கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்

Page 1
ԳՀia, (18 anytyiv Sx_Wዮዩ
= سیاحت
 
 

| IITTTTTTT
ugi
až (3757 J/75

Page 2

حض کسی کا
விபுலம் வெளியீடு - 11
தமிழக வன்னியகம் ஈழத்து வன்னியம்ே
வெல்லவுர்க் கோபால்

Page 3
THAMILAGA VANNYARUM EALATHU VANNYARUM
HISTORICAL RESEARCH)
VIIPUAM PUBLICATION: 11
Author S. GOPALASINGHAM
-VELLAVOOR GOPAL -
Edition First Edn. June 2003
No. of Pages XII - 110
No. of Copies 1000
Printers : Thaimilatchu
Printers & Publishers 240, Trinco Road, Batticaloa.
Prize Rs. 120/-(Srilanka)
Rs. 60/- (India)
ـــقـ
வெல்லவுர்க் tabitured

என் நன்றி.
143/28, எல்லை வீதி மட்டக்களப்பு
இந்நூலின் இறுதியில் பக்கம்:108-109ல் குறிப்பிடப்பட்ட என் பேரன்பிற்குரிய தமிழக கல்விமான்களுக்கும் நண்பர்களுக்கும்,
என் பள்ளிக் காலம் முதல் இன்றுவரை என்னோடும் எம் மோடும் இறுக்கமாகிவிட்ட இனிய சகோதரர் பேராசிரியர் மெளனகுரு அவர்களுக்கும் என் உறவில் கனிந்த அன்பு நண்பர் க.ஆறுமுகம் அவர்களுக்கும்,
ஆய்வுரைதந்து, ஆற்றுப்படுத்திய பொருளியல் ஆசான்வன்னியின்மைந்தன்குமாரவேலுதம்பையா அவர்களுக்கும் தமிழக அறிஞர் முனைவர் வே.இராமகிருஷ்னன் அவர்க -ஞக்கும்,
இந்நூலினை அழகுற ஆக்கிய மட்டக்களப்பு தமிழச்சு அச்சகத்தாருக்கும்,
என்றும் நன்றியுடன் சீ.கோபாலசிங்கம். -வெல்லவூர்க் கோபால்
இலங்கை.
e: 065-22993
வெல்லவுர்க் கோபால் * III

Page 4
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
ஆய்வுக்குறிப்பு:01
முனைவர் வே.இராமகிருஷ்ணன்
M.A, M.Ed, ph.D sesarras 6T
விரலாறு என்பது மக்கட் சமுதாயத்தின் அல்லது அதன் கூறுகளின் காலப்பதிவாகும். அது வரலாற்று நிகழ்வுகளின் ஆவணத் தொகுதியாகவும் அமைகின்றது. அத்தோடு நாட்டையும் அம் மக்க ளையும் பற்றி நிற்பதோடு மானிடத்தையும் அதனோடு கூடியதான கால உறவினையும் தொடர்புபடுத்தும் பதிவேடாகவும் வரலாறு திகழ வேண்டும். இதற்கான தேடல்கள் தவறான தரவுகளைக் கொண்டிருப் பின் அதுவே தவறான வழிகாட்டியாகவும் ஆகிவிடும். ஆகவேதான் அதற்கென குறிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் அடிப் படையில் வரலாறுகள் எழுதப்படவேண்டிய அவசியம் உணரப்படுகின்றது.
வெல்லவுர்க் கோபால் IV

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
நீண்டகால வரலாற்றினைக் கொண்ட தமிழ் நிலத்தின்கண் பழந்தமிழ் இலக்கியங்களே தமிழர்தம் வாழ்க்கை மற்றும் பண்பாடுகளை வெளிக்காட்டும் கருவூலங்களாக அமைந்தன. தமிழ் மொழியின்பால் இலக்கிய வரலாற்று நூல்கள் எண்ணிலவாயினும் தமிழர்தம் பண்பாடு மற்றும் நாகரிகத்தை வெளிப்படுத்தும் அறிவியல் அணுகுமுறைகளோடு கூடிய நூல்கள் மிகவும் அரிதாகவே தென்படுகின்றன. கடந்த முப்ப தாண்டு காலத்தே வரலாற்று நூல்கள் படிப்படியாக ஒரு தெளிவினை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. எனினும் அவை இந்தோ - ஆரிய வரலாற்று அணுகுமுறைகளிலிருந்து முற்றாகவே விடுபட்டுப் போயின எனக்கருத முடியவில்லை.
வன்னியர் தொடர்பாகப் பல நூல்கள் தமிழகத்திலும் ஈழத் திலும் வெளிவந்திருப்பினும் பொதுவாக அவை ஒரு வரையறைக்குள் ளேயே நிலைநிறுத்தப்பட்டிருப்பது தெரிகின்றது. ஈழத்து எழுத்தாளர் - கவிஞர் வெல்லவூர்க் கோபால் அவர்களது தமிழக "வன்னியரும் ஈழத்து வன்னியரும்” நூலைப் படித்தபோது என் சிந்தனை விரிந்தது. தமிழின் செழுமையும் தமிழினத்தின் சிறப்பும் பண்பாடும் இன்று உலக அரங்கில் ஓங்கியொலிக்க ஈழத் தமிழனது விழிப்பே முக்கிய காரண மாகிவிட்ட நிலையில் 'நான் ஒரு ஆய்வாளன் அல்லன். அதனை தேடிப்படிக்கும் மாணவன்’ என தன்னை முதலில் எனக்கு அறிமுகப் படுத்திக்கொண்ட 'கோபால் அவர்களது தேடல்கள் உணர்வுகளுக்கு அப்பால் ஆழப்பட்டும் அகலப்பட்டும் நிற்பது அவரது சமூகப் பார் வையில் ஒரு புதிய பரிமாணத்தைத் தோற்றுவிக்கின்றது. அது படிப் போர்க்கு பல சுவையான அனுகூலங்களை உள்வாங்கவும் ஏதுவா கின்றது. தாய்த் தமிழகத்தே தமிழினம் தனது தொடக்க நிலைச் சிறப்புக ளிலிருந்து விடுபட்டு காலப்போக்கில் வலிந்துவந்த சாதி, சமூகப் பிரி
வெல்லவுர்க் கோபால் W

Page 5
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
வினைக் கீறல்களால் ரணகளப்பட்டு தோற்றுப்போய் நிற்பதைக் கண்டு அவரது கவியுள்ளம் படும் வேதனையை நூலில் உணரமுடிகின்றது. ஈழத்தின் கிழக்குப் பிரதேசமான மட்டக்களப்பு - அம்பாரை மாவட்டங் களில் பரந்து வாழும் ஒரு பிரதான சமூகம் எவ்வாறு வெவ்வேறு திராவிடப் பிரிவு களின் கூட்டமைப்பாக விளங்குகிறது என்பதனை அவர் ஆதார பூர்வமாக விளக்கியிருப்பது சமூகவியலாளர்களை ஒரு புதிய பாதைக்கு அழைத்திருக்கின்றது.
ஈழம் காலத்துக்குக்காலம் மூவேந்தர் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தாலும் சேரத்துக் கலாசாரத் தாக்கமே அதைப் பெரிதளவு பாதித்தது. ஈழத்தமிழர் தம் பேச்சுவழக்கு, உணவுமுறை, பழக்க வழக்கங்கள் அனைத்துமே பண்டைய சேரநாட்டுடன் அவர்க ளைப் பிணைத்து நிற்கின்றது. அன்றைய ஈழம் சேரன் தீவு' என அழைக்கப்பட்டமை இதனைப் புலப்படுத்தும். எனவேதான் மேலை நாட்டுப் பயணிகள் ஈழத்தை சேரன்தீவ் (SERENDIB) என தங்கள் பயணக் குறிப்புகளில் எழுதிவைத்தனர்.
இந்நூலைப் படிக்கின்றபோது ஈழத்தே தமிழர்தம் பிரதே சங்கள் நீண்டகாலமாகவே அபகரிக்கப்பட்டு வருகின்ற துயரச் சம்ப வங்கள் நெஞ்சைக் கணக்க வைக்கின்றன. தமிழினம் சிறுமைப்படுத்தப் பட்ட கொடுமையை, சிலாபம் முதற்கொண்டு புத்தளம் வரையான தமிழ்ப் பிரதேசம் பறிபோன இருண்ட வரலாறு உணர்த்தி நிற்கின்றது.
ஒருகால் தலைவிரித்தாடிய சாதி மற்றும் சமூகக் கொடு மைகள் இன்றைய ஈழத்தே அடங்கிப் போய்விட்டமை தமிழினத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றியென்றே கொள்ளவேண்டும். நாளைய ஈழம்
வெல்லவூர்க் கோபால் W

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
ஏற்றத் தாழ்வற்ற ஒரு சமூகநிலை வளர்ச்சியின்பால் தன்னை இணைத் துக் கொண்டுள்ளமை உலக அரங்கினில் தமிழனுக்குப் பெருமை சேர்ப் பதாகும்.
தமிழகத்தின் வேர்களிலிருந்து ஈழத்து விழுதுகளை வேறுபடுத் துவதோ பிரித்துப் பார்ப்பதோ சிறுபிள்ளைத்தனமானது என்பது உணரப் படும் காலம் வெகுவாக அண்மித்துவிட்ட நிலையில் அத்தொப்புள் கொடிப்பிணைப்பே உலக அரங்கினில் தமிழினை ஒன்றுபடுத்தப் போகின்றது.
இந்நூலை எழுத கோபால் மேற்கொண்ட முயற்சிகள் உண்மையில் பாராட்டப்படத்தக்கவை. இதில் எனக்கு அவரளித்த பணி கடுகளவே ஆனாலும் அது எனக்கு பெருமையளிக்கின்றது. கவிதைமூலம் நம்மை இறுக்கமாகப் பற்றிநிற்கும் கவிஞர் ஆய்வுத் துறையில் தான் எடுத்து வைத்த காலடியை தொடரவேண்டும். அதன் மூலம் பல வெற்றிகளை அவர் சாதிக்கவேண்டும். இதுவே எனது அவா. வேண்டுகோளும் கூட.
முனைவர் வே.இராமகிருஷ்ணன்
கோவை, 641002 தமிழ்நாடு.
வெல்லவூர்க் கோபால் V

Page 6
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
ஆய்வுக் குறிப்பு - 02
- குமாரவேல் தம்பையா அவர்கள்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
$பூய்வாளன் ஒருவன் பாரம்பரிய பிரதேசங்களின் வர லாறு பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது, தேடல் என்பது மிகவும் வேண்டிய ஒன்றாகக் காணப்படுகிறது. அத்தகைய தேடல்கள் மூலமே பொதிந்து கிடக்கும் அல்லது புதைந்து கிடக்கும் வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர முடியும். இந்தவகையில் வெல்லவூர்க் கோபால் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் திருகோபால சிங்கம் அவர்கள் எழுதியுள்ள ‘ஈழத்து வன்னியும் இந்திய வன்னியும்” பற்றிய ஓர் ஒப்பீட்டு ஆய்வு நூலானது சுதந்திரமான தேடல் முயற்சி களோடு ஈழத்து வன்னி பற்றிய பரிசோதனை ஆய்வாகவும் காணப் படுகின்றது. மட்டக்களப்பின் மாண்புறு பல விடயங்களைக் கவிதைகள் மூலம் வெளிக்காட்டிய கோபால் அவர்கள் எமது வன்னிப் பிரதேசத்
வெல்லவுர்க் கோபால் VIII

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
தோடு நெருங்கிய தொடர்பும் பரீட்சியமும் உள்ளவர். மேலாக வன்னி யின் வேர்களைக் கண்டறிய விரும்பிய கோபால் தமிழ் நாட்டில் பாரம் பரியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வன்னியர் பிரதேசங்களிற்குச் சென் றும் அவர்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆய்வா ளர்களைத் தேடிச்சென்றும் பெறுமதிமிக்க வன்னியர் தொடர்பான நூல் கள் மூலமும் காத்திரமான பல ஆய்வுக் குறிப்புகளை வெளிப்படுத்தி யுள்ளார்.
வன்னியையும் மட்டக்களப்பு மரபுகளையும் மானசீகமாக நேசிப்பவன் என்ற அடிப்படையில் திரு. கோபால் அவர்களின் இந்த ஆய்வு நூலுக்கு ஆய்வுக் குறிப்புகள் எழுதுவதில் பெருமகிழ்ச்சியடை கின்றேன். ‘வீரம் செறிந்த விளைநிலமான வன்னிமண்’ என்றும் தன் தனித்துவத்தை யாருக்கும் விட்டுக் கொடுத்தது கிடையாது. வந்தாரை வாழவைக்கும் இப்பிரதேசமானது கடினமான கலாசார விழுமியங்க ளோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. கோபாலின் இந்த ஆய்வு நூலில் பல பக்கங்களில் இது பற்றிய கருத்துக்கள் இழையோடி வருகின்றன. குறிப்பாக ஈழத்து வன்னியைத் தமிழக வன்னியோடு குறிப்பிட்டுக் கூறும் ஆய்வுக் குறிப்புகள் ஆலமரம் ஒன்றுக்கு ஆணி வேர் தேடும் முயற்சியாக உள்ளது. கோபால் அவர்கள் பல்வேறு இந் திய இலக்கியங்களிலும் ஆய்வு நூல்களிலும் வன்னியர் பற்றிக் கூறும் தகவல்களைத் திரட்டித் தந்திருப்பது பெறுமதிமிக்க விடயமாகும்.
ஈழத்தின் வன்னிப் பிரதேசத்தைப் பற்றி இதுவரை வெளி வந்த ஆய்வு நூல்கள் மிக அற்பசொற்பமாகவே உள்ளன. கோபால் ஈழத்து வன்னியைப் பற்றி குறிப்பிடும் பல விடயங்களில் ஆய்வாள னின் கவனத்தை ஈர்ப்பதோடு எதிர்காலத்தில் ஆய்வுகளை மேற் கொள்ள விரும்புவோருக்கும் பெறுமதிமிக்கதாய் உள்ளன. குறிப்பாகத் தமிழர்தம் வரலாற்றைத் திட்டமிட்டு மறைக்க முற்படும் சில சிங்களப் புத்திஜீவிகள் பற்றிய குறிப்புக்கள் ஈழத்தின் வன்னியானது வரலாற்றுக்
வெல்லவூர்க் கோபால் IX

Page 7
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் காலத்தில் சிங்கள வன்னிகளோடு வைத்திருந்த தொடர்புகளும் தமிழ் வன்னியின் எல்லைப் பிரதேசங்களும் (மன்னம்பிட்டி, சமன்பிட்டி, முத் துக்கல், தென்னைமரவடி) இப்பிரதேசங்கள் இப்பொழுது முழுமையான அல்லது பகுதியான சிங்களப் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளன.
கோபால் ஆய்வு நூலின் பிற்பகுதியில் குறிப்பிடும் மறத் தமிழன் பண்டாரவன்னியன் பற்றிய கருத்துக்களும் வன்னியைக் காப்பதற்காக ஆங்கிலேயரோடு அவன் நடத்திய படையெடுப்புகள் எமக்குத் தமிழ் இனப்பிரச்சினையையும் தமிழர் இனப் போராட்டத்தில் வன்னி கொண்டிருந்த பங்கினையும் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளது. ஒரு வகையில் வரலாறு மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படு கிறதோ என்ற எண்ணம் இந்நூலை வாசிக்கும் போது என் மனதில் தோன்றியது. வன்னி மண்ணைக் காப்பதற்கும் மீட்பதற்கும் பண்டார வன்னியன் நடத்திய போராட்டங்களும் அதில் அவன் அடைந்த வெற்றியும் (முறிகண்டி பதினெட்டாம் போர்முல்லைத்தீவு ரிபேக்குடன் நடந்த கடல் யுத்தம்) மிக அண்மைக் காலங்களில் நடை பெற்ற 'ஜய சிக்குறு வெற்றியைப் போன்றதாகவே இது உள்ளது. குறிப்பாக ஆங்கி லேயரிடம் சரணடைய விரும்பாத மறத் தமிழச்சியான பண்டாரவன்னி யனின் காதலியும் அவனது தங்கையும் கார்த்திகைக் கிழங்கை உண்டு தற்கொலை செய்யும் செயலானது வரலாற்றுப் படிமங்களில் நடை பெற்ற பல சம்பவங்களை எமக்கு புடம்போட்டுக் காட்டுகின்றது.
கோபாலின் இவ்வாய்வுநூலானது வன்னிப் பிரதேசத்தைப் பற்றிய ஆய்வுகளுக்கு ஒரு கால்கோளாக உள்ளது. இதன் தொடர்ச்சி யாக வன்னி பற்றிய ஆய்வுகள் நூல் வடிவில் வெளிக்கொணரப்பட வேண்டியது தமிழ் ஆய்வாளன் ஒவ்வொருவரதும் கடமையாகும். கோபால் அவர்களின் இந்தக் கடின ஆய்வுப் பயணத்தை மனம் திறந்து பாராட்டுகின்றேன்.
குமாரவேல் தம்பையா, மட்டக்களப்பு.
வெல்லவுர்க் கோபால் X

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
பதிப்புரை
விபுலத்தின் முதல் வெளியீடு, கலாநிதி சி.மௌனகுரு வின் பழையதும் புதியதும் என்னும் நாடக ஆய்வுநூல் 1992P ஆண் டில் வெளியிடப்பட்டது. இவ்வாண்டில் நாம் வெல்லவூர்க் கோபாலின் ‘தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் என்ற வரலாற்று ஆய்வு நூலினை வெளியிடுகின்றோம். 11 வருடங்களுக்குள் 11 நூல் களை விபுலம் வெளியிட்டுள்ளது. வரலாறு, நாடகம், பண்பாடு, வாழ்க்கை வரலாறு, ஆய்வு எனப்பல துறைகளிலும் நாம் நூல்களை வெளியிட்டுள்ளோம். எமது நூல்கள் பல தேசிய ரீதியிலும் பிரதேச ரீதியிலுமாக சாகித்தியமண்டலப் பரிசில்களையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளமையை இவ்விடத்தில் நினைவுகூர விரும்புகின்றோம்.
விபுலத்தின் வளர்ச்சிக்கு பலர் பின்னணியாக உள்ள னர். கோபாலசிங்கம் அவர்களுள் ஒருவர். கவிஞரான வெல்லவூர்க் கோபால் இந்நூல் மூலம் ஆய்வாளராக நமக்கு அறிமுகமாகின்றார். இந்நூலினை பதிப்பிக்க அனுமதி தந்த அவருக்கு விபுலத்தின் சார்பில் மிகுந்த நன்றிகள்.
க.ஆறுமுகம் விபுலம் வெளியீட்டுக்குழு.
7, ஞானசூரியம் சதுக்கம், மட்டக்களப்பு.
Te: 06523639
வெல்லவுர்க் கோபால் XI

Page 8
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
உள்ளே.
01. நுழைவாயில் 01 - OS
02. தோற்றுவாய் 00 - 10
OS. வன்னியர் பற்றிய முன்னீடு 11 - 14
04. வன்னியர் பற்றிய குறிப்புகள் i = 1
05. வன்னியரின் எழுச்சி 20 - 28
06. முக்கிய குறுநில மன்னர்கள் 2 - 33
07. ஈழத்து வன்னியர்கள் - 7
08. ஈழத்தில் வன்னியர் குடியேற்றம் 38 - 40
0. ஈழத்தில் வன்னியர் இடப்பெயர்வும் சிற்றரசுகளும் 41 - 5
10. சிங்கள வன்னியர்கள் - 48
11. வன்னியும் மட்டக்களப்பும் - 55
12. வன்னிப் பிரதேசம் அடங்காப்பற்று 6 - 59
13. மட்டக்களப்புப் பிரதேசம் 030 0 نے
14。 மட்டக்களப்பு முற்குகள் 62 一 71
15. மட்டக்களப்பு படையாட்சியரும் மழவரசரும் 72 - 79
16. முற்குகரும் முக்கியரும் 80 84 ܚ
17. தமிழக வன்னியரின் தளர்ச்சி 85 - 0
18. ஈழத்து வன்னியரின் எழுச்சி 1 - 99
篮纷。 தமிழக ஈழவன்னியர்கள் - வாழ்வியல் ஒப்பீடு 100 - 105
O. சான்றாதாரங்கள் 106 - 107
நன்றிக்குரியவர்கள் 108 - 109
வெல்லவுர்க் கோபால் XII

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
ருபழைவாயில்
‘தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்’ எனும் இந் நூல் பற்றி எழுத முற்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள. ஈழத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தைச் சார்ந்த நான் வன்னிப் பிரதேச மக்களை யும் அவர்களது மூலங்களையும் கண்டறிய முற்படுவதும் அதனூடே மட்டக்களப்புப் பிரதேசத்தே வாழும் ஒரு பிரதான சமூகத்தினது வேர் கள் பற்றிய தேடலை இணைத்துக் கொள்வதும், நீண்டகாலமாக என் நெஞ்சத்துள் நெருடிக்கொண்டிருக்கும் கேள்வி ஒன்றினுக்கு விடை தேடியே. மட்டக்களப்புப் பிரதேச விவசாயக் கிராமங்கள் பல வன்னிப் பிரதேச கிராமங்களின் சாயலை ஒத்திருந்தாலும் வன்னிக்கென்று ஒரு தனித்துவம் நீண்டகாலமாக இருந்தே வந்துள்ளது. வன்னிவாழ் மக்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் அடையாளத்தை விட்டுக்கொடுக்க விரும்பாதவர்கள் என்பதனை எவரும் ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள்.
வெல்லவூர்க் கோபால் 01.

Page 9
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் அதேநேரத்தில் மட்டக்களப்பாரைப் போன்று தங்களை நாடி வரு வோரை மனங்கோணாது வரவேற்று உபசரிக்கும் உயர்ந்த பண்புக்கும் அவர்கள் சொந்தக்காரரே என்பதும் வெளிப்படை
1981ன் முற்பகுதியில் முதன்முதலாக நான் வன்னிப் பிரதேசத் தினுள் காலடி வைத்தபோது பல புதிய அனுபவங்கள் எனக்கு கிடைத் தன. நண்பர்களுடன் வன்னியின் அழகிய கிராமங்களை சுற்றிய களிப்பு இன்னும் நெஞ்சை நிறைத்துக் கொண்டேயிருக்கின்றது. அந்தச் சூழலில் இலங்கை வானொலி 'பக்த ரஞ்சனி’ நிகழ்ச்சிக்காக ஒட்டிசுட்டான் தான்தோன்றீச்சரம். வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் என்பன பற்றி நான் எழுதிய பாடல்களும் என் நினைவுக்கு வருகின்றன.
'அன்னியர் குடல்நடுங்க அரசாண்ட பண்டார வன்னியன் தினம்தொழுது வரலாறு பெற்றதலம்
என்ற பாடல் அடிகள் ஒரு வரலாற்றையே க்மந்து நிற்பது இப்போது தெரிகின்றது.
வன்னி என்றுமே தமிழினத்தின் பாதுகாப்பு நிலமாகவே இருந்து வந்துள்ளது. எனவேதான் வன்னியின் மரம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு போர்வீரனென வன்னிக் காட்டை வேடிக்கையாக குறிப்பிடுவதுண்டு. இன்று கூட வன்னி ஈழத்தமிழனின் பெருமைக்கு எடுத்துக்காட்டாகவே திகழ்கின்றது. ஆயிரமாயிரம் தமிழர்களை அரவணைத்துப் புகலிடம ளித்து வாழவைத்துக்கொண்டிருக்கும் வன்னியின் புகழ் என்றுமே
மாறாது.
இதைப் பார்க்கும் தோறும் கி.பி.14ம் நூற்றாட்டின் முற்பகுதியில்
வெல்லவுர்க் கோபால் 02

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
தமிழகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி நம் கவனத்தில் வருகின்றது. தமிழ் நாட்டில் ஏற்பட்ட முஸ்லிம் படையெடுப்பால் வட தமிழகத்தில் அல்ல லுற்ற மக்களுக்கு ஆதரவாக அப்போது 'அஞ்சினான் புகலிடங்களை வன்னியச் சிற்றரசர்கள் (சம்புவராயர்) அமைத்துச் செயல்பட்டமையை
வரலாறு கூறும்.
வன்னியைப் பற்றியும் அம் மக்களைப் பற்றியும் அறிந்த உண் மைகளும் பல வழிகளிலும் சேகரிப்பாகக் கிடைத்த தகவல்களும் தமிழகத்தில் வாழ்ந்த இந்த ஐந்தாண்டு காலத்தில் ஒரு ஆய்வினை நோக்கி முன் தள்ளின. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக புலம் பெயர்ந்தோராய் மறுபுறம் அகதிகளெனும் பெயரில் வாழ்ந்து கொண்டி ருக்கும் வன்னியின் மைந்தர்களான சில பெரியவர்களுடன் உறவாடும் வாய்ப்பு கிடைத்தபோது அவர்களது ஒத்துழைப்பு எனது முயற்சிக்கு உரமூட்டியதை நன்றியுடன் நினைவு கூரவேண்டும்.
ஈழத்தில் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் மக்கள் தங்களை எந்த விதத்தில் அடையாளப்படுத்தினாலும் அவர்களது வேர்கள் இந் திய நிலப்பரப்பை விட்டு வேறிடம் ஒடி நிலைபெற வாய்ப்பே இல்லை யெனும் உண்மையை முதலில் நாம் நெஞ்சிலிருத்தல் வேண்டும். அவர்களது வரலாறு பல நூறு ஆண்டுகள் கடந்ததாக அமைந்திருந்தா லும் அவர்களை இனக் குழுக்களாகவோ அன்றேல் சமுகக் குழுக்க ளாகவோ வரையறை செய்யவும் நிலைநிறுத்திக் காட்டவும் இந்திய மரபுகளே வழி வகுத்தன.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்றைய கேரளத்தின் சில பகுதிகளிலும் ஈழத்து மக்கள் பற்றிய - குறிப்பாக மட்டக்களப்பும் வன்னியும் பற்றியதான என் தேடலுக்கு பெருமளவு வெற்றிகிடைத்தது
வெல்லவுர்க் கோபால் OS

Page 10
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
என்றே கொள்ளவேண்டும். இது விடயத்தில் நான் சந்தித்த கல்விமான் களும் பெரியவர்களும் காட்டிய பரிவும் பாச உணர்வும், அதனோடு இணைந்த இனவுணர்வின் வெளிப்பாடும் என்றுமே என் நெஞ்சை விட்டு அகலாது. தமிழன் என்பவன் உலகின் எந்தப் பாகத்தில் வாழ்ந்
தாலும் அவனது தாய் நாற்று தமிழ்நாட்டு மண்ணே! என்பதனை எப் பேற்பட்ட சூழ்நிலையிலும் மறுத்திடத்தான் முடியுமா?
இந்நூலை நான் வெளிக்கொணர முற்பட்டது சமூக உணர்வு களை பிரதிபலிக்கவேண்டுமென்பதற்காகவோ அன்றேல் அவை தலை தூக்க வேண்டுமென்பதற்காகவோ அல்ல. மாறாக இதன் மூலம் பேத மற்ற சமூக ஒற்றுமை வலியுறுத்தப்படவும் தமிழன் என்கின்ற உணர்வு இறுக்கமாக்கப்படவேண்டும் என்பதற்காகவே. குறிப்பாக இச்சமூக நிலை ஆய்வு தமிழுணர்வின் ஈர்ப்பு எனக்கொள்வதே முழுக்க முழுக்க ஏற்புடைத்தாகும்.
ஒன்றே குலம் எனும் சிறப்பு தமிழினத்துக்குரியது. இன்று தமிழ கத்தில் கிளைபரப்பி மூடிக்கிடக்கும் சாதி அமைப்புக்கள். சமூகப் பிரிவி னைகள் எவையுமே தமிழன் தனது மரபுவழிப் பண்பாட்டில் பயின்று வந்தவை அல்ல. தமிழினத்தின் நாகரிகம் உயர்வு தாழ்வினுக்கு வித்தி டவும் இல்லை. தமிழகத்தை வாழ்விடமாக்கியவர்களும் இடையிடையே புகுந்து தமிழனின் வளங்களை சுருட்டித் தங்களை வளர்த்துக்கொண்ட வர்களும் காலத்தின் பிடியில் அதற்கு உடந்தையாய்ப்போன நமது முன்னைய மன்னர்களுமே இதற்கு காரணகர்த்தாக்கள்.
உரிமையுள்ள ஒரு இனம் தனது அடையாளங்களை எங்கேயோ தொலைத்துவிட்டு அடிமைப்பட்ட சமூகக் கூறுகளாகி அதனுள்ளும் சிதறுண்டுபோய் எதற்குமே இட ஒதுக்கீடு கேட்டு கையேந்தும் அவ
வெல்லவுர்க் கோபால் 0.

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் லத்தை என்னவென்பது? கோவில் மானிய நிலவுடமைச் சமூக அமைப்
பொன்று பண்டைய மரபுவழிச் சமூக அமைப்பினுள் வலிந்து புகுந்து ஏற்படுத்திய சீரழிவுக் கொடுமைகள் இன்னும் மாறியதாயில்லை. மேலும் மேலும் அவை தங்களை வளர்த்துக் கொள்ளவே செய்கின்றன. அறி வியல் ரீதியாக உலகம் வானளாவ முன்னேறிய போதிலும் பூட்டிய விலங்குகள் அப்படியே இருக்கின்றன. இம் மண்ணினது மைந்தர்களாக தலைநிமிர்ந்து வாழவேண்டிய சமூகங்கள் சாதீயம் என்னும் சாக்க டைக்குள் ஒதுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் ‘தலித்’ என தமிழிலே இல்லாத ஒரு நாமத்தை தமக்கு சூட்டிக்கொண்டும் வாழ்வது எத்தனை கொடுமையானது.
வலிமையுள்ளவன் வைத்தது எல்லாம் சட்டமாகாது என வாய் நிறைய தத்துவம் பேசினாலும் இன்றுவரை அதுதான் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி ஆட்சிபுரிகின்றது. பணபலத்துக்கும் அரசியல் ஆதிக்கத் துக்கும் அடகுவைக்கப்பட்டுத்தானே தமிழர் சமூகங்கள் கட்டுண்டு நலிந்து கிடக்கின்றன.
தமிழகத்தில் புரையோடிப்போய்விட்ட இச் சமூகக் கொடுமைகள் ஈழத்தில் குறிப்பாக கற்றோர் மலிந்த யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலம் வரை ஆதிக்கம் செலுத்தியது உண்மையே. காலவோட்டத்தினூடே உயர் சாதிகளென தங்களுக்குத் தாங்களே முத்திரை குத்திக்கொண்ட சில வகுப்பினர் தங்களை வளமோடு வளர்த்துக்கொள்ள வகுத்து வைத்த வரன்முறைகளெல்லாம் இப்போது காலாவதியாகிவிட்டன. தமி ழின உணர்வும் தாயக மீட்புப் போராட்டங்களும் அங்கு முதன்மைப் படுத்தப்பட்டமையே அதற்கான காரணங்களாகக் கொள்ளவேண்டும். சமூகங்கள் ஒற்றுமைப்பட்டால் மட்டுமே தமிழனால் தலைநிமிர முடி u {Lfb.
வெல்லவூர்க் கோபால் OS

Page 11
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
தோற்றுவாய்
வரலாறு என்பது கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் அமைவாக எழுதப்படவேண்டியதாகும். அவை இல்லையென்றால் அது வரலாறு என்று ஆகிவிடாது. எழுதப்படும் வரலாறுகள் காலம் தோறும் நின்று நிலைக்கப்படவேண்டியவை என்பதாலும் எதிர்கால சமூகம் முழுமையானதும் சரியானதுமான தகவல்களை நம்பிக்கை யுடன் சேகரிக்கவேண்டிய அவசியம் உள்ளமையாலும் அவற்றினை எழுதும் ஆசிரியர்களின் பங்கு மிகமிகப் புனிதமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. காய்தல் உவத்தலின்றி நடுநிலைக் கண்ணோட்டத் தோடு தமது தேட்டங்களையும் ஆய்வுகளையும் வரலாற்றாசிரியர்கள் வகைப்படுத்தி தரவேண்டும்.
மானிடவியல், சமூகவியல், தொல்லியல், அறிவியல் ஆகிய
வெல்லவுர்க் கோபால் 06

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் இவை நான்கும் ஒரு வரலாற்றினை முழுமைப்படுத்த உதவும். பல நூற்றாண்டுகளாக இவை கடைப்பிடிக்கப்படாமைக்குக் காரணம் போதிய
வாய்ப்பும் வசதியும் இல்லாதிருந்தமையே. பண்டைய வரலாறுகள் பல இதற்கு நல்ல உதாரணங்களாகும். ஒரு நாட்டின் அல்லது அங்கு வாழும் சமூகங்களின் பண்டைய மரபுகள், பழக்கவழக்கங்கள். பண்பா டுகள் போன்றவற்றை முறையாகப் பேணாது விட்டதுவும் அவற்றை ஒழுங்காக ஆவணப்படுத்தி பாதுகாக்க முடியாமல் போனதுவும் இதற் கான முக்கிய குறைபாடுகள் ஆகும்.
கடந்த கால வரலாறுகள் முழுக்கமுழுக்க புராணங்கள், இலக்கி யங்கள். இதிகாசங்கள், பழமைக் கதைகள் என்பவற்றின் வெளிப்பாடா கவே விளங்கின. இவற்றில் வரலாற்றுச் சான்றுகள் இல்லாமலில்லை. இந்திய புராண மரபுக்கதைகள் பொதுவாக வரலாற்றுச் சூழல்களையும் மன்னர்களது மரபு மாற்றங்களையும் படையெடுப்புகளையும் பொருளா தார நிலைகளையும் சமுதாய அமைப்புகளையும் விளக்கும் வகையில் எழுதப்பட்டவையாயினும் அக்கருவூலங்கள் கற்பனையிலும் மிகைப்ப டுத்தலிலும் அவற்றின் தனித்தன்மையிலிருந்து மாறுபடவும் காலச்சூழல், வாய்ப்புவசதி மற்றும் ஆதிக்கப் பின்னணிகளில் அவற்றை நிகர்த்த அல்லது அவற்றிலும் மேம்பட்ட பல வரலாற்று உண்மைகளை மூடி மறைத்து இருட்டடிப்புச் செய்வதிலும் பன்னெடுங்காலமாகவே வெற்றி பெற்று வந்துள்ளன. இவற்றிற்கு இந்தியா, இலங்கை போன்ற நமது நாடுகளின் இன வரலாறுகள் மற்றும் மொழி வரலாறுகள் எழுதப்பட்ட மையைச் சான்றாகக் கொள்ளமுடியும்.
இந்திய மொழியில் வரலாற்று உண்மைகள் திரிபுபடுத்தப்பட்டமை தமிழ் நாட்டினது பண்டைய சிறப்புக்களையும் தமிழ் மொழியினது
வெல்லவூர்க் கோபால் 07

Page 12
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
வரலாற்றுப் பெருமையினையும் குறைப் பிரசவமாகவே வெளிக் கொணர்ந்தன. எனவே தான் இந்திய வரலாற்று நூல்கள் பற்றி குறிப்பி டும் வரலாற்று அறிஞர் அல்புரூணி 'இந்திய வரலாறுகள் பொதுவாகக் கதை சொல்லும் பாணியில் தென்படுகின்றன’ எனக்கூறுகின்றார்.
இருபதாம் நூற்றாண்டினைப் பொறுத்தவரையில் அது வரலாற் றுத் திருப்புமுனைக்கு வித்திட்டதாகவே கொள்ளலாம். வின்சன்ற் சிமித் போன்ற வரலாற்றாசிரியர்களின் ஆய்வுகளும் தேடல்களும் கீழைத் தேய வரலாற்றுத் துறைகளில் தடம் பதித்த போது இந்தியா போன்ற நாடுகளின் வரலாறுகள் பலவகையான திரைகளால் மூடப்பட்டுக்கிடப் பதை வெளிக்கொணர்ந்தார்கள். இது இன்னும் முழுமை பெறாமைக்கு காரணம் இன்றைய ஆய்வாளர்களில் பலர் அறிவியல் ரீதியான அணுகு முறைகளில் நாட்டம் கொள்ளாது, முன்னைய வரலாற்றாசிரியர்களின் ஆய்வுகளையே திரும்பத் திரும்பத் தீண்டிக் கொண்டிருப்பதுவும் தங்களின் சமகாலத் தேவையின் நிமித்தம் அவற்றையே ஆவணப்ப டுத்த முற்படுவதுமாகும்.
தமிழ் நாட்டில் எழுதப்படும் வரலாறுகள் கூட இன்னும் குழப்ப நிலையை நீடிக்கவே செய்கின்றன. தமிழக வரலாற்றை வகைப்படுத்திய காலத்தையே நம் ஆய்வாளர்கள் முரண்பாட்டுக்கு இடமாகவே வைத் துள்ளனர். சங்ககாலம் மற்றும் சங்கம்மருவிய காலம் பற்றிய கணிப் புகளில் கூட இவர்கள் ஒரு சரியான முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. சிலப்பதிகார காலத்திலும் இதே குளறுபடிகள் தொடரவே செய்கின்றன.
‘கடல்சூழ் இலங்கை கயவாகு வேந்தன்' பற்றிய குறிப்புக்களை அடிப்படையாகக்கொண்டு சிலப்பதிகாரக் காலம் மாத்திரமன்றி பல
வெல்லவூர்க் கோபால் 08

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் வரலாறுகள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் கால நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளன. எனினும் அக்காப்பியத்திலே இடம்பெறும் சொல் லாட்சி மற்றும் யாப்பமைதி என்பன கொண்டும் அதில் கூறப்படும் தமிழர் தம் வாழ்க்கைநெறி பற்றிய செய்திகள் கொண்டும் சில ஆய் வாளர்கள் கூறுவது நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது. இதனது காலம் இன்னும் பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டுவிடுமோ எனும் ஐயப்பாட்டையும் இது தோற்றுவிக்கின்றது. இப்பேற்பட்ட பிரச்சனைகள் தலைதூக்கும் சூழ்நிலையில் அறிஞர் பெருமக்கள் தங்கள் தங்கள் கருத்துகளுக்கு வலுசேர்ப்பதை விடுத்து எதிர்கால சந்ததியினரின் நன் மையை முக்கியப்படுத்தி தங்களுக்குள் ஒன்றுபட்டு சரியான ஒரு முடிவினை எட்டுதலே அவர்களுக்கு பெருமைசேர்ப்பதாக அமையும்.
இது குறித்து தன்னைத் துறந்தும் தமிழைத் துறக்காத முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்த அடிகளார் ‘தமிழும் தமிழரும்’ எனும் தனது கட்டுரையில் கூறும் கருத்துக்கள் நம் கவனத்தை ஈர்ப்பனவா யுள்ளன.
‘தமிழுக்கும் தமிழருக்குமான புதிய வரலாற்று நூல்களையும் அரசியல் நூல்களையும் இயற்றல் இன்று நமது தலையாய கடமையாகும். தமிழரது பழைய வரலாற்றினைப் பற்றிய சிற் சில முடிபுகள் தொல்காப்பிய எழுத்ததிகார நச்சினார்க்கினியார் உரை. இறையனார் அகப் பொருள் நக்கீரனார் உரை, சிலப்ப திகாரம் அடியார்க்கு நல்லார் உரை என்னும் இவை தம் முள்ளே காணப்படுகின்றன. இம்முடிவுகள் வரலாற்று நூலாசிரியர் ஆராய்ந்து கண்ட சரித்திர முடிவுகளோடு ஒத்தி ருக்கின்றன. தமிழரது நாகரிகம் மிகப் பழைமை வாய்ந்தது.
வெல்லவுர்க் கோபால் 09

Page 13
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
உலக சரித்திரத்தில் தமிழரே முதன்முதல் நாகரீக வாழ்க்கை எய்திய சாதியர் என்பதற்கும் கடல் கடந்து சென்று தமது
நாகரீகத்தைப் பலப்பல நாடுகளிலும் பரப்பினர் என்பதற்கும் வணிகத் துறையிலும் கணிதநூல் வானநூல் முதலிய எத்துறை களிலும் வல்லுநராயிருந்தார்கள் என்பதற்கும் பல சான்றுகள் கிடைத்திருக்கின்றன. ஆதலால் பள்ளியில் பயிலும் தமிழ்ச் சிறார்முதல் பல்கலை கற்றுத் தேறிய முது தமிழ்ப் புலவோர் ஈறாக அனைவரும் தமிழ்க் குலத்தாரின் உண்மை வரலாற்றி னை உளம்கொண்டு உணர்வதற்கு வேண்டிய சிறியவும் பெரி யனவுமாகிய வரலாற்று நூல்கள் பல தமிழ் மொழியிலே எழு தப்படல்வேண்டும். இதுவே நாம் செய்யும் தமிழ்த் தொண்டுக ளுள்ளே முதலில் வைத்து எண்ணுதற்குரியதென்பது எனது உள்ளக்கிடைக்கை.
இதன்மூலம் சுவாமி அவர்கள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னே இக்கருத்தை வலியுறுத்தியுள்ளமை வியந்து நோக்கத்தக்கது.
இன்று சில ஆய்வாளர்களிடத்தில் இத்தகைய ஆர்வம் பரவ லாகத் தென்பட்டிருப்பது அண்மைக் காலங்களில் வெளிவந்த சில வரலாற்று நூல்களால் உணரமுடிகின்றது. இப்பணிமென்மேலும் விரிவ டையவேண்டுமென்பதே தமிழினத்தின் முக்கிய வேண்டுதலாகும்.
வெல்லவுர்க் கோபால் 10

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
வன்னியர் பற்றிய முன்னிடு
வன்னியர் பற்றி தமிழகத்திலும் ஈழத்திலும் பல்வேறு ஆய்வா ளர்கள் தங்கள் ஆய்வுகளை முன்வைத்துள்ளனர். இவர்களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை உறுதிப்படுத்துவதிலும் சரியாகக் காலவரை யறை செய்வதிலும் ஆய்வாளர்கள் தங்களுக்குள் முரண்படவே செய் கின்றனர். வன்னியர் பற்றிய தேடலில் வெகுவாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரும் தொல்லியல் அறிஞருமான நடன காசிநாதன் அவர்கள் வன்னியர் பற்றித் தெரிவிக்கும் பழமையான சான்றாக மதுரைக் கருங் காலங் குடிக்கு அண்மையில் காணப்படும் குகைக் கல்வெட்டொன் றைக் குறிப்பிடுகின்றார். இதனது காலம் கி.பி. 9ம்நூற்றாண்டைக் கொண் ப.து என்பதனையும் அவர் கண்டறிந்துள்ளார். அத்துடன் பழமையான இலக்கியச் சான்றாக கம்பரால் எழுதப்பட்ட சிலை எழுபதையே இவர்
வெல்லவூர்க் கோபால் 1.

Page 14
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் கருதுகின்றார். இந்நூல் கி.பி.11ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 12ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
ஈழத்து ஆய்வாளர்களைப் பொறுத்தமட்டில் இவர்கள் சற்று முன்னோக்கிய காலக்கணிப்பினை உறுதிப்படுத்துபவர்களாகவே உள்ள னர். ஈழத்துத் தொல்லியல் ஆய்வாளர் க.தங்கேஸ்வரி அவர்கள் வர லாற்றுக் குறிப்புகள் கி.பி.7ம் நூற்றாண்டு முதல் கிடைப்பதாக குறிப்பிட் டுள்ளதோடு இலக்கியக் குறிப்புக்கள் கி.பி. 2ம் நூற்றாண்டு முதல் கிடைப்பதாகவும் கூறுகின்றார். இதற்கு அவர் பதிற்றுப்பத்து பாடல் அடிகளை ஆதாரப்படுத்தியுள்ளார்.
ஈழத்து மட்டக்களப்பு பூர்வீக சரித்திரத்தை ஆதாரமாகக்கொண்டு மகாவித்துவான FXCநடராசா அவர்களால் வெளியிடப்பட்ட ‘மட்டக்க ளப்பு மான்மியம்’ எனும் முதன்நூலை ஆய்வுசெய்து தொல்லியல் பேராசிரியர் கே.தனபாக்கியம் அவர்கள் எழுதிய ‘மட்டக்களப்பு மான்மிய ஆராய்ச்சி' யில் கலிபிறந்து 3466 (கி.பி.364) மட்டக்களப்பை ஆண்ட கலிங்க மன்னன் அமரசேனன் காலத்தில் இராமநாதபுரத்திலி ருந்து ஏழு பெண்கள் தங்கள் கணவன்மாருடனும் ஐந்து வன்னியகுல குருமாருடனும் மட்டக்களப்பில் குடியேறியமை பற்றியும் மன்னன் அமரசேனன் அவ்வேழு பெண்களையும் வன்னிச்சிமார் என சிறப்பித்த மை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். எனவே கி.பி.4ம் நூற்றாண்டு முதலாக வன்னியர் பற்றிய குறிப்பு ஈழத்தில் கிடைப்பதாகவுள்ளது. இதனடிப் படையில் அக்காலகட்டத்தே இராமநாதபுரத்தில் வன்னியர்கள் வாழ்ந் துள்ளமை தெரியவருகின்றது.
கி.பி. 7ம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆட்சிசெய்த பல்லவர், சாளுக்கியராலும் ராஷ்டிரகூடராலும் ஏற்பட்ட நெருக்குதலிருந்து விடு பட வன்னியர்களை தங்கள் படைகளில் சேர்த்துக்கொண்டதாக ஈழத்து
வெல்லவுர்க் கோபால் 12

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் வரலாற்றாசிரியர் கலாநிதி க.செ.நடராசா குறிப்பிட்டுள்ளார்.
வடமொழி நூலான அக்னி புராணத்தை தழுவி எழுதப்பட்ட வன்னியர் புராணம் வன்னியர்கள் தோற்றம் பற்றி குறிப்பிடுகையில் இவர்கள் அக்கினியில் அவதரித்தவர்கள் எனக்குறிப்பிடுகின்றது. இடங் கை வலங்கைப் புராணமும் ஓரளவு இதனையே ஒத்ததாக அமை கின்றது. கல்லாடம் எனும் புராணநூல் இவர்களை பன்னிரெண்டு பன்றிக் குட்டிகள் மூலமாக சிவபெருமானால் தோற்றம் பெற்றவர்கள் எனக் குறிப்பிடுகின்றது. இக்கூற்றுக்களில் மிகுந்துள்ள இயல்பான கற் பனைகளை ஒதுக்கிவைத்துவிட்டு வரலாறு ஒன்றினை முழுமைப்படுத்த அறிவியல் ரீதியான அணுகுமுறைகள் அவசியமாகின்றது.
இங்கே கல்லாடம் கூறும் கருத்துகளும் இடங்கை வலங்கைப் புராணம் கூறும் கருத்துகளும் உற்றுநோக்கத்தக்கன. இராமாயணம், பாரதம் போன்ற இதிகாச காவியங்களும் எண்ணற்ற புராணங்களும் பிறவிகளையோ அவதாரங்களையோ இவ்வாறே வெளிப்படுத்துகின் றன. கற்பனை மிகையான புனைந்துரைகளை விடுத்து உண்மையான தேடலுக்கு இதன்மூலம் விடைகாணமுடியும். சரியான காலக்கணிப் பினை நிர்ணயிக்க முடியாதுபோனாலும் வன்னியரின் தோற்றம் பற்றிய சர்ச்சைக்கு ஒரு முடிவினைக்காண இதன்மூலம் வாய்ப்பேற்படும்.
குறிப்புகள் அனைத்திலும் நாம் காணும் சம்புனியே ஆய்வுக ளிலும் நம் கவனத்தை ஈர்ப்பவராகின்றார். சம்புமகரிஜி வீரசம்பு, சம்பு வராயர் எனவும் இவர் குறிப்பிடப்படுகின்றார். அதேபோல புராணங்க ளிலே இடம்பெறும் சம்புதேசம் என்னும் நிலப்பரப்பும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படத்தக்கதாகும்.
சம்புமுனிவரின் யாகத்தின்போது வெளிப்பட்டவனான
வெல்லவூர்க் கோபால் 13

Page 15
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
வீரவன்னியன் சம்புமுனிவரின் வாரிசாகவே கொள்ளப்படத்தக்கவன். வீரவன்னியனின் பிள்ளைகளான சம்புவன்னியன், கிருஷ்ண வன்னி யன், பிரம்மவன்னியன், அக்கினி வன்னியன் மற்றும் பின்னர் உதித்த மகவு எல்லோருமே சம்புமுனிவரின் சந்ததியினரே. இவ்வழியே அச் சந்ததியினர் சமூக விரிவாக்கம் பெறுவதில் ஒரு தோற்றுவாய் தென் படுகின்றது. சம்பு, அக்கினி எனும் முன்நாமங்கள் இச்சந்ததியிடத்தே மீண்டு வருதலிலும் பிற்காலத்தில் இவர்கள் சம்புவராயர்கள் என அழைக்கப்படுவதற்கும் ஒரு ஆதாரசுருதி இழையோடுகின்றது.
மனித நாகரிகத்தின் உயிர்ப்படைதலுக்கு இயற்கையோடு ஒட்டிய வழிபாடும் ஒரு முக்கிய காரணமாகின்றது. அதில் அக்கினி வழிபாடே முதன்மையானதாகும். அவ்வழிபாடே குலப்பெயரின் தோற்றத்திற்கு காரணமாகவும் அமையலாம். இவ்வணுகுமுறையானது விஞ்ஞானபூர்வ மானதாகவும் மானிடவியல் மற்றும் சமூகவியலோடு இசைவுபடத்தக் கதாகவும் அமைகின்றது. இதன்மூலம் ஆய்வாளர்தம் கவனத்தை ஈர்க்க (tքlգեւյմ).
இப்புராணங்களின் முக்கிய பகுதி வாதாபியோடு பொருது வெற்றி கொண்டதை குறிப்பிடுவதாகவுள்ளது. கடலின் நடுவேயுள்ள அவனது இரத்தினபுரி நகரத்தை அழித்த சம்பவம் இலங்கையையும் இதன் முக்கிய நகரான இரத்தினபுரியையும் நினைவுபடுத்துகின்றது.
பொதுவாக வன்னிய சமூகத்தினர் நீண்டகால பாரம்பரியம் மிக்கவர்களாகவும் மிகப் பழங்காலம் முதலே சிறந்த படைக்கலப் பயிற்சிபெற்று மன்னர்களது மெய்க்காப்பாளர்களாக படைத் தளபதி களாக குறுநில மன்னர்களாக விளங்கியமையும் ஒப்புக்கொள்ளப்பட்ட வையே.
வெல்லவுர்க் கோபால் 14

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
வன்னியர் பற்றிய குறிப்புக்கள்
வன்னிய சமூகமானது தமிழகத்தே வன்னியர், குடிப்பள்ளி, வில்லி காடவர். சம்புவராயர், வாணராயர், கச்சியரையர், பண்ணாட்டார், மழவர், மழவராயர், வேளைக்காரர், படையாட்சியர் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்துள்ளனர். இவர்களைப் பற்றிய குறிப் புக்கள் கி.பி. 2ம் நூற்றாண்டு முதல் கிடைப்பதாக உள்ளன.
(1) பதிற்றுப் பத்து
சங்க இலக்கியமான பதிற்றுப் பத்து கி.பி. 2ம் நூற்றாண்டில்
எழுதப்பட்டதாக கொள்ளப்படுகின்றது. பேராசிரியர் வேதிசெல்லம்
போன்ற ஆய்வாளர்கள் இக்காலத்தை இன்னும் முற்பட்டதாகவே
வெல்லவுர்க் கோபால் 15

Page 16
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் கருதுகின்றனர். இந்நூல் வன்னியர் மன்றம் பற்றிக் குறிப்பிடுகின்றது.
‘மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விழங்கிய காடே என்ற பாடல் அடிகள் மூலம் இதனை விளங்கிக்கொள்ளலாம்.
(2) வன்னியர் புராணம்
வடமொழி நூலான அக்கினி புராணத்தை தழுவியதாக வன்னியர் புராணம் எழுதப்பட்டதாகும். மதுரையை ஆண்ட சுந்தர பாண்டியன் காலத்தே மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவரான வீரப்பிள்ளை என்பவரால் இந்நூல் இயற்றப்பட்டதாக கூறுவர். இப்புராணத்திலே வேதவியாசரால் அருளப்பட்ட பதினெண் புராணம் பற்றியும் அதிலே உருத்திர வன் னியன் கதை இடம் பெறுவது பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. வன் னியர் புராணம் இரண்டாம் பாடலிலே
* வங்கண் வீர வன்னியர் பூமன்னர்
பரிமீது தோன்றினனே’
எனும் அடிகளைக் காணலாம்.
(3) கல்லாடம்
இந்நூலில் திருவிளையாடற் புராணத்திலே பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலத்தை ஒத்ததர்க வன்னியர் தோற்றம் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது.
தருமப் பெரும்பயி ருலகுபெற விளைக்கு நாற்படை வன்னிய ராக்கிய பெருமான்’
எனக் கூறப்படும்
வெல்லவுர்க் கோபால் 16

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் சிவபெருமானால் பன்னிரண்டு வன்னியர் தோற்றம் பெற்றதாக வரலாறு. இங்கு இடம்பெறும் பன்றி முகங்கள் ஒரு குறியீடாகவே கொள்ளப்பட வேண்டும். பன்றியாக (வராக) அவதாரமெடுத்த திருமால் அக்கினி குலத்து வன்னியருக்கு அதிபதியாக இடங்கை குல அரசாகவும் அவ தாரமெடுத்தவர் என வேறு கதைகள் நிலவுகின்றன. இதனடிப்படையி லேதான் பன்றிக்குட்டிகளது பிறப்பும் சிவனின் ஆட்கொளலும் எழுந் திருக்கவேண்டும்.
இது தொடர்பான கருத்துக்கள் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலும் சுட்டிக்காட்டப்படுகின்றன. தென்சீமை ஏழாயிரம் பண்ணை பாழையப்பட்டுக்கு அதிபதியாயிருந்த முத்துச்சாமி வன்னியனும் அவ ரது பரம்பரையினரும் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம் மனுக்கு உதவிபுரிந்தமைக்காக பாழையக்காரர் முத்துச்சாமி வன்னி யனை இது பேராசிரியர் வேதிசெல்லம் தனது ‘தமிழக வரலாறும் பண்பாடும் நூலில் குறிப்பிடும் மாப்பிள்ளை வன்னியனாக இருக்கலாம்) ஆங்கிலேயர் கைதுசெய்து அந்தமானுக்கு அனுப்பியபோது அவனின் தம்பியாகிய சிதம்பர வன்னியன் ஆங்கிலேய ஆளுனருக்கு சமர்ப் பித்த கருணை மனுவில் தங்களது குல கோத்திரம் பற்றிக் குறிப்பிடும் போது பன்றிக் குட்டிகளாய்ப் பிறந்து உருமாறிய கதையும் அக்கினிக் குதிரை ஏறிய கதையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(4) சிலை எழுபது
இந்நூல் கிபி. 11ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 12ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கம்பரால் எழுதப்பட்டதாகக் கொள்ளப்படு கின்றது. இக்காலம் வன்னியர் படிப்படியாக தமிழக ஆட்சி நிலையில் காலூன்றத் தொடங்கிய காலம். வன்னியரின் வீரத்தினையும் படைத்த லைமைச் சிறப்பினையும் இலக்கிய நயத்துடன் சொல்லும் முதல் நூலாக இதனைக் குறிப்பிடலாம். காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி
வெல்லவுர்க் கோபால் 17

Page 17
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் செய்த சிற்றரசன் கருணாகரத் தொண்டை வன்னியன் அவையில் இந்நூல் பாடப்பட்டதாக பதிப்பாசிரியர் ஜெகநாதாச்சாரியார் குறிப்பிடு கின்றார்.
இந்நூல் வன்னியரை பண்ணாடார். பண்ணாட்டார் எனக் குறிப்பிடுகின்றது. பள்ளி நாட்டாரே பண்நாட்டாராகி பின் பண்ணாடார் ஆயினரென்பது ஆய்வாளர்தம் கூற்றாகும்.
(8) கருணாகரத் தொண்டை வன்னியனார் சதகம்.
இந்நூல் சோழப் பேரரசன் முதலாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் தலைமைத் தளபதியாக விளங்கிய கருணாகரத் தொண்டை மான் கலிங்கத்தின்மீது படையெடுத்து வெற்றி கொண்டதை போற்றிப் பாடப்பட்டதாகும். இவனே பின்னர் காஞ்சியை ஆட்சிசெய்தவனாவான்.
(6) ஏகாம்பர நாதருலா
இந்நூல் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் மீது இரட்டைப் புலவர்களால் பாடப்பட்டதாகும். வன்னியச் சிற்றரசன் மல்லி நாதன் எனும் சம்புவராய வேந்தனின் நல்லாட்சி பற்றிய பல பாடல்களை இதில் காணமுடியும். இந்நூல் கி.பி. 14ம் நூற்றாண்டுக்குரியதாகும்.
(7) இடங்கை வலங்கைப் புராணம்
இந்நூல் வன்னியர் புராணத்தை தழுவி எழுதப்பட்டதாகும். இதில் இடங்கைப் பிரிவின் முதன்மைப் பிரிவினராக பண்ணாட்டார் குறிப்பிடப்படுகின்றனர்.
(8) கல்வெட்டுச் சான்றுகள்
வன்னியர் பற்றித் தெரிவிக்கும் ஆவணங்கள் இதுவரை முந் நூறுக்குமேல் கிடைத்துள்ளதாக தமிழக முன்னாள தொல்லியல்துறைப்
வெல்லவுர்க் கோபால் 18

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் பணிப்பாளர் நடன காசிநாதன் அவர்கள் குறிப்பிடுகின்றார். இதில் மதுரை மாவட்ட கருங்காலங்குடிக் கல்வெட்டே முதன்மையானதாகும். இது கி.பி. 9ம் நூற்றாண்டுக்குரியதாக கண்டறியப்பட்டுள்ளது.
(9) ஈழத்துக் குறிப்புக்கள்
ஈழத்தில் வன்னியர் பற்றிய காலக்குறிப்புக்கள் கி.பி. 4ம் நூற் றாண்டு முதல் கிடைப்பதாகவுள்ளது. மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம் இதுபற்றிக் குறிப்பிடுகின்றது. மேலும் வரலாற்று ரீதியான ஆவணங்கள் கி.பி.10ம் நூற்றாண்டு முதலே ஈழத்தில் வன்னியர் நிலைகொண்டமை யை வெளிப்படுத்துகின்றன. கி.பி. 11ம் நூற்றாண்டில் ஜனநாதமங்கலத்தில் (பொலநறுவை) உத்தம சோழமண்டலம் என்ற பெயரில் அமைப் பொன்று உருவாக்கப்பட்டதாகவும் இம் மகா மண்டபத்தை அமைக்க மாதேவன் என்னும் வேளைக்காரப் படைத்தலைவன் மேற்கொண்ட நடவடிக்கை பற்றியும் பொலன்நறுவை ரன்கொத் விகாரைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்ச் சாசனமொன்று விபரிக்கின்றது. அன்றைய சோழர் ஆட்சியில் வேளைக்காரப் படைத்தலைவர்களாக வன்னியரே விளங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் வன்னியர் ஆட்சிபற்றிய குறிப்புக்கள் யாழ்ப்பாண வைபவமாலை, வையா பாடல், கோணேசர் கல்வெட்டு, மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு மான்மிய ஆராய்ச்சி மட்டக்களப்பு குகன்குல முற்குகர் வரலாறு போன்ற நூல்கள் வாயிலாக அறியப்படுகின்றது.
சிங்கள மொழிமூலம் கிடைக்கும் ஆவணங்கள் கி.பி. 12ம் நூற் றாண்டு முதல் இலங்கையில் வன்னியர் வாழ்ந்து வருவதை வரலாற்று ரீதியாக தெளிவுபடுத்துகின்றன.
வெல்லவூர்க் கோபால் 19

Page 18
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
வன்னியரின் எழுச்சி
தற்போது சிறு விவசாயக்குடியினராக காணப்படும் வன்னியர்கள் முற்காலத்தில் தென்னிந்தியாவில் இருந்த பழங்குடியினரின் ஒரு பழங் குடியின் வழிவந்தோராக இருந்திருப்பார்கள் என்று கொள்வதற்கு போதிய காரணம் உள்ளது. இவர்கள் அக்கினி குலத்தை சேர்ந்தவர்க ளென்றும் சம்புமுனிவரின் வழிவந்தவர்கள் என்றும் விற்போரினால் பல வெற்றிகளைக் குவித்தவர்களென்றும் தெரியவருகின்றது. வன்னி யரில் சிறந்த குறுநிலத் தலைவர்கள் இருந்ததையும் திறைகொடுக்க மறுத்த இவர்களை நெடுங்காலமாக விஜயநகர இராயர்களால் அடக்கி யாளமுடியாதிருந்ததுவும் வரலாற்றுக் குறிப்புக்களால் உணரமுடியும்.
வரலாற்றாசிரியர் தேர்ஸ்ட்டனின் வன்னியர் பற்றிய குறிப்பு இது.
வெல்லவுர்க் கோபால் 20

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
வரலாற்றுக் கோட்பாடுகளுக்குரியதான வன்னியர் பற்றிய இலக் கியக் குறிப்பு தமிழ்மொழியில் முதன்முதலாக சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து மூலம் வெளிவருகின்றது. பின்னர் தொடர்ந்து வந்த சில நூற்றாண்டுகளாக அவர்கள் பற்றிய ஆய்வுக்குறிப்புகள் தெளிவற்ற தாகவே காணப்படுகின்றன. ஈழத்தில் கி.பி4ம் நூற்றாண்டை தொடர்பு படுத்தியதாக கிடைத்துள்ள குறிப்புகளும் மேலும் ஆய்வினுக்கு உட்ப டுத்தல் அவசியமாகின்றது.
கி.பி 7ம் நூற்றாண்டில் பல்லவரது ஆட்சிக் காலத்தின்போது சாளுக்கியராலும் ராஷ்டிரகூடராலும் அடிக்கடி ஏற்பட்ட தொல்லைகள் காரணமாக இரண்டாம் மகேந்திர வர்மனின் புதல்வன் முதலாம் பர மேஸ்வர வர்மன் காடவரின் (வன்னியர்) படைத்துணையைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிகின்றது. சாளுக்கிய வேந்தன் விக்கிரமாதித்தனிடம் தோற்றோடிய பரமேஸ்வர வர்மனுக்குத் துணையாக நின்று போர்தொ டுத்து விக்கிரமாதித்தனை தோற்கடித்து மீண்டும் காஞ்சியை மீட்க காடவர்கள் உதவியதாக வரலாறு கூறுகின்றது. இதனை ஈழத்து வரலாற் றாசிரியர்கள் கலாநிதி.க.செநடராசா அவர்களும் கதங்கேஸ்வரி அவர்க ளும் தங்கள் ஆய்வுகளில் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்து வரலாற்றாசிரியர்கள் காடவர் என்னும் பதம் குறித்து பெரிதளவு அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. எனினும் ஆய்வா ளர் நடன காசிநாதன் அவர்கள் தனது 'வன்னியர்'என்னும் நூலில் காடவராதித்தன் எனும் வன்னியன் பற்றிக் குறிப்பிடும் போது இவர் காடவர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் காடவர்களும் வன்னியரெனத் தெரியவருவதாக கூறியுள்ளார்.
பொதுவாக வன்னியர்தம் எழுச்சிக் காலம் கி.பி 9ம் நூற்றாண்டு
வெல்லவுர்க் கோபால் 21

Page 19
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் முதல் தொடக்கமாக கொண்டிருப்பதை ஆய்வுகள் உணர்த்தும். சோழப் பேரரசுகள் மற்றும் பாண்டியப் பேரரசுகளின் படைப்பொறுப்புகளில் தொடங்கிய இவர்களது செல்வாக்கு படிப்படியாக விரிவுபட்டு அதிகார நிலைக்கும் ஆட்சிப்பொறுப்புக்கும் உயர்ந்தது. இதற்கு பண்டைய தமிழ் நாட்டின் ஆட்சிமுறையைக் காரணமாகக் கொள்ளலாம்.
ஒரு நாட்டின் மீது படையெடுத்து வெற்றிகொண்டாலோ அல் லது எதிரிகள் தமது நாட்டின் மீது மேற்கொள்ளும் படையெடுப்பை முறியடித்தாலோ படைத்தலைவர்களையும் வீரர்களையும் அம்மன்னன் பாராட்டி பட்டமும் பரிசுமளிக்கும் வழக்கம் தமிழ் நாட்டில் இருந்தது. பரிசாக நாட்டையே கொடுப்பதுவும் ஒரு ஊரையோ அல்லது பல ஊர்களையோ இனாமாக வழங்குதலும் ஏனாதி, காவிதி போன்ற பட்டங் களை வழங்கி கெளரவிப்பதும் இதில் அடங்கும். இதனை மாராயம் என்ற சொல்லால் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.
'மாராயம் பெற்ற நெடுமொழியானும்
(தொ.பொ.புற-7)
சோழர்தம் எழுச்சிக்கும் வெற்றிக்கும் வன்னியரது வீரமும் படை நடாத்தும் திறனும் பேருதவி புரிந்தது. இதன்மூலம் வன்னியச் சிற்ற ரசுகளை நிறுவி அதிகாரம் செலுத்துமளவுக்கு இவர்களது ஆற்றல் இவர்களுக்கு வழிகோலியது. இடங்கைப் பிரிவின் முதல்பிரிவில் கணிக்கப்பட்ட வன்னியர்களில் பலர் பின்னாளில் பெரும் நிலபுலங் களின் சொந்தக்காரர்களாய் மாறினர். குடிப்பள்ளி என்ற சிறப்புப் பெய ரும் அவர்களுக்குரியதாயிற்று.
கி.பி. 13ம், 14ம் நூற்றாண்டுகள் இவர்களது சிறப்புக் காலம் என லாம். அன்றைய செங்கேணிப் பிரதேசம் (செங்கல்பட்டு, விழுப்புரம்,
வெல்லவுர்க் கோபால் 22

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
திருவண்ணாமலைப் பகுதிகள்) இவர்களது முக்கிய பகுதிகளாக விளங் கியது. ஓமய நாட்டு முன்னுற்றுப் பள்ளிப் பகுதியும் இதுவாகவே இருக்கமுடியும். விரிச்சிபுரத்தை இருக்கையாகக்கொண்டு இவர்கள் நிறுவிய இராசகம்பீர இராச்சியம் இவர்களது வலிமைக்கு சிறந்த எடுத் துக்காட்டு. இவர்களது ஆதிக்கம் வட தமிழகமெங்கும் பரந்திருந்த மைக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன.
வன்னியர்களோடு வரலாற்று ரீதியாகவும் குலப்பெயராகவும் இடம்பெற்ற செங்கேணி’ என்னும் பதம் மிகவும் கவனத்தில் கொள் ளத்தக்கதாகின்றது. இடப்பெயர் குலப்பெயரானது ஒரு சிறப்பு அம்ச மென்றே கொள்ளவேண்டும். செங்கேணியே செங்கழுநீராகி பின்னர் செங்கல்பட்டு என மருவியதென்பர்.
கி.பி. 9ம் நூற்றாண்டில் தெரியவந்த வன்னியச் சிற்றரசுகள் சோழ பாண்டிய பேரரசுகளில் விரிவுபட்டு நின்றமையும் தொடர்ந்த அரசியல் மாற்றங்களில் அவை பாளையங்களாகவும் உடையார் பகுதிகளாகவும் அண்மைக் காலம் வரையும் நிலை பெற்றிருந்தமையும் வரலாற்றில் ஒப்புக்கொள்ளப்பட்டவையே.
ஈழத்தை பொறுத்தமட்டில் கி.பி. 12ம் நூற்றாண்டைத் தொடர்ந்து வந்த வன்னியச் சிற்றரசுகள் 19ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வன்னிப் பிரதேசத்தில் நிலைபெற ஏனைய பகுதிகளில் வன்னிமைகளாக உருவெடுத்தன.
வெல்லவுர்க் கோபால் 28

Page 20
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
முக்கிய குறுநில
மன்னர்கள்
பாண்டிய நாட்டின் குறுநிலத் தலைவர்களில் ஒருவனாக விளங் கிய பள்ளித் தரையன் என்னும் வன்னியன் கி.பி. 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த வழுதி என்னும் பாண்டிய மன்னனின் காலத்தைச் சேர்ந்த சிற்றரசனாக கருதப்படுகின்றான். சோழர் ஆட்சிக் காலத்திலும் வன்னி யரை பள்ளி என அழைக்கும் மரபு பரந்துபட்டு தெரிகின்றது. சுந்தர சோழன் ஆட்சிக் காலத்தில் பாரதாயன் பள்ளி என்ற குறுநில மன்ன னும் ஒமாயிந்தன் முன்னூற்றுவன் பள்ளியான கரணமாணிக்கம் என்ற குறுநில மன்னனும் பேசப்படுகின்றனர்.
ஓய்மா நாட்டு உத்தம பேரூர் தென்பிடாகைப் புலியூரில் உள்ள
வெல்லவுர்க் கோபால் 24

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் திருப்புவிவலம் ஆலயம் தொடர்பான சாசனங்களில் ஓய்மா நாட்டு குடிப்பள்ளி பற்றிய குறிப்புகள் தென்படுகின்றன.
‘வெண் குன்றக் கோட்டத்து இரும்பேடு நாட்டுப் பெருநல்லூர் குடிப்பள்ளி செல்வப் பேரரையன் பரிவேட்டைப் போனநாளில் அவனை ஓய்மா நாட்டு குடிப்பள்ளி தொண்டைமான் சோழப் பேரரையனின் மகன் தேவன் கைப்பிழையாக எய்தமையால் அவன் இறந்து விட்டான். அதற்குப் பிராயச்சித்தமாக விளக்கு எரிப்பதற்காக 15 பசுக்கள் திருப் புவிவலம் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டது.
இக்குறிப்பானது இலங்கை இந்து சமய கலாசார அமைச்சின் வெளியீடான இந்து கலைக்களஞ்சியம் பகுதி 2ல் காணப்படுகின்றது.
ஓய்மா நாட்டைக் கொண்ட சிறப்புப் பெயரே ஓய்மாயிந்தன் என்பதாகும். ஓய்மா நாட்டின் தலைநகரமாக திண்டிவனம் விளங்கியது. முன்னர் குறிப்பிட்ட செங்கேணிப் பிரதேசமே ஒய்மா நாடு ஆகும்.
சுந்தர சோழனைத் தொடர்ந்து அவன் வழி வந்தோரான முதலாம் இராசராச சோழன், முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சிக் காலத்திலும் வன்னியர் சிறப்பான இடத்தில் வைத்து மதிக்கப்பட்டனர். அவர்களது வேற்று நாட்டுப் படையெடுப்புகளிலெல்லாம் வன்னியர்களின் பங்க ளிப்பு மகத்தானதாகக் கருதப்படுகின்றது.கி.பி.10ம் நூற்றாண்டின் பிற் பகுதியில் இலங்கை சென்ற வன்னியப்படைத்தலைவர்களதும் போர் வீரர்களதும் வாரிசுகளும் பின்வந்தோரும் இலங்கையில் வன்னியர்
ஆதிக்கம் பெற கால்கோளாய் அமைந்தனர்.
கி.பி. 11ம் நூற்றாண்டில் செங்கேணி எனும் இடப்பெயரை சிறப்புப்
வெல்லவுர்க் கோபால் 25

Page 21
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
பெயராகக் கொண்ட பலர் தொடர்ந்து குறுநிலத் தலைவர்களாக விளங் கியமை வரலாற்றில் தெளிவாகின்றது. கி.பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த வனாக கருதப்படும் செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பன் சிறப் பான இடத்தில் வைத்துக் கணிக்கப்படுகின்றான். இவனது பணிகளைப் பற்றிப் பல கல்வெட்டுச் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன. இவன் இராசேந்திர சோழ சம்புவராயன் என்னும் பெயராலும் அழைக்கப் படுகின்றான்.
வன்னியத் தளபதிகளின் வீரத்திற்கு சிறந்ததோர் எடுத்துக் காட்டாக கலிங்கப்போரை குறிப்பிடலாம். கோதாவிரிக்கும் மகேந்திர மலைத் தொடருக்கு இடைப்பட்ட பிரதேசம் கலிங்கமாகும். கலிங்கத்தை அடக்கியாண்ட சோழப் பேரரசன் குலோத்துங்கனுக்கு வரி செலுத்த மறுத்த கலிங்கத்தின் வடபகுதி அரசன் அனந்தவர்மனுக்கு எதிராக தொடுக்கப்பட்டதே இப்போர்.
சோழப் பேரரசர்களில் இராசராசன் மற்றும் இராசேந்திரனுக்குப் பின் குறிப்பிடத்தக்கவனாக இராசேந்திரனின் பேரனும் வேங்கி நாட்டு வேந்தனுமான இரண்டாம் இராசேந்திரன் கருதப்படுகின்றான். இவனே சோழ நாட்டின் வேந்தனாக குலோத்துங்கன் என்ற பெயரில் முடிசூடி யவன். இவனுடைய ஆட்சிக்காலத்திலும் சம்புவராயர்கள் என்னும் வன்னியச் சிற்றரசர்கள் நிலை பெற்றிருந்தனர். காஞ்சி சென்று அச்சிற்றர சர்களை சந்தித்த குலோத்துங்கன் அவர்களது ஆலோச னைக்கு அமைவாக கலிங்கப் போரைத் திட்டமிட்டான்.
காஞ்சியின் சிற்றரசன் கருணாகரத் தொண்டை வன்னியன் தலை மையில் கரி, பரி, காலாட் படைகள் கலிங்கம் நோக்கி விரைந்தன. கி.பி. 1112ல் பாலாறு, வடபெண்ணை, கிருஷ்ணா, கோதாவிரி தாண்டிய வெல்லவுர்க் கோபால் 26

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் சோழப்படை கலிங்கத்தைத் தாக்கியது. இப்பெரும் போரினுக்கு ஈடு கொடுக்க முடியாத கலிங்க வேந்தன் ஓடியொளிந்துகொள்ள கலிங்கப் படை புறமுதுகிட்டது. மகளிருடனும் அளவற்ற செல்வங்களுடனும் யானைகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்களுடனும் கருணாகரத் தொண்டை வன்னியன் வெற்றித் தளபதியாக நாடு திரும்பினான். இதனா லேயே இவன்மீது கருணாகரத் தொண்டை வன்னியனார் சதகம் பாடப் ull-gil.
வன்னிய குறுநில மன்னர்களில் குறிப்பிடத்தக்க இன்னுமொரு சிற்றரசன் எதிரிலி சோழ சம்புவராயனாகும். ராஜகம்பீர சம்புவராயன் எனவும் இவன் அழைக்கப்பட்டதிலிருந்தே இவன் ஆற்றல் வெளிப்ப டும். கி.பி. 1236 தொடக்கம் 1258 வரையும் குறுநில மன்னனாக ஆட்சி செய்த இவன் தனியாக கோட்டை கொத்தளம் அமைத்து அதற்கு மருதரசர் படை வீடு எனப் பெயரிட்டு பின்னர் தனியரசினை மேற் கொண்டான் என கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
பிற்கால சோழர்களான விக்கிரம சோழன், இரண்டாம் இராசரா சன், இரண்டாம் இராசேந்திரன், மூன்றாம் குலோத்துங்கன் போன்ற வர்களின் படைகளிலும் வன்னியர்களின் சிறப்பான பணிபற்றி அறிய முடிகின்றது.
கி.பி.13ம் நூற்றாண்டில் மூன்றாம் இராசராச சோழனுடன் சோழ ராட்சி முடிவுபெற வன்னியர்கள் சிற்றரசு நிலைகளிலிருந்து மாறி, தமிழ கத்தின் வடபகுதியில் பெரும் வலிமை பெற்றனர். காஞ்சியே சம்புவரா யர்களின் முக்கிய இருக்கையானது, அழகிய சிங்கன், இராசராச சம்பு வராயன், திருபுவன வீர சம்புவராயன், அழகிய சோழ சம்புவராயன், அத்திமல்லன், வீரப்பெருமான், எதிரிலி சம்புவராயன் போன்றோர் தன்னாட்சி நடத்திய வன்னிய மன்னர்களாகக் கருதப்படுகின்றனர்.
வெல்லவுர்க் கோபால் 27

Page 22
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
கி.பி. 13ம் நூற்றாண்டில் பாண்டியரின் எழுச்சியானது வன்னியரின் ஆட்சியமைப்புக்குப் பெரும் நெருக்குதலைக் கொடுத்தது. கி.பி. 14ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத்தில் ஏற்பட்ட முஸ்லீம் படையெ டுப்புக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 131ல் டில்லி அலாவுதீன் கில்சியின் தளபதியான, மாலிக் கபூர் யாதவர்களையும் காகாத்தியர்களை யும், போசாளர்களையும் தோற்கடித்து, தமிழகத்தில் புகுந்தான். சுந்தர பாண்டியனுக்கும் வீர பாண்டியனுக்கும் ஏற்பட்ட அரசுரிமைப் போட்டி யும் உள்நாட்டுப் பூசல்களும் மாலிக் கபூரின் படையெடுப்புக்கு உர மூட்டியது. மதுரை, திருச்சி, கன்னனுர் பகுதிகள் இவனது ஈவிரக்க மற்ற தாக்குதல்களால் சிதைந்துபோயின. தமிழக மக்கள் அடைந்த துன்பங்கள் விபரிக்கமுடியாதவை. அதன் பின்னர் உதின் தம்கானி என்பவன் மதுரை சுல்தானாக இருந்த காலத்திலும் தமிழகம் மென் மேலும் கொடுமையால் பெரும துயருற்றது. அதுபற்றிய ஆபிரிக்கப் பயணியான இபன் பதூதாவின் (கி.பி. 1312) பயணக் குறிப்பானது நெஞ்சைப் பிளிகின்றது.
“எண்பதைக் கடந்து தனது தள்ளாத வயதிலும் இந்துக்களின் பாதுகாவலனாக முஸ்லிம் படைகளை எதிர்த்துப் போராடிய போசாள வேந்தன் வீரவல்லாளனைச் சிறைப்பிடித்த சுல்தான் தம்கானி அவரைக் கொன்று அவரது உடலில் வைக்கோலைத் திணித்து, அச்சடலத்தை மதுரைப் பெருவீதியில் மக்கள் பார்வையில் படுமாறு தொங்கவிட்டான். தலைவனை இழந்து தவித்த இந்துக்கள் மீதும் அவன் கொடுஞ்சினம் பாய்ந்தது. ஆண், பெண், முதியோர், சிறியோர், குழந்தை குட்டிகள் என்ற பாகுபாடின்றி, கண்ணில்கண்ட அனைவரையும் வாளுக்கிரை யாக்கினான். வீதிகள் பிணக் குவியலாய் தென்பட்டன. மக்களை எச்சரிக் கைப்படுத்த சூலங்களில் குத்தி நாட்டப்பட்ட தலைகள் கொடூரமாய்
வெல்லவுர்க் கோபால் 28

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
காட்சியளித்தன. இவை அனைத்தும் கொடுங்கோன்மைச் சின்னங்
9.
களே
இத்தனைக்கும். தான் நேரில் பார்த்ததைக் குறிப்பாக எழுதி வைத்த இபன்பதுதா இக் கொடுங்கோலன் தம்கானியின் குடும்பத்தே திருமண உறவுகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்காலத்தே சம்புவராயர்கள் அல்லலுற்றுத் தவித்த மக்களுக் காக தங்கள் பகுதிகளில் “அஞ்சினான் புகலிடங்களை’ அமைத்து அவர்களுக்கு உணவளித்து உதவினர். இதில் ஏகாம்பரநாத குலசேகர சம்புவராயன் முக்கியமானவனாகக் கருதப்படுகின்றான்.
முஸ்லிம்களின் படையெடுப்பின்போது தமிழகத்தில் பல இந்துக் கோவில்கள் தகர்க்கப்பட்டும், கொள்ளையடிக்கவும் பட்டன. கி.பி.1322ல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த குலசேகர சம்புவராயரின் மகன் மண் கொண்ட சம்புவராயன் தனது ஆட்சிக்கு உட்பட்ட பல இந்து ஆலயங் களைப் புனரமைத்து. பூசைகள் நடக்கப்பண்ணியதாக அறியவரு கின்றது. பதினெட்டு ஆண்டுகள் வரை இவனது நல்லாட்சி நீடித்தது.
இவனைத் தொடர்ந்து குறிப்பிடத்தக்கவன் திருமல்லிநாதன் என் னும் மூன்றாம் இராசநாராயணன். இவனது ஆட்சிக்கால அறப்பணிகள் பற்றி பல கல்வெட்டுக்கள் சான்று பகர்கின்றன. இவன் இருபத்து மூன்று ஆண்டுகள் நல்லாட்சி புரிந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன் பின்னர், சமபுவராயர்களின் ஆட்சி நலிவடைந்ததென்றே கொள்ளவேண்டும்.
சம்புவராயர்களின் ஆட்சிக்காலத்திய நாணயம் வீரசம்பன் குளி
29
வெல்லவுர்க் கோபால்

Page 23
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
கைகள் என அவர்களது பெயரிலேயே அழைக்கப்பட்டுள்ளது. தமி ழுக்கும் சைவத்திற்கும் இவர்கள் பெரும் தொண்டாற்றியமை குறிப்பிடத் தக்கதாகும்.
உடையார் மற்றும் பாழையக்காரர்கள்
இறைவனையும், மற்றும் சோழ மன்னர்களையும் குறித்து நின்ற உடையார் என்னும் சிறப்புப் பெயர் சோழராட்சிக் காலத்தில் வகுக்கப் பட்ட ஒரு தலைமை நிருவாகப் பதவியைக் குறிப்பதாக மாறியது. இவர்களுக்கு மன்னர்கள் நிலமானியங்களை வழங்கினர். சோழர் மற்றும் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் உடையான் என்ற பட்டத்தினைப் பெற்ற பலரை சாசனங்கள் வாயிலாகக் காணமுடியும். இவர்களில் பலர் சோழமன்னர்களின் சேனாதிபதி, அமைச்சன், திருமந்திர ஓலை, வரியி லீடு முகவெட்டி, கங்காணி முதலான பல்வேறு நிலைகளிலுள்ள பதவிப் பெயர்களில் அரசியல் நிருவாகங்களை நடத்தியுள்ளனர்.
இரண்டாம் இராசராச சோழன் காலத்தில் (கி.பி. 163-178) திருச் சிற்றம்பலம் முறையான் பெருமான்நம்பி அரையன் என்ற வன்னியன் முகலமைச்சனாக இருந்து செயற்பட்டதோடு இவனின் திறமையால் பாண்டிநாட்டு விவகாரங்களில் தலையிட்டு, குழப்ப நிலையை உருவாக் கிய சிங்கள ஒற்றர் படைகள் துரத்தியடிக்கப்பட்டதாகக் கூறப்படுகின் றது. இவனுக்குப் பிறகு இவனின் சகோதரன் வேதவனம் உடையான் அம்மையப்பன் அப்பதவியை வகுத்ததாகத் தெரியவருகின்றது.
இராசேந்திர சோழபுரத்து அரண்மனையிலிருந்து அரசாங்க அலுவல்கள் புரிந்த உடையார் வரிசையில் பின்வரும் வன்னிய குலத்தவர்கள் அறியப்படுகின்றனர். வெல்லவூர்க் கோபால் 30

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
01. விடையில் அதிகாரி அருள்மொழித்தேவ வளநாட்டு நல்லூர் உடை
யான் புறம்பியன் குடிப்பள்ளி
02. வரிப்பொத்தகக் கணக்கு
மதுராந்தக வளநாடடு வீரசோழ நல்லூர் உடை யான் பேரரையன் மாதேவன்
03. புரவுவரித் திணைக்கள நாயகம்
மதுராந்தக வளநாட்டு இராசேந்திர சோழ குளக் கீழ்க் குறிச்சி உடையான் கணபதி பூவன்
04. முகவெட்டி : மதுராந்தக வளநாட்டு இருஞ்சோணாட்டுத் துற்று -டை உடையான் பள்ளி பகவன் சத்துரு காலன்
இலங்கையிலும் சோழராட்சி நிலவிய காலத்தில் (கி.பி.983-1070) உடையான் என்ற பதவிப் பெயர் வழக்கில் இருந்தது. மோசனூர் உடை யான் திருப்பூவணதேவன், சிறுகுளத்தூர் உடையான் தேவன், பாலைப் பாக்கம் உடையான் சாத்தான் என்போர் பற்றி சாசனங்கள் குறிப்பிடுகின் றன. இதன் பின்னரும் ஈழத்தே உடையான் என்ற பதவிப் பெயர் நீண்டகாலமாகத் தொடரவே செய்தது.
பனங்காமம் பற்று வன்னிய சிற்றரசன் குலசேகரன் நல்லமாப் பாண வன்னியன் ஆள்வயினார் கந்தன் என்னும் வேளாளனுக்கு வழங்கிய நியமனக் கடிதத்திலும் இதனை அறியமுடியும்.
‘பனங்காமம் பற்று அயுதாந்தி வன்னிபம் தொஞ்சுவாய் குலசேகர நல்ல மாப்பாண வன்னியன் அவர்கள் கற்பித்த படியாவது பனங்காமம் பற்றுக்கு சேர்ந்த கிழக்கு மூலைக்கு
வெல்லவுர்க் கோபால் 3.

Page 24
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
சேர்ந்த * விழாங்குளம் சாதி வெள்ளாளன் ஆள்வயினார் கந்த உடையான் வந்து கிழக்கு மூலைக்கு தொழிலும் பட்டப் பேரும் கிடைக்கவேண்டுமென்று மிகுந்த அழுதாவுடனே மன்றாடிக் கேட்டபடியால் நாமும் சொல்லப்பட்ட கந்த உடை யானுக்கு திசை விளங்கு நாயகம் என்கிற பட்டமும் கட்டி, கிழக்கு மூலைக்கு சேர்ந்த உடையார், கண்காணி, ஆயுதாந்தி மொத்தக்கர், பணிக்கமார், போதியகமக்காரர் மற்றும் குடியான வர்கள், வர்த்தகர், போக்கர், கச்சவடகாரர், இனிமேல் வரப் பட்ட குடியானவர்கள், தழையர், பட்டங்கட்டி மார், சகலரும் இவனைத் தங்கள் முதலியார் என்கிறதறிந்து, அடுத்த சங்கை பண்ணி பேர்சொல்லி அழைக்கவும்”
(* விழாங்குளம் - தற்போதைய வவுனியா நகரம்)
கி.பி. 14ம் நூற்றாண்டு முதல் சோழ, பாண்டியப் பேரரசுகள் நிலைகுலைந்து போக தமிழ்நாட்டில் அயலார் ஆதிக்கம் தலையெ டுக்கத் தொடங்கியது. குறுநிலச் சிற்றரசுகள் பாழையக்காரர் நிலைக் குத் தள்ளப்பட்டன. இதில் அரியலூர் மழவராயர்கள் நீண்ட பாரம்பரிய மிக்க பாழையக்காரராவார். சேரநாட்டின் தொடர்பினராகக் கொள்ளப் படும் இவர்கள் வன்னியரில் ஒரு பிரிவினராகக் கணிக்கப்படுகின்றனர். குறுநில மன்னர்களாக ஆட்சிசெலுத்திய இவர்கள் வழிவழியாக சுமார் ஐநூறு ஆண்டுகள் பாழையக்காரர்களாக புகழோடு விளங்கினரென அரியலூர் தொடர்பான ஆவணங்கள் சான்றுபகர்கின்றன.
“மழவர் பெரும!
பொருநரும் உளரோ நீகளம் புகினே"
(புறநானூறு - அதியமான் நெடுமான் அஞ்சி)
ஈழத்திலும் மட்டக்களப்புப் பிரதேசத்திலே மழவரயன்குடி என ஒரு பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களும் சேரநாட்டு மரபின
வெல்லவூர்க் கோபால் 32

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
ராகவே கொள்ளப்படுகின்றனர்.
தமிழகத்திலே வன்னிய மரபைச் சேர்ந்த பாழையக்காரர்கள் உடையார் பாழையம், பிச்சாவரம், வடகால், ஏழாயிரம் பண்ணை, அழ காபுரி, சிவகிரி போன்ற பகுதிகளிலும் அதிகாரம் செலுத்தியுள்ளமை வரலாற்றுக் குறிப்புக்களால் புலனாகின்றன. வன்னிய சமூகத்தவர் பல உட்பிரிவுகளை உள்ளடக்கிய பழங்குடி மரபினராகவும் நீண்ட பாரம்ப ரியத்தினைத் தன்னகத்தே கொண்டவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர் என்பதனை மறுப்பதற்கில்லை.
பழந்தமிழ் குடியினர் திணை நில வாழ்க்கை மரபிலிருந்து காலப் போக்கில் வர்ணாசிரமத்தில் புகுந்துகொண்ட பின்னர் சாதி அமைப்புக் கள் கிளைவிட்டு சமூக அமைப்புக்கள் உருவாக்கம் பெற்றதும், அவ் வாறான மக்கட் சமுதாயத்திலே பொருளாதார ஏற்ற இறக்கங்கள் உயர்வு தாழ்வினுக்கு வழிவகுத்தமையும் வரலாறு உணர்த்தும். தொல்காப்பியர் காலத்தில் கூட உள்ளவர் உயர்ந்தோராகவும் இல்லாதார் இழிந்தோரா
கவும் கருதப்பட்டமை காணப்படுகின்றது.
(தொல்காப்பியம் பொ.அ. -44)
ஒரே சமுதாய அமைப்பிலே வலங்கை இடங்கைப் பிரிவினர் உருவாக்கம் பெற்றமையும் இத் தன்மையதே. இடங்கைப் பிரிவில் வைத்துக் கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தினர் தங்களது ஆற்றலையும் வீரத்தினையும் முன்னிலைப்படுத்தி தமிழகத்தில் ஒரு ஆதிக்க சக்தி யாக வளர்ச்சியுற்றமையும் நீண்ட காலமாக புதுவை, கடலூர், செங்கல் பட்டு, ஆர்க்காடு, விழுப்புரம், சேலம், வேலூர், தருமபுரி, திருவண்ணா மலை, அரியலூர் போன்ற பிரதேசங்களில் மட்டுமன்றி, ஈழத்திலும் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தமையும் வன்னியரின் எழுச்சியைக் காட்டுவதாகவே அமையும்.
வெல்லவுர்க் கோபால் 33

Page 25
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
ஈழத்து வன்னியர்கள்
பழமையான வரலாறுகளை செம்மைப்படுத்துவதென்பது மிகவும் சிரமமான பணியாகும். இதனை வரலாற்றாசிரியர்களே ஒப்புக்கொள் கின்றனர். தற்போது கிடைக்கும் மேலதிக ஆதாரங்களைக் கொண்டு ஏற்கனவே எழுதப்பட்ட வரலாறுகளில் மாற்றமோ திருத்தமோ செய்ய முற்படுபவர்கள்கூட அரசியல் மற்றும் இனவாதம், சமூகவாதம் போன்ற தாக்கங்களால் மீண்டும் பின்னடைவையே எட்டுகின்றனர்.
ஈழத்தினுடைய வரலாற்றுக்காலம் இந்திய வரலாற்றுக் காலத்தி லிருந்து வேறுபட வாய்பேயில்லை. இந்திய நாட்டினுக்கான இயற்கை யுந்துதல் பரிணாமமே ஈழத்திற்குமானதாகும். மனித இனம் மொழி வழக்கு இனக் குழுக்களாக ஏற்றமடைந்தது முதலாய் ஈழத்தில் மொழி வழக்கும் இருந்திடவே செய்யும். அதுகூட ஏதோவொரு வகையில்
வெல்லவுர்க் கோபால் 3.

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் இந்திய மொழிக் குடும்பங்களைத் தழுவியதாகவேயுள்ளது. இதில் தமிழர்தம் வரலாற்றுக்காலம் வேறுபடினும் வரலாறு பின்னப்பட்டே அமைந்து கிடக்கின்றது.
ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்கள் தமிழகத்தின் எல்லைகளில் என்றுமே குறிப்பிட்டிருக்கவில்லை. தொன்றுதொட்டு ஈழம் தனி நாடா கவே கருதப்பட்டு வந்தது. ஈழத்தின் ஆரம்பகால அல்லது முதல் வரலாற்று நூல்களாகக் கருதப்படும் பாளி நூல்களான தீபவம்சம், சூழவம்சம், மகாவம்சம் போன்றவை மத ரீதியாக ஒருதலைப்பட்சமாக எழுதப்பட்டவையே வரலாற்று அடிப்படை அம்சங்களுக்கு அப்பாற் பட்டு நிற்கும் இந்நூல்களையே முக்கிய ஆதாரமாகக்கொண்டு மென் மேலும் வரலாறு படைத்து, பல்கலைக்கழகங்களில் உயர் பட்டங்களைப் பெற்ற பலர் இன்று இலங்கையில் பெரும் வரலாற்றாசிரியர்களாக மதிக் கப்படவே செய்கின்றனர்.
வடக்கே மாந்தைத் துறைமுகமும், திருக்கேதீச்சரம் திருத்தலமும், கிழக்கே திருக்கோணேஸ்வரம் மற்றும் கொக்கட்டிச்சோலை தான்தோன் ரீஸ்வரமும் திருக்கோயில் திருத்தலமும் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்பதோடு, ஈழத்தின் தொன்மையை மாந்தையும் திருக் கோவிலும் வெளிப்படுத்தி நிற்பதனையும் வரலாற்று ஆய்வாளர்களில் பலர் இன்னும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இவை செம்மைப் படுத்தப்பட்டால் எங்கே தமிழினத்தின் வரலாறு முன்னிலைப்படுத்தப் பட்டுவிடுமோ என்பதுவும் காரணமாக அமையலாம்.
ஈழத்து வன்னியர்களைப் பொறுத்தவரை இவர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்பாரும் மாறாக இவர்கள் தமிழகத்தில் இருந்துவந்த ஒரு பழங்குடி மரபினர் என்பாரும் தங்கள் தங்கள் கருத்துக்களுக்கு வெல்லவூர்க் கோபால் 35

Page 26
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
வெவ்வேறு காரணங்களைக் கற்பிக்கும் நிலையில் சில சிங்கள ஆய்வா ளர்களோ தங்கள் சமூகத்தோடு இணைத்து, இவர்கள் ஆரியர் வழியில் வந்தவர்களென வரலாற்றைத் திசைதிருப்ப முற்படுகின்றனர்.
வன்னியர்கள் ஈழத்து பூர்வீகக்குடிகள் என்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. கடல்கோள் காரணமாக ஈழம் குமரிக்கண்ட நிலப்பரப்பில் இருந்து விடுபட்டு, பல்லாயிரம் வருடங்களைத் தாண்டிய நிலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வுகளெல்லாம் ஈழத்துப் பூர்வீகக் குடிகள் இயக்கர் மற்றும் நாகர் எனவும் இன்று இலங்கையில் காணப்படும் வேடர்களுக்கு இவர்களது தொடர்புகள் தென்படுவ்தால் வேடர்களே பூர்வீக குடிகளெனக் கொள்ளப்படத்தக்கவராவர் என்ப தையும் புலப்படுத்தியுள்ளனர். மறுமுனை வாதமான ஆரியர் வழி பற்றிய கருத்துக்கும் சரியான காரணங்கள் கற்பிக்கப்படவில்லை. ஈழத்து வன்னியர் திராவிடப் பண்பாட்டியலிலும் சிறு தெய்வ வழிபாட்டு நெறி முறைகளிலும் காலங்காலமாக தங்களை வெகுவாக ஈடுபடுத்திக் கொண் டவர்கள். அத்துடன் இந்திய வரலாற்று ஆய்வுகளிலும் இதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. சிங்கள வன்னியர்களைக் கருத்திற்கொண்டு இவர்கள் இம்முடிவினுக்கு வந்திருப்பதையே இது காட்டுகின்றது.
சோழராட்சிக் காலத்தில் நிலைபெற்ற வன்னியர்களது ஆற்றல்க ளையும், சேவைகளையும் அதன்பின் வந்த சிங்கள மன்னர்கள் தங்க ளுக்கு சாதகமாக்கிக் கொண்டனர். இதனால் சிங்களப் பிரதேசங்களிலும் வன்னியர்கள் ஆதிக்கம் பரவலாயிற்று. இதுவே சிங்கள வன்னிமைக்கு வித்திடவும் சிங்களவரிடையே 'வன்னியர்’ என ஒரு மரபினரைத் தோற்றுவிக்கவும் வழி வகுத்தது. கி.பி. 19ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை அடங்காப்பற்று வன்னியர்களுக்கும் கண்டி வன்னியர்களுக்கும் இருந்த உறவுமுறை கவனத்திற் கொள்ளப்படத்தக்கதாகின்றது.
வெல்லவுர்க் கோபால் 38

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
தமிழகத்து வன்னியர்களின் பூர்வீகம் தொடர்பாகவும் வரலாற்றுக் காலம் தொடர்பாகவும் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண் டிய நிலையில் கிடைக்கப்பட்ட ஆதாரங்களான அக்கினி புராணம். கல்லாடம் போன்ற புராணங்களும் பதிற்றுப்பத்து போன்ற சங்க இலக் கியக் குறிப்புக்களும் கி.பி. 9ம் நூற்றாண்டு முதல் பெறப்பட்ட கல்வெட் டுக்களும் பிற ஆவணங்களும் இவர்களைப் பண்டைத் தமிழகத்தின் ஒரு மரபினர் என்பதை நிலைநிறுத்த உதவுகின்றன.
ஈழத்து வன்னியர்களின் பூர்வீகம் தமிழகமே என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றே. அவர்கள் பற்றிய காலம் தொடர்பாக ஈழத்தில் கிடைக்கும் முதல் குறிப்பு மட்டக்களப்பு மான்மியம் மூலம் கிடைப்ப தாகும். கி.பி. 4ம் நூற்றாண்டில் இராமநாதபுரத்தில் இருந்து வந்த ஏழு பெண்களையும், வன்னியக் குருமாரையும் பற்றியதாக அது குறிப்பிடு கின்றது. இக்குறிப்பு பிற்காலத்தில் எழுதப்பட்டதாகவும் கொள்ள இடமுள்ளதால் காலநிர்ணயம் ஆய்வினுக்கு உட்படுத்தப்படல் அவசிய மாகின்றது.
கி.பி. 10ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கமாக வன்னியர்களான வேளைக்கார படைத்தலைவர்கள் மூலம் ஈழத்தே வன்னியர்கள் நிலை பெறவும் அதன் தொடர்பாக படிப்படியாக வன்னியரகள் ஈழத்தே குடியேறவும் வழி பிறந்ததை ஆய்வுகள் புலப்படுத்தும். தமிழகத்தில் கிடைக்கும் ஆய்வுக் குறிப்புகளும் இதற்கு ஒத்துப்போவதாகவேயுள்ளது.
இன்று ஈழத்தில் வாழும் வன்னியர்களில் ஒருசிலர் தாங்கள் தமிழகத்து வன்னியர்களிலிருந்து வேறுபட்டவர்களாகக் காட்டிக் கொள்ள முற்படுகின்றனர். இதற்கு வரலாற்று ரீதியாக எவ்வித ஆதாரமு மில்லை. காலவோட்டத்தில் நிகழ்ந்த தமிழக வன்னியரின் தளர்ச்சி இதற்குக் காரணமாக அமையலாம்.
வெல்லவுர்க் கோபால் 37

Page 27
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
ஈழத்தில் வன்னியர் குடியேற்றம்
ஈழத்தில் வன்னியர் குடியேற்றம் பற்றி இதுவரை கண்ட றியப்பட்ட வரலாற்றுக் குறிப்புக்களின்படி கி.பி. 10ம் நூற்றாண்டின் பிற்பகுதியையோ அல்லது கி.பி. 11ம் நூற்றாண்டின் முற்பகுதியையோ தொடக்க காலமாகக் கொள்ள போதிய ஆதாரமுள்ளது. பேராசிரியர் இந்திரபாலா அவர்களது ஈழத்து வன்னியர் பற்றிய குறிப்புக்களை வைத்து, கி.பி. 9ம் நூற்றாண்டுக்கு உரியதான மதுரை பள்ளித்தரையன் தொடர்பான கல்வெட்டினைக் கொண்டு மதுரைப் பிரதேசத்தே வாழ்ந்த வன்னியர்கள் கிபி 8ம் நூற்றாண்டளவில் ஈழத்தில் குடியேற வாய்ப்பி ருந்ததாகத் தொல்லியலாளர் நடன காசிநாதன் கருதுகின்றார். இதனை உறுதிப்படுத்த மேலதிக ஆதாரங்கள் இதுவரை கிடைத்ததாகத் தெரிய
வெல்லவுர்க் கோபால் 38

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
வில்லை. ஊகத்தின் அடிப்படையில் வரலாற்றினை தெளிவுபடுத்த முடியாதென்பதால் இதனை ஊர்சிதம் செய்யமுடியாதுள்ளது. தொடரும் ஆய்வுகளால் வருங்காலத்தே இதற்கான முடிவினை எட்ட வாய்ப் பேற்படும் என நம்பலாம்.
இராசராசனின் தந்தையும் சுந்தரசோழன் என அழைக்கப்பட்டவ னுமான இரண்டாம் பராந்தகன் (கிபி 957-973) எனும் சோழப் பேரரசன் ஆட்சிக் காலத்தில் வன்னியர்கள் வேளைக் காரப் படைத் தலைவர்களாகச் செயல்பட்டதை ஏற்கனவே கண்டோம். தனது மகன் இரண்டாம் ஆதித்தன் எதிர்பாராது போரிலே கொல்லப்பட துயரால் வாடிய சுந்தர சோழனும் சிறிது காலத்தே உயிர்துறக்க நேரிட்டது. சுந்தர சோழனின் இரண்டாவது மகன் அருண்மொழித்தேவன் இரா சராசன்) சிறுவனாக இருந்ததனால் ஆட்சிப்பொறுப்பு உத்தம சோழனின் கைக்குச் சென்றது. அவனது மறைவுக்குப் பின்னரேயே இராசராசனால் ஆட்சிக்கு வரமுடிந்தது. தந்தையின் ஆட்சிக் காலத்தைப் போன்றே இவனது ஆட்சிக்காலத்திலும் வன்னியர்கள் படைப்பொறுப்புக்களில் நியமிக்கப்பட்டனர்.
பாண்டிய நாட்டையும் சேர நாட்டையும் வெற்றிகொண்ட இராச ராசன் தனக்கு எதிராக செயற்பட்ட இலங்கை வேந்தன் 5ம் மகிந்தன் மீது போரிட்டான். அனுராதபுரத்தைக் கைப்பற்றிய பின்னர் ஈழத்தின் வட பிரதேசத்தையும் தனதாக்கி மும்முடிச் சோழமண்டலம் எனப் பெயரிட்டு, ஜனநாத மங்கலத்தை (பொலநறுவை) தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தினான். அக்காலத்தே (கி.பி 985 - 1015) வேளைக்காரப் படைத் தலைவர்களின் பங்களிப்பு மிகவும் மகத்தான
வெல்லவூர்க் கோபால் 39

Page 28
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
தாக அமைந்தது. பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் அவர்களது செயல்பாடு முக்கியத்துவம் பெற்றது. இராசேந்திர சோழ ருடைய ஆட்சிக்காலத்திலும் (கி.பி.1012 - 1044) ஈழத்தில் வன்னியர்களது
செல்வாக்கு தொடரவே செய்தது. இக்காலகட்டத்தே இவர்கள் தமிழ கத்திலிருந்து ஈழத்திற்கு இடம்பெயர வாய்ப்பிருந்ததை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கிபி 1ம் நூற்றாண்டில் ஜனநாத மங்கலத்தில் (பொலநறுவை) உத்தம சோழ மண்டபம் எனப் பெயருடைய அமைப்பொன்று உரு வாக்கப்பட்டதாகவும், இம் மகா மண்டபத்தை அமைப்பதற்கு மாதே வன் என்ற வேளைக்காரன் தனது சகாக்களுடன் மேற்கொண்ட நடவ டிக்கை பற்றியும், பொலநறுவை ரன்கொத் விகாரைக்கு அண்மையில் நிறுவப்பட்ட சோழர் காலத்து தமிழ்ச் சாசனமொன்றில் குறிப்பிடப்பட் டுள்ளது. அத்துடன் தமிழ் நாட்டிலும் உத்தம சோழனின் மண்டபம் என்ற அமைப்பொன்று வன்னியச் சிற்றரசுக்கு உட்பட்ட ஊற்றத்தூரில் நிறுவப்பட்டிருந்தமையும் இதில் சுருதிமான்கள் ஒன்றுகூடி இடங்கைப் பிரிவினரின் வழமைகள் பற்றி ஆராய்ந்ததாகவும் இலங்கை இந்து கலாசார அமைச்சின் வெளியீடான 'இந்து கலைக் களஞ்சியம் பகுதி02ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெல்லவுர்க் கோபால் 40

ஈழத்ததில் வன்னியர் இடப்பெயர்வும்
சிற்றரசுகளும்
ஈழத்தில் இடம்பெற்ற சோழராட்சி சிங்கள மன்னனான 1ம் விஜயபாகுவின் கைக்கு (கி.பி.1059 - 1114) மாறியபோதும் வேளைக்காரர் தம் திறமையை அவன் தனக்கு சாதகமாகவே மாற்றிக்கொண்டான். இதனால் வன்னியரது ஆதிக்கம் தொடர்ந்தும் 2ம் கஜபாகு, 2ம் பராக் கிரமபாகு போன்ற மன்னர்களது ஆட்சிக்காலத்திலும் பொலநறுவை மாத்திரமன்றி, அதனையண்டிய பிரதேசங்களிலும் விரிவடையத் தொடங்கியது. இதுபற்றிய பல வரலாற்றுக் குறிப்புக்கள் சிங்கள வர லாற்று நூல்களிலே காணக்கிடக்கின்றன.
வெல்லவுர்க் கோபால் 41

Page 29
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
கலிங்க மாகன் எனப்படும் மாகோன் ஆட்சிக்காலத்திலே பெரு மளவில் வன்னியர்கள் உட்பட அநேக தமிழ்க் குடியினர் ஈழத்துக்குக் கொண்டுவரப்பட்டனர் என்பதனை இருநாட்டு ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.
ஈழத்தில் மாகோனது ஆட்சிக்காலம் (கி.பி. 1215 - 1255) சுமார் நாற்பது ஆண்டுகளாகும். இவனது ஆட்சிக்காலம் வரலாற்றில் நீண்ட காலமாகக் கொள்ளப்படுகின்றது. திருபுவனசக்கரவர்த்தி எனும் புகழால் இவன் பெருமை பெற்றவன். இவன் சிங்கள மன்னர்களுக்கு எதிராக போர்தொடுத்தபோது இவனது படையில் இருபத்தி நாலாயிரம் போர் வீரர்கள் இருந்ததாகச் சிங்கள வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இவனது ஆட்சிப் பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டோரில் கலாநிதி பரணவிதான, கலாநிதி இந்திரபாலா. கலாநிதி லியனகமகே, கலாநிதி பத்மநாதன், கலாநிதி சிற்றம்பலம், தொல்லியலாளர் தங் கேஸ்வரி போன்றவர்கள் பெளத்த வரலாற்று நூல்களில் காணப்படும் உண்மைக்கு மாறான செய்திகளை ஆதாரபூர்வமாக மறுதலித்ததோடு, மாகோனின் சிறப்பான பணிகளை வெளிக்கொணர்ந்தனர்.
பொலநறுவையை (புலத்தி நகர், தோப்பாவை மீண்டும் தலை நகராக்கி ஈழத்தில் மூன்றில் இரண்டு பகுதியைத் தனது ஆட்சிக்குள் வைத்திருந்த இவனது பெரும் படைகள், வடக்கே யாழ்ப்பாணம், ஊர் காவற்துறை, காங்கேசன்துறையிலும் கிழக்கே கொட்டியாபுரம், திரு கோணமலை, கந்தளாயிலும், மேற்கே பெரியகுளம், மன்னார். மாந்தை யிலும் தெற்கே திசைமாறாமையிலும் மத்தியில் பொலநறுவையிலும் நிலைகொண்டிருந்தன. இக்காலப் பகுதியில் தம்பதெனியாவுக்கு அப்
வெல்லவுர்க் கோபால் 42

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
பால் தங்களது ஆட்சியை நகர்த்தியிருந்த சிங்கள மன்னர்கள் மகோ னுக்கு எதிராக அடிக்கடி மேற்கொண்ட போர் முயற்சிகள் தோல்வி யில் முடிந்துள்ளமையை கலாநிதி பரணவிதான அவர்கள் தனது 'தம்பதெனிய வம்சய’ எனும் கட்டுரையில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கலிங்க மாகோனின் உப ராசாக்களில் முக்கியமானவனாகக் கரு தப்படுபவன் குளக்கோட்டன் என்னும் சோழகங்கனாவான். இவனோடு இணைந்தே மாகோன் பல நற்பணிகளை மேற்கொண்டான். குளக்கோட் டனை சமநிலையில் வைத்தே மாகோன் செயற்பட்டான். குளக்கோட் டனை ஒரு வன்னியனாகவே சில ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
“முன்னே குளக்கோட்டன் மூட்டும் திருப்பணியை
பின்னே பறங்கி பிடிக்கவே”
என்னும் கல்வெட்டுப் பாடல் இவனின் பெருமை கூறும்.
வடக்குக் கிழக்குப் பிரதேச வரண்முறைகளைப் பாகுபடுத்த லிலும் ஆலயங்களுக்கு நிவந்தங்கள் அளிப்பதிலும் கோவில்கள், குளங்கள் உருவாக்கலிலும் புனரமைப்பிலும் மாகோனும் குளக்கோட்ட னும் இணைத்தே பேசப்படுகின்றனர்.
மாகோனின் கட்டுக்கோப்பான ஆட்சிக்கு வன்னிமைச் சிற்றரசுக ளின் அமைப்பும் முக்கிய காரணமாகக் கொள்ளப்படுகின்றது. இவற்றின் உருவாக்கத்துக்கு குளக்கோட்டன் வலது கரமாகவே செயற்பட்டான். திருகோணமலையும் அதன் வட பிரதேசங்களும் இவனது ஆட்சியி லிருந்தபோது, தமிழகத்திலிருந்து பெருமளவில் வன்னியர்களை இவனே அழைப்பித்துக் குடியேற்றினான். ஆயிரக்கணக்கான ஏக்கர்
வெல்லவுர்க் கோபால் 43

Page 30
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் வயல் நிலங்களை வளப்படுத்திக் கொண்டிருக்கும் கந்தளாய் குளம் காலம்தோறும் இவன் பெருமையைப் பேசிக்கொண்டேயிருக்கும்.
குளக்கோட்டன் பற்றிய சில குறிப்புக்கள் மிகப் பிற்பட்ட காலத் திலும் கிடைத்துள்ளன. யாழ்ப்பாணம் காரைநகரில் எழுநிலைக் கோபு ரத்துடன் கூடிய ஐயனார் கோவில் குளக்கோட்டு மகாராசாவினால் கட்டப்பட்டதாகவும் காரை நகரில் அவரது அரண்மனை அமைந்தி ருந்த இடம் இராசாவின் வளவு என இன்றும் அழைக்கப்படுவதாகவும் பண்டிதர் சோ.இளமுருகனாரின் ஈழத்து சிதம்பர புராணம் என்னும் நூல் குறிப்பிடுகின்றது.
இம்மன்னன் சோழநாடு காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து வந்தவ னாகக் கூறப்படும் அதேநேரத்தில், இவ்வாலயத்தின் குடமுழுக்கு கலி பிறந்து 4703ல் (கி.பி. 1601) குளக்கோட்டனால் நிறைவேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. மிகவும் பிற்பட்டதான இக்காலக் கணிப்பு குழப்ப நிலையைத் தோற்றுவிப்பதாகவுள்ளது. மாகோனின் ஆட்சிக்காலம் கி.பி. 13ம் நூற்றாண்டு என்பதால் இதில் சொல்லப்படும் குளக்கோட்டன் பிற்காலத்தில் வாழ்ந்தவனாகவும் இருக்கமுடியும்.
கி.பி. 1215 - 1255 வரையான தனது ஆட்சிக்காலத்தில் வன்னியர் களை மாகோன் பல்வேறு நிர்வாகப் பொறுப்புக்களிலும் நியமித்தான். வன்னியர்கள் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் இந்திரபாலா தென்னிந்தியாவிலிருந்து வந்த வன்னியரே முதன்முதலாக திருகோணமலைப் பிரதேசத்தில் ஆட்சி செய்தவர்கள் என்றும், இக் காலம் கி.பி. 12ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகவே கொள்ள முடியுமெ னவும் குறிப்பிடுகின்றார். எனவே, இதனை மாகோன் ஆட்சிக் காலமான கி.பி. 13ம் நூற்றாண்டு எனக் கருத வாய்ப்புள்ளது. திருகோணமலைப் வெல்லவூர்க் கோபால் 4.

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் பிரதேசமென்பது வடக்கே வன்னிப் பகுதியையும் உள்ளடக்கியதாகும்.
சோழராட்சிக் காலம் முதலாக வன்னியர்கள் பொலநறுவையி லிருந்து ஏனைய பகுதிகளுக்கும் நகரத் தொடங்கினர். இக்காலகட்டத் தே தமிழகத்தில் வன்னியருக்கிருந்த செல்வாக்கு மற்றும் அரசியல் பின்னணி உரிமை நிலை போன்றவை ஈழத்திலும் வியாபிக்க அவர்க ளுக்குச் சாதகமாக அமைந்தது.
கலிங்க மாகோனால் பெருமளவினராக தமிழகத்திலிருந்து அழைத்துவரப்பட்ட இவர்கள் திருகோணமலை தொடங்கி, வடக்கு, வடமேற்கு நோக்கி நகரவும் கால் பதிக்கவும் வன்னிய சிற்றரசுகளை உருவாக்கவும் வழிபிறந்தது. அத்தோடு சோழராட்சிக் காலத்தின் பின் ஏற்பட்ட அனுராதபுரம் மற்றும் கண்டி வன்னிய சிற்றரசுகளுடன் தொடர்பும் கிடைக்கலாயிற்று.
மறுபுறத்தில் பொலநறுவைக்கு தென்கிழக்கே அமைந்த மட்டக்களப்புப் பிரதேசத்தில் (தற்போதைய மட்டக்களப்பு - அம்பாரை, விந்தனைப் பகுதிகள்) படையாட்சி வன்னிமைச் சிற்றரசுகள் மாகோனின் வழிகாட்டுதலில் நிலைபெறலாயிற்று.
வெல்லவூர்க் கோபால் s

Page 31
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
சிங்கள வன்னியர்கள்
சிங்கள வன்னியர்கள் பற்றி இன்றயை ஆய்வாளர்களிற் சிலர் வெவ்வேறு கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கின்றனர். இதனை இன ரீதியான கண்ணோட்டத்தில் அணுகுபவர்களுமுளர். ஆனால் அவர் கள் தங்கள் கருத்துக்களை நிலைநிறுத்த போதிய வலுவான ஆதா ரங்களை முன்வைப்பதாக இல்லை. வன்னியர்கள் ஆரியர் வழி வந்த வர்கள் என்று சொல்வதால் மட்டும் வரலாறு தெளிவுபெற முடியாது. தமிழக ஆய்வுகளிற் கூட இதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. சோழருடைய ஆட்சிக்காலத்திற்கு முன்னர் வன் னியர் என்ற சமூக அமைப்பொன்று ஈழத்தில் வாழ்ந்தமைக்கான சரியான வரலாற்றுச் சான்றுகள் ஆய்வு ரீதியாகக் கண்டறியப்பட வில்லை. பூஜாவளி என்னும் நூலே வன்னியர் பற்றிய குறிப்புக்களை முதன்முதலில் வெளிக்கொணர்ந்தது. ஓவல்லவுர்க் கோபால்

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
இந்நூல் கி.பி. 13ம் நூற்றாண்டின் மத்தியில் மாகோனின் ஆட்சி யின் பின்னர் எழுதப்பட்டதாகவே கருதப்படுகின்றது. சூழவம்சத்தின் இரண்டாம் பகுதியிலும் வன்னியர் பற்றிய செய்திகள் காணப்படு கின்றன. இதன் காலம் கி.பி. 14ம் நூற்றாண்டின் முற்பகுதியெனக் கணிக் கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பார்க்கும்போது, சிங்களப் பகுதி களை நோக்கிய தமிழ் வன்னியச் சிற்றரசுகளின் விரிவாக்கமே சிங்கள
வன் னிமைகளின் உருவாக்கத்திற்கு முக்கிய காரணமாயிற்று என முடி வுறுத்தலாம்.
சோழருடைய ஆட்சிக் காலத்தில் நிருவாகப் பொறுப்பிலிருந்த வேளைக்காரத் தலைவர்கள் மாயரட்டை உறுகுணைப் பிரதேசங்களில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர். பொதுவாக சிங்கள மன்னர்களும் இவ்வன்னியச் சிற்றரசுகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டதா கவே தெரிகின்றது. இதற்கான இன்னுமொரு காரணம், அன்றைய சூழலில் ஈழத்தில் வாழ்ந்த மக்களிடையே இன, மத, மொழி வேறு பாடுகள் தலையெடுக்காதிருந்தமையே. வேளைக்காரத் தலைவர்கள் பெளத்த விகாரைகளைப் பாதுகாத்தமைக்கு பதவியாவில் கண்டெடுக் கப்பட்ட கல்வெட்டே சான்றாகும். சிங்களவர் - தமிழர், இந்து, பெளத் தம் என்ற வேறுபாடற்றதாக வன்னியச் சிற்றரசுகள் சிங்களப் பகுதி களிலும் நிலைபெற்றதையே இது காட்டுகின்றது. லோகநாதன் என்ற வேளைக்கார தளபதி ஒரு பெளத்த விகாரையை அமைத்து, அதற்கு வேளைக்கார விகாரை எனப் பெயரிட்டு, அதனைப் பாதுகாக்க வேண்டி வேளைக்காரப் படையையே நியமித்ததாக அக்கல்வெட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பதவியா, மதவாச்சிப் பகுதிகளும் சோழ நாட்டு வன்னியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தமையும் நிரூபண
வெல்லவுர்க் கோபால் 7

Page 32
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
மாகின்றது. கண்டி, நுவரெலியாப் பகுதிகளில் நிலைபெற்ற வன்னியச் சிற்றரசுகள் அடங்காப் பற்று சிற்றரசுகளோடு நீண்டகாலமாகக் கொண்டி ருந்த நட்பும், உறவுமுறைகளும் சிங்கள வன்னியர்கள் தமிழ் வன்னியர் களின் வழிவந்தவர்கள் என்பதற்குப் போதிய சான்றழிப்பதாகவுள்ளது. புத்தளம், சிலாபம் பிரதேசங்களில் பன்நெடுங்காலமாக நிலைகொண்டி ருந்த ஏழு வன்னிமைப் பிரதேசங்கள் (ஹத்த தெமழ பத்துவ இன்று அழகிய தமிழ் பெயர்களைக் கொண்டிருந்தும் சிங்களப் பிரதேசங்களாக மாறிவிட்டதோடு, தமிழர் சமூகம் பெருமளவில் சிங்களவரோடு ஒன்றிவிட்டமையும் இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு.
சோழர் ஆட்சிக் காலத்தின் போது அரசூழியம் செய்வதற்காக சோழ நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட இடங்கைப் பிரிவினருக்காக பொலநறுவையையண்டி உருவாக்கப்பட்ட தமிழ் கிராமங்களான மன்னன்பிட்டி, சமன்பிட்டி, முத்துக்கல், திரிகோணமடு போன்ற தமிழ்க் கிராமங்கள் சோழராட்சிக் காலம் தொடக்கம் (கி.பி. 11ம் நூற்றாண்டு) அண்மைக்காலம் வரை முத்துக்கல் வன்னிமை பின்னர் முத்துக்கல் உடையார் பிரிவின் கீழ் சிறப்போடு விளங்கியிருந்தும் நாடு சுதந்திரம் பெற்றபின்னர் அடிக்கடி ஏற்பட்ட இனக்கலவரங்களில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு, சிங்களவரது கைக்கு மாறிவிட்டமையும் வழி பாட்டுத் தலங்கள் சிதைந்து போய் காட்சியளிப்பதுவும் நாம் காணக் கூடியவையே.
கி.பி. 19ம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் அடங்கப்பற்று வன்னிய சிற்றரசுகளுடன் குறிப்பாக பனங்காமத்து வன்னியச் சிற்றரசர் களான கைலை வன்னியன், குலசேகரம் மாப்பாண வன்னியன், குலசே கரம் வைரமுத்து பண்டாரவன்னியன் போன்றவர்கள் கண்டியுடன் கொண்டிருந்த உறவுமுறைகளும் பாதுகாப்புச் சம்பந்தமான ஒத்துழைப் பும் நினைவுகூரத் தக்கவையே.
வெல்லவூர்க் கோபால் 48

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
வன்னியும் மட்டக்களப்பும்
ஈழத்தே சோழராட்சிக் காலத்திலும் அதன்பின் வந்த சிங்கள மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் தமிழ்ப் பிரதேசங்களில் குறுநில மன்னர்களுடைய ஆட்சி நிலைகொண்டிருந்தாலும், மாகோன் ஆட்சிக் காலத்திலேயே பிரதேசப் பிரிவுகள் வரையறை செய்யப்பட்டு முறை யான வன்னிமைப் பிரிவுகளும் உருவாக்கம் பெற்றன. இதிலே யாழ்ப் பாணப் பிரதேசம், வன்னிப் பிரதேசம், புத்தளப் பிரதேசம், மட்டக் களப்புப் பிரதேசம் ஆகியவை தமிழர் வாழ் பகுதிகளாக அடையாளப் படுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிரதேசமும் ஏழு வன்னியச் சிற்ற ரசுகளைக் கொண்டிருந்தன. சிற்றரசுகள் வன்னிமை எனவும் அழைக் கப்பட்டன. புத்தளம், சிலாபம் பகுதிகள் காலச் சூழலிலும் அரசியல் வெல்லவூர்க் கோபால் 9

Page 33
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் பின்னணிகளிலும் மொழி மாற்றம் மதமாற்றங்களினூடே கரைந்து காணா மற் போயின. பொன்பரப்பிப் பற்று போன்ற அழகிய தமிழ் நாமங்களே தமிழரற்ற நாமங்களாக எஞ்சி நின்று நெஞ்சை நெருடுகின்றன.
புத்தளப் பிரதேசத்திலே எஞ்சி நிற்கும் தூய தமிழ்க் கிராமங்க ளாக உடப்பு மற்றும் ஆண்டிமுனை ஆகிய இரண்டையும் குறிப்பிட லாம். முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல்முனைத் தாக்கங்களுக் கும் ஈடுகொடுத்து தமிழர் பெருமையை நாள்தோறும் உச்சிரித்துக் கொண்டிருப்பவை அவை. ஈழத்தின் ஐந்து ஈச்சரங்களில் ஒன்றாகவும் பல நூற்றாண்டுகள் வரலாற்றுப் புகழ்மிக்கதுமான முன்னேஸ்வரப் பெருமான் வடிவாம்பிகை சமேதராய் கோவில்கொண்டு அருள்பா லிக்கும் சிலாபம் முன்னேஸ்வரமும் வற்றாத ஜீவ நதியாம் மாதவன் தீர்த்தமும் காலச்சூழலில் ஈழத்தமிழன் சீரழிவினைச் சொல்லிக்கொண் டேயிருக்கின்றன. ஆனைமடு, தோணிக்கல், காக்காப்பள்ளி, கொட்டுக் கச்சி, கல்லடி, மாம்புரி, மதுரங்குழி, முந்தல், தலைவில்லு, வண்ணாத்தி வில்லு, கற்பிட்டி, இலவங்குளம், பொன்பரப்பி, குதிரைமலை, தந்திரி மலை, மறிச்சுக்கட்டி, காரைதீவு, நுரைச்சோலை போன்ற சங்கொலியும் மணியொலியும் தமிழ் ஒலியாய் பண்ணொலித்த தமிழ்க் கிராமங்கள் தமிழினத்தையும் இழந்து தமது பெயரின் ஈற்றெழுத்தையும் இழந்து விட்டன.
இலங்கை இந்து சமய, கலாசார அமைச்சின் வெளியீடான இந் துக் கலைக்களஞ்சியம் பகுதி - 2 அதன் குறிப்புக்களால் நம் கவனத்தை ஈர்க்கின்றது.
“இலங்கையின் வடமேல் மாகாணத்தின் கரையோரமாகவுள்ள பகுதிகளிலே முற்காலத்தில் சைவர்களான தமிழ்க் குடிகள்
வெல்லவுர்க் கோபால் 50

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
வாழ்ந்த பலவூர்கள் இருந்தன என்பதனை வரலாற்று ஆதா ரங்கள் மூலம் அறிகின்றோம். ஐரோப்பியரின் ஆட்சிக்காலத்தே ஏற்பட்ட மதமாற்றங்கள் காரணமாக அவ்வூர்கள் பலவற்றின் தமிழ்ப்பேசும் சைவர்கள் பிற மதங்களைச் (பெளத்தம், கிறிஸ் தவம், இஸ்லாம் சேர்ந்துள்ளனர். மதமாற்றங்களின் விளைவாக மொழிமாற்றமும் ஏற்படலாயிற்று. இதற்குப் புறநடையாகவுள்ள இரண்டு ஊர்கள் உடப்பும் ஆண்டிமுனையுமாகும். உடப்பில் 9000 மக்களும் ஆண்டிமுனையில் 4000 மக்களும் வாழ்கின்ற னர். இவர்கள் தமிழ் பேசும் சைவர்களாவர். இவர்களது முன்னோர்கள் இஸ்லாமியரின் வற்புறுத்தலிலிருந்து தங்கள் மத சுதந்தித்தைக் காப்பாற்ற மன்னார் சென்றதாகவும் அங்கு போர்த்துக்கேயரின் நெருக்குதலினால் தெற்கு நோக்கிச் சென்று இக்கிராமங்களில் குடியேறியதாகவும் தெரிய வருகின்றது. இச்சமூகத்தின் முன்னோர்கள் வன்னியனார், உடையார்,
போன்ற பதவிகளை வகுத்துள்ளமை ஆவணங்கள் சில வற்றின் மூலம் அறியலாம்.”
ஈழத்துத் தமிழறிஞர் பேராசிரியர் மெளனகுரு அவர்கள் ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு என்னும் தனது ஆய்வு நூலில் சிலாபம் முன் னேஸ்வரம் பற்றிக் குறிப்பிடும்போது,
‘தமிழர் ஒரு காலத்தில் சிறப்பாக வாழ்ந்த இன்னுமோர் பகுதி சிலாபமாகும். நீர்கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையுள்ள நிலப்பகுதி பழங்காலத்தில் தமிழரான இந்துக்கள் வாழ்ந்த பகுதியாக இருந்தது. கோவில்களை மையமாகக் கொண்ட நிலமானிய அமைப்பு முறை நிலவிய அக்காலத்தில் இப்பகுதி யில் வாழ்ந்த மக்களின் மையப் பகுதியாக முனிஸ்வரம்
வெல்லவுர்க் கோபால் 51

Page 34
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
கோவில் அமைந்திருந்தது. இக்கோவிலுக்குச் சேர்ந்த பூமிகள் 64 கிராமங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கிராமத்தினருக்கு முரிய கோவில் கடமைகள் விதிக்கப்பட்டன. 1613ம் ஆண்டில் போர்த்துக்கேயர் அமைத்த தோம்பில் இக்கிராமங்களின் பெயர்களைக் கொடுத்துள்ளனர். இக்கோவில்களே அன்று தமிழ் மக்களின் கலைவாழ்வின் மையமாகத் திகழ்ந்தது எனக் கூறுகின்றார்.
அப்பிரதேசமானது ‘ஹத்த தெமழ பத்துவ' (ஏழு தமிழ்பற்று என்ற சொற்றொடராலும் குருநாகலிலிருந்து புத்தளம் செல்லும் பாதை ‘தெமழ பாற' (தமிழர் வீதி) என அழைக்கப்பட்டதையும் சிங்கள அறிஞர்கள் சிலர் நினைவில் வைத்துள்ளமையை நன்றியுடன் நினைவு கூரலாம்.
யாழ்குடா நாடு அதனை அண்டிய தீவுகளுடன் யாழ்ப்பாண இராச்சியமாக உருவெடுத்திருந்தது. திருகோணமலையை தெற்கு எல்லையாகக் கொண்டு ஆனையிறவுவரை பரந்ததாக வன்னிப் பிர தேசம் விளங்கியது. மட்டக்களப்புப் பிரதேசம் தெற்கே குமுக்கனாறு வரை நீண்டு கிடந்தது. மொத்தத்தில் தமிழர் தாயகம் அன்னியர் ஈழத்தை ஆக்கிரமிக்கும் வரை மொத்த நிலப்பரப்பில் மூன்றிலொரு பகுதியினைக் கொண்டிருந்தது. கரையோர நிலப்பரப்போ மூன்றில் இரண்டு பங்கினைக் கொண்டு விளங்கியது.
வன்னிப் பிரதேசம்
01. பனங்காமம் பற்று 02. முள்ளியவளைப் பற்று 03. கருநாவல் பற்று 04. மேல்பற்று
வெல்லவுர்க் கோபால்

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
05. கரிக்கட்டுமூலைப் பற்று
06. செட்டிகுளம் பற்று
07. தென்னமரவாடிப் பற்று என ஏழு வன்னியச் சிற்றரசுகளைக்
கொண்டிருந்தது.
மட்டக்களப்பு பிரதேசத்தில்
01. நாடுகாட்டுப் பற்று (விந்தனைப் பற்று 02. பாணமைப் பற்று 03. அக்கரைப்பற்று 04. சம்மான்துறைப் பற்று 05. கரவாகுப் பற்று 06. மண்முனைப் பற்று 07. கோறளைப் பற்று என ஏழு சிற்றரசுகள் வரலாற்றுச் சிறப்புடன்
பல்லாண்டுகள் நிலைபெற்றன.
நீண்ட காலமாக அறியப்படும் திருக்கேதீச்சரமும் திருக்கோ ணஸ்வரமும் தேவாரம் பெற்ற திருத்தலங்களாக வன்னிப் பிரதேசத் திற்கு பெருமை சேர்த்தன. அதற்கும் முன்னதாக வரலாற்றுப் பெருமை கொண்ட மாந்தைத் துறைமுகமும் வன்னியினுடையதே கி.பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களான பிளிமியும் தாலமியும் திருக்கேதீச் FUğ60Dg5 Palavi Mundi Oppidum um GosTGÔ) Ld6Orðir GaoLib GTGOTė; (56') பிட்டுள்ளனர். இங்குள்ள மாந்தைத் துறைமுக நகரம் சங்ககாலம் முதலே அறியப்பட்டதாகும். சங்கத் தொகை நூலான அகநானூறில் புலவர் மாமூலனார் (கி.பி320)
‘மன்னநகர் மாந்தை முற்றத் தொன்னார்
பணிதிறை கொணர்ந்த பாடுசெய் நன்கலம்
வெல்லவுர்க் கோபால் 53

Page 35
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் என மாந்தையின் சிறப்பினைக் குறிப்பிடுகின்றார். அரபிக் கதைக் குறிப்
புக்களும் யுவான் சங் என்னும் பண்டைய சீன யாத்திரிகரின் குறிப்பும் அதன் பெருமை கூறும். இங்கே காந்தக் கோட்டை (Magnet Court) எனும் உலோகத்திலாலான கோட்டையொன்று அமைந்திருந்ததாக அறிய வருகின்றது.
இராவணனின் மனைவி மண்டோதரியின் தந்தையான மயன் எனும் சிற்பியே இதை அமைத்தவனாவான். இங்கு இராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடந்ததாகவும் வானுயரக் காட்சியளித்த கோட்டையொன்று இராவணனுக்கு துங்கெயில்) இருந்ததாகவும் நூல்கள் கூறும். இது சோப்பட்டினம் என்னும் பெயராலும் அழைக்கப் பட்டிருந்தது. வரலாற்றாசிரியர் பொரிப்பிளஸ் (கி.பி.1ம் நூற்றாண்டு) Sopatama சோப்பட்டினம் எனக் குறிப்பிட்டுள்ளார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் -ஆச்சியர் குரவையில்
சோவரனும் போர்மடியத்
தொல்லிலங்கைக் கட்டழித்த
சேவகன் சீ 5.
என இதைப் பாடியுள்ளார்.
இதே போன்றே இராவணன் முதலானோரால் வணங்கப்பட்டதும் கடல்சூழ் மலைமீது கோவில் கொண்டதுமான கோணேசப் பெருமான் திருத்தலமும் வரலாற்றுப் புகழ் கொண்டதாகும். கண்டி மன்னன் கய பாகு (கி.பி.113-125) இக்கோயிலை அழிக்கும் நோக்குடன் திரு கோணமலை நோக்கிப் படையுடன் வந்தபோது இடைவழியில் கண் பார்வை இழந்ததாகவும் பலரின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வி டத்தே சிவலிங்கம் ஒன்றினை (கந்தளாய் சிவன் கோயில் ) வைத்துப் வெல்லவூர்க் கோபால்

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
பூசித்துப் பார்வை பெற்றதாகவும் (கண்தழை -கந்தளாய் அதன் பின்னர் கோணேசப் பெருமானை பயபக்தியுடன் தரிசித்துச் சென்றதாகவும் வரலாறு கூறும்.
மட்டக்களப்புப் பிரதேசத்தின் ஒரே தேரோடும் திருத்தலமாக கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றிச்சரம் (கி.பி. 4ம் நூற்றாண்டு) விளங்குகின்றது. இவ்வாலயத்தை முதன்முதலில் கலிங்கநாட்டு இளவ ரசி உலக நாச்சி என்பாள் நிர்மாணித்ததாக வரலாறு கூறும்.
மட்டக்களப்பின் தென்கோடியில் அமைந்த திருக்கோயில் திருத்த லமே இப்பிரதேசத்தின் நீண்டகால வரலாற்றினைக் கொண்டதாகக் கருதப்படுகின்றது. திருச்செந்தூர் ஆலயத்தோடு (முருகனின் சூரசம் ஹார காலம்) தொடர்புபட்டதாகக் கருதப்படும் இவ்வாலயத்தைத் தரி சிக்க பண்டைத் தமிழகத்திலிருந்து யாத்திரிகர்கள் சென்றதாகக் குறிப் புகள் உள்ளன. கி.மு.3ம் நூற்றாண்டு முதலே வரலாற்றில் இவ்வாலயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்புக்கும் வன்னிக்கும் மேலும் பெருமை சேர்ப்பது கண்ணகி வழிபாடாகும். சேர, சோழ, பாண்டிய முத்தமிழ் நாடுகளை ஒருங்கிணைத்து தமிழர் நீதியினையும் தமிழ்ப் பெண்டிர் பெருமை யினையும் உலகுக்கு வெளிகாட்டி தெய்வ நிலைக்கு உயர்ந்திட்ட கண்ணகியை தமிழ்நாடு மறந்தபோதும் மட்டக்களப்புப் பிரதேசத்தே ஊர்தோறும் கோவில் அமைத்தும் வன்னியில் முக்கிய தெய்வமாகக் கருதி வழிபட்டும் பெருமைகொண்டது ஈழத் தமிழகமே.
வெல்லவுர்க் கோபால்

Page 36
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
வன்னிப் பிரதேசம்
(அடங்காப் பற்று)
எல்லை வடக்கில் எழில்யாழ் பரவுகடல் பல்லோர் புகழருவி தெற்கெல்லை -நல்லதிரு கோணமலை கீழ்ப்பால் கேதீச்சரம் மேற்கில் மாணத் திகழ்வன்னி நாடு
என்ற பாடல் அடிகள் மூலம் வன்னி நிலத்தின் எல்லைகள் குறித்து அறியமுடிகின்றது.
ஈழத்து அறிஞர் போராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் Sri Lankan Tamil Societies and Politics Gigh sGOrg-gu JG DTGSG)
In terms of geography of Sri Lanka the area referred to as the Vanni District fall between Mankulam and
வெல்லவூர்க் கோபால் s

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
Anuradhapura in the north covering Vavuniya and Mullaitivu among the Tamil Districts and Anuradhapura . . Thamankaduwa and Kekirawa of the Sinhala areas going up to the northern reaches of Trincomalee Districts
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வன்னியின் வரலாற்றுப் பெருமை பற்றி கலாநிதி பூலோக சிங்கம் அவர்கள் குறிப்பிடும் போது
‘ஈழநாட்டினை சோழப் பெருமன்னர்களது சாம்ராச்சியத்தின் ஒரு அங்கமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த காலகட்டத்தினை யொட்டி வன்னி இராச்சியங்கள் கால்கொள்ளத் தொடங்கி யிருக்கலாம் என்று கருதப் போதிய சான்றுகளுள்ளன. சோழப் பெருமன்னர் ஆட்சியினையடுத்து பொலநறுவையில் ஆட்சி புரிந்த சிங்கள மன்னர் ஆதிக்கம் நிலைதளர்ந்தபோது, வன்னி இராச்சியங்கள் மேலாதிக்கம் பெற்றன. வடக்கிலே ஆரியச் சக்கரவர்த்திகளினாட்சி 14ம் நூற்றாண்டிலே ஆரம்பித்தபோது வன்னி இராச்சியங்களைத் தங்களது ஆட்சிக்குள் கொண்டு வர அவர்கள் முற்பட்டனர். வன்னி இராச்சியங்கள் வடக்கே ஆரியச் சக்கரவர்த்திக்கும் தெற்கே கண்டி அரசுக்கும். பின்பு மேல் நாட்டவருக்கும் ஈடுகொடுத்து அடங்காப்பற்றாகத் திகழ்ந்தன.
எனக் குறிப்பிடுகின்றார்.
ஏழு வன்னியச் சிற்றரசுகளைக் கொண்ட இவ் அடங்காப்பற்று நீண்டகாலப் பெருமைக்குரியது என்பதனை மறுப்பதற்கில்லை. தமிழ்ப் பிரதேசங்கள் வேற்றுப் படையெடுப்புக்களால் அடிக்கடி தாக்குண்ட போதும் திருகோணமலை மற்றும் மன்னார் தவிர்ந்த ஏனைய வன்னிப்
வெல்லவூர்க் கோபால் 57

Page 37
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் பகுதிகள் தமது பொலிவையும் தனித்துவத்தையும் நிலைநிறுத்தியே வந்துள்ளன. யாழ்ப்பாண இராச்சியத்துக்கு உட்பட்டிருந்த ஒரு கால கட்டத்தில் கூட வன்னியச் சிற்றரசுகள் தங்களது சுதந்திரச் செயற்பாட்டி னை விட்டுக்கொடுக்கவில்லை. அடங்காப்பற்றைப் பொறுத்தமட்டில் மாகோன் ஆட்சிக்காலம் முதற்கொண்டு ஆங்கிலேயர் காலம் வரை நீடித்த வரலாற்றுப் பெருமையினை அது கொண்டிருந்தது.
வன்னியின் நிலவமைப்பும் இயற்கை வளங்களும் அதற்கான பெரும் கொடையெனலாம். வரலாற்று ரீதியில் அது புகழுற இது முக்கிய காரணமாயிற்று. வன்னி மக்கள் ஏனைய ஈழத்தமிழ் மக்களைக் காட்டிலும் மரபுவழிப் பண்பாட்டுப் பேணலிலும் தங்களது தனித்து வத்தை இறுக்கமாக்கி வாழ்வதிலும் தங்களை அடையாளப்படுத்தியே வந்துள்ளனர். தொழில் ரீதியான பிரிவுகளைக் கொண்ட மக்கள் வன்னி யில் வாழ்ந்தபோதும் எவ்வழிகளிலும் சமூகப் பிரிவினைக்கு இடமளிக் காத நிலைப்பாட்டினையே பொதுவாக அவர்கள் கொண்டிருந்தார்கள். பொருளாதார அமைப்பிலும் பேணலிலும் அவர்களது சமூகக் கட்ட மைப்பு அம்மண்ணோடு ஒன்றியே காணப்பட்டது. இது குறித்து அம் மண்ணின் மைந்தரும் பொருளியலாளருமான குமாரவேலு தம்பையா தனது ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
பல ஆய்வாளர்களது நோக்கில் வன்னிப் பிரதேசம் சிறந்த சமூகவியல் ஆய்வுக்களமாகக் கருதப்படுகின்றது. வன்னிப் பிரதேசம் தொடர்பாக இதுவரை பன்நோக்கில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சில ஆய்வா ளர்கள் வன்னியை ஆழமாகவும் சிலர் அகலமாகவும் நோக் கியுள்ளனர். எவ்வாறாயினும் பாரம்பரிய வன்னிப் பிரதேசத்தின் பொருளாதாரம் பற்றிய ஆய்வுகள் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெறவில்லை. குறிப்பாக அப்பிராந்தியம் கொண்டிருந்த
வெல்லவுர்க் கோபால் 58

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
தும் கொண்டுள்ளதுமான - அம்மண்ணில் மண்டிக் கிடக்கும் பொருளாதாரப் பண்புகளையோ மற்றும் இன்றுவரை தொன்று தொட்டு அழியாமல் நிலைத்து நிற்கும் பண்புகளையோ எடுத்துக் காட்டவில்லை. வன்னிப் பிராந்தியத்தின் பொரு ளாதாரப் பண்புகள் அதன் பொருளியல் சார் வரலாறு என்ப வற்றைத் திட்டவட்டமாக அறிய அதன் புவியியல் வரலாறு பற்றி அறிதல் பல வகையிலும் பலனளிக்கும்.
வன்னிப் பிரதேச வரலாற்றுச் சிறப்புக்களைக் கண்டறிவதில் இன்றுகூட மந்த நிலையே தென்படுகின்றது. ஆய்வாளர் J.P.லூயிஸ், கலாநிதி பூலோகசிங்கம், கலாநிதி பத்மநாதன், போராசிரியர் சிவத்தம்பி, கலாநிதி குணசிங்கம், போராசிரியர் கைலாசபதி, ஆய்வாளர் K.S.நட ராசா, ஆய்வாளர் கதங்கேஸ்வரி போன்றோர் வரலாற்று ரீதியாக மேற் கொண்ட ஆய்வுகள் மேலும் தொல்லியல் ரீதியாக விரிவுபடுமாயின் வன்னியின் சிறப்புப்பற்றி இன்னும் பல தகவல்கள் நாட்டுக்குக் கிடைக்க வாய்ப்பேற்படும். கர்ணபரம்பரைக் கதைகளும் வன்னி மக்களால் கண்டறியப்பட்ட பல அழிபாடுகளும் மாந்தை , மாமடு போன்ற பண் டைப் பெருமைபெற்ற இடங்களும் தொல்லியல் ஆய்வுகளுக்குப் போதிய அடிப்படைகளைக் கொண்டுள்ளன என்பதனால் இவ்வாய்ப் பினை சாதகமாக்கிக்கொள்ள அறிஞர்கள் முன் வரவேண்டும்.
கடந்த சில தசாப்தங்களாக யாழ்ப்பாண பிரதேச மக்கள் வள மான வன்னியை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் அடிக்கடி ஏற்பட்டுவரும் இனப் பூசல்க ளில் தமிழர் என்ற காரணத்தினால் பெரும் அவதிக்குள்ளாகி சொந்த பந்தங்களையும் சொத்து சுகங்களையும் பறிகொடுத்து கூட்டம் கூட்ட மாக மலையகத் தமிழர்கள் வன்னி மண்ணைத் தஞ்சமடைந்தனர். வருவோரை மனதார ஏற்று வாழிடமுமளித்து தமிழினத்தின் பாதுகாப்பு வலயமாக இன்றுவரை வன்னி மண் சிறப்புடன் மிளிரவே செய்கின்றது. வெல்லவுர்க் கோபால் 59

Page 38
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
மட்டக்களப்பு
வடக்கே வெருகல் வளம் செய்யத் தெற்கே குடைபோல் வளைந்து குமுக்கன் அணிசெய்யும் -இடைநடுவே நீள்வாவி தாலாட்டும் நிலமடந்தை மட்டுநகர் ஆழிக்கரத்தில் அணைந்தே கிடக்கின்றாள்
மட்டக்களப்பு பிரதேசம் இன்றைய மட்டக்களப்பு , அம்பாரை மாவட்டங்களை உள்ளடக்கியதாக 1960ம் ஆண்டு வரையும் நீடித் திருந்தது. உண்மையில் மட்டக்களப்பு நாடு வடக்கே வெருகல் கங்கை யிலிருந்து தெற்கே பாணமைப்பற்றின் எல்லையாகிய குமுக்கனாறு வரையும் கிழக்கே வங்காளவிரிகுடாக் கரையிலிருந்து மேற்கே வெல் லசை என்னும் பிரிவு வரையும் அமைந்திருந்தது. இதனை ஆய்வாளர் திருஞானசண்முகம் மட்டக்களப்பு குகன்குல முற்குகர் வரலாறும் மரபுகளும் எனும் தனது ஆய்வுநூலில் வரை படத்துடன் குறிப்பிட்டுள்ளர்.
வெல்லவுர்க் கோபால் 60 .

தமிழக வன்னியரும் ஈழத்து வண்னியரும்
மட்டக்களப்பு நீண்டகால வரலாற்றினைக் கொண்டிருந்தமைக் குப் பல சான்றுகள் கிடைத்தாலும் காலக்கணிப்பு குறித்து ஆய் வாளர்களிடையே முரண்பட்ட கருத்துக்களும் நிலவவே செய்கின்றன. மட்டக்களப்பு பூர்வீக சரித்திரத்தை அடியொற்றியும் பல கல்வெட்டுப் பாடல்களை உள்ளடக்கியும் 'மட்டக்களப்பு மான்மியம்' என்னும் வர லாற்று நூலினை மகாவித்துவான் எவ்.எக்ஸ்.சி. நடராசா வெளிக் கொணர்ந்தார்.
மட்டக்களப்புக்கான தெளிவான வரலாறு கி.பி2ம் நூற்றாண்டு முதல் கிடைப்பதாக இருந்தாலும் கி.மு.261ல் (கலியாப்தம் 2840) மட்டக்களப்பில் முற்குகர் (கலிங்கர்) குடியேற்றம் இடம்பெற்றமையும் அப்போதே திமிலர் என்ற ஒரு சாதியினர் (திமிலைத் தீவு மட்டக்க ளப்பில் வாழ்ந்ததையும் அறிய முடிகின்றது. அதனைத் தொடர்ந்து கலிங்க மன்னர்கள் நீண்டகாலம் ஆட்சி புரிந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. கி.பி.13ம் நூற்றாண்டில் மாகோனால் வன்னியச் சிற்றரசுகள் உருவாக்கம் பெறும்வரை மட்டக்களப்பு பொதுவாக தன்னாட்சி நாடா கவே மிளிர்ந்துள்ளது.
நிறைந்த நீர்வளமும் நிலவளமும் கொண்டதான மட்டக்களப்பு மக்கள்விவசாயம், கால்நடைவளர்ப்பு போன்றவற்றையே முக்கிய தொழிலாகக் கொண்டிருந்தனர். மட்டக்களப்பின் சமூக அமைப்பானது ஒன்றுக்கொன்று கைகொடுப்பதாகவேயுள்ளது. இங்குள்ள நீண்டகால வரலாற்றினைக் கொண்ட திருப்படைக் கோவில்களே இதற்கு நல்ல உதாரணமாகும். தேசத்துக் கோவில்கள் என அழைக்கப்படும் இக்கோ வில்களில் எல்லாச் சமூகத்தினருக்குமென வரையறை செய்யப்பட்ட உரிமைகளும் கடமைகளும் சகலருக்கும் திருவிழாக்கள் வழங்கப் பட்ட முறைகளும் நீண்டகாலமாக இம்மக்களை ஒன்றுபடுத்தியே வந்தி ருக்கின்றன.
வெல்லவூர்க் கோபால் 61

Page 39
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
மட்டக்களப்பு முற்குகர்
மட்டக்களப்பும் வன்னியும் என்ற இவ்வத்தியாயத்தில் மட்டக் களப்பு முற்குகர் பற்றி எழுதுவதற்கு சில முக்கிய காரணங் களுள். மட்டக்களப்பு முற்குகரிடையே காணப்படும் முக்கிய பிரிவினர் படையாட்சி குடியினராவர். பூபாலகோத்திர வன்னி மையும் இவர்களைச் சார்ந்ததே. இவர்களே மாகோன் காலத் தில் வன்னியர்களாக நியமிக்கப்பட்டவர்கள். அத்தோடு அண் மைக் காலம்வரை நிலைபெற்று, தற்போது அருகிவரும் இன் னொரு குடிப்பிரிவினர் மழவரசன் குடி(மழவர் குடி, மழவ ராயர்குடி) யினராவர். படையாட்சிவரும் மழவரும் தமிழகத்து வன்னியரில் அடங்குபவராதலால் இவர்கள் பற்றிய தேடல் அவசியமாகின்றது. இத்தேடலானது தற்போது தமிழக ஆய் வாளர்களது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வெல்லவூர்க் கோபால் 62

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
மட்டக்களப்பு முற்குகர் வன்னியர் போன்று ஒரு தனித்துவமான சமூகத்தினராகக் கருதப்பட்டாலும் இவர்களது தொடக்க நிலையிலும் தொடர்ந்து வந்த வரலாறுகளிலும் சில வேறுபாடுகளை அவதானிக்க முடிகின்றது. இவர்கள் இந்திய நாட்டின் வெவ்வேறு பகுதிகளான கலிங்கம், தமிழகம், கேரளம் போன்றவற்றின் திராவிட இனப்பிரிவுகளிலி ருந்து வெவ்வேறு காலங்களில் வந்து சமூக உறவு முறையில் இணைந்து கொண்டவர்கள் என்றே கருதவேண்டியுள்ளது. இலங் கையை நோக்கிய கலிங்கர்களின் ஆரம்பகால கடற்பயணமும் படை யெடுப்புக்களும் குடியேற்றமும் அதனைத் தொடர்ந்து சேர, சோழ, பாண்டியர்தம் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த படையெடுப்புக்கள் மற்றும் ஆட்சியதிகாரங்களும் மட்டக்களப்பில் இம் மக்களது விரிவாக்கத்திற்கு முக்கிய காரணமாயிற்று.
ஆரம்பத்தில் இங்கு வந்தவர்கள் இந்திய வடபகுதியான அயோத்தியிலிருந்தே வந்தனரெனக் கல்வெட்டுப்பாடல்கள் கூறுகின் றன. இவர்கள் கங்கை நதியைக் கடக்க இராமனுக்கு உதவிய குறுநிலத் தலைவன் குகனின் மரபினர் எனவும் எனவேதான் குகன் குடியினர் என இவர்கள் அழைக்கப்படுவதாகவும் இவை குறிப்பிடுகின்றன. இது தொடர்பான விரிவான ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றே கூறலாம். அத்தோடு ஆய்வுகளை மேற்கொண்டோரின் அணுகுமுறைகளும் விஞ்ஞான பூர்வமான தேடல்களை விடுத்து குறிப்பிட்ட வட்டத்துள் வரையறை செய்யப்பட்டதாகவே தென்படு கின்றது. மட்டக்களப்பு முற்குகரின் தொடக்க நிலையைக் கூறுபவர்கள் இடைப்பட்ட ஒரு நீண்டகாலத்தை வரலாற்றின் இடைவெளியாகவே விட்டு வைத்துள்ளனர்.
மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம், மட்டக்களப்பு மான்மியம், சீர்பாத குல வரலாறு, மட்டக்களப்புத் தமிழகம், மட்டக்களப்பு மான்மிய
வெல்லவுர்க் கோபால் 63

Page 40
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் ஆராய்ச்சி, மட்டக்களப்பு குகன் குல முற்குகர் வரலாறும் மரபுகளும் போன்ற ஆய்வு நூல்கள் பெருமளவு வரலாற்றுச் சான்றுகளைக் கொண் டிருப்பினும் முழுமையான தோற்றத்தை வெளிக்கொணரத் தவறிவிட் டன. அறிவியல், சமூகவியல், தொல்லியல் சார்ந்தவொரு முழுமையான ஆய்வே மட்டக்களப்புக்கும் வேண்டியதாகின்றது. ‘தமிழகத்து வன்னி யரும் ஈழத்துவன்னியரும்’ எனும் சமூக ஒப்பீட்டு ஆய்வில் இந்நூல் எழுதப்படுவதால் எமது தேடல்களையும் அதற்கேற்றாற்போல் வரை யறை செய்வதே உகந்ததாகும் என்பதால் முன் சொன்ன கருத்துக்க ளோடு குறுக்கிக் கொள்வதே பொருத்தமானது.
மட்டக்களப்பின் தமிழறிஞர் வி.சி.கந்தையா அவர்கள் தனது மட்டக்களப்பு தமிழகத்தில் முற்குகர் வருகைபற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
இலங்கையின் சிறப்புப்பற்றிக் கேள்வியுற்று வட இந்தியாவி லிருந்து திரளாக வந்த முற்குகர்களே ஈழத்தின் கிழக்குக் கடல்வழியாக வந்து பின்னர் உப்புநீர் ஏரியினூடே தங்கள் ஒடங்களைச் செலுத்தி அவை தரைதட்டியதும் அந் நிலப்பகு தியில் காலூன்றி அப்பகுதி மட்டமான களப்பு நிலமாக இருந்தமையால் அதற்கு மட்டக்களப்பு என்ற பெயரும் சூட்டி பின்னர் அங்கு ஏழு ஊர்களை உருவாக்கி தமது மக்களைக் கொண்டுவந்து குடியேற்றி அதன்பின்னர் சிற்றரசுகளையும் உருவாக்கி மட்டக்களப்பு மண்ணை வளப்படுத்திய முதல் மக்கள்
எனக்குறிப்பிடுகின்றார்.
ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்ககாலத்தில் பிரதம நீதியரசராகப் பணியாற்றிய ஆங்கிலேயர் சேர் அலக்ஸ் ஜோன்சன்
வெல்லவுர்க் கோபால் 64

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் தனது குறிப்பில் முற்குகர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே மலபார் பிரதேசத்தில் இருந்து வந்து மட்டக்களப்பு, புத்தளம் பிரதேசங்களில் குடியேறினர். மட்டக்களப்பு மாகாணத்திலுள்ள ஏறக்குறைய எல்லா நில உடமைகளுக்குமே சொந்தக்காரர்களாயினர். காலகட்டத்தில் மட்டக் களப்பு மாகாண ஆட்சி அதிகாரத்திற்கும் முழுமையாக அவர்களே உரித்தாளிகளாயினர்’ எனக் குறிப்பிடுகின்றார்.
இவ்விரு குறிப்புக்களுமே ஒப்புநோக்கத்தக்கவையாகின்றன. அத்துடன் ஏற்கனவே குறிப்பிட்டதற்கமைய முற்குகர்கள் காலத்துக்குக் காலம் இந்தியாவின் திராவிடர்வாழ் பிரதேசங்களிலிருந்து வந்த வர்கள் என்பதற்கு இவை சான்றாகவுள்ளன.
கலிங்கர் (கலிங்க குடியினர்)
மட்டக்களப்புக்கு முதன்முதலில் கடல்கடந்து வந்தவர்கள் கலிங் கராகவே இருக்கமுடியும். இக்காலத்தை கி.மு. 3ம் நூற்றாண்டாகக் கொள்ளவும் சான்றுகள் உள்ளன. கலிங்கமும் தமிழ் வழங்கும் நாடாக வே கி.மு.ஏழாம் நூற்றாண்டு முதல் அறியப்படுகின்றது. தொல்காப்பியம் சொல்லதிகாரம் எச்சவியலில் தமிழ் நாட்டினை அடுத்த பன்னிரு தமிழ் வழங்கும் நாடுகள் குறிப்பிடப்படுகின்றன.
‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே திசைச்சொற் கிழவி
எனும் சூத்திரப்படி தமிழ் வழங்கும் நாடுகளான பழந்தீபம், கூபகம். கொல்லம், ஈழம், கருநடம், வடுகம், தெலிங்கம், கலிங்கம், கொங்கணம், துளுவம், குடகம், குன்றகம் ஆகிய நாடுகளை ஆய் வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதிலே பழந்தீபம், கூபகம் ஆகிய
வெல்லவுர்க் கோபால்

Page 41
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
நாடுகள் கடல் கோளிலே மறைந்துபோயின.
தமிழ் வழங்கும் நாடுகள் பற்றிப் பின்வரும் பழந்தமிழ்ப் பாடல் மூலமும் அறியமுடிகின்றது.
தென்பாண்டி குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றி யருவா வதன்வடக்கு -நன்றாய சீதமலாடு புனனாடு செந்தமிழ் சேர் ஏதமில் பன்னிருநாட் டெண்
கலிங்கத்தை தமிழ்நாட்டை அடுத்துள்ள நாடாகக் குறிப்பிட்டுள்ள மையால் கோதாவரி நதி வரையிலுமுள்ள கீழ்க்கரைப்பகுதி ஒரு காலத் தில் தமிழ் நாடாக இருந்ததாகக் கொள்ள இடமுண்டு என்பதனை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
இலங்கையில் கலிங்கர் குடியேற்றம் பற்றி முதலியார் இராசநா u5th 56073) Lugo.TGOLuurgpurgOTLb ANCIENT JAFFNA GTg)ub நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
இந்தியாவில் தக்கணப் பிரதேசத்தில் நிலைநாட்டப்பட்டிருந்த கலிங்க நாடு பழமையான காலத்திலிருந்தே தனது வரலாற்றி னைக் கொண்டிருக்கிறது. இது திராவிடர்களின் இராச்சியம் என்பதற்கு எந்த ஐயப்பாடுமே இல்லை. ஒரிசா மற்றும் வங்க தேசத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியதாகக் கலிங்கம் அமைந்திருந்தது. இந்திய நாட்டவரில் கலிங்கரே மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்து கடல்கடந்து பிற நாடுகள் சென்று குடியேற்றங்களை ஏற்படுத்தியும் வர்த்தகத்தில் ஈடுபட்டும் வந்துள்ளனர். இவர்களே இலங்கை, யாவா போன்ற நாடு களிலும் குடியேறினர்.
வெல்லவுர்க் கோபால் 66

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் இந்தியாவின் ஆதிவாசிகள் பற்றிய விபரக் கோப்பில் பின்வரும் குறிப்பு அவதானிக்கப்படுகின்றது.
‘இந்தியாவில் ஒரிசாவிலேயே (ஒரிசா-கலிங்கம்) ஆதிவாசிகள் விகிதாசாரம் மிகக் கூடுதலாகவுள்ளது. இங்குள்ள 62 ஆதிவாசி களின் இனக்குழுக்களில் 14 வகையினர் தனித்துவமான பண்பாட்டு மரபுகளையே பேணுகின்றனர். இவ்வாதிவாசிகள் பெரும்பாலும் திராவிட மொழிகளையே பேசுகின்றனர்.
இக்குறிப்பின் மூலம் பண்டைய கலிங்கம் திராவிடர் நாடே என் பதை உறுதிசெய்து கொள்ளலாம்.
மட்டக்களப்பில் கலிங்கரின் குடியேற்றம் பற்றித் தெளிவாக அறிந்துகொள்ள கலிங்க இளவரசி உலகநாச்சி பற்றிய குறிப்புக்கள் மிகவும் உதவியாகவுள்ளது. கலிங்க மன்னன் குகசேனனின் புத்திரியா கிய இவள் (கி.பி.362-380) தம்பி உலகநாதனுடனும் அனேக கலிங்க வீரர்களுடனும் படகுகளில் வந்ததாகவும் அப்போது மட்டக்களப்பை ஆண்டுகொண்டிருந்த கலிங்க மன்னன் குணசிங்கனின் உதவியுடன் மட்டக்களப்பின் வடபால் மண்முனையில் ஒரு மாளிகை அமைத்து அதன்பின்னர் உலகநாதனை தந்தையிடம் அனுப்பி அங்கிருந்து குகக் குடும்பம் நூற்றாறும் தொண்டு செய்ய சிறைக்குடும்பம் முப்பதும் எடுப் பித்து காடழித்து மேலும் மனைகளை உருவாக்கி அவர்களைக் குடி யமர்த்தி சிவாலயம் அமைத்து, வழிபாடியற்றியதோடு, குணசிங்கனின் விருப்பத்தோடு இளவரசியாக முடிசூட்டிக் கொண்டாள் எனவும் அறிய முடிகின்றது. அத்தோடு இவளது காலத்தில் தொடர்ந்து கலிங்கக் குடி யேற்றம் இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது. கொக்கட்டிச்சோலை தான்தோன்றிச்சரத்தையும் இவளே அமைத்தவளாவாள். இதனை மட்டக்களப்பு மான்மியமும் ஊர்சிதம் செய்கின்றது.
வெல்லவுர்க் கோபால் 67

Page 42
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் m
இங்கே உலக நாச்சி வரும்போது மட்டக்களப்பில் கலிங்கர் ஆட் சியே இடம்பெற்றிருந்தது என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் மட்டக்களப்புக்கு வடபால் மண்முனை எனக் குறிப்பிடப்படு வதால் பண்டைய மட்டக்களப்பு சம்மான்துறையாக இருக்கமுடியும் எனும் ஆய்வாளர்களது கூற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகின்றது. இதேபோன்ற வரலாற்றுக் கதையானது சிங்கள நூல்களிலும் காணக் கிடக்கின்றது.
போர்த்துக்கீசர் ஆட்சிக்காலத்தில் கோவாவில் தங்கி மதப் பிர சாரம் மேற்கொண்ட பிதா குயரோல் என்பவர் மட்டக்களப்பு முற்குகர் பற்றிய தனது வரலாற்றுக் குறிப்பில் பெரும்பாலும் இதேபோன்றே குறிப்பிட்டுள்ளார். இவ்விளவரசி நாற்பது படகுகளில் வந்ததாகவும் மட்டக்களப்பு பிரதேசத்தில் எழுபத்திரெண்டு கிராமங்களில் தனது மக்களை இவள் தனது ஆட்சிக் காலத்தே குடியமர்த்தியதாகவும் அவர் கூறுகின்றார்.
மட்டக்களப்பில் தொடக்க காலத்தே குடியேறியவர்கள் குகன்வழி மரபினர் என்பதுவும் உலகநாச்சி மூலம் குடியேற்றப்பட்டவர்களும் குகக் குடும்பத்தினர் என்பதுவும் இவளது தந்தையின் பெயரும் குக சேனன் என்பதுவும் கவனத்தில் கொள்ளப்படத்தக்கது.
கலிங்கத்திலிருந்து வந்தவர்களில் இன்னுமோர் பிரிவினர் ‘கலிங்க வம்சய’ என்ற பெயரில் சிங்கள மக்களிடையே உயர்ந்த ஒரு பிரிவி னராக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பெளத்தமத வழிபாட்டினையே மேற்கொள்ளுகின்றனர். ஆனால் மட்டக்களப்பு முற்குகரின் முதல் வழியினராகக் கருதப்படும் கலிங்கர் வரலாற்று ரீதி யாக சிவ வழிபாட்டினையே முன்னிலைப்படுத்தினர். இன்றும் ஒரிசா வில் சிவ வழிபாடே சிறப்புற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெல்லவுர்க் கோபால் 68

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
கலாநிதி தம்பையா அவர்கள் மட்டக்களப்பில் முற்குகர் குடியேற் றத்தை கி.பி2ம் நூற்றாண்டாகக் கொள்ளலாம் எனக் கூறுகின்றார். இது கண்டி மன்னன் கயபாகு (கி.பி.13-125) சேர நாட்டுடன் கொண்டிந்த தொடர்பினைக் காரணப்படுத்தியதாக அமையலாம். எனினும் கலிங்கரது கடற்பயணம் தொடர்பான இந்திய வரலாற்றாசிரியர்களின் குறிப்புக் களை அவதானிக்கும்போது இலங்கை, யாவா போன்ற நாடுகள் மீது
அவர்கள் மேற்கொண்ட பயணங்களும் குடியேற்றங்களும் கிறிஸ்து வுக்கு முற்பட்ட காலத்தையே கொண்டிருக்கின்றன.
கலிங்கரது ஆட்சியின்போது மட்டக்களப்பில் வன்னியர் குடி யேறியது பற்றிய ஒரு குறிப்பு மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம் மூலம் அறியவருகின்றது. இது குணசிங்கனின் தந்தையான அமரசேனின் (கி.பி.4ம் நூற்றாண்டின் முற்பகுதி) ஆட்சிக்காலமாகும். இராமநாதபு ரத்திலிருந்து கலைவஞ்சி, மங்கியம்மை, செட்டிச்சி, மகிழரசி, பாலம்மை, இராசம்மை, வீரமுத்து ஆகிய ஏழு பெண்கள் தங்கள் கணவன்மாருட னும் ஐந்து வன்னிய குருமாருடனும் மட்டக்களப்புக்கு வந்ததாகவும் அமரசேனன் இவர்களை வன்னிச்சிமார் என விருதளித்து கெளரவித்து இவர்கள் பெயரில் ஏழு ஊர்களை உருவாக்கி, இவர்களுக்கு அளித்த தாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. இத்தகவல்களை தொல்லியல் பேரா சிரியர் கே.தனபாக்கியம் அவர்களும் தனது மட்டக்களப்பு மான்மிய ஆராய்ச்சி எனும் நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகின்றது. வரலாற்று ரீதி யாக இக்குறிப்பு உறுதிசெய்யப்படுமாயின் தமிழகத்து ஆய்வாளர்கள் கொண்டிருக்கும் வன்னியர் பற்றிய வரலாற்றுக் காலத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல இது வாய்ப்பளிப்பதாக அமையும்.
முற்குகரில் முதல் குடியினராகக் கருதப்படும் கலிங்கக் குடியும் உலகநாச்சி மூலம் குடியமர்த்தப்பட்ட உலகநாச்சி குடியும் கலிங்கத்தின்
வெல்லவுர்க் கோபால் 69

Page 43
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் குகக் குடிகளே. முற்குகருக்கும் இவர்களே முன்னோடிகள். ஏனைய குடிகள் காலத்தால் இணைக்கப்பட்டு குகப்பட்டம் வழங்கப்பட்டவையா கவே கருதப்படவேண்டும். இது தொடர்பாக படையாட்சியர் பற்றிய தான பங்கு கூறும் கல்வெட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது அவசியமாகின்றது. எனினும் எவ்வழியிலேனும் தமிழகத்தின் வன்னிய மரபினருக்கும் மட்டக்களப்பின் குகமரபினரான கலிங்கக் குடியின ருக்குமிடையே நேரடி சமூகவழித் தொடர்புகள் இருப்பதாகக் கருத வாய்ப்பில்லையென்றே கூறலாம்.
பணிக்கர் குடி
மட்டக்களப்பு முற்குகரில் பிரதான ஒரு பிரிவினரான இவர்கள் சேர நாட்டின் வழிவந்தவர்கள் எனக்கொள்ள போதிய சான்றுகள் உள்ளன. காலத்துக்கு காலம் பல்வேறு காரணங்களால் பெருமளவில் இவர்கள் மட்டக்களப்பை நோக்கி வந்தவர்களாவர். இவர்களது வருகை கி.பி2ம் நூற்றாண்டை தொடக்கமாகக் கொண்டிருக்கமுடியுமென ஆய் வாளர்கள் கருதுகின்றனர். மாகோனின் ஆடசிக்காலத்திலும் பெருமளவு இவர்கள் குடியேற்றம் இடம்பெற்றதாகக் கருதப்படுகின்றது. மாகோன் சேரத்திலிருந்து முப்பதாயிரம் போர் வீரர்களை அழைத்துவந்ததற்கும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. பணிக்கர்கள் ஒரு முக்கிய சமூகத் தினராகக் கேரளத்தில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். மலையாளத்தின் மரபுவழி பண்பாடுகளும் தாய்வழி பேணுகையும் பேச்சுவழக்கு ஓசை நயமும் உணவுப் பழக்கவழக்கங்களும் மலையாள மாந்திரீக வழிபாடுக ளும் மட்டக்களப்புப் பிரதேசத்தே ஆழமாக வேரூன்றி நிற்பதற்கு பணிக்கர் போன்ற பழங்குடி மரபினரே காரணமாவர். சமூகவியல் ஆய் வுகளும் இதனை வலியுறுத்தவே செய்கின்றன. AV
ஆரம்பத்தில் விவசாயத் தொழிலையே மேற்கொண்ட இவர்கள் காலப்போக்கில் ஆட்சி அதிகாரத்திலும் செல்வாக்குப் பெற்றனர்.
வெல்லவுர்க் கோபால் 70

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் ஆலயங்களின் பராபரிப்பாளர்களாகவும், சிற்றரசர்களாகவும், தலை மைப் போடிகளாகவும், உடையார்களாகவும், சிறப்புப் பெற்றனர். பொது வாக இவர்களது செல்வாக்கு பாணமை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கரவாகு ஆகிய வன்னிமைப் பிரதேசங்களில் மேலோங்கிக் காணப் பட்டது. வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கோவில் சித்திரவேலாயுதர் ஆல யம், கோவில் போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயம், பாண்டிருப்பு துரோபதையம்மன் ஆலயம் போன்றவற்றின் தலைமைப் பொறுப்பை யும் இவர்களேயேற்று முறைப்படுத்தினர். மட்டக்களப்பு தென்பகுதிக்கு எதிர்மன்னசிங்கன் எனும் பணிக்கர்குல மன்னன் ஆட்சிப் பொறுப் பிலிருந்து நற்பணிகள் புரிந்தான். இதனை தாதன் கல்வெட்டும் உறுதி செய்கின்றது.
'பத்ததிபோற் காட்டிப் பணிக்கன் குலத்தோர்க்கு
உற்றபுகழ் மேவ உங்களுக்கே முன்னீடு
மாதத்தில் மூன்றுமழை மட்டுநகர் பெய்துவர என்றார் பணிக்கர்குலத் ததிபனா மேந்தலிடம்
கொங்கு நாட்டு (கோயம்புத்தூர்) கோவசியர் குலத்தில் வந்தவன் தாதன். இவன் தனது கூட்டத்தாருடன் நாடுநாடாகச் சென்று பாரதக் கதையை நாடகமாகக் காட்டியவன். வங்கம், கலிங்கம், மலையாளம், புத்திபுரம் எனப் பல நாடுகள் சென்ற பின்னர் இலங்கை சென்றதாக கல்வெட் டுப்பாடல்கள் தெரிவிக்கின்றன. இவன் நடித்துக்காட்டிய நாடகத்தை மக்களுடன் லயித்து மகிழ்ந்த மன்னன் எதிர்மன்னசிங்கன் அதேயிடத் தில் (பாண்டிருப்பு ஆலயமமைத்து துரோபதையம்மன் ஆலயம் எனப் பெயரிட்டு வருடந்தோறும் விழா நடாத்தவும் ஏற்பாடுகள் செய்தான்.
கேரளத்தின் பணிக்கர் மரபினரான இம்மக்களும் கலிங்கரைப் போன்று வன்னியச் சமூகத்தாருடன் மரபுவழித் தொடர்பற்றவர்களே.
வெல்லவுர்க் கோபால் 71

Page 44
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
LD Lds356TILI
L6OLUIT-Jalul Golf
மழவரசரும்
படையாட்சியர் (பூபாலகோத்திரம்)
இவ்வத்தியாயத்தில் மிகவும் முக்கியப்படுத்தப்பட வேண்டிய நிலையில் படையாட்சியர் உள்ளனர். இக்குடி மரபினர் முற்குகரிடையே ஒரு முக்கிய பிரிவினராகவும் மட்டக்களப்புப் பிரதேசமெங்கும் பரந்து பட வாழ்பவர்களாகவும் காணப்படுகின்றனர். மட்டக்களப்பில் கலிங்கர் ஆட்சியே நிலை பெற்றிருந்தாலும் வன்னியச்சிற்றரசுகளுக்கு இவர் களே தொடக்ககாலம் முதல் பொறுப்பேற்றனர். மட்டக்களப்புக் கல் வெட்டுப் பாடல்களில் வன்னிபங்கள், வன்னிமைகள், வன்னியர்கள் வெல்லவுர்க் கோபால் − 72

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
என்ற பதங்கள் படையாட்சியரையே குறிப்பனவாயுள்ளன. மட்டக்க ளப்பு மான்மியத்தில் இது தொடர்பான குறிப்புக்கள் பல இடங்களில் காணப்படுகின்றன.
பங்கு தடுக்கும் முறைக் கல்வெட்டில் வன்னிபங்களை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளுக்கும் வன்னிபங்கள் கூறும் பதிலில்
நெறிதவறார். சுயநாடு காளிகட்டம் நீர்குலமே படையாட்சி உழுதூணுண்போன் செறிகமழு மகாலிங்க வாசனெங்கள் திறத்தோரைப் படைத்துணைக்கு தலைவராக்கி குறிப்பறிந்து வன்னிபங்கள் குலமேயென்று குகப்பட்டத் தரசது கொண்டோன் நானே
எனக் குறிப்பிடுவது தெரிகின்றது.
நெறிதவறாத வாழ்க்கையைக் கொண்ட இவர்கள் காளி கட்டத் தினை சேர்ந்தவர்கள் எனவும் படையாட்சி எனும் குலப்பெயரோடு உழவுத் தொழில் செய்து வாழ்பவர்கள் எனவும் கலிங்க மன்னனான மாகோன் இவர்களில் திறமை பெற்றோரை தனது துணைப் படை களுக்கு தலைவர்களாக்கி குலத்தால் வன்னியர்கள் என்பதால் இவர்க ளுக்கு குகப்பட்டமுமளித்து வன்னியச் சிற்றரசர்களாகவும் நியமித்தான் என இப்பாடல் மூலம் அறியமுடிகின்றது.
இப்பாடல் ஒரு தெளிவினைத்தருகின்றது. 'குகன்குலம்’ என்பது கலிங்க வம்மிசத்தினருக்குரிய சிறப்புப் பெயர் என்பதுவும் ஏனைய குடியினர் காலத்துக்குக் காலம் குகப்பெயர் பெற்று இவர்களோடு இணைக்கப்பட்டவர்கள் என்பதுவும் தெரியவருகின்றது. இது 顎融
ளர்கள் கவனத்தை ஈர்க்க வேண்டியதொன்றாகும். હાઈિ
لام Aه گفه
வெல்லவுர்க் கோபால் 73

Page 45
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
இங்கே காளிகட்டம் குறித்து ஆய்வாளர்கள் முரண்பட்ட கருத் தையே கொண்டுள்ளனர். ஒரு காலத்தில் கலிங்கத்தோடு ஒட்டியதாக வங்கத்தின் கல்கத்தா இருந்ததாகவும் இதுவே காளிகட்டம் எனக் குறிப்பிடப்பட்டதாகவும் சிலர் கருதுகின்றனர். வங்கத்தில் காளிக்கு அனேக கோவில்கள் உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒரிசாவில் கலிங்கர் என்ற இனம் அன்றும் இன்றும் அடையாளப் படுத்தப்படுவதைப்போல வங்கத்திலோ, ஒரிசாவிலோ படையாட்சியர் என்ற இனம் அல்லது சமூகப்பிரிவினர் வாழ்ந்ததாக அறியமுடிய வில்லை. அம் மானிலங்களின் ஆதிவாசிகள் பட்டியலிலும் இது இடம்
பெறவில்லை.
படையாட்சியர் மலபார் முக்குவரே என்பாரும் உளர். காளி கட்டம் என்பதை தற்போதைய கோழிக்கோடு (Calicut) என இவர்கள் கருதுகின்றனர். இக்கருத்தை கேரளத்து ஆய்வாளர்களோ நூல்களோ ஊர்சிதம் செய்யவில்லை. மாறாக படையாட்சியர் என்போர் வன்னியர் களே என்பதையே இவர்களும் உறுதிசெய்கின்றனர். இக்கல்வெட்டுப் பாடல் தொடர்பாக தமிழகத்தின் முன்னாள் தொல்லியல் துறையின் இயக்குனரும் ஆய்வாளருமான நடன காசிநாதன் அவர்கள் காளி கட்டம் என்பது தமிழகத்தின் சீர்காழிப் பகுதியாக இருக்கலாம் எனக் கருதுகின்றார். அக்கால கட்டத்தில் இப்பகுதியில் வாழ்ந்த வன்னிய குல படையாட்சியர் பற்றிய இவரது ஈடுபாடே இதற்குக் காரணமாக
960LDu JG)|Tif.
சீர்காழியை அடுத்த சிதம்பரத்திலும் படையாட்சி குலத்தவர் அன்றைய காலகட்டத்தில் பரவலாக வாழ்ந்துள்ளமை தெரிய வரு கின்றது. யாழ்ப்பாணம் பரராசசேகரன் பட்டயமொன்று சிதம்பரம் கோயி லுக்கு அவனளித்த தருமங்கள் தொடர்பாகக் குறிப்பிடுகின்றது. அவற் றை நிருவகிக்க அப்பகுதி படையாட்சியரில் ஒருவருக்கு தம்பிரான்
வெல்லவுர்க் கோபால் . . 7.

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் பட்டம் கட்டி இம் மன்னன் பொறுப்பளித்துள்ளமை அதில் தெரிய வருகின்றது.
கலிங்க மாகோன் படையாட்சி குலத்தவரையே படைத் தலைவர் களாகவும் வன்னியச் சிற்றரசர்களாகவும் நியமித்தான். முன்னைய சோழப் பேரரசின் காலத்திலும் வன்னியர்கள் படைத்தலைவர்களாகவும் குறு நிலத் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டமை கவனத்தில் கொள் ளத்தக்கதாகின்றது. மேலும்
விறல் கலிங்கன் படையாட்சி இருவருந்தான் முத்தகல்லில் இருத்திவைத்து மாகோன்தானும் முதன்மைதரும் படையாட்சி வன்னியைச் சேர்த்துப் பெரும் தோப்பாவையை கைவசப்படுத்தி படையாட்சி குலத்தாருக்கும் பகிர்ந்து ஈர்ந்தான்.
எனும் இக்குறிப்புகள் மட்டக்களப்பு மான்மியத்தில் காணப்படுகின்றன. தோப்பாவை என்பது சோழராட்சிக் காலத்தில் தலைநகராயிருந்த பொலநறுவையாகும். மாகோனும் இதனையே தனது தலை நகராக்கிக் கொண்டான். முத்தகல் என்பது தற்போதைய முத்துக்கல் ஆகும். இது பொலநறுவையை அண்டிய வன்னிய சிற்றரசாக இருந்தது. சோழராட்சி யில் அரசு பதவிகளுக்கும் அரசூழியம் செய்வதுக்குமாக தமிழகத்திலி ருந்து வந்தவர்கள் மன்னன்பிட்டி, சமணன்பிட்டி, தம்பன் கடவை, முத்துக்கல் போன்ற இடங்களில் குடியமர்த்தப்பட்டிருந்தமையை பண் டைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு கலிங்க மன்னன் அமர சேனன் காலத்திலும் அவனால் வன்னிச்சியென விருதளிக்கப்பட்ட வீரமுத்துவுக்கு முத்துக்கல் ஊர் வழங்கப்பட்டதாக மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம் கூறுவது கவனத்தை யீர்க்கின்றது. சோழராட்சியைத் தொடர்ந்து வேளைக்காரர் (வன்னியர்) சிங்கள மன்னரின் ஆட்சிக்
வெல்லவுர்க் கோபால் 75

Page 46
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் காலத்திலும் அங்கேயே தங்கியதாக வரலாறு கூறும். மாகோன் கலிங்க னாக இருந்தபடியால் ஏற்கனவே அங்கு குடிகொண்டிருந்த படை யாட்சி வன்னியரின் உரிமைகளில் கைவையாது அவர்களையும் சேர்த் துக்கொண்டு தான் கைப்பற்றிய பொலநறுவைப் பகுதியைக் கலிங்க ருக்கும் படையாட்சியருக்கும் பகிர்ந்தளித்தமையையே இக்குறிப்புக் கள் புலப்படுத்துகின்றன.
நீண்டகாலமாக வன்னியச் சிற்றரசாக விளங்கிவந்த முத்துக்கல் ஐரோப்பியர் ஆட்சியிலும் நீடித்தது. பிற்பட்ட காலத்தில் உடையார் பிரிவுகள் உருவாக்கம் பெற்றபோது அது முத்துக்கல் உடையார் பிரி வாக பெயர் மாற்றம் பெற்றது.
மட்டக்களப்பு பிரதேசத்தில் தொடக்க நிலையில் செயற்பட்ட வன்னியச் சிற்றரசுகள் சில பிற்பட்ட அரசியல் சூழ்நிலையில் பூபாலகோத்திர படையாட்சியிலிருந்து வேறுபிரிவினரிடம் மாற்றம் பெற்றபோதும் சில தொடரவே செய்தன. ஆங்கிலேயர்காலத்தின் தொடக்கம் வரை நாதனையில் (மட்டக்களப்பு -வெல்லாவெளி இருந்த படையாட்சி வன்னிமை பற்றி பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அக்கிராமத்துப் படையாட்சி குடியினர் வருடந்தோறும் மேற்கொள் ளும மறைந்த முன்னோருக்கான பிதிர்கடன் நினைவுச்சடங்கு நம் கவனத்தையிர்க்கின்றது.
மரணித்த உறவினர்களை நினைவுகூர்ந்து ஏனைய குடி மரபினர் நான்கு மடை (படையல்) வைக்க படையாட்சி குடியினர் மாத்திரம் ஐந்து மடை (வன்னிச்சி மடை) வைப்பார்கள். 01. தாய் வழியினருக்கான மடை 02. தந்தை வழியினருக்கான மடை 03. தாயின் தந்தை வழியினருக்கான மடை
வெல்லவுர்க் கோபால் 78

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
04. தந்தையின் தாய் வழியினருக்கான மடை 05. வன்னிச்சி மடை
இவ் வன்னிச்சி மடைக்கான அவர்கள் கூறும் காரணம் அக்கிரா மத்தினது ஒரு மரபுவழிப் பண்பாட்டுப் பெருமையினை நமக்கு உணர்த் துவதாகவுள்ளது.
நாதனையிலிருந்த கடைசி வன்னியனார் அவருக்கு வாரிசு இல் லாதிருந்ததால் தனது வயோதிப நிலையில் அக்கிராமத்து படையாட்சி குலத்தினரை அழைத்து ஒரு வேண்டுகோளினை வைத்தார். தனது மறைவுக்குப் பின்னர் தன் அன்பு மனைவியை நன்கு கவனிப்பதோடு அவள் மரணமானதும் அதற்கான சடங்குகள் அனைத்தையும் முறை யாக மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார். வன்னியனாரின் மரணத் தின் பின்னர் அதற்கான கிரியைகளை சிறப்பாக மேற்கொண்ட இம்மக் கள், வன்னி நாச்சியாரை நன்கு கவனித்து வந்தனர். கல்லடிப் பிள்ளை யார், சுவாதியம்மன் குன்றுக் கோவில்களை அண்மித்ததாக (வாழைச் சேனை) நாச்சியாருக்கு ஒரு மனையிருந்தது. அவர் தனது இறுதிக் காலத்தை அங்கேயே கழித்தார். கல்லடி ஐங்கரனை தவறாது அவர் வழிபட்டுவந்தார். நாச்சியார் கல்லடி என்றே அப்போது அது அழைக் கப்படலாயிற்று. தற்போது அது நாச்சிமார் கல்லடியென்று மருவி நிற்கின்றது.
வன்னி நாச்சியார் மறைவுக்குப் பின்னர் உரிய கடமைகளைச் செய்த அம்மக்கள் தொடர்ந்து தங்கள் குடும்பத்திலொருவராக அவரை நெஞ்சிருத்தி வருடந்தோறும் பிதுர்கடனும் செய்துவருகின்றனர்.
தமிழகத்தின் வன்னிய சமூகப் பிரிவான படையாட்சி குலத்தி னருக்கும் மட்டக்களப்பு பிரதேசத்தே முற்குக சமூகத்தின் ஒரு பிரதான குடியினராக பரந்துபட்டு வாழும் படையாட்சி குலத்தினருக்குமான வெல்லவுர்க் கோபால் לל

Page 47
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் வேர்கள் பற்றிய ஆழமான தேடல்மிகுந்த அவதானத்துடன் முன் னெடுத்துச் செல்லப்படுவது இக்காலகட்டத்தே மிக மிக அவசிய மாகின்றது. மட்டக்களப்பு - வன்னி பற்றிய சமூக ஆய்வினுக்கும் இது பயனுள்ளதாக அமையும்.
மழவர் குடி - மழவரசன் குடி
சீர்தங்கு வல்லவரும் பணிக்கனாரும் சிறந்த படையாட்சியொடு உலகிப்போடி கார்தங்கு மழவரசன் தனஞ்செயனும் கலிங்கனொடு குடியேழு.
என்ற கல்வெட்டுப் பாடல் படிக்கும் ‘உழ வருக்கு சிவனாம்.என்று தொடங்கி “மழவருக்கு வீரபத்திரன் மறை யோருக்கு நான்முகனே' என முடியும் சாதித் தெய்வக் கல்வெட்டுப் பாடல்படிக்கும் மட்டக்களப்பு முற்குகரிடையே இன்னொருகுடிப் பிரி வினராக மழவர் அல்லது மழவரசர் குறிப்பிடப்படுகின்றனர். தற்போது அருகிவிட்ட நிலையில் காணப்படும் இவர்கள் சேரநாட்டின் வழி யினராகவே கருதப்படுகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இக்குடியினர் தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் வன்னியர்தம் பழங்குடி மரபின் ஒரு பிரிவினராக ஆய்வாளர்களால் கருதப்படுகின்றனர். மட்டக்களப்பு மழவர் போன்றே சேரநாட்டின் வழிவந்த இவர்கள் கொங்குநாடு ஊடாக வட தமிழகம் வந்து திருச்சிராப்பள்ளிக்கு மேற்பால் காவிரியாற்றின் வடபாகத்தே குடியேறினர் என்றும் அப்பிரதேசம் மழநாடு என்றும் மழவர் நாடு என்றும் சங்ககாலத்தே குறிப்பிடப்பட்டமையும் தெரிய வருகின்றது. அரிசி விளைந்த இந்நாடு அரிசில் என்றும் பின்னர் அரியலூர் என்றும்
வெல்லவுர்க் கோபால் マ 78

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் அழைக்கப்படலாயிற்று மழவர் குடியினர் அரியலூரில் இன்றும் பெரு மளவில் வாழுகின்றனர். இவர்கள் சிறந்த போர்வீரர்களாக விளங்கினர். மழவர் வழிவந்த அரியலூர்ப் பாழயக்காரர்கள் சுமார் ஐநூறு ஆண்டு கள் ஆதிக்கம் செலுத்தியவர்களாவர்.
மாகோன் சேரநாட்டிலிருந்து அழைத்து வந்த முப்பதாயிரம் பேரில் மழவரும் இடம்பெற்றிருக்கவேண்டும். இவர்களே மட்டக்களப் பில் முழவர் குடி-மழவரசன் குடி என்ற பெயரினைப் பெற்றிருக்கலாம். சேரமன்னன் அதியமானை “மழவர் பெரும என புறநாநூற்றுப் பாடல் மூலம் ஒளவையார் குறிப்பிடுவது கவனத்தில் கொள்ளத்தக்கது.
தமிழகத்தில் வன்னியரிடையே காணப்படும் மழவர்குடி மட்டக்க ளப்பு முற்குகரிடையேயும் யாழ்ப்பாணத்தில் வேளாளரிடையேயும் காணப்படுவது சமூகவியல் தொடர்பான சிந்தனையைத் தூண்டுகின்றது.
மட்டக்களப்பின் படையாட்சியரும் மழவரும் தமிழக வன்னிய ருடன் தொடர்புபட்டு நிற்பதற்கு போதிய வரலாற்றுச்சான்றுகள் தென்ப டுவதால் ஆய்வாளர்கள் மேலும் இதில் ஆர்வம் கொள்ளுதல் மிகுந்த பலனைத் தரும். அத்தோடு ஏனைய தமிழகத்து ஈழத்து சமூக அமைப் புக்களை இணைத்துப் பார்க்கவும் வழியேற்படும்.
வெல்லவுர்க் கோபால் 79

Page 48
தமிழக வண்னியரும் ஈழத்து வன்னியரும்
மட்டக்களப்பு முற்குகரும்
யாழ்ப்பான முக்கியரும்
ஒரு சமூக ஆய்வினை மேற்கொள்ளும்போது ஆய்வாளர் நடு நிலை தவறாதவராக இருத்தல் அவசியம். மேலெழுந்த வாரியாக ஒரு சமூகத்தை உச்சாணிக்கொப்பில் வைத்துப் பார்ப்பதோ அல்லது தாழ்வு நிலைக்கு உள்ளாக்குவதோ அன்றேல் தான் சார்ந்துள்ள சமூகத்தை எந்த வழியிலேனும் தூக்கி நிமிர்த்திவிட்டால் போதுமென கருதுவதோ ஆய்வினைக் கொச்சைப்படுத்துவதாகவே அமையும். எந்தவொரு சமூக ஆய்விலும் அடிப்படை அம்சங்களை ஆய்வுசெய்யும் போது உயர்வு -தாழ்வு கற்பிக்க எள்ளளவும் இடமில்லை. காலவோட்டத்தால் ஒன்றிவிட்ட தொழில்முறைகளும் பொருளாதாரக் கூறுகளால் உண் டான சமச்சீரின்மையுமே சமூகங்களைப் பிரித்துக்காட்டவும் அவற்றினி டையே உயர்வு தாழ்வினை உருவாக்கவும் வழிவகுத்துக் கொடுத்தது.
வெல்லவுர்க் கோபால் 80

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
யாழ்ப்பாணப் பிரதேசத்தே வாழும் நீண்ட பாரம்பரியமிக்க பழங் குடி மரபினருள் முக்கியரும் அடங்குவர். இவர்களும் சேரத்து முக்கு வர்களாகவே கருதப்படுகின்றனர். 'விஷ்ணுபுத்திரன் வெடியரசன்’ என்ற நூலையெழுதிய அறிஞர் சிவப்பிரகாசம் அவர்களும் ஆய்வாளரும் விமர்சகருமான அந்தனிசில் அவர்களும் முக்கியர் குறித்து பல குறிப் புக்களை முன்வைத்துள்ளனர். மட்டக்களப்பு முற்குகருடனும் இவர்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர். இத் தொடர்பினை சில ஆய்வாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். இதற்குக் காரணமாக அவர்கள் தொழில் வேறு பாடுகளைக் காண்பிக்கின்றனர். மட்டக்களப்பு முற்குகர் விவசாயத்தை மேற்கொள்பவர்களாகவும் யாழ்ப்பாண முக்கியர் மீன்பிடித் தொழிலை மேற்கொள்பவர்களாகவும் இருப்பதே இதற்கு அடிப்படைக் காரண மாகக் கூறப்படுகின்றது. எனினும் நீண்ட சமூகவழித்தொடர்புகளால் பல சமூகங்கள் ஒன்றிணைக்கப்படுவதை சமூகவியல் ஆய்வுகள் வெளிப்படுத்தியே வருகின்றன. மானிடவியல் ஆய்வுகளின் ஆழ் நிலைப்பாடும் இதனையே முடிபுறுத்தும். இதனடிப்படையில் இவ்விரு சமூகங்களுக்குமிடையே அடிப்படைத் தொடர்பொன்று தென்படுவதை மறுக்கமுடியாதுள்ளது. இந்நூலில் இதுபற்றிய குறிப்புக்கள் இடம் பெறுவது பொருத்தமானதாகவே அமையும்.
மட்டக்களப்பு முற்குகர் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தே குடி யேறியவர்கள் என்பதுவும் கலிங்கத்தில் வாழ்ந்த திராவிடருடன் பண் டைய தமிழகத்தின் பழங்குடி மரபினரும் இணைந்த ஒரு சமூகமே இவர்கள் என்பதுவும் இதுவரை கண்டறியப்பட்டதாகும். கேரளத்தின் மலபார் பகுதியைச் சேர்ந்த ஒரு மரபினர் முக்குவர் என அழைக்கப்ப டுகின்றனர். இன்று இவர்கள் தமிழ்நாட்டின் தென்கரைப் பகுதியிலும் கேரளத்தின் கரைப்பிரதேசத்திலும் பரவலாக வாழுகின்றனர். தமிழக அரசின் முக்கிய சாதிப்பட்டியலிலும் முக்குவர் இடம்பெறுகின்றனர்.
வெல்லவுர்க் Gasuma 8.

Page 49
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
தமிழக மற்றும் கேரள முக்குவர்கள் நீண்டகாலமாக முத்துக்
குளிப்பதையே தொழிலாகக்கொண்டிருந்தார்கள் என்பதை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. காலப்போக்கில் இவர்கள் மீன்பிடித் தொழிலையும் மேற்கொள்ளத் தொடங்கினர். முற்குகருக்கும் முக்கியருக்கும் உள்ள தொடர்பினைக் கண்டறிவதற்கு பண்டைய சேரநாட்டு முக்குவரின் விரிவாக்கம் அவசியமாகின்றது.
கடற்போரில் புகழ் பெற்றவனும் யாழ்ப்பாணம் நெடுந்தீவிலி ருந்து ஆட்சிசெய்தவனுமான மன்னன் வெடியரசன் மட்டக்களப்பு முற்குக சமூக வரலாற்றோடு பேசப்படுபவனாகின்றான். இவனது காலத் தின் பின் யாழ்ப்பாணத்திலிருந்த முக்குவர்கள் மட்டக்டகளப்பில் குடி யேறியதாக வரலாற்றுச் சான்றுகள் உண்டு. அதேநேரத்தில் இம்மன்னன் யாழ்ப்பாண முக்கியரோடும் நெருக்கமுறப் பேசப்படுபவனாகின்றான். திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட மகா விஷ்ணுவின் வழிபாடு தொடர் பான கேரள முக்குவரின் கர்ண பரம்பரைக் கதைகளும் யாழ்ப்பாண முக்கியரின் தோற்றுவாய் தொடர்பாக பேசப்படும் பழமைக் கதைகளும் மட்டக்களப்பு முற்குகப் பெரியோர்கள் மூலம் அறியப்பட்ட வாய்வழிக் கதைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவேயுள்ளது. மகாவிஷ்ணு மூலம் தோற்றம் பெற்றவர்களாகவே இவர்கள் தங்களைப் பெருமைப் படுத்திக் கொள்கின்றனர்.
சேரநாட்டில் முத்துக் குளித்துக் கொண்டிருந்த ஒரு சமூகப் பிரிவினரின் படிப்படியான நகர்வே யாழ்ப்பாண முக்கியரின் தோற்று வாயாக அமைந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மலபார் பகுதி யில் வாழ்ந்த மக்கள் தங்கள் தொழில்நிமித்தம் தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். இது ஒரு நீண்டகால படிப்படியான இடப்பெயர்வாக அமைந்திருந்தது.
வெல்லவுர்க் கோபால் 82

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
முத்துவளம் அருக அருக அம்மக்களின் நகர்வும் தொடர்ந்து கொண்டே சென்றது. குருவாயூர், கொச்சி, பரவரூர், குளித்துறை, திரு வனந்தபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி, இராமேஸ்வரம், தூத்துக்குடி என காலவோட்டத்தில் நிகழ்ந்த இடப்பெயர்வு ஆழ்கடல் பிரதேசமான வடபகுதியை நோக்கிச் செல்வதை விடுத்து முத்து வளமிக்க மன்னார் குடா நோக்கித் தாவ வைத்தது. கேரள தமிழகத்தின் இப்பகுதிகளில் முக்குவ சமூகத்தினர் இன்றும் வாழ்ந்து வருவது இதனை உறுதி செய்கின்றது. சிலாபம், புத்தளம். சிலாபத்துறை, குதிரைமலைத்துறை, மன்னார் பரப்பு என இப்பகுதிக் கடற்கரைகளை அழகு செய்த இவர் கள் பின்னர் யாழ்குடா சென்று கொழும்புத்துறையை தங்களது நீண்ட கால இருப்பிடமாக்கினர்.
கிழக்குக் கடல்பகுதி ஆழமிக்கதாக அமைந்திருந்ததாலும் முத்து வளம் இல்லாதிருந்ததாலும் மேலும் இம் மக்கள் தங்கள் நகர்வினைத் தொடர வாய்ப்பில்லாது போயிற்று.
காலப்போக்கில் ஈழத்தின் வடக்கு மற்றும் வடமேற்கு கடற்கரைப் பரப்பில் முத்துவளம் அருகிக் கொண்டே சென்றதால் தங்களது பரம் பரைத் தொழிலினை இழந்துவிட்ட இம் மக்கள் வேறு தொழில்களை நாடத்தொடங்கினர். கடலோடு ஒன்றிவிட்ட வாழக்கையினை இயல் பாகவும் மரபாகவும் கொண்டிருந்த இம் மக்களுக்கு கடல்தொழிலான மீன்பிடித் தொழிலே இலகுவானதும் வசதியானதுமான தொழிலாக அமைந்தது. கடலும் கடல்சார்ந்த நிலப்பரப்பும் இத்தகைய வாழ்க்கை முறையினையே வழங்கமுடியும். இவர்களது முன்னோர்களான கேரளா மற்றும் தமிழ்நாட்டு முக்குவர்களும் பெரும்பாலும் இத்தொழலினையே தற்போது மேற்கொண்டுவருகின்றனர்.
தொழில்கள் என்பவை குறிப்பிட்ட சமூகத்தோடு நிலை பெற்ற
வெல்லவுர்க் கோபால் 83

Page 50
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் மைக்கான சான்றுகளில்லை. காலப்போக்கில் மாறுபட்ட சூழலில் அவை
யும் மாறுபடவே செய்தன. ஒரு சமூக அமைப்பே பல்வேறு தொழிலை மேற்கொள்ளும் போக்கினை காலம் அமைத்துக் கொடுத்திருக்கின்றது.
சேரநாட்டிலிருந்து தொழில்முறை நகர்வை மேற்கொண்டு யாழ்ப் பாணம் சென்ற முக்குவர் முக்கியராகி மீன்பிடித் தொழிலை மேற் கொண்டதும் படையெடுப்பு, போர் நடவடிக்கைகள், குடியேற்றம் என தொடர்புபட்டு மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்த முக்குவர், குகமரபின ருடன் சமூக இணைப்புப்பெற்று முற்குகராகி விவசாயத் தொழிலை மேற்கொண்டதும் காலமாற்றமே. எனவே இதனை வைத்து பல நூற்றாண்டுகள் முற்பட்டதான ஒரு தொடர்பு அறுந்து போய்விட்டதாகக் கொள்ளின் அதனை வரலாறு ஏற்காது. ஆய்வாளர்கள் தங்களது கருத் துக்களை தெளிவாக மீளாய்வு செய்வதனால் ஒரு நிறைவினை எதிர் கால சமூகம் பெற வாய்ப்பளிப்பதாக அமையும். இப்பணி தொடரு மேயானால் ஈழத்தே வாழும் தமிழ்ச் சமூக அமைப்புக்கள் ஒன்றோ டொன்று பின்னிப்பிணைந்திருப்பதை உறுதிசெய்து கொள்ளவும் அதன் மூலம் வழி பிறக்கும். இதுவே எதிர்கால ஈழம் ஏற்றத் தாழ்வற்ற ஒரு சமூகத்தினைக் கொண்டதாக அமைய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.
வெல்லவுர்க் கோபால் 84

தமிழக வன்னியரும் ஈழத்து வண்னியரும்
தமிழக வன்னியரின் தளர்ச்சி
ஒரு இனத்தினது அல்லது சமூகத்தினது எழுச்சியோ வீழ்ச்சியோ பல்வேறு காரணங்களை உள்ளடக்கியதாக இருந்தாலும் அரசியல் மாற்றங்களும் பொருளாதார ஏற்ற இறக்கங்களும் அதற்குள் முக்கிய மாக கொள்ளத்தக்கன. உலக வரலாற்றில் இந்நிகழ்வுகள் சாதாரண மாகவே இடம்பெற்றுவந்திருக்கின்றன. பாரதத்தில் மட்டுமன்றி கடல் கடந்த நாடுகளிலும் தங்கள் புலிக்கொடியைப் பறக்கவிட்டு வலிமை யுடன் தலைநிமிர்ந்து நின்ற சோழப் பேரரசுகள் சுமார் முன்னூறு ஆண்டுகளிலேயே நிலைதளர்ந்து போனமை வரலாறு நமக்கு உணர்த் தும் பாடங்கள். அவர்களது எச்சங்களே சோழர்தம் பெருமையை உலகுக்கு காலம்தோறும் எடுத்துக் காட்டி நிற்கின்றன.
வெல்லவுர்க் கோபால் 8.

Page 51
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
குலக்குழு நிலைச் சமூக அந்தஸ்து அல்லது இனக்குழு நிலைச்
சமூக அந்தஸ்து எழுச்சியுறுவதும் வீழ்ச்சியடைவதும் மாறிவரும் சூழ்
நிலையில் மாறிமாறி வந்திருக்கின்றன. திறமையும் செயலாக்கமும் ஒரு
சேர நெறிப்படும்போது எழுச்சியுறுவதும் அவை நெரிக்கப்படும் போது தளர்ச்சியடைவதும் வரலாற்றுப் பாடங்களே. அதற்காக அவை நிரந்தர மாகவே வீழ்ந்துவிட்டதாகக் கருதவேண்டிய அவசியமில்லை. சமகாலச் சூழலில் நிகழ்ந்த ஈழத் தமிழர்தம் பாதிப்புக்களும் புலம் பெயர்வு களும் கூட அத்தன்மையதே. இதுவே அவர்களது மரபுவழிப் பெரு மையினைப் பாதுகாக்கவும் மீண்டும் விசைகொண்டு கிளைகளைப் பரப்பவும் உறுதியான நிலைப்பாட்டினை அவர்களுக்கு அளித்திருக் கின்றது.
பண்டைய தமிழகத்தின் பழங்குடிகளில் ஒன்றாக கருதப்படும் வன்னியர் சமூகம் சிறப்புமிக்க பாரம்பரியத்தையும் மரபுவழிப் பேணல் களையும் கைக்கொண்டே வந்திருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியானது இவர்களது பின்னடைவுக்கு வழிவகுத்துக் கொடுத்து விட் டது. இது ஒட்டு மொத்தமாக தமிழகத்தையே பாதிப்புக்குள்ளாக்கிவிட் டது என்றுகூட கூறலாம். இதனைச் சற்றுப் பிக்னோக்கிப் பார்ப்பதே
அவசியமாகின்றது.
வெல்லவுர்க் கோபால் 86

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
சமஸ்கிருத மயமாக்கலின் விளைவு
தமிழகத்தில் பல்லவர் ஆட்சிக்காலம் பல சிறப்புக்களை வழங்கி யிருந்தாலும் மறுபுறத்தில் தமிழர்தம் பண்பாடுகளுக்கும் சமூக நெறி முறைகளுக்கும் பாதகமான சூழ்நிலைக்கு களம் அமைத்துக் கொடுத் தது. கி.பி.4ம் நூற்றாண்டின் மையப்பகுதியில் பல்லவரால் உருவாக் கப்பட்ட சமஸ்கிருத மயமாக்கல் கோட்பாட்டுக்கும் செயற்பாட்டுக்கும் கிடைத்த வெற்றியானது மறுபுறத்தில் தமிழரிடையே சமூகப் பிரிவி னைகளையும் சாதீய அமைப்புக்களையும் வெகுவாக வளர்தெடுக்க உறுதியான அத்திவாரமாய் அமைந்தது.
தமிழரால் கடைப்பிடிக்கப்பட்ட திணையொழுக்க சமுதாய அமைப்பு ஒடுக்கப்பட்டு நால்வருண சமுதாய அமைப்பு உருவெடுத் தது. அதனைத் தொடர்ந்து சமுதாய அடுக்கு முறைகளும் சாதிகளுக்
வெல்லவுர்க் கோபால் 87

Page 52
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
கான உரிமைகள் மற்றும் கடமைகளும் வரையறை செய்யப்பட்டன. அவையே சமூகநீதியாகவும் கருதப்பட்டன. பண்டைப் புகழ்பெற்ற வாணிப நகரங்களெல்லாம் சிறப்புக்குன்றி வேதியருக்கான கோவில் நகரங்கள் உருவாகின. தமிழருக்கான சமய வழிபாட்டு நடைமுறைகளில் வேதியருக்கான நிகம வழிபாட்டு முறைகள் புகுந்து கொண்டன. விவ சாயிகளுக்கும் உழைப்பாளிகளுக்குமான காணி உரிமைகள் தேவஸ் தான அமைப்புக்களுக்கும் கோவில்களுக்கும் மாற்றப்பட்டு பிராமணர் களின் ஆதிக்கத்துள் வீழ்ந்தன. தமிழினத்தின் பெரும் பிரிவு ஒன்று நில உரிமைகள் பறிக்கப்பட்டு ஒருபுறத்தே வறுமை நிலைக்கு மாறிக் கொண்டிருக்க மறுபுறத்தில் கோவில் மானிய நிலவுடமைச் சமுதாயம் ஒன்று வளர்ந்து வரத் தொடங்கியது.
இக்காலகட்டத்தே அழகுதமிழால் அழைக்கப்பட்ட ஊர்ப் பெயர் கள் பலவும் சமஸ்கிருதப் பெயர்களாக மாற்றமடையத் தொடங்கின. பல்லவர் தொடங்கிய இந் நடைமுறைகள் சோழர்தம் ஆட்சியிலும் மிகத் துரிதமாகத் தொடர்ந்தன. சாதி அமைப்புக்களும் சமூக நிலை ஏற்றத் தாழ்வுகளும் மென்மேலும் ஏற்றம் பெற்றன. இடங்கை வலங்கைப் பிரிவுகளும் தோற்றம்பெற்று தொழில்புரிவோரிடையே மேலும் பல வர்க்கக் கூறுகள் உருவாக்கம் பெற்றன. தொடக்ககாலத்தே ஏற்றத் தாழ்வுகள் குன்றியதாக விளங்கிய பண்டைய தமிழகம் இன்று பாரதத்திலேயே சாதியத்தை நிலைநிறுத்தும் முதல் மாநிலமாகத் திகழ இதுவே வழிவகுத்தது.
சமஸ்கிருதமயமாக்கல் கொள்கையானது ஆரம்பம் முதலே சமூக ஒற்றுமையை சிதைத்து கூறுபோட்டது. முக்காலமும் உணர்ந்த சித்தர்களும் திருமூலர் போன்ற பெரும் ஞானிகளும் பின்வந்த நாயன் மார்களும் எடுத்துச் சொன்ன கருத்துக்களெல்லாம் ஏட்டளவிலே நின்றுபோயின. இதன் பிரதிபலிப்பாக தமிழகம் காலப்போக்கில் உள் நாட்டுப் பிரச்சனைகளுக்கும் உணவுப் பஞ்சம் போன்ற பாதிப்புக்க
வெல்லவுர்க் கோபால் 38

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
ளுக்கும் முகம்கொடுக்கவேண்டியதாயிற்று.
கி.பி. 14ம் நூற்றாண்டு முதலே சோழ, பாண்டியப் பேரரசுகள் தளர்ச்சி கண்டன. பாண்டியரின் அரசுரிமைப்போராட்டமோ தமிழகத் தின் மீது முஸ்லிம்களின் படையெடுப்புக்கு தீனிபோட்டது. தொடர்ந் தாற் போல் வேற்றாரின் வேட்டைக்காடாக தமிழகம் மாறியது. விஜய நகரத்தினர், நாயக்கர்கள், மராட்டியர்கள் என தமிழர்தம் ஆட்சியுரிமைப் பறிப்பு தொடர்கதையானது.
இக்காலம் குறித்து பொதுவாக தமிழக ஆய்வாளர்கள் ஒரே கருத்தையே கொண்டுள்ளனர். பல்லவராட்சிக் காலத்திலும் சோழராட்சிக் காலத்திலும் வர்ணாசிரமத்தைக் காப்பதிலும் பிராமணர்களை குபேரர் களாக வாழ வைப்பதிலுமே மன்னர்கள் பெரிதும் ஆர்வம் காட்டினர். ஆலயப் பணியும் அரசர்களுக்கான ஆலோசனைப் பணியுமே வேதி யர்களுக்கான கடமையாயிருந்தது. உடலுழைப்பை அறியாத இவர்கள் சமூகத்தின் உயர்ந்த மட்டத்தினர் என்ற மமதை கொண்டவர்களாயி ருந்தனர். அவர்களது உயர்ந்த வாழ்வினுக்காக உழைக்கும் மக்கள் பெரும் கெடிபிடிகளுக்கு ஆளாயினர். வரிப்பளுவால் வதங்கினர். அடி மைத் தளையில் அல்லலுற்றனர். இதனைத் தொடர்ந்து அயல் நாட்டினர் (மானிலத்தவர்) தமிழகத்தில் தமக்கிருந்த சாதக நிலைமையைப் பயன் படுத்தி கூட்டம் கூட்டமாக குடியேறினர். இவர்களில் தெலுங்குப் பிரா மணர்கள் பெரும் செல்வாக்குப் பெற்றனர். சாதி வேற்றுமைக்கும் தீண் டாமைக்கும் தமிழக சமூகங்கள் உள்ளாக்கப்பட்டன. தொழில் அடிப் படையிலும் சாதிகள் உயர்வு தாழ்வு பெற்றன. பெயர்களுடன் சாதிப் பெயரை இணைப்பதுவும் கட்டாயமாக்கப்பட்டது.
சமூக உரிமைகளைப் படிப்படியாக இழந்துபோன இடங்கைப் பிரிவினர் ஆட்சி அதிகாரிகளது அதிக வரிச்சுமையால் மிகவும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டனர். இது தமிழகத்தை வாழ்விடமாக்கியவர்கள்
வெல்லவுர்க் கோபால் 89

Page 53
தமிழக வன்னியரும் ஈழத்து வண்னியரும்
ஏற்றமுறவும் தமிழ்நாட்டின் சொந்தக்காரர்களான பழங்குடி மரபினர் சகல நிலையிலும் ஒடுக்கப்பட்ட-ஒதுக்கப்பட்ட சமூகத்தினராக மாறவும் வழியமைத்துக் கொடுத்தது. ஆய்வாளர்கள் தி.வி.மகாலிங்கம், வேதிசெல்லம் போன்றோர் இது குறித்து விரிவாக விளக்கியுள்ளனர்.
தமிழகத்துக்கு ஏற்பட்ட வீழ்ச்சி தமிழ் நாட்டின் பல வழிகளிலும் தலையெடுத்திருந்த பண்டைய தமிழ்க் குடிமரபினரில் ஒரு பெரும் சமூகத்தினரான வன்னியரை பெருமளவு பாதிக்கவே செய்தது. அரசுப் படைகளிலும் நாட்டின் நிருவாக அமைப்பிலும் விவசாயத் தொழிலிலும் முக்கிய ஈடுபாடு கொண்டு முன்னேறிய சமுதாயமாக வாழ்ந்த இவர்கள் படைத்தொழிலினை இழந்தும் மாற்றாரின் ஆதிக்கத் தலையெடுப்பால் நிருவாகப் பதவிகளைப் பறிகொடுத்தும் விவசாய நிலங்கள் கையகப்ப டுத்தப்பட்டதால் நிலவுடமை பறிக்கப்பட்டும் சமூகநிலைப் பின்னடை வினை நோக்கித் தள்ளப்பட்டனர்.
இதனை வீழ்ச்சி என்பதிலும் தளர்ச்சியெனக் கொள்ளலே பெருத்தமானதாகும். இந்நிலை படிப்படியாக மாறிவரும் சூழ்நிலையில் மீண்டுமொரு பொற்காலத்தை நோக்கி மீட்சிபெற பின்னடைந்த சமூ கங்களுக்கு வாய்பினை உருவாக்கவே செய்யும்.
இன்றைக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னே தமிழகத்தில் உருவாக்கப்பட்ட இடங்கைப் பிரிவே தொழிலாள வர்க்கத்தின் கூட்ட மைப்பு என்று கொள்ளப்படவேண்டும். வன்னிய சமூகத்தை முதன் மைப்படுத்தி ஏனைய சமூகங்களுடன் இணைந்ததாக செயல்பட்ட அவ்வமைப்பின் மக்கள் தமிழகத்தின் உரிமையுள்ள வாரிசுகள் என் பதை மனதில் கொள்ளவேண்டும். மக்களாட்சி நெறிமுறைகள் வலி மைபெற்ற காலமிது. இத்தகைய சாதகமான சூழலில் தளர்வுற்ற சமூ கங்கள் சாதித்துவ நிலையிலிருந்து விடுபட்டு ஒன்றையொன்று அரவ ணைத்துக்கொண்டு உண்மையான குறிக்கோளை எட்ட முயல வேண் டும். இன்றைய தமிழ் நாட்டுக்கான தேவையுமிதுவே.
வெல்லவுர்க் கோபால் 90

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
ஈழத்து வன்னியரின் 6TCLged aga
கி.பி. 14ம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட தாக் கங்களைப் போன்று ஈழத்தில் வன்னியில் ஏற்படவில்லையென்றே கொள்ளவேண்டும். வடக்கே யாழ்ப்பாண அரசர்கள் மூலமும் தெற்கே அனுராதபுர சிங்கள அரசர்கள் மூலமும் சிறுசிறு படையெடுப்புக்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் வன்னிமண் பாதிப்புக்குள்ளானதாக வர லாறு இல்லை. ஒரு குறிப்பிட்ட காலம் கி.பி.13ம் நூற்றாண்டின் பிற்பகு தியில் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த வரோதய சிங்கை ஆரி யன், மார்த்தாண்ட சிங்கை ஆரியன் போன்ற ஆரியச் சக்கரவர்த்திக ளின் ஆட்சியின்போதும் பின்னர் சங்கிலியன் ஆட்சியின் போதும் பின்னடைவைச் சந்தித்திருக்கலாம் எனக் கருதப்பட்டாலும் அது நிலை பெற்றிருந்தமைக்கான சான்றுகளில்லையென்றே ஆய்வாளர்கள் கூறு கின்றனர். வெல்லவுர்க் கோபால் 91

Page 54
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
இக்காலகட்டத்தின் பின்னர் வன்னிப் பகுதி பெரும் இயற்கை
அழிவினைச் சந்தித்ததாகக் கலாநிதி பூலோகசிங்கம் அவர்கள் தனது
கட்டுரையொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
புயலாலும் பெருமழை வெள்ளத்தாலும் வன்னிப் பிரதேசத் தின் அனேக குளங்கள் உடைப்பெடுத்ததைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக அவை வெறிச்சோடிக் கிடந்தன. காலரா போன்ற தொற்று நோய்களுக்கு நூற்றுக்கணக்கில் மக்கள் பலியானார்கள். ஆயிரக்கணக்கில் கால்நடைகள் மடிந்தன. மக்கள் பட்டினியால் பெரிதும் அவதிக்குள்ளாயினர். தங்களின் பாரம்பரிய கிராமங்களைவிட்டு கூட்டம் கூட்டமாய் வேறு கிராமங்களுக்கு மக்கள் இடம் பெயரலாயினர். இதனால் காலப் போக்கில் அக்கிராமங்கள் பலவும் புதர் மண்டி அழிந்து போயின. எனினும் தங்களது கிராமங்களை விட்டு வெளியே றிய மக்கள் வன்னிப்பிரதேசத்தை விடுத்து வெளியேறவில்லை.
பனங்காமம் சிற்றரசு
யாழ்ப்பாண மன்னர்களுக்கு திறைகொடுக்கமறுத்த வன்னிச் சிற்றாசகள் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்திலும் தங்களது நிலைப்பாட்டினைத் தொடரவே செய்தனர். அடங்காப்பற்று ஏழினுள்ளும் பெரு நிலப்பரப்புடன் முதன்மை நிலையில் விளங்கியது பனங்காமம் சிற்றரசாகும். ஏனைய ஆறு சிற்றரசுகளும் காலங்காலமாக பனங்காமம் அரசின் செயற்பாட்டினையே பின்பற்றிவந்தன. இதனால் அவை தங்களுக்குள்ளே நீண்டகால பிணைப்பினைக் கொண்டி ருந்தன. கைலை வன்னியன்
அடங்காப் பற்றில் அன்னிய ஏகாதிபத்தியத்தினை எதிர்த்து வர லாறு படைத்த சிற்றரசர்களில் குறிப்பிடத்தக்கவனாக கருதப்படுபவன்
வெல்லவுர்க் கோபால் 92

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் பனங்காமம் கைலைவன்னியன். ஒல்லாந்தருக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவன். கைலை வன்னியன் குறித்து 'வன்னியும் வன்னியரும் என்ற தனது நூலில் ஆய்வாளர் சிநவரெத்தினம் பின்வருமாறு குறிப் பிடுகின்றார்.
போர்த்துக்கேயர் இலங்கையின் பல பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் வன்னியைக் கைப்பற்றுவது அவர்களுக்கு முடியாதிருந்தது.பின் ஒல்லாந் தரின் ஆட்சியேற்பட்ட காலத்தில் கைலை வன்னியன் என் னும் மாவீரன் பனங்காமத்தை இராசதானியாக்கி வன்னி முழு வதையும் ஆண்டான். இவன் கோட்டை நீர்கொழும்பு, மன் னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு அனைத்தும் ஒல்லாந்தருக்குப் பணிந்து வரிசெலுத்திக் கொண் டிருந்தபோது யாழ்ப்பாணத்தில் இருந்த ஒல்லாந்தக் கவர்ண ரின் கட்டளைக்கு பணியாது பன்னிரண்டு ஆண்டுகளாக வரிசெலுத்த மறுத்து வன்னியின் சுதந்திரத்தைப் பேணிக் காத்தான் எனக்குறிப்பிடுகின்றார்.
ஒல்லாந்தக் கவர்ணர் வான்றி தோமஸ் (1692-1697) தனது நாட்டு அரசினுக்கு அனுப்பிவைத்த பின் வரும் அறிக் கையையே சிநவரெத்தினம் தனது நூலில் ஆவணப்படுத்தியுள்ளமை தெரிகின்றது. “They Were a constant source of irritation to the Dutch as they had been to the portuguese. The chief woul not pay their tribute of elephants and their land rents and some even would not appear at the annual Durbars when they were summoned by the Governors. This was specilly the case with KAILAVANNIYA of Panankamamwho failed to appear before the Dutch Governor for twelve consecutive years' (Report of Dutch Governor Thomas Van Rhee(1692-1697)
வெல்லவுர்க் கோபால்

Page 55
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
மேலும் கைலை வன்னியன் மறைவுக்குப் பின் சிலகாலம் ஆட் சிப் பொறுப்பேற்ற அவனது பேரனான காசி வன்னியன் ஒல்லாந்தருக்கு வரி கொடுக்க சம்மதித்து நட்புப் பேணியதாக பின்னைய குறிப்புக்களில் தென்படுகின்றன. ஒல்லாந்தக் கவர்ணர் தனது நாட்டுக்கு அனுப்பிய செய்தியில் இதனைப் பெரும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகக் குறிப்பிட் டுள்ளான்.
பண்டாரவன்னியன்
கைலை வன்னியனுக்கு பின்னர் ஈழத் தமிழராட்சி வரலாற்றில் முக்கிய இடத்தினை வகிப்பவன் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். இவனது ஆட்சிக்காலம் வன்னியை வீரம் விளைத்த மண் எனப் பெருமைபேச வைத்தது. இவனது வீர வரலாறு ஈழத்தே ஒரு பகுதியில் இடம்பெற்றதால் தமிழகத்து ஆய்வாளர்கள் அதனைப் பெரி தாக கண்டு கொள்ளவில்லை. இவன் ஒல்லாந்தர் ஆட்சியின் பிற் பகுதியிலும் ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்க காலத்திலும் வாழ்ந்த வன். குலசேகரம் நல்லமாப்பாண வன்னியனுக்குப்பின் தனது 21ம் வயதில் பண்டார வன்னியன் ஆட்சிப் பெறுப்பேற்றான்.
பண்டார வன்னியன் அடங்காப் பற்றின் முழுப்பகுதிக்கும் தலை வனாகவே மதிக்கப்பட்டான். தனது இராசதானியைப் பண்டாரிக் குளம் என்னும் இடத்தில் நிறுவினான். இது ஒட்டி சுட்டானுக்குப் பக்கத்தில் அமைந்திருந்தது. ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் மீது மிகுந்த பக்தி கொண்டவன். இதனாலேயே அத்தலம்
அன்னியர் குடல்நடுங்க அரசாண்ட பண்டார
வன்னியன் தினம்தொழுது வரலாறு பெற்றதலம்
எனப் பின்னாளில் பெருமை பேசப்படுகின்றது.
இளவரசி நல்லநாச்சான் வன்னிச்சியும் இளவரசி உமா நாச்சான் வன்னிச்சியும் இவனது தங்கைகளாவர். சமளங்குளத்தில் வாழ்ந்த குரு
வெல்லவூர்க் கோபால் 9.

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
விச்சை வன்னிச்சி இவனது காதலியாக குறிப்பிடப்படுகின்றாள். நல்ல நாச்சான் வன்னிச்சி கண்டி நுவர வன்னியன் மகன் குமாரசிங்க வன்னி யனை காதல்மணம் புரிந்தவள்.
இவனது ஆட்சிக் காலத்தில் விவசாயமும் கடல்வளமும் வன் னியை வளப்படுத்தின. யானைத்தந்தம், தேக்கு, கருங்காலி, சாயவேர், தேன் போன்றவை வன்னியின் காட்டுப் பிரதேசத்தில் இருந்து பெறப் பட்டு பிற இடங்களுக்கு அனுப்பப்பட்டன. பண்டார வன்னியன் அன் னியரை எதிர்ப்பதில் தனது முன்னோர்கள் கொண்டிருந்த உறுதிப் பாட்டைப் பின்பற்றி, சுதந்திரமான தன்னாட்சியை நிலைநிறுத்துவதில் பெரிதும் ஆர்வம் காட்டினான். கண்டி மன்னர்களுடன் வன்னியருக் கிருந்த தொடர்பினையும் பாதுகாப்பு ஒத்துழைப்பினையும் மேலும் வலுப்படுத்தினான். கண்டியைக் கைப்பற்ற முதன்முதலாக ஆங்கிலே யர் முற்பட்டபோது தனது படைகளைக் கொண்டு கண்டி மன்னனோடு இணைந்து அவர்களை விரட்டியடிக்க உதவினான்.
பண்டார வன்னியன் செயல்பாடுகள் ஆங்கிலேயர்களைப் பேர திர்ச்சிக்குள்ளாக்கியது. வன்னியைக் கைப்பற்றினால் மட்டுமே கண்டி யைப் பிடிக்கமுடியும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். தங்களது வழக்கமான தந்திரத்தை அவர்கள் கையாளத்தொடங்கினர். யாழ்ப்பா ணத்திலிருந்து கடல்வழியாக இலகுவில் சென்றடையக்கூடிய முல்லைத் தீவுப் பகுதி, கரிக்கட்டுமூலை வன்னியன் வசமிருந்தது. அவனைத் தங்கள் கைக்குள் போட்டுக்கொள்ளும் வழிவகையிலீடுபட்டனர். வன்னி இராச்சியம் முழுவதையும் கைப்பற்றி அவனையே அதற்கு அரசனாக்குவதாக ஆசைகாட்டினர். அவர்கள் விரித்த வலையில் கரிக்கட்டுமூலை வன்னியன் விழுந்தான். அவசர அவசரமாக முல்லைத்தீவில் ஒரு கோட்டை நிர்மாணிக்கப்பட்டு கப்டன் றிப்பேக் தனது படைகளுடன் அங்கு நிலைகொண்டான்.
வெல்லவுர்க் கோபால் s

Page 56
தமிழக வன்னியரும் ஈழத்து வண்னியரும்
காலம் தாழ்த்திக் கிடைத்த செய்தியும் தனது இனத்தான் ஒருவன் அன்னியனுக்கு அடிபணிந்த இழிசெயலும் பண்டார வன்னியனது இரத்தத்தைச் சூடேற்றியது. உடனடியாகத் தனது படைகளுடன் முல் லைத்தீவுக் கோட்டையை நோக்கிப் புறப்பட்டான். பண்டார வன்னியன் தலைமையிலான யானை, குதிரை. காலாட்படைகள் ஒருபுறமும் கப்டன் வொன் ட்றிபேக் தலைமையிலான பீரங்கி மற்றும் துப்பாக்கிப் படை கள் மறுபுறமுமாகப் பெரும் போர் மூண்டது. தொடர்ந்து நடந்த இப் போரில் முன்னேறிச்சென்ற வன்னியப் படைகள் முல்லைத்தீவுக் கோட் டைக்குள் ஊடுருவித் தகர்த்தன. ஆங்கிலேயப் படையினர் பலர் கொல்லப்பட்டு சிறைபிடிக்கவும் பட்டனர். கப்டன் ட்றிபேக் எஞ்சிய வீரர்களுடன் படகுகளில் ஏறி தப்பியோடினான். அங்கு சிதறிக் கிடக்கும் கோட்டையின் அழிபாடுகள் இன்றும் இதற்கு சான்று பகர்கின்றன.
ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பண்டார வன்னியன் மேற்கொண்ட இப்பாரிய தாக்குதல் குறித்து அப்பகுதியில் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றிய சொ.அமிர்தலிங்கம் அவர்கள் தனது ஆய்வுக் குறிப்பில் பின்வரும் தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.
1803 ஆகஸ்ட் 25ம் திகதி ஆங்கிலேயரின் முல்லைத்தீவுக் கோட்டை பண்டார வன்னியனால் தகர்க்கப்பட்டது. கப்டன் ட்றிபேக் போரில் எஞ்சிய வீரர்களுடன் படகுகளில் ஏறி யாழ்ப் பாணத்துக்கு தப்பிச் சென்றான். முல்லைத்தீவுக்கு அருகே யுள்ள குதிரைசாய்ந்த இறக்கம் இதனை நினைவுபடுத்துவதா யுள்ளது. பண்டார வன்னியன் இப்போரில் மூன்று பீரங்கிக ளையும் துப்பாக்கிகளையும் கைப்பற்றிக்கொண்டான். சிறை பிடித்த வீரர்களைப் பின்னர் விடுவித்த அவன் தனது படை களுடன் பனங்காமம் திரும்பினான்.
பண்டார வன்னியனால் எதிர்பாராதவிதமாக தோற்கடிக்கப்பட்ட
வெல்லவூர்க் கோபால் 96

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் கப்டன் டிறிபேக் எப்படியும் வன்னிப் பெரு நிலப்பரப்பை கைப்பற் றியே தீரவேண்டுமெனும் பெருமுயற்சியில் ஈடுபட்டான். யாழ்ப்பாணத் திலிருந்து லெப்டினன் ஜோன் ஜூவல் தலைமையிலும் திருகோண மலையிலிருந்து கப்டன் எட்வேட் மட்ச் தலைமையிலும் ஆங்கிலேயப் படைகள் வன்னியை நோக்கிப் புறப்பட்டன. கரிக்கட்டுமூலை வன்னி யனின் ஆலோசனையுடன் மன்னாரிலிருந்து தனது தலைமையில் காட்டு வழியாக ஒரு படையை இராவோடிரவாக வன்னிக்குள் நுழைக்க, கப்டன் றிபேக் திட்டமிட்டான்.யாழ்ப்பாணத்திலிருந்தும் திருகோணமலையிலிருந்தும் படைகள் வரும் செய்தி மட்டுமே பண் டார வன்னியனுக்குக் கிடைத்தது. திருகோணமலைப் படைப் பிரிவை எதிர்கொள்ள தனது மைத்துனன் குமாரசிங்க வன்னியனை அனுப்பிய அவன் யாழ்ப்பாணப் படைப்பிரிவை தனது தலைமையில் எதிர் கொண்டான்.
போர் தொடர்ந்து கொண்டிருந்த நிலையிலும் இரவோடிரவாகக் காட்டு வழியே வந்த கப்டன் றிபேக்கின் படை கற்சிலைமடு என்ற இடத்தில் நள்ளிரவு தாண்டி தூக்கத்திலிருந்த பண்டார வன்னியனை சுற்றிவளைத்துப் பிடித்துக்கொண்டது. மறுபுறத்தே தீவிரமாகப் போரா டிய குமாரசிங்க வன்னியனும் வீர மரணத்தைத் தழுவினான்.
பண்டார வன்னியனைச் சிறைப் பிடித்த பெருமையினைப் பறை சாற்ற அதே இடத்தில் கப்டன் றிபேக்கினால் ஒரு கல் நாட்டப்பட்டது. 9556)656) "Here abouts Captain Van Dreberg defeated Pandara Vanniya31Stoctober 1803’ இவ்விடத்தில் கப்டன் வான் றிபேக்கால் பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்டான். 31 அக்டோபர்1803) என்ற ஆங்கில வாசகம் தென்படுகின்றது.
சிறையிலடைக்கப்பட்ட பண்டார வன்னியன் தனது பதினாறு போர் வீரர்களுடன் தப்பிச் சென்றதாக ஒரு தகவலும் அவனை
வெல்லவுர்க் கோபால் 97

Page 57
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
விடுவித்து வன்னியிலிருந்து வெளியேற்றியதாக வேறு ஒரு தகவலும் கூறப்படுகின்றது.
கண்டியில் தங்கியிருந்த பண்டார வன்னியனுக்கு தனது மண்ணி னை மீண்டும் கைப்பற்றுவதே நோக்கமாயிருந்தது. இடைப்பட்ட காலத் தில் வீரர்களைத் திரட்டி, துப்பாக்கி போன்ற ஆயுதப் பயிற்சியளித்தான். 1810 மே மாதம் வன்னியின் கிழக்கு மற்றும் தெற்கு காவல் அரண் களை அவன் தாக்கியழித்தான். இதனைத் தொடர்ந்து ஆங்கிலக் கவர் ணர் ரேணர் வவுனியாவிலும் வெடிவைத்த கல்லிலும் பாதுகாப்பைப் பலப்படுத்தினான். இதனையும் மீரி பண்டார வன்னியனின் படைகள் வன்னிக்குள் ஊடுருவி சிறுசிறு தாக்குதலில் ஈடுபட்டன. நிலமை மோச மானதால் கலக்டர் ரேணர் திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நிலைகொண்டிருந்த ஆங்கிலப் படைகளுக்கு செய்தி யனுப்பினான்.
மீண்டும் வன்னியை நோக்கி ஆங்கிலப் படைகள் (181) புறப்பட் டன. வன்னியின் கிழக்கு எல்லையில் திருகோணமலைப் படையணியை தங்கை நல்லநாச்சான் வன்னிச்சியும் மேற்கு எல்லையில் மன்னார் படையணியை தங்கை உமாச்சியா வன்னிச்சியும் எதிர்கொள்ள யாழ்ப் பாணத்திலிருந்து வந்த பெரும் படையணியை மாங்குளத்துக்கும் முறி கண்டிக்கும்மிடையில் (18ம் போர் எனத் தற்போது அழைக்கப்படும் இடம்) பண்டார வன்னியன் எதிர்கொண்டான். உக்கிரமாக இடம்பெற்ற இச்சண்டையில் பண்டார வன்னியன் பின்வாங்கி மீண்டும் உடையூரில் தனது தாக்குதலைத் தொடுத்தான். குண்டு காயங்களுக்குள்ளான இவனை வீரர்கள் இரவோடிரவாக பனங்காமம் கொண்டு வந்து சிகிச் சையளித்தனர். எனினும் மறுநாளே அந்த மாவீரன் மரணத்தை தழு வினான். அதேபோன்று தங்கை உமாச்சியா வன்னிச்சியும் அப்போரில் வீர மரணமடைந்தாள். சேதியறிந்த தங்கை நல்லநாச்சான் வன்னிச்சியும் அவனின் காதலி குருவிச்சை வன்னிச்சியும் கார்த்திகைக் கிழங்கை வெல்லவூர்க் கோபால் 98

தமிழக வண்னிேயரும் ஈழத்து வன்னியரும் யுண்டு தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகின்றது.
தனது 21ம் வயதில் அரசுப் பொறுப்பேற்றுக்கொண்ட பண்டார வன்னியனின் ஆட்சிக்காலம் முழுக்கமுழுக்க அன்னியரை எதிர்ப் பதிலேயே கழிந்தது. நீண்ட காலமாக தான் விரும்பியிருந்த காதலியைக் கூட கைப்பிடிக்க முடியாமல் தனது 34ம் வயதில் அவன் மரணமடைய நேரிட்டது. வன்னி மண்ணின் மானத்தைக் காக்க தனது சந்ததியைக்கூட அவன் பறிகொடுத்தான். ஆங்கில அரசோ பண்டார வன்னியனுக்கு உரித்தான பண்டாரிக்குளம் உட்பட பெரும் வயல் நிலப்பரப்பைக் கப்டன் டிறிபேக்குக்கு பரிசளித்துப் பாராட்டியது. 1865 வரையும் அவ னின் சந்ததியினர் அவற்றைப் பராமரித்து வந்துள்ளனர்.
பாதுகாப்பு அரணாக விளங்கிய வன்னிப் பிரதேசம் முற்றாக ஆங்கிலேயரிடம் வீழ்ச்சியுற்ற நான்கு ஆண்டுகளில் (1815) மலையக மான கண்டி இராச்சியமும் வீழ்ச்சியடைய நேரிட்டது. கண்டியை ஆண்ட வேலூர் கண்ணுச்சாமி நாயக்கன் (சிறி விக்கிரமராஜசிங்கன்) சிறைப்பிடிக்கப்பட்டு இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான். இதன்மூலம் இலங்கை முழுவதும் ஆங்கிலேயரின் ஆட்சியின்கீழ் வந்தது.
கற்சிலை மடுவிலுள்ள நடுகல்லும் குமுளமுனையிலுள்ள பண் டார வன்னியன் கிணறு மற்றும் பண்டார வன்னியன் வளவும் பண்டா ரிக் குளமும் அவனது நாமத்தைக் காலந்தோறும் பேசிக்கொண்டே யிருக்கும். உலகில் கடைசியாக அன்னியரிடம் வீழ்ச்சியுற்ற தமிழர் இராச்சியமாக வன்னி மண்ணே திகழ்கின்றது.
வெல்லவுர்க் கோபால் 9

Page 58
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
தமிழக -ஈழ வன்னியர்கள்
- வாழ்வியல் ஒப்பீடு -
ஈழத்தே வன்னிப் பிரதேசத்தின் நிலப்பரப்பில் பெரும்பாலா னவை மருதமும் முல்லையும் கலந்தவையாகவே அமைந் துள்ளன. பொதுவாக இந்நிலப் பகுதியே மக்களது வாழ்விய லில் மரபுவழிப் பண்பாட்டுப் பேணலுக்கு முக்கிய இடமளித் துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. தமிழக-ஈழ வன்னியர் களது வாழ்வியல் ஒப்பீடு தொடர்பாக தொடர்புபட்ட ஒரு பிரதேசமாக விளங்கும் செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண் ணாமலை மாவட்டங்களைச் சார்ந்த விவசாயக் கிராமங்களில் வன்னியகுல மக்கள் பரவலாக வாழுகின்ற சில கிராமங்களில் நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
வெல்லவுர்க் கோபால் 100

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
இது விடயத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் திரு.செல்லத்துரை அவர்களும் திரு.குணரெத்தினம் அவர்களும் பெரிதும் ஒத்திழைப்பு நல் கியதோடு வன்னி தொடர்பான பல்வேறு தகவல்களையும் தந்துதவினர். காலத்தால் அவர்கள் செய்த உதவி என்றும் நெஞ்சில் நிற்பதாகும்.
வாழ்வியல் ஒப்பீடானது மானிடவியலோடும் சமூகவியலோடும் ஒன்றியதாகும். வாழ்விடச் சூழலும், காலச் சூழலும் வாழ்வியல் பரிமா ணங்களை நிர்ணயிக்கும் தன்மை வாய்ந்தவை. தொழில்முறைகள், வழிபாடுகள், சடங்குகள், வழிவழியாகப் பேணப்படும் மரபுவழிச் சம்பிரதாயங்கள் எல் லாமே சமூக அமைப்புக்களை எல்லை தாண்டாத கட்டுப்பாட்டுக்குள் நிறுத்தி வைக்க உதவுகின்றன. புறவழித்தாக்கங்கள்; ஊடுருவல்கள் மூலம் சமுதாயக்கோப்பினுள் புகுதலை முற்றாகத் தடுத்துநிறுத்திவிட முடியாது போனாலும், தங்களுக்கான சில முக்கிய பழக்கவழக்கங்களை இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் சில சமூகங்களும் இருக்கவே செய் கின்றன.
ஈழத்தே வன்னி மக்களின் சில வாழ்வியல் பண்பாடுகள் நீண்ட காலமாகவே ஒரு கட்டுக்கோப்பினுள் அமைந்திருப்பதற்கு அவர்களில் இன்னும் பலர் தாங்கள் ஒரு பெருமைமிக்க இனத்தின் வழிவந்தவர்கள் எனக் கருதுவதே. கலப்பற்ற ஒரு இனக்குழுவாக தங்களை அடையா ளப்படுத்தவே இவர்களில் பெரும்பான்மையினர் இன்றும் ஆர்வம் கொள்ளுகின்றனர். இதனால் பிற சமூகங்களைக் குறைத்து மதிப்பிடு வதாக பொருளில்லை. மற்றையோரை மதித்து நடக்கவும் முகம் கோணாது உபசரிக்கவும் என்றும் இவர்கள் பின் தங்கியதேயில்லை.
வடதமிழகத்தில் நாம் சுற்றிப் பார்த்த பன்னிரண்டு கிராமங்களும்
வெல்லவூர்க் கோபால் 101

Page 59
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் பொதுவாக இதே நிலைப்பாட்டையே எம்மால் அவதானிக்கமுடிந்தது. இவர்களில் பலர் எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் மதமாற்றத்தை விரும் பாது தாங்கள் என்றும் இந்துக்களாக வாழவிரும்புவதாகவே எம்மிடம் கூறினர். இதனால் ஐரோப்பியர் காலம் முதல் தங்கள் சமூகம் அடைந்த பாதிப்புக்களை இவர்களில் கற்றோர் பலர் விளக்கிக் கூறினர்.
கல்வி வசதிகளை இழந்து அதனால் தாங்கள் பல்வேறு நிலை களிலும் பின்னடைவைச் சந்தித்தபோதிலும் சென்னை, புதுவை மற்றும் நகரங்களை ஒட்டிவாழ்ந்த தமது சமூகத்தினர் கல்வியில் மேம்பாடுற்று உயர் நிலையில் வாழ்ந்து வருவதையும் சில பெரியவர்கள் சுட்டிக் காட்டினர். இந்த மாற்றமானது பண்டைய வன்னிப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டிருப்பதை அவதானிக்கமுடியும்.
இம்மக்களின் வாழ்வியலில் குறிப்பிடத் தக்க அம்சமாகக் கருதப் படுவது வழிபாட்டியலாகும். மக்களுக்கு நலமான வாழ்வினையும், பிற ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பினையும் அளித்து நோய் நொடி களையும் தீர்க்க தெய்வ வழிபாடே உகந்தது என்பதனை இம்மக்கள் முழுமையாக நம்புகின்றனர். இவர்கள் தங்களது பரவணித் தெய்வங்கள் அல்லது குலதெய்வங்களையே காவல் தெய்வங்களாகவும் வைத்துள் ளனர். ஊரின் பொதுவிடங்களில் பிள்ளையார், முருகன், சிவன், விஷ்ணு போன்ற பெருந்தெய்வங்களுக்கு ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தா லும் மாரி, காளி, வைரவர், ஐயனார், நரசிங்கர், காத்தவ ராயர், நாக தம்பிரான், கங்காதேவி, பேச்சி, கருப்பண்ணாசாமி போன்ற சிறு தெய் வங்கள் குலதெய்வங்களாக அமைந்துள்ளன. எவ்வளவோ வைத்திய வசதிகள் பல்கிவிட்ட இக்காலகட்டத்திலும் சூழ்நில காரணமாகவும் தொற்றிக்கொள்ளும் தன்மையினாலும் பீடிக்கின்ற நோய்களைப் போக்க வழிபாடு மற்றும் மந்திர முறைகளில் இம்மக்களுக்குள்ள நம்பிக்கையானது அவர்கள் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டதாகும்.
வெல்லவூர்க் கோபால் 102

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் பொதுவாக ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டு கிராம பூசாரிகளே பூசை செய்கின்றனர். சில ஆலயங்களில் பரம்பரைப் பூசகர் முறையும் தென் படுகின்றது.சமஸ்கிருத சுலோகங்களையோ மந்திரங்களையோ இவர்கள் உச்சரிப்பதில்லை.
வருடாந்த சடங்குகள் இடமபெறும்போது பெருமளவில் மக்கள் கூடுவர். உறவுமுறைக் கிராமங்களிலிருந்தும் கூட்டங்கூட்டமாக மக்கள் வருவர். அவர்கள் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் வரும் போது ஆடிப்பாடி மகிழ்வர். இது ஊராரின் மத்தியில் பெரும் உற்சா கத்தினை ஏற்படுத்தும். அயற்கிராமங்களிலிருந்து வருவோர் இரண்டு மூன்று தினங்கள் தங்கிச்செல்வதுமுண்டு. சிலர் தங்களது உறவினர் களின் இல்லங்களில் விருந்தினராக இருப்பர். சிலர் தாங்கள் கொண்டு வரும் பாத்திரங்களில் சமையல் செய்து கூடியிருந்து உண்பர்.
பொதுவாக குலதெய்வங்களுக்கான ஆலயங்கள் சிறியனவா கவே அமைந்திருக்கும். இவ்வாலயத்தை அண்டியதாக ஏனைய தெய் வங்களுக்கும் குறிப்பாக பிள்ளையார், முருகன், மாரி, வைரவர், போன்ற வற்றிற்கும் சிறிய அளவில் கோவில்களிலிருக்கும். விழாவின்போது ஆலயத்துக்கு முன்னால் பந்தலிட்டு வாழை, கரும்பு, தென்னைஓலை, மாவிலை, வேப்பங்குழை, பூக்கள் என்பன கொண்டு அலங்கரிப்பர். சடங்கின் போது நேர்த்தி செலுத்துதலும் பூசகர் அல்லது இதற்காக உள்ளவர்கள் (ஆண்-பெண் இருபாலரும்) தெய்வ உருக்கொண்டு ஆடுதல், தெய்வ ஆணையாக அருள்வாக்கு சொல்லல், பீடித்துள்ள நோய்கள் நீக்குவதற்கான பரிகாரம் பண்ணல் எல்லாமே இடம்பெறும். இவ்விழாவின்போது உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்தித்து உறவாடி மகிழ்தல் முக்கிய நிகழ்வாக அமையும். புதிய ஆல்களும் இவ்விழாவின்போது தலையெடுப்பதுமுண்டு. பொதுவுது நிற்படி வழி பாட்டு முறைகள் பழமைபேணும் வன்னிக் ஆழியிளிேடையேயும்
வெல்லவூர்க் கோபால் 03

Page 60
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் இன்றும் அவதானிக்கத்தக்கனவாகவுள்ளது.
ஈழத்து வன்னிக் கிராமங்களைப் போன்றே தமிழகத்தில் அவதா னிக்கப்பட்ட வன்னிக்கிராமங்களிலும் விவசாயத் தொழில் முறைகள் அமைகின்றன. இவை நீண்ட கால மரபுவழியின்பாற்பட்டதாகவே தென்படுகின்றன. வயல், தோட்டம் அல்லது பண்ணையில் தொழில் ஆரம்பிக்கும்போது மேற்கொள்ளப்படும் வழிபாட்டு முறைகள் நிலத் தைப் பண்படுத்தி, நாற்று நட்டு அறுவடைசெய்யும் வரை மேற்கொள் ளப்படும் பல்வேறு கருமங்கள் மற்றும் அறுவடையின் பின்னர் செய் யப்படும் பொங்கல் வன்னியோடு மட்டக்களப்பினையும் சேர்த்துப் பார்க்கத் தூண்டுகின்றது.
அடுத்து பெரிதும் நம் கவனத்தை ஈர்ப்பவை அக்கிராமங்களின் வாழ்விடங்களும் அவற்றின் கட்டமைப்புமாகும். சூடான காலத்துக்கும் குளிரான காலத்துக்கும் ஏற்றவகையில் தாழ்வான கூரைகளைக்கொண்டு களி மண்ணாலான சுவர்களோடு வைக்கோலினால் வேயப்பட்டு சாணத் தால் அழகாக மெழுகப்பட்ட தள அமைப்பைக்கொண்ட சிறுசிறு வீடு களை இக்கிராமங்களில் காணமுடியும். இவ்வீடுகளுக்கு முன்னால் தனியாக நான்கு பக்கமும திறந்தாற்போல் அரைச்சுவரோடு கூடியதாக சிறு வரவேற்புக் கூடங்களும் பல இடங்களில் அவதானிக் கக்கூடியதாக இருந்தன. அங்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பாய் விரித்து அமரச்செய்து உபசரிக்கவும் உரையாடவும் இவை அமைக் கப்பட்டுள்ளன.
பரம்பரை வழியிலோ அன்றேல் பண்பாட்டு நெறிமுறைகளிலோ வந்த பெரியவர்கள் அக்கிராமங்களில் தென்படுகின்றனர். இப்பெரியவர் களின் வ்ார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு மதிப்பளித்து மரியாதை செலுத் தும் நெறிமுறைகள் பல கிராமங்களில் காணப்படுகின்றன. கிராம மக்க
வெல்லவுர்க் கோபால் 104

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் ளின் அனைத்துப் பிரச்சனைகளிலும் இப்பெரியவர்கள் பங்குகொள்வ தும் தீர்வு காண்பதும் நம் கவனத்தைப் பெரிதும் ஈர்ப்பனவாகவே உள்ளன.
அண்மைக் காலத்தே இக்கிராமங்கள் சில அரசியல் ரீதியான தாக்கங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் அவர்களது கூட்டு வாழ்க்கை முறையில் தளர்ச்சியேற்பட்டிருப்பது தெரிகின்றது. இது காலப்போக்கில் மேலும் சமூகப் பிரிவினைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சநிலை நல்லுளம் படைத்த பலரிடமுமிருக்கவே செய்கின்றது. உள்ளூர் அரசியல்வாதிகளே இதற்கு முழுக்க முழுக்கக் காரணமாகின்றனர்.
ஈழத்தைப் பொறுத்தவரை போர்க்கால சூழ்நிலைத் தாக்கங்களை வன்னிப் பிரதேசம் உள்வாங்கியிருந்தாலும் மரபுவழிப் பண்பாடுகளுக்கு அவை அச்சுறுத்தலாக அமையவில்லை.
தமிழகத்தின் பாரம்பரிய வன்னிய மக்களின் வாழ்வியலும் மாற்
றத்துக்கு உட்படாத ஈழத்து வன்னிக் கிராமங்களின் வாழ்வியலும் ஒத்த
தோற்றத்தைக் கொண்டிருப்பது தமிழக ஈழத் தமிழரிடையே ஒற்றுமை உணர்வினைப் பிரதிபலிக்க வாய்ப்பாகின்றது.
இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் இரு நாட்டுத் தமிழ் சமூகங்களது ஒரே அடியின்பாற்பட்ட வேர்களைக் கண்டறிய வழிபிறக்கும். இதுவே உலகெலாம்பரந்துகிடக்கும் தமிழனை ஒன்றிணைக்கவும் இன உணர்வின்பால் அவனை ஈர்க்கவும் வாய்ப் பினை ஏற்படுத்தும். அந்த நல்ல குறிக்கோளை நோக்கி நம் பயணத் தைத் தொடர்வோம்.
வெல்லவுர்க் கோபால் 05

Page 61
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
சாண்றாதாரங்கள் :
01. தொல்காப்பியம் (சொல்லதிகாரம்) உவே.சாமிநாதையர் உரை 02. கலிங்கத்துப் பரணி -செயங்கொண்டார் (கழக வெளியீடு) 03. தமிழ்நாட்டு எல்லைகள் -மு.ஆரோக்கியசாமி 04. சிலப்பதிகாரம் (ஆய்ச்சியர் குரவை உவேசாமிநாதையர் உரை 05. தமிழக வரலாறும் பண்பாடும் -வேதிசெல்லம் 06. வன்னியர் - நடன காசிநாதன் 07. வீர வன்னியர் கதை - அரு.ராமநாதன் 08. சிலை எழுபது - கம்பர்
09 இடங்கை வலங்கைப் புராணம் 10. கருணாகரத்தொண்டை வன்னியனார் சதகம் 11. அரியலூர் மழவராயர்கள் -ஆர்.ராமேஷன் 12. வன்னியர் உரிமை முழக்கம் -எழில் நிலவனார் 13. யாழ்ப்பாண வைபவ விமர்சனம் -எஸ்.ஞானப்பிரகாசர் 14. யாழ்ப்பாண வைபவ மாலை -கே.சபாநாதன் 15. பாழையப் பட்டுக்களின் வரலாறு -க.குழந்தைவேலன் 16. மட்டக்களப்பு மான்மியம் -FXC.நடராசா 17. மட்டக்களப்புத் தமிழகம் -VC.கந்தையா 18. மட்டக்களப்பு மான்மிய ஆராய்ச்சி - கே.தனபாக்கியம் 19. மட்டக்களப்பு குகன்குல முற்குகர் வரலாறு -ஞா.சிவசண்முகம் 20. சம்புவராயர் வரலாறு -கோதங்கவேலு, இலதியாகராசன் 21 கல்வெட்டு காலாண்டிதழ் -நடன காசிநாதன் கட்டுரைகள் 22. குளக்கோட்டன் தரிசனம் - கதங்கேஸ்வரி
வெல்லவுர்க் கோபால் 06

தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
23
24
25
26
சூளவம்சம்
மகாவம்சம்
தக்ஷண கைலாச புராணம் - இந்துக் கலைக் களஞ்சியம் - இந்து சமய கலாசார அமைச்சு கொழும்பு)
27. ஈழத்து தமிழ் நாடக அரங்கு - கலாநிதி சிமெளனகுரு
28
29
30
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48
தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புக்கள்-சுப.அறவாணன் தமிழர் நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் -க.காந்தி தமிழ்நில வரலாறு -கோதங்கவேலு Kanchipuram in early south Indian History-TV.Mahalingam
பண்டார வன்னியன் விழாமலர் -வவுனியா மருதநிலா -வவுனியா இலக்கிய விழா மலர் 1996 Manuel of the Vanni District -J.P. Louis வன்னியும் வன்னியரும் -C.S.நவரெத்தினம் வன்னியர் -கலாநிதி சி.பத்மநாதன் SriLanka Tamil Society and Politics -Prof.K.Sivathamby ஈழத்து வாழ்வும் வளமும் -பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை மாகோன் வரலாறு -கதங்கேஸ்வரி மட்டக்களப்பு சைவக் கோவில்கள் - வி.சி.கந்தையா Laws and Customs of Tamil of Ceylon-H.W.Thambiah Ancient Jaffna -Mudaliyar Rasanayagam சோழர் காலத்து அரசியல் பண்பாட்டு வரலாறு -மபாலசுப்பிரமணியம் விஷ்ணுபுத்திரன் வெடியரசன் -மு.சிவப்பிரகாசம்
புறநாநூறு
அகநாநூறு கொச்சின் பழங்குடிகளும் சாதிகளும் -அனந்த கிருஷ்ண ஐயர் திருவாங்கூர் பழங்குடிகளும் சாதிகளும் -அனந்த கிருஷ்ண ஐயர
வெல்லவுர்க் கோபால் 107

Page 62
மிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
böjtööfuJGÜEbbi
ஆலோசனை வழங்கியவர்கள்
01. பேராசிரியர் ஆர்.சுப்பிரமணியன் M.A.M.Lit Ph.D அவர்கள்
02. திரு.வி.குழந்தைவேலு M.A.M.Ed. அவர்கள்
03. திரு.கே.எஸ்.முருகேசன் M.A,B.L அவர்கள்
04. திருஎஸ்ஈபாலகிருஷ்னன் M.A.M.Lit.PG.D.A அவர்கள் நாகர்கோவில)
05. திரு.ரி.சபாநாதன் M.A அவர்கள், திருவனந்தபுரம்
06. குருவாயூர் சோதிடமணி திரு.எம்.கேசவப்பணிக்கர் B.A அவர்கள்
07. பாலக்காடு திரு.பி.எஸ்.கிருஷ்னப்பணிக்கர் M.SC அவர்கள்
08. காட்பாடி திரு.M.ஜோசப் M.A.MEd. அதிபர்
தகவல் சேகரிக்க உதவியவர்கள் :
01. திருச்சி - திரு.ஆர்.சுந்தர்ராஜன், திரு.ரி.பாலசுந்தரம்
02. மயிலாடுதுறை - திரு.ரிதங்கராசு
03. சிதம்பரம் - திரு.எஸ்.சந்திரசேகரன்
04. விருத்தாசலம் - திரு.பிராமலிங்கம்
05. கடலூர் திரு.ஐதிருநாவுக்கரசு. திரு.கே.வேலாயுதன்
06. புதுவை - திரு.ரி.இராமகிருஷ்னன்
வெல்லவுர்க் கோபால் 108

தமிழக வன்னியரும் ஈழத்து வண்ணியரும்
07. பண்டுருட்டி - திரு.எஸ்.பாலு
08. பல்லாவரம் - திரு.ஆர்.வைத்திலிங்கம்
09. தாம்பரம் - திரு.ஏ.சிதம்பரநாதன்
10. காஞ்சி புரம் - திரு.ரி.ஆறுமுகம்
11. செங்கல்பட்டு - திரு.பிமாணிக்கவேல்
12. திண்டிவனம் - திரு.ஐராஜூ
13. விழுப்புரம் -திரு.பி.துரைசாமி
14. உளுந்தூர்ப்பேட்டை - திரு.ரி.குமாரசுவாமி 15. திருவண்ணாமலை - திரு.வி.பழனிவேல் 16. அம்பத்தூர் - திரு.வேலு சண்முகம்
17. வேலூர் - திரு.கே.பத்மநாதன்
18. சேலம் - திரு.ஆர்.சுந்தரம்
19. ஆத்தூர் - திரு.பி.ஏகாம்பரம்
20. தருமபுரி - திரு.ஈ.ராமமூர்த்தி
21. அரியலூர் -திரு.சி.குமாரவேல்
வெல்லவுர்க் கோபால் 109

Page 63
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்
விபுலத்தின் வெளியீடுகள் ހާރަހި%//
卷
1. பழையதும், புதியதும் 1992
(கலாநிதி சிமெளனகுரு)
2. தான்தோன்றீச்சரம் 1992
(வெல்லவூர்க்கோபால்
3. புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை 1993
(எஸ்.எதிர்மன்னசிங்கம்)
4. சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும் 1993
(கலாநிதி சிமெளனகுரு)
5. முற்றுப்பெறாத காவியம் 1994
(வெல்லவூர்க் கோபால் 6. பாரதியாரின் பெண் விடுதலை 1996
இலக்கியக் கருத்து காலம் (சித்திரலேகா மெளனகுரு ) 7. மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் 1998
(கலாநிதி சிமெளனகுரு) 8. இராவணேசன் நாடகம்) 1998
(கலாநிதி சிமெளனகுரு) 9. மட்டக்களப்பு குகன்குல முற்குகர் 2OOO
வரலாறும் மரபுகளும் 8- -ஞா.சிவசண்முகம்10. வனவாசத்தின் பின் 2001
-பேராசிரியர் சிமெளனகுரு1. தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் 2003
-வெல்லவூர்க் கோபால்தொடர்புகளுக்கு : *விபுலம்’
(தேசிய சாகித்திய மண்டலப்
பரிசு பெற்றது. இந்து கலாசார அமைச்சின்
விருது.
(பிரதேச சாகித்திய மண்ட
-லப் பரிசு பெற்றது)
(தேசிய சாகித்திய மண்டலப்
பரிசு பெற்றது)
7, ஞானசூரியம் சதுக்கம் மட்டக்களப்பு. தொ.பே.065-23639
வெல்லவூர்க் கோபால் 10


Page 64
வெல்லவூர்க் கோபால் என கோபாலசிங்கம் எனக்கு பத்து வயதில் அறிமுகம சமூக நலநாட்டமும் செ கொண்டவராக இருந்தார் இருக்கின்றார்.
சமூகஅநீதிகளுக்கெதிரா எதிராகவும் கொதிக்கும் L கவிதைகள், பேச்சுக்க கருத்துக்களை அவர் வெளி அவரது இயல்பு அவரது வெளிநாடுகளில் பெற்ற வ -gବll it #) if $ଶନୀ ଶୀ ଶନୀ ଶT
சிந்தனையாளனாக ஆய் பேச்சாளனாக ஆரம்பித் கவிஞனாக அறியப்பட் கனிந்துள்ளார். சமூக அர களைந்து மானுடத்தைக் அவர்களைப் பூரண விடு வகையில் அவரது ஆய்வு எதிர்பார்ப்பு நம்பிக்கை
 

இலக்கிய உலகில் அறியப்பட்ட அவரது மாணவப் பருவத்தில் ானவர். மாணவப் பருவத்தே யற்துடிப்பும் படிப்பார்வமும் இன்று வரை அடிப்படியே
கவும் ஏற்றத் தாழ்வுகளுக்கு மனம் கொண்டவர் அவள் தன் சர் செயல்கள் மூலம் தன் பிப்படுத்தினார் நிறைய வாசிப்பது இயல்பான தேடலும் உள்நாடு ழ்பனுபவங்களும் நூற்கல்வியும் அகலித்தன. இன்று ஒரு வாளனாக காட்சி தருகின்றார். து எழுத்தாளனாக வளர்ந்து, டு இன்று ஆய்வாளனாகக் நீதிகளை ஏற்றத்தாழ்வுகளைக் கட்டிய தளையெலாம் அறுத்து தலைக்கு இட்டுச் செல்வத்தக்க புகள் அமையும் என்பது எனது
பேராசிரியர் சி. மெளனகுரு கிழக்குப் பல்கலைக்கழகம்,