கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கரவைக் கோவை

Page 1


Page 2

கிரவைக்கோவை
ஆசிரியர் “கவிவேந்தன்” аР. வேலாயுதம்
தமிழர் கலை கலாச்சார மன்றம் பேர்லின்
O 1.O 1.2OOO

Page 3
ஆய்வு தொகுப்பு வே. மதிராசன்
கனடா.
தமிழ் கலை கலாச்சார இலசவ வெளியீடு
ASIAN KULTUR PUBLIKATION - KOSTENLOS ASIAN CULTURAL PUBLICATIONS - FREE ISSUE
رسمي لي S. VELA UTHAM e/o V SRŽNI VASAN N()TL KENS WEG - 8 22.307 HAMBURG GERMANY

முகவுரை
புலம் பெயர்ந்து வாழும் கரவை மக்கள் பலரின் வேண்டுகோளை நிறைவு செய்யும் முகமாக வடமராட்சியில் பெரும் பகுதியாக விளங்கும் கரவை மண்ணின் பெருமையையும், சிறப்பையும் எழுத முயன்றுள்ளேன். கரவையில் பிறந்து வளர்ந்தவன் என்ற ரீதியில் கரவை மண்ணின், மக்களின் சிறப்புக்களையும், கரவையில் அமைந்துள்ள கோயில்கள், பாடசாலைகளின் பெருமைகளையும், திருக்கோலங்களையும் எழுதுவதில் ஆத்ம திருப்தி அடைகிறேன்.
புத்திக்குக் கரவை என்பர். கற்றவர்க்குக் கரவையில் குறைவில்லை. நீர் வளம், நில வளம் நிறைந்தது கரவை. தச்சை விநாயகர், கிராய்ப்பிள்ளையார், அத்துளு அம்மன், முருகையா போன்ற சிறப்புமிக்க பல கோயில்கள் கரவையில் உண்டு. தெய்வ வணக்கத்தின் அகப்பொருட் பிரபந்தம் உணர்ந்தவர்கள் கரவை மக்கள்.
தெய்வ காரியங்களில் நிலையான நம்பிக்கையான பக்தி கொண்டவர்கள். இறைவனிடத்தில் பக்தி இருப்பதோடு பயமும் இருக்க வேண்டும். இந்த ரீதியில் பாவம் செய்யப் பயப்படுபவர்கள் கரவை மக்கள். ரசாயன ரசம் பூசிய கண்ணாடியில் முகம் பார்க்கலாம். அதேபோல பக்தி ரசம் பூசிய மனக் கண்ணாடியில் இறைவனைக் காணலாம். இறை வழிபாட்டின் தத்துவங்களை நன்கு புரிந்தவர்கள் கரவை மக்கள்.
கரவை மக்கள் வழமையாக தம் எதிர்கால சந்ததியினருக்கு தெய்வங்களின் பெயர்களையும் கலை கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பெயர்களையுமே சூட்டினர்.
3

Page 4
காரணம் சமய ஈடுபாட்டை வளர்க்கும் நோக்கமே. 21ம்
நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்நூல் எழுதப்படுவதால்
மக்களின் சில முறையற்ற மாற்றங்களையும் குறிப்பிடுவது பொருத்தமே. '
புலம் பெயர்வும் புதிய சூழலும் நாகரீக மோகமும் பலரை சமய ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் மாற்றி விட்டன. கரவை மக்கள் எங்கு வாழ்ந்தாலும் தமது சந்ததியினருக்கு இனத்தையும் சமயத்தையும் தமிழர் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் பெயர்களைச் சூட்ட வேண்டுமெனக் கோருகிறேன்.
கரவை மக்கள் கல்விக்கே மிக முக்கியத்துவம் கொடுப்பர். வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் குறையாது கல்வி. இவ் உண்மைகளை மக்கள் நன்கு உணர்ந்தே கல்வி கற்பதை ஊக்குவிப்பர். இதனால் கற்றவர்களுக்கும் பட்டம் பெற்றவர்களுக்கும் கரவையில் குறைவில்லை.
கரவை மக்கள் கோயில் விடயங்களில் அதிக அக்கறை காட்டுவது வழமை. சமயத் தொண்டும் ஆன்மீக வளர்ச்சிக்கு விரதங்களும் அனுஷ்டிப்பர். ஆன்மீக இலட்சியத்தை அடைவதற்குச் செய்யும் காரியங்களில் ஜீவ சேவை முக்கிய இடத்தைப் பெறுகின்றது. பிறருக்குச் செய்யும் தன்னலமற்ற சேவையும் அறமே. ஆகவே தியாகமும் சேவையும் தமது பண்பாட்டிலும் சமயத்திலும் இணைத்து வாழ்பவர் கரவை மக்கள்.
கரவை தச்சன் தோப்பு விநாயகர் ஆலயம் புகழ்பெற்ற திருத்தலமாகும். சம்பந்தர் எனும் பெரியார் காலத்தில் தோன்றிய ஆலயம், அவரால் பரிபாலனம் செய்யப்பட்டது. கட்டிக் காத்துப் போற்றி வளர்க்கப்பட்ட ஆலயம் பின்பு

பாட்டா கந்தப்பு எனும் சைவப் பெரியாரின் வழி நடத்தலில் வளர்ச்சி கண்டது. கருங் கல்லால் கோயில் கட்டிடங்கள் கட்டப்பட்டன. பரிபாலன உரிமையில் பிணக்குகள் ஏறபட்டதால் பொதுச் சபை மூலம் காலத்திற்குக் காலம் ஒரு மணியகாரனை நியமனம் செய்து பரிபாலிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் மக்கள் ஆதரவுடன் சிறந்த மணிமண்டபம் அமைக்கப்பட்டது. கரவை விநாயகர் ஆலயம் சிறப்பான திருத்தலமாக விளங்குகின்றது. இத்தனை சித்திகளும் கரவை மக்களின் பக்தியின்
பலன்களே.
அத் துளுக் குளத்தின் வற்றாத நீர் ஊற்றும் கரவைக்குப் பெரும் செல்வமே. பனை மரங்கள் தென்னை மரங்கள் வாழை கமுகு வயல் தோட்டங்கள் யாவுமே கரவையின் வளத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. பாரம்பரியமாக கரவை மக்கள் கடைப்பிடித்து வந்த நடை உடை பாவனைகள், உணவு வகைகள், கலை கலாச்சாரம் மற்றும் பூர்வீக பண்பாடுகளை உள்ளபடி விவரித்துள்ளேன்.
மலர்ந்த முகம் மகிழ்ந்த மனம் கனிந்த பேச்சு இவையெல்லாம் மனிதனுக்கு தானாகவே இருக்க வேண்டியன. இது ஒரு சொத்து. இச் சொத்துக் கரவையிலே மெத்த உண்டு.
“புத்திக்கும் பக்திக்கும் கரவை - மக்கள்
சித்திக்கும் சக்திக்கும் கரவைக் கோவை."
- ஆசிரியார்

Page 5
அணிந்துரை
“கவி வேந்தன்” சி. வேலாயுதம் அவர்கள் எழுதிய “கரவைக் கோவை"யின் பிரதியைப் படித்தேன். கரவையூரின் சிறப்பியல்புகளையும் கரவை மக்களின் தாற்பரியங்களையும் நாம் மறந்து விடாதிருக்க உதவுவதுடன் புலம் பெயர்ந்து வாழும் புதிய தலைமுறையினருக்கு எம்மூரின் தனித்துவத்தை எடுத்தியம்பவும் இந்நூல் ஒரு கருவியாக அமையும் என்பது உண்மையே.
கரவை மக்களின் வழமைசள் பழமைகள் பாரம்பரியம் பண்பாடு தெய்வ வழிபாடு பொழுதுபோக்கு எனப் பல்வேறு அம்சங்களை சிறப்பாக வெளிக்கொணர்ந்து இவ்வூரின் முழுமைத்துவத்தையும் இவ்வூராரின் இயற்கையோடு இணைந்துபட்ட இல்லறத்தின் இயல்பையும் சூட்சுமமாகச் சுட்டிக் காட்டியுள்ளார் ஆசிரியர். இவர் வழமையாகவே மனித தத்துவங்களைச் சித்தரிப்பதில் நாட்டமும் திறமையும் உள்ளவர்.
நூலின் கவிதைச் சரங்கள் கூட கரவையூரின் குணாதிசயங்கள் மூலம் மனித நேயத்தையும் நீதியையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் கோடிட்டுக் காட்டுகின்றன. இந்நூலைப் படிக்கும் கரவையூரார் எவரேனும் தத்தமது இளமைக்கால இனிய வசந்த நினைவுகளை அசைபோடத் தவற மாட்டார்கள் என்பது என் எண்ணம். அதே வேளை எம் இளைய சந்ததியினருக்கு இந்நூலின் வாயிலாக எமது பழக்க வழக்கங்களை அறிமுகப்படுத்த ஒரு அரிய சந்தர்ப்பத்தை ஆசிரியார் வேலாயுதம் அவர்கள் எமக்களித்துள்ளார்.
எம்மூர் மண்ணில் ஆதியில் கல்வி கலை

கலாச்சாரங்களுக்கு இடப்பட்ட ஆணித்தரமான அஸ்திவாரம் தான் இன்று அகில உலக ரீதியில் எம்மக்கள் வியாபித்திருந்த சகல துறைகளிலும் சிறப்புற வழிவகுத்தது என்பதை நினைவுபடுத்துவதோடு எம் கிளைகள் எங்கிருந்தாலும் எமது வேர் கரவையில்தான் என்பதையும் பெருமையோடு நினைவு கூற வைத்துள்ளார் ஆசிரியர்.
எம்மூரை எம் மண்ணை எம் மக்களின் பழமை வாய்ந்த வழமைகளையும் கலை கலாச்சாரங்களையும் எம் மனக்கண் முன் கொணர்ந்து எம்மனதைத்தொட்டு எமது சிறப்பான தனித்துவத்தை உணரவைத்த ஆசிரியருக்கு நன்றி. அன்னாரின் பணி தன்னலமற்றது கைமாறு கருதாதது என்பன உண்மையே. இப்பணி மேலும் தொடர
પ્રકિર્દી په لاملksلي ”"
ச், பரஞ்சோதி
திருமதி. சகுந்தலா பரஞ்சோதி, B.Sc., ஆசிரியை - கனடா.

Page 6
வாழ்த்துரை
கரவையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. சி. வேலாயுதம் எனக்குப் பல வருடங்களாகத் தெரிந்தவர். இவர் எழுதிய சில புத்தகங்கள் படித்தேன். "இலக்கியம் இந்துமதம் மனித வாழ்வு”, “சிந்தி", "சமதாரம்”, “பணமும் குணமும்’ போன்ற நூல்கள் மூலம் மனித வாழ்வின் உண்மைத் தத்துவங்களை எளிதாக வெளிப் படுத்தியுள்ளார். அனுபவ ரீதியான யதார்த்தங்களைச் சித்தரிப்பதில் ஆற்றலுடையவர். இவர் ஒரு கவிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கதே. வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களைப் பிறர் அறிந்து நன்மை பெறக்கூடிய வகையில் பல புத்தகங்கள் கவிதைகள் எழுதியுள்ளார். இல்லறம் பற்றி இவர் எழுதிய கவிதையில் சில வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன. ஆழமான நடைமுறைக் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தியிருப்பது சிறபபிற்குரியதே.
மனித பிறப்பின் நியதி உணர்வுகளின் களம் பருவத்தின் பாடங்களை புனிதமாயப் பயில ஆண் பெண் உறவு கொண்டு அகமகிழ்ந்து கூடும் வீடு நடுநிலை நிற்பினும் விடுபடாப்பேதம் நிலைக்கும் கடும் பகை வரினும் படும் வேதனை தாங்கி விடாது தொடரும் காவியம் இல்லறமே நல்லறம்.

இவ்வாறு இல்லறத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஓர் சிறந்த கவிஞர். தனது எழுத்துக்கள் மூலம் தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் பணி புரிகின்றார். 1998ம் ஆண்டு கனடாவில் நான் சந்தித்த வேளை "கரவை வேலன் கோவை’ என்னும் பழமை வாய்ந்த நூல் பற்றிக் கலந்துரையாட வாய்ப்புக் கிடைத்தது. இவ்விளைவாகவே காலத்திற்கு ஏற்ப ‘கரவைக் கோவை’ என்னும் நூலை எழுதியுள்ளார். கரவை வேலன் கோவை 17ம் நூற்றாண்டளவில் கரவையில் வாழ்ந்த சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் வேலாயுதபிள்ளையின் சிறப்பு அம்சங்களை விளக்குகின்றது. கரவைக் கோவை கரவை மக்களின் வழமைகளையும் பழமைகளையும் சிறப்புக்களையும் விளக்குகின்றது. புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு பழமைகளைப் புதுப்பிக்கின்றது. இளைய சந்ததியினருக்கு கரவை மக்களின் வழமைகளையும் பண்பாடுகளையும் அறிமுகம் செய்கின்றது. இவர் பணி வளர
வாம்க்ககிறேன். N V V
,(6ف ہو توہیrاوہ اچھرہ، جانے ”طلسمعطط
5.T. gilis studgglibl 5, B.Sc., (Tech Chem) Diploma - PaperTechnology Retired General Manager (R+D)
42 Carda.

Page 7
சிறப்புரை
கடந்த 20 ஆண்டுகள்ாக புலம் பெயர்ந்த நிலையிலும் இனத்திற்கும் மதத்திற்கும் மொழிக்கும் திருச்சி. வேலாயுதம் ஆற்றிவரும் பணிகளை அறிந்தேன். இவர் ஒரு எழுத்தாளர், கவிஞர். இன மத மொழிப் பற்றுக் கொண்டவர்: வாழ்க்கையின் மேடு பள்ளங்களை நடைமுறையில் அனுபவித்த ஓர் சிறந்த அனுபவசாலி. இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர்; டில நூல்கள் எழுதி இலவசமாக வெளியிட்டுள்ளார்.
கரவைக் கோவை என்னும் இந்நூல் மூலம் ஆசிரியர், கரவை மக்களின் வழமைகளையும் பண்பாடுகளையும், இளைய தலைமுறையினர் அறிவதற்கு சிறந்த வாய்ப்பை அளித்துள்ளார். கரவை மக்களின் பாரம்பரியமான சிறந்த இயல்புகளை விளக்குவதுடன் கரவைக் கோவை மக்களின், தெய்வ வழிபாட்டையும் பாடசாலைகள் கோயில்களின் சிறப்புக்களையும் எடுத்துரைக்கின்றது. கரவை சிந்தாமணி விநாயகரின் அருட் பெருழையுை, ஆசிரியர் மிக அழகாக எழுதியுள்ளார். - - --- ~ -
தச்சை விநாய்கர் புதுமையோ புதும்ை புனிதம் அங்கு பூக்களாய் விரியும் புண்ணியம் அங்கு புனல்களாய் வழியும்.
இவ்வாறு கர்வை விநாயகரைப் போற்றி மக்களுக்கும்
கரவை மண்ணிற்கும் பெருமையைத் தேடித் தந்துள்ளார். கரவையில் பல அறிஞர்கள் இருந்தும் மக்களின்

பழமையையும் சிறப்புக்கள்ையும்*எழுதிய உரிமையும் பெருமையும் திரு. சி. வேலாயுதத்தையே சாரும் என்றால் மிகையாகாது. கரவைழண்ணின் வளத்தையும் மிக அழகாக விபரித்துள்ளார்
கரவைக கோவையில் அக்கால்ம் இட்ம்பெற்ற சமூகச் சீர்கேடுகளையும் ஆசிரியர் விளக்கியுள்ளார். இனத்திற்கும் மொழிக்கும் சமயத்திற்கும் திரு. சி. வேலாயுதம் செய்து வரும் பணி மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன். கரவைக் - கோவை மலரை வாசிக்கும் கரவை மக்கள் மகிழ்வர்
போற்றுவர் என்பது எனது எண்ணம். கரவை விநாயகர்
"] && ഋി
ஏ.சி.கந்தசாமி,B.Sc., (Ex-President) Graduates Union Caida.
அருள் புரிவாராக
1

Page 8
சிறப்புரை
கரவையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. சி. வேலாயுதம் என்னுடன் பல வருடங்களாக மிக நெருக்கமாகப் பழகிய ஒருவர். இவர் கல்வி கற்கும் காலத்திலேயே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டவர். மனித தத்துவங்களைச் சித்தரிப்பதில் விருப்பம் உள்ளவர். வாழ்க்கையில் ஏற்படும் வறுமை செல்வம் என்ற இரு நிலையையும் நடைமுறையில் அனுபவித்தவர். கடின முயற்சியால் பல புரட்சிகளை எதிர்நோக்கி வாழ்வை, வளப்படுத்திக் கொண்டவர். சிறந்த அனுபவங்கள் நிறைந்தவர். தனது அனுபவங்களைப் பிறரும் அறிந்து நன்மை பெறவேண்டும் என்ற நோக்கம் உள்ளவர். எண்ணங்களை நீதிகளை உண்மைகளை அஞ்சாது எளிய நடையில் எழுதவல்ல சிறந்த ஒரு எழுத்தாளர். இவர் எழுதிய "செத்த மாட்டில் உண்ணி போல நத்தை வேகத்தில் நகர்ந்துவிடும் சொந்தங்கள்!"
"நாய்களின் உருவங்கள் பயங்கரமான தோற்றங்கள் மனிதர்கள் அழகுதான் நன்றியில் பன்றியில் நரியிற் கரிகள்!”
"எப்பொழுதும் சந்தோசத்தையும் சுகத்தையும் விரும்பும் மனிதன் பிறரைப் பார்த்துப் பொறாமைப் பட்டு ஏன் துன்பத்தைத் தேடுகிறான்?”
போன்ற தத்துவங்கள் என்னைச் சிந்திக்க வைத்தன கவர்ந்தன. திரு. சி. வேலாயுதம் 1981 ஆண்டளவில் ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்த போதும் தமிழ்மொழிக்கும் இனத்திற்கும் பணிபுரியத் தவறவில்லை. இவர் "பணமும் குணமும்”, “சமதாரம்’, ‘சிந்தி’, ‘பழமை மொழியும் பழமொழிகள்", “சிந்தனைக்கு விருந்து', 'வீரத் தமிழ’
12

விடுதலைக் காவியம்’ போன்ற பல புத்தகங்கள் எழுதி அச்சிட்டு இலவசமாக வெளியிட்டுள்ளார். இவரின் கவிதைத்
திறமையைப் பாராட்டிப் பேர்லின் தமிழ்ச் சங்கத்தினர் “கவி வேந்தன்” எனும் சிறப்புப் பட்டத்தை வழங்கினர் என்பது குறிப்பிடத் தக்கதே.
கரவைக் கோவை நூலின் பிரதிகள் படித்தேன். கரவை மக்களின் பழமை வாய்ந்த பண்பாடுகளையும் சிறப்புக்களையும் எழுதியுள்ளார். இப் பண்பாடுகளை இளைய தலைமுறையினர் அறிந்து பயன் பெறவேண்டும். கரவையில் பல அறிஞர்கள் இருந்தும் கரவை மக்களின் பாரம்பரியமான சிறப்புக்களை எழுதிய பெருமை "கவி வேந்தன்” திரு. சி. வேலாயுதத்தையே சாரும் என்றால் மிகையாகாது. இவர் பணி வளர வாழ்த்துகிறேன்.
A V
m/*
க. ஆனந்த்குமாரசாமி கரவெட்டி,
13

Page 9
சமர்ப்பணம்
கரவை மக்களுக்குப் பல வகைகளிலும் நேர்மையுடனும் சேவை செய்து மறைந்த அமரர் கரவை பொன், குமாரசாமி அவர்களின் ஞாபகார்த்தமாக இந்நூல் வெளியிடப்படுகின்றது.
- ஆ ժ]rflայfi
14
 

பேர்லின் கலை கலாச்சார மன்றம்
வெளியிட்ட புத்தகங்களின் விபரம். இலவச வெளியீடுகள்.
எழுதியவர்
'கவி வேந்தன்"
சி. வேலாயுதம்
பேர்லின்.
1. இலக்கியம் இந்துமதம் மனிதவாழ்வு. 2. ஜிந்தனைக்கு விருந்து.
3. சூழல். (வினா விடை)
4. சிந்தி. பாகம். 1.
5. வீரத் தமிழன் விடுதலைக் காவியம்.
6. சிந்தி. பாகம். 11.
7. பழமை மொழியும் பழமொழிகள்.
8. சிந்தனைக்கு விருந்து. பாகம். 11.
9. சமதாரம்.
10. பணமும் குணமும்.
11. கரவைக் கோவை.
15

Page 10
கரவை தச்சை விநாயகர்
துதி
நற் குஞ்சரமே நற் கலையின் உருவே
தச்சை விநாயகரே கற்கும் செந்தமிழுக்கு பொற்பும் பொருளும் அருள்வாய் நீயே.
மலரில் மணமாய் மனதில் உணர்வாய் புலனில் கருவாய் விளங்கும் புனித கணபதியே களங்கம் நெஞ்சில் நீக்கி நல்லறிவு சேர்த்து புலமை தருவாயே.
ச்ெல்லாத அறிவுடையார் பொருள் விளங்க எல்லாமும் ஒன்றுமாய் சக்தியும் யுக்தியுமாய் முத்தி தரும் பக்தியுமாய் அருள் சித்தி பெற அருள்வாயே.
தச்சையம்பதிச் செல்லா நீயே தஞ்சமென
16

உச்ச வினை அகற்ற வேண்டும் அடியார்க்கு துன்பம் நீக்கியே இன்பம் அருள்வாயே.
நல்லாயிரம் நலங்கள் பெறவே பல்லாயிரம் வேதங்கள் ஒதி பகலிரவாயப் பக்தியுடன் தேவார நாதங்கள் பாடி ஆதாரமாய் அருள் தேடிடும் அன்பர்களுக்கு எல்லாம் தருவாயே.
சித்தாந்த நாயகனே சிறிய மனமுடையோாக்கும் பெருமனதாய்ப் பாதை காட்டி பாசுரம் பாட வைத்தே பாமரரை ஆட்கொண்டவனே பாடியகாரர் எது உரைத்தாலும் பாண்டரங்கன் பாதம் தொழுவோமே.
- ஆசிரியார்.
“கரவை மக்கள் வழமையும் பழமையும் ஏற்று
தச்சை விநாயகர் திரு அருளைப் போற்று"
17

Page 11
கரவை மக்களின் பாரம்பரிய வழமைகளும் சிறப்பும் கரவை மண்ணின் நீர்வளமும் நிலவளமும்
கரவை மக்கள் சிறப்பையும் பழமையையும் வழமையையும் மண்ணின் மகிமையையும் எண்ணி எழுத வந்தேன் புண்ணியம் சேர்த்திடவே கரவை விநாயகர் அருளையும் கருத்திற் கொண்டேன் என் கருத்தில் பிழை நேர்ந்தால் பொறுத்து மன்னிப்பீரே.
இல்லையென்று சொல்வதற்கே கரவையில் என்ன இல்லை உற்ற செல்வங்கள் யாவும் உண்டே கற்றவர்க்கும் குறைவுண்டோ கரவை பெற்ற கலைஞர்களின் சிறப்பிற்கும் நிறையும் உண்டோ.
பஞ்சமிலாக் கரவை மக்கள் அஞ்சிடாது தானம் செய்வர் துஞ்சிடாத வீரர்தான் துணிந்து நிற்பர் நீதிக்கே அணிந்து கொள்வர் என்றும் புத்தியையே.
18

கனிந்த உள்ளம் கொண்டவரே பணிந்து நிற்பர் பண்பிற்கே விருந்தோம்பலுக்கும் மக்கள் சிறந்த விருந்துபசாரிகளே மறந்தும் மறவார் என்றும் நன்றியையே.
பாசங்கள் பந்தங்கள் காணுவர் நேசமுடன் என்றும் வயோதிபரைப் பேணுவர் இல்லறத்தின் நல்லறங்கள் போற்றிக் காப்பர் கரவை மக்கள்
ஏழைகளையும் தேற்றுவரே.
யாராயிருப்பினும் நேர்மை பிறழாமல் நேராய் இருப்பவர் நேர்மைப் பயிருக்கு வேராய் இருப்பவர் அகமும் சொல்லும் கரவை மக்கள் நேர்மையை அவர் முகமும் சொல்லும்
நாகரீகம் தெரிந்தவரே சிறந்த ஒழுக்கங்களையே கடைப் பிடிப்பர்
பண்புகள் வழக்கங்கள்
19

Page 12
நல்ல நடை உடை பாவனைகள் மாறாது காப்பவரே வழக்கங்கள் பழக்கமாகி
வாழும் கரவை மக்கள் நல் நெறிகளை காத்து வாழ்பவரே.
ஆத்திரம் அறிவை மயக்கும் ஆணவம் அழிவை விதைக்கும் நேத்திரம் நெடும் புகையைக் கக்கும் நெஞ்சமோ நெருப்பாற்றில் விழும் தீய உணர்வுகளின் தீமையை கரவை மக்கள் திண்ணமாக அறிந்தவர்.
சொத்துக்கள் செல்வங்கள் விருப்பமுடன் தேடுவர் தம் சந்ததிக்கும் தேவையென சேமிப்பர் கரவை மக்கள் தம் சுகங்களையும் தியாகம் செய்வர் குடும்பத்தைப் பேணி
காத்து வளர்ப்பவரே.
2O

தொட்டிலில் ஆடும் பச்சைக் குழந்தையை ஒலைத்தடுக்குப் பாயில் படுக்க வைப்பர் ஊர் எள்ளை உரலில் போட்டு இடித்து வடித்து எடுப்பர் குடிக்கவும் சுவைக்கும் தூய நல்லெண்ணை குழந்தை உடம்பில் பூசி இள வெய்யிலில் படுக்க வைப்பர் உடலையும் பிடித்து உரம் கொடுப்பர் விஞ்ஞானம் கண்ட வைற்றமின் டீயை கரவை மக்கள் முன்பே
ஞானத்தால் அறிந்தவரே.
அரசியலில் அங்கம் வகிப்பர் கொள்கைக்குப் பங்கம் வந்தால் கரவை மக்கள்
அருகில் நில்லார் அரசியல்வாதிகளுக்கும் குறைவில்லை கரவையிலே.
அறநெறி வாழ்வை கரவை மக்கள்
கைவிடமாட்டார் விட்டு விட்டு பிறர் கெக்கலிக்க அவமானப்பட மாட்டார்
இப் பண்பை
21

Page 13
இறுதிவரை இழக்கமாட்டார் அது அவர் மதிப்பு தமக்குத் தாமே விதித்த விதிப்பு.
நல்லவரென நாமம் கொண்ட கரவைக் காணிச் செல்வர் நல்லவர் சின்னத்தம்பி சிறார்கள் கல்வி கற்க மாணிக்க வாசக வித்தியாலயம் வித்திட்டார் புகழ் கொண்டார் சித்தமணியமும் வளர்த்தார் முருகேசு உடையார்
பெருமனம் கொண்டே விக்னேஸ் வராக் கல்லூரியமைத்தார் பொன்னையா மணியமும் வளர்த்தார் உயர் கல்வியும் கரவையில் வளர்ந்ததே.
மாடு ஆடு கோழி நாட்டுமுடன் வளர்ப்பர் தேட்டம் தேடிடவே சிக்கனத்தைக் காப்பர் கரவை மக்கள் பொருளாதாரம் வேறு பகுதியில் இல்லை அதன் விகிதாசாரம்.
நல்லவர் என நாமம் கொண்டவர் நேரில் நின்று உய்யும் நீதி உரைத்தவர்
22

பாரிய பொன் பொருள் பூமி படைத்தவர் கொட்டன் எறிந்து காணிகளுக்கு எல்லை நட்டவர் மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தவர் மோதிரக் கைகளென நாமம் பெற்றவர் உரிய உதவிகள் புரிந்து கரவை மக்களை வாழவைத்தவர் நீதியையும் புண்ணியத்தையும் நெருக்கமாய்க் கைப்பிடித்தவர் வாழ்வின் இலக்கணம் விளக்கியவர் குலப் பெருமையைக் காத்தவர் கரவை மக்கள் நலனை சிரசில் கொண்டு சேவை செய்தவர் பரம்பரைப் பெயர்களுக்கே குறைவில்லை கரவையிலே கரவை வேலன் பரம்பரை முதலியார் பரம்பரை மணியகாரன் பரம்பரை
உடையார் பரம்பரை விதானையார் சந்ததி நல்லவர் பரம்பரை பாட்டா பரம்பரை பாரம்பரிய பரம்பரைகளின்
சிறப்பு என்றும் அழியாதே.
23

Page 14
கோயில்கள் போல பாடசாலைகள் காப்பர் சந்ததிகளின் நன்மைக்கே சுற்றங்கள் பாராது பெற்றோர் ஆசிரியர் சங்கம் அமைப்பர் ஒற்றுமையாய்க் கல்விக் குற்றம் களைவர்.
விண்கலம் செலுத்தும் பெண்ணிற்குக் கல்வி கண்கலம் போன்றது வேளைக்கே பெண் கல்விக்கு வித்திட்ட சித்தமணியம் அமைத்தார் சரஸ்வதி வித்தியாலயம் பெண் பிள்ளைகள் கூடி பண்புடன் கற்கும்
பெண் பாடசாலை பெண் கல்விக்கும் விடுதலைக்கும் வித்திட்ட அறிவுச் சாலையே.
போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் பொருள்தேட வந்து இலங்கையை ஒரு காலம் அடிமை கொண்டனரே தொடுத்தனர் அதிகாரத்தை இந்துக் கோயில்களை அழித்தனர் மக்கள் வழிபாட்டைத் தடுத்தனர் கரவை மக்கள் அடுப்பாய் அமைத்தனர் சமைத்தனர் அடுப்பு நாச்சியென பெயரிட்டுத் தெய்வத்தை நினைத்தனர்
தெய்வ வழிபாட்டை
24

எக் காலமும் கைவிடாதவர்
கரவை மக்களே.
வீட்டுக்கு வீடு மக்கள் ஆதரிக்கும் குல தெய்வங்கள் வருடம் ஒரு முறை சுற்றங்கள் கூடி பலகார மடை போடுவர் பட்டுப் புடவை சாத்துவர் வடைமாலையும் போட்டு - வணங்கி அருள் பெறுவர் மோதகம் வடை புக்கை முறுக்கு அரியதரம் பாக்கு வெற்றிலை பழங்கள் படைத்து வேண்டுவர் அன்புப் பந்தங்களுக்கு பலகாரம் பங்கிடுவர் வேண்டும் அடியார்க்கும் அடிமைகளுக்கும் கொடுப்பர் மடைகாலம் வந்தால் மக்கள் குதூகலம் கொடிகட்டிப் பறக்கும்.
அகங்காரம் அநீதிகள் அகத்தில் கொள்ளார் அகற்றிடுவர் தீமைகளை பாவம் செய்வோரை
25

Page 15
கரவை மக்கள்
பாதியிற் கழித்திடுவாரே.
பெருமைக்கும் சிறுமைக்கும் மக்கள் வறுமைக்கும் முயற்சியை மருந்தாக முப்பொழுதும் கொண்டவரே கரவை மக்கள்
உயர்ச்சியாய் வாழ்பவரே.
டாம்பீகம் விரும்பார் பிறர் விருந்தையும் எளிதில் விரும்பார் தன்மானக் கோட்டை கரவை மக்கள்
வெகுமானத்திற்கும் தாண்டார்.
கூடுவிட்டு ஆவி செல்லும்போது கூடிவருவதெது செய்தவினை சேரும் செய்தவனையே சாரும் நன்மையும் தீமையும் பிறர்தர வாரா மனித தத்துவத்தின் சத்தியத்தை கரவை மக்கள் சித்தத்தில் பதித்தவர்.
சாஸ்திரம் கேட்பர் நினைத்த காரியம் சொல்ல
26

கரவையிலே சாஸ்திரம் அறிந்த சாஸ்திரிகள் பலர் உண்டு மக்கள் தம் நன்மை தீமைகளை திண்ணமாக அறிய பாக்கு வெற்றிலையில் தெட்சணை வைத்து பரிவுடன் கேட்டறிவர் இது மக்கள் வழமையே.
சந்ததிப் பெருமைகளை சந்தர்ப்பம் வந்தால் பேசுவர் சந்தர்ப்பவாதிகளை கரவை மக்கள் எச் சந்தர்ப்பத்திலும் விரும்பார் துரும்பு போல விரட்டிடுவர்.
செய்வினைகள் சூனியங்கள் செய்த சிலரும் வாழ்ந்தனரோ உய்யவில்லை உருக்குலைந்தனரே ஆதிமுதல் கரவை மக்கள் செய்வினை மதபேதம் வெறுத்தவரே அன்பே தெய்வமென வகுத்தவரே.
குடும்பச் சண்டைகள் சமூகப் பிணக்குகள் கடும் பகை வராது நீதி சமைப்பர் கரவை மக்கள்
கொடுமைகள் நீக்க
27

Page 16
கற்றோர் நடு நிலைமை ஏற்பர் அருமைகள் அறிந்தே சமாதானம் காப்பவரே இவர் பண்பை நினைத்தால் வார்த்தைகள் வராமல்
வாய்க்குள்ளே இருந்துவிடும்.
இனத்தை இனம் பகைத்தால் கனக்க வரும் துன்பம் இன்னொருவர் நுழையாரோ இன்னொருவர் இடை நுழைந்தால் இனமே அழியாதோ மனம் கொண்டு மக்கள் ஒற்றுமை வளர்ப்பவரே.
எவரெவர்க்கு எவ் வாழ்வு என வகுத்து வைப்பது அவரவர் விதியென அறிந்து வாழ்பவர் கரவை மக்கள்
பிறவிப் பயனும் அறிந்தவரே.
கொலை களவு விரும்பார் மலையுருவாய்க் கலை கல்வி கலாச்சாரமும் மதிப்பரே குலையாது தன்மானம் காப்பர் சிலை உருவான பெண்களும் விலையில்லாக் கற்புக் காப்பவரே.
28

அந்தி நேரம் இரவிற்கு முந்தி
கரவைத தாய தன் கருவூலத்தில் சுமந்த அன்புக் குழதைக்கு உணவு ஊட்டுவாள் தன் அழகு நிலாவை இடுப்பில் ஏந்தி முற்றத்தில் உலாவி தேயும் நிலாவைக் காட்டி தேயா நிலாவிற்கு சோறுட்டி மகிழ்வாள் பிள்ளைப் பராமரிப்பை வெள்ளை நிலாவும் பார்த்து பொறாமைப்படும் தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை என்பதற்கு கரவைத் தாய் சிறந்த உவமையே.
அந்தணர்க்கும் ஆசிரியர்க்கும் முதியவர்க்கும் பெற்றோருக்கும் எந்த நேரமும் மரியாதை கரவை மக்கள் பார்த்திருந்து செய்த உதவிகளுக்கு என்றும் மறக்காமல் காத்திருந்து
செய்வர் நன்றிக் கடன்.
29

Page 17
புன்னகை மலர்வுடன் கரவைப் பெண்கள் கழுத்தில் பூக்கும் பவுண் நகைகள் சங்கிலி சறடு காப்பு சுமங்கலிக்குத் தாலி ஆண் பெண் காதுகளை அலங்காரம் செய்யும் கடுக்கன் கஷ்ட காலங்களிலே பவுன் நகைகள் கை கொடுக்குமே காலப் போக்கில் சறடு பதக்கமாய் மாறியதே.
மரண வீடுகளிலே வேற்றுமை மறந்தே மனமுவந்து கூடி துன்பம் பகிர்வர் திருமணக் கொண்டாட்டங்களில் அழைப்பை ஏற்று கூடி மகிழ்ந்து வாழ்த்துவர் சன்மானம் கொடுத்துப் போற்றுவர் ஒருமனமாயப் பொதுப் பணிகள் ஒன்று கூடிச் செய்வர் வாடி நிற்கும் வறியவர்க்கும் வாழ்வு தேடிக் கொடுப்பர்.
பனைமரத்தின் பயன் அறிவர் சில உடற் பிணிக்கும்
3O

பனைப் பண்டங்கள் உண்பர்
தித்திக்கும் பாணிப் பனாட்டு
தாகம் தீர இனிய கருப்பநீரும் குடிப்பர்.
பனங்கிழங்குதான் காய்ந்தால் ஒடியல் இடித்து மா எடுத்து ஒடியற் புட்டவிப்பர் அவித்த பனங்கிழங்கை உரித்துச் சூரியவெப்பத்தில் காய வைப்பர்
காய்ந்த புளுக்கொடியல் உண்டு கொடுத்து மகிழ்வர்.
ஒடியல் கூழ் கூடிக் குடிப்பர் படியாத மாட்டையும் பழக்கி எடுப்பர் வெடி கொளுத்தி வெற்றி கொண்டாடுவர் மாட்டுச் சவாரிக்கும் கரவை பேரானதே மாட்டுச் சவாரி விழாவை பார்த்த கண்கள் ஒன்றுமே தோன்றாது ஒரு விநாடி நின்றுவிடும் தொன்றுதொட்டு நடாத்தும்
31

Page 18
மாட்டுச் சவாரி
கரவைக்கு மகிமையே.
கள்ளுக் குடிப்பவருமுண்டு கரவை மக்கள் அவர்களை தள்ளி வைப்பதும் உண்மையே குடிகாரரென எள்ளி நகையாடுவர்
கடிந்து திருத்தியும் எடுப்பர்.
கருப்ப நீர் காய்ச்சி பனங்கட்டி செய்வர் தினம் தேநீர் குடிப்பதற்கு பனங்கட்டி ருசிப்பர் சினம் காட்டும் பிணியும் சேராதே குழந்தைகளுக்கு மருந்தாய் பனங் கற்கண்டும் செய்வாரே.
ஊர் வயல்களிலே விளைந்த நெற்பயிரை வெட்டிக் கட்டி போர் வைப்பர் நல்ல நாள் பார்த்தே வயலில் நெல்லடிப்பர் நெல் அடிக்கும் வேளை எல்லோரும் உண்ண சோறு கறி புட்டுடன்
படையல் படைப்பர்
32

கூலிகளுக்கும் கொடுத்து உண்டு மகிழ்வர் வியர்வை சிந்தி உயர்வாய்ச் சேவகம் செய்த கூலிகளுக்கு குல்லத்தால் அளந்து நெல்லும் கொடுப்பர் மீதி நெல்லை மூட்டைகளில் கட்டி நாட்டமுடன் மாட்டு வண்டிகளில் வீட்டிற்குக் கொண்டு செல்லும் காட்சிகளை இனிமேல் என்று காண்போம்.
வீடு தோறும் நெற் களஞ்சியம் பாடுபடுவர் கரவை மக்கள் கூடி விளையாடுவர் வாலிபர் கிளித்தட்டு அம்பு குடுகுடு கிட்டியுமே.
பனை வளம் தென்னை வளம் தினை சாமி குரக்கன் நினைத்தபடி செழிக்கும் பூமி அனைத்துத் தானியங்களும் கரவை மக்கள் - - காலம் கணித்து பயிர் செய்வர்
பயன் பெறுவர்.
33

Page 19
நெல் வயல்கள் தோட்டங்கள் புல் வளர்ந்த
புல் வெளிகள் காலநடைப் பசுக் கூட்டங்கள் ஆட்டுப் பட்டிகள் கரவைக்கே பால் வளமும் நெல் வளமும் சிறந்த தேட்டங்களே.
கரவை மக்களின் நெல் வயல்கள் மன்னவன்திடல் மெத்த உண்டான் அந்தணத்திடல் அம்பலன்வெளி அத்துளு அந்திரான் கப்பு தூ "நுணுக்கை வைரவெல்லன்
கரம்பான் தம்பான் கட்டைக்காடு தில்லையம்பலம் மாது எனப் பல சிறப்புப் பெயர்கள் பட்டியலில் அடங்காதே.
ஒரு கல் எறிய ஒரு கல் எடுக்க ஓராயிரம் தென்கிளியாம் ஊஞ்சல் கட்டி ஆண் பெண் ஒன்று Gin tą. பாட்டுப் பாடி ஆடிக் குதூகலிப்பர் சிவராத்திரித் திருநாள் சிவன் அருள்பெறும் பெரு நாளே
34

குரவைக் கூத்தும் குலமுறைப் பாட்டும் இரவை இனிக்க வைக்கும் சிவராத்திரி திருநாளில் கூடி மகிழ்ந்து கொண்டாடுவர்.
சட்டம் என்ற பட்டமும் பணக் காற்றின் பக்கம் பறக்குமே கணக்காக மூங்கில் தடியும் மூவர்ணக் கடதாசியும் கொண்டே வண்ண வண்ணப் பட்டங்கள் வித வித வடிவங்கள் கரவை வாலிபர் கூடுவர் பட்டம் கட்டுவர் போட்டி போட்டே பட்டம் விட்டு மகிழ்வர்.
எழுத்தறிவித்தவன் இறைவன் எழுத வைத்தவனும் அவனே தொழுது வேண்டியே கரவையின் சிறப்பை வரலாற்றின் முகப்பை எழுதி முடிக்க உயர் அறிவுள்ள தம்பிகளுடனும் கலந்தேன் சிவா நாமம் கொண்ட தம்பியும் உரைத்தார் கதிர் நாமம் கொண்ட அண்ணலும் வகுத்தார்
35

Page 20
சாமி நாமம் கொண்டவரும் மேவி ஊக்கம் தந்தார் அக் காலப் பெயர்களும் அர்த்தம் உள்ளனவே புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் இவர் கரவையை மறக்கவில்லை.
அறிஞர் பலரும் கருத்திற் கொள்ளும் அறிவுரைகள் தந்தனர் துணிந்து ஏட்டில் வந்த பரம்பரைகளை மீட்டுகிறேன் மாப்பாண முதலியார் மதிப்புள்ள நல்லதம்பி உடையார் வேலுடையார் பரம்பரை சித்த உடையார் வம்சம் கறுவலுடையார் பரம்பரை முருகேசு உடையார் வம்சம் காத்த உடையார் வம்சம் சீனுடையார் வம்சப் புகழும் கரவையின் சரித்திரத்திலே உரிய இடம் பெற்றனவே.
தை பிறந்தால் வழி பிறக்கும் மெய்யை வருத்தி விருப்புடன் வயலில் நெல்லை விதைத்து பயன் பெற்று வாழ விரும்பும் பாங்கான கரவைக் கமக்காரர் நல்ல நாள் பார்த்தே விளைந்த நெற்பயிரின்
36

கதிர் அறுத்தெடுப்பர் புதிர்ப் பொங்கல் செய்வர் கைப்பிடியளவு கதிர் வீட்டில் கட்டித் தொங்க விடுவர் சோறு கறி சமைத்துப் படைத்து நாலுபேரும் கூடி உண்டு மகிழ்வர் அடிமை குட்டிகளையும் உணவு கொடுத்து அணைப்பர்.
தைப் பொங்கல் விழா கரவை மக்கள்
புது நெல் குத்தி புதரிசி போட்டு பாலும் விட்டு வழியப் பொங்குவர் மனமும் குதூகலத்தில் பொங்கும் காற்றும் மழையும் வெய்யிலும் போற்றக் கொடுக்கும் சூரியனுக்கே படைத்து நன்றி செலுத்துவர் புக்கை மற்றயவர்களுக்கும் கொடுப்பர்.
தில்லையம்பலப் பிள்ளையார் எல்லையில்லாப் பிணிகளிலிருந்தே கால் நடைகளைக் காப்பவர் மக்கள் நம்பும் பிள்ளையாரே மாடு ஆடுகளுக்கு நோய் வந்தால் பரிகாரம்,செய்ய
வீட்டுக்கு வருவார்
37

Page 21
மாட்டுப் பரிகாரியார் யாழ்க் குறிச்சி பூராவும் மாட்டுப் பரிகாரியார்
புகழ் பரவியதே.
மாரிகாலம் வருமுன்பே விறகு அரிசி மா கருவாடு ஒடியல் மோர் மிளகாய் பாவற்காய் வற்றல் மிளகாய்ச் செத்தல் புளுக்கொடியல் பனாட்டு அடுப்புப் பற்ற பனையின் பன்னாடை வளர்க்கும் ஆடு மாடுகளுக்கு வைக்கோல் தவிடு புண்ணாக்கு செப்பமாகச் சேகரிப்பர் அடைமழை காலத்திலே அருந்தாமல் பயன்படுத்துவார் அன்று வந்த அடைமழை இன்று எங்கு சென்றதோ?
ஆதிகால கரவை மக்கள் இயற்கையிலிருந்து போதனை பெற்றவர் இயற்கை வளத்தை இயல்பாய்க் காத்தவர் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தவர் மாட்டுச் சாணி ஆட்டுப் புளுக்கை இலை குளைகளை இயற்கைப் பசளையாக்கி
மண்வளம் பெருக்கி பயன் பெற்றவரே.
38

தொண்டில் ஊக்கமுள்ள கரவை அடியார் அமைத்த சண்டில் வயிரவர் கோயில் முன்பே சண்டிக் குளம் மக்கள் கூடுவர் மனம்போல் நீராடுவர் தனம் தரும் கால் நடைகளும் இங்கு வந்தே தாகம் தீர்க்கும் பொங்கும் நீர் மாரியிலே சண்டில் ஏரியும் கரவைச் சரித்திரத்திலே இடம் பெற்ற குளமே.
வயலில் விளைந்த நெல்லை காக்கும் காவற்காரர் காலமறிந்து உடையவர் வீடுகளுக்கு சென்று தம் சேவையின் அடையாளமாய் றால் அல்லது பயறு கொடுப்பர் உடையவர்கள் பெற்று உதவியும் ஆசியும் நல்குவர் நெல் அடித்து முடியும்வரை காத்துக் கொடுப்பர் ஊதியமும் பெறுவர் வயல் காவற்காரர்களே.
கல்வெட்டுப் பாக்கள் நெஞ்சைத் தொட எழுதுவார் மரம் தளிர்விடுத்து "ہا- الا.
பூப்பதுண்டோ
39

Page 22
பகலவனார் திசை மாறி உதிப்பதுண்டோ விட்ட உடல் தன்னில் உயிர் சேர்வதுண்டோ இயற்கை அறிஞன் கிருஷ்ணாழ்வார் தேற்றம் எழுதுவதிலும் கைதேர்ந்த இயற்கைக் கவிஞனே.
பூவரச மரம் புளிய மரம் புவி அறிந்த வேப்ப மரம் நாட்டிக் காத்து வளர்ப்பர்
நல்ல தேட்டமும் தேடிடுவர்.
பன்னைக் குழை பாவட்டம் குழை பூவரசம் குழை பசுங் குழைகள் பசளையாகத் தாட்டு புகையிலை வெண்காயம் மிளகாய் கத்தரி புளகாங்கிதமாய் வளர்ப்பர்
பயன் பெறுவர்.
முள் முருங்கை வளர்ப்பர் ஆடு மாடுகளுக்கு தீனியாக்கி பால் பெருக எடுப்பர்
ஆட்டுக் கடா நாம்பன் மாடு பயனிறிந்தே வளர்ப்பர்.
40

வயல்களிலே எள்ளு விதைப்பர் விளைந்த எள்ளை அரிவாளால் வெட்டி எடுப்டர் புரிந்தவர்க்கே புரியும் நல்லெண்ணையின் பயன்களே.
திருவெம்பாவை விரத காலம் அதிகாலை சில அடியார்கள் தெருத் தெருவாய்ச் சென்று சங்கு ஊதுவார் மக்கள் எழும்பி புனிதமாய்க் கோயிலுக்குச் செல்வர் தீப ஆராதனை கண்டருள் பெறுவர் திருவெம்பாவை வணக்கம் முடித்து நெற்றியில் நீறும் சந்தணமும் குங்குமமும் இட்டு மக்கள் முகமலர்வுடன் வீடு செல்லும்
காட்சியைக் கண்டால் கண்கள் குளிருமே.
மனித பிறப்பின் நியதி உணர்வுகளின் களம் பருவத்தின் பாடங்களை புனிதமாய்ப் பயில ஆண் பெண் உறவு கொண்டு அகமகிழ்ந்து கூடும் வீடு கடும் பகை வரினும் படும் வேதனை தாங்கி விடாது தொடரும் காவியம் திருமணங்கள் என்றும் பந்த பாசங்களிடையே நடைபெறும்
41

Page 23
சொந்தத்தில் பெண் ஆண் பார்த்து முறைப்படி பேசி பெற்றோர் முடிவு செய்வர் திருமணங்கள் நடத்தி பொருள் பண்டம் கொடுப்பர் மங்கள காரியமென மகிழ்வர்.
மாரி காலம் மக்களுக்கோ வேலை குறைவு பனை மரத்தின் குருத்தோலை எடுத்துப் பதப்படுத்துவர் பாய் குட்டான் பெட்டி பறி உமல் நீத்துப் பெட்டி தடுக்கு பீலிப்பட்டை பனை ஈக்கால் துலாக்கயிறு பலவித பன்ன வேலைகள் செய்வர் பயன்படுத்துவர் தலைக்குப் போடத் தொப்பியும் பனை ஒலையால் பின்னுவர் ஒலைப் பின்னலிலும் கைதேர்ந்தவரே.
கரவை மக்கள் சரித்திரத்திலே நாடகக் கலை வளர்த்த அமரர் அண்ணாவி ஆழ்வார் முக்கிய கலைஞனாக இடம் பிடித்தாரே கிருஷ்ணர் வேடம் போட்டு நடித்தார் கிருஷ்ணாழ்வார் எனப் பெயரெடுத்தார் அண்ணாவியார் புகழ் என்றும் அழியாதே.
வந்தேன் வந்தனம் என் அரசிற்கே தந்தேன்
42

மந்திரி நமது மாநகர் தன்னில் மாதமும் மும் மழை பொழிகின்றதா நாட்டுக் கூத்து நல்லதங்காள் கதை பாட்டும் பரதமும் பூதத்தம்பி நாடகம் பார் புகழும் அம்பிகாபதி அமராபதி நாடகம் அன்று கரவையிலே பல நாடகங்கள் கூத்துக்கள் மேடை ஏறின மனித உள்ளங்கள் தேறின இன்று கலைகள் நாறின வேதனைதான் மீறின.
பாம்புக் கடிக்கும் தேள் பூரான் நோய் நொடிக்கும் பாம்புப் பரிகாரியார் வீம்பில்லாது மருந்து செய்வர் கரவை வைத்தியர்கள் கைவைத்தியமும் தெரிந்தவர் பயித்தியத்திற்கும் பரிகாரம்
பாங்காய்ச் செய்வாரே.
டாக்டர் என்ஜினியர்
பயிற்றப்பட்ட ஆசிரியர்
43

Page 24
திட்ட வல்லுனர் பட்டதாரிகள் பல் வைத்தியர் தொழில்நுட்ப மேதைகள் கல்வித் தகமைகளுக்கே கரவையில் என்றும் குறைவில்லை.
சட்டத்தரணிகள் கட்டிடக் கலைஞர்கள் நட்டமிலா வியாபாரிகள் ஊக்கமுள்ள கமக்காரர் நாடகக் கலை வளர்க்கும் அண்ணாவிகள் சங்கீத வித்துவான்கள் கரவை மக்கள் சிறப்பின் அணிகளே.
வித்துவான் பண்டிதர் எம்.ஏ.பி.ஓ.எல்.பி.கம். பி.ஏ.பி.எஸ்.சி. பால பண்டிதர் கல்விப் பட்டம் பெற்ற கல்விமான்களுக்குக் குறைவில்லை பலர் அரச சேவையிலே பணிபுரிந்து புகழ் பெறுவர் தேங்கும் செல்வம் கரவைக்கே.
முருங்கைக் காய்க்கறி முல்லையிலைக் குழம்பு முசுட்டை வரை தக்காழிக் கறி சொதி எக்காலமும் முடியுமா இவ் உணவுகளை மறக்கவே.
44

ஒடியல் மாவுடன் கீரைவகை சேர்த்து கீரைப் புட்டவிப்பர் சம்பலுடன் கறி சேர்த்து நம்பி உண்பர் சகல சத்தும் சேரும் உடல் நலத்திற்கே.
பாசிப் பருப்புக் கறி பசுமை உள்ள பயித்தங்காய்க் கத்திரி வாழைக்க்ர்ய் பால் வெள்ளைக் கறி பூசணியும் மரவள்ளியும் சேர்ந்தால் மனிதனின் நா இனிமை கொள்ளாதோ வாழைக்காய்ப் பொரியல் வாழைக்காய்ச் சம்பல் பாவற்காய்க் கறியை நினைத்தால் பசி தேடி வாராதோ பசுந்தளிர்க் கீரையும் தயிர் நெய்யுடன் அறு சுவையும் சேர்த்தே படையல் படைப்பர் கரவை மக்கள் சமையலிலும் கை தேர்ந்தவர்களே நினைத்தால் நா ஊறுமே.
45

Page 25
ஆடி அமாவாசை கந்த சஷ்டி விரதங்கள் தேடி அனுசரிப்பர்
கரவை மக்கள் காத்தோட்டியங் காய் தேடி எடுத்தப் பொரிப்பர் வாயுக் கோளாறுகள் நீக்க நாடி உண்பர் வேப்பம் பூவில் செய்த வடகமும் பொரித்தே வயிற்றுப் பிணி நீக்க வாஞ்சையுடன் உண்பர் ஊறுகாயும் சேர்ந்தே உட்செல்லும் பஞ்ச பூதங்களும் வணங்கும் இவர் பாரம்பரியத்தையே.
தலை வாழையிலை போட்டு கலை வாஞ்சையுடன் சோறு கறி படைத்து மறைந்த பிதிர்களுக்கே நிறைந்த பூசை கொடுப்பர் சுற்றம் சொந்தம் அழைத்து சூழ்ந்திருந்து மகிழ்ந்தே படையற் பந்தியிலே வரிசையாக இருந்து உணவு அருந்தும் காட்சி மனதைவிட்டு அகலாதே.
ஊர் வயலில் விளைந்த கறுப்பன் நெல் எடுத்து
46

பதமாகக் கையாற் குத்தி அரிசிமாப் புட்டவிப்பர் கொளுக்கட்டையும் கையாற் பிடித்தவிப்பர் அதன் ருசியை உண்டவர்கள் உணர்வர் கண்டவர்களையும் கவருமே.
எள்ளை உரலிற் போட்டு கையால் குத்தி நல்லெண்ணை வடித்து எடுப்பர் எள்ளுப் பாகும் செய்வர் பனம் பழக் காலம் பனம் பணியாரம் சுடுவர் மனம் மகிழ்ந்து உண்பர் தினம் வேலை செய்யும் கமக்காரர்கள் ஒடியல் புட்டவித்து நல்லெண்ணை சேர்த்து உடல் வளத்திற்கு உண்பர்.
அன்று வாழ்ந்த மனிதருக்கு இன்றுபோல நோய்கள் இருக்கவில்லை உடலும் பெருக்கவில்லை பித்தம் வாதம் நெருங்கவில்லை இயற்கை உணவு உண்டு நெடுங்காலம் வாழ்ந்தனரே.
மாங்கனி மரங்கள்
தேன் கதலி
47

Page 26
கப்பல் வாழை பச்சை அரிசி முத்துப் போல பழுத்து வெடித்து இச்சை கொள்ள வைக்கும் மாதுளம் பழம் பலாமரப் பழத்தை நினைத்தால் சிலாவி வரும் உமிழ் நீர் அன்பு குலாவி உண்டு கொடுத்து மகிழ்வர் கரவை மக்கள் விற்றுப் பணமும் பெறுவர் விந்தையில்லை.
கொய்யாப் பழம் கொழுத்த அண்ணாப் பழம் பல்லும் நாவும் புளிக்கும் கசக்கும் இனிக்கும் நெல்லிப்பழம் இனிக்க உண்டால் உணவை ஜீரணிக்கும் மலச் சிக்கல் போக்கும்
பப்பாசிப் பழம்
பழவகைகளுக்கே என்றும் பஞ்சமில்லை கரவையிலே.
சமயச் சண்டைகள் சற்றுமில்லை அஞ்ஞான அறிவில் பற்றுமில்லை கரவை மக்கள் அகப்பொருட் பிரபந்தம்
48

அகண்ட பரிபூரணம் அகத்திற் கொண்டே இறைவழி செய்யும் மக்களே.
ஆன்மீக வளர்ச்சியை நலமாகக் கொண்டவர் ஆத்ம ஞானம் அறிந்தவர் தெய்வ அருளை நன்கு புரிந்தவரே.
வயோதிபர்கள் சேர்ந்து வாஞ்சையுடன் பேசி மகிழ்ந்து புதினப்பத்திரிகைகள் சஞ்சிகைகள் படித்து அறிவைப் பெருக்க பொது வாசகசாலைகள் வாலிபரும் பயன் பெறும் வாசகசாலைகள் பல உண்டு.
கோயில் மணி ஒசை
காலம் அறிந்து
ஒலிக்கும் கரவையிலே வேளைக்கே மக்கள் எழுந்து காலைக் கடன் முடிப்பர் கடவுளை வேண்டுவர் விபூதி இல்லாத வீடு இல்ல கரவையிலே காலை மாலை வேலை செய்வர் கண்ணியமாய் கரவை மக்கள் கடமை செய்பவரே.
49

Page 27
கரவை தச்சன்தோப்பு விநாயகரின் திருவிழாக் கொண்டாட்டங்களும் - திருக்கோலங்களும் சிறப்பும் - கரவை மக்களின் தெய்வ ஈடுபாடுகளும்.
பாரத நாட்டிலிருந்தே பேர்போன ஆசாரியார்களையும் சைவச் சிற்பிகளையும் வரவழைத்தே சைவத் திருமுறைக்கேற்ப தச்சை விநாயகருக்கே கருங்கல்லால் கோபுரங்கள் கரவை மக்கள் அமைத்தனர் மனஉரம் கொண்டவரே அறநெறியும் நிறைந்தவரே.
கரவை விநாயகர் இறைமை மறந்தால் முறைமை கெடும் நிலவும் வளமும் நிலைக்காது என்பதை கரவை மக்கள் நினைவில் நிறுத்தியவர் எந்த நாமத்தை விதைத்தால் ஞானப்பயிர் வாக்கில் முளைக்குமோ
எந்த நாமத்தை உச்சரித்தால் அபாயம் வராதோ அந்த சிவாயநம
5 O

நாமத்தை உச்சரிப்பர் கரவை மக்கள் தெய்வ யோகத்தைப் பெறுபவரே. வண்ண வண்ணச் சித்திரங்கள் வடிவான தெய்வ சிலைகள் முன்னும் பின்னும் ஒளி வீசி கோபுரத்தில் காட்சி தரும் அன்னநடை போடும் மயில்களும் அங்குவந்தே இடையிடையே அகவுமே.
தச்சை விநாயகரின் திருவிழாக் காலம் கரவை மக்கள்
ஒன்று கூடி நடாத்தும் பெருவிழாக் கோலம் பத்துத் திருவிழாவும் பகலிரவாய் நடாத்தும் அடியார்களின் அருள் ஞாலம் விலகமுடியா மக்கள் ஒன்று கூடும் அன்புப் பாலம் அகமகிழ்ந்து பார்ப்பதற்கே இரண்டு கண்கள் போதாதே.
கரவை மக்கள் மனதிலும் அருள் சிரசிலும் நடமாடும் வெகு சீக்கிரம் இதயங்களில் தச்சை விநாயகர் அன்பு அரும்பும் தீப ஒளி கண்டு
51.

Page 28
எழும் பேரோசை 'அரோகரா’ அதில் கரையும்
• 2σιΙή ஒசை.
கரவை மக்களின் இதயங்களிலே இடம் பிடித்தவர் கரவை விநாயகர் மக்கள் பிணி துடைப்பவர்.
கரவையிலே வாழும் குடும்பங்கள் ஒன்று சேர்ந்தே பங்களிப்புச் செய்வர் தச்சை விநாயகரின் ப்த்துத் திருவிழாவும் சைவ திருமுறைப்படி அருள் ஓங்க நடாத்துவாரே விநாயகர் அருள்பெற்று உய்வாரே.
பிறப்பவை எல்லாம் இறைவனிடமிருந்தே பிறக்கின்றன இறப்பவை எல்லாம் இறைவனைச் சேரவே இறக்கின்றன உயிர்கள் உள்வாங்கும் மூச்சும் நாக்கின் பேச்சும் இறைவனின் கருணையே இந்துமத தத்துவங்களை
கரவை மக்கள்
52

இதயத்தில் பதித்தவர்.
தச்சை விநாயகர் ஆலயத்தைச் சுற்றியே வானைத் தொடும் தென்னை மரங்கள் தேன் சொரியும் இலுப்பை மரத்தின் பூக்கள் வில்வை மரமும் வீம்பின்றி வளரும் பூந்தோட்டக் கொல்லையும் நறுமணம் கமழும் செழிப்பான இயற்கை தந்த சூழலிலே வீற்றிருக்கும் தச்சை விநாயர் உச்ச அருள்புரிந்து காப்பவரே.
எம்பிரானே கணபதி தச்சையம்பதியிலே வீற்றிருக்கும் குணபதி நீ எல்லாம் வல்லவன் நல்லவர்க்கும் பொல்லார்க்கும் நடுவிலிருக்கும் நல்லவன் ' மக்கள் போற்றுவர் விநாயகர் அருள் ஏற்றுவர்.
புதுமைமிகு விநாயகர்க்கே புதிய மணிமண்டபமும் கரவைப் பக்தர்கள் சிறப்பாகச் சமைத்தனரே தச்சை விநாயகரின்
53

Page 29
புதுமை அருள் ஓங்க புதிய கோபுரத் தோற்றம் அரும் சிற்பக் கலைகளின் ஏற்றம் கோபுர அழகை விமர்சிக்க அமுதத் தமிழ் போதாதே.
தச்சை விநாயகர் புதுமையோ புதுமை புனிதம் அங்கு பூக்களாய் விரியும் புண்ணியம் அங்கு புனல்களாய் வழியும் அறம் பொருள் இன்பம் நல்கும் பரம்பொருள் அவனே.
சித்தி விநாயகரின் பக்தி கரவையில் பலித்தது ஆதலால்தான் கரவை அழகு கொழிக்கிறது அனைத்தும் செழிக்கிறது.
அத்துளுக் குளத்தின் வற்றாத நீர் ஊற்றும் வித்தெழுந்து விளையும் உயர்நெற் பயிரின் காட்சிதனைப் போற்றும் புத்தெழா நிலவளமும் நீர் வளமும் காக்கும் புனித தச்சை விநாயகரை போற்றுவோம் என்றுமே.
54

பச்சைக் குழந்தைபோல இச்சை அகற்ற இனிமையாய் வேண்டுவோர்க்கு எச்சமிலாது சொற்பனத்திலே உச்ச வடிவம் காட்டி பிணியகல அருள் புரிந்தவனே சித்தம் குளிர என்றும் அருள்வாயே.
அன்பர்களும் அடியாரும் அந்தணரும் பாவலரும் இன்ப அருள் பெறுவதற்கே தச்சை விநாயகரை வேண்டி ஆராதனைகள் தந்தே திண்ணமாகத் தூய்மை பெற்று வாழ அருள்வாய் கணபதியே.
தச்சை விநாயகரின் திருவிழாக் காலத்திலே கரவை ஊர் அருட்கோலம் தேர் ஊர்ந்த வீதிவரை மக்கள் அருள் வேண்டும் காட்சிகளைக் காண மேலும் கண்கள் வேண்டுமே.
கடலை கச்சான் காப்பு இனிப்பு வியாபாரம் படலைவரை சந்தன மணம் சிறார்கள் விளையாட சிதறி ஓடும் காட்சிகள் வீதிகளில் விடலைப் பருவத்தின்
55

Page 30
விருந்து வீம்புகள் அடியார் கூட்டத்தின் அலங்காரக் கோலங்கள் திருவிழாக் காட்சிகளை கண்டு களிக்க இரண்டு கண்கள் போதாதே
அடியார் கூட்டம் அடியசைத்து அடி அழித்து வணங்கும் அருட் கோலம் ஆடிக் கைகோர்த்தே சிறார்கள் அகமகிழ்ந்து தேவாரம் பாடி வேடிக்கையாக வேடம் போட்டே வேட்டைத் திருவிழாவையும் சோட்டையின்றியே சிறப்பிப்பர் கரவை மக்க்ள நாடுவதும் என்றும்
வாட்டமிலா வாழ்வையே.
தச்சை விநாயகரின் தேர் தீர்த்தம் பெரும் முகூர்த்தமே விரதம் அனுட்டிப்பர் கரவை மக்கள் சிரந்தாழ்த்தி தெய்வத்தை வேண்டுவர் தேங்காய் உடைப்பர்
பாங்காய் அருள் பெறுவாரே.
56

பிறப்புப் பிணியகற்றும் தச்சை விநாயகரின் திருவிழாக் காலம் ஆத்மீகம் வளர்ப்பதற்கே அறிவைச் சேர்ப்பதற்கே பல அறிஞர்கள் பிரசங்கம் கோயில் வீதியில் மக்கள் கூடி முகமலர்வுடன் பிரசங்கம் கேட்கும் காட்சி கரவை மக்கள்
அகத்தைவிட்டு அகலாதே.
மாரிகாலக் கோலம் நெற்பயிரின் பசுமை மாந்தளிரின் ஜாலம் குளவளமே அத்துளு நீர் பெருகி
கருங்கடல் போல அத்துளு அம்மன் வாசலில் சித்தமுடன் அலையடிக்கும் முத்தம் கொடுக்கிறதோ மெத்த அருள் பாலிக்கும் அத்துளு அம்மனுக்கே. கத்தை கத்தையாய் பசும் பற்றைகள் செடி கொடிகள் கோபுரமாய் இயற்கை மரங்கள் இயற்கைப் பசுமையின் நடுவே இன்பமுடன் வீற்றிருப்பாள் அம்மன் இவள் புகழ் பாட
57

Page 31
இனிய தமிழ் இல்லையே அத்துளு அம்மன் கரவை மண்ணிற்கே அரிய சிறப்பானதே.
பூவிதழ் மந்தாரம் புன்னகை முத்தாரம் தங்கத்தில் புரண்டு துவஞம் மேனியோ அருள் ஒளியாலே தொடுத்த சித்திரப் பெண்ணோ அத்துளு அம்மனின் சிறப்பே சிறப்பு.
ஊரறிய அம்மன் பொங்கல் உலகறிய வைபோகம் வான வீதியில் விளையாடும் மாலை நேரத்து மேகங்கள் பொங்கற் புகையில் மறையும் அடிவானம் கறுக்கும் பற்றை சூழ் வீதியில் மக்கள் கூடிப் பொங்குவர் வீதியெல்லாம் பெருந்தீப ஒளி போல
காட்சி தரும் பொங்கல் அடுப்புக்கள்
ஒதுக்கினாலும் தீயை விட்டு ஒதுங்கிப் போகுமோ புகை
58

வான்விட்டு மண்வந்தும் விலகாது அம்மன் தெய்வீகம்.
சோதியின் வடிவம் கல்வியின் தேவி அத்துளு அம்மனுக்கே பட்டாடை சூட்டுவர் பூம்பந்தல் நாட்டுவர் ஆராதனைகள் அர்ச்சனைகள் செய்து அருள் வேண்டுவர் அருளும் பொருளும் கொழிக்குமே.
அத்துளுக் குளத்திலே என்றும் தாமரை மலர்கள் தென்றல் அடித்து அசைந்தாடி சாமரை வீசும் அழகு அருகருகே வீற்றிருக்கும் தச்சை விநாயகரும் அத்துளு அம்மனும் இயற்கைச் சூழலில் இணைந்திருக்கும் சிறப்பு மயக்கும் மனித பிறப்பை ஆதி முதல் தோன்றிய அன்புத் தெய்வங்களே கரவைக்கு இத் தெய்வங்கள்
என்றும் காப்பே.
59

Page 32
கரவைக்கு அருளணி சேர்க்க கிராய்ப் பிள்ளையார் முருகையன் கோயில்கள் கரவை மக்களின் கடவுட் பக்தியை
விளக்கி விளங்குகின்றன.
புத்திக்குக் கரவை பக்திக்கும் கரவை கல்விச் சித்திக்கும் கரவை பல கலைகளும் வளர்ப்பர் விலையில்லா அன்பில் வீரமும் சேர்ப்பர் பண்பைக் காப்பர் இங்கிதம் அறிந்து நடப்பர் சங்கீதமும் வளர்ப்பர் பொங்கும் புகழும் கரவைக்கே தங்கும் என்றும் தரணியிலே.
கரவை மண்ணின் மகிமை உரைக்கப் போதாது தகமை மண் வேறில்லை உவமை கரவை மக்கள்
சைவக் கண்கள்
பண்புக் கணக்கிலே முக்கிய எண்கள் கனிந்த அன்பிலே கரவைப் பெண்கள்
கவரி மான்கள்.
6O

கரவை மண்ணின் சிறப்பையும் மக்கள் சிறப்பையும் பண்பையும் வழமைகளையும் பழமைகளையும் சகல வளங்களையும் எழுத மேலும் சிறந்த அறிவு வேண்டும் அறிந்ததைக் கேட்டதை பார்த்ததையும் வடித்தேன் தவறு காணும் கரவை மக்கள் பொறுமையுடன் பொறுத்தருள்வீரே.
V வேறு தெய்வத்தைத் தேடுகிறீர்களா?
தூய உணர்வின் உருவில் உணரும் உணர்வே தெய்வம்
அறியும் கருவே தெய்வம் அன்பின் உணர்வில் அறியும் உருவே தெய்வம் அருவும் உருவும் இல்லானை தூய உள்ளக் கமலத்திலே புனித உணர்வாய் அறி ஆற்றும் புனித பணியிலே உணர்வாய்த் தோற்றம் தரும் தெய்வத்தைத் தேடி அலைய வேண்டாம் சீலம் கூடி நிற்கும் உள்ளத்தை தெய்வம் தேடி வரும்.
61.

Page 33
சமூகச் சீர்கேடுகள்
கரவை மக்களின் வழமைகளையும் பழமைகளையும் நடை உடை பாவனைகளையும் சிறப்புக்களையும் அக்காலத்தில் நிகழ்ந்த நடைமுறைகளையும் உள்ளபடி எழுதும் வேளை நடந்த சீர்கேடுகளையும் குறிப்பிட வேண்டியது அவசியமே. எச் சமூகத்திலும் நல்லவர்கள் மத்தியில் ஒரு சில கெட்டவர்களும் இருப்பது இயல்பே. அவ்வாறே கரவையிலும் சிறந்தவர்கள் மத்தியில் சில நீதியற்றவர்களும் வாழ்ந்தார்கள். சாதி பேதம் ஆதிகாலம் கரவையில் நிலவியது. கரவை மக்களின் சிறப்புக்களை மட்டும் எழுதினால் அது மிகைப்படுத்துவதாகவே அமையும். ஆகவே அக்கால சீர்கேடுகளையும் உள்ளபடி குறிப்பிடுகிறேன். இச் சீர்கேடுகளை எழுதாத பட்சம் கரவைக் கோவை உண்மை விளக்கமாக அமையாது. உண்மைக்கு இடம் அளிக்காத நிலையில் எழுத்துப் பணிக்கும் இழுக்கு நேரிடும்.
சாதி பேதத்தின் ஆதியை அறிந்திலேன். பாதியில் வந்தவன் நான். பார்த்ததைக் கேட்டதை அறிந்ததை எழுதுகிறேன் உண்மையே. உயர்ந்த சாதியினருக்குச் சேவை செய்யும் நோக்கமாகவே சாதிகள் தோன்றியதாக அமையலாம். காரணம் தாழ்ந்தோர் உயர்ந்த சாதியினருக்குச் சேவகம் செய்பவர்களாகவே ஆதியில் விளங்கினர். இட்ட கட்டளையை நிறைவு செய்பவர்களாகவும் வாழ்வதற்கு உயர்ந்த சாதியினரின் உதவிகளையே நம்பி வாழ்பவர்களாகவும் திகழ்ந்தனர். செய்யும் தொழிலை வைத்தே சாதிப் பெயர்கள் தோன்றின.
கோத்திரக்காரர்கள் சிலரின் கொடிய கோரத்திற்கும் கொடுமைகளுக்கும் தாழ்ந்தவர்கள் காலத்திற்குக் காலம்
62

ஆளானார்கள். ஒருவரின் அல்லது ஒரு சமூகத்தின் முக்கிய தொழிலை வைத்தே சாதிப் பெயர்கள் கூறப்பட்டன. சாதிமான்களை வேளாளர் என்றும் உடையவர் என்றும் கூறப்பட்டன. உடையவர் என்றால் பொருள் பண்டம் காணி பூமி செல்வங்கள் நிறைந்தவர்களாகவே திகழ்ந்தனர். தாழ்ந்தவர்கள் எனக் கூறப்பட்டவர்கள் உடையவர்களுக்கு பணிகள் புரிந்தனர்.
உடையவர்களின் தோட்டம் காணி வயல்கள் காப்பதும் பார்ப்பதும் வேலை செய்வதுமே முக்கிய வேலைகளாக அமைந்தன. இவ்வாறான சேவையின் சுகங்களை அனுபவித்த சாதிமான்கள் குறைந்த ஊதியமே கொடுத்தனர். உடையவர்களின் உதவிகளையே நம்பி வாழ்வு நடாத்தினர் தாழ்ந்தவர்கள். உடையவர்கள் மிகுந்த அதிகாரம் நிலவிய நிலையில் தாழ்ந்தவர்களின் சேவைக்கு உணவும் உடையும் காலத்திற்குக் காலம் அளித்து தமது சுகங்களை அனுபவித்து வந்தனர்.
ஆதியில் குறிச்சிகளில் தலைமைக்காரன் எனப் பெயர் சூட்டப்பட்டு மணியகாரனின் நிர்வாக நடை முறைகளுக்காக சிலர் நியமிக்கப்பட்டனர். இது மணியகாரன் மூலம் நடைபெறும் அரச நியமனமே. இவ்வாறான நியமனங்களும் உயர்ந்த உடையவர்களுக்கே வழங்கப் பட்டன. தலைமைக்காரன் என்ற பெயர் பின்பு கிராம விதானை என மாறியது. இன்று கிராம சேவகர் எனக் கூறப்படுகின்றது. தலைமைக்காரன் என்ற பெயர் நிலவிய காலமும் கிராம விதானை எனப் பெயர் நிலைத்த காலமும் தலைமைக்காரர் விதானைப் பட்டம் பெற்ற சிலர் சாதியைச் சாட்டாக வைத்துப் பல அநியாயங்கள் செய்தார்கள் என்பது
உண்மையே.
63

Page 34
தாழ்ந்தவர்களுக்கு கல்வி கற்கவும் வாய்ப்புக்கள் அளிக்கப்படவில்லை. புத்தியும் அறிவும் வளர்ந்தால் புரட்சிகளும் மறுமலர்ச்சிகளும் எழும் என்பதைச் சாதிமான்கள் அறிந்திருந்தனர். தாழ்ந்தவர்களின் பொருளாதாரத்தையும் தந்திர உபாயங்கள் தீட்டி காலத்திற்குக் காலம் மட்டம் தட்டி வந்தனர். வருடம் ஒருமுறை கூத்துப் பழகுமாறு ஊக்கு வித்து தலைமைக்காரனும் சிறு பண உதவி செய்து தாழ்ந்தவர்களை கூத்தாட வைத்து அவர் பொருளாதாரத்தை வளரா வண்ணம் தடுத்தனர். இக் கூத்து வ்ைபவங்களில் தாழ்ந்தவர்கள் தமது கையிருப்பை செலவு செய்து விடுவார்கள். இந்நிலையாலேயே தொடர்ந்தும் தாழ்ந்தவர்கள் உயர்ந்தோரின் அடிமை குட்டிகளாக வேலை செய்தனர். பணம் இல்லாதவர்கள் எவ்வளவு வல்லமைகள் தகமைகள் உள்ளவர்களாகத் திகழ்ந்தாலும் சமூகத்தில் தலைதூக்கி சுய மரியாதையுடன் வாழ்வது கடினமே என்ற கருத்து எக்காலமும் பொருந்தும்.
ஆகவே வறுமையின் பிடியில் வாழ்ந்த தாழ்ந்தவர்கள் உடையவன் சொற்படி நடக்க வேண்டும் இல்லையேல் அடி உதை பட வேண்டும். உடையவர்கள் விதிக்கும் உரிமையில்லாத கொடிய தண்டனைகளை அனுபவிக்க நேரிட்டது. இவ்வாறான அநீதிகளை கரவையிலே அக் காலம் ஒரு சில சாதிமான்களே செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலம் சாதிபேதம் நிலவியதால் சாதிகளுக்கு ஏற்ப சாதிகளிடையேயும் சில நடைமுறை வித்தியாசங்கள் இடம்பெற்றன. பிராமணர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கப்பட்டது. சாதிமான்களின் வீடுகளுக்கு உள்ளே தாழ்ந்தவர்கள் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டார். தாழ்ந்தவர்கள் உயர்ந்த சாதியினரைத் தெருக்களில் கண்டால் விலகி நின்று தோளால் சால்வை
64

எடுத்து மரியாதை செலுத்த வேண்டும். மதிக்க வேண்டும். இவ்வித மரியாதை நடைமுறைகளை மீறுபவர்கள் தண்டிக்கப்பட்டனர். சாதிமான் கூட்டாகச் சென்று தாக்கிய சம்பவங்களும் இடம் பெற்றன.
அக்காலம் வீதிகள் மணல் நிறைந்த தெருக்களாகவே அமைந்திருந்தன. தாழ்ந்தவர்கள் மணல் வீதிகளில் நடந்து செல்லும் சமயம் ஏற்படும் அடிச்சுவடுகளை அழித்துக் கொண்டே செல்ல வேண்டும். காரணம் உயர்ந்தவர்கள் நடந்து செல்லும் சமயம் தாழ்ந்தவர்களின் அடிச் சுவடுகளில் கால்கள் படக் கூடாது. ஆகவே தாழ்ந்தவர்கள் வீதிகளில் செல்லும் வேளை தமது காலடிச் சுவடுகளை அழித்துக் கொண்டு செல்வதற்கு பனை மரத்தின் காய்ந்த ஒலையை தமக்குப் பின்புறம் இழுத்துச் செல்வார்கள். இந்த முறையற்ற நடைமுறைகள் இன்று மறைந்துவிட்டன.
வருடப் பிறப்பு தீபாவளி தைப் பொங்கல் போன்ற விசேட தினங்களில் தாழ்ந்தவர்கள் தாம் சேவை செய்து ’கொடுக்கும் உடையவர்கள் வீடுகளுக்குச் செல்வார்கள். உடையவர்கள் முற்றத்தில் வீழ்ந்து வணங்குவார்கள். உடையவர்கள் உணவும் பலகாரமும் பணமும் சந்தோஷமாகக் கொடுப்பார்கள். இவ்வாறான மனித நடைமுறைகளை என் கண்ணாற் கண்டேன். சாதிமான்களின் மத்தியிலும் அக்காலம் பொருளாதாரக் குறைவுடன் பலர் வாழ்ந்தனர். சாதிமான்களிடையேயும் வறியவர் செல்வர் என்ற பாகுபாட்டு ரீதியில் ஏற்றத் தாழ்வுகள் வேறுபாடுகள் நிலவின. உயர்சாதிச் செல்வந்தர்கள் உயர் சாதி வறியவர்களை மதிப்பதில்லை. அக்காலம் நடந்த இவ்வாறான பேதங்களை இன்று பெரும் பாலானவர்கள் ஏற்பதுமில்லை விரும்புவதுமில்லை. காரணம் அறிவு வளர்ச்சியின் விளக்கங்களே.
65

Page 35
பொது என்ற சொல்லில் மனிதன் பொருள் தேடினான் பொருளென்ற பழியைத் தன் பொருளாய்க் கொண்டான். பொருளென்ற பிடியில் பல பேதங்கள் வளர்த்தான் மனித பிறப்பைத் தேடும் பொருளாய் மதித்தான் மனித உறவுகளையும் பொருளென்று தவறிப் போதித்தான் இருள் சூழும் என்பதை மறந்தான் அழியும் உலக இன்பம் தேடி அலைந்தான் நீதியென்ற ஒளியை அழித்தான் நிலைத்ததோ வாழ்வு?
ஆகவே கரவையில் அக்காலம் சில சாதிமான்கள் சாதியின் பெயரில் தகாத காரியங்கள் செய்தனர் என்பது தெளிவான உண்மையே. உலகில் பலவித தொழில்களை மக்கள் செய்கின்றனர். வித்தியாசமான பலவித தொழில்களைச் செய்வதால் மனிதரிடையே வித்தியாசங்கள் நிலவுவது அநீதியே. அறிவும் பண்பும் புனிதமும் எல்லோரிடமும் நிறைந்தால் பேதம் நிலவாது. காலம்தான் மாற்ற வல்லது.
ஆசிரியர் குறிப்பு :
எவரையும் புண்படுத்தும் நோக்குடன் எதுவுமே எழுதப்படவில்லை. கரவையில் ஆதிகாலம் வாழ்ந்த ஒரு சில மனிதர்களின் தவறான இயல்புகளையே எழுதுகிறேன். எவை தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டுவதும் பண்பாட்டின் பங்காகும். அத்துடன் நடைமுறை உண்மைகளை உள்ளபடி எழுதாத பட்சம் எழுத்துப் பணிக்கும் இழுக்கு நேரிடும் என்பது எனது திடமான
நம்பிக்கையாகும்.
உயர்ந்த வகுப்பினர் சிலரும் ஆதிகாலம் கரவையில் புரிந்துணர்வு குறைந்தவர்களாகவே வாழ்ந்தனர். போதிய பொருள் பண்டங்கள் செல்வங்கள் நிறைந்த நிலையிலும்
66

சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டனர். உயர் சாதி தாழ்ந்த சாதி என்ற பாகுபாட்டினால் அல்லது வேறுபாட்டினால் நீதியற்றவர்களாகவே செயற்பட்டனர்.
21ம் நூற்றாண்டிலும் ஒரு சிலர் பண்பாடற்ற முறையில் நடைமுறைப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில் 17ம், 18ம், 19 ம் நூற்றாண்டுகளில் சிலர் பண்பற்றவர்களாக வாழ்ந்தார்கள் என்றால் புதுமைப்பட ஒன்றுமில்லை. சமூக பழமைகளை வழமைகளை பண்பாடுகளை உண்மைகளை மூதாதையரிடமிருந்து நடைமுறையில் கற்றுக்கொண்ட போதும் அறிவின்மையால் குழப்பங்கள் கோள் குண்டுனிகள் சதிகள் செய்பவர்களாகவே விளங்கினர். அறிவின் மையினாலேயே சமூகச் சீர்கேடுகள் நிலைக்கின்றன வளர்ச்சி அடைகின்றன என்றால் தவறாகாது. ጎ பண்பாட்டின் கண்ணோட்டம் :
கரவை மக்களின் பண்பாடுகள் கலாச்சாரங்கள் வழமைகள் சமயக் கட்டுப்பாடுகள் பெருமையையும் உயர்வையும் சமாதானத்தையும் மன அமைதியையும் சிறப்பையும் அளிக்க வல்லன. சட்டத்தால் வலியுறுத்தப் படாத வாழ்வின் சிறந்த உகந்த வழிமுறைகள் என அழைக்கலாம். ஆனால் சட்டத்தின் தண்டனையைக் காட்டிலும் சமூகம் பண்பாட்டை அவமதிப்பவர்களைத் தண்டிக்கும் முறை அபூர்வமானதே. குடிப்பவனைக் குடிகாரன் எனப் பழித்து ஒதுக்கி விடுகின்றது. சூதாடுபவனையும் சமூகம் வெறுத்து விடுகின்றது. களவு எடுப்பவனைக் கள்ளன் என்று அவமதித்துவிடுகின்றது. வெள்ளை வேட்டி கட்டி மூன்று வேளை வேதங்களை ஒதிக்

Page 36
கொண்டு கள்ளத்தனமாகச் சூழ்ச்சியும் சதியும் செய்பவர்களைக் காலப் போக்கில் சமூகம் இனம் கண்டு
செல்லாக் காசாக்கி விடுகின்றது.
சமயம் எவ்வாறு சிறந்த வழிகாட்டியாக அமைகின்றதோ அவ்வாறே ஒரு சமூகத்தின் பண்பாடும் சுமூகமாக வாழ்வதற்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கின்றது. பண்பு என்பது குணம் இயல்பு விதம் வழக்கமுறை செய்கை எனப் பொருள்படுகின்றது. மனித வாழ்வு எண்ணற்ற பிரச்சின்ைகளும் துன்பங்களும் இன்பங்களும் நிறைந்ததே. மூதாதையரின் நடைமுறை வாழ்வில் கிடைத்த அனுபவரீதியான உண்மைகள் அல்லது வழிமுறைகளையே பண்பாடுகள் என அழைக்கின்றோம்.
மனிதனைத் தவறான பாதைகளுக்குச் செல்லாது தடுக்கும் சிறந்த பணியைச் செய்கின்றது பண்பாடு. மனித வாழ்வில் ஏற்படும் இன்னல்களை எதிர்நோக்கி வெற்றி கொள்வதற்கு பண்பாடுகள் எம்மைத் தயார்படுத்தும் பணியையும் செய்கின்றன. ஆகவே சிறந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் மனித வாழ்வு சீரும் சிறப்பும் பயனும் உடையதாக அமையும். இதை வள்ளுவரும் வற்புறுத்தி உள்ளார்.
பண்பு உடையார்ப் பட்டு உண் (டு) உலகம் அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன். பண்பாடுகளைக் கடைப்பிடியாதவர் வாழ்வு துன்பம் நிறைந்தது வீணானது பயனற்றது. இவற்றை இளம் தலைமுறையினர் கவனத்தில் எடுக்க வேண்டியது அவசியமே. கரவை மக்கள் கடைப்பிடித்துவரும் பண்பாடுகள் ஏற்படக்கூடிய துன்பங்களைத் தவிர்க்க
68

உதவுகின்றன. அத்துடன் பிரச்சினைகளுக்கு சிறந்த பரிகாரம் தேடவும் வழிகளை வகுத்துத் தருகின்றன.
ஈயென இரத்தல் இழிதினும் இழிவு கொள்ளெனக் கொடுத்தல் உயர்வினும் உயர்வு கொள்ளாதிருத்தல் அதனினும் உயர்வு.
ஒருவர் செய்யும் செயலைக் கொண்டும் வாழ்க்கை முறையைக் கொண்டும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் அல்லது பெரியவர் சிறியவர் அல்லது நல்லவர் கெட்டவர் எனச் சமூகம் வகுத்துக் கொள்கின்றது.
மனிதர்களின் பண்பாட்டு மேன்மையைச் சமூகம் தரம் பிரிக்கும் முறை ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதே.
சொல்லாமற் செய்வர் பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர் சொல்லியும் செய்யார் கயவரே.
மனிதர்களின் தகுதி அல்லது தரம் அவரவர் கடைப்பிடிக்கும் பண்பாட்டிலேயே தங்கியுள்ளது. பண்பாடான நடைமுறைகளில் சிறந்த பகுத்தறிவும் கலந்து கொள்கின்றது. பண்பாட்டையும் பகுத்தறிவையும் பயன்படுத்தாதவர்கள் தமக்கும் பிறர்க்கும் தவறாமல் அவமானத்தையும் துன்பத்தையும் தேடிக் கொள்வர். எம் முன்னோர் அனுபவ ரீதியாக வகுத்துத் தந்த வழுவாத வாழ்க்கை வழிமுறைகளை உதாசீனம் செய்யலாமா? இயற்கையுடன் இணைந்த உண்மையான பயன்தரும் பண்பாடுகளை ஏற்க மறுப்பவர்கள் சூடு பட்டபின் அல்லது பண்பாடற்ற வழிகளில் சென்று அடிபட்டபின் ஏற்க நேரிடும்.
69

Page 37
தமிழ் பண்பாட்டின் கோட்டை மீறிய பலர் புலம் பெயர்ந்த நாடுகளில் புண் பட்டு வேதனையுடன் வாழ்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. பண்பாட்டில் பற்றுக் கொண்டு ஆராய்ந்து அதை நடைமுறைப் படுத்துபவர்களின் வாழ்க்கை முறைகள் நடை உடை பாவனைகள் உயர்ந்த நிலையைக் காட்டுவது இயல்பே. நல்ல பண்புகளைக் கடைப்பிடித்து வாழும் கால் அப் பண்புகள் சிறந்த பழக்கங்களாக மாறி சிறந்த பயன்களைத் தரும் என்பது உண்மையே.
நற்பழக்கங்களில் தீமையற்ற பண்பாட்டு வழி முறைகளில் ஊறியவர்கள் அவற்றை எளிதில் தம் வாழ்வில் நடைமுறைப்படுத்தக் கூடிய தன்மையை அல்லது வல்லமையைப் பெற்று விடுகின்றனர். வாழ்வில் Sவற்றியையும் நிம்மதியையும் புகழையும் அடைகின்றனர். தனக்கும் பிறர்க்கும் எவ்வித தீமையோ அல்லது அநீதியையோ பயக்காத வகையில் நடைமுறைப் படுத்தக் கூடிய சிறந்த மார்க்கங்களையும் வழிமுறைகளையுமே பண்பாடு என்கிறோம்.
நீதியும் நேர்மையும் மனித வாழ்வில் எத்துணை பயன் தர வல்லன என்பதை தமிழர் பண்பாடு வற்புறுத்துகின்றது. நீதியும் நேர்மையும் சிறந்த ஒழுக்க நெறிகளாகும். புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் இளைய சந்ததியினர் தமிழர் பண்பாட்டை நாகரீக சமூகத்திற்கு அவசியம் தேவையான நடைமுறைகளென ஏற்க வேண்டும் பயன்பெற வேண்டும். நீதி நேர்மை உண்மை முதலிய சிறந்த இயல்புகளை அழிக்க மறைக்க முயல்பவர்களின் நிலைமையென்ன?
நீதி என்னும் தீயை எந்த மனிதனாலும் நீர் ஊற்றி அழிக்க முடியாது. கயவர்கள் அறிவிலிகள் அயோக்கியர்
7ο

சதிகாரர் குள்ள நரிக் குணமுள்ளவர்கள் நீதியை அழிக்க முயலலாம். நீதியை அழிக்க முயல்பவர்கள் ஈற்றில் முடங்குவர் அடங்குவர் துடிப்பர் துன்பப்படுவர். செய்த தீய செயல்களுக்குத் தக்க தீமையை தப்பாது அனுபவித்தே அழிவர் என்பது அழியாத உண்மையே. செய்த வினை சேரும் செய்தவனையே சாரும்.
கரவை மக்களின் ஆதிகால வழமைகளையும் பாரம்பரியமான பண்பாடுகளையும் ஆத்மீக வளர்ச்சிக்குரிய தெய்வ வழிபாடுகளையும் கரவை மண்ணின் நீர் வளம் நில வளம் போன்ற சிறப்புக்களையும் உள்ளபடி எழுதியுள்ளேன். கரவையில் ஆதியிலே பரவியிருந்த சமூகச் சீர் கேடுகளையும் சித்தரித்துள்ளேன். ஆராய்ந்து அறிந்த உண்மைகளையே குறிப்பிட்டுள்ளேன். விவாதத்திற்கு உரியதாகவோ அன்றி விரும்பத் தகாததாகவோ கருத்துக்கள் காண்பவர்கள் மன்னிப்பீரே. A , ''
71.

Page 38
பழமை வாய்ந்த கரவை வேலன் கோவை நூலின் கண்ணோட்டம்
கரவை வேலன் கோவை என்பது ஆதியில் 17ம் நூற்றாண்டளவில் கரவையில் வாழ்ந்த பெரு வள்ளலாகிய வேலன் மேற் பாடப்பட்ட கோவைப் பிரபந்தம் எனப் பொருள்படும். கோவை என்பது வரிசை ஏற்பாடு திட்டம் எனப் பொருள்படும். பிரபந்தம் என்பது 96 வகைப்பட்ட செய்யுள் நூல் வகைகளில் ஒன்று. இசைப்பாடல் எனவும் பொருள்படும். இப்பாடல்கள் அக்காலம் யாழ்ப்பாணம் நல்லூரில் வசித்த சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பட்டன.
கரவை என்பது கரவெட்டி என்ற கிராமத்தைக் குறிக்கும். மாவை (மாவிட்டபுரம்) வல்வை (வல்வெட்டி) புதுவை (புதுக்கோட்டை) என்பன போல கரவெட்டி என்பது யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறைக்குச் செல்லும் தெருவில் 17வது மையிலில் இருக்கும் ஒரு கிராமம். வேலன் என்றது வேலாயுதபிள்ளை என்னும் பிரபுவைக் குறிக்கும். இவர் 17ம் நூற்றாண்டளவில் கரவையில் வாழ்ந்த பெரியார். இவருடைய முழுப்பெயர் சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் வேலாயுதபிளை என்பதே.
இவர் பெயர் வேலாயுதர் வேலாயுத உடையார் வேலாத்தை உடையார் எனப் பலவிதமாகவும் வழங்கும். இப்பிரபு அக்காலம் சமயத்திற்கும் மக்களுக்கும் மொழிக்கும் அளப்பரிய சேவைகள் ஆற்றினார். சமய நெறி சிறந்த ஒழுக்கங்கள் பண்பாடுகள் நிறைந்தவராக வாழ்ந்தார். அத்துடன் இவர் பெரும் செல்வந்தராகவும் எல்லையற்ற கொடை வள்ளலாகவும் திகழ்ந்தார். பாரம்பரியமான
72

வழமைகளையும் பண்பாடுகளையும் கடைப்பிடித்து வாழ்ந்துள்ளார். செல்வம் பெருகிய நிலையிலும் கரவை வேலன் சிறந்த குண நலங்கள் நிறைந்தவராக திகழ்ந்திருப்பது அவரின் புகழை மெருகூட்டுகின்றது. வேலாயுதபிள்ளையின் சிறப்புக்களை பாடல்கள் மூலம் சின்னத்தம்பிப் புலவர் மொழிந்தார். இப்பாடல்களின் தொகுப்பே கரவை வேலன் கோவை என்னும் நூலாகும். சிறு வயதிலேயே தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர் சின்னத்தம்பிப் புலவர் என்பது குறிப்பிடத்தக்கதே மாப்பாண முதலியார் வேலாயுதபிள்ளை என்றும் வேலாத்தை உடையார் என்றும் அழைக்கப்பட்டதால் கரவை வேலன் கோவை என இந்நூல் நாமம் பெற்றது.
பாட்டுடைத் தலைவனாக விளங்கிய வேலாயுதபிள்ளை கரவெட்டியில் வேளாளர் குலத்திற் பிறந்து செல்வமும் சிறப்புமுற்று வாழ்ந்த ஒரு பெரும் பிரபு ஆவார். இவர் தந்தையார் பெயர் மாப்பாண முதலியார் என்பதே. மாப்பாண முதலியார் இலங்கையை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் வாழ்ந்தவர். ஒல்லாந்து அரசினர் மக்களிடமிருந்து நில வரி பெறுவதற்கு ஆதாரமாக அமைத்துக் காலத்திற்குக் காலம் திருத்தி வைத்துக் கொண்ட சாதனம் தோம்பு எனப்படும். தோம்பு என்பது புத்தகம் எனும் பொருள் கொண்ட ஒரு பறங்கிச் சொல்லாகும். இந்நிலவரித் தோம்பு காணித்தோம்பு எனவும் அழைக்கப்படும். இத்தோம்பில் நன்செய் புன்செய் நிலங்களும் அவற்றின் பெயர்களும் அவற்றிலுள்ள பயிர் வகைகளும் அந்நிலங்களின் சொந்தக்காரருடைய பெயர்களும் இருக்க வேண்டிய வரிப் பணத் தொகையும் அடங்கும். இவ்விதமாகிய காணித் தோம்பு ஒல்லாந்தரால் கடைசி முறையாகத் திருத்தப்பட்ட காலம் கி.பி. 1754ம் ஆண்டாகும்.
73

Page 39
இவ்வாறு திருத்தப்பட்ட ஒல்லாந்தருடைய தோம்பை எழுதிய ஒலைச் சுவடுகள் இப்பொழுதும் யாழ்ப்பாணக் கச்சேரி ஆவண சாலையில் சேமமாக வைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றுள் கரவெட்டி வென்றியாகுதேவன் குறிச்சிக்குரிய காணித் தோம்பில் சில நிலங்களின் சொந்தக்காரனாகச் சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் வேலாயுதர் என்னும் பெயர் காணப்படுகின்றது. இவர் பிறந்த காலம் கி.பி. 1730ம் ஆண்டாக அமையலாம் எனக் கருதப் படுகின்றது.
சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் வேலாயுதபிள்ளைக்கு புதுநாச்சி என்னும் பெயருடைய ஒரு சகோதரி உண்டென்பதும் இத்தோம்பிற் காணப்படுகின்றது. வேலாயுதபிள்ளை இளைஞராக இருந்தபோது சேது சிதம்பரம் இராமேஸ்வரம் முதலிய தலங்களுக்கு யாத்திரை செய்தார். சில காலம் சேது என்னும் இடத்தில் நிலை கொண்டு சமயத் தொண்டுகள் செய்தாரென்றும் கூறப் படுகின்றது. சேது என்னும் இடத்தில் நிலைகொண்டு சேவைகள் செய்தபடியால் சேது நிலையிட்ட என்னும் சிறப்புப் பெயர் கூறப்பட்டதாக அறியக்கிடக்கின்றது. இவர் மலையாள தேசம் சென்று மாந்திரீக வித்தைகள் கற்றார் என்றும் கூறப்படுகின்றது. கரவை வேலன் சகல கலைகளிலும் வல்லவராக விளங்கியுள்ளார். அதேசமயம் மக்கள் அன்பனாகவும் திகழ்ந்துள்ளார்.
வேலாயுதபிள்ளைக்கு சிற்றம்பலம் என்னும் ஒரு மகன் பிறந்து வாழ்ந்தாரென்பதை 'தாரணி மெச்சிய சிற்றம்பலவனைத் தந்த தந்தை” எனும் பாடல் வரி மூலம் அறியலாம். இப்பாடல் வரி கரவை வேலன் கோவையில் இடம் பெற்றுள்ளது. சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் வேலாயுதபிள்ளைக்கு ஏழு புத்திரிகள் பிறந்ததாகவும்
74

அவர்களைச் சீரும் சிறப்பாகவும் வாழ வைத்தார் என்பதும் யாபேரும் கரவெட்டியில் வாழ்ந்தனர் என்பதும் அறியக் கூடியதாக இருக்கின்றது. இவர்களின் வழித்தோன்றல்களாக அநேகர் இக்காலமும் கரவெட்டியில் பரந்து இருக்கின்றார்கள். இவர்கள் வேலாயுதபிள்ளையின் சந்ததிகளே.
சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் வேலாயுதபிள்ளை பெருஞ் செல்வந்தராகவும் தரும சீலராகவும் விளங்கியதால் கரவெட்டியில் 6J (Uge LD L— புண்ணியங்கள் இவரால் அமைக்கப்பட்டன. அவற்றுள் 'தம்பான் மடம்”, “தாளங்குடி மடம்” என இரண்டு மடங்கள் இன்றும் இவர் பெயர் வழங்கி கரவெட்டிப் பகுதியில் இருக்கின்றன. இவருக்குச் சொந்தமாக 'திரை கடற் புரவி', “சிங்காரப் புரவி' என இரு கப்பல்கள் இருந்தன. இவை முத்து எடுத்தல் தொழிலையும் ஆதாரம் காட்டுகின்றன. இவர் பெயர் வேலாயுத உடையார் எனப் பெரும் பான்மையாக வழங்கினும் ஒல்லாந்தர் அரசாட்சியில் உடையார் உத்தியோகம் வகித்தவரல்லர். * W
சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் வேலாயுதபிள்ளை சிறந்த தெய்வ பக்தி உள்ளவராகவும் புண்ணிவானாகவும் மக்கள் காவலனாகவும் விளங்கினார் என்பது உண்மையே. இவரின் நீதியான நடை முறைகளினாலும் கொடை வள்ளல் குணத்தினாலும் மக்கள் சேவையாலும் அக்காலம் கரவை மக்களால் மதிக்கப் பட்டவர் போற்றப்பட்டவர்.
75.

Page 40
கரவை வேலன் கோவை நரல் பாடப்பட்ட வரலாறு
சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் வேலாயுதபிள்ளை காலத்தில் இருமரபுந்துய்ய மாப்பாண முதலியார் என வேறும் ஒரு வேளாள குலப் பிரபு கரவெட்டியல் வாழ்ந்தார். இந்த இரு குடும்பத்தவரிடையே பகை உண்டாகி ஒருவருக்கு ஒருவர் தீங்கிழைத்து வந்தனர். (ஆதியிலும் அதிகார செல்வாக்குப் போட்டிகளும் ஒற்றுமையின் மையும் நிலவியது என்பதற்கு இது சான்றாகும்). வசைக் கவி பாடியும் மாந்திரீகச் செய்கைகள் செய்தும் ஒரு குடும்பத்தார் மற்றக் குடும்பத்தாரை அடக்கவும் வெல்லவும் முயல்வராயினர்.
சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் வேலாயுதபிள்ளை வாழ்ந்த காலத்தில் அவரது எதிரிகள் தங்களுக்குப் புகழாகவும் வேலாயுதபிள்ளைக்கு இகழாகவும் கவி பாடுவிக்க எண்ணி அக்காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த நல்லூர் சின்னத்தம்பிப் புலவரை அழைத்தனர். அதனைக் கேள்வியுற்ற வேலாயுதபிள்ளை புலவர் வரும் வழியையும் அறிந்து அவ்வழியில் தாமே முன்னதாகச் சென்று ஒரெல்லைமானப் பந்தல் அமைப்பித்து அலங்கரிப்பித்து அதில் புலவரை வரவேற்றுப் பச்சைப் பட்டு விரித்த கட்டிலில் அமரச் செய்து உபசரித்து தமக்கு நன்மை பெருகும்படி தம்மேல் ஒரு தமிழ்ப் பிரபந்தம் பாடும்படி
வேண்டிக் கொண்டார்.
சின்னத்தம்பி புலவரும் வேலாயுதபிள்ளை செய்த வரவேற்பு உபசாரங்களால் மகிழ்ந்து வேண்டுகோளை ஏற்று கரவை வேலன் கோவைப் பிரபந்தத்தைப் பாடினார். பாடும்
76

போது ஒவ்வொரு பாட்டிற்கும் ஒவ்வொரு வராகன் உட் புதைத்த தேங்காய் பரிசிலாகப் புலவருக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் வேலாயுதபிள்ளை சின்னத்தம்பிப் புலவரை ஏற்று உபசரித்துப் பாடல் பெற்ற இடம் “எல்லை மானப் பந்தலடி" 6T 6 இன்றும் வழங்கி வருகின்றது. இது யாழ்ப்பாணத்திலிருந்து மட்டு வில் வழியாகக் கரவெட்டிக்குச் செல்லும் மார்க்கத்திற் 'கப்புதூவெளி’ என்னும் இடத்தில் உள்ளது. சின்னத்தம்பிப் புலவர் தனது பாடலுக்குக் காப்பாக தில்லைவனம் எனக் குறிப்பிட்டுத் தில்லை நடராசப் பெருமானை வணங்கியதாகவும் அவர் பாடல் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது. கப்புதூ வெளியில் இடம் பெற்ற பாடற் சம்பவத்திற்கு தில்லைவனக் கற்பக வாரணர் என தில்லையம்பலப் பிள்ளையாரை வேண்டினாரோ எனவும் ஐயப்பட இடம் உண்டு?
சிற்பரை வாணிமை யப்பிடி யீன்றருள் தில்லைவனக் கற்பக வாரணப் பொற்சர ணாம்புயங் காப்பதுவே.
வேலாயுதபிள்ளை முதலியாரின் எதிரிகள் தாம் அழைப்பித்த புலவரைக் கொண்டே வேலாயுதபிள்ளை தமக்குச் செந்தமிழ்ப் பாமாலை சூட்டுவித்துக் கொண்ட செய்தியைக் கேள்வியுற்றுப் பின் ஒன்றுஞ் செய்யலாற்றாது வாளா இருந்தனர். கட்டிலின் மேற் பச்சைப் பட்டு விரித்து அதிலிருந்து உபசரித்ததை வியந்து சின்னத்தம்பிப் புலவர் பாடியதாக வழங்கி வரும் பாடல் ஒன்று சான்றாக அமைகின்றது.
ஆணிப் பொற் கொடை வழங்கும்
பெருமான் தன் கிளை வாழ்க வனேககாலம்
சேணிக் கைப்புகழ்ச் சேது நிலையிட்ட
மாப்பாணன் வேலன்
77

Page 41
காணிக்கைப் பிரதாபமாகவே புலவர் வரக் கட்டின் மீது மாணிக்கப் பிரகாசப் பச்சை வடம் விரித்தது: நல் வடிவுதானே.
சேது நிலையிட்ட மாபபாண முதலlயார் வேலாயுதபிள்ளை காலத்தில் இருமரபுந்துய்ய ம்ாப்பாண முதலியார் என்று வேறும் ஒரு வேளாளப் பிரபு கரவையில் வாழ்ந்தார் என்பது புலனாகுகின்றது. இவ் இரு குடும்பத்தாரிடையே ஏற்பட்ட பகைகள் அதிகார பிணக்குகள் காரணமாக இரமரபுத்துய்ய மாப்பாண முதலியார் சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் வேலாயுதபிள்ளையின் குடும்பத்திற்கு எதிராக இகழச்சிப் பாடல்கள் அல்லது மறம் பாடச் சின்னத்தம்பிப் புலவரை அழைத்துள்ளார். இதை முன்கூட்டியே அறிந்து கொண்ட சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் வேலாயுதபிள்ளை பரப்பாண முதலியாரின் செயலை முறியடிக்கும் நோக்கமாக புலவர் வரும் வழிக்குச் சென்று உபசரித்து தனக்கு நன்மை பெருகும்படி அறம் பாடுமாறு வேண்டிக் கொண்டார். சின்னத்தம்பிப் புலவரும் உபசரிப்பில் மகிழ்ந்து சேது நிலையிட்ட் மர்ப்ப்ாண முதலியார் வேலர்யுதபிள்ளைய்ை ஏற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்பே கரவை வேலன் கோவை என்னும் பழமை வாய்ந்த நூலாக் விளங்குகின்றது.
இக்கோவையில் முன்னுற உணர்தல் குறையுறஉணர்தல் -களவியல் இயற்கைப் ஃபன்புணர்ச்சி+இடிந்! தலைப்பாடு- வன்புறை-பாங்கியற் கூட்டம்-உ4&ன்iோக்குக, தெளிவு-அறத்தொடுநிலை-வரைவியல்காவற்பிரிவுகற்பியல்-இல்வாழ்க்கைமீட்சி-ஒதற்பிரிவு-தன் “ມີ 60 607 வரைதல் பிரிவுழி "மீகி ழ்ச்சி"இரவுக் {{* ',' }, ) u6)
,". ... k' . . . . . . . -へ いぶ is بین مو&جھ ، نہج t : :... ۔ یہ بھی தலைப்புக்களில் சின்னத்தம்பிப் புலவ்ர்ப்ாடியுள்ளார்.
78,
 
 
 
 

சேது நிலையிட்ட மாப்பாண்: முதிலியார் வேலாயுதபிள்ளையை ஏற்றிச் சின்னத்தம்பிப் புலவர் 425 ரடல்கள் பாடியுள்ளார். இவற்றுள் 172 பாடல்கள் அழிந்து விட்டன. இதுவரை-கரவை வேலன் கோவை நூலின் மூலப் பிரதி தேடியும் எவருக்குமே கிடைக்கவில்லை. சேது நிலையிட்ட டிாப்பாண முதலியார் வேலாயுதபிள்ள்ையை ஓர் அவதார:புருஷனாகவேtசின்னத்தம்பிப் புலவர் சித்தரித்துள்ளார். புலவர் பாடிய பாட்டுக்களில் சில :-
மற்பயில் வாகன் கரவையில் வேலன் மகீபதி மேற் கொற்பயில் கோவைச் செழுந்தமிழ் மாலை தொகுத்துரைக்கச் சிற்பரை வாணிமையப்பிடி யீன்றருள் தில்லைவனக் கற்பக வாரணப் பொற்சர ணாம்புயங் காப்பதுவே
பொழிப்பு :
மற்பயில்-மல்யுத்தம். வாகு தோள். மல்யுத்தப் பயிற்சிகள் செயது.வலிய தோள்களையுடீைய்வன் வேலன். மகீபதி-பூமிக்குத தலைவன். செந்தமிழில் ச்ொற்கள் எடுத்து தமிழ் மாலை பாடஞானசொரூபி இமய மலைமகள் பார்வதி, சிதம்பரக் கற்பகப் பிள்ளையார் முதலிய தெய்வங்கள்ை சின்னத்தம்பிப் புலவர் வேண்டினார் என்க. காப்புப் பாட்லாகும். வினைமா வழங்கு நஞ்சீறூர்க் குரம்பையின் மேவிப்ப்சுந்' தினைமாவுத்தேனும் விருந்திருந்துண்டு சிலம்பதக்க கனைமாநகுலன் கரவையில் வேலன் கனக வேற்பிற் புனைமா மணிப்புய காலையினேகு நின் பொன்னகர்க்கே.
ப்ொழிப்பு .
வினைமா-கொடிய வனவிலங்குகள்குரிம்பை-சிறு வீடு,அல்லது பந்தல்:கொடியவனவிலங்குகள் சஞ்சரிக்கும்
798

Page 42
இடத்தில் பந்தல் அமைத்து கனை மா நகுலன்-குதிரை ஏற்றம் அசுவசாத்திரம் என்பவற்றில் வல்லவனாக விளங்கிய பஞ்சபாண்டவருள் நாலாமவன் நகுலனை ஒத்த வேலன். தேனும் தினைமாவும் விருந்தாகக் கொடுத்து கவிகள் பாட வைத்தான். கனகம்-பொன்.புனைமா-மாபெரும் அழகு. பொன் போன்ற மாபெரும் நவமணி அழகு பொருந்திய காலையில் தன் பொன்னகர்க்கு ஏகுவேன் என மொழிந்தார்.
இல்லாத மெல்லிடை வல்லிநல் லாயிசை முத்தமிழ் நூல் வல்லான் கரவைப் பதி வாழும் வேலன் மணித் துறைவாய் எல்லாரும் போற்றிடுந் தெய்வமுன்னே யெங்களைப் பிரிந்து செல்லாமை சொல்லிச் சென்றார் நல்லர் நல்லர்நஞ் செல்வருமே. பொழிப்பு :
கரவையில் வாழும் வேலன் முத்தமிழ் வல்லவன். தமிழ் இலக்கணத்திலும் இயல் இசை நாடகத்திலும் வித்தகம். எல்லோரும் போற்றும் தெய்வம் போன்றவன். மக்களுடன் பிரியாது வாழ்பவன். புலவரைப் பிரிந்து சென்றதை பிரியமாட்டேன் எனச் சொல்லிச் சென்ற செல்வன் வேலன் என்க.
மரைமான் விரும்புங் கரவையில் வேலன் மணிவரை நாட் டுரைசால் குடிமைக்குஞ் சீமைக்கு மேன்மை யுயர்ந்த பெருந் தரையார் புகழ் நங் குலநலத்திற்குத் தகைமையுடன் வரையா திருப்பது நன்றல்ல நாடு மதித்திடுமே. பொழிப்பு :
மரை-தாமரை. மரைமான்-இலக்குமி. குலநலம் பொருந்திய காணிகள் நிறைந்த செல்வத்திற்கு இலக்குமியை விரும்பி வணங்கும் வேலனின் குடி மக்களின் சீர்மையையும் மேன்மையையும் சிறப்பாகப் பாடாது விட்டால் நல்லதல்ல
8O

என்றும் இவர் புகழை நாடு மதித்திடுமே என்க. நாடு மதித்திடும் என்றது நாட்டவர் ஆராயத் தொடங்குவர் எனவும் பொருள்படும்.
சின்னத்தம்பிப் புலவர் கைக்கொண்ட உவமைகள் சில :-
கார் காலத்து முகில் பொழியும் மழை போன்றது வேலனின் கொடை, ஆழி நகை திகிரி வலம்புரிமால் :- வட்டமாகிய ஒளி பொருந்திய சக்கரத்தையுஞ் சங்கினையுமுடைய திருமாலை நிகர்த்த தலைவர். தருப்பாணியான் - கற்பகதருவை யொத்த பாணியை உடையவன். தமிழ்த் தெளிவு ஆய கும்பன் - தமிழிலே தெளிந்த அறிவு பொருந்திய அகத்தியன் - அவனையொத்த வேலன் என்க.
கன்ன வதாரன் :- கன்னனைப் போன்ற கொடையுடையவன் வேலன் மதிநலத்தாலும் விதி நலத்தாலும் வள்ளலாக விளங்கிய பெருமான் வேலன்.
கரவை வேலன் கோவை என்னும் இந்நூலின் மூலப் பிரதியைப் பெறுவதற்கு பல எழுத்தாளர்கள் சில தமிழ் வளர்ச்சிக் கழகங்கள் வருடக்கணக்காக எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 1932ம் ஆண்டில் இந்நூற் காகிதப் பிரதியொன்று கரவை வேலன் வழித்தோன்றிய கரவெட்டிக் கந்தப்புச் சட்டம்பியார் சங்கரப்பிள்ளை என்பவரிடமிருந்து யாழ்ப்பாண ம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தாருக்குக் கிடைத்தது. அப் பிரதியும் சிதைவுறப் பெற்று இருந்தது. வேறு மூலப் பிரதிகள் கிடைக்கவில்லை. இருப்பதும் அழிந்தொழிந்து போகாமல் காக்கும் பணியாக யாழ்ப்பாண ம் ஆரிய திராவிட பாஷா பிவிருத்திச் சங்கத்தினர் கரவை கரணவாய் பண்டிதர் திரு. செவ்வந்தி நாத தேசிகர வர்கள் வித்துவான் திரு. கணேசையர்
81

Page 43
கவிஞர் திரு. நவநீச கிருஷ்ண பாரதி பண்டிதர் திரு. வே. மகாலிங்கசிவமலர் ஆகியோரின் அனுசரணையுடன் 20.02.1935ம் ஆண்டு அச்சிட்டு வெளியிட்டனர். கரவை கந்தப்புச் சட்டம்பியார் சங்கரப்பிள்ளை கொடுத்த சிதைவுறப் பெற்ற பிரதிகளை ஆதாரமாகக் கொண்டே இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
கரவை வேலன் கோவை கரவெட்டியில் கி.பி. 1730ம் ஆண்டளவில் வாழ்ந்த சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் வேலாயுதபிள்ளை மேற்பாடப்பட்ட அகப் பொருட் கோவையாகும். வேலாயுதபிள்ளை செல்வந்தப் பிரபுவாகவும் கொடை வள்ளலாகவும் சமயத் தொண்டுகள் மொழித் தொண்டுகள் செய்தவரர்கவும் பக்தி மிகுந்தவராகவும் மக்கள் தொண்டராகவும் விளங்கினார். சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் வேலாயுதபிள்ளை இரண்டு கப்பல்களுக்குச் சொந்தக்காரர் என்பதும் முத்துக் குளிக்கும் தொழிலும் நடாத்தியவர் என்பதும் தெளிவாகப் புலனாகுகின்றன. அத்துடன் மதியும் விதியும் பயன்பெறுதலாக மதிநலத்தாலும் விதி நலத்தாலும் பெற்ற செல்வங்களை நிறைவாக உடையவராக விளங்கினார். சீரும் செல்வமும் அறிவும் ஆற்றலும் அன்பும் பண்பும் சேவையும் பக்தியும் நிறைந்தவராக விளங்கியதால் பெயரும் புகழும் பிரசித்தியும் பெற்றார்.
அக்காலம் யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்த சின்னத்தம்பிப் புலவர் வேலாயுதபிள்ளையின் தரும நற் குணங்களை ஏற்றிப் புகழ்ந்து பாடிய பாடல்களே கரவை வேலன் கோவையில் இடம் பெறுகின்றன. சின்னத்தம்பிப் புலவர் பாடிய பாடல்கள் செந்தமிழில் எழுதப்பட்டுள்ளன. வேலாயுதபிள்ளையைக் கர்ணனைப் போன்ற கொடையுடையவன் எனப் புகழ்ந்து பாடியிருப்பது
82

பெருமைக்குரியது அதிசயிக்கத்தக்கது. சிறந்த சொல் நயம் பொருள் நயம் ஒசையின்பம் பொருந்திய பாடல்களாகச் சிறந்து விளங்குகின்றன.
கரவை வேலன் கோவைப் பாடல்கள் பாடிய சின்னத்தம்பிப் புலவர் சின்ன வயதிலேயே தமிழ் மொழியில் நிறைந்த பாண்டித்தியம் பெற்றதால் சின்னத்தம்பிப் புலவர் எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகின்றது கரவை ஊரின் பாரம்பரியத்தையும் பண்பாடுகளையும் பழமை வாய்ந்த வழமைகளையும் சரித்திரப் பெருமைகளையும் தொடர்ந்து காத்து வளர்த்துப் பேண வேண்டியது பரம்பரையினரின் பாரிய கடமையாகும்.
கரவைக் கோவை ஆசிரியர் வேலாயுதம் கரவை வேலன் புகழை வாழ்த்தும் பாடல்.
மனிதரும் மண்ணில் கரவை வேலன் போற் தெய்வமாகலாம் புனிதமிகு தனியில்லா நன்னியநல்லறங்கள் நாடிச் செய்திடின் இனியொரு வேத வேலன் கரவையுய்ய வந்துதிக்க இறையைப் பாவினவேலன் வேண்டினேன் செப்பரும் சேது வேலன் புகழ் வாழ்க.
கரவை வேலன் கோவை பற்றிய அபிப்பிராயங்கள் யாழ்ப்பாணம் ஆதிதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தாரின் பகிரங்க வேண்டுகோள்.
சின்னத்தம்பிப் புலவர் கரவை வேலனைப் புகழ்ந்து பாடிய பாட்டுக்கள் வியப்பையும் அதேசமயம் பெருமையையும் பிரதிபலிக்கின்றன. கரவை வேலனை ஒர் அவதார புருஷனாக கற்பகதருவாக அகத்தியனை ஒத்தவராகத் தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். திருமாலின் அவதாரமாகிய இராமனை ஒத்த வேலன் என்க எனவும் பாடியுள்ளார். ஆதாரம் :- துணிவு என்ற தலையங்கத்தில்
83

Page 44
சின்னத்தம்பிப் புலவர் பாடிய பாடலே.
"பூவென்ற மாவிலங் கேசனை நாளைக்குப் போர்புரிய வாவென்ற வீரன் கரவையில் வேலன் மகீபதிமேற்’
என்ற வரிகள் சான்று பகர்கின்றன. பொழிப்பு :
பூ-பூமி. மா : மிகப் பெரிய, இலங்கேசன் : இராவணன். இலங்கா-ஈசன். பூமில் மிகப்பெரிய இராவணனை போர்புரிய இன்று போய் நாளை வா என்று கூறிய வீரன் இராமனே. இராமன் மாபெரும் வீரன் என்பது மறைமுகப் பொருள். அவ்வாறு இராமனைப் போன்ற வீரம் உடையவன் வேலன் எனப் பாடியிருப்பது சிறப்புடையதே.
பாட்டுடைத் தலைவன் சேது நிலையிட்ட மாப்பாண முதலியார் வேலாயுதபிள்ளையைப் புகழ்ந்து சின்னத்தம்பிப் புலவர் 425 பாடல்கள் பாடியிருப்பதாக ஆதாரங்கள் கரவை கந்தப்புச் சட்டம்பியார் சங்கரப்பிள்ளை கொடுத்த பிரதிகளிலிருந்து காணக்கூடியதாக உள்ளன. இப்பிரதிகளில் 172 பாடல்கள் அழிந்து சிதைவுற்று இருப்பதாக பாஷாபி விருத்திச் சங்கத்தினர் கருதுகின்றனர். ஆகவே கரவை வேலன் கோவையின் பாடல்கள் இன்றும் நிறைவு பெறாத நிலையிலேயே காணப்படுகின்றன. கரவை வேலன் கோவை நூலின் மூலப் பிரதியைச் சங்கத்தினர் தேடுகின்றனர். வைத்திருப்பவர்கள் தயவுசெய்து யாழ்ப்பாணம் ஆதி திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினருக்குக் கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன். இச் சங்கத்தாரின் பணிக்குக் கரவை மக்கள் சார்பில் எனது நன்றி.
84

நன்றி நவில்கிறேன்
“கரவைக் கோவை’ என்னும் இந்நூலை எழுதுவதற்குப் பல வழிகளிலும் உதவியும் வழிநடாத்தலும் நல்கிய திரு. தா. கதிர்காமத்தம்பி - கனடா திரு. சி. கந்தசாமி - கனடா, திருமதி. சகுந்தலா பரஞ்சோதி - கனடா, திரு. க. ஆனந்த குமாரசாமி - கரவெட்டி ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். இவர்கள் இந்நூலிற்கு அணிந்துரைகள் எழுதி ஊக்குவித்தமைக்கும் எனது நன்றிகள்.
“கரவைக் கோவை’ கரவை மக்களின் பழமையான வழமைகளையும் மண்ணின் சிறப்புக்களையும் பாடசாலைகள் கோயில்கள் போன்றவற்றின் பெருமைகளையும் வெளிப்படுத்துகின்றது. இதேசமயம் கரவை வேலன் கோவையின் பல சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. கரவை வேலன் கோவை நூலின் மூலப் பிரதி கிடைக்காத நிலையில் இன்றும் ஆராயப்பட வேண்டிய நூலாகவே விளங்குகின்றது என்பதை நினைவு கூர்கிறேன். நினைவும் செயலும் இணைந்த விடயங்களே என்பது உண்மை. ஆனால் மனிதன் நினைத்ததைச் செயற்படுத்துவது கடினமே. இந்த ரீதியில் கரவைக் கோவை என்னும் இந்நூலை எழுதி அச்சிட்டு இலவசமாக வெளியிடுவதில் பல இன்னல்களை அடைந்தேன் என்பதை எடுத்துரைக்க விரும்புகிறேன். கரவையில் பிறந்து வளர்ந்தவன் என்ற ரீதியில் புலம் பெயர்ந்த நிலையிலும் கரவை மக்களின் மண்ணின் சிறப்புக்களை உள்ளபடி எடுத்துரைப்பதில் பெருமையடைகிறேன். இந்நூலைச் சிறப்பாக அச்சிட்டுத் தந்த அச்சகத்தாருக்கும் எனது நன்றி. இந்நூல் தொடர்பாக
உதவிய அனைவருக்கும் நன்றி.
முற்றும்.
- ஆசிரியர்

Page 45


Page 46


Page 47
Printed by: AN 2 g/1, Amida War KOil Street,

DAWAR OFFSET Wada palani, Chennai – 600 025.