கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாகம் 1993.10

Page 1
t
2-3 2:3-ჭ:::::::: ა. :-:-:-:-:-:: ÷ኃፌŠ ❖om።❖ኃኛ ❖
s". يقتي قة
ჯჯ; ::::::: భ క్షణ ဒိခိုစိဒ္ဓိ၊
{ఫ్ట్వేలో జో
 
 
 

** „ჯ! ***- ი. ჯ.-. `. .. 3 * ; : ** ** ** & x - v • x + ܀܇
'' ......... "
- ': ,"്യ
: ". تي **
' ჯჯ-ა: *** :
"عي م. ۔ کھمدرسہ مہدی% *
"" م. - سهیم:
ク

Page 2
நீங்களும் ரெலிப்பாஸ்போ
வெளிநாடுகளுக
இலங்கை e193 e340 cc இந்தியா
55 60 五4.35 E4.2O fシ牛。 அமெரிக்கா
* ரெலிப்பாஸ்போட் கட்டணங்களு
 
 

ட் மூலம் குறைந்த செலவில் க்கு கதைக்கலாம்.
RGLOBE TELEPASSPORT (Mercury)
83 去E○、○2 五三4,7る
ØO E2.3O 五三1.73
க்கு MAT அறவிடப்படுவதில்லை.

Page 3
செப்திகளின் சேதிகள்
அண்மையில் புலிகள் ஜனகபுர-மணர்கிண்டி த இராணுவ முகாமை தாக்கிக் கைப்பற்றியமையை இதயபூமி எனத் அறிவித்தார்கள். இவ்வகையான ய தாக்குதல், பார்வைக்கு ஒரு மரபு யுத்தம் வி போன்ற ஆனையிறவு சண்டையை விட ெ புலிகளுக்கு மிகவும் கைவரப்பெற்றது. 6 சிறிய, நடுத்தர அசையும் இராணுவ இலக்கு ே களை அதிகமாக மிக விருப்பத்தோடு தேர்ந் கு தெடுக்கும் புலிகள், யாழ் தேவி போன்ற பத்தாயிரம் பி படையினர் மேற்கொண்ட படையெடுப்பை முகம் பி கொள்ளும் அம்சங்களை வைத்தே வருங்கால அ நிலைமைகளை கணிக்கலாம்.
வழமைபோல, இதில் புலிகள் மையப்படுத்திய வ பிரதான உத்தி இராணுவத்தின், முன்-நகர்வை ெ தாமதப்படுத்துதல் அல்லது தடுத்து நிறுத்துதல். இ இவை இரண்டும் முற்றாக செயலிழக்கும் போது பா பின் வாங்கி திடீரென முன்னேறித் தாக்குதல். ஒ இதனால் இராணுவம் கைப்பற்றும் ஒவ்வொரு க சதுர மைல் நிலத்திலும் ஒவ்வொரு முகாம் அமைத்தாலொழிய தொடர்ந்து நிலை கொண்டிருக்க வ முடியாத சூழல் ஏற்படும். எனினும் தொடர்ச்சியான க இவ்வகை வியூகங்கள் சிலவேளை பேரழிவுகளைத் பி
நீண்ட காலமாக விளக்க மறியலில் ை வைக்கப்பட்டிருக்கும் மலையக மக்கள் ெ முன்னணி தலைவர்கள் பி.ஏகாதர், சந்திரசேகரம், ெ தர்மலிங்கம் போன்றோரின் விடுதலைக்கு தார்மீக ஆதரவைத் தேடும், தன்னளவில் ஒரு ெ கடமையாக, லண்டனில் இருக்கும் காதரின் வி நண்பர் ஒருவர், புகலிடங்களில் வெளிவரும் ம தமிழ் பத்திரிகைகளுக்கு அவர்களினால் எழுதி ெ அனுப்பப்பட்ட அவர்களின் கைது-விசாரணை- வி வழக்கு பற்றிய முழு விபரங்களுடன் அவர்களது து புகைப்படங்களைக் கூட அனுப்பி வைத்தார். படி
அண்மையில் ஐரோப்பிய விஜயம் மேற்கொண்ட தொண்டமான் குசு விட்ட மாதிரி சொன்ன
15 S?ð6-Tlui 1998 mmmmmmmmmmm
 
 

ரக்கூடிய அபாயங்களையும் கொண்டவை. இதய பூமி போன்ற இராணுவ அதிர்ச்சிகள் ஒரு ாழ் தேவி இராணுவ நடவடிக்கையை முடுக்கி ட்டுள்ளது என்பதை விட நடவடிக்கை தலைமை சயலகத்திடம் (O.H. )ெ அதிகாரங்கள் குவிந்து பிட்ட நிலையே முக்கியமெனலாம். கலிக்குரிய அர்த்தமாகிவிட்ட பாராளுமன்ற தெரிவுக் ழுவின் நிலை, "இலங்கையில் உள்ளது இனப் ரச்சினை அல்ல. அது ஒரு பயங்கரவாதப் ரச்சினையே’ எனும் டிபி. விஜயத்துங்காவின் அறிக்கை, கூட்டுப்படை தலைமையகம் (J.C.C) லைப்பு, அடிப்படைக் காரணியான அதிகரித்து ரும் பாதுகாப்பு (செக்கனுக்கு 800 ரூபாய்கள்) சலவு போன்றனவற்றை உன்னிப்பாக பார்த்தால், துவரை காலம் யுத்தத்தை நடத்தி வந்த ாராளுமன்ற அரசியல் தலைமைகளிடம் இருந்து ரு வகையில் அரசியல் அதிகாரங்கள் முப்படை ளிடம் கைமாறுவதைக் காணலாம். இதனால் பாரிய அனர்த்தங்களைக் கொண்டு ரும் விரலை விட வீங்கிய இராணுவநடவடிக்கை வினால் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் ச்சைக்காரர்களாக ஆக்கப்படுவார்கள். A1
hÍIDi
வகளை ஏதோ பீரங்கி முழங்கியதாக செய்தி வளியிட்ட இந்தப் பத்திரிகைகள் இவர்களது சய்திகளை அமுக்கியது ஏன்?
ஐக்கிய தேசிய கட்சியினதும், இலங்கை தாழிலாளர் காங்கிரசினதும் அரசியல் கூட்டு யாபாரத்தின் பரஸ்பர தேவையே மலையக க்கள் முன்னணி தலைவர்கள் கைது சய்யப்பட்டதன் பின்னணி என்பது ஒரு புதிய சயம் அல்லவே. ஒருவேளை இதுதான் இந்த பத்திரிகைகளது ந்திரி கா கா தர்மமே?
தருமி

Page 4

a CaCLT.? (1)
a tu: Jg5gaOJTTTTT-1993

Page 5
A.
அரசியல் கைதிகளை
ł
B.A sngsi
பாவா அப்துல் காதர் (காதர்) மலையகத்தை பிறப்பிடமாக் கொண்டவர். தற்போது 48 வயதுடைய இவர், 1971 ல் ஆசிரிய நியமனம் பெற்று நுவரெலிய மாவட்டத்திலுள்ள பல தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றியவர், இலங்கையின் மிகப் பெரிய ஆசிரியர் தொழிற்சங்கமான இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டவர். இச் சங்கமே இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை முதன் முதலில் அங்கீகரித்த தென்னி லங்கை அமைப்பாகும். இதற்கான பிரேரணையை கொண்டு வந்தவர் இவரே யாவார். இது விடயமாக இடதுசாரிகளுடன் இவர் நடத்திய தத்துவார்த்த 'அரசியல் போராட்டம் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது.
1983 இனக்கலவரத்தின் பின் "இனி மலையக மக்கள் தம்மை தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்ற கருத்தைக் கொண்டிருந்த மலையக வெகுஜன இயக்கத்தின் இணைப் பொது செயலாளர்களில் ஒருவருமாவார்.
1985ல் மலையக இளைஞர்களுக்கு தற்காப்பு பயிற்சி கொடுக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டிருக்கும் போது கண்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டு 20வருட சிறைத் தண்டனை பெற்றார். எனினும் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ் பொது - மன்னிப்பு கிடைத்து விடுதலையானார்.
அதைத் தொடர்ந்து பொதுத்தேர்தலில் திரு. சந்திரசேகரனை ஆதரித்தார். 03-07-91இல் காதர் கைது செய்யப்பட்ட போது மலையக மக்கள்
முன்னணியின் செயலாளராக இருந்தார்.
தாமதிக்கப்பட்ட நீதி
 
 

விடுதலை செய்க!!!
சல்வி
செல்வநிதி தியாகராஜா (செல்வி) சேமமடு, வவுனியாவைச் சேர்ந்த இவர் 1980ல் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் காந்தியத்துடன் இணைந்து அகதிகளுக்காக உழைத்தவர். 80ல் புளொட் இயக்கத்தின் மகளிர் அமைப்பின் முக்கிய உறுப்பின ராக வேலைசெய்த அவர், அவ்வியக்கத்தின் தவறான போக்குகளினால் அதிலிருந்து விலகிக் கொண்டார். பின்பு 1988ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று 88ல் யாழ் பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெற்றார். இக்காலப்பகுதியில் யாழ்ப்பாணம் பெண்கள் ஆய்வு வட்டத்தின் அங்கத்தவராகவும் இணைந்தார். இவ் ஆய்வு வட்டம் நடாத்திய பெண்நிலைவாதம் தொடர்பான கட்டுரைகள், கலந் துரையாடல்கள், நாடகங்கள் என்பனவற்றில் பங்கு பற்றினார்.
யாழ் பெண்கள் ஆய்வு வட்டம் வெளியிட்ட சொல்லாத சேதிகள் என்ற கவிதைத் தொகுப்பில் இவர் எழுதிய கவிதைகள் சில உள்ளன. இக் கவிதைத் தொகுதிதான் தமிழில் வெளிவந்த முதலாவது பெண்நிலைவாதக் கவிதைத் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
-9Quosdid, Gusii -960)Lofty(Pen American Center) 1992ம் ஆண்டிற்கான சுதந்திர எழுத்துக்கான (Freedom to Write) 605560601 Q 6565-i(5. வழங்கியுள்ளது.
30ம் திகதி ஆகஸ்ட் மாதம் 1991ம் ஆண்டு புலி களினால் செல்வி கடத்தி செல்லப்பட்ட போது அவர் நாடகமும் அரங்கவியலும் பயிலும் ம்ே வருட மாணவியாக இருந்தார்.
மறுக்கப்பட்ட நீதியே!

Page 6
எமது பக்கத்தில்.
/= egyiZlíz
பேரின ே எமது ே நிற/இன: சபிக்கப்
போலிகள
வாழ எ பட்டிருக்
ஏனெனில் நாம் வழ காட்டிலும் வாக்கிக்
7Záé® பேர் இரு யங்களேன்
சாதகமான உண்மை கொள்ளவு 7æ೧ು,
இதனால் எமக்கு <
எமது ே தார்ப்பரிய தையும்
நின்றாலெ கடினமான ஜீரணத்து பிராயத்ை
எமது அ எண்றெண் ஏற்படும்
நாம் மிக
67Zoaếø5 Lua
கிடையாது
 
 

─།༽ பிராயமும் புரிதலும் மலாதிக்கத்தால் கோரமாக ஒடுக்கப்படும் தச மக்கள் போல் அகதிகளான எமக்கும் வாதத்தால் மிகவும் கேவலமான வாழ்வு பட்டிருக்கிறது. இதனால் ஏதோ ஒரு ாய் வாழ அகதிகளாகிய நாமும், சாவுக்குள் மது தேச மக்களும் பழக்கப்படுத்தப் கிறோம்.
, மமையாக ஒன்றைப் பற்றிய புரிதலைக் ர் ஒன்றின் மீது அபிப்பிராயங்களை உரு காள்ளவே முயற்சிக்கிறோர். அபிப்பி எர உருவாக்கித் தர நம்மிடம் நிறையப் க்கிறார்கள். உண்மைகளை விட அபிப்பிரா Iம்மில் அதிக பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. ர அபிப்பிராயங்களை ஏற்படுத்தி விட்டால் களுக்கு பதிலாக பொய்களை நாம் ஏற்றுக் Iம் அதிக காலங்கள் எடுத்துக் கொள்வ
நாம் இழந்து போன விசயங்கள் பற்றி அக்கறையும் இல்லை.
தசத்தின் விடுதலைக்கான தேவையின் த்தையும், ஜனநாயகத்திற்கான அவசியத் அகதிகளான எமது தேடல் வேண்டி ாழிய, எமது மீட்சிக்கான மார்க்கம் மிகக் ாது. எனினும் புனித மண் மீட்பு பற்றி க்கு இடமின்றி ஒரு மாபெரும் அபிப் தயே நாம் மிண்டி விழுங்கியுள்ளோம்.
பிப்பிராயங்கள் வீரியமானவை-சத்தானவை Mர் சொல்லித் தர நாமே ஆட்களை
செய்து வைத்திருக்கிறோம்.
வும் தந்திரசாவிகள்.
லகீனத்தை ஒத்துக் கொள்ளவும் அணிச்சல்
f
டிமறைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளால்
ானமாக நிற்கிறோர்/ J
தாகம் இதழ் 2

Page 7
15
சந்திரனில் நீல் ஆம்ஸ்ற்றோங் என்ற அமெரிக்கள் 1989இல் அடிவைத்த நிகழ்வை விஞ் ஞானத்தினதும் தொழில் நுட்பத்தினதும் அதி உயரிய சாதனைகளில் ஒன்றாகப் பலர் கரு துகின்றனர். இந்தச் சாதனை நமது நாட்டின் இரண்டு கவிஞர்களின் மனதில் ஏற்படுத்திய பாதிப்பைக் கவனிப்போம்.
ஒருவர் சமகால ஈழத் தமிழ்க் கவிதையின் சிகரம் என்று சொல்லக்கூடிய மகாகவி. அவரது கவிதை மரபு சார்ந்த வடிவமுடையது. அவரது
தேரும் திங்களும்
ஊரெல்லாம் கூடி ஒரு தேர் இ வாருங்கள் நாமும் பிடிப்போம் என்று
வந்தான் ஒருவன்.
வயிற்றில் உலகத்தாய் நொந்து சுமந்திங்கு நூறாண்டு பெற்ற மகனே அவனும்: பெருந்தோளும், கைகளும், கண்ணில் ஒளியும், உய்ய விழையும் உளமும் உண
வந்தான். அவன் ஓர் இளைஞ6 மனிதன்தான். சிந்தனையாம் ஆற்றற் சிறகுதை முந்த நாள் ஏறி முழுநிலவைத் மீண்டவனின் தம்பி மிகுந்த உழைப்பாளி
ஒக்டோபர் 1993 பா
 

எழுத்து நடை நிதானமானது, ஆயினும் அநீதியைக் கண்டு பேசாமல் இருப்பதல்ல. அவர் வாழ்ந்த சூழலில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சியும் அதற்கெதிராகச் சாதி வெறியர்களது போர்க் கோலமும் வடக்கின் சமுதாயச் சூழலில் ஆதிக்கஞ் செலுத்தின. இத்தகைய ஒரு சூழலில், கோவிற் திருவிழாவில் நடந்த ஒரு சாதி வெறிச் சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதைதான் தேரும் திங்களும்.
ழுக்கிறதே!
வடத்தை
வாழ்வதற்காய்ப்
கவலையிடை
டையவன்தான்.
நத்து வானத்தே தொட்டுவிட்டு

Page 8
"ஈண்டு நாம் யாரும் இசைந்தெ
வேண்டும்" எனும் ஓர் இனிய வந்தான் குனிந்து வணங்கி வ
நில்" என்றான் ஒராள் "நிறுத்து" என்றான் மற்றோராள். "புல்" என்றான் ஒராள் "புலை" என்றான் இன்னோராள். "கொல்" என்றான் ஓராள் "கொழுத்து" என்றான் வேறோரா
கல்லொன்று வீழ்ந்து கழுத்தொ பல்லோடு உதடு பறந்து சிதறு சில்லென்று செந்நீர் தெறித்து
நிலம் சிவந்து மல்லொன்று நே
மனிதர் கொலையுண்டார்.
ஊரெல்லாம் கூடி இழுக்க உக வேர் கொண்டதுபோல் வெடுக்ெ பாரெல்லாம் அன்று படைத்தளி உட்கார்ந் திருந்துவிட்டாள் ஊ மக்களுடைய மதத்தினைக் கன
முந்த நாள் வான முழுநிலவை
வந்தவனின் சுற்றம்
அதோ மண்ணிற் புரள்கிறது!
புதுக்கவிதையில் அதி யதார்த்தவியல் எனப்படும் Surrealism என்ற கருத்து வெளிப்பாட்டு முறையைச் சிறப்ப்ாகக் கையாண்டு வரும் சோலைக்கிளி, மகாகவியின் கவிதை நெஞ்சம் துடிப்பை நிறுத்தி வெகு காலத்தின் பின்பே கவிதையுலகிற் தன் கைவண்ணத்தைக் காட்டினார். அவர் எழுதத் தொடங்கிய சூழலில் இன ஒடுக்கலும் அதற்கெதிரான போராட்டமும் எழுச்சி பெற்றிருந்தன. அவரது கவிதைகள் முதிர்ச்சி பெறத் தொடங்கிய போது இன

ான்றி நின்றிடுதல் விருப்போடு
டம் பிடிக்க.
ன்று வெட்டுண்டு ண்டு
ர்ந்து
ந்த தேர் கென்று நின்றுவிடப் த்த அன்னையோ மையாய்த் தான் பெற்ற
ண்டபடி,
த் தொட்டுவிட்டு
ஒடுக்கலுக்கு எதிரான போராட்டம் திசைதிரும்பிப் போட்டி விடுதலை இயக்கங்கட்கு மீது மட்டுமன்றி, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் விடுதலை இயக்கங்கள் கொடுமைகளை இழைக்கும் அபத்தம் ஆரம்பித்து விட்டது. இக் கொடுமைகளையும் கொலைகளையும் கொண்ட சூழலைப் பற்றிய தனது ஆட்சேபனைக்குச் சந்திரனில் ஆம்ஸ்ற்றோங் அடி வைத்த கதையையே சோலைக்கிளியும் பயன்படுத்துகிறார்.
και ΦΙΦίύ Θεφ 2

Page 9
நவீன இலங்காபுரி
(1988 ஆகஸ்ட் 10. கல்முனை
சொன்னவன் யார்? கேளு, ஆம்ஸ்ரோங் இன்னும் சந்தி
இந்த 1986 லும் விஞ்ஞானம் தழைத்ததென்று மண்ணள்ளிக் குத்து வாய்த்தையல் போடு பேசாமல்
இளித்த வாயனை இருக்கச்
(3ւմil
முட்டாளே நம்பு செய்மதியும் மிதக்கவில்லை சத்தியமாய் பிள்ளை குழாய்க கொஞ்சவில்லை இரத்தம் ப எத்தனையோ வர்ணத்தில் இ யுகத்துக்குள் வாழ்ந்து கொ சந்திரனின் கற்கள் கொண்டு யாரப்பா சொன்னான்? அடி பழசால் வாய்க்கு.
இங்கே!
கடலுக்குள் ஆய்வு நடத்து5 பெண்ணுடைய கருப்பைக்கு குஞ்சாமணியுள்ள குழந்தைய என்றெல்லாம் இவர்கள் அறி முன்னேற்றம் நடந்திருந்தால்,
இந்த இராவணர்கள் எங்கிரு முகத்தைப் பார்த்தால் மலை தெரிகின்ற அளவுக்கு அச்சத் மனுக் குலத்தின் துரோகி
15 ஒக்டோபர் 1993
 

இனக்கலவரத்தின் வெறுப்பாக.)
ானில் இறங்கவில்லை.
சொன்னவனின் வாய்க்குள்
சொல்
ளிலே பெற்று ச்சை சிவப்பென்று
ருக்குதென்று நினைக்கின்ற ண்டு.
வந்தானென்று
வதும் சுத்தப்பொய் ள் உறைகின்ற சதைக் கட்டி ா, வேறேதுமா கின்ற அளவுக்கு
ந்து வந்தார்கள்? விழுங்கிபோல
$தை உண்டுபண்ணும்

Page 10
உருமாறும் அரக்கர் பட்டாளம் எங்கிருந்து கண்மு
நீ நினைப்பது மாதிரி இது நவயுலகே அல்ல அனுமான் எரித்த இலங்காபுரி
போய்ப்பார், இன்னும் சீதைகள் சிறையிருக்
இரண்டு கவிதைகளும் ஒரு பொதுவான தன்மையையுடையன. இன்றைய மனித உறவின் அவலத்தின் முன், மனிதன் நிலவிற் கால் பதித்த சம்பவத்தைப் பற்றி மனிதர் பெருமைப்பட என்ன இருக்கிறது என்ற கேள்வியை அவை எழுப்புகின்றன. இரண்டு கவிதைகளும் மனிதருடைய சமுதாய உரிமைகளையும் அடிப்படையான சமத்துவதி தையும் உணர்த்துவன. இரண்டுக்கும் மனிதாபிமானமே அடிப்படையாக உள்ளது. இரண்டு கவிஞர்களும் இந்தப் பரிமாணத்திற்கு அப்பால் போக முடியவில்லை. இந்தளவில் இவர்களது கவிதைகளினதும் கவிதையாற்றலினதும் சமுதாய உணர்வு ஒரு மாற்றுக் குறைவானதாகவே தென்படுகிறது உண்மை. ஆயினும் அவர்கள் சொல்லுகிற செய்தியின் உண்மையும் அவை வெளிப்படுத்தும் மனக்கொதிப்பும் எவரும் தட்டிக்கழிக்க (pLQUIT;560s.
இரண்டு கவிஞர்களதும் நடைகளில் உள்ள வேறுபாடுகளும் நமது கவனத்துக்குரியன. மரபுக் கவிதை-புதுக் கவிதை என்ற வேறுபாட்டை விட முக்கியமானது கவிதைகளின் தொனியில் உள்ள வேறுபாடு. மகாகவியின் கவிதை, கதை சொல்லும் பாங்கில், மெலிதாகத் தொடங்கி, ஒரு கொலை சம்பவத்தின் கோரம் வரை, மரபின் ஒரு சீரான சந்தத்திற்குள்ளேயே வேகத்தையும் விறுவிறுப்பையும் வளர்த்துக் கொண்டு போய், மீண்டும் பழைய நிதானத்துக்கே திரும்பி, அசைய மறுத்த தேரில் அமர்ந்திருந்த அன்னையின் நிசப்தத்தின் மூலம் நிலைமையின்

ன்னே தோன்றியது?
கக் கூடும்.
அபத்தத்தை உணர்த்துகிறது. வான வெளியில் உலாவி நிலவைத் தொட்டுவந்த நிலையுடன் மண்ணிற் போரிட்டுப் புரளும் அவலத்தை ஏளனத்துடன், ஆனால் மனிதாபிமான உணர்வுக்குப் பங்கமில்லாமல், ஒப்பிடுகிறார் மகாகவி.
சோலைக் கிளியினர் படைப் பு
கோபாவேசத்துடனேயே தொடங்குகிறது. அந்த ஆவேசம், வரிக்கு வரி, இறுதி வரை தொய்வின்றித் தொடர்கிறது. அதற்குள்ளும் ஏளனம் இழையோடுகிறது. ஆயினும் அது நகைச்சுவைக்காக அங்கு வைக்கப்படவில்லை. "இரத்தம் பச்சை சிவப்பென்று எத்தனையோ வர்ணத்தில் இருக்குதென்று நினைக்கிற யுகம், சாதியம், இனவாதம், நிறவாதம் போன்ற அனைத்தையுங் குறிக்கிறது. அவரது கவிதை ஒரு சம்பவத்தையும் குறிப்பாகச் சொல்லவில்லை. தலைப்பிற் தரப்பட்ட குறிப்பு இல்லாவிட்டால் அது எச் சம்பவத்தின் விளைவாக எழுந்தது என்று எளிதாக ஊகிக்க முடியாது. ஏனெனில் இலங்கை மண்ணில் அது போன்றவை மிகவும் மலிந்து விட்டன.
எவ்வாறு பார்த்தாலும் முற்றிலும் வேறுபட்ட முறைகளில் எழுதப்பட்ட இரண்டு கவிதைகளும் முடிவில் ஒரு நிலைக்கே நம்மைக் கொண்டுவந்து விடுகின்றன. நமது இருப்பின் அவலம் பற்றிய துன்ப உணர்வையே இரண்டு கவிதைகளும் தூண்டி விடுகின்றன. இவை ஒவ்வொரு மனதிலும் ஏற்படுத்தக் கூடிய எதிர் வினைகள், அவரவரது சமுதாயப் பார்வையையும் சமுதாயச் சார்பையும் பொறுத்தது.
SLSLSGSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLGSLSLSL SS TTTT TT 0

Page 11
யாழ்ப்பாணத்தில் ஒரு சமூகவியல்
சாதியமைப்பு இந்தியாவிலும் இந்திய சமூக கலாச்சார செல்வாக்கிற்குட்பட்ட தென்னாசிய நாடுகளிலும் மட்டுமே காணப்படுகிற பலமான சமூக நிறுவனமாகும்.
அரேபிய பிடோயின் (Bedouin) நாடோடிகள் மத்தியிலும், புராதன எகிப்திலும், ஜப்பானிலும் காணப்பட்ட ஒரு சில சமூகங்களிடையேயும் சாதியமைப்பின் ஒரு சில கூறுகள் நிலவியமை ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட் டுள்ளது. இருப்பினும் அவை சாதி அமைப்பை ஒத்ததாக வளர்ச்சி அடையவில்லை.
ஆசியர்களாக இருந்தபோதும் சீன அறிஞர்களுக்கு சாதி அமைப்பு என்றும் புதிதான புரிவதற்குச் சிக்கலான ஒரு நிறுவனமாகவே இருந்து வந்திருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த சீன யாத்திரிகன் குவாங் சாங்கிற்கும் (HSVan Tsang) சாதி அமைப்பு புதிராகவே இருந்தது. 30-10-1979ல் யாழ் பல்கலைக் கழக தென்னாசிய 08:08.1993ல் நெத இயல் கருத்தரங் 16வது இலக்க கொன்றில் உரை: அஆஇ பிர9 யாற்றிய பீக்கிங்| வாசிக்கப் பல்கலைக் கழக : விரிவுரையாளர் லியூ சிங் வூ (Liu XingWu) பல்கலைக்கழகத்தில் தென்னாசியா பற்றிய ஆய்வுகளில் ஈடுபடும் வரை, தான் 'சாதி என்ற சொல்லைக் கேள்விப்பட்டதே இல்லை என்று
குறிப்பிட்டார்.
சாதி பற்றிய சேதியை தென்னாசியாவிற்கு
159di Gt - TL i 1993 mm
 
 
 

) சாதியமைப்பு
பரிசீலனை
வெளியில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு போத்துக்கீசரே எடுத்துச் சென்றனர். சாதியைக் குறிக்கும் ஐரோப்பிய மொழிச் சொற்களுக்கு 'காஸ்ராஸ் (Castas) என்ற போத்துக்கீச மொழிச் சொல்லே அடியாகும்.
ஐரோப்பிய, தென்னாசியாவிற்கு வெளியிலான சீனா போன்ற ஆசிய நில உடைமை சமூக அமைப்புக்களில் நிலவிய சமூக நிறுவனங்களை வர்க்க ரீதியாக ஆராய்ந்து புரிந்து கொள்ள முடியும். தென்னாசிய நில உடைமை சமூக நிறுவனங்களை வர்க்க ரீதியாகவும் சாதிய ரீதியாகவும் ஆராய்ந்து புரிந்து கொள்ளுவது அவசியம்.
சாதி அமைப்பின் கீழ் ஒருவன் பிறக்கும் போதே அவனது சமூக, பொருளாதார, கலாச்சார உறவுகள் நிர்ணயமாகி விடுகின்றன. இதில் அவனது தெரிவுக்கோ தனிப்பட்ட மேலோங்குவத ဒြို............့်”.ိမ္ပိ ံ } |ற்கோ இடமில்லை.
: : । р சாதி அமைப்பு கியச் சந்திப்பில் பரம்பரையானது,
மேல் கீழ் என படி
: முறை உள்ளது, ySySySySyySyySySySySySS TTTT TTTS கண்டிப்பான சாதி வாரி அகமண விதி, கீழ் நிலையில் உள்ளவர்கள் தீட்டுப்படுத்துவார்கள் என்ற கருத்து, தீண்டாமை, இந்துசமய அங்கீகாரம், சாதி அடிப்படையிலான சமூக
சமயச் சடங்குகள், கலாச்சாரம் என்பவற்றால்
கட்டிக்காக்கப்படுவது.

Page 12
சாதி அமைப்பில் படிமுறை அடிப்படையில் அமைந்த பல்வேறு சாதியினருக்கு இடையிலான அக உறவுகள் முக்கிய மானவை. ஆராய்ந்து
பார்ப்பின் அத்தகைய உறவுகள் நிலத்துடன்
பல்வேறு சாதியினரும் கொண்டிருக்கும் உற்பத்தி உறவுகளைப் பிரதிபலிப்பதைக் காணலாம்.
கலாச்சார ரீதியாக இந்தியனான தென்னாசிய மனிதனுக்கு தனிமனித ஆளுமைகளாலும் முயற்சிகளாலும் சாதித் தடைகளை மீறி மேலோங்குவது சாத்தியமில்லை,
வர்க்க ரீதியாக பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் வர்க்கத்தினர் சாதிவாரியாக பல்வேறு பட்டு சிறுபான்மையினராகக் குறுகிப் போவதும், வர்க்க ரீதியாகச் சிறுபான்மையினராக இருக்கும் மேல் வர்க்கத்தினர் சாதிவாரியாக பெரும் பான்மையினராக விரிவடைவதும் தென்னாசிய சமூக அமைப்பின் சிக்கலான அம்சங்களாகும்.
இது இலங்கைக்கும் பொருந்தும்.
Firs ஒரு சமூக நிறுவனம்
இலங்கைத் தீவில் முஸ்லிம்களைத் தவிர்த்து பெளத்தர்களாகவோ, இந்துக்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ உள்ள சிங்களவர்களதும், தமிழரதும், மலையகத் தமிழர்களதும் மத்தியில் சாதி அமைப்பு வலுவான ஒரு சமூக நிறுவனமாக நிலவுகிறது.
முஸ்லிம்கள் மத்தியில் கூட வலுவிழந்து கைவிடப்பட்டு வருகிற நிலையில் சாதி அமைப்பின் மிச்சசொச்சங்கள் இன்னும் நிலவுவதை அடையாளங் காணலாம். உதாரணத்துக்கு புத்தளம்-கற்பிட்டிப் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் இன்றும் கூட முக்குல முஸ்லிம்கள் என்று குறிப்பிடப் படுவதும், மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்
O
 

மத்தியில் முக்குவரின் சமூக நிறுவனமான 'வயிற்றுவார் எனப்படும் தாய்வழிக் குடி அமைப்பு (MatriLiniage) காணப்படுவதும் யாழ்ப்பாணம் செம்மாதெருவில் வாழும் தோல் வேலை செய்யும் முஸ்லிம்களின் தாழ்ந்த சமூக அந்தஸ்தும் சில முஸ்லிம் பிரிவினரிடை வலுவிழந்த நிலையில் நிலவும் அகமண வழக்கங்களும் இங்கு குறிப்பிடப்படலாம்.
கோட்பாட்டு ரீதியில் இஸ்லாமிய மதத்தைப் போலவே பெளத்த, கிறிஸ்துவ சமயங்களும் சாதி அமைப்பை அங்கீகரிக்கவில்லை. எனினும் நடைமுறையில் முஸ்லிம்கள் மட்டுமே சாதி அமைப்பை நிராகரித்துள்ளனர். இலங்கையில் பெளத்தர்களும் கிறிஸ்தவர்களும் சாதி அமைப்புடன் சமரசம் செய்து கொண்டு ஒன்றிப் போகிற பண்பையே வளர்த்துள்ளனர்.
18ம் நூற்றாண்டின் கடைக் கூறுகளிலிருந்து 20ம் நூற்றாண்டின் முற்கூறுகள் வரையிலான சிங்கள பெளத்த சமய பீடங்களின் வரலாறு ஒருவகையில் கொவிகம உயர் சாதியினரின் சியாம் நிக்காயாவை சேர்ந்த பிக்குகளுக்கும் தாழ்த்தப்பட்ட கரவா, சலாகம, துறாவ சாதிகளைச் சேர்ந்த பிக்குகளுக்கும் இடையிலான போராட்டங்களின் வரலாறேயாகும். பின்னர்கரவா, சலாகம, துறாவ சாதியினர் எல்லாச் சாதியினருக்கும் பொதுவான 'அமரபுர நிக்காயாவை நிறுவினர்.
கிறிஸ்தவ தேவாலயங்கள் எல்லாச் சாதியினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமையவில்லை. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தேவாலயம் என்ற வகையில் நிலவிய சாதி அமைப்பிற்குள் சிக்கல்கள் இல்லாமல் கிறிஸ்தவ சமயம் தன்னை நிறுத்திக் கொண்டது. மேல் மட்டத்தில் சமய அமைப்புக்களை கட்டுப்படுத்துவதற்காக வெள்ளாளர், கரையார் சாதிகளைச் சேர்ந்த குருத்துவ பிரிவினரிடையே
SLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSL TTTT TT 0

Page 13
15 ஒக்டோபர் 1993
இடம் பெற்ற இழுபறிகள் ஒன்றும் பரம இரகசியங்கள் இல்லை.
இந்துமதத்தை சாதி அமைப்பின் தத்துவ கலாச்சார காவல் அரண் என்றே கூற வேண்டும். இலங்கையில் கோவில் பூசகர்களான ஏழைப்
பிராமணர்களே உள்ளனர். பிராமணிய இயக்கம்
இலங்கையில் இல்லை.
சாதி அமைப்பு இறுக்கமானதாகவும் கொடூரமானதாகவும் பலப்பட்டிருக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டில், பெரும்பான் மையினராகவும், பெரும்பாலான நிலத்திற்கும் ஏனைய வளங்களுக்கும் உடைமையா ளர்களாகவும், கல்வியில் மேம்பட்டும், சமூக பொருளாதார அரசியல் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கிறவர்களுமான வெள்ளாளரது இயக்கமான யாழ்ப்பானியமே யாழ்ப்பாணத்தின்
பிராமணியமாகும்.
இலங்கைதி தீவின் நிலவுடைமை அமைப்பையும் சாதி அமைப்பையும் சிங்கள் அமைப்பு, தமிழ் அமைப்பு என இரு பிரிவுகளாக வகுக்கலாம்.
சிங்கள அமைப்பு கோட்பாட்டு ரீதியாகத் தனியார் உடைமையல்ல. கோட்பாட்டு ரீதியாகச் சிங்கள அமைப்பில் நிலம் அரசனுக்குச் சொந்தமானது. சாதிவாரிச் சேவைகளுக்காக (ராஜகாரியம்) எல்லாச் சாதியினரும் நிலத்தை மானியமாகப் பெறுவார்கள். "ரொடி போன்ற சின்னஞ்சிறு சாதிகள் புறநடையாக இருப்பினும் சாதிவாரிப் பணிகளுக்காக எலி லாச் சாதியினருக்கும் மானியமாக-அளவு, தரம்ரீதியான பேதங்கள் இருப்பினும் நிலம் கிட்டும். கோட்பாட்டு ரீதியாக ஆண் வாரிசு இன்றி இறத்தல், சாதிவாரிப் பணிகளை ஆற்றத் தவறுதல் என்பவற்றுக்காக அரசன் நிலத்தை மீளப்பெற முடியும். ஆனால் மேற்படி நிலம் எந்தச் சாதியைச் சேர்ந்தவருக்குச்
 

சொந்தமாக இருந்ததோ அதே சாதியைச் சேர்ந்த ஒருவருக்கே திரும்பவும் வழங்கப்பட வேண்டும்.
அளவு, தரம் தொடர்பான மாறுபாடுகள் இருப்பினும் உற்பத்திக் காரணியான நிலம் எல்லாச் சாதியினருக்கும் பகிரப்பட்ட நிலைமையும், கிராமங்கள் தனிச்சாதி அடிப்படையில் அமைந்திருந்த நிலைமையும், சிங்களப் பகுதிகளில் வர்க்க ஒடுக்குதல்கள் சாதிவாரித் தன்மை பெறுகிற வாய்ப்பும், சாதி ஒரு கொடுமையான ஒடுக்கும் அமைப்பாகத் தோற்றம் பெறும் வாய்ப்பும் -ஒருசில பிரதேசப் புறநடைகளுடன்- குறைவாகவே இருந்தது. அரசியல் ரீதியாக சாதிவாரியாக அணிதிரளும் வாய்ப்புகளும், வளங்களுக்கும் வாய்ப்பு களுக்குமான சாதிவாரிப் போட்டிகளும் அங்கு பலமாக இருந்தன.
தமிழரது நிலவுடைமை அமைப்பு தனியார் நிலவுடைமை அமைப்பாகும். கண்டிய சிங்கள அரசின் கீழ் தமிழ், முஸ்லிம், வன்னித் தலைவர்களால் பரிபாலிக்கப்பட்ட கிழக்கு மாகாண தமிழ்ப் பகுதிகளில் கூட சிங்கள நிலவுடைமை அமைப்பு நிலவவில்லை. தமிழரது நிலவுடைமை அமைப்பான தனியார் உடைமை அமைப்பே அங்கும் நிலவியது.
சிங்களச் சாதி அமைப்பில் கண்டியச் சிங்களப் பகுதிகளிலும் சரி, கரையோரச் சிங்களப் பகுதிகளிலும் சரி வெள்ளாளின் சிங்களப் பிரதியான கொவிகம சாதியினரின் தொகை ரீதியான, கலாச்சார ரீதியான முதன்மை இருந்தது. தமிழ் சாதி அமைப்பில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வெளியே வன்னிமாவட்டத்தில் சரி, கிழக்கு மாகாணத்தில் சரி வெள்ளாளர் முதன்மை இருக்கவில்லை.
தமிழரது சாதி அமைப்பை யாழ் குடாநாட்டின் சாதி அமைப்பு, ஏனைய தமிழ்ப் பிரதேசங்களின்
mum II

Page 14
சாதி அமைப்பு என இரண்டு பெரும் பிரிவுகளாகப்
பிரிக்கலாம்.
திருமலை நகரம் புறநீங்கலாக
யாழ்ப்பாணத்துக்கு வெளியே குறிப்பிடத்தக்க
வகையில் சாதிவாரி அடிமை முறை தமிழ்ப்
பகுதிகளிலோ சிங்களப் பகுதிகளிலோ இருக்கவில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் திருமலை வெளியே இலங்கை அடங்கிலும் மிகச் சில வீட்டுப் பணியாட்களே அடிமைகளாக இருந்தனர்.
1824ம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் 12.5 வீதத்தினரும் திருமலை மாவட்டத்தில் 89 வீதத்தினரும் அடிமைகளாக இருந்தனர். ஏனைய பகுதிகளில் கொழும்பில்தான் அதிக அடிமைகள் இருந்தனர். இவர்கள் வீட்டுப் பணியாளர்கள். இருப்பினும் கொழும்பில் அடிமைகளின் வீதம் 0.3 மட்டுமே.
திருமலையில் இருந்த அடிமைகள் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கே உரிய வெள்ளாளர்களின் அடிமைகளான கோவியர்களாக இருந்தமை திருமலை மாவட்டத்திற்கு புலம் பெயர்ந்த வெள்ளாளரால் அடிமைகள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்ற கருத்துக்கு இடம் தருகிறது. இவர்கள் துறைமுகம் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப் பட்டிருக்கலாம்.
கிழக்கு மாகாணத்தில் வரலாற்று ரீதியாக ஓரளவுக்கேனும் யாழ்ப்பாணத்தில் செல்வாக்குள்ள பகுதியாக, திருமலை நகர்ப்பகுதி இருந்து வந்துள்ளது. எனினும் திருமலையில் யாழ்ப்பாணத்தைப் போல சாதி ஒடுக்குதல் வளராமைக்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும்.
திருமலையில் அடிமைகளாக இருந்த கோவியர்கள் கலாச்சார ரீதியாக வெள்ளாளருக்குச் சமமானவர்களாகவும், வெள்ளாளரது உள்வீட்டுப்
2
 

பணியாளர்களாகவும், சட்டரீதியாக அடிமைகளாக இருந்தபோதும் நடைமுறையில் பெரும்பாலும் வெள்ளாளரது வாரக் குடிகளாகவும், அடிமை ஆளணி முகாமையாளர்களாகவும் இருந்தவர்கள். 1844ல் சட்டரீதியாக அடிமை முறை ஒழிக்கப்பட்டபோது நிலப் பஞ்சமற்ற திருமலையில் கலாச்சாரரீதியாக வெள்ளாளருக்குச் சமதையாக இருந்த கோவியர்கள் பொருளாதார ரீதியாகவும் விடுதலை பெறுவதில் அதிகம் சிரமம் இருந்திருக்காது என்று கருதலாம். யாழ்ப்பாணத்து நிலைமை மாறுபட்டது.
கடற்புறத்து மீனவக் கிராமங்கள் புறநீங்கலாக பெரும்பாலான யாழ்ப்பாணத்துக் கிராமங்கள் பல்சாதிக் கிராமங்கள் ஆகும். இங்கெல்லாம்’ நிலத்தினதும் உற்பத்திக் காரணிகளதும் பெரும்பகுதி வெள்ளாளரது உடைமையாகும். ஏனைய அடிமை குடிமைச் சாதிகள் ஏதோ ஒருவகையில் வெள்ளாளரைச் சார்ந்து வாழவேண்டிய நிலை இங்கெல்லாம் இருந்தது. இது யாழ்ப்பாண மாவட்டத்தில் பருமட்டத்தில் மட்டுமன்றி கிராமியக் குறுமட்டத்திலும் வெள்ளாளரது ஆதிக்கத்தைப் பலப்படுத்தி நிறுவனமயப்படுத்தியது.
சிறு நீர்ப்பாசனக் குளங்கள் சார்ந்த வன்னிக் கிராமங்கள் பெரும்பாலும் தனிச் சாதிக் கிராமங்களாக அமைந்தன. இத்தகைய கிராமிய அமைப்பில் சாதிவாரி ஒடுக்குதல்களுக்கு வாய்ப்புகள் குறைவாகவே அமையும்.
திருமலை மாவட்டத்தின் பெரும் பகுதியிலும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் பிரதேசரீதியான தனிச்சாதிப் பரம்பல் அமைந் திருந்தது. கிழக்கு மாகாணத்தின் வடபுலம் பெரும்பாலும் விவசாயிகளாக மாறிவிட்ட கரையரின் கையிலும் தெற்குப்புலம் முக்குவரின் கையிலும் இருந்தது. இப் பகுதிகளில் நிலப் பஞ்சம் இருக்கவில்லை.
தாகம் இதழ் 2

Page 15
நிலவுடைமையும் நிலமின்மையும் ஒரே சாதியினுள் அமைகிற பிரதேசங்களில் சாதிவாரியான ஒடுக்குதலுக்கான வாய்ப்புகள் அதிகமில்லை. புறநடையாக இத் தனிச் சாதிப் பிரதேசங்களில் மிகச் சிறுபான்மையினராக வாழும் அம்பட்டர், வண்ணார் போன்ற தாழ்த்தப்பட்ட சேவைச் சாதிகளின் அனுபவங்கள் அமையலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்கிலேய அரசாங்க அதிபர்களால் 1850களில் போடி நிலவுடைமையாளர்களின் ஆதிக் கமீ தகர்க்கப்பட்டு, போடியாரின் நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்த வாரக்குடிகள் விடுவிக் கப்பட்டனர். அவர்களுக்கு வாவியின் மேற்குக் கரையில் விவசாயத்துக்கும் குடியிருப்புக்கும் நிலம் வழங்கப்பட்டது. இவை பற்றி வேறு ஒரு கட்டுரையில் ஆராயலாம். யாழ்ப்பாணச் சாதி அமைப்பின் முக்கியமான ஒரு அம்சம் சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட சாதியினரின் பெரும் பகுதியினர் ஒடுக்கப்பட்ட சாதியினராக மட்டும் இல்லாமல் வெள்ளாளினதும் அடிமைகளாக இருந்ததுதான். இது பற்றி பிறிதொரு கட்டுரை யில் விரிவாக ஆராய்ந்துள்ளேன்.
தேசவழமைச் சட்டப்படி நளவரும் பள்ளரும் சாதிவாரி அடிமைகளாகக் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்களை விற்கலாம், வாங்கலாம், சீதனமாகக் கொடுக்கலாம், நகைநட்டுப் போல அடைமான மாகவும் வைக்கலாம்.
யாழ்ப்பாணத்தின் குடிமைச் சாதிகள் பல்வேறுபட்டவர்கள். மிகமிகச் சிறுபான் மையானவர்கள். தத்தமது சொந்த நிலத்தில் வாழ்ந்த இவர்கள் கோட்பாட்டு ரீதியாகச் சுதந்திரமானவர்கள். இவர்கள் கிராமத்து வெள்ளாளர் முழுமைக்கும் சேவை வழங்க வேண்டியவர்கள். இவர்கள் குறித்த ஒரு வெள்ளாளரின் நிலத்துடனோ பணிகளுடனோ
பிணைக்கப்பட்டவர்களல்ல.
15 dGLTusi 1993 S

கீழ்க்காணும் படிமுறை வரிசையில் முறையே சாதிவாரிக் குடிமைகளான வண்ணாரும் அம்பட்டரும் பறையரும் இவர்களுடன் சாதிவாரி அடிமைகளுள் சூத்திரரான கோவியர் புறநீங்கலாக நளவரும், பள்ளரும் நாற்பாலுக்கு வெளியில் கீழ்ப்படுத்தப்பட்டு பஞ்சமர் அமைப்பினுள் இடம் பெறுகின்றனர்.
தமிழகச் சாதி அமைப்பில் பறையர்கள் நிலத்துடன் பிணைக்கப்பட்ட பண்ணை யாட்களாக இருந்தனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் பறையர்கள் அடிமைப் பிரிவினர் அல்லர். வெள்ளாளரின் குடிமைகளாக இருந்தவர்கள் கோலியப் பறையர் என அழைக்கப்பட்டனர். இதைவிட போத்துக்கீசராலும் டச்சுக்காரராலும் சாயவேர் (அவுரிவேர்) சேகரிப்பதற்கும், நெசவு, துணி சாயம் போடுதல் போன்ற வேலைகளுக்காக தமிழகத்தில் பண்ணையாட்களாக இருந்த பறையரையும் பள்ளரையும் கொண்டு வந்தார்கள். இவ்வாறு அன்னிய அரசுகளால் கொண்டு வரப்பட்ட பறையர்களும் பள்ளர்களும் ஏற்கனவே நிலவிய யாழ்ப்பாண சாதிய முறைமையின் கீழ் Ym. முறையே குடிமைகளாகவும் அடிமைகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டனர். எனினும் இவர்கள் சுதந்திரமானவர்கள். அன்னிய ஆளுனர்களின் பணியாளர்களாக இருந்த இவர்களுக்கு குடியிருப்பு நிலம் சொந்தமாக இருந்தது. இவர்களது சாதிப் பெயருக்கு முன்னர் அடைமொழியாக இவர்கள் ஈடுபடுத்தப்பட்ட மரபு சாராத பணிகளின் பெயர்கள் அமைந்தன. உதாரணம் வேர்க்குத்திப் பறையர், சாயக்காரப் பறையர், வேர்க்குத்திப் பள்ளர், செருப்புக்கட்டிப் பள்ளர் என்பவர்களைக் குறிப்பிடலாம்.
நளவர்களுள் ஒரு பகுதியினர் டச்சுக் கம்பனியாரின் அடிமைகளாக இருந்தனர். இவர்களும் சுதந்திரமானவர்கள். இவர்களுக்கு உதாராணமாக கம்பனி நளவர், கோட்டை

Page 16
காத்த நளவர் என்பவர்களைக் குறிப்பிடலாம். அடிமைச் சாதியினரும் பள்ளரைத் தவிர கோவியரும் நளவரும் தமிழகத்தில் இல்லை. நளவர் பஞ்சங்களின் போது வெள்ளாளரால் அடிமைகளாக இறக்குமதி செய்யப்பட்ட மலையாளத்து ஈழவர் என்ற கருத்து பொதுவாக உள்ளது. கோவியரின் தோற்றப்பாட்டின் பின்னணிகளை எனது ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளது.
கோவியர்கள் கலாச்சார ரீதியாக வெள்ளாளருக்குச் சமதையான தென்னிந்திய வடுகர் சாதிப் பிரிவினர். தென்னகப் பஞ்சங்களின் போது வெள்ளாளர்களால் அடிமைகளாக இறக்குமதி செய்யப்பட்டவர்கள். ஏனைய சாதியினரைப் போல வெள்ளாளரும் கூட அரசுக்கு, தமிழில் ஊழியம் எனவும் ஐரோப்பிய மொழிகளில் கோவி (Convee) எனவும் அழைக்கப்பட்ட கட்டாய சேவையை வழங்க வேண்டியிருந்தது. இது தொடர்பாக அவர்களுக்கிருந்த சலுகைகள் யாவும் போதிதுக்கீசர் காலத்திலேயே ரத்துச் செய்யப்பட்டுவிட்டது. வெள்ளாளர்களுள் மேம்பட்ட பிரிவினர் தமக்குப் பதிலாக ஊழியம் செய்வதற்காக வடுக சாதியைச் சேர்ந்த தமது அடிமைகளை அனுப்பினர். இவர்கள் "கோவி என ஆவணங்களில் எழுதப்பட்டனர். இதனால் வடுகர்கள் கோவி என உத்தியோக பூர்வமாகப் பெயர் பெற்றனர். இதுவே பின்னர் அவர்களது சாதிப் பெயராயிற்று. இது தனியான ஒரு கட்டுரையில் விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒரு விடயம்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் கரையோர மீனவர் கிராமத்து நிலங்களும் மீன்பிடிச் சாதனங்களும் புறநீங்கலாக வெள்ளாளனே, நிலம் ஏனைய உற்பத்திக் காரணிகள் என்பவற்றின் ஏக உடைமையாளனாக இருந்தான். மீனவர் கிராமங்களில் நிலமும், கருவிகளும் கரையார்,
14 mill

திமிலர், முக்குவர், பள்ளிவிரியர் போன்ற பல்வேறு மீனவச் சாதியினரின் உடைமையாக இருந்தது. யாழ் மாவட்டத்தில் மீனவர்களுள் கரையாரே பெரும்பான்மையினர். இவர்களுள் கத்தோலிக்க மதத்தைத் தழுவியவர்கள் நடைமுறையில் ஒரு தனிச் சாதிப்பிரிவினராக வளர்ச்சி பெற்றுவிட்டனர். இது ஏறி கனவே சிறுபான்மையாக இருந்த மீனவர்களை மேலும் பிளவு படுத்தியது. யாழ்ப்பாணச் சாதியமைப்பில் வெள்ளாளரைத் தவிர்த்து மீனவர்களுக்கே சொத்துடமை இருந்தது. அவர்களும் கடற்புறத்துக் கிராமங்களில் நிலத்துக்கும் உற்பத்திக் காரணிகளுக்கும் சொந்தக்காரர்களாக இருந்தனர். எனினும் கலாச்சார ரீதியாக அவர்கள் வெள்ளாளரை விடப் பிற்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களது உற்பத்தியான மீன் விரைவிற் சேதப்படக் கூடியதும் உப உணவுத் தன்மை வாய்நீததுமாகும். மீனை அவர்கள் வெள்ளாளருக்க விற்று பிரதான உணவுப் பொருளான தானியத்தை வெள்ளாளரிடமிருந்து பெறவேண்டியிருந்தது. இத்தகைய பரிமாற்றத் தொடர்புகளாலும் தொகை ரீதியான சிறுபான்மைத் தன்மையாலும் கூட ஒருவகையில் அவர்கள் வெள்ளாளர்களில் சார்ந்திருக்க நேர்ந்தது.
1844ல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் யாழ்ப்பாண மாவட்ட நிலைமையை கருத்தில் கொண்டு 'அடிமை விடுதலைச் சட்டத்தை இயற்றினர். இதற்கு முன்னர் படிப்படியாக அடிமை விடுதலையை ஏற்படுத்துவதற்காகப் பிரிட்டிஷார் கொண்டு வந்த எல்லாச் சட்ட ஏற்பாடுகளும் வெள்ளாளர்களால் முறியடிக்கப்பட்டது. 1844ம் ஆண்டுச் சட்டம் சட்டரீதியான அடிமை விடுதலைக்கு வழிவகுத்த போதும் அடிமைச் சாதியினருக்கு குடியிருப்பு நிலம் தானும் ஏற்பாடு செய்யப்படவில்லை. குடியிருப்பு நிலமின்மை,
u hliðið 85, 2

Page 17
மரபு சாராத மாற்றுத் தொழில் வாய்ப்பு இன்மை என்பவை அவர்களைத் தொடர்ந்தும் வெள்ளாளரது நிலங்களில் பிணைத்து வைத்திருந்தது. இந்நிலை ஒரு நூற்றாண் டுகளுக்கும் மேலாகப் பெரிய மாற்றம் எதுவுமின்றித் தொடர்ந்தது.
1930களின் பின் தாராளவாத, முற்போக்குச் சிந்தனையுள்ள நடுத்தரவர்க்க வெள்ளாள இளைஞர்கள் முதன்மைபெற்ற யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தினர் மத்தியிலிருந்து நாட்டு விடுதலைக்கு மட்டுமன்றி சாதிய விடுதலை தொடர்பாகவும் சமூகப் பிரக்ஞை உள்ள குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தது.பஞ்சமர்களுள் வேர்க்குத்திப் பள்ளர், செருப்புக்கட்டிப் பள்ளர்,கம்பனி நளவர், கோட்டை காத்த நளவர், வேர்க்குத்திப் பறையர் போன்ற சுதந்திரமான சாதிப் பிரிவினருக்கும் நகர வளர்ச்சியினால் உருவான மூட்டை சுமத்தல், றிக்ஷோ இழுத்தல், சந்தை சார்ந்த பணிகள் போன்ற பல்வேறு கீழ் மட்டப் பணிகளிலும் ஈடுபட்டு ஓரளவு விடுதலை அடைந்த கன்பொலை போன்ற பல்வேறு நகர்சார்ந்த அடிமைச் சாதிப் பிரிவினரின் கிராமத்து இளைஞர்களும் நளவர் பள்ளர் சாதிப் பிரிவினருள் மரவரி முறையில் கள் இறக்குவதன் மூலம் விடுதலை பெற்றவர்களும் மெல்ல மெல்ல எழுச்சி பெற்றனர். இவர்களுள் கல்வி, பொருளாதாரம் என்பவற்றால் சமூக மேம் பாடடைந்தவர்கள் மத்தியிலிருந்து யோவேல் போல் போன்ற ஆற்றலும் துணிச்சலும் மிக்க தலைவர்கள் உருவாக ஆரம்பித்தனர். இப்படி யாழ்ப்பாண சமூக வரலாற்றின் புதிய சகாப்தம் ஒன்று மெல்ல மெல்ல தோற்றம் பெற ஆரம்பித்தது.
குடியிருப்பு தொழில் என்பவை தொடர்பாக தொடர்ந்தும் வெள்ளாளரது நிலத்துடன் மீளா அடிமைகளாகப் பிணைக்கப்பட்டிருந்த அடிமை
15 g? &Gu-Tui 1993
 

குடிமை பிரிவினரால் வெள்ளாளர் ஆதிக்கத்தை மீறி சுதந்திரமாக நிமிர முடியவில்லை. இவர்களுள் ஒரு சாரார் வெள்ளாளத் தேசியவாதிகளுள் சீர்திருத்தவாதிகளாக இருந்த ஓரிரு தலைவர் களின் பின் அணிதிரண்டனர்.
சாதிய எதிர்ப்பு கிளர்ச்சிகளை இடதுசாரிகளின் உதவியுடன் அமைப்பு ரீதியாக நெறிப்படுத்தும் முயற்சிகள் 1940களின் ஆரம்பத்திலிருந்து முதன்மை பெற்று 1943ல் சிறுபான்மைத் தமிழர் மகாசபையாகத் தோற்றம் பெற்றது. 1950களின் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து சிறுபான்மைத் தமிழர் மகாசபை முன்னெடுத்த போராட்டங்கள் சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்ததுடன் சமூகப் பிரக்ஞையற்றிருந்த தமிழர் தேசிய இயக் கங்களையும் பாதித்தது. இக் கால கட்டத்தில் முன்னணியிலிருந்த தமிழ்த் தேசியவாதிகளுள் கோப்பாய் கு.வன்னியசிங்கமும் திருமலை இராஜவரோதயமும் அவர்களை ஆதரித்த தமிழ் ஆசிரியர்கள் எழுது வினைஞர்களின் முன்னனிப் பிரிவினரும் தவிர்ந்த ஏனைய பகுதியினர் அசல் யாழ்ப்பாணிகளாக வெள்ளாளரது நிலைப் பாட்டிலிருந்தே சாதியப் பிரச்சினையை அணுகி னார்கள்.
1964ல் கம்யூனிஸ்ட் கட்சி மொஸ்கோ சார்பு, சீனச் சார்பு என உடைந்தது. சாதிய எதிர்ப்புப் போராட்ட அமைப்புக்களும் அவற்றின் மூல தந்திர உபாயங்களும் கூட இரு வகைப்பட்டது. சண்முகதாசன் தலைமையிலான சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் வழி நடத்தலுடன் திரு எஸ்.ரி.என்.நாகரத்தினம் அவர்களின் தலைமையில் இயங்கிய தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தினரின் வெகுஜன அடிப்படையிலானி இலங்கை வரலாற்றிலேயே முன்னுதாரணமற்ற துணிச்சல் மிக்க வன்முறைப் போராட்டம், மொஸ்கோ சார்க் கம்யூனிஸ்ட் கட்சியின் வட
பிரதேசக் கிளையின் வழிநடத்தலுடன் திரு

Page 18
எம்.சி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் தொடர்ந்தியங்கிய சிறுபான்மைத் தமிழர் மகாசபையினரின் சட்டரீதியான கிளர்ச்சி, என்பவற்றின் பின்னணியில் பல நூற்றாண் டுகளாகத் தேங்கி நாற்றமெடுத்துக் கிடந்த யாழ்ப்பாணத்தின் சமூக பொருளாதார வரலாறு உடைப்பெடுத்துப் பெருகி ஓடத் தொடங்கியது. சமூக அரசியல் அணிகளை மட்டுமன்றி இச் சமூக விடுதலைப் போராட்டம் கலாச்சார அணிகள் உருவாகவும் வழி வகுத்தது.
வெள்ளாளரின் பெரும்பான்மை அபிப்பி ராயங்களை நிராகரித்து மோதல் நிலைகளுக்கு முகம் கொடுக்கத் தயாராகாமல் அடுத்து எந்த ஒரு சுவடும் முன்னே எடுத்து வைக்க முடியாதிருந்த தருணத்தில் அதற்குத் தயாராக எழுந்தவர்கள் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தினர் தான்.
1980களை யாழ்ப்பாணத்து வரலாற்றின் திருப்பு முனையாக மாற்றியமைத்த இந்த மகத்தான போராட்டங்களின் விளைவாக யாழ்ப்பாணத்து சாதி அமைப்பின் கலாச்சார ரீதியான இறுக்கம் வெடித்து உடையத் தொடங்கியது.
உண்மையில் இன்று எஞ்சியிருக்கும் சாதிய ஒடுக்குதல்கள் தொடர்பான பிரச்சினைகளுள் முக்கியமானவை பஞ்சமர் சாதிப் பிரிவினரின், கீழ் வர்க்கத்தவர்களது சமூக பொருளாதாரப் பிரச்சினைகளேயாகும்.
எல்லோருக்கும் குடியிருக்கும் நிலம் சொந்தமாகிற வகையிலும் குத்தகை விவசாயிகளது பாதுகாப்பு உறுதிப் படுத்தப் படுகிற வகையிலும் யாழ்ப்பாண மாவட்டத்திற்குப் பொருத்தமான விசேடமான நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியப்படுகிறது. உயர் கல்வி வாய்ப்புகள், நிலப் பங்கீடு, நிலம் சாராத-மரபு சாராத வேலை வாய்ப்புகள், மத்திய-உள்ளுர்
6 mu

ஆட்சி என்பவை தொடர்பாக அவசியப்படுகிற குறைந்த பட்சக் காலகட்டம் வரை ஒடுக்கப்பட்ட சாதியினரின் கீழ்ப் பிரிவினருக்கு விசேட முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டும். சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் மாறுதல்களுக்கும் யாழ்ப்பாணம் ஆட்படத் தொடங்கிய காலகட்டம் 19ம் நூற்றாண்டுகளில் ஆரம்பிக்கிறது. பயிர்ச்செய்கை வர்த்தக மயமாதல் கல்வி பரவ லாதல் வருமான மார்க்கம் தேடிய பொருளாதார புலம் பெயர்வுகள் தோற்றம் பெற்ற இந்த நூற்றாண்டு பற்றிய சமூக பொருளாதார ஆய்வுகள் அவசியம்.
பொருள் தேடும் வேட்கையோடும் அதற்கான தகுதியோடும் இந்தியாவின் வடகிழக்கு எல்லைப் பிரதேசங்களுள் வங்காள மனிதன் புகுந்தது போல, யாழ்ப்பாணக் குடாநாட்டின் வெளியே ஏனைய தமிழ்ப் பிரதேசங்களுள்ளும், மலையகத் தேயிலைத் தோட்டங்களை நோக்கியும், இலங்கையின் வெளியே கிழக்காசிய நாடுகளை நோக்கியும் யாழ்ப்பாணத்து மனிதன் பெருகிப் பெருகிச் செல்லத் தொடங்கிய காலம் இது. தமிழகத்திலும் இக் காலகட்டத்தில் சைவதமிழ்க் காவலர்களாக யாழ்ப்பாண மனிதன் அறிமுகமாகியிருந்தான்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வெளியே வாழும் தமிழர்களால் யாழ்ப்பாணி என வெறுப்போடும், அச்சத்தோடும், பிரமிப்போடும் பார்க்கப்பட்ட இந்த மனிதன் தான் தமிழகத்து மேல்வர்க்கவைதீகப் பிராமணர்களின் யாழ்ப்பாணத்து சமூகப் பிரதி. யாழ்ப்பாணியம் தான் இலங்கைத் தமிழர்களின் பிராமணியம்.
யாழ்ப்பானியத்தைப் புரிந்து கொள்ள ஆறுமுகநாவலரையும் அவரது நேர், எதிர் பங்களிப்புகளையும் தெரிந்து கொள்வது
影
அவசியம்.
ா தாகம் இதழ் 2

Page 19
இக் காலகட்டத்தில் ஏற்பட்ட சமூக பொருளாதா வளர்ச்சியும் சமூக மேம்பாடும் யாழ்ப்பாணத்து பல்வேறு உயர் சாதிச் சமூகங்களை உலுப்பியது வெள்ளாளருடன் கலாச்சாரரீதியாக சமநிலையிலுL சமூக பொருளாதார ரீதியாக தாழ்ந்த நிலையில் இருந்த மடப்பள்ளிகள், செட்டி, அகம்படியர் தவசிகள், தானத்தார். பரதேசிகள், தனக்காரர் வாணிபர் போன்ற சாதிப்பிரிவினரும் சமூக பொருளாதார ரீதியாக மேம்பாடடையத் தொடங்கினர். இம் மேம்பாடு மேற்படி சாதியினர் வெள்ளாளருடன் ஒருங்கிணைந்து வெள்ளாளர் மயமாவதற்கு வழிவகுத்தது. இந்த ஒருங்கிணைவுகள் மூலம் ஏற்கனவே பெரும்பான்மைச் சமூகமாக இருந்த வெள்ளாளர் சமூகம் மேலும் விரிவடைந்து தொகை ரீதியாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் சனத்தொகையின் சரிபாதிக்கும் சற்று அதிகமான நிலையை அடைந்தனர்.
தொகை ரீதியான பலம், கல்வி, அதிகாரபலம் தொகை ரீதியான பெரும்பான்மைப் பலம், சாதி அடிப்படையிலான சமூக கலாச்சாரப் பலம் ஒரு புறத்திலும் 50 வீதத்திற்கும் குறைவான ஏனைய
பகுதியினர் 20 க்கும் மேற்பட்ட சாதியினராக
பிளவு பட்டிருந்தமை மறுபுறமாக வெள்ளாளின் கையை மேலும் பலப்படுத்தியது. வெள்ளாளர் தவிர்ந்த கோவியர் போன்ற சூத்திரர் பிரிவைச் சேர்ந்த நடுத்தரச் சாதிகளும் பஞ்சமர் பகுப்புள் இடம்பெறாத குடிமைச் சாதிகளும் பெரும்பாலும் வெள்ளாளருக்கு சார்பு நிலை கொண்ட சாதிகளாகவே இருந்தன.
இந்த நிலைமை வெள்ளாளரது சாதிவாரியான காய் நகர்த்தல்களுக்கும் அவர்களது பிரித்து ஆதிக்கம் செலுத்தும் தந்திரோபாயங்களுக்கும் வாய்ப்பான ஒரு சூழலை ஏற்படுத்தியிருந்தது.
வெள்ளாளரின் பிற்போக்கான பகுதியினர் இந்த வாய்ப்பை வரலாறு முழுவதிலும் நன்கு பயன்படுத்தினர்.
سسس 3 * * 1 آثا"ـاه گا9 $1

நாவலர்
வெள்ளாளரின் காவலர்
இலங்கைத் தமிழர்கள் மத்தியில் சைவ சமய மறுமலர்ச்சி இயக்கத்தினதும் தமிழ் வளர்ச்சிப் பணிகளதும் தந்தையான ஆறுமுகநாவலர், ஆளவந்த அன்னியர்களது சமய அடிப் படையிலான கலாச்சார ஆதிக்க விரோதம், சுதேசிய கல்வித்துறை வளர்ச்சி, தமிழ் நூல் வளர்ச்சி எனப் பல்வேறு துறைகளில் தனது முத்திரையைப் பதித்தவர். இது அவரின் முன்னேற்றமான பார்வையுள்ள முற்பக்க முகத்தைப் பற்றியது. அதே சமயம் அவரது சமூகம் வெள்ளாளரும் சமூக பொருளாதார மேம்பாட்டினால் வெள்ளாளருடன் தன்மயமாகி வருகிற சாதிகளும் தான். இவற்றுக்கு அப்பால் உள்ளவர்கள் நாவலரின் கண்களில் நிறை மனிதர்களாகத் தெரியவில்லை. சம காலத்து சமூக பொருளாதார மாற்றங்கள் மீளா அடிமைச் சேற்றில் ஆழ்ந்து அல்லலுறும் அந்த மனிதர்களுக்கும் சென்று சேர்வதை தடுத்த பிற்போக்கு இயக்கமான யாழ்ப்பாணியத்தின் மூளையாகவும் அதன் தத்துவார்த்தத் தலைவ ராகவும் அமைந்தார். இது அவரது பின் நோக்கிய பார்வையுள்ள பிற்பக்க முகத்தைப் பற்றியது.
தன்னைப் பாதிக்கும் மேலாதிக்கப் போக்குகளுக்கு எதிராக நிமிர்ந்து முன்நோக்கிய பார்வையுள்ள ஒரு முகமும், தனக்குக் கீழ்ப் பட்டவர்களை கொடுமையாக ஒடுக்கி அடக்கும் சமூகப் பிரக்ஞையற்ற பின்நோக்கிய இன்னொரு முகமும் கொண்ட நவீன யாழ்ப்பாணிகளின் முதற்சந்ததி ஆறுமுக நாவலருடன்தான் ஆரம்பிக்கிறது.
சிறு தெய்வ வழிபாடும் கிராமியச் சடங்குகளும் நிறைந்த, பரந்துபட்ட சாதிவளியாக பல்வேறுபட்ட
SSSSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSL 0S

Page 20
மக்களது பங்குபற்றலும் கொண்ட யாழ்ப்பாணத்து சமய அமைப்பை ஆறுமுகநாவலர் பிராமணர் ( தலைமையில் ஆகம மயப்படுத்தினார். e
ஆறுமுகநாவரின் தலைமையிலான சைவத் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் என்று குறிப் ( பிடப்படுகின்ற யாழ்ப்பானியக் கலாச்சாரம் தோற்றம் பெறுகிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பிராமணர் தலைமைக்கும் ஆகமக் கட்டுக்கோப்புகளுக்கும் வெளியே, சிறுதெய்வ வழிபாட்டு அடிப்படையில் கிராமியக் கலை கலாச்சார மையங்களாக இயங்கிவந்த கோவில் வழிபாட்டு அமைப்பு இந்த இயக்கத்தினால் தகர்த்து எறியப்பட்டது. தமிழகத்திலிருந்து கோவில் பூசகர்களான நிலவுடைமையற்ற கீழ்வர்க்க பிராமணர்கள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டனர். கோட்பாட்டுரீதியாக யாழ்ப்பாணத்து சாதி, சமய, கலாச்சார அமைப்பின் கொடுமுடியில் இவர்களை இருத்திய வெள்ளாளன் நடைமுறையில் தனது உடைமையான கோவில்களில் சேவை செய்யும் பணியாளனாகவே பிராமணர்களை கீழ்ப்படுத்தி வைத்தான். கோட்பாட்டு ரீதியாக வெள்ளாளரை
விட மேம்பட்டவர்களாகவும் நடைமுறையில் வெள்ளாளர்களின் பணியாளர்களாகவும் வாழ்ந்த இந்தப் பிராமணர்களை எந்த வகையிலும் தமிழகப் பிராமணர்களின் மேல் வர்க்கத்துடன் ஒப்பிடமுடியாது. அதிஷ்டவசமாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியில் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்து கோவில்களை இந்த ஆகம மயப்படுத்தும் முயற்சி பாதிக்கவில்லை. கோவில் கலாச்சாரமாக கிராமியக் கலைகள், கிராமிய வாத்தியங்கள்- உடுக்கு, பறை கிராமிய இசைகளுக்குப் பதிலாக தமிழகத்து உயர் கலைகளான கர்நாடக சங்கீதம், தவில் நாதஸ்வர வாத்திய இசை, தேவதாசிகளின் பரதநாட்டியம் என்பன புகுத்தப்பட்டன. இதனால் நட்டுவர் போன்ற சாதிவரிக் கலைஞர்களின் தேவையையும்
g
8
 

வரவையும் அதிகரித்தது. இது ஒரு புறத்தில் குறிப்பிடத்தக்க கலாச்சார பங்களிப்பேயாகும்.
ஆனால் பரந்துபட்ட யாழ்ப்பாணத்து மக்களது கிராமியக் கலை கலாச்சாரத்திற்கு பிரதியீடாகவும் மேட்டுக் குடியினரின் கலாச்சாரமாகவும் புகுத்தி மக்கள் கலைகள் இழிசனர் வழக்காகக் கழித்து ஒதுக்கியமை பரந்துபட்ட மட்டத்தில் யாழ்ப் ாணத்தை கலாச்சாரப் பாலைவன மாக்கியது. பரந்துபட்ட மக்களின் கலை கலாச் சாரங்களின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தையும் மட்டக் களப்பையும் ஒப்பிட்டு ஆராய்கிற ஒருவர் இக் கருத்தையும் ஒத்துக் கொள்ளவே செய்வர்.
யாழ்ப்பாண சமூக பொருளாதார வரலாற்றின் புறநடையாக, வெள்ளாளர் மயமாகாமலேயே ாழ்ப்பாணிகளாக அங்கீகரிக்கப்பட்டு பலம் பெற்ற சைவக்கரையார்களது எழுச்சியைக் குறிப் பிடலாம்.
வெள்ளாளரால் நிர்ணயிக்கப்பட்ட சமூக பொருளாதார கலாச்சார அமைப்பில் சாதிவாரி மீனவ சமூகங்கள் தொகை ரீதியாகச் சிறுபான்மையாகவும் கலாச்சார ரீதியாக வெள்ளாளருடன் ஒப்பிடும் போது பிற்படுத்தப் பட்டவர்களாகவும் இருந்தனர். எனினும் இவர்கள் சொத்துடைமை உள்ளவர்களாகவும் வெள்ளாளரில் தங்கியிருக்காதவர்களாகவும் மக்குக் கீழ்ப்பட்டவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருந்தனர். கரையாரில் பெரும்பகுதி கத்தோலிக்கராகப் பிரிந்து போனமை சைவக்கரையாரை சாதிவாரியாக மேலும் சிறுபான்மையினராக்கியது. யாழ்ப்பாணச் மூகத்தில் நிலவிய முரண்பாடுகள் மோதல்கள் ரு புறத்திலும், தொழில் வாரியாக மீன்பிடித்தல் ட்டுமன்றி ஆரம்பத்திலிருந்தே சட்டரீதியானதும் ட்டமறுப்பானதுமான கடல் வாணிபத்தில் டுபட்டிருந்தமை மறுபுறத்திலுமாக அவர்களை இறுக்கமானதும், செயல்திறன் மிக்கதும்
தாகம் இதழ் 2

Page 21
போர்க்குணம் உள்ளதுமான வகையில் நிறுவ5 மயப்படுத்தியது.
முரண்பாடுகளின் மத்தியிலும் யாழ்ப்பாணத்து வெள்ளாளரையும் சைவக் கரையாரையு இணைக்கும் வலுவான கலாச்சார அம்சங்களா சைவமும், தமிழ் இனத்துவ வளர்ச்சியு அதிகரித்தது. தொழில் ரீதியாகவும் சைவ கரையாரின் கடல் வாணிபப் பண்டங்களின் விற்பனையாளர்களாக நவீன யாழ்ப்பாண சமூகத்தின் பலமான அம்சமான வெள்ளா6 வர்த்தக முதலாளிகளே அமைந்தனர். இந்: இணைப்புகள் ஓரளவில் சைவக்கரையாருக்கு பல்வேறு துறைகளில் வெள்ளாளரது அங் காரத்தைப் பெற்றுக் கொடுத்தது.
எனினும் 1950களில் அரசியலில் தமிழருக்கு எதிரான இன வன்முறையும் காவற் படையினரின் அத்துமீறல்களும் ஆரம்பித்த காலங்களிலிருந்தே சைவக் கரையாருக்கும் வெள்ளாளருக்குப இடையே உறவு நிலைமையில் புதிய பரிமாணங்கள் ஏற்பட்டு வளர ஆரம்பித்தன.
சட்டமறுப்பு போர்க்குணம் இறுக்கமான சமூக பொருளாதார அமைப்பு என்பவற்றைக் கொண்டி ருந்த சைவக் கரையாரை தமது காவல களாகவும் அவர்களது பிரதேச மையமான வல்வெட்டித்துறையை தமது காவல் அரண கவும் பார்க்கிற போக்கு 1958ம் ஆண்டு கலவரங்களில் தோற்றம் பெற்று 1970களில் வலிமை பெறத்தொடங்கியது.
இது தான் 1950களிலேயே சைவக்கரையா வெள்ளாளர் மயப்படாமல் வெள்ளாளர் மையப்பட்ட யாழ்ப்பாணி சமூகத்தின் பலமான ஒரு அங்கமாக மாறிய கதை.
ஆய்வின் தேவை
சிங்களத் தமிழ் சாதி அமைப்பு தொடர்பான
ஒப்பீட்டு ஆய்வுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் கொவிகம, கரவா சாதியினரது உறவுகளும்
15 ஒக்டோபர் 1993
 

வெள்ளாளர் கரையார் உறவுகளும், இலங்கையின் தெற்குக் கரையில் வாழும் பெளத்த கரவா சாதியினரும் வடகரையில் வாழும் சைவக் கரையாரதும் சமூக பொருளாதார அரசியல் வரலாறு ஒப்பீட்டு ஆய்வுக்கு உரியன.
இத்தகைய ஆய்வுகள் நமது சமூக பொருளாதார வரலாற்றினையும் அதன் இயங்கு திசைகளையும் புரிந்து கொள்வதற்கும் உதவும்.
காலச்சுவடு ஆண்டு மலர் மற்றும் சுந்தர ராமசாமி படைப்புகள்
5
தமிழ் இலக்கியச் சூழல் படைப்பாளிகளின் தொகுப்பு
கவிதை, சிறுகதை, நாடகம் விமர்சனங்கள் தத்துவார்த்த விமர்சனங்கள் தமிழின் முக்கியமான படைப்பாளிகள் அனைவரதும் எழுத்துக்கள் கொண்ட ஒரு முழுமையான தொகுதி காலச்சுவடு ஆண்டு மலர் விலை F5.00
f மற்றும் அவரது படைப்புகளும் - கிடைக்கும் s தொடர்புகளுக்கு

Page 22
- ANAGANNYAVA
பன்னிரண்டு
அனைத்து நா
சந்தா ப காசோலை (U
காசுக் கட்டளை, அல்ல
மூலம் அணு
பணம் பெறுபவர்
67(45/////-
அனுப்பவேண்ட THAG
PO BOX LONDON )
20
 
 

Iணம் JK LDL (6 h), Uது தபாற் கட்டளை
றுப்பலாம்.
* THAGAM 67øy
வேண்டும்
டிய முகவரி AMI
| 3186
E17 6TJ
m $Tðsló Sý 2

Page 23
சுப்பம்மான். நாய்ச் சுப்பு என்றால் எல்லோர் முகத்திலும் உடனே சிரிப்பு - முகமலர்வு. தண்ணிர் என்றவுடன் எப்படி ஈரம் நினைவில் வருகிறதோ அழகானது என்றவுடன் ஒரு விரிந்த பூ கனவில் வருகிறதோ சுப்பம்மான் என்றவுடன் நாய்ச் சுப்புவும் சிரிப்பும் நினைவில் வந்து தொலைக்கிறது.
கமுகைப் பிளந்து பாடை கட்டியதுபோய் ஊருக்கு வண்டில் செய்ய வேண்டிய தேவையை உணர்ந்தோம். வண்டில் செய்து முடிய வீராச்சாமி செத்துப் போனார். மழை சிறுகதையில் வரும் முசுப்பாத்திக் கட்டை தான் வீராச்சாமி. மனிசன் முதலில் வண்டியில் ஏறியதால் வீர ரதம் எனும் பெயரும் வைத்தாயிற்று.
வணிடிலைப் பராமரிக்கிறது யார்.?
தொடங்கியது பிரச்சினை. செத்தவர்களின் சொந்தக்காரர்களுக்கு வீட்டில் இருந்து தொடங்கும்போதும், சுடலையை நெருங்கும் போதும் வண்டில் தள்ளுவதில் இருக்கும் ஈடுபாடு கொள்ளி வைக்கும் நேரத்தோடு சரி. வண்டில் அனாதரவாகச் சுடலையில் கிடந்தது. அன்று இரவு உடனே கிராம முன்னேற்றச் சங்க நிர்வாக சபைக் கூட்டம்.
சங்கத் தலைவர்தான் வண்டிலைக் கழுவிப் பராமரிக்க வேணுமென்று சபை ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.
சுப்பம்மான் இதுவரை வேலுப்பிள்ளைப்
பரியாரியாருக்கு உதவியாக இருந்தவர். கையில் ஒலைப்பையுடன் வறுத்தோலை, முங்கோலை, நீத்துவன், குடாக்கனை என்று ஊர்ஊராகத் திரிந்து வருவார். வேரோ வெட்டியோ இல்லாமல்
15 696 i 1993 mu
 

போகாது அந்தப் பையுள்.
காசும் முகராசியும் இருந்தா சுப்பம்மானும் ஒரு பரியாரியார்தான். ஏன் வேலுப்பிள்ளைப் பரியாரியாரே அம்மானிலைதான் தங்கி இருக்கிறார். அம்மானிற்கு சயிக்கிள் ஓடத் தெரியாது. எங்கும் எதற்கும் நடைதான். சங்கானையில் இருந்து ஆத்தி வாய்க்காலால் சயிக்கிளில் வந்து கொண்டிருந்தேன். அம்மான் நடந்து போய்க் கொண்டிருந்தார்.
வரட்டோ தம்பி என்றவுடன் சயிக்கிளை நிறுத்தினேன். வயதில் மூத்தவர்களை ஓட ஓட ஏற்றக் கூடாது என்பதும் சயிக்கிளை நிற்பாட்டி ஏற்றுவதே மரியாதைக்குரியதாகவும் இருக்கலாம். ஆனால் சுப்பம்மானுக்கு ஓட ஓட சயிக்கிளில் ஏறத் தெரியாது என்பது ஊரில் சயிக்கிள் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். மனிசன் பார் இல் இருப்பதே பெரிய விசயம். "அம்மான்! இப்ப இருதையத்தையே மாத்தி மனிசன் உயிரோடை இருக்கிற அளவுக்கு வைத்தியம் வளந்து விட்டுது. இன்னும் நாங்கள் உந்த வாத மடக்கியோடையும் சுக்கோடையும் தான் நிக்கிறம். பரியாரியாற்றை தங்கபஸ்ப வேலையெல்லாம் முடிஞ்சுதோ..?”
"இல்லைப் பெடி, நெருப்பு நூராமை ஒரு மாதத்திற்கு மேலை அதுக்கு எரிக்க வேணும். வைத்தியம் எண்டா பொறுக்கித் திண்ணிற வேலையில்லை. அதுக்கு பவ்வியம் பவுத்திரம் இருக்கு! நீ இருதயத்தைப் பத்திக் கதைக்கிறாய், சித்தர் காலத்திலை மண்டையைப் பிளந்து மூளைக்குள்ளையே வைத்தியம் நடந்தது. இப்ப அதெல்லாம் அருகிப் போச்சு!" "என்ன மூளையிலையோ?”
2.

Page 24
"ஒரு மனிசன்ரை தலையுக்கை தேரை போய் இருந்து விட்டுது."(சிரிப்பை அடக்கிக் கொண்டேன்)
"கனநாளா அது அவருக்கு பெரிய மண்டைக் குத்தா இருந்தது. தேரையரிட்டை அவர் வந்து மண்டைக் குத்துக்குக் கையைக் காட்ட அந்தாள் விசயத்தைப் பிடிச்சுப் போட்டுது. (ஒரு வேளை காதுக்குள்ளாலை போயிருக் குமோவென நினைத்து சுப்பம்மானின் காதைப் பார்த்தேன்.)
"மண்டையைப் பிளந்து தேரையை எடுக்கச் சொல்லிவிட்டு அவர் போவிட்டார். தேரை
வெளியாலை வராமல் மூளையைக் கால்
விரலாலை இறுக்கிப் பிடிச்சுக் கொண்டிருந்து விட்டுது. அப்பிடி எடுத்தா மூளை கிழியும்.
உடனை வைத்தியர் மாரெல்லாம் தேரை யரிட்டைப் போய்ச் சொல்லிச்சினம். மனிசன் வந்து தண்ணிப் பாத்திரத்தை தேரைக்கு அருகிலை பிடிச்சுது. தேரை லாவகமா தண்ணியுக்கை எழும்பிப் பாஞ்சுது
நான் சிரித்தேன் - தலையுக்கை இருக்கிறதை விட தண்ணியுக்கை இருக்கிறது தேரைக்குச் சுகமாக இருக்கிறது. சுப்பம்மான் நல்ல பொருள்முதல்வாதிதான்.
சங்கத் தலைவர் வண்டிலைப் பராமரிப்பதை மறுத்து சுப்பம்மானை வேலைக்கு அமர்த்தினார். ஒரு செத்த வீட்டுக்கு வண்டில் கொண்டு போக 35 ரூபாய். வண்டிலுக்குப் பதினைந்து. அம்மானுக்கு இருபது. அம்மானுக்கு வலு சந்தோசம்.
தன்ரை பொறுப்பிலை வண்டில் வந்து விட்டுது. படுக்கிற பாய், உடுக்கிற வேட்டி மாதிரி அம்மான் வண்டிலில் வலு கவனம்.
கொள்ளி வைத்தபின்பு அம்மானில் அனுதாபப்பட்டு நாங்கள் கடலையில் இருந்து தள்ளிக் கொண்டு வருவோம்.
வண்டிலைத் தள்ளிக் கொண்டு வரக் கூடாதென்றும் மாட்டைப் பிடித்துப் பூட்டிக் கொண்டு வர வேண்டுமென்றும் தீர்மானம்
நிறைவேறியது.
:
(6.
(6.

வண்டில் சங்கத்தின் சொத்தே தவிர சுப்புவின் சொத்தல்ல என்றும் சுப்பு சம்பளத்துக்கு அமர்த்தப் Iட்டிருக்கிறார் என்றும் (பலமாக) அடித்துக் nறப்பட்டது. மாட்டிற்குக் கொடுக்கும் 5 ருபாவினால் அம்மானின் கூலியில் வெட்டு விழுந்தது. உடனே அம்மான் வண்டில் கூலியை 0 ரூபாவாக உயர்த்தி விட்டார். தர மறுத்தால் ான் வண்டிலைத் தொடுவதில்லை என்றும் தை கட்டி விட்டார்.
சவவண்டில் கழுவுவதற்கு எவருக்கும் ன்மானம் இடம் கொடுக்கவில்லையாதலால் அம்மான் வெற்றி பெற்றார். அம்மான் 30 ரூபாய்
மாடு 5 + சங்கம் 15 = 50 ரூபாய். அம்மான் கூலியை உயர்த்தியதால் சினமடைந்த தய்வேந்திரம் தன்னுடைய அடியுக்கை சாவீடு டந்தால் கப்பு வண்டில் கொண்டு வரக்கூடாது ான்று பொதுக் கூட்டத்தில் பேசினார். தய்வேந்திரத்திற்கும் வேலுப்பிள்ளைப் ரியாரியாருக்கும் தீராப் பகையாதலாற்தான் தய்வேந்திரம் உந்தப் பிடி பிடிக்கிறார் என்பது ஊருக்கு வெளிச்சம்.
"தெய்வேந்திரத்தின்ரை அடியுக்கை சுப்பு பண்டில் கொண்டு வரக்கூடாது என்று சொல்ல வருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் சுப்பு ல்லாமல் சங்கம் யாருக்கும் வண்டிலைக் காடுக்காது" என்று சங்கத் தலைவர் புத்தி ாலித்தனமாகத் தீர்ப்புக் கூறினார். சுப்புவை விட்டால் அடுத்த அடி தனக்குமேல் ழுமென்று, வண்டிலை தான்தான் கழுவ வண்டி வருமென்று ஊகிக்கத் தெரியாதவரல்ல ங்கள் தலைவர். இந்த நேரம் பார்த்து தய்வேந்திரத்தின் பெரிய தகப்பன் மண்டையைப் பாட வண்டில் அனாதரவாகப் போயிற்று. மீண்டும் கமுகைப் பிளந்து. பாடை கட்டி. சிறுகதையை முடித்தேன். கனடாவிலிருந்து காலம்' எனும் காலாண்டிதழ் }ன்று கிடைத்தது. அதில் 'நேற்று' எனும் றுகதை என்னைக் கடுமையாகப் பாதித்தது. தருக்களில் சுடப்பட்டிருக்கும் பிரேதங்களை ரிக்கும் இரண்டு இளைஞர்களின் மனோ
mum srátů 3,5ý 2

Page 25
i SSSSSSS
நிலையையும், அந்த சூழ்நிலையையும் சிறப்பாக சித்தரிக்கிறது அச்சிறுகதை.
திருகோணமலை அகதி முகாமில் 20 சிறுவர்க பசியால் இறந்துள்ளதாக பார்த்திபனிடமிருந்து ரெலிபோன் வந்தது.
அடுத்த தலைமுறைக்கு கையளிக்க என்னிட சவவண்டில்தான் உண்டு. எல்லாவற்றையு போலவே 'வீர ரதம் அனாதரவாகப் போவது எனக்குப் பேரிழப்புத்தான்.
வண்டிலை அனாதரவாகப் போக விடமாட்டே6 என எனக்குள் உறுதி எடுத்துக் கொண்டேன் எங்கள் ஊருக்கும் மியூசியம் வராமலா போக போகிறது. அனாதரவாகக் கிடக்கும் வீர ரதத்:ை எடுத்து மியூசியத்தில் வைப்பேன்.
(முற்றும்) குறிப்பு : சிறுகதை மழை'- ககலாமோகனி - வீரகேச 6/77 oolif சிறுகதை நேற்று' - தயாளனி - காலம்' காலாண இதழ் கனடா
விற்பனையாகிறது
மா. சத்தியமூர்த்தியின் ஓ.வணடிககாரா
மெல்லிசைப் பாடல்கள்-ஒலிநாடா
இலங்கை வானொலியில் பாடியவை
தொடர்புகளுக்கு :
O81 - 771 2104
ls 96LIui 1993

5.
(செப்டெம்பர் 7இல் நியோ நாஜிகள் சாவு கொண்ட
ஒரு சிறுமி நினைவாக.) கீரன்
ஐம்பது வருடங்களாய் மரணப்படுக்கையில்.
ஸ்வஸ்ரிகா நீயேதான்.
பாழாய் போன உன் நெஞ்சுக்குள் இன்னும் எப்படித்தான் இருந்ததோ இந்த மூச்சு? இறுகிக் கணத்த உனது இமைகளுக்குள் முழித்துத்தானே கிடந்திருக்கிறது இந்த விகாரக் கண்கள். பொத்திய வாய்க்குள்ளும் புழுக்களாய் நெளியுது உனது
கோசம்.
பேச்சுக் கெட்டு, கண்கள் சொருகி ஏதோ மூச்சடங்கிப்போய் நீ மாண்டதாக
என் பள்ளிக்கூட வாத்தியார் சொன்ன ஞாபகம்.
அவர்கள் தேசத்தைக் கிழித்த சுவரைத்தானே உடைத்தார்களென நம்பினோம்
உனது புதைகுழியின் சுவர்களை அல்லவே!
ஸ்வஸ்ரிகா : நாஜிகளைக் குறிக்கும் SWastika ஹிட்லரின் சின்னம்
23

Page 26
சினிமா - ஒரு பார்வை
மூன்று சினிமாக்கள்
குணேவின் மூன்று படங்கள் பற்றி இப்போது பார்ப்போம். கலைக்கும் அரசியலுக்குமான உறவை குணே மிகத் தெளிவாக வரையறை செய்து கொண்டிருந்தார். கலை மக்களோடு உரையாடுவதற்கான ஒரு ஊடகம், அரசியல் நம்பிக்கையின் மீதெழும் நடவடிக்கை, கலை தனது பங்களிப்பை வெளியிடும் எல்லையில் தொடங்குகிறது அரசியல் நடவடிக்கை என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.
அவரின் இறுதிப் படங்களான ஆட்டிடையணி (HERD), L/6025 (YOL) uyöpıh to67ü (WALL) பற்றி அவரின் விமர்சகர்கள் சொல்லும்போது, அவர் படங்கள் நிலப் பிரபுத்துவத்திற்கும் முதலாளித்துவ சமூகத்திற்கும் உள்ள உறவில் நிகழ்பவை என்கிறார்கள்.
குறிப்பாக சொல்வதானால் கிராமிய விவசாய சமூகத்தின் கலாச்சார மதிப்பீடுகளும், மாறிவரும் நகரமயமான தொழில் மயமான சமூகத்தின் கலாச்சார மதிப்பீடுகளும் கொள்ளும் மோதலில் விளைகின்றன அவர் படங்கள் என்கிறார்கள். நிலப்பிரபுத்துவ சமூகம் நிர்மூலமுறுவதால் நகரம் நோக்கிச் செல்லும் மனிதர்களின் பிரச்சினைகளை வெளியிடுகிறது அவரது ஆட்டிடையன் மற்றும் பாதை படங்கள். சிறை அமைப்பின் குரூரத்தை வெளியிடுகிறது மதில் படம்.
குணேவின் இந்த மூன்று படங்களிலும் அவதானிக்கத்தக்க இன்னொரு முக்கியமான அம்சம், இராணுவ அடக்குமுறையின் குரூரம் எவ்வாறாய் துருக்கிய மக்களின் அன்றாட வாழ்வில் புழிையாடிப் போயிருக்கிறது எனபதுதான. .
இந்த வாழ்வியல் யதார்த்தத்தை துருக்கியின் யதார்த்தம் என்பதை விடவும் மூன்றாம் உலக யதார்த்தம் என்று சொல்வதே பொருத்தமானது என்கிறார்கள் குனேவின் விமர்சகர்கள்.
00 S LSLSLSLSLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
 
 
 

கிராமிய வாழ்விலிருந்து வெளியேறும் மக்கள் மிகப் பெரிய சிறைச்சாலைகளான நகர வாழ்வுக்குள் சிறைப்படுகிறார்கள் என்கிறது இப்ப்டங்கள்.
திரும்பத் திரும்ப இம்மூன்று படங்களும் அக்கறையுடன் பரிசீலிக்கும் விசயங்கள் இவைதான்; நிலப்பிரபுத்துவ சமூகத்தில் பெண்களின் நிலை, ஆண் பெண் பாலுறவின் தன்மை, இவர்களுக்கிடையில் ஏற்படும் வன்முறை உணர்ச்சி, மனித உறவுகள் முற்றிலும் . வன்முறை சார்ந்து இயங்கும் அவலம், நிறுவன அமைப்புகள் வன்முறை அமைப்புகளாக மாறிப்போன குரூரம்.
நகரம் சார்ந்த மதிப்பீடுகள் இம்மக்களை அசுத்தப்படுத்தும் கொடுமை, இவைகளினூடே சிறிய நம்பிக்கையாய் வெளிப்படும் மக்களின் எதிர்ப்புணர்வு.
உண்மையில் இவைகளை இரத்தமும் சதையுமாய்ச் சித்தரிப்பதன் மூலம் குனேவின் இந்த மூன்று படங்களும் நாடு, மொழி, எல்லைகளைக் கடந்து பிரபஞ்சத் தன்மையை அடைந்து விடுகிறது.
கலாச்சார அடையாளத்துடன் சொல்வதானால் மூன்றாம் உலக யதார்த்தத்தை தொட்டு நிற்கிறது.
1. 1979 இல் வெளியான ஆட்டிடையன் படம் துருக்கியின் தென்கிழக்கு அனதொலியாவைச் சார்ந்த நாடோடிகளின் (NOMNDS) சோகக் கதையைச் சொல்கிறது.
2. 1982 இல் வெளியான பாதை’ படம் ஐந்து வித்தியாசமான சிறைக் கைதிகளின் கதை
யைச் சொல்கிறது. ... '
3. 1983 இல் வெளியான மதில் படம் துருக்கி யின் சிறைச்சாலையின் கொடூரத்தைச் சொல் கிறது.
தாகம் இதழ் 2

Page 27
ஆட்டிடையன் மூன்று பகுதிகளாக நிகழ்கிறது. முதல் பகுதி அந்த நாடோடி மக்களுக்குள் உள்ள இரண்டு இனக்குழுக்களுக்குள் இருக்கும் பகைமையைச் சொல்கிறது. இந்தக் குழுக் களுக்குள்ளான பகைமையை முடிவுக்குக் கொண்டு வர ஒரு குழுவைச் சார்ந்தவர் தனது மகளை இன்னொரு குழுவைச் சார்ந்த ஒருவருக்கு மணமுடித்து வைக்கிறார். அவர்களுக்கிடையில் காதல் மலர்கிறது. அவர்களின் குழந்தையொன்று செத்துப் பிறக்கிறது. நிரந்தரமாக உடல் நோய்க்கு ஆளாகிறார் அந்த இளம் மனைவி. அவளைக் காப்பாற்றுவதற்கு தொடர்ந்து முயல்கிறான் கணவன். அவளுக்கு வைத்தியம் செய்வதற்காக நகரம் போகவும் யோசிக்கிறான். ஆரம்பத்திலிருந்தே மணமகனின் தந்தை மிகமிக மூர்க்ககுணம் கொண்ட விவசாயியாகவே சித்தரிக்கப்படுகிறார். அந்தப் பெண் ஒரு தீயசக்தி என்று சபிக்கிறார். அவளைக் கைவிடுமாறு மகனை நிர்ப்பந்திக்கிறார். - இந்தச் சூழல் கால்நடை மற்றும் விவசாயம் சார்ந்த அவர்கள் வாழ்வு வறட்சி, தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றால் நிர்மூலமாகிறது. அடிப்படை வாழ்வே பிரச்சினையாகிப் போகிறது. நிலங்களைக் கொத்திக்களைத்து குரூரமாகப் புரட்டிப் போடும் குராக்பெரின் காதடைக்கும் சத்தம் மூலம், அந்தக் குறியீட்டின் மூலம் நம்மை உலுப்புகிறார் குணே.
கால்நடைகளை விற்பதற்காக துருக்கியின் தலைநகரான அங்காரா (ANKARA) நோக்கிக் கிளம்புகிறது அக்குடும்பம். இரண்டாவது பகுதி அக்குடும்பத்தின் அங்காரா நோக்கிய ரெயில் பிரயாணம்.
அமைதியும் அழகும், பூச்சும் அற்ற கிராமங்கள் விலகிப் போகிறது.
ஆர்ப்பாட்டமும், எங்கு நோக்கிலும் இராணுவ நடமாட்டமும், அழுக்கும், நெருக்கடியும், விபச்சாரமும் மலிந்த நகரத்தின் காட்சிகளை உள்வாங்கிக் கொண்டு போகிறது ரெயில்.
பயணத்தில் அக்குடும்பத்தின் இளைய மகன்
15 ?šCLTuli 1993 mmmmmmmmmmmmmmmm
 

ரயில் பெட்டியிலேயே காசு கொடுத்து ஒரு ஊனமுற்ற பெண்ணை ஆடுகளுக்கிடையில் அவசரமாகப் புணர்கிறான். ஆடுகள் பயணத்தின் நெருக்கடி தாங்காமல் மரணமுறுகின்றன. வறுமை, அசிங்கம், நம்பிக்கையின்மை, கைவிடப்பட்ட அவலம் போன்றவை ரெயில் பயணத்துக்குள் வருகிறது.
ரெயில் பெட்டியிலிருந்து கைவிலங்கிடப்பட்ட நிலையில் ஒரு கவிஞன் இராணுவத்தினரால் பாடலைப் பாடியதற்காக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறான். நகரமே சிறையின் மிகப்பெரிய குறியீடாக விரிகிறது.
மூன்றாவது பகுதி அங்காராவில் அவர்கள் . -- எதிர் கொள்ளும் நகரத்தின் பொய் Y முகம் பற்றியது.
S. கால் நடைகளை நினைத்தபடி விற்க முடியாது போகிறது. இளம் மனைவி கவனிப்பாரற்று மெளனமாக மரணமுறுகிறாள். அவள் கணவன் இராணுவத்தால் சிறைபிடிக்கப்படுகிறான். இளைய மகன் காணாமல் போகிறான்.
மூர்க்கமான அந்த விவசாயக் குடும்பத் தலைவன் தனது மருமகளினி அனாதைப் பிணத்தை ஏற்க மறுக்கிறான். அப்போதும் மற்ற குழுவின் மீது துவேஷத்தோடேயே நிற்கிறான்.
அந்தப் பிணம் தரையில் தரதரவென்று இழுத்துக் கொண்டு போகப்படுகிறது.
வெளியில் ஊர்வலம் போன தொழிலாளி வர்க்க இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
தொலைந்து விட்ட மகனுக்காக அந்த நகரத்தின் ஜனக் கும்பலுக்குள் நின்று கத்திக் கொண்டிருக்கிறான் அந்த விவசாயக் குடும்பத்தின் மூர்க்கமான தலைவன்.
படம் முடிவடைகிறது.
'பாதை’ படம் துருக்கியின் மேற்கு அனதொலியாவின் சிறைக் கைதிகள் பற்றிச் சொல்வது.
அச்சிறையிலிருந்து ஐந்து கைதிகள் விடுமுறைக்காக தங்கள் குடும்பங்களைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். குடும்பங்களை நோக்கிப்
25

Page 28
போகும் பயணத்தையும், அவர்கள் திரும்பவும் சிறை நோக்கி வருவதற்கான பயணத்தையும் விவரிக்கிறது இப்படம். இந்தப் படத்திலும் ரெயில் பிரதான குறியீடாக வருகிறது.
பாதையெங்கும் இராணுவ வாகனங்கள் நிற் கின்றன. பயணிகள் சோதனை இடப்படுகிறார்கள். இந்த ஐந்து கைதிகளின் கதைகளில் இரண்டு கைதிகளின் கதைகள் துணைக் கதைகளாகப் போக, மூன்று கைதிகளின் கதைகள் படத்தின் பிரதான மையமாக வருகிறது.
ஸைத்யத் அலி, விபச்சார விடுதிக்கு ஓடிப்போன தனது மனைவியைப் பார்ப்பதற்காகப் போகிறான். அவள் ஸைத்யத் அலியின் சகோதரனால் பிடிக்கப்பட்டு, இவனால் கொல்லப்பட வேண்டும் என்று தண்டிக்கப் பட்டிருக்கிறாள்.
அவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. அவன் மனைவியை நேசிக்கிறான். அவன் அவளைக் கொல்ல விரும்பவும் இல்லை. ஆயினும் அவன் வாழும் சமூக மதிப்பீடுகள், அவளை அவன் வெறுப்பதற்கான நியாயங்களாகின்றன. அதன் படி அவளை வெறுக்கவும் செய்கிறான்.
அவளை பனிப் புயலுக்கிடையில் கைவிட்டுவிட்டு வருகிறான். திரும்பவும் அவளை மீட்டு வர பின் போகிறான். ஆனால் காலம் கடந்து விட்டது. அவள் விறைத்து பிணமாகி விடுகிறாள்.
அவன் தன் மகனுக்கு முத்தமிட்டு விட்டு திரும்பவும் சிறை நோக்கிப் பயணமாகிறான். ஸைத்யத் அலி, அவளைத் தேடிப் போகும் சந்தர்ப்பத்தில் அவனின் பயணத்தில் அவனைச் சுமந்து போகும் குதிரை பனிப் புயலில் ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல் பணியில் உடல் புதைகிறது. இவன் மிக முயன்றும் குதிரையை எழுப்ப முடியவில்லை.
இறுதியில் குதிரையைச் சுட்டுக் கொல்கிறான். சிவப்பு இரத்தம் வெள்ளைப் பணியில் மெல்லப் பரவி உறைகிறது. அன்பும், குரூரமும் பாதுகாப்பும், கைவிடுதலும் ஆன வாழ்வின் இரட்டைத் தன்மையின் குறியீடாக குதிரையின் மரணம்.
மனைவி பிணமாகிறாள். அகண்ட வானத்தின்
கீழ் பனிவெளி. வெள்ளைப் பணிவெளி, மகனோடு
26
 

முன்னோக்கி நடக்கும் ஸைத்யத் அலி. இரத்தம் பரவி உறைந்த மரணமுற்ற குதிரை. மனைவின் சில்லிட்ட புதைந்த உடல். ஒரே காட்சிக்குள், ஒரு பிரேமுக்குள் இதைக் கொண்டு வருகிறார் குணே. அச் சமூக அமைப்பின் குரூரத்தை, பெண்கள் மீதான வன்முறையை இவ்வாறாய் காட்சி ரூபப்படுத்துவதன் மூலம் நம்மை உலுக்கி விடுகிறார் குணே.
இன்னொருவன் முஹமத், பொய்யன். திருடன். திருடப் போன இடத்தில் தன் மனைவியின் சகோதரனை காட்டிக் கொடுத்து கை விட்டு அவன் சாவுக்கு காரணமானவன். உண்மையை ஒப்புக் கொள்கிறான். தான் பொய்யன் என்பதை ஒப்புக் கொள்கிறான்.
முஹமத் தன் மனைவி, குழந்தைகளைப் பார்க்கப் போகிறான். அவன் மாமனாரும், மனைவியின் சகோதரர்களும் அதை மறுக்கிறார்கள். அவர்களை மீறி மனைவி குழந்தைகளுடன் அவனோடு வந்து விடுகிறாள். ரெயில் பயணம் தொடர்கிறது. ரெயில் பெட்டிக்குள் ஆண்களுக்கான கழிப்பறையில் மனைவியோடு உடலுறவு கொள்ள முற்படுகிறான். முஹமத் பிடிபட்டு அவன் குழந்தைகளுக்கு முன்பாகவே கேவலப்படுத்தப்பட்டு, அவள் தன் மனைவிதான் என்று அடையாளம் மூலம் நிரூபிக்கிறான்.
மூன்றாமவன் உமர். குர்திஸ் கிராமத்தைச் சேர்ந்தவன். அவன் தன் கிராமத்தை நோக்கிப் போகினிறான். குர்திஸ் கெரில் லாப் போராளிகளுக்கும், அரசின் இராணுவ ஒடுக்கு முறையின் தாக்குதலுக்கும் இடையில் வாழத் தலைப்படுகிறான்.
முதியவர்கள் கடுபட்டுச் சாவதும், குழந்தைகளின் மரணமும் அவன் கண்ணெதிரில் நிகழ்கிறது. ஒரு இரவு முழுக்கவும் துப்பாக்கிச் சத்தம் அந்த கிராமத்தைச் சுற்றிலும் கேட்கிறது. அதிகாலையில் ஒரு இராணுவ வாகனம் நிறைய, குர்திஸ் போராளிகளின் பிணங்களோடு வருகிறது இராணுவம். அடையாளம் காட்டச் சொல்கிறார்கள். கணவனை அடையாளம் காட்ட முடியாது தவிக்கிறாள் மனைவி. தங்கள் சொந்தங்களை அடையாளம் காட்ட முடியாது நிற்கிறது அம்முழுக் கிராமமும், சாவு அவர்கள் வாழ்வின் அன்றாட நிகழ்வாகிவிட்டது.
SLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSL TTTT TTT 0

Page 29
Il 5 şiĉLHU i 1993
இவற்றுக்கிடையிலும் அன்பும் காதலும் வாழ்கிறது. இவன் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிக்கும் காதலுள்ள பெண்ணின் விழிகளை அடிக்கடி எதிர் கொள்கிறான் உமர். அவன் திரும்ப வேண்டிய நாள் வருகிறது. அவன் குதிரையின் மீதேறி மலையொன்றின் மறுபுறம் மறைகிறான்.
மதில் அல்லது சிறைச் சுவர் படம் அங்காரா நகரத்தின் சிறையொன்றின் அடக்கு முறைக் கட்டமைப்பைச் சொல்கிறது. இப்படைப்புக்கான அடிப்படைகள் குணேவின் சொந்த வாழ்க்கை அனுபவம்தான்.
இந்தப் படத்திற்காக பாரிஸ் நகரின் புறநகரிலிருந்த ஒரு பழைய பண்டக சாலை சிறைச் சாலையாக மாற்றப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.
இப்படத்தில் மூன்று வகையான கைதிகளின் வாழ்க்கை பற்றி விவரிக்கப் படுகிறது.
பெண்களின் சிறை பற்றி, அரசியல் கைதிகளான ஆண்களின் சிறை பற்றி, சிறுவர்களின் சிறை பற்றி இப்படம் பேசுகிறது.
படத்தின் மையமாக சிறுவர்களின் சிறை அனுபவம் பற்றியே சொல்லப்படுகிறது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்வதாகச் சொல்லி இருவரையும் ஒன்றாக தூக்குக் கயிற்றுக்கு கொண்டு போகிறுது அரசு.
சிறையிலிருந்து முதல்முறையாக பள்ளிக் கூடம் போகும் பிஞ்சுக் குழந்தைக்கு சிறை கூடமே சந்தோசதி திணி குறியீடாகி வழியனுப்புகிறது.
சிறையதிகாரியொருவன் ஒரு சின்னஞ் சிறுவனின் மூலம் தனது காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்கிறான். வாய்வழி மூலம் தன்னினச் சேர்க் கைக்கு சிறுவனை தினமும் நிர்ப்பந்திக்கிறான் அதிகாரி.
தப்பிச் செல்ல முயற்சிக்கும் சிறுவன் சுட்டுக் கொல்லப்படுகிறான். அந்தச் சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்று எனக் கோரி சிறுவர்கள் நடத்தும் போராட்டமும், எதிர்ப்புணர்வும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சத்தத்தில் அமுக்கப்படுகிறது.
கைதிகள் கடிதங்களுக்காக காத்திருக்கிறார்கள்.
 
 

சிறையில் இருப்பவனின் மனைவி அடுத்தொரு ஆணோடு உறவு கொள்வதை அங்கீகரிக்க முனைகிறான் சிறையிலுள்ள ஒருவன்.
அடக்கு முறையின் குரூரத்தை அதன் மொத்தத் தன்மையோடு காண்பிக்கிறது மதில் படம், நம்பிக்கை, நம்பிக்கையின்மை இவைகள்தான் இப்படம் மொழி. அடக்கு முறை பற்றிய பிரக்ஞை என்ன என்பதுதான் இப்படத்தின் செய்தி.
இப்படம் வெளிவந்த போது துருக்கிய சமூகம் பற்றிய ஒரு புதிய சித்திரம் மேற்கத்தியர்களுக்கு திறந்து வைக்கப்பட்டது. துருக்கிய யதார்த்தத்தையும் தாண்டிய மூன்றாம் உலக அடக்கு முறை அமைப்பின் தரிசனம்தான்
இது.
இம்மூன்று படங்களைப் பற்றியும் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வெளிவந்தது. துருக்கிய சமூகத்தை மிக மோசமாக குணே சித்தரிக்கிறார். அது அவ்வளவு மோசமானது இல்லை"துருக்கிய அரசை ஜனநாயக அரசாக பார்க்கும், பாதுகாக்கும் மேற்கத்திய அழகியல் விமர்சகர்களிடம் இருந்து வந்த விமர்சனம் இது.
அதி தீவிர இடதுசாரிகள் குணே அரசியல் தீர்வை தெளிவாக முன் வைக்கவில்லை என்ற விமர்சனத்தை முன் வைத்தார்கள்.
குனே இவர்களின் விமர்சனத்துக்கெல்லாம் பதிலிறுத்தார். சினிமா பற்றி, அரசியல் பற்றி, கலைஞனுக்கும் சமூகத்துக்கும் இருக்கும் தொடர்பு, அரசியலுக்கும் கலைஞனுக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றி தெளிவான பதில்களை முன்வைத்தார்.
அடுத்த பகுதியில் விமர்சனங்கள் பற்றியும் குனேவின் பதில்கள் பற்றியும் பேசுவோம்
குணேவின் பாதை (YOL)திரைப்படம் இப்போது வீடியோவில் கிடைக்கிறது
6606): E15.99 + 1.95 P&P (p56) if: J.P.R
Production Limited
315 KRIKROAD
BEARSDEN
GLASGOW G61 3RG

Page 30
வாசகர் களத்தில்.
இலங்கையிலிருந்து மலையகத்தைச் சேர்ந்த
ஜனநாயக உரிமைகளு
மலையக மக்கள் முன்னணி தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான திரு.பெ.சந்திரசேகரன் மாகாணசபை உறுப் பினராக சத்திய பிரமாணம் செய்வதற்கு இறுதி நேரத்தில் பாதுகாப்பு அமைச்சினால் இரத்து செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயலாகும். திருசந்திரசேகரன் சத்தியப்பிரமாணம் செய்யவும் மாகாணசபை கூட்டங்களில் கலந்து கொள்ளவும் அனுமதியளிக்குமாறு அவரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி திருவிநாயகமூர்த்தி மேல் நீதிமன்ற நீதிபதியிடம் அனுமதி கோரினார்.
வழக்கை விசாரிக்கும் நீதிபதி திரு. ரி. பி. வீர சூரிய, திரு.சந்திரசேகரனை பதவிப் பிரமாணம் செய்யவும், வரவேற்பு கூட்டத்தில் கலந்து கொள்ளவும், ஆதரவாளர்களைச் சந்திக்கவும் அனுமதிக்க வேண்டுமென அரச தரப்பினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அரசதரப்பில் ஆஜரான சட்டத்தரணி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட திரு.சந்திரசேகரன் சத்தியப் பிரமாணம் செய்யவும் மாகாணசபைக் கூட்டங் களில் கலந்து கொள்வதிலும் தனக்கு ஆட் சேபனை இல்லையெனத் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சகம் கண்டிக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கியது.
இதன்படி 17.08.93 அன்று ஆளுனர் முன்னிலை யில் சத்தியப் பிரமாணம் செய்வதென இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால் இறுதி நேரத்தில் பாதுகாப்பு காரணங் களுக்காக எனக் கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சத்தியப்பிரமாண வைபவத்தில் கலந்து கொள்வதற்கென கண்டிக்கு வந்திருந்த அவரின் ஆதரவாளர்கள் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற் பட்டோர் ஏமாற்றத்துடன் மாகாணசபை முதல்வரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்து
28
 
 
 
 

ஆர்.ஆர் ராம் என்பவரால் எழுதியனுப்பப்பட்டது
கு மதிப்பளிக்கப்படுமா?
விட்டு திரும்பிச் சென்றனர்.
இவ் அனுமதி மறுப்பை மாகாணசபையில் பல உறுப்பினர்கள் கண்டித்ததுடன் எதிர்கட்சித் தலைவர் திரு.விஜய விக்ரமரட்ன, திரு சந்திர சேகரனை இச் சபைக்கு அழைத்து வராமை அப்பட்டமான அரசியல் காரணமே என்றும் மக் கள் பிரதிநிதி ஒருவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்றால் பொது மக்களின் நிலை எப்படியிருக்கும் எனவும் கேள்வி எழுப்பினார்.
அவர் 4-7-91இல் கைது செய்யப்பட்டு
இரண்டு வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த போதும், அவர்சார்ந்த கட்சி எந்தவிதமான சட்டவிரோத செயலிலும் ஈடுபடாமல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலிலும் மலையக மக்கள் முன்னணி மலையக மக்களிடம் இரண்டாவது சக்தியாக இனங் காணப்பட் டுள்ளது.
கைது செய்யப்பட்ட காலத்தில் அவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அவரை கைது செய்ததும் தடுத்து வைத்திருப்பதும் சட்டவிரோதம் எனத் தீர்ப்பு வழங்கி நஸ்டாடும் கொடுக்க வேண்டுமென பணித்தது.
மலையக முன்னணியின் செயலாளர் நாயகம் திரு. பாவா அப்துல் காதர், உபதலைவர் திரு. விரி தர்மலிங்கம், அமைப்பாளர்கள் திரு. இரா இராஜாராம், திரு.இராமகிருஸ்ணர் ஆகியோரும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதும், வழக்கை இழுத்தடிப்பதும், பிணை வழங்க மறுப்பதும் அரசின் திட்டமிட்ட அரசியல் அராஜகத்தின் ஒரு வெளிப்பாடே என்பதைத் தவிர வேறு காரணங்கள் ஏதும் இருக்க
(pLugJ.
m sidi 9sy 2

Page 31
பாலஸ்தீன-இஸ்ரேல் உடன்பாட்டின் உள்ள எழுத்து மூலம், ஐரோப்பிய தொடர்பு சாதி முன்வைக்கப்படாத ஒரு சூழலில் இப்போதைக்கு முன் வைப்பதே பொருத்தமானது.
பாலஸ்தீன பிரதேசத்தில் பாலஸ்தீன மக்கள் வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. 2ம் உலகப் பே யூத இன மக்கள் மிருகத்தனமாக நாஜிக்களால் வே போது யூத மக்களுக்கு ஒரு நிலப்பரப்பு ே அவசியத்தில் இருந்து எழுந்தது இஸ்ரே6 அன்றைய சூழலில் யூத மக்கள் மீதான பரி ஏகாதிபத்திய வாதிகளின் ஆதரவும் இஸ்ரே அமைவதற்கான ஏதுவான சூழலை உருவாக் ஐரோப்பிய நாடுகளில் சிதறிக்கிடந்த யூதர்கள் பால தொன்மையான பிரதேசங்களுக்கு கொண குடியேற்றப்பட்டார்கள்.
பிரச்சினையின் பரிணாமம் புதிய திசைக்கு போவது ஆரம்பமானது. மத்திய கிழக்கில் தனது இராணு ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள 69C இஸ்ரேலை அமெரிக்க, மேற்குலக அரசு தொடங்கியது. பனிப்போர் காலகட்டத்தில் சே சார்பான மத்திய கிழக்கு நாடுகளின் நகர்வை இஸ்ரேல் அரபு நாடுகளுக்கு எதிராக நிலை இக்காலகட்டத்தில் இஸ்ரேல் தனது நிலப்பரப் மக்களின் குடியிருப்புகளுக்குள் விஸ்தரித்தது. அ அண்டை நாடுகளான ஜோர்தான், சிரியா, லெ முஸ்லிம் நாடுகளின் சில பிரதேசங்களையும் ஆ ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இஸ்ரேல் கெடுபிடியைக் கட்டவிழ்த்து விட்டது. சொ மக்களை வெளியேற்றியது. அதைத் தொடர்ந்து உலகெங்கும் விரட்டப்பட்டர்கள். பெருவளியான லெபனான், சிரியா போன்ற நாடுகளில் அகதிகளாக பகுதியினராக பிற முஸ்லிம் நாடுகளுக்கும் ஐரோப்பி
15 dGLuf 1993
 

ார்ந்த அம்சங்கள் நனங்கள் மூலம் சில குறிப்புகளை
தொன்மையாக ர் காலகட்டத்தில் ட்டையாடப்பட்ட வண்டும் என்ற ல் எனும் நாடு. தாப உணர்வும் ால் என்ற நாடு கியது. பல்வேறு ஸ்தீன மக்களின் ர்டு வரப்பட்டு
து அப்போதுதான் வ பொருளாதார ரு பிரதி நாடாக கள் கையாளத் ாவியத் யூனியன் தடுத்து நிறுத்த நிறுத்தப்பட்டது. பை பாலஸ்தீன த்தோடு நில்லாது பனான் போன்ற ஆக்கிரமித்தது.
நனது இராணுவ ந்த மண்ணின் பாலஸ்தீனர்கள் மக்கள் ஜேர்தான், னார்கள். சிறுசிறு யநாடுகளுக்கும்
ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் ஆரம்பத்தில் பாலஸ்தீன-யூதர்கள் தொகை
பாலஸ்தீனர் - யூதர் 1660 iO0000 24,000
1914 ரீ00,000 ዷõ000
LIovania g/g256i
நாடு رA350( سي AA லெபனானி (27000 3/0588
áffluff 82/94 2ዷ9,92፵
ஜோர்டான் 508200 921?
s
மேற்குக்கரை 4氹究
பிரதேசம்
‹፰//mዎ;7 ̆ 丛2%Z á苏份4
மொத்தம் 942 25948
ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் பாலஸ்தீன மக்கள் தொகை(199)
(கிழக்கு ஜெருசெலம் மக்கள் தொகை 140000 உட்பட)
மேற்குக்கரை பிரதேசத்தில்
200,000 காசா நிலப்பரப்பு 700,000
மொத்தம் 1900,000

Page 32
30
புலம் பெயர்ந்தார்கள்.
பாலஸ்தீன மக்களின் சுதந்திரமான அரசியலு இயக்கமும் வெளிநாடுகளில் தான் நிகழ வேண ஏற்பட்டது. இச்சூழலில் முஸ்லிம் அடிப்படை தாக்குதல்களுக்கும் பாதிப்புக்கும் பாலஸ்தீன மக்கள் ஆ அரபு நாடுகள் தங்கள் நோக்கங்களுக்கு ஏற் மக்களின் துயரத்தைப் பாவிக்க ஆரம்பித்தார்கள் இந்த துயரங்களிலிருந்து மக்களை விடுவிப்பதற்க விடுதலை இயக்கம் பல்வேறு பட்ட அரசியல் பே உட்கொண்டு ஒரு பொதுவான வரையறைக்கு பட்ட இயக்கமாக எழுந்தது. பாலஸ்தீன மக்கள் த மண்ணிற்கான போராட்டத்தை அரை நூற்றாண்டுக நடத்தி வந்தார்கள். அவர்கள் முன்வைத்த கே சாரம்சம் இரண்டு விடயங்கள் பற்றியது. ஒன்றுதேசத்தை தாமே ஆளுமை செலுத்துவது. இரண்டுஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து வெளியேற்றுவது. இந்த இரண்டு அம்சங்களின் டெ என்பது ஒரு அரசியல் பொருளாதார கலாச்சார அ தமது நாட்டைக் கட்டி எழுப்புவது.
பனிப்போர் காலகட்டத்திலும் அதற்குப் பின்பா காலகட்டம் வரையிலும் இஸ்ரேலும் இஸ்ரேலைத் அமெரிக்க மற்றும் மேற்கத்திய அரசுகளும் பலஸ்தீன அவர்களின் விடுதலைப் போராட்டத்தையோ எ ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மாறாக பாலஸ் தேச விடுதலைப் போராட்டத்தை சர்வதேச பய சித்தரித்து வந்தது. இதனால் PLOவோடு எந்த வி வார்த்தைகளுக்கும் வர இயலாது என்ற மூர் நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தன.
மாறி வரும் உலகச் சூழலில் சோவியத்தின் உன ஐரோப்பிய நாடுகளின் மாற்றம், ஆசிய, ஆபிரி அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் அரசியல் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய சமூகத்துக்கும் நிர்ப்பந்தத்தைக் கொண்டு வந்தது. ஈராக்-குவை அமெரிக்காவின் பாத்திரம் குறித்து ஏற்பட்ட அர அமெரிக்காவை ஒரு இக்கட்டான நெருக்கடிக் வந்தது.
இந்தச் சூழலில் மக்கள் எழுச்சிகளை அங்கீகரிக் ஒரு புதிய சூழலுக்கு உலக ஆதிக்க அமைப்பு வரப்பட்டன. இப்பின்னணியின் முதற் கட்டமாக இஸ்ரேல் உடன்படிக்கையை நாம் பார்க்கிறோம்.

ம் கலாச்சார ர்டிய தேவை
வாதிகளின் ஆட்பட்டர்கள்.
பாலஸ்தீன
ாக பாலஸ்தீன க்குகளையும் ர்ளான ஒன்று ங்கள் சொந்த TITS, $6iul NTS, ாரிக்கைகளின் நமது சொந்த இஸ்ரேலினால்
இஸ்ரேலை ாது நோக்கம்
60)LLE FT67TL)T,
ன சமீபத்திய தாங்கி நிற்கிற மக்களையோ ழுச்சியையோ நீன மக்களின் ங்கரவாதமாக தமான பேச்சு க்கத்தனமான
டவு, கிழக்கு க்க, லத்தீன் மாற்றங்கள் ஒரு தார்மீக த் யுத்தத்தில் சியல் மாற்றம் கு கொண்டு
க வேண்டிய கள் கொண்டு பாலஸ்தீன
யூத குடியேற்றங்கள்
1990 வரை
கிழக்கு ஜெருசெலத்தில்
20,000 மேற்குக் கரைப்பிரதேசத்தில்
100,000 காசா நிலப்பரப்பில்
2፰00
மேற்குக் கரைப்பிரதேசத்தில் 50 வீத நிலப்பரப்பும் காசா நிலப்பகுதியில் 35 வீத நிலப்பரப்பும் இனிப்ரேலிய அரசினர் நிலம் என்று இஸ்ரேல் பிரகடனப்படுத்தி இருந்தது. யூத குடியேற்றக்காரர்களின் பிரத்தியேக நிலப்பரப்பு எனவும் அதை வரையறுத்திருந்தது.
இன்ட்ரிஃபாதா பாலஸ்தீன மக்கள் எழுச்சி 87இல் இருந்து 97 யூலை வரையிலான உயிர்ச் சேதம் மொத்தம் 98 இதில் 82 பேர் சுட்டுக்கொண்லப்பட்டார்கள் 3ே ர்ே|
அடித்துக் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களில் 253 பேர் 16 வயதிற்குக் குறைந்தவர்கள்.
மிக மோசமாக காயமடைந்தவர்கள்
ஓர் இலட்சத்திற்கு அதிகமானோர்.
30 வீதத்திற்கு மேலானோர் 18
வயதிற்கு குறைந்தவர்கள்.
சிறையிலடைக்கப்பட்டோர் b.00 മീff இடிக்கப்பட்ட வீடுகள் 2017
ா தாகம் இதழ் 2

Page 33
இந்த உடன்படிக்கையில் குறிப்பிடக்கூடி விவாதிக்கப்படுவன வருமாறு:
1. பாலஸ்தீன விடுதலை இயக்கம் பயங் என்பதற்கு மாறாக பாலஸ்தீனர்களின் பி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2. யூத மக்கள் மீதான துவேஷத்துக்கும் வெ இஸ்ரேலை ஒரு நாடு என்று அங்கீகரிக் பாலஸ்தீனர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
3. காசா பிரதேசம், ஜெரிக்கோ குன்றுப்பி பாலஸ்தீன மக்களின் தன்னாட்சி உரிமைக்கு உ அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து உடனடியாக இந்: ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், உலக பன்னாட்டு நிதி நிறுவனங்கள் அதிகப்படியாக மு முன்வருவதாக அறிவித்துள்ளதும் இங்கு க3 வேண்டிய மறு அம்சமாகும்.
எனினும் இந்த ஒப்பந்தத்துக்கு எதிரான அடிப் இரண்டு தரப்பிலும் மனிதக் கொலைகளை நிகழ் எகிப்து தவிர மற்றைய அரபு நாடுகள் இர ஆதரிப்பதாக இன்னும் தெரிவிக்கவில்லை.PL முக்கிய தலைவர்கள் பாலஸ்தீன முஸ்லி மதவாதிகளால் அண்மையில் கொலை செய்ய எல்லாவற்றையும் மீறி, "பாலஸ்தீன விடுதலைக்குமான ஆரம்ப நடவடிக்கையே இயக்கத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். தலைவர் ஜசீர் அரபாத்.
T
மற்றும் இலக்கிய வாதிகே
அந்த முழு ஒலிப்பதிவும் எழுத்து
இது தமிழ் அவைக்காற்று
Phone : C
15 ஒக்டோபர் 1993
 
 
 
 
 
 
 
 
 

டய அம்சங்களாக
கரவாத இயக்கம்
ரதிநிதி என்பது
றுப்புக்கும் மாறாக தம் மனப்போக்கு
ாதே சம் போன்றன ட்பட்ட பிரதேசமாக
த பிரதேசங்களில் வங்கி போன்ற தலீடு செய்வதற்கு
வனத்தில் கொள்ள
படை மதவாதிகள் த்தி வருகிறார்கள். ந்த ஒப்பந்தத்தை Oவை சார்ந்த சில ம்ெ அடிப்படை பப்பட்டுள்ளார்கள். மக்களின் முழு இது. எமது
இருந்து எமது என்கிறார் PLO
PLO வில் அங்கம் வகிக்கும் |
நான்கு பெரிய இயக்கங்கள் 1) Aéế57 (FATAH) ஜசிர் அரபாத்தினால் தலைமை | தாங்கப்படும் இயக்கம் ஐநா வினால் அங்கீகரிக்கப்பட்ட | அரசை அமைப்புது இதன் நோக் | கமாக இருந்தது. - 2) பாலஸ்தீன மக்கள் விடுதலை | guésó (PFLP) ஜோஜ் அப7ளப் இதற்கு தலைமை தாங்குகின்றார். ஆயுதப் போராட்டத்தின் மூலமே | பாலஸ்தீனத்தை மீட்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட அமைப்பு. 3) பாலஸ்தீன ஜனநாயக விடுதலை முன்னணி (DPLF) நெய்வி ஹவாட்மெக் தலைமை மில் இயங்குகின்றது. இஸ்ரேலின் இருப்பை ஏற்று. | இரு தேசிய ஜனநாயக அரசை அங்கீகரிக்கும் இயக்கம். 4) பாலஸ்தீன மக்கள் கட்சி 1982 இல் தடைசெய்யப்பட்ட ஜோர்டான் கொம்யூனிசக் கட்சி யில் இருந்து உருவான கட்சி வெளிப் படையாக இனப்ரேலை அங்கீகரித்த கட்சி ஆயுதப்பிவை
உருவாக்கிக் கொள்ளவில்லை.
မ္ပိ - ဒြို ့်
ம் தங்கியிருந்து பல்வேறு படைப்பாளிகள்
ளாடு நடத்திய கலந்துரையாடல் பதிவு நாடாவில் உள்ளது.
வடிவில் புத்தகமாக வெளிவருகிறது. | கலைக்கழகத்தின் ஒரு வெளியீடாகும், ! முனா ராஜேந்திரன் ர்புகளுக்கு . 81 459 4335
3.

Page 34
சிரிப்புப் பற்றிய சிறியதொ
Naprsčar6ů GaprsyĚ (Miroslaz Holu (செக் தேசத்தவர் விஞ்ஞானி முக்கியமான சமகால
சிரிக்கும் போது நாம் வாயைக் காதுகள் வரை, குறைந்தளவு அத்திசையிலாவது, இழுக்க நமது பற்களைக் காட்டுகிறோம். அவ் வகையிற், சிரிப்பு, கொல்லப்பட்ட அயலவனை நாம் வென்றதன் வெளிப்பாடாக இருந்த நமது பரிணாமத்தின் பழைய நிலைகளை
நமது குரல்வளையின் ஆழத்தினின்று மூச்சை
தேவைக்கேற்ப நமது ஒலியுறுப்புகளை அ அவசியமாயின் நமது நெற்றிகளையோ பின்னந்தலைகளையோ தொட்டு, அல்லது தொடைகளைத் தட்டி, அவ்வகையில், வெற்றி என்பது பாதங்களின் வேகமெனக் கருதப்பட்ட பழைய நிலைகளை
வெளிக்காட்டுகிறோம்.
பொதுவாகச் சொன்னால், நமக்குச் சிரிக்கத் தோ
விஷேமான சந்தர்ப்பங்களில்
நமக்குச் சிரிக்கவே தோன்றாத போது சிரி சிரிக்குமாறு நமக்குப் பரிந்துரைக்கப்பட்ட அல்லது பரிந்துரைக்கப்படாததாற் சிரிக்கி
எனவே, மொத்தத்தில், நாம்
நம்மை நோக்கி எவரோ சிரிக்கிறார்கள் என்ற உண்மையை மறப்பதற்காகவேனும் எல்லா நேரமும் சிரிக்கிறோம்.
தமிழில் : மணி
32

ரு சிந்தனை 4)
உலகக் கவிஞர்களுள் ஒருவர்)
கிறோம்.
வெளிப்படுத்துகிறோம்.
வெளியேற்றித் அதிரவைத்து
கைகளை உரசி, அல்லது
ன்றும் போது சிரிக்கிறோம்
m ' 892

Page 35
FLAT4 BEAL ROAD FRONTAGE 24 MANSFIELD ROAD ILFORD
ESSEX
1 G1 3AZ
With C
KARATE
Learn the world's finest art of
SHOTOKANKARATE
கராத்தேவகுப்புகளில்
U
081
CHIFF INSTRUCT
08 -
 

TELEPHONE: O81-553 2917 FACSIMILE. O81-553 2632
N. Devarajan
Solicitor
'ompliments
கலந்துகொள்ளவேண்டுமா?
ஞ்சன் - 520 7872
OR : S. GANESHALINGAM
569 9416

Page 36
Efi
LAWAW
G
eneva Coilve-fitr . . Act. ". . ." | · · · · = "1a Tort_Iா
ஆயுதக் கண்காட்சியை கண்டித்
இடத்தில் நடைபெற்ற
 

sil 05-09-19936 ALDERSHOT grgytis
ஊர்வலத்தில் சில காட்சிகள்.