கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குரும்பசிட்டியும் சட்டப் பாரம்பரியமும்

Page 1
----
 


Page 2

குரும்பசிட்டியும்
சட்டப் பாரம்பரியமும்
மனோ. ரீதரன்
பதிப்பு:
நூல் வெளியீட்டுக் குழு, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, அனைத்துலகப் பழைய மாணவர் சங்கம், தெல்லிப்ழை, இலங்கை.

Page 3
d EF DIT LI LE 60TD
எமத குடும்பத்தின் மூத்த குலவிளக்காய் சுடர்விட்டு அணைந்துவிட்ட தீபம் எனது சகோதரி திருமதி. சாரதாதேவி நடராஜா அவர்களுக்கும் சட்டக் கல்லூரிக் கல்வி நிறைவேறும்வரை எண் கல்வியில் கண்ணாயிருந்த நெறிப்படுத்திய எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்ட அமரர் மேற்கரவையுர் செல்வி. பொன்னம்மா முருகேசு அவர்களுக்கும் இந்நாலினைச் சமர்ப்பிக்கின்றேன்.
மனோ நீதரன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நூல் அறிமுகம்
ஈழத்தின் வடபகுதியில் வலி வடக்கில் அமைந்திருந்த வளமிக்க கிராமமாகிய குரும்பசிட்டி இன்று மனித சஞ்சாரமற்ற பகுதியாகக் காட்சியளிக்கின்றது. காட்சியளிக்கின்றது என்பதனை விட அவ்வாறு கேள்விப் படுகின்றோம் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது எனக் கருதுகின்றேன். குரும்பசிட்டிக் கிராமத்தின் செழுமையும், கலை கலாச்சார மேம்பாடுகளை நினைவூட்டும் சின்னங்களும், சமூக முன்னேற்ற ஸ்தாபனங்களும், மக்கள் குடியிருப்புக்களும் முற்றாகவே சிதைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் காட்சியளிப்பதாக அறிகின்றோம். மக்கள் தங்கள் பிரதேசத்தில் காலடி வைக்க முடியாத சூனியப் பிரதேசமாக மாறியுள்ளது இக்கிராமம். நிலப்பரப்பில் சிறிய பிரதேசமாக இருந்தபொழுதிலும், பாரம்பரியமாக ஒரு 'கலைமலிந்தபூமயாகவே மிளிர்ந்தது. கலைத்துறையில் மட்டுமல்லகல்வித்துறையிலும் பல்வேறு துறைகள் சார்ந்த புத்திஜீவிகளும் ஆழுமைமிக்க பிரஜைகளும் இம்மண்ணில் தோன்றியுள்ளனர். இக் கிராமம் ஆழுமைமிக்க தலைவர்களின் நெருக்கமான உறவினையும் கொண்டிருந்தது. அத்தலைவர்கள் இக்கிராமத்தில் உரிமையுடன் உறவாடி இந்நாட்டின் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர்களாகவும் பரிணமித்தனர். இப்படிப்பட்ட பெருமக்களும் தலைவர்களும் தம் தொழிலின் நிமித்தமும், இன்னோரன்ன பல்வேறு காரணங்களினாலும் குரும்பசிட்டி கிராமத்திற்கு வெளியே வசித்துவந்த போதிலும் அவர்கள் குரும்பசிட்டிக் கிராமத்திற்கே உரித்தானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர்.
வரலாற்றுத் தேவையினைக் கருத்திற் கொண்டு இக் கிராமத்துடன் தொடர்புபட்ட சட்ட ஆழுமைகள் பற்றியும், அவர்களுடைய பாரம்பரியம் பற்றியும், அவர்கள் குரும்பசிட்டியின் சட்டபாரம்பரியத்தை எவ்வாறு செழுமைப்படுத்தினார்கள் என்பது பற்றியும், சமூக முன்னேற்றத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்கினைப்பற்றியும் தெரிந்து கொள்வது குரும்பசிட்டியின் மறைந்திருக்கும் சட்ட பாரம்பரியத்தின்
- i

Page 4
செழுமையை வெளிக் கொணர்வதாக அமையும் என எண்ணுகின்றேன்.
சில பிரதேசங்களின் வரலாற்றுச் சிறப்புக்கள், கலாச்சார பாரம்பரியங்கள், கல்வி மேம்பாடுகள் அழிக்கப்பட்டு விடுமோ எனும் ஐயப்பாடு எழுகின்ற இக்காலகட்டத்தில் அவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்காக எதிர்நீச்சல் போடவேண்டிய கடப்பாடு அங்கு வாழுகின்ற அல்லது வாழ்ந்த சமூகத்தின் ஒவ்வோர் அங்கத்தவருக்கும் உரிய கடமையாகும். இன்றேல் நாம் ஒரு வரலாற்றுத் தவறினைச் செய்த குற்றவாளிகளாவோம். இவ் வகையிலேதான் எனக்குப் பரீட்சையமான சட்டத்துறை சார்ந்த, குரும்பசிட்டி மண்ணோடு தொடர்புபட்ட சட்ட அறிஞர்களின் வரலாற்றையும், அவர்கள் குரும்பசிட்டியின் சட்ட பாரம்பரியத்திற்கு ஆற்றிய பங்களிப்பினையும் ஆவணப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறுமுயற்சியின் வெளிப்பாடே இந்நூலின் தோற்றப்பாடாகும். இந்நூலில் குறிப்பிடப்படும் சட்ட அறிஞர்களின் வரலாறு எதிர்காலச் சந்ததியினருக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைவதுடன், அவர்களுக்கு ஆதர்ஷமாகவும் அமையவேண்டும் என்பதும் குறிக்கோளாகும். சட்டத்துறை புறக்கணிக்கப்பட முடியாத கண் ணியமான உயர் தொழில் என்பதனை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்வதுடன் இவ்வுயர் தொழிலை எதிர்காலச் சந்ததியினர் ஆர்வத்துடன் தெரிந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் நோக்கமாகும்.
இந்நூலில் குறிப்பிடப்பட்ட சட்ட அறிஞர்கள் வெறுமனே தமது தொழிலாகமட்டும் சட்டத்தொழிலை மேற்கொள்ளவில்லை. உள்ளுராட்சி அரசியல், தேசிய அரசியல், நாட்டின் நிர்வாகம், நீதி சேவை, மனித உரிமைகள், பத்திரிகைத்துறை, எழுத்துத்துறை, உரிமைப் போராட்டம் எனப் பல்வேறு வழிகளில் சமூக முன்னேற்றத்திற்கு தம்மாலான பங்களிப்பினைச் செலுத்தியுள்ளனர். அவற்றை நினைவு கூர்வதும், ஆவணப்படுத்துவதும் இன்றைய கட்டாயத் தேவைப்பாடாகும்.
- 11 ܒܒ

இந்நூல் வெளிவருவதற்கு பல பிரமுகர்கள் காரணமாக இருந்துள்ளனர். வேலைப்பழுவின் மத்தியிலும் மிகவும் சிரமத்தின் மத்தியிலும் சில தரவுகள், தகவல்கள், புகைப்படங்கள், செய்திகள் போன்றவற்றை சேகரிக்கவேண்டி இருந்தது. இம்முயற்சியில் எனக்கு உதவிய எல்லோருக்கும் நன்றி கூறுவதுடன் பெயர் குறிப்பிட்டு நன்றி கூறுவது இவ்விடத்தில் சற்று சிரமமான காரியம் என எண்ணுகின்றேன். ஆயினும் இம்முயற்சியில் என்னை மிகவும் ஊக்குவித்த குரும்பசிட்டியின் மைந்தன், எழுத்தாளர் திரு. வேல் அமுதன் அவர்களை விசேடமாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும். குரும்பசிட்டி சட்ட பாரம்பரியத்தில் நானும் ஓர் அங்கத்தவன் என்ற வகையில் என்னைப்பற்றிய திரு.வேல் அமுதன் அவர்களின் நோக்கினை தாழ்மையுடனும் நன்றியுடனும் இந்நூலினிலே சேர்த்துள்ளேன். இந்நூல் வெளியிடும் பணியை தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்க ஒன்றியத்தின் நூல் வெளியீட்டுப் பிரிவு பொறுப்பேற்றுள்ளமை மிகவும் பொருத்தமான விடயமாக நான் கருதுகின்றேன். குரும்பசிட்டி சட்ட பாரம்பரியத்தினை அலங்கரித்த, அலங்கரித்துக் கொண்டிருக்கும் மூவர் மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர்கள் ஆவர்.
இந்நூலைச் சிறந்த முறையில் அச்சிட்டு உதவிய "Forward Graphics" தாபனத்தாரிற்கும் என் நன்றிகள்.
மனோ. பூரீதரன்.

Page 5
பதிப்புரை
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூாாரி பாவலர் தெ.அ. துரையப்பாபிள்ளை அவர்களால் 1910ம் ஆண்டு நிறுவப்பட்டது. 2010ம் ஆண்டு கல்லூரியின் நூற்றாண்டு. ஏழு ஆண்டுகளில் கல்லூரியின் பல்துறை வளர்ச்சிகளையும் சிறப்பாக பணியாற்ற வேண்டுமென்பது ஈழத்திலும் பிற நாடுகளிலும் வாழும் கல்லூரிப் பழைய மாணவர்களின் நோக்கமாகும். இந்நோக்குடன் பழைய மாணவர் சங்கக் கிளைகளின் முக்கிய உறுப்பினர்கள் அண்மையில் கொழும்பிற் கூடிப் பழைய மாணவர் சங்கக் கிளைகளின் அனைத்துலகப் பழைய மாணவர் அமைப்பை நிறுவியுள்ளனர். இச் சங்கம் கல்லூரிப் பழைய மாணவர்களின் நூல் வெளியீட்டுக் குழு ஒன்றினையும் தெரிவு செய்துள்ளது.
வெளியீட்டுக் குழுவின் முதல் வெளியீடாகக் கல்லூரிப் பழைய மாணவரும் சட்டத்தரணியும் தொழில் நியாயசபைத் தலைவரும், மேலதிக நீதவானுமான ம. ரீதரன் அவர்களின் 'இலங்கையில் தொழில் நியாய சபைகளின் செயற்பாடு' என்ற தொழில்சட்ட துறை நூலையும் 'குரும்பசிட்டியும் சட்டப்பாரம்பரியமும்' எனும் குரும்பசிட்டிக் கிராமத்துடன் தொடர்புடைய சட்ட அறிஞர்களின் பங்களிப்புப் பற்றிய இந்நூலினையும் வெளியிடத் தலைமைச் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்நூல்களை முதல் நூல்களாக வெளியிடுவதில் பெருமையடைகின்றோம். இவற்றினை வெளியிடத்தந்த திரு. ம. யூரீதரன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
இவ் வெளியீட்டுப் பணியைத் தொடரப் பழைய மாணவ எழுத்தாளர் அனைவரிடமும் இருந்து ஒத்துழைப்பை நாடுகின்றோம்.
- iv -
 

இந்நூல் வெளியீட்டிற்கு வழிவகுத்த பழைய மாணவர் சங்கங் களுக்கும் வெளியிடத் துணை செய்த திரு. என். சிறீகெங்காதரன் அவர்களுக்கும் (செயலர், ஐக்கிய இராச்சியக் கிளை), திரு. இ. கிருபானந்தன் அவர்களுக்கும் (தலைவர், கொழும்புக்கிளை) எமது நன்றிகள்.
பி. நடராசன், பொறுப்பாளர், வெளியீட்டுக்குழு, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, O8.06.2003 அனைத்துலகப் பழைய மாணவர் சங்கம்.

Page 6

திரு. ஆர். ஆர். நல்லையா திரு. ரி. ஆர். நல்லையா சகோதரர்கள்
குரும்பசிட்டி கிராமத்தின் தோற்றப்பாட்டுடனேயே இக்கிராமத்தின் சட்ட பாரம்பரியம் அல்லது சட்ட பரம்பரை ஆரம்பமாகியது எனலாம். 1833ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக்கியதும், நிர்வாகக் கடமைகளைச் செய்வதற்கோ அல்லது அரச பதவிகளைப் பெறுவதற்கோ ஆங்கில அறிவு இன்றியமையாததாகியது. எனவே திண்ணைப் பள்ளிக்கூடங்களில் தமிழ் கற்ற மேற்தட்டு வர்க்கத்தினரில் ஒருசாரார் ஆங்கிலம் கற்கத் தலைப்பட்டனர். இவ்வாறு குரும்பசிட்டியின் ஆரம்பகால வரலாற்றினை விளக்கும் "பரமானந்தம் நூற்றாண்டு மலர் குறிப்பிடுகின்றது. குரும்பசிட்டியைச் சேர்ந்த நில அளவையாளராகக் கடமையாற்றிய திரு. முதலித்தம்பி நல்லையா அவர்கள் தம் பிள்ளைகளின் ஆங்கிலக்கல்வி காரணமாகவும், அவரது தொழிலின் நிமித்தமும், அவர் கொண்டிருந்த வியாபார ஈடுபாட்டின் காரணமாகவும் யாழ்நகரில் படித்த மேற்தட்டு வர்க்கத்தினர் செறிந்து வாழ்ந்த பறங்கித்தெரு என அப்போது அழைக்கப்பட்ட - பிரதான வீதியை அண்டியதான - முதலாம் குறுக்குத் தெருவில் குடியேறினார். ஆயினும் இவருடைய சகோதரர் முதலித்தம்பி சின்னையா அவர்கள் விவாக, பிறப்பு இறப்புப் பதிவுக்காரராக குரும்பசிட்டியிலேயே வசித்து வந்தார். திரு. நல்லையா அவர்களின் சொத்துக்கள், நிலபுலன்கள் குரும்பசிட்டியில் இருந்தன. உறவினர்களுடனான தொடர்பு நீடித்தும் நிலைத்தும் இருந்தது. திரு. நல்லையா அவர்கள் தன் தொழிலுடன் அச்சுத் தொழில் பால் கொண்ட கவர்ச்சியின் காரணமாக வெளிநாட்டில் இருந்து அச்சு இயந்திரங்களை இறக்குமதி செய்து யாழ் பிரதான வீதியில் Commercial Printers எனும் ஸ்தாபனத்தினை ஆரம்பித்து நடாத்தி வந்தார். இத்தாபனம் அப்போது ஆங்கில அச்சு வேலைகளுக்கு மிகவும் பிரபல்யம் பெற்ற ஸ்தாபனமாக விளங்கியது. திரு. நல்லையா அவர்கள் மேலும் பல வியாபார முயற்சிகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். திரு. நல்லையா
- 01 -

Page 7
அவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர். ஆண்பிள்ளைகளில் மூத்தவரான திரு. என். ஆர். நல்லையா அவர்கள் யாழ் மத்திய கல்லூரியில் கல்விபயின்று பின்னர் வைத்திய கலாநிதிப்பட்டம் பெற்று பிரித்தானியப் பிரஜையை மணம்புரிந்து லண்டனில் குடியேறிவிட்டார். இவரது கல்வித்திறமை பற்றி 1930ம் ஆண்டு வெளியிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி bTibprisoir(S LD6)ir Mr. N. R. Nallaiah a brother of Messrs R. R. Nallaiah and T. R. Nallaiah - obtained the M.R.C.S (Eng) and
L.R.C.P. and S (Lond). Dr. N. R. Nallaiah has settled down in England and is now a Panel Doctor under the Sheffield Municipality
எனக் குறிப்பிடுகின்றது.
திரு ஆர். ஆர்.நல்லையா
திரு. ஆர். ஆர். நல்லையா அவர்களின் இயற்பெயர் இராசரத் தினம் என்பதே. சுருக்கமாக இராசா எனவே ஊர்மக்கள் அழைப்பர். ஆயினும் அவர் தனது பெயரை ஆர். ஆர். நல்லையா எனவே பாவனையில் கொண்டார். இவரும் தனது ஆரம்பக் கல்வியை யாழ் மத்திய கல்லூரியிலேயே பெற்றார். கல்லூரிக் காலத்தில் கல்வியில் மட்டுமன்றி - - ஏனைய விளையாட்டுத் துறைகளிலும் பிரகாசித்தார். குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கினார். யாழ் மத்திய கல்லூரியின் 1930ம் ஆண்டு நூற்றாண்டு மலர் (பக்.77) பின்வருமாறு குறிப்பிடுகின்றது. "R. R. Nalaiah, R. R. Alexander, L.R. Alexander, R. C. Thambaiah and Victor A. Paul were among the leading cricketers of the period." gob. gr. ஆர். நல்லையா அவர்கள் யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் குழுவிற்கு தலைமை தாங்கி பல வெற்றிகளைக் கல்லூரிக்குப் பெற்றுக் கொடுத்தார். ஆரம்ப, இடைநிலைக் கல்வியை முடித்துக்கொண்ட இவர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து வழக்கறிஞராக
- 02
 

வெளியேறினார். யாழ் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக தொழில்பார்த்த வேளையில் உள்ளுர் அரசியலில் அதிதீவிர ஈடுபாடு கொண்டு அப்போதைய நகரசபையின் முதலாவது தலைவராகப் பணியாற்றி நகரசபை மாநகர சபையாக தரமுயர்வதற்கு பல முயற்சிகளிலும் ஈடுபட்டார். அழகிய தோற்றமுடைய மாநகரசபைக் கட்டடம் திரு. ஆர். ஆர். நல்லையா அவர்கள் நகரசபைத் தலைவராக இருந்தபொழுது அமைக்கப்பட்டது. இரசிகமணி கனக. செந்திநாதன் அவர்கள் இம் மாநகரசபை மண்டபத்திற்கும் குரும்பசிட்டி மண்ணிற்கும் உள்ள தொடர்புபற்றி பின்வருமாறு குறிப்பிட்டார்.
‘மணிக்கூண்டு கோபுர மூலையில் அப்போது திரும்புகிறேன்; எதிர்ப்பக்கத்தில் பார்க்கிறேன்; என் நெஞ்சு பூரிப்பால் விம்முகின்றது. ஆம், குரும்பசிட்டிக்கும் யாழ்மாநகரசபை மண்டபத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. அம் மண்டபத்தை அழகே உருவாக - கம்பீரமாக அமைத்த அக்கால யாழ் நகரசபைத் தலைவர் திரு. ஆர்.ஆர் நல்லையா அவர்கள் மயிலிட்டி தெற்கு என அக்காலம் வழக்கப் பெற்றதும் இப்போது குரும்பசிட்டி என வழக்கப்படுவதுமான இக்கிராமம் நல்லையா குடும்பத்தினரால் பெயர் பெறத் தொடங்கியது. யாழ் நகர வாசிகளாக அவர்கள் மாறிவிட்ட போதிலும் தாம் பிறந்த ஊரின் நலனில் அக்கறை காட்டியே வந்தனர். அம்பாள் கோவில், உள்ளுர்ப் பாடசாலை என்பவற்றின் முகாமையாளராகத் திரு. ஆர்.ஆர். நல்லையா அவர்கள் பணிபுரிந்தார்கள். அவர்களுக்கென குரும்பசிட்டியில் நிலபுலன்களும் இருந்தன". (மனோரஞ்சிதமலர் - 05.12.71).
அழிந்து சிதைந்து தரைமட்டமாகக் காட்சிதரும் அம்மாநகர சபை
மண்டபம் பற்றி 12.02.2003ம் நாள் 'தினக்குரல்' பத்திரிகையில்
யாழ் மாநகர சபை மண்டபம் பற்றிய உணர்வலைகள்' எனும்
கட்டுரை பின்வருமாறு குறிப்பிடுகிறது. 1932-36 களில் நகர சபைத்
தலைவராக விளங்கிய ஆர்.ஆர். நல்லையாவின் அயராத
உழைப்பினால் சகல வசதிகளுங்கொண்ட நகரசபை மண்டபம்
- 03 -

Page 8
நிர்மாணிக்கப்பட்டது. அன்றைய ஆளுனராக விளங்கிய எட்வேட் ஸ்ரெப்ஸ் என்பவரால் அது திறந்து வைக் கப்பட்டது'. தனியார்களினால் நடாத்தப்பட்டு வந்த நூல் நிலையத்தினையும் பொறுப்பேற்று நகரசபை நிர்வாகத்தின்கீழ் திரு. நல்லையா அவர்கள் கொண்டுவந்தார். நூல் நிலைய வளர்ச்சி இவரது காலத்திலேயே ஆரம்பித்தது. 14.02.2003ம் திகதிய வீரகேசரி பத்திரிகையில் வெளியான யாழ் நூலகத்திற்கு வித்திட்ட இரு வீரத்துறவிகள்' எனும் கட்டுரையில் முன்னாள் பலாலி ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் திரு துரை அரோக்கியதாசன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'தனியார் நிர்வாகத்தில் இந்நூலகம் இயங்கி வந்ததால் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அந்நூல் நிலையத்தை மூடிவிட வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டது. அப்போது திரு ஆர்.ஆர். நல்லையா அவர்கள் யாழ்ப்பாண பட்டின சபையின் தலைவராக இருந்தார். இவர் சபையின் அனுமதியுடன் நூலகத்தைப் பொறுப்பேற்றதுடன் இடத்தையும் மாற்றி அமைத்தார். இதனால் 1935.01.01ம் திகதி முதல் யாழ்ப்பாண வாடிவீட்டின் தென்புறத்தேயுள்ள பழைய கட்டிடத்தின் மேல்மாடியில் நூலகம் இயங்க ஆரம்பித்தது. இக் காலத்திலிருந்து நூலகத்தைப் பயன்படுத்துபவர்களிடமிருந்து அங்கத்துவக் கட்டணமாக மூன்று ரூபா அறவிடப்பட்டது.
இவரது சேவையினைப் பாராட்டி இவர் வசித்த யாழ்ப்பாணம் 1ம் குறுக்கத்தெருவிற்கு ஆர்.ஆர். நல்லையா வீதி என யாழ் மாநகரசபை பெயர் சூட்டிக் கெளரவித்துள்ளது. இவர்களது திருமணத் தொடர்புகளும், சட்டத்துறைசார்ந்த குடும்பங்களிடையே தான் ஏற்பட்டது. திரு. ஆர்.ஆர். நல்லையா அவர்கள் வண்ணார்பண்ணையில் இராமலிங்கம் உடையார் அவர்களின் மகள் சொர்ணம் என்பவரைத் திருமணம் செய்தார். திருமதி. சொர்ணம் நல்லையா அவர்களின் சகோதரர் திரு. இராமச்சந்திரன் அவர்களும் ஆரம்பத்தில் வழக்கறிஞராகவும் பின்னர் நீதிவானாகவும், அதன் பின் மாவட்ட நீதிபதியாகவும் பதவிகள் பெற்று இறுதியில் கொழும்பில் கடமையாற்றி ஓய்வு பெற்றார். தற்போதைய இருதயநோய் நிபுணர்
-04 -

தேசமான்ய வைத்திய கலாநிதி. இராமச்சந்திரன் அவர்கள் மாவட்ட நீதிபதி இராமச்சந்திரன் அவர்களது புதல்வராவார்.
திரு. ரி. ஆர். நல்லையா.
திரு. நல்லையா அவர்களின் மற்ற புதல்வரான திரு. ரி.ஆர். நல்லையா அவர்களின் இயற்பெயர் துரைரட்ணம் என்பதாகும். இவரை துரையப்பா என்றே ஊரவர் அழைத்தனர். ஆயினும் இவர் தனது பெயரை ரி.ஆர். நல்லையா என்றே பாவனையில் கொண்டார். ஆரம்ப இடைநிலைக் கல்வியினை யாழ் மத்திய கல்லுாரியில் பெற்றுக்கொண்ட இவர் பல்கலைக்கழக B.A பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார். கல்லூரிக் காலத்தில் இவரும் தன் சகோதரர் ஆர்.ஆர். நல்லையா போன்றே விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கினார். திரு. ரி.ஆர். நல்லையாவின் விளையாட்டுத் திறமைபற்றி ய்ாழ் மத்திய கல்லூரி நூற்றாண்டு மலர் (1930ம் ஆண்டு) "The Cup was again won by Central in 1900 by a broad margin. Mr. E.D. Martin was the Principal and Mr. L.P. Spencer was the Acting Headmaster and Athletic-Coach. T. R. Nalliah was the Champion athlete of the meet and R. R. Nalliah, J.T. Thambirajah, S. Kandiah, Edward and
R. R. Beadle were among those who obtained places. The Cup is now in our possession as one of our permanent trophies of Victory"
எனக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு பல வெற்றிகளை பாடசாலைக்கு ஆர்.ஆர், ரி.ஆர். நல்லையா சகோதரர்கள் பெற்றுக் கொடுத்தனர். திரு. ரி.ஆர். நல்லையா சட்டக்கல்லூரியில் வழக்குரைஞர் பரீட்சையில் திறமைச்சித்தி யெய்தி யாழ் நீதிமன்றங்களில் வழக்குரைஞராக தன் தொழிலை ஆரம்பித்தார். இவர்களது ஒரே சகோதரியான நாகரத்தினம் அவர்கள் நவாலியைச் சேர்ந்த வழக்கறிஞர் நாகமுத்து செல்லத்துரை அவர்களை மணம் புரிந்தார். இம் மூவரும் யாழ் நீதிமன்றத்தினை அண்மித்த பகுதிகளான ஆஸ்பத்திரி வீதி
- 05 -

Page 9
(தற்போதைய சம்பந்தர் வைத்தியசாலை), முதலாம் குறுக்குத் தெரு ஆகிய இடங்களில் வசித்ததுடன் மூன்று தசாப்தங்கள் வரையில் யாழ். நீதிமன்றங்களில் ஆதிக்கமும் செலுத்தினர்.
குரும்பசிட்டியின் சட்டத்தரணிகள் வரலாறு அல்லது சட்ட பாரம்பரியம் மேற்குறிப்பிட்ட பெரியோர்களின் வரலாற்றுடன் ஆரம்பித்தது என்பதோடு குரும்பசிட்டி கிராமத்தின் தோற்றப்பாடும் இக்காலப் பகுதியிலே தான் ஆரம்பித்தது எனலாம். மயிலிட்டி தெற்கு என அழைக்கப்பெற்ற பிரதேசத்தின் ஒரு பகுதி இக்காலப் பகுதியிலேதான் குரும்பசிட்டி எனும் கிராமமாக உருவாகிய தென்பதோடு நான் மேலே குறிப்பிட்ட பொரியார்கள் அல்லது சட்ட வல்லுனர்கள் ஆரம்பித்துவைத்த அல்லது அத்திவாரமிட்ட சட்ட பாரம்பரியம் எதிர்காலத்தில் செழுமையும் வளர்ச்சியும் பெற்றது எனலாம்.
முன்னைய யாழ்ப்பாண மாநகரசபை மண்டபத்தின் கம்பீரத் தோற்றம்
- 06 -
 

ଽ : '';
மீளமைக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம்
- O7

Page 10
திரு. சிவா. பசுபதி அவர்கள்
குரும்பசிட்டி கிராமத்துக்கு மருமக்களாக வருபவர்களை எத்துறை சார்ந்தவர்களாக இருப்பினும் தம் மக்களாக அரவணைத்துக் கொள்வது குரும்பசிட்டி மண்ணுக்கே உரிய பண்பும், பாரம்பரியமும் ஆகிவிட்டது. இந்த வகையில் பல்துறை சார்ந்த அறிஞர்கள் வேற்றிடங்களில் இருந்து மருமக்களாக வந்த போதிலும் குரும்பசிட்டியையே தமது சொந்தக் கிராமமாக மதித்து இக் கிராமத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தம்மாலான பங்களிப்பைச் செலுத்தியதுடன் தங்கள் துறைபோன திறமைகளினால் குரும்பசிட்டிக்கு சிறப்பினையும், பெருமையையும் சேர்த்துள்ளனர். இத்தகைய சிறப்புவாய்ந்த பெரியோர்கள் பலரை குரும்பசிட்டிக் கிராமம் தன்னகத்தே கொண்டிருந்தது.
யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த டாக்டர் VT பசுபதி, திருமதி. கமலாம்பிகை பசுபதி அவர்களின் மகனான திரு சிவா பசுபதி அவர்கள் குரும்பசிட்டியின் மருமகனாவார். இவரது ஏனைய சகோதரர்கள் வைத்திய கலாநிதி V. பசுபதி, கணக்காளர் திரு. M. பசுபதி, வைத்திய கலாநிதி ஜெகா பசுபதி, வைத்திய கலாநிதி யோகு பசுபதி ஆகிய நால்வரும் தற்போது வெளிநாடுகளில் பணிபுரியும் துறைபோன அறிஞர்கள் ஆவார்கள். திரு சிவா பசுபதி அவர்கள் 1947/1950 காலப்பகுதியில் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சட்டபீடத்திற்கு தெரிவாகிய முதல் மாணவ குழுவில் ஒருவராவார். சட்டமானிப் பரீட்சையில் (LL.B.) சித்தியெய்திய திரு. சிவா பசுபதி அவர்கள் 1953ம் ஆண்டு வழக்குரைஞராக தன் தொழிலை ஆரம்பித்தார். இவர் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டத்திற்கான பட்டப்பின் டிப்புளோமா பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார். திரு. சிவா பசுபதி அவர்கள்
- 08 -
 

குரும்பசிட்டியின் பெருமையை ஈழகேசரி பத்திரிகை வாயிலாக இலங்கை முழுவதும் அறியச் செய்த திரு நா. பொன்னையா அவர்களின் ஒரே புதல்வி புனிதவதி அவர்களை 1955ம் ஆண்டு மணம் புரிந்ததன் மூலம் குரும்பசிட்டியின் மருமகனானார். ஆயினும் குரும்பசிட்டி திரு. சிவா பசுபதி அவர்களை தனது சொந்த மைந்தனாகவே உரிமைபாராட்டியது.
திரு. சிவா பசுபதி அவர்களது அதிஷ்டமோ அல்லது வாய்த்த மனையாளின் அதிஷ்டமோ, அல்லது குரும்பசிட்டி மண்ணில் அவர் காலடி பதிந்த அதிஷ்டமோ திரு. சிவா பசுபதி அவர்களின் திருமண நான்காம் நாள் நிகழ்வினன்றே அவர்களுக்கு அரச சட்டத்தரணியாக நியமனக் கடிதமும் கிடைக்கப்பெற்றது.
நியமன நாளில் இருந்தே திரு. சிவா பசுபதியவர்கள் பல வழக்குகளிலும் அரசதரப்பில் ஆஜராகி தனது திறமையினால் வெற்றிகண்டதோடு தனது திணைக் களத்தில் அவரது உயரதிகாரிகளின் நன்மதிப்பினையும் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டார். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கிணங்க ஆரம்பநாள் முதலே படிப்படியாக பல பதவி உயர்வுகளையும் பெற்றுக் கொண்டார்.
சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்தில் 1955ம் ஆண்டு அரசவழக்குரைஞராக சேர்ந்த அவர் பின்னர் பிரதான அரச வழக்கு Gg5 T (65 U IT GE56||ló (DIRECTOR OF PUBLIC PROSECUTIONS) LD6örpfligu IITs g5606)60)LD 9gSug (SOLICITOR GENERAL) g3565 பதவி உயர்வுகள் பெற்று இறுதியில் 1975ம் ஆண்டு சட்டத்துறை g5606)60)LD 95uguT35 (ATTORNEY GENERAL) ugb65uufréfé Guibo) இரு வேறுபட்ட அரசாங்கங்களின் கீழும் மிக நீண்ட காலம் (பதின்மூன்று ஆண்டுகள்; 1988ம் ஆண்டு வரை) அப்பதவியை அலங்கரித்தார்.
- 09 -

Page 11
இவர் அதிஉயர் பதவியாகிய சட்டத்துறை தலைமை அதிபதியாக நியமனம் பெற்றபொழுது குரும்பசிட்டி மக்கள் தம் சொந்த மைந்தனுக்கு எடுக்கின்ற விழாவாக குரும்பசிட்டி அம்பாள் ஆலயத்தில் இருந்து வாசல்கள் தோறும் பூரண கும்பம் வைத்து ஊர்வலமாக அழைத்து சன்மார்க்க சபையில் பாராட்டு கூட்டத்தினையும் நடாத்தி மகிழ்ந்தனர். 1975ம் ஆண்டு அப்போதைய அரசாங்கம் பிரிவினைக் கருத்துக்களைத் தெரிவித்தல், துண்டுப் பிரசுரங்களை வெளியிடுதல் போன்றவற்றை பாரிய குற்றமாக, அதாவது நாட்டின் அரசுக்கெதிரான குற்றமாக அவசரகால சட்ட விதிகளின் கீழ் பிரகடனப்படுத்தி அவ்விதிகளை மீறுவோரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும், அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கவும் பிரமாணங்களை இயற்றியது. இப் பிரமாணங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் முதன்மையானவர் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் ஆவர். அவர் வழக்கிலே முதலாவது எதிரியாக குறிப்பிடப்பட்டிருந்தார். இவரும் குரும்பசிட்டியின் ஒரு மருமகனாரே. இவர் எவ்வாறு குரும்பசிட்டியின் மருமகனானார் என்பதை இவர் பற்றிய கண்ணோட்டத்தில் குறிப்பிடுகின்றேன். மேற்குறிப்பிட்ட வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் முன்னிலையிலே ட்ரயல்-அற்-பார் முறையிலே விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் வழக்குத் தொடுதரப்பில் அரசசார்பாக ஆஜராகிய வழக்கறிஞர்களுக்கு தலைமைதாங்கி வாதிட்டவர் சட்டத்துறை தலைமை அதிபதியாக இருந்த திரு. சிவா பசுபதி அவர்கள் ஆவர்.
குரும்பசிட்டியைப் பொறுத்தவரை இவ்வழக்கு கிராமத்திற்கு பெருமை சோர்த்த வழக்காகும். தமிழ் இனத்தின் வரலாற்றை நிர்ணயிக்கும் விடயத்தில் குரும்பசிட்டியின் மருமக்கள் இருவர் நீதிமன்றின் முனி நின்ற காட்சியைக் கணி டபோது கணிணியமான கனவான்களுடைய தொழிலுக்கு உரிய சிறப்பை உணர்ந்து கொண்டதோடு இத்தகைய பெரியார்களை மருமக்களாகப்பெற்ற கிராமத்தின் மைந்தன் என்ற வகையிலே நான் உவகையுற்றேன்;
- 10 -

பெருமிதமடைந்தேன். அதுமாத்திரமல்ல; இதே வழக்குத்தான் முதல் முதலாக ட்ரயல்-அற்-பார் முறையில் இலங்கையில் விசாரிக்கப்பட்ட முதல் வழக்கு என்பதோடு பிரிந்திருந்த தமிழ் தலைவர்களான காலஞ்சென்ற திரு ஜீ.ஜீ. பொன்னம்பலம் Q.C., திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் Q.C., திரு. திருச்செல்வம் Q.C. போன்ற தலைவர்களை ஒன்றிணைத்ததும் ஆகும்.
திரு சிவா பசுபதி அவர்கள் அடக்கமான, அமைதியான குணம் படைத்தவர். சட்டத்துறையில் ஆழமான அறிவும் அனுபவமும் கொண்டவர். இவர் உயர் நீதிமன்றின்முன் குற்றவியல், குடியியல், அரசியலமைப்பு சம்பந்தமான எல்லா வழக்குகளிலுமே அரசதரப்பில் அஜராகி மிகவும் சிறப்புற வாதாடியுள்ளார். இலங்கை குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின் 'இராணி வழக்குரைஞர் (QC) என்னும் பட்டம் வழங்கும் முறைமை இரத்துச் செய்யப்பட்டது. பதிலாக ஜனாதிபதி சட்டத்தரணி (PC) பட்டம் வழங்கும் முறை இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வாறான உயர் பட்டத்தினை முதன் முதலாக திரு. சிவாபசுபதி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இவர் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றபின் குடும்பத்தினருடன் வேற்று நாட்டில் குடியேறிவிட்டபோதிலும் தன் சொந்த மக்களுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருக்கும் அன்னாரின் நிலபுலன்கள் இன்னும் குரும்பசிட்டியிலே இருக்கின்றன.
குரும்பசிட்டி சட்டப்பாரம்பரியம் அல்லது பரம்பரையின் ஒர்
அங்கமாகத் திகழும் திரு. சிவா பசுபதி அவர்களால் குரும்பசிட்டிக் கிராமம் பெருமையடைகிறது.
- 11 -

Page 12
திரு. ஆர்.ஆர். நல்லையா (ஜூனியர்)
ராஜாராம் என்பதே இவரது பெயராக இருந்த போதும் இவரது தந்தையார் போலவே மரபு வழியாக நல்லையா எனும் குடும்பப் பெயரைக் கொண்டு வாழ்ந்தமையால் R.R. நல்லையா என்னும் பெயரினாலேயே அறியப்பட்டார். எல்லோரும் ஆர்.ஆர் என்றே சுருக்கமாக அழைத்தனர். குடும்பத்தில் மூத்த ஆண் பிள்ளையாகிய இவரை இவரது தந்தையார் ஆர்.ஆர். நல்லையா அவர்கள் தன் வாரிசாக தன்னைப்போலவே வழக்குரைஞராக்க விரும்பினார். யாழ். புனித பற்றிக்ஸ் கல்லூரி, கொழும்பு புனித தோமையார் கல்லூரி ஆகியவற்றில் தனது ஆரம்பக்கல்வியை முடித்துக்கொண்ட திரு. R.R. நல்லையா அவர்கள் இலங்கைப் பல்கலைக் கழக கல்விக் காலத்தில் கல்வியிலும், விளையாட்டிலும் தலைசிறந்து விளங்கியதோடு இலங்கையில் தடகள விளையாட்டில் கெந்தி அடிவைத்துப் பாய்தலில் (Hop Step and Jump) முதலிடத்தைப் பெற்றதுடன் சாதனையையும் தனதாக்கிக் கொண்டார். பல்கலைக் கழக காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு தலைமை (Captain) தாங்கி பல்கலைக் கழகங்களிடையேயான விளையாட்டுப் போட்டிகளுக்குச்சென்றதோடு இந்தியாவில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியிலும் பங்குபற்றினார்.
தந்தையாரின் விருப்பத்திற்கேற்ப வழக்குரைஞராக வர விரும்பிய இவர் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள 'லிங்கன்ஸ் இன் இல் பரிஸ்ரர் பட்டம் பெற்று வழக்குரைஞராக தன் தொழிலை ஆரம்பித்தார். தந்தையார் யாழ் மண்ணிலே சிறந்த வழக்கறிஞராக தொழில் புரிந்தபோதிலும் இவர் தன் வழக்குரைஞர் தொழிலை பிரதானமாக கொழும்பிலே மேற்கொண்டார். ஆயினும் இலங்கையின் பல பாகங்களிலும் நீதிமன்ற வழக்குகளில் ஏற்பட்டு வாதாடியுள்ளார்.
- 12
 

குறிப்பாக 1968ம் ஆண்டு உச்சநீதிமன்றமாகிய பிரித்தானிய பிரிவிக் கவுன்சில்முன் சேர். டிங்கிள் பூட் Q.C. அவர்களுடன் கனிஷ்ட வழக்குரைஞராக கொன்ராக் கொமிஷன் வழக்கில் (Contract Commission ) ஆஜராகி வெற்றி பெற்றதுடன் இலங்கைக்கு கீர்த்தியும் பெருமையும் தேடித் தந்துள்ளார். கொழும்பிலே தன் தொழிலை மேற்கொண்டபோதிலும் இவரது தந்தையார் பெரிய தந்தையார் போன்று இவரும் தனது பரம்பரை ஊரான குரும்பசிட்டியை மறந்து விடவில்லை. விடுமுறை காலங்களில் யாழ்ப்பாணம் செல்வதோடு தன் உறவினர்கள் வாழும் குரும்பசிட்டி, ஊரெழு போன்ற கிராமங்களுக்குச் சென்றுவரத் தவறுவதில்லை. அத்தோடு தன்னை நாடிவரும் கிராமமக்களுக்கு அவர்களின் தேவை அறிந்து அவ்வப்போது வேண்டிய உதவிகளைச் செய்யவும் தவறவில்லை. தம் தந்தையார் முகாமையாளராகப் பணிபுரிந்த அம்பாள் ஆலயம், பொன். பரமானந்தர் வித்தியாசாலை (அப்போதைய மகாதேவா வித்தியாசாலை) ஆகியவற்றின் வளர்ச்சிபற்றி அவ்வப்போது விசாரித்து அறிந்து கொள்வார்.
அரசியல்:- அரசியலில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாக இருந்த திரு. நல்லையா அவர்கள் திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் மறைவினைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் நெருங்கிய நண்பராகவும், கட்சிப் பிரமுகர்களின் நன்மதிப்பைப் பெற்றவராகவும் விளங்கினார். ஜக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்குமிக்க செல்லப்பிள்ளையாக இவர் திகழ்ந்தார். 1977ம் ஆண்டுத் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தனா அவர்கள் கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதியில் போட்டியிட்டபோது அவரது பெயரை முன் மொழிந்தவர் திரு. ஆர்.ஆர். நல்லையா அவர்களாவார். அத்தோடு திரு. ஆர். பிரேமதாசா அவர்களின் பிரசார இயக்கத்தை முதலில் தலைமைதாங்கி கொச்சிக்கடையில் ஆரம்பித்து வைத்தவரும் திரு. ஆர். ஆர். நல்லையா அவர்களே ஆவார். இத்தேர்தலின் பின் திரு. ஜே. ஆர். ஜெயவர்தனா அவர்கள் ஜனாதிபதியாகவும், திரு. பிரேமதாசா அவர்கள் பிரதமராகவும்
- 13 -

Page 13
பதவியேற்றனர். இதனால் இத்தலைவர்கள் இவரை கைராசிக் காரர்' எனக் கருதினர். 1977ல் ஐ.தே.க. அதிகாரத்திற்கு வந்ததும் இவர் 'ரைம்ஸ் ஒவ் சிலோன் நிறுவனத்தின் தகவுடைய அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் திரு. ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் தான் ராஜாங்க அமைச்சராக இருந்தபொழுது ஸ்தாபித்த அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான திரு. ஆர்.ஆர். நல்லையா அவர்களைத் தலைவராக நியமித்தார். இவரது பதவிக் காலத்திலே அச்சகக் கூட்டுத்தாபனத்தில் பாடசாலைப் பிள்ளைகளுக்கான இலவச பாடப்புத்தகம், மக்கள் வங்கிக்கான காசோலை, உல்லாசப் பயணச் சபை டயறிகள் என்பவற்றை அச்சிடல் போன்ற இன்னோரன்ன புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அச்சுக் கூட்டுத்தாபனத்தை இலாபத்தில் இயங்கச் செய்ததோடு, சிறந்த நிர்வாகி எனும் பாராட்டினையும் பெற்றார். 1986ம் ஆண்டு மேற்கு ஜேர்மனியில் டசில்டொப் (Dussell drof) நகரில் நடைபெற்ற 'டுருபா' எனும் கண்காட்சியில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து கலந்து கொண்டதுடன் 1987ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜ. நா. சபைக்கான இலங்கைத் தூதுக்குழுவில் அங்கத்தவராகவும் சென்றார். இவரது மனைவி திருமதி. நல்லையா அவர்கள் தன் pÉiró IIIsi, 5p60LD BITU600TLDITS Colombo Gas and Water Company இன் பொதுமுகாமையாளராகவும், இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் அதிகாரியாகவும், பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் நிறைவேற்று அதிகாரியாகவும் நியமனம் பெற்றிருந்தார்.
சமூகசேவைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த திரு. நல்லையா அவர்கள் கொழும்பு கிழக்கு றோட்டறிக் கழக அங்கத்தவராகத் திகழ்ந்தார். 1988ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி திரு. நல்லையா அவர்கள் காலமாகியதைத் தொடர்ந்து கொழும்பு கிழக்கு றோட்டறிக் கழகம் சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டோர்க்கு நிதி உதவி புரியும் பொருட்டு ஒரு நிதியத்தை அரச அனுசரணையுடன் 'ஆர்.ஆர். நல்லையா ஞாபகார்த்த நிதி எனும் பெயரில் ஆரம்பித்துள்ளது.
- 14

சட்டத்தொழிலின் நிமித்தம் குரும்பசிட்டிக்கு வெளியே வாழ்ந்த பொழுதும் சட்டத்துறை மற்றும் பல்வேறு துறைகளிலும் அவர் ஆற்றிய சேவையால் அனைவரினதும் பாராட்டைப்பெற்றார். இவரது பரம்பரையின் மூலவேர் குரும்பசிட்டியிலேயே ஆழமாகப் பதிந்திருந்ததன் காரணமாக குரும்பசிட்டிக்கு உரித்தான சட்ட பாரம்பரியத்தின் ஓர்அங்கமாக இவர் திகழ்வதால் குரும்பசிட்டி பெருமையடைகின்றது.
திரு. ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களின் யாழ் விஜயத்தின் போது திரு. ஈ.எல். சேனநாயக்கா, உடுப்பிட்டித் தொகுதி பா.உ. திரு. மு. சிவசிதம்பரம் ஆகியோருடன் திரு. ஆர்.ஆர். நல்லையா அவர்களை முதலாவது படத்திலும் 1977ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது திரு. ஆர். பிரேமதாச, திருமதி. பிரேமதாச ஆகியோருடன் திரு. ஆர். ஆர். நல்லையா, திருமதி. நல்லையா ஆகியோரை 2வது படத்திலும் காணலாம்.
- 15 -

Page 14
திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள்
குரும்பசிட்டி கிராமத்தின் மருமக்களாக வருபவர்களை தம் மக்களாக அரவணைத்துக் கொள்ளுதல் குரும்பசிட்டி மண்ணிற்குரிய பண்பு என நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். அந்த வரிசையிலே குரும்பசிட்டியின் சட்ட பாரம்பரிய தலைமுறையின் ஓர் முக்கிய அங்கத்தவராக அமரர். திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் திகழ்கின்றார். அமரர். திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களும் குரும்பசிட்டி கிராமத்திற்கு பெருமைசேர்த்த மருமகனாவார். திரு. அமிர்தலிங்கம், தான் குரும்பசிட்டியின் மருமகன் என்பதை குரும்பசிட்டியில் நடைபெறும் எந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் போதும் பெருமையுடன் குறிப்பிடத்தவறுவதில்லை.
திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் 1954ம் ஆண்டு ஜூலை மாதம் வல்லிபுரம் மங்கையற்கரசி அவர்களைக் கரம் பற்றினார். திருமதி. மங்கையற்கரசி அவர்கள் திரு. முத்துக்குட்டி வல்லிபுரம்-நாகம்மா தம்பதியினரின் மூத்த மகளாவார். இவருக்கு ஞானாம்பிகை, கிருஷ்ணவேணி என இரு சகோதரிகளும் கணேஷானந்தன், கோபாலச்சந்திரன் என இரு சகோதரர்களும் உளர். தந்தையார் திரு. முத்துக்குட்டி வல்லிபுரம் அவர்கள் குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். துணைவியார் மூளாயைச் சேர்ந்தவராதலாலும் அவர் மேற்கொண்ட வியாபார ஸ்தாபனங்கள் வடபகுதிக்கு வெளியே பண்டாரவளை, வெலிமடை போன்ற இடங்களில் அமைந்திருந்தமையாலும் குரும்பசிட்டி கிராமத்திற்கு வெளியிலே வசித்து வந்தனர். ஆயினும் திரு. மு. வல்லிபுரம் அவர்களது சகோதரர்களில் திரு. சுப்பிரமணியம் அவர்கள் வெளிநாட்டில் குடியேறிவிட ஏனைய இரு சகோதரர்களான திரு. ஆறுமுகம் அவர்களும் திரு. கந்தையா அவர்களும்
- 16 -
 

குரும்பசிட்டியிலேயே வாழ்ந்தனர். அப்போதைய பிரபல சுருட்டுத் தொழில் அதிபர் திரு. இராசையா அவர்களின் துணைவியார் அன்னமுத்து அவர்கள் திரு. மு. வல்லிபுரம் அவர்களின் சகோதரியாவார். எனவே திருமதி. மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் மரபுவழி மூதாதையரின் மூலவேர் குரும்பசிட்டியிலேயே ஆழமாகப் பதிந்திருந்தது எனலாம். இவ்வகையிலே திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் குரும்பசிட்டியின் மருகர் என்பதோடு குரும்பசிட்டி சட்ட பாரம்பரியத்தினை ஐம்பதுகளின் பின் பிரதிநிதித்துவப் படுத்திய பெருமைமிக்க அங்கத்தவர் எனவும் குறிப்பிடலாம்.
திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களது அரசியல் ஆளுமை பற்றியும் அவரது அரசியல் வரலாறு பற்றியும் நான் இக்கட்டுரையில் குறிப்பிட்டு மக்கள் அறிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்க மாட்டாது என்பது எனது தாழ்மையான கருத்தாகும். அவர் uppuu foo b|T6)356ir, (s) g5 Tg500TLDT35 "The Murder of a Moderate", "வரலாற்றின் மனிதன்") அவ்வப்போது வெளிவந்த கட்டுரைகள் போன்றன திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் ஆளுமை, அவரது அரசியல் வரலாறு போன்றவற்றை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் எமது மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் சம்பவங்கள் சிலவற்றைக் குறிப்பிடுவது பொருத்தமானதெனக் கருதுகின்றேன். திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் நீண்டகாலம் பிரதிநிதித்துவப் படுத்தியதும் அவர் பிறந்த மண்ணும் வட்டுக்கோட்டைத் தொகுதியே ஆக இருந்த பொழுதிலும் இறுதியாக 1977ம் ஆண்டு திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் மறைவினைத் தொடர்ந்து பிரதிநிதித்துவப் படுத்தியது புகுந்த வீடு (குரும்பசிட்டி) அமைந்திருந்த காங்கேசன் துறைத் தொகுதியெண் பதால் குரும் பசிட் டி பெருமையடைகின்றது. அது மட்டுமன்றி இத்தொகுதி ஓர் மாற்று பிரதமரையும் கொண்டிருந்தது எனின் அது மிகையாகாது. 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலின் பின்னரே திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். ஜனநாயக மரபின்படியும் பாராளுமன்ற சம்பிரதாயங்களின்
- 17

Page 15
அடிப்படையிலும் எதிர்கட்சித் தலைவர் ஓர் மாற்று பிரதமராகவே கணிக்கப்படுவதோடு எந்த வேளையிலும் அரசாங்கத்தினைப் பொறுப்பேற்கக் கூடிய ஓர் நிழல் மந்திரி சபையையும் அமைத்து வைத்திருக்க வேண்டிய பொறுப்பினை உடையவர். இப்பேறு எந்தத் தமிழ் தலைவருக்கும் கிட்டாத பேறாகும். இதனால் குரும்பசிட்டி சட்ட பாரம்பரியம், இலங்கையின் அரசியல் வரலாற்றிலும் ஓர் உன்னத இடத்தைப் பெறுகின்றது. திரு. அமிர்தலிங்கம் அவர்களது அரசியல் ஆளுமை, ஜனநாயக நிறுவனங்கள் பால் அவர் கொண்டிருந்த அசையாத நம்பிக்கை, சட்டவியல் ஞானம், அவரது அரசியல் எதிரியையும் மதிக்கும் மனப்பாங்கு போன்ற உயரிய விழுமியங்கள் என்பன போற்றத் தகுந்தன. இப்பண்புகள் அனைத்தையுமே இவர் 1989ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ம் திகதி பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்தபொழுது அத்தனகலைத் தொகுதிப் பாரளுமன்ற உறுப்பினரும் முன்னைநாள் பிரதமருமாகிய திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களது குடியியல் உரிமையை இரத்துச் செய்யும் மசோதா மீதான விவாதத்தில் நிகழ்த்திய உரை வெளிப்படுத்தியது. ஆழமான அரசறிவியல், சட்டவியல் நுணுக்கம், நீதி, நேர்மை, நியாயமான அணுகுமுறை, ஜனநாயக மரபு பேணல் போன்ற அனைத்தும் இவ்வுரையில் தெளிவாக எதிரொலித்தன. திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களின் பண்பான அரசியல் கலாச்சாரத்திற்கு அவரது மறைவின் பின் எதிர்கட்சித் தலைவி திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் விடுத்த செய்தி சான்று பகர்வதாகும். அச்செய்தியில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்.
நான் தொடர்ச்சியாக பிரதமராக பதவிவகித்த அரசாங்கங்களின் காலப் பகுதிகளிலே திரு. அமிர்தலிங்கம் அவர்களோடு அரசியல் ரீதியில் தொடர்பு கொள்ளும் பேற்றினைப் பெற்றிருந்தேன். நாங்கள் அவருடைய கட்சியுடனும் அவருடனும் அரசியல் வேறுபாடுகளைக் கொண்டிருந்தோம். எனது பன்னிரண்டு வருட ஆட்சியின்போது அவரை நான் மூன்று தடவைகள் தடுத்து வைத்தேன். இதனை 1989ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ம் திகதி நடைபெற்ற
- 18

பாராளுமன் ற அனுதாபப் பிரேரணை உரையிலும் குறிப்பிட்டிருந்தேன். நான் அங்கு குறிப்பிட்டது போல அவர் என் மீது எவ்விதமான கசப்புணர்வையும் கொண்டிருக்கவில்லை. அத்தோடு அப்போதைய ஐ.தே.க. அரசாங்கம் எனது குடியியல் உரிமைகளை மறுக்கும் பிரேரணையை பாராளுமன்றில் கொண்டு வந்தபோது அவர் எவ்வாறு அப்பிரேரணையை எதிர்த்தார் என நான் எப்பொழுதும் நினைவு கூருகின்றேன். (நன்றி : வரலாற்றின் மனிதன்). இன்னும் வரலாற்றின் மனிதன் நூல் ஆசிரியர்களான திரு. சு. மகாலிங்கம் (மாலி), டாக்டர். பாஞ். இராமலிங்கம் என்போர் திரு. அமிர்தலிங்கம் அவர்கள் பற்றிக் கூறுகையில் இலங்கைத் தமிழர்களுடைய வரலாறு அமிர்தலிங்கத்தைத் தவிர்த்து எழுதப்பட இயலாதது என்று குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு உயரிய, சீரிய சிந்தனை கொண்ட பெரியாரை, உன்னதமான அரசியல் தலைவரை குரும்பசிட்டி மருமகனாகவும் குரும்பசிட்டியின் சட்ட பாரம்பரியத்தின் ஓர் அங்கத்தவராகவும் பெற்றமை குரும்பசிட்டி மண் ணிற்கு செழுமையூட்டும் நிகழ்வுகளாகும்.
தந்தை செல்வா, பெரியார். ஈ.வே.ரா. ஆகியோருடன் திரு. திருமதி. அமிர்தலிங்கம் அவர்கள் (1972ம் ஆண்டு)
- 19 -

Page 16
திரு. அ. அமிர்தலிங்கம், திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் ஆகியோரை முதலாவது படத்திலும், திரு. அமிர்தலிங்கம் அவர்கள் 1983ம் ஆண்டு கலைஞ கருணாநிதியுடன் ஆலோசனை செய்வதை இரண்டாம படத்திலும் காண்க.
- 20
 

திரு. க.வே. மகாதேவன்
குரும் பசிட் டி சட்ட பாரம் பரியத் திணி உறுப்பினர்களுள் தற்பொழுது இலங்கையில் வசிக்கும் மிக மூத்த உறுப்பினர் சட்டத்தரணி திரு. க.வே மகாதேவன் அவர்கள் ஆவார். குரும்பசிட்டி திரு. க. வேலுப்பிள்ளை-சுந்தரம் தம்பதியினரின் மகனான திரு.க.வே. மகாதேவன் அவர்கள் ஆரம்பக் கல்வியை குரும்பசிட்டி மகாதேவா வித்தியாசாலையிலும் பின்னர் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியிலும் பெற்றார். க.பொ.த. உயர்தர வகுப்பில் உயிரியல் விஞ்ஞானத் துறையில் கல்வி பயின்றார்.
இளமைக் காலத்திலேயே அரசியலில் இவர் காட்டிய ஈடுபாடும் சட்டத்துறையின்பால் கொண்ட ஈர்ப்பும், இவரை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை மேற்கொள்ளத் தூண்டியது. சட்டக் கல்லூரியில் பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றியதுடன் சட்டக்கல்லூரி இந்துமாமன்றத்தின் தலைவராகவும், தமிழ் மன்ற உப தலைவராகவும் பணியாற்றினார். தமிழ்மன்ற விவாதக்குழுவின் உறுப்பினராக தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். இறுதி ஆண்டில் குழுவின் தலைவராக பணியாற்றிய இவர் பல்வேறு விவாத அணிகளுடன் விவாத மேடைகளில் சட்டக்கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். திரு. மகாதேவன் அவர்கள் ஓர் சித்திரக்கலைஞர் என்றும் கூறலாம். சில பிரமுகர்களின் உருவை அவ்வாறே வரையும் ஆற்றல் கொண்டிருந்தமையை இளமைக் காலத்தில் அவரோடு நெருக்கமாகப் பழகியபொழுது என்னால் அறிய முடிந்தது. என்ன காரணமோ தெரியவில்லை அவர் அப்போதைய சிறந்த திரைப்பட நடிகையும் நாட்டியப் பேரொளி எனப் புகழ் பெற்றவருமான நடிகை பத்மினி அவர்களின் உருவத்தை தத்ரூபமாக வரைந்த நிகழ்வுகள் என் மனக்கண் முன் இன்றும் நிழலாடுகின்றன. இளமைக் காலத்திலே
- 21 -

Page 17
நடிப்புத் துறையில் ஈடுபாடு காட்டாத போதிலும் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்தபோது நாடகத்துறையிலும் ஈடுபட்டிருந்தார். இவர் முக்கிய பாத்திரமேற்று சட்டக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து நடித்த கோட்டிற்குப் போகாதே’ எனும் நகைச்சுவை நாடகம் குரும்பசிட்டியிலும் மேடையேறியது. கிராமப்புற மாணவனாக இருந்தபொழுதிலும் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்ந்த திரு. மகாதேவன் அவர்கள் மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் இருந்தே மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தலில் ஈடுபட்டிருந்தார். இன்றும்கூட இவர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றார்.
அரசியலில் இவர் காட்டிய அதிதீவிர ஈடுபாடு தமிழரசுக் கட்சித் தலைவர்களின் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தியது. இவர் 1970ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வடகிழக்கு மாகாணம் முழுவதும் கட்சிக்கான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். 1971ம் ஆண்டு வழக்கறிஞராகச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட திரு. மகாதேவன் அவர்கள் தன் சொந்த மண் குரும்பசிட்டியிலேயே தன் சட்டத் தொழிலை மேற்கொள்ள விரும்பிச் செயலாற்றினார். சட்டத் தொழிலின் கண்ணியத் தன்மையை அல்லது அது கனவான்களின் உயர் தொழில் என்பதனை அறியாத சிலரின் நடத்தையால் கண்பார்வையை இழக்க நேரிட்டது. இருப்பினும் நெஞ்சுறுதியும் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் சேவை மனப்பாங்கும் எல்லாவற்றிற்கும் மேலாக இவருக்கு வாய்த்த மனையாளின் திறமையும் இவரை இற்றைவரை சட்டத்துறையில் உற்சாகமாக செயல்பட வைக்கின்றன. மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் உப தலைவர்களில் ஒருவராகவும் திரு. மகாதேவன் அவர்கள் பணிபுரிந்து கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கு தம்மாலான பங்களிப்பினைச் செய்து வருகின்றார்.
காலத்தின் சூழ்நிலையால் இடம் பெயர்ந்து கொழும்பில் வாழ்ந்தாலும்
தன் உதவி நாடி வருவோர்க்கு தன்னால் இயன்ற வரை சேவை
செய்து வருகின்றார். இவரது பணிக்கு முகம் கோணாது உதவி
வருபவர் திருமதி. பவானி மகாதேவன் அவர்கள் ஆவார். திருமதி
- 22

பவானி மகாதேவன் அவர்களது சேவையின் அங்கீகாரமாக அரசு இவருக்கு சமாதான நீதவான் பட்டத்தினையும் வழங்கியுள்ளது. திரு.மகாதேவன் அவர்கள் 2001ம் ஆண்டு மார்கழி மாதம் நடை பெற்ற பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அபேட்சகராகப் போட்டியிட்டு கணிசமான அளவு வாக்குக்களைப் பெற்றிருந்தார். இவர் குரும்பசிட்டி சட்ட பாரம்பரியத்தில் நீண்டகால இடைவெளிக்குப் பின் வந்த மூத்த உறுப்பினராவர். இவரால் குரும்பசிட்டி சட்ட பாரம்பரியம் பெருமையடைகின்றது.
திரு. க.வே. மகாதேவன் அவர்கள் உரையாற்றுவதையும் அருகில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. மு. சிவசிதம்பரம் அவர்கள் அமர்ந்திருப்பதையும் 85IT600T6) Tub.
- 23

Page 18
திரு. கணபதிப்பிள்ளை சிவபாதம் திருமதி. நாகராஜேஸ்வரி சிவபாதம் தம்பதியினர்
திரு. கணபதிப்பிள்ளை சிவபாதம்
குரும்பசிட்டி, சட்டத்துறையில் தந்த இளைய பரம்பரையினர் வரிசையிலே திரு. கணபதிப்பிள்ளை சிவபாதம் அவர்கள் குறிப்பிடப்படவேண்டியவர். திரு. சிவபாதம் அவர்களுடைய குடும்பம் சமூகசேவையில் மிகவும் ஈடுபாடு கொண்ட குடும்பமாகும். சமூகத்தில் மிகவும் நலிவடைந்த வகுப்பாரின் மேம்பாட்டில் அக்கறை கொண்டு அதற்குரிய பங்களிப்பினை நல்கியவர்கள்தான் திரு. சிவபாதம் அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்கள். இவருடைய மூத்த சகோதரராகிய திரு. சிவசுப்பிரமணியம் அவர்கள் தீவிர சமதர்மக் கொள்கையைப் பின்பற்றி அரசியலில் ஈடுபாடு கொண்டவராகக் காணப்பட்டார். திரு.க. சிவபாதம் அவர்களும் அவருடைய கொள்கைகளின் தாக்கத்திற்கு உட்பட்டிருந்தார் என்றே சொல்லலாம். இவர் ஆரம்பக்கல்வியை குரும்பசிட்டி பொன் பரமானந்தர் வித்தியாசாலையிலும் பின்னர் வசாவிளான் மத்தியகல்லூரியிலும் க.பொ.த. உயர்தர வகுப்பினை தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியிலும் கற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார். பல்கலைக் கழகக் கல்விக்கு சட்டத்துறை பட்டப் படிப்பினைத் (LLB.) தேர்ந்தெடுத்துக் கொண்டார். இவருடைய பரந்த விரிந்த சமூகநோக்கு, தமிழ் இனத்தின் விடிவின்பால் கொண்ட ஈர்ப்பு பல்கலைக்கழக கல்வியைக்கூடச் சிறிது காலம் தாமதிக்கச் செய்தது. ஆயினும் காலதாமதத்தின் பின்னரும் வெற்றிகரமாக (LLB) பட்டம்பெற்ற திரு. சிவபாதம் அவர்கள் 1991ம் ஆண்டு
- 24
 

சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கல்வியின்பால் மட்டுமன்றி ஓர் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த இவர் 1980ம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பெற்ற கராட்டிப் போட்டியில் தங்கப்பதக்கத்தினை வென்று குரும்பசிட்டி கிராமத்துக்கு பெருமை சேர்த்தார். இந்நாளில் கொழும்பில் குடியியல், குற்றவியல், கம்பனி ஆகிய துறைகளில் தொழில் புரியும் திரு. சிவபாதம் அவர்கள் வளர்ந்துவரும் துடிப்புள்ள இளைய சட்டத்தரணிகளில் ஒருவராகத் திகழ்கின்றார்.
திருமதி. நாகராஜேஸ்வரி சிவபாதம்
சட்டத்தரணி திரு. க. சிவபாதம் அவர்களின் துணைவியார் நாகராஜேஸ்வரி அவர்களும் கொழும்பில் தொழில் புரியும் மிகவும் சுறுசுறுப்பான சட்டத்தரணியாவார். வட்டுக் கோட்டை அராலியைச் சேர்ந்த துரைரத்தினம்செல்வரத்தினம் தம்பதிகளின் மகளாகிய நாகராஜேஸ் வரி அவர்கள் கொழும் பு பல்கல்ைக்கழக சட்டத்துறைப் பட்டதாரி (LLB) ஆவார். திரு.க. சிவபாதம் அவர்களைக் கரம் பற்றியதின் காரணமாக குரும்பசிட்டி மணி னின் மருமகளாகியதுடன் குரும்பசிட் டி சட்டபாரம்பரியத்தின் அங்கத்தவராகிவிட்டார். ஆரம்பக்கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு சென்கிளையர் பெண்கள் பாடசாலையிலும் பயின்றார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழக சட்டமானிப் பட்டத்தினையும் பெற்று 1988ல் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பல்கலைக்கழக காலத்தில் அறங்கூறும் அவையத்தோர் போட்டியில் முறையே 1982ம், 1983ம் ஆண்டுகளில் வெள்ளிப்பதக்கம், தங்கப்பதக்கங்களைச் சுவீகரித்துக் கொண்டவர். பாடசாலைக் கல்வியோடு மட்டும் நின்றுவிடாது நாடகம், நடனம், சங்கீதம்,
- 25

Page 19
விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் ஈடுபாடு கொண்ட இவர் நல்லை ஆதீன பண்ணிசை மாமணி பட்டப்படிப்பினை இரு ஆண்டுகளில் பூர்த்தி செய்ததுடன் வடஇலங்கை சங்கீதசபையின் ஆசிரிய தரத்திற்கான சான்றிதளையும் பெற்றவர். சட்டத்துறையில் புகழ்பெற்ற காலஞ் சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி திரு. மோதிலால் நேரு அவர்களின் கனிஷ்ட சட்டத்தரணியாகவும் பணிபுரிந்தவர். தற்பொழுது கணவனுடன் இணைந்து பல்வேறு வகை சார்ந்த சட்டத்துறைகளிலும் தொழில் செய்யும் இவர் தன் பிள்ளைகளுக்கு ஓர் சிறந்த தாயாக, குடும்பத்திற்கு ஓர் சிறந்த தலைவியாக, சமூக முன்னேற்றத்திற்கு ஓர் வழிகாட்டியாக, குரும்பசிட்டி மண்ணிற்கு ஓர் பெருமை சேர்க்கும் மருமகளாகத் திகழ்கின்றார். இவருடைய பங்களிப்பு குரும்பசிட்டி கிராமத்தின் மக்களினது கெளரவத்திற்கும் வளர்ச்சிக்கும் ஓர் சிறந்த முன் உதாரணமாகும்.
திரு. சிவபாதம் அவர்களும் திருமதி. சிவபாதம் அவர்களும் தங்கள் தொழிலிலும் மேலாக தாம் பிறந்த, புகுந்த மண்ணை நேசிப்பதன் காரணமாக குரும்பசிட்டி மண்ணில் என்று மீண்டும் காலடி வைப்போம் எனும் ஆதங்கத்தில் விடியலை நோக்கியவாறு கொழும்பில் இருந்தே தம்மால் இயன்றவரை தம்மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். இவர்களுடைய சேவை குரும்பசிட்டி மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எமது அவா. சட்டத்துறை சார்ந்த இவர்களின் பங்களிப்பினால் குரும்பசிட்டி சட்ட பாரம்பரியம் மேலும் செழுமை பெறுகின்றது.
- 26 -

திரு. சுவர்ணராஜா நிஷாந்தன், திரு. சுவர்ணராஜா நிலக்ஷன் சகோதரர்கள்
குரும்பசிட்டி சட்டபரம்பரையின் ஆரம்ப கர்த்தாக்காளான திரு. R.R. நல்லையா, TR நல்லையா சகோதர்கள் போன்று நீண்ட காலத்தின் பின் குரும்பசிட்டியில் தோன்றியுள்ள இளம் சட்டதரணிகளான சகோதரர்கள் திரு. சுவர்ணராஜா நிஷாந்தன், திரு. சுவர்ணராஜா நிலக்ஷன் சகோதரர்கள் ஆவர். நல்லையா குடும்பத்தவர் போலவே இவர்களது குடும்பமும் சமூக சேவையிலே ஈடுபாடுகொண்ட குடும்பமாகும். இவர்களது பேரனாராகிய காலஞ்சென்ற திரு.PS. நடராஜா அவர்கள் கெக்கிராவவில் பிரபல வர்த்தகராக விளங்கியதோடு குரும்பசிட்டி கிராமத்தின் கல்வி வளர்ச்சி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். குரும்பசிட்டி மகாதேவா வித்தியாசாலையின் முகாமையாளராக கடமையாற்றியதோடு குரும்பசிட்டி, மயிலிட்டி, பலாலி, வசாவிளான், கட்டுவன், வறுத்தலை விளான், வீமன்காமத்தின் ஒரு பகுதி, ஆகிய பரந்த பிரதேசத்தை உள்ளடக்கிய மயிலிட்டி கிராமசபையின் தலைவராகவும் பணிபுரிந்தவர். அவரது மகனான திரு. சுவர்ணராஜா அவர்களும், தந்தையார் போலவே வர்த்தகத்தில் ஈடுபட்ட பொழுதிலும் காலத்தின் சூழ்நிலையும், குரும்பசிட்டியை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையும் அவரது வர்த்தக முயற்சிகளைப் பெரிதும் பாதித்தது. இருப்பினும் தம் பிள்ளைகளின் கல்வியில் அதிக அக்கறை காட்டி வந்தார் . அதன் பயனாகவே இரு புதல் வர்களும் சட்டத்தரணிகளானார்கள்.
- 27

Page 20
திரு. சுவர்ணராஜா நிலக்ஷன்
குரும்பசிட்டியைச் சேர்ந்த திரு. சுவர்ணராஜாரேணுகா ஆகியோரின் இரண்டாவது மகனான திரு. நிலக்ஷன் அவர்கள் இளமைக் கல்வியைக் குரும்பசிட்டி பொன். பரமானந்தர் வித்தியாலயத்தில் கற்றார். சிறுவயது முதலே கலை, பண்பாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி வந்ததுடன் பேச்சு, இலக்கியப் போட்டிகளிலும் கலந்து பல பரிசில்களைப் பெற்று வந்தார். யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியில் 1986 ம் ஆண்டு இணைந்து அங்கும் கல்வி சார், மற்றும் புறக்கிருத்திய நடவடிக்கைகளில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றார். ஆரம்பப் பிரிவு மற்றும் இடைநிலைப் பிரிவு மாணவ தலைவராகவும் பணியாற்றியதுடன் பல்வேறு சங்கங்களிலும் இணைந்து செயலாற்றினார். 1992ம் ஆண்டு கொழும்பு றோயல் கல்லூரியில் இணைந்த நிலக்ஷன் குறுகிய காலத்தினுள் கல்லூரியின் பல்துறை நடவடிக்கைகளிலும் ஊக்கத்துடன் ஈடுபட்டு ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் பாராட்டப்பட்டார். றோயல் கல்லூரி தமிழ் விவாத அணிக்குத் தலைமை தாங்கிப் பல்வேறு கேடயங்களையும் வெற்றிக் கிண்ணங்களையும் கல்லூரி வென்றெடுக்கக் காரணமாயிருந்ததுடன் சிறந்த விவாதிக்கான பரிசில்களையும் பலதடவைகள் பெற்றார். றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றத்தின் தலைமைப் பதவியையும் அலங்கரித்த இவர் கல்லூரியின் சிரேஷ்ட மாணவர் தலைவர்களில் ஒருவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீடத்திற்கு தெரிவான இவர் சட்டக் கல்வியில் கொண்ட ஈடுபாடு காரணமாக பல்கலைக்கழகக் கல்வியை இடையில் நிறுத்திக்கொண்டு கொழும்பு சட்டக் கல்லூரியில் தனது சட்டக் கல்வியை 1997ம் ஆண்டில் ஆரம்பித்து சட்டக் கல்லூரியின் அனைத்துப்பரீட்சைகளிலும் திறமைச் சித்தியைப்
- 28
 

பெற்றதுடன் பொது நடவடிக்கைகளிலும் சிறப்பான பங்கை ஆற்றினார். சட்டக் கல்லூாரி தமிழ் விவாத அணிக்கு அடுத்தடுத்து இரண்டாண்டுகள் தலைவராக விளங்கியதுடன் அதற்கான அல்ஹாஜ் பாக்கீர் மாக்கார் நினைவுத் தங்கப்பதக்கத்தையும் வென்றிருந்தார். எழுந்தமானப் பேச்சுப் போட்டிக்கான சுவாமிநாதன் நினைவுத் தங்கப்பதக்கம், குமாரசுவாமி விநோதன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம், அறங்கூறும் அவையத்துக்கு உரைத்தற் போட்டிக்கான இராமநாதன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் என்பவற்றுடன் மேலும் பல பதக்கங்களையும் வெற்றிக் கேடயங்களையும் தனதாக்கிக் கொண்ட இவரின் பல்துறை செயற்பாட்டின் பயனாக சட்டக் கல்லூரியில் சகல துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக வழங்கப்படும் மன்றம் 90 விருதைத் தொடர்ச்சியாக இரு தடவைகள் வென்ற பெருமையைப் பெற்றார்.
2000ம் ஆண்டு மார்கழி 14ம் திகதி சட்டத்தரணியாகச் சத்தியப் பிரமாணஞ் செய்து கொண்ட திரு. நிலக்ஷன், சிரேஷ்ட சட்டத்தரணி திரு. ஏ.ஆர். சுரேந்திரன் அவர்களுடன் தனது சட்டத் தொழிற் பாடுகளை மேற்கொள்வதுடன் பிரித்தானிய உயர்ஸ்தானிக ராலயத்தில் அரசியல் மற்றும் பொது அலுவல்கள் அதிகாரியாகப் பணியாற்றி வருகின்றார். பத்திரிகைகளில் இலங்கை அரசியல் மற்றும் சமூக கலை இலக்கிய விடயங்கள் பற்றி பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ள இவர் 'எழு குரல்கள்' என்னும் செவ்வித் தொகுப்பு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் டிப்ளோமா சான்றிதழையும் பெற்றிருக்கும் இவர் தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக பட்டப்படிப்புகள் பீடத்தில் வணிக முகாமைத்துவத்துக்கான முதுமானிப் பட்டப்படிப்பையும் மேற்கொண்டு வருகின்றார். துடிப்புள்ள இளைஞரான இவர் வளர்ந்து வரும் சட்டத்தரணியாக குரும்பசிட்டி சட்டபரம்பரையில் இளைய தலைமுறையை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.
- 29

Page 21
திரு. சுவர்ணராஜா நிஷாந்தன் :
இவர் ஆரம்பக் கல்வியை குரும்பசிட்டி பொன் பரமானந்தர் வித்தியாலயத்திலும் பின்னர் தெல்லிப்பழை தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளியிலும் பின்னர் யாழ். பரியோவான் கல்லூரியிலும் கற்று உயர்தர பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்று பல்கலைக் கழக சட்டபீட மாணவராகத் தெரிவானார். சட்ட மானிப் பட்டத்தின் (LLB) பின் சட்டக் கல்லூரியின் இறுதியாண்டுப் பரீட்சையில் முதலாம் வகுப்பில் சித்தியெய்தினார். சட்டத்தரணியாக தொழிலை ஆரம்பித்த இவர் சமூக அபிவிருத்தி சமூக சேவையின்பால் கொண்ட ஈடுபாடு காரணமாக மனித உரிமை நிறுவனத்துடன் தன் செயல்பாடுகளை இணைத்துக் கொண்ட்ார். மனித உரிமைகள் தொடர்பான பல பணிகளில் ஈடுபட்டு மனித உரிமைகள் கற்கை நெறியை வவுனியா, மட்டக்களப்பு, திருமலை போன்ற மாவட்டங்களில் ஏற்படுத்தினார். அத்தோடு வவுனியா மேல் நீதிமன்றில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்குச் சந்தேக நபர்களுக்காக ஆஜராகினார்.
2002ம் ஆண்டு பாங்கொக் நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் சம்பந்தமான கருத்தரங்கிலும் பங்குபற்றினார். தற்பொழுது சேலான் வங்கி நிறுவனத்தில் சட்ட அலுவலராக கடமையாற்றும் திரு. நிஷாந்தன் அவர்கள் குரும்பசிட்டி கிராமத்தின்பால் மிகுந்த பற்றுக் கொண்டவர். திரு. நிஷாந்தன் அவர்கள் சட்டத்தொழிலை ஆரம்பித்து மிகவும் குறுகிய காலம் ஆயினும் தன்னுடன் தொழில் புரியும் சக சட்டத்தரணிகளிடத்தில் மிகுந்த நன்மதிப்பைப் பெற்றவர். வணிக, வங்கி, தொழிற் சட்டங்களில் புலமைபெறல் நோக்காகக் கொண்ட இவர் பழகுவதற்கு இனிய அமைதியான குணம் கொண்டவர். இவரின் சட்டத்துறைப் பிரவேசம் குரும்பசிட்டி சட்ட பாரம்பரியத்தினை மேலும் செழுமைப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
- 30 -
 

திருமதி. உமாநந்தினி நிஷாந்தன் :
இவர் கோப்பாயைத் தன் பிறப்பிடமாக கொண்டிருந்தாலும் திரு. சுவர்ணராஜா நிஷாந்தன் அவர்களை கரம்பற்றியதன் காரணமாக குரும்பசிட்டியின் மருமகளானார். இதனால் திருமதி. . உமாநந்தினி நிஷாந்தன் அவர்களும் குரும்பசிட்டி சட்ட பாரம்பரியத்தின் அசைக்க முடியாத ஓர் அங்கமாகி விட்டார். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கல்வி பயின்று கொழும்பு பல்கலைக் கழக சட்டப்பீடத்திற்கு தெரிவான இவர் சட்டமானிப் பட்டத்தில் (LL.B.) 2ம் தர மேல் நிலை (Upper Second) தரத்தில் சித்தியெய்தினார். 2001ம் ஆண்டு சட்டத்தரணி பரீட்சையிலும் சித்தியெய்தி சட்டத்தரணியாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தில் விரிவுரையாளராக பணியாற்றும் திருமதி. உமாநந்தினி நிஷாந்தன் அவர்கள் தம் கணவர் போன்றே மனித உரிமைகள் விடயத்தில் ஈடுபாடு கொண்டவராவார். மனித உரிமைகள் இல்லத்தின் செயல்பாடு களிலும் ஈடுபாடு கொண்டு வவுனியா, திருமலை ஆகிய மாவட்டங்களில் நடாத்தப்பெற்ற கற்கை நெறிகளில் விரிவுரைகள் நிகழ்த்தியுள்ளார். 2002ம் ஆண்டு மார்கழித் திங்கள் ஜேர்மனியில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான கருத்தரங்கிலும் பங்குபற்றினார். சட்டத் துறையிலும் சட்டக் கல்வி சம்பந்தமான மேம்பாட்டிலும் அதீத அக்கறையும் ஈடுபாடும் காட்டிவரும் திருமதி. உமாநந்தினி நிஷாந்தன் அவர்களின் சட்டத்துறைசார் கல்விக்கான ப்ங்களிப்பு குரும்பசிட்டி சட்ட பாரம்பரிய வளர்ச்சிக்கு ஓர் உந்து சக்தியாகும்.
- 31 -

Page 22
38 蠱職』 圈 வவுனியாவில் மாணவ மாணவிகளுக்கு மனித உரிமைகள் இல்லத்தினால் நடாத்தப்பெற்ற கருத்தரங்கில் திரு. நிஷாந்தன் அவர்கள் உரையாற்றுவதை முதலாவது படத்திலும் திருமதி. உமாநந்தினி நிஷாந்தன் அவர்கள ப ரையாற்றுவதை இரண்டாவது படத்திலும் காணலாம்.
- 32
 

குரும்பசிட்டி நீதித்துறைப் பிதாமகன் மனோ சிறீதரன் - எழுத்தாளர். வேல் அமுதன் பார்வையில் -
R
1974 ஆம் ஆண்டு என நல்ல ஞாபகம். ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை கொழும் பு இராமகிருஷ்ண மண்டபத்தில் ஒரு பட்டி மன்றம் வெகு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு இருந்தது. விவாதத்தில் பங்குபற்றி விளாசித் தள்ளிய ஒரு பட்டதாரி இளைஞனின் வாதம் என் மனதைக் கவர்ந்தது. அவர் நியாயங்களை முன்வைத்த ஒழுங்கு முறையும் - நியாய, நீதி அடிப்படையில் தன் கருத்தைக் கட்டியெழுப்பிய அழகும் அற்புதமாக இருந்தன. இந்த இளைஞன் என்றோ ஒருநாள் சட்டத்தரணியாய்ப் பிரகாசிப்பார் என நினைத்தேன்.
என் நினைவு நிஜமானது 0 0 to
அந்த மிடுக்கான இளைஞன் வேறு யாருமல்ல. குரும்பசிட்டியின்
சட்டத்துறை சார்ந்த முதன்மைக் குடும்பமான அமரர் திரு. R.R.
நல்லையா அவர்களின் வழித்தோன்றல் திரு. மனோரஞ்சிதன் சிறீதரன் (மனோ சிறீதரன்) தான் அவர்.
மனோ சிறீதரன் குரும்பசிட்டியின் பிரபல சட்டத்தரணி என்பதற்கு மேலாக, குரும்பசிட்டி நீதித் துறை பிதாமகன் என்பது வரலாறு.
அவர் பிறந்ததிலிருந்து அவரை நான் நன்கறிவேன்.
ஆரம்பக்கல்வியை குரும்பசிட்டி மகாதேவா வித்தியாசாலையிலும்
இடைநிலைக் கல்வியை தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியிலும்
ஹாட்லிக் கல்லூரியிலும் பயின்ற இவர் பேராதனை பல்கலைக் - 33

Page 23
கழகத்தில் கலைப்பட்டத்தினைப் (B.A.) பெற்றுக் கொண்டார். பல்கலைக்கழக காலத்தில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவப் பேரவையின் உறுப் பினராக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டதுடன் மாணவப் பேரவையின் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
வ. இராசரத்தினம் கட்டிடத்தில், 2ம், 3ம் மாடிகளில், நாம் நடத்தி வந்த எமது 'மதி அக்கடமி கல்வி நிறுவனம் இயங்கியது. அந்த நிறுவனம் மனோ சிறீதரன் வீட்டிற்கு நேர் எதிராக இருந்தமையால், நான் விரும்பியோ, விரும்பாமலோ மனோ சிறீதரன் அவர்களை நன்றாக அவதானிக்கக் கூடியதாகவும் நெருங்கிப் பழகக் கூடியதாகவும் இருந்தது.
மனோ சிறீதரன் இன்முகம், கனிந்த பேச்சு, இனிய சுபாவம் கொண்ட வசீகரன். நேர்மை, அஞ்சாமை, துணிவு உடைய குணாளன். மனித நேயம், சமூக நலனில் அக்கறை மிக்க மானிடன். கடும் உழைப்பு, விடா முயற்சி, சோர்வின்மை மிக்க முயற்சியாளன்.
குரும்பசிட்டி கிராம நலனைப் பொறுத்தவரை, அவரை நான் ஒரு நல்ல போராளி' என்றே குறிப்பிட ஆசைப்படுகின்றேன். அடக்க ஒடுக்கமாக - ஆரவாரம் எதுவுமின்றி, தன்னைக் குரும்பசிட்டி நலனுக்கு முழுமையாக அர்ப்பணித்து, என்றும் கிராம மேன்மைக்காகவும் - இன்று கிராம மீட்சிக்காகவும் அயராது உழைத்து வரும் ஒருவர்.
மனோ சிறீதரன் ஒரு நல்ல பேச்சாளர். சிறந்த எழுத்தாளர். அண்மையில் வெளிவந்த 'பரமானந்தம் நூற்றாண்டு நிறைவு மலரில் அவர் எழுதிய 'கலை மலிந்த பூமி’ என்ற அருமையான ஆய்வுக் கட்டுரை அவரின் எழுத்தாற்றலுக்கும், கிராம பக்திக்கும் ஒரு நல்ல சான்று. அத்தோடு, குரும்பசிட்டியூரின் கலை, இலக்கிய வளத்தையும், தனித்துவத்தையும் ஆழமாகவும், அகலமாகவும், அழகாகவும் காட்டும் கட்டுரை அது என்பது குறிப்பிடப்படவேண்டிய
ങ്ങ[0].
- 34

ஆயிரத்து தொழாயிரத்து எண்பதுகளில் மனோ சிறீதரன் சட்டத்தரணியாக மிளிர்ந்த காலத்தில் அவரின் அலுவலகம் குரும்பசிட்டியில் இருந்தது. அந்நாட்களில் எந்நாளும் எந்நேரமும் அவரது அலுவலகம் கட்சிக்காரர்களால் நிறைந்து வழிந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
அவர் மல்லாகம், யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆகிய நீதி மன்றுகளில் குடியியல், குற்றவியல் சட்டத்தரணியாகப் பிரகாசித்தார்.
அவர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்ற காலத்தில் எழுத்துத்துறை, பேச்சுத்துறை ஆகியவற்றில் ஈடுபட்டதாலும், எழுந்தமான பேச்சுப் போட்டி, விவாதக் குழு விவாதங்களில் பங்கு பற்றியமையாலும், ஒய்வு நேரங்களில் நூலகங்களுள் வாசிப்பில் மூழ்கியமையாலும் சட்டத்தரணியாகத் தொழில் ஆற்றிய காலத்தில் நீதிமன்றுகளில் காரசாரமாக விவாதித்து - நீதியை நிலைநாட்டக் கூடியதாக இருந்தது.
மனோ சிறீதரனின் அன்புத் தந்தை அமரர் சின்னையா மனோரஞ்சிதன் ஓர் பரீட்சையெடா சட்டத்தரணி. அதற்கு மேலாக ஒரு கலைஞன். தந்தையின் ஆளுமை தனையனை வழிப்படுத்தியது.
மனோ சிறீதரனின் அறிவு, ஆற்றல், அர்ப்பணம் ஆகியவற்றின் அங்கீகாரமாக 1988ம் ஆண்டு தொழில் மன்ற நீதிபதியாகவும், அதனைத் தொடர்ந்து 1998ம் ஆண்டு மேலதிக நீதிவானாகவும் நியமனங்கள் வழங்கப்பட்டன.
தொழிலுண்டு, தானுண்டு, தனக்கு மனைவி, மக்கள் இருவர் உண்டு என வெறுமையாக ஒரு நீதித்துறை நிர்வாகியாக மாத்திரம் தன் செயற்பாட்டை மட்டுப்படுத்தாது, சமூகப் பிரக்ஞையின் உந்தலால், சர்வதேச தொழில் ஸ்தாபனம் (ILO), மனித உரிமைகளுக்கான நிலையம் ஆகியவற்றுக்குக் கணிசமாக பங்களிப்பு செய்து வருகின்றார்.
- 35

Page 24
"Labour Tribunal Journal' F (65 flood 35 d5 (5& 3560735 Tg5 g5 JLDIT60T ஆக்கங்களையும் வழங்கி அளப்பரிய சேவையாற்றி வருகின்றார் மனோ சிறீதரன் அவர்கள்.
குரும்பசிட்டி மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் பல்துறை இளைஞர்கள் குறிப்பாக கலை, இலக்கிய அறிஞர்கள் எம்மிடை பலர் இன்றும் இருக்கின்றார்கள். ஆனால், நீதித்துறை சார்ந்த அறிஞர் இந்நாள் வரை உயர்திரு. மனோ சிறீதரன் அவர்க்ள் மாத்திரமே!
ஓய்வுபெற்ற இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. என். கிருஷ்ண ஐயர் அவர்களுடன் நூலாசிரியர் மனோ யூரீதரன் அவர்கள் (1998ம் ஆண்டு நவம்பர் மாதம் கேரள மாநிலத்தில் நடைபெற்ற ILO மகாநாட்டின் போது).
- 36 -
 

பங்களாதேஷ் தொழில் மனிதவள பிரதிஅமைச்சர் திரு. எம்.ஏ. மனான் அவர்களுடன் நூலாசிரியர் (2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ILO கருத்தரங்கின் போது) முதலாவது படத்திலும், தொழில் நீதிமன்ற நீதிபதிகள் சங்க வருடாந்த கூட்டத்தில் உரையாற்றுவதையும், உயர் நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு அமிர் இஸ்மாயில் பிரதம நீதியரசர் மாண்புமிகு சரத் என். சில்வா அவர்களை இரண்டாவது படத்திலும் காணலாம்.
- 37

Page 25
நூல் அறிமுகத்திற் குறிப்பிட்டவாறு இந்நாலில் குறிப்பிட்ட சட்ட அறிஞர்கள் வெறுமனே தமது தொழிலாக மட்டும் சட்டத்தொழிலை மேற்கொள்ளவில்லை. சமூக முன்னேற்றத்திற்கும் பல்வேறு துறைகளில் இவர்கள் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பங்களிப்பு மிகவும் முக்கியமானதும் குறிப்பிடப்பட வேண்டியதுமாகும். தமது சொத்துக்கள், சுகங்கள் அனைத்தையும் இழந்து அகதிவாழ்வு வாழும் குரும்பசிட்டிக் கிராமத்தின் அனைத்து மக்களுக்கும் தற்பொழுது சட்டத்தொழில் புரிகின்ற சட்ட அறிஞர்களின் சேவை கிடைக்க வேண்டும் என்பதுடன், இவர்களின் பங்களிப்பால் குரும்பசிட்டியின் சட்ட பாரம்பரியம் மென்மேலும் செழுமையடைய வேண்டும்.
- 38

நூலாசிரியர்:
மனோ, யூரீதரன், இல. 36/6, எட்மன்டன் வீதி, கிருலப்பனை, கொழும்பு - 06.
இலங்கை.
தொலைபேசி 01-513337 தொலைமடல் 01-555935
for 9 (6586); forwardsGsltnet.lk

Page 26


Page 27
யாழ்மாநகராட்சி மன்றத்தின் ! இதனுள் ஒரு திரைய
==
—
 

இடிபாடுகளும் சிதைவுகளும் பரங்கும் இருந்தத.
s.raahulan