கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வயற்காற்று

Page 1


Page 2

வயற்காற்று
தெல்லிப்பழைக் கிராமத்தைப் பற்றிய ஒரு ஆவணம்
நாகலிங்கம் சிறிகெங்காதரன்

Page 3
வயற்காற்று
தெல்லிப்பழைக் கிராமத்தைப் பற்றிய ஒரு ஆவணம்
எழுத்தும் தொகுப்பும் பதிப்பு வெளியீடு
பக்கங்கள் கணனிப் பதிவு அச்சுப்பதிவு
பதிப்புரிமை
நாக சிறிகெங்காதரன் முதற்பதிப்பு: 08 பெப்ரவரி 2005
அம்பனை-கலைப்பெருமன்றம் (ஐஇ) “Arivakam” 13 Arcus Road,
Bromley, Kent BR14NN
United Kingdom Tel : +44 (0)2086982938 XVI -- 130 கெங்கா, ஆனந்தி, கெளரி Techno Print, 55, E A Cooray Mawatha, Colombo 6, Sri Lanka. Mobile : O777 30 1920
அம்பனை-கலைப்பெருமன்றம் (ஐஇ)

இளமைக்கால இலட்சிய வாழ்க்கை சந்தோசமாக அமைய கரம்கோத்து துணைநின்ற என்னுடைய நண்பர்களின் இனிய நட்புக்கு இந்நூல் சமர்ப்பணம்
கெங்காதரன்

Page 4

அணிந்துரை
திரு. பொ. கனகசபாபதி தெல்லிப்பழை - மகாஜனக் கல்லூரியின் முன்னாள் அதிபர்
தெ ல்லிப்பழை ஒரு அதிசயமிக்க கிராமம். வேறு எந்தக் கிராமத்திலே அருகருகே இத்தனை பெரிய இரு கல்லூரிகளைக் காணமுடியும். "உதயதாரகை" பத்திரிகையின் பத்திராதிபராக விளங்கிய அலன் அபிரகாம் அவர்கள்,
"திருவள ரிலங்கா சிரமென யாண்டும் பெருவளம் பொலிந்து பிறங்குயாழ்ப் பாணச் சீருறை நாட்டின் திலகமே யாகும் ஏர்பெறு தெல்லிநல் லெழில் நகர்" எனத் தெல்லிப்பழையினைப் போற்றுகிறார் என்றால் அத்திலகத்தின் சந்தனமாயும் குங்குமமாயும் விளங்குபவை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியும் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியுமேயாகும்.
இருபெரும் பாடசாலைகள் தோன்றி அபரிமிதமாய் அருகருகே வளருவதென்றால் அக்கிராம மக்கள் கல்வியில் காட்டிய அக்கறை, கல்வியறிவினால்த்தான் சமூகமேம்பாடு சாத்தியமாகும் என்ற உணர்வு இக்கிராம மக்களை ஏனைய கிராமங்களிலிருந்து தனித்துவம் வாய்ந்தவர்களாக்கிக் காட்டுகிறது. 1865 ஆம் ஆண்டிலேயே தமிழ்க் கல்வி புகட்டுதற்கு பன்னாலையில் பள்ளிக் கூடம் ஒன்று தோன்றியதால்தான் அடுத்த கட்டமான ஆங்கிலக் கல்விபற்றி மக்களை எண்ண வைத்தது என்றால். அது மிகையல்ல.
y / வயற்காற்று

Page 5
எமது பெருமதிப்புக்குப்பாத்திரரான பாவலர் துரையப்பா பிள்ளை அவர்கள்,
"எல்லவரும் துதிக்கும் கல்வியெனும் நிதிக்கும்
நல்ல பரகதிக்கும் நாடும் வழி பதிக்கும்
தெல்லிக் கழகமதை வெல்ல இப்புவிமீது வல்ல கழகமேது?" என மார்தட்டுகிறார்.
தெல்லிப்பழை மக்கள் மார்தட்டுவதற்கு நிறையவே காரணங்கள் இருந்துள்ளன. இதனால்தான் தொல்லிப்பழை, அதன் சுற்றாடல் மாத்திரமல்லாமல் இலங்கையின் பல்வேறு பாகங்களிலிருந்தும் மாணவர் கல்விப் பசியை போக்குதற்குத் தெல்லிநகர் ஓடிவந்தனர். அவர்களுக்கு இடமளிக்கும் பொருட்டு இரு கல்லூரிகளுமே வளர்ந்தன, வந்தோருக்கு வதிவிடம் தர விடுதிச் சாலைகளையும் கொண்டிருந்தன. gy
வெறும் ஏட்டுக் கல்வி மட்டும் போதுமா?உலக நடப்புக்கள் தெரிந்தால்தானே மனது விசாலமாகும். ஆழுமை விருத்தியுறும். இதற்கெனவே உலகின் முதல் தமிழ்ப் பத்திரிகையாகிய "உதயதாரகை" தெல்லிப்பழையிலேயே 1841ம் ஆண்டிலே பிரசுரிக்கப் பட்டது. g6 Irisoa5u56ör (pg56i grislaša Lugg5f.60dbuT60T "The Morning Star' பிரசுரிக்கப்பட்டதும் தெல்லிப்பழையிலேயே. கேட்பதற்கே ஆச்சரியமாயும் மனதிலே புழகாங்கிதம் ஏற்படுத்துவதாயும். இல்லையா?
கல்வி அறிவு எத்தகைய முற்போக்கு சிந்தனையாளர்களை உருவாக்கித் தெல்லிப் பழையினுக்குப் பெருமை தேடித் தந்துள்ளது என்பதை பாவலர் துரையப்பாபிள்ளை அவர்கள் 1901ம் ஆண்டிலே தனது "கீதரசமஞ்சரி" என்ற கவிதை நூலுக்கு ஆங்கிலத்தில் எழுதிய (p63rg)6OTuj6io alb/T607(pgd5.jpg5!." I claim to be unique,at least as far as Jaffna is concerned; for, without following the beaten track of composing lyrics on personal, religious or dramatic themes, which have had, at any rate, a portion of their off attention at worthier hands than mine, and inspite of the thought that praising God is the noblest use to which the poetic genius of one can be put, my muse has preferred to sing on subjects of moral and general utility, the verses on which can be used irrespective of Creed.” தெல்லிப்பழையை உலகறிய வைத்த அந்தப் பெருமகனார் சமூக சீர்திருத்தம் பற்றியே பாட்டிசைத்தார். பரமனைப் பாடுதல் இரண்டாம் பட்சமாயிற்று. ஒருவர் பெற்ற கல்வி அச்சமூகத்தின் மேம் பாட்டிற்கே உதவ வேண்டும் என்பதை தெல்லிப்பழை உலகறியச்
வயற்காற்று /vi

செய்தது துரையப்பா பிள்ளையின் பாட்ல்கள் மூலமாக என்பதைச் "சிந்தனைச் சோலை" பார்த்தவர்கள் உணர்வார்கள்.
1960ஆம் ஆண்டிலே இலங்கை அரசு பாடசாலைகளை அரசுடமையாக்க முனைந்த பொழுது, மாணவர்களுக்குத் தேசியக் கல்வி அவசியம், அதனை சீராக வழங்குதற்குப் பாடசாலைகளை அரசுடமையாக்க வேண்டியது முக்கியம் என உணர்ந்து யாழ்ப்பாணத்துத் தனியார் பாடசாலைகளிலே முதற் பாடசாலையாக அரசிடம் கையளித்த பாடசாலையும் தெல்லிப்பழையினைச் சார்ந்ததே.
இப்படியாக துர்க்கை அம்மன் ஆலயம், தந்தை செல்வா என நிறையவே தெல்லிப் பழையினைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம். ஆனால் அதைத்தானே தம்பி சிறீகெங்காதரன் சுவைபடச் சொல்லப் போகிறார்.
தெல்லிப்பழை எப்படி ஒரு அதிசயக் கிராமமோ அப்படியே சிறீ கெங்காதரனும் ஒரு அதிசயப் பிறவி. அவருக்கு நாளொன்றில் எத்தனை மணி உள்ளது என்றால் தெரியாது. அவருக்கு நாளென ஒன்று இருப்பதே தெரியாது. அப்படிப் பட்ட உழைப்பாளி. எங்கெங்கு நல்லன நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் இருப்பார். இருப்பார் என்பதிலும் உழைப்பார் என்பதே மிகப் பொருத்தும். குறுகுறுக்கும் அவர் மனது ஏதாவது செய்யவேண்டும் என தவித்த வண்ணமே இருக்கும். அவரின் பேரதிருஷ்டம் அவருக்குக் கிடைத்த மனைவி ஜெயகெளரி. கணவர் மகாஜனவுக்கு அருகே அதன் காற்றைச் சுவாசித்தடி என்றால் இவர் யூனியனுக்கு அருகே அதன் காற்றை நுகர்ந்தபடி இருந்தவர். இருவருமே இன்று தமது பாடசாலைகளுக்காக அரும் பணியாற்றுகின்றனர்.
தெல்லிப்பழையைப் பற்றி அதன் சிறப்பைப் பற்றி, அங்கு வாழ்ந்த பெரியார்கள் பற்றியும் அவர்கள் பணிகள் பற்றியும் சிறப்பாக எழுதுதற்கு சிறீ கெங்காதரனிலும் பார்க்கச் சிறந்தவர்கள் இருத்தல் சாத்தியமில்லை. நான் இதனை வெறும் புகழ்ச்சிக்காச் சொல்லவில்லை. அவர் தகுதி கண்டே கூறுகிறேன்.மகாஜக் கல்லூரியில் கற்கும் போதுசாரணியத்தின் தலைவராகவும் இராணிச்சாரணராகவும் இருந்ததோடல்லாமல் அம்பனைக் கலைப் பெருமன்றத்தையும், சூட்டிங் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தையும் நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்துச் சிறப்புற இயக்கியவர்.
vil / வயற்காற்று

Page 6
ஐக்கிய முன்னணி அரசுடன் பொதுவுடமைக் கட்சி இருந்த காலத்திலே காங்கேசந்துறை அபிவிருத்திச் சபையின் செயலாளராக மிகவும் ஈடுபாட்டுடன் உழைத்தவர் கெங்கா.தெல்லிப்பழை கம்யூ னிஸ்ட் வாலிபர் சங்கத்தின் செயலாளராகவம் யாழ் பிராந்தியத்தின் உதவிச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். கெங்காவின் ஊர்பற்றிய அறிவின் விசாலத்தை காண்பிப்பதற்காவே இவை அனைத்தையும் சொன்னேன். இன்னும் சொல்லலாம். சொல்லமுடியும். சொன்னது போதும்.
நான் பிறந்தது, வளர்ந்தது சண்டிலிப்பாய். புகுந்தது, வாழ்ந்தது காங்கேசன்துறை. எனக்கு வாழ்வழித்தது, வளம் சேர்த்தது தெல்லிப்பழை. எனது வாழ்வில் இருபத்தி ஐந்து வருடங்கள் தினசரி எனது பகற் பொழுது தெல்லிப்பழையிலேயே கழிந்தது என்றால் அது மிகை அல்ல. மகாஜனக் கல்லூரியுடன் அதன் மூலமாகத் தெல்லிப்பழையுடன் எனக்கேற்பட்ட தொடர்பு எனது வாழ்வின் குபேர சம்பத்து.
தெல்லிப்பழை பற்றி திரு. கெங்கா அவர்கள் "தமிழர் தகவல்" சஞ்சிகையில் எழுதிய சில கட்டுரைகளை வாசித்து அவற்றில் காணப்படும் விபரம் கண்டு அதிசயித்துள்ளேன். விபரமான நூலாகக் காண ஆசைப்படுகிறேன்.
கெங்காவின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். அவர் பணி தொடரட்டும்.
அவரைப்போல இன்னொருவரா? கண்ணாடியில் தான்பார்க்க வேண்டும்.!!
6uuupið5pb.gp / viii

தெல்லிப்பழை பற்றிய தேடலும் நினைவுகளும்
திரு. ஆ. சிவநேசச்செல்வன் பிரதிப் பணிப்பாளர் இலங்கை இதழியல் கல்லூரி
உலகத்தை ஒரு நாடாக மாற்ற முடியும் என்ற "கவித்துவக்கனவு" அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ கலங்கிக் கொண்டிருக்கின்றது. வாழ்க்கைப் போராட்டங்களின் மத்தியிலே கடந்த காலத்து நிகழ்வுகளையும் அனுபவங்களையும் நிகழ்காலத்தோடு இணைத்து இரைமீட்டுப் பார்ப்பது ஒரு வகையிலே அற்புதமானது மட்டுமல்ல, சுவையானதும் கூட.
'மனோன்' என்று கெழுதகை அன்போடு அழைத்து மகிழும் நாகலிங்க மாமாவின் மகன், சிறுவயது முதல் எதையென்றாலும் புதிதாகவும் புதுமையாகவும் செய்ய வேண்டும் என்று புரட்சி மனப்பான்மையோடு சிந்தித்துச் செயலாற்றுபவர். நாக. பூரீகெங்காதரன் மேற்கொள்ளும் இந்த முயற்சி, வெறும் நினைவு மீட்டல் மட்டும் அல்ல, கடந்த காலத்தை அசைபோட வைக்கும் நிகழ்வாகி விட்டது.
பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலான தமது இருபத்தி ஐந்து வருடகாலத்து இல்வாழ்க்கைப்பயணத்தின்நிழலிலே ஒரு சிறிய கிராமத்தின், கனவுகளை இணைத்து நினைவு கூர முற்படுவது ஒரு இனிய சுகானுபவமாக இருக்கின்றது. பாரம்பரியத்தேடலும், வரலாறும் பண்பாட்டின் மூலவிசை. தெல்லிப்பழை என்ற பிறந்த மண்ணையும் அம்பனை என்ற சிறிய குறிச்சியையும் மனதார நேசிக்கும், தம்பி மனோன்' எனது மனவுணர்வுகளைக் 'கிளற' முற்பட்டுள்ளமை சற்று இதமாகவிருக்கின்றது.
ix / 6)LupiöSpögpu

Page 7
பிறந்து மொழி பயின்ற காலத்தின் பின் ச்ென்ற நூற்றாண்டின் அறுபதுகளிலே தெல்லிப்பழையைத் தேடும் முயற்சியில் இறங்கி குறிச்சிப் பெயர்களையும், தெல்லிவளவு, தெல்லியம்பளை, தெல்லியன் குடியிருப்பு எனப் பட்டியல் இடமுற்பட்டமை நினைவுக்கு வருகின்றது. மாவை,சின்னக்குட்டிப்புலவர் பாடிய தண்டிகைக் கனகராயன் பள்ளில் உள்ள நீண்ட முடிவுரை முதல் யாழ்ப்பாண வைபவ கொமுதி என்ற கல்லடி வேலுப்பிள்ளையின் வரலாற்று நாள் வரை தேடிப் பார்த்தேன். இது தொடரப்படவேண்டிய நீண்ட வரலாற்றாய்வு.
தெல்லிப்பழையைத் தெல்லிப்போல எனவும் தெலிபொல எனவும், தல்லிப் பள்ளி எனவும், தில்லிப் பள்ளி எனவும் இடப்பெயர் பற்றி ஆராய்ந்த வ.குமாரசுவாமி (1932) கைமண்காசிச் செட்டி (1834) சுவாமி ஞானப்பிரகாசர் (1317) முதலியோர் ஆராய்ந்து, சொற்சிலம்பம் ஆடியுள்ளனர். இடம்பெயர் ஆராய்ச்சி ஒரு புதிய துறையாகவே மாறி. விட்டது.
மொத்தத்திலே பழை என்பது குடியிருப்பு அல்லது மக்கள் வாழும் பகுதி என்று பொருள்படும். யாழ்ப்பாணப்பிரதேசத்திலே தெல்லிப்பழை மட்டுமல்லபளை, புலோப்பளை, பெரிய பழை வராத்துப்பளை, விடத்தற் பளை என்ற பல ஊர்கள் காணப்படுகின்றன. இலங்கையிலே வற்றாப் பளை, பட்டிப்பளை போன்ற ஊர்ப்பெயர்களும் உள்ளன.
மாவிட்டபுரம் தல வரலாற்றோடு இணைந்து, மாருதப்புரவீகவல்லி குதிரை முகம் நீங்கி இளமை பெற்று தல்லிப் பள்ளியில் வாழ்ந்தாள். அதுவே தெல்லிப்பழையாயிற்று என்று கதையும் கூறப்பட்டுள்ளது. நம் பொத்த' என்ற சிங்கள நூலிலே தெல்லிப்பழை என்பது 'தெலிப்பொல என்று கூறப்பட்டுள்ளமையே சுட்டிக்காட்டப்பட்டது.
வரலாற்று ரீதியாகத் தெல்லிப்பளை என்ற கிராமத்தின் நீதி மூலத்தையும் நதிமூலத்தையும் தேட முற்பட்ட பல ஆய்வுகள் சுவாரசியமாக நடந்தேறியுள்ளன. தெல்லிப்பழையிலே, தொண்டை மண்டலத்து காரைக்காட்டு வேளாளர் வந்து குடியேறி வாழ்ந்தனர் என்பது யாழ்ப்பாணக் குடியேற்ற ஆய்வின் மூலம் கூறப்பட்டுள்ளது. கனவாய் நனவாகிப் போன பழைய வரலாற்றின் தொடர்ச்சியாக இப்பொழுது தெல்லிப்பழை என்ற பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாம் புலம் பெயர்ந்து சிதறிப் போயுள்ளனர்.
இந்த வகையிலே பாரம்பரிய குடியிருப்புகளையும் நினைவோட்டப் பதிவுகளையும் சென்ற காலத்தின் பழுதிலாத் திறன்களையும் அசை
வயற்காற்று /x

போடுவது கூட அவசியமானது. நினைவுக்கு எட்டிய வகையிலே தெல்லிப்பழை, தெல்லியம்பதியாகவும் தெல்லிநகராகவும் சிறப்பிக்கப் பெற்றமை கூட வரலாறாகிவிட்டது.
தெல்லிப்பழையிலே 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பேதுருப் புலவர், தமது சந்தியோடுமுடையோர் அம்மானையில் (1647) துங்கமுடி போலுயர்ந்த வல்லிக் கிராமம் எனவும் திருநகராம் தெல்லிக் கிராமம் எனவும் பாடியுள்ளார். இதுபோல, 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாவை,சின்னக்குட்டிப் புலவர், "பங்கமான சங்கதோங்கிய வாவி மாவிடுதெல்லிப்பழைநாளும் வாழ்வ வென்று கூறலாய் குடியிலே" எனப் பாடியுள்ளார். தெல்லிப்பழையில் உள்ள பத்தாவத்தை என்ற பகுதியில் வாழ்ந்த அருளப்பநாவலர் திச்செல்வர் காவியம் என்ற பாரகாவியத்தையே எழுதினார். இவர் தெல்லிநகர் அருளப்பர் எனச் சிறப்பிக்கப்படுகின்றார்.
போர்த்துக்கேயராட்சிக் காலத்தில் தெல்லிப்பழையில் பால் டயங்ஸ் பாதிரியார் வாழ்ந்தார். இந்தக் காலம் முதலாகத் தெல்லிப்பழையிலே கிறித்துவ பாரம்பரியம் வேரூன்றியாயிற்று. இதன் தொடர்ச்சியாக அமெரிக்க மிசன் பாடசாலை (பின்னர் யூனியன் கல்லூரி) அமெரிக்க மிசன் அச்சகம் வந்தமையுமே படிமுறையாக இந்தப் பிரதேசத்திலே ஒரு புதிய கல்விப்பாரம்பரியத்தையே வேரூன்ற வைத்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து படிப்படியாக வெளிப்பட்ட ஆங்கிலக் கல்வித் தாக்கத்தின் எதிரொலியான 6) நிகழ்வுகளின் களமாக தெல்லிப்பழை அமையலாயிற்று. நாலவர் பாரம்பரியத்தோடு வேகமடைந்த சைவமும் தமிழும் என்ற உணர்வின் பிரதிபலிப்பாகத் தெல்லிப்பழையில் பாவலர் துரையப்பாபிள்ளை, மகாஜனக்கல்லூரியை ஆரம்பித்தமையும் புதிய வரலாற்றின் ஊற்றுக் கண்ணாக அமையலாயிற்று.
வட்டுக்கோட்டை செமினறியிற் பயின்று ரெயிலர் என்ற கிறிஸ்தவ நாமத்தைப் பெற்ற பாவலர் துரையப்பா பிள்ளை ஏற்படுத்த முயன்ற கலாசார மறுமலர்ச்சியின் விளைமூலமாக தெல்லிப்பழை மாறியமை ஒரு பெரிய வரலாற்று நிகழ்வாகும். பழம் பெருமை பேசிவாழ்ந்த யாழ்ப்பாணத்தைத் திருத்தும் தீர்க்கதரிசனக் குரலோடு எழுச்சி பெற்ற பாவலர் துரையப்பா பிள்ளையின் சிந்தனைப் புரட்சிதான் மகாஜனக் கல்லூரியின் தோற்றமாயிற்று.
லர் / வயற்காற்று

Page 8
இதே காலப்பகுதியிலே தெல்லிப்பழையில் ஜகாத் தம்பையாவின் குடும்பத்தினர் வாழ்ந்தனர். ஈழத்தின் முதலாவது பெண் நாவலாசிரியையாகிய மங்களநாயகம் தம்பையாவும் தெல்லிப்பழையிலே தமது சிந்தனைக் கருவூலங்களை வெளியிட்டார். தெல்லிப்பழை என்ற சிறிய கிராமத்திலே ஏற்பட்ட சமூகமாற்றம் சிந்தனைத் தாக்கம் ஆகியன நொறுங்குண்ட இருதயத்தின் மூலவிசையாக அமைந்தது.
பாவலர் துரையப்பாபிள்ளையின் வழிவழி மரபு செறிந்த தெல்லிப்பழை என்ற கிராமம் மீண்டும் எழுச்சி பெற வேண்டும். மகாஜனாக் கல்லூரி வளாகத்திலே மாங்காய்க்குக் கல்லெறிந்து மகிழ மரத்தேறிப் பாங்காகத் தோழருடன் பள்ளிக்குத் சென்ற காலம்
tudiéodLDu IIT60Igs.
வாகை மரங்களும், நீண்டு நிமிர்ந்த பன்ைமரங்களும் மாமரங்களும், ஆலமரங்களும் செறிந்து வளர்ந்து செழித்த பூமியும் கல்லூரி. யின் முன்னே பரந்திருந்த வயல் வெளியும் நெஞ்சில் நிழலாடுகின்றன. 'அம்பனையின் முன்னால் அடிக்கும் வயல் காற்றில், கொம்புலுப்பிப் பூச்சொரியும் குடைவாகை நம் பெரிய வெற்றிக்கு நாலு மலர் சூட்டிடவும்" என்ற அமர கவிஞன் மஹாகவியின் உணர்வுகள் செவிப்பறையை அதிர வைக்கின்றன. மகாஜனாக் கல்லூரி என்ற வாணியின் வீடு மீண்டும் எழுச்சி பெற வேண்டும்.
மகாஜனாக் கல்லூரியினதும் அம்பனை மண்ணினதும் நினைவுகள் இனிமையானவை. அம்பனைக் கலைப் பெருமன்றம் சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் தீர்க்க தரிசனத்தோடு எத்தனையோ காரியங்களைச் செய்ய முயன்றமை வரலாறாகிவிட்டது.
எத்தனையோ விடயங்களுக்கு எல்லாம் ஆதார சுருதியாக வெளிப்பட்ட அம்பனைக் கலைப் பெருமன்றத்தின் தூணாகவிருந்த நாக.ழரீகெங்காதரனின் பிறந்த மண்ணின் மேல் கொண்ட பற்றும் புரட்சிகரமான சிந்தனைகளும் புதுமை செய்யவேண்டும் என வாழ்த்து(36)ruprób.
6nu Lupib35rpiögnu / xlii

என்னுரை
தெ ல்லிப்பழை - ஒரு அதிசயமான கிராமம். எனது இளமைக்காலம் முழுமையையும் சந்தோசமாக்கிய அற்புத மண். சிறுவனாக இருந்த போது என்னுடைய கனவு மண். மாணவனானபோது இலட்சிய மண். இளைஞனானபோதுதான் புரிந்தது - எல்லாம் இருந்தும் இது திருத்தப்படவேண்டிய மண் என்று. இதனால் தான் தெல்லிப்பழைக் கிராமசபையின் தலைவராக வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. இது சாத்தியமாக முடியாதது அல்ல. இருபத்துமூன்று வட்டாரங்களைக் கொண்ட கிராமசபை எல்லைக்குள் தமிழ்மக்கள் மத்தியிலுள்ள அத்தனை சமூகங்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தார்கள். சிறுபான்மை சமூக மக்களும் கணிசமாகவும் தத்தமது பகுதிகளில் செறிந்தும் வாழ்ந்தார்கள். சமூக அக்கறை கொண்டவர்களை குறிப்பாக இளைஞர்களை இணைத்த ஒரு ஒழுங்கான திட்டம் இதைச் சாத்தியமாக்கியிருக்கும்.
பாராளுமன்ற அரசியல் நீரோட்டத்திற்கும் உள்ளுர் அரசியல் நிலைவரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. தமிழினத்தின் தலைவராகக் குறிப்பிடப்படும் திரு. சா. ஜே. வே. செல்வநாயகம் அவர்கள் தெல்லிப்பழைக் கிராமசபையை உள்ளடக்கிய காங்கேசன்துறைத் தொகுதியின் நீண்டகால பாராளுமன்ற உறுப்பினர். 1970ம் ஆண்டு பொதுத்தேர்தலில் திரு. செல்வநாயகம் வெற்றிபெற்ற போது தொகுதிக்குட்பட்ட ஐந்து உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களும் எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் வி. பொன்னம்பலத்தையே ஆதரித்தார்கள்.
xi / 61 updirfigy

Page 9
நீண்டகால இடதுசாரி அரசியல் பாரம்பரியத்திலிருந்து வந்தமையாலும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து வேலைசெய்தமையாலும் எனக்கு கிராமத்தின் சகலபகுதி மக்களுடனும் நல்ல உறவு இருந்தது. எனவேதான், என்னுடைய கனவை நனவாக்கவேண்டிய சகல வாய்ப்புக்களுமிருந்தன.
ஆனால் இளைஞர்களின் ஆரம்பகால அரசியல் என்னை தற்காலிகமாக புகலிட மொன்றினைத் தேடவைத்தது. இனிய நண்பர்கள் மாணிக்கரத்தினமும் நவரத்தினமும் என்னை லண்டனுக்கு வரவழைத்தார்கள். ஐந்து அல்லது பத்து வருடங்கள் தங்குவதற்கு வந்த நான் காலத்தின் கோலத்தால் எறக்குறைய முப்பது ஆண்டுகள் இந்த மண்ணில் தங்கிவிட்டேன். எங்களுடைய தமிழ்மண் கண்ட அழிவைவிட தெல்லிப்பழை மண் கண்ட அழிவு அதிகமானது. ஏறக்குறைய சகல மக்களும் அகதிவாழ்க்கை வாழ்கின்றார்கள். இன்று கிராமத்தின் சிறிய பகுதியில் மாத்திரமே மக்கள் வாழ்கின்றார்கள். பெரும்பகுதி நிலம் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளேயே இன்னமும் இருக்கின்றது. எதோ ஒரு வடிவில் தமிழ்மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இந்த நிலை தொடரும். உண்மை நிலைவரமும் அதுவேதான்.
ஆயினும், தெல்லிப்பழையின் உயிர்நாடியான நிறுவனங்கள் செயற்படத் தொடங்கியுள்ளன. இந்த நிறுவனங்களோடு தொடர்புள்ள. வர்கள் காட்டிவருகின்ற அக்கறைகள் கனதியானவை. மகாஜனக் கல்லூரி, யூனியன் கல்லூரி. பன்னாலை சேர் கனகபை வித்தியாசாலை, மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், கீரிமலை நகுலேஸ்வரர் கோவில், தெல்லிப்பழை அரசினர் வைத்தியசாலையின் புற்றுநோய் நிலையம் என்பன இன்னமும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்துகொண்டே செயற்படுகின்றன. எமது கிராம மக்களின் உயிர்ப்பு இன்னமும் இருப்பது நம்பிக்கை தருகின்றது.
எமது கிராமத்திற்குச் செய்வதற்கு எத்தனையோ திட்டங்கள் இருந்தன. பொது நூலகம், அழகான நவீன மயானங்கள், பொதுச் சந்தை, நவீன விளையாட்டு மைதானம், வசதிகள் நிறைந்த மண்டபம் என்பன இவற்றில் சில. இவற்றை நிறைவேற்ற நல்ல திட்டங்களும் பொதுவான தலைமையும் தேவை. கடினமான காரியம். ஆனாலும் இன்றைய கஷ்டமான காலகட்டத்திலும் இவைபற்றிய சிந்தனைகளிலும் செயற்பாடுகளிலும் என்னையும் இணைத்துள்ள நிலை நிறைவைத் தருகின்றது.
வயற்காற்று /wiy

இந்த நூலினை எழுதி வெளியிட நீண்டகாலமாக நினைத்ததுண்டு. ஆனாலும் செயற்படுத்த முடியவில்லை. பல்வேறு காரணங்கள். முதலில் என்னுடைய அரசியல் பற்றி எழுத நினைத்தேன். இன்றைய போராட்டங்களில் இளைஞர்களின் பங்களிப்பு ஆரம்பிக்க முன்னதாக ஆரம்பித்துச் செயற்பட்ட ஈழத் தமிழ் இளைஞர் இயக்கத்தின் நிர்வாகத்தில் செயற்பட்டவர்களில் நானும் ஒருவன். அரசியலால் ஏற்பட்ட நண்பர்கள் பலர். சந்திரிக்கா குமாரதுங்க, அன்ரன் பாலசிங்கம், வாசுதேவ நாணயக்காரா இவர்களில் சிலர். என்னுடைய அரசியல் பற்றி ஒரு நூல் எழுதினால் இவர்களோடும் ஏனைய அரசியல் சம்பந்தமானவர்களோடும் எனக்கு ஏற்பட்ட தொடர்புகள் பற்றியெல்லாம் எழுதப்பட வேண்டும். தற்போது வெளிவந்திருக்கும் பல அரசியல் நூல்களில் வேண்டுமென்றே விடப்பட்ட இடைவெளிகள் பல. இவற்றைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும். எனவே நீண்ட காலத் தயாரிப்பு அவசியம். இதனால்தான் தெல்லிப்பழையைப் பற்றிய நூலுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் வெளியிட நினைத்தேன்.
எங்களுடைய வீடு, மகாஜனக் கல்லூரிக்கருகில் அமைந்துள்ளது. வீட்டிற்கு முன்னால் கண்ணுக்கு எட்டும் தூரம் வரையும் வயல்வெளி. மஹாகவி து. உருத்திரமூர்த்தி "அம்பனைக்கு முன்னால் அடிக்கின்ற வயற்காற்றில்" என்று மகாஜனாவைப் பற்றிப் பாடுகின்றார். மஹாகவி குறிப்பிடுகின்ற இந்த வயற்காற்றை இருபத்திநான்கு ஆண்டுகள் அனுபவித்தபடி எங்கள் வீட்டு முன் விறாந்தையில் துயில்கொண்டவன் நான். இதனால்தான் தெல்லிப்பழையில் அடிக்கின்ற வயற்காற்றை இந்த நூலுக்குத் தலைப்பாக்கியுள்ளேன்.
சென்ற ஆண்டு லண்டன் தமிழர் தகவல் சஞ்சிகையை வெளியிடும் நண்பர் சிவானந்தசோதியின் வற்புறுத்தலால் தெல்லிப்பழையைப் பற்றிய கட்டுரையை எழுதத் தொடங்கினேன். நான்கு மாதங்கள் தொடர்ந்து வந்த கட்டுரைகள் முழுமையாக முடியவில்லை. தமிழர் தகவல் லண்டனில் அச்சடிக்கப்படாமல் இந்தியாவில் அச்சாகிய காரணத்தினால் எற்பட்ட நிலை இது. தற்போதய நிலையில் இந்த நூலை மிக அவசரமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வழமைபோலவே எனது மனைவியும் தம்பி சபேசனும் ஒத்துழைத்தார்கள். நண்பர் சோதியும் ஆனந்தியும் உதவினார்கள். இலங்கையில் நண்பர்கள் குலமணி, மதுசூதன் உதவியுடன் கேசவன் இதனை நூலாக்கித் தந்துள்ளார். இவர்களுக்கு எனது நன்றிகள்.
கt ry / வயற்காற்று

Page 10
அதிபர் கனகசபாபதி அவர்கள் எழுதிய அணிந்துரை நூலைக் கனதியாக்குகின்றது. கஷ்டமான காலகட்டத்தில் வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராக இருந்த திரு. ஆ சிவநேசச் செல்வன் முன்னுரை தந்துள்ளார். கலை. இலக்கிய, அரசியல் அரங்குகளில் திரு. ஆ. சிவநேசச்செல்வனுடன் சேர்ந்து செயற்பட்டுள்ளேன். என்னிடமுள்ள வாசிக்கும் பழக்கத்தை மெருகேற்றியவர் இவர். இவர்களுக்கும் நன்றிகள்.
எனது கனவுகள் கனிய ஆதரவு தாருங்கள்.
அன்பன்
நாக சிறிகெங்காதரன்
08ー02ー2005
வயற்காற்று /vi

வயற்காற்று - 1 தெல்லிப்பழை

Page 11

தெல்லிப்பழை
தெல்லிப்பழைக் கிராமத்தைப் பற்றி முழுமையான நூல் ஒன்றின் அவசியத்தை நான் பல ஆண்டுகளாக உணர்ந்திருந்தேன். மகாஜனக் கல்லூரி, யூனியன் கல்லூரி சம்பந்தமாகவும் பாவலர் துரையப்பாபிள்ளை, திரு.தெ. து. ஜயரத்தினம், திரு.ஐ.பி.துரைரத்தினம் ஆகியோர் பற்றியும் எழுத வேண்டிய தேவைகள் எனக்கு ஏற்பட்டன. இதற்கான தகவல்களைத் திரட்டவும் வாசிக்கவும் செய்தேன். பல ஆச்சரியங்களைக் கண்டேன். இவற்றை எல்லாம் தொகுத்து எழுத முனைந்தேன். முதலில்,தெல்லிப்பழை என்கின்ற கிராமத்தின் நிலப்பரப்பை எப்படி வரையறை செய்வது? கடிதங்கள் கிடைப்பதற்கு குரும்பசிட்டி, கட்டுவன், வசாவிளான் போன்ற கிராமத்தவர்கள் தமது தபால் விலாசத்தை தெல்லிப்பழை என்றே எழுதவேண்டும். எழுதி. னால்தான் கடிதங்கள் அவர்களின் கைகளுக்குக் கிடைக்கும். இதே போல் தெல்லிப்பழை என்றே கருதப்படுகின்ற வீமன்காமத்தின் பெருமளவு பகுதிகள் மயிலிட்டிக் கிராமசபைக்கு உட்பட்டவை. எனவே நிறைந்த ஆலோசனைகளின் பின் தெல்லிப்பழைக் கிராமசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளையே 'தெல்லிப்பழைக் கிராமம்' என்று கொள்வதாக முடிவு செய்தேன். நூலில் இடம்பெறுகின்ற மண்ணின் மைந்தர்கள் இந்த அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
தெல்லிப்பழையை விட்டு நான் புலம்பெயர்ந்து இருபத்தொன்பது ஆண்டுகளிற்கு மேலாகி விட்டது. எனக்குள்ள தொடர்ந்த தொடர்புகளினால் கிடைத்த தகவல்களையும், பரவலான சமூக, அரசியற் பங்களிப்புக் காலங்களில் அறிந்து கொண்டதையும் வைத்துக் கொண்டே இதனை எழுதுகின்றேன். குறிப்பாக, எமது கிராமத்திற்குப் பெருமை சேர்ப்பவர்களின் பட்டியல் பூரணமானதல்ல. எதிர்காலத்தில் இது பூரணமாக்கப்பட்டு முழுமையாக்கப்பட வேண்டும்.
3 / வயற்காற்று

Page 12
தெல்லிப்பழை ஒரு கிராமத்திற்குரிய எல்லாத் தன்மைகளையும் கொண்டிருந்ததோடு, ஒரு வளர்ச்சிபெற்றிருந்த நகருக்குரிய தன்மைகளையும் கொண்டிருந்தது. விவசாயிகளையும் தொழிலாளிகளையும் பெருமளவில் கொண்டிருந்த எமது கிராமம், சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் பின்பு புத்திஜீவிகளையும் உற்பத்திசெய்து தன்னகத்தே கொண்டிருந்த கிராமமாகப் பரிமளித்தது.
எல்லைகள்
தெல்லிப்பழை என்ற கிராமம் மிகப்பெரியது. இலங்கையின் வடமாகாணத்திலுள்ள (தற்போதைய வடகிழக்கு மாகாணம்) யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இலங்கைப் பாராளுமன்ற காங்கேசன்துறைத் தொகுதியின் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் இதுவும் ஒன்று. எமது கிராமத்தைச் சுற்றி மல்லாகம் கிராமசபை, பண்டத்தரிப்பு கிராமசபை, காங்கேசன்துறைப் பட்டினசபை, மயிலிட்டி கிராமசபை என்பன அமைந்துள்ளன. துர்க்கையம்மன் கோவிலடியிலிருந்து தொடங்கி பலாலி போகும் வழியிலுள்ள அரசினர் வைத்தியசாலை, மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், சீமெந்துத் தொழிற்சாலையின் தெற்குப் பகுதி, கீரிமலைக் கடற்கரை, கவுணாவத்தை வைரவர் ஆலயம், மயிலங்கூடல் வைரவர் ஆலயம், பன்னாலை வர்த்தலம் பிள்ளையார் ஆலயம், அம்பனை வயல்வெளி மகாதனை ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டது தெல்லிப்பழைக் கிராமம்.
வரலாற்றுப் பெருமைகள்
குடாநாட்டின் சில கிராமங்கள் மாத்திரமே புகையிரத நிலையத்தைக் கொண்டிருந்தன. அவற்றில் தெல்லிப்பழையும் ஒன்று. அமெரிக்க மிசனால் 1816இல் இலங்கையில் கட்டப்பட்ட முதலாவது பாடசாலை தெல்லிப்பழையிலேயே அமைந்தது. இலங்கையில் ஆங்கிலத்தில் வெளிவந்த இரண்டாவது பத்திரிகை தெல்லிப்பழையில் இருந்து வெளிவந்த Morning Star என்ற பத்திரிகையாகும். இலங்கையின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையான உதயதாரகை வெளிவந்ததும் தெல்லிப்பழையிலேயே. இலங்கையின் முதலாவது பெண் நாவலாசிரியையாக எமது கிராமத்தவரான மங்களநாயகம் தம்பையா கருதப்படுகின்றார். பாவலர் துரையப்பாபிள்ளையே மகாகவிபாரதியின்
வயற்காற்று 14

கவிதைகள் நூலுருப்பெறுவதற்கு முன் அச்சேற்றிய புதுக்கவிதை நூலின் சொந்தக்காரர் இவர். 1886ம் ஆண்டில் இலங்கை தோசாதிபதியின் நன்கொடையைப் பெற்று. அமெரிக்காவிற்கு இரண்டு வருடங்களிற்கு உயர்கல்வி கற்பதற்காக புகைக்கப்பலிற் சென்ற முதலாவது இலங்கையர் தெல்லிப்பழையைச் சேர்ந்த சின்னத்தம்பி கார்த்திகேசு ஜேசுதாசன் அவர்களே. இத்துடன், அதியுயர்தரம்பெற்ற இருபாலாரும் கல்வி கற்கின்ற இரண்டு பாடசாலைகளைக் கொண்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கது எங்கள் கிரரமம்.
அரசியல்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடப்படவேண்டிய முக்கியமான அரசியல் இயக்கம் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசே, மகாத்மா காந்தியின் சாத்வீகப் போராட்டத்தால் கவரப்பட்டு, சமூகத்தைப்பற்றிய தீர்க்கமான பார்வையுடன் தமிழ்மக்கள் மத்தியில் சம உரிமையை வற்புறுத்தியும் இலங்கைக்குப் பூரணமான சுதந்திரம் வேண்டியும் இவர்கள் நடாத்திய போராட்டங்கள் காத்திரமானவை. டொனமூர் அரசியற் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பொதுத்தேர்தலைப் பகிஷ்கரிக்க இவர்கள் விடுத்த கோரிக்கை பெருமளவில் வெற்றி. பெற்றுச் சரித்திரம் படைத்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஒரு தொகுதி தவிர, அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தலே நடைபெறவில்லை. இந்த இயக்கத்தை ஆரம்பித்து நடாத்தியவர்களில் தெல்லிப்பழையைச் சேர்ந்த திரு.பி.நாகலிகம், திரு.ஐ.பி. துரைரத்தினம் ஆகிய இருவரும் வெவ்வேறு காலத்தில் அதன் செயலாளர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். தமிழினத்தின் தலைவர்களாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்க இருவர், எமது கிராமத்தவர்களான திரு. வன்னியசிங்கமும் திரு. செல்வநாயகம் அவர்களுமே. இலங்கையில் சுதந்திரம் கோரி சமசமாஜக் கட்சியினர் நடாத்திய போராட்டத்தின் போது டாக்டர் என். எம். பெரேராவும் டாக்டர் கொல்வின் ஆர். டீ சில்வாவும் தலைமறைவு வாழ்க்கை நடாத்தினார்கள். இந்தியாவுக்குச் செல்லுமுன் இவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடாத்தியது தெல்லிப்பழையில் தான். சுமஷ்டிக் கருத்தின் தந்தை என்று வர்ணிக்கப்படுகின்ற திரு.வன்னியசிங்கம் அவர்களும், சமசமாஜக் கட்சியின் மூளை என்றழைக்கப்படும் திரு. வி. காராள. சிங்கம் அவர்களும் எமது கிராமத்தவர்களே. எமது கிராமசபையில் உள்ள இருபத்திமூன்று வட்டாரங்களில் பல்வேறு சமூகத்தினரும்
5 / வயற்காற்று

Page 13
செறிந்து கணிசமான அளவில் வாழ்கின்றர்கள். தமிழ்மண் முழுமையிலும் இடதுசாரிக் கருத்தை கணிசமான அளவில் ஆதரித்து நின்ற ஊர் தெல்லிப்பழையாகும்.
குறிப்பு: தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தோடு சம்பந்தமான பெயர்கள் இன்றைய நிலையில் தேவை கருதி தவிர்க்கப்படுகின்றது.
6561&Itujlb
தெல்லிப்பழை காலங்காலமாக விவசாயம் செய்யப்படுகின்ற மண். எனவே விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் நிறைந்த கிராமமாகவே சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதிவரை இருந்தது. விவசாயத்திற்குத் துணைநிற்கின்ற ஆடு, மாடுகளின் தொகையும் அதிகம். விவசாயத்திற்கு இரசாயன உரங்கள் அதிகளவில் பாவனைக்கு வந்தபின்னரும் 'பட்டி அடைப்பது என்பது எழுபதுகளில்கூட பெருமளவில் இங்கே நடைபெற்றன. காசுப்பயிர்களே அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. வெவ்வேறு காலங்களில் விளைகின்ற இப்பயிர்களின் உற்பத்திகள் பெருமளவில் கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றில் சின்னவெங்காயம், தக்காளி, கத்தரி என்பன குறிப்பிடக்கூடிய உற்பத்திகளாகும். ஏமது கிராமமே வெற்றிலை உற்பத்திக்குப் பெயர்பெற்ற கிராமமாகும். மிக நீண்டகாலம் கவனமாகப் பராமரிக்க வேண்டிய பயிர் இதுவாகும். இதுபோலவே வாழையும் ஒருவகையில் நீண்டகாலப் பயிராகும். குலை போட்டவுடன் அதனுடைய தேவை இல்லாமற் போனாலும் அதனடியிலேயே புதிய கன்றுகள் முளைத்து வளர்ந்திருக்கும். முற்றாக ஒரு வாழைத் தோட்டத்தை அழித்து புதியனவற்றை உருவாக்குவது அரிது. இவை இரண்டும் எமது மண்ணின் முக்கியமான உற்பத்திகள். பன்னாலை என்றால் குரக்கனும் கொல்லங்கலட்டி என்றால் வெற்றிலையும் கீரிமலைக்கு அண்மிய இடங்கள் என்றால் பனங்கிழங்கும் நினைவுக்கு வரும். பனங்கள்ளுக்குப் பெயர்பெற்றது கூவில் என்ற இடம், கீரி. மலைக்கு வருகின்ற யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த வளர்ந்த மாணவர்களுக்கு இது தாகம் தீர்க்கும் இடம். இப்படி எத்தனையோ சொல்லலாம். தெல்லிப்பழையின் எல்லா இடங்களிலும் பரவலாகப் பனைமரங்கள் அடர்ந்து உள்ளன.
வயற்காற்று /6

LD600
பல்வேறுவகைப்பட்ட மண்வகைகள் எமது கிராமத்தில் உள்ளன. செம்பாட்டு மண், களிமண், வயல்மண், கடல் மணல் என்பன எமது கிராமத்தில் உள்ள மண்வகைகளாகும். கிராமத்தின் வடபகுதியில் சீமெந்துத்தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திலுள்ள மண் ஒருவகைக் களிமண்ணாகும். இந்த இடத்துடன் தொடர்புடைய எமது கிராமத்தின் வடக்குப்பகுதிகளிலும் இந்தவகை மண் இருக்கலாமென நம்பப்படுகின்றது.
கிறிஸ்தவ தேவாலயங்கள்
தெல்லிப்பழையில் கணிசமான அளவு கிறிஸ்தவர்கள் இருந்தார். கள். இதனால் இரண்டு தேவாலயங்கள் இங்கே அமைந்துள்ளன. யூனியன் கல்லூரியின் அருகே அமைந்துள்ள தேவாலயம், தெல்லிப்பழை கிழக்கில் அமைந்துள்ள மாதா தேவாலயம் என்பனவே இவையாகும்
பெளத்த விகாரை
அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதி தற்போது மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளாக உள்ளன. இந்தப் பகுதியினுள் இராணுவ முகாம்களும் பரவலாக உள்ளன. இவற்றில் பெளத்த விகாரைகள் அமையும் சாத்தியக் கூறுகள் உள்ளன. யூனியன் கல்லூரிமைதானத்தின் பின்புறமாக அமைந்துள்ள இராணுவ முகாமில் ஒரு பெளத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதை கல்லூரிக்குச் செல்பவர்களால் பார்க்கமுடியும். இவை நிரந்தரமா இல்லையா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.
ஆலயங்கள்
இலங்கை முழுமைக்கும் பெருமைசேர்க்கும் மூன்று பெரிய ஆலயங்களும் பல சிறிய ஆலயங்களும், பல சிறுதெய்வ வழிபாட்டுத் தலங்களும் கிராமத்தை அலங்கரிக்கின்றன. மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் என்பனவே இம்மூன்று பெரிய ஆலயங்களாகும்.
7 / வயற்காற்று

Page 14
தெல்லப்பழை-மாரியம்மன் ஆலயம், காசிப்பிள்ளையார் ஆலயம், தலவாங்கலட்டி பிள்ளையார் ஆலயம், தெல்லிப்பழை-கரண்டக்குளம் ஐயனார் கோவில், பன்னாலை வரத்தலம் கற்பகப் பிள்ளையார் ஆலயம், மேலைத்தெல்லபூர் விழிசிட்டி சிவகுருநாதர் ஆலயம், கொல்லங்கலட்டி-பிள்ளையார் கோவில், கீரிமலை கிருஷ்ணர் ஆலயம், தோதரை அம்மன் கோவில் என்பன திருவிழாக்கள் நடைபெறும் ஆலயங்களாகும்.
இவைதவிர பல சிறிய கோவில்களும் எமது கிராமத்தில் ஆங்காங்கே அமைந்துள்ளன. பல வருடங்களிற்கு முன் வேள்விகள் இடம்பெற்று நிறுத்தப்பட்ட நரசிம்ம வைரவர் ஆலயங்கள் தற்போது புதிய அவதாரங்களை எடுத்து ஞானவைரவர்களாக கிராமத்தில் காட்சியளிக்கின்றன. இவற்றோடு ஐம்பதிற்கும் மேற்பட்ட வைரவர் ஆலயங்களும் சில காளிகோவில்களும் கிராமத்தின் காவல் காவல்தெய்வங்களாக அமைந்துள்ளன. இவற்றுடன் கிராமத்தில் பெயர்பெற்ற இன்னொரு கோவில் கவுணாவத்தை வைரவர் ஆலயமாகும். இலங்கை முழுவதிலும் மிகப்பெரிய அளவில் மிருகபலி நடைபெறும் கோவில் இதுவாகும். அரசாங்கம் மிருகபலியைத் தடை செய்தபின் நிறுத்தப்பட்ட வேள்வி தற்போது மீண்டும் சிறிய அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இது வெட்கத்திற்குரிய நிலை.
கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக மகாஜனக் கல்லூரியில் சிவகாமி சமேத நடராஜர் ஆலயம் சிறப்பான ஆராதனைகளுடன் நடைபெற்று வருகின்றது. இதேபோல யூனியன் கல்லூரியிலும் சென்ற ஆண்டு கும்பாபிஷேகம் இடம்பெற்ற ஆலயமொன்று அமைந்துள்ளது.
மாவிட்டபுரம் கந்தசாமி கோவில்
தெல்லிப்பழையின் வடகிழக்கு எல்லையில் இது அமைந்துள்ளது. சரித்திரப்பிரசித்தி பெற்ற இந்த ஆலயம் இலங்கையின் மிகப்பெரியதும் தொன்மையானதுமாகும். மாருதப்புரவீகவல்லி என்ற இராஜகுமாரிக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக, அழகான முகம் குதிரைமுகமாக மாறியது. இந்த அரசகுமாரி கீரிமலையில் நன்நீரும் கடல்நீரும் கலக்குமிடத்தில் நீராடிவிட்டு முருகனை வழிபட்ட இடத்துக்கு மாவிட்ட-புரம் எனப் பெயர் வந்ததாக இக்கோவிலின் வரலாறு கூறுகிறது. (மா என்றால் குதிரையைக் குறிக்கும்)
வயற்காற்று 18

தந்தையை இழந்தவர்கள், அவர்களை நினைத்துப்பிதிர்க் கடன் செய்யும் நாள் ஆடிஅமாவாசையாகும். இந்தத் தினத்தை தீர்த்தத் தினமாகக் கொண்டு இருபத்தைந்துநாட்கள் திருவிழாக்களாக இங்கு நடைபெறுகின்றன. திருவிழாக்கள் எல்லாம் மிகநல்ல முறையில் விமரிசையாக நடைபெற்றாலும் இருபத்திநாலாம் நாள் நடைபெறும் தேர்த்திருவிழாவின் போது ஐந்து தேர்களில் முறையே வினாயகர், வள்ளி-தெய்வானை சகிதம் அருள்முருகன். பார்வதி சகிதம் சிவன், ஆறுமுகசுவாமி, சண்டேசுவரர் என தெய்வங்கள் பவனிவரும் காட்சி அற்புதமானது. இந்தக் காட்சியினைப் புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளரும் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் காட்டவேண்டும். இப்படியான கிராமப்புறத்திற்கேயுரிய புனிதம், பக்தி, பண்பு. அழகு ஆகியவைகளை எமது புலம்பெயர் சந்ததியினரும் அவசியம் பார்த்து அறிந்திருக்க வேண்டும். கடைசி ஆறு ஏழு நாட்கள் இடம்பெறும் திருவிழாக் காலத்தின் மாலை வேளைகளின்போது இளம் பெண்பிள்ளைகள் அழகான உடைஉடுத்தி ஒய்யாரமாக வரும் காட்சி அற்புதமானது. இவைகளை ரசிப்பதற்காகவே இளைஞர்கள் தங்கள் மாலைவேளை நேரங்களை ஒதுக்கி சுவாமி தரிசனம்செய்ய வரும் காட்சிகளும் அழகானது தான்.
மாவைக் கந்தன் ஆடி அமாவாசையன்று அதிகாலையில் கீரிமலை சென்று தீர்த்தமாடிவிட்டு அழகான அலங்காரங்களுடனும் மின்வெளிச்சங்களுடனும் திரும்பிவரும் காட்சி பார்க்கக் கண்கொள்ளாதது. இதேபோல் இதன் பின்னர் இரண்டாம்நாள் கப்பற்பயணம் செய்வதற்காக (கப்பற் திருவிழா) காங்கேசன்துறைக் கடற்கரை சென்று பாக்குநீரிணையில் சில மணிநேரம் பவனிவரும் காட்சியும் அழகானதே. நவராத்திரி பண்டிகையின் இறுதிநாளான மானம்பூவின் போது (வாளை வெட்டு) மாவிட்டபுரத்திலிருந்து முருகன் துர்க்கை அம்மன் கோவில்சென்று அங்கே வாழையை வெட்டிவிட்டு மீண்டும் இரவு அழகாகக் கோவிலுக்குத் திரும்பும் காட்சியும் அற்புதமானதே.
இக்கோவில் உள்வீதி. இரண்டாம் வீதி, வெளி வீதி என மூன்று வீதிகளைக் கொண்டிருக்கின்றது. இலங்கையில் உள்ள கோவில்களில் மிகப்பெரிய வெளிவீதி உள்ள கோவில் இதுதான். மேற்கு வீதியில் பெரிய இராஜ கோபுரத்தையும் இங்கே நாம் தரிசிக்கலாம். நீண்டகாலம் ஆதீனகர்தாவாக இருந்து கோவிலைச் சிறப்பாக நடாத்திவந்த தனது தந்தை பிரம்மறி துரைச்சாமிக்குருக்களைப் பின்பற்றி பிரம்மறி சண்முகநாதக் குருக்களும் தனது கடமைகளைச்
9 / வயற்காற்று

Page 15
செவ்வனே செய்து வருகின்றார். மீண்டும் கும்பாபிஷேகம் நடந்து திருவிழாக்கள் நடைபெறும்வரை தான் எங்குமே செல்வதில்லை என்று திடசங்கற்பம்பூண்டு புனருத்தாரணப் பணிகளைச் செய்து வருகின்றார்.
இவ்வளவு பெருமையும் முக்கியத்துவமும் வாய்ந்த கோயிலுக்கு ஒரு கறைபடிந்த வரலாறும் உண்டென்பது பதியப்படவேண்டும். அறுபதுகளின் பிற்பகுதியில் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தின் கூர்மையான நிகழ்வுகள் இங்கேதான் நிகழ்ந்தது. பொது இடங்களில் எந்தவேறுபாடுகளும் இல்லாமல் குறிப்பாக, பிறப்பினால் உருவான சாதி வேற்றுமை பாராட்டாமல் நடாத்தப்படவேண்டும் என்பதுதான் போராட்டம். இதன் பிரதான அங்கமாக ஆலயங்களில் அனைத்து சைவமக்களும் உட்சென்று வழிபடுவதற்கு பாகுபாடில்லாமல் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற போராட்டம்தான் ஆலயப்பிரவேசப் போராட்டமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் சகல பகுதிகளிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றாலும் கூர்மையும் உக்கிரமும் பெற்ற போராட்டமாக அது நடைபெற்றதுமாவிட்டபுரத்தில்தான். வெவ்வேறு ஆலயங்களில் நடந்த போராட்டங்களின் பயனாகப் பல ஆலயங்கள் எல்லோருக்கும் திறந்துவிடப்பட்டன. இதன் விளவாக சில ஆலயங்கள் தாமாகவே முன்வந்து அனைவரையும் மனிதர்களாக மதித்தன.
மாவிட்டபுரத்தின் நிலை வேறாகவே இருந்துது. சிறிதாக இருந்த இந்த மனிதப் போராட்டத்தை ஒரு தமிழ்த்தலைவரின் வருகை வன்மமும் பகையும் கொண்ட போராட்டமாக மாற்றியது. இந்த வரலாற்றுத் துரோகம் முன்னாள் வவுனியாய் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான 'அடங்காத்தமிழன்’ திரு.சி.சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையில்தான் இடம்பெற்றது. காலம் சென்ற திரு.எஸ்.ரி.நாகரத்தினத்தின் (எஸ் ரி என்) தலைமையில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் நடாத்திய இப்போராட்டம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இடம்பெற்றது. இரத்தக்களரி, குண்டுவெடிப்பு என்பன கூட இப்போராட்டத்தின் அங்கமாக இருந்தமை கவனிக்கப்பட வேண்டும். 1965இல் எமது தொகுதியின் பாராளுமன்ற உறுப்பிரான திரு செல்வநாயகம் அவர்கள் தன்னுடைய சமயத்தைக் காரணம் காட்டி இதிலிருந்து முற்றிலும் ஒதுங்கியிருந்தார். எமது கிராமத்தின் முக்கிய கூறுகளான மாவிட்டபுரம், பன்னாலை, கொல்லங்கலட்டி பகுதிகளின் 'பெரியவர்கள்’ எனக் கருதப்பட்டவர்கள் திரு.சுந்தரலிங்கத்தின் ஆதரவாளர்களாக இருந்தார்கள். ஒரு காலத்தில் தமிழரசுக்கட்சியின் கோட்டைகளாக இருந்த இந்த ஊரவர்களின் ஆதரவுடன்தான் திரு "
வயற்காற்று 110

சுந்தரலிங்கம் 1970 பொதுத்தேர்தலில், மாவை ஆலயப்பிரவேசத்தை ஒரே கோரிக்கையாக வைத்து போட்டியிட்டு ஐயாயிரத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றார். ஆனாலும் 1970 தேர்தல் முடிவுகள் தேசிய ரீதியில் திருமதி சிறிமாவோ பண்டாரநாக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசினை உருவாக்கியது. தமிழர்கள் மத்தியில் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தின் முக்கிய கூறாக விளங்கிய சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தலைவர் திரு எம்.சி.சுப்பிரமணியம் நியமன பாராளுமன்ற உறுப்பினரானார். புதிய அராசாங்கம் பொலிசாருக்கு விடுத்த திடமான கட்டளைகள், எஸ்.ரி. என் தலைமையிலான உறுதியான போராட்டம் என்பனவற்றின் விளைவாக 1970 இல் திருவிழாக் காலத்தின்போது ஆலயப்பிரவேசப் போராட்டம் வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டது.
போரின் அழிவின் பின்னரும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து கிடைத்த பணத்தைக் கொண்டு புனருத்தாரண வேலைகள் நடைபெறுகின்றன. பூசைகள் பகல் வேளைகளில் ஒழுங்காக இடம்பெறுகின்றன. கொடியேற்றி திருவிழாக்கள் இடம்பெறாவிட்டாலும் வருடாந்த உற்சவ காலங்கள் மீண்டும் சோபிக்கின்றன. ஆனாலும் மக்களற்ற காடுகளின் நடுவில் ஏதோ நடைபெறுவதான உணர்வுகளே ஏற்படுகின்றது. உயர் பாதுகாப்பு வலயம் நீங்கி மக்கள் மீண்டும் குடியேற அனுமதிக்கப்பட்டால் தான் இந்த நிலை மாறும். மாறுமா? மாறவேண்டும் .
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம்
எமது ஊரில் அமைந்துள்ள இன்னொரு சரித்திரப் புகழ்மிக்க ஆலயம் கீரிமலை சிவன் ஆலயமாகும். இந்த ஆலயத்தை நகுலேஸ்வரம் எனவும் அழைப்பர். கீரிமலை தீர்த்தக்கரையில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் நகுலேஸ்வரம் அமைந்துள்ளது. மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய ஆதீன கர்த்தாக்களின் குடும்பத்துடன் தொடர்புடைய குடும்பத்தினர் இந்த ஆலயத்தை காலம் காலமாகப் பரிபாலித்து வருகின்றார்கள். போர்த்துக்கேயர் காலத்தில் முழுமையாக அழிக்கப்பட்டு, பின் புதிய வடிவில் மீண்டும் இவ்வாலயம் உருவாக்கப்பட்டது. போரின் அழிவுகளுக்கு உள்ளாகி, மிகப் பாரதூரமான அளவில் பாதிப்புக்கு உள்ளானது இந்தக் கோயில், கடந்த மூன்று ஆண்டுகளாக ஜனாதிபதியின் உதவியுடனும் வெளி
11 / வயற்காற்று

Page 16
நாடுகளில் வதியும் ஊரவர்களின் ஒத்துழைப்புடனும் புனருத்தாரண வேலைகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
கீரிமலையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் வரலாறு சமஸ்கிருதத்திலுள்ள தக்ஷண கைலாசபுராணத்தில் மிக விரித்துக் கூறப்பட்டுள்ளது. கிருதயுகத்திலே கீரி முகமுடைய நகுலமுனிவர் என்பவர், முசுகுந்தராசனுடன் வந்து கீரிமலை தீர்த்தத்திலே நீராடியபடியால் கீரிமுகம் மாறப் பெற்று, சுவாமி தரிசனமுஞ் செய்துகொண்டு அம்மலையின் குகையிலே நீண்டகாலம் வாசஞ் செய்தார். அதனால் தான் அம்மலையும், தீர்த்தத் தலமும், கோயிலும் அவர் பெயரால் வழங்கப் பெறுகின்றது.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத் தீர்த்தத் தினமான ஆடி அமாவாசையின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலிலே தீர்த்தமாடியபின்னர் நகுலேஸ்வர ஆலயம் சென்று தரிசிப்பது வழமை. இதேபோல், பதினைந்து நாட்கள் இடம் பெறுகின்ற வருடாந்தத் திருவிழாவின் இறுதியான தீர்த்தத் திருவிழாவை சிவராத்திரி தினத்தில் கொண்டுள்ளது இக்கோயிலாகும். சிவராத்திரியின் போது இங்கே இடம்பெறுகின்ற பூசைகளும் நிகழ்ச்சிகளும் பெயர் பெற்றவைகளாகும். புரட்டாதி மாதத்துச் சனிக்கிழமைகளின் போதும் குறிப்பாகக் கடைசிச் சனிக்கிழமையின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் தீர்த்தமாடியதன் பின்பாக இந்த ஆலயத்தில் எள்ளெண்ணெய் எரிக்கும் நிகழ்வும் சிறப்புடையது. பிரம்மறி நகுலேஸ்வரக் குருக்கள் இந்த ஆலயத்தை மீண்டும் சிறப்புப் பெற வைக்க உரிய முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
தெல்லிப்பழை - துர்க்காதேவி ஆலயம்
முப்பந்தைந்து ஆண்டுகள் மாத்திரமே வெளியுலகுக்குத் தெரிந்த - தற்போது எமது கிராமத்தின் பெயரைச் சொல்லும் ஆலயம் இதுவாகும். நான் சிறுவனாகவும் இளைஞனாகவும் இருந்த காலகட்டத்தில் பிரபல்யம் பெறாதது மாத்திரமல்ல, எந்த விதத்திலும் பராமரிக்கப்படாத ஆலயமாகவும் இந்த ஆலயம் இருந்தது. வருடாந்தப் பொங்கலின் போதும், நவராத்திரிக் கடைசிநாளான மானம்பூவின் போதும் மாத்திரமே ஊரவர்கள் கூடும் ஆலயமாக இந்த ஆலயம் இருந்து வந்தது. -
வயற்காற்று 112

எழுபதுகளில் எமது ஊரின் இளைஞர்கள சரமதானத்தின்மூலம் இந்த ஆலயத்தின் புனருத்தாரண வேலைகளைத் தொடக்கி வைத்தார்கள். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் அதிபரான திரு.தெ.து.ஜயரத்தினம் அவர்களைத் தலைவராகக் கொண்டு ஊரவர்களைக் கொண்ட நிருவாக சபையும் புனருத்தாரண சபையும் அமைக்கப்பட்டது. திரு.ஜயரத்தினம் அவர்களின் சீரிய தலைமையிலும் வழிகாட்டலிலுமே ஆலயம் முழுமையாக்கப்பட்டு புதுப் பொலிவும் சிறப்பும் பெற்றது. துர்க்கை அம்மன் ஆலயம் திருவிழாக்கள் இடம் பெற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்குரியதாகவும் இலங்கை முழுமையிலும் செல்வாக்குப் பெற்ற கோயிலாகவும் விளங்கிய வேளையில், 1976ல் திரு ஜயரத்தினம் அவர்கள் அமரரானார்கள். திரு.ஜயரத்தினம் அவர்களைத் தொடர்ந்து செல்விதங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் தலைமையில் கோயில் சிறப்பாக நடைபெறுகின்றது. எழுபதுகளின் நடுப்பகுதிகளில் எட்டுச் செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து இக்கோயிலுக்குச் சென்றால், தங்கள் திருமணம் நடைபெறும் என்ற பெண் பிள்ளைகளின் நம்பிக்கை, ஒரு பெரிய வடிவம் எடுத்த காரணத்தால் யாழ் மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிருந்தும் பெண் பிள்ளைகள் இங்கே குவியத் தொடங்கினார்கள். இக்கோயிலின் வளர்ச்சிக்கு இந்தப் போலியான நம்பிக்கையும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகின்றது.
கல்வி நிறுவனங்கள்
விவசாயிகளையும் தொழிலாளர்களையும் மிகப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த எமது கிராமம், நாடு சுதந்திரம் அடைந்த பின் குறிப்பாக 1956 இன் பின் அறிஞர்களையும் புத்திஜீவிகளையும் அரச உத்தியோகத்தர்களையும் மிகப் பெருந்தொகையில் உற்பத்தி செய்து கிராமங்களின் மகுடமாக மாற்றமடைந்தது. இதற்கான காரணம் எமது மண்ணில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்களே என்பதில் ஐயமில்லை. ஒரு கிராமத்தில் ஒரு சிறந்த கல்லூரி அமைவது பெரிய விடயமாக இருக்கும். ஆனால் ஒரே கிராமத்தில் இரண்டு ஏ கிரேட் பாடசாலைகள் அதுவும் கலவன் பாடசாலைகளாக அமைந்திருப்பது மிகப் பெருமைக்குரிய விடயமாகும். மகாஜனக் கல்லூரியும், யூனியன் கல்லூரியும் இந்தப் பெருமையையும் அபூர்வமான சாதனையையும் எமது கிராமத்துக்குத் தந்துள்ளன.
13 / வயற்காற்று

Page 17
மகாஜனக் கல்லூரி
ரெயிலர் அருளம்பலம் துரையப்பாபிள்ளை என ஆரம்பத்தில் அறியப்பட்ட பாவலர் துரையப்பாபிள்ளை, யூனியன் கல்லூரியாக மாறுவதற்கு முன்புதான் தெல்லிப்பழை அமெரிக்க மிசன் பாடசாலையின் தலைமை ஆசிரியராக இருந்தார். கிறிஸ்தவராக இருந்தவர் சைவராக மாறி சைவப்பிள்ளைகளின் கல்விமுறை பற்றிச் சிந்திக்கலானார். ஆங்கில ஆட்சியின் பெறுபேறாக மதமாற்றம் இடம்பெற்றதும் அதன் பின்னரான கலாச்சாரப் பாதிப்புக்களையும் நன்கு உணர்ந்த பாவலர், சைவப்பிள்ளைகள் சைவச் சூழலில் கல்விகற்பதனை விரும்பினார். தன்னுள் உதித்த சிந்தனைக்கு வடிவம் கொடுக்குமுகமாக தன்னுடைய தலைமையாசிரியர் தொழிலை உதறிவிட்டு மகாஜன தமிழ்ப் பாடசாலையை உருவாக்கினார்.
தெல்லிப்பளை என்கின்ற சிறு கிராமத்தை இலங்கை முழுவதிலும் அறிய வைத்துப் பெருமைப்படுத்திய முக்கியமான காரணி மகாஜனக் கல்லூரியேயாகும். 1910ம் ஆண்டு பாவலர் துரையப்பா பிள்ளை என்கின்ற அறிஞனால் உருவாக்கப்பட்டு அவரின் தலைமகனாம் அமரர் ஜயரத்தினத்தால் இலங்கை முழுமையிலும் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இக்கல்லூரி வளர்த்தெடுக்கப்பட்டது. எமது ஊரவர்களினாலும் நாட்டின் அறிஞர் பெருமக்களாலும் ஒரு கிராமத்துப் பல்கலைக்கழகம் என மகாஜனக் கல்லூரி பெருமையாக அழைக்கப்படுகின்றது. அறுபதுகளில் தொடங்கி மிக அதிக எண்ணிக்கையில் மாணவர்களைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புகின்ற சில பாடசாலைகளில் மகாஜனக் கல்லூரி குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாகப் பெருமளவு மருத்துவர்களையும் பொறியியலாளர்களையும் நாட்டுக்குத் தந்த கல்விநிறுவனங்களில் இது முதன்மையானது. எமது நாட்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், அறிஞர்களையும், பத்திரிகையாளர்களையும் பெருந்தொகையாக சமூகத்திற்குத் தந்த கல்வி நிறுவனம் மகாஜனாவே.
கல்விக்கு மேலாக விளையாட்டுத் துறையில் இக்கல்லூரி பெற்ற வெற்றிகளும் செய்த சாதனைகளும் ஒரு சரித்திரமாகும். உதைபந்தாட்டத்தில் பல தடவைகள் யாழ்.மாவட்ட சாம்பியன்களாக இக்கல்லூரியினர் 1967 இல் இருந்து தொடர்ந்து எட்டு ஆண்டுகள் முதலாம் பிரிவின் சாம்பியன்களாகி சாதனை படைத்ததுடன், 1971 இலும் 1978 இலும் அகில இலங்கைச் சம்பியன்களாகி தமிழ்
வயற்காற்று /14

மக்களுக்குப் பெருமை சேர்த்தனர். உதைபந்தாட்டத்தில் இரண்டாம், மூன்றாம் பிரிவுகளிலும் பல தடவைகள் மாவட்டத்தின் வெற்றி வீரர்களானதுடன் கிரிக்கெட்டிலும் கொக்கியிலும் பலதடவைகள் சம்பியன்களாகினர்.
இலங்கை முழுமைக்குமான பாடசாலைகளிற்கிடையிலான நாடகப் போட்டிகளில் தொடர்ந்து ஐந்து தடவைகள் இக்கல்லூரியின் ஆசிரியர் கவிஞர் கதிரேசபிள்ளை எழுதித் தயாரித்த நாடகங்கள் வெற்றி பெற்றன. இன்றைக்கும் பெண் கதாபாத்திரங்களில் பெருமளவில் ஆண்களே நடிக்கின்ற எம்மவர் மத்தியில், நாற்பது ஆண்டுகளிற்கு முன்னரே மாணவிகளை துணிச்சலுடன் நடிக்கவைத்து, மேடையேற்றிய பெருமை இக்கல்லூரிக்கு உரியது.
போரின் அநர்த்தங்களையும் அதனது கொடுமையான விளைவுகளையும் முழுமையாகத் தரிசித்து பாதிப்புற்ற முக்கியமான கல்லூரி மகாஜனாவே. இலங்கை முழுமையிலும் உள்ள கல்வி நிறுவனங்களிலே, ஒரு செல்வந்தரினதோ அல்லது செல்வந்தக் குடும்பத்தினதோ உதவி இல்லாமல் முற்றிலும் பொதுமக்களின் பணத்தினாலே கட்டப்பட்ட ஒரே கல்வி நிறுவனம் இக்கல்லூரியாகும். 2010 ம் நூற்றாண்டு காண்கின்ற இக்கல்லூரி பத்து ஆண்டுகளிற்கும் மேலாக பல்வேறு இடங்களில் அகதி வாழ்வு வாழ்ந்துவிட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக மீண்டும் தனது சொந்த மண்ணில் சேவையாற்றத் தொடங்கியுள்ளது. மகாஜனா மீண்டும் புதிய பொலிவுபெறத் திட்டங்கள் திட்டப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் திகதி கொழும்பு - கொலிடே இன் ஹோட்டலில், கல்லூரி அதிபர் திரு.சுந்தரலிங்கம் தலைமையிலே உலகம் முழுமையிலும் பரந்து வாழும் மகாஜனன்களின் சர்வதேச மாநாடு அடுத்த பத்து ஆண்டுகளிற்கான திட்டம் ஒன்றைத் தீட்டித் செயற்படுத்தத் தொடங்கியுள்ளது.
எனினும் மகாஜனா தொடர்ந்தும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் தான் செயற்படுகின்றது. இது ஆசிரியர்களையும் மாணவர்களையும் பெரிய அளவில் பாதிக்கின்றது. இந்தக் கஷ்டநிலைமை மாறினால் கல்லூரி மீண்டும் புதுப்பொலிவு பெறும் என்பதில் ஐயமில்லை.
15 / வயற்காற்று

Page 18
யூனியன் கல்லூரி
எமது கிராமத்திற்குப் பெருமையும் புகழும் சேர்த்த இன்னொரு காரணியூனியன் கல்லூரியாகும். இலங்கையின் முதலாவது அமெரிக்க மிஷன் பாடசாலையாக 187 ஆண்டுகளின் முன்பாக இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இதுவும் முதலில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்-பெண் கலவன் பாடசாலையாகும். 150 ஆண்டு காலம் கிறிஸ்தவப் பாடசாலையாக விளங்கிய யூனியன் கல்லூரி, அறுபதுகளில் அரசாங்கம் பொறுப்பெடுத்ததன் பின்னர் சைவப் பிள்ளைகள் பெரும்பான்மையாகப் படிக்கின்ற காரணத்தினால் சைவக் கோயில் அமைந்த பாடசாலையாக மாற்றம் பெற்றுள்ளது.
எமது மண்ணுக்குச் சிறந்த கல்விமான்களையும் விளையாட்டு வீரர்களையும் தந்த இக்கல்லூரி விளையாட்டுத்துறையிலும் குறிப்பாக உதைபந்தாட்டத்துறையில் யாழ் மாவ்ட்டத்திலும் அகில இலங்கையிலும் வெற்றிகள் பல பெற்ற சாதனைகளுக்கு உரியது. எமது மண்ணின் மைந்தர்களில் ஒருவரான அமரர் ஐ.பி.துரைரத்தினம் அவர்களின் சீரிய தலைமையில் கல்லூரி வெற்றிகள் பல கண்டு உயர் கல்லூரியாகப் பரிணமித்தது. ஒரே கிராமத்தில் இருந்த காரணத்தால், மகாஜனக் கல்லூரியின் மிக மிக உயரிய வெற்றிகள், யூனியன் கல்லூரியின் வளர்ச்சியை ஓரளவு பாதித்தாலும், கல்லூரி எமது மக்களிற்குச் செய்த சேவைகள் அளப்பரியன.
இந்தக் கல்லூரியும் பத்தாண்டுகளிற்கு மேற்பட்ட அகதி வாழ்வின் பின்னர் 2002ம் ஆண்டு மீண்டும் எமது கிராமத்திலுள்ள சொந்த மண்ணில் செயற்படத் தொடங்கியுள்ளது. உயர் பாதுகாப்பு வலயத்தினில் உள்ளமை, யூனியன் கல்லூரியின் சுதந்திரமான செயற்பாடுகளிற்குத் தடையாக இருந்தாலும் இன்றைய அதிபர் திரு.புண்ணியசீலனின் சீரிய வழிநடத்தலில் கல்லூரி மீண்டும் பொலிவு பெறுகின்றது.
6J60)6OTuu LJITLEIT60)6)856ir
எமது கிராமத்தில் இன்னும் பல பாடசாலைகள் அமைந்துள்ளன. இவற்றில் சில நூற்றி இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டவை. தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலை திரு.ஜயரத்தினத்தின் ஆளுகையின் கீழ் செயற்பட்டது.
வயற்காற்று 716

கொல்லங்கலட்டி தமிழ்ப் பாடசாலையும் பன்னானை சேர் கனகசபை வித்தியாலயமும் நீண்ட வரலாறு கொண்டவை. கருப்பணிக்கொத்தை தமிழ்ப் பாடசாலை, கீரிமலை நகுலேஸ்வர வித்தியாலயம், திரு.செல்வநாயகத்தின் நினைவாக யூனியன் கல்லூரியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தந்தை செல்வா கனிஷ்ட பாடசாலை என்பன எமது கிராமத்தை அலங்கரித்தன. இந்தப் பாடசாலைகளெல்லாம் எமது மக்களுக்கு அறிவூட்டும் பணிகளைச் செய்தாலும் மகாஜனா, யூனியன் என்கின்ற இரு உயர் கல்வி நிறுவனங்களினால் இவற்றின் பெயரும் புகழும் மட்டுப்படுத்தப்பட்டு விட்டன என்பது தான் உண்மை,
வைத்தியசாலைகள்
எமது கிராமத்தில் இரண்டு பெரிய வைத்தியசாலைகள் செயற்பட்டன. இலங்கை முழுமையிலும் கூட்டுறவுமுறையில் இயங்கிய பெரிய வைத்தியசாலையாக மூளாய் வைத்தியசாலை இருந்தது. ஆனால் தெல்லிப்பழையில் இயங்கிய கூட்டுறவு வைத்தியசாலை அறுபதுகளின் முற்பகுதியிலிருந்து மிகப் பெரியதான சிறப்பான சேவை செய்கின்ற வைத்தியசாலையாகப் பரிணமித்தது. ஆரம்பத்தில் டாக்டர் சின்னையா என்கின்ற கைராசிக்கார வைத்தியரும், உச்சம் பெற்ற வேளையில் பொது வைத்தியத்திற்கு டாக்டர் செல்வேந்திராவும், மகப்பேற்று வைத்தியத்திற்கு டாக்டர் கெங்கம்மாவும் குடாநாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் தேடிவரும் வைத்தியர்களாகச் சிறப்பாக சேவையாற்றியுள்ளார்கள்.
காங்கேசன்துறைக் கடற்கரையில் சீமெந்துத் தொழிற்சாலைக்கு அண்மையாக நீண்ட காலம் சேவையாற்றிய அரசினர் வைத்தியசாலை சுகாதாரத் தேவை கருதி 1970ல் தெல்லிப்பழையில் புதிதாக அமைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் முதலாவது புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவு இங்கே ஆரம்பிக்கப்பட்டுச் செயற்பட ஆரம்பித்தது. இதனை முழுமையானதாக்க எடுத்த முயற்சிகள் போரினால் முற்றிலும் தடைப்பட்டு விட்டது. தற்போது இந்த வைத்தியசாலை அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருப்பதினால் செயற்பட முடியாமல் கூட்டுறவு வைத்தியசாலையின் ஒருபகுதியாகச் செயற்படுகின்றது.
இவை தவிர தனிப்பட்ட சில ஆங்கில வைத்தியசாலைகளும் ஊரில் பரவலாக அமைந்திருந்தன. கிராமங்களுக்கே உரிய ஆயுர்வேத வைத்தியம் எமது கிராமத்திலும் நன்றாகவே வேரூன்றி.
17 / வயற்காற்று

Page 19
யிருந்தது. பிரபல்யமான பல வைத்தியர்கள் கிராமம் முழுமையிலும் வீடுகளிலும், சிலர் வியாபார நோக்கிலான வைத்திய நிலையங்களையும் திறந்து சேவையாற்றினர்.
சமூக நிறுவனங்கள்
தெல்லிப்பழைக் கிராமத்தில் பரவலாக பல சமூகசேவை நிறுவனங்கள் செயற்பட்டன. சிலவற்றின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் கணிசமான தாக்கங்களை உருவாக்கியதை அவதானிக்க முடிகின்றது. தெல்லிப்பழையில் செயற்பட்ட இந்து இளைஞர் மன்றம், அம்பனைக் கலைப்பெருமன்றம்,சூட்டிங் ஸ்ரார் விளையாட்டுச் சங்கம், பன்னாலை கணேச சனசமூக நிலையம், தெல்லிப்பழை கிழக்கு திருமகள் சனசமூக நிலையம் என்பன குறிப்பிட்டுச் சொல்லத்தக்கன.
தெல்லிப்பழை இந்து இளைஞர் மன்றம் அமரர் திரு.ஜயரத்தினத்தைப் பெருந்தலைவராகக் கொண்டு மிகச் சிறப்பாகச் செயற்பட்டது. அழிவுகளிற்கு உட்பட்டு பராமரிக்காமல் இருந்த துர்க்கை அம்மன் ஆலயத்தைச் சிரமதானத்தின் மூலம் புதுப்பிக்க முன்முயற்சி எடுத்தவர்கள் இந்தச் சங்கத்தின் இளைஞர்களே என்றால் மிகை
ULINTööft gôl.
அம்பனை - கலைப்பெருமன்றம்
மகாஜனக்கல்லூரி அருகில் நரசிம்மவைரவர் ஆலயமாக முன்பு இருந்து, ஐம்பதுகளில் ஞானவைரவராகப் புதிய அவதாரம் பூண்ட கோயில் உள்ளது. மகாஜனக் கல்லூரியின் விளையாட்டுக் கோஷ்டிகள் இந்தக் கோவிலுக்குச் சென்று கற்பூரம் கொழுத்தி தேங்காய் உடைத்தே தங்களுடைய போட்டிகளிற்குச் செல்வார்கள். இந்தக் கோவிலைத் தளமாக் கொண்டு உருவாக்கப்பட்டதே அம்பனை- கலைப்பெருமன்றமாகும். 1968ம் ஆண்டு ஐப்பசி மாதம் ஒரு வெள்ளிக்கிழமை வைரவர் ஆலயத்தின் வழமையான பூசை, பஜனையின் பின் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கியதே கலைப் பெருமன்றமாகும். ஏறக்குறைய பத்து ஆண்டுகள் மாத்திரமே செயற்பட்ட மன்றம், கலை, இலக்கிய, சமூகத் தளங்களில் காத்திரமான பங்களிப்பை வழங்கியது. வைரவர் ஆலயத்தில் திருக்கார்த்திகையைத் தீபத்திருவிழாவாகவும் பத்துநாள் திருவெம்பாவை
வயற்காற்று 118

அதிகாலை வேளையிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். மன்றம் தைப்பொங்கலன்று நடாத்திய உழவர் விழா வருடாவருடம் பிரமிக்கத்தக்கதாக நடாத்தப்பட்டது. மன்றத்தின் விழாக்களில் பங்குபற்றாத அறிஞர்களோ, அல்லது கவிஞர்களோ இல்லையென. லாம். மன்றத்தின் சில வெளியீடுகள் அந்தக் காலத்திலேயே முன்னுதாரணங்களாக அமைந்தன.
இவர்கள் தயாரித்து மேடையேற்றிய நாடகங்கள் தரமானவை, சென்ற போட்டிகளிலெல்லாம் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றனர். கலைஞர்கள் திறமைக்கான பரிசில்களை வென்றனர். அன்றைய காலகட்டத்தில் நாடகத்துறையில் குடாநாட்டின் மிகச்சிறந்த நாடகக்குழு இதுவேயாகும். மன்றம் வருடா வருடம் சமூகத்திற்குச் சேவைசெய்த கலைஞர்களைக் கெளரவித்தது. எமது கிராமத்திற்குப் பெருமைசேர்த்த சமூக அமைப்புக்களில் கலைப் பெருமன்றம் முதன்மையானது.
பன்னாலை - கணேச சனசமூகநிலையம்
கணேச சனசமூக நிலையம் 1950ம் ஆண்டு ஆசிரியர் திரு வி சங்கரப்பிள்ளை அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டது. நீண்டகாலம் சிறு வாசிகசாலையுடன் இயங்கியநிலையம் அமரர் திரு. சிங்கம் அவர்கள் அன்பளிப்பாக வழங்கிய காணியில் ஒரு திறந்த வெளியரங்கையும் வாசிகசாலையையும் 1974அளவில் அமைத்தது. அமைப்பின் வெள்ளிவிழா 1975ம் ஆண்டு மிகச் சிறப்பாக மூன்று நாட்களாக முறையே மாதர் அரங்கு, இளைஞர் அரங்கு, அr ஞர் அரங்கு என தமிழுலகின் சிறந்த அறிஞர்கள், கலைஞர்கள் கலந்து கொண்ட விழாவாக நடாத்தப்பட்டது. எழுபதுகளின் நடுப்பகுதியில் அன்றைய இளைஞர்களான நந்தீஸ்வரன், கார்திகைக்குமரன் தலைமையில் இலவச ரியூசன் நடாத்தப்பட்டது. பன்னாலை மக்கள் மத்தியில் கணிசமான சேவை செய்த நிலையம் இதுவாகும்.
தெல்லிப்பழை கிழக்கு - திருமகள் சனசமூக நிலையம்
தெல்லிப்பழை கிழக்கில் அமைந்த திருமகள் சனசமூக நிலையம்
ஒரு வாசிகசாலையைக் கொண்டிருந்தது. சுற்றாடலைச் சேர்ந்த
19 / வயற்காற்று

Page 20
பெரியவர்களின் மாலை நேரச் சந்திப்பு மையமாகவும் பத்திரிகை படித்துப் புதினம் பரிமாறும் நிலையமாகவும் இது திகழ்ந்தது. முக்கியமானவர்களைக் கெளரவிக்கும் பல நிகழ்வுகள் இந்நிலையத்தால் நடாத்தப்பட்டன. ஆழிக் குமரன் ஆனந்தன் பாக்குநீரிணையை வெற்றிகரமாக நீந்திக்கடந்தமையைக் கெளரவித்து அவருக்கு ஒரு மகத்தான பாராட்டுவிழாவை இந்நிலையம் நடாத்தியது.
அம்பனை - சூட்டிங் ஸ்ரார் விளையாட்டுக் கழகம்
மகாஜனக் கல்லூரியில் கல்விகற்ற மாணவர்களால் 1968இல் கல்லூரியின் தேனீர்ச்சாலையில் ஆரம்பிக்கப்பட்டது துட்டிங் ஸ்ரார் விளையாட்டுக் கழகமாகும். கல்லூரிக்கு அருகில் மைதானம் ஒன்று உருவாக்கி, கரப்பந்தாட்டமும் பூப்பந்தாட்டமும் ஆரம்பித்தார்கள். வலிகாமம் விளையாட்டு அதிகாரியினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றும் பரிசளிப்பு இடம்பெறாமையைக் கண்டித்து, தாங்களே ஒரு மென்பந்துச் சுற்றுப்போட்டியை நடாத்தினார்கள். ஏழு ஆண்டுகள் தொடர்ந்து நடாத்தப்பட்ட இந்தச் சுற்றுப்போட்டி யாழ்மாவட்டத்தின் சிறந்த சுற்றுப்போட்டியாக விளங்கியது. இவர்கள் 1971இல் மகாஜனாக்கல்லூரி மைதானத்தில் ஒரு உதைபந்தாட்ட விழாவை மின்னொளியில் நடாத்தினார்கள். இரண்டுநாட்கள் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கொழும்பு சுகததாசா விளையாட்டரங்குக்கு வெளியே நடைபெற்ற முதல் மின்னொளி உதைபந்தாட்டம் இதுவாகும். யாழ் மாவட்டத்தின் உதைபந்தாட்டத்தில் சிறந்த பாடசாலைகளின் பழையமாணவர் குழுக்கள் இதில் கலந்து கொண்டன. அதிக பார்வையாளர்களைக் கொண்ட விளையாட்டு நிகழ்ச்சி இதுவாகும். இந்தக் கழகத்தை நடாத்தியவர்கள் பல்கலைக்கழகத்திற்கும் உத்தியோக நிமித்தம் கொழும்புக்குச் சென்றபோது இதன் கிளை அமைப்பு ஒன்றை அங்கு நடாத்தினார்கள். 1975இல் இதன் முக்கியஸ்தர்கள் கொழும்புக்கும் வெளிநாட்டிற்கும் சென்ற காரணத்தினால் கழகம் முற்றாக ஸ்தம்பித மடைந்தது. சிறிதுகாலமே இயங்கினாலும் காத்திரமான சமூகப் பங்களிப்புச் செய்த அமைப்பு இது.
வயற்காற்று /20

ஏனைய நிறுவனங்கள்
வாசிகசாலைகள், சனசமூக நிலையங்கள், ஐக்கிய நாணய சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விளையாட்டுச் சங்கங்கள் எனப் பல எமது கிராமத்தில் செயற்பட்டாலும் முறையாகப் பதிவுசெய்யத்தக்க தகவல்களைப் பெறமுடியவில்லை.
பிரத்தியேக கல்வி நிலையங்கள்
எமது மண்ணின் கல்வி தொடர்பான மாற்றங்களில் பிரத்தியேக கல்விநிலையங்கள் குறிப்பிடத்தக்கவை. அம்பனைச் சந்திக்கருகில் நடாத்தப்பட்ட அம்பனைக் கல்விக் கழகமும், தெல்லிப்பழைச் சந்திக்கருகில் நடாத்தப்பட்ட தெல்லிப்பழைக் கல்வி நிலையமும் எமது கிராமத்தில் இயங்கியவையாகும். பெற்றோரின் கருத்துக்கள் எப்படியாயினும், சமூகசிந்தனையாளர்கள் இவற்றைப்பற்றி நல்ல அபிப்பிராயம் கொள்ளவில்லை.
கிராமத்தைச் செழுமைப்படுத்தியவர்கள்
இவ்வளவு புகழுக்குரிய தெல்லிப்பழைக் கிராமத்தைச் செழுமைப்படுத்தியவர்கள் பலர். இவர்களைப்பற்றி இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பகுதிகளில் பதியப்பட்டுள்ளன. ஆனாலும் விவசாயிகளும் தொழிலாளிகளும் மாத்திரம் இருந்த இக்கிராமத்தின் நிலையை முற்றாக மாற்றியது அங்கு கிடைத்த உயர்கல்வியே. மகாஜனாக்கல்லூரியும் யூனியன் கல்லூரியும் கண்ட உயரிய வளர்ச்சியும் அதனை வழிநடாத்தியவர்களின் தன்னலமில்லாத உழைப்பு, தூரநோக்குடைய திட்டம், சீரிய தலைமை என்பன இதனைச் சாத்தியமாக்கின.
இந்தக் காரணத்தினால் தெல்லிப்பழையின் மிக மதிப்புக்குரிய மனிதர்களாக பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களும், மகாஜனச் சிற்பி தெ.து. ஜயரத்தினம் அவர்களும், நவீன யூனியன் கல்லூரியின் சிற்பி ஐபி துரைரத்தினம் அவர்களும் இனம்காணப்படுகின்றார்கள்.
21 / வயற்காற்று

Page 21
முடிவுரை
எமது மண் அழிந்துள்ளது. மண்ணில் வாழ்ந்தவர்கள் அழிக்கப்பட்டுள்ளார்கள். கிராமம் சகலதையும் இழந்துள்ளது. ஆனால் கிராமத்தின் முக்கிய அமைப்புக்கள் அனைத்துமே உயிர்ப்புடன் செயற்படுகின்றன. மகாஜனா என்கின்ற மகத்தான நிறுவனத்தை தங்களின் அன்பளிப்புக்களினால் மாத்திரமே வளர்த்த எம்மூரவர்கள், சந்தர்ப்பம் வரும்போது கிராமத்தை மீண்டும் கட்டியெழுப்புவார்கள் என்று நம்பிக்கையுறுவோம்.
வயற்காற்று 122

வயற்காற்று - 2
தெல்லிப்பழையின் LD60oss6ir

Page 22

தெல்லிப்பழையின் மணிகள்
தெல்லிப்பழை கிராமசபைக்கு உட்பட்ட பகுதிகளை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவர்களில் வெவ்வேறு துறைகளில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்களின் விபரங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் முழுமையானவையல்ல. எமது ஊரில் காத்திரமான ஆசிரியர்கள் நிறையவே இருந்தார்கள். மகாஜனக் கல்லூரியின் வளர்ச்சியினால் உயர்ந்த பதவிகளிலும் எமது ஊரவர்கள் நிறையவே இருந்துள்ளார்கள். இவர்களைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படவேண்டும். ஆனாலும் இங்கே பதிவாகியிருப்பவர்கள் என்னுடைய பார்வையில் அதற்குப் பொருத்தமானவர்கள் எனக் கருதிய காரணத்தால் இடம் பெறுகின்றார்கள்.
எதிர்காலத்தில் இதை முழுமையாக்கும் முயற்சியைச் செய்வதாக உள்ளேன். வேறுயாராவது செய்ய விரும்பினால் என்னுடைய முழுமையான ஒத்துழைப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
இங்கே இரண்டாம் பகுதியிலுள்ள பதிவுகள் முடிந்தவரை ஆங்கில அகர வரிசைப்படி பதியப்பட்டுள்ளன. உங்கள் ஒத்துழைப்பு மிக அவசியமானது.
இரண்டாம் பகுதியில் பதிவாகியிருப்பவர்களில
*
குறியுடையவர்கள் மூன்றாம் பகுதியிலும்
*责
குறியுடையவர்கள் மூன்றாம் பகுதியின் குறிப்புகளிலும் நான்காம் பகுதியின் கட்டுரைகளிலும் பதிவாகியுள்ளனர்.
25 / வயற்காற்று

Page 23
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி “ Miss Thankammah Appakkuddy தெல்லிப்பழை, 1925
ஆசிரியர், தமிழறிஞர், சைவப் பிரமுகர், சமூக சேவையாளர்.
திரு. குமாரசாமி பாலசிங்கம் CAS * Mr Cumarasamy Balasingham CAS கொல்லங்கலட்டி. (காலம்சென்றவர்)
திறைசேரியின் துணைச்செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், áFelpá5 (3áF60b6)Ju IIT6YTi.
திரு. கென்.பாலேந்திரா" Mr Ken Balendra
தெல்லிப்பழை.
விளையாட்டு வீரர், நிர்வாகத் தலைவர், ஜோன்ஸ் கீல்ஸ், தலைவர், இலங்கை வங்கி,
திரு.ஜே. டபிள்யு. பார் குமரகுலசிங்கி Mr. J.W. Barr Kumarakulasinghe தெல்லிப்பழை, 1826 - 1883.
நீதிமன்ற முதலியார், நாடகத் தயாரிப்பாளர்,
திரு.கே.சி. பார் குமரகுலசிங்கி Mr. K. C. Barr Kumarakulasinghe தெல்லிப்பழை, 1862-1903,
கேட் முதலியார், தேசாதிபதியின் தமிழ் மொழிபெயர்ப்பாளர்.
வயற்காற்று /26

திரு.ஆர்.ஆர். பார் கும்ரகுலசிங்கி Mr. R. R.Barr Kumarakulasinghe தெல்லிப்பழை, 1864 - / (காலம்சென்றவர்)
சமாதான நீதவான், சமூக சேவையாளர், மணியகாரர்.
திரு.எஸ்.பாஸ்கரலிங்கம் CAS * Mr. M. Baskaralingam CAS தெல்லிப்பழை.
ஆசிரியர்,
திறைசேரிச் செயலாளர். கல்வி அமைச்சுச் செயலாளர், உலக வங்கி ஆலோசகர்.
திரு. நாகேந்திரன் போஜன் Mr. N. Bojan கொல்லங்கலட்டி, 1950 -
இராணி சாரணன், சாரண ஆணையாளர்,
திரு.சா.ஜே. வே.செல்வநாயகம் Cெ MP “ Mr. S. J. V. Chelvanayagam QC, MP தெல்லிப்பழை. 1898 - 1977
ஆசிரியர். சட்ட வல்லுனர், தமிழரசுக்கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்.
வைத்திய கலாநிதி சின்னையா Dr. Chiliniah தெல்லிப்பழை, (காலம்சென்றவர்)
மருத்துவ வல்லுனர். (தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலை)
27 / வயற்காற்று

Page 24
திருமதி மலர்மதி கங்காதரன் Mrs Malarmathy Kangatharan (d/o K Muthulingam) அம்பனை. 1965 -
ஆசிரியர், நிதிஅமைச்சு நிர்வாகி.
திரு.தெ.து. ஜயரத்தினம் “ Mr.T.T. Jayaratnam தெல்லிப்பழை, 1913 - 1976 அதிபர், கல்வியாளர்,
சைவப் பிரமுகர், சமூக சேவையாளர்.
திரு. கதிரிப்பிள்ளை ஜெகதீஸ்வரம்பிள்ளை *. Mr. Kathirippillai Jegatheesvarampilai விளிசிட்டி. (இங்கிலாந்து)
சைவ அறிஞர், பத்திரிகையாளர், ஆசிரியர், சுமூகசேவகர்,
திரு. T. கனகரத்தினம் . Mr. T. Kanagaratnam
தெல்லிப்பழை.
எழுத்தாளர்.
திரு. பொ. கண்ணப்பர் Mr. P. Kannappar தெல்லிப்பழை, (காலம்சென்றவர்)
வர்த்தகப் பிரமுகர், சமூகசேவையாளர்.
திரு. வி. காராளசிங்கம் Mr. V. Karalasingham தெல்லிப்பழை, (காலம்சென்றவர்)
சட்ட வல்லுனர், அரசியல் அறிஞர், தொழிற்சங்கவாதி, இலங்கை விமானச்சேவை நிர்வாகி.
வயற்காற்று 128

திரு. சின்னத்தம்பி கந்தையா Mr. Sinnathamy Kandiah கொல்லங்கலட்டி. 1899 - 1981
மண்ணியல் நியுணர், விரிவுரையாளர், சைவப் பிரமுகர், சமூக சேவையாளர்.
திரு. கந்தையா கந்தசாமி Mr. Kandaiah Kanthasamy மாவிட்டபுரம். 1930 - 1988
ஆசிரியர்,
சட்ட அறிஞர். மனித உரிமைப் போராளி, சமூக சேவையாளர்.
திரு. கு. கதிரையாண்டி Mr. K. Kathiraiandy
தெல்லிப்பழை, (காலம்சென்றவர்)
ஆசிரியர், கிராமசபைத் தலைவர், சமூகசேவையாளர்.
திரு. கா. கதிர்காமத்தம்பி “ Mr. K. Kathirgamathamby பன்னாலை, 1914 - 2004
தலைமை ஆசிரியர். சமூக சேவையாளர். சைவசமய அறிஞர்.
திரு. வைத்தீஸ்வரன் குணாளன் ‘ Mr. Waitheeswaran Kunalan தெல்லிப்பழை தென் மேற்கு.
அரசியலாளர், சமூக சேவையாளர், கிராம சேவகர்.
29 / வயற்காற்று

Page 25
திருமதி. கோகிலா மகேந்திரராஜா * Mrs. Kokila Mahendrarajah (d/o S Sivasubramaniam) விழிசிட்டி.
ஆசிரியர், எழுத்தாளர், சமூகவியலாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்.
திரு. எஸ். மாணிக்கவாசகர் Mr. S. ManickavaSgar தெல்லிப்பழை, (காலம்சென்றவர்)
கிராமசபைத் தலைவர், சமூக சேவையாளர்.
திரு. எம். மாசிலாமணி Mr. M. Masilamani தெல்லிப்பழை (காலம்சென்றவர்)
கிராமசபைத் துணைத்தலைவர், சமூக சேவையாளர்.
திரு. த. பூ முருகையா" Mr.P. Murugaiah தெல்லிப்பழை.
ஆசிரியர், கிராமசபைத் துணைத்தலைவர், அரசியல் பிரமுகர், கூட்டுறவாளர்.
திருமதி. முத்தம்மா நாகலிங்கம்
Mrs. Muthammah Nagalingam
தெல்லிப்பழை கிழக்கு. (காலம்சென்றவர்)
செங்கண்மாரி வைத்தியர்.
வயற்காற்று 130

火
மயிலங்கூடலூர் பிநடராசன் Mylankoodaloor P Nadarasan மயிலங்கூடல்.
ஆசிரியர், எழுத்தாளர், வெளியீட்டாளர், சமூக சேவையாளர்.
திரு. வேலுப்பிள்ளை நந்தீஸ்வரர்” Mr. Veluppilai Nantheeswarar பன்னாலை. (கனடா)
அரசியலாளர், சமூகசேவகர், மாவட்ட பொறியியலாளர்.
★
வைத்தியகலாநிதி சீனியர் நவரத்தினம் Dr Seeniar Navaratnam விழிசிட்டி. (இங்கிலாந்து)
அரசியலாளர்,
சமூக சேவையாளர்.
அருட்திரு கலாநிதி நைல்ஸ் Rev Dr Niles தெல்லிப்பழை, (காலம்சென்றவர்
சமய சேவையாளர்.
திரு. மாவை தி நித்தியானந்தன் Mr. Mavai TNithiyananthan மாவிட்டபுரம். (அவுஸ்திரேலியா)
நாடகாசிரியர், எழுத்தாளர், அரசியலாளர், சமூகசேவையாளர்.
31 / வயற்காற்று

Page 26
பண்டிதர் கதிரிப்பிள்ளை Pandit Kathirippillai விழிசிட்டி. (காலம்சென்றவர்)
தமிழறிஞர், தலைமை ஆசிரியர்.
செல்வி பரமேஸ்வரி * Miss. Parameswary
தெல்லிப்பழை கிழக்கு .
விளையாட்டுவீரர்.
திரு. இளையவி பசுபதி” Mr. Elaiavy Pasupathy தெல்லிப்பழை, (காலம்சென்றவர்)
அரசியலாளர், சமூகசேவகர்.
திரு. து. பத்பநாபன் Mr. T. Pathmanaban தெல்லிப்பழை, (இங்கிலாந்து)
தொழில் அதிபர்.
திரு.பவை ஜெயபாலன்” Mr. Pavai Jeyabalan தெல்லிப்பழை தென் மேற்கு. (இங்கிலாந்து)
கவிஞர்,
அரசியற் தொண்டர், சமூக சேவையாளர்,
ஊடகவியலாளர்.
டாக்டர். பொன்னம்பலம் Dr. Ponnampalam கருகம்பனை. (காலம்சென்றவர்)
வைத்தியசேவையாளர், சமூகசேவையாளர்.
வயற்காற்று 132

வைத்தியகலாநிதி எண். பூபாலசிங்கம்
Dr. N. Poobalasingham கருகம்பனை. (இங்கிலாந்து)
*
சமூகசேவையாளர்.
புலவர் ம பார்வதிநாதசிவம் ” Pulavar M. ParvathinathaSivam மாவிட்டபுரம்.
கவிஞர். பத்திரிகையாளர், தமிழறிஞர்.
திரு. பொன்னையா இராஜகாந்தன் * Mr. Ponniah Rajakanthan அம்பனை. (பிரான்ஸ்)
சமூகசேவகர்,
விளையாட்டு வீரர்.
திரு. ரி. டபுள்யு ராஜரத்தினம் பா உ Mr. T. W. Rajaratnam MP
தெல்லிப்பழை, (காலம்சென்றவர்)
பாராளுமன்ற உறுப்பினர்,
சட்ட அறிஞர்.
திரு. ரஜே ராஜரத்தினம் Mr. T. J Rajaratnam தெல்லிப்பழை. 1919-1981
உயர்நீதிமன்ற நீதியரசர், சட்ட அறிஞர்.
திரு. ரி. சீ ராஜரத்தினம் Mr. T. C. Rajaratnam தெல்லிப்பழை, (காலம்சென்றவர்)
கூட்டுறவாளர், ćFIDuu(356006) u IT6пi.
33 / வயற்காற்று

Page 27
திரு. பொ. இராஜேஸ்வரன் Mr. P. Rajeswaran கருகம்பனை. (காலம்சென்றவர்)
பொலிஸ் அத்தியட்சகர்.
安素
திரு. வி.ஆர். இராமநாதன் Mr. V. R. Ramanathan பன்னாலை . (இங்கிலாந்து)
சமயத்தொண்டர், சமூக சேவையாளர்.
திரு. எஸ். இரங்கநாதன் Mr. S. Ranganathan தெல்லிப்பழை, (காலம்சென்றவர்)
பிரபல வர்த்தகர்.
赏
திரு. றோகன் இராஜசிங்கம் Mr. Rohan Rajasingham தெல்லிப்பழை கிழக்கு. 1957
விளையாட்டுவீரர், சமூக சேவையாளர்,
பிரதான விளையாட்டு அலுவலர்.
திரு. நாகலிங்கம் சிறீசபேசன்’ Mr. Nagalingam Srisabesan அம்பனை. (இங்கிலாந்து)
கவிஞர், பத்திரிகையாளர், சமூக சேவையாளர், அரசியலாளர்.
செல்வி சந்திரமதி தவராஜா * Miss. Sandiramathy Thavarajah தெல்லிப்பழை தென்மேற்கு.
விளையாட்டுவீரர்,
விளையாட்டு உத்தியோகஸ்தர்.
வயற்காற்று 134

வைத்தியர் செல்லத்துரை
Ayur vedha Vaththiyar Sellaththurai
தெல்லிப்பழை தென்மேற்கு. (காலம்சென்றவர்)
ஆயுள்வேத வைத்தியர்.
வைத்தியர் செல்லத்துரை Ayur vedha Vaththiyar Sellaththurai தெல்லிப்பழை கிழக்கு. (காலம்சென்றவர்)
ஆயுள்வேத வைத்தியர்.
திரு. மாவை சோ சேனாதிராஜா * M.r Mavai SSenathirajah MP மாவிட்டபுரம்.
அரசியலாளர், பாராளுமன்ற உறுப்பினர்.
செனேற்றர் பொ.நாகலிங்கம் Senator P. Nagalingam தெல்லிப்பழை. 1904 - 1981
பாராளுமன்ற செனேற் உறுப்பினர், தொழிற்சங்க தலைவர், சுன்னாகம் பட்டினசபைத் தலைவர், சமூக சேவையாளர்.
திரு. கே. சண்முகலிங்கம்* Mr. K.Shanmugalingam SLAS பன்னாலை,
தமிழறிஞர், அரசாங்க உயர் உத்தியோகஸ்தர், சமூக சேவையாளர்.
திரு. எஸ். சின்னமணி Mr. S. Sinnamani தெல்லிப்பழை, (இங்கிலாந்து)
அரசியலாளர், லண்டன்/ லூயிசம் மேயர், சமூகசேவையாளர்.
35 / வயற்காற்று

Page 28
சேர் அம்பலவாணர் கனகசபை Sir Ampalavanar Kanagasabai பன்னாலை. 1856 - 1927
சட்டசபை உறுப்பினர், சட்ட வல்லுனர்.
திரு. ம. சிதம்பரநாதன் Mr. M. Sithambaranathan தெல்லிப்பழை, (காலம்சென்றவர் )
கிராமசபைத் தலைவர், வழக்கறிஞர்.
安安
வைத்திய கலாநிதி வி. சிவஞானவேல் Dr. V. Sivagnanavel பன்னாலை. (இங்கிலாந்து)
பிரபல மருத்துவர்.
சமூகவியலாளர்.
வைத்திய கலாநிதிக சிவகுமாரன் * Dr. Kandiah Sivakumaran கொல்லங்கலட்டி. (இங்கிலாந்து) சமய, தமிழறிஞர், சமூக சேவையாளர், மனநல நிபுணர்.
திரு. சி. சிவமகாராசா பா உ “ Mr. S. SivamaharaSa MP கொல்லங்கலட்டி.
கூட்டுறவாளர், பாராளுமன்ற உறுப்பினர், சமூகசேவையாளர்.
திரு. ஆ. சிவநேசச்செல்வன் ’ Mr. A. Sivanesaselwan
அம்பனை.
பத்திரிகையாளர், எழுத்தாளர், சமூகசேவையாளர்.
வயற்காற்று /36

வைத்திய கலாநிதி என். சிவசுப்பிறமணியம் Dr. N. Sivasubramanian கருகம்பனை. (காலம்சென்றவர்)
பிரபல மருத்துவர், சமூக சேவையாளர்.
திரு. எஸ். சிவதாசன் பா உ Mr. S. SivathaSan MP கொல்லங்கலட்டி.
அரசியலாளர், சமூகவியலாளர், பாராளுமன்ற உறுப்பினர்.
安
திரு. நா. சிறிபாலகெங்காதரன் Mr. N. Sribalagengatharan அம்பனை. (இங்கிலாந்து
விளையாட்டுவீரர்.
திரு. நாகலிங்கம் சிறிகெங்காதரன் ** Mr. Nagalingam Sri Gengatharan அம்பனை. (இங்கிலாந்து)
அரசியலாளர், தமிழார்வலர்,
சமூக சேவையாளர்.
安
திருமதி. சொர்ணதேவிதம்பிப்பிள்ளை Mrs. Sornadevi Thambipillai (d/o Mr Murugesu) தெல்லிப்பழை, (இங்கிலாந்து)
சமூகசேவையாளர்.
திரு. தம்பு மாஸ்ரர் Mr. Thampoo Master தெல்லிப்பழை தென்மேற்கு. (காலம்சென்றவர்)
தலைமை ஆசிரியர், சமூகசேவகர்.
37 / வயற்காற்று

Page 29
திரு. தம்பு செல்வரத்தினம் Mr. Thampu Selvaratnam கொல்லங்கலட்டி. (காலம்சென்றவர்)
கிராமசபைத் தலைவர், சமூக சேவையாளர்.
திரு. தெ. து. தர்மரத்தினம் " Mr. T. T. Tharmaratnam தெல்லிப்பழை, (காலம்சென்றவர்)
ஆசிரியர், சமூகவியலாளர், உயர் பதவி வகித்தவர்.
திரு. வைத்தீஸ்வரன் தயாளன் ‘ Mr. Waitheswaran Thayalan தெல்லிப்பழை தென் மேற்கு. (இங்கிலாந்து)
சமூக சேவையாளர்.
திரு. மாணிக்கவாசகர் தில்லையம்பலம் * Mr. Manickavagar Thillaiampalam தெல்லிப்பழை, (காலம்சென்றவர்)
விளையாட்டுவீரர்.
பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை “ Pavalar T. A. Thuraiappapillai தெல்லிப்பழை, 1872 - 1929
தலைமை ஆசிரியர்,
பத்திரிகையாளர், தமிழறிஞர், சமூகசேவையாளர்.
திரு. ஐ. பி.துரைரத்தினம் “ Mr. ... P. Thurairatnam தெல்லிப்பழை, 1904 - 1985
கல்லூரி அதிபர், சமூகசேவையாளர், அரசியலாளர்.
வயற்காற்று /38

திரு. கதிர்க்ாமத்தம்பி துரைசிங்கம் * Mr. Kathirkamathamby Thuraisingham பன்னாலை (கனடா)
சமூக சேவையாளர்.
திரு. கதிரிப்பிள்ளை உமாமகேஸ்வரம்பிள்ளை * Mr. Kathirippilai Umamaheswaran 6ỉuộlfì” lọ.
ஆசிரியர், எழுத்தாளர், சமய அறிஞர்.
திரு. பூதப்பிள்ளை வைத்திலிங்கம்* Mr. Poothapillai Vaithilingam பன்னாலை, (காலம்சென்றவர்)
மாவட்ட நீதிவான்.
திரு. வி. வன்னியசிங்கம் Mr. V. Vanniyasingham பன்னாலை, (காலம்சென்றவர்)
கிராமசபைத் துணைத்தலைவர், ஆயுள்வேத மருத்துவர்.
திரு. கு. வன்னியசிங்கம் பா உ* Mr. C. Vanniyasingham MP கொல்லங்கலட்டி. (காலம்சென்றவர்)
சட்டஅறிஞர், பாராளுமன்ற உறுப்பினர், தமிழரசுக்கட்சி ஸ்தாபகர்களில் ஒருவர்.
திரு. விச்சுப்பரியாரியார் Mr. Vichchu Pariyariyar பன்னாலை. (காலம்சென்றவர்)
ஆயுள்வேத வைத்தியர்.
39 / வயற்காற்று

Page 30
பேராசிரியர் ○所。 வித்தியானந்தன் 袁安 Prof. S. Vithiyananthan தெல்லிப்பழை, (காலம்சென்றவர்)
பேராசிரியர், எழுத்தாளர், தமிழறிஞர்,
பல்கலைக்கழகத் தலைவர்.
திரு. சொக்கநாதன் யோகநாதன் Mr. Sockanathan Yoganathan தெல்லிப்பழை. 1950 -
அரசியலாளர், சமூகவியலாளர்.
திருமதி. மங்களநாயகம் தம்பையா Mrs. Mankalanayagam Thambiah கீரிமலை. (காலம்சென்றவர்)
முதல் பெண் நாவலாசிரியை,
திரு. பொன் முத்துக்குமாரு Mr. Pon Muthukkumaru பன்னாலை . (காலம்சென்றவர்)
சங்கீத வித்துவான், சமூக சேவையாளர்.
திரு. பொன் தெய்வேந்திரன் Mr. POn Theivendran
பன்னாலை,
சங்கீத வித்துவான், சமயஅறிஞர்.
திரு. தம்பு கனகேஸ்வரன் Mr. Thampu Kanakeswaran புதுத்தோட்டம். 1952 -
விளையாட்டுவீரர்.
வயற்காற்று 140

★
திரு. வி. சங்கரப்பிள்ளை Mr. V. Sangarappillai பன்னாலை, 1913 -
ஆசிரியர்,
சமூக சேவையாளர்.
திரு. எஸ். எஸ். இராஜகுமார் Mr. S. S. Rajkumar
தெல்லிப்பழை, (இங்கிலாந்து)
விளையாட்டு வீரர்.
திரு. சிதம்பரப்பிள்ளை ஜயர் Mr. Sithamparappilai Iyar அம்பளை. (காலம்சென்றவர்)
கலைஞர்.
பிரம்மழரீ துரைச்சாமிக் குருக்கள்
PramaSri Thuraisamy Kurukkal
மாவிட்டபுரம். (காலம்சென்றவர்)
மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய ஆதீனகர்த்தா.
பிரம்மறிது. சண்முகநாதக் குருக்கள் PramaSri T. Shanmuganatha Kurukkal மாவிட்டபுரம் .
மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய ஆதீனகர்த்தா.
பிரம்மறிநகுலேஸ்வரக் குருக்கள் Prama.Sri Naguleswara Kurukkal கீரிமலை .
கீரிமலை நகுலேஸ்வர ஆலய ஆதீனகர்த்தா.
திரு. ரி. நாகேந்திரம் Mr. T.Nagendram தெல்லிப்பழை, (காலம்சென்றவர்)
சட்ட அறிஞர், கையெழுத்து ஆய்வு நிபுணர்.
41 / வயற்காற்று

Page 31
திரு. வி. குமாரசாமிப்பிள்ளை Mr. V. Cumarasamypillai கோல்லங்கலட்டி. (காலம்சென்றவர்)
சட்ட அறிஞர், ஒலைச் சுவடி சேகரிப்பாளர்.
கலாநிதி வேலுப்பிள்ளை பேரம்பலம் Dr. Velupillai Perampalam தெல்லிப்பழை. 1917 -1993
காங்கேசன் சீமெந்து தொழிற்சாலை முகாமையாளர், ஐக்கிய நாடுகள் சபை ஆலோசகர்.
திரு. சு. விாையகரத்தினம் Mr. S. Vinayagaratnam பன்னாலை.
ஆசிரியர், சமூகசேவையாளர், சமயத் தொண்டர்.
திரு. க. நல்லநாதன் CAS Mr. K. Nailanathan CAS கொல்லங்கலட்டி .
உள்ளுராட்சி ஆணையாளர்.
திரு. செகராஜசிங்கம் பத்மநாதன் Mr. Segarajasingam Pathmanathan தெல்லிப்பழை, (இங்கிலாந்து)
சமூகசேவையாளர்.
திரு. வை. பொன்னையா Mr. V .POnnaiah பன்னாலை. (காலம்சென்றவர்)
அதிபர், சமய, சமூகத் தொண்டர்.
வயற்காற்று 742

திரு. நா. ஆறுமுகம் Mr. N. Arumugam அம்பனை. (காலம்சென்றவர்)
ஆசிரியர், கவிஞர், சமய, சமூகத் தொண்டர்.
திரு. கந்தையா முருகதாசன் Mr. Kandiah Murugathasan அம்பனை. (ஜெர்மனி)
சமூகத் தொண்டர்,
பத்திரிகையாளர்.
திரு. வி. விஜயநாயகம் Mr. W.Wijayanayagam தெல்லிப்பழை கிழக்கு .
தொழிற்சங்கவாதி.
திரு. மார்க்கண்டு ராமதாஸ் Mr. Markandu RamathaS தெல்லிப்பழை.
கட்டட நிபுணர், கட்டட ஒப்பந்தகாரர்.
திருமதி ஜெயரஞ்சினி ஞானதாஸ் Mrs. Jayaranjini Gnanathas அம்பனை.
குறும்படத் தயாரிப்பாளர், புல்கலைக்கழக விரிவுரையாளர்.
வைத்திய கலாநிதி சின்னத்தம்பி ராஜசேகரன் Dr. Sinnathamby Rajasegaran அம்பனை ,
வைத்திய நிபுணர், நாட்டுப்பற்றாளர்.
43 / வயற்காற்று

Page 32
திரு. கே. ஏ. சுப்பிரமணியம் Mr. K. A. Subramaniam கொல்லங்கலட்டி. (காலம்சென்றவர்)
முழுநேர அரசியல்வாதி,
தொழிற்சங்கவாதி.
திரு. நாகலிங்கம் தவநாதன் Mr. Nagalingam Thavanathan தெல்லிப்பழை,
கூட்டுறவாளர்.
திரு. ச. துதிபாலசுந்தரன் Mr. S. ThuthibalaSundaran தெல்லிப்பழை தென் மேற்கு.
எண்சாத்திர நிபுணர்.
திருமதி. இராணிரத்தினம் ஜயரத்தினம் Mrs. Raniratnam Jayaratnam தெல்லிப்பழை (இங்கிலாந்து)
சமூகசேவைக்கு உந்துசக்தி.
திரு. எஸ். ஆறுமுகநாதன் Mr. S. Arumuganathan தெல்லிப்பழை,
பிரபல கட்டட ஒப்பந்தகாரர்.
திரு. சின்னத்தம்பி சிறிதரன் Mr. Sinnathamby Sritharan அம்பனை .
பிரபல கட்டட ஒப்பந்தகாரர்.
திரு. திருமேனி செல்லத்துரை
Mr. Thirumeni Sellathurai
தெல்லிப்பழை கிழக்கு.
உள்ளுராட்சியாளர், சமுகசேவையாளர்.
வயற்காற்று /44

பிரம்மறி எஸ் குகசர்மா PrammaSri S Kugasarma தெல்லிப்பழை (காலம் சென்றவர்)
சமய அறிஞர், சமய பிரச்சாரகர்.
திரு. தம்பு இரத்தினம் Mr. Thampu Rathinam பன்னாலை. (காலம்சென்றவர்)
கட்டட கலைஞர், கட்டட ஒப்பந்தகாரர்.
பிரம்மறி ஆர். விசுவநாத ஐயர் Prammasri R. Visuvanath yar தெல்லிப்பழை, (காலம்சென்றவர்)
சங்கீத விற்பன்னர்.
45 / வயற்காற்று

Page 33

6 IUs)&mpbp - 3
பிரசித்தி பெற்ற பிரமுகர்கள்

Page 34

பகுதி இரண்டில் இருந்து விபரங்கள் தெரிந்த ஐம்பது பிரமுகர்கள் பற்றிய குறிப்புகள் இங்கே ஆங்கில அகர வரிசைப்படி பதியப்பட்டுள்ளன
செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி
2 திரு. கு. பாலசிங்கம்
3 திரு. கென் பாலேந்திரா 4 திரு. சா. ஜே. வே. செல்வநாயகம் (பா.உ) 5 திரு. ப.வை ஜெயபாலன்
6 திருமதி. இராணிரத்தினம் ஜயரத்தினம் 7 திரு. தெ. து. ஜயரத்தினம் (ஜே. பி) 8 திரு. க. ஜெகதீஸ்வரம்பிள்ளை
9 திரு. சொ. யோகநாதன் 10 திரு. கா. கதிர்காமத்தம்பி
1 திருமதி. மலர்மதி கங்காதரன் 12 திருமதி. கோகிலா மகேந்திரன் 13 திரு. த. பூ முருகையா 14 திரு. பி. நடராசன் 15 செனேற்றர் பொ.நாகலிங்கம் 16 திரு. க. நல்லநாதன் 17 திரு. வி. நந்தீஸ்வரர் 18 வைத்திய கலாநிதி சீ நவரத்தினம் 19 செல்வி. பரமேஸ்வரி 20 புலவர் ம. பார்வதிநாதசிவம்
21 திரு. எஸ்.பாஸ்கரலிங்கம் 22 திரு. செ. பத்மநாதன் 23 திரு. ரி. பி. பத்மநாதன்
49 / வயற்காற்று

Page 35
24
25
26
27
28
29
30
திரு. இ. பசுபதி ஜேபி வைத்திய கலாநிதி என் பூபாலசிங்கம் திரு. பொ. இராஜகாந்தன் திரு. றொகான் இராஜசிங்கம் திரு. பொ. இராஜேஸ்வரன்
திரு. வி. ஆர். இராமநாதன்
திரு. வி. சங்கரப்பிள்ளை திரு. மாவை சோ சேனாதிராஜா (பா.உ) திரு. க. சண்முகலிங்கம் வைத்திய கலாநிதி க சிவகுமாரன் திரு. சி. சிவமகாராசா (பா. உ) திரு. ஆ. சிவநேசச்செல்வன் , திரு. நா. சிறிபால கெங்காதரன் திரு. நா. சிறிகெங்காதரன் திரு. நா. சிறீசபேசன் திருமதி. சொர்ணதேவி தம்பிப்பிள்ளை திரு. தெ. து. தர்மரத்தினம் செல்வி. சந்திரமதி தவராஜா திரு வைத்தீஸ்வரன் தயாளன் திரு. மாணிக்கவாசகர் தில்லையம்பலம் பாவலர் துரையப்பாபிள்ளை திரு. ஐ. பி. துரைரத்தினம் (ஜே. பி.) திரு. க. துரைசிங்கம் திரு. பூ வைத்தியலிங்கம் திரு. கு. வன்னியசிங்கம்’ (பா.உ) பேராசிரியர் சு. வித்தியானந்தன் திரு. க. உமாமகேஸ்வரம்பிள்ளை
வயற்காற்று /50

1. செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி
சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்ற இவர், பயிற்றப்பட்ட முதற்தர ஆசிரியராக 1945ல் ஆசிரியர் சேவையில் இணைந்தார். பண்டிதர் பரீட்சையிலும் சைவப்புலவர் பரீட்சையிலும் சித்தியெய்திய செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி ஆரம்பத்தில் மட்டக்களப்பு கொழும்பு ஆகிய இடங்களில் கடமையாற்றிய பின்னர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் 1964இல் இருந்து 1976இல் இளைப்பாறும் வரை ஆசிரியராகக் கடமையாற்றினார்.
திரு. ஜயரத்தினத்தின் மறைவின் பின்னர் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தலைவரான இவர், இன்று சைவ உலகின் மதிப்புக்குரியவராகத் திகழ்கின்றார்.இவரது சேவையைப் பாராட்டி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கியுள்ளது.
2. திரு. கு. பாலசிங்கம் (CAS)
கொல்லங்கலட்டி வழக்கறிஞர் திரு. குமாரசாமியின் இரண்டாவது மகனான இவர் மகாஜனக் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்றவர். கொழும்பு பல்கலைக்கழகப் பட்டதாரியான திரு. பாலசிங்கம் இலங்கை அரசசேவையில் சேர்ந்து மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர். திறைசேரியின் துணைச் செயலாளராகவும் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் திறம்படச் சேவையாற்றினார். சமய சமூகசேவைகளை ஆற்றிய இவர், முன்னாள்
கோப்பாய் M.P திரு. கு. வன்னியசிங்கத்தின் சகோதரராவார்.
3. திரு. கென். பாலேந்திரா
பன்னாலை திரு. அம்பலவி கந்தையா அவர்களின் (கொள்ளுப்பிட்டி கந்தையா) இரண்டாவது மகன் திரு. கென். பாலேந்திரா. இலங்கையின் மிகச் சிறந்த தொழில்சார் நிர்வாகிகளில் முதன்மையானவர். கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் சிறந்த றகள் விளையாட்டு வீரராவர். ஆரம்பத்தில் மலை
51 / வயற்காற்று

Page 36
யகத் தோட்ட சுப்பிறிண்டனாக பணியாற்றினார். பின்னர் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் தலைவராக ஒய்வுபெறும்வரை செயற்பட்டார். இரண்டு ஆண்டுகள் இலங்கை வங்கியின் தலைவராக சேவையாற்றினார். தற்போது ஓய்வுபெற்று கொழும்பில் வசித்து வருகிறார்.
4. திரு. சா. ஜே. வே. செல்வநாயகம்
தமிழினத்தின் தந்தை என அறியப்பட்ட திரு செல்வநாயகம் மலேசியாவில் பிறந்தவர். சிறுவயதில் தெல்லிப்பழைக்கு இடம்பெயர்ந்தவர். மிகச்சிறந்த சட்டவல்லுனர். 1947 பொதுத்தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் காங்கேசன்துறைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான இவர் 1952 பொதுத்தேர்தலில் தோல்வியுற்றாலும் 1956 முதல் இறக்கும்வரையான 1977ம் ஆண்டுவரை ஆறு தடவைகள் காங்கேசன்துறைத் தொகுதியைப் பிரதிநித்துவப்படுத்தியவர். இவரைப் பற்றிய விரிவான கட்டுரையொன்று பகுதிநான்கில் இடம்பெறுகின்றது.
5. திரு. ப.வை. ஜெயபாலன்
திரு. ப.வை. ஜெயபாலன், மகாஜனக் கல்லூரியின் வளர்ச்சியில் முக்கிய பங்குவகித்த திரு. தம்புவாத்தியாரின் மகள் வயிற்றுப் பேரன். தமிழரசுக் கட்சியின் தீவிரமான ஆதரவாளர்.
அம்பனை - கலைப்பெருமன்றம், அம்பனை - சூட்டிங் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றில் முக்கியமான உறுப்பினர். கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த இவர், அங்கு தமிழர் கூட்டணியின் முக்கியமான உறுப்பினராகச் செயற்பட்டார். அங்கு செயற்பட்ட பல சமூக இயக்கங்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். லண்டனில் ஒலிபரப்பாளராக விளங்கும் திரு. ஜெயபாலன் சமீபத்தில் வெளிவந்த கவிதை நூலின் ஆசிரியர். மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், அதன் பழைய மாணவர் சங்கத் துணைச் செயலாளர்.
6. திருமதி . இராணிரத்தினம் ஜயரத்தினம்
பாவலர் துரையப்பாபிள்ளையின் மருமகளாகவும் மகாஜன சிற்பி ஜயரத்தினத்தின் மனைவியாகவும் அறியப்பட்ட திருமதி இராணிரத்தி. னம் அவர்கள் மகாஜனக் கல்லூரியினது அபரிதமான வளர்ச்சியின் பின்னால் இருந்த உந்துசக்தி என்ற ஒரே காரணத்தினால் இந்தப்புத்தகத்
வயற்காற்று /52

தின் இரண்டாம் மூன்றாம்பகுதியில் இடம்பெறுகின்றார். இவரை தெல்லிப்பழைக் கிராமத்தின் முதற்பெண்மணி என்று கூறினால் மிகையல்ல.
7. திரு. தெ.து. ஜயரத்தினம்
எமது கிராமத்தின் பெயரை நாடு முழுமைக்கும் தெரியப்படுத்திய பெருமகன் இவராவர். 1913ம் ஆண்டு அன்றைய அமெரிக்க மிசன் பாடசாலையின் அதிபரான பாவலர் துரையப்பாபிள்ளையின் தலைமகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பித்தார். பின்னர் மகாஜன உயர்நிலைப் பள்ளியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1932ம் ஆண்டு மகாஜன உயர்நிலைப் பள்ளியின் உதவி ஆசிரியரானார். 1945ம் ஆண்டு மகாஜனாவின் அதிபராகப் பொறுப்பேற்றார். 400 மாணவர்களுடனும் 15 ஆசிரியர்களுடனும் இவரின் அதிபர் பணி ஆரம்பமாகியது. 1945இல் வடமாகாண ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும், தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலையின் முதற் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
1953-55 வரை மீண்டும் தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலையின் தலைவராகப் பணியாற்றினார்.
1956இல் வடமாகாண ஆசிரியர் சங்கச் செயலாளரானார். 1959இல் யாழ் கல்விச் சபையின் இணைச் செயலாளராகத் தெரியப்பட்டு நீண்டகாலம் சேவையாற்றினார். 1961இல் மகாஜன அதிஉயர்தரப் UITLóFIT60)6lou IITab (Super Grade) GU(b60LDGuibngs.
1962-63இல் இரண்டாண்டுகள் யாழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் தலைவராகக் கடமையாற்றினார். 1964ல் அனைத்திலங்கை அதிபர்கள் மாநாட்டுக்குச் செயலாளராகத் தெரியப்பட்டார். 1965ல் திரு. சு. நடேசபிள்ளையின் மறைவின் பின் நிலைதளர்ந்த இராமநாதன் இசைக்கல்லூரியைப் பொறுப்பேற்று அதன் தலைவராகி அதனை உறுதியுடன் நிலைபெறச் செய்தார்.
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய பரிபாலனசபைத் தலைவராகவும், தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தின் தலைவராகவும் 1966இல் இருந்து 1976இல் அமரராகும் வரை செயற்பட்டார். 1967இல் சமாதான நீதவானாகச் சிறப்புப் பெற்றார். 1968இல் அம்பனைக் கலைப்பெருமன்றத்தின் காப்பாளராக கலை இலக்கியப் பணிகள் பல செய்வதற்கு வழிகோலினார். 1970இல் ஓய்வு
53 / வயற்காற்று

Page 37
பெற்றபோது மகாஜனா 1800 மாணவர்களுடனும் 64 ஆசிரியர்களுடனும் சிறப்புப் பெற்றது.
8. திரு. கதிரிப்பிள்ளை ஜெகதீஸ்வரம்பிள்ளை
திரு. ஜெகதீஸ்வரம்பிள்ளை அவர்கள் ஆசிரியத் தொண்டு செய்யும் தமிழறிஞர்களின் குடும்பத்தில் பிறந்தவர். தெல்லிப்பழை மண்தந்த தமிழறிஞர் பண்டிதர் கதிரிப்பிள்ளை அவர்களின் மகன். தமிழறிஞர் திரு. உமாமகேஸ்வரம்பிள்ளை அவர்களின் சகோதரருமாவார். இவரின் தாயாரும் ஆசிரியரே. தனது தந்தையார் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்த பன்னாலை சேர்.கனகசபை வித்தியாலயத்திலும், தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரியிலும் கல்வி கற்ற இவர், கடந்த 30 ஆண்டுகளிற்கும் மேலாக லண்டனில் வசித்து வருகின்றார்.
லண்டனில், 1986 இல் தமிழார்வம் கொண்ட நண்பர்களுடன் ஆரம்பித்த கிங்ஸ்ரன் தமிழ்ப்பாடசாலையின் தலைமை ஆசிரியராகக் கடந்த 18 ஆண்டுகளாகக் கடமை புரிகின்றார்.
சைவமுன்னேற்றச் சங்கம், மகாஜன பழையமாணவர் சங்கம் என்பனவற்றின் முக்கிய உறுப்பினரான இவர், "லண்டன் முரசு", "கலசம்" என்பவற்றின் உதவி ஆசிரியராகச் செயற்பட்டுள்ளார்.
9. திரு. சொக்கநாதன் யோகநாதன்
தெல்லிப்பழை மாதனையைச் சேர்ந்த திரு. யோகநாதன் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவராவர். இராணி சாரணரான இவர் தமிழரசுக் கட்சியினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் தீவிரமான ஆதரவாளர். அறுபதுகளின் பிற்பகுதியில் இளைஞர்கள் கிளிநொச்சி மாவட்டத்தை நோக்கி விவசாயிகளாகப் படையெடுத்தபோது சென்ற இளைஞர்களில் இவரும் ஒருவர்.
70களின் ஆரம்பத்தில் தமிழ் மாணவர் போராட்டத்தில் தன்னையும் இணைத்து தமிழ் இளைஞர் பேரவையை உருவாக்கியவர்களில் ஒருவரானார். காலம் சென்ற இறைகுமாரனுடனும் சந்ததியாருடனும் இணைந்து சிறிதுகாலம் இளைஞர் பேரவையினைத் தலைமை தாங்கி நடாத்தினார். இளைஞர் பேரவை தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் முரண்பட்ட வேளையில் அதன் செயலாளராகக் கடமையாற்றியவர்.
வயற்காற்று 154

பின்னர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துTRO இன் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். தற்போது இந்தியாவில் வாழ்ந்து வருகின்றார்.
10. திரு. காசிப்பிள்ளை கதிர்காமத்தம்பி
திரு. கா. கதிர்காமத்தம்பி உபாத்தியாயர் அவர்கள் ஆரம்பக் கல்வியை சேர் கனகசபை வித்தியாசாலையிலும், ஆசிரியர் பயிற்சியை 1931இல் திருநெல்வேலி சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் முடித்து, 1936இல் சேர்.கனகசபை வித்தியாசாலையில் உதவி ஆசிரியரானார். 1959 முதல் 1971 வரை அதிபராகக் கடமையாற்றினார்.
தனது ஊரான பன்னாலையின் சமய சமூக வளர்ச்சியில் மிகக் கணிசமான பங்கு திரு. கதிர்காமத்தம்பி ஆசிரியருடையது. கோயில் திருப்பணிகளைத் தனது கிராமத்தில் முன்னின்று நடாத்தியபோது கூட்டுப்பிரார்த்தனைகள், நால்வர் குருபூசைகள், சேக்கிழார் விழா என்பனவற்றைத் திறம்பட ஒழுங்கமைத்தார். ஐக்கிய நாணய சங்கம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், கணேசா சனசமூக நிலையம் என்பன ஆசிரியரின் காத்திரமான பங்களிப்பினால் மிகச் சிறப்பாக செயற்பட்டதை ஊரவர்கள் நன்றியுடன் நினைவு கூருவார்கள்.
11. திருமதி. மலர்மதி கங்காதரன்
(செல்வி முத்துலிங்கம்) தெல்லிப்பழை அம்பனை திரு. கந்தையா முத்துலிங்கம் அவர்களின் புத்திரியான மலர்மதி அவர்கள் தந்தையாரின் அரச அலுவல் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் கல்வி கற்றாலும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் நீண்டகாலம் கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் கொழும்பு சென்ற் பிறிட்ஜெட் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார். அரசாங்க திட்டமிடல் சேவைப் பரீட்சையில் சித்தியெய்தி இலங்கை அரசாங்கத்தின் திட்டமிடல், நிதி அமைச்சில் உயர் பதவியில் இருக்கின்றார். உலக வங்கியின் புலமைப் பரிசில் பெற்று இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு பயின்றார்.
55 / வயற்காற்று

Page 38
12. திருமதி. கோகிலா மகேந்திரன்
எமது கிராமத்தின் புகழைப் பேசவைக்கின்ற பல்துறை விற்பன்னர் இவர், சேர் கனகசபை வித்தியாலயத்தினதும், மகாஜனக் கல்லூரி. யினதும் மாணவர். எமது சமூகத்தின் திறமை மிக்க ஆசிரியர்களில் ஒருவர். தனது தந்தையாரைப்பின்பற்றி தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாலயத்தின் அதிபராகச் சிலகாலம் பதவி வகித்து இன்று உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றுகின்றார்.
தமிழின் இன்றைய சிறுகதை எழுத்தாளராக இனங்காணப்படுபவர். பொதுவான சமூகம் சார்ந்த பல காத்திரமான நடவடிக்கைகளை இன்று முன்னின்று நடாத்துபவர் இவர். ஆசிரிய சமூகத்தை தனது சீரிய வழிநடத்துகை மூலமாக சமூக அக்கறை கொண்ட ஒரு சமூகமாக மாற்றுவதற்குக் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றார்.
13. திரு. த பூ முருகையா
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் அதன் ஆசிரியராக நீண்டகாலம் செயற்பட்டவர். எமது மண்தந்த மிகச்சிறந்த கணித ஆசிரியரான திரு. முருகையா கல்லூரியின் வளர்ச்சியில் அதிபர் திரு. ஜயரத்தினத்துடன் இணைந்து செயற்பட்டவர். 60களில் லங்கா சமசமாஜக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதியின் அமைப்பாளராகச் செயற்பட்ட இவர் பின்னாளில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகச் செயற்பட்டார். தெல்லிப்பழை கிராமசபையின் அங்கத்தவராகவும் துணைத் தலைவராகவும் தெரியப்பட்ட இவர் ஆசிரியர்களுக்கான அரசியல் தடை காரணமாக நேரடி அரசியலில் இருந்து விலகியிருந்தார்.
தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலை நிர்வாகத்திலும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கநிர்வாகத்திலும் தீவிரமாகச் செயற்பட்ட திரு. முருகையா, எழுபதுகளில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகச் செயற்பட்டார். தேநீர்சாலை மின்தறி நிலையம் எனக் கூட்டுறவுச் சங்கம் கண்ட வளர்ச்சியில் இவரின் பங்கு முக்கியமானது.
புதிய அரசியல் சூழலினால் அதிலிருந்து விலகிய இவர் சிலகாலம் வீடமைப்பு அதிகாரியாகவும் பணிபுரிந்தார். தற்போது கொழும்பில் வதியும் திரு. முருகையா மகாஜன பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாடுகளில் தன்னை இணைத்துள்ளார்.
வயற்காற்று 156

14. மயிலங்கூடலூர் பி. நடராசன்
மயிலங்கூடலூர் நடராசன் எனப் பரவலாக அறியப்பட்டவர். மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர். அதேகல்லூரியின் ஆசிரியர். கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராகக் கடமையாற்றியவர். பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டு விழாச் சபையின் இணைச்செயலாளராக செயலாற்றியவர். தனது கருத்துக்கள் எதனையும் திணிக்காமல் மாணவர்கள் சுயமாகச் சித்தித்துச் செயற்பட ஊக்கமளித்தவர் என்று அவருடைய மாணவர்களான இன்றைய எழுத்தாளர்கள் பலரால் மதிப்புடன் குறிப்பிடப்படுபவர். எமது மண்ணில் வெளிவருகின்ற பலருடைய நூல்களின் பின்னால் உள்ள சக்தி இவர்தான். மகாஜனக் கல்லூரியுடன் சம்பந்தப்பட்ட பல வெளியீடுகளின் பொறுப்பாளராகச் செயற்படும் திரு. நடராசன் ஒரு எழுத்தாளரும் கவிஞருமாவார்.
15. செனேற்றர் பொ. நாகலிங்கம்
இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருந்த அரசியல்வாதிகளில் மிகச் சிறந்தவர்களாக எண்ணத்தக்க சிலரில் தோழர் நாகலிங்கம் குறிப்பிடத்தக்கவர். 1904இல் தெல்லிப்பழையில் பொன்னர் வளவில் பிறந்த இவர் யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றுப்பின்னர் இலங்கை சட்டக்கல்லூரியில் கற்று சட்டத்தரணியானார்.
சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் 1924இல் யாழ்ப்பாணத்தில் சமூக அக்கறை கொண்ட மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இளைஞர்களான பின்னரும் தொடர்ந்து யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசை தொடக்கியவர்களில் திரு.நாகலிங்கம் முக்கியமானவர். மகாத்மா காந்தியின் சுதேசியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர்கள் பிரித்தானிய அரசிடமிருந்து இலங்கைக்குச் சுதந்திரம் வேண்டி நின்றதுடன், தமிழ் மக்கள் மத்தியில் சமஉரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்தார்கள்.
டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தலை தமிழ்மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற இளைஞர் காங்கிரசின் வேண்டுகோளை ஏற்று ஒரு தொகுதி தவிர்ந்த ஏனைய தொகுதிகள் அனைத்திலும் தேர்தலே நடைபெறவில்லை என்பது சரித்திரம்.
57 / வயற்காற்று

Page 39
லங்கா சமசமாஜக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினரான தோழர் நாகலிங்கம், 1947 பொதுத் தேர்தலில் கட்சியின் சார்பில் காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்டார். பின்னர் 1951இல் சமசமாஜக் கட்சியின் சார்பில் பாராளுமன்ற செனற் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1956 வரை செனற் உறுப்பினராகச் செயற்பட்ட இவர் பின்னர் உடுவில் தொகுதியிலும் சமசமாஜக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். தமிழ் மக்கள் மத்தியில் தொழிற்சங்கங்களை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர் இவராவர்.
இலங்கைச் சுருட்டுத் தொழிலாளர்சங்கம், பஸ் தொழிலாளர் சங்கம் என்பனவற்றை உருவாக்கியதுடன் ஆரம்பகாலத்தில் அதன் தலைவராகவும் செயற்பட்டார். சுன்னாகம் பட்டின சபை உருவாக உழைத்ததுடன் அதன் முதற்தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டார். தனது இறுதிக்காலம் வரை தலைவராகவே பணியாற்றிய இவர், சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டார். சமூக அந்தஸ்து குறைந்த தமிழ் மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்காக உழைத்தவர்களில் இவர் முக்கியமானவர்.
16. திரு. மு. நல்லைநாதன் (CAS)
கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. நல்லைநாதன் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர். பல்கலைக்கழகப் படிப்பின் பின்னர், இலங்கை அரச சேவைப் பரீட்சையில் சித்தியெய்தி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பதவி உட்பட பல உயர் பதவிகளை வகித்தவர்.
17. திரு. வே. நந்தீஸ்வரர்
பன்னாலை திரு வே நந்தீஸ்வரர் மகாஜனக் கல்லூரியில் கல்விகற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரியாகி நாட்டின் பல பகுதிகளில் கடமை யாற்றினார். யுாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதான பொறியியலாளராக கடமையாற்றிய திரு நந்தீஸ்வரர், சிறந்த சேவைக்காக ஜனாதிபதியினால் பாராட்டப்பெற்றார். சிறுவயது முதற்கொண்டு சமூக சேவையில் அக்கறை கொண்டு செயற்பட்டார். தனது கிராமத்தில் மாணவர்களுக்கு இலவச ரியூசன் வகுப்புக்களை நடாத்தினார். புன்னாலை
வயற்காற்று /58

கணேச சனசமூக நிலையத்தின் செயலாளராக இருந்து திறந்த வெளியரங்கு அமைக்கப் பாடுபட்டார். சங்கத்தின் வெள்ளி விழாவை 1975இல் மூன்று நாட்கள் கலை-இலக்கிய விழாவாக சிறப்பாக நடாத்துவதற்கு காரணமாக இருந்தார். தீவிரமாக இடதுசாரி அரசியலில் அக்கறை கொண்டு செயற்பட்டார்.
கனடாவில் குடும்பத்துடன் வசித்து வரும் திரு நந்தீஸ்வரன் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராக இருந்ததுடன் சமய நிறுவனங்களில் தீவிரமான செயற்பாடுகளைக் கொண்டுள்ளார்.
18. வைத்திய கலாநிதி சீ. நவரத்தினம்
தெல்லிப்பழை - விழிசிட்டி சீனியர் நவரத்தினம், எமது மண் தந்த சிறந்த் வைத்தியநிபுணர்களில் ஒருவர். மகாஜனக் கல்லூரியில் இருந்து பல்கலைக்கழகம் சென்று வைத்தியகலாநிதியான இவர் சிலகாலம் இலங்கையில் கடமையாற்றிய பின் இங்கிலாந்தில் வாழ்ந்துவருகின்றார்.
இங்கிலாந்தில் பல்வேறு சமய சமூக அமைப்புக்களில் மிக முக்கிய பொறுப்புக்களில் செயற்பட்டு வருகின்றார். SCOT என்கின்ற கெளரவமான நிறுவனத்தின் ஆரம்பகாலத் தலைவர்களில் ஒருவராகவும் பணிபுரிகின்றார். மகாஜனக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கத்தின் முதல் தலைவரான இவர், இன்று காப்பாளர்களில் ஒருவராவர். இலண்டன் சிவன் கோயில் உட்படப் பல்வேறு சமய அமைப்புக்களின் பொறுப்புக்களில் செயற்பட்டு வருபவர் இவர். இங்கிலாந்து மண்ணில் எமது கிராமத்தின் பெயர் சொல்லும் மைந்தர்களில் குறிப்பிடத்தக்கவர் இவர்.
19. செல்வி பரமேஸ்வரி
தெல்லிப்பழை கிழக்கைச் சேர்ந்த பரமேஸ்வரி, யூனியன் கல்லூரியின் சிறந்த தடகள வீராங்கனையாவார். யாழ் மாவட்ட மட்டத்தில் பரிசில்கள் பல பெற்ற குறிப்பிடத்தக்க வீராங்கனையாவர்.
20. புலவர் ம. பார்வதிநாதசிவம் //
மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர் ம.பார்வதிநாத சிவம் அவர்கள் பரீட்சைக்குத் தோற்றாமலே பண்டிதரான மகாலிங்க
59 / வயற்காற்று

Page 40
சிவத்தின் மைந்தர்.மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே பேரறிஞர்களான மு. அருணாசலம்பிள்ளை, தண்டபாணி தேசிகர் ஆகியோரிடத்தில் மரபுவழி அமைந்த உயர்கல்வி பெற்றுப் புலவரானவர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் நெருங்கிய தொடர்பினாலே புதிய சிந்தனைகளை உள்ளிந்தவர். இன்று பண்டிதரும், அல்லாதோரும் போற்றிடும் நற்கவிஞராக விளங்குகின்றார்.
தூய வெள்ளைநிற வேட்டிநஷனலுடன் எப்பொழுதும் காட்சிதரும் புலவர் பார்வதிநாதசிவம், மிகமிக மெலிந்த தோற்றமுடையவர். இவர் இடதுசாரி சிந்தனைகளைக் கொண்டவராக விளங்குகின்றார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பல பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் முன்பும், தற்போதும் செயற்பட்டுக் கொண்டிருப்பவர் புலவர் அவர்கள்.
21. திரு. மு. பாஸ்கரலிங்கம் CAs
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவரான திரு. பாஸ்கரலிங்கம் தெல்லிப்பழை கிழக்கைச் சேர்ந்தவர். பல்கலைக்கழகக் கல்வியின் பின் சிறிதுகாலம் மகாஜனக் கல்லூரியின் தற்காலிக ஆசிரியராகக் கடமை புரிந்தார். இந்தக் காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் நிர்வாகசேவைப் பரீட்சையில் சித்தி எய்தினார். இலங்கை அரசாங்கத்தில் திரு.பாஸ்கரலிங்கம் வகிக்காத பதவிகளே இல்லையெனலாம்.
திறைசேரியின் செயலாளராகத் திறம்படச் செயலாற்றிய இவர் ஒருகாலகட்டத்தில் அரசாங்கத்தின் சக்திவாய்ந்த பிரமுகராக விளங்கினார். ஜனாதிபதி பிரேமதாசாவின் நம்பிக்கைக்குரியவராக விளங்கினார். ஒய்வுபெற்ற பின் உலகவங்கியின் ஆலோசகராகவும் பதவி வகித்தார்.
22. திரு. செ. பத்மநாதன்
தெல்லிப்பழையின் பிரபல வியாபாரக் குடும்பத்தினைச் சேர்ந்தவர் திரு. செகராஜசிங்கம் பத்மநாதன். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கல்விகற்ற இவர், தனது கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தை இங்கிலாந்தில் உருவாக்குவதற்கும் அதனை நல்லமுறையில் செயற்படுத்துவதற்கும் காரணமானவர். 50க்கும் மேற்பட்ட தமிழ்ப்
வயற்காற்று / 60

பழைய மாணவர் சங்கங்க்ள் இணைந்துள்ள தமிழ்ப்பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவர் என்பதுடன் மூன்று ஆண்டுகள் அதன் தலைவராகவும் கடமையாற்றியவர். வெம்பிலி தமிழ்பாடசாலையின் வளர்ச்சியிலும் தனது சுற்றாடலில் உள்ள சமூக அமைப்புக்களின் செயற்திட்டங்களிலும் அக்கறையுடன் பங்குபற்றுகின்றார்.
23. திரு. ரி. பி. பத்மநாதன்
சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. ரி.பி. பத்மநாதன் அவர்கள் மகாஜனக் கல்லூரியில் நூலகராகவும் உதைபந்தாட்டப் பயிற்சியாளராகவும் அறுபதுகளின் முற்பகுதியில் பொறுப்பேற்ற காரணத்தினால் தெல்லிப்பழையில் குடியேறியவர். தன்னுடைய மிகுதிநாட்களை தெல்லிப்பழையில் வாழ்ந்தவர் . தெல்லிப்பழைக் கிராமத்திற்குப் பெரும் புகழும் கீர்த்தியும் கிடைக்கக் கரணமான இருவரில் ஒருவர். மகாஜனக் கல்லூரியை வளர்த்தமையால் திரு ஜயரத்தினமும் உதைபந்தாட்டத்தில் கண்ட உயரிய வெற்றிகளினால் திரு பத்மநாதனும் இப்பெருமைக்கு உரியவர்களாகின்றனர். இவரைப்பற்றி நான் 1971இல் எழுதிய கட்டுரையினை விரிவாக்கி திரு விநாயகரத்தினம் எழுதிய கட்டுரை, பாகம் நான்கில் இடம்பெறுகின்றது.
24. திரு. இ. பசுபதி (ஜே. பி.)
சிறுபான்மைத் தமிழ்மக்கள் மத்தியில் எழுபதுகளில் சமூக அக்கறையுடன் செயற்பட்டவர்களில் திரு. பசுபதி குறிப்பிடத்தக்கவர். கொம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவரான இவர், தெல்லிப்பழையில் இடம்பெற்ற பொது அமைப்புக்களிலும் சமூக நிறுவனங்களிலும் முக்கிய பங்காற்றியவர். இவர் சமூகத்திற்குச் செய்த சேவைகளிற். காக அரசாங்கத்தினால் சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டார். கட்சியினதும் சிறுபான்மைச் சமூகத்தினதும் போராட்டங்கள் அனைத்திலும் முன்நின்ற போராளி இவர்.
25. வைத்தியகலாநிதி N. பூபாலசிங்கம்
வைத்தியகலாநிதி பூபாலசிங்கம் கருகம்பனையைச் சேர்ந்தவர். மகாஜனக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் சென்றவர். இலங்கையில் சிலகாலம் மருத்துவராகச் சேவையாற்றிய பின் லண்டனில்
61 / வயற்காற்று

Page 41
மருத்துவராக இருந்துவருகின்றார். மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முக்கியமான உறுப்பினரான இவர் Scot என்ற சமூகநல நிறுவனத்தில் தலைவராகச் சிறந்த பணியாற்றியுள்ளார்.
26. திரு. பொன்னையா இராஜகாந்தன்
தெல்லிப்பழை - அம்பனை திரு. சின்னத்தம்பி பொன்னையாவின் மகன் திரு. இராஜகாந்தன்.
மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கல்லூரியின் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராவர். கிரிக் கெட், ஹொக்கி, உதைபந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களில் கல்லூரியின் மாவட்டச் சாம்பியன் கோஷ்டிகளின் வீரரும், கப்டனுமாவர். கல்லூரியின் 3ம், 2ம், 1ம் குழுக்களில் இவர் தொடர்ந்து விளையாடியதுடன், யாழ் மாவட்டத் தெரிவுக் குழுவுக்காக உதைபந்தாட்டம், ஹொக்கி ஆகிய விளையாட்டுக்களில் பங்குபற்றினார்.
கல்லூரியின் ஒட்டப் போட்டிகளில் சாம்பியனான இவர் கல்லூரியின் சார்பில் மாவட்டப் போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றிகள் பல பெற்றுள்ளார். தெல்லிப்பழை கிராஸ்கொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகம், மகாஜன பழைய மாணவர் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து விளையாடிய இவர். கடந்த 15 ஆண்டுகளாகப் பிரான்சில் வசித்து வருகின்றார். பிரான்சிலும் விளையாட்டில் அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்றார். பிரான்சில் இவர் ஒரு தகுதி பெற்ற உதைபந்தாட்ட மத்தியஸ்தராவார்.
27. திரு. றொகான் இராஜசிங்கம்
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கல்விபயின்ற இவர் பின்பு விளையாட்டு அலுவலராகத் தெரிவாகினார். 1986-88 காலப்பகுதியில் யாழ்ப்பாண பிரதேச செயலகத்திலும், 1996ல் இருந்து 2004 வரை வடக்கு கிழக்கு மாகாண விளையாட்டுத் துறைத் திட்டமிடல் அலுவராகவும் கடமைபுரிந்து தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதான விளையாட்டு அலுவலராகப் பதவி வகிக்கின்றார்.
பாடசாலையில் கல்வி பயிலும் காலங்களில் ஹொக்கி, உதைபந்து துடுப்பாட்டம், மெய்வல்லுனர் போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர். 1976ல்,
வயற்காற்று /62

ஹொக்கி அணியின் தலைவராகவும், 77ல் உதைப்ந்தாட்ட அணித் தலைவராகவும், துடுப்பாட்ட அணியின் உபதலைவராகவும் இருந்து பாடசாலை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 1977ல் சிறந்த துடுப்பாட்ட வீரராகத் தெரிவானார். 1978ல் அகில இலங்கை பாடசாலை மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் தனது பாடசாலை அணியின் தலைவராக இருந்து சிறப்புற விளையாடி அவ்வணி Champian ஆக வருவதற்கு உறுதுணையாக இருந்தவர். இதே காலப்பகுதியில் அகில இலங்கைப் பாடசாலைகள் ஹொக்கி அணிக்கான தெரிவணியில் இடம்பெற்றார். அதேபோல், தேசிய இளைஞர் உதைபந்தாட்டத் தெரிவணியிலும் இடம்பெற்றார்.
தெல்லிப்பழை கிறாஸ் கொப் பேர்ஸ் விளையாட்டுக் கழக அங்கத்தவரான இவர், உதைபந்தாட்டம், ஹொக்கி, துடுப்பாட்டம், மெய்வல்லுனர் போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றி அக்கழக அணிகளின் வெற்றிக்கு வழிவகுத்தவர்.
1986ல் விளையாட்டு அலுவலராகக் கடமை ஏற்ற பின்பு 1987ல் தேசிய விளையாட்டுக்கள் விஞ்ஞான நிறுவனத்தில் விளையாட்டு 19ü(3677/TuDIT ébsb60)35 (2)|Blijlu76006OTü (Diploma in Sports - Sri Lanka) பூர்த்தி செய்தார். பின்பு உதைபந்தாட்டம், மெய்வல்லுனர் என்பவற்றில் தகுதிவாய்ந்த பயிற்றுனராகப் பதவி உயர்வு பெற்றார். 1994ல் மெய்வல்லுனர் விசேட கற்கை நெறியினை இலங்கையிலும், 1998ல் பயிற்சியாளர்களுக்கான டிப்ளோமாப் பயிற்சியினை (Diploma in Brasiloan Football) பிறேசிலிலும், 1998ல் பயிற்சியாளர்களுக்கான igi (86TITLDITL uujibéfu560607 (Diploma in Coaching and Training)
இந்தியாவிலும் பூர்த்தி செய்தார்.
தெல்லிப்பழையில் விளையாட்டு அலுவலராக இருந்த காலப்
பகுதியில் வலைப்பந்தாட்ட அணி 1991, 2001, 2002ம் ஆண்டுகளில்
தேசிய மட்டத்தில் 3ம் இடத்தினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
உதைபந்தாட்ட நடுவர், வலைபந்தாட்ட மத்தியஸ்தர், துடுப்பாட்ட மத்தியஸ்தர் பரீட்சைகளில் சித்தி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.திரு. றொகான் இராஜசிங்கம் அவர்கள் எமது கல்லூரிதந்த மிகச் சிறந்த விளையாட்டுவீரர்களில் ஒருவராவர். இன்று யாழ் மாவட்டத்தின் பிரதான விளையாட்டு உத்தியோகஸ்தராகக் கடமைபுரியும் இவர், 2003 இல் இலண்டனுக்கு வருகை தந்த வடகிழக்கு வலைப்பந்தாட்ட அணியின் முகாமையாளராகவும் (Manager) விளங்கினார்.
63 / வயற்காற்று

Page 42
28. பொலிஸ் அத்தியட்சகள்
திரு. பொ. இராஜேஸ்வரன்
கருகம்பனை டாக்டர் பொன்னம்பலத்தின் மகனான திரு. இராஜேஸ்வரன் பொலிஸ் திணைக்களத்தில் சேர்ந்து பதவி உயர்வுகள் பல பெற்று பொலிஸ் சுப்பிரண்டனாக சேவையாற்றினார். விடுதலைப் போராட்டத்தின் பெயரால் உயிர் பறிக்கப்பட்ட முக்கியமான பொலிஸ் உத்தியோகஸ்தர் இவராவார்.
29. திரு. வி. ஆர். இராமநாதன்
பன்னாலையைச் சேர்ந்த திரு வைரமுத்து இரத்தினம் இராம. நாதன் மகாஜனாவின் பழைய மாணவர். கொழும்பிலும் பின் இங்கிலாந்திலும் தனது தொண்டினால் உயர்ந்தவர். இன்று இங்கிலாந்திலுள்ள முக்கியமான சமயப்பிரமுகராக அறியப் படுகின்றவர். மகாஜனக் கல்லூரிப் பழையமணவர் சங்கத்தின் தலைவராக உள்ள திரு. இராமநாதன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் பின்னால் உள்ள உந்துசக்தியாவர். இவரைப் பற்றிய விரிவான கட்டுரை பாகம் நான்கில் இடம்பெறுகின்றது.
30. திரு. வி. சங்கரப்பிள்ளை
இவர் 1914ல் பிறந்தார். பன்னாலையில் சமூகவளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியவர்களில் விச்சுப் பரியாரியரின் மூத்த புதல்வரான திரு. சங்கரப்பிள்ளை ஆசிரியரும் ஒருவர்.
இவர் ஆசிரியர் திரு. கா. கதிர்காமத்தம்பியின் சமகாலத்து மனிதர்.
சேர் கனகசபை வித்தியாலயத்தில் ஒன்றாகப் படித்து ஒன்றாகவே ஆசிரியப் பணிபுரிந்தவர்கள். வித்தியாலயத்தின் துணை அதிபராகக் கடமையாற்றி, 1971இல் இளைப்பாறினார். ஊரின் சமய, சமூக வளர்ச்சியில் இவரின் பங்கு கணிசமானது. கணேச சனசமூகநிலையம் இவரின் தலைமையில் சீரிய வளர்ச்சி கண்டது.
31. glob. LDIT606 (Beit. சேனாதிராஜா
இலங்கைத் தமிழ்மக்கள் மத்தியில் மாவை என்றால் மாவிட்டபுரம் திரு சோ சேனாதிராஜாவையே குறிக்கும். காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், தமிழரசுக் கட்சியின்.
வயற்காற்று / 64

பாரம்பரியத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர். 1965இல் தமிழரசுக் கட்சி வாலிப முன்னணியின் தேசிய மாநாடு மாவிட்டபுரத்தில் நடைபெற்றபோது தேசிய அரசியலுக்கு வந்தவர். கடந்த நாற்பது ஆண்டுகளாக முழுநேர அரசில்வாதியாக விளங்குகின்றார். நான்காவது முறையாகப் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் திரு. சேனாதிராஜா தமிழ்மக்களின் போராட்டங்களில் முன்னணிப் பாத்திரம் வகிப்பவர்.
32. திரு. க. சண்முகலிங்கம் (SLAS)
பன்னாலையைச் சேர்ந்த திரு. சண்முகலிங்கம் அவர்கள் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர். பேராதனைப் பல்கலைக்கழகப்பட்டதாரியான இவர், அரச சேவைப் பரீட்சையில் சித்தியெய்தி அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர். கலை இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட திரு. சண்முகலிங்கம் இடதுசாரி அரசியலில் அக்கறை கொண்டவர். மகாஜன பழைய மாணவர் சங்கம் உட்படப் பல நிறுவனங்களில் நிறைவாகச் செயற்படுகின்றார்.
33. வைத்திய கலாநிதி கந்தையா சிவகுமாரன்
கொல்லங்கலட்டி - மண்வள நிபுணர் திரு. கந்தையா அவர்களின் ஒரே மகனான டாக்டர் சிவகுமாரன் சிறந்த மனநல வைத்திய நிபுணராவர். தமிழிலும் சமயத்திலும் ஆழ்ந்த புலமையும் அக்கறையும் கொண்டவர். கீரிமலை நகுலேஸ்வரர் தேவாஸ்தான புனருத்தாரண வேலைகளில் அக்கறையுடன் தன்னை இணைத்துக் கொண்ட இவர் SCOT என்கின்ற தமிழரின் முக்கியமான சமூக நிறுவனத்தில் ஆரம்பத்தில் இருந்து செயற்படுபவர். செயலாளராகவும், தலைவராகவும் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் அழகாகச் சொற்பொழிவாற்றும் திறமைசாலி.
34. திரு. சி. சிவமகாராசா
கொல்லங்கலட்டி சின்னத்தம்பி சிவமகாராசா அவர்கள் கொல்லங்கலட்டி சைவவித்தியாசாலை மகாஜனக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். தெல்லிப்பழை கிராமசபையின் நூலகராகக் கடமை புரிந்தவர். இளைஞனான காலம் முதல் பல்வேறு சமூக ஸ்தாபனங்களில் பொறுப்பான பதவிகளில் செயற்பட்டவர்.
65 / வயற்காற்று

Page 43
கூட்டுறவுத் துறையில் நீண்டகால ஈடுபாடு கொண்ட இவர், தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகச் செயற்படுகின்றார். யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபையின் தலைவராகவும் 3 ஆண்டுகள் செயற்பட்ட இவர், 1989ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் 2000ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரியப்பட்டார்.
கூட்டுறவுத் துறையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு அமைப்புக்களிலும் பொறுப்பான பதவிகளில் செயற்படுபவர் இவர். தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் முக்கியமான அங்கத்தவர்.
35. திரு. ஆ. சிவநேசச்செல்வன்
அம்பனையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.ஆறுமுகம் சிவநேசச்செல்வன் தெல்லிப்பழை மண் தந்த சிறந்த பத்திரிகையாளர். மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், அங்கு சில காலம் ஆசிரியராகவும் கடமையற்றியவர். யாழ்ப்பாணக்கல்லூரி, யாழ் - சென். ஜோன்ஸ் கல்லூரிகளில் ஆசிரியராகக் கடமையாற்றியவர். பேராதனைப்பல்கலைக்கழகத்தின் மாணவர் சஞ்சிகையின் ஆசிரியர். பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, வித்தியானந்தன், தில்லைநாதன் ஆகியோருடன் இணைந்து பல இலக்கிய முயற்சிகளில் செயற்பட்டவர். மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் இணைச்செயலாளராகவும் பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டுச் சபையின் இணைச் செயலாளராகவும் இருந்தவர். 1972இல் வெளியிடப்பட்ட பாவலர் நூற்றாண்டு மலரின் ஆசிரியர். அம்பனை கலைப் பெருமன்ற ஸ்தாபகர்களில் ஒருவர். அதன் தலைவராகச் செயற்பட்டவர். கலைப்பெரு மன்றத்தின் காத்திரமான பல இலக்கியப் பணிகளின் பின்னணியில் செயற்பட்டவர்.
யாழ்ப்பாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கி, அதன் செயலாளராக விளங்கியவர். எமது மண்ணின் பிரச்சினைக்குரிய காலகட்டத்தின் இரண்டுபெரும் பத்திரிகைகளின் ஆசிரியராக விளங்கியவர். வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளின் வெற்றிகளுக்கான காரணகர்த்தர். தற்போது இலங்கை பத்திரிகை மன்றத்தின் விரிவுரையாளராகக் கடமையற்றுகின்றார்.
வயற்காற்று /66

36. நாகலிங்கம் சிறீபாலகெங்காதரன்
தெல்லிப்பழை - அம்பனை திரு. கந்தப்பிள்ளை நாகலிங்கம் அவர்களின் இரண்டாவது புதல்வனான சிறீபாலகெங்காதரன் (ரவி) மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்றவர். மகாஜனக் கல்லூரியின் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர். உதைபந்தாட்டத்தில் கல்லூரியின் மூன்றாம், இரண்டாம் பிரிவுகளின் யாழ் மாவட்டச் சாம்பியன் குழுக்களின் வீரராகவும் அவற்றின் கப்டன்களாகவும் விளங்கியவர். கல்லூரியில் இரண்டாம் பிரிவு வீரராக இருந்தபோதே யாழ்ப்பாண மாவட்ட தெரிவுக்குழுவுக்கான முதலாவது பிரிவுக்காக விளையாடிய வீரர். கல்லூரியின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் இவர் விளங்கினார். கல்லூரியின் ஹொக்கி கோஷ்டியின் வீரரான இவர், அதன் பல சாம்பியன் குழுக்களுக்காகவும் விளையாடியவர்.
திரு. சிறீபாலகெங்காதரனின் தலைமையில் கல்லூரி ஹொக்கி கோஷ்டி யாழ்மாவட்ட சாம்பியன்களாகினர். கல்லூரியின் சிறந்த ஒட்டப்பந்தய வீரரான இவர், மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகள் பெற்ற வீரருமாவர். யாழ்ப்பாண மாவட்ட ஹொக்கி தெரிவுக்குழுவுக்காக பலவருடங்கள் விளையாடிய பெருமைக்குரியவர்.
10 ஆண்டுகள் பொலிஸ் உத்தியோகஸ்தராக இருந்த இவர், பொலிஸ் தெரிவுக்குழுவுக்காக உதைபந்தாட்டத்திலும் ரகர் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். கடந்த 20 ஆண்டுகளாக பாரிசிலும் லண்டனிலும் வாழ்ந்து வருகின்றார்.
37. திரு. நாகலிங்கம் சிறிகெங்காதரன்
தெல்லிப்பழையின் குறிப்பிடத்தக்க இடதுசாரிக் குடும்பத்தின் வாரிசு இவர். காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை தொழிலாளியும் சமசமாஜக் கட்சியின் அங்கத்தவருமான அம்பனை - தெல்லிப்பழை திரு. கந்தப்பிள்ளை நாகலிங்கம் அவர்களின் மூத்த மகன். மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கல்லூரியின் விளையாட்டு வீரரும், இராணி சாரண விருது பெற்றவருமாவார். கல்லூரியின் சாரண அமைப்பின் தலைவரான இவர், 60 களின் இறுதியில் செயற்பட்ட ஈழத்தமிழ் இளைஞர் இயக்கத்தின் நிர்வாகசபையில் செயற்பட்டவர்.
67 / வயற்காற்று

Page 44
தெல்லிப்பழையில் காத்திரமான பணிகள் செய்த அம்பனை - கலைப்பெருமன்றம், அம்பனை - சூட்டிங் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் என்பனவற்றினை ஆரம்பித்தவர்களில் ஒருவரான இவர், அதன் செயலாளராகப் பல ஆண்டுகள் செயற்பட்டவர். 70 களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பின் முக்கியமான பிரமுகர்களில் ஒருவர். 1970, 1975 தேர்தல்களில் காங்கேசன்துறைத் தொகுதியின் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரச்சாரப் பொறுப்புக்களில் செயற்பட்டவர்.
1975இல் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்தவர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய அமைப்புக்களில் இயங்கினார். மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான இவர் கடந்த பன்னிரண்டு ஆண்டுகள் அதன் செயலாளராகச் செயற்பட்டு வருகின்றார். 50க்கும் மேற்பட்ட பழைய மாணவர் சங்கங்கள் இணைந்த தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தினை ஆரம்பித்தவர்களில் ஒருவரான இவர், அதன் செயலாளராகக் கடந்த ஆறு ஆண்டுகளாகச் செயற்படுகின்றார்.
தமிழ் மக்களின் விடுதலை அமைப்புக்களின் தலைவர்களோடும் இலங்கையின் சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, சிறீலங்கா சுதந்திரக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவற்றின் தலைவர்களுடன் தொடர்புள்ள இவர், இன்று லண்டனில் முக்கியமான தெல்லிப்பழைப் பிரமுகர்களில் ஒருவராகத் திகழ்கின்றார்.
38. திரு. நாகலிங்கம் சிறீசபேசன்
பள்ளி மாணவனாக இருந்த காலத்திலேயே பரவலாக தமிழீழ இலக்கிய உலகிலும் அரசியலிலும் அறியப்பட்ட சபேசனின் சொந்தப் பெயர் நாகலிங்கம் சிறீசபேசன்.
இவர் இலண்டனில் கடந்த 20 ஆண்டுகளாக வாழ்ந்துவருகின்றார். இங்கு வெளிவந்த "பனிமலர்" சஞ்சிகையின் வெளியீட்டாளரான இவர், அதன் ஆசிரியர் குழுவிலும் செயற்பட்டவர். இங்கும் இலங்கையிலும் பல சமூக இலக்கிய முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கின்றார்.
இடதுசாரி அரசியலில் அக்கறை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இவர், தனது இளமைக்காலம் முதல் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர். NLFT என்ற விடுதலை அமைப்பில் முன்னணி உறுப்பினராக விளங்கியவர். o
வயற்காற்று /68

கவிதை, சிறுகதை, கட்டுரை விமர்சனக் குறிப்புகள் என்று பல்வேறு விசயங்களில் கால்பதித்துள்ள சபேசன், 1980ம் ஆண்டிலிருந்து தமிழீழத்தில் வெளிவந்த "புதுசு" சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவர்.
39. திருமதி சொர்ணதேவி தம்பிப்பிள்ளை
தெல்லிப்பழை திரு. முருகேசு அவர்களின் மூத்த மகளான திருமதி. சொர்ணதேவி தம்பிப்பிள்ளை - காஞ்சி என அழைக்கப்படுபவர். யூனியன் கல்லூரியில் கல்வி கற்றவர். நைஜீரியா நாட்டில் நீண்ட காலம் ஆசிரியையாகக் கடமையாற்றியவர். அங்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பொறுப்பாளராக, பாடசாலையின் முன்னேற்றத்திற்குக் காரணமானவர். இங்கிலாந்தில் தமிழரல்லாத பல்வேறு சமூக அமைப்புக்களில் செயற்படும் திருமதி. சொர்ணதேவி, யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய பிரமுகர்.
அதன் தலைவராகவும் செயலாளராகவும் பல ஆண்டுகளாகச் செயற்படுபவர். 50 தமிழ்ப் பழைய மாணவர்சங்கங்கள் இணைந்த தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் முக்கிய உறுப்பினராகவும் அதன் தலைவர், செயலாளராகவும் செயற்பட்டவர்.
40. திரு. தெ.து. தருமரெத்தினம்
திரு. தெ.து. தருமரெத்தினம் அவர்கள் பாவலர் துரையப்பாபிள்ளையின் இளையமகன். ஆரம்பக் கல்வியை தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாலயத்திலும் பின்னர் மகாஜன உயர்தரப் பாடசாலையிலும், யாழ்ப்பாண இந்துக்கல்லூரியிலும் கல்வி கற்றார்.
பல அரச திணைக்களங்களில் உயர்பதவி வகித்த இவர் ஒய்வு பெறுவதற்கு முன்னதாக இலங்கைப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பெத்தை வளாகத்தின் பதிவாளராகக் கடமையாற்றினார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் சிலகாலம் செயற்பட்டார்.
41. செல்வி சந்திரமதி தவராஜா
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவியான இவர், 1993ம் ஆண்டு கலைப்பிரிவிற் பயின்று பல்கலைக்கழக அனுமதி பெற்று அங்கு தமிழில் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற்று தற்போது
69 / வயற்காற்று

Page 45
விளையாட்டு அலுவலராக சங்கானை பிரதேச செயலகத்தில் கடமை புரிகின்றார்.
தெல்லிப்பழை தென்மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது கல்லூரிப் பருவத்தில் 15, 17, 19 வயதுப் பிரிவினர்க்கான வலைப்பந்தாட்ட அணிகளில் சிறப்பாக விளையாடினார். 1991ம் ஆண்டு 19 வயதுப் பிரிவு அணியின் தலைவராக இருந்து யாழ் மாவட்டத்தில் தனது பாடசாலை 2ம் இடம் பெறுவதற்குச் சிறப்பாக விளையாடிப் பலரது பாராட்டுக்களைப் பெற்றவர்.
19 வயதுப் பிரிவில் மெய்வல்லுனர் போட்டியில் குண்டெறிதல், தட்டெறிதல், ஈட்டி எறிதல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றார். 1992ம் ஆண்டு பாடசாலையின் மெய்வல்லுனர் தலைவியாகவும், 89,91ம் ஆண்டுகளில் சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனை. யாகவும் தெரிவு செய்யப்பட்டார். VM
பாடசாலை மட்டத்தில் மட்டுமன்றித் தனது பல்கலைக்கழக வாழ்விலும் பல விளையாட்டுகளில் பங்குபற்றினார். 97; 98; 99, 2000ம் ஆண்டுகளில் பல்கலைக்கழக வலைபந்தாட்ட அணியின் வீராங்கனையாக இருந்த இவர், 97ம் ஆண்டில் சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனையாகத் தெரிவாகினார்.98ல் அணியின் உபதலைவியாகவும், 99ல் அணியின் தலைவியாகவும் விளங்கினார். 2000ம் ஆண்டு மெய்வல்லுனர் தலைவியாக விளங்கிய இவர், கூடைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற அணிகளிலும் சிறந்த வீராங்கனையாக விளங்கினார்.
பல்கலைக்கழகத்தில் சகல துறைகளிலும் சிறந்த ஒருவருக்கு ஒவ்வோர் வருடமும் வழங்கப்பட்டு வருவது துரைராஜா நினைவுப் பதக்கமாகும். தனது திறமைகளை அனைத்துத் துறைகளிலும் வெளிக்கொணர்ந்ததன் மூலம் 2001ம் ஆண்டின் சிறந்த மாணவியாகத் தெரிவு செய்யப்பட்டு துரைராஜா நினைவுப் பதக்கத்தினைத் தனதாக்கிக் கொண்டார். தெல்லிப்பழை கிறாஸ் கொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அங்கத்தவரான இவர், தெல்லிப்பழை பிரதேச செயலக அணியில் இடம்பெற்று 90, 91, 92, 93, 94, 95, 99ம் ஆண்டுகளில் யாழ் மாவட்டத்தில் சம்பியனாகத் தெரிவாவதற்கு உறுதுணையாக இருந்தார்.
அத்துடன், பல சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றிச் சிறந்த வீராங்கனையாகப் பலதடவைகள் தெரிவானவர். மெய்வல்லுனர் போட்டிகளில் குண்டெறிதல், தட்டெறிதல், ஈட்டி எறிதல் போன்ற
வயற்காற்று /70

நிகழ்வுகளில் பங்குபற்றி மாவட்ட மட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்ற இவர், 1991ம் ஆண்டு குண்டெறிதல் நிகழ்ச்சியில் 7.9 m தூரம் எறிந்து பதிய சாதனையை நிலைநாட்டியவர்.
1990ம் ஆண்டு யாழ் மாவட்ட அணியில் ஒரு வீராங்கனையாக விளங்கினார். 1998ல் வடக்கு கிழக்கு மாகாண போட்டியில் முதலிடம் பெற்ற யாழ் மாவட்ட அணியின் ஒரு வீராங்கனையாவார். 1998ல் இலங்கைத் தேசிய அணித்தெரிவில் இடம்பெற்றார். 2002ம் ஆண்டு யாழ் மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்க அணி கொழும்பில் நடந்த சுற்றுப் போட்டியில் பங்குபற்றிச் சிறப்பாக விளையாடிப் பலரது பாராட்டுக்களையும் பெற்று அணியின் தலைவியாகவும் இவர் விளங்கினார். செல்வி. சந்திரமதி 2003ம் ஆண்டு வடகிழக்கு வலைப்பந்தாட்ட அணியின் வீராங்கனையாக லண்டன் வந்திருந்தார்.
42. திரு. வைத்தீஸ்வரன் தயாளன்
தெல்லிப்பழை தென்மேற்கைச் சேர்ந்த திரு. தயாளன் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர். இவர் கடந்த 30 ஆண்டுகளிற்கும் மேலாக லண்டனில் வசித்து வருகின்றார். அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத சமூகப்பணிக்கு உதாரணமானவர் திரு. தயாளன். மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் பத்து ஆண்டுகள் செயற்பட்ட இவர் தற்போது கல்லூரியின் நூற்றாண்டு விழாச் சபையில் செயலாளராகக் கடமைபுரிகின்றார்.
கிங்ஸ்ரன் தமிழ்ப் பாடசாலையை உருவாக்கி கடந்த 18 ஆண்டுகளாக அதன் முதுகெலும்பாக இயங்கும் இவர், இரண்டு ஆண்டுகள் தமிழ்பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் செயலாளராகவும் விளங்கினார். பல்வேறு இன மக்களிடம் ஒற்றுமையை உருவாக்கும் வகையில் கிங்ஸ்ரன் நகர அமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார். தமிழரசுக் கட்சியின் ஆரம்பகர்த்தாவான திரு. வைத்தீஸ்வரனின் மகனான இவர், மகாஜனாவின் புகழுக்குரிய தம்பு மாஸ்ரரின் பேரனுமாவர்.
43. திரு. மாணிக்கவாசகர் தில்லையம்பலம்
தெல்லிப்பழை கிராமசபைத் தலைவர் திரு. மாணிக்கவாசகரின் மகனான திரு. தில்லையம்பலம் யூனியன் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.
71 / வயற்காற்று

Page 46
மத்திய கல்லூரியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக விளங்கிய இவர், கொழும்பில் தமிழ் யூனியன் விளையாட்டுக்கழக கிரிக்கெட் கோஷ்டிகளுக்காக விளையாடினார். யாழ் மாவட்டத் தெரிவுக் குழுவின் கிரிக்கெட் வீரரான இவர், கணக்காளராக நீண்டகாலம் ஆபிரிக்க நாடுகளில் வேலை செய்த பின் தற்போது லண்டனில் வதிகின்றார்.
44. பாவலர் துரையப்பாபிள்ளை
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியை உருவாக்கியவர் திரு. அருளம்பலம் துரையப்பாபிள்ளை ஆவர். தெல்லிப்பழை அமெரிக்க மிசன் கல்லூரியின் தலைமை ஆசிரியராகக் கடமையாற்றிய இவர், சைவப்பிள்ளைகள் அதற்கான சூழலிலேயே தங்களின் கல்வியைத் தொடரவேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடாக தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகி ஆரம்பித்ததே மகாஜனக் கல்லூரி ஆகும். சிறந்த கவிஞராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் திகழ்ந்த இவர், இயற்றிய பாடல்களின் தொகுப்பு "சிந்தனைக்சோலை" என்று நூலுருப் பெற்று மகாஜனக் கல்லூரியினால் 1960இல் வெளியிடப்பட்டது. இவர் "உதயதாரகை" பத்திரிகையின் ஆசிரியராகக் கடமையாற்றினார். இவர் "மகாஜன சிற்பி" எனப் போற்றப்படும் அதிபர் திரு. ஜயரத்தினத்தின் தந்தையாவார். பாவலர் பற்றிய விரிவான கட்டுரை பகுதி நான்கில் இடம்பெறுகின்றது
45. திரு. ஐ. பி. துரைரத்தினம்
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் அதிபராக நீண்டகாலம் சேவையாற்றிய திரு ஐ பி துரைரத்தினம் அவர்கள் தெல்லிப்பழை மண்ணிற்குப் பெருமை சேர்த்த இன்னொருவராவர். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும் அதன் செயலாளராகவும் இருந்தவர். யாழ்ப்பாணப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் செயற்பட்ட இவர், பல்வேறு சமய சமூக அமைப்புக்களின் பின்னால் இருந்து செயற்பட்டவர். திரு ஜிஜி பொன்னம்பலம் அவர்கள் காங்கிரஸ் மாநாட்டில் ஐம்பதிற்கு ஐம்பது கோரிக்கையை முன்வைத்த போது அதனை வழிமொழிந்தவர் திரு துரைரத்தினம் அவர்களே. இவரைப் பற்றி விரிவான கட்டுரையொன்று பாகம் நான்கில் இடம்பெறுகின்றது.
வயற்காற்று 172

46. திரு. க. துரைசிங்கம்
பன்னாலை கதிர்காமத்தம்பி ஆசிரியரின் மூத்த புதல்வாரன துரைசிங்கம் மகாஜனக் கல்லூரின் பழைய மாணவர். கனடா பழைய மாணவர் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான இவர், அதன் தலைவராகவும் செயற்பட்டவர். நல்ல நடிகர். கனடாவில் இடம்பெறும் பல நல்லவிடயங்களின் பின்னாலுள்ள திரு துரைசிங்கம், கனடாவில் தெல்லிப்பழையின் பெயர் சொல்லுகின்ற முக்கியமானவராவர். இவரைப்பற்றிய கட்டுரையொன்று பாகம் நான்கில் இடம்பெறுகின்றது.
47. மாவட்ட நீதவான் திரு. பூ வைத்தியலிங்கம்
பன்னாலை சின்னத்தம்பியர் பூதப்பிள்ளையின் மகனான வைத்தியலிங்கம் வட்டுக்கோட்டை செமினறியில் கல்வி கற்ற பின்பாக கல்கத்தாவில் தனது பட்டப்படிப்பை முடித்து நாடு திரும்பினார். அட்வகேற்றாக தனது தொழிலை ஆரம்பித்த திரு. வைத்தியலிங்கம் முதலில் அரச வழக்கறிஞராகவும் பின்னர் பொலிஸ் மஜிஸ்ரேட்டாகவும் நியமனம் பெற்றார். மாவட்ட நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுநீண்டகாலம் பருத்தித்துறை உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் சேவையாற்றினார்.
48. திரு. கு. வன்னியசிங்கம் (M.P)
கொல்லங்கலட்டியில் 1911ல் பிறந்த திரு. கு. வன்னியசிங்கம், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவர்.
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கல்வி கற்று பரிஸ்டரானார். யாழ்ப்பாணத்தின் சிறந்த சட்டவல்லுனர்களில் ஒருவரான திரு. வன்னியசிங்கம் 1947ல் தேர்தலில் கோப்பாய் தொகுதியில் தமிழ்க்காங்கிரஸ் வேட்பாளர் திரு. தம்பியப்பா திடீரென மரணமானதைத் தொடர்ந்து வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். இத்தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். 1949இல் மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினையில் கொண்ட கருத்து முரண்பாடு காரணமாக தமிழ்க்காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். இதே ஆண்டு டிசம்பர் மாதம் திரு. செல்வநாயகத்துடன் இணைந்து தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். சமஷ்டிக் கோரிக்கையின்
73 / வயற்காற்று

Page 47
பிதாமகன் என கருதப்படுகின்ற திரு. வன்னியசிங்கம் தமிழரசுக் கட்சி சந்தித்த முதலாவது தேர்தலில் வடக்கிலிருந்து வெற்றி பெற்ற ஒரே வேட்பாளராவர். திருமலைத் தொகுதியில் வெற்றிபெற்ற திரு. இராஜவரோதயத்துடன் இணைந்து கட்சியை வளர்ப்பதில் முன்னின்றார். 1956இல் மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்ற திரு. வன்னியசிங்கம் அவர்கள் தனது 48வது வயதில் abit 6LDIT60TITit.
49. பேராசிரியர் சு. வித்தியானந்தன்
இலங்கையின் சிறந்த கல்விமான்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள். நாடறிந்த தழிழறிஞர். பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத்தலைவராக பேராதனையிலும் யாழ்ப்பாணத்திலும் விளங்கியவர். பேராசிரியர் கைலாசபதின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்து அதன் வளர்ச்சியில் கணிசமான பங்காற்றியவர்.
இலங்கையில் தமிழ்நாடகத்துறையைக் குறிப்பாக வடமோடி தென்மோடிக் கூத்தினை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் பங்காற்றியவர். யாழ்ப்பாணத்தில் 1974இல் நடைபெற்ற தமிழாராச்சி மாநாட்டின் தலைவர். இவரைப் பற்றிய கட்டுரையொன்று பாகம் நான்கில் இடம்பெறுகின்றது.
50. திரு. க. உமாமகேஸ்வரம்பிள்ளை
விழிசிட்டி திரு. கதிரிப்பிள்ளை உமாகேஸ்வரம்பிள்ளை சிறந்த தமிழறிஞர். சுமய அறிஞர். யாழ்ப்பாணத்து தமிழ்ச்சங்கத்தில் தலைமைப்புலவர் சுன்னாகம் குமாரசாமிப்புலவர் அவர்களிடம் முறையாகக்கற்று பண்டித பரீட்சையிற் சித்தியெய்தியவர் திரு. சி. கதிரிப்பிள்ளை அவர்கள். தமிழ் மயமான இந்தச்சூழலில் தான் திரு உமாமகேஸ்வரனின் இளமைக்காலமும் கல்வியும் இடம்பெற்றன. இலங்கையிலும் இந்தியாவிலும் மதிப்புமிக்க சமயஆராய்ச்சியாளாராக விளங்கும் இவர் சிறந்த தமிழ்ப் பேச்சாளர்.
வயற்காற்று 174

வயற்காற்று - 3
இணைப்புக் கட்டுரைகள்

Page 48
பாவலர் துரையப்பாபிள்ளை
- பேராசிரியர் கா. சிவத்தம்பி
திரு. தெ. து. ஜயரத்தினம்
- பேராசிரியர் சு. வித்தியானந்தன்
பேராசிரியர் சு. வித்தியானந்தன்
- ஏ. ரி. பொன்னுத்துரை
திரு. சா. ஜே. வே. செல்வநாயகம்
- நீலன் திருச்செல்வம்
செல்வி, தங்கம்மா அப்பாக்குட்டி
- கே. பி. நடனசிகாமணி
திரு. கா. கதிர்காமத்தம்பி
- வை. பொன்னையா
திரு. சி. சிவமகாராஜா
- க. சிவபாலசுப்பிறமணியம்
திரு. ரி. பி. பத்மநாதன்
- ச. விநாயக்ரத்தினம்
திரு. வி. ஆர். இராமநாதன்
- பாமா ராஜகோபால்
10. திரு. க. துரைசிங்கம்
- பொ. கனகசபாபதி
11 திரு. நாக. சிறிகெங்காதரன்
- வி. சிவலிங்கம்

ஈழத்து இலக்கிய வரலாற்றில்
பாவலர் துரையப்பாபிள்ளை
பேராசிரியர் கா. சிவத்தம்பி
நாவலர் காலத்தை அடுத்துவருங் காலப்பிரிவில், இலங்கைத் தமிழ் மக்களிடையேயுள்ள உயர் மத்தியதர வர்க்கத்தினரின் கலை, இலக்கியப் பணி முதன்மைப்படுகின்றது.
இக்கால கட்டத்தில் முக்கிய பிரதிநிதியாக அமைபவர் பாவலர் துரையப்பாபிள்ளையாவர். (1872-1929)
ஆறுமுகநாவலர் காலத்தில் “சைவமும் தமிழும்” என்ற கோசம், ஈழத்து வடபகுதியின் சமூக, அரசியல் தேவைகளை - ஒரு வரலாற்றுத் தேவையினைப் பூர்த்தி செய்வதாக அமைந்தது. நாவலருடைய கண்ணோட்டத்தில், சைவம் என்பது வெறும் மத ஆசாரத்தை மாத்திரமல்லாது அம்மத ஆசாரத்தைப் பின்பற்றுவோரை, சிறப்பாக, விவசாயிகளையும் குறிப்பதாகவே இருந்தது. “யாழ்ப்பாணத்துச் சமயநிலை” போன்ற கட்டுரைகள் உண்மையிலே சமூகப் பிரச்சினை பற்றியனவே. நாவலரது கண்ணோட்டத்தில் தமிழ் என்பது சுதேசப் பண்பாட்டுக் கருவூலமாக விளங்கியது. அப்பண்பாட்டுக் கருவூலம் பிறரது கையிற் சிக்கி, அவர்களால் ஆயுதமாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதற்காகவே தமிழைச் சைவத்திலிருந்து பிரிக்க முடியாத வொன்றாகக் கொண்டார்.
இந்தப் பண்புநெறி பிறழாது வளர்ந்திருக்குமேல் அது சைவ மக்களை அதாவது, யாழ்ப்பாணத்துக் கமக்காரர்களை மேலும் மேலும் பிரதிபலிக்கின்ற, அவர்களது பிரச்சினைகளை எடுத்துக்கூறித் தீர்வுமுறை காட்டுகின்ற இலக்கியங்கள் தோன்றியிருக்கும். இயக்கங்
77 / வயற்காற்று

Page 49
களின் வரலாறுகளை நோக்கும்பொழுது ஆரம்பநிலையிற் காணப்படுவது நேரடிச் சமூகத் தொடர்பு பின்னர் படிப்படியாக மறைக்கப்படுவதையும் மறக்கப்படுவதையும் காணலாம். இது காலம் வழங்கும் “தண். டனை’களிலொன்று சமூக நிலைப்பட்டுநின்ற சைவ ஆர்வம். சைவத்திற்குக் கிட்டிய வெற்றியின் பின்னர் சாஸ்திரீய நிலை ஆர்வமாக முகிழ்க்கத் தொடங்குகிறது. சைவச்சூழலில் ஆங்கிலம் கற்பதற்கான வாய்ப்புக்கள் பெருக (உத்தியோக வாய்ப்பினைத் தராத) தமிழ்க் கல்வி பற்றிய ஆர்வம் குன்றத் தொடங்கிற்று. யாழ்ப்பாண நிலமானியவுடைமைச் சமுதாய அமைப்புக்கேற்ற முறையில், அச்சமுதாயத்து மேன்மக்களின் பொருளாதார, சமூக மேன்மை தொடர்ந்து நிலைப்பதற்கேற்ற வகையில் ஆங்கிலக் கல்வி புகட்டத் தொடங்கியதும் சைவமும் தமிழும் என்ற கோசம் வலுவிழக்கத் தொடங்கிற்று. அரசியலிலும் புதிய உணர்வு எதுவும் ஏற்படவில்லை. இவை காரணமாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பாகத்தில், ஈழத்துத் தமிழ் இலக்கியம் நாவலர் வகுத்த சமூக அர்ப்பண நிலையிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டுக் கொண்டிருந்தது.
துரையப்பாபிள்ளை அவர்கள் வட்டுக்கோட்டை செமினறியிற் பயின்றவர். ரெய்லர் என்னும் கிறிஸ்தவ நாமம் பெற்றிருந்தவர்."பாவலர் சரித்திர தீப” ஆசிரியர் ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் விருப்புக்குரிய மாணாக்கள்களுள் ஒருவர். 1910இல் மகாஜனக் கல்லூரியைத் தொடங்கும் வரை கிறிஸ்தவத் தொடர்புகளைப் பேணிவந்தவர். கிறிஸ்தவ நெறியிலே இவர் தொடர்ந்து சென்றிருப்பின், தமது ஆசிரியர் சதாசிவம்பிள்ளையைப் போன்றே இவரும் “கிறிஸ்தவத்தைத் தமிழ் மண்ணுடன் இரண்டறக் கலக்கவைக்கும்” பணியில் ஈடுபட்டிருப்பார். ஆனால், இவரோ சமூகப் பணியையே தமது வாழ்க்கைப் பணியாகக் கொண்டார். தமது இதய வேட்கைக்கியையத் தொழிற்படுவதற்கான திடசித்தத்தை இந்திய சீவியம் ஏற்படுத்திற்று எனலாம். இவர் 1894 முதல் 1898 வரை வட இந்தியாவில் ஆசிரியராகக் கடமையாற்றினார்.
பிள்ளையவர்கள் பற்றிய கட்டுரையில் வி. முத்துக்குமாரு அவர்கள் குறிப்பிட்டுள்ளவை மிக முக்கியமானவையாகும்.
“தனது பராமரிப்பிலிருந்து குழந்தைகளின் நலனிலும் பாடசாலை வேலையிலும் கவனஞ் செலுத்தி வந்த அதே வேளையில் அவர், சமூகத்திற்குத் தான் ஆற்றவேண்டிய கடமையை என்றுமே புறக்கணித்திடவில்லை. சமூகச்
வயற்காற்று /78

சீர்திருத்தத்துக்கான அவர் திட்டம் வளர்ந்தோர் கல்வி, அறநெறியுறுத்தல், இசை, நாடக மறுமலர்ச்சி ஆகிய பலவற்றைக் கொண்டதாகவிருந்தது."
திலகள், கோகலே ஆகிய இந்தியப் பெருந்தலைவர்கள் தமது தேசியப் பணியினைத் தொடங்கிய காலத்தில் பம்பாய் மகாணத்தில் கோலாய்பூர், பெல்காம் ஆகிய இடங்களில் வசித்ததன் பலனாகவே இவர் (மக்கள்) சேவையின்பால் விருப்புடையவரானார் எனலாம். குறைபாடுகளை அகற்றுவதற்கான கிளர்ச்சிகளைச் செய்வதற்கெனக் காலத்துக்குக் காலம் இவர் கூட்டங்களை ஒழுங்குசெய்து வந்தார்.
இவரது பாடல்கள் பெரும்பாலும் சமூகக் குறைபாடுகளை அகற்று. வதற்கான இலக்கிய முயற்சிகளாகவே உள்ளன. “சிந்தனைச் சோலை'யில் இடம்பெறும் இவரது கவிதைகளுள் “சிவமணிமாலை” தவிர்ந்த மற்றையவை யாவுமே, மேலே குறிப்பிட்டது போன்று "சமூக சீர்திருத்தம்” சம்பந்தப்பட்டவையே”.
வெகுசனநிலையில், மக்கள் பாடல்களை இசைத்துப் பாடவேண்டும் என்பதற்காகவே இவர் தமது ஆக்கங்களைக் “கீதங்களாக” இயற்றினார். இலக்கியத்தைக் கற்றறிந்தோரது ஆர்வ ஈடுபாடாக மாத்திரம் கொள்ளாது சாதாரண மக்களது பாடற் பொருளாகவும் கொள்ள இவர் முனைந்தமை, இவரை இக்காலப் புலவர்கள் பலரினின்றும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. “இதோபதேச கீதரச மஞ்சரி” என்ற இவரது பாடற்றொகுதிக்கு “முகவாசகம்’ எழுதிய கு. கதிரைவேற். பிள்ளை அவர்கள் கூறியுள்ளவை இப்பண்பினை எடுத்துக் காட்டுகின்றன:
“நமது தேசத்தில புலவர் சன்மார்க்க விடயங்களைச் சார்ந்த கீர்த்தனங்கள் இசைப்பாருளராயினும் ஒரோர் மார்க்கத்தோடு சம்பந்தப்பட்டனவாய் அல்லது நரஸ்துதியோடு கலந்தனவாயன்றிப் பெரும்பாலும் இசைத்தாரல்லர். ஆனால், இம்மஞ்சரியில் இசைக்கப்பட்ட கீதங்களோ சர்வசமயிகளும் ஒத்த உள்ளத்தினராய்ப் பாடக்கூடிய கீர்த்தனங்கள். தாம் ஆங்கிலோ - தமிழ்க் கல்வியறிவின் பயனாய்த் தேச நன்மைக்கேற்ற சிறந்த தேர்ச்சிக்குரிய கருத்துக்களைக் கீர்த்தனங்கள் மூலமாய் இந்நூலைச் செய்தவரே முதன் முதலாக வெளிப்படுத்துகிறாரென்று சொல்லலாம்.”
79 / வயற்காற்று

Page 50
ஆசிரியரும் தமது நூலின் ஆங்கில முன்னுரையில் சமுதாயத்தின் சீவாதாரமான அமிசங்களை அரித்துத் தின்று கொண்டிருக்கும் தீய நெறிகளை, அவற்றின் உண்மையான தோற்றத்துடன் எடுத்துக்காட்ட முயன்றுள்ளதாகக் கூறியுள்ளார். இலக்கிய ஆக்கத்தில் தமிழ் இலக்கிய கர்த்தாக்கள் பழையனவற்றையே மீண்டும் மீண்டும் பிரதி செய்யாது, புத்தம் புதிய நெறிகளிற் செல்ல வேண்டும் என்ற தமது கருத்தைத் துரையப்பாபிள்ளையவர்கள் தாம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையொன்றில் மிக வன்மையாக எடுத்துக் கூறியுள்ளார்.
இவ்வாறு பார்க்கும் பொழுது “இலக்கியத்தை” அல்லது “எழுத்தை” மக்களின்பாற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இக்காலகட்டத்தில் முக்கிய முனைப்புப் பெறுவதைக் காணலாம்.
இக்காலகட்டத்திலேயே இலங்கையில் தமிழ் நாவல் இலக்கியம் நிலைபேறுடைய இலக்கியமாக வளரத் தொடங்கும் உண்மையையும் நாம் இங்கு அவதானித்தல் வேண்டும். மங்களநாயகம் தம்பையாவின் “நொறுங்குண்ட இதயம்’ (1914), மா.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின்“காசிநாதன் - நேசமலர்” (1923), “கோபால நேசரத்தினம்” (1928) முதலியன முக்கியமானவையாகும்.
இக்காலகட்டத்தில் ஈழத்து இலக்கியத்தின் ஆக்கநிலைப்பட்டட தேசிய பரிமாணம் நன்கு புலனாகத் தொடங்குகின்றது.
அடுத்துவரும் காலப்பகுதி அதனை வன்மையுடன்நிறுத்துகின்றதெனலாம்.
நன்றி: ஈழத்தில் தமிழ் இலக்கியம் பக்32-36 தமிழ்ப் புத்தகாலயம், சென்னை. 1978
வயற்காற்று 180

நிறைந்த வாழ்வு : தெது. ஜயரத்தினம்
பேராசிரியர் சு. வித்தியானந்தன்
இவ்வுலகில் யாரும் தன்னந் தனியாகப் பிறக்கவில்லை. பலகோடி மக்கள் பிறந்து வாழும் உலகில் நாமும் பிறந்து வாழ்கின்றோம். ஆனால், எல்லோரும் நிறைவு வாழ்வு வாழ்வதில்லை. மனிதன் வாழ்க்கைக்கு உதவியாக என்னென்னவோ தேடி அலைகின்றான். செல்வம், பதவி, புகழ் முதலியவற்றில் அவன் அலையும் அலைப்புக்கு அளவு இல்லை. ஆனால், புறநடையாக ஒருசிலர் தமக்கென வாழாது பிறர்க்கெனத் தமது வாழ்வை அர்ப்பணித்துப் பல துறைகளிலே தொண்டாற்றி நிறைந்த வாழ்வு நடத்திச் செல்கின்றனர். அத்தகைய சிலருள் ஒருவரே ஜயரத்தினம் அவர்கள்.
அப்பெருந்தகையை நாம் எடைபோடும்போது, தலைசிறந்த கல்விமானாக, சமூகத் தொண்டனாக, சமய ஊழியனாக, எல்லாவற்றிற்கும் மேலாக மனித அபிமானியாக அவரை நோக்குகின்றோம்.
இருபத்தைந்தாண்டு தலைமையாசிரியராக அவர் கடமையாற்றிய காலத்தில் மகாஜனக் கல்லூரி ஈழத்தின் வேறெந்தக் கல்லூரியும் காணாத விருத்தியை அடைந்து ஈழத்தின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாகக் கணிக்கப்பட்டுப் புகழ்பெற்றது. கிராமப் புறத்தில் நிறுவப்பட்ட கல்லூரி பட்டணத்தாரும் பிற பிரதேசத்தாரும் விரும்பி நாடும் கல்லூரியாக மாறியது யாவரும் அறிந்ததே. ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் ஊர்மக்களையும் தம்வசப்படுத்தி, கல்லூரியைத் துரிதமாக அவர் வளர்ச்சியடையச் செய்ததின் இரகசியம் யாது?தமது தகப்பனார் நிறுவிய கல்லூரி என்ற உரிமை கொண்டோ, அடக்குமுறை அதிகாரம் கொண்டோ அவர் இதனைச் செய்யவில்லை. எல்லோரின் ஒத்துழைப்பையும் இலகுவாகப் பெறக்கூடிய வகையில் கல்லூரியின் முன்னேற்றம் அவர்களது கடமையென்ற உணர்வை ஏற்படுத்தி, சாந்தமான முறையில் யாவரையும் தம்வசப்படுத்தும் ஒழுங்குகளைக்
81 / வயற்காற்று

Page 51
கடைப்பிடித்து, கல்லூரி மகாஜனத்தின் கல்விப்பீடம் என்ற கருத்தைப் பதியச் செய்து, தமக்கேயுரிய பணிவான அடக்கத்துடன் செயற்பட்டதனாலேயே பிற தலைமையாசிரியர் காணமுடியாத வெற்றியை அவராற் காணமுடிந்தது. கல்வி அமைச்சினாலும் கல்விமான்களினாலும் பொதுமக்களாலும் தலைமை ஆசிரியருக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகக் கணிக்கப்பட்டுக் கல்வியுலகிலே பெருஞ் சாதனைகளை நிலைநாட்டியும் விட்டார்.
தெல்லிப்பழையினைப் பொறுத்தவரையில், அவரைப் போன்ற சிறந்த சமூகத் தொண்டனை, சிறந்த சமய ஊழியனை நாம் கண்டதில்லை. கடந்த நாற்பதாண்டுகளாக, தெல்லியூர் அவரின் தொண்டினாற் பல துறைகளில் முன்னேற்றமடைந்துள்ளது. அவர் வளர்த்துவிட்டுச் சென்றிருக்கும் கலை, கல்விக்கூடம் ஒரு சமயநிலையமாகவும் விளங்குகின்றது. கிறிஸ்தவ சமயச் செல்வாக்கு ஒரு காலத்தில் மேலோங்கியிருந்த தெல்லிப்பழை, மகாஜனக் கல்லூரியின் புனித சூழலினால் இன்று ஒரு சைவப் பூமியாகத் திகழ்கின்றது. மாணவர்களை ஆலயப் பணியில் ஈடுபடச்செய்த அப்பெரியாரின் தொண்டுக்குச் சின்னமாக இன்று தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோயில் காட்சியளிக்கின்றது. தலைமையாசிரியப் பதவியிலிருந்து ஒய்வு பெற்ற பின் இக்கோயிலின் திருப்பணிக்காக முழுமூச்சுடன் செயலாற்றி வந்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் மனித அபிமானத்திற்காக நாம் அவரை நன்றியுடன் நினைவு கூருகின்றோம். மன்ரித இனத்தை எப்போதும் அன்போடு நோக்கியவர் அவர். சிரிப்புப் பொங்கி வழியும் அவர் முகத்தை நாம் என்றும் மறக்கவே இயலாது. தம்மை நாடிவந்த எவரையும் எந்நேரத்திலும் எத்தனை தடவையும் அன்போடு வரவேற்று இனிதுமொழிந்து, வழியனுப்பி வைக்கும் பெருமகனார் அவரைப் போல வேறொருவரும் இல்லையெனலாம்.
அவருக்கு ஏற்ற மனைவியாகத் திருமதி. ஜயரத்தினம் அவர்கள் பண்பான முறையில் யாவரையும் வரவேற்று இனிய முகத்துடனும் அன்பு மொழியுடனும் உபசரித்து வந்தார். தமிழர் கண்ட இல்லக்கிழத்தியின் நற்பண்புகள் யாவும் நிரம்பப் பெற்ற அவர் கணவனின் வாழ்க்கைக்குச் சுடராக விளங்கிய மங்கையர் திலகம் இப்போது தன்னந்தனியாகத் தவிக்கின்றார். அவருக்கும், உள்ளம் ஒடிந்து ஏங்கியிருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் இறைவன் நல்வழி வகுத்து அருள்செய்வார்.
நல்லவர் குடும்பம் தழைத்தோங்கும்.
நன்றி: மகாஜனன் 1976
வயற்காற்று /82

"கலைஞன்” சு. வித்தியானந்தன்
A.T. பொன்னுத்துரை
1962ம்ஆண்டு வைகாசி மாதம் 12ம் திகதி மாலை 5 மணி, கலைஞர். களும், கற்றிந்த வல்லுநர்களும், இரசிகர்களும் யாழ்நகரமண்டபத்தை நோக்கி வந்தவண்ணம் இருக்கும்வேளை கையில் பணப்பையை வைத்துக்கொண்டு வாசற்பக்கத்தை ஆவலோடு பார்த்தபடி அங்கும் இங்கும் உலாவுகிறேன். நாடு போற்றும் நாடகக் கலைஞனுக்கு பொன் முடிப்பு கொடுக்கும் விழாவையொட்டி நிதி சேர்க்கும் பொறுப்பை ஏற்றிருந்தேன். ஆனாலும், விழாவுக்கான தலைவரை நேரே பார்க்கவோ அன்றிப் பழகவோ அவகாசம் ஏற்படவில்லை, வேகமாக வந்தகார் நிற்கிறது. மடித்த சால்வை, கழுத்தில் அசைய, பரந்த முகத்துடன் விரிந்த நெற்றியுடன், எடுப்பான மூக்குடன், காந்தக் கண்களுடன், புன்முறுவல் சிந்தியபடி பொலிவே உருவாக ஒருவர் இறங்குகிறார். 'இவள்தான் அவர்’ என்கிறது என் உள்ளம், சந்திக்கிறோம்.
'நியாயமாய் சேர்ந்ததோ மாஸ்டர்? இது அவரது முதற் கேள்வி. கணிசமான ஒரு தொகையைக் கூறிய போது ‘இன்னும் கூடுதலாகச் சேர்த்திருந்தால் நல்லாய் இருந்திருக்கும்’ என்கிறார். கூடியகாலம் இருந்திருந்தால் என்று இழுத்தபடி பணப் பையைக் கொடுக்கிறேன். பல்கலைக்கழகத்திலும் கொழும்பிலும் தான் திரட்டிய நிதியுடன் சேர்த்தால் ஒரு அளவுதிருப்தியாயிருக்கும் என்று திருப்தியடைகிறார். நூறாவது தடவையாக மயான காண்டம் என்னும் நாடகத்தை மேடையிடும் நடிகமணி வி. வைரமுத்துவுக்கு, ஒரு ஈழத்துக் கலைஞனுக்கு கொடுக்கும்போது தாராளமாக உள்ளம் குளிரக் கொடுக்க வேண்டுமென்ற சிந்தையுடைய இக்கலைப் பெருமான் வேறு யாருமல்ல,
83 / வயற்காற்று

Page 52
கலை,இலக்கியம் என்று சதா இயங்கிக் கொண்டிருக்கும் பல்கலைக். கழக விரிவுரையாளர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள்தான்.
மணி ஆறாகிறது. தலைமைப் பேருரை தொடங்குகிறது. நாட்டுக் கூத்துக்கள் “டிராமா மோடி நாடகங்கள் புத்துயிரளிக்கப்பட வேண்டும். புதுப் பொலிவுடன் மிளிர வேண்டும் என்ற கருத்தை அடியொற்றி கணி என்ற குரலில் பேசுகிறார். கம்பநாடான் காவியத்துக்குச் சடையப்ப வள்ளலின் புரக்கும் தன்மை எவ்வண்ணம் காரணமானதோ அதேபோல நம்நாட்டு எழுத்தாளர்களை, கலைஞர்களைப் போற்றிப்புரப்பது நமது தலையாய கடன் எனப் பேசிப் பொன் முடிப்பைக் கொடுக்கிறார். எங்கும் கரகோஷம். அவர் வெளியிட்ட பல கருத்துக்கள் அவரைப் பழமையில் விளைந்த புதுமலர்ச் செடியாக என்முன் நிறுத்துகிறது. பேச்சுக் கலையிலும் துறைபோகியவர் என வியக்கிறேன். விழாவுக்கு வந்திருந்த பல பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடுகிறேன். பல உண்மைகளை அறிகிறேன்.
கலாநிதி வித்தியானந்தன், சுவாமி விபுலானந்தர், பேராசிரியர் கணபதிப்பிள்ளை என்போரிடம் முறையாகத் தமிழ் கற்றவர். பல்கலைக்கழக விரிவுரையாளராய் அமர்ந்த நாள் முதல், மாணவர் உள்ளத்தில் கலை உணர்வைப் பாய்ச்சியவர். தமிழ்ச் சங்கத்தில் முக்கிய பங்கு வகித்து கலைத் துறையில் மாணவர்களை ஈடுபடச் செய்தவர். பா நாடகங்களில் சிலவற்றையும், தவறான எண்ணம், சுந்தரம் எங்கே? போன்ற வெற்றி நாடகங்களையும் தயாரித்தவர். தானுண்டு தன் குடும்பமுண்டு என்று அறையிலோ வீட்டிலோ ஒதுங்காது பல்கலைக்கழக மாணவர்களைப் பல துறைகளில் ஈடுபட வைத்து, தரமான எழுத்தாளர்களை, பேச்சாளர்களை, நடிகர்களை, நாடக இயக்குநர்களை உருவாக்கியவர். கல்வியுடன் மட்டுமன்றி, கலை ஆர்வத்துடனும் துடிப்புடனும் பட்டதாரிகள் விளங்க அயராது உழைத்தவர் இவரென உணர்ந்து உவகையுற்றேன்.
சந்திப்பின் பின் இவர் மேல் எனக்கு ஒரு அலாதிப் பிரியம் மானசீகமான வியப்பு. இதற்குக் காரணம் கலைத்துறையில் அசுர வேகத்தில் இவர் ஆற்றும் பணிகள்தான். காலத்துக்குக் காலம் இவரால் எழுதப்படும் கட்டுரைகளை வாசிக்கத் தவறுவதில்லை. இவரது எழுத்து ஒவியங்கள் இடம்பெறாத மலர்கள் இல்லை என்றநிலை ஏற்பட்டது. இவர் எழுதிய ‘தமிழர் சால்பு’, ‘கலையும் பண்பும்' என்னும் நூல்கள் சிறந்த ஆராய்ச்சி நூல்களாக மிளிருகின்றன.
வயற்காற்று /84

தமிழறிவும் கலை ஆர்வமும் மிக்க இவர், கலைக்கழக தமிழ் நாடகக் குழுத் தலைவரான பின் ஈழத்துத் தமிழ்நாடக உலகில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பெரிய உத்வேகம் பிறந்தது. ஈழத்தின் நாலாபக்கங்களிலும் நடைபெறும் நாடகங்களைப் பார்த்து மெச்சிப் பேசி நாடக மன்றங்களுக்கு ஊக்கம் ஊட்டினார். மன்ற நாடகப் போட்டிகள், கல்லூரி நாடகப் போட்டிகள், நாடக எழுத்துப் போட்டிகள் என்பன ஆண்டுதோறும் அகில இலங்கை ரீதியில் அமைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் கருத்தரங்குகள் கூட நடைபெற்றன. இவற்றை எல்லாம் நடத்தி, துரிதமாகச் செயற்படுத்த கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், வவுனியா என்று வாராவாரம் பம்பரம்போல் சுழன்று சென்று கருமமாற்றினார். கலைக் கழக தமிழ் நாடகக் குழு ஈட்டிய வெற்றிக்கு இவரது அயரா உழைப்பும் நிர்வாகச் சிறப்புமே காரணமென உணர்ந்தேன்.
இத்தகைய பெரியாரை குரும்பசிட்டி சன்மார்க்கசபை எடுத்த முப்பதாவது முத்தமிழ் பெருவிழாவில் தலைமை தாங்கவைக்கும் நோக்குடன் சந்திப்பதற்காக ஒருமுறை பேராதனை சென்றேன். இவரது வீட்டிற்கு அருகே பல மோட்டாள் வண்டிகள் நின்றன. உள்ளே நுழைகிறேன், அன்புடன் வரவேற்கிறார். முன்வந்தவர்களுடைய விஷயங்கள் பற்றி அவர்களுடன் கலந்து பேசுகிறார். ‘அண்ணாவிமாரைக் கெளரவிக்கும் விழாவை இந்த மாத முடிவில் வைத்துவிடுவோம். நாட்டுப்பாடல் தொகுதி வேலையும் முடித்து விட்டேன். அண்ணாவிமாருக்குப் பொன்னாடையும் போர்க்க வேண்டும். முயற்சியாய் வேலை செய்யுங்கள். எல்லாம் வெற்றியாய் முடியும்’ என்று பேசி ஊக்கமளிக்கிறார். மன்னாரில் இருந்து வந்த பெரியார்களுக்கு, கிளிநொச்சியில் நடைபெறும் திருக்குறள் மகாநாட்டுக் கருத்தரங்குக்குத் தலைமை தாங்க வேண்டும். இது கிளிநொச்சிப் பிரமுகர் பிரச்சினை. டயரி"யில் குறித்தபடி ‘ஆம்’ என்கிறார். ‘அப்போ நாட்டுக்கூத்து அரங்கேற்றத்தை அடுத்த மாதமே வைக்கலாமா? இது மட்டக்களப்புக் கலைஞரின் வேண்டுகோள். சிரித்தபடி பொருத்தமான தினத்தை முடிவுபண்ணுகிறார்கள். மற்றவர்கள் விடைபெற்றுச் செல்ல என்பக்கம் பார்க்கிறார். கலை அரங்குக்குத் தலைமை தாங்குவது பற்றிய விஷயத்தை ஆரம்பிக்கிறேன். ‘ரீ எடுத்துவர சற்று அப்பால் அவர் செல்ல அங்கிருந்த "அல்பத்தைப் பார்க்கிறேன். கர்ணன் போர்’, ‘நொண்டி நாடகம்’ என்ற நாட்டுக்கூத்துப் படங்களைப் பார்க்கிறேன். ஆடல்களை அடிப்படையாகக் கொண்ட வடமோடி
85 / வயற்காற்று

Page 53
தென்மோடி நாட்டுக்கூத்துகளுக்கு புது மெருகு கொடுத்த இவர் பெருமையை, பல்கலைக்கழக மாணவர்களை இவற்றில் நடிக்க வைத்த முயற்சியை நினைவுகூருகிறேன். யாழ்ப்பாணத்தில் இக்கூத்துகளுக்கு இருந்த மகத்தான வரவேற்பை உணர்கிறேன். ‘நாட்டுக்கூத்து, கொட்டகைக்கூத்து’ ஆகிய இரு துறைகளிலும் நீங்கள் ஏற்படுத்திய விளிப்புணர்வுக்கு ஈழத்துக் கலையுலகு எப்படித்தான் ஈடுசெய்யப் போகிறதோ!’ என்று வாயாரப் புகழ்கிறேன். கலைஞர். களிடம் உள்ள நல்ல அம்சங்களைப் புகழ்வதில், பத்துப் பேருக்குக் கூறுவதில் இன்பம் காண்பவன் நான். கலைஞர்களையே கருகச் செய்துவிடும் விமர்சனங்களை விஷமாகக் கருதுபவன் நான். 'இராவணேஸ்வரன்’ என்ற நாடகக்கூத்தையும் நடாத்த யோசிக்கிறோம்’ என்கிறார் அவர். சம்பாஷணை நீளுகிறது. யாழ்ப்பாணத்துக் கல்லூரி நாடகங்கள் பற்றி என்னிடம் உசாவுகிறார். கல்லூரி நாடகங்களைப் பற்றி விமர்சிக்கும் சிலர் கல்லூரி நாடகங்கள் தயாரிப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றி உணராது எழுந்தமானத்துக்கு - நாடக உத்திகளை உணராமலும் கூடக் கண்டிக்கிறார்களே என்று நாடக விமர்சனங்களைப் பற்றிப் பேசுகிறேன். ‘மற்றவர்களின் கண்டனங்களைப் பொருட்படுத்தாது எமக்குச் சரி என்று பட்டவை. களைத் துணிந்து செய்வதே என் போக்கு என்று கூறி கலைஞர்கள் எதைக் கண்டும் கலங்காது துணிவுடன் இயங்கவேண்டுமென்று வற்புறுத்தினார். இதற்கிடையில், கண்டிச் சைவ மகாசபை அன்பர் ஒருவர் தலைநீட்டுகிறார். வாராவாரம் நடத்தும் சமயபாட வகுப்புப் பற்றிப் பேசுகிறார், நாளைய நிர்வாக சபையில் பேசி, சுமுகமாய் எல்லாம் நடத்தலாம் என்கிறார். அவரது குழந்தைச் செல்வங்கள் ‘அப்பா’ என்கின்றன. “கிறிக்கற் மச்’ பார்க்க வேணும், வாங்க, அம்மாவும் தயார் என்கின்றன. அடம் பிடிக்கின்றன. எழும்புகிறோம். *விழாவுக்குக் கட்டாயம் வருகிறேன்’ என உறுதி கூறுகிறார். கலையரசுவைச் சந்தித்தால் விசாரித்ததாய் கூறும்படி கூறுகிறார். கலை,இலக்கிய உலகில் சதா இயங்கும் கலைப் பெருமகனிடம் விடை பெறுகிறேன். இவரது கலைச்சேவைக்கு உறுதுணையாய் இருக்கும் இவரது பாரியாரது ஒத்தாசை மென்மேலும் வளரட்டும் என்ற வாழ்த்தொலி உள்ளத்தில் சதிராட நடையைக் கட்டுகிறேன்.
|B6(5): D6ü6560 as September 1969
வயற்காற்று /86

சட்டமேதையின் சமூக சேவைகள் :
திரு. சா.ஜே.வே. செல்வநாயகம்
கலாநிதி. நீலன் திருச்செல்வம் M.P
தந்தை செல்வா. தமது சொந்த ஜனசமூகத்தினால் இத்துணை ஆழமாகப் பூஜிக்கப்பட்டவரும், நாட்டினுள் பல்வேறு அரசியல் அபிப்பிராயம் கொண்டோரினதும் பரந்த மரியாதையையும், மெச்சுதலையும் பெற்றவருமான வேறொரு தலைவரைக் காண்பது அரிது.
எனது தந்தையார் திருச்செல்வமும், இலங்கைநிர்வாக சேவையில் கடமையாற்றிய எனது சிறிய தந்தையார் இராஜேந்திராவும் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வரக் காரணமாக இருந்தவர் திரு. செல்வநாயகம் அவர்கள். இலங்கை வந்தபின்னர் ஒரு காலகட்டத்தில் அவர்கள் இருவரும் பரி. தோமஸ் கல்லூரியில் விடுதி மாணவர்களாக இருந்தார்கள். அந்த நேரத்தில் வெஸ்லிக் கல்லூரியில் கணித ஆசிரியராக இருந்துகொண்டு சட்டப்படிப்பை முடித்திருந்த தந்தை செல்வா வழக்கறிஞர் சங்கத்தில் இணைய அனுமதி பெற்றிருந்தார். ஓர் ஆசிரியர் என்ற வகையில் அவர் கனிவு மிக்கவர். மற்றவள் நலனைச் சிந்திப்பவர், கண்டிப்பானவர். ஆயினும், அடக்கியாழும் தன்மையற்றவர் என்று மாணவர்கள் கூறுவதுண்டு. அவர் பின்னர் விஞ்ஞானப் பிரிவின் தலைவராகவும், விடுதியின் சிரேஷ்ட ஆசானாகவும் விளங்கினார். அவர் எனது தந்தைக்கும் சிறிய தந்தைக்கும் பாதுகாவலராக விளங்கினார். புறக்கோட்டை நூல்நிலையத்திற்கு அடிக்கடி செல்லுமாறு அவர்களை அவர் உற்சாகமூட்டினார்.
செல்வநாயகம் மத ஆராதனைகளில் ஒழுங்காகக் கலந்து கொள்ளும் பக்தி உணர்வுள்ள கிறிஸ்தவராக விளங்கியதோடு, தமது
87 / வயற்காற்று

Page 54
மதத்தின் உயர்வான கோட்பாடுகளை வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகுவதற்கு முயற்சி செய்தார். அவர் மதுஅருந்துவதுமில்லை, புகை பிடிப்பதுமில்லை. ஆயினும், உடை விடயத்தில் அளவுக்கதிகமான அக்கறை காட்டுபவராக விளங்கினார். 20களின் ஆரம்பத்தில் வெஸ்லிக் கல்லூரியில் தேசிய உடையை அணியத் தொடங்கியபோது, பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமையும், சிக்கனமும் இலங்கின. வயலின் பழகிக் கொள்வதற்குப் பெருமுயற்சி எடுத்ததோடு, வெளியிடங்களில் இருந்து வருகைதரும் கர்நாடக இசைக்கலைஞர்களின் கச்சேரிகளுக்கும் சென்றார். வெனிஸ் நகரத்து வணிகன் நாடகத்தில் போர்வழியாவின் பாத்திரத்தை ஏற்று நடித்தார். ஒரு விளையாட்டு வீரரென்று பெரிதாக எதுவும் கூறமுடியாத போதிலும் கிரிக்கெட்டில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
செல்வநாயகம் ஒரு பிரபலமான சட்டக் குடும்பத்தை சேராதவராக இருந்தபோதிலும் சட்ட உயர்வாழ்க்கைத் தொழிலில் விரைவாக முன்னேறினார். உயர்வாழ்க்கைத் தொழில் மற்றும் வியாபார ஸ்தாபனங்களோடு அவர் கொண்டிருந்த தொடர்புகள் மிகவும் குறைவானவை. அவள் பிரான்சிஸ் டி சொய்சாவின் பணி அவையில் கருமமாற்றினார். குடியியல் சட்டத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்ததோடு அக் காலத்து வழமைக்கேற்ப கொழும்பு விண்ணப்ப நீதிமன்றத்தில் தமது தொழிலை ஆரம்பித்தார். இந்நீதிமன்றம் அக்காலத்தில் சீநாகலிங்கம், என். நடராஜா, மற்றும் வீஎல்.பரி.சீ ஸ்வான் என்போரின் ஆதிக்கம் விளங்கும் ஒன்றாகவிருந்தது. அவர்கள் அனைவரும் பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக உயர்வுபெற்றனர். திரு. செல்வநாயகம் அவர்களிடம் கூர்மையாக, ஆழ்ந்து பகுத்தாய்வு செய்யும் மூளை, சட்டக்கோட்பாடுகள் மற்றும் எண்ணக் கருக்கள் குறித்த சிறந்த விளக்கம் என்பவை இருந்ததோடு, அர்ப்பண உணர்வு மற்றும் கடின உழைப்பு என்பனவும் நிறைந்திருந்தன. சுருக்கமும், தெளிவும், நேர்த்தியும் மிக்க சட்டவாத வரைவுகளைத் தயாரிப்பதில் பிரத்தியேகத் திறமை அவருக்கிருந்தது. அவரது சட்டவாதங்கள் பகட்டான உரைகளாகவோ, வார்த்தைஜாலங்கள் மிக்கதாகவோ இருக்கவில்லை. அவரது மொழி எளிமையானதும் ஒளிவுமறைவற்றதுமாகும். சாட்சிகளுக்கும், ஏன், தம் எதிராளிகளுக்குக் கூட உரிய கெளரவத்தையும் மதிப்பையும் வழங்குவதற்கு அவர் என்றுமே தவறியதில்லை. அவரது வழக்குரைத்தலில் அன்னார் பெற்றிருந்த வல்லமைக்காகவும் அவரது சமர்ப்பணங்களில் இடம்பெற்றிருந்த நியாயபூர்வத் தன்மைக்காகவும் பிறர் அவரை மதித்தனர். அவள் நீதிமன்றத்தைத் தவறாக
வயற்காற்று /88

வழிநடத்த மாட்டார் என்பதாலும் அவர் ஒரு வழக்கின் தொகுப்புரையை நிகழ்த்தும்போது நீதிபதிகள் ஒரு சொல் தவறாமல் அதைக் குறித்துக் கொள்வார்கள் என்று பலர் கூறியுள்ளனர். 1947இல் அவர் அரசரின் வழக்குரைஞர் (King’s Counsel) ஆகினார். செல்வநாயகத்தின் அரசியற் பிரவேசம் சிந்தித்து வேண்டுமென்று எடுக்கப்பட்ட முடிவு என்பதைவிட, அது ஒரு தற்செயல் நிகழ்வு என்றே கூறலாம். அவரது சகபாடிகள் பலரும் செய்தது போன்று அவரும் தமது உயர் வாழ்க்கைத் தொழிலில் தொடர்ச்சியாக ஈடுபட்டுழைத்து உயர்நீதிமன்றத்தில் மேலும் உன்னத ஸ்தானத்தைப் பெற்றிருக்க முடியும். அவருக்கு அதைவிட ஓர் உயர்வான அழைப்பு அமைந்திருந்தமையாலும் ஆரம்பத்தில், சோல்பரி ஆணைக்குழுவின் கலந்துரையாடல், வாதங்கள் இடம்பெற்றபோது, தமிழ்க் காங்கிரசில் இணைந்து, தனது சமூகத்தின் அரசியல் பாதை மற்றும் எதிர்காலத்தோடு தம்மை இனங்காட்டும் ஒருவரானார். தமிழ்க் காங்கிரசுடனான அவரது உறவு சிறிது காலமே நீடித்தது. 1948இல் மலையக தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமை தொடர்பில் அபிப்பிராய பேதங்கள் எழுந்தமையால் சீ வன்னியசிங்கம், மற்றும் ஈ.எம்.வி. நாகநாதன் ஆகியோர்களுடன் தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். அவர் உருவாக்கிய சமஷ்டிக் கட்சியும், அதன் தொடர்ச்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணியும் வட-கிழக்கு அரசியலில் ஏறக்குறைய மூன்று தசாய்த காலம் ஆதிக்கம் வகித்தன.
திரு. செல்வநாயகத்தை அவரின் சமகாலத்தவர்களிடமிருந்து பிரித்துப் பிரகாசிக்க வைத்தவையும், வட-கிழக்கில் வாழ் தமிழ் மக்களின் உள்ளங்களில் அரசியல் சிந்தனை மற்றும் உணர்வு அலைகளை ஆதிக்கஞ் செலுத்த வைத்தவையுமான குணாம்சங்கள் எவை? முதலாவதாகத் தாம் நம்பிக்கை வைத்த அரசியல், அரசியற் கோட்பாடு மற்றும் இலட்சியங்கள் என்பவை குறித்த அவரின் பூரண அர்ப்பண உணர்வாகும். அவர் தன் செல்வத்தை, உயர்தொழில் வாழ்க்கைப் பணியை, உடல் சேமநலத்தைத் தியாகம் செய்ததோடு, பிற்காலத்தில் “பார்க்கின்சன்’ வியாதி அவரைப்பயங்கரமாக வருத்திய போதும் அவள் சமத்துவத்தையும்நீதியையும்நிலைநாட்டத் துடித்த ஒரு சமூகத்தின் தளர்ச்சியுறா மனோபலத்தை உலகுக்குப் பறைசாற்றும் சின்னமாக விளங்கினார். இந்த “மெலிந்து, ஒட்டியுலர்ந்து, இளைத்துக் களைத்த தோற்றம் கொண்ட, நடப்பதற்கே பலமற்ற, பலமாகப் பேசவும் திராணியற்ற மனிதனின், மலையளவு முக்கியம் வாய்ந்த பண்பு, தோல்வியை ஏற்காமையாகுமென்றும், தொடர்ச்சியான தோல்விகள், ஏமாற்றங்கள் மத்தியிலும் என்றுமே விரக்திப் பரிதவிப்பு நிலையை
89 / வயற்காற்று

Page 55
அண்ட விடாமை ஆகுமென்றும்”> ஆயர் குலேந்திரன் அவருக்குப் புகழாரம் சூட்டினார். அவர் மேலும், “காற்று நிலையாகப் பயங்கர வேகத்தில் வீசிய பொழுதும் இந்தச் சுவாலையை அணைக்க முடியவில்ல்ை அது அணையப் போகும் சிறு தடுமாற்றத்தைக் கூடக் காண்பிக்கவில்லை” என்று மேலும் கூறியுள்ளார். இரண்டாவது, அரசியல் மற்றும் தார்மீக விழுமியங்களுக்கு அவர் வழங்கிய முக்கியத்துவமாகும். திரு. செல்வநாயகம் ஒரு வாக்குறுதியை வழங்கினாரென்றால், எத்தகைய எதிர்ப்புகளும் பிரச்சினைகளும் ஏற்படினும் அதை அவர் காப்பாற்றியே திருவார் என்பதில் அவரது அரசியல் எதிரிகள்கூட விசுவாசங் கொண்டிருந்தனர். எனவேதான் அவர், 1958 இலும் 1956 இலும் செய்து கொண்ட இரு பிரதான உடன்படிக்கைகளும் பின்னர் கைவிடப்பட்டபோது தனிப்பட்ட முறையில் அவருக்கும், மற்றவர்களுக்கும் அது பெரும் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. ஆயினும், அரசியல் குரோதம், மனக்கசப்பு என்பவை அவரது வாழ்வில் இடம்பெறாத விடயங்களாகும். ரொஷான்பீரிஸ், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் அவரைப் பலமுறை சிறையிலடைத்தமை, தடுப்புக்காவலில் வைத்தமையை நினைவுபடுத்தி, இந்த அனுபவங்கள் அவரைக் கசப்புணர்வு கொள்ள வைக்கவில்லையா என அவரிடமே வினவினார். ஒரு திடமான, “இல்லை” என்பதே அவரின் பதிலாகவிருந்தது. “கசப்புணர்வினால் எந்தப் பலனும் ஏற்படுமென்று நான் எண்ணவில்லை. கசப்புணர்வு கொள்வதில் அர்த்தமில்லை. கசப்புணர்வின்றித் துன்பத்தை அனுபவிப்பது எனக்குப் பழகிப்போன விடயமாகும்” என்று மேலும் தெரிவித்தார்.
மூன்றாவதாக, திரு. செல்வநாயகம் ஒரு பல்லினப் பாங்கான குடியியல் நிர்வாகத்தின் அரசியலமைப்பு அத்திவாரங்கள் குறித்த, வாழ்வாதாரமான முக்கியத்துவம் வாய்ந்த, கருத்துக்களுக்கு வடிவம் கொடுப்பதில் அதிமுக்கிய புத்திஜீவிப் பங்களிப்பை நல்கினார். சமநிலைப்படுத்திய பிரதிநிதித்துவத்துக்கான வலியுறுத்தல் என்பதி லிருந்து விலகிச் சென்று அவர் அரசை மீள் வரைவிலக்கணம் செய்தும், மத்திய அரசுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையில் பயனுறுதியுள்ள வகையில் அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துவதுமான ஒரு அரசியலமைப்புச் சட்டத்துக்கான தேவை குறித்துத் தெளிவாக எடுத்தரைத்தார். அதிகாரப் பகிர்வு குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். அதிகாரப் பகிர்வு குறித்த இக்கருத்துக்கள் பின்னர் ஏற்பட்ட பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம் மற்றும் டட்லி - செல்வநாயகம் ஒப்பந்தம் என்பவற்றுள் ஒன்றிணைப்புச் செய்யப்பட்டன. அவை 1980 இல் ஏற்பட்ட
வயற்காற்று / 90

மாவட்ட சபைக்கும், 1987இல் இடம்பெற்ற அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்துக்கும் உத்வேகமளித்து வழி சமைப்பவையாகவும் விளங்கின. அவை, 1995 ஆகஸ்ட் பிரேரணைகளிலும், மற்றும் 1996 சட்ட வாசகத்திலும்கூட மிகப் பயனுறுதியுள்ள வகையில் வெளிவந்துள்ளன. திரு. செல்வநாயகம் மொழிச் சமத்துவம், சமமான வாய்ப்புக்கள், மற்றும் பூரணமான, பயனுறுதிமிக்க தனிநபர் குடியியல், அரசியல் உரிமைகளை நிலைநாட்டுதல் என்பவற்றுக்கு ஆழமான முக்கியத்துவமளித்துச் செயற்பட்டார். இவ்விடயத்திற்கூட, நாம் சிங்களத்துக்கும் தமிழுக்கும் அரசகரும மொழிகள் என்றவகையில் சம அந்தஸ்து, ஆங்கிலம் இணைப்பு மொழியென்ற வகையில் அதற்குரிய, அங்கீகாரம் என்பவற்றுக்காகப் போராடினோம்.
இறுதியாக, அஹிம்சை, அரசியலமைப்புரீதியான மாற்றம், அரசியல் போராட்டம் என்பவற்றில் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக திரு. செல்வநாயகம் முக்கியத்துவம் பெறுகிறார். அஹிம்சை அவரது அரசியல் விசுவாசத்தின் உயிர் மூச்சாக விளங்கியது. அவர் தேசியப் பிரச்சினையில் ஒரு சமாதானமான, நிலையான தீர்வை எட்டுதல் அரசோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எய்பொழுதும் தயாராகவே இருந்தார். 1956இல் சத்தியாக்கிரக இயக்கம் பலாத்காரமாகவும், கொடுரமாகவும் அடக்கப்பட்டமை, 1961 இலும் அதன் பின்னரும் இடம்பெற்ற ஏனைய ஒடுக்குமுறை நடவடிக்கைகள் என்பன ஜனநாயக அரசியல் என்னும் மாயை அகல்வதற்கும், வேறு போராட்ட வடிவங்களுக்குத் தம்மை அர்ப்பணித்த சக்திகளின் தோற்றத்துக்கும் வழிசமைத்தன. திரு. செல்வநாயகம் வயதில் குறைந்த தமது சகபாடிகளினதும் ஆதரவாளர்களினதும் பொறுமையின்மை மற்றும் அமைதியீனம் ஆகியவற்றிற்கு முன்னால் தமது கொள்கை, நம்பிக்கை என்பன குறித்த நிலையான திடசித்தத்தை வெளிப்படுத்தினார். அவரது நூற்றாண்டு விழா நிகழும் வேளையில் அவரது வாழ்வும் பணியும் தொடர்ந்து நினைவுகூரப்படுவது புொருத்தமானதாகும். திரு. செல்வநாயகம் குறித்துப் பேசுகையில் முன்னாள் பிரதம நீதியரசர் விக்டர் தென்னக்கோன் 0.C. பின்வருமாறு குறிப்பிட்டார். “ஒரு அரசியல்வாதியென்ற வகையில் அவரின் மரணம் ஒரு பாரிய விருட்சம் சாய்ந்தது போன்றிருக்கிறது. அவரது நண்பர்களும், ஆதரவாளர்களும் அவரில்லாத சுற்றாடல் எத்துணை வெறுமையானது என்று உணர்ந்து கவலை கொள்கிறார்கள்."
நன்றி: தமிழீழம் தந்த தந்தை செல்வா நூற்றாண்டு நினைவுகள். May 1998
91 / வயற்காற்று

Page 56
துர்க்காதேவியின் தூயபணியில் துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
கே.பி. நடனசிகாமணி (1993இல் எழுதியது)
உலகத்திலுள்ள இந்து ஆலயங்களுக்குகெல்லாம் ஓர் எடுத்துக் காட்டாக - முன்மாதிரியாகத் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தை மிகத் திறமையான அறச்சாலையாகவும் அறிவாலயமாகவும் நடத்தி வருபவரும் இலங்கையின் இந்து சமயத்தின் தூதுவராக, பாதுகாவலராக இந்தியா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று வந்த ஒரேயொரு பெண்மணியென்ற பெருமைக்கும் பெருமதிப்புக்கும் உரியவரும், ஏழைகள், செல்வந்தர், படித்தவர், பாமரர், பெரியோர், சிறியோர் என்ற பேதங்கள் எதுவுமின்றி ‘அம்மா’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவருமான அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி தனது 68ஆவது அகவையில் கால்பதித்துள்ளார்.
அன்பு, பண்பு, அறிவாற்றல், ஆளுமை, அடக்கம், பணிவு, துணிவு ஆகிய குணநலன்கள் அனைத்தும் ஒன்றுதிரண்டு ஒருருவாகக் காட்சி தருவதே அன்னை தங்கம்மா அனைவராலும் ஒரே மனதுடன் ஆராதிக்கப்படுவதற்கான காரணம்.
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் பிரபல கல்விமானுமான திரு. ஜயரத்தினம் அவர்களின் மறைவின் பின் அவர் வகித்த துர்க்காதேவி தேவஸ்தானத்தின் நிர்வாக சபைத் தலைவர் பதவி சிவத்தமிழ்ச் செல்வியிடம் தானாகவே வந்து சேர்ந்தது. இது சைவத் தமிழ் மக்கள் செய்த பெரும் பேறாகும் எனப் பெரியார்கள் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
வயற்காற்று /92

“இறைவழிபாட்டில் முழு நேரமும் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியப்பணி புரிந்தபோது அவர்களின் ஐந்துநேரத் தொழுகைகள் தான்’ என்று அடித்துக் கூறும் சிவத்தமிழ்ச் செல்வி, சிறந்த முறையில் இந்த ஆலயத்தை நிர்வகிக்க என்னால் முடிகிறதென்றால், அந்தப் பெருமையில் பெரும் பங்கு கிறிஸ்தவக் கல்லூரிகளில் நான் கற்பித்தபோது படித்த பாடங்கள்தான் என மிக அடக்கத்தோடும் பெருந்தன்மையோடும் குறிப்பிட்டது என் நினைவுக்கு வருகின்றது.
சில ஆண்டுகளுக்கு முன் நிர்வாகத் தலைவியாகப் பொறுப்பேற்கும் போது சிறு கொட்டிலாக இருந்த இந்த ஆலயத்தை இலங்கையின் மிகப் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக வளர்த்தெடுத்ததுடன் ஒரு தலைமுறைக் காலத்தில் நடக்கக்கூடிய காரியமல்ல என்று கருதப்படும் கோபுரம், தேர், தீர்த்தத்தடாகம் ஆகிய மூன்றையும் மிகக் குறுகிய காலத்தில் அமைத்தது அற்புத நிகழ்ச்சிகளாகும் என்று அனைவரும் வியந்து பாராட்டுகின்றனர்.
“ஆலயத்துக்கு இரண்டு ரூபா சந்தாய்பணம் சேர்ப்பதற்காகக் கால் வலிக்க நடந்து சென்ற நாம் இன்று அம்பாளின் உண்டியலில் சேரும் பணத்தைக் கை வலிக்க வலிக்க எண்ணுகிறோம்’ என்று சொன்ன சிவத்தமிழ்ச் செல்வி சில ஆண்டுகளுக்கு முன் அந்த ஆலயத்தில் அவரின் தங்க உருத்திராட்ச மாலை, காப்புகள் உட்பட பல இலட்ச ரூபா பெறுமதியான ஆலயத்துக்குச் சொந்தமான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையும் நினைவூட்டினார்.
ஆலயத்தில் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளும் ஒருவருட காலத்துக்குள் மீண்டும் கொண்டுவந்து தெற்கு வீதியில் போடப்பட்டன. அவ்விடத்தில் அதன் ஞாபகமாகத் தடாகம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீண்டும் கிடைக்கும் வரை அம்பாளுக்கு அன்பளிப்பாக வழங்க முன்வந்த பக்தர்களிடம் ஒரு நகைகூட வாங்குவதற்கு சிவத்தமிழ்ச் செல்வி மறுத்துவிட்டார் என்பதை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தம்.
துர்க்காபுரம் மகளிர் இல்லம், இந்து இளைஞர் சங்கம், பெண் தொண்டர் சபை, அன்னபூரணி மண்டபம், நூல் நிலையம் எனப்பல சமூகசேவை நிலையங்கள் என்பன இந்த ஆலயத்தின் நிர்வாகத்தின் தலைவியான சிவத்தமிழ்ச் செல்வியின் நேரடிக் கண்காணிப்பில் அற்புதமாக இயங்கிவருகிறது.
93 / வயற்காற்று

Page 57
இலங்கையின் இணையற்ற தமிழ் இலக்கியச் சொற்பொழிவாளரும், சைவசமயத் தூதுவரும், சிறந்த சமூகசேவையாளருமான சிவத்தமிழ்ச் செல்விக்கு யாழ் பல்கலைக்கழகம் ‘கலாநிதி பட்டம் வழங்கிக் கெளரவிக்க வேண்டும் என்று நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பொது ஸ்தாபனங்களும், கல்விமான்களும், பேராசிரியர்களும் சிலகாலமாக வற்புறுத்தி வருகின்றனர்.
யாழ். பல்கலைக்கழகம் சிவத்தமிழ்ச் செல்வி வாழும் காலத்திலேயே அப்பட்டத்தை வழங்கி தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நன்றி: சந்திப்பும் சிந்திப்பும் - November 1999
வயற்காற்று 194

ஆசிரியப் பெருந்தகை திரு. காசிப்பிள்ளை கதிர்காமத்தம்பி
வை. பொன்னையா (இளைப்பாறிய ஆசிரியர்)
செ ய்வதற்கு அரிய அரும்பெரும் காரியங்களைச் செய்து சாதனை படைப்பவர்களைப் பெரியோர் என்றும் அவ்விதம் அரிய செயல்களைச் செய்ய மாட்டாதவர்களைச் சிறியோர் என்றும் காரிய வகையால் மக்களை இருவகைப்படுத்தியுள்ளார் திருவள்ளுவ நாயனார்.
"செயற்கரிய செய்வார் பெரியார் - சிறியர்
செயற்கரிய செய்கலா தார்." என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கு அமைய இன்றைய விழா நாயகராகத் திகழும் எமது ஆசிரியப் பெருந்தகை திரு.கா. கதிர்காமத்தம்பி அவர்களும் அரிய பெரிய கைங்கரியங்களைச் செய்து பெரியவர்களுள் ஒருவராக மிளிர்கின்றார்கள்.
சைவமும் தமிழும் தழைத்தோங்கும் பன்னாலைக் கிராமத்தில் திரு. காசிப்பிள்ளை அவர்களுக்கும் திருமதி. வள்ளிப்பிள்ளை காசிப்பிள்ளைக்கும் மகனாக 26-02-1914ல் பிறந்தார் திரு.கதிர்காமத்தம்பி அவர்கள். இவரது மூத்த உடன்பிறப்புகள் மீனாட்சிப்பிள்ளை, சண்முகம்பிள்ளை, விநாயகமூர்த்தி ஆகியோர். கிருஷ்ணமூர்த்தி இவருக்குத் தம்பி.
அக்காலத்தில் கல்விக்குப் பெயர் பெற்று விளங்கிய பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில் திரு.கதிர்காமத்தம்பியின் கல்வி ஆரம்பமாகியது.
95 / வயற்காற்று

Page 58
பண்டிதமணியின் மாணவர்
திருநெல்வேலி சைவாசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 1931 முதல் 1933 வரை பயின்று ஆசிரியர் தராதரப் பத்திரத்தைப் பெற்ற இப் பெரியார் தான்கற்ற பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில் 1936ல் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர், 1959 முதல் அதன் அதிபராகவும் சேவையாற்றினார். கணிதம், நாட்டுச் சீவன சாஸ்திரம், பூமி சாஸ்திரம், கயிற்று வேலை, விவசாயம் ஆகிய பாடங்களைச் செவ்வனே கற்பிப்பதில் வல்லவராக விளங்கினார். கணிதத்தில் இவர் மிக விவேகி. 1942ல் சென் ஜோன்ஸ் கல்லூரியில் நடந்த தும்புக் கைத்தொழில் பயிற்சி வகுப்பில் ஆறுமாதங்கள் பங்குபற்றிப் பயிற்சி முடிவில் சேர் கனகசபை வித்தியாசாலையில் தமது செலவில் கொட்டில் அமைத்து. 6ம் வகுப்பு முதல் S.S.C வரையான எல்லா வகுப்புகளுக்கும் தும்புக் கைத்தொழிலை ஒரு பாடமாகக் கற்பித்தார்.
கல்விச் சேவையுடன் சமய சமூக சேவைகளையும் மேற்கொண்டு ஊரவர்களும் அயலூரவர்களும் போற்றும் வகையில் பலவித பணிகளைச் செய்தார். சைவாசிரிய கலாசாலையில் பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்களின் மாணவராக இருந்தவராதலால் அவர் வழியில் இவரும் சமய திட்சை பெற்றுச் சிறந்த சைவாசார சீலராக விளங்கியவர். நித்திய சந்தியாவந்தனம் செய்து பன்னிரு திருமுறைப் பாராயணம் செய்தே உணவருந்தும் பழக்கம் உடையவர். பூரீலறி ஆறுமுகநாவலர் பெருமான் அவர்களின் வழிநின்று ஒழுகுபவர்.
பாடசாலையில் நால்வர் குருபூசைகள் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படும். மாணவர்களிடையே திருமுறைப் பண்ணிசைப் போட்டியும் நடத்தப் பெற்று வெற்றி பெற்ற மாணவருக்குப் பரிசில்களும் வழங்கப்பெறும். வருடந்தோறும் மாணவருக்கு சமயப் பிரவேசத் தீட்சை கார்த்திகை மாதத்தில் நடைபெறும். கிராமத்துப் பொதுமக்களும் சமயத் தீட்சை பெற வசதிகள் அளிக்கப்பட்டன. மாணவர் கல்வியிலும் பாடசாலை வளர்ச்சியிலும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்த இவர் மெய்வல்லுநர் போட்டி, பரிசளிப்பு விழா, கலை விழா முதலியவற்றை ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் ஒத்துழைப்புடன் வருடந்தோறும் நடத்தி பொதுமக்களுக்கும் பாடசாலைகளுக்குமிடையே நல்ல உறவையும் வளர்த்துவந்தார். அதனால், ஊரவர்களினதும் கல்வித் திணைக்களத்தினதும் நன்மதிப்புக்கு அவர் உள்ளானதில் வியப்பொன்றுமில்லை.
வயற்காற்று 196

சிறந்த நிர்வாகி
தமது நிர்வாகத் திறமையாலும் ஆளுமையாலும் கல்வித் திணைக்கள அதிகாரிகளின் பாராட்டுதல்களை எப்பொழுதுமே பெற்று வந்திருக்கின்றார். ஒரு சம்பவத்தை இந்த இடத்தில் எடுத்துக் காட்டுதல் பொருந்தும். 1960ம் ஆண்டு தனிமுகாமையில் இயங்கிவந்த பாடசாலைகளை அரசாங்கம் சுவீகரிக்கத் தொடங்கியது. அப்போதைய பாடசாலை முகாமையாளர் தாமாகவே முன்வந்து பாடசாலையை அரசாங்கத்துக்குக் கையளித்தார்.
கையளிக்கும் சம்பவத்துக்குக் கொழும்பில் இருந்து கல்விப் பணிப்பாளரும் உயர் அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர். அப்பொழுது அதிபராகக் கடமையாற்றிய ஆசிரியர் திரு. கா. கதிர்காமத்தம்பி அவர்கள் ஆற்றிய உரையை வியந்து பாராட்டிய பணிப்பாளர், தமக்கு அணிவித்த மாலையைக் கழற்றி எமது அதிபருக்கே சூட்டிக் கெளரவித்தமை ஊருக்கே பெருமையளித்த காட்சியாகும். அதிபரின் நிர்வாகத் திறமைக்குச் சான்றாக அமைந்த இந்நிகழ்ச்சி பாடசாலைப் பதிவுப் புத்தகத்திலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலையின் நூற்றாண்டு விழாவை 1965ம் ஆண்டு அதிபர் கோலாகலமாகக் கொண்டாடினார். அதன் ஞாபகார்த்தமாக ஒரு சிறுமலரும் வெளியிடப்பட்டது. 1965, 1966களில் பாலர் பாடசாலைக் கட்டிடமும் தண்ணித் தொட்டியும் கட்டிமுடிக்கப்பட்டடன. அரசாங்க உதவிப் பணம் பெற்றுப் பெரிய பாடசாலைக்கு ஒடும் போடப்பட்டது.
திருப்பணிகள்
சித்தாந்த சாஸ்திரம் கற்கும் அவா உந்தவே, பன்னாலை சித்தாந்த வித்தகள் திரு. வி. சங்கரப்பிள்ளை ஆசிரியர் அவர்களிடம் முறைப்படி சிவஞானசித்தியார், சிவஞானபோதம் முதலாய சாஸ்திர நூல்களைக் கற்றார். இன்றும் அவரையே தமது குருவாகப் போற்றி வருகின்றார். மேலும் சித்தாந்த சாகரம் பண்டிதர் திரு. மு. கந்தையா அவர்களிடத்தும் சித்தாந்த சாஸ்திர நூல்களையும் கற்றுத்தேறி அவற்றில் விற்பன்னரானார்.
தெய்வீகத் திருப்பணிகளில் ஈடுபாடு மிக்குடைய இப்பெரியார் கூட்டுப் பிரார்த்தனையை 1938ல் முதன் முதலாகப் பன்னாலை மயிலையம்பதி ஞானவைரவர் ஆலயத்தில் ஆரம்பித்து வைத்த
97 / வயற்காற்று

Page 59
பெருமையுடையவர். கொழும்புக்கு இடம்பெயரும் வரை அப்பிரார்த்தனையைத் தொடர்ந்து நடத்தியதுடன் அவ்வாலயத்திலும் மற்றைய ஆலயங்களிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். 1939 மார்கழியில் திருவெம்பாவைக் கூட்டுப்பிரார்த்தனையையும் ஆரம்பித்து வைத்தார். ஆலயங்களிலும் பன்னாலை அடியார் தொண்டர் மடாலயத்திலும் புராண படனப் படிப்பிலும் ஈடுபட்டார்.
"செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா அம்மலங் கழி, அன்பரோடு மரீஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே." என்னும் சிவஞான போதத்தின்படி ஒழுகி, அப்பாடலை மேற்கோள் காட்டி மற்றவர்களையும் ஒழுகச் செய்தவர்.
செம்பொருள் அறிவும் சிவநெறியே பேர்ற்றி வாழும் வாழ்வும் கொண்ட இவர் இந்தியாவிலிருந்து வருகைதந்த திருவாளர்கள் திருமுருக கிருபானந்தவாரியார், வெள்ளை வாரணர் சத்தியமூர்த்தி, வச்சிரவேலு முதலியார் முதலானவர்களின் உரைகளைக் கேட்கத் தவறமாட்டார். அதனோடு அமையாது அவர்களைப் பாடசாலைக்கு அழைப்பித்து உரையாற்றுவித்துக் கெளரவித்துமுள்ளார்.
1961 தொடக்கம் பன்னாலை ஞானவைரவர் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் பெரிய புராணத்திற் கூறப்பட்ட அறுபத்து மூவரைப் பற்றித் தொடர் பிரசங்கம் செய்து வந்தார். பிரசங்கப்பூர்த்தி 1964ல் சேக்கிழார் விழாவாக மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கலைநிகழ்ச்சிகளுக்கு மகாஜனாவின் சிற்பிதிரு. தெ.து. ஜயரத்தினம் அவர்கள் தலைமை வகித்தார்கள். மாலை நிகழ்ச்சிகள் சேர். கந்தையா வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றன. அப்பகுதியில் சேக்கிழார் பெருமானுக்கு முதன் முதலாக எடுக்கப் பெற்ற விழா அதுவேயாகும். அவ்விழாவின் போதுதான் அளவையூர் நாதஸ்வர வித்துவார் திரு. நா. பத்மநாதன் அவர்களுக்கு கானகலாநிதி என்ற பட்டமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
கிராம அபிவிருத்தி
எமது கிராமத்து அபிவிருத்திக்காக எந்நேரமும் சேவை செய்தவர்திரு.கா. கதிர்காமத்தம்பி அவர்கள். முன்னேற்றத் திட்டங்கள் பல அவரால் திட்டப்பட்டன. அக்காலத்தில் துடிப்பு மிக்க இளைஞனாக
வயற்காற்று 198

இருந்தபோதே பன்னாலை வாழ் விவசாயப் பெருங்குடி மக்களின் பொருளாதார வளத்தினை உயர்த்தும் சிந்தனை அவர் உள்ளத்தில் முளைவிட்டது.
"செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்." என்னும் தமிழ் மறைக்கேற்ப பன்னாலையில் ஐக்கிய நாணய சங்கம் ஒன்றை 1940ஆம் ஆண்டு ஆரம்பித்து, அதில் அநேக விவசாயிகளை அங்கத்தவராக்கி அதன் தலைவராகவும் பின்னர் செயலாளராகவும் பதவிகள் வகித்து அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக அதன் வளர்ச்சிக்கு அயராது உழைத்தார். அப்பகுதியில் வேறு நாணயச் சங்கங்கள் தோன்றுவதற்கு இச்சங்கம் முன்னோடியாக அமைந்தது. கொழும்புக்கு இடம்மாறும்வரை அந்நிறுவனத்தைப் பாதுகாக்க அவர் எடுத்த முயற்சிகள் அளப்பரியன. பன்னாலை சிக்கன கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கமாக இன்றும் அது இயங்கி வருகின்றது.
1943ல் பன்னாலையில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒன்றை ஆரம்பிக்கக் காரணமானவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக அதன் செயலாளராகவும் பொருளாளராகவும் பதவிகள் வகித்து அதன் செயற்பாடுகளுக்கும் முன்னேற்றத்துக்கும் உழைத்தவர்.
இச்சங்கத்தின் மூலம் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்து, பிற மாவட்டங்களில் விற்பனை செய்து அவர்களின் பொருளாதாரத்தைப் பெருக்கவும் இவர் காரணமாக இருந்தார். இவ்வாறாக, கிராமத்தின் ஐக்கியத்துக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் அயராது உழைத்த பண்பாளர் திரு. கதிர்காமத்தம்பி அவர்கள்.
வலிவடக்கு உதவி அரசாங்கப் பகுதியில் உள்ள கிராமசேவர் பிரிவுகளை அதிகரிக்கும் நோக்குடன் பன்னாலைக் கிராமத்து எல்லையை மறுசீரமைக்க அரசினர் எண்ணினர். பன்னாலைப் பாடசாலையைக் கூறுபோடும் வகையில் மாதிரிப் படம் ஒன்றைச் சிலர் வரைந்து அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்தனர். அதனை எதிர்த்து வாதாடி எல்லை எவ்விதம் அமையவேண்டும் என்பதற்கு மாதிரிப்படம் ஒன்றை வரைந்து காட்டிய பெருமக்களில் ஆசிரியர் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. இங்ங்னமாக கிராமத்தின் முன்னேற்றத்துக்குத் திரிகரண சுத்தியோடு தம்மை அர்ப்பணித்தவர் பெரியார் திரு. கதிர்காமத்தம்பி அவர்கள்.
99 / வயற்காற்று

Page 60
கூட்டுப் பிரார்த்தனைகள்
1939ல் முதன்முதலாக இந்திய யாத்திரை செய்தார். தொடர்ந்து பல யாத்திரைகளை மேற்கொண்டு திருத்தலங்கள் பலவற்றைத் தரிசித்தார். பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்களையும் பலதடவைகள் அழைத்துச் சென்று திருத்தலங்களை வழிபட உதவியாக இருந்தார். சிதம்பரத்திலே உள்ள கனகசபையிலே மார்கழி மாதத் திருவாதிரை ஆருத்திரா தரிசனத்தைக் கண்ணுற்ற அவர் அதன் மகிமையைப் பலவாறு எடுத்தியம்பிப் புளகாங்கிதம் கொண்டு பரவசப்படுவார். குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும். என்ற அப்பர் சுவாமியின் திருவிருத்தப் பாவினைக் கண்ணிர் மல்க ஒதுவார்.
தென்இந்தியாவிலே மார்கழித் திருவெம்பாவைக் காலங்களில் ஆலயங்களைச் சார்ந்த கிராம வீதிகள் தோறும் பெரியோர் நெறிப்படுத்தச் சிறுவர் சிறுமியர் திருவெம்பாவைப் பாடல்களை விடியற் காலையில் ஒதிக்கொண்டு செல்வதைக் கண்ணுற்று, அதனால் கவரப்பட்ட இவர் எமது ஊர்களிலும் இவ்வித தொண்டில் இளைஞரை ஈடுபடுத்தக் கருதினார். திருவெம்பாவைக் கூட்டுப்பிரார்த்தனைச்சபை என்ற ஒரு சபையையும் தோற்றுவித்தார். திருவெம்பாவைப் பத்து நாட்களிலும் பன்னாலையில் உள்ள ஒவ்வொரு கோயிலிலும் விடியற் காலையில் இளைஞர்கள் ஒன்றுகூடித் திருவெம்பாவைப் பாடல்களை இசையுடன் சங்கு, சேமக்கலம் மணிமுதலிய மங்கல இசைக்கருவிகள் சகிதம் வீதிகள் தோறும் ஒதிக்கொண்டுவந்து தொடங்கிய ஆலயத்தில் முடிப்பர். பத்தாம் நாள் திருவெம்பாவைப் பூர்த்தி விழா மிகச் சிறப்பாக நடைபெறும். ஆரம்ப காலத்தில் இதனைச் சிலர் எதிர்த்தாலும் காலகதியில் அதன் மகத்துவத்தை அறிந்து ஊர்மக்கள் ஆதரவும் ஒத்தாசையும் நல்கினர். இடைவிடாது தொடர்ந்து நடத்தி வந்தனர். தொண்ணுறுகளின் ஆரம்ப காலங்களில் நோயுற்றிருந்த போதும் கூட, சைக் கிளை ஒரு கையால் பிடித்தவாறு நடந்து, திருவெம்பாவைப் பாடல்களைச் சொல்லிக் கொடுப்பார்.
1966ல் கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் முதலியார் சின்னத்தம்பி அவர்களின் தலைமையில் இவரது பிரசங்கம் நடைபெற்றது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு நிகழ்ச்சியாகும். 1971ம்
ஆண்டு தமது 57வது வயதில் பாடசாலைத் தொழிலிலிருந்து ஓய்வ பெற்றார்.
வயற்காற்று / 100

திருவெம்பாவைக் கூட்டுப்பிரார்த்தனையின் பொன்விழா 1989ம் ஆண்டு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அவ்வமயம் ஆசிரியர் அவர்களின் சேவையைப் பாராட்டி நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு மகாசந்நிதானம் பூரீலறி சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப் பெற்றமை அன்னார் சைவத்துக்கு ஆற்றிய தொண்டின் பெருமைக்கோர் எடுத்துக்காட்டாகும். பொன்விழா மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. திருமுறை ஒதுதல், திருவெம்பாவை மனனம், கோலம் போடுதல், மாலை கட்டுதல் முதலிய நிகழ்ச்சிகளில் மாணவர் மத்தியில் போட்டிகள் வைத்து வெற்றியீட்டியவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
- நன்றி. நினைவு தீபம் 28-03-2004
101 / வயற்காற்று

Page 61
கூட்டுறவுச் சேவையில் பற்றுறுதியுடைய பண்பாளர் திரு. சி. சிவமகாராசா M.P
க. சிவபாலசுப்பிரமணியம் LDIT6ljLLë GlauJ6un6T - u. IITUp LDT6ljLL-ás asal (606ljës60)Lj.
த
அரிய பிறவியாகிய மானிடப்பிறவியை பெற்றநாம் வாழும் காலத்தில் ஏனையோருக்குப் பயனுள்ளவராக நம்மை அமைத்துக் கொள்வதே தர்மமாகும். இந்நிலையில் நின்று வாழ்பவர்களை மக்கள் போற்றத் தவறுவதும் இல்லை. இந்தவகையில் தனக்கென வாழாதுதான் வாழும் சமூகத்திற்காகத் தன்னை அர்ப்பணித்து, சமூகத்திற்காக பணிகள் பல ஆற்றிவரும் மதிப்புக்குரிய திரு. சின்னத்தம்பி சிவமகாராசா அவர்களின் சேவையை கூட்டுறவாளர் போற்ற முன்வந்தமை மகிழ்ச்சிக்குரியதே.
மனித தர்மங்கள், மனிதப் பெறுமானங்கள், மனித கெளரவங்கள், மனித விழுமியங்கள் போன்றவை மதிக்கப்படுகின்ற சமூகத்தில் சமூகப் பணியை இலகுவாகவே ஆற்றமுடியும். ஆனால், இவை அனைத்தும் இன்று அவமதிக்கப்படுகின்ற அல்லது அருகிவருகின்ற சூழ்நிலையில் சமூகப் பணியை ஆற்றுகின்றவர்களும் அருகியே வருகின்றனர். எனினும், மக்கள் சேவையில் தம்மை அர்ப்பணித்து சுயநலமற்ற, ஆடம்பரமற்ற அமைதியான, நியாயமான முறையில் சேவைகளை ஆற்றி வருபவர்கள் சிலரும் எம்மத்தியில் இருக்கின்றார்கள். அத்தகைய சிலரில் ஒருவராகவே எமது மதிப்பிற்குரிய திரு. சின்னத்தம்பி சிவமகாராசா அவர்கள் காணப்படுகின்றனர். அவர்கள் பல்வேறு சமூக, சமய நிறுவனங்களினூடாகத் தனது சேவையை விரிவுபடுத்திக் கொண்ட போதும் கூட்டுறவுத்துறையே அவர்களின் அதிக ஈடுபாடுடைய அமைப்பாகும்.
வயற்காற்று / 102

திரு. சி. சிவமகாராசா அவர்களின் கால் நூற்றாண்டுகால கூட்டுறவுச் சேவையில் கூட்டுறவுத் துறையின் பணியாளன் என்ற வகையில் நான் அவருடன் இணைந்து பணிபுரிந்த காரணத்தினால் அவரது கூட்டுறவுச் சேவையை நன்கு அறிந்தவன் என்ற வகையில் அவரது கூட்டுறவுப் பணிகளை இம்மலரில் குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
மனிதனுடன் கூடிப்பிறந்த ஒன்றாக, மனிதப் பண்பை மதிக்கின்ற ஒன்றாக, மனித மேம்பாட்டிற்கு உதவுகின்ற ஒன்றாக, மனித சமத்துவம் பேணுகின்ற ஒன்றாக, மனிதர்கள் என்ற நிலையில் இணைந்து இயங்கும் ஒரு அமைப்பே கூட்டுறவு வெறுமனே, இது ஒரு அமைப்பு மட்டுமன்றி, மக்களின் இதயத்தில் எழுகின்ற ஊக்க உணர்வுமாகும். இத்தகைய கூட்டுறவு அமைப்பில் தன்னை இணைத்து கிராமிய, பிரதேச, மாவட்ட, தேசிய மட்டங்களில் தனது கூட்டுறவுப்பணியை அணிசெய்தவர்.
தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கிளைக்குழு, பொதுச்சபை என்பவற்றில் பணிபுரிந்து 1978ல் தலைவராக உயர்ந்து, தன் கூட்டுறவுப் பணியைத் தொடர்ந்தவர். தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் பல ஆண்டுகள் தலைவர் பதவியில் இருந்த இவர் சங்க வளர்ச்சிக்கும், அதன் தொழிற்பாட்டு அபிவிருத்திக்கும் குறிப்பாக, அப்பிரதேச சமூக பொருளாதார கலாசார மேம்பாட்டிற்கும் சிறந்த பணிகளை ஆற்றி வந்தவர். அங்கத்தவர், கிளைக்குழு, பொதுச்சபை என்பவற்றிற்கும் சங்கத்திற்கும் இடையே உள்ள தொடர்புகளை வலுப்படுத்த காலத்திற்குக் காலம் கலந்துரையாடல், பயிற்சி வகுப்பு, கூட்டங்கள் நடாத்தியும், சங்கத்தின் நிலைகளை அங்கத்தவர், கிளைக்குழு, பொதுச்சபை அறிந்துகொள்ள வேண்டும் என்பதிலும், அவர்களது கருத்தைப் பெற்றுத் தீர்மானங்களை எடுப்பது பொருத்தமானது என்பதிலும் பெரிதும் நம்பிக்கை உடையவராக செயல்பட்டவர் கூட்டுறவுச்சங்கத் தொடர்பு பணிகளை மேம்படுத்தி வந்தமை அவரது கூட்டுறவுப் பண்பை எடுத்துக்காட்டும் அம்சமாகும்.
அத்துடன் சங்கத்திற்கு வினைத்திறன் மிக்க பணியாளர் குழுவைக் கட்டியெழுப்புவதிலும், கூட்டுறவுப் பணியாளர்களுக்குச் சிறந்த சம்பள சமூகநல வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் அதிக கவனம் உடையவர். மேலும் சங்கத்துடன் தொடர்புடைய எல்லா நிறுவனங்களுடனும் சிறந்த தொடர்பு முறைகளை ஏற்படுத்தி
103 / வயற்காற்று

Page 62
தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்பைச் சங்க வளர்ச்சிக்குப் பெற்றுக் கொள்வதில் பெருவெற்றி கண்டவர். தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் மட்டுமன்றி, வலிவடக்கு பிரதேச கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம், கூட்டுறவு வைத்தியசாலை போன்ற பல்வேறு கூட்டுறவு அமைப்புக்களிலும் இணைந்து பிரதேச மட்டத்திலும் தனது கூட்டுறவுப் பணியை ஆற்றிவந்தார்.
சங்க பிராந்திய மட்டங்கள் மட்டுமன்றி, மாவட்ட மட்டத்தில் அவர் ஆற்றிய கூட்டுறவுப்பணிகள் இம்மாவட்ட கூட்டுறவாளர்களால் என்றும் போற்றப்படும் ஒன்றாக உள்ளது. 1981ம் ஆண்டு இலங்கை தேசிய கூட்டுறவுச் சபையின் யாழ்ப்பாணக் கிளையாக யாழ்ப்பாண மாவட்டக் கூட்டுறவுச்சபை இருந்த காலத்தில் அதன் பணிப்பாளராக இணைந்து கொண்டார். மாவட்டத்திலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்கள், சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்கள். ஏனைய வகைக் கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்துடனும் இணைந்து எந்தவித வேறுபாடுகளும் இன்றி, மாவட்ட மட்டத்தில் அனைத்துக் கூட்டுறவாளர்களையும் இணைத்து கூட்டுறவு அமைப்பின் தேவைகளிற்குக் குரல் கொடுத்தும், செயலாற்றியும் வந்துள்ளார். தேசிய கூட்டுறவுச் சபையின் யாழ்ப்பாணக் கிளையின் தலைவராக இவர் பதவி ஏற்ற காலம் குறிப்பாக 1986-1989ம் ஆண்டு காலப்பகுதி சபைக்கு மிகவும் சோதனை மிகுந்த காலமாகவே இருந்தது. நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழ்நிலையில் வீரசிங்க கட்டிடம் கூட்டுறவுப் பயிற்சிக் கல்லூரியில் இருந்தும் தளபாட உபகரணங்களையாவது எடுத்துப் பாதுகாக்க வேண்டும் என்பதில் கருத்துடையவராய் தானே நேரில் நின்று செயல்படுத்தியவர். இத்தகைய இக்கட்டான நிலைகள் பல சந்தர்ப்பங்களில் தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு ஏற்பட்ட போது பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடிவிடாது தனது உயிரையே துச்சமென மதித்து பணியாளர்களையும் உற்சாகப்படுத்தி அவர்களுடன் உடன் இணைந்து கூட்டுறவுத் துறையின் சொத்துக்களை இயன்றவரை பாதுகாப்பதற்கு அவரால் எடுக்கப்பட்ட பெருமுயற்சிகளைக் கூட்டுறவுச் சமூகம் நன்கறியும்.
எத்தகைய நெருக்கடியான நிலையிலும் கூட்டுறவுச் சபையின் சேவையும், கூட்டுறவுக் கல்வி நடவடிக்கையும் தொடரவேண்டும் என்பதில் அக்கறை உடையவராக இருந்து வருபவர். கூட்டுறவு இயக்கம் சுதந்திரமான அமைப்பாகவும், கூட்டுறவாளர்களால்"
வயற்காற்று / 104

நிர்வகிக்கும் அமைப்பாகவும் செயல்பட வேண்டும் என்பதில் தீவிர கருத்துடையவர். தேசிய கூட்டுறவுச் சபையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு மாவட்டக் கூட்டுறவுச் சபைகள் அந்தந்த மாவட்ட கூட்டுறவாளர்களால் நிர்வகிக்கும் சுதந்திர அமைப்பாக உருவாக வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்ற காலத்தில் நடைபெற்ற கருத்தரங்குகள், கலந்துரையாடல்களில் கலந்து ஆதரவு அளித்து மாவட்ட கூட்டுறவுச் சபைகளின் உருவாக்கத்திற்கு ஆதரவாக இருந்து உதவியவர்.
1989ம் ஆண்டு மாவட்டக் கூட்டுறவுச் சபை பதிவுசெய்யப்பட்ட போது அதன் முதல் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டவர். அக்கால கட்டத்தில் சபை தனது நடவடிக்கைகளைத் தொடர்வதற்கான நிதி, பெளதிக, ஆளணி வளங்களில் மிகவும் பலவீன நிலையில் இருந்தது. இத்தகைய நிலையை போக்குவதற்கு மாவட்டத்தின் கூட்டுறவாளர்களினதும், கூட்டுறவுச் சங்கங்களினதும் ஒத்துழைப்புக்களைச் சிறப்பாகப் பெற்றுக் கொண்டமையோடு தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினூடாக பல உதவிகளை வழங்கி சபையின் ஸ்திர தன்மைக்கு பெரிதும் உதவியவர்.
மாவட்டத்திலுள்ள அனைத்து கூட்டுறவாளர்களும் இணைந்து ஒற்றுமையாக கூட்டுறவு நிறுவனங்களை வளர்க்க வேண்டும் என்ற பெரும் ஆசை உடையவர். அதற்காக தன்னாலான பணிகளைத் தொடர்ந்து செய்பவர். மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை, அல்லது ஏனைய கூட்டுறவுச் சங்கங்களுக்கு விநியோகிப்பதற்கு நுகர்ச்சிப் பொருள் தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்ட காலங்களில் தன்னாலான பணிகளைச் செய்ய முன்னின்றுழைத்தவர். இதே போன்று விவசாய உள்ளிடுகளை பெற்றுக்கொடுத்தல், விவசாய உற்பத்திகளைச் சந்தைப்படுத்தல் போன்றவற்றை கூட்டுறவு நிறுவனங்கள் ஊடாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகள் மேற்கொண்டவர்.
கூட்டுறவுச் சங்கங்களினதும், பணியாளர்களினதும், கூட்டுறவாளர்களினதும் நன்மை, தீமைகள் எதிலும் எந்தவித பாகுபாடும் காட்டாது உரிய நேரத்தில் உரிய இடத்தில் சமூகமாயிருந்து தனது பங்களிப்பை வழங்கும் உயர்ந்த கூட்டுறவுப் பண்பு அவர்களிடம் நிறையவே உள்ளது.
105 / வயற்காற்று

Page 63
கூட்டுறவுச் சங்கங்கள் சுதந்திரமாகவும், ஒற்றுமையாகவும் அதே நேரத்தில் சமூக மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் செயலாற்ற வேண்டும் என்பதில் அவர்காட்டும் ஆர்வம் அதிகம். இத்தகைய தன்மைகள் ஆரம்பத்தில் சிலரால் எதிர்க்கப்பட்ட போதும் தற்போதைய கூட்டுறவுக் கொள்கையின் ஏழாவது அம்சமான சமூக மேம்பாடு என்ற அம்சம் சேர்த்துக் கொள்ளப்பட்ட பின்னர், அதன் மூலம் அவரது முன்னைய கருத்து தற்போது அனைவராலும் மனம் கொள்ளப்படுகின்றது. கூட்டுறவுக் கொள்கையில் அதிகபற்றுள்ள இவர், கூட்டுறவுக் கல்விக்கு எப்பொழுதுமே முக்கியத்துவம் அளித்து வந்துள்ளார். பொதுமக்கள், அங்கத்தவர், பதவி வகிப்போர், பணியாளர் அனைவருக்கும் காலத்தின் தேவைக்கு ஏற்ப நவீன முறையிலான கல்வியும் பயிற்சியளிப்பும் அவசியம் என்பதை வலியுறுத்தும் அவர், அதன் செயல்பாட்டிற்கு அதிகம் பங்களிப்பவர்.
யாழ்ப்பாணம் மாவட்டக் கூட்டுறவுச் சபையின் தலைவராகவும், பணிப்பாளராகவும், தேசிய கூட்டுறவுச் சபையின் பணிப்பாளராகவும் இருந்து பணியாற்றிய காலங்களில் சபையின் அபிவிருத்திக்கும். கூட்டுறவுக் கல்விப்பணிக்கும் சிறந்த ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கிவந்தார். யாழ்ப்பாணம் மாவட்டக் கூட்டுறவுச்சபையின் கல்விப் பயிற்சியளிப்பு தேவைக்கு வேண்டியநிதி, நவீன சாதனங்கள் என்பவற்றின் ஒரு பகுதியை தேசிய கூட்டுறவுச் சபையில் இருந்து பெற்றுத் தந்தவர்.
கூட்டுறவாளர் வீரசிங்க மண்டபக் கட்டிடத் தொகுதியின் புனரமைப்புக்காக, புனரமைப்புக் குழுவிலும் சபையின் பணிப்பாளர் சபையிலும் இருந்து வேண்டிய ஆலோசனைகளை வழங்கியதோடு, தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினுடாக ரூபா ஒரு லட்சம் நிதியை முதலில் வழங்கி கூட்டுறவு நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டு ஆக்கபூர்வமான பங்களிப்பு மூலம் ஊக்கம் அளித்தவர்.
கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலும் சேவை வழங்கிவரும் அவர் கூட்டுறவுத் துறையில் பெண்கள் பங்களிப்பை அதிகரிக்கும் செயல்பாடுகளிலும் முன்மாதிரியாகவே செயல்பட்டவர். 1980ம் ஆண்டு காலப்பகுதியில் கூட்டுறவுத்துறையில் மகளிர் பங்களிப்பை மேம்படுத்துவதற்குகாக தேசிய கூட்டுறவுச் சபையினால் முன்னெடுக்கப்பட்ட கூட்டுறவு மகளிர் பாவனையாளர் கல்வித்திட்ட
வயற்காற்று / 106

செயல்பாட்டிற்கு பெரிதும் ஊக்கம் கொடுத்தவர். இலங்கையில் பரீட்சார்த்தமாகத் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றாகத் தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமும் தெரிவுசெய்யப்பட்டது. தெல்லிப்பழை ப.நோ.கூ. சங்கத்தில் இத்திட்டம் வெற்றியளித்தமையால் யாழ்மாவட்டத்தில் அளவெட்டி, மல்லாகம்,நீர்வேலி, நல்லூர், கட்டைவேலி, நெல்லியடி ஆகிய நான்கு ப.நோ.கூ. சங்கங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டன. அத்துடன், கூட்டுறவு மகளிர் செயல்திட்டம் மூலம் மகளிர் சுயஅபிவிருத்தி, மகளிர் பொருளாதார அபிவிருத்தி, மகளிர் தலமைத்துவ அபிவிருத்தி போன்றவற்றை மேம்படுத்த பொருத்தமான கல்விப் பயிற்சியளிப்புத் திட்டங்களை சங்க மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் நடைமுறைப்படுத்தி, அதில் வெற்றியும் கண்டார். சிறந்த மகளிர் தலைவிகள் உருவாகவும். சங்கத்தின் பொதுச்சபை, பணிப்பாளர் சபை போன்றவற்றில் மகளிர்கள் இடம்பெற்றுச் செயல்படவும், கூட்டுறவுத்துறையில் பெண்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இவர் ஆற்றிய பணிகள் பாராட்டப்படக் கூடியவை.
கூட்டுறவுப் பெரியார் வீரசிங்கம் அவர்களது கூட்டுறவுச் சேவை மீது மிகுந்த மதிப்பும், பற்றும் உடைய இவர், அவரது வழி நின்று கூட்டுறவுத் துறையில் பல்வேறு பதவிகளையும் பொறுப்பேற்று வெறுமனே கதிரைகளை அலங்கரிப்பவராக அல்லாது பதவியில் பெருமை பெற்றும், பதவிக்குப் பெருமை சேர்த்தவரும் ஆவார்.
கூட்டுறவுத் துறையோடு மட்டுமன்றி, வலிவடக்கு செஞ்சிலுவைச் சங்கம், வலிவடக்கு புனர்வாழ்வுக் கழகம் போன்ற பொது நிறுவனங்கள் ஊடாகச் சமூகப்பணி ஆற்றிவரும் இவர், சிறந்த சமயப் பற்றும் நிறைந்தவர். தனது சமூகப்பணிகளோடு சமயப்பணிகளுக்கும் அமைதியாக துணைநின்று உழைப்பவர். இவரது இத்தகைய கூட்டுறவு, சமூக, சமயப்பணிகளுக்கு அணிகலனாக அமைந்திருப்பது அவரது சிறந்த தலைமைத்துவத் திறனேயாகும்.
பழகுவதற்கு இனியவரான இவர், பக்குவமான மனப்பாங்குள்ள பண்பாளன். செயல்வீரரும் ஆவர். பல்வேறு கருத்துள்ள மனித உள்ளங்களை ஏககாலத்தில் கவர்ந்து அவர்களைத் தான் தலைமை தாங்கும் நிறவனங்களின் நோக்கங்களிற்காகப் பயன்படுத்துவதில் பட்டறிந்தவர். சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒன்றாக இவரிடம் காணப்படும். எவரையும் துதி செய்யும் மனப்பக்குவம் இல்லாத இவர்,
107 / வயற்காற்று

Page 64
பிழைகளை நேரில் சுட்டிக்காட்டவும், அதற்கான எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளவும் தயங்கமாட்டாதவர். வெற்றியையும், தோல்வியையும் சமமாக ஏற்கும் மனநிலை உடையவர். இவர் பிழை என்று கருதுவதை விட்டுக் கொடுக்க மறுப்பவரும்கூட. ஆனால் சரி எனத் தனக்குத் தோன்றுவதைச் செயல்படுத்தத் தாமதிப்பவரும் அல்லர். இத்தகைய சற்று கடுமையான போக்குள்ள இவர், அளவாகப் பேசி அதிக செயலாற்றும் வல்லலமை இயல்பாகவே பெற்றவர். என்றும் எளிமையான தோற்றம், எளிமையான வாழ்க்கை வாழும் இவர் நலிந்த மக்களுக்கு அவர்களின் மேம்பாடு கருதி எதையாவது செய்ய வேண்டுமே என்று சதா துடிப்புடையவர்.
தனது பண்பால், மற்றவர்கள் மீது காட்டும் அன்பால், சமூகத்தின் மீது உள்ள பற்றால் கூட்டுறவுச் சேவையால் பதவிகள் பல பெற்று பணிகள் பல புரிந்து பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையும் ஒருங்குசேர இன்று தான் சேவை புரிந்த கூட்டுறவுச் சமூகத்தின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொள்கிறார். தற்காலத்தில் வேதனத்திற்காகச் செய்யும் சேவைகளுக்கே விழாக்களும் பாராட்டுக்களும் மலிந்துள்ள சூழ்நிலையில் எந்தவித பிரதிபலனும் இன்றிப்படோபகாரம் இல்லாது அமைதியாகவே கூட்டுறவுத் துறைக்கு தம்மை அர்ப்பணித்து உண்மையான கூட்டுறவுப்பணியைச் செம்மையாக ஆற்றிவரும் கூட்டுறவாளர்கள் பலர் நம் மத்தியில் இருப்பதையோ அன்றி அவர்களது சேவைகளையோ சீர்துக்குவது குறைவாகவே உள்ளது. இந்நிலையில், கூட்டுறவாளராகிய திரு. சி. சிவமகாராசா அவர்களின் சேவையைப் பாராட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் ஏனைய கூட்டுறவாளர்களையும் உற்சாகப்படுத்துவதோடு, கூட்டுறவுச் சேவைக்குள் ஏனையோரும் புகழ்ந்துகொள்ள ஊக்கமளிப்பதாக அமைகிறது. எனவே, இத்தகைய முயற்சியைப் பாராட்டுவதோடு இவ்வாறான பெருமைகள் ஒரு கூட்டுறவாளனுக்கு அணிசெய்கின்றதே என்ற வகையில் மட்டற்ற பெருமிதம் அடைகின்றேன். திரு. சி. சிவமகாராசா அவர்கள் சேவை எமது சமூகத்திற்குத் தொடர எல்லாம் வல்ல இறைவன் சகல வல்லமைகளையும் அவர்களுக்கு வழங்க இறைவனைப் பிரார்த்தித்து வாழ்த்தி அமைகிறேன்.
நன்றி: கூட்டுறவுத் தீபம் - 2001
வயற்காற்று / 108

சாதனையாளனின் வரலாறு : திரு. ரி. பி. பத்மநாதன்
திரு. ச. வினாயகரத்தினம்
LDTனிப்பாய் கட்டுடையில் பிறந்தாலும் தனது தொழிலையும் வாழ்வையும் தெல்லிப்பழையுடன் பிணைத்தவர் திரு.TP பத்மநாதன் அவர்கள். இவர் தமது ஆரம்பக் கல்வியைக் கட்டுடையில் உள்ள பாடசாலையிலும் பின்னர் தமது உயர் கல்வியைச் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் பெற்றார். படிக்கும் காலத்தில் உதைபந்தாட்டம், கிரிக்கட் ஆகிய விளையாட்டுக்களிற் சிறந்து விளங்கினார்.
கல்லூரிப் படிப்பை முடித்து, இந்தியாவில் கல்வி பயின்ற லக்னோ கிறிஸ்தவ கல்லூரியில் உதைபந்தாட்ட வீரராக கல்விப் பயிற்சி முடியும்வரை சிறந்து விளங்கினார். அக்கோஷ்டியின் தலைவராகவும் ஓர் ஆண்டு பணிபுரிந்தார். அதன் பின்னர், தனது பழைய கல்லூரியான ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் நூலகராகவும், பயிற்சியாளராகவும் பதவியேற்றுக் கொண்டார். இவரின் பயிற்சியின் திறனால் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முதலாம் அணி 1958, 1959 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பாடசாலைகளின் சங்கம் நடாத்திய சுற்றுப் போட்டியில் வெற்றிக் கோஷ்டியாகத் திகழ்ந்தது. 1957ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாண உதைபந்தாட்ட அணியில் அங்கம் வகித்த இவர், 1958, 1962 ஆகிய ஆண்டுகளில் அவ்வணியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கால் சுகவீனம் காரணமாக
யாழ்ப்பாண மாவட்டத் தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தார். இவர்
109 / வயற்காற்று

Page 65
விளையாடிய காலத்தில் யாழ்ப்பாணத் வெற்றிகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பந்தைக் காதலித்து அல்லும் பகலும் அதே சிந்தனையாக விளங்கிய ரீபி. மானிப்பாயைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை உருக்குமணி தம்பதிகளின் ஏகபுத்திரியாகவும், குகேந்திரன், கமலேந்திரன், ஞானேந்திரன், கருணேந்திரன், ஆகியோரின் அன்புச் சகோதரி. யாகவும் விளங்கிய ஜெயமணிதேவியைக் காதலித்து 1963 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களது இனிய இல்வாழ்க்கையில், முறையே முரளி, பிறேமிலா, பிறேம்ஆனந்த், பத்மஜெயந்த் ஆகிய நால்வரைப் பெற்றுச் சிறப்புடன் வாழ்க்கை நடத்தினார்.
மகாஜனாக் கல்லூரியின் சிற்பி எனப் போற்றப்படும் தெ.து. ஜயரத்தினம் அவர்கள் 1960ஆம் ஆண்டு ரீபி.யைத் தமது கல்லூரியின் நூலகராகவும், விளையாட்டுத்துறைப் பயிற்சியாளராகவும் நியமனம் செய்து கொண்டார். 1960 ஆம் ஆண்டு மகாஜனாவின் முதலாம் அணி போட்டிகளில் தோல்வியுறாத அணியாக விளங்கியது. 1964ஆம் ஆண்டு தொடக்கம் 1970 ஆம் ஆண்டுவரை மகாஜனாவின் மூன்று உதைபந்தாட்ட அணிகளும் 16 தடவைகள் இறுதிப் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பும், அவற்றில் 13 தடவைகள் சாம்பியன்களாக்கிய இவரின் திறமையான பயிற்சியினால் கிடைத்த பலன்கள். இலங்கையில் வேறு எந்தப் பாடசாலையும் நிலைநாட்ட முடியாத சாதனையை (தொடர்ந்து எட்டு ஆண்டுகள் முதலாம் அணியின் சாம்பியன் விருதைப் பெற்றனர்.) மகாஜனா பெறுவதற்குரிய நிலையை ஆக்கிய பெருமை ரீ.பி. அவர்களையே சாரும். இரண்டு தடவை 1970 ஆம் ஆண்டும், 1978ஆம் ஆண்டும் முறையே சேர். ஜோன்ராபற் வெற்றிக் கேடயத்தையும், சிங்கர் கேடயத்தையும் பெற்று, கல்லூரி உதைபந்தாட்டத்தின் உச்சநிலையை அடையச் செய்த பெருமையும் இவரையே சாரும். நா. வடிவேஸ்வரன் அகில இலங்கைத் தெரிவுக் கோஷ்டியிலும் இடம்பெற்றுக் கல்லூரி பெருமையடையும் நிலையை உருவாக்கியவரும் இவரே. −
ரீபி. தானெடுத்த கருமத்தை முடிக்கும் வரை ஊண், உறக்கமின்றி எந்நேரமும் அதே சிந்தனையோடு அக்கருமத்தில் வெற்றி காண்பதில் வல்லவராக விளங்கினார். கல்லூரியின் ஹொக்கி விளையாட்டை ஆரம்பித்து, அடுத்த ஆண்டிலே அந்த அணி யாழ்ப்பாண மாவட்ட சபையினாலும் தகுதியைப் பெற வைத்ததோடு ஹொக்கி அணியைச்.
வயற்காற்று / 110

சேர்ந்த எம். வாம்தேவராஜா அகில இலங்கைப் பாடசாலைகளின் தெரிவுக் கோஷ்டியின் தலைவனாகும் பேற்றையும், பி. மகேந்திரராசா அகில இலங்கைப் பாடசாலைகளின் அணியில் அங்கம் வகிக்கும் நிலையையும் உருவாக்கித் தந்தவர் இவரே.
இவர் “கிறாஸ் கொப்பேர்ஸ்’ விளையாட்டுக் கழகத்தை ஆரம்பித்து திறம்பட நடாத்தி வந்தார். இக்கழகம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உதைப்பந்தாட்டம் கிறிக்கெட், ஹொக்கி, மெய்வல்லுனர், வலைப்பந்தாட்டம் ஆகிய துறைகளில் பெரும் சாதனைகளை நிலைநாட்டி வருகின்றதை யாவரும் அறிவர். இத்தனை சாதனைகளை நிலைநாட்டிய போதிலும் எளிய தோற்றத்துடன் இவர் காட்சியளிப்பார். அணிகள் வெற்றி பெற்றதும் தன்னடக்கத்துடன் அவ்விடத்தை விட்டு மாயமாய் மறைந்துவிடுவார்.
1983ம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் உதைபந்தாட்டப் பயிற்சியாளராக நியமனம் பெற்ற இவர், அவ்வணியினர் இரு தடவை அகில இலங்கை விருதைப்பெற வித்திட்டார். இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி அணியினரைப் பயிற்றுவித்து அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட சாம்பியனாகும் பேற்றை அடையச் செய்தார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை உதைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக இருந்து, அந்த அணியினரை வெற்றியீட்ட வைத்தார். அதேபோன்று, மாதகல் இளைஞர் அணியைப் பயிற்றிப் பரிசுகள் பெறவைத்தார்.
பல சாதனைகளைக் கண்ட வீரனாகத் திகழ்ந்த இவர், தற்பெருமையோ, கர்வமோ இல்லாதவர். குழந்தையுள்ளம் படைத்தவர். குழந்தைகளுடன் தாமும் இணைந்து விளையாடுவார். தமது வீரர். களின் உணவு, உடை, உடற்சுத்தம் என்பவற்றில் மிகுந்த அக்கறை உடையவர். வீரர்களுக்குத் தாமே சிகிச்சை அளிப்பார். மருந்து வகைகளைத் தேடிப் பெற்று, அவர்களுக்குக் கொடுத்துக் குணமடையவைத்து, விளையாட வைப்பார். தமது குடும்பத்தை மறந்து விளையாட்டையே நேசித்து வாழ்ந்தவர். இவர் கால்நடைகளை வளர்ப்பதிலும் தீரர். அவைகளுக்கு நோய் ஏற்பட்டால் தாமே இனங்கண்டு உடனுக்குடன் தீர்த்து வைப்பார்.
தமது தலைவரை இறுதி நிலையிலும் காணமுடியாத துர்ப்பாக்கியம் இவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்டது. அந்நிலையில் அவர்களை எங்ங்ணம் தேற்ற முடியும். தமது கணவரை உயிரற்ற நிலையிலும்
III / 6 Augb35pögu

Page 66
காணக்கொடுக்காத மனைவி படும் துயரை வேதனையை எங்ங்னம் எடுத்து இயம்ப முடியும்? அழுது அழுது கண்ணிர் வடித்துச் சோகமயமாகவே காட்சி தருகின்றார். அவரது துயரைப் போக்க வல்லவர் யார்? பிறப்பது இறப்பது இயற்கையே எனினும் எங்ங்ணம் ஆறுதல் அடைவார்?சதா அழுதழுது உருக்குலைந்த நிலையிலேயே காணப்படுகின்றார்.
யாருக்கும் பாரமாக கடமையாக வாழக்கூடாதெனக் கருதிவாழும் இந்தப் பண்பாளனின் வாழ்வும் அப்படியே நிறைவடைந்தது. தனது சுகவீனத்தை வைத்தியசாலைக்குச் சென்று காண்பித்தார். இவரின் உடல்நிலையைப் பரிசோதித்து அங்கேயே இவரை அனுமதித்துவிட்டு வீட்டிற்குத் தகவல் கொடுத்தது இவரிடம் உதைபந்து பயின்ற வீரரின் மனைவியே! தகவலறிந்து இவரைக்காண நண்பர்கள் உறவினர்கள் விரைந்தபோது இவரின் மறைவுச் செய்தியே அவர்களுக்குக் கிடைத்தது.
இவரை இழந்த குடும்பம் படும் வேதனையைச் சகிக்க முடியாத நிலையில் நாங்களும் தவிக்கிறோம். இவர்களுடன் சேர்ந்து அன்னாரின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திப்போம்.
வயற்காற்று / 112

சமூக சமயப் பணிகளின் வெள்ளி விழா நாயகன் வி.ஆர். இராமநாதன்
கே. ராஜகோபால்
Tெண்ணிலடங்காத பணிகளைச் செய்தும், செய்து கொண்டுமிருக்கும், போலித்தனமில்லாத மனித நேயமுளள பெருந்தகை இவர். ஆனாலும், என்றும் எப்பொழுதுமே பந்தா’ எதுவுமின்றி, இவரை அணுகவும், இவரிடம் உதவிகள் பெற்றுக் கொள்ளவும் கூடிய ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். ஆதனால், அவர் எண்ணற்ற தமிழர் இதயங்களில் குடிகொண்டிருக்கிறார்.
ஈழத்தில் தெல்லிப்பழையில், பன்னாலை கிராமத்தில், சயம்புநாதர் வைரமுத்து இரத்தினம் - செல்வநாயகி தம்பதிகள் பெற்ற மூன்று இரத்தினங்களில்நடுமுத்துத்தான் இந்த வ.இ.இராமநாதன். பெற்றவர். களிடம் இருந்து தான் பிள்ளைகளின் பண்புகள் தோன்றுகின்றன என்பது இந்த முத்துக்களுக்கு முழுக்க முழுக்கப் பொருந்தும். 'ஊரார் வீட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்ற தன் தந்தையிடமிருந்து படித்த பாலபாடம் தான், இவரது சேவையின் ஆரம்பப் பாடம்.
தமிழன் என்ற தன்மான உணர்வும், சைவ சமய சிந்தனையும், பணியும் அவரது சிறுவயதிலிருந்தே இரண்டறக் கலந்து வளர்ந்தது. கொழும்பு பொரளையில் வெஸ்லி கல்லூரியில் (1956) ஆறாம் வகுப்புப் படிக்கும் போதே, ‘பூங்கா’ என்ற கையெழுத்துச் சஞ்சிகையைத் தன்னோடு பள்ளியில் படித்த விமல் சொக்கநாதன், திருச்செல்வம், தன் சகோதரர் பத்மநாதன் போன்றவர்களுடன் நடத்தினார். 1957 இல் அக்கல்லூரியில், தமிழ் மாணவர்களுக்குச் சிங்களம் கற்பிக்க
I3 / வயற்காற்று

Page 67
முற்பட்டபோது, அதனை எதிர்த்து, தன் நண்பர் குழாமுடன் போராட்டம் நடத்தி, துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து, சிங்களத்தைப் படிக்காமல் விட்டார்.
1958இல் இனக்கலவரம் கொழும்பில் வெடிக்க, அவர் பெற்றோருடன் யாழ்ப்பாணம் சென்று, தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்து, அங்கேயே படிப்பைத் தொடர்ந்தார். அக்காலத்தில் சாரண இயக்கத்தில் சேர்ந்து, சேவை உள்ளத்தை முழுமையாக்கிக் கொண்டார். கிராமத்தில் சமய, சமூக, அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அந்தச் சிறுவயதிலேயே, சாதிக் கொடுமைக்கு எதிராக, அவர் தம் நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய போராட்டம், பல உறவுகளையும் பெரியவர்களையும் சினத்தில் ஆழ்த்தியது. ஆனாலும், அவர் செய்த புரட்சி ஆரவாரமில்லாமல் ஆர்ப்பரித்து வெற்றி கண்டது.
பன்னாலை மயிலை ஞானவைரவர் ஆலயத்தில், கூட்டுப் பிரார்த்தனை சபை ஒன்றை ஆசிரியர் கா. கதிர்காமத்தம்பியின் உதவியுடன் ஆரம்பித்து, அதன் செயலாளராக இராமநாதன் தெரிவாகி அப் பணியை ஆரம்பித்த போது, அவருக்கு 14 வயதுகூட இல்லை. அவ்வாலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூட்டுப் பிரார்த்தனை செய்தும், அவ்வப்போது சிறந்த பேச்சாளர்களை அழைத்துச் சமயச் சொற்பொழிவுகள், கதாப்பிரசங்கங்களை நடத்தியமை பொது வாழ்விலும், சமயப் பணியிலும் இவருக்கு அனுபவ அரங்காக அமைந்தது. சேக்கிழார் அருளிய பெரியபுராண 63 நாயன்மார்கள் வரலாறுகளை கிழமைதோறும் ஆலயத்தில் பேச்சாளர்களை அழைத்து சொற்பொழிவுகளாக வழங்க வைத்தார். அத்தோடு 1964ம் ஆண்டு பெரியபுராண சொற்பொழிவுப் பூர்த்தியை சேக்கிழார் மகாநாடு’ ஆக முதல்நாள் மேற்படி ஆலயத்திலும், இரண்டாவதுநாள் முழுநாள் நிகழ்வாக பன்னாலை சேர் கனகசபை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மண்டபத்திலும் நடத்தியபோது, இவரே செயலாளராக இருந்து வெற்றிக்கு உழைத்தமை, இவர் ஆரம்ப வாழ்வின் முக்கிய ஒரு அத்தியாயம். இந்த மாநாட்டில் தான் நமது நாதஸ்வரக் கலைஞர் என்.கே. பத்மநாதனுக்கு 'நாதசுர கான கலாநிதி' என்ற பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
அக்காலத்தில், பன்னாலைக் கிராமத்தில் நடந்த மங்கள, அமங்கல வைபவங்களில், குறிப்பாக கிராமத்தில் நடந்த மரணக் கிரியைகளில் இவர் சரீர உதவி உறவுகளின் உள்ளங்களை நிறைத் •
வயற்காற்று /I4

தது. அரசியலில், அக்காலத்தில் கிராமசபை, பாராளுமன்ற தேர்தல்களில் தமிழரசுக் கட்சியின் வெற்றிக்குத் தொண்டனாகத் திகழ்ந்தார். தந்தை செல்வா தன் கையெழுத்தால் இவருக்கு வழங்கிய சான்றிதழ் இன்றும் சாட்சி பகர்கிறது.
1964 இறுதியில், மீண்டும் கொழும்பில் தொழில் பெற்றுச் சென்றவர், பத்தாண்டுகள் தொடர்ச்சியாக, அமரராகிவிட்ட க. பாலசுப்பிரமணி. யத்தின் உரிமையான உறவோடு கொழும்பு கொம்பனித் தெரு சைவமுன்னேற்றச் சங்கத்தில் பொருளாளராகக் கடமைபுரிந்தார். அங்கு சங்கத்தின் நால்வர் பாடசாலை ஆசிரியராக, 'நால்வர் நெறி மலர் இணை ஆசிரியராக, தொண்டரணி சபைத் தானைத் தலைவராகப் பணிசெய்தார்.
1975ம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் இருந்து மேற்கல்வி பெறுவதற்காக இராமநாதன் லண்டன் வரும்போது, இவர் பிரிவைத் தாங்க முடியாமல் அழுத இதயங்கள் பல! இவரோடு பழகினால், இலகுவாக இவரை மறந்துவிட முடிவதில்லை.
இருபத்தாறு வருடங்களுக்கு முன்னர், விஜயலட்சுமி என்ற நல்லாளை இராமநாதன் லண்டனில் மணமுடித்த அதே தினத்தில், கொம்பனித்தெரு சிவசுப்பிரமணிய கோயிலில் இராமநாதன் தம்பதிகள் இல்லாமலே இவர்களது திருமணக் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. மணமக்களின் பெற்றோர். மணமகன் இராமநாதனின் சகோதரர்கள், கொழும்பு சைவமுன்னேற்றச் சங்க உறுப்பினர்கள், உற்றார், உறவினர்கள் அனைவருமே திரண்டிருந்தநிகழ்ச்சியில் பலரும் பேசினார்கள். 'இராமநாதன் தனிமனிதரல்ல. அவர் ஒரு இயக்கம். அதனால்தான்இன்று ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால்லண்டனில் அவர்திருமணம் இப்போது நடந்து கொண்டிருந்தாலும் - மணமக்கள் இல்லாமலே இங்கு அவர் ஆற்றிய அளப்பரிய சேவைக்காக இங்கும் ஒரு திருமண நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது” என்று எல்லாம் புகழப்பட்டார்.
தமிழ் என்றும் சைவ முன்னேற்றச் சங்கம், நாவலர் பாடசாலை என்றும், ஆலயம் என்றும், கொழும்பில் தன் பொழுதைக் கழித்த இராமநாதனுக்கு இங்கிலாந்தில் Wickford என்ற இடத்தில் ஏதோ ஒரு குற்ற உணர்வு வாட்டியது. ஆனாலும், அவர் இதயத்தின் அடித்தளத்து எண்ணம் ஈடேறும் நாள் அதிக தூரத்தில் இருக்கவில்லை. தான் வாழ glutp gig. 46.State Houses Road, Wickford Cypab6|rfu56i, 60.56(p67னேற்றச் சங்கத்தின் இங்கிலாந்துக் கிளையை 1977 இல் எழுவருடன்
115 / வயற்காற்று

Page 68
ஸ்தாபித்தார். கொழும்பில் இயங்கிய சைவ முன்னேற்ற்ச் சங்கத்தின் உணர்வோடு, இங்கும் அந்தப்பணி தொடர வேண்டும் என்ற இவரது இலட்சியத்துக்கு உரம் சேர்த்தவர்களில் முக்கியமானவர் ஆனந்த தியாகள். அவரும் கொழும்பில் சங்கத்தில் செயற்பட்டவர். அவரோடு இவரது உடன்பிறப்புக்களான அண்ணன் வி.ஆர். பத்மநாதனும், தம்பி வி.ஆர். லோகநாதனும் இங்குவந்து சேரவே, இராமநாதனின் எண்ணங்கள் படிப்படியாக ஈடேறத் தொடங்கின.
ஒன்றா? இரண்டா?சைவ முன்னேற்றச் சங்கம் தோன்றிய பின்னர், செய்துகொண்டிருக்கிற பணிகள் பல்கிப் பெருகுகின்றன.
அந்நிய நாட்டில் அந்நியப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்த எம்மவர்களுக்கு, மரணக்கிரியைகளை நமது பாரம்பரிய முறைப்படி ஏற்பாடுகளைச் செய்து நடத்தி முடிப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்து தருகிறது சைவ முன்னேற்றச் சங்கம். நம்மவர்களுக்கு இந்தக் கிரியைகளைச் செய்வதற்கு முன்னர் இருந்த சிரமங்கள் எல்லாம் நீக்கப்பட்டு, முழுநேரமாகவே ஒரு குருவானவர் சைவ முன்னேற்றச் சங்கத்தின் முழுநேர ஊழியராக கடமையாற்றுவது லண்டன் தமிழர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். இது இராமநாத வள்ளல் செய்த கைங்கரியம்.
லண்டனில் வாழும் சிறார்களுக்கு சைவமும் தமிழும் கலைகளோடு சேர்த்துப் போதிக்க வேண்டும் என்ற இராமநாதனின் லட்சியக் கனவுதான், 'நால்வர்’ பாடசாலை, செவ்வனே அது இயங்கி தன் கடமையை ஆற்றுகிறது. கலசம்" என்ற இதழை சைவ முன்னேற்றச் சங்கத்தின் காலாண்டு இதழாக எட்டாண்டு காலத்துக்கு முன் ஆரம்பித்து, அதன் நிர்வாகியாகச் செயல்பட்டு வருகிறார். ஆன்மீகத்தினுடான சமூகத்தின் அவலங்களைப் போக்க விளைகிறது ‘கலசம்". லண்டன் சைவமுன்னேற்றச் சங்கத்தின் கடந்த இருபத்தைந்து ஆண்டுகால அங்கத்துவ சேவையில் இராமநாதன் பொதுச் செயலாளர், பொருளாளர், அறங்காவலர், உதவித் தலைவர், தலைவர் என்று பதவிகளை வகித்திருக்கிறார். இன்று ஐரோப்பாவில் ஒரு பலம் வாய்ந்த சைவ நிறுவனமாகத் திகழும் சைவ முன்னேற்றச் சங்கத்துக்கு ஒரு நிரந்தரப் பணிமனை வேண்டும் எனத் தீவிரமாக உழைத்து வெற்றி கண்டார்.
சைவ முன்னேற்றச் சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டுத் தலைவராக இராமநாதன் தெரிவாகி, கடந்த ஆண்டு இவரது தலைமையில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் வெள்ளமெனத் திரண்ட மக்கள் கூட்டத்.
வயற்காற்று / I6

திடையே கோலாகலமாக நிறைவு பெற்றது. செயல் வீரரான இராமநாதன் தலைமையில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றதும் வெற்றியின் ஒர் காரணமெனலாம்.
தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் 1987ம் ஆண்டு இராமநாதன் உட்பட ஐவருடன் ஸ்தாபிக்கப்பட்டது. இப்போது வியத்தகு விதத்தில் இங்கிலாந்தில் வியாபித்து நிற்கிறது. துாய மண்ணில் பெருமை சேர்க்கின்ற தமது பள்ளிக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது சங்கம். பொருளாளராகவும், நிர்வாகசபை உறுப்பின. ராகவும் கடந்த காலத்தில் பணிசெய்த இராமநாதன், இந்த ஆண்டு தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலண்டன் ரூட்டிங் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் குறைகேள் அதிகாரியாக (Temple Ombudsman) கடந்த பல ஆண்டுகளாக நியமிக்கப்பட்டுக் கடமையாற்றுகிறார். பல அமைப்புகளில் இராமநாதன் செயல்படுகிறார். இலண்டன் மெய்கண்டான் ஆதீன அறங்காவலர் - செயலாளர். உலக சைவப்பேரவை அறங்காவலர் - பொருளாளர். லண்டன் தமிழர் தகவல் நிலையத்தில் ஒரு இயக்குனர். ஐ.பி.சி. வானொலியில் ஒரு உறுப்பினர்.
பல்வேறு நிறுவனங்கள் பட்டங்கள் பல இவருக்குச் சூட்டி மகிழ்ந்துள்ளன. இந்துசமய அமைச்சு 'சைவ துரந்தரர்', உலக சைவப் பேரவை சிவநெறிக் காவலர்’, இலண்டன் சிவயோகம் சிவநெறிச் செம்மல்" எனப் பட்டங்களை வழங்கியுள்ளன.
இவருக்கு பவன், குகன் என்ற இரண்டு ஆண்பிள்ளைகள்;
சமீபத்தில் பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்கள். இவர்களோடு தன்
கணவன் முகம் கோணாமல் இவர் பணிகளுக்கு உறுதுணையாக நிற்கும் விஜயலட்சுமி.
ஆரவாரமில்லாமல் அள்ளிக் கொடுப்பதும், ஒடி ஒடி ஆன்மீகப் பணிகளும் சங்கப்பணிகளும் பொது நோக்கத்துக்காக உழைப்பதும், நெஞ்சமெல்லாம் தமிழீழத்தை நிறைத்து வைத்திருப்பதும், இராமநாதனின் தனித்துவங்கள். இவரது சேவைகளைப் பாராட்டி ‘தமிழர் தகவல்’ சிறப்பு விருதுடன், 'ஈழகேசரி’ பொன்னையா அவர்கள் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினர் சார்பில் திரு.ரி.ஈஸ்வரகுமார் வழங்கும் தங்கப்பதக்கமும் சூட்டப்பெறுகின்றது.
நன்றி: தமிழர் தகவல் (கனடா) மாசி 2008
117 / வயற்காற்று

Page 69
நண்பர்" திரு. கதிர்காமத்தம்பி துரைசிங்கம்
பொ. கனகசபாபதி முன்னாள் அதிபர் - மகாஜனா கல்லூரி பல்கலாசார ஆலோசகர் - ரொறன்ரோ கல்விச் சபை,
*
ஏறக்குறைய 43 வருடத் தொடர்பு. “இளமையிற் கல்வி சிலையில் எழுத்து’ என்பார்களே. அதுநிறைந்த உண்மையான வாக்கியம். நண்பர் துரைசிங்கம் எங்களோடு பரிச்சயமானது அவரது கட்டிளமைப் பருவத்திலே, பரிச்சயம் மெல்ல நட்பாகி காலத்தால் சிறிது சிறிதாக உரமேறி இன்று உற்ற தோழமையுடன் இறுகிப் போய் நிற்கிறது. இல்லாவிட்டால் நைஜீரியாவிலே என் குடும்பத்துடன் மிக நெருக்கமாக வாழ்ந்து ஆண்டு அனுபவித்த பல நண்பர்கள் இங்கே உள்ளனர். எனது மனைவி இறந்த பின் அவர்கள் எங்கே என்பது இன்றுவரை புரியாத புதிர். ஒளவையார் மூதுரையில் அவர்கள் பற்றிய விளக்கம் தந்துள்ளார்.
"அற்ற குளத்தில் அறநிர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வர் உறவு அல்லர் - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறவார் உறவு." (மூதுரை-17)
நீர்ப்பறவைகள் பல அற்ற இக்குளத்தை விட்டு நீங்கிட, கொட்டியும், ஆம்பலும், நெய்தலும் போன்ற துரைசிங்கம் அனைய சிலரே இன்னும் என்னுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பது இளமையில் நட்பெனும் பண்புக் கல்வி ஏற்பட்டதன் விளைவோ?
1937 - மகாஜனக் கல்லூரியின் முதல் மாணவன் வைத்தியக் கல்லூரி புகுந்துள்ளான். அதிபர் ஜயரத்தினத்தின் ஆளுமை நிறைந்த நிர்வாகத்திறன் பயனளிக்கத் தொடங்குகிறது. மகாஜனாக் கல்லூரி.
வயற்காற்ற / 118

யின் ஏற்றம் நிறைந்த பொற்காலத்தின் ஆரம்பப்படி. பத்தாம் தரம் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகப் புகுமுகக் கல்விக்காகப் பட்டணப் பாடசாலைகளை நாடி ஓடிய முதற்காலகட்டம் முடிவுற்று இரண்டாம் காலகட்டம் ஆரம்பமாகிறது. சரி ஒருமுறை இப்பாடசாலையில் இருந்து முயற்சி செய்து பார்ப்போம். தவறினால் யாழ்ப்பாணப் பாடசாலைகளுக்குச் செல்வோம் என்ற தீர்மானத்துடன் மாணவர் பல்கலைக்கழகப்புகுமுக வகுப்புக்களில் தங்கிநிற்கின்றனர். இக்காலகட்டத்தில் தான் துரைசிங்கம் மகாஜனக் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவன். அவர் போன்ற பாடசாலையில் விசுவாசம் மிக்க பல மாணவர் அக்காலகட்டத்தில் உருவானமையால் மகாஜனாவின் உயர்ச்சியின் இரண்டாவது காலகட்டம் மிகக் குறுகியதாய் அமைந்து, மூன்றாம் காலகட்டம் மிக விரைவிலேயே ஆரம்பமானது. உயர்தர வகுப்புப் பெறுபேறுகள், சிறப்பாக மருத்துவத் துறைப் பெறுபேறுகள் மிகச் சிறப்பாக அமைந்தமையாலே, யாழ்நகர், தீவுப்பகுதி மணவர்கள் மாத்திரமல்ல, திருகோணமலை, மட்டக்களப்பு, பதுளை, மலைநாடு போன்ற அகில இலங்கை மாணவர்களின் சங்கமமாய் குறுகிய காலத்திலேயே எழுச்சி காட்டி நின்றாள் மகாஜன மாதா.
மகாஜனாவின் வளர்ச்சியின் இரண்டாவது காலகட்டத்து உதாரண புருஷன் துரைசிங்கம். ஆனால் என்றுமே, முழுமையாக மகாஜனாக் கல்லூரியுடன் தன் வாழ்வினைப் பிணைத்த நல்லதொரு மாணவர். என் போன்ற இளம் ஆசிரியர் குழு ஒன்று, ஆசிரியப் பணிக்குத் தம்மை அர்ப்பணித்ததும் இக்காலகட்டத்திலே தான். ஆசிரியர்களுக்கிடையே கணிசமான ஆனால் சினேகபூர்வமான போட்டியும், அர்ப்பணிப்பும், ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையே நட்புணர்வும், புரிந்துணர்வும் இருந்ததும் அப்போதுதான். வகுப்பறையில் பாடம் புகட்டல்;அப்பொழுது ஆசிரிய மாணவ உறவு. மணியடித்ததும் நட்புறவு, அந்நியோன்னியமான நேச உணர்வுடன் தோழமை. எனவே அது தொடர்ந்தது! துரைசிங்கம் கல்லூரியை விட்டு நீங்கி தொழில் பார்க்கத் தொடங்கியபின்னரும் வளர்ந்தது. ஒவ்வொரு விடுமுறைக்கு வரும் பொழுதும் பாடசாலை வந்தோ அல்லது வீடு வந்தோ என்னுடன் அளவளாவுவது நின்றதில்லை. ஆசிரிய மாணவ உறவு தொடர்ந்தது.
1961-நான் அசட்டுத்தனமாக மோட்டார் சைக்கிள் ஓடி, காலை
முறித்துக் கொண்டேன். அறிந்த துரைசிங்கம் வீடுவந்து ஆறுதல் கூறினார். எனக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரு பொக்கிஷத்தையும்
119 / வயற்காற்று

Page 70
காலத்திற் தந்து உதவினார். நாங்கள் இருவருமே சிவாஜி கணேசனின் நடிப்புக்கு அடிமைகளாக இருந்தோம். அப்போது சிவாஜி 100 படங்களை நடித்து முடித்திருந்தார். அதன் விளைவாக அருமையான மலர் ஒன்று வெளியிட்டிருந்தார்கள். துரைசிங்கம் அம்மலர் ஒன்றினை எனக்கு அன்பளிப்புச் செய்ததை நான் என்றுமே மறப்பதற்கில்லை. 1964ல் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெண்ணைப் பார்க்காமலேயே நான் சம்மதம் தெரிவித்துவிட்டேன். அது துரைசிங்கத்திற்குச் சம்மதம் தருவதாயில்லை. எனவே, உடனடியாக கொழும்பு சென்று தபால்நிலைய நூலகத்தில் கடமையாற்றிய எனது மனைவியைப் பார்த்து எனக்கு ஏற்றவர் தானா என்பதைக் கண்டு திருப்தியடைந்தார். அந்த அளவிற்கு என் மீது அக்கறை கொண்டிருந்தார். ஆசிரியர் எனும் உறவு படிப்படியாக மாறி நட்பு எனும் கட்டத்தை அடைந்தது. காதலித்தார், கல்யாணம் செய்தார். அவர் திருமண நாள் என் பிறந்த நாள் இரண்டும் ஒன்றாயின. உறவு நட்பானது. 1981 - நைஜீரியா சென்றோம். முதலில் அவரது மனைவியே வந்தார். பின்னர் துரை. சிங்கம் வந்து சேர்ந்தார். அவர்களுக்கு ஆரம்பத்தில் வீடு கிடைக்கவில்லை. எனக்கு விசாலமான வீடு. எனவே இரு குடும்பங்களும் ஒன்றாக வாழ்ந்தோம். ஒரே ஒரு பிரச்சனை. என்ன? கொஞ்சம் தண்ணிப் பற்றாக்குறை. எப்படியோ சமாளித்தோம். மூன்று மாதங்கள் ஒன்றாக இருந்தோம். நைஜீரியா வாழ்க்கையின் இன்பகரமான, பொன்னான அந்த மூன்று மாதங்கள். அப்பொழுது எம்மிருவரிடமும் கார் வசதியும் இல்லை. துரைசிங்கத்திற்கோ தினசரி குளிக்க வேண்டும். மழை காலம் சற்று உதவியது. நடுநிசியில் மழை பெய்தாலும் அதனைச் சாதகமாக்கினோம். இருக்கிற பாத்திரம் எல்லாவற்றிலும் நீர் சேகரிப்போம். நட்ட நடுநிசியிலும் மழை நீராடுவோம். ஆனந்தமாகப் பொழுது போகும். இரவுவேளைகளில் கடுதாசி விளையாட்டு, ஒலிநாடா கேட்டல், துரைசிங்கத்தின் அதிர்வேட்டுத் துணுக்குகள் என என் மனைவியார் துரைசிங்கத்தின் பரம பக்தை ஆகிவிட்டார். வார இறுதி நாட்களில் மேலும் நண்பர்கள் குழாம் அதிகரிக்கும். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். நட்பு வளர்ந்தது.
மூன்று மாதத்தின் பின்னர் அவர் குடும்பம் 200 கிலோமீற்றர் தொலைவிற் போனது. ஆனால் மாதமொரு முறையாவது அவர்கள் எம்மைப் பார்க்க வருவார்கள். தவறினால் நாம் செல்வோம். துரைசிங்கத்தின் தலைசிறந்த இரு பண்புகள் பற்றி இங்கே சொல்லுதல் அவசியம். மிக இங்கிதமாகப் பழகும் பண்பு, எவர்க்கும் உதவும் இயல்பு
வயற்காற்று / 120

இவை இரண்டும் துரைசிங்கம் நைஜீரியாவில் பெருமையுடன் வாழப் பெரிதும் உதவின. நைஜீரியாவில் தொழில் ஆற்றுவதற்குக் கல்வித் தகமை, தொழிற் திறமையுடன் வேறும் சில திறமைகள் தேவை. காசு நிறையவே பேசும். கண்ணியம் பார்த்தால் எண்ணிய கருமம் நிறைவேறாது. கீழோராயினும் தாழவுரைத்தவர் வெற்றியடைவர். நண்பர் துரைசிங்கம் மருத்துவர். எனவே, கல்வியமைச்சு ஊழியர்களுக்கும், நிதியமைச்சு ஊழியர்களுக்கும் துரைசிங்கத்தின் உதவி நிறையவே தேவையாயிருந்தது. வாரி வழங்கினார். பலர் காசு கொடுத்தும், கண்ணியத்தை இழந்தும் பெறக்கூடிய சகாயங்களை துரைசிங்கத்தால் காசு கொடுக்காமல், கண்ணியத்தை இழக்காமல் பெறக்கூடியதாக இருந்ததென்றால், முன்பே நான் கூறிய அவரது பண்புகளாகிய இங்கிதமாகப் பழகலும், தேடித் தேடி உதவலுமே காரணமாக நிற்கின்றன.
1987 - கனடா வரத் தீர்மானிக்கின்றோம். இரு குடும்பங்களும் நியூயோர்க்கில் டாக்டர் கணேசன் வீடு சென்று அங்கிருந்து ஒன்றாய் வருகிறோம். மொன்றியலில் ஏறக்குறைய ஆறு மாத வாழ்க்கை. இருவரும் அங்கே சக மாணவர்கள். கணனி, பிரெஞ்சு, கணக்கியல் வகுப்புகள், வீட்டுக் கவலைகள் எல்லாம் மறந்து துரைசிங்கத்துடன் உல்லாசமாய்ச் செலவிடும் நேரம். எனது மனைவிக்குப்புற்றுநோய் என அறிந்ததை அவருக்குத் தெரிவிக்கிறேன். அவர் உடனடியாக டாக்டர் கணேசனுடன் தொடர்புகொள்ள வைக்கிறார். ஆலோசனைகள், ஆதரவு வார்த்தைகள் என எல்லாமே அளப்பரிய அளவில் கிடைக்கின்றன. என்ன பிரயோசனம்? மனைவியை இழந்து நிற்கின்றேன். இக்கட்டான அவ்வேளையில் உறுதுணையாய் நின்ற சிலரில் நண்பர் துரைசிங்கமும் ஒருவர் என்பதைக் கூறத்தேவையில்லை.
1989- ரொறன்ரோவில் உள்ள மகாஜனவின் பழைய மாணவர் கூடி ஒரு சங்கம் அமைக்கின்றனர். அமைப்பதற்கு முழுமூச்சுடன் இயங்கியவர்களில் துரைசிங்கம் முதன்மையானவர். அங்கு அதிபராயிருந்த காரணத்தாலே, என்னைத் தலைவராக்கி விட்டனர். ஆனால், சங்கத்தின் வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியவர் துரைசிங்கம். எவ்வித பதவி வேட்கையும் இல்லாமல் சங்கத்தின் வளர்ச்சியையே குறிக்கோளாகக் கொண்டு சீரிய பணியாற்றினார், ஆற்றிக் கொண்டிருக்கிறார். சிறந்த ஆலோசனைகளைத் தருவார். அதை மற்றவர்கள் ஏற்பார்களோ இல்லையோ என்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். அதேபோன்று, மற்றவர்கள் விடும் பிழைகளையும் தாட்சண்யமின்றி
121 / வயற்காற்று

Page 71
பின்வாங்க மாட்டார். சில சமயங்களிலே அவை என்னையே குறை கூறுவனவாக அமைந்த போது உடனே துன்பம் ஏற்பட்டாலும் பின்னர் யோசித்துப் பார்க்கும் பொழுது அவரது சாடலில் உள்ள உண்மை புலப்படும்.
"நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்றிடித்தற் பொருட்டு." (குறள் - 784) வள்ளுவன் இதனையே நட்புக்கு இலக்கணமாக வரைகிறான். துரை. சிங்கம் அங்கே உயர்ந்து நிற்கிறார்.
1990 - மனைவியின் இழப்பினை ஒரளவு மறந்து சமூக வாழ்வில்
என்னையும் இணைத்துக் கொள்கிறேன். எனது நண்பர்கள், மாணவர்கள் அவரது நண்பர்களாகின்றனர். அவரது ஈர்ப்புசக்தி அளப்பரியது. எனவே, அவர்கள் அவரது இனிய நண்பர்களாகி விடுகிறார்கள்.
கூட்டங்கள், விழாக்கள், கலந்துரையாடல்கள் இன்னபிறவற்றுக்கு பெரும்பாலான நாட்கள் எனக்குப்பார்த்தசாரதி ஆகிவிடுகிறார். காரில் ஏறினால் கர்நாடக இசையோ அல்லது நல்ல திரையிசையோ கேட்கலாம். எமது உரையாடல் அவை சம்பந்தமானதாக இருக்கும். என்னிடம் இல்லாத ஒலிநாடாக்களைப் பிரதி பண்ணித் தந்து உதவுவார். துரைசிங்கத்தினுடைய ஒட்டி உறவாடும் பண்பு, நேரம் அறிந்து உதவும் மனப்பான்மை, செய்கின்ற வேலையைக் கச்சிதமாகக் காலம் தவறாது முடிக்கின்ற திறமை, இங்கு நடைபெறுகின்ற பல விழாக்களிலே அவரை இன்றியமையாத அங்கமாக்கிவிட்டன. அவரும் சளைக்காது உழைத்து தன் பெயரை நிலைநிறுத்தி விடுகிறார்.
துரைசிங்கம் இப்பொழுது புதிய அவதாரம் ஒன்றும் எடுத்துள்ளார். இயற்கையாகவே அமைந்த நகைச்சுவை உணர்வு, அகட விகடப் பேச்சு கைகொடுக்க, இங்கே ஒரு தலைசிறந்த நாடக நடிகராக, நாடக ஆசிரியராகப் பரிணமிக்கிறார்.
அவரது மகளின் திருமணத்தைத் தொடர்ந்து எனது மகனின் திருமணம், முழுப் பொறுப்பையுமே அவரிடம் ஒப்படைத்துவிடுகிறேன். கனகச்சிதமாகச் செய்து முடிக்கிறார்.
இடியென எனக்கு ஒரு செய்தி, எனது இரண்டாவது மகனுக்குப் புற்றுநோய். ஒரு வருடம் ஜீவமரணப் போராட்டம். கடைசியில் அவர் எம்மை விட்டு மறைகிறார். நான் முடங்கிவிட்டேன். என் நண்பர்கள் என்னை நிமிர்த்த முனைகிறார்கள். துரைசிங்கம் அதில் முக்கியஸ்தர்.
வயற்காற்று / 122

தினசரி இரவு வேளைகளில் ஒருமுறையர்வது என்னுடன் பேசுவார். நண்பர்கள் பற்றிய செய்தி, நாட்டுச் செய்தி என எல்லாமே பேச்சில் வரும்,
2000-நண்பன் துரைசிங்கத்தின் அறுபது ஆண்டின் பூர்த்தி விழா. “இவருக்கு அறுபது அகவை முடிந்து விட்டதா? இன்னமும் இளமையாய் உள்ளாரே? கட்டிளம் காளைபோல் எங்கெங்கு வேண்டுமோ அங்கெல்லாம் காணப்படுகிறாரே? உடலிலே தளர்ச்சியையோ, உள்ளத்திலே அயர்ச்சியையோ சிறிதேனும் காணமுடியவில்லையே? இவரின் நிரந்தர இளமையின் காரணம் தான் என்ன?’ எனப் பலர் வியக்கின்றனர். பிசிராந்தையார் என்ற சங்ககாலப் புலவர் ஒருவர் கூறியதை இங்கு நான் கூற விரும்பவில்லை. அதைக் கூறினால் அப்பெருமை நாட்டின் அரசுக்கும், அமைந்த மனைவிக்கும், பிறந்த பிள்ளைகளுக்கும் ஆகிவிடும். அவர் பேணும் இளமைக்குப் புறக் காரணிகள் காரணமாகி விடும். நான் அப்படிக் கருதாமல் அவரது மனப்பாங்கே அதற்குக் காரணமாகிறது என்பேன்.
கெடுநீர் மறதி. மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (குறள்-605) காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய துக்கம் ஆகிய நான்கும் கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறுகின்ற தோணிகள் என்கிறார் வள்ளுவர்.
இந்த நான்கையும் நடைமுறையில் காண்பிக்காத நண்பர்
துரைசிங்கம். கெட்டுப் போகவில்லை. அதுவே அவரின் இளமையின் இரகசியம்.
எங்கள் நட்புத் தொடர்கிறது. தொடரும் அடுத்த பிறவியிலும் கூட. என்னை Sir போட்டே அழைப்பதால், இடையிடையே பழைய பழைய ஞாபகங்களை நினைவுகூர வைக்கிறார்.
அவர் குடும்பம் காதல் வயப்பட்ட குடும்பம். அன்பும் அறமும் பேணும் அளவான குடும்பம். மகனில்லாக் குறையை அருமையான இரு மருமகன்கள் ஈடுசெய்கின்றனர். பேரப்பிள்ளைகள் தாத்தா என அழைக்கத் தொடங்கிவிட்டனர். வயதுபோய்விட்டது என இப்போது தான் தெரிந்து கொள்கிறார். ஆனால், அவர் உள்ளம் என்றுமே இளமையாக இருக்கும். அவர் மேலும் பல்லாண்டு வாழவேண்டுமென வாழ்த்துகிறேன்.
123 / வயற்காற்று

Page 72
நெடிய நட்பின் ஓர் துளி நாகலிங்கம் சிறீகெங்காதரன்
வி. சிவலிங்கம் அரசியல் ஆய்வாளர்
ஒரு மனிதனின் ஆயுள் ஐம்பதைத் தாண்டிவிட்டது என்றால் அது ஒர் அனுபவத்தின் ஆயுளைத்தான் குறிக்கிறது. எனது அன்பு நண்பர் சிறிகெங்காதரனின் ஆயுள் ஐம்பதை எட்டிவிட்டது என்றால் ஒர் அனுபவத்தின் ஆயுளுக்கும் ஐம்பது வயது ஆகிவிட்டது என்றே நான் கருதுகிறேன்.
நண்பர் கெங்காவிற்கு பலநண்பர்கள் இருந்தார்கள்; இருக்கிறார். கள். இவர்கள் வெவ்வேறு குணாம்சங்களைக் கொண்டவர்கள். தனிப்பட்ட பழக்க வழக்கங்களில், அரசியல் நம்பிக்கைகளில், பொதுவாழ்வில் இப்படி பல்வேறு வகைப்பட்டவர்கள் நண்பர்களாக உள்ளார்கள்.
இதற்குக் காரணம் கெங்கா இடத்திலும் பல்வேறு விதமான குணாம்சங்கள் நிறைந்து இருப்பது தான். அத்துடன், சகலரையும் ஏற்றுக் கொள்ளும் போக்கும், இணைத்துச் செல்லும் அனுபவமும் இருப்பதால்தான்.
கெங்காவிற்கும் எனக்கும் உள்ள உறவை ஆண்டுக் கணக்கில் விபரிப்பதை விட ஒரு மனிதனின் சிறந்த வாழ்க்கைக் காலம் எனக் கூறப்படும் இளமைக்காலம் முதல் இன்றுவரை எமது உறவு உள்ளது எனக் குறிப்பிடுவதே சாலப் பொருத்தமாகும்.
சீமெந்துத் தொழிற்சாலையின் தொழிலாளி ஒருவரின் மகனாகப் பிறந்த வர்க்கப் போராட்டத்தின் அடிப்படை நோக்கங்களை நன்கு உணர்ந்த தந்தையின் நேரடி வாரிசு என்றே குறிப்பிடுவேன்.
வயற்காற்று 1124

மற்றவர்களுக்காக உதவுவது, சமூக முன்னேற்றத்திற்காக உழைப்பது, தனது ஏனைய குடும்ப உறவினர்களின் நலன்களிலும் அக்கறை எடுத்துக் கொள்வது என்பன எல்லோராலும் நிறைவேற்றப்படுவதில்லை. இவ்வாறான உயர்ந்த மனப்பான்மை வளர்வதற்கு ஓர் மனப்பக்குவம் தேவை.
இது சிறுவயதில் இருந்தே உருவாக்கப்படுகிறது. மற்றவர்களுக்காகப் பாடுபடும் உணர்வு சிலருக்கு ஒர் பொழுதுபோக்கு முயற்சியாக இருக்கலாம். ஆனால் கெங்காவைப் பொறுத்தவரையில் மிகச் சிறிய வயதிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் எல்லோரிலுமே காணப்படுகிறது. அவர்கள் யாபேருமே ஒரே உணர்வில் வளர்க்கப் பட்டிருக்கிறார்கள் என்பதே அதன் உண்மையாகும்.
கல்வியில், விளையாட்டுத் துறையில், நாடகத் துறையில் ஒர் சிறப்பு வாய்ந்தவர் எனக் குறிப்பிடும்படியாக எந்தத் தகமையும் இவரிடம் இல்லை. ஆனால் விளையாட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகக் காணப்படுகிறார். அம்பனை சூட்டிங் ஸ்ரார் என்ற விளையாட்டுக் கழகத்தினை ஆரம்பித்து கிரிக்கெட் போட்டிகள், இரவு ஒளியில் உதைபந்தாட்டப் போட்டிகள் பல இவரது முன்னெடுப்பில் நடத்தப்பட்டன. அம்பனைக் கலைப்பெரு மன்றம் என்ற பெயரில் பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு யாழ். மாவட்டத்தின் சிறந்த நாடகங்களாகப் புகழப்பட்டுள்ளன.
தான், கல்வி கற்ற மகாஜனக் கல்லூரியின் உயர்ச்சிக்காக இன்றுவரை பாடுபடுபவர். இளமைக் காலத்தில் இப்படியான முயற்சி. களில் ஆர்வம் கொண்டவர்கள் பலர். பின்னைய நாட்களில தான் உண்டு தன் குடும்பம் உண்டு என விலகி குடும்ப வாழ்க்கையோடு தமது பயணத்தைத் தொடர்பவர்கள் ஏராளம்.
இப்படி பல்வேறு துறைகளில் மிக ஆர்வத்தோடு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து வருவதற்குக் காரணம் அவரது இதயத்தில் இன்றும் இணைந்துள்ள வர்க்க உணர்வுதான்.
இடதுசாரி அரசியலை நம்புபவர்களுக்கும், இதர அரசியல் போக்குகளை நம்புபவர்களுக்கும் இடையே பெரும் வித்தியாசம் இன்றும் இருந்துவருகிறது. அதாவது தனிப்பட்ட வாழ்க்கை, தனிப்பட்ட குணங்கள் என்பவற்றை அரசியலுடன் இணைத்துப் பார்க்கும் போக்கு அதாவது இடதுசாரி அரசியலை நம்புபவர்களிடம் இவற்றினை
125 / வயற்காற்று

Page 73
மற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், ஏனைய அரசியல் போக்குகளை நம்புபவர்கள் தனிப்பட்ட வாழ்வில் எப்படி வாழ்ந்தாலும் அவை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.
இடதுசாரி அரசியலை நம்புபவர்கள் எந்தவிதமான ஆடைகளை அணிகிறார்கள். பணக்காரருடனா, அல்லது ஏழைகளுடனா பழகுகின்றனர், அவர்கள் நேர்மையுடன் நடக்கிறார்களா என அதிகளவு நோட்டம் பார்க்கின்றனர்.
இதற்குக் காரணம் இடதுசாரி அரசியல் என்பது ஆங்கிலத்தில் FairneSS என அழைக்கப்படும் நியாயத்தினை வற்புறுத்துகிறார்கள். இதனால், இடதுசாரி அரசியலை நம்புபவர்களும் நியாயமாக நடந்து கொள்கிறார்களா என எதிர்பார்க்கிறார்கள். இடதுசாரி அரசியல் தனிப்பட்டவர்கள் நியாயமாக நடந்து கொள்கிறார்களா? என்பது பற்றிப் பேசவில்லை. பதிலாக சமூக நிர்மாணங்கள், அல்லது சமூகக் கட்டுமானங்கள் நியாயத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என வற்புறுத்துகின்றது.
நியாயத் தன்மை தொடர்பாக தனிப்பட்டவர்களையும், சமூக நிர்மாணத்தையும் இவ்வாறு தவறாகப் பார்ப்பதனால் இடதுசாரி அரசியலை நம்பும் தனிப்பட்டவர்கள் அதிகளவு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதற்கு கெங்காவும் விதிவிலக்கு அல்ல. பலருக்கு ஏணியாக நின்று அவர்களை உயர்த்திய இவர் அவர்களின் கண்டனங்களுக்கு உள்ளாகிய நிலமைகளையும் நான் அவதானித்துள்ளேன். இவரும் அவர்கள் வாழும் சமூகத்தின் ஓர் உற்பத்தியே என்பதை அவர்கள் அவதானிக்கத் தவறுகின்றனர்.
நாம் இருவரும் ஒரே அரசியல் சித்தாந்தத்தினை அதிக காலம் பின்பற்றி வருகிறோம். இதன் காரணமாக சில முக்கியமான சிக்கலான தருணங்களில் மிக இணைந்து சில க்ஷ்டங்களை அனுபவித்துள்ளோம். அதனை இங்கு குறிப்பிடுவது பொருத்தம் என நம்புகிறேன்.
1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு அமுலுக்கு வந்தது. இக்குடியரசு யாப்பு தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வழங்காததுமட்டுமல்ல; முன்னைய சோல்பரி அரசியல் அமைப்பில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் 29வது சரத்தையும் நீக்கிவிட்டது என தமிழரசுக் கட்சி மிகப் பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. கறுப்புக் கொடிகள் தமிழ்ப் பிரதேசமெங்கும் பறக்க விடப்பட்டன.
வயற்காற்று / 126

அந்தச் சந்தர்ப்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினர். களாக நாம் இருந்தோம். 1972ம் ஆண்டின் அரசியல் யாப்பு பிரித்தானிய காலனித்துவ நுகத்தடியிலிருந்தும் நாட்டை முழுதாக விடுவித்து எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் ஓர் அரசியல் அமைப்பாக கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இதனை முழுதாக நாம் ஏற்றோம்.
இலங்கைத் தேசத்தை ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து விடுவிப்பது முழுமையான சுதந்திரத்திற்கான முன் நிபந்தனை என்பதை நாம் ஏற்றுக் கொண்டோம். தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாத அரசியல் யாப்பாக இருந்த போதும் தேசம் முழுவதுக்குமான சுதந்திரத்தைப் பெறுவது அவசியம் என்பதனை உணர்ந்தோம்.
ஏகாதிபத்திய ஆதரவுப் போக்கினைக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சி தமிழ் பேசும் மக்களின் நலனை முதன்மையாக வைத்தே அரசியல் யாப்பு மாற்றங்களைப் பார்த்தது. இந்நிலையில் அரசியல் அமைப்பு மாற்றங்களின் மூலம் இலங்கை குடியரசாக மாற்றம் பெறும் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினத்தை தமிழ் பேசும் மக்களில் ஒரு சாரார் ஏற்றார்கள் என்பதை வரலாற்று பூர்வமாக நிரூபிப்பதற்காக குடியரசு தின மலர் ஒன்றினை இருவரும் இணைந்து வெளியிட்டோம். தமிழ்ப்பிரதேசங்களில் குடியரசு தினத்தை ஆதரித்து வெளியிட்ட ஒரே ஒரு பிரசுரம் இது என நம்புகிறேன்.
அந்த முதலாவது குடியரசு தினம் இன்றுவரை தமிழ் பேசும் மக்கள் பலரால் எதிர்க்கப்பட்டு வருகின்ற போதிலும், தேசிய நலன் சார்ந்த வகையில் ஒர் முக்கிய தினம் என்பதை இன்றும் நம்புகிறேன்.
சமூக முன்னேற்றம் கருதி இலங்கையிலும், லண்டனிலும் இவர் எடுத்த, எடுக்கின்ற முயற்சிகள் பல. ஒரு மனிதனின் சமூக வாழ்வு அவன் உயிருடன் வாழும்போது நினைவு கூரப்படுவது எதிர்காலச் சந்ததியினருக்கு ஒர் உணர்வை வழங்கும் என நம்புகிறேன்.
எனது வாழ்க்கைக் காலத்தில் இவ்வாறான வாழ்க்கைக் குணாம்சங்களைக் கொண்ட இனிய மனிதனை நண்பனாகப் பெற்றதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். எனது நினைவின் சிறு துளிகளைப் பகிர்ந்து கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைகிறேன்.
கெங்காவைப் பெற்றதாய் சிவகெங்கைக்கு எனது வணக்கங்கள்!
127 / வயற்காற்று

Page 74


Page 75
கெங்கா
அம்பனையின் வயற்காற்று அ புன்செய்நிலப் பயிரினங்கள் புது எண்ணெழுத்தை அறிவிக்கும் பண்புநிறை குடும்பத்தில் பாங்
உயர்ந்தத்ணம் இவையனைத்
இன்றுனக்கு ஐம்பதென இயம் என்றும்நீ இளமையுடன் எழில அன்றலர்ந்த மலர்போன்ற அரு கொன்றைமலர்சூடுசிவன் நல்
 
 
 

ருகமர்ந்து இசைபாட க்கவிதை எழுதிவர எழில்மாசனாஅருகில் காக வந்துற்றோய்
ந்தனையில் தொலைநோக்கு யும் பணியவைக்கும்
ண்பருடன் நல்நேயம் தும் உன்னிமத்தில்கண்டினம்யம்
புகிறார் நம்புகிறோம் ார்ந்த மனையுடனும் மகனும் சிறப்பெய்த இது
லருளால் நனிவாழ்க!'
ப்பிள்ளை ஜெகதீஸ்வரன்
2.
“ * ့် Wိါ ````
*