவும் சுவாமிகள் "இஞ்சாய்! நீ அதை இதைக் கொண்டு வரலாம் என்று நினைக்காதே! வருகில் எல்லாவற்றையும் விட்டு விட்டு வா’ என்று கூறினாராம். இவையே என் சிந்தனைப் பெருக்கில் சிவயோகசுவாமிகளின் நினைவுகள்.
திருமதி மகாதேவி மகாலிங்கம்
米米米米米米
உன்னை முழுவதும் ஒப்புக் கொடுத்தால் அன்னையைப் போலே யாதரிப் பாரே
W நற்கிந்தனை
201

Page 113
யோகசுவாமிகளின் திருமுறைப் பற்று
சைவ சமயிகளாகிய எமக்கு நிலைக் களனாக விளங்குபவைகள் பன்னிரு திருமுறைகள். எமது முன்னோர்கள் அவற்றைத் தமதுயிரினும் பார்க்கப் போற்றிப் பூசித்து வந்தார்கள். நான்கு வேதங்களின் சாரமே நமது மூவர் பாடிய தேவாரம். திருவாசகத்திற்கு ஒப்பான சைவநுால், பக்தி நூல், அனுபவ நூல், ஞான நூல் இவ்வுலகெங்கணும் தேடினாலும் கிடைப்பதரிது.
"திருமுறை திருவருட் கடலில் முழ்கி எடுக்கப்பெற்ற நன்முத்துக்கள். மக்கள் அனைவரும் பிறவிக் கடலைக் கடந்து திருவடிக் கரையை எய்துதற்குக் கிடைத்த இன்பத் தோணி யாமெல்லாம் நுகர்ந்து உணர்வைப் பெருக்கி, உயிரை மீடேற்றிக் கொள்ளும் வண்ணம் கிடைத்த இசைத்தேன் கலந்த இனிய சிவ அமுதம்; என்றென்றும் இன்ப நிலையில் இருத்தும் ஈடற்ற குளிகை; வாய்க் கொண்டாலும், செவிக் கொண்டாலும், சிந்தையிற் புகுந்து மும்மல நோயை முழுவதும் வாட்டி இருமையும் இன்பமளிக்கும் மருந்து” என்று திருவாவடுதுறை ஆதீனத்தின் இருபத்தோராவது குருமகா சந்நிதானம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். எங்கள் ஆறுமுகநாவலர் பெருமான், சிதம்பர கூேஷத்திரத்தில் வசித்த காலத்தில், திருமுறைகளுக்கு உரிய இடத்தை வழங்காத, அவர் காலத்தில் வாழ்ந்த தில்லைவாழந்தணர்களை அஞ்சாது கண்டித்தார்.
ஈழமணித் திருநாடு செய்த தவத்தின் பயனாய், ஞானக் கொழுந்தாய், திசைகாட்டும் கருவியாய், கருணையங்கடலாய், எம்மனோரையெல்லாம் ஆட்கொள்ளும் பொருட்டு மானுடச் சட்டை சாத்திவந்த அருட் குருவாகிய யோக சுவாமிகளுக்குத் திருமுறைகளிலுள்ள ஆர்வமும், பற்றும் பேரன்பும் அளவிடற்
202

கரியன, அவர் தம்மை அண்டினோரையெல்லாம் திருமுறைகளைப் பக்தி சிரத்தையுடன் ஒதுமாறு அருளுரை வழங்குவார். தாமே அவற்றை நெஞ்சமுருகி ஒதுவார். தம்முடைய சீடர்கள் ஒதக்கேட்டு உள்ளம் பூரிப்பார். அப்படி ஒதுகின்றவர்களைத் தமது அருட்கண்ணால் நோக்குவார்.
எங்கள் சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடல்களில் திருமுறைகளின் சொற்றொடர்கள், திருமுறைக் கருத்துக்கள் நன்கு பரவியிருக்கின்றன. திருமுறையின் கருவூலத்தையே சுவாமிகள் எமக்குக் குழைத்து ஊட்டுகின்றார். சுருங்கக் கூறின் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய நற்சிந்தனைப் பாடல்கள் திருமுறைகளின் பெருமையை எம் மனோருக்கு உணர்த்தவே பாடப்பட்டவைகள்.
யோக சுவாமிகளின் ஊனிலும், உயிரிலும், உள்ளத்திலும், திருமுறைக் கருத்துக்கள் நன்றாக ஊறிப் பொங்கித் ததும்பிப் பெருக்கெடுத்தோடுகின்றன. தாயுமான சுவாமிகள், திருமூலர், பட்டினத்தார், குமரகுருபர அடிகள், சிவப்பிரகாச சுவாமிகள், மெய்கணிடதேவர், அருணந்தி சிவாச்சாரியார் முதலிய ஆகமவிற்பன்னர்கள், சைவச்சான்றோர்களின் கருத்துக்கள், சொற்றொடர்கள் சுவாமிகளின் நற்சிந்தனைப் பாடல்களில் துறுமி மிளிர்வதைக் காணலாம். திருமுறையின் வடிவமே சிவயோக சுவாமிகள்.
அருள் தியாகராசா
நன்றி மலர் - 36 சிறப்பிதழ் 567 யோகசுவாமிகளின் பிறந்ததின நூற்றாண்டு விழா மலர் சிவ தொணடன் நிலையம் 1972
203

Page 114
பன்னிரு திருமுறை பாரெல்லாம் பரவட்டும்
சீர்பெருகு பன்னிருமுறை சிவம்பெருகிப் பெருகட்டும் பார் முழுதும் பரவட்டும் பஞ்சமெலாம் ஒழியட்டும் ஊருலகு உணரட்டும் உள்ளமெலாம் இணையட்டும் பேர்பெருகு பேரின்பம் பெருஞ்சோதி பெருகட்டும்.
ஞானகுரு பரம்பரையின் நற்கொடையே திருமுறைகள் ஞானகுரு பரம்பரையின் நல்லுரையே திருமுறைகள் ஞானகுரு பரம்பரையின் நல்லரனே திருமுறைகள் ஞானகுரு பரம்பரையின் நல்லருளே திருமுறைகள்
நற்றமிழர் நலம்பெருக்கும் நற்றவமே திருமுறைகள் நற்றமிழர் துயர்தீர்க்கும் நண்மருந்தே திருமுறைகள் நற்றமிழர் நலன்பெருக்கும் நல்லுணர்வே திருமுறைகள் நற்றமிழர் நனியுயர நல்கிடுமே திருமுறைகள்
திருமுறைகள் ஒதாத நாவென்ன நாவே திருமுறைகள் கேளாத செவியென்ன செவியே திருமுறைகள் உறையாத நெஞ்சென்ன நெஞ்சே திருமுறைகள் இல்லாத இல்லெண்ண இல்லே
திருமுறைச் செல்வங்கள் திக்கெல்லாம் திகழட்டும் திருமுறைச் செல்வங்கள் திக்கெல்லாம் திரியட்டும் திருமுறை ஓதம் பரம்பரை பெருகட்டும் திமுறைத் தென்றல் பிரபஞ்சமெங்கனும் வீசட்டும்
ஊனுருகி உணர்வுருகி உள்ளமெலாம் ஒன்றுபட நானுருகி நானழிந்து நான்மறைகள் நலந்திகழத்
தேனூறல் தினம் பெருகித் தெள்ளமுதம் திரண்டுவர தானூன்றித் தானாகத் தகைமை தரும் திருமுறைகள்
செல்வம் கல்யாணசுந்தரம்
25-2-1997
204

எணர்ணுவார் நெஞ்சில் நணர்ணுவான் ஈசன்
எங்கள் குருநாதரைச் சுமார் 1946ம் வருடம் நான் வட மத்திய மாகாணம் கெக்கிராவை என்ற ஊரில் கண்டது. கெக்கிராவையில் அக்காலம் பல வடமாகாணத்துத் தமிழ் மக்கள் பெரிய, சிறிய கடைகள் வைத்துச் சிறப்பாக இருந்த காலமது. யோக சுவாமியார் ஒரு காமாட் பேர்ஜோ காரில் யாழ்ப்பாணமிருந்து மாத்தளை போகும் வழியில் எமது பெற்றோல் கூட்டுத்தாபன நிலையத்தில் காரை விட்டு இறங்கினார். வெள்ளை நலமுண்டு நாலுமுழ வேட்டி சால்வை, வெண்தலையும் தாடியும் என்னை அவர்பால் ஈர்த்தது. உடனே புறப்பட்டு விட்டார். அக்காட்சி என் மனத்தைவிட்டு அகலவில்லை. பின்பு பல வருடம் கழித்து சுவாமிகளை நேரில் கொழும்புத்துறையில் கண்டேன் அவர் திருப்பாதம். “திருவாசம், சிவபுராணம்’ பல சிறு பிள்ளைகளையும் கூட்டி வீட்டில் அருச்சினை, பால், பழம் வைத்து எமக்கு ஒதி உபதேசித்தார். அன்று ஒதியருளியது தான் என் ஆன்மீகக் கருவூலமாகியது.
பின்பு பலகாலம் சுவாமிகளின் சிவ தொண்டன் நிலையம், மட்டக்களப்பு சிவ தொண்டன் நிலையம், நல்லூர் தேர்முட்டிப் பிரார்த்தனை, கல்வயல் சங்கீத பூஷணம் சி. வி. மட்டுவில் திருவாளர்கள் கைலாசபிள்ளை, கணபதிப்பிள்ளை என்னும் பல தொண்டருடனும் பாத யாத்திரை செய்தோம். அண்மையில் ஆத்மசாந்தி பெற்ற 'ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள் தலைமையில் தென்மராட்சி தெய்வீக மன்ற மூலமும், நல்லூர் தேரடிப் பிரார்த்தனை செய்துள்ளோம். ஊரிக்காட்டு பண்ணிசை மணி நடராசா குழுவுடனும் சேர்ந்து, தேர்முட்டி வில்வத் தலத்து நற்சிந்தனை ஒதியதும் குறிப்பிடத் தக்கது.
205

Page 115
தொடர்ந்து கைதடி சுவாமிகளின் ஆச்சிரமத்தில் மார்க்கண்டு சுவாமிகளையும் தரிசித்து அவர்களின் திருமுறை, நற்சிந்தனை உபதேசங்களையும் பெறக் கிடைத்தது. காவாய் பூரீ சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளையும் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தரிசிக்கச் செய்ததும் சுவாமிகளின் அருள். இந்த நாட்டிலும் சிவ தொண்டன் நிலையம் நிலைபெற எல்லாம் வல்ல இறைவனை
வேண்டுகிறேன்.
கு, வி மகாலிங்கம்
நன்றி.
சிவயோக மலர் யூரீ சிவயோக சுவாமிகள் 125வது ஜெயந்தி விழா சிவதொண்டன் நிலையம் - கனடா - 1997
米米米米米米
சைவத்தில் எல்லாவிதமான வழிபாடுகளுக்கும்
இடமுண்டு ஒவ்வொரு ஆத்மாவும் தனது இயல்புக்கேற்றபடி வழிபாடு செய்யலாம்.
சுவாமிகள் அருள் மொழி

என் மனக்கோயிலில் யோகசுவாமிகள்
1926ம் ஆண்டளவில் நான் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில் யோகசுவாமியைப் பற்றி அறிந்தேன். அவரைத்தரிசிக்க வேண்டுமென ஆவல் கொண்டேன்.
ஒருநாள் வண்ணார்பண்ணையில் இருந்த பூரீலங்கா புத்தகசாலைக்கு நான் என் நண்பன் கதிரிப்பாய் இராசரத்தினத்தோடு சென்றிருந்தபோது, கடைவிறாந்தையில் சுவாமி ஒருபக்கம் வாங்கிலும், எதிர்ப்பக்கம் M.S. இளையதம்பி, T.M.சுப்பையா, ஐயம்பிள்ளை உடையார் ஆகியோரும் கதைத்துக் கொண்டிருந்தனர். அப்போது எனக்கு இவர்தான் யோகசுவாமி எனத் தெரியாது. நண்பர் யோகசுவாமி என்பது தெரிந்து உள்ளே வராது வெளியே நின்றுவிட்டார். நான் பாத அணியோடு உள்ளிட்டுவிட்டேன். உள்ளே சென்றதும் நெஞ்சு படபட என அடித்துக் கொண்டது. இவர்தான் யோகசுவாமியோ என்று நினைத்துக் கொண்டேன். செருப்போடு வந்துவிட்டேனே என்று கவலைப்பட்டேன். செருப்பைக் கழற்றி விட்டுத்திரும்பவும் மனம் இடந்தரவில்லை. வெளியே வந்தேன். வெளியில் நின்றிருந்த நண்பர் இராசரத்தினம் "இவர்தான் யோகசுவாமி” என்றார். நான் திரும்பிப் பார்த்தேன் சுவாமியும் திரும்பிப் பார்த்துத் தலையாட்டினார்.
அன்று முதல் யோகசுவாமியைத் தரிசிக்க வேண்டுமென்ற எண்ணம் தீவிரமடையப் பித்துப் பிடித்த நிலையில் இருந்தேன் என்றே கூறலாம். வெள்ளிக்கிழமை தோறும் இரவு வேளையில் புத்தகசாலையில் புத்துவாட்டி இரத்தினம் என்ற கலைஞரின் பிள்ளைகளும் வேறு பலரும் சேர்ந்து கூட்டுப்பிரார்த்தனை நடத்துவது வழக்கம். ஒரு வெள்ளிக்கிழமை நானும் என் நண்பனும் அங்கு போனோம். நூறு, நூற்றைம்பது பேரளவில் மக்கள் கூட்டம்
207

Page 116
வெளியே நின்றது. நாங்களும் வெளியே நின்றோம். வெளியே நின்றவாறு யோகசுவாமியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். திடீரெனச் சுவாமி என் முன்னே வந்து முகத்துக்கு நேரே “நீ யார்?’ எனக் கேட்டார்.
நான் பீதியோடு, மயிர்க்கூச்செறிய ராஜசேகரம் எனப் பதிலளித்தேன். சுவாமி இருந்த இடத்திற்குப் போய்விட்டார். சிறிது நேரத்தின் பின் இரண்டாவது தடவையும் என் முன்னே வந்து "நீ யார்? என்ன ஒவ்வொரு மாதிரியாகக் காட்சியளிக்கிறாய்?" எனக் கேட்டுவிட்டுச் சென்றார். இதன் பின்னர் யோக சுவாமிகளின் மீது எனக்கிருந்த பற்றுமேலும் தீவிரமாகியது.
வெள்ளிக்கிழமை தோறும் கூட்டுப்பிரார்த்தனைக்குத் தொடர்ந்து நான்கு, ஐந்து, தடவைகள் சென்றேன். பிராத்தனை முடிவில் போய்வரும்படி ஒவ்வொருவருக்கும் யோகசுவாமி விடை கொடுப்பார். பலதடவை தொடர்ந்து சென்றும் எனக்குப் போய்வரும்படி கூறவில்லை. ஆகவே ஒருமுறை சுவாமி என்னைப் போய்வா எனச் சொல்லும் வரை போகாமல் நிற்பது எனத்தீர்மானித்தேன். பிரார்த்தனை முடிந்தது, கூட்டம் கலையத் தொடங்கியது. சுவாமியும் எழுந்து சென்றார். வைத்தியர் முத்துக்குமார் வீட்டிற்குத்தான் யோகசுவாமி போவது வழக்கம், நானும் அவரைப் பின்தொடர்ந்தேன். பதினைந்து இருபது யார்வரை போனதும் சுவாமி என்னைத் திரும்பிப் பார்த்து “உன்னைப் போகச் சொல்லஇல்லை என என்பின் வருகிறாயா? சரி போய் வா” என்றார், நானும் மனநிறைவோடு சென்றேன்.
இதன் பின் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு என்று சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் கொழும்புத்துறை ஆச்சிரமத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டேன். இராசரத்தினம், சதாசிவம்
208

போன்ற நண்பர்களுடனேயே செல்வேன். போகும்போது பழங்களும் கொண்டு செல்வோம். திருநாவுக்கரசு என்பவர் வீட்டில் ஒரு சிறுபகுதியை ஆச்சிரமமாக்கி யோகசுவாமி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். ஒருபலகை மேற் துணி விரிப்பு இதுவே அவரது படுக்கை. அதில் சிலசமயம் தலையணை இருக்கும், சிலசமயம் இருக்காது. சுவாமி முன்னிலையில் ஐந்து அல்லது ஆறு பேர் இருப்போம். ஒவ்வொருவரும் வெவ்வேறு சிந்தனையில் இருப்போம். சுவாமி சொல்லும் ஒரு மறுமொழியே எல்லோருக்கும் பொருந்தி அமையும். இது எனக்கு ஆச்சரியத்தை விளைவிக்கும். ஒரு தடவை எனது உறவினர் ஒருவர் தானும் யோகசுவாமியைப் பார்க்க வேண்டுமெனக் கூறி என்னோடு வந்தார். அவர் உள்ளிட்டதும் சுவாமி அவரை ஏசி வெளியே அனுப்பி விட்டார். பின்னர் அவர் தான் சாத்திரம் கேட்டுச் சுவாமியைச் சோதிக்க வந்ததாக என்னிடம் கூறினார். திருநாவுக்கரசுவின் பிள்ளைகள் பாடல்கள் பாடும் போது சிலசமயம் சுவாமியின் மடியிலும் இருந்து பாடுவதுண்டு.
பல தடவைகள் சுவாமியைப் பார்க்க வேண்டும் என நினைத்துப் போனால் சுவாமி ஆச்சிரமத்தில் இருக்கமாட்டார். அவர் என்னைப் பார்க்க நினைத்தால் நான் போவது போல “என்ன, நான் நினைக்க, நீ வந்து விட்டாய்” எனக் கேட்பர். 1926ம் தொடக்கம் 1933 வரை நான் தொடர்ந்து சுவாமியைத் தரிசித்து வந்தேன்.
1933ம் ஆண்டு நான் மணம் முடிக்கப் போகும் செய்தியைச் சுவாமியிடம் கூறியபோது பழமும் தந்து ஆசீர்வாதமும் அளித்தார். மணமானபின் நான் என் மனைவியையும் அழைத்துச் செல்வதை வழக்கத்திற் கொண்டேன். வருடங்கள் மூன்று உருண்டோடின.
ஆனால் எங்களுக்குக் குழந்தைப் பேறு கிட்டவில்லை. மனத்திற்
209

Page 117
கவலையோடு யோகசுவாமிகளிடம் போய் வந்தோம். ஒருநாள் அவரது ஆச்சிரமத்தில் “உன் பிள்ளைக்குப் பெயர் வைக்கிறேன்” எனக் கூறி “வடிவேற்கரசன்” எனப் பெயர் சூட்டினார். இதன் பின் என் மனைவி கர்ப்பவதியானாள். 1937ம் ஆண்டு எமக்குப் பிறந்த ஆண்குழந்கைக்கு வடிவேற்கரசன் எனச் சுவாமி கூறிய பெயரையே சூட்டினோம். இன்று அவர் இலங்கை மட்டுமல்ல இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளோடு வர்த்தகத் தொடர்பு கொண்ட பெருவணிகராக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
சில சமயங்களில் நான் காரில் செல்லும்போது சுவாமி எதிர்ப்பட்டால் வாகனத்தை நிறுத்தி ஏறும்படி கேட்பேன். சுவாமி ஏறிக்கொள்ளமாட்டார். அநேகமாக யோகசுவாமி பூநகரியிலும் அல்லது அரியாலையில் SRகந்தையா வீட்டிலுமே இருப்பார். அரியாலைக்குச் சிங்கள அடியார்கள் கூட வருவது வழக்கத்தில் இருந்தது. சுவாமி தன்னைக் காணவரும் சன நெரிசலைக் குறைக்கவே இவ்வாறு செய்தாரெனினும், இங்கும் நெரிசல் அதிகமாகவே இருந்தது.
எனது குழந்தைகள் வளர்ந்ததும் அவர்களையும் அழைத்துக் கொண்டு கொழும்புத்துறைக்குச் செல்லுவேன். கனகேஸ்வரி, பயோதரி ஆகிய இருவரையும் சுவாமி "உன்னைத் துதிக்க அருள் தா, இன்னிசையுடன், உன்னைத் துதிக்க அருள் தா” என்ற பாடலையும், “எங்கே தேடுகின்றாய்” என்ற பாடலையும் பாடும் படி கேட்பார். இருவரும் பாடுவார்கள்.
ஒருநாள் வண்ணார்பண்ணை பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோயிலடியில் சுவாமி எதிர்ப்பட்டு என் காரை மறித்து, கலைப்புலவர் நவரத்தினத்தின் வீட்டில் ஜேர்மன் சுவாமி கெளிபாலா நிற்பதாகவும், அவரை Dr.இராமநாதன் வீட்டில் காரில் கொண்டுபோய் விடும்படியும் கூறினார். நான் அவ்வாறே செய்தேன். ஜேர்மன் சுவாமியும் மிகச் சந்தோஷம் அடைந்தார்.
210

ஒரு கால -டத்தில் எனக்கும் எங்களூரில் வாழ்ந்த ஹிட்லர் கந்தசாமி என்பருக்கும் வழக்கு நடந்து கொண்டிருந்தது. காரை நிறுத்தி ஏறும்படி கேட்டால் ஏறாத யோகசுவாமி ஒருநாள் என் காரை மறித்து நல்லுாரடியில் ஏறிக் கொண்டார். பின் என்னிடம், “சில நாட்களுக்கு முன் ஹிட்லர் கந்தசாமி என்னை வில்லங்கமாகத் தனது காரில் ஏறச் சொல்ல, நான் ஏறிவிட்டேன். அதனாலேதான் நான் இன்றைக்கு உன் காரில் ஏறினேன்” என்றார். எனக்கு விடயம் விளங்கி விட்டது. ஹிட்லர் கந்தசாமி, யோகசுவாமி தன்காரில் ஏறினால் என்னோடு ஆடிய வழக்கு வெல்லும் என நினைத்திருப்பார் போலும். ஆனால் வழக்கு தள்ளுபடியாகி விட்டது. யோகசுவாமி தன் பக்தர்களில் அருட்கடைக்கண் சாத்தினார் எனலாம்.
இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத் மகாராணிக்கும் முடிபுனை விழா நடைபெற இருந்தசமயம், அதற்குச் சமுகம் அளிக்க (speaker) சபாநாயகர் துரைசாமி சென்றிருந்தார். அவர் கப்பலில் பிரய்ாணம் செய்த சமயம், சுவாமி நான் துரைசாமியைச் சந்தித்துப் பேசி விட்டு வந்தேன்” என்று என்னிடம் கூறினார். பல இடங்களில் சுவாமி தோற்றுவர் என்பது என் நினைவுக்கு வந்தது.
சுவாமியின் அந்திம காலம் நெருங்கிக் கொண்டிருந்த காலத்தில், ஒரு நாட்கனவில் சுவாமி தோன்றி ‘யாத்திரை போவோம் வருகிறாயா? என்று கேட்டார். நானும் சரி என்று கூறினேன். வைத்தீசுவரன் வித்தியாலம் போல் இருக்கிறது. பின் அதுவும் இல்லை. செல்வச்சன்னிதியாகவுள்ளது, வள்ளியம்மன் வாசலில் நின்று அபிடேகம் செய்யும்படி கூற அபிடேகம் செய்கிறோம். பின் நான் பிள்ளைகளோடு கோயிலினுட் சென்றுவிட்டேன். பின் காலி நகரம் போலத் தெரிகிறது. நீண்ட பந்தலின் கீழ் இயமதர்மராஜாவின் துாதுவர் போன்ற தோற்றத்தோடு அரக்கன் போன்றோர் காணப்படுகிறார்கள். பிறை போலக் கடைவாய்பற்கள் நீட்டிக்
211

Page 118
கொண்டிருக்கின்றன. என்னைப் பார்த்து தெமிழா தெமிழா எனக் கேட்கிறார்கள் கனவு முடிந்தது. யாழ்ப்பாணக் கச்சேரிக்கு முன் சத்தியாக்கிரகம் நடந்தகாலம். தமிழருக்கு என்ன கஷ்டமோ என எண்ணினேன். வீட்டிலிருந்து புறப்பட்டுக் கடைக்குச் சென்றேன். யோகசுவாமி சமாதி அடைந்த செய்தி கேள்விப்பட்டுத் துயருற்றேன்.
கொழும்புத்துறையில் பெரிய பந்தல் புனைந்து இறுதிக் கிரியைகளை நடத்தித் துண்டி மயானத்தில் தகனக் கிரியைகள் செய்தனர். நானும் இத்துயரிலும், கிரியைகளிலும் பங்குகொண்டேன். இத்தோடு சுவாமியினுடைய தொடர்பு முடிந்து விடவில்லை.
சுவாமியின் அஸ்தி பிரதிஷ்டைக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன் கனவு கணிடேன். கொழும்புத்துறை போயிருக்கிறேன். K.நவரத்தினம், நான், இன்னும் பலர் இருந்தோம். பெருமழை பெய்து வெள்ளம் ஒடுதிறது. வெள்ளத்தைத் திருநீற்றால் நவரத்தினம் அடைக்கிறார். நான் அழுத வண்ணம் நிற்கிறேன். நவரத்தினம் என்னை அழவேண்டாமெனக் கூறி, அவியல் நடை பெறுமிடத்திற்குச் சென்று உதவுமாறு கூறினார். பின் ஒரு திருநீற்று மூட்டையைத் தந்து, இதனை மானிப்பாய் சிறீகாந்தா பிரசங்கம் செய்யும் இடத்தில்கொடு என்றார். நான் திருநாவுக்கரசுவிடம் இக் கனவைக் கூறினேன். “வீயூதி தேவைப்படும் போலிருக்கிறது” எனத் திருநாவுக்கரசு விடை கூறினர். விபூதி எங்கேயும் கிடைப்பதாயில்லை. வவுனியா G.A ஆக இருந்த சிவஞானத்திடம் கூறினேன். பழனித்திருநீறு விற்கும் கடையில் ஒரே ஒரு மூடை இருந்ததாக அறிந்து வாங்கி அனுப்பினேன்.
சுவாமியின் அஸ்தி பிரதிஷ்டை அன்று எல்லோரும் அஸ்திப் பேழை வைத்த இடத்தில் விபூதியிட்டு வணங்கி வருகிறார்கள், மன வேதனையோடு கடைசியில் நானும் போனேன். நான் கனவிற்
212

கண்டபடி வீபூதிச் சாக்கு ஒருபுறம் கிடக்கக் கண்டேன். அஸ்திப் பேழைக்கருகில் பெட்டியில் வீயூதி. கனவைச்சிந்தித்தேன். கண்ணீர்வந்தது. நானும் அஸ்திப் பேழைக்கு வீயூதி இட்டு அஞ்சலிசெய்து மீண்டேன்.
கிழக்கிலங்கையில் செங்கலடியில் பிரபு சோல்பெரியின் மைந்தனான சாந்தாசுவாமி யின் நிர்வாகத்திலிருந்த காணியில் சிவதொண்டன் நிலையம் ஸ்தாபிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கும், திறப்புவிழாவிற்கும் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கேற்பட்டது.
வண்ணார்பண்ணைச் சிவதொண்டன் நிலையத்தில் யோகசுவாமிக்கு வெண்கலச்சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மாதத்தின் முதல் ஞாயிறு அன்று முன்னூறுக்கும் குறையாது ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நல்லூர்த் தேரடியிலும் மகேஸ்வர பூசை நடைபெறுகிறது.
யாழ்ப்பாணத்தில் கைதடியில் சுவாமி பாதயாத்திரை ஒன்றையும் நடத்திவைத்தார். "சைவசித்தாந்தம் இங்கிலாந்தில் பேச வேணி டியது” எனக் கூறி கணக்காளர் சச்சிதானந்தம், Dr.கனகரத்தினம், Kநவரத்தினம் திருமதி இரத்தினம்மா நவரத்தினம் ஆகியோரைச் சுவாமி அனுப்பிவைத்தார். இவர்கள் மலேசியா, சிங்கப்பூர், லண்டன் ஆகிய இடங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றி மீண்டனர். ஹாவாய் சுப்பிரமுனிய சுவாமிகளும் யோகசுவாமியிடம் தீட்சை பெற்றவரேயாவர்.
இரு மாதங்களுக்குமுன் கண்ட கனவில், ஆயிலியப் பூசையன்று சிவதொண்டன் நிலையத்திற்கு நான் போக முடியவில்லை. கனவிலே சுவாமி மெலிந்து காணப்பட்டார்.
213

Page 119
கற்குழிகள், மாடு, தண்ணீர் என்பன காணப்படுகின்றன, மாட்டுக்கு தண்ணிர் கொடு என்ற நோக்கம் புலப்புடுகிறது, சுவாமி வடி! வடி என இருதடவை அழைத்தார். இருதயநோய்ச் சிகிச்சைக்காக எனது மகன் வடிவேற்கரசன் ஒருமுறை நவலோக வைத்தியசாலைக்கும் அடுத்து அப்பலோ சென்னைக்கும் போய்த்திரும்பியுள்ளார்.
என் குடும்பத்திற்கு விளக்காக விளங்கிய யோசசுவாமிகள் இன்று உலகத்தின் விளக்காக ஆன்மீக ஒளிபரப்புகிறார் என்பதில் ஐயமில்லை.
வீரகத்திப்பிள்ளை இராஜசேகரம்
பிரதியாக்கம் சந்தனா நல்லவிங்கம்
米米米米米米
மனம் இறக்கிறதில்லை. ஆன்மாவில் ஒடுங்குகிறது.
சுவாமிகள் அருள் மொழி
214

சுவாமிகளைப் பற்றிய தொடர்பு
இளமைப் பிராயத்தில் படித்துத் கொண்டு இருக்கும் வேளையில் யோகசுவாமி என்னும் நாமம் பூண்ட ஒருவர் சுன்னாகம் செல்லாச்சி அம்மாவின் இல்லத்திற்கு வழமையாக வருகிறவர் என்று கேள்விப்ட்டேன். அவரைக் காண ஆசை கொண்டு செல்லாச்சி அம்மாவின் இல்லத்திற்கு ஒரு நாள் சென்றேன். அப்போது சுவாமிகள் வடக்கு முகமாக இருந்து கண்மூடித் தியானத்தில் இருப்பதையும் பல ஆண், பெண்கள் செல்லாச்சிஅம்மாவை, வழிபட்டு அவவிடம் திருநீறு முதலியன பெறுவதையும் கண்டேன். அங்கு சில நிமிடங்கள் தங்கி இருந்து வீடு திரும்பினேன்.
நமது தகப்பனார் சுவாமிகளுடன் நெருங்கிய பழக்கமும் அன்பும் விசுவாசமும் உடையவராக அவருடைய கதையிலிருந்து தோற்றியது. சாயந்தரங்களில் 4மணி அளவில் சுவாமி அவர்கள் செல்லாச்சி அம்மாவின் வீட்டை விட்டுத் தமது ஆச்சிரமத்தக்குச் செல்லும் வழக்கத்தை அறிந்த நமது தகப்பனார் அவரைக் சுன்னாகத்துச் சந்தைக்கு அருகாமையில் சந்திப்பார். இருவரும் சந்தைக்குக் கிழக்குப் பக்கமாக உள்ள மதவு ஒன்றில் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்தக் காலத்தில் முதலாவது உலகப்பேர் நடந்துகொண்டிருந்தது. அப்பொழுது சுவாமிகள் நமது தகப்பனாரைப் பார்த்து "ஒய் சித்தியாரே யேர்மன்காரர் பெல்ஜியத்திற்குள் புகுந்து (Antwerb) அன்ற்வேப் கோட்டையில் குண்டுமாரி பொழிவது உனக்குத் தெரியவில்லையா? எவ்வளவு கொடுரம்.” இதைக் கேட்டதும் தகப்பனார் திகைத்தார். யாருக்கு வெற்றி என்று தகப்பனர் கேட்டபொழுது வெள்ளைக்காரருக்கே இறுதி வெற்றி என்று சுவாமி பதில் அளித்தார்.
இருவரும் நாள்தோறும் சாயந்தர நேரத்தில் சமயத்தைப்
பற்றியும் சிவஞான சித்தியாரிலுள்ள விடயங்களைப் பற்றியும் பேசுவதுண்டு. தகப்பனார் வீட்டிற்கு வரும்படியாக அழைத்ததும்
215

Page 120
தான் ஒருமுறை வருவதாகச் சொன்னார். 1924ம் ஆண்டு மாசிமாதம் 4ம் தேதி சுவாமிகள் நமது தகப்பனார் இல்லத்திற்கு வந்து படலைக்கு அருகாமையில் நின்று பார்த்தார். தகப்பனார் அச்சமயம் வீட்டில் இல்லாததையும் அருகாமையில் உள்ள நியாயதுரந்தரர் பொன்னம்பலம் வீட்டில்இருப்பதையும் தம்முடைய ஞானசித்தியால் உணர்ந்து பொன்னம்பலத்தின் படலையில் போய் நின்றார். சுவாமிகளைக் கண்டதும் பொன்னம்பலமும் தகப்பனாரும் அவரிடம் செல்ல நமது தகப்பனாருடைய தாடியைப் பிடித்துக் கொண்டு “உன்னை இன்று கண்ட ஆசை தீர்ந்து விட்டது” என்றார்.
உடனே சுவாமிகள் சுன்னாகம் மார்க்கமாக நடக்கலானார். அப்போது அவர்கள் சுவாமியை வழிமறித்துக் கொழும்புத்துறையில் கொண்டு சென்று விடுவதாகச் சொல்லியும் அவர் தனது கார் (கால்) வண்டியிலும் பார்க்க வேகமாகச் செல்லும் என்று சொல்லிச் சென்றுவிட்டார். தகப்பனார் வீடு திரும்பியபோது நமது ஐந்து வயதுள்ள மருமகன் அவர் வைத்திருந்த பிரம்பை இழுத்தான். அவர் நிலத்தில் விழுந்ததும் காலில் நோவும் காய்ச்சலும் உடன் வந்தது. கஸ்தூரி முத்துக்குமாரு அவர்களும் நாயன்மார்க்கட்டு சுப்பிரமணியம் அவர்களும் முறையே வைத்தியம் செய்ததும் அவர்களது மருந்துக்கு அந்நோய் கட்டுப்படாது ஏழாம் நாள் அவர் மரணம் அடைந்தார்.
நான் நாவலப்பிட்டியில் புகையிரதப்பகுதி றான்ஸ் கந்தோரில் உத்தியோகமாக இருக்கும் காலத்தில் அங்குள்ள இந்து வாலிபர் சங்கம் கதிரேசன் வித்தியாசாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் காண்பதற்கும் சுவாமிகள் அதிகமாக அங்கு வருவது வழக்கம். அக்காலத்தில்தான் அடியேனுக்குச் சுவாமிகளுடன் நெருங்கிய பழக்கமும் அன்பும் கூடிற்று.
இங்கிருந்து குயீன்ஸ்பெரி (QueensBery) தோட்டத்தில் சமாதி வைக்கப்பட்ட ஒரு ஞானியாருடைய சமாதியைத் தரிசிப்பதற்குச் சுவாமிகளும் பல அன்பர்களும் ஒன்றுசேர்ந்து செல்வோம். மேலும்
216

றம்புப்பிட்டியா என்னும் கிராமத்திலுள்ள சுப்பிரமணியத்தின் இல்லத்தில் ஒரு இரவு தங்க நேரிட்டது. நித்திரைக்குப் போகும் சமயத்தில் “சிவகுரு நீ எனக்குப் பக்கத்தில் வந்துபடு” என்று சுவாமிகள் சொன்னார். அச்சமயத்தில், “எல்லா வகையினாலும் உன்னைமெச்சினேன். ஆனால் ஒரு பிழை மாத்திரம் உண்டு. அதை நீ தவிர்ப்பாயா” எள்றார். அவர் சொன்னதும் நமது பிழை நமக்குத் தெரிந்தும், “சுவாமீ அது என்ன பிழை” என்று கேட்டேன். "நீ பிழை செய்பவர்களைக் கடுமையாகத் தாக்கிப்பேசுவதையும் குற்றப்படுத்துவதையும் நிறுத்து” என்றார். அதற்கு நான் விடை சொல்ல முழுவதையும் கேட்க மறுத்து “எல்லாவற்றையும் சமப்படுத்தி நடத்து” என்றார்.
ஒரு முறை நமது மனைவிக்குப் பேராதனைப் பூந்தோட்டம் காண்பிப்பதற்காகக் கொண்டு சென்றேன். திரும்பிப் புதுப் பேராதனைப் புகைவண்டி நிலையத்தில் வண்டிக்காகக் காத்துக்கொண்டு இருக்கும் சமயத்தில் கண்டாக்கு வேலுப்பிள்ளையின் வீட்டில் சுவாமி இருப்பதை அறிந்து அங்குச்சென்றோம். எங்களைக் சுவாமிகள் ஆனந்தமாக வரவேற்று அவருக்குமுன் இருந்த பழங்களில் இருவருக்கும் கொடுத்து "நாவலப்பிட்டிக்குத் திரும்புங்கள். நான் அவ்விடம் வருவேன்” என்றார்.
ஒரு மாதம் கழிந்தபின் ஒரு சனிக்கிழமை அன்று சுவாமி அவர்கள் வந்து நமது வீட்டு விறாந்தையில் நின்று “எடே சிவகுரு எடே சிவகுரு” என்று கதவில் தட்டினார். நான் இவ்வகையாகத் கூப்பிடுபவர் யார் என்பதை அறிவதற்குக் கதவைத் திறந்தேன். சுவாமிகள் மத்தியானச் சமையல் முடிந்து விட்டதா என்று கேட்டார். அவரை உடன் ஆசனத்தில் இருத்தி அந்நேரத்தில் சமையல் முடிந்திருந்ததும், அரைமணித்தியாலத்தில் முடியுமென்று நான் கூறிவிட்டு, குசினிக்குப் போய், பாயாசத்தை, சீக்கிரத்தில் செய்யும்படி நமது வேலைக்காரப் பையனுக்குக் கூறினேன்.
சுவாமிகள் கோப்பி அருந்தியபின் சொற்ப நேரத்திற்குள்ளாகத் தன்கருமங்களை முடித்து விட்டதாக வேலைக்காரப் பையன்
217

Page 121
அறிவித்தான். உடனே சுவாமிகளும் நானும் சாப்பாட்டு இடத்துக்குப் போக, வீட்டில் உள்ளோர் யாபேருக்கும் இலை போடும் படியாகச் சொன்னார். அப்படியே செய்தேன். தண்ணீரும் கற்பூரமும் விபூதியும் கொண்டு வரும்படியாக உத்தரவிட்டார். எல்லாம் கொண்டு வந்தவுடன் எழுந்து நின்று அரை மணித்தியாலமாகத் தியானத்திலமர்ந்தார். தியானஞ்செய்து முடிந்ததும் சாப்பிடும்படியாக உத்தரவு கொடுத்தார். சாப்பிட்டதின் மேல் இலை கொண்டு போய் எறியும் போது இங்கு “சிவம் வராமல் என்ன செய்யும் என்றார்?" அவரது வாக்கின்படி திருவருட் கிருபையால் சொற்பகாலத்துத்குள் ஒரு திருவருள் தோற்றம் நமக்குக் கிடைத்தது. நான் சில காலத்துக்குள் அநுராதபுர றான்ஸ் கந்தோருக்கு மாற்றப்பட்டேன்.
அப் போது நாவலப்பிட்டியிலுள்ள கதிரேசனி வித்தியாசாலையைக் கொண்டு நடத்தும் நிர்வாக சபையில் சில பிணக்குகள் ஏற்பட்டிருந்தபடியால் அதன் காரணமாக நான் நாவலப்பிட்டிக்கு ஒருமுறை போக வேண்டியிருந்தது. அவ்வண்ணமே அங்கு போவதற்கு நான் ஏறிய ரயில் பெட்டியில் யோகசுவாமிகளும் இருந்தார்கள்.
இருவரும் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் "உனக்கு எத்தனை பிள்ளைகள்” என்று கேட்டார். “ஒரு பிள்ளைகளும் இல்லை” என்று பதிலளித்தேன். பிற்பாடு ஒரு பிரபல தமிழ் அப்புக்காத்துவின் பெயரைச் சொல்லி அவரால் ஏற்பட்ட பலன் என்னவென்று கூறினார். அதன் பின் ஆறுமுக நாவலர் செய்துவைத்த தொண்டுகளைத் தற்பொழுது கையாண்டு அதை நிலை நிறுத்துபவர் யார் எள்று கேட்டார். நான் சேர். பொன்னம்பலம் இராமநாதன், சேர். அருணாசலம், சேர். கனகசபை, சு.இராசரத்தினம் முதலியோர்களின் பெயரைக் கூறியதும் "இராசரத்தினம்தான் எல்லாவிடங்களிலும் தமிழ் வித்தியாசாலைகளை ஏற்படுத்தி நாவலர் வழியைப் பின் பற்றுகின்றான்” என்றார். இவ்வகையாகவே அவருக்கும் மறுமொழி கூற எனக்குத் தடுமலும்
218

தொண்டை நோவும் முன் இருந்ததிலும் பார்க்கக் கூடியதைக் கண்ட சுவாமிகள் “கை அசைவினால் மறுமொழி கூறு” என்றார்.
பின் "உனக்குப் புத்திர பாக்கியம் இல்லை. எல்லாம் closed" என்றார். நாங்கள் இருவரும் பொல்காவலையில் இறங்கியதும் தடுமலும் தொண்டை நோவும் முற்றாக மாறின. அவர் முன் கூறிய அப்புகாத்து பிளாட்பாரத்தில் platform நின்றார். இவர் தன்னைச்சந்திக்கப் போகிறார் என்பதை ரயிலில் பிரயாணம் செய்யும் போதே ஞானசித்தியால் அறிந்திருந்தார்.
இந்தப் பிரபல அப்புக்காத்து அவரைச் சுவாமீ என்று சொல்லி தரிசிக்கப் போக அவர் "நீ போ போ” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
நமது மைத்துனன் தென் கோவைப் பணி டிதர் கந்தையாபிள்ளை அவர்கள் தனது சுகவீனம் காரணமாகக் கஸ்தூரி முத்துக்குமாரு அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது சுவாமிகளும் அங்கு இருந்தார். சுவாமிகளோடு பணிடிதர் பேசிக்கொண்டிருக்கையில் அரசாங்க மொழியாக வைக்கவும் தமிழைப் புறக்கணிப்பதாகவும் பண்டிதர் கூறச் சுவாமிகள் சிங்களம்தான் அரசாங்க பாஷை என்று கூறினார். தமிழர்பாடு எப்படி முடியும் என்று கேட்க விடை கூறாது மருந்து கொடுப்பவரைக் கூப்பிட்டுப் பண்டிதருக்கு ஒரு போத்தலில் குளிசைகளை வைத்துப் பணம் வாங்காமல் கொடுக்கவும் என்று சொல்லி அறைக்குள் புகுந்து விட்டார்.
அனுராதபுரத்திலிருந்து நானும் பல நண்பர்களும் weekend க்கு வீடு திரும்பும் பொழுது நாங்கள் ஏறிய பெட்டியில் சுவாமிகள் இருப்பதைக் கண்டோம். பரிசங்காவா நிலையத்தில் புகையிரதம் வந்து நின்றதும் அங்கிருந்த நிலையத் தலைவர் Mமாணிக்கம் அவர்கள் சுவாமியைக் கணிடதும் தோடம் பழங்களும்
219

Page 122
சீனியும்கொண்டு வந்து கொடுத்தார். புகைவண்டியில் சுவாமிகளும் மற்றும் நண்பர்களும் தோடம்பழத்தைக் கரைத்துக் குடித்தோம். அக்காலத்தில் தான் இரண்டாவது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்தது. சண்டைப் புதினங்களைப் பார்ப்பதற்கு ஒரு நண்பரிடம் புதினப்பத்திரிகை வாங்க நான் எத்தனித்தபோது சுவாமிகள் “இங்கே வா. நான் புதினம் சொல்லுகிறேன்” என்றார். “வெள்ளைக்காரருக்குத்தான் வெற்றி. இதிலும் பார்க்க வேறு என்ன புதினம் உண்டு” என்றார். V−
சில ஆண்டுகளுக்கு முன்சுவாமிகளைத் தரிசிப்பதற்காக அவரது ஆச்சிமத்துக்குப் போயிருந்தேன். சில நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்பும் போது அவர் படலைமட்டும் வந்து காரில் ஏறும் சமயத்தில் பின் வரும் பாட்டைச் சொல்லிக்கொள் என்று நமக்குச் சொன்னார்.
சொல்லு சிவமே சொல்லு சிவமே சுகம் பெறும் மார்க்கமொன்று சொல்லு சிவமே
சாந்தி/ சந்தி/ சந்தி/
திரு. திசிவகுருநாதன் கந்தரோடை,
நன்றி சிவதொண்டன் சிறப்புமலர் இதழ் - 29 , 1965
米 米 米 米 米 米
220

அடியாரும் அடியேனும்
சரியாக அறுபது ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடும்பம் பர்மாவிலிருந்து அகதிகளாக யாழ்ப்பாணம் வந்து பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதுதான், நான் முதல் தடவையாக யோகர்சாமியாரைச் சந்திக்க நேரிட்டது. போதனை முறை மாற்றத்தினாலும், சூழ்நிலை வித்தியாசத்தினாலும் இரண்டொரு பரீட்சைகளில் சித்தி பெற முடியாமல் போக, ஆண்டவனிடம் பிராயச்சித்தம் பெற என் தகப்பனார் என்னைக் கொண்டுபோய் கொழும்புத்துறை ஆச்சிரமத்திலிருந்த யோகர் சாமியார் முன்னிலையில் நிறுத்தினார். அந்தநாட்களில் அந்த ஆச்சிரமம் கிடுகுகளினால் வேயப்பட்ட ஒரு சிறிய கொட்டில். இடம் நிறையப் பெரியவர்களும் நடுத்தர வயதினரும், நான் தான் சிறுவன், விபரமறியாத அப்பாவி,
எடுத்த எடுப்பிலே முன் பின் காணாத என்னை அவ்வளவு பேர் முன்னிலையிலும் முதல் கேள்வி “என்னடா படிக்கிறாய்?" தோரணை ஒருபுறம் பயமுறுத்த, மற்றப்பக்கம் “யாரிந்த தாடிக்காரர் என்னைக் கேட்க” என்ற திமிர். அதற்குள் அவர் தொடர்ந்தார், junior என்ற சொல்லை “you near என்று தான் நான் சொல்வேன். நெருங்கிப் போன பிறகு see near - senior கிட்டப் பார்ப்பேன். எனது முக்கால் நூற்றாண்டு வாழ்க்கை தாரக மந்திரமாக அவரது புத்திமதி அமைந்தது.
சாமியாரின் நெருங்கிய அடியார்களான காலஞ்சென்ற VS.Sகுமாரசாமி, VAகந்தையா, A.சிந்தாமணி M.தண்டாயுதபாணி, பலாங்கொட வாலுப்பிள்ளை, Dr.S.கனகரத்தினம், எனது தகப்பனார், பிற்காலத்தில் Dr.C.குருசாமி, அவர்களுக்கிடையில் ஆன்மீக உறவை மிஞ்சி ஒருவித உணர்வலை இணைப்பும் இருந்ததை நான் அவதானிக்க முடிந்தது. ஒருவருக்குத் தலை வலி வந்தால்,
22

Page 123
இரண்டாமவர் எங்கிருந்தாலும் அதே நேரத்தில் தும்முவார். மூன்றாமவர் இமை துடிக்கும். நாலாம் நபருக்கு உள்ளங்கை அரிக்கும். நீங்கள் நினைக்கும் விஷயத்திற்கல்ல, பீப்பர், செல்போன், இன்ரனெற் இல்லாத காலத்தில் இதுதான் அவர்களின் சமிக்ஞைகள். எல்லோரும் உடனடியாகச் சாமியார் முன் ஆஜர் ஆவார்கள். இந்தப் பின்னணியில் தான் அவரை இரண்டாவது முறையாகச் சந்தித்தேன். இடம் அரியாலையில் பரந்த வயல் வெளிக்குள் நடுநாயகமாக வீற்றிருக்கும் ஒரு சின்னஞ் சிறு வைரவ கோவில். ஒரு நாள் எனது தந்தையாருக்கு இரவு பத்து மணியளவில் சமிக்ஞை வர என்னைத் துணைக்கழைத்துக் கொண்டு, காரில் புறப்பட்டார். கண்டி வீதி கடந்து கரடு முரடான அரியாலை ஒழுங்கை வழியாக விழுந்து எழும்பி இரு மதில்களைக் காளின் மட்காட்கள் பதம் பார்த்து ஒரு மாதிரி கோவிலுக்கு முன் வந்து நின்றோம். வீதியிலிருந்து கோவிலுக்குப் போக, ஒருகட்டை ஒற்றையடிப்பாதை நடை. கும்மிருட்டு. கோவில் மங்கிய விளக்கில் இரண்டு வெள்ளை வேட்டி கட்டின உருவங்கள். ஒன்று யாரென்று ஊகித்திருப்பீர்கள். மற்றதின் சொந்தக்காரர் காலஞ்சென்ற கச்சேரி O.A.dpig, ITLD600f. எங்களைக் கணிடவுடன் சிந்தாமணி ஆரவாரத்துடன் சொன்னார். “தம்பியும் மகனும் காரில் விழுந்து எழும்பி வருகினம் என்று சாமியார் சொன்னார், நீங்களும் வந்துவிட்டீர்கள்”.
நான் திரும்பி வந்து காருக்குள் படுத்துக் கொண்டேன். ஒரு மணியளவில் மூவரும் வந்து என்னை எழுப்பியதும், அப்பா உடனே சாமியாரை விழுந்து கும்பிடும் படி உத்தரவிட்டார். தூக்கம் ஒருபக்கம் புழுதி மண் மற்றப் பக்கம், அதற்குள் சாமியார் தனக்குரிய பாணியில் “அவனைச் சும்மா விடு சுகமாய்ப் போய் வீடு சேருங்கள்” என்று என் உதவிக்கு வந்தார்.
222

மூன்றாவது அனுபவம். சாமியார், தந்தையார் இன்னும் இரண்டு அடியார்கள் (பெயர்கள் நினைவில் இல்லை) எல்லோருக்கும் சமிக்ஞை வர எங்கள் காரில் கதிர்காமம் போவது என்று தீர்மானித்தார்கள். சாமியாரின் ஞானக் கண் வேலை செய்து பயணம் சரிவராது போலிருக்கு என்று எச்சரித்தார். கோவிலுக்கு அதுவும் கதிர்காமத்துக்கு என்று எடுத்த முடிவை ரத்துச் செய்யக் கூடாது, என்று மற்றவர்களின் வாக்குவாதம். அவர்களுடன் தந்தையார் கோவில் குளம் என்று எங்கேயாவது அடிக்கடி போவது புத்திரசிகாமணியான எங்களுக்கு (நாங்கள் நாலு, தந்தையார் எங்களைச் செல்லமாக நாம்பன்கள்’ என்பார்) பரமதிருப்தி. இரவு ஆறு மணிக்குப் போனவர்கள் ஒன்பது மணியளவில் வந்து படலையைத் தட்ட எங்களுக்குத் திகில், சாவகச்சேரியில் கார் ரிப்பேர்.
ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான், நான்காம் தரம் அவரிடம் மாட்டிக் கொண்டேன. நானும் எனது பால்யகுடும்ப நண்பனுமாகிய காலஞ்சென்ற பிரமானந்தா,பிரபல புகையிலை புள்ளி VSSK இன் வாரிசு, ஒரு பின்னேரம் பழைய நீகல் சினிமா கொட்டகையில் ஆங்கிலப் படம் ஒன்று பார்க்கத் திட்டமிட்டு சந்தியில் சைக்கிள்களுடன் நிற்கும் போது கும்பிட நினைக்காத தெய்வம் தூரத்தில் எங்கள் கண்களில் பிரசன்னமானார். அவரை எங்குகண்டாலும் விழுந்து வணங்க வேண்டும் என்று எங்களது தகப்பனார்களின் அறக் கட்டளை. எங்களுக்கு முன்பு சென்ற ஒரு பெரிசு, முன்னாள் பரந்தன் ரசாயனக் கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் பாலேந்திராவின் பேரன் காலஞ் சென்ற முத்துக்குமாரு, அவர்கள் சண்டிக்கட்டை அவிழ்த்து, துண்டை வயிற்றில் கட்டி சாஸ்டாங்கம் செய்தார். நாங்கள் இருவரும் அந்த நாட்களில் பள்ளிக்கூடங்களில் பிரபல்யமான நற்சிந்தனையின் முதல் வரியை துலைஞ்சவா போற்றி” மனதுக்குள் முணுமுணுக்க
223

Page 124
முன், எங்கள் முன் தோன்றி அளித்த, தீர்ப்பு: “களவெடுக்கப் போகிறீர்கள். ஏன் நிற்கிறீர்கள், போங்கடா”
காலஞ் சென்ற Dr.C.குருசாமி (எனது நெருங்கிய உறவினர்) இல்லத்தில் தான், பிற்காலத்தில் அதிகமாகத் தங்கிவந்தார். டாக்டர் தான் அவருக்கு ஈமக் கடன் செய்தவர். ஒரு நாள் நான் அங்கிருக்கும் போது சாமியார் யாரோ ஒரு நபருக்குச் செம டோஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். வசனங்கள் தமிழ், ஆங்கிலம், சிங்களம், தூஷணமும் தூள். கை கட்டித் தலைகுனிந்த வண்ணம், மூச்சு விடாமல் கேட்டுக் கொண்டிருந்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இருதய சிகிச்சை நிபுணர் Dr. வாலுப்பிள்ளையின் மாமனாருமான சு.கந்தையா, வசைமாரி முடிந்ததும் சாமியார், “கார் எங்கே கந்தையா?”, கந்தையா, “வெளியில் நிற்குது சாமி”, சாமியார், “வா, போவோம்” அத்தியாயம் முடிந்தது உடனே மறந்து போவார்.
எனது இல்லற வாழ்க்கையில் நடந்த ஒரு சுவையான சம்பவம். காலப்போக்கில் எனது முறைப் பெண்ணை (அவருடன் கூடப் பிறந்தவர்கள் நாலு பெண்களும் கடைக் குட்டி தம்பி ஒருவரும்) மணந்து அடுத்தடுத்து இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்து தாயைப் போல் ஐந்துக்கு மேல் ஆண்டியாகித் தான் ஆண் வாரிசு பெறும் பாக்கியம் கிட்டுமோ என்று மனம் சஞ்சலமடைந்து, பரிகாரம் காண என்னையும் வற்புறுத்தி, என் தகப்பனார் நான் படிக்காததிற்கு எவ்விதம் சாமியார் முன் கொண்டு போனாரோ அதே போல் இருவரும் அவரைச் சந்திக்கச் சென்றோம். வீடு நெருங்கியதும் எனது மனம் குறுகுறுக்க, கால் இடற, வீட்டின் பின்புறமாக வேகமாக நடக்க சாமியார் 'கள்ளன் பிறத்தாலே ஓடுகிறான்” என்று அறிவித்து, கண்ணீரும் கம்பலையுமாய் நின்றவரைப் பார்த்து அருளிய பொன் மொழி "அதுகள் இரண்டும்
224

பெண் பிள்ளைகள் அல்ல. பொன் பிள்ளைகள்”. அவர் சொன்னபடியே இரண்டும் 24 கரட் கோல்டு கட்டிகள். இன்றுவரைக்கும் ஆண் வாரிசு இல்லாத குறையே இல்லை.
கடைசியாக வாழ்க்கையில் என்ன துன்பம் நேர்ந்தாலும் ஆண்டவனின் மேல் பழி சுமத்தி பழக்கப்பட்ட எங்கள் சமுதாயத்திற்கு அவரின் ஞானோதயம் “எல்லாம் எப்பவோ முடிந்து போன காரியம்’
கட்டுரையில் குறிப்பிட்ட எனது உயிர்த் தோழன் பிரமானந்தா, தன் சிறு மகன் நாவல் மரத்திலிருந்து விழுந்து படு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்த்த கையோடு, மூன்று தலைமுறைகளுக்குத் தங்களுக்கு ஆசானாக இருந்து தெய்வ வழிபாடு நடத்திய மகானிடம் ஒடிப் போக, அவர் சொன்னது மேலே குறிப்பிட்ட
வசனந்தான்.
T ஜெயரட்ணம்.
நன்றி
“சிவயோக மலர்” சிவயோக சுவாமிகள் 25வது ஜெயந்தி விழா சிவதொண்டன் நிலையம் - கனடா - 1997
ck k k >k sk. k.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. படம் கூடாதென்றாலும்அதிலே துப்பக்கூடாது.
சுவாமிகள் அருள் மொழி
225

Page 125
வருவிருந்திற்கு முன்னறிவிப்பு
கொழும்புத்துறையில் வாழ்ந்த எமது குருநாதர் சிவயோகசுவாமிகளுடைய தொடர்பு எம் வாழ்வில் மறக்கமுடியாத சில அற்புதங்களை நிகழ்த்தியது. யாழ்ப்பாணத்திற்குப் போன உடனும் பின் திரும்பும் போதும் நாம் சுவாமிகளைச் சென்று தரிசித்து வருவது வழக்கம். நாங்கள் அவரிடம் சென்ற போதெலெல்லாம் அவர் எங்களுக்குப் பாட்டுச்சொல்லித் தருவதுண்டு. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் தான் சொல்லும் பாட்டை நான் எழுத வேண்டும் என்று பணித்தார். அவர் முன்னும் பின்னுமாக நடை போட்டபடியே பாட்டை இயற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். நான் அதை எழுதிக்கொண்டிருந்தேன். இரு பாட்டுக்கள் இயற்றினார். அவற்றுக்குரிய இராகம் இதுவெனக் கூறினார். இவ்விரு பாட்டையும் எழுதும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது பற்றி எனக்கு மிக்க மகிழ்ச்சி. இடையிடையே நான் சரியாக எழுதுகிறேனா என்றும் பார்த்துக் கொள்வார். இவ்வாறு இரு பாடல்களையும் எழுதி முடித்தாயிற்று. சிறு பிள்ளைகள் தானே. இது ஒரு பெரிய சாதனை என மகிழ்ந்தோம்.
எக்காரியத்தையும் தீர்மானிப்பது சுவாமிகளது அனுசரணையில் தங்கியுள்ளது. இது பெற்றோரின் விருப்பம், கட்டளையாகவும் இருந்தது. நாங்கள் பருவமடைந்த பெண்களானபோது பெற்றோர் எமக்குப் பல இடங்களில் வரன் தேடிச் சென்றார்கள். எனக்கு எந்தப் பேச்சும் முடிவுறும் தறுவாயில் குழம்பிவிடும். இதனால் கவலை கொண்ட பெற்றோர் என்னை எமது குருநாதனிடம் சென்று வரும்படி பணித்தார்கள்.
யாழ் வந்து சேர்ந்ததும், நான் கொண்டுவந்த பழம் மற்றும் பொருட்கள் யாவற்றையும் ஒரு தட்டில் வைத்துக்கொண்டு மாலை
226

சுவாமி தரிசனத்திற்காகக் கொழும்புத்துறைக்குச் சென்றோம். ஆச்சிரமத்திற்கு வெளியே பலர் நின்றார்கள். நானும் அதில் ஒருவர். சுவாமிகள் எங்களை உள்ளே வரச் சொன்னதும் எல்லோரும் உள்ளே சென்றார்கள். நானும் சென்று தட்டத்தை அவர் பாதத்தருகில் வைத்து வணங்கி மெளனமாக நின்றேன். இருக்கும் படி பணித்தார். நாம் தரையில் உட்கார்ந்தோம். என்னைச் சிறிது பொழுது பார்த்தார். பின்னர் பெயர் என்ன என்று விசாரித்தார். பின்னர் மெளனமாக இருந்துவிட்டார். என்னுடன் வந்த சகோதரியை “தேடிநின் திருவடியை” என்ற பாட்டைப் பாடச்சொன்னார். சகோதரியும் அப் பாடலை மிக இரசனையுடன் பாடினார். முடிந்ததும் சொன்னார் “இந்தப் பாட்டைப் பாடித்தான் சிவபாக்கியம் மணம் முடித்தாள்” என்று சொன்னார். தொடர்ந்து பலருடனும் பலதும் பேசிய பின் எல்லோரையும் வழியனுப்பினார். நாங்களும் சந்தோஷமாக வீடு வந்தோம்.
மறுநாட் காலை ஒரு மோட்டார் வண்டி வீட்டு வாசலில் நின்றது. யாராக இருக்கலாம் என்ற ஆவலுடன் ஓடிப் போனோம். அங்கு வந்தது வேறுயாருமல்ல. சுவாமிகளே. நாம் அதிசயம், ஆச்சரியம் எல்லாம் கலந்த ஒரு திகைப்பு நிலையை அடைந்தோம். சுவாமிகள் காரை விட்டு இறங்கி வீட்டை நோக்கி வந்தார். நாங்கள் எல்லோரும் அவரை நமஸ்கரித்து நின்றோம். சுவாமிகளுடன் வந்தவர்களும் எம் வீட்டவர்களுடன் உரையாடி நின்றார்கள்.
சுவாமிகளுக்கும் வந்தவர்களுக்கும் பகல் போசனம் தயாரிக்கும் பணியில் எனது பெரியதாயார், சகோதரி, நான் பெருமகிழ்வுடன் ஆரம்பித்தோம். சுவாமிகளுக்கு உணவு தயாரிப்பதென்றால் மகிழ்ச்சியைச் சொல்லவா வேணும்! மிகுவிரைவாகவே சமையல் பண்ணி முடிந்தாயிற்று. மிக்க பக்தியுடன் சுவாமிகளுக்கு உணவு பரிமாறினார் பெரியதாயார்.
227

Page 126
ஏனையோரும் விருந்தில் கலந்து கொண்டார்கள். நாங்கள் வீட்டிற்குள் போய்விட்டோம். திடீரென்று சுவாமிகள் எனது பெயரைச் சொல்லி அழைத்தார். என்னை ஒரு வாழையிலை கொண்டுவரும்படி சொன்னார். பின்னர் அதில் சோறு கறி எல்லாம் பரிமாறிவிட்டு அதனைக் காகத்திற்கு வைத்து வரும் படி சொன்னார். நானும் அதனை எடுத்துச் சென்று காகத்திற்கு வைத்துவிட்டு வந்தேன். வந்ததும் கேட்டார் “காகம் சாப்பிட்டதா?’ ‘நான் பார்க்கவில்லை சுவாமி’ என்று கூறிக்கொண்டு மீண்டும் இலை வைத்த இடத்திற்கு ஓடினேன். அங்கு பல காகங்கள் மிக்க சந்தோஷத்துடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தன. ஓடிவந்து ‘காகங்கள் சாப்பிடுகின்றன’ என்றேன். “சரி” யென்றார். உணவு சாப்பிட்டபின் சிறிது வேளை ஆறிவிட்டு அவர் மீண்டும் அன்பர்களுடன் கொழும்புத்துறைக்குப் போய்விட்டார்.
நாங்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் தங்கிவிட்டுப் பின் கொழும்பு புறப்படும் முன் சுவாமிகளிடம் சென்றோம். அவர் வழமை போல அன்புடன் எம்மை வழியனுப்பினார். நாம் கொழும்பு வந்து சேர்ந்தோம். வந்து இரண்டு நாட்களில் எனக்குத் திருமணம் நிச்சயமாயிற்று எல்லாம் சுவாமிகளின் ஆசீர்வாதம் என்று தான் சொல்லவேணும்!
அடியாள்
米 米 米 米 米 米
நமச்சி வாயவே நான்மறை யாகமம் நமச்சி வாயவே மந்திர தந்திரம் நமச்சி வாயவே நம்முட லுயிர்பொருள் நமச்சி வாயவே நற்றுணை யாகுமே
நற்கிந்தனை
228

யோகசுவாமிகளுக்கு அஞ்சலி
யோகசுவாமிகள் வாழ்ந்துகொண்டிருக்கையிலே அவர் உண்மையான ஞானம் பெற்ற முனிவர் என்ற பெரும் மதிப்பு அவருக்கு இலங்கையிலும் இந்தியாவிலும் கூட நிலவியிருந்தது. அவரது அடியார்கள் தாமாகவே அவரது ஆத்மீகச் செயற்பாடுகளைப் பற்றிப் பெரிதும் வியந்து பேசியுள்ளார்கள். சங்கரருக்குப் பின்னர் இந்த உலகு அறிந்த பெரியஞானி இவர் எனப் போற்றப்பட்டவர். மனோதத்துவ சக்திவாய்ந்தவர்களில் இவரும் ஒருவர் என அவரைக் கைவிட்ட நம்பிக்கையில்லாப் பேர்வழிகளும் இருந்தனர். அவர்கள் இவரிடம் அதிவிசேட மனோதத்துவ சக்தி உள்ளதை உடனடியாகவே ஒப்புக்கொண்டதாக இல்லை. சிறப்பித்துக் கூறக்கூடிய ஞான திருஷ்டி கொண்டவர் என்று இவர் போற்றப்பட்டவர். அவர் திடீரென வெளியில் மறைந்தும் பின்னர் ஒரே வேளை பல இடங்களிலே தோற்றமுறக்கூடிய சக்தி பெற்றவர் என்று கூறப்படுகிறது. யாழ்ப்பாணம், சென்னை, லண்டன் போன்ற தொலைவான இடங்களிலே ஒரே வேளை சுவாமிகளைத் தாம் தரிசித்ததாக மூன்று அடியார்கள் விளம்பியுள்ளார்கள். யோக சுவாமிகள் எதனை நினைத் தாலும் அது நிறைவேற்றப்பட்டுவிடுகின்றது என்று அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் கூறினார்.
ஒரு சந்தர்ப்பத்தில் இந் நண்பர் யோகசுவாமிகளுடன் கிராமப் புறப்பக்கமாகப் பல மைல்களுக்கு மேல் நெல்வயல்களுக்கூடாக நடந்து சென்றுகொண்டிருந்தார். சுவாமிக்குப் பசியெடுத்ததோடு களைப்பும் மேலிட அவர் அப்பொழுது தாம் மீண்டும் பட்டினத்திற்குப் போவதற்கு ஒரு வாகன வசதி கிடைத்தால் நன்றாயிருக்குமெனச் சாவகாசமாக எண்ணினார். இந்த விருப்பத்தை வெளியே சொன்னது தான் தாமதம், அங்கு பல வாகனங்கள்
229

Page 127
தென்பட்டன. வாகன்ச்சாரதிகள் ஒவ்வொருவரும் தமது வாகனத்தில் ஏறிக்கொள்ளும் படி சுவாமிகளை மிகவும் பணிவன்புடன் கேட்டார்கள். ஒரு தெய்வீகப் பெரியாருக்கு ஏதாவது ஒரு விதத்தில் சேவை செய்வதற்கு ஒரு சந்தர்ப்பத்திற்கு ஏங்கிநின்றார்கள். இச் சந்தர்ப்பத்தில் சுவாமிகள் தமது கைகளை உயர்த்தியவாறு, "ஆசைப்படுவது எத்தகைய ஆபத்து", என்று ஆச்சரியத் தோடு கூறினார். ஆத்மீக விடுதலை பெற்றவர்கள் உளரீதியான உணர்வில் எதையும் விரும்பி எண்ணிக் கொள்ளாதவர்கள். ஏனென்றால் அவர்களுக்கு நான் எனது என்ற முனைப்பு முற்றாக அற்றுப்போய் விடுகின்றது. ஆனால் அவரது விருப்புக்கள் முழமையாகப் பெளதிகத் தேவைகளுக்கு மட்டுமேயாம் என்று கேள்விப்பட்டிருக் கின்றேன்.
இன்னுமோர் அரிய சந்தர்ப்பத்தில் யோகசுவாமிகள் கொழும்பிற்கு வருகைதந்து தங்கியிருக்கும் காலம் நிறைவுறும் பொழுதில் கொழும்பு புகையிரத நிலையத்தில் பெருந்திரளான அடியார்கள் அவரை வழியனுப்பும் முகமாகக் குழுமி இருந்தனர். சில அடியார்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அருட் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். சிலர் அவருக்கு மலர் மாலை சமர்ப்பித்தார்கள். நேரம் தாமதித்துக்கொண்டிருந்ததால் சுவாமிகளது அன்பர்கள் அவர் புகையிரதப் பெட்டிக்குள் ஏறிக்கொள்வதன் அவசியத்தை அவருக்குப் புலப்படுத்தினார்கள். "கவலைப்படாதீர்கள் புகையிரதம் என்னை விட்டுவிட்டுப் புறப்படாது” என்றார். அன்று மாலை புகைவண்டி இஞ்சின் கோளாறு காரணமாக வழமையான நேரத்திற்குக் கிளம்பவில்லை. எல்லா நண்பர்களுக்கும் ஆறுதலாகவே விடை கூறிவிட்டு சுவாமிகள் தமது இருப்பிடத்தில் சென்று அமர்ந்தார். அதன் பின்பு தான் புகைவண்டி நகரத் தொடங்கியது.
நான் யோகசுவாமிகளைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்த போதிலும் அவருடன் நேர்முகமாகக் கதைக்கும் சந்தர்ப்பம் வரும் வரை
அவரைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று என்றுமே
230

அவாவுறாததற்குப் பல காரணங்கள் இருந்தன. முதலாவதாக இலங்கையின் வடக்கில் மிகு தொலைவிலிருக்கும் யாழ்ப்பாணத்திற்குப் போவதானல் புகைவண்டிப் பிரயாணச் செலவை என்னால் பொறுக்க இயலாதிருந்தது. இரண்டாவதாக அன்றும் இன்றும் எனக்குத் தென்பட்டதொன்று என்னவெனின் கடவுளை அல்லது சத்தியத்தை (உண்மையை) ஒருவர் தன் முயற்சியாலே தான் கண்டுகொள்ள வேண்டும். புறச்சக்திகள் எதுவுமே இவ்விடயத்தில் நிச்சயமாக உதவக்கூடியதாக இல்லை என்பதாகும். மூன்றாவதாக யோகசுவாமிகள் தன்னைக் காணச்செல்லும் பெரும்பான்மையினரை விரட்டி விடுவார். யோகசுவாமிகள் எதிர்காலத்தைச் சரியாகக் கூறக் கூடிய ஒரு கொடையைப் பெற்ற சாதாரண சோதிடர் என்று பலர் துரதிஷடமாக எண்ணிக்கொண்டார்கள். ஒரு காலத்தில் காலை முதல் மாலை வரை மக்கள் ஓயாது சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் பலவிதமான தனிப்பட்டதும் மற்றும் வேறு பிரச்சனைகளுடன் அவரிடம் சென்றார்கள். அவரால் நன்கு வரவேற்கப்படும் வாய்ப்பினைப் பெற்றவர்கள் தாம் இருமுறை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என எண்ணிக்கொள்வார்கள். யோகசுவமிகளிடமிருந்து வசைமொழி பெற்றவர்கள் தாம் ஆத்மீகத் தண்டனை பெற்றவர்களாக எண்ணிக் கொள்வார்கள். ஒருவரின் பார்வையிலிருந்து தாம் விடுபட்டுக்கொள்ள சுவாமிகள் விரும்புவாராயின் அவர் ஒன்றில் மறைந்து விடுவார் அன்றிப் பலகாலத்திற்குத் தென்படாது போய்விடுவார். யோகசுவாமிகளது நடத்தைமுறை பற்றிய சுவாரஸ்யமான விளக்கம் இதுவாகும்.
பந்தத்திற்குட்பட்ட மானிடரின் சிந்தையானது பந்தத்தால் இயக்கப்படுகிறது. இதுவே இந்து பெளத்தக் கொள்கையும் கூட. இந்தக் கர்ம வினை என்பது வேறொன்றல்ல. விடுதலைப்பேற்றை அடையவிடாது முட்டுக்கட்டையாய் நிற்பதுமல்லாமல் சிந்தையைப்
231

Page 128
பதப்படுத்திவைக்கும் எண்ணிக்கையற்ற உளரீதியான தாக்கங்களின் முழுமையான கூட்டுநிலை எனலாம். இந்த உளரீதியான காரணிகள் ஒன்று கூடி "நான்” என்ற மாயையை உருவாக்குகிறது. விடுதலை பெற்றவர்கள் "நான்” என்ற இந்தக் கூடுகளில் அகப்பட்ட நிலையைத் தாண்டி அப்பால் செல்லுவதால் தூயநினைவு நிலையை அனுபவிக்கக் கூடியதாக இருக்கிறார்கள். கர்மத்தால் (வினையால்) உத்வேகப்படுத்தப்படாத உளநிலை வீடுபேற்று நிலை எனக்கூறுவது பொருத்தமானதாகும். ஏனெனில் வீடுபேறு பெற்றவர்களது மனதைக் கர்மவினை எவ்விதத்திலும் உணர்ச்சியூட்ட முடியாது. வீடு பேறு பெற்ற மனம் உணர்வூட்ட முடியாத ஒரு வஸ்துவுக்கு ஒப்பிடக் கூடியதாக இருக்கும் பொழுது அது கர்மவினையால் உணர்வூட்டக் கூடிய விடுதலை பெறாத மனத்தவர்களால் சிலவேளை உணர்வூட்டப்படலாம். எவ்வாறு எனில் வீடுபேறு அடைந்த மனம் கண்ணாடி போல விளங்கும் தன்மையை உடையது. இதில் வீடுபேறு அடையாத மனம் அதன் விடுதலையடையாத நிலையினைப் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கும். சுவாமிகளது பவித்திரமான ஆளுமைநிலையில் தற்காலிகமாக மாறுபட்டனவாகச் சில குறைபாடுள்ள இயல்பு காணப்படின், அதற்குக் காரணம் அவரது ஆளுமை அங்கு கூடியிருந்தவர்களது இயல்புகளைத் தற்காலிகமான பிரதிபலிப்பாகக் கொண்டமை யேயாகும். ஆகவே அகந்தை பிடித்தவர்கள் தம்மிடம் சுவாமிகள் அகங்காரமான முறையில் நடந்துகொள்வதாகக் காண்பார்களேயானால் அது எவ்விதத்திலும் ஆச்சரியப்படத் தக்கதொன்றாக இல்லை. பணிவுடையார்களுக்கு சுவாமிகளது இயல்பு மிகவும் சாந்தமாகவே இருந்தது.
தென்னிந்தியாவிலிருந்து வந்த துறவியொருவர் சுவாமிகளுக்குப் பகவத்கீதையிலிருந்து ஒரு செய்யுளை எடுத்துக் கூறினார். அதன் பின் சுவாமிகள் அதே செய்யுளை மாற்றியமைத்து
232

சில சொற்களைச் சிலேடையாகக் கொண்டு மிகவும் புனிதமாகக் கருதப்பட்ட அந்தச் செய்யுளைக் காம உணர்வுகளைக் கொண்டதாகக் கூறினார். இவ்வாறு கூறுவதை அவரால் தடுத்துக்கொள்ள முடியவில்லை. காரணம் அத்துறவியின் நனவுநிலையில் உறங்கிக் கிடந்த காம உணர்வுகளை அப்படியே எடுத்தியம்பும் நிலையில் சுவாமிகள் இருந்தார். சுவாமிகளது ஏனைய அடியார்களைப் போலவே இத்துறவியும் எரிச்சலடையாது மிகவும் சங்கோசப்பட்டார். மக்களை அவர்களது உளரீதியான தூக்கத்திலிருந்தும் விழிப்புற வேண்டி, சுவாமிகள் அவர்களுக்கு திட்டவட்டமாக அதிரவைக்க வேண்டு மென்றே சிறு சிறு அதிர்வுகளைக் கொடுத்து உதவுவதில் ஒரு “சென்” தலைவரைப் போல் விளங்கினார் எனக் கொள்ளலாம். மதிப்பு, அன்பு, பயம் எல்லாம் கலந்த ஒரு விசித்திரமான முறையில்தான் யாழ்ப்பாணத்து மக்கள் சுவாமிகளை நோக்கினார்கள். சுவாமிகளது அடியார்களுட் சிலர் அவர் மீது அன்பு கொள்வதிலும் பார்க்கப் பயப்பட்டார்கள் என்றே கூறவேணடும். சுவாமிகளால் வரவேற்கப்பட வேண்டுமென்றால் சாதாரணமாக எதுவித அடிப்படை நோக்கம், காரணம் இல்லாது செல்லவேண்டும். ஒரு உள்ளார்ந்த நோக்கும் காரணமுமில்லாத நிலைகொண்ட தூய நிலைப்பாடு பெறுதற்கரிய ஆத்மீகத்தின் உச்சநிலையாகும். உண்மையில் அத்ததகைய தூய நனவுநிலையினை ஒருவர் பெற்றால் அவர் சுவாமிகளுடன் ஒன்றிய நிலையை அடையமாட்டார்களா? எதுவித குறிப்பிடத்தக்க காரணமுமின்றி சுவாமிகள் முன்னிலையில் நிற்பதற்கு என்னளவில் எனக்கு இருந்த நம்பிக் கையின்மை, அவரை நான் காணவேண்டுமென்ற அவாவைத் தடுத்துக் கொண்டிருந்த மற்றுமொரு முக்கிய காரணமாகும்.
கொழும்புக் கடற்கரையோரமாக நான் நெடுந்தூரம் நடந்து வந்துவிட்டேன். சூரிய மறைவிற்கு முன்பதாகத் தமது
233

Page 129
வள்ளங்களைத் தெகிவளை மணற்பகுதிக்குத் தள்ளிவிட வேண்டும் என்று மீனவர்கள் விரைவாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களது சத்தமும், மீன்நிரம்பிய கூடைகளும் அமைதியான அந்த மாலை வேளையைக் குழப்பிக்கொண்டிருந்தன. ஆகவே நான் அவர்களது இடத்தை விட்டு அப்பால் சென்று எவருமே தென்படாத இடத்தில் கடலை நோக்கியிருக்கும் பாறையொன்றைத் தெரிவுசெய்தேன். சூரிய அஸ்தமனம் காரணமாக வானம் மெதுவாகப் பல வர்ணங்களால் ஒளியூட்டப்பட்டுக் கொண்டிருந்தது. மாலை வேளை மனோரம்மியமாக, இதமாக இருந்தது. மெதுவாக வருடிச்செல்லும் கடற்காற்று ஒருவரது நரம்புகளில் தனி உற்சாகத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஓயாது இரைந்து கொண்டிருக்கும் கடலின் ஒசையும், அலைகள் பாறைமேல் மோதி சிதறிச் செல்லும் காட்சியும் சிந்திப்பதற்கு ஏற்ற பொருத்தமான விடயமாகத் தென்பட்டது. களைப்பேயில்லாத அந்த அலைகள் கோடானு கோடி ஆண்டுகளாக அதே கற்பாறைமீது மோதிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அக் கற்பாறையோ திடமாக உறுதியாக இருந்துள்ளது. காலாதிகாலமாக மனிதரிடையே எழுந்த ஆத்மீக அவாவும் இதுபோன்றதல்லவா? மனிதனும் கடவுளின் உண்மை பற்றி அறிவதற்கு முடிவில்லாது பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால் இன்றும் அறியப்படாததாய் இரகசியமான வினோதமான ஒன்றாகவே அது இருக்கிறது. அலைகள் சிறு சிறு அகங்கார முனைப்புக்களாகும். உதயமாகும் மொத்த பிரபஞ்ச உணர்வு நிலைக்கு நாம் கடலை ஒப்பிடலாம். இவ்வலைகள் உண்மையின்மீது மோதி உருக்குலைகின்றன. ஆனால் அவை மீண்டும் மற்றுமோர் அலையாகவே வேற்றுருப் பெறுகின்றன. இவ்வாறு நான் சிந்தித்துக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு வயதான கறுவல் மனிதர் ஒருவர் என்னைநோக்கி வந்து தான் கூறுவதை நான் கேட்க வேண்டுமென்று நிர்ப்பந்தப் படுத்தினார். எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அவரது தாற்பரியம்
234

சற்று ஆக்கிரமிப்புத் தன்மை கொண்டதாய் இருந்தாலும் அவரது சுபாவம் முழுமையாக அன்பும் இரக்கத் தன்மை வாய்ந்ததுமாக இருப்பதை நான் விரைவில் கண்டுகொண்டேன். “இளைஞனே உமது நேரத்தை ஏன் வீணாக்குகிறாய்?” என்றார். எமது தொடர்பு விரைவில் நெருங்கிய நட்பு நிலையாக உருவாகியது. தான் ஒய்வு பெற்ற அரச ஊழியர் என்றும் யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை எனும் ஊரில் மனைவி குடும்பத்துடன் வாழ்பவர் என்றும் தன்னை எனக்கு அறிமுகப் படுத்தினார். அவரை நான் அறிந்து கொண்ட சில நிமிடங்களிலேயே அவர் யோகசுவாமிகளைப் பற்றி வெகு உற்சாகத்துடன் எனக்குக் கூறிக்கொண்டிருந்தார். “இத்தீவிலேயே வசிக்கின்ற எமது ஞானியைத் தரிசிக்க நீர் எவ்வித சிரத்தையும் எடுக்காதது உண்மையில் வெட்கப்படவேண்டியதொன்று தான்” என்று அவர் உணர்த்தினார்.
நான் யாழ்ப்பாணம் செல்வதற்குரிய பயணக் கட்டணத்தையும் தான் கட்டுவதாக இம்மனிதர் அன்பாக முன்வந்ததோடு அல்லாமல் " நான் விரும்பும் வரை அவரது இல்லத்திலும் தங்கலாம் என்றும் எனக்கு அழைப்பு விடுத்தார். அவர் கூறியபடி உண்மையில் குறிப்பிடத் தக்கதான பல வாரங்கள் நாங்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றாகக் கழித்தோம். அவர் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் உட்பட அப்பகுதியிலுள்ள பிரசித்திபெற்ற எல்லாக் கோவில்களுக்கும் என்னை அழைத்துச் சென்றார். இவர் சிறந்த பக்தியுள்ள இந்துவாக இருந்தமையால் யோகசுவாமிகளிடம் செல்வதற்கு முன்னோடியான ஆயத்தங்களால் என்னைத் தூய்மைப் படுத்த வேண்டுமென்ற ஆழமான நம்பிக்கை கொண்டி ருந்தார். சூரியன் உதயமாவதற்கு முன்பே விடியற் காலையில் அவர் மனைவி சைவத் திருமுறைகளில் உள்ள பாடல்களைப் பாடுவார். கோவில்களுக்குச் செல்ல முன்பு அவசியம் செய்ய வேண்டிய காரியங்களான வெள்ளை வேட்டி உடுத்தல், சந்தனம் வீயூதி உடம்பில் பூசிக்கொள்ளல் போன்றவற்றை
235

Page 130
நான் அடிக்கடி செய்ய வேண்டியதாக இருந்தது. இதில் அடங்கியுள்ள சமய அல்லது ஆத்மீக தாற்பரியங்களை நான் அறிந்துகொள்ளவில்லை. ஆனால் அவை இத்தகைய உத்வேகமற்ற, பயபக்திநிரம்பிய வைபவங்களுக்கு ஓரளவில் கவர்ச்சியையும் பிரகாசத்தையும் அளித்திருக்கலாம் என எண்ணினேன். கிழமைகள் கழிந்து கொண்டே போகும் போது, எனது தாராள மனப்பான்மை மிக்க இல் லத் தலைவரால் எனக்கு அளிக்கப் படும் விருந்துபசாரத்தையும் நல்வரவேற்பையும் நன்கு நான் அனுபவித்துக்கொண்ட போதிலும் யோகசுவாமிகளிடம் இன்னும் போகவில்லையே என்ற எண்ணத்தால் நான் சிறிது பொறுமையிழக்கத் தொடங்கினேன். எனது நண்பன் துல்லியமான முறையில் என்னை இந்து வாழ்க்கை நெறிக்கு மாற்றிவிட முனைகின்றாரா? என்று கூட நான் அங்கலாய்க்கத் தொடங்கி விட்டேன். எவ்வாறாக இருந்த போதிலும் அத்தகைய ஒரு பிரயத்தனம் தேவையற்றது. ஏனெனில் நான் வேதாந்த தத்துவத்தில் ஏலவே சிறிது இசைவாக்கமுடையவனாக இருந்தேன். யோக சுவாமிகளுடனான நேர்முகச் சந்திப்பிற்கு முன்னோடியாகவே சிலகால ஆயத்த நடவடிக்கைகள் கட்டாயம் தேவைப் பட்டன என்றதில் எனது நண்பன் மிகவும் நம்பிக்கையுடையவராக இருந்தார் என்பதை நான் பின்பு உணர்ந்து கொண்டேன். ۔۔۔۔
ஒரு மாதம் கடந்து விட்டது. நான் கொழும்பிற்கு மீள வேண்டுமென அவாக்கொள்ளத் தொடங்கினேன். யோகசுவாமிளைக் காண வேண்டுமென்று முன்பு எனக்கு இருந்த ஆவல் இப்போது மிகு விரைவாகவே குறைவுற்று வருவதால் அவரைக் காணாமலேயே நான் யாழ்ப்பாணத்தை விட்டு விலகுவோம் என்று இறுதியாகத் தீர்மானித்தேன். எனது இத் தீர்மானத்தை நண்பருக்குத் தெரிவித்த போது அவர் வெகுவாகச் சந்தோஷப்பட்டு “ஆ சரியான வேளை இப்போது வந்துவிட்டதென நான் நினைக்கின்றேன். அவர்
236

மீதுள்ள அக்கறையை நீர் இழந்து கொண்டு வருவதென்றால் அவரைச் சந்திப்பதற்கு நீர் ஆயத்த நிலையில் இருக்கின்றீர். நாம் நாளையே போவோம்.” என்றார். அவர் பேசி முடித்த பின்பு தான் இந்த நீண்ட காலமாகக், காத்திருத்தல், ஆயத்தம் செய்தல் ஆகியவற்றின் அடிப்படை உண்மைக் காரணத்தை முதன் முறையாக நான் ஒப்புக் கொள்ள முடிந்தது. இத்தகைய ஒரு சந்திப்பிற்குச் சூரியோதய வேளையே உகந்தது எனக் கொண்டு மறுநாட் காலை நாங்கள் யோகசுவாமிகளைத் தரிசிக்கச் செல்வதெனத் தீர்மானித்தோம்.
நெடிது உயர்ந்து வளர்ந்த பனைமரங்களின் ஒலைகள் மெல்லிய பூங்காற்றிற்கு அசைவதால் ஏற்பட்ட சலசலப்பு ஓசையைத் தவிர அக்காலை வேளை மிகவும் அமைதியானதாகவும் குளிர்ந்ததாயும் இருந்தது. ஒடுக்கமான தூசிபடிந்த வீதிகளுடாக நாம் ஒசையின்றி நடந்து சென்றோம். பட்டினம் இன்னமும் உறங்கிக் கொண்டேயிருந்தது. யாழ்ப்பாணப் பட்டினத்திலே உள்ள ஒரு வீட்டின் தோட்டப்பகுதியில் அவருக்கெனப் பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட ஒரு சிறு குடிசையில் யோகசுவாமிகள் வாழ்ந்து வந்தார். குடிசை ஓலையால் வேயப்பட்டிருந்தது. முழுமையாகப் பார்க்குமிடத்து சாதாரணமான எளிய நிலைப்பாட்டை அது உணர்த்தியது. சுவாமிகள் எவ்வாறு தோற்றமளிப்பார் என நான் கற்பனை செய்திருந்தது போலவே அவர் தோற்றமளித்தார். அவர் வயோதிபப்பருவமும் மென்மையான உடலமைப்பையும் கொண்டிருந்தார். அவர் சுமாராக நடுத்தர உயரம் கொண்டவர். அவரது நீண்ட நரைமுடி அவர் தோள்களில் புரண்டு கிடந்தது. நாம் அவரை முதன் முதலில் கண்ட போது அவர் நீண்ட ஒரு விளக்குமாற்றினால் முன்பக்கத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தார். அவர் மெதுவாக எம்மை நோக்கி வந்து படலையைத் திறந்தார். "நான் ஒரு கூலியின் வேலையைச் செய்கிறேன். ஒரு கூலியைப்
237

Page 131
பார்ப்பதற்கு நீங்கள் ஏன் வந்தீர்கள்?” என்று கண்களில் குறும்புத்தனம் மிளிர உள்ளூர ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டார். சிறிது வேறுபாடான உச்சரிப்பில் ஆனால் நல்ல ஆங்கிலத்தில் அவர் பேசியதை நான் அவதானிக்க முடிந்தது. அவர் கூறும் வாக்கியங்களில் வழமையாக ஓர் ஆழ்ந்த மறைபொருள் இருப்பதனால் நான் அவர் கூறிய வாக்கினை இத்தகைய ஒரு கருத்துப்படக் கொண்டேன். "நான் மனிதப் பிறவிகளது ஆத்மீக சுத்திகரிப்பாளன். நீங்கள் எதற்காக உங்களைச் சுத்திகரிக்க விரும்புகிறீர்கள்?” தனது குடிசைக்கு வருமாறு மெதுவாகச் சைகைகாட்டினார். சிறிதளவு உயர்ந்த ஒரு பீடத்தில் சப்பாணிகட்டியவாறு சுவாமிகள் உட்கார்ந்தார். நாம் அவரை நோக்கியவாறு நிலத்தில் இருந்தோம்.
நாம் இதுவரை யாதும் பேசவில்லை. அன்று காலை அவரே பேசிக்கொண்டிருந்தார். நாம் அதிகம் பேசவில்லை. அவருடன் பேசுவது அனாவசியமானது. ஏனெனில், நாம் ஒன்றை நினைக்க வேண்டியதுதான் அவர் உடனடியாகவே அதற்குப் பதில் கொடுத்து விடுவார். நான் எனது வினாக்களை வாயால் சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை. எல்லா வேளையும் எனது எணணங்கள் அனைத தையும் சுவாமிகள் தெரிந்துகொண்டிருந்தார்.
நாங்கள் நிலத்தில் செளகரியமாக இருந்ததன் பின்னர் சுவாமிகள் கண்களை மூடி அரை மணித்தியாலம் வரை அசைவற்றிருந்தார். அவ்வேளை அவர் தனக்கேயுரித்தான பிறிதொரு பரப்பில் சஞ்சரித்திருந்தார். அவரது முகபாவ மானது அவரின் ஆழ்ந்த தியானத்து ஆனந்த நிலை என்லாம். அவர் துயிலுகிறாரா? நாம் அவரால் வரவேற்கப் பட்டமை எமது அதிர்ஷ்டமே என எனது நண்பர் தனது தளர்வான புன்முறுவலால் எடுத்தியம்பினார்.
238

திடீரெனச் சுவாமிகள் கண்விழித்தார். ஒளிமிக்க அக் கண்கள் குடிசையில் நிலவியிருந்த இருளை நீக்கி, பிரகாசமாக்கின. அவரது கண்கள் பிரகாசமாக இருந்ததோடு கனிவுற்றதாகவும் விளங்கின. கருணையின் கனிவு அவற்றில் இருந்தது. இப்போது பசியையும் களைப்பையும் நான் உணரத் தொடங்கினேன். உடனே அவ்வேளை சுவாமிகள் “காலை உணவாக என்ன சாப்பிட விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது எதைத்தான் வழங்கினாலும் அதை நான் ஏற்கத் தயாராக இருந்த போதிலும் யாழ்ப்பாண உணவுவகையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த இட்டலியும் வாழைப்பழத்தையுமே நான் எண்ணினேன். சட்டென்று குடிசைக்குள் ஒரு புதியவர் மிக்க பணிவுடன் நுழைந்து ஒரு தட்டில் தாம் கொண்டுவந்த இட்டலியையும் பழத்தையும் எமக்குப் பரிமாறினார். பின்னர் எனது நண்பர் காப்பிசாப்பிட விரும்பினார். அவர் தமது எண்ணத்தை வெளிப்படுத்த முன்னதாகவே அதே மனிதர் மீண்டும் அங்கு வந்து காப்பியைப் பரிமாறினார். சாப்பிட்ட பின் வாழைப்பழத் தோலை வெளியே எறிய வேண்டாம் என்று சுவாமிகள் கூறினார்கள். அவை பசுவுக்கு ஆகும். தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுவை நோக்கி உரத்த குரலில் பேச்சுக் கொடுத்தார். பசு சாவகாசமாகக் குடிசைக்குள் நுழைந்தது. சுவாமிகள் வாழைப்பழத் தோலை அதற்கு ஊட்டினார். அது அவரது கையை நன்றியுடன் நக்கிவிட்டு அவ்விடத்திலேயே இருப்பதற்கு எத்தனித்தது. சுவாமிகள் தனது கையிலிருந்த இறுதி வாழைப்பழத் தோலை அதற்கு நீட்டிய வாறே ‘இனி எம்மை எம்பாட்டில் இருக்க விடு வல்லி எம்மைக் குழப்பாதே. எனக்கு விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள்” என்றார். பசு மரியாதையுடன் தலையை ஆட்டிவிட்டு மிகவும் கீழ்ப்படிவுடன் அவரது கட்டளையை மேற்கொண்டது. பசு போனபின்பு சுவாமிகள் மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். மீண்டும் அவர் தனக்கே யுரித்தான அந்த உலகில் தன்னை மறந்த நிலையில் காணப்பட்டார்.
239

Page 132
இவ்வேளைகளிலெல்லாம் சுவாமிகள் ஏன் கண்களை மூடிக்கொள்கிறார் என்பதை அறிவதற்கு நான் மிகவும் ஆவலுற்றேன். அவர் தியானிக்கிறாரோ என யோசித்தேன். இவ்விடயத்தை முன்வைத்து ஆய்வுறுவதற்கு இது தகுந்த நேரம் இல்லை என்றாலும் நான் வினாவுவதற்கு எத்தனிக்க முன்பே திடீரென சுவாமிகள் விழித்துப் பேசத் தொடங்கினார். “இந்த மரக்கிளைகளைப் பாருங்கள். இம்மரங்கள் தியானிக்கின்றன. தியானம் என்பது சலனமற்ற நிலையாகும். நீ உண்மையில் ஒன்றையுமறிந்திலை, என்று உணரும்போது தியானத்தில் அமைகின்றாய். அத்தகைய உண்மை நிலையே சலனமற்ற நிலை. சலனமற்ற நிலையே தியானம்” என்றார். சுவாமிகள் வெகு உற்சாகமாக முன்புறமாக வளைந்து 'நீ எளிமையாக இருக்க வேண்டும். நீ உனது உணர்வு நிலையில் வெறுமையாக சும்மா இருக்க வேண்டும். நீ ஒன்றுமில்லை என்ற நிலைக்கு உன்னைக் குறுக்கிக் கொள்ள வேண்டும். அப்போது உனது "நான்” என்றது மறைய f ஒன்றுமில்லை என்ற நிலைக்கு வந்ததும் நீயே கடவுளாகிறாய். நான் ஒன்றுமில்லை என்று எண்ணுபவன் கடவுளை அறிவான். ஏனெனில் கடவுளும் ஒன்றுமிலியாம். ஒன்றுமில்லை என்பது தான் எல்லாமாகும். பாருங்கள் நானும் ஒன்றுமிலி, நான் ஒரு பிச்ச்ைகாரனாக இருப்பதனால் நான் எல்லாவற்றையும் உரிமைகொண்டிருக்கின்றேன். ஆகவே ஒன்றுமிலி என்பது எல்லாமாகும், விளங்கியதா?’ என்றார்.
ஒன்றுமிலி நிலைபற்றி எமக்குச் சொல்ல வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் எனது நண்பர் வேண்டினார். உண்மையில் எதையும் நீ விரும்பவில்லை என்பதாகும். உனக்கு ஒன்றும் தெரியாது என்பதை நீ நேர்மையுடன் கூறக்கூடியதாக இருத்தல் என்பதாகும். இந்த ஒன்றுமிலி நிலைபற்றி ஏதும் செய்வதற்கும் நீ ஆர்வமின்றி இருக்கும் நிலையையும் குறிக்கும் என்றார். ஒன்றும்
240

அறியாமை என்பது பற்றி அவர் என்ன கருதினார்? ஒரு நிலையிலிருந்து மற்றொன்றாக மாறும் தூய நிலையில் அமைந்து இருப்பவனாகக் கருதினாரா? நான் சிந்தித்தேன். உனக்குத் தெரியுமென நீ நினைக்கின்றாய். ஆனால் உண்மையில் உனக்கு ஒன்றும் தெரியாது. உன்னைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது என்பதை நீ கண்டுகொண்டால் அப்போது நீயே கடவுளாகின்றாய். இந்தச் சும்மா இருக்கும் நிலைப்பாட்டைப் பற்றி யோகசுவாமிகள் அடிக்கடி எடுத்தியம்புவார். அதுவே அவரது உயிர்நாடி எனக் கொண்டு அவர் அதுபற்றிப் பேசுவார். இந்தச் சமாதி நிலையை அனுபவிக்காத ஒருவனுக்கு அதைப்பற்றி எத்தகைய விளக்கமும் மறைமுகமாகவே இருந்துவிடும். சுவாமிகளது முன்னிலையில் ஒருவர் அந்த ஆனந்தத்தின் ஒரு கீற்றினை உணரக் கூடியதாக உள்ளது. யேகசுவாமிகளது நனவு நிலையானது விரிந்து அவருக்கு முன்னால் நேரடியாக இருந்தவர்களையும் உள்ளடக்கிக் கொண்டு விட்டதா அன்றி வர்ணிக்க முடியாத உயர் நிலை அல்லது சும்மா இருத்தலின் ஆனந்தம் அல்லது சமாதி நிலையானது ஒருவர் தாமாகவே தம்மை ஏமாற்றிக் கொள்ளப்பட்ட நிலையா? இது இலகுவில் தீர்மானிக்கக் கூடிய விடயமல்ல. யோகசுவாமிகள் கூறிய அனைத்துமே அதிசயிக்கத் தக்க எளிமையானவையாக இருந்தன. இதனால் அவர் கூறும் நடைமுறைப் படுத்தக் கூடிய செயற்பாடுகளில் தற்காலிகமாகவாவது, ஒருவர் தம்மை உள்ளடக்கிக் கொள்ளக் கூடியவராக ஆகிவிடுவார். பின்னர் குறுகிய வேளை எனது சிந்தையை சுதந்திரமாகச் சிந்திக்க இடமளிப்பது போல நான் எவ்வித வினாவையும் கேளாது, சுவாமிகள் கூறியவற்றை நுண்ணிதாக ஆராய முற்பட்டேன். இந்தச் சும்மா இருத்தல் நிலையானது தெய்வ அருட்செயலா? இந்த நிலை ஒருவரில் நிர்ப்பந்திக்கக் கூடியதாக இருக்குமா? எவ்வித மனோசக்தி விரயமில்லாது இந்த நிலையை ஒருவர் தற்செயலாகப் பெறக்கூடியதாக இருக்கிறதா? சும்மா இருத்தலை, பலாத்காரமாக
24

Page 133
நிலை நிறுத்த எடுக்கும் எத்தகைய முயற்சியும் ஒருவரின் அகங்காரத்தைத் தூண்டிவிட மாட்டாதா? இத்தகைய எனது ஐயப்பாட்டையும் பிரச்சினையையும் அறிந்து கொண்ட யோகசுவாமிகள் நான் மறக்கமுடியாத சாரமுள்ள குறிப்பினால் எனக்கு விடையளிக்க முன்வந்தார். "நயம் பெறுவதற்கும் ஒன்றுமில்லை. நட்டமுறவும் ஒன்றுமில்லை என்பதை நீ உணரும் போது அங்கு சும்மா இருக்கும் நிலை நிலவுகிறது” என்றார்.
எமது உரையாடல் சுவாரஸ்யமான கட்டத்தை நோக்கித் திரும்பிக் கொண்டு இருக்கையில் அது குடிசைக்குள் நுழைந்த ஒருவரால் தடைப்பட்டது. இம்மனிதர் யோகசுவாமிகளது நெருங்கிய அடியார் எனத் தெரியவந்தது. அவர் ஒரு தீபத்தை ஏற்றினார். சில மல்லிகைப் பூக்களை நிலத்தில் தூவினார். குளிர்ந்த அச்சீமெந்துத் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து யோகசுவாமிகளின் பாதங்களை முத்தமிட்டார். “சுத்தமுட்டாள் இது சந்நிதானமில்லை! நீ என்னைக் கும்பிடுகிறாயா இல்லை உன்னைக் கும்பிடுகிறாயா? ஏன் இன்னொருவரைக் கும்பிட வேண்டும்?” என்று உரத்த குரலில் கூறினார். பாவம் அந்த மனிதன். மிகுந்த மரியாதையுடனும் நடுக்கத்துடனும் குடிசையின் மூலைப் புறமாகப் போய்விட்டார். “இன்னொருவரைக் கும்பிடுவதனால் கடவுளைக் காணலாம் என்று நீ நினைக்கின்றாயா? பூக்களை வைத்து தீபத்தை ஏற்றி விசர் வேலை செய்கிறாயே! இலஞ்சம் கொடுத்துக் கடவுளைக் காணலாம் என்று நினைக்கின்றாயா?” என்றார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் சுவாமிகளது கணிடித்தல் அடியார்கள் பலர் எண்ணிக்கொள்வது போல அவர் ஆன்மீக ஆசிரியர் அல்லது குருவின் கற்பித்தற் கடமை என்ற நிலையிலிருந்து தோன்றிய வெளிப்பாடொன்று என்பதற்கில்லை. ஆயின் மனித மூடத்தனத்தினால் பெரிதும் மனம் கலங்கிய ஒருவரால் தற்செயலாகச் சமயோசிதமாக வெளிப்படுத்தப் பட்ட பேச்சென்றே கூறவேண்டும். உண்மையில்
242

யோகசுவாமிகள் தான் கூறும் வாக்கியங்களைப் பாதுகாத்து வைக்கத் தேவையில்லாத குப்பைக்கு ஒப்பிட்டு அவற்றைக் குறித்து வைத்துக் கொள்ளும் முறையைப் பெரிதும் தவிர்த்தார். இயல்பாகவே கூறப்பட்ட கூற்றுக்களின் பெறுமானம் அவை எழுவதற்குக் காரணமாயிருந்த் தனிப்பட்ட, மீண்டும் எழாதிருக்கக் கூடிய சந்தர்ப்பங்களில் தான் தங்கியுள்ளது என்று தான் அவர் கருதிக் கொண்டார் என்று நான் கருதினேன்.
சுவாமிகள் தன்னை வணங்கிய அந்த மனிதனுக்குத் தான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றவாறு கையை அசைத்தார். பின்னர் அவர் சற்று நடுநடுங்கிக் கொண்டிருந்த தமது கைகளைத் தமது இதயத்தின் மீது அழுத்தி மிகவும் கெம்பீரமான நிலையில் இருந்து கொண்டு உரத்த குரலில் “பார்! அது இங்கே இருக்கிறது. கடவுள் இங்கு இருக்கின்றார். அது இங்கே இருக்கிறது” என்றார். மீண்டும் சில நிமிடங்கள் அவர் கண்களை மூடிக்கொண்டார். இத்தகைய இடைவெளிகள் தான் கூறியவற்றின் அர்த்தங்களை தனக்கு முன்னால் இருந்து கேட்போரது சிந்தையில் மெதுவாக உள்ளிறங்க வேண்டும் என்பதற்காக அவர் ஏற்பாடு செய்ததொன்றாக இருக்கலாம். நிமிர்ந்து நேராக நிற்கும் முள்ளந்தண்டு, சப்பாணிகொட்டிய நிலை, துயில் நிலையைக் குறிக்கும் முகம், ஆனால் அது மேலான உணர்வுநிலையில் சஞ்சரிக்கும் தாற்பரியம், இவற்றுடன் யோகசுவாமிகள் கண்களை மூடித் தியானத்தில் இருக்கும் போதெல்லாம் ஒரு வித வினோதமான, இராஜகம்பீர, புத்தரைப் போன்ற ஒரு மதிப்பான தோற்றமாய் இருந்தது.
“காலமோ குறுகியது. விடயமோ பரந்தது”. அதி ஆழமான தன்மையை முன்வைத்து மெதுவான குரலில் கூறினார். கடவுளை அல்லது உண்மையை அறியும் விடயம் மிகவும் பரந்தது. ஒருவருக்குக் கிடைத்திருக்கும் வாழ்நாளோ வரையறுக்கப் பட்டது.
243

Page 134
அதை அவன் தேவையற்ற கிரியைகள், விழாக்களில் கழித்துவிடக்கூடாது என்பதே இப்புதிரிலடங்கியதாக இருக்கலாம்.
நான் கேட்டுக்கொள்வதற்குத் தயக்கப் பட்டுக் கொண்டிருந்த வினா ஒன்று அவ்வேளை எனக்கு முக்கியமானதாகத் தென்பட்டதாகவும் இருந்தது. எவ்வாறு ஒருவர் மனச்சோர்வை வெல்லலாம் என்பதே அது. நான் இவ்வினாவைச் சிந்தையில் உருவாக்கி முடிந்ததும் தான் தாமதம் சுவாமிகள் அதற்கு விடையை உடனடியாகவே கூறினார். "மனச் சோர்வு என்றால் என்ன? எல்லாம் நன்மைக்கே எனக் கொள்ளாத நிலையைத் தானே நீ எண்ணுகிறாய்? எல்லாம் நன்மைக்கே எனக் கொள்ளாத நிலையும், எல்லாம் நன்மைக்கே எனக் கொள்ளும் நிலையும் ஒன்றுதான் அவை ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். எல்லாம் நன்மைக்கே எனக் கொள்வதிலும் பார்க்க எல்லாம் நன்மைக்கே எனக் கொள்ளாது இருப்பதால் மேலான நிலையை அடையப் போவதுமில்லை. இன்ப துன்பங்களால் பிரதிபலிக்கப்படும் நன்மையில் நம்பிக்கையுடைமையும், நன்மையில் நம்பிக்கையின்மையும் வாழ்க்கையை நீ பார்க்கும் கோணத்தில் தங்கியுள்ளது. ஆனால் வாழ்வு என்பது இரண்டுமே அல்ல. கோணங்களில் இருந்து பார்க்காது இருமை நிலையையும் நீக்கி வாழ்க்கையை வாழ்க்கையாகவே நோக்கினாயேயானால் வாழி வானது நன்மையில் நம்பிக்கையும் நன்மையில் நம்பிக்கையின்மையும் என்றதல்ல என்பது புலப்படும்.” இவ்வாறு அவர் கூறிக் கொண்டிருக்கும் போது வயது வந்த ஓர் அமெரிக்க நாட்டுப் பெண்மணி உள்ளே நுளைந்தார். விரைவாகவே கால் அணியைக் கழற்றிவிட்டு நிலத்திலிருந்த எம்மவருடன் சேர்ந்து கொண்டார். அங்கிருந்த ஒவ்வெருவரையும் நோக்கித் தனக்குப் பழகிப் போன முறையில் புன்னகை புரிந்ததும், சுவாமிகளை மிகவும் அன்புடன் அஞ்சலி செய்ததும் அவர் அக் குடிசைக்கு அடிக்கடி வந்து போகும் ஒருவர் எனபதை விளக்கியது. "நீ என்ன
244

பண்ணிப்போட்டாய்?" சுவாமிகள் மிகவும் விளையாட்டாகவே கேட்டார். "அயலில் உள்ள இந்து ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். மிகவும் நிம்மதியாக இருந்தது அங்கு” என்றாள். “அந்தக் கல்லுக் கோயிலையா நீ சொல்லுகிறாய்? சுவாமிகள் சிரித்துக் கொண்டே கேட்டார். “கல்லுக்கோயிலிலே கல்லுச்சாமிகளை நீ கும்பிடப் போயிருந்தாய்? ஒரே ஒரு கோயில் தான் உண்டு. அந்தக் கோயில் தான் நீ ஆகும். கடவுளை அறிவதற்கு நீ நீயாகிய கோயிலை அறிய வேண்டும். வேறு கோயில்கள் இல்லை. எவருமே உன்னைக் காப்பாற்ற முடியாது” என்றார்.
“கிறிஸ்துவும் புத்தரும் என்னவாம்? அவர்கள் எமக்கு உதவமாட்டார்களா? இடையிட்டாள் அந்த அமெரிக்கப் பெண். அவள் வினாவிய விதத்திலிருந்து அவள் வினாவியது மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலினால் அல்ல, ஆனால் யோகசுவாமிகள் கூறியது அவளது உள்ளத்தில் ஏற்படுத்திய சமயரீதியான தாக்கலின் பிரதிபலிப்பாபக இருந்தது என்பது தெளிவாக விளங்கியது. “புத்தரும் கிறிஸ்துவும் தமது சுய முயற்சியால் தம்மைத் தாமே தம்முயற்சியால் பாதுகாத்துக் கொண்டனர். பின்பு போதனையாளர்கள் அந்தக் குப்பையை எடுத்துப் பிரசாரம் செய்தார்கள். போதனையாளர்கள் மட வேலை செய்தார்கள். இந்த ஆத்மீக வியாபாரத்தில் ஒவ்வொருவரும் தமக்காகவேதான். உனக்கு உதவி செய்வதாகக் கூறும் எவரையும் நம்ப வேண்டாம். எவருமே உனக்கு உதவிசெய்ய முடியாது. ஏனெனில் எவராலுமே இயலாது. இன்னொருவர் உனக்கு வழியைக் காட்டலாம், ஆனால் நடக்கவேண்டியது நீ தான்", என்றார்.
இவ்வாறு சுவாமிகள் உரையாற்றிக்கொண்டு இருக்கையில் நாம் ஒன்றிய கவனத்துடன் அவரது ஒவ்வொரு வார்த்தையையும் கிரகித்துக் கொண்டும், அச் சிறு குடிசையிலே நாம் கழித்த
245

Page 135
ஒவ்வொரு நிமிடத்தையும் பொன்னானதெனக் கொண்டும் இருந்தோம். குடிசையின் குறுகிய வாயிலில் இப்பொழுது பலர் குழுமி நின்றார்கள். அதனால் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. "நீங்கள் எல்லோரும் ஏன் என்னைப்பார்க்க வந்தீர்கள்? அந்த வினா அங்கு குழுமியிருந்த ஒவ்வொருவருக்கும் கேட்கப்பட்ட தொன்றேயொழியப் புதிதாக வந்ததவர்கட்கு மட்டுமல்ல. "நான் உங்கள் ஒவ்வொருவரையும் போல ஒரு மடையன் தான். நானும் அறிந்துகொள்வதற்காகத் தேடுகிறேன். இருட்டிலும் தேடி முயற்சிக்கிறேன். உண்மையில் நான் உங்களுக்கு உதவமுடியாது. நான் உங்களுக்குத் தரக்கூடியதாக என்னிடம் ஒன்றுமில்லை. இங்கிருந்து நீங்கள் எடுத்துப் போவதற்கும் ஒன்றுமில்லை. நான் ஒரு மடையன் என்பதை யாரும் நம்புகிறார்கள் இல்லை. நான் ஒரு மடையனே!"
"ஆனால் நீங்கள் அப்படியில்லை.” அந்த அமெரிக்கப் பெண்மணி பொறுமையிழந்து அவரது அறமிஞ்சிய பணிவின் பொய்மையை வெளிப்படுத்துவது போல வெடுக்கென்று சொன்னாள். “ஒரு வேளை நான் ஒரு வித்தியாசமான மடையனாக இருக்கலாம். எனது மடைமைத்தனத்தை எனது சம்மதத்துடனேயே ஏற்றுக்
கொள்ளும் ஒரு மடையன்."
யோகசுவாமிகள் சில ஆண்டுகளுக்கு முன் காலமாகி விட்டார். ஆனால் அவருக்குரியதான முறையிலே அவர் வெளிப்படுத்தியதெல்லாம் என்றும் நிலைத் திருக்கும் உண்மைகளாகவும் அவரைச் சந்தித்த அனைவருக்கும் உத்வேகத்தின் ஊற்றாகவும் இருக்கும். காலவரம்பில்லாத ஆத்மிக தத்துவ ஞானத்தைப் பற்றிப் பல பல நூல்களை வாசிப்பதிலும் பார்க்க வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசானுடன் என்றும்
246

நினைவிலிருக்கும் நேர்முகச் சந்திப்பில் உரையாடுவதனால் ஏற்படும்
அனுபவமானது மிகவும் தெளிவான தொன்றாக இருக்கும்.
சுஸந்த வீரபெரும7
நன்றி
Homage to Yogaswami
ஆங்கில மொழி வெளியீடு
மெழிபெயர்ப்பு
米 来 米 米 米 米
மனிதன் பரிசுத்தமாக இருந்து பேசுவதெல்லாம் திருவாசகம். நாங்கள் பரிசுத்தமாய் இருக்கிறோம் எங்களுக்குள்ளேயே திருவாசகமாயிருக்கிறது. மாணிக்கவாசகர் பேசியது திருவாசகம்.
சுவாமிகள் அருள் மொழி
மன அடக்கமும், அடியாருறவும், அறிஞர் நட்புமே துன்பந் துடைக்கும் நெறியாகும்.
அருள் மொழி
247

Page 136
என் கணிகண்ட தெய்வம்
"தெய்வத்தை நம்பு. முழுமனத்துடன் நம்பு” என என் கணி கண்ட தெய்வமாகிய யோக சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். அடியேன் இத் தெய்வத்தை முதன் முறையாகத் தரிசிக்கும் பேறு இற்றைக்கு முப்த்தோராண்டுகட்கு முன் கிடைத்தது. இரண்டாம் முறை தரிசனங்கிடைத்த போது எனக்குச் கிடைத்த திருஉபதேசம் “எல்லாம் போதுமென்றிரு. ஒருவரையுங் குறை கூறாதே’ என்பதாகும். அப்போது எனக்கு வயது இருபத்திரண்டு, விவாகமாகி மூன்று குழந்தைகட்குத் தயாகியும் இதற்குப் பின்தான் எங்களுக்கென்று தனிச் சீவியம் தொடங்கவிருந்தோம். அந்நிலையில் “எல்லாம் போதுமென்றிரு” என்ற மகா வாக்கியத்தின் உண்மைப்பொருளை உணர்ந்து ஒழுக மனமென்னும் குரங்கு அனுமதிக்கவில்லை. கஷ்டங்கள் நேரும்போது மற்றவர்களுடைய செயல்களால் நான் கஷ்டப்படுகிறேன் என்ற கவலை தோன்றும். உடனே மகாவாக்கியம் நினைவுக்கு வரும். இவ்வாறு காலப் போக்கில் இதை முழுதும் உணர்ந்து என் சிந்தையைத் தெளிய வைத்து விட்டது இம்மகாவாக்கியம். முழுமனத்துடனும் தெய்வத்தை நம்பினேன்.
நாம் முன்பு செய்த புண்ணியச்சேர்க்கையால் கிடைத்தற்கரிய இம்மானுடப் பிறவி எடுத்தோம். அதிலும் பரனுடைய திருவடிகளைத் தரிசிக்கவும் தொழவும் அவருடைய திரு உபதேசங்களைக் கேட்கவும் பேறுகிடைத்த நாங்களல்லவோ பாக்கியசாலிகள்.
ஈன்றாளுமாய், எந்தையுமாய், குருவுமாய் எங்களை வேண்டும் போது அடித்து அணைத்து அருளி ஆட்கொண்டது எங்கள் தெய்வம். அதுவுமல்லாமல், எங்கள் மீது கொண்ட மாபெருங் கருணையினால் (காசியைக் கண்ணால் காணாதவருக்கும் கணி டவர் கீ கும்) இருந்த இருக்கின்ற இருக்கும்
248

யாழ்ப்பாணத்தவருக்கும் கருமாதி காசியில் தானாகவே செய்தாகி விட்டது.
இன்னும் "நற்சிந்தனை” யென்னும் நல்லமுத மலரை எங்களுக்களித்திருக்கிறார். இம் மலரிலுள்ள தேனை வண்டுகளாகிய நாங்கள் உண்மை உணர்ச்சியோடு பருகினால் “எங்கள் தெய்வம்” எம் முன்னே காட்சியளித்துக் கொண்டேயிருக்கும். நற்சிந்தனையில் வரும.
“கணணே யுறங்குறங்கு கார்வண்ணா நீயுறங்கு எனனேன் பிறதெய்வம்என் னிதயத்தே நீயுறங்கு”
என்னும் அடிகள் இடையறாது என் மனத்தில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன.
அவருடைய உருவம் எங்கள் புறக் கணிகளுக்கு மறைந்ததே யொழிய, அகக்கண்களுக்கு மறையவில்லை. எந்நேரமும் அக் கம்பீரமான உருவம் மனக் கண்ணில் தாண்டவமாடிக் கொண்டேயிருக்கின்றது, அவருடைய நாதம் செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. உண்மையாகச் சொல்லப்போனால் இப்போதுதான் அநேகருக்கு முன்னிலும் பார்க்க அவரைப்பற்றிய சிந்தனை இடையறாது தோன்றிக் கொண்டிருக்கிறது.
ஓம் சந்தி
திருமதி கனமணி அம்மாள் கனகரத்தினம் அவர்கள்
நன்றி சிவதொண்டன் சிறப்புமலர் இதழ் - 29 1965
米 米 米 米。米 米
249

Page 137
அற்புதமான முதற் தரிசனமும் அனுபவமும்
காலை நாலு மணிக்கு எழுந்து ஸ்நானம் செய்து, இயன்றளவு உள்ளும் புறமும் தூய்மையாகப் புறப்பட்டேன். முன் செய்திருந்த ஒழுங்கின் படி கார் நாலரை மணிக்கு வந்தது. நான் அப்போது வாழ்ந்த இடம் கட்டுடையில் உள்ள எனது மனைவியின் இல்லம். அவ்வளவு அதிகாலையில் எங்கே போகிறேன் என்பதை என் மனைவிக்கும் சொல்லவில்லை. இரண்டு பைக்கற் கற்பூரமும் ஒரு தீக்குச்சிப் பெட்டியும் மாத்திரம் என் சட்டைப்பையிலிருந்தன. என்ன நடக்கப் போகிறதோ சுவாமிகளைச் சந்திப்பேனா வா என்று ஏற்றுக்கொள்வாரோ அல்லது வெருட்டிக் கலைத்து விடுவாரோ இன்னோரன்ன எண்ண அலைகள் என் மனத்தைக் குடையத் தொடங்கின. மனத்தைச் சாந்தப் படுத்திக் கொள்ள இயன்ற வரை தெண்டித்தேன். மனம் முற்றாக அமைதிபெற முன், கார் கொழும்புத்துறையைச் சென்றடைந்து விட்டது. மிக மெதுவாக ஒட்டி, யாதொரு சத்தமும் இல்லாமல் சுவாமிகளின் கொட்டில் படலையடியில் நிறுத்து' எனச் சாரதிக்குச் சொல்லியிருந்தேன். அப்படியே சென்று கார் நின்றது.
படலை சாத்தியபடி இருந்தது. கொட்டிலுக்குள் இருந்து ஓர் உரத்த சத்தம் வைரமுத்து' என்று என் பெயரைச் சொல்லியழைத்தது. 'ஓம் சுவாமி என்று தடதடத்த குரலில் பதிலளித்தேன். என்ன ஆச்சரியம் முன் பின் தெரியாத என்னை, இந்தக் கெசஇருளில், கொட்டிலுள் மறைந்திருந்து கொண்டே பெயர் சொல்லி அழைக்கின்றாரே! என்ற எண்ணம் எனக்குத் திடீர் அதிர்ச்சியைத் தந்தது. படலை திறந்திருக்கு, வா என்று உத்தரவு பிறந்தது. நான் மெதுவாக கொட்டிலை நோக்கிச் சென்றேன்.
250

கதவு நிலையில் தலையை மோதிக் கொள்ளாதே; குனிந்து உள்ளே, வா. மெளனமாகவும், ஜாக்கிரதையாகவும் உள்ளே புகுந்தேன். கற்பூரத்தை நிலத்தில் வைத்துக் கொழுத்தாதே; பக்கச் சுவரில் ஒரு கற்பூரத் தட்டிருக்கு, எடுத்துக் கீழே வைத்துக் கொழுத்து என்றார் சுவாமிகள். இந்த வார்த்தை, முன் என் மனத்திலிருந்த அதிசயத்தை, மேலும் அதிகரிக்கச் செய்தது. என்னுடைய சட்டைப் பையுள் கற்பூரம் இருப்பது இவருக்கு எப்படித் தெரியும் என்று ஆச்சரியப் பட்டேன். நான் கற்பூரத்தைக் கொழுத்தியவுடன், இரு. கால் முகம் கழுவிக் கொண்டு வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு வெளியே சென்றார்.
சுவாமி அறையினுள்ளே வந்ததும் நான் எழுந்து நின்றேன். இரு என்றவுடன் இருந்தேன். எனக்கு நேர்முகமாக எதிரில் உள்ள தன் படுக்கைப் பாயில் அவர் அமர்ந்தார். இருவருக்குமிடையில் கற்பூர விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அதை அணையவிடாது, ஒவ்வொன்றாகக் கற்பூரத் துண்டுகளை அவ்விளக்கின் மேல் வைத்தவண்ணம் இருந்தேன். சுவாமிகள் அமர்ந்ததும், மெளனமாகக் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் ஒடுங்கி விட்டார். காலை ஐந்து மணியிருக்கும் வெளியில் இருட்டு அகலவில்லை எங்கும் நிசப்தமாயே இருந்தது.
என் மனக்குரங்கு கால்விட்டோடத் தொடங்கியது. ஒன்றன்பின் ஒன்றாகப் பலவித எண்ணங்கள் மனத்தில் உதிப்பதும், மறைவதுமாக விருந்தன. சுவாமிகளைக் கற்பூர ஒளியில் உற்றுப்பார்த்தபடியேயிருந்தேன். அவருடைய அழகிய தோற்றம், அவருடைய சாந்த நிலை, அவருடைய சடாபாரத்தின் சிறப்பு, அவருடைய அசைவற்ற சரீர அமைப்பும், அமைதியும் எனக்குத் தட்ஷணாமூர்த்தத்தை நினைவூட்டியது. எவர் மனத்தையும் கொள்ளை கொள்ளக் கூடிய கவர்ச்சிவாய்ந்த வடிவம் கற்சிலை போல என் முன் காட்சியளித்தது.
251

Page 138
சில நிமிடங்களில், கணிணைத் திறந்து எனக்கு ஏதேனுமொரு நல்ல வார்த்தை சொல்லுவார் என்னும் நம்பிக்கையுடன், யானும் அமைதியாக விருந்தேன். சுவாமியையே பார்த்துத் தியானத்தில் நானும் அமர்ந்திருக்க எத்தனித்திருக்கலாம். தியான சாதனையில்லாத சிறியேனுக்கு அஃது எவ்வாறு சடுதியில் கைகூடும், ஆயினும் மனம் ஓரளவு அமைதிநிலையை அடைந்திருந்தது. பதினைந்து நிமிடங்களாயும் சுவாமியின் தியானம் குலையவில்லை. முப்பது நிமிடங்கள் சென்றுவிட்டன: யாதொரு மாற்றமும் இல்லை. மனதை விட்டு சற்று முன் நீங்கியிருந்த பயம் எனக்குத் திரும்ப உண்டாகியது. கொஞ்சம்கொஞ்ச மாயதிகரித்தது. சுவாமிகளின் அகக் கண்ணுக்கு என் முற்பிறவிகளைப் பற்றிய விபரமும், இந்தப் பிறவியும், இனிவரும் பிறவியும் என்னிடத்தே உள்ள அளவற்ற குணக்கேடுகளும் குறைபாடுகளும், யாவும் வெட்ட வெளிச்சமாகத் திரையிலே ஒன்றன் பின் ஒன்றாக விழும் படக்காட்சிகளைப் போலத் தென்படுமே! இவற்றையெல்லாம் அறிந்து கொண்டு, கண்களை விழித்தபின் என்ன சொல்வாரோ? தூஷிப்பாரோ? அன்றேல் அவற்றைப் பொருட்படுத்தாது பொறுத்துக் கொண்டு அன்பாக என்னுடன் சம்பாஷிப்பாரோ? இவ்வித எண்ணங்கள் என் மனத்தைக் கலக்கத் தொடங்கின்
மேலும் பதினைந்து நிமிடங்கள் சென்றுவிட்டன. சுவாமிகளில் யாதொரு அசைவும் காணப்படவில்லை. என் மனம் தத்தளித்தது. சரீரம் வியர்த்தது. என்னால் பொறுத்துக்கொள்ள முடியாத ஓர் அவத்தை நிலை ஏற்பட்டது. என்ன செய்வதென எனக்குத் தெரியவில்லை. அவர் கண்களை மூடிக்கொண்டிருக்கும் பொழுதே, மெதுவாக நான் எழுந்து வெளியேறிவிடுவது நன்று போல் தோன்றியது. அது பேடித்தனமாக முடியும். அப்படி நான் நடந்து கொண்டால் எண் பெயரைச் சொல்லி உள்ளே
252

வாவென்றழைத்து உட்காரவைத்த பெரியார் என்னைப் பற்றியென்ன நினைப்பார். சீ சீ அது தகாத செயல். இன்னும் சிறிது நேரம் இருந்தே பார்ப்போம் என மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு இருக்கத் துணிந்தேன். ஆனால் மனக்குமுறல் ஓய்ந்தபாடில்லை. ஒவ்வொரு நிமிடமும் என்னுள்ளத்துணர்ச்சியின் வேகம் அதிகரித்துக்கொண்டே யிருந்தது. இதுகாறும் வியர்வையினால் தோய்ந்திருந்த சரீரம் இப்போது கனன்றது போலிருந்தது. 100 பாகை 101 பாகை, 102 பாகை ஆக உடம்பின் வெப்பம் ஏறுவது போன்ற உணர்ச்சி என் வாழ்வில் முன்னொருபோதும் பெறாத ஓர் அனுபவம். சுவாமிகள் தியானத்தமர்ந்து நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேலாய் விட்டது.
என் நிலையில் ஒரு திருப்பம் தோன்றத் தொடங்கியது. இதுவரையும் என்னை வாட்டிவதக்கிய மன வேதனைகள் சிறிது சிறிதாகக் கலையத் தொடங்கின. எது வரினும் வரட்டும்: சுவாமிகள் எது சொன்னாலும் எதைச் செய்தாலும், சித்த சமாதானத்துடன் ஏற்றுக்கொள்ள நான் தயாராகி விட்டேன். அக்கினியில் குளித்தது போலிருந்த வெப்பநிலை மறைந்து விட்டது. சரீரம் காற்றினில் பறந்து விடும் போன்ற ஓர் லேசான உணர்ச்சி உற்பத்தியானது. யானுமே தியானத் திலிருந்து விடலாம் போலத் தோன்றியது. பயமோ, கவலையோ, ஐயப்பாடோ, யாதுமில்லாத ஒரு சாந்த நிலை உருவானது. நான் கொட்டினுள் புகுந்து ஒரு மணித்தியாலம் சென்றிருக்கலாம். சுவாமி மெதுவாகக் கண்களை விழித்தார். அருமையான உலகம் வைரமுத்து (யான் ஒன்றுமே பேசவில்லை) சும்மா பார்த்திட்டுப் போகத்தானே வந்த நீ. ஓம் சுவாமீ
ஒருவருக்கும் ஒரு குறைவுமில்லை. உன்னைப் போலத்தான் நான், என்னைப் போலத்தான் நீ, நூதனமொன்றுமில்லை. எல்லாம் எப்பவோ முடிந்த காரியம், எண்ணாயிரம் வருஷங்களுக்கு
253

Page 139
முன்னே, டெல் ஹரி மாநகரிலே, செப்புத் தகட்டிலே, எழுதிவைத்திருக்கு. அதன் படி நடக்கும் நமக்கென்ன கவலை? பிரபஞ்சம் முழுவதையும் படைத்தவனுமவன் காப்பவனுமவன் அழிப்பவனுமவன் எனக்கும் உனக்கும் வேலை கம்மா இருத்தல் தானே, இரவில் நீ நித்திரைக்குப் போன பின் நடப்பதொன்றும் உனக்குத் தெரியாது. உன் வீடு வாசல், பொருள் பண்டம், காசு பணம், ஆடு மாடு யாவுக்கும் காவல் யார்? ஆரோ ஒருவன் இவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கிறான் தானே. காலையில் எழுந்தவுடன் நீ ஏன், என் வீடு, என் மாடு, என் மனைவி, ள்ன் பிள்ளையென்று எல்லாவற்றையும் உனது தலைப் பொறுப்பென்று நினைத்துக் கூத்தாடுவான்? இரவில் காப்பாற்றியவன் பகலில் காப்பாற்ற மாட்டானா?
இப்படியே அரை மணிநேரம் சுவாமி மிக மிக அன்பாகவும் பல உண்மைகளைப் பலவேறு விதமாக விசித்திரமான உவமானங்கள் காட்டியும் கூறிக்கொண்டே போனார். ஒரு தாய் தான் அருமையாகப் பெற்றுவளர்த்த தன் பிள்ளைக்கு, எத்துணைப் பரிவோடு புதி திபுகட் டுவாளோ அதே போலவே, எனி அறிவுக்கேற்றவாறு, எளிமையாகவும் இனிமையாகவும் இருந்தது சுவாமியின் திருவுபதேசம். உலகத்தை மறந்து, என்னையே மறந்து சும்மா இருந்தேன் நான். என் ஐம்புலன்களில் செவிப்புலன் ஒன்றுதான் தொழிற்பட்டுக்கொண்டிருந்தது. காலை ஆறரை மணியிருக்கும்: நீ எப்போது கொழும்புக்குத் திரும்புகின்றாய் என்றார் சுவாமி நாளைக்குத் திரும்ப எண்ணியிருக்கிறேன் சுவாமி என்று விடையளித்தேன் நான். ஒரு பொல்லாப்புமில்லை: நீ போய் வா. கொழும்பிலிருந்து அடிக்கடி இங்கு வரவேண்டுமென்று நினையாதே. நீ அங்கே இரு: நான் இங்கே இருக்கிறேன். இருவரும் ஒருவரையொருவர் கண்டு கொண்டிருக்கலாம்'. 'கண்டு கொண்டிருக்கலாம் ' என்ற நம்பிககை என் மனசிலும் உதயமாய்
254

விட்டது. அவ்வளவிற்குச் சுவாமிகளின் வடிவம் என் மனத்தில் பதிந்து விட்டது. அதை இலேசில் மறந்துவிட முடியாது.
துறவிக்கு உயர்வேது? தாழ்வேது?
யோகர் சுவாமிகளுக்குப் பெரியார் சிறியார் என்ற பாகுபாடில்லை. சாதி, மத, பேதமில்லை. யாரை எந்த நேரத்தில் எப்படி வரவேற்பாரென்று ஒருவராலும் சொல்ல முடியாது. அஃ து ஒரு மர்மம். ஒருவரை வாவென்று ஏற்பதும், இப்போது சந்தர்ப்பமில்லைப் போய் வா என்று இன்னொருவரை வெளியேற்றுவதும், சுவாமிகளின் அவ்வப்போதய மனோநிலையைப் பொறுத்திருக்கலாம். அந்த மனோநிலையும், வருபவர்களின் நோக்கத்தையும் மனோநிலையையும் பொறுத்திருக்கலாம். நாட்டில் மிகப்பெரிய செல்வாக்கையும், பதவியையும் உடையவர்களையும் சரி மிகத் தாழ்ந்த நிலை யுள்ள ஏழை மக்களையும் சரி, சுவாமிகளின் ஆச்சிரமத்தில் காணலாம். சில நேரங்களில் இவ்விருசாராரையும் ஒரு பாகுபாடும் காட்டாது கலைத்து விடுவதுமுண்டு. மற்றவர்களிலும் பார்க்கச் சுவாமி எம்முடன் கூடப் பற்றுள்ளவர் என்றெணிணித் தங்கள் சிறுமையினால் இறுமாப்புக் கொண்டுள்ளவர்களுக்கும், தத்தம் சுயநலத்துக்காக அவரைப் பாவிக்கும் நோக்கத்துடன் வருபவர்களுக்கும், சில நேரங்களில் நல்ல பாடம் படிப்பிக்கும் முறையையும் கவனிக்கத் தக்கதாயிருந்தது.
ஒரு நாள் மலைநாட்டில் வசிக்கும் ஒரு சீமான் சுவாமிகளிடம் வந்தார். படித்தவர் செல்வந்தர். தான் உயர்ந்த வராகக் கருதியோ, என்னவோ தெரியாது, எல்லோருடனும் கலந்து அளவளாவுபவர் அல்லர். இருந்தும், முன்னரும் பலமுறை வந்து சுவாமியைத் தரிசித்துச் சென்றவர். சுவாமியும் அவர் இல்லத்திற்கு இடையிடையே போய்ச் சிலநாட்கள் தங்கியும் வந்ததுண்டு.
255

Page 140
இம்முறை அந்தப் பெரியவரும் மனைவியும் மலைநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்து ஏராளமான காணிக்கைப் பொருட்களையும் வெள்ளித்தட்டத்திலேந்திக் கொண்டு சுவாமிகளின் கொட்டிலுக்குள் உத்தரவையும் காத்திராது, நேரே உள்புகுந்து தாங்கள் கொண்டுவந்த பொருட்களைச் சுவாமிகளின் சந்நிதானத்தில் வைத்தார்கள். குனிந்து பொருட்களை வைத்தவர்கள் நிமிரும் முன், எடு இங்கு ஒன்றும் தேவையில்லை திருப்பிக் கொண்டுபோய் விடலாம், எனக்கு இப்போது நேரமில்லை. என்ன பார்த்துக் கொண்டு நிற்கிறீர்கள், எடென்றால் எடு' என்று கோபக் குரலில் உறுக்கினார் சுவாமி. வந்தவர்கள் இந்த மாதிரியான ஒரு வரவேற்பை ஒரு போதும் காத்திருக்கவில்லை என்பது அவர்களின் முகங்களில் தெரிந்தது. அவர்களால் வாய் திறந்து ஒன்றும் பேசவும் முடியவில்லை. நடுங்கி விட்டார்கள்.
பார்தீதுக் கொணடிருந்த எங்களுக்கு மிகப் பரிதாபமாயிருந்தது. அவர்கள் போனபின் சுவாமி சிரித்தார் சிரித்துக் கொண்டே,மகளுக்குக் கலியாணம் பேசட்டாம் என்னை பேசிய மாப்பிள்ளை சம்மதிக்கிறாரில்லையாம், அவரின் மனத்தை என்னால் மாற்றமுடியுமாம். நல்ல வேலை எனக்குக் கொண்டுவந்தார்கள். அன்றொருநாள் ஒரு ஏழை மனிதன் தன் பிள்ளைக்குக் கலியாணமாகுதில்லையே என்று வந்து முறையிட்டான். பரிதாபமாயிருந்தது. இப்போ பேசுகின்ற மாப்பிள்ளைக்குச் சொல்லு என்னை வந்து காணும் படி என்று சொல்லி விட்டேன். அந்தக் கலியாணம் சரி வந்து விட்டது. அந்த ஏழை மனிதனும் தப்பி விட்டான்.
இதைக் கேள்விப்பட்டிட்டார்கள் இவர்கள். நான் கலியாணத்தரகரென்று நினைத்து விட்டார்கள். அவர்கள்
கொண்டுவந்த சாமான்களைப் பார்க்கவில்லையா? படித்த மோடர்
256

என்று சொல்லிமுடித்தார் சுவாமி. அப்போது தான் விஷயம் எங்களுக்கு விளங்கியது. ஒரு மகானைத் தரிசிக்க வரும் பொழுது எப்படி வரக்கூடாதென்பதற்கு, எடுத்துக் காட்டாக இருந்தது. அன்று அவர்கள் வருகை எங்களுக்கோ அஃது ஒரு மறக்கமுடியாத சிறந்த படிப்பினையாயமைந்தது.
இதற்கு முற்றிலும் மாறான இன்னொரு சம்பவம் குறிப்பிடத்தக்கது. ஒருநாள் நண்பகல் பன்னிரண்டு மணியிருக்கும், சுவாமிகளின் சந்நிதானத்தில் சிலரிருக்கும் போது, எங்கோ ஒரு தூரக் கிராமத்திலிருந்து, ஒரு வயது சென்ற பெண்மணி அங்கு வந்தாள். ஏழைக் குடும்பத்துப் பெண்ணைப்போலத் தோன்றியது. வரும் போது ஒரு பெரிய பலாப்பழத்தைத் தன் தலைமேல் வேர்க்க விறுவிறுக்கச் சுமந்துகொண்டு வந்து சுவாமியின் முன் இறக்கி வைத்துவிட்டு, வந்த களைப்புத் தோன்ற அப்பாடி' என்று பெருமூச்சு விட்டுச் சுவாமிகளின் முன் உட்கார்ந்தாள். இதையெல்லாம் ஒன்றும் பேசாது பார்த்துக் கொண்டிருந்த சுவாமி பெண்மணியை நோக்கி, இஞ்சாய் உனக்கென்ன பைத்தியமா? இந்த வெய்யிலுக்கை, இவ்வளவு தூரம் நடந்து இந்தப் பெரிய பிலாப்பழத்தையும் கொண்டு ஏன் வந்த நீ? என்றார். அது நானெல்லோ காவிக்கொண்டு வந்தது; நீ ஏன் போட்டடிக்கிறாய்? என்ரை ஆசைக்கு நான் கொண்டு வந்தேன். அதுக்கு உனக்கென்ன? நீ ஒன்றும் எனக்குத் தரவேண்டாம். நான் கொஞ்சநேரம் இருந்துவிட்டு ஆறிக்கொண்டு போகிறேன் என்றாள் வஞ்சகம் சூது வாது யாதுந் தெரியாத அந்தக் கிராமியப் பெண். சுவாமி தன் வாயிலே கையை வைத்துப் பரிவுடன் அவளைப் பார்த்துப் நீ நல்லாயிருந்திட்டுப் போ என்று கூறிவிட்டு, எங்களைப் பார்த்து பார்த்தீர்களா, இந்த மனுஷி என் வாயையடக்கி விட்டதை, அது தன் தலைவிதியால் கஷ்டப்படுகின்றது, அதற்கு நானென்ன செய்வது? நான் குறைசொன்னது பிழைதானே என்றார். அந்தப்
257

Page 141
பெண்மணியின் களங்கமற்ற உள்ளத்தை வியந்து கொண்ட சுவாமி, தன்முன் இருந்த தோடம்பழம் ஒன்றை எடுத்து பெண்மணியிடம் பரிவுடன் கொடுத்து இந்தாணை நீ போய் நல்லாய் இரு என்று ஆசீர்வதித்தார். சிறிது நேரத்தின் பின் அந்தப் பெண்மணி எழுந்து நான் அப்ப போட்டு வாறேன். நெடுநாள் எடுத்த பயணம் இன்றுதான் கைகூடியது. நீ மகாராசாவாய் இரு. நான் வாறேன். என்று முணுமுணுத்துக் கொண்டு வெளியேறினாள்.
மேலே குறிப்பிட்ட இரு சம்பவங்களையும் ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது 'கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றுமறிவில்லாதவென் கர்மத்தையென் சொல்வேன் மதியை யென் சொல்வேன்' என்ற தாயுமானவர் சுவாமிகள் புலம்பல் ஞாபகத்திற்கு வருகின்றது. படிப்பிலோ செல்வத்திலோ செல்வாக்கிலோ பண்பாடு தங்கியிருக்கவில்லை என்பது இதனால் வெளிப்படையாகின்றது அல்லவா? யோகர்சுவாமிகள் அனேகமாகச் செல்வந்தர், செல்வாக்கு உள்ளவர்கள், அல்லது கார் வைத்திருப்பவர்களுடன் பழகுவது, அவர்களைத் தான் மதிப்பது, அவர்கள் வீடுகளுக்குத் தான் செல்வது என்ற ஓர் அபிப்பிராயம் சிலரிடம் அந்தக் காலத்திலிருந்தது நிலவிவந்தது.
ஒரு நாள் சுவாமிகளின் ஆச்சிரமத்தில் நாங்கள் சிலர் இருக்கும் போது, ஓர் இளைஞன், துணிச்சலோடு, இதைப்பற்றிச் சுவாமியிடம் கேட்டான் சுவாமி குறை நினைக்க வேண்டாம் பெரிய பணக்காரர், கார் வைத்திருப்பவர்கள், இவர்களுடன் தான் நீங்கள் அதிகமாகப் புழங்கிக் கொள்வதென்று சிலர் சொல்லுகிறார்கள். அதில் ஏதும் உண்மை இருக்கின்றதா? சுவாமிகள் சிரித்தார். வறியவர்கள், எளியவர்கள் பொதுவாக நல்லவர்கள். அவர்களால் உலகத்திற்கு அதிகம் தீமை விளைவதற்கு இடமில்லை. நீ சொன்ன பெரியவர்களைத்தான் திருத்த வேண்டும். அவர்களிடம் தான்
258

துர்க்குணங்கள் மலிந்து கிடக்கின்றன. சுயநலம், பொறாமை, பெருமிதம், பிறரைச் சுரண்டும் பழக்கம், இக் குணங்களை மாற்றமுடியுமானால், அவர்களால் சமுதாயத்திற்கு மிக்க நன்மை உண்டாகும், அல்லவா? நல்லகாலமாக அவர்கள் தான் அதிகமாக என்னிடம் வருகிறார்கள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நான் எத்தனிப்பதில் என்ன பிழை?’ என்று மிகப் பொறுமையாக, விளக்கம் கூறினார். இளைஞன் குறிப்பிட்ட அந்தத் தப்பெண்ணம் அறியாமையினால் எழுந்ததென்பது வெளியானது. கேள்வி கேட்ட இளைஞனும் பூரண திருப்தியடைந்ததாகச் சுவாமிக்கு நன்றி கூறினான். கேள்வி கேட்டதற்கு மன்னிப்பும் கோரினான்.
ஒழுக்கம், சீலம் இவையில்லாத பல செல்வந்தர்கள் சமுதாயத்தில் தங்கள் செல்வாக்கைப் பெருக்கும் ஆசையினால், உலகத்தாற் போற்றப்படும் உத்தமர் யாருமிருப்பின் அவர்களிடத்து நட்புரிமை பாராட்ட எத்தனிப்பது இயல்பு ஆயினும் இவ்வண்ணம் யோகர் சுவாமிகளை நாடி வந்த பலர், காலா காலத்தில் சுவாமிகளின் சகவாசத்தினால் தங்கள் துர்க்குணங்கவில் இருந்து விடுதலை பெற்று நல்லவர்களாய்ப் பண்பாடு உடையவர்களாய்த் தாமிதுவரை கட்டிக்காத்து வந்த சுயநலப்போக்கை மாற்றிச் சுவாமிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மெய்யன்பர்களாகி, தங்களின் முன்னைய உயர் பீடங்களிலிருந்து கீழே இறங்கி, ஏழை எளிய மக்களுடனும் அளவளாவி, இரக்கங்காட்டி, இயன்ற தொண்டுகளையும் செய்து, இறைபணி நிற்கத் தூண்டப்பட்டார்கள் என்பதற்கு ஐயமே இல்லை. இதற்குப் போதிய திருட்டாந்தங்கள் உண்டு.
சுவாமிகள் எங்கள் மத்தியில் அவதரித்ததன் பெறுபேறு இதுவாகும். இ.தொன்றே ஈழத்து மக்கள் பண்டு செய்த தவப் பயன் எனலாம். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற அடிப்படைத் தத்துவத்தை நன்குணர்ந்த ஞானி யோகர் சுவாமிகள்.
259

Page 142
ஆகவே சகல ஜீவராசிகளிடத்தும் யாதொரு வேறுபாடுமின்றிக் கருணைகாட்டும் இயல்புடையவராய் இருந்தார். ஒரு விலங்கு கொடுமையுள்ளதாய் இருந்தாற் கூட அவ்வளவு தீமையில்லை. ஒரு மனிதன் கொடியவனாக விருந்தால், அவன் மனித சமுதாயத்தையே பிடித்து ஆட்டி அலைக்கின்ற பேய் போல ஆகிவிடுவான என்பது சுவாமிகள் மன சில ஊன்றியிருந்தமையினாலேயே, போலி மனிதரைப் பண்பாடு சிறிதுமில்லாத கபடர்களை, பண்டமாற்றுக்காகத் தன்னிடம் பழம் பாக்கு வெற்றிலையோடு வரும் மனிதர்களைச் சில நேரங்களிற் சீறிச் சினந்து துரத்துவது, இதுவும் கருணையின் பாற் பட்டது தான். (மறக்கருணையென்பர், அறிஞர்.) இந்த வழியாலும் பலர் திருந்தியிருக்கின்றார்கள் என்பதை நானறிவேன்.
யோகர் சுவாமி திருத்தாள் போற்றி
திரு . மு. வைரமுத்து முன்னைநாள் சி. சி. எஸ்
நன்றி. என் நெஞ்சில் இடங்கொண்ட ஒரு பெரியார் சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்.
米 米 米 米 米 米
நாத னிருப்பது நற்றவர் நெஞ்சிலே நாத னுரையது நான்மறை யாகமம் நாதனை நாடினர் ஞான மெய்துவர் நாதனை நாடி நாமறிந் தோமே
நற்சிந்தனை.
260

யாழ்ப்பாணத்தச் சிவயோகசுவாமிகள்
அனேகமானவர்கள் வாங்குபவர்களாக இருக்கிறார்கள். சிலர், மிகக் குறைவான எண்ணிக்கையினரே கொடுப்பவராக இருக்கிறார்கள். இவ்வகையில் யோகசுவாமிகள் மிகப் பெரும் கொடையாளி ஆவார். அவரது வாழ்க்கை முழுவதுமே ஒரு நீண்ட கால வழங்கல் சேவையாகவேயாயிற்று.
1952லும் பின்னர் 1963லும் அவரைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. இடைப்பட்ட காலத்தில், கஷ்டகாலமும் துன்பகரமான சம்பவமொன்றும் தவிர்க்க முடியாத மாற்றங்களைப் பெரிதும் ஏற்படுத்திவிட்டன. தைரியமும் நற்சுகமும் கொண்ட் அவர் இப்பொழுது பலவீனப் பட்டு படுக்கையிலேயே இருக்க வேண்டியவராய், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூட மற்றவர்களது உதவியை வேண்டிநிற்கும் நிலையில் இருக்கவேண்டியதாயிற்று. மிகவும் பிரகாசமாகவும், ஊடுருவிச் செல்லும் தன்மையினைக் கொண்ட அவரது கண்கள் இப்பொழுது மங்கிப் போய் இருந்தன. அவரது குரல் அதன் அதிர்வுத் தன்மையை இழந்து விட்டது. ஒரு காலம் நிதானமாயிருந்த கரங்கள் இப்பொழுது நடுங்கிய வண்ணம் இருந்தன. அவரது புனிதமான வதனத்தில் வருத்தம் தாங்காத் தன்மை தன் ரேகையைப் படவிட்டிருந்தது. சகல ஜீவராசிகளனைத்தும் பெரிதோ சிறிதோ மாற்றமடையும் என்ற விதிக்கு ஒரு எடுத்துக்காட்டாக அவர் விளங்குகிறார். மிகப் பெரியோரும் அதற்கு விதிவிலக்கல்ல. எனினும் அவரது உன்னத ஆத்மீக ஒளி மேலும் பிரகாசித்த படியே இருந்ததை நான் உணரக் கூடியதாக இருந்தது. மங்கிக் கிடந்த கண்கள் இன்றும் மானிட இதயத்தை ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டதாகவே இருந்தன. குரலோ இன்னும் அதிகாரத் தொனி கொண்டதாகவே இருந்தது. நடுக்கம் பெற்ற கரங்கள் உண்மையான
26

Page 143
ராஜ கம்பீரத்தின் கோல் தாங்கியவையாகவே இருந்தன. அவர் இப்பொழுதும் கொடுப்பவராகவே இருக்கிறார். நான் வாங்கிக் கொள்பவராகவே இருக்கின்றேன்.
அவர் எதைக் கொடுத்தார்? அமைதி, பலம், நம்பிக்கை, மனத்தைரியம், இன்னும் பல கொடைகள் சொல்லமுடியாத எண்ணிக்கையற்றவை. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அன்பைத் தந்தார். சூரியனில் இருந்து ஒளியும் வெப்பமும் வெளிவருவது போல அன்பு அவரிடமிருந்து வெளிப்பட்டது. நான் எதனைப் பெற்றுக் கொண்டேன்? என்னால் ஏற்கும் அளவிற்குப் பெற்றுக் கொண்டேன். ஒரு சிறு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நீர் வீழ்ச்சியின் கீழ் நில்லுங்கள் நீரின் பெருமளவைக் கண்டு பிரமித்துப் போய் நிற்கிறீர்கள். ஆனால் அதில் எவ்வளவு தான் கொண்டு வர முடிந்தது. அந்தச் சிறு பாத்திரமளவு தான்!
இப்பொழுது அந்த மாபெரும் ஆத்மா இவ்வுலகிலிருந்து விடுதலை பெற்று, இங்கு திரட்டிய வினையை மட்டும் கொண்டு மேலே போகிறது. காலமும் நேரமும் வந்த வேளை அதுவே எம் எல்லோருக்கும் அமையப் போவது.
‘வாழ்க்கை ஒரு பாலம் போன்றது. அதனைக் கடவுங்கள். ஆனால் அதில் வீடுகளை மட்டும் கட்டிவிடாதீர்கள், ஏன ஒரு சீனப் பழமொழியுண்டு. எம்மில் பலர் மடத்தனமாக வாழ்க்கைப் பாலத்திலே வீடுகளைக் கட்டுகிறோம். அத்துடன் எதிர் நோக்கிவரும் மரணத்திற்குக் கண்களை மூடிக் கொள்கிறோம். நாம் இங்கு நிலைத்திருப்பவர்கள் என்று எண்ணுவதில் விருப்ப முறுகிறோம். யோகர் சுவாமிகள் வீடு கட்டியவரல்லர். ஒரு சிலர் சுதந்திரமானவர்கள் போல அவரும் சுதந்திரமானவர். அவர் எதிலும் பற்றுவைக்காதவர். அப்படிப் பட்ட அவருக்கு மரணம் நண்பன் போலவே வந்தது.
262

சுவாமிக்கு ஆனந்த பெரேரா எழுதிய கடிதம் :
3/2 ஹவ்லொக் றோட், கொழும்பு 05. 25. 3. 1963. அன்பான மதிப்பிற்குரிய ஆசானுக்கு,
நான் தினமும் உங்களை அன்புடனும் நன்றியுடனும் நினைத்து உங்களுக்கு நல்லாரோக்கியம், பலம், வேண்டி என் மகிழ்ச்சியைப்பற்றிய எண்ணத்தையும் சமர்ப்பிப்பதுண்டு. 1952ல் நாங்கள் சந்தித்த போது நீங்கள் கூறியனவற்றை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.
“காலம் குறுகியது விடயமோ விரிந்தது.” “ஒவ்வொருவனும் மன்னன் தான். அவனது இராச்சியம் அவனேயாம்.” "உன்னிலே உன்னை நிறுத்திக் கொள்.” “வேலையை மிக்க கவனத்துடன் செய்." “பார்வையாளனாகவே இருந்து விடு. " “கருணையான பார்வையே கணிகளுக்கு அணிகலனி.
கருணையற்ற கண்கள் வெறும் புண்களே." “வாழ்க்கை இது போன்றது” தனது விரலைச் சுற்றிச் சுற்றி
வட்டமிட்டுக் காட்டினார்கள். “என்றும் மாறுபடுவது என்றும் ஒரே தனி மையதாம் (மாறுபாடற்றது)” “அமைதியாக இரு நீ அறிவாய்”
அன்றிலிருந்து நான் மிகவும் கவனமாக வேலை செய்கிறேன். அதுவும் மிகவும் அவதானத்துடன் தான். நான் பலவற்றைச்
263

Page 144
செய்துள்ளேன். சில நல்லவை. சில கெட்டவை. சில கருத்தற்றவை. சில கருத்துள்ளவை. மிகுந்த கடினமானதும் திறமையானதும் கருத்துள்ளதுமான வேலை அமைதியாக இருப்பதேயாம். நான் ஒரு சட்டத்தரணி. ஆனால் நாணி ஒரு வரைக் குணப்படுத்துபவனாகவே இருக்க விரும்புகிறேன். உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது எவ்வளவோ இருக்கிறது. ஆனால் நேரமோ குறுகியது. விடயமோ பரந்தது.
மேலான உண்மையின் சித்தி உங்களைக் காப்பாற்றி நற்சுகத்துடன் இருத்தட்டும். நான் என்றும் உங்களுடன் இருக்கிறேன். நான் இதனை எழுதும் போது உங்கள் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரிக்கின்றேன்.
உங்கள் அண்டான நண்பனும் மாணவனுமாகிய ஆனந்தம்-ஆனந்தபெரேரா
நன்றி கிவதொண்டன் சிறப்பு மலர் 29 - 1965 ஆங்கில மொழி வெளியீடு
மொழிபெயர்ப்பு
米 米 米 米 米 米
பூகம்பம் கெடுதிசெய்தால் நாம் திரும்பிக் கெடுதி செய்கிறோமா? பேசாமல் இருப்போம்.
அதேபோல் அவரவர் வேலையைப் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் கடவுளே.
சுவாமிகள் அருள்மொழி
264

திருமுறையின் அற்புத சக்தி
அன்பிற் கரைந்துருகி அடிபணியும் மெய்யடியார்கள் துன்பமெல்லாம் துடைத்து தாயினும் தயவான சுவமிகள் சில அருட்செயலாகிய அற்புதங்கள் ஆற்றியுள்ளார். நால்வர்கள் தான் அற்புதங்கள் செய்தார்கள், மற்றையோர் அற்புதங்கள் செய்யமுடியாது என நினைக்க வேண்டாம். ஞான மின்சார நிலையங்கள் ஆகிய மகான்களின் பார்வையால் இன்சொல்லால், ஸ்பரிசத்தால் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அதை நீங்கள் அறிய வேண்டும் என யோகர் சுவாமி கூறியுள்ளார். இவ்வாறு முத்திரையிட்டது போல் நாகலிங்கப் பரதேசி என்பவருக்கு அன்று ஆச்சிரமத்தில் நடந்தது. இதனை நேராகக் கண்டவர் கூறுகின்றார்.
இச்சம்பவம் 1925 ஆம் ஆண்டு ஆடி மாதம் நடந்தது. நாகலிங்கப் பரதேசியார் பண்ணிசை பாடுவதிலும் கதாப்பிரசங்கம் செய்வதிலும் அக்காலத்தில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் விளங்கினார். இவர் பாடினால் கல்லும் கரைந்து உருகும் என்பர். பிற்காலத்தில் முதுமையும் நோயும் வறுமையும் பிடித்ததனால் தளர்வுற்றார். யோகர் சுவாமியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தரிசிக்க வேண்டுமென ஆசைப்பட்டு, வாடகைக் காரில் அங்கு வந்தார். வாகனம் படலையில் நின்றதும், சாமி வீதிக்குச் சென்று காரிலிருந்து நாகலிங்கத்தாரை இறக்கித் தமது கரங்களால் அணைத்துக் கொண்டு வந்து தமது ஆசனததில் அமர்த்தினார். பரதேசியார் மறுப்பதும் சாமியார் பணிப்பதுமாகச் சில நிமிடங்கள் சென்றன. இறுதியில் சாமியின் கட்டளையை மறுக்கமுடியாமல் ஆசனத்தில் அமர்ந்தார். சாமிகளோ தரைமீது அமர்ந்தார். இதைக் கண்ட அடியார்கள் சாமிக்கு வேறு ஆசனம் கொடுத்தனர். சிறிது நேரம் மெளனம் நிலவியது. சாமி பரதேசியாரைத் தேவாரம் பாடப்
265

Page 145
பணித்தார். பரதேசியார் பாடாது தாமதித்தார். அவரது உள்ளக் கருத்தை அறிந்த சாமிகள் "இடரினும் தளரினும்” என்றார். பரதேசியார் சம்பந்தப் பெருமானின் திருப்பதிகத்தைத் ‘திருச்சிற்றம்பலம்’ எனக்கூறி ஓதத் தொடங்கினார்.
"இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உன கழல் தொழுதெழுவேன் கடல் தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ எமை ஆளுமா ரீவதொண்றெமக் கில்லையே அதுவோ உனதின்னருள் ஆவடு துறையரனே"
பரதேசியார் உடல் பதைபதைக்க, கண்ணிர் சொரிய, பக்திப் பரவசத்துடன் பாடினார். கேட்டவர்களின் உள்ளமும் குழைந்து உருகியது.
எட்டாம் திருப்பதிகம் பாடும் போது படலையில் கார் ஒன்று வந்து நின்றது. ஒர் இளம் தம்பதிகள் காரிலிருந்து இறங்கிக், கிணற்றடி சென்று கைகால் அலம்பி, சுவாமியின் திருமுன்னே வந்து வணங்கினர். ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் பூசனைப் பொருட்களுடன், ஒரு பட்டுப் பை முடிச்சும் இருந்தது. சுவாமிகள் பட்டுப்பையை எடுத்து முடிச்சை அவிழ்த்து நிலத்தில் கொட்டினார். கலீர் கலீர் என்ற ஒலியுடன் தங்கப் பவுண் நாணயங்கள் விழுந்தன. சுவாமிகள் பரதேசியாரை நோக்கி “நீர் இடரினும் தளரினும் பாடுவதைக் கேட்ட அம்மையும் அப்பனும் கைலையிலிருந்து உமக்குப் பண்சுமந்த பாடல் பரிசு அனுப்பியுள்ளார் எனக் கூறினார். வந்தவர் சிங்கப்பூரில் டாக்டராகத் தொழில் புரிபவர்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு பட்டுப் பையில் தம்பதிகள் சில தங்கப் பவுண்களைப் போட்டுச் சுவாமிக்கெனச் சேர்த்து நூறு பவுண் சேர்ந்ததும் அதைக் கொண்டுவந்து கொடுப்பதற்கென அங்கு அவ்வேளையில் வந்தனர்
266

"இடரினும் தளரினும், பாடிச் சம்பந்தப் பெருமான் பொற்கிளி பெற்றார். இடரினும் தளரினும் பாடிய பரதேசியாருக்கும் பொற்கிளி கிடைத்தது” என்று கூறி ஆனந்தம் பொங்கச் சிரித்தார். அடியார்கள் இதைக் கண்டு ‘அற்புதம்! அற்புதம்!” என்று வியப்புடன் கூறினார்கள். சுவாமிகள் வெளியில் தென்னைமரத்தடியில் சாய்ந்து நின்ற பெளத்த சிங்கள வாடகைக் கார் சாரதியைக் கூப்பிட்டு ஒரு தங்கப்பவுணைக் கொடுத்தார். எஞ்சிய 99 நாணயங்களைப் பையில் போட்டு முடிச்சை பரதேசியாருக்கு நீட்டினார். பரதேசியார் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிப் பையைப் பெற்றுக் கண்களில் ஒற்றிக்கொண்டார். சுவாமி “நீர் இத்தனை நாளும் பாடும் பணியில் ஈடுபட்டு உம்முடைய உடல் இளைத்துப் போய்விட்டது. உம்முடைய பாடும் பணிக்குப் பரிசை இதோ ஆண்டவன் அனுப்பி வைத்துள்ளார். ஆகவே இனி நீர் ஆறுதலாய் இருக்க வேண்டும், உசன் ஆச்சிரமத்தில் தங்கிக் கொள்ளும்” என அன்புக்கட்டளை இட்டார். இந்தக் கட்டளையைச் சிரமேற் தாங்கியவராய் உசன் ஆச்சிரமத்தற்குச் சென்று தமது கடைசி நாட்களை சிவத்தியானத்தில் ஈடுபட்டு நாகலிங்கப் பரதேசியார் நிறைவெய்தினார்
" யோகசுவாமிகளின் திருவடி வழிக
ஆசிரியர் வை. வல்லிபுரம்
நன்றி பிறந்ததின நூற்றாண்டு விழா மலர் சிவதொண்டன் 1972
米 ※ 米 米 米 米
ஒரு அருள் மொழியினாலே கன்ம வினைகள் ஒடும்.
சுவாமிகள் அருள் மொழி
267

Page 146
சுவாமி நினைவுகள்
இளமையிலேயே ஆன்மவிசாரம் ஏற்பட்டது அடியேனின் பூர்வபுண்ணியமே. ஆன்மவிசாரம் தழைப்பதற்கு அநுபூதிச் செல்வரை அண்டிவாழ்தலே வாய்ப்பானது எனும் அறிவு வெளித்ததும் பெரும் பாக்கியமே. யான் இருபது வயது இளைஞனாய், பரமேஸ்வராக் கல்லூரியில் ஆசிரியப்பணிபுரிந்து கொண்டிருந்த பொழுது யோகசுவாமிகளை முதன் முதலாகத் தரிசித்தேன். யோகசுவாமிகள் என்னை ஓர் இளைஞனாகவன்றிச் சினேகிதன் போலவே எண்ணிய திறம் எனக்கு மிக ஊக்கமூட்டுவதாக இருந்தது. சுவாமிகளின் சார்பால் தூய பிரமச்சாரியாக வாழவேண்டுமென்ற உறுதி பூண்டொழுகினேன். ஆனால் படிக்கும் சிறுவன் பாடசாலைக்கு வேளைக்கே வந்து வகுப்பறைச் சுத்தம், வெளிச்சுத்தம் என்பவற்றில் ஆர்வமாய் ஈடுபட்டுப் பாடம் தொடங்கும் வேளையில் ஏதோ ஒரு அவசரகாரியமாய்ப் பெற்றோரால் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டது போல, எனது முப்பத்தோராவது வயதில் பிரமச்சாரிய விரதத்தைக் காக்க முடியாதவனாய் இல்வாழ்க்கையில் ஈடுபட வேண்டியதாயிற்று: இவ்வாறு ஒரு குடும்பியான பின்னர் ஒருநாள் சுவாமியைத் தரிசிக்கச் சென்ற பொழுது சுவாமிகள் “பொன்னையா மணி அடிக்கப்போகிற வேளையில் விலகிவிட்டான்” என்று கூறினார். முப்பதாவது வயதில் மூன்றற்று ஒரு பொருளைத் தேடுவதே பிரமச்சரிய விரதம் பூண்ட ஒருவனின் முறைமையாயிருக்க மூன்றினுள் ஒன்றில் மூழ்கவேண்டியேற்பட்ட நிலை குறித்துச் சுவாமிகள் இவ்வாறு கூறினார் போலும்.
ஒரு நாள் பருத்தித்துறையில் அலுவலாக நின்றபொழுது சுவாமியின் கொட்டிலுக்குச் சென்றால் பிட்டுச்சாப்பிடலாம் என்றோர்
268

எண்ணம் எழுந்தது. அது இனிய பிட்டிலிருந்த ஆர்வமோ அல்லது சுவாமிகள் திருமுன்னிலையிலே அமர்ந்திருக்கும் சுகநாட்டத்தின் வெளிப்பாடோ யானறியேன். சிறிது நேரத்தில் அவ்வெண்ணம் முற்றிப் பிடர் பிடித்துத்தள்ள யான் கொழும்புத்துறை நோக்கிச் சென்றேன். அதிகாலை மூன்று மணியளவில் சுவாமிகளது ஆச்சிரமத்தை அடைந்தேன். ஆச்சிரமத்துள் விளக்கெரிந்தது. வீதியோரமாக உள்ள கோயிற்கிணற்றில் கைகால் முகங்கழுவிச் சென்றேன். சுவாமி தியானத்தில் அமர்ந்திருந்தார். அது அடியேனும் தியானித்திருக்கும் வேளை ஆதலால் சுவாமிகளின் திருமுன்னிலையில் தியானத்தமர்ந்தேன். தியானம் நிறைவுறும் வேளையில் ஆச்சிரம முற்றத்திலிருந்து "சுவாமி பிட்டுக்கொண்டு வந்திருக்கிறேன்” என்று வயது முதிர்ந்த ஓர் அம்மையாரின் குரல் கேட்டது. சுவாமிகள் “இந்த நேரத்தில் உன்னை யார் பிட்டுக் கொண்டுவரச்சொன்னது” எனக் கூறினார். அந்த அம்மையார் சுவாமி கனவிலே தோன்றி “உடனே பிட்டுக் கொண்டு வா’ எனக் கூறினீர்கள், நான் பிட்டுக் கொண்டு வந்திருக்கின்றேன் என்று சொன்னார். சுவாமிகள் "பிட்டுக் கேட்டது பொன்னையா: பொன்னையாவுக்குக் கொடுங்கள்” என்று அருளினார். இது பற்றிச் சுவாமிகளோடு உடனுறைந்து பெற்ற அருட்பேறும், கற்ற உளநூல் அறிவும் சேர்ந்து தந்த விளக்கம் மேல்வருமாறு:- முதலில் “எனது எண்ண அலைகள் நற்சிந்தையரான சிவயோக சுவாமிகளது உள்ளத்தில் ஒலி அலைகளாகப் பட்டன. பின்னர் ஆன்மாவில் இலயித்த அவரது உள்ளத்தின் ஆற்றலால் உள்ளத்தில் பட்ட ஒலி அலைகள் தெறித்து எண்ண அலைகளாய் அம்மையாரின் மனத்தில் கனவாகத் தோன்றின’
ஒரு நாள் யோகசுவாமிகளை ஒரு கடையருகில் சந்தித்தேன். கடையின் எதிர்ப்புறத்திலே புதுமனை புகுவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. வீட்டுக்காரர் அங்கும் இங்குமாய்ச்
269

Page 147
சுறுசுறுப்பாகத் திரிந்தார். சுவாமி அவரைப்பார்த்த வண்ணம் கண்கள் குளமாக நின்றார். இஃது எனக்குப் பெரும் வியப்பாக இருந்தது. எனது கண்களும் கலங்கச் சுவாமியை நோக்கி நின்றேன். சுவாமிகள் “நாளைக்கு இதே நேரத்தில் இவ்விடத்தில் சந்திப்போம். பெரும் புதினம் நடக்கும் பார்க்கலாம்” எனக்கூறினார். அவ்வண்ணமே அடுத்தநாள் குறித்த கடையருகே வந்து நின்றேன். சுவாமிகளும் வந்தார். சற்று நேரத்தில் குடிபுகுந்த புதுமனையிலிருந்து அவல ஒலம் எழுந்தது. வீட்டுக்காரர் இறந்து போனதன் எதிரொலியே அது. இப்பொழுது சுவாமிகள் அழவில்லை. சிரித்துக்கொண்டே “நீர்க்குமிழி போன்ற வாழ்க்கை” எனக் கூறினார்.
சுவாமிகள் தம்மைத் தரிசிக்கவந்த அடியவர்களுக்கு விடை கொடுக்கும் பொழுது சில வேளைகளில் இந்தப்பக்கம் தானே போகின்றீர்கள்? என்றோ வீட்டிற்குத் தானே போகிறீர்கள் என்றவாறோ சொல்வது ஒரு குறிப்பினையுடையதாக இருக்கும். சுவாமிகள் இவ்வருட் குறிப்பு, குறித்த வழியாற் செல்வது இடையூறினின்றும் தப்புதற்கு அல்லது நலம் பெறுதற்கான கைகாட்டி போன்றதென்பதை அணுக்கத் தொண்டர்கள் நன்கு அறிவார்கள். சுவாமிகள் ஒரு சமயம் “பொன்னையா! உவ் வழியாற் போகாதே’ என்று எச்சரித்தார். அடியேன் இக்குறிப்பின் பின்னணியிலுள்ள இடையூறு என்ன என்பதைப் பரீட்சித்துப் பார்க்கும் ஓர் ஆர்வங் கொண்டேன். ஆதலால் சுவாமிகள் விதித்த தடையையும் மீறி அவ்வழியாற் சென்றேன். அவ் வழியில் செல்லும் பொழுது பல நாய்கள் சேர்ந்து ஒரு மனிதனை உருட்டி உருட்டிக் கடித்துக் காயப்படுத்தி இரத்த வெள்ளத்துக்குள் கிடத்தியிருக்கும் காட்சியைக் காணவேண்டி நேரிட்டது. இது போன்ற இரத்தக் காட்சிகள் காண்பதைச் சிறுவயது முதற்கொண்டே தவிர்த்து வந்த என் ஏழையுள்ளத்தையும், வழியில் நிகழ்ந்த இரத்தக்காட்சியையும் ஒருங்கே கண்ட சுவாமிகள் அவ்வாறு எச்சரித்தனர்.
270

எல்லாம் என்கைவசமாச்சே என்றாங்கு யாவும் சுவாமிகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. அதனை அறிந்து கொள்ளக்கூடிய குறிப்பு அடியேனுக்கு வாய்த்தது. ஒருநாள் சுவாமிகளுடன் கூடிச் சுன்னாகம் சென்று திரும்பும் வழியில் சுவாமிகள் விளையாட்டாக வீதியிற் செல்லும் வாகனமெல்லாம் எம்மைக் கண்டவுடன் நிற்கவேண்டும் எனக்கூறினார். சற்று நேரத்தில் இராமநாதன் கல்லூரி மாணவிகளை ஏற்றிவந்த வாகனம் எங்களது அருகில் நின்றது. வாகனச் சாரதி இறங்கிவந்து எங்களை வண்டியிலேறி அமருமாறு பணிவாக வேண்டினார். சுவாமி அதனைப் பண்பாக மறுத்து விட்டு அவர்களைச் சென்று வருமாறு கூறினார். அடுத்து வந்த கார் ஒன்றும் சுவாமிகளின் அருகில் நின்றது. கார்ச் சொந்தக்காரர் சுவாமிகளிடம் வந்து மிக பயபக்தியுடன் ஏறி அமர்ந்து கொள்ளுமாறு வேண்டினார். சுவாமி அவருடனும் இரண்டொரு வார்த்தை கூறிச் சென்றுவருமாறு விடையளித்தார். இவ்வாறு தொடர்ந்து வந்த வண்டிகள் பலவும் சுவாமிகளைக்கண்டு நின்றன. சுவாமிகள் என்னிடம் “இப்பொழுது என்ன செய்யலாம்? இதற்கோர் வழி சொல்” எனக் கேட்டார். 'யான் புகையிரதவீதியாற் செல்வோம்” சுவாமி எனக் கூறினேன். சுவாமி அதற்குச் சந்தோசப்பட்டார். புகையிரதவீதிவழியாக வந்து நகரையடைந்தோம்.
பொண்ணையா உபாத்தியார் நினைவுக்குறிப்புகள் நன்றி சிவதொனடன் மலர்-67 இதழ் 1-2
米 米 米 米 米 米 Y இரவும் பகலும் வந்துவோவதுபோல் இன்ப துன்பங்கள் வந்து போகட்டும்.
சுவாமிகள் அருள் மொழி
271

Page 148
யாழ்ப்பாணத்த நீ யோக சுவாமிகள்
லெளகீகத் தன்மையான, அழிந்து போவனபற்றிச் சிந்திக்காது, வாழ்க்கையின் உண்மைநிலை பற்றிச் சிந்திக்கும், ஞானிகளது குரு சிஷ்ய கல்விமுறையானது இந்தியாவில் வாழ்ந்த ஞானிகள் பரம்பரையாக வழங்கப் பட்டு வந்ததொன்றாகும். இந்திய கலாச்சாரத்தின் பின்னணியில் இருக்கும் இலங்கையும் அத்தகைய ஒரு பாரம்பரியத்தைப் பேணிக் கொண்டது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலே ஞானிகள் வாழ்ந்து அடியார்களையும் பெற்றிருந்தார்கள். அவர்கள் நுண்ணிதான கட்டுக்கோப்புக் கொண்ட சம்பிரதாயமான கட்டுப்பாடுகளுக்கப்பாற் பட்டு ஒரு சர்வதேச சமய நிலையைச் (சமரசம்) தென்னிந்தியாவில் வாழ்ந்த சுவாமிகளின் அடிச்சுவட்டினைப் பின்பற்றி உருவாக்கினார்கள்.
இலங்கையின் வட பாகத்தில் ஞான ஒளியாக விளங்கியோரில் யோகசுவாமிகளும் ஒருவர். அவர் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலடியில் செல்லப்பா சுவாமிகளது சீடராகும். செல்லப்பா சுவாமிகள் ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்து கொண்டு அவரது ஆத்மீக பலத்தைப் பெரும் விசேடத்துவமான முறையில் வெளிப்படுத்தினார். அவர் தோற்றத்தில் எனிமையானவராக இருந்தாரேயாயினும், அவரினின்றும் நறுமணம் வீசியது. மிகுந்த உள்நோக்கான ஆழமான எண்ணக்கருக்கள் கொண்ட வார்த்தைகளைப் பேசுவார். செல்லப்பாச் சுவாமிகள் யோகர்சுவாமிகளிடம் தான் உண்மையான சிஷ்ய
நிலையைக் கண்டார்.
செல்லப்பாச் சுவாமிகளது மறைவின் பின்னர், யோகர்
சுவாமிகள் தமது குருநாதருடைய ஆத்மீக ஞான பாரம்பரியத்தைப் பெற்றுக் கொண்டார். அறியாமையிலும் அங்கலாய்ப்பிலும் சிக்கிக்
272

கொண்டோருக்கு அவர் குன்றின்மேல் வைத்த தீபம் போலானார். பல்வேறு கொள்கைகள், சமய உத்வேகங்கள் கொண்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கெல்லாம் அவர் ஓர் ஆத்மீக குருவாக விளங்கினார். ஒரு கிறிஸ்தவனுக்கு அவர் பைபிளை மேற்கோள் காட்டிப் பேசுவார். கிறிஸ்துவின் ஈடு இணையற்ற வாக்கியங்களான “உன்னால் இயலுமான மட்டும் முழு மனத்துடன் இறைவனில் அன்பு வை, அத்துடன் உனது அயலவனையும் நீ உன்னை நேசிப்பது போல் நேசித்துக் கொள்” என்பதை அடிக்கடி கூறுவார்.
ஒரு பெளத்த மதத்தவனுக்கு அவர் புத்தபிரான் கூறிய மேலான கொள்கைகள் பற்றி எடுத்துக் கூறுவார். இஸ்லாமியர்களுக்கு அவர் மொகமட்டினுடைய போதனைகள் பற்றியும் அவர் எவ்வாறு இறைவனை - அல்லாவை நேசித்தார் என்பதையும் விளக்கிக் காட்டுவார். இந்துக்களுக்கு அவர் வேதாந்த தத்துவத்தையும் சைவர்களுக்குச் சைவசித்தாந்தக் கோட்பாடுகளையும் எடுத்துரைப்பார்.
எல்லா ஆறுகளும் கடலுள் சங்கமமாவது போல எல்லாச் சமயங்களும் ஒரே இலக்கைச் சேருகின்றன என்று கூறுவார்.
அவருடைய இளமைக் காலத்தில் அவர் ஒரு மரத்தின் கீழோ அன்றி, தனித்த ஓர் இடத்திலே வாழ்ந்து வந்தார். ஆழ்ந்த தியானத்தில் காணப்பட்டார். அவர் எவ்வித சொத்துக்களையும் உரிமை கொண்டவர் அல்லர். எத்தகைய பொருட்களிலும் கவனம் கொண்டவருமல்லர். அவர் தனக்குக் கொண்டுவரப்பட்ட சைவ உணவுகளைத் தன்னுடன் இருக்கும் அடியார்களுக்கும் கொடுத்து உண்பார். அவர் எதிர்காலத்தைப் பற்றி எண்ணுவதில்லை. ஆனால் மக்களுக்குக் கடவுளை அடையும் வழி பற்றியும் மானுடத்தின் பால் கொள்ள வேண்டிய அண்ட ரீதியான அன்பு பற்றியும்
273

Page 149
மக்களுக்கு உபதேசித்து, தெய்வீகக் கருணையை வேண்டி மன்றாடுங்கள் என்று மக்களைத் தூண்டி விடுவார்.
அவர் சொல்லுதற்கரிய ஞான சக்தியினைத் தன்னகத்தே கொண்டுள்ள போதும், அதனை ஒருபோதும், வெளிப்படுத்திக் காட்டவில்லை. ஆனால் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் இத்தகைய உயர் சக்தியைப் பற்றி அறியத் தவறுவதில்லை. அவருடன் அடிக்கடி தொடர்பு கொண்ட சட்டத்தரணிகள் பிரபல்யமான வைத்தியர்கள் அவரின் சக்தி மேம்பாடுகள் பற்றிக் கூறுவார்கள். அவர் சக்திக்கும் அவரது வாழ்க்கையும் அவருக்கு நன்கறிந்த திறந்த விடயமாயிருந்தது. அவர் ஆவிகள் உண்டு என்பதையும் மாந்திரீகத்திற்குச் சக்தி உண்டென்பதையும் நம்பினார். அவர் மாந்திரீகத்தை ஒருபோதும் கையாளவில்லை, மக்களையும் தொடர்புகொள்ளத் தூண்டவில்லை. இருந்தபோதிலும் ஒரு மந்திரவாதியுடன் தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை ஒரு முறை கூறினார்.
அவர் இளமைப் பருவத்தில் இருந்த போது மட்டக்களப்பில் ஓர் இஸ்லாமிய மந்திரவாதியைச் சந்தித்தாராம். சுவாமிகளுக்கு அவர் செய்து காட்டிய பல நிகழ்ச்சிகளில் ஒன்று சுவாமிகளைப் பெரிதும் கவர்ந்து விட்டதாம். வானத்தில் முகிலே அற்ற ஒரு நாளில் சூரியன் உச்சியில் நின்ற வேளை மந்திரவாதி சுவாமிகளிடம் ஒரு பாட்டம் மழையைக் காண விரும்புகிறீர்களா? என்று வினாவினாராம். சுவாமிகள் “ஆம்” என்ற போது மந்திரவாதி சில மந்திரங்களை உச்சரித்தானாம். உடனடியாக மழை பொழிந்து கொட்டியதாம். ஆவிகளைக் கண்டிருக்கிறீர்களா? என்று சுவாமிகளிடம் ஒருமுறை கேட்கப் பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் தான் சுண்டிக்குழிச் சந்தியில் அமர்ந்திருந்த போது காலில்லாத இரு மனிதர் குதிரையை இட்டுச்
274

சென்றனர். அவர்கள் எங்கு போகிறார்கள் எனக் கேட்ட போது அவர்கள் தாம் முல்லைத்தீவுக்கு அருகாமையிலிருக்கின்ற கிராமமாகிய ஒட்டிசுட்டானுக்குச் செல்வதாகக் கூறியிருக்கிறார்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் தான் நடுச்சாமம் போல நடந்து செல்லுகையில் மிக வேகமாக ஒருவர் நடந்து வந்து தன்னையும் கடந்து சென்று ஒரு மதிலிற்கூடாகக் கோவிலை அடைந்தார் எனக் கூறியிருக்கிறார். யோகர் சுவாமியை அறிந்தவர்கள் அவர் ஒருபோதும் பொய் பேசமாட்டார் என்பதை அறிவர். நுண்ணுணர்வு அலைப் பரிசோதனைகள் நடத்திய இன்றைய விஞ்ஞானிகள் ஆவிகளில் நம்பிக்கை பற்றிய தாற்பரியத்தை மெய்ப்பித்துள்ளார்கள். யோகசுவாமிகள் தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர். அவர் தேவாரம், திருவாசகம், திருப்பாடல், புராணப் படிப்பை ஆரம்பித்து வைத்தார். சிவத்தொண்டன் சபையைத் தொடங்கியவர் அவர். அவர் பெரும் புலவன். அவரது நற்சிந்தனைகள் தத்துவக் கருத்துக்கள் பொதிந்தவை மட்டுமல்ல ஒரு சிறந்த தமிழ்ப் பாடல்களாகவும் விளங்குகின்றன. இன்றைய காலத்துத் தமிழ் எழுத்தாளர்களுள் அவருக்குக் கலியாணசுந்தரனது "சைவசமரசம்” என்பதின் மேல் தனிமதிப்பும் பற்றுதலும் இருந்தது. சுவாமிகளுக்கு ஆங்கிலம், சமஸ்கிருதம், சிங்கள மொழி எல்லாம் தெரிந்ததே. மக்களுடன் மிகவும் சரசமாக இம்மொழிகளில் பேசுவார்.
யோக சுவாமிகளுக்கு இலங்கையில் மட்டுமல்ல தூரநாடுகளிலும் பக்தர்கள் இருந்தார்கள். இவருடைய வருகையில் தனித்துவமான தூய்மையும், மகிழ்ச்சியும் நிலவியது. அவர் வரும் போது வீசும் கற்பூர மணமும், சந்தனக் குச்சி வாசமும் அங்கிருப்போரை இறைவன் சந்நிதானத்திற்கு இட்டுச்செல்லும். சுவாமிகளது மறைவு ஈடுசெய்ய இயலாதவொரு வெற்றிடத்தை உண்டு பண்ணியிருக்கிறது. தொண்ணுறு ஆண்டுகளுக்குக் கிட்டவாக ஒளிவீசிய சுடர் மறைந்து விட்டது. அவரைக்
275

Page 150
காண்பதற்குக் கூடிய ஆயிரக்கணக்கான மக்களை வழிநடத்திச் சென்ற ஞானி இன்றில்லை. அவர் பாலித்த அருளை ஏனைய அனைவரும் அனுபவித்துக் கொள்ள இனி இயலாது. "நீங்கள் மறைந்த பின்னர் இவ்வுலகில் எனக்கு யார் இருக்கிறார்கள்?” என்று ஒரு பக்தர் சுவாமிகளைக் கேட்ட போது சுவாமிகள் “கடவுள்” எனப் பதிலளித்தார்.
தொண்ணுறு ஆண்டுகளாக அவர் ஆற்றிய சேவை மக்கள் உள்ளங்களில் வாழ்வதாக, குருவினுடைய சிறந்த பாரம்பரியப் பண்புகளைத் தொடர்ந்து பரிபாலித்து வரக் கூடிய நிறைவு பெற்ற தகுதிவாய்ந்த ஒரு சீடன் உருவாகட்டும்.
gf ø7#. LLźbig. SuốøOLLIT
நன்றி சிவதொண்டன் சிறப்பு மலர் 29-1965 ஆங்கில மொழி வெளியீடு
GaA62 rufiy
米 米 米 米 米 米
மெத்தை வீட்டில் ஏறும்பொழுது படிகளில் கால்வைத்து ஏறவேண்டும். ஆனால் இயங்கேணியிலேயும் (டகைவ) போகலாம்.
அது முன்பிறவித் தவத்தினாலே வரவேண்டும்.
அருள் மொழிகள்
276

சுவாமிகளது அருள்
குடற்புண் ulcer என்பது குடலின் கண்ணே ஏற்படும் ஒரு வெளிப்புற நொய்தல் ஆகும். இது இடைவிடாத நோவை ஏற்படுத்துவதோடு ஒருவரை உண்ணவும் விடாது துயிலவும் விடாது. மிக முற்றிய நிலையில் இரத்தப்போக்கு உருவாகி அதனால் மரணமும் தொடர்ந்து வரும். நான் இக்குடற்புண்களால் பெரிதும் உழன்று, அதனைத் தாங்கி வென்று, முற்றாகச் சுகப்படுத்தப்பட்டு இருக்கிறேன் எனும்பொழுது, என்னால் மறக்க முடியாத ஒரு சம்பவம் என் ஞாபகத்திற்கு வருகிறது. இது ஒரு முழுமையான அற்புதமாகும் என வைத்தியர் குறிப்பிட்டார். ஆனால் மிகப் பெரியாராகிய சுவாமிகளோடு தொடர்பு கொள்ளும் பெரும் பாக்கியம் பெற்றவர்களுக்கு இது ஆச்சரியத்தை விளைவிக்கமாட்டாத தொன்றுதான்.
நான் ஓராண்டுக்காலமாக இத்தகைய குடற்புண்நோயால் பெரிதும் தாக்கப்பட்டு வருத்தமுற்றிருந்தேன். வைத்தியர் என்னைச் சத்திரசிகிச்சை செய்து கொள்ளும்படி ஆலோசனை கூறினார்கள். இங்கு அந்தச் சத்திரசிகிச்சையை மேற்கொள்ள எனது கணவர் விரும்பவில்லை. ஆகவே என்னை இங்கிலாந்திற்கு அனுப்பத் தீர்மானித்தார். நான் இன்னும் சில கிழமைகளில் இங்கிலாந்திற்குக் கப்பல் மூலம் செல்ல இருந்தேன். வழமைபோல நாங்கள் சுவாமிகளது ஆசியைப் பெறுவதற்காக யாழ்ப்பாணம் சென்றோம். நான் ஏன் அங்கு அவரிடம் சென்றேன், என்ற காரணத்தை என் கணவர் அவருக்குச் சொன்னபோது அவர் சிரித்துக் கொண்டு ‘உல்லாசத்திற்குப் போவதென்றால் இங்கிலாந்திற்குப் போ அல்லாவிட்டால் எதுவித தேவையுமில்லை. காலையில் பனங்கட்டி சேர்த்து தயாரித்த கஞ்சியைக் கொஞ்சம் குடி, நீ நல்ல சுகமடைவாய். அதை எப்படிச் தயாரிக்க வேண்டுமென்று உனது தாயாருக்குத் தெரியும்” என்றார்.
277

Page 151
மறுநாட்காலை சுன்னாகச் சந்தையிலே எனது வாகனஓட்டி கடைச்சாமான்கள் வாங்குவதற்கு ஒரு கடைக்குள் நுழைந்தபோது அங்கு சுவாமிகள் இருப்பதைக்கண்டு அதிசயித்தான். நான் காரில் இருக்கின்றேனா?, என வினாவி விட்டு, சுவாமிகள் தான் வைத்திருந்த பணத்தில் பனங்கட்டி வாங்கிக் கொண்டு அதனைச் சாரதியிடம், எனக்குக் கொடுக்குபடி கொடுத்தார். அவரது பெரும் கருணையை எண்ணி நான் அழுதேன். ஆரம்பித்ததிலிருந்தே எனக்குச் சத்திரசிகிச்சை தேவைப்படாது என நான் நம்பிக்கை கொண்டேன். நான் கஞ்சியைக் குடித்தேன். ஒரு சில நாட்களில் நான் எதுவித எதிர்த்தாக்கமோ நோவோ இல்லாமல் திண்மமான உணவையும் உட்கொள்ள முடிந்தது.
பயணத்திற்குரிய கடவுச்சீட்டும் பெற்று, சகல விதமான ஒழுங்குகள் எல்லாம் செய்தாகிவிட்டதால் எனது கணவர் நான் இங்கிலாந்து சென்று அங்கு ஒரு பொதுவான பரிசோதனை செய்து வரும்படி வற்புறுத்தினார்.
இங்கிலாந்தில் வைத்தியர்கள் என்னைப் பரிசோதித்தார்கள். ஒளிக்கதிர்படங்களைப் பார்வையிட்டார்கள். சொன்னார்கள் “இது
குறிப்பிடத்தக்க ஓர் அற்புதமாகும். உங்களது குடற்புண் இத்தனை விரைவில் குணமடைந்தமை பற்றி எம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இரத்தப்பெருக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.”
பூனிமதி கெளரி தியாகராஜா நன்றி சிவதொண்டன் சிறப்புமலர் 29-1965 ஆங்கில மொழி வெளியீடு
மொழிபெயர்ப்பு
米 米 米 米 米 米
278

சிவமயம்
தாயினும் நல்ல தலைவன்
வாழ்க்கையில் எழும் இன்ப துன்ப அலைகளால் அலைக்கப்பட்டு பிறவிக் கடலில் ஆழ்ந்து போகாதபடி இறைவன் திருவடிப் புணையை இறுகப் பற்றிநின்று இம்மை மறுமைப் பயனைப் பெற்றுய்யும் வண்ணம் அன்பர்கள், அடியார்கள், அருளாளர்கள், ஞானதானப் பணியில் ஈடுபட்டு அயராது உழைத்து வரும் தொண்டர்கள், இன்னுந் தன் பக்திவலையில், வாழ்க்கையில் எழும் இன்ப துன்ப அலைகளால் அலைக்கப் பட்டவர்கள் ஆதியோரது மனத்தகத்து எள்ளுக்குள் எண்ணெய் போல் கலந்து நின்று அவர்களுக்கு வரும் இன்னல்களைக் கேட்டும் கேளாமலும், தெரிந்தும் தெரியாதவர் போலும் விரைந்து சென்று நீக்கி அஞ்சேல் என்று அபயம் அளித்து அருள் பாலித்த எங்கள் குருநாதர், யாழ்ப்பாணத்துக் கொழும்புத் துறையில் சிவயோக சுவாமிகள் அடியேனுக்கு வழங்கிய அருளமிர்தம் தொடர்பான நிகழ்வுகளில் ஒன்றை அவர்களது திருவடித் தாமரைகளைச் சிரமேற்கொண்டு அவரருளாகவே எழுதுகின்றேன்.
1944 ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் ஒரு நாள், இற்றைக்கு 54 ஆண்டுகளுக்கு-அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் எனலாம். எனது அருமைத் தாயாரின் பெயர் சிவக்கொழுந்து. ஆனாலும் அவர் ஒரு முருக பக்தர். வேல் முருகனிடத்து நீங்காத பக்தி கொண்டவர். அவர் தம்மை இடைவிடாது வருத்திக்கொண்டிருந்த ஒரு குடர் நோய் காரணமாக மிகவும் வேதனையுற்று நலிவடைந்திருந்தார். ஊரில் உள்ள சிறந்த சித்த ஆயுர் வேத வைத்தியர்களைக் கொண்டு வைத்தியம் செய்வித்தும் ஒரு சிறிதேனும் நோய் குணமடையவில்லை. அதனால் யாழ்ப்பாணம் அரசினர் வைத்தியசாலையிற் சேர்த்தோம். அவரைப் பார்வையிட்ட
279

Page 152
வைத்திய நிபுணர் “சத்திர சிகிச்சை மூலம் தான் இந் நோயைக் குணப்படுத்தலாமே தவிர வேறுவழியில்லை. அதுவும் இரண்டு நாட்களுக்கிடையில் செய்தாக வேண்டும்” என்று நிபந்தனையும் விதித்துவிட்டார். எனவே உரிமைக்காரர் காலம் தாழ்த்தாது சம்மதம் தெரிவிக்க வேண்டும். தந்தையாரும் உத்தியோகம் காரணமாக ஊரில் இல்லை. தந்தையாருக்கு ஏக புத்திரன் என்ற வகையில் யானே சம்மதம் தெரிவிக்க வேண்டும்.
இந் நலையில் இதற்கு யான் என்ன செய்யலாம் என்று கலங்கி நிற்கும் வேளையில் தாயாருக்கு இது எப்படியோ தெரிந்து விட்டது. அவர் என்னை அருகில் அழைத்து உச்சி மோந்து முத்தமிட்டுக் கைகளை வருடி இருகரம் கூப்பி “தம்பி எனக்குச் சத்திரச் சிகிச்சையே வேண்டாம் யான் ஆதற்கு ஒரு போதும் சம்மதியேன் வள்ளியம்மன் எப்படியும் என்னைக் காப்பாற்றுவார். இப்பொழுதே வீட்டிற்கு அழைத்துச் செல்வாயாக’ என்று ஈனக் குரலில் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். அவருடைய செயலைச் சகிக்கவும், உள்ளத்தை உருக்கும் வேண்டுகோளை நிராகரிக்கவும் என்னால் ஒரு சிறிதும் முடியவில்லை. அவருடைய அன்புக் கரங்களை மெதுவாகப் பற்றி "ஆச்சி நீங்கள் எதற்கும் ஒரு சிறிதும் வருந்த வேண்டாம். உங்களை விரைவில் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போவதற்குரிய ஆயத்தங்களைச் செய்து விட்டு வாகனத்துடன் வருகிறேன், நீங்கள் சற்றுப் படுத்துறங்குங்கள்.” என்று கூறிச் சகோதரி துணைநிற்க, அவ்விடத்தினின்றும் புறப்படும் போது உண்டான அழுகையை மறைத்துக் கொண்டு செல்கையில், அக் காலம் எம்மிடையே நடமாடுந் தெய்வமாக விளங்கிய யோகசுவாமிகளுடைய எண்ணம் மனத்தில் உதித்தது. புன்னகை பூத்த மலர் வதனம் பொதிந்திலங்க மின்பிரபைக் காலும் திருவுருவம் மனத்தகத்தே மலர்ந்து அழுகை ஆனந்தமாக மாறியது.
280

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து - அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழுங் கணணிரதனால் உடம்பெலாம் நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞானநடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து வழுத்துதும் .
என்ற இராமலிங்க வள்ளலாருடைய பாடலைப் பாடி வழுத்திக் கொண்டு சுவாமியவர்களைத் தேடித் துவிச்சக்கர வணிடியில் கொழும்புத்துறையில் உள்ள அவர்களது ஆச்சிரமத்திற்கு விரைந்தேன். அத்தெய்வம் அங்கில்லை. விசாரித்தேன். பெரியவர் ஒருவர் "நாவற்குழிப் புகையிரத நிலைய அதிபர் அவர்களிடம் சென்றிருக்க வேண்டும்” என்றார். பெரியவருக்கு வணக்கம் கூறி, மிக விரைவாகக் கண்டி வீதியையடைந்து அவி வழியாக நாவற் குழிக் குச் சென்றுகொண்டிருந்தேன்.
யாழ்ப்பாணத்துக் கமக்காரர்கள், சோளகக் காற்று என்று கூறும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று என்னுடைய நிலையை நன்கு அறிந்தோ என்னவோ மிக விரைவாக அழைத்துச் செல்கின்றது. சில நிமிடங்களில் நாவற்குழிச் சந்தியை அடைந்தேன். வியாபார நிலையம் ஒன்றில் தெரிந்தவரிடம் துவிச்சக்கர வண்டியை ஒப்படைத்து விட்டு புகையிரத நிலைய வாயிலின் முற்பக்கத்தை அண்மினேன். அடைந்த மகிழ்ச்சிக்கோரளவில்லை.
சுவாமிகள் உயர்ந்த ஓர் ஆசனத்தில் வீற்றிருக்கின்றார். நிலைய அதிபர் அவர்கள் அயலே நிற்கின்றார். மெளனம் நிலவிக் கொணடிருக்கின்றது. அந்த நிலையில் சுவாமிகள்
281

Page 153
புறப்படவிருக்கின்றார் என்பதைப் புரியக் கூடியதாக விருக்கின்றது. இடையிற் செல்ல மனந் துணியவில்லை. சாளரத்தினூடாக "ஐயா யாழ்ப்பாணத்திற்கு ஒரு "ரிக்கற்” என்றேன். அதிபர் விரைந்து தந்தார். புகையிரதமும் வந்து நின்றது. அதிபர் சுவாமிகளை இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஏற்றி வைத்தார். யான் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறித் தெற்கு வாயிற் பக்கமாக நின்று சுவாமிகள் புங்கன்குளம் நிலையத்தில் இறங்குகின்றாரோ அல்லது நேரே யாழ்ப்பாணநிலையத்திற்குத் தான் செல்கின்றாரோ என்பதை அவதானித்துக் கொண்டு நின்றேன். சுவாமிகள் புங்கன்குளத்தில் இறங்கவில்லை. யாழ் நிலையத்தில் தான் இறங்கினார். யானும் விரைந்து இறங்கிச் சுவாமிகளைப் பின் தொடர்ந்தேன். அவர்கள்
'மாட்டினி வீதி வழியாக தீ தெற்கு நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார். சமீபத்திற் செல்ல மனம் அஞ்சுகின்றது. உடலும் நடுங்குகின்றது. ஏறக் குறைய இருபது அடி இடைவெளியிருக்கும். யானும் பின்தொடர்கின்றேன். எதிர் பார்த்த வண்ணம் திரும்பி என்னை உற்றுநோக்கினார். ஆனந்த பரவசமடைந்தேன். ஆனால் நடந்ததென்ன? எதிர்மாறாகக் கருத்துப் புரிந்துகொள்ள முடியாத கடுங் கோப வார்த்தைகளால் அறம்புறமாகப் பேசி "போடா” என்று அதட்டி மீண்டும் சென்ற வழிக்குத் திரும்பினார். திரும்பும் போது செய்வதொன்றறியாது திகைத்தவனாய்த் திருமுகத்தை உற்றுநோக்கினேன். திருமுகத்தில் புன்முறுவலோடு கூடிய மின்பிரபை காணலுற்றதும். அச்சம் அகன்றது. ஆனந்தம் பொங்கியது.
விள்ளத்தான் ஒன்றுமாட்டேன் விருப்பெனும் வேட்கையாலே வள்ளத்தேன் போலநின்னை வாய்மடுத் துணடிடாமே உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புனே வருத்தியேனும் கள்ளத்தே நிற்றியம்மா எங்ஙனம் காணுமாறே
282

என்னுந் தேனினுமினிய மாணிக்கவாசகர் திருவாசகத்தை மனத்திருத்தி வணங்கிக் கொண்டு பின்தொடர்கின்றேன். இரண்டாம் முறையாகவுந் திருக்கண்ணோக்கஞ் செய்தார். எனினும் முன் போலவே முறைத்துப் பார்த்து “டேய் சொல்வதைக் கேட்க மாட்டாயா? இன்னும் தொடருவாயேயானால் இது தான் வரும்” என்று தமது இடது திருவடிப் பாதணியை மலர்க் கரத்தெடுத்து ஓங்கிக் காட்டினார். சுவாமி சொல்வதைக் கேட்கத் தானே ஆவலோடு வந்துள்ளேன் என்று கூறிக் கொண்டு விரைந்து சென்று அட்டாங்கங்களும் நிலத்திற் பொருந்த வீழ்ந்து பாத கமலங்களைப் பற்றிய வண்ணம் கண்களில் நீர் மல்க
ஐயனே எனை ஆண்டருள் புரியும் ஆதியே உழை அணி மழுவிருக்கும் கையனே கொடுங்காலனை முனியும் காலனே இருகணனினுள் மணியே செய்யனே அடி போற்றி எண் பெரிய செல்வமே அடி போற்றி பொய்யினர் தம் பொய்யனே அடி போற்றி எவ்வுயிர்க்கும் போதமே அடி போற்றி
எனினும் கடவுணி மாமுனிவர் அருளிச் செய்த திருவாதவூரடிகள் புராணத்து திருப்பெருந்துறைச் சருக்கத்திலுள்ள பாடலைப் பாடி என்னைக் காப்பாற்றுவீராக எள்று அலறினேன். சுவாமிகள் தமது வலக்கரத்தால் என் தலையைத் தொட்டு எழுந்து நிற்கச் செய்து “உலகில் இயற்கைக்கு மாறாகச் செய்கின்ற காரியங்கள் அவ்வளவு நிலைத்திருப்பதில்லை. இவைகள் எல்லாம் எப்பவோ முடிந்த காரியம். ஒரு பொல்லாப்புமில்லை. தாய்சொல்லைத் தட்டாதே நீ விரும்பிய படி விரைந்து செய் போ. போ” என்று அருளமிர்தம் வழங்கினார். மீண்டும் வணங்கி விடைபெற்றுக் கொண்டு வைத்திய சாலையிலிருந்து புறப்படும் போதிருந்த மனநிலைக்கு நேர்
283

Page 154
எதிர்மாறான மட்டற்ற மகிழ்ச்சியோடு வைத்தியசாலையை அடைந்து தாயாருக்கும் சகோதரிக்கும் நடந்தவற்றைக் கூறினேன். அவர்களும் அளவற்ற ஆனந்தமடைந்தார்கள். போவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து அங்கிருந்து புறப்பட்டு அற்றைத்தினமே வீட்டையடைந்தோம். தாயார் வரவரக் குணமடைந்து சில மாதங்களில் பூரண சுகமுடையவராக மேலும் இருபது ஆண்டுகள் வாழ்ந்து 1964ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் கிருஷ்ணபசஷ்ச் சதுர்த்தசித் தியில் இறைவன் திருவடி நிழலை அடைந்தின்புற்றார்.
சுவாமியின் அண்டர்
米 米 米 米 米 米
சூரியன் வருவது யாரால் தூமதி தவழ்வது யாராலே விண்மீன் மிளிர்வது யாராலே வெய்யி லெறிப்பது யாராலே கண்ணிணை காண்பது யாராலே காற்று மடிப்பது யாராலே தண்ணீர் பெருதல் யாராலே தக்கோர் புகழ்வது யாராலே பூமி சுழல்வது யாராலே பூக்கள் மலர்வது யாராலே கால்க ணடப்பது யாராலே கைக ளெடுப்பது யாராலே எண்ணிப் பார்நீ யறிவாயே எல்லாஞ் சிவன் செயல் குறியாயே சொல்லு சுதந்திரம் பெறுவாயே சுவாமி வாக்கிது தெரிவாயே
நற்கிந்தனை
284

நான் கண்ட யோக சுவாமி
பல ஆணிடுகளாக யோக சுவாமியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சில அதிசயச் செய்திகளையும் கேட்டிருக்கிறேன். ஆனால் இலங்கைக்குப் பல முறை சென்ற போதும் இலங்கையில் தமிழ் விழா நடப்பதற்கு முன் அவரைக் காணும் பேறு பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழ் விழாவின் போது கலைப் புலவர் நவரத்தினமும், நானும் காரில் சென்றுகொண்டிருந்தோம். இடைவழியில் யோகசுவாமி நின்றிருந்தார். கலைப் புலவர் யோகசுவாமியிடம் ஈடுபாடு உள்ளவர். சுவாமிகளை ஏற்றிக் கொண்டு அவர் சொல்லிய இடத்தில் விட்டுவிட்டுப் போனோம். அந்த இடத்தில் அவர் எல்லோருக்கும் மோர் வழங்குமாறு கூறினார். சுவாமிகளின் அருட் பிரசாதம் என்று அதனைத் தெய்வீக எண்ணத்தோடு பருகி மகிழ்ந்தோம். காரில் வரும் போது சுவாமிகள் தமிழ் விழாவைப் பற்றிக் கேட்டறிந்து கொண்டார். அதில் ஒரு மகிழ்ச்சியும் இருந்தது என்பது தெளிவாயிற்று. ‘சந்நிதான விசேஷம் என்று கூறுவார்கள். பெரியோர்களோ, ஞானிகளோ, ஆண்டவன் கோயிலோ அருகே வருகிறவர்களில் பலரைத் தம் தூய அமைதியின்பத்தில் அவரையும் அறியாமல் ஆழ்த்தி விடுகின்றதைப் பார்க்கிறோம்.
இரண்டாம் முறை அவரைக் காணும் பேறு நான் பெற்றது அன்பர் நடேசபிள்ளை அவர்களின் அறுபதாவது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நடந்த மாநாட்டில் பங்குகொள்ளும் போது தான். அப்போது அங்கிருந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு மாலையும் அவரைப் பார்க்கவும், அவரோடு பேசவும், அவருடைய நல்லுரைகளைக் கேட்கவும் வாய்ப்புக் கிடைத்தது. தத்துவப் பேராசிரியர் திரு. டி. எம் பி. மகாதேவன் அவர்களும் திரு. அ. ச.
285

Page 155
ஞானசம்பந்தமும் உடன் வந்திருந்தார்கள். முதல் நாள் கண்டு வணங்கினோம். எங்களைப் பற்றி எல்லாம் அன்போடு விரும்பிக் கேட்டு அறிந்து கொண்டார். எல்லோரும் நல்லவர்கள் என்று வாழ்த்தினார்கள். மனங்கசிந்து பழத்தைத் தந்து உண்ணச் செய்தார். சில பாடல்களைப் பாடினார். தேவாரத்திலிருந்து சில பாடல்கள்: அவருடைய குருநாதர் மீது பாடிய சில பாடல்கள் இப்படி எத்தனையோ பாடினார். “ஆண்டவனை நம்பி நல்லவனாக உண்மையாய் நடப்பதே சரியான வழி என்று கூறினார்.” உபதேசந்தானே அது. இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போது சகஜ நிட்டையில் அடிக்கடி இருப்பது போல் தோன்றிற்று. ஒரு குழந்தை போன்ற நினைவு. சகஜநிட்டையோடு தம்மைத் தொடர்பு படுத்திக் கொண்டு அப்போதப்போது பேசிவருவதால் முழுப் பேச்சின் தொடர்பும் நமக்கு விளங்குவதில்லை. இதனாலே தான் “ஞானியர் பேச்சு பித்துப் பேச்சு” என்று பலர் சொல்கிறார்கள் போலும். அடுத்த அறையில் ஏதோ பூசை நடைபெற்றது தெரிந்தது. தம்முடைய அடியார் ஒருவருக்காக இவ்வாறு நிகழ்ந்தது என்று அறிந்தோம். “தீய ஆவிகள் உண்டா அவற்றைப் பூசை செய்து ஓட்ட முடியுமா?” என்றெல்லாம் எங்கள் மனதில் கேட்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அன்று சுவாமிகள் எதிரே நாங்கள் பெற்ற அமைதி நிலையில் இதைப் பற்றியெல்லாம் பேசக்கூட மனம் எழவில்லை. அந்த அமைதி நிலையிலேயே அவரை வணங்கி எங்கள் விடுதிக்குத் திரும்பினோம்.
அடுத்தநாளும் வரச்சொன்னார். நாங்கள் மாநாட்டில் பேசிய பேச்சு என்னென்ன என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். சிரித்து விளையாடினார்; மறுபடியும் அந்தக் குழந்தையின் நினைப்பே, பித்தரின் நினைப்பே எங்களுக்கு வந்து நின்றன. ஆனால் அந்த அமைதியின்பத்தைப் பெற்று மகிழ்ந்தோம். அடுத்தநாளும் வரச்சொல்லிக் கட்டாயப் படுத்தினார். மூன்றாம் நாள் நாங்கள்
286

விடைபெற்றுக் கொண்டு ஊர் திரும்ப வேண்டும் என்று தெரிவித்தோம். அவர் எங்களிடம் காண்பித்த அன்பை என்ன என்பது எங்களுக்காக விருந்து ஒன்று அமைத்திருந்தார். உணவு என்றா சொல்வது ஞானத்தையே அன்புடன் குழைத்துக் குழந்தைக்கு ஊட்டுவது போல் ஊட்டினார் என்றே சொல்ல வேண்டும். எல்லையற்றப் பேரின்பம்! அப் பேரின்பத்தில் திளைத்து மகிழ்ந்து நின்றார். முகத்தில் குழைந்த புன்சிரிப்பு- நெற்றியில் திருநீற்று வெண்மை - இடுப்பில் சுற்றுக் கட்டாகக் கட்டிய வெள்ளை வேட்டி- மார்பு வரை வந்து புரளும் நரைத்த தாடிதலையெல்லாம் நரைத்து வெளுத்த முடி - முழுவதுமாகிய பேரின்பக் களிப்பு - அமைதியையும் உயர்ந்த எண்ணத்தையும் வந்தோரிடமெல்லாம் நிலவச் செய்யும் சூழ்நிலை - இப்படியாக அவரைக் கண்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தோம்.
மூன்றாவதாக ஒரு தமிழ்க்கழக விழாவுற்குப் போயிருந்த போது அவரைப் பார்த்தேன். அப்போது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்ச்சியால் நடக்கமுடியாமல் படுக்கையிலேயே அவர் கிடக்க வேண்டி இருந்தது. சுவாமிகளின் சீடர்களும், அவராலே மணம்கனும், மணமகளும் ஆக ஆக்கப்பெற்றவர்களான என் அருமைநண்பர்கள் திரு. நவரத்தினமும் திருமதி ரத்னா நவரத்தினமும் என்னை அவர்கள் வீட்டில் வரவேற்றுத் தங்கச் செய்திருந்தார்கள். நான் போய்ச் சேர்ந்த அன்று மாலையே அவரைப் பார்க்கச் சென்றேன். அவர் ஞான சமாதியில் இருந்தார். அப்போதப்போது உலக நினைவாக வந்து தம் அடியாரோடு சில சொல் பேசினார். அவருடைய சீடர்கள் என்னையும் அறிமுகம் செய்தார்கள். ஆனால் ஞான சமாதியில் அடிக்கடி அவர் புகுவதால் இந்த வெளிப் பேச்செல்லாம் அதனைக் கலைப்பதாகவே தெரிந்தது. இந்த நிலை என்னோடு பேசுவதை விடச் சிறந்த உபதேசமாகத் தோன்றியது. அடுத்தநாள் இரவு கூட்டத்தில் பேச்சு ஆகையினாலே அவரைப் பார்க்க முடியவில்லை.
287

Page 156
மறுநாள் காலையில் ஆகாய விமானத்துக்குச் செல்லுகின்ற வழியில் அவரைப் பார்க்கப் போனோம். அப்போதும் அவர் ஞான நிட்டையிலேயே இருந்தார். அவருடைய சீடர்கள் கருப்பூரத்தை ஏற்றிவைத்து உபநிடதம், தேவாரம் முதலிய பாடல்களைப் பாடி வணங்கிச் சென்றார்கள். நாங்களும் வணங்கி விடைபெற்று வந்தோம்.
அப்போது ஒரு செய்தி அறிந்தோம். ஞாயிறு தோறும் அன்பர்கள் கூடிப் பாடிக்கொண்டு ஊரூராகப் பயணம் போகும் ஏற்பாட்டைச் சுவாமிகள் தாமே செய்திருந்தாராம். வாரத்திற்கு வாரம் கூட்டம் மிகுந்து கொண்டே வந்ததாம். இளைஞர்கள், செல்வர்கள், கிழவர்கள் எல்லோரும் நடந்தே வந்து முதலிலிருந்து முடிவு வரை பயணத்தை முடிப்பார்களாம். ஒரு புது உயிரே உண்டாகியிருக்கிறதென்றும் என்னிடம் அவர் சீடர்கள் கூறினார்கள். நேரில் காணும் வாய்ப்பில்லையே என்று வருந்தினேன். குடியொழிப்புத் திட்டத்தில் முன்னர் சுவாமிகள் கலந்து ஊக்கந்தந்து நின்றமை நினைவுக்கு வந்தது. இதற்கு முன் ஒரு ஜெர்மானியர் சந்நியாசியாகி யோகர் சுவாமியோடு பழகியிருந்ததும் அவர் வழியே சுவாமிகளது நான்கு மகா வாக்கியங்களைக் கலைப்புலவர் வீட்டில்
கேட்டறிந்ததும் நினைவுக்கு வந்தன.
சைவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, உபநிடத உண்மைகளோடு ஒன்று சேரவைத்துச் சைவத்தை விளக்கி உலகெங்கும் பரப்ப வேண்டும் என்று சுவாமிகள் கருதினார்களாம். சைவசித்தாந்தப் பாடத்தை முறையாகப் பாடஞ்சொல்லி வரவும் சுவாமிகள் ஏற்பாடு செய்தார்களாம். சுவாமிகள் அவர்களுக்கு லார்ட் சோல்பரியின் மகன் போன்றவர்கள் சீடர்களாக மேனாட்டிலும் விளங்குகின்றார்கள். அவர்கள் உதவியால் இங்கிலாந்திலும்
288

சைவத்தைப் பற்றிப் பேசவேண்டுமென்று தம் சீடர்களிற் சிலராகிய வித்துவான் க. கி. நடராஜன், திருமதி ரத்னா நவரத்தினம், திரு. நவரத்தினம், திரு. சச்சிதானந்தம், திரு. இராம்ஸ் போதம் (சாந்தசுவாமி) ஆகியோரை வேண்டிக் கொண்டார்களாம். அவர்களுள் ஒருவராகிய திருமதி ரத்னா நவரத்தினமும் அவரது கணவரும் இந்தத் தொண்டாற்ற இங்கிலாந்திற்குப் போய்த் திரும்பி வந்த போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவர்களை
வரவேற்கும் பேறு பெற்றேன்.
தொண்டு முடிந்தது. சுவாமிகள் விதேகமுத்தி அடைந்து விட்டார். கண்ணிரும் கம்பலையுமாக இதைத் திருமதி ரத்னா நவரத்தினம் அவர்கள் எழுதினார்கள். இனி அவரைக் காண முடியாது. ஆனால் அழியா நிலைமையையல்லவா அவர் பெற்றுவிட்டார். அவர் தொண்டு வாழும். சிவதொண்டன் என்றும் சிவதொண்டனே. பல தொண்டர்கள் வளர்வார்கள். உலகம் வாழும். அவரில் நாம் கண்ட காட்சி அவருடைய இனிய பேச்சு, ஞானப்புன்சிரிப்பு, அமுதவிருந்து இவற்றை எப்போதும் என் மனதில் கண்டு களிக்கின்றேன். யான் எதிர்பாராதபடி ஒரு நாள் கலைப் புலவரிடமிருந்து சுவாமிகளுடைய புகைப்படம் ஒன்று வந்தது. என் எதிரே சுவாமிகளை நினைப்பூட்டிக் கொண்டு உலகிலே மயங்கும் போதெல்லாம் மயக்கத்தை நீக்கி அது அருள் புரிந்து வருகிறது. நண்பர்கள் இருவர் சுவாமிகள் பாடிய பாடல்கள் நிறைந்த நற்கிந்தனை என்ற நூலை எனக்கு உதவினார்கள். ஒன்றுக்கு இரண்டாக அவர் அருள் கிடைத்ததே என்று மிகமிக மகிழ்ந்தேன். அவர் பேசுவதுபோல அவர் பாடல்களைப் படிக்குந் தோறும் எனக்குத் தோன்றும். ஆகவே அவரோடு கூடியிருப்பது போலவே இன்றும் எனக்குத் தோன்றுகிறது.
289

Page 157
(இக் கட்டுரையில், தாம் சுவாமிகளைத் தரிசித்ததும், அறிந்ததும், பெற்றதுமாகிய அனுபவங்களைப் பன்மொழிப் புலவரும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியருமாகிய திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் இனிய முறையில் எடுத்துக் கூறுகிறார்கள்)
திரு.தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்
நன்றி சிவத்தொண்டன் சிறப்பு மலர் 29
米 米 米 米 米 米
அவனருளாலே அவன்றாள் வணங்கி, அருள் எப்போதும் இருக்கிறது. யன்னலைத் திறந்தவுடன் காற்று வீசுகிறது. காற்று வீச முன்பும் இருந்தது. தடுத்திருந்த யன்னலைத் திறந்தவுடன் வீசிற்று. காற்றுப் புதிதாய் வீசியதல்ல, கொஞ்சம் இழக்கி விட வேண்டும் அதாவது தன்னைப் பரிசுத்தமாய் வைத்திருக்க அருள் வெளிப்படும்.
சுவாமிகள் அருள் மொழி
290

நான் கணிட அற்புத யோகர் எனை ஆணர்ட தெய்வம்
1954ம் ஆண்டு நல்லூர்த் திருவிழா ஒரு நாள் ஆவணி மாதம் நான் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் போய் அங்கு எங்கள் அண்ணன் வீட்டில் தங்கியிருந்தேன். பொழுது விடிந்ததும் தேருக்கு வெளிக்கிட்டபோது எனது உடல் நிலை சரியில்லை. கோயிலுக்குப் போகமுடியாத நிலை காணப்பட்டது. இதனை அம்மாவிடம் கூறினால் கூட்டிக் கொண்டு போகமாட்டார் என்பது எனக்குத் தெரியும். இவ்வளவு தூரம் இருந்து வந்துவிட்டுத் தேரைப் பார்க்காமல் திரும்பிப் போவதா? என் ஆசையின் நிமிர்த்தம் நல்லூர்ப் பிள்ளையார் கோவில் வாசலில் நின்றேன். அப்போது என் பக்கமாக ஒரு வயோதிப தாத்தா நின்று “உன்னை யாரடி இங்கு வரச்சொன்னது? வீட்டிற்குள் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் கோயிலுக்கு வாறதா?” என்று கூறினார். என் மனம் நடுங்கத் தொடங்கியது. அம்மா அறிந்தால் என்னை ஏசப்போகின்றார் என்று அம்மாவுக்கு விசயத்தைக் கூறாமல், எனக்கு நிற்கமுடியவில்லை தலைக்குள் என்னவோ செய்கிறது என்று கூறியதும், அம்மா என்னை ஒருவருடன் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
அதன் பின்னர் அவரை நான் சந்திக்கவில்லை. பின்பு நான் திருமணமாகி யாழ்ப்பாணத்தில் இருந்த போது ஏழு வருடத்தில் ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். அப்போது நான் பிள்ளைகள் காணும் என்று சத்திரச் சிகிச்சை செய்ய எண்ணி நயினை நாகபூஷணி அம்மாளிடம் போய்ப் பூக் கட்டிவைத்து பார்த்துச் செய்வது என்று சென்றேன். வெள்ளைப் பூ வந்தால் செய்வது இல்லை, சிவப்புப் பூ வந்தால் செய்வது என்று எடுத்துப் பார்த்த போது வெள்ளைப் பூ வந்தது. நான் என்ன செய்ய
29

Page 158
முடியும்? எல்லாம் ஆண்டவன் கட்டளைப் படி தான் நடக்கும் என்று நினைத்துவிட்டு, சந்நிதியில் நின்று கும்பிட்டுக் கொண்டு நின்ற போது, “நீ ஒரு காரியம் நினைத்திருக்கின்றாய் அதனைச் செய்யாதயடி எல்லாம் நல்லபடி முடியும்" என்று கூறுவது கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஒரு வயோதிபர், இவர் எல்லாம் தெரிந்தவர் போலக் கூறுகிறார் என்று நினைத்து விட்டு, வீடு சென்றதும் கெடு குடி சொற் கேளாது சாகுடி மருந்து குடியாது’ என்பதற் கிணங்க என்னை விட்டு உயிர் பிரிந்த மூத்த மகன் கையால் பூவெடுத்த போது வெள்ளைப்பூ வந்தபடியால் செய்து விட்டு, கடைசியில் நானும் உயிருக்குப் போராடி பின் என் இரு பிள்ளைகளையும் இழந்தேன். அப்போது கூறியது யோகர் சுவாமி என்பது எனக்குத் தெரியாது.
பின்பு நான் வவுனியா வந்து குடியேறி இருந்து 1989ல் கனடா வந்து வாழ்ந்து கொண்டிருந்தேன். ஒரு நாள் நினையாப் பிரகாரமாய் ஐயப்பன் கோவிலில் பஜனையில் பங்கு கொண்டு பாடிக்கொண்டிருக்கும் போது தான் எங்கள், யோகர் சுவாமித் தலைவர்கள் என்னைக் கண்டு நீங்கள் கட்டாயம் யோகர் சுவாமிக்குப் படிக்க வரவேண்டும் என்று விலாசம் தந்து போனார்கள். நான் அங்கு சென்று அவரின் படத்தைக் கண்டதும், எனது மனம் எல்லாம் நடுங்கியது. இவர் தானே என்னை இரு முறையும் ஆட்கொண்ட தெய்வம். என் கண்கள் குளமாகின. தெய்வ வாக்கை மீறி எனது இரு பிள்ளைகளையும் இழந்ததை நினைத்து மிகவும் கவலையில் ஆழ்ந்தேன். ஆனால் எந்தச் சாத்திரியிடம் குறிப்பைக் கொண்டுபோய்க் கொடுத்தலும் இரு பிள்ளைகள் பிறந்தால் நீங்கள் நல்லாய் இருப்பீர்கள் என்று கூறுவார்கள். என்று கூறியதையும், என் தெய்வம் எனை ஆட்கொண்ட தெய்வம் கூறியதையும் நினைத்து நான் கலங்காத நாட்களில்லை. அதனால்
292

நான் இப்போது அவரின் நமச்சிவாயப் பதிகத்தை அவரின் ஞாபகமாக படித்துக் கொண்டிருக்கிறேன்.
என்னையெனக் கறிவித்தா னெங்கள் குருநாதன் இணையடியென் தலைலைத்தா னெங்கள் குருநாதன் அன்னைபிதா குருவானா னெங்கள் குருநாதன் அவனியெல்லா மாளவைத்தா னெங்கள் குருநாதன்
திருமதி கணேஷ் நாகேஸ்வரி
நன்றி
“சிவயோக மலர்”
யூனி சிவயோக சுவாமிகள் 125வது ஜெயந்தி விழா சிவதொண்டன் நிலையம் - கனடா - 1997
ck k >k k >k k
மற்றவர்களுக்கு உதவ வேண்டின் இறைவனை நோக்கிப் பிரார்த்தனை செய், உன்னால் வேறு என்ன செய்ய முடியும்? யாவும்
அவன் செயல். இதுவே உத்தமமான உண்மை.
சுவாமிகள் அருள்மொழி
293

Page 159
குருநாதன் அருள்
"மூர்த்தி தசிந் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினார்க்கோர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே”
என்னையறியாமலே இதயத்தினுள்ளேயிருந்து கொண்டு ஏதோவொன்று என்றும் என்னைத் தூண்டிக் கொண்டே யிருந்தது. இத் தூண்டுதலின் காரணமாகப் புகையிரதப் பகுதியில் வேலைக்கமர்ந்த காலத்தில் இந்தியாவிலுள்ள தலங்களுக்கு யாத்திரை செய்து வந்தேன். யாத்திரையனுபவத்தில் சாதுக்களோடும், சாமிகளோடும் கூடிப் பழகிய முறையில் என்னைக் கவர்ந்தார் யாருமிலர். கவர்வதற்குப் பதிலாக ஒருவித வெறுப்பையே அவர்கள் சேர்க்கை அளித்தது என்னலும் மிகையாகாது. இவ்வாறு ஆறாக் காதலால் அடியேன் அகம் என்றும் "இன்னும் என் இலட்சியம் நிறைவேறவில்லையே” என்று ஏதோ வொன்றை அவாவிக் கொண்டும் சஞ்சலப் பட்டுக் கொண்டும் இருப்பதாயிற்று.
இவ்வாறிருக்கும் நிலையில் யான வேலை செய்துகொண்டிருக்கும் நாட்களில் ஒருநாள் ஒருவர் வந்து “யோகர் சுவாமியார் உங்கள் இருப்பிடம் எங்கேயுள்ளது?’ என்று தன்னைக் கேட்டதாகக் கூறினார். இது 1930ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமாகும். “எத்தனையோ சாமிகளைப் பார்த்தாயிற்று. இவரும் அவர்களில் ஒருவர் போலத் தானே இருப்பார்” என நினைத்து வாளாவிருந்தேன். மேலும் என்னுடன் பழகிய வேறு சிலர் சுவாமிகளைப் பார்க்கப் போவதாகக் கூறினார்கள். அப்போது சாமியார்களைப் பற்றி யான் கொண்ட கருத்தை நண்பரொருவருக்குக் கூறினேன். அவர் “இந்தச் சாமி அப்படிப்பட்டவரல்லர்” என்று எனக்குக் கூறினார். அடுத்தநாள் மாலை மூன்று மணியளவில் சுவாமிகள் இருக்கும் இடத்திற்குச்
294

சென்று பார்க்க வேண்டும் என்று என் அந்தரங்க உள்ளம் என்னைத் தூண்ட யான் சுவாமிகள் தோற்றத்தைக் கண்டு வியந்தேன். வேடம் ஒன்றும் இல்லை. சம்பிரதாயம் ஏதும் இல்லை. மாதிரி ஏதும் இல்லை.
“வேர்த்தற் குளித்துப் பசித்தாற் புசித்து விழிதுயிண்று பார்த்தால் உலகத்தவர் போலிருப்பர் பற்றற்றவரே”
என்னும் பட்டினத்தார் பாடலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு திருவுருவத்தைக் கண்டேன். எவ்வித FLOLL சாத்திரப் பேச்சுமின்றிச் சாதாரண விடயங்களைத் தொடர்ந்து மூன்று மணித்தியாலங்களாக என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சுக்கிடையில் என் இதயந் தூண்ட சுவாமிகளைப் பார்த்து “சுவாமி என் இல்லத்திற்கு எப்போது வருவீர்கள்?’ என்றேன். “நாளை நின்று வருகின்றேன்” என்றார்கள். விடை பெற்று மீண்ட பின் காந்தத்தால் இழுப்புண்ட இரும்பு போல் சுவாமிகளின் எண்ணமாகவே இருந்தேன். குறிப்பிட்ட தினத்தில் சுவாமிகள் வருவார் என நம்பியிருந்தேன். “சுவாமிகள் அப்படித்தான் சொல்லுவார், பின் வராமலும் விடுவார்” என்றுஞ் சிலர் அதைரியப்படுத்தினார்கள். எனினும் அத்தினத்தில் அவர்களுக்காகவும் உணவு ஆயத்தம் செய்திருந்தேன்.
மத்தியாானம் அளவில் சுவாமிகள் வந்து சேர்ந்தார்கள். சாதுக்கள் பால் பழம் உண்ணும் வழக்கமிருந்ததால் சுவாமிகளைப் பார்த்து ‘சுவாமி என்ன சாப்பிடுவீர்கள்?’ என்றேன். “சோறு சாப்பிடலாம்” என்றார்கள். உடனே எல்லாம் கொண்டு வந்து வைத்தபோது இலையிலுள்ள திருவமுதில் பாதியை வேறாக்கிப் பிரித்து அவ்விலையிலேயே வைத்துவிட்டுப் பாதியை உண்டார்கள். "சுவாமி! இந்தப் பாதியை யான் உண்ணலாமா?” என்றேன். "ஆம்"
என்றார்கள்.
295

Page 160
உண்டபின் கதைத்துக் கொண்டிருக்கையில் "எவ்வாறு ஆண்ம சாந்தியுறலாம்?” என்று வினாவினேன். "எல்லாம் வர வர மெல்ல மெல்லச் சொல்லித்தரலாம்” என்றார்கள். அதிகாலையில் மூன்று மணிக்கே விழித்துத் தியானஞ் செய்வதும், பகவத்கீதை படிப்பதும் அக்காலத்தில் எனது வழக்கமாகும். இதற்குப் பின் செப்ரெம்பர் மாதத்தில் சுவாமிகளிடமிருந்து சிறியேனுக்கு மேல்வரும் கடிதம் கிடைத்துள்ளது.
சிவமயம்
'நீ உடம்பன்று, மணமன்று, புத்தியன்று, சித்தமன்று, நீ ஆத்மா. ஆத்மா ஒருநாளும் அழியாது, இது மாகாண்களுடைய அனுபவ சித்தாந்தம் இந்த உணமை உனது உள்ளத்தில் நன்றாகப் பதியக் கடவது. ஆனால் நீ கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. அதாவது தருமநெறியிற் பிசகாதே. எவ்வுயிரும் பெருமான் திருமுன்னிலை என்று சாதனை செய் கடவுள் உள்ளும் புறமும் 2-6forólf.”
இப்படிக்கு, அவனே நானே.
இதுவே எங்கள் குருநாதன் எமக்கருளிய முதலாவது உபதேசக் கடிதமாகும். பின்னாட்களில் அவர்கள் நேராகச் சொல்லச் சொல்ல எழுதியனவும், அவர்கள் சொந்த எழுத்துக்களாக எழுதியனவும் அன்று தொட்டு இன்று வரை எமக்கருளிய உபதேசங்களாக அமைந்து வருகின்றன. “கண்டார்க்கும் உண்டோ குறை” எனும் திருமொழிப் படிபெருமானைத் தரிசித்த நாட்தொடக்கம் காதலித்த பொருள் கைகூடிவிட்டது போன்ற சாந்தியும், சிறியேன் உள்ளத்தில் வேர் கொண்டுள்ளது. இனி எடுத்த
296

பிறப்பின் பயன் சித்தியாகும் என்ற உறுதியும் சிறியேன் உள்ளத்தில் வேர் கொண்டுள.
“பொருள் பல இனிப் பார்க்க வேண்டிலேன் போதும் இந்த அனுபவம்”
அமரர். S. வினாசித்தம்பி
நன்றி
யோகசுவாமியின் அமிர்தவசனங்கள் அவரது கையெழுத்தில் 19970320
k k k k k sk
அன்புடன் ஐந்தெழுத்தைச் சொல்லு - வேல் வேல் ஆசா னடிக்கீழ் அமர்ந்துநீ நில்லு
கொஞ்சங்கொஞ்ச மாய்மனதை வெல்லு - வேல் வேல் கூடாத கூட்டத்தை விட்டுநீ சொல்லு
நற்கிந்தனை
அஞ்சுபூதமும் நீயல்ல நம்பு - வேல் வேல் ஐம்பொறி ஐம்புலனும் நீயல்ல நம்பு வெஞ்சினம்தெஞ்சில் வாராமல் காப்பாய் - வேல் வேல் வேறு பொருளில்லா நிட்டையில் சேர்ப்பாய்
நற்கிந்தனை
297

Page 161
யோகசுவாமிகள்
சுவாமிகள் தமது மானுடக்கட்டத்தைத் தகர்த்து விட்டார். அவரது ஆத்மா பரமாத்மாவுடன் கலந்து விட்டது. நாம் அவரை இழந்து விடவில்லை ஏனென்றால் அவர் தமது பக்தர்கள் இருதயங்களில் வீற்றிருக்கிறார்.
யாழ்ப்பாணத் தீபகத்திலே சிறந்த பெரியாராக விளங்கியவர் சுவாமிகள் அவரது உபதேசங்கள், அன்பான குசலம் விசாரித்தல், அவரை அணைத்தவர்களது கஷ்டங்களையெல்லாம் துடைத்து விடும். அவர் அவர்களது பாதையை மிகவும் இலகுவானதாகவும் பசுமையானதாகவும் ஆக்குவார்.
இருபதி திரணி டு ஆணிடுகளுக்கு முன்னர், நான் யாழ்ப்பாணத்தில் உதவி அரசாங்க அதிபராக அமர்த்தப்பட்டிருந்தபோது தீபகத்தின் மறுபுறத்தில் ஒரு பெரிய சமயவிழா நடந்தது. மோட்டார் படகுகளில் பெருந் தொகையான மக்கள் அந்த விழாவிற்குச் சென்றார்கள். திரும்பி வரும் பயணத்தின் போது படகு தாங்கக்கூடியதற்கு மேலாக மக்கள் கூட்டம் படகுகளுக்கு வந்து விட்டது. படகை நெறிப் படுத்தியவர் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருந்தார். துரதிஷ்டவசமாக மோட்டார் படகு கரையிலிருந்து சிறிது தூரத்தளவில் மூழ்கி, பலர் உயிர் இழந்தனர். காயமுற்றவர்களுக்கு என்னால் செய்யக்கூடிய உதவியை நான் செய்தேன். உயிரிழந்தவர்களது இனத்தவர்களுக்கு எனது துயரத்தைத் தெரிவித்து ஆறுதல் கூறினேன்.
இந்த கெடுதியானது எனது கவலையீனத்தால் நேர்ந்தது எனச் சிலர் குற்றம் சாட்டினார்கள். நான் பெரிதும் மனம்குழம்பிய
298

நிலைக் குட்படுத்தப்பட்டேன். எனது நண்பர் ஒருவர் யோகசுவாமிகளிடம் சென்று வணங்கும்படி கூறினார். இந்நிகழ்ச்சி நடந்து ஒருவாரத்தின் பின் அவ்வாறு செய்தேன். நான் ஏன் தன்னிடம் வந்துள்ளேன் என்று சுவாமிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இருபது நிமிடங்களின் பின்னர் நான் அவரது ஆச்சிரமத்தை விட்டு வெளியேற எத்தனிக்கும்வரை அவர் எதுவுமே 6 JJ 6isb606). 56.560ii, “Have no worry, I am your witness. 561606). JLT6:5 நான் உன்னுடைய சாட்சியாளன்” என்றார். இவ்வார்த்தைகள் உள்ளத்தை இதமாக்கி எவ்வளவு ஆறுதலைத் தந்தது என்பதை என்னால் வார்த்தைகளால் வருணித்துக் காட்ட முடியாது.
அன்று முதல் நாணி யாழிப்பாணத்திலிருந்து மாற்றலாக்கப்பட்ட வரை சுவாமிகளின் ஆச்சிரமத்திற்கு அடிக்கடி செல்வேன். அவர் மிக்க அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தார். எனது சிந்தையில் அவரது ஞாபகம் என்றும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு இருக்கும். நான் எனது சிந்தையால் அவரது பாதத்தில் வீழ்ந்து வணங்குகிறேன்.
யூனி M. பிரசாத்
நன்றி சிவதொனடன் சிறப்பு மலர் 29-1965 ஆங்கில மொழி வெளியீடு
மொழிபெயர்ப்பு
ok >< >k :k -k >ko
சிருஷ்டியில் அணுவும் பிழையாது.
சுவாமிகள் அருள் மொழி
299

Page 162
நாமென்ன கொடுமை செய்தோம்
எண்ணவும் வலிமையில்லேன் எழுதவும் வார்த்தை இல்லை அண்ணலே உந்தன் ஆவி அருட் பிழம்பான பின்பு பொன்னுடல் மட்டும் இந்த பூமியில் கிடக்கக் கண்ட கண்ணெல்லாம் கண்ணே அல்ல கடும் பாவம் புரிந்த புண்ணே
புத்தியில்லாத மக்கள்: புன்மையின் இழிகுணத்தோர் சத்தியம், அன்பு, தூய்மை தர்மங்கள் கொன்ற தீயோர் பக்தி நன்நெறி மறந்த பாதகக் கொடியோர் தம்மின் மத்தியில் வாழ நாணி வானுல கெய்தினாயோ?
வளந்தரு ஈழமாதா மாதவச் செல்வனாம் என் குழந்தையை இழந்தேன் என்று கொதித்து உயிர் துடித்து வாட நலந் திகழ் உலகு யாவும் ஞாயிறு மறைந்தான் என்றே புலம்பி வெங் கண்ணிர் சோர புனிதன் நீ போனதெங்கே?
திங்களின் அமுத ஜோதி திகழ்ந்திடும் ஒளி முகத்தில் பொங்கிடும் இனிய ஞானப் பொன்மலர் முறுவல் எங்கே? தங்கத்தை உருக்கி வார்த்த தளிர் மணியுடலை விட்டு எங்கு நீ மறைந்தாய் ஐயா? உனக்குமோர் கூற்றன் உண்டோ?
பக்தியின் பெருக்கால் ஈசன் பாதமே துணையாய்ப் பற்றி சத்திய ஜோதி தன்னில் சகஜமாய் கவந்த ஜீவன் முத்தனே கருணை பொங்கும் முதல்வன் நீ உடலை விட்டு செத்திடவில்லை: ஆமாம் சாவினை உணர்த்திச் சென்றாய்
300

காரிருள் அகற்ற வந்த கதிரவன் மறைந்து விட்டான் பேரொளி அணைந்து ஞானப் பேரிகை ஓய்ந்த தம்மா பாரெல்லாம் வெய்ய, கங்குல் படரிருள் மூடிற் றந்தோ யாரிதை ஈடு செய்வார்? நாமென்ன கொடுமை செய்தோம்?
சி , பொண்ணுத் தம்பி
நன்றி ஆத்மஜோதி இதழ் 4, 4 1964
se se k je k ek
எப்போதும் வெளிச்சத்தோடு செல். நம்பிக்கைக் குறைவு, ஐயம், உலகப்பற்றுக்களாகிய காற்றுக்கள் வெளிச்சத்தை அணைக்கவிடக்கூடாது
சுவாமிகள் அருள்மொழிகள்
301

Page 163
யோகர்சுவாமிகள் சரணம்
ஈழமணித் திருநாட்டின் வடபாலுள்ள எழிற் கொழும்புத் துறையெனுமோர் பதியில் மேவி வாழ வழிவகுத்திட்ட ஞானபானு வடிவெடுத்தாற் போன்றவொரு மூர்த்தியாகி ஆழமதாய் நெஞ்சிலுள் அகந்தையெல்லாம் அகழ்ந்தெடுத்து அருள் நோக்கால் ஆப்தவாக்கால் மாழவகத்திருள் கடிந்த மகானும் யோக மகரிஷிதன் மலரடிகள் வந்திப்போமே.
செல்லப்பாக்சுவாமிகளின் சீடனாகிச் சிறப்புறு நல்லூர் வேளைச் சிந்தை வைத்துச் செல்லாச்சி யம்மை முதல் அடியாரோடு செறிவுடைய சித்தாந்தக் கலைகள் முற்றி கல்லாரே யாயிடினும் கண்டார் நீங்காக் காருண்யமூர்த்தியாய்க் காட்சி தந்து எல்லார்க்கும் பரகதியை அளிக்க வந்த எமது குரு யோகனடி இறைஞ்சி வாழ்வாம்
சிவதொண்டன் இதழால் நற்சிந்தை தந்து தியான மண்டபமதனுற் றிருந்தயாரும் பவமாய் நோய் பகலவன் முன் பனியே யாகிப் பறந்தோடப் பார்வையினால் அகற்றும் சோதி தவமுனியே சார்ந்த மனைதலமேயாகும் சங்கரனோடொன்றித்த யோகர்சுவாமி சிவஞானப்பாதமலர்கள் சிந்திப்போமே செய்தவினை முதலோடும் சிந்திப்போமே
302

அருள் ஞானம் பழுத்த சிவ வடிவே போற்றி அகிலமெலாம் தொழுமடியார்க்கருள்வாய் போற்றி இருள் நிறைந்த சகமதனிற் றிரவி போற்றி என்றென்றும் ஆத்ம பசிக்கமுதே போற்றி தெருளாதார்த் தெளிவிக்கும் சிவமே போற்றி திசையனைத்தும் நிறைந்திலங்குந் திருவே போற்றி அருளுருவே குருவடிவாய் ஆனாய் போற்றி அருட் சோதி யோகமுனி அடிகள் போற்றி
எங்கேநாம் அவர் பெருமை கூறக் கேட்போம் எள்ளளவும் குறையாத கீர்த்தி தன்னைத் தங்கிடுமோர் இருப்பைதரு நீழற்கண்ணே இருந்தபடி இருந்தருள் செய் குருவே போற்றி
ஓம் சிவம்
நன்றி சைவரீதி சித்திரை புதுவருடமலர் 1998 கனடா இந்து மாமன்றம்
3.ද අැද 3: $ද · §ද 3k
காசை அதிகமாக வைத்திருந்து என்ன செய்யப் போகிறீர்கள்? சீவியத்தை ஒருநாளாவது கூட்ட முடியுமா? உள்ளபொழுது தான தருமங்களைச் செய்யுங்கள்.
சுவாமிகள் அருள்மொழி
303

Page 164
அத்தவிதப் பொருள் காப்பாம்
அத்துவி தப்பொருள் காப்பாம் - எனக் கடியார்க ளென்றென்றுங் காப்பாம் சித்தருந் தேவருங் காப்பாம் - என்றன் சித்தத் திலங்குந் திருவருள் காப்பாம் (அத்து)
அட்ட வசுக்களுங் காப்பாம் - எனக் கானந்த மான பராபரன் காப்பாம் எட்டுத் திசைகளுங் காப்பாம் - எனக் கெங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம் (அத்து)
பிராண னபானனுங் காப்பாம் - என்னைப் பிரியா திருக்கும் பிரணவங் காப்பாம் அராவணி வேணியன் காப்பாம் - எனக் கருளை யளிக்குங் குருபரன் காப்ாம் (அத்து)
பஞ்சப் புலன்களுங் காப்பாம் - என்னைப் பரவு மடியவ ரனுதினங் காப்பாம் குஞ்சர முகத்தவன் காப்பாம் - நல்ல குழந்தை வடிவேலன் என்றென்றுங் காப்பாம் (அத்து)
சந்திர சூரியர் காப்பாம் - எங்குந் தங்கு முயிர்க ளனைத்துமென் காப்பாம் மந்திரந் தந்திரங் காப்பாம் - நான்கு மறைகள் சிவாகமம் மாநிலங் காப்பாம் (அத்து)
நற்கிந்தனை.
ஓம் தத் சத் ஓம்
304


Page 165