கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: A History of The Modern World From 1789

Page 1


Page 2


Page 3

A HISTORY OF
THE M () ) {RN W () R.D)
FROM 1789
By V. E. Nicholas, B. A. (Hons) Lond., Eng. Tr.,
(Lecturer in History, Training College, Colomboyan, Jaffna)
Printed at :
ASirvathan PreSS
Jaffna;
Copyright Reserved) Price: Rs. 7175

Page 4
யாழ்ப்பாணம், 32, கண்டி வீதியில் உள்ள ஆசீர்வாகம் அச்சகக்திற் பதிப்பிக்கப்பெற்றது.

பாடநூற் பிரசுரசபையாரின் அங்கீகாரம்
புது உலக சரித்திரம்
--o-O-O-O-,
1952-ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 29-க் கிகதி வெளி வந்துள்ள இலங்கை அரசாங்க வர்த்தமானப் பக்கிரிகையில் உதவி நன்கொடை பெறும் கன்மொழிப் பாடசாலைகளுக்கும், இரு பாஷைப் பாடசாலைகளுக்கும், ஆங்கில பாடசாலைகளுக்கு மான ஒழுங்குச்சட்டத்தின் 19(எ)ம் பிரிவில் பிரசுரிக்கப்பட்ட கற்கமைய இப்புத்தகம் ஒரு பாடப் புக்தகமாக 1968-ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31-ந் திகதிவரை உபயோகிக்கற்கு
விக்கியாகிபதி அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பீ. ஜெயசூரிய பாடநூற் பிரசுர ஆலோசனைச் சபை செயலாளர்
கொழும்பு-2 1963-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் திகதி.

Page 5

முன்னுரை
பல்லாண்டுகளாக ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் சரித்திரம் கற்பித்த முயற்சி, இப்பொழுது இந்நூல் வாயிலாய் உருவம் பெறு கின்றது. உயர்தர வகுப்புக்களில் தாய் மொழி மூலங் கல்வி பயிலும் மாணவர்க்கு ஆங்கில சரித்திர நூல்களுக்கு நிகரான வரலாற்று நூலொன்றைத் தீந்தமிழில் உருவாக்க வேண்டுமென்ற எம் கருத்து ஒரளவு பூர்த்தி பெற்றுள்ளது.
இந்நூல் சரித்திரம் கற்கும் மாணவரைத் தேர்வுப் பரீட்சை களுக்கு ஆயத்தப்படுத்துவதையே தனி நோக்காய்க் கொண்டு எழுதப் பட்டதன்று. சரித்திரத்தை நிதானத்துடனும் மதிநுடபத்துடனும் ஆய்ந்து கற்கும் ஆற்றலையும், சரித்திர மனுேபாவத்தையும் ஆர்வத் தையும் மாணவரிடத்தில் ஒருங்கே விருத்தி செய்ய வேண்டுமென்பதே இதன் முதன்மையான குறிக்கோளாகும். இதனலே பல ஆங்கில நூல்களை உசாவியும், ஏற்ற பல சிறு குறிப்புக்களுடனும், பல தேசப் படங்களுடனும் இதனை உருவாக்கியுள்ளோம். எனவே, தாய்மொழிக் கல்வியின் இன்றியாமை மதிக்கப்படும் இந்நாளில், இந் நூல், சரித்தி ரத்தில் விவேகமும் விருப்புமுள்ள தமிழாசிரியர்கள், உயர்வகுப்பு மாணவர்கள், பல்கலைக்கழக, ஆசிரிய கலாசாலை மாணவர்கள் யாவரும் சரித்திரத்தின் பொருளை ஒரளவு உணர்ந்துகொள்ளவும், மேலும் அதனை ஆழ்ந்து கற்கத் தூண்டவும் பயன்படுமென்பது எம் நம்பிக்கை uijst (354 p.
இந்நூலை ஆக்குங்கால் எழுந்த இடையூறுகளில் மிகவும் முக்கிய மானது கலைச்சொற் பிரயோகமும், இடப்பெயர்களின் தமிழுருவங்களை ஆக்குவதுமாகும். வரலாற்றுக்கெனப் பிரத்தியேகமான ஒரு கலைச் சொற்ருெகுதி வெளிவராத போதிலும், இலங்கைத் தன்மொழி அலுவ லகத்தார் குடிமையியலில் வெளியிட்டுள்ள கலைச் சொற்களையும், புவி யியற்ருெகுதியில் பிரசுரித்துள்ள இடப் பெயர்களையுமே உபயோகித் துள்ளோம். எனவே, நாம் இயன்றளவு அரசகருமத் திணைக் கழகத் தின் கலைச்சொல் வரம்புக்குக் கட்டுப்பட்டே ஒழுகியுள்ளோமென் பதைக் கலையுலகின் அவதானத்துக்குத் தெரியத் தருகிருேம்.
நீண்ட காலம், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் சரித் திரத் துறைத் தலைமை ஆசானயிருந்து உயர் வகுப்புக்களில் சரித்திரம் கற்பிப்பதில் நிறைந்த அனுபவமும், ஆழ்ந்த அறிவும், உன்னத தேர்ச்சி யும் பெற்றுள்ள திரு. S. W. பாலசிங்கம் M. A. (Lond.) அவர்களின் ஆலோ

Page 6
1ν
சனையுடனும் மேற்பார்வையின் கீழுமே இந்நூல் கடந்த மூவாண்டு களில் பூரணத்துவம் பெற்றுள்ளதென்பதையறியத் தருவதில் மட்டற்ற பெருமிதங் கொள்கிருேம்.
இந்நூலைப் பார்வையிட்டு, மனமுவந்து அணிந்துரையருளிய புனித பத்திரிசியார் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசான் கலாநி தி H. S. 5T6í951 egyig 56tti M. A., Ph. D. (Lond.) egyaui sejéig5ub Grub உளங்கனிந்த நன்றி என்றும் உரித்தாகுக.
இந்நூல் ஆக்கப் பெறுவதற்குத் தோன்றத் துணை புரிந்த அன்பர் கள், ஆசிரிய மாணவர்கள், அது புது மெருகுடன் வெளியாவதற்குக் கை தந்து அவ்வப்போது உதவிய வித்துவான் ச. சி. ஞானப்பிரகாசம், ஆசிரிய மாணவர்கள் M. விக்றர், S. இம்மானுவேல், ஆசிரியர் X. அந்தோனிப்பிள்ளை அவர்களுக்கு எம் நன்றி என்றும் உரியது.
மிகக் குறுகிய காலத்தில் இந் நூலை அதி உன்னதமாய் அச்சேற் றித் தந்த ஆசீர்வாதம் அச்சகத்தின் அதிகாரிகளுக்கும் தொழிலாளர் களுக்கும் எமது வந்தனம்.
மிகப் பெரியதான இந்த அரிய முயற்சியிலே, குணங் கண்டு இன்புறுமாறு அனைவரையும் வேண்டி, இதனைத் தமிழ்த் தாயின் மலரடிகளில் அர்ப்பணிக்கிருேம்.
ஆக்கியோன்
புனித வளனர் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி,
கொலம்பகம், யாழ்ப்பாணம், 1 3-6 س-5 I

யாழ் நகர், புனித பத்திரிசியார் கல்லூரி, வரலாற்றுப் பகுதி த் தலைமைப் பேராசான்
கலாநிதி ஹியசிந்து சிங்கராயர் தாவீது அடிகள் B. A. First Class Honours in History, M. A. Sanskrit, Ph. D. Tamil அவர்கள் அளித்த
அணிந்துரை
பல்லாண்டுகளாக ஐரோப்பிய சரித்திரத்தை யாம் ஆங்கில மொழி மூலமாகவே அர்ச். பத்திரிசியார் கலாசாலையிலும் இலண்டன் சர்வகலாசாலையிலும் கற்பித்து வந்த பின்றை, சடுதியாக இவ் வாண்டின் ஆரம்பத்தில் அச் சரித்திரத்தையே எமது இனிய தமிம் மொழி மூலமாக படிப்பிக்குஞ் சந்தர்ப்பம் எமக்கு வாய்த்தது அதிஷ்டமும் மகிழ்ச்சியையு முண்டாக்குஞ் செய்தியுமன்ருே ? ஆனலும் இடையூறற்ற அதிஷ்டம் இவ்வுலகில் காண்பதோ அரிது.
இவ்விடையூறு யாதெனில் உயர்தர மாணக்கர் தம் தேவைகளை பூர்த்தி செய்யவும், நாள் ஒரு வண்ணம் பொழுதொரு மேனியாய்ச் சரித்திர அறிவில் வளர்ந்த வரவும் அவர்கள் உபயோகிக்கக்கூடிய ஐரோப்பிய சரித்திர நூல்கள் மிகக் குறைவாயிருப்பதேயாம். யாம் இதுகாறும் படித்த சரித்திர நூல்கள் .ே (). E. வகுப்புக்கே உரியன. அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு, விசேஷமாய்ச் சர்வகலாசாலைப் பிரவேசனை வகுப்புகளுக்குப் பொருந்திய யாதொரு நூலையுங் கண்டிலம். இப்பொழுதோ திருவாளர் வி. இ. நிக்கலஸ் அவர்கள் மிக நேர்த்தியான சொற்ருெடர்களையும் இனிய பதங்களையும், ஐரோப்பிய சரித்திரத்தில் தமதான்ற அறிவையும் உபயோகித்து எமது இன்னல்களைக் களைந்தது புகழற்பாற்று.
இதுவே இந்நூலின் முதலாம் பிரசுரம். வரப்போகின்ற பிரசுரங் களில் ஐரோப்பிய இடங்களின் பெயர்களை ஐரோப்பியர் தாமே அங்கீகரிக்கக்கூடிய விதமாய்த் தமிழில் எழுத்துக் கூட்டுவது நல்ல தென்பது எம் அபிப்பிராயமாகும்.
ஆங்கில மொழியை முற்ருக மறந்து, ஒவ்வோரிடத்தின் பெயரை
யும் கூடியளவு அதின் மூலமொழியில் வரைவதே சால்புடைத்தாம்.
உதாரணமாக, ஆங்கிலத்தில் Arcot, Asia, Arabia என்னும் பதங்
களை முறையே “ஆர்க்கட், ஏஷ்யா அல்லது ஏஷயா, அரேபியா” என்றே
ஆங்கிலர் உச்சரிப்பர். ஆனல் இவற்றை இங்ங்ணம் யார் தான் தமிழில்
A.

Page 7
νi
எழுதத் துணிவர் ? இவற்றை முறையே 'ஆர்க்காடு, ஆஸியா, அரா பியா' எனச் சான்றேர் மொழி பெயர்ப்பரன்ருே ? அங்ங்ணமே Mesopotamia என்னுங் கிரேக்க பதத்தை *மெஸோபொத்தர் மியா' எனவே எழுதல் வேண்டும். இக்கிரேக்க பதம் இரண்டாய்ப் பிரியும். “மெஸோ' என்பதின் பொருள் “நடுவண்'. ஆங்கில * Middle', இலத்தின் 'Medius', சமஸ்கிரதம் *Maddhya' போன்ற வற்றுடன ஒப்பிடுக. “பொத்தமொஸ்" என்பதின் பொருள் “ஆறு', *நதி". ஆனதினல் “மெஸோபொத்தா மியா', இரு நதிகள் (அவை யாவன : எயுபிருத்தெஸ், திகிரிஸ்) மத்தியிலிருக்கும் நாடே என்பது இச்சொல்லைச் செவ்வன எழுதினல் மாத்திரமே புலப்படுமன்ருே ! இங்ங்ணமே இந்நூலாசிரியரும், இவரைப்போன்றவர்களும், இனிமேல் பிரசுரிக்கப்படவிருக்குந் தமிழ் நூல்களில் ஆங்கில மொழியின் பிறழ்ச்சியான உச்சரிப்பை முற்ருகத் தவிர்த்து, மூல பாஷைகளுக்கு இணங்கவே ஐரோப்பிய இடங்களை வரைவார்களென்று நம்புகின்றனம்.
இப்பிறழ்வைவிட, யாம் வேருெரு பிழையையும் இச்சரித்திர நூலிற்கண்டு அதைக் கண்டிப்பதற்குத் தருணங் கொடாததையிட்டு இந்நூலாசிரியரை மெச்சுகின்றனம். யாவரும் இந்நூலைப் படித்து இன்புற்று, தமது ஐரோப்பிய சரித்திர அறிவில் வளர்ந்துயர்வர் என்பது திண்ணம்.
H. S. தாவீது
யாழ்நகர், புனித பத்திரிசியார் கலாசாலை.
1 - 11-61.

பொருளடக்க நிரல்
(1789 தொடக்கம் இன்று வரை) புது உலக சரித்திரம்
༤─────གསྨགས་མ8མཐགང་ས་ནས་ནམ་ཡང་བསམ་
அதிகாரம் ა) விடயம் பக்கம்
1. அமெரிக்க சுதந்திரப் புரட்சி : (i)
1. புது உலகில் ஐரோப்பியர் A P 2. 2. போரின் காரணங்கள் 3. சுதந்திரப் போரின் நிலைகள் l 2. புரட்சிக்கு முந்திய பிரான்சு : (18)
1. பழைய ஆட்சி முறையின் ஒழுங்கீனம் 19 2. தத்துவ ஞானமும் புரட்சியும் s 27 3, 16 ஆம் இலூயி மன்னன் 0 0 ). P 30 8. கைத்தொழிற் புரட்சி : (34)
1. இங்கிலந்தில் புரட்சிக்குரிய சூழ்நிலை is 35 2. கைத்தொழில்களின் விருத்தி 4. 3. போக்குவரத்து விருத்தி - • • 8 45 4. விவசாயம் . A. As is is A 40 48
5. புரட்சியின் விளைவுகள் . 8 (8. 52 4. பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு : (58)
1. நாட்டு மன்றம் & . . . . p 58 2. சட்ட மன்றம் dr z . st a a 65 3. நாட்டுச் சமவாயம் & sy 49 %) Sw 69 5. நெப்போலியன் பொனப்பாட் : (75)
1. நெப்போலியனின் எழுச்சி ... . . . 75 2. பிரான்சின் எசமான் . a to w 80 3. நெப்போலியனின் பேரரசு வேட்கை p 85 4. வீழ்ச்சி y «A d 9 0. As a P 94 6. வியன்ன மாநாடும், ஐரோப்பிய மாநாட்டு
முறைமையும் : (103) 1. வியன்னு மாநாடு d - 03 2. ஐரோப்பிய மாநாட்டு முறைமை . 2 3 09

Page 8
viii
7. ஐரோப்பாவில் தாராண்மைவாதமும்
10.
ll.
12.
13.
நாட்டினவாதமும் : (114)
பழைமையும் புதுமையும் o ope பிரான்சு A 4 . . . . a o Q.
இத்தாலி . p 8 O 0 0 (P O செர்மனி a P ஒசுத்திரியா-அங்கேரி பெல்சிய சுதந்திரம் 8 to
அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை
(1771-1856): (142)
1. பதினெட்டாம் நூற்றண்டில்
ஐரோப்பாவும் ஒட்டோமன் பேரரசும் 2. கிரேக்க சுதந்திரம் . . . . 3. எகித்திய-துருக்கிய இகல் 8 b is 4. கிறைமியன் போர் o 0 (de இத்தாலியின் ஐக்கியம் : (157)
1. வட இத்தாலியின் ஒற்றுமை w 2. கரிபால்டியும் அவரது ஆயிரவரின் அணிவகுப்பும்
மூன்ருரம் நெப்போலியனும்,
இரண்டாம் பேரரசும் : (169)
1. இரண்டாம் பேரரசின் உதயம் 2. தாராண்மைப் பேரரசு செர்மனியின் ஐக்கியம் : (180)
1. பிரசிய--தேனியப் போர் 2. ஒசுத்திரிய-பிரசியப் போர் 3. பிரெஞ்சுப்-பிரசியப் போர் ஐரோப்பாவின் ஆள்புலப் படர்ச்சி : (198)
1. 1783 முதல் 1825 வரை 2. 1825 முதல் 1870 வரை
l.
2.
அமெரிக்க ஐக்கிய இராச்சியங்களின் எழுச்சி :(219)
புதுக் குடியரசின் தோற்றமும் வளர்ச்சியும் அமெரிக்காவின் அபிவிருத்தி p të
3. அடிமை முறையும் உண்ணுட்டுப் போரும்
卫五连
16
122
I 29
134
39
42
45
J48
50
157
丑64
170
77
180
88
92
198
2O7
220
230
236

ix
14. நவயுகத்தின் பிரதான இயக்கங்கள்
(1870 1914) : (242) 1. ஐரோப்பாவின் தொழில் வளர்ச்சியும் அதன் பயன்களும் 224 2. தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி . 244 3. படையாண்மை நாட்டினவாதம் . 253
a
15. செர்மன் பேரரசின் உண்ணுட்டு வரலாறு : (256)
16. மூன்ருரவது பிரெஞ்சுக் குடியரசு : (267)
17. ஐரோப்பாவின் புதுப் பேரரசுவாதம் : ; (275)
1 ஆபிரிக்காவின் ஆள்புலப் பிரிவினை . 278 2. தென் ஆபிரிக்காவில் ஆங்கிலர் a 282
18. தூரகிழக்கில் ஐரோப்பியர் : 290)
1. சீன > I KO v Ko do 290
2. யப்பான் « XX 4 - 296 3. சீனுவில் அந்நியரின் ஆதிக்கம் a 302
19. அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை : (310)
1. பரிசு மாநாடு முதல் பேளின் மாநாடு வரை . 31 2. பேவின் மாநாடு முதல் சராசேவோ வரை . 3.18
20. முதல் உலகப் போருக்கு வழிகாட்டிய
சர்வதேச உறவுகளும் நிகழ்ச்சிகளும் : (330) 1. மூவர் நட்பு . . . . . a ao 33 2. மூவர் கேண்மை உடன்பாடு a 3.35
21. முதலாம் உலகப் போர் (1914-18) : (345)
22 வேர்சைச் சமாகாணமும், சர்வதேச
சங்கமும் : (359) 23. இரசியாவில் சீர்திருத்த-புரட்சி இயக்கங்கள் : (371)
1. சீர்திருத்த இயக்கமும் அதன் இறுதித் தோல்வியும் 372 2. இரசியப் புரட்சி & > A 380
24. ஐரோப்பிய ஆள்புலங்களின் சுதந்திர **
இயக்கங்கள் : (390)

Page 9
x
25. ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் : (401)
26. இரண்டாம் உலகப்போர் (1939-45) :
27. உலக சமாதானம் :
இரசியாவில் பொதுவுடைமை வாதம் இத்தாலியில் பாசிசம்
செர்மனியில் நாற்சிசம் . சிபானிய உண்ணுட்டுப் போர் துருக்கியும் முசுதபா கெமாலும் . தூர கிழக்கில் சீன-யப்பானிய இகல் 4t உலக அரசியலரங்கில் அமெரிக்காவின் பிரவேசம்
தேசப்படங்கள்
வட அமெரிக்க குடியேற்றங்கள் (1755-63) நெப்போலியன் காலத்து ஐரோப்பா (1810) செர்மனியின் ஐக்கியம் ஆபிரிக்காவின் ஆள்புலப் பிரிவினை 1914-18 போரின் முன் ஐரோப்பா . 1914-18 போரின்பின் ஐரோப்பா 8 இற்லரின் கீழ் செர்மனியின் ஆள்புலப்படர்ச்சி (1933-39) தூர கிழக்கில் யப்பானின் படர்ச்சி (1939-42)
(434)
{453)
402
407
4.
48
4卫9
424
428
97
85
28
337
361
41 S
445

ஆரம்பவுரை
இந்நூல் ஆரம்பமான 18 ஆம் நூற்றண்டின் பிற்பகுதி, ஐரோப் பாவின் சகல கருமத் துறைகளிலும் அதி விசாலமும் பாரதூரமும் நிறைந்த மாற்றங்களை ஏற்படுத்தவல்ல அரும்பெரும் நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டது. இந்நிகழ்ச்சிகள் தாம் ஐரோப்பாவினதும் உலகத்தினதும் "எதிர்கால வரலாறுகளை உருவாக்கப்போகும் உள்ளீடு களாய் அமைந்தவை. இங்ங்ணம், ஐரோப்பிய வரலாற்றில் மாற்றங் களை ஏற்படுத்திய இயக்கங்களையும் நிகழ்ச்சிகளையும் அறிமுகப் படுத் துவதுடன் இந்நூல் அந்நிகழ்ச்சிகளுக்கான காரணங்களையும் அவற்றி ஞல் விளைந்த பயன்களையும் வரலாற்று மாணவனுக்கு எடுத்தியம்ப முயல்கின்றது.
வரலாறு இடையருத தொடர்புடைய தெனும் கோட்பாடு உயர்வு பெற்று விளங்கும் இக்காலத்தில், சரித்திரத்தைத் தனித்தனிக் காலங்களாகவும் யுகங்களாகவும் பிரித்துக் காட்டுவதும் கற்பதும் இயற்கைக்கு மாறனது என்பது மறுக்கமுடியாத உண்மை. எனவே, அதில் ஆராய்ச்சிக்காக அல்லது ஆழ்ந்த படிப்பிற்காகத் தேர்ந் தெடுக்கப்படும் எந்தக் காலமும் எதேச்சையாக நிர்ணயிக்கப்பட்ட காலமாகவே இருக்கும். எனினும், வசதிக்காக சில குறிப்பிட்ட ஆண்டுகளை, சில குறிப்பிட்ட கட்டங்களின் ஆரம்பமாகவோ, முடி வாகவோ கொள்ளும் முறை இன்று சரித்திர மரபாகிவிட்டது. எம் காலத்தின் ஆரம்பம் எனச் சொல்லக்கூடிய ஓர் ஆண்டைக் குறிப்பிட வேண்டுமாயின், அது பிரெஞ்சுப் புரட்சி ஆரம்பமாய 1789 ஆம் ஆண்டே எனக் குறிப்பிடலாம். எனவே, வசதியை முன்னிட்டு நாம் வரலாற்றைச் செயற்கையான காலப் பிரிவுகளாகப் பிரித்தபோதி லும், அவை ஒரு தொடர்பான சரித்திரத்தின் சிறு கூறுகளென்றே மாணவன் உணர்வாஞயின், அக்காலப் பிரிவுகள் வரலாற்றைக் கற்ப தற்கு ஒரு சீரிய முறையை அறிவுறுத்தும். இம்மனப் பதிவுடனேயே ஒருவன் சரித்திரத்தின் குரலைக் கேட்டு, அதன் படிப்பினைகளைக் கண் டறிய முயற்சிக்க வேண்டும். 18 ஆம் நூற்றண்டு முடிவடையும் தறுவாயில் பல புரட்சிகரமான இயக்கங்கள் ஒன்று சேர்ந்தன. ஒரே காலத்தில் நடந்தேறிய இம்மாற்றங்களினுல் ஐரோப்பாவின் வணிகம், தொழில் முறைகள், சமுதாயம், அரசியல், இலட்சியக் கருத்துக்கள், சர்வதேச உறவுகள் முதலாம் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் உண்மையாகவே புரட்சிகரமானவை.
18 ஆம் நூற்ருண்டின் இறுதி ஐம்பது ஆண்டுகளில் செயற்பட ஆரம்பித்த நான்கு பிரதான சக்திகளின் சுழல் வேகத்திலே தான் அந் நூற்ருண்டு மறைந்து, 19 ஆம் நூற்ருண்டு மலர்ந்தது. அவை

Page 10
xii
தாம் பிரெஞ்சுப் புரட்சி, கைத்தொழிற் புரட்சி, அமெரிக்க சுதந் திரப் புரட்சி, அறிவுப் புரட்சி என்பனவாம். ஒரே காலத்தில் ஒன்று கூடிய இவ்வியக்கங்களினலாய கூட்டுப் பயன்கள் ஐரோப்பிய வர லாற்றில் காணப்பெறும் மறுமலர்ச்சி, மதச் சீர்திருத்தம் போன்ற நிகழ்ச்சிகளினலேற்பட்ட பயன்களிலும் பார்க்க மகத்தானவை. இம் மாற்றங்கள் ஐரோப்பாவையும் அகில உலகையுமே அடையாளங் காணமுடியாத அளவுக்கு ஆட்டிப்படைக்கவல்ல சக்திகளேக் கட்ட விழ்த்து விட்டன. இதனலேயே 18 ஆம் நூற்றண்டு ஒரு யுகத்தின் கல்லறையென்றும் பிறிதொரு யுகத்தின் தொட்டிலென்றும் அழைக் கப்படுகிறது.
பிரெஞ்சு, அமெரிக்கப் புரட்சிகள் உலகில் அன்று நிலவிய அர சியற் கொள்கைகளின் அடித்தளத்தில் மாபெரும் மாற்றங்களை ஏற் படுத்தின, பிரெஞ்சுப் புரட்சி, பிரான்சில் மாத்திரமன்றி, அகில உல கிலும் அளப்பரிய விளைவுகளுக்கு வித்திட்டது. அஃது, அபரிமிதமான அதிகாரம் படைத்த மத்திய அரசாங்கத்துக்கும், சர்வாதிகார முடி யாட்சிக்கும். பிரபுக்களின் விசேட உரிமைகளுக்கும் எதிராக எழுந்த ஒரு வீறுகொண்ட மக்களின் விடுதலைக் கிளர்ச்சியாகும். அதன் வளர்ச்சியில் ஒருவன், புதுச் சனநாயகக் கோட்பாடுகளையும், யாப் புறு முடியாட்சி முறைமையின் தத்துவங்களையும், மானிய முறை ஆட்சியின் புனரமைப்புக் கெதிராக நடந்தேறிய பேரெழுச்சிகளையும் காண முடிகிறது. இப்புரட்சிக் களத்தில்தான் தாராண்மைவாதம் என்ற புது ஆயுதம் உருப்பெற்றது. அத்தத்துவம், சருவசன வாக் குரிமை, பேச்சுச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம், சட்ட மன்றம் நிருவாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்காத அரசாங்கத்தை அகற்றும் உரிமை, எனும் நவீன கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டு, மெருகிடப்பட்டு மிளிர்ந்தது. தாராண்மைவாதத்துடன், புரட்சியிலிருந்தெழுந்த பிறிதொரு சக்தி நாட்டினவாதமாகும்.
ஐரோப்பாவில் 1815 க்கும் 1848 க்குமிடையில் பிற்போக்குவாதத் துக்கும் புரட்சிவாதத்துக்குமிடையே எழுந்த வன் சமருக்கு, தாராண் மைவாதம், நாட்டினவாதம் எனும் இப்புதுச் சக்திகளே அடிப்படைக் காரணங்களாய் அமைந்தன. பிரான்சில் திடீரெனத் தோன்றிய 1830, 1848 ஆம் ஆண்டுப் புரட்சிகள், ஐரோப்பாவெங்கணும் தாராள அரசமைப்புக்களை அன்றேல் நாட்டொற்றுமையைப் பெறும் நோக்கங் கொண்ட பல கிளர்ச்சிகளுக்கு வழிகாட்டின.
கைத்தொழிற் புரட்சியின் தோற்றம், ஐரோப்பிய விவகாரங்களை பெருமளவுக்குப் பாதித்த மற்ருெரு முக்கிய இயக்கமாகும். அஃது ஐரோப்பாவின் சமுதாய, பொருளாதார, அரசியல் நிலைகளின் முனை

xiii
களில் பல புதுத் தாக்குதல்களை ஆரம்பித்தது. ஐரோப்பிய நாடு களின் அரசியல் விருத்தி, அரசியல் எண்ணங்கள், அரசமைப்புத் திட்டங்கள் யாவும் புது விரைவும் வளர்ச்சியும் பெற்றன. பொரு ளாதார விருத்தி முறைகளிலும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் நவீன பூட்கைகள் கையாளப்பட்டன. அப்புரட்சி, இவற்றிலும் மேலாக, ஐரோப்பிய நாடுகளை உலகின் பல பாகங் களுக்கும் அண்ழத்துச் சென்று “பேரரசுவாதம்’ எனும் புதுக் கோட் பாட்டை உருவாக்கியது. எந்திரச் சாதனத் தொழில்முறை வளர்ச் சியையொட்டி முதலில் ஐரோப்பாவிலும் பின்னர் உலகெங்கணும் சமூகவுடைமைவாதம், பொதுவுடைமைவாதம் போன்ற அரசியற் கொள்கைகள் முளைத்து வியப்புக்குரிய வேகத்தில் பரவின.
நாட்டினவாதம் என்ற புதுச் சக்தி பெல்சியம், கிறீசு, இத்தாலி, செர்மனி நாடுகளிலேயே பூரணத்துவம் பெற்றது. மா நாட்டு முறைமை ஐரோப்பாவில் சர்வதேச அமைதியை நிலைக்கச் செய்ய வேண்டுமென்ற உண்மையான நம்பிக்கையுடன் முயற்சித்துத் தோல் வியடைந்து நின்ற காலத்தில் இத்தாலி, செர்மனி எனும் நாடு களின் ஐக்கியம், ஐரோப்பிய சூழியலையும் சர்வதேச உறவுகளையும் புரட்சிகரமாக மாற்றியமைத்தன. இரசியா, தான் மத்தியதரைப் பிராந்தியத்தில் ஒரு தனி இடத்தைச் சுவீகரித்துக் கொள்ள வேண்டு மென வேணவாக் கொண்டதுடன், அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை, 19 ஆம் நூற்றண்டில் முன்னணிக்கு வரலாயிற்று. இத்தக ராறுகளும் ஆபிரிக்க ஏகாதிபத்தியப் போட்டியும் ஒன்று சேர்ந்தே முதல் உலகப் போரை விளைத்தன. இப்போரில் பங்குபற்றிய வல் லரசுகளில் ஒன்ருன யப்பான், ஆசியாவில் நாட்டினவாதத்தின் வளர்ச்சியை முன்னறிவுறுத்தி நின்றது. அமைதியை நிலைபெறச் செய்யும் நோக்குடன் அமைக்கப்பெற்ற மாநாட்டு முறைமை தோல்வியடைந்த போதிலும், சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு ஒரு சர்வதேசத் தாபனம் இயங்க வேண்டுமென்ற எண்ணம் மனித னின் உள்ளத்தைவிட்டு நீங்கவில்லை. முன்னைய ஐரோப்பிய மாநாட்டு முறையைப் போன்று சர்வதேச சங்கமும் சீர்குலைந்தது. “சரித்திர சம்பவங்கள் திரும்பத்திரும்ப நிகழ்கின்றன’ எனும் கூற்று உண்மை யாயிற்று.
கைத்தொழிற் புரட்சிக்கு அடுத்த காலம் முதல், விஞ்ஞானம் தங்கு தடையின்றி முன்னேறிக்கொண்டே வரலாயிற்று. நீராவி எந்திரத்தினல் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்களுக்கேற்றபடி தன் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள மனிதனுக்குச் சுமார் நூறு ஆண்டு கள் பிடித்தன. அடுத்த ஐம்பது ஆண்டுகளுள் மோட்டார் இரதம்,

Page 11
Χίν
தொலைபேசி, தொலைக்காட்சி, 'செட்” விமானம், “உருெக்கற்’ விமானம், அணு சக்தி முதலியவற்றை மனிதன் அடுத்தடுத்துக் கண்டு பிடித்தமை வியக்கற்பாலது. அணுவைப் பிளந்தது, இதற்குமுன் என்றும் கண்டிராத பிரமிப்பூட்டும் விஞ்ஞான சாதனை. மனிதன் வாழும் சூரிய குடும்பம், வானில் உள்ள கற்பனைக் கெட்டாத பிரபஞ்சங்க ளில் ஓர் அணுவேயென வானசாத்திரம் இயம்பியது. இதைப் போலவே வைத்தியம், இரசாயனம், உயிர் நூல், மனுேதத்துவம் முதலாம் விவித சாத்திரங்களிலும் அதிசயத்துக்குரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மிக அண்மையில் மனிதன், பூமிக்கு மேலே செயற்கை முறையில் உபக்கிரகங்களை மிதக்க விட்டும், அதனுள் ஆரோகணித்து அகிலத்தை வலம் வந்தும், அதி அற்புத சாதனைகளை நிலை நாட்டி யுள்ளான். இருபதாம் நூற்றண்டு விஞ்ஞானம் எடுத்துக் காட்டியுள்ள இந்த அதிசய சாதனைகளினல் மனிதன் தலை சுற்றி நிற்கிருன். ஆனல் இவற்றிலிருந்து, மனிதன் தன் சாதனைகளினல் தன்னைத் தானே அழித்து விடுவான ? எனும் ஐய வினவும் எழுந்துள்ளது.
ஈருலகப் போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இத்தாலியில் பாசிச அரசாங்கம் அமைவு பெற்றது. சற்றுப் பின்னர், செர்மனி யில் தேசப்பற்று, வெறியாக மாறி, நாற்சித் தலைவனுன அடால்ப் இற்லரின் கீழ், அது புது உத்வேகத்துடன் எழுச்சியடைந்தது. இதுவே இரண்டாம் உலகப் போரெனும் பேரழிவுக்கு அடிப்படைக் காரண மாயிற்று. இதற்கிடையில் இரசியா, சமூகவுடைமைப் பொருளாதா ரத் திட்டங்களின் அடிப்படையில் தன்னைப் புனர் நிர்மாணம் செய்து, பொருளாதாரத் துறையிலும், அரசியற் றுறையிலும் வலுப் பெற்றது. தம் பொருளாதாரத்தை உறுதியாகத் தாபிக்க நோக்கங் கொண்ட இத்தாலியும் செர்மனியும், குடியேற்றங்களைத் தேடிப் பேரரசு வேட்கையிலும் அதனுல் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிலும் இறங்கின. அவற்றின் இராசதந்திர நடவடிக்கைகளுக்கு வல்லபம் பொருந்திய படைபூண்ட இராணுவம் அனுசரணையாக நின்றமை யால் போர்க் கெடுபிடி மிக அண்மையில் நெருங்கியது. இதற்கிடை யில் பேராசை மிகுதியால் உந்தப்பட்ட யப்பான், கிழக்கே அதிர்ச்சி தரக்கூடிய அட்டகாசச் செயல்களில் இறங்கிற்று. நிகழ்ச்சிகளின் விரைந்த போக்கினுல் முதல் உலகப் போர் முடிவெய்திய இருபது ஆண்டுகளுக்குள் இரண்டாம் உலகப் போர் மூண்டது. முதற் போரில் போன்று, அமெரிக்கா இரண்டாவதிலும் இறங்கியதுடன் உலக விவ காரங்களில் அஃது ஒதுங்கி நின்ற காலம் போய், உலகுக்குத் தலைமை தாங்கும் காலம் பிறந்தது. உவில்சன் கூறிய யோசனையை நிரா கரித்த அமெரிக்கா, ஐக்கிய நாட்டமையத்தை உருப்பெறச் செய்ய முன் நின்று பணியாற்றியது. இத்தாபனம்தான் “யாதும் ஊரே,

XV
யாவரும் கேளிர் ; எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே’ எனும் பொன்மொழிக்கமைய, உலக மக்கள் அனைவரும் ஒரே குலத் தைச் சேர்ந்தவர் என்ற உண்மையைக் கருதவும், கூறவும், அதன்படி வாழவும் முடியுமென வற்புறுத்தி நிற்கின்றது.
மிகுதிச் சம்பவங்கள் இக்கால அரசியலாகும். இரண்டாவது உலகப் போரின், பிரதான பயனக ஆசிய, ஆபிரிக்க கண்டங்களில் 65 கோடி மக்கள் பழங்காலக் குடியேற்ற ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றுத் தம் நாட்டாட்சியைத் தாம் விரும்பிய முறையில் ஆக்கிக் கொண்டுள்ளனர். மேற்குலகில், மேனுட்டு வாழ்க்கைக் குறிக்கோ ளுக்கு அமெரிக்காவே வாரிசாகவும், காப்பாளியாகவும், பிரசார நிலைய மாகவும் மாறியது. அது சரித்திரம் என்றும் கண்டிராத துணிவை யும், தூரப் பார்வையையும், தாராள மனப்பான்மையையும் காட்டி உலகில் சனநாயகத்தைப் பாதுகாக்கக் கங்கணம் கட்டி நிற்கின்றது. மறுபுறம் போர்க் காலத்தில் மேற்கத்திய தேசங்களின் நேச நாடு களாயிருந்த இரசியாவும் சீனுவும் சனநாயக உலகின் பகைவர்களாக மாறி நிற்கின்றன. உலகப் பொதுவுடைமைவாதம் 70 கோடிக்கு அதிகப்படியான மக்களை, அதாவது மனித வர்க்கத்தில் மூன்றிலொரு பகுதியினரைத் தன் ஆதிக்கத்துக்குட்படுத்தியுள்ளது. இங்ங்னம், முற்காலங்களில் சுதந்திரத்தை நிலைக்கச் செய்ய வேண்டுமென நடந்த முடிவற்ற போர், இன்று புது ரூபத்தில் பரிணமித்து நடைபெறு கின்றது.

Page 12

புது உலக சரித்திரம்
(1789 தொடக்கம் இன்றுவரை)
அதிகாரம் 1
அமெரிக்க சுதந்திரப் புரட்சி
ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து ஒரு குடியேற்ற நாடு வெற்றி பெற்றதற்கு அமெரிக்கப் புரட்சியே முதல் எடுத்துக்காட்டாகும் பதி னெட்டாம் நூற்றண்டில் ஐரோப்பாவுக்கு அப்புரட்சி ஓர் அதிமுக்கிய சம்பவமாகும் ; ஏனெனில் அஃது அங்கு நிலவிய குடியேற்ற ஆட்சி முறையின் அத்திவாரத்தைத் தகர்த்தெறிந்து, உலகெங்கும் அடிமை களாக வாழ்பவர்களுக்கு ஒர் அணையாத் தீபத்தை மலைமேல் ஏற்றி வைத்தது. பிற அரசாங்கம் உரிமை பாராட்டாத நிலப்பரப்பில் ஒரு நாட்டு மக்கள் குடியேறின், அவர்கள் தம் தாய்நாட்டு மன்னனின் அதிகாரத்தைப் புதிதாகக் குடியேறிய நிலத்திலும் படரச் செய்வர் என்பதே பதினெட்டாம் நூற்ருண்டு ஐரோப்பியரின் நம்பிக்கை அரசன் ஒரு தந்தையைப்போன்று, தன் பிள்ளைகளை அகில உலகத்திற் கும் எதிரே பாதுகாக்க உரிமையுடையவன் என்ற கடல் கடந்த போத் துக்கல், சிபெயின், பிரான்சு, இங்கிலாந்து எனும் நாடுகளின் 'பழைய குடியேற்ற ஆட்சி முறை'மைக்கு (Old colonial System) அமெரிக்கா முற்றுப்புள்ளி வைத்தது. ‘எல்லா மக்களும், சுதந்திர மாகவும் சமமாகவும் படைக்கப்பட்டனர்' எனும் புதுக் கருத்தை உலகுக்கு ஈந்தது. உலக வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் மலர்ந்தது. புரட்சி புரியும் உரிமை மிகப் புனிதமானது. இந்த உரிமை மூலம் உலகத்தையே விடுவிக்கலாம் என்று நாம் நம்புகி ருேம்;-- எதிர்பார்க்கிருேம்' என்ற வாசகம் செயற்பட ஆரம்பிக்க லாயிற்று. 14 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்காவின் முன்மாதிரிகை, பிரான்சிலும் பின்பற்றப்பட்டது. அதன் வழியாக முழு ஐரோப்பிய வரலாற்றையும் கால் நூற்ருண்டுக்குப் பாதித்தது. அடுத்த இரு நூற்றண்டுகளில் அப்புரட்சிக்கு ஆக்கமளித்த கருத்துக்கள் உலகெங் கும் பரவலாயின. *உலகெங்கும் அடிமைகளாக வாழ்பவர்கள் விடுதலை பெறுவதற்காகவே இந்த மகத்தான காட்சியை ஆண்டவன் சிருட்டித்ததாகக் கருதுகிறேன்' என்று கூறினர் சணுதிபதி யோண்

Page 13
2 புது உலக சரித்திரம்
அடம்சு (John Adams). அன்று தொட்டு அகில உலகிலும் குடியேற்ற ஆட்சியை எதிர்த்தவர்கள் அமெரிக்கப் போர்முரசங்களிலும் ஆர்ப் பாட்டங்களிலும் இயல்பாகவே ஒரு முன்மாதிரியைக் கண்டனர்.
தவிர, புரட்சியின் வெற்றியினல், அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு அப்பால் உதயமான புது அரசு, ஐரோப்பிய போர்களிலும் நட்புறவு களிலும் அதி செல்வாக்குடையதாயிருக்கும் என்பதும் தவிர்க்கமுடி யாத பயன்களில் ஒன்ருகும்.
1. புது உலகில் ஐரோப்பியர்
கொலம்பசும் புது உலகமும் :
புவியியல் அறிவு விரிவடைந்ததுடன், பல ஐரோப்பிய யாத்திரீ கர்கள் உலகின் அதிசயங்களைக் காணவும், வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் நீண்ட பிரயாணங்களை மேற் கொண்டனர்.
உலகம் உருண்டை வடிவமானது என்று நிரூபிக்கப்பட்டதுடன், ஐரோப்பாவிலிருந்து புறப்பட்டு, மேற்கை நோக்கிப் போய்க்கொண்டே யிருந்தால், ஈற்றில் சீனவை யடையலாம் என்று ஐரோப்பிய மாலுமி கள் நம்பினர். இந்த யாத்திரையில் முதன் முதல் ஈடுபட்டவர் கிறித்தோபர் கொலம் பசு என்ற இத்தாலியராவர். சிபெயின் தேசச் ) மன்னரின் ஆதரவோடு புறப்பட்டு, 1490 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளிற் கால் வைத்தார். இத்தீவுகளைக் கண்ட கொலம்பசு தான் தேடிவந்த இலட்சியம் நிறைவேறி விட்டதாக எண்ணினரே தவிர, தான் கண்டுபிடித்த கண்டம் ஒரு புது உலகம் என்பதைத் தன் ஆயுள் காலம் முழுவதும் அறியவில்லை. அஃது ஆசியாவின் ஒரு பகுதி என்ற எண்ணத்துடனேயே இறந்தார்.
: சிபெயின் لgا
கடல் வழி காணும் காலம் முடிந்ததும், நாடு பிடிக்கும் 4ாலமும் குடியேற்றக்காலமும் ஆரம்பமாயின. இம் முயற்சியில் ஏனைய நாடு களைவிட, சிபெயின் முதன்மை பெற்றது. 1521 ஆம் ஆண்டு ஏர் ஞ ண்டோ கோட்டேசு, மெக்சிக்கோவை வீரத்தாலும் வஞ்சகத்தாலும் வென்று, அங்கு சிபெயினின் வெற்றிக்கொடியை நாட்டினர். 1533ஆம் ஆண்டு பிர ன் சிசுக்ே 1.7 பிசாரோ பெருவிலிருந்த பழைமையான இன் கா நாகரிகத்தை அழித்துக் கைப்பற்றினர். 1565 இல் மெக் சிக்கோவிலிருந்து வடதிசையில், பிளாரிடா எனும் ஒரு நிரந்தர குடி யேற்றம் தாபிக்கப்பட்டது. 1600 மட்டில் டெக்சாசு, நியூ மெக்சிக்டோ, கலிபோர்னியா கடலோரப் பிரதேசம் முழுவதிற்கும் சிபானிய

அமெரிக்க சுதந்திரப் புரட்சி 3
பேரரசு பரவியது. அமெரிக்கப் பேரரசு 16ஆம் நூற்றண்டின் "புது சிபெயின் எனும் பெயரைப் பெறலாயிற்று. பிற்பகுதியில் சிபெயி னின் பிறநாட்டாதிக்கம் நலியத்தொடங்கியதுடன், டச்சுக்காரரும், ஆங்கிலேயரும் எழுச்சியடையலாயினர்.
புது இங்கிலாந்து :
சிபெயின் இழந்த இடத்தைப் படிப்படியாக இங்கிலாந்து சுவீகரித்துக் கொண்டது. 1585 இல் எலிசபெத் இராணி சென் லோரன்சு நதிக்கும் பிளோரிடாவுக்கும் இடைப்பட்ட கிழக்குக் கடலோரப் பிரதேசம் ஆங்கிலேயருக்கானது என்று உரிமை பாராட்டி, அதற்கு வே சீனியா என்ற நாமத்தைச் சூட்டினர். 1585-க்கும் 1587-க்கும் இடைப்பட்ட காலத்தில் சர் வோல்ற்றர் றலே தன் முயற்சியினல் இப்பிரதேசத்தில் சில குழுக்களைக் குடியேற்றினர். ஆணுல் இவை தோற்றியது போல் கெதியில் மறைந்தன.
அமெரிக்காவில் குடியேற்றுவதற்கு நடைபெற்ற அடுத்த முக்கிய நிகழ்ச்சி வர்த்தகக் கப் பணிகள் தாபிக்கப்பட்டமையாகும். இக் கம்பனிகள், வெளிநாடுகளில் குடியேற விரும்பிய மக்களை ஏராளமாக ஒன்று சேர்த்தன. இலண்டன் கம்பனி 1607 இல் 120 பேரை மூன்று சிறு கப்பல்களில் வேசீனியாவுக்கு அனுப்பியது. தம் அரசரின் ஞ பகார்த்தமாக அவர்கள் இறங்கிய இடத்திற்கு யேமிசு டவுண் (James town) என்ற பெயரையிட்டனர். இதுதான் அமெரிக்காவில் முதன் முதலாக ஆங்கிலேயர் நிரந்தரமாகக் குடியேறிய இடமாகும். பிளிமத் கம்பனியார் மெயின் (Maine) எனுமிடத்தில் ஒரு சிறு குடி யேற்றத்தை நிறுவினர். ஆனல் அஃது உருப்பெறவில்லை. 1620 இல் 'யாத்திரைப் பெரியார்கள்’ (Pilgrim Fathers) என்ற சரித்திரப் புகழ்பெற்ற 100 ஆண்களும், பெண்களும் ‘மே பிளவர்' எனும் கப்ப லில் அத்லாந்திக்குச் சமுத்திரத்தைக் கடந்து மசச்சூசட்சு என்று இன்று அழைக்கப்படும் கடலோரத்தில் வந்து இறங்கினர். அடுத்த சில ஆண்டுகளில் இவர்களின் நிலை பலமடைந்தது ; ஏனெனில் சுடுவட் (Stuart) மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட மதக் குரோதங்களினுல் "பியூறிற்றன் சு’ என்றவர்களும் மதச் சுயாதீனத்தை அனுபவிப்பதற்காக மன்னரிடம் அதிகாரப் பத்திரங்களைப் பெற்று சமுத்திரத்தைக் கடந்து இப் பகுதிகளிற் குடியேறினர்.
1630 ஆம் ஆண்டு மேலும் 25 பேர் அரசனிடம் அதிகாரப் பத்திரமொன்றைப் பெற்று மசச்சூசட்சு பகுதியில் வந்திறங்கிக் குடி யேற்றமொன்றை நிறுவி, அங்கு மத ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முயன்றனர். இங்கும் அதையடுத்த பிரதேசங்களிலும் புரட்டசுத்தாந்

Page 14
4 புது உலக சரித்திரம்
தரின் மத அனுசரணைகளையும், தொந்தரவுகளையும் தாங்கமுடியாத கத்தோலிக்கர் 1634 ஆம் ஆண்டு பால்ரிமோர் பிரபு (Lord Baltimore) வின் தலைமையில் மேரிலாந்தில் குடியேறினர். 1684 இல் வில்லியம் பென் என்பவரின் தலைமையில் குவேக்கர்கள் பென்சில்வேனியாவில்
ஒரு குடியேற்றத்தை நிறுவினர்.
புது பிரான்சு :
பிரான்சு தேசத்து சாம்ப்ளேன் 1608-ல் குவிபெக் நகரத்தைத்
தாபித்தார். காலப்போக்கில் பிரெஞ்சுப் பேரரசு இங்கிருந்து விரி
வடைந்து கனடாவின் பெரும்பகுதி, மிசிசிப்பி நதிப் பள்ளத்தாக்கு,
அமெரிக்காவின் மத்தியபாகம் முழுவதையும் தன்னகத்தே கொண்டது.
புது ஒல்லாந்து :
இதற்கிடையில் டச்சு அரசாங்கத்தில் சேவைசெய்த என்றி கட்சன் (Henry Hudson) அமெரிக்காவுக்குச் சென்று, கட்சன் நதியைக் கண்டுபிடித்து, அஃது ஒல்லாந்துக்குரியதென உரிமை பாராட்டி, L000S ST TT TTTTTS LL S SLLLL LLLLLLLLS LLLLLLLLtlLlLLLS S TTT S T TTTSS TTS SL0 வேர் என்ற இடங்களில் குடியேற்றங்களை நிர்மாணித்தார். 1626-ல் மன்கட்டன் தீவைச் சுதேசிகளிடமிருந்து விலைக்கு வாங்கினர்.
டச்சுக் குடியேற்றங்கள் ஆங்கிலேயக் குடிகளுக்கருகாமையில் ஏற்பட்டதனுல் அவைகளுக்கிடையே சண்டை மூண்டது 1667-ல் பிரீடா (Breda) உடன்படிக்கையின் பிரகாரம் நியூ அமித்தடாம், நியூ யேர்சி, டெலாவேர் ஆங்கிலேயருக்குச் சொந்தமாயின. நியூ அமித்தடாமுக்கு நியூயோர்க் என்ற புது நாமம் சூட்டப்பட்டது. இதன்பின் 13 குடியேற்ற நாடுகளும் ஒரே தொகுதியாக அமைந்தன.
2. போரின் காரணங்கள்
அரசியல் பிரச்சனைகள் :
பலவீனமும் வறுமையும் நிறைந்த இக் குடியேற்ற நாடுகள் ஒற்றுமையற்ற தனி அரசாங்கங்களாகவும் இயங்கின. 800 மைல் நீளமான கரையோரத்தில் அங்குமிங்குமாகச் சிதறிக் கிடந்த சமூ கங்களின் தேவைகளும் நாட்டங்களும் பெரிதும் வேறுபட்டிருப்பது இயல்பே. சில மாகாணங்கள் அடிமை முறை பிழையானது என்ற போது, வேறு சில மாகாணங்கள் அஃது இன்றியமையாதது எனக் கூறின. சில அரசாங்கங்கள் வியாபார சுதந்திரத்தை ஆசித்த நேரத்தில், வேறு இராச்சியங்கள் அரசாங்க பாதுகாப்பை வேண்டி

அமெரிக்க சுதந்திரப் புரட்சி 5
நின்றன. பிரித்தானியாவுக் கெதிரான ஆத்திரம், தம் மாகாண சுதந்திரத்தைப் பாதுகாத்தல் என்னும் இவைகளே மாகாணங்களின் பொது மனுேபாவத்தின் இரு முக்கிய அம்சங்களாகும்.
குடியேற்ற நாடுகளின் வளர்ச்சி வரலாற்றின் ஆரம்ப நிலையில், பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதியாமல், அவற்றைச் சுதந்திரமாக வாழ அனுமதித்தது. அவை, உருப்பெறும் காலத்தில், தத்தம் விருப்பங்களுக்கும் சூழ்நிலைக்கு மிசைய அரசாங்கங்களை அமைக்கும் சுயாதீனத்தைப் பெற்றன. குடியேற்றங்களை நிறுவும் முயற்சியில் பிரித்தானிய அரசாங்கம் பங்குபற்ருததனல், அவற்றின் அரசியற் போக்கை நிதானிக்கும் முயற்சியில் அக்கறை கொள்ள வில்லை. புது உலகக் குடியேற்றங்களின் ஆட்சியதிகாரம் ஒப்பந்தங் கள் மூலம் வர்த்தகத் தாபனங்களின் மேற்பார்வையில் விடப்பட்டது. இந்தக் கம்பனிகளின் தலைமைக் காரியாலயங்கள் இங்கிலாந்திலேயே இருந்தமையால், அவற்றின் வழியாக அரசர் தாம் நினைத்த நேரம் தம் அமெரிக்கப் பிரசைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பினர்.
பிரித்தானியாவில் போன்று வட அமெரிக்காவிலும் ஆங்கிலேய மொழியும், ஆங்கிலேய நீதி முறையும் வழங்கின. ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட மதமிருந்தது. மாகாணங் களின் தாபனங்கள் தாய்நாட்டைப் பின்பற்றியே அமைக்கப்பட்டன. அரசன், பிரபுக்கள், பொதுமக்கள் சபைகளின் பிரதி யுருவங்கள் ஆள் பதி, ஆயுரைக் கழகம் (Council), பொதுமக்கள் சபை எனும் அமைப்புக்களில் பிரதிபலித்தன.
முதன் முதல் இலண்டன் கம்பனி, வேசீனிய அரசாங்கத்தில் மக்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கத் தீர்மானித்தது. 1619 ஆம் ஆண்டு சுதந்திரக் குடிமக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் உரிமையைப் பெறவேண்டுமென்ற சட்டத்தை இயற்றியது. ஆள் பதியுடனும், நியமன அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு “கவுன்சில்' உடனும், இப் பிரதிநிதிகள் சேர்ந்து, நாட்டின் சட்டமியற்றும் கரு மங்களுக்குப் பொறுப்பாளிகளாக்கப்பட்டனர் இந்த முன்மாதிரிகை யிலிருந்து குடியேற்ற நாட்டு வாசிகள் தம் அரசாங்கத்தில் பங்கு பற்றும் உரிமை யுடையவர்கள் என்ற கொள்கை பொதுப்பட ஏற்றுக் கொள்ளப்பட்டது. குடியேற்றங்களில் ஏற்பட்ட ஆட்சி முறை தாய் நாட்டின் ஆட்சியிலும் பார்க்கச் சற்று முன்னேற்ற மடைந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
ஆரம்பத்தில் சட்டசபையில் மக்களுக்கு அளிக்கப்பட்ட பிரதி நிதித்துவம் பெயரளவில் மாத்திரமே முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆனல் காலப்போக்கில், சட்டசபைமீது பரிபூரண உரிமை பாராட்ட

Page 15
6 புது உலக சரித்திரம்
நோக்கங் கொண்ட பிரதிநிதிகள் சட்டசபைகளின் நிதி, நிர்வாக அதிகாரங்களைக் கைப்பற்றி, அவற்றில் தம் தேவைகளைப் பூர்த்தி செய்ய முற்பட்டனர். வரிகளை விதிக்கும் உரிமை, வசூலிக்கப் பட்ட பணத்தைச் செலவிடும் உரிமை, ஆள்பதிக்கும், நியமன அலுவலாளர்க்கும் அளிக்கப்படும் வேதனம் உட்பட அனைத்தும் பிரதி நிதிகளின் சம்மதத்துடனேயே நடைபெற வேண்டுமென்ற தத்துவம் ஒன்றன்பின் ஒன்ருக எல்லாக் குடியேற்ற நாடுகளிலும் நிலை நாட் t- till-gil. குடியேற்ற நாடுகளில் செல்வத்துக் கேதுவான மூலங்கள் நிறைந்திருந்தன. இவற்றின் மூலம் கூடுதலான இலாபத் தைப் பெறும் நோக்குடன் 1680 அளவில் பிரித்தானிய அரசாங்கம் இப் பிரதேசங்களை மன்னரின் நேர் ஆட்சிக் குட்படுத்த நடவடிக்கை எடுத்தது. கம்பனிகளுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரப் பத்திரங்களை நிராகரித்து, அவை மன்னராட்சிக் குட்படுத்தப்பட்டன. 1686 இல் இரண்டாம் யேமிசு, நியூ இங்கிலாந்து, நியூ யார்க், நியூ யேர்சி என்ற பிரிவுகளை இணைத்து மன்னராட்சியின் கீழுள்ள ஒரே மாகாண மாக்கினர். 1688 ஆம் ஆண்டு மாண் புரட்சியினுல் யேமிசு மன்னர் முடி துறந்தார்’ என்ற செய்தி அமெரிக்காவை எட்டியதும், ஆள்ப தியை மாசச்சூசட்சு மக்கள் சிறைப்படுத்தி, பின்பு விசாரணைக்காக இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தனர் ; ஈராண்டுகளுக்குத் தம்மில் ஒருவரை ஆள்பதியாக்கி, சுதந்திர வாழ்வு நடாத்தினர். மாசச்சூ சட்சு திரும்பவும் மன்னராட்சிக் குட்படுத்தப்பட்டபோது மக்கள் அரசாங்கத்தில் ஒரு பங்கு பெற்றனர். மற்றக் குடியேற்றங்களிற் போல திரும்பவும் இப் பங்கு முழு அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு விரிக்கப்பட்டது. பிரித்தானிய அரசாங்கம் ஆள்பதி களின் மூலமும், கோ மறைக் கழகத்தின் (Privy Council) மூலமும் குடியேற்றங்களை இன்னும் கட்டுப்படுத்த முயன்றது. ஆனல் குடி யேற்ற வாசிகள் இக் கட்டுப்பாடுகளை நீக்கி நடக்கக் கற்றுக் கொண்டனர்.
வியாபாரப் பிரச்சனை :
அரசியல் துறையில் பெருமளவு சுதந்திரம் நிலவிய போதும், வர்த் தகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. “பழைய குடியேற்ற நாட்டு முறை'க் கொள்கைகளின்படி குடியேற்ற நாடுகள், தாய் நாட்டின் நன்மைக்காகத் தாபிக்கப்பட்ட தோட்டங்களைப்போல் உபயோகிக்கப்பட்டன. தூரநாடுகளில் குடியேற்றங்களை அமைப்ப தற்குச் செலவிடப்படும் பணத்தை வியாபாரமூலம் இலாபத்துடன் திரும்பிப் பெறும் பேரரசு முறையில் பிழையொன்றுமில்லை என்றே அக்காலத்தில் பொதுவாக எண்ணப்பட்டது.

அமெரிக்க சுதந்திரப் புரட்சி 7
பிரித்தானிய கப்பற்படை, குடியேற்ற மாகாணங்களின் கரை யோரங்களையும், அவற்றின் வர்த்தகத்தையும் பாதுகாத்துக் கொடுத் ததற்குக் கைம்மாருக இம் மாகாணங்களின் வர்த்தகத்தின் மீது 1651 தெர்டக்கம் பல கட்டுப்பாடுகளை விதித்தது.
மாகாணங்கள் தம் உற்பத்திப் பொருள்கள் முழுவதையும் தாய் நாட்டுக்கு மாத்திரமே ஏற்றுமதி செய்தல் வேண்டும் ; தங்களுக்குத் தேவையான பொருள்கள் இங்கிலாந்தின் மூலமே இறக்குமதியாக வேண்டும் ; வர்த்தகம் முழுவதும் சுதேசிகளின் கப்பல்களில் அல்லது ஆங்கிலேய கப்பல்களின் மூலம் மாத்திரமே நடைபெறுதல் வேண்டும் என்ற விதிகள் இயற்றப்பட்டன. இவ்வாறு குடியேற்ற வாசிகளின் வியாபாரத் தொடர்புகளைக் கட்டுப்படுத்தியும். புதுத் தொழில்கள் ஆரம்பிக்கும் உரிமையைத் தடுத்தும், குடியேற்ற மாகாணங்களின் ஆதிக்கத்தைத் தம் கையிலேயே வைத்திருக்கலாமென ஆங்கிலேயர் எண்ணினர். குடியேற்ற நாடுகளில் எஃகு, கம்பளிப் புடைவைகள், தொப்பிகள் போன்ற பொருள்களின் உற்பத்தி தடைசெய்யப் பட்டது.
மறுபுறம் இவ்விதிகள் ஒரம்சமுள்ளனவாக விருக்கவில்லை குடி. யேற்ற நாட்டுப் பொருள்களுக்கு (புகையிலை, கோப்பி, சீனி, அரிசி) பிரித்தானிய சந்தைகளில் தனிச் சலுகைகள் வழங்கப்பட்டன. வேறு சில பொருள்கள் ஏக வியாபாராதிகாரத்தைப் பெற்றிருந்தன. இப்படியான அமைப்பின் கீழ் இருசாராருக்கும் நன்மைகள் ஏற்பட்ட மையினலும், சட்டங்கள் கடுமையாக அனுட்டிக்கப்படாமல் விடப்பட் டமையினலும், இவ் விதிகளுக்கு ஆரம்பத்தில் அதிகம் எதிர்ப்பிருக்க வில்லை. மற்ற நாடுகளுடன் களவு வியாபாரம் பலமாக நடந்து வந்தது.
பாதுகாப்புப் பிரச்சனை :
ஆங்கிலேயர் கரையோரப் பிரதேசங்களில் தோட்டங்கள், பட் டினங்கள் முதலியவற்றை அமைத்த அதே காலத்தில், கிழக்குக் கனடாவில் செயின்லோறன்சு நதிப் பள்ளத்தாக்கில் பிரெஞ்சுக்காரர் வேறுவிதமான ஒரு பேரரசை நிறுவினர். குடிமக்களைப் பார்க்கிலும் ஆராய்ச்சியாளர், மதபோதகர்கள், உரோம வியாபாரிகளே இப்பிர தேசத்துக்குக் கூடுதலாக வந்தனர். காலப்போக்கில் மிசிசிப்பி நதிப் பள்ளத்தாக்கையும், தமதாக்கி வடகிழக்கில் குவிபெக் தொடக்கம்" தெற்கில் நியூ ஒலியன்சுவரை ஒரு பிறை வடிவான பேரரசை அமைத்துக் கொண்டனர். குவிபெக், மாண் ட்ரியல், கிரெளன் பாயின்ட், நயாகரா போன்ற நகரங்களில் கோட்டைகளையும், இராணுவநிலையங் களையும் அமைத்துத் தம் ஆதிக்கத்தை வட அமெரிக்காவில் நிலை

Page 16
8 புது உலக சரித்திரம்
நிறுத்தினர். ஆங்கிலேயர் மேற்கு நோக்கி விரிவடைவதையும் தடை செய்தனர். இதனல் ஆங்கிலேயர் அப்பலேசியன் மலைத் தொட ருக்கும், கிழக்கேயுள்ள பிரதேசத்துக்கும் இடையில் அடைபட்டனர்.
ஆங்கிலேயர் நீண்டகாலமாக பிரெஞ்சுக்காரரின், *ஆக்கிரமிப்பை” எதிர்த்து வந்தனர். 1613 லேயே ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்கார ருக்குமிடையே கை கலப்புக்கள் ஏற்பட்டன. ஐரோப்பாவில் இரு சாராருக்கும் போர்கள் நடைபெற்ற காலங்களிலெல்லாம், அவற்றின் எதிரொலிகள் வட அமெரிக்காவிலும் கேட்டன (1689-97; 1701-13; 1744-48). இவை பெரும்பாலும் திட்டமான முடி வின்றி முற்றுப் பெற்றதனல், அமெரிக்காவில் பிரான்சின் நிலை உறுதிபெற்றது. 1748 ஆம் ஆண்டு. ஏச்சிலாச் செப்பல் சமாதானத் தின் பின் பிரெஞ்சுக்காரர் மிசிசிப்பி நதிப் பள்ளத்தாக்கில் தம் நிலையை உறுதிப்படுத்திக் கொண்டனர். அதே காலத்தில் ஆங்கி லேயரின் அலிகனிசு மலைத் தொடரைக் கடந்து, மேற்குப் பிரதேசங் களிற் குடியேறும் முயற்சி அதிகரித்தது. இரு பகுதியினரும் ஒரே பிரதேசத்தைத் தமதாக்கிக்கொள்ள முயற்சித்தமையினுல் திரும்பவும் போர்கள் ஏற்பட்டன. 1754 இல் யோச்சு உவா சின்றனின் தலைமை யில் இருந்த வேசினிய இராணுவத்தினரோடு பிரெஞ்சுத் துருப்புக் கள் பொருதினர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஏழாண்டுப் போரே, இரு சாதியாரில், யார் வட அமெரிக்காவில் முதன்மை பெறு வது என்பதை நிர்ணயிக்கும் ஏதுவாயிருந்தது.
இங்கிலாந்தின் சரித்திரத்தில் ஏழாண்டுப் போர் அதிமுக்கியத்து வம் வாய்ந்த ஒரு சம்பவம் என்று கணிப்பதற்குப் பல காரணங்க ளுண்டு. இப்போர்தான் உலகத்தின் கடலாதிக்கத்தை அந் நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்தது. மேலும் 1759 இல், வுல்ப் மான்ட்காம் என்ற இரு பிரித்தானிய தளபதிகள் குவிபெக்கைத் தாக்கிக் கைப்பற்றிய துடன், அமெரிக்காவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் உறுதி பெற்றது. “ஆபிரகாம் குன்றுகளில் வுல்ப்பின் வெற்றியுடன் ஐக்கிய நாடுகளின் வரலாறு ஆரம்பமாயிற்று' எனச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. 1763 ஆம் ஆண்டு, பரிசு உடன்படிக்கையினல் பிரெஞ்சுக்காரருக்குச் சொந்தமாக விருந்த வட அமெரிக்கப் பிரதேசம் முழுவதும் ஆங்கி லேயருக்குச் சொந்தமாயிற்று.
அமெரிக்க மாகாணங்களுக்குப் பிரெஞ்சுக்காரர் மீதிருந்த பயம் நீங்கியதுடன், தாய் நாட்டி ன் மீதிருந்த பாசமும் குறைந்தது ; துணிவு அதிகரித்தது. 'பிரெஞ்சுக்காரர் கனடாவை விட்டு அகன்றதும், அமெரிக்கா சுதந்திரத்தை நாடும்” என்று, 1763 ஆம் ஆண்டு தீர்க்க தரிசனம் போன்று, வெர்கன்சு (Wergannes) என்ற அரசியல் ஞானி கூறினர்.

த்தானிய நிலப்பரப்பு
நிலப்பரப்பு நிலப்பரப்பு
குடியேற்றங்கள் (1755-63)
山历霜以孤 óqäär

Page 17

அமெரிக்க சுதந்திரப் புரட்சி 9
உண்ணுட்டு ஒழுங்குச் சட்டம் :
பிரெஞ்சுக்காரரை வெற்றி கொண்டதுடன், பிரித்தானிய பேரர சின் நிலப்பரப்பு இரு மடங்காகப் பெருகியது. கரையோரப் பிர தேசத்துடன் கனடாவும், மிசிசிப்பி நதிப் பள்ளத்தாக்கும் இணைக்கப் பட்டன. ஆங்கிலேய புரட்டத்தாந்தரைப் பெரும்பான்மையினராகக் கொண்டிருந்த பிரதேசம், கத்தோலிக்க பிரெஞ்சுக்காரரையும் செவ் விந்தியர்களையும் புதுப்பிரசைகளாகக் கொண்டதினுல், வட அமெரிக்க ஆட்சி முறையில் புது ஒழுங்குகள் அவசியமாயிற்று. ஆனல் அமெ ரிக்க குடியேற்ற நாட்டு மக்கள் புதுக் கட்டுப்பாடுகளை வரவேற்கி ஆயத்தமாக விருக்கவில்லை. நீண்ட காலம் சுதந்திரத்தை அனுப வித்து வந்த குடியேற்ற வாசிகள், பிரெஞ்சு அபாயம் நீங்கியவுடன் இன்னும் கூடுதலான சுதந்திரத்தை விரும்பினரேயொழிய, புது ஒழுங்குகளை ஏற்கும் நிலையிலிருக்கவில்லை.
புதுப் பேரரசைச் சரிவர நிர்வகிக்கும் நோக்குடன் பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்ட ஆரம்ப நடவடிக்கைகளில் ஒன்று உள் நாட்டை ஒழுங்குபடுத்தும் முயற்சியாகும். குடிசனத்தில் பெருகி வந்த கரையோர மாகாணங்கள், புதுப்பிரதேசங்களின் நலன்களைத் தாமே அனுபவிக்கத் திட்டம் கொண்டிருந்தன. பல மாகாணங்கள் மிசிசிப்பி நதிவரை புது நிலத்தில் உரிமை பாராட்டி, புதிதாக வெற்றி கொள்ளப்பட்ட நிலப் பகுதி தங்களுக்கே சொந்தமானது என்று நினைத்து மக்கள் கூடுதலாக அங்கு குடியேறினர். நேரத்துட னேயே கனடாவிலும் மிசிசிப்பிப் பிரதேசத்திலும் பிரெஞ்சுக்கார ரையோ, இந்தியரையோ துன்புறுத்தாத முறையில் நில, மதக் கொள்கைகளை நிர்வகிக்க வேண்டிய அவசியத்தைப் பிரித்தானிய அரசாங்கம் உணர்ந்தது.
கரையோரக் குடியேற்றங்களின் படர்ச்சியை ஏற்கனவே தடை செய்யாவிடில் நாளடைவில் இந்தியருக்கும் புதுக்குடிகளுக்கு மிடையே போர் மூளும் என அஞ்சி, 1763 ஆம் ஆண்டு, பிரித்தானிய அரசாங் கம் உண்ணுட்டு ஒழுங்குச் சட்டத்தைப் பிரகடனம் செய்தது. இதனல், மேற்குப் பிரதேசத்தை இந்தியருக்குப் பிரத்தியேகமாக ஒதுக்கி, கரையோர மாகாணங்கள் மேற்கு நோக்கி விரிவடைவதைப் பலவந்தமாகத் தடைப்படுத்தியது.
தாய் நாட்டின் இக்கடும் நடவடிக்கை குடியேற்றங்களில் பெரும் அதிருப்தியை வளர்க்கலாயிற்று.
இவ்வாறு ஆரம்பித்த பகைமை,-அரசாங்கத்தின் நிதி நடவடிக்கை
களினல் மேலும் வலுவடைந்தது.
2- GF --- 2

Page 18
0 புது உலக சரித்திரம்
கிறென் வில்லின் திட்டம் :
1764 இல், பிரித்தானிய பிரதம மந்திரியாக இருந்த யோச்சு கிறென் வில் (George Grenville) அமெரிக்காவைப்பற்றி அறியாதவர். அந்தாட்டைப்பற்றி அவர் கேள்விப்பட்ட சொற்ப விடயங்கள் கூட அவருக்கு வெறுப்பையே கொடுத்தன. ஏழாண்டுப் போருக்குப் பின் அமெரிக்க நாட்டின் பாதுகாப்புக்குத் தேவைப்பட்ட செலவை அந் நாடுகளே பொறுக்க வேண்டுமென்று தாய் நாடு கேட்டது. ஆனல், இத்திட்டத்தைக் குடியேற்ற நாடுகள் நிராகரித்தன. இப் பொறுப்பை மாகாணங்கள் ஏற்க மறுத்ததனல், இதற்கு வேண்டிய பணத்தை வேறுவழிகளில் பெறத் திட்டங்கள் வகுக்கப்பெற்றன. அமெரிக்க நாடுகளில் 7,500 போர் வீரர்களையும் மேற்கிந்திய தீவுகளில் 2,500 வீரர்களையும் நிறுத்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. 1764 இல் வர்த்தக விதிகளைக் கடுமையாக அனுட்டிக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டன. சுங்க அதிகாரிகளும் கப்பற்படை ரோந்துக்காரர் களும் நியமிக்கப்பட்டனர். இவ் வழியாகப் பாதுகாப்பின் தேவைக் கான பணத்தின் ஒரு பகுதியைச் சேகரிக்கலாமென்று எத்தனித்தனர். அடுத்த ஆண்டு, பிரித்தானியப் பாராளுமன்றம் ஒரு முத்திரை விதியை நிறைவேற்றியது. சட்ட சம்பந்தமான சகல சாதனங்கள். துண்டுப் பத்திரங்கள், புதினப்பத்திரிகைகள் எல்லாம் அரசாங்க முத்திரைகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற சட்டம் அமுலுக்கு வந்தது. இவ் வரியின் மூலம் நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான 10,000 பவுனில், மூன்றில் ஒரு பகுதியைச் சேகரிக்க எத்தனித்தனர்.
குடியேற்ற நாடுகளின் எதிர்ப்பு:
முத்திரை விதி, அமெரிக்க மாகாணங்களில் பலமான எதிர்ப்பை உண்டு பண்ணியது. பல பகுதிகளில் கலகங்கள் உண்டாயின. அர சாங்கக் காரியாலயங்கள் தாக்கப்பட்டு, முத்திரைக் கடதாசி முழு வதும் தீக்கிரையாக்கப்பட்டது. நாட்டின் எல்லாப் பாகங்களிலும் எதிர்ப்புக் கூட்டங்கள் நடைபெற்றன. தீர்மானங்கள் இங்கிலாந் துக்கு அனுப்பப்பட்டன. அத்துடன், இவ் வரி விதிக்கப்படும் காலம் முழுவதும், தாம் பிரித்தானிய பொருள்களை உபயோகிப்பதில்லை என்றும் தீர்மானித்தனர்.
இங்கிலாந்தின் வர்த்தகத்துக்குப் பங்கம் விளையுமோவென அஞ்சி 1766 ஆம் ஆண்டு, தவுன் சென்ட் இவ்வரியை நீக்கினர். அமெரிக்கா வில் இச் செய்தி குதூகலத்துடன் வரவேற்கப்பட்டது. 1767 இல் புதுவிதமான மறைமுக வரிகள் விதிக்கப்பட்டன.

அமெரிக்க சுதந்திரப் புரட்தி 1 Π
வரி நீக்கப்பட்டபோதும், குடியேற்ற நாடுகள் மீது வரி விதிக் கத் தனக்கு உரிமையுண்டு என்பதைப் பிரித்தானிய பாராளுமன்றம் சுட்டிக் காட்டிற்று. இவ் வுரிமையை உணர்த்தும் முகமாகத் தேயிலை, 56,or(so)lg, Fulb, 5 stSgth, 6 si6307 lb Tea, Glass Lead. Papers Pai ters Colours) போன்ற சில குறிப்பிட்ட பொருள்கள் மீது இறக்கு மதிவரி விதிக்கப்பட்டது. இதனல் வருட வருமானம் 40,000 பவுண் கிடைக்கலாம்ென்று கணக்கிடப்பட்டு, இவ் வருவாய் இதுவரை சட்ட சபைகளிடமிருந்து வேதனம் பெற்ற ஆள்பதிக்கும், உத்தியோகத்த ருக்கும் சம்பளங்களைக் கொடுக்க உபயோகிக்க வேண்டுமென உத்தர விடப்பட்டது. இதனல், குடியேற்ற நாடுகள், ஆள்பதிகள் மீது கொண்டிருந்த அதிகாரத்தையும் அதல்ை தம் சு த ந் திர த் தையும் இழக்க நேரிடுமென்று சரிவர யூகித்தனர். எனவே இத்திட்டத்துக் கெதிராக வலிமையான எதிர்ப்பும், ஆர்ப்பாட்டங் களும் உண்டாயின. மாசச்சூசட்சு, வேசீனியா, வட கரோலின இவ் வரிகளைச் செலுத்த மறுத்தன.
இங்கிலாந்தில் சாதம் (Chatham), பர்க் (Rurke) என்ற அரசியலறி ஞர்கள் இவ்வகை வரிவிதிப்புகளை எதிர்த்தனர். 1770 ஆம் ஆண்டு நோத் பிரபு எல்லா வரிகளையும் நீக்கி, தேயிலை மீது மாத்திரம் ஒரு வரி இருக்கவேண்டுமென்ற சட்டத்தைப் பிறப்பித்தார். தேயிலை வரி வருவாய்க்காக விதிக்கப்பட்டதன்று. பிரித்தானிய பாராளுமன்றத் தின் உரிமையைப் பாராட்டுவதற்காகவே இவ் வ ரி இருக்கவேண்டு மெனத் தீர்மானிக்கப்பட்டது.
மறுபுறம் அமெரிக்கர் 'பிரதிநிதித்துவமின்றி வரி விதிப்பிள் இல" என்ற கூக்குரலை எழுப்பினர். குடியேற்ற மாகாணங்கள் மீது வரி விதிக்கும் உரிமை அந் நாட்டுச் சட்டசபைக்குத்தான் உண்டு என்று வாதாடினர்.
3. சுதந்திரப் போரின் நிலைகள்
இப்படியாக இருசாராரும் ஒருவரை யொருவர் பகையுடனும், கோபத்துடனும் நோக்கி நின்ற வேளையில், அமெரிக்காவில் நடந்த அற்ப சம்பவங்கள் எல்லாம் மிகப் பெ ரி தா க ப் பாராட்டப் பட்டன.
1770 இல் பொசுதனில் ஒரு கலவரம் ஏற்பட்டபோது, அதைப் பிரித்தானிய அதிகாரிகள் இராணுவ பலத்தினல் அடக்கினர் 96) கக்காரரிற் பலர் உயிர் துறந்தனர். இது “பொசுதன் படு கொலே’ என்று வர்ணிக்கப்பட்டது. 1772 இல் காசுப்பீ (Gaspee) என்ற

Page 19
2 புது உலக சரித்திரம்
ஆங்கிலேயக் கப்பல் கரையேறிய போது, அதை அமெரிக்கர் தீக் கிரையாக்கினர். இச்சிறு சம்பவங்கள் இரு பகுதியினரின் கோபத்தை அதிகரிக்கச் செய்தன. அடுத்த சம்பவம் போரை மிக அண்மையில் கொண்டு வந்து விட்டது.
பொசுதன் தேநீர் விருந்து :
அமெரிக்காவில் இறக்குமதியான ஒவ்வோர் இரு த் த ல் தேயி லைக்கும் மூன்று பென்சு வரி இறுக்க வேண்டியிருந்தமையைப் பல தீவிரவாதிகள் ஆட்சேபித்தனர். 1773 ஆம் ஆண்டு பொசு தன் துறைமுகத்துக்கு ஆங்கிலேயக் கப்பலொன்று தே யி லே கொண்டு வந்தபோது, அமெரிக்க செவ்விந்தியர் போல் மாறுவேடம் பூண்டு 18 000 பவுண் பெறுமதியான 350 தேயிலைப் பெட்டிக%ளக் கடலுக்குள் வீசினர். ஆங்கிலேய அரசாங்கம் ஆத்திரம் கொண்டு, கடும் நட வடிக்கையில் இறங்கியது. அஃது 1774 ஆம் ஆண்டு பொசுதன் துறைமுகத்தைக் கப்பற் போக்கு வர த் துக்கு மூடி, மாசச்சூசட்சு பாராளுமன்றத்தைப் இரத்துச் செய்து, இம்மாகாணம் குடியேற்ற நாட் டைப்போல் ஆட்சி செய்யப்பட வேண்டுமென்ற சட்டங்களைப் பிறப் பித்ததுந் தவிர, ஆள்பதிக்கு விசேட அதிகாரங்களையும் வழங்கி, அவரது அதிகாரமின்றிப் பொதுக் கூட்டங்கள் ஒன்றும் நடக்கலாகா GG GỗT DJ lub Gi?Sjö 5g. G5 ## (Maj. Gen. Thomas Gage) GT Gör gD), Lib தளபதி மாசச்சூசட்சின் ஆள்பதியாகவும் நியமிக்கப்பட்டார்.
பிலடெல்பியா மகாசபை :
பிரித்தானிய அரசாங்கத்தின் மேற்கூறிய செயல், பதின்மூன்று குடியேற்ற நாடுகளையும் ஒற்றுமை கொள்ளத் தூண்டியது. மாசச் சூசட்சுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எ ல் லா நாடுகளினதும் சுதந்திரத்தைக் கட்டுப் படுத்தக் கூடிய முதற் குறி யாக இருக்கலாமெனக் குடியேற்ற நாடுகள் அஞ்சின. நிலைமையைப் பரிசீலனை செய்து நடவடிக்கை யெடுக்க ஒவ்வொரு நா ட் டி லு மிருந்து அழைக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட மாசபை (Con gress) பிலடெல்பியாவில் கூடியது.
ஆங்கிலேயருக்கும் அமெரிக்கருக்குமிடையில் ஏற்பட்ட தகராறைச் சிநேக மனப்பான்மையுடன் தீர்க்கும்படி, இச்சபை ஒரு விண் ண ப் பக்  ைத மன்னருக்கு அனுப்பியது. ஆணுல் 3 ஆம் யோச்சு அதை ஏற்க மறுத் து, 1774 ஆம் ஆண்டு செற்றெம்பர் மாதம் “குடியேற்ற மாகாணங்கள், ஒன்றில் அடிபணிய வேண்டும் ; அல் லது வெற்றி பெற வேண்டும்' என்று ஐயம் , திரிபறத் தன் அபிப் பிராயத்தை அமைச்சருக்குத் தெரிவித்தார்.

அமெரிக்க சுதந்திரப் புரட்சி 13
இலெக்சிங்ரன் கைகலப்பு :
மாசச்சூசட்சுத் தேசாபிமானிகள், இருபது மைல்களுக்கு அப் பாற்பட்ட கொன்கோட் எனுமூரில் வெடிமருந்தும் இராணுவத் தள பாடங்களும் சேகரிக்கின்றனர், என்ற செய்தி பொசுதனிலிருந்த ஆங்கிலேய செனரல் கேச்சுக்கு எட்டியது. 1775 ஆம் ஆண்டு ஏப் ரல் 18 ஆம் நாள் இரவு, கேச்சு இத்தளபாடங்களைப் பறிமுதலாக் கும்படி பிரிட்டிசுத் துருப்புக்களை கொன்கோடுக்கு அனுப்பி வைத் தார். ஆனல் இவர்கள் இலெக்சிங்ரன் என்னுமிடத்தில் அமெரிக் கரினுற் தாக்கப்பட்டனர். அங்குதான் அமெரிக்க சுதந்திரத்துக் கான முதல் இரத்தம் சிந்தப்பட்டது. ஆங்கிலேயர் கொன்கோடுக்கு முன்னேறித் தம் வேலையை முடித்துக்கொண்டு திரும்பும் வழி முழு
வதும் அமெரிக்க தேசாபிமானிகளால் தாக்கப்பட்டனர்.
இலெக்சிங்ரன், கொன்கோட் செய்திகள் குடியேற்ற நாடுகளில் ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இச்சம்பவம் பதின்மூன்று குடியேற்றங்களையும் ஒன்ருக இணைத்து அவை முழுமையாக இயங்க வழிப்படுத்தியது. உண்மையான யுத்தம் அண்மையில் இருக்கிற தென்ற உணர்வு ஏற்பட்டதுடன் வித்தியாசங்கள் மறைந்து, எங்கும் ஒரே ஒற்றுமைக்குரல் கேட்கப்பட்டது.
சட்ட மறுப்பும் சுதந்திரப் பிரகடனமும் :
இந்த அமைதியீனத்தின் மத்தியில் 1775 மே 10 ஆம் நாள் இரண்டாவது மாசபை பிலடெல்பியாவில் கூடியது. தனது தீர் மானங்களை விவாதிக்க முன்பு மாசபை யுத்தத்துக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்தது. அமெரிக்க இராணுவப் படைகளுக்கு யோச்சு உவா சிந்தனைப் பிரதம தளபதியாக நியமித்தது. மாசடை உடனே கடும் நடவடிக்கையில் இறங்க விரும்பவில்லை. மன்னனுக்கு அனுப்பிய விண்ணப்பத்துக்குப் பதில் கிடைக்குமென எதிர்பார்த்து நின்றது. மாதங்கள் கழிந்தன; ஆனல் இங்கிலாந்திலிருந்து எதிர் பார்க்கப்பட்ட சமரசம் வந்த பாடில்லை. அரசன், சமரசத்துக்குப் பதிலாக, 1775 ஆகத்து 23 ஆம் நாள் தனது அனுமதியின்றி மா சபை கூடியதனல் அது புரட்சிவாத சபையென்றும், அத்துடன் தான் ஒருவித தொடர்பும் வைக்கமுடியாதென்றும், பிரக ட ன மொன்றை வெளியிட்டார்.
இனிமேல் சமரச ஏற்பாடுகளுக்கு இடமில்லையென்று அறிந்த
மாசபை பிரதிநிதிகள், இங்கிலாந்தை எதிர்க்கவும், தம் சுதந்திரத் தைப் பிரகடனம் செய்யவும் தீர்மானித்தனர். உடனே மாசபை

Page 20
Η 4 புது உலக சரித்திரம்
இங்கிலாந்தின் வர்த்தகக் கட்டுப்பாடுகளை இரத்துச் செய்து, அமெ ரிக்கா அகில உலகுடனும் தடையின்றி வியாபாரம் செய்யலாமென்ற சட்டத்தைப் பிறப்பித்தது.
1776 ஆம் ஆண்டு யூலை மாதம் 4 ஆம் நாள், மாசபை அமெரிக்க குடியேற்ற நாடுகளின் பிரசித்திபெற்ற சுதந்திரத்தையும் பிரகடனம் செய்தது. ‘எல்லா மனிதர்களும் சமமாகவே சிருட்டிக்கப்படுகின் றனர். பறிக்கவே முடியாத சில உரிமைகளை அவர்களைப் படைத்த ஆண்டவன் அவர்களுக்கு அளித்திருக்கிருர், இவற்றில் வாழ்வு, சுதந்திரம், சுகவாழ்வைத் தேடுவது ஆகியவை முக்கியமானவையா கும். . இந்த உரிமைகளைப் பெறவே அரசாங்கங்கள் நிறுவப் படு கின்றன. அவை தம் நீதியுள்ள அதிகாரங்களை, ஆளப்படுவோரின் சம்மதத்திலிருந்து பெறுகின்றன. இவ்விலட்சியங்களை அரசாங்கம் பாழ்படுத்தினுல், அந்த ஆட்சியை மாற்றவோ அல்லது அகற்றவோ மக்களுக்கு அதிகாரம் உண்டு; தம் பாதுகாப்பையும், நலனையும் பெற்றுக் கொடுக்கக்கூடிய புதியதோர் அரசாங்கத்தை அமைத்துக் கொள்ள மக்களுக்கு உரிமையுண்டு’ என்றது பிரகடனம். இதனுல் பதின் மூன்றுகுடியேற்ற மாகாணங்கள “கடவுளினதும், மனிதனதும் கண்கள் முன்பரிசுத்தமாக விளங்கிய’ தொடர்புகளையும் விசுவாசத்தையும்கத் தரித்தனர். சுதந்திரப் பிரகடனம் தொடர்ந்து கூறியதாவது “ஐக்கிய அமெரிக்க அரசுகளின் பிரதிநிதிகளாகிய நாம், மாசபையில் கூடி, உலகின் முக்கிய நீதிபதியின் முன் எம் எண்ணங்களின் நேர்மையை உறுதி செய்துகொண்டு, இவ்வைக்கியக் குடியேற்ற நாடுகள் சுதந்திர முள்ள தனி நாடுகளாக விளங்க வேண்டுமென்று, பயபக்தியுடன், எடுத்து விளம்பிப் பிரசுரிக்கின்ருேம்; இவை, பிருட்டிசு முடிக்குரிய கீழ்ப்படிவினின்றும் நீக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கும் பெரிய பிரித் தனுக்குமிடையேயுள்ள அரசியல் தொடர்புகள் முற்ருக ஒழிக்கப் பட்டுள்ளன; இத்தொடர்புகள் ஒழிக்கப்படவேண்டியவையே.
போரின் தன்மை :
டச்சுச் சுதந்திரப் போரைப் போன்று, அமெரிக்கப் போர் சிறி தளவிலேயே நடைபெற்றது. 1777 ஆம் ஆண்டு சரட்டோகாவில் நடைபெற்ற போரில் பர்காயின் 3,500 வீரர்களையும், 12 கப்பல்களை யும் யுத்தத்திற்கு வழிநடத்திச் சென்றர். 1778 இல் பிரான் சி லிருந்து வந்திறங்கியவர்கள் ஆக 5,000 போர் வீரர்களே.
பிரித்தானியர் 800 மைல் நீளமான காடடைந்த பிரதேசத்தில் போரை நடத்துவதில் பெரிதும் அல்லற் பட்டனர். இன்னும் தமது நாட்டில், தாமறிந்த தளங்களிலிருந்து போர் செய்த

அமெரிக்க சுதந்திரப் புரட்சி 5
அமெரிக்கருடன் ஆங்கிலேயர் போரிட வேண்டியதாயிற்று. பிரித்தா னியா தனது தொண்டர்களுடன் 20,000 செர்மன் வீரர்களை இராணுவ சேவைக்காகக் கடன் வாங்கியது. ஆனல் இவர்களை இவ்வளவு தூரத் துக்குக் கொண்டு செல்லும் இடைஞ்சல்களினல் 16,000 பேர் தான் போரில் பங்குபற்றினர். தவிர, பிரித்தானியர் அமெரிக்கரின் உறுதியையும் பலத்தையும் தவருக மதித்தனர். அமெரிக்காவை வெற்றிகொள்ள நான்கு படைகள் போதும் என்று ஒரு நிபுணர் கூறினர். அமெரிக்கப் போர் எட்டு ஆண்டு காலம் நீடித்தது.
பிரித்தானியர் வெற்றிகள் :
சுதந்திரத்தை அடுத்து வந்த மாதங்களில் அமெரிக்கர் பல தோல்விகளையடைந்தனர். முதலாவது தோல்வி நியூயோக்கில் தான் ஏற்பட்டது. 1776 ஆம் ஆண்டு செனரல் கோ (Howe) உவா சிந்தனை புறு க்வின் எனுமிடத்தில் வெற்றி கொண்டு, நியூயோக்கைத் தனதாக்கி, அதை ஆங்கிலேய இராணுவத் தலைநகரமாக அமைத்துக் Qgst 600TLT i. மேலும் கார்ன்வாலிசு பிரபு2 நியூயேசியைக் கைப்பற்றி உவாசிந்தனை இன்னும் தெற்கே துரத்தினர். புரட்சிக் காரரின் நிலை அவலமாகிக் கொண்டுவரும் வேளையில், அவர்களுக்கு இரு வெற்றிகள் கிட்டின. 1776 ஆம் ஆண்டு நத்தார் இரவு, உவா சிந்தன் திரென்ரனில் (Trent on) ஒர் ஆங்கிலேயப் பட்டாளத்தைத் தாக்கித் தோற்கடித்தார். அடுத்த சனவரி பிறின் சுட்டனில் (Princeton) மேலும் இரு பிரித்தானிய படைகளை வெற்றிகொண்டு நியூயேசியை மீட்டார். உவாசிந்தனுடைய உறுதியும் போர்த் திறமையுமே அமெரிக்கருக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. ஆனல் திரும்பவும் ஆபத்து உண்டானது. 1777 செற்றெம்பரில் கோ, பில டெல்பியாவைத் தனதாக்கிக் காங்கிரசைப் பால்ட்டிமோருக்குக் கலைத்தார்.
சரட்டோகாப் போர் :
அடுத்து கோ, வேருெரு புதுப்போர்த் திட்டத்தை வகுத்து, அதை நிறைவேற்ற முயற்சித்தார். கட்சன் நதிதீரத்தைக் கைப்பற்றிப் புது ஆங்கிலேய குடியேற்றங்களைத் தென் குடியேற்றங்களிலிருந்து துண்டித்து விடலாமென எண்ணினர். ஆனல் திட்டங்களின்படி செயல்கள் நடவாமற் போனதனல், இம்முயற்சி அனுகூலமடைய வில்லை. அதற்கு மாருகக் கனடாவிலிருந்து கட்சன் நதியை நோக் கித் தெற்கிலிருந்து உதவியை எதிர்பார்த்து வ்ந்த பர்காயினும் (Burgoyne) அவரது துருப்புக்களும் தனியே செனரல் கேச்சின் கையில் சிக்கினர். கடும் சமருக்குப் பின் ஆங்கிலேய துருப்புக்கள்

Page 21
16 புது உலக சரித்திரம்
1777 ஒக்டோபர் 17 ஆம் நாள், சரட்டோகாவில் சரணடைந்தனர். சரட்டோகாவில் பர்காயினின் துருப்புக்கள் சரணடைந்தமை, யுத்தத் தில் பெரும் மாற்றங்களை உண்டு பண்ணியது. அமெரிக்கரின் இந்த மகத்தான வெற்றி, நாட்டில் புது உணர்வையும், உற்சாகத்தையும், தன் நம்பிக்கையையும் தட்டியெழுப்பியது. மறுபுறம் ஐரோப்பிய அரசுகள் பிரித்தானியாவின் இன்னல்களையும் இக்கட்டையும் கண்டு, தாம் ஏழாண்டுப் போரில் அடைந்த அவமானத்தையும், இன்னல் களையும் நிவர்த்தி செய்ய, இதுதான் தருண மென்று நினைத்தனர். ஆங்கிலேயரின் கடலாதிக்கத்தையும், வியாபார அதிகாரத்தையும் முறியடிக்கக் காத்திருந்த நாடுகளுக்கு இது நல்ல சந்தர்ப்பமாயிற்று. அமெரிக்கர், தமக்கு உதவவேண்டுமென்று பிரான்சுக்கும் சிபெயினுக் கும் கோரிக்கைகள் விடுத்தனர்.
ஐரோப்பிய நாடுகளின் தலையீடு :
‘இங்கிலாந்துதான் பிரான்சின் இயற்கையான விரோதிபேராசை படைத்த, நேர்மையற்ற கபடம் நிறைந்த, எப்பொழு தும் பிரான்சின் அழிவைத் தேடும் நாடு அது' என்ருர் வெர் கென்சு (Vergennes). தவிர, பிரான்சு தலையிடாவிடின், இங்கிலாந்து அமெரிக்க குடியேற்றங்களை மீண்டும் அடிமைப்படுத்தி, அதன் வியா பாரத்தில் ஏகபோக உரிமை பாராட்டும். ஆனல் பிரெஞ்சு உதவி அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தால், பிரான்சு ஐரோப் பாவில் இழந்த முதன்மையைத் திரும்ப நிலை நாட்ட வழி காட்டும் என்ருர். எனவே, பிரெஞ்சு-அமெரிக்க உடன்பாடு விசேட உரிமை களையோ புது வெற்றிகளையோ கோரவில்லை. பிரான்சின் உதவி தான் அமெரிக்காவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொ டு த் த து. 1778 ஆம் ஆண்டு பிரான்சு, அமெரிக்காவின் சார்பில் இங்கிலாந் துக்கெதிராகப் போரில் இறங்கியது மார்க்குவி டி லபாயெட் (Marquis de lafayette) அமெரிக்க இராணுவத்துக் குதவி செய்யு மாறு 6000 வீரர்களுடன் அனுப்பப்பட்டார்; பிரெஞ்சுக் கப்பற் படையும் உதவிக்குப் புறப்பட்டது. 1779 இல், சிபெயினும் அமெரிக் காவுக்குச் சார்பாகப் போரில் இறங்கி சிப்ருேல்டரைத் தாக்கியது. ஏனைய ஐரோப்பிய வல்லரசுகளும் இங்கிலாந்தின் மீது பகைமை கொண்டிருந்தன. பிரான்சும், சிபெயினும் போரிற் சேரவே, அவை களும் போரில் இறங்குவதற்கு ஆயத்தப்படுத்தின.
படைபூண்ட நடு நிலைமை :
ஆங்கிலேயக் கப்பல்கள், ஏனைய ஐரோப்பிய நாடுகளின் கப்பல்
களை நடுக் கடலில் வைத்து, யுத்த தளபாடங்கள் கொண்டு செல் கின்றனவா என்று பரிசோதிப்பதுண்டு.

அமெரிக்க சுதந்திரப் புரட்சி 7
இதைத் தீவிரமாக எதிர்த்த நாடுகள், ஒரு படை பூண்ட நடுநிலை மையை (Armed Neutrality) ஏற்படுத்தின. இரசியா, ஒசுத்திரியா, போத்துக்கல், சிபெயின், நார்வே, சுவீடன் நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, இரசியாவின் கத்தரினைத் தம் தலைவியாக்கினர். இவ் வாறு பிரித்தனின் எதிரிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்த துடன், அது கடலாதிக்கத்தையும் சொற்ப காலத்துக்கு இழக்க நேரிட்டது.
சாள் சுட்டன், யோக்ரவுண் போர்கள் :
ஆங்கிலேயப் படைகள், ஒரு கடுமையான எதிர்த் தாக்குதலை நடாத்தும் வரை சரணடைவதில்லையென்று உறுதிகொண்டு நின்ற னர். 1778 இல் பிரெஞ்சு கப்பற்படையின் பயமுறுத்தலின் முன் ஆங்கிலேயர் பிலடெல்பியாவை விட்டு வெளியேற நேரிட்டது. ஆனல், தெற்கில் அவர்களது தாக்குதல் வன்மை பெற்ற து. 1780 இன் ஆரம்பத்தில், அவர்கள் சாள் சு டன் (Charlestown) என்ற பிரதான தென் கப்பல் தளத்தைக் கைப்பற்றி, தற்காலிக மாக கரோ லிஞ) பிரதேசத்தின் அதிபதிகளாயினர். அடுத்த ஆண் டில் வேசீனியா வைக் கைப்பற்றும் முயற்சியை மேற் கொண்டனர். ஆனல், அதற்கிடையில் பிரெஞ்சு, அமெரிக்க படைகள் ஒன்று சேர்ந்து 15,000 வீரர்கள் வேசீனிய கரையோரத்தில் யோக்ரவுண் எனும் நகரத்தில் கான்வாலிசு பிரபுவின் 8,000 வீரர்களை சுற்றி வளைத்துக் கொண்டனர். 1781 ஆம் ஆண்டு ஒற்ருேபர் 19 இல் கான்வாலிசு சரணடைந்ததுடன், சுதந்திரப் போர் முற்றுப்பெற்றது.
பிரான்சும் சிபெயினும் தாக்குதல் :
இந்நிகழ்ச்சிகளினல் பிரான்சினதும், சிபெயினதும் துணிவு அதி கரித்து, பிரித்தனை வலிமையுடன் தாக்க முற்பட்டன. மேற்கிந்தி யத் தீவுகளிற் பல, (பா பேடோசு, சமேயிக்கா நீங்கலாக கைப் பற்றப் பட்டன. சிபெயின், சிப்ருேல்ட்டரைத் தொடர் ந் து தாக்கி, மத்தியதரைக் கடலில் மைனுேக்கா தீவையும் அடிமைப் படுத்தியது. ஆனல் ருெட்னி, மேற்கிந்தியத் தீவுகளில் 1782 இல் பிரெஞ்சுக்காரரைத் தோற்கடித்தார்; அதேயாண்டு சிப்ருேல்ட்ட ரும் காப்பாற்றப்பட்டது.
அமெரிக்கர், பிரெஞ்சுக்காரர், சிபானியர் ஈட்டிய வெற்றியைப் பற்றியசெய்தி ஐரோப்பாவுக்கு எட்டியபோது பிரித்தானியா போரை நிறுத்தத் தீர்மானித்தது 1782 ஏப்ரலில் சமாதானப் பேச்சு வார்த் தைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1783 இல் ஏற்பட்ட சமாதான உடன்
ぬ- gー3

Page 22
18 புது உலக சரித்திரம்
படிக்கையின் பிரகாரம், பதின் மூன்று இராச்சியங்களின் சுதந்திரமும், ஆதிபத்திய அதிகாரமும் இங்கிலாந்தினுல் அங்கீகரிக்கப்பட்டது. இவ் வாறு அத்திலாந்திக் சமுத்திரத்திற்கு அப்பால் ஒரு புதுச் சுதந்திர அர சாங்கம் உதயமாயிற்று.
அதிகாரம் 2 புரட்சிக்கு முந்திய பிரான்சு
பிரெஞ்சுப் புரட்சியின் சிறப்பு :
பிரான்சு தேசத்தில், 18 ஆம் நூற்றண்டில் நடந்தேறிய புரட்சி, மிகுந்த புகழும் கீர்த்தியும் வாய்ந்தது. உண்ணுட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் புது ஒழுங்கையும், புதிய சமுதாயத்தையும் ஏற்படுத்துவதற்காகவே அஃது எழுந்தது. ஆனல் பிரான்சில் ஏற்பட்ட இந்த மகத்தான கிளர்ச்சி, பிரெஞ்சுமக்களின் உண்ணுட்டுப் பிரச்சினையாக மாத்திரம் அமையவில்லை. அப்புரட்சி யோடு "ஐரோப்பிய வரலாறு, ஒரு நாட்டினதும், ஒரு நிகழ்ச்சியினதும், ஒரு மனிதனதும் சரித்திரத்துடன் ஒன்று சேர்ந்தது; அத்தேசம் பிரான்சு, அந்நிகழ்ச்சி பிரெஞ்சுப் புரட்சி, அம்மனிதன் நெப்போவி யன்." அஃது ஐரோப்பாவை அத்திவாரம் வரை கி டு கி டுக்கச் செய்து, அதைப் புது அடிப்படையில் புனர் நிர்மாணம் செய்ய வழி வகுத்தது.
பிரெஞ்சுப் புரட்சி, துப்பாக்கியும் வாளும் கொண்டு செய்யப் பட்ட போர் மாத்திரமன்று; அது புது எண்ணங்கள் நிறைந்த இலட்சியப் போராகவும் அமைந்தது-புது ஆட்சித் தத்துவங்கள், அரசியல் கருத்துக்கள், சமுதாய அமைப்பைப் பற்றிய புது எண் ணங்கள், மனித உரிமைகளைப் பற்றிய புதுச் சித்தாந்தங்கள் என்பன வற்றை நாலா பக்கங்களிலும் பரப்பி, ஐரோப்பாவின் பழைய பழக்க வழக்கங்களையும் தாபுனங்களையும் ஆட்சேபிக் க லா யி ற் று. அதிகாரம், வகுப்புக்களின் சிறப்புரிமைகள், சர்வாதிகாரம்--இவை தாம் ஐரோப்பாவினது பழைய ஆட்சி முறையின் அத்திவாரக்கற் கள். பிரான்சிலிருந்து வீசிய புயல்காற்று ஐரோப்பாவின் பயனற்ற தாபனங்களை நிராகரித்து, புது யுகத்தின் உதயத்தை அறிவித்தது. ஒரு படையின் ஆக்கிரமிப்பை மறித்து அணை கட்டலாம்; ஆனல்

புரட்சிக்கு முந்திய பிரான்சு 19
புது எண்ணங்கள் பரவாது தடை செய்ய வழியேயில்லை. எனவே தான், பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து எழுந்த “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' எனும் முழக்கங்கள் ஐரோப்பா எங்கணும் ஒலித்து, அங்கு நிலவிய பழைய அரசியல், சமுதாய அமைப்புக்களைக் கிடுகிடுக் கச் செய்தன. உண்மை யாதெனில், ஐரோப்பாவினது பழைய 6 முங்குகள் பிரயோசனத்தை இழந்து நின்றன. அவை காலத்துக் கொவ்வாத, ஒழுங்கீனம் நிறைந்த தீங்கிழைக்கும் முறையாக மாறி விட்டன. இதனுல் தான் சமத்துவம், நாட்டினவாதம், குடி யாட்சி எனும் புதுக் கருத்துக்களின் முன், பழைய முறை அழிந் தொழிந்து, மண்ணுேடு மண்ணுக மறைந்தது. மறுபுறம் இப்புது எண்ணங்கள், அதிகாரம், சிறப்புரிமை, வழமை எனும் கொடுங் கோன்மையில் நீண்ட காலம் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களினது உள்ளங்களை மயக்கமூட்டும் மதுபோலக் கொள்ளை கொண்டது.
1. பழைய ஆட்சி முறையின் ஒழுங்கீனம்
14 ஆம் இலூயி, 15 ஆம் இலூயி மன்னர்கள் :
பிரான்சின் வரலாற்றில் அரச பதவி, தேசத்தின் ஐக்கியத்தினதும் அதிகாரத்தினதும் சின்னமாகவே எப்பொழுதும் விளங்கி வந்துள்ளது. இறிச்சலுவும் மசாறினுவும் முதல் மந்திரிகளாக இருந்த காலத்தில், ஐரோப்பாவில் பிரான்சு முதன்மை பெற்றதுடன், அரசாதிகார மும் நிகரற்ற தனிப் பெரும் உயர்வும் பெறலாயிற்று. பதினன்காம் இலூயி எல்லாச் சர்வாதிகாரிகளிலும் மேலான அதிகாரத்தைச் செலுத் தினர். அவரது நீண்ட ஆட்சிக் காலத்தில் தான் பி ரெ ஞ் சு முடி யாட்சி அதன் இறுதியமைப்பைப் பெற்றது. அவர் உருவாக்கிய அரசியல் முறை தான், புரட்சியின் வருகை ம ட் டு ம் பிரான்சில் நிலைத்து நின்றது. 1715 இல் பதினன்காம் இலூயி மன்னன் கால Lானதுடன் பதினைந்தாம் இலூயி பிரான்சு தேசத்தின் அர ச ஞ க 1774 வரை செங்கோலோச்சினர்.
அவரது காலத்தில், பிரான்சு தேசத்தின் அர சாட்சி வெளித் தோற்றத்துக்கு எவ்வளவு பகட்டாயிருந்த போதிலும், உள்ளே நிலைமை மிகவும் சீர்கெட்டுக் கவலைக் குரியதாயிருந்தது. ஒரு புறம் பிரெஞ்சுமொழி, இலக்கியம், பண்பாடு, அரண்மனை எல்லாம் ஐரோப் பாவில் தனிப்பெரும் மதிப்பும் புகழும் பெற்றவை. பரிசு நகரத்தின் சமூகம், ஐரோப்பிய நாகரிகத்தின் மகுடம் போல அமைந்தது. மறு புறம் வெள்ளையடித்த கல்லறை போன்று, உண்ணுட்டு நிலை அதி கீழ்க் கட்டத்தை எய்தியது. நாட்டில் பெருகி வந்த அரசியல், பொரு

Page 23
20 புது உலக சரித்திரம்
ளாதாரச் சீர் கேடுகளைப் போக்கி, ஒழுங்கை நிலை நாட்டும் திறமை மன்னனுக்கில்லை. 18 ஆம் நூற்றண்டில், பிரான்சின் அதி பிரதான அம்சமாயிருந்தமை ஒழுங்கீனமே. புரட்சிக்கு முந் தி ய பிரான்சில், தெளிவில்லாத, சிக்கல் நிறைந்த பரம்பரை வழக்கங்கள், உரிமை கள். பிரகடனங்கள், சட்டங்கள், மாகாணங்களின் சு த ந் தி ர ம் , மானிய சலுகைகள், அரச அதிகாரம் என்பன நிறைந்திருந்தன. சர்வாதிகாரமும் பலவீனமும் படைத்த முடியாட்சி, நேர்மையற்ற தாய் இலெளகீக சுக போகங்களில் திளைத்து நின்ற திருச்சபை, நாட் டின் இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்த கடமையற்ற பிரபுக் கள், வெறுமையாகக் கிடந்த அரசாங்க இறைசேரி, ஆத்திரம் கொண்ட மத்திய வகுப்பினர், அடிமைப் படுத்தப்பட்ட விவசாயிகள், பண, நிர்வாக, பொருளாதார ஆட்சியறவு, ஒழுங்கிலா ஆட்சியினுல் பிளவு பட்ட சமுதாயம், சுருங்கச் சொன்னல், புரட்சிக்கு வேண்டிய அத் தனை காரணங்களும் பிரான்சில் மலிந்து கிடந்தன. இப்பேர்ப்பட்ட ஒரு சரித்திர வனத்தினுள் தெளிவான வழிகளைக் காண்பது இலகு வானதன்று. எனினும் 18 ஆம் நூற்ருண்டிற் பிரான்சில் காணப் பட்ட இச்சிக்கல்கள் நிறைந்த நிலையில்கூட, சில பிரதான அம்சங்கள் அவதானத்துக் குரியவை.
சமுதாய ஒப்பின்மை :
பிரெஞ்சு சமுதாயமானது, உரிமையுடையோர், உரிமையற்றவர் கள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிளவு பட்டுக் கிடந்தது. நாட் டின் சமூகக் கட்டுக்கோப்பு, ஏணிப்படிகள் போன்று வகுப்பு வரிசை களாக அமைந்திருந்தது. பரம்பரை மன்னர்கள், பிரபுக்கள், திருச் சபையினர் தாம் ஆட்சியாளராக இருந்து வந்தனர். சமூகத்தின் அடிவரிசையில் அடிமைக் குடிகளாக அமைந்த மூன்றம் குடித்திணை யோர்தான் வரிச்சுமை முழுவதையும் சுமக்க வேண்டியதாயிற்று.
Syl35, it (Nobility) :
மானிய முறை நிலவிய காலத்தில், பிரபுக்கள் நாட்டுப்புறங்களில் பெரும் நிலச் சொந்த க்காரராகவும், செல்வம் படைத்தவர்களாகவும் வாழ்ந்து வந்தவர்கள். அக்காலத்தில் அவர்கள் மாகாண பரிபால னத்தைப் பொறுப்புடன் நடித்தியமையிஞல், பல உரிமைகளை அனு பவித்ததுடன், வரியிறுக்கும் கட்டாயத்திலிருந்தும் விடுதலை பெற் நிருந்தனர். ஆணுல், மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் விரி வடைந்ததுடன் அவர்களுடைய பரிபாலன உரிமைகளெல்லாம் படிப்படியாகப் பறிபோயின. ஈற்றில், அரசனின் தயவை நாடி, அரண்மனைப் பரிவாரங்களில் இடம் பெறலாயினர். பழைய கடமை

புரட்சிக்கு முந்திய பிரான்சு 21
களை நிறைவேற்ருதபோதிலும், தம் உரிமைகளை இன்னும் அனுப வித்து வந்தனர். உதாரணமாக, கப்பற்படை, தரைப்படை, அரசாங்கம், கத்தோலிக்க திருச்சபை ஆகிய நிறுவகங்களிலெல்லாம் உயர் பதவிகள் இவர்களுக்கென்றே பிரத்தியேகமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும், பரிசு நகரத்தில் சுகபோக வாழ்வு நடாத்துவதற்கு வேண்டிய பணத்தைத் தம் நிலங்களில் வசித்த ஏழைக் குடியிானவர்களிடமிருந்து வருத்திப் பெற்றனர். அவர்க ளுடைய ஆடம்பரமும் அகங்காரமும் மக்களின் கோபத்தை அதி கரிக்கச் செய்தன.
(5(56), T Lui (The Clergy):
உயர்பதவிகளை வகித்த குருக்கள், பிரபுக்கள் அனுபவித்த எல்லாச் சலுகைகளுக்கும் பாத் திரவாளிகளாயிருந்தனர். பிரான்சு தேசத்தின் நிலத்தின் ஏறக்குறைய ஐந்திலொரு பகுதி திருச்சபைக்கே சொந்தமாகவிருந்தரு. குருவாயம் இவ்வளவு செல்வத்தில் மூழ்கிக் கிடந்தபோதிலும், வரிசெலுத்தும் கடமையிலிருந்து விலக்குவிதி பெற்றிருந்தது.
(p67 (3 () (59.5g, 200, (Third Estate):
விசேட உரிமைகள் அனுபவித்த இரு வகுப்புக்களுக்குக் கீழ் பிரெஞ்சு சமுதாயத்தின் பெரும் பகுதி, மூன்ரும் குடித்திணை என்ற பெயருடன் இடம் பெற்றது. தொழிலாளரையும் விவசாயிகளையும் கொண்ட பாட்டாளி வகுப்பே எண்ணிக்கையில் மிக விசாலமானது நாட்டு மக்களில் ஏறக்குறைய 415 பகுதியினர் விவசாயத்தையே அண்டி வாழ்ந்தனர். ஏனைய ஐரோப்பிய நாட்டு மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பிரெஞ்சு விவசாயியின் நிலை அவ்வளவு மோசமான தன்று. இங்கிலாந்து தேசம் ஒன்றைத் தவிர, மற்றைய ஐரோப்பிய நாடுகள் மானிய முறையைத் தம் சமூக, பொருளாதார, அரசியல் அமைப்புக்களின் அத்திவாரக்கல்லாகக் கொண்டிருந்தன. அந்நாட்டு மக்களைப்போல, பிரெஞ்சு விவசாயிகள் அடிமை வாழ்வு வாழவில்லை. தாம் விரும்பிய தொழிலைச் செய்ய, தாம் மனம் வைத்த ஒரு பெண்ணை மணம் செய்ய, தடையின்றி நாட்டில் நடமாட, பொருள் களை விற்க அல்லது வாங்க உரிமை பெற்றிருந்தனர். அவர்களில் பெரும் பகுதியினர், சிக்கனத்தைக் கடைப்பிடித்துத் தமக்கெனச் சொந்தமான காணி பூமிகளையும் வாங்கியிருந்தனர். நாட்டின் நிலத்தில் ஏறக்குறைய 1/3 பகுதி இந்த விவசாயச் சொந்தக்கார ருக்கே உரித்தானதென்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆணுல், அவர்க ளது பொருளாதார நிலை, வரிக் கொடுமையினல் மிகவும் கீழ்

Page 24
22 புது உலக சரித்திரம்
நிலையை அடைந்தது. இவ்வகுப்பினர், அரசாங்கம், பிரபுக்கள், குரு வாயம் என்ற மூன்று தரத்தினருக்கும் வரியிறுக்க வேண்டிய நிர்ப் பந்தத்துக்குள்ளாயினர். அரசாங்கத்துக்கு அவர்கள் செலுத்திய வரி கள் பின்வருமாறு : •
1. காணி வரி (Taile) ஒவ்வொரு குடியானவனும், தன் நிலத் திலிருந்து பெற்ற வருவாய்க்குத் தக்க வரி செலுத்தக் கட்டாயப் படுத்தப்பட்டான். அவனுடைய வருவாய் அதிகரித்தால், வரியை வருவாயிலும் பார்க்கக் கூட்டினர். இதன் பயனுக, இவ்வரியிலிருந்து தப்ப, மக்கள் தம் வாழ்க்கைத் தரத்தைக் குறைத்ததுடன், விவசாய நிலங்களையும் பயிர் செய்யாது விட்டனர். இவ்வரி முழுத் தேசத் துக்கும் பெரும் பொருளாதார நட்டத்தை விளைவித்தது.
2. gh &sr 6) ii (Capitation or Poll tax): 66i Gola) fTC5 (g5G o 5 தின் மீதும், சமுதாயத்தில் தன் நிலைக்கு ஒப்ப வரி விதிக்கப்பட்டது. இவ்வரியை அறவாக்கும் நோக்குடன் பிரெஞ்சுச் சமுதாயம் 22 பிரிவு களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. குருமார், 1709 தொடக்கம் இவ்வரியி லிருந்து பூரணமாக விதிவிலக்குப் பெற்றிருந்தனர் பிரபுக்களும் பல் வேறு காரணங்களின் நிமித்தம் விதிவிலக்குப் பெற்றிருந்னர். பிரபுக்க ளும் குருவாயமும் கட்டாத தொகையைக் கடைசிப்படிகளிலிருந்த குடும்பங்கள் இறுக்குமாறு வற்புறுத்தப்பட்டனர்.
3. வருமான வரி (Vingtienne) வருமானத்தில் 1/8 பகுதி வரி யாக அறவ க்கப்பட்டது.
4. உப்பு வரி (Gabelle) உப்பு வியாபாரத்தின் மீது அரசாங்கம் ஏகபோக உரிமையைப் பாராட்டி, எட்டு வயதுக்கு மேற்பட்ட பிரசைகள் ஒரளவு உப்புச் சாப்பிடுதல் அவசியமெனக் கணக்கிட்டு, அதன்பிரகாரம் வரிகளை விதித்தது.
5. சுங்க வரி (Excise tax) : குடிவகை, இரும்பு, வெள்ளி, தங்கம், கடதாசி போன்ற அத்தியாவசிய பொருள்களின் மீது, அர சாங்கம் கடுமையான சுங்கத் தீர்வைகளை விதித்து வரிகளைச் சேகரித்தது.
6. (3 rä(5 6) vig 6. (Transit dues) : மாகாணங்கள் கோயில் ஆதனங்கள், பிரபுக்களின் நிலங்கள் வழியாகப் பொருள்கள் கொண்டு செல்லப்படும்போது, அவ்விடங்களில் அவ்வதிகாரிகளினல் வரிகள் அறவாக்கப்பட்டன.
இவற்றை விடத் தேவாலயத்துக்கு, விவசாயிகள் தங்கள் ஆதனங் களிலிருந்து பெறப்பட்ட வருமானத்தில் தொடக்கம் பகுதிவரை செலுத்தக் கடமைப்படுத்தப்பட்டனர்.

புரட்சிக்கு முந்திய பிரான்சு 23
அவர்கள் பிரபுக்களுக்கு இறுத்த வரிகள், எண்ணிக்கையிலும் அள விலும் மிகவும் பாரதூரமானவை. சரீர சேவை (Corwee), பொரு வளாகத் திறை செலுத்தல், பயிரிடும் நிகழ்ச்சிகளுக்கு வரி போன்றவை பிரதானமானவை. பிரபுக்களின் வேட்டையாடும் உரிமைகள் பயிர் களையும், விளைபொருள்களையும் நாசமாக்கின. பிரபுக்களினது பறவை களும் மிருகங்களும், தம் பயிர்களை நாசம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒரு கல்லெடுத் தெறிந்தாலே குற்றம். இவற்றைவிட, விவசாயிகள் தம் பிரபுவின் உவைன், கோதுமை அரைக்கும் எந்திரங்களையும் (Mil), பாண் போற %னயையும் கூலி கொடுத்து உபயோகிக்க கட்டாயப் படுத்தப் பட்ட னர். பிரபுக்களின் நிலங்களின் வழியாகச் சென்ற தெருக்கள், கால் வாய்கள், பாலங்களின் உபயோகத்துக்கும் தீர்வை கட்ட வேண்டி யிருந்தது. இப் பேர் ப் பட் ட தீர்வைகள் இன்னும் பலவுள. இவ்வாறு வரிக்கொடுமை, வி வ ச |ா யி க ளின் கழு த் தி ல் ஒரு பாரக்கல்லைப் போலக் கட்டப்பட்டிருந்தது. விவசாயமே மக்களுக்கு ஒரு பயனற்ற தொழிலாயிற்று. பட்டின வாசிகளும் கிராம வாசி களும் எந்நேரமும் பஞ்சத்தின் வாயிலிலேயே நின்றனர்.
56. Gje, ju (Middle Class) :
நியாயவாதிகள், நீதிபதிகள், வைத்தியர்கள், அரசாங்க சேவை யாளர்களைக் கொண்ட நடு வகுப்பினர், தொழில், வர்த்தகத் துறை களில் முன்னேற்ற மடைந்தவர்களாகவும், செல்வந்தர்களாகவும், அறிவாளிகளாகவும், இவ்வளவு வரிகளும் இறுக்க வேண்டிய நிர்ப் பந்தமற்றவர்களாகவும் காணப்பட்டனர். நாட்டுப் புற ங் களி ல் வாழ்ந்த நியாய வாதிகளைவிட, ஏனைய நடு வகுப்பினர், பெரும் பாலும் பட்டினங்களில் வாழ்ந்து வரலாயினர். பட்டினங்களுக்கு, அவற்றின் செல்வத்துக்கும் நிலைக்கும் தக்க உரிமைகள் வழங்கப்பட் டன. இவ்வுள்ளூர் நகர ஆட்சிச் சபையில் அல்லது தொழிற் சபை களில் அங்கம் வகித்தவர்கள், ஏனைய பிரசைகளிலும் பார்க்கக் கூடுத லான சலுகைகளுக்குப் பாத்திரவாளிகளாயினர். 14 ஆn இலூயி காலம் தொடக்கம் பிரான்சில் புதுக் கைத்தொழில்களும் வாணிபமும் வளர்ந்து வந்தமையில்ை நகரவாசிகள் எண்ணிக்கையிலும், செல்வத் திலும் மேன்மை பெற்று வரலாயினர். நல்ல வருமானம் தரக்கூடிய உத்தியோகங்களெல்லாம் இவர்களாலேயே நிரப்பப்பட்டன நியாய வாதிகள், நீதிபதிகள், அரசாங்க அலுவலாளர், பண முதலாளிகள் வங்கி நிர்வாகிகள், வர்த்தகர் எல்லோரும் நடு வகுப்பினரைச் சேர்ந் தவர்கள். அறிவும், சிக்கனமும், முயற்சியும் படைத்த இவ்வகுப்பினர் நாட்டில் பெரும் சக்தி வாய்ந்தவர்களாகக் காணப்பட்டனர். அர

Page 25
24 புது உலக சரித்திரம்
சாங்கத்துக்கும் பிரபுக்களுக்கும் கடன் கொடுத்த இவர் க ள், நிலம் படைத்த தனவந்தரிலும் பார்க்கப் பன்மடங்கு செ ல் வந்த ராயினர். தம் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற பங்கு, சமுதாயத் திலோ, அரசாங்கத்திலோ, கிடைக்காததையிட்டு மனம் புழுங்கினர். பிரபுக்கள், பிறப்பு என்ற ஒரேயொரு உரிமையினுல் உயர் பதவி களைப் பெறுவதைக் கண்டு பொருமை கொண்டனர். அக்காலத்திய புரட்சிவாத இலக்கியங்களினல் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களும் இவர் கள் தாம். இவ்வகுப்பிலிருந்தே புரட்சியின் பிரதான த லை வர் க ள் தோன்றினர்.
இராணுவத்திலும், குருவாயத்திலும் பூசல்கள் :
மக்களின் அதிருப்தி இவற்றேடு நின்று விடவில்லை. இராணுவத் திலும், குருவாயத்திலும் ஏராளமான பூசல் கள் காணப்பட்டன. 1789 ஆம் ஆண்டின் இராணுவத்தினதும், கீழ் நிலைகளிலிருந்த குருக் களினதும் ஆதரவைப் பெற்றிராவிட்டால், மக்களின் புரட்சி தோல் வியில் முடிந்திருக்கும். இராணுவத்தின் எல்லா வரிசைகளிலும் சன நாயகக் கருத்துக்கள் பரவி, அதிருப்தியை வளர்த்தன. கடின கட்டுப் பாடு, கூடா உணவு, குறைந்த வேதனம் என்பவற்றைப் போர் வீரர்கள் விரும்பவில்லை ; தமக்கு உயர் பதவிகள் மறுக்கப்பட்டதை யிட்டும் மனம் நொந்தனர்.
இதே விதமான பிரிவினைகள் குருவாயத்திலும் காணப்பட்டன. ஒரு பக்கம் பிரபுக்கள்  ெமிசத்திலிருந்து உதித்த உயர் அதிகாரிகள், செல்வத்திலும் சுக போகத்திலும் திளைத்ததனர். மறுபுறம் மூன்ரும் வகுப்பிலிருந்து எழுந்து, கீழ்ப்பதவிகளை நிர்வகித்த பங்குக் குருக்கள் சீவனுேபாயத்துக்கே போதிய வருவாயற்ற வறுமையில் வாழ்ந்தனர். மத்திய, விவசாய வகுப்புக்களிலிருந்து உதித்தமையினலும், அவ ர்கள் மத்தியிலேயே தம் வாழ்நாளை செலவிட்டதனலும் இக்குரவர் களின் அனுதாபம் பூராகவும் மூன்றங் குடித்திணையிலேயே நிலைத்து நின்றது.
நிதி பரிபாலனம் :
மேலே கூறப்பட்ட பிரான்சு தேசத்தின் சீர்கெட்ட அரசியல் முறை, சமனற்ற வரி விகிதங்கள், மூ வகுப்புகளுக்கிடையே எழுந்த விரோதங்கள்-இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை மூல காரணம் ஒழுங்கற்ற நிதி பரிபாலனமாகும். புரட்சியின் ஆரம்பத்திற்குரிய மறைமுக காரணமும் உடன், காரணமும் இதுவே. பரிசுப்-பாராளுமன் றம்புதிதாக விதிக்கப்பட்ட வரிகளை அங்கீகரிக்க மறுத்ததினுல் பொது நாட்டுச் சபை (States General) அழைக்கப்படவேண்டியதாயிற்று.

புரட்சிக்கு முந்திய பிரான்சு 25
14 ஆம் இலூயி 73 வருடங்களுக்கு ஆட்சி புரிந்தார். அவரது ஆட் சிக் காலத்தில் புதுக் கட்டடங்களை நிர்மாணிப்பதிலும், போர்களிலும் செலவிடப்பட்ட பணம், நாட்டின் நிதி நிலைமையை நாசமாக்கியது. இந் தியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா முதலாம் நாடுகளிலிருந்த குடியேற்றங் கள் இழக்கப்பட்டமையினல் வருவாய் குன்றியது. இவருக்கு ப் பின் அரசேறிய இரு.அரசர்களின் காலங்களில், ஒவ்வொரு யுத்தமும் ஒரு நிதி நெருக்கடியை உண்டு பண்ணியது. கடைசி யுத்தம், அரசியற் கொந்த ளிப்புடனும், பஞ்சத்துடனும் ஒரே காலத்தில் ஏற்பட்டதனல், நெருக் கடி புரட்சியாக மாறிற்று.
16 ஆம் இலூயி அரசேறிய காலத்தில், பிரான்சின் இறைசேரி வெறுமையாகவும், வருவாயின்றியும், புது வரிகள் மூலம் அதை நிரப்ப வழியின்றியும் அல்லற்பட்டது. ஒரு புறம் முதலாம், இரண் டாம் வகுப்பினர் புது வரிகளை இறுக்க மறுத்தனர்; மறுபுறம் மூன்ரும் குடித்திணையினர், தங்கள் மீது சுமத்தப்பட்ட வரிச்சுமையைத் தாங்க முடியாது தவித்தனர். இதனல் எழுந்த பிரச்சனை மிகச் சிக்கலானதுபண வருவாயை அதிகரிக்க வேண்டும்; அதே நேரத்தில் மூன்ரும் குடித்திணையினரின் வரி விகிதங்களைக் குறைக்கவேண்டும். இச் சங்கட மான நிலையைச் சமாளிப்பதற்கு, ஒரேயொரு வழிதானிருந்தது. விசேட சலுகைகளையனுபவித்த வகுப்பினரை மூன்ரும் குடித்திணையைப் போல, சம வரிகள் இறுக்கக் கட்டாயப்படுத்தியிருந்தால், நெருக்கடி நீங்கியிருக்கும். அதைவிட வேறெந்த உபாயமும் புரட்சியைத் தற் காலிகமாகப் பின்போட்டிருக்குமேயொழிய, அதை நிரந்தரமாக த் தீர்த்திராது.
18 ஆம் நூற்றண்டு பிரான்சு தேசத்து அரசாங்க நிருவாகம் வரவு செலவுத் திட்டங்களின்றியே நடைபெற்றது. வருடா வருடம் எவ்வளவு பணம் சேகரிக்கப்பட்டது, எவ்வளவு பணம் செலவிடப் பட்டது, எனும் விபரங்களைக் காட்டும் திட்ட்ம் ஒன்றுமே தயாரிக்கப் படவில்லை. ஒரு கை ஆற்றிய கருமங்களை மற்றக்கை அறியாத வித மாக நிதி நிருவாகம் நடைபெற்றது. எனவே, இத்துறையில், ஒழுங் கீனம், களவு, மிதமிஞ்சிய செலவு எனும் ஊழல்கள் ஏராளமாக மலிந்து கிடந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அரசாங்கத்தின வருவா யில் அரைவாசியை வருடா வருடம் கடனுக்காக ஒதுக்க வேண்டியதா யிற்று. கடனும் பிரதி வருடமும் வளர்ந்து கொண்டு வந்ததே தவிர, குறைந்த பாடில்லை. கடனையிறுத்தபின் மிகுதிப் பணம் அடிப்படைத் தேவைகளுக்கே போதாமற் போயிற்று. இறைசேரி வெறுமையானதுடன், கடன் வாங்கும் புது வழிகளும் மறைந்தன. அடுத்த வருடத்து வரு மானத்தை ஏற்கனவே செலவு செய்யும் முறை வழக்கமாயிற்று. போதிய நியாயமின்றி, உத்தியோகங்கள் சிருட்டிக்கப்பட்டு ரொக்கப்
- F - 4

Page 26
26 புது உலக சரித்திரம்
பணத்துக்கு விற்கப்பட்டன. பட்டங்கள், பதவிகள், நகர உரிமைகள் விலைக்கு விற்பனையாயின. இவற்றை வாங்குவோர், வரியிறுக்கும் கடமை யிலிருந்து விடுதலை பெற்றனர். மூன்ருங் குடித்திணையினர் சுமந்த வரி கள் ஒரு பக்கமிருக்க, வரி அறவாக்குவதற்கு மேற் கொள்ளப்பட்ட முறைகளின் கொடூரம் சொல்லி முடியாது. பல வரிகள் ஏலத்தில் விற் கப்பட்டன. ஏலத்தை வாங்கினேர், அரசாங்கத்துக்கு இறுத்த பணத் தொகையைப் பொது மக்களிடமிருந்து வசூலிக்க அதிகாரம் பெற்ற னர். இவர்களிடமிருந்து அறவாக்கப்பட்ட வரியில் ஒரு சிறு பகுதியே அரசாங்கத்திடம் போய்ச் சேர்ந்தது. சில வரிகளைச் சேகரிக்கச் செல வான பணம், வரியிலிருந்து வந்த வருவாயிலும் பார்க்க அதிகமானது.
மன்னனின் வல்லாட்சி :
முடியாட்சியின் சர்வாதிகாரம் எவ்வித கட்டுப்பாடுமின்றி நாட்டில் நிகரற்ற தனி ஆட்சி செய்யும் வல்லபம் படைத்து நின்றது. நாட்டின் நிருவாக, நீதி, சட்ட வாக்கத் துறைகளில், அரசர் ஆட்சேபனைக்கு இடமற்ற ஏகபோக அதிகாரங்களை அனுபவித்து வந்தார். போர்ப் பிரகடனம் செய்யவும், வரிகளை விதிக்கவும், பிரதான வழக்குகளை விசாரணை செய்யவும் - இவைமுதலான நினைத்தவற்றைச் செய்து முடிப்பதற்கு வேண்டிய அதிகாரம், அவரது கைகளிலேயே குவிந்து கிடந்தது. மாகாணங்களை ஆட்சி செய்வதற்குரிய அதிகாரிகளை (Intendants) அவரே நியமித்தார். இவர்கள்தான் பிரெஞ்சு மாகாண ஆட்சியின் தணியதிகாரம் படைத்த அதிபதிகள். “இத்தேசம் 30 மாகாண அதிகாரிகளினலேயே ஆட்சி செய்யப்படுகிறது' என ஒர் அவதானி ஆச்சரியத்துடன் எழுதினர். நெ ப் போ லி ய ன் காலத்தில் நியமிக்கப்பட்ட பிறீபெக்ற் Prefects)களைப் போல் இவர்க ளும் அதிகாரம் படைத்தவர்கள். இவ்வாறு அரசாங்க அதிகாரத்தின் பெரும் பகுதியை, இப்பேர்ப்பட்ட ஏராளமான அலுவலாளர்கள் தமதாக்கிக் கொண்டனர். ஒருகாலத்தில் பொது நாட்டுச் சபை என்ற அவை யாருக்கிருந்த சட்டமியற்றும் அதிகாரம் 1614 க்குப் பின் மறைந்துவிட்டது.
அதற்குப்பின் தேசச் சட்டங்கள் அரச கட்டளைகளினல் ஈடு செய்யப்பட்டன. நீதி நிருவாக அதிகாரம் அரச சபையினுலும் (King’s Council) பிரதான , நகரங்களில் இடம்பெற்ற அரச நீதித் தலங்களினலும் நடாத்தப்பட்டன. இப்படியான ஒர் அமைப்பின் கீழ் ஒழுங்கீனங்கள் அதிகரிக்கவும், முடியின் அதிகாரம் சர்வாதிகார அடிப்படையில் இயங்கவும் போதிய வாய்ப்பிருந்தது. அரசாங்க அதிகாரத்தை கட்டுப்படுத்தவல்ல எவ்விதமான சக்தியும் நாட்டி வில்லை.

புரட்சிக்கு முந்திய பிரான்சு 27
இப்பேர்ப்பட்ட நிருவாக, சட்டவாக்க, நீதி நிருவாக அதிகாரங் களை உருவாக்கி, நிரைப்படுத்தும் முயற்சிகளுடன் அரசரின் சக்தி வீண் விரயம் செய்யப்பட்டு, சோர் வேற்பட்டது. இவ்வளவு அதி காரங்கள் இருந்தபோதிலும், அரசர் தேவையான நேரத்தில் சமூக, நீதிச் சீர்திருத்தங்களை ஆரம்பிக்கவோ, முதலாம், இரண்டாம் வகுப் பினரின் மானிய, நிதி உரிமைகளில் கை வைக்கவோ வல்லப மற்றவராயிருந்தார். நிதியறவு நிலையில்கூட, வரியுரிமைகளை நிரா கரிக்க முடியாமற் போயிற்று. இதற்குப் பதிலாக, மானக்கேடான யோக்கியமற்ற, புது உத்தியோகங்களை சிருட்டித்து விற்றல்போன்ற வழிவகைகளைக் கையாண்டார். அரசரின் சாமர்த்தியமும், இறைசேரி யும் மறுபடி வெறுமையானவுடன், முந்தின அரசரினல் அநுமதிக்கப் பட்ட பட்டங்களையும் நகர உரிமைகளையும் நிராகரித்து, திரும்பவும் அவற்றை விற்க அரச கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன.
இத்தகைய அமைப்பின் கீழ் ஒப்பின்மை எழுந்தது ; அரசனின் அதிகாரம் வல்லாட்சியாக மாறியது. பிரதிநிதித்துவ ஆட்சி முறை யின் கீழ் நிலவுவது போன்று, அரசாங்கத்தின்மீது எவ்வித கட்டுப் பாடுகளும் இல்லை. அரசாங்கத்தை கண்டிக்க வாய்ப்புக்களில்லை; பத் திரிகைகளுக்கு சுதந்திரமில்லை; தனிமனித னின் உரிமைகளுக்கு உத்தர வாதமில்லை ; ஆளுரிமைக் கட்டளைக்கு (Habeas Corpus) இடமே யில்லை. சலுகைகள், தனி உ ரி  ைம க ள், விதி விலக்குகள்தான்-- ஒழுங்கான சட்டமல்ல--பிரெஞ்சுச் சமுதாயத்தின் அடிப்படை தற் காலிக வழிவகைகள்தான் --உறுதியான கொள்கைகளல்ல--அந்நாட்டு அரசர்களின் மேற்கோள். எனவே புரட்சிவாதிகள் முதல் கோரிக்கை யாக ஒர் “அரசமைப்பை" ஆசித்ததில் ஆச்சரியமில்லை. ஏனெனில் இதன் வழியாக அவர்கள் நாட்டில் ஒழுங்கும், சீரும் வரம்புமுடைய ஓர் ஆட்சியை ஏற்படுத்த எத்தனித்தனர்.
2. தத்துவஞானமும் புரட்சியும்
இத்தகைய அதிருப்தி நிறைந்த சமுதாயத்தின் மத்தியில் எழுத் தாளர்கள், சிந்தனையாளர், தத்துவஞானிகள் மக்களை ஊக்குவித்தும் குறைகளைச் சுட்டிக் காட்டியும், நீண்ட காலமாக சமுதாயத்தை ஒன்று படுத்திய பரம்பரை வழக்கங்களைச் சிதைத்தும், அவர்களது மனத் தாங்கல்களை உரத்து வெளியிட்டும், சீர்திருத்த இயக்கங்களுக்குத் தலைமை தாங்கியும், அவர்களுக்கு ஒரு புது நம்பிக்கையைக் கொடுத்தும் புரட்சிக்கு வழி வகுத்தனர். நகைச்சுவை, கேலிப் பேச்சு, விமரிசனம் செய்தல், ஒப்பிடுதல், விஞ்ஞான ரீதியில் ஆராய்தல், சமுதாய க் கொள்கைகள், வசை மாரி--சகல வகைகளிலும், பிரான்சின் அரசியல்

Page 27
28 புது உலக சரித்திரம்
சமுதாயம், மதம் எனும் துறைகளில் உள்ள சீர்கெட்ட நிலைமையை அம்பலப்படுத்தினர். இவ்வெழுத்தாளர்கள், நிர்வாகத்தை நடாத்து வதில் ஏற்படக் கூடிய நடைமுறைச் சிக்கல்களை உணராத காரணத் தில்ை, இப்புது சனநாயகத்தின் இலக்கியமானது, பொதுத் தத்துவங் களினலும், தீவிர உணர்ச்சிகளினுலும், கற்பனைக் கொள்கைகளினுலும், கடுமையான தர்க்க சாத்திர (Logic) கொள்கைகளிலுைம், சூத்திரங் களினலும் ஆட்கொள்ளப் பட்டமையினல், அவை அரசியல் திட்டங்களை உருவாக்குவதற்கு பொருத்த மற்ற, நடை முறைக்கு சாத்தியமறற ஆதாரமாக அமைந்தன. அதற்கு எதிர் மறையாக, இத்தன்மை அர சாங்கத்தை தகர்த் தெறிவதற்கு வேண் உப தலை சிறந்த வெடி மருந் தாகப் பயன்பட்டது. “ஒரு தேசம் சிந்திக்கத் தொடங்கி விடுமானல், அதன் வேகத்தை நிறுத்த ஒருவராலும் முடியாது’ என்று கூறினர் வோல்த்தேயர். சிந்த%னயிலிருந்து தான் செ ய ல் பிற க் கிற து. சுதந்திரத்தைப்பற்றி சிந்தனை செய்ய ஆரம்பிப்பவர்களே ஈற்றில் அவ் வின்பத்தைப் பெற முடியும். LDITáTG) a č, šu, (Montesquieu :
பல வகைப்பட்ட எழுத்தாளர்களும் பிரெஞ்சுப் புரட்சியை ஆயத் தப் படுத்தினர். நூற்ருண்டின் ஆரம்ப காலத்தில் மான்டெசுக்கியூ (1689-1755) திருச்சபையின் முறைகளையும், அரசாங்கத்தின் சர்வாதி காரத்தையும் எடுத்துரைத்தார். மான்டெசுக்கியூ, ஒரு புரட்சிவாதியின் கொள்கைகளையோ மனப்பான்மையோ, கொண்டவரல்ல. உண்மையில் அவர் ஒரு அரசுவாதியும் கத்தோலிக்கருமாவர். “சட்டங்களின் சாரம்' (Spirit of the Laws) எனும் நூலில் பல தேசங்களினது அரசியல் அமைப்புக்களை ஆராய்ந்து, ஒப்பிட்டுப் பார்த்து, இங்கிலாந்து தேசத் தின் யாப்புறுமுடியாட்சி முறையில் சுதந்திரமும், சமத்துவமும் காணப் பட்டதென்று கூறினர். இவ்வாராய்ச்சியின் பயனக, வலுவேருக்கம் (Separation of powers) எனும் ஒரு புதுக் கொள்கையையும் வெளி யிட்டார். ஓர் அரசாங்கத்தின் அதிகாரத்தை, நிருவாகம், சட்டவாக் கம், நீதி பரிபாலனம் எனும் முப்பிரிவுகளாகப் பிரிக்கலாமென்பதும், இம் மூன்று உறுப்புக்களும் வெவ்வேறு அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப் படலா மென்பதும் அவரின் அடிப்படையான கொள்கையாகும். இவை, ஒன்ருேடொன்று தொடர்பின்றி, சுயேச்சையுடன் வேலை செய்தால்தான் குடிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பது அவரது நம்பிக்கை.
Goirt do g6 guir (Woltaire) :
18 ஆம் நூற்றண்டின் மத்தியில், ஐரோப்பாவில், தனிப்பட்ட
மதிப்பும் கீர்த்தியும் பெற்று விளங்கினவர் வோல்த்தேயர்(1694-1778)
கேலிப் பேச்சு எழுதியதற்காக, பசிதில் (Bastile) சிறைச்சாலையின்

புரட்சிக்கு முந்திய பிரான்சு 29
உள்ளறையைக் கண்டவர். மகா பிரடெரிக் அரசரின் மேன்மை தங் கிய விருந்தாளியாக நீண்டகாலம் இருந்து, ஓய்வு பெற்றபின் இருபது ஆண்டுகளாக, ஐரோப்பா மீது தன் பேனையிலிருந்து பிறந்த பரிகாசங் களையும், சவால்களையும், கண்டனங்களையும் கட்டவிழ்த்து விட்டார். ஈற்றில், நீண்ட காலம் நாடு புறம்போக்கப்பட்டு, பின் தா ய கம் திரும்பி, அவர் மகிமையின் உச்சநிலையில், காலமானர். பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் புரட்சிவாதிகள் அவரதும் உரூசோவினதும் பூத வுடல்களை பந்தியன் (Pantheon) என்ற இடத்தில் நல்லடக்கம் செய் தனா.
வோல்த்தேயர் ஒர் சலிக்காத எழுத்தாளர், கவிஞன், சரித்திரா சிரியர், தத்துவஞானி, நாடகாசிரியர், பத்திரிகை நிருபர், எல்லாவற் றிற்கும் மேலாக ஒரு நகைச்சுவை எழுத்தாளன். அரசாங்கத்தின் தனி ஆட்சியையும், கத்தோலிக்க திருச்சபையின் மதாதிபத்தியத்தையும் வன்மையாகக் கண்டித்தவர். அவர் விசேடமாக கத்தோலிக்க சமய எற்பாடுகளைப் பலமாக எதிர்த்து, இவை வேரோடு தகர்த்தெறியப் பட்டால்தான் நாட்டில் நீதியும், அறிவும் ஏற்படுமென்றர். குடி யாட்சிக் கருத்துக்களையும் ஒரளவு ஆதரித்தார். சட்டசபை, தேர்தல் கள், பத்திரிகைகளின் சுதந்திரம் என்பவற்றிற்காகவும் வாதாடினர்.
p (5(3& T (Rousseau) :
உரூசோ (1744-1810), 18 ஆம் நூற்றண்டின் க ற் பணு சக்தி நிறைந்த மேதாவி--அடிமைப் படுத்தப்பட்டோருக்காக உண்மையான அனுதாபமும் ஊக்கமும் காட்டியவர். அவரது நூல்களினல், விசேட மாக “சமூக ஒப்பந்தம்' எனும் நூலிலிருந்து பிறந்த அரசியல் செல் வாக்கு, பிரான்சை மட்டுமன்றி ஐரோப்பாவையும் ஆட்கொண்டது. உரூசோ, மனிதனின் இயற்கை நிலையைப் பெரிதும் புகழ்ந்து பாராட் டினர். சமூக அரசியல் அமைப்புக்கள், இவ்வியற்கை ம னி த னின் சுதந்திரத்தைச் சிதைத்து, விலங்குகளை அவன் மீது மாட்டியுள்ளன. “மனிதன் சுதந்திரத்துடன் பிறக்கிறன். ஆனல் எங்கும் அடிமைச் சங்கிலிகளினல் கட்டுண்டு கிடக்கிருன்” என்ருர். எனவே, மனிதன் செயற்கைக் கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்து, பொற்காலமாகிய பண்டைய உரிமைக்காலத்துக்குத் திருப்பிச் செல்ல வேண்டுமென்பது அவரது சித்தாந்தம். சட்டங்கள், சமுதாயத்தினது “பொதுச் சம் மதத்தை' பிரதிபலிக்க வேண்டும். மக்கள் தம் நலனைக் கருத்திற் கொண்டு, ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டமையினலேயே அரச சிருட்டிகள் தோன்றினர்; அரசர், தன் குடிகளின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொடுக்க கடமைப்பட்டவர். பிரெஞ்சு மக்கள் தம்

Page 28
30 புது உலக சரித்திரம்
உரிமைகளை இழந்து நின்றதனல், ஒப்பந்தம் பங்கப்படுத்தப்பட்டது. அரசன் மக்களின் விசுவாசத்தை இழந்துவிட்டார். எனவே, மக்கள் அரசருக்கெதிரே புரட்சி செய்ய உரித்துடையவர்கள். இவ்வகையான போதனைகள்தான், பிரான்சில், முடியாட்சியைச் சிதை க்க வழி வகுத்தன.
உரூசோவின் நூல்கள், நாட்டில் தலைவிரித்தாடிய தீங்குகளை பல மாக ஆட்சேபித்தன. ஆட்சிப்பீடத்தில் அமர்பவர்கள், தம் கடமை களை சரிவர உணர்ந்து நடக்கவேண்டும் ; அரசனின் சிரத்தை நாட் டின் நலனிலிருந்து பிரிந்து நின்றதனலும், பிரபுக்களும், குருவாய மும் தம் கடமைகளைச் செய்ய மறுத்ததனுலுமே--அதாவது சமூக ஒப்பந்தம் முறிந்துவிட்டதனல்தான், பிரெஞ்சு மக்கள் துன்பப்பட்ட னர், என்று சமூக ஒப்பந்தக் கொள்கை கற்பித்தது. இக்கொள்கை கள் வலிமையுடனும், கற்பனையுடனும், தர்க்க ரீதியாகவும் நிரூபிக் கப் பட்டதனுல் துன்பப்பட்டவர்களும், ஏமாற்றமடைந்தவர்களும் அவற்றின் தீவிரவாதத்தில் உணர்ச்சியையும், ஆட்சே பனை களி ல் தைரியத்தையும், அதன் வாக்குறுதியில் நம்பிக்கையையும் கண்டனர். மான்டெசுக்கியூ, வோல்த்தேயர், உரூசோ என்ற மூவருமே அக் காலத்தின் தலைசிறந்த அறிஞர்கள். அவர்களின் உயர்நிலைக்கு குறைந்த படியில் டிடருே (Diderot) டி அலெப்பெட், 1750 க்குப்பின் வெளி வந்த கலைக்களஞ்சியத் (Encyclopaedia) தின் ஆசிரியர்கள், பொரு ளாதார விற்பன்னர்கள் (Physiocrats) அனைவரும் நாட்டின் சீர் கெட்ட நிலையை எடுத்துரைத்தனர்.
3. 16 ஆம் இலூயி மன்னன்
1774 ஆம் ஆண்டு மே மாதம், 15 ஆம் இலூயி வைசூரி நோயாற் பீடிக்கப்பட்டு காலமானுர், நற்குணமும் அறிவு ஆற்றலும் மிக் க , 20 வயது நிரம்பிய இளம் அரசரை பிரெஞ்சு மக்கள் கரகோசத் துடனும் நம்பிக்கையுடனும் வரவேற்றனர். 16 ஆம் இலூயி அர சேறியபோது, பலர் காலத்தின் புரட்சிக் கோலத்தையும், சீர் திருத் தங்களை வற்புறுத்தும் இயக்கங்களையும் காணலாயினர். பி ரா ன் சு தேசம், இலூயி மன்னனிடம் ஓர் அரசரை மாத்திரமல்ல, ஒர் இரட் சகரையே எதிர் பார்த்து நின்றது. ஆனல், அதே நேரத்தில் இலூயி அல்ல, எந்த மனிதனுவது அப்பேர்ப்பட்ட பதவியை நிர்வகித்திருக்க முடியாதென்பதும் வெளிப்படை.
இலூயி மன்னனிடம் பல நற்குணங்களும், நல்லெண்ணங்களும் காணப்பட்டபோதும், அவர் அரசாட்சி செய்வதற்கு தகுதியற்றவர். சுகபோக வாழ்விலோ, அன்றேல் அரண்மனையின் ஊழல்களிலோ, அவர்

புரட்சிக்கு முந்திய பிரான்சு 3.
நாட்டங் கொள்ளவில்லை. உண்மையில், குடிகளின் அவல நிலையைச் சீர்திருத்த வேண்டுமென மனமார ஆசித்தார். இக் கருத்தை மனதிற் கொண்டே, தகுதியுடையவர்களை அமைச்சர்களாக நியமித்தார். ஆனல் நற்குணங்கள் மாத்திரம் ஓர் நல்ல அரசனை உருவாக்க மாட்டா. வல் லாட்சி செய்வதற்கு திடமான உறுதியும், தளராத தீர்மானமும் இன் றியமையாத இலட்சணங்களாகும். ஆனல், இலூயி மன்னனிடம் இவ் வாற்றல்கள் கடுகளவுமில்லை. அத்துடன் இயற்கையில் விவேகம் குறைந் தவர். திடமான நடவடிக்கை எடாது தடுமாறும் தன்மையுடைய வர் ; மனைவியினதும், நண்பர்களினதும் சொல்லைக் கேட்டு, தானிட்ட திட்டத்தைப் பல முறையும் மாற்றம் செய்வது அவரது இயல்பு ; இராச்சிய விவகாரங்களில் நாட்ட மற்றவர் ; வேட்டையாடுவதில் அவருக்குத் தனிப் பிரியம். உற்சாகத்துடன் வேட்டையாடிக் களைப்புற்ற நேரத்தில், அமைச்சர் சபைக் கூட்டங்களுக்கு சமுகம் கொ டு த் து, ஆழ்ந்த நித்திரை செய்வார்.
மாரி அன்டனெட் :
அரசேறுவதற்கு 4 வருடங்களுக்கு முன், ஒசுத்திரிய நாட்டு மறிய தெறேசாவின் மகளாகிய மாரி அன்டனெட்டை (Marie Antonette) மணம் புரிந்திரிந்தார்.
1774 ஆம் ஆண்டு, 19 வயது நிறைந்த மாரி அன்டனெட் அரசனி லும் பார்க்க அதிகமான ஆண்மையும் புருடத்துவமும் படைத்த வள்; கணவனின் வழியாக நாட்டு விவகாரங்களில் அதி உன்னத செல்வாக்கைச் சம்பாதித்துக் கொண்டாள். அரசி, அழகும், வசீ கரமும், இரக்கமுள்ள நெஞ்சமும் படைத்தவளாயினும், அரசியல் அனுபவமும் அரசியல் அறிவும் அற்றவள். அவளை நண்பர்கள் ஏமாற்றி, சுயநலவாதிகள் தம் கருமங்களைச் சாதித்துக் கொண்ட னர். இறுதி வரைக்கும் நாட்டினதும், காலத்தினதும் விபரீதப் போக்கை அறியாதவளாகவே வாழ்ந்தாள்.
ஒசுத்திரிய நாட்டுடன் தொடர்புபூண்டிருந்த மாரி அன்டனெட், பிரெஞ்சு மக்களின் அன்பையோ ஆதரவையோ சிறி தளவும் பெற வில்லை. ஏழாண்டுப்போரில் பிரான்சு, இந்திய, அமெரிக்க இராச்சி யங்களை இழந்ததுடன், இரண்டாவது தர வல்லரசின் நிலையை எய்தி யமைக்கு, ஒசுத்திரிய நாட்டுடன் கொண்ட நட்பே காரணமென்ற எண்ணம் மக்கள் மனதில் நிலவியது. இக்காரணங்களைக் கொண்டு, மாரி அன்டனெட் பிரான்சு, தேசத்தின் விரோதியென்றே மக்கள்
கீர்ப்பக்கட்டினர்.

Page 29
52 புது உலக சரித்திரம்
சீர்திருத்தங்களின் ஆரம்ப காலம் :
20 ஆண்டுகளுக்குள், தம்மக்களின் கையினலேயே மரணிக்க விதிக் கப் பெற்ற அரசனும் அரசியும், அதி உன்னத நல்லெண்ணங்களு டனேயே சிம்மாசனம் ஏறினர். மக்களின் துயரங்களைக் கேள்விப் பட்ட அவர்கள், வரிச்சுமையைக் குறைக்கும் நோக்குடன் பல உரி மைகளைக் கை நெகிழ விட்டனர். இலூயி நியமித்த புது அமைச்சர் களில், டேர்கோ அதிசிறந்த சீர்திருத்தவாதி. அவரை விடச் சிறத்த ஒரு நிதியமைச்சரைச் சீர்திருத்த வாதிகள் தன்னும் தெரிந்தெடுத்திருக்க முடியாது. உண்மையில், இலூயி தன் அரசாட்சியின் முதல் ஏழு வருடங் களில், அமைச்சர்கள் வழியாக உண்ணுட்டுச் சீர்திருத்த மேற்கொள் ஒன்றைக் கடைப்பிடிக்கவும், மக்களின் துயரங்களைத் துடைக்கவும் அயராது முயற்சி செய்து வரலாயினர்.
Guff (35 T (Turgot) (1774—76) :
டேர்கோ, நிதி மந்திரியாக கடமையாற்றிய 20 மாத காலத்துள், நிலைமை ஓரளவு அபிவிருத்தியடைந்தது. மிதமிஞ்சிய செலவுகளையும், கைக்கூலி முறைகளையும் கட்டுப்படுத்தி, அதி கொடூரமான வரிகளில் சிலவற்றை நீக்கினர். இன்னும் பிரான்சு தேசத்தினது கடனிலும் ஒரு பகுதி தீர்க்கப்பட்டது. அரசாங்க சேவை, தொழில், வியாபாரம், கப்பற்படை, தரைப்படை ஆகிய துறைகளில் முன்னேற்ற நடவடிக்கை கள் மேற் கொள்ளப்பட்டன. 1776 ஆம் ஆண்டு, பொது மக்கள் சரீர சேவை (Corwee) செய்வதை யொழித்து, இதற்குப் பதிலாக வகுப் புப் பாகுபாடின்றி, எல்லோரும் ஒரு நிலவரி இறுக்க வேண்டு மென்று ஒரு திட்டத்தை வகுத்தார். அரசன் தனது சம்மதத்தைக் கொடுத் தார். ஆனல் மாரி அன்டனெட்டும் பிரபுக்களும் இத் திட்டத்தை பலமாக எதிர்த்தனர். தாங்கள் இது காலம் வரை அனுப வித் த சலுகைகளுக்குப் பங்கம் ஏற்படப் போவதைக் கண்டு அஞ்சி, டேர் கோவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிடுமாறு கட்டாயப்படுத்தினர். அவர்களது பலாத்காரத்தை மேற் கொள்ள முடியாத அரசன், தனது சொந்த விருப்பத்திற்கு மாருக, டேர்கோவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினர்.
G 5š 5 (Necker) (1776-78) :
டேர்கோவை அடுத்து, முற்போக்குக் கொள்கைகளுடைய சுவிற் சலாந்து தேசத்து நெக்கர், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர், நாட்டின் பொருளாதாரக் கருமங்களில் டேர்கோவிலும் பார்க்கக் கூடு தலான சிக்கன வழிவகைகளைக் கடைப்பிடித்தார். ஆணுல் இங்கிலாந்

புரட்சிக்கு முந்திய பிரான்சு 33
துடன் ஆரம்பித்த போரின் காரணத்தினல் கட்டுப்பாடுகளை மீறிச் செலவு அதிகரித்தது. நேர் முகமாகவும், மறை முகமாகவும் கடன் வாங்கும் நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாததாயிற்று.
நெக்கர் வேறுசில சீர்திருத்தங்களையும் மேற்கொண்டார். அரச னுடைய நிலங்களில் அடிமைகளாக வாழ்ந்த குடியானவர்களை விடு தலை செய்வித்தர்ர். அரசரின் மானிய முறை உரிமைகளில் சில கைவிடப்பட்டன. மகோண சபைகள் அமைப்பதில் ஊக்கம் காட்டி ர்ை. புரட்டத்தாந்தருக்கு பூரண சமூக உரிமைகளை வழங்குமாறு சிபார்சு செய்தார். டேர்கோவின் பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்ந்து அனுட்டித்தார்.
டேர்கோவை பதவியிலிருந்து நீக்குவதற்குக் காரணமாகவிருந்த அதே சத்திகள் அரண்மனைப் பரிவாரங்கள், திருச்சபை, பரிசுப் பாராளுமன்ற அங்கத்தினர், வரிகளை ஏலத்தில் வாங்கியவர்கள், பணம் கடன் கொடுத்தவர்கள்--யாவரும் நெக்கரையும் வீழ்த்தச் சூழ்ச்சி செய்து, அரசியின் மூலம், அரசரைத் தம் விருப்பப்படி நடக்கு மாறு இணங்கச் செய்தனர். இவர்களுடைய சதியிஞல் நெக்கர் நீண்ட காலம் சேவை புரியவில்லை. 1781 ஆம் ஆண்டு பதவியி லிருந்து நீக்கப்பட்டார்.
நெக்கருடைய நீக்கத்துடன், அரசர் பலவந்த மின்றி தன் உதார குணத்தால், சீர்திருத்தங்களைப் புகுத்த வேண்டுமென்ற முயற்சி தோல்வியில் முற்றுப் பெற்றது. டேர்கோ, நெக்கர் இருவரும் சித்தி பெருது போயினமை அவர்களுடைய தனிப்பட்ட குறைகளினலல்ல. அரசரின் பெலவீனமும், அவர்களுக்கெதிராக அணிவகுத்து நின்ற எதிர்ச் சக்திகளின் வலிமையுமே, அவர்களது முயற்சிகளை வீண் விர யம் செய்தன. அரசர் உறுதியாக அவர்களது செயல்களையும் திட் டங்களையும் ஆதரித்திருந்தால் ஒரளவு நன்மையாவது ஏற்பட்டிருக் கும். 1781 ஆம் ஆண்டு அரசர் நெக்கரைப் பதவியிலிருந்து நீக்கிய போது சீர்திருத்தங்கள் ஏற்படுவதற்குப் புரட்சி மார்க்கத்தான் ஒரேயொரு வழியென நிச்சயமாயிற்று.
3,6 Q) IT GöT (Calonne):
1785 இல் கலோன் நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டார். இங் கிலாந்துடன் நடைபெற்றுக் கொண்டிருந்த செலவு மிகுந்த யுத்தத் கிலுைம், கலோனினுடைய தப்பான பொருளாதாரக் கொள்கை களினலும், நாட்டின் பண நிலை மீட்சியடைய முடியாத பாதா ளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. “ஒருவன் கடன் வாங்க வேண்டுமாயின் அவன் தன்னை ஒரு செல்வந்தன்போற் காட்டிக்
5 - مس و سوی

Page 30
34 புது உலக சரித்திரம்
கொள்ள வேண்டும். செல்வந்தன்போற் காட்டிக்கொள்ள அளவுக்கு மிகுதியாகச் செலவு செய்ய வேண்டும்" என்ற கொள்கையை ந் தன் சொத்த விடயத்தில் கடைப் பிடித்ததுபோல், தேசீய நிதித் துறையிலும் கடைப் பிடித்தார். மிதமிஞ்சிய செலவு செய்து, நாட்டை இன்னும் கடனளியாக்கினர். மேலும் கடன் வாங்க முடியாத நிலை விரைவில் வந்தது. என்ன செய்வது என்று தெரியாது தத்தளித்த கலோன் “மேன் மக்கள் மன்றத்தை" (Assembly of Notables) ji Gin L GOLDATUDI 9 TF(Uőh(g5 - G36vnt F &DT கூறினர். முதலாம், இரண்டாம் வகுப்புக்கள் சம வரி இ று க் க வேண்டுமென்ற பிரேரணையை இச்சபை நிராகரித்தது. ஆனல் சிலர் பொதுநாட்டுச் சபை கூட்டப்பட வேண்டுமென்று சிபார்சு செய் தனர். அடுத்து, பரிசுப் பாராளுமன்றமும் புது வரிகளை அங்கீகரிக்க மறுத்தது. வேறு வழியின்றி, அரசர் பொதுநாட்டுச் ச  ைப  ைய அழைக்கச் சம்மதித்தார். -
1789 ஆம் ஆண்டு சனவரி மாதம், 175 ஆண்டுகளாகக் கூடா திருந்த பொதுநாட்டுச் சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற் காகத் தேர்தல்கள் பெரும் உற்சாகத்துடன் நடைபெறலாயின.
அதிகாரம் 3
கைத்தொழிற் புரட்சி
18 ஆம் நூற்றண்டின் பிற்பகுதியிலும், 19 ஆம் நூற்ருண்டின் முற்பகுதியிலும் பிரிட்டனின் கைத்தொழில் முறைகளிலும், வியா பாரத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள் தான் கைத்தொழிற் புரட்சி எனும் பெயரைப் பெறலாயின. இப் பதம், முதன் முதல் ஆர்ணல்ட் ரொயின்பீ என்ற சரித்திர ஆசிரி ய ரி ன ல், 1760 க்கும் 1830 க்கும் இடைப்பப்ட இங்கிலாந்தின் பொருளாதார சரித்திரத்தைக் குறிப் பிட பிரயோகிக்கப்பட்டது . அக்காலத்தில் இங்கிலாந்து “உலகத்தின் தொழிற்சாலையாகவும்" பொருள் வளம்மிகுந்த நாடாகவும், மாறினது; மக்கள் “கடைவைத்திருக்கும் சாதியினராக' மாறினர். 18 ஆம் நூற்ருண்டினதும், 19 ஆம் நூற்றண்டினதும் பொருளாதார நிலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இம்மாறுதல்கள் யாவும் மிக விசால மானவை என்பது புலப்படும். மாற்றமும், முன்னேற்றமும் எக்காலத்

கைத்தொழிற் புரட்சி 35
துக்கும் உரியவை. ஆனல், இக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் கூட்டமாகவும், ஒன்று திரண்டும், வேகமாகவும் நடைபெற்றமையி
ஆனல் தொழிற் புரட்சி ஒரு சடுதியான முறிவன்று, என்பதை வற்புறுத்துவதற்காக இம்மாற்றங்களைப் புரட்சி யென்று அழைக்கும் கொள்கை இன்று கைவிடப்பட்டுள்ளது பிறப்பானது, நம் கண் ணுக்குப் புலப்படாத நீண்ட காலத்து மெளன சம்பவங்களின் பயன் என்பது போலத் தொழிற் புரட்சிக்கு அத்தியாவசியமான நிபந்தனைக ளெல்லாம் இதற்கு முற்பட்ட சரித்திர காலத்தில் மறைவாகப் பல நூற்ருண்டுகளாக ஆரம்பமாகி, வளர்ந்து வந்தவை. எந்திரங்களை இயக்குவதற்கு நீராவிச் சக்தி உபயோகிக்கப்பட்ட ஒரு புதுமா ற் றத்தைவிடப் புரட்சியின் ஏனைய அம்சங்கள் அனைத்தும், 16 ஆம் நூற் ருண்டுக்கு முன் ஆரம்பமானவையே. நீராவிச் சக்தி முதலாவது புடைவைத் தொழிலிலும், பின்னர் ஏனைய தொழில்களிலும் உப யோகிக்கப்பட்டதால் ஏற்பட்ட ஒரு பிரத்தியேக மாற்றமே தொழிற் புரட்சி என விவரிக்கப்படுகிறது. இம்மாற்றத்தினல் புதுத்தொழில் கள் ஆனவை, அவற்றைத் தொழிற் படுத்தும் சக்தியின் மூலங்க ளுக்கு அண்மையில் தொழிற்சாலைகளை அமைத்து அங்கேயே நடை பெற ஆரம்பித்தன. இவற்றைச் சுற்றி, மழையைக் கண்டு காளான்கள் தோன்றியதைப்போல, நகரங்கள் பல தோன்றலாயின. 1760 ஆம் ஆண்டு, இடைக்காலத்தினதும் தற்காலத்தினதும் உற்பத்தி முறைகளை வேறுபடுத்தி ஒப்பிட்டு நோக்காவிடினும், 18 ஆம் நூற் முண்டின் கடைசி 40 ஆண்டுகளில் உண்டான தொழில் நுட்ப முன் னேற்றத்தினுலும், தொழிற்சாலை முறையினலும், செல்வ உற்பத்தி யிலுைம், பாமர மக்களின் பொருளாதார நிலையில் ஏற்பட்ட மாற்றங் கள், ஒரு விதத்தில் புரட்சிகரமானவையே. ܘܝ ܚ - --- - ----
1. இங்கிலாந்தில் புரட்சிக்குரிய சூழ்நிலை
கைத்தொழிற் புரட்சி ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட்டு இங் கிலாந்தில் முதன் முதல் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தன.
18 ஆம் நூற்றண்டின் பிற்பகுதி, புதுக் கண்டு பிடித்தல்களுக்கு அத்தியாவசியமானதும், துணையானதுமான பல சக்திகள் ஒருங்கே சந்திக்கும் காலமாக அமைந்தது. இவை தேவைக்கு மிகுதியான தொழில் வசதிகள், மிதமிஞ்சிய மூலதனம், இலகுவில் பெறக்கூடிய மூலப்பொருள்கள், புதுச் சந்தைகள் என்பனவாகும். இச்சக்திகள்

Page 31
36 புது உலக சரித்திரம்
யாவற்றையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போக அவ ற்றின் முக்கியத் துவம் மிகவும் விசாலமானது. முதல் மூன்று ஏதுக்களும் நாட்டின் தொழில்வளம் அபூர்வமான விதத்தில் விரிவடைய வழி வகுத்தன. புதுச் சந்தைகள் பொருள்களின் விற்பனைக்கு வெளிச் செல்லும் வழி களை ஏற்படுத்தின.
தேவைக்கு மிகுதியான தொழில் வசதிகளும், மிதமிஞ்சிய மூல தனமும் 17 ஆம் நூற்றண்டின் ஆரம்ப காலம் தொடக்கம் இங்கி லாந்தில் குவிந்து கொண்டே வரலாயின. கடல் கடந்த குடியேற்றங் களினதும் தோட்டங்களினதும் அபிவிருத்தி, நாட்டின் மூலப்பொருள் தேவையைப் போதியளவு பூர்த்தி செய்தது. சிபானியா, ஒல்லாந்து ந்ாடுகளின் வர்த்தக வீழ்ச்சி, வூல்ப், கிளைவ் என்பவர்களின் வெற்றி கள்,விசாலமான வெப்பவலயப் பிரதேசங்களையும் ஏனைய சந்தைகளையும் பிரித்தானியாவின் ஆதிக்கத்துக்கும் சுரண்டலுக்கும் திறந்து விட்டன. குடியேற்ற நாடுகளின் அபிவிருத்தியும், வெளிநாட்டு வியாபாரத்தின் விரிவும் தொழில் மாற்றங்களுக்கு அவசியமான தேவைகளை ஈடு செய்தன. ஐரோப்பிய நாடுகளிற்போல, இங்கிலாந்தில் வாணிபம் இழிவான தொழிலாகக் கருதப்படவில்லை. பிரபுக்களும் செல்வந்தர் களும் அதிலுள்ள நயத்தைக் கண்டு, அம்முயற்சியில் சிரத்தை எடுத் தனர். இவர்களின் பிரயாசங்களினல் வர்த்தகக் கம்பனிகள் நிறுவப் பட்டு, அவை உலகின் எல்லாப் பாகங்களுடனும் வியாபாரம் செய் தன. மத்தியதரை, கிழக்கிந்திய, அமெரிக்க வர்த்தகக் கம்பனிகளெல் லாம் பெரும் செல்வத்தை ஈட்டிக் கொடுத்தன. இம்மூலதனம் புது முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு ஆயத்தமாகவிருந்தது. இதுவும் தவிர ஐரோப்பிய அரசியல் நிலையில் இங்கிலாந்தின் 6 எரிய, விலை குறைந்த பொருள்களின் உற்பத்தி முறைகளோடு போட்டியிடக்கூடிய நாடு வேறென்றுமிருக்கவில்லை.
இக்காலத்து இங்கிலாந்தினதும் ஐரோப்பாவினதும் அரசியல் நிலை களும அவதானத்துக்குரியவை. 1888 ஆம் ஆண்டுப் புரட்சி தொடக் கம் இங்கிலாந்தின் புவியியல் நிலையின் பயனகவும், அது ஒரு வல்ல பம் பொருந்திய கப்பற்படையினுல் பாதுகாக்கப்பட்டதன் விளைவாக வும், அன்னிய ஆக்கிரமிப்புக்கு அஞ்ச வேண்டிய தேவையில்லாத, நீண்டகால சமாதானம் நிலவியது. வால்ப்போலின் ச மா தானக் கொள்கையுடன் கூட, இங்கிலாந்து சர்வ தேசீய சிக்கல்களைத் தவிர்த்து நடக்க முடியவில்லையென்பது உண்மை. ஆனல் இவை மக்களின் வாழ்க்கையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தவில்லை. அதற்கு மாறக இச் சமர்களிலிருந்து இங்கிலாந்து புதுச் சந்தைகளுடன் வெளி வந்ததனல், இவையும் தொழில் முன்னேற்றத்துக்கு அநுசரணையாகவே அமைந்தன. s

கைத்தொழிற் புரட்சி 37
ஆனல் ஐரோப்பா கண்டத்தின் நிலைமை முற்றிலும் எதிர் மாறனது. 17 ஆம், 18 ஆம் நூற்ருண்டுகள் அங்கு எதிர்பாராததும், அதிக காலம் நீடித்ததுமான வமிசப் போர்கள் நிறைந்த காலமாகவே அமைந்தன. தவிர பிரான்சு, நெதர்லந்து, செர்மனி, மத்திய ஐரோப்பா என் பன சமயப் போர்களினலும் அந்நிய ஆக்கிரமிப்புக்களினலும் அல் லற்பட்டன. 3, இத்தாலியும் சிபெயினும் தி ரு ச் ச  ைப யி  ைல் விலங்கிடப்பட்டன. இங்கிலாந்தில் சீர்திருத்தப்படாத பாராளுமன்ற ஆட்சியின் கீழ், மக்கள் அரசியல் சுயாதீனம் அனுபவியா விட்டாலும், அந்நாட்டில்போல, ழைய உலகிலுள்ள வேறெந்த நாட்டிலாவது தொழில் விரிவுக்கு அவசியமான அரசியல், சமூக சூழ் நிலை யில்லை என்பதை மறுப்பதற்கில்லை.
மேலே கூறப்பட்ட காரணங்களுடன் இணைந்த ஒரு தத்துவஞான நிகழ்ச்சியும் விசேட அவதானத்துக்குரியது அது தான் தனியாண் மைக் கொள்கையின் எழுச்சி. அரசியல் துறையில் பயனுடைய கொள்கை (Utilitarianism) போல, பொருளாதாரத் துறையில் தனியாண்மைக் (காள்கை (dividualism) முன்னேற்றத்துக்கு இடையூருக இருந்த தடைகளை நீக்கி, பயன்தரு விளைவுகளை ஏற்படுத்தியது. ஆடம் சிமித் போன்ற ஆங்கிலப் பொருளாதார அறிஞர்கள் வாணிப முறைக் (Mercantilism) கொள்கையின் குறைபாடுகளை வெளிப்படுத்தினமை யால், 18 ஆம் நூற்ருண்டின் நடுவில் தனியாண்மைக் கொள்கை உயர்வு பெற்றது. இக் கருத்துக்களினல் பொருளாதார வானில் ஏற்பட்ட சுயாதீனம், வர்த்தகம், வங்கிகள், தொழில்கள் என்ற துறை களில் கூடுதலான நிர்வாகத் திறமையை வளர்க்க வழி வகுத்தது. மற்றைய ஐரோப்பிய நாடுகளைப் பார்க்கிலும் ஆங்கிலேயர் கூடின முன் னேற்றத்தைக் காட்டினர்.
இவையனைத்தும் போதாதென்று இயற்கையன்னையும் தன் கொடைகளே ஏராளமாக அள்ளிச் சொரிந்தாள். அதன் சுவாத்தியம் போக்குவரத்துக்கு பயன்படக்கூடிய நதிகள், தரை முரிவுபட்ட கடற் கரை, ஏராளமான இயற்கை வசதிகள்--இவையனைத்தும் மாற்றத்துக் குரிய ஏதுக்களாக அமைந்தன. வடபகுதிகளில் ஏராளமாகக் கிடைத்த இரும்பு, நிலக்கரி, நீர்ச்சக்தி வசதிகள் எல்லாம் புது ஆலைகள் வடக்கே தாபிப்பதற்கு வாய்ப்புக்களாய் அமைந்தன.
புரட்சிக்கு முந்திய நிலை :
பல நூற்றண்டுகளாக விவசாயம் தான், இங்கிலாந்தின் பிரதான
தொழிலாயிருந்தது. 1760 ஆம் ஆண்டில் இங்கிலாந்து இன்னும்
கிராமிய நாடாகவே இருந்தது ; சனத்தொகை குறைவாயிருந்தது.
நாட்டுப்புறங்களில் அல்லது வளர்ச்சியடைந்த கிராமங்கள் போன்ற
A 5

Page 32
38 புது உலக சரித்திரம்
நகரங்களில் தான், சனங்கள் வாழ்ந்து வந்தனர். தொழில்கள் இன்னும் குறிப்பிட்ட இடங்களில் குவிய ஆரம்பிக்கவில்லை. புடைவை உற்பத்தி, இரும்பை உபயோகமுள்ள கருவிகளாக மாற்றும் முயற்சி கள் தொழிலாளர்களின் வீடுகளிலேயே நடைபெற்றன. கால்வாய்கள், எந்திரப் போக்குவரத்துச் சாதனங்கள் இன்னும் எதிர்காலத்திலேயே நின்றன.
விவசாயத்துக்கு அடுத்ததாக, கம்பளிப் புடைவை நெசவுதான் மக்களின் முக்கிய தொழில். பல நூற்ருண்டுகளாக இதை மக்கள் ஒரு குடிசைக் கைத்தொழிலாகப் பின்பற்றி வந்தனர். நாட்டுப்புறங் களில் விவசாயிகளின் குடிசைகளில் கையினல் அல்லது கையினுல் இயக்கப்பட்ட எந்திரங்களில்தான் நெசவு முயற்சிகள் யாவும் முடி வடைந்தன. இம் முயற்சியில் வீட்டிலிருந்த அங்கத்தினர் அனைவரும் ஓய்வு நேரங்களிலும், மாரிகாலத்திலும் ஈடுபட்டனர்.
16 ஆம் நூற்ருண்டு தொடக்கம், இத்தொழில் பெருமளவுக்கு துணி வணிகர்களின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்தது. இவ்வணிகர் தம் மூலதனத்தை விட்டு, கிராமவாசிகளுக்கு உரோமம் முதலிய மூலப் பொருள்களைச் சந்தைகளில் வாங்கி விநியோகம் செய்தனர். பின்பு உரோமம் புடைவைகளாக முற்றுப் பெற்றவுடன், உரிய கூலியைக் கொடுத்துப் புடைவைகளைச் சேகரித்தனர். விற்பனைக்கு முன் வெண்மையாக்கல், சாயமூட்டல் போன்ற இறுதி வேலைகள் அவர்க ளுடைய சொந்தத் தொழிற்சாலைகளில் நடந்தேறின. அதன் பின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இம்முறை வீட்டுத் தொழில் முறை (Domestic System) என வழங்கப்பெற்றது. ஐரோப் பாக் கண்டத்தில் பிரித்தானிய புடைவைகளுக்கு நல்ல மதிப்பு இருந்தது; ஆனல் உற்பத்தி போதாது. ஆகையினல்தான் உற்பத்தி யின் வேகத்தை அதிகரிக்கச் செய்யப் புது வழிகளை ஆராய்வதில் பலர் முயன்றனர்.
பருத்திப் புடைவை உற்பத்தி, கம்பளித் தொழிலைப்போல பழமை யானதுமன்று, பிரபல்யமானதுமன்று. 17 ஆம் நூற்றண்டில் மன் செசுடர் உண்மைப் பருத்திப் புடைவைகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது என்பதற்கு ஆதாரமுண்டு. இத் தொழிலுக்கு மூலப் பொருளான பருத்தி, மத்திய மண்டலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டியிருந்தமையாலும், பருத்திப் புடைவைகளுக்கு அதிகம் கிராக்கி ஏற்படாமல் விட்ட காரணத்தினுலும், இத் தொழிலை அபிவிருத்தியடையாது தடுக்க, கம்பளித் தொழில் முதலாளிகள் முயற்சி செய்தமையாலும் இது குறிப்பிடத்தக்க விருத்தியடையாமற் போயிற்று.

கைத்தொழிற் புரட்சி 39
கைத்தொழிற் புரட்சியின் சிறப்பு :
நாகரிக வரலாற்றிற் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி எனக் கணிக்கப் படும் இப்புரட்சியின் சிறப்புக்களில் ஒன்று, அதன் பல பகு தி க ள் ஒன்ருேடொன்று நெருங்கி இணைந்திருப்பதேயாகும். புரட்சியின் வளர்ச்சிக்கு நீராவி எந்திரம் என்ற ஒரு முக்கிய கண்டு பிடித்தலே வழி காட்டியாக அமைந்தபோதும், அப்புதுக்கருவியின் உபயோகமும் முக்கியத்துவமும் பிற துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியிலேயே தங்கி நின்றது. ஆலைகளை நிறுவி, அவற்றிற்குத் தேவையான உபகரணங் களை நிர்மாணிக்க ஏராளமான மூலதனம் தேவைப்பட்டது. இம்மூல தனம் வியாபார அபிவிருத்தியின் வழியாகவே பெறப்பட்டது. நவ மாகக் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள், தம் அமைப்புக்குத் தேவை யான மூலப் பொருள்களுக்கு உலோகத் தொழிலையே நம்பி நின்றன. இரும்புற்பத்தி முறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களும், சுட்ட கரி யின் உபயோகமுமின்றி, புதுக் கருவிகளின் பரந்த பயன் ஏற்பட் டிருக்க மாட்டா. குறிப்பாக நீராவி எந்திரத்தின் அமைப்பு முற்ருக இரும்பின் தரத்திலும் அது தயார் செய்யப்பட்ட நுட்பத்திலும் தங்கி நின்றது. புரட்சியின் முழு இயக்கம், போக்குவரத்து வசதி களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்கிலாந் தின் அதிகரித்த குடிசனத்தைப் போசிக்கவும், நெப்போலிய யுத்தங் களினூடாக வெற்றி முரசுடன் செல்லவும், விவசாய அபிவிருத்தி அத்தியாவசிய தேவையாயிற்று. வாணிபம், நிதி நிர்வாக முறை கள் இக்காலத்துக்கு இசைந்தவாறு மாற்றியமைக்கப் பெற்ற ன. எனவே இப்புரட்சியில் முன்னுெருபோதும் நிகழாத ஒரு விசேட சிறப்பைக் காண முடிகிறது. அஃது என்னவெனில், ஒன்ருேடொன்று தொடர்புடையதும், ஒவ்வொன்றும் தம் முன்னேற்றத்திற்கு மற்ற தின் அபிவிருத்தியைக் காத்து நிற்பதுமான, பல்வேறு தொழிற் றுறைகள் ஒரே காலத்தில் முன்னேற்ற மடையும்படி, பல இயக்கங் கள் ஒன்று கூடியதன் பலனே தொழிற் புரட்சியென்பதாகும்.
அடுத்து இதனை விவரமாக ஆராயப் புகுவோம்.
நீராவி எந்திரம் :
தொழிற் புரட்சிக்கு ஆதாரம் நீராவி எந்திரம். இப்புதுக் கருவி தான் ஏனைய எந்திரங்களின் அபிவிருத்திக்கு வழி வகுத்தது. கைத் தொழிற் புரட்சி அடிப்படியில் நீராவிச் சக்தியின் காலம், புடைவை உற்பத்தி ஆலைத் தொழில் முறையாக மாறியமை, ஆழமான சுரங் கங்களிலிருந்து கரியை அகழ்ந் தெடுக்க வழி பிறந்தமை, இரும்புற் பத்தி அதி முக்கிய தொழிலாக மாறியமை, தொழிற்சாலைகள் கரி

Page 33
40 புது உலக சரித்திரம்
வயல்களுக்கு அண்மையில் நிர்மாணிக்கப்பட்டமை, இவையாவும் நீராவி எந்திரம் கண்டு பிடிக்கப்பட்டதன் நேர் பலாபலன்களாகும். எனவே காலக்கிரமத்தின் கடும் நிபந்தனைகளை ஒரு புறம் அகற்றி, இந் த அதி முக்கியத்துவம் வாய்ந்த கண்டு பிடித்தலை முதன் முதல் ஆராய் வது பொருத்தமாகும். அதனேடு புரட்சியின் பின் நிலைகளில் அடிப் படையாக அமைந்த விஞ்ஞான தத்துவங்களை எந்திரங்களின் செயற் படக்கூடிய திருத்தங்களுக்குப் பயன் படுத்தல், எனும் முறையின் முதல் தெளிவான தோற்றத்தையும், இக்கருவியின் கண்டு பி டி த் த லில் காணக் கிடக்கிறது.
யேமிசு வாட் (James Watt) அறிவும் மதிநுட்பமும் படைத்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர். அவரது பேரன் ஒரு கணித ஆசிரியர், தந்தை சிற்ப சாத்திரத்திலும், கப்பல் கட்டுவதிலும் வல்லுனர், வாட், சிறு வயதிலேயே எந்திரங்களின் நுட்பங்களில் நாட்டம் கொண்டவர். ஆனல் அவரது ஈடுபாடு இத்துறையுடன் மாத்திரம் நின்று விடவில்லை. அவரது நாட்டங்கள் அதி விசாலமானவை. பிரெஞ்சு, இலத்தீன், செர்மன் மொழிகளி லும், இலக்கியம், தத்துவஞானம், சங்கீதம் முதலாம் துறைகளிலும் தேர்ச்சி பெற்றர். கைத்தொழில் புரட்சியின் மூல எந்திரத்தைக் கண்டு பிடித்த இந்த மேதை விசால மான பண்பாடும், அதி விரிவான அறிவும் படைத்தவர். விஞ்ஞான நுட்பக் கருவிகளை அமைக்கும் வேலையையே தன் தொழிலாகக் கொண்டார். கிளாசுக்கோ சர்வகலா சாலையில் வேலையும் கிடைத்தது ; அவருக்கு அக்கலாசாலையின் வசதிகளும் கிட்டியது.
வாட், கொதிக்கும் கேத்திலிலிருந்தே நீராலி எந்திரத்தின் தத்துவத்தைக் கற்ற றிந்தார் என்று கூறப்படும் சுவையான கதை உண்மையான தென்று கொள்வதற்கு எவ் வித ஆதாரமுமில்லை. நீராவியின் அமுக்கத்தைப் பற்றிய பரிசோதனைகளில் நீண்ட கால மாக ஈடுபட்டிருந்த வேளையில்தான் 1764 ஆம் ஆண்டு 28 வது பாாயத்தில், அவரது வாழ்வின் அதி முக்கிய சம்பவம் நிகழ்ந்தது. கலாசாலையில் போதனைக்கு உபகரணமாக வைக்கப்பட்ட நியூகமனின் எந்திரம் ஒன்று செயற்பட மறுக்கவே, அதைப் பழுது பார்க் கும் முயற்சியில் இறங்கிஞர். அவர் அதை ஆராய்ந்து அதன் குறைகள் பிழையான விஞ்ஞான தத்துவங்களின் உபயோகத்தினல் ஏற்பட்டவை எனும் முடிபுக்கு வந்தார்.
அத்துடன் அதேயாண்டு வாட், சர்வ துறைகளிலும் சக்தியின் உற்பத்திச் சாதன மாக அமையப் போகும் எந்திரத்தின் அடிப்படை விஞ்ஞானத் த த் துவங்களே ச் எடுத் துரைத்தார். பணமின்மையினல் அவர் தனது எண்ணங்களேச செயற்படுத்த முடியவில்லை. எனினும் அதிட்ட வசமாக மத்தியூ பூல்ட்டன் (Mashew Boulton) என்ற உற்பத்தியாள ஒடைய ஆதரவு கிட்டியதனுல், முதலாவது நீராவி எந்திரம் அவரது கை யி ல் உருப் பெற்றது. VM
இவ்வெந்திரத்தின் வருகையுடன் தொழில் துறைகளின் கதவுகள் அதற்குத் திறந்து விடப்பட்டன. இக்கருவி எல்லா விதமான தேவை களுக்கும் அவசியமான சக்தியை உற்பத்தி செய்ய, எந்த விதமான தொழிற்சாலைகளிலும் பயன்படக் கூடியதாயிற்று. அதன் அபிவிருத்தி யோச்சு தீபன்சனின் கையில் உருப்பெற்ற புகையிரத எந்திரமாகும். இக்கருவியின் வருகையுடன் கைத்தொழிற் புரட்சியின் அதி முக்கிய விசாலமான உற்பத்தி முறைகளின் விருத்திக்காலம் பிறந்தது.

கைத்தொழிற் புரட்சி 4.
2. கைத்தொழில்களின் விருத்தி
நெசவுத் தொழில் :
நெசவு முறைகளில் புதிதாகக் கண்டு பிடிக்கப்பெற்ற கருவிகள் பருத்திப்புடைவைத் தொழிலில் தான் முதலில் உபயோகிக்கப்பட் டன. இம் முயற்சி இன்னும் அபிவிருத்தியடையாத எளிய நிலையில் இருந்தமையாலும், இலங்காசயர், மன்செசுட்டர் போன்ற குறிப் பிட்ட பகுதிகளில் மாத்திரம் நடைபெற்றமையினலும், புதுக் கருவி களை நேரடியாக உபயோகிக்க முடிந்தது.
1733 ஆம் ஆண்டு யோன் கே (John Kaye) என்பவர் பறக்கும் நூனுழி’ (Flying Shuttle) எனும் கருவியைக் கண்டு பிடித்ததன் பய ணுக, நெசவு முயற்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதற்கு முன் ஒரு நெசவுத்தறியில் ஒரு புடைவையை நெசவுசெய்தற்கு மூன்று அல்லது நான்கு பேரின் உதவி வேண்டியிருந்தது. இக் கருவியின் வருகையுடன், ஒரு மனிதன் பிற உதவியின்றித் தனியே ஒரு நெசவுத் தறியில் வேலைசெய்யக் கூடிய வசதி ஏற்படலாயிற்று. நெசவுத் தறிகளில் வேலை துரிதமாகவும், வேகமாகவும் நடைபெற்றதனுல் நூற்கப்பட்ட நூலுக்கு (Yarn) பெரும் கிராக்கி உண்டானது. இத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் பல முயற்சிகள் செய்யப் பட்டன. ஈற்றில் 1764 ல் யேமிசு ஆகிரீசு (James Hargraves) என்பவர் ஒரு நூற்கும் சென்னியைக் கண்டு பிடித்தார். இதன் மூலம் ஒருவன், ஒரே நேரத்தில் எட்டுக் கதிர் களை இயக்கும் ஆற்றலைப் பெற்றன். மேற் கூறப்பட்ட இரு கருவி களும் கையினலேயே இயக்கப்பட்டமையினல், குடிசைக் கைத்தொழில் முறையில் துரிதம் ஏற்பட்டதேயொழிய, புரட்சிகரமான மாற்றம் ஒன் றும் ஏற்படவில்லை. உண்மையான புரட்சிகரமான மாற்றங்கள் அடுத்த கருவியுடன்தான் ஆரம்பமாயின; ஏனெனில், புதுக்கருவியை இயக்குவதற்கு நீர்ச்சக்தி, முதன் முதலாக உபயோகிக்க ஆரம்பிக்கப் பட்டது. இநிச்சாட் ஆக்ரைட்டு (1767-70) நீர்ச்சட்டகம் (Water Frame) எனும் நூற்கும் எந்திரத்தை நீர்ச் சக்தியினுல் இயங்கச் செய்தார். இவ்வியந்திரத்தில் 120 நூல்கள் ஒரே முறையில் நூற்கப் பட்டன. மேலும் இவ்வியந்திரத்தை வீடுகளில் தாபிக்கமுடியாது என் பது புலப்பட்டதுடன், ஆலைகளின் அவசியம் முதன் முதலாக உணரப் பட்டது. ܀-
1776ஆம்ஆண்டு சாமுவேல் குருேம்ரன் (Samuel Crompton)நூற்கும் சென்னியினதும் நீர்ச் சட்டகத்தினதும் தன்மைகளை ஒற்றுமைப் படுத்தி, “மியூல்" (Mule) எனும் புதுக்கருவியை உண்டுபண்ணினர். இதன் பயனுக நெசவாளரின் தேவைக்கு மிதமிஞ்சிய அளவில் நூல் நூற்கப்படலாயிற்று.

Page 34
42 புது உலக சரித்திரம்
இன்னும் இக்கருவியின் உதவியுடன், இதுவரையும் செய்ய முடியாமலி ருந்த மிகவும் நுண்ணிய நூல்களை நூற்பதற்கு வசதிகள் உண்டாயின. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிகவும் அழகான புடை வைகள், (muslims) இங்கிலாந்தில் எந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்ய இக்கருவி வழி கோலியது.
நீர்ச்சக்தி சிறிது காலமே எந்திரங்களை இயக்குவதற்குப் பயன்பட் டது. 1782ஆம் ஆண்டு யேமிசு வாட் நீராவி எந்திரத்தைக் கண்டு பிடித்தார். .
நீராவிச் சக்தி யி ன ல் இயங்கும் வலுத்தறியை (Power loom) 1785ஆம்ஆண்டு எட்மண் டுகாட்றைற் (Edmund Cartright)அமைத்தார். இவற்றில்ஒரேநேரத்தில் கோடிக்கணக்கானநூல்களை உபயோகித்து நெசவு செய்வதற்கு வசதிகள் உண்டாயின. அடுத்த 15 ஆண்டு காலத்துக்குள் இத் தறியில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு, ஈற்றில் முழு எந்தி ரமும் இரும்பினல் செய்யப்பட்டது. இவற்றை நிறுவுவதற்கு ஆலைக ளும் நிருமாணிக்கப்பட்டன.
வெண்மையாக்கல் (Beaching) நிறமூட்டல் (Dyeing) முறைகள் நெசவுத்தொழிலின் ஏனைய முயற்சிகளைப் போல முன்னேற்றமடைந் தன. பழைய கை முறைப்படி, ஒரு புடைவையை வெண்மையாக்க மாத் திரம், ஆறு அல்லது ஏழு மாதங்கள் எடுத்தன. 1774இல் சீல் (Scheele) குளோறின் வாயுவைக் கண்டுபிடித்ததன் பயணுக, ஏழு மாதவேலை இரண்டு நாள்களில் முற்றுப்பெற்றது. 1760-க்கு முன்பு நிறமூட்டல் மிகச்சிறிய தொழிலாகவே இருந்து வந்தது. கை அச்சுக்களே உபயோ கிக்கப்பட்டன. ஒரு புடைவையில் ஒரு சித்திர வடிவம் அச்சிடுவதற்கு 400 அல்லது 500 தரம் கையினல் அச்சுக்களை மாற்றி மாற்றியமைக்க வேண்டியிருந்தது. 1785 ஆம் ஆண்டு, சிலிண்டர் அச்சி திமுறை (Cylinder Printing) கண்டு பிடிக்கப்பட்டது. விரைவாகவும், குறைந்த செல லும் அச்சிடு வேலைகள் நடக்க ஆரம்பித்தன.
1830 ஆம் ஆண்டு அளவில் பருத்தி நெசவுத் தொழிலின் எல்லா முயற்சிகளும் எந்திரங்கள் மூலம் நடைபெறக் கூடிய நிலைமை ஏற்பட் டது. இம் மாற்றங்களுடன் பல நூற்றண்டுகளாக முதன்மை பெற்று விளங்கிய கம்பளித் தொழில், தனது முக்கியத்துவத்தையும் நிலையையும் பருத்திப் புடைவைக்கு ஈந்தது.
இரும்பும் உருக்கும் :
மாற்றங்கள் நெசவுத் தொழிலோடு நின்றுவிடவில்லை. தொழிற்
புரட்சியானது மனிதனின் பல்வேறுபட்ட முயற்சிகள் ஒரேகாலத்தில் அபிவிருத்தியடைந்தமையையே மையமாகக் கொண்டது.

கைத்தொழிற் புரட்சி 43
18 ஆம் நூற்ருண்டுக்கு முற்பட்ட காலத்தில் இரும்பு சிறிதள வுக்கே உபயோகிக்கப்பட்டு வந்தது. அதனை உருக்குவதற்கு மரத்தை எரித்தனர். ஒரு தொன் இரும்பு உற்பத்தி செய்ய 24 அந்தர் மரக்கரி தேவைப்பட்டது. தேவை குறைவாக இருந்தமையினலும், செ ல வு அதிகமாக இருந்தமையிலுைம், இரும்புத் தொழில் முறைகள் அபி விருத்தியடையாத நிலையிலேயே இருந்தன. மரம் ஏராளமாகத் தேவைப் பட்டதனல், அதற்குப் பதிலாக ஓர் எரி பொருளைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் பலர் முனைந்தனர்.
1709 ஆம் ஆண்டு, ஆபிரகாம் டாபி (Abraham Darby) மரக் கரிக் குப் பதிலாக, சுட்டகரி (Coke) எனும் புது எரி பதார்த்தத்தைக் கண்டு பிடித்தார். சுட்ட கரியிலிருந்து அதிக சூடு பிறக்கும். எனவே சுட்ட கரியை ஊதிகள்ல் உபயோகித்து, நல்ல முறையில் இரும்பை உருக்க முடிந்தது.
1740 gub g670), Gué5 Flasi py6irl' J. LD air (Benjamin Huntsnan) உயர் தரமான எஃது உற்பத்தி செய்ய குறிசிபிள் முறையை (Crucible process) உபயோகித்தார். 1772முதல், இவருடைய செபீல்டு (Sheffield) தொழிற்சாலை உயர்வடைந்தது. இவர் செபீல்டுக்கும், உல குக்கும் பெற்றுக் கொடுத்த நன்மைகள் அளப்பரியன.
1783 ஆம் ஆண்டுக்குப்பின், நீராவி எந்திரம் இரும்புத் தொழி லில் ஊதிகளையும், எந்திரங்களையும் இயக்குவதற்கு உப யோ கி க் கப்பட்டது.
இரும்புற்பத்தியில் கரியின் விகிதமும், அது கலந்துள்ள வகையும் இரும்பின் பறை புகளே நிர்ணயிக்கின்றன. மூன்று விதப்பட்ட இரும்பு வ ைக க ள் செய்யப்படுகின்றன. உருக்குக் கடினமானது. வார்ப்பிரும்பு (Cast Iron) கெதியில் உடையுந் தன்மையுடையது. தேனிரும்பு (Wronght Iron) சூடான நிலையில் பசைத்தன்மையுடையது. இது ஒட்டுதலுக் குப் (Welding) பயன்படும், கடினமாக்க முடியாது.
1782 ஆம் ஆண்டு, என்றி கோட் (Henry Cort) வார்ப்பிரும்பு செய்வதற்கு ஒரு நவீன முறையைக் கண்டு பிடித்தார். அகழ்ந் தெடுக்கப்பட்ட இரும்பை, ஊதிகளில் உருக்கியபின் கலக்குவதனல் (Stirring), அதிலுள்ள அசுத்தங்கள் நீக்கப்படுகின்றன. அத்துடன், அவ்வார்ப்பிரும்பை பட்டடைகளில் வைத்தடிக்காது, உருளைகள் வழி யாகச் செலுத்தி, மெல்லிய இரும்பு செய்யும் முறையைக் காட்டிக் கொடுத்தார். இவருடைய புது முறையுடன் இங்கிலாந்தில் இரும்பு யுகம் தோன்றலாயிற்று.
இரும்பின் புது உபயோகங்கள் :
1790 க்கும் 1850 க்கும் இடைப்பட்ட காலத்தில் இரு ம் புத் தொழில், எரி பொருளுக்காகக் காடுகளுடனும், சக்திக்காக நதிகளுட

Page 35
44 புது உலக சரித்திரம்
னும், கட்டுண்டு கிட்ந்த நிலையிலிருந்து விடுதலை பெறலாயிற்று. முன்னெருபோதும் இல்லாத முறையில், இரும்புத் தொழிற்சாலைகள், கரிச்சுரங்கங்களை நாட ஆரம்பித்தன. இக்காலத்தில் இரும்புற்பத்தி யில் ஏற்பட்ட அபரிமிதமான முன்னேற்றம், பெரும்பாலும் யுத்தங் களினதும், புகையிரதங்களினதும் தேவைகளை ஈடுசெய்ய ஏற்பட்ட வையே. பிரெஞ்சுப் புரட்சிப் போர்களும், நெப்போலியப் போர் களும், ஆரம்பத்தில், ஆயுதங்களுக்குக் கடும் கிராக்கியை உண்டுபண் ணின. அத்துடன், நாளாந்தம் இரும்பின் புது உபயோகங்கள் அதி கரித்துக்கொண்டே வரலாயின. வாயுக் குழாய்கள், தண்ணி ர் க் குழாய்கள், கட்டடங்கள் முதலியவற்றிற்கு வார்ப்பிரும்பு உபயோ கிக்கப் பெற்றது. 1831 க்கும் 1841 க்குமிடையில் ஒவ்வொரு கட்டை (Mile) க்கும் இடப்பட்ட இருப்புப்பாதையில், இரும்பு 53; தொன்னிலிருந்து 156 ஆக அதிகரித்தது. இருப்புப் பாதைகளுடன் தளபாடங்கள் (Rolling Stock), பாலங்கள், அடைப்புக்கள், புகை யிரத நிலையங்கள் முதலியவற்றிற்கும் இரும்பு மேலும் மேலும் பயன் படலாயிற்று. தவிர, இருப்புப் பாதைகளின் ஏற்றுமதியும் அதிகரித்து வந்தது. பிரித்தானிய புகையிரத காலம் முடிவெய்திய து டன்,
பிரெஞ்சு, அமெரிக்கப் புகையிரத வீதிகளின் அமைப்புக்காலம் உச்ச நிலையை எய்தியது. இரு நாடுகளும், பிரித்தானிய இருப்புப் பாதை களையே இறக்குமதி செய்தன. கப்பல் கட்டுபவர்களும், இரும்பை உபயோகிக்கலாஞர்கள். முதலாவது இரும்புக் கப்பல், 1812 இல் மிதந்தது. எனினும் புகையிரதங்களைப் போன்று, க ப் ப ல் க ள் இரும்பை உபயோகிக்கவில்லை.
“2 (5ë 5ë 6 T Gollb” (Age of Steel) :
1850 க்குப் பின், உருக்கின் காலம் உதயமாயிற்று. இதற்கு இரு புது முறைகள் வழி வகுத்தன. 1850 இல் சீமன் சு ச.ோ,ரர் கள் (Siemens brothers) கரிக்குப் பதிலாக வாயுக்களை எரி பொரு ளாகப் பயன் படுத்தி, உயர்ந்த சூடு தரும் உலைகளைக் கண்டு பிடித் 55 GT iii. I 856 இல் என்ரி பெசிமர் (Henry Bessemer) இரும்பை உருக்கி அதன் வழியே காற்றை ஊதி, அதிலுள்ள அசுத்தங்களை எரித்துத், தூய உருக்கைப் பெறும் முறையைக் கண்டு பிடித்தார். இம்முறை ‘பெசிமர் முறை' எனப் பெயர் பெறலாயிற்று. இத ல்ை உருக்கின் விலை ஐந்திலொரு பங்காகக் குறைந்தது. நிலக்கரி :
18 ஆம் நூற்றண்டின் ஆரம்பகாலத்தில், நிலக்கரி வீட்டுத் தேவைகளுக்கு மாத்திரமே பயன்பட்டது. தேவை குறைவாகவிருந்த மையினுல், நிலத்தின் சமீபத்திலிருந்த கரி மாத்திரமே அகழ்ந்தெடுக்

கைத்தொழிற் புரட்சி 45
கப்பட்டது. சுரங்கங்கள் ஆழத்துக்கு வெட்டப்படாமலிருந்ததற் குரிய காரணங்களில் முக்கியமானவை நீரும், தீயுமே. நீர் ஊற்றுக்கள் சுரங்கங்களை வெள்ளத்தினல் மூடும்போது, அதை அகற்றத்தகுந்த கருவிகளிருக்கவில்லை. தீப்பிடிக்கும் வாயுக்கள் நிறைந்த சுரங்கங்களில் வேலை செய்வது மிகவும் அபாயகரமாயிருந்தது. இவற்றை விடச் சுரங்கங்களில் விளக்கேற்றும் முறைகளும், நிலத்துக்குக் கீழ்ப் போக்கு வரத்து வசதிகளும் பிற்போக்கான நிலையிலேயே இருந்தன.
நியூகமன் என்பவர், வாட் கண்டுபிடித்த நீராவி எந்திரத்தைப் பயன்படுத்தி, நீரிறைக்கும் முறையைக் கண்டறிந்தார். இந்த எந்திரம் உபயோகத்துக்கு வந்ததுடன், சுரங்கங்கள் ஆழத்திற்கு அகழக்கூடிய நிலைமை ஏற்பட்டது.
சுரங்கங்களின் அடிவாரத்தில் போக்குவரத்துச் சாதனங்களில் முன்னேற்ற முறைகள் ஆரம்பத்தில் இல்லவே இல்லை. அகழ்ந்தெடுக் கப்பட்ட நிலக்கரி, ஆண்களினதும் பெண்களினதும் முதுகில் தான் சுமத்தப்பட்டது. 18 ஆம் நூற்றண்டின் மத்தியில், குதிரைகள் உபயோகத்துக்கு வந்தன. இக் குதிரைகளை ஒட்டுவதற்குப் பிள்ளைகள் அமர்த்தப்பட்டனர். 1770 க்குப் பின் தண்டவாளங்கள் இடப்பட்டன. இம்முறையை முதன் முதலாக றிச்சேட்டு இறெயினுேல்சு (Richard Reynolds) 5607 g/ கோல்புறூக்டேல் சுரங்கங்களில் அமைத்து, மற்றச் சுரங்க முதலாளிகள், அதைப் பின்பற்ற வழிவகுத்தார்.
1815 -g, b -2,6570), (5 fi is ti gas (3t-of (Sir Humphrey Davy) காப்பு விளக்கைக் (Safety Iamp) கண்டு பிடித்த பின்பே, ஆழமான சுரங்கங்களில் தீக்குப் பயமின்றி, வேலை செய்யக்கூடிய அபாயமற்ற நிலைமையமைந்தது.
3 போக்கு வரத்து விருத்தி
பொருளுற்பத்தி முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், உண்ணுட்டு வெளிநாட்டுப் போக்கு வர வு ச் சாதனங்களில் ஒரு புரட்சிகரமான மாற்றத்துக்கு வழி வகுத்தன. கைத்தொழிலும், வாணிக மும் பன் மடங்கு பெருகியதோடு, மூலப் பொருள்களைப் பெறுவதற்கும், ஆக் கப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கும், தரை மார்க்கமாக வும் கடல்மார்க்கமாகவும், கெதியான போக்கு வரத்து வசதிகள், இன்றி யமையாத தேவைகளாயின.
கால்வாய்கள் :
18 ஆம் நூற்றண்டில் குறைந்த செலவில் கெதியான போக்கு வரத்துக்கு ஏற்பட்ட கிராக்கியை, ஆரம்பத்தில் வாய்க்கால்களே பெரும்

Page 36
46 புது உலக சரித்திரம்
பாலும் பூர்த்தி செய்தன. படகுகள் உபயோகிக்கக் கூடிய பல நதி கள் இங்கிலாந்தில் இருந்தமையினல், இக்காலத்தில் கால்வாய்கள் துரிதமாக அமைக்கப் பெற்றன.
கால்வாய்களின் காலம், 1761 ஆம் ஆண்டு, பிரிச்சுவோட்டர் Gas TLD5667 (Duke of Bridgewater), Gulag, sasoit 68 (James Brindley) என்ற எந்திர நிபுணரின் உதவியுடன், தனது நிலக்கரிச் சுரங் கங்களிலிருந்த வோசுலி (Worsley) என்னுமிடத்தை மன்செசுட்டரோடு இணைத்ததுடன், ஆரம்பித்தது. இதனல் மன்செசுட்டரில் கரியின் விலை சரி அரைவாசியாகக் குறைந்தது. இதையடுத்துப் பல கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் முக்கியமானது கிழக்குக் கரையிலிருந்த அல்லையும் (Hul) மேற்குக் கரையிலிருந்த இலிவப்பூலையும் இணைத்த “கிராண்டு திரங்கு’ (Grand Trunk Canal) கால்வாயாகும். சொற்ப காலத்துக்கு, இக்கால்வாய்கள் அபரிதமான வருவாயைப் பெ ற் று க் கொடுத்தன. கால்வாய்ப் பங்குகளின் விலை இருபது மடங்கு அதி கரித்தது.
கால்வாய்கள், இங்கிலாந்தின் பொருளாதார அபிவிருத்திக்குப் பெரும் தொண்டு செய்த போதிலும், அவற்றின் பிரயோசனம் காலப் போக்கில் குறைந்து, கால்வாய்களுக்குப் பதிலாக ப் புகையிரதங்கள் கூடுதலாக உபயோகிக்கப் பட்டன. கடைசிக் கால்வாய், 1834 இல் முற்றுப் பெற்றது. அதன் பின் கால்வாய்களின உபயோகம் புகையிர தங்களின் கூடிய உபயோகத்தால் தடைப்பட்டது. தெருக்கள்
19 ஆம் நூற்றண்டின் ஆரம்பகாலம்வரை, தெருக்கள் குதிரை வண்டிகளின் சவாரிக்காக மாத்திரமே அமைக்கப்பெற்றவை. காலத் துக்குக் காலம் ஒழுங்காகத் திருத்தப்படாமையினல், அவை சமநிலை யின்றி, பள்ளங்களும் மேடுகளும் நிறைந்திருந்தன. இந்நிலையில், தெரு மார்க்கமாகப் பொருள்களை ஒரிடத்திலிருந்து இன்னுமோரிடத்திற்கு அனுப்புவது கூடிய நேரத்தை எடுத்ததுடன், செலவும் அதிகமாக விருந்தது. 3እ
தெருக்களின் அபிவிருத்திக்குத் தடையாக இரண்டு காரணங்களி ருந்தன. ஒன்று அறிவீனம். தெருவசதிகளைச் சீர்ப்படுத்துவதில் தங்கள் அவதானத்தைச் செலுத்த எந்திர நிபுணர்கள் துணியவில்லை. இரண்டா வது தெருக்களின் பரிபாலனம், சபைகளில் விடப்பட்டிருந்தமையாம். தெருக்களின் அமைப்பில் நவீன முறைகளைப் புகுத்தியவர்கள் (as it 109 (Telford), Lodid, Luh (MacAdam) 6T657 so gijolst. 56) பட்டு, சுக்கொட்லாந்துப் பிரதேசத்திலுள்ள தெருக்களைச் சீர்திருத்து

கைத்தொழிற் புரட்சி 47
வதில் தன் முழு அவதானத்தைச் செலுத்தி, 15 ஆண்டுக் காலத்தில் 920 மைல் நீளமுள்ள தெருக்களையும், 120 பாலங்களையும் கட்டி முடித்தார். சிறுபராயம் தொட்டே, விஞ்ஞான முறையில் தெருக்க ளின் சீர்திருத்தத்தில் நாட்டம் கொண்டு வந்த மக்கடம், பல ஆண்டு ஆராய்ச்சிகளின் பயனுக இன்று தெருக்கள் அமைப்பதற்கு உபயோ கப்படும் முறைகளை 1811 ஆம் ஆண்டு கண்டு பிடித்தார். தெருக்கள் பலமான அத்திவாரத்தில், சுற்றுப்புறத்திலும் பார்க்க கூடுதலான உயரத்தில், அக்கம் பக்கம் வாய்க்கால்களுடன், மேற் படை குறுணிக் கற்களைக் கொண்டு அமைக்கப்படல் வேண்டும், என்று செய்கைமுறை யில் காட்டினர். இதுவரை கைத்தொழில் துறையில் பின் தங்கி நின்ற இடங்கள் யாவும், இப்புதிய தெருக்களினலே மிகவும் நன்மை யடைந்தன.
புகையிரதமும் இருப்புப் பாதைகளும் :
(3urég, guair F6öt (George Stephenson) 1781 24b 26387 (6) பிறந்தவர். கரிச்சுரங்கத்தில் நீரிறைக்கும் எந்திரத்தை இயக்கும் தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்த இவர், 1814 ஆம் ஆண்டு நீராவிச் சக்தியினல் இயங்கும் புகையிரதத்தை முதன், முதல் கரி யிழுப்பதற்கு அமைத்தார். அவருடைய பெரும் புகழ் இலிவப்பூல்மான்செசுட்டர்புகையிரத வீதி அமைக்கப்பட்டதுடன் ஏற்பட்டது. இவ் வீதி, கால்வாய்ப் போக்குவரத்து முறையில் விதிக்கப்பட்ட கடும் கூலிக்கெதிராகப் போட்டியிடும் நோக்குடன், அமைக்கப் பெற்றது. இவ்வீதியில் பயன்படக்கூடிய எந்திரத்தை அமைப்பவர்க்கு 500 பவுண் பரிசு வழங்குவதாக அதிகாரிகள் வாக்களித்தனர். 1829 இல் யோச்சு தீபன்சன், மணித்தியாலம் 30 மைல் வேகத்துடன் ஓடக்கூடிய *ருெக்கட்" என்ற பெயர் பெற்ற இரதத்தை அமைத்து, அப்பரிசைப் பெற்றர். இந்த ஓட்டத்துடன், புகையிரதத்தின் இறுதி வெற்றி நிச்சயமாயிற்று இலிவப்பூல்-மான்செசுட்டர்புகையிரத வீதி, 1830ஆம் ஆண்டு, போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. இதையடுத்து இங்கி லாந்தின் எல்லாப் பாகங்களிலும் புகையிரத வீதிகள் அமைந்தன. ஆரம்பந் தொட்டுப் புகையிரத வீதி அ ைம ப் புத் திட்டங் களில் அரசாங்கம் தலையிடாக் கொள்கையைக் கடைப் பிடித்தது. தனிப்பட்ட கம்பனிகளின் முயற்சியே, புது வீதிகளை அமைப்பதற்குக் காரணமாகியது. இதனல் அரசாங்கம் தேச அடிப்படையில் வீதி களையமைக்கும் வாய்ப்பையிழந்தது. வீதிகள் தனிப்பட்ட பகுதிகளை இணைக்கும் தொடர்பற்ற அமைப்புக்களாக உருப்பட்டன.
1850 இல் 6,620 மைல் நீளமுள்ள இருப்புப் பாதை அமைக்கப் பட்டுவிட்டது. 1870 இல் 15,537 மைல் நீளமாகவும் 1910 இல் 23,387 மைலாகவும் அதிகரித்தது.

Page 37
48 புது உலக சரித்திரம்
போக்குவரத்து அபிவிருத்தி, தெருக்கள், கால்வாய்கள், புகை யிரத வீதிகள், போன்ற உண்ணுட்டுச் சாதனங்களின் முன்னேற்றத் துடன் நின்றுவிடவில்லை. வெளி நாட்டுப் போக்குவரத்துச் சாதனங் களிலும் துரிதமான முன்னேற்றம் ஏற்பட்டது.
கப்பல்கள் :
19 ஆம் நூற்ருண்டில், பிரித்தானிய கப்பற் போக்குவரத்து முறைகளில் இருவித மாற்றங்கள் ஏற்பட்டன. முதலாவது கப்பல் கள் கட்டுவதற்கு உபயோகமான பொருள்கள் மாறின. ஆரம்பம் தொட்டு, மரத்தினுல் செய்யப்பட்ட கப்பல்கள், காலப்போக்கில் இரும்பினுலும், பின்பு உருக்கினுலு அமைக்கப்படலாயின. இரண் டாவது, கப்பல்களைச் செலுத்துவதற்குக் காற்றிற்குப் பதிலாக, நீராவி காந்திரங்கள் நிர்மாணிக்கப்பட்டன.
இங்கிலாந்தில், கப்பல்கள் அமைப்பதற்குப் போதிய மரம் கிடை யாமற் போனதணுலேயே, மரத்துக்குப் பதிலாக இரும்பை உபயோ கிக்க முற்பட்டனர். முதல் இரும்புப் படகு, 1787 இல் அமைக்கப் பட்டது. 19 ஆம் நூற்றண்டின் ஆரம்பத்துடன் இரும்பினல் செய் யப்பட்ட படகுகள் நதி, கால்வாய்ப் போக்குவரத்தில் உபயோகத் துக்கு வந்தன.
4. விவசாயம்
18 ஆம், 19 ஆம் நூற்றண்டுகளில் ஏற்பட்ட உற்பத்தி முறை மாற்றங்கள், விவசாயத்திலும் பெரும் புரட்சியை உண்டாக்கின. புதிய தொழிற்சாலைகளில் அதிக இலாபம் அடையும் முதலாளிகள், அவ் விதமே விவசாயத்திலும் கூடுதலான இலாபம் பெறும் நோக்குடன், விவசாய உற்பத்தி முறைகளில் அதிக மாறுதல்களைப் புகுத்தினர்.
“gf gDg5 GJUJI Go” (Up GODA) (Open Field Systen) :
18 ஆம் நூற்றண்டின் ஆரம்பத்தில், இங்கிலாந்து தேசத்து வயல் நிலத்தின் மூன்றில் இரண்டு பகுதி, பழைய, திறந்த வயல் முறையின் படியே, பயிர் செய்யப்பட்டு வந்தது. பிரபுக்கள், தங்கள் நிலத்தில் ஒரு பகுதியைத் தமக்கெனச் சொந்தமாக வைத்துக் கொண்டு, மிகுதி யைப் பல துண்டுகளாகப் பிரித்து, அவற்றைக் குடியானவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தனர். குடியானவர், தமக் குக் கொடுக்கப்பட்ட நிலத்துக்குப் பிரதியுபகாரமாகந் பிரபுக்களின் நிலத்தைத் தங்கள் செல வில் பயிரிடுவதுடன், காலத்துக் கேற்பத் திறைகள் செலுத்தவும், வேண் டிய சமயங்களில், சரீர சேவை செய்யவும் கடமைப் பட்டிருந்தனர்.

கைத்தொழிற் புரட்சி 49
திறந்த வயல் விவசாயத்தின் குறைபாடுகள் :
திறந்த வயல் முறை விவசாயம், இது காலம்வரை, இங்கிலாந்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய நிலையிலிருந்தமையால், பயிர்ச்செய்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஒன்றும் ஏற்படவில்லை. பல நூற்றண்டுகளாக உபயோகிக்கப்பட்ட கருவிகளே உபயோகத்தி லிருந்தன. ஆனல், 18 ஆம் நூற்றண்டில் சனத்தொகை அதிகரிக்க ஆரம்பித்ததுடன், கூடுதலான மக்களைப் போசிக்க, ஏராளமான உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்ய வேண்டிய தாயிற்று. இத் தேவையின் முன், நிலச் சொந்தக்காரர், திறந்த வயல் முறை விவசாயத்தின் குறைபாடுகளை உணர ஆரம்பித்தனர். முதலாவது, நிலத்தின் மூன்றிலொரு பகுதியைப் பயிரிடாமல் விட்டு வருவது வீண் என்றுணர்ந்தனர். இரண்டாவது, குடியானவர்களின் வயல்கள் துரத்தில் கிடந்தமை, நேரத்தையும் முயற்சியையும் வீண் விசயம் செய்தது. மூன்றவது, மாரிகாலத்தில் உணவின்மை, நோயுள்ள விலங்குகள் ஒதுக்கப்படாமை போன்ற காரணங்களினுல் நல்ல விலங்குகளை வளர்க்க முடியாமற் போயிற்று. எல்லாவற்றிலும் மேலாக, குடியானவர் பரம்பரை முறைகளைப் பின்பற்றிப் பயிர் செய்ததனல், புது முறைகள் ஒன்றையும் மேற்கொள்ள முடியாமற் போயிற்று. எல்லா விவசாயிகளும் ஒரே நேரத்தில் ஒரே பயிரைச் செய்ய வேண்டியமையால், காலம் மாறி புதுப் பயிர்வகைகளைச் செய்யவோ, புதுக்கருவிகளை உபயோகிக்கவோ முடியாத நிலையிலிருந்தனர்.
திறந்த வயல் முறை விவசாயத்தில், பாரதூரமான குறைகள் இருந்ததனுல், விவசாய முறைகள் முன்னேற, தனி மனிதனின் நிலங் கள் தோட்டங்களாக அடைக்கப்படுதல், இன்றியமையாத முதற்படி என்பது புலனயிற்று. தொழில் துறையில் போல, விவசாயத்திலும் இலாபமடைவதற்கு, தோட்டமுறையே பொருத்தமானது என்று ஏற்பட்டது.
பொது நிலங்களை அடைத்தல் (Enclosures) :
திறந்த வயல்களை வேலிகளினல் அடைத்து, நிலங்களைத் தோட் டங்களாக மாற்றும் முயற்சி, 16 ஆம் நூற்ருண்டு தொடக்கம், இடை யிடையே நடந்து வந்தது. உரோமத்துக்கு ஏற்பட்ட கிராக்கியை ஈடு செய்யப் பிரபுக்கள், தாம் கோதுமை விளைவித்த நிலங்களை ஒன்று சேர்த்து, வேலிகட்டி, அவற்றை ஆடுகள் மேய்ப்பதற்குப் பெரும் புல் வெளியாக்கினர். ஆனல், 17 ஆம் நூற்றண்டில், உரோமத்தின் விலை வீழ்ந்ததுடன், இப் புல்வெளிகள் திரும்பவும் கோதுமைச் செய்கைக்கு உபயோகப்படுத்தப்பட்டன. எனினும், இவ்வியக்கம் 1760 க்கும் 1820 க்கும் இடைப்பட்ட காலத்தில் தான் உச்சநிலையை எய்தியது. ஆரம்பத்தில், விவசாயிகளுக்கிடையே ஏறபட்ட ஒற்றுமையின் பயனு கவே, நிலங்கள் அடைக்கப்பட்டன. ஒருசிலர், இதை யெதிர்த்த பொழுது, முழுத் திட்டத்துக்குமே தடையேற்பட்டது. 18 ஆம் நூற்றண்டின் காலப்போக்கில் நிலங்கள், பாராளுமன்றச் சட்டங்களின் பின்பே, அடைக்கப்பட வேண்டுமென்ற சட்டம் ஏற்பட்டது 1760 க்கும் 1820 க்குமிடையில் மாத்திரம் ஏறக்குறைய 4,000 வேலி
6 rو س--D

Page 38
50 புது உலக சரித்திரம்
கட்டுச் சட்டங்கள் (Enclosure Acts) ஆக்கப்பெற்றன ; 7 கோடி ஏக்கர் திறந்த வயல் நிலம் அடைபட்டது. சிறு நிலச் சொந்தக்காரர்களின் நிலம், பெருநிலச் சொந்தக்காரர்களின் நிலத்துடன் இணைபட வழி கோலப்பட்டது. வேலியிடும் வேலை, செலவுக்குரிய கருமமாதலினல், சிறு நிலச் சொந்தக்காரர் தம் நிலத்தைப் பெருநிலக்காரருக்கு விற்ற னர். வேறு பல இடையூறுகளும் ஏற்பட்டன. மேய்ச்சல் தரையும் சேர்த்து அடைபட்டமையில்ை, மேய்ச்சல் தொழிலால் வந்த வருமானம் குறைந்தது. இவற்றைச் சகிக்க முடியாது சிறுபான்மை விவசாயிகள் (Yeomen) பட்டணங்களை நோக்கிப் புறப்படலாயினர்.
புதுமுறைகளும் புதுக்கருவிகளும் :
திறந்த வயல்கள் தோட்டங்களாக அடைக்கப்பட்டதுடன், புதுக்
கருவிகளையும், புது முறைகளையும் பின்பற்றத் தோட்ட முதலாளிகளுக்கு
வாய்ப்புக் கிடைத்தது.
யெத்ரோ ரல் :
18 ஆம் நூற்றண்டின் ஆரம்பகாலம் தொட்டே, விவசாயத்தில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கின. புராதன விவசாய முறைகளில் புது விஞ்ஞான வழிவகைகளைக் கையாளுவதற்கு வழி வகுத்த வர் Guš(3utr práv (Jethro Tull). 9jali GTOp9u 1576ílá) (“Horse hoeing Husbandry') காணப்பட்ட புதுக் கருத்துக்களே, பிற்கால விவசாய முறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை உண்டு பண்ண மூல கார ணமாக அமைந்தன. பல சீர்திருத்த வாதிகளுக்கு நடந்தது போன்று, அவரது புதுக் கொள்கைகளுக்கும் முயற்சிகளுக்கும், ஆரம்பத்தில் பல மான எதிர்ப்பு இருந்ததனல், தனது காலத்தில்இம் மாற்றங்களின் பலா பலன்களைக் கண்ணுரக் காணவில்லை. அவர் கடைப்பிடித்த புது வழி களில் முக்கியமானவை, விதைகளின் அளவைக் குறைத்தல், துளைத்தல் (driling) என்பனவாகும். நிலங்களைத் தரிசாக விடுவது அவசியமற்ற முறையெனக் கற்பித்தார். கிழங்குகளைப் பயிரிட்டு, நிலங்களின் இழந்த செழிப்பை மீண்டும் பெறலாம் என்றும் காட்டினர். ஆனல் திறந்த வயல் முறையைப் பின்பற்றிய விவசாயிகள், தொடர்ந்து விதைகளை வியாபித்தும், நெருக்கமாகவும். வித்தியாசமான ஆழத்திலும் விதைத்து, வந்தனர்.
*தேனிப்பு"தவுன்சென்ட
ரல்லின் முறைகளைக் கையாண்டு வெற்றி கண்டவர் தவுன்சென்ட் பிரபு. (Lord Townsend) இவர் 1730 அளவில், அரசியலிலிருந்து ஓய்வு பெற்று, தனதுதோட்டங்களை அபிவிருத்தி செய்வதில் முழு நேரத்தை

கைத்தொழிற் புரட்சி 5.
யும் செலவிட்டார். கிழங்கு (Turnip) வகைகளையும், புல் வகைகளையும் (Clover) வயல் நிலங்களில் பயிரிடும் புது முறைகளைச் சித்திகரமாகச் செய்கை முறையில் காட்டினர்.
பழைய முறைப்படி, மூன்ருண்டுகளுக்கொரு முறை, ஒரு பகுதி நிலத்தைப் பயிர் செய்யாது வெறுமையாக விடுவதற்குப் பதிலாக, நான்கு பயிர்களைக் கொண்ட மாற்றுப் பயிர்ச் செய்கை முறையைக் கையாண்டார். நூற்றண்டின் முடிவுக் கிடையில், இவர் கற்பித் த மாதிரியை அகில இங்கிலாந்தும் பின்பற்றலாயிற்று. இதனல் தோட் டங்களில், ஆடு, மாடுகளை வளர்க்கவும், அவற்றிலிருந்து பெறப் பட்ட உரத்துடன் பயிர்களின் விளைவை அதிகரிக்கவும், வசதிகள் ஏற் பட்டன.
பண்ணை விலங்குப் பெருக்கம் :
இங்கிலாந்தில் பெருகிவரும் சனத் தொகையைப் போசிப்பதற்குக் கூடுதலான தானியங்களை உற்பத்தி செய்ய எப்படி தவுன் சென்ட் வழியைக் காட்டினரோ, அதேபோல, பேக்வல் (Bakewell) மாமிசத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் புது முறைகளைக் காட்டினர்.
இலெசுட்டர்சயரில் (Leicestershire) பேக்வல், கால்நடை பரா மரிப்பு முறைகளில் நவமான வழிகளைக் கையாண்டு, புரட்சிகரமான மாற்றங்களுக்கு வழி வகுத்தார். எருதுகள் வேலைக்கும், ஆடு க ள் உரோமத்துக்கும் மாத்திரம் வளர்ப்பதைவிட்டுப் புது முறைகளில் பரி சோதனைகள் நடாத்தினர். தேர்வு முறையைக் கையாண்டு, ஆடு, மாடுகளை எப்படி உணவுக்காக வளர்க்கலாம், என்பதைக் கண்டு பிடித்தார். இதனல் 1800 அளவில், ஆடுகளினதும், மாடுகளினதும் சராசரி எடை இரண்டு, மூன்று மடங்காக அதிகரித்தது.
விவசாய முன்னேற்றம் :
ரல், தவுன்சென்ட். என்பவர்களின் புது முறைகள் பரவுவதற்கு 18 ஆம் நூற்ருண் டின் முதல் அரைப்பாதியில் சூழ்நிலை சரியாகவில்லை. ஆனல் அடுத்த 50 ஆண்டு காலதி தில் விலைகள் உயர்ந்தன; பெரும் நிலப்பரப்புக்கள் வேலிகட்டிய தோட்டங்க ளா கின. எனவே 1760 க்கும் 1830 க்குமிடையில் நிலச்சொந்தக்காரருக்கும், கமக்காரருக்கும் கல்வியூட்டுவதிலும் புதுமுறைகளைப் பயிற்றுவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இக்கால முன்னேற்றத்தில் மூன்று அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை-(1) ஆர்த்தர் யங் என்பவரின் தனிப்பட்ட முயற்சிகள் (2) ஒல்க்கம் தோட்டங்களின் முன்மாதிரிகை (3) விவசாய இலாக்காவின் (Board of Agriculture) நடவடிக்கைகள்.
ஆர்த்தர் யங் :
ஆர்த்தர் யங் 1741 இல் பிறந்தவர். 1787 இல் இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்சு
ன்னும் பிரதேசங்களில் நிலவிய விவசாய முறைகளேத் தீர ஆராய்வதற்காக ஒரு சுற்றுப்
LSoun 6007,560.5 gyalil Saisitif. asth scussigdias3.1 "A six wasks' Tour through she

Page 39
5歳2 புது உலக சரித்திரம்
southern countries of England and Wales' (1763), "A six months' "Tour through the North of England"” (1770) 6T 691 b {2ab5 a5ITổdas G?ổ) Quas? St.Lrrrr. இந்நாடுகளில் நிலவிய விவசாய முறையை நுணுக்கமாக ஆராய்ந்து, அவற்றில் தான் அவ தானித்த குறைகளையும், அவற்றை நீக்குவதற்கு வேண்டிய வழிவகைகளையும், முன்னேற்ற மடைந்த தோட்டங்களில் காணப்பட்ட புது முறைகளையும் விரிவாக வர்ணித்தார். வேறும் விவசாய சஞ்சிகைகள், பிரசுரங்கள் மூலமும் புது விவசாய முறைகளின் சிறப்புக்களைப் பிர SFT Ttib செய்தார். -
மூன்றம் யோச்சு அரசேறிய காலம் தொடக்கம் பெரும் நிலச் சொந்தக்காரர் மத்தியில் ஒரு புது ஆர்வமும், உற்சாகமும், ஊக்கமும் காணப்பட்டன. அரசர், விவசாய முயற்சி களில் அதிசிரத்தையும் கவனமும் எடுத்து ** விவசாயி யோச்சு" எனும் பெயரைப் பெற்றர். அவர் தனது வின்சர் தோட்டத்தை ஒரு மாதிரியாக அமைத்தும், பத்திரிகை களில் கட்டுரைகள் எழுதியும், மக்களின் ஆர்வத்தைக் கிளறி விட்டார்.
9 iod, s,ti Gas Ti (Coke of Holkham) :
கோக், தனது ஒல்க்கம் தோட்டங்களில், விவசாய முறைகளில் புது வழிகளைத் தூண்டு வதற்காக ஆகவேண்டியனவற்றையெல்லாம் செய்தார். 50 ஆண்டுகளுக்கு முன், தவுன் சென்ட் காட்டிய விதிகளைக் கடைப் பிடித்தும், அவற்றில் திருத்தங்களைச் செய்தும் கோதுமை பயிரிடுவதில் பெரும் வெற்றி கண்டார். 1776 க்கும் 1816 க்குமிடையில் அவரது தோட் டக் குத்தகை 2,200 பவுணிலிருந்து 20,000பவுணுக்கு உயர்ந்தது. இவ்வுயர்வு பச்ளேயிடுதல், மாற்றுப் பயிர்ச்செய்கை முறைகளைத் திறம்படக் கையாண்டதினலேயே ஏற்பட்டது. அவரது முயற்சிகளினுல் எற்பட்ட பயன்கள், அவரது தோட்டங்களுடன் நின்றுவிடவில்லை. 1778 தொடக்கம் ஒல்க்கமில் விவசாய மாநாடுகள் ஆரம்பிக்கப்பட்டு, இங்கிலாந்தின் எல்லாப்பாகங் களிலுமிருந்து கமக்காரர் வரவழைக்கப்பட்டனர். இம்மாநாடுகள், பொருட்காட்சிகள் போல் பயன்பட்டுப், புது அறிவு அகில இங்கிலாந்துக்கும் பரவியது.
sa sa F sa u gasc Air dis, assir
1793 இல் விவசாய இலாக்கா (Board of Agriculture) அமைக்கப்பட்டது. அவ் வாண்டு தொடக்கம் 1810 வரை, ஆர்த்தர் யங் செயலாளராகக் கடமையாற்றி அரும்பெரும் தொண்டு புரிந்தார். "Annals of Agriculture" எனும் சஞ்சிகை, இவரால் வெளி பிடப்பட்டது. அத்துடன் இம்மத்திய நிறுவனத்தின் வழியாக எல்லா விவசாய முயற்சி களும் ஒருமைப்படுத்தப்பட்டன.
5. புரட்சியின் விளைவுகள்
அடிப்படைப் பொருளாதார மாற்றம் :
தொழிற் புரட்சியின் வருகையுடன், மக்களின் வாழ்க்கையும், இங்கிலாந்து தேசத்தின் பொருளாதார அமைப்பும், அடியோடு மாற்ற மடைந்தன. 18 ஆம் நூற்ருண்டுவரை பெருமளவுக்கு விவசாய நாடாகவிருந்த இங்கிலாந்து, 19 ஆம் நூற்றண்டில் “உலகத்தின் தொழிற்சாலை"யாக மாறியது. இன்னும் விவசாயம், தேசப்பொருளா தாரத்தில் பிரதான இடத்தை வகித்தபோதிலும், ஏனைய தொழில்க ளுடன் ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, அஃது இரண்டாந்தர

கைத்தொழிற் புரட்சி 53
இடத்தை வகிக்க ஆரம்பித்து விட்டதென்பது புலணுகும். இங்கிலாந் தின் குடிமக்கள், விவசாயத்தை விட்டு, கைத்தொழில்களையும், வாணிபத்தையும் பிரதான முயற்சிகளாக மேற்கொண்டு, பட்டினங்க ளில் வசிக்கலானர்கள். இங்கிலாந்தின் செல்வ வளம், விவசாயத்தை விட்டு, வாணிபத்தில் நம்பிக்கை வைக்க நேரிட்டது. மக்கள் தம் சீவனுேபாயத்துக்கே யுத்தம், வரி போன்ற பல்வேறுபட்ட காரணங் களினல் எந்நேரமும் மூடப்படக்கூடிய உலக சந்தைகளை நம்பி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. உணவுற்பத்தியைக் கைவிட்டு, தொழில் வளங்களில் தன் கவனத்தைச் செலுத்திய இங்கிலாந்து, ஆக்கப்பட்ட பொருள்களை விற்று, மூலப்பொருள்களையும், உணவையும் அச் சந்தைகளிலிருந்து பெற்றது. இதல்ை 19 ஆம் நூற்ருண்டு தொடக்கம், தனது (தவைகளைப் பூர்த்தி செய்யவும், மிதமிஞ்சிய பொருள்களை விற்பனை செய்யவும், சந்தைகளைப் பெறும் முயற்சி, திட்ட மிட்டு மேற்கொள்ளப் பட்டது. ஏகாதிபத்தியத்திற்காக நடைபெற்ற பழைய போட்டி, சந்தைகளுக்கான புதுப் போட்டியாக மாறியது.
ஆலைத் தொழில் முறை : V முதலாளி-தொழிலாளி வகுப்புக்களின் தோற்றம் : எந்திரங்களின் வருகையுடன், கைத்தொழில் போய் எந்திரத் தொழில், குடிசை போய்த் தொழிற்சாலை, வீட்டுத் தொழில் போய் எந்திர சாலைத் தொழில், சொந்தத் தொழில் போய்க் கூலித் தொழில் ஏற்பட்டது. ஆலைகளை நிறுவ அதிக மூலதனம் தேவைப்பட்டமை யால், பணம் படைத்த செல்வந்தர்களே தொழிற்சாலைகளை அமைத் தனர். இந்த ஆலைகளில், ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் கூலிக்கு வேலையில் அமர்த்தப்பட்டனர். முன்னர் தத்தம் குடிசைக ளில், தாமே சுதந்திரமாக வேலை செய்து வந்த தொழிலாளி, இப் பொழுது எந்திரத்தை வாங்கவோ, வீட்டிலேயே தொழில் புரியவோ முடியாமற் போயிற்று செல்வந்தர்களினல் நிறுவப்பெற்ற ஆலைக ளில், தொழிலாளர் கூலிக்கு மாரடிக்கும் வகுப்பினராக மாறினர். இதனல் சமூகத்தில், முதலாளி, தொழிலாளி என்ற இருவர்க்கத்தினர் தோன்றலாயினர். வீட்டுத் தொழில் முறையில் தொழிலாளியே முதலாளியாகவும் இருந்தான். புது முறையில் தொழிலாளி வேறு, முதலாளி வேறு என்ற பேதம் ஏற்பட்டது. பாட்டாளிகள் தம் பாட்டை (Labour) விலைக்கு விற்று, முதலாளியை நம்பியே வாழ வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.
ஆலைத் தொழில் முறையின் வருகையுடன், மூலதனத்தின் ஆதிக்கம் ஓங்கியது. முதலை உடையவர்கள் உற்பத்தி, வாணிபம் ஆகிய துறை களை ஆளத் தொடங்கினர். பொருளாதார அதிகாரத்தின் கவர்ச்சி
A 6

Page 40
54 புது உலக சரித்திரம்
மையம், பழைய நிலப் பிரபுக்களிடமிருந்து புது இரும்புப் பெருமக் களுக்கும், பருத்திப் பிரபுக்களுக்கும் மாறியது. ஆனல் இத்தப் புது வகுப்பின் எழுச்சி, ஈற்றில் பயன்தரு பலன்களுக்கே வழி காட்டியது. பிறப்புரிமையுடன் இணைக்கப்பட்டிருந்த கெளரவத்தையும், இது வரை நிலப்பிரபுக்கள் அனுபவித்த பொருளாதார, அ ர சி ய ல் ஏக போக உரிமைகளையும் முறித்து, சனநாயகத்தின் வளர்ச்சிக்கு வாயில் திறந்து விடப்பட்டது.
சமூகக் கிளர்ச்சிகள் :
நாட்டின் பொருளாதாரத்தில் புரட்சிகரமான அடிப்படை மாற் றங்கள் ஏற்படும்போது, சமூகக் கிளர்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடி யாததே. தொழிற்சாலை உரிமையாளர்கள், கோடிக் கணக் கான தொழிலாளரைச் சுரண்டலாயினர். தொழிலாளர், சுரங்கங்களிலும் ஆலைகளிலும் மிகக் கொடிய சூழ் நிலையில் வேலை செய்ய நேர்ந்தது. முதலாளிகள், தம் சட்டைப்பைகளை நிரப்புவதில் கண்னும் கருத்து மாக இருந்தார்களே தவிர, தொழிலாளரின் சேமத்தைப் பற்றிச் சற் றேனும் சிந்திக்கவில்லை. சுகாதார வசதிகளற்ற, செளகரியங்களற்ற, அபாயகரமான எந்திரங்களிலிருந்து பாதுகாப்பற்ற நிலையங்களாகவே, தொழிற்சாலைகள் இருந்தன. பெண்களும் குழந்தைகளும் 3 ன் ட மணித்தியாலங்களுக்கு, மிகக் கொடிய சூழ் நிலையில், கடுமையாக உழைக்கக் கட்டாயப் படுத்தப் பட்டமை, அதி பரிதாபமானது. சுகா தாரமற்ற இருப்பிடங்களும், அழுக்குப் படிந்த வாழ்வும் அவர்களின் சொந்தமாயிற்று. இவர்கள் பெற்ற சம்பளமோ மிகச் சொற்பம் ; ஆணுல், விலைகள் பாதுகாப்புச் சட்டங்களினல், உயர் நிலைகளில் நிலைப் படுத்தப்பட்டன. நாட்டிலே துன்பம் தாண்டவமாடி, கலகங்களும், குழப்பங்களும் ஏற்படலாயின. பட்டினியால் வருந்தும் மக்களுக்குத் துணை புரிவதற்கு மாருக, அரசாங்கம் அடக்கு முறைகளைக் கையாண்டது. 1799-1800 இல், முதலாளிகள், இணைப்புச் சட்டங் களேப் பிறப்பித்து, சம்பள உயர்வுக்காகவோ, வேலை செய்யும் மணித் தியாலத்தைக் குறைப்பதற்காகவோ தொழிலாளர், ஒன்றுகூடாத படி தடை செய்தனர். இவ்வாறு செல்வம் கொளிக்கும் இங்கிலாந் தில், `வெள்ளை அடிமைகள்" எனப் பெயர்பெற்ற தொழிலாள வர்க்கம் பசியால் வருந்தி, சஞ்சலத்தால் வாடி, உரிமைகளனைத்தை யும் இழந்து நின்றது. A நகரங்களின் வளர்ச்சி :
நீராவியும், நிலக்கரியும் எந்திரங்களை இயக்கும் சக்திகளாகப் பயன்படத் தொடங்கியதுடன்; புதுத் தொழிற்சாலைகள், இரும்பு, நிலக் கரிச் சுரங்கங்களுக்கு அருகாமையில் அமைக்கப்பெற்றன. இவ்வாறு

கைத்தொழிற் புரட்சி 55
முக்கியத்துவம் பெற்ற இடங்கள், வட இங்கிலாந்து, உவேல்சு, சுக் கொட்லாந்து என்பவையாகும். எந்திரம், மனிதனின் தொழிலைப் பறித்துக்கொண்டபோதும், இறுதியில் கைத்தொழில் வளம் பெருகவே, தொழிற்சாலைகளில், எந்திரங்களை இயக்கக் கணக்கற்ற தொழிலாளி கள் தேவைப்பட்டனர். தொழிலாளரும் குடும்பங்களும் ஆலைகளுள்ள இடங்களில் குவிந்து, புது நகரங்களைத் தாபிக்கலாயினர். மேர்சி, அம்பர் நதிப்பிரதேசங்களின் தரிசு நிலங்களிலும், தென் உவேல்சு, வடமேற்கு மிட்லாந்து பள்ளத்தாக்குகளிலும், புதுத்தொழிற் பிர தேசங்கள் வளர்ச்சியடையலாயின. பர்மிங்காம், இலிவப்பூல், மன் செசுட்டர், கிளாசுகோ, இலீட்சு, செப்பீல்டு என்ற புது நகரங்கள் தோன்றலாயின.
கைத்தொழிற் புரட்சிக் காலத்தில், நிதானமான அபிவிருத்திக்குப் பதிலாக, அவசரம் மேலிட்டதனல், புது நகரங்கள் உருவமற்ற கும் பல்களாகப் பரிணமித்தன. திட்டமின்றி உருப்பெற்ற இந்நகரங் களில், நீர் விநியோகத்துக்கும், கழிவுப்பொருள்களை அகற்றுவதற்கும் வசதிகள் இன்மையினல், அழுக்குத் தொற்று நோய்கள் சாதாரண நிகழ்ச்சிகளாயின. பல்லாண்டுகளாக இந்நோய்களுடன் வாழ்ந்த பிற்பாடே, மக்கள் படிப்படியாகச் சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்ளலாயினர்.
தொழிலாளர் நிலையில் சீர்திருத்தங்கள் :
ஆரம்பத்தில், தற்போக்குக் கொள்கையை (Laissez Faire) கடைப் பிடித்த அரசாங்கம், தொழிலாளரின் விடயங்களில் தலையிடாது விலகி நின்றது. வறுமையாலும், பசிப்பிணியாலும் வாடிய மக்களின் இன் னல்களைத் தீர்ப்பதற்கு, அரசாங்கம் எந்த விதமான பிரயத்தனமும் செய்யவில்லை. அரசாங்கம், முதலாளியும், தொழிலாளியும் த த் தம் பிரச்சினைகளைத் தாமே தீர்க்குமாறு விட்டது.
(p(pLDT sò D 6 T giò (Radicalism):
பிரான்சினது உரூசோ, வோல்த்தேயர் ஆகியவர்களைஒப்ப, இங்கிலாந் திலும் தனியாண்மை (Individualism) பயன் பாட்டுக் கொள்கைகள் கையாளப்பட்டன. செரமி பெந்தம் (1748-1832), ஒசுட்டின் (17901859), யோன் சுட்டுவட் மில் (1806-73) என்ற முழு மாற்ற வாதிகள் (Radicals) பிரபுத்துவ ஆட்சியை வன்மையாகக் கண்டித்து, சட்டங் களைச் சீர் திருத்துவதன் அவசியத்தைத் தாம் எழுதிய பல நூல்களில் விவரித்தனர். 'அதி கூடுதலான மக்களுக்கு, அதி கூடுதலான இன் பத்தைப் பெற்றுக் கொடுப்பதையே’ அரசாங்கம் தன் இலக்காகக்

Page 41
56 புது உலக சரித்திரம்
கொள்ள வேண்டுமென வாதித்தனர். தொழிலாளரின் பரிதா ப நிலையை அபிவிருத்தி செய்ய முயற்சித்தவர்களில், ருெபட் ஓவன் (1771-1858), அசிலி பிரபு (1801-85) தல சிறந்தவர்கள்.
G(gu 30 cór (Robert Owen)
ருெபட் ஓவன் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஒரு சனுேபகாரி: ஆங்கிலேயரின் நிலைகள் அபிவிருத்தியடைய, அவர்களின் சமூக பொரு ளாதார வாழ்வில், போட்டிக்குப் பதிலாக ஒத்துழைப்பு அ ல் ல து கூட்டுறவு எனும் புது மார்க்கத்தைக் கடைப் பிடிப்பதே மேல் என்று கற்பித்தார். த மது கொள்கைகளைச் சாதனையில் நியூ லணுர்க் (New Lamark) எனுமிடத்தில், தான் நிறுவிய தொழிற் சாலையில் நிரூ பித்தார்.
சாபிசுபெரி பிரபு :
அன்ரனி அசிலி கூப்பர் (பின்பு சாபிசுபெரி பிரபு - Lord Shafiesbury) பிரபுக்கள் வம்சத்தில் உதித்தாலும், தன் வாழ் நாள் முழுவதையும் சமூக, பரோபகார முயற்சிகளில் செலவிட்டார். அவர் தொழிலாளருக்குச் செய்த தொண்டுக்காக, 19 ஆம் நூற்றண்டுடின் தொழிற்சாலை விதிகளின் தந்தை  ெய ன் று அழைக்கப்பட்டுள்ளார். அரசாங்கம் சட்டங்கள், கட்டுப்பாடுகள் மூலம் தொழிற்சாலைகளின் வேலை முறைகள், வேலை நாட்களின் நீட்சி, மனிதவுரிமைகள், வேத னம் போன்ற விடயங்களில் தலையிட வேண்டுமென்பன த ஒயா து வற்புறுத்தி வந்தார். ஆட்சி புரி யு ம் வகுப்புக்கள், தொழிலாளரின் அபிவிருத்திக்கான பொறுப்பை யேற்க வேண்டு மென்பதைப் படிப் படி யாகக் கற்பித்தார். அவரது முதல் வெற்றி, 1833 ஆம் ஆண் டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தொழிற்சாலை விதி யாகும். இவ்விதி ஒன்பது, வயதுக்குட்பட்டவர்களை வேலையில் அமர்த்தக் கூடா தென்றும் 13 வயதுக்குட்பட்டவர்களுக்கு வேலை நேரம் 9 மணி என் றும், 13-18 வயதுள்ளவர்களுக்கு வேலை நேரம் 12 மணியென்றும் நிர்ணயித்தது. இச்சட்டம், சரியாக அமல் செய்யப்படுவதைக் கட்டுப் படுத்த, நான்கு தொழிற்சாலைப் பரிசோதகர் நியமிக்கப்பட்டனர். 1847 இல் நிறைவேறிய “பத்து மணி மசோதா” தொழிற்சாலைகளில் வேலை நேர ம், பத் து மணித்தியாலம் எ ன் று கட்டுப்படுத்தியது. ஆணுல், முதலாளிகள், கூடுதலான வேலை வாங்க மாற்று முறைகளை (Shift System) 6J,ibuG5ğ595)60T rf. இதைக் களைவதற்காக 1850, 1853 ஆம் ஆண்டுச் சட்டங்கள் இயற்றப்பட்டன. பெண்களும், பிள்ளை களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் அல்லது காலை 7 தொடக்கம் மாலை 7 வரை வேலை செய்யலாமென்றும், இடையில் 14

கைத்தொழிற் புரட்சி 57
மணி நேரம் சாப்பாட்டிற்கு இடைவேளை கொடுக்க வேண்டு மென்றும் விதிகள் உண்டாக்கப்பட்டன. இத்தோடு 10 மணிக்கு மேல் வேலை வாங்கும் பழக்கம் அடியோடு ஒழிந்தது.
தொழிற்சங்க வளர்ச்சி :
தொழிலாள்ர், பரோபகாரிகளின் முயற்சிகளுடன் மாத்திரம் திருப்திப்படவில்லை. தம் நிலையைத் தாமே அபிவிருத்திசெய்ய வேண்டு மென்ற உணர்ச்சி, மெல்ல மெல்லப் பரவலாயிற்று. பிரான்சிசு பிளேசு (Francis Place), 2 669 6v 6êuLulub 66 @@djib (William Lowett) G3List Gör so வர்களின் முயற்சிகளினல், தொழிலாள வகுப்பினர், தம் சுயதேவை யைப் பூர்த்திசெய்யும் முயற்சிகளில் அனுபவம் பெற ல |ா யி ன ர். தொழிலாளர் ஒன்றுகூடுவதைத் தடுப்பதற்கு 1800 இல் ஏற்பட்ட சேர்க்கை விதிகளுக்கு (Combination Laws) எதிராக, இயக்கங்கள் தோன்றலாயின. இக்கிளர்ச்சிக்கு, அரசாங்கம் செவி சா ய் த் து 1824-இல் சேர்க்கை விதிகளை அகற்றியது. இதைத் தொடர்ந்து தொழி லாளர் சங்கங்கள் அதிகரிக்கலாயின. அதே காலத்தில், தொழிற் சங்கங்களை ஒன்ருக இணைத்துப் பெரிய தொழிற் சங்கம் ஒன்றை அமைக்கவேண்டுமென்ற எண்ணமும் வளர்ச்சியடைந்து வந்தது. 1834 இல், ருெபட் ஓவனின் இடைவிடாத முயற்சியினல், பெரிய (356Fuu (GosT faib y filius ?)&POI ÜLI (Grand National Consolidated Trade Union) ஏற்படலாயிற்று. இச்சங்கத்தில், ஐந்து இலட்சம் அங்கத்தினர் சேர்ந்தனர். அதி உயர்ந்த இலட்சியங்களுடன் அமைக் கப்பட்டமையினல், அது சித்திகரமாக இயங்க முடியாமற் போயிற்று. இத்தோல்வியினல், தொழிற் சங்கங்களின் வளர்ச்சி சொற்ப காலத்துக் குத்தடைப்படலாயிற்று. 1843 இல் ‘புதுநோக்குத்தொழிற்சங்கங்கள்' அமைக்கப்பட்டன. 1871 ஆம் ஆண்டு, அதி முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சட்டம்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பெற்றது. சங்கங்கள், தம் சொத்துக்களைப் பாதுகாக்க, நீதித்தலங்களில் வழக்குத் தொடர லாம் என்றும், “வேலை நிறுத்தம், சட்டபூர்வமான செயல்' என வும் புதுச் சட்டம் கூறியது. இச்சட்டத்துடன் தொழிற்சங்கங்களின் பொற் காலம் உதயமாயிற்று.

Page 42
58 புது உலக சரித்திரம்
அதிகாரம் 4 பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு
1. நாட்டுமன்றம் (மே 1789-செற்றம்பர் 1791)
பொது நாட்டுச் சபை (States General) கூடுதல் :
நிதியறவு நிலைக்குத் தீர்வு காண்பதற்காக, அரசர் பொது நாட்டுச் சபையைக் கூட்டிய பொழுது, அவர், சரித்திரத்தில் அதி முக்கியமும், அபாயமும் நிறைந்த பரிசோதனையை ஆரம்பித்து வைத்தார் என்பதை உணரவில்லை. பொது நாட்டுச்சபை உறுப்பினரும், தங்க ளுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பிரச்சனையைத் தீர்ப்பதில் அடங்கியிருந்த சங்கடங்களை உணர்ந்தாரிலர்.
பிரெஞ்சுப் பொது நாட்டுச் சபை, பேரிலும் உருவத்திலும் பழமை யானது ; ஆனல், ஆன்மாவிலும், அங்கத்துவத்திலும் முற்ருகப் புதுமையானது. அது தனித்தனி அங்கங்களாக இயங்கும், மூன்று வகுப் பினரது மன்றமாக அமைந்தது. 1614 க்குப்பின், இச்சபை கூட்டப் படாததனல் அதன் ஒழுங்குகள், விதிகள், தத்துவங்கள், அதிகாரங் கள் யாவும் தெளிவில்லாத நிலையிலிருந்தன. பழைய காலத்தில் பொதுமக்களின் குறைகளையும், செயற்படவேண்டிய திருத்தங்களையும் அரசனுக்கு எடுத்துரைக்கும் ஆய்வுரைக் கழகமாகவே கடமையாற்றி யதல்ை, அது நிதி நிலையைத் தீர்ப்பதற்கு வேண்டிய வழிவகைகளைக் கூறுவதுடன் நின்றுவிடுமெனவே அரசர் எதிர்பார்த்தார். அவர்களின் ஆலோசனைகளை ஏற்றுச் சீர்திருத்தங்களைச் செய்யவும், அரசர் சித்தமாக விருந்தார். ஆல்ை பிரதிநிதிகள் முற்றிலும் மாறுபட்ட அபிப்பிரா யங்களையும், நோக்கங்களையும் கொண்டிருந்தனர். நாட்டின் அரசியல், சமூக அமைப்பை முற்ருக மாற்றியமைக்க வேண்டுமென்ற எண்ணம், அவர்கள் மனதில் குடிகொண்டிருந்தது.
வாக்களிப்புப் பிரச்சினை :
1789 ஆம் ஆண்டு, மே மாதம் 5 ஆம் நாள், பொதுச்சபை கூடிற்று. 308 குருக்கள், 285 பிரபுக்கள், 621 மூன்ரும் வகுப்பினர், பரிசிலிருந்து பத்துமைல்களுக்கு அப்பாலுள்ள வேர்சை (Versailles) நகரத்தில் குழுமினர். அங்கு, முதன் முதலாக சபையின் பிரதிநிதிகள் தனிப்பட்ட அங்கத்தவர் என்ற நியதியிலா, அல்லது வகுப்பு முறை யிலா வாக்களிப்பது ? என்ற முக்கிய பிரச்சினை எழுந்தது. முந்திய

பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு 59
முறை அங்கீகரிக்கப்பட்டால், மூன்ரும் வகுப்பினர் சபையில் பெரும் பான்மையினராவர். பிந்திய முறை மேற்கொள்ளப்பட்டால், இரண் டிற்கு ஒன்று என்ற விகிதத்தில், மூன்ரும் குடித்திணையினர் சிறுபான்மை யினராவர், இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அரசனும் அமைச்சர்க களும் ஒரு நடவடிக்கையும் எடுக்காது விடவே, தொடர்ந்து ஆறு கிழமைகட்கு, பிரச்சினை தீராத நிலையில் தர்க்கிக்கப்பட்டது. மூன்ரும் குடித்திணையினர் மத்தியில், கூட்டு ஒற்றுமை உணர்ச்சி, நாளாந்தம் வளர்ந்து வந்தது. அவர்களிடையில் புதுத் தலைவர்கள் தோன்றினர். மிருபோ (Mirabeau) என்ற பிரபு, மூன்ரும் குடித்திணையில் அதி சிறந்த பேச்சாளராகவும், திறமை வாய்ந்தவராகவும் உருப்பெற்றர்.
Ab MT (GLDGör púb (National Assembly) :
யூன் 17 ஆம் நாள், மூன்ரும் வகுப்புப் பிரதிநிதிகள், பிரான்சின் அரசமைப்பை மாற்றியமைக்கும் நோக்குடன், ' நாட்டு மன்றம்' எனும் நாமத்தைப் பூண்டனர். உரூசோவின் கோட்பாடுகளின்படி, அரசதிகாரம் பொதுமக்களுக்கே உரியது, என நம்பிக்கொண்ட மூன் மும் குடித்தினையினர், மற்ற இரு வகுப்பினருக்கும், இதுகாலம்வரை மன்றத்திலிருந்த வகுப்புவாரி அதிகாரத்தை நிராகரித்து, அவ்விரு வகுப்புக்களின் பிரதிநிதிகள், தனிப் பட்ட அங்கத்தவர் என்ற நியதி யில், தீர்மானங்களில் பங்குபற்றலாமென்ற சட்டத்தைப் பிறப்பித் தனர். இதுகாலம் வரை, கண்களை மூடிக்கொண்டிருந்த அரசன், இச் சந்தர்ப்பத்தில், மூன்ருங் குடித்திணையினர் ஆற்றிய கருமங்கள் யாவும் ஒழுங்கற்றவை என்றும், சபை வகுப்புவாரியாகவே கூடவேண்டு மென்றும், ஒரு சட்டத்தைப் பிரகடனஞ்செய்து, நாட்டுமன்றத்தின் கதவுகளை மூடுவித்தார். ஆனல், அவரது சட்டம் ஐம்பது நாள்களால் பிந்திவிட்டது.
தெனிசு மைதான சத்தியம் (Tennis Court 0ath) :
இச்சட்டத்தைக் கேள்வியுற்ற மூன்றங் குடித்திணையினர், கோபங் கொண்டெழுந்து, சபைக்கருகாமையிலிருந்த தெ னிசு மைதானத்தில், யூன் 20 ஆம் நாள் குழுமி, அங்கு, தாங்கள் பிரான்சுக்கு ஒரு புது அரசியல் யாப்பை உருவாக்குமுன் கலைவதில்லை எனச் சத்தியம் செய்தனர். மூன்ரும் வகுப்பினர், அரசனை விட்டு, தம்மிலேயும், தம் தலைவரான மிருபோவிலும் முழு நம்பிக்கை வைக்கலாயினர்.
இதற்கிடையில், முதலாம் வகுப்பைச் சேர்ந்த ஒரு சிலகுரவர் கள், மூன்ரும் குடித்திணையுடன் சேர்ந்து கொண்டனர். இச்செயலி ணுல் புது உற்சாகம் கொண்ட மூன்றங் குடித்திணையினர், அரசனின்

Page 43
60 புது உலக சரித்திரம்
அதிகாரத்தை அலட்சியம் செய்து, தங்கள் விருப்பப்படி கருமமாற்ற முற்பட்டனர். இவ்வாறு வகுப்பு ரீதியில்லாமல், ஒரு ச  ைப யாக இயங்கும் தன்மை ஏற்பட்டது. udg; GS air of gif (Fall of the Bastille):
இந்நிலையில், அரசியையும் அரசரின் சகோதரரையும் தலைவராகக் கொண்ட பிரபுத்துவக் கட்சி ஏற்படுத்திய சில நடவடிக்கைகளினல், அரசனுக்கும் மக்களுக்குமிடையில் ஏற்பட்ட பிளவு, மேலும் விரிவடைந் தது. அவர்களது தூண்டுதலினல், கலகம் என்ற போர்வையின் கீழ் 40,000 இராணுவத்தினர், பரிசு நகரத்தை முற்றுகையிட் ட ன ர். யூலை 11 ஆம் நாள், நெக்கரும், அவரது அதிகாரிகளும் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அரசியின் நண்பர்கள், அப்பதவிகளுக்கு நியமிக்கப்பட லாயினர். மேலும் 1788 ஆம் ஆண்டு, தானிய விளைவுக் குறைவின லும், வேலையில்லாத் திண்டாட்டத்தினலும், ஆயிரக்கணக்கான மக் கள் தலைநகரை நாடி வந்தனர். அங்கு, நெக்கரின் வீழ்ச்சிச் செய்தி கலகத்தை உண்டாக்கியது. கலகக்காரர், ஆயுதங்களைக் கைப்பற்றி நகரத்தில் அட்டகாசம் செய்தனர். அவர்கள், யூலை 14 ஆம் நாள், பழைய அரசியல் முறையின் சின்னமாக விளங்கிய பசிதில் என்ற சிறைச்சாலையைக் கைப்பற்றினர். இக்கோட்டையின் வீழ்ச்சி, ஒரு யுகத்தின் வரவைச் சுட்டிக்காட்டும் சம்பவம் போன்று, பிரெஞ்சு மக் கள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியை உண்டுபண்ணியது. தவிர, பரிசு நகரத்தினர், அரசனின் கட்டுப்பாட்டை நிராகரித்து, 47,000 தொண் டர்களைக் கொண்ட படையொன்றை நிறுவி, தலைநகரை அரசனின் துருப்புக்களிலிருந்து பாதுகாக்க ஒழுங்குகள் செய்தனர். பரிசின் சிவப்பு, நீலம், பூர்போன் வம்சத்தின் வெள்ளை என்பன ஒன்ருக இணைக்கப்பட்ட மூவர்ணக் கொடி, புதுச் சுதந்திரத்தினதும், புதுஒழுங் கீனத்தினதும் சின்னமாக, பரிசு நகரில் உயர்த்தப்பட்டது.
கலகங்கள் :
பரிசில் நடந்த சம்பவங்களைப் பின்பற்றி, நாட்டுப்புறங்களில் 40,000 பசிதில்களாக விளங்கிய பிரபுக்களின் கோட்டைகளையும். வீடுகளையும், பழைய மானிய முறையோடு தொடர்புகொண்ட எல்லா அமைப்புக்களையும், பாமர. மக்கள் அழித்தொழித்தனர்.
திரும்பவும், பரி  ைச :ப் போ ன் று, கிராமங்கள், நகரங்க ளெல்லாம் தம், தலபாலன முறையை மாற்றியமைக்கலாயின. பழைய, உள்ளூர் ஆட்சி மன்றங்களுக்குப் பதிலாகப் பொதுமக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சபைகள், மத்திய அரசாங்கத்துக்குக் கட்டுப்படாது, தம் எண்ணப்படி இயங்க ஆரம்

பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு 61
பி க்தன. ஒவ்வொரு சபையும், தன்னைப் பாதுகாக்கும் நோக்குடன், சிறிய படைகளைத் திரட்டியது. நாட்டில் மத்திய அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரம் சீர்குலைந்தது. J pä (596u sä6 (Emigres) :
இந்நடவடிக்கைகளைக் கண்டு வெகுண்ட பிரபுக்கள், தாய கத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். பிரான்சின் எல்லைகளுக்குச் சமீபத்திலிருந்த, அயல் நாடுகளிற் குடியேறி, தம் தாய் நாட்டிற் கெதிராகப் போர் தொடுக்குமாறு, அரசர்களைத் தூண்டி நின்றனர்.
மானியமுறை ஒழுங்கீனத்தின் மறைவு :
ஆகத்துமாதம் 4 ஆம் நாள், நாட்டு மன்றத்தின் சரித்திரத்தில் பிரபலியம் வாய்ந்த சம்பவங்கள் நடந்தேறின. ஒரு பிரபு எழுந்து மானியமுறை உரிமைகளும், வருவாய்களும், சட்டமூலம் தவிர்க்கப் படவேண்டுமெனப் பிரேரிக்கவே, அவரைப் பின்பற்றி, பிரபுக்கள் ஒவ் வொருவராக எழுந்து, உணர்ச்சி வேகத்துடன் தங்கள் அதிகாரங்களை யும் உரிமைகளையும் நாட்டுமன்றத்துக்கு அர்ப்பணம் செய்தனர். இரவு முழுவதும் சட்டங்கள் ஒன்றன்பின் ஒன்ருக நிறைவேற்றப் பட்டன.
முப்பது சட்டங்கள் மூலம், பழைய ஆட்சி முறையின் ஒழுங்கீனங் கள் யாவும் நிராகரிக்கப்பட்டன. நில மானிய முறையின் சின்னங்கள், பிரான்சின் அரசியல், சமுதாயம், ஆகிய அமைப்புக்கள் இரண்டிலு மிருந்து மறைந்தன. அதனேடு, எல்லா மக்களும் பாகுபாடின்றிச் சமவரிகள் இறுக்கவேண்டும் ; அடிமைகள் சுதந்திரம் பெறவேண்டும் ; எல்லோருக்கும் சம உரிமைகளும், நீதியும் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. இவ்வாறு ஓர் இரவினுள் பிரான்சில், சமுதாயப் புரட்சி நடந்தேறிற்று. மனித உரிமைப் பிரகடனம் :
இதற்கிடையில் நாட்டுமன்றம், அரசமைப்பை உருவா க் கும் முயற்சியில் ஈடு பட் டது. அவர்கள் இயற்றி, ஆக த் து 12 ஆம் நாள் வெளியிட்ட சாசனம், அமெரிக்கக் குடியேற்ற நாடுக ளின் மாதிரியைப் பின்பற்றி, “எல்லா மக்களும், எல்லாக் காலங்களுக் கும், ஒவ்வொரு நாட்டுக்கும், அகில உலகிற்கும் ஓர் உதாரணமாக. சமமாகப் பிறக்கும் மக்கள் அனைவருக்கும் சம உரிமைகள் இருக்க வேண்டும்" என்ற முகவுரையுடன் அமைந்தது.
இச்சானம், ஒருபுறம் புரட்சிக்காரர் அனைவரையும் ஒன்றுபடுத் தும் பட்டயமாக விளங்கியது. மறுபுறம், அது நாட்டிலுள்ள குழப்ப நிலையை மேலும் அதிகரிக்கச் செய்தது ; ஏனெனில் ஒழுங்கும்

Page 44
62 புது உலக சரித்திரம்
சட்டமும் இல்லாத நிலையில், மக்களது விசாலமான உரிமைகளை வெளியிட்டமை, ஒரு தவருன நடவடிக்கையாகும். அந்நேரத்தில், மனிதரின் உரிமைகளைப் பிரகடனம் செய்வதிலும் பார்க்க, அவர்க ளது கடமைகளை நினைவூட்டியிருப்பதே மேலானது, என்ருர் மிருபோ.
புது அரசியல் யாப்பு :
நாட்டில் ஒழுங்கீனம் தலைவிரித்தாடியதனல், அரசியல் யாப்பைச் சீக்கிரம் தயாரிக்க வேண்டிய அவசியம் தவிர்க்கமுடியாததாயிற்று. அரசாதிகாரம் சிதைவுற்றதுடன், நாட்டின் மத்திய மாகாண அரசியல் நிருவாகமெல்லாம் நின்று விட்டது. பரிசிலும், மாகாணங்களிலும் மக்கள், தம் விருப்புப்படி, தலதாபன மன்றங்களை அமைத்து, சட்டங் களை மதியாது நடக்கலாயினர். எனவே ஒழுங்கை நிலை நாட்டுவதற்குப் புது அரசியல் யாப்பு விரைவில் அமுலுக்கு வரவேண்டியதாயிற்று. புது அரசியல் யாப்பைத் தயாரிப்பது இலகுவான வேலையன்று. நாட்டுமன்ற உறுப்பினருக்கு இஃது ஒரு புது அனுபவம். உரூசோ, மொன்டெசுக்கியூ, வோல்த்தேயர் என்ற அரசியல் ஞானிகளின் சித்தாந்தங்களில் ஊறியிருந்த அவர்கட்கு, அக் கொள்கைகளில் எவை நடைமுறைக் ச் சாத்தியமானவை, எவை சாத்தியமற்றவை என்று பிரித்தறியும் அநுபவம் இல்லை. அவர்கள், ஈராண்டுகளாகப் பாடுபட்டு, இவ்வேலையைச் செய்து முடித்தனர். புது அரசாங்கம், மொன்டெசுக் கியூவின் வலுவேருக்கம் எனும் அத்திவாரத்தில் கட்டப்பட்டது. நிருவாகம், சட்டமியற்றுதல், நீதிபரிபாலனம் எனும் மூன்று அதிகாரங்களும், பூரணமாக, ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்கப்பட்டன. சட்டமியற்றும் அதிகாரம், வரியிறுக்கும் (சர்வசன வாக்குரிமை யாலன்று) மக்களினுல் ஈராண்டு காலத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட, ஓர் அவை கொண்ட சட்டசபையில் விடப்பட்டது. சட்டசபை உறுப்பினர் நிருவாக சபையில் அங்கத்துவம் பெறமுடியாது என்றும் எற்பட்டது.
தலவாட்சி முறையில், நாட்டு மன்றம் ஒரு புதுப் பிரான்சையே உருவாக்கியது மாகாண ஆள்பதிகளின் (Intendants) ஆட்சிமுறை மறைந்தது. இதுவரையுமிருந்த வல்லாட்சி முறைக்குப் பதிலாகக் குடியரசு முறையின் தன்மைகள் புகுத்தப்பெற்றன. பழைய மாகா ணங்களுக்குப் பதிலாக 83 சம அளவுள்ள, சம உரிமைகளுள்ள பிரிவுகள் (Departments) தோற்றுவிக்கப்பட்டன.
நீதிபரிபாலன முறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. மத்திய நீதிமன்றங்களும், மாகாண நீதிமன்றங்களும் புதிதாக அமைக்கப் பட்டன. நடுவர் முறைமை (Jury System) முதன் முதலாக ஏற்பட்டது.

பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு 63
ஒற்றேபர் ஐந்தாம் நாள்
பசிக்கொடுமை தாங்கமுடியாது, பரிசு நகரப் பெண்களும், ஆண் களும் வேர்சை நகரத்துக்குச் சென்று, பாணின் விலையைக் குறைக்கு மாறு அரசரை வற்புறுத்தினர். இடையில் அரசனும், நாட்டு மன்ற மும் தம் கண்காணிப்பில், தலைநகரில் வசிக்க வேண்டுமென்ற அபிப் பிராயம் பிறந்தது. மன்னனும், நாட்டுமன்றமும் பரிசுக்கு அழைத் துச் செல்லப்பட்டு, அங்கே நகரத்து வாசிகளின் கைதிகளாயினர். கோயில் ஆதனம் நாட்டுரிமையாக்கப்படல் :
இதற்கிடையில் நிதியறவுக்குத் தீர்வுகாணவேண்டிய அவசியம் முதன்மையான பிரச்சனையாயிற்று. இந்த அதி முக்கிய பிரச்சனை யைத் தீர்ப்பதற்குத் தகுதியான வழிவகைகள் ஒன்றும் இதுவரை ஆராயப்படவில்லை; அதை மேலும் பின்போடக்கூடிய நிலையுமில்லை. அதைத் தீர்ப்பதற்காகப் பற்பல திட்டங்கள் ஆராயப்பட்டு, ஒன்றைத் தவிர ஏனையவை யாவும் கைவிடப்பட்டன. செல்வத்தின் இருப் பிடமாக, ஒரேயொரு தாபனம் மாத்திரமே இன்னும் நிலைத்து நின் றது. அதுதான் கத்தோலிக்க திருச்சபை, ஒற்ருேபர் மாதம் 10 ஆம் நாள் கோயில் ஆதனங்கள் நாட்டுரிமையாக்கப்படல் வேண்டுமென்ற முறி, நீண்ட விவாதத்தின் பின் மன்றத்தில் நிறைவே றி யது. கோயில் ஆதனத்தின் பெறுமதிக்கு ஈடாக ** அசிக்னம் சு’ (Assignats) என்ற கடதாசி நோட்டுக்கள் அச்சிடப்பட்டன. ஆரம்பத்தில் ஆத னங்களின் பெறுமதியில் அரைவாசிக்குத்தான் நோட்டுக்கள் அச்சடிக்க எத்தனிக்கப்பட்டது. ஆனல் 1790 இல், அச்சிடப்பட்ட 40 கோடி 1796 இல் 450 கோடியாயிற்று. நாளடைவில் அவை அச்சிடப்பட்ட கடதாசியின் பெறுமதியைக்கூட இழந்துவிட்டன.
திருச்சபையின் குடியியற் பரிபாலன யாப்பு
(Civil Consitution of the Clergy :
கோயில் ஆதனங்களை நாட்டுரிமையாக்கினதனல், அதே 1ா டு தொடர்புடைய பல பிரச்சினைகள் எழுந்தன. மதச்சங்கங்களை என்ன செய்வது ? குருமாருக்கு எப்படி வேதனம் கொடுப்பது ? இவற்றிற்கு விடை காணும் முயற்சியினல், மத உலகில் முற்றிலும் புரட்சிகர மான மாற்றங்கள் செய்யப்பட்டன. எல்லா மதச் சங்கங்களும் குலைக்கப்பட்டன; திருச்சபையிலிருந்து பட்டங்கள் பதவிகளெல்லாம் நீக்கப்பட்டன; பழைய மேற்றிராசனங்களுக்குப் பதிலாக, புதுத் தல தாபனப் பிரிவுகளுக்கிசைய, 83 மேற்றிராசனங்கள் உருவாக்கப்பட் டன. மேற்றிராணிமாரும் குருமாரும், பொது மக்களால் தெரிவுசெய் யப்பட்டு, அரசாங்கத்திடமிருந்து வேதனம் பெறவேண்டுமென விதிக் கப்பட்டது. போப்பாண்டவரின் அதிகாரம் நிராகரிக்கப்பட்டது.

Page 45
64 புது உலக சரித்திரம்
இச்சட்டம், சீர்திருத்தங்களின் அமைதியான போக்கை மாற்றியது. தம் உரிமைகளைப் பற்றி, நாட்டுமன்றம் இயற்றிய சட்டங்களை அரச ரும் பிரபுக்களும் ஆட்சேபனையின்றி ஏற்றுக்கொண்டனர். ஆனல் குருவாயத்தின் குடியியற் பாலன யாப்பு, தேவ பக்தியுள்ள பிரெஞ்சு மக்களின் உள்ளத்தைப் புண்படுத்தியது; போப்பாண்டவரை புதுப் அரசாங்கத்தின் எதிரியாக்கியது; நாட்டு மன்றத்துக்கும் பங்குக் குர வருக்குமிடையில் இருந்த தொடர்பை முறித்தது: ஈற்றில் அரசனின் மனதையும் மாற்றியது.
வரேன்சு(Varennes)க்குத் தப்பி ஓடல் :
1789 இல், அரசன் இரண்டொரு முறை புரட்சியின் போக்கைக் கட்டுப்படுத்த முயற்சித்தும், பயன் காணவில்லை. அதன்பின் அவர், வேறு உறுதியான நடவடிக்கையொன்றும் எடாது, மக்கள் தம் மனம்போனவாறு செல்வதற்கு எதிர்ப்புக் காட்டாது விட்டு விட்டார். மத உலகில் ஏற்பட்ட மாற்றங்களைச் சகிக்க முடியாத நிலையில் தான், இலூயி, புரட்சி இயக்கத்துக்கு எதிர்ப்புக் காட்டவும், இலியோப்போல்டு மன்னனிடம் உதவி கோரவும் முற்பட்டார். பிரான்சு மீது முறையான படையெடுப்பு நடக்கவேண்டுமென்பதை இலூயி ஆசிக்கவில்லை. யூன் 28 ஆம் நாள் மன்னனும் மனைவியும், மாறு வேடம் பூண்டு, நாட்டை விட்டுத் தப்பி ஒட எத்தனித்தபோது, அவர்கள், வரேன்சு என்னும் இடத்தில் கைப்பற்றப்பட்டு, திரும்பவும் பரிசுக்குக் கொண்டுவரப்பட்டனர். அன்று தினம், மன்னனின் செயலைக் கண்டு, தலைநகரம் துக்கம் கொண்டாடியது. அடுத்ததினம் நாட்டு மன்றம், அரசனின் அதிகாரங்களைப் பறிமுதலாக்கியது.
அரசன், பிரான்சை விட்டு தப்பி ஒட எத்தனித்துத் தோல்வி யடைந்த செயல், முடியாட்சிக்கு அபாயகரமான விளைவுகளை ஏற் படுத்தியது. இச் செயலின் நீண்ட கால பலாபலன்களில் ஒன்று, 1792 ஆம் ஆண்டு செற்றம்பர் மாதம் குடியாட்சி ஏற்படுத்தப் பட்டதேயாகும்.
நாட்டு மன்றத்தின் முடிவு :
1791 செற்றம்பரில், புது அரசியல் யாப்புத் தயாரானதுடன் நாட்டு மன்றத்தின் வேலை முடிவெய்தியது. அது நாட்டில் உள்ளும் புறமும் எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்க்காது விட்டது என்பதை மறுப்பதற்கில்லை. அது நிருவாக முறையை முழுமையாக அழித் தொழித்தது; நகர வாசிகளின் ஆட்சிக்கு வழிவகுத்தது ; அபாய கரமான சித்தாந்தங்களைப் பிரகடனம் செய்தது : பறிமுதல் செய்வதைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது ; சர்வதேசிய சட்ட

பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு 65
திட்டங்களை நிராகரித்தது ; அதன் இறுதிச் சட்டத்தினல், புதுச் சட்ட சபையில் பழைய அனுபவசாலிகள், இடம்பெறுவதைத் தடுத்தது, என்ற குறைகளெல்லாம் அச்சபை மேல் சுமத்தப்பட்டுள்ளன. t மறு புறம், நாட்டு மன்றம், பல நூற்ருண்டுகளின் சரித்திரத்தின் பலனக, பிரான்சில் ஏற்பட்டிருந்த குறைகளை யெல்லாம் நிவர்த்தி செய்தது ; அது பிரான்சின் ஐக்கியத்தை நிலை நாட்டியது; புது அர சியல் யாப்பைச் சனநாயக இலட்சிய அமைப்பாக இயற்றியது ; எல்லோருக்கும் ஒரே நீதி முறையையும், சம சந்தர்ப்பத்தையும், சம வரி விதிப்பையும் பெற்றுக் கொடுத்தது : மக்களின் விருப்பங்களைத் தலையாக மதித்து ஒரு புது அரசியல் சித்தாந்தத்தை உருவாக்கியது: இவையாவும் அதன் நிறைவுகளாகும். சட்ட மன்றத்தின் அமைப்பு :
ஒற்ருேபர் முதலாம் நாள் கூடிய சட்ட சபையின் 745 அங்கத் தவர்களில், பெரும்பான்மையினர் வலது சாரிகளே. வலது சாரிகள், (Feuilants) யாப்புறு முடியாட்சி முறையை ஆசித்தவர்கள். நடு வகுப்பினரும் இவர்களுக்கு ஆதரவளித்தமையினல், இவர்களின் எண் னிக்கை ஏறக் குறைய 600 ஆயிற்று. புரட்சிவாதிகளைக் கொண்ட யக்கோபினரே (Jocobins) சபையின் தீவிர இடது சாரிகளாம். இவ் விடது சாரிகளுள், சிரோந்தின்கள் (Girondins) என்ற குழுவினர், மன்றத்தில் உயர்வு பெறலாயினர். அவர்கள் அரசமைப்புத் திட் டத்தை நிராகரித்து, புரட்சியை நீடிக்க வேண்டு மென்று உறுதி பூண டவர்கள். மன்றத்துக்குள் பிறிசோ (Brissot) என்ற சுயநலவாதியும் அதற்குப் புறத் தி ல், திருமதி உருே லன்டு (Madame Roland), சியே (Sieyes) என்பவாகள் இத்தீவிரக் கட்சியின் தலைவர்களானர்கள். சிரோந்தின்களின் எழுச்சி :
சிரோந்து (Gironde) என்ற, பிரான்சின் தெற்குப் பிரதேசங் களிலிருந்து பிரதிநிதித்துவம் பெற்றவர்கள் (சிரோந்தின்கள்), பேச்சு வன்மையாலும், வாலிபத் துடிப்பினலும், ஆவேசத்தினுலும் தூண்டப் பட்டு, நாளடைவில் மன்றத்தில் முதன்மை பெற்று, அமைச்சர் பதவி களைக் கைப்பற்றி, ஒரு மிக நெருக்கடியான நேரத்தில் பிரான்சின் விதியை நிர்ணயிக்கும் அதிகாரிகளாயினர். ஒர் ஆண்டுக்குள், முடி யாட்சியைச் சிம்மாசனத்திலிருந்து இறக்கித் தரை மட்டமாக்கியதுடன், இருபது ஆண்டு காலம் நீடிக்கப் போகும் வெளிநாட்டு யுத்தத்தையும் அவர்கள் ஆரம்பித்து வைத்தனர். அதன் பின், அவர்கள் பலவீனத் தின் நிமித்தம் புரட்சியைப் பரிசு, சனத்திரள், சங்கங்கள் (Clubs) என்னும் சக்திகளின் கைகளில் ஒப்படைத்தனர்.
ad — agF 7

Page 46
66 புது உலக சரித்திரம்
சிரோந்தின்களுடைய பேச்சு வன்மை, அவர்களுக்கும் பிரான்சுக்கும் கெடுதியைத் தான் விளைவித்தது. தாம் கட்டவிழ்த்து விட்ட உணர்ச்சிகளை அவர்களினல் அடக்க முடியாமல் போயிற்று. அவர்கள் அறிவு படைத்தவர்கள் ; ஆயினும் இராசதந்திர தேர்ச்சி பெற்ற ஒருவராவது அவர்கள் மத்தியில் இல்லை.
சிரோந்தினர் தமக்காகவும், தம் கொள்கைகளுக்காகவும்புரட்சியில் ஒரு சாதனையை நிலை நாட்ட வேண்டுமென்று விரும்பினர். 1792 சனவரி முதலாம் நாளுக்கு முதல், தாயகம் திரும்பாத பிரபுக்களுக்கு மரண தண்டனை என்ற சட்டத்தையும், ஒரு கிழமைக்குள் அரசியல் திட்டத்தை ஏற்றுச் சத்தியப் பிாமாணம் செய்யாத குருக்கள், தம் விசார2ணப் பங்குகளை இழப்பர் என்ற சட்டத்தையும் ஏற்படுத்தினர். அரசன், குருக்களுக்கும், பிரபுக்க ளுக்கும் மாறக இயற்றப்பட்ட சட்டங்களை எற்க மறுத்து அவற்றை நிராகரித்தனன்.
இச்செயலினல், அரசர், புரட்சியின் எதிரியென்றும், தேசத் துரோகிகளுடன் கை கோத்து நிற்பதாகவும், தன்னைக் காட்டிக் கொண்டார். அரசனை ஒரு தேசத் துரோகியாக்க விரும்பின அவர்கள், இத்தோடு திருப்திப்பட வில்லை. பழைய ஆட்சி முறை யி ன் இறுதி எச்சமாக நின்ற முடியாட்சியைத் தரைமட்ட மாக்குவதற்கு, போர் அவசியமென முடிவு கட்டினர். போர் ஏற்படின், அரசர் எதிரிகளுக்கு ஆதரவு காட்டி, தனது பிரசை களுக்கு எதிரே யுத்தம் செய்யும் அவல நிலைக்குள்ளாவார் எ ன் ப ைத நன்கறிந்திருதி தனர். இதனல், முடி தம் காலடியில் வைக்கப்படு மென்றும் எதிர்பார்த்தனர். எல்லா வற்றிலும் மேலாக இந்த உணர்ச்சியின் வேகரத்தில் தம் நிலையை உறுதிப்படுத்திக் கொள் ளலாம் என்று கருதிய சிரோந்தின்கள், திட்டமிட்டுப் போரை வருவிக்க ஏற்பாடுகளை முற் ருக்கினர்.
ஐரோப்பாவும் புரட்சியும் :
பிரெஞ்சுப் புரட்சியினல் பாதிக்கப்படாத ஹரோப்பியநாடுகள் ஒன்றுமேயில்லை. அதன் கொள்கைகளான "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்", ஒரு புது யுகத்தின் உதயத்தைக் குறித்ததென, தாராண்மைவாதிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆங்கிலேயக் கவிகளான உவேட்சுவேத்து, (Wordsworth), கோல் றிச் (Coleridge) என்பவர்கள், புரட்சியில் இன்பமும் விடுதலையுமுண்டு என எடுத்துரைத்தனர். பசிதிலின் வீழ்ச்சி தான் ஐரோப்பிய வரலாற்றில் அதிமுக்கிய சம்பவம் என வர்ணித்தனர். பொக்சு (Fox) உவீக் (Whig), கட்சியினர், இதற்கும் 1688 ஆம் ஆண்டு நடந்த மாண் புரட்சிக்குமிடை, யில் ஒப்புவமைகள் கண்டனர். ஐரோப்பாவெங்கணும், புது ஆர்வத் தினுல் தூண்டப்பட்டோர், சுதந்தரச் சின்னங்களை நாட்டி ன ர். பிரெஞ்சுப் புரட்சி, ஒரு தனிநாட்டுக்கு உரித்தான சம்பவமன்று; சர்வதேச சகோதரத்துவம் எனும் சித்தாந்தம், பிரான்சின் எல்லை களுக்குள் மாத்திரமடங்கக்கூடிய கொள்கையன்று, என்றனர். புரட்சி வாத சனநாயகம் ஒரு புதுத் தாரக மந்திரம்; ஒரு புது மதத்தைப் போல, அதன் தத்துவங்கள் உலகெங்கும் போதிக்கப்படவல்லன.
மறுபுறம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற இப்புது மத்திரங்களின் முன், ஐரோப்பாவின் சர்வாதிகார அரசியல் முறை

பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு 67
களும் சமுதாய அமைப்புக்களும் கிடு கிடுத்தன. ஐரோப்பிய மன்னர் களின் மனதில் அச்சம் எழுந்தது. தம் நாடுகளல் புரட்சிவாதக் கொள்கைகள் பரவாதவண்ணம் தடுக்க, பிரான்சுக்கெதிரே போர் தொடுக்க வேண்டிய கட்டாய நிலைக்குள்ளானர்கள்.
அரசனின் பலவீனத்தின லும், பிடிவாதமான நேர்மைத்தனத்தினலும் புரட்சியின் எதிர்ச்சக்திகள், பிறநாட்டு அரசர்களையே நம்பவேண்டியதாயிற்று. முதலாவது சாள்சு (Charles I ) நொட்டிங்காமில் செய்ததுபோன்று, பரிசைவிட்டு, பிரான்சின் வேறெந்தப் பகுதியிலாவது இலூயி எதிர்ப்புக் கொடியை உயர்த்தியிருந்தால், அவர் புரட்சியின் எதிர்ச்சக்திகளை ஒன்று சேர்த்திருக்கலாம். அதற்குமாருக, அவர் பயந்து, கிழக்கு எல்லையை நோக்கி ஓட்டம்பிடித்தபோது அவரும், புரட்சியை எதிர்க்க வல்லவர்கள், அயல் நாட்டு அரசர்கள் தான் என்று காட்டிக்கொண்டார். இதனல் புரட்சியின் முழுப்போக்கே மாற்ற மடைந்தது. இலூயி, உதவிக்கு வெளிநாட்டு மன்னர்கள் பக்கம் திரும்பியபோது அது தேசத்து ரோகமாகியது. அயல் நாடுகள் புரட்சியை அடக்க முயன்றபோது சகோதரத்துவம் தேசியமயமாகமாறி, தாயகத்தை மதத்துக்கு மேலாக மதிக்கும் முறை பிறந்தது.
SG) 5 fa), Sy SLGOT. The Declaration of Pilnitz) :
இவ்விதமான சூழ்நிலையில், அயல் நாட்டு வல்லரசுகள் தலையிடத் தீர்மானித்தமை ஆச்சரியத்துக்குரிய விடயமன்று ; அவர்கள் அரை மனதுடன் பயனற்ற விதத்தில் தலையிட்டதே, ஆச்சரியத்துக் குரியது. ஐரோப்பா, தனது பிரச்சினைகளில் ஈடுபட்டும், நாடுகள் பிளவுபட்டும் நலற g ரு நேரத்தில் பரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டதே இதற்கு மூல காரணமாகும். நீண்டகால தாமதத்தின் பின், அரை ம ன துடன் 1791 ஆகத்து 27 ஆம் நாள், ஒசுத்திரிய அரசர் இலியோப்போல்டு பிரெஞ்சு மன்னனின் அரசவுரிமைகளைத் தம் சொந்த உடையகலப போலப் பாதுகாக்க முன்வருமாறு ஐரோப்பிய அரசர்களுககு ஒரு வேண்டுகோளை விடுத்தார். பிரசிய அரசர், இதற்குத் தன் சம்மதத்தைத் தெரிவித்தார். மற்ற ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைக்க முன் வந் தால், ஒசுத்திரிய சக்கரவர்த்தியும், பிரசிய அரசனும் தலையிடத் தாம் ஆயத்தம், என்று குறிப்பிட்டதை விட்டு, வேறென்றுமே செய்ய அவர்கள் துணியவில்லை. அன்றைய ஐரோப்பாவின பிளவுபட்ட நிலை யில், ஒற்றுமையான கூட்டு நடவடிக்கையில் இறங்குவது முற்றிலும் முடியாக்கருமம் என்பது புலனுயிற்று. செற்றம்பர் மாதம், இலூயி, அரச மைப்புத்திட்டத்தை அங்கீகரித்தபோது, இலியோப்போல்டு தன் ஆக்கி ரமிப்புத் திட்டங்களைக் கை நெகிழ விட்டார். ஆனல், மன்றத் தீவிரவாதி கள்,பில் நிற் சுப் பிரகடனத்தையும் தமக்குச் சாதகமாகப் பய ன் படுத்திக் கொண்டனர். ஐரோப்பிய வல்லரசுகள் பிரான்சைத் தாக் கப் போவதாக மக்களின் மனதில், அச்சத்தையும், யுத்தப் பீதியை யும் ஏற்படுத்தித் தாய் நாட்டைப் பாதுகாப்பதற்கு ஆயத்த்ம் செய்

Page 47
68 புது உலக சரித்திரம்
வதுபோல் பாசாங்கு செய்து, தாம் ஆசித்த போருக்கான ஏற்பாடு களைச் செய்யலாயினர். 1791 திசம்பர் தொடக்கம் , துருப்புக்கள் சேர்க்கப்பட்டன.
யுத்த ஆரம்பம் :
மன்றத்தின் வற்புறுத்தலின் பேரில், 1792 ஆம் ஆண்டு எப்ரல் மாதம், ஒசுத்திரியாவுக் கெதிரே அரசர், யுத் த ப் பி ரக ட ன மொன்றை மன்றத்தில் வாசித்தார். ஓர் ஆயத்தமுமின்றி, இவ்வாறு ஒசுத்திரியாவுக்கும் பிரசியாவுக்கு மெதிரே யுத்தத்தில் பிரவேசித்த பிரான்சு, ஐந்து மாத காலம், ஆக்கிரமிப்பு, அவமானம், தோல் வி முதலியவற்றையே கண்டுகழித்தது. ஒழுங்கு, பயிற்சி, கட்டளைகளுக்கு அமையும் தன்மையற்ற பிரெஞ்சுத் துருப்புக்கள், தோற்கடிக்கப் பட் டதில் ஆச்சரியமில்லை. முதல் பெல்சியத் தாக்குதல் பெரும் தோல்வி யில் முடிந்தது. செற்றம்பர் 2 ஆம் நாள், பிரசிய துருப்புக் கள் வேடன் (Verdun) கோட்டையைக் கைப்பற்றினர். அவர்களுக்கு, பரிசு மிக அண்மையிலிருந்தது.
உண்ணுட்டு நிலை :
உண்ணுட்டில், யுத்தப்பிரகடனம் செய்யப்பட்ட ஏப்ரல் 20 க்கும், வேடன் கோட்டை வீழ்ச்சியடைந்ததற்கும் இடைப்பட்ட ஐந்து மாத காலத்தினுள், புரட்சியின் போக்கு முழுமையாக மாறியது. யுத்தத்தினலும் தோல்வியினலும் ஏற்பட்ட பீதியின் மத்தியில் சட்டசபை செயலற்று நிற்கவே, மக்கள் ஆத்திரத்தினுல் உந்தப் பட்டு, செயற்பட ஆரம்பித்தனர். யக்கோபின்களினுல் தூண்டப் பட்ட பரிசு நகரவாசிகள், 'பரிசுக் கமியூன்' (Paris Commune) என்ற நகரசபை மன்றத்தைக் கைப்பற்றி, தம் கோபத்தைத் தீர்க்க முயன்றனர். முடியாட்சியின் வீழ்ச்சி :
அடுத்து, இவர்களது ஆத்திரம் அரசன் பக்கம் திரும்பியது. ஒசுத்திரிய பிரசிய துருப்புகளுக்கு அரசர் ஆதரவளிப்பதாகவும், அக் காரணத்தினல், அவர் தேசத்துரோகியென்றும், அவரே பிரானசின் தோல்விக்கு மூலகாரணம் என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். ஆகத்து மாதம் 10 ஆம் நாள், பரிசு நகரவாசிகள் உணர்ச்சிவசப் பட்டு, அரசரின் வாசத்தலத்தைத் தாக்கினர். அரச குடும்பத்தினர், மாளிகையை (Tuileries) விட்டுச் சட்டமன்றத்தில் அடைக்கலம் புகுந்தனர். அவரை அரச பதவியிலிருந்து விலக்குவதை ஆராய ஒரு, நாட்டுச் சமவாயத்தை (Convention) அமைக்க வேண்டுமென்று சட்டசபை தீர்மானித்தது.

பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு 69
யக்கோபினரின் எழுச்சி :
ஆகத்து 10 ஆம் நாட் சம்பவத்துடன், பிரான்சில் பரிசுவாசி
களின் நேர்முக ஆட்சி ஆரம்பிக்கலாயிற்று. பரிசு மக்களுக்கூடாகத்
தொழிற்பட்ட யக்கோப்பின்களின் கை ஓங்கியது அன்று தொடக்கம்
சட்டசபை, நிருவாகசபை, நடுவகுப்பினர் யாவரும், சனக்கும்பலையும்
அவர்கள் மூலம் யக்கோபின்களையும் புது எசமான்களாகப் பெற் றனர். யக்கோபின்கள் பரிசுக் கமியூனைக் கைப்பற்றித் தம் சர்வாதி காரத்தைத் தாபித்தனர். யக்கோபின்களைக் கொண்ட பரிசுக் கம்யூன் பரிசினதும், சட்டசபையினதும், பிரான்சினதும், புரட்சியினதும் முத லாளியாயிற்று. வாய்ச் சாதுரியம் படைத்த டாந்தன் (Danton) உருெ பெ சுப்பியர் (Robespierre), என்ற யக்கோபின்கள் பரிசு நகரத்தில் மேன்மை பெற்றனர்.
செற்றம்பாப் படு கொலைகள் :
செற்றம்பரில், வேடன் தோல்வியுடன் ஏற்பட்ட அச்சத்தைப் பயன்படுத்தி, யக்கோபின்கள் படுகொலைகளைப் பரிசில் செய்தனர். அவர்களமைத்த முறைமன்று (Tribunal) அரசியல்வாதிகளை யும், தேசத் துரோகிகள் என்று ஐயப்பட்ட அனைவரையும் விளங்கி, கொலைக்குத் தீர்த்தது. பரிசில் மாத்திரம் 1,400 மக்கள் உயிர் இழந்தனர். மாகாணங்களும் இதே நடவடிக்கையில் ஈடுபடும்படி தூண்டப்பட்டனர் அதேமாதம், புதுச்சமவாயத்துக்குப் பிரதிநிதிகளைத தெரிவதற்காக தேர்தல்கள் நடைபெற்றன. உருெபெசுப்பியர், இக் கொலைகளினல் ஏற்பட்ட அமைதியீனத்தைப் பயன்படுத்தி, பரிசில், யக் கோபின்களைச் சமவாயத்துக்குக் கூடுதலாகத் தெரியப்படுவதற்கு வழி கோலினர்.
3. நாட்டுச் சமவாயம்
(செற்றம்பர் 1792-ஒற்ருேபர் 1795)
நாட்டுப் பாதுகாப்பு எனும் புதுத் தேவை :
1792 க்கும் 1795 க்கும் இடைப்பட்ட கால சரிதையில், இரு முக்கிய இயக்கங்கள் அவதானத்துக் குரியவை. முதலாவது, யுத் த நிலையின் அபாயத்தால், தேசத்தின் பாதுகாப்புத் திட்டங்களைப் பலப் படுத்தி நாட்டை அன்னியரின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டியது தலையான கடமையாயிற்று. எனவே, எதிரிகளை வெற்றி கொள்ளும் பிரத்தியேக நோக்குடன் அமைக்கப்பட்ட நிருவாகத்தில் பல நூதன அம்சங்கள் இடம் பெற்றன. அன்னியரின் வெளி எதிர்ப் புடன் உண்ணுட்டிலும், பலர் தம் தேசத்தைக் காட்டிக் கொடுக்க
A 7

Page 48
70 புது உலக சரித்திரம்
ஆயத்தமாக இருந்ததினல், உண்ணுட்டுப் பிரசைகளின் சுதந்திரத்தை நசுக்கியேனும், நாட்டை எதிரிகளின் படையெடுப்பிலிருந்து பாது காப்பது தவிர்க்க முடியாத தேவையாயிற்று. இதனுல் நாட்டு ப் பாதுகாப்பின் அடிப்படையில், சரித்திரத்தில் பிரசித்தி வாய்ந்த கொடுங் கோலாட்சி எழுந்தது. சன நாயகம், மு த ல் சர்வாதிகாரமாகவும் பின் கொடுங்கோலாட்சியாகவும் உருமாறியது; 1792 ஆம் ஆண்டுக் குடியரசு, 1793-94 ஆம் ஆண்டுப் பயங்கர ஆட்சியாக உருப் பெற் றது. மனித உரிமைகளின் பேரில், பழைய ஆட்சி முறைமை அழிக் கப் பட்டது; நாட்டுப் பாதுகாப்பின் பேரில் அழிந்த ஆட்சியிலும் மேலான வல்லாட்சி தோன்றியது.
இரண்டாவது இயக்கம், புது அதிகாரத்தையும் புது நிருவாகத் தையும் கைப்பற்றுவதற்குச் சிரோந்தின்களுக்கும் யக்கோபின்களுக்கு மிடையில் நடைபெற்ற சமரை மையமாகக் கொண்டது. இச்சமரில் யக்கோபினரே ஈற்றில் வெற்றி பெறலாயினர்.
பிரான்சு குடியரசாதல் :
நாட்டுச் சம வாயம் கூடிய அடுத்த தினமே, அரசர் பதவியி லிருந்து நீக்கப்பட்டு, பிரான்சு ஒரு குடியரசென ஏக மனதாகப் பிர கடனம் செய்யப்பட்டது. அன்று, புரட்சி யுகத்தின் முதல் ஆண்டு ( Year II ) D-5 LuLDTufosib goy.
வால்மியும் இரு மாத வெற்றிகளும் :
பிரான்சின் எல்லைகளில் ஐரோப்பிய அரசுகளுடன் நடைபெற்ற யுத்தத்தில், புதுக் குடியரசு வெற்றியினுல் ஆசீர்வதிக்கப்பட்டது. காத்திராப்பிரகாரம், டுமோறியே (Doumouriez) என்ற தளபதியின் சாமர்த்தியத்தினுலும், இராணுவ வீரர்களின் புது உற்சாகத்திலுைம் வால்மீ(Walmy)யில் ஒரு மகத்தான வெற்றி ஏற்பட்டது. இவ் வெற்றியை அடுத்துப் பத்துவாரங்களுக்குள், முழுநிலையும் மாற்றமடைந் தது. பல முனைகளில் நடத்தப்பட்ட போர்களிலெல்லாம் பிரெஞ்சுப் படைகள் வெற்றிமுரசு கொட்டின. ஒருபடை, அல்பிசு மலை க ளை க் கடந்து, சவோய், நீசு மாகாணங்களைக் கைப்பற்றியது. மற்றென்று, இறைன் நதியின் கிழக்குக்கரையில் இருந்த செர்மனியின் பிரதான கோட்டையை வெற்றி கொண்டது. டுமோறியே பெல்சியத்தில் ஒசுத்திரியரைத் தோற்கடித்தபோது, பெல்சிய மக்கள், பிரெஞ்சினரை ஆரவாரத்துடன் வரவேற்றனர். பிரெஞ்சினரும், தாம் சென்ற இடமெல் லாம், புதுக்கொள்கைகளைப் பிரசாரம் செய்து, பாமர மக்களின் நல் லெண்ணத்தைப் பெற்றனர். “அரண்மனைக் கெதிரே போரும், குடி சைக்குச் சமாதானமும்" எனக்கூறி, குடியரசின் இராணுவப்படைகள், மக்களின் பாதுகாவலர், என்று தம்மைக் காட்டிக்கொண்டனர்.

பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு 71
அரசனின் சிரச்சேதம் :
புது வெற்றிகள், பிரெஞ்சு மக்களின் மதியை மயக்கியது. குடி யரசில் விசுவாசமும், நாட்டுப்பற்றும் புது உச்சத்தை எ ய் தி ன. இவ்வுணர்ச்சி வெள்ளத்தின் நடுநாயகமாக, சமவாயத்தில் யக்கோ பினரின் தீவிரவாதம் ஓங்கியது. அரசர் தேசத்துரோகி என்றும், அவரது இரத்தம் சிந்தப்பட வேண்டுமென்றும், உருெபெசுப் பியர் வாதாடினர். உறுதியான இச்சிறுபான்மையினரின் நடவடிக்கைகளைத் தடைசெய்ய முடியாது, சிரோந்தின்கள் தவித்தனர். யக்கோபின் களின் பயங்கர செயல்களுக்கஞ்சி, சமவாய அங்கத்தினர் ஒரேயொரு பெரும்பான்மை வாக்கினல், அரசர் குற்றவாளியெனத் தீர்மானித்தனர்.
1793 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் நாள், அரசன் கொலைக் களத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு 'கிலற்றின்' (Guillotine) என்ற தலை கொய் தறியில் உயிர்ப்பலியாயினன். மன்னனின் சிரச்தேசம், ஐரோப்பிய போரையும், உண்ணுட்டுக் கலகத்தையும் கொணர்ந்தது. ஐரோப்பியப் போர் :
16 ஆம் இலூயியின் தலை கொய்யப்பட்டதுடன், பிரான்சின்மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஐரோப்பிய அரசுகளின் மத்தியில் நில விய தடுமாற்றமும் மயக்கமும் மாறின. பிரான்சுக்கு எதிராகப் போர் தொடுப்பதை, மேலும் தாமதிக்க முடியாதென அவர்கள் ஒரு மனப் பட்டனர். ஏனெனில் பிரான்சு ஈட்டிய வெற்றிகளும், அது பிரகட னம் செய்த கருத்துக்களும், ஐரோப்பியநாடுகளை அபாயத்துக்குள் ளாக்கின. ஒல்லாந்தைத் தாக்கப் பிரெஞ்சுத் துருப்புக்கள் ஆயத்தமாக அணிவகுத்து நின்றன. மார்ச் மாத முடிவில் ஒசுத்திரியா, பிரசியா இங்கிலாந்து, ஒல்லாந்து, சிபெயின், போர்த்துக்கல், செர்மனி ஆகிய நாடுகளுக்கெதிரே பிரான்சு தனித்துப் போர்புரியவேண்டிய நிலைக் குள்ளானது. சமவாயமோ போரைக்கண்டு அஞ்சவில்லை. ஒல்லாந் துத் தாக்குதலுடன் போரை ஆரம்பித்துவைத்த டுமொறியே முதல் தாக்குதலிலேயே தோல்வியையும் கண்டார். மார்ச் 21 ஆம் நாள், நீர்வின்டன் (Neerwinden) யுத்தத்திலும், பிரெ ஞ் சு ப் படைகள் தோற்கடிக்கப்பட்டன. டுமோறியே பக்கம் மாறி எதிரி களுடன் சேர்ந்துகொண்டார். ஒசுத்திரியா பெல்சியத்தை மீட்டது.
பெல்சியம் மீட்கப்பட்டதுடன், பிரெஞ்சு எல்லைகளை ஐரோப்பிய அரசுகள் தாக்கத் திட்டமிட்டன. ஆங்கிலேயர் டன்கேர்க்கை முற் றுகையிட்டனர்; ஒசுத்தரியர் லில்லி (Lile) யைத் தாக்கினர்; பிர சிய, செர்மானியப் படைகள் அல்சாசை (Asace) ஆக்கிரமித்தனர். தெற்கே சிபானியர் பிறனிசு மலைகளைக் கடந்து, உறுசிலொன் (R0ussilon) மீது படையெடுத்தனர்.

Page 49
72 புது உலக சரித்திரம்
உண்ணட்டுப் போர் :
இதற்கிடையில், மன்னர் சிரச்சேதம் செய்யப்பட்டமையினல் இராசவிசுவாசம் நிறைந்த நாட்டின் பல பாகங்களில் கலகங்கள் தோன்றலாயின. பிரித்தனி (Brittany), லா வென்டீ (La Wendee) என்ற மாகாணங்களில், அரசினர், ஆண்களைப் பட்டாளங்களில் சேரு மாறு கட்டாயப்படுத்திய போது, அவர்கள், அரசரைக் கொலை செய்தவருக் கெதிரே போர் செய்வதேயன்றி, அவர்களுக்காக யுத்தம் செய்யத் தாம் தயாரில்லையெனச் சத்தியம் செய்தனர். அவர்கள், 17 ஆம் இலூயிதான் தம் அரசரெனப் பிரகடனம் செய்து, ஒரு கலகத்தையும் ஆரம்பித்து, இங்கிலாந்தின் உதவியையும் பெற முயற்சித்தனர். கலகத்தை அடக்க அனுப்பப்பட்ட இரு பட்டாளங் கள், யூலை மாதம் படுதோல்வி யடைந்தன. போர் முனையிலிருந்து ஒழுங்கான துருப்புக்கள் அனுப்பப்பட்ட பின்பே, கலகம், செற்றம் பரில் அடங்கியது.
இவ்வாறு, 1793 ஆம் ஆண்டின் பெரும் பகுதியில், உள்ளும் புறமும் பிரான்சின் நிலை 1792 இலும் பார்க்க எவ்வளவோ அபாய கரமானதாயிற்று. வெளியே, பிரான்சினது ஒல்லாந்துப் படையெடுப் புக்கள் தோல்வியில் முடிந்தன. பெல்சியமும், முந்திய இறைன் வெற்றிகளும் இழக்கப்பட்டன; அத்துடன் பிரான்சின் எல்லைகளும் ஆக்கிரமிக்கப் பட்டன. உள்ளே கலகங்கள் நாட்டின் பலத்தைக் குறைத்தன. பிரான்சின் இந்த அவல நிலையை, யக்கோபினர், தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். யுத்த காலத் தில், நாட்டைப் பாதுகாப்பதன் மூலமாகவே தம் நோக்கங்களை அடையலாமென உணர்ந்த யக்கோபினர், பிரான்சின் ஐக்கியத்தை யும், புது நிருவாகத்தையும், பாதுகாப்பையும் பலப்படுத்த முயற் சித்த அதே நேரத்தில், தம் அதிகாரத்தையும் உறுதிப்படுத்த உழைத் தனர். அன்னிய எதிர்ப்புக்கும் உண்ணுட்டு எதிர்ப்புக்கும் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்த பிரபுக்களுக்கும் எதிரே, கடும் சமரை ஆரம் பித் தனர். இராணுவ சேவையில் கட்டாய ஊழியத்தை ஏற்படுத்தி, புதுப் படைகளை ஒரு புறம் அமைத்தனர்; மறுபுறம் செல்வந்தர் மீது வரி, வேலை செய்யும் உரிமை, பாணின் விலையைக் கட்டுப் படுத் த ல் போன்ற பொது மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி, நாட்டில் தம் செல்வாக்கை ஓங்கச் செய்தனர்.
முடியாட்சியின் வீழ்ச்சிக்குப்பின் யக்கோபினர், உண்மையான நிருவாக அதிகாரம் படைத்த பொதுச் சன சேம நிருவாக சபையை scommittee of Public Safety) upsá) upset a fuG.55 sort. Gas F அபாயம் அதிகரித்ததுடன், அதன் அதிகாரங்களும் விரிக்கப் பட்டன. மார்ச் 9 ஆம் நாள், ஒரு புரட்சி முறை மன்றம் (Revolutionary

பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு 73
Tribunal) நிறுவப்பட்டது. 21 ஆம் நாள், நிருவாக அதி கா ரம் படைத்த புரட்சிக் குழுக்கள் (Revolutionary Committees) ஒவ்வொரு தல பாலனப் பிரிவிலும் அமைக்கப்பட்டன.
பயங்கர ஆட்சி (1793-1794)
பரிசில் அமைக்கப்பட்ட பொதுசனச் சேம நிருவாக ச  ைபயும், மற்றும் புரட்சிக் குழுக்களும் கடும் சட்டங்களின் மூலம் நா ட் டி ல் ஒழுங்கையும், அமைதியையும் நிலை நாட்ட மு ய ந் சி செய்தமை யிலிருந்தே பயங்கர ஆட்சி தோன்றியது. ஒரே சந்தர்ப்பத்தில் யுத்த மும் புரட்சியும், மக்களையும் தேசத்தையும், எவ்வளவு தூரம் மாற்ற வல்லன என்பதை இது எடுத்துக் காட்டியது.
1793 ஆம் ஆண்டு யூலை மாதம், உருெபெசுபியர், பொது சனச்சேம சபையில் முதன்மை பெற்ற பின்பே, பயங்கர ஆட்சி மு மூ  ைம யாக அனுட்டிக்கப்பட்டது. உருெ பெசுப்பியர் அளவற்ற பேராசை பிடித்தவர். கற்பணு சக்தியற்ற தீவிரவாதி; மனுத்தன்மை யற்ற பிடிவாதம் நிறைந்த இலட்சியவாதி. தனது, கருமத்தை நிறைவேற்றப் பட்ச Mாதகமின்றி நண்பனையும், எதிரியையும் ஒரே நீதியினல் விளங்கிக் கொலைக் களத்துக்கு ப்பினர். உரூசோவின் இச் சீடப்பிள்ளை, மக்களின் முன், பெயரை மங்கலிடாது வைத்
நிருவாகச் சபையின் தலைவரானதுடன் பிரான்சின் சர்வாதி காரியானர். 1794 இல் 'பரம் Quitofføöt GlySut(G" (Worship of the Supreme Being) et SOith SQ5 Lig uog grn ாத்Aை எற்படுத்தி, அதன் பிரதம ஆசாரியானர். இவ்வாறு நாட்டின் சகல அதி காரங்களையும் தனதாக்கிய உருெபெசுப்பியர், அதைப் பயங்கர ஆட்சியென்னும் மார்க்கத் தின் வழியாகவே நிலைநாட்டினர்.
1793 யூலை தொடக்கம் 1794 யூலை வரையும் பரிசிலும், மாகா ணங்களிலும் கொடுமை, அச்சம் எனும் ஆயுதங்களைக் கொண்டே தன் பதவியை நிலைக்கச் செய்தார். இவருடை கொடுங்கோல் ஆட்சிக்கு இலட்சக் கணக்கான மக்கள் கிலற்றின் என்ற தலை கொய் தறி யில் உயிர்ப் பலியாயினர். நாட்டின் நாலா பக்கங்களிலும், அரசாங்க அதி கா ரிகள், தம் தலைவரின் ஆணை களை ஆட்சேபனையின்றி நிறைவேற்றி, ஆயிரக் கணக்கான மக்களைக் கொலைக்குத் தீர்த்தனர். பரிசில், மாத்திரம் 2,600 பேர் கிலற்றினுக்கு இரையாகினர்கள். நீதி விசாரணைகள் சுருங்கச் சுருங்க, கொலைத் தண்டனைகள் வே க ம r க விதிக்கப்பட்டன. மாதத்திற்கு 15 இலிருந்து 65 ஆகவும், பின்பு 116 ஆகவும் கொலைக் குற்றவாளிகளின் எண்ணிக்கை உயர்ந்தது . ஐயத்தின்மீது மக்களைக் கைது செய்யலாம் (Law of Suspects) என்ற சட்டம் ஏற்பட்டதுடன், 47 நாள்களில் 1366 பேர் கொலை செய்யப்
பட்டனர்.

Page 50
74 புது உலக சரித்திரம்
பிரெஞ்சு வெற்றிகள் :
நான்கு மாத காலத்தினுள் மரணப்படுக்கையிலிருந்த பிரான்சு, புத்துயிரையும், புது வாழ்க்கையையும் பெற்றது. பயங்கர ஆட்சியின் விளைவாகவே உண்ணுட்டு ஐக்கியமும் வெளிநாட்டு வெற் றிகளும் கிட் டி ன. ஓர் ஆண்டுக்குள் காணுே (Carnot) வின் திறமையினல் 1,200,000 போர்வீரர்களைக்கொண்ட 14 படைகள் பயிற்சி பெற்று போருக்கு ஆயத்தமாக நின்றன. இவர்களின் திற, மையினல், பிரான்சின் எல்லைப்புறங்களில் ஏற்பட்ட அபாயம் நீங்கி யது. புதுப்படைகள் நாட்டைப் பாதுகாப்பதோடு நின்றுவிடாது, முன்சென்று எதிரிகளையும் தாக்கின. 1794 ஆம் ஆண்டு, ஒசுத்திரியா பிளயிரசு (Fleurus) எனுமிடத்தில் தோற்கடிக்கப்பட்டனது. அடுத்து 1795 சனவரியில், பெல்சியத்தின்மீது படையெடுத்து, அந்துவேப்பைக் கைப்பற்றி, அந்நாட்டை அடிபணியச் செய்தனர். ஏப்ரல் மாதம் பிரசியாவும், சிபெயினும் பேசவில் (Basel) சமாதானம் செய்தன. இந்த வெற்றிகளின் முன், சமவாயம், தான் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறலாயிற்று. -
பயங்கர ஆட்சியின் முடிவும் டைரக்டரியின் (Directory) ஏற்பாடும்
ஈற்றில், சமவாய அதிகாரிகள் உருெபெசுப்பியரின் அட்டகாசத்துக் கெதிராக 1794 யூலையில் கிளர்த்தெழுந்து, அவரையும் அவரது 92 ஆதரவாளரையும், அவர் சிருட்டித்த அதே கிலற்றினில் ஏற்றி, தலைகளைக் கொய்வித்தனர். உருெபெசுப்பியரின வீழ்ச்சியுடன் யக்கோபின் குழு வினரின் ஒழுங்கான நிருவாகம் சிதைந்தது; பயங்கர ஆட்சியும் முற் றுப் பெற்றது. உருெபெசுப்பியரின் வீழ்ச்சிக்கும், பயங்கர ஆட்சியின் முடிவுக்கும் பின், சமவாயம் உறுதியுடன் செயலாற்ற முன் வந்தது. பரிசுக் கமியூன், யக்கோபின் குழு, புரட்சிமுறை மன்றம், பொதுசனச் சேவை,நிருவாக சபை, என்பன அழிக்கப்பட்டன. அது 1795ஆம்ஆண்டு. டைரக்டரி என்ற நிருவாக சபையையும், இரு சபைகளைக்கொண்ட ஒரு சட்ட சபையையும் ஏற்படுத்தியது. இச்சபைகள் நெப்போலிய னின் எழுச்சிவரை நான்கு ஆண்டு காலம் பிரான்சை ஆட்சி புரிந்தன:

நெப்போலியன் பொனப்பாட் 75
அதிகாரம் 5
நெப்போலியன் பொனப்பாட் 1. நெப்போலியனின் எழுச்சி (1769-1799)
இளமைப் பருவம் :
“இச்சிறுதீவு ஒரு நாள் ஐரோப்பாவைப் பிரமிக்கச் செய்யும் என்ற ஒரு நம்பிக்கை எனக்குண்டு," என, காசிக்காத் தீவின் சுதந் திர இயக்கத்தைக் கண்ணுற்ற உரூசோ, 1762 ஆம் ஆண்டு கூறினர். ஏழு ஆண்டுகளுக்குப்பின், 1769 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் நாள், இத்தீர்க்க தரிசனத்தை நிறைவேற்ற, இத்தாலிய பெற்றே ருக்குத் தவப் புதல்வனக நெப்போலியன் பொனப்பாட் அவதரித்தார். பாலப் பருவத்திலேயே, தன் தாய் நாட்டைப் பிரான்சின் ஆட்சியிலி ருந்து விடுவித்துச் சுதந்திர நாடாக்க வேண்டுமெனப் பே ரா வல் கொண்ட நெப்போலியன், காலப்போக்கில் பிரான்சையே தனது தாயக மாகக் கருதி, அந்நாட்டின் மேன்மைக்காகப் பாடுபட ம ன வுறு தி கொண்டார். இளமைப் பருவத்திலேயே இராணுவக் கல்லூரியில் பயின்று, பதினேழாவது பராயத்தில் 1785 ஆம் ஆண்டு வாலென்சு நகரப் பீரங்கிப் படையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக நிய மனம் பெற்ருர்,
1789 க்கும் 1793 க்கும் இடைப்பட்ட காலத்தை நெப்போலி யன் கார்சிக்காத் தீவில் செலவழித்தார். 1793 இல், தனது குடும்பத்தின ருடன், நெப்போலியன் பிரான்சில்குடி புகுந்தார், அதேயாண்டு அவரு டைய எழுச்சியின் முதற் சந்தர்ப்பம் அவருக்குக் கிட்டியது. ஆகத்து மாதம், துரலான் (Toulon) என்ற நகரம், ஒர் ஆங்கிலேய படையைத் தனது எல்லைகட்குள் அனுமதித்தபோது, அந்நகரை மீட்பதற்காக, நெப் போலியன் சமவாயத்தினுல் நியமிக்கப்பட்டார். மிகத் திறம்படப் படைகளை நிர்வகித்து, ஆங்கிலேயரை அந்நகரிலிருந்து விரட் டி யடித்து, பிரிகேடியர் செனரலாக உ ய ர் வு பெற்ருர். அவருடைய அதிட்ட தாரகை, வான வீதியில் ஒளி வீச ஆரம்பித்து விட்டது.
சமவாயத்தின் ஆட்சியில் அதிருப்தியடைந்த பரிசு நகரவாசிகள் அதை ஒழிக்க முனைந்தபோது, சமவாய உறுப்பினர் நெப்போலியன் உதவியை நாடி, அவரைப் பிரான்சின் துணைப்படைத் தலைவராக நியமித்தனர். 1795 ஒற்ருேபர் 5 இல், அவருடைய அதிசய ஏற்பாட் டால், மியூறற் (Murat) றின் உதவியுடன் பரிசுவாசிகளுக்கும் அரசுக் சுட்வியினருக்கும் எதிரே பீரங்கிகளை முழங்கச் செய்து, ஆர்ப்பாட்டக்

Page 51
76 புது 26) சரித்திரம்
காரரை இருந்த இடம் தெரியாமல் மறையச் செய்தார். சமவாயம் பாதுகாக்கப்பட்டது. இதற்குப் பிரதியுபகாரமாக 1796 ஆம் ஆண்டு, 26 வது பராயத்தில் நெப்போலியன், இத்தாலிய பிரெஞ்சு சேனைக்குத் தளபதியாக்கப்பட்டார்.
இத்தாலியப் படையெடுப்பு :
இத்தாலியில், நெப்போலியன், ஒரு மேதையின் சாமர்த்தியத்தை உலகறிய வெளிப்படுத்தினர். அவர், துருப்புக்களின் மீது தளராத அதிகாரம், ஆளுகை, கட்டுப்பாடு, வீராவேசத்தைத் தட்டியெழுப்பல் போன்ற சிறப்பியல்புகளினல், மக்களினதும், அதிகாரிகளினதும் மன தைக் கொள்ளை கொண்டார். ‘நான் உங்களை உலகத்தின் மிகச் செழிப்பான சமவெளிக்கு அழைத்துச் செல்வேன். அங்கு நீங்கள் மகிமை, கீர்த்தி, செல்வம் முதலியவற்றை அறுவடை செய்வீர்கள்" என்ற வாக்குடன், பிரெஞ்சுப் படைகளை, இத்தாலிக்கு அழைத்துச் சென்ருர், அங்கு சாதாரண போர்வீரர்களைத் தளபதிகளாகவும், ஒழுங்கற்ற துருப்புக்களை வீரச்சேனைகளாகவும் உருப்பெறச் செய்தார். அங்குதான் முதன்முதல், உயர்சர்வதேச விவகாரங்கள், சூழியல் ஆட்சி நிபுணத்துவம் முதலாம் துறைகளில் தேர்ச்சிபெற்ருர். அரசி யல் தெளிவும், தன்னம்பிக்கையும் அவரது செயல்களில் மிளிர்ந்தன. 'திறமையின் உருவமே நெப்போலியன்,' என்ற பெயருக்கு அவர் இலக்கணமானர்.
1796 மார்ச் 27 ஆம் நாள், நீசு (Nice) எனுமிடத்தில், இத்தாலிய படையெடுப்பின் தலைமையை நெப்போலியன் ஏற்ருன். ஒரு மாதத்தி னுள் அவன், அல்பிசு மலைகளைக் கடந்து, பீட்மந்துக்குள் புகுந்து, சாடீனியரைத் தனியாகத் தாக்கி, மன்னரைச் சரணடையச் செய்தான். சாவோய், நீசு என்ற இரு மாகாணங்கள், பிரான்சுடன் இணைக்கப் பட்டன. பின், கிழக்கே ஒசுத்திரியருக்கு எதிரே படையெடுத்து, மே மாதம் 15 ஆம் நாள், மிலான் நகருக்குள் நெப்போலியன் புகுந்த போது, பொதுமக்கள் அவரை இரட்சகரென்று மலர் மாலைகளுடன் வரவேற்றனர். மிலான் பிரதேசத்து மக்களுக்கு, ஒசுத்திரியர் ஆதிக்கத் திலிருந்து விடுதலை பெற்றுக் கொடுத்தான், அடுத்து, ஒசுத்திரியர்பின் வாங்கி அரண்செய்து நின்ற மந்துவா (Mantua) கோட்டையைத் தாக்கினன். 1797 பெப்ரவரி 2 ஆம் நாள், இக்கோட்டை கைப்பற்றப் பட்டதுடன், வெனிசு சரண்புகுந்தது; வட இத்தாலி நெப்போலிய னுக்குச் சொந்தமாயிற்று. உடனே நெப்போலியன் அல்பிசு மலைகளைக் கடந்து, ஒசுத்திரியரை நேர்முகமாகத் தாக்க ஆயத்தப் படுத்தினன். இந்த ஆபத்தைக் கண்டு அஞ்சி, ஒசுத்திரிய மன்னர் இரண்டாம் பிரான்சீசு, நெப்போலியனுடன் சமாதான ஞ் செய்ய வேண்டி நின்றர்.

நெப்போலியன் பொனபாட் 77
நெப்போலியன், இக் கோரிக்கையை ஏற்று, கம்போபோமியோ உடன் tu qli 60 56Codulu (Peace of Campoformio) (ypsib(g? (g5alu gav gaspuhul...&ë GoFuu லாற்றி, எல்லோருடைய மதிப்பையும் பெற்றன்.
கம்போ போமியோ உடன்படிக்கை (1797) :
இதன்படி, பிரான்சு தன் இயற்கை யெல்லைகளை அடைந்தது. கிழக்கு எல்லை, இரைன் நதிவரையும் விரிவடைந்தது; அதற்குள் ளிருந்த பெல்சியம், ஒசுத் திரியாவினல் பிரான்சுக்குக் கையளிக்கப் பட்டது; ஒல்லாந்து, பற்றேவியன் குடியரசு (Babawian Republic) என்ற பெயருடன் பிரான்சுடன் இணைக்கப்படலாயிற்று. பிரான்சினது தென்கிழக்கு எல்லை, அல்பிசு மலைவரை விரிக்கப்பட்டு, அதற்குள் ளிருந்த சவோய், நீசு என்ற மாகாணங்கள் பிரான்சுக்குச் சொந்த மாயின பல நூற்ருண்டுகளாகப் பிரெஞ்சு அரசர்கள் ன்ட கனவை இவ்வாறு, நெப்போலியன் ஒரு படையெடுப்புடன் நன வாக்கினன்.
வட இத்தாலியில் இரு குடியரசுகள் சிருட்டிக்கப்பட்டன. பழைய செனுேவா, இலிகூரியன் குடியரசென்ற பெயருடனும் லொம்பாடி இராச்சியம் சிசஸ்ப்பைன் குடியரசென்ற பெயருடனும், நெப்போலிய னுடைய ஆதிக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டன. இங்கு ஒசுத்திரியா, தான் இழந்த பிரதேசங்களுக்குக் கைமாருக வெனிசு, இசுத்திறியா, தல்மேசியா எனும் இராச்சியங்களை நன்கொடையாகப் பெற்றது.
பிரான்சு தனது இயற்கை எல்லைகளைப் பெற்றது மாத்திரமன்றி வட இத்தாலியிலும், ஒல்லாந்திலும், புதுப்பேரரசின் அத்திவாரத்தை யிட்டமை, ஒரு மகத்தான வெற்றியாகப் பிரெஞ்சு மக்களினுல் கணிக் கப்பட்டது. இத்தாலியப் படையெடுப்புப் பூரண வெற்றியாக முற் றுப் பெற்றபின், 1797 இல் நெப்போலியன் பரிசுக்குத் திரும் பி ய போது, அங்கு அவன் பெரும் ஆரவாரத்துடனும், கெளரவத்துடனும் பொது மக்களினுல் வரவேற்கப்பட்டான். அவன் ஈட்டிய வெற்றிகள் அவனைப் பிரான்சில் மிக முக்கிய மனிதனுக்கின.
ஆங்கிலேயர் பலத்தை ஒடுக்க முயற்சி :
ஐரோப்பாவில் ஒசுத்திரியா சரணடைந்ததுடன், பிரான் சின் ஐரோப்பிய ஆக்கிரமிப்பை எதிர்க்கக்கூடிய வல்லரசு இங்கில ரா ந் து மாத்திரமே, “இங்கிலாந்தை வெற்றி கொள்பவன் ஐரோப்பாவைத் தன் காலடியில் வைத்திருப்பான்' என்பதை நெப்போலியன் பூரண மாக அறிவான்; அத்துடன் பலம் வாய்ந்த கப்பற்படையின்றி இங்கி லாந்தை நேர்முகமாகத் தாக்குவது மடைமைத்தனம், என்பதையும் நன்கறிந்தவர். எனவே, இங்கிலாந்தை மறைமுகமாகத் தாக்குவது

Page 52
78 புது உலக சரித்திரம்
தான் ஒரேயொரு வழி என்ற முடிபுக்குவந்தார். கிழக்கு உலகிற்குச் செல்லும் வழியில் கேந்திரதானமான எ கித்தைக் கைப்பற்றினல், இங் கிலந்தின் வாணிபத்தைத் துண்டித்து, அந்நாட்டை அடிபணியச் செய் யலாமென்று தேச அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினர். அவை மாத் திரமன்று; எகித்து வீழ்ந்தால், அங்கிருந்து துருக்கி, இந்தியாமீது படை யெடுத்து, கிழக்கில் ஒரு பிரெஞ்சுப் பேரரசையே சிருட்டிக்கலாமென் றும் அவரது கற்பனை கூறியது.
நெப்போலியனைப் பிரான்சிலிருந்து கடத்த வேண்டுமெனத் திட்ட மிட்டுக் கொண்டிருந்த அதிகாரிகள், நெப்போலியனின் எ கித் தி ய படையெடுப்புத் திட்டத்தைப் பூரணமாக வரவேற்றனர். பரிசில் நெப்போலியன் சாதிக்க க் கூடியதொன்றும் இருக்கவில்லை. ‘நான் இங்கு நீண்ட காலம் ஒன்றும் செய்யாதிருப்பின் மக்கள் எ ன் னை மறந்து விடுவர். இந்த நாட்டில் யாவும் மிக விரைவில் மங்கி விடு கின்றன ; என்னுடைய புகழ் இதற்குள் மறைந்து விட்டது. இந்தச் சின்ன ஐரோப்பா எனக்குப் போதிய அளவு புகழ் பெற்றுத் தரு வருதற்கில்லை, நான் அதைக் கிழக்கிலேயே தேட வேண்டும் ; எல் லாப் பெரும் புக மு ம் அப்பகுதியிலிருந்தே எழுகின்றது,' எ ன் று குறிப்பிட்டார், நெப்போலியன்.
அதிகாரிகள், எகித்திய படையெடுப்புக்கு வேண்டிய வசதிகளைச் செய்து, 1798 மே மாதம் நெப்போலியனை வழியனுப்பியும் வைத் தனர். அன்று, 38,000 போர் வீரர்களையும் 175 அறிவாளிகளையும் கொண்ட 400 கப்பல்கள் எகித்தை நோக்கிப் புறப்பட்டன. சகல கலா வல்லுனர்களையும் நெப்போலியன் தன்னுடன் அழைத்துச் சென் ருர், அஃது, ஒரு படையெடுப்பு மாத்திரமன்று : ஒரு நாகரிகத் தையே அடிமைப்படுத்தும் முயற்சியாகவும் மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கே போகும் வழியில், பிரெஞ்சுப்படை, மோற்ரு (Malta) தீவைக் கைப்பற்றியது. அடுத்து, அலகுசாந்திரியா (Alexandria) வைத் தாக்கி, புறமிட்டுப் போரில் மமலுக்கரை வெற்றி கொண் டது ; வெற்றிக் கொடியுடன் நெப்போலியன் கைரோவுக்குள் பிரவே சித்தார். துருக்கரின் ஆதரவைப் பெறுவதற்கும் திட்டமிட்டு, தான் இசிலாம் மதத்தைத் தழுவப் போவதாகவும், பிரெஞ்சுத் துருப்புக் களுக்கு ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கு ஆலோசிப்பதாகவும் பாசாங்கு செய்தார்.
அபூகீர்க் குடா யுத்தம் :
நெப்போலியனுடைய கீழைத் தேயத் திட்டங்களனைத்தும், ஆங்கி
லேய கப்பல் தளபதியான நெல்சனினல் தவிடுபொடி யாக்கப்பட்
டன. நெப்போலியன் கிழக்கே ஒரு பெரிய சேனையுடன் புறப்பட்ட

நெப்போலியன் பொனபாட் 79
தைக் கேள்விப்பட்டதும், நெல்சன், அவரைத்தேடிப் பல நாள்களாக அலைந்து திரிந்து, ஆகத்து முதலாம் நாள், நெப்போலியனுடைய கப் பற்படையை அபூகீர்க் குடாவில் கண்டு, அன்று மாலை பொழுது சாயும் நேரம் பிரெஞ்சுக் கப்பற்படையைத் திடீரெனத் தாக்கினர். இரவு தொடங்கி அடுத்த நாட் காலை வரை நிகழ்ந்த சமரில், எதிரி யின் கப்பல்களை எரித்தும், படைகளைத் நோற்கடித்தும் இங்கிலாந் தின் பேரில் ஒரு மகத்தான வெற்றியை ஈட்டினர். பிரெஞ்சுக் கப் பல்களில் நான்கு மாத்திரமே எஞ்சி நின்றன. நெப்போலியன் அவல நிலைக்குள்ளானர். எதிர் மனப்பான்மையுடைய மக்கள் மத் தி யில் கடும் வெப்பம், தாகம் பிணி முதலிய துன்பங்களைத் தாங்க முடி யாத நிலையில், தாய் நாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டு நின் ரு ர். இந்த இக்கட்டான நிலையிலும், அவரது மதியூகம் அவருக்கு உறுதுணை யாக நின்றது. பிரான்சிலிருந்து தகவலை எதிர்பார்த்து நின்ற வேளை யில் தனது புலனை விஞ்ஞான, தொல் பொருள் ஆராய்ச்சித் துறை களில், செலுத்தினர். புராதன எகித்திய நாகரிகத்தின் சிறப்புக்களை முதன் முதல் அகில உலகத்திற்கும் எடுத்துரைத்த பெருமை நெப் போலியனுக்கே உரியது. எகித்திய எழுத்துக்களின் (Hieroglyphics) விந்தையைத் தெளிவு படுத்துவதற்கு உத வி ய ருெசேற்றக் கல் (Rosetta Stone) நெப்போலியனது பொறி விற்பன்னர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது. சூவெசுக் கால்வாயமைப்பதற்கு ஒரு திட்டம் கூட வகுத்தார். ஈற்றில், துருக்கி, பிரான்சுக் கெதிரே, யுத்தப் பிர கடனம் செய்து விட்டதென்றும், துருக்கியப் படையொன்று சிரியா வுக் கூடாக எகித்தை நோக்கி விரைந்து வருவதாகவும் த க வல் கிடைத்தது. ΕΣ ஏக்கர் முற்றுகை (1799) :
நெப்போலியன், நொடிப்பொழுதில் தமது திட்டங்களை மாற்றி யமைத்து, உடனே சீரியாமீது படையெடுப்பதற்கு ஆயத்தப் படுத் தினர். சீரியாவைக் கைப்பற்றியவுடன், அங்கிருந்து இந்தியாமீது படையெடுக்கலாமென்று திட்டமிட்டு, ஏக்கரைத் தாக்கினர். ஆனல் சர் சிட்னி சிமித் (Sir. Sydney Smith) தின் தலைமையில் ஆங்கிலேயரும் துருக்கியரும் ஒன்று சேர்ந்து, நெப்போலியனுடைய துருப்புக்களைத் தோற்கடித்து, அவரது திட்டங்களுக்கு முற்றுப் புள்ளிவைத்தனர். மிக்கவீரத்துடன் போர்செய்தும், இவ்வெதிர்ப்பை வெற்றிகொள்ள முடியாமற் போகவே, நெப்போலியன், எகித்துக்குப் பின்வாங்க வேண் டியதாயிற்று.
எகித்துக்குத் திரும்பியபோது, எல்லா ஐரோப்பிய வல்லரசுகளும் பிரான்சைத் தாக்க முயக்சி செய்து கொண்டிருப்பதாக அறிந்ததும் நெப்போலியன் தாய்நாட்டுக்குக் கப்பலேறிஞர்.

Page 53
80 புது உலக சரித்திரம்
2. பிரான்சின் எசமான் (1799-1804)
1799 ஆம் ஆண்டு ஆட்சிப்புரட்டும் டைரக்டரியின் வீழ்ச்சியும் :
நெப்போலியன் பிரான்சுக்குத் திரும்பியபோது, அங்கு குழப்ப நிலைமை குடிகொண்டிருந்தது. பொருமை, ஒற்றுமையின்மை, கொடுங் கோன்மை எ னு ம் காரணங்களினல், டைரக்டரி பொதுமக்களின் நல்லெண்ணத்தை இழந்து செயற்படாது நின்றது. விவசாயமும், வர்த்தகமும், சீர்கெட்டு, பசியும் பஞ்சமும் மலிந்துவிட்டன. வெளி நாட்டு விவகாரங்களிலும், தோல்வியே பிரான்சைப் பின் தொடர்ந் தது. சுவருேவ் (Suvorow) என்ற இரசிய தளபதி, நெப்போலியனு டைய வெற்றிகளைச் சிதைத்து, ஒசுத்திரியா இழந்த நாடுகளைத் திரும் பவும் மீட்டுக்கொடுத்தான். மேலும், பிரான்சின் ஆக்கிரமிப்பு, 1799இல் இரசியா, ஒசத்திரியா, இங்கிலாந்து, போச்சுச்கல், துருக்கி எனும் நாடுகளை இரண்டாவது கூட்டமைப்பில் (Second Coalition) ஒற்று மைப் படுத்தியது.
நெப்போலியன் திரும்பியதைக் கண்டு, டைரக்டரி திகிலடைந் தது. ஆனல், பிரெஞ்சு மக்கள் இந்த நெருக்கடியான சந்தர்ப்பத் தில் நெப்போலியனைக் கண்டு ஆனந்தம் கொண்டாடினர். நெப் போலியனும் மக்களின் உள்ளப் பூரிப்பை உணர்ந்து, அதிகாரத்தைக் கைப்பற்றும் சுபநேரம் வ ந் து வி ட் ட தெ ன நினை ந் து, *நான் சரியான வேளை யி ல் வத்திருக்கிறேன்' என்ருர், நாட் டின் நல்லோர் உள்ளத்திலும், எல்லோர் நாவிலும் குடிகொண்டார், நெப்போலியன். பொதுமக்களின் ஆதரவு தனக்கிருப்பதைப் பயன் படுத் தியும், துருப்புக்களின் உதவியைக் கொண்டும், சூழ்ச்சியினல் டைரக் டரியைக் கலைத்து, 1799 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் நாள், மூவரடங்கிய 'கொன்சுலேற்’ (Consulate) என்ற ஒரு நிருவாக சபையை அமைத்தார். இம்மூவருள் நெப்போலியன் முதல் உறுப் பினரானர். முதல் கொன்சலே இராச்சியத் தலைவர். இவ்வாறு நெப் போலியன் பிரான்சின் சருவாதிகாரியானர்.
நெப்போலியனுடைய எழுச்சியானது சரித்திரத்தில் காணப்படும் ஒரு பொதுவிதிக்கு ஒத்ததாகவே காணப்படுகின்றது. புரட்சி, கலகங்கள், ஒழுங்கீனம் நிறைந்த காலம் ஈற்றில் சருவாதிகாரத்தில் முற்றுப்பெறுவதை உலக சரித்திரம் திரும்பவும் திரும்பவும் எடுத்துக் காட்டுகின்றது. புரட்சிக்காலத்தில், சனங்கள் அளவற்ற துன்பத்தை அனுபவித்த பின்பு, ஒழுங்கையும், அமைதியையும் பெற்றுக்கொடுக்கக்கூடிய உறுதியான அரசாங்கத்தை விரும் புவது இயல்பே. சணனயக அரசியல்முறை, இந்நிலையை ஆக்கிக் கொடுக்கமுடியாதவிடத்து, ஒரு தனி மனிதன் அப்படியான ஆட்சியைப் பலாத்காரத்தினல் அமைத்தலைக்கூட விரும் புவர். இப்படியான சூழ்நிலையில்தான் திறமையற்ற அரசாங்கத்தை அகற்றிவிட்டு, மக்க ரூக்கு விமோசனம் பெற்றுக்கொடுப்பதற்காக, நெப்போலியன் முன்வந்தாா. இவ் வா று புரட்சி, சந்தர்ப்பத்தையும், பிரான்சு, தேவையான ஆயுதங்களையும் அவருக்குக் கொடுத்தன.

நெப்போலியன் பொனப்பாட் 8.
இரண்டாவது இத்தாலியப் போர் :
முதற் கொன்சலானதும், பிரான்சுக் கெதிராக எழுந்த ஐரோப் பிய வல்லரசுகளின் பயமுறுத்தலை முறியடிப்பதையும், தான் இழந்த நாடுகளைத் திரும்பப் பெறுவதையுமே, நெப்போ லிய ன் மு த ல் நோக்கங்களாகக் கொண்டார்.
மரங்கோவம் (Marengo, 1800) கூட்டமைப்பின் வீழ்ச்சியும் :
நெப்போலியன், ஒசுத்திரியர்களை இருவழிகளில் தாக்கத் திட்ட மிட்டார். செர்மனிக்கூடாக மொருே (Moreau) என்ற தளபதியை அனுப்பி விட்டு, அ ல் பி சு மலை களை க் கடந்து, தா ன் , இத் தாலியில் ஒசுத்திரியரைச் ச ந் தி க் க ப் புறப்பட்டார். 1800 ஆம் ஆண்டு, மரங்கோ யுத்தத்தில், ஒசுத்திரியர் தோற்கடிக்கப்பட்டதுடன். நெப்போலியன், இத்தாலிய ஆதிக்கத்தை மீண்டும் பெற்ருர், சில மாதங்களுக்குள், மொருேவும் 1800 இல், ஒசுத்திரியரை ஓகென் லின் டனில் (Hohenlinden) தோற்கடித்தார். இரு போர் முனைகளிலும் தோல்விகண்ட ஒசுத்திரிய அரசர், சமாதானம் செ ய் ய ஆயத்த மானுர்.
1801 இல், ஏற்பட்ட உலுணவில் (Luneville) சமாதானத்தினல், கம்போபோ மியோ உடன்படிக்கையின் எல்லா முறிகளும் திரும் பவும் ஒசுத்திரியாவினல் ஏற்கப்பட்டன. இவ்வாறு, இரண்டாவது கூட்டமைப்பும் தோல்வியுற்றது. பிரான்சு, முன்னிலும் மே லா ன இறுமாப்படைந்தது.
GT 6 Gujdó, si LD (Tg5 IT GOTüb (Peace of Amiens, 1802) :
ஒசுத்திரியா, நெப்போலியனுடன் சமாதான உடன்படிக்கை செய்த பின், இங்கிலாந்து மாத்திரமே, நெப்போலியனை எதிர்த்து நின் றது. தனியே போரை நடத்த விரும்பாத இங்கிலாந்து, பிரான் சுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள விரும்பியது. நெப் போலியனும், தனது கவனத்தைப் பிரான்சின் சீர் கெட்ட நிலையைத் திருத்தச் செலவிட விரும்பியதனல், 1802 ஆம் ஆண்டு, இரு நாடு களுக்குமிடையே சமாதானம் ஏற்பட்டது.
J ir sin a do 8 av Gud o áo Saor" :
1799 ஆம் ஆண்டு, கொன்சலாட்சி அமைக்கப்பட்டு, நெப்போலியன் முதற் கொன்ச லானதுடன் புரட்சி ஆரம்பித்த பத்துவருட காலத்துக்குள், பிரான்சில் திரும்பவும் முடியாட் சியை ஏற்படுத்துவதற்கு ஒரு திட்டமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. புது அரசியற் திட் டத்தின்படி, அரசாங்கம் மூன்று கொன்சல்களினல் நடாத்தப்படவேண்டுமென்று விதிக்கப் பட்டிருந்தபோதும், இராணுவத் தலைமை உட்பட, முழுஅதிகாரமும் முதலாவது கொன்ச
Ed F-8

Page 54
82 புது உலக சரித்திரம்
லின் கையிலேயே இருந்தது. மற்ற இருவரும், முதற் கொன்சலுக்கு உதவியாளர்களாகவே அமைந்தனர். இவ்வாறு எற்பட்ட புது முடியாட்சி, பூர்போன்களின் சருவாதிகாரத்தைப் போன்றது. ஆனல், ஆரம்பத்தில் அதன் தன்மைகள், வாம்புடைய ஆட்சிமுறையின் தன் மைகளின் போர்வைக்குக் கீழ் மறைத்து மூடப்பட்டன. எனினும், இப்புதுச் சருவாதிகா ரம், பலவகைகளில் பழைய பூர்போன் சருவாதிகாாத்தின் குணுதிசயங்களிலிருந்து மேம் பாடுடையது. அவர்களுடைய சாந்தமான, பெலவீனமான அரசாங்கத்துக்கு எதிர்மறை யாகப், புது அரசாங்கம் சக்தி வாய்ந்ததும், இரக்கமில்லாததுமாகக் காணப்பட்டது. கடன் சுமையினலும் பண்டைக்கால நிதிநிருவாக முறையினலும் நசுக்கப்பட்ட ஒழுங்கீனத்துக்குப் பதிலாக, கொன்சலாட்சி, சிக்கனமான முறையிலும் உறுதியான பொருளாதாரத் தத்துவங் களின் அடிப்படையிலும் இயங்கியது. பழைய அரசாங்கம், தனது வேலைகளை சரிவர நிருவ கிக்க முடியாததற்குப் பதிலாக, புது அரசாங்கம் எல்லாத் துறைகளிலும் திறமை காட்டியது. டைரக்டரி ஆட்சி மிகச் சுமுகமாக கொன்சலாட்சியாக மாறியமை, டைரக்டர்களின் திறமையின்மையிலும் நேர்மையற்ற தன்மையிலும், எவ்வளவுதூரம் பிரெஞ்சு மக்கள் அதிருப்திப்பட்டிருந்தனர், என்பதை உணர்த்தியது. குடியரசுக்கு வெற்றிகளையும் புகழை யும் ஈட்டிவரும் ஒரு தளபதியைத் தலையான நிலைக்கு உயர்த்துவதில்தான், ஒர் உறுதி யான அரசாங்கத்தைப் பெறச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற கருத்து உயர்வு பெற்றது. பிரெஞ்சு மக்கள் சுதந்திரத்தைச் சுவைத்துவிட்டனர். ஆனல் தம் வரலாற்றில் இம்முறை மாத்திரமல்ல, பல முறைகளிலும், புகழை மேலாக மதித்தனர்.
உண்ணுட்டுச் சீர்திருத்தங்கள் :
நெப்போலியன், முதற் கொன்சலான காலந் தொடக்கம், பிரெஞ்சு அரசாங்கத்திலும் சமுதாய அமைப்பிலும் சீர்திருத்தங் களைச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அவர், போர்க்களத்தில் ஈட்டிய வெற்றிகள் எல்லாவற்றிலும் மேலாக, உண்ணுட்டு அரசியல் முறையில் ஏற்படுத்திய மாற்றங்கள் முக்கியமானவை. புரட்சியினல் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்தி, அரசாங்கத்தில் ஒழு ங்  ைக நிலைநாட்டுவதையே தனது இலட்சியமாகக் கொண்டார். அரசாங்க சேவையிலுள்ள ஊழல்களை வேரோடு களைந்தெறிய அயராது உழைத்த அவர், முயற்சி. ஊக்கம், நேர்மை என்ற நற்பண்புகளுக்கு, தானே ஒரு முன்மாதிரியாக விளங்கி, அவற்றை நிருவாகத்தில் நிலைநாட்டும் முயற்சியில், தயக்கமோ தாட்சணியமோ காட்டவில்லை.
புரட்சியிலிருந்து எழுந்த சமத்துவம் எனும் கொள்கையை மனப் பூர்வமாக ஏற்ருர் ; மக்கள், சுதந்திரம் அநுபவிக்க வேண்டும் என்ற மற்றப் புரட்சிக் கொள்கையில், சிறிதளவும் நம்பிக்கை யற்றவர். இக்கொள்கைதான், பிரான்சில் ஏற்பட்ட எல்லா இன்னல்களுக்கும், ஒழுங்கீனத்துக்கும் மூல காரணமென்பதைக் கண்ணுரக் கண்டார். தத்துவங்களையும் நோக்கங்களையும் விட்டு, விளைவுகளை அடிப்படை யாகக் கொண்டே அவர் புரட்சியைக் கணக்கிட்டார்.
அவர், புரட்சியின் தத்துவங்களை நிராகரித்த போதிலும், புரட்சியி ஞல் ஏற்பட்ட நிலையை உறுதிப்படுத்தத் தயங்கவில்லை. பழைய ஆட்சி முறைகளைப் புதுப்பிக்கவோ, பூர்போன் வமிசத்தினரை

நெப்போலியன் பொனப்பாட் 83
அரச பதவிக்கு உயர்த்தவோ, மானிய முறையை உயிர்ப்பிக்கவோ அவர் ஆயத்தமாக இருக்கவில்லை. புரட்சியில் காணப்பட்ட சிறப்புக் கானைத்தையும் “நானே புரட்சி” எனும் வாக்கியத்தில் தொகுத் துக் கூறினர். உரிமைகள் சதாகாலத்துக்கும் அழிந்து விட்டன : விவேகமுள்ளவர்கள், முன்னேறுவதற்குக் கதவுகள் திறக்கப்பட்டன. நீதித்துறையில், ச்மத்துவம் நிலைத்தது.
இவ்வாறு, புரட்சி பிரகடனம் செய்த தத்துவங்களை, நெப்போலி யன் நிரந்தரமான தாபனங்களின் மூலம் நிலை நாட்டினர். பிரான் சின் நிதி நிலையை நெப்போலியன் சீர்ப்படுத்தினர். மதிப்பிழத்திருந்த காசோலைகளின் பெறுமதியை நிலைப்படுத்தி, பிரெஞ்சு வங்கி யை நிறுவினர்.
நாட்டின் கல்வி,தேசஅடிப்படையில் நிர்வகிக்கப்பட்டது.பாடசாலை கள் தலபாலன நிருவாகத்தின் கீழும், மத்திய, அரசாங்க அதிகாரத் தின் கீழு ம் அமைக்கப்பட்டன. இப்பாடசாலைகளில் இராணுவப் படிப்புக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. அதற்கடுத்து, விஞ்ஞான மும், கணிதமும் முக்கிய பாடங்களாக இடம் பெற்றன. ஒரு தேசிய சர்வகலாசாலையும் அமைக்கப்பட்டது.
தலதாபன அரசாங்கம் :
1790 ஆம் ஆண்டு, தலதாபனங்களுக்குக் கூடுதலான சுயாதீனம் அளிக்கப்பட்டமையினல், அவை மத்திய அரசாங்கத்துக்குக் கட்டுப் படாது தனித்தியங்கும் தன்மையுடையனவாய் மாறியிருந்தன. தல தாபன ஆட்சி முறையில், மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை ஓங்கச் செய்தார்; உள்ளூராட்சி மன்றங்களின் அலுவலாளர்கள், நெப்போ லியனின் அதிகாரத்துக்கு முழுமையாமக் கட்டுப்பட்டவர்களாய் விளங்கினர்.
6ì5ü3ufI66ìuj6ör figilỏ(35ff60)6u (Code Napoleon) :
நெப்போலியனின் அழியாப்புகழின் இருபெரும் சின்னங்கள்,
அவர் பிரான்சுக்கு வழங்கிய நீதிக்கோவையும், பரிசுத்த பாப்புவுடன்
செய்த இணக்க உடன்படிக்கையுமாகும் (Concordat).
பழைய பிரான்சின் பாரதூரமான குறைகளிலொன்று, நீதித்துறை யில் காணப்பட்ட சமத்துவமின்மையாகும். இக்குறையைக் களைய வேண்டுமென்பதையே நெப்போலியன், தனது முதல் வேலையாகக் கொண்டார். அவருடைய மேற்பார்வையின் கீழ், தயாரிக்கப்பட்ட நீதிச் சட்டங்களின் கோவை 1804 இல், முதன் முதல் மேற்கொள்ளப் பட்டு, இன்றும் பிரான்சின் நீதியொழுங்கு முறையாக இருந்து

Page 55
84 புது உலக சரித்திரம்
வருகிறது. பிரான்சின் முழுக் குடியியல் நீதாசனமுறை பிழைதிருத்தப் பட்டு, தொகுக்கப்பட்டு, ஒழுங்கு செய்யப்பட்டது. அவர், இவ்வேலை யில் அயராத உழைப்பும் விவேகமும் காட்டினர். குடியியன் நடை முறைக் கோவை (Civil Prncedure) பாதகவியல் நடைமுறைக் கோவை, (Criminal Procedure), afu ruit Drd F. Li 36ir (Commercial Law) 6TGir பவையும், காலப்போக்கில் உருவாக்கப்பட்டன. இவை, குடியியற் சட்டத்தைப் போன்ற முக்கியத்துவமும் செல்வாக்கும் பெருவிட்டா லும், நெப்போலியன், ஒரு தற்கால “யசுத்தீனியன்' என்ற மதிப்பை ஊர்சிதம் செய்தன. அவரது வெற்றிகள் பரவியதுடன், இச் சட்டங் கள் பிறநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு, ஈற்றில் அவரது நீதி வேலை, பிரான்சின் எல்லைகளுக்கு வெளியிலும் அதியுன்னத கீர்த்தியை யும், புகழையும் பெற்றது.
போப்பாண்டவருடன் இணக்க உடன்படிக்கை (Concordat, 1801) :
கல்வியைப்போல, மதத்தைப் பிறரின் ஆதிக்கத்தில் விட, நெப் போலியன் தயாராக இருக்கவில்லை. புரட்சி, மத ஒழுங்குகளை அறவே சிதைத்து விட்டமையினல், நெப்போலியன், மத நிலையைச் சீர்ப்படுத்தி அதைத் தனது தேவைக்காக உபயோகிக்கத் திட்டமிட்டார். நெப் போலியன், உண்மையில் மதச் சார்பற்றவர்.
பாப்புவின் ஆசீர்வாதத்துடன், உரோமன் கத்தோலிக்க மதம், புரட்சிக்கு முன் போலவே, உத்தியோக பூர்வமான சமயமாக ஏற்படுத் தப்பட்டது. திருச்சபையின் உயர் அதிகாரிகள், முதல் கொன்சலி ஞல் நியமிக்கப்பட்டு, பாப்புவினுல் உறுதிப்படுத்தப் படுவர், என்றும் ஏற்பட்டது. புரட்சிக் காலத் தி ல் உண்டான அலங்கோலத்தை நிவிர்த்தி செய்ய, எல்லா இடங்களும் காலியாயின, என்று பிரகட னம் செய்யப்பட்டு, புது ஒப்பந்தத்தின் விதிகள் அமுல் நடத்தப் பட்டன. இவ்வாறு, நெப்போலியன், பிரெஞ்சுக் கத்தோலிக்கரின் நல் லெண்ணத்தைப் பெறுவதற்காகப் பாப்புவின் நட்பைப் பயன் படுத்தி, ஒழுங்கை நிலை நாட்டினன்.
guys (TG) (SD 5LD G3, IT girs (i) (Consul for Life) :
சமாதானமும், புது மத உடன்படிக்கையும் நெப்போலியனை மக் களின் நேசனுக்கின. இதைப் பயன் படுத்தி, ஆகத்து மாதம், நாட் டில் ஒரு குடியொப்பத்தை நடாத்தி, தனது அதிகாரத்தை உறுதிப் படுத்திக் கொண்டார். மக்களின் அமோகமான ஆதரவின் பேரில் , 1802 ஆம் ஆண்டு, நெப்போலியன் ஆயுட்கால பிரதம கொன்சல் பதவியை ஏற்றுக்கொண்டார்.

நெப்போலியன் பொனப்பாட் &5
& 58, ) of 55) (Emperor, 1804):
1804 ஆம் ஆண்டு மார்ச் மாதம், நெப்போலியன் பழைய புனித உரோமப் பேரரசின் தோரணையில், “முடிவில்லாத கீர்த்தியுடன் புவிக்குள்ளே முதன்மை பெற்றவனுய்,” பிரான்சின் சக்கரவர்த்திய்ாக முடிசூடினர். “அரசன் என்ற பட்டத்தின் புகழ் தேய்ந்து விட்டது. சக்கரவர்த்தி ஸ்ன்ற பட்டம், அரசன் என்ற நாமத்திலும் விட மேலா னது. அதனது அர்த்தத்தைப் பூரணமாக விளக்க முடியாதென்ற காரணத்தினல், அது சிந்தையைத் தூண்ட வல்லது', என்ருர் நெப் போலியன். இதிலிருந்து, நெப்போலியன், மீண்டும் பழைய உரோமா புரியின் புகழை நிலைநாட்ட விரும்புகிறர் என்பது தெளிவாயிற்று.
3. நெப்போலியனின் பேரரசு வேட்கை(1804-10)
ஆங்கிலேய-பிரெஞ்சுத் தகராறுகள் :
எமியேன் சமாதானம், ஒரு போர் நிறுத்த உடன்படிக்கையே யொழிய, அஃது ஒரு நிரந்தரமான சமாதான ஏற்பாடன்று. பிரான் சுக்கும் இங்கிலாந்துக்கு மிடையே ஏற்பட்ட போட்டி குறைந்த பாடில்லை. 1803 ஆம் ஆண்டு, இத்தாலிய பகுதிகளை இணைத்தும், சுவிற்சலாந்தை ஆக்கிரமித்தும், நெப்போலியனுடைய அதிகாரம் ஓங்கியமை, இங்கிலாந்து அவன் மேல் கொண்ட ஐயத்தை உறுதிப் படுத்தியது. நெப்போலியன், ஆங்கிலேயப் பொருள்களைப் பிரெஞ்சுத் துறைமுகங்களிலிருந்து தடை செய்தமை, ஒல்லாந்தை இராணுவஆட்சி யின் கீழ் வைத்திருந்தமை, இலூயிசியானவைப் பெற்றமை, இவை யாவும் இங்கிலாந்தில் அச்சத்தை வளர்த்தன. இந்தியாவை ஆக்கிரமிக்க ஒரு பிரெஞ்சுப்படை ஆயத்தப்படுத்தப்பட்டதையும், துருக்கிமேல் கண் வீசியதையும், மத்தியதரைப் பிரதேசத்தில் நெப்போலியனுடைய ஆசைகளையும் கண்டு, இங்கிலாந்து மனம் நொந்தது. மத்தியதரைப் பிரதேசத்திலும், கிழக்கிலும் நெப்போலியனுடைய ஆக்கிரமிப்புத் திட் டங்களைத் தடை செய்யும் நோக்குடன், இங்கிலாந்து மோற்றத் தீவைப் பிரான்சுக்குத் திருப்பிக்கொடுக்க மறுத்தது. இங்கிலாந்து, எமியேன் சமாதான விதிகளை மீறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டி, நெப்போலியன் புதுப் போரை ஆரம்பித்தார்.
இங்கிலாந்து மீது படையெடுக்க முயற்சி :
1803 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள், போர்ப் பிரகடனம்
செய்யப்பட்டது. இங்கிலாந்து மீது படையெடுத்து, அந்நாட்டை
அடக்குவதற்கான முயற்சியில், நெப்போலியன், உடனடியாக ஈடுபட்
A 8

Page 56
86 புது உலக சரித்திரம்
டார். பூலோன் (Boulogne)என்னுமிடத்தில், மூன்று இலட்சம் வீரர்களை யும், இரண்டாயிரம் பீரங்கிப் படகுகளையும் கொண்ட இராணுவப் படை களை அணிவகுத்தார் ; சிபானிய, டச்சுக் கப்பற்படைகளை, நெப் போலியன், தன்னுடன் ஒத்துழைக்குமாறு கட்டாயப்படுத்தினர்.
guó)5|Tii (8unii (Battle of Trafalgar) :
பதினெட்டு மாத காலமாக, கால்வாயின் இரு புறங்களிலும் எதிரி கள் ஒருவரை ஒருவர் நோக்கி நின்றனர். தனது திட்டம் நிறை வேறுவதற்கு, தன் துருப்புக்கள் கால்வாயைக் கடக்கும் சொற்ப நேரத்திற்காவது, பிரித்தானியக் கால்வாயை தன்வசப்படுத்த வேண்டு மென்று நெம்போலியன் உணர்ந்தார். “நாங்கள் ஆறு மணித்தியா லங்களுக்கு கால்வாயின் எசமானர்களானல், நாங்கள் உ ல கத் தி ன் எசமானர்களாவோம்" என்ருர், அவர். பிரெஞ்சு, சிபானியக் கப்பற் படைகளின் கப்பல்கள் தங்கி நின்ற பிறெசு (Brest), துரலன் (Toulon), ருெச்பேட் (Rochefort), கடிசு (Cadiz), எனும் துறைமுகங்கள் யாவும், இரு வருடங்களாக, நெல்சனலும் பிரித்தானிய கப்பல்களினலும் கண்காணிக்கப்பட்டு, தடையிடப்பட்டன. 1805 ஆம் ஆண்டு சனவரி யில், இத்துறைமுகங்களில் நின்ற (பிரெஞ்சுக்) கப்பல்கள் யாவும் பிரித்தானிய படையைப் பராக்கில் ஈடுபடுத்தும் நோக்குடன், மேற்கு இந்திய தீவுகளுக்குச் சென்று, அங்கிருந்து கால்வாயைநோக்கி விரைந்து வரத்திட்டமிடப்பட்டிருத்தது. மே 14 ஆம் நாள், எல்லாப் படை களும் மாட்டீனிக் (Martinique) என்ற தீவில் சந்தித்தன. இதை யறிந்த நெல்சன், அவர்களைப் பின் தொடர்ந்தார். ஆனல், நெல்ச னுக்குப் பிழையான தகவல் கிடைத்ததனல், அவர் திருனிதத்து (Trinidad) என்ற தீவுக்குச் சென்றபோது, பிரெஞ்சுக்கட ந் ப  ைட மீண்டும் ஐரோப்பாவை நோக்கிப் புறப்படலாயிற்று. இவை கடிசு துறைமுகத்தில் தங்கின. இதற்கிடையில், இங்கிலாந்து திரும்பிய நெல்சன், மீண்டும் செற்றம்பர் 13 ஆம் நாள், “விற்றறி” (Victory') என்ற கப்பலில், தனது, இறுதிப் பிரயாணத்தை ஆரம்பித்தார். 28 ஆம் நாள், பிரித்தானிய கப்பற்படையின் சகல பகுதிகளும் ஒன்று சேர்ந்தன. ஒற்ருேபர் 19 ஆம் நாள், 27 கப்பல்களைக்கொண்ட நெல் சனின் படை, கடிசிலிருந்து 50 மைல்களுக்கப்பால் தங்கி நின்றபோது, பிரெஞ்சுக் கப்பற்படை, துறைமுகத்தைவிட்டுப் புறப்படுவதாக தக வல் அவருக்குக் கிட்டியது. அவை வெளிப்பட்டு, தெற்கு நோக்கி அசையத் தொடங்கியபோது, அவற்றை நெல்சன் பின் தொடர்ந்து ஒற்ருேபர் 21 ஆம் நாள், நண்பகல் 11-30 க்கு தனது முதற் பீரங்கியை வெடிதீரக் கட்டளையிட்டார்.

நெப்போலியன் பொனப்பாட் 87
போர், பிற்பகல் ஐந்து மணிவரை நீடித்தது. பகைவரின் 33 கப் கல்களில், 19 கைப்பற்றப்பட்டன : 7,000 எதிரிகள் மடிந்தனர். ஆனல், அதற்குள் இங்கிலாந்தின் வெற்றியை மங்கச் செய்ய வல்ல ஒரு நட்டமும் ஏற்பட்டது. ஒரு குண்டு, நெல்சனின் இடது தோழில் பாய்ந்து உடலை ஊடுருவிச் சென்றது. இதனல் வீழ்ந்த நெல்சன், தனது வெற்றி பூரணமாயிற்று என்று அறிந்த பின்பே, உயிர் நீத்தார்’ *ェ “தனது இறுதிப் பெரும்போரில் நெல்சன் ஒசுத்த லிற்சின் சுவாலையை திரபல்காரின் புகையினல் கருமையாக்கினர்.' என்ருர், மெரடித். ஆங்கிலேயக் கால்வாய் நெப்போலியனுக்கும் உலக ஆளுகைக்குமிடையே தடையாக நின்றது.
பிரான்சுக் கெதிரே மூன்றவது கூட்டமைப்பு (1805) :
இதற்கிடையில் இங்கிலாந்தில் பதவிக்கு மீண்ட பிற்று (Pitt), மூன்ருவது கூட்டமைப்பை உருவாக்கினர். இங்கிலாந்துடன், ஒ சுத் திரியா, இரசியா, சுவீடன், நேப்பிள்சு என்ற நாடுகள் நெப்போலி யனை முறியடிக்க, மூன்ருவது முறையாக ஒற்றுமைப் பட்டன. பிரசிய்ா நடுநிலை வகித்தது. இவ்வரசுகள் ஒற்றுமை பூண்டதற்குப் பல காரணங்களிருந்தன. 1804 இல், நெப்போலியன் சக்கரவர்த்தி யென முடிசூடியமை, வல்லரசுகளில் அச்சத்தை ஏற்படுத்தியது. 1805 யூனில், மேலும் செனுேவாவைப் பிரான்சுடன் இணைத்து, நெப் போலியன் இத்தாலிய அரசனென முடிசூடினர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஒசுத்திரியாவும், இரசியாவும் போர்ப் பிரகடனம் செய்யலாயின.
9ởi 59566ịbởi (Austerlitz, 1805) :
திரபல்காரில், நெல்சன், பிரான்சின் கடற்படை வலிமையை அழித்துவிட்டார். இங்கிலாந்து மீது பாய்வதற்குப் பயிற்சியளிக்கப் பட்டு, ஆயத்தமாக நின்ற இராணுவச் சேனைகளுடன், நெப்போலியன் உடனே ஒசுத்திரியாவை நோக்கிப் புறப்பட்டார். ஒற்ருேபர் மாதம் 20 ஆம் நாள், ஒசுத்திரிய சேனைகள் உலும் (Ulm) என்னுமிடத்தில் தோற்கடிக்கப்பட்டன. அடுத்த மாதம், வியன்ன, இக்கால சரித்திரத் தில் முதன் முறையாக அன்னிய எதிரியிடம் சரணடைந்தது. இத் துடன் நின்று விடாது, இரசியர்களும் ஒசுத்திரியர்களும் சேர்ந்த படையை ஒசுத்தலிற்சில், திசம்பர் மாதம் 21 ஆம் திகதி, நெப்போல் யன் புறங் கண்டோடச் செய்தார். இதைப் போல் ஒரு வெற்றியை ஐரோப்பா நீண்ட நாட்களாகக் கண்டதில்லை. ஒ சுத் தி ரிய சக்கர வர்த்தி மூன்றம் முறையாக, நெப்போலியனுடன் சமா தா ன ம் செய்தார்.

Page 57
88 புது உலக சரித்திரம்
இரசிய அரசர், பேrரைவிட்டு தன் துருப்புக்களுடன் கிழக்கு நோக்கி விரைந்ததுடன், மூன்றம் கூட்டமைப்பு குலைந்தது. ஒசுத் திரியா, பிரெசுபேக் (Presburg) ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டது. இவ்வொப்பந்தம், ஒசுத்திரியர்வை மேலும் பெலவீனப்படுத்தியது. இத்தாலியில் தல்மேரியா, வெனிசியா, சேர்மனியில் பவேறியா, எனும் பிரதேசங்கள் பிரித்தெடுக்கப்பட்டன.
செர்மன் புனரமைப்பு :
பிரெசுபேக் உடன்படிக்கையினுல் ஏற்பட்ட முக்கிய பலன், செர் மணியின் புனரமைப்பாகும். செர்மன் விவகாரங்களில், நெப்போலியன், அப்பிரதேசத்தின் இரு பெரும் அரசுகளான ஒசுத்திரியாவினதும், பிரசி யாவினதும் அதிகாரத்தையும், செல்வாக்கையும் குறைப் ப ைத யே நோக்காகக் கொண்டார். சிற்றரசுகளுக்குக் கூடுதலான நிலத்தையும் அதிகாரத்தையும் கொடுத்து, அவர்களைத் தன் வசப்படுத்தியதுடன், அவர்களுக்கும், பெரிய அரசுகளுக்கு மிடையே போட்டியையும் ஏற் LIG5569 it. Gil 667, Gu(5th gasp fia) Lib (Grand Duchy) ஆனது. மேலும், அவர், பரிசுத்த உரோமப் பேரரசு என்ற அமைப்பைப் பூரணமாகச் சிதைத்து, அதற்குப் பதிலாக நவமான நாட்டுக் கூட் டிணைப்பை உருவாக்கினர். குறுநில அரசுகள் பல, பூரணமாக அழிந் தன. யெர்மனியின் தெற்கிலும் மேற்கிலுமுள்ள 16 அரசுகள் இறைன் கூட்டிணைப்பில் இணைக்கப்பட்டு, பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
ஒசுத்தலிற்கத் தோல்விக்குப்பின் பிற்று “ஐரோப்பிய தேசப் படத்தைச் சுருட்டி வையுங்கள் அடுத்த பத்து வருடங்களுக்கு அது தேவைப்படாது," எனக் குறிப்பிட்டார். பிற்று கூறியது போலச் சரியாக பத்து வருடகாலத்துக்கு ஐரோப்பாவை நெப்போலியன் தான் நினைத்தவாறு ஆட்டிவைத்தான். ஐரோப்பாவின் அரசர்களை சிம்மா சன மேற்றுவதும், இறக்குவதும், நெப்போலியன்  ைக க ளி லே யே இருந்தது. நேப்பிள் சிலிருந்து, பேடினந்தைத் துரத்திவிட்டு, நெப் போலியன், தனது சகோதரன் யோசப்பு பொனபாட்டை அப்பத விக்கு உயர்த்தினர். இன்னும் ஒரு சகோதரர் இலூயி பொனபாட், ஒல்லாந்தின் அரசரானர். சகோதரி எலைசி, தசுகனிலும், மியுறற் கிளிவ்சிலும் (Cleves) செங்கோல் ஒச்சினர்.
இந்த ஐரோப்பிய ஆதிக்கத்தை, நெப்போலியன், வேருெரு விதத்திலும் உபயோகிக்கத் திட்டமிட்டார். இங்கிலாந்தை அடிபணி யச் செய்ய, இவ்வமைப்பை ஒரு சக்திவாய்ந்த பொருளாதாரக் கருவி யாகப் பயன்படுத்தும் திட்டம், அவர் மனதில் உருப்பெற்றது.

நெப்போலியன் பொனப்பாட் 89
(3s@) {Jena, 1806) :
ஒசுத்திரியாவினதும் இரசியாவினதும் நிர்ப்பந்தத்தைப் பொருட் படுத்தாது, பிரசிய மன்னர் மூன்றுவது பிரடரிக் உலில்லியம் இரண் டாம், மூன்ரும் கூட்டமைப்புக்களில் பங்குபற்ருது, நீண்ட காலம் நடு நிலைமை வகித்து வந்தார். ஆனல் நெப்போலியன், தான் இங்கி லாந்தை முறிய்டிக்க வகுத்த கண்டத்திட்டத்திற்குப் பிரசியாவின் ஒத்துழைப்பை எப்படியாவது பெறவேண்டுமென உறுதிகொண்டார். அனேவர் (Hanover) எனும் செர்மன் மாகாணத்தை முதலில் பிரசி யாவுக்கும், பின்பு இங்கிலாந்துக்கும் தருவதாக நெப்போலியன் ஏமாற் றியதனல், பிரசியா பொறுமையிழந்து, ஒரு வாய்ப்பில்லாத தருணத் தில் போரில் குதித்தது. மூன்ருவது கூட்டமைப்பில் சேர்ந்து, உலும் அல்லது ஒசுத்தலிற்சுப் போரில் பங்குபற்றியிருந்தால், நெப்போலிய னுக்கெதிராக ஏற்பட்ட எதிர்ப்பைப் பெலப்படுத்த, பிரசியா உதவியி ருக்கலாம். அதைவிட்டு, உதவியைக் கொடுக்கவோ, பெறவோ, முடி யாத நேரத்தில் பிரசியா தனிமையாகப் போரில் இறங்கியதனல், தோல்வி நிச்சயமாயிற்று. ஒசுத்திரியாவிலும் பார்க்கப் பி ர சி யா கூடின வேகத்துடன் சேனனில் தோற்கடிக்கப்பட்டது. ஒற்ருேபர் 25 ஆம் நாள், நெப்போலியன், வெற்றி வீரனகப் பேளினுக்குள் பிர வேசித்தார்.
Guofar sillars cir (Berlin Decrees):
பிரசியாவின் கர்வத்தை அடக்கியதன் அறிகுறியாக, பேளினி லிருந்து, நவம்பர் 21 ஆம் நாள், இங்கிலாந்தின் கடற்பெலத்தைத் தரையில் வெற்றி கொள்வதற்கான பேளின் கட்டளைகளை நெப்போலியன் பிறப்பித்தார். அ  ைவ ‘இங்கிலாந்தினதும், அத ன் குடியேற் றங்களினதும் துறைமுகங்களுக்கெதிரே நிரந்தரமான தடை விதிக் கப்பட்டுள்ளது', என்று அறிவித்தன. மேலும் பிரித்தானியா வி லிருந்து, அல்லது பிரித்தானியாவுக்குத் தரை அல்லது கடல் மார்க்க மாகப் பொருள்களைக் கொண்டு செல்லும் நடுநிலை வகிக்கும் நாடு களின் கப்பல்கள் பறிமுதலாகும், எனக் கட்டளை கூறியது.
19) fiĝGoff5g5] (Friedland, 1807) :
பிரசியாவுடன் சமாதானஞ் செய்யுமுன், நெப்போலியன் இரசியா மீது படையெடுத்தார். 1807 ஆம் ஆண்டு யூன் மாதம், இரசியப் படைகள் பிரிதிலாந்தில் நெப்போலியனுக்கு அடிபணிந்தன. ஒரு தனி யுத்தம் இரசியாவைச் சரணடையச் செய்திருக்க முடியாது எனினும் நிலையை நன்கு பரிசீலனை செய்து, அலெக்சாந்தர், நெப் போலியனெடு சமாதானப் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்தார். பிரி

Page 58
90 புது உலக சரித்திரம்
திலந்து தோல்விகளுக்குப் பின்பு, இரசியாவின் நிலை அபாயத்துக்குள் ளானது. பிரசியா மண் கெளவி விட்டது. ஒசுத்திரியா, நெப்போலி யனுடன் நட்புக் கொள்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. கண் டத் திட்டத்தினல் பிரித்தானியா, இரசியாவுக்கு உடன் உதவியளிக் கும் நிலையிலில்லை. போலந்து மக்களும் இரசியாவுக் கெதிரே புரட்சி செய்யுமாறு தூண்டப்பட்டனர். இப்பேர்ப்பட்ட ஓர் இக்கட்டான நிலையில் இரசிய அரசர் அலெக்சாந்தர், நெப்போலியனுடன் சினே கம் கொள்வதே உத்தமமான வழி என நினைத்தார். இவ்வுறவு ஏற் பட்டதும், அலெக்சாந்தரின் கவலைகள் எல்லாம், நொடிப் பொழுதில் மறைந்தன.
goi) diff) plair up 3,605 (Treaty of Tilsit, 807) :
1807 ஆம் ஆண்டு யூன் மாதம் 25 ஆம் நாள், நெப்போலி யனும் அலெக்சாந்தரும் தில் சிற்றில், ஒரு நதியின் நடுவே க ட் டி நின்ற ஒடம் ஒன்றில் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினர். வெகு சீக்கரம், நெப்போலியன் அலெக்சாந்தரைத் தன்வசப் படுத்தி ஞர். அங்கு ஏற்பட்ட உடன்படிக்கையினல் நெப்போலியன், பிரசியா வைச் சிதைத்து, சில புது அரசியல் சிருட்டிப்புக்களை ஏற்படுத்தினர்.
பிரசிய போலந்தும், ஒசித்திரிய கலீசியாவும் ஒன்ருக்கப்பட்டு, sl6al rig Fit Gualth goop footh (Grand Duchy of Warsaw) 6T657 so புதுச் சிருட்டிப்பு, சக்சனிய அரசரின் ஆளுகைக்குள் விடப்பட்டது. எல்ப் நதிக்கு மேற்கேயுள்ள பிரசிய நிலம் முழுவதும், உவெசுப்பாலிய அரசாக (Kingdom of Westphalia) அமைக்கப்பட்டு, நெப்போலியனின் சகோதரரான யெருே முக்கு (Jerome) கையளிக்கப்பட்டது. ஒசுத் திரியா, பிரசியா இரண்டும் நீங்கலாக, செர்மனியின் மிகுதி முழுவதும் இறைன் கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டது. அரைப் பகுதிக்கு மேற் பட்ட நிலங்களை இழந்து, ஆயுதங்களும் துருப்புக்களுமின்றி, நாலா பக்கங்களிலும் பிரெஞ்சு ஏகாதிபத்திய நாடுகளினல் சூழப்பட்டு, 100,000 பிரெஞ்சுத் துருப்புக்களைத் தன்னகத்தே கொண்டிருந்த பிரசியா, வேறு வழியெதுவுமின்றி பிரான்சுடனும் இரசியாவுடனும் இணைந்தது.
தோல்வியடைந்து நின்ற இரசியாவுக்கு, தில்சிற்று ஒப்பந்தம், பல வெற்றிகளின் பலன்களைச் செலவின் றிப் பெற்றுக் கொடுத்தது. நெப்போலியன் செய்தவற்றையும், செய்யப்போவதையும் அங்கீகரித் ததற்குக் கைமாருக, மூன்ரும் பங்கீட்டின் பின் பிரசியாவுக்குச் சொந்தமாயிருந்த பியாலிசுத்தொக்கு (Bialystok) நிலத்தை இரசியா பெற்று, பிரசியாவைக் காப்பாற்றித் தன் னைத் தாக் கு த லி லிருந்து பாதுகாத்துக் கொண்டது.

நெப்போலியன் பொனப்பாட் 9.
sGöTL-53). Lúb (The Continental System) :
பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் போட்டியும், பிணக் கும் நாளாந்தம் வளர்ந்துகொண்டே வந்தன. இரு நா டு களு ம் ஒன்றையொன்று பொருளாதாரக் கட்டுப்பாடுகளினல் குரல்வளையை நெரிக்க முயற்சித்தன. பேளின் கட்டளைகளுக்கு மறுப்பாகப் பிரித் தானிய அரசாங்கம், 1807 சனவரியில் 'கழகப் பணிக்கை" (Orders in Council) சட்டங்களைப் பிறப்பித்தது. நெப்போலியனுடைய கட் டளைகளை மேற்கொள்ளும் துறைமுகங்கள் மீது, தான் தடை விதித் திருப்பதாகவும், பிரித்தானிய பொருள்களைக் கைப்பற்றும் நாடுகளின் கப்பல்கள் பறிமுதலாக்கப்படும் என்றும் சட்டம் கூறியது. இப் பொருளாதாரப் போர், நடுநிலைநாடுகளுக்குப் பெரும் துன்பத்தையுண் டாக்கியது. போல்த்திக்கு கடலில் பிரெஞ்சு ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்குடன், இங்கிலாந்தின் கனிங்கு (Canning) செற்றெம்பர் மாதம் கோபனேகனத் தாக்கி, தேனிய கப்பற்படையைப் பறிமுதலாக்கினர். நெப்போலியன், தன் கண்டத் திட்டத்தை மேலும் கூர்மையாக்க, திசம்பர் மாதம் மிலான் கட்டளைகளைப் பிறப்பித்தார்.
பிற எதிர்ப்புக்கள் :
ஐரோப்பாவில், நெப்போலியனின் ஆதிக்கத்துக்கெதிராக வேறு இரு துறைகளிலும் எதிர்ப்புத்தோன்ற ஆரம்பிக்கலாயிற்று. தனது செயல்களினல், நெப்போ லியன் கத்தோலிக்க ஐரோப்பாவின் உள் ளத்தைப் புண்படுத்தி, அவர்களின் தீராத கோபத்தைச் சம்பா தித்துக்கொண்டார். மறுபுறம், தனக்கு எதிராக நாட்டினவாதம் என்ற சக்தியைத் தட்டி எழுப்பிவிட்டார்.
1806 ஆம் ஆண்டு, பாப்புவின் இராச்சியங்களுக்குள் இருந்த துறைமுகங்கள் பிரித்தானிய கப்பல்களை அனுமதிக்கலாகாது, என்று நெப்போலியன் பாப்புவுக்குக் கட்டளையிட்டார். இதற்குப் பாப்பான வர், தான் நடுநிலை வகிப்பதாகப் பதில் கூறியபோது, நெப்போலியன் *நான் சக்கரவர்த்தி; எனது எதிரிகள் உமது எதிரிகளாக வும் இருப்பர்” என்று வெருட்டினர். 1808 ஏப்ரல் மாதம், பிரெஞ்சுத் துருப்புக்கள் பாப்பானவரின் இராச்சியங்களைக் கைப்பற்றி, உருேமைத் தமதாக்கினர். அடுத்த ஆண்டு, இப்பிரதேசம் பிரெஞ்சு ஏகாதிபத் தியத்துடன் இணைக்கப்பட்டது.
போத்துக்கல், சிபெயின் மீது ஆக்கிரமிப்பு :
இங்கிலாந்தின்மீது விதிக்கப்பட்ட கண்டத் திட்டத்தை மேலும் கூர்மையாக்குவதற்கும், அதைச் சரிவர நிர்வகிப்பதற்கும், போர்த்துக் கலின் திறந்த துறைமுகங்கள் தடையாயிருப்பதைக் கண்டு, அவற்றை

Page 59
92 புது உலக சரித்திரம்
மூடுமாறு, நெப்போலியன் அந்நாட்டு அதிபதியை வற்புறுத்தினர். அவரும் ஆக்கிரழிப்புக்கு அஞ்சி, விருப்பின்றி, அக் கட்டளையை ஏற் றுக் கொண்டார். ஆனல், அங்கிருந்த ஆங்கிலேயப் பொருள்களைப் பறிமுதலாக்க வேண்டுமென்ற நெப்போலியனின் இரண்டாவது கோரிக்கையை ஏற்க மறுத்தார். உடனே நெப்போலியன், இரக்க மின்றி, அச்சிறு நாட்டை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டார். தேனிய விவகாரங்களில் பிரித்தானியா தலையிட்டதற்குப் பதிலாகத் தான் போத்துக்கலில் த லை யி டு வ தா கக் கூறி க் கொண் டு , தன் துருப்புக்களைப் போத்துக்கலுக்குள் புகக்கட்டளையிட்டார். யூணுேவின் (Junot) 8gp 25,000 போர் வீரர்கள் இலிசுபனுக்குள் பி ர வே சித்தபோது, அரச குடும்பத்தினர், ஆங்கிலேய பாதுகாப்புடன், பிறே சிலுக்குப் புறப்பட்டு விட்டதாகவும், பிரித்தானியா, அந்நாட்டின் கடற் படையைத் தன் வசமாக் கிக் கொண்டதாகவும் கேள்விப் பட்டார்.
நெப்போலியன் செர்மனியுடன் தான் போர் செய்து கொண்டி ருக்கும் வேளையில், சுதந்திர சிபெயின் பிரான்சின் பின் புறத்துக்கு அபாயம் வருவிக்கலாமென்று எண்ணியதால், போத்துக்கல் ஆக்கிர மிப்புடன் சிபெயினையும் அடிமைப்படுத்த வேண்டுமென்று ஆ  ைச ப் பட்டார். நேப்பிள் சில்போல, மற்றிதிலும் (Madrid) பூர்போன் வமிசத் தினர் அகற்றப்பட்டு, ஒரு பொனப்பாட் அவரது இடத்தைப் பெறுதல் அவசியம் என அவர் மனதிற்பட்டது.
1808 ஆம் ஆண்டு பெப்பரவரி, மார்ச் மாதங்களில், போத்துக் கல் இராணுவத்தைப் பெலப்படுத்தும் போர்வையின்கீழ், மியூறற்றும் 75,000 போர் வீரர்களும் சிபெயினுக்குள் புகுந்தனர். மியூறற், மற் றிதைக் கைப்பற்றியதும் அரசர், தன் மகன் பேரில் மு டி  ைய த் துறந்து விட்டு, ஒட்டம் பிடிக்க எத்தனித்தார். பேயோன் (Bay onne) எனுமிடத்தில், நெப்போலியன் தகப்பனையும் மகனையும் சந் தித்து, இருவரையும் முடியைத் துறக்குமாறு பலாத்காரமாகக் கட் டாயப் படுத்தி, யோசப்பை நேப்பிள் சிலிருந்து வரவழைத்து, சிபானி யாவின் அரசராக்கினர். அவருக்குப் பதிலாக மியூறற் நேப்பிள்சு அர சராக்கப்பட்டார். இவ்வாறு, நெப்போலியன் முழு ஐபீரியத் தீபகற் பத்தினதும் அதிபதியானர். 1808 ஆம் ஆண்டு மே முடிவில், சிபெ யின் அமைதியாக இருப்பதாக வெளியிட்டார்.
தீபகற்பப் போர் :
ஐபீரிய தீபகற்பத்தில், நெப்போலியன் ஒர் எதிர்பாராத சக்தி
யினுல் தடைப்பட்டார். நீண்டகாலம் சுய ஆட்சியையும், சுதந்திரத்
தையும் அனுபவித்து வந்த ஒரு சமுதாயத்தை அடக்கியாளுவது

நெப்போலியன் பொனபாட் 93
சுலபமான கருமம் அன்று, என்பதை சிபானிய மக்கள் நெப்போலிய னுக்குச் செயலில் காட்டினர். பிரெஞ்சுப் புரட்சியின் தத்துவங்களி னல் பாதிக்கப்படாது, தனிமையில் வாழ்ந்து வந்த இம்மக்கள், நெப்போலியனில், தம் மதத்தின் எதிரியையும், தேச ஒற்றுமையைக் குலைப்பவரையும், தம் நாட்டு அரசைக் கைப்பற்ற ஆசைப்பட்டவரை யும் கண்டனர். அசுத்திரியாசு (Asturias) என்ற மாகாணத்தைப் பின் பற்றி, ஏனைய மாகாணங்கள் ஒன்றன்பின் ஒன்ருகப் பிரெஞ்சு ஆக்கிரமிப்பை எதிர்த்துப் புரட்சி செய்தன. 1808 ஆம் ஆண்டு யூன் மாதம், சிபானியர், 20,000 வீரர்களுக்கு மேற்பட்ட ஒரு பிரெஞ்சு சைனியத்தை தென்மலைகளின் மத்தியில் பேலன் (Baylem) எனுமிடத் தில் சரணடையச் செய்தனர். யோசப்பு மற்றிதிலிருந்து ஒட்டம் பிடித்ததைக் கண்ட நெப்போலியன், கோபாவேசம் கொண்டு தீப கற்பத்தை அடிபணியச் செய்ய வேண்டுமெனத் திட்டமிட்டார். ஆனல், சூழ்நிலை, பூரணமாக சிபானியருக்கே உதவி செய்தது. சிபானியர் தேர்ச்சி பெற்றிருந்த 'குவரில்லா’ப் போர்முறைக்கு தீபகற்பத்தின் புவியியல் அமைவு அனுசரணையாக இருந்ததுடன், பிரித்தானிய கடற்படையினை வரவழைப்பதற்கும், பொருளுதவியை இலகுவாகப் பெ று வ த ற கும் மிகச் சாதகமாக இரு ந் த து. பிரித்தானியரிடம், சிபானியர் கேட்டு நின்ற உதவியும் உடனே கிட்டிற்று. ஆகத்து மாதம், சேர் ஆதர் உவெலசிலியின் {Sir. Arthur Welesley) கீழ், துருப்புக்கள் போத்துக்கலில் வந்திறங்கின. இப்படை பூனேவையும், அவரது துருப்புக்களையும் மூன்று மாதகாலத்துக்குள், இரண்டாம் முறையாக விமிரோவில் (Wimiero) தோற்கடித்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சிந்திரா (Cintra) உடன்படிக்கை யினல், பிரெஞ்சுத் துருப்புக்கள் போத்துக்கலை விட்டு நீங்க ஒப்புக் கொண்டன. ஆங்கிலேயர், சிபானியாவில் பிரெஞ்சுக்காரரைத் தாக்குவதற்குப் போத்துக்கலை ஒரு தளமாக அமைத்தனர். ஆனல் நெப்போலியன், புது வெற்றிகளையீட்ட வல்லபமுடையவர் என்பதை செயலில் காட்டினர். 1808 ஆம் ஆண்டு முடிவில், அவர் 150,000 வீரர்களின் தலைமையில், சிபானியாவுக்குள் புகுந்து, அந்நாட்டுப் படைகளைப் புறங்கண்டோடச் செய்தும், ஆங்கிலேயத் துருப்புக்களை * கடலுக்குள்" துரத்தியும், தன் சகோதரனை மற்றிதில் திரும்பவும் சிம்மாசனத்தில் அமர்த்தினர். ஆல்ை, இப் போர்க்கள நடவடிக்கை கள் முடிவடையுமுன், ஐரோப்பாவில் புது யுத்தம் ஆரம்பிக்கப் போவதாகக் கேள்விப்பட்ட நெப்போலியன், அதிகாரத்தைத் தன் தளபதியாரிடம் விட்டுப் பரிசுக்குத் திரும்பினர். ஒசுத்திரியப் போர் :
சிபானியாவின் முன்மாதிரியைக் கண்டு நாட்டுப்பற்றினல் உந்தப் பட்ட ஒசுத்திரியா, நான்காவது முறையாக, 1809 ஏப்ரலில் நெப்

Page 60
94 புது உலக சரித்திரம்
போலிய சாம்ராச்சியத்தைத் தாக்கியது. நான்காவது முறையும் நெப்போலியன், ஒசுத்திரியாவின் ஆணவத்தை வக்ரும் (Wagram) போரில் (யூலை) அடக்கி அடிபணியச் செய்தார்.
பிரான்சிசு சக்கரவத்தி தன் விருப்பத்துக்கு மாருக, சொன்பிறன் (Schonbrunn) சமாதானத்தைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தப் பட்டார். ஒசுத்திரிய, செர்மன், போலிசு, இத்தாலிய எல்லைகளில், ஐந்து இலட்சம் மக்களையும் நிலப்பரப்பையும் ஒசுத்திரியா, நெப்போ லியனுக்கும் அவரது நண்பர்களுக்கும் கொடுத்தது. அத்துடன் நெப் போலியன், இலீறிய மாகாணங்களைப் பறித்து, ஒசுத்திரியாவைக் கடற்கரையிலிருந்து விரட்டினர். தவிர, பெரிய நட்ட ஈட்டை இறுக்கவும், கண்டத்திட்டத்தில் சேரவும், புது சிபானிய அரசை அங்கீகரிக்கவும், நெப்போலியனுக்குப் பெண் கொடுக்கவும், பிரான்சிசு, ஒப்புக்கொண்டார்.
4. வீழ்ச்சி (1810.1815)
நெப்போலியனின் இரண்டாவது திருமணம், பழைய ஐரோப் பாவில் அவரது கீர்த்தியை அறிவுறுத்தியது. 1810 ஆம் ஆண்டு, நெப் போலிய ஏகாதிபத்தியம், அதிகாரத்தின் சிகரத்தை எய்தியது. ஒசுத் திரியா அடிபணிந்து, திருமணத்தின் மூலம் நெப்போலியனுடன் உறவு கொண்டாடிற்று. சிபெயினும், போத்துக்கலும், கர்வம் அடக்கப் பட்ட நாடுகளாக, நின்றன; போப்பாண்டவர் தாழ்த்தப்பட்டார். சுவீடன் நெப்போலியனுக்குச் செவிசாய்த்தது. பிரெஞ்சு--இரசிய உடன்படிக்கையில் ஏற்பட்ட முறிவு நிவிர்த்தி செய்யப்பட்டது. இங்கிலாந்தின் வியாபாரம் கண்டத்திட்டத்தினுல் நோக்காடு பட்ட துடன், அமெரிக்க ஐக்கிய இராச்சியத்துடன் போருக்கு ஆயத்தப் படுத்தியது. போல்ற்றிக்கு தொடக்கம் மத்தியதரைக் கடல் வரை, ரேகசு தொடக்கம் நீமன் நதிவரை, நெப்போலியனுடைய சொல் சட்டமாக மதிக்கப்பட்டது
அதே நேரத்தில், ஏகாதிபத்தியத்தைச் சிதைக்கவல்ல சக்திகள் ஒன்றுபட ஆரம்பித்துவிட்டன. அவ்வமைப்பில் அங்கும் இங்கு ம் தென்பட்ட வெடிப்புக்கள், பெரும் பிளவுகளாக மாறின. நேப் பிள்சை அடிமைப்படுத்துவதற்கெதிராக, சிசிலியில் எதிர்ப்புத் தோன்றி யது. ஐபீரியன் தீபகற்பத்தில், மக்களின் எதிர்ப்புக்கு உவெலிசிலி தலைமை தாங்கும்வரை, அவர்கள் குவரில்லாச் சண்டைசெய்து வந்த Gotif. 6 si6D spoir (Stein) F( 6.7 (3.5 T did not (Scharnhrost) 6T girl Jourt
களின் இராணுவச் சீர்திருத்தங்கள், பிரசியாவுக்குப் புத்துயிர் அளித்

நெப்போலியன் பொனப்பாட் 95
தன. செர்மானியர் சுதந்திர இலட்சியங்களினல் தூண்டப்பட்டு, அமைதியீனம் கொண்டனர். பிரான்சின் இராணுவ, பொருளாதார நிதிக் கட்டுப்பாடுகள், ஐரோப்பாவில் எங்கும் ஒரு புது எதிர்ப்பு மனப்பான்மையை வளர்த்தன. பிரான்சு, புகழில் சலிப்படைந்து மக்கள், தம் ஆட்பலம் நாளாந்தம் குறைந்து வருவதை ஆட்சேபித் தனா. 3,
furt Gofuù S GTGO)6 (The Spanish Ulcer):
1809 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம், உவெலசிலி, தீபகற்பத்துக்கு இரண்டாம் முறை திரும்பியதுடன் ‘தீபகற்பப் போர்’ என்று கூறப் பட்ட போர் நடவடிக்கைகள் ஆரம்பமாயின. இம்முறை நெப்போ லியன், தனக்குப் பதிலாக மசேன (Massena) வை, பிரெஞ்சுத் தள பதியாக அனுப்பிவைத்ததைக் கண்டு, உவெலசிலி ஆறுதலடைந்தார். ஏனெனில் உவெலசிலி, போர்க்களத்தில் நெப்போலியனின் நேர்முகத் தரிசனம் 4,000 போர்வீரர்களுக்குச் சமானமாகும் எனக் குறிப்பிட் டார். ஆரம்பத்தில், உவெலசிலி பெரும் வெற்றி ெயா ன்  ைற யு ம் ஈட்டமுடியாமற் போயிற்று. சிபானியர், இவருக்கு உதவி செய்யா மற் போனதினுல். பிரெஞ்சுப் படைகள் உவெலசிலியைப் போர்த்துக் கல்வரை துரத்திச் சென்றனர்; அவர் இலிசிபனுக்குப் பின்வாங்கி, தொராசு வெடராசு (Torres Wedras) எனுமிடத்தில் நீர், தடை கள், துப்பாக்கிகள் எனும் மூவகை அரண்களை அமைத்து, பிரிட்டிசுத் துருப்புகளை அதனுள் பாதுகாத்துக் கொண்டார். ஐந்து மாதங் களாக, இவ்வரண்களை மேற்கொள்ள மசேஞ பெரும்பாடுபட்டும் முடியாமற்போயிற்று. பசி, பிணி, துன்பங்களினல் பீடிக்கப்பட்ட பிரெஞ்சுத் துருப்புகள், 1811 மார்ச்சில், சிபெயினுக்குள் பின் வாங் கின. பிரித்தானியப் படையைக் காத்தமைக்காக பிரபு உவெலிந்தன் என்ற பட்டத்தையும், நாமத்தையும், பிரித்தானிய அரசாங்க ம் உவெலசிலிக்குச் சூட்டியது. மே மாதம், புவன் தேசு த ஒன ரோ விலும் (Fuentes D' 0moro) பிரெஞ்சினருக்கு மேலும் ஒரு தோல்வி ஏற்படலாயிற்று; போத்துக்கலை உவெலிந்தன் மீட்டார். அப் படையெடுப்பினல் 35,000 வீரர்களை இழந்ததே, பிரெஞ்சினர் கண்ட மிச்சமாகும். இத்தோல்வியின் பயனக மசேனுக்குப் பதிலாக மார் மந்து (Marmont) பிரெஞ்சுத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
அடுத்த ஆண்டு (1812) இரசியாவின் மேல் நெப்போலியன் படையெடுத்ததுடன், தீபகற்பத்திலிருந்த ஒரு படை திருப்பியழைக் கப்பட்டது; உவெலிந்தனின் கை ஓங்கியது. பிரெஞ்சுப் படைகள் தீரத்தோடு போர் புரிந்தும், படை வலிமை மிக்க உவெலிந்தனை

Page 61
96 புது உலக சரித்திரம்
எதிர்த்துநிற்க முடியவில்லை. யூலை மாதம், உவெலிந்தன் மார்மொந்தை சலமங்காவில் (Salamanca) தோற்கடித்து, மற்றிதுக்குள் (Madrid) வெற்றிக்கொடியுடன் பிரவேசித்தார்.
1813 மே மாதம், சிபானியத் துருப்புக்கள் உதவியுடன், பிரித் தானியப் படைகள் வலடோலிடு (Walladolid) க்கும், அங்கிருந்து விற் ருே றி யா வுக் கும் (Wittoria) முன்னேறின. அங்கிருந்து, உவெலிந்தன் மெதுவாகவும், விடாப்பிடியாகவும், பிரெஞ்சுத் துருப்புக் களைத் தன்முன்னே துரத்திக்கொண்டு பிரனிசு மலைகளைக் கடந்து, gi,6ör LDT 95th, y 6ör ở LJ T đã & 9ươ sổr (San Sebastian) [556) [ru! b : thư லோஞ (Pampalona) வையும் முற்றுகையிட்டார். ஆகத்தில் முந்தி யதும், ஒற்ருேபரில், பிந்தியதும் முறையே ச ர ண  ைட ந் த ன. அங்கிருந்து உவெலிந்தன், பிரான்சுக்குள் கால் வைத்து, பேயனை (Bayonne) முற்றுகையிட்டார். 1814 பெப்ரவரியில், அவர் பிரெஞ்சுப் படைகளைத் துரத்திச் சென்று, துரலோ சில் (Toulouse) கடும் சமரின் பின், ஓர் அரைகுறையான வெற்றியை ஈட்டினர். ஆனல் இதற்குள் பிரான்சின் வடக்கே கேயநாட்டுப் படைகள், பிரெஞ்சினரைத் தோற் கடித்து, வெற்றிமுரசுடன் பரிசுக்குள் பிரவேசித்துவிட்டனர்; பிரான் சினது தோல்வி நிச்சயமாயிற்று, ஏப்ரில் 11 ஆம் நாள், நெப்போலி யன், முடியைத் துறந்தார். அடுத்த தினம், தீபகற்பப்போர் முடி வெய்தியது. ....
சிபானியப் படையெடுப்பு, நெப்போலியன் விட்ட பெரும் தவறுகளில் ஒன்று. நெப் போலியனின் வீழ்ச்சிக்க்ான முக்கிய காரணங்களில் இது பிரதானமானது. சிபானியாவில் எதிர்ப்பு இராது, என்ற எண்ணத்துடனேயே அப்போரில் நெப்போலியன் ஈடுபட்டார். எதிர்ப்பு எற்பட்டபோது, அதன் கனத்தைச் சரிவர மட்டிடவில்லை. இன்னும் உவெலிந்த னுடைய விடாப்பிடித் திறனையும், போர்த்திறனையும், நெப்போலியன் துரும்பெனவே ஆரம்பத்தில் மதித்தார். போரை ஆரம்பித்தபின், தோல்வியை ஏற்காது பின்வாங்க முடியாமற் போயிற்று. இதை அறிந்தும், அப்போரை முடிவுக்குக் கொண்டுவரத் தன் திறனையோ, முழுப் பலத்தையோ அவர் உபயோக்கவில்லே, 300,000 பிரெஞ்சு வீரர்கள் சிபானியாவில் ஒன்றையும் சாதிக்காது, வீண் விரயம் செய்யப்பட்டனர். சிபானியப்போர் முடிவடைய முன்பு, வேறு ஐரோப்பிய பிரச்சினைகள் தோன்றி, நெப்போலியனை மேலும் தொந்தரவுக்குள்ளாக்கின. " சிபானியப் பிளவை" நெப்போலியனுடைய முயற்சிகளை வீணுக்கியது மாத்திரமன்று ; அஃது ஐரோப்பிய மக்களுக்கு ஒரு முன்மாதிரிகையையும் வகுத்து விட்டது.
கண்டத்திட்டத்தின் விளைவுகள் :
1810-1811 ஆம் ஆண்டுகளில், இங்கிலாந்துக் கெதிரே பிரகட னம் செய்யப்பட்ட கண்டத்திட்டத்தின் சட்டங்களை, நெப்போலியன் தானே, நிருவகித்தார் : இங்கிலாந்தினதும் அதன் குடியேற்றங்களின தும் ஏற்றுமதிகளைத் தன்னலியன்ற மட்டும், ஐரோப்பாவிலிருந்து தடுக் கப் பிரயாசைப்பட்டார். கடும் சுங்க வரிகள் விதிக்கப்பட்டன; சுங்க

-- yooroo ·„rny&#*&
,--> {*@ショg ダ、*●g』a「浮- 7ー・レ琳甚n遭8
„rne ao* グ %仏残
磁ო0 ტ;形必
3ョQコg"sひun グ ggっC・ 、、Sく%y
•} ut nuo 0,5s
斗 (orgi) osasuo aerogovoprofeo

Page 62

நெப்போலியன் பொனப்பாட் 97
அகிகாரிகளும், கடற்படை உரோந்துக்காரர்களும் ஆயிரக்கணக்கில் நியமிக்கப்பட்டனர். எனினும், இத்தடைகள் எல்லாவற்றையும் மீறி. ஏராளமான பிரித்தானியப் பொருள்கள் ஐரோப்பாவுக்குள் கள்ளத்தன மாக நுழைந்தன. சகலவிதமான கள்ள வழிகளும் மேற்கொள்ளப்பட் டன. பிரேதப் பெட்டிகள், சீனியால் நிரப்பப்பட்டன என்று கண்டு பிடிக்கப்படும் வரை, சா வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்தன. சீனி, புகையிலை, கோப்பி, பருத்தி போன்ற பொருள்களின் கூடிய விலைகள், துன்பப்பட்ட ஐரோப்பிய மக்களின் துன்பத்தை, பன்மடங்கு அதி கரிக்கச் செய்தன. வியாபாரத்தையண்டி வாழ்ந்த ஒல்லாந்து, இக் கட்டளைகளினல் பெரிதும் பாதிக்கப்பட்டமையினல், அந்நாட்டு அரசர் (நெப்போலியனின் சகோதரர்) திட்டத்தை ஏற்க மறுத்த போது, நெப்போலியன் அந்நாட்டைப் பிரான்சுடன் இணைத்தார். 1812 இல் பிரெஞ்சுப் பேரரசு, வடக்கே ஒல்லாந்திலிருந்து தெற்கே நேப்பிள்சு வரை வியாபித்துக் கிடந்தது. மேற்கு ஐரோப்பாவினதும், கிழக்கு ஐரோப்பாவினதும், சக்கரவர்த்திகளுக்கிடையே தில்சிற்றில் ஏற்பட்ட நட்பும் குறைய ஆரம்பித்தது. மூன்று வருடங்களுக்குள் ஒருவரை யொருவர், பொருமை, அச்சம், சந்தேகக் கண்களுடன் நோக்கினர். கிழக்கில், அலெக்சாந்தரின் அதிகாரமும் சுதந்திரமும் நாளுக்கு நாள் வளர்வதைக் கண்டு, நெப்போலியன் மனம் புழுங்கினர். பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அளவு கணக்கின்றி விரிவடைவதைக் கண்டு, அலெக் சாந்தர் அச்சம் கொண்டார். ஈற்றில், வாணிபப் பிரச்சினைதான் இரு நாடுகளின் நட்பையும் சிதைத்து, யுத்தத்தை வருவித்தது. பிரித்தானியப் பொருள்கள் கண்டத்தில் ஏராளமாக இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்காக, இரசிய எல்லைக்குள் எல்லா நடுநிலை நாடுகளின் கப்பல்களைத் தடைசெய்யுமாறு, நெப்போலியன், 1810 ஒற்ருேபர் மாதம், ஒரு வேண்டுகோளை விடுத்தார். அலெக்சாந்தர் இக்கோரிக்கையை நிராகரித்ததுமன்றி, பிரெஞ்சுப் பொருள்மீது புது வரிகளையும் பிரகடனம் செய்தார். இச் செயலை, நெப்போலியன், யுத்தப் பிரகடனமாகப் பாவித்து, 1812 ஏப்ரல் மாதம் இரசியாவுக் கெதிராகப் போர் தொடுத்தார். இரசியப் படையெடுப்பு :
நெப்போலியன், இரசியாமீது படையெடுத்து, அலெக்சாந்தரின் கர்வத்தை அடக்கத் திட்டமிட்டார். அத்துடன், இந்தியாவுக்குப் போகும் பாதையில், மொசுக்கோ ஒரு தங்குமிடமென எண்ணிய அவர், போரையும் மனப்பூர்வமாக வரவேற்றர். உடனே பிரெஞ்சுக் காரர், செர்மானியர், டச்சு, சுவிசு, போல், சிபானியர், போத்துக் கேயர், இத்தாலியர், குருேட், தல்மேசியர் என்ற பல்வேறு இனங் 5ளின், ஆறு இலட்சம் போர் வீரர்களைக் கொண்ட, ஒரு பெரும்
89 rو س-D

Page 63
98 புது உலக சரித்திரம்
படையை (Grand Army) நெப்போலியன் திரட்டினர். ஒசுத்திரிய, பிரசிய சேனைகளும் பங்குபற்றின. போலந்து 60,000 வீரர்களை ஈந்தது. மறுபுறம் சுவீடனும், துருக்கியும் அலெக்சாந்தருடன் உடன் படிக்கை செய்து, நெப்போலியனை ஆதரிக்க மறுத்தன.
மொசுக்கோ படையெடுப்புடன், நெப்போலியனின் வீழ்ச்சி வரலாற்றில் முதலாம் அத்தியாயம் ஆரம்பித்தது. நெப்போலியன், தன் பெரும்படைக்குத் தலைமை தாங்கி நீமன் நதியைக் கடந்து, 1812 யூன் மாதம், இரசிய நிலத்தில் கால்வைத்தார். 850 மைல்களுக்கப்பாலி ருந்த மொசுக்கோவை விரைவாக அடைவதே அவரது திட்டம். நாளடைவில் இப் படையெடுப்பு ஓர் இனத்தின் மதப்பற்று, இயற்கை ஏதுக்கள், காடடைந்த பிரதேசம், கடுங்குளிர், பட்டினி, நோய் எனும் சக்திகளுக் கெதிரே நடைபெறும் போராட்டமாக மாறியது. இவற் றின் முன், உலகத்தின் அரியேறன்னன் அடிபணிந்தனன்.
இரசியாவில், சிபெயினில் போன்று, எதிர்ப்பு ஏற்படுமென நெப் போலியன் எதிர்பார்க்கவில்லை; ஆரம்பத்திலேயே ஒரு யுத்தத்தினல் அலெக்சாந்தரை அடிபணியச் செய்யலாம் என்றே அவர் எதிர்பார்த் தார். ஆனல் ஐந்து இலட்சம் படைகளுக்கு முன்னல், இரசியப் படைகள் ஒன்றும் செய்யமுடியாது பின்வாங்கின. ஆரம்பத் தி ல் பயத்தினல் ஏற்பட்ட செயல், சீக்கிரம் திட்டமிடப்பட்ட போர் உபாயமாக மேற்கொள்ளப்பட்டது. நெப்போலியன், பாதைகளில் லாத, காடடைந்த பிரதேசத்துக்குள் புகவே, இரசியத் துருப்புக் களும், குடியானவர்களும் தம் உணவையும், நகரங்களையும் தீக்கிரை யாக்கிவிட்டு, வெளியேறினர். துருப்புக்களில், ஆயிரக்கணக்கானேர் நோயினுல் பீடிக்கப்பட்டனர்; ஏனையோர் களவாக ஒட்டம் பிடித் தனர்; போர்வீரர்களும் குதிரைகளும் பசியால் வாடின. சுமாலென் சுக்கில் (Smolensk), ஒரு சிறு இரசியப்படையை நெப்போலியன் வெற்றி கொண்டார்; ஆனல் இரசியாவின் இருபெரும் ப  ைட க ள் நெப்போலியனுக்கு முகம்கொடுத்து யுத்தம் செய்யாது, பின் வாங் கின. மூன்று கிழமைகளில் பிரெஞ்சியர் மொசுக்கோவை யடைந்தனர். தாராளத்துடன் இரசிய மக்களை நடாத்த எண்ணிய நெப்போலி யன், வெறும் நகரத்தையே கண்ணுற்றர். துருப்புக்களும் நகரவாசி களும் ஏற்கனவே பட்டினத்துக்குத் தீ வைத்துவிட்டு வெளியேறி விட் டனர்; மொசுக்கோவில், நெப்பே லியன் அலெக்சாந்தரின் சமாதான வேண்டுகோளை எதிர்பார்த்து நின்ருர். ஆனல் செயின்ட் பீற்றசுபேக்கி லிருந்து ஒரு பதிலும் வரவில்லை.
அப்பொழுது ஒற்ருேபர் மாதம். பிரான்சில் எதிர்ப்பையும் ஐரோப் பாவில் புது ஐக்கியத்தையும் கண்டு அஞ்சிய நெப்டோலியன், மாரி காலத்தை இரசியா மத்தியில் செலவழிக்கத் துணியாது, உடனே

நெப்போலியன் பொனப்பாட் 99
தன் துருப்புக்களைப் பின் வாங்கும்படி, கட்டளையை பிறப்பித்தார். உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தங்குதற்குக் கூரையுமின்றி அல்லற்பட்ட பிரெஞ்சுத் துருப்புக்கள், நவம்பர் மாதம் பனிக்கட்டிக் கூடாக மேற்கு நோக்கிப் புறப்படலாயினர். பசியால் வாடிய போர் வீரர்களும் குதிரைகளும், கடுங்குளிரைத் தாங்கமுடியாது, வழி முழுவ திலும் ஈக்களைப்போல மடிந்தன. இரசியப் படைகள், பின்னும் அக் கமும் பக்கமும் நின்று தாக்கி, இறந்தவர்களின் எண்ணிக்கையை அதி கரிக்கச் செய்தனர். நெப்போலியனின் பெரும்படை சின்னபின்ன மாகி நாசமடைந்தது. திசம்பர் மாதம் 20,000 வீரர்கள் மாத்திரமே திரும்பினர். துருப்புக்களை இரசிய எல்லையில் விட்டுவிட்டு, நெப்போலி யன் இரகசியமாகப் பரிசுக்குத் திரும்பி, அங்கு ஏற்பட்ட சதித் திட் டத்தை முறியடித்து, புதுப் படையொன்றை ஆயத்தப்படுத்தினர். நெப்போலியனுடைய இரசியத் தோல்வி, அவரது எதிரிகளுக் கிடையே ஐரோப்பாவில் என்றும் காணப்படாத எதிர்ப்பை உண்டு பண்ணியது. முதல் சிபானியர், பின்பு இரசியர், இப்போது செர் மானியர் நெப்போலியனை அடியோடு முறியடிக்க ஏற்பாடுகள் செய் தனர். 1813 மாசி மாதம், பிரசிய அரசர் பிரடெறிக் உலில்லியம் அலெக்சாந்தருடன் ஒரு நேச உடன்படிக்கை செய்தார் : சுவீடன் நெப்போலியனுக் கெதிரே படையெடுக்க ஆயத்தமாக அணிவகுத்து நின்றது. பக்கம் மாறத் தருணம் பார்த்தும் நின்ற ஒசுத்திரியாவும், ஆகத்து மாதம் இப்புது ஐக்கியத்தில் சேர்ந்தது. இனங்களின் போர் (ஒற்றேபர் 16,183) :
எந்தச் சுதந்திர மக்களை நெப்போலியன் அடிமைப் படுத்த முயன் ருரோ, அவர்களே இப்போது அவரை மட்டந் தட்ட உறுதி பூண்டு நின்றனர். நெப்போலியன் ஒரு காலத்தில் ஐரோப்பிய அரசுகளுக் கெதிரே பயன் படுத்திய அதே சக்தி, இப்பொழுது புதுச் சர்வாதி காரிக் கெதிரே திரும்பியது. நெப்போலியன், தன் விடா முயற்சியி ஞல், இரண்டு இலட்சம் போர் வீரர்களைச் சேர்த்துப் போர்க் களத் துக்கனுப்பினர். முதல் யுத்தம் சக்சனியில் நடந்தேறியது. 1813 ஆம் ஆண்டு மே மாதம், லூட்சன் (Lutzen) போட்சன் (Bautzen) எனும் இரு இடங்களில் வெற்றி கண்ட நெப்போலியன், தனக்கே இறுதி வெற்றி எனக் கங்கணங் கட்டினர். ஆன ல் , அடுத்த யுத்தத்தில் நிலைமை முற்றிலும் மாறியது. இரசிய, பிரசிய, சுவீடிசு, ஒசுத்திரிய துருப்புக்கள் நெப்போலியனையும், அவரது தளபதியையும் நா ன் கு பக்கங்களிலும் சூழ்ந்து, அடிபணியச் செய்தனர். ஒற்ருேபர் 16 ஆம் நாள் இலைப்சிக்கில் (Leipzig) “இனங்களின் போர்’ (Battle of the Nations) என்று அழைக்கப்படும் மூன்று நாட் போரில், ஐரோப் பாவின் மிகத் திறமை வாய்ந்த இராணுவ வீரர், மண் கெளவினர்.

Page 64
| 0 0 புது உலக சரித்திரம்
இலைப்சிக் தோல்வியுடன், நெப்போலியப் பேரரசு நிலை குலைந் தது. எனினும், அவரது சித்தம் இன்னும் தோல்வியை ஏ ற் று க் கொள்ள மறுத்தது. ஐரோப்பிய அரசுகள், அவரைப் பிரான்சின் அரசராக ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்த போதும், அதனை நெப்போலியன நிராகரித்தான். பரிசுக்குத் திரும்பிய நெப்போலியன், மீண் டும் படைகளைத் திரட்டி, யுத்தம் செய்ய ஆயத்தப் படுத்தினர். எல்லா நேய நாடுகளும் பிரான்சை நாலா பக்கங்களிலிம் தாக்கின : ஈற்றில் 1814 மார்ச் மாதம் 30 ஆம் நாள், இரசிய சார் பரிசைக் கைப் பற்றினர்.
முதலாம் பரிசு உடன்படிக்கை (மே 30, 1814) :
1814 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் நாள் நெப்போலியன், பிரெஞ்சு முடியைத் துறந்ததுடன் எல்பாத் தீவுக்கு நாடு கடத்தப் பட்டார். ஐரோப்பிய வல்லரசுகளுக்கு முன், பிரான்சு தேசத்துக்கு ஓர் அரசரைத் தேடும் பிரச்சினை எழுந்தது. தெரிவு செய்யப்படும் அரசர், உறுதியான ஆட்சியை நிலைநாட்டக் கூடியவராக இருக் 5 வேண்டுமென்பது, எல்லோருடையவும் பொது அபிப்பிராயம். பிரான்சில் ஒழுங்கான ஆட்சியை உருவாக்குவதற்குப் பழைய பூர்போன் வமிசத் தைச் சேர்ந்த 18 ஆம் இலூயிக்கே சிம்மாசனம் கையளிக்கப்பட்டது. இவருடைய அரசு, பிரெஞ்சு மக்களுக்கு உவப்பற்றதாக இருக்கலா மென உணர்ந்த வல்லரசுகள், எதிர்ப்பைக் குறைக்கும் நோக்குடன் பிரான்சுக்குப் பல சலுகைகள் வழங்கினர். இருபது ஆண்டு கால இரத்தக் களரிக்கு நெப்போலியன்தான் குற்றவாளியென்றும், பிரெஞ்சு மக்கள் நிரபராதிகளென்றும் சமாதானம் கூறினர். எனவே 16 ஆம் இலூயி அரசராயிருந்த காலத்தில் (1792 வரையும்) கைப்பற்றப் பட்ட இராச்சியங்கள் உட்பட, பிரான்சின் எல்லைகள் நிர்ணயிக்கப் பட்டன. நெப்போலியன், ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்து கைப் பற்றிப் பிரான்சுக்கு ஏற்றுமதி செய்த ஒவியங்கள் திருப்பிக்கொடு படவேண்டியதில்லையென்றும் விதிக்கப்பட்டது.
மேலும் பிரெஞ்சு மக்கள் நிரபராதிகள் என்றதனல், அவர்கள் குற்றப்பணம் செலுத்த வேண்டியதில்லையென்றும் தீர்மானித்தனர். பிரான்சு, கைப்பற்றியிருந்த குடியேற்றங்களில், பெரும்பகுதி அவர் களுக்கே சொந்தமென விடப்பட்டது. இந்த நிபந்தனைகள் உதார குணத்துடன் அளிக்கப்பட்டபோதும், இவை நெப்போலியனுடைய சாம்ராச்சியத்திலிருந்து அநேக நாடுகள் பிரித்தெடுக்கப்பட்டதினல், ஏற்பட்ட அதிருப்தியை ஈடுசெய்ய முடியவில்லை.

நெப்போலியன் பொனபாட் 10
நூறு நாள்கள் :
பத்து மாதங்களை நெப்போலியன் எல்பா தீவில் கழித் தார். அங்கிருந்து, ஐரோப்பிய இராசதந்திரிகள் மத்தியில் வெற்றியின் பலன்களைப் பங்கீடு செய்வதில் பொருமை, அச்சம். ஒற்றுமை யின்மை, ஏற்படுவதையும், பிரான்சில் 18 ஆம் இ லூ யி யின் வருகையுடன் பிரபுக்களும் திருச்சபையும் மேன்மை பெறுவதையும் 6956öoTL Trir.
தருணம் பார்த்து, எல்பா தீவிலிந்து தப்பிய நெப்போலியன், மார்ச் மாதம் முதலாம் நாள், பிரான்சில் கால் வைத்தார். அங்கு பொதுமக்கள் அவரை ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவரை எதிர்க்கத் துருப்புக்கள் அனுப்பப்பட்டபோது, தன் மார்பைத் திறந்து காட்டி “உங்களில் எவன் தன் சக்கரவர்த்தியைச் சுடுவான்’ என்று வினவி துருப்புக்களைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டார். இவ்வாறு ஒரு துப்பாக்கிச் சூடுமின்றி, நெப்போலியன் தலைநகரத்துள் பிரவே சிப்பதைக்கண்ட 18 ஆம் இலுயி, ஒட்டம் பிடித்தார். அமைச்சர் களும் பழைய தளபதிகளும் நெப்போலியனைச் சூழ்ந்து ஆர்ப்பாட் டம் செய்தனர். பிரசித்தி பெற்ற நெப்போலியனின் நூறு நாள் ஆரம்பமாயிற்று.
நெப்போலியன் பிரான்சுக்குத் திரும்பியதனுல் ஏற்பட்ட அபாயத் தைக்கண்ட வல்லரசுகள் அவனை எப்படியாவது தொலைத்துவிடவேண்டு மென்ற நோக்குடன் ஒற்றுமைப்பட்டனர். பிரித்தானியா, ஒசுத்திரியா, இரசியா, பிரசியா ஒவ்வொன்றும் 150,000 இராணுவ வீரர்களையனுப்ப உடன் பட்டது. அவர்கள் தம் படைகளை இறைன் நதிக்கரைச் சமவெளி யில் ஒன்று சேர்த்து, பரிசின்மீது படையெடுக்கவே திட்டமிட்டனர். பூன், மாதம் ஆங்கிலேய, டச்சு-பெல்சிய, செர்மன் படைகள் உவெலிந் தனின் தலைமையிலும், பிரசியப் படைகள் புளூசரின் (Blucher) தலை மையிலும் கென்ற் (Ghent) தொடக்கம் இலீச் (Liege) வரை, நூறு மைல் நீளமான நிலப்பரப்பில், அங்கும் இங்குமாக ஒழுங்கின்றிப் பரவி நின்றன. பகைவரின் ஆயத்தங்களை அறிந்த நெப்போலியன் கி.வெலிந்தனின் படைகளையும், புளூசரின் படைகளையும் ஒன்று சேர விடாமற், தனித்தனியே பிரித்துப் போர்புரியத் திட்டமிட்டார்.
இலிக்னி குவாட்டேபிராப் போர்கள் (யூன் 16, 1815) :
1815 யூன் 15 ஆம் திகதி, பிரெஞ்சுத்துருப்புக்கள் சாம்பர் (Sambre) நதியைக் கடந்து, சாளிராயைக் கைப்பற்றி, இலிக்கினியில் புளுசரை எதிர்ப்பட்டன. நே (Marshal Ney), ஏழு மைல்களுக்கப்பால் குவாட்டே பிராவில் உவெலிந்தனைத் தடுக்கச் சென்ருர், 16 ஆம் திகதி இலிக்னி
A 9

Page 65
102 புது உலக சரித்திரம்
யில் நடைபெற்ற இரு போர்களில், பிரசியர் தோல்வியடைந்தனர். புளூசர் ஒட்டம்பிடித்தார். அதே தினம் நே, உவெலிந்தனை குவாட்டே பிராவில் அடக்கினர்.
உவாட்டலூ (யூன் 18, 1815) :
புளூசர், உவெலிந்தனுக்கு உதவி செய்யமுடியாத அளவுக்கு பின் வாங்கி விட்டாரென எண்ணிய நெப்போலியன், 17 ஆம் நாள் உவெலிந்தனைத் தாக்க விரைந்து சென்றர். ஞாயிறு 18 ஆம் நாள், இரு படைகளும் உவாட்ட லூவுக்குச் சற்றுத் தெற்கே பொருதின. ஆரம்பத்தில், இருபடைகளும் சம பலம் உடையனவாகக் காணப்பட் டன. ஆனல், நெப்போலியன் போரை ஆரம்பிப்பதற்கு நண்பகல்வரை தாமதித்ததல்ை, புளூசர் பிரசிய படைகளுடன், உவெலிந்தனின் உதவிக்கு வர சாத்தியமாயிற்று. பிற்பகல் நான்கு மணியளவில் புளூசரின் படைகளின் வருகையுடன், போரின் போக்கு முற்ருக மாறியது. பிரெஞ்சுப் படைகள் பின்வாங்கின ; நள்ளிரவுவரை பிரெஞ்சு சக்கரவர்த்தியின் துருப்புக்கள் பின் தொடரப்பட்டு, முறியடிக் கப்பட்டன. இதுவே நெப்போலியனின் அறுபதாவதும் இறுதிப் போருமாகும். நெப்போலியன், ஓட்டம் பிடித்த படைகளை ஒன்று சேர்க்க அரும்பாடுபட்டு, ஏமாற்றப டைந்து, பரிசுக்குத் திரும்பினர். அங்கு யூன் 22 ஆம் திகதி, முடியைத் துறந்து, சென்ற் எலேனத் தீவு க் கு கைதியாக அனுப்பப்பட்டார். நெப்போலியனுடைய அதிட்ட தாரகை வானவீதியில் முற்ருக மங்கி மறைந்து விட்டது.
இரண்டாம் பரிசு உடன்படிக்கை :
இங்கு, முதலாவது உடன்படிக்கையில் பிரான்சுக்கு வழங்கப்பட்ட சகாயங்கள் நிராகரிக்கப் பட்டன. நெப்போலியனுடைய நூறு நாள் ஆட்சிக்குப் பிரெஞ்சு மக்கள் உடந்தையா யிருந்தமையினல் அவர் களும் நெப்போலியனைப் போன்று குற்றவாளிகள் என்று வல்லரசுக் கள் தீர்த்தனர். திரும்பவும் இப்பேர்ப்பட்ட சம்பவம் நிகழாதிருக்க, உவெலிந்தனின் தலைமையில் நேய நாட்டுத் துருப்புக்கள், ஐந்து வருட காலத்துக்குப் பிரான் ரில் தங்க வேண்டுமென விதிக்கப்பட்டது. பிரான் சின் எல்லைகள் புரட்சிக்கு முன்னிருந்த அளவுக்குக் குறைக்கப்பட்டன. 700,000,000 பிராங் தண்டம் விதிக்கப்பட்டது ; ஐரோப்பாவின் பல பாகங்களில் நெப்போலியன்’ பிரான்சுக்குப் பெற்றுக் கொடுத்த ஓவி யங்கள், திருப்பிக் கொடுக்கப்பட வேண்டுமென்றும், ஆணை பிறந்தது.

வியன்ன-ஐரோப்பிய மாநாடு 103
அதிகாரம் 6 வியன்னு மாநாடும் ஐரோப்பிய மாநாட்டு முறைமையும் 1. வியன்னு மாநாடு
மாநாட்டின் தன்மை :
பதினெட்டாம் நூற்ருண்டின் வரலாறு 14 ஆம் இலூயியின் வீழ்ச் யுடனும், சிபானிய வாரிசுரிமைப் போரின் முடிபுடனும் ஆரம்பமாகிற தென கணிக்கப்படுவது போன்று, 19 ஆம் நூற்றண்டின் ஐரோப் பிய அரசியல் வரலாறு நெப்போலியனுடைய வீழ் ச் சி யு ட னு ம் வியன்ன மாநாட்டுடனும் ஆரம்பமாகிற தெ ன க் கொள்ளலாம். உலக வரலாற்றில், சரித்திராசிரியர்கள் வசதிக்காகப் புது யுகங்களைக் குறிப்பிடுவதற்குத் தேர்ந்தெடுக்கும் ஏனைய ஆண்டுகளிலும் பார்க்க, 1815 ஆம் ஆண்டு உண்மைக் கருத்துடையதும், நன்கு புலப் படக் கூடியதுமான காலமுமாகும். போர்களின் கூச்சலினல் காத டைத்த மக்கள், கடந்த 15 ஆண்டுகளாக ஐரோப்பாவை ஆட் டி வைத்த நெப்போலியனின் வீழ்ச்சி, ஒரு யுகத்தின் முடிபையும் இன்னு மொரு யுகத்தின் ஆரம்பத்தையும் குறித்ததென எண்ணினர். இப்புது யுகம் வியன்ன மாநாட்டுடன் தான் ஆரம்பமாயிற்று. நெப்போலி யன் தோற்கடிக்கப் பட்டபின், சரணுகதி யடைந்த நாடுகளின் எதிர் காலத்தை நிர்ணயிக்கவும், அமைதியிழந்த கண்டத்தில் ஒழுங்கை நிலை நாட்டவும் ஐரோப்பிய மன்னர்கள் பொதுச் சம்மதத்தினுல் ஒன்று கூடியதே, ஐரோப்பிய வரலாற்றில் ஒரு புதுத் திருப்பமாகும்.
வியன்ன மாநாட்டுக்கு, துருக்கி ஒன்றைத் தவிர, ஏனைய ஐரோப் பிய நாடுகளின் பரிபாலகர்கள் யாவரும் ச மு கம் கொடுத்தனர். அங்கு கூடிய முடிவேந்தர்கள், இராசதந்திரிகள், இளவரசர்கள் அர. சியல் நிபுணர்கள், இராணுவ வீரர்கள் நிறைந்த ஒரு மாநாட்டை இதற்கு முன் ஐரோப்பா ஒரு போதும் கண்டதில்லை. ஒசுத்திரியா வின் முதலாவது பிரான்சிசு, விருந்தினரை ஒரு குறையுமின்றி உபச ரிப்பதற்காக 800,000 பவுண் செலவிட்டார். அவரது அமைச்சர் மற்றேணிக் மாநாட்டுக்குத் தலைமை தாங்கியதுடன், அதை வழி நடத்தும் கர்த்தாவு மானர். ஐரோப்பாவைப் புனருத் தாரணம் செய்யும் முயற்சியில், நான்கு வல்லரசுகளான ஒசுத்திரியா, இரசியா, பிரசியா, இங்கிலாந்து, பிரதான பங்கு தமதுரிமையெனக் கொண்ட

Page 66
04 புது உலக சரித்திரம்
தில் ஆச்சரியமில்லை. தலேருந்து (Taleyrand) திறமையுள்ள சூழி யலினல் தன்னை மாநாட்டில் பிரான்சின் செல்வாக்கு irள பிரதிநிதியாக அமைத்துக் கொண்டார்.
நோக்கங்கள் :
நெப்போலியனின் ஆட்சியினல் ஏற்பட்ட மாற்றங்கள் அனந்தம். அவர், ஐரோப்பிய நாட்டரசர்களில் சிலரை அகற்றி, தன் உறவினரை அப்பதவிகளுக்கு உயர்த்தினர்; பழைய இராச்சியங்களில் சிலவைற்றை ழிைத்து, புதியவற்றைச் சிருட்டித்தார்; எல்லைகளைப் பல முறை மாற் றிர்ை. இவ்வாறு, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிகழ்ந்த சம் பவங்களில்ை எழுந்த பிரச்சனைகளைத் தீர்த்து, ஐரோப்பாவைத் திருப்பியமைக்க வேண்டிய பொறுப்பு வியன்னு மாநாட்டு இராசதந் திரிகளையே சூழ்ந்தது. இக்கருமத்தைச் செய்து முடிப்பதில் அவர்கள் சில உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்தனர்.
ஐரோப்பாவில் மீண்டும் இயன்றவரை பழைய அரசர்களை ஏற் படுத்த வேண்டுமென்பதே (Legitimacy) அவர்களது முதன்மையான நோக்கம். வெற்றி பெற்ற அரசர்கள், தோல்வியடைந்தவர்களின் நில புலங்களை தம் மனம்போனவாறு திருத்தியமைக்கலாமெனக் கருதினர்களே தவிர, அந்நாட்டு மக்களின் ஆசைகளைப் பற்றியோ, எண்ணங்சளைப்பற்றியோ அக்கறை கொள்ளவுமில்லை, நிலையான சமா தானத்துக்குரிய வழிவகைகளைக் கையாளவுமில்லை. இவ்வாறு அரசி யல் தூரப்பார்வையும், இராசதந்திர சாமர்த்தியமுமின்றி கரும மாற்றியதனலேயே, ஐரோப்பா, ஒரு நூற்ருண்டு காலமாக, அவர்கள் செய்த ஏற்பாடுகளைத் துண்டு துண்டாக உடைத் தெறியலாயிற்று. இரண்டாவதாக, எதேச்சாதிகார முறைப்படி புரட்சிக்கு முன்னிருந்த நிலையைத் திரும்பவும் தாபிக்கவேண்டுமென்பதே அவர்களது மற்ற நோக்கமாகும். மாநாட்டின் இராசதந்திரிகள், அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகள் மாத்திரமே. அவர்கள் கண் முன், புரட்சியின் கோட்பாடு கள், அழிவை மாத்திரம் ஏற்படுத்த வல்ல சக்திகளாக நிரூபிக்கப்பட்டு நின்றன. இத் தத்துவங்களினல் உண்டான ஒழுங்கீனத்தை நிவர்த்தி செய்து, பழைய ஆட்சியின் கொள்கைகளை நிலை நாட்டுவதே தமக்கு எஞ்சியிருந்த வேலையெனக் கொண்டனர். வியன்னவில், அலெக்சாந் தர் சக்கரவர்த்தி ஒருவரின் உணர்ச்சி மிக்க உளம் ஒன்று தான், காலத்தின் அறிவுப் போக்குகளைப் பிரதி பலித்தது. பொது சன அபிப் பிராயத்திற்காக விட்டுக் கொடுக்கப்பட்டு, உடன் படிக்கையில் இடம் பெற்ற சலுகைகள் யாவும் பிரதானமாக அலெக்சாந்தரைத் திருப் திப் படுத்தும் நோக்கமாகவே செய்யப்பட்டவை.

வியன்ன-ஐரோப்பிய மாநாடு 05
பிரான்சு :
பிரான்சைப் பற்றிய முடிபுகள், இரண்டாவது பரிசு அமைதிப் பொருத்தனையில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டன. அதனுடன் அதன் எல்லைகளைப் பாதுகாக்கவும், அது மீண்டும் புரட்சி செய்யா வண்ணம் மேற்பார்வை செய்யவும், பிரான்சின் வட, கீழ், தென் எல்லைகள் மூன்றிலும் நேசநாடுகளின் பெலத்தை அதிகரிக்க இராசதந் திரிகள் திட்டமிட்டனர். இன்னுமொரு நெப்போலியன் அதிகாரத் தைக் கைப்பற்றினும், பழைய சரித்திரம் மீண்டும் நிகழாதிருக்க இந்த “வேலி" உதவுமென எண்ணினர். வடக்கே, மொழியில் மாத் திரமின்றி நீண்டகால மத, வியாபார, அரசியல் மரபு என்பன வற்றல் வேறுபட்ட பெல்சியம், ஒல்லாந்துடன் இணைக்கப்பட்டது. இறைன் நதிக்குக் கிழக்கே கிடந்த செர்மன் மாகாணங்கள் பிரசியா வுக்குக் கொடுக்கப்பட்டன. இவை பிரான்சிடமிருந்து பிரிக்க்ப்பட்டு பிரசியாவுக்குக் கொடுக்கப்பட்டமை இயற்கைக்கு மாறனதன்று. எனினும் பிற்காலத்தில் பிரான்சு இங்கிழந்த தன் “இயற்கை எல்லை யான” இறைன் நதியைத் தனதாக்கிக் கொள்ள வேண்டுமென்று ஆவல் கொண்டமை, 19 ஆம் நூற்றண்டு ஐரோப்பாவின் அமைதி யீனத்துக்கு ஒரு முக்கிய காரணமாகும். தெற்கே, நீசு, செனுேவா, சவோய் எனும் மூன்று மாகாணங்களைப் பீட்டுமன்றுடன் இணைத்து, சாடினிய அரசின் பலம் அதிகரிக்கப்பட்டது. இச்செயல், ச வோ ய் அரசின் கீழ் இத்தாலி ஐக்கியமுறுவதற்கு முதற்படியாக அமைந்தது. சுவிற்சலாந்து மேலும் மூன்று மாகாணங்களைப் பெற்றுப் புதுப் பல மடைந்தது.
(6)g fuD 60f :
செர்மனியில் பழைய பரிசுத்த உரோமப் பேரரசுக்குப் பதிலாக முப்பத்தொன்பது நாடுகளைக் கொண்ட ஒரு கூட்டாட்சியமைப்பு தாபிக்கப்பட்டது. இக்கூட்டாட்சியமைப்பு ஒரு நெருங்கிய ஐக்கிய மாக அமையவேண்டுமென்ற ஆலோசனைகள், காலப்போக்கில் பிரசிய தலைமையின்கீழ் ஓர் உறுதியான பேரரசுக்கு வழிகோலுமென அஞ்சிய மற்றேணிக்கினல் முறியடிக்கப்பட்டன.
ஒசுத்திரியா :
பிரான்சின் எல்லைகளுடன் தொடர்பின்றித், தன் பே ர ர  ைச அமைக்க விரும்பிய ஒசுத்திரியா, நெதலன்சிலிருந்த தன் பழைய உடைமைகளைத் தி ரு ப் பி ப் பெற மறுத்து, அதற்குப் பதிலாக வட இத்தாலியில் லொம்பாடி, வெனீசியா எனும் மாகாணங்களில்

Page 67
106 புது உலக சரித்திரம்
நட்ட ஈடு தேடிக் கொண்டது. த விர, ஒசுத்திரியா, 1809 இல் இழந்த இலீரிய மாகாணங்களும் அதற்கே உரியவையென மாநாடு தீர்த்தது.
SJ u J mi :
பிரசியா, அதற்குரித்தான போலந்து நிலப் பகுதியின் பெரும் பாகத்தை இரசியாவுக்குக் கையளித்து, அதற்குப் பதிலாக சக்சனி யின் ஒரு பகுதியைப் பெறலாயிற்று. நெப்போலியனை ஆதரித்த சக் சனிய மன்னன், தான் செய்த தவறுக்குப் பரிகாரமாக, தன் இராச் சியத்தின் அரைவாசியை இழந்தான். மேலும் பிரசியா, பொமறேனியா வையும், இறைன் மாகாணங்களையும் பெற்று, சிதறிக் கிடந்த தன் இராச்சியத்தை ஓரளவுக்கு ஒற்றுமைப் படுத்தியது.
ஒசுத்திரியாவினதும் பிரசியாவினதும் எல்லைகளில் ஏற்பட்ட இம் மாற்றங்கள், எதிர்கால இயக்கங்களின் தன்மைகளைச் சுட்டிக் காட்ட வல்லவை. மேற்கே, தன் காவலிடங்களைக் கை விட்டமையும், இறைன் நதியின் எல்லைகளைப் பிரான்சுக்கு எ தி ரே பாதுகாக்கும் கடமையை மறுதலித்தமையும், ஒசுத்திரியா, தன் நலவுரிமைகளை செர்மனியிலி ருந்து கத்தரித்துக் கொண்டதன் அறிகுறியாகும். அது தனிப்பட்ட ஒசுத்திரிய கொள்கைகளை அனுசரிக்க ஆரம்பித்தமை தான், ஈற்றில் செர்மானியப் பேரரசிலிருந்து அகற்றப்பட்டமைக்கு முக்கிய காரண மாகும். பிரசிய இராசதந்திரத்தின் குறிக்கோள் ஒசுத்திரிய நோக் கங்களின் நேர் எதிர்மாறனவை முற்றிலும் செர்மன் மயமானது. புது நிலங்களைப் பெற்றமையினல், வட செர்மனியில் பிரசியாவின் கை வலுத்தது, செர்மன் கூட்டாட்சியமைப்பில் அதன் செல்வாக்கு பன் மடங்கு அதிகரித்தது. கத்தோலிக்க இ  ைற ன் மாகாணங்களையும் வெசுத் பாலியாவையும் இணைத்ததுடன், பிரசியா தென் இராச்சியங் களுடனும் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வழி பிறந் தது. மேற்கே, ஒசுத்திரியா நிராகரித்த, செர்மன் நில ங் களை பிரான்சிடமிருந்து பாதுகாக்கும் பொறுப்பும் பிரசியாவைச் சூழ்ந் தது. சுருங்கக் கூறின், வியன்னு ஏற்பாடுகளுக்குப் பிற்பட்ட காலத் தில் பிரசிய நலவுரிமைகள் செர்மனியின் பெலத்துடனும், ஒசுத்திரியா வின் நலன் அதன் பெலவீனத்துடனும் இணைக்கப்பட்டு நின்றன.
இத்தாலி :
இத்தாலி எட்டாகக் கூறுபோடப்பட்டு, ஒசுத்திரியா, வெனிசி யாவையும் லொம்பாடியையும் பெறலாயிற்று. சாடீனிய மன்னன் பீட்டுமன்று, நீசு, சவோய், செனுேவா என்பவற்றைத் தனது இராச் சியத்துடன் இணைத்துக்கொண்டார். தசுக்கனி, பாமா, மொடேன

வியன்ன -ஐரோப்பிய மாநாடு 107
தனி அரசுகளாக ஒசுத்திரிய மன்னனின் வமிச வரிசையைக் சேர்ந்த இளவரசர்களுக்குக் கொடுக்கப்பட்டன. நேப்பிள்சிலும், போப்பாண் டவரின் இராச்சியத்திலும் பழைய அரசுகள் மீண்டும் அங்கீகரிக்கப் பட்டன.
தென்மாக்கு, நோவே, சுவீடன் :
தென்மாகைத் தண்டிக்கும் நேர்க்குடனும், சுவீடனுக்கு நன் கொடை கொடுக்கும் நோக்குடனும், நோவே தென்மாக்கிலிருந்து பிரிக்கப்பட்டுச் சுவீடனுக்கு கையளிக்கப்பட்டது. இதனுடன் மூன்றுவது தர வல்லரசு நிலையை எய்திய சுவீடன், ஐரோப்பிய அரசியலுக்கு அப்பாற்பட்ட வாழ்வை ஆரம்பித்தது.
இரசியா :
இரசியா, 1812 இல், பின்லாந்தைக் கவர்ந்தமை, மாநாட்டினல் அங்கீகரிக்கப்பட்டது. அன்று தொட்டு, இரசியா பால்த்திக் அரசு களில் முதன்மை பெற, ஆரம்பித்தது. அதனுடன் போலந்தையும் முழுமையாகப் பெற இரசியா செய்த முயற்சியை மற்ற வல்லரசுகள் தடை செய்தன. ஈற்றில், 1795 ஆம் ஆண்டு ஏற்பாட்டின்படி, போலந்து முப்பிரிவுகளாகக் கூறுபோடப்பட்டது. இரசியா ப்ெற்ற போலந்தின் பாகம் வடக்கே பிரசியாவுக்கும் தெற்கே ஒசுத்திரியாவுக்கு மிடையில் ஓர் ஆப்புப்போல அமைந்தது. இப் புது உடைமை இரசியா வருங்காலத்தில் மேற்கு ஐரோப்பிய விவகாரங்களில் கூடுதலான பங்கெடுக்கப்போவதன் முன் அறிகுறியாகும்.
மாநாட்டின் குறைகள் :
வியன்ன மாநாட்டு இராசதந்திரிகள், தாம் புனருத்தாரணம் செய்ய முயற்சித்த காலத்தின் உள்ளக் கிளர்ச்சிகளை அறியாமற் போனதே அதன் பெலவீனத்தின் தலையான காரணம். 1789 க்கும் 1815 க்கும் ஐரோப்பாவில் ஏற்பட்ட மாற்றங்களை அலட்சியம் செய்தே, வியன்ன மாநாட்டு இராசதந்திரிகள் கருமமாற்றினர் என்று குறை கூறப்படுகிறது. புரட்சியுகத்திலிருந்து தோற்றிய நாட்டினவாதம், தாராண்மைவாதம் என்ற இருபெரும் சக்திகளின் எதிர்கால முக்கி யத்துவத்தை உணர மறுத்தனர்-அல்ல, அதை நன்முக உணர்ந்த அவர்கள், அவற்றைத் தலைகாட்டாது அடக்கி யொடுக்கத் திட்ட மிட்டனர் என்றும், பொதுமக்களின் கருத்துக்களை முற்ருகப் புறக் கணித்து, ஐரோப்பாவின் அரச வலுச்சமநிலை என்ற கொள்கையைப் பெரிதாக மதித்தே கருமமாற்றினர் என்றும் குற்றஞ் சாட்டப்பட் டுள்ளது. வியன்னவில் கூடிய இராசதந்திரிகள், புரட்சிகளின் அழிக்

Page 68
I 08 புது உலக சரித்திரம்
கும் சக்திகளைக் கண்டார்களே தவிர, அவற்றில் மறைந்து கிடந்த ஆக்கும் சக்திகளைக் காண மறுத்தனர். தாராண்மை வாதமும், நாட்டினவாதமும், "புரட்சியிலருந்து எழுந்த பயங்கர ஆட்சியையும், எண்ணற்ற தீமைகளையும், ஒழுங்கீனத்தையும் நினைப்பூட்டியமையினல், அவை அரசு புரிபவர்களின் கண்முன் மதிப்பிழந்து நின்றன. இதனல் தான அவர்கள், தம் நாடுகளில், புரட்சிகள் தலைகாட்டாது தடை செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென உறுதி கொண்டனர். இருபதாம் நூற்றண்டில் வெற்றி பெற்றவர்கள், செர்மன் நாற்சிசத்தையும், இத்தாலிய பாசிசத்தையும் பரிபூரண மாக நிராகரித்தது போன்று, 19 ஆம் நூற்ருண்டு வெற்றியாளர்கள், புரட்சிவாதப் பிரெஞ்சு சனநாயகத்தை அறவே அழிக்கத் திட்டமிட் டனர். இம் மனப்பான்மை பிற்போக்கானதென்றெ கூறவேண்டும் ; ஏனெனில், உண்மையான முன்னேற்றம், புதிதாகத் தோன்றிய இரு சக்திகளின் வளர்ச்சியை ஆதரிப்பதிலேயே தங்கியிருந்து. இக் கொள்கைகளுக்கு அவர்கள் ஆதரவு காட்டியிருப்பின், 19 ஆம் நூற் முண்டின் சரித்திரமே வேறு விதமாக அமைந்திருக்கும். அவர்கள் இருபத்தைந்து ஆண்டு கால அபிவிருத்தியை மறந்து கருமமாற்றிய போதும், நூற்ருண்டு முடிவடைய முன், அப்புரட்சிக்காலத்திலிருந் தெழுந்த சனநாயகம், நாட்டினவாதம் என்ற இரு சக்திகளும் அவர்கள் செய்த முடிபுகள் அத்தனையையும் பூரணமாகச் சிதைத்து விட்டன. நிறைகள் :
மறுபுறம், வியன்னு ஒழுங்குகள், கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்டிருந்த ஆழமான மாற்றங்களையும் தத்துவங்களையும் அங்கீ கரித்தது. இரசியாவின் விரிவு, மேற்கு விவகாரங்கல் அதன் பிரவே சம், பரிசுத்த உரோமப் பேரரசின் மறைவு, சுவீடன் சிக்கந்தினே வியத் தனிமைக்குள் பின்வாங்கியமை, அது பால்த்திக் பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு எண்ணங்களைக் கைவிட்டமை, எனும் அம்சங்களை வல் லரசுகள் மாற்றமின்றி அப்படியே உறுதிப்படுத்தினர். செர்மன் இராச்சியங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அதன் அமைப்பு இலகுவாக்கப்பட்டமை, பிற்கால ஒற்றுமைக்கு வழிவகுத்தது. ஒசுத் திரியா, மத்திய ஐரோப்பாவில் மாத்திரம் குவிந்தமை அது செர்மா னிய விவகாரங்களிலிருந்து அகற்றப்படும் வேலையின் முதற்படியாகும். புதிதாகப் பெலப்படுத்தப்பட்ட பிரசிய, சாடீனிய இராச்சியங்கள், 19 ஆம் நூற்றண்டின் அதி சிறந்த இரு சாதனைகளின் மூலங்களாக அமைந்தன.
வியன்ன மாநாடு, போலந்தின் ஆசைகளைத் திருப்திப்படுத்தவு மில்லை பெல்சிய மக்களைக் கவனிக்கவுமில்லை. நோ வே  ைய ப் பொருத்தமற்ற துணையுடன் ஒருங்குசேர்ந்துவிட்டது இத்தாலியைப்

வியன்ன-ஐரோப்பிய மாநாடு 09
பிரித்துவைத்தது. சேர்மனிக்கு ஒரு நிலையான ஒழுங்கை ஏற்படுத்தத் தவறியது. ஆயினும், அது நிதானத்துடனும் அரசியல் விவேகத் துடனும் கருமமாற்றிப் பிற்கால ஐரோப்பா பின்பற்றக்கூடிய ஒர் உண்மையான அத்திவாரத்தை இட்டுச் சென்றதென்பதையும், நாற் பது ஆண்டுகளுக்குச் சர்வதேச சமாதானத்தைப் பாதுகாத்ததென் பதையும் மறுப்பதற்கில்லை.
2 ஐரோப்பிய மாநாட்டு முறைமை (1815-1825)
பிரான்சு மீண்டும் புரட்சி செய்யாது பாதுகாத்தல், ஐரோப்பிய மன்னர் வியன்ன ஒப்பந்தத்தின் முறிகளை அனுட்டிக்கச் செய்தல், அமைதியை குலைக்கக் கூடிய புரட்சிகளை அடக்குதல்-இவைகளே வல் லரசுகளின் நோக்கங்களாக அமைந்தன. மேலும், நாடுகளுக்கிடையே கூடிய ஒத்துழைப்பைப் பெறுவதற்கும் நேச மனப்பான்மையை வளர்ப் பதற்கும் ஒரு சர்வதேச கூட்டுறவு அமைப்பு இருக்க வேண் டு மென்றும் அவர்கள் அபிப்பிராயப் பட்டனர்.
திருவுடன் படிக்கை (Holy Alliance) :
சர்வதேச சமாதானத்தைப் பாது காப்பதற்கு ஒன்றேடொன்று முரண்பட்ட இரு திட்டங்கள் ஏற்பட்டன. இவற்றில் முதலாவது, சrர் அலெக்சாந்தரின் திருவுடன் படிக்கையாகும். முதற் சந்தர்ப்பத் தில் இரசிய, பிரசிய, ஒசுத்திரிய வல்லரசுகளினல் ஒப்புக் கொள்ளப் பட்டு, 1815 ஆம் ஆண்டு செற்றம்பர் மாதம் 26 ஆம் நாள், பரசி லிருந்து பிரகடனம் செய்யப்பட்டது. திருவுடன்படிக்கை ஒர் ஒப் பந்தமன்று ; அஃது அலெக்சாந்தரினல் உருவாக்கப்பட்டு, ஐரோப் பிய வல்லரசுகளின் உடன்பாட்டைப் பெற்ற, ஒரு பிரதிக்கினையாகும். பரிசுத்த திரித்துவத்தின் பேரில் கட்டுப்பட்டு கிறித்தவ சமயத்தின் சத்தியங்களைத் தம் அரசியல் விவகாரங்களில் கடைப்பிடிக்க அரசர்கள் ஒப்புக்கொண்டனர். கிறித்தவ இனத்தின் சகோதரர்களைப் போன்று, ஒருவருக் கொருவர் உதவி செய்யவும், குடும்பங்களின் தந்தைகளைப் போன்று தம் பிரசைகளை, “சத்திய வேதம், நீதி நெறி, சமாதானம்' என்பவற்றைப் பாதுகாக்க வழி நடத்தத் தாம் கடமைப்பட்டவர்கள் என்றும் ஏற்றுக் கொண்டனர்.
போப்பாண்டவரையும் சுலு தானையும் தவிர, ஐரோப்பிய வல்லரசு கள் அச்சாதனத்தில் கைச்சாத்திடும்படி அழைக்கப்பட்ட போது பிரித்தானியா ஒன்றைவிட மற்ற அரசர்கள் யாபேரும் அதற்குச் சம் மதித்தனர். இங்கிலாந்தின் அதிபதி இளவரசர், அத்திருக் கட்டளை களைத் தானும் ஆதரிப்பதாகச் சாட்டுப் போக்குக் கூறி, கைச்சாத் திடாது விட்டார்.

Page 69
I I. Ο புது உலக சரித்திரம்
நோக்கங்கள் மட்டில், திருவுடன் படிக்கை, நல்லெண்ணத்திற்கோ அன்றேல் தாராண்மை வாதத்துக்கோ மாறனது என்று கூறுவதற்கில்லை. ஒர் அரசமைப்பு அல்லது இராசதந்திர ஆயுதம் என்ற மட்டில் அது முற்றிலும் பயனற்றது. அலெக்சாந்தர் ஒருவரைத் தவிர வேருெரு வரும் அதைப் பொருட்படுத்தவில்லை. காசல்றீ (Castlereagh) அதை ‘ஒரு விழுமிய மறைபொருளும் வெற்றுரையும்” என்று வருணித் தார் ; மற்றேணிக் “அதி சப்தமிடும் வெறுமை’ என்று வியாக்கி யானம் செய்தார். 1815 க்கும் 1825 க்கும் இடையில் திருவுடன்படிக் கையின் பெயர் மேன்மை பெற்றபோதும் உண்மையில் அதன் எண்ணங் களோ கருத்துக்களோ அரசியற் துறையில் செயற்படவில்லை.
JђпGuoJi polupo (Quadruple Alliance) :
இரண்டாவது திட்டம் மற்றேணிக் உருவாக்கிய வல்லரசுகளின் நட்புறவாகும். அலெக்சாந்தர் கனவு கண்ட, கிறித்தவ போதனைகளி ஞல் இயக்கப்படும் ஐரோப்பிய மன்னர்களின் சகோதரத்துவத்துக் குப் பதிலாக, மற்றேணிக் சூழியலினல், வல்லரசுகளின் வல்லாட் சியை ஏற்படுத்த முயன்ருர்,
1815 நவம்பர் மாதம் இங்கிலாந்து, ஒசுத்துரியா, பிரசியா, இர சியா என்ற வல்லரசுகள் நான்கும் ஒரு நட்புறவில் கைச்சாத்திட் டன. இதில் அரசுகள், காலத்துக்குக் காலம் ஒன்று கூடி, எதிர் காலத்தில் யுத்தம் நிகழாது தடுக்கவும், தம் மத்தியில் எழும் பிரச் சினைகளை உரையாடல் மூலம் சுமுகமாகத் தீர்க்கவும், தம் நாட்டு மக்களின் சுபீட்ச வாழ்வுக்கும், முன்னேற்றத்துக்கும் தேவையான நடவடிக்கைகளை ஆராயவும் ஒப்புக் கொண்டனர். இவ்வுடன்பாட் டுக்குப் பிற்பட்ட காலம் "மாநாடுகளின் காலம்" என அழைக்கப் பட்டுள்ளது. அடுத்த ஏழு ஆண்டு காலத்தினுள், வல்லரசுகள் கூட்டா லோசனைக்கு நான்குமுறை ஏச்சிலாச் செப்பல், துரொப்போ, இலை பாசு, வெருே ஞ எனும் இடங்களில் கூடி, பல பொதுப் பி ர ச் ச னை களைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தன.
6 54a)пš Gla Ljudo (Aix La Chapelle) upтБTG-1818:
மூன்று ஆண்டு காலத்துக்குப் பின்பு, நான்கு வ ல் ல ர சு க ளின் பிரதிநிதிகள் 1818 ஆம் ஆண்டு, ஏச்சிலாச் செப்பலில் கூடினர். இம் மாநாடு, ஐரோப்பாவில் முதன்மையான ஆதிக்க அதிகாரம் படைத்த அரசுக் கழகமாக விளங்கியதுடன், அது ஒர் உச்ச நீதிமன்ருகவும் அமைந் தது. அதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட பல விடயங்களுக்குத் தீர்ப் புக் கூறிற்று. தாமிடும் பிரமாணங்களை, கண்டத்து அரசுகள் யாவும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று கட்டாயப்படுத்திய முறைமை இங்கு

வியன்ன-ஐரோப்பிய மாநாடு
பூரண வெற்றி பெறலாயிற்று. வல்லரசுகளின் கூட்டுறவுத்திட்டம் இங்குதான் அதி உன்னத நிலையை எய்தியது. “இதைவிட சிறப் பான ஒரு சிறு சங்கத்தை நான் ஒருபோதும் கண்டதில்லை" என மற்றேணிக் குறிப்பிட்டார்.
பிரான்சின் நிலையைப்பற்றிய பிரச்சினையில் எல்லா வல்லரசு களுக்குமிடையில் ஒருமைப்பாடு காணப்பட்டது. மூன்று ஆண்டுகளுக் குள், இரண்டாம் பரிசு அமைதிப் பொருத்தனையின்படி விதிக்கப்பட்ட குற்றம் தீர்க்கப்பட்டமையினல், பிரான்சில் நிறுத்தி வைக்கப்பட்ட துருப்புக்கள் அகற்றப்பட்டன. அதனுடன் ஐரோப்பிய நட்புறவு அமைப்பில், பிரான்சு ஐந்தாவது வல்லரசாக அனுமதிக்கப்பட்டது; நால்வர் ந ட் புற வு ஐவரின் நட்புறவாக (Quintuple Aliance) மாறியது.
பொது விடயங்களில் வல்லரசுகளுக்கிடையே ஒற்றுமை காணப் பட்டபோதும், தத்தம் நலத்தோடு சம்பந்தப்பட்ட விடயங்களில் அபிப்பிராய பேதம் அங்கு தலைகாட்ட ஆரம்பித்து விட்டது. தென் அமெரிக்க சிபானிய புரட்சிக் குடியேற்றங்களுக்கும் இங்கிலாந்துக்கு மிடையில் அதி இலாபகரமான வியாபாரத் தொடர்புகள் ஏற்பட்டி ருந்தமையினல், அவற்றைச் சிபானிய அரசுக்குட்படுத்தும் முயற்சி களைக் காசல்றி பலமாக எதிர்த்தார். அடுத்து, மத்தியதரைக், கட லுக்குள், இரசியக் கப்பல்களை அனுமதிக்க இங்கிலாந்து மறுத்ததனல் அக் கடலில் வட ஆபிரிக்க பார்பரி கொள்ளைக்காரரின் அக்கிரமச் செயல்களை அடக்க, கூட்டு நடவடிக்கை எடுக்கமுடியாமற் போயிற்று. மறுபுறம் மற்ற வல்லரசுகள், இங்கிலாந்துக்குக் கடல்களில் அடிமை வியாபாரத்தைத் தடை செய்யும் அதிகாரத்தை வழங்க மறுத்தன.
ஏச்சிலாச் செப்பல் மாநாடு விசேட முக்கியத்துவம் வாய்ந்தது; ஏனெனில் அங்கு தான் ஐரோப்பிய மாநாட்டு முறைமைக்கு அடிப்படையாக அமைந்த உண்மைத் தத்து வங்களின் அபாயத்தை ஆங்கிலேய இராசதந்திரிகள் முதன் முதலாக உணர ஆரம்பித் தனர். வியன்ன மாநாட்டு இராச்சிய அமைப்புக்களையும், அரசர்களின் உரிமைகளையும் கெளரவிப்பதாக உத்தரவாதமளிப்பதென, எல்லா வல்லரசுகளும் ஒரு பிரகடனத்தில் கைச் சாத்திட வேண்டுமென, அலெக்சாந்தர் சமர்ப்பித்த பிரேரணையை ஒசுத்திரியாவும், பிரசி யாவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டன. இத்திட்டம் தாராண்மை வாதத்தையும் நாட்டினவாதத்தையும் அழித்தொழிப்பதையே நோக்காகக் கொண்டது என்பதில் ஐயமில்லை. ஆனல் இங்கிலாந்தின் உறுதியான தீர்மானத்துக்கும் நடவடிக்கைகளுக்கும் முன் மற்ற வல்லரசுகள் தம் சதித்திட்டங்களை கைவிட வேண்டியதாயிற்று. ஏனைய நாடுகளின் உண்ணுட்டு விவகாரங்களில் தலையிட வல்லரசுகளுக்கு அதிகாரமுண்டா என்ற முக்கிய பிரச்சினையில் பிரித்தானியா "இல்லவே இல்லை" என விடை பகர்ந்தது. ஒவ்வொரு அவசர நிலையும், அஃது எழும் சூழ்நிலையில் ஆராய்ந்து தீர்க்கப்பட வேண்டுமே தவிர, அந் நாட்டுக்குப் பாதகமாக அமையக்கூடிய, முன்பே தீர்மானிக்கப்பட்ட விதிகளினல் தீர்க்க வல் லரசுகளுக்கு அதிகாரமில்லை யென்றது இங்கிலாந்து. "மாநாட்டு முறை உலகத்தை ஆட்சி செய்வதற்காகவோ ஏனைய நாடுகளின் உண்ணுட்டு விவகாரங்களை மேற்பார்வை செய்வதற்

Page 70
12 புது உலக சரித்திரம்
காகவோ ஏற்படுத்தப்பட்ட ஐக்கியமன்று!" என காசல்றீ தன் அபிப்பிராயத்தைத் தெளிவாக வரையறுத்தார். எச்சிலாச் செப்பலில் ஆங்கிலேய அமைச்சர்களின் மனதில் எழுந்த ஐயங்கள் பின்வந்த மாநாடுகளில் உறுதியாயின். துரொப்போ (Troppan) மாநாடு-1820 :
சிபெயின், போத்துக்கல், நேப்பிள் சு எனும் நாடுகளில் 1820 ஆம் ஆண்டு பல புரட்சி இயக்கங்கள் தோன்றலாயின. இந்நாடு களில், மக்கள், 1812 ஆம் ஆண்டு, சிபெயினுக்கு வழங்கப்பெற்ற யாப்புறு முடியாட்சியையே வேண்டி நின்றனர். சிபெயினின் ஏழாம் பேடினந்து, போத்துக்காலின் ஆரும் யோண், நேப்பிள்சின் முதலாம் பேடினந்து முறையே யாப்புறு முடியாட்சியை தத்தம் நாடுகளில் அங்கீகரித்தினர். சிபெயின், போத்துக்கல் நாடுகளில் ஏற்பட்ட புரட் சிகள் ஒசுத்திரிய பேரரசை பாதிக்கமாட்டாதெனக் கண்ட மற்றே னிக் அவற்றில் அக்கறை கொள்ளவில்லை. ஆனல், நேப்பிள் சில் தோற் றிய புரட்சியோ, ஒசுத்திரியாவின் இத்தாலிய ஆட்சிக்குப் பங்கம் விளை விக்கவல்லதென்பதை யுணர்ந்த மற்றேணிக், இப் புரட்சி களை அடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கும் நோக்குடன் துரொப்போ மாநாட்டைக் கூட்டுவித்தார். எந்த ஒரு நாட்டிலாவது புரட்சி ஏற் படின், அஃது அயல்நாடுகளுக்குப் பரவக்கூடிய தன்மையைக் கொண் டிருப்பதனல், ஐரோப்பிய அமைதியின் பொருட்டு, வல்லரசுகள், இந் நாடுகளில் தலையிட்டு, புரட்சிகளை அடக்கவேண்டுமென மற் றே ணரிக் கூறிய ஆலோசனையை பிரசியாவும், இரசியாவும் மனப்பூர்வ மாக அங்கீகரித்தன. இம்மூன்று நாடுகளும் தம் கொள்கைகளை 'துரொப்போ வெளியீடு" என்ற விஞ்ஞாபனத்தில் பிரகடனம் செய் தன. இதன்படி ஐரோப்பிய சமாதானத்தைப் பாதிக்க வல்ல புரட்சி நிலை எந்த நாட்டிலாவது ஏற்படின், அதைத் தீர்க்க, வல்லரசுகளுக்கு அதிகாரமுண்டு என்ற சித்தாந்தத்தைச் சிருட்டித்தனர். தவிர அர சியல் மாற்றங்கள், அரசனுல் வழங்கப்பட வேண்டுமே தவிர, மக்கள், கிளர்ச்சிகளினல் ஒன்றையும் சாதிக்க முடியாதென்றும் கூறினர். பிரித் தானிய அமைச்சர் காசல்றியும் பிரெஞ்சு மந்திரி தலேருந்தும் இக் கொள்கைகளைப் பலமாக எதிர்த்து, அவற்றை ஏற்க மறுத்தனர். இவ்வாறு ஏச்சிலாச் செப்பலில் எழுந்த அபிப்பிராயபேதம் துரொப் போவில் ஒரு பெரிய பிளவாக மாறியது. இம்மாநாட்டில், புரட்சி களைப் பற்றி ஒரு முடியும் ஏற்படவில்லை. அடுத்த ஆண்டு பிரச் சினையை மீண்டும் கூடி ஆராயத் தீர்மானித்தனர். இலய்பாசு (Laibach) மாநாடு 1821 :
துரொப்போவில் பின்போடப்பட்ட மாநாடு, 1821 இல் இலய் பாசில் கூடியது. ஆனல், இதற்கிடையில் நேப்பிள்சு புரட்சியுடன், பீட்டுமன்றிலும் ஒரு புரட்சி தோன்றிவிட்டது. இவை ஒசுத்திரிய்

வியன்னு-ஐரோப்பிய மாநாடு 18
சாம்ராச்சியத்துக்குள் குழப்பங்களை விளைவிக்கக் கூடியன என்ற கார ணத்தினல், அவற்றை அடக்க மற்றேணிக் அங்கீகாரம் பெற்ருர், ஒசுத் திரிய துருப்புக்கள் வெகு விரைவில் நேப்பிள்சு புரட்சியை அடக் கியதுடன், அங்கு அரசனுயிருந்த பேடினந்து சர்வாதிகார ஆட்சி நடாத்துவதற்கு வேண்டிய சூழ்நிலையையும் சிருட்டித்துவிட்டு வெளி யேறினர். அவர்கள் திரும்பும் வழியில், பீட்டுமன்றுப் புரட்சியையும் அடக்கிப் பழைய நிலையை ஏற்படுத்தினர்.
வெரோன (Werona) மாநாடு-1822 :
நான்காவதும் இறுதி மாநாடும், 1822 ஆம் ஆண்டு சிபானியப் பிரச்சினைக்கு முடிபுகாண, வெரோணுவில் கூடியது. 1820 இல் சிடெயி னில் ஏற்பட்ட புரட்சியின் பயனக ஓர் அரசமைப்புத் திட்டத்தை பிரகடனம் செய்து நின்ற ன்னன் 7 வது பேடினந்து ஆரம் பந் தொட்டே தனது பிரசைகளுக்கு எதிரே பிரான்சின் உதவியைக்கோரி நின்றர். அவரது கோரிக்கை பிரான்சின் ஆட்சிப்பீடத்திலமர்ந்திருந்த அரசு தீவிரவாதிகளின் ஆதரவையும் ஒத்தாசையையும் பெற்றது. வெரோன மாநாட்டில், பிரான்சு, தான் சிபானிய பிரச்சினையில் தலையிடப்போவதாகவும், அதற்கு மாநாடு ஆதரவளிக்கவேண்டுமென் றும் அறிவித்தது. ஒசுத்திரியர், பிரசியர், இரசியர் தாம் பிரான்சுக்கு வேண்டிய ஆதரவையும், உதவியையும் தரஆயத்தமென்று உறுதிமொழி கூறினர். பெரிய பிரித்தானியா மாத்திரம், தலையிடாக் கொள்கையின் அடிப்படையில், இத்திட்டத்தைப் பலமாக எதிர்த்தமையினுல் அஃது கண்டத்து வல்லரசுகளிலிருந்து பிளவுபட்டு, அவர் ஞட்ன் ஒத்துழைக்க மறுத்தது. பிரெஞ்சுப் படையினா, சிபானிய எல்லைகளைக் கடந்தன; ஐரோப்பியமாநாட்டு முறைமை சந்தேகத்துக்கோ ஆட்சேபனைக்கோ இடமின்றிப் பூரணமாக முறிந்தது. வெரோனு மாநாட்டுக்கு முன், காசல்றீக்குப் பதிலாக பிற நாட்டு அமைச்சராக நியமனம் பெற்ற கனிங்கு (Canning) மாநாட்டு முறை தோல்வியடைந்ததைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. வெரோனேவிலெழுந்த அபிப்பிராயபேதம், “பிரிக்கமுடியாத ஐக்கியத்தை', மூன்ருகப் பிளவு படுத்தியதையிட்டு தான், மகிழ்ச்சியடைவதாகக் கனிங்கு கூறினர் “இனிமேல் ஒவ்வொரு நாடும் தத்தமக்கு; கடவுள் எங்கள் எல்லோருக்கும்” என்ருர் அவர்.
மாநாட்டு முறையின் முறிவு :
இவ்வாறு, ஐரோப்பாவை மாநாடுகளின் வழியாக வல்லரசுக்ள்
கட்டியாளச் செய்த முயற்சி, மாறுபட்ட “தேச நலவுரிமைகள்"
எனும் கற்பாறையில் மோதி உடைந்தது. பிரித்தானியாவின் எதிர்
மாருண எண்ணங்களைக், கண்டத்து வல்லரசுகளின் நோக்கங்களுடன்
- F-10

Page 71
14 புது உலக சரித்திரம்
சமாதானப்படுத்துவது முடியாத கருமமாகப் போயிற்று. சுதந்திரமும், ஆதிபத்திய அரசுரிமையும், படைத்த நாடுகளின் உண்ணுட்டு விவ காரங்களில் தலையிடாமை என்பது பிரித்தானிய நாட்டுக் கொள்கை யின் திறவுகோல். இக் கொள்கையைக் காசல்றீயும், கனிங்கும் நிதான மாகச் சந்தேகத்துக்கிடமின்றிக் கடைப்பிடித்தனர். ஆரம்பத்தில் காசல்றீ ஐரோப்பிய கண்டத்து வல்லரசுகளுடன் வெளிப்படையான ஒரு முறிவை ஏற்படுத்த விரும்பவிலை. ஆனல் அவரைத் தொடர்ந்து பதவி வகித்த கனிங்கு, அவ்விதமான தயக்கத்தைச் சற்றேனும் காட்டவில்லை. இதனல் தான் மற்றேணிக் அவரை ‘கோபமுள்ள கடவுளினுல் ஐரோப்பா மீது கட்டவிழ்க்கப்பட்ட ஒரு கெடுதி நிறைந்த எரி நட்சத்திரம்' என்று வர்ணித்தார்.
அதிகாரம் 7
ஐரோப்பாவில் தாராண்மை வாதமும்
நாட்டின வாதமும் (1815-1850)
1. பழைமையும் புதுமையும்
அரசியலுலகில் 1815 க்கும் 1850 க்கும் இடைப்பட்ட ஆண்டுகள், சாதனைகளிலும் பார்க்க, ஆசைகளும் எண்ணங்களும் மே ன் மை யடைந்த காலமாகும். இதற்கு முன் சென்ற இருபது ஆண்டுகளுடன், இக்காலத்தை ஒப்பிட்டு நோக்கு மிடத்து, எந்திர, தொழில், சங் கீத, இலக்கியத் துறைகள் நீங்கலாக, அரசியற் துறையில் ஏற்பட்ட சாதனைகள், மிக மிகச் சொற்பமே. 1815 ஆம் ஆண்டு ஐரோப்பா வுக்கும், 1850 ஆம் ஆண்டு ஐரோப்பாவுக்கு மிடையில், பாரதூர மான வித்தியாசங்கள் என்று அழைக்கக் கூடியவை, சொற்பமான வையே. பெல்சியம் ஒல்லாந்திடமிருந்தும், கிறிசு துருக்கியிட மிருந் தும், சுதந்திரம் பெற்று நின்றன ; முடி களை அணிந்தவர்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன ; பிரான்சில் முடியரசுக்குப் பதிலாக குடியரசு ஏற்பட்டிருந்தது.
நிலையான சாதனைகளின்மை, நிறைந்த ஏமாற்றம், உண்மையான ஆயத்தம் எனும் மூன்று அம்சங்களுமே இக்காலத்தின் சிறப்புக் களாகும். ஐரோப்பா எங்கணும், நாட்டின வாத, தாராண்மைக்

ஐரோப்பாவில் தாராண்மை வாதமும் நாட்டினவாதமும் il 5
கருத்துக்கள் பரவி, அரசியல் சுதந்திரம், தேச ஒற்றுமை; விடுதலை என்பவற்றைப் பற்றி மக்கள் கனவுகள் காணலாயினர். ஆனல், நன வுலகில், பிற்போக்கான சர்வாதிகாரிகளையும், பழைய நிகழ்வு நிலையை யும் மாத்திரமே அவர் களு க கு நேர்முகமாக காணக்கிடைத்தது. அவர்களது புரட்சிகள் தோல்வியடைந்து, சேனைகள் வெற்றி கொள் ளப்பட்டு, பிற்போக்குவாதம் தான் ஓங்கியது போலத் தென்பட்ட போதும், உண்மையில், இக்காலம் முழுவதும் ஒன்றும் பூரண" வெற்றி பெருத, பிற்போக்கு வாதத்துக்கும், முன்னேற்ற சக்திகளுக்கு மிடை யில், ஓயாத போர் நடைபெற்று வரலாயிற்று. ஒரு புறம் பிரெஞ் சுப் புரட்சியின் தத்துவங்களையும் தூண்டுதல்களையும் அடக்கி ஒடுக் கும் முயற்சிகளும், மறுபுறம், பிற்கால சனநாயக, நாட்டின வெற்றி களுக்கான உண்மையான ஆயத்தங்களும், ஒன்றேடொன்று பொருதி நின்றன. ஏனெனில், பிரெஞ்சுப் புரட்சி யெழுப்பிய பிரச்சினைக்கு நெப்போலியனின் தோல்வி, விடை பகரவில்லை. அப்புரட்சி தோற்று வித்த இவ்வினவுக்கு விடை காணும் முயற்சி தான், 1815 க்கும் 1850 க்கும் இடைப்பட்ட காலச் சரித்திரத்தை உருவாக்கியது தேச அரசாங்கங்களில், அந்நாட்டு மக்களின் விருப்பங்களுக்கு என்ன அங் கீகாரம் கொடுப்பது, என்பதே அவ்வினவாகும். இத்தாலிய, செர் மன் ஐக்கியங்கள், இரசியாவின் விருத்தி, இரண்டாவது பிரெஞ்சுப் பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும், சமூகவுடமை இயக்கங்கள், எனும் 19 ஆம் நூற்ருண்டுச் சமர்கள் எல்லாவற்றிலும், இதுவே அடிப்படை யான பிரச்சினையாக அமைந்தது. எனவே பிற்போக்கு வாத ம் , பழைமை வாதம், சருவாதிகாரம் எனும் சக்திகள் தாராண்மைவாதம்) நாட்டினவாதம், புரட்சி வாதம் என்பவற்றுடன் மோதியமைதாம்; 1815 க்கும், 1850 க்கும் இடைப்பட்ட ஐரோப்பிய வரலாற்றின் பிரதான உட்பொருள் எனக் கொள்ளலாம்.
இவ்வாண்டுகளில் தோன்றிய கிளர்ச்சிகளுக்கு மூலங்கள் இரண்டு - ஒன்று தாராண்மை வாதம், மற்றது நாட்டினவாதம்.
is ar yr Ar 6ŵyr, 69) yn Gall ar g, h *
தேச ஒற்றுமையும் சுதந்திரமும் பெற்ற இங்கிலாந்து, பிரான்சு, சிவெயின் சுவீடன் இரசியா போன்ற நாடுகளில் பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து எழுந்த தாராண்மை வாதம் உயர்வு பெறலாயிற்று. சுதந்திரம், ஒவ்வொரு மனிதனதும் பிறப்புரிமை, என்ற கொள்கையை புரட்சி மேற்கு ஐரோப்பா வெங்கணும் பரப்பியிருந்தது. ஆனல் மனித உரிமைகளைப் பற் றிய கொள்கைகள் புது அரசாங்சங்களை நிர்வகிப்பதற்கு பயனுள்ள, ஆதாரமாகத் தென் படவில்லை. உரூசோவின்' தத்துவங்கள் செரமி பெந்தமின் கொள்கையினல் ஆட்கொள் ளப்பட்டன. உலகத்தைக் கலக்கி வைத்த புரட்சிக் கொள்கைகள், பயனுடைய அனுபவ சித் தாந்தங்களுக்கு இடம் விட்டுக்கொடுத்தன. ‘இயற்கை நிலை", மனிதனின் உரிமைகள் பற்றிய கனவுகளுக்குப் பதிலாக, 'அதி கூடுதலான மக்க ளி ன் மிகு பெரும் இன்பம்," எனும் பயனுடைய வாதத்தின் கோட்பாடு, அரசாங்கத்தின் அதி உன்னத நோக்காக அமைய வேண்டும், என்ற கொள்கை ஒங்கியது.

Page 72
6 புது உலக சரித்திரம்
**மக்களினல் மக்களுக்காகவே அரசாங்கம்" எனும் கொள்கை புரட்சியின் தவக் குழந்தை. ஆனல், அனுபவத்தில், அதற்குப் பயன்தரு புது வியாக்கியானம் கூறப்பட்டது. அதாவது, பிறப்பு எனும் ஒரேயொரு காரணத்தினல், உயர்குலத்தோர் அனுபவித்த உரிமைகளில், மத்திய வகுப்பினருக்கும் உரிமையுண்டு, என்பதே அதன் புதுப்பொருள். இது, வாணிபத்தின் வளர்ச்சி, தொழில்களின் விருத்தி, இவற்றின் பயனக உண்டான பணச்செருக்கு எனும் காரணங்களிலிருந்தே பிறந்தது. பிரெஞ்சுப் புரட்சி, சமுதாயத்தின் சமூக அமைப்பை மாற்றியதே தவிர, அதன் பொருளாதார அடிப்படையில், எவ்வித மாற்றத்தையும் உண்டுபண்ணவில்லை. இதனல், நடு வகுப்பினர் முதன்முதல் அடிமைத்தளை யிலிருந்து விடுவிக்கப் பட்டுச் சுதந்திரம் பெறலாயினர். 19 ஆம் நூற்ருண்டின் பெரும் பொருளாதாரப் புரட்சியின் வருகையுடன்தான், பாமர மக்கள், தமக்கும் அரசியல் அதிகாரத் தில் பங்குண்டு, என்ற கூக்குரலை எழுப்பினர். பாமர மக்களுக்கு நலவுரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முன்வந்தது, சமூகவுடைமை வாதம்.
நாட்டினவாதம் :
செர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில், ஓரின மக்கள் அரசியல் முறையில்ை பிளவு
பட்டுக் கிடந்தனர்; போலந்து அயர்லாந்து பெல்சியம் நோவே, போல்கன்,
தீபகற்பம் முதலிய நாடுகளில், அன்னியரின் ஆட்சி மக்களை அரசியலடிமைகளாக்கியது.
ஓர் இனத்தைச் சேர்ந்த மக்கள், ஒற்றுமையாக, ஒரு குடையின் கீழ் வாழவேண்டு மென்ற நாட்டின உணர்ச்சியும் பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து எழுந்த ஒரு மறைமுகமான சக்தியாகும். 18 ஆம் நூற்றண்டில், நாட்டினவாதம், ஒரு மக்கட் சமுதாயத்தை, அதன் அரசனுடன் விசுவாசத்தில் பிணைத்த பந்தத்தையே குறித்தது. புரட்சியுக போர்களுக்குப் பின், அது, புது ஆழ்ந்த கருத்துக்களைப்பெற்று, 19 ஆம் நூற்ருண்டில், ஐரோப்பிய அரசியல் உருவத்தை ஆக்கவல்ல பிரதான சக்தி.ாக மாறியது. நெப்போலிய யுத்தங்கள், பிரான்சில் நாட்டினவாதத்தை பெலப்படுத்தியதோடு நின்றிவிடவில்லை; இவ்வுணர்வு இல்லாத நாடுகளில் கூட, அதை தட்டியெழுப்பவும், அவை வழிவகுத்தன. சிபானியர்களினதும், இரசியர்களினதும் வெற்றிகள் அகில உலகிற்கும் ஓர் உன்னத முன்மாதிரியாக அமைந்தன. பெலவீனத்தின் காரணமாக, பிரெஞ்சுக் கொடுமைகளுக்கு அடிபணிந்த செர்மனி, தான் பெலமுள்ள ஒர் அரசாகத்திகழ, தேச ஒற்றுமை அத்தியாவசியமென உணர்ந்தது. இதே உணர்ச்சிகள் இத்தாலியையும் ஆட்கொண்டன. நாளடைவில், ஒசுத்திரியாவின் நெறி பிறழ்ந்த ஆட்சி, இவ்வுணர்வை ஒரு போரிடும் சக்தியாக மாற்றியது. நாட்டினவாதம் என்ற எண்ணம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டதுடன், அது ஆச்சரியத்துக்குரிய வேகத்துடன் ஐரோப்பாவெங்கணும் பரவலாயிற்று.
2. பிரான்சு (1815-1848)
கடந்த 25 ஆண்டுகளுக்குள், முடியாட்சி மறைந்து, அரசன் கொலை செய்யப்பட்டதையும், பயங்கர ஆட்சிபோய் பேரரசு தோற்றியதையும், வெற்றிகள் தோல்விகளாக மாறினமையையும், பொனப்பாட் போய், பூர்போன் வமிசம் சிம்மாசன்ம் ஏறியதையும், ஒன்றன்பின் ஒன்ருகக் க்ண்டு கழித்த பிரான்சின் எதிர்கால வரலாறு, நிலையானதாக இருக்கு மென எதிர்பார்ப்பது சாத்தியமற்றது. புது நூற்றண்டில், அந் நாட்டை எதிர்நோக்கி நின்ற பிரச்சினைகள், பலவிதப்பட்டவை. புரட்சியின் பயன்களை முடியாட்சியின் புனருத்தாரணத்துடன் சமா

ஐரோப்பாவில் தாராண்மை வாதமும் நாட்டினவாதமும் II 7
தானப்படுத்தல்; புறக்குடியேறிகள் தாமிழந்த உரிமைகளை மீண்டும் பெறவேண்டுமென ஆசித்தமையை, மாற்றமுடியாத காலத்தின் முன் னேற்றத்துடனும், புதிதாக எழுச்சியடைந்த நிரந்தர உரிமைகளுட னும் ஒத்துப்போக வழிவகுத்தல்; தோல்வியினுல் ஏற்பட்ட அவமா னத்தை மீட்டல்; நாட்டிலிருந்து, அன்னிய துருப்புக்களின் மேற் பார்வையைக் "க்ளைதல்-இவை தாம், பிரான்சின் முக்கிய பிரச்சனை
களாம்.
89,ò ggpTuS (Louis XVIII)
1814 ஆம் ஆண்டு, ஐரோப்பிய வல்லரசுகள் பழைய பூர்போன் வமிச பரம்பரையைச் சேர்ந்த 18 ஆம் இலூயியை பிரான்சின் சிம் மாசனத்தில் அமர்த்தினர். தீவிர அரசுவாதம் பொதுமக்களினது ஆதரவைப் பெறமாட்டாதென நன்குணர்ந்த இலூயி, அமைதிக்கான மத்திய வழியைக் கடைப்பிடிக்கச் சித்தமானர். புரட்சியினல் ஏற் பட்ட பயன்கள், எவ்வளவுதூரம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந் திருந்தனவென்பதை அவர், ஒரளவு உணர்ந்து, அம்மாற்றங்களை ஏற்க ஆயத்தமானர். மக்களுடைய வருப்பு வெறுப்புக்களை யூகித்தறிந்த இலூயி, தனது அரசு, யாப்புறு முடியாட்சியாகவே அமையுமெனப் பகிரங்கமாகப் பிரகடனம் செய்து, தாராளக் கொள்கைகளைக் Gestačitl - p(5 utůyp LLLuš60.5 (Constitutional Charter) வெளியிட்டார். பொதுமக்களினல் தெரிவு செய்யப்பட்ட அங்கத் தினரைக்கொண்ட மன்றம், தனிமனிதனின் சமத்துவம், வழிபாட்டுச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் என்பவை, பிரெஞ்சினருக்கு பட் டயம், பெற்றுக்கொடுத்த பிரதான நலன்களாகும். "இருகூரு ன மக்களின் அரசனுக"த் தான் இருக்க விரும்பவில்லையெனக் கூறி, தேச ஒற்றுமையையும் நிலைநாட்ட அரும்பாடுபட்டார். ஆனல் அவர், அமைச்சர் குழுவையும், நாட்டை பலவந்த்ப்படுத்திய தீவிர அரசுவாதச் சக்திகளையும் கட்டுப்படுத்தவோ, தாராண்மை வாதி களைப் பயன்படுத்தவோ முடியாமற்போயிற்று. ஏனெனில், ஒரு பட் டயம் மாத்திரம், யாப்புறு அரசாங்கத்தைச் சுமுகமாக இயக்கும், என எதிர்பார்ப்பது வீண். அதற்கு, நீண்ட பயிற்சியடைந்த அனுப வம், நெகிழ்வுடைய அமைப்புக்கள், கட்சிப்பிரிவினைகளுக்கு மேலான தேச ஒற்றுமையுணர்வு, என்பவை இன்றியமையாதவை. இவை' பிரான்சுக்குப் புதிரானவை; அத்துடன் அது தன்னுட்சிக்கும் புதி தானது. இதனுல்தான், பல்லாண்டுகளாகப் புரட்சிகளும், ஆட்சிப் புரட்டுக்களும், அந்நாட்டின் அரசாங்கங்களைப் பன்முறை மாற்றி யமைக்கக் காரணங்களாக அமைந்தன.
A l 0

Page 73
118 புது உலக சரித்திரம்
1815 இல், நெப்போலியனுடைய நூறுநாள் ஆட்சியை ஒரு காரணமாகப் பயன்படுத்தி, தீவிர அரசுவாதிகள் (Ultras), சட்ட சபையில் பெரும்பான்மையிடங்களைக் கைப்பற்றினர். புரட்க்சிகாலத் தில், தாம் அனுபவித்த இன்னல்களெல்லாவற்றிற்கும் பழி வாங்கும் நோக்குடன், நாட்டில் ஒரு விதமான பயங்கர ஆட்சியைச் (White Terror) சிருட்டித்து, பழைய பயங்கர ஆட்சியின் கொ டூ ரங் களை நினைவூட்டும் அட்டூழியங்களைச் செய்து முடித்தனர். நடுவர் (Jury) இல்லா நீதிமன்றங்களில், குடியரசுவாதிகள் அரைகுறை விசாரணையின் பின், கொலைக்குத் தீர்க்கப்பட்டனர்; நெப்போலியனின் கீழ்ப் புகழ் பெற்ற நே என்ற தளபதியும், அவர்களது பழிக்கு இரையானர். இச்சபையின் தீவிர வாதத்தைச் சகிக்கமுடியாது அரசன் அதை 1816 இல் கலைத்துவிட்டார். அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில், gorop (Richilieu l816-–18), G & T (3 (Decazes 1818 20) என்ற பிரதமர்களின் கீழ், இலூயி ஒர் ஒழுங்கான ஆட்சியை உரு வாக்க முயற்சித்தார். கடன் தீர்க்கப்பட்டு, அந்நிய துருப்புக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டன. ஏச்சிலாச்செப்பலில், பிரான்சு ஐவரின் நட்புறவில் ஒரு வல்லரசாக அனுமதிக்கப்பெற்றது. இந்த நடுவகுப்பின் ஆட்சி, 1820 இல், பட்டத்து இளவரசனுன டுக் டி பெறி (1)ue de Berri) கொலைசெய்யப்பட்டதுடன், தடைப்பட்டது 1821 இல், அமைக்கப்பெற்ற புதுச் சட்டசபையில், கடைசி இருபது ஆண்டு களில் ‘ஒன்றைப் படிக்காதவர்களும், ஒன்றை மறக்காதவர்களு மான" புறக்குடியேறிகள், மீண்டும் ஆட்சிப்பீடத்தையடைந்தனர்; விலேல் (Willele) என்ற தீவிர அரசுவாதி பிரதமரானர்.
uğğTüb FT Girağı (Charles X) :
1824 ஆம் ஆண்டு, 18 ஆம் இலூயி காலமானதுடன், புரட்சிக் காலத்தில் புறக் குடியேறிகளுக்குத் தலைமை தாங்கி நின்ற, அவரது சகோதரன், பத்தாம் சாள்சு எ னு ம் நாமத்துடன் அரசேறினன். அவரது வருகையுடன், அரசுவாதிகளின் செல்வாக்கு படிப்படியாக வளர்ந்து, ஈற்றில் அவரது அரசாங்கம் பிரபுக்களினதும், குருக்களின தும் ஆதரவிலேயே நிலைத்தது. பொது மக்களின் சுதந்திரத்துக்கு புது வரம்புகள் இடப்பட்டன : சட்ட மன்றத்தின் கால எ ல் லை ஏழு ஆண்டுகளாக நீடிக்கப் பெற்றது. புறக் குடியேறிகளுக்கும் திருச்சபைக் கும் நட்ட ஈடு, கத்தோலிக்க குரவரின் முதன்மைக்கான சட்டங்கள், யேசு சபைக் கூட்டத்தினருக்குப் பாடசாலைகளை நடாத்தும் அதிகாரம், தேவ நிந்தனைச் சட்டங்கள் என்பனவை இயற்றப்பட்டன. உவெலிந் தன் பிரபு, இவ்வரசாங்கத்தை “குருக்களால், குருக்களுக்காக நடத்

ஐரோப்பாவில் தாராண்மை வாதமும் நாட்டினவாதமும் 119
தப் பெறும் குருக்களின் ஆட்சி" என வர்ணித்தார். 1827 இல் பிர புக்களின் ஆட்சி நிராகரிக்கப்படவே, விலே ல் பிரதமர் பதவியிலி ருந்து விலகினர். 1830 ஆம் ஆண்டுப் புரட்சி :
பொலிக் நரக் (Polignac) தலைமையில் எதேச்சாதிகாரிகள் நிறைந்த ஒர் அமைச்சர் குழு நியமிக்கப்பட்டதுடன், எ திர்ப்பு புரட்சியாக மாறியது. பத்திரிகைகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும், பொது மன்றத்தைக் கலைக்கவும், வாக்குரிமைத் தகைமைகளை அதிகரிக்கவும், பிரதிநிதிகளின் தேர்தல் முறையை மாற்றவும் நான்கு சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. மன்னனின் எதேச்சாதிகாரத்தைக் கண்டு, மனக் கொதிப்படைந்த மக்கள், 1830 ஆம் ஆண்டு யூலை மாதம் கலகம் செய்யலாயினர். ஒடுக்கமான வீதிகளில் தடைகளையிட்டுச் சனக்கும் பல், மூன்று நாள்களாக தலை நகரத்தில், ஆதிக்கம் செலுத்தியது. அரச துருப்புக்களில், பல பட்டாளங்கள் பக்கம் மாறின ; எஞ்சி யவை, பின் வாங்கின. ம ன் ன ன் பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் செய்த முயற்சிகள் யா வும் வீண் விரயமாயின. பூர்போன் வமி சத்தைச் சேர்ந்த பத்தசிம் சாள்சு, பி ரா ன் சின் சிம்மாசனத்திலி ருந்து நீக்கப்பட்டார். (39) uál SGólů Gu (Louis Philippe) :
யூலைப் புரட்சி நடந்தேறிய சில நாள்களுக்குப்பின், ஆகத்து மாதம் 7 ஆம் நாள், இலூயி பிலிப்பே பொதுமக்களினல் அரசி பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
சிம்மாசனம் எறுமுன், இலூயி பிலிப்பே தீர சம்பவங்கள் நிறைந்த ஒரு வரழ்வைக் கண்டவர். வாலிபப் பராயத்தில் வல்மீ (Walmy) யிலும், யெமாப்பே (Jemappes) யிலும் குடியரசின் துருப்புக்களுடன் போர் புரிந்தவர். அதன்பின் வட ஐரோப்பா, சிசிலி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் உட்பட, உலகின் பல பாகங்களைத் தரிசித்து, சுவிற்சலாந்திலும் இங்கி லாந்திலும் வாழ்ந்தார். பூர்போன் அரச வமிசம் சிம்மாசனத்துக்கு மீண்டபோது, அவர், தாயகம் திரும்பி, குடும்ப நிலபுலங்களைப் பெற்று, பிரபுக்கள் மன்றத்தில் உறுப்பினராஞர். பல ஆண்டுகளாக, தாராண்மைவாதி போல நடித்து, நடு வகுப்பினருடனும், பரிசுத் தொழிலாளருடனும் நெருங்கிப் பழகி, அவர்களது நட்பையும் ஆதரவையும் சம்பாதித்துக் கொண்டார். அாசேறிய பின்பும், கழுத்தில் ஒரு மூவர்ணக் குட்டையை அணிந்தும், தொழி லாளக் குழுவினருடன் நன்ருகப் பழகியும், தன் புத்திரர்களைப் பொதுப் பாடசாலைகளுக்கு அனுப்பியும், இராணுவப் படையில் அவர்களை சாமானியப் போர் வீரர்களாகச் சேர்த்தும் , இலூயி பிலிப்பே தன்னை ஒரு குடி அரசன் (Citizen-King) எனக் காட்டிக் கொண்டார். ஆணுல் பாசாங்கு பண்ணுதல், ஒரு நிலையான அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு போது மானதன்று.
இலூயி பிலிப்பே ஒரு சனநாயகப் பிரியனல்ல ; சருவாதிகாரத் தையும் தூய சனநாயகத்தையும் விரும்பாது, அ ைவ இரண்டிறகும் இடைப்பட்ட யாப்புறு முடியாட்சியிலேயே நம்பிக்கை வைத்தார்.

Page 74
20 புது உலக சரித்திரம்
தன் ஆட்சிக்காலம் முழுவதும், அவர் இந்த மத்திய வழியிலிருந்து சிறி தளவேனும் பிசகவில்லை. இலூயி பிலிப்பேயின் ஆட்சியின் கீழ், சன நாயக முன்னேற்றத்துக்குக் காத்துநின்ற மக்கள் ஏமாற்றமே அடைந் தனர். வாக்குரிமைத் தகுதிகள் குறைக்கப்பட்டமையினல், நடு வகுப்பி னர் வாக்குரிமையைப் பெற்று, அரசாங்கத்தில் அதி செல்வாக்குப் பெற லாயினர். எனினும், ஒலியோன் முடியரசு, நாட்டின் ஒரு பிரதான பகுதியினது ஆதரவையாவது பெறமுடியாமற் போயிற்று. அஃது அதற் கெதிரே அணிவகுத்து நின்ற எதிர்ச் சக்திகளின் ஒழுங்கீனத்தின் காரணமாகவே, பதினெட்டு ஆண்டுகளுக்கு உயிர் வாழ முடிந்தது.
எதிர்ப்புக்கள் :
தெய்வவழி யுரிமையை (Divine Right) இழந்ததும், மக்களின் பொதுச் சம்மதத்தின் அடிப்படையில் நிலைத்ததுமான, அரசாங்கத் துக்கு முடியரசு வாதிகள் தம் விசுவாசத்தைக் காட்ட முடியவில்லை. சிம்மாசனத்துக்கும், அடுத்தாருக்கு மிடையில் பிளவை ஏற்படுத்திய அரசாங்கத்தை, கத்தோலிக்கர் ஆதரிக்காமற் போயினர். படிப்படி யாக முடியரசின் தனியாட்சியாக மாறி வந் த அரசாங்கத்துக் கெதிரே, குடியரசு வாதிகள் பலமான எதிர்ப்புக் காட்டி வரலாயினர்; ஏனெனில் புரட்சியினல், நாட்டின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டதே தவிர, இதயத்தில் மாற்றம் ஏற்படவில்லை. பிரான்சு குடி ய ர சுப் பாதையில் செல்லும் வழியில், யூலைப் புரட்சி ஒரு தங்குமிடமென வர்ணித்தார், விற்றர் கியூகோ (Victor Hugo). பொருளாதாரப் பிரச் சினைகளுக்குத் தீர்வு காண மறுத் த அரசாங்கத்தை, சமூகவுடமை வாதிகள் வன்மையாகக் கண்டித்து, சமூகப் புரட்சிக்கு ஆயத்தப் படுத்தினர். அவர்களுடைய தலைவரான இலூயி பிளாங்க் (Louis Blanc), முதலாளித்துவமும் போட்டி முறையும் தொழிற்றுறையிலிருந்து அகற்றப்பட வேண்டு மென்றும், எல்லோருக்கும் வேலை செய்யும் உரி மையை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க க ட  ைம ப் பாடுடைய தென்றும் கற்பித்தார். இலூயி பிலிப்பேயின் ஆட்சியின் வெறுமை யால் சலிப்படைந்தவர்கள், நெப்போலியன் பொனப்பாட்டின் காலத் துப்புகழைப் பற்றி ஏங்கி நின்றனர். நெப்போலிய அபிமானம் மக்கள் உள்ளங்களில் வளர ஆரம்பிக்கலாயிற்று.
1848 ஆம் ஆண்டுப் புரட்சி :
வாக்குரிமையைப் பெருக்கும் ஒரு பிரச்சினையிலிருந்தே, 1848 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், புரட்சி ஏற்பட்டு, இலூயி பிலிப்பேயை யும் ஒலியோன் வமிசத்தையும் பிரான்சின் சிம்மாசனத்திலிருந்து துரத்தியது. தியர்சு (Thiers) என்பவரின் கீழ், பாராளுமன்ற சீர்

ஐரோப்பாவில் தாராண்மை வாதமும் நாட்டினவாதமும் 12
திருத்த, சருவ வாக்குரிமை இயக்கங்கள் நாட்டில் வலுப்பெற்று வர லாயின. சீர்திருத்தவாதிகள், பரிசில் ஒழுங்கு செய்திருந்த 'சீர் திருத்த விருந்து' (Reform Banquet) ஒன்றை அரசாங்கம் தடை செய்தது. பொது மக்கள், உணர்ச்சி வசப்பட்டு, கீசோ (Guizot) வைப் பழிவாங்க வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்தனர். இராணு வத்தினர் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் ஆர்ப்பாட்டம் சீக்கிரம் கலகமாக மாறியது. வீடுகளும் கடைகளும் கொள்ளையடிக்கப்பட்டன : அரசனின் மாளிகை, ஆயுதம் தாங்கிய மக்களினல் சூழப்பட்டது. இலூயி பிலிப்பே தன் தலையைக் காப்பாற் றிக் கொள்ள, உடனே அரசைத் துறந்து, இங்கிலாந்திற்கு ஒட்டம் பிடித்தார். முடியாட்சி நீக்கப்பட்டு, இரண்டாவது குடியரசு தாபிக் கப்பெற்றது. Ys
சமுகவுடைமைவாதிகளின் எழுச்சி :
ஆனல் வெகுவிரைவில், குடியரசின் வெற்றி, முதன்முறை அரசி யல் அரங்கில் ஓர் ஒழுங்குடைய அரசியற் சக்தியாகத் தோன்றிய, சமூகவுடைமைவாதிகளினல் ஆட்சேபிக்கப்பட்டது. சொற்ப காலத் துக்கு இலமாட்டைனின் (Lamartine) தனித் திறமையினல், குடி யரசுவாதிகளுக்கும் சமூகவுடைமைவாதிகளுக்குமிடையில் ஒற்றுமை ஏற்பட்டு, இரு கட்சிகளும் கூட்டரசாங்கமாக இயங்கின. சமூகவு டைமை வாதிகள், "வேலை செய்யும் உரிமைக்காக” வாதாடி, தேசத் தொழில் நிலையங்களை அமைக்கும் பரிசோதனையை ஆரம்பித் தனர். இதனல் குடியரசுவாதிகளுக்கும் சமூகவுடைமைவாதிகளுக்கு மிடையில் ஏற்பட்ட ஒற்றுமையும் குலைந்தது. தற்காலிக அரசாங் கத்தை நிரந்தரமாக்க, மே மாதம், பொதுத் தேர்தல் நடாத்தப் பெற்றபோது, புது மன்றத்தில் இலமாட்டைனும் அவரது குடியரசுக் கட்சியுமே அபரிமிதமான பெரும்பான்மை ஆதரவைப் பெறலாயினர். தேசத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதைக் கண்ட பரிசு நக ரத்து தொழிலாளர் வர்க்கம், யூன் மாதம், தீவிர நடவடிக்கையில் இறங்கிற்று. குடியரசின் மூவர்ணக்கொடிக்கும் சமூகவுடைமை வாதத் தின் செங்கொடிக்குமிடையே மூன்று நாள்களாக, பரிசு நகரத்தின் வீதி களில் கடும்போர் நிகழ்ந்தது. 1460 பேர் மாண்டனர்; 11,000 பேர் கைது செய்யப்பட்டனர். செம்புரட்சி அடக்கப்பட்டது. அடுத் து , சட்டசபை, ஒர் அரசமைப்பைத் தயாரிக்கும் வேலையிலிறங்கியது. சட்டவாக்கம், சருவ வாக்குரிமையினல் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத் தினரைக் கொண்ட மக்கள் சபையிலும், நிருவாகம் குடிப்பதியின் (President) கீழும் விடப்பெற்றன. குடிப்பதி, சருவ வாக்குரிமையினல் ஐந்து ஆண்டு காலத்துக்குத் தெரிந்தெடுக்கப் படுவாரென்றும், அக்கால

Page 75
22 புது உலக சரித்திரம்
முடிவில் மீண்டும் அவர் அப்பதவிக்கு போட்டியிடலாகாதென்றும் விதிக் கப் பெற்றது. குடிப்பதித் தேர்தலுக்கு, இலூயி நெப்போலியன் பொனப் பாட்டின் பெயர் சமர்ப்பிக்கப்பட்டபோது, அவர் அபரிமிதமான பெரும்பான்மை வாக்குகளினல் வெற்றிபெற்றர். பத்துமாத பிரயா சத்தின் பின், பிரான்சு இரண்டாவது குடியரசையும், இரண்டாவது பொனப்பாட்டையும் பெறலாயிற்று.
3. இத்தாலி (1815-1849)
இத்தாலியும் பிரெஞ்சுப் புரட்சியும்
பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து எழுந்த புயல்வேகத்தில் இத்தாலியும் அகப்பட்டு, பெரிய மாற்றங்களுக்குப் பாத்திரவாளியாயிற்று. பல நூற்ருண்டுகளாக, ஒற்றுமையின்றி ஐரோப்பிய வல்லரசுகளின் போர்க் களமாக விளங்கிய இத்தாலிய அரசுகள், நெப்போலியனின் கீழ் முதன் முதல், ஒற்றுமையின் பலன்களைக் காணலாயின. செனேவா வில் இலிகூரியன் குடியரசு, உரோமில் உரோமானியக் குடியரசு, நேப்பிள்சில் பாத்தினுேப்பியன் குடியரசு என்பவை நெப்போலிய னின் 1798 ஆம் ஆண்டு சிருட்டிப்புக்களாகும். 1804 இல், தசுக்கனி பிரான்சுடன் இணைக்கப் பெற்றது. நெப்போலியனின் பேரரசு வட இத்தாலி முழுவதும் பரவியது. நெப்போலியனுடைய மறைவுடன் இத்தாலியில் ஏற்பட்ட ஒற்றுமையும் மறைந்தது. வியன்ன மாநாட்டு முடிவுகள் :
1815 ஆம் ஆண்டு வியன்ன மாநாடு, இத்தாலியை மீண்டும் பழைய வமிசவழிகளுக்கும் புராதன பிரிவினைகளுக்கும் கையளித்தது. ஆகவே இத்தாலி ஒன்றுபட்டதாக இருக்கவில்லை. அதை மற்றே னிக் "புவியியற் சொல்லாற் குறிக்கப்படுமிடம்' என்று வர்ணித் தான். அதன் கூறுகள் பீட்டுமன்று--சா டினிய அரசு, வெனிசியா லொம்பாடி எனும் ஒசுத்திரிய மாகாணங்கள், தசுக்கனி, பாமா மொடேஞ எனும் சுதந்திர கோமக அரசுகள், போப்பாண்டவரின் பிரதேசங்கள், நேப்பிள் சு-சிசிலி இராச்சியம் என்பனவையாகும்.
1815 ஆம் ஆண்டு நடந்தேறிய திருப்பி ஒப்படைத்தல்களைத் தொடர்ந்து, பிற்போக்கான, ஒழுங்குகெட்ட ஆட்சி முறைகளே ஏற்பட்டன.
நேப்பிள் சு-சிசிலி இராச்சியத்தில், பூர்போன் வமிசத்தைச் சேர்ந்த முதலாவது பேடினந்து, மக்களினல் வெறுக்கப்பெற்ற பொலீசு முறையையும் பத்திரிகைகளின் கட்டுப்பாட்டையும், குருவா

ஐரோப்பாவில் தாாாண்மை வாதமும் நாட்டின வாதமும் 123
யத்தின் அதிகாரத்தையும் பழையபடி ஏற்படுத்தினர். தாராண்மை வாதிகளைத் துன்புறுத்தியும், இராசவிசுவாசமுள்ளவர்களை உயர் பதவி களில் நியமித்தும், சிசிலியின் தன்னுண்மையுடைய அரசமைப்பை நிராகரித்து அதை நேப்பிள் சின் பரிபாலனத்துக்குரிய மாகாணமாக மாற்றியும், மக்களின் சாபத்தைப் பெறலாயினர். “இவனுடைய அரசாங்கம் கடவுளே மறுதலிக்கும் இயல்புடையது' என்று பின் னெரு காலத்தில் கிளாற்சன் வருணித்தார்.
இத்தாலிக்குக் குறுக்கே வியாபித்துக் கிடந்த போப்பாண்டவரின் அரசில், போப்பாண்டவர் அதன் ஆத்மீக தலைவராக மாத்திரமன்று, இலெளகீக தலைவராகவும் ஆட்சி செலுத்தினர். பிரதான அலுவலா ளர்கள் யாபேரும் குருவாயத்தினரைக் கொண்ட ஒரு புதுமையான மதச் சார்பாட்சி அங்கு நிலவியது. பிரெஞ்சுச் சட்டங்களுக்குப் பதிலாக போப்பின் விசாரணைச் சபை (Inquisition), விலக்கப்பட்ட நூற்பட்டியல் (Index), பலாத்காரம், பொலீசு ஆட்சி எனும் முறைகள் அமுலாக்கப்பட்டன.
வட மத்திய கோமக அரசுகளிலும் பிற்போக்கான எதேச் சாதிகார ஆட்சி நிலைத்தது. ஒசுத்திரியாவின் செல்வாக்கு, அங்கு தாராண்மை இயக்கங்களை அடக்கி ஒடுக்க என்றும் அனுசரணையாக விருந்தது.
வடக்கே ஒசுத்திரிய மாகாணங்களில் ஏற்பட்ட பயங்கர ஆட்சி முறையின் கீழ், நாட்டினவாதிகள் சிறையில் தள்ளப்பட்டும், தூக்கி லிடப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும் துன்புறுத்தப்பட்டனர். இவ்வாட்சியின் கொடூரத்தைத் தாங்கமுடியாத தேசாபிமானிகள், நாட்டை விட்டு ஒடித்தப்பினர்.
பீட்டுமன்று-சா டீனிய இராச்சியத்தில், சவோய் அரச வமிசத் தைச் சேர்ந்த முதலாம் விற்றர் இம்மானுவேல் மக்களால் விரும்பப் பட்டவர். அங்கு கூட, பிரெஞ்சு ஆதிபத்தியத்துக்கு முன்னிருந்த நிலையை, மீண்டும் புதுப்பிக்கும் புராதன சட்ட திட்டங்கள், குரு வாயத்தின் செல்வாக்கு, உயர்குடி மக்களின் உரிமைகள் எல்லாம் மீண்டும் முன்பு போல ஏற்பட்டன. முதலாம் விற்றர் இம்மானு வேலுக்குப்பின் அரசபதவியை யடைந்த சாள்சு பீலிக்சு சுயேச்சை இயக்கங்கள் எல்லாவற்றையும் அடக்கி, பிற்போக்கான ஆட்சியைத் நாபித்தார். அதிருப்தி நாளாந்தம் அதிகரித்து வரலாயிற்று.
இவ்வாறு, இத்தாலியின் வரலாற்றின், 1815'க்கும் 1850 க்கும் இடைப்பட்ட காலம், ஒற்றுமையின்மை, அன்னியரின் ஆதிக்கம், பய னற்றமுயற்சி எனும் அம்சங்களையே அடக்கியுள்ளது. ஒற்றுமையின்மை, இத்தாலியை முழுமையாக ஆட்கொண்டது. இதற்கடுத்து, அதன்

Page 76
124 புது உலக சரித்திரம்
நிலையின் பிரதான அம்சம், ஒசுத்திரியாவின் ஆதிக்கமாகும். ஒசுத்திரியா, லொம்பாடியையும் வெனிசியாவையும் தான் நேர்முகமாக ஆட்சி செய்தது ; ஆனல் அதன் அரச பரம்பரையைச் சேர்ந்த இளவரசர்கள் பாமா, மொடேன, தசுக்கணி எனும் இடங்களில் செங்கோலோச்சி னர். நேப்பிள் சின் பேடினந்து, ஒசுத்திரியாவுக்குப் பிடியாத அரசாங் கத்தை ஏற்படுத்துவதில்லையென உறுதி மொழி கூறியிருந்தார். தவிர, மற்றேணிக் ஒசுத்திரிய சார்புடைய ஒரு போப்பாண்டவரைத் தெரிவு செய்வதற்கும் தருணம் வரும் எனக் காத்திருந்தார். இப்பேர்ப்பட்ட நிலையில், இத்தாலிய அரசர்கள், ஒசுத்திரியாவின் அனுசரணையுடன் தான் வாழமுடியு மென்பது புலனுயிற்று. ஒசுத்திரியாவின் ஆதிக்கம், இத்தாலி முழுவதும் நிலைத்தது. பீட்டுமன்று ஒன்றில் மாத்திரuம, ஒரு சுதேச அரசன் சுயேச்சையுடன் ஆட்சி புரிந்து வரலாயினன்.
கரியெரிப்போர் சங்கம் :
இவ்வாறு இத்தாலியின் எல்லாப் பகுதிகளிலும், தம் அரசுகளை மீண்டும் பெற்ற அரசர்கள், பிற்போக்குவாதத்தின் அத்திவாரத்தில், தம் அரசாங்கங்களை அமைப்பதைக் கண்டு, மக்கள் பெரும் ஏமாற்ற மடைந்தனர். தேசப் பற்றுடையவர்கள், தம் நாட்டின் அவல நிலையைக் கண்டு மனம் கலங்கினர் ; தாராண்மைவாதிகள், சர்வாதி காரத்தை எதிர்க்க உறுதி கொண்டனர். இத்தாலி பூராவும், இரகசிய சங்கங்கள், விசேடமாக, நேப்பிள்சில் ஆரம்பித்த கரியெரிப்போர் சங்கம் (Carbonari), பெருகின. கிறித்தவ மதத்தின் சடங்குகளின் போர்வையின் கீழ், இச் சங்கங்கள், அன்னியரை நாட்டிலிருந்து துரத்துவது, வரம்புடைய ஆட்சி முறையை ஏற்படுத்துவது எனும் அரசியற் கருத்துக்களை நாலா பக்கங்களிலும் பரப்பின. பிரபுக்கள், இராணுவ அதிகாரிகள், விவசாயிகள், குருக்கள் எனும் பேதங்களின்றி, யாவரும் சங்கங்களில் சேரலாயினர். ஆனல் நாட்டின், தாராளக் கொள்கைகளினல் பெரிதும் பாதிக்கப்பட்ட நடுவகுப்பினரே இ தி ல் பிரதான பங்கெடுத்தனர்.
1820 ஆம் ஆண்டுப் புரட்சி :
இரகசிய சங்கங்களின் உணர்ச்சி வேகத்திலிருந்து, 1820 ஆம் ஆண்டு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்த புரட்சி இயக்கம், முப் பது ஆண்டுகளுக்கு அணைந்து போ கா ம ல் பாதுகாக்கப்பட்டது. 1820 ஆம் ஆண்டு, சிபானியப் புரட்சி யி ன் வழியில், நேப்பிள் சில் தோற்றிய புரட்சி சொற்ப காலத்துக்கு வெற்றி பெற்று, பின் ஒசுத்திரியாவின் தலையீட்டினல் நசுக்கப்படலாயிற்று. இஃது அடக்கப் படு முன், பீட்டுமன்றில் குழப்பம் தோற்றி விட்டது; இதை லொம்

ஐரோப்பாவில் தாராண்மை வாதமும் நாட்டினவாதமும் 25
பாடியும், பின் பற்றும் போன்ற அறிகுறிகள் காணப்பட்டன. ஆனல் ஒசுத்திரியா, மீண்டும் தனது துருப்புக்களை இயக்கி, புரட்சி  ைய அடக்கி, ஒழுங்கை நிலைநாட்டியது. அடக்கப்பட்ட உணர்ச்சிகளுடன், இத்தாலி சில ஆண்டுகளுக்கு அமைதியாக இருந்தது.
1830 ஆம் ஆண்டுப் புரட்சி :
1830 ஆம் ஆண்டு யூலை மாதப் புரட்சியின் எதிரொலிகள், அல் பிசு மலைகளுக்குத் தெற்கேயும் கேட்கப்பட்டன. உருெ மாக்னூ, மாச் சசு, பாமா, மொடேஞ எ னு ம் பிரதேசங்களில் போப்பாண்டவர், மாறி இலூயிசு, பிரான்சிசு எனும் அரசர்களின் கொடுங்கோன்மையை எதிர்த்துப் புரட்சி இயக்கங்கள் ஆரம்பித்தன. ஒசுத்திரியா, திரும் பவும் தலையிட்டது; எதேச்சாதிகாரம் திரும் பவும் நிலைநாட்டப் பட்டது ; தாராண்மை வாதம் தலை கவிழ்ந்து நின்றது. இவ்வியக் கங்கள், ஒசுத்திரியாவின் பலத்துக்கு முன் தோல்வியடைந்ததற்கு முக் கிய காரணம், இன்னும் சனநாயகக் கிளர்ச்சிகள் ஒற்றுமைப்படாது, இடையிடையே தனி வெளிப்பாடுகளாக ஏற்பட்டமையாகும். மக்கள், இன்னும் புரட்சிக்கு ஆயத்தப்படுத்தப்பட வில்லை. வெற்றி பெறு வதற்கு அத்தியாவசியமான “ஒற்றுமை' என்ற குரல், ஒரு சில தலை வர்களிடமிருந்து எழுந்ததே தவிர, அது பாமர மக்களின் நம்பிக்கை யாக இருக்கவில்லை. எனினும், அதே நேரத்தில், இறுதி வெற்றி யின் அறிகுறிகளும் தென்பட ஆரம்பித்தன. சனநாயக, நாட்டின வாத இயக்கங்கள், பெலவீன நிலையில் இருந்தமையை மறுப்பதற் கில்லை. ஆனல், அதே போன்று, பிற்போக்கான அரசுகளின் ஆட்சி முறைகளும், உறுதியான அத்திவாரத்திலில்லை, என்பதும் வெளிப் படையாயிற்று. இவ்வரசர்கள், தம் சிம்மாசனங்களை அன்னியரின் தலை யீட்டினுல் தான் பாதுகாக்க முடியும் என்ற உண்மைக்கு, கடந்த சம்பவங்கள் சாட்சி பகர்ந்தன. அன்னியரின் தலையீடு, ஒர் இன்ன லென்ருலும், அதன் வழியாகவே நாட்டின் விடுதலையை அ  ைட ய வழி பிறந்தது. ஏனெனில், ஒசுத்திரிய வெற்றிகள் ஒரு புறம், வல்ல ரசுகளின் பொருமையைக் கிளறி விட்டன : மறுபுறம் இத்தாலிய மக்கள், தம் அவல நிலையை உணர்ந்து, ஐக்கியத்தின் அவசியத்தை மசீனியின் (Mazzini) போதனைகளிலிருந்து கற்றுக் கொண்டனர்.
மனிேயும் 'யெளவன இத்தாலியும்"
1830 ஆம் ஆண்டு செற்றம்பர் மாதம், ஒரு நாள் மசீனி கைது செய்யப்பட்டு, தனது 25 வது பராயத்தில், சவோன சிறைச்சாலையில் தள்ளப்பட்டார். சிறையில், அவர் தன் தாய்நாட்டின் பரிதாப நிலையைப்பற்றி சிந்தித்து, எங்கி, மனம் நொந்து, அதன மிடுதலைக்கான முயற்சிகளைப் பற்றியும் சிந்திக்க ஆரம்பித்தார். இந்த சிந்தனையிலிருந்து தான் 'யெளவன இத்தாலி" (Young Italy) என்ற புது இயக்கத்தை உருவாக்க

Page 77
126 புது உலக சரித்திரம்
வேண்டுமென்ற தீர்மானம் பிறந்தது. இச்சங்கம், திட்டவட்டமான நோக்கங்கள், கொள்கை சள், இலட்சியங்கள் என்பவற்றையும் உணர்ச்சி மிக்க தலைவரையும் கொண்டிருந்தமையி னல், விரைவில் இது கரியெரிப்போர் சங்கத்தின் கருத்துக்களை தனதாக்கி, தேசப் புரட்சி இயக்கத்தின் மத்திய தாபனமாக மாறியது. "தாழ்த்தப்பட்டும், ஒடுக்கப்பட்டும் ஒதுக்கப் பட்ட ஒரு சாதியினரை மட்டும் கைதுக்கிவிடவேண்டுமென்பது, என் எண்ணமன்று. ஐரோப்பாவிலுள்ள எல்லா இனத்தினருக்கும், ஒரு புது வாழ்வை பெற்றுக் கொடுப்பதற்கு, இத்தாலி ஒரு கருவியாக இருக்கவேண்டுமென்பதே என் ஆசை" என்று தன் நோக்கங் களை மசீனி வரையறுத்தார். மேலும், அவர் கூறியதாவது, ‘ஒரு நாட்டில் சுதந்திர விருட்சம் எப்பொழுது பலன் கொடுக்கிறது தெரியுமா ? அந்நாட்டு மக்கள், தம் கையா லேயே, சுதந்திர வித்தை நிலத்தில் ஊன்ற வேண்டும்; தங்கள் இரத்தத்தினலேயே அதற்கு நீர்ப்பாய்ச்ச வேண்டும்; தங்கள் வீரத்தினலேயே அதற்கு வேலியிட்டுப் பாதுகாக்க வேண்டும். அப்பொழுதுதான் அது பலன் கொடுக்கும்." இத்தாலிய விடுதலை இயக்கத் தின் தலைமையை இளைஞர்களிடம் ஒப்புவிக்க வேண்டுமென்றும், அவர்களிடத்தில்தான் வருங்காலத்த்ை நிதானமாக்கும் சக்தி உண்டென்றும் கூறினர். "இளைஞர்களைப் பாமர மக்களின் தலைவர்களாக நியமியுங்கள். அவர்களிடத்தில் எவ்வளவு மகத்தான சக்தி அடங்கியிருக்கிறதென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று அறை கூவினர்.
பீட்டுமன்றிலிருந்து இளைஞர் சங்கங்கள் இத்தாலியின் எல்லாப் பாகங்களுக்கும் பரவின. ஈராண்டுகளுக்குள், புனிதமான சத்தியப்பிர மாணங்களால் கட்டுப்படுத்தப்பட்ட 60,000 இளைஞர்கள், தேச விடு தலைக்கு உழைப்பதற்காக, சங்கங்களில் சேர்ந்து, “மலைகளின் மீது ஏறுங்கள் ; பாமர மக்களின் குடிசைகளில் சென்று உட்காருங்கள் ; தொழிலாளர்களுடைய பட்டடைகளுக்குச் செல்லுங்கள் அவர் க ளெல்லோரையும், இதுகாறும் நீங்கள் புறக்கணித்து வந்தீர்கள். இனி அப்படி இருக்கலாகாது. அவர்களுடைய நியாயமான உரிமைகள் என்ன, அவர்களது பரம்பரைச் சம்பிரதாயங்களென்ன, பரம்பரைப் புகழென்ன, பழைய வியாபாரப் பெருமைகளென்ன, இவைகளெல் லாவற்றையும்பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்,' என்ற தம் தலைவரின் கட்டளையை நிறைவேற்றினர்.
S? Gör Ug5 Túo uģg (bsTg5si (Pope Pius IX): ||
மசீனியின் குடியரசுக் கொள்கைகளிலிருந்து மாறு பட்ட தாரா ளச் சித்தாந்தங்களைக் கொண்ட வேறு சிலரும், தேச விடுதலைக்காக உழைத்தனர். 1846ஆம் ஆண்டு ஒன்பதாம் பத்திநாதர், பாப்பர சராகத் தெரியப்பட்டபோது, அவர் தன்னை ஒரு தாராண்மைவாதி யென்றும், ஒசுத்திரிய சர்வாதிகாரத்தில் விருப்பமற்றவ ரென்றும் காட்டிக் கொண்டார். இவரது வருகை, இத்தாலிய தேசாபிமானி களுக்குப் புது நம்பிக்கையைக் கொடுத்தது. ஒன்பதாம் பத்திநாதர், தனது இராச்சியத்துக்குள் பல மாற்றங்களையும் திருத்தங்களையும் செய் தார். அரசியல் கைதிகள் விடுதலை பெற்றனர் ; பத்திரிகைக் கட்டுப் பாடுகள் நீக்கப்பட்டன; பொது மக்களினல் தெரிவு செய்யப்பட்ட

ஐரோப்பாவில் தாராண்மை வாதமும் நாட்டினவாதமும் 127
பிரதிநிதிகளைக் கொண்ட ஆயுரைக் கழகம் நிறுவப்பட்டது ; சில உத்தியோகங்கள் பொது மக்களுக்குத் திறக்கப் பட்டன. இப்பேர்ப் பட்ட தாராளக் கொள்கைகளைக் கொண்ட பாப்பு, மற்றேணிக்கின் மனதில் பீதியை உண்டாக்கினர் மற்றேணிச், பாப்புவின் மனதை பிலாத்காரத்தினல் மாற்ற எத்தனித்து, பாப்புவின் நாட்டின் ஒரு பகுதிக்கு (Ferrata) ஒசுத்திரிய துருப்புக்களை அனுப்பி வைத்தான். 1847 ஆம் ஆண்டு ஒசுத்திரியாவின் இக்கடும் நடவடிக்கைக் கெதிரே, இத்தாலிய மக்களின் தேசப்பற்று உச்ச நிலையை அடைந்தது. அடுத்த ஆண்டு, ஐரோப்பாவில் கடல் போலக் கரை புரண்டெழுந்த புரட்சி, இத்தாலியின் எல்லைகளையும் அடைந்தது.
1848 ஆம் ஆண்டுப் புரட்சி :
1848 ஆம் ஆண்டு, ஐரோப்பா முழுவதும், ஏற்பட்ட கலகங்களின் எதிரொலிகள் இத்தாலியின் பல பாகங்களிலும் கேட்கப்பட்டன. சிசிலி, நேப்பிள் சு, சாடினியா, மிலான், வெனிசு, பாமா, மொடேணு, தசுக்கனி முதலிய இடங்களிலெல்லாம் பிரதிநிதித்துவ ஆட்சியை வேண்டிக் குடிகள் கலகம் செய்யலாயினர்.
புரட்சி, இத்தாலியின் தெற்கிலிருந்தே தோற்றியது. சிசிலித் தீவு மக்கள், தம் அரசரின் கொடுங்கோன்மைக் கெதிரே சீறியெழுந்து, சுய நிர்ணய உரிமையையும் அரசியல் சீர்திருத்தங்களையும் கேட்டு நின்றனர். கிளர்ச்சி, சிசிலியிலிருந்து நேப்பிள் சுக்குப் பரவி யது. இரண்டாம் பேடினந்து, பயந்து. சிசிலிக்கும் நேப்பிள்சுக்கும் வரம் புடைய ஆட்சியை அனுமதித்தார்.
பேடினந்தின் இந்தப் பெலவீனச் செயல், முழுத்தேசத்துக்கும் ஒரு முன்னேடியாக அமைந்தது. பீட்டுமன்று, தசுக்கனி, பாப்புவின் இராச்சியங்கள் என்பனவற்றில் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. ஒசுத்திரிய மாகாணங்களைத் தவிர, இத்தாலியின் ஏனைய நாடுகள் யாவற்றிலும் பாராளுமன்ற ஆட்சி முறை நிலைநாட்டப் பட்டது.
இந்த சனநாயகப் புரட்சி, விரைவில் தேச விடுதலைப் போராட்ட மாக மாறியது. பரிசுப் புரட்சி, வியன்னப் புரட்சியின் வெற்றி, மற்றேணிக் ஒட்டம் பிடித்தமை, இவையெல்லாம் ஒன்று சேர்ந்து இத்தாலிய இனத்துக்கு ஒரு புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தன. ஒசுத்திரியாவில் கொடுங்கோல் ஆட்சிக் கெதிரே மிலானில் கலகம் ஏற்படலாயிற்று. ஐந்து நாள் கடும் போரின் பின், ஒசுத்திரிய துருப்புக்கள் நகரை விட்டுப் பின் வாங்கின. வெனிசும், மிலானைப் பின் பற்றி ஒசுத்திரிய துருப்புக்களை நாட்டிலிருந்து விரட்டியடித்து அங்கு

Page 78
128 புது உலக சரித்திரம்
ஒரு குடியரசை நிறுவியது. மொடேன. பாமா இராச்சியங்களின் இளவரசர்கள் ஒட்டம் பிடித்தனர். வட இத்தாலியில் ஒசுத்திரி யாவின் ஆதிக்கம் தளர்ச்சியடைந்தது.
ஒசுத்திரியாவின் பெலவீனத்தைக் கண்ட சாள்சு அல்பேட் (Charles Albert) அன்னியரை இத்தாலியிலிருந்து அகற்றுவதற்கு, இதுவே சிறந்த தருணமென எண்ணி, ஒசுத்திரிய ஆதிக்கத்திற் கெதிராக ஏற்பட்ட கலகங்களெல்லாவற்றிற்கும் தலைமை தாங்க முன்வந்தார். தனது பிரசைகளினலும், லொம்பாடி தேசத்து மக்க ளினலும் தூண்டப்பட்ட சாள்சு அல்பேட், 1848 ஆம் ஆண்டு ஒசுத் திரியருக்கெதிரே யுத்தம் செய்யவும் துணிந்தார். இவ் விடுதலை இயக் கத்துக்கு இத்தாலியின் பல பாகங்களிலிருந்து ஆதரவு கிட்டியது. தசுக்கனியின் இலியப்போல்டு, பாப்பரசர், நேப்பிள் சின் பேடினந்து யாவரும் மக்களின் தூண்டுதலினல், புரட்சிக்கு ஆதரவு காட்டினர்.
இந்த ஒற்றுமை எவ்வளவு கெதியாக ஏற்பட்டதோ, அதேயளவு வேகத்தில் குலைந்தது. போப்பாண்டவர், கத்தோலிக்க ஒசுத்திரியா வுக் கெதிரே போர் புரிய மறுத்து, தனது படைகளைத் திருப்பி யழைத் தrர். நேப்பிள்சு அரசன், தன் தலைநகரத்திலேற்பட்ட கலக மொன்றை அடக்குவதற்கு, தன் துருப்புக்களை பயன்படுத்த முற்பட் டான். சாள்சு அல்பேட்டின் நிலை பெலவீனமடைந்தது. அதே யாண்டு ஒசுத்திரிய சேனைகளின் தளபதி இறடற்சிக்கி (Radetzky) இத்தாலியப் படைகளை குசுத்தோசா (Custozza) என்னுமிடத்தில் தோற்கடித்தார். சமாதான உடன்படிக்கையும் ஏற்பட்டது.
சாள்சு அல்பேட்டின் தோல்வியுடன், குடியரசுவாதம் தலை தூக் கியது. குசுத்தோசா தோல்வியினல் மனமுடைந்த மக்கள், மசீனி யையும், கரிபால்தியையும் நோக்கித் திரும்பினர். இவர்கள், உருே மிலிருந்து பாப்புவைக் கலைத்து விட்டு, அங்கு ஒரு குடியரசை நிறுவி னர். உருேமிலிருந்து பாப்பு துரத்தப்பட்டமை உருேமன் கத்தோ லிக்க உலகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியது. பிரான்சில் தன் உண்ணுட்டு நிலையை உறுதிப் படுத்திக் கொள்ள, கத் தோலிக்க கட்சியின் ஆதரவைத் தேடி நின்ற இலூயி நெப்போலியன், உடனே பாப்புவுக்கு உதவியளிக்கத் திட்டமிட்டு, மசீனிக்கெதிராக ஒரு படையை அனுப்பி வைத்தார். உருேமைப் பாதுகாத்து நின்ற கரி பால்தியின் துருப்புக்களுக்கும் பிரெஞ்சுத் துருப்புக்களுக்குமிடையே, இரு மாத காலம் கடும்போர் நிகழ்ந்தது. ஈற்றில் பிரெஞ்சுக்கார ரிடம் கரிபால்தியின் துருப்புக்கள் சரணடைந்தன. ஒன்பதாம் பத்தி நாதர் உருேமுக்குத் திரும்பினர் ; பிற்போக்குவாதம் மீண்டும் வெற்றி பெற்றது.

ஐரோப்பாவில் தாராண்மை வாதமும் நாட்டினவாதமும் 29
இத்தாலியின் எதிர்காலம், பீட்டுமன்றின் சரள்சு அல்பேட்டின் செயலில் தான் தங்கி நின்றது. அவர் பொது மக்களினல் திரும்பவும் தூண்டப்பட்டு, இத்தாலிய விடுதலைக்காக மீண்டுமொரு முறை முயற்சி செய்தார். மார்ச் 12, 1849 இல் ஒசுத்திரிய உடன் படிக்கையை நிரா கரித்து, 20 ஆம் நாள் ஒசுத்திரியருக்கெதிராக தாக்குதலை ஆரம்பித்த அவர், 23 ஆம் நாள் நவாரா (Novaraj எனுமிடத்தில் படுதோல்வி u60) —j555 frori. இத்தோல்வியினல் மனமுடைந்த சாள்சு அல்பேட் ஒசுத்திரியருடன் சமாதானம் செய்வதை விரும்பாது, அடுத்த தினமே தனது மகன் இரண்டாம் விற்றர் இம்மானுவேவின் பேரில் அரசைத் துறந்தார்.
4. செர்மனி (1815-48)
செர்மனியும் நெப்போலியனும் :
பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் ஐரோப்பாவில், செர்மனிதான் அதி கூடுதலான பிளவுபட்ட நாடாயிருந்தது. அது பெயரளவில் உரோப ச் சக்கரவர்த்திக்குக் கழ்ப்படிவுள்ள, 200க்கு மேற்பட்ட நாடுகளைத் தன் னகத்தே கொண்டிருந்தது. தம் உண்ணுட்டு விவகாரங்க ளிலும், ஒருவரொருவரோடு கொண்ட பிற நாட்டு நடைமுறைகளிலும், ஒவ் வொரு அரசும், பூரண ஆதிபத்திய அதிகாரம் படைத்ததாக விளங் 8 ற்று. இந்தப் பிரிவினையை மாற்றி, இக்கால செர்மனியை சிருட் டித்தவர் நெப்போலியன் தான், என்பது சரித்திர வினேதங்களில் ஒன்ருகும். முதலாவது, அவர் சுதந்திர அரசுகளின் எண்ணிக்கையை 200 இலிருந்து 39 ஆகக் குறைத்து, ஒரு கூட்டாட்சியின் மூலம் ஒற்று மையைப் பெறுவதற்கு வழியைத் திறந்துவிட்டார். இரண்டாவ தாக, 1806 ஆம் ஆண்டு பரிசுத்த உரோம இராச்சியத்தை அழித்து அதற்குப் பதிலாக இறைன் கூட்டாட்சியமைப்பை ஏற்படுத்திஞர். மூன்ருவதாக, அதி முக்கியமானதான நாட்டினவாதத்தை அவர் தட்டியெழுப்பினர்.
செர்மனியும் வியன்ன மாநாடும் :
19 ஆம் நூற்றண்டின் செர்மன் அரசமைப்பு, 1815 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் அத்திவாரத்தில்தான் கட்டப்பட்டது. 39 அரசு கள் ஒரு கூட்டாட்சியமைப்பில் இலகுவாக இணைக்கப் பட்ட ன. அதில் ஒசுத்திரியா, பிரசியா என்ற இரு வல்லரசுகள், பல நடுத்தர இராச்சியங்கள் (பவேரியா, அனேவர், சக்சனி, உவேட்டம்பேக்), பல சிறு சிற்றரசுகள், நான்கு சுதந்திர ந்கரங்கள் யாவும் இடம் பெற்றன. ஒசுத்திரியா கூட்டாட்சியின் தலைவராகவும், பிர்
O-F ll

Page 79
130 w புது உலக சரித்திரம்
சியா உபதலைவராகவும் இயல்பாகத் தெரியப்பட்டன. டயற் (Diet) என்ற மத்திய பிரதிநிதிகளின் சபை பிராங்பேட்டில் அமைந்தது. நடைமுறையில் அது நிருவாக அதிகாரமின்றி, அரசியலில் பயனற்றதா கத் திகம்ந்தது. பெயரளவில், செர்மன் விவகாரங்களைக் கட்டுப்படுத்த அதிகாரம் பெற்றிருந்தபோதிலும், தலைவரின் திட்டமிட்ட செயல்களி லுைம், சிற்றரசுகளின் ஒத்துழையாமையினலும், பிரசி யாவுக் கும் ஒசுத்திரியாவுக்கு மிடையே ஏற்பட்ட போட்டியினலும், சபை, செய லாற்றும் தகைமையை இழந்தது. ஒசுத்திரியப் பேரரசின் பெரும் பகுதி, செர்மனிக்கு வெளியே இருந்தமையினல், அது செர்மன் ஐக்கி யத்தைச் சிதைக்கவும், தனது தலைமையை நிலைநாட்டவுமே க ரு ம மாற்றியது. செர்மன் அரசுகளுள், பிரசியா மாத்திரமே ஒசுத்திரியா வின் ஆதிக்கத்தை சிதைக்க வல்லது. ஆனல் புரட்சிகளுக்குப் பயந்த பிரசிய மன்னன் மூன்ருவது பிறடறிக் உலில்லியமும், மற்றேணிக்கின் வலையில் சிக்குண்டு எதேச்சாதிகாரத்தையே பின்பற்றலானன். இவ் வாறு 1815 தொடக்கம், மற்றேணிக்கினுடைய எதேச்சாதிகாரம், மத் திய ஐரோப்பாவில் நிலைத்தது.
ar där SAGu“ s ut sur ssir (Carlsbad Decrees) :
வியன்ன உடன்படிக்கை செர்மானியரின் நாட்டின, சனநாயக ஆசைகளைப் பூர்த்தி செய்யாது விட்டதனல், அவர்கள் எமாற்ற மடைந்தனர். இந்த ஏமாற்றத்திலிருந்து, செர் மன் சர்வகலாசாலைகளில் ஒரு நாட்டின இயக்கம் பிறந்தது. நாட்டின், ச ன நாயக க் கொள்கைகள், அழிந்து போகாது மக்களின் உள்ளங்களில் உறுதி பெறச் செய்யும் நோக் TTSTS ETTTTTLTT S SSTLTLTT LLLLLLLLS SSLLLLLLLLtttLLLlLLLlLLtS TTT TT TYTTTJT தாபித்தனர். அவர்கள் புரட்டத்தாந்து மதத்தின் 300 ஆம் ஆண்டு விழாவை வோட் பேகில் (Warburg) அதி சிறப்பாகக் கொண்டாடினர். சில நாள்களுக்குள் கேரட்செபியு (Kotzebue) என்ற ஒரு பத்திரிகை ஆசிரியர், கொலை செய்யப்பட்டார். இச்சம்பவங்களே மற்றேணிக் நன்கு பயன் படுத்தி, புரட்சிகளினல் எழக்கூடிய அபாயங்களைப் பிரசிய அர சருக்கும் செர்மன் சிற்றரசர்களுக்கும் எடுத்துக்கூறி, அவர்களை தன் பக்கம் திருப்பி, மத் திய ஐரோப்பாவின் நிலையை பரிசீலனை செய்வதற்காக, 1819 ஆம் ஆண்டு காள் சிபேட் டில் செர்மன அரசர்களைக் கொண்ட ஒரு மாநாட்டைக் கூட்டினர். அங்கு மற்றேணிக்கின் தூண்டுதலின் பேரில், எல்லா சுயேச்சுை இயக்கங்களும் அடக்கப்படல் வேண்டுமென தீர் மானித்தனர். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, அரசுகள் மேற் கொள்ளக்கூடிய வழி வகைகளும் பிரகடனம் செய்யப்பட்டன. இவை யே காள் சிபேட் கட்டளைகள் என்று பெயர் பெற்றன. சர்வகலாசாலைகளை மேற்பார்வை செய்தல், பத்திரிகைகளைத் தணித் தல், மாணவர் சங்கங்களை அடக்குதல் போன்றவை இச்சட்டங்களில் முக்கியமானவை.
சொல்வறைன் (Zolverein) :
மத்திய ஐரோப்பாவின் அரசியலபிவிருத்தி மற்றேணிக்கினல் தடை செய்யப்பட்டபோதிலும், அவருடைய நோக்கங்களை முறியடிக்கும் வல் லமை பொருந்திய இரண்டு இயக்கங்கள் செர்மனியில் தோன்றின. 1818 ஆம் ஆண்டு பிரசியாவின் தலைமையில் "சொல்வறைன்' என்ற

ஐரோப்பாவில் தாராண்மை வாதமும் நாட்டினவாதமும் 13
ஒரு சுங்கச் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. பிரசியாவும், அயல் சிற் றரசுகளும் தங்களது சுங்கவரி முறையை மாற்றியமைத்து, வரியில்லா வாணிக முறையை மேற்கொண்டன. இந்த ஒத்துழைப்பினல் ஏற் பட்ட பலன்களைக் கண்ட மற்ற அரசர்களும், படிப்படியாக ஐக்கியத் தில் பங்குபற்றலாயினர். 1848 ஆம் ஆண்டு, செர்மன் அரசுகள் யாவும் அதில் சேர்ந்து விட்டன. அரசியற் கருமங்களில் பிரசியா தலைமை தாங்க முடியாமற் போனபோதிலும், பொருளாதார விவகாரங்க ளில் செர்மன் நாடுகளைத் தனது தலைமையில் ஒற்றுமைப் படுத்தியது.
இலக்கிய மறுமலர்ச்சி :
இத்தாலியில் போன்று, செர்மனியிலும் ஒற்றுமை இயக்கங்கள் தடைப்பட்டபோதிலும், நாட்டினவுணர்ச்சி, கற்பனையுலகில் உன்னத உயர்வைப் பெற்றது. இலக்கியத்துறையில் கவிஞர்கள், தத்துவ ஞானிகள், சரித்திராசிரியர்கள் எல்லோரும் செர்மன் ஐக்கியத்தின் சிறப்புக்களை எடுத்துரைத்தனர். பிச்சே (Richte), எகல் (Hegel), சிற் றைன் (Stein) என்ற எழுத்தாளர்கள், இந்த இலக்கியப் புத்துணர்ச் சிக்கு நடு நாயகமாக விளங்கினர். சரித்திராசிரியர்கள் செர்மனியின் பழைமையையும் சிறப்பையும் புதிதாக எழுதினர். பேவின், பிறெ சுலோ, பொண், மூனிக், இலைப்சிக் எனுமிடங்களின் சர்வகலாசாலைகள் செர்மன் இலக்கியங்களைப் படிப்பதில், புது ஊக்கம் காட்டின. சர்வ கலாசாலைப் பேராசிரியர்களும், மாணவர்களும், மக்களின் எண்ணங் களைச் சிற்றரசுகளின் குறுகிய உலகிலிருந்து, முழு செர்மானிய பரந்த உலகிற்குயர்த்தினர்.
1848 ஆம் ஆண்டுப் புரட்சி :
1848 ஆம் ஆண்டு செர்மன் புரட்சியில் தேச ஒற்றுமை, சன நாயகச் சீர்திருத்தம் எனும் இரண்டு இயக்கங்களும் ஒருங்கே அமைந் தன. செர்மனி முழுவதிலும், மிதவாதிகளின் அரசியல் உரிமைகள், பத்திரிகைச் சுதந்திரம், யாப்புறு ஆட்சிமுறைக் கோரிக்கைகள் தீ போலப் பரவி, பிரசியா, சக்சனி, பவேரியா, அணுேவர், பேடன் ஆகிய இடங்களில் புரட்சிகளை ஏற்படுத்தின. இறைன் நதி தொடக் கம் டனியூப் ஈருக, யாப்புறு முடியாட்சி முறைக்காகப் பரபரப்பும் கிளர்ச்சிகளும் உண்டாயின. பல சிற்றரசர்கள் தாமதமின்றிச் சீர் திருத்தங்களை அங்கீகரித்தனர். வியன்னவில் நடைபெற்றவற்றைக் கண்டு பயமடைந்த பிரசிய அரசர், மக்களின் கோரிக்கைகளை அங்கீ கரித்தார்; இம் முன்மாதிரியைப் பின்பற்றி சக்சனி, அனேவர், பவே ரிய அரசர்களும் சீர்திருத்தங்களை ஒப்புக் கொண்டனர். செர்மனி முழுவதிலும் சனநாயகக் கிளர்ச்சி வெற்றி பெற்றது.

Page 80
132 புது உலக சரித்திரம்
புள் சிட்யும் பிறடறிக் உவில்லியமும் :
பாசியாவின, நான்காவது பிறடறிக் உவில்லியம், தாராண்மைவாதத்துக்கும் பதேச்சாதிகாரத்துக்கு மிடையில் சந்தர்ப்பத்துக்குத் தக்கவாறு, கொப்பு விட்டுக் கொப்புப் பாய்ந்து கொண்டிருந்தார். ஒரு புறம், புரட்சிவாதிகளுக்கு அச்சமும் மறு புறம், தன்னிலும் உறுதியான தீர்மானத்தைக் கொண்ட மற்றேணிக்குக்கு அஞ்சியதுமே, இவரது தடுமாற்றத்துக்குக் காரணமாகும். முடியாட்சியின் உரிமைகளில் தளராத நம்பிக்கை வைத்திருந்த அவர், அதே நேரத்தில் தாராள நாட்டினக் கொள்கைகளிலும் உண்மை யான பற்றுக் கொண்டிருந்தார். புரட்சிகளே அவர் விரும்பவில்லை ; ஆனல் விடுதலைப் போருக்குப்பின், பிரசியாவுக்கு வாக்களிக்கப்பட்ட யாப்புறு முடியாட்சியின் சில அம்சங்களே யாவது நிறைவேற்றத் தான் கடமைப் பட்டவர் என்று எண்ணினர். இப்பேர்ப்பட்ட மனே நிலையைக் கொண்ட பிறடறிக் உலில்லியம் 1848 ஆம் ஆண்டு இலட்சியக் கொள்கைகளினல் பாதிக்கப்படாமல் இருக்க முடியவில்லை.
புரட்சியின் முதல் மாதத்திலேயே (மார்ச்) அரசன், ஒரு புது அரசமைப்புத் திட்டத்துக்குத் தனது அங்கீகாரத்தைக் கொடுத்தார். பொதுமக்களின் உள்ளப் பூரிப்பில் தானும் பங்குபற்றி, செர்மனி யின் தலைமையைத் தான் ஏற்கப்போவதாகவும் “இனிமேல் செர்மனி யின் நலவுரிமைகளே பிரசியாவினதாக இருக்கும்” என்றும் கூறினர். ஆல்ை, இம்மனநிலை விரைவில் மாறியது. வியன்னவிலும், ஏனைய செர்மன் நாடுகளிலும் புரட்சிகள் தோல்வியடைவதைக் கண்டதும், பிறடறிக் உலில்லியம், அப்பொழுது பேளினில் எழுச்சி பெற்றுவந்த புரட்சிகளின் எதிரியும், அரசுரிமையின் பாதுகாவலனுமான பிசுமாக் கின் ஆலோசனைகளுக்கு செவிசாய்த்து, 1848 ஆம் ஆண்டு, தாராண்மை வாதத்தையும் நாட்டினவாதத்தையும் புறக்கணித்தார். பேவின் புரட்சி அடக்கப்பட்டது : புது அரசமைப்புத் திட்டத்தில் முடியாட் சிக்குச் சாதகமாக மாற்றங்கள் செய்யப்பட்டன; எதேச்சாதிகார அமைச்சுச் சபை நியமிக்கப்பட்டது.
பிராங்பேட் பாராளுமன்றம் :
பிரசிய மன்னரின் ஆரம்ப மனமாற்றம், தேசபக்தர்களுக்கு நம் பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்தது. இவ்வுற்சாகத்தின் மத்தி யில்நாட்டுப் பாராளுமன்றம் (Worparliament) 1848 ஆம் ஆண்டு பிராங் பேட்டில் கூடிற்று. மத்திய ஐரோப்பாவின் செர்மன் மொழி பேசும் மக்களின் முதற் தேசப் பாராளும்ன்றம் இதுவே : செர்மன் கூட் டாட்சியமைப்பின் எல்லா அரசுகளினதும், சர்வசன வாக்குரிமை யினுல் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டிருந்தது : ஐக் கிய செர்மனிக்கு ஓர் அரசமைப்புத் திட்டத்தை அமைப்பதே அதன் வேலைய்ாயிற்று.
இம்மன்றத்துக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட பிரச்சினைகள், சிக்கல்கள் நிறைந்தவை. சபையின் 831 அங்கத்தவர்களில் 600 பேரளவில் அரசி யல் விவகாரங்களில் அனுபவமற்ற நியாயவாதிகளும் சர்வகலா

ஐரோப்பாவில் தாராண்மை வாதமும் நாட்டினவாதமும் 33
சாலைப் பேராசிரியர்களுமாவர். பல நூற்ருண்டுகளின் சரித்திரப் போக்கை மாற்றியமைத்தல், 39 அரசுகளின் தனித்தியங்கும் தன் மையை மேற்கொள்ளல், அவ்வரசர்களுக்கு ந ட் ட ஈடு தேடிக் கொடுத்தல், பிரசியாவுக்கும், ஒசுத்திரியாவுக்கும் ஐக்கிய அமைப்பில் இடம் தேடல் போன்ற பல சிக்கல் நிறைந்த பிரச்சினைகளை பிராங் பேட் பாராளும்ன்றம் தீர்க்க வேண்டியதாயிற்று. ஐக்கிய செர்ம னிக்கு ஒர் அரசமைப்புத் திட்டத்தைத் தயாரிக்கும் வேலை முற்றுப் பெறுவதற்குள் உற்சாகம் குன்றியது மல்லாமல், பழைய எதேச்சாதி கார சக்திகள் மீண்டும் புத் துயிர் பெற்றன. ஒசுத்திரியா, தன் எல்லைகளுக்குள் நடைபெற்ற புரட்சிகளை அடக்கியதுடன், செர்மன் விவகாரங்களைக் கூர்மையாக அவதானித்தும் வந்தது. அரசன், தன் முந்தின செயல்களெல்லாவற்றையும் மறந்து, யதேச்சாதிகாரத்தின் பக்கம் சரிந்து கொண்டு வந்த நேரத்தில், புது அரசமைப்புத் திட் டத்தின்படி ஐக்கிய செர்மன் பேரரசின் முடியை, பிராங்பேட் பாராளுமன்றம் 1849 ஆம் ஆண்டு மார்ச் மாதம், பிறடறிக் உவில்லி யத்துக்குக் கொடுத்தது. இப்பதவியைத் தான் ஏற்ருல், செர்மன் விவகாரங்களில், ஒசுத்திரியா இரண்டாவது இடத்தை வகிக்க மறுக்கு மென்றும், அதனுல் யுத்தம் ஏற்படக் கூடுமெனவும் அஞ்சிய பிறடறிக் உவில்லியம், முடியை ஏற்க மறுத்தார். அத்துடன் ஒரு புரட்சிச் சபை அவ்வுயர் பதவியைத் தனக்களிக்க உரிமையற்றது என்பது போலவும் காட்டிக் கொண்டார்.
பிரசிய மன்னனின் மறுப்புடன் பி ரா ங் பே ட் பாராளு மன்ற தேசபக்தர்களின் நம்பிக்கை மறைந்தது. சிற்றரசர்களிற் பலர் புது அரசமைப்புத் திட்டத்தை ஏற்க மறுத்தனர். தீவிர சனநாயக வாதிகள் கலகங்களைத் தூண்ட முயற்சித்தனர் ; ஆனல் அவை பிர சிய இராணுவத்தினல் அடக்கப்பட்டன. அதனுடன் பிரசிய அரசன் பிராங்பேட் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு, பிரசிய மக்களுக் குத் தன்னிட்டப்படி ஒர் அரசியல் திட்டத்தை வழங்கினர்.
67 Gust" gäsuu (The Union of Erfurt) :
பிராங்பேட் பாராளுமன்றம் உவந்தளித்த ஐக்கிய செர்மனியின் தலைமைப் பதவியை பிறடறிக் உலில்லியம் ஏற்க மறுத்தபோதிலும் அவர் செர்மன் ஐக்கியக் கொள்கையைக் கைவிடவில்லை. அதற்குப் பதிலாக செர்மன் அரசுகளின் 'ஐக்கியம்’ (Union) ஒன்றைச் சிருட் டிக்க நோக்கங் கொண்டார். அனுேவர், சக்சனி, உவேட்டம்பேக், பவேரியா எனும் நான்கு இராச்சியங்களும், செர்மனியின் குறுநில அாசுகளும், பிரசியாவுடன் ஒர் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு, ஏபேட்டில் ஒரு செர்மன் பாராளுமன்றத்தைக் கூட்டினர். ஆனல் இத்
A ll li

Page 81
134 புது உலக சரித்திரம்
திட்டம், வெகுவிரைவில் தோல்வியடைந்தது. புரட்சியிலிருந்து வெற்றி பெற்ற ஒசுத்திரியா, தான் இத்திட்டத்துக்கு மாறென பகிரங்க மாகக் கூறிற்று. ஒன்று கூடிய இராச்சியங்கள் யாவும் பிரசியாவை விட்டு விலகின. தனித்து, ஒசுத்திரியாவுடன் போர் தொடுக்க விரும் பாத பிரசியா, 1850 ஆம் ஆண்டு ஒல்மட்சில் (Olmutz) அடிபணிந் தது. ஈற்றில் நாட்டினவாதமும், பிரசியாவும் தோல்வியெனும் கசப் பான காடியை நிறையப் பருகின.
5. ஒசுத்திரியா-அங்கேரி (1815-1848)
ஒசுத்திரியாவை எதிர்த்து நின்ற பிரச்சினைகளைப்போல் சிக்கல் நிறைந்தவை ஐரோப்பாவில் வேறெந்த நாட்டிலாவது எழவில்லை. இக்தாலி, செர்மனி, போலந்து, போல்கன் நாடுகள் முதலியவற்றின் எதிர்காலத்தை நிர்ணயிக்கவல்ல, அதிமுக்கிய நாடாக ஒசுத்திரியா மத்திய ஐரோப்பாவில் விளங்கியது.
ஒசுத்திரியா பல்லினமும், பன்மொழியினரும் பரந்திருந்த ஒரு பெரும் நிலப்பரப்பு. இப் பேரரசினுள் செர்மன், மாகியர், செக், சுலோவாக், போல், உறு தீன், குருேட், சேர்பியர், சுலோவீன், இத்தாலியர், உறுர மேனியர், யூதர் எனும் பன்னிரண்டுக்குக் குறை யாத இனத்தினர் வாழ்ந்து வரலாயினர். இப் பல்வேறுபட்ட மக்களின் ஒவ்வாப் பண்பாடுகளையும் ஒன்ருக ஆட்சிபுரிவது முடியாத சரும மாயிற்று. இதனுல் தான், செர்மனியிலும், இத்தாலியிலும் மக்களை ஒற்றுமைப்படுத்தும் சக்தியாக விளங்கிய நாட்டினவாதம், ஒசுத்திரி யாவில் மக்களைப் பிளவுபடுத்தும் சக்தியாக விளங்கியது. ஒசுத்திரிய பேரரசினுள் தாராள, நாட்டினவாதக் கொள்கைகள் உட்புகா வண்ணம் பாதுகாப்பதற்கு எல்லா முயற்சிகளையும், அரசாங்கம் மேற் கொண்டது. நிகழ்வு நிலையைப் பாதுகாப்பதிலேயே, அரசாங்கம் தன் முழுச் சக்தியையும் வீண் விரயம் செய்தது. பிரான்சில் பழைய ஆட்சி முறையின் கீழ்ப்போன்று, மானியமுறைச் சலுகைகள் ஒசுத் திரியாவில் விவசாயத்தை ஒரு பயன்தரா முயற்சியாக்கின. வியாபா ரமும், கைத்தொழிலும் கீழ் நிலையை எய்தின.
unib (3p 68vsfaä :,
1809 தொடக்கம், நாற்பது ஆண்டுகளுக்கு ஒசுத்திரியாவை வழிநடத்திய மற்றேணிக் 1815 தொட்டு, ஐரோப்பாவின் அதி முக்கியத்துவம் வாய்ந்த தனி நபராகத் திகழ்ந்தார். அவரது தனிப்பட்ட வசீகரம், எவருடனும் பண்புடன் பழகும் பக்குவம், அவரது அரசியல் சாணக்கியம், மக்களைப் பூரணமாகக் கணிக்கும் விவேகம், சூழியலில் உன்னத தேர் ச் சி, எந்தச் சிக்கலான பிரச்சினையையும் துருவி அணுகும் ஆற்றல் இவை யாவும், மற்றேணிக் குக்கு வியன்ன மாநாட்டிலும், பின்பு, மத்திய ஐரோப்பாவிலும் அதி உன்னத இடத்தை பெற்றுக் கொடுத்தன.

ஐரோப்பாவில் தாராண்மை வாதமும் நாட்டினவாதமும் 35
மற்றேணிக் ஒரு சூழ்ச்சிக்காரனென்றும், ஒரு சந்தர்ப்பவாதி யென்றும், "மினுக்க முடைய அற்பன்" என்றும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளார். அனறும், இன்றும் தாராணம்ை வாதிகளும், சனநாயக வாதிகளும் அவரை ஒர் பிற்போக்குவாதி எனறும், காலத்தின் கோலத்துக்கேற்ப நடக்காதவரென்றும், மக்களின் விருப்பங்களைத் தயவு தாட்சணிய மிறிை அடக்கி ஒடுக்கினவரென்றும் தாக்குகின்றனர். ஆனல், மற்றேணிக் ஒசுத்திரியாவின நலத் தையே தன்னலமாகக் கொண்டு கருமமாற்றினர், என்பதை மறுப்பதற்கில்லை.
ʼ `i
ஒசுத்திரிய பேரரசானது, பாரம்பரிய வாரிசுரிமையினுல், அல்லது திருமண சீதனத் தினல் பெறப்பட்ட நாடுகளையும், போரின் அல்லது இராசதந்திரத்தின் விளைவாக வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளையும், துருக்கியின் ஆக்கிரமிப்புக் கெதிரே அணைகட்டும் நோக்குடன் இணைக்கப்பட்ட நாடுகளையும் உள்ளடக்கியது. இந்த பலவிதப்பட்ட நாடுகளில் காணப்பட்ட வேறுபாடுகள் அனந்தம். இந்த வேறுபட்ட பகுதிகள், தாம் ஒரு பொது எசமானுக்கு அமைய வேண்டு மென்ற ஒரேயொரு கொள்கையைத் தவிர, வேறு எவ்வித பொது க் கொள்கைகளினுலும் கட்டுப்படவில்லை யென்பதை மற்றேணிக் நன்குணர்நதவர். எனவே இப்பேர்ப்பட்ட ஓர் அமைப்பினுள் தாராள, நாட்டினக் கொள்கைகள் புகுந்தால், அதன சமநிலை நொடிப் பொழுதில் மறையும் என்றும் மற்றேணிக் அறிவார். எனவே, அவ ரது சந்தர்ப்ப வாதத்துக்கும், ஒளிப்பு மறைப்புக்கும் பினனல் ஒசுத்திரிய சாம்ராச்சி யத்தை எப்படியும் பாதுகாக்க வேண்டு மென்ற ஒரு நியாயமான கொள்கையும், சரித்திர முன்னறிவும் மறைந்து நின்றன. புதுச் சக்திகளினல் வற்படக் கூடிய அபாயங்களைத் தெளி வாகக கண்ட மற்றேணிக், இத்தாலியிலும் செர்மனியிலும் நாட்டின, தாராளக் கிளர்ச்சிகளை ஒடுக்கவும், போல்கன் நாடுகளின் சுதந்திர நாட்டங்களை எதிர்க்கவும், இடையிடையே இர சிய சாரின் மனதில் எழுந்த சனநாயக, நாட்டின மனமற்றங்களைத் தணிக்கவும் திடம் கொண்டார். அதே நேரத்தில், ஐரோப்பிய மாநாட்டு முறைமையை, ஐந்து வல்லரசுகளின் சமநிலையினல் பாதுகாக்கவும் முயன்றர். இரசியாவின் அதிகரித்த பெலத்தினல், அலலது பிரான்சின் பெலக் குறைவால், அல்லது பிரித்தானியாவின் கடற் பெலத்தின் மிகுதியினல, ஐரோப்பிய மாநாட்டு முறையை நிலை குலையாமல் பாதுகாக்க வேண்டுமென்று உறுதி கொண்டார்.
பிற்கால சந்ததியாருக்கு மற்றேணிக்கின் நோக்கங்கள் அரசியல் சாணக்கியம் நிறைந்த வையாகக் காணப்படவில்லை. அவை எதிர் மறையான சமயோசிதச் செயல்களாகவும், அடககு முறையை அடிப்படையாகக் கொண்டனவாகவும், காலத்தின் போக்குக்கு முழு மாறனவையு மாகவே காணப் பட்டன. ஒசுத்திரிய புனரமைப்பின் அத்தியாவசியம், 18 ஆம் நூற்றண்டின் முடிபுக்கு முன்னமே, உணரப்படலாயிற்று. இரண்டாம் யோசேப் இக்கருமத்தை ஒள்ளிய வல்லாட்சியின் மூலம் நிறைவேற்ற முயற்சித்துத் தோல்வியே கண்டார். ஒள்ளிய வல்லாட்சி தோல்வியடைந்த இடத்தில் தாராண்மை வாதமும் நாட்டின வாதமும் தேசத்தை ஒற்று மைப் படுத்தும் சக்திகளாக அமையப் போவதில்லை யென்பதை மற்றேணிக் நன்கறிவர்: எனவே, அவர் தான் விசேட திறமையும், ஆதிக்கமும் பெற்றிருந்த வெளி நாட்டுப் பூட் கையின் வழியாகத் தீர்க்க முற்பட்டார்.
மற்றேணிக் தனக்கு முன் தோன்றிய சிக்கலான பிரச்சனையை விவரிக்கும்கால் 'நான் உலகத்தில் ஒன்றில் அதி முன்னதாக அல்லது அதி பின்னதாகவே வந்துள்ளேன். முன் தோன்றியிருப்பின், காலத்தை நான் சுவைத்திருப்பேன், பின் வந்திருப்பின், அதை மாற்றியமைக்க உதவியிருப்பேன். ஆனல், இன்று, நான் உழுத்துப்போன தாபனங் களுக்கு உறுதுணையளிப்பதிலேயே என் வாழ் நாளேச் வீணுளாக்க வேண்டியிருக்கிறது” என வர்ணித்தார். அவர் ஒசுத்திரிய பிரச்சினையையும், ஐரோப்பிய பிரசசினையையும் வல்லர சுகளின் அரசவலுச் சமநிலையினலும், நிகழ்வு நிலை யை உறுதிப் படுத்துவதி

Page 82
3 புது உலக சரித்திரம்
ரூலும் தீர்க்கலாமென்ற முடிபுக்கு வந்தார். ஆனல் அவரைக் கண்டித்த ஐரோப்பா, பெருமளவுக்கு அவரது முயற்சியினலேயே நாற்பது ஆண்டுகளாக அமைதியை அனுப வித்தது.
1830 ஆம் ஆண்டுப் புரட்சியும், ஒசுத்திரியாவும் :
மற்றேணிக்கிய முறையின் வெற்றியினலேயே, 1830 ஆம் ஆண்டுப் புரட்சி, ஒசுத்திரிய பேரரசை விலகிச் சென்றது. ஒசுத்திரியாவுக்கு வெளியே, இத்தாலியில் ஏற்பட்ட கலகங்கள் ஒசுத்திரிய துருப்புக் களில்ை இலகுவாக அடக்கப்பட்டன. செர்மனியில் உண்டான கல க் த்தைக் கண்ட ஒசுத்திரிய, இரசிய அரசர்கள், தத்தம் நாடுகளி லிருந்து, தாராண்மை வாதத்தை ஒடுக்க உறுதி கொண்டனர்.
நாட்டினவாதமும் விவசாய அதிருப்தியும் :
செர்மனியிலும், இத்தாலியிலும் போன்று, ஒசுத்திரியா-அங்கேரி ஆகியனவிலும் அடுத்த இருபது ஆண்டுகளில், நாட்டினவாதம் நன்கு வளர்ந்து வரலாயிற்று. அரசன், மக்களின் அவதானத்தை அரசியற் பிரச்சினைகளிலிருந்து திருப்பும் நோக்குடன், பேரரசின் மாகாணங்க ளில் தேச மொழிகளைப் பயிலுவதை ஆதரித்தான். ஆனல் இம் மொழிச் சங்கங்கள் நாட்டினவாதத்தைப் பரப்பும் கழகங்களாக LDTa56or. 1846 36) d.357 LT 667 3,686?uj 636Tij6 (Galician rising) விவசாயப் பாமர மக்களின் அதிருப்தியைத் தெளிவாக எடுத் துரைத்தது.
எனவே, 1848 ஆம் ஆண்டுப் பிரெஞ்சுப் புரட்சி, ஐரோப்பாவை ஆட்கொண்டபோது, ஒசுத்திரியாவுக்கும், புரட்சி, காட்டுத் தீ போலப் பரவ, தேவையான சூழ்நிலைகள் அங்கு அமைந்திருந்தன.
1848 ஆம் ஆண்டுப் புரட்சி :
“பிரான்சில் தடிமன் ஏற்படும்போது, ஐரோப்பா எங்கணும், தும் மல் உண்டாகும்' என்ற மற்றேணிக்கின் வாக்குக்கிசைய, 1848 ஆம் ஆண்டுப் பிரெஞ்சுப் புரட்சியைப் பின்பற்றி, ஒசுத்திரியாவில் குமுறிக் கொண்டிருந்த எரிமலை வெடித்தது. தேசமெங்கும் புரட்சிக் கனல் பரவியது. ஒசுத்திரியப் பேரரசுக்குள் வியன்ன, மிலான், வெனிசு, பொகீமியா, அங்கேரி எனும் ஐந்திடங்களில் புரட்சிகள் தோன்றின. முதற் கலகம், மார்ச் மாதம் வியன்னுவில் ஏற்பட்டது. சன நாயகச் சீர்திருத்தங்களைப் பெறும் நோக்குடனேயே, புரட்சி ஆரம்பிக் கப்பட்டது.
முதல் அதிர்ச்சியுடன், மற்றேணிக் நாட்டைவிட்டு ஒட்டம் பிடித்து, இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார். மற்றேணிக்கின் மறை

ஐரோப்பாவில் தாராண்மை வாதமும் நாட்டினவாதமும் 137
வுடன், வியன்ன ஒரு பருவத்துக்கு, பொது சனத்தினதும் மாணவ ரினதும் கைகளில் சிக்குண்டது. முதலாம் பேடினந்து தாராள அர சியல் திட்டமொன்றை உருவாக்க வாக்களித்ததுடன், தேச சபையை யும் கூட்டச் சம்மதித்தார். நிலை மோசமடைவதைக் கண்டு, அரசர் இனிசிபிறக் (Innsbruck) குக்கு ஒட்டம் பிடித்தார். சீக்கிரம் கூடிய நாட்டுச் சபை, ஒரு மகத்தான கருமத்தைச் செய்து முடித்தது ; ஒசுத் திரியாவிலிருந்து மானிய முறைமையை நீக்கியது.
பேடினந்து அரசரும், தன் மருமகன் முதலாம் பிரான்சிசு யோசேப்புக்கு முடிசூட்டித் தாம் அரச பதவியைத் துறந்தார்
இரண்டாவது புரட்சி இத்தாலியப் பிரதேசமான மிலான், வெனி சில் ஏற்பட்டன. அவை முன்னரே விவரிக்கப்பட்டுள்ளன. ஒசுத் திரிய துருப்புக்கள், இரு நாடுகளிலிருந்தும் துரத்தப்பட்டதுடன், சாள்சு அல்பேட்டின் கீழ் விடுதலைப் போராட்டம் ஆரம்பமாயிற்று.
மூன்ருவது கிளர்ச்சி பொகீமியாவின் தலைநகரான பிரேக்கில் (Prague) காட்சியளித்தது. பொகீமியாவில் செக் (Czech) சாதி யினர், பெரும்பான்மையினராக விருந்தபோதும், சிறுபான்மையினரில் முக்கியமான செர்மன் இனத்தினரே, நாட்டில் முதன்மை பெறலா யினர். செக் சாதியினர், அரசியல் சுய நிர்ணய உரிமை கோரிய துடன் செர்மானியருடன் சம உரிமை வேண்டுமென்றும் வாதாடினர்.
நான்காவது புரட்சி அங்கேரியில் ஏற்பட்டது. அதன் தலைநகரான புடாபெசுத்தில் (Budapest) ஏற்பட்ட கிளர்ச்சியும் சுயநிர்ணய உரிமை, யாப்புறு ஆட்சி முறை எனும் இரு நோக்கங்களைக் கொண்டது. இலூயி கொசத் (Louis Kossuth) என்ற பத்திரிகையாசிரியரின் தலைமை யில், மாகியர் (Magyars) பாராளுமன்ற ஆட்சி முறையையும், தாரா ளச் சீர்திருத்தங்களையும் வேண்டிக் கலகம் செய்தனர். அங்கேரியை, அப்சுபேர்க்கு மன்னரின் பெயரின் கீழ், ஒரு தனிச் சனநாயக அரசாக அமைப்பதே அவர்கள் கொண்ட இலட்சியமாகும். மன்னரும் அவர் களது கோரிக்கைகளுக்கிணங்க வற்புறுத்தப்பட்டார். அங்கேரியப் பாராளுமன்றம், உடனே 'மார்ச்சுச் சட்டங்களை' (March Laws) அரங் கேற்றியது. மானிய முறை, பிரபுக்களின் விசேட உரிமைகள் யாவும் நீக்கப்பட்டு நடுவர்முறை, பத்திரிகைச் சுதந்திரம், மதச் சுதந்திரம் என்பன பிரகடனம் செய்யப்பட்டன.
அங்கேரியப் புரட்சியில், எதிர்மாறன இருமுகப்பட்ட இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று பொருதி நின்றன. அங்கேரிய நாட்டினவாதம், மாகிய இனத்தவரின் மேன்மையைப் பிரத்தியேகமாக நிலைநாட்ட நோக்கம் கொண்டிருந்தது. மாகியர் தம் நாட்டில் வசித்த குருேட், உறுமேனி யர், சுலோவீன், சேபியர் சிறுபான்மையினங்களுக்கு, ஒரு விதமான

Page 83
38 புது உலக சரித்திரம்
உரிமைகளையும் கொடுக்காது, அடக்கியாள முயன்றனர். தம் நாட்டு உரிமைகளுக்கு எவ்வளவு பெலமாக அவர்கள் வாதாடினரோ, அதே யளவு திடத்துடன் தம் எல்லைகளுக்குள் வாழ்ந்த சிறுபான்மை யினருக்கு அவ்வுரிமைகளைக் கொடுக்க மறுத்தனர்.
இதிலிருந்து தான் ஐந்தாவது புரட்சி பிறந்தது. இவ்வியக்கம், மாகிய இனத்தவரின் சருவாதிகாரக் கோரிக்கைகளை ஆட்சேபிக்கும் முகமாக எழுந்து, ஒசுத்திரியாவை விட, அங்கேரியை எதிர்ப்பதையே நோக்கமாகக் கொண்டது. குருேட், கலோவீன், சேபியர் எ ன் ற இனங்கள் தம்முள் ஒற்றுமைப்பட்டு, மகியரின் நோக்கங்களை முறி யடிக்கவும் திடம் பூண்டனர். தென் சிலாவியரின் ஐக்கியத்தினல் இன்று ஏற்பட்டுள்ள யூகோசிலாவியாவின் ஒற்றுமையின் முதற்படி இதுவே. செலாசிக் (Jelagic) என்பவரின் தலைமையில் ஒரு பாராளு மன்றம் கூடி, மகியருக்கெதிரே யுத்தப் பிரகடனம் செய்யலாயிற்று.
1848 ஆம் ஆண்டுப் புரட்சியின் தோல்வி :
இராணுவத் துருப்புக்களின் இராச விசுவாசத்தினலேயே, சுத் திரியா, மரணப் படுக்கையிலிருந்து மீட்கப்பட்டது. இன்னும் ஒசுத் திரியாவின் பெலவீனத்துக்குக் காரணமாகவிருந்த சக்தியே இப்போது அதற்குப் பெலத்தைக் கொடுத்தது. சாம்ராச்சியத்தின் பல்வேறு பட்ட இனங்களும், அவற்றின் தனித்தனி இலட்சியங்களும், ஒற்றுமை யான நடவடிக்கைகளை யெடுப்பதற்கு பேரிடையூருக அமைந்தன. சந்தேகமும், பொருமையும் இனங்களைத் தனித்து இயங்கத் தூண்டி யதுமல்லாமல், ஒருவரையொருவர் எதிர்க்கவும் செய்தன. அரசாங்க மும் சூழ்நிலையை நன்கு பயன்படுத்திப் புரட்சிகளை ஒவ்வொன்றச அடக்கி வெற்றி ஈட்டியது.
அரசாங்கத்தின் முதல் வெற்றி பொகீமியாவில் ஏற்பட்டது. அங்கு சிலாவியர், செர்மானியருடன் உண்ணுட்டுக் கலகத்தில் ஈடு பட்டு நின்றனர். வின்டிசுகிருட்சு (Windischgratz) என்ற தளபதி யின் கீழ் அரசரின் துருப்புக்கள் பிரேக்கினுள் நுழைந்து கலகக் காரரை அடக்கினர். பொகீமியப் புரட்சி, யூன்மாதம், இரு வாரங்களுள் அடக்கப்பட்டது. w
அடுத்து, இத்தாலியப் புரட்சிகள் யூலை மாதம் நசுக்கப்பட்டன. சாடீனிய மன்னரும் அவரது துருப்புக்களும் குசுட்டோசாவில் தோற் கடிக்கப்பட்டதுடன், இத்தாலிய சுதந்திர இயக்கம் முளையிலேயே கிள்ளியெறியப்படலாயிற்று.
இதற்கிடையில், வியன்னப் புரட்சியும் ஒற்றுமையீனத்தினல் சின்னபின்னப்பட்டுக்கிடக்கும் வேளையில், ஒற்ருேபர் மாதம், வின்டிசு கிருட்சு வியன்னுவைச் சரணடையச் செய்தார்.

ஐரோப்பாவில் தாாாண்மை வாதமும் நாட்டின வாதமும் 139
பொகீமிய, இத்தாலிய இயக்கங்கள் அடக்கப்பட்டதுடன், அரசாங் கம் தன் முழு அவதானத்தையும் அங்கேரியின் மீது திருப்பியது. அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த உண்ணுட்டு யுத்தத்தில், முதல் செலாசிக் என்றவருக்கு ஆதரவும், உதவியும் காட்டினர். பின்பு அங்கேரியருக்கெதிராக நேர் யுத்தத்தில் ஒசுத்திரிய துருப்புக்கள் இறங்கின. அங்கேரியர் ஒசுத்திரிய அரசரை ஏற்க மறுத்து, தம் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்யலாயினர். இதைத் தொடர்ந்து கடும் யுத்தத்தில் அங்கேரியர், ஒசுத்திரியரைப் பலமாகத் தாக்கி நாலா பக்கங்களிலும் பின்வாங்கச் செய்தனர்.
மாகியரின் வெற்றிகளைக் கண்டு, போலந்தும் புரட்சி செய்யக் கூடுமென அஞ்சிய இரசிய சார் முதலாம் நிக்கலசு, ஒசுத்திரியருகு உதவி செய்ய முற்பட்டார். ஆயிரக்கணக்கான இரசிய துருப்புக் களை அனுப்பி, ஆகத்து மாதம் 1849 இல் அங்கேரியரை அடிபணியச் செய்தார்.
அரசியல் திட்டமும் மக்களின் உரிமைகளும் நிராகரிக்கப்பட்டன. புரட்சிக்காரர் மிகக் கொடூரமான தண்டனைகளுக்கு உள்ளாயினர். கொசத் நாடு கடத்தப்பட்டார்.
6. பெல்சிய சுதந்திரம்
16 ஆம் நூற்ருண்டு புரட்டத்தாந்து சீர்திருத்தத்தினல் எழுந்த டச்சுச் சுதந்திரப்போரில், இன்று ஒல்லாந்து என்று அழைக்கப்படும் வட மாகாணங்கள், சிபானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றன; பெல்சியம் என அழைக்கப்படும் தென்மாகாணங்கள் 1713 வரையும் சிபானிய ஏகாதிபத்தியத்துக்குள் ஓர் அங்கமாக இருந்து வந்தன. உற்றெச்சு ஒப்பந்தம் (1714) செய்யப்பட்ட போது பெல்சியம், ஒசுத்திரிய அப்சிபேக் மன்னருக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டது.
1794 ஆம் ஆண்டு பிரெஞ்சுத் துருப்புக்கள், பெல்சியத்துக்குள் பிரவேசித்து, அதனை அடிமைப்படுத்தி, பிரான்சுடன் இணைத்தன. 1814 வரையும், பெல்சியம் பிரான்சின் ஏகாதிபத்தியத்தில் ஒரு பகுதி யாக இடம் பெற்று வந்தது : நெப்போலிய சாம்ராச்சியம் வீழ்ந்த துடன், பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து அது விடுதலை பெற்றது. வியன்ன மாநாட்டில், பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கு இலக்காக இருந்த இந்நாட்டை ஒசுத்திரியா ஏற்க மறுத்தது. எனவே காசல்றீ, பெல்சியம் பிரான் சின் வடகிழக்கெல்லையை பெலப்படுத்த ஒல்லாந்துடன் இணைக்கப் படலாமென ஆலோசனை கூறினர். வியன்ன வல்லரசுகள் இதை யேற்று, 1815 இல் ஐரோப்பிய சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக

Page 84
40 புது உலக சரித்திரம்
இரு நாடுகளையும் ஒன்ருக்கின. இனம், மதம், மொழி, பாரம்பரியம் முதலிய துறைகளில் முற்றிலும் முரண்பட்ட இரு இனத்தினரை ஐக்கியப்படுத்தியமை நாட்டினக் கொள்கைகளுக்கு மாருனதாம். எனவே, இவர்கள் ஒற்றுமையாக வாழ முடியாமற் போனதில் அதிசயமொன்றுமில்லை.
பெல்சிய மக்கள் ஒல்லாந்தரின் ஆட்சியை வெறுக்க பல காரணங் களிருந்தன. ஒல்லாந்தின் குடிசனத் தொகை இரு கோடி ; பெல்சியத் தினது நான்கு கோடி. அப்படியிருந்த போதும், நாட்டுப் பொது மக்கள் மன்றத்தை ஒல்லாந்தில் நிறுவி, சிறுபான்மையினர், பெரும் பான்மையினரை கட்டியாள முயற்சித்தனர். குடிசனத்தைக் கணக் கெடாது, புதிதாக நிறுவப்பட்ட சட்டசபையில் ஒவ்வொரு நாட்டுக் கும் சம அளவான 55 பிரதிநிதிகள் இடம்பெறலாயினர். பெல்சியப் பிரதிநிதிகள் சிலர், ஒல்லாந்தருடன் ஒத்துழைத்தமையினல், பெல்சி யா, சபையில், நிரந்தரமான சிறுபான்மையாயினர் அரசாங்கக் கொள்கைகளைத் தாக்கி பேசினவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப் பட்டது. அரசாங்க உயர் பதவிகளெல்லாம் ஒல்லாந்தருக்கே கொடு பட்டன. மொழிப்பிரச்சினை இன்னும் எதிர்ப்பை வளர்த்தது. இரு நாடுகளிலும் டச்சு மொழியே பெருப்பான்மையினரின் மொழியாக இருந்தபோதும், அதைச் சட்டத்தின் மூலம் பெல்சிய மக்கள் மீது திணிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள், மனக்கசப்பை அதிகரிக்கச் செய்தன. புதுப் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில், பாகு பாடு காட்டப்பட்டமையும் நிதிபரிபாலன முறையும், அரசாங்கத்துக் கெதிராக பலமான எதிர்ப்பை உண்டுபண்ணின. யுத்த காலத்தில், ஒல்லாந்து பட்ட பெரும் கடனில் அரைவாசியை பெல்சியம் பொறுக்கவேண்டுமென வற்புறுத்தியமை, நீதியற்ற செயலாக பெல்சியரினுல் கருதப்பட்டது. இக் கடனைச் சமாளிக்கப் புது வரிகள் விதிக்கப்பட்டன. நாட்டில் பலமான எதிர்ப்பும் தோன்றியது.
மத விடயங்கள் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பிளவைப் பெரிதாக்கின. எல்லாப் பாடசாலைகளும் நாட்டுரிமையாக்கப்பட வேண்டுமென்ற டச்சுக்காரரின் கொள்கை, உருேமன் கத்தோலிக்க மதத்தைத் தழுவிய பெல்சியருக்கு அறவே பிடிக்கவில்லை. கத்தோலிக்க திருச்சபையும் ஒல்லாந்தருக்கெதிரே எழுந்த எதிர்ப்பிற்குத் தூபம் போட்டு அதை வளர்க்க உதவியது.
1830 ஆம் ஆண்டுப் புரட்சி :
பரிசில் புரட்சி ஏற்பட்ட காலத்தில், பெல்சியரும் புரட்சிக்கான
மனே நிலையிலேயே இருந்தனர். ஆகத்து மாதம் 15 ஆம் நாள், பிறகல்சு நகரில் சுதந்திரத்தைப் பற்றிய ஒரு இசை நாடகத்தைப்

ஐரோப்பாவில் தாராண்மை வாதமும் நாட்டினவாதமும் 14
இரசித்த மக்கள், உணர்ச்சி மிகுதியினல் கலகத்தை ஆரம்பித்தனர். முன்யோசனையின்றி ஆரம்பிக்கப்பட்ட இக்கலகம் மின்னல் வேகத்துடன், பெல்சியத்தின் ஏனைய நகரங்களுக்கும் பரவியது. டச்சு அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தயங்கியதனல், தீவிரவாதிகளின் கை பெலத்தது. ஒற்ருேபர் மாதம், பிறசல்சில் கூடிய ஒரு தற்காலிக சபை, பெல்சியத்தின் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது. நவம்பர் மாதம் 10 ஆம் நாள், தேச மாசபை அரசியல் திட்டத்தை வகுக்கும் வேலையிலிறங்கியது. இதைத் தொடர்ந்து, நாட்டின் உள்ளும் புறமும் பிரச்சினைகள் பல தோன்றின.
பிரான்சின் புது அரசரான இலூயி பிலிப்பே, இப்புரட்சியை பிரான் சின் இலாபத்துக்காகப் பயன்படுத்த முற்பட்டார். அதே நேரத்தில் பாமசன், இலூயி பிலிப்பேயின் முயற்சிகளை முறியடிக்க உறுதி கொண்டு, தன் இராச தந்திரத் தேர்ச்சியினல் போரின்றிப் பெல்சிய சுதந்திரத் துக்கு வல்லரசுகளின் சம்மதத்தைப் பெற்ருர், விற்றேறியா இராணி யின் மாமனன இலியப்போல்டு பெல்சிய அரசராக முடிசூட்டப் பட்டார். 1839 இல், வல்லரசுகள் ஒரு சர்வதேச உடன்படிக்கையினல், பெல்சியத்தின் நடுநிலையை அங்கீகரித்தன.

Page 85
42 புது உலக சரித்திரம்
அதிகாரம் 8
அண்மைக் கிழக்கு நாடுகளின்
1. பதினெட்டாம் நூற்ருண்டில்
ஐரோப்பாவும் ஒட்டோமன் பேரரசும்
ஒட்டோமன் பேரரசின் தோற்றமும் எழுச்சியும் :
கடந்த பன்னிரெண்டு நூற்ருண்டுகளாக அண்மைக் கிழக்குப் பிரச்சினை, வெவ்வேறு வகையில் ஐரோப்பிய வரலாற்றுக்கு ஒரு பின்னணி யகா அமைந்துள்ளது. 13 ஆம் நூற்றண்டில் துருக்கியரின் முதல் தலைவ ரான ஆத்மன் (Othman) சின்னசியாவில் ஒரு பெரிய அரசை நிறுவி ஞர். 1350 க்குள் சின்னுசியாவின் வடமேற் பகுதி, பொசுப்பொரசு, புரொப்பான்டிசு சல சந்திகளின் கிழக்குக் கரைகள் ஆகியவை, துருக் கர் கைவசமாயின; பின்னர் அவர்கள், அங்கிருந்து ஐரோப்பாவின் மேல் படையெடுக்கலாயினர். 1375 இல், கொன்சுதாந்திநோபிள் ஒன்று நீங்கலாக, போல்கன் தீபகற்பம் முழுவதும் துருக்கியரின் உடைமையாயிற்று. 1453 இல், கொன்சுதாந்திநோபிளும் வீழ்ந்தது. துருக்கியர், பல திசைகளிலுஞ் சென்று கிறைலியா, அங்கேரி, சீரியா, எகித்து, அரேபியா, சைப்பிரசு முதலிய நாடுகளை வென்றனர். மகா T &rudir Gör (Suleiman the Magnificent, l520 --66) - ĝis stravis தில், ஒட்டோமன் பேரரசு உச்ச நிலையை எய்தி, உலகின் வலிய பெரிய பேரசுகளில் ஒன்ருகத் திகழ்ந்தது. 1571 இல் வெனிசியரும் (Wenetians) சிபானியாரும் இலெப்பாண்டோ (Lepanto) போரில் துருக்கியரை வென்ற போதிலும், பேரரசு தொடர்ந்து பெருகி வளர லாயிற்று. இன்னும் தியூனிசியா, யோச்சியா, பாக்தாது, கிரிட்டு ஆகி யவையும் கைப்பற்றப் பட்டன. ஆனல் 1682 இல் துருக்கியர் வியன் னவைக் கைப்பற்ற முயன்று தோல்வியடைந்தது முதல், துருக்கிய பேரரசின் வலிமை குன்றத் தொடங்கியது. பேரரசின் பெலவீனம் :
ஐரோப்பாவின் தென் கிழக்குப் பிரதேசத்தில் எழுந்த இந்த ஆசிய அரசு, நீண்ட காலமாக, தன் இராணுவ அதிகாரத்தை கிறித் தவ நாடுகளின் மீது செலுத்தி வந்தது. சாதி, மதம், கலாச்சாரம், அரசியல் நோக்கங்கள் என்பனவற்றில் ஐரோப்பியருக்கும் துருக்கருக்கு

அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சனை 43
மிடையே மேற் கொள்ள முடியாத வேறுபாடுகள் இருந்தமையினல், துருக்கி, ஏனைய கிறித்தவ அரசுகளுடன், சம பதம் பெற முடியாமற் போயிற்று. 17 ஆம் நூற்றண்டு வரை, அது வாள் முனையில் பல வெற்றிகளை ஈட்டி, அவ்வாள் வலிமையினலேயே, தன் பேரரசை நிரு வகித்து வரலாயிற்று. ஆனல், இவ்விதம் வெற்றி கொள்ளப்பட்ட நாடு களை ஒருமைப்படுத்தும் முயற்சி சித்தி பெற வில்லை. நிர்வாகத் திறமை யின்மை, காலப் போக்கில் இவ்வரசை மேலும் பெலவீனப்படுத்தியது. அதன் இராணுவ வலிமை வெற்றி கொள்ளப்பட்டதுடன், 18 ஆம் நூற்ருண்டில் தென்பட ஆரம்பித்த அதன் பெலவீனம், 19 ஆம் நூற்றண்டில் நன்கு வெளிப்படையாயிற்று. எனினும், 19 ஆம் நூற் முண்டின் தொடக்கத்தில், துருக்கிய பேரரசு டனியூப், நீத்தர் நதி கள் வரை பரந்து கிடந்தது. இவ்வாறு ஐரோப்பாவில் துருக்கி இன் னும் நிலைத்தமைக்கு இரு காரணங்கள் உள.
முதலாவது, 18 ஆம் நூற்றண்டில் அது, தன் இராணுவ வலிமை யைப் பூரணமாக இழந்து விடவில்லை. வேண்டிய சந்தர்ப்பங்களில் இரசியாவினதும், ஒசுத்திரியாவினதும் ஆக்கிரமிப்புத் திட்டங்களை எதிர்த்துத் தன் எல்லைகளைப் பாதுகாக்கும் ஆற்றல், அதற்கு இன்னு மிருந்தது.
இரண்டாவது, தன் புவியியல் நிலையத்தினல், துருக்கி, மேற்கே அமைந்த ஐரோப்பாவின் அரசியல் கவர்ச்சி மையத்துக்கு அப்பாற் பட்டு விட்டதனல், ஐரோப்பிய நாடுகள் அவ்வரசின் மீது அவதா னமோ, அக்கறையோ செலுத்தவில்லை. ஐரோப்பிய அரசுகளில், பிரான்சு ஒன்று மாத்திரமே, ஒட்டமன் பேரரசுடன் வியாபாரத் தொடர்பு களினல் ஏற்படக்கூடிய நலன்களை நன்குணர்ந்திருந்தது. துருக்கியின் வலிமையினல் அபாயத்துக் குட்பட்ட ஒசுத்திரியா-அங்கேரி கூட, அத்தேசத்தில் சிரத்தை கொண்டதாக வில்லை.
18 ஆம் நூற்றண்டில், துருக்கி மேற்கத்திய வல்லரசுகளின் கண் ணுேட்டத்துக்கு அப்பாற்பட்டு நின்றபோதும், அதன் அழிவிற்கான சக்தி, பிறிதொரு கோணத்திலிருந்து தோற்றியது.
துருக்கியும் இரசியாவும் :
பதினெட்டாம் நூற்றண்டில் இரசியாவின் ஐரோப்பியப் பிரவே சத்துடன், துருக்கியின் நிலை பேராபத்துக்குள்ளாயிற்று. இரசியா, மேற்கு நோக்கி விரிவடைந்து, ஒரு ஐரோப்பிய வல்லரசாக எண்ணங் கொண்ட காலத்தில், போலந்து, சுவீடன் எனும் நாடுகளைப்போன்று, துருக்கியும், அதன் முன்னேற்றப்பாதையில் வழி மறித்து நின்றது. சுவீடன், போலந்து, துருக்கி மூன்றும் இரசியாவின் ஆள்புலப்படர்ச்சி

Page 86
144 புது உலக சரித்திரம்
நோக்குக்கு இயற்கை எதிரிகளாக அமைந்தமையினல், 18 ஆம் நூற் ருண்டில் அது, பன்முறை இந் நாடுகளுடன் போர் புரிந்தது. பீற்றர், சுவீடனிடமிருந்து கைப்பற்றிய பிரதேசத்தில், செயின்ற் பீற்றே சு பேக்கு (St. Petersburg) நகரத்தை நிர்மாணித்து, போல்த்திக் கட் லுக்கு வழியைத் தேடினர். கத்தறின் 1772, 1793, 1795 எனும் ஆண்டுகளில் பிரசியாவுடனும், ஒசுத்திரியாவுடனும் ஒன்று சேர்ந்து, போலந்தை ஐரோப்பிய படத்திலிருந்து அகற்றினள்.
குச்சுக்கயினுசி உடன்படிக்கை (1774) :
மகா பீற்றர் காலம் தொடக்கம் 1914 வரை, இரசியா, துருக்கியப் பேரரசைச் சூறையாட அல்லது அடிமைப்படுத்த முயற்சித்தமை, அண்மைக் கிழக்குப் பிரச்சினையில் காணப்படும் ஒரு நிரந்தரமான பொது அம்சமாகும் . இரண்டா வது கத்தறின் (1762-1796) காலத்தில், இரசியா, துருக்கி மட்டில் கொண்டிருந்த நோக்கங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணலாயிற்று. ஆறு ஆண்டுகளாகத் துருக்கியுடன் செய்யப்பட்ட போரின் விளைவாக, 1774 இல் குச்சுக் கயினுசி (Treaty of Kutchuk Kainardji) யில் ஏற்பட்ட இாசிய-துருக்கிய உடன்படிக்கையுடன், கிழக்கு ஐரோப் பாவில் இரசியா, செல்வாக்கின் சிகரத்தை அடைந்தது. நிலப்பரப்பு, அரசியல், மதம் எனும் துறைகளிலெல்லாம் இரசியா அபாரமான புது வெற்றிகளை ஈட்டியது. கருங்கடலின வட கரையோரத்திலும், டொன், நீப்பர் நதிகளின் கழிமுகங்களிலும் உறுதியான பிடியை யும், தாதனெ லீசு (Dardanelles) நீரணை வழியாக இரசியக் கப்பல்கள் மத்தியதரைக் கட் லில் பிரயாணஞ் செய்யவும், இரசியா உரிமை பெற்றது. மேலும், டனியூப் நதிக்கரையில் வசித்த கிறித்தவ மக்களைத் துருக்கியரின் அட்டூழியங்களிலிருந்து பாதுகாக்கவும் கொன்சுதாந்திநோபிளில் ஒரு நிரந்தரமான இராசதந்திரத் தொடர்பை ஏற்படுத்தவும் அது அங்கீகாரம் பெற்றது.
யசி உடன்படிக்கை (1792) :
சில ஆண்டுகளுக்குள், கத்தறின் இன்னுமோர் நடவடிக்கையில் இறங்கினள். 1782 இல், அவள் கிறைமியாவைத் துருக்கியரிடமிருந்து பறித்து, தன் இராச்சியத்துடன் இணைத் தாள். மீண்டும் 1788 இல் ஒசுத்திரியாவுடன் சேர்ந்து, துருக்கியை ஆக்கிரமித்து, 1792 ஆம் ஆண்டு எற்பட்ட யசி உடன்படிக்கை (Treaty of Jassy) யினல், நீத்தர் நதியை இரசி யாவின் எல்லையாக்கினுள். 'நான் இரசியாவுக்கு ஏழைப் பெண்ணுகவே வந்தேன். இச சியா எனக் குவந்தளித்த பெரும் சீதனத்துக்குப் பிரதியுபகாரமாக நான் அசோவ், கிறை மியா, யூக்கிறேன் எனும் இராச்சியங்களே அதற்குக் கொடுத்திருக்கிறேன்" என, கத்தறின் பெருமிதத்துடன் கூறிஞள். .
புக்கறசு உடன்படிக்கை :
அடுத்த சில ஆண்டுகளுக்கு இரசியா, போலந்தின் பங்கீட்டிலும் பிரான்சுக்கெதிராக இரண்டாம், மூன்றம் கூட்டமைப்புக்களை உருவாக் குவதிலுமே தன் முழு அவதானத்தையும் செலுத்தியது. 1807 ஆம் ஆண்டு தில் சிற்றில் அலெக்சாந்தர், நெப்போலியனுடன் நட்புக் கொண்டபின், அவனுடைய உதவி கிட்டுமென நம்பி, துருக்கியை ஆக்கிரமித்தார். 1812 ஆம் ஆண்டு மொசுக்கோ படையெடுப்

அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை 45
புக்குச் சற்று முன்பு, இரசியா, துருக்கியுடன் புக்கறசு (Bukarest) உடன்படிக்கையைச் செய்து, பெசரெபியாவை (Bessar abia) அப கரிக்கலாயிற்று.
இவ்வாறு, 1816 அளவில் துருக்கியின் செலவில் இரசியப் பேரரசு மொல்தேவியா, உவலேசியா எனும் மாகாணங்களின் எல்லைகள் வரை படர்ந்து விட்டது. இதுகாலம்வரை, இரசியாவுக்கும் துருக்கிக்குமிடை யில் நடைபெறும் தனிப்பட்ட போரெனக் கணிக்கப்பட்ட அண்மைக் கிழக்குப் பிரச்சினையில், 19 ஆம் நூற்றண்டுடன் பல புதுச் சக்திகள் புகுந்தன.
நெப்போலியனும் துருக்கியும் :
துருக்கியின் முக்கியத்துவத்தை ஐரோப்பிய வல்லரசுகளுக்கு முதன் முதல் தெளிவாக எடுத்துரைத்தவர் நெப்போலியன் ஆவர். பெல வீனப்பட்ட துருக்கியின் செலவில், இரசியா, கிழக்கு ஐரோப்பாவில் விரிவடையுமாயின், ஐரோப்பிய நாடுகளின் அரச வலுச் சமநிலைக்குப் பங்கமேற்படும் என்ற அச்சத்தை அவர்தான் வல்லரசுகளின் மனதில் எழுப்பியவர். இதன் பின்பே, ஐரோப்பிய வல்லரசுகள் குச்சுக்கயி னசி ஒப்பந்தத்திலை ஏற்பட்ட பாரதூரமான விளைவுகளை உணரலா யினர். வெளியில், தான் கிழக்கு ஐரோப்பாவின் உபகார வீரன் எனக் காட்டிய இரசியா, இரகசியமாக மத்தியதரைக் கடலுக்கு வழிதேடும் முயற்சியிலேயே ஈடுபட்டுநின்றதெனும் உண்மை வெளிப்படையாயிற்று. இவ்வாறு, ஐரோப்பிய அரசுகள் இரசியாவின் விரிவால் ஏற்படக்கூடிய அபாயத்தை உணர ஆரம்பித்ததுடன், அண்மைக் கிழக்குப் பிரச்சினை யில் ஒரு புதுக்கட்டம் ஆரம்பமாயிற்று. இரசியா, போல்கன் கிறித் தவர்களுக்காக வாளேந்தும் போதெல்லாம், அதன் எழுச்சியைத் தடை செய்யும் முகமாக, ஐரோப்பிய வல்லரசுகள் துருக்கிக்கு உதவி செய்யும் காலம் பிறந்தது.
2. கிரேக்க சுதந்திரம் (1821-31)
கிரீசில் நாட்டினவாதம் பரவுதல் :
பத்தொன்பதாம் நூற்றண்டின் ஆரம்பத்துடன், சுதந்திர ஆவல், கிரேக்க நாடுகளெங்கும் பரவலாயிற்று. அக்காலத்தில், அங்கு ஏற் பட்ட ஒர் இலக்கிய மறுமலர்ச்சி, கிரீசின் பழைமையையும், அவர்க ளின் அழிந்துபோன கலாச்சாரத்தையும் புதுப்பிக்கும் நோக்கங் கொண்டது. கிரேக்க இலக்கியங்கள், கிரேக்க மொழி என்பவற்றில் ஊக்கமும் உணர்ச்சியும் மக்களின் மனதைக் கவர்ந்தன. இப் புத் துணர்வின் மத்தியில், துருக்கியரின் கொடூரமான வரிகளினலும், மிரு
of -12

Page 87
46 புது உலக சரித்திரம்
கத்தனமான ஆட்சி முறையினலும் துன்பப்பட்ட மக்களிடையே, நாட் டினவாதம் வலுப்பெற்றது. இத்தாலியில் போன்று, கிரீசிலும், நாட் டினவாதம், பில்க்கே எற்றேய்றியா (Phike Hetairia) எனும் இரகசிய சங்கங்களின் வழியாகவே, நாடெங்கும் பரவியது. இச் சங்கம் நாட் டினக் கொள்கைகளைப் பரப்புதல், துருக்கியரை ஐரோப்பாவிலிருந்து துரத்தல், கிரீசின் பழைமையை உயிர்ப்பித்தல் எனும் மூவித நோக் கங்களைக்கொண்டது.
புரட்சி :
கிரேக்கரின் முதற் புரட்சி வடக்கே மொல்தேவியா, உவலேசியா எனும் பிரதேசங்களில் 1821 ஆம் ஆண்டு ஏற்படலாயிற்று. புரட்சித் தலைவனன அலெக்சாந்தர் இப்சிலான்ரி (Alexander Hypsilanti), இரசியாவிடமிருந்து எதிர்பார்த்த உதவியைப் பெருமற்போகவே புரட்சி அடக்கப்பட்டது. இப்சிலான்ரி ஒசுத்திரியாவுக்கு ஒடித்தப்பினர். இதற்கிடையில் மொறயா (தென் கிரீசு) விலும் ஒரு புரட்சி இயக்கம் தோன்றிற்று. அஃது அங்கிருந்து, ஈசியன் கடலிலுள்ள தீவுகளெல்லா வற்றிற்கும் பரவி, தென் கிரிசு முழுமையும் நாட்டுணர்ச்சியைப் பெலப் படுத்தியது. ஆனல் கிரேக்கர், தம் இயக்கத்தைப் படு கொலைகளினல் மாசுபடுத்திக் கொண்டனர். துருக்கரும் அதேவிதமாக ஒழுகினர். அவர்கள், கொன்சுதாந்திநோபிளில் கிரேக்க திருச்சபையின் பிதாப் பிதாவைக் (Patriarch) கொலைசெய்து அவரது மாளிகையின் வாசலில் தூக்கினர்.
பிரித்தானியாவின் தலையிடாக் கொள்கை, மற்றேணிக்கின் புரட்சிகளைப் பற்றிய அச்சம், இரசியாவைப் பற்றிய பொதுப்பயம், துருக்கியின் நிலையைப் பாதுகாக்க வேண்டுமென்ற மேற்கு வல்லரசு களின் ஆசை எல்லாம் ஒருங்கு சேர்ந்தமையினல், ஒரு வல்லரசும் பிரச்சின்ையில் பிரவேசிக்கத் துணியவில்லை. கிரேக்கர் ஆறு ஆண்டு காலம் தனித்து, பிறர் உதவியின்றி சுதந்திரப்போரை நடாத்த வேண்டிய நிலைக்குள்ளானர்கள். இபுறகிமின் உதவி :
1824 இல் நிலைமை மாறியது. அவ்வாண்டு துருக்கிய சுலு தான், கிரேக்க புரட்சியை அடக்குவதற்காக, எகித்திய பாசா (Pasha), முக மது அலி (Mohemet Ali) யிடம் உதவி கோரி நிற்கவே, முகமது அலி, தன் மகன் இபுரு கிமின் (Ibrahim) தலைமையில் ஒரு கப்பற்படை யையும், தரைப்படையையும் அனுப்பி வைத்தான். இபுரு கிமின் தோற்றத்துடன், புரட்சியின் போக்கு அறவே மாறியது. மொறயா புரட்சிக்காரரிடமிருந்து மீட்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளின் தலை யீடு ஏற்படாவிடின் புரட்சி அடக்கப்படுமென்பது நிச்சயமாயிற்று.

அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை 147
வல்லரசுகளின் தலையீடும் இலண்டன் மாநாடும் :
1825 இல், முதலாம் நிக்கலசு இரசிய சாரானதுடன், கிரேக்கர் தம் மதத்தைச் சேர்ந்தவர்களெனும் காரணத்தினுல், அவர்களுக்கு நேரடியான உதவி புரியாவிடினும், தன் அனுதாபத்தை வெளியரங்க மாகக் காட்டிஞர். இரசியா, தனியே தலையிட்டுக் கிரேக்கருக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தால், போல்கன் தீபகற்பத்தில் இரசியாவின் செல்வாக்கு உயர்வடையுமென, இங்கிலாந்தும், ஒசுத் திரியாவும் அஞ்சின. கனிங் (Canning), கிரேக்கருக்காக, இரசியா போர்க் கோலம் பூணுவதை எப்படியாயினும், தடுத்தேயாகவேண்டு மெனத் திட்டமிட்டார். அவர், உவெலிந்தனை செயின்ட் பீற்றசுபேக் குக்கு தூதனுப்பி, இபுரு:கிமின அக்கிரமங்களைக் கட்டுப்படுத்த, ஆங்கி லேய-இரசிய கூட்டு நடவடிக்கைக்கு வழிவகுத்தார். பிரான்சும், இத்திட்டத்தை ஆதரிக்கவே, 1827 இல் இலண்டன் மாநாடு கூடிற்று. அங்கு கிரேக்கருக்குச் சுயாட்சி வழங்கும்படி துருக்கியைக் கட்டாயப் படுத்த மூவல்லரசுகளும் ஒப்புக்கொண்டன. இவ்வேண்டுகோளைத் துருக்கி ஏற்க மறுத்தமையினல், மூவல்லரசுகளும் தம் கடற்படைகளை ஈசியன் கடலுக்கு அனுப்பலாயின. கிரேக்கருக்கும் துருக்கியருக்கு மிடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த முயற்சித்த ஆங்கிலேய, பரெஞ்சுப் படைகள், நவாறினுேவில் (Navarino) இபுருகிமின் கடற் படையைத் தாக்கி அவனது கப்பல்களை மூழ்கடித்தன (ஒற் ருேபர் 20, 1827).
இரசியாவின் தனித் தலையீடு :
1828 இல் இங்கிலாந்தின் பிரதமரான உவெலிந்தன், ஒட்ட மன் பேரரசை எவ்விதமாவது பாதுகாக்க வேண்டுமென்ற மாற்றமுடி யாத தீர்மானத்தையுடையவர். அவரது பிடிவாதத்தினுலும் தூரப் பார்வையின்மையினுலும், கனிங் திட்டமிட்டுச் சாதித்த நன்மைகள் நிராாரிக்கப்பட்டன. 1828 இல் இரசியா, தனித்து துருக்கிமேல் போர் தொடுத்து, அடுத்த ஆண்டு போரை முடிபுக்குக் கொண்டு வந்து, கிரீசுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தது. 1829 ஆம் ஆண்டு ஏற்பட்ட அதிரியாநோபிள் உடன்படிக்கை (Treat of Adrianople) யின்படி கிறிசு, துருக்கிய மேற்பார்வையின்கீழ், ஒரு சுதந் திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது.
அதிரியா நோபிள் உடன்படிக்கை :
இவ்வுடன்படிக்கை கிரேக்க சுதந்திரத்தை உத்தரவாதம் செய்ததுடன், அஃது இர சிய சாருக்கு விசேட நில, வியாபார, அரசியல் இலாபங்களையும் பெற்றுக் கொடுத்தது. கிரீசு சுதந்திரம் பெற்ற அதே காலத்தில், மொல்தேவியா, உவலேசியா என்ற இரு நாடு களும் துருக்கிய ஆட்சியிலிருந்து சுயாட்சி பெறலாயின. கிரேக்கர், மெர்ஸ்தேவியர், உவலே

Page 88
48 புது உலக சரித்திரம்
சியர் தாம் சுதந்திரம் பெற்றமைக்கு ஏனைய நாடுகளிலும் பார்க்க, இரசியாவே கா ர ன மென எண்ணி, இரசியாவுக்குத் தம்மைக் கடமைப்பாடுடையவர்களாகக் காட்டிக் கொண்ட னர். போல்கன் தீபகற்பத்தில் இரசியாவின் செல்வாக்குப் பன் மடங்கு அதிகரித்தது. நான்கு ஆண்டுகளுக்குள், இரசியா, இதிலும் சிறப்பான ஒரு வெற்றியை ஈட்டியது.
3. எகித்திய-துருக்கிய இகல் (1831-41)
முதலாவது எகித்திய-துருக்கியப் போர் :
சுலு தானின் கீழ், சிற்றரசனுக விளங்கிய முகமது அலி, கிரேக்க பிரச்சினையின் வாயிலாக, துருக்கியின் பெலவீனத்தை நன்கறிந்து கொண்டான். தானும், தன் மகனும் செய்த சேவைக்குக் கைம்மாருக, எகித்திய பாசா சீரியாவை நன்கொடையாகக் கேட்டார். சுலுதான், இக்கோரிக்கைக்கு இணங்க மறுக்கவே, 1831 இல், இபுரு:கிம் பலத் தீனத்தைத் தாக்கி, சீரியாவை ஊடுருவிச் சென்று, சின்ன ஆசியா வுக்குள் பிரவேசித்தான். 1832 இல், சுலுதான், வல்லரசுகளிடம் உதவி கோரிய போது, இரசியா மாத்திரமே துணைக்கு முன் வந்தது. இரசிய துருப்புக்கள், அணி அணியாகத் துருக்கியினுள் நுழைந்தன. இதைக் கண்ட வல்லரசுகள், சீரியாவை முகமது அலிக்குக் கொடுத்து விடுமாறு துருக்கியைக் கட்டாயப் படுத்தினர். 1833 இல், துருக்கி, எகித்தை முகமது அலிக்கு கையளித்தது. உங்கியார் சிகலசி (Unkiar Skelessi) உடன்படிக்கை இரசியாவுக்கும் துருக்கிக்கும் இடையே ஏற் பட்டது.
உங்கியார் சிகலசி உடன்படிக்கை (1833) :
இதனுல் துருக்கி, இரசியாவின் இராணுவப் பாதுகாப்பை ஏற்றுக் கொண்டது. யுத்த காலத்தில் தாதனெலீசு நீரணையை, இரசியாவை விட ஏனைய நாடுகளின் கப்பல்களுக்கு மூடத், துருக்கி சம்மதித்தது. கருங்கடல் ஓர் இரசிய வாவியாயிற்று. துருக்கிய தலைநகரான கொன்சுதாந்திநோபிளில், இரசிய செல்வாக்கு உயர்வடைவதைக் கண்டு, பிரித்தானியா, பிரான்சு, ஒசுத்திரியா கோபங் கொண்டன. இங்கிலாந்தின் பிறநாட்டு, அமைச்சர் பாமசன் (Palmerston), உங் கியார் சிகலசி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய உறுதி பூண்டு, தருணம் பார்த்து நின்றர்.
இரண்டாவது எகித்திய-துருக்கியப்போர் :
1839 இல், துருக்கிய சுலுதான் இரண்டாவது முகமது (Mahmud 11), தன் இராணுவப் படைகளைப் பிரசிய வொன் மொல்க் (Won Moltke) கின் உதவி கொண்டு புனரமைத்தார். காலதாமத மின்றி, சீரியாவை மீட்க எத்தனித்த சுலுதான், அதே யாண்டு

அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை 49
எகித்துக்கெதிராகப் போர் தொடுத்தார். ஆனல், எகித்திய இபுருகிம் மீண்டும் வெற்றிபெறலாயினன். சுலுதான், தன் அரசைப் பதினறு வயதுச் சிறுவன் அப்துல் மசிதுக்கு (Abdul Majeed) விட்டுக் காலமானர்.
இங்கிலாந்து இரசியா இரண்டும், முகமது அலி வெற்றிபெறுவதை விரும்பவில்லை. ஆனல், பிரான்சின் இலூயி பிலிப்பே, எகித்தில் தன் செல்வாக்கை நிலை நாட்ட எத்தனித்து, முகமது அலியை ஆதரிக்கவும், இரகசியமாக இராணுவ உதவி கொடுக்கவும் துணிந்தார். பிரான்சின் களவைக் கண்ட இரசியா, இங்கிலாந்துடன் ஒன்று சேர்ந்து, முகமது அலியின் வெற்றியைச் சிதைக்கவும், துருக்கியைப் பாதுகாக்கவும் முற்பட்டது.
இலண்டன் ஒப்பந்தம் (1841) :
பிரான்சைப் புறக்கணித்து, இங்கிலாந்து, ஒசுத்திரியா, இரசியா ஒன்று சேர்ந்து, 1841 ஆம் ஆண்டு இலண்டன் ஒப்பந்தத்தை உரு வாக்கின. முகமது அலி, துருக்கியின் கீழ், எகித்தின் பரம்பரை பாசா வாக இருப்பரென வல்லரசுகள் உத்தரவாதம் அளித்தன. சீரியா கிறீற், அரேபியா எனும் பிரதேசங்களைத் துருக்கி திருப்பிப் பெற்றது. துருக்கிய சுலு தானும், எகித்திய பாசாவும் இந்நிபந்தனைகளை ஏற்கு மாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இவ்வொப்பந்தத்தைப் பற்றி அறிந்த பிரான்சு, இங்கிலாந்துடன் போர் தொடுக்கப்போவதாக மிரட்டியது. ஆனல் இலூயி பிலிப்பேக் குப் போர் செய்யும் துணிச்சலில்லை என்பதை, பாமசன் நன்கறிவான் பாமசனின் இராசதந்திர வெற்றிகளில், இவ் வொப்பந்தம் தலை சிறந்தது. பிரான்சு, தன் வாக்குறுதியை நிறைவேற்ற வல்லபமற்ற நாடாகத் தன் கெளரவத்தை இழந்து நின்றது ; போல்கன் பிரதே சத்தில், இரசிய செல்வாக்கு அளவுக்கு மிகுதியாக அதிகரித்தமைக்கு வரம்பிடப்பட்டது; துருக்கி, தன் பாதுகாப்புக்குப் பூரணமாக இரசி யாவை நம்பியிருப்பது தவறு என உணர்ந்தது.
பிரான்சு, தன் இராசதந்திரத் தோல்வியை ஏற்றபின்னர், 1842 gav pag &OOT LIDITA5 T L G&G (Convention of the Straits) J969 på கப்பட்டது. அங்கு டாடன வீசு, பொசுபரசு நீரணைகள், எல்லா நாடுகளினதும் யுத்தக் கப்பல்களுக்கு மூடப்படுமென்ற தீர்மானம் நிறைவேறியது. பாமசன், திட்டமிட்ட பிரகாரம், உங்கியார் சிகலசி ஒப்பந்தம் கிழிக்கப்பட்டது.
A l?

Page 89
150 புது உலக சரித்திரம்
சார் நிக்கலசும் துருக்கிய பிரச்சினையும் :
1841 க்கும் 1854 க்கும் இடைப்பட்ட காலத்தில், இரசிய சார், அண்மைக் கிழக்குப் பிரச்சினக்கு ஒரு நிரந்தர முடிபைக் காண முயற்சித்தார். 1844 இல் சார் நிக்கலசு, இங்கிலாந்தைத் தரிசித்த போது, துருக்கியப் பேரரசைக் கூறுபோடுவதற்கான ஒரு திட்டத்தை வெளியிட்டார். ஆனல், இரசியாவின் நோக்கங்கள் மீது சந்தேகம் கொண்ட ஆங்கிலேய இராசதந்திரிகள், அதை ஏற்க மறுத்துவிட்ட னர். மீண்டும் 1853 இல் செயின்ட் பீற்றேகபேகில், பிரித்தானிய தூதமைச்சருக்கு, துருக்கியை ‘ஐரோப்பாவின் நோயாளி” என்றும், அந் நோயாளி இறக்கமுன்னமே, அவனது உடைமைகளைத் தமக் கிடையே பங்கிட்டுக் கொள்வது புத்திசாலித்தனமானது என்றும் கூறினர். ஆனல் ஆங்கிலேயர், துருக்கியின் நோய் மாற்ற முடியாத தொன் றன்று என்றும் அதன் மரணத்தைப் பல்லாண்டுகளுக்குப் பின் போடலாமென்றுமே நம்பினர். NA
4. கிறைமியன் போர் (1854-56)
பத்து ஆண்டுக் காலம், கிழக்கு ஐரோப்பாவில் நிலவிய சமா தானம், பலத்தீனத்தில், உருேமன் கத்தோலிக்க குரவருக்கும், கிரேக்க வைதீகத் திருச்சபைக்குமிடையே எழுந்த பிரச்சினையால் குலைந்தது. அற்ப காரணங்களிலிருந்து தோற்றிய இந்தச் சச்சரவு, கிழக்கு ஐரோப்பிய விவகாரங்களில் ஒரு புது அத்தியாயத்தையே திறந்து விட்டது.
போருக்காய காரணங்கள் :
பெத்தலேம் (Bethlehem) நகரின் பூர்வ தேவாலயத்தை கத்தோ லிக்கரும், வைதீகத் திருச்சபையினரும் உபயோகித்து வந்தனர்; கிரேக்கர் பிரதான வாயிலின் திறவுகோலையும், இலத்தீனியர் பக்கக் கதவுத் திறவுகோலையும் வைத்திருந்தனர். ஆனல், இலத்தீனியர் பதத்தில் தாமும் சமமாயிருக்க வேண்டுமென எண்ணி, பிரதான கதவின் திறவுகோலொன்று தமக்கும் வேண்டுமென, உரிமை கோரி னர். இக்கோரிக்கையைப் பிரான்சு ஆதரித்தது. அதே சமயம், இரசிய சார் முதலாம் நிக்கலசு, கிரேக்க குருக்களின் உரிமையைப் பாது காக்க முற்பட்டார். ஆரம்பத்தில், மூன்ரும் நெப்போலியனுடைய கோரிக்கைகளுக்கிணங்கிய துருக்கி, சாரின் ஆட்சேபனையின் பேரில், பின் வாங்கியது. இரு பகுதியினராலும் நெருக்கப்பட்ட துருக்கி, இரு சாராரையும், திருப்திப்படுத்தக்கூடிய மத்திய வழியைக் கடைப் பிடிக்க முய்ற்சித்தது. பிரான்சும், இரசியாவும், இப்பிரச்சினையில்

அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை 51
உடன் சமரசம் காண விரும்பாததினல், துருக்கியின் முயற்சி வீண் போயிற்று. பரிசுத்த தலங்களின் ஆட்சியைப் பற்றி எழுந்த இப் பிரச்சினைப் போர்வையின் கீழ், நெப்போலியனும், நிக்கலசும் தம் தனிப்பட்ட சுயநல நோக்கங்களை நிறைவேற்ற எண்ணங்கொண்டனர். உற்சாகமான பிறநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து, பிரெஞ்சு மக்களின் புகழ் விருப்பத்தைத் திருப்திப்படுத்த இது நல்ல சந்தர்ப்பம் என எண்ணினர் நெப்போலியன்; அதனுடன் கத்தோலிக்க கட்சியின் ஆதரவைப் பெற்றுத் தனது இரண்டாம் பேரரசை நிலைநாட்டவும், இப்பிரச்சினை உதவுமெனத் திட்டமிட்டார். மறுபக்கம், நிக்கலசு, துருக்கியின் பெலவீனத்தைப் பயன்படுத்தி, தாதனலிசு நீரணையை யும், கொன்சுதாந்திநோபிளையும் ஒரே நேரத்தில் தன் அதிகாரத் துக்குள் கொண்டுவரலாம் என எண்ணினர். 1853 மார்ச் மாதம், பரிசுத்த தலங்களைப்பற்றி ஒரு திருப்திகரமான முடிவைப் பெறவும், துருக்கிய சுலு தான், தன் இராச்சியத்துக் கிறித்தவர் மீது, சாருக்குப் பாதுகாப்புரிமையுண்டென்பதை ஏற்க வேண்டுமென வற்புறுத்தவும், இரசியா, இளவரசர் மென் சிக்கோவ் (Menschikott) என்ற விசேடத் தூதுவரை கொன்சுதாந்திநோப்பிளுக்கு அனுப்பியமை, ஐரோப்பாவைத் திடுக்கிடச் செய்தது. இவ்வுரிமை குச்சுக்கயினுசி ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கோரப்பட்டது. இதனுல் கிழக்கு ஐரோப்பியப் பிரச்சினை மீண்டும் எழுந்தது.
ஆனல், இதற்கிடையில் கொன்சுதாந்திநோபிளில் இருந்த பிரித் தானியத் தூதுவரான திருற்போட் டி இறெற்கிளிப் (Stradford de Redcliffe) பிரபு, துருக்கிய தலைநகரத்தில் அதி செல்வாக்குடையவராக விளங்கினர். இரசியாவின் அபாயகரமான நோக்கங்களை நன்கறிந்த அவர், இரசியாவின் திட்டங்கள் பூரணமாக நிராகரிக்கப்படும் வரை கிழக்கு ஐரோப்பாவில் நிலையான சமாதானம் ஏற்படமாட்டாது எனும் நம்பிக்கை கொண்டார். விசேட திறமையுடன் அவர் பரிசுத்த தலங் களைப்பற்றிய பிரச்சினையை, இரசிய பாதுகாப்புக் கோரிக்கையிலிருந்து வேறுபடுத்தி, முதல் கோரிக்கையை விட்டுக் கொடுக்குமாறும் இரண் டாவதற்கு இணங்கக்கூடாதென்றும் சுலு தானத் தூண்டினர். இதன் பயனுக 1853 மே மாதம், மென்சிக்கோவும், இரசிய தூதுவராலயத்து அலுவலாளர்களும் கொன்சுதாந்திநோபிளை விட்டு வெளியேறினர். துருக்கி தான் எடுத்த முடிவைப்பற்றி ஓர் அறிக்கையை வல்லரசு களுக்குச் சமர்ப்பித்துவிட்டு, அச்சத்துடன் தற்பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. யூலை 21 ஆம் நாள், இரசியா ஒரு படையை மொல்தேவியா, உவலேசியா மாகாணங்களுக்குள் ஆக்கிர மிப்பு நோக்குடனன்றி, தனது உரிமைகளுக்கு உத்தரவாதமாக வைத் திருக்கும் நோக்குடன் அனுப்பியது. அதே நேரத்தில் பிரித்தானிய,

Page 90
52 புது உலக சரித்திரம்
பிரெஞ்சுக் கப்பற்படைகள் துருக்கிய கடலுக்குள் பிரவேசித்தன. ஒற்ருேபர் மாதக் கடைசிவரை, நிலை இவ்வாறே மாற்றமின்றி நீடித் தது. ஆனல் அதற்கிடையில் இங்கிலாந்து, பிரான்சு, ஒசுத்திரியா, பிரசியா என்ற நான்கு வல்லரசுகள் ஒன்றுகூடி வியன்னுக் குறிப்பு (Vienna Note) என்ற சூத்திரத்தின் மூலம் நிலையைச் சமாளிக்க முயற்சித்தனர். ஆனல் இம்முயற்சி எவ்வித பலனையும் கொடுக்கவில்லை.
இரசிய-துருக்கியப் போர் :
இராசதந்திரம், பிரச்சினையைத் தீர்க்க முடியாமற்போகவே, போர் எனும் ஆயுதம்தான் சிக்கலை விடுவிக்க வல்லது என்பது நிச்சயமா யிற்று. அபடின் பிரபு கூறியதுபோல, ஆங்கிலேய, பிரெஞ்சு உதவி யுடன், துருக்கி, இரசியாவைத் துரத்தியடிக்க, இதைப்போன்ற ஒரு வாய்ப்பான சந்தர்ப்பத்தை ஒருபோதும் பெற்றதுமில்லை ; இனிமேல் பெறப்போவதுமில்லை. 1853 ஒற்ருேபர் 23 இல், போல்கன் பிர தேசத்தைவிட்டு விலகுமாறு துருக்கி, இரசியாவுக்குக் கட்டளையிட்டு போர்ப் பிரகடனம் செய்யலாயிற்று. துருக்கிய படைகள் தனியூப் நதிக்கரை மாகாணங்களைத் தாக்கின மறுச்செயலாக இரசிய கருங் கடற் கப்பற்படை, நவம்பர் 30 இல், துருக்கிய கப்பற்படையை சிளுேப்பேக்குடாவில் (Sinope) பூரணமாக மூழ்கடித்தது.
பிரான்சினதும், இங்கிலாந்தினதும் போர்ப் பிரவேசம் :
போர் நீண்டகாலம் துருக்கிக்கும் இரசியாவுக்குமிடையில் கட்டுப் பட்டு நிற்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. இப்போரில் தான், துருக்கியின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும் என்று பிரான்சும் இங்கி லாந்தும் உறுதியாக நம்பின. தவிர, பிரான்சில் ஒரு பிறநாட்டு யுத்தம், மக்களின் நல்லெண்ணத்தைப் பெறவும், உறுதியற்ற சிம்மா சனத்தை உறுதிப்படுத்தவும் உதவுமென்று எதிர்பார்க்கப்பட்டது. இங்கிலாந்தில், பொதுசன அபிப்பிராயம் இரசியாவை வன்மையாகக் கண்டித்தது. இரசியாவின் விரிவினல், பிரித்தானிய இந்தியாவும், அபுகனித்தானும் அபாயத்துக்குள்ளாகும் என்று ஆங்கிலேயர் நம்பி னர். “சினேப்பே படுகொலை' யையிட்டு, பொதுசன அபிப்பிராயம் உச்சநிலையை அடைந்தபோதும், பிரதமர் அபடின் பிரபு, மிகவும் பொறுமையாக இருந்தார். அபடின் பிரபு இல்லாமலே, பிரித்தா னியா போர்க்கோலம் பூண்ட்து. தனியே இயங்க அஞ்சிய பிரான்சு, பொறுமையின்றி இங்கிலாந்தின் செயலை அவதானத்துடன் நோக்கி நின்றது. 1854 சனவரி 4 இல், ஆங்கிலேய பிரெஞ்சுக் கப்பற்படை கள், கருங்கடலுக்குள் பிரவேசித்தன. பெப்ரவரி 27 ஆம் நாள், தனியூப் மாகாணங்களைவிட்டு விலகவேண்டுமென்று, இரு நாடுகளும்,

அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை 53
ஒரு பொது இறுதி நிபந்தனையை இரசியாவுக்கு அனுப்பி வைத்தன. மார்ச் மாதக் கடைசியில் இரு நாடுகளும் யுத்தப் பிரகடனம் செய்தன.
இரசியா, ஒசுத்திரியா, பிரசியா :
சனவரி மாதக் கடைசிவரையில் கூட, இங்கிலாந்து போரில் பிரவேசிக்கமாட்டாதென்றே நிக்கலசு எதிர்பார்த்தார். தவிர ஒசுத்திரியாவின் உதவியை எதிர்பார்த்த அவர், அத்துறை யிலும் பெரும் எமாற்றமடைந்தார். 1849 இல் புரட்சிக் கோலம் பூண்ட ஒசுத்திரிய-அங்கே ரிய எகாதிபத்தியத்தை அழிவிலிருந்து காப்பாற்றியதற்கும், 1850 இல் ஒல்மட்சில் பிரசியா வுடன் நடந்த சமரில் ஒசுத்திரியாவை ஆதரித்ததற்கும் பிரதியுபகாரம் கிடைக்குமென எதிர்பார்த்த நிக்கலசின் நம்பிக்கை கெட்டது. இரசியா, போல்கன் நாடுகளை ஆக்கிரமித் தமை, அப்சுபேக் பேரரசுக்கு ஆபத்தான என்றுணர்ந்த ஒசுத்திரிய அரசியல் அவதானி கள், இரசியாவை பயமுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினர். இந்தப் பயமுறுத்தலின் முன், இரசியா விட்டுக்கொடுக்கவேண்டிய கட்டாய நிலைக்குள்ளாயிற்று. ஒரு புது எதிரி யைச் சம்பாதிக்க விரும்பாத இரசியா, இரு சந்தர்ப்பங்களில் ஒசுத்திரியா விடுத்த இறுதி எச்சரிக்கைகளை எற்றுக்கொண்டது. ஒசுத்திரியா நேரடியான போர் நடவடிக்கைகளில் இறங்காவிடினும், அதன் எதிர்மனப்பான்மையுடைய நடுநிலைமை, இரசியாவின் தோல் விக்குரிய பிரதான காரணங்களிலொன்று. ஒசுத்திரியாவின் நன்றிகெட்ட தனம் விரைவில் மறக்கப்படவில்லை. அதன் பலனை, 1866 இல், ஒசுத்திரியா அறுவடை செய்தது.
ஒசுத்திரியா இழந்த நலன், பிரசியாவுக்குப் பெரும் இலாபமாக முடிந்தது. இரசியா வுக்கெதிராக போர் என்று பேவினில் எழுந்த கோசத்தை, பிசு மாக் தன் முழுச்சக்தி யுடன் எதிர்த்து நின்றர். ‘அண்மைக் கிழக்குப் பிரச்சினையில் எங்களுக்கு ஈடுபாடில்லை : இரசியாவுடன் போர் தொடுப்பதற்கு உண்மையான காரணமுமில்லை. எனவே, கோபமூட் டும் காரணமின்றி, எங்கள் நீண்டகால நண்பனையும் அயலானையும் என் ஆக்கிரமிக்க வேண்டும் ?’ என்ற ரீதியில் தர்க்கித்து, அவர் பிரசியாவை கிரைமியப் போரில் பங்குபற்ருது நிறுத்தி வைத்தார். பிரசியாவின் நடு நிலைமை, இரசியாவுக்கு ஒரு நட்புச் செயலாகவே அமைந்தது. இதன் பயனுக, பத்து ஆண்டுகளுக்குப்பின் ஒசுத்திரியாவுடன் நடந்த சமரில் சாரின் அளப்பரிய உதவியைப் பிரசியா பெற்றது.
பீட்டுமந்து :
அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினையில் ஒரு விதமான ஈடு பாடுமில்லாத இன்னுமொரு நாடும், 1855 இல் கிரைமியப் போரில் பிரவேசித்தது. பிரான்சின் நட்பைப் பெறும் நோக்குடன், பீட்டு மந்து--சாடீனிய அரசாங்கம் 15,000 போர் வீரர்களை இரசியா வுடன் போர்செய்யுமாறு அனுப்பிவைத்தது.
இரசியாவின் முதல் படையெடுப்பும், அதன் தோல்வியும் :
மொல்தேவியா, உவலேசியா மாகாணங்களில் முகாமிட்டிருந்த இரசிய துருப்புக்கள், மாச் 23 ஆம் நாள், தனியூப் நதியைக் கடந்து, சிலிசுத்திரியா (Silistria) வை முற்றுகையிட்டன. கருங்கடலுக் கண்மை யில், துருக்கிய கரையோரத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்ற பிரெஞ்சு, பிரித்தானியக் கடற்படைகள், மே 29 இல், தம் துருப்புக்களை வார்னு

Page 91
丑54 புது உலக சரித்திரம்
(Warna)வில் இறக்கின. ஐந்து நாள்களுக்குப்பின், இரசியா தனியூப் மாகாணங்களை விட்டு வெளியேற வேண்டுமென்ற முதலாவது இறுதிக் கூற்றை (Ultimatum) ஒசுத்திரியா விடுத்தது. எதிர்பாராத விதமாக, சிலிசுத்திரியாவை துருக்கி பாதுகாத்ததனலும், பிரிட்டிசுப் படைகள், அதனுசு விக்கு வருவதையும் கண்ட நிக்கலசு, முற்றுகையைக் கைவிட்டு, தனியூப் நதியை மீண்டும் கடந்து, தன துருப்புக்களை இரு மாகாணங் களிலிருந்தும் வெளியேற்றுவித்தார். இரசிய துருப்புக்கள் பின் வாங் கவே, ஒசுத்திரிய சைனியங்கள் அவ்விரு மாகாணங்களுக்குள் பிரவே சித்து, போர் முடிவடையும் காலம் வரை அங்கு தங்கி நின்றன. இவ்வாறு யூலை மாதக் கடைசியில், இரசியாவின் முதல் ஆக்கிரமிப் புத் திட்டம் படுதோல்வியில் முடிவடைந்தது. அதன் பெலவீனத் தைக் கண்ட நேய நாடுகள், நான்கு அம்சங்களில் (Four Points) இர சியா தங்களைத் திருப்திப் படுத்த வேண்டு மென்ற கோரிக்கையை விடுத்தனர். இவை கிரேக்க திருச்சபையின் பாதுகாப்பு, கருங்கடலில் கடற்படை உரிமைகள், தனியூப் நதியில் வியாபார உரிமைகள், இரு மாகாணங்களுக்காகப் பரிந்து பேசுதல் என்ற நான்கு உரிமைகளுடன் சம்பந்தப் பட்டவை. இரசியா தடுமாறியது ; ஈற்றில் நவம்பர் மாதம் நேய நாடுகளின் கோரிக்கைகளுக்கு இணங்கியது. ஆனல் தடு மாற்றம் நீடித்த இடைக்காலத்துக்குள், செற்றம்பரில் நேய நாடுகள் கிறைமியாவை ஆக்கிரமித்ததுடன், போரின் இரண்டாவது கட்டம் ஆரமபமாயிற்று.
அல்மா, செபத்தபோல் வெற்றிகள் :
இரசியரை துருக்கிய பிரதேசத்திலிருந்து அகற்றுவதென்ற நோக் கம் கைகூடி நின்ற போதும், எதிர்காலத்தில் இங்கு சமாதானத்தை நிலைக்கச் செய்யும் நோக்குடன், இரசியாவை அடித்து முறிக்க வேண்டுமென நேய நாடுகள் திட்டமிட்டன. எனவே, இரசியாவின் கீழைத்தேச ஆதிக்கத்தின் உயிர் நிலையமெனக் கருதப்பட்ட கிறைமியா விலுள்ள செபத்தபேர்ல் கோட்டையை முற்றுகையிட்டு அழிக்கவும், இரசியாவின் கடற்படையை ஆழ்கடலில் மூழ்கடிக்கவும் எண்ணங் கொண்டன. கிறைமியாவைத் தாக்குவதில், நேய நாடுகள் மிகத் திறமையான போர் முறையைக் கையாண்டனர். நெப்போலியன் தோல்வியடைவதற்கு மூலகாரணமாக அமைந்த படையெடுப்பைப் போல் ஒன்றை உண்ணுட்டுக்குள் நடத்தாது, அவர்கள் இரசியாவைக் களைப்பினல் சரணடையச் செய்தனர்.
இர கலன் பிரபு (Lord Ragan) வின் தலைமையில் ஆங்கிலேயப்
Lu60)L5G25lb, LDr J6i Q5F6ivAb -25(36)!" (Mashal St. Arnaud) 96ôt தலைமையில் பிரெஞ்சு சேனையும் 1854 ஆம் ஆண்டு, கிறைமியாவில்

அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை 155
வந்திறங்கின. இரு படைகளும் ஒன்று சேர்ந்து செற்றம்பர் மாதம் ஒர் இரசியப்படையை அல்மா (UIma) எனுமிடத்தில் தோற்கடித்தன. செபத்தபோல் (Sebastapol) முற்ருக இராணுவ ஆயத்தமின்றி யிருந்தது. அத்தருணத்தில் தாக்கியிருந்தால் அதை இலகுவாக வெற்றி கொண்டிருக்கலாம். ஆனல் கோட்டையை உடனே தாக்க வேண்டுமென்ற இரகலன் பிரபுவின் யோசனையை, செயின்ட் ஆனேட் ஆதரிக்கவில்லை. கோட்டையை ரொட்லிபன் (Todleben) பலப்படுத்திய பின்புதான் முற்றுகை ஆரம்பமாகியது. பலக்கிளாவா, (ஒற்ருேபர்) இன் கேமான் (நவம்பர் 5, 1854) எனுமிடங்களில் யுத்தங்கள் நடை பெறலாயின.
செபத்தபோல் முற்றுகை, மாரி காலத்திலும் தொடர்ந்து நடை பெற்றதனுல், அடுத்த நான்கு மாத காலத்தில் படை வீரர்கள் மிகவும் கொடிய நோய்களினலும் பிணிகளினலும் பீடிக்கப்பட்டு மிகவும் துன்பப்பட்டனர். குளிர், உணவு, உடையின்மை, போக்குவரத்து வசதியின்மை, வைத்திய உதவியின்மை எனும் காரணங்களினல் அவர்களது நிலை மிகவும் மோசமாயிற்று. கொள்ளை, சொறி, சிரங்கு, சீதபேதி எனும் தொற்று நோய்கள் பரவின.
பிரித்தானிய இராணுவத் திறமைக்குறைவினல் ஏற்பட்ட ஊழல் களெல்லாம் **டைம்சு" ("Times”) பத்திரிகையினல் அம்பலப்படுத்தப் பட்டன.
Gaur er Gur6äresa, 60o j5jo goia Gas66ño (Florence Nightingale):
உவாட்டலூப் போருக்குப் பின்வந்த நாற்பது ஆண்டு அமைதியின் பயனக, ஆங்கிலேய இராணுவத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அலுவலகம் (Department et Supply) சீர்குலைந்துவிட்டது. கிறைமியப் போரின் ஆரம்ப காலத்திலேயே, துருப்புக்களுக்குத் தேவை யான உணவு, உடைகளைப் பெற்றுக் கொடுக்கும் முறைகளும், காயப்பட்டோரையும், நோய்வாய்ப்பட்டோரையும் பராமரிக்கும் முறைகளும், சிறிதளவும் திருப்தியற்றதென உண ரப்பட்டது. போர் முடியமுன், நான்கு பாராளுமன்ற விசாரணைக் குழுக்கன், இக் கேடுகெட்ட நிலையை ஆராயவண்ேடிய கட்டாய நிலை ஏற்பட்டது.
1854 இல், அல்மாவில் பிரித்தானிய வீரர்கள் காட்டிய போர்த்திறனையும், அஞ்சா நெஞ்சத்தையும் கேள்விப்பட்டு, பிரித்தானிய மக்கள் உள்ளம் பூரித்தனர். ஆணுல், அவ் வெற்றிகளுக்குப்பின் துருப்புக்கள் அனுபவித்த சொல்லொணத் துன்பங்களை அவர்கள் அறியா தவர்கள். காயங்களைக் கட்டும் துணிகள், படுக்கைகள், சவர்க்காரம், மயக்க மருந்துகள் (Chloroform, Morphia) இல்லாமலே சத்திரசிகிச்சை நடந்தது. மெழுகுவர்த்திகளும், தீபங்களுமின்மையால், சத்திரவைத்தியர்கள் நிலவுவெளிச்சத்தில் வேலைசெய்யலாயினர் ஆயிரக்கணக்கான காயப்பட்டவர்களும், நோயினல் பீடிக்கப்பட்டவர்களும், சு குற்றறி (Reunri) எனும் பிரித்தானிய தளத்திலிருந்த வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போது, அங்கும் இதே நிலைதான் காணப்பட்டது. இவ்வின்னல்கள் ஒரு ரைம்சு பத்திரிகை நிருபரினல் வெளியிடபபட்டபோது, ஆங்கிலேய மக்கள், ஆத்திரமும் கோபமும் கொண் Q-qpsñAssot fl. 6o '-sol 67 Lu". (Sydney Herbart) 6TGö7g) GLITffà Qouj6)ffGTst (Secretary

Page 92
156 புது உலக சரித்திரம்
of War) புளொரன்சு நைற்றிங்கேலை, சுகுற்றறியிலிருந்த, இராணுவ வீரரின் பராம ரிப்பை ஏற்குமாறு, வேண்டினுர், நைற்றிங்கேல் நாற்பது மருத்துவ சேவைப் பெண்களுடன் அங்கு சென்று, வைத்தியத் துறையில் பல புரட்சிகரமான மாற்றங்களுக்கு வழியைத் திறந்து விட்டார்.
இங்கிலாந்தில் பொது சன அபிப்பிராயம் அரசாங்கத்திற் கெதிராக எழுந்து, அபடின் அரசாங்கம் மறைந்தது; பாமசன் புதுப் பிரதமரா ஞர். 1855 கோடைகால முடிவில், கோட்சக்கோவ் (Gortschakoff) என்பவரின் கீழ், இரசியப் படையினர், நேயப்படையினரின் முழுமூச் சுத் தாக்குதலுக்கு அடிபணிந்து, செபத்தபோலை பறிகொடுக்கவே, நேயநாட்டினர் அங்குள்ள எதிரிகளின் இராணுவ முகாம்கள் எல்லா வற்றையும் அழித்தொழித்தனர்.
1855 பெப்ரவரியில், சார் மன்னன் நிக்கலசு இறந்ததுடன், இரண் டாம் அலெக்சாந்தர் அரசனனர். அவ்வாண்டு வசந்தகாலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், எத் தகைய முடிபும் ஏற்படவில்லை. செபத்தபோலின் வீழ்ச்சியுடன் போர் முடிந்தது ; சமாதானத்துக்கு முன்னேற்பாடான பேச்சு வார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, 1856 மார்ச் மாதம், பரிசு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
பரிசு உடன்படிக்கை :
யுத்தத்துக்கு உடன் காரணமாக அமைந்த பிரச்சினையைப்பற்றிய ஒரு குறிப்பும், ஒப்பந் தத்தில் இடம்பெறவில்லை. ஆனல், அண்மைக் கிழக்குநாடுகளின் பிரச்சினைக்கு முடிபு காண்ப தற்கு அதி முயற்சியெடுக்கப்பட்டது. யுத்தகாலத்தில் கைப்பற்றப்ப்ட்ட நாடுகள், திருப்பிக் கொடுபட்டன. ஆனல் இரசியா, செபத்தபோலை மீண்டும் ஒர் இராணுவத்தளமாக அமைக் கக்கூடாதென விதிக்கப்பட்டது. தாதனலிசு நீர2ண, யுத்தக்கப்பல்களுக்கு மூடப்படும் ; ஆனல் சகலநாட்டு வியாபாரக் கப்பல்களுக்கும் திறந்துவிடப்படும் என்று முடிவு செய்யப்பட் டது கருங்கடலில் இரசியாவும், துருக்கியும் கடற்படைகளை வைத்திருக்கலாகாது ; தனியூப் நதியில் போக்குவரத்து, தீர்வைகளின்றி இலவசமாக நடைபெறும் என்பன எனைய முடிவு களாகும். ம்ொல்தேவியாவும், உவலேசியாவும் துருக்கிய மேற்பார்வையின்கீழ், பரிபூரண சுதந்திரம் பெற்றன. இவற்றினதும் சேபியாவினதும் சுதந்திரத்துக்கு வல்லரசுகள் உத்தர வாதம் அளித்தன. பெசரேபியாவின் ஒரு பகுதியை, இரசியா மொல்தேவியாவுக்கு கையளித்தது. வல்லரசுகள் தனியாகவோ, அன்றேல் ஒன்றுசேர்ந்தோ, இனிமேல் சுலு தானின் உண்ணுட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லையென்றும் உறுதியளித்தன. குச்சுக் கயினசி ஒப்பந்தத்தினல், துருக்கிய ஆட்சியின் கீழ் உள்ள கிறித்தவ மக்களின் மீது இரசியா பாராட்டிய பாதுகாப்புரிமை நிராகரிக்கப்பட்டது.

இத்தாலியின் ஐக்கியம் 157
அதிகாரம் 9 இத்தாலியின் ஐக்கியம் (1850-70) 1:* வட இத்தாலியின் ஒற்றுமை
1848 ஆம் ஆண்டுப் புரட்சியின் விளைவுகள் :
1848-49 ஆம் ஆண்டு தேச விடுதலை இயக்கம், துக்ககரமான தோல்வியில் முடிவடைந்தபோதும், அத்தோல்வியிலிருந்தே, இறுதி வெற்றிக்கான அறிகுறிகள் உதயமாயின. இதுகாலம்வரை இத்தாலியை ஐக்கியப்படுத்துவதற்கு மூன்று முரண்பட்ட கொள்கைகள், ஒன்ருே’ டொன்று பொருதி நின்றன. மாசினி குடியரசையும், சியோபேட்டி (Globerti) பாப்புவின் தலைமையில் ஒற்றுமையை உண்டாக்குவதை ம், ஏஜனயோர் பீட்டுமன்று--சாடீனியாவின் தலைமையில் ஐக்கியப் படுதலையும் ஆசித்து நின்றனர். 1848-49 நிகழ்ச்சிகளின் பின்பு குடி, யரசுக் கொள்கையும், பாப்புவின் கீழ் ஐக்கியப்படும் கொள்கையும், இத்தாலியப் பிரச்சினையைத் தீர்க்க முடியாதென்ற உணர்வு ஏற்பட் டுக் கைவிடப்பட்டன. மாசினி உருேமில் அடைந்த தோல்வியுடன், குடியரசுவாதம் இத்தாலிய அரசியல் அரங்கிலிருந்து நீங்கியது. அவர், நான்குமாத கால ஆட்சிக்குப்பின், இலண்டனுக்குத் திரும்பினர் கரிபால்டி தன் வீரர்களுடன் உருேமைவிட்டுப் புறப்பட்டார். ஒரு காலத்தில், சீர்திருத்த இயக்கத்தின் முன்னிலையில் நின்ற ஒன்பதாம் பத்திநாதர், இத்தாலியில் தனி அரசு ஏற்பட்டால், தனது ஆத்மீக செல்வாக்குக்குப் பங்கமேற்படக்கூடுமென அஞ்சி, ஒற்றுமைக்கான சகல முயற்சிகளையும் சிதைக்கத் திட்டமிட்டு வந்தார். பிரெஞ்சுத் துருப்புக்கள் அவரது தலைநகரத்தைக் காவல்புரிந்த வேளையில், சன நாயகத்திற்கும் தாராண்மைவாதத்துக்குமெதிரே, நிருபங்கள் எழுத ஆயத்தமானர். இவ்வாறு இரு முரண்பட்ட கொள்கைகளும் இத்தா லிய மக்களின் அபிமானத்தை இழந்ததுடன், பிரச்சினை சுலபமாயிற்று.
சாடினிய-பீட்டுமன்று அரசரின்கீழ் ஐக்கியத்தை ஏற்படுத்தும் திட்டம், தேச பக்தர்களினதும், பொதுமக்களினதும் மனதைக் கவர்ந் தது. இத்தாலிய நாட்டினவாதிகள், வருங்கால இத்தாலியை அமைப் பதற்குப் பீட்டுமன்றைத் தலைமைதாங்க எதிர்பார்த்ததற்கு, வேறு காரணங்களும் இருந்தன. பீட்டுமன்று அரசு ஒன்றுதான், ஒசுத்திரிய ஆதிக்கத்துக்குட்படாது, சுயேச்சையாக வாழ்ந்த நாடு. அதனுடன் 1848-49 ஆம் ஆண்டுப் போரில், இந்நாடு தனித்து, ஒசுத்திரியாவை எதிர்க்க முற்பட்டபோது, அந்நாட்டின் அரச வமிசத்தினர், தேச

Page 93
注互58 புது உலக சரித்திரம்
விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணிக்க ஆயத்தமாக இருந்தனரென்று காட்டிக் கொண்டனர். இரண்டாவது விற்றர் இம்மானுவேல் தன் தந்தையில்ை மக்களுக்கு உவந்தளிக்கப்பட்ட யாப்புறு முடியாட்சி முறையை நிலைக்கச் செய்தார். சருவாதிகாரம் தாண்டவமாடிய இத்தாலிய வனுந்தரத்தில், பீட்டுமன்று ஒன்று மாத்திரமே தாராளக் கொள்கைகளைக் கொண்ட ஒரு பசுந்தரையைப்போல் மிளிர்ந்தது.
கவூர் பிரதமராதல் :
1852 ஆம் ஆண்டு கவூர் பீட்டுமன்றின் பிரதமரானதுடன், இத் தாலிய விடுதலைப் பிரச்சினை, ஒரு புதிய சகாப்தத்தை எய்தியது.
அரும்பெரும் குணங்களும், தேசப்பற்றும், படைத்த தலைவர்களினுல் இத்தாலிய விடுதலை இயக்கம் பேணி வளர்க்கப்பட்டது. இத்தாலிய ஐக்கியத்தின் உண்மைச் சிருட்டி யான கவூரின் உதவியில்லாவிடின், மாசினியினதும், கரிபால்டியினதும் முயற்சிகள் வீணுக்கு இறைத்த நீராக முடிந்திருக்கும். 'இத்தாலியின் ஆத்மா மாசினி ஆயுதம், கரி பால்டி , அறிவு கவூர்” இம்மூவரும், ஒரே இட்லசியத்திற்காப் போராடியபோதும், முரண்
பட்ட கொள்கைகளைக கொண்டவர்கள்.
தாராள முடியாட்சியிலும், விற்றர் இம்மானுவேலின் ஊழியத் திலும் உறுதி கொண்டிருந்த கவூர், மாசினியின் குடியரசு வாதத்திலோ, அன்றேல் பாப்புவின் கீழ் கூட்டாட்சி யமைப்பை உருவாக்குவதிலோ, சற்றேனும் நாட்டம் கொள்ளவில்லை. அவரது மதி நுட்பம், மாசினி யின் சுதந்திரத் தாகத்தையும், கரிபால்டியின் ஆயுத பலத்தையும், தேச விடுதலைக்கு உபயோகமுள்ள கருவிகளாக மாற்றி, ஈற்றில் எல்லோருடைய கனவுகளையும் நனவாக்கியது.
கவூர், ஆங்கிலேய பாராளுமன்ற ஆட்சிமுறையில் உறுதியான நம்பிக்கை பூண்டவர். பீட்டுமன்று, பெலத்திலும், தாராண்மை வாதத்திலும் இத்தாலியில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்து, ஏனைய நாடுகளின் அபிமானத்தைப் பெறவேண்டுமெனத் திட்டமிட்டார். எனவே, அரசியல் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், பீட்டு மன்றைப் பெலம் மிக்க நாடாகக் கட்டியெழுப்பும் முதற் பணியைத் துணிகரமாகச் செய்து முடித்தார். பாராளுமன்ற அரசியல் முறையை நிலைநாட்டவும், அதை வளர்ச்சியுறச் செய்யவும் அயராது உழைத்தார். புகையிரத வீதிகளை அமைத்தார் ; வாணிபத்தை வளர்த்தார்; வியாபாரத்தை விரிவடையச் செய்தார் ; நிதி நிலையை உறுதிப்படுத் தினர் : இராணுவத்தை புனருத்தாரணம் செய்தார் ; பழைய சமத் துவமின்மை முறைகளை அழித்தார் : திருச்சபையின் அதிகாரத்தைக் குறைத்தார். இந்த உண்ணுட்டுச் சீர்திருத்தங்கள் மாத்திரம்ே, தற்காலச் சிறப்பு வாய்ந்த முதன் அமைச்சர்களில், கவூரும் ஒருவ

இத்தாலியின் ஐக்கியம் 159
ரென்ற பெருமையைப் பெற்றுக் கொடுத் திருக்கும். ஆனல் பிற நாட்டு விவகாரங்களில் அவர் பெற்ற பெருமை இதிலும் பன்மடங்கு மகிமையுடையது.
இரண்டாவது இத்தாலிய ஐக்கியம் பூரணமடைவதற்கு, ஐரோப் பிய நாடுகளின் ஆதரவும், ஒரு பெலம் மிக்க வல்லரசின் இராணுவ உதவியும் அவசியமென அறிந்து, இரண்டையும் பெறுவதற்குத் திட்டமிட்டுக் கருமமாற்றினர். “இத்தாலி தன்னைத் தானே பாது காத்துக் கொள்ளும்' என்பதே, 1848 ஆம் ஆண்டுப் புரட்சியின் சித்தாந்தம். ஆனல் கவூர், அப் புரட்சியிலிருந்து ஒசுத்திரியாவும் பிரான்சும் என்றும் இத்தாலிய ஐக்கியத்துக்கு முட்டுக்கட்டைகளாக நிற்கும் எனும் உன்னத பாடத்தைக் கற்றுக்கொண்டார். அது மாத்திரமன்றி, ஒசுத்திரியா இத்தாலிய எல்லைகளிலிருந்து கலைக்கப்பட்ட பின்பே, இத்தாலிய ஐக்கியம் கை கூடுமென்றும், சாடீனியா போன்ற ஒரு சிறு இராச்சியம் தனித்தோ, ஏனைய இத்தாலிய நாடுகளுடன் சேர்ந்தோ ஒசுத்திரிய சேனைகளை வெற்றி கொள்ள முடியாதென்றும் புலனுயிற்று. மேலும், இத்தாலிய ஐக்கியமென்ற கனவு நனவாகுவ தற்குப் பிரான்சின் உதவி அத்தியாவசியமென உணர்ந்தார். எனவே, இத்தாலியப் பிரச்சினை, ஒசுத்திரியாவின் உண்ணுட்டு விவகாரங்களோடு சம்பந்தப்பட்டது, எனும் இருள் திரையைக் கிழித்து, அதை ஐரோப் பாவின் முன் பிரபல்யமாக்க வழி வகை தேடினர். இத்தாலியப் பிரச்சினையை ஐரோப்பிய வல்லரசுகளின் கண்ணுேட்டத்திற்குக் கொண்டு வந்து, அவர்களது அனுதாபத்தைப் பெற்ருல் தான், அது சுலபமாகத் தீருமென உறுதியான நம்பிக்கையுடையவர், கவூர்.
கவூரும் கிறைமியப் போரும் :
இத்தாலிய பிரச்சினையை ஐரோப்பிய நிலைக்கு உயர்த்தத் திட்ட மிட்டுக் கொண்டிருந்த கவூர், கிறைமிய யுத்தத்தை ஒரு அரிய ஆயுதமாக உபயோகித்தார். பீட்டுமன்றுக்கு, போல்கன் தீபகற்ப நாடுகளுடனே, அன்றேல் இரசியாவுடனே ஒருவிதமான ஈடுபாடு மிருக்கவில்லை. எனினும் கவூர் பிரான்சுடனும் இங்கிலாந்துடனும் நட்புப் பூண்டு, இரசியாவுக் கெதிராக யுத்தப் பிரகடனம் செய்தார். இச் செயலினல் பீட்டுமன்றின் சர்வதேச நிலையை உயர்த்தவும், வல்லரசுகளின் நல்லெண்ணத்தைப் பெறவும், அவர்களைப் பீட்டு மன்றுக்குக் கடைமைப்படச் செய்யவும் எதிர்பார்த்தார். ஆங்கிலே யர் அளித்த பண உதவியை ஏற்க மறுத்து, ஆங்கிலேய-பிரெஞ்சு உடன் பாட்டில், சம பதத்துடன் சேர்ந்து, 15,000 தெரிந்தெடுக்கப்பட்ட வீரர்களை போர்க்களத்துக்கு அனுப்பி வைத்தார். சாடீனிய சேனையும், போரில் வீரங் காட்டி மகத்தான ஒரு வெற்றியை ஈட்டியது. கவூ

Page 94
60 புது உலக சரித்திரம்
ரின் திட்டமும் நிறைவேறியது. 1856 ஆம் ஆண்டு, பரிசில் கூடிய வல்லரசுகளின் மாநாட்டில், கவூர் இடம் பெற்றர். அங்கு, இத் தாலிய பிரச்சினை, ஒசுத்திரிய உண்ணுட்டு நிலையிலிருந்து சர்வதேச நிலைக்கு உயர்ந்தது. ஐரோப்பிய இராசதந்திரிகள், தம் அனுதா பத்தை கவூருக்குத் தெரிவித்தனர். மூன்ரும் நெப்போலியன் இத்தாலி யருக்கு உதவி செய்யக் கடமைப் பாடுடையவரெனக் காட்டிக் கொண்டார். கவூர், கிறைமியன் யுத்தத்தில் இறங்கிய நோக்கங்கள் பூரணமாக நிறைவேறின.
ஒசீனியின் கொலை முயற்சி :
இரு ஆண்டுகளாக ஒன்றும் நடைபெறவில்லை. அதன்பின் கவூ ருடைய திட்டங்கள் ஒசீனி என்ற குடியரசுவாதியின் மதியற்ற செயலி ஞல் சிதைவுறும் நிலைக்குள்ளாகின. 1858 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் நாள் ஒசினி நெப்போலியனைக் கொலைசெய்ய முயற்சித் தான் ; நெப்போலியனும் புதுமையாக உயிர் தப்பினர். ஒசீனி, “இத் தாலி நீடூழி வாழ்க’ எனத் தன் தாயகத்தை வாழ்த்தியவாறே கழு மரத்தில் உயிர் விட்டான். அவனது தேசப்பற்றிலிருந்து, இத்தாலிய விடுதலைக்கான ஒர் புதுச் சத்தி பிறந்தது.
புளொம்பியேர் உடன்படிக்கை :
1858 ஆம் ஆண்டு மே மாதம், கவூரும் நெப்போலியனும் புளொம் யேர் (Plombieres) எனுமிடத்தில், இரகசியமாகச் சந்தித்து, ஒசுத் திரியாவுக்கெதிராக போர் செய்யவும், இத்தாலிய அமைப்பை மாற்றி யமைக்கவும் முடிவுகட்டினர்.
நெப்போலியன், இத்தாலிய விடுதலையில் சிரத்தை கொண்டானே தவிர, இத்தாலிய ஐக்கியத்தை ஆசிக்கவில்லை. அவர் ஒசுத்திரியா வுடன் போர் புரிய ஒப்புக் கொண்ட அதே நேர ம், இத்தாலி ஒன்ருவதை ஏற்க மறுத்தார். எனவே, லொம்பாடி, வெனீசியா பிர தேசங்களிலிருந்து ஒசுத்திரியரைக் கலைத்து, அவ்விரு நாடுகளையும் பீட்டு மன்றுக்கு மீட்டுக் கொடுக்க, நெப்போலியன் ஒப்புக் கொண்டார். மிகுதி இத்தாலியின் புனரமைப்பைப் பற்றியும், பேச்சுவார்த்தைகள் நடந்தன. நேப்பிள்சு, உருேம் என்ற இரு அரசுகள், பழைய முறைப் படியே அமைய, மத்திய இத்தாலி தன் மருமகன் செருேம் பொனப் பாட்டுக்கு, ஒரு தனி அரசாக அமைய வேண்டு மென்று இலூயி வற்புறுத்தினன். இவற்றிற்குக் கைம்மாருக, நீசு, சவோய் என்ற இத்தாலிய பகுதிகளைப் பிரான்சுக்குக் கொடுக்கவும், விற்றர் இம்மானு வேலுடைய மகள், செருேம் போனப்பாட்டைத் திருமணம் செய்வ தையும், கவூர் ஒப்புக்கொண்டார். இத்தாலியை நான்காகக் கூறு போடு


Page 95
مساہم بحر ہم~~”ل۔۔۔تم 邻 墨
சுவிற்சலந்து k ኀ ஒசுத்திரியா
『ペ、 سہ ممص<محسیم *^ ? کہ ”۔^Tن۔۔} :
1. ' ۔ہم ت............. ۔ ? ! A محے at hut y's ~ష్ణోగ్ళ
59 :့် ( ၄၉။
ܓܓ*ܓ-ܼ
محصحیح سمص۔ سے ح --سم
*\ யுகொசிலாவியா
ஐக்கியம் (1859-1870)
 
 
 
 
 
 

இத்தாலியின் ஐக்கியம் Η 6
வது, கவூரின் இறுதி நோக்கமன்று. எனினும், ஒசுத்திரியாவுக் கெதி ராக பிரெஞ்சு உதவியைப் பெறுவதற்காக, இத் தற்காலிக ஒழுங்கை ஏற்றுக் கொண்டார்.
ஒசுத்திரியாவுக் கெதிராக பிரெஞ்சு-சாடீனிய யுத்தம் :
புளொம்பியேர் ஒப்பந்தத்தின்படி, ஒசுத்திரிய யுத்தம், கூடிய சீக் கிரத்தில் ஏற்படவேண்டுமென்றும், கவூருடைய 100,000 போர் வீரர் களுக்குதவியாக நெப்போலியன் 200,000 வீரர்களை அனுப்புவாரென் றும் ஏற்பட்டிருந்தது. எனவே, நெப்போலியனின் மனம் மாறுமுன் பும், வேறு இடையூறுகள் ஏற்படமுன்பும், யுத்தம் ஆரம்பிக்க வேண்டு மென, கவூர் கருமமாற்றினர். ஒசுத்திரியாவைப் பலவந்தமாகப் போரில் இழுக்க முயற்சித்தபோதிலும், அந்நாடு அதி பொறுமையாக விருந்தது. கவூரும் நம்பிக்கையிழக்கும் நிலையை அடைந்தார். மார்ச் 9 ஆம் திகதி, சாடீனிய இராணுவத்தை யுத்தத்துக்கு ஆயத்த மாகும்படி கட்டளையிட்டார். பத்திரிகைகள் ஒசுத்திரியாவைக் கண்டிப் பதில் ஈடுபட்டு, லொம்பாடி, வெனீசியாவில் கிளர்ச்சிகளைத் தூண்ட முயற்சித்தன. யுத்தத்தைத் தவிர்க்க, இங்கிலாந்து, ஒர் ஐரோப்பிய மாநாட்டைக் கூட்ட முற்பட்டது. கவூர், தன் திட்டங்களெல்லாம் மாயமாக மறைவதைக் கண்டு, தற்கொலை செய்யக்கூட முயற்சித் தார். இந் நிலையில், ஒசுத்திரியா, எதிர்பாராத விதமாகத் தலையிட்டு, நிலையை மாற்றியது. “உடனே பற்றறவு (Disarmament) அன்றேல் போர்' என்ற ஒரு யுத்தப் பிரதிக்கினையைச் சாடீனிய மன்னருக்கு, ஒசுத்திரியா அனுப்பி வைத்தது. கவூர் விரித்த வலையில் ஒசுத்திரியா தானகவே சிக்குண்டது. கவூரின் உள்ளம் பூரித்தது: “நாம் சரித்திர கர்த்தாக்களானுேம்" என்று ஆர்ப்பரித்தார். கவூர், ஒசுத்திரிய ஆக்கிர மிப்பிலிருந்து தன் தேசத்தைக் காப்பாற்ற ஆயத்தப்படுத்துவதாக, ஐரோப்பாவின் கண்முன் காட்டிக் கொண்டார். தடுமாறிக் கொண் டிருந்த நெப்போலியனும் ஓர் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் பங்குபற்று வதில், திருப்தி கொண்டார். ஏப்ரல் 29 ஆம் திகதி, பிரான்சு யுத் தப் பிரகடனம் செய்தது. பிரெஞ்சு-சாடீனிய துருப்புக்கள் யூன் 4 ஆம் திகதி, ஒசுத்திரியாவை மசென்ரா (Magenta) எனுமிடத் தில் தோற்கடித்து, யூலை 7 ஆம் திகதி, மிலானுக்குள் பிரவேசித் தன. அவை, இவ்வெற்றியைத் தொடர்ந்து, சொல்பறினுே (Solterino) எனுமிடத்தில், இன்னுமொரு மகத்தான வெற்றியை ஈட்டி, லொம் பாடியைக் கைப்பற்றின. ஒசுத்திரியர், வெனீசியாவிலுள்ள வலிமை மிக்க கோட்டைகளுக்குப் பின்வாங்கினர்.
D - F 13

Page 96
62 புது உலக சரித்திரம்
விலாபிருங்கா உடன்படிக்கை :
வெனிசிலிருந்தும் ஒசுத்திரிய துருப்புக்கள் கலைக்கப்பட்டு, சாடீனி யருக்கு வெற்றி நிச்சயமாகிக் கொண்டிருக்கும் வேளையில், நெப்போலி யன், சடுதியாக யுத்தத்தை நிறுத்தி, விலா பிருங்கா (Williafranca) எனுமிடத்தில் ஒசுத்திரியாவுடன் சமாதானம் செய்து கொண்டார். சாடீனியா, லொம்படியைப் பெற்றது ; ஒசுத்திரியா வெனீசியாவை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது.
வெற்றியின் மத்தியில் போர் நிறுத்தம் ஏற்பட்டதைக் கண்டு இத்தாலியர் ஏமாற்றமடைந்தனர். பீட்டுமன்றுக்கும் அகில இத் தாலிக்கும், நெப்போலியனின் செயல், துரோகம் நிறைந்ததும், மன்னிக்க முடியாததுமான குற்றமாகப் பட்டது.
கவூரும் விற்றர் இம்மானுவேலும் :
நெப்போலியனின் துரோகமான செயலைக்கண்டு கோபாவேசம் கொண்ட கவூர். அந்த அவமானமிக்க ஒப்பந்தத்தை ஏற்க வேண்டா மென விற்றர் இம்மானுவேலுக்கு ஆலோசனை கூறினர். அரசன் அவ்வாலோசனைக்குச் செவிசாய்க்க மறுக்கவே, கவூர் மனமுடைந்து தனது பதவியைத் துறந்து ஓய்வு பெற்ருர். இந்த இக்கட்டான நிலையில் விற்றர் இம்மானுவேலின் தீர்மானம், கவூரின் ஆத்திரச் செயலிலும் பார்க்க மேன்மையானது என்பதை பிற்காலத்துச் சம் பவங்கள் எடுத்துரைத்தன. ஆத்திரத்தினல், கைகூடினவற்றை இழப் பதிலும் பார்க்க, உடன் பெறக்கூடியவற்றைப் பெற்றுக்கொண்டு, மிகுதியைப் பின் தேடிக் கொள்வதே மேல், என்பது விற்றர் இம்மானு வேலின் உறுதியான நம்பிக்கை. அதனுடன், இத்தாலியின் எதிர் காலம் இராச தந்திரிகளிடமிருந்து மக்கள் கைக்கு மாறிவிட்ட தென்பதையும் அவர் நன்குணர்ந்திருந்தார்.
இத்தாலியின் ஐக்கியத்தின் வளர்ச்சி :
லொம்பாடியிலிருந்து ஒசுத்திரியர் துரத்தப்பட்டனர் என்ற செய்தி இத்தாலிய மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியையும் உற் சாகத்தையும் ஊட்டியது. மத்திய இத்தாலிய மக்கள் புரட்சி யிலிறங்கினர். பாமா, மெசடேனு, தசுக்கணிப் பிரசைகள் தம் அரசர்களை நாட்டை விட்டு விரட்டினர். பாப்புவின் பிரதேசமான உருெமக்னு, பொலொஞ்ஞா (Bolonga) விலிருந்து பாப்புவின் பிரதிநிதி களைத் துரத்தி விட்டுத் தற்காலிக அரசாங்கங்களை யமைத்தனர். எங்கும் பீட்டுமன்றுடன் இணைந்து கொள்ள, வாக்குகள் அளிக்கப்பட் டன. இப்படியான மக்களின் தீர்ப்பை மீறி பழைய அரசுகளை மீண்டும் நிலைநிறுத்த நெப்போலியனுக்குத் துணிச்சலில்லை.

இத்தாலியின் ஐக்கியம் il 6
இங்கிலாந்தின் பிறநாட்டு அமைச்சர்கள் பாமசன், இறசல் இருவரும் தம் அனுதாபத்தை இத்தாலிக்கு வெளியரங்கமாகக் காட்டினர். இத்தாலிய மக்கள் தம் தலைவிதியைத் தாமே நிர்ணயிகக அவர்களுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டுமென்றும், அதில் ஏனையோர் தலையிடக் கூடாதென்றும் தம் கொள்கையை வெளியிட்டனர், மத்திய இராச்சியங்களில் நடைபெற்ற விடுதலை இயக்கத்துக்கு இங்கிலாந்து இவ்விதம் காட்டிய ஆதரவு, இத்தாலிய ஐக்கியத்துக்குப் பெரிதும் துணை புரிந்தது. ஒசுத்திரியா வழமைபோல், சாடீனியா வுடன் நாடுகள் இணைக்கப்படும் இயங்கங்களையும், பாப்பானவரின் அதிகாரத்தைக் குறைக்கும் இயக்கங்களையும், எதிர்த்தே வந்தது. பிரான்சு, விலாபிருங்கா ஒப்பந்தத்தை மீறி, பீட்டுமன்றுக்கு ஆதரவு காட்ட முடியாமலும், பிரிட்டிசு அமைச்சர்களின் கொள்கைகளினல், அதை எதிர்க்க முடியாமலும் தடுமாறியது. இச் சந்தர்ப்பத்தில் பதவிக்குத் திரும்பவும் மீண்ட கவூர், ஒர் இலகுவான வழியைக் கண்டு பிடித்தார். பிரான்சுக்கு வாக்களிக்கப்பட்ட சவோய், நீசு மாகாணங்களை அதற்குக் கொடுத்து, மத்திய இராச்சியங்கள் பீட்டு மன்றுடன் இணைவதற்கு நெப்போலியனின் சம்மதத்தை அவர் பெற்ருர். இவ்வாறு, இத்தாலிய ஐக்கியத்தின் இரண்டாம் படி பூர்த்தி யாயிற்று. வட இத்தாலியில் வெனிசியா நீங்கலாக, ஏனைய பகுதிகள் யாவும் ஒற்றுமையும் விடுதலையும் பெற்றுவிட்டன.
கவூரின் இந்தச் செயல், ஓர் உன்னத இராசதந்திர வெற்றி என்பதில் ஐயமில்லை. சவோய், நீசு மாகாணங்களைக் கொடுத்து பிரான்சைத் திருப்திப் படுத்தி யிருக்காவிடின் பிரான்சும் ஒசுத்திரியா வும் தலையிட்டு, மத்திய பிரதேசங்களில் பழைய ஆட்சியைப் புதுப் பித்திருப்பர். இத்தாலியின் இரு சிறு மாகாணங்களின் வழியாக மூன்றுவது நெப்போலியனின் கைகளைக் கட்டி, இச்செயலில் அவரையும் பங்காளியாக்கினர்.
1860 ஏப்ரல் மாதம், விற்றர் இம்மானுவேல், அல்பிசு மலைகள் முதல், போப்பாண்டவர் இராச்சியம் ஈருக (வெனிசியா ஒன்று நீங்க லாக) வியாபித்துக் கிடந்த வட--மத்திய இத்தாலியின் அரசனனர்.
இந்த ஐக்கியம் ஏற்பட்ட ஓராண்டுக்குள் நேப்பிள்சு, சிசிலி, பாப்புவின் இராச்சியங்கள் முழுவதையும் (வத்திக்கான் ஒன்று நீங்கலாக) ஒருமைப்படுத்தியதைக் கண்டு ஐரோப்பா வியப்படைந்தது.
கவூர், பிறநாட்டு அரசர்களின் ஆதரவைத் தேடுவதிலிருந்து மாசினி, கரிபால்டி என்பவர்களின் பக்கம் திரும்பினுர்.

Page 97
6. புது உலக சரித்திரம்
2. கரிபால்டியும்
அவரது ஆயிரவரின் அணிவகுப்பும்
நேப்பிள்சு-சிசிலியில் இரண்டாம் பிரான்சிசு :
வட இத்தாலியின் ஒற்றுமை பூர்த்தியானதும், தென் பகுதியில் ஒரு பெரும் ஒற்றுமை இயக்கம் ஆரம்பித்தது. வடக்கே நடந்தேறிய சம்பவங்கள் பூர்போன் அரசரின் கொடுங்கோ ல் ஆட்சிக்குள் அடி மைப்பட்டுக்கிடந்த நேப்பிள்சு, சிசிலி மக்களை நித்திரையிலிருந்து தட்டி யெழுப்பியது. 1821 தொடக்கம் 1860 வரை பொலீசு அதி காரத்தின் அத்திவாரத்தில் கட்டப்பட்ட அரசாங்கம், பெலவீனத் தினுல் ஆட்டங் கொடுத்தது. 1859 இல் இரண்டாவது பேடினந்து, விவேகமற்ற தன் மகன் இரண்டாம் பிரான்சிசு என்பவனை அரசேற விட்டுப் பரகதி எய்தினுர், நாட்டின் உள்ளும் புறமும் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல், இவருக்கு இல்லை. புரட்சியை நோக்கி, நாடு வேகமாக ஒடிக்கொண்டிருந்தது. விலாபிராங்கா சமா தானத்துடன், பிரெஞ்சு அரசுக் கெதிராக பலமான எதிர்ப்பு ஏற்பட் டது மாத்திரமன்று, பீட்டுமன்றுடன் இணைந்து இத்தாலிய ஐக்கி யத்தைப் பூர்த்தி செய்யவும், மக்கள் ஆசித்தனர்.
கவூரும் கரிபால் டியும் :
விலாபிராங்கா ஒப்பந்தத்துக்கு மறுப்பாக சிசிலித்தீவில் தோன் றிய பல புரட்சி இயக்கங்களுக்கு மாசினி ஆதரவு காட்டினர். புரட் சிக்காரர், கரிபால்டியிடமும் கவூரிடமும் உதவி கோரினர். மக்க ள் தாமாகவே புரட்சியை விற்றர் இம்மானுவேலின் பேரில் ஆரம்பித் தால், தான் உதவிக்கு வரச் சித்தமாக விருந்ததாக கரிபால்டி தெரி வித்தார். ஆனல் இதை ஆதரிக்க, கவூர் சற்றுத் தயங்கினர் ; ஒர் அயல் நாட்டின் மீது ஆக்கிரமிப்பைத் துரண்டினுல் வல்லரசுகளின் கோபத்தையும் தலையீட்டையும் சம்பாதிக்க நேரிடுமென அஞ்சினர். மறுபுறம் விற்றர் இம்மானுவேலின் பேரில் ஆரம்பிக்கப்படும் புரட்சி, தனது வாழ்வின் இலட்சியத்தைப் பூர்த்தி செய்யுமென்பதையும் நன் கறிந்திருந்தார். ஆகவே, கவூர் வெளித்தோற்றத்துக்கு நடு நிலை வகிப்பதாகக் காட்டிக் கொண்டு இரகசியமாகப் புரட்சியை ஆதரிக் கத் திட்டமிட்டார். A.
சிசிலியில் புரட்சி :
1860 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி, சிசிலியில் புரட்சி ஏற்பட்டவுடன், தான் அத்தீவின் மக்களுக்குக் கொடுத்த

இத்தாலியின் ஐக்கியம் 1 6 5
வாக்கை நிறைவேற்றக் கரிபால்டி கவூரிடமும் அரசரிடமும் உதவி கேட்டார். இப்புரட்சியின் வெற்றி, கரிபால்டி, கவூர் எனும் இருவரின் செயல்களிலேயே தங்கி நின்றது.
கரிபால்டி , 1807 ஆம் ஆண்டு நீசு என்ற நகரத்தில் ஒரு கப்பலோட்டிக்கு மகனுகம் பிறந்தவர். அவரது தந்தை அவருக்கு அளிக்க முயற்சித்த கல்லியில் நாட்டம் கொள் பளாது, பாலிய பருவ்த்திலேயே பத்து ஆண்டுகளாக மாலுமித் தொழிலில் பயிற்சிபெற்று, நல்ல உடல் வலிமையையும், தடைகளை இலகுவில் மேற்கொள்ளும் ஆற்றலையும் பெற்ருர். அதனுடன், இக்காலத்தில் இத்தாலியிலிருந்து நாடுகடத்தப்பட்ட தேசாபிமானிகளுடன் தொடர்புகொண்டு, அவரது எஞ்சிய வாழ்நாள் முழுவதும், அவரை ஆட்கொண்ட நாட்டுப் பற்றையும், சுதந்திர உணர்ச்சியையும் பெற்றர். 1833 ஆம் ஆண்டு மாசினிக்கு அறிமுகம் செய்யப்பட்டு, ‘யெளவன இத்தாலி" இயக்கத்தில் சேர்ந்தார். அதே ஆண்டு, மாசினியின் புரட்சிச் சதித்திட்டமொன்றில் பங்குபற்றிஞர், ஆணுல் புரட்சி அனுகூலமடையவிலலை. சாடீனிய அரசாங்கம், கரிபால்டிமீது மரணதண்டனை விதிக்கவே, அவர் நாட்டைவிட்டு ஒட்டம் பிடித்தார்.
1836 தொடக்கம் 1848 வரை, கரிபால்டி பன்னிரண்டு வருடங்களுக்கு தென் அமெரிக் காவில், றியோ கிருன் டே (Rio Grande) என்ற குடியரசில் சேனைத் தலைவராக நிய மிக்கப்பட்டு, குவரில்லாப் போர் முறைகளில் தனித்திறமை பெற்றர்.
1848 ஆம் ஆண்டு இத்தாலி முழுவதும் புரட்சியேற்பட்டதைக் கேள்வியுற்ற கரிபால்டி, தாய்நாட்டின் விடுதலைக்காக உழைக்கும் நோக்குடன் இத்தாலிக்குத் திரும்பினர்; ஒசுத் திரியாவுக்கெதிராக போர்தொடுத்த சாடீனிய அரசர் சாள்சு அல்பேட்டுக்குத் தன் சேவையை அர்ப்பணித்துத், தொண்டு செய்தார். குசுட்டோசா தோல்விக்குப்பின் மாசினியுடன் சேர்ந்து உரோமாபுரிக் குடியரசை அமைப்பதில் ஈடுபட்டார். கரிபால்டி, ஒரு பெரிய படைக்குத் தலைமை தாங்கிப் பிரெஞ்சுத் துருப்புக்களைப பலமாக எதிர்த்தார். வீரம் நிறைந்த காவ லுக்குப் பின்பு உருேம் பிரெஞ்சுக்காாரினல் மீட்கப்பட்டது. கரிபால்டி தன் ஆதரவாளர் களுடன் உருேமைவிட்டு வெளியேறியதால் தம்மைப் பின்தொடர்ந்த 4000 வீரர்களுக்கு 'தாகம், தவிப்பு, தடையற்ற அணிவகுப்பு, போர், வீரமரணம்" என்பவற்றையே வாக்களித் தார். இவர்களில் பெரும்பகுதி ஒசுத்திரியரின் துப்பாக்கிகளுக்கு இரையாகினர். வழியில் தனது மனைவியையும் இழந்த கரிபால்டி, தசுக்கனியில் ஒடியொளித்து, பின்பு பீட்டுமன் றுக்குச் சென்று, அங்கிருந்து அமெரிக்காவுக்குக் கப்பலேறினர். Α 1854 ஆம் ஆண்டு தாயகம் திரும்பி, சாடீனியாவுக்கு அண்மையி லிருந்த கப்றேரு தீவை விலைக்குவாங்கி, அங்கு ஒரு வீட்டை அமைத்து எளிமையில் வாழ்ந்தார். 1856 இல் கவூரை முதன்முறை யாகச் சந்தித்ததன் பயனக, கரிபால்டி இவ்வளவு காலமும் கடைப் பிடித்த குடியரசுவாதத்தைக் கைவிட்டு முடியரசை ஏற்றதனுல் நாட் டின் ஒற்றுமை இயக்கங்கள் யாவும் ஒன்றுபட்டன.
சிசிலி மீது ஆயிரவரின் படையெடுப்பு :
சிசிலித்தீவு மக்களுக்குத் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் நோக்குடன், சரித்திரப் புகழ் வாய்ந்த தன் ஆயிரவருடன் கரிபால்டி சிசிலிக்குப் பயணமானர். பிரித்தானியக் கப்பற்படை, இவரது கப்பல் களுக்குப் பாதுகாப்பளித்துத் தேசபக்தர்களின் அன்பையும் ஆதரவை
A l3

Page 98
66 புது உலக சரித்திரம்
யும் பெற்றது. இங்கிலாந்தின் இக் கண்ணியமான செயலை இத்தாலி யர் நீண்ட காலம் மறக்கவில்லை. மே மாதம் 11 ஆம் நாள், கரிபால்டி யின் படை சிசிலியில் இறங்கி, உடனே சிசிலியின் தலைநகரான பலேமோ வை நோக்கி விரைந்து முன்னேறியது. மூன்று மாதங்களுக் குள் சிசிலியைக் கைப்பற்றி, விற்றர் இம்மானுவேலின் பேரில் சிசிலித் தீவின் சருவாதிகாரியெனத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்டார். இத்தகைய சிறு படையைக் கொண்டு, இவ்வளவு விரைவாக, ஒரு நாடு பிடிபட்டதைச் சரித்திரம் என்றுமே கண்டதில்லை.
கவூரும் கரிபால்டியும் :
கரிபால்டியின் இவ்வதிசய வெற்றிகள், கவூரின் முன் சில சிக்கலான பிரச்சினேகளே எழுப்பின. வெற்றி வெறிபின் மயக்கத்தாலும், குடியரசு வாதிகளின் உற்சாகத்தாலும், கரிபால்டி உருே மின் மீது நிச்சயம் படையெடுப்பார் என்று கவூர் யூகித்தார். மேலும், ஒவ் வொரு வெற்றியுடனும், கரிபால்டி ஒரு சுயேச்சை வாதியாக மாறி, கவூரில் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து, தீவிரவாதிகளின் பேச்சில்ை கவரப்பட்டு, இவ்வியக்கத்தைக் குடியரசின் பக்கம் திருப்ப எண்ணினர். கவூரின் திட்டங்கள் பூர்த்தியடையக் கரிபால்டி யின் வெற்றிகள் இத்தாலியின் பேரில் ஈட்டப்படவேண்டுமென்றும், உருேமைத் தாக்கிப் பிரான்சினதும் ஒசுத்திரியாவினதும் கோபத்தைச் சம்பாதிக்கலாகாது என்றும் கவூர் நன்குணர்ந்தார். இதுவரை சர்வ தேச நிலை இத்தாலிக்குச் சாதகமாகவே இருந்தது.
சிசிலியை பீட்டுமன்றுடன் இணைக்கக் கரிபால்டி சம்மதிக்க மறுத் ததன்பேரில், ஐக்கிய இயக்கத்தைத் தன் விருப்பப்படி வழிப்படுத்த கவூர் திட்டமிட்டார். நாட்டின இயக்கத்தின் போக்கைக் கரிபால்டி யின் கையிலிருந்து பறித்து, அதன் பொறுப்பை சாடீனிய அரசாங் கம் ஏற்க நேரம் வந்துவிட்டதெனக் கவூர் உணர்ந்தார்.
ஆகத்து மாதம், கரிபால்டி கடலைக் கடந்து நேப்பிள் சுக்குள் வெற்றி முரசுடன் பிரவேசித்தார். பூர்போன் அரச வம்சத்தினர் எதிர்ப்பே காட்டவில்லை. புழுவரித்த நேப்பிள்சு அரசாங்கம் தொட்ட வுடன் சிதைவுற்றது. கரிபால்டி ஆவணி 31 இல், இறே சியோவைக் (Reggio) கைப்பற்றினர். அவரது முன்னேற்றம் ஒரு வெற்றிகரமான சுற் றுப் பிரகாரமாக மாறியது. செற்றெம்பர் 6 ஆம் நாள், அரசர் கேற்ரு (Gaeta) வுக்குக் கப்பலேறினர். அடுத்த தினம், தனது துருப்புக் களுக்கு முன், கரிபால்டி நேப்பிள் சில் மக்களின் கரகோசத்தின் மத்தி யில் வந்திறங்கினர். நகரவாசிகள் அவரைத் தங்கள் மீட்பர் என்று வரவேற்றனர். கரிபால்டி தன்னை நேப்பிள் சின் சர்வாதிகாரி என்று பிரகடனம் செய்து, தனது திட்டத்தையும் பகிரங்கமாக வெளிப்

இத்தாலியின் ஐக்கியம் 丑67
படுத்தினர்-நேப்பிள் சுக்குப் பின் வெனிசு; வெனிசுக்குப் பின் உருேம். இப்பேர்ப்பட்ட நடவடிக்கை ஒசுத்திரியாவுடனும் பிரான் சுடனும் போரில் முடிவுபெறும், என்பது அவருக்குக் கவலையைக் கொடுக்கவில்லை. தன் வெற்றிகளின் பலன்களை வீண் விரயம் செய் யக்கூடாதென்று, கவூர் கூறிய ஆலோசனைக்குக் கரிபால்டி, செவி சாய்க்க மறுத்தீார். உடனே கவூர் நிலை மோசமடையுமுன்னம் கரும மாற்றத் திட்டம் பூண்டார். “இத்தாலி அன்னியர்களிடமிருந்தும், தப்பான கொள்கைகளிடமிருந்தும், பைத்தியக்காரரிடமிருந்தும் காப் பாற்றப்படவேண்டும்” என்ருர் கவூர். பாப்பானவரின் பிரதேசத்தை ஆக்கிரமித்து உருேமை கரிபால்டியிடமிருந்து பாதுகாக்க முற்பட் டார் அவர். விற்றர் இம்மானுவேலின் துருப்புக்கள், பாப்புவின் இராச்சியங்களுக்குள் பிரவேசித்து, அங்கு தோற்றிய எதிர்ப்பை முறி யடித்து அம்பிறியா, மாச்சசு மாகாணங்களைக் கைப்பற்றின.
இதன் பின்பு விற்றர் இம்மானுவேல், தெற்கே செஞ்சட்டையின ரைச் சந்திக்க நேப்பிள்சை நோக்கிப் புறப்பட்டு, ஒற்ருேபர் மாதம் அந்நாட்டு எல்லையைக் கடந்தார். கரிபால்டி காத்திராப்பிரகாரம் கபூவா (Capua) எனுமிடத்தில் நேப்பிள் சுப் படையினரால் மறிபட்டு முன்னேற முடியாத நிலையில் நின்ருர் ; இதற்கிடையில் சிசிலி, நேப் பிள்சு, அம்பீறியா, மாச்சசு எங்கும் குடியொப்பங்கள் நடாத்தப் பட்டபோது, எல்லா இடங்களிலும் மக்கள் சாடீனியாவுடன் இணைய ஏகமனதாக விருப்பம் தெரிவித்தனர். கவூரின் இராசதந்திரத்தினல் ஒதுக்கப்பட்ட கரிபால்டி, தான் கைப்பற்றின பிரதேசங்கள் அனைத் தையும், தன் துருப்புக்களையும், தன் அதிகாரத்தையும் ஒற்ருேபர் மாதம் 27 ஆம் நாள், விற்றர் இம்மனுவேலுக்குக் கையளித்தார். இரு பகுதியினரின் ஒற்றுமைப் பட்ட படைகள், நேப்பிள்சு இராணுவ எதிர்ப்பைச் சுலபமாக மேற் கொண்டன. நவம்பர் மாதம் 9 ஆம் நாள், விற்றர் இம்மானுவேல் சிசிலி, நேப்பிள்சின் அரசராக முடி சூட்டப்பட்டார். அடுத்த தினம், மனிதரில் காணமுடியாத சுய பரித்தியாகத்துடன், கரிபால்டி தனக்குக் கிடைத்த பரிசுகளையும், பட் டங்களையும் உதறித் தள்ளிவிட்டு கப்றேருத் தீவில் தன் தோட்டத் திற்குத் தேவையான ஒரு பை விதையைவிட வேறென்று மில்லாத வராய் வெளியேறினர்.
1861 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் நாள், தியூறினில் கூடிய முதல் இத்தாலிய பாராளுமன்றத்துக்கு உருேம், வெனிசியா இரண்டும் நீங்கலாக, சகல இத்தாலிய பிரதேசங்களிலுமிருந்து பிரதி நிதிகள் சமுகம் கொடுத்தனர். அங்கு விற்றர் இம்மானுவேல், இத் தாலியின் அரசராகப் பிரகடனம் செய்யப்பட்டு, முடி சூட்டப்பட் டார். அதேயாண்டு கவூர் அமரத்துவம் அடைந்தார்.

Page 99
168 புது உலக சரித்திரம்
இத்தாலிய ஐக்கியத்தின் நிறைவு : வெனிசியாவும் உருே மும் மாத்திரமே எஞ்சி நின்றன. முன்னது ஒசுத்திரியாவினலும், பின்னது பிரான்சினலும் பாதுகாக்கப்பட்டே உயிர் வாழ்ந்தன. வெனிசியாவை ஐக்கியத்தில் இணைப்பதற்கு, இத் தாலியர் 1866 இல், ஒரு நல்வாய்ப்பைப் பெற்றனர். அவ்வாண்டு, பிரசியா, ஒசுத்திரியாவுக் கெதிராக போரிட்ட சமயத்தில், வெனிசி யாவை ஆக்கிரமிக்கும் நோக்குடன், இத்தாலி பிரசியாவுக்குப் போரில் உதவி செய்தது. 1888 ஆம் ஆண்டுக் குறுகிய போரில் பிரசியா, ஒசுத் திரியாவை முறியடித்ததுடன், வெனிசியா, இத்தாலிய ஐக்கியத்தில் இணைக்கப்பட்டது.
ஒற்றுமைப்பட்ட இத்தாலியர், பண்டைய சிறப்பு வாய்ந்த உருே மையே, தம் தலைநகராகக் கொள்ள வேண்டுமென ஆர்வம் கொண்டனர். பிரான்சுக்கும் பிரசியாவுக்கு மிடையே மூண்ட போரில் 1870 செற்றம்பர் 2 ஆம் நாள் ஏற்பட்ட செடான் தோல்வியுடன், பிரெஞ்சுப் பேரரசு அழிந்தது. செற் றம்பர் 11 ஆம் நாள், இத்தா லிய படைகள், பாப்புவின இராச்சியத்தினுள் பிரவேசித்து, உருேமை ஆட்கொண்டன. அங்கு நடாத்தப் பெற்ற குடியொப்பத்தில், பெரும் பான்மை மக்கள், ஐக்கியத்தில் சேர விருப்புத் தெரிவித்தனர். 1872 யூலையில் விற்றர் இம்மானுவேல், இத்தாலியின் தலைநகரை உருேமில் அமைத்தான். இவ்வாறு இத்தாலியின் ஐக்கியம் நிறைவெய்தியது.

மூன்ரும் நெப்போலியனும் இரண்டாம் பேரரசும் 69
அதிகாரம் 10
மூன்ரும் நெப்போலியனும் இரண்டாம் பேரரசும்
இலூயி நெப்போலியன் பொனப்பாட், ஒலந்தின் அரசனன இலூயி பொனப்பாட்டின் தவப்புதல்வனுக 1808 ஆம் ஆண்டு பிறந் தார். 1815 இல், நெப்போலியன் ஆட்சியை இழந்தபோது, இவரும் பொனப்பாட்டின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும், நாடு கடத் தப்பட்டனர். அவர் பல்லாண்டுகளாகப் பிரபல்யமில்லாத மறைவான வாழ்வு நடாத்தியபோதிலும், காலம், ஒரு நாள் தன்னைப் பிரான்சின் சிம்மாசனத்தை அலங்கரிக்க அழைத்துச் செல்லும் என்ற அழியா நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தார்.
இலூயி, 1831 இல் போப்பாண்டவருக்கெதிரே, கரியெரிப்போர் சங்கம் நடாத்திய கலகமொன்றில் ஒர் அங்கத்தவனக அரசியலுலகில் பிரவேசித்தார். 1832 ஆம் ஆண்டு, இரண்டாம் நெப்போலியன் காலமானதும், இலூயி நெப்போலியன், தன்னைப் பொனப்பாட்டிய உரிமைகளின் தனிப் பிரதிநிதியாகக் கருத்திற் கொண்டார். இங்கி லாந்துக்கு நாடுகடத்தப்பட்ட அவர், அங்கிருந்து இறந்த பேரரச னின் மகிமையானது பிரான்சின் இதயத்தில், ஒர் அன்பு மிக்க உள் ளக் கிளர்ச்சியாக உருப்பெற்று ஓங்கி வளர்வதைக் காணலாயினர். முதலாம் நெப்போலியன் இறந்த தினமான மே 5 ஆம் நாள், ஒரு தேச துக்க தினமாயிற்று ; வீடுகளும், கடைகளும், வீதிகளும் நெப் போலியனின் உருவப்படங்களினலும், ஞாபகச் சின்னங்களினலும் நிறைந்தன. தனக்கு நிறைந்த ஆதரவு இருக்குமென எண்ணிய இலூயி, 1838 இல் பிரான்சின் சிம்மாசனத்தையடைய, ஒரு முறை முயற்சித்து தோல்வி கண்டார். இரண்டாம் முயற்சி, 1840 இல் நடந்தேறியது. அவ்வாண்டு, நெப்போலியனின் பூதவுடல் சென் எலேனுவிலிருந்து, பரிசுக்குக் கொண்டுவரப்பட்டபோது, அதைத் தானே நேரில் வரவேற்கவேண்டுமெனத் திட்டமிட்டு, பிரான்சுக்கு விரைந்த இலூயி, பூலோங் என்னுமிடத்தில் கைப்பற்றப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.
நெப்போலியனும் 1848 ஆம் ஆண்டுப் புரட்சியும் :
ஆறு, ஆண்டுச் சிறைவாசத்தின் பின், நெப்போலியன் மாறு
வேடம் பூண்டு, மீண்டும் இங்கிலாந்துக்கு தப்பி ஓடினர். 1848 ஆம் ஆண்டுப் புரட்சியின் தகவல் எட்டியதுடன், பரிசுக்கு வந்து, பிரான்சு

Page 100
170 புது உலக சரித்திரம்
இன்னும் தன்னை வரவேற்க ஆயத்தமில்லை யென்றுணர்ந்து, உடனே வந்த வழியே திரும்பினர். யூன் மா தம், பிரெஞ்சுத் தேர்தல்கள் நடந்த போது, புது நாட்டு மன்றத்தின் பிரதிநிதியாக நான்கு தொகு திகளில் தெரியப்பட்டார் ; ஆணுல் புத்தி சாதுரியத்துடன் அத் தெரிவை அவர் ஏற்கவில்லை. செற்றம்பர் மாதம் மீண்டும் ஐந்து தொகுதிகள் அக்கெளரவத்தை அவர் மேற் சுமத்தின. அம்மாதம் 26 ஆம் நாள் இலூயி நெப்போலியன் மிக மரியாதையுடன் புதுச் சபையில் தன் ஆசனத்தில் அமர்ந்தார். மூன்று மாதங்களுக்குப்பின் குடிப்பதியானுர் ; நான்கு ஆண்டுகளுக்குப்பின் பேரரசனஞர்.
1. இரண்டாம் பேரரசின் உதயம்
1851 ஆம் ஆண்டு ஆட்சிப் புரட்டு :
1848 ஆம் ஆண்டு அரசமைப்பின்படி, இலூயி நெப்போலியன், சருவ வாக்குரிமையில்ை குடியரசின் குடிப்பதி (prescdeut)யாக நான்கு ஆண்டுகளுக்குத் தெரிந் தெடுக்கப்பட்டவர். நிருவாகத்தின் தலைவன் என்ற முறையில், நாட்டின் நிருவாக அதிகாரம் முழுவதும் அவர் கையில் தான் குவிந்திருந்தது. இராணுவத்தின் தலைவன் எனும் முறை யில் அதன் மீது இருந்த செல்வாக்கைச் சட்ட ரீதியாக உபயோகிக்க அவருக்கு அதிகாரமிருந்தது. இக் குடிப்பதிக்கும் பேரரசுக்கும் இடை யில் ஒரு சிறு கவடு தூரம் மாத்திரமே காணப்பட்டது. நீண்ட காலம் காத்து நின்ற நெப்போலியனுக்கு, இன்னும் சொற்ப காலம் தாமதிப்பது பெரும் வேலையன்று. தனது இலட்சியத்தை அடை வதற்கு, அதி அவதானத்துடன் நடை முறைகளை வகுத்தார். தனது திட்டங்களைப் பூர்த்தி செய்ய இன்னும் நான்கு ஆண்டுகள் அவர் முன் நின்றன. மிகமெதுவாக, சந்தேகத்துக்கு அதிக இடம் தராது, தான் திட்டமிட்ட இலக்கை நோக்கி முன்னேறினர். அமைச்சர் சபைகளில் தனது ஆதரவாளர்களையும், நம்பிக்கையுடையவர்களையும் பிரதான பதவிகளுக்கு நியமித்தார் ; நெப்போலியனின் மகிமையைப் பற்றி மக்களுக்குச் சதா நினைவூட்டிக் கொண்டிருந்தார் ; மாகாணங்களைச் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களின் ஆதரவை உறுதிப் படுத்திக் கொண்டார் ; அரசமைப்பைத் தான் மாற்றியமைக்கப் போவதாக இடையிடையே கூறிக் கொண்டார் ; இராணுவப் பட்டாளங்கள் தன்னைப் “பேரரசன்’ என்று அழைப்பதை அனுமதித்தார் இவ்வாறு நெப்போலியன் பொதுசன உணர்ச்சி நாடியில் கை வைத்தபடி, தரு ணம் வரும் வரை காத்து நின்றர். தருணம் 1850 மே மாதம் 31 இல் வந்தது. நாட்டில் ஒழுங்கீனத்துக்குக் காரணமாக விருந்த பொது வுடைமை வாதத்தை அடக்கும் நோக்குடன், பிரதிநிதிகள் சபை,

மூன்ரும் நெப்போலியனும் இரண்டாம் பேரரசும் 171
அன்று முப்பது இலட்சம் வாக்காளருக்கு வாக்குரிமையை மறுக்கும் ஒரு சட்டத்தை அரங்கேற்றியது. சந்தர்ப்பத்தைக் கண்ட நெப்போலி பன், சருவ வாக்குரிமையின் வீரனுகத் தன்னைக் காட்டி, தான் அச் சட்டத்தை மாற்றியமைக்கப் போவதாகக் கூறிஞர். தேச மன்றம் நெப்போலியனின் சூழ்ச்சியைக் கண்டு, அவாது சருவ வாக்குரிமைத் திட்டத்தை நிராகரித்தது. நெப்போலியன், ஆட்சிப் புரட்சிக்கு (Coup d'etat) ஆயத்தம் செய்தார். நீண்ட காலமாகத் தயாரிக்கப் பட்டிருந்த சதித் திட்டம் 1851 திசம்பர் முதலாம் திகதி இர வு , நடந்தேறியது. நள்ளிரவில் எழுபத்து எட்டு தேச மன்றப் பிரதிநிதி கள், தம் இல்லங்களிலிருந்து சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட் டனர். தேச மன்றம் குலைக்கப் பட்டதாகவும் புது அரசமைப்பொன்று தயாரிக்கப்படுமென்றும், பரிசு நகரம் படையியற் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்ட தென்றும் அறிவித்த சுவரொட்டிகள் நகரத்தின் சகல வீதிகளிலும் ஒட்டப்பட்டன.
திர்ம்பர் 2 ஆம் நாள் அதிகாலையில் நடந்தேறிய ஆட்சிப் புரட் டைப் பரிசு நகரம் ஆச்சரியத்துடனும் கலக்கத்துடனும் கண்ணுற்றது. அங்கும் இங்குமாகத் தோற்றிய சிறு எதிர்ப்புக்கள் அடக்கப்பட்டன. எதிர்ப்பாளிகள் மேலும் சிறைகளில் தள்ளப்பட்டனர். இலூயி நெப்போலியன் வெற்றி பெற்று விட்டான். ஒரு குடியொப்பம், நடந்தேறிய ஆட்சிப் புரட்டை அங்கீகரித்து, குடிப்பதியின் (President) காலத்தை 10 ஆண்டுகளாக நீடிக்க அனுமதித்தது. 1852 சனவரி 14 இல், போர்த்து மூடப்பட்ட வல்லாட்சியை அடிப்படையாகக் கொண்ட புது அரசமைப்புப் பிரசுரமாயிற்று.
இரண்டாம் பேரரசன் :
1852 திசம்பர் 2 ஆம் நாள், ஆட்சிப்புரட்டு நடந்தேறிய ஓராண் டின் பின், இரண்டாவது குடியொப்பம் அவரைப் பேரரசனக்கியது. மூன்ரும் நெப்போலியன் என்ற நாமம் பூண்டு அவர், “கடவுள் கிருபையாலும் மக்களின் சம்மதத்தினுலும் பிரெஞ்சியரின் பேரரச ஞைர்.” மூன்றவது நெப்போலியன் ஆரம்பந் தொட்டுத் தான் கொண்ட கோலத்துக்கு ஏற்க நடக்க முடியாது தத்தளித்தார். அவர் ஒரு வல்லரசாங்கத்தை வல்லாட்சி முறைகளினுல் அமைத்தார்; ஆணுல் அவர் ஒரு வல்லாளன் அல்லர்.
உண்ணுட்டுப் பூட்கை :
'நெப்போலியனின் நாமம் நாட்டினுள் ஒழுங்குக்கும் மக்கள்
நலனுக்கும். புறத்தில் தேச கெளரவத்துக்கும் ஆதாரமாக உள்ளது' என்று 1849 இல் குடியரசின் குடிப்பதி பிரகடனம் செய்தார். இக் கூற்று

Page 101
72 புது உலக சரித்திரம்
இரண்டாம் பேரரசின் வேலைத்திட்டத்தைத் திறம்படச் சுருக்கி வர்ணிக்கிறது. "ஒழுங்கை, சுதந்திரத்துடன் சமாதானப் படுத்தல். என்பதே நெப்போலியனின் உண்ணுட்டுப் பூட்கையின் குறிக்கோள். ஓர் உறுதியான அரசாங்கத்தின் முதல் இலட்சணம் அதன் அதிகார மாகும். ஓர் இனம் சுதந்திரமாக இயங்க ஆரம்பிக்குமுன், அது சட்டத்துக்குக் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ள வேண்டும், ஏனெனில் சரித்திரத்தில், சுதந்திரத்துக்குமுன் ஒழுங்கு தான் முதன்மையானது. இவ் வடிப்படையில் முதலாவது நெப்போலியன் செய்தது போன்று, மக்கள் சுதந்திரத்தின் ஆசீர்களைப் பெறுமுன், அவர்கள் அதிகாரத்தை மதிக்கவும், கீழ்ப்படிவில் பயிற்றப்படவும் வேண்டுமெனக் கற்பித்தார். இப் பாசாங்கின் மறைவில், தேச மக்களின் சகல அரசியல் உரிமை களையும் நிராகரித்து, 'நாட்டின் தலைவனே தேசத்தின் பொறுப்பாளி, அவன் எந்தச் சுதந்திரமுள்ள தாபனத்துக்கும் கட்டுப்படாதவன்’ என்று கூறிற்று புது அரசமைப்பு. கடற் படையினதும், தரைப் படை யினதும் தலைவரான அவரே, சமாதானத்தையும் போரையும் நிர்ண யித்தார். நீதி பரிபாலனம் அவர் பெயரினலேயே வழங்கப் பெற்றது. அவரே சட்டங்களை ஆக்கி, பிரசுரித்து, அவற்றை அமுல் நடத்தினர். சருவ வாக்குரிமையினல் தெரிந்தெடுக்கப்பட்ட பொது மக்கள் சபை, செனற், கவுன்சில் என்பவை பெயரளவில் மக்களின் பொது நலன்களைப் பாதுகாக்க உரிமை பெற்றிருந்தன ; ஆனல் நடை முறையில் அவை பேரரசனின் சர்வாதிகாரத்துக்கு அனுசரணையாக அமைந்த கைப் பாவைகளே. பேரரசனைச் சிம்மாசனத்தில் அமர்த்திய இராணுவமே, அவரைப் பாதுகாத்தும் வரலாயிற்று. நெப்போலியனின் ஒள்ளிய வல்லாட்சி :
நெப்போலியன் சுயேச்சாதிகார முறையில் ஆட்சி செய்தபோதிலும், 18 ஆம் நூற்ருண்டில் ஐரோப்பாவை அரசாட்சி செய்த ஒள்ளிய வல்லாட்சியாளரின் (Enlightened Despots) பரிபாலன வழக்கங்களைக் கடைப் பிடித்தார். மகா பிரடெரிக், இரண்டாம் யோசேப்பு போன்று, மூன்ரும் நெப்போலியனும் தன்னை அரசாங்கத்தின் முதல் ஊழியன் எனக் காட்டினர். குடிகள் நன்னிலையிலும், திருப்தியுடனு மிருப்பின், அரசவுரிமைகளைப்பற்றி அக்கறை கொள்ளாரென்பதே அவரது எண்ணம். “நெப்போலியனின் குறிக்கோள் போரன்று அது சமூக, தொழில், வியாபார, பரோபகார கருத்துக்கள் உடையது' என்ருர் அவர். அவரது திட்டங்களில் தேச மக்களின் நலன் எப்பொழுதும் முதல் இடம் பெற்று நின்றது. நெப்போலி யன் உண்மையாக ஏழைகளின் பரிதாப நிலையில் அக்கறை காட்டும் கருணை உள்ளம் படைத்தவர். அவரது வழிநடத்தலின் கீழ் பிரான்சு தொழில் வியாபாரத் துறைகளில் அதி முன்னேற்றம் அடைந்தது.

மூன்றம் நெப்போலியனும் இரண்டாம் பேரரசும் ፲ 73
நாட்டின் செல்வ வளத்தை விருத்திசெய்து, மக்களுக்குச் சுகமான தும், திருப்தியானதுமான வாழ்வைக் கொடுத்து, சகல வகுப்பினரை யும் திருப்திப்படுத்த நெப்போலியன் முயன்ருர், புது அரசாங்கம் தன் முழுச் சக்தியுடன் கைத்தொழில், நிதி அபிவிருத்தித் திட்டங் களை ஆதரித்தது. மக்களுக்குக் கடன் கொடுத்து உதவ, இருபெரும் கடன் வங்கிகள் அமைக்கப்பட்டன.
அவரது மேற்பார்வையின் கீழ், போக்குவரத்து முறைகள் துரித மாக முன்னேறின. புகையிரத வீதிகளை அமைப்பதற்காக ஆறுபெரிய கம்பனிகள் நிறுவப்பட்டன. 1851 இல் 3627 கி. மீற்றர் நீள முடைய இருப்புப் பாதைகள் 1858 இல் 16,207 ஆக நீட்சியடைந் தன. தபால், தந்திச் சேவைகள், 1855 இல் பிரதான நகரங்கள் யாவற்றையும் ஒன்ருக இணைத்தன. இந்நடவடிக்கைகள், கைத்தொழி லுக்கும் வியாபாரத்திற்கும், புது உற்சாகத்தையும், ஊக்கத்தையும், கொடுத்தன. தொழிலாள வகுப்பினரும் திருப்தியடைந்த வர் போன்று காணப்பட்டனர். அவன் தொழிற் சங்கங்களைச் சட்ட பூர்வமானவையாக்கி, வேலை நிறுத்தங்களுக்கு விரோதமான சட்டங் களை அகற்றினன். தொழிலாளரை விபத்துக்களிலிருந்து பாதுகாப்ப தற்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன. 1855 ஆம் ஆண்டு, பரிசில் நடந்த பெரிய கைத்தொழில் பொருட்காட்சிக்கு, சகல கைத்தொழில் நாடுகளையும் பேரரசன் அழைத்தான். அங்கு பிரெஞ்சினர், தம் வியப்புக்குரிய கைத்தொழில் முன்னேற்றத்தை உலகுக்கெடுத்துக் காட்டினர்.
பரிசு நகரம் :
நெப்போலியன் பரிசை வனப்பும் கவர்ச்சியும் மிக்க நகரமாகப் புனர் நிர்மாணம் செய்தான். நவீன போக்கு வரத்து வசதிகள், மாளிகைகள், தேவாலயங்கள், பூங்காக்கள், கலாசாலைகள் எல்லாம் ஒருங்கு சேர்ந்து பரிசை ஒரு புது நகரமாக மாற்றின. புரட்சி நகரத்து மக்களின் அவதானத்தை அரசியலிலிருந்து மாற்றுவதற்கு எராளமான பொழுது போக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவு :
இராணுவ பலத்தைக் கொண்டு ஆட்சி புரியும் எந்த அரசாங்க மும் நிலைக்காதென அறிந்த நெப்போலியன், கத்தோலிக்க மதத்தின் வழியாக நாட்டு மக்களின் ஆதரவைப் பெற முயற்சித்தார். திருச் சபையும் அவரைத் தன் பேராதரவாளனுகக் கருத்திற் கொண்டது. திருச்சபை ஏராளமான சலுகைகளைப் பெற்றது. அழிந்து பாழாய்க் கிடந்த கோவில்கள் எல்லாம் அழகுக் கோபுரங்களாக மாறின.

Page 102
7. புது உலக சரித்திரம்
திருச்சபை வைபவங்களில் அரசாங்க அலுவலாளர்கள் உத்தியோக பூர்வமாகப் பங்குபற்றின்ர். வேதப்பரப்புதல் இயக்கங்கள் விரிவடைந் தன. கல்வி, தானம் என்பவற்றுடன் சம்பந்தப்பட்ட தாபனங் களுக்கு, அரசாங்க நன்கொடைகள் வழங்கப்பட்டன.
இக்காரணத்தினலேயே, உரோமில் கலகம் உண்டானபோது, போப்பாண்டவரைக் காப்பதற்காக, நெப்போலியன் படைகளை அனுப்பிவைத்தான். பிறநாட்டுப் பூட்கை :
“இரண்டாவது பேரரசு சமாதானத்தையே நாடும்" எனக் குறிப் பிட்ட போதும், நெப்போலியன் பிற நாடுகளுடன் கொள்ளும் உறவு களில் துணிவும், பலமும் நிறைந்த பூட்கையைக் கடைப்பிடிப்பதால் தான் பிரான்சின் ‘புகழ்’ நாட்டத்துக்குத் தூபம் காட்ட முடியு மென உணர்ந்தார். எனினும் அவர் தனது மனதில் ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்கியிருந்தாரோ என்பது சந்தேகத்துக்கு இட மானது. பிசுமாக் கூறியதுபோல ‘நெப்போலியன் போர் ஒன்று அவ சிய மென்பதை மங்கலாக உணர்ந்திருந்தார்.’ ஏனெனில் இலூயி பிலிப்பே போன்று, தீவிர அமைதிப் பூட்கையைக் கடைப் பிடித்து வீழ்ச்சியடையத் தான் ஆயத்தமாகவில்லை யெனப் பகிரங்கமாகக் கூறி யிருந்தார். பிரான்சினது சுபாவம் இராணுவ மயமானதும், கர்வம் நிறைந்ததும் என்பதை உணர்ந்த நெப்போலியன், அவ்வியல்புகளைத் திருப்திப் படுத்தத் திடம் கொண்டார். ஆனல், மறுபுறம் போரை விலைக்கு வாங்கி ஐரோப்பாவினது கோபத்தையும், ஒற்றுமையையும் சம்பாதித்துக் கொள்ள அவர் தயாராயிருக்க வில்லை. முதலாவது பேரரசின் வரலாறு இனனும் மக்கள் மனதில் பசுமை குன்றதிருந்த மையினல், நெப்போலியன் மீண்டும் ஐரோப்பிய கண்டத்தை ஓர் இரத்தக் களரியில் அமிழ்த்துவது தன் எண்ணமன்று என உலகுக்கு ஓர் உறுதி மொழி கூறவேண்டியதாயிற்று. இவ்வாறு, ஆரம்பம் முதல் அவரது நிலை முரண்பட்ட இவ்விரு கருத்துக்களுக்கு மிடையில் ஊசலாடிற்று. அவரது இந்த முரண்பட்ட நிலை அதன் அழிவுக்கான வித்துக்களையும் அடக்கிக் கொண்டிருந்தது. தனது திட்டங்களைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு அமைதி இன்றியமையாதது என்பது அவரது துணிபு. ஆயினும் அதே நேரத்தில், தனது பரம்பரையை உறுதியாக நிலைநாட்டுவதற்குப் பிரெஞ்சு மக்களின் தீராத புகழ் ஆசையை திருப்திப் படுத்தவும் போர் வேண்டியதாயிற்று.
கிறைமியன் போர் :
நெப்போலியனின் முதல் துணிவான சூழியல் நடவடிக்கை கத் தோலிக்க மக்களைத் திருப்திப் படுத்தும் நோக்குடனேயே கைக்கொள்

மூன்ரும் நெப்போலியனும் இரண்டாம் பேரரசும் 及75
ளப்பட்டது. யெருசலேம் புனித தலங்களை யிட்டுக் கிரேக்க வைதீகத் திருச்சபைக்கும் இலத்தீன் திருச்சபைக்கு மிடையில் ஏற்பட்ட தகரா றில், நெப்போலியன் பிரெஞ்சுக் கத்தோலிக்கர் சார்பாக இலத் தீன் திருச்சபையின் உரிமைகளை ஆதரித்தார். இரசியா வைதீகத் திருச்சபையின் சார்பாக அவ்வுரிமைகளை ஆட்சேபிக்கலாயிற்று.
850 தொட்க்கம் 1854 வரை நீடித்த இந்தத் தெளிவற்ற பிரச் சினையிலிருந்தே கிறைமியன் போர் தோன்றி, ஐந்து இலட்சம் துருப் புக்களைப் பலி கொண்டது. நெப்போ லியன் சமயப் பிரச்சினையைப் பற்றி அக்கறை கொள்ளாத போதும், தன் கத்தோலிக்க ஆதரவா ளர்களை விரோதிக்க முடியாமற் போயிற்று. இரசிய சாரும் இணங்க மறுத்ததுடன், புதுப் பிரச்சினைகளும் தோன்றலாயின. மனிதனது கையிலும் சிறிதாகத் தோன்றிய கார்மேகங்கள், வெகு விரைவில் முழு வானத்தையும் இருளினுல் மூடின. சூழ்வல்லோரின் ஐயங் க்ளும் தப்பபிப்பிராயங்களும் ஒரு கோர அறுவடையின் வித்துக்களை விதைத்தன. ஒட்டமன் பேரரசின் முழுமை உருக்குலைந்து விடு மென அஞ்சிய இங்கிலாந்தும் , முரண்பாட்டில் பிரவேசித்தது. முதலாம் நிக்கலசு துருக்கியைப் பங்கீடு செய்வதற்குக் கூறிய ஆலோசனை, இரசியா தெற்கு நோக்கிப் படர்வதைத் தடை செய் வதே தன் பரம்பரைத் தத்துவமென எண்ணிக்கருமமாற்றிய இங்கி லாந்தின் சந்தேகத்தைக் கிளறிவிட்டது. பிரித்தானிய தூதமைச் சரினல் தூண்டப்பெற்ற துருக்கி, இரசியா கோரிய துருக்க மக்க ளின் பாதுகாப்புரிமையை நிராகரித்தது. தன் கெளரவத்துக்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டதாக எண்ணிய நிக்கலசு, மொல்தேவிய, உவ லேசிய மாகாணங்களை ஆக்கிரமிக்கவே, போர் ஆரம்பமாயிற்று. சமாதான நியதிகளை வாதிக்கக் கூட்டப்பெற்ற பரிசு அமைதிப் பொருத்தனை (1856) மாநாட்டிற்கு நெப்போலியன் தலைமைதாங்கி, ஐரோப்பாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கவல்ல நடுவணுகக் காட்சி யளித்து, பெரும் புகழை ஈட்டிக்கொண்டார். பேரரசன், 1815 இன தும் 1840 இனதும் அவமானக் கறைகளைத் துடைத்து, பிரான்சை மகிமையினல். அலங்கரித்து, புகழின் சிகரத்தையடைந்தார்.
பரிசு அமைதிப் பொருத்தனே யானது நெப்போலியனுக்குப் புது அதிகார பெலத்தைப் பெற்றுக் கொடுத்தது. வெற்றியினுல் தூண் ட்ப்பட்ட அவர் உடனே தன் புதுக் கெளரவத்தைப் பயன்படுத்த முற்பட்டார். ஐரோப்பாவின் படத்தைப் புது உருவத்தில் வார்த் தல், 1815 ஆம் ஆண்டு வியன்னு முடிபுகளை முறித்தல், பிரான்சி . து எல்லைகளை இறைன் நதிவரை படரச் செய்தல், அடிமைத்தனத் தில் வாழ்ந்த இனங்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தல் எனும் ஆசைகள் அவர் மனக் கடலில் அலை அலையாக மோதின. ஐரோப்

Page 103
176 புது உலக சரித்திரம்
பாவின் அரசியல் நிகழ்வு நிலையை எந்நேரமும் பாதிக்கவல்ல உணர்ச்சி வசப்பட்ட சுபாவத்தையும், கணக்கிட முடியாத மனே நிலையையு முடைய நெப்போலியன், ஐரோப்பிய தலைநகரங்களில், ஒர் அபாயகரமான போர்ப்பிரியணுக அஞ்சப்பட்டார். அவரது நாட் டினவாதத் திட்டத்தின் முதற் பலனக மொல்தேவியா, உவலேசியா என்ற இரு மாகாணங்கள் உறுமேனியா என்ற அரசாக உருமாறின.
இத்தாலியப் பூட்கை :
எல்லாவற்றிற்கும் மேலாக இத்தாலிய விடுதலை இயக்கம் நெப் டோலியனது மனதை ஈர்த்து நின்றது. அவர் கிறைமியப் போரில் பீட்டு மன்று செய்த உதவிக்குக் கடமைப் பட்டிருந்தார். இத்தாலிய விடு தலை இயக்கத்துக்கு உதவி புரிவதன் மூலம் பிரெஞ்சினருடைய அபிமானத்தைப் பெறுவது மாத்திரமன்று அந்நாட்டுத் தாராண்மை வாதிகளையும் குடியரசுவாதிகளையும் தன் பக்கம் கவரலாமெனத் திட்ட மிட்டார். 1858 ஆம் ஆண்டு, ஓசினி, நெப்போலியனை இத்தாலியின் துரோகி எனக் குற்றஞ்சாட்டி கொலை செய்ய முயற்சித்ததுடன், சகல தடைகளையும் உதறித் தள்ளி இத்தாலிக்கு உதவி செய்யத் தீர்மானித்தார். அதேயாண்டு யூலை மாதம் 21 ஆம் நாள், கவூரும் நெப்போலியனும் புளொம்பியோர் எனுமிடத்தில் சந்தித்து, பிரெஞ்சு உதவிக்கான நிபந்தனைகளை முற்றுக் கட்டினர். ஆனல், ஈற்றில் ஒருவரையும் திருப்திப்படுத்தாத அவரது அரை குறையான நட வடிக்கைகளே பேரரசின் கடைசி அத்தியாயத்தைத் திறந்து விட்டன. உண்ணுட்டில் நெப்போலியனின் இத்தாலிய பூட்கை அணைந்திருந்த கட்சிச் சண்டைகளை மீண்டும் கிளறிவிட்டு, அவரது நிலையைப் பெலவீனப்படுத்தியது ; போப்பாண்டவருக்கு விளைவிக்கப்பட்ட தீங்கைக் கண்ணுற்ற கத்தோலிக்கர் கோபம் கொண்டனர்; தென் இத்தாலியிலிருந்து நேப்பிள்சின் பூர்போன் வமிசத்தினர் நீக்கப் பட் டமையை பிரெஞ்சு அரசு வாதிகள் பலமாக ஆட்சேபித்தனர். போரிலிருந்து நெப்போலியன் சடுதியாக விலகியதனுல் இத்தாலிய ரின் பரிதாப நிலையைக் கண்டு பிரெஞ்சு பருமாற்றவாதிகள் (Radicals) பேதப்பட்டனர். பிரான்சுக்கு வெளியில் இத்தாலியின் நன்றியையும், நீசையும், சவோயையும் பலவந்தமாகப் பறித்ததனுல் இங்கிலாந்தி னது நட்பையும் நெப்போலியன் இழந்தார். அவர் பீட்டுமன்றுடன் நட்புக் கொண்டதானுல் ஒசுத்திரியா விரோதம் பாராட்டியது. அவரது ஆக்கிரமிப்புத் திட்டங்களைக் கண்டு பிரசியாவும் ஐயமுற்றது. சொற்ப காலத்துக்குள் நெப்போலியன் 1863 ஆம் ஆண்டு போலந் துப் புரட்சியிலும் தலையிட்டு, இரசியாவின் கோபத்தையும் சம்பாதித் துக் கொண்டார்.

மூன்றம் நெப்போலியனும் இரண்டாம் பேரரசும் 177
2. தாராளப் பேரரசு
1860 ஆம் ஆண்டு தாராளச் சட்டங்கள் :
தன் ஆட்சியின் பின் அரைப்பகுதியில், நெப்போலியன், இதுவரை நம்பியிருந்த சக்திகளின் ஆதரவை இழக்கவே, அவர் அவற்றினது எதிரிகளின் பக்கம் திரும்பினர். தான் முன் செய்திருந்த வாக்குறுதி களை நினைந்து, ஒழுங்குக்குப்பின் சுதந்திரத்தை அனுமதிக்க ஆயத்த மானுர். "தாராளப் பேரரசு’ நீடித்த பத்து ஆண்டுகளில், இடை யிடையே தாராளச் சட்டங்கள் அனுமதிக்கப்பட்டன. gllமன்றம், விரிவான-ஆனல் இன்னும் கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங் களைப் பெறலாயிற்று. பாராளுமன்ற விவாதங்கள் முழுமையாகப் பிரசுரிக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பத்திரிகைத் தணிக்கைச் சட்டங்கள் நீக்கப்பட்டு, பொதுக் கூட்டங்கள் அனுமதிக்கப்பட்டன. எனினும், இம் மாற்றங்களில்ை, நெப்போலியன், எதிர்பார்த்த் பலன்களுக்கு எதிர் மாருனவற்றையே கண்டார். நாட்டில் அரசியல் விழிப்பு அதிகரித்தது; நெப்போலியன் தாராண்மை வாதிகளின் ஆதரவைப் பெற முடியாமற் போயிற்று. அவர்கள், இச் சலுகைகளை, நெப்போலியனின் பெலவீனத்தின் அறிகுறிகளாகவே கருதி, அவற்றின் வழியாக மேலும் புதுச் சலுகைகளைப் பெறத் திட்டமிட்டனர். குடியரசுக் கட்சி புத்துயிர் பெற்று, முன்னிலும் மேலான செல்வாக் கைப் பெற்றது.
மெச்சிக்கோச் சம்பவம் :
நெப்போலியனது அயல்நாட்டுப் பூட்கை, சொற்ப காலத்துக்குப் பல வெற்றிகளை ஈட்டிக் கொடுத்தது. சீனுவில் வியாபாரச் சலுகை கள், அல்சீரியா வெற்றி கொள்ளப்பட்டமை, இந்தோ சீனவில் ஒரு புதுக் குடியேற்றம் என்பவற்றின் வழியாக ஓரளவு புகழைப் பெற்றர். ஆணுல் 1861 இல், அவர் இதுவரையும் சம்பாதித்த எல்லாப் புகழையும் ஒருங்கே மங்கவைக்கத்தக்க ஒரு திட்டத்தில் பிரவேசித்தார்.
நெப்போலியன், மெச்சிக்கோவில், ஒசுத்திரிய இளவரசன் மக்சி மிலியன (Maximilian) அரசேற்ற நோக்குக்கொண்டு, அங்கு ஒரு பிரெஞ்சுப் படையையும் அனுப்பிவைத்தார். மெச்சிக்கருக்கும் பிரெஞ்சினருக்கும் இடையில் ஏற்பட்ட போரில், பிரெஞ்சுப் படைகள் தோல்வியே கண்டன. 1865 இல் உண்ணுட்டுப் போர் முடி வெய்திய துடன், ஐக்கிய அமெரிக்க அரசு, நெப்போலியனின் செயலை ஆட் சேபித்து போரில் தலையிட மிரட்டியது. அதனுடன் போர் தொடுக்க
2-& -l 4

Page 104
178 புது உலக சரித்திரம் ;
விரும்பாத நெப்போலியன், தன் படைகளைத் திருப்பியழைத்தான், முடியும் விரைவில் வந்தது. 1867 இல் மக்சிமிலியன், மெச்சிக்கரினல் பிடிக்கப்பட்டு துப்பாக்கிக்கு இரையானர்.
இச்செயலினல், நெப்போலியன் பெரும் அவமானத்துக்குள்ளா ஞர். ஏராளமான பணத்தையும், ஆட்பலத்தையும் இறைத்த நெப் போலியனுக்கு ஒரு விதமான பலனும் கிட்டவில்லை. அவரை நம்பி ஏமாந்த மக்சிமிலியனை நடுக் கடலில் விட்டு விலகியமை, பெரும் நம்பிக்கைத் துரோகமாயிற்று. மறுபுறம், அவர் இவ்வாறு தன் புலனை இப்பயனற்ற புது உலக நடவடிக்கையில் செலவிட்டதனல், ஐரோப்பிய விவகாரங்களில் ஒன்றையும் சாதிக்க முடியாமற் போயிற்று. பிரசியா, தென்மாக்கையும், ஒசுத்திரியாவையும் தோற் கடித்த காலத்தில், நெப்போலியன் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தான். ஒசுத்திரிய-பிரசிய யுத்தம் :
1866 இல், பிாசியா ஒசுத்திரியாவுடன் போர் தொடுத்தபொழுது நெப்போலியன் நடுநிலைமை வகித்ததனல், பிரெஞ்சுச் செல்வாக்கை அதிகரிப்பதற்கு எழுந்த அரிய சந்தர்ப்பத்தைக் கைநெகிழவிட்டார். தான் நடுநிலை வகித்ததற்குக் கைம்மாருக, இறைன் நதிப் பிரதேசங் களில் சில, தனக்குக் கிடைக்கலாமென்றே, எதிர்பார்த்தார். ஆனல் போர் சந்தேகத்துக்கிடமின்றி, வெகு விரைவில் முற்றுப்பெற்றது. நெப்போலியன் எண்ணியதற்கு நேர் எதிர் மறையாக, தென் செர் மனியின் அரசர்கள், அவரை நண்பன் எனக் கருதாது, கொடிய பகைவன் என எண்ணலானர்கள், பிரெஞ்சுப் படைத் தலைவனுெரு வன் ‘சடோவாவில் தோற்கடிக்கப்பட்டது பிரான் சே' எனக் குறிப் பாகக் கூறினன்.
தாராளச் சட்டங்கள் •
இரண்டாம் பேரரசுக்கு எதிராக எதிர்ப்பு வலுப்பெற்றது. நாட் டில் பெருகிவந்த குடியரசுவாதத்தை கட்டுப்படுத்தவேண்டும் என உணர்ந்த நெப்போலியன், மேலும் சலுகைகளைப் பெற்றுத்தரத் தீர்மானித்து, முற்றிலும் புதுமையான ஒரு அமைப்புத் திட்டத்தைப் பிரகடனம் செயயலானர். பிரான்சு இன்னும் பேரரசாகவே திகழும், ஆனல் இங்கிலாந்திற்போன்று, உண்மையதிகாரம் படைத்த மக்கள் மன்றமும், அதற்கு பொறுப்புள்ள அமைச்சர் குழுவும் அவரினல் அங்கீகரிக்கப்பட்டன. 1870 இன் ஆரம்பத்தில் இத்திட்டம் ஒரு குடி யொப்பத்தின் வழியாக, மக்களின் சம்மதத்தையும் பெற்றது. வெளித் தோற்றத்துக்கு பேரரசு பாதுகாக்கப்பட்டது. ஆனல், புது அபாயம் பிறிதொரு துறையிலிருந்து தோற்றியது.

மூன்றவது நெப்பேரலியனும் இரண்டாவது பேரரசும் 179
பிரெஞ்சுப்-பிரசிய போரும், பேரரசின் வீழ்ச்சியும் :
நெப்போலியன், தான் 1866 ஆம் ஆண்டுப் போரினல் இழந்த நட்டத்தை, சூழியலினல் பெறத் திட்டமிட்டார். ஆனல் பிரசியா வின் நெருக்கடியான காலம் கழிந்துவிட்டது. முடிவெய்திய போரில் நெப்போலியன் நடுநிலைமை வகித்ததற்கு, பிசுமாக், செர்மன் நிலப் பரப்பொன்றைய்ாவது சன்மானமாகக் கொடுக்கச் சித்தமாகவிருக்க வில்லை. பேச்சு வார்த்தைகள் நீடித்தன. நெப்போலியன், வெவ் வேறு காலத்தில், பெல்சியம், இலக்சம்பேக், பலற்றினேற் எனும் இராச்சியங்களைத் தனக்குத் தரும்படியாகக் கேட்டார். பிசுமாக், பிந்திய கோரிக்கையைத் தென் செர்மன் அரசர்களுக்குத் தெரிவித்து, அவர்களின் ஆதரவைப் பெற்ருன் : பெல்சியத்தைப் பற்றிய எண் ணத்தை, பிரித்தானிய அரசாங்கத்துக்கு அறிவித்து, அதன் அச்சத்தை எழுப்பிவிட்டான் பிரான்சுக்கு ஐரோப்பாவில் ஒரு நண்பனும் இல்லை என்ற உண்மை உறுதியானதுடன், பிசுமாக், தன் செர்மன் ஐக்கிய வேலையைப் பூர்த்திப்படுத்துவதற்கு, அதன்மேல் போர் தொடுக்க ஆயத்தமானன். பிரெஞ்சு-பிரசியப் போர் ஏற்பட்ட அதே மாதம் நெப்போலியன் போர்க் கைதியானன். இரண்டாம்
ரரசு மறைந்தது.

Page 105
180 புது உலக சரித்திரம்
அதிகாரம் 11 செர்மனியின் ஐக்கியம் (1850-71) 1. பிரசிய-தேனியப் போர்
1848 ஆம் ஆண்டுப் புரட்சியின் பயன் :
1848 க்கும் 1850 க்கும் இடைப்பட்ட கால வ ர லா ற் றை செர்மன் பிரச்சினையின் தடைகளையும் சிக்கல்களையும் தெளிவு படுத் தும் பளிங்கெனக் கூறலாம். கூட்டாட்சி மன்றத்தில் (Diet), அல்லது ஒசுத் திரியாவின் உதவியுடன், செர்மனி ஒற்றுமைப்படும் என்ற எண் னக் கனவுகள் கைவிடப்பட்டன ; பிரசியாவில்தான் செர்மனி ஐக் கியப்படும் எனும் உண்மை புலயிைற்று. 1848 ஆம் ஆண்டுத் தோல் வியின் பின்பு கூட பிரசியா ஒன்றே, செர்மனியின் ஐக்கியப் பாதையை அமைத்து, வழி நடத்தும் தகைமை பெற்றது என்று மக்கள் எதிர் பார்த்தனர். ஒசுத்திரியா, கீர்த்தியும் உயர்வும் பெற்று இலங்கியது ; ஆனல் மற்றேணிக்கின் நீடிய கால ஆட்சியின் பின்னர் அதன் அத்தி வாரத்தில் பிளவுகள் ஏற்பட்டன; பெலவீனத்தின் அறிகுறிகள் தென் பட்டன. அன்றியும், அது செர்மனிக்குப் புறம்பே உள்ள நாடாக வும் விளங்கியது. ஒசுத்திரியா, புது செர்மனியை ஏற்க மறுத்த துடன், அதைச் சின்னபின்னப்படுத்துவதற்குக் கூட்டாட்சி மன்றை ஓர் ஆயுதமாக உபயோகித்தது.
மறுபுறம், பிரசியா, செர்மனியில் தன்னை ஓர் வலிமை பொருந் திய நாடாக அமைத்துக் கொண்டது. நெப்போலியனிடம் தோல்வி பெற்ற காலம் முதல், அது சகல துறைகளிலும் வளர்பிறையெனத் துரிதமாக வளர்ந்தது ; ஆனல், தன்னம்பிக்கையில் பின் தங்கி நின் றது. சிற்றைன் (Stein), சாண் கோசுட்டு (Scharmhorst) என்பவர் களின் சீர்திருத்தங்கள் பிரசியாவின் உண்ணுட்டுப் பொருளா தாரத்தைப் பலம் பொருந்திய அத்திவாரத்தில் படைத்தன. விடு start Guarioi (War of Liberation) pga Lita, 9grghurt GuGiblib g, ழைச் சுவீகரித்துக்கொண்டது. 1815 ஆம் ஆண்டின் இலாபங்கள், பிரசியாவை தென் செர்மன் நாடுகளுடன் இறுகப் பிணைக்கும் பந்த னங்களாய் விளங்கின. செர்மனியைப் பாதுகாக்கும் பொறுப்பை பிரசியா கையேற்றது. மேலும் சொல்வறைன் (Zolverein) மூலம வியாபார ஐக்கியம் ஆக்கிவைக்கப்பட்டமையினுல், ஒசுத்திரியாவுக்குப் பதிலாய், செர்மன் நாடுகள் பிரசியாவைத் தலை நாடஏய்க் கொண்

செர்மனியின் ஐக்கியம் 8.
டன. சுருங்கக் கூறின் பிரசியாவின் எதிர் காலம் செர்மனியின் பெலத்தோடும், ஒசுத்திரியாவின் வாழ்வு செர்மனியின் பெலவீனத் தோடும் தொடர்புற்று நின்றன.
முதலாம் உவில்லியம் :
தளர்ச்சியும் கோழைத் தனமும் படைத்த நான்காம் பிறடறிக் உவில்லியம் 1848-49 ஆம் ஆண்டு அதிர்ச்சியிலிருந்து மீள முடிய வில்லை. 1858 ஆம் ஆண்டு, இவரது சகோதரன் அதிபதி (Regent) யாகி, 1861 இல் அரச பீட மேறினன். பிரசிய சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தம் உதயமாயிற்று. முதலாம் உவில்லியம் தன் உடன் பிறந்தானைப் போலன்றி திடமும் உறுதியும் படைத்தவர். போர் வீர ணுய்ப் பெற்றிருந்த பயிற்சி, திட்டங்களைத் திறம்பட வகுக்கவும், தீர் மானங்களைச் சாதுரியமாக நிறைவேற்றவும், அவரைப் பயிற்றி யிருந் தன. தன் நாட்டின் எதிர்கால இலட்சியத்தில், அவருக்குப் பூரண நம்பிக்கை யிருந்தது. சேவையிற் சிறந்த தொண்டர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ளுவதிலும், அவர்கள் மீது காண்பித்த பரிபூரண நம்பிக்கையிலும், அவரது சிறந்த அரசியல் ஞானம் பிரதிபலித்தது.
பிசு மாக்
பிசுமாக் உலக வரலாற்றின் இதய பீடத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை அமைத்துக் கொண்டார். அவருடைய சாதனைகள் கீர்த்தி யும் புகழும் வாய்ந்தவை. 19 ஆம் நூற்ருண்டின் நிகரற்ற ஓர் அரசியல் சாணக்கியணுக அவன் கருதப்படுவதில் வியப்பில்லை. 1845 முதல் 1898 வரை அந்நூற்றண்டின் பெரும் பகுதியை ஒட்டோ வொன் பிசு மாக்கின் வாழ்வு உள்ளடக்கியது. 1850 இல் சுவீடனலும் தென்மாக் கினலும் சூழப்படாது, துறைமுகச் சுவடே அற்றிருந்த பிரசியாவுக்கு அவர் ஓர் ஏகாதிபத்தியத்தையும், பல குடியேற்றங்களையும் பரிசாகப் பெற்றுக் கொடுத்தார். செர்மன் இனத்துக்கு, அவர் ஈட்டிக் கொடுத்த சின்னம் அரசியலுலகில் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இணையானது. இன்றைய அமெரிககாவின் உதயம் வரை, இக்கால நிகழ்ச்சிகளில் மிக முக்கியத்துவமான சம்பவமெனப் பாராட்டப்படும் செர்மன் பேர ரசின் சிருட்டி கர்த்தா இவரே.
பிசுமாக் 'கங்கர்கள்" (Jurkers) எனப் பெயர் பெறும் நாட்டுப்புற மேன்மக்கள் வம்சத்தைச் சார்ந்தவர். 1815 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் நாள், சரித்திரத்தில் இணையில்லாப் புகழீட்டிய பிசுமாக்கை செர்மனி ஈன்றெடுத்த பொன்னுளாம். உறுதி, துணிபு, திறமை இவற்றுடன் கூடிப் பிறந்த சுங்கர்கள் எவர்க்கும் அமையாது, எதேச்சாதி காரப்ப்டி நடக்கும் இயல்பு உள்ளவர்கள். வாளினலும் கலப்பையினலும் வாழ்ந்த இவ்' வகுப்பினர், சலுகைகளையும் உரிமைகளையும் டாதுகாப்பதில் சலிப்டற்ற பிடிவாத முன்ளவர்கள்."
A 14

Page 106
82 புது உலக சரித்திரம்
எனினும் இவர்களைப் போன்ற உண்மை ஊழியர்களே, பிரசியா என்றும் கண்டதில்லை. இரும்பு போன்ற உடலமைப்பு, உணவிலும், குடியிலும் தீராப்பிரியம், நாட்டு வாழ்க்கையில் நிரந்தரப் பற்று என்பன, பிசுமாக் தன் வீரத் தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட பிறவிச் சொத்துக்கள். அறிவுக் கூர்மை, நினைவாற்றல், மதியூகம், அயரா உழைப்பு என்பன அவரன்னை ஈந்தவை. அவரது இளமை வாழ்வு பொமறேனியா (Pomerania) விலும், பேளின் பாடசாலை யொன்றிலும் கழிந்தது. பின்பு நியாயதுரந்தர மாணவனுக பேனின் சர்வகலாசாலையுட் பிரவேசித்தார். அங்கே, வாட்சண்டையிலும், மது அருந்துவதிலும் அவரது காலம் கரைந்தது. ஆயினும், ஆழமான வாசினே, ஆறு மொழிகளில் பேசவும், எழுதவும் அவருக்குப பாண்டித்தியம் நல்கியது. ஓராண்டுக் காலம் கட்டாய இராணுவப் பயிற்சியின் , பின்பு கூட, அவருக்கு இராணுவ நாட்டம் எழவில்லை. பதிலாக நீதி சேவையில், ஒர் அரசாங்க அலுவலாளராக பணிபுரிந்தார். எச்சிலாச் செப்பலில் இப்பதவியின் சோர்வை மதுவாலும் சூதாட்டத்தாலும் மறைத்துக் கொண்டார். 24 வது பராயத்திலேயே பிசுமாக்கின் தனித் திறமைகள், அடிவானத்தில் நின்றெழும் ஆதவன் கதிர்கள் போல் மெல்ல மெல்ல உதயமாயின. பிரசித்தப் படுத்தப் பட்ட பிரசிய நிருவாகத்தின் ஊழல்கள் அவரது மதி நுட்பத்தையும், தெளிவையும் பறை சாற்றின. அழகு படிந்த இப் பிரசிய அலுவலாளரின் வதனத்தில் எதிர்கால எகாதிபத்திய முதல் அமைச்சரின் சிறப்பியல்புகள் பரிணமித்ததை எவரும் காண முடிந்தது. பிசுமாக்கின் வாழ்வில் 1839 ஒரு புது மாற்றத்தை உண்டு பண்ணியது. குடும்பத்தின் வறுமை நிலையால் உத்தியோகத்தைத் துறந்து, மீண்டும் கலப்பை எந்தினர். ஏழாண்டு காலத்தின் உழைப்புக் கடினம் அவரது புருடத்துவத்தில் புது மாற்றங்களே நிலை நிறுத்தியது. தத்துவ ஞானம், வரலாறு, இலக்கிய நூல்கள் அ.ரது இ2ண பிரியா நண்பர்களாயின. பல நாட்டுத் தரிசனம் விசாலமான அனுபவத்தை அளித்தது.
1847 இல் பிசுமாக்கு யோகன் ஞ (Johanna) எனும் பெண்மணியை மணந்து அதே ஆண்டு பிரசிய அரசியலுலகிலும் பிரவேசித்தார். மண வாழ்வும், அரசியல் வாழ்வும் இன்பத்தையும் பிரபல்யத்தையும் பெற்றுக் கொடுத்தன. 1847 இல் தாராண்மை வாதத் துக்கு ஆதரவு தரும் நோக்குடன் அரசன் கூட்டிய ஐக்கிய பிரசிய பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்ற அவர், உலக வரலாற்றில் கால் வைத்தார். 1847-51 க்கு இடைப்பட்ட பிரசிய வரலாறு, அரசியல் நெருக்கடி, புரட்சி, பிராங்பேட் பாராளுமன்றத்தின் பேரரசு முடியின் நிராகரிப்பு, எபேட் ஐக்கியத்தின் தோற்றம், மறைவு எனும் நிகழ்ச்சிகளை உள்ளிடாய்க் கொண்டது. இவ்வாண்டுகளில், பிசுமாக் தன் சுயேச்சையான மனப்போக்கை யும், நா வன்மையையும் பழைமை வாதத்தின் வீரத்துவத்தையும், சனநாயக விரோத மனப்பான்மையையும், எதற்கும் அஞ்சாத நெஞ்சுத் திடனையும் பகிரங்கப்படுத்திக் கொண்டார். பிரசிய அரசு சனநாயகத்துடன் உறவுபூண்டு ஒத்துழைத்தல் கூடாது, அதற்கு தயவு தாட்சணியம் காட்டுதல் பிழை என்பவற்றை அவர் பேச்சுக்கள் பிரதிபலித்தன. கடந்த
நான்கு ஆண்டுக் காலமும் சனநாயகத்துக் கெதிராக தான் போர் நடாத்திய தாகவே, பிசுமாக் எண்ணிக்கொண்டார். புரட்சியை ஆதரிப்பது மதியீனம், அவமானம் எனும் காரணங்களினுல், அரசன் பிராங்பேட் முடியை எற்பதை எதிர்த்தார்.
எபேட் ஐக்கியத் திட்டத்தின் தோல்வி அவருக்கு மிக மகிழ்ச்சி அளித்தது. ஐக்கியத் திட்டம் வெற்றி பெற்றிருந்தால், பிரசிய அரசன் சனநாயகத்தின் அடிமையாகி யிருப்பான் என்பது அவரது துணிவு.
பிசுமாக் உண்மையில் சனநாயக விரோதி ; ஆனல் பிரசியாவின் தேசப்பற்றும் விசு லாசமும் அவன் இரு கண்கள். 'நாங்கள் பிரசியர்கள் ; என்றும் பிரசியர்களாகவே இருப்போம்” என்ற அவனது கர்ச்சனையே, அவன் தன் தாயகத்தில் கொண்ட காதலுக் குச் சான்று பகரும். இந்த உன்னத இலட்சியத்தையே பிசுமாக் தன் சிரமேற் கொண்டு திட்டங்களை உருவாக்கினர். அவரது திட்டம் செயல்பட்ட பிரகாரம், செர்மன் ஐக்கியம் பூர்த்தி

செர்மனியின் ஐக்கியம் 183
பெற்ற போது, செர்மனி பிரசியாவில் பிஜணக்கப்பட்டதேயல்லாது, செர்மனியில் பிரசியா அல்ல. இத்தாலிய, செர்மன் ஐக்கியங்களின் வேறுபாடு இதுவே. ஐக்கியத்தின் முடிவில் சாடினியா உறே முக்கும், செர்மனி பேளினுக்கும் அசைந்தன. 1851 அளவில் பிசமாக் ஒப்பற்ற தகைமை வாய்ந்த ஒரு தலைவனுக்குரிய திறமையும் ஆற்றலும் அமைந்த வல்லாள குய் உருப்பெற்றர். அவரது இராச விசுவாசம், அரசனைப் பெருமிதமடையச் செய்தது. பிகமாக்கின் பிடிவாதமான மனே நிலைமை அரசனைச் சிந்திக்கச் செய்தது. "குருதிக்கு தாகமாயிருக்கும் செந்நிற எதேச்சாதிகாரி-துப்பாக்கியும் ஈட்டியும் தடையின்றி விக்ட்சி செலுத்தும்போது மாத்திரம், உபயோகத்துக்கு" என பிசுமாக்கின் பெயருக்கு எதிரே அரசன் குறிப்பெழுதியதாகக் கூறப்படுகிறது. பிசுமாக்கின் கல்வியைப் பூரணப் படுத்தும் நோக்குடன், அரசர், பிராங்பேட் கூட்டாட்சிப் பாராளுமன்றத்துக்கு அவரைப் பிரசியத் தூதுவராக அமைத்தார். இந்த நியமனம், பதினெரு ஆண்டுகளுள் பிசுமாக்கை அறிவியல், அதுபவம், சூழியல், ஆட்சி நிபுணத்துவம் என்பவற்றின் இருப்பிடமாக மாற்றியமைத்தது : பிசுமாக் பூரண புருடரானர். செர்மன் ஐக்கியத்தை வழிநடத்தப்போகும் ஒருவருக்கு பிராங்பேட்டில் எட்டு ஆண்டுகள், செயின்ட் பிற்றசு பேக்கில் மூன்று ஆண்டுகள் பரிசு, வியன் ஞவிற் சில மாதங்கள் எதிர்பார்க்க முடியாத அபரிமிதமான கல்வியையும் அரசியல் அநுபவத்தையும் பெற்றுக் கொடுத்தன. இவற்றிலும் மேலாக இங்கிலாந்தின் தரிசனையும், கவூர் தவிர்ந்த மற்றைய எல்லா ஐரோப்பிய இராசதந்திரிகளினதும் அறிமுகமும் பிசுமாக்கின் அரசியல் நிபுணத்துவத்துக்கு பெருந்துணை புரிந்தன.
பிசுமாக்கின் நோக்கங்கள் :
பிராங்பேட்டில் செர்மன் பிரச்சினையைப் பற்றிய ஒரு விசால மான நோக்கையும், அதில் ஆழ்ந்து கிடந்த சிக்கல்களையும், அதை விடு விக்க எடுக்க வேண்டிய முயற்சிகளையும் பற்றி, பிசுமாக் திட்டமான ஒரு முடிபை நிர்ணயித்திருந்தார். ஒசுத்திரியாவும், பிரசியாவும் செர்மனி யில் நிரந்தரமான எதிரிகளாக உருவாக்கப்பட்டவை ; ஒசுத்திரிய அபிசுபேகுகள் (Hapsburgs) பிரசிய ஒகன் சொலன்களை (Hohen20ltern) தமக்கு நிகரானவையென ஏற்கும் நோக்கம் இல்லாதவர் கள் ; பிரசிய தலைமையில் செர்மன் ஐக்கியம், ஒசுத்திரியாவுடன் போரின் பின்பே ஏற்படுமெனும் உன்னத பாடங்களை பிசுமாக் கற் றுக் கொண்டார். சனநாயகத்திலும், இங்கிலாந்திலிருந்தது போன்ற பாராளுமன்ற ஆட்சி முறையிலும் அவருக்கு நம்பிக்கை சிறிதும் இல்லை.
முதலாவது உவில்லியம் ஒகன்சோலன் இராணுவ பரம்பரை யைச் சேர்ந்தவர் ; பிசுமாக்கைப்போல் போர்க் கடவுளில் பூரணப் பற்றுள்ளவர் ; தாராளக் கொள்கைகளில் நம்பிக்கையற்றவர், பூரண தேச்சாதிகாரி. பிரசியாவின் பெலமும் ஆன்மாவும் அதன் இராணுவத்திலேதான் அடங்கிக் கிடக்கின்றன என்பது அவரது திட பான அபிப்பிராயம். ஒல்மட்சு அவமானத்தை மீட்கவும், செர்மனி யின் முதன்மையை ஆக்கவும் இராணுவ பெலம் ஒன்றினலேயே இய லும் எனும் முடிவான நோக்கமும் கொண்டிருந்தார். அதனல், விடு தலைப் போர்க் காலம் முதல், மாற்றத்தைக் கண்டறியா இராணு

Page 107
18 புது உலக சரித்திரம்
வத்தைச் சீர்திருத்தும் வேலையில், உவில்லியம் காலதாமதமின்றிப் பிரவேசித்தார். படையணி மாவீரன் எனும் புகழ்படைத்த வொன் Gunr 6ödi (Von Moltke) 56ITL 15 uurt 356ylb, Gay Teir a-pt dit (Von Roon) பாதுகாப்பு, யுத்த அமைச்சராகவும் நியமனம் பெற்றனர்.
பாராளுமன்றமும், இராணுவ வரவு செலவுத் திட்டமும் :
தாராண்மை வாதிகளே பிரசிய பாராளுமன்றத்தின் பெரும் பங்கினர். 1859 ஆம் ஆண்டு, 39 காற்படைகளாலும், 10 குதிரைப் படைகளாலும் இராணுவ பெலத்தை அதிகரிப்பதற்குத் தேவையான புதிய இராணுவ முறிகளை பிரசிய பாராளுமன்றத்தில் உMல்லியம் சமர்ப்பித்தார். தாராண்மை வாதிகள், அவற்றை அங்கீகரிக்க மறுத்து, நிராகரித்தனர். அரசனுக்கும் பாராளுமன்றத்துக்குமிடை யில் நீண்ட வன் சமர் ஆரம்பித்தது. எக்காரணம் பற்றியும் தன் பிடியைத் தளர்த்த அரசன் சித்தமாயிருக்கவில்லை ; அரசமைப்பையும் பெரளுட்படுத்தவில்லை. புதுப் படைகள் பதிவு செய்யப்பட்டன : அரசனின் நீங்காப் பிடிவாதத்தால், எதிர்ப்பு ஓங்கி உக்கிரமடைந் தது. ஒரு பாராளுமன்றம் கலைந்து, மற்றையது ஆரம்பித்தபோது, எதிர்ப்பு முன்னிலும் பன்மடங்காய் மூண்டெழுந்தது. தாராண்மை’ வாத அமைச்சு விலகிற்று. புதிய, பழைமை பேண் அமைச்சு, முன் னையதன் மாதிரியைப் பின்பற்றி, அரசாங்க இராணுவத் திட்டத்தை வன்மையாகக் கண்டித்தது. படைகளின் அதிகரிப்புக்குப் பதிலாய், பாராளுமன்றம் அவற்றைக் குறைக்கப்போவதாய் பயமுறுத்தியது. இராணுவச் செலவினங்கள், வரவுசெலவுத் திட்டத்திலிருந்து அகற் றப்பட்டன. இவ்வண்ணம், சட்டசபையில் உள்ளே புகைந்த எதிர்ப் பானது, புறத்திலும் பொது மக்களின் உணர்ச்சியில் பிரதி பலித்தது.
மன்னன் முடியைத் துறத்தல் எனும் ஒரு முடிபை நோக்கியே நிலைமை தீவிரம் பெற்றது. ஈற்றில், உவில்லியம் முடியைத் துறப்ப தற்கு முன்பு இறுதி நடவடிக்கையாக, உறுான், பிசுமாக்கை அழைக்கு மாறு வற்புறுத்தினர், வல்லபங்களின் உறைவிடமான பிசுமாக்கில், இன்னும் முழு நம்பிக்கை வைக்காத உவில்லியம், அவரை வரவழைக் கத் தயங்கினர். அரசியும், பிசுமாக்கின் வருகையை ஆட்சேபித்தாள். எனினும் அத்தியாவசிய தேவை, அரசனின் செயலை நிதானித்தது ; உறுான் கூறிய ஆலோசனைப் பிரகாரம், பரிசிலிருந்த பிசுமாக்குக்கு தந்தி மூலம் அழைப்பனுப்பப் பட்டது. அழைப்பை ஆவலுடன் எதிர் பார்த்து நின்ற பிசுமாக், உடனே பேளினிக்கு விரைந்து சென்ருர்,


Page 108
|-Izom-gros) qirmssoo lognyosangoo„“− aveo? •;& qv&o tạor„--~ «stø og uægt, iga-thournes taev –ırıą toQ**mg**} ezia-ove isson woo -irtoqo& z981}感初兵砲 |-→-砷瑙‘ą• tęsa nga www.asafns) spoo ŋwɛg&心* A'上水产 1ņo-ihsaerne og qoố 99&Iungaskmn影建 廳霸圖赋 鸥į „so „urnagyo qoaes gror~~& 以惑、Y セa C*息}*
よさg**。---- |-メ
柳y
*$
----~----***
*贪好.
... ... ——————•T{ー?
多
„%
•rneo cổ
4mg4?门电污9
 
 
 
 

செர்மனியின் ஐக்கியம் 85
பிசுமாக் பிரசியாவின் முதல் அமைச்சர் :
பிரசிய வரலாற்றில் பிணக்கும் பிரளயமும் நிறைந்த கட்டத் தில், அரசியலைக் கையேற்கும் பொறுப்பு, பிசுமாக்கின் கைகளில் சுமத் தப்பட்டது. 1862, செற்றம்பர் 23 ஆம் நாள் ஆட்சிப் பொறுப் பும், பிரசியாவின் எதிர் காலமும், நூற்ருண்டின் அதி தலை சிறந்த அரசியலறிஞனய பிசுமாக்கின் பாதுகாப்பின் கீழ் விடப்பட்டன. ஐரோப்பிய வரலாற்றில் ஒரு புது யுகம் மலர்ந்தது.
பிசுமாக்கின் நியமனம், எரி தீயில் எண்ணெயை வார்த்தது போலா யிற்று. சபையின் உள்ளும் புறமும் எதிர்ப்பு மூண்டெழுந்தது ; பாராளுமன்றம், அரசன், முதலமைச்சர்-இடையே ஏற்பட்ட பிளவு பூரணமாயிற்று. நான்கு ஆண்டு காலம், அரசனின் அளவற்ற நம்பிக் கையின் ஆதரவின் கீழ், பிசுமாக், அமைச்சுக்கும் மக்களுக்கும் எதிரே ஒரு தொடர்ச் சமரை நிகழ்த்தினர். இராணுவ பலமே செர்மன் ஐக்கியத்தின் பூரண சாதனம் எனும் முடிபை ஆரம்பத் திட்டமாக வகுத்திருந்த பிசுமாக், அரசனின் இராணுவ திட்டத்தை மனப்பூர்வ மாக ஆதரித்தார். 'இன்றைய பெரும் பிரச்சினைகள் பிரசங்கங் களிஞலும் பெரும்பான்மைத் தீர்மானங்களினுலுமன்று, இரத்தத் தினுலும் இரும்பினுலுமே தீர்க்கப்படும்" எனத் தன் திட்டத்தை ஐயம்திரிபற எடுத்துரைத்தார். திடமும் தீர்க்கமும் நிறைந்த பிசு மாக்கின் இத் தீர்மானம், நாட்டு மக்களின் நல்லெண்ணத்தை அவ ரிடமிருந்து முற்ருய்ப் பிரித்துவிட்டது. “அரசியல் வானிலிருந்து பிசு மாக் ஒராண்டு காலத்துள் மங்கி மறைந்து விடுவார்' என எதிர்க் கட்சியினர் கங்கணங் கட்டினர். ஆனல் இருபத்தெட்டு ஆண்டுகள் ஈடு இணையற்ற சர்வாதிகாரியாக பிசுமாக் செர்மனி மீது ஆட்சி
செலுத்தினர். ஒன்பது ஆண்டுகளுக்குள் மூன்று போர்களை நிகழ்த்தி ஒர் ; ஒசுத் திரியாவை செர்மன் கூட்டாட்சியிலிருந்து விலக்கினர் : தாராளவாதிகளுடன் சமாதானம் செய்து கொண்டார் ; பிரசிய முடியின் கீழ் செர்மனியை ஜக்கியப்படுத்தலாம் என்று தாம் கண்ட கனவை நனவாக்கினர்.
போலந்துப் புரட்சி:
செர்மன் நாடுகளில் ஒசுத் திரிய ஆதிக்கம் அழிக்கப்பட வேண்டு மென்பதே பிசுமாக்கின் முதன்மையான நோக்கம். இதற்காக, எதிர் காலத்தில் ஒசுத்திரியாவுடன் நிகழவிருக்கும் போரில், அந்நாட்டை ஐரோப்பாவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் உடனடியாக இறங்கி குறர்.

Page 109
186 புது உலக சரித்திரம்
சர்வதேசத்துறையில் எழுந்த அதி முக்கியத்துவம் வாய்ந்த பிரச் சினை 1863 ஆம் ஆண்டு ஏற்பட்ட இரண்டாவது போலிசுப் புரட்சி யாகும். இப்புரட்சி பாதி ஐரோப்பாவின் அனுதாபத்தைப் பெற்றது ; மூன்ரும் நெப்போலியன், இங்கிலாந்து, ஒசுத்திரியா எனும் நாடுகள் இரசியாவை எச்சரிக்கவும் துணிந்தன. பிரசிய தாராண்மைவாதி களும் புரட்சியை ஆதரித்தனர். ஆனல், பிசுமாக் இப்புரட்சியில் இரசியாவின் நல்லெண்ணத்தை நிரந்தரமாசப் பெற அல்லது இழக்க ஒரு அரிய சந்தர்ப்பத்தைக் கண்டார். பிரசியத் தாராண்மை வாதி களின் பெலமான எதிர்ப்பைப் பொருட் படுத்தாது, அவர் இரண் டாம் அலெக்சாந்தருடன் ஒப்பந்தம் செய்து, புரட்சியை அடக்கு வதற்கு தன்னலியன்ற உதவியைத் தர ஒப்புக் கொண்டார். புரட்சியின் முடிவில் திட்டமிடப்பட்ட இரசியாவின் நட்பும் கிட்டியது.
இளவரசர்கள் மாநாடு :
@Fi uDGör sin. L L TL6? (German Confederation) 9y60MLDvů60)Ljë 8ori திருத்தும் நோக்குடன், 1863 ஆம் ஆண்டு ஒசுத்திரிய பேராசன், பிரான்சிசு யோசப், செர்மன் இளவரசர்களை பிராங்பேட்டில் ஒர் மாநாட் டுக்கு அழைத்தார். இவ்வழைப்பை மறுக்க உலில்லியம் சற்றுத் தயங்கினர். ஆனல், பிராங்பேட் மாநாடு, செர்மன் விவகாரங் களில் ஒசுத்திரியா தன் பிடியை உறுதிப்படுத்துவதற்காவே கூட்டப் பட்டதெனச் சரிவர யூகித்த பிசுமாக், உவில்லியத்தை அங்குபோகாத படி தடை செய்தார். பிரசியா சமுகம் கொடுக்க மறுத்தமையினல், ஒகத்திரியா பெரும் ஏமாற்றமடைந்தது. செர்மன் விவகாரங்களில் தன் முதன்மையைப் பாதுகாக்கவும் உறுதிப்படுத்தவும், ஒசுத்திரியா செய்த இறுதி முயற்சி இதுவேயாம். அஃது அவ்வாண்டு முடிவடைய முன்அதன் வீழ்ச்சிக்கு நேரே வழிகாட்டிய செல்சுவிக்கு-ஒல்சீன் பிரச்சி னையில் பிரவேசித்தது.
செல்சு விக்கு-ஒல்சீன் பிரச்சினை :
பிசுமாக்கின் தேனிய மாகாண நடவடிக்கைகள் அவரது மதி யூகத்தின் தெளிவை எடுத்தியம்பின. •
யத்திலாந்து (Jutland) தீபகற்பத்தின் தென்பாதியில் செல்சு விக்கு, ஒல் சீன் என்ற இரு மாகாணங்கள் தாமாக தென்மாக்குடன் இணைந்து, நீண்ட காலம் அந்நாட்டு மன்னனின் கீழ் இருந்து வந்தவை. இம் மாகாணங்களின் பிரசைகளில் ஒரு பகுதியினர் தேனியராயும், ஏனை யோர் செர்மனியராகவும் இருந்தமையினல், நாளடைவில் செல்சு விக்கு, தென்மாக்கின் நேர்முக ஆட்சிக் குட்படலாயிற்று. ஒல்சீன், 1815 ஆம் ஆண்டு செர்மன் கூட்டாட்சி யமைப்பில் ஒா உறுப்புரிமை

செர்மனியின் ஐக்கியம் 87
யைப் பெற்றது. தேனிய அரசர், ஒல்சீன் மீது பாராட்டிய உரிமை யினல், செர்மன் கூட்டாட்சி மன்றத்திலும் ஒர் இடம் பெறலாயினர். இவ்வொழுங்கு திருப்தியற்றதாக இருந்தபோதிலும், அது மாற்றமின்றி நீடித்து வரலாயிற்று.
1848 ஆம் ஆண்டு, இப் பிரச்சினை முதலெழுந்தபோது, ஐரோப் பிய வல்லரசுகள் தலையிட்டு, 1852 ஆம் ஆண்டு, இலண்டன் உடன் படிக்கை வாயிலாகத் தீர்த்து வைத்தனர். பத்து ஆண்டுகளுக்கு அமைதி காப்பாற்றப் பெற்றது. 1863 இல் ஒன்பதாம் கிறித்தியன் (Christian IX), அரசேறியதுடன் பிரச்சினை மீண்டும் கிளம்பியது. அவ்வாண்டு, அரசன் செல்சுவிக்கை தென்மாக்குடன் இணைக்கவும் ஒல் சீன நெருங்கப் பிணைக்கவும் ஓர் திட்டத்தைப் பிரசுரித்தார். செர்மனியும். இரு மாகாணங்களும் தம் பெலமான ஆட்சேபனையைத் தெரிவித்தன. செர்மன் கூட்டாட்சி மன்றத்தின் இராணுவப் படைகள் ஒல் சீனுக்குள் புகுந்து, தேனியப் படைகளைத் துரத்திவிட்டு, செர்மன் இளவரசர் (Duke of Augustenburg) ஒருவரைச் சிம்மாசனத் தில் அமர்த்தின. இவ்வாறு செல்சுவிக்கு - ஒல்சீன் பிரச்சினை மீண்டும் செர்மன் அரசியலரங்கில் தோற்றியது.
பிசுமாக், அதி அவதானத்துடன் இப் பிரச்சினையைத் தீர்க்க இறங்கினர். ஆரம்பம் தொட்டே, இரு மாகாணங்களையும் பிரசியா வுடன் இணைக்க வேண்டு மென்ற நோக்கை விடாப்பிடியாகக் கடைப் பிடித்தார். ஆனல் ஒசுத்திரியாவுக்கும், வல்லரசுகளுக்கும் அஞ்சிய பிசுமாச், தனித்துத் தலையிடத் துணியவில்லை. அதற்குப் பதிலாக, ஒசுத்திரியாவைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ளத் திட்டமிட்டார். ஒசுத்திரியாவும், பிரசியாவும் ஒருங்கு சேர்ந்து, 48 மணித்தியாலங்க ளுக்குள் புது அரசியற்றிட்டத்தை மாற்றுமாறு இறுதிக் கூற்ருெ ன்றை (Ultimatum) தேனிய அரசனுக்கு விடுத்தனர். இதை தேனிய அரசன் அங்கீகரிக்க மறுக்கவே, 1864 சனவரி முடிவில் பிரசிய-ஒசுத் திரிய சைனியங்கள் செல்கவிக்கினுள் புகுந்தன. இரு மாதங்களில் இரு மாகாணங்களையும் வெற்றி கொண்ட செர்மன் படைகள், தென்மாக்கின் மேல் படையெடுப்பதைக் கண்ட வல்லரசுகள், தலை யிட்டு போரை நிறுத்தி, இலண்டனில் ஒரு மாநாட்டைக் கூட்டினர். யூன் மாதம் வரை பிரச்சினை தீராத நிலையில் விவாதிக்கப்பட்டது; ஒரு திட்டமான முடிபுமின்றி மாநாடு கலைந்தது. யூன் முடிவில் ஒசுத் திரியாவும், பிரசியாவும் போரைத் தொடர்ந்து நடாத்தி தேனியரை வெற்றி கொண்டன. தேனியப் படைகள் முறியடிக்கப் பட்டதுடன், ஆகத்து மாதம் முதலாம் நாள் அமைதி ஏற்பட்டது.

Page 110
188 புது உலக சரித்திரம்
தேனிய அரசர் செல்சுவிக்கு, ஒல்சீன்மீது பாராட்டிய சகல உரிமை களையும் வெற்றி பெற்ருேருக்குக் கையளித்து, அங்கு ஏற்படும் எம் மாற்றத்தையும், தாம் ஒப்புக்கொள்ள சம்மதப் பட்டார்.
53 ġġ för 26örugë. GODS (Convention of Gastein) :
பிசுமாக் திட்டமிட்ட போர் வெற்றியுடன் முடிவெய்தியது. ஆனல் செல்சுவிக்கு, ஒல்சீன் மாகாணங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிரச்சினை இன்னும் தீரவில்லை. இதில் அடங்கியிருந்த சிக்கல் யாதெ னில், பிரசியா இரு மாகாணங்களையும் தனது சொந்தமாக்க விருப் புக் கொண்டது ; ஆனல் ஒசுத்திரியா, செர்மனியின் இப்பாகத்தில் புது நிலங்களைப் பெற ஆசிக்க வில்லை. எனினும் தனக்கு ந ட் ட ஈடின்றிப் பிரசியா படர்வதை அனுமதிக்க ஒசுத்திரியா தயாரா யிருக்கவில்லை. “ஒரு விருந்துக்கு முன் இரு விருந்தாளிகளைப் போன்று நாம் இம் மாகாணங்களின் முன் நிற்கிருேம். ஆணுல் பசியில்லாத ஒருவன், பசியுள்ளவன் உணவை அருந்துவதை வன்மையாகத் தடை செய்கிருன்” என பிசுமாக் ஒசுத்திரிய தூதமைச்சருக்குக் கூறி ஞர். நீண்ட விவாதத்தின் பின்னர், ஒசுத்திரியா ஒல்சீனையும், பிர சியா செல்சுவிக்கையும் ஆட்சி செய்வதென ஏற்றுக் கொண்டன.
கீல் துறைமுகத்தின்மீது ஆணை, கீல் கால்வாயை வெட்ட உரிமை, ஒல்சீனை சொல்வறைணிற் சேர்த்தல் போன்ற உரிமைகளைப் பிரசியா ஒசுத்திரிய ஒல்சீனில் பெற்றமையினல், இவ்வொப்பந்தம் பிரசியா வுக்கு ஒரு மகத்தான வெற்றியாகக் கணிக்கப்பட்டது.
2. ஒசுத்திரிய-பிரசியப் போர்
பிசுமாக்கும் கசுத்தீன் ஒப்பந்தமும் :
பிசுமாக்கின் விரிவான செர்மன் ஐக்கியத்திட்டத்தில் தேனியப் போர் ஒரு இடை நிகழ்ச்சியாகும். ஒசுத்திரியாவுடன் போரை ஏற் படுத்த வேண்டுமெனத் திட்டமிட்டிருந்த பிசுபமாக், ஒசுத்திரிய-பிரசியத் தகராறுகளை ஒரு நிரந்தரமான உடன். படிக்கையில்ை தீர்த்து வைக்க விரும்பவில்லை. "நாம் பிளவுகளை மூடி மறைத்திருக்கிருேம்’ என கசுத்தீன் ஒப்பந்தத்தை வியாக்கியானம் செய்தார். எந்நேரமும், ஒசுத்திரியாவுக் கெதிராகப் போரை வருவிருக்க வல்ல பிணக்குக்கான வித் துக்கள் பலவற்றை கசுத்தீன் ஒப்பந்தத்தில், பிசுமாக் விதைத்திருந் தார்.
நாலா பக்கங்களிலும் பிரசியாவினல் சூழப்பட்டிருந்த ஒல்சீன கை நெகிழ விட விரும்பிய ஒசுத்திரியா, பிரச்சினையை செர்மன் டயற் றின் தீர்மானத்துக்குச் சமர்ப்பிக்க உறுதி கொண்டது. இந்நட

செர்மனியின் ஐக்கியம் 189
வடிக்கை, கசுத்தீன் முறிகளுக்கு முரண்பட்டதெனக் குற்றஞ் சாட்ட பிசுமாக்குக்குச் சந்தர்ப்பம் வாய்த்தது. இப்பிரச்சினையிலிருந்து, தான் நினைத்த நேரம் போரை ஏற்படுத்தலாமெனக் கண்டு கொண்ட பிசுமாக், மோதுதலை ஆரம்பிக்க முன், இராணுவ ஆயத்தங்களைப் பூர்த்தி செய்யவும், அயல் வல்லரசுகளின் ஆதரவைப் பெறவும், சூழியலினல் புழற்ற நாடுகளை நடுநிலை வகிக்கச் செய்யவும் முற் பட்டார். . ܕ ܐ பிசுமாக்கும் இரசியாவும் :
இரசியாவின் நல்லெண்ணம் நிச்சயம் கிடைக்கும் என பிகமாக் எண்ணினர். அவர், கிறைமியன் போரிலும், 1863 ஆம் ஆண்டுப் போலிசுப் புரட்சியிலும், இரசியாவுக்குச் செய்த உதவிகள் வீண் போகவில்லை. இரசிய சார், பிசுமாக்கை ஓர் உற்ற நண்பனுகவே கருத்திற் கொண்டிருந்தார்.
பிரான்சினதும் இத்தாலியினதும் ஆதரவைப் பெறுவதிலேயே தன் முழு அவதானத்தையும், சூழியல் தேர்ச்சியையும் திருப்பினர். பிரான்சினது நடுநிலைமை அத்தியாவசியமான தென்றும், இத்தாலி யின் படை பூண்ட நட்பு பயன் தரத்தக்க தென்றும் தீர்மானித் திருந்தார். பிரித்தானியா தலையிடாதென அவர் எண்ணியது உண்மை யாயிற்று. பிசுமாக்கும் முன்றம் நெப்போலியனும் :
பிசுமாக், பிரசியாவின் சென்ம விரோதியான மூன்ரும் நெப் போலியனை 1865 ஒற்ருேபரில், பியா றிற்சு (Biarritz) எனுமிடத்தில இரகசியமாகச் சந்தித்தார். நெப்போலியன் நிதார்த்தமற்றவனென் றும் இலகுவில் ஏமாறக்கூடியவனென்றும் ஏற்கனவே பிசு மாக் அறிந்திருந்தார். சாட்சிகளின்றி நடைபெற்ற இச்சந்திப்பில், எதிர் காலத்தில் நிகழவிருக்கும் ஒசுத்திரிய-பிரசியப் போரில், பிரான்சு நடுநிலை வகிப்பின், இறைன் பிரதேசத்தில் ஒரு பகுதியைப் பிரதியுப காரமாகத் தாம் தரத் தயாரென ஆசை வார்த்தை கூறி, பிகமாக் நெப்போலியனைச் சமாதானப் படுத்தினர். மறுபுறம் பிரசியாவின் இராணுவ பெலத்தை உணராத நெப்போலியன், ஒசுத்திரிய-பிரசி யப் போர் நெடுங்காலம் நீடிக்குமெனவும், அதில் பிரசியாவே தோல் வியுறும் என்றும், தக்க தருணத்தில் தலையிட்டு, சமாதானத்தை ஏற் படுத்திப் பிரான்சின் எல்லைகளை இறைன் நதிவரை விரிக்கலாமென்றும் மனப்பால் குடித்தான். w இத்தாலிய உடன்படிக்கை :
அடுத்து, பிசுமாக் 1866 ஏப்பிரலில், இத்தாலியுடனும் ஒப்பந்தம் செய்து கொண்டார். மூன்று மாதங்களுக்குள் ஒசுத்திரியா, பிரசியா

Page 111
190 புது உலக சரித்திரம்
வுடன் போர் தொடுப்பின், அப்போரில் இத்தாலி, பிரசியாவுக்கு இராணுவ உதவி புரியவும், அதற்குப் பிரதியுபகாரமாக வெனிசியா வைப் பெற்றுத்தரவும் பிசுமாக் உறுதிமொழி கூறி, அதன் படை பூண்ட நட்பைச் சம்பாதித்துக் கொண்டார்.
சூழியலினல் மத்திய ஐரோப்பாவில் ஒசுத்திரியாவைத் தனிமை யாக்கிய பிசுமாக், அரும் பாடுபட்டே போருக்கு மன்னனின் சம்மதத் தைப் பெற்றன்.
ஒசுத்திரிய-பிரசியப் போர் :
1866 யூன் முதலாம் நாள், ஒசுத்திரியா, செல்சுவிக்கு-ஒல்சீன் பிரச்சினையைத் தீர்க்குமாறு, செர்மன் டயற்றைக் கேட்டு நின்ற போது, பிசுமாக், அது கசுற்றின் ஒப்பந்தத்தை மீறுவதாகும் எனக் கூறி ஒல்சீனுக்குள் பிரசிய துருப்புக்களைக் கட்டளையிட்டு, ஒசுத்திரி யாவை வெளியேற்றினர். ஒல்சீனில் தன் உரிமையைப் பறித்து, அமைதியைக் குலைத்ததற்கு பிரசியாவைத் தண்டிக்கவேண்டுமென ஒசுத்திரியா சபையில வற்புறுத்தியது. இப்பிரேரணைக்குச் சாதகமாக அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும், தன் அரசாங்கத்தின் மேல் போர்ப் பிரகடனம் செய்வதற்குச் சமானமாகப் பாவிக்கப்படுமென, பிரசியப் பிரதிநிதி அறிவுறுத்தினன். யூன் 14 ஆம் நாள், பிரேரணை பெரும் பான்மை வாக்குகளினுல் நிறைவேறியது. 18 ஆம் நாள் பிரசியா போரில் குதித்தது.
ஒரு சில சிறு அரசுகளைவிட, கூட்டாட்சியமைப்பின் பெரிய இராச் சியங்கள் அனைத்தும் ஒசுத்திரியாவுடனேயே ஒன்று சேர்ந்தன. ஆனல், போருக்கு ஆயத்தமாக நின்ற பிரசிய சேனைகள், உடனே எதிர் நாடுகள் மீது படையெடுத்தன. சக்சனி, எசே-கசல், அனுேவர் பத்து நாட்களில் அடிபணிந்தன. யூன் இறுதியில், வட செர்மனியில், பிரசியா ஆட்சேபனைக் கிடமற்ற முதன்மையைப் பெறலாயிற்று. அடுத்து இரு பிரசியப்படைகள் பொகீமியாவுக்குள் ஊடுருவிச் சென் றன. அங்கு, யூலை 3 ஆம் நாள், ஒசுத்திரிய-பிரசியப் படைகள் சடோவா (Sadowa) வில் பொருதின. அங்கு, ஒசுத்திரிய துருப்புக்கள் மீட்சிக்கு இடமின்றி முறியடிக்கப் பட்டதுடன், போர் முடிவெய்தியது.
இரகசிய் ஒப்பந்தத்தின் படி, இத்தாலிய துருப்புக்கள் வெனிசி யாவை ஆக்கிரமித்து, குசுத்தோசாவில் தோற்கடிக்கப்பட்டன. அவர்களது கடற்படையும் அதிரியாற்றிக்குக் கடலில் வெற்றி கொள்ளப்பட்டது. எனினும், வெனிசியாவில் ஒரு பெரும் ஒசுத்திரிய படையைத் தடை செய்து வைத்தமையினல், அவர்களும் பிரசியாவின் வெற்றிக்குக் காரணராயினர்.

செர்மளியின் ஐக்கியம்
பிரசியாவின் தென் செர்மன் எதிரிகள்--பவேரியா, பேடன், உவேட்டம் பேக் இலகுவாக வெற்றி கொள்ளப்பட்டன. பிரசியாவின் மின்னல் வெற்றியைக் கண்ட மூன்ரும் நெப்போலியன் அதிர்ச்சி யடைந்து சமாதானத்தை ஏற்படுத்த முற்பட்டார். பிரெஞ்சினரை அவமானப்படுத்தத் தன் இராணுவத்தின் பெலம் இன்னும் போதா தென உணர்ந்த பிசுமாக், சமாதானப் பேச்சு வார்த்தைகளை ஆரம் பிக்க உடன்பட்டார். 1866 ஆகத்து 23 இல், பிறேக்கு அமைதிப் Qu roit, JT (Treaty of Prague) affi) Lullarrussibg.
இவ்வுடன்படிக்கையின்படி ஒசுத்திரியா, செர்மனியிலிருந்து வெளி யேறவும், செர்மன் கூட்டாட்சி மன்றத்தைக் கலைக்கவும், வெனிசி யாவை இத்தாலிக்குக் கொடுக்கவும், செல்சுவிக்கு-ஒல்சீன் மாகாணங் களில் தமக்கிருந்த உரிமைகளைப் பிரசியாவுக்குக் கையளிக்கவும், செர்மனியில், பிரசியா சிருட்டிக்கும் எத்தகைய புனரமைப்பையும் ஏற்றுக் கொள்ளவும், ஒசுத்திரியா சம்மதித்தது.
(3u g ßsör eß8smT shassir :
செல்சுவிக்கு, ஒல்சீன், அனேவர், எசே-நசோ உட்பட 28,000 சதுர மைல் நிலப் பரப்பைப் பிரசியா புதிதாகப் பெற்று, மெயின் நதிக்கு வடக்கே வடசெர்மன் கூட் LLTT S LLLLL LLLLtLtLLLLLLL LLrttLtttLtSHLL LLLLLS TT kTkT LrT TT SE TTTTTLTT STTS STSTSS 1867 இல் பேளின் நகரில் 22 வடசெர்மன் நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ச ை கூடிற்று. பிசுமாக் தயாரித்த புது அரசமைப்பின் படி வட செர்மன் கூட்டாட்சி அமை: கப் பெற்றது. அவைக்கு ஒரு கட்டரசு (Bund98rath) என்ற கூட்டாட்சி முறையையும்; இறைகு சாக்கு (Reichstag) என்ற சட்ட சபையையும் ஆக்கிக் கொடுத்தார். பவேரியா, உவேட்டம் பேக், பேடன் என்னும் தென் இராச்சியங்கள் கூட்டாட்சியில் சே ராது வெளியே நிற்கவும் தம் விருப்புப்படி தமக்குள் ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்தவோ, அதன் றேல் வட இராச்சியங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யவோ அனுமதி பெற்றன.
1866 gö ஆண்டுப் போரின் பயனக, பிரசியா, தன் இராச்சியத்தின் இரு பெரும் குதிகளுக்கிடையே வியாபித்துக் கிடந்த நிலப் பரப்புக்களே இணைத்து, ஒரு வல்லரசுக்குரிய எல்லைகளைப் பெறலாயிற்று. சிதறிக் கிடந்த அரசுகளை ஒன்று கூட்டி, ஒரு பெரிய அர சாக அமைக்கும், பிரசிய வரலாற்றின் பிரதான போக்கு, வட செர்மன் கூட்டாட்சியமைப் பில் முற்றுப் பெற்றது.
பிசுமாக்கும் உவில்லியமும், பரிபூரணமாக நம்பிக்கை வைத்த இராணுவம் அவர் களை மகிமைப்படுத்தி, அவர்களது எதிரிகளை வெட்கிக்கச் செய்தது. ஒரு காலம் பிடி யாவில் அதி கூடுதலாக வெறுக்கப்பட்ட பிசுமாக், இப்பொழுது நாட்டின இலட்சிய வீர னக போற்றப்பட்டான். வெற்றியின் மத்தியில் கூட, பிசுமாக் தன் நண்பர்கள் ஆச்சரி யப் படும் படியும், எதிரிகள் மனம் மாறும் படியும் கண்ணியமாக நடந்து கொண்டார்.
1866 ஆம் ஆண்டுப் போர் தான் இத்தாலிய ஐக்கியத்தையும் பூரணப்படுத்தும் வாயிலில் கொண்டு வந்து விட்டது. வெனிசியா, இத்தாலியுடன் இணைந்ததன் பின், உருே மின் வீழ்ச்சி தவிர்க்க முடியாத நிலைக்குள்ளாயிற்று. செடானில் பிரான்சு தோல்வி வடைந்த அன்று, உருேம் வீழ்ந்தது.

Page 112
192 புது உலக சரித்திரம்
3. பிரெஞ்சுப்-பிரசியப் போர்
கு
பிரான்சும் பிசுமாக்கும் :
இதுவரை நடந்தேறிய ஐக்கியத்தைப் பூரணப் படுத்துவதற்கு, பிரான்சு என்றும் தடையாயிருக்கும் என்பதை பிசுமாக் நன்குணர்ந் திருந்தார். பிரான்சு, இரு நூற்ருண்டு காலமாக செர்மனியைப் பிளவு படுத்தி, அதைப் பெலவீனமான நிலையில் வைத்திருக்க வேண்டு மென்றே, திட்டமிட்டுக் கரும மாற்றியது. 19 ஆம் நூற்றண்டிலும் இக் கொள்கையே பிரெஞ்சு இராசதந்திரத்தின் உன்னத நோக்காக அமைந்தது. “நாம் ஒருபோதும் செர்மனி ஐக்கியப்படுவதை அனுமதிக் கலாகாது' என்ருர் தியசு (Thiers). பிரெஞ்சு-பிரசிய வரலாற்றை மதி நுட்பத்துடன் பரிசீலனை செய்திருந்த பிசுமாக், 'பிரான்சுடன் ஒரு யுத்தம் நடந்தே தீர வேண்டுமெனச் சரித்திரம் விதிக்கிறது" எனத் திட்டவட்டமாகக் கூறினர். பிரான்சு ஒரு போரில் வெற்றி கொள்ளப் பட்டாலன்றி, அஃது ஒரு பொழுதும் செர்மன் ஐக்கியத்தை அங்கீகரிக்க மாட்டாது என்பது அவரது முடிபு. அதனுடன் தென் இராச்சியங்களான பவேரியா, பேடன், உவேட்டம்பேக் கூட்டாட்சி யமைப்பில் இணைக்கப்படும்வரை, செர்மன் ஐக்கியம் பூர்த்தி யடைய மாட்டாதென உணர்ந்த பிசுமாக், இரு நோக்கங்களையும் ஒன்ரு கப் பிணைத்து, செர்மனியின் பரம்பரை விரோதியான பிரான் சுடன் செய்யப்படும் போர், தென் மாகாணங்களையும் ஐக்கியத்துக் குள் கொண்டு வரவும் பயன்பட வேண்டுமெனத் திட்டமிட்டுக் கரும மாற்றினர்.
பிசுமாக்கின் சூழியல் :
பிரான்சுடன் யுத்தம் தவிர்க்க முடியாததெனத் தீர்மானித்ததும், பிசுமாக், அந் நாட்டை ஐரோப்பாவில் தனிமையாக்கும் முயற்சியில் இறங்கினர்.
இரசியா இன்னும் பிரசியாவை நல்லெண்ணத்துடனேயே நோக்கி நின்றது. 1856 ஆம் ஆண்டு பரிசு உடன்படிக்கையின் கருங் கடல் விதிகளை இரசியா மீறுவதை, செர்மனி எதிர்க்கமாட்டாதெனக் காட்டி நட்பை வளர்த்தார்.
சடோவாப் போருக்குப் பின், பிசுமாக், ஒசுத்திரியாவைத் தாரா ளத்துடனும் அன்புடனும் நடத்தியதன் பயன் உடனே கை மேல் கிட்டியது. ‘இன்றைய எதிரி நாளைய நண்பன்' என்று நினைத்துப் பிசுமாக் ஒசுத்திரியாவின் மானத்தைக் காத்து வைத்தமையினுல் அந் நாடும் பிசுமாக்குக்குக் கடமைப்பட்டிருந்தது. பாப்புவின் நாடு

செர்மனியின் ஐக்கியம் 93.
பிரெஞ்சுச் சேனைகளால் காக்கப்படுவதை இத்தாலிக்குச் கீட்டிக் காட்டி, பிரான்சு தோற்கடிக்கப்படின் இத்தாலிய ஐக்கியம் பூரண மடையும் எனக் கூறி, இத்தாலியின் நல்லெண்ணத்தையும் பிசுமாக் பெற்ருர்.
மூன்றம் நெப்போலியன் பெல்சியத்தை ஆக்கிரமிக்க நோக்கம் கொண்டிருந்தமையை இங்கிலாந்துக்குத் தெரிவித்து, இரு நாடுகளுக் கிடையே பிணக்கை வளர்த்தான்.
போருக்காய காரணங்கள் :
பிரெஞ்சுப் பிரசிய யுத்தத்துக்கான அடிப்படைக் காரணம் 1866 ஆம் ஆண்டு யுத்தத்தினுல், பிரான்சுக்கும் பிரசியாவுக்குமிடையே ஏற்பட்ட போட்டியாகும். பிரசியாவின் சடோவா வெற்றி, பிரெஞ் சுச் சக்கரவர்த்தியின் கற்பனைக் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத் தது. ஒ சுத்திரிய-பிரசியப் போர் நீட்சியுறும் என்றும், தக்க தருணத் தில் தான் பிரவேசித்து, சமாதானத்தை ஏற்படுத்தித் தன் நிலப்பரப் ல பயும் விரிவடையச் செய்யலாமென நெப்போலியன் மனப்பால் குடித்திருந்தார். மேலும் இந்த யுத்தத்தில் பிரசியா தோல்வியடையு மென்றும் அதனல் செர்மனி முன்னிலும் இழிவான நிலையையடையு மென்றும் எண்ணியிருந்தார். இவையெல்லாவற்றையும் பிரசியாவின் சடோவா வெற்றி வீண் கனவாக்கியது. “சடோவாவில் தோல்வி யடைந்தது பிரான்சு தான்' என்ருர் தியசு, நெப்போலியனின் பய னற்ற, தடுமாறும் நடுநிலைக் கொள்கையே பிரசியாவின் வெற்றிக்குக் காரணமெனப் பிரெஞ்சு மக்கள் நெப்போலியன்மேல் சீற்றங் கொண்டனர்.
1863 ஆம் ஆண்டுப் போலிசுப் புரட்சியில் தோல்வியடைந்தத ஞலும், மெக்சிக்கோப் படையெடுப்பு வீண் போனதனுலும், பிரான் சில், நெப்போலியனின் நிலை பெலவீனப்பட்டது. தன் நிலையை உறுதிப் படுத்திக் கொள்ளப் பிரான்சின் பறிபோன புகழைத் திரும்பிப் பெறக்கூடிய கருமமொன்றைச் சாதிக்க நெப்போலியன் தேடித்திரிந் தார். பியாறிற்சில் தனக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றும்படி, பிகமாக்கை நெப்போலியன் கட்டாயப்படுத்தினர். அவர் பெல் சியத்தை ஆக்கிரமிக்க பிசுமாக்கின் சம்மதத்தைக் கேட்டார். 'தவிர்க்க முடியாத காரணங்களினல் பிரெஞ்சுப் படைகள் பெல் சியத்துக்குள் பிரவேசித்தால்' நெப்போலியனும் பிசுமாக்கும் செய்யக் கூடிய ஒப்பந்தத்தை பிசுமாக் எழுத்தில் வாங்கி அதைப் பிற்கால உப யோசுத்துக்கு வைத்துக்கொண்டார். இதற்குப் பிசுமாக் உடன்பட மறுக் கவே, நெப்போலியன் நட்ட ஈடாக இலக்சம்பேக் தனக்குத் தரப்பட் வேண்டுமென வற்புறுத்தினர். இலக்சம்பேக் ஒல்லாந்துக்குச் சொந்த
2 - F 15

Page 113
194 புது உலக சரித்திரம்
மான நாடு ; ஆனல் அது சொல்வறைணிலும் செர்மன் கூட்டாட்சி யமைப்பிலும் இடம் பெற்றதுடன், அதன் கோட்டை பிரசிய துருப் புக்களினல் பாதுகாக்கப்பட்டும் வந்தது. ஒல்லாந்து அதை விலைக்கு விற்கச் சம்மதிக்கவே, பிரான்சைச் செலவின்றித் திருப்திப்படுத்தலா மென எண்ணிய பிசுமாக் “அதை எடுத்துக்கொள்' என்று நெப்போ லியனுக்கு ஆட்சேபனை பற்ற அனுமதி கொடுத்தார். ஆனல் இச் சதியைக் கேள்விப்பட்ட பிரசிய மக்கள், பலமான எதிர்ப்புக் காட் டினர் பிசுமாக் வேறு வழியின்றிப் பிரசிய மக்களின் நாட்டின உணர்ச்சிக்கு அடிபணிந்து தம்வாக்கை நிறைவேற்ற மறுத்துவிட் டார். "பிசுமாக் என்னை ஏமாற்றி விட்டான்' என்று நெப்போ வியன் மனம் புழுங்கினன். யுத்தம் ஏற்படும் சூழ்நிலையும் தோன்றி யது. ஆனல் வல்லரசுகள் தலையிட்டு இலக்சம்பேக் பிரச்சினையைத் தீர்த்து வைத்தன. இலக்சம்பேக், வல்லரசுகளின் உத்தரவாதத்தின் கீழ் நடுநிலை நாடாக இருக்கவும், பிரசிய துருப்புக்கள் வெளியேறவும் உடன்பாடு ஏற்பட்டது. இது, பரிசில் பிரான்சினரும், பேளினில் செர்மானியரும் தத்தமக்கு வெற்றியெனப் பெருமை பாராட்டினர். சங்கட நிலை யுத்த மின்றிக் கழிந்தது. ஆனல் அடுத்த மூன்று வரு டங்களுள் வரப்போகும் குருவளியின் அறிகுறிகள் சர்வதேச நிலையின் அமைதியைக் குலைத்தன. இரு நாடுகளும் நண்பர்களைத் தேடுவதில் முனைந்தன. செர்மனி இத்தாலியினதும், இரசியாவினதும் நட்பை இலகுவாகச் சம்பாதித்துக் கொண்டது.
சிபானிய வழிக்கொள்ளல் பிரச்சினை :
1870 யூலையில் எவரும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் யுத்த சூரு வளி தென்மேற்கு முனையிலிருந்து வீச ஆரம்பித்து, ஐரோப்பாவை ஆட்கொண்டது. 1868 ஆம் ஆண்டு சிபெயினில் ஏற்பட்ட புரட்சி இசபெலாவைச் சிங்காசனத்திலிருந்து துரத்தியது. ஈர் ஆண்டு களாக சிபானிய அரசாங்கம், ஒரு தகுதியான அரசரைத் தேடி, ஈற் றில் அப்பதவியைத் தென் செர்மன் பிரசிய அரச வம்சத்தைச் சேர்ந்த இலியப்போல்டு இளவரசருக்கு நல்கியது. 1870 இல் இலி யப்போல்டு இப்பதவியை ஏற்க மறுத்துவிட்டார். யூன் மாதத்தில், வேண்டுகோள் புதுப்பிக்கப்பட்டபோது, யூலை 3 ஆம் நாள் இலியோப் போல்டு அதை ஏற்றுவிட்டார் என்று கேள்விப்பட்ட ஐரோப்பா அதிர்ச்சியடைந்தது. ஏற்கனவே தன் விருப்பின்மையைத் தெரிவித் திருந்த பிரெஞ்சு அரசாங்கம், இப்புதினத்தைக் கேட்டவுடன் சீறி எழுந்தது. இதனல், ஐரோப்பிய சம நிலைக்கும், பிரான்சுக்கும் ஏற் படக் கூடிய கெடுதிகளைப் பரிசுப் பத்திரிகைகள் கண்டனங்களுடன் எடுத்துரைத்தன. யூலை 6 ஆம் நாள், பிரெஞ்சுப் பிறநாட்டு அமைச்சர்

செர்மனயின் ஐக்கியம் 95
இலியப்போல்டின் பிரேரணை வாபசு பெறப்படாவிட்டால், “நாம் எங்கள் கடமையைப் பெலவீனமின்றியும், தாமதமின்றியும் செய்யத் தயங்க மாட்டோம்' என்று செர்மனிக்குச் சவால்விட்டார்.
எம்சுத் தந்தியும் போர்ப் பிரகடனமும் :
இதன் பின் பிரான்சு கோபமூட்டும் அதட்டல் முறைகளில் இலியோப்போல்டை அகற்ற முயற்சித்து, ஐரோப்பாமுன் சமா தானத்தைக் குலைக்க முயற்சிப்பதாகக் காட்டிக் கொண்டது. பிரெஞ்சுத் தூதுவரான பெனடிற்றி (Count Beneditti) பிரசிய அரசரை எ ம் சு (Ems) என்ற இடத்தில் ச ந் தி த் து , நடாத் திய பேச்சு வார்த்தைகளில் முதலாவது உவில்லியம் அவரது கோரிக் கைகளுக்கு இணங்கினர். இதனுடன் போர்க் கார் மேகங்கள் மறைந் தன. ஆனல் செர்மனியை வலியப்போருக்கு இழுக்க வேண்டுமென்று திடம் கொண்ட பிரான்சு, உவில்லியத்தையும் செர்மனியையும் அவ மதிக்க நோக்கங்கொண்டது. பிரசிய மன்னர் இனிமேல் எப்போ தாவது அவ்வுரிமைக்குப் பாத்தியதை பாராட்டக் கூடாது என்ற உத்தரவாதத்தைப் பெற்றுத் தருமாறு பெனடீற்றிக்குப் பிரெஞ்சு அரசாங்கம் கட்டளையிட்டது. உவில்லியம் இவ்வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்தார். இதைக் கேள்விப்பட்ட பிசுமாக், செர்மனி, தன் மானத்தைக் காக்க யுத்தம் செய்தேயாக வேண்டுமென்ருர், யூலை 13 ஆம் நாள் உலில்லியமும், பெனடீற்றியும் நடத்திய பேச்சுவார்த்தை களின் விபரமடங்கிய தந்தி எம்சிலிருந்து பிசுமாக்குக்கு அனுப்பப் பட்டது. டோர் வருமோ என்று கலங்கி நின்ற பிசு மாக், இத்தந்தி யில் தான் ஆசித்த சந்தர்ப்பத்தைக் கண்டார். தந்தியின் வசன நடையை மாற்ருது, அதைச் சுருக்கி, பிரெஞ்சுத் தூதுவர் பிரசிய அரசரினல் அவமதிக்கப்பட்டார் எனும் பொருட்பட, சுருக்கத்தைப் பத்திரிகைகளில் பிரசுரிக்க அனுமதி கொடுத்தார். உண்மைப் பிர திக்கும், சுருக்கத்துக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரான்சை அவமதிப்பதாக அமைந்தது. தந்தியின் பிரசுரம், பிசுமாக் எதிர்பார்த்த விளைவுகளைக் கொண்டுவந்தன. பிரான்சில் நாட்டின உணர்வு உச்சத்தைத் தொட்டது. அவ்வுணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது அரசாங்கம், யுத்தப் பிரகடனம் செய்ய முடிவு செய்தது. அடுத்த தினம் பிரெஞ்சு மக்களின் குதூகலத்தின் மத்தியில் செர் மணிக்கெதிரே பிரான்சு போர்ப் பிரகடனம் செய்யலாயிற்று.
பிரான்சு, செர்மனி ஆகிய இரு நாடுகளிலும் போர், ஆர்ப்பாட் டங்களுடன் மக்களினுல் வரவேற்கப்பட்டது. யுத்தம் செர்மனியைப் பிளவு படுத்தும் என்று பிரான்சு கண்ட கனவு பலிக்கவில்லை. வட செர்மன் கூட்டாட்சிக்கு வெளிப்பட்ட நாடுகளும் போரை வரவேற்

Page 114
196 புது உலக சரித்திரம்
றுப் பிரசியாவுடன் ஒத்துழைக்கத் தீர்மானித்தன. நெப்போலியன் எழுத்து மூலம் புது நாடுகள் வேண்டுமெனத் தந்த கடிதங்கள் பிரசு ரிக்கப்பட்டன. பெல்சியத்தின் நிலையைப் பாதுகாப்பதையே பரம் பரைக் கொள்கையாகக் கொண்ட இங்கிலாந்து, நெப்போலியனின் பேராசையைக் கண்டு சீறிச் சினந்தது. ஐரோப்பாவின் பொதுசன அபிப்பிராயம் பிசுமாக் பக்கம் திரும்பியது.
இரு வாரங்களுக்குள் செர்மன் சைனியங்களின் ஆயத்தங்கள் யாவும் பூர்த்தியடைந்தன. ஆகத்து 2 ஆம் நாள், உவில்லியம், தன் படைகளின் தலைமையை ஏற்க மெயின்சு (Mainz) நகரத்திக்க வந்தார்.
செர்மன் தாக்குதல் :
450,000 போர் வீரர்களைக் கொண்ட செர்மன் சைனியம் மூன்று படைகளாக அணிவகுக்கப் பட்டு, அவை லொறெயின், வட அல்சாசு எனும் மாகாணங்களின் எல்லைகளுக் கூடாக பிரான்சை ஊடுருவிச் செல்ல ஆயத்தமாக நின்றன. பிரெஞ்சுப் படைகளும் அதே எல்லை களில் நெப்போலியனதும் மக்மகோனினதும் (Macmahon) தலைமையின் கீழ் அணிவகுத்து நின்றன.
செர்மனியர் ஒர் திடீர்த் தாக்குதலுடன் போர் மு ர  ைச க் கொட்டினர் : ஆகத்து 4 ஆம் நாள், ஒரு படை அல்சாசுக்குள் புகுந் தது. 6 ஆம் நாள் ஒரு போரில் வெற்றியடைந்த பின் லொறெயி னின் கதவுகளும் செர்மானியருக்குத் திறக்கப்பட்டன.
பிரான்சுக்குத் தோல்விகள் ஒன்றன் பின் ஒன்ருக தொடர்ந்து வந்தன. பிரதான பிரெஞ்சுப்படை ஒரு கடும் தாக்குதலின் பின் 18 ஆம் திகதியன்று, போதிய உணவின்றி மெற்சுக் கோட்டையில் அடைபட்டு முற்றுகையிடப் பட்டது. சக்கரவர்த்தியும் மக்மகோனும் மெற்சின் உதவிக்குப் புறப்பட்டனர். ஆனல் வொன் மொல்க்கின் திறமையான நடவடிக்கைகளினல் இம் முயற்சி வீண் போயிற்று. மக்மகோனின் படைகள் செடான் (Sedan) எனும் இடத்தில் செர் மன் சைனியங்களினல் சுற்றி வளைக்கப்பட்டன. ஓர் பள்ளத் தாக் கில் அகப்பட்ட இப்படைகள் செற்றம்பர் முதலாம் நாள், நாலா பக்கங்களிலும் வன்மையாகத் தாக்கப்பட்டன. அடுத்த தினம் பிரெஞ் சுப் பேரரசனும் அவரது 83,000 போர்வீரர்களும் சரணுகதி யடைந் தனர். இவ்வாறு உவாட்டலூவுக்குப் பின் ஏற்பட்ட அதி பெரிய இரா ணுவ வீழ்ச்சி செடானில் நடந்தேறியது.

செர்மனியின் ஐக்கியம் 19ጎ
பரிசின் முற்றுகை :
செடான் தோல்வியின் தகவல் பரிசுக்கு எட்டியதுடன், இரண் டாம் பேரரசு வீழ்ந்து, மூன்ரும் முடியரசு ஏற்படலாயிற்று. உடனே, ஒரு தற்காலிக தேசப் பாதுகாப்பு அரசாங்கம் அமைக்கப்பட்டு, தேசத் தைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. "பிரெஞ்சு மண்ணில் ஒரு அங்குலமாவது, பிரெஞ்சுக் கோட்டைகளில் ஒரு கல்லேயாவது விட்டுக் கொடுக்க மாட டோம்" என்று வீர ஆவே சத்துடன் புது அரசாங்கம் சங்கற்பம் செய்தது. செற்றம்பர் மாதத் தின் இரு கிழமைகளுக்குள், செர்மானியர் தலை நகரம் வரை முன்னேறி னர். தியசு தற்காலிக அரசாங்கத்திற்கு வெளிநாடுகளின் உதவிய்ைத் தேடி ஐரோப்பாவின் தலை நகரங்களுக்கு புறப்படலாயினர். செற்றம் பர் 19 இல் பரிசு முற்றுகையிடப் பட்டது. ஆயுதங்களின்மையாலும் பயிற்சியின்மையாலும், மாகாணங்களில் சேர்க்கப்பட்ட புதுப் படை கள், முற்றுகையிடப்பட்ட தலை நகருக்கு ஒரு உதவியும் செய்ய முடியாமற்போயிற்று. ஒற்ருேபர் 27 இல் மெற்சில் அடைபட் டிருந்த 180,000 பிரெஞ்சு வீரர்கள் அடிபணிந்தனர்; பரிசின் முற்று கைக்கு மேலும் செர்மன் படைகள் விடுவிக்கப்பட்டன. R
1871 சனவரி 18 இல் வேர்சை நகரத்தின் கண்ணுடி மண்டபத் தில் ( சர்மன் இளவரசர்களினல் சூழப்பட்ட பிரசிய அரசன் உவில் லியம், செர்மன் சக்கரவர்த்தியாக முடி சூட்டப்பட்டார். “சக்கர வர்த்தி உவில்லியம் நீடூழி வாழ்க’ என்ற பேரொலி வானைப் பிழந்தது.
A 15

Page 115
98 புது உலக சரித்திரம் அதிகாரம் 12
ஐரோப்பாவின் ஆள்புலப் படர்ச்சி
(1783-1870)
அகில உலகமும் ஐரோப்பிய மயமானதே, 19 ஆம் நூற்றண் டின் தனிச் சிறப்புக்களில் ஒன்ரு கும். 15 ஆம் நூற்ருண்டு தொடக் கம் செல்வம், வியாபாரம், மதப்பிரசாரம் எனும் காரணங்களினல் உந்தப்பட்ட போத்துக்கேயர், சிபானியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஐரோப்பாவுக்கு அப்பாற்பட்ட கடல்கடந்த நாடுகளைத் தமதாக்கிக் கொள்ள ஆரம்பித்ததுடன், ஐரோப்பாவின் பெலமும், அதிகாரமும், செல்வாக்கும் உலகத்தின் எல்லாப் பாகங்களுக்கும் பரவலாயின. 19 ஆம் நூற்றண்டில் அகில உலகும், ஐரோப்பிய குடியேற்ற நாடுக ளாக, அல்லது ஐரோப்பிய தொழில், எந்திர கலாச்சாரங்களுக்கு அடிமைப்பட்ட தேசங்களாக உருமாறின. இக்காலத்தினுள் ஆபி ரிக்க, ஆசிய, ஒசுத்திரேலிய, பசிபிக் பிரதேசங்கள் அனைத்தும் ஐரோப் பிய அரசுகளின் அல்லது ஐரோப்பிய மக்களின் ஆதிக்கத்துக்கு உட் படுத்தப்ப்ட்டன. நெப்போலியப் போர்கள் முடிவெய்திய காலம் தொடக்கம் முதல் உலக யுத்தத்தின் வருகை வரையும், ஐரோப்பியர் அதி கூடுதலான தொகையாகப் பிறநாடுகளில் குடியேறி, புதுக் குடி யேற்றங்களை நிறுவினர் : அல்லது வெள்ளை மக்களின் குடியேற் றங்களின் பெலத்தை அதிகரிக்க உதவினர்.
1. 1783 முதல் 1825 வரை
ஏழாண்டுப் போரின் பின் ஐரோப்பிய வல்லரசுகளின் ஏகாதி பத்திய நாட்டம் மந்த நிலை  ைய எய்தியது. நாலா பக் கங்களிலும், ஐரோப்பியர், சென்ற நூற்ருண்டுகளில் அரும்பாடு பட்டு நிர்மாணித்த பேரரசுகள் யாவும் சீர்குலைந்தன. 1783 க்கும் 1825 க்கும் இடைப்பட்ட காலத்தில் பிரிட்டிசுப் பேரரசு ஒன்றைத் தவிர, பிரான்சு, நெத லன்சு, சிபெயின், போத்துக்கல் அரசுகள் சிருட்டித்திருந்த ஏகாதிபத்தியங்கள் யாவும் இருந்தவிடம் தெரியா மல் மறைந்தன. பிரான்சு :
பிரான்சு, வட அமெரிக்காவில் சென் லோறன் சு, மிசிசிப்பி நதி தீரங்களையும், இந்தியாவில் பெரும் பகுதியையும் ஏழாண்டுப் போரில், இங்கிலாந்துக்கு அளித்தது. நெப்போலிய யுத்த காலத்தில்,

ஐரோப்பாவின் ஆள்புலப் படர்ச்சி 199
அது மேலும் சில பகுதிகளை இழக்க நேரிட்டது. 1825 அளவில், பிரான்சு, மேற்கு இந்தியத் தீவுகளில் பலவற்றையும், தென் அமெரிக் காவில் கயனவையும், இந்தியாவில் ஒன்றிரண்டு வியா பார நிலையங்களையும் மாத்திரமே தன் பண்டைய ஏகாதிபத்தியத்தின் எச் சங்களாக வைத்திருந்தது.
ஒல்லாந்து :
ஐரோப்பிய வாணிபத்தின் முன்னணியில் நின்ற ஒல்லாந்தர், குடி யேற்றங்களை அமைப்பதற்கு மிகச் சிறிய இனமாக இருந்த போதும், அவர்கள் ஒரு காலத்தில் எல்லாக் கண்டங்களிலும் வியா பாரத் தலங்களை அமைத்திருந்தனர். புதிதாகக் கண்டுபிடித்த ஒசுத் திரேலியா, நியூ சீலந்து எனும் பிரதேசங்களை அவர்கள் அபிவிருத்தி செய்யாது விட்டனர்; வட அமெரிக்காவில் நியூ அமித்தடாமை ஆங்கிலேயருக்கு இழந்தனர். நெப்போலியப் போர்களின் போது தென் ஆபிரிக்கா, இலங்கை, தென் அமெரிக்காவில் கயணு எனும் நாடுகள் பறிபோயின. 1870 அளவில், கிழக்கிந்தியத் தீவுகள் சிலவற் றிலும், மேற்கு இந்தியத் தீவுகளில் இரண்டொன்றிலும் மாத்திரமே அது உரிமை பாராட்டி நின்றது.
இவ்வாறு பிரெஞ்சு, ஒல்லாந்துக் குடியேற்றங்கள், ஏனைய ஐரோப் பிய வல்லரசுகளுடன் நடாத்தப்பட்ட போர்களின் காரணமாக இழக் கப்பட்டன. சிபானிய, போத்துக்கேய ஏகாதிபத்தியங்கள் உண் ஞட்டுக் கலகங்களினல் அழிந்தன.
சிபெயின் :
1783 இல், சிபெயின் இரு அமெரிக்காக்களிலும் 300 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த விசாலமான நிலப்பரப்புக்களின் மீது உரிமை பாராட்டி, பெருமையுடன் விளங்கியது. அதன் வட அமெரிக்கப் பேரரசு மாத்திரமே இங்கிலாந்தின் உடைமைகளிலும் பார்க்க விசால மானது. அது, மிசிசிப்பி நதிக்கு மேற்கே விசாலமான நிலங்களையும், மத்திய அமெரிக்காவையும், தென் அமெரிக்காவின் அரைப்பகுதியை யும் த ன் ஆணையின் கீழ் வைத்திருந்தது. 19 ஆம் நூற்ருண்டின் மு த ல் 25 ஆண்டுகளில், சிபெயின், இவையனைத்தையும் இழந்தது. 1801 இல் மிசிசிப்பி நதிக்கும் ருெக்கீசு மலைகளுக்கும் இடையே பரந்து கிடந்த இலூயிசியாஞ) பிரதேசத்தை நெப்போலியனுக்குக் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டது; 1819 இல் புளொரிடாவை ஐக்கிய அமெ ரிக்க நாடுகளுக்கு விற்றது; மத்திய, தென் அமெரிக்க நிலங்களை புரட்சியினல் இழந்தது. நீண்ட காலத்துக் குறைகள், அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சிகளின் முன்மாதிரிகைகள், நெப்போலியனின்

Page 116
200 புது உலக சரித்திரம்
ஆக்கிரமிப்புக் காலத்திலும் தீபகற்பப் போர்க் காலத்திலும் சிபெயி னின பெல்வீனத்தைப் பயன்படுத்தவும், தம் சுதந்திரத்தைப் பிரகட னம் செய்யவும் தூண்டின. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின், 7-வது பேடினந்து, சிபானிய சிம்மாசனத்துக்கு மீண்டபோது, அவர் குடியேற்ற நாடுகளுக்கு, தாய் நாட்டுடன் சம உரிமைகள் வழங்க மறுத்தார். குடியேற்ற நாடுகள் சிபானிய ஆட்சியதிகாரத்தை நிரா கரித்தன. தேசாபிமானி சைமன் பொலிவாரின் (Simon Bolivar) முயற்சியினலும், பிற்காலத்தில் ஐக்கிய அமெரிக்காவினதும், இங்கி லாந்தினதும் உதவியினலும், சிபானிய அமெரிக்க குடியேற்றங்கள் ஒவ்வொன்ருகத் தம் சுதந்திரத்தை நிலைநாட்டின. 1825 இல் இங்கி லாந்து, இப்புது நாடுகளின் சுதந்திரத்தை முறையாக அங்கீகரித்தது. அவ்வாண்டளவில் கனறிசு, புவட்டோறிக்கோ, பிலிப்பீன் தீவுகள் என்பனவற்றைவிட சிபானிய ஏகாதிபத்தியத்தின் மிகுதி வேருென்று LóGövöa.
போத்துக்கல் :
போத்துக்கலும், சிபெயினைப் போன்ற கதிக்குள்ளாயிற்று. பிறே சில் எனும் அதன் அதி பெரிய குடியேற்றம், சிபானிய அமெரிக்கக் குடியேற்றங்களைப் பின்பற்றி, 1822 இல் தன் சுதந்திரத்தைப் பிரகட னம் செய்யலாயிற்று. 1822 க்குப் பின் போத்துக்கேய பேரரசு, இந்திய, ஆபிரிக்க கரையோரங்களில் அழிந்து போகும் ஒரு சில நிலையங்களையும் தீவுகளையும் மாத்திரமே கொண்டிருந்தது.
பெரிய பிரித்தன் :
ஐரோப்பிய பேரரசுகள் யாவும், சின்னபின்னமாக அழிந் தொழிந்து போன இக்காலத்தின் பொது இயல்புக்கு, பெரிய பிரித்தனின் பேரரசு ஒன்று மாத்திரமே விதி விலக்காகும். 18 ஆம் நூற்ருண்டின் இறுதி யில், அது தன் கடல் கடந்த பேரரசின் அதி விலையுயர்ந்த பகுதி யான அமெரிக்கக் குடியேற்றங்களை இழந்து நின்றது. அமெரிக்க முன்மாதிரியைப் பின் பற்றி, கனடாவும் வெகு சீக்கிரம் சுதந்திரத்தை நாடும் என எதிர்பார்த்த ஆங்கிலேயர், அதற்குச் சுதந்திரம் வழங் கவும் தயாராகவே இருந்தனர். முதிர்ந்த கனிகள் மரத்திலிருந்து உதிர்வதே போல் குடியேற்ற நாடுகளும் பக்குவமடைந்தவுடன் சுதந் திரத்தை நாடும் எனும் பாடத்தை அமெரிக்க உதாரணத்திலிருந்து கற்றறிந் திருந்தனர். குடியேற்ற நாடுகளினுல் தாய் நாட்டுக்கு அதிக இலாபமில்லை யென்றும், அவற்றை அமைப்பதற்குச் செலவிடப்படும் முயற்சிக்கும் பணத்துக்கும் தகுந்த வருவாய் கிடைப்பதில்லை யென் றும் அவர்கள் நம்பினர். திசிரேலி (Disraeli)ஆங்கிலேயரின் இம்மனே

ஐரோப்பாவின் ஆள்புலப் படர்ச்சி 20
நிலையை 'குடியேற்ற நாடுகள், பிரித்தன் அணிந்துள்ள ஆபரண மல்ல ; பிரித்தனின் கழுத்தில் கட்டி விடப்பட்டுள்ள பாரக்கல்' எனத் திறம்பட வருணித்தார்.
1783 முதல் 1825 வரை பிரெஞ்சு, ஒல்லாந்து, சிபானியா, போத் துக்கேய ஏகாதிபத்தியங்கள் போர்களினலும், உண்ணுட்டுப் புரட்சி யினலும் பாழடைந்த காலத்தில், பிரித்தானியப் பேரரசு நான்கு துறை களில் துரிதமாக முன்னேறலாயிற்று.
ஒசுத்திரேலியா :
முதலாவது, இக் காலத்தில் தான், பிரித்தன், ஒசுத்திரேலியா மீது உரிமை பாராட்டி, அங்கு ஒரு வெள்ளைக் குடியேற்றத்தை நிறு வியது. 17 ஆம் நூற்ருண்டில் ஒசுத்திரேலியாவைப் பற்றியும், நியூசீ லந்தைப் பற்றியும் திட்டமான அறிவை உலகுக்கு எடுத்துரைத்த வாகள் ஒல்லாந்தரே. ஆனல், அவர்கள் தம் ஆராய்வூக்கத்தைக் கை நெகிழ விட்டபின், 1770 இல், தலைஞன் குக் (Captain Cook), இப் பிரதேசங்களை மீண்டும் கண்டு பிடித்தார். அவர் ஒசுத்திரேலியாவின் கிழக்குக் கரையோரத்தை ஆராய்ந்து, பொட்டனிக் குடாவில் (Botany Bay) இறங்கி, ஒசுத்திரேலியாக் கண்டத்தைப் பிரித்தனுக்குரிய தாக்கி ஞர். அமெரிக்க குடியேற்ற நாடுகளின் புரட்சியும், இதே காலத்தில் நடை பெற்றமையினல், சிறைவாசத் தீர்ப்பளிக்கப் பெற்ற பிரித்தானி யக் குற்றவாளிகளை எங்கு நாடு கடத்துவது எனும் பிரச்சினை எழுந்தது. இக் குற்றவாளிகள், பல்லாண்டுகளாக அமெரிக்க குடியேற்ற நாடு களுக்குக் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டு, அங்கு குறைந்த சம் பளத்துக்குத் தொழில்களில் அமர்த்தப்பட்டு வந்தனர். ஆன ல் 1776 க்குப் பின், இக் கைதிகளுக்கு அமெரிக்க நாடுகளின் வாயில் மூடப்பட்டதுடன், பிறிதொரு மார்க்கத்தைக் கண்டு பிடிக்க வேண் டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தலைஞன் குக் கண்டு பிடித்த நாடு, இதற்குப் பயன்படக் கூடியதென பிரித்தானிய பாராளுமன்றம்sஉடனே தீர்மானித்தது. 1787 இல், ஒன்பது கப்பல்களும் இரு யுத்தக் கப் பல்களும் ஒசுத்திரேலியாவை நோக்கிப் புறப்பட்டு, பொட்டணிக் குடாவில் வந்திறங்கின. தசுமேனியா உட்பட, கி ழ க் கு ஒசுத்தி ரேலியா முழுவதும் நியூ சுவுத் உவேல்சு (New South Wales) என்ற நாமத்துடன் பிரித்தானிய முடிக்குச் சொந்தமானது என உரிமை பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து வேறு கைதிக் குடியேற் றங்களும் நாளடைவில் நிறுவப் பெற்றன. ஆனல் ஒசுத்திரேலியாவில் காணப் பெற்ற நிலைகள் அமெரிக்க நிலைகளிலிருந்து முற்றிலும் வேறு பட்டமையினல், புதுக் குடியேற்றங்கள், ஆரம்ப நிலையில் சித்தி பெற வில்லை. கைதிகள், விவசாயத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்கள் ;

Page 117
202 புது உலக சரித்திரம்
அதனுடன் புது நிலங்களைப் பண்படுத்தும் முயற்சியில் ஊக்கமோ அக் கறையோ காட்ட வில்லை. அவர்கள், தாயகத்திலிருந்து அனுப்பப் பெற்ற உணவையே (Rations) நம்பி வாழ்ந்து வந்தனர்.
இவ்வாறு சில ஆண்டுகளுக்கு, குடியேற்றங்களின் வளர்ச்சி, மந்த மாகவும், செலவு மிகுந்ததாகவும் இருந்தது. ஆனல் இக்காலத்தில் சில நிரந்தரமான பயன்கள் ஏற்பட்டன. பிற்காலக் குடியேற்றவாசி களுக்கு நன்கு பயன்படக்கூடிய தெருக்கள், பாலங்கள், பாடசாலை கள், தேவாலயங்கள் முதலானவை அமைக்கப் பெற்றன. நெப்போ லியப் போர்களின் முடிவில், நிலை சற்று விருத்தியடைந்தது. நியூ காசிலில் (New Castle) கரி கண்டு அறியப் பட்டமையும், மெறினுே (Merino) ஆடுகள், வருவிக்கப்பட்டமையும், தொழிற்துறைகளை விருத்திசெய்தன. போரைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக் காலங்களில், குடியேற்ற வாசிகள் மேலும் வெளிச்சென்று ஒசுத்திரேலிய மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தனர். பல ஆங்கிலேயர் கண்டம் முழுவதையும் ஆராய்ந்து, அங்கு ஆட்டுப் பண்ணைகளை அமைக்கலாமென்றும், வேளாண்மை செய்யலாமென்றும், ஆலோசனை கூறினர். எனினும் பல்லாயிரம் மைல்களைக் கடந்து ஒசுத்திரேலியாவில் குடியேறுவதற்கு ஆங்கிலே யர் மேலும் தயங்கினர்.
ESGOTLT
உலகத்தின் மறுமுனையில், பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த இன்னுெரு விதமான புதுப் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டது. 1763 ஆம் ஆண்டு, ஏழாண்டுப் போரின் இறுதி யில் கனடா பிரெஞ்சினிடமிருந்து, பிரித்தானியரின் உடமையாகக் கைமாறிற்று. இந்நிலப்பரப்பின் முக்கியமான குவிபெக் மாகாணம் முற்றிலும் கத்தோலிக்க பிரெஞ்சினரையே கொண்டிருந்தது. ஆகை யினுல், ஆரம்பம் முதல், கனடாவில், பிரித்தானிய அரசாங்கம் சாதி, மதம், மொழி, அரசியற் கருத்துக்கள் என்பவற்றில் முழுமையாக வேறுபட்ட ஒரு இனத்தினரை ஆட்சி செய்யவேண்டிய கட்டாய நிலைக்குள்ளாயிற்று. தவிர, புதிதாகத் தன் சுதந்திரத்தை ஈட்டிய அமெரிக்க ஐக்கிய நாடுகள், அதற்கு அருகாமையில் இருந்தமையி ணுல், குடியரசுவாதம் நாளடைவில் கனேடிய மக்களையும் தன் வயப் படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனல் புரட்சிக்குச் சற்றுமுன் 1774 இல் நோத் பிரபு (Lord North) குவிபெக் விதியின் வாயிலாக, பிரெஞ்சு மக்களுக்குத் தம் நீதிச் சட்டங்களை நிருவகிக்கவும், கத் தோலிக்க மதத்தை வழிபடவும் சுயாதீனம் வழங்கினர். இவ்விதி அமெரிக்க சுதந்திரப் போர்க் காலத்தில, பிரித்தானிய அரசாங்கத்

ஐரோப்பாவின் ஆள்புலப் படர்ச்சி 203
துக் கெதிராக எழுந்திருக்கக் கூடிய வெளியரங்கமான மனப்போக்கை மாற்ற உதவியது. மேலும், போருக்குப் பின் ஐக்கியப் பேரரசுப் figy of r f456i (United Empire Loyalists), 9/GLDifidistaO)6), 62 G. கனடாவில் குடியேறியமையினலும் நிலமை மாறியது. இவர்களில் பெரும்பான்மையினர் நியூ பிறன்சுவிக்கிலும், பெரிய வாவிகளுக்கு வடக்கிலும் குடியேறினர். நூற்ருண்டின் இறுதிக்கு முன், ஆங்கிலே யரைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இன்னுமொரு "கனடா" தோற்றி நின்றது. மதத்தில் இவர்கள் ஆங்கிலேய திருச்சபையை (Church of England) சேர்ந்தவர்கள் ; இதே, புதுக் குடியேற்றத் தின் உத்தியோகபூர்வமான மதமாயிற்று. இப்புதுக் குடியேற்றத்தை நன்குணர்ந்த பிற்று, 1791 இல் கனடா விதியை (Canada Act) பிரித்தானிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றினர். இவ் வி தி, பிரெஞ்சு மக்களைக்கொண்ட கீழ்க் கனடாவை (குவிபெக்) ஆங்கிலே யக் குடியேற்றமான மேற் கனடா (ஒன்தேரியோ) விலிருந்து பிரித்து இரு மாகாணங்களுக்கும் ஒவ்வொரு சட்ட சபையையும், நிருவாக சபையையும் கொண்ட பாராளுமன்ற அரசியல் முறையை அங்கீ கரித்தது. வெகு விரைவல், கனடா, பிரித்தனிலிருந்து பிரிந்து விடு மென்ற எண்ணத்துடனேயே, இவ்விதியைப் பிரித்தானிய அரசாங்கம் நிறைவேற்றியது. ஆனல், இவ்வாறு அமைக்கப்பெற்ற முறைமை 50 ஆண்டுகளுக்கு நீடித்தது. அதன் பயனுக, மேலும் அதிகமான அமெரிக்க குடியேற்ற வாசிகளும், 1815 க்குப்பின் ஆங்கிலேயரும், வடக்கே பிரித்தானிய நிலப்பரப்புக்களில் குடியேறினர். இம் மாகா ணங்களில் அமைக்கப்பெற்ற பொதுமக்கள் சபைகளிலும் பொறுப் பற்ற நிருவாக சபைகளிலும் சனநாயகத்தின் சாரம் அற்றுப் போயிற்று. அவற்றைத் திருத்தியமைக்க வேண்டிய கட்டாயத்திலி ருந்தே, ஏகாதிபத்திய நாடுகளைப்பற்றிய எண்ணங்களிலும், அவற்றை ஆட்சி புரியும் முறைகளிலும், ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்படு வதற்கு வழி பிறந்தது.
இந்தியா :
ஒசுத்திரேலியாவிலிருந்தும், கனடாவிலிருந்தும் முற்றிலும் வேறு விதப்பட்ட, பிரித்தானியப் பேரரசின் மூன்ருவது வளர்ச்சி இந்தியாவில் ஏற்பட்டது. அமெரிக்கா தன் சுதந்திரத்தை நிலைநாட்டிய அதே காலத் தில் இந்தியா தன் சுதந்திரத்தை இழந்தது. அமெரிக்காவில் பிரித்தானி யரின் ஆதிக்கம் அழிந்தொழிந்ததற்கு அறிகுறியாக, உவாசிந்தனிடம் சரணுகதியடைந்த அதே கோண் வாலிசு பிரபு, பின்னர் இந்தியாவின் ஆள்பதி நாயகமானர் என்பது ஒருவிதமான விசித்திர ஒருமைப்பா டுடையது. 200 ஆண்டுகள் நிறைவெய்திய பிரித்தானிய கிழக்கிந்தியக்

Page 118
204 புது உலக சரித்திரம்
கம்பனி, தன் வியார முயற்சிகளின் பயனுக, பழைமை வாய்ந்த நாகரிகமும் சீர் கெட்ட அரசியலும் படைத்த இந்திய உபகண்டத் தில், அளப்பரிய அரசியலதிகாரமுடைய தாபனமாக விளங்கியது.
பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி, 1600 இல், கீழைத் தேசங்களுடன் வியாபாரஞ் செய்வதற்காக எலிசபெத் இாாணியாரிடம் பட்டயம் (Charier) பெற்றது. 1612 இல் அது, சுரத்தில் (Surai) ஒரு பண்டக சாலையைக் கட்டி, அதைத் தன் ஆட்சித தலமாக அமைத்துக் கொண்டது. 1839 இல், இந்தியாவின் தென்கீழ்க் கரையில் பிரான் சிசு டே (Francis Day) சென்னையைப் பெற்றதுடன், கம்பனியார் அங்கு செயின்ட் யோச்சுக் கோட்டையை (Fort St. George) நிறுவினர். 1868 இல் போத்துக்கேயரிட இருந்து தமக்குச் சீதனமாகக் கிடைத்த பம்பாயை, சாள்சு மன்னன் வர்த்தகக் கம்பனிக்கு அளித்தனன். 1885 இல், கங்கையாற்றின் கிளையாகிய ஊக்லி நதியில் வர்த்தக சங்கம் உவில்லியம் கோட்டையைக் கட்டிற்று. பிற்காலத்தில் கல்கத்தா நகரம் இதிலி ருந்தே தோன்றிற்று. இவ்வாறு சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மூவிடங்களுமே பிரித்தானிய வர்த்தகக் கம்பனியின் மத்திய நிலையங்களாக விளங்கின.
1664 இல் கொல்பே (Colbert) என்ற பிரெஞ்சு முதலமைச்சரின் முயற்சியினுல் சென்னைக் கடுத்த புதுச்சேரியிலும், கல்கத்தாவுக்கு அண்மையிலுள்ள சந்திர நாகூ சிலும் , வேறு பல கரையோரப் பிரதேசங்களிலும், பிரெஞ்சினர் பல வியாபாரத் தலங்களை நிறுவினர்.
ஆரம்பத்தில் இவ்விரு சங்க வர்த்தகர்கள், அமைதியுடன் வியாபாரத்தை நடாத்துவதி லும், பணம் சம்பாதிப்பதிலும் திருப்தியடைந்தனர். ஆனல் 1707 இல் ஒளரங்கசீப் இறக் கவே மொகலாய இராச்சியம் சீர்குலைந்தது; அதனு51 ஆதிக்கம் பெற பிரெஞ்சினருக்கும் ஆங்கிலேயருக்குமிடையே போட்டி எழுந்தது. 1744-83 இல் மூன்று போர்களில், பிரெஞ் சினரை அடிபணியச் செய்ததுடன், ஆங்கிலேய சங்கம் தென்னிந்தியாவில் ஆதிக்கம் பெற்றது. 1757 இல், பிளாசிப் பேரில், இந்தியாவில் பிரித்தானியப் பேரரசைத் தாபித்தவனென குறிப்பிடப்படும் கிளைவ் வெற்றி பெற்ற பின்னர், வங்காளத்திலும் அவர்கள் ஆதிக்கம் ஓங்கியது. 1785 இல் மொகலாயச் சக்கரவர்த்தியிட மிருந்து வங்காளத்தின் ஆட்சியுரிமையை யும், கம்பனி பெறலாயிற்று.
கம்பனியின் அதிகாரிகள், தம் கையில் ஒப்படைக்கபட்ட அதி காரத்துக்குத் தகுந்த பொறுப்புணர்ச்சியைக் காட்டாது விட்டமை பினல், இந்தியாவின் அரசியல் முறையைச் சீர்திருத்த வேண்டு மென்ற எண்ணம் இங்கில்ாந்தில் உயர்வு பெற்றது. தவிர இரண்டரைக் கோடி மக்களையும், 30,000 போர் வீரர்களைக் கொண்ட இராணு வத்தையும், வருடம் 4,000,000 பவுண் சேகரிப்பையுங் கொண்ட இப் பெரும் நிலப் பரப்பை ஒரு வர்த்தக சங்கம் ஆட்சி புரிய அருகதை யற்றது என பிரித்தானிய அரசாங்கம் உணர்ந்தமையினல், அது கம்பனியின் நட வடிக்கைகளை படிப்படியாகக் கட்டு ப் படுத்தும் முயற்சியில் இறங் கிற்று. 1773 ஆம் ஆண்டு நோத்தின் ஒழுங்கு படுத்தும் விதியினுலும் (North's Regulating Act), 1784 i glub -9.6:iTG) = ? b ó)air (3).ji; 39u i 669 யினுலும் (Pitts India Act), ஆள்பதி நாயகம், கம்பனியின் பிரதான அலுவலாளர்களை நியமித்தல், அதன் அரசியல் கொள்கைகளை நிச் ணயித்தல் எனும் அதிகாரங்களைப் பிரித்தானிய அரசாங்கம் தன்ன கத்தே கொண்டது.

ஐரோப்பாவின் ஆள்புலப் படர்ச்சி 205
e ou r g 6ðir Gráfi?ĝerir(5 (Warren Hastings, 1772-85) (p,356v 6iru 6 நாயகமாக நியமிக்கப் பெற்ருர். அமெரிக்கச் சுதந்திரப்போர் ஏற்பட்ட நெருக்கடியான காலத்தில் “பதினெட்டாம் நூற்றண்டின் அதி சிறந்த ஆங்கிலேயன்” எனப் பெயர் பெற்ற ஏசிதிங்கு, தம் வீரத்தினலும் திற மையினலும், பிரித்தானிய இராச்சியங்களை பிரெஞ்சினரதும் சுதேச இள வரசர்களினதும் ஒன்று சேர்ந்த ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றினர். தென் இந்தியாவில் மைசூர் அரசன் ஐதர் அலியும், வட மத்திய இந் தியாவில் மராத்தியரும் பிரெஞ்சுக்காரரினது உதவியுடன் பிரித்தானிய இந்தியப் பேரரசை அழிக்க இட்ட திட்டங்களை அவர் வெகு சாமர்த்தி யத்துடன் வெற்றி கொண்டார். 1781 இல், பத்து மடங்கு அதிக மான துருப்புக்களைக் கொண்ட ஐதர் அலியன் படைகளை போட்டோ நோவோ (Porto Novo) வில் வெற்றி கொண்டார். 1782 இல் ஒதர் அலி, தன்னிலும் பார்க்க திறமை குறைந்த திப்பூ சுலு தானுக்கு அரசை விட்டு காலமானன். ஏசிதிங்கு வங்காள நவாபுக்கு உப காரச் சம்பளம் கொடுத்து நீக்கி விட்டு, அதைத் தானே ஏற்று அங்கு ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டினர். அவர் செய்த பெரும் தொண்டு, சங்க நிருவாகத்தைச் சீர்ப்படுத்தி, அதிலிருந்து ஊழல் களைக் களைந்து, திறமைக்கு வழி திறந்து விட்டமையாகும். தாயகம் திரும்பிய பொழுது அவர் ஒரு நீண்ட கால குற்றச்சாட்டுக்கும் வழக் குக்கும் ஆளானர்.
கோண் வாலிசு பிரபு (Lord Cornwallis, 1786-92) ஆள்பதி நாயக மாக நியமிக்கப்பட்டமை, பிரித்தானியா, இந்தியாவில் பின்பற்றிய ஆள் புலப்படர்ச்சித் திட்டங்களைக் கை நெகிழ விடுவதன் அறிகுறியாகக் கணிக்கப்பட்டது. அவர் உவாரன் ஏசிதிங்கின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, வங்காளத்தில் ஒரு நிரந்தரமான ஒழுங்கு முறையை ஏற் படுத்தினர். வங்காளத்தின் நிலம் அளக்கப்பட்டு, பெறுமதி நிதா னிக்கப்பட்டு ஒவ்வொரு குடியானவனும் இறுக்கவேண்டிய திறையின் அளவு நிர்ணயிக்கப்பட்டது. திரும்பவும் ஏசிதிங்கைப் போன்று, அவர் திப்பூ சுலு தானை இரண்டாவது மைசூர் போரில் (1790-2) வென்று அவனது நாட்டின் பாதியை கைப்பற்றினர்.
2-Queváfiso Dreg56íos (Marquis Wellesley, 1798-1804) u96r 8g. தான் இந்தியப் பேரரசு அதிகூடிய முன்னேற்றத்தைக் காணலாயிற்று. 1798 இல் நெப்போலியனின் எகித்தியப் படையெடுப்பு பிரித்தானிய இந்தியாவுக்குப் பேராபத்தை விளைவிக்க் வல்லதென அஞ்சப்பட்டது. உண்ணுட்டு மன்னர், பிரெஞ்சினரின் இராணுவ உதவியுடன், ஆங்கி லேயர் ஆதிக்கத்தை ஒழிக்க நோக்கங் கொண்டனர். ஆணுல் உவெல சிலி நிலையைத் துருவி ஆராய்ந்து, துணிகரமான திட்டங்கள் மூலம் ஆபத்தை நீக்கி, ஆங்கிலக் கம்பனியின் நிலையை நாட்டில் உயர்த்தி

Page 119
2O6 புது உலக சரித்திரம்
னன். அவர், இந்தியாவில் தங்கள் பழைய எதிரியான திப்பூவை மூன்ரும் மைசூர்ப் போரில் (1798-9) வெற்றி கொண்டார். அப் போரில் திப்பூ மாண்டான். மைசூர் இராச்சியத்தின் எல்லைகளைக்
குறைத்து, தன் ஆதரவாளணுெருவரை சிம்மாசனத்தில் அமர்த்தினுர்,
இன்னும் பிரித்தானிய ஆட்சியை எதிர்த்து நின்ற மராத்திய பிரதானி களுக்கிடையில் ஏற்பட்டபோரில், தன் சகோதரனுன ஆதர் உவெலசிலி
(பின்பு இறைமகன் உவெலிந்தன்) யின் உதவியுடன் மராத்தியரின்
பெலத்தைக் குறைத்தார். மேலும் அவர் ஐதரபாத்திலும், அயோத்தி
ugyth (Oudh) LJ 6.0Ligi & J P L-6i Lutg-d60) is (Subsidiary Alliances)
மூலம், சுதேச மன்னர் செலவிலேயே ஆங்கிலேயப் படைகளை அவர்
களின் நாடுகளில் நிறுவி, பிறநாட்டுப் பூட்கை முதலியவற்றில் கம்
பனிக்கு அடங்கி நடக்குமாறு செய்தார். பிரித்தானிய முடியின்
பேரில் மேலதிகமான நிலப்பரப்புக்களை இணைத்ததுடன் (Doab, Car
natic, Rohilkund, Tanjore) பிரெஞ்சினரின் ஆசைகளுக்கும் நிரந்தர
மான முற்றுப்புள்ளி வைத்தார். இவரது ஏழு ஆண்டு ஆட்சிக்
காலத்தினுள் பிரித்தானியப் பேரரசை தில்லி முதல் கல்கத்தா ஈருக,
கல்கத்தா முதல் குமரிமுனை ஈருக ஒரே தொடர்பாக இணைத்தார்.
பிரெஞ்சினரின் பெலத்தை முறித்து, பிரித்தானிய இந்தியப் பேரரசை
அதி உயர் நிலையில் அமைத்துவிட்டுச் சென்ருர்,
6 6FấSri LD AT 56ńî si (Marquis of Hastings, 1814-23) 6 (U5 முற்போக்குவாதி பிரித்தானியரின் ஆட்சி, இந்தியாவுக்கு நன்மை பயக்கவல்லது எனும் உறுதியான நம்பிக்கையுடையவர். 1817-18 இல் ஏற்பட்ட மூன்றுவது மராத்தியப் போரில், மராத்தியரின் பெலம் வாய்ந்த ஐக்கியம், இறுதியாகத் தகர்த்தெறியப்பட்டு, பிரித்தானிய ஆதிபத்தியம் ஆட்சேபனைக் கிடமின்றி நிலைநாட்டப் பெற்றது. Sgithul L. pig 60 gptly (up 6D pufosi (Subordinate Co-operation) இந்திய மன்னர்கள் தம் தலைநகரங்களில் ஆங்கிலப் பிரதிநிதிகளை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தனர்.
இவ்வாருகப் பிரித்தானியப் பேரரசு உண்ணுட்டு ஒழுங்கீனம், பிரெஞ்சினரதும் இளவரசர்களினதும் எதிர்ப்பு எனும் தொந்தரவு களிலிருந்து மீட்கப் பெற்றது.
பிறக் குடியேற்றங்கள் :
பிரித்தானியப் பேரரசின் நான்காவது விரிவு, நெப்போலியப் போர்க்காலத்தில் பிரான்சிடமிருந்தும், அதன் நண்பர்களிடமிருந்தும் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளைக் கொண்டது. ஒல்லாந்து நன் னம்பிக்கை முனை, இலங்கை, கயணு எனுமிடங்களை இழந்தது. இந்தி யாவுக்குச் செல்லும் வழியில், அதன் கேந்திரதான முக்கியத்துவத்

goGBprnrui Lurr67sir ள்புலப் படர்ச்சி 207
○エ ஆள்பு
துக்காக வெற்றி கொள்ளப்பட்ட நன்னம்பிக்கை முனை, நாளடைவில் தென் ஆபிரிக்க பிரித்தானிய பேரரசுக்கு வழிகாட்டியது. இலங்கை, இந்தியப் பேரரசின் ஒரு பிரதான இணைப்பாக மாறியது. தென் அமெரிக்காவில் ஆங்கிலருக்குள்ள ஒரேயொரு குடியேற்றம் தான் கயணு. தவிர கோட்டைகளாகவும், தங்கு நிலையங்களாகவும் பயன் படக்கூடிய பல தீவுகளையும் பிரித்தானியா பெறலாயிற்று. இவற்றில் முக்கியமானவை திரினிடாட், மோற்ரு, செயிசவீசு (Seycheles), மொறிசியசு (Mauritius) என்பனவையாகும்.
இவ்வாறு 1825 இல் பிரித்தன் ஒன்றுதான், உலகின் அதி தலை சிறந்த பேரரசாக விளங்கியது.
2. 1825 முதல் 1870 வரை
நெப்போலியப் போர்கள் முடிவெய்திய காலம் முதல் 1878 ஆம் ஆண்டு பேளின் மாநாடு வரை, ஐரோப்பா முழுமையாக ஐரோப்பிய விவகாரங்களிலேயே ஈடுபட்டு நின்றது. அதன் அவதானம் பரிசு, பேளின், வியன்னு முதலாம் நகரங்களில் நடந்த சம்பவங்களில் நிலைத்ததே தவிர, கனடா, ஒசுத்திரேலியா, ஆபிரிக்கா, இந்தியா எனும் நாடுகளில் நடந்தேறிய நிகழ்ச்சிகளன்று. ஏகாதிபத்திய சிக்கல் களிலும் மேலாக தாராண்மைவாதமும் நாட்டினவாதமுமே அதி முக்கிய பிரச்சினைகளாகியமையினல், அதன் நோக்கு முற்றிலும் ஐரோப்பியமயமானது. இத்தாலிய, சிபானிய, கிரேக்க. போலந்துப் புரட்சிகளின் முடிபுகள், பிரான்சு, செர்மனி, ஒசுத்திரியா எனும் இடங் களில் உண்டான அரசியல் கொந்தளிப்புக்கள், ஒசுத்திரிய-சாடீனிய அல்லது ஒசுத்திரிய-பிரசிய உறவுகளின் விளைவுகள், போல்கன் தீபகற் பத்தில் இரசியாவின் சூழ்ச்சி, மத்தியதரைப் பிரதேசத்தில் பிரான்சின் ஆசைகள்-இவைதான் வல்லரசுகளின் திட்டங்களையும், மற்றேணிக், கவூர், பிசுமாக் என்பவர்களின் சூழியல் ஏற்பாடுகளையும் நிர்ணயித்தன. ஐரோப்பிய பிரச்சினைகளில் அதி குறைவான நாடுகளே ஏகாதிபத் திய குடியேற்ற நாடுகளின் அபிவிருத்தித் துறையில் அதி கூடுதலான முன்னேற்றத்தைக் காட்டின. கொள்கைகளிலுைம் தூரத்தினுலும் அதி தொலைவிலிருந்த ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய உல கத்தின் ஒரு முனையில் இடம் பெற்ற இரசியா, இடையிடையே பிரெஞ்சு மக்களின் அவதானத்தை தூர நாடுகளுக்குத் திருப்ப விசேட காரணம் கொண்ட பிரான்சு, கடைசியாக பெரிய பிரித்தன் இவை தாம் இத்துறையில் மேன்மையும், புகழும், செல்வமும் பெற்றன.

Page 120
208 புது உலக சரித்திரம்
பெரிய பிரித்தன் :
இக்காலத்துப் பிரதான ஐரோப்பிய விவகாரங்களில், பெரிய பிரித்தன் மிகச் சிறிய பங்கே எடுத்தது. கிறைமியப் போரிலும், கிரேக்க, இத்தாலிய சுதந்திர இயக்கங்களுக்கு சொற்ப உதவியளிப் பது மாத்திரமே அதன் பிரதான கடமைகளாம். போரையும், புரட்சி யையும் ஆயுதங்களாகக் கொண் டு ஐரோப்பாவை அச்சுறுத்திய நாட்டின, தாராண்மை இயக்கங்கள் இங்கிலாந்தின் கரைகளை விலத் திச் சென்றன. ஐரோப்பிய நிகழ்ச்சிகளில் தலையிடாது, தனிமையில் தன் சுய நலத்தைப் பேணி நடக்க நோக்கங் கொண்ட பிரித்தன், உலகில் ஒரு தனிப் பேரரசின் தலைவியாகவும், கடல்களின் அரசியாக வும், வாணிபத்தில் நிகரற்றவளாகவும், தனித் தன்மை படைத்த வல் லரசாகத் திகழ்ந்தனள். எனினும், இக் காலத்தில் ஆங்கிலேயர் கூட புது நாடுகளைக் கைப்பற்ற வேண்டும் அல்லது புதுக் குடியேற்ற நாடு களை நிறுவ வேண்டும் என்ற ஆசையினல் தூண்டப்பட்டாரிலர். திட்டமும் ஒழுங்கு மின்றி, சந்தர்ப்ப வாதத்தின் அடிப்படையில் பிரித் தானிய பேரரசு தொடர்ந்து வளர்ச்சியடையலாயிற்று. அது ஒன்றன் பின் ஒன்ருக புதுச் சுமைகளையும் புதுப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டது.
85 G -
கனடாவில் பிரித்தானியப் பேரரசின் நிலப்பரப்பு, செயின்ட் லோறன்சு நதித்தீரத்திலிருந்து பசிபிக் கரையோரம்வரை படர்ந்து, இன்றைய கனடாவின் எல்லைகளைக் கொண்டது. இக்காலத்தில் அமெரிக்காவுடன் உண்டான எல்லைத் தகராறுகள் தீர்க்கப்பட்டு, அவை தெளிவாக நிர்ணயிக்கப்பட்டன. ஒய்வின்றி நடந்த ஆராய்ச்சி யின் பயணுக, மக்சள் குடியேற்றமும், முன்னேற்றமும் பசிபிக் கரையை நோக்கி மின்னல் வேகத்தில் நடைபெறலாயின. புதுத் தெருக்கள், கால்வாய்கள், புகையிரத வீதிகள் அமைக்கப்பட்டமையும், கொலம் பியாவில் தங்கம் அகப்பட்டமையும் இவ்விரிவின் வேகத்துக்கும் பிற காரணங்களாம்.
பிரபு தரமும் ஐக்கிய கனடா விதியும் :
பிரித்தானியப் பேரரசின் வளர்ச்சி வரலாற்றில், மேலே கூறப் பட்ட ஆள்புலப் படர்ச்சியிலும் மேலான சிறப்பும் முக்கியமும் வாய்ந்த ஒரு புது அத்தியாயம் இக்காலத்தில் ஆரம்பித்தது. பிரித் தன், இதுவரை தம் குடியேற்றங்கள் மட்டில் கொண்டிருந்த மனப் பான்மையில் ஒரு பிரதான திருப்பம் ஏற்படலாயிற்று : நாளடைவில் குடியேற்ற நாடுகளுக்குச் சுய ஆட்சி உரிமை வழங்கவேண்டுமென்ற எண்ணம் கனடாவில் நடைபெற்ற சம்பவங்களிலிருந்தே பிறந்தது.

ஐரோப்பாவின் ஆள்புலப் படர்ச்சி 209
பிற்றின் 1791 ஆம் ஆண்டு விதியின் பிரகாரம், கனடா, ஆங் கிலம் பேசப்பெறும் மாகாணமான மேல் கனடா, பிரெஞ்சுமொழி வழங்கும் கீழ் கனடா என இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பாராளுமன்றம், நியமனம் பெற்ற நிருவாக சபையின் மீது அதிகார மற்றதாகவும், நிதிச் செலவினங்கள் மீது கட்டுப்பாடற்றதாகவும் விளங்கியமையின்ல், மக்கள் அதிருப்திப்பட்டனர். இப்பிரச்சினயுடன் பிரெஞ்சுக் கீழ்க் கனடாவில் இன வேறுபாடுகளும் ஒன்று சேர்ந்த மையினல், நிலைமை மோசமாயிற்று. ஏனெனில் பாராளுமன்றத்தில் பிரெஞ்சினர் பெரும்பான்மையினராயிருந்த வேளையில், அந்நிருவாக சபையில் கூடுதலான ஆங்கிலரே நியமிக்கப்பட்டனர். ஆங்கிலருக் கும் பிரெஞ்சினருக்கும் மனத்தாங்கல்களும், வேறுபாடுகளும் நாளாந் தம் வளரலாயின.
இந்த ஆங்கிலேய-பிரெஞ்சுப் போட்டி, நாளடைவில் ஓர் அர சியல் நெருக்கடியையும், உண்ணுட்டுக் கலகத்தையும் விளைவித்தது. 1837 ஆம் ஆண்டு, இராணி விற்ருேறியா சிம்மாசனம் ஏறிய காலத் தில் இரு மாகாணங்களும் கலகம் செய்தன. கனேடிய பிரெஞ்சு மக் களின் புரட்சித் தலைவன், பப்பினூ (Papineau) ; ஆங்கிலரின் தலை வன் மக்கன் சி (Mackenzie). பிரித்தானிய அரசாங்கம், இரண்டாம் முறையும் உண்ணுட்டுக் கலவரத்தைத் தீர்க்க வேண்டிய நிலை தலைப் பட்டது. அமெரிக்கச் சுதந்திரப் போரின் வரலாறு புதுப்பிக்கப்படப் போவதாகவும், குடியேற்றங்கள் பெலம் பெற்றவுடன் தம் சுதந்தி ரத்தை நிலை நாட்டுவர் என்றும் ஆங்கிலர் எண்ணினர்.
இங்கிலாந்தில், மெல்பேன் பிரபுவின் (Lord Melbourne) கீழ் ஆட் சிப் பீடத்திலிருந்து உவிக் கட்சியினர், தம் கட்சியிலுள்ள அதி கூடு தலான முன்னேற்ற வாதியைத் தெரிந் தெடுத்து. நிலையைத் தீர ஆராய கனடாவுக்கு அனுப்பத் தீர்மானித்தனர். "முழுமாற்றவாதி யக்” (Radical Jack) எனப் பெயர் பெற்றிருந்த பிரபு தரம் (Lord Durham), J. T6ir J, 16mri (Charles Buller), Gu 6ër se G6uj, 19 sicG (Gibbon Wakefield) எனும் மூவரைக் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை அரசாங்கம் நியமித்தது.
கனடாவில், தரம் பிரபு உண்ணுட்டுக் கலகங்கள் மிகச் சிறிய வையே யென்றும், அவற்றை அடக்குவது மிகச் சுலபமென்றும் காண லாயினர். அவர் கலகம் விளைவித்த சிலரை விசாரணையின்றி பேமி யூடாத் தீவுக்கு நாடு கடத்தியமை, கனடாவின் உள்ளும் புறமும் எதிர்ப்பை உண்டு பண்ணியது. பிரித்தானிய பாராளுமன்றத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட அவர் திருப்பியழைக்கப்பட்டார். ஆனல் தரம், தாயகம் திரும்புமுன் இக்கால ஏகாதிபத்திய முறையின் பாடப் புத்தகமாகவும், குடியேற்ற நாட்டாட்சி முறையின் அதி
ይ› -óቻ -፲6

Page 121
ዷ 10 புது உலக சரித்திரம்
சிறந்த இலக்கியங்களில் ஒன்ருகவும் கணிக்கப்படும், அவரது புகழ் பெற்ற அறிக்கைக்கு (Durham Report) வேண்டிய விடயங்களைச் சேகரித்துக் கொண்டார். , தரம் பிரபு, கனடாவின் இரு பிரச்சினைகளை வேறுபடுத்தி, அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சீர்திருத்தங்களைச் சிபார்சு செய்தார். முதலாவது பிரச்சினை அரசியல் சம்பந்தமானது. இதற்கு இரு மாகா ணங்களுக்கும், தம் உண்ணுட்டு நிருவாகக் கருமங்களில் பூரண ஆதி பத்திய உரிமை வழங்க வேண்டு மென்றும், பிரித்தானிய மாதிரியின் அடிப்படையில், அவர்களுக்குப் பூரண பொறுப்பாட்சி (Responsible Government) கொடுக்கப்பட வேண்டு மென்ரு ர். *எவரிடம் பிரதி நிதித்துவ அங்கத்தினருக்கு நம்பிக்கையுண்டோ, அவர்களைக் கொண்டே, ஆட்சி நடாத்த அரசர் இணங்க வேண்டும்’ என்பதே அவரது தீர்ப்பு.
இரண்டாவது பிரச்சினை இன சம்பந்தமானது. “அரசாங்கத் துக்கும் மக்களுக்குமிடையில் தகராறுகள் இருப்பதையே நான் எதிர் பார்த்தேன் ஆனல் அங்கு ஒரு நாட்டின் மத்தியில் ஈர் இனங்கள் ஒருவரோடு ஒருவர் பொருதுவதையே கண்ணுற்றேன்' என்று கூறி ஞர். தாம், இதற்கு, கனடாவின் இரு மாகாணங்களைத் தனித்தனி யாகப் பிரித்து வைப்பது தவறென்றும், அவற்றை ஐக்கியப்படுத் துவது மிக அவசியம் என்றும் விசேடமாக எடுத்தியம்பினர்.
இச் சிபார்சுகளின் அடிப்படையில், பிரித்தானிய பாராளுமன் {oth gồì) 1840 g)ả), đ:(*oor tại tư gả6àut 6í??6iou (Union of Canada Act) உருவாக்கி, கனடாவின் மேல், கீழ் மாகாணங்களை ஒன்ருக இணைத்தது. அதற்கு இரு அவைகளைக் கொண்ட பாராளுமன்றமும், கீழ்ச் சபைக்கு பொறுப்புள்ள மந்திரமும் (Cabinet) அங்கீகரிக்கப் பட்டன. இவ்வாருக, பிரித்தானியக் குடியேற்றங்களில் கனடா தன் ஞட்சி உரிமையை முதன் முதலாகப் பெற்றது.
காலப்போக்கில், 1840 இல் ஐக்கிய விதி, கனடாவின் தன் ஞட்சி முறையின் இறுதி ஒழுங்காக இருக்கமுடியாதென உணரப் பட் டது. மேல், கீழ் கனடாக்களை ஒன்ருக இணைத்தபோதும், அது மேற்கே விருத்தியடைந்து வந்த புதுக் குடியேற்றங்களை உட்படுத்தவுமில்லை, பிரெஞ்சினருக்கும் ஆங்கிலருக்குமிடையே ஏற்பட்டிருந்த இனக் குரோதங்களைத் தீர்த்துவைக்கவுமில்லை. அதி மேற்கில், புதுக் குடியேற் றமான பிரிட்டிசு கொலம்பியா, மக்கள் தொகையிலும், செல்வத் திலும் நாளாந்தம் விருத்தி பெற்று வந்தது. தவிர, இவ்வாண்டு களில் இங்கிலாந்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்திறங்கி, ஆங்கில மக்கள் குடியேறியிருந்த பிரதேசங்களைப் பெலப்படுத்திய

ஐரோப்பாவின் ஆள்புலப் படர்ச்சி 2
மையில்ை, குடியேற்ற நாடுகளிடையே கூடுதலான தொடர்பும், ஆற்றுமையும் இருக்க வேண்டுமென்ற எண்ணம் எழுச்சி பெறலாயிற்று. 1867 ஆம் ஆண்டு நிறைவேறிய பிரித்தானிய வட அமெரிக்க afs (13ritish North America Act) usair 6 furtas , (3607 g. u aforth (1)ominion of Canads) தோற்றுவிக்கப்பட்டது. ஒன்ரு றியோ, குவி பெக் என்பவை. நோவா சுகோசியா, நியூ பிறன் சுவிக் என்பவற் றுடன் ஒரு கூட்டாட்சியமைப்பில் இணைந்தன. புதிதாகத் தோற் றிய ஆணிலத்தின் அரசாங்கம் பல வழிகளில் பிரிட்டிசு அரசாங் கத்தை ஒத்திருந்தது. முழு ஆணிலத்திற்கும் அரசரின் பிரதிநிதியாக ஆள்பதி நாயகம், மேற்சபை, கீழ்ச்சபை எனும் இரு அவைகளைக் கொண்ட பாராளுமன்றம், மக்கள் சபைக்கு பொறுப்புள்ள மந்திரம் என்பவை ஏற்பட்டன. தவிர, ஒவ்வொரு மாகாணமும், தன் உண் ஞட்டு விவகாரங்களை நிருவகிக்க, ஒவ்வொரு பாராளுமன்றத்தை ஏற்படுத்தியது. ஒசுத்திரேலியா :
ஒசுத்திரேலியாவிலும், பிரித்தானியரின் குடி யே ந் ற மும், ஆராய்ச்சியும் தான் ஏகாதிபத்தியத்தின் படர்ச்சிக்கான தலையான காரணங்களாக அமைந்தன. 1833 இல் கிபன் உவேக்பீல்டு, குடி யேற்றச் சங்கமொன்றைத் தாபித்து, பிரித்தானிய ஏழை மக்களை ஒசுத்திரேலியாவிற்கு அனுப்பவேண்டுமென பிரசாரஞ் செய்தார். அவரது முயற்சியினலும், ஆங்கில அரசாங்கத்தின் ஊக்கத்தினுலும், இந் நூற்றண்டின் பிற்பகுதியில் நியூ சவுத் உவேல்சு, விற்ருேறியா, தென் ஒசுத்திரேலியா, மேற்கு ஒசுத்திரேலியா, குவீன்சுலாந்து, த சுமேனியா ஆகிய ஆறு நாடுகள் தோன்றலாயின. மக்கள் தொகை பெருகவே, அரசியலிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. முதலில் ஒசுத்திரேலியக் குடியேற்ற நாடுகள் ஒவ்வொன்றிலும் பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்ட ஆள்பதி, இராணுவத்தின் உதவியுடனேயே ஆட்சி புரிந்து வந்தார். ஆனல் நூற்றண்டின் பிற்பகுதியில், கனடா விடயமாக தரம் பிரபு ஆக்கிக் கொடுத்த கொள்கையினை பிரித்தானிய அரசாங்கம் கடைப்பிடித்து, குடியேற்றங்களுக்கு ஒன்றன்பின் ஒன்ரூக பொறுப்பாட்சி அளித்தது. 1858 இல் நான்கு மாகாணங்கள் சுயாட்சி பெற்றன. 1900 இல் ஆறு மாகாணங்களும் ஒரு கூட்டாட்சி யமைப்பில் இணைந்ததுடன், இருபதாம் நூற்ருண்டின் முதல் தினத் தன்று, ஒசுத்திரேலியாவும் ஆணிலப்பதத்தை எய்தியது. நியூ சீலந்து :
1839 ஆம் ஆண்டு நியூ சீலந்துக் கம்பனி எனும் வர்த்தக சங் கம் நிறுவப்பெற்று, இவ்விடயத்தில் ஈடுபடும்வரை, அங்கே மக்கள் ஒழுங்காகப் போய் குடியேறவில்லை. பிரித்தானியாவில் பெருகி வரும்

Page 122
212 புது உலக சரித்திரம்
மக்கட் தொகையினருக்கு இப்புதுக் குடியேற்றம் வாழ இடங்கொடுக் குமென பிரசாரஞ் செய்த கிபன் உவேக்பீல்டும் இத்துறையில் துணை புரிந்தார். 1840 இல் தான் நியூசீலந்தின் இரு தீவுகளில் பிரித்தானிய அரசாங்கம் உரிமை பாராட்டியது. அவ்வாண்டு ஏற்பட்ட வைதாங்கி (Treaty of Waitangi) உடன்படிக்கையின் பிரகாரம், மாயோரிகள் (Maoris), விற்றேறியா மகா இராணியைத் தம் அரசியாக ஏற்றுக் கொள்ள உடன்பட்டனர். பிரித்தானிய அரசாங்கமும் அவர்களது நிலங்கள், வனங்கள், மீன்பிடி உரிமைகள் முதலியவற்றிற்கு உத்தர வாதம் அளித்தது. ஆனல் தங்கம் கண்டு பிடிக்கப்பட்டமையினலும், விவசாயம், மந்தை வளர்த்தல் எனும் பயன்தரு முயற்சிகளினலும் கவரப்பட்ட ஆங்கிலர் ஆயிரக்கணக்கில் வந்திறங்கினர். 1840 க்கும் 1880 க்குமிடையில் ஆங்கிலரின் எண்ணிக்கை 2,000 த்திலிருந்து ஐந்து இலட்சமாக உயர்ந்ததைக் கண்ணுற்ற மயோரிகள் 1845-48, 1860-70 ஆண்டுகளில் ஆங்கில ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சிகள் செய்யலாயி னர். இரு மாயோரிப் போர்களின் பின்னர், 1871 இல், அமைதி ஏற்பட்டது. சர் யோச்சு கிறே (Sir George Grey) என்ற ஆள்பதி மாயோரி மக்களைச் சிறந்த முறையில் நடாத்தி, நியூசீலந்துக்கு ஒரு அரசியற் திட்டத்தையும் வகுத்துக் கொடுத்தார்.
தென் ஆபிரிக்கா :
தென் ஆபிரிக்காவில், நியூசீலந்தில் போன்ற ஒரு சுதேசிகளின் உண் குட்டுப் பிரச்சினையும், கனடாவில் போன்ற வெள்ளை இனங்களுக் கிடையே தகராறுகள் நிறைந்த பிரச்சினையும் எழுந்தன. நன்னம் பிக்கை முனையில் முதற் குடியேறியவர்கள் ஒல்லாந்தரின் பிற்சந்ததியின ரான போயர் மக்கள் (1652) ஆவர். இவர்கள் மந்தை மேய்ப்பதையும், சுதேச அடிமைகளைக் கொண்டு கமம் செய்வதையுமே பிரதான தொழில் களாகக் கொண்டனர். 1795 இல் பிரெஞ்சினர் ஒலந்தைக் கைப் பற்றி, அதை பற்றேவியன் குடியரசாக அமைக்கவே, ஒலந்து அரசன் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தான். அவனது சம்மதத்துடன், இங்கி லாந்து நன்னம்பிக்கை முனயைத் தன தாக்கிற்று. நெப்போலி யப் போர்களைத் தொடர்ந்து வந்த பொருளாதார நெருக்கடிக் காலத் தில் நன்னம்பிக்கை முனையின் குடிசனத் தொகை துரிதமாக அதி கரித்தது. இவ்வாறு, குடியேற்றத்தில் டச்சு, பிரிட்டிசு என்ற ஈரின வெள்ளை மக்கள் குடியேறி நின்றனர்.
மறுபுறம் தென்னபிரிக்காவில் ஒற்றென்ருெட் (Hottenbots) கபீர், சூலு, பசுற்ருே போன்ற சுதேச கறுத்த இனங்கள் தமக்குள் ஒருவர் ஒருவருடன் பொருதியது மாத்திரமின்றி, வெள்ளி மக்களின் நிலவுரிமைகளையும் ஆட்சேபிக்கலாயினர். இப்பொது எதிரியின் முன்

ஐரோப்பாவின் ஆள்புலப் படர்ச்சி 213
வெள்ளே இனத்தினர் ஒற்றுமையாக இயங்கினர். டச்சுச் சட்டங்களும் மொழியும் வழக்கிலிருந்தன ; அடிமைத்தனம், குடியேற்றத்தினது பொருளாதார வாழ்வின் அடிப்படையாக அமைந்தது.
1806 க்கும் 1833 க்கு மிடையில், நன்னம்பிக்கை முனை, ஒரு இராணுவ ஆள்பதியின் அதிகாரத்திற் குட்பட்டு நின்றது. 1828 இல், இது காலம் வண்ர நிலவிய உள்ளூர் ஆட்சி முறை நிராகரிகப்பட்டது. பிரித்தானிய நீதிபதிகள் நியமிக்கப் பெற்றனர் ; டச்சு மொழிக்குப் பதிலாக ஆங்கிலம் நீதி மன்றங்களில் உத்தியோக பூர்வமான மொழி யாக்கப் பெற்றது ; கறுத்த சுதேசிகளும் பிரசாவுரிமை பெற்றனர். இவ்வாறு, ஆங்கிலேயருக்கும் போயர்களுக்குமிடையே எழுந்த பிளவு, 1833 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் தம் பேரரசெங்கும் அடிமை முறையை ஒளித்ததுடன், பூரணமாயிற்று.
1836 இல், "பெரிய யாத்திரை" (The Great Trek) ஆரம்பமா யிற்று. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வாழ மறுத்த ஆயிரக்கணக்கான போயர்கள், தம் பொருள்களை மூட்டை கட்டிக்கொண்டு, உண்ணுட்டை நோக்கிப் புறப்படலாயினர். 1836-40 ஆண்டுகளில், 7000 போயர் கள் நத்தாலிலும் (Natal), இதுவரை வெள்ளை மக்கள் குடியேருத ஒறேஞ்சு நதிப்பிரதேசங்களிலும் புதுக் குடியேற்றங்களை நிறுவினர். நத்தாலுக்குள், போயர்களைப் பின் தொடர்ந்து வந்த ஆங்கிலர் அதை 1842 இல் தமதாக்கினர். நத்தால் போயர்கள், மீண்டும் யாத்திரையை ஆரம்பித்து, மேலும் வடக்கே திரான் சுவாலில் (TransWaal) குடியேறினர். பிரித்தானிய அரசாங்கம், ஒறேஞ்சு சுதந்திர அரசையும், திரான்சுவாலையும் போயரின் ஆளுகையிலேயே விட்டது (Convention of Bloemfontein, 1854).
நன்னம்பிக்கை முனையிலும், நத்தாலிலும் அரசியல் அபிவிருத்தி கனேடிய மாதிரியையே பின்பற்றியது. 1853 இல், நன்னம்பிக்கை முனையிலும், 1856 இல், நத்தாலிலும் பிரதிநிதித்துவ நிறுவகங்கள் ஏற்படுத்தப் பட்டன. 1872 இல், நன்னம்பிக்கை முனை சுயவாட்சி உரிமையைப்பெற்றது.
இந்தியா :
இந்தியாவில், 1825 க்குப் பிந்திய ஐம்பது ஆண்டுகளில் உண்டான பிரித்தானிய அதிகாரத்தின் படர்ச்சி, அதற்கு முன் சென்ற அரை நூற்ருண்டில் ஏற்பட்ட விரிவைப் போல பிரபல்யம் வாய்ந்தது. பிரித்தானிய முடியில் பிரகாசிக்கும் ஒளி மிக்க இரத்தினம் எனப் பெயர் பெற்ற பிரிட்டிசு இந்தியா, பிரித்தானிய குடியேற்றங்களில், அன்றும் என்றும் ஒரு தனி இடத்தை வகிக்க ஆரம்பித்தது. அதன் செல்வத்திற்
A 16

Page 123
214 − புது உலக சரித்திரம்
காகவும், வியாபார வாய்ப்புக்களுக்காகவும் அதை வைத்திருப்பது பயன் தரவல்லது என ஆங்கிலேயர் நம்பினர். தவிர, அங்கு அமெரிக்க, பிரெஞ்சு சுதந்திர எண்ணங்களினல் பாதிக்கப் படாத சுதேச இனங் களே வாழ்ந்தமையினல், அது நீண்ட காலம் தம் உடைமையாக இருக்குமென எண்ணினர். இந்தியாவை ஒரு வெள்ளைக் குடி யேற்றமாக மாற்ற முடியாதெனக் கண்ட பிரித்தானிய அரசாங்கம், தன் அதிகாரத்தை இராணுவ பெலத்தினலேயே நிலை நாட்ட முடிவு செய்தது. பிரித்தானியா, அடிமைத் தனத்தில் வாழ்ந்த இந்திய மக் களின் சேம நலத்திற்காக ஒரளவு பொறுப் புணர்ச்சியையும் சிரத்தை யும் காட்டிற்று என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், இராணுவ பெலத்தினல் வெற்றி கொள்ளப்பட்ட இந்தியா, அதே பெலத்தி ஞலேயே நிருவகிக்கப் பெற்றது. வியாபாரத்துக்காக இந்தியா வந்து சேர்ந்த ஆங்கிலர், அதை வெற்றி கொள்வதற்காகப் பின் தங்கினர்.
19 ஆம் நூற்றண்டில், பிரெஞ்சினரின் இந்தியப் பேரரசு ஆசைகள், உவெலசிலியின் முயற்சிகளினல் நிர்மூலமாக்கப்பட்டன. அதன் பின், மத்திய ஆசியாவுக் கூடாக இந்தியாவின் வட மேற்கு எல் லையை நோக்கிப் படர்ந்து வந்த இரசியப் பேரரசின் நோக்கங்களைக் கண்டு பிரித்தானிய இராசதந்திரிகளும், ஆள்பதிகளும் அச்சம் கொண் டனர். இரசியாவை முந்தி, ஆப்கனித்தானை வெற்றி கொள்ள திட்ட மிட்ட பிரித்தானியா, ஆப்கனியப் போர்களில் (1837-43) ஈடுபட் டது. இப்போர்களின் காரணமாக பிரித்தன், சிந்து, பஞ்சாப் எனும் எல்லை இராச்சியங்களுடன் முரண் பட்டு, 1843, 1849 ஆண்டுக ளில் முறையே இரண்டையும் தன் பேரரசுடன் இணைத்தது. இந்தியா வின் கிழக்கு எல்லையிலும் ஆங்கிலேயருக்கும் பர்மியருக்கும் பகைமை மூண்டு, இரு பர்மியப் போர்கள் (1824-26, 1852-53) நடை பெற்றன ; பர்மாவின் பெரும் பகுதி பிரித்தனின் சொந்தமாயிற்று.
இவ்வாறு 1858 அளவில் இமயம் தொட்டு கன்னியாகுமரி ஈருக, பஞ்சாப் முதல் அசாம் வரை, இந்திய உபகண்டம் முழுவதி லும் பிரித்தனின் நேர்முக அன்றேல் மறைமுக ஆட்சி நிலைத்தது.
all of 6i stuith Q 165 gig, (Lord William Bentinck, 1828-35) காலத்தில் பல முக்கியமான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. நன முறையில் ஆட்சி செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஆழமாக உணர்ந்த இவர், நாட்டின் அரசியலிலும் சமுதாயத்திலும் பல திருத் தங்களைச் செய்வித்தார். 1828 இல், இந்துக்களிடையே வழங்கி வந்த சதி (Suitee) எனும் கொடிய வழக்கத்தை ஒழித்தார். நீதித்துறை 'யிலும் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. சுலபமாகவும், விரைவாகவும் எல்லோருக்கும் நீதி கிடைக்கவும், இந்தியர்களை உயர் பதவிகளில் நியமிக்கவும், அவர்களது சம்பளத்தையும், நிலையையும் உயர்த்தவும் வழிவகுத்தார்.

ஐரோப்பாவின் ஆள்புலப் படர்ச்சி 215
இவருக்குப் பின் மெட்காப் (1835-36), ஆக்லந்து 1836-42), எல்லன் பரோ (1842-44) என்பவர்கள் ஆள்பதி நாயகங்களாகக் கடமையாற்றினர். ஆனல் பெனடிங்குக்குப்பின் அதி முக்கியமும் பிரபல்யமும் வாய்ந்த ஆள்பதி நாயகமாக விளங்கியவர் இடலெளசி பிரபு ஆவர்.
இடாலெளசி L TLH (Lord Dalhousie, 1848--56), Frisolas "L ஆட்சி முறை நிலவும் நாடுகளை பிரித்தானிய நிலப்பரப்புடன் இணைத்து பொதுமக்களுக்குச் சிறந்த ஆட்சியின் குளுதிசயங்களைப் பெற்றுத் தருவது தன் கடனெனக் கொண்டார். அயோத்தி (0udh) நவா பின் ஆட்சி மிகவும் சீர்கெட்ட நிலையிலிருந்தமையினல், 1856 இல் அதைக் கைப்பற்றி, பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்தார். அதனுடன் இடாலெளசி இங்கிலாந்தின் மிகச் சமீபமான சீர்திருத்த திட்டங்களையும் எண்ணங்களையும் இந்தியாவில் புகுத்தினர். புதுத் தெருக்கள், துறைமுகங்கள், தந்திமுறை, புகையிரத வீதிகள், பாட சாலைகள் முதலியவை நாட்டை உருமாற்றின.
g) sbglu.Jú Lj60)L- & & 608;úð (Indian Mutiny) :
இடாலெளசி கையாண்ட முறைகளினதும், பத்து ஆண்டுகளில் செய்துமுடித்த சீர்திருத்தங்களினதும் பயன், 1857 ஆம் ஆண்டு ஏற் பட்ட இந்தியக் கிளர்ச்சியாகும். அவர் புகுத்திய ஆங்கிலக் கல்வி சமுதாயச் சீர்திருத்தங்கள் யாவும், இந்துக்களை கிறித்தவர்களாக்க அரசாங்கம் செய்துவரும் சூழ்ச்சிகளென்று மக்கள் கருதினர். நாடி ழந்த மன்னர்கள், உபகாரச் சம்பளம் போன்ற உரிமைகளை இழந்த இளவரசர்கள், மனக்கொதிப்படைந்த வீரர்கள், மதப்பற்றுடைய மக் கள் இவைதாம் கிளர்ச்சிக்கான அடிப்படைக் காரணங்கள். ஆனல் கலகம் படைஞரிடையேதான் தலைதூக்கியது. பசு, பன்றி ஆகிய மிரு கங்களின் கொழுப்பைத் தடவிய தோட்டாக்களை கொண்டு சுடும் துப்பாக்கிகள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டன. இது படைஞ ரின் சமய உணர்ச்சிகளைப் புண்படுத்தியமையினல், அவர்கள் அவற் றைக் கையாள மறுத்து கிளர்ச்சி செய்தனர். கிளர்ச்சி பெருகி மீருட்டிலிருந்து டெல்லிக்குப் பரவியது. ஊர்க் கொள்ளை, சிறைக் கைதிகளை விடுதலை செய்தல், ஆங்கிலரைக் கொலை செய்தல் எனும் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தன. விரைவில் புரட்சி கான்புரிக்கும் (Cawmpore), இலட்சுமண புரிக்கும் பரவிற்று. சிறிது காலத்துக்குள் என்றி லோரன்சும், நிக்கல்சனும் ஆறுநாட்கள் கடும் போர் புரிந்து டெல்லியை மீட்டனர். அவ்லொக், நானுசாகிப்பைத் தோற்கடித்துக் கான் புரியைக் கைப்பற்றினர். விரைவில் பிரிட்டிசுப் படைகள் ஒவ்வொரு இடமாக வெற்றி கொண்டு, தம் ஆதிக்கத்தை நிலைநாட்டின.

Page 124
216 புது உலக சரித்திரம்
கலகத்தின் பயனக இந்தியாவில் கம்பனியின் ஆட்சி முடி வடைந்து, பிரித்தானிய அரசாங்கத்தின் நேர்முக ஆட்சி ஆரம்ப மாயிற்று. 1858 ஆகத்தில், இந்திய அரசியல் விதி இலண்டன் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதன்படி இந்தியாவின் அர சாங்கப் பொறுப்பு பிரிட்டிசு அமைச்சர் குழு அங்கத்தினரில் ஒருவ Jrrgu gfigurd J, a ful as f6 (Secretary of State for India) யிடம் அளிக்கப்பட்டது. அவருக்கு உதவியாக பதினைந்து அங்கத்தின ரடங்கிய ஒரு சபையும் அமைக்கப்பெற்றது.
இதன்பின் இருபது ஆண்டுகளுக்கு இந்தியாவில் அமைதி நிலவி யது. அயல் பிரதேசங்களை இணைக்கும் கொள்கை நிறுத்தப்பட்டது. 1877 ஆம் ஆண்டின் முதல் தினத்தன்று தில்லியில் நடைபெற்ற ஆடம்பரமான தர்பாரில், விற்ருேறியா இராணி இந்தியாவின் பேரரசியாக முடிசூட்டப் பெற்றனள்.
இரசியா :
இரசியா, ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் நிலங்களைக் கொண்ட ஓர் அரசாகப் பன்னெடுங் காலமாகத் திகழ்ந்து வந்தது. இவ்வரசு இக் காலத்தில், தென் மேற்கில் கொன்சுதாந்திநோபிளையும், போல் கன் தீபகற்பத்தையும், கிழக்கில் சைபீரியச் சம வெளிக்கூடாக ஊடு ருவிச் சென்று பசிபிக் சமுத்திரத்தையும் அடைய வேண்டு மென நோக் கங் கொண்டது.
இவ்வித ஆசைகளினல் தூண்டப் பெற்ற இரசியப் பேரரசு வடக்கே பின்லந்தையும், கிழக்கே போலந்தையும், தெற்கே காக்கே சிய மாகாணங்களையும், மத்திய ஆசியாவில் துருக்கித்தானையும், சீன வின் எல்லையில் ஆமூர் மாகாணத்தையும், யப்பானில் சக்கலின் தீவில் அரைவாசியையும் ஆக்கிரமித்துத் தனதாக்கிக் கொண்டது. இரசிய மக்களின் அவதானத்தை நாட்டின வாதத்திலிருந் தும், மேற்கத்திய நாடுகளின் தாராண்மைக் கொள்கைகளிலிருந் தும், கிறை மியன் போரின் அவமானத்திலிருந்தும் திருப்பும் நோக் குடனேயே, இரசிய சார்கள் இவ்வேகாதிபத்திய வேட்கையை ஆத ரித்தனர். இதன் விளைவாக இரசியப் பேரரசு, பேசியா, ஆப்கனித் தான், சீனு, யப்பான் எனும் நாடுகளுடன் தொடர்பு பூண்டு இக் கால மிக முக்கிய இயக்கங்களின் சுழல் வேகத்தில் பிரவேசித்தது. பேசியக் குடாவிலும், இந்தியாவின் வடமேற்கு எல்லையிலும் இரசியா வின் நிழல் நீடித்தமையினல், அது பிரித்தனுடன் முரண்பட்டு நின் றது. இரசியா மேலும் துருக்கியப் பேரரசினதும், அதனது குடியேற் றங்களினதும் எதிர் காலத்தில் அதி அக்கறையும் சிரத்தையும் காட்

ஐரோப்பாவின் ஆள்புலப் படர்ச்சி
டிற்று, பசிபிக் பிரதேசத்தினுள், ஏனைய வல்லரசுகள் தெற்கிலிருந்து பிரவேசித்த காலத்தில், இரசியா வடக்கிலிருந்து நுழைந்தது; வளர்ச்சி யடைந்து வரும் பசிபிக் பிரச்சினைகளில் இரசியா ஒர் அதி முக்கியத் துவம் வாய்ந்த சக்தியாக மாறிற்று. சுருங்கக் கூறின், இவ்வாள் புலப் படர்ச்சியினல், உலக அரங்கில் இரசியா ஒரு முக்கிய வல்லர சாக உருப் பெற்றது.
பிரான்சு :
நாளடைவில் பிரித்தானிய, இரசியப் பேரரசுகளுக்கு அடுத்ததாக இடம் பெற்ற புதுப் பிரெஞ்சு ஏகாதிபதியத்தின் அத்திவாரம், உவாட் டலூவைத் தொடர்ந்து வந்த அறுபது ஆண்டுகளில்தான் இடப் பட்டது.
வட ஆபிரிக்காவில் மத்தியதரைக் கடலுக்கும் அற்லசு மலைகளுக் கும் இடையில் அல்சீரியாவுக்குள் 1827 ஆம் ஆண்டு, பிரான்சு பிர வேசித்தது. அவ்வாண்டு பிரெஞ்சுக் கொடிக்கு செய்யப்பட்ட அவமரி யாதையையும் பிரெஞ்சு கொன்சலுக்கு செய்யப்பட்ட அவமானத்தை யும் ஈடு செய்யும் நோக்குடன் ஒரு பிரெஞ்சுப்படை அல்சீரியாவுக்கு அனுப்பப்பட்டது. 1830 ஆம் ஆண்டு யூலை மாதம், பரிசில் பூர்போன் ஆட்சி வீழ்ச்சி யடைந்த அதே காலத்தில், இந் நகரம் வெற்றி கொள்ளப்பட்டது. குடியேற்ற நாடுகளைச் சுவீகரித்தல் தாராண்மைக் கொள்கைகளுக்கு முரண்பட்டவை யென்றும், நெப்போலிய யுத்தங்க ளின் பின் இவ் வெற்றி மகத்தானதன்று எனவும் புறக்கணிக்கப் பட்டது எனினும் அல்சியர்சு கைவிடப் படவில்லை ; அதற்கு மாழுக, இலூயி பிலிப்பேயின் அரசாங்கம் சொற்ப காலத்துக்குப் பின் அல்சீரியாவைத் திட்டமிட்டு வெற்றி கொள்ளும் முயற்சியில் இறங்கிற்று. 1847 இல், இம்முயற்சி முற்றுப் பெற்று, 1858 இல், அம்மாகாணம் பிரான்சுடன் இணைக்கப்பட்டது. அல்சீரியாவுடன் நடத்தப்பட்ட போர் பிரான்சை அதன் மேற்கு அயல் நாடான மொறக்கோ வுடன் ஒரு வெற்றிகரமான ஆக்கிரமிப்புக்கும் காரணமாக அமைந்தது. மொறக்கோவினதும் கிழக்கே தியூனிசினதும் இணைப்புக்கள் பின்னெரு நாளுக்குப் பின் போடப்பட்டன. அல்சீரியாவில் வெள்ளை மக்கள் குடியேறுவதற்கு சகல வசதிகளையும் பிரெஞ்சுப் அரசாங்கம் செய்து கொடுத்தது. நிலங்களை இனமாகக் கொடுத்து பிரெஞ்சு போர் வீரர்களுக்கு உதவி செய்தது. 1871 இல், அல்சாசு, உலொறேன் மாகாணங்கள் செர்மனியுடன் இஜணக் கப்பட்டதை விரும்பாத பல செர்மானியர், இத்தாலியர், சிபானியர் அல்சீரியாவில் குடியேறினர்.

Page 125
218 புது உலக சரித்திரம்
மூன்ரும் நெப்போலியனின் காலத்தில் பிரான்சின் ஏகாதிபத்திய வேட்கை பல இடங்களில் பரிணமித்து, மேற்கு ஆபிரிக்காவில் செனெகால் நதியோரத்திலிருந்த பழைய துறைமுகங்களைச் சுற்றி முக்கியத்துவம் வாய்ந்த சில குடியேற்றங்களை உருவாக்கியது. 1869 ஆம் ஆண்டு பிரெஞ்சு விஞ்ஞானத்தினதும், பிரெஞ்சு முதலீட் டினதும் பயணுக சுயசு கால்வாய் திறக்கப்பட்டது. துலையில் பசிபிக் சமுத்திரத்தில் தகீற்றி (Tahiti), மார்க்குவேசாசு, நியூ கலடோனியா எனும் தீவுகளை பிரான்சு தனது சொந்தமாக்கிற்று. 1862 இல், தென் அணும் வெற்றிகொள்ளப் பட்டதுடன் கொச்சின் சீனு எனும் பிரெஞ்சுக் குடியேற்றம் ஆரம்பமாகியது. சீனுவைத் திறக்கும் முயற்சியிலும் பிரான்சு ஓர் பிரதான பங்கெடுத்தது. ஆனல் இதே ஏகாதிபத்திய ஆசையினுல் தூண்டப்பட்ட மெச்சிக்க முயற்சி படு. தோல்வியில் முடிந்தது. இவ்வாருக பசிபிக், இந்தோசீன, ஆபிரிக்கா எனும் பிரதேசங்களில் இரண்டாவது தற்காலிகமான பிரெஞ்சுப் பேரரசின் அத்திவாரம் இக்காலத்தின் தான் இடப்பட்டது.

அமெரிக்க ஐக்கிய இராச்சியங்களின் எழுச்சி 29
அதிகாரம் 13 அமெரிக்க ஐக்கிய இராச்சியங்களின் எழுச்சி (1783-1870)
அமெரிக்க மக்களின் அழைப்பை யோச்சு உவாசிந்தன் மனப்பூர்வ மாக வரவேற்றர்; “அமெரிக்கக் குடிப்பதிப் பதவியை நான் உண்மை யுடன் நிருவகித்து வருவேன். என் திறமைக்கு எட்டிய வரை நாட் டின் அரசியல், சட்டங்கள் என்பவற்றைப் பேணி போற்றிப் பாது காப்பேன்’ என்ற பதவியேற்பு வாசகத்துடன், அவர் அமெரிக்க ஐக்கிய இராச்சியங்களின் முதற் குடிப்பதிப் பதவியை 1789 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள், ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சி யானது உலக வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஆரம்பித்து வைத்தது; ஏனெனில் 200 ஆண்டுகளுக்குள் செல்வாக்கிலும், செல் வத்திலும், பொருளாதார மேம்பாட்டிலும், இராணுவ பெலத்திலும் உலக அரசியலில் முதலிடம் வகிக்கவல்ல ஓர் அரசு மேற்கில் உதய LDfT60ig5!. W−
1914-18 ஆம் ஆண்டுச் சமரில் செர்மனியும் அமெரிக்காவும் சென்ம விரோதிகளாகப் போர்க்களத்தில் பொருதினகாலம்வரை ஐக்கிய இராச்சியங்களின் சர்வதேச முக்கியத்துவம் சரிவர உணரப் படவில்லை. 19 ஆம் நூற்ருண்டில், தூரத்தின் விளைவாகவும், தன் விருப்பின் பயனுகவும், சொந்தப் பிரச்சினைகளின் முழு அவதானம் செலுத்திய காரணத்தினலும், அமெரிக்கா, ஐரோப்பிய அரசியல் மையக்கவர்ச்சிக்கு அப்பாற்பட்டு, தனி வாழ்வு வாழ்ந்தது. திட்ட மிட்ட கொள்கையின்படி ஐரோப்பிய விவகாரங்களிலிருந்தும், உடன் படிக்கைகளிலிருந்தும் ஒதுங்கி வாழ்ந்தது. ஐரோப்பிய நலவுரிமை கள், சமர்கள், சுற்ருடல் எனும் தொடர்புகளுட் புக மறுத்து, உண் ணுட்டு அபிவிருத்தியில் நாட்டம் செலுத்தியது. இவற்றின் பயனுக, 20 ஆம் நூற்றண்டுக்கு முன்பு, சர்வதேச விவகாரங்களில் அமெ ரிக்சா ஒரு பங்கும் எடுத்ததில்லை. இத்தனிமையின் விளைவு துரித முன்னேற்றத்தையும், விரிவையும் அமெரிக்காவுக்குப் பெற்றுக் கொடுத்தது. இதற்கு நிகரான வேறேர் உதாரணம் உலகின் எம் முனையிலும் நாம் காண்பதற்கில்லை. ஆயிரம் ஆண்டுகளிற் ஐரோப்பா சாதித்த வரலாற்று நிகழ்ச்சிகளை ஒரு நூற்ருண்டுள் அமெரிக்கா செய்து முடித்தது. அன்னிய இனங்களுடன் சமர், சுதந்திர எதிர்ப்பு, உண்ணுட்டுக் கலகங்கள், விவசாய தொழிற் சிக்கல்கள் அமெரிக்காவை எதிர் நோக்கின. ஆயினும் பல நூற்ருண்டுகளாக ஐரோப்பாவின்

Page 126
220. புது உலக சரித்திரம்
அமைதியைக் கலங்கவைத்து, களங்கமுறச் செய்த மானியமுறைச் சிக்கல்கள் அமெரிக்காவை அலைக்கவில்லை. எனவே, அமெரிக்க, ஐரோப் பிய வரலாறுகளை நாம் நிறுத்து ஒப்பிட முயல்வது நியாயமான தன்று.
1. புதுக் குடியரசின் தோற்றமும் வளர்ச்சியும் (1783-1812)
சுதந்திரப் போரின் முடிவில் அமெரிக்கா :
அமெரிக்க குடியேற்ற நாடுகள் 1776 இல், பிரகடனம் செய் திருந்த சுதந்திரத்தை 1783 இல் பெற்றன. சுதந்திரப்போரின் முடிவின் பின், புதுக்குடியரசு தான் கண்டு அனுபவித்தவற்றிலும் பார்க்க, அதி நெருக்கடியான சோதனைக் காலத்தினுள் பிரவேசித்தது. சமாதானத்தைத் தொடர்ந்து வியாபார மந்தம், நிதி நெருக்கடி, உண்ணுட்டுப் போரின் காரணமான தவிர்க்க முடியா இன்னல்கள் புதிய அரசை அலைத்தன. இராணுவப் படையினரிடம் பிரியாவிடை பெற்று, தன் ஆதிகாரத்தைப் பேரவையிடம் கையளித்து, மவுண்ட் வேணனுக்குத் (Mount Wernon) திரும்பினர் உவாசிந்தன். ஐக்கியப் பேரரசு ஒற்றுமைவாதிகள், ஒரிலட்சம் பேர், பிரித்தானிய மேற்கிந்தி யத் தீவுகள், கனடா, சிபானியா, புளொரிடா எனும் பிரதேசங்களை நாடி வெளியேறினர். வர்த்தகத்தில் பேரழிவு காணப்பட்டது. தொழிற்சாலைகள் தோற்றவில்லை. புது அரசுடன் தொடர்பு வியா பாரத்தை, சில நாடுகள் புறக்கணித்தன. பிரித்தானிய மேற்கிந்தியத் தீவு வியாபாரம் நிராகரிக்கப்பட்டது. தன் துறைமுகங்களில் பல வற்றை சிபெயின் மூடியது. இதுவரை விட்டுக் கொடுத்த உரிமைகளை பிரான்சு இரத்துச் செய்தது.  ெபா து வா னி பச் சட்ட த் தொகுப்பு வேண்டுமென்ற கர்ச்சனை எழுந்தது ; ஆனல் இதற்குப் புது இராச்சியங்களின் போட்டியும் பேரவையின் பெலவீனமும் முட்டுக்கட்டைகளாய் அமைந்தன. எனவே, ஒவ்வொரு நாடும் தன் எண்ணப்படி அயலாருடனும், அவைக்கு எதிராயும் தீர்வைப் பட்டியல் களைத் தயாரித்தது. இங்ங்ணம் 1781 இல், பிறந்த கூட்டாட்சி ஐக்கி யமானது, வெகு விரைவில் மறையக் கூடிய குறிகள் தென்பட்டன. இவ் வைக்கியத்தின் முறிகளுக்குக் கட்டுப்பட்டு ஒழுக, போர் அபாயத் தின் காரணமாய், பதின்மூன்று இராச்சியங்கள் ஒப்புக் கொண்டிருந் தன. ஆனல் சுதந்திரத்தின் பின், ஒவ்வோர் அரசும் தனி இயக்கத்தில் தணியா வாஞ்சை உற்றது. கூட்டாட்சி ஐக்கியத்தின் மத்திய அதி காரத் தாபனமான பேரவை (Congress) போட்டியிடும் இராச்சியங் களின் மத்தியில் ஒரு பொதுத் திட்டத்தை வகுக்கவோ, அமைதியை நிலையுறுத்தவோ வல்லபமற்றிருந்தது. உண்மையதிகாரம் ஒன்றேனும்

அமெரிக்க ஐக்கிய இராச்சியங்களின் எழுச்சி 22及
பேரவைக்கு வழங்கப்பட வில்லை. பேரவையின் சிபார்சுகளை, இராச்சி யங்கள் தம் மெண்ணப்படி புதுப்பிக்கவும், நிராகரிக்கவும் உரிமை பெற்றிருந்தன. எந்த இராச்சியத்தின் விருப்புக்கெதிராகவும் தன் அதிகாரத்தை வலியுறுத்த அதற்குத் திடமில்லை. வரி விதிக்கும் உரிமையும் பேரவைக்கு மறுக்கப்பட்டது.
ஒற்றுமையின் வளர்ச்சி :
இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், இப் பிரமாண்டமான கண் டம், ஒரு குடியரசாக இயங்க முடியாது என்ற முடிபு வெளிப்பட் டது. உவா சிந்தனை அரசனுக்கத் திட்டம் வகுத்தனர் சிலர். கூட் டாட்சி ஐக்கியத்தின் முடிபு காலம் நெருங்கி விட்டதெனத் தீர்மானித் தனர் வேறு சிலர். உவாசிந்தன் அரச பதவியை ஏற்றிருப்பின், ஐக்கியம் பெலப்பட்டிருக்கலாம். ஆனல் அரசபதவியைப் பற்றிய பிரேரணைகளை அவர் ஏற்க அறவே மறுத்தார்.
அதே பொழுது, ஒற்றுமையை உண்டாக்கும் சக்திகளும் இயங்கிக் கொண்டிருந்தன. அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்பைப் பற் றிய அச்சம், வர்த்தக, வாணிப நலன்களைப் பற்றிய சிந்தனை அவர் களைத் தனி அரசுகளாக அல்லது குழுக்களாகப் பிரியாது தடுத்தன. வணிகத்துக்கு அடுத்தாற் போல் ஐக்கியத்தை உறுதிப் படுத்தும் சக்தி அலிகனிசு மலைத் தொடர் மேற்குப் புறப் பொது நிலங்களிலிருந்து ஆரம் பித்தது. 1786 ஆம் ஆண்டு, வேர்சை உடன் படிக்கையின் படி, அலி கணிசு மலைகளுக்கும் பசிபிக் சமுத்திரத்துக்கும் இடைப்பட்ட பிரதே சம் முழுவதும் தேசச் சொத்தாகப் பேரவையின் பாதுகாப்பில் விடப் பட்டது. இப் புது நிலங்களில் எல்லா இராச்சியங்களும் காட்டிய சிரத்தை ஐக்கியத்தைப் பாதுகாக்கத் துணையாயிற்று. 1787 ஆம் ஆண்டு, சட்டப்படி பேரவை இப்பிரதேசத்தின் மீது அதிகாரப் பிர கடனம் செய்து, அதன் அரசியல் நிருவாகத்தை ஏற்று அங்கு அடிமை முறைத் தடை, ஆட்சி முறை நிருவாகம், அரசியல் பயிற்சியின் பின் ஐக்கியத்தில் சமவுரிமைகளுடன் இணைதல் என்பவற்றைப் பற்றி புதுச் சட்டங்களை உருவாக்கியது.
அன்றைய அரசியல் விவாதங்களில் சனநாயக இலட்சியக் கருத் துக்கள் உன்னதம் பெற்றன. இரத்தம் சிந்திச் சம்பாதித்துக் கொண்ட சுதந்திரத்தையும், தனி மனிதனின் உரிமைகளையும் ஐக்கி யத்தின் மூலம் பாதுகாக்க வேண்டுமென்ற ஆர்வம் மேலிட்டது. * அதன் குறைகளுடன் எங்கள் அரசாங்கமே, பழையவற்றிலும் புதியவற்றிலும் தலை சிறந்தது’ என்ருர், யெபசன் (Jefferson).

Page 127
;22 புது உலக சரித்திரம்
SG) GLG) Suit & LDG. Tui (Convention of Philadelphia) :
தனி இயக்கத்தினல் எற்படவல்ல அபாயங்களை உணர்ந்த இராச் சியங்கள், வாணிபச் சிக்கல்களைத் தீர்க்கவும், தமக்கென ஓர் அரசமைப் புத் திட்டத்தை அமைக்கவும் நடவடிக்கைகள் எடுத்தன 1787 ஆம் ஆண்டு, பிலடெல்பியாவில் உவா சிந்தன் தலைமையில் சமவாயம் கூடிற்று. அறிவாளிகள், மேதைகள், நிருவாகத் திறன் பூண்டோர், செயல் வல்லுனர், அனுபவம் வாய்ந்தோர் ஒன்று கூடினர். இத் தகைய சாதுரியம் மிக்க ஓர் அறிஞர் குழு வேறெந்தத் தருணத் திலும் ஒன்று கூடியதில்லை. அவர்கள் கற்பனை, புரட்சிவாதம் என்ப வற்ருல் தூண்டப்பட்டவர்கள் அல்லர். சுயநலமற்றவர்கள், விஞ்ஞானி கள் , தத்துவஞானிகள், இராசதந்திரிகள், எழுத்தாளர் போன்றேர் இக்குழுவில் இடம் பெற்றனர். "அமெரிக்க சொக்குறத்தீசு" என்று வர்ணிக்கப்பெற்ற எண்பது பராயமுள்ள பெஞ்சமின் பிராங்ளின் (Benjamin Franklin) GT6örL16)If S6ör sö60)[ru föso LDufli 56lfl(G96) சபைக்குக் கெளரவம் அளித்தார். யேமிசு மாடிசன், அலெக்சாந் தர் அமில்தன், எட்மன் இருன்டோல்ப், உவில்லியம் பற்றசன், உருெ பட் மொறிசு, இவர்கள்தாம் புது அரசின் தாபகர்களாவர். நடைமுறைத் தேவைச் சீர்திருத்தங்கள், நாட்டின் வர்த்தகம், தேசக் கடன், நிதிப் பிரச்சினை என்பவற்றைத் தீர்க்கவல்ல ஒரு நல்லர சாங்கத்தை நிறுவுவதே இவர்கள்தம் குறிக்கோளாகும். இவர்கள் இயற்றிய அரசமைப்புத் திட்டம் அனுபவம் மிக்க, தெளிவான 5,000 சொற்களுக்குக் குறைவான ஒரு அரிய விஞ்ஞாபனமாகத் தோற்றிய தில் அதிசயமில்லை. இராச்சியங்களிடையே நிலவிய மாறுபட்ட கருத் துக்களையும், பொருமைகளையும் தீர்க்கவேண்டியதே அவர்களது தலை யாய பிரச்சினையாயிருந்தது. தனி இராச்சியங்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில், மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அமைக்கும் முறையைக் காண்பதே விவாதங்களின் அதிக நேரத் தைப் பெற்றது. அவர்கள் கையாண்ட மார்க்கம் அகில உலகிற் கும் குன்றின் தீபமாய் அமைந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுதான் உலகில் முதன் முதல் தோன்றிய கூட்டாட்சி அரசாகும்.
Jo. LIT's 960) LDCL (Federal Constitution):
அவர்கள் ஏற்படுத்திய கூட்டாட்சி யமைப்பில் தேசாதிகாரங்கள், மத்திய, இராச்சிய அரசாங்கங்களுக்கிடையே பகிரப்பட்டன. இங்கி லாந்தின், வியாபித்த மத்திய தனிச் சட்டமியற்றும் பாராளுமன்றத் தைப் போன்ற ஒரு அமைப்பு ஐக்கிய அமெரிக்க இராச்சியத்திலில்லை. இதற்குப் பதிலாய் 1787 இல், அதிகாரம் படைத்த சட்டசபைகள் பதினன்கு இயற்றப்பட்டன. இன்று, 50 இராச்சியங்களுக்கு (அல

அமெரிக்க ஐக்கிய இராச்சியங்களின் எழுச்சி 223
சுக்கா 1959 சனவரியிலும், அவாய்த்தீவு 1959 ஆகத்திலும் இராச்சி யங்களாக அனுமதிக்கப்பட்டன.) 50 சட்ட சபைகளும், ஒரு மத்திய பேரவையுமுண்டு. இவ்வமைப்பு இராச்சியங்களின் அதிகாரங்களுக் குப் பங்கம் விளைக்காது, தேச ஐக்கியம் பிரதிபலிக்க வழி திறந்தது. ஒவ்வோர் இராச்சியமும் தன் எல்லைகளுக்குள் ஆதிபத்திய அதிகாரம் படைத்தது. த்ேச ஐக்கியம், வெளி விவகாரம், போர், சமாதானம், பாதுகாப்பு எனும் விடயங்களை மேற்பார்வை செய்தற்கு மத்திய அல்லது கூட்டாட்சி அரசாங்கம் உதவுகிறது.
கூட்டாட்சியின் மத்திய சட்ட சபை, மேற்சபை (Senate), பிரதி நிதிகள் சபை எனும் இரு அவைகளைக் கொண்டது. மேற்சபையில் ஒவ் வொரு இராச்சியத்துக்கும் சம அளவான (இரு பிரதிநிதிகள்) பிரதி நிதித்துவமும், பிரதிநிதிகள் சபையில் சனத்தொகையின் அடிப்படை யில் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட்டன.
இந்த அமைப்பே இன்றும் அமெரிக்க கூட்டாட்சி அரசாங்கத்தின் அடிப்படை. இவ்வமைப்பு இதுவரை 22 முறை திருத்தப்பட்ட போதும் அதன் முக்கிய விதிகள் எவையும் மாறவில்லை.
(5 g. thugs (President):
அமெரிக்க குடிப்பதி, அரசாங்கத்தின் தலைவராகவும் மக்களின் தலைவராகவும் திகழ்கிருர், அவரது அதிகாரம் தனிப்பெருந் தன்மை வாய்ந்தது. அவர் சட்டமன்றத்தின் உறுப்பினர் அல்லர் ; எனினும் அவர்தான் நாட்டின் சட்டமியற்றும் தலைவர். அவர் இராணுவத்தின் உறுப்பினர் அல்லர் ; எனினும் அவர்தான் இராணுவத்தின் தலைமைத் தளபதி. அமெரிக்க ஐக்கியம் முழுவதிற்காகவும் சிந்தித்து, திட்ட மிட்டு ஆட்சி செலுத்தும் முழுப் பொறுப்பையும் மக்கள் நேரடியாகக் குடிப்பதியிடம் ஒப்படைத்துள்ளனர்.
நான்கு ஆண்டுக் கொரு முறை நாடு முழுவதும் நடைபெறும் ஒரு சனதிபதித் தேர்தலில் தம் பிரதிநிதியாக விளங் க ப் போகிறவர் யார் என்பதை, தனிப்பட்ட குடிமக்கள் தம் வாக்குரிமை யினல் முடிபு செய்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பின், குடிப்பதி அமெரிக்க மக்கள் அனைவருடைய பொதுக் கருத்து, மதி நுட்பம் வலிமை, சுதந்திரம் ஆகியவற்றின் சின்னமாக விளங்குகிருர்.
யோச்சு உவாசிந்தன், முதற் குடிப்பதி (1789-1797) :
குடியரசின் முதற் தலைவராக எவரை நியமிப்பது என்பதில் அணு வளவேனும் ஆட்சேபனைக்கு இடமிருக்கவில்லை. அரசியல் ஆரூடத்தி லும், உறுதியிலும், பண்பாட்டிலும் தன்னிகரற்றவராக விளங்கிய

Page 128
224 புது உலக சரித்திரம்
உவாசிந்தன் ஏகமனதாக முதற் குடிப்பதியாகத் தெரிவு செய்யப் பட்டார். அவர் ‘சமாதானத்தில் முதல்வனுகவும், சமரில் முன்னணி வீரனகவும், தன் மக்கள் இதயத்தில் அணையாச் சோதியாகவும் திகழ்ந்தார்.”
ஒரு புதிய அரசை நிர்மாணிக்கும்போது ஏற்படும் இயல்பான இடையூறுகள் மத்தியில் உவாசிந்தன் பதவியைக் கையேற்ருர். நாட்டுக்குத் தலைநகரில்லை ; குடிப்பதிக்கு இருப்பிடம் கிடையாது ; பேரவை கூடுவதற்கு மன்றமும் இல்லை : கூட்டாட்சி நிருவாக முறை நடைமுறையிற் பயிற்சிக்கப்படவில்லை. இராணுவமில்லை ; நீதிபதிகள் நியமனம் பெறவில்லை : மந்திரமும் இனிமேல்தான் நிறுவப்பட வேண்டும். பொருளாதாரப் பிரச்சினைகள் போதியளவு இருந்தன. வெளிநாட்டு நிலைமை கவலைக்கு வழி திறந்தது. ஒவ் வோர் இராச்சியத்திலுமிருந்து புதிய கூட்டாட்சி ஐக்கியத்துக்கு எதிர்ப்புக்கள் எதிர்நோக்கி வந்து கொண்டிருந்தன. இன்னும் வெளியே நின்ற வட கரோவினு 1789 நவம்பர் மாதம் ஐக்கியத்தில் இணைந்தது : உருேட் தீவு, 1790 மே மாதம் வியாபாரத் தடைப் பயமுறுத்தலுக்குப் பின்பே ஐக்கியத்தில்சேரத் தன் சம்மதத்தை அளித்தது.
அலெக்சாந்தர் Stflóðspör (Alexander Hamilton) :
ஏறக்குறைய அறுபது வயது நிரம்பப் பெற்ற உவாசிந்தன் பேரச் சத்துடன் பதவியில் அமர்ந்தார். அலெக்சாந்தர் அமில்ற்றன் நிதி இலாக்கா காரியதரிசிப் பதவியையும், தொமசு யெபசன் வெளி நாட்டுக் காரியதரிசிப் பதவியையும் பொறுப்பேற்றனர். உவாசிந்த னுக்கு அடுத்ததாக, புது அரசைப் பெலமான அத்திவாரத்தில் நிருமா னிக்கும் மூல கர்த்தாவாக அமைந்த வர் அலெக்சாந்தர் அமில்ற் றனே. அவர் ஒரு தேசபக்தன், சிறந்த போர்வீரன், இராசதந்திரி, பேச்சு வல்லுனன், சட்ட நிபுணன், தத்துவஞானி. பல சீரிய இலட் சணங்கள் ஒருங்கே அமைந்த இவரைப்போன்ற ஒரு கலா மேதையை புது உலகம் என்றும் கண்டதில்லையென வரலாறு கூறுகிறது. நிதி பரிபாலன நிபுணனுகிய அவர் மாகாண அரசுகளின் செல்வாக் கைக் குறைத்து, மத்திய கூட்டாட்சி அரசின் பெலத்தை அதிகரிக்க அவாவுற்றர். நிதி இலாகா' காரியதரிசியான காலம் முதல் ஐக்கிய பலத்தை உறுதிப்படுத்துவதில் தம்மால் ஆனவரையும் முயன்ருர். ஈராண்டு காலத்துள் புதிய கூட்டாட்சி ஐக்கியத்தை எதிர்நோக்கி நின்ற பிரச்சினைகளில் ஒன்றுக்கு முற்றுப்புள்ளியிட்டார். தேசத்தின் வெளிநாட்டுக் கடன்கள் தீர்க்கப்பட்டன. உண்ணுட்டுக் கடன் பத் திரங்கள் மீட்கப்பட்டன. பேரவை இராச்சியங்களின் கடன்களை மேற்

அமெரிக்க ஐக்கிய இரரச்சியங்களின் எழுச்சி 225
கொள்ளும் பொறுப்பை ஏற்றது. பலமான ஐக்கியம் உருவானது. மேலும் மத்திய தேசவங்கி மூலம் முழுத் தேசத்துக்கும் ஒரே சீரான கடதாசி நாணயம் வெளியிடும் வழியும் வகுக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசின் வருமானத்தைப் பெருக்க இறக்குமதிப் பொருள் கள் மீது காப்புவழி, விசுக்கி (Whiskey) வரி என்பனவும் விதிக்கப்
பட்டன.
பிறநாட்டுப் பூட்கை :
உவாசித்தன் குடிப்பதியான ஆரும் நாள் பொது நாட்டுச் சபை வேர்சையில் கூடினது ; பிரெஞ்சுப் புரட்சி ஆரம்பமாயது. அமெரிக்க சுதந்திரத்தின் தத்துவங்களைப் பின்பற்ற முயலும் ஐரோப்பாவை அமெ ரிக்க மக்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர். பு தி ய உல்கிலிருந்து பழைய உலகை நோக்கிப் புத்தொளி பரவுவதைக் கண்டு மக்கள் ஆர்ப் பரித்து ஆனந்தித்தனர். ஆனல் சொற்ப காலத்துள் புரட்சித் தீ பரவி, தீவிர வாதத்தையும், அரச கொலையையும், ஐரோப்பிய போரை யும் வளர்த்த போது அபிப்பிராய பேதங்கள் தலை காட்டின. அமெ ரிக்காவில் ஒரு பகுதியினர், பிரான்சு தமக்குச் செய்த உதவிக்கு பிர தியுபகாரம் செய்யத் தருணம் கிட்டியதெனப் பிரசாரம்ப் செய்தனர். ஆனல் உவாசிந்தனும் அரசாங்கக் கட்சியும் புரட்சியின் பயங்க ர ஆட்சியைக் கண்டு, ஆங்கிலேயர் பக்கம் சாய்ந்தனர் ; 1793 ஏப்ரலில் அமெரிக்காவின் நடு நிலையையும் பிரகடனம் செய்தனர்.
இந் நடுநிலைக் கொள்கையினல் அமெரிக்காவின் வாணிபம் வளர்ந் தது. விசாலமான ஒரு நடு நிலை வியாபாரம் வெகு விரைவிற் சித்தி யானது. பிரான்சின் தேவைப் பொருள்கள் யாவும் அமெரிக்க கப்பல் களில் அனுப்பப்பட்டன. ஆனல் தன் கடலாதிக்கத்தால் பிரான்சை முற்றுகையிடத் தருணம் பார்த்து நின்ற பிரித்தன், அமெரிக்கா தடை யாயிருப்பதைக் கண்டு ஆத்திர முற்றது. அன்றியும் இன்றே என்ருே தன்னை அமெரிக்கா எதிர்த்துச் சமரிடும் என எண்ணிய பிரித்தன், அமெரிக்க கப்பல்களுக்குத் தடையிடத் திட்டமிட்டது. விலக்கப் பட்ட பொருள்களின் பட்டியலை நீட்டி, மேற்கிந்தியத் தீவில் அமெரிக்க கப்பல்களை அபகரித்தது. இச் செயல்களின் பயனுய் ஆங் கில அமெரிக்கப் பகைமை புது உச்சத்தை அடைந்தது. ஆயினும், ஆத் திர மூட்டும் இச் செயல்களை உவாசிந்தன் பொருட் படுத்தவில்லை ; நடுநிலைக் கொள்கையில் திட நிலையைக் கடைப் பிடித்தார். தம் குறைகளைத் தீர்க்கும் நோக்குடன் ஒர் உடன்படிக்கையைச் செய் தற்கு சே (Jay)யை இங்கிலாந்துக்கு அனுப்பியும் வைத்தார்.
al-F 17

Page 129
226 புது உலக சரித்திரம்
அரசியற் கட்சிகளின் பரிணுமம் :
இந்நிலையில், இயல்பிலும், கொள்கைகளிலும் அடிப்படை வேறு பாடுகளைப் பூண்ட பல அரசியற் கட்சிகள் கிளைத்தன. அரசமைப் புத் திட்டம் அங்கீகரிக்கப்படுமுன் தோற்றிய அபிப்பிராய பேதங்கள் ஐக்கியத்தின் பின்னர் புது வேடம் தரித்துப் புறப்பட்டன. அரசி யல் யாப்பை அங்கீகரிப்பதைப் பற்றி எழுந்த வேறுபாடுகள், ஐக்கி யத்தின் பின்னர் அதனை வியாக்கியானம் செய்யும் பிரச்சினைகளாக உருமாறின. அமில்ற்றணின் தலைமையில் அரசாங்கக் கட்சியைக் கொண்ட கூட்டாட்சி வாதிகள் (Federalists) ஐக்கியத்தைப் பலப் படுத்தும் நோக்குடன் உறுதியான நிருவாகத்தையும் பரந்த வேலைத் திட்டத்தையும் அமைக்கவும், மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை விசாலமான கருத்துக்களுடன் வியாக்கியானம் செய்யவும் ஆயத்தமா யிருந்தனர். இராச்சியங்களின் தனித் தன்மைகளை அழிப்பதே அவர் களது இறுதி இலக்காயிருந்தது.
தம்மைச் சனநாயகவாதிகள் என அழைத்துக்கொண்ட குடியரசு வாதிகள் (Republicans) ஐக்கியத்தில் ஐயமுற்று, அமில்ற்றனைச் சந்தே கக் கண்களுடன் உற்று நோக்கினர். உவாசிந்தனில் ஒரு மறைவான மன்னரும், மக்களின் சுதந்திரத்தை மறுக்கும் ஓர் அரசாங்க சதித் திட்டமும் அவர்களுக்குத் தென்பட்டன. அரசமைப்புத் திட்டத்தில் மத்திய அரசாங்க அதிகாரங்களை மிகக் குறுகிய கருத்துடன் வியாக்கி யானம் செய்தனர். கூட்டாட்சி அரசுத் திட்டங்களை வெறுத்து, தடையிலா வாணிபம் தர வேண்டுமென வாதாடினர் ; கப்பற் படை யையும் தேச சர்வகலாசாலையையும் எதிர்த்தனர். யெடசன் குடியர சின் தலைவராகி, குடிப்பதியின் இராச போக்கை வன்மையாகக் கண் டிக்கும் நிலைமையளவாக கிளர்ச்சி எழுந்தது. கருத்து வேறுபாடு களின் அதிகரிப்பால் யெபசன், 1793 இன் இறுதியில் உவாசிந்தன் மந்திரத்திலிருந்து விலகினர்.
(SuTGoT 9, Li Ji (John Adams) (59. Ug :
மூன்ரும் முறையாக குடிப்பதிப் பதவியை ஏற்க மறுத்து, 1797 இல், உவாசிந்தன் விலகினர். அதிகப்படியான மூன்று வாக்கு களால் கூட்டாட்சி வாதிகள் வெற்றி யீட்டினர் ; யோண் அடம்சு குடிப்பதியானர். அடம்சு அவசர புத்தியின் பிரதியுருவம், பொறுமை யின்மையின் இருப்பிடம், பொருமையின் பிறப்பிடம். உறுதியின்மை யும், பிழையான மதிப்பீடும், தவறுதலாக நடத்தலும் அவரது தனிக் குணங்கள். அடம்சின் பிழைகளும் நடை முறைகளும், உயர்ந்திருந்த கூட்டாட்சிக் கட்சியின் செல்வாக்கைத் தலை கவிழ வைத்தன. கட்சியின் கீர்த்தி நான்கு ஆண்டுக் காலத்தில் அடம்சு என்பவரால் பூண்டோடு

அமெரிக்க ஐக்கிய இராச்சியங்களின் எழுச்சி 227
அழிக்கப்பட்டது. பிரெஞ்சுப் புரட்சியினல் ஏற்பட்ட யுத்த அமைதி யீனத்தைச் சாதகமாய்க்கொண்டு கூட்டாட்சி வாதிகள், குடியரசு வாதிகளுக்கெதிராய் ஒர் அரசியல் வெற்றியைப் பொறிக்க முயன்ற னர். அதன் பயனப், பத்திரிகைச் சுதந்திரம் விலங்கிடப்பட்டது : அன்னியரின் வருகை மீது பொதுத்தடை பிறந்தது. அரசாங்கத்தின் அதிகாரம் விரிக்கப்பட்டு, அன்னிய தேசத்துரோக விதிகள் (Alien and Sedition Acts) நான்கு ஏற்படுத்தப்பட்டன. இந் நிகழ்ச்சிகள் சனநாயகக் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரான அறைகூவல் போலமைந்தன. இவை ஒரே சமயத்தில் தனி மனித சுதந்திரத்தை யும், இராச்சிய சுதந்திரத்தையும் பாதிக்க வல்லன என்று கணிக்கப் பட்டன.
இச் செய்கைக்கு எதிர்ப்பாக, யெபசன், மடிசன் என்ற சனநாயக வாதிகளின் கென்தகி-வேசீனிய தீர்மானங்கள் (Kentucky-Wirginia Resolutions) மறுப்புத்திட்டத்தை உருவாக்கின. அரசாங்கம் அத்து மீறி விட்டதென்றும், ஐக்கியமென்பது ஓர் உடன்படிக்கையென்றும், இவ்வுடன்படிக்கையின் முறிகள் மீறப்படும்போது அவற்றைப் பற்றித் தீர்ப்பளிக்க இராச்சியங்களுக்கு அதிகாரமுண்டென்றும் இத் தீர்மானங் கள் கூறின. இவை ஐக்கியத்தின் முழு அத்திவாரத்தையுமே அசைத் தன. ஏனெனின் இவற்றின் பிரகாரம் பேரவைச்சட்டதிட்டங்களை நிரர் கரித்தற்கும் ஐக்கியத்திலிருந்து விலகிப்போதற்கும் இராச்சியங்கள் அதிகாரமுடையன. இத் தீர்மானங்கள், ஒவ்வொருவரும் குடிப்பதிப் பதிவியை எட்டு ஆண்டுகளுக்கு நிருவகிக்கப்போகும் யெபசன், மடி சன் என்பவர்களின் தயாரிப்பாகும். மடிசனும் சனநாயக வாதிகளும் பின்னர் இக்கோரிக்கைகளைத் தாமே நிராகரித்துவிட்டார்கள். இத் தீர் மானங்களால் விளைந்த பலன்களின் பயணுகவும், 1799 இல் உவாசிந் தனின் மறைவாலும், கூட்டாட்சி வாதிகள் தம் செல்வாக்கிழந்தனர்.
Golgi TLD 9 Guuugi sõT (Thomas Jefferson) :
1800 ஆம் ஆண்டு, புதுத் தேர்தல் நிகழ்ந்தது. குடிப்பதியாக, யெபசன் தெரியப்பட்டார். சனநாயக வாதிகளுடன் யெபசன் பதவி யேற்ற இந் நிகழ்ச்சி, 1800 ஆம் ஆண்டுப் புரட்சியென அழைக்கப் பட்டுள்ளது. இப் புரட்சி அரசாங்க விவகாரங்களை விடுத்து, கட்சிக் கொள்கையளவிலேயே நின்றது. அமெரிக்கக் கட்சி அரசியலில் உறுதி யான கொள்கைகளைக் காண்பது அரிது. ஒரு கட்சியின் பதவிக்காலத் தில், அது மற்றக் கட்சியின் திட்டங்களை மேற்கொள்வது இயல்பு. அதிகாரமின்றி வெளியே நிற்கும் கட்சி குறுகிய மனப்போக்குடன் அரசமைப்புத் திட்டத்தை வியாக்கியானஞ் செய்து அரசாங்க அதி காரத்தைக் கட்டுப்படுத்த முயல்வதே வழக்கமாய் விட்டது. சிக்கனத்

Page 130
228 புது உலக சரித்திரம்
தினதும் குறுகிய அதிகாரக் கட்சியினதும் தலைவரான யெபசன், மத்திய அரசுப் பணத்தைச் செலவு செய்வதிலும், கூட்டாட்சி அதிகா ரப் பிரயோகத்திலும் முன் சென்றவர்களையே முந்தி விட்டர், *எல்லா மக்க வருக்கும் ஒரே நீதி, எல்லா நாடுகளுடனும் தேர்மை யான உறவு ஒருவருடனும் ஒப்பந்தமில்ல' என்று தமது ஆரம்ப உரையில், யெபசன் கொள்கைப் பிரகடனம் செய்தார். தனி மனித சுதந் திரம், சனநாயக சித்தாந்தம் என்பவற்றின் பாதுகாவலய்ை உழைத் தார்; அன்னிய தேசத் துரோகச் சட்டங்க%ள வெறுத்தார் ; கைதிகளுக்கு விடுதலையளித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நடந்தேறிய மகத் தான சம்பவம் பிரான்சிடமிருந்து இலூயிசியாஞ 12,ouisiana) பிர தேசத்தை விலைக்குப் பெற்றதாகும். 1803 ஆம் ஆண்டு, நெப்போலி யன் கையிலிருந்து 800 ஆயிரம் சதுரமைல் நிலம் 160 இலட்ச்ம் டொலர்களுக்குக் கைமாறிற்று. இப்புது நிலப்பரப்பானது, அமெரிக்சு இடப்பரப்பை இரு மடங்குக்கு மேல் பெருக்கிற்று. அதன் காரண மாய் ஏற்பட்ட பயன்களும் பரந்தவை. இப்புதுப் பிரதேசத்தி 66) (15jög nó sin 6or (8 r rill T (Minne stota), tá gy fro (Missouri), ag But Ir Gaill (Iowa), கன்சசு (Kansas), மொந்தானு (Montana), தக்கோட்டா (Dakota), இலூயிசியானு, என்ற புது இராச்சியங்கள் அமைக்கப்பட் டன. இப்புது இராச்சியங்களின் தோற்றத்தினல் கிழக்கு-மேற்கு அரசியல் நிலையிலும், அடிமையுள்ள-அடிமையற்ற இராச்சியங் களின் அரசியல் சமபலத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இதுகால வரை யெபசனின் ஆட்சியானது, மக்களின் விருப்பைப் பெற்று, சாமர்த்தியமாகவும், சித்திகரமாகவும் நடாத்தப்பட்டது. ஆனல் அவ ருக்குக் கவலையூட்டிய அடுத்த நிகழ்ச்சி ஆறு ஆண்டுகளுக்கு நீடித்து, அவருக்குப் பின்வந்த குடிப்பதியின் ஆட்சியில் சமரை உண்டாக்கியது.
இங்கிலாந்துடன் போர் :
நெப்போலிய யுத்தங்களின் பயனுகவே, இங்கிலாந்துப்போர் உதயமானது. தரையில் தொடர்பான வெற்றிகளை ஈட்டிய நெப் போலியன், கடலரசியான இங்கிலாந்தை வெற்றி கொள்ள முடியாது போனர். பொருளாதாரக் கட்டுப்பாட்டின் மூலம் இங்கிலாந்தின் வியா பாரத்தை அழிக்கவும் அடிப்படுத்தவும் திட்டமிட்டார். அதே தரு ணத்தில் இங்கிலாந்தும் தன் கடலாதிக்கத்தினுல் பிரான்சின் பலத்தை முறியடிக்க முனைந்தது. உருவிலும் வலியிலும் மிக்கவர்களான இரு அரக்கர்களைப்போல் நாடுகள் இரண்டும் தம் முழுவன்மையுடன் கை கலந்தன. நெப்போலியன் கட்டளையிட்ட கண்டத் திட்டத்துக்கு மறுப்பாய் இங்கிலாந்து எதிர் நடவடிக்கைகள் எடுத்தது. தடைப் பொருள்களின் நிரல் நீண்டது. துறைமுகங்கள் மூடப்பட்டன. நடு

அமெரிக்க ஐக்கிய இராச்சியங்களின் எழுச்சி 229
நிலை நாடுகளின் வியாபாரம் தடை செய்யப்பட்டது. சிறப்பாய் அமெரிக்க வியாபாரத்துக்குப் பெரு நட்டம் ஏற்பட்டது. கண்டத் திட்டத்தின் வலிமை வளர வளர இருபகுதியினரும் நடுநிலை நாட்டு உரிமைகளை அறவே அலட்சியம் செய்தனர். இங்கிலாந்தும் பிரான்சும் அமெரிக்காவின் கப்பல்களைக் கைப்பற்றித் தடை செய்தன; அமெரிக் காவின் கோபம் பொங்கியெழுந்தது. ஆனல் போரின் காரணம் இதற்குப் புறம்பாயிருந்தது. ஆங்கிலேய கப்பற்படையிலிருந்து தப்பி யோடியவர்கள் அமெரிக்கக் கப்பல்களில் இலகுவிற்சேர வசதிகள் வாய்த்தன. இங்கிலாந்து இதை ஆட்சேபித்தது. பொருள்களின் தடை, தப்பி ஓடிய வீரர்களுக்கும் தரப்பட்டது. 1807 யூன் மாதம் **இலெப்பட்' (Leopard) என்ற ஆங்கிலப் போர்க் கப்பல் ஒர் அமெரிக் கக் கப்பல் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து தப்பியோடியவர்களில் நால்வரைப் பலாத்காரமாகக் கைது செய்தது. இங்கிலாந்தின் மூர்க் கச் செயல் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை உண்டுபண்ணிற்று. இந்நிலையில் யெபசன் போர் எண்ணம் பூண்டிருந்தால், அமெரிக்கா முழுவதும் அவரை ஆதரித்திருக்கும். ஆனல் யெபசன் கடும் நடவடிக் கைகளைக் கைக்கொள்ளவில்லை.
1808 ஆம் ஆண்டுத் தேர்தற் பிரசாரத்தில், அமெரிக்காவின் மானம் காக்கப்பட வேண்டுமாயின் உடனே டோரெழ வேண்டு மென்ற கொள்கை மேன்மையுற்றது. குடிப்பதிப் பதவிக்காகப் போர் வேடம் தரிக்க மடிசன் சம்மதித்தார். போரின் ஆரம்பம் கனேடிய எல்லையிலும் கடலிலும் நிகழ்ந்தது. கனடாவுக்கு உடனு த வி கொடுக்க இங்கிலாந்தினுல் முடியாமற்போகவே, கனடா உபாயத் தினல் தன்னைக் காத்துக் கொண்டது. அமெரிக்க பிரதேசத்தினுள் கனேடியரின் ஒரு படையெடுப்பு தோல்வி கண்டது. கடற்போர் இரு தேசங்களினதும் தனிப்பட்ட கப்பல்களுக்கிடையேதான் நடைபெற் றன. ஆங்கிலேயக் கப்பல்கள் பல அமெரிக்கக் கப்பல்களால் மூழ் கடிக்கப்பட்டன. ஐரோப்பாவின் தீபகற்பப் போர் முடிந்தவுடன், இங்கிலாந்து இரு ப  ைட க ளே அமெரிக்காவுக்கு அனுப்பியது. ஒரு படை உவாசிந்தன் நகரைக் கைப்பற்றி வெள்ளை மாளி கைக்கு எரியூட்டியது. இரண்டாம் படை நியூ ஒலியன்சை முற்று கையிட முனைந்து, 1815 சனவரியில் செனரல் அன்ட்று யக்சனினுல் (Andrew Jackson) தோற்கடிக்கப்பட்டது. ஆனல் இத்தோல்வியின் முன்னரே 1814 இல் கென்ற் (Ghent) சமாதான உடன்படிக்கையின் படி இரு பகுதியினருக்குமிடையில் அமைதி நிலவிவிட்டது.

Page 131
230 புது உலக சரித்திரம்
2. அமெரிக்காவின் அபிவிருத்தி (1815-50)
1812 ஆம் ஆண்டுப் போரின் பயன்கள் :
அமெரிக்காவின் 'இரண்டாவது சுதந்திரப் போர்' என்று அழைக்கப்பட்டுள்ள 1812 ஆம் ஆண்டு யுத்தம் அமெரிக்க வரலாற்றில் ஒரு புது சகாப்தத்தை பல வழிகளிலும் மலரச் செய்தது. அப்போர் புதுப் பொருளாதார வசதிகளைப் பெற்றுக் கொடுத்ததுடன் ஒரு புதுத் தேச ஐக்கிய உணர்வையும் உண்டுபண்ணியது. அக்காலம் தொட்டு அமெரிக்கா, இராச்சிய ரீதியில் இயங்கும் தன்மையைக் கைவிட்டது. சுதந்திரம் பெற்றபின் அமெரிக்கா ஈடுபட்ட இம் முதல் யுத்தம், நாட்டின் ஒற்றுமையை நன்ருக உறுதிப்படுத்தியது.
DGi (; JT5 (35 slur (S (Monroe Doctrine) :
யேமிசு மன்ரோ (James Monroe) குடிப்பதியாக இருந்த காலத் தில் (1816-24) அமெரிக்கா வெளிநாட்டு விவகாரங்களில் உறுதி யுடன் நடந்து பெரும் வெற்றி கண்டது. 1823 ஆம் ஆண்டு மன்ரோ, மேற்குக் கோளார்த்த விவகாரங்களில், ஐரோப்பா தலையிடக் கூடா தென்ற தனது பெயரைக்கொண்ட பிரபல்யமான கொள்கையைப் பிரசித்தஞ் செய்தார். ஐரோப்பிய நாடுகள் இனிமேல் அமெரிக்க கண்டங்களில் சுரண்டுவது அனுமதிக்கப்படமாட்டாது; பிரசிய, ஒசுத் திரிய நாட்டு சர்வாதிகாரங்களைப்போன்ற ஆட்சி முறைகள் அமெரிக் காவில் வேரூன்ற இடம் கொடுபடமாட்டா; எதேச்சாதிகாரமோ, பிற் போக்குவாதமோ அமெரிக்க அரசியல் வாழ்வில் நிலைக்காது, என்றே இக் கொள்கை பொருட்பட்டது. அமெரிக்கா புதுஉலகில் சனநாயகத்தைப் பாதுகாக்கக் கங்கணங் கட்டியது. தன்னளவில், அமெரிக்கா ஐரோப் பிய விவகாரங்களில் தலையிட மாட்டாது என்றும் உறுதி மொழி கூறிற்று. ஒரே நேரத்தில் அலசுக்காவில் இரசியாவின் ஆள்புலப் படர்ச்சியையும், சிபெயினின் அமெரிக்க குடியேற்றங்களை டேட்கும் முயற்சியையும் அக்கோட்பாடு தடை செய்தது. பெரிய பிரித்தனும் அமெரிக்காவின் கொள்கையை ஆதரித்தமையினல் மன்ரோவின் வாக்கு ஐரோப்பாவில் மதிப்பும் மேன்மையும் பெறலாயிற்று.
மன்ரோக் டி கொள்கையுடன் "அமெரிக்காவின் விதி' கிழக்கி லல்ல, மேற்கிலேயே இருப்பதை மக்கள் உணர்ந்தனர். 1812 க்குப் பிற்பட்ட 40 ஆண்டுகளில் ஏற்ப்ட்ட முக்கிய நிகழ்ச்சி அமெரிக்கா வின் பொருளாதார அபிவிருத்தியாகும். ஆனல் இப் பொருளாதார முன்னேற்றம் தேச அடிப்படையில் ஏற்படாது, பகுதிகளாகவே நடை பெற்றன. பிற்காலத்தில் அரசியல் பிளவுகளை ஏற்படுத்தவும், உண் சூட்டுப் போரைக் கொண்டுவரவும் வல்ல வேற்றுமைகள் வட,

அமெரிக்க ஐக்கிய இராச்சியங்களின் எழுச்சி 23J
தென், மேற்குப் பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்தியினின் றும் தோற்ற ஆரம்பித்தன. கைத்தொழில் மிக்க, வட இராச்சியங் களுக்கும் விவசாயம் மிக்க தென் இராச்சியங்களுக்கும், சொந்தப் பண்ணைகள் மிகுந்த மேற்கத்திய இராச்சியங்களுக்குமிடையில் வேறு பாடுகள் தலைகாட்டி, தலை தூக்க ஆரம்பித்தன.
வட பிராந்தியத்தின் அபிவிருத்தி :
1812 ஆம் ஆண்டுப் போர் நடை பெற்ற காலத்தில் பிரித்தானி யப் பொருள்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டமையினல், அமெ ரிக்கா தன் கையே தனக்குதவி' என்பதை உணர ஆரம்பித்தது. வட, மத்திய இராச்சியங்களின் பால்ய தொழில்கள் பலமான ஊக்கம் பெற் றன. தொழிற்சாலைகள் பல தோன்றி, இப்பிராந்தியம் முழுவதும் ஒரு விசாலமான கைத்தொழில் பிரதேசமாக மாறிற்று. போர் முடிந் தவுடன் ஐரோப்பிய போட்டி திரும்பவும் ஏற்பட்டது ; அமெரிக்க ஆலை முதலாளிகள் தங்கள் புதுத் தொழில்களுக்குப் பாதுகாப்புத் தரப் பட வேண்டுமெனக் கூக்குரலிட்டனர். மேலும் வட இராச்சியங்களில், அடிமை முறை இரத்துச் செய்யப்பட்டிருந்தமையினுல் தொழில் இடையூறுகளும் இடையருதேற்பட்டன. சுதந்திரத் தொழிலாளரைப் பெறுவது மிகக் கடினமாயிற்று. ஏனெனில் அவர்கள் மேற்கு நோக்கி முன்னேறின், அங்கு நிலங்களைப் பெற்று தாம் சொந்த எசமானராக அமையும் வாய்ப்பிருந்தது. உயர்ந்த வேதனம், குறைந்த நேர ம் எனும் சலாக்கியங்களைக் காட்டியே அவர்களை வேலைக்கு அமர்த் த வேண்டியிருந்தமையினல், புதுத் தொழில்கள் அரசாங்க பாதுகாப் பின்றி இயங்க முடியா நிலையடைந்தன. 1816 முதல் பாதுகாப்புத் தீர்வைச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.
தென் இராச்சியங்கள் :
இவ்வாறு வட இராச்சியங்களில் ஆலை முதலாளிகள், வங்கிக்காரர், வர்த்தகர்கள் விஞ்ஞானிகள், மூலதனம் படைத்தோர் உயர்வு பெற, தெற்கில் பண்ணைச் சொந்தக்காரரும், அடிமைச் சொந்தக்காரரும் மேன்மை பெற்றனர். தென் இராச்சியங்களின் செல்வம், எதிர்காலம் யாவும் பருத்திப் பயிரிலே தங்கி நின்றன. பருத்தி பயிரிடுதலுக்கு எங்கெங்கு தகுதியான நிலங்கள் கிடைத்தனவோ அங்கங்கெல்லாம் பயிரி ட ப் பட்ட து. தெற்கிலிருந்து இப்பயிர்ச் செய்கை தென் மேற்கு இராச்சியங்களுக்கும் பரவியது. எனவே தென், தென்-மேற்கு இராச்சியங்கள் பருத்தி பயிரிடுதல், அதை வட அமெரிக்க சந்தை களுக்கும் இங்கிலாந்துக்கும் ஏற்றுமதி செய்தல் எனும் பொருளாதார ஒற்றுமையினல், உறுதியாகப் பிணைக்கப்பட்டன. தென் இராச்சியங்

Page 132
232 புது உலக சரித்திரம்
களின் செல்வம் மாத்திரமன்று அவற்றின் சமூக அமைப்பும் பருத்திப் பயிருடனேயே தொடர்புற்று நின்றது. இரும்புபோன்ற கடினமான பருத்தி நூல்களினுல் அடிமைமுறையானது தென் இராச்சியங்களு டன் உறுதியாகக் கட்டப்பட்டது.
இப் பிரதேசங்களில் ஒரு தற்காலிக இன்னல் என்று கூறப்பெற்ற அடிமை முறை, காலப்போக்கில் முற்றிலும் புது நிலையைப் பெற்றது. அது தென் இராச்சியங்களின் தொழிலாளர் பிரச்சினையை இலகுவா கவும், இலாபத்துடனும் தீர்க்க வல்ல தவிர்க்க முடியாத இன்றி யமையாத அமைப்பாக மாறிற்று. வடக்கே ஆலை முதலாளிகள் தம் தொழில்களை வளர்க்கப் பாதுகாப்புச் சட்டங்களைக் கோரி நின்றது போல, தெற்கே பண்ணைத் தொழிலாளிகள் தம் பொருளாதாரத் தைக் காக்க அடிமைகள் தப்பியோடுவதைத் தடை செய்யவல்ல “ : ssyuq-GouD j F L L i 35 Gir” (Fugitive Slave Laws) வேண்டுமென்று கூக்குரலிட்டனர்.
இவ்வாறு வட, தென் இராச்சியங்களின் பொருளாதாரக் கோரிக் கைகள் வேறுபட்டவை. வட பகுதிகளின் முதலாளிகள் தென் இராச் சியங்களில் விளைவிக்கப்பட்ட பருத்தியை விற்பனை செய்து, கொள்ளை இலாபம் பெறுவதை தென் நாட்டவராற் சகிக்க முடியவில்லை. தென் நாட்டவர் தம் கீழ்ப் பொருளாதார நிலைக்கு வட நாட்டினரின் சுரண்டுதல் தான் மூல காரணம் என்றனர். வடக்கத்தியர் இதற்கு காரணம் தம் சுரண்டுதலல்ல, அடிமை முறையே என்றனர்.
மேற்கு இராச்சியங்கள் :
மேற்கு இராச்சியங்கள் விலை குறைந்த பொருள்களையோ, குறைந்த வேதனத்துக்கு உழைக்க வல்ல தொழிலாளரையோ விரும்பவில்லை ; அவர்கள் விருப்பியது குறைந்த விலைக்கு நிலம் ஒன்றே. அப்பிரதேசம் தொழில்களிலோ அன்றேல் பருத்திப் பயிர்ச் செய்கையிலோ ஈடு படவில்லை ; புது நிலங்களைத் தமக்குச் சொந்தப் பண்ணைகளாக அமைப்பதில் தான், மேற்கு நோக்கி குடியேறியவர்கள் நாட்டங் கொண்டனர். விவசாயிகள் தம் சொந்தப் பண்ணைகளில் கோதுமை விளைவித்தல், தோட்டப் பயிர்கள் செய்தல், மந்தை மேய்த்தல் என்ப வற்றையே முக்கிய தொழில்களாகக் கொண்டனர். 1812 ஆம் ஆண்டு யுத்தத்தைத் தொடர்ந்து, கிழக்குப் பிரதேசத்தில் ஏற்பட்ட பொரு ளாதார நெருக்சடியின் காரணமாக, மக்கள் மேற்கு நோக்கிப் புது இல்லங்களை அமைக்க விரைந்தனர். 1816 க்குப் பின்பு இது ஒரு பெரிய "வேகப் போக்காக" (Rush) மாறியது. இவர்கள் நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றைத் தம் சொந்தப் பண்ணைகளாக அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மத்திய அரசாங்கமும் புது

அமெரிக்க ஐக்கிய இராச்சியங்களின் எழுச்சி 233
நிலங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்க முன்வந்தது; 1820 இல், நிலம் 80 ஏக்கர் பங்குகளில் ஏக்கர் 1 25 டாலர் வீதம் விற்றது ; புதுப் பிரதேசங்களைக் கூட்டாட்சியினுள் இணைப்பதற்கும் இலகுவான சட்டங்களை இயற்றியது. ஒரு பி ர தே ச ம் குறிப்பிட்ட சனத் தொகையைக் கொண்டபோது, அது மத்திய அரசாங்கத்தினுல் நிர்வகிக்கப்படும். ஒரு தனி நிலப்பரப்பாக (Territory) அமையு மென்றும், அது மேலும் அபிவிருத்தி யடைந்து 60,000 மக்களைக் கொண்டபோது அஃது ஒர் இராச்சியமாகக் கூட்டாட்சிக்குள் அனும திக்கப்பட்டு, ஏனைய இராச்சியங்களைப்போலச் சம உரிமைகள் பெறும் என்றும் சட்டம் விளம்பியது.
அமெரிக்காவின் அபிவிருத்தியில் மேற்கின் பங்கைச் சரிவர அளப்பது இலகுவானதல்ல. இந்தப் பரந்த நிலப்பரப்பு அமெரிக்காவின் இலக் கியம், பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் எனும் சகல துறை களிலும் பாரதூரமான பலன்களை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரதே சங்களில் குடியேறியவர்கள் பழைய இராச்சிய மக்கள் மாத்திரமன்று; அயலாந்து, செர்மனி, பிரான்சு, சுவீடன், போல்கன் நாடுகள் என்ற ஐரோப்பாவின் நான்கு கோணங்களிலிருந்தும் மக்கள் புது வீடு வாசல்களைத் தேடி அமெரிக்காவின் மேற்குத் தேசத்துக்குள் ஆயிரக் கணக்கில் புகுந்தனர்.
அமெரிக்க-மெச்சிக்கப் போர் :
மேலே கூறப்பட்ட மேற்குப் பிரதேசம் திறக்கப்பட்டதற்கு மேலதிக மாக அமெரிக்காவின் இக்கால வரலாறு இன்னும் தொடர்பான முறிவற்ற படர்ச்சி எனும் கதையையே உள்ளடக்கிற்று. இவ் விரிவை அமெரிக்கா தன் ‘வெளியாகமான தலைவிதி' என வர் னித்து, பசிபிக் கரை வரையும் முன்னேறியது. இப் படர்ச்சியிலி ருந்துதான் அதன் உள், வெளிநாட்டுப் பிரச்சினைகள், மெக்சிக்கோவு டன் போர், சிபெயின், இங்கிலாந்துடன் இராசதந்திரத் தகராறுகள், வட-தெற்கு யுத்தம் யாவும் எழுந்தன. 1803 இலூசியானவைப் பிரான் சிடமிருந்து விலைக்கு வாங்கியது ; 1819-இல் புளொறிடாவை சிபெயி னிடமிருந்து ஒப்பந்தம் மூலம் பெற்றது. அதற்குப்பின் அமெரிக்கர் கள், மெச்சிக்கோவுக்குச் சொந்தமான தெக்சசு (Texas) என்ற மாக ணத்துக்குள் ஏராளமாகக் குடியேறி 1838 இல் அதன் சுதந்திரத் தைப் பிரகடனப் செய்தனர். தெக்சசு வாசிகள் மெக்சிக்க படை களைத் தோற்கடித்து, சுதந்திரக் குடியரசை நிறுவி, அமெரிக்க கூட டாச்சியில் சேர உரிமை கோரினர் ; 1842 இல் அது அமெரிக்க ஹக் கியத்தின் பகுதியாகவும் அனுமதிக்கப்பட்டது. 1840 அளவில் குடிப் பதி பொல்க் (President Polk) இன் காலத்தில் பசிபிக் கரைப்பி

Page 133
234 புது உலக சரித்திரம்
தேசமான கலிபோணியாவை மெச்சிக்கோ விடமிருந்து விலைக்கு வாங்க முயற்சிகள் எடுக்கப்பட்டன . ஆனல் மெச்சிக்கோ இக் கோரிக்கையை நிர ரீ க ரி க் க வே போர் மூண்டது. மெச்சிக்க எதிர்ப்பு இ லகு வாக வெற்றி கொள்ளப்பட்டது ; தெக்சசுக்கும் பசிபிக் கரைக்கும் இடைப்பட்ட பிரதேசம் முழுவதும் அமெரிக்காவுக்குச் சொந்தமா யிற்று. இக்காலப் புதுமெச்சிக்கோ, அரிசோனு, கலிபோனியா இராச்சி யங்களின் நிலப்பரப்பிற்கு அதிகமான பிரதேசத்தை அமெரிக்கா பெறலாயிற்று. அமெரிக்கா மெச்சிக்கோவுக்குப் பதினைந்து இலட்சம் டொலரை நட்ட ஈடாகக் கொடுத்து தன் ஏகாதிபத்திய அட்டகாசச் செயலைச் சாந்திப்படுத்தியது.
கலிபோனியா கை மாறிய அதே காலத்தில், அங்கு தங்க ம் கண்டு பிடிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றண்டின் மிகப் பெரிய 'தங்க வெறி'யில் பங்கு பற்ற உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கலி போனியாவில் குவிந்தனர்.
6?)3, GöT SU35360T (The Oregon Question) :
கலிபோனியாவுக்கு வடக்கே கிடந்த ஒறிகன் பிரதேசத்தின் மீது ஆங்கிலேயரும் அமெரிக்கரும் ஒருங்கே உரிமை பாராட்டி, இரு பகு தியினரும் அதைக் கூட்டு முறையில் நிர்வகிக்க உடன்பாடு செய்து கொண்டனர். ஆனல் இங்கு அமெரிக்கர் ஏராளமாகக் குடியேறியதன் பலனக, அதையும் அமெரிக்க ஐக்கியத்தில் இணைப்பது முக்கிய பிரச் சினையாகியது ; அதைப் பெறுவதற்குப் போர் புரியவும் ஆயத்தமாயி னர். ஆனல் 1846 இல் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டது. இரு பகுதியினரும் உருெக்கீசு மலைப் பிரதேசத்தில் அமைந்த 49 ஆம் அட்சம் அமெரிக்காவையும் கனடாவையும் பிரிக்கும் எல்லையாக ஏற் றுக் கொண்டனர்.
இவ்வாருக 1844 க்கும் 1848 க்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டு களில் அமெரிக்காவின் எல்லைகள் இரு மடங்குக்கு மேற் பெருகின.
ஆள் புலப் படர்ச்சியின் பயன்கள் :
மேற்கிலிருந்து ஏகாதிபத்திய வேட்கை மாத்திரமன்று, தீவிரவாதமும் தோற்றியது. 1829 வரை அமெரிக்க அரசாங்கத்தை நடத்தியவர்கள் முழுமையாக பழைமை வாதிகள் ; நாட்டில் நிலவியது பிரபுத்துவ ஆட்சி முறை ; இருவரைவிட மிகுதிக் குடிப்பதிகள் அனை வரும் வேசீனியாவைச் சேர்ந்தவர்கள். மேற்குப் பிரதேசம் திறக்கப்பட்டதுடன் அமெரிக்க ஆட்சிமுறை மேலும் மேலும் சனநாயகத்தன்மை பெறலாயிற்று. கிழக்கு இமாச்சியங் களில் வாக்குரிமைக்கு விசேட தகைமைகள் விதிக்கப்பட்டிருந்தன் ; ஆனல் மேற்கில் சர்வசன வாக்குரிமை ஆரம்பத்திலிருந்தே அனுட்டிக்கப்பட்டது. இது காலம்வரை வேசி மனியாவின் ஏகபோக உரிமையாகவிருந்த குடிப்பதிப் பதவி மறைந்தது. மேற்கு இராச் சியங்களில் ஒழுங்கு உருவாகியதுடன் அவைகள் பேரவைக்கு பிரதிநிதிகளே அனுப்பி, அர

அமெரிக்க ஐக்கிய இராச்சியங்களின் எழுச்சி 235
சியல் விவகாங்களில் கூடுதலான பங்கெடுக்க ஆரம்பித்தன. 1829 இல் தெனசியைச் (Te nu48ne) சேர்ந்த ஆண்ட்ரூ யாக்சன் குடிபபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்டதே மேற்கு இராச்சியங்களின் தலைசிறந்த வெற்றியாக அமைந்தது.
Je,GöTú(5 ujTö5 GöT (Andrew Jackson) :
யாக்சன் குடிப்பதியாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட தினம், உவாசிந்தன் நகரில் மக்களின் உற்சாகம் கரை புரண்டோடி யது. இவ்வைபவத்தைக் கண்டு களிப்பதற்காக 10,000 மக்கள் நாட் டின் எல்லாப் பாகங்களிலிருந்தும் வந்திருந்தனர். "நாட்டின் மன்னர் நாமே” என்ற புதுமை யுணர்ச்சி மக்களின் மனதில் பூத்திருந்தது. மகிழ்ச்சிப் பெருக்கால் தன் நிலை மறந்த பெரும் சனத்திரள் புது சனதிபதியைச் சூழ்ந்து கொண்டது. அவருடன் கை குலுக்குவதற் காக மக்கள் அவரைச் சுற்றி மொய்க்க ஆரம்பித்தனர். அன்பு வெள் ளத்தில் திளைத்த அப்பெரும் திரளினுக் கூடாக வெகு பிரயாசையுடன் அவர் வெளியேறி வெள்ளை மாளிகையை அடைந்தார்.
யாக்சன் இதய சுத்திபூண்டவர் : சாதாரண பொது மக்களுடன் ஒருமைப் பாடுடையவர் : எளிய ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர் ; பிறப்புக்கு முன்பே தந்தையை இழந்தவர். வறுமையில் வளர்ந்த யாக்சன் உறுதி, முயற்சி, திறமை ஆகிய பண்புகளுக்கு உறைவிட மாயிருந்தார் ; இன்ற்ை பட்டவர்கள் மட்டில் தீராத அனுதாபத்தை யும் கொண்டவர் ; சாதாரண மனிதனின் அசாதாரண ஆற்றலிலும் விவேகத்திலும் உறுதியான நம்பிக்கை கொண்டவர். அவரது சித்தாந் தம் மிக வும் எளிமையானது. சாதாரண மனிதனிலும், அரசியல் சமத்துவத்திலும், சமபொருளாதார சந்தர்ப்பத்திலும் பூரண விசுவாசம் கொண்டவர். ஏகபோக உரிமைகளும் விசேடஉரிமைகளும் அவரது கொடும் விரோதிகள். அதிகார பதவியை அடைந்தது தான் தாமதம், உடனே இக்கொள்கைகளை நடைமுறையில் அனுட்டானத்துக்கு கொண்டுவந்து, சமூகத் துறையிலும் அரசியல் துறையிலும் புரட்சி கரமான மாற்றங்களுக்கு வழி திறந்து விட்டார். எல்லாத் துறைகளிலும் உண்மை யான அமெரிக்க சமத்துவம் நிலைத்தது.
அமெரிக்க சுதந்திரப் பிரகடனம், மொன்ரோ கோட்பாடு என்ப வற்றைப் போன்று யக்சனுடைய குடிப்பதவி, அமெரிக்காவின் முதிர்ச்சி யில் மூன்ருவது முக்கிய கட்டமெனப் புகழ் பெற்றுள்ளது.
1832 இல் தென் இராச்சியங்கள் ஐக்கியத்தை விட்டு விலகத் திட்டமிட்ட போது, யாக்சன் உறுதியாக நடந்து, இவ்வபாயத்தை இலகுவில் மேற் கொண் டு , கூட்டாட்சியின் ஒற்றுமையைப் பாது காத்தார்.

Page 134
236 புது உலக சரித்திரம்
3. அடிமை முறையும் உண்ணுட்டுப் போரும் (1850-70)
அடிமை முறை :
அமெரிக்காவின் சுதந்திரம் பிரகடனம் செய்யப்பட்டகாலத்தில் மாசச்சூசட்சு என்ற ஒரு மாகாணத்தைவிட ஏனைய இராச்சியங்கள் எல்லாவற்றிலும் அ டி  ைம மு  ைற 200 ஆண்டுகளுக்குமேலாக நிலைத்து நின்றது. இருபது அடிமைகளுடன் ஆரம்பித்த இம்முறை 18 ஆம் நூற்றண்டின் முடிவில் 20 இலட்சத்துக்கு மேலாக அதி கரித்து விட்டது. அந்நூற்றண்டின் முடிவில், மனித தர்மத்துக்கு மாறனது என்ற கருத்து எழவே, வட இராச்சியங்களில் பென்சில் வேனியாவுக்கு வடக்கே அடிமை முறை அழிக்கப்பட்டது. அலிகனிசு மலைகளுக்கு மேற்கேயும் ஒகையோ நதிக்கு வடக்கேயும் தோற்றிய புது இராச்சியங்களில் அடிமை முறை 1787 ஆம் ஆண்டுச் சட்டத்தினுல் தடைசெய்யப்பட்டது. தெற்குப் பிரதேசத்திலும் தனிப்பட்ட பரோப கார சிந்தைகள் படைத்த தோட்ட முதலாளிகளின் செயல்களினல் அது மிக மெதுவாக மறைந்து வரலாயிற்று. உவாசிந்தன் போன்ற பெரியார்கள் தம் தோட்டங்களில் வாழ்ந்த அடிமைகளை விடுதலை செய்தனர். யெபசன் அடிமைகளை விடுதலை செய்யவும் அவைகளை ஆபிரிக்காவுக்கு திருப்பியனுப்பவும் ஒரு திட்டம் வகுத்தனர் ; ஆனல் அது சித்தி பெறவில்லை. இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அமெரிக்காவின் இக்கால இன்னல்களில் முக்கியமானதொன்று நீங்கி யிருக்கும். 1808 இல் மேலும் அடிமைகளை இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடைசெய்தது.
இந்நிலை, தெற்கு இராச்சியங்களில் பருத்தி ஏராளமாகப் பயிர் செய்ய ஆரம்பிக்கப்பட்டதுடன் முற்றிலும் மாற்றமடைந்தது. இப் பயிர்ச் செய்கையினல் ஏற்பட்ட ஏராளமான இலாபத்தைக் கண்ட முதலாளிகள் அடிமை முறையைத் தம் நிலங்களில் கைவிட மறுத் தனர். பரோபகார சிந்தனைகள் யாவும் காற்றேடு பறந்தன. அதற்கு மாருக, அடிமை முறையை என்ன பாடுபட்டும் தென் இராச் சியங்களில் வேரோடச் செய்ய வேண்டுமென்ற கருத்து ஓங்கியது. இலூர்கள் அடிமை முறை தமக்குத் தம்முன்னேர் உவந்தளித்த ஒரு தவிர்க்க முடியாத அமைப்பென்றே கருதினர். வடக்குக்கும் தெற்குக் கும் இடையே அடிமைத்தனம் பற்றி வளர்ந்துவந்த கவலை, மேற்கு இராச்சியங்களின் திறப்பினுல் ஒரு புதுக் கட்டத்தை எய்தியது. வட மக்கள் மனதில், மேற்குப் பிரதேசங்களில் அமைக்கப்பட்ட புது இராச் சியங்களில் அடிமை முறையை அனுமதிக்கலாகாது என்ற உறுதி

ஐரோப்பாவின் ஆள்புலப் படர்ச்சி 237
ஓங்கியது. இக்காலம் வரை அடிமை முறை நிலவிய இராச்சியங்களில் மாத்திரம் அது அவ்வெல்லைகளுக்குட்பட்ட பிரச்சினையாக விருக்கும் என்றே எண்ணப்பட்டது ; ஆனல் அடிமை முறைக்குப் பொருத்த மான புது நிலங்கள் திறக்கப்பட்டதுடன், அடிமை முறை பழைய எல்லைகளை மீறக்கூடும் என்ற அச்சம் எழுந்தது.
1820 ஆம் ஆண்டு ஏற்பட்ட ‘மிகுறி ஒத்துமேவல்" (Missouri Compromise) பிரச்சினையை முப்பது ஆண்டுகளுக்குத் தீர்த்து வைத் தது. 1787 ஆம் ஆண்டுச் சட்டம் ஒகையோ நதியை அடிமை இராச்சியங்களுக்கும் அடிமையற்ற இராச்சியங்களுக்குமிடைப்பட்ட எல்லையாக நிர்ணயித்திருந்தது. ஆனல் அச்சட்டம் மிசிசிப்பி நதிக்கு மேற்கேயமைந்த பிரதேசங்களின் எதிர்காலத்தைப் பற்றி ஒன்றும் கூருது விட்டது. மிசூறி இராச்சியம், ஐக்கியத்தில் சேர அனுமதி கோரிய பொழுது, இப்பிரச்சினை பேரவைக்கு முன் வந்தது ; அது ஒர் அடிமை இாாச்சியமாக கூட்டாட்சியில் அனுமதிக்கப்பட்டது. அதே நேரத்தில் மிகுறி இராச்சியத்துக்கு மேற்கே 36° 30" அட்சம் அடிமை இராச்சியங்களின வட எல்லையாகவும் இவ்வட்சத்துக்கு வடக்கே அடிமை முறை அனுமதிக்கப்படமாட்டாதென்றும் பேரவை சட்டம் இயற்றியது. இவ்வாறு 1820 முதல் 1850 வரை, முப்பது ஆண்டுகளுக்கு அடிமை முறை, அலிகனிசு மலைகளை பென்சில் வேனிய இராச்சியம் வரையும், ஒகையோ நதியை மிசிசிப்பி இராச் சியம் வரையும், மிசூறியின் வட எல்லையையும், மேற்கே 360 307 அட்சத்தையும் தன் எல்லைகளாகக் கொண்டு அமைந்தது.
இதற்கிடையில், அடிமை முறை தென் இராச்சியங்களில் உறுதி பெற்று, அவற்றின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாக நிலைத்தது. தென் அமெரிக்க இராச்சியங்களில் 90 இலட்சம் சனத் தொகையில், 30 இலட்சத்துக்குச் சற்று மேற்
பட்டவர்கள் அடிமைகள்.
1845 ஆம் ஆண்டுக்குப்பின் அடிமைகளைப்பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளே அமெரிக்க அரசியலின் அதி முக்கிய பிரச்சினையா யிற்று. அவ்வாண்டு தெக்சசு, ஐக்கியத்தில் சேர்ந்ததுடன், மெச்சிக்கோ யுத்தத்தினல் பெறப்பட்ட புது நிலப்பரப்புக்கள், அரசியல் பிரச் சினையைத் திருப்பித் திறந்தன ; நேரே உண்ணுட்டுப் போருக்கும் வழி காட்டின. மெச்சிக்கோவிட மிருந்து வெற்றிகொள்ளப்பட்ட பிரதே சத்தின் பெரும்பகுதி 36' 30 அட்சத்துக்குத் தெற்கே தான் பரந்து கிடந்தது. தெக்சசு ஒரு ‘*அடிமை இராச்சியம்’ ஆக அனுமதிக்கப் பட்டது. ஆனல் கலிபோனியா, நியூ மெச்சிக்கோ, ஊட்டா என்ற இராச்சியங்கள் 1846 இல், ஐக்கியத்தில் சேர விருப்பம் தெரிவித்த

Page 135
238 புது உலக சரித்திரம்
போது அவற்றில் அடிமை முறையை அனுமதிப்பதா இல்லையா என்பது தலையான பிரச்சினையாயிற்று. வட, தென் மக்கள் என்ற இரு சாராரின் ஆசைகளையும் ஒரளவுக்கு திருப்திப்படுத்தி பிரச்சினை, 1850 இல், தீர்க்கப்பட்டது. கலிபோ னியா அடிமையிலா இராச்சிய மாக அனுமதிக்கப்பட்டது; நியூ மெச்சிக்கோ, ஊட்டா இராச்சியங் களின் அடிமை முறைப் பிரச்சினை, தீர்படாத நிலையில் ஐக்கியத்திற்குள் அனுமதிக்கப் பட்டன : இவ்விராச்சியங்களின் அடிமை முறையைப் பற்றிய எதிர்காலத்தை அம் மக்கள் தாமே நிர்ணயிக்க வேண்டுமென விதிக்கப்பட்டது.
இத்தீர்ப்பு மூன்று ஆண்டுகளுக்கு மனத்தாங்கல்களை தற்காலிக மாகத் தணித்தது. என்ருலும் அடிமனத்தின் துயர்கள் சுடர்விட்டு வளர்ந்து கொண்டே வந்தன. 1852 இல், அரியட் பீச்சர் சுட்டோ (Harriet Beecher Stowe) 6) 'Gör smo Gol u GðoTLD GOof? - 9ļuq-GOLDj F L " fiii 356f6ör கொடுமைகளைப்பற்றி தொம் மாமாவின் குடிசை (Uncle Tom's Cabin) என்ற ஒரு கதையை எழுதி பிரச்சினையை முன்னணியில் நிறுத்தினர்.
1854 இல், புது இராச்சியங்களில் அடிமைப் பிரச்சினை மீண்டும் தலைதுாக்கிற்று. அவ்வாண்டு நிறைவேற்றப்பட்ட கன்சசு நெப்ற சுக்காச் சட்டத்தினுல் இவ்விரு மாகாணங்களின் அடிமை நிலையைப் பற்றிய பிரச்சினையை அவ்விராச்சிய மக்கள், தாமே தீர்க்க வேண்டு மென விதிக்கப்பட்டது. உடனே அடிமை முறையை ஆதரித்தவர் களும் எதிர்த்தவர்களும் போட்டா போட்டியில் புது மாகாணங்களில் குடியேற முனைந்தனர். இருசாராருக்குமிடையில் பலத்த போட்டியும் பிணக்கும் ஏற்பட்டன; சூது, வஞ்சகம், இலஞ்சம் எனும் முறைகளைக் கடைப்பிடித்து ஒருவரை யொருவர் வெல்ல முயன்றனர். கை கலப்புக் கள் ஏற்பட்டன : இரத்தமும் சிந்தப்பட்டது. இராச்சியமும் 'இரத் தம் உதிரும் கன்சசு' எனும் பெயரைப் பெற்றது. A.
குடியரசுக் கட்சியின் தோற்றம் :
1854 ஆம் ஆண்டு கன்சசு நெப்றசுக்காச் சட்டத்தைத் தொடர்ந்து உவிக் (Whig) கட்சி மாண்டது ; அதன் சாம்பலிலிருந்து ஒரு புது வல்லபம் வாய்ந்து குடியரசுக் கட்சி (Republican Party) தோன்ற லாயிற்று. அடிமை முறையை வளர விடாது அதைக் கட்டுப்படுத்து வதே அதன் தலையான நோக்காக அமைந்தது. ஆனல் கட்சித் தீவிர வாதிகள் அடிமை முறை எல்லா இராச்சியங்களிலிருந்தும் அகற்றப் பட வேண்டுமென கூக்குரலிட்டனர். இந்த அச்சம் தான் 1860 இல் ஆபிரகாம் இலிங்கன் குடிப்பதியான போது, தென் இராச்சியங்களை உண்ணுட்டுப் போரில் இறங்கத் தூண்டியது ; ஏனெனில் வட இராச்சி யங்கள் நினைத்ததை சாதிக்கும் அளவுக்கு வல்லபத்தைப் பேரவையிலும்

அமெரிக்க ஐக்கிய இராச்சியங்களின் எழுச்சி 239
செனட்டிலும் பிரதிநிதித்துவம் மூலம் பெற்றிருந்தன. 1860 ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுப் புள்ளி விவரங்களில், தென் இராச்சியங்கள் தம் சலுகைகளினதும் சுதந்திரத்தினதும் முடிபையும், அரசியல் அணுதைகளாக வேண்டி வரும் என்ற தன்மையையும் கண்டனர்.
ஆபிரகாம் இலிங்கன் :
1854 க்கும் 1860 க்குமிடையே வட பகுதியில் குடியரசு கட்சியின் ஆதரவில் அடி மைத் தனத்தை எதிர்த்து பிரசாரம் செய்த சிறந்த அரசியல்வாதிகளுள் ஆபிரகாம் இலிங் கனே முன்னணியில் நின்றர். இலிங்கன் 1809 ஆம் ஆண்டு கென்தகியில் மிக வறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பாமர சூழ்நிலையில் வளர்ந்தபோதிலும் உயர்ந்த குணங்களும் உன்னத இலட்சியங்களும் நிறைந்த பண்பாளராகத் திகழ்ந்தார். இளமையி லேயே அடிமை வியாபாரச் சந்தையொன்றில் பெண் அடிமைகள் சாட்டைகளால் அடிபடு வதைக் கண்ட அவர் உள்ளம் துடித்தது. அன்றே அவர் நீக்கிரோக்களும் 'மனிதர்" தான் என்பதை ஒவ்வொரு அமெரிக்கனும் கண்டுணரச் செய்யும்வரை உழைத்தே தீர வேண்டும் என்று சபதம் பூண்டார். அவரது முயற்சியும் ஆர்வமும் அவரை ஒரு சிறந்த நாவலனுகச் செய்தன. அவரது பிரசங்கங்கள் புது குடியரசுக் கட்சியின் அதி நெருங்கிய ஆதரவாளனுக அவரை எடுத்துக் காட்டின. அவர் நாட்டின் பல பாகங்களிலும் நடாத் திய மேடைப் பேச்சுக்கள், சகல மக்களினுடைய அவதானத்தையும் அபிமானத்தையும் கவர்ந்தன. 1859 ஆம் ஆண்டு, 50 வது பராயத்தில் குடிப்பதித் தேர்தலுக்குக் குடியரசுக் கட்சி சிறந்த அரசியலறிஞரும் நாவலருமாய இலிங்கனை தன் அபேட்சகராகத் தெரிந்தெடுத் தது. தனது சொற்பொழிவுகள் ஒன்றில் 'இந்த நாடு பாதி சுதந்திரமாகவும் மறு பாதி அடிமையாகவும் இருக்க முடியாது. ஒரு வீடு தனக்குத்தானே விரோத மாய் பிரியுமாகில் அந்த வீடு நிலை நிற்கமாட்டாது" என்று தன் கொள்கைகளை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். எவ்வாறயினும் அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றி அடிமை நிலையை ஒழிக்கக் கங்கணங் கட்டி நின்றர் இலிங்கன்.
1860 ஆம் ஆண்டு பெலத்த சர்ச்சைகளுக்கிடையே இலிங்கன் ஐக்கிய நாட்டின் குடிப்பதியாக அடிமையிலா இராச்சியங்களின் ஆதர வில் மாத்திரம் தெரிந்தெடுக்கப்பட்டார்.
உண்ணுட்டுப் போரின் ஆரம்பம் :
குடியரசு வாதி இலிங்கன் குடிப்பதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஆறு கிழமைகளுக்குள் தென் கரோலினு ஐக்கியத்தை விட்டு வெளி யேறி, ஒரு தென் பிராந்திய ஐக்கியத்தைச் சிருட்டிக்க வழி வகுத்தது. தென் கரோலினவின் முன்மாதிரியைப் பின்பற்றி 1861 சனவரியில் அலபாமா, புளொரிடா, மிசிசிப்பி, இலுயிசியானு, தெக்சசு, யோச் சியா என்ற பருத்தி இராச்சியங்கள் முறையே, ஐக்கியத்தை விட்டு வெளியேறின. இவையெல்லாம் ஒன்றுசேர்ந்து யெபசன் டேவிசு (3etterson Davies) என்ற குடிப்பதியின் கீழ் 1861 பெப்ரவரி 8 இல் தென் ஐக்கியத்தைப் பிரகடனம் செய்தன. அவ்வாண்டு மார்ச் 4 ஆம் நாள் இலிங்கன் முறைப்படி குடிப்பதிப் பதவியை ஏற்ருரர். ஆரம்ப உரையிலேயே அவர், பிரிவினை சட்டத்துக்கு விரோதமான

Page 136
240 புது உலக சரித்திரம்
தென்று கூறி அதை அங்கீகரிக்க மறுத்தார் ; அவ்வுரையின் இறுதி யில் பழைய ஐக்கியத்தை நிலைநாட்ட எல்லோரும் ஒத்துழைக்க வேண்டுமென மிகவும் உருக்கமான வேண்டுகோளை விடுத்தார். ஆனல் தென் நாடுகள் அவ்வேண்டுகோளுக்கு செவிசாய்க்க மறுத்தன்
ஏப்ரல் 12 ஆம் நாள் தென் கரோலினவின் சாள்சுடன் துறை முகத்திலிருந்த சம்தர் கோட்டை (Fort Sunter) மீது பீரங்கிகள் முழங்கின. யுத்தமும் ஆரம்பமாகியது. எவ்விதப்பட்டும் ஐக்கியத்தை பாதுகாக்க திடம்பூண்டு நின்ற இலிங்கன் இளைஞரை பட்டாளங் களில் சேருமாறு வேண்டுகோளை விடுத்தார். அதே மாதம் வேசி னியா, தெனசி, வடகரோ விஷ்ணு, ஆக்கன் சாசு என்ற எல்லை இராச் சியங்களும் ஐக்கியத்தைவிட்டு விலகின; மிகுதி எல்லை இராச்சியங் களான மிகுறி, கென் தகி, மே சிலந்து இலிங்கனின் கெட்டித்தனத்தி ஞலும் இராசதந்திரத்திலுைம் வட பகுதியுடன் சேர்ந்துகொண்டன. இவ்வாருக 23 வட இராச்சியங்கள் 11 தென் இராச்சியங்களுக் கெதிராகப் போர் புரிய ஆயத்தம் செய்தன.
சனத் தொகையிலும் கைத் தொழில் பெருக்கத்திலும் தெ ன் இராச்சியங்களைவிட வட பகு தி அநுகூலங்களை அதிகம் பெற்றி ருந்தது. கூட்டாட்சி அரசாங்கத்தின் தலைநகரம், ஆயுத தளபாடங்கள், கப்பற்படை, தரைப் படையின் அரைவாசி எல்லாம் வடஇராச்சியத்தவ ருக்கே சாதகமாக அமைந்தன. தென் இராச்சியங்கள் கூடுதலான ஒற்று மையையும், தலைசிறந்த இராணுவத் தளபதிகளையும் , மேலான போர்த் திறமையையும், சகிப்புத் தன்மையையும் கொண்டிருந்தன. யுத்தத்தின் ஆரம்பத்தில் தென் பகுதியினர் முழுமையாகப் பல வெற்றிகளை ஈட்டி னர். வேசினியா வழியாக வட நாட்டவர் தெற்கின் மீது ஆக்கிர மிப்பு நடாத்த எடுத்த சகல முயற்சிகளும் நிர்மூலமாக்கப்பட்டன. அவர்களுடைய திடமான எதிர்ப்பை மேற் கொள்வதற்கு இலிங்கன் எல்லா அடிமைகளுக்கும் சுதந்திரத்தை வழங்கும் உபாயத்தைப் பயன் படுத்தினர். 1863 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம நாள் அடிமை களின் விடுதலை விஞ்ஞாபனம் பிரகடனம் செய்யப்பட்டது. இத னுடன் யுத்த நிலையிலும் மாறுதல் ஏற்பட்டது. வட துருப்புக்கள் நியூஒலியன் சையும் பிற்க பேக்கையும் கைப்பற்றி மிசிசிப்பி பிரதே சத்தைத் தமதாக்கினர். தென் பருத்தி இராச்சியங்கள் இரண் டாகத் துண்டிக்கப்பட்டன : மிசிசிப்பிக்கு மேற்கே கிடந்த இராச்சியங் கள் தென் பகுதியினருடன் தொடர்பின்றி தனிமையாகின. கிழக் கில் தென் இராச்சியத் துருப்புக்கள் கெட்டிசுபேக் (Gettysburg) எனுமிடத்தில் 1863 யூலையில் தோற்கடிக்கப்பட்டன. இவ்வெற்றி யுடன் போரில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. தென் படைகள் மேலும்

அமெரிக்க ஐக்கிய இராச்சியங்களின் எழுச்சி 24惠
தெற்கே துரத்தப்பட்டன : முடிபு 1865 ஏப்ரல் 9 ஆம் நாள் வந்தது. அன்று தென் இராச்சியத் துருப்புக்கள் சரணடைந்ததுடன் உண் ணுட்டுப் போர் முடிவெய்தியது.
இலிங்கனின் மரணம் :
இலிங்கனுக்கு 'உண்ணுட்டு யுத்தத்தின் முடிபை மாத்திரம் காணக் கிடைத்தது. வெற்றி கிட்டிய ஐந்து நாள்களுக்குள் ஏப்ரல் 14 ஆம் நாள் பெரிய வெள்ளிக்கிழமையன்று நாடகம் பார்த்துக் கொண்டி ருக்கும் வேளையில் வில்க்சு பூத் எனும் தீவிரவாதியின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானுர், ஆபிரகாம் இலிங்கன் உவாசிந்த ஆறுக்கு நிக ரான பெருமையுடையவர். நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டி அமெரிக்க ஐக்கியத்தைக் காத்து, அடிமை நிலையை ஒழித்த பெருமை அவரையே சாரும்.
ഉ_് -18

Page 137
242 புது உலக சரித்திரம்
அதிகாரம் 14
நவ யுகத்தின் பிரதான இயக்கங்கள் (1871 - . 1914)
19 ஆம் நூற்றண்டின் மத்திய பாகத்தின் துரிதமான இயக்கங் களுக்குப் பின், 1871 முதல் 1914 ஆம் ஆண்டு யுத்தம் ஈருக ஏறக் குறைய நாற்பது ஆண்டுகளுக்கு ஐரோப்பாவில் அமைதி நிலவிற்று. நெப்போலியப் போர்களை அடுத்து வந்த ஆண்டுகளில் போன்று இக்காலத்திலும் ஐரோப்பிய நாடுகள் தம்மைப் பெலப்படுத்துவதிலும் அபிவிருத்தி செய்வதிலுமே தம் முழுக் கவனத்தையும் செலுத்தின. வியன்ன மாநாடு அணைகட்ட முயன்ற நாட்டினவாதமெனும் வெள் ளப் பெருக்கு ஐரோப்பாவெங்கணும் ஒடி பள்ளத்தாக்குகளை நிரவி யது. பெல்சியம், கிறீசு, சேவியா, உறுாமேனியா, பல்கேரியா என்ற நாடுகள் சுதந்திரம் பெற்று நின்றன. இவற்றினதும் இத்தாலி, செர் மணி என்ற இரு புது அரசுகளின் தோற்றத்துடன் ஐரோப்பாவின் அரச வலுச் சமநிலை நிலைகுலைந்தது. நவமாகத் தோன்றிய இப்புதுச் சக்திகளுக்கும் சம்பவங்களுக்கும் இசைய தத்தம் அமைப்புக்களை மாற்றி யமைக்கும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபட்டன. எல்லாவற்றிலும் மேலாக நாட்டின வாதத்திலும் தாராண்மை வாதத் திலும் புலனை முழுமையாகச் செலுத்தாத ஐரோப்பியர், தம் கண் ணுேட்டத்தை அகில உலகத்தின் மேலும் எறிந்தனர். தூரத்துப் பிரச்சினைகள் யாவும் திடீரென ஐரோப்பிய முக்கியத்துவம் பெற்றன. பிற துறைகளிலிருந்து இக்காலத்தில் ஐரோப்பிய நாடுகள் முன், புதுப் பிரச்சினைகளும் புதுச் சிக்கல்களும் எழுந்தன.
1. ஐரோப்பாவின் தொழில் வளர்ச்சியும் அதன் பயன்களும்
முதல் உலக யுத்தத்துக்கு முற்பட்ட காலத்து ஐரோப்பாவில் நான்கு பிரதான இயக்கங்கள் அவதானத்துக்குரியவை. இவற்றுள் முதலாவது அதன் தொழில் வளர்ச்சியாகும்.
தொழிற்புரட்சி முதற்கண் இங்கிலாந்திலும், பின்னர் பிரான்சு, செர்மனி எனும் நாடுகளிலும் நிகழ்ந்தது : நாளடைவில் போலந்து, இரசியா எனும் தூர நாடுகளின் எல்லைகளையும் அடைந்தது. இந் நூற்றண்டில், தொழிற் புரட்சியின் சக்திகளையும் பயன்களையும் மணி

நவ யுகத்தின் பிரதான இயக்கங்கள் 243
தன் கூடிய திறமையுடனும் தன்னம்பிக்கையுடனும் தன் உபயோகத் துக்கு வயப்படுத்தினன். தொழில் முறைகளினதும் விஞ்ஞான முன் னேற்றத்தினதும் வேகம், நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியு மாக வளர்ச்சியடைந்து வரலாயிற்று. ஒவ்வொரு புதுக் கண்டுபிடித் தலும் அதற்கு முன் தோற்றியதை ஒளி குன்றச் செய்தது. குடிசைக் கைத்தொழில், உள்ந்திரத் தொழில் முறைக்கு இடம் விட்டுக் கொடுத் தது. எந்திரத் தொழில் முறையும் பல புரட்சிகரமான மாற்றங் களுக்குப் பாத்திரவாளியாயிற்று. நீராவி யுகம் மின்சார யுகத்துக் கும், நிலக்கரி, எண்ணெய் யுகத்துக்கும் முறையே மாறின. 1840 முதல் புகையிரதமும், 1880 முதல் துவிச்சக்கர வண்டியும், 20 ஆம் நூற்ருண்டின் ஆரம்பத்துடன் மோட்டார் வாகன மும் போக்குவரந்து முறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தின ஆகாயப் போக்குவரத்துக்கான சில பரிசோதனைகளும் வெற்றிகரமாக நடந் தேறின. கம்பித் தந்தி முறை, கம்பியிலா வானுெலித் தந்திமுறைக் குத் தன் இடத்தை ஈந்தது. மருத்துவம், இரசாயனம், பெளதிகம், ஏனைய விஞ்ஞானத் துறைகள் அனைத்தும் துரிதமான முன்னேற்றத் தைக் காட்டின. பெஞ்சமின் பிராங்களின், மைக்கல் பாரடே, தோமசு ஆல்வா எடிசன், கிரகம் பெல், கெல்வின் பிரபு, மாக் கோனி ஆகியோர் இக்காலத்து தலைசிறந்த விஞ்ஞானிகளில் சிலர். எட்வட் யெனர், இலூயி பாசிற்றர் (Louis Pasteur) கியூரி அம் மையார், உருெண்யன் (Rontgen) என்பவர்கள் மருத்துவ உலகிற்கு பல நவீன முறைகளைப் பெற்றுத் தந்தனர்.
தொழிற் புரட்சியின் மாற்றங்களினல் பொருளாதார வாழ்க்கை அடியோடு மாறிற்று. தொழிற்றுறையில் மூலதனத்தின் ஆதிக்கம் பெருகி முதலாளித்துவம் தோன்றியது. மனிதர் தம் கைகளாலும் சிறு கருவிகளாலுமன்றிப் பெரும் எந்திரங்களின் உதவியைக் கொண்டு உற் பத்தியைப் பெருக்கும் காலம் பிறந்தது. விஞ்ஞானிகள் கண்டு பிடித்த நவீனப் போக்குவரத்து முறைகளினல் குறைந்த நேரத்தில் ஓரிடம் விட்டு ஓரிடம் செல்லவும், தொடர்பு வைத்துக் கொள்ளவும் முடிந்தது ; தாரத் தொலைவும் காலத்தொலைவும் ஒழிந்தன ; உலகத்தின் பல்வேறு பகுதிகளில் சிதறிக் கிடந்த மக்கள் நெருங்கிப் பிணைக்கப்பட்டனர். உல கம் முழுவதுமே ஒரு சந்தையாக இணைக்கப்பட்டது; இதுவரை ஆரர் யப்படாத பிரதேசங்களை ஆராய்ச்சி செய்யவும், அன்னிய சந்தைக் ளைத் திறக்கவும், உலக வியாபாரத்தை விருத்தி செய்யவும் வழி பிறந் தது. வளர்ந்து வரும் தொழிலுக்கும் பெருகி வரும் வணிகத்துக்கும் துணையாக வங்கிகளும் மற்றும் நிதி நிலையங்களும் ஏற்பட்டன. கடன் முறைகள் சர்வதேச முக்கியத்துவம் பெற்றன. மாபெரும் தொழில் வணிக நிலையங்களை நடத்தத் தேவைப்படும் பெருமுதலைத் திரட்ட

Page 138
244 புது உலக சரித்திரம்
ஐக்கிய மூலதனக் கம்பெனி முறை தோற்றியது. இவ்வாறு, பொரு ளாதார, நிதித்துறைகளில் எல்லா இன மக்களும் ஒருவரை யொருவர் நம்பிவாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்புது தொழில் முறையிலிருந்து புது இயக்கங்கள் வெளி த் தோன்றின. புது வகுப்புக்கள் தம் உரிமைகளையும் அதிகாரங்களையும் கோரிக் குரல் எழுப்பின.
2. தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி
தொழிலாள வர்க்கத்தின் இயக்கமும் அதன் பல்வேறுபட்ட பரி ணமிப்புக்களுமே இக்காலத்தினது இரண்டாவது பெரும் சிறப்பாகும்.
தொழிற் புரட்சியின் விளைவாக சமூகம், முதலாளி, தொளிலாளி என்ற இரு வர்க்கங்களாகப் பிளவுபட்டது. வாய்ப்பும் திறமையும் உள்ளவர்கள் தொழில்களை நடத்தி, இலாபம் தேடிச் செல்வர்களா யினர் ; இச்செல்வம் மிகச் சிலர் கையிலேயே குவிந்தது. மூலதனம், முயற்சி நிருவாகத்திறனற்றவர்கள் கூலியாகத் தம் உழைப்பை நல்கி வருமானக் குறைவால். வறுமையில் வாடினர். பாடு, (Labour) மற் றப் பண்டங்களைப் போன்று விலை க்கு விற்பனையாயிற்று. முதலாளி களுக்கு பாட்டின் தேவை எப்பொழுது ஏற்படுகிறதோ, அப்பொழுது தான் பாட்டாளி தன்னிலிருந்து பிரிக்கமுடியாத பாட்டை விற்கமுடி யும். ஆகவே பாட்டாளி முதலாளியை நம்பி வாழ வேண்டிய நிர்ப்பந் தத்துக்குள்ளானன். தவிர, சிகிக்க முடியாத தீங்குகளும், இன் ன ல் களும் அவசரம், அறிவின்மை, சுயநலம், அநுபவமின்மை எனும் கார ணங்களினல் ஆலைத் தொழில் முறைக்குள்ளும் பாட்டாளி வகுப்பின் வாழ்விலும் புகுத்தப்பட்டன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சம் பளத்துக்கு நீண்ட மணித்தியாலங்களுக்கு உளைக்கவும், சுகாதார வசதி களற்ற சூழ் நிலைகளில் வேலை செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். நாளடைவில் தொழிலாளி தன் உ ட ல் ஆரோக்கியத்தை இழந்து, அவனை எப்பொழுதும் எதிர்த்து நின்ற பட்டினிக்கு எதிரே போராட வேண்டிய கூலி அடிமையானன் (Wage Slave). தவிர இடையிடையே தோற்றிய வேலையில்லாத் திண்டாட்டம் அவனுக்கு நிம்மதியே கொடுக்க வில்லை.
ஆலைத் தொழில் முறை தோன்றிய பொழுது, அவற்றின் அமைப் பையும் வேலை நிபந்தனைகளையும் கண்காணிக்க அரசாங்கம் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. வேலைநேரம், கூலி, சுகாதார வசதி, பாது காப்பு நல ஏற்பாடு முதலியவற்றில் தான் தலையிடுவது தகுதியற்றது என எண்ணியது, அரசாங்கம். விஞ்ஞானத்தால் கண்டறியப்பட்ட

நவ யுகத்தின் பிரதான இயக்கங்கள் 245
புதுமைகளைப் பயன்படுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, நாட்டின் செல் வத்தை அதிகரிக்கச் செய்யத் தொழில் தலைவர்கட்குச் செயல் சுதந் திரம் இருக்கவேண்டுமென எண்ணியே, அது கருமமாற்றியது. இவ் வாறு செல்வத்துக்கிடையே வறுமையையும், செழிப்புக்கிடையே நிலை பேறின்மையையும் நிறையக் காணக் கிடைத்தது.
மனித தர்மத்துக்கும் நீதிக்கும் முரண்பட்ட இக் கொடிய சூழ் நிலையைக் கண்ட தொழில் உலகம், தொழிலாளரின் நிலையைச் சீர் திருத்த வேண்டு மென்ற ஏகமனதான குரலை எழுப்பியது. இத் தூண்டுதல் மூன்று வழிகளில் பரிணமித்தது.
G5 (Tf) Fril 3, 34 & 5th (Trade Unionism):
ஆலைத் தொழில் முறையின் கொடூரங்களிலிருந்தும், முதலாளிக ளின் அடிமைத்தனத்திலிருந்தும் பாட்டாளிகள் தம்மைப் பாது காத்து க் கொள் ள வேண் டு மென் ற எண்ணிங்களிலிருந்தே தொழிற் சங்க இயக்கம் ஆரம்பித்தது. வெகு விரைவில், தொழிலாளி தன் தனிச் செயல்களிலும் பார்க்க கூட்டு நடவடிக்கைகளும், கூட்டாக விலை பேசுதலும் அதி பயனைத் தரவல்லவை என உணர்ந்து கொண்டான். ஒரே தொழிலில் ஈடுபட்ட கூலியாட்கள் ஒற்றுமைப் பட வேண்டுமென்ற கருத்து 18 ஆம் நூற்றண்டின் இறுதிக்கு முன்னரே, வளர்ச்சி யடைந்து நின்றது. ஆனல் இவ்வாரம்ப தொழிற் சங்கங்கள் பலாத்கார முறைகளைக் கையாண்டமையினல், இங்கிலாந் தில் 1824 வரை, அவை சட்டத்துக்கு விரோதமான, பாதக அமைப் புக்கள் என தடை செய்யப்பட்டிருந்தன. 1825 முதல், அவை ஒரளவுக்கு சுயாதீனம் பெற்றபோதும், கிளாற் சனின் (Gladstone) 1871 ஆம் ஆண்டுச் சட்டம் தான், அவற்றிற்கு சட்டபூர்வமான இடத்தைப் பெற்றுக் கொடுத்தது. பிரான்சில் 1791 ஆம் ஆண்டு புரட்சி விதியினல் தொழிலுடனும் வியாபாரத்துடனும் சம்பந்தப் பட்ட தொழிற் சங்கங்கள் யாவும் குலைக்கப்பட்டன. இரண்டாம் பேரரசின் இறுதி வருடங்களில் அவை அங்கீகரிக்கப்பட்டு உவால்டெக் கி.ரூசோ (Waldeck--Rousseau) வின் 1884 ஆம் ஆண்டு விதியினல் உக்தியோக பூர்வமான நிலையைப் பெற்றன. செர்மனியில் பிசுமாக் கின் 1878 ஆம் ஆண்டு விதி தொழிற் சங்கங்களைத் தடைசெய்த போதும் அவை சட்டத்தின் மறைவில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் போன்று, விரைவாக வளர்ச்சியடைந்தன. நாளடைவில் ஐரோப்பா வெங்கணும் தொழிற்சங்கங்கள் பெருகி, செல்வாக்குப் பெறலாயின. இன்று, தொழிற் சங்க அமைப்பு இல்லாத தொழிலையோ, உத்தி யோகத்தையே காண்பது அரிதிலும் அரிது.
A l8

Page 139
246 புது உலக சரித்திரம்
இங்கிலாந்தில் 1890 ஆம் ஆண்டு கெர் ஆடி (Keit Hardy) , ' சுயேச்சை LLLL TTT TT T T TLLT TSStTTtS SLLLLLLLLlLmLLL cLLtLLLL LLLLLLLLSS TTTT TTTLSS STT பாராளுமன்றத்தில் பிரதிநிதித்தும் பெற்று, தொழிலாளர் நன்  ைமக்காக பாடுபட முனைந்தது.
1901 இல் தாப் வேல் (Taff Wale) புகையிரதக் கம்பனியில் ஏற்பட்ட தகராறின் விளைவாக, நீதி மன்றம் தொழிற் சங்கங்களின் நிதி பறிமுதல் செய்யப்படலாமென தீர்த் தது. 1905 இல் ஏற்பட்ட தொழில் விவகார விதி (Trade Disputes Act) இயற்றப்பட் டது; இவ்விதி குற்றங்கள் இழைத்த தனி அங்கத்தினரின் மீது வழக்குத் தொடர வேண்டு மென்றும், தொழிற் சங்கங்களின் மீது வழக் குத் தொடரக் கூடாதெனவும் கூறி சங்கங்களின் உரிமைகளைப் பாதுகாத்தது. இது தொழிற்சங்கங்களுக்கு ஒரு மகத்தான வெற்றியாயிற்று.
1906 இலிருந்து தொழிற் கட்சிப் பிரதிநிதிகள் பாராளுமன்றங்களில் அதிகரித்கக் தொடங்கினர் ; 1924, 1929 ஆம் ஆண்டுகளில் தொழிற் கட்சி குறுகியகால அரசாங்கங் களையும் அமைத்தது. 1913 இல் தொழிற் சங்கங்கள் அ ர சி ய ல் கருமங்களுக்காகப் பணம் சேகரிக்கலாமெனும் உரிமையையும் பெற்றது. 1945 இல் தான் தொழிற் கட்சி அதி பெரிய வெற்றியை ஈட்டியது. அவ்வாண்டில், மந்திரத்தை அமைத்து அரசாங் கத்தை நடாத்தும் அதிகாரத்தைப் பெறலாயிற்று.
ஆரம்பத்தில், முதலாளிகளுடன் போர்புரியும் நோக்குடன் அமைக்
கப் பெற்ற தொழிற் சங்கங்கள், இன்று எல்லா நாடுகளிலும் அதி சக்தி வாய்ந்த தாபனங்களாகத் திகழ்கின்றன. இவை பெரும்பான் மையான தொழில் தகராறுகளைத் தாங்களே நேரடிப் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கவும், தொழிலைப் பற்றிய நிபந்தனைகள், சம் பள விகிதங்கள் முதலியவற்றை தொழிலாளி, முதலாளி மீது கட் டளையிட வல்ல உரிமைகளுடைய அமைப்புக்களாக மாறியுள்ளன. இங்கிலாந்தின் தொழிற் சங்கம் அரசாங்கத்தைக் கைப்பற்றக்கூடிய அளவு அரசியல் செல்வாக்கையும் பெற்றுவிட்டது. இன்று தொழிற் சங்கங்கள் தொழிற் துறையின் அதிகாரிகளாகவும், பொருளாதாரத் தின் பெரும் பகுதியின் எசமான்களாகவும் இடம் பெற்றுவிட்டன.
சமூகவுடைமைவாதம் :
19 ஆம் நூற்ருண்டின் இறுதிக்கு முன், சமூகவுடைமைவாதம் (Socialism) என்ற புதுக் கோட்பாடு, தாராண்மைவாதத்தின் அர சியல், தத்துவக் கொள்கைகளை ஆட்சேபிக்கலாயிற்று.
சமூகவுடைமைவாதம் என்ற பதத்தை திட்டவட்டமாக வியாக்கி யானம் செய்வது இலகுவானதன்று. ‘எத்தனை சமூகவுடைமை வாதிகள் இருக்கின்றனரேர் அத்தனை விதமாக சமூகவுடைமை வாதத்தின் பொருளை விளக்கலாம்’ எனக் கூறப் பெற்றுள்ளது. ஐரோப்பாவில் பல எழுத்தாளர்களும், பல கட்சிகளும், தாம் கூறு வதே சமூகவுடைமைவாதத்தின் அசல் பொருள் எனக் கூறி, தத்தம் கண்களுக்குத் தென்பட்டவாறு புதுப்புதுக் கருத்துக்களுடன் நூல்களை

நவ யுகத்தின் பிரதான இயக்கங்கள் 24锣
எழுதிவிட்டனர். அவ்வப்போது சிலர், சமூகவுடைமைவாதம் என் பது பொருள் உள்ளோர்க்கும், இல்லாதார்க்கும் இடையில் நடை பெறும் சமர் என வர்ணித்தனர் ; சிலர் அதை ஒரு பொருளாதார திட்டமாக வரைந்தனர் ; வேறு சிலர் விஞ்ஞான முறையில் வகுத் தனர் ; இன்னும் வேறு சிலர் அதை ஒர் இலட்சிய அமைப்பாக (Utopian Socialism) is gllgaori.
இலட்சிய சமூகவுடைமைவாதம் 18 ஆம் நூற்றண்டின் பிற் பகுதியில் பிரான்ச தேசத்தின் சைமன் போரியர், இங்கிலாந்தின் உருெபட் ஓவன் போன்றவர்களின் எழுத்தால் உயர்வு பெற்றது. அவர்கள் தீட்டிய இலட்சிய சமூகம் மக்களின் விருப்பப்படி ஏற்படும், அங்கு போட்டிக்கும் கட்டாயத்துக்கும் இடமிராது ; கூட்டுறவும் அன்னியோன் னியமுமே நிலைக்கும். தனி உடைமை தலைகாட்டாது ; சொத்து முழுவதும் சமூகத்தின் சொந்தமாகவே இருக்கும். வருமானம் சமூக மக்களிடையே சமமாகப் பங்கிடப்படும்.
கிறித்தவ சமூகவுடைமைவாதம் 19 ஆம் நூற்ருண்டின் சமூகச் சீர்திருத்தவாதிக ளிடையே எழுந்தது. சமூகவுடைமை வயதமும் கிறித்தவமும் ஒன்றுக் கொன்று முரண் பட்டவையன்று. நல்ல பகிர்வு முறையை ஏற்படுத்தல், நிலத்தை நாட்டுரிமையாக்கல், பொது நல ஆட்சியை அமைத்தல என்பவை கிறித்தவ சமூகவுடைமை வாதத்தின் முக்கிய இயல் புளாகும்.
பேபியின் சமூகவுடைமை வாதம் என்ற தத்துவத்தை கற்பித்தவர்களில் முக்கிய Lortoo76, its gir Gus ' s (G. Bernarb Shaw), a Gai gos (H. G. Wells) cal) and (Beveridge) உவெப் (Webb) ஆகியோர் வறுமைக்குக் கார ண ம் வேலையின்மையும், வியாதியுமே என்றனர். எனவே சமுதாயத்தில் வறுமையை ஒழிக்க வேண்டியது அரசாங் கத்தின் பொறுப்பு என வற்புறுத்தினர். இதனலேயே ஆங்கில அரசியற் கட்சிகள் பொரு ளாதார பிரச்சினைக்கு விமோசனம் தேட முனைந்தனர்.
சமூகவுடைமைவாதம் எல்லோர் தலைக்கும் பொருந்தக் கூடிய தொப்பியாக மாறிற்று. இக்காலத்தில் சமூகவுடைமைவாதம் பொதுப் பட, தனிப்பட்ட முதலாளித்துவத்தைக் கண்டிக்கிறது. ஏனெனில் தனிப் பட்டவரின் நிருவாகம் ஒரு சிலரின் பணப் பெருக்கத்துக்குத்தான் பயன்படுகிறது. பொருளாதாரத் துறையிலும், சமுதாயத்துறையிலும் அது, உழைப்பாளர், முதலாளிகள், செல்வந்தர்கள், நிலக்கிழார், பொருளுடையோர் என்பவர்களுக்கு எதிராக தொழிலாளர்களின் நல வுரிமைகளைப் பாதுகாக்க முயலுகின்றது. மூலதனம், செல்வத்துக்கான மூலங்கள், பெரிய தொழில்கள், பொதுச் சேவைகள், உற்பத்திச்சாத னங்கள் என்பவை நாட்டுரிமையாக்கப்படல் வேண்டுமென்றும், பொரு ளாதாரம் திட்டமிடப்பட்ட வழிகளில் நடாத்தப்படவேண்டுமென் றும் அது கூறுகிறது. மேலும் சமூகவுடைமைவாதம் தொழிலாளரின் பொதுநல விருக்திக்கான பொருளாதாரம், சமூக கல்வித் திட்டங் களையும் ஆதரிக்கின்றது.

Page 140
248 புது உலக சரித்திரம்
இப்பொது இலட்சியங்களைக் கொண்ட அமைப்பின் மத்தியில் ஏராளமான வேறுபாடுகள் நிலவுகின்றன. எச்சாதனங்கள், எவ்வள வுக்கு நாட்டுரிமையாக்கப்படல் வேண்டும், தனி உடைமைகளை நட்ட ஈடு கொடுத்து நாட்டுரிமையாக்குவதா அல்லது நட்ட ஈடின்றி பறி முதல் செய்வதா, பாராளுமன்ற ஆட்சி முறைக்கும் பொருளாதாரத் துக்கும், அரசாட்சிக்கும் புரட்சிவாதத்துக்குமிடையேயுள்ள தொடர் புகள் எவை இவற்றைப்பற்றி எழுந்த அபிப்பிராய பேதங்கள் பல வழிகளில் பரிணமித்துள்ளன. பிரித்தானிய தொழிற் கட்சி, சில பிரெஞ்சு, செர்மன் மிதவாத சமூகவுடைமைவாதிகள் (Moderate Socialists) பாராளுமன்ற ஆட்சி முறையின் தத்துவங்களுக்கேற்ப நட்ட ஈடு கொடுத்துச் சொத்துக்களை நாட்டுரிமையாக்கும் எளிமை யான சமூகவுடைமைவாதத்தை ஆதரிக்கின்றனர். “தொழில்களைத் திடீர்ப் புரட்சியால் நாட்டுரிமையாக்கலாகாது ; சனநாயக முறைப் 'படி அமைதியான வகையில் நாட்டுரிமையாக்க வேண்டும்" என்பதே அவர்களது சித்தாந்தம். பிரான்சிலும், இத்தாலியிலும் ஒரு காலத் தில் மேன்மை பெற்ற சிந்திக்கலியம் (Syndicalism) ஒவ்வொரு தொழிலிலும் அதன் தொழிலாளிகளே சொந்தக்காரராக வேண்டு மென்ற கொள்கையை ஆதரிக்கிறது தொழிற்சாலைகளை அரசாங்கம் நிருவகிப்பதற்குப் பதிலாக தொழிற் சங்கமே அதை நிருவகிக்க வேண்டுமென்றும், தொழிற் சங்க இயக்கமே தொழில்துறை அமைப் பின் அடிப்படையாக நிலவவேண்டுமென்றும் வற்புறுத்துகிறது, சிந் திக்கலியம். பாசிச இத்தாலி (Fascist Italy) இப்பேர்ப்பட்ட அடிப் uGol lu?ai) at '9pay sa prafarisub (Co-operative state) gaGirGop ஏற்படுத்தியது.
இதே விதமாக தொழிலாளர் கையாளக்கூடிய முறைகளையும் வழி வகைகளையும் பற்றி பல கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. சிலர் தொழில் நிறுத்தம், ஒன்றியொதுக்கல் (Boycott), கீழறை (Sabotage) எனும் முறைகளை ஆதரித்தனர். தொழில் நிறுத்தம், உள்ளிருப்பு வேலை நிறுத்தம் (Sit down strike), அனுதாப வேலை giggisth (Sympathefic sfrike), GLIT gil Gaia) is giggilb (General strike) GôudğI6QurT (3a)uäka) Gô)éFui`iğ56ö) (Gogslow), uD,jiö?uLu6ñ) Gô)5F uiiğ5ôi) (Pickefing), எனும் பல வழிகளில் இன்று பரிணமித்துள்ளது. வேறு சிலர் பாராளுமன்ற முறைகளைப் பின்பற்ற வேண்டு மென்றனர்; இன்னும் வேறு சிலர் வகுப்புப் போராட்டமும் புரட்சியுமே தொழிலாளரின் தலை சிறந்த ஆயுதங்களென்றனர். பொதுவுடமை வாதம் :
இன்றைய உலகில் பொதுவுடைமை வாதத்துக்கும் ஏனைய தத்து வங்களுக்கு மிடையில் எழுந்துள்ள வேறுபாடுகள் அதி முக்கியத்துவம்

நவ யுகத்தின் பிரதான இயக்கங்கள் 949
வாய்ந்தவை; ஏனெளில் பொதுவுடைமை வாதம் ஒரு சீரான விருட்ச மாக வளர்ந்து விட்டது. இது தனிப்பட்டவரின் சொத்துரிமைக்குப் பதிலாக சமூகச் சொத்துரிமையையும் தனித் தொழில் முயற்சிக்குப் பதிலாக சமூகக் கூட்டுத் தொழில் முறையையும் அது கையாளுகிறது. உற்பத்திக் காரணிகள் யாவும் சமூகத்தின் பொதுவுடைமையாக்கப் பட்டுப் பொது நிருவாகம் செய்யப்படும் ; இலாப நோக்கமும் தனிப்பட்டேர்ர் இலாபம் பெறுவதும் இடம் பெற மாட்டா; தொழில் சமூகத்தின் பொது நலன் கருதியே நடாத்தப்படும். எனக்கூறுர இப் பொதுவுடைமை வாதம் இரசிய பொருளாதாரத்திலிருந்து பிரிக்க முடியாத அம்சமாக இடம்பெற்று விட்டது.
8, Tóir LDT), (Karl Marx):
இக்கால பொதுவுடைமை வாதத்தின் தந்தை காள் மாட்சு. இவருக்குமுன் இங்கிலாந்தில் தொமசு ஒசுக்கின் (Thomas Hodgskin, 1784-1869), உவில்லியம் தொம்சன் (William Thomson, 1785-- 1833), 2 Fear i u L. 69 Gd Gir (Robert Owen, 1771-1858) GLluíTGÖTAD சமூகவுடைமைவாதிகளும், பிரான்சில் செயின்ட் சைமன் (Saint Simon , 1760 -- 1825), Gur flui (Fourier, 1772-1837) top 5-6ăr, (Proudhon 1809-65) என்பவர்களும் ஏ ற் கன வே தோற்றியிருந்தனர். மேலும் 1793 க்கும் 1848 க்கு மிடையில் பிரான்சு, தொழிலாளர் களின் நேரடியான சமூகவுடைமைப் பரிசோதனையையும் கண்டிருந்தது.
ஆனல் மாட்சுக்கு முற்பட்ட சமூகவுடைமை வாதிகளில் ஒருவராவது ஒரு உறுதியான அரசியற் கட்சியை நிறுவியதில்லை. சமூகவுடைமை வாதத்தின் தத்துவங்களை ஒழுங்காக வகுத்த பெருமையும், ஒரு சர்வ தேச சமூகவாத இயக்கத்தை ஆரம்பித்து வைத்த பெருமையும் மாட்சுக்கும், அவருடன் அயராது உழைத்த என்சல் சுக்குமே (Engels) உரியன.
காள் மாட்சு 1818 ஆம் ஆண்டு, பிரசியாவில் திரியர் (Trier) எனுமிடத்தில் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு கிறித்தவ குடும்பத்தில் பிறந்தார். பிரசிய அாசாங்கத் தில் ஒரு நீதி அலுவலாளனுகக் கடமையாற்றிய தந்தையின் இல்லத்தில் செளகரியங்களுக் கும் அறிவு விருததிக்கும் குறைவேயில்லை. பொன் (Bonn) பேளின் பல்கலைக் கழகங் களில் பயின்ற மாட்சு, சரித்திரம், தத்துவஞானம், சட்டவியல், பொருளாதாரம் எனும் துறைகளில் விசேட நாட்டமும் பாண்டித்தியமும் பெற்றர். அவரது காலத்துப் பல இளை ஞரைப் போன்று, மாட்சும், எகல் (Hegel) என்ற தத்துவ ஞானியின் கொள்கைகனி குற் கவரப்பட்டு, அவரிடமே சரித்திரத்தைப் பற்றுய ஞானத்தைப் பெற்றர். மாட்சு வெகு விரைவில் இளம் செர்மனியின் புரட்சிவாத, சனநாயகக் சிளர்ச்சிகளின் பலமான ஆதர வாளரூகி, 1842 இல் ஒரு தீவிரப் பத்திரிகையின் ஆசிரியாரூர். அடுத்த ஆண்டு , அப்பத்திரிகை பிரசிய அரசாங்கத்தினுல் தடை செய்யப்பட்டபோது, அவர் பரிசில் தஞ்சம் புகுந்தார். அங்கு தான் அவரது வாழ் நாள் பிரான சிநேகிதனும், உதவியாளருமான எஞ்சல்சை (1820-95)ச் சந்தித்தார். 1845 இல், அவர் பரிசிலிருந்து நாடு கடத்தப்பட்ட

Page 141
250 புது உலக சரித்திரம்
போது, தன் மனைவியுடனும் எஞ்சல்சுடனும் பிற சல்சில் குடியேறிஞர். இக் காலத்திலேயே மாட்சு ஒரு உறுதியான சமூகவுடைமைவாதி எனப் பிரபல்யம் பெற்று விட்டார். 1847 இல் பரிசிலுள்ள செர்மன் பொதுவுடைமைச் சங்கம், தம் கட்சிக்கு ஒரு பிரகடனத்தைத் தயாரிக் கும் பொறுப்பை மாட்சிடம் ஒப்படைத்தது. இம் முயற்சியின் பயனகவே 1848 ஆம் ஆண் டில் ‘இக்கால சமூகவுடைமை வாதத்தின் பிறப்புக் குரல்" எனப் புகழ் பெற்ற STTLTTO TLL S T TT T TT S SLLLLL LLLLlLLLLLLL LL LLltLSLLLlL SS LTTT0TTtTTTS S AMTLS வாண்டு செர்மனியில் புரட்சித் தீ பரவிய பொழுது அவர் அங்கு சென்று ஒரு சமூக வுடைமைப் பத்திரிகையை நடாத்தினுா ; புரட்சி நசுக்கப்பட்டதுடன் பத்திரிகையும் மறைந் தது. அதன் பின்னா இலண்டனில் தஞ்சம் புகுந்து அங்கு பிரிட்டிசு ‘லிபரல்" பத் திரிகையில் ஒரு விமர்சகராக கடமையாற்றினர். நாள் தவருது பிரிட்டிசு நூதனசாலை யின் (British Museum) கண் அமைந்த நூலகத்திற்குச் சென்று கிடைத்த நூல் களை ஆழமாகப் படித்து, தமது கொள்கைகளைச் சீராகவும் தெளிவாகவும் வகுத்து, தமது மிகப் பெரிய நூலான மூலதனத்தை (Das Kapital) தயாரித்தார். **மூலதனம்" ஒரு விறைப் பான பொருளாதார நூல் ; ஆயினும் உரூசோவின் 'சமூக ஒப்பந்தம்' போன்று, அது ஒரு நம்பிக்கையின் மறை நூலாகவும் எண்ணங்களிலும் அரசியலிலும் புரட்சிகரமான மாற் றங்களை உண்டு பண்ண வல்ல ஒரு பிரகடனமாக அமைந்தது. சமூக ஒப்பந்தத்தின் பிசு ரத்துக்கும் பிரெஞ்சுப் புரட்சிக்கு மிடையே 23 ஆண்டு இடைவெளி இருந்தது போன்று மூலதனத்தின் பிரிசுரத்துக்கும் இரசியப் புாட்சிக்கு மிடையே ஒரு 27 ஆண்டு இடை வெளி இருந்தது.
மாட்சுவாதத்தின் அடிப்படைக் கொள்கை முரணறு தருக்க வுலோகாயதம் (Dialectical Materialism) எனும் தத்துவமாகும். மாட்சு இக்கோட்பாட்டை எகல் என்ற சரித்திராசிரியரிடமிருந்தே கற்றுக் கொண்டார். மனித வரலாற்றை இயக்குவிக்கும் சக்தி பொருளாதாரம் ; இதை மீற மனிதனுக்கு வல்லபமில்லை. ஏனெ னில் பொருளாதாரத் திட்டமே மனித வாழ்க்கையின் உருவங்களை யும், எண்ணங்களையும், நிறுவகங்களையும், சமூகத்தையும் உருவாக்கு கின்றது. வரலாற்றில் காணப்பெறும் நெருக்கடிகளும், மாற்றங்களும் உண்மையில் பொருளாதார அடிப்படையிலிருந்து எழுந்தவையே.
மாற்றங்களை விளைவிக்கும் சக்தி வகுப்புப் போராட்டம் (Class struggle) என்ருர் மாட்சு. எகலின் தத்துவத்தின் முதல்நிலை, எதிர் நிலை, கலப்பு நிலை என்றிருப்பது போன்று, மாட்சின் கோட்பாட்டில் பொருளாதாரச் சகடத்துக்கு அச்சின் இரு முனைகள் போல் பணியாற் றுவது இரு பொருளாதார வகுப்புக்கள் என வர்ணித்தார். எக்காலத் திலும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பொருளாதார வருப்புக்கள் இருந்தே வந்திருக்கின்றன. ஒரு வகுப்பு செல்வமும் பொருழும், பொரு ளாதாரப் பலமும் படைத்தது; மற்றது பொருளில்லா, பல மில்லா, செல்வமில்லா பாட்டாளிவகுப்பு ; ஆதிகாலந் தொட்டு இவ்வகுப் புப் போர் நிகழ்ந்து வந்துள்ளது என்றர். மாட்சு சரித்திரம் முழுவ தையும் வர்க்கப்போராட்டத்தின் அடிப்படையிலேயே வியாக்கியானஞ் செய்தார். புராதன காலத்திலிருந்து இடைக்காலத்துக்கும், இடைக் காலத்திலிருந்து இக்காலத்துக்கும் ஏற்பட்டுள்ள சரித்திர முன்னேற்

நவ யுகத்தின் பிரதான இயக்கங்கள் 25I
றமானது ஒவ்வொரு காலத்திலும் அதிகார வர்க்கங்களின் வீழ்ச்சியை யும், அடிமைப்படுத்தப்பட்ட வகுப்புக்களின் எழுச்சியையும் விடுதலை யையுமே உட்பொருளாகக் கொண்டுள்ளதென மாட்சு வரைவிலக் கணம் கூறினர்.
முதலாளி-தொழிலாளி வகுப்புக்களுக்கிடையே எழும் பூசலுக் குக் காரணம் முதலாளி தொழிலாளியைச் சுரண்டுவதாகும். இதை மாட்சு மிகை மதிப்புக் கொள்கையினுல் (Surplus Walue) விளக்கினர். பாடு எல்லாப் பொருள்களிலும் அடங்கியுள்ளது. பண்டங்களுக்கு விலைமதிப்பு ஏற்படுவதற்கு ஒரேயொரு காரணம், அவைகளிலடங்கி யிருக்கும் தொழிலாளியின் சரீர உழைப்பேயாகும். பாட்டை நல்கும் பாட்டாளி, தன் உழைப்பின் மதிப்பிற்கு அதிகமாகவே பொருளை உற்பத்தி செய்கிருன். ஆனல் அவன் தன் உற்பத்திப் பொருளில் தனக்குரிய பங்கைப் பெறுவதில்லை. அவன் பெறும் கூலி, அவனது உற்பத்தியின் மதிப்பைவிடக் குறைந்ததாகும். மிகை மதிப்பை முத லாளி பறித்து விடுகிருன்.
மாட்சு தான் வரைந்த இலட்சியத்தை உடனடியாக அடைவ தற்கு பாட்டாளிகளில் வர்க்க உணர்ச்சியை உண்டு பண்ணி, முத லாளித்துவத்துக் கெதிராக புரட்சி செய்ய வேண்டு மென்றும், முதலா ளித்துவத்தை அழித்துவிட்டு, பாட்டாளியின் சருவாதிகாரத்தையே (Dictatorship of the proletariat) pimpiau G3NJGðITGGOLDGOT Gayub Sijibu (jgsririi. முதலாளிகள் மறைந்து சமூகத்தில் அமைதி ஏற்படும்வரை அரசாங் கம் வல்லாட்சியையும், கொடூரங்கள் நிறைந்த மார்க்கத்தையும் கடைப்பிடிக்கும். ஆனல் அமைதி நிலவும் காலத்தில் சமுதாயத்துக்கோ அரசாங்கத்துக்கோ தேவையிராது. அன்று பூமியில் சுவர்க்கமான பொதுவுடைமை உலகம் மலரும் : அரசாங்கம், சட்டம், அடக்குமுறை என்பவை கணியுதிர்ந்தவாறு மறைந்துவிடும். மாட்சு, இவ்வாறு ஒரு இலட்சிய அமைப்பைச் சிருட்டித்து, பாட்டாளிகளின் கண்முன் தொங்கவிட்டார். இச் சுவர்க்கத்தைக் கண்டு தொழிலாளரும் மதி மயங்கினர். நாளடைவில் இது ஒரு பெரிய ஏமாற்று வித்தையாக மாறிற்று. இச் சுவர்க்க உலகத்தை எதிர்நோக்கியே இரசியா முன் னேறுகிறதெனக் கூறி, ஆட்சியாளர் பாட்டாளி மக்களை சொல்லொ குனுத் துன்பத்திலும், கவலையிலும் அமிழ்த்தியுள்ளார்கள்.
காள் மாட்சின் காலம் முதல் இன்று வரை உலகத்தை எதிர்நோக்கி நிற்கும் பிரச்சினைகளில் இது மிகப் பெரியது. மாட்சிய வாதிகள் மாட் சின் கொள்கைகளை மாற்றியும் மறுத்தும், திருத்தியும் வருகின்றனர்.
of Gorf. 56T (Internationals ):
மறுபுறம் மாட்சினுடைய பொதுவுடைமைவாதம் சர்வதேச மயமானது. “தற்போதுள்ள சமூகச் சூழ்நிலைகளைப் பலாத்காரமாக

Page 142
252 புது உலக சரித்திரம்
அழித்தால்தான் தம் இலட்சியம் கைகூடுமென பொதுவுடைமையாளர் கள் பகிரங்கமாக அறிவிக்கின்றனர். பொதுவுடமைப் புரட்சியைக் கண்டு ஆட்சி வர்க்கத்தினர் நடுநடுங்கட்டும். இப்புரட்சிமூலம் பாட் டாளி மக்கள் தங்கள் விலங்குகளைத் தவிர இழக்க வேறென்றுமில்லை. உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என மாட்சு மக்களை உலகப் புரட்சிக்கு பகிரங்கமாக அழைத்தார். பாட்டாளி மக்க ளுக்குத் தம் தேசமொன்றில்லை ; வகுப்பு நலனும் அனுதாபமும் அகில உலகத்தினதும் தொழிலாளர்களை ஒன்றுபடச் செய்யுமென்றே நம்பினர். தத்தம் நாடுகளிலுள்ள பாட்டாளி மக்களின் பொது எதிரிகளான முதலாளித்துவ ஆட்சி முறைகளின் மீதுள்ள வெறுப்பு, ஒற்றுமையை வளர்க்கவும், இறுதியில் புரட்சியின் வெற்றி உலகெங் கணும் வகுப்பு வேறுபாடற்ற ஒரு சமூகத்தை உருவாக்கவும், உலகப் பொருளாதார முறையை ஏற்படுத்தவும் உதவும் என்ருர் மாட்சு. இந்நோக்கத்தையடையவும் வகுப்பு உணர்ச்சியை வளர்க்கவும், 1864 ஆம் ஆண்டில் மாட்சு, முதலாவது அகிலம் (First International) எனச் சரித்திரத்தில் பெயர் பெற்றுள்ள சர்வதேசத் தொழிலாளர் சங்கமொன்றைத் தாபித்தார். பெரும்பாலான ஐரோப்பிய நாடு களின் பிரதிநிதிகள் இச்சங்கத்தில் கலந்தனர். மாட்சு காலமான பின்பு இரண்டாம் அகிலம் (Second International) 1889 இல் நிறு வப்பட்டது. முதலாவது உலகப் போருடன் இது நீரில் தோன்றிய குமிழிபோல உடைந்து மறைந்தது. 1919 இல் இரசியப் பொது வுடைமையாளர்கள், தலைமைப் பீடத்தை மொசுக்கோவில் அமைத்து T T rE eT TTTT TTE S SSLLLLL LLLLLLLlLLLLLLlLLSS TTT aTTTTTTTT நோக்கங்களைத் தம் இலட்சியமாகக் கொண்டனர்.
மாட்சு வாதமும் ஐரோப்பாவும் :
மேற்கைரோப்பிய நாடுகளில் சனநாயகம் பரவியதன லும் தொழிலாளருக்கு நாளடைவில் பல வசதிகள் பெற்றுக் கொடுக்கப் பட்டமையினுலும், புரட்சி மனப்போக்கு அதிகம் பரவவில்லை. வகுப் புப் போராட்டத்துக்குப் பதிலாக முதலாளிகளும் தொழிலாளிகளும் ஒத்துழைப்பை ஏற்படுத்தினர். சனநாயக சமூகவுடைமைவாதம் (Democratic Socialism) மேற்கு ஐரோப்பாவில் பரவியது. புரட்சி வாத மாட்சுவாதம், இங்கிலாந்தில் ஒரு பொழுதும் மேன் மையடைந்த தில்லை ; ஏனெனில் ஆங்கிலேயர், எம் மாற்றமும் சனநாயக முறைப் படி அமைதியான முறையில் நடைபெறவேண்டுமென்ற நம்பிக்கை யுடையவர்கள். இங்கிலாந்தில் பொதுவுடைமைவாதத்துக்குப் பதி லாக மக்கள் நலன் அரசாங்கம் (Welfare State) உருவாகியது.

நவ யுசத்தின் பிரதான இயக்கங்கள் 253
பிரான்சிலும், மாட்சுவாதத்துக்கு சிந்திக்கலிய நிருவாகிகளிடமிருந்து வன்மையான எதிர்ப்பு ஏற்பட்டமையினல், அது வேரூன்ற முடியா மற் போயிற்று.
செர்மனியில் மாட்சுவாதம் சொற்ப காலத்துக்கு சமுதாய சன sfrusé, il '5u565r (Social Democratic Party) Go)5 frGirGO)5ufr5 glb பெற்றது ; ஆனல் 20 ஆம் நூற்றண்டின் ஆரம்பத்துடன், அது அங்கும் தன் மதிப்பை இழந்துவிட்டது.
மாட்சுவாதம் இரசியாவில் மாத்திரமே பரீட்சிக்கப்பட்டு, 1917 இல் வெற்றி பெற்றது.
3. படையாண்மை நாட்டினவாதம்
முதலாவது உலக யுத்தத்துக்கு முன் சென்ற நாற்பது ஆண்டு களின் இரு பிரதான இயக்கங்கள் ஐரோப்பாவின் தொழில் வளர்ச்சி யும், தொழிலாளர் வகுப்பின் எழுச்சியுமாகும். இக்காலத்தின் மூன் ருவது பிரதான இயக்கம் படையாண்மை நாட்டினவாதமாகும் (Militant Nationalism).
படையாண்மை நாட்டினவாதம் :
ஐரோப்பாவில் நாட்டின வாதம் வளர்ந்திருந்த போதும், அங்கு இன்னும் அடிமைத்தக்ளயில் வாழ்ந்து வந்த பல இன மக்கள், தம் விடுதலை நாளை ஆவலுடன் நோக்கி ஏங்கி நின்றனர். இம் மக்களின் உள்ளங்களில் எரிமலைபோல் குமுறிக்கொண்டிருந்த நாட்டுப்பற்று, ஒரு வினடியில் ஐரோப்பாவின் அமைதியைக் குலைக்க வல்ல காரண மாக அமையக் கூடிய அச்சமும் ஐரோப்பாவை ஆழ்ந்த கவலையில் அமிழ்த்தியது. போலந்து, போல்கன் நாடுகள், ஒசுத்திரிய-அங் கேரி என்பவற்றில் தேசப்பற்று கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருந்தது. மறுபுறம் சுதந்திரம் பெற்ற நாடுகள் தாம் நினைத்தவாறு இயங்குவதைத் தடை செய்ய வல்ல அமைப்புக்கள் ஒன்றுமேயில்லை; அவை மற்ற இனங்களின் உரிமைகளை மதித்து நடக்கும் என்பதற்கு உத்தரவாதமுமில்லை. புது செர்மனியின் நாட்டுணர்ச்சி, அளப்பரிய சக்தி வாய்ந்ததாகவும், அதன் விரிவின் வழியில் இடப்படும் தடைகளை உடைத்தெறியும் வல்லபம் பொருந்தியதாகவும் காணப்பெற்றது செர்மனிபோன்று இத்தாலியும் தன் புலனச் செலுத்த புது வழிகளைத் தேடி நின்றது. பிரான்சின் தேசப்பற்று புண்படுத்தப்பட்டமையினல், அது பழி வாங்கவும், தான் இழந்த மாகாணங்களை மீட்கவும் நோக் கங் கொண்டிருந்தது. இவை யாவும் எந்நேரமும் ஐரோப்பாமீது போரை வருவிக்க வல்ல கார் மேகங்களாகும்.

Page 143
254 புது உலக சரித்திரம்
வியாபாரப் பேராசைகளும் நாடுகளுக்கிடையே பொருமையையும் பூசல்களையும் கிளறி விட்டன. உலகின் எல்லாப் பாகங்களிலும் புதுச் சந்தைகளுக்காகவும், செல்வத்தை ஈட்டுவதற்காகவும் நாடுகள் ஒன்ருேடொன்று பொருதி நின்றன. படைபூண்ட அமைதி !
முதல் உலக யுத்தத்துக்கு முன் சென்ற நாற்பது ஆண்டுகளில் நாடுகளுக்கிடையே எழுந்த படையாண்மைப் போட்டி ஐரோப்பா வில் அச்சத்தையும், ஐயத்தையும், பிணக்கையும் வளர்த்தது. 1870 ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரெஞ்சு-பிரசிய யுத்தம் முதல் போரைப் பற்றிய அச்சம் ஐரோப்பாவை விட்டு விலகவில்லை. 1870 இல் பிரான்சு தோல்வியடைந்ததன் பயணுக, பிரெஞ்சு இராணுவம் கட் டாய சேவையைக் கையாண்டு, படைகளை புனருத்தாரணம் செய்தது. இதைத் தொடர்ந்து பிரான்சுக்கும் செர்மனிக்குமிடையில் பொருமை, சந்தேகம், பீதி வளர ஆரம்பித்தன. ஒவ்வொரு நாடும் தன் பலத் தையும், எல்லையையும் ஆட்சியையும் பெருக்கும் முயற்சியில் ஈடுபட் டது. ஒவ்வொரு நாடும் மற்றதுடன் இராணுவ பலத்தில் நிகராக நிற்க வும், ஒன்று மற்றதை படைகளின் எண்ணிக்கை, பயிற்சியின் தரம் என் பவற்றில் முந்த முனைந்தது ; போட்டியும் வலுத்தது. 1885 இல் பிரெஞ்சுப் படைகளின் எண்ணிக்கை 500,000. செர்மனியினது 427,000. இருபது ஆண்டுகளுக்குள் பிரெஞ்சுத் துருப்புக்களின் எண்ணிக்கை 545,000 ஆகவும், செர்மனியினது 505,000 ஆகவும் உயர்ந்தன. பிரான்சும், இரசியாவும் உறுதியான நட்பு பூண்டபின், செர்மனி தன் எல்லைகளை இரு முனைகளிலும் பாதுக்ாக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக் குள்ளானது. செர்மனி 1913 ஆம் ஆண்டு ஒர் இராணுவச் சட் டத்தை நிறைவேற்றி ஒரு பிரமாண்டமான முயற்சியினல், அதன் துருப்புக்களின் எண்ணிக்கையை 800,000 ஆக்கியது. பிரான்சு இம் முன்மாதிரியை இன்னுமோர் இராணுவச் சட்டத்தினல் பின்பற்றி யது. பிரான்சும் செர்மனியும் படைதரித்த இரு பாசறைகளாக (Armed Camps) LDfT staar.
பிரான்சினதும் செர்மனியினதும் இந்த வன்மையான ஆயுதப்போட் டியினல் பாதிக்கப்படாத ஐரோப்பிய நாடு ஒன்றுமேயில்லை. "சமாதா னம் நிலவச் செய்ய வேண்டுமாயின் போருக்கான ஆயத்தங்களைச் செய்” எனும் வாக்குக்கிணங்க, ஐரோப்பிய நாடுகள் யாவும் போருக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்வதில் ஈடுபட்டன.
இங்கிலாந்து ஒன்றைத்தவிர ஏனைய ஐரோப்பிய அரசுகள் யாவும் கட்டாய இராணுவ சேவையை மேற்கொண்டன. பிரித்தானியா, தன் புவியியல் நிலையத்தை ஆதாரமாகக் கொண்டு, இப்போட்டியி

நவ யுகத்தின் பிரதான இயக்கங்கள் 255
லிருந்து விலகி ஒதுங்கி நின்றது. குடியேற்ற நாடுகளின் துருப்புக்கள் உட்பட 1914 இல் அகில உலகிலும் பிரித்தானிய படைகளின் எண் னிக்கை 250,000 மாத்திரமே.
ஆனல் நூற்ருண்டின் ஆரம்பத்திலிருந்து கடல் வலிமைக்காக இங்கிலாந்து செர்மனியுடன் ஒரு வன்மையான போட்டியில் இறங் கிற்று. இரண்டாவது உவில்லியம் செர்மனியின் பேரரசனனதுடன், அவர் புதுக் கப்பல்களைக் கட்டு விப்பதற்கு ஒரு விசாலமான புதுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். செர்மனியின் கடற்படைச் செலவு பன்மடங்கு அதிகரித்தது ; பல நவீன போர்க் கப்பல்களைக் கட்டவும் செலவினங்கள் அங்கீகரிக்கப்பட்டன. செர்மனி முன்னேற்ற மடைந்து வரும் வேகத்தைக் கண்டு இங்கிலாந்து அச்சங் கொண்டது. ஐந்து வருடங்களில் தன்னிலும் விட அதிகமான கப்பல்களை வைத் திருக்குமென வெகுளியுற்ற இங்கிலாந்து, பிரித்தானிய கடற்படைச் செலவினங்களை உடனே ஆட்சேபனையின்றி கூட்டிற்று ; புதுக் கப்பல் களை நிர்மாணிக்கும் வேலையும் தாமதமின்றி ஆரம்பமாயிற்று. பிரித் தனும் ஆயுதப் போட்டியில் குதித்தது.
சர்வதேசியம் :
பிறிதொரு கோணத்திலிருந்து நோக்குமிடத்து, இவ்வாண்டுகளில் சர்வதேசியம் ஒரு புது உச்சத்தைத் தொட்டது. வியாபாரமும் வாணி பமும் தேச எல்லைகளைக் கடந்து சர்வதேச அளவிற்கு விரிவடைந்தன. பெண்களின் விடுதலைச் சமரும், சமூகவுடைமை வாதமும் ஐரோப்பா வின் இரு பொதுப் பிரச்சினைகள். போக்கு வரவு வசதிகளின் முன் னேற்றம் ஐரோப்பிய நாடுகளை நெருங்கப் பிணைத்தது. எண்ணங் களைப் பரிமாறுவதற்கும் அறிவு பரவுதலுக்கும் புது வழிகள் திறந்தன. மானிட முயற்சிகளின் சகல துறைகளிலும் ஏற்பட்ட புது முன்னேற் றங்கள் சர்வதேச மாநாடுகள் வாயிலாக அகில உலகமும் பரவின. அரசியற்றுறையிலும் ஒற்றுமை நாளாந்தம் வளர்ந்து வரலாயிற்று. அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை, மொறக்கோ நெருக்கடி, கொங்கோ அரசின் நிர்மாணம் என்பவற்றைத் தீர்ப்பதற்கு மாநாடு கள் கூடின. போரைப் பற்றி சர்வதேசக் சட்டங்களை ஆக்குவதற் கும் முயற்சிகள் கைக்கொள்ளப் பட்டன. 1899 இலும் 1907 இலும், படைக் கலங் குறைத்தலை விவா தி க்க மாநாடுகள் ஏகில் (Hague) கூடின ; ஆனல் நாடுகளிடையே எழுந்த போட்டியினல் அவை ஒழுங் காண முடிபுக்கு வராது கலைந்தன.

Page 144
256 புது உலக சரித்திரம் அதிகாரம் 15
செர்மன் பேரரசின் உண்ணுட்டு வரலாறு
(1871-1914)
பல நூற்ருண்டுகளாகப் பிளவுபட்டு சீர்குலைந்து நின்ற செர்மனி, ஒரு வல்லமை பொருந்திய வல்லரசாக வேண்டுமெனத் தேச பக்தர் கள் கண்ட ஆசைக் கனவு, 1866 க்கும் 1870 க்குமிடையில் நிறை வேறி நின்றது. பிரசிய-பிரெஞ்சுப் போரில் தோல்வியுற்ற பிரான் சின் வேர்சை நகரத்தில், 1871 ஆம் ஆண்டு, முதலாம் உவில்லியம் பேரரசனுக முடி சூடினர். அன்று தொட்டு, 1914 வரை செர்மனி சகல விதங்களிலும் ஐரோப்பிய வல்லரசு என்ற நிலையைத் தொட்டது.
@GD DG 5 TšG5 (Reichstag) 5 Čil 173 (Bundesrat) :
ஐக்சிய செர்மனியில் புதிதாக நிறுவப்பட்ட கூட்டாட்சியரசு, ஐக்கிய அரெக்க இராச்சியங்கள், கனடா, சுவிற்சலாந்து, ஒசுத்திரே லியா எனும் நாடுகளின் அரசமைப்புத் திட்டங்களின் பண்புகளிற் பலவற்றை பின்பற்றியது. இக்கூட்டாட்சியரசு, 1933 இல் இற்லர் அதை அழித்த காலம் வரை, செர்மனியின் மத்திய அரசியற் ருபன மாக விளங்கியது. புதுச் செர்மன் கூட்டாட்சியமைப்பில், இருபத் தாறு இராச்சியங்கள் தம் உண்ணுட்டுக் கருமங்களில் பூரண ஆதிபத் திய அதிகாரத்தையும், ஏனையப் பொது விடயங்களில் தம் அதிகா ரத்தை மத்திய அரசாங்கத்துக்கு விட்டுக் கொடுத்தும் இயங்கின. பழைய சிற்றரசர்களும் குறுநில மன்னரும் தத்தம் நாடுகளின் உண் ணுட்டு விவகாரங்களில் நிறைந்த அதிகாரமுடையவர்களாக இருக்க அனுமதிக்கப்பட்டனர். :
ஒவ்வோர் இராச்சியமும் தனக்கென ஒர் அரசாங்கத்தையும், சட்ட மன்றத்தையும், நிருவாக அமைப்பையும், நீதி குலத்தையும் கொண்டிருந்தது. இவ்விராச்சிய அரசியலமைப்புக்களை விட, ஈரவை களைக் கொண்ட சட்ட மன்றம், நிருவாகம், உச்ச நீதி மன்றம் என்ற மூன்று அங்கங்களையுடைய ஒரு மத்திய அல்லது கூட்டாட்சி அரசாங்க மும் அமைந்தது. மத்திய சட்ட மன்றம் இறைகு சாக்கு, கட்டரசு எனும் இரு சபைகளைக் கொண்டது. இறைகு சாக்கு அல்லது பொது மக்கள் மன்றம் ஒவ்வோர் இராச்சியத்தின் மக்கள் தொகையை அடிப்படை யாகக் கொண்டு, பேரரசின் எல்லா இராச்சியங்களுக்கும் பிரதிநிதித் துவம் அளித்தது. இச்சபையின் உறுப்பினர்கள் சர்வசன வாக்குரி மையினல் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். கட்டரசு அ ல் ல து கூட்

செர்மன் பேரரசின் உண்ணுட்டு வரலாறு 257
டாட்சியின் மத்திய அரசியல் மன்றம், பேரரசின் இராச்சியங்களுக்குப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொடுத்தது. கட்டரசில், பிரசியா 17 ஆசனங்களையும், அடுத்த பெரிய இராச்சியமான பவேரியா ஆறை யும், சக்சனி, உவேட்டம்பேக் ஒவ்வொன்றும் நான் கையும், ஏனைய 17 சிறு இராச்சியங்கள் ஒவ்வொன்றையும் பெற்றன. கூட்டாட்சி யின் நிருவாக, அதிகாரம் கைசரிலும் (Kaiser), அவரிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரம் படைத்த மண்டில நாயகனிலும் (Chancellor) வீற்றிருந்தது. மண்டில நாயகரை, பதவியிலிருந்து நீக்கச் சட்ட மன்றத் துக்கு அதிகாரமில்லை. அவர் சக்கரவர்த்தியாலேயே நியமிக்கப்பட்டு, அவராலேயே பதவி நீக்கம் செய்யப்படுவார். சாம்ராச்சியத்தின் சட் டங்கள் அமுலுக்கு வருமுன் நாயகரின் கைச்சாத்தைப் பெற்றிருக்க வேண்டுமென்றும் புது அரசமைப்புத் திட்டம் விதித்தது. பிசுமாக் தான் சிருட்டித்த சக்கராதிபத்தியத்தின் ஒர் இளவரசராக்கப்பட்டு, அதன் முதல் மண்டில நாயராகவும் நியமிக்கப்பட்டார்.
உவில்லியமும் பிசுமாக்கும் :
செர்மன் சக்கராதிபத்தியத்தைப் படைத்த இரு மேதாவிகளும் அதன் அலுவல்களை மேலும் இருபது ஆண்டுகளுக்கு வழி நடத்துவர் என ஒருவருமே எதிர்பார்க்க வில்லை. 74 பராயம் நிறைந்த கைசர் இன்னும் பதினேழு ஆண்டுகளுக்கு செர்மனியின் சிம்மாசனத்தில் வீற் நிருப்பர் என்று யாரால் யூகிக்க முடியும் ? நற்குண சீலரும், கட மையில் பற்றுள்ளவருமான உவில்லியம், பிசுமாக் மட்டில் அளவற்ற நன்றியும், நம்பிக்கையும், விசுவாசமும் உடையவராயிருந்தார் ; சக் கராதிபத்தியத்தை உருவாக்கிய பிசுமாக்கின் கையிலேயே நாட்டின் அதிகாரம் முழுவதையும் விட்டார். தேசத்தின் முதல் அமைச்சனுக வும், சட்ட மன்றத்தின் தலைவனுகவும், வர்த்தக அமைச்சனுகவும், பிற நாட்டு, உண்ணுட்டு விவகாரங்களின் சருவ அதிகாரியாகவும் இருபது ஆண்டுகளுக்கு, பிசுமாக் அதி சாமர்த்தியத்துடனும் விவேகத்துடனும் கடைமைகளை நிறைவேற்றினன். நாட்டின் உள்ளும் புறமும் எதிரிகளைத் தீர்மானத்தினுல் இணங்கச் செய்யும் வன்மையையும், புது ஆலோசனை களை அதி பொறுமையுடன் கேட்கும் ஆற்றலையும் அவர் நிறையப் பெற்றிருந்தார் ; முன்னேற்றப் பாதையில் ஏற்படும் இடையூறுகளைக் கண்டு நண்பர் நிலை தடுமாறும் போதெல்லாம், அவர் த னி யே நின்று உறுதியைக் கைவிடாது செயற்படும் தி ற  ைம மிக்கவர் ; இடாம்பீகமான வெளி மகிமைகளில் சிறிதளவேனும் வாஞ்சையில் லாதவர். தான் பெற்ற அதிகாரத்தைச் சுயநலத்துக்காக வன்று ; தன் படைப்பான பேரரசின் நன்மைக்காகவே பயன் படுத்தினர். இக் காலம் முழுவதும் அமைதி, நாட்டுப் பாதுகாப்பு, நாட்டின் விருத்தி
so - F 9

Page 145
458 புது உலக சரித்திரம்
ன்னும் மூன்று நோக்கங்களுக்காகவுமே தன் வாழ் நாளை அர்ப்பணித் தார். பிசுமாக், தன் உத்தியோக பூர்வமான வாழ்வில் முதற் பத்து ஆண்டுகளில் சாதித்த அழியாத நிறுவகங்களுக்காக என்றும் நினைவு கூரப்படுவர்.
பிசு மாக்கின் பிறநாட்டுப் பூட்கை :
பிறநாட்டு விவகாரங்களில் பிசுமாக், என்றும் போல நிகரற்ற தனிப் பண்புகள் படைத்த நிபுணனுகவும், சூழ் வல்லோனுகவும் திகழ்ந்தார். “அவர் ஒருவர்தான் எப்பொழுதும் ஐந்து பந்துகளில் (பிரான்சு, இரசியா, ஒசுத்திரியா, இங்கிலாந்து, இத்தாலி) இரண்டினை ஆகாயத்தில் நிறுத்தி, மாயா சாலம் புரியும் மந்திரவாதி' என பிசுமாக் கின் சாமர்த்தியத்தை வயதுபோன சக்கரவர்த்தி வர்ணித்தார். சாந்தப்படுத்த முடியாத பிரான்சை, தன் சூழியல் வலிமையினல், ஐரோப்பாவில் தனிமைப்படுத்தினர் ; ஒசுத்திரியா, இரசியா, இத் தாலி மூன்றையும் தன் வயப்படுத்திக் கைப்பொம்மைகளைப்போல் உபயோகித்தார். இங்கிலாந்தையும் ஐரோப்பிய வல்லரசுகளுடன் ஒப்பந்தம் செய்யாது தடுத்தும், தன் நோக்கங்களில் பூரண வெற்றி கண்டார்.
பிசுமாக்கின் உண்ணுட்டுப் பூட்கை :
உண்ணுட்டு விவகாரங்களில், பிசுமாக் ஒரு வல்லாளனுகவே ஆட்சி புரிந்தார். இராணுவ வலிமையினுலும் போர்களினலும் சிருட் டிக்கப்பட்ட ஐக்கியத்தை அழிந்து போகாது, அமைதி காலத்திலும் பாதுகாக்க வேண்டுமென்பதே அவரது முதன்மையான நோக்கம். புதுச் செர்மனியின் சக்திகள் அனைத்தையும் ஒன்றுபடுத்தி, ஒர் ஒழுங் கான ஆட்சியை உருவாக்க வேண்டுமென்றே அயராது அல்லும் பக லும் உழைத்தார். தன் இலட்சியமான ஐக்கிய செர்மனியின் ஒற்று மையைக் குலைக்கவல்ல இரு வன்மையான எதிரிகளைக் கத்தோலிக்க விலும், சமூகவுடைமைவாதிகளிலும் கண்டார். இவ்விரு சக்திகளுக்கும் எதிராக பிசுமாக் ஒரு வன்சமரை நடாத்தினர் ; ஆனல் ஈற்றில் இரு பகைவரின் கையிலும் தோல்வியே கண்டார்.
பிசுமாக்கும் உருேமன் கத்தோலிக்கரும் :
- பிசுமாக், உருேமன் கத்தோலிக்கரில் கொண்ட பகைமை 1866 இல் ஆரம்பித்தது. செர்மன் விவகாரங்களிலிருந்து கத்தோலிக்க ஒசுத்திரியா அகற்றப்பட்டு, பதித ஒகன்சொலன் வம்சம் சிம்மா சனத்துக்கு உயர்த்தப்பட்டமை கத்தோலிக்கருக்கு வேம்பாயிற்று. இதனல் உருேமன் கத்தோலிக்க திருச்சபை புதுச் சக்கராதிபத்தி

செர்மன் பேரரசின் உண்ணுட்டு வரலாறு 259
யத்தை முழு மனதுடன் எதிர்த்து நின்றது. கத்தோலிக்க கட்சி, உண்ணுட்டு விவகாரங்களில் திட்டமிட்டு பிசுமாக்கின் வழியில் பல இடையூறுகளை விளைவித்தது. கத்தோலிக்க கட்சியின் வளர்ச்சி, சக்கரா திபத்தியத்தின் அபிவிருத்தியைப் பாதிக்க வல்லதென நன்குணர்ந்த பிசுமாக்கு, அதன் பெலத்தை முறிக்கத் திட்டமிட்டார். இச் சமரில் பிசுமாக், அரசியல் தன்மையையே வற்புறுத்தினர். "சமர் புரட்ட த் தாந்த அரச வம்சத்துக்கும், உருேமன் கத்தோலிக்கருக்குமிடையி லன்று விசுவாசத்துக்கும் அஞ்ஞானத்துக்கு மிடையிலன்று. இஃது பழைய போராட்டத்தின் புது உருவம் மாத்திரமே” என்று குறிப்பிட்டார் அவர்.
1870 இல் போப்பாண்டவர் வெளியிட்ட வழுவாவரம் (Papa Infallibility) கத்தோலிக்கரை இரு கூறுகளாகப் பிளவுபடுத்தியது. சலாநிதி டொலிங்கர் (Dr. Dollinger) என்ற வேத சாத்திர பேராசிரிய ரின் தலைமையில் கத்தோலிக்க மேதைகள், பல்கலைக்கழகப் பேராசிரி யர்கள், குரவர்கள் பலர், தம்மைப் 'பழைய கத்தோலிக்கர்" (Old Catholics) என அழைத்துக்கொண்டு, வத்திக்கானின் தலைமைப் பீடத்தை ஆட்சேபிக்க முற்பட்டனர். அவர்கள் உண்மைக் கத்தோ லிக்கச் சத்தியங்களை விசுவசிப்பதாகவும், புதிதாகப் புகுத்தப்பட்டி போதனைகளைத் தாம் ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லையென்றும் கூறி னர். இப்பழைமைவாதிகள் உருேமன் கத்தோலிக்க மேற்றிராணிமார் களின் மேற்பார்வையின் கீழிருந்த பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர்; திருச்சபையிலிருந்தும் விலக்கப்பட்டனர்; அவர்களது விரிவுர்ைக் ளுக்குச் செவி சாய்க்கலாகாதென்றும் அவர்கள் தேவாலயங்களில் நிறைவேற்றும் திருச் சடங்குகளில் பங்குபற்றலாகாதென்றும் திருச் சபை தன் விசுவாசிகளுக்குக் கற்பித்தது. இவ்வாறு பல வழிகளில் துன்புறுத்தப்பட்ட பழைய கத்தோலிக்கர், அன்புக்கும், ஆதரவுக்கும், பாதுகாப்புக்கும் அரசாங்கத்தின் பக்கம் சரிந்தனர்.
செர்மன் சட்ட மன்றத்திலும் கத்தோலிக்க மையக் கட்சி (R. 0. Centre Party) oasir Gas raig (Windthorst) 6T657 L16) fair g5&60) up யில் ஓர் ஒழுங்கும் கட்டுப்பாடுமுள்ள குழுவாக இயங்கிற்று. மன் றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் 1871 ஆம் ஆண்டு 61 இலிருந்து 1874 இல் 100 ஆக அதிகரித்தது. மன்றத்தின் 113 பிரதிநிதிகளைக் கொண்ட இக்கட்சி ஆங்கிலேய பாராளுமன்றத்தில், அயர்லாந்து நாட்டினவாதிகள் செய்தது போன்று, தம் ஆதரவை விரும்பிய பக்க மளிக் து, தம் வாக்குகளுக்கு அனுகூலமான நன்மைகளைப் பெற்றுவர லாயினர். தான் வத்திக்கானுக்கு தூதமைச்சராக அனுப்பிய குசுத்

Page 146
檗60 புது உலக சரித்திரம்
தாவ் ஒகன்லோபை (Gustav Hohenlohe) போப்பாண்டவர் ஏற்க மறுத்தபொழுது, பிசுமாக் அளவற்ற கோபம் கொண்டு, மையக் கட் சியின் பலத்தைத் தகர்த்தெறியத் திடம் பூண்டார்.
Gsstuogoflu6o Goug sovflu&or (Kulturkampf) :
1872 முதல் 1878 ஈருக, செர்மன் கத்தோலிக்கரின் செல்வாக் கைப் பூண்டோடு களைந் தெறியும் நோக்குடன், பிசுமாக் பல தொடர் பான சட்டங்களை நடை முறைக்குக் கொண்டு வரலாயினர். யேசு சபையும், பிற நாட்டுக் குரவரும் நாடு கடத்துப் பட்டனர் ; குர வர் தேவாலயங்களில் அரசியல் விடயங்களைத் தர்க்கிப்பது சட்டவிரோத மாயிற்று. 1873 ஆம் ஆண் டு இயற்றப்பட்ட ‘மே சட்டங்கள்' (May Laws) சமரின் வன்மையைக் கடுமையாக்கின மத தாபனங் களின் குறைகளைப் பரிசீலனை செய்ய விசாரணைச் சபைகள் நியமிக் கப்பட்டன. வேத சாத்திரம் கற்க எத்தனிக்கும் மாணவர்கள் பல் கலைக் கழகத்தில் மூன்று ஆண்டு பயின்று, பொதுத் தேர்வுகளில் சித்தியடைந்த பின்னரே குருமடத்தினுள் பிரவேசிக்கலாம் ; குரு மடங்கள் காலத்துக்குக் கா லம் அரசாங்க அதிகாரிகளினல் பரி சோதனை செய்யப்படும் ; புதுக் குருமடங்கள் நிறுவ அரசாங்க அனு மதி அவசியமானது என்றெல்லாம் புது விதிகள் இயற்றப்பட்டன.
1875 ஆம் ஆண்டு போப்பாண்டவர் ஒன்பதாம் பத்திநாதர் ஒரு நிருபத்தில் (Quod Nunquam) இச் சட்டங்கள் மனித நீதிக்கும் தர்மத்துக்கும் மாருணவை என வருணித்து, அவற்றை விசுவாசிகள் ஏற்று நடக்கக் கடமைப் பட்டவர்களல்லர் எனக் கற்பித்தார். இத ஞல் கோபங் கொண்ட பிசுமாக், புது உறுதி கொண்டவராய் கத் தோலிக்கருக் கெதிராகப் பல புதுச் சட்டங்களைப் பிறப்பித்தார். கத் தோலிக்க குரவர் தம் பங்குகளிலிருந்து பெற்ற வருவாய் த  ைட செய்யப்பட்டது ; கன்னியர் சபைகள் குலைக்கப்பட்டன. சட்டங் களுக்கு, எதிர்ப்புக் காட்டிய ஆயிரக் கணக்கான குரவரும் கத்தோலிக்க பிரசைகளும் சிறைச்சாலைகளில் தள்ளப்பட்டனர். ஆனல் தண்டனை களும் சட்டங்களும் கத்தோலிக்கரின் உறுதிக்கும் விசுவாசத்துக்கும் முன்பு தலைவணங்கி நின்றன. நாட்டின் வேத கலாபனைகள் அதிகரித்த துடன், நாட்டு மன்றத்தில் கத்தோலிக்க மையக் கட்சியின் எண்ணிக்கை யும் அதிகரித்தே வந்தது. கத்தோலிக்கருடன் அமைதி !
ஐந்து ஆண்டுகள் ஓடி மறைந்த பின்னர், பிசுமாக் தன் நட வடிக்கைகளினல் செர்மன் பிரதேசங்களில் மூன்றிலொரு பகுதியினர் சக்கராதிபத்தியத்தின் நிரந்தர எதிரிகளாக உருமாறி வருவதைக்

சொமன் பேரரசின் உண்ணுட்டு வரலாறு 26
கண்டு உளங் கலங்கினர். பிற நாட்டு நிலை அபாயகரமாக இருப் பதையும் சமூகவுடைமை வாதிகளின் செல்வாக்குச் செழிப்பதையும் கண்டு, பிசுமாக் கத்தோலிக்கருடன் சமாதானம் செய்து கொள்ள விருப்புக் கொண்டார். சந்தர்ப்பமும் வெகு விரைவில் கிட்டியது. 1878 பெப்ரவரியில் ஒன்பதாம் பத்திநாதர் காலமானுர் அவருக் குப்பின் போப்பாண்டவரான 13 ஆம் சிங்கராயருடன் (Leo XIII) பிசுமாக் சமாத்ானம் செய்து கொண்டார். கத்தோலிக்கருக்குக் கெதிராக இயற்றப்சட்ட சட்டங்கள் செயற் படாமல் போவதை அனுமதித்தும், வத்திக்கானுடன் புது இராசதந்திரத் தொடர்புகளை ஏற்படுத்தியும் இரு நாடுகளுக்கிடையே அமைதியை நிலைநாட்டினர்.
சமூகவுடைமைவாதத்திற்கு எதிராகப் போர் :
சமூகவுடைமை வாதிகளின் செல்வாக்கைத் தகர் த் தெறியும் நோக்குடனேயே பிசுமாக் கத்தோலிக்கருக் கெதிராக தான் நடத்திய சமரைக் கை விட்டார். செர்மனியில் இடம் பெற்ற கட்சிகளில் சமூக r67 An urasi s86u (Social Democratic Party) 82(piigib, 5. Gli பாடும், செல்வாக்கும் நிறைந்ததாகக் காணப்பட்டது. அஃது ஏறக் குறையப் பதினைந்து ஆண்டுகளாக இயங்கி, நாட்டில் அதி முக்கியத் துவம் பெற்று நின்றது ; அக்காலத்தில் பிசுமாக்கின் முடியாட்சிக் கொள்கையுடனும் இராணுவக் கருத்துக்களுடனும் முரண்பட்டமையி ஞல் ‘நாட்டுப் பற்றும் தேச பக்தியும் இல்லாத இப் பேர் வழிகளின்’ பலத்தை முறிச்க வேண்டுமென பிசுமாக் திட்டமிட்டார்.
1878 யூன், யூலை மாதங்களில் சமூகவுடைமைவாதத் தீவிரவாதி கள் இரு முறை சக்கரவர்த்தியைக் கொலை செய்ய முயற்சித்தனர்" இரண்டாம் முயற்சியில் பேளின் மாநாடு கூடியிருந்த வேளையில், வயது போன சக்கரவர்த்தி காயப்படுத்தப்பட்டார். இச் செயலின் பயனுக சமூகவுடைமை வாதிகளுக் கெதிராக நாட்டிலெழுந்த பொது சன அபிப்பிராயத்தைப் பயன் படுத்தி, அவர்களே அடக்கி ஒடுக்கும் முயற்சி யில் பிசுமாக் உடனடியாக இறங்கினர் 1878 ஒற்ருேபர் மாதம் இறைகு சாக்கில் நிறைவெய்திய ஒரு சட்டம் சமூக சனநாயக வாதிகளின் கூட் டங்கள் சங்கங்கள், பத்திரிகைகள் யாவற்றையும் தடை செய்தது. பொலீசு இலாக்காவின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன. சமூகவுடை மைத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டனர். கட்சி வெளியீடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பத்திரிகையாசிரியர்கள் சிறைவைக்கப் பட்டனர். கட்சியினதும் சங்கங்களினதும் முதல் பறிமுத லாயிற்று. இச்சட்டங்களினல் சமூக சனநாயகக் கட்சி மிகவும் பெலவீனப்பட்டது : ஆனல் நாளடைவில் இவ்வியக்கம் இரகசிய மாகப் புது உற்சாகத்துடன் வளர்த்து வரலாயிற்று. இரகசிய சங்கங்
A l9

Page 147
262 புது உலக சரித்திரம்
க்ள், தொழிற் புரட்சியினல் தொழிலாளர் மத்தியில் எழுந்த அமைதி யின்மையை வளர்த்தும், அவர்களை ஒற்றுமைப்படுத்தியும் வரலாயின. செர்மனியில் நிகழ்த்த முடியாத கூட்டங்கள் சுவிற்சலாந்து போன்ற அயல் நாடுகளில் கூடின. ஈற்றில் கத்தோலிக்கர் கையில் பிசுமாக் தோல்வி கண்டது போன்று, சமூகவுடைமை வாதிகளின் கையிலும்
அவர் தோல்வியே கண்டார். பிசுமாக்கின் இராச்சிய சமூகவுடைமை வாதம் (State Socialism): பிசுமாக் பொதுவுடைமை, சனநாயக வாதிகளின் அரசியல் வெளிப் போக்கை அடக்க முயற்சித்தபோதிலும், அவர்களது கோரிக்கைகளின் அடிப்படைக் கருத்துக்களை அலட்சியம் செப்யவில்லை. 1881 ஆம் ஆண்டுச் சிம்மாசனப் பிரசங்கத்திலேயே சக்கரவர்த்தி, தொழிலாள ரின் நிலையைப் பாதுகாப்பதற்குச் சட்டங்களை இயற்றத் தாம் எண் ணங் கொண்டிருப்பதாக அறிவித்தார். 1883 இல் நோயாளிகளுக்கு 'உதவியளிக்க இளைப்பாறற் சட்டம் உருவாக்கப்பட்டது. 1884 இல் அபாயத்திற்கும், 1889 இல் வயோதிபருக்கும் 1891 இல் வேலை செய்ய முடியாதோருக்கும் முறையே இன்சூரன்சுத் திட்டங்கள் வகுக் கப்பட்டன. 1911 இல் இச் சட்டங்கள் யாவும் 2000 முறிகளுக்கு மேற்ப்ட்ட பிரிவுகளைக் கொண்ட ஒரு மிக விரிவான இன்சூரன்சு திட்ட மாக ஒருமைப்படுத்தப்பட்டன. தொழிலாளரின் நிலையைச் சீர்ப் படுத்த இப்பேர்ப்பட்ட விரிவான திட்டங்களை வேறெந்த நாடும் ஏற் படுத்தியது கிடையாது. இங்கிலாந்து, பிரான்சு முதலாம் நாடுகள் தொழிலாள இன்சூரன்சு திட்டங்களை வகுப்பதற்கு பிசுமாக்கின் திட் டத்தையே ஒரு முன்மாதிரியாகக் கொண்டன.
பிசுமாக்கின் நேர்முக அடக்கு முறைகளும் இராச்சிய சமூக வுடைமை வாதமும் சமூக-சனநாயக் கட்சியின் வளர்ச்சியை தட்ை செய்ய முடியாமற் போயிற்று. 1878 ஆம் ஆண்டுப் பொதுத் தேர் தலில் சமூகவுடைமை வாதிகள் ஓர் இ லட் சம் வாக்குகளைப் பெற் றனர் ; பன்னிரெண்டு ஆண்டு அடக்கு முறையின் பி ன் னர் 1890 இல் ஐந்துலட்சம் வாக்குகளைப் பெறலாயினர். கட்சி தொடர்ந்து வளர்ந்தது. பிசுமாக்கின் பொருளாதாரப் பூட்கை :
பிசுமாக்கின் ஆட்சிக் காலத்தில், செர்மனியின் தொழில் வளமும், செல்வ நிலையும் பன் மடங்கு பெருகின, செர்மன் இரும்பு, புடை வைத் தொழில்கள் அதி கூடுதலான முன்னேற்றத்தைக் காணலாயின, அரசாங்கமும் பல புதுத் தொழில்களுக்கு நிறைந்த ஆதரவையும் உதவி யையும் காட்டிற்று. புகையிரத வீதிகள் நீட்டப் பட்டன : வங்கி முறை நிறுவப் பெற்றது ; தொழில் நுட்பக் கல்வி முன்னேறியது.

செர்மன் பேரரசின் உண்ணுட்டு வரலாறு 2迺域這
பிசுமாக்கின் வியாபாரப் பூட்கையும் ஐரோப்பாவில் பாரதூர% மான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு ஒரு தூண்டு கோலாய் அமைந் தது. செர்மனி தான் ஐரோப்பாவில் கட்டிலா வியாபார (Free Trade) நிலையிலிருந்து பாதுகாப்பு நிலைக்கு மாறிய முதல் நாடாகும்: பிரெஞ்சுப் பிரசியப் போர் மூண்ட காலத்தில் ஐரோப்பாக் கண்டம், முழுவதும், ஒரு கட்டிலா வியாபார ஐக்கியத்தில் ஒன்று படுவதற். கான அறிகுறிகள் காணப்பட்டன. இங்கிலாந்தில் பூரண வெற்றி பெற்ற கட்டி லா வியாடார இயக்கம், கண்டத்திலும் பல நாடுகளின் ஆதரவைப் பெற்றது. 1870 இல் செர்மனியும் முழுமையாக ஒரு கட்’ டிலா வியாபார நாடாயிற்று. பீரங்கிக் குண்டுகளைக் கொண்டு நடாத்தப்படும் போரிலும் கூடுதலான கொடுமைகளைக் கொண்டது. சுங்க வரிப்போர்’ என்ருர் பிசு மாக். எனினும் எட்டு ஆண்டுகளில்" பிசுமாக் தன் பழைய தீர்மானங்களைக் காற்றில் பறக்க விட்டு, மிக வும் விசாலமான மாற்றங்கள் நிறைந்த புது வியாபரப் பூட்கையை மேற் கொண்டார். 1879 இல் பிற நாட்டுக் கோதுமையிலும் பொருள் களிலும் சுங்கத் தீர்வைகளை விதித்தார். ஆரம்பத்தில் கோதுமையில் விதிக்கப்பட்ட சிறிய தீர்வை நாளடைவில் அதிகரிக்கப்பட்டது. இதன் பயணுக விவசாயிகள் திருப்திப்பட்டனர் ; ஆன ல் தொழிலாள வகுப்பினர் முரண்பட்டமையில்ை இதுவும் சமூகவுடைமை வாதத்தின் வளர்ச்சிக்கு ஒரு தூண்டு கோலாயிற்று. *
குடியேற்ற நாடுகள்
தன் இறுதி ஆண்டுகள் வரை செர்மனியின் எதிர் காலம் ஐரோப் பாவிலே தான் உள்ளது, எனப் பிசுமாக் உறுதியாக நம் பிக் கை கொண்டிருந்தமையினல் செர்மன் பேரரசு, புதுக் குடியேற்றங்களுக் காக நடைபெற்ற ஏகாதிபத்தியப் போட்டியில் பிரவேசிக்கவில்லை. ஆனல் செர்மனியின் தொழில் வளம் அதிசயத்துக் குரிய வேகத்தில் விருத்தியடைந்தமையினல், மூலப் பொருள்களைப் பெறுவதற்கும், ஆக் கப் பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கும் புதுச் சந்தைகள் அத்தியாவசியமானவை, என்ற எண்ணம் நாட்டில் தோன்றி வளர் லாயிற்று. இதன் பயனக 1884 க்குப் பின் செர்மனியும் குடியேற்று நாட்டுப் போட்டியில் குதித்தது. ஈராண்டுகளுக்குள் அஃது ஆபிரிக் காவில் தோகோலந்து, கமறுரன்சு செர்மன் த்ென் மேற்கு ஆபிரிக்கா, செர்மன் கிழக்கு ஆபிரிக்கா எனும் பிரதேசங்களைக் கைப்பற்றியது. செர்மனியின் இக்காலத்து தொழில், குடியேற்ற நாட்டு விருத்தியுடன் வியாபாரக் கப்பற்றுறையும் துரிதமாக முன்னேறிற்று.

Page 148
珍岱会 புது உலக சரித்திரம்
சக்கரவர்த்தியின் மறைவு :
செர்மனியின் வீரம் நிறைந்த வரலாற்றுக் காலத்தின் ஆரம்பத் தில் அரசருக்கும் முதல் அமைச்சருக்குமிடையில் ஏற்பட்ட நட்பும் பாசமும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு நீடித்து, 1888 மார்ச்சில் முடி வைக் கண்டது. வயது நிறைந்த சக்கரவர்த்தி, தன் 91 வது பரா யத்தில் குறுகிய சுகவீனத்தின் பின் காலமானர்.
சக்கரவர்த்தி இரண்டாம் உவில்லியம் :
சக்கரவர்த்தி முதலாம் உலில்லியமின் புதல்வன் பிறடறிக், 99 நாள் ஆட்சிக்குப் பின், 1888 யூனில் காலமானார். அவரது மைந்தன் கைசர் இரண்டாம் உவில்லியம் சக்கரவர்த்தியானதுடன் செர்மனி ஒரு புதிய எசமானப் பெற்றது ; அந்நாட்டின் வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் திறந்தது.
பேராவல், துணிவு, பிடிவாதம், அமைதியின்மை, கற்பணு சக்தி எனும் பண்புகள் நிரம்பப் பெற்ற 29 பராயம் நிரம்பிய இளம் சிங் கம், தன் நாட்டில் தானே ஆட்சி புரிய வேண்டுமென உறுதி கொண் டான். பிசுமாக் தன் கைகளில் திரட்டி வைத்திருந்த அதிகார பலத் தைச் சகிக்கவோ, பிசுமாக் தான், நாட்டின் முடிசூடா மன்னன் என்ற மக்களின் கேலிப் பேச்சைக் கேட்கவோ அவரது அனுபவமின் மையும் இளம் இரத்தத் துடிப்பும் இடம் கொடுக்கவில்லை. பிசுமாக் கின் புதல்வனன ஏபேட் (Count Herbert) டின் கீழமைந்த வெளி நாட்டுக் காரியாலயம், முதலமைச்சரின் கைப்பாவையாகவே இருந் தது சக்கரவர்த்தி தன் மந்திரக் கூட்டங்களில் ஓர் அதிகாரமுமற் றவராக இருப்பதைக் கண்டு மனம் புழுங்கினர். வெகு விரைவில் புதுச் சக்கரவர்த்திக்கும் பழைய முதல் அமைச்சருக்குமிடையே பார தூரமான அபிப்பிராய பேதங்கள் தலைகாட்டின ; பிசுமாக்குக்கு எதிரான சக்திகள் அனைத்தும் சக்கரவர்த்தியைச் சூழ்ந்து ஒற்றுமைப் பட்டன. எசமானுக்கும் ஊழியனுக்குமிடையில் எழுந்த வேறுபாடு களின் நெருக்கடி நிலை, 1890 மாச்சில் உ ச் ச த்  ைத எய்தியது. பழைய எசமானின் நாவில் ஒரு பொழுதும் கேட்டறியாத வன் சொல்லை பிசுமாக், அவரது மைந்தனிடம் கேட்க ஆயத்தமாக விருக்க வில்லை. சக்கரவர்த்தி, தன் சித்தம் பிசுமாக்கினல் அல்லது பிறி தொருவரால் நிறைவேறியே ஆக வேண்டு மெனப் பிடிவாதம் காட் டினர். ‘அப்படியாயின் நான் உங்கள் மேன்மைக்கு இடையூருக இருக் கிறேனு ?" என பிசுமாக் வினவியதற்கு, சக்கரவர்த்தி "ஆம்" எனப் பதிலிறுத்தார். பிசுமாக் இல்லம் திரும்பித் தன் பதவியைத் துறப் பதற்கான கடிதத்தை வரைந்தார்.

செர்மன் பேரரசின் உண்ணுட்டு வரலாறு 265
பிசுமாக்கின் பதவி நீக்கத்தை, சக்கரவர்த்தி, மகிமைகளினலும், பட்டங்களினலும் மூடி மறைக்க முயன்ருர். இளவரசர்களும் மக்க ளும் தம் நன்றியையும், அன்பையும் காட்டுவதில் ஒருவரோடொரு வர் போட்டியிட்டனர். ஆனல் சக்கரவர்த்தியின் சொல்லம்பினல் ஏற் பட்ட காயம் அவரது இதயத்தில் என்றும் ஆரு த இரணமாகவே இருந்தது. சக்கரவர்த்தி, இளவரசர்கள் நண்பர்கள் முதலியோரிடம் விடை பெற்று, தன் பழைய சக்கரவர்த்தியின் சமாதியில் ஒரு உருேசா மலரைத் தன் காணிக்கையாக வைத்து, அரசியலுலகிலிருந்து ஒய்வு பெற்ருர் , 1898 இல் பரகதியடைந்தார்.
சுக்கானி கைவிடப்படல் :
நீண்ட காலமாக செர்மனியின் அரசாங்கக் கப்பலை செலுத்திய சுக்கானி இவ்வாறு கைவிடப்பட்டார். பழைய சக்கரவர்த்தி, உறுான், மொல்க் என் ) அவரது உற்ற சிநேகிதர் யாபேரும் இறந்து விட்டனர். புதுக் கருத்துக்களும் புது மனிதரும் நிறைந்த காலம் உதயமாயிற்று.
uGDL-ġg5&ao6Jör 5Ů fð6 (General Caprivi) :
இரண்டாம் உவில்லியம் கப்ரீவியை முதலமைச்சராக நியமித் தார். ஆனல் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் யாவும் சக்கரவர்த்தி யினலேயே தீர்மானிக்கப்பட்டன. 1890 இல் சமூகவுடைமை வாதி களுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களை புதுப்பிக்காமல் விடவே சமூக சனநாயகக் கட்சியின் பிரசாரம் பகிரங்கமாக நடைபெறலா யிற்று; இறைகு சாக்கில் பிரதிநிதித்துவம் அதிகரித்தது ; தடையின்றி நாட்டில் செல்வாக்கும் பிரசாரமும் ஓங்கியது. பிசுமாக் ஆரம் பித்து வைத்த பாதுகாப்புப் பூட்கையை சக்கரவர்த்தி தொடர்ந்து அனுட்டித்து வந்தார். அயல் நாடுகளான ஒசுத்திரியா, இத்தாவி, பெல்சியம், சுவிற்சலாந்து என்பவற்றுடன் 1891 இலும் இரசியாவுடன் 1894 இலும் வர்த்தக உடன்படிக்கைகள் நடந்தேறின.
856ör 3GoT (Hohelohe) :
1894 இல் கப்றிவியின் இடத்துக்கு ஒகன்லோ நியமிக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளுக்குப் பதவி வகித்தார். இக்காலம், செர்மன் கடற் படைப் பலத்தின விருத்திக்குப் பேர்போனது. வட கடலிலுள்ள எலிகோலந்து (Heligoland) 1890 இல் செர்மன் உடைமையாயிற்று. வட கடலையும் போல்திக் கடலையும் இணைக்கும் கீல் கால்வாய் (Kiel Canal) வெட்டப்பட்டது. 1897 இல் இங்கிலந்தின் கடல் வலிமையை ஆட்சேபிக்க வல்ல ஒரு விசாலமான கப்பலமைக்கும் திட்டம் கைக் கொள்ளப்பட்டது.

Page 149
புது உலக சரித்திரம்
Sy4,03 Q) m. (Bulow), GuğLD 6öT gQ6ñb0)6)Jé; (Beth man Hollweg) :
1900 முதல் 1909 ஈருக பியூலோவும், 1909 முதல் உலகப்போரின் வருகை மட்டும் பெத்மன் ஒல்வெக்கும் மண்டலநாயக பதவியை வகித் தனர். உண்ணுட்டில், இராணுவ, கடற்படை அதிகரிப்புத் திட்டங் களுக்குவேண்டிய பணம், புது வரிகளினல் அறவாக்கப் பட்டமையினல் எதிர்ப்பு அதிகரிக்கலாயிற்று. இக்காலத்தில் சர்வ தேச விவகாரங் களில் நெருக்கடிகள் ஒன்றன்பின் ஒன்முக தொடர்ந்து வந்துகொண்டே யிருந்தன. ஈற்றில் 1914 ஆம் ஆண்டு, கைசர் செர்மனியை போருக்கு இழுத்துச் சென்ருர், போரின் முடிவில் பேரரசு மறைந்தது ; சக்கர வர்த்தி நாட்டைவிட்டு ஒட்டம் பிடித்தார் ; செர்மனி குடியரசாயிற்று

மூன்ருவது பிரெஞ்சுக் குடியரசு 267
அதிகாரம் 16
மூன்ருவது பிரெஞ்சுக் குடியரசு (1870-1914)
1870 க்கும் 1871 க்கு மிடைப்பட்ட "கொடுமையான ஒராண்டில்" பிரான்சைப் பல பிரச்சினைகள் எதிர்த்து நின்றன. ஆபத்து நிறைந்த அந்நிய நாட்டுப் போர், உண்ணுட்டு அரசியல் நெருக்கடி, கொடூரங் கள் நிறைந்த உண்ணுட்டுப் போரை ஏற்படுத்திய சமூகப் புரட்சி, என்பன அவ்வாண்டினுள் பிரான் சை அலலற்படுத்தின.
மூன்றவது குடியரசும் பிரசியாவுடன் அமைதியும் :
செற்றம்பர் 4 ஆம் நாள் செடான் தோல்வியின் செய்தி பரிசுக்கு எட்டியது. அங்கு ஒரு குடியரசும், போரைத் தொடர்ந்து நடாத்த ஒரு தற்காலிக தேசப் பாதுகாப்பு அரசாங்கமும் (Govt. of National Defence) ஏற்படுத்தப்பட்டன. 1871 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் நாள், பரிசு நகரம் சரணடைந்தது. செர்மன் சமாதான உடன் படிக் கையின் முறிகளைப் பரிசீலிக்க நாட்டு மன்றம் (National Assembly) ஒன்று தெரிவு செய்யப்பட்டது. சமாதானத்தை மிக வன்மையாக பிரான்சு ஆசித்தமையினல், பிசுமாக்கின் கடும் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டியதாயிற்று. வேறு மார்க்க மின்றி அ ல் சா சு உலொறேன் மாகாணங்களைக் கொடுத்தும், நட்ட ஈடு தருவதாக வாக்களித்தும் பிசுமாக்குடன் பிராங்பேட் சமாதான உடன்படிக்கை (Treaty of Frankfort) GIF uiu Lu'Luli. L-gl.
பரிசுச் சமிதி :
சமாதானத்தைத் தொடர்ந்து, பிரான்சில் கொடூரம் நிறைந்த உண் ணுட்டுக் கலகமொன்று ஏற்பட்டது. மார்ச் மாதம் 18 ஆம் நாள், பரிசுச் சமிதி (Commune) அமைக்கப்பட்டதுடன், புரட்சி பூத்தது. தற்பெருமை, பட்டினி, குடியரசுவாதம், சமூகவுடைமைவாதம், ஆட்சி யறவு எனும் வெடி மருந்துகளின் கலப்புத் தயாரிப்பே சமிதி என லாம். ஒரு நூற்றண்டில் பத்து முறை தன் சித்தத்தை முழுப் பிரான் சின் மீது செலுத்த முயற்சித்த பரிசு நகரம், இக்கலகத்தின் அடித்தள மாய் அமைந்தது 1870 யுத்தத்தின்போது, பரிசு நகரம் முற்றுகை யிடப்பட்டு, போர்த் துன்பத்தின் பெரும் பகுதியைச் சுமந்தது. முற் றுகையின்போது பிரான்சின் ஏனைய பகுதிகளிலிருந்தும் துணை கிடைக்கு மென எதிர்பார்த்த பரிசு மக்கள் ஏமாந்தனர். கட்டிடங்கள் செர்

Page 150
268 புது உலக சரித்திரம்
மன் பீரங்கிகளின் பெருவாயில் இரையாவதைக் கண்டு மனம் துடித் தனர். வெற்றிக் கீதத்துடன் நகரத்துள் பிரவேசிக்கும் செர்மன் படைகளைக் கண்டு நெஞ்சு வெடித்தனர். இவ்வாறு நான்கு மாத காலம் பரிசு நகரத்து மக்கள் இன்னலைப் பொறுமையோடு சகித் தனர். தாய் நாட்டின் மானத்தைக் காக்க இவர்கள் துன்பக் கேணி யில் தத்தளிக்கும் வேளையில், முடியரசுவாதத்தை ஆதரித்த நாட்டு மன்றம் தேசத்தின் மானத்தைக் காற்றில் விட்டு சமாதானத்தை நாடியது. மன்றம், போடோ (Bordeaux) விலிருந்து வேர்சைக்கு மாறியதைக் கண்டு, மக்கள் பொறுமையைக் கைவிட்டு, தேச அர சாங்கத்துக் கெதிராய் பொங்கியெழுந்தனர். தலைநகரிலிருந்த பீரங்கி களை அரசாங்கம் அகற்ற முயற்சித்தபோது புரட்சி ஆரம்பித்தது. கலகக்காரர் வேர்சை நாட்டு மன்றத்தின் சட்டங்களை நிராகரித்து சமிதியை பரிசில் நிறுவினர். செந்நிறக் கொடி வானளாவப் பறந் தது. பரிசு நகரின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறு பிரெஞ்சு மாகா ணங்களுக்கு விஞ்ஞாபனங்கள் பறந்தன. பரிசின் 90 அங்கத்தினர் களைக் கொண்ட ஒரு பொதுச் சபை (General Council)--இதுவே பரிசுச் சமிதி, எனும் பெயரைப் பெற்றது.--நகரத்தைப் பல மாதங் களுக்குத் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வைத்திருந்தது. பிரான் சில், பூரண சுயவாட்சி படைத்த சமிதிகளை (Communes) நிறுவி, மத் திய அரசாங்கத்தில் பலத்தைக் குறைக்க வேண்டுமென்றே இப்புரட்சி வாதிகள் நோக்கங் கொண்டனர். தியசும் நாட்டுமன்றமும் குடியர சைக் கவிழ்த்துவிட முயற்சிப்பதாகக் குற்றஞ் சாட்டினர்.
உண்ணுட்டுக் கலகத்தின் முடிவு :
கலகக்காரரைப் பலவந்தமாக அடக்கும் ஒரேயொரு பாதை தான் தியேசுக்கு (Thiers) த் திறந்திருந்தது. செர்மனியர் தம் முகாம்களி லிருக்க, பிரெஞ்சுக்காரர் பரிசு மக்களை அடக்கும் நோக்குடன் அந் நகரை மீண்டும் முற்றுகையிட்டனர். தாக்குதலை எதிர்த்து ஆறு கிழமைகள் பரிசு வன்மையுடன் போராடியது. ஆனல் அரசாங்கம் ஒவ்வொரு வீதியாகக் கைப்பற்றி முன்னேறி வந்தது. பரிசு மக்க ளின் நம்பிக்கைச் சுடர் அணைந்தது ; அவர்களது அட்டகாசங் களும் கொடூரங்களும் அதிகரித்தன. இறுதிக் கிழமை இரத்தக்களரி யில் முடிவேற்பட்டது. பரிசு நகரத்தின் தலைவர்கள் துப்பாக்கிகளுக் குப் பலியாயினர். கட்டடங்கள் தீக்கிரையாகின. சீன் நதி, குருதி யினுல் குளிப்பாட்டப்படும் வரை பொதுவுடைமைவாதிகள் வதைக்கப் பட்டனர். பரிசின் சர்வாதிகாரமும் அடங்கிப் பணிந்தது. பொது வுடைமைவாதிகள் சுட்டுப் பொசுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்

மூன்ருவது பிரெஞ்சுக் குடியரசு 269
பட்டு, நாடு கடத்தப்பட்டு, பழி வாங்கப்பட்டனர். இப்படு தோல் வியானது நூற்ருண்டின் முடிவுகாலம் வரை தலைதுாக்க முடியா வண்ணம் பொதுவுடைமைவாதத்தைக் குழி தோண்டிப் புதைத்தது.
தியேசின் சேவை :
சமிதி அட்ங்கியதும் தியேசின் தேச நிருமான வேலை தொடங் கியது. இயன்ற விரைவில் நட்ட ஈட்டைக் கட்டி செர்மன் துருப் புக்களை நாட்டிலிருந்து அகற்றுதல் அவரது முத ன் வேலையாயிற்று. வியப்புக்குரிய வேகத்தில் தேவையான பணம் நாட்டில் கடன் மூலம் வசூலிக்கப்பட்டது. யுத்த நட்ட ஈட்டை அவர் விதித்த போது ஒரு தலை முறைக்கேனும் பிரான்சு செயற்படாதென பிசுமாக்கு எதிர்பார்த் தார் ஆணுல் ஈராண்டுக்குள் கடன் சுமை தீர்க்கப்பட்டது. போரின் விளைவாக ஏற்பட்ட இரணங்கள் குணப்படுத்தப் பட்டன. பழுதடைந்த பாதைகள், பாலங்கள் வீதிகள், மாடங்கள், கோட்டைகள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டன. வியாபாரமும் தொழிலும் மின் வேகத் தில் விருத்தி பெற்றன. தேச புனர் நிர்மாணத் திட்ட வேலையின் முக்கிய அம்சம் இராணுவச் சீர்திருத்தத்தை இலக்காகக் கொண்டது. 1870 ஆம் ஆண்டுப் போர் இராணுவத்தின் குறைகளையும், ஆயத்த மின்மையையும் சுட்டிக் காட்டிற்று. பிரசியாவின் விஞ்ஞான இரா ணுவ அமைப்புக்கு முன்னுல் பிரான்சு தன்னைக் காத்துக் கொள்ள முடியவில்லை. 1872 ஆம் ஆண்டு இராணுவச் சட்டத்தின் மூ ல ம் பிரெஞ்சுப் படைகள் பிரசிய மாதிரியில் புதுப்பிக்கப்பட்டன. கட் டாய இராணுவ சேவையும் கைக்கொள்ளப்பட்டது.
முடியரசு வாதிகளின் ஒற்றுமையின்மையும் அதன் பயனும் :
அரசியல் திட்டத்தின் தன்மையில் மீண்டும் வரையறுப்பு வேண் டியிருந்தது. ஆனல் இவ்விடயத்தில் ஒருமைப்பாடு உருவாவது கடினமாயிற்று. அரசு வாதிகள் மன்றப் பெரும் பான்மையினரா யிருந்த போதிலும், அவர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவ வில்லை. ஒரு மகுடத்துக்கு மூ வர் ஆதரிக்கப் பட்டனர். பூர்போன் வமிசத்தின் கொம்ரே டி சம்போட் (Comte de Chambord) ஒலியோன் பரம்பரை யின் கொம்ரே டி பரி (Comte de Paris) நெப்போலிய வழியில் மூன் கும் நெப்போலியனின் மைந்தன் மூவரும் ஒரு பதவிக்குப் போராடி னர். இவ்வண்ணம் முடியாட்சிக் கட்சியில் உண்டான பிளவை மேற் கொள்வதற்கு ஒலியோன் பரம்பரையின் ஆதரவாளரான தியேசு, குடி யரசை ஆதரித்தார், ஏனெனில் “அம் முறை தான் எம்மை மிக க் குறைவாய் பிரிக்கிறது' என்ருர். தியேசு கூறிய வாக்கு, அவர் ஆட்

Page 151
27d புது உலக சரித்திரம்
சிக்குத் தீர்ப்பளித்தது. முடியாட்சிக் கட்சியினர் ஒன்று கூடி, அவர் பதவிக்கு முடிவுதேடி, மக்மகோனுக்கு (Mac Mahon) குடிப்பதிப் பதவி யைச் சூட்டினர். .
குடியரசு :
அரசு வாதிகளின் மத்தியில் முளைத்த கருத்து வேறுபாடுகளைக் க%ளந்தெறிய முடியாத பிடிவாதநிலை அமைந்ததன் காரணமாய் 1875 ஆம் ஆண்டு பெரும் பான்மை வாக்கு, குடியரசு முறையைத் தேர்ந்தது அரசுரிமையைச் சுவீகரித்த குடிப்பதியின் கீழ் அரசுரிமை யின் ஆதரவாளரான பெரும்பான்மை உறுப்பினர், குடியரசு முறை யைத் தாபித்தமை உண்மையில் பெரும் விசித்திரமான செயலே. அவ் வாண்டு ஏற்பட்ட அரசமைப்புத் திட்டமானது பொது மக்கள் தேர்ந்த மக்கள் சபையையும், மறை முகத் தேர்வில் தேர்ந்த செனற்சபையையும் பொறுப்பு வாய்ந்த மந்திரத்தையும் சிபார்சு செய்தது. குடியரசின் குடிப்பதியைச் சட்ட சபையின் இரு பகுதிகளும் ஒன்று கூடித் தெரிய வேண்டு மென்றும் அவரது பதவி ஆயுள் ஏழு ஆண்டுகள் என்று ம் விதித்தது. இவ்வாறு மூன்றுவது முறையாக, பிரான்சின் வரலாற்றில் குடியரசின் தாபிதம் பொறிக்கப்பட்டது. அம் மூன்றிலும் இறுதி யான இதுவே 1946 ஆம் ஆண்டுத் திருத்தம்வரை நீடித்து இயங்கி யது. 1870 ஆம் ஆண்டு அரசு வாதிகள் திடீர்ப் புரட்சித் தீயை திரும்பவும் ஏற்ற முயன்றனர்; முயற்சி பலிக்கவில்லை. 1879 இல், மக்மகோன் பதவியிலிருந்து நீங்கினர். புதுத் தேர்தலால் குடியரசு வாதிகளுக்குக் கீழ்ச்சபையின் பெரும்பான்மை கிடைத்தது. அவர்கள் அவ்வாண்டு குடியரசு வாதிகள் நிறைந்த மந்திரத்தை நிறுவினர். யூல்சு கிறேவி (Jules Grevy) என்ற திடமான குடியரசுவாதியை குடிப்பதிப்பதவியில் ஏற்றினர்.
முடியாட்சி வாதிகளின் மீள முடியாத தோல்வி நிச்சயமான துடன், புதுக்குடியரசு தன் நிலையை உறுதிப்படுத்தவும், நாட்டின் உள்ளும் புறமும் அரசாங்கத்தின் அவதானத்தை வேண்டி நின்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் முற்பட்டது. அடுத் த சில ஆண்டுகளில் பல சீர்திருத்தங்கள் கைக் கொள்ளப்பட்டன. பத்திரிகைகள் பூரண சுதந்திரம் பெற்றன ; கல்வி முறை மத அதிகாரத்திலிருந்து விடுவிக் கப்பட்டு தேச அடிப்படையில் நிர்வகிக்கப் பெற்றது. மதக் குரவர் கள் தேச பாடசாலைகளில் நியமனம் பெற முடியாதென்றும், திருச் சபை தன் தனிப்பட்ட பாடசாலைகளை நடாத்தலாமென்றும் விதிக்கப் பட்டது.

மூன்றுவது பிரெஞ்சுக் குடியரசு 27
குடியாட்சியின் இறுதி வெற்றி :
1884 ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் சில திருத்தங்கள் செய்யப் பட்டன. குடியரசு அரசியல் யாப்பில் மாற்றங்கள் செய்யப்படலாகா தென்றும் குடிப்பதிப் பதவிக்கு பழைய அரச வமிசங்களைச் சேர்ந்த வர்கள் போட்டியிடலாகாதென்றும் புது மாற்றங்கள் கூறின. 1848இல் போன்று குடிப்ப்திப் பதவி சிம்மாசனத்தையடைய ஒரு மிதிபடியாக அமையலாகாது என்பதே அவர்களது நோக்கம். 1866 இல் பழைய அரச வமிசங்களைச் சேர்ந்த உரிமையாளர்கள் பிரான்சிலிருந்து நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு குடியரசு முறை பெலமான அத்திவா ரத்தில் அமையப் பெற்றது.
புதுக் குடியரசின் அமைவு ஒரு கட்சியின் முயற்சிகளினல் எற்பட்டதன்று ; அதை உருவாக்குவதில் நாட்டின் சகல கட்சிகளும் ஒத்துழைத்தன. அதனுலேயே புதுக் குடியரசு பிரெஞ்சு வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற பல்வேறு தன்மையையும் கொண்ட ஒரு ஒத்து மேவலாக (Compromise) அமைந்தது. பிரெஞ்சுப் புரட்சி பெற்றுத் தந்த சமுதாய சமத்துவம் , நெப்போலியப் பேரரசின் அதிகாரம் நிறைந்த மத்திய அர சாங்கத்தின் நிறுவகங்கள். வல்லாட்சிக்கும் தூய சனநாயக்கத்துகுமிடையில் மத்திய இடை நிலையைப் பெற்றுத் தரவல்ல அரசியல் அதிகாரப் பங்கீடு என்பவை புது யாப்பில் பாதுகாக்கப்பட்டன. இத்தன்மையே அதற்கு உறுதியையும், நிலையான தன்மைகளையும் பெற்றுக் கொடுத்தது. இவ்வாறு பிரெஞ்சு மக்கள் நீண்ட காலத்து மாற்றமற்ற அரசியல் வாழ்வை வாழ்வதற்கு வரய்ப்பைப் பெற்றமைக்கு பிறிதொரு காரணமுமுண்டு. பிரான் சில் எற்பட்ட ஒவ்வொரு புரட்சியும் குடியரசுவாதிகளின் தூண்டுதலினலேயே எற்பட்டது. முதல் மூன்று சத்தர்ப்பங்களில் (1792, 1830, 1848) அவர்களது செல்வாக்கு பரிசிலும் எனைய பெரிய நகரங்களிலும் மாத்திரமே நிலைத்ததனல், நாளடைவில் பாமர மக்களின் குடியரசுவாவம் அவர்கள் வெற்றிகளைச் சிதைத்தது. ஆனல் நான்காவது முறை ஏற்பட்ட புரட்சியில் (1870) குடியரசுவாதம் தேச மக்களின் உள்ளங்களில் வேரூன்றி நிலைத்துவிட்ட மையினூலேயே 1870 ஆம் ஆண்டு ஏற்பட்ட மூன்றவது குடியரசு ஆட்சிப் புரட்டுக்களுக்கு இடம் கொடாது நீண்ட காலம் நிலைத்தது.
பிரான்சில் மீண்டும் முடியாட்சி ஏற்படும் என்ற அச்சம் நீங்கிய வுடன், குடியரசு வாதக் கட்சி பல குழுக்களாகப் பிளவுபட்டு, பல தொல்லைகளை விளைவித்தது. v
பிரான்சில் நிலையான இரு கட்சி அரசியல் முறை உருவாகாத காரணத்தினுல் பாராளுமன்ற ஆட்சி முறையில் பலவீனம் காணப் பட்டது. கட்சிகள் என்ற குழுக்களின் ஆதரவு காலத்துக்குக் க்ாலம் சதா மாறிக்கொண்டே இருந்தமையினுல் மந்திரங்களும் ஈடாடின. குடியரசு வாதத்துக்கு எதிர்ப்பும் பலத்தது. தோன்றி மறைந்த குடியரசுகளைப் போல் இதுவும் விரைவில் தோல்வியுறுமென்று எதிர் பார்த்தனர் பலர்.
பூலாங்கரும் அவரது ஆதரவாளர்களும் :
1886 ஆம் ஆண்டு போர் அமைச்சரான பூலாங்கர் (Boulanger) என்பவரின் தலைமையில் குடியரசின் எதிரிகள் ஒன்று கூடினர். ஒற்

Page 152
272 புது உலக சரித்திரம்
றுமை கொண்டனர். பாராளுமன்ற ஆட்சியைக் கவிழ்க்கவும் பூலாங் கரின் கீழ் வல்லாட்சி ஆளுகையை நிறுத்தவும் அரசுவாதிகள், பொனப் பாட் வாதிகள், குரவர், பொதுவுடைமை வாதிகள் பேராதரவு அளித் தனர். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதைப்போல, அபாயத்தைக் கண்ட குடியரசு வாதிகளும் ஐக்கியம் பூண்டனர். உறுதி யாகக் கருமமாற்றினர். அதனுல் பூலாங்கரின் திட்டங்கள் பொடிப் பொடியாயின. பூலாங்கரைக் கைது செய்யும் படி பிறந்த சட்டம் அவரைத் தொடர்ந்தபோது, அவர் நாட்டைத் துறந்து ஒட்டம் பிடித்தார். பூலாங்கர் இல்லாத தருணத்தில் நீதி விசாரணை நடந்தது. அவர் தேசத்துரோகியெனத் தீர்ப்பளிக்கப்பட்டார். சில மாதங்களின் பின் பூலாங்கர் பிறசல்சில் தற்கொலை புரிந்து கொண்டார்.
இந் நிகழ்ச்சியானது அரசவாதிகள் குருமாரது செல்வாக்கைப் பாதித்து, உறுதியான குடியரசுக்கு உதவியளித்தது.
§ puu 6.jpä(5 (Dreyfus Case):
1887 இல் குடிப்பதியான காணுே (Carnot) 1894 இல் கொலை செய்யப்பட்டார். போறே (Faure) யின் குடிப்பதவிக் காலத்தில் 1894 ஆம் ஆண்டின் திறயிபசு வழக்கு மீண்டும் குடியரசைப் பரிசோதித் தது. பிரான்சின் இராணுவ அதிகாரிகளில் ஒருவரான அல்பிறட் திறயிபசு (Alfred Dreyfus) இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தினு ரென குற்றம் சாட்டப்பட்டு கைதாகினர். இரகசிய நீதி விசாரணை யின் பின் பகிரங்கமாக அவமானப் படுத்தப்பட்டார். பின் தென் அமெரிக்காவின் பேய்த்தீவுக்கு (Devil's Island) நாடு கடத்தப்பட்டார் அவர் தான் நிரபராதியென வாதாடினர். ஆனல் அவர் பிறந்த யூத இனம் பிரெஞ்சு மக்களின் ஆதரவைப் பெறமுடியாத நிலைமையை உண்டாக்கியது. 1894 இல் நிகழ்ந்த இச்சம்பவத்தை ஈராண்டுக் காலத்தில் எல்லோரும் மறந்திருந்தனர். ஆனல் அந் நிலை யில் கேணல் பிக்காட் (Colonel Picquart) என்ற இளைஞனன இரகசியப் பகுதி இராணுவத் தலைவன் திறயிபசு வழக்கின் பிரதான ஆதாரமா யிருந்த ஒரு பத்திரத்தை பரிசீலனை செய்து அஃது ஒரு போலித் தயாரிப்பென நிரூபித்தான். அவ்வழக்கு மீண்டும் விசாரணை செய்யப் படவேண்டுமென வற்புறுத்தினன். இதனை மூடிமறைக்கும் நோக் குடன் அரசாங்கம் பிக்காட் என்பவரை தியூனிசுக்கு இடம் மாற்றியது. கேணல் என்றி (Clonel Henry) அவரது இடத்துக்கு நியமிக்கப்பட் டார். இந்நிகழ்சிகளினுல் வழக்கு பிரமாண்டமான தோற்ற மெடுத் தது. அரசியல், சமூகத் திட்டப் பிரச்சினைகள் அதைச் சூழ்ந்து கவிந் தன. தேசத்து மக்கள் யாவரும் இதில் பங்கு கொண்டனர். முன் னேற்ற வாதிகள், குடியரசுவாதிகள், பொதுவுடைமை வாதிகள் அனை

மூன்ருவது பிரெஞ்சுக் குடியரசு 273
வரும் திறயிபசு நிரபராதி என வாதித்தனர். மறுபுறமாய் இராணுவ அதிகாரிகளும், மத குருக்களும் குடியரசு வாதிகளும் திறயிபசு குற்ற வாளியே என்று பிடிவாதமாய் வாதாடினர். தேசத்தை அதன் எதிரிகளி டமிருந்து பாதுகாருங்கள் என்று திசையெங்கும் பிரசாரம் நடாத்தினர்.
திறயிபசின் எதிரிகள் ஆரம்ப வெற்றியைப் பெற்றனர். போலிச் சாட்சிப் பத்திரத்தை தயாரித்தவர் என்பதற்காய் கைது செய்யப் பட்ட மேசர் எசித்தகேசி (Major Esterhazy), நிரபராதியென விடு தலை பெற்றர் அவர்மீது. குற்றஞ் சுமத்திய பிக்காட் சிறைக் கைதி யானுர் ; வெற்றி பெற்ற எதிரிகள் ஆர்ப்பரித்துக் குதூகலித்தனர். ஆனல் உடனே போக்கு மாற ஆரம்பித்தது. கேணல் என்றி என் பவர் தானே போலிப் பத்திரத்தின் தாயாரிப்பாளன் என ஏற்றுக் கொண்டு, தற்கொலை புரிந்தார். நிரபராதியென சிறையிலிருந்து வெளி யேற்றப்பட்ட மேசர் எசித்தகேசியும் தன் குற்றத்தை ஒ ப் புக் கொண்டு நாட்டைத் துறந்தார். இந்நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக அர சாங்கம் மீண்டும் வழக்கைத் திறக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளா னது. பேய்த் தீவிலிருந்து கைதி வரவழைக்கப்பட்டார். ஓர் இரா ணுவ விசாரணைச் சபை முன் புது வழக்கு விசாரணை நடந்தது. இச் சபையிலும் திற யி பசு குற்றவாளியெனவே தீர்மானிக்கப்பட்டார். ஆயினும் அவரது சிறை வாழ்வு பத்து ஆண்டுகளுக்குக் குறைக்கப் LLLL-gij
பிரான்சின் குடிப்பதி தன் உரிமைப் பலத்தால் குற்றவாளி மீது விதிக்கப்பட்ட தண்டனையை முற்றப் நீக்கி விடுதலை வழங்கினர் சுமுகமான இம்முடிபு கூட திறயிபசு சுத்தவாளியாய்க் காணப்பட வேண்டுமென்று விருப்பம் கொண்டிருந்த அவரது ஆதரவாளருக்குத் திருப்தி தரவில்லை. 1906 இல் மீண்டுமொரு முறை வழக்கு விசார ணைக் கெடுக்கப்பட்டு, திறயிபசு பூரண சுத்தவாளியென தீர்ப் பளிக்கப்பட்டது. இதுவரை அவருக்கு இழைக்கப்பட்ட இன்னல் களுக்குப் பரிகாரமாக உயர் பதவியொன்றும் தரப்பட்டது. திறயி பசின் வெற்றியானது ஈற்றில் குடியரசின் வெற்றியாக மாறியது. கேணல் பிக்காட் செனரலாக்கப்பட்டுப் பின்பு யுத்த அமைச்சர் பத விக்கு உயர்த்தப்பட்டார். குடியரசும் திருச்சபையும் :
அரசாங்கத்துக்கும் திருச்சபைக்குமிடையே புகைந்து கொண்: டிருந்த பிரச்சினையை திறயிபசு வழக்கு எனும் காற்று ஊதி எரித்து விட்டது. அவ்வழக்கானது குடியரசின் தலையாய எதிரி திருச்சபை தான் என முடிபு கட்டியது. அதனல் வெற்றி பெற்ற குடியரசுவாதி கள், மதத்துக்கும் அரசாங்கத்துக்குமிடையே உள்ள தொடர்புகஷ் தெளிவாய் வரையறுக்கப்பட வேண்டுமென்று கிளர்ச்சி எழுப்பினர்.
2 g - 20 *

Page 153
274 புது உலக சரித்திரம்
1901 இல் வோல்டெக் உரூசோவின் மந்திரம் இயற்றிய கூட்டுச் சட்டம் (Law of Association) சகல சங்கங்களும் அரசாங்க அனு மதி பெறுதல் வேண்டுமெனக் கூறியது. இப்போர்வையின்கீழ் ஏறத் தாள 3,000 மதச் சங்கங்கள் கலைக்கப்பட்டன : சங்கங்களின் மடங் களும் சொத்துக்களும் பறிக்கப்பட்டன. அங்கீகாரம் பெற்றுக்கொள் ளாத தாபன அங்கத்தவர்கள் பாடசாலைகளை நிருவகிக்கவும், பாட சாலைகளில் கற்பிக்கவும் முடியாதென்றும் வேறேர் சட்டம் விதித்தது. இச்சட்டத்தின் கீழ் மத குருக்களின் கையிலிருந்த கல்வி, விடுவிக்கப் பட்டது. 1904 இல் கலாசாலைகள், மத தாபனங்களின் ஆளுகையிலி ருந்து அப்புறப்படுத்தப்பட்டு அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வரப்பட்டன. 1905 இல் நெப்போலியன் போப்பாண்டவருடன் செய் திருந்த இணக்க உடன்படிக்கை (Concordat) இரத்துச் செய்யப்பட் டது. மதமும் அரசாங்கமும் இருவேறு தாபனங்களாய் நிலைமாறின. சமூகவுடைமை வாதம் :
குடியரசு, முடியரசு வாதிகளுடனும், திருச்சபையுடனும் நடாத்திய சமர்கள் ஓய்ந்ததுடன், உண்ணுட்டு விவகாரங்களில் சமூகவுடைமை வாதமும் சமூகப் பிரச்சினைகளும் முன்னணிக்கு வந்தன. பிரான்சில் தொழிலாள வகுப்பினரின் நலவுரிமைச் சட்டங்கள் இங்கிலாந்துக்கும் செர்மனிக்கும் பிந்திய காலங்களிலேயே ஏற்படுத்தப்பட்டன. 1884 இல் தொழிற் சங்கங்கள் சட்ட பூர்வமான அமைப்புக்களாக அங்கீகாரம் பெற்றன ; 1898 ஆம் ஆண்டு தொழிலாளர் நட்ட ஈடு விதி (Workmen's Compensation Act) -9/Сурбi Glarui Lupi LILL-g. ; 1906 g)di, பத்து மணித்தியால தொழிற்சாலைச் சட்டமும், 1910 இல், மூப்பு இளைப்பாறல் விதியும் (Old Age Pensions Law) இயற்றப்பட்டன.
1906 க்கும் 1910 க்கு மிடையில் சமூகவுடைமை வாதிகளின் மத் தியில் சிந்திகவியர் (Syndicalists) உயர்வு பெற்றதுடன், வேலை நிறுத்தங்களும் கீழறையும் (Sabotage) நாட்டில் மலிந்தன. 1910 இல ஒரு விசாலமான புகையிரத வேலை நிறுத்தம், ஒரு சமூகவுடைமைப் புரட்சிக்கு முன்னேடியாக அமைவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனல் இவ்வேலை நிறுத்தம் பிறயந்து (M. Briand) என்ற சமூகவு டைமைப் பிரதமரினலேயே முறியடிக்கப்பட்டது.
சமூகவுடைமை வாதிகள் பல கூறுகளாகப் பிளவு பட்டு நின்றமை
யினுல், அவர்கள் நாட்டு விவகாரங்களில் தம் எண்ணங்களை நிலை நாட்ட முடியாமற் போயிற்று. குறுகிய காலத்து மந்திரங்கள் ஒன் றன்பின் ஒன்ருகப் பதவிக்கு வருவதும் மறைவதுமாக இருந்தன.
1914 ஆகத்தில், தேசத்தைப் பாதுகாப்பதற்கு எல்லாக் கட்சிகளி னதும் ஒற்றுமை தே  ைவ ப் பட்டமையினுல், குழு மனப்பான்மை தற்காலிகமாக மறைந்தது.

ஐரோப்பாவின் புதுப் பேரரசுவாதம் 275
அதிகாரம் 17 ஐரோப்பாவின் புதுப் பேரரசுவாதம்
(1870-1914)
கைத்தொழிற் புரட்சியின் பயனக ஐரோப்பாவில் ஏற்பட்ட புதுப் பொருளாதார நிலைகளே 19 ஆம் நூற்ருண்டின் புதுப் பேரரசு வாதத்துக்கு (New Imperialism) வழி காட்டின. விஞ்ஞானத்தி னதும், தொழில் நுட்ப இயலினதும் அதிசயத்துக்குரிய வெற்றிகளி னல், முதலாவது உலக யுத்தத்துக்கு முன்னுள்ள நாற்பது ஆண்டு களில், ஐரோப்பிய நாடுகள் குடியேற்றப் பிரச்சினைகளில் கொண் டிருந்த மனே நிலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டின. ஐரோப்பாவில் எந்திரத் தொழில் முறை தோன்றியது ; பண்டங் களின் உற்பத்தி பெருகியது ; தொழிற்சாலைகளுக்கு வேண்டிய மூலப் பொருள்களைப் பெறுவதற்கும், ஆக்கப்பட்ட பொருள்களை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கும் ஆங்காங்கு தம் ஆதிக்கத்தின் கீழ் குடியேற்ற நாடுகளை ஏற்படுத்துவதன் நன்மைகளை ஐரோப்பியர் உணர்ந்தனர். போக்குவரத்துச் சாதனங்களின் வியப்புக்குரிய வளர்ச் சியினல் தூரத்துத் தேசங்களை வெற்றி கொள்வதும், ஆட்சி செய்வ தும் சாத்தியமாயிற்று. இவற்றின் பயனக ஐரோப்பிய அரசாங்கங் களின் நாட்டம் வணிகப் பெருக்கத்திலும், குடியேற்ற சாம்ராச்சியத் திலும் படிந்தது.
உலகத்தின் பல பாகங்களிலும் அதி கூடுதலான குடியேற்ற நாடு களைக் கொண்டிருக்கும் அரசுகளே பெரும் வல்லரசுகள் எனக் கணிக்கப்படும் காலம் உதயமாயிற்று. 1870 க்கும் 1914 க்குமிடை யில் ஏகாதிபத்தியப் போட்டியில் கால் வைத்த புதுத் தோற்றங்க ளான செர்மனி, இத்தாலி, யப்பான் எனும் நாடுகளில் இவ்வுணர்வு மிகத் துலக்கமாகக் காணப்பட்டது. 1871 க்குப்பின் பிசுமாக் செர் மனியை ஓர் அமைவு கொண்ட அரசு என வருணித்தபோதிலும், அந்நாட்டின் தேச உணர்ச்சியின் வேகம் அதை ஏகாதிபத்திய வேட் கையில் இழுத்துச் சென்றது. புதுக் குடியேற்ற நாடுகளைச் சுவீகரிக் கும் போட்டியில் இத்தாலியும் குதித்தது. ஏகாதிபத்திய விரிவே ஒரு முன்னேற்றமுடைய அரசின் பிரதான இலட்சணம் என அவதா னித்த யப்பானும் தன் புலனை இத்துறையில் புகுத்தியது.
எனினும் அளவற்ற மூலப் பொருள்களின் களஞ்சியங்களைக் கொண்ட பிரித்தானியப் பேரரசுக்கு நிகரானது உலகில் வேருென்று மேயில்லை. இப்பருவம் பிரித்தனின் "மூன்ரும் பேரரசு” தோற்று

Page 154
276 புது உலக சரித்திரம்
விக்கப்பட்ட காலமென்ற சிறப்புப் பெயரைப் பெற்றது. பிரித்த னுக்கு அடுத்து, மேற்கே ஒரு கண்டத்தின் அரைப் பாகத்தை உள் ளடக்கிய அமெரிக்க அரசும், போலந்து முதல் சீன ஈருக வியாபித் துக் கிடந்த இரசியப் பேரரசும் இரண்டாம் இடத்துக்குப் போட்டி யிட்டன.
1870 க்குப்பின் ஐரோப்பிய நாடுகள் பேரரசுவாதத்தில் நாட்டங் கொண்ட்மைக்கு மூல காரணங்கள் தொழில் வளர்ச்சி, போக்குவரத் துச் சாதனங்களின் விருத்தி, வியாபாரப் பெருக்கம் என்பனவாம்.
வியாபாரப் பெருக்கம் :
17 ஆம் நூற்ருண்டு முதல், அமெரிக்கக் குடியேற்ற மாகாணங்க ளும் மேற்கிந்தியத் தீவுகளும் தாம் விளைவித்த புகையிலை, சீனி, வர்ணங்கள் முதலாம் பொருள்களைத் தாயகத்துக்கு ஏற்றுமதி செய்து, அவற்றிற்குப் பதிலாக பிரித்தனில் உற்பத்தி செய்யப்பட்ட புடைவை கள், பாதரட்சைகள், இரும்புப் பொருள்கள் என்பவற்றை வரவழைத் தன. தம் உடன் தேவைக்கே அத்தியாவசியமான உணவுப் பொருள் களின் உற்பத்தியை விட்டு, குடியேற்ற வாசிகள் தம் முழு நேரத்தையும் பிரயாசத்தையும் கரும்புத் தோட்டங்களில் செலவிட்டனர். வெண் ணெய்,கோதுமை, உப்பு, மாமிசம்,மீன் முதலாம் குடியேற்றங்களின் உன வுத்தேவைகளை அக்காலத்து விவசாய இங்கிலாந்து ஈடு செய்தது. இவ் வாறு 17 ஆம் நூற்ருண்டிலேயே கடல் கடந்த நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான வியாபாரம் தோற்றி நின்றது. 1700 க்கும் 1775 க்குமிடையில் அமெரிக்காவினதும் மேற்கிந்தியத் தீவுகளினதும் சனத் தொகை 3 இலட்சத்திலிருந்து 30 இலட்சமாக அதிகரித்தது ; அதனுல் குடியேற்றச் சந்தைகளின் முக்கியத்துவமும் பன்மடங்கு உயர்வுபெற்றது. அமெரிக்க நாடுகளின் சுதந்திரம் தா ணும் இவ்வியாபாரத் தொடர்புகளில் எவ்வித மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை. சுதந்திரப் போருக்குப் பின்பும் ஆங்கில, அமெரிக்க வியாபாரம் தொடர்ந்து முன்பு போலவே வளர்ச்சியடைந்து வரலா யிற்று. 19 ஆம் நூற்றண்டின் பிற்பகுதி வரை அமெரிக்கா ஆக்கப் பட்ட பொருள்களை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்தும் மூலப் பொருள்களை ஏற்றுமதி செய்தும் வந்தது. 1751 இல் அமெரிக்கா 1300 தொன் பருத்தியை ஏற்றுமதி செய்தது ; 1782 இல் 5,400 தொன் ; 1800 இல் 25,000 தொன் ; 1810 இல் 59,000 தொன். இப்பருத்தி பிரித்தனின் ஆலைகளில் புடைவைகளாக உற்பத்தி செய் யப்பட்டு, உலகின் எல்லாப் பாகங்களிலும் விற்பனையாயிற்று. கடல் கடந்த வணிகம் பருவமடைந்தது.

ஐரோப்பாவின் புதுப் பேரரசுவாதம் 277
ஏனைய குடியேற்றங்களின் சரிதைகளும் இதே விதமானவையே: மேற்கிந்தியத் தீவுகளில் சீனி உற்பத்தி நிறைந்த இலாபத்தை தோட்ட முதலாளிகளுக்குப் பெற்றுத் தந்தது. இக் கரும்புத் தோட் டங்களுக்குத் தேவையான நீக்ரோ அடிமைகளை விற்பனை செய்யும் வியாபாரத்தையும் ஆங்கிலரே நடாத்தினர். அவர்கள் தாம் பெற்றி இலாபத்தை இங்கிலந்தில் முதலீடு செய்து, அங்கு உற்பத்தியான பொருள்களை ஆபிரிக்காவில் அடிமைகளுக்கு பண்டமாற்றுச் செய்தனர். படிப்படியாக பிரித்தனின் ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்டு வந்த இந்தி யாவும் செல்வத்தைப் பல ரூபங்களில் வணிகருக்குப் பெற்றுக் கொடுத் தது. தலைஞன் குக்கைப் பின்தொடர்ந்து வியாபாரிகள் பசிபிக் பிராந்தியத்தை ஊடுருவிச் சென்றனர். தேநீர் ஆங்கிலரின் தேச பானமாயிற்று. தேயிலையை பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி சீனுவிலிருந்து பெற்றுக் கொடுத்தது. ஆங்கிலர் இந்தியாவி லிருந்து அபினியை சீனுவுக்கு ஏற்றுமதி செய்து நிறைந்த இலாபத்தைச் சம்பாதித்துக் கொண்டனர். தூர கிழக்குப் பிராந்தியம் முழுவதும் மேற்கு நாடுகளின் வியாபாரத்துக்குத் திறக்கப்பட்டது. இம் முயற்சிக ளின் பயணுக அகில உலகிலும் புதுத் தேவைகள் ஏற்படலாயின. ஆபிரிக் கரும் ஆசியரும் பிரித்தனில் உற்பத்தியான கத்திகள், துப்பாக்கிகள், ஆயுதங்கள் என்பனவற்றையும், மண், கண்ணுடிப் பாத்திரங்களையும் புடைவைகளையும் ஏராளமாக உபயோகிக்கலாயினர். இவ்வாறு 19 ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியில் ஐரோப்பியரின் வெப்ப வலய வணி கம் பன்மடங்கு பெருகியது.
காப்பு வரிகள் :
இக்காலத்தில் வணிகப் பெருக்கம், ஐரோப்பிய நாடுகளின் பிறி தொரு முயற்சியினலும் புது உத்வேகம் பெற்றது. ஐரோப்பாவிலே தொழிற்றுறையின் முன்னணியில் நின்ற நாடுகள், 19 ஆம் நூற்றண் டின் இறுதி இருபத்தைந்து ஆண்டுகளில் காப்பு வரிகளை (Protective Tariffs) Grföl 1653)6ðr. இங்கிலந்து, பிரான்சு, செர்மனி முதலாம் நாடுகள் தற்போக்குக் கொள்கையை (Laissez Faire)க் கை விட்டு காப்பு வரிச் சட்டங்களை இயற்றின. அயல் நாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்பட்ட எல்லாச் சரக்குகளுக்கும் அதிகமான வரிகளை விதித்து, தம் நாட்டின் தொழில் வளர்ச்சியை விருத்தி செய்வதே அவற்றின் நோக்கம். எந்த நாடு அதன் பொருள்களை வாங்குவதில் சலுகை காட்டியதோ, அந்நாட்டுக்குப் பதிற் சலுகை காட்டப் பட் டது. இக்காப்பு வரி முறையினுல் சந்தைகள் வெகுவாகச் சுருங்கின. இதன் பயனக, கைத்தொழில் மயமான ஐரோப்பிய நாடுகள் தம் தேவைகளை ஈடு செய்வதற்கு மத்திய வலயப் பிரதேசங்களைக் கட்டுப் படுத்த வேண்டிய கட்டாய நிலை பிறந்தது. ஐரோப்பிய நாடுகள்
A 20 w

Page 155
ጰ27 8 புது உலக சரித்திரம்
பாதுகாப்பு வரிகளை மேற்கொண்ட 19 ஆம் நூற்ருண்டின் இறுதி 25 ஆண்டு காலந்தான் குடியேற்ற ஆள் புலப்படர்ச்சியினதும் காலம் என்பது குறிப்பிடத் தக்கது.
மிதமிஞ்சிய குடிசனமும் மூலதனமும் :
மேலும் ஐரோப்பிய நாடுகளில் பெருகி வந்த குடிசனப் பிரச்சினை யையும் குடியேற்ற நாடுகள் தீர்க்க வல்லன என்றும் உணரப்பட் டது. காலத்துக்குக் காலம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லாத் திண்டாட்டம் எனும் காரணங்களினல் கோடிக் கணக் கான ஐரோப்பியர் கடல் கடந்த பிரதேசங்களில் புது இல்லங்களை அமைக்கவும், புது வாழ்வை ஆரம்பிக்கவும் புறப்படலாயினர். இறுதி யாக மித மிஞ்சிய குடிசனத்தைப் போன்று, மிதமிஞ்சிய முதல், புதி தாகத் திறக்கப்பட்ட நாடுகளில் அதி கூடுதலான வருவாயைத் தரத் தக்க முயற்சிகளில் முதலீடு செய்யப்பட்டது. இப்பேர்ப்பட்ட பொரு
ளாதார ஊடுருவுதல் தான் நாளடைவில் அரசி ய ல் ஆதிகத்துக்கு
(எகித்தில் போன்று)த் திறப்பு விழாவாக அமைந்தது.
இவை தாம் புதுப் பேரரசு வாதத்துக்கு வழி காட்டிய பிரதான காரணங்களாம்.
1. ஆபிரிக்காவின் ஆள்புலப்பிரிவினை
இக்காலத்தினது அதி வியப்புக்குரிய நிகழ்ச்சிகளில் ஒன்று ஆபிரிக் காவின் ஆள் புலப் பிரிவினையாகும். தவிர, ஆபிரிக்காக் கண்டம் ஓர் ஐரோப்பிய போருமின்றிப் பங்கிடப் பட்டமை இதிலும் மேலான அதி சயத்தக்க விடயமாகும்.
19 ஆம் நூற்றண்டின் பிற்பகுதி வரை ஐரோப்பியர் ஆபிரிக்காவை **இருட் கண்டம்' என்றே வழங்கி வந்தனர். ஆபிரிக்கா ஐரோப்பா வின் மிக அண்மையான கண்டமாக இருந்த போதிலும், அதுவே உல கத்தில் அதி குறைவாக அறியப்பட்டிருந்த பிரதேசமாகும். கண் டத்தின் வடக்கே பிரான்சு அல்சீரியாவை 1848 இல் கைப்பற்றி தனதாக்கிக் கொண்டது. தெற்கே ஆங்கிலரும் டச்சு போய ரும் ஒறேஞ்சு, வால் நதிகள் வரை குடியேறி நின்றனர். மேற்கு, கிழக்குக் கரையோரங்களில், போத்துக்கேயர், பிரெஞ்சியர், ஆங்கிலர் இடையிடையே சிற் சில வர்த்தக நிலையங்களை அமைத்திருந்தனர். தீயூனிசு,திரிப்போளி இரண்டும் துருக்கிய மாகாாைங்கள். மொறக்கோ அராபியரையும் பேர்பரையும் (Berbers) பெரும் பான்மையின ராகக் கொண்ட, ஒரு சுதந்திர, ஆனல் பெலவீனப் பட்ட அரசு, எகித்து, ஐரோப்பிய நாகரிகத்தில் தழைத்த, சுதந்திரமுடைய துருக்

ஐரோப்பாவின் புதுப் பேரரசுவாதம் 279
கிய மாகாணங்களில் ஒன்று. இவை தாம் ஐரோப்பிய கண்கண்ட ஆபிரிக்க நிலப்பரப்புக்கள். கண்டத்தின் பெரும் பகுதியை ஐரோப் பியர் அறியாத நிலையிலேயே இருந்தனர்.
இந்த அறியாமை எனும் இருளை அகற்றுவதற்காக, ஆபிரிக்கா
வின் உள்நாடுகளில் பல ஆராய்ச்சியாளர்களும், பாதிரிகளும் பிரயா ணஞ் செய்து, ஆங்கு மறைந்து கிடந்த செல்வ வசதிகளை ஐரோப் பியருக்கு எடுத்துரைத்தனர். இவர்கன்ல் அதி பிரபல்யம் வாய்ந்த வர்கள் மாங்கோ பாக், டாக்டர் இலிவிங்சன் (Doctor Livingstone) சிற்றன்லி (Stanley) என்ற மூவராவர். மாங்கோ பாக் நைசர் நதித் தீரத்தையும், டாக்டர் இலிவிங்சன் சம்பசி, நைல் நதிகளின் உற்பத் தித் தானங்களையும், சிற்றன் லி கொங்கோ நதித் தீரத்தையும் ஆராய்ந்தறிந்தனர். குளிரான சுவாத்தியமுடைய நாடுகளில் உற் பத்தி செய்ய இயலாத மூலப் பொருள்களில் பலவற்றை, ஆபிரிக்கா விலிருந்து பெற முடியுமெனும் உண்மையை உலகுக்கீந்தனர்.
பெல்சியம் :
இத்துறையில் முதல் நடவடிக்கை யெடுத்தவர், பெல்சிய அரச ஞன இரண்டாம் இலியப்போல்டாவர் (Leopold 11). ஆபிரிக்காவின் மத்தியில் அமைந்த பாரிய, வளமான, அபிவிருத்தியடையாத பிரதே சங்களை ஆராயவும், அத்தேசத்து மக்களுக்கு கிறித்தவ சமயத்தைப் போதிக்கவும், அவற்றை வாணிகத்துக்கும் புதுத் தொழில்களுக்கும் திறந்து விடவும் நோக்கங் கொண்ட இலியப்போல்டு, 1876 ஆம் ஆண்டு பிறசல்சில் ஒரு சர்வதேச புவியியல் மாநாட்டைக் கூட்டுவித் தார். ஒரு சர்வதேச ஆபிரிக்கச் சங்கமும் நிறுவப்பட்டது. சிற்றன் லியின் கொங்கோ யாத்திரை பெல்சிய மன்னனின் விசேட கவனத் தைப் பெறவே, அப் பிரதேசத்தை ஆராய்வதற்கான திட்டத்துக்குத் தேவையான பணத்தைத் தானே முதலீடு செய்து, அதைத் தனி பெல்சிய முயற்சியாக்கினர். சில ஆண்டுகளுக்குள் கொங்கோ சுதந் திர நாடு, இலியப்போல்டின் தணிப்பட்ட ஆதிக்கத்துக்குட் பட்டது.
இலியப்போல்டின் நூ த ன ப் பிரியம், ஆரம்பம் முதல் ஏனைய ஐரோப்பிய அரசுகளின் பேராசைப் பிரியத்துக்கு ஒரு துர ண் டு கோலாக அமைந்தது. பிரான்சும், போத்துக்கலும் கொங்கோவில் உரி மைகள் கோரின. பல ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களும், உண் ஞ9ட்டுக்குள் புகுந்து, பல சுதேச இனங்களின் தலைவர்களுடன் ஒப் பந்தங்களைச் செய்து, புது நிலப்பரப்புக்களில் தம் நாடுகளின் உரிமை கள நிலைநாட்டினர். 1884-85 ஆம் ஆண்டுகளில் கூடிய பேளின் மாநாடு அன்றுவரை ஆபிரிக்காவில் நடந்தேறிய ஒழுங்குகளை சர்வ தேச ரீதியில் அங்கீகரித்தது. ஆபிரிக்காவின் ஆள்புலப் பிரிவினை

Page 156
280 புது உலக சரித்திரம்
ஆரம்பத்தில் துரிதமாகவும், பின்பு மெதுவாகவும் தொடர்ந்து நடந்து வரலாயிற்று. 1914 இல் அபிசீனியா, இலைபீரியா எனும் இரு நாடு கள் தவிர, ஆபிரிக்காவின் மிகுதியில் ஐரோப்பிய அரசுகளின் ஆதிக்கம் படிந்தது.
நீண்ட காலம் கொங்கோ நாடு இலியப்போல்டின் தனி உடை மையாக இருந்து வந்தது. ஆனல் அவர் இந்நிலப்பரப்பின் பெரும் பகுதியை வியாபாரக் கம்பனிகளுக்கு குத்தகைக்குக் கொடுக்கவே அவை இவ்வுரிமையை மிகக் கேவலமான முறையில் துர்ப் பிரயோ கம் செய்து, சுதேசிகளுக்குச் சொல்லொணுத் தீங்குகளை இழைத் தனர். இக் கொடுமைகளுக்கெதிரே எழுந்த கூச்சலைப் பொருட்படுத்தி 1908 இல் பெல்சிய அரசாங்கம் அதற்குப் பொறுப்பேற்றது.
போத்துக்கல் :
வல்லரசுகள் மாத்திரமின்றி, சில ஐரோப்பிய சிறு நாடுகளும் ஆபிரிக்காவில் தம் செல்வாக்கை நிலைநாட்டிப் புதுப் பிரதேசங்களைக் கைப்பற்றின. 16 ஆம், 17 ஆம் நூற்றண்டுக்குள் முதல் ஆபிரிக்க கரையோரத்தில் சில நிலையங்களை வைத்திருந்த போத்துக்கேயர், இ நிலப்பரப்புக்களை சுவீகரிக்க, மற்ற ஐரோப்பிய வல்லரசுகள் அனுமதித் தன. போத்துக்கல், பெல்சியன் கொங்கோவுக்குத் தெற்கே அங் கோலாவிலும், கண்டத்தின் கிழக்குக் கரையில் மொசாம்பிக்கிலும் உரிமை பாராட்டி அவற்றைத் தனதாக்கியது.
இத்தாலி :
ஆபிரிக்க பேரரசுப் போட்டியில் சற்றுப் பிந்தி வந்திறங்கிய இத்தாலி, கீழ்க்கரையில் எரித்திரியா (Eritrea) வையும், சோமாலிலந் தையும் ஆக்கிரமித்து, தன் ஆணையின் கீழ் கொண்டுவந்தது. ஆபிரிக் காவிலே பழைமை வாய்ந்த அரசாக விளங்கிய அபிசீனியாவைத் தனதாக்கிக்கொள்ள இத்தாலி எத்தனித்து, 1896 ஆம் ஆண்டு அந் நாட்டின் மீது போர் தொடுத்தது. ஆனல் எவரும் காத்திராத பிரகாரம், அப்போரில் அபிசீனியா இத்தாலியை முறியடித்து வெற்றி கொள்ளவே, இத்தாலி பின் வாங்கியது. 1911-12 ஆண்டுகளில் துருக்கியுடன் நடைபெற்ற போரின் விளைவாக திரிப்போலி, சிற னேக்கா என்ற இரு நாடுகள் இத்தாலிய ஏகாதிபத்தியத்துடன் இணைக்கப்பெற்றன. இத்தாலியின் ஏகாதிபத்திய நாட்டம் இயற்கை பாகவே வட ஆபிரிக்கப் பிரதேசத்தில் தான் படிந்தது. ஆனல் அதன் எண்ணங்களும் திட்டங்களும் பிரான்சின் படர்ச்சியினுல் தடை செய்யப்பட்டன.

அத்திலாந்திக்குச்
சமுத்தி ரம்
Ca
ஆபிரிக்காவின் ஆள்புலப்பிரிவினை
[III] Lafflictų-Gi
பிரெஞ்சு செர்மன்
"篩"嚮" 醬
பெல்சிய சிபானிய

Page 157

ஐரோப்பாவின் புதுப் பேரரசுவாதம் 28
செர்மனி :
1884 ஆம் ஆண்டு கூடிய பேளின் மாநாட்டில், பிசுமாக் தலைமை தாங்கியபோது, செர்மனி குடியேற்ற நாடுகளைப் பெற வேண்டு மென்ற ஆசையற்ற "அமைவு கொண்ட அரசு’ எனக் கூறினர். செர்மனியை ஒற்றுமைப்படுத்தும் காலையில் பெறப்பட்ட சிலசுவிக்கு, ஒல்சீன், அல்சாத, உலொறேன் ஆகிய மாகாணங்களை இணைத்தபின், செர்மனி குடியேற்ற நாடுகளில் ஆசை கொள்ளும் என அவர் எதிர் பார்க்கவில்லை. எனினும் பிகமாக்கின் எண்ணங்களுக்கு எதிர்மறை யாக செர்மனி 1884--85 ஆம் ஆண்டுகளில் தென்மேற்கு ஆபி ரிக்கா, கமறுரன்சு, தோகோ எனும் மூன்று துண்டுகளைப் பெற்றது; அடுத்த சில ஆண்டுகளில் தென்கிழக்கு ஆபிரிக்காவிலும் தன் ஆதிக் கத்தை நிலைநாட்டிற்று.
சிபானியா : -
சிபானியா, இறியோ த ஒரோ என்ற வடமேற்கு சகாரா மாகா ணத்தையும், மொறக்கோவில் ஒரு சிறு பகுதியையும் தனதாக்கியது. ஆபிரிக்க ஏகாதிபத்தியப் போட்டியில் அதி கூடுதலான பிரதே சங்களைச் சுவீகரித்துக் கொண்ட இரு நாடுகள் பிரான்சும் இங்கி லந்துமே.
6ਲ : ஐரோப்பாக் கண்டத்தில் பிரான்சு சில பிரதேசங்களை இழந்து விட்டமையினல் அதனின்றும், பிரெஞ்சு-பிரசியப் போரின் அவமா னத்தினின்றும் மக்களின் புலனைத் திருப்பிவிடக் கருதி, குடியேற்ற நாடுகள் தேடுவதில் அதி உற்சாகத்துடன் முனைந்தது. பிரான்சை ஒரளவுக்குச் சாந்திப் படுத்த முயன்ற பிசுமாக், பேளின் மாட்டில் இத்திட்டத்தை அதி உற்சாகத்துடன் ஆதரித்தார்.
பிரான்சு தன் பழைய உடைமைகளுடன் 1882 இல் தியூனிசை யும், 1912 இல் மொறக்கோவையும் இணைத்துக்கொண்டது. மேலும் அது இந்நாடுகளிலிருந்து தெற்கு நோக்கி முழுச் சகாராப் பிரதேசத் தின் மீதும் தன் அதிகாரத்தை விரித்து, வட ஆபிரிக்காவில் ஒர் உறுதியான பேரரசை அமைக்கலாயிற்று. 1896 இல் கண்டத்தின் கிழக்கே மடகசுக்கார் தீவையும் பெற்றது.
இங்கிலந்து : . .
ஆபிரிக்காவின் ஆள்புலப் பிரிவினையில் அதி கூடுதலான நிலங் களைப் பெற்ற தேசம் இங்கிலாந்தாம். அதன் நிலப்பரப்பு கெயிரோ முதல் நன்னம்பிக்கை ஈருக, செர்மன் கிழக்கு ஆபிரிக்கா எனும் ஓர் இணைப்பைத் தவிர, ஒரு சங்கிலிக் கோவை போன்று வியாபித்துக் கிடந்தது.

Page 158
282 புது உலக சரித்திரம்
2. தென் ஆபிரிக்காவில் ஆங்கிலர்
டச்சு போயர்கள் நன்னம்பிக்கை முனையிலிருந்து வெளியேறி, திரான்சுவால், ஒரேஞ்சு சுதந்திர அரசு எனும் இரு குடியேற்றங்களை நிறுவியதன் பின் 1852 இல் அவற்றிற்குப் பிரித்தானிய அரசாங்கம் சுதந்திரம் வழங்கிய வரலாற்றை முன் கண்டோம்.
பிரித்தனும் ஒரேஞ்சு சுதந்திர அரசும் :
ஒரேஞ்சு சுதந்திர அரசுடன் பிரித்தானிய உறவுகள் எப்பொழுதும் நல்ல நிலையிலேயே இருந்தன. ஆனல் அவ்வரசு, தமக்கு அருகாமை யிலிருந்த பசூற்ருேக்களின் தாக்குதலினல் பெரிதும் இடர்ப்பட்டது. பகுந்ருேக்களை எதிர்த்து போர் புரியும் வலிமை இச் சுதந்திர அரசி டம் இல்லை. 1868 இல் பிரித்தன், போர்க்கோலம் பூண்டு நின்ற பகுற்ருேக்களை வெற்றி கொண்டு அவர்களின் நாடான பசூற்ருே லந்தை (Basutoland) தனதாக்கிற்று. மேலும் பிரித்தன், 1878 இல், கபீர் இனத்தினரை வென்று, நன்னம்பிக்கை முனை முதல் ஒரேஞ்சு நதி ஈருக வியாபித்துக் கிடந்த சுதேசிகளின் நிலப்பரப்புக்களை முனைக் குடியேற்றத்துடன் இணைத்தது.
திரான்சு வாலின் இணைப்பு :
பிரித்தானியருக்கும் திரான்சுவாலுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறுகள் றுாற்ருண்டின் முடிபு வரையும் நீடித்தன. உண்ணுட்டில் அமைதியீனமும், கலக நிலையும் ஏற்பட்ட அதே காலத்தில் சூலு மக்கள், திரான்சுவாலை ஆக்கிரமிக்க நோக்குக் கொண்டனர். இப் படையெடுப்பைப் போயர் மக்கள் மேற் கொள்ள முடியாத நிலையி லிருந்தமையைக் கண்டு, பிரித்தன் தலையிட்டது; 1877 இல் திரான்சு வாலைத் தன் பிரதேசங்களுடன் இணைக்கலாயிற்று. இந் நடவடிக்கை யினுல் பிரித்தன், சூலு மக்களுடனும், போயர்களுடனும் ஒரேநேரத்தில் போர் புரியவேண்டிய அவல நிலை ஏற்பட்டது. சூலுப் போர் 1888 வரை நீடித்தது. சூலுக்களின் பூரண :தோல்வியுடன், சூலுலந்து எனும் பிரதேசம் பிரித்தானியருக்காயிற்று.
முதலாம் போயர்ப் போர் (1881) :
சூலுக்களின் அச்சம் நீங்கியவுடன், திரான்சுவாலிலிருந்த போயர் கள், 1877 ஆம் ஆண்டு இணைப்பினல் தாமிழந்த சுதந்திரத்தை மீண்டும் நிலை நாட்டப் போர் தொடுத்தனர். பிரித்தானியப் படை கள் சில தோற்கடிக்கப்பட்டன. கிளாற்சன், சமாதானத்தை ஏற்ப

ஐரோப்பாவின் புதுப் பேரரசுவாதம் 283
டுத்தி, போயர்கள் வேண்டி நின்ற சுதந்திர உரிமையை 1881 இல் அளித்தார். அதன் பிறநாட்டுப் பூட்கை பிரித்தானியரின் அதிகாரத் துக் குட்பட்டிருக்கு மென்றும் ஏற்பட்டது.
போல் குருகரும், சிசில் உருேட்சும் :
இக்காலத்தில் மாறுபாடான நோக்கங்களும் எண்ணங்களுமுடைய இரு தீவிர நாட்டினவாதிகள் தென்னபிரிக்க அரசியலரங்கில் தோன் றினர். போல் குரூகரின் தலைமையில் ஒர் உணர்ச்சி மிக்க தே ச ப் பற்று இயக்கம், போயர்கள் மத் தி யில் தோற்றியது. இவ்வியக்கம் மறுபுறம் அதே விதப்பட்ட ஒரு பிரித்தானிய நாட்டின இயக்கத்தை" சிசில் உருேட்சின் தலைமையில் ஆரம்பிக்கக் காரணமாயிற்று. ஆங்கில மக்களின் உள்ளங்களில் குடி கொண்டிருந்த பேரரசுக் கொள்கையில் உறுதியான நம்பிக்கையுடையவராகத் திகழ்ந்தார், உருேட்சு. கைரோ முதல் நன்னம்பிக்கை முனை வரை, பிரித்தனின் ஆதிக்கம் நிலைநாட்டப் பட வேண்டுமென்பதே அவரது தீராத ஆசை. குரூகர், சுதந்திரம் பெற்ற ஒல்லாந்துத் தென்னுபிரிக்க நாடொன்றைச் சிருட்டிக்க வேண்டு மென்ற நோக்குக் கொண்டார்.
திரான்சுவாலுக்கு வடக்கேயுள்ள பிராந்தியத்தின் வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக உருேட்சு, பிரித்தானிய தென்னுயிரிக்க வர்த் தக சங்கத்தைத் தாபித்தார். இதன் விளைவாக திரான்சுவாலுக்கு வடக்கே, மத்திய ஆபிரிக்காவில் நெடுந்தூரம் வியாபித்துக் கிடந்த ஒரு பிரதேசத்தில் மக்கள் குடியேறினர். சி சி ல் உருேட்சின் ஞாப கார்த்தமாக அப்பிரதேசம் உரொடீசியா என வழங்கப் பெற்றது. இவ்வாறு உரொடீசியா விசாலித்தமையும், பெச்சுவானலந்து ஒரு பிரித் தானிய பாதுகாப்பு நா டா க அமைக்கப் பட்டமையும், திரான்சு வாலிலுள்ள போயர்களை பரவ விடாது, நாற்புறமும் சுற்றியடைத் தது. 1886 ஆம் ஆண்டு திரான்சுவாலில் பொன்னும் வைரக் கற்க ளும் விளையும் நிலங்கள் கண்டு பிடிக்கப்பட்டதுடன் நிலைமை மாறிற்று. ஐரோப்பாவின் எ ல் லா ப் பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான வெள்ளையர், சுரங்கங்களில் வேலை செய்வதற்காய் வந்திறங்கிறர். யோகனிசுபேக்கு ந க ர ம் சொற்ப காலத்துக்குள் விருத்தியடைந் தது. புதுச் செல்வத்தின் அதிகாரத்தைக் கை நெகிழ விடாது, தம் கையிலேயே வைத்திருக்கப் போயர்கள் உறுதி கொண்டனர். வரிப் பணத்தால் அரசாங்கத்தின் வரு மா ன ம் 150,000 பவுணிலிருந்து 3,000,000 பவுணுக உயர்ந்தது. வெள்ளையருக்கும் போயர் விவசாயி களுக்கு மிடையிலிருந்த உறவுகள் ஆண் டாண்டு நெருக்கடி யை நோக்கி விரைந்து சென்றன. வெள்ளையரின் வருகையினல் தம் சுதந்தரத்துக்

Page 159
284 புது உலக சரித்திரம்
குப் பங்கம் ஏற்படுமோவென அஞ்சிய குரூகரின் அரசாங்கம், அந்நிய் ருக்கு வாக்குரிமையை மறுத்து, தன் அரசமைப்புத் தி ட் டத் தை மாற்றியமைத்தது. , , - '.
இயேமிசனின் தாக்குதல் (1795) :
இதனுற் சினங்கொண்ட அந்நியர், கிளர்ச்சி செய்யத் தீர்மானித் தனர். முனைக்குடியேற்ற நாட்டின் முதலமைச்சராகவிருந்த உரோட்சு இவர்களுக்கு இரகசியமாக ஆ த ர வளி க் க ஒப் புக் கொ ன் டார். உரொடீசிய அரசாங்கத் தலைவனுன 'கலாநிதி இயேமிசனின் (Dr. Jameson) தலைமையில் 600 வீரர்கள் திரான்சுவாலின் எல்லைகட் குள் படையெடுத்தனர்; ஆனல் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு, வீரர் யாபேரும் கைப்பற்றப்பட்டனர். இத் தப்பிதமான செயலில் உரோட் சும் சம்பந்தப்பட்டு நின்றமையினல், அவர் பிரதமர் பதவியிலிருந்து தானே விலகிக் கொண்டார். வெள்ளையர் ஆயுத பலத்தினல் திரான்சு வாலை அடிமைப் படுத்த ஏற்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. செர்மன் கைசர், ஒரு தந்தியின் மூலம் திரான்சுவாலன் திறமையைப் பாராட்டினர்.
இரண்டாம் போயர்ப் போர் (1899-1902) :
இயேமிசனின் சதித்திட்டம் மனக்கசப்பை வளர்த்த 1899 இல், போயர் குடியரசுகளுக்கும் பிரித்தானிய முடிக்குமிடையே போரை வருவித்தது. 1895 ஆம் ஆண்டு இயே மிசனின் தாக்குதல் தோற்கடிக் கப் பட்டபின், சூழ்ச்சிக்கு உடைந்தையாயிருந்த வெள்ளையர்கள் அரசாங்கத்தின் கடும் கோபத்துக்காளாகி, வெகுவாகத் துன்பப்பட் டனர் ; வேறு வழியின்றி பிரித்தானிய அரசாங்கத்திடம் உதவி கோரவும் துணிந்தனர். பிரித்தானிய அரசுக்கும் போல் குரூகரின் அரசாங்கத் துக்குமிடையே சச்சரவுகளும், மனத்தாங்கல்களும், எதிர்ப்பும் நாளாந் தம் வளர்ந்து வ்ந்தன. திரான்சுவாலில் பிரித்தானிய அரசாங்கம் வைத்திருந்த அதிகாரங்களை நிலைநாட்ட முற்பட்டபோது, குரூகர் ஓர் இறுதிக் கூற்றை விடுத்தார். 1899 ஒற்ருே பரில் போர் மூண்டது.
போர் ஏற்படவே, ஒரேஞ்சு சுதந்திர அரசு திரான்சுவாலுடன் சேர்ந்து கொண்டது. எதிர்பாராத அளவிற்கு, போயர் மக்கள் வீரத்துடன் போர்புரிந்து, இலேடிசிமிது, கிம்பளி, மபேகிங் எனும் நகரங்களில் சில வெற்றிகளையும் ஈட்டினர். நத்தால், முனைக் குடி யேற்ற நாடுகளுக்குள்ளும் நுழைந்து பிரித்தானியரைத் தோற்கடித் தனர். ஆனல், அவர்கள் பிரித்தானியப் பேரரசின் சக்திகளுடன் போர் புரிந்து இறுதி வெற்றியை நிலைநாட்டுவது அசாத்தியமாயிற்று. 1899 இல் புதுப் படைகள் பிரபு கிச்சினரின் தலைமையில் தென்

ஐரோப்பாவின் புதுப் பேரரசுவாதம் 285
பிைரிக்காவில் வந்திறங்கின. 1900 பெப்ரவரியில் பிறிற்ருேறியா, ஒரேஞ்சுச் சுதந்திர அரசு, திரான்சுவால் என்பவை கைப்பற்றப் பட்டன. இதன்பின்பும் ஈராண்டுகளாகப் போயர் போரைத் தொடர்ந்து நடாத்தி வந்தனர். ஆனல் போரில் பயனில்லையெனக் கண்ட போயர்கள் 1902 இல், சமாதானம் செய்தனர்.
தென்னபிரிக்க ஐக்கியம் :
இப்போர் முடி வெய்திய காலத்தில் செய்யப்பட்ட சமாதான உடன்படிக்கையின் விதிகள் கடுமையானவையன்று. ஒல்லாந்தர் தென்னு பிரிக்காவில் ஆதிபத்திய உரிமை பெற இயலாதென உணர்ந்து, பிரித் தானியருடன் நட்புக் கொள்ளத் தீர்மானித்தனர். இவர்களுள் பிரித் தானியருக்கு எதிராகப் போர் புரிந்த போதா, சிமட்சு எனும் படைத் தலைவர்கள் பிரதானமானவர்கள். பிரித்தானிய அரசாங்கமும் மக்கள் மனதில் எழுந்த கோபத்தையும் அச்சத்தையும் தணிக்க, தன்னலியன்ற வற்றைச் செய்ய நல் மனதுடன் முன் வந்தது. 1907 இல் இரு குடி யரசு நாடுகளுக்கும் பூரண பொறுப்பாட்சி வழங்கப்பட்டது.
1909 இல் நன்னம்பிக்கை முனை, நத்தால், ஒரேஞ்சு சுதந்திர அரசு, திரான்சுவால் என்ற நான்கு மாநிலங்களும் ஒன்று கூடிப் பிரித்தானிய முடியின் கீழ் ஆணிலப்பதத்தை எய்தின. 1910 இல் முதலாவது ஐக் கி ய பாராளுமன்றம் கூடியது. இலூயி பேரதா (Louis Botha) ஐக்கியத்தின் முதல் அமைச்சரானர்.
3. எகித்தில் பிரித்தானியர்
எகித்தில் ஆங்கிலரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட முறை, பிரித் தானிய ஏகாதிபத்திய வரலாற்றில், ஒரு நூதனமான அத்தியாயமாக அமைந்துள்ளது. இவ்வாதிக்கத்தின் மூலம், நிதியுடன் சம்பந்தப்பட் டது. எகித்திய நிதி நெருக்கடியைத் தீர்க்கப் பிரித்தனும், பிரான் சும் ஒருங்கு சேர்ந்து பிரவேசித்தன. ஆனல் பிரான்சு பின்வாங்கவே பிரித்தானிய அதிகாரம் அங்கு நிலைத்தது.
இசுமெயில் பாசாவின் கடன்கள் :
பிரான்சினதும் இங்கிலாந்தினதும் தலையீடு : 19 ஆம் நூற்ருண்டில் முகமது அலியின் காலத்துக்குப் பின்பு எகித்து, துருக்கிய சுலு தானுக்கு ஒரு திறை செலுத்தும் மாகாணமாக, 'கெடீவ்' (Khedive) என அழைக்கப்பட்ட அதிபதி மூலம் ஆட்சி செய் யப்பட்டு வரலாயிற்று. முகமது அலிக்குப் பின் அரச பதவிக்கு வந்த இசுமெயில் பாசா எகித்தை முன்னேற்றப் பாதையில் வழி நடாத்த

Page 160
286 புது உலக சரித்திரம்
திடங் கொண்டார். 1856 ஆம் ஆண்டு சுயசுக் கால்வாயை வெட்ட ஏற்பாடுகள் பூர்த்தியாகின. இக்கால்வாயை பிரெஞ்சு பண உதவி up 6ir, Guig. 627 fig 5 goadfi (Ferdinand de Lesseps) 6T6ir so பிரெஞ்சு எந்திர நிபுணன் கட்டி முடித்தான். ஆங்கில நிதியுதவி யுடன் தந்திக் கம்பனியும், எகித்திய வங்கியும் நிறுவப்பட்டன. இவற்றினலும், கெடீவ் இசுமெயில் பாசாவின் ஆடம்பரத்தினலும், ஏராளமான பணம் செலவாகியமையினல், அரசாங்கம் நிதியறவு நிலையை எய்தியது. 1875 இல் பணந் திரட்டும் நோக்குடன் இசுமெ யில், சுயசுக் கால்வாய் கம்பனியில் தமக்கிருந்த பங்குகளை விற்ற பொழுது, திசிரேலி அவற்றை நாற்பது இலட்சம் பவுணுக்கு வாங்கி கால்வாயைக் கட்டுப்படுத்தக் கூடியதான அதிகாரத்தை இங்கிலாந் துக்குப் பெற்றுத் தந்தார். ஆனல் இப்பணம் அரசாங்கத்தின் கட னைத் தீர்க்க முடியாமற் போகவே, இசுமெயில் பிரான்சினதும் இங்கி லாந்தினதும் கடன்களை 1876 இல் நிராகரித்தனன். பிரான்சும் இங்கி லந்தும் எகித்தின் நிதி நிலையை தீர ஆராய்ந்து, அதன் விளைவாக இரு நாடுகளும் எகித்தினது நிதியதிகாரத்தின் மீது ஆணை செலுத்த ஆரம்பித்தன. அவை இசுமெயிலின் மைந்தனை அரசனுக அமர்த்தி எகித்தின் உண்ணுட்டு விவகாரங்களில் மேலும் மேலும் தலையிட்டு, அதையொரு யாப்புறு முடியாட்சியாக அமைக்க முயன்றன. இந்த இணையாட்சி முறை ஆறு ஆண்டுகளுக்கு நீடித்தது.
கலகமும் (1881) எகித்தில் ஆங்கில ஆதிக்கமும் :
ஐரோப்பியருக்கும் உண்ணுட்டு அதிகாரிகளுக்கு மிடையே ஏற்பட்ட பிணக்குகளும் போட்டியும் உச்சத்தைத் தொட்டன. மக்களும் அந் நியரின் ஆட்சியை வெகுவாக வெறுத்தனர். 1881 இல் அரபி பே என்பவரின் தலைமையில் “எகித்து எகித்தியருக்கே” எனும் வீர முழக் கத்துடன் நாட்டை ஐரோப்பியரின் பிடியிலிருந்து விடுவிக்க ஒரு கல கம் உண்டாயிற்று, அகுலசாந்திரியாவில் கலகக்காரர் ஐரோப்பிய ரின் உயிரையும் பொருளையும் பேராபத்துக் குள்ளாக்கினர். பிரான் சும் இங்கிலாந்தும் இராணுவத்துடன் தலையிட மு டி பு செய்தன. ஆனல் இறுதி நிமிடத்தில் பிரான்சு பின் வாங்கியது ; இங்கிலாந்தின் கப்பற்படை அலகுசாந்திரியாவை பீரங்கிகளினல் தாக்கியது. புரட்சி சர் காணற் உவில்சிலி (Sir Garnet Wolseley) யினல் அடக்கப்பட்டது. எகித்தில் பிரித்தனின் அரசியல் ஆதிக்கம் ஆரம்பமாயிற்று.
எகித்தின் விருத்தி :
புரட்சிக்குப் பின்னர் பிரித்தன், எகித்தில் அமைதியையும் ஒழுங்
கையும் நிலைநாட்டுவது தன் பொறுப்பென உணர்ந்து, அத ன்
அரசியல், பொருளாதார நிலைகளைச் சீர்திருத்த முற்பட்டது. 1884 ஆம்

ஐரோப்பாவின் புதுப் ரபரரசுவாதம் 287
ஆண்டு “இக்கால எகித்தை ஆக்கியவர்” எனப் பெயர் பெற்ற பிரபு gradi (Lord Cromer) 67oš5aör goir L5 bitu 5LDr3 (Consul General) நியமிக்கப் பட்டார். குரோமர் எகித்துக்குச் செயத சேவை, தாலெளசி இந்தியாவுக்குச் செய்த தொண்டைப் போன்று கீர்த்தியும் புகழும் வாய்ந்தவை.
19 ஆம் நூற்ருண்டின் இறுதி இருபது ஆண்டுகளில் அதி விசால மான சீர்திருத்தங்களினுல் எகித்திய அரசாங்கம் முற்றிலும் புதுமை யான அடிப்படையில் நிருவகிக்கப் பெற்றது. புகையிரத வீதிகள், கால்வாய்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் நாட்டின் எல்லாப் பாகங் களிலும் பல்கிப் பெருகின. எகித்திய விவசாயத்தின் செல்வாக்கு, பிரதி ஆண்டும் நைல் நதியின் மிதமிஞ்சிய நீர்ச் சமவெளிகளை வெள் ளப் பெருக்கால் மூடுவதையே நம்பி நின்றது. வெள்ளப் பெருக்கின் அளவு ஆண்டு தோறும் கூடியும் குறைந்தும் ஏற்பட்டமையிஞல், விவசாயிகள் தம் முயற்சியைச் சீராகச் செய்ய முடியாமற் போயிற்று. அணைகளைக் கட்டியும், குளங்களை அமைத்தும் வெள்ளப் பெருக்கின் விபரீதப் போக்குக் கட்டுப்படுத்தப் பட்டது , நீர்ப் பாசனத்துக்குக் கால்வாய்களை வெட்டியும், தரிசு நிலங்கள் விவசாயத்துக்குத் திறக்கப் பட்டன. 19 ஆம் நூற்றண்டின் இறுதியில் எகித்தின் வளமும் செல்வ மும் பன்மடங்கு பெருகின. இதன் பயனக மக்களின் சுகாதார, கல்வி நீதாசன முறைகள் யாவும் சீர்ப்படுத்தப்பட்டன.
எகித்திய சூடான் :
எகித்திலும் மேலான சிக்கல் நிறைந்த பிறிதோர் பிரச்சினை சூடான் அல்லது 'கரும் பிரதேசம்’ (Black Country) என அழைக்கப் பட்ட விசாலமான நிலப்பரப்பில் தோற்றியது. இசுமெயிலின் ஆட்சி யறவின் காரணமாக மக்கள் மனதில் வளர்ந்து வந்த எதிர்ப்பு ஒர் குழப்பத்தை விளைவித்தது. "நபியின் அவதாரம்" எனத் தன்னை அழைத்துக்கொண்டு தோற்றிய 'மாதி” என்பவனின் தலைமையில் ஏற்பட்ட இப் புரட்சியின் பயனக எகித்திய ஆட்சி நிறுதிட்டத்தை படைந்தது. சூடான் மக்கள் தம் தேசத்தில் சுதந்திரத்தைப் பிரக டனம் செய்யலாயினர். புரட்சியை அடக்கும் நோக்குடன் அங்கு 1883 ஆம் ஆண்டு, அனுப்பப்பெற்ற சேனதிபதி இக்சு (General Higgs), ஒபேடு எனுமிடத்தில் படு தோல்வியடைந்தார் ; சூடான் முழுவதும்
ாதிக்குச் சொந்தமாயிற்று. சேஞதிபதி கோடன்.
சூடானில் அபாயத்தில் சிக்குண்ட எகித்திய, பிரித்தானிய படை கஃா திருப்பியழைப்பதற்காக, சேனதிபதி சாள்சு கோடன் சூடானுக்கு அனுப்பப்பட்டார். அவர் காட்டுமை (Khartoum) அடைந்த போது, அந்

Page 161
288 புது உலக சரித்திரம்
நாட்டை உண்ணுட்டுக் கலவரத்துக்கும், குழப்பத்ததுக்கும் விட்டுத் திரும்புவது தர்மம் ஆகாது என்று எண்ணி, அங்கு தாமதித்தார். 1885 இல் மாதியின் படைகள் கோடனையும் அவரது சிறிய சைனி யத்தையும் சூழ்ந்து, காட்டுமைக் கைப்பற்றி, கோடனையும் கொலை செய்தன. பத்து ஆண்டுகளுக்குப்பின் சோல்சுபரி பிரபு, பிரதமரான காலத்தில் காட்டூமைக் கைப்பற்ற கிச்சனர் பிரபுவை அனுப்பிவைத் தார். 1898 இல் கிச்சனர் சூடானியப் படைகளை ஒம்டர்மான் போரில் தோற்கடித்து, கோடனின் மரணத்துக்குப் பழி வாங்கினர். இதன் பின்பு சூடானில் மாதிகளின் பெலம் தளர, பிரித்தானியரின் அதி காரம் வளரலாயிற்று. w
வல்லரசுகளின் தகராறுகள் :
இங்ங்னம் 'ஆபிரிக்காவைப் பற்றல்' என்ற இந்நிகழ்ச்சி வல்லரசு களுக்கிடையே போரின்றி முடிவெய்தியமை உண்மையில் ஆச்சரியத் துக்குரிய ஒரு சம்பவமாகும். ஆனல் அதற்குப் பதிலாக சர்வதேச அரங்கில் அதி உக்கிரமமான பொருமையும், போட்டியும், பிணக்கு களும் இல்லாமற் போகவில்லை. கொங்கோ பிரதேசத்தில் பிரெஞ்சுபோத்துக்கேய போட்டி நாளாந்தம் புது உத்வேகம் பெற்றது. பிசு மாக், திட்டமிட்டு ஆதரவு காட்டியவாறு, பி ரா ன் சு தியூ னிசியாவைக் கைப்பற்றியமையினுல், இத்தாலி கோபங் கொண்டு மூவர் நட்புறவில் (Triple Aliance) கைச் சாத்திட்டது. பிரான்சுக் கும் இங்கிலாந்துக்கும் இடையே ஏற்பட்ட தகராறுகள் பத்து ஆண்டு களுக்கு நீடித்தன. 1898 ஆம் ஆண்டு பசோடா (Rashoda) வில் சேனை மேயர் மாச்சன் (Major Marchand) பிரெஞ்சுக் கொடியைப் பறக்க விட்ட போது, இரு நாடுகளுக்கு மிடையில் ஏற்பட்ட நெரு க் கடி , அவர்களை ஒரு பெரிய போரின் விளிம்பில் கொண்டு வந்து விட்டன. மொறக்கோ, எகித்து எனும் இரு நாடுகளையிட்டுப் பிரான்சும் இங் கிலந்தும் 1904 இல் செய்து கொண்ட உடன்பாட்டின் பின் பே இந்த பிரெஞ்சு-இங்கிலாந்துப் போட்டியும் கோபாவேசமும் அணைந்தன. சில ஆண்டுகளுக்கு ஸ் 1906 இலும் 1911 இலும் மொறக்கோ பற்றிய பிரச்சினை ஐரோப்பிய நெருக்கடிகளைத் தோற்று வித்தது.
ஆசியாவில் ஐரோப்பியர் :
இதே காலத்தில் ஆசியாவிலும், நாடுகளை ஐரோப்பிய மயமாக் கும் முயற்சி தொடர்ந்து நடைபெறலாயிற்று. சீைைவ ஐரோப்பியர் சுரண்ட ஆரம்பித்த வரலாற்றையும், யப்பான் விழிப்படைந்த வர லாற்றையும் பிறிதொரு அத்தியாயத்தில் காண்க.

ஐரோப்பாவின் புதுப் பேரரசுவாதம் 289
பிரான்சு, சீனுவுக்குத் தெற்கே தொங்கின், அணும் பிரதேசங்களை யும், பிரித்தன் பர்மாவையும் போர்களினல் வெற்றி கொண்டன. மலாயா, சரவக், வட பேணியோ, வட கினி, தென் பசிபிக்கில் சில தீவுக்கூட்டங்கள் பிரித்தானியப் பேர ரசு க் கு அடிமைப்பட்டன. பிரான்சு, செர்மனி, அமெரிக்கா தத்தம் கொடிகளை பசிபிக் தீவுகள் பலவற்றின் மீது பறக்கவிட்டன. அமெரிக்கா சிபெயினிடமிருந்து பிலிப் பைன் தீவுகளை வெற்றி கொண்டது. ஏற்கனவே ஒல்லாந்து இப்பகுதி யில் சில தீவுகளில் உரிமை பாராட்டி நின்றது.
al-F 21

Page 162
290 புது உலக சரித்திரம்
அதிகாரம் 18
துார கிழக்கில் ஐரோப்பியர் (1773-1914)
சீனவினதும் யப்பானினதும் வரலாறுகளில் பல அமிசங்கள் ஒரே வகையானவை. ஐரோப்பிய வல்லரசுகள், 1800 முதல், தூர கிழக்குப் பிராந்திய மக்களின் விருப்பங்களுக்கு முழு மாரு ய், துப் பாக்கி முனையில், 3000 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த வாயில்களைத் தம் சுரண்டலுக்குத் திறந்தன. ஆனல், இந்நாடுகள் மேற்கத்திய அரசுகளை வித்தியாசமான வகையில் வரவேற்றதினலேயே, அவற்றின் வரலாறு களும் ஒரளவுக்கு வேறுபட்டனவாகக் காணப்படுகின்றன. தன்னைப் பாதுகாக்க முடியாத அளவுக்கு பலவீனப்பட்டு நின்ற சீன, தன் நிலங் களையும், செல்வங்களையும் மேற்கு நாகரிகங்கள் அடிமைப்படுத்துவ தைத் தடை செய்ய எதுவுமே செய்ய முடியாமற் போயிற்று; இத ஞல் சீன, அந்நியர்களின் அட்டகாசங்களை மனக்கசப்புடன் சகிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளானது. சீன ஏகாதிபத்தியம் இருந்த இடம் தெரியாமல் முழுமையாக அந்நியர்களுக்கு அடிமைப்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுமளவிற்கு, மேற்கத்திய வல்லரசுகளின் சுரண்டல் வளர்ந்துகொண்டே சென்றது. ஈற்றில் சீனுவின் பலத்தின லன்று, வல்லரசுகளின் மத்தியில் எழுந்த பொருமையினலும் போட் டியினலுமே, அதன் நிலப்பரப்புக்கள் பாதுகாக்கப்பட்டன. மறுபுறம் யப்பான் “குள்ள' உபாயங்களைக் கையாண்டது. யப்பானியர் தம் மனே நிலையை மாற்றியும், எதிரிகளின் போர் முறைகளைக் கைக் கொண்டும், அவர்களது சூழ்ச்சிகளைக் கற்றும், அவர்களது உடை களைத் தரித்தும், அவர்கள் பேராசையைப் பின்பற்றியும், போர்க் கோலம் பூண்டும், ஐரோப்பியர்களின் ஆக்கிரமிப்புத் திட்டங்களைத் தோற்கடித்தது. 1945 ஆம் ஆண்டுப் பெரும் வீழ்ச்சி வரை, யப்பான் தன் நிலப்பரப்பில் ஒர் அங்குலத்தையாவது இழக்காது பாதுகாத்துக் கொண்டது மாத்திரமின்றி, வாணிபத்தை விருத்தி செய்தும், ஏகாதி பத்திய குடியேற்றங்களை அமைத்தும், ஐரோப்பிய வல்லரசுகளுடன் சரி நிகர் சமானமாக நின்று போட்டியிட்டும், தன் அயல் ஆசிய நாடுகளிடமிருந்து தன்னுலியன்ற பிரதேசங்களை அபகரித் து க் கொண்டது.
1 . சீனு
“சீன - அதோ தூங்கும் அரக்கன் போலக்கிடக்கிறது ; அது தூங் கிக் கொண்டேயிருக்கட்டும் ; ஏனெனில், அது விழித்தெழுந்தால், உல கத்தையே உலுக்கி விடும்." இது நெப்போலியன் பொனப்பாட்டின்

தூரகிழக்கில் ஐரோப்பியர் 29
தீர்க்கதரிசனம். கடலினலும், மலைத் தொடர்களினலும், வனந்திரத்தி " ஓம் நாற்புறமும் அரண் செய்யப்பட்டிருந்த சீனு, பல நூற்ருண்டு 1.ாாக வெளி நாட்டவரின் தலையீடின்றித் தனிமையில் வாழ்ந்து வந் தது. உலகில் முதன் முதல் நாகரிக வளர்ச்சியடைந்த நாடுகளில் சீனுவும் ஒன்று; 5,000 ஆண்டுகள் முதிர்ந்த நாகரிகத்தையும் மேற்கு நாடுகளிலிருந்து ?. முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறைகளையும், தத்துவங்களையும் உருவாக்கி மாற்றமின்றித் திகழ்ந்தது. அவர்களது நாகரிகம் ஏனைய நாடுகளின் நாகரிகத்திலிருந்தும் பாரதூரமாக வேறு பட்டமையினல், சீன அரசர்கள் மற்றைய நாடுகளுடன் தொடர்பு கொள்ள விரும்பாததுடன் தம் நாட்டிலும் அந்நியர் கால்வைப்பதைத் தடை செய்ய சகல முயற்சிகளையும் மேற்கொண்டனர்.
தூர கிழக்கில் முதல் ஐரோப்பியர் :
ஆயினும் சீன, நீண்ட காலம் தன்னை மேற்கு வல்லரசுகளின் இரா ணுவ பலத்தில் நின்று பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. 15 ஆம் நூற்றண்டில் ஏற்பட்ட பூமிசாத்திர விரிவின் பலனுக ஐரோப்பிய மாலுமிகள் தூர கிழக்குத் தேசங்களில் நடமாட ஆரம்பித்தனர். மிக மெதுவாக ஐரோப்பிய வியாபாரிகள் சீனுவின் தனிமையைச் சிதைத் தனர். 16 ஆம் நூற்ருண்டில் சீனுவின் தென் கரையோரங்களில் போத்துக்கேயர், மக்காவோ வில் தம்மைத் தாபித்துக் கொண்டனர். அடுத்த நூற்ருண்டில் டச்சு வியாபாரிகள் போமோசாவிலும், பிரித் தானிய வாணிபர் கன்ரனிலும் நிலையான வியாபார நிலையங்களை அமைத்தனர். சீன அரசாங்கம் இவ்வந்நியரை விரும்பாத போதிலும் அவர்களைத் துரத்த முடியாமற்போயிற்று. சீனர் இவர்களைத் துன்புறுத் திப் பல இன்னல்களை விளைவித்து நாட்டை விட்டு விரட்ட முயற்சித்த னர். ஆல்ை இவ்வியாபாரிகள் துன்பங்கள், அவமானம் யாவற்றையும் சகித்துக்கொண்டு தம் முயற்சியைத் தொடர்ந்து நடாத்தி வந்தனர்.
ஆங்கில வர்த்தக சங்கம்
18 ஆம் நூற்றண்டில் ஆங்கில வர்த்தக சங்கத்தின் வியா பாரமே சீனுவில் மேன்மை பெற்றது. தேயிலை, பட்டு போன்ற பொருள் கள் ஐரோப்பாவில் மதிப்பான விலைக்கு விற்கப்பட்டமையினல் அச் சங்கத்தின் வியாபாரம் நாளாந்தம் ஓங்கி வளர்ந்தது. இப் பொருள் களிலும் பார்க்க அபினி வியாபாரமே அவர்களுக்கு அதிக இலாபத் தைப் பெற்றுக்கொடுத்தது. வியாபாரம் விரிவடையவே, வர்த்தக சங்கம் சீன அரசாங்கத்திடம் விசேட சலுகைகள், உடன்படிக்கை எற்பாடுகள், சம உரிமைகள் போன்றவற்றைக் கோரி நின்றது. ஆனல் சீன அரசாங்கம் இக்கோரிக்கைகளை அறவே நிராகரித்து, சீன மேற்கு

Page 163
292 புது உலக சரித்திரம்
நாடுகளுடன் வியாபார உடன்படிக்கை செய்ய ஆயத்தமாயில்லை யென்றும் சீன மக்களுக்கு அவர்களோ அவர்களது வியாபாரமோ தேவையில்லை யென்றும், திட்டவட்டமாகக் கூறியது. இன்னும் அவர் கள் வியாபாரம் செய்ய விரும்பின், அவை சீன அரசாங்கத்தின் கட்டுப் பாடுகளுக்குட்பட்டே நடக்க வேண்டுமென்றும் சீனச் சக்கரவர்த்தி தீர்ப்புக் கூறினர். இதன்படி சீன-ஐரோப்பிய வியாபாரம் ஒரு முகப் பட்டதாகவே இருந்திருக்கும் ; ஆனல் சீன மக்கள் அபினி எ ன் ற பொருளை நாளடைவில் ஏராளமாக அருந்தப் பழகிக் கொண்டனர். இந்த அபினி வியாபாரத்திலிருந்து சீன வரலாற்றில் ஒரு புது அத்தி யாயம் திறந்தது. r
அபினிப் பிரச்சினை :
சீனருக்கு அபினி ஒரு நவமான பொருளன்று. போத்துக்கேயர் வர முன்னரே சீனர் அதனை அறிந்தும் உபயோகித்தும் வந்திருந்தனர். ஆனல் 1773 ஆம் ஆண்டு முதல், ஆங்கிலர் இப்பொருளை இந்தி யாவிலிருந்து இறக்குமதி செய்ய ஆரம்பித்ததுடன், 18 ஆம் நூற் முண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்ருண்டிலும், அதன் மதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. பதினைந்து ஆண்டு காலத்துள் ஆரம்பத் திலும் பார்க்க நான்கு மடங்கு அபினி சீனவில் விற்பனையாயிற்று. இவ்வியாபாரத்தைத் தடை செய்யச் சீன அரசாங்கம் பல கட்டுப் பாடுகளைத் திரும்பவும் திரும்பவும் பயனின்று விதித்தது. ஈற்றில் 1800 ஆம் ஆண்டு அபினி இறக்குமதி முற்ருகத் தடை செய்யப் பட்டது. ஆனல் ஆங்கிலர் சீன உத்தியோத்கதர்களின் உதவி யுடன் கள்ளத்தனமாக வியாபாரத்தைத் தொடர்ந்து நடாத்தி வந்தனர்.
முதல் சீன-பிரிட்டிசு யுத்தம் (1839-44) :
அபினி வியாபாரம் களவாக நடை பெறுவதைத் தடுக்கச் சீன அரசாங்கம் கடும் நடவடிக்கைகளில் இறங்கியது. 1839 இல் இலின் என்ற விசேட அரசாங்க அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர் ஆங் கில வியாபாரிகளிடம் இருப்பிலிருந்த 20,000 பெட்டி அபினியைப் பறி முதலாக்கி முழுவதையும் தீக்கிரையாக்கினர். அதனுடன் இனிமேல் ஆங்கிலர் இவ்வியாபாரத்தில் ஈடுபடல் ஆகாது என்றும், அகப்படுப வர்கள் கொலைத் தண்டனைக்குத் தீர்க்கப்படுவர் எனும் நிபந்தனை களை ஆங்கிலர் ஏற்க வேண்டு மென்றும் இலின் பிடிவாதமாக நின் ருர். ஆங்கில-சீன உறவுகள் மோச மடைந்தன ; கை கலப்புக்களும் ஏற்பட்டன. இந்தச் சம்பவங்களிலிருந்து 1840 ஆம் ஆண்டு போர் மூண்டது. மூண்டபோர் மூன்று ஆண்டுக் காலம் நீண்டது. ஆங்கிலர் ஒரு வித துன்பமுமின்றி வெற்றிகளை ஈட்டிக்கொண்டே முன்னேறினர்.

தூரகிழக்கில் ஐரோப்பியர் 泌93
திங்போ, அமோய் என்ற நகரங்கள் கைப்பற்றப்பட்டன. செல்வ மிக்க சங்காய் (Shanghai) துறைமுகத்தைக் கைப்பற்றிய ஆங்கிலர், ஒங்கொங் தீவையும் ஆக்கிரமித்தனர்.
பீக்கிங், நான்கிங் என்ற நகரங்களின் மீது தாக்குதல்கள் ஆரம் பமானதும், சக்கரவர்த்தி சமாதான வேண்டுகோளை விடுத்தார். சீன வின் இராணுவ்ப் பாதுகாப்பு முற்றிலும் பிரயோசனமற்றதாகவுழ் போதாததாகவும் காணப்பட்டது. இங்கிலாந்தி ன் வெ ற் றி, தற்கால நவீன போர் முறைகளினதும், மேற்கத்திய நாகரிகத் தினதும் வெற்றியாகும். சீன தனது கோரிக்கைகளை எதிர்க்க் முடியாதென்றும், தன் திட்டங்களை உரிமையுடன் சீனவின் மேல் திணிக்கலாமென்றும் ஐரோப்பா உணர்ந்து கொண்டது. யுத் தத்தின் காரணமும் பயனும், அபினிய வியாபா ர த் ை த ச் சீன ஏற்க வற்புறுத்தப்பட்டதாகும். ஆனல் இப்பிரச்சினையுட்ன் அந்நிய வியாபாரம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் பின்னிக் கிடந்தது. இக்கோரிக்கைகள் ஏற்கனவே அங் கீகரிக்கப்பட்டிருப்பின் இப்போர் எழுந்திருக்காது. மறுபுறம் இப் போரில் சீன வெற்றி பெற்றிருந்தால் ஆங்கிலரும் அந்நிய வியாபாரி களும் சீனத் துறைமுகங்களிலிருந்து முற்ருக நீக்கப்பட்டிருப்பர் என்பு தில் சந்தேகமில்லை.
1842 ஆம் ஆண்டு நான் கிங் உடன்படிக்கை ஏற்பட்டது. இத னல் சீன ஒங்கொங் தீவை ஆங்கிலருக்குச் சொந்தமாகக் கொடுக் கவும், கன்ரன், பூச்செள (Foochow), நிங்போ (Ning po), அமோய் (Amoy), சங்காய் என்ற ஐந்து துறைமுகங்களை ஐரோப்பிய வர்த் தகத்துக்குத் திறந்து விடவும் சம்மதித்தது. ஆங்கிலருக்கு விசேட் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன . ஆணுல் அபினி வியாபாரத்தைப் பற்றி ஒரு முடிவும் ஏற்படவில்லை. கள்ள வியாபாரம் முன்னிலும் பார்க்க பன்மடங்கு அதிகமாக நடைபெறலாயிற்று. 's
பிரித்தானிய பீரங்கிகள் சீனவை ஐரோப்பியரின் வியாபாரத்துக் குத் திறந்து விட்டன. மேற்கு அரசுகளின் இராணுவ பலத்திற் கெதிராகத் தன்னைப் பாதுகாக்க முடியாமற் போகவே, சீன ஐரோப் பிய வல்லரசுகளின் ஆதிக்கத்துக்குத் தன் கதவுகளைத் திறக்க வேண் டியதாயிற்று. படிப்படியாக அந்நியரின் ஆதிக்கம் வலுப்பெற்றுச் சீன ஒரு குடியேற்ற நாட்டைப் போலக் காட்சியளிக்க ஆரம்பித்தது. 1844 இல் அமெரிக்காவும், பிரான்சும் இங்கிலாந்தைப் போலச் சம சலுகைகள் பெற்றன. இதைப் பின்பற்றி ஒல்லாந்து, பெலசியம், போத்துக்கல், பிரசியா என்ற நாடுகளும் ஐந்து துறைமுகங்களைப் பயன்படுத்த அனுமதி பெற்றன.
A 21

Page 164
294 புது உலக சரித்திரம்
இரண்டாம் சீன-பிரிட்டிசு யுத்தம் (1856-60) :
இவ்வுடன்படிக்கைகள் இரு பகுதியினருக்கும் திருப்தியளிக்கவில்லை. சீனுவின் பெலவீனத்தைக் கண்ட ஆங்கிலர், நான்கிங் உடன்படிக்கை யால் ஏற்பட்ட உரிமைகளை படரச் செய்ய வேண்டுமென உறுதி பூண்டனர். இராணுவ மேன்மையும் வாணிப ஆசையும் அவர்களை ஆக்கிரமிப்புப் பாதையில் இழுத்துச் சென்றன. மறுபுறம் 'அந்நிய காட்டுமிராண்டிகளுக்கு" சீனர் எதிர்ப்புக் காட்டினர்.
இராண்டாவது சீனப் போரில் பெரிய பிரித் த னு க் கு ப் பிரான்சின் உதவி கிடைத்தது. பல நிகழ்ச்சிகள் போரை வருவித் தன. 1856 ஆம் ஆண்டு மாசி மாதம் ஒரு பிரெஞ்சுப் பா கிரி சீனரி ஞல் கொல் செய்யப்பட்டார். இச் செயலை ஆட்சேபித்து, பிரெஞ்சுத் தூதமைச்சர் தன் தேசத்தின் சார்பாக முறையிட்டார். அதே யாண்டு 'அருே" (Arrow) என்ற கப்பல் பிரித்தானியக் கொடி யைப் பிழையாகப் பறக்க விட்டமையில்ை, சீன அதிகாரிகள் அதைக் கைப்பற்றி மாலுமிகளைச் சிறைப்படுத்தினர். ஆங்கிலர், இச்சம்ப வம் பிரித்தானிய கொடியைப் பெரிதும் அவமதித்ததாகக் கருதினர். இவ்விரு நிகழ்ச்சிகளினலும் பாதிக்கப்பட்ட இங்கிலந்தும் பிரான் சும் கிறைமியன் போ ரி ல் தாம் எடுத்த கூட்டு நடவடிக்கைகளைச் சீன மீதும் பிரயோகிக்கத் திட்ட மிட்டன. 1856 ஆம் ஆண் டு போர்ப் பிரகடனம் செய்யப்பட்டது. 1857 இல் ஆங்கில பிரெஞ்சுத் துருப்புக்கள் கன்ரன் முதலிய துறை முகங்களைக் கைப்பற்றி, பீக் கிங்கை முற்றுகையிட்டன. தலை நகருக்கு ஏற்பட்ட அபாயம் சீனர் களை 1858 இல் அடிபணியச் செய்தது. ஆனல் சமாதான உடன்படிக்கை ஏற்பட முன்பு திரும்பவும் யுத்தம் மூண்டு, 1861 ஆம் ஆண்டு தியன் சினில் சீனர் முறையே ஆங்கிலருடனும் பிரெஞ்சுக் காரருடனும் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் அவர்களது விருப்பங்களுக் கிணங்கினர். வெளிநாட்டுப் பிரதிநிதிகளைப் பீக்கிங்கில் அநுமதிக்கவும், பதினுெரு புதுத் துறைமுகங்களை அந்நிய வியாபாரத்துக்குத் திறந்து விடவும், கிறித்தவ சமயக் குரவருக்கு உரிமைகள் வழங்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கவும், வெளிநாட்டவர் உள்ளூரில் சுற்றுப் பிரயாணம் செய்வதை அநுமதிக்கவும் சீனர் ஒப்புக் கொண்டனர். அதனுடன் யுத்த நட்ட ஈடாகப் பெருந் தொகைப் பணத்தையும் கொடுக்கச்ச் சீன சம்மதித்தது. மேலும் சூழ் நிலையைப் பயன்படுத்தி இரசியரும் அமெரிக்கரும் சீனுவுடன் தனித்தனி உடன்படிக்கைகள் செய் து கொண்டனர்.
உண்ணுட்டுப் புரட்சிகள் :
அந்நியரின் ஆக்குரமிப்பு ஏற்பட்ட அதே காலத்தில் மஞ்சு வமி சத்தினர் உண்ணுட்டுத் தொல்லைகளையும் மேற்கொள்ள வேண்டிய

தூரகிழக்கில் ஐரோப்பியர் 295
தாயிற்று. மேற்கு நாட்டினருடன் ஏற்பட்ட வெறுப்புக்குரிய உடன் படிக்கைகளின் பயனகச் சீன மக்களிடையே ஒரு புது தேச உணர்ச்சி பிறந்தது ; அபினி யுத்தத்துக்குப்பின் சில ஆண்டுகளுக்கு ஒரு புதிய சமூக உத்வேகம் சீன சம்பிரதாயங்களைத் துளைக்கத் தொடங்கியது அரசாங்கத்துக்கெதிராகத் தோற்றிய புரட்சிகளில் முக்கியமானது அங்இசியு-சுவான்(Hung-Hsiu-Chuan) என்பவரின் தலைமையில் 1851 ஆம் ஆண்டு ஏற்பட்ட தைப்பிங் (Taiping) புரட்சியாகும். ஆயுதங்கள் தரித்த முரட்டு வெறி பிடித்த விவசாயிகள் 1853 ஆம் ஆண்டு நான்கிங் கைக் கைப்பற்றி அங்கு தைப்பிங்-தியென்குவோ (Taiping--Then kuo) என்ற ஆட்சியைத் தாபித்தனர். இவ்வாட்சி நான்கிங்கில் பதினெரு ஆண்டு காலம் (1853-64) நிலைத்தது. இவர்கள் இங்கி ருந்து பல படையெழுச்சிகளை நடாத்தி, யங்சி கழிமுகத்தின் பெரும் பகுதியை அழித்தனர். காலப்போக்கில் செங்குவோ பான் (TsengKuo-Fan) என்பவர் புது இராணுவத்தை நிருவகித்தும் ஆங்கிலரின் உதவியைக் கொண்டும் 1864 ஆம் ஆண்டு, புரட்சிவாதிகளை வெற்றி கொண்டு, நான்கிங்கை மீட்டார். மஞ்சு அரசாங்கம் தற்காலிகமாக அழிவிலிருந்து மீட்கப்பட்டது.
தைப்பிங் புரட்சி பலாத்காரத்தினுல் அடக்கப்பட்டபோதும், அதற்குக் காரணமாயிருந்த நிலை 19 வது நூற்ருண்டில் பெரிதும் மாருமலே இருந்து வந்தது. அடக்கப்பட்ட கொந்தளிப்பு மீண்டும் தலைகாட்டிப் பெருகத் தொடங்கியது.
வெளிநாட்டவரின் ஆதிக்கம் ஓங்கல் :
சீனவின் வாயில்கள் திறக்கப்பட்டதை அடுத்து, ஐரோப்பியர் சீன நிலப்பரப்பைச் சூறையாடவும், பொருளாதாரத்தைத் தம் நலனுக் காகப் பயன்படுத்தவும் முற்பட்டனர். தியன்சின் ஒப்பந்தம் ஏற் பட்ட முப்பது ஆண்டுகளுக்குள் எல்லா ஐரோப்பிய நாடுகளும் இப்போட்டியில் பங்குபற்றியமையினல், சீனவில் அந்நியரின் முதலீடும் வியாடாரமும், செல்வாக்கும் ஓங்கின. இப்போட்டியில் ஆங்கிலர் முன்பு போல முன்னணியில் நின்றனர். ஒரு பிரித்தானியத் தானிகர் கொலை செய்யப்பட்டமை சீனவிடமிருந்து புதுச் சலுகைகளைப் பெற நன்கு பயன்பட்டது. 1876 ஆம் ஆண்டு ஆங்கிலர் செபூ (Chefoo agreement) உடன்படிக்கையை சீனர்மீது திணித்து, மேலும் நான்கு துறைமுகங்களைத் திறக்கவும் புது வியாபார உரிமைகளைப் பெறவும் வழி வகுத்தனர்.
சீனவின் நிலப்பரப்பு கெளரவிக்கப்பட்டபோதும், வல்லரசுகள் அதன் வெளி எல்லைப் பரப்புக்களை மெதுவாகச் சூறையாட ஆரம் பித்தனர். இரசியா 1875 இல், சக்கலினையும் (Sakhalin) 1881 இல்

Page 165
逻96 புது உலக சரித்திரம்
சீனத் துருக்கித்தானில் கலகம் நடந்தபோது, சவி (Ti) பிரதேசத்தை யும் தனதாக்கிக்கொண்டது. தெற்கே இந்தோ சீனவில் அணும், தொன்கின் எனும் பிரேதசங்களின்மீது பிரான்சு பாதுகாப்புரிமை பாராட்டியது. ஆங்கிலர் யுத்தம் செய்து, பர்மாவை 1886 இலும் சிக்கிமை 1890 இலும் கைப்பற்றினர். யப்பான் பாமோசாவையும் இறியூக்கியூ (Ryuku) தீவையும் ஆக்கிரமித்தது.
V− 2. யப்பான்
யப்பானின் தனிமை :
சீனத்தின் கீழ்க்கரைக்கப்பால், இரு பெரும் தீவுகளையும் பல சிறு தீவுகளையும் கொண்ட யப்பானிய தேசமிருந்தது.
பல விதங்களில் யப்பானிய பழைய வரலாறும் சீனுவைப் போன் றது. 19 ஆம் நூற்றண்டுவரையும் ய ப் பா ன் சீனுவிலும் பார்க்கக் கூடுதலான தனிமைச் சீவியம் வாழ்ந்து வரலாயிற்று; சீன  ைவ ப் போன்று 16 ஆம் நூற்ருண்டில்தான் யப்பானும் முதன் முதலாக ஐரோப்பிய வியாபாரிகளுடன் சிறி த ள வு தொடர்பு கொண்டது. கீழைத் தேசங்களுக்கு வழி காட்டிய போத்துக்கேய மாலுமிகள் 1542 ல் யப்பானை அடைந்தனர். இதற்குப் பிந்திய ஐம்பது ஆண்டுகளுக்குள் பிரித்தானிய, சிபானிய, ஒல்லாந்து, போத்துக்கேய வியாபாரிகள் வாணிபத்தை விருத்தி செய்ய ஏற்பாடுகளை அந் நாட்டினரோடு செய்து கொண்டனர். 1549 ஆம் ஆண்டு அர்ச். பிரான்சிசு சவேரியார் (St.F. ancis Xavier) என்ற யேசு சபைக் குரவர், கிறித்து சமயத்தை யப்பா னியருக்குப் போதித்தார். புதுச் சமயம் மக்கள் மத்தியில் அதிசயத் தக்க முறையில் பரவியமை, அதிகாரிகளின் மனதில் அச்சத்தை எழுப் பியது. கிறித்தவ போதகர்களின் ஆத்மீக வெற்றி, நாளடைவில் அர சியல் வெற்றிக்கு வழிகாட்டுமென அஞ் சி, யப்பானிய அதிகாரிகள் கிறித்தவ மகத்தை வேருடன் தகர்த்தெறிய பல கட்டளைகளைப் பிறப் பித்ததனர். போத்துக்கேய குரவரை நாட்டிலிருந்து கலைக்கச் சட்டங் கள் இயற்றப்பட்டன. 1591 ல் 20, 000 க்கு மேற்பட்ட புதுக் கிறித்த வர்கள் படு கொலை செய்யப்பட்டனர். 17 ஆம் நூற்றண்டின் ஆரம் பத்தில் நாட்டிற்குள் பிரவேசிக்கும் அந்நியருக்கும், நாட்டை விட்டு வெளிப்படும் சுதேசிகளுக்கும் மரணதண்டனை விதிக்கப்படுமெனச் சட் டத்தைப் பிறப்பித்து, அந்நிய நாட்டுத் தொடர்புகளைப் பூரணமாகத் துண்டித்தனர். ஒரு சில ஒல்லாந்து வியாபாரிகளை விடச் சகல வெளி நாட்டவரும் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டனர். இதன் பின்பு 200 ஆண்டுகளுக்கு மேல் யப்பானியர் தம் பழைய சமயத்தையும் பண்டைய வாழ்க்கை முறைகளையும் அனுசரித்து, வெளிநாட்டுத் தொடர்பெதுவு மின்றிச் சந்நியாச வாழ்வு வாழ்ந்து வந்தனர்.

தூரகிழக்கில் ஐரோப்பியர் 297
யப்பானில் அமெரிக்கர் :
ஐரோப்பாவினலன்று, அமெரிக்க தூண்டுதலினலேயே, யப்பான் தனது முகத்தை மேற்கே திருப்பியது. அபினிய யுத் தம் எப்படிச் சீனுவுக்கு அமைந்ததோ, அதே விதமாக ஒர் அமெரிக்க தளபதியின் கோரிக்கைகள் யப்பானுக்கு அமைந்தன. அமெரிக்கா மேற்கே கலி போனியாவரை விரிவடைய ஆரம்பித்ததுடன், தன் கண்ணுேட்டத்தைப் பசிபிக்கின் மீது செலுத்த ஆரம்பித்தது; அந்நோக்கு அவர்களை யப் பானிய கரைக்கும் கொண்டுவந்தது. 1853 ஆம் ஆண்டு, அமெரிக்க ஐக் கிய தேசத்து கடற்படைத் தளபதி பெரி (Commodore Perry) நான்கு யுத்தக் கப்பல்களுடன் யெடோ (பின்பு தோக்கியோ) க் குடாவுக்குள் பிரவேசித்து, யப்பானிய துறைமுகங்கள் அமெரிக்க கப்பல்களுக்குத் திறக்கப்பட வேண்டுமென, அரசனை வேண்டி விடைக்கு அடுத்த ஆண்டு தான் வருவதாகக் கூறி விடைபெற்ருர், பெரி, குறிக்கப்பட்ட திகதி யில் எட்டு யுத்தக் கப்பல்களுடனும் அவற்றில் 4000 போர் வீரர் களுடனும் திரும்பவும் தோற்றினர். அமெரிக்காவின் இராணுவ பலத் தைக் கண்டு வெருண்ட யப்பானியர் ஒர் உடன்படிக்கையை அதனுடன் செய்தனர். புயலினல் அல்லது (விபத்தினல் பாதிக்கப் படும் மாலுமிகளின் உபயோகத்துக்கு இரு துறைமுகங்கள் திறக்கப் பட்டன. அவற்றில் வியாபார சலுகைகள் மறைமுகமாக அங்கீகரிக் கப்பட்டன.
ஐரோப்பிய நாடுகளின் பிரவேசம் :
யப்பானைத் திறப்பதில் முதல் முயற்சி பூர்த்தியானதும், சீனவில் போன்று மேற்கத்திய அரசுகள் உடனே இடங்களைப் பிடிக்கப் போட்டி போட்டன. இரசியாவுடன் போர் செய்து கொண்டிருந்த பெரிய பிரித்தன் பசிபிக் சமுத்திரத்தில் ஒரு சிநேக துறைமுகத்தின் அவசி யத்தையுணர்ந்து, முதலாவது ஆங்கில யப்பானிய உடன்படிக்கை யைச் செய்தது. இதனுல் பிரித்தன், கப்பல் திருத்தும் வசதிகளைப் பெற்றதே தவிர, வியாபார உரிமைகளைப் பெறவில்லை. அடுத்த பத்து ஆண்டு காலத்தில் யப்பான் மே ற் கு நாடுகளில் பிரதானமானவை யுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டது. 1867 க்கிடையில் மொத்த மாகப் பதினைந்து நாடுகள் யப்பானுடன் உடன்படிக்கைகள் செய்து, வர்த்தக உரிமைகள், திறந்த துறைமுகங்கள், கடல் உரிமைகள், சுங்கவரிக் கட்டுப்பாடு போன்ற சலுகைகளைப் பெற்றன.
இது காலம்வரை யப்பானின் பொதுச் சரித்திரம் சீனுவின் வர லாற்றைப் பின்பற்றியது. இரு நாடுகளும் மேற்கு அரசுகளுடன் ஒரு முகப்பட்ட உடன்படிக்கைகளினல் கட்டுண்டு கிடந்தன. அந் நியரினல் ஆக்கிரமிக்கப்பட்ட இரு நாடுகளின் எதிர்காலம் இவ்விரு

Page 166
298 LSI உலக சரித்திரம்
கலாச்சாரங்களுக்கிடையே ஏற்பட்ட போராட்டத்தின் முடிபில்தான் தங்கி நின்றது. இப்போரிலிருந்து மீட்சி பெற்ற விதத்தில்தான் இரு நாடுகளின் வரலாறுகள் பெருமளவுக்கு வேறுபட்டவை.
யப்பானின் பழைய நிலை :
மேற்சத்திய அரசுகளுடன் ஏற்பட்ட தொடர்பு, யப்பானில் வியப் புக்குரிய மாற்றங்களுக்கு வழி காட்டியது. 19 ஆம் நூற்றண்டின் மத்தியில் யப்பானிய அரசு மானிய முறையையும், இராணுவ முறை யையும், குழு மனப்பான்மையையும் அடிப்படையாகக் கொண்டது. மிக்காடோ பெயரளவில் நாட்டின் சக்கரவர்த்தி ; ஆனல் பல நூற் ருண்டுகளின் வரலாற்றின் பயனக அஃது அதிகாரமற்ற ஒரு பதவி யாக மாற்றமடைந்து நின்றது. அவர் தெய்வீகத் தன்மைகள் உடைய வராக மக்களால் கணிக்கப்பட்டு, கியோட்டோ நகரத்தில் நாட்டின் விவகாரங்களில் தலையிடாது தனிமையில் வாழ்ந்து வந்தார். சோகன் என்ற மிக்காடோவின் பிரதம உத்தியோகத்தர் படிப்படியாக அதிகா ரம் முழுவதையும் கைப்பற்றிக் கொண்டார்; நாளடைவில் அவருடைய யெடோ மாளிகையே அரசாங்கத்தின் உண்மை இருப்பிடமாக மாறியது. அவரது அதிகாரத்துக்கு இராணுவ பலம் தான் ஆதாரமாக அமைந் தது. இவருக்குக் கீழ் “டய்மியோ’க்கள் என்று அழைக்கப்பட்ட நிலப் பிரபுக்கள் இராணுவப் பிரபுத்துவ ஆட்சியை நிருவகித்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் சமுறை (Samurai) என்ற இராணுவ போர் வீரர்களை வைத்திருந்தனர். டய்மியோக்களுகுக் கீழ், சிறிய நிலக்கிழார் கள் இருந்தனர்; இவ்விரு வகுப்பினருக்கும் ஆதாரமாக விவசாயிகள் செலுத்திய கப்பம் இருந்தது. 19 ஆம் நூற்றண்டு யப்பானிய அரசிய லமைப்பு ஏறக்குறைய இரசியாவின் அரசியலமைப்பை ஒத்தது.
யப்பானில் மாற்றங்களின் காலம் :
இவ்வாறு அமைந்த அரசாங்கம், அந்நியரின் வருகையின் முப்பது ஆண்டுகட்குள், ஐரோப்பிய வல்லரசுகளான பிரான்சு, பிரித்தன் என்பவற்றின் இலட்சணங்களை யப்பானிய அரசாங்கம் பெற்றது. 1867 ஆம் ஆண்டு, மக்கள் சோகனப் பதவியிலிருந்து நீக்கி, அரசியல் முறையைப் பூரணமாக மாற்றியமைத்தனர். குறுநில மன்னர் போல் அதிகாரம் செலுத்திவந்த நான்கு டய்மியோக்கள் தம் அதி காரத்தை மன்னனுக்கு விட்டுக்கொடுத்தனர்; சமுறை என்ற இரா ணுவ வீரர்களும் தம் உரிமைகளைக் கைவிட்டனர். 1867 இல், மிற்க கிற்ருே (Mitsuhito) மன்னர், சர்வ அதிகாரங்களுடன் தோக்கியோ தலைநகரில் தாபிக்கப்பட்டார். சிற்றரசர்கள் இழந்த அதிகாரங்கள் யாவும் மத்திய அரசாங்கத்தில் குவிந்து, அரசருடைய பலம் அதிக

தூரகிழக்கில் ஐரோப்பியர் 299
ரித்தது. அடுத்து, அரசர் சமுதாயத்திலிருந்து, மானிய முறையை அகற்ற நடவடிக்கை எடுத்தார். 1868 ஆம் ஆண்டு கப்பம் செலுத் தும் முறை நீக்கப்பட்டது. 1871 இல் ஓர் இராசகட்டளை, மானிய முறையை நாட்டிலிருந்து அறவே அகற்றியது. அதனுடன் அரசாங்கத் தைத் தேச அடிப்படையில் அமைக்க வழிகோலப்பட்டது. பல சிற் றரசர்களைக் கொண்ட தேசம், தனி மத்திய அதிகாரமுடைய நாடாக உருமாறியது.
அரசியல் சீர்திருத்தங்களிலும் பார்க்க மக்களின் சாதாரண வாழ்க்கையிலும் அதிசயத்துக்குரிய மாற்றங்கள் புகுத்தப்பட்டன. 1868 முதல் மேற்கத்திய எண்ணங்களைப் பின்பற்றுவதில் யப்பான் அதி அக்கறையும் சிரத்தையும் கொண்டது. அதன் இராணுவ, தொழில், விஞ்ஞான, பொருளாதாரவாழ்வை மேற்கத்திய எண்ணங் களின் அடிப்படையில் புதிதாகக் கட்டியெழுப்ப ஆவணயாவும் செய்யப் பட்டன. புகையிரதங்கள், தந்தி, தெவிபோன் தபால் வசதிகள், துறைமுகங்கள், கப்பல் கட்டும் நிலையங்கள் யாவும் உபயோகத் துக்கு வந்தன. சுரங்கங்கள், தொழிற்சாலைகள் மின்னல் வேகத்தில் திருத்தியமைக்கப்பட்டு, பெரும் பொருளுற்பத்தியில் ஈடுபட்டன. பண முறை சீர்திருத்தி யமைக்கப்பட்டது; வங்கி முறை அனுட்டானத் துக்கு வந்தது; வெளிநாட்டு வாணிபம் ஆண்டாண்டு அதிகரித்துக் கொண்டே சென்றது. 1887 க்கும் 1923 க்கு மிடையில் இவ்வாணி பம் 26 மடங்கு பெருகியது.
1872 முதல் ஆண், பெண் பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வி கட் டாய மாக்கப்பட்டது. சர்வகலாசாலைகளும் தொழிற் கல்லூரி களும் அரசாங்க மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட்டன. வெளி நாட்டு ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆங்கில மொழி கட்டாய பாடமாயிற்று. விவேகமும் ஆற்றலும் நிறைந்த வாலிபர் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் உயர் கல்வி பயின்று, தம் தாயகம் மீண்டு, பல துறைகளில் தொண்டாற்றி, நாட்டை விருத்தி செய்தனர். நீதி முறை புதிப்பிக்கப்பட்டது. வெளி நாட்ட வர்களின் உதவியுடன் புது நீதிச்சட்டங்கள் தொகுக்கப்பட்டன 1889 ஆம் ஆண்டு ஒரு புது அரசமைப்புத் திட்டம் பிரகடனம் செய் யப்பட்டு, ‘டயற்" என்ற இரு சபைகளைக் கொண்ட பாராளு மன்றம் அங்கீகரிக்கப்பட்டது.
யப்பானுக்கு பிறநாட்டு வல்லுனர்கள் ஏராளமாக வரவழைக்கப் பட்டனர். ஆங்கிலர் புகையிரத வீதிகளை அமைத்தனர்; அமெரிக் கரின் உதவியினல் விவசாயம், கல்வி முறைகள் விருத்தி யடைந்தன ; பிரெஞ்சினர் நீதி நிருவாக முறைகளைச் சீர்ப்படுத்தினர் ; செர்மனி யர் வைத்திய முறையை திருத்தியமைத்தனர்.

Page 167
300 புது உலக சரித்திரம்
இராணுவ முறைகளும் முற்றிலும் சீர்திருத்தியமைக்கப்ப்ட்டன. இராணுவம் தேச அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டதுடன், கட்டாய் இராணுவ சேவையும் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்டது. செர்மன் முறைகளைப் பின்பற்றி யப்பானிய வீரர் நவீன ஆயுதங்களையும் பெற்றனர். பிரித்தானிய மாதிரியைப்போல யப்பான் ஒரு கடற்படை யையும் அமைக்கத் திட்டங்கள் தீட்டியது. எக்கருமமும் அதி கூடுத் லான திறமையுடனேயே நிருவகிக்கப்பட வேண்டுமென்பது அவர் களது தீர்மானம். இவ்வாறு மேல்நாட்டு நாகரிகத்தின் சின்னங்கள் எல்லாத் துறைகளையும் ஊடுருவிச் சென்று விசாலமான மாற்றங்களை ஏற்படுத்தின.
பலம் பொருந்திய பிறநாட்டுப் பூட்கை :
ஏனைய மேற்கத்திய அம்சங்களில் போன்று, யப்பானியப் பேரரசு ஒரு பலம் பொருந்திய பிறநாட்டுப் பூட்கையையும் அபிவிருத்தி செய்யலாயிற்று. அறியாமையில் அது வல்லரசுகளுடன் செய்து கொண்ட ஒருதலைப்பட்ட ஒப்பந்தங்களைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதையே தலையான நோக்கமாகக் கொண்டது. இந் நோக்கத்துடன் 1871 ஆம் ஆண்டு அஃது ஒரு தூதுக் குழுவை ஐரோப்பிய தலைநகரங்களுக்கு அனுப்பிய பொழுது, அது வெறுங்கை யுடனேயே திரும்பியது. இத் தோல்வி, தான் ஒருவல்லரகாக மாறினல் தான், தன் தோக்கங்கள் நிறைவேறும், எனும் உன்னத பாடத்தைக் கற்பித்தது. பலாத்காரம் தான் தூரகிழக்குப் பிரச்சினையில் அதி சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதை யப்பானியர் உணர்ந்தனர். சீனுவின் மானபங்கத்துக்கும், யப்பானை எதிர்த்து நின்ற அபாயத்துக்கும் இதுவே அடிப்படை காரணம் என்ற படிப்பின அதன் மனதில் நன்கு பதிந் தது. யப்பான் திட்டமிட்டுத் தன்னை ஒரு வல்லரசாக மாற்றிக் கொள்ளும் முயற்சி பூர்த்தியானதுடன், தனது அயலார் மட்டில் ஆக்கிரமிப்பு நடவ்டிக்கையில் இறங்கியது. இதற்கு முன்னரே கொறியாவில் சீனுவின் மேன்மையை யப்பான் ஆட்சேபித்திருந்தது ; இப்பொழுது அதை முற்ருக அணைத்துவிட முற்பட்டது.
சீன - யப்பானியப் போர் (1894-95) :
கொறியா அதன் புவியியல் அமைப்பினல் யப்பானுக்கு அதிமுக் கியத்துவம் வாய்ந்த ஒரு குடாநாடு. பெரிய பிரித்தனின் தேச பாதுகாப் புக்கு பெல்சியம் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதிலும் மேலாக கொறியாவின் சுதந்திரம் யப்பானின் பாதுகாப்புக்கு அவசியமானது என்று யப்பானியர் எண்ணியதில் தப்பில்லை. அந்நியரின் ஆளுகையில்
கொறியா *யப்பானின் இதயத்துக்கெதிரே நீட்டப்பட்ட கூர்வாள்

தூரகிழக்கில் ஐரோப்பியர் 30
ஆக அமையுமென நன்குணர்ந்த யப்பான் வேறு ஐரோப்பிய அரசு களோ சீனவோ அந்நாட்டை ஆக்கிரமிக்க முன், அதைத் தானே கைப் பற்றத் திட்டமிட்டது.
1894 ஆம் ஆண்டு, கொறியாவில் புரட்சி ஏற்பட்ட பொழுது, கொறியன் அரசாங்கம் சீனவிடம் உதவி கோரி நிற்கவே, 2500 சீனத் துருப்புக்கள் கொறியாவுக்கு அனுப்பப்பட்டன. யப்பான், சீனுவின் இச் செயலை ஆட்சேபித்து, தானும் 8000 போர்வீரர்களை குடாநாட் டுக்கு அனுப்பியது; புரட்சியும் அடங்கியது. ஆனல் யப்பானிய துருப்புக்க ளும் சீனத்துருப்புக்களும் ஒருவரையொருவர் முகம் காட்டி நின்றனர்; இவர்களில் யார் முதலில் நாட்டைவிட்டு வெளியேறுவது எனும் பிரச்சினையில் தகராறு ஏற்பட்டது. சமாதானத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன . ஆனல் ஐரோப்பிய அரசுகளுக்குத் தம் பலத்தைக் காட்டப் போரை ஆசித்த யப்பான், எல்லா சமாதான கோரிக்கைகளையும் நிராகரித்து, இணங்க மறுத்தது.
சீன துருப்புக்களைக் கொறியாவுக்குக் கொண்டு வந்த ஒரு சீனக் கப்பலை யப்பானியர் தாக்கி, கப்பலையும் அத்தனை போர்வீரர்களையும் பாதாளத்துக்கு அனுப்பினர். இவ்வுடன் காரணத்திலிருந்து எழுந்த சீன-யப்பானியப் போர் ஒன்பது மாதம் நீடித்தது. தரையிலும் கடலிலும் யப்பான் மகத்தான வெற்றிகளையீட்டி சீன  ைவ அடிபணியச் செய்தது. 1895 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சீன சர ணடைந்து யப்பானுடன் சிமனேசேக்கி (Treaty of Shimonoseki) உடன்படிக்கையை செய்து கொண்டது. இவ்வுடன்படிக்கையின்படி கொறியாவின் பூரண சுதந்திரத்தை ஏற்கவும், இலியாற்றுங் (Liaoubung) தீபகற்பத்தை யப்பானுக்குக் கொடுக்கவும், பெரிய நட்ட ஈடொன்றை இறுக்கவும், மேற்கத்திய அரசுகளைப்போல சீன வாணி பத்தில் யப்பானைச் சம உரிமைகளுடன் அனுமதிக்கவும், இவ்வியாபா ரத்துக்கு நான்கு துறைமுகங்களைத் திறக்கவும் சீன ஒப்புக் கொண்டது.
போரின் பயன்கள் :
தூர கிழக்கின் இன்றைய வரலாற்றில், சீன-யப்பானிய யுத்தம் சில திட்டமான முடிபு களையும் பலன்களையும் அதன் வழியில் கொண்டு வந்தது. முதலாவது, யப்பான் தான் அந்நியருடன் செய்து கொண்ட ஒரு தலைப்பட்ட ஒப்பந்தங்களை நிராகரிக்கக், கூடிய துணிவு பூண்டது. தனது இராணுவ பலத்தை நிரூபித்ததன் பேரில், அது மேற்கத்திய பல்லரசுகளின் பாதுகாப்பைத் தேடுவது அனவசிய மாயிற்று. ஒப்பந்தங்கள் கிழிபட்டன : அந்நியரின் உரிமைகள் நிராகரிக்கப்பட்டன ; அது தன் வரி விதிப்பு உரிமையை நிர்வகிக் கும் வாய்ப்பை மீட்டுக் கொண்டது. - இரண்டாவது, வேறு எந்த சம்பவத்திலும் மேலாக இப்போர், சீனுவின் பல வீனத்தை அம்பலப் படுத்தியது. தான் நீண்ட காலம் வெறுத்து வந்த *"குள்ள இனத்தின்’ கையில் சீன தோல்வியுற்று, தன் நிலப்பரப்பின் பகுதிகளில் சிலவற்றை

Page 168
302 புது உலக சரித்திரம்
கையளிக்க வேண்டியதாயிற்று. இந்த வெளிப்பாடு, சீன மக்களின் மனத்தில் துன்பத்தை உண்டாக்கியதுடன், மஞ்சு சக்கராதி பத்தியத்தை மேற்கத்திய சீர்திருத்தங்களினுல் புதுப் பிக்க வேண்டு மென்ற ஓர் இயக்கத்தையும் ஆரம்பித்தது. மறுபுறம், மேற்கத் திய அரசுகள் சீன புழு வரிக்கப்பட்ட நாடென்றும் அது எந்நேரமும் சிதைவுறலா மென்றும் கண்ணுரக் கண்டனர். ஆபிரிக்காவைப் போல சீனவும் வல்லரசுகளின் ஏகாதிபத்திய வேட் கைக்கு ஆயத்தமான தருவாயில் நின்றது. அவர்கள் மத்தியில் சீன பங்கு போடப்பட வேண்டு மென்ற கொள்கை ஓங்கியது ; தேசங்கள் சீனவைச் சூறையாட ஆயத்தப்படுத் தின ; சலுகைகள், குத்தகை நிலப்பரப்புக்கள், செல்வாக்கு எல்லைகள் (Spheres of Influence) என்பவற்றிற்காக வல்லரசுகளிடையே போட்டி வலுத்தது.
மூன்ருவது, 1896 ஆம் ஆண்டு வெற்றி, யப்பானிய ஏகாதிபத்திய வேட்கை யைப் பெரிய அளவில் தூண்டியது. 25 ஆண்டு காலமாக தனது படைகளேயும் ஆயுதங் களேயும் கூர்மையாக்கி ஆயத்தப்படுத்திய யபபான், அதன் முதல் பரிசோதனையில் வெற்றி மாலைகளைக் சூடிக் கொண்டது. இவ் வெற்றி அவர்களின் ஆசைகளை வானம் வரை எழுப் பின. பத்து ஆண்டுகளுக்குள் யப்பான் ஒர் ஐரோப்பிய ஆரசைப் போருக்கு இழுத்து அதைத் தோற்கடித்தது ; பதினேந்து ஆண்டுகட்குள் கொறியாவைத் தனதாக்கியது.
3. சீனுவில் அந்நியரின் ஆதிக்கம்
1895 ஆம் ஆண்டு நிகழ்ந்த சீன-யப்பானியப் போர் ஒரு காலத் தின் முடிபையும், இன்னுமோர் காலத்தின் ஆரம்பத்தையும் குறிக் கும் முக்கிய சம்பவமாக அமைந்தது. அன்று தூர கிழக்கில் ஆரம்ப மான இயக்கங்கள் இரண்டாம் உலக யுத்தம் வரை நீ டி த் த ன ஐரோப்பிய வல்லரசுகளும் யப்பானும் சீனுவைச் சூறையாடி அதன் முழுமையை உருக்குலையச் செய்த காலம் அது. ஐரோப்பிய வல்லர சுகள் ஆபிரிக்கா கண்டத்துப் பிரதேசங்களை தமக்கிடையே பங்கிட்ட வாறு, சீனப்பிரதேசமும் கூறுபோடப்படுமோ என்ற அச்சம் எழுந் தது. ஆனல் வல்லரசுகளுக்கிடையே எழுந்த போட்டியும், பிணக்கும், பொருமையுமே சீனுவை உயிர் வாழவிட்டன. இரசியாவின் பேரரசு வாதத்தையும், யப்பானின் ஆள்புலப்படர்ச்சியையும் தடை செய்ய வும், தூரகிழக்கில் அரசவலுச் சம நிலையைப் பாதுகாக்கவும் ஐரோப் பிய அரசுகள் முற்பட்டன. தவிர இப்போட்டியின் விளைவாக இது வரை ஐரோப்பியர் மஞ்சள் இனத்தினருக்கெதிராக கொண்டிருந்த ஒருமைப்பாடும் 1902 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆங்கில-யப்பானிய நட்புறவினல் அழிந்தது. இன்னும் இக்காலத்தில் சீனுவின் மனே நிலையிலும் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டது; அதன் மனம் புழுங் கிய சாத்வீகம், புரட்சிகரமான ஆட்சேபமாக உருமாறியது. இறுதி யாக இப்பிராந்தியத்தில் எழுந்த நெருக்கடியான பிரச்சினைகளை, அமெரிக்கா சர்வதேச போட்டிக்குப் பதிலாக 'திறந்த வாயிற் பூட்கை”யினல் தீர்க்க முயன்றது.

தூரகிழக்கில் ஐரோப்பியர் 303
மூவல்லரசுகளின் தலையீடு :
சீன-யப்பானியப் போரின் முடிவில் ஏற்பட்ட சிமனேசேக்கி உடன்படிக்கையின் முறிகளை இரசியா சிதைக்க நோக்கங் கொண்டது. இரசியா, தான் சீனவின் உற்ற நண்பன் என பாசாங்குபண்ணி, பிரான்சு, செர்மனி என்ற நாடுகளின் அனுசரணையுடன், யப்பான் அவ்வுடன்படிக்ன்கயின் வழியாகப் பெற்ற பரிசின் ஒரு பகுதியான இலியோட்டுங் தீபகற்பத்தை (போட் ஆத்தர் உட்பட), பலவந்தமா கப் பறித்தெடுத்து சீனுவுக்குத் திருப்பிக் கொடுத்தது. இவ்வாறு இரசியா தன் வெற்றியின் பரிசைப் பறித்தமையை யப்பான் மன்னிக்கவுமில்லை, மறக்கவுமில்லை. மறுபுறம் இங்கிலாந்து மூவல்லரசுகளுடன் ஒத்துழைக்க மறுத்ததை நன்றியுடன் நோக்கியது. இவ்வாறு இரசிய-யப்பா னரியப் போருக்கும், ஆங்கில-யப்பானிய நட்புக்குமான வித்துக்கள் இடப் பட்டன.
அந்நியரின் ஆதிக்கம் ஓங்கல் :
சீன தன்னைப் பாதுகாக்கும் நிலையிலில்லை என்ற உண்மை வெளி யரங்கமாயிற்று. இதைக் கண்ட வல்லரசுகள், தாம் சீனுவுக்குச் செய்த உதவிக்குப் பிரதியுபகாரமாக, பரிசுகளைப் பெறத் தலைப்பட்டன. இரசியா, பிரான்சு, செர்மனி, பிரித்தன் என்ற நான்கு நாடுகள் துறைமுகங்களையும், மாவட்டங்களையும் குத்தகைக்கு எடுத்ததுடன், விசேட சலுகைகளையும் பெறலாயின. செர்மனி கியாசெள, (Kiaochow), சிங்டெள (Tsingtao) மாவட்டங்களைப் பெற்றது : இரசியா போட் ஆத்தரையும் (Port Arthur) அதன் மாவட்டத்தையும் தன தாக்கிற்று ; பிரித்தன் வெய்-காய்-வெய் (Wei-hai-wei), குவாங்ருங் கில் (Kuangtung) ஒரு பகுதியிலும் உரிமை பாராட்டியது ; பிரான்சு குவாங்செள விரிகுடாவை ஆக்கிரமித்தது. இப் பகு தி களி ல் பொருளாதாரத்தை விருத்தி செய்தல், புகையிரத வீதிகளை அமைத் தல், சுரங்கங்களை நிறுவுதல் போன்ற உரிமைகளையும் வல்லரசுகள் பெற்றன. மேலும் அவை, சீனுவின் சுங்கவரி, வெளி நாட்டு வியாபா ரம், கடல், தரை, ஆகாய, உண்ணுட்டுக் கால்வாய்ப் போக்குவரத்து என்பனவற்றை தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தன. சீன விற்குக் கடன் கொடுத்தும், அந் நாட்டில் வங்கிகளை நிறுவியும் சீன நிதி நிலையின் மேல் ஆதிக்கம் பெற்றன.
அமெரிக்காவின் 'திறந்தவாயில்' பூட்கை (Open Door Policy')
மேற்கத்திய வல்லரசுகளினுள் அமெரிக்கா ஒன்றுதான் சீனுவின்
தலை சிறந்த நண்பன் என பல வருடங்களாக எண் எணப்பட்டு வந்தது. 1884 முதல் அமெரிக்கா சீனுவின் வாயில்களை மேற்கு வல்லரசுகளின்

Page 169
304 புது உலக சரித்திரம்
வாணிபத்துக்குத் திறக்க முழுமூச்சாக உழைத்தபோதும், அந்நாடு சீனவுடன் ஒரு போரிலாவது ஈடுபட்டதுமில்லை ; வியாபாரம் என்ற ஒரு துறையைவிட ஏனைய வழிகளில் அமெரிக்கா சீனவை மானபங் கம் செய்ய முயற்சிந்ததுமில்லை. ஏனைய வல்லரசுகளைப்போல விசேட உரிமைகளைப் பெறவோ, மாவட்டங்களைப் பெறவோ அமெரிக்காவின் நாட்டம் படியவில்லை. இக்காலத்தில் அமெரிக்கா, சீனவின் ஒரு துண்டு நிலப்பரப்புக்கு ஆசைப்படவுமில்லை, ஆக்கிரமிக்கவுமில்லை. அமெரிக்கா வியாபாரம் எனும் ஒரேயொரு நோக்கத்தைவிட்டு அணு வளவு தன்னும் பிசகாது, சீனு மட்டில் மிகவும் கண்ணியமாக நடந்து வரலாயிற்று.
ஆனல் 1898 இல் விசேட உரிமைகளுக்காகவும் மாவட்டங்களுக் காகவும் வல்லரசுகளிடையே ஏற்பட்ட போட்டி, அமெரிக்காவை இக் கட்டான நிலைக்குள்ளாக்கியது. மேற்கத்திய வல்லரசுகள் சீனுவின் மேல் வைத்திருந்த பிடியை மேலும் உறிதிப்படுத்த மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியுடனும், சீனப் பிரதேசத்தில் நிலவுரிமைகளற்ற அமெரிக்காவின் வியாபார உரிமைகளுக்குப் பங்கம் ஏற்படுமென்ற அச்சம் வளர்ந்து வந்தது. வல்லரசுகள் எல்லா அந்நிய நாடுகளின் வியாபாரத் தொடர்புகளை நிராகரிக்கத் திட்டமிடின், அமெரிக்கர் தம் வியாபாரச் சந்தைகளை இழக்க நேரிடும் என்று அஞ்சினர். இந்த ஆபத்தை நீக்குவதற்காகவே அமெரிக்கா “திறந்தவாயில் பூட்கையை’ப் பிரகடனம் செய்தது. 1899 ஆம் ஆண்டு செற்றம்பரில் அமெரிக்க அரசாங்க காரியதரிசியான சோண் கே (John Hay) இலண்டன், பேளின், செயின்ட் பீட்டசு பேக் என்ற நகரங்களுக்கும் நவம்பரில் தோக்கியோ, பரிசு உருேம் என்ற நகரங்களுக்கும் ஒரு சுற்று நிரு பத்தை அனுப்பிவைத்தார். எல்லா நாடுகளுக்கும் சீனவுடன் வியா பாரம் செய்யச் சமசந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டுமென்றும், எல் லாத் தேசங்களுக்கும் பாகுபாடற்ற ஒரே அளவான தீர்வைகள் விதிக்கப்படவேண்டுமென்றும், எல்லா அரசுகளும் சீனுவின் சுங்க வரி விதிப்பு அதிகாரத்தை மதித்து நடக்கவேண்டுமென்றும் உத்தர வாதம் கொடுக்கும்படி இந்நிருபத்தில் கேட்கப்பட்டது. அதாவது, மறைமுகமாக, வவ்லரசுகள் தத்தம் மாவட்டங்களின் வியாபார வாயில்களைத் திறந்து வைத்திருக்க வேண்டுமென்றும், பிற நாடுகளின் வியாபாரப் பொருள்களுக்குக் கூடுதலான தீர்வை விதிக்கக் கூடா தென்றுமே கேட்டார். பாக்சர் கலகம் (1900) :
வல்லரசுகளின் ஏகாபத்திய அட்டகாசத்தைச் சகிக்க முடியாது, சீனர் நாட்டில் பல எதிர்ப்பு இயக்கங்களை ஆரம்பித்தனர். “பாக்சர் கள்” என்ற இர க சி ய சங்கம் வெளிநாட்டவரின் ஆக்கிரமிப்பை

தூரகிழக்கில் ஐரோப்பியர் 305
எதிர்த்து 1900 இல் ஒரு பயங்கர ஆட்சியை ஏற்படுத்தியது. கொலை, கொள்ளை, தீவைத்தல் போன்ற செயல்களினல் கலகக்காரர் பீக்கிங்கை யும், தியன்சின்னையும் அடிமைப்படுத்தினர். தலைநகரத்தில் இராணுவம் கலகக்காரருடன் சேர்ந்தது ; கலத்துக்கு மஞ்சு அரச வம்சத்தினரும் வெளிப்படையாகத் தம் ஆதரவைக் காட்டினர். ஆரம்பத்தில் கிறித்தவ குரவரையும் கிறித்தவ சீனரையும் ஈன இரக்கமின்றி வெட்டி வீழ்த் தினர்; நாளட்ைவில் எல்லா அன்னியர்களும் அவர்களுடைய கோபாவே சத்துக்கு ஆளாகினர். செர்மன் வெளிநாட்டுத் தூதுவரும், யப்பானிய வெளிநாட்டுக் காரியாலயத்து உயர் உத்தியோகத்தர் (Chancellor 0f the Jap. Legation) ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கலகக் காரர் வெளிநாட்டவரைத் தத்தம் காரியாலயங்களிலேயே முற்றுகையிட் னர். அந்நியர்கள், இரு மாத காலம் மிக அவலத்துடன் தம்மைப் பாது காத்தபின் ஒரு சர்வதேச இராணுவப்படை தலைநகரைக் கலகக்காரரிட மிருந்து மீட்டது. அவர்களும் நாட்டுப்பற்றுள்ள சீனர்களைத் தயவு தாட் சணயமின்றிக் கொலை செய்தனர்; புரட்சியும் அடங்கியது. தனது செய லினுல் எழுந்த இச்சம்பவங்களுக்குச் சீன அரசாங்கம் மறுப்புக் கூறமுடி யாத நிலையில் வல்லரசுகளின் தயவையே எதிர்பார்க்க வேண்டிற்று. சீனவை பங்குபோடுவதற்கு இதைப் போன்ற வாய்ப்பான ஒரு சிறந்த சந்தர்ப்பத்தை வல்லரசுகளும் ஆசித்திருக்க முடியாது. ஆனல் அவர்களுக் கிடையே எழுந்த போட்டியும், அச்சமும் சீனவைப் பாதுகாத்தன. எனி னும் அவர்கள் பெருந்தொகை நட்ட ஈட்டைக் கேட்டுப்பெற்றனர்.
ஆங்கில யப்பானிய நட்புறவு (1902) :
தூர கிழக்கில் இரசியாவினுடைய ஆக்கிரமிப்பை யப்பானும், இங் கிலந்துமே வெகுவாக அஞ்சின; கடந்த ஐம்பது ஆண்டு நிகழ்ச்சிகளிலி ருந்து இவ்விரு நாடுகளும் இரசியாவின் நோக்கங்களை தெளிவாகக்த் கண்ணுரக்கண்டு கொண்டனர். சமாதான கால உட்புகுதலினுல் அன் றேல் இராணுவ ஆக்கிரமிப்பினல் அன்றேல் சீனுவின் உபகார வீரன் என்று தன்னைக் காட்டிக்கொண்டு இரசியா அரை நூற்ருண்டுக்குள் மஞ்சூரியா, மொங்கோலியா, கிழக்குத் துருக்கித்தான் எனும் பிர தேசங்களின் மீது தன் ஆட்சியை நிலை நாட்டி விட்டது. யப்பானில் ஒரு எதிரியைக் கண்ட இரசியா, 1895 இல் அந்நாட்டை இலியாட்டுங் தீப கற்பத்திலிருந்து வெளிப்படுத்தி, 1897இல் போட் ஆத்தரைத் தானே அப கரித்தது. மஞ்சூரியாவிலிருந்து திரான்சு-சைபீரிய புகையிரத வீதியைப் போட்ஆத்தர் வரை நீட்ட உரிமை கோரி அதையும் பெற்றது. திரும்ப வும் பாக்சர் கலகத்தையடுத்து, இரசியாவுக்கு, தனது எல்லைகளைப் பட ரச்செய்ய இன்னுமோர் அரிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. சீனவின் நண்ப ஞகத் தன்னைக் காட்டிக்கொண்டு வல்லரசுகளுடன் மத்தியட்சம் பேசிய
oldF - 22

Page 170
306 புது உலக சரித்திரம்
தற்குப் பிரதிபுபகாரமாக இரசியா மஞ்சூரியா மீது ஆண செலுத்த முயன்றது. ஆனல் வல்லரசுகள் இவ்வேண்டுகோளை நிராகரிக்குமாறு சீனுவைத் தூண்டி, வெற்றி பெற்றன.
இரசியாவின் இவ்வியக்கத்தைக் கண்டு, அந்நாட்டின் நோக்கங் களுக்கு அஞ்சிய யப்பானும் பிரித்தனும் ஒற்றுமைப்பட்டு, 1902 இல் ஆங்கில-யப்பானிய உடன்படிக்கையை ஏற்படுத்தின. இரு வல்லரசு களில் ஒன்று, இரு பிற எதிரிகளினல் தாக்கப்படின், மற்ற அரசு அதற்கு உதவி புரிய ஒப்புக் கொண்டது. இவ்வுடன் படிக்கை 1905, 1911 எனும் ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டு 1923 வரையும் நிலைத் தது. இதுவே, ஒரு ஆசிய அரசு ஐரோப்பிய நட்புறவுகளில் சம பதத்துடன் அனுமதிக்கப்பட்ட முதற் சந்தர்ப்பமாகும் ஒரு பொழு தும் ஒரு ஆசிய நாடும் பெற்றிராத உயர்வையும் பலத்தையும் யப் பான் பெறலாயிற்று. -
இவ்வுடன்படிக்கையின் முதற் பலன் இரசிய யப்பானியப் போராகும்.
இரசிய-யப்பானியப் போர் (1904) :
ஆங்கில-யப்பானிய உடன்படிக்கை முற்றுப் பெற்றதனல் தனக்கு ஏற்படக்கூடிய அபாயத்தை உணர்ந்த இரசியா, தனது துருப்புக்களை மஞ்சூரியாவிலிருந்து திருப்பி யழைக்க ஒப்புக்கொண்டது. இரசியர், தாம் திருப்பி யழைத்த துருப்புக்களைக் கொறியாவின் எல்லைகளில் ஒன்று திரட்டியமை, யப்பானுக்குப் பேரச்சத்தை உண்டாக்கியது. கொறியா வினதும், சீனுவினதும் உரிமைகளை மதித்து நடக்க வேண்டுமென்று யப்பான் விடுத்த வேண்டுகோளை இரசியா ஏற்க மறுக்கவே, 1904 ஆம் ஆண்டு மாசி மாதம் யப்பான், யுத்தப் பிரகடனம் செய்தது.
ஓர் ஆசிய அரசு, ஐரோப்பிய வல்லரசொன்றின் மீது போர் தொடுத்தது இதுவே முதல் தரமாகும். நிலப்பரப்பிலும் மூலப் பொருள் வசதியிலும் இரசியா யப்பானைவிடப் பன்மடங்கு பலம் வாய்ந்தது. ஆனுல் பூரண ஒழுங்கினலும் தனது வீரர்களின் அளப் பரிய வீரத்தினலும், யப்பான் தனது எதிரியை மண் கெளவச் செய்தது.
மூண்ட போர் தரையிலும் கடலிலும் நடந்தேறியது. யுத்த ஆரம்பத்திலேயே யப்பானிய கடற் தளபதி தோகோ, இரசியாவின் கடற்படையைப் போட் ஆத்தர் துறைமுகத்தில் செயற்படாது முற்றுகையிட்டார்; யப்பான் தனது படைகளையும் தளபாடங்களையும் யுத்த நிலையத்துக்குக் கொண்டு செல்ல வசதி பிறந்தது. பத்து மாத முற்றுகையின் பின் போட் ஆத்தர் சரணடைந்தது. அதனுடன் யப்

தூரகிழக்கில் ஐரோப்பியர் 307
பானிய துருப்புக்கள் மஞ்சூரியாவின் தலைநகரான முக்டனே (Mukden) நோக்கி முன்னேறின. அங்கு தான் தரை யுத்தத்தின் மிக முக்கிய மான போர் நடைபெற்றது ; அதில் இரசியர் தோல்வியடைந்து பின் வாங்கினர். இறுதிச் செயலாக இரசியா தனது போல்த்திக் குக் கடற்படையை தூர கிழக்குக்கு அனுப்பியது ; 1905 ஆம் ஆண்டு மே மாதம், அது.சீனக் கடலுக்குள் பிரவேசித்து, விளடிவத்தொக்கை நோக்கிப் புறப்பட்ட வேளையில் யப்பானுக்கும் கொறியாவுக்கு மிடை யிலிருந்த நீரணையில் தோகோ அதை மறித்து, திரபல்காரில் நெல்சன் ஈட் டிய வெற்றியைப் போன்ற ஒரு மகத்தான வெற்றியைப் பெற்ருர். இர சியக் கப்பல்களில், மூன்றில் இரண்டு பகுதி மூழ்கின; ஆறு கைப்பற்றப் பட்டன : நான்கு மாத்திரம் விளடிவத்தொக்கை யடைந்தன; ஏனையவை சிதறடிக்கப்பட்டு நடுநிலை நாடுகளின் துறைமுகங்களில் தஞ்சம் புகுந்தன. இவ்வாறு போல்த்திக்குக் கடற்படை சின்னபின்ன மாக்கப் பட்டதுடன் யுத்தம் முடிவெய்தியது.
சமாதான ஏற்பாட்டில்,இரசியா போட்ஆத்தர் உட்பட்ட இலயாட் டுங் தீபகற்பத்தை யப்பானுக்குக் கொடுக்கவும், 1875 இல், தான் இணைத்த சக்கலினின் தென் அரைவாசியைத் திருப்பிக் கொடுக்கவும் மஞ்சூரியாவை விட்டு வெளியேறவும், கொறியாவில் யப்பானிய
செல்வாக்கை அனுமதிக்கவும் ஒப்புக்கொண்டது.
போரின் பயன்கள் :
இரசிய-யப்பானியப் போர் இரசியாவிலும், யப்பானிலும், சீனவிலும், ஐரோப்பாவிலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. இப்போரின் விளைவாக, இரசியா தூர கிழக்கில் தன் ஆக்கிரமிப்புத் திட்டங்களை நிறுத்தி, தன் கவனத்தை மீண்டும் போல்கன் பிரதேசத் திலும் கிழக்கு ஐரோப்பிய பிரச்சினைகளிலும் திருப்பியது. இரசியா வினுள் நீண்ட காலம் குமுறிக்கொண்டிருந்த அதிருப்தி எரிமலைபோல் வெடித்து உண்ணுட்டில் புரட்சி உண்டானது.
இரசிய்ாவை அடிபணியச் செய்த யப்பான், தூர கிழக்கில் இணை யற்ற உயர்வைப் பெற்றது ; சீன மட்டில் விசேட பதத்தையும் துரச கிழக்கில் முதன்மையையும் யப்பான் சுவீகரித்துக் கொண்டது. இக்காலம் முதல் யப்பான் ஏகாதிபத்திய வேட்கையில் நாட்டம் கொண்டு, தன் எண்ணங்கள் யாவற்றையும் எதிர்ப்பின்றி பூர்த்தி செய் தது. கொறியாவிலிருந்து இரசியாவை அகற்றிய யப்பான், அந்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு 1910 இல் அதைத் தனதாக்கியது.

Page 171
308 புது உலக சரித்திரம்
சீனுவில் இந்த யுத்தம், மக்களைத் துயிலிலிருந்து தட்டியெழுப் பிற்று. பத்து ஆண்டுகட்கு முன் சீன -யப்பானியப் போர் பாக்சர் கலகத்துக்கு வழிகாட்டியது போன்று, இரசிய-யப்பானிய யுத்தம் 1911 ஆம் ஆண்டு சீனப் புரட்சிக்கு வழி வகுத்தது.
சீனப் புரட்சி :
யப்பானியரின் மின்னல் வேக முன்னேற்றம் சீன மக்களுக்கு ஓர் உன்னத படிப்பினையாக அமைந்தது. யுத்தத்தையடுத்த ஆண்டு களில் சீனவில் தேச உணர்ச்சி ஒரு புது உச்சத்தைத் தொட்டது. சீனர் தாமும் யப்பானியரைப் போன்று முன்னேற்றப் பாதையில் துரிதமாக முன்னேற ஆசைப்பட்டனர். 1905 இல் சுன் யாட் சென் (Sun-yat Sen) என்ற கிறித்தவ வைத்தியர் அமைத்த சீனப் புரட்சிச் சங்கம், மஞ்சு அரசாங்கத்தை அழிக்கவும், குடியரசை ஏற்படுத்த வும் நோக்கங் கொண்டது. இவர்களுடைய புரட்சிவாத பிரசாரத் தைக் கண்ட சீன அரசாங்கம் 1910 இல், ஒரு தேச மன்றத்தைக் கூட் டிப் பல சீர்திருத்தங்களைப் பிரகடனம் செய்தது. பாராளுமன்றத்தைக் கொண்ட யாப்புறு முடியாட்சி முறையை மஞ்சு அரசாங்கம் வாக் குப் பண்ணியது. ஆனல் சுன்யாட்சென்னின் ஆதரவாளர்கள் மஞ் சுச் சக்கரவர்த்தியை வேரோடு ஒழிக்க வேண்டுமென்ற திடமான உறுதி பூண்டிருந்தனர். 1911 ஆம் ஆண்டு ஒற்ருே பர் 10 ஆம் நாள் புரட்சி ஏற்படலாயிற்று. புரட்சி வாதிகள், நான்கிங்கைக்கு கைப்பற்றி அதைக் குடியரசின் தற்காலிக நகராக அமைத்தனர். அவர்கள் 1912 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் நாள், மஞ்சு வமிசத் தினரின் குடியாட்சியை அகற்றிக் குடியரசைப் பிரகடனம் செய்து, டாக்டர் சுன்யாட்சென்னை குடியரசின் முதல் குடிப்பதியாகத் தெரிந் தெடுத்தனர். அடுத்த ஆண்டு, தன்னிலும் பார்க்க யுவான்-சி-கை (Yuan-shi-khai) என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் குடியரசு ஒற்றுமை அதி சீக்கிரத்தில் ஏற்படுமென எண்ணித் தன் பதவியை இவ்விரும்பு மனிதனின் பேரில் சுன்யாட்சென் துறந்தார். ஆனல் யுவான் குடியரசின் இலட்சியங்களுக்கு மாறக, பாராளுமன்ற முறை யைப் புறக்கணித்து, ஆட்சியைத் தன் சுயநலத்துக்காகப் பயன்படுத்த முற்பட்டதைக் கண்டு, சுன்யாட்சென் 1911 இல் நிறுவிய குமிந் தாங்கு (Kuomintang) என்ற தேசக் கட்சி, 1913 இல் புரட்சி செய் தது. யுவான் புரட்சியை அடக்கி, தானே அரசனகத் திட்டமிட் டான் ; ஆனல் நாடெங்கும் எதிர்ப்புக்களும், கலகங்களும் புரட்சி களும் தோற்றின. நிலைமை மோசமாகிக் கொண்டு வரும் வேளையில் அதிட்ட வசமாக 1916 இல் யுவான் இறந்தார். குடியரசுப் பற் றுடைய உதவித் தலைவர் இலியுவான் உங் (Li-yuan-hung) குடிப் பதியானர்.

தூரகிழக்கில் ஐரோப்பியர் 309
குடியரசுக் கட்சியின் நோக்கங்களைச் சுன்யாட்சென் தன் மூன்று திட்டங்களில் வரையறுத்தார் ; அவையாவன : "மக்களால் மக்களுக் காக அரசாங்கம் நடைபெற வேண்டும் : சீனு அந்நியரின் ஆதிக் கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் ; சீன மக்கள் எல்லோருக் கும் போதுமான வாழ்க்கை வசதி வேண்டும்.’ இவ்வாறு சுன் யாட் GରଥF ଶୈr வரையறுத்த நாட்டின வாதம், சனநாயகம், சமூகவுடைமை வாதம் என்ற மூன்று தத்துவங்களைக் கட்சி தன் கொள்கைகளாக ஏற்றுக் கொண்டது.
புரட்சி ஏற்பட்ட நான்கு ஆண்டுகளுக்குள் முதலாவது உலகப் போர் மூண்டது.
Α 22

Page 172
30 புது உலக சரித்திரம்
அதிகாரம் 19
அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை (1856-1914)
'ஐரோப்பிய நோயாளி” யின் மறைவும், அம்மறைவின் பயனக ஏற்படும் வெற்றிடத்தை எவ்வாறு நிரப்புவது என்பதுமே கிழக்கு ஐரோப்பிய பிரச்சினையின் இரு முக்கிய கூறுகளாகும். இங்கிலந்தும் ஐரோப்பாவும், ஐரோப்பிய துருக்கியின் அந்திய காலம் நெருங்கி விட்டதெனும் உண்மையை ஏற்க அறவே மறுத்து, துருக்கியை, அதன் பகைவருக்கெதிராகப் பலப்படுத்த அரும்பாடுபட்டன. பாமச னின் நல்லெண்ணத் திட்டங்கள், ஐரோப்பிய கூட்டாட்சியின் பாது காப்பு, பிரான்சினதும் இங்கிலந்தினதும் இராணுவ உதவி--இவை யாவும் பயனற்ற செயல்களாகவே முடிந்தன. ஐரோப்பிய அரசுகள், கிறைமியன் போரின் முடிவில், இரு நூற்றண்டுகளில் இரசியா, போர் களினுலும் சூழியலினலும் பெற்றிருந்த இலாபங்களனைத்தையும் நிரா கரித்து, துருக்கி ஒரு புதி வாழ்வை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஓர் அரிய சந்தர்ப்பத்தை அளித்தன. “கழுதைக்கு உபதேசம் காதில் ஒதினலும் அழுகைக் குரலல்லாமல் அங்கொன்றுமில்லை" என்றவாறு துருக்கி, வல்லரசுகள் பெற்றுத் தந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடி யாமற் போயிற்று ; அது தாராளக் கொள்கைகளைப் பின்பற்றி கிறித்தவ நாடுகளின் நல்லெண்ணத்தைப் பெற முயற்சிக்க வேண்டு மென வல்லரசுகள் தூண்டியும் ஒரு பயனும் விளையவில்லை. மேலும் இருபது ஆண்டுகளுக்குப் பின், பேளின் மாநாட்டில் இதே விதமான ஒரு வாய்ப்பை மீண்டும் துருக்கிக்கு அளித்தும் அதனலும் அது நன் மையடைய முடியாமற் போயிற்று. துருக்கியை எவ்வகையிலும் பாது காத்தேயாக வேண்டுமென எண்ணங் கொண்ட ஐரோப்பிய அரசு களின் ஏற்பாடுகள் யாவும் இராசதந்திரத் திறமையின்மையையும் தூரப் பார்வையின்மையையுமே பிரதிபலித்தன. அவை சரித்திரத் தின் இயற்கைப் போக்கைத் தடைசெய்து, அணை கட்ட முயற்சித்த மையினல், அவர்களது நடவடிக்கைகள் யாவும் பயனற்ற தற்காலிக மான செயல்களாகவே முடிந்தன. அவர்கள் செய்த முடிபுகளுக்கு நேர் விரோதமான சம்பவங்களே நடந்தேறியமையினல், விருப்ப மின்றி தமது சம்மதத்தைக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் பன் முறை உண்டாயிற்று. ஈற்றில், ஐரோப்பாவில் துருக்கிக்கு இடமில்லை என்பதை ஏற்க மறுத்த இங்கிலந்தும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் அந்நூற்றண்டின் முடிபில், அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட் டாய நிலைக்குள்ளாயின.

அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை 3. Η
1. பரிசு மாநாடு முதல் பேளின் மாநாடு வரை (1856-1878)
1856 இல் துருக்கிய பேரரசு :
1856 இல் துருக்கிய சாம்ராச்சியம் இன்னும் அழியாத நிலையில் டனியூப் நதி வரையும் வியாபித்துக் கிடந்தது. அதனுள், மொன்றி நெகிரோவும், கிறிசும் ஏற்கனவே சுதந்திரம் பெற்ற இரு நாடுகள் : சேபியா பெயரளவில் துருக்கியின் ஆட்சியின் கீழ் இருந்த பொழுதும், உண்மை நடைமுறையில் சுதந்திர நாடாகவே திகழ்ந்தது. இம் மூவரசுகள் நீங்கலாக, மிகுதி நிலப்பரப்பின் மீது பிறைக் கொடி இறுமாப்புடன் பறந்தது. பரிசு உடன்படிக்கையில் மொல்தேவியா, உவலேசியா என்ற இரு மாகாணங்களில், இரசியப் பாதுகாப்பு நிராக ரிக்கப்பட்டு, துருக்கிய அதிகாரம் மீண்டும் நிலை நாட்டப்பட்டு நின்றது.
1914 இல், துருக்கி தன் தலை நகரையும், திறேகூ (Thrace) என்ற மிகச்சிறிய நிலப்பரப்பையும் மாத்திரமே தன் பழைய காலத்து ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் இறுதி எச்சங்களாகக் கொண்டு நின்றது. 1856 க்கும் 1914 க்கும் இடைப்பட்ட துருக்கிய வரலாறு நான்கு பிரதான பிரச்சினைகளை உள்ளடக்கியது.
முதலாவது, 19 ஆம் நூற்ருண்டின் நாட்டினவாதம் போல்கன் தீபகற்பத்தின் எல்லைகளை வந்தடைந்தபொழுது, இப் பிராந்தியத்து மக்கள் துருக்கியின் கொடுங்கோல் ஆட்சியை அழித்து, தம் சுதந்தி ரத்தை நிலை நாட்டி, அதற்கு ஐரோப்பிய அரசுகளின் அங்கீகாரத் தைப் பெற வேண்டுமென ஆசை கொண்டனர்.
இரண்டாவது, ஒவ்வொரு நாடும் தன் கருமங்களை ஒழுங்காக நிருவகித்து, உண்ணுட்டு அரசியல், பொருளாதார, நிதிப் பிரச்சினை களைச் சீர்ப்படுத்தும் முயற்சிகளில் முனைந்தது.
மூன்ருவது, புதிதாகச் சுதந்திரம் பெற்ற கிறித்தவ நாடுகள் தம் தேச எல்லைகளைத் துருக்கியின் அல்லது அயல் நாடுகளின் செலவில் படரச் செய்ய பேராசை கொண்டன.
இறுதியாக, ஐரோப்பிய வல்லரசுகள் ஒவ்வொன்றும் போல்கன் பிரதேசம் மட்டில் தனித்தனி ஆசைகளைக் கொண்டிருந்தது. அவை துருக்கியின் அல்லது புது நாடுகளின் பெலவீனத்தைப் பயன்படுத்தி தம் திட்டங்களை நிறைவேற்ற முயற்சித்தன. குறிப்பாக இரசியா, ஒசுத்திரியா, செர்மனி இப்பிராந்தியத்தில் விசேட அக்கறை கொண்ட நாடுகளாம்.

Page 173
312 புது உலக சரித்திரம்
ஐக்கிய உறுமேனியாவின் தோற்றம் :
கிறைமியன் போருக்குப்பின் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட முதற் குழப்பம் மொல்தேவிய, உவலேசிய மாகாணங்களிலிருந்தே எழுந்தது. இவ்விரு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே இனத்தி னர் ; ஒரே மொழியைப் பேசியவர்கள் ; உறுாமேனியர் என்ற பொதுப் பெயரினல் தம்மை அழைத்துக் கொண்டவர்கள். பரிசு அமைதிப் பொருத்தனையில் அவர்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப் படுமென வாக்குப்பண்ணப்பட்டிருந்தது. அதில் நம்பிக்கை வைத்த இரு மாகாண வாசிகளும், தம் எதிர்காலத்தைத் தாமே நிர்ணயிக் 5 வும், துருக்கியிடமிருந்து விடுதலை பெற்று, ஒன்றேடொன்றிணைந்து ஐக்கியப்பட வேண்டு மென்றும் எண்ணங் கொண்டனர். பிரான்சை யும் இரசியாவையும் தவிர ஏனைய வல்லரசுகள் இவ் வாசைகளை எதிர்த்தன. இரு மாகாணங்களும் ஐக்கியப்படின் தீபகற்பத்தில் சுதந்திர இயக்கம் வலுப்பெறுமென்றுணர்ந்த துருக்கி, இத்திட்டத்தை வன்மையாகக் கண்டித்தது ; தன் எல்லைகட்குள் நாட்டினவாத இயக்கங்களைப்பற்றி அச்சம் கொண்ட ஒசுத்திரியாவும் அதனை ஆதரிக்க மறுத்தது : துருக்கியைப் பாதுகாத்து அதற்குப் புத்துயிர் அளிக்க வேண்டுமென்ற நோக்குடன் செயலாற்றிய இங்கிலந்தும் இரு மாகாணங்களின் ஐக்கிய முயற்சிகளைத் தடை செய்ய நோக்கங் கொண்டது.
இந் நிலையில் இரு மாகாணங்களிலும் ஒரு குடியொப்பம் நடாத் தப்பட்ட பொழுது, அது துருக்கிக்குச் சாதகமாகவே முடிந்தது. ஆனல் தாராளவாதியான மூன்ரும் நெப்போலியன், குடியொப்பம் நேர்மையற்ற முறையில் நடாத்தப்பட்ட தெனக் குறை கூறி, புதுக் குடியொப்பம் நடைபெற வேண்டுமென பல மாக வற்புறுத்தினர். பிரான்சின் அணுவசியமான தலையீட்டை இங்கிலந்து வன்மையாக கண் டிக்கவே, இன்னுமோர் ஐரோப்பிய யுத்தம் ஏற்படுமோ என்ற அச் சம் எழுந்தது ; ஆனல் இரு நாடுகளும் ஒரு புதுப் போரை இவ் வளவு சீக்கிரம் ஆசிக்கவில்லை. கிழக்கு ஐரோப்பாவில் இரசியாவின் முன்னேற்றத்தைத் தடை செய்யும் தலையான பிரச்சினையைத் தீர்ப் பதற்கு மொல்தேவிய, உவலேசிய மாகாணங்களின் ஐக்கியமே மிகச் சிறந்த வழியென்றும், வலிமையற்ற இரு நா டு க ள் இருப்பதிலும் மேலாக ஒரு பலமான அரசு தான் இரசியாவுக் கெதிராக ஒரு வன்மை யான அணைக்கட்டாக அமையலா மென்றும் நெப்போலியன் இங் கிலந்துக்கும் ஒசுத்திரியாவுக்கும் சுட்டிக் காட்டினர்.
இதற்கிடையில் நடந்தேறிய புதுக் குடியொப்பம் இரு மாகா ணங்களின் ஐக்கியத்துக்கு வழி காட்டிற்று ; ஆன ல் வல்லரசுகள் அம்முடிபை அங்கீகரிக்க ஆயத்தமான நிலையிலில்லை. 1858 மே முதல்

அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை 313
ஆகத்து ஈருக, வல்லரசுகள் பிரச்சினையைப் பரிசீலனை செய்து, இரு மாகாணங்களும் தனி நாடுகளாக இயங்க வேண்டு மென்றும், ஒவ் வொன்றும் தனித் தனி பாராளுமன்றத்தையும் இளவரசனையும் பெற் றிருக்க வேண்டு மென்றும் தீர்ப்புக் கூறின. இம் முடிபைக் கண் டு ஏமாற்ற மடைந்த இரு மாகாணங்கள், அவற்றை மீறி தம் ஆசை களை நிறைவேற்றத் திட்டமிட்டன. 1859 இல் புக்கற சு, யசி என்ற இரு தலை நகரங்களிலும் தேச மன்றங்கள் தத்தம் இளவரசர்களைத் தெரிவு செய்ய ஒன்று கூடி, இரு மன்றங்களும் தனித்தனியாக அலக் F grib i FA. FIT (Alexander Couza) GT Gör smp SA(B5GAJ GOUrG3u u øJ 35D6aT தாகத் தெரிவு செய்தன. வல்லரசுகளின் தீர்ப்புக்கு மாருக நடந் தேறிய இச் செயல், ஐரோப்பிய தலை நகரங்களில் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியது. ஆனல் முற்றுப் பெற்ற சம்பவத்தை அங்கீகரிக்கவே அரசுகள் தீர்மானித்தன. 1861 திசம்பர் 23 இல் இரு மாகாணங் களினதும் ஐக்கியம் பிரகடனம் செய்யப்பட்டது ; புது அரசு உறு மேனியா என்ற பெயரையும் புக்கறசைத் தலைநகரமாகவும் கொண்
-ஆதி:
ஐக்கிய உறுாமேனியா உதயமாகிய ஆண்டிலிருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு துருக்கிய சாம்ராச்சியத்தில் வெளியரங்கமான குழப்பங்கள் ஒன்றுமேற்படவில்லை : 1870 இல் எழுந்த நீர&ணப் பிரச்சினை (Straits question) சீக்கிரம் தீர்க்கப்பட்டது. இக்காலத்தில் துருக்கி, 1856 ஆம் ஆண்டு தன் கிறித்தவ பிரசைகளை நல்லாட்சி செய்வதாகக் கொடுத்த வாக்குறுதி வெறுமையில் மறைந்தது. அதன் அழிவுக்கான சக்திகள் வேகமாக ஒன்று கூடின. 1861 இல் பட்டத் தையடைந்த சுலுதான் அப்துல் அசீசு தன் அதிகாரிகளை ஒழுங் காக நிர்வகிக்கும் ஆற்றல் தன்னும் அற்றவர் ; தீர்மானங்களைப் பின் போட்டும், நாட்டுப் பிரச்சினைகளுக்கு நிலையான விடைகளைக் காணு மலும், துருக்கிய சாம்ராச்சியத்தின் அழிவைத் தடுக்க முயற்சி செய்தும் வந்தார். துருக்கி, ஒரு மதச் சார்புடைய அரசாங்கததைக் கொண் டிருந்தமையினல், மத ஆசாரங்களுடன் பிணைக்கப்பட்ட சட்டங் களில் மாற்றங்களை ஏற்படுத்துவது இலகுவானதன்று எனும் தன் மையை நிரூபித்துக் காட்டிற்று. வல்லர்சுகளின் வற்புறுத்தலினல் அப்துல் அசீசு போக்குவரத்து முறைகளை விருத்தி செய்தும், கல்விச் சாலைகளை நிறுவியும் சில மாற்றங்களைப் புகுத்தினர் ; ஆனல் இவை பயனளிக்கவில்லை. நீதி முறை, சொத்துரிமை என்பவை உண்ணுட்டு அதிகாரிகளின் தயவிலேயே தங்கி நின்றன.
இக் கொடூரங்களையும் அநீதிகளையும் பொறுமையுடன் சகிக்கும் காலம் கழிந்து விட்டதென்பதை உணர்த்த போல்கன் பிராந்தி யத்து அடிமைக் கிறித்தவ இனங்கள் துடியாய்த் துடித்தனர்.

Page 174
4 புது உலக சரித்திரம்
மொன்றிநெகிரோ, சேவிய, கிரேக்க மக்களைப் போன்று தானும் விடுதலை பெற்றுச் சுதந்திரமாக வாழும் காலம் எப்பொழுது உதய மாகுமோ என ஏங்கி நின்றது.
9 fla)-f] 00II oiltII (9 L8,3ú) (Pan-Slavism) :
போல்கன் தீபகற்பத்தின் அடிமை இனங்கள் துருக்கியின் கொடுங் கோலாட்சியை மேலும் பொறுமையுடன் சகிக்க ஆயத்தமான நிலையி வில்லை. எங்கும் அமைதியீனம், பொறுமையின்மை, நாட்டினக் கருத் துக்கள் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தன. இரசிய அதிகாரிகள் தம் மதத்தையும் தம் இனத்தையும் சேர்ந்தவர்கள் மத்தியில் ஓயாத பிரசாரம் நடாத்தித் தேச உணர்வை வளர்த்து வந்தனர். 1876 ஆம் ஆண்டு ஒரு மாபெரும் அகில சிலாவிய மாநாடு, விஞ்ஞானக் கூட் டம் என்ற போர்வையின் கீழ், மொசுக்கோவில் கூடியது. அங்கு ஒரு மத்திய அகில, சிலாவிய நிர்வாக சபை அமைக்கப் பெற்றது. நூல் கள், வெளியீடுகள் பத்திரிகைகள் போல்கன் நாடுகளில் பரவின ; சிலாவிய இளைஞர்கள் இரசிய பல்கலைக் கழகங்களில் குவிந்தனர். தீபகற்பத்தில் கடமையாற்றிய ஒவ்வொரு தூதமைச்சரும் இவ்வியக் கத்தை ஆதரித்து வளர்த்தனர். சேவியா, பொசினியா, மொன்றி நெகிரோ, பல்கேரிய நாடுகள் தேன் கூடுகள் போன்று இரகசிய சங் கங்களால் நிறைந்தன.
1875, 1876 ஆம் ஆண்டுக் கிளர்ச்சிகள் :
கிழக்கு ஐரோப்பிய பிரச்சினையின் அடுத்த இயக்கம் பொசுனியா, ஏசகொவீனு பிரதேசங்களிலிருந்தே தோற்றியது. சடுதியாக நாட் டின் உள்ளே எரிந்த தீயின் வெப்பத்தினுல் துருக்கிய சாம்ராச்சியத் தின் நாலா பக்கங்களிலும் பிளவுகள் தோன்றின. சமூக, பொரு ளாதார, நாட்டின வாதம் எனும் காரணங்கள் யாவும் ஒன்று சேர்ந்து புரட்சி இயக்கத்தை ஆரம்பித்தன. மானிய முறையின் இன்னல் களைத் தாங்க மாட்டாது தவித்த விவசாயிகள் துருக்கிய, அதிகாரிகளுக் கும் நிலக்கிழாருக்கும் தாம் சேவை செய்யக் கடமைப் பட்டதை ஆட்சேபித்தனர்.
1875 யூலை மாதம் ஏசகொவினு விவசாயிகள் வரிகளை இறுக்க வும் வழமையான சேவைகளைச் செய்யவும் மறுத்த பொழுது ஒரு துருக் கிய படை அவர்களை அடக்கும் நோக்குடன் அனுப்பப்பட்டு, அவர் கள் கையில் தோல்வியும் கண்டது. சேபியா, மொன்றி நெகிரோ, தல் மேசிய பிரதேசத்து அனுதாபிகள் உடனே ஏசகொவீனுவின் உத விக்கு வந்தனர். கலகம் போல்கன் தீபகற்பத்தில் காட்டுத் தீ போலப் பரவியது; பொசுனியா, சேபியா, மொன்றி நெகிரோ இராச்

அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை 35
சியங்கள் யாவும் துருக்கியருக்கு எதிராகப் போரில் குதித்தன; நாளடை வில் அவற்றுடன் பல்கேரியாவும் ஒன்று சேர்ந்தது. பல்கேரியர், துருக்கிய அதிகாரிகளின் சட்ட திட்டங்களுக்கு அமைய மறுத்து , ஏறக்குறையை நூறு அதிகாரிகளைப் படுகொலை செய்தனர்.
தனது இரரச்சியங்களில் அமைச்சலின்மை வளர்ந்து வருவதைக் கண்ட துருக்கி, கோபமடைந்து, பழி வாங்கும் படலத்தில் இறங்கி யது. ஒரு துருக்கிய சைனியம் பல்கேரிய கிராமங்களின் மீது கட் டவிழ்க்கப்பட்டது ; அவை புரிந்த அட்டூழியங்களும் கொடுமைகளும் விவரிக்க முடியாதவை. கொலை செய்யப்பட்ட ப ல் கே ரிய கிறித் தவர்களின் எண்ணிக்கையை 12,000 க்கும் 30,000 க்கும் இடைப் பட்டதாகப் பலர் பலவாறு கணக்கிட்டுள்ளனர். இக் கொடுமைகளைக் கேள்விப்பட்டு கிறித்தவ உலகம் கோபாவேசம் கொண்டது. கிளாற் சன் ஒய்வு வாழ்விலிருந்து மீண்டும் பிரித்தானிய மக்களின் உணர்ச் சியைத் தட்டி யெழுப்பி துருக்கியின் அட்டூழியங்களை வன்மையாகக் கண்டித்ததுடன் *துருக்கிய அதிகாரிகள் தம் மூட்டை முடிச்சுக்க ளுடன் தாம் கொடுமை செய்த பிரதேசத்திலிருந்து உடனே வெளி யேற வேண்டும்’ என்ற குரலை எழுப்பினர். ஆணுல் கிளாற்சன் அப்பொழுது முதலமைச்சர் அல்லர்; பிரதமராக இருந்த யூதர் திசிறேலி வேறு கொள்கைகளின் அடிப்படையில இயங்கினர். இங்கிலந்தின் ஆசிய, எகித்திய நலன்களைப் பாதிக்க வல்லது துருக்கியன்று, இரசியா தான் என்று உணர்ந்தவர். தனது இந்திய சக்கராதிபத்தியத்தின் எதிரி இரசியா என்று அனுபவ ரீதியாக திசிறேலி கண்டிருந்தார்.
இரசிய-துருக்கியப் போர் :
சிலாவ் இன மக்களினதும் கிறித்தவ வைதீகத் திருச்சபையைச் சேர்ந்த மக்களினதும் பாதுகாவலனுய்த் தம்மைக் கருதிய சார், துருக் கியை எச்சரிக்கத் தம்முடன் பிரித்தன், செர்மனி, ஒசுத்திரிய அரசுகளை ஒன்று சேருமாறு கேட்டார். திசிரேலி இக்கோரிக்கையை மறுக்கவே 1877 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள், இரசியா, துருக்கி மீது யுத் தப் பிரகடனம் செய்தது. ஆனி மாதம், இரசிய துருப்புக்கள் உறுf மேனியாவின் வழியாக டனியூப் நதியைக் கடந்து, துருக்கிய தலை நகரத்தை நோக்கி முன்னேறின மொன்றிநெகிரோவும், சேபியா வும் திரும்பவும் துருக்கிக் கெதிராக போர் தொடுத்தன. பிளவினு (Pewna) எனுமிடத்தில் இரசியரின் முன்னேற்றம் தடைப்பட்டது. ஐந்து மாத காலம் இரசியரும் உறுாமேனியரும் ஒன்று சேர்ந்து இந் நகரத்தை முற்றுகையிட்டு திசம்பரில் அதைக் கைப்பற்றினர். கொன்சுதாந்திநோபிகள நோக்கிப் படையெடுப்பு திரும்பவும் ஆரம் பிக்கப்பட்டது. 1878 சனவரி 20 ஆம் நாள், துருக்கிய தலை நகரத்தி

Page 175
36 புது உலக சரித்திரம்
லிருந்து 120 மைல் தூரத்திலிருந்த அகிறியநோபிள் நகரத்துக்குள் இரசியர் பிரவேசித்தனர். மார்ச் மாதம் வெற்றி பெற்ற இரசியர் சான் சித்தெப்பாணுே ஒப்பந்தத்தைத் துருக்கியுடன் செய்தனர்.
& IT Gir d505 UT (SGO) gluigi (Treaty of San Stefano):
இவ்வொப்பந்தத்தின்படி மெர்ன்றிநெகிரோ, சேபியா தனிச் சுதந்திர இராச்சியங்களாக அங்கீகரிக்கப்பட்டதுடன் ஒவ்வொன்றின் எல்லைகளைப் பெருக்குவதற்கும் திட்டம் வகுக்கப்பட்டது. பொசினியா, ஏசிகொவினு என்ற இராச்சியங்களில் இரசிய, ஒசுத்திரிய மேற்பார் வையின் கீழ் உடனடியாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் வழிகள் வகுக்கப்பட்டன. ஆமீனியருக்கும் சீர்திருத்தங்கள் வாக்குப் பண் ணப் பட்டது. ஆசியாவில் பாட்டம், கார்சு (Khairs) என்ற நிலப் பரப்புக்களையும், ஐரோப்பாவில் 1856 இல் தானிழந்த பெசரேபியா, டொபுறுசாவின் ஒரு பகுதியையும் இரசியா தனதாக்கியது. இதனல் உறுfமேனியா இழந்த பெசரேபியா நிலப்பரப்புக்குப் பிற துருக்கிய நிலங்களைக் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உறு மேனியாவின் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட்டது. இவை யாவற்றிலும் முக்கியம் வாய்ந்தது, புது பல்கேரிய சிருட்டிப்பாகும். இப்புது இராச்சியம் பெயரளவில் துருக்கியின் மேற்பார்வையின் கீழ், சுயநிர் ணய உரிமையுடனும் ஒரு கிறித்தவ அரசாங்கத்துடனும் இயங்கு மென விதிக்கப் பட்டது ; இதன் எல்லைகள் டனியூப் நதியிலிருந்து ஈசியன் கடல் வரையும், கருங்கடலிலிருந்து மசிடோனியா வரையும் பரவிக் கிடக்கும் ஒரு மிகப்பெரிய தேசமாக அமையப் பெற்றது. ஐரோப்பிய துருக்கி படத்திலிருந்து ஏறக்குறைய நீக்கப்பட்டது.
இவ்வேற்பாடுகள் இரசியாவுக்கு ஒரு மகத்தான வெற்றியாக அமைந்தன. பரிசு உடன்படிக்கையின் முறிகள் அழிந்தன திரும்ப வும் இரசியாவின் செல்வாக்கு போல்கன் குடாநாட்டில் ஒரு புது உச்சத்தை அடைவதற்கு நிலைமை ஆயத்தமாகியது. ஆனல் ஐரோப் பிய நாடுகள், விசேடமாக இங்கிலந்து, இரசியாவின் வெற்றிகளை நிர்மூலமாக்கத் திட்டமிட்டுக் கருமமாற்றின.
இரசியா, பல்கேரியா என்ற இரு நாடுகளைத் தவிர சான் சித்தா பானே ஒப்பந்தத்துடன் வேறெந்த நாடும் திருப்திப்பட வில்லை. அமைதிப் பேச்சு வார்த்தைகளில் இடம் பெருத உறுர மேனியா, தான் புறக்கணிக்கப் பட்டதையும் இரசியாவின் நன்றி கெட்டதனத் தையும் கண்டு மனம் நொந்தது. பல்கேரியாவின் எல்லைகள் படர்ச்சி யடைந்ததை யிட்டு சேபியா, மொன்றிநெகிரோ, கிறிசு எனும் மூன்று நாடுகளும் பொருமை கொண்டன. ஒசுத்திரியா தன் செல் வாக்கு இப்பிராந்தியத்தில் குறைவதை ஆட்சேபிக்க ஆயத்தம் செய்

அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை 317
தது. போல்கன் தீபகற்பத்தில் இரசியாவின் படர்ச்சியில் அதி அக் கறை கொண்ட நாடு இங்கிலந்து. எகித்துக்கும் சுவெசுக் கால் வாய்க்கும் அபாயம் ஏற்படக் கூடியதை யூகித்து, இரசியாவின் திட் டங்களை எதிர்க்கத் தருணம் பார்த்து நின்ற இங்கிலந்து, கிழக்கு ஐரோப்பிய பிரச்சினையை சர்வதேச நிலைக்கு உயர்த்தத் திட்டமிட் டது. 1856, 1871 ஆம் ஆண்டு உடன் படிக்கைகளுக்கு மாறக இர சியாவும் துருக்கியும் செய்யும் எந்த ஒப்பந்தத்தையும் அதில் அக் கறை கொண்ட ஐரோப்பிய அரசுகள் அங்கீகரிக்க வேண்டும் என்பதே திசிறேவியின் அபிப்பிராயம். ஒசுத்திரியாவும் சான் சித்தெப்பானே உடன்படிக்கையின் சில முறிகளை நிராகரிக்க நோக்கங் கொண்டதன் பயணுக, இப்பிரச்சினையை ஆராய்வதற்கு ஒரு சர்வதேச மாநாடு கூட் டப்பட வேண்டுமென பிரேரித்தது. இரசியாவுக்கும் துருக்கிக்கும் ஏற் பட்ட உடன் படிக்கையின் முறிகள் யாவும் மாநாட்டில் தீர்க்க அலசி ஆலோசிக்கப்பட வேண்டு மென்ற அடிப்படையில் திசிறேலி, ஒசுத்திரி யாவின் பிரேரணையை ஆமோதித்தார். இரசியா சம்மதிக்கப் பின் வாங்கியது; இங்கிலந்து வற்புறுத்தியது ; ஆறு கிழமை காலம் யுத் தக் கார் மேகங்கள் ஐரோப்பாவைச் சூழ்ந்தன ; ஏப்ரல் 17 ஆம் நாள், திசிறேலி தான் 17,000 இந்திய துருப்புக்களை மோற்றத் தீவுக்கு புறப்பட ஆயத்தம் 'செய்யக் கட்டளையிட்டுவிட்டதாக அறி வித்தார். செர்மனியினதும் ஒசுத்திரியாவினதும் நட்பைப் பற்றிச் சந் தேகம் கொண்ட இரசியா, இங்கிலந்துடன் போர் தொடுக்க ஆயத்த மாக இருக்கவில்லை. எனவே விருப்பின்றி, இரசியா, தான் இயற்றிய சான் சித்தெபானே உடன்படிக்கையின் முறிகளை ஆராய்வதற்கு ஒரு ஐரோப்பிய மாநாடு கூடுவதற்குச் சம்மதித்தது.
பேளின் மாநாடு :
ஐரோப்பாவில் நவமாகத் தோன்றிய புது அரசைக் கெளரவிக் கும் நோக்குடன் மாநாடு, பேளினில், உண்மையுள்ள தரகன் பிசு மாக்கின் தலைமையில் கூடியது.
இரசியாவின் இலாபங்களில் பெசரேபியா, பாட்டம், கார்சு, ஆமீனி யாவின் ஒரு பகுதி என்பவை பிரித்தெடுக்கப்பட்டன. உறு மேனியாவின் சுதந்திரம் துருக்கியின் அங்கீகாரத்தைப் பெற்றதுடன் அது பெசரேபியா வுக்குக் கைம்மாருக டொபும்றுாசாவைப் பெறலாயிற்று. பொசினியா, ஏசிகொ வீன என்ற பிரதேசங்கள் ஒசுத்திரியாவின் ஆணையின் கீழ் விடப்பட்டன. இங்கிலந்து சைப்பிற சு தீவைப் பெற்றது. எதிர் காலத்தில் தி யூனிசைத் தனதாக்க பிரர்ன்சு உரிமை கோரியது. ஆமீ கனியா மீதும் திரிப்போளி மீதும் உரிமை கோரி, புது இத்தாலி தன் ஐரோப்பிய பதத்தைப் பிரகடனம் செய்தது. புது செர்மனி ஒரு பிர

Page 176
3 Ι 8 புது உலக சரித்திரம்
தேசத்திலாவது ஆசை காட்டாது, இவற்றிலும் மேலான பயனுள்ள துருக்கியின் நல்லெண்ணத்துக்கு பாத்திரவாளியாயிற்று. சான் சித் தெபானே முடிபுகளின் பிரகாரம் சேபியாவும் மொன்றிநெகிரோ வும் தம் நிலப்பரப்புக்களையும் சுதந்திரத்தையும் பெறலாயின. தெசவி, எப்பறைசு, கிறீட் என்பவற்றைக் கிறிசு கேட்ட போதும் அது உடனடியாக ஒன்றையும் பெறவில்லை. புத ஒப்பந்தத்தினல் பாரதூர மாகப் பாதிக்கப்பட்ட தேசம் பல்கேரியாவாகும். சான் சித்தெபானே உடன்படிக்கையில் வரையறுக்கப்பட்ட எல்லைகளில் ஏறக் குறைய 2/3 பகுதி அதனிடமிருந்து பிரித்தெடுக்கப் பட்டது. பல்கேரியாவுக் குத் தெற்கே கிழக்கு உறு மீவியா என்ற ஒரு புது இராச்சியம் துருக்கியின் மேற் பார்வையின் கீழ், ஒரு கிறித்தவ அரசாங்கத்துடன் சிருட்டிச்கப்பட்டது. மசிடோனிய நிலங்கள் துருக்கிக்குத் திருப்பிக் கொடுபட்டன. பல்கேரியா ஈசியன் கடலிலிருந்து முழுமையாகத் துண் டிக்கப்பட்டது.
2. பேளின் மாநாடு முதல் சராசேவோ வரை (1878-1914) பேளின் உடன்படிக்கையின் பலாபலன்கள் :
பேளின் மாநாட்டில் திசிறேவி உறுதியுடன் செயலாற்றிய போதும், அம் முடிபுகளிலிருந்தே 1913, 1914 ஆம் ஆண்டு போல்கன் போர்களின் பிரதம காரணங்கள் எழுந்தன. “ஐரோப்பாவில் மீண் டும் ஒரு துருக்கி இருக்கிறது" என்று குறிப்பிட்ட திசிறேவி, ஒட்டோ மன் சாம்ராச்சியம் முற்ருக அழிந்து போகாவண்ணம் பாதுகாத்தமை யைத் தன் மகத்தான செயல்களில் ஒன்ருகக் கணித்தார். Frtøör சித்தெபானேவில் இழந்த நிலப்பரப்பில் 30,000 சதுர மைல் நிலத்தை யும் 25 இலட்சம் மக்களையும் துருக்கி பேளினில் மீட்டுக்கொண்ட போதும், தன் சாம்ராச்சியத்தினதும் சனத்தொகையினதும் ஏறக் குறைய அரைப் பகுதியை இழந்த அந்நாடு, புத்துயிர் பெறக்கூடிய நிலையிலிருக்கவில்லை. துருக்கியின் அழிவை நீடித்தும், அதன் நோயை நீண்ட காலம் அதி துன்பத்துடன் அனுபவிக்கச் செய்ததுமே திசிறேலி செய்த தொண்டாகும். மசிடோனியா துருக்கிக்கு திருப்பிக் கொடுக் கப்பட்டமை, 1912 ஆம் ஆண்டு யுத்தத்தை கொண்டு வந்தது. பல் கேரியாவின் எல்லைகள் குறைக்கப்பட்டமை 1913 ஆம் ஆண்டுப் போருக்குக் காரணமாயிற்று.
இரசியாவின் கைக்கெட்டிய வெற்றிகள் வாய்க்கெட்டாமற் போயின ; அதன் தீராத ஆசைகளுக்குப் பல இடையூறுகளும் தடை களும் விதிக்கப்பட்டன.

அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை 39
இரசியாவைக் கட்டுப்படுத்திய திசிறேலி, இன்னுமொரு வல்லர சின் ஆசைகளைக் கிளறி விட்டார். செர்மனியின் ஆதரவுடன் தீபகற்பத்தில் பிரவேசித்த ஒசுத்திரியா, தன் கண்களை ஈசியன் கடலின் மேல் எறிந்தமையிலுைம், சேபியாவின் அபிலாசைகளை நிறைவேருத படி தடை செய்யத் திட்டமிட்டதனலும் போல்கன் பிரதேசத்தில் புதுப் பிரச்சினைகள் தோற்றின. 1878 ஆம் ஆண்டு ஒசுத்திரியாவுக் கும், 1914 ஆம் ஆண்டு ஒசுத்திரியாவுக்கும், அதிலிருந்து முதலாம் உலக யுத்தத்துக்கும் ஒரு முறிவற்ற தொடர்பைக் காணக்கிடக்கிறது.
பழைய ஒட்டோமன் இராச்சியத்திலிருந்து உறு மேனியா, பல் கேரியா, மொன் றிநெகிரோ, கிறிசு, சேபியா என்ற ஐந்து சுதந்திர நாடுகள் தோற்றி நின்றன. நிதானமான வேறுபாடுகளின்றி கிழக்கு உறு மீலியா பாதி சுதந்திரத்துடன் திகழ்ந்தது ; பொசுனியா, ஏசி கொவின்னு ஒசுத்திரியாவினல் ஆட்சி செய்யப்பட்டன.
பல்கேரியா :
அடுத்த இருபது ஆண்டுகளில் எகித்திலும், ஆமீனியாவிலும் கிறீசு, கிரீட், சேபியா என்ற இடங்களிலும் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறைந்தன. ஆனல் கிழக்கு ஐரோப்பிய பிரச்சினையை அணையாத நிலையில் வைத்திருந்தது பல்கேரியா தான். பற்றன்பேக் @6TT GOur F i øy 6nci FtTigisi (Prince Alexander of Battenberg) gr6ðoT டாம் அலெக்சாந்தர் சாரின் மருமகன்; 1879 தொடக்கம் 1886 வரை பல்கேரியாவில் ஆட்சி புரிந்தார். இவர் புத்தி சாதுரியம் படைத்த ஒரு சிறந்த இராசதந்திரியாக இருந்த போதும், அவரது திட்டங்கள் பல்கேரிய பாராளுமன்றத்தினுலும், இரசியாவினலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தடை செய்யப் பட்டமையினல், அவர் 1886 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்துதார். இ  ைத த் தொடர்ந்து சக்சே-கோபேக்-கொத்தா இளவரசர் பேடினந்து (Prince Ferdinand of Saxe-Coburg-Gotha) (plg. 5 g. 1914 Gay GMT u 356ứu î6ógsstrř.
சொற்ப காலத்துக்கு பல்கேரியா, கிழக்கு உறுாமீலியாவுடன் ஐக்கியப்பட வேண்டுமென எண்ணங்கொண்டதே அதி மு க் கி ய பிரச்சினை யாயிற். பேளின் மாநாடு பல்கேரியாவினதும் கிழக்கு உறு மீலியாவினதும் மக்களின் இன ஒற்றுமையைக் கருத்திற் கொள் ளாது, அவர்களைச் செயற்கையாகப் பிரித்து வைத்தது. இப் பிரிவ னையை ஆட்சேபித்து, ஒரே இன மக்களையுடைய இரு நாடுகளும் ஐக்கியப்பட வேண்டு மென்ற உணர்ச்சி, தீவிரமாக வளர்ந்து வரலாயிற்று.
1885 செற்றம்பரில் இரு நாடுகளும் தாமே பிரச்சினையைத் தீர்க்க திட்டமிட்டுக் கருமத்தில் இறங்கின. கிழக்கு உறுாமீலியப் பிரசைகள் துருக்கிய ஆள்பதியை வெளியேற்றி, ஐக்கிய பல்கேரியாவின் அரச

Page 177
320 புது உலக சரித்திரம்
பதவியை அலெக்சாந்தருக்கு கையளித்த பொழுது, அவர் அதை
ஆட்சேபனையின்றி ஏற்றுக் கொண்டார். பல்கேரியாவின் இச் செயல்
போல்கன் பிரதேசத்தினது அரசவலுச் சமநிலைக்கு குந்தகம் விளைவிக்க
வல்லது எனக் கூறி, சேபியா, சடுதியாக பல்கேரியா மீது போர்
தொடுத்தது. இவ்வாறு மூண்ட சிறிய போரில் சேபியா திட்டவட்ட மாக தோற்கடிக்கப் பட்டதுடன், ஒர் இளம் பல்கேரியப்படை சேபியா
வுக்குள்ளும் நுழைந்தது. இச் சந்தர்ப்பத்தில் ஒசுத்திரியா போரை
நிறுத்தி, புக்காறசில் சமாதானத்தை ஏற்படுத்தி சேபியாவைக்
காப்பாற்றியது.
ஐரோப்பா வின் மனமாற்றமும் ஐக்கிய பல்கேரியாவின் உதயமும் :
இதற்கிடையில் பல்கேரிய ஐக்கியப் பிரச்சினை வல்லரசுகளின் மாநாட்டுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. பேஸ்ரின் மாநாடு காலம் முதல், ஐரோப்பிய வல்லரசுகளின் அண்மைக் கிழக்குப் பிரச் சினைக் கொள்கைகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டு, மெதுவாக வளர்ந்து வரலாயிற்று. பல்கேரியாவையும் கிழக்கு உறுர மீலியாவையும் பிரித்து  ைவ த் த வல்லரசுகள், இப்பொழுது அ  ைவ ஒற்றுமைப் படுவதை மனமார வரவேற்றன. சான் சித்தெப்பானேவில் பெரிய பல்கேரியாவை சிருட்டித்த இரசியா, ஐக்கியத்தை இப்பொழுது எதிர்த்தது. இவ்வாறு ஐரோப்பிய வல்லரசுகள் தாம் நீண்ட காலம் கடைப்பிடித்த கொள்கைகளை மாற்றியமைத்தமைக்கு போதிய காரணங்களிருந்தன. பேளினில் எதிர்பார்க்கப்பட்டதற்கு முற்றிலும் மாருக பல்கேரியா இரசியாவின் 'வாலை’ப் பிடிக்க மறுத்து, ஆச் சரியத்தக்க முறையில் சுயாதீன சுதந்திர எண்ணங் கொண்டது மாத்திரமின்றி இரசியாவுக்கு எதிரப்புக்காட்டவும் துணிந்தது. எனவே இரசியாவின் முன்னேற்றத்தைத் தடைசெய்வதையே தலையான நோக்காகக்கொண்ட இங்கிலந்தும் ஒசுத்திரியாவும் புழுவரித்த துருக்கியை நிலைநாட்ட முயற்சிப்பதிலும் பார்க்க, சுதந்திர பல்கேரி யாவை பலப்படுத்துவதனுல் தம் நோக்கங்கள் சித்தியடையும் என்ற முடிபுக்கு வந்தன. எனவே இங்கிலந்து, பல்கேரிய ஐக்கியத்தை, துருக்கி உடனே அங்கீகரிக்க வேண்டுமென்று பலமாக வற்புறுத்தியது. 1886 ஆம் ஆண்டு சுலுதான் அப்துல் அமீது ஐக்கிய பல்கேரியாவை முறைப்படி ஒரு சுதந்திர அரசாக ஏற்றுக் கொண்டார்.
ஆமீனியப் படுகொலைகள் :
1896 க்கும் 1898 க்கும் இடையில் ஆமீனியப் பிரச்சினையே கிழக்கு ஐரோப்பிய அரங்கில் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. ஐரோப் பிய கூட்டாட்சியின் பெலவீனத்தை விளக்குவதற்கு இதைவிட

அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை 32真
சிறந்த உதாரணம் வேறில்லை. 1878 ஆம் ஆண்டு, ஐரோப்பிய வல்லரசுகள் கருங்கடலுக்கும் கசுப்பியன் கடலுக்கும் இடையே பரந்து கிடந்த நிலப்பரப்பில் வசித்து வந்த ஆமீனிய மக்கள் மட்டில் விசேடி சிரத்தை காட்டினர். இம் மக்களின் நல்லாட்சிக்கான உத்தரவாதம் துருக்கியிடமிருந்து பெறப்பட்டு, பேளின் ஒப்பந்தத்தில் அம்முறியும் சேர்க்கப்பட்டது. ஐரோப்பாவின் அவதானம் இம் மக்களுக்கு நன்மை பயப்பதற்குப் பதிலாகத் தினமையையே விளைவித்தது.
அப்துல் அமீது நல்லாட்சிக்காகக் கொடுத்த உத்தரவாதம் வழமை போல வெறும் வாய்ப் பேச்சாகவே இருந்ததைக் கண்ட இங்கிலந்து, பன்முறை தன் ஆட்சேபனையைத் தெரிவித்தது. ஆனல் வல்லரசுகள் ஒன்ருே டொன்று பொருதி நின்றதையும், கூட்டாக இயங்க முடியாத நிலையில் பிளவுபட்டு நின்றதையும் கண்ட அப்துல் அமீது, தன் கிறித் தவ பிரசைகளுக்கு ஒரு மறக்கமுடியாத பாடத்தைக் கற்பிக்கத் திட்ட மிட்டான். ஆமீனியாவில் புரட்சி வாதம் ஓங்கி வளர்ந்தது ; துருக் கிய சாம்ராச்சியத்திலிருந்து இன்னுமொரு கிறித்தவ சுதந்திர நாடு தோற்றுவதற்கான சூழ்நிலை படிப்படியாக எழுந்தது : சுதந்திர இயக்கத்தை நசுக்காவிடின் ஆமீனியாவும் இன்னுமொரு பல்கேரியா போலாகும் என்ற அச்சம் சுலு தானின் மனதில் படவே 五&94 ஆம் ஆண்டு, துருக்கரின் பழிவாங்கும் திட்டம் ஆரம்பமாகியது. துருக்க இராணுவத்தினரும் காடையரும் ஆமினிய கிராமங்களில் அட் டூழியங்களும் படுகொலைகளும் புரிந்தனர் ; 1894, 1895 என்ற இரு வருடங்களில் 50,000 ஆமீனியர் துருக்கியரின் மிருகத் தனத்துக்குப் பலியாயினர்.
இரசியா தன் நோக்கை மறுபுறம் திருப்பியது ; அது பல்சேரி யாவில் போன்று ஆமினியாவிலும் ஒரு சுதந்திர இராச்சியம் எழுவ தில் அக்கறையோ சிரத்தையோ காட்டவில்லை. மேலும் இது இங்கி லந்தின் பிரச்சினையான தினல், இங்கிலந்து பல்கேரியாவில் தனக்கு இழைத்த இன்னலுக்குக் கைம்மாருக, இரசியா இங்கிலந்தின் நோக் கங்களை ஆமீனியாவில் பாழாக்கத் திட்டமிட்டது. புது செர்மனி, கைசர் இரண்டாம் உவில்லியத்தின் கீழ் துருக்கியின் நல்லெண்ணத் தைப் பெறுவதில் முனைந்து நின்றது ; செர்மனியை ஒசுத்திரியாவும் பின்பற்றியது. பிரான்சும் அக்கறை காட்டவில்லை. இங்கிலந்து மாத்திரமே ஆட்சேபித்தது, வெருட்டிப் பார்த்தது; ஆனல் துருக்கி, இவ்வெருட்டுக்கு அடிபணியவில்லை. ஆங்கில மக்களும் அமைச்சர் களும் கோபாவேசப்பட்டனர் ; ஆனல் பிரதமர் சோல்சு பரிப் பிரபு யுக்தத்துக்குத் துணியவில்லை. இவ்வாறு ஆமினியர் வல்லரசுகளின் பொருமை எனும் பீடத்தில் பலியிடப்பட்டனர். சோல்சுபரிப் பிரபுவும்
உ-ச 23

Page 178
葛22 புது உலக சரித்திரம்
ஆங்கில மக்களும் தாம் இதுவரை துருக்கியை ஆதரிப்பதில் 'தாம் பிழையான குதிரையில் தம் பணத்தைக் கட்டினர்” என்ற திட்ட மான முடிபுக்கு வரலாயினர்.
கிறீசு :
ஆமீனியாவில் மரித்தோரை எண்ணி முடிய முன்பு, கிழக்கு ஐரோப்பிய பிரச்சினை வேருெரு ரூபத்தில் பிறிதொரு திசையிலிருந்து காட்சியளித்தது.
1832 இல், கிறீசின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்ட காலம் முதல், கிரேக்கர் பலர், புது இராச்சியத்திலிருந்து விலக்கப்பட்டமையினல், அங்கு அதிருப்தி வளர்ந்து வரலாயிற்று. அயோனியன் தீவுகள், கிறிட், தெசவி, எப்பைறசு, மசிடோனியா எனும் பிரதேசங்களிலெல் லாம் கிரேக்கர் வாழ்ந்தமையினல், கிறிசு இந்நாடுகளைத் தனதாக்கு வதையே தன் வெளி நாட்டுப் பூட்கையின் தலையான நோக்காகக் கொண்டது. ஆரம்பத்தில் அது துருக்கியின் ஆட்சியின் கீழிருந்த தெசவி, எப்பைறசு என்ற பிரதேசங்களையே கைப்பற்ற முனைந்தது : துருக்கி இக்கட்டான நிலைக்குள்ளான சந்தர்ப்பங்களி லெல்லாம் கிரேக்கர், இப்பிரதேசங்களின் மீது படையெடுத்து, அவற்றைப் பறிமுதலாக்க முனைந்தனர். கிறைமியன் போரிலும், 1877-78 ஆம் ஆண்டு இர சிய-துருக்கியப் போரிலும் இவ்விதமாக நடந்த கிறீசின் நடவடிக்கை களை வல்லரசுகள் கட்டுப்படுத்தின. ஆணுல் 1861 இல் கிறிசு ஏழு அயோனிய தீவுகளை இங்கிலந்திடமிருந்து பெறலாயிற்று 1881 இல் கிளாற்சனின் வற்புறுத்தலினல் அது தெசவியின் பெரும் பகுதியையும் எப்பைறசின் 1/3 ஐயும் சுலு தானிடமிருந்து பெற்றுக் கொண்டது. அடுத்து, கிரேக்கர் கிறீட் என்ற தீவின் மேல் தம் கண்ணுேட்டத்தை எறிந்தனர்.
கிறிட்டில் நாட்டின உணர்ச்சி உச்ச நிலையை அடைந்தது ; கிறிசு டன் இணைய வேண்டு மென்ற ஆசையினுல் தூண்டப்பட்ட மக்கள், 1896, 1897 ஆம் ஆண்டுகளில் ஏகமனதாக புரட்சியை ஆரம்பித் தனர். உடனே கிறீசு, கிறீட்டின் உதவிக்கு துருப்புக்களை அனுப்பி வைக்கவே, துருக்கி 1897 இல் கிறீசின் மீது போர்ப் பிரகடனம் செய் தது. முப்பது நாட்களுக்கு நீடித்த போர் கிறீசுக்கு படு தோல்வி யில் முடிந்தது. கிறிசு கிறீட்டை வெல்ல முடியாமற் போகவே ஐரோப்பிய வல்லரசுகள் தீவின் ஆட்சிக்கு பொறுப்பேற்றனர்.
கிறீட்டை துருக்கிய அதிகாரத்தின் கீழ் சுயேச்சாதிகாரம் படைத்த ஓர் அரசாக வல்லரசுகள் அமைத்தன. இவ்வொழுங்கு, பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மூன்று நாடுகளுக்கும் திருப்தியளிக்க வில்லை. 1908 இல்

அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை 323
புரட்சி தலைகாட்டிய பொழுது கிறீட்டை கிறிசுடன் ஒற்றுமைப் படுத்த மீண்டு மொரு முறை முயற்சி செய்யப்பட்டது : ஆனல் வல்லரசுகள் தலையிட்டு நிகழ்வு நிலையை நிறுத்தின.
1912 ஆம் ஆண்டு போல்கன் போருக்குப் பின்பே, 1896 ஆம் ஆண்டுப் புரட்சி நடந்த 15 ஆண்டுகள் ஓடி மறைந்த பின்பு தான், கிறீட், கிறீசுடன் ஒற்றுமைப்பட அனுமதிக்கப்பட்டது.
துருக்கிய சாம்ராச்சியத்தில் செர்மன் செல்வாக்கு
(Berlin to Baghdad): 1880 முதல், விசேடமாக 1890 க்குப் பின்பு, கிழக்கு ஐரோப் பிய அரங்கில் புது செர்மன் ஏகாதிபத்தியம் என்ற புதுச் சக் தி மேலும் மேலும் தலைகாட்ட ஆரம்பித்தது. ஏறக்குறைய ஒரு நூற் ருண்டு காலமாக இங்கிலந்தே துருக்கியின் நெருங்கிய நண்பனுகவும் ஆதரவாளனகவும் இருந்து வந்தது; ஆணுல், பேளின் மாநாட்டுக் காலத் திலிருந்து இந்நட்பு பல வழிகளில் சிதைய ஆரம்பித்தது. துருக்கியிடமி ருந்து சைப்பிரசைப் பறித்தமை, 1882 இல் எகித்து ஆக்கிரமிக்கப் பட் டமை, ஆர்மீனியப் படு கொலைகள் யாவும் இதற்குரிய காரணங்களாகும். இங்கிலந்தின் செல்வாக்கு குறைய ஆரம்பித்ததுடன், துருக்கிய சாம் ராச்சியத்தில் தோன்றிய வெற்றிடத்தை செர்மனி நிரப்பியது. பிசு மாக் கிழக்கு ஐரோப்பிய பிரச்சினையில் அதிகம் கவனம் செலுத்தின ரிலர். ஆனல் அவரின் மறைவின் பின் செர்மன் சக்கரவர்த்தி இரண் டாம் உவில்லியம் துருக்கி மட்டில் தனிப்பட்ட அக்கறையும் ஈடு பாடும் காட்ட ஆரம்பித்தார். அவர் 1889 இல் கொன்சுதாந்தி நோபிளில் சுலுதான் அப்துல் அமீதை சந்தித்து, 1898 இல் பரிசுத்த தலங்கள் வழியாக யர்த்திரை செய்தார். தமாக்கசில் (Damascus) **மேன்மை தங்கிய சுலுதான் அப்துல் அமீதும் அவருக்கு வ ைக் கம் செலுத்தும் 30 கோடி முகமதியரும் எப்பொழுதும் செர்மன் சக்கரவர்த்தி அவர்களது உற்ற நண்பனுக இருப்பாரென்பதில் பூரண நம்பிக்கை கொள்ளலாம்" என அவர் கூறிய சொற்கள் சக்கரவர்த்தியின் நோக்கங்களைத் தெளிவாக எடுத்துரைத்தன.
1881 தொடக்கம் துருக்கிய இராணுவத்தின் புனரமைப்பை செர்மன் உயர் இராணுவ அதிகாரிகள் ஏற்றனர். இதைத் தொடர்ந்து செர்மன் வங்கிக்காரர், முதலாளிகள், வியாபாரிகள் நாட்டின் மூலை முடுக்குகள் எங்கும் ஊடுருவிச் சென்றனர்; பேளின் வங்கியின் கிளைத் தாபனம் ஒன்று கொன்சுதாந்திநோபிளில் திறக்கப்பட்டது; செர்மனி யின் ஆதரவில் பேளின்-பாத்தாது புகையிரதப் பாதையை அமைக்க திட்டங்கள் உருவாயின. புது செர்மனியின் பேராசைகளை உணர்த் தும் மிகப்பெரிய இத்திட்டம், மத்திய ஐரோப்பாவை துருக்கிய மெசப்

Page 179
总24 புது உலக சரித்திரம்
பொற்றேமியாவுடன் இணைக்க எத்தனித்தது. செர்மனியின் இத்துணி கரமான திட்டம் 20 ஆம் நூற்ருண்டின் ஆரம்பகாலத்து முக்கியத் துவம் வாய்ந்த சர்வதேச பிரச்சினை யொன்றை கிளப்பிவிட்டது. 1899 ஆம் ஆண்டில் துருக்கி, செர்மன் அனட்டோயிலின் புகையிரதக் suburofilág5 (German Company of Anatolian Railways) -96ñ55 g6y கைகளின் அடிப்படையில் பசுரு (Basra) வரையும் புகையிரத வீதியை அமைக்க ஏற்பாடுகள் தயாராயின. இத் திட்டத்தின் அரசியல் முக் கியத்துவமும் கேந்திரத்தன்மையும் எல்லா வல்லரசுகளினலும் உண ரப்பட்டது. அது இந்தியாவுக்கும் எகித்துக்கும் ஆபத்து விளைவிக்க வல்ல தென்றும் துருக்கியின் மீது இராணுவ ஆதிக்கத்தை செலுத்த வழி வகுக்குமென்றும், போர் ஏற்படின் போல்கள் நாடுகள் கைசரு டன் சேரக்கட்டாயம் ஏற்படுமென்றும் இங்கிலந்து அஞ்சியது. சீறி யாவின் நிலைக்கு அபாய மேற்படலாமென பிரான்சு வெகுளியுற்றது. புது செர்மனி, துருக்கியில் திட்டமிட்டு வளர்த்த நட்பு, செர்மனி நிர்மாணித்து உறுதிப்படுத்த முனைந்த விசாலமான அரசியல் அமைப் பின் ஒரு பகுதியே யாகும். 1879 இல் செர்மன்-ஒசுத்திரிய நட்புறவு ஏற்பட்டது; 1882 இல் இத்தாலி அதில் சேர்ந்தது; பத்து ஆண்டுக ளுக்குப்பின் அது துருக்கிக்கும் விரிக்கப்பட்டது. செர்மனியின் வெற்றி, ஒசுத்திரியாவின் வெற்றியே என உணர்ந்த போல்கன் நாடுகள், இந் நடவடிக்கைகளினல் கலக்கமடைந்தன; ஏனெனில் ஒசுத்திரியாவின் நல வுரிமைகள் இரசியாவுக்கும் சேபியாவுக்கும் முற்றிலும் விரோத LDs T6ST60)6N. முதலாவது உலக யுத்தத்தின் கார் மேகங்கள் கிழக்கு ஐரோப்பாவை மூட ஆரம்பித்தன.
"இளம் துருக்கா" புரட்சி :
1908 ஆம் ஆண்டு கிழக்கு ஐரோப்பிய பிரச்சினையில், சம்பவங்கள் நிறைந்த ஒரு புது அத்தியாயம் திறந்தது ஐரோப்பா முழுவதும் தீப்பற்றி எரியும்வரை இவ் வத்தியாயம் மூடப்படவில்லை.
1908 ஆம் ஆண்டு யூலை மாதம் துருக்கிய சாம்ராச்சியத்தில் புரட்சி பூத்தது : "இளம் துருக்கர்" என்று அழைக்கப்பட்ட ஐக்கிய (up 637 (36.7 fibpd F6Du' (Committee of Union and Progress) &rgyg, it னின் எதேச்சாதிகாரக் கொள்கைகளை ஆட்சேபித்து, புரட்சியை ஆரம் பித்தது. மேற்கு நாடுகளில் கல்வி பயின்ற வாலிபர்கள், துருக்கியில் ஒரு சீர்திருத்த இயக்கத்தைத் தோற்றுவித்து, புழுவரித்துப்போன துருக்கிய அரசுக்குப் புத்துயிர் அளித்து அதை மேற்கத்திய அரசுகளைப் போல நிருமாணிக்க வேண்டுமென்ற எண்ணத்தினுல் தூண்டப்பட்ட னர். அவர்களது நோக்கங்கள் இரு வகைப்பட்டவை ; ஒரு புறம் பலமுறை வாக்குப்பண்ணப் பட்ட அரசமைப்புத் திட்டம், பாராளு

அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை 325
மன்றம், பேச்சுச் சுதந்திரம், மதச்சுதந்திரம் வேண்டுமென்ற சன நாயகக் கருத்துக்களும், மறு புறம் அன்னிய ஆக்கிரமிப்பைத் தடை செய்து நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்த வேண்டுமென்ற நாட்டின எண்ணங்களும் அவர்களை ஆட்கொண்டன. துருக்கியும் உலகத்தின் ஏனைய முற்போக்கு அரசுகளைப்போல முதன்மை பெற வேண்டு மென்பதே அவர்களது தீராத ஆசை.
இளம் துருக்கரின் பிரசாரம் பெருமளவுக்கு இரகசிய சங்கங்களின் வழியாகவே நாட்டில் பரவிற்று ; குறிப்பாக இராணுவத்திலேயே அது உயர்வு பெற்றிருந்தது. யூலை 23 ஆம் நாள், ஐக்கிய முன்னேற் றச் சபை, அப்துல் அமீதின் 1876 ஆம் ஆண்டு அரசமைப்புத் திட் டத்தை சலோனிக்காவில் பிரகடனம் செய்தது. அப்துல் அமீது பலாத்காரத்துக்கு அஞ்சி, தனது அங்கீகாரத்தைக் கொடுத்தார். பாராளுமன்றம் கூட ஏற்பாடுகள் பூர்த்தியாயின ; பிரசைகளின் சுதந்திரமும் மத சுயாதீனமும் அங்கீகரிக்கப் பட்டன : பத்திரிகைக் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டன : 40,000 க்கு மேற்பட்ட ஒற்றரைக் கொண்ட படை கலைக்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பின் அப்துல் அமீது இச்சலுகைகள் யாவையும் நிராகரித்து, திரும்பவும் எதேச்சாதி காரத்தை ஒரு ஆட்சிப் புரட்டின் வழியாக நிலை நாட்டத் திட்ட மிட்டார். 1909 மே மாதம், இளம் துருக்கப் படைகள் கொன்சு தாந்தினேபிளுக்குள் பிரவேசித்து, அப்துல் அமீதை அரச பதவியி லிருந்து நீக்கி, நாடு கடத்திவிட்டு, அவரது சகோதரரான ஐந்தாம் முகமது என்பவரை துருக்கிய சுலுதானுக்கின.
இப்புரட்சியுடன் துருக்கியில் சீர்திருத்தங்களும் தாராள ஆட்சிக் காலமும் ஆரம்பிக்கப் போவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன : ஆனல் இது நீரில் தோன்றிய குமிழி போல மறைந்தது. பழைமை வாதம் மீண்டும் வெற்றி பெற்றது. தீவிர நாட்டினவாதத்தினுல் உந்தப் பட்ட துருக்கர், முன்னிலும் பார்க்க மிருகத்தனமான கொடுமைகளையும் அட்டூழியங்களையும் அந்நிய, கிறித்தவ மக்கள் வாழ்ந்த பிரதேசங் களில் செய்து முடிக்கத் திட்டமிட்டனர்.
ஒசுத்திரியா, பொசினிய, ஏசிகொவினு மாகாணங்களை இணைத்தல் :
துருக்கிய புரட்சியின் ஆரம்பத்துடன், கிழக்கு ஐரோப்பிய பிரச் சினையின் பல்வேறு இயக்கங்களும் மீண்டும் புது உற்சாகத்துடன் தலைகாட்டின. 1908 ஒற்ருேபரில் துருக்கியின் இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி பல்கேரியா தனது சுதந்திரத்தைப் பெறத் திட்டமிட்டது. 5 ஆம் நாள் பேடினந்து இளவரசன் பல்கேரியாவின் சார் என்ற
A 23

Page 180
326 புது உலக சரித்திரம்
நாமத்தைப் பூண்டு, தன் நாட்டின் சுதந்திரத்தைப் பிரகடனம் செய் தார். சுலுதான் கோபம் கொண்டு, வல்லரசுகளின் உதவியை நாடி, ஈற்றில் ஒரு நட்ட ஈட்டைப் பெறச் சம்மதித்தார். இதைப் பல் கேரியா இறுக்க மறுக்கவே யுத்த அபாயம் நெருங்கியது. ஆனல் இரசியா தலையிட்டு நட்ட ஈட்டைக் கட்டியதுடன், 1909 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துருக்கிய பாராளுமன்றம் பல்கேரியாவின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. W பேடினந்து இளவரசரின் பிரகடனம் வெளியிடப்பட்ட இரு நாட் களுக்குள் ஒற்ருேபர் 7 ஆம் நாள், ஒசுத்திரியா தான் பொசினியா, ஏசிகொவின்னு மாகாணங்களை இணைத்துவிட்டதாக அறிவித்தது. 1866இல் ஒசுத்திரியா செர்மனியிலிருந்து அகற்றப்பட்ட காலம் முதல், அது தன் அவதானத்தை அதிகமாக தென்-கிழக்குப் பகுதியிலேயே செலுத்தியது. ஒசுத் திரியாவின் இச்செயலைக் கண்டு, சேபியா ஆத் திரம் கொண்டது ; ஐரோப்பாவின் வலுச் சமநிலை மாறுவதைக் கண்டு வல்லரசுகள் கலங்கினர் சர்வதேச நெருக்கடி தோன்றியது. ஆனல் போர்க்கோலம் பூண்ட செர்மனி, ஒசுத்திரியாவுக்கு உறுதுணை யாக நிற்பதைக் கண்டு வல்லரசுகள் ஒன்றுமே செய்யத் துணிய வில்லை. யப்பானியப் போரில் தோல்வியடைந்து பலவீனப்பட்டு நின்ற இரசியா, யுத்தத்துக்கு ஆயத்தமான நிலையிலில்லை. அமைதி யின் பொருட்டு பிரான்சு, இரசியா, இங்கிலந்து வெட்கத்தைக் கக் கத்தில் வைத்துக் கொண்டு, இணைப்பை ஏற்று, பேளின் உடன்படிக் கையின் 25 வது முறியைக் கிழித்த்ெறிந்தனர். சேபியா தனியே என்னதான் செய்ய முடியும் ? அதுவும் பெரும் ஏமாற்றத் துடன் பின்வாங்கியது. நெருக்கடி யுத்தமின்றிக் கழிந்தது. ஆனல் வெற்றிபெற்ற ஒசுத்திரியா, தன் சாதனையில் அளவிலா பெருமித மடைந்த செர்மனி, ஏமாற்றமடைந்த இரசியா, ஆத்திரம் கொண்ட சேபியா இவற்றில் எதிர்கால் யுத்தத்தை ஆரம்பிப்பதற்கு வேண் டிய வெடி மருந்துக் கலவை ஆயத்தமாயிற்று.
வேறு இடையூறுகளும் பல, இளம் துருக்கருக்கு முன் தோன்றின. எகித்தில் பிரித்தானியர், அல்சீரியா, தியூனிசு, மென்றக்கோப் பிர தேசங்களில் பிரெஞ்சினர், திரிப்போளி (Tripoli) யில் இத்தாலியர் யாவரும் துருக்கிய சாம்ராச்சியத்தைச் சூறையாடுவதில், முனைந் தனர். 1911 செற்றெம் பர் 25 ஆம் நாள் இத் தா லி ய ர் துருக்கி மீது போர்ப் பிரகடனம் செய்து திரிப்போளி, பெங்காசி, திசினு, என்ற கரையோர நகரங்களை ஆக்கிரமித்தனர். போர் 1912 இன் ஊடாக நீடித்தது. ஒரு புது அபாயம் எழுவதைக் கண்ட துருக்கி, ஒற்ருேபரில் உலா சேன் சமாதான உடன்படிக்கையினல் (Peace of Lausanne) திறிப்போளியை இத்தாலிக்குக் கையளித்தது.

அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை 327
GuITGö5óór de Uguu&5üb (Balkan League):
புது அபாயம், போல்கன் பிரதேசத்திலிருந்தே தலை காட்டியது. இப்பிராந்தியத்தின் கிறித்தவ நாடுகள் யாவும் ஐக்கியப்பட வேண்டு மென்ற எண்ணம் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த போதி லும், அவற்றின் பொருமைகளே அத்திட்டத்தை செயற்படா வண் ணம் தடை செய்த்ன. கிறீசின் பிரதமரான வெனிசலோசு (Venizelos) என்பவரின் முயற்சியினல் கிறீசு, சேபியா, மொன்றிநெகிரோ, மசி டோனியாவின் கிறித்தவர்களின் பரிதாப நிலையைச் சீர்திருத்தும் நோக்குடனேயே இவ்வொற்றுமை ஏற்படுத்தப்பட்டது இளம் துருக் கரின் புரட்சிக்குப்பின், துருக்கி தன் ஏகாதிபத்தியத்தின் இறுதிப் பகுதியான மசிடோனியா மீது தன் ஆட்சியை உறுதியாக அமைக்க முயன்றது. கிறித்தவர்கள் அனுபவித்த இன்னல்களும் துயரங்களும் பன்மடங்கு அதிகரித்தன.
முதலாவது போல்கள் போர் (1912):
கிறித்தவரைத் துன்புறுத்துவதில் இளம் துருக்கர் இரண்டாவது அப்துல் அமீதைப் போன்று கல் நெஞ்சராகவே இருந்தனர். மசி டோனிய கிறித்தவர்களின் நிலையை அபிவிருத்தி செய்யுமாறு ஒற் றுமை பூண்ட நாடுகள் விடுத்த ஏகமனதான கோரிக்கையை துருக் கர் அ லட் சி யம் செய்யவே, 1912 ஒற்ருேபரில் நேச நாடுகள் துருக்கி மீது போர் தொடுத்தன. போல்கன் தீபகற்பத்தில் புது நிலப் பங்கீடு அங்கீகரிக்கப்பட மாட்டாது என வல்லரசுகள் விடுத்த் எச்சரிக்கையையும் அவர்கள் பொருட் படுத்தவில்லை. த ங் க ள் பழைய எதிரியைத் தாக்கி அடிபணியச் செய்வதற்கு இதைப் போல ஒரு வாய்ப்பை அவர்கள் ஒரு போதும் பெற்றதில்லை. தாம் ஆரம் பித்த அறப்போரைத் தொடர்ந்து நடாத்தி, ஒரு திட்டமான முடி பைக் காண வேண்டு மென்ற உறுதியுடன் இயங்கின.
துருக்கிய சாம்ராச்சியம் நான்கு முனைகளில் தாக்கப்பெற்றது. பல்கேரியர் திறேகக்குள் புகுந்து, அதிரியநோபிளை முற்றுகையிட்டு துருக்கரைத் தம் தலைநகர்வரை துரத்திச் சென்றனர். சேபியர் அன் பேனியாவுக்குள் ஊடுருவிச் சென்று அதிரியாட்டிக் கடற்கரை வர்ை முன்னேறினர். மொன்றி நெகிரோப் படைகளும் அல்பேனியாவைத் தாக்கின. கிரேக்கர், தெசவியை ஆக்கிரமித்து சலோனிக்காவை நவம்பர் 8 ஆம் நாள் கைப்பற்றினர். கிறிசு கடல் மார்க்கமாகவும் துருக்கிய துறைமுகங்களை முற்றுகையிட்டு பல ஈசியன் தீவுகளைத் தனதாக்கியது. திசம்பர் மாத ஆரம்பத்தில், வல்லரசுகள் தலையிட்டு போரை நிறுத்தி, இலண்டனில் ஒரு மாநாட்டை கூட்டுவிக்க ஏற் பாடுகள் செய்தன. ஐரோப்பாவில் எஞ்சி நின்ற கொன்சுதாந்தி

Page 181
328 புது உலக சரித்திரம்
நோபிள், அதிPயநோபிள், சனீன, சிக்குட்டாறி என்ற நான்கு நக ரங்களில், அதிPயநோபிளைக் கைவிட்டு, மிகுதி மூன்றையும் வைத் திருக்கலாமென்று செயயப்பட்ட முடிபை துருக்கி ஏற்க மறுக்கவே, பெப்ரவரி மாதம் மீண்டும் போர் ஆரம்பமாயிற்று.
புதுப் போரில் கிறித்தவ நாடுகள் இலகுவாக வெற்றிகளை ஈட்டி, துருக்கியை அடிபணியச் செய்தன. 1913 மே மாதம் இலண்டனில் அமைதிப் பொருத்தனை செய்யப்பட்டது. கொன்சுதாந்திநோபிளை உள்ளடக்கிய கிறே சு என்ற ஒரு சிறு நிலப்பரப்பைத் தவிர மிகுதி ஐரோப்பிய நிலங்களைத் துருக்கி இழந்தது. அல்பேனியா ஒரு சுதந் திர அரசாக அமைக்கப் பெற்றது. கிரீட், கிறிசுடன் இணைய அனுமதிக்கப்பட்டது.
வெற்றி பெற்ற பிரதேசங்களைப் பங்கீடு செய்வதில், போல்கன் கிறித்தவ நாடுகள் தமக்குள்ளே பொரு நிக் கொண்டன. மசிடோனி யாவில் எல்லா நாடுகளும் ஈடுபா டு கொண்டிருந்தன. கிறீசு, சேபியா, பல்கேரியா என்பன மசிடோனியாவின் பகுதிகளைத் தம தாக்க ஒன்றேடொன்று போட்டியிட்டன. சான் சித் தெப்பானே ஒப்பந்தத்தில் தான் பெற்ற எல்லைகளை எப்படியும் பெற்றே ஆக வேண்டுமென உறுதி பூண்டது பல்கேரியா.
இரண்டாவது போல்கன் போர் (1913) :
இங்ங்ணம் போல்கன் நாடுகள் தமக்கிடையே எழுந்த போட்டி களைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முடியாத பரிதாப நிலையேற் பட்டது. 1913 யூன் மாதம் கிறிசு, சேபியா, உறுர மேனியா மூன் றும் ஒன்றுசேர்ந்து பல்கேரியாவுக் கெதிராகப் போர் தொடுத்தன. போர் ஒரு மாத காலம் நீடித்தது. நாலா பக்கங்களிலும் எதிரி களினல் சூழப்பட்டு ஆக்கிரமிப்புக்குள்ளான பல்கேரியா திட்டவட்ட மாகத் தோற்கடிக்கப்பட்டது. துருக்கியும் சந்தர்ப்பத்தை நழுவ விடாது பல்கேரியா மீது யுத்தப் பிரகடனம் செய்து, அதிரியனுேபிளே மீட்டது. 1913 ஆகத்து மாதம் ஏற்பட்ட அமைதிப் பொருத்தனை யில் நாலா பக்கங்களிலும் பல்கேரியா சலுகைக%ள வழங்க வேண்டிய கட்டாய நிலைக்குள்ளானது. வடக்கே உறுர மேனியாவுக்கு சிலித்திரி யாவையும் (Sistria) டொப்றூ சாவின் பெரும்பாகத்தையும் கொடுத் தது ; தான் உரிமை பாராட்டிய மசிடோனியாவின் பெரும் பகுதி களை கிரீசு, சேபியா, மொன்றி நெகிரோ என்ற மூன்று நாடுகளுக்கும் கையளிக்தது : துருக்கிக்கு அதிநியனுேபிளையும் திறேசின் பகுதியை யும் திருப்பிக் கொடுத்தது. இலண்டன் ஒப்பந்தம் விதி த் த எல்லைகளைத் துருக்கி திருப்பிப் பெற்றது.

அண்மைக் கிழக்கு நாடுகளின் பிரச்சினை 329
இரு போல்கன் போர்களின் பயன்கள் :
இரு போல்கன் யுத்தங்களின் கூட்டுப் பயனக துருக்கியின் ஐரோப்பியப் பேரரசு மறைந்தது ; அதன் செலவில் கிறித்தவ நாடு கள் தம் எல்லைகளைப் பெருக்கிக் கொண்டன. கொன் சுதாந்திதோ பிள், அதிநியனுேபிள் நகரங்களையும் பொசு பறசு, தாதன வீசு என்ற இரு நீரணைகளையும் அதற்கு இடையில் அமைந்த பிரதேசத்தையும் மாத்திரமே துருக்கி வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது. அன்றும் இன்றும் போல்கன் தீபகற்பத்தின் மிகப் பெரிய நாடான உறுர மே னியா 2,687 சதுர மைல் நிலப் பரப்பை பல்கேரியாவின் செலவில் சுவீகரித்துக் கொண்டது. பல்கேரியா 9000 சதுர மைல் நிலத்தை மசிடோனியாவில் பெற்றது ; ஈசியன் கடற்கரையோரத்தின் ஒரு பகு தியைச் சுவீகரித்த போதும், அது உரிமை பாராட்டிய நிலப்பரப்பின் அரைப்பாகத்துக்குக் குறையவே பெறலாயிற்று மொன்றி நெகிரோ நொவிபசார்என்ற நிலப் பரப்பின் மேற்கு அரைவாசியைப் பெற்று தன் எல்லையை இரு மடங்காகப் பெருக்கிக் கொண்டது. அதிகமான இலாபமடைந்த நாடுகள் சேபியாவும் கிறிசுமாகும். சேபியாவின் நிலப்பரப்பு 18,000 இலிருந்து 33,000 சதுர மைலாக உயர்ந்தது. அதன் சனத் தொகை 30 இலட்சத்திலிருந்து 45 இலட்சமானது. கிறிசு, கிரீட், ஈசியன் தீவுகள், மசிடோனியாவில் பெரும் பகுதி எல் லாமாக 15,000 சதுர மைல் புது நிலத்தையும் 20 இலட்சம் புதுப் பிரசைகளையும் பெற்றது.
இப்போர்களினுல் வேறு ப்லன்களும் ஏற்பட்டன. துருக்கரை தோற்கடித்துப் பெற்ற பலன்களை தன்னிடமிருந்து பறித்தமையை யிட்டு பல்கேரியா தன் அயல் நாடுகளின் மீது பழி வாங்க வேண்டு மென எண்ணங் கொண்டது. முதலாவது உலக யுத்தத்தில் இப்பழி யைத் தீர்க்க முற்பட்ட பல்கேரியா, தனக்கு கெடுதியையே இழைத் துக்கொண்டது. இரசியா, மீண்டும் போல்கன் நாடுகளின் உபகார வீரனுக-இம்முறை துருக்கிக்கு எதிரேயல்ல, ஒசுத்திரியாவுக்கு மாருக --காட்சியளித்தது. துருக்கிய இராணுவப்படைகளை புனரமைக்கும் பணியை செர்மனி மேற் கொண்டது. எல்லாவற்றிலும் மேலாக ஒசுத்திரிய-சேபிய போட்டியில் ஒசுத்திரியா வெற்றி பெற்றது. சேபியா தோல்வி கண்டது. பொசினிய, ஏசி கொவினு மக்களைத் தன் பக்கம் கவர்ந்து கொள்ளும் நோக்குடன் சேபியா, ஒசுத்திரிய நாட் டுக் கெதிராக சூழ்ச்சித் திட்டங்களைக் கையாண்டது. சேபியாவின் பேராசைகளுக்கு நிரந்தரமான முற்றுப் புள்ளி வைக்க வேண்டு மென்று உறுதி கொண்ட ஒசுத்திரியா, சேபியாவை ஒரு போரில் தோற்கடித்து அதற்கு ஒரு உன்னத பாடத்தைக் கற்பிக்கத் திட்ட மிட்டது; அப் போருக்கான காரணத்தையும் அது ஆக்கிக் கொண்டது.

Page 182
3.30 புது உலக சரித்திரம்
1914 ஆம் ஆண்டு யூன் மாதம் 23 ஆம் நாள், ஒசுத்திரிய கோம கன் பிரான்சு பேடினன்ட், சராசேவோ நகரத்தில் ஒரு பொசினிய தீவிர வாதியினுல் கொலை செய்யப்பட்டார் ; ஒசுத்திரியா தேடித் திரிந்த சந்தர்ப்பமும் வந்து விட்டது. ஒசுத்திரியாவுக்கும் சேபியாவுக்கு மிடையே மூண்ட போர் உலகப் போராக உருமாறியது.
அதிகாரம் 20
முதல் உலகப் போருக்கு வழிகாட்டிய சர்வதேச உறவுகளும் நிகழ்ச்சிகளும் (1870-1914)
1914-18 ஆம் ஆண்டுகள், உலக வரலாற்றிலே ஒரு போதும் மறக்க முடியாத கோர சம்பவங்களின் நிலைக்களஞய் அமைந்தன. அவ்வாண்டுகளை, வரலாறு எனும் வெண் திரையிலே எதிர் பாராது ஏற்பட்ட ஒர் இரத்தக் களங்கம் ; தேச மக்கள் எல்லோர் வாழ்வை யும் சின்னபின்னப்படுத்திய ஒரு பயங்கரப் புயல் ; மனித இனத்தின் குமுறலுக்கும் கொந்தளிப்புக்கும் பேரழிவுக்கும் வழிவகுத்த ஒரு கோர நிகழ்ச்சி என வர்ணிக்கின் அது மிகையன்று.
இந்நிகழ்ச்சியின் காரணங்கள் எவை ? காரணர்கள் யார் ? என அறிவதற்கு மனித உள்ளம் ஆவல் கொண்டு துடிப்பது இயற்கை. பிறர் விட்ட பிழையில் இது பிறந்ததா ? அல்லது திட்டமிட்டு எவ ரும் செய்த சதியா ? தெய்வ சங்கற்பம் தான ? ஆயிரம் ஆயிரம் நூல்களிலும் கட்டுரைகளிலும் கேட்கப்படும் ஐய வினுக்களிவை.
தீ நாக்குகளைக் கக்கும் எரிமலையின் குமுறல் திடீரென ஏற்படுவ தில்லை. இறந்த காலத்தின் அடிப்படை அமைப்புக்கள் பல அதற் குத் தூபமிட்டு வளர்த்து வருகின்றன என்பது கண்கூடு. உலகப் போரின் காரணத்துக்கும் இக்கூற்றுப் பொருந்தும். போர் ஆரம்ப மாவதற்கு முன்பே, பல நிகழ்ச்சிகள் இதற்கு அத்திவாரம் இட்டி ருந்தன. நிதானமற்ற செயல்கள், அவசர புத்தி, இராச தந்திரி

சர்வதேச உறவுகளும் நிகழ்ச்சிகளும் 33
களின் சூழ்ச்சிகள், எதிர்காலத்தின் தீமையை எண்ணிப்பாராத மடைமை, இப்படி பலப்பல காரணங்கள் இதன் வித்துக்களாய் அமைந்திருந்ததை வரலாற்றுக் கண்கொண்டு நோக்குபவர்கள் மறுக்க முடியாது. பழைய உலகின் வல்லரசுகள் இரு பகுதிகளாய்ப் பிரிந்து அச்சமும் ஐயமும் பூண்டு ஒன்றையொன்று உக்கிரக் கண்களுடன் எதிர் நோக்கி நின்றமையே இப்போரின் அடிப்படைக் காரணமாக அமைந்தது என்பதில் ஐயமில்லை. கரு மருந்தறையிற் சிறு பொறி சிதறின் பெரு நெருப்பன்ருே ? பின்பு ஆர் தடுப்பார்.
1. Sup6) i bu"L (The Triple Alliance)
istofré, (187-90):
19 ஆம் தூற்றண்டில் பிசுமாக்கே ஐரோப்பிய விவகாரங்களின் மூல கர்த்தாவாய்த் திகழ்ந்தார் என்பது கண்கூடு. அமைதியே அவ ரது குறிக்கோள்களில் முதன்மை பெற்றது. “செர்மன் மக்களை ஒன்று படுத்தும் கருவி, போரன்று; அது, செர்மனிக்குத் தனி உயர்வை ஈட் டிக்கொடுத்த காலம் அகன்று விட்டது; மீண்டும் ஒரு போர் ஏற் படின், செர்மனியின் தேட்டம் யாவும் பறிமுதலாக வேண்டும்' என்பன, அவர்கண்ட பூரண முடிபுகளாகும். ஒரு நூற்ருண்டுக்கு முன், தான் கைப்பற்றிக் கொண்ட சைலீசிய மாகாணங்களைக் காத்துக்கொள் 6.5 lbsita, LD5 it foll-sijd (Fredrick the Great}, ஐரோப்பிய வல்லரசு ளுடன் ஏழாண்டுப் போர் நிகழ்த்தினர். இப்பயங்கர நிலை, புதிய செர்மனிக்கு உண்டாகக் கூடாதென்பதே பிசுமாக்கின் அடிப்படைக் கொள்கை. தருணம் கிடைத்தால், செர்மனியின் எதிரிகள் ஒன்று திரண்டு நாட்டின் ஐக்கியத்தைச் சிதைக்கத் தவருர் என்பதை அவர் நன்கறிவார். ஒருகால் சதா போரார்வம் பூண்டு நின்ற பிசுமாக் ஞானுேதயம் பெற்று, 1871 க்குப் பின் நாட்டின் நலனை மனதிற் கொண்டு, சமாதானத்தைப் பாதுகாக்கவும் பழைய நிலையை உருவாக்க வும் அயராது உழைத்தார். வியன்னுவில் ஏற்பட்ட ஐரோப்பிய வலுச் சமநிலையை அடக்கியாண்ட பிசுமாக், இப்போது சடோவாவிலும் செடானிலும் ஏற்பட்ட புதுச் சமநிலையை அமைதி செய்வதில் தன் அவதானத்தைச் செலவிட்டார்.
பிரான்சின் பழிவாங்கும் பூட்கை :
பிராங்பேட் அமைதிப் பொருத்தனையில் பிரான்சு ஐந்து இலட் சம் பிராங்குகளை நட்ட ஈடாகவும், அல்சாசு, உலொறேன் மாநிலங் களையும் செர்மனிக்குக் கையளிக்க விருப்பமின்றிச் சம்மதித்தது. இவ்விரு மாகாண மக்களுக்கும் தாய் மொழி செர்மன் ; அன்றியும்

Page 183
332 புது உலக சரித்திரம்
அவை செர்மனிக்குச் சொந்தமாயிருந்த காலமுமுண்டு. பிசுமாக், ஏகாதிபத்திய அபேட்சையினல் இவ்விரு மாகாணங்களையும் கைப்பற்றி ஞரல்லர் ; மேற்கு வல்லரசுகளின் ஆக்கிரமிப்பில் ருத்து செர்மனிக்கு நிரந்தர பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டுமாயின், இம் மாகாணங்களை செர்மனியுடன் இணைத்தேயாக வேண்டுமென்ற தவிர்க்க முடியாக் காரணத்தை உணர்ந்தே, கருமமாற்றினர். இக் கடின நிபந்தனைகள் செர்மன் சக்கராதிபத்தியத்துக்குப் பிரான்சில் ஒரு நிரந்தர எதிரி யைத் தேடிக் கொடுத்தன. அந்நாட்டின் மீது பழிவாங்க வேண்டு மென்ற மனப்பதிவு பிரான்சில் உள்ளூர உண்டாகி வருவதைக் கண்டு பிசுமாக் அஞ்சினர்; அச்சத்தின் காரணமாய் தன் நாட்டின் பாதுகாப் புக்கு நட்புறவுகளைச் சிருட்டிப்பதிலும் தன் நாட்டிற் கெதிராய் நட் புறவுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதிலும் தன் அறிவையும், இராசதந்திரத் தேர்ச்சியையும் செலவிட்டார். செர்மனியின் எதிரியான பிரான்சை ஐரோப்பாவின் அகதியாக்கியமை பிசுமாக்கின் பெரு வெற்றியாகும். ஒசுத்திரியா, (இத்தாலி, இரசியா என்ற மூவரசு நட்புறவால் பிரான் சைத் தனித்து நிற்கச் செய்தார்; பெரிய பிரித்தனுடன் நட்புறவையேற் படுத்தும் உழைப்பிலும் வெற்றி கண்டார். பிசுமாக்கின் ஆட்சி முடிவு வரை இங்கிலந்தினதும் செர்மனியினதும் நேச உறவுகள் நிலைத்தே இருந்தன: “ஒரு நில எலிக்கும் ஒரு நீர் எலிக்கும் போர் ஏற்படக் காரணமில்லை” என்று குறிப்பிட்டார், பிசுமாக்.
(pë 5ë 5 J GJi555 Gilcit bil (The Dreikaiserhund) :
பிசுமாக் பிரசியாவின் முதல் அமைச்சரான காலம் முதல் அவ ரது திட்டங்கள் அனைத்துக்கும், பிரசிய-இரசிய உடன்பாடு ஒரு மூலைக் கல்லாய் அமைந்தது; செர்மன் சக்கராதிபத்தியம் அக்கல்லின் மேலேயே கட்டியெழுப்பப் பட்டது. ஆயினும் அவர் சமீபத்தில், சத்துராதியாக விருந்த ஒசுத்திரியாவை வெகு சாதுரியமாய்த் தன் பக்கம் சாய்க்க வேண்டியிருந்தது. சடோவா வெற்றித் தினத் தன்றே ஒசுத்திரிய பிரசிய உடன்பாட்டை அமைக்கத் திட்டமிட்ட பிசுமாக், அந்நாட்டை நிரந்தர எ தி ரி யா க் க க் கூடிய நட வடிக்கைகளை தவிர்த்து நடந்து கொண்டார். அவரது திட்டம் 1872 இல் நிறைவெய்தியது. செற்றம்பர் மாதம் பிரான்சிசு யோசேப், உவில்லியம், அலெக்சாந்தர் எனும் முச் சக்கரவர்த்திகளும் பேளி னில் ஒன்று கூடி செர்மன் , பேரரசுக்குக் கெளரவம் அளித்தனர். எழுத்துடன்பாடு அங்கு ஏற்படாத போதிலும், அரசியற் றுறையில் அம் மகாநாடு முக்கியத்துவ நி க |ழ் ச் சி யா ய் க் கணிக்கப்பட்டது. “செயின்ட் பீற்றசுபேகுக்கு அமைத்த பாலம் அவ்வாறேயிருக்க வியன்ஞவுக்கும் நான் ஒரு பாலம் நிறுவியுள்ளேன்' என்று பிசுமாக் தன் செயல் வன்மையிை எடுத்துரைத்தார். 1873 இல் விற்றர்

சர்வதேச உறவுகளும் நிகழ்ச்சிகளும் 333
இம்மனுவேல் பேளினைத் தரிசித்த பொழுது இம் முச் சக்கரவர்த்திகளு டன் இத்தாலியின் ஒத்துழைப்பும் பிணைக்கப்படுமென எதிர்பார்க்கப் பட்டது.
பேளின் மாநாட்டில் பிசுமாக் இருவர் நட்புறவு :
1872 இல் இச்சக்கரவர்த்திகளுக்கிடையில் ஏற்பட்ட உறவானது, மிக விரைவில் கடும் பரிசோதனைக்குள்ளாயிற்று. 1877 இல் பாசி படிந்துபோயிருந்த கிழக்கு ஐரோப்பிய பிரச்சினை திரும்பவும் புதுப் பிக்கப்பட்டதுடன் ஒசுத்திரிய இரசிய பகைமை மீண்டும் முளை கொண்டது. இந்நிகழ்ச்சியானது முச்சக்கரவர்த்திகளின் ஒற்றுமை யைச் சீர்குலைக்கும் வல்லபம் பெறலாயிற்று. 1878 இல் பேளின் மாநாட்டில் பிசுமாக் 'நேர்மையுள்ள மத்தியட்சகராக’, (HomestBroker) கடமையாற்றியபோதும், அவரது செல்வாக்கு இரசியாவுக் குப் பாதகமாகவே பிரயோகிக்கப்பட்டது. வெற்றியின் பயனுய்க் கைக்கெட்டிய கனி, பிசுமாக்கின் செயலினுல் தட்டிப் பறிக்கப்படு வதைக் கண்ட இரண்டாம் அலெக்சாந்தர், ஆத்திரமுற்றர். செர் மணி இரசியாவின் நட்பை இழக்க நேரிடவே, அலெக்சாந்தர் முச் சக்கரவர்த்திகளின் உடன்பாட்டிலிருந்து விலகிக் கொண்டார். இப் பேரிழப்புக்கு ஈடாக பிசுமாக், ஒசுத்திரியாவின் உறுதியான நட்டை 1879 இல் இருவர் நட்புறவில் (Dual Aliance) பெற்றர். இரு நாடு களில் ஒன்றை இரசியா தாக்கினல் மற்றையது உதவி தருவதாயும், பிரெஞ்சு ஆக்கிரமிப் பேற்படின் நடு நிலை வகிப்பதாகவும் ஒப்புக் கொண்டன. இந்த நட்புத்தான் முதல் உலகப் போருக்கு முன் மிகத் திடமான ஐக்கியமாய்த் திகழ்ந்தது.
மூவர் நட்புறவு :
ஒரு நண்பனுடன் திருப்தியடையாத பிசுமாக், பிரான்சின் எல்லை யில் புதிதாய்த் தோற்றிய வல்லரசையும் தம் கட்டுப்பாட்டுள் கொண்டுவரத் திட்டமிட்டார். பிரெஞ்சு-இத்தாலிய எதிர்ப்பை வளர்க்கும் நோக்குடன், வட ஆபிரிக்காவில் தன் எல்லைகளைப் பிரான்சு பெருக்குவதற்கு அந்தரங்க ஆதரவையளித்தார். 1881 இல் பிரெஞ்சினர் தியூனிசைக் கைப்பற்றினர். அடுத்த ஆண்டு இத்தாலி இரு வல்லரசுகளுடன் இணைந்து, மூவர் நட்புறவை ஏற்படுத்தியது. இவ்வுறவு தற்பாதுகாப்பையே பிரதான நோக்காகவும் பிரெஞ்சு அல் லது இரசிய ஆக்கிரமிப்பை எதிர்க்கவும் நோக்கங் கொண்டது.
ஐந்தாண்டுகளுக்கான இவ்வொப்பந்தம் பல காலம் நீடித்து
நிலைத்தது. 1887 இல் ஐந்து ஆண்டுகளுக்கும் 1892 இல் பன்னி ரெண்டு ஆண்டுகளுக்கும் புதுப்பிக்கப்பட்டது:

Page 184
334 புது உலக சரித்திரம்
மறு உத்தரவாதப் பொருத்தனை :
மூவர் நட்புறவை உறுதிப் படுத்திய பிசுமாக், இரசியாவை விரோ திக்கவோ, அன்றேல் இரசியா, பிரான்சின் நட்பைத் தேடுவதையோ அனுமதிக்க சித்தங் கொள்ள வில்லை. "பேளினுக்கும் செயின்ட் பீற் றசுபேகுக்குமிடையே பகிரங்கத் தந்திக் கம்பி பாதிக்கப்பட்டாலும் இரகசியக் கம்பியைத் திருப்பியமைக்கலாம்' என்ருர் பிசுமாக். எனவே இருவர் நட்புறவு பூர்த்தியானதுடனே, இரசியா மட்டில் தான் கடைப் பிடித்து வந்த சிநேகபாவத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் அலெக் சாந்தர் பக்கமாய் பார்வையைத் திருப்பி, இரசியா தன் எதிரியா வதையும், பிரான்சுடன் உறவு பூணுவதையும் தடை செய்தார். 1881 இல், முச்சக்கரவர்த்திகளின் உடன்பாடு புதுப்பிக்கப் பட்டது. ஆனல் 1885-86 ஆம் ஆண்டு பல்கேரியச் சிக்கலில் இரசிய-ஒசுத்திரிய பொரு தல் ஏற்படுமோ என அஞ்சிய பிசுமாக், இரசியாவுடன் இரகசிய மறு உத்தரவாதப் பொருத்தனையைச் (Re-Insurance Treaty) செய்தார்.
பிசுமாக்கின் கூட்டுறவுகளும் அவற்றின் பயன்களும் :
இவ்வாருக தன் வீழ்ச்சிக் காலத்துக்குமுன் பிசுமாக், செர்மனி யின் பாதுகாப்புக்காக சிக்கல்கள் நிறைந்த பல ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார். ஒசுத்திரியா, செர்மனியைத் தாக்கின் இாசியா நடு நிலைவகிக்கவும், இரசியா ஆக்கிரமிக்கும் பொழுது, ஒசுத்திரியா நடு நிலை பூணவும், பிரான்சு ஆக்கிரமிப்பின் இத்தாலியின் உதவியைப் பெறவும், இரசியாவின் அல்லது பிரான்சின் ஆக்கிரமிப்புக் கெதிராக ஒசுத்திரிய-இத்தாலிய துணையைப் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் பூர்த்தியாயின. இவ்வளவு சிக்கலான இந்திரசால வித்தையை பிசு மாக் ஒருவரைத் தவிர வேறெவரும் சித்திகரமாய்ச் சாதித்திருக்க முடி யாது. பிரான்சைத் தனிமைப் படுத்தி, ஐரோப்பாவின் அரச வலுச் சம நிலையைப் பாதுகாத்து, அமைதியை நிலை நிறுத்த வேண்டுமென்ற மூன்று குறிக்கோள்களிலும் பிசுமாக் பூரண வெற்றிகண்டார். செர்மனி, ஒசுத்திரியா, இரசியா என்ற மூன்று நாடுகளையும் கொண்ட முக் கோண அமைப்பில் முரண்பாடுகள் உண்டு, என்பதை இரசியா பல் கேரியப் பிரச்சினையில் உணர்ந்தபின், பிசுமாக் ஓய்வு பெறுதற்கு முன்னரே, அது செர்மனியை விட்டு பிரான்சின் பக்கமாய்த் திசை மாற ஆரம்பித்தது. மறு புறத்தில் பிரான்சைத் தனிமைப் படுத்தி, அதற் கெதிராக வல்லரசுகளை ஒன்று படுத்தியதனல், பிரான்சு நண் பர்களைத் தேட வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலையையும் பிசுமாக் சிருட்டித்தார்.

சர்வதேச உறவுசஞம் நிகழ்ச்சிகளும் 335
2. மூவர் கேண்மை உடன்பாடு (Triple Entente)
இவ்வண்ணம் பிசுமாக் தன்னடிச் சுவட்டைப் பின்பற்றி வரும் அதிகாரிக்கு இன்னலும் சிக்கலும் நிறைந்த சர்வதேச உறவுப் பிரச் சினையை வைத்துச் சென்றார். 1890 இல் பிசுமாக்கின் வீழ்ச்சிக்கும் 1914 இன் யுத்த காலத்துக்கு மிடையே நால்வர் செர்மன் மண்டில நாயக பதவியை வகித்தனர். இடையிடையே வெளி நாட்டுக் கொள்கைகளில் ஏற்பட்ட விளைவுகளுக்கு அவர்கள் மீது குற்றஞ் சுமத்திய போதிலும், இக்காலம் முழுவதும் செர்மனியின் பிறநாட் டுப் பூட்கையின் நிருவாகம் செர்மனியின் புதுச் சக்கரவர்த்தியான இரண்டாம் உவில்லியத்தின் தனிப்பட்ட ஆளுகையிலே இருந்தது.
செர்மனியின் உலக ஆளுகைப் பூட்கை (Weltpolittk)
பழைய செர்மன் மண்டில நாயகர் கையாண்ட கொள்கைகளுக்கு முழு மாறன தத்துவங்களிலிருந்தே செர்மன் பிறநாட்டுப் பூட்கையை உவில்லியம் நிர்ணயித்தார். அவரது கோட்பாடுகளுக்கமைய செர் மணி ஒரு அமைவுகொண்ட அரசன்று ; அது நிகரற்ற விரிவடையும் வன்மை பெற்ற நாடு; செர்மன் இனம் உலகாளப் பிறந்த இனம் என்று கூறினர். அதன் நோக்கம் ஐரோப்பாவுடன் தரிக்காது அகில உலகத்தையும் உட்படுத்தியது. இதிலிருந்து செர்மனி ஐரோப்பிய அரசியலில் மாத்திரமின்றி முழு உலக விவகாரங்களிலும் முதன்மைப் பங்கு பெற வேண்டு மென்ற கொள்கை முளைத்தது. செர்மனி தன் உலக முக்கியத்துவத்தை உணர்த்தவும், மித மிஞ்சிய சனத்தை வெளி யேற்றவும், பொருளாதாரத்தைப் பெருக்கவும் ஒரு குடியேற்ற ஏகாதி பத்தியத்தை நிருமாணிக்க வேட்கை கொண்டது.
கைசர் உவில்லியம் குடியேற்றங்களிலிருந்து ஒரு கப்பற்படையின் அவசியத்தை வாதித்தார், புது செர்மன் குடியேற்ற வாசிகள் ஏகாதி பத்திய அரசின் பாதுகாப்பையே எதிர்பார்ப்ப ரென்றும் ஒரு கப்பற் படையின்றி தன் கடமையைப் பரிபூரணமாக நிருவகிக்க முடியா தென்றும் கூறினர். கப்பற்படையை நிருமாணிக்கா விடின் எந்நாளும் செர்மனி பிரித்தனுக்கு பயந்து ஒடுங்கிப் பதுங்க வேண்டு மென்றும் அதன் ஆக்கிரமிப்பை சகித்து ஒதுங்க வேண்டு மென்றும் ஞாயங் காட் டிஞர். இங்ங்ணம் உலக அரசியல் தொடர்பு, குடியேற்ற நாடுகளின் சுவீகாரம், கடற்படை நிருமாணம் எனும் மூன்று அம்சங்களே கைச ரின் பிறநாட்டுப் பூட்கையின் இன்றியமையா நோக்குகளாய் அமைந் தன. புது நூற்றண்டு வளர வளர, இக் கொள்கைளும் புது வலி யுடன் வற்புறுத்தப்பட்டன. இத்திட்டங்களின் முன்னிலையில் பிசு மாக் கட்டியெழுப்பியிருந்த பிறநாட்டு நட்புறவுக் கட்டுக் கோப்பு

Page 185
36 புது உலக சரித்திரம்
முழுவதும் சரிந்து, வீழ்ந்து தரை மட்டமாகியது. பிசுமாக் கடைப் பிடித்த ஐரோப்பாவின் பழைய நிலையையும் வலுச் சம நிலையையும் பாதுகாத்தல், அமைதியை நிலை நாட்டல் என்ற கொள்கைகளைப் பூரணமாகக் கைசர் கைவிட்டார். ‘என்னையும் எனது 25 இராணுவ பட்டாளங்களையும் தவிர ஐரோப்பாவில் சமபலமில்லை' யென்ருர் உவில்லியம். செர்மனியின் நாட்டினத் திட்டம் அதன் ஆள்புலப் படர்ச் சியை நடுநாயகமாய்க் கொள்ளவேண்டுமென ஒளிப்பு மறைப் பின்றி வெளியிட்டார். தனது கொள்கைளை, உன்னத ஆயத்த நிலமையிலுள்ள இராணுவ கப்பற்படைகளுடன் மீண்டும் மீண்டும் அச்சுறுத்திய போது, அவரது சொல் வன்மையையும் செயல் திறமை யைம் கண்டு ஐரோப்பாவே அஞ்சி நடுங்க ஆரம்பித்தது.
இரட்டை உடன்பாடு :
கைசர் பிறநாட்டு விவகாரங்களின் பொறுப்பையேற்ற ஒரு சில ஆண்டுகளுக்குள், பிசுமாக்கின் சிரமசாதனையின் விளைவான ஒப்பந் தங்கள் பயனிழந்து போயின. மூன்ருண்டுகளுக்குள் இரசியா செர்மன் நட்பை நிராகரித்து, பிரான்சுடன் உறவு கொள்ளும் முயற்சியில் இறங்கியது. ஆருண்டுகளுக்குள் இங்கிலந்து, செர்மனியின் முழு விரோதியானது. ஈராண்டுகளுக்குப் பின் ஏற்படும் யுத்தம் செர்மனி யுடன்தான் என்று அமெரிக்கா அறை கூவியது. 1907 ஆம் ஆண்டள வில் மூவர் கேண்மை; உடன்பாடு (Triple Entente) உதயமாயிற்று. இந்த இழப்புகளுக்குக் கைமாருக செர்மனி துருக்கியில் ஒரு புது நண் பனைத் தேடிக் கொண்டது.
பிசுமாக் ஒய்வு பெற்றதுடன் இரசியாவுடன் செய்யப்பட்டிருந்த மறு உத்தரவாத ஒப்பந்தம் மிகச் சிக்கலானது என்ற காரணத்தின் மேல் புதுக்கப் பெருது கை நெகிழப்பட்டது. இந்த உறவு கத்தரிக் கப்பட்ட பொழுது கிழக்கு ஐரோப்பிய விவகாரங்களில் தங்குதடை யின்றி ஒசுத்திரியாவுக்குப் பூரண ஆதரவு தரப்போவதாக செர்மனி வெளியிட்டது : இரசியா, உடனே தன் ஏகாந்த நிலையை உணர்ந் தது; பிரெஞ்சு-இரசிய கேண்மை ஏற்படுவதற்கு சாதகமான சூழ் நிலையும் தோற்றியது. பிரான்சு வலிமையுறும் எந்நேரத்திலும் அதை நசுக்க கிழக்கெல்லையில் செர்மனி தயாராய் நின்றது. இங்கிலந்துக் கும் பிரான்சுக்கு மிடையிலிருந்த உறவுகளும் நல்லுறவுகளல்ல ; எகித்து, மேற்கு ஆபிரிக்காவிலேற்பட்ட ஏகாதிபத்திய போட்டியில் இரு நாடுகளும் ஒன்றையொன்று பேரச்சத்துடன் எதிர்நோக்கி நின் றன. இங்கிலந்து, அபுக னரித்தானில் இரசியாவை எதிர்த்தது. பிரான்சும் இரசியாவும் தனிமையைப் போக்க ஆசித்தன ; அவற் றுக்கிடையே நிரந்தர கேண்மை வளரும் நிலையும் உதயமாயிற்று.

uer o an as st
Lufa C
வியன்கு
rSrirai క్షణరీతా6 ஒகததிரியா - அங்கேரி
1914-1918 போரின் முன் ஐரோப்பர்

Page 186

சர்வதேச உறவுகளும் நிகழ்ச்சிகளும் 337
1891 ஆம் ஆண்டு பிரெஞ்சுக் கப்பற்படை, குருென்சுதாத் (Kronstadt) என்ற துறைமுகத்தைத் தரிசித்தபொழுது இரசிய மக்கள் அன் பையும் அக்களிப்பையும் சொரிந்து அதை வரவேற்றனர் : ஆழ் கடல் நோக்கி இக்கப்பற்படையின் நங்கூரம் இறங்கியதுபோல, இரசிய-பிரெஞ்சு அரசுகளின் உறவும் ஆழ்ந்து நிலைத்தது. இவ் வுறவை சட்ட ரீதியான உடன்படிக்கையினல் உறுதிப்படுத்தும் நிலை மாத்திரமே எஞ்சி நின்றது. தொடர்ந்து இரசிய அபிவிருத்தித் திட் டங்களுக்கு பிரான்சு ஒரு கடன் நிதி கொடுத்து உதவியது. 1893 ஆம் ஆண்டு இரசியக் கப்பற்படை தூலான (Toulon) வந்து சேர்ந்த காலையில், இரசிய அதிகாரிகள் பரிசு நகரத்திற் கால் வைத்தபொழுது குதூகல வரவேற்பு அவர்களுக்குத் தரப்பட்டது. 1894 இல் இரு நாடுகளின் ஒப்பந்தமும் உருவாகி, மூன்றம் அலெக்சாந்தரின் மறை வுக்குப்பின் அடுத்த ஆண்டு தை மாதம் பிரசுரமாயிற்று. செர்மனி அல்லது செர்மன் உதவியுடன் இத்தாலி பிரான்சைத் தாக்குமாயின் இரசியா உறுதுணை புரிவதாகவும், செர்மனி அல்லது செர்மன் உதவி யுடன் ஒசுத்திரியா, இரசியாவைத் தாக்குமாயின், பிரான்சு பேரா தரவு அளிப்பதாகவும் உடன்பாட்டு வாசகங்கள் உரைத்தன. 1898 இல் சார் இரண்டாம் நிக்கலசும் பாரியாருமாக பிரசன்சை யடைந்து மூன்ரும் குடியரசைக் கெளரவித்தார்கள்.
இங்கிலந்தின் "மகத்தான தனிமைக் கொள்கை" :
1900 வரை இங்கிலந்து ஐரோப்பிய நட்புறவுகளின் சிக்கல்களிலிருந்து விலகி "மகத் தான தனிமைக் கொள்கை" (ple did Isolation) யைக் கையாண்டு இல் நீசியதுடன, தன் உண்மையான அனுதாபத்தையும் செர்மனியின் பக்கமே காட்டி வந்தது. பிரித்தனின் அரச குடும்பம் ஒகன்சொலன் குடும்பத்தினுடன் நெருங்கிய இரத்த உறவு கொண்டிருந்த மையினல், இரு நாடுகளுக்கிடையேயும் பலமான நட்பு ஏற்படுமென அமைச்சரும் பக்களும் எதிர்பார்த்தனர். ஆனல் புது நூற்றண்டில் இவ்வெண்ணம் மறைந்தது.
ஆங்கில-பிரெஞ்சு நட்புறவு :
பெரிய பிரித்தன் செர்மனியின் எதிரியாவதற்கும் பிரான்சுடன் நட்புறவு பூணவும், கைசரின் புதுக் கப்பற்படைத் திட்டம் மூலா தாரமாகியது. 1900 இல் உருவாக்கப்பட்ட செர்மன் கப்பற்படைச் சட்டம் பிரான்சு, இரசியா, இவற்றின் கப்பற்படைகளிலும் விசால மான ஒரு படையை செர்மனி திரட்டுவதற்குச் சித்தஞ் செய்வதை எடுத்துக் காட்டிற்று. இத் திட்டமானது தன் கடலாதிக்கத்தைச் சிதைக்க வல்லதென இங்கிலந்து அஞ்சியது . மிகவும் உணர்ச்சி மிக்க ஒரு தானத்தில் இங்கிலந்து தாக்கப்பட்டதன் காரணமாய், கப்பற்படைப் பிரச்சினையே அது முதல் இங்கிலந்தில் அதி முக்கியத் துவம் வாய்ந்த விடயமாயிற்று. நாட்டுப் பாதுகாப்பும் கடற்படைப் போட்டியும் நாட்டின் இரு கண்களாய் மதிக்கப்பட்டன. ஐரோப்
g_凸F 一24

Page 187
938 புது உலக சரித்திரம்
பிய அரசுகளுடன் இங்கிலந்து கொண்டிருந்த பகைமைகளிற் சில வற்றைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அஃது உணர்ந்தது. அதல்ை மதிநுட்ப அறிவும் அரசதந்திரத் திறனும் படைத்த அரசர் வட்டுவேட்டின் (Edward WII) துணையைக் கருவியாய்க் கொண்டு, இருபது ஆண்டுகளாய் கடின விரோதம் காட்டிய பிரான்சை நோக்கி இங்கிலந்தின் பார்வை திரும்பியது. 1904 ஆம் ஆண்டு, ஆங்கில -பிரெஞ்சுக் கேண்மை உடன்படிக்கை பூர்த்தியானது. 1883 முதல் எகித்தைப்பற்றி எழுந்த விவாதம், நியூபவுணிலாந்தின் மீன்பிடி உரிமை, சியாம், மடகசுக்கார், மேற்கு ஆபிரிக்கா என்பவற்றின் சிக்கல்கள் யாவும் சுமுகமாய்த் தீர்க்கப்பட்டன. பிரான்சு, எகித்தில் இங்கிலந்தின் முதன்மையை அங்கீகரித்தது : இங்கிலந்து மொறக் கோவில் பிரான்சின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டது.
தட்புறவின் பயன்கள் :
ஆங்கில-பிரெஞ்சு நட்புறவு இவ்விரு தேசங்களின் அரசியல் விவகாரங்களில் ஒரு புரட்சிகரமான நிகழ்ச்சியாகும். கால்வாயின் இரு புறங்களிலும் உடன்படிக்கை உற் சாகமாக வரவேற்கப்பட்டது. இதன் மூலம் இங்கிலந்து செர்மனியின் சார்பை விட்டுத் திரும் பியது ; ஆங்கில-பிரெஞ்சு ஒத்துழைப்பு உயர்ந்தது. அன்று ஆரம்பித்த ஒத்துழைப்பு இன்றுவரை சகல இடையூறுகளையும் வென்று உறுதியாக நின்று நிலவுகின்றது. பிரான் சின் இழந்துபோன தன்னம்பிக்கை வளர்ந்தது. மூவர் நட்புறலில் தனது நிலை பற்றி இத்தாலி, புனராலோசனை செய்யவேண்டுமென்று கட்டாயப் படுத்திற்று. எகித்திய விவ காரங்களில் இங்கிலந்து செர்மனியின் உறவை எதிர்பார்க்க வேண்டிய நிலையும் நீங்கிற்று, இரசிய-யப்பானிய யுத்த காலத்தில் இங்கிலந்துக்கும் இரசியாவுக்கும் எற்பட்ட மனப்பூசல் நீங்கி, அபிப்பிராய பேதங்கள் அகலக்கூடிய சூழ்நிலை உருவானது; 1907 இல் இரசிய உடன் பாடு உண்டாவதற்கும் மூவர் கேண்மை ஒப்பந்தம் முற்றுப் பெறுவதற்கும் வழி திறக்கப்பட்டது.
ஆங்கில-இரசிய நட்புறவு :
மூன்று ஆண்டுகளின் முடிவுக்குள் ஆங்கில வெளி நாட்டு விவ காரங்களில், இரண்டாவது சூழியல் புரட்சி 1907 இல் நடந்தேறி யது. 1907 ஆம் ஆண்டின் ஆங்கில-இரசிய நட்புறவானது, இர சிய-யப்பானியப் போர், 1905 ஆம் ஆண்டுகளின் மொறக்கோ நிகழ்ச்சி, 1906 ஆம் ஆண்டின் புது செர்மன் கப்பற்படைச் சட்டம் எனும் மூன்று காரணங்களின் விளைவாய் உருப்பெற்றது. இரசியா, யப்பானினல் தோற்கடிக்கப்பட்டு போட் ஆத்தரைக் கைவிட வேண் டிய நிர்ப்பந்தம் எழவே, அது தூரகிழக்கில் தன் ஆக்கிரமிப்புத் திட்டங் களையும் படர்ச்சி நினைவுகளையும் நிறுத்த வேண்டிய நிலைக்குள்ளானது. உண்ணுட்டுப் புரட்சியும் இரசியாவின் பார்வையை ஐரோப்பா பக் கம் திருப்பியது.

சர்வதேச உறவுகளும் நிகழ்ச்சிகளும் 339
மொறக்கோவும் தஞ்சியர் நிகழ்ச்சியும் :
ஐந்து ஆண் டு காலத்துள் இரு தடவைகள் வட ஆபிரிக்க பிரச்சினைகள் போர் மூளக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தின. மொறக்கோ ஒரு முகமதிய சுதந்திர மாகாணம் : அங்கு இரும்பு அகப்பட்டது : அன்றியும் அத்திலாந்திக்குக் கரையில் சிப்ருேல்றர் நீர ணைக் கருகாமையில் அதன் நிலையம் அமைந்திருந்தது ; ஆன ல் ஐரோப்பிய படர்ச்சியை தடைசெய்ய வல்ல வலிமை அதற்கிருக்க வில்லை. இக்காரணங்களால் சிபெயின், பிரித்தன், பிரான்சு, செர்மனி, இத்தாலி என்ற அரசுகள் மொறக்கோவின் மேல் சிரத்தை கொண் டன. அல்சீரியாவையும் தியூனிசையும் அடிப்படுத்தி சகாரா பால வனத்தினூடாக தன் தெற்கெல்லையை பரப்பிக் கொண்டு வந்த பிரான்சு, மொறக்கோவில் விசேட கவனம் செலுத்தியது. 1904 இல் ஏற்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் மொறக்கோமீது பிரான்சின் ஆக்கிரமிப்பை இங்கிலந்து ஏற்றதுடன், பிரான்சு தன் பிடியை உறு திப் படுத்தியது. சுலு தானுக்கு கடன் நிதி உதவியது ; சீர்திருத் தங்களை ஆரம்பித்தது : இராணுவம், பொருளாதாரம், நிதி என்ப வற்றின் மீது பிரெஞ்சு ஆதிபத்தியத்தை நிலை நாட்ட நடவடிக்கை கள் எடுத்தது. இச் செயல்கள், செர்மன் கைசரின் உள்ளத்தில் அச் சத்தை ஊட்டவே, பிரான்சும் சிபெயினும் செர்மனியின் வியாபார உரிமைகளைச் சிதைக்கப் போவதாய் குற்றஞ் சாட்டி, மொறக்கோ விவகாரங்களில் அவர் திடீரெனத் தலையிட்டார். 1905 மாச் மாதம், செர்மன் சக்கரவர்த்தி தஞ்சியரை (Tangier)த் தரிசித்து, சுலு தானின் சுதந்திரத்தைப் பிரெஞ்சு ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கப் போவ தாயும், வியாபார உரிமைச் சமத்துவத்தை நிலைநாட்டப் போவ தாயும் அறை கூவினர். பிரான்சின் உதவியை சுலுதான் நிராக ரித்து, மொறக்கோவின் எதிர் காலத்தை நிர்ணயிக்க ஒரு மாநாடு கூட்டப்பட வேண்டுமெனக் கைசரைக் கேட்டார். செர்மனியின் தலை யீட்டை பிரான்சு ஆட்சேபித்தது ; மாநாட்டுத் திட்டத்தை செர் மணி வற்புறுத்தியது ; மறுத்தால் போர் மூளுமென உணர் ந் த பிரான்சு, சற்றுத் தயங்கியது. இறுதியில் அமெரிக்காவின் நடு நிலைமை, மாநாட்டை ஏற்படுத்தி, அது 1906 சனவரி மாதம், அல்சசிரு சில் (Algeciras) கூடுவதற்கான ஆயத்தங்கள் பூர்த்தியாயின. செர்மனி மொறக்கோவில் ஒரு இராச தந்திர வெற்றியை ஈட்டிக்
கொண்டது.
அல்சசிருசு மாநாடு :
இரு பகுதியினருக்கும் பாதகமின்றி மாநாடு முடிவுற்றது. செர்
மன் தேசத்து வொன் பியூலோ (Won Bulow) மாநாட்டைப் பற்றிக்
குறிப்பிடும் பொழுது “நாம் வெற்றி பெறவுமில்லை, தோல்வியுறவு

Page 188
40 புது உலக சரித்திரம்
மில்லை" எனக் கூறினர். பிரெஞ்சு முதன் அமைச்சரும் அதே அபிப் பிராயத்தை வெளியிட்டார். மொறக்கோவில் பிரான்சுக்குச் சில சலுகைகள் வழங்கப்பட்ட அதே நேரத்தில், அதன் ஆக்கிரமிப்பு தடை செய்யப்பட்டது. மொறக்கோவின் 'திறந்த வாயில்" முறையை செர்மனி உறுதிப்படுத்தி, சர்வதேச பொறுப்பு நிலையுறுத்தப்பட்டது. ஆனல் சூழியற்றுறையில் செர்மனி தோல்வியே கண்டது. ஒசுத் திரியா ஒன்றைத் தவிர, வேறெந்த வல்லரசின் உதவியும் செர்மனிக்குக் கிட்டவில்லை. பிரான்சு, இரசியா, சிபெயின், பிரித்தன் யாவும் ஒன்று கூடி செர்மனியை எதிர்த்தன; இத்தாலியும் மூவர் நட்புறவில் மற் றைய இரண்டுக்கெதிரே தன் வாக்கை உபயோகித்தது. சமாதான தூதாக வந்த அமெரிக்காவும், திரை மறைவில் பிரான்சையே ஆதரித் தது. செர்மனியின் செயலால் ஆங்கில - பிரெஞ்சு உறவு அழிவு பெறுவதற்கு மாரு ய், ஆக்கம் பெற்றதுடன், இரசியா மட்டிலும் பிரித்தன் நல்லெண்ணெங் கொண்டது. இந்த முதல் சர்வதேச நெருக் கடியானது இங்கிலந்து, பிரான்சு, இரசியா, இத்தாலியெனும் நாடு களை ஒரு புறமாகவும் செர்மனி, ஒசுத்திரியாவை மறுபுறமாகவும் பிளவு படுத்தியது. இவ்வாருக பின்னர் வரும் போரின் அறிகுறிகள் போருக்கு முதல் ஒலிக்கும் முரசே போல் தென்படலாயின.
செர்மன் கடற்படை :
ஆங்கில-இரசிய கேண்மையின் மூன்ரும் காரணம் 1906 ஆம் ஆண்டின் செர்மன் கப்பற்படைத் திருத்தச்சட்டமாகும் (German Navy Amendment Law). இச் சட்டத்தினுல் செர்மனி வெளிநாட்டுக் கப்பற் படையை அதிகரிப்பதையும், கப்பற்படைச் செலவை உயர்த்துவதை யுங் கண்டு இங்கிலந்து வெகுண்டது. ஆங்கில-செர்மன் உறவுகளைச் சீர்திருத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியுறவே, 1907 இல் பிரித்தன் திடமாக இரசியாவின் பக்கம் சாய்ந்தது. அவ்வாண்டு ஆகத்து மாதம், இரு வல்லரசுகளுக்குமிடையே பேசியா, அபுகனித் தான், திபெத்து எனும் நாடுகளில் ஏற்பட்ட போட்டிகள் சிநேக மனப்பான்மையுடன் தீர்க்கப்பட்டன. இங்கிலந்து, இரசியா, பிரான்சு எனும் மூவரின் கேண்மை உடன்பாடு ஆக்கம் பெற்றது.
மூவர் கேண்மை செர்மனியில் ஏக்கத்தை விளைத்தது. இவ்வேக் கம் இங்கிலந்தின் காரணமாய் ஏற்பட்டதன்று. இங்கிலந்து பிரான் சுடன் கொண்ட உறவும், அல்சாசு உலொறேன் மாநிலங்களில் இரசி யாவுடன் கொண்ட தொடர்பும், போல்கன் பிரதேசத்தில் என்ன கெடுதிகளை விளைக்குமோ என்ற பேரச்சமுமே ஏக்கத்தின் அடித்தள மாய் அமைந்தன. இது முதல் செர்மனியின் கைசர், இங்கிலந்தின் அரசர் 7 ஆம் எட்வேட்டும், பிரான்சு, இரசியா, பிரித்தன், யப்பான் என்ற

சர்வதேச உறவுகளும் நிகழ்ச்சிகளும் 34
பகை நாடுகளைத் திட்டமிட்டு ஒன்று படுத்தித் திரட்டி செர்மனியைச் சுற்றி வளைத்து, வளர்ச்சியடையும் அதன் அதிகாரத்தை நசுக்க முயற் சிப்பதாக மீண்டும் குற்றஞ்சாட்டினர். செர்மனியினதும் கைசரின தும் ஆதரவாளர் இதனை ஆதாரமாய்க் கொண்டே அவரது செயல் களுக்கு ஞாயம் கூறுகின்றனர். போருக்காய கார்ணங்கள் ஒன்று சேர்தல் :
1907 ஆம் ஆண்டு முதல், ஐரோப்பா ஒன்றன்மீதொன்று அச்ச மும் ஐயமும் கொண்ட இரு தொகுதிகளாய்ப் பிரியவே, சமாதான அமைதியைச் சிதைக்க வல்ல ஏதுக்களும் அரசியல் நிலையில் வந்து குவிந் தன. இராணுவ பலமும் கடற்பலமும் இரு தொகுதிகளிலும் அதி கரிக்கப்பட்டன. செர்மனியின் கடல் ஆதிக்க முயற்சியை இங்கிலந்து அங்கீகரிக்க மறுத்தது. அல்சாசு உலொறேன் மாநிலங்களை பிரான்சு மீட்க நோக்கங்கொண்டது. மொறக்கோ நெருக்கடி போன்ற சம்பவங்களும் இடையிடையே தலைகாட்டின. போல்கன் நாடுகளிடையே எழுந்த பொருமை நிகழ்ச்சிகளில், ஒசுத்திரியாவும் இரசியாவும் தொடர்பான எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. போர்க் கருமேகங்கள் சுற்றிச் சுழன்று ஐரோப்பாவைச் சூழ்ந்தன ; அடுத்த ஏழு ஆண்டுகளில் சர்வதேச அமைதியைக் குலைக்கவல்ல நிகழ்ச் சிகள் எங்கும் தலையெடுத்தன. அகதிர் நிகழ்ச்சி :
1911 ஆம் ஆண்டு மொறக்கோப் பிரச்சினை மீண்டும் சர்வதேச அரங்கில் ஏறியது. அல்சசீருசில் விதிக்கப்பட்ட தடைகளை உதறி யெறிந்து மொறக்கோவை அடிப்படுத்தத் திட்டமிட்ட பிரான்சு, உண்ணுட்டுக் குழப்பமெனும் காரணத்தைக் காட்டி, தன் துருப்புக் களை மாகாணத்துக்குள்ளே பிரவேசிக்கச் செய்தது. உடனே செர் மணி ‘பாந்தர்” (Panther) என்ற போர்க் கப்பலையுப் பேளின் என்ற கப்பலையும் அகதீர் துறைமுகத்துக்கனுப்பியது ; சர்வதேச நெருக்கடி ஏற்படும் தருணமும் கிட்டியது. நடைபெற்ற செயல்கள் அல்சசிருசு மாநாட்டு முடிபுகளுக்கு முற்றிலும் மாமுனவை என்று இங்கிலந்து பலமான ஆட்சேபனையைக் கிளப்பியது ; இலொயிட் யோச்சு (Lloyd George) என்பவர் “நாம் போர்க்களத்திலே குதிக்கவும் தயர்ர்" என்று செர்மனியைக் கலக்கினர். செர்மனியின் இராணுவ ஆயத் தங்கள் பரிபூரணம் பெரு த காரணத்தினல், செர்மனி மொறக்கோ லில் பிரான்சின் ஆதிபத்தியத்தை விட்டுக் கொடுத்தது ; இச்சம்ப் வம் செர்மனியின் பெரும் தோல்வியாய் முடிந்தது. 1905 - 6 ஆம் ஆண்டின் தஞ்சியர் நிகழ்ச்சி (Tangier Incident) போல் இதுவும் மூவர் கேண்மைக்கு உறுதியளித்தது. 1912 இல் பிரான்சு மொறக் கோவை ஒரு பாதுகாப்பு நாடாக்கியது.
A 24

Page 189
342 புது உலக சரித்திரம்
1911 செற்றம்பரில் அகதீர் நெருக்கடியைத் தனக்குச் சாதக மாக்கிக் கொண்டு இத்தாலி துருக்கியின் மீது பாய்ந்து, ஒராண்டுக் குள் திறிப்போலியைக் (Tripoli) கைப்பற்றியது.
ஒசுத்திரியாவும் போல்கன் நாடுகளும் :
1912 ஒற்ருேபர் மாதம் முதலாவது போல்கன் போர் மூண்ட நேரம் முதல், உலகப் போர் வருகை வரை ஐரோப்பிய வல்லரசு களின் பார்வை முழுவதும் கிழக்கு ஐரோப்பாவிலேயே குத் திட்டு நின்றது. 1912-13 ஆம் ஆண்டுகளின் போல்கன் பிரச்சினைகள் தீர்க் கப்பட்ட வரலாற்றை முந்திய ஓர் அத்தியாயத்திற் காண்க.
இவற்றிலிருந்து ஒசுத்திரியாவுக்கும் சேபியாவுக்கும், ஒசுத்திரியா வுக்கும் இரசியாவுக்கும் இடையே ஏற்பட்டிருந்த ஐயமும் அச்சமும் குறைவுபடவில்லை. “நான் ஒர் உலகப் போரைக் காணப் போவ தில்லை ; ஆனல், நீர் காண்பீர் ; அதுவும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்தே கிளம்பும்" என்று பிசுமாக் பாலினுக்குக் (Balin) கூறிய தீர்க்க தரி சன மொழி நிறைவேறும் காலம் நெருங்கி வந்தது. இங்கிலந்தும் செர்மன் கடற்படையும் :
இவற்றிற் கிடையில் ஆங்கில-செர்மன் உறவு நிலை மோசமாயிற்று. 1912 பெப்ரவரியில் பிரித்தனின் போர் அமைச்சர் அல்தேன் பிரபு (Lord Haldane) செர்மனிக்குச் சென்று, ஓர் உடன்பாட்டை ஏற்படுத்த முயற்சித்துத் தோல்வி கண்டபின், படைகளின் பலத்தைப் பெருக்கு வதில் இரு நாடுகளும் ஒன்றை யொன்று முந்தி நின்றன. 1912 யூனில் புது செர்மன் கப்பற்படைச் சட்டம் யுத்தக் கப்பல்களையும் நீர்மூழ்கிகளையும் அமைக்கத் திட்டமிட்டது. 1914-15 ஆம் ஆண்டு களில் பிரத்தானிய கப்பற்படைச் செலவுத் திட்டம் 20 இலட்சம் பவுண் உயர்ந்தது. தரைப்படை ஆயத்தமும் ஆயுதச் சேகரிப்பும் உச்ச நிலையையடைந்தன.
1912-13 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இரு புதுச் சட்டங்களின் விளைவாய் செர்மன் படைப் பலம் பல இலட்சங்களுக்கு மேல் உயர்ந் தது. இரசியாவும் பிரான்சும் இவற்றைப் பின்பற்றி, தங்கள் படைப் பலத்தையும் பெருக்கின. சுருங்கக் கூறின், எதிர்காலக் குருதி வெள் ளத்தை நிரப்புவதற்காய் வல்லரசுகள் ஆயுதங்களையும் கருவிகளை யும் திரட்டிக் குவித்தன. சரசேவோக் கொலை :
இவ்வாறு போருக்கு ஆயத்தமாக நாடுகள் யாவும் திட்டங்கள் தீட் டிக் கொண்டிருக்கும் தருணத்தில் பொசினியாவில் நிகழ்ந்த ஒரு சம் பவமே உலகப் போரின் உடன் காரணமாய் அமைந்தது. தன்

r A. கி. உ محم“
N N్స
๙ {*சின்ன
"”' ” : ܬ గో
à 。豆 2_تی -- ص
--۔ ۔ ۔ حــم
یک
9、
2,
§ಜ್ಜಿ Nji.
& N. VS
1912 இல் போல்கன் தீபகற்பம்

Page 190

சர்வதேச உறவுகளும் நிகழ்ச்சிகளும் 343
கிழக்கு எல்லையைப் படரச் செய்வதில் நெடுங் காலமாய் நினைவு பூண்டிருந்த ஒ சுத் தி ரியா, தன் ஆசை நிறைவேறு தற்குத் தடை யாக சேபியாவும், மொன்றிநெகிரோவும் வழி மறித்து நிற்பதைக் கண்டு மனம் புழுங்கிக் கொண்டிருந்தது. இச் சூழ் நிலையில் 1914 ஆம் ஆண்டு யூன் 28 ஆம் நாள், சேவிய மாணவனெருவன் ஒசுத் திரிய நாட்டுப் பட்டித்து இளவரசன் பிரான்சு பேடினந்தையும், (Franz Ferdinand) அவரது பாரியாரையும் பொசினியாவின் தலை நகரான சரசேவோ எனுமிடத்தில் சுட்டுக் கொன்ருன். அந்த ஆரம்ப வெடி அகில உலகப் போரின் வருகைக்கு அறிகுறியாய் "எதிர்பாராத விபத் துக்களின் அத்தியாயத்'தைத் தொடக்கி விட்டது.
ஒசுத்திரியாவின் இறுதிக் கூற்று :
ஒசுத்திரிய அரசாங்கம், ஒரு விசாரணையை நடாத்தி சிலாவிய மக்களை ஒசுத்திரிய-அங்கேரிய ஆட்சியிலிருந்து பிரிப்பதற்கு சிலாவிய அரசாங்கமும் அதன் உயர் அதிகாரிகளும் செய்த பிரசாரமே கொலை யின் காரணமென முடிவு செய்தது.
ஒசுத்திரியா போல்கன் பிரதேசத்தில் தன் செல்வாக்கை நிலை நாட்டுவதற்கு சேவிய நச்சுப் பிரசாரங்களை அடக்கவேண்டுமென்று தன் நண்பன் செர்மனியுடன் கலந்தாலோசித்தது. ஒசுத்திரியாவுக்கு சுயாதீனத்தை அளித்து, சேபியாவைத் தண்டிக்க ஐரோப்பிய வல் லரசுகள் அத்தருணம் தலையிடாதபடி செர்மனி பாதுகாப்பளிக்க வேண்டுமென்பதே அவர்களது தீர்மானத் திட்டமாகும். இவ்விடயம் ஒசுத்திரியாவையும் சேபியாவையும் விட்டு வெளியே பரவலாகாதென் றும் முடிபு செய்தன. ஒரு மாதம் கடந்தது. ஏலவே செய்யப் பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கைசர் நோவேக் கடலுக்கு உல்லா சப் பிரயாணத்துக்குப் புறப்பட்ட பின்பு, 1914 யூலை 23 இல், தான் கூறும் நிபந்தனைகளை 48 மணி நேரத்துள் ஏற்கவேண்டுமென்று சேபி யாவுக்கு ஒசுத்திரியா ஒரு உக்கிரமமான இறுதி எச்சரிக்கையை விடுத்தது. யூலை 25 இல், ஒருசில நிபந்தனைகளைவிட மிகுதியை வர வேற்கிருேம் என்று சேபியா பதிலிறுத்தது. ஒசுத்திரியா பதிலை அங் கீகரிக்க மறுத்துத் தன் தூதமைச்சரை பெல் கிரேடிலிருந்து திருப்பி யழைத்தது. 26 ஆம் நாள், ஒசுத்திரிய-அங்கேரிய இராணுவத்தின் ஒரு பகுதியினர் போருக்குத் தயாராகினர். 28 ஆம் நாள் சேபியா மீது போர் பிரகடனம் தெரிவிக்கப்பட்டது.
இரசியாவும் சேபியாவும் :
ஒசுத்திரிய-சேபிய நெருக்கடியின் அதிர்ச்சி ஐரோப்பா எங்கும் உணரப்பட்டது. ஒசுத்திரிய எச்சரிக்கையின் படர்ச்சித் திட்டங்களைப் பார்த்த இரசியா, தன்னெண்ணங்கள் பாழடைவதைச் சகிக்க முடி

Page 191
344 புது உலக சரித்திரம்
யாது, சேபியாவின் நலனைத் தன் நலமாய்க் கருதியது. “சேபியாவின் எதிர் காலத்தைப் பற்றி எத்தருணத்திலும் இரசியா கவலை கொள்ளா திருக்க மாட்டாது' என்ற இரசிய சாரின் தந்தி யூலை 27 ஆம் நாள் சேபியாவுக்குக் கிடைத்தது. அதே தருணத்தில் ஒசுத்திரிய துருப்புக் கள் சேபியாவினுள் பிரவேசித்தால், இரசியா போரில் தலையிடத் தயங்காது, என்ற எச்சரிக்கையும் ஒசுத்திரியாவுக்குக் கிடைத்தது.
கிறேயின் சமாதான முயற்சியின் தோல்வி :
பிரித்தனின் கிறே பிரபு (Lord Grey), அமைதியின் உருவம். மூளப் போகும் போர்ச் சிக் கலை முளையிலே கிள்ளி யெறிவதற்கும், உலக அமை தியை நிலைநிறுத்துவதற்கும் சர்வதேச மாநாடு அகத்தியமென்று தன் ஆலோசனையைக் கூறினர். ஆல்ை செர்மனி தான் ஒசுத்திரியாவுக்குக் கொடுத்த 'வெற்றுக் காசோலை'யால் கட்டுப்பட்டு சிக்கலில் தலையிட மறுத்தது. பேச்சு வார்த்தைகள் மூலம் ஒசுத்திரியாவையும் இரசியா வையும் சாந்தப் படுத்துவதற்குக் கைசர் சித்தமாயிருந்தார். வெறும் சொற்களின் மூலம் ஒசுக் திரிய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த முடியு மென்ற நம்பிக்கை இரசியாவுக்கு ஏற்படவில்லை. படைகளை இரசியா அணிவகுத்ததைக் கண்டு செர்மனி அதிர்ச்சியடைந்தது. ஆயத்த மில்லா நிலையில் இரசியாவை எதிர்த்துத் தாக்கி வெற்றி கொள்ளுவது இலகு, என்று செர்மன் இராணுவ நிபுணர்கள் கைசருக்கு ஆலோசனை கூறினர். ஆகத்து மாதம் முதலாம் நாள், இரசியர் மீது செர்மனி யுத் தப் பிரகடனம் செய்தது. “ஐரோப்பிய விளக்குகள் அணைகின்றன’ என கிறே பிரபு கண்கலங்கிக் கூறினர். இரசியாவின் உதவிக்குச் செல்லுமுன் ஆவணி 3 ஆம் நாள் பிரான்சின்மீதும் செர்மனி போர்க் கன தொடுத்தது. பெல்சிய ஆக்கிரமிப்பும் இங்கிலத்தின் போர்ப்பிரவேசமும் :
பிரான்சைத் தாக்க, நடு நிலை வகித்த பெல்சியமும் இலக்சம் பேகும் பலியாயின. பிரான்சின் எல்லைகளுக்குள் பாய்வதற்கு பாதை விடும்படி செர்மனி பெல்சியத்தை மிரட்டியது. பெல்சுயம் அசைந்து கொடுக்காது, “பெல்சியம் ஒரு நாடு ; பாதையன்று," என வீர விடை பகர்ந்தது. உடனே யோச்சு மன்னரிடம் உதவி கோரி தந்தி பறந்தது. பெல்சியத்தின் நடுநிலையை மதித்து செர்மன் அரசாங்கம் கெளரவமாக நடக்குமென பன்னிரெண்டு மணித்தியாலங்களுக்குள் உறுதி மொழி யனுப்பும்படி சேர் எட்வட் கிறே இறுதி எச்சரிக்கை விடுத்தார். இதற் கிடையில் செர்மன் துருப்புக்கள் பெல்சியத்தின் எல்லைகளைக் கடந்துவிட் டன. இந்த நெறிகெட்ட நிகழ்ச்சியைக் காரணமாய்க்கொண்டு ஆகத்து மாதம் 4 ஆம் நாள், இங்கிலந்தும் போர்க்களத்தில் குதித்தது.

முதலாம் உலகப் போர் 545
அதிகாரம் 21 முதலாம் உலகப் போர் (1914-1918)
முதல் உலக யுத்தம், நடந்தேறிய பிரமாணங்களோ அதி விசால் மானவை. அப்போரின் உக்கிரமமான தாக்குதலைப் போல் முன்பு எந்த நூற்ருண்டிலும் உலகம் கேட்டதுமில்லை, கண்டதுமில்லை. ஒரே தருணத்தில், காட்டுத் தீபோற் பரவிய இக்குரூர நிகழ்ச்சி இனம், மொழி, மதம் எனும் சகல வேறுபாடுகளையும் மீறி அகில உலகத்திற்கும் பரவியது. உலக வல்லரசுகளின் குடியேற்றங்கள் வியா பித்துக் கிடந்த ஆபிரிக்கா, எகித்து, இந்தியா, ஆசியா, ஒசுத்திரே லியா, கனடா, தூரகிழக்கில் சீன, யப்பான், தூர மேற்கில் ஐக்கிய அமெரிக்க இராச்சியங்கள், தென் அமெரிக்கக் குடியரசுகள் யாவும் முந் தியோ பிந்தியோ போரில் பிரவேசித்தன. தரையிலும், கடலி லும், ஆழ்கடலிலும், ஆகாயத்திலும் நடந்தேறிய போர்களில் விஞ் ஞானம் பல அதிசயத்துக்குரிய மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது. போர் செல்லச் செல்ல கொடிய துன்பங்களையும், பயங்கரமான அழிவையும் ஆக்க வல்ல பல புதுக் கருவிகளை எதிரிகள் கையாண் டனர். முன்னெல்லாம் ஆயிரக் கணக்கானேர் போரிட்ட இடங்களில் இப்பொழுது கோடிக்கணக்கானேர் படை தாங்கினவராய் ஒருவரோ டொருவர் பொருதினர். ஆண்கள், பெண்கள், வெள்ளை, கறுப்பு, மஞ்சள் எனும் பேதங்களின்றி மக்கள் போர் புரிந்தனர்.
மேற்குப் போர்முனை : பெல்சியத்தின் வீழ்ச்சி :
போரை ஒரே அடியில் வெல்ல எண்ணங் கொண்ட செர்மனி பிரான்சின் மீது படையெடுத்து, போரை ஆரம்பித்தது.
பெல்பட் (Belfort) முதல் வேடன் ஈருக நிரையாக அமைக்கப் பட்டிருந்த கோட்டைகள் பிரான்சின் கிழக்கு எல்லைக்கு உறுதியான பாதுகாப்பளித்தன ; எனவே செர்மனி, பிரான்சை ஒரு பாதுகாப்பு மின்றித் திகழ்ந்த பெல்சியத்தினூடாகத் தாக்கத் திட்டமிட்டது. போரின் ஆரம்ப நிகழ்ச்சியாக அதி பெரிய செர்மன் சைனியங்கள் பெல்சியத்தினுள் நுழைந்தன. அவைகளின் எண்ணிக்கையையும், முன்னேற்றத்தின் வேகத்தையும் கண்டு, நேச நாடுகள் திகிலடைந் தன. இவீச்சு (Liege) வீரத்துடன் போர் புரிந்தது ; ஆனல் செர் மானியர் அதற்கெதிராகப் புதுப் பீரங்கியை (Siege Cannon) உப யோகித்து, அந்நகரத்தின் கோட்டைகளே பாக்கு வெட்டியில் வைத்து கொட்டைகளை நொருக்குமாப் போலத் தவிடுபொடியாக்கினர். இப் புதுக் கருவியை செர்மானியர் ஒர் இரகசியமாக நன்கு பாதுகாத்து

Page 192
346 ւI3;] உலக சரித்திரம்
வைத்திருந்தமையினுல், அதன் அழிவுச் சக்தியைக் கண்டு நேசநாடு கள், நிலை தடுமாறின. ஆகத்து 15 இல் இலீச்சு அடிபணிந்தது ; தென்கிழக்கு பெல்சியம் எதிரிகளின கைவசமாயிற்று. ஆகத்து 20 இல் பெல்சியத்தின் தலை நகரம், பிற சல்சு சரணடைந்தது ; அரசனும் படைகளும் அந்துவேப்புக்குப் பின்வாங்கின. பிரெஞ்சு, பிரிட்டிசுப் படைகள் பெல்சியத்தில் வந்திறங்கி, பல இடங்களில் வீரப்போர் புரிந்தன ; ஆனல் அவை எதிரிகளின் மின்னல் வேக முன்னேற்றத் தைச் சற்றுத் தாமதித்தனரே தவிர, தடைசெய்ய முடியவில்லை. சாளருேய். மொன்சு, நாமூர் முறையே ஒன்றன்பின் ஒன்ருக வெற்றி கொள்ளப்பட்டன ; நேச நாடுகளின் படைகளும் பின்வாங்கின. ஆகத்து முடிவில் செர்மானியர் பிரான்சுக்குள் புகுந்து, இலெல்லைத் (Lile) தாக்கினர். செர்மன் படைகள் கரை புரண்டெழும் அலை களைப் போன்று, எல்லாத் தடைகளையும் மீறி பரிசை நோக்கி ஊடு ருவிச் சென்றன. செற்றம்பர் ஆரம்பத்தில் அவை பரிசிலிருந்து பதி னைந்து மைல் தூரத்துக்குள் வந்து முகாமிட்டு நின்றன. தேச மன் றம் பரிசிலிருந்து, போடோவுக்கு மாறிற்று ; பிரான்சில் பீதி உண் டாயிற்று. மாண் யுத்தம் :
செர்மானியாரின் தொடர்பான முன்னேற்றத்துக்கு மாண் போரில் (Battle of the Marne) (up5sib 55 GOL GT sibu "Lág. LDT Gðior B5 gu 976ör தென் புறமாக நேச நாடுகள் ஒரு பலமான அணிவகுப்பை அமைத்து, செர்மனியரை உறுதியுடன் எதிர்க்கத் திட்டமிட்டன. செர்மனியர், இவ்வெதிர்பாராத எதிர்ப்பை தகர்த்தெறிவதற்கு நான்கு நாள்க ளாக அல்லும் பகலும் ஒய்வின்றித் தாக்கினர் ; ஆனல் நேச நாடு களின் நிலைகள் நிலைதளராது நிலைத்தன. இவ்வாறு செர்மனியின் பரிசை நோக்கி, ஆரம்பிக்கப்பட்ட *ஓட்டம்" தோல்வியடையவே, செர்மன் படைகள் அயின் (Aisne) நதியின் எல்லைவரை பின் வாங்கி, அகழிகளையும் முள்ளுக்கம்பித் தடைகளையும் அமைத்துத் தம் நிலைகளை உறுதிப்படுத்துவதில் முனைந்தன. செற்றம்பர் மாதம், எதிரிகள் ஒரு வரை யொருவர் பலமாகத் தாக்கி, ஒரு பலனையும் காண முடியாமற் போகவே, தாக்குவதிலும் பார்க்க, பாதுகாப்பதே சிறந்த போர் உபா யம் என உணர்ந்து கொண்டன. "அகழ்ப் போர்’ (Trench Warfare) முறையும் ஆரம்பமானது. முட்கம்பத் தடைகளினலும், எந்திரத் துப்பாக்கிகளினலும் பாதுகாக்கப்பட்ட அகழிகளை மேற் கொள்ள முடியாமற் போகவே, நதியின் இரு புறங்களிலும், ஒரு சமநிலை உரு வாகியது ; தம் அரண் செய்யப்பட்ட அகழிகளை நதிக்கு வடக்கேயும் தெற்கேயும் நீடிக்கும் போட்டியும் ஏற்பட்டது. 150 மைல்களுக்கப் பாலிருந்த பிரிட்டிசுக் கால்வாய்த் துறைமுகங்களை யார் முதற் கைப்

முதலாம் உலகப்போர் 347
பற்றுவது என எதிரிகள் போட்டிபிட்டு விரைந்தன. செர்மானியர், தாம் அவற்றை அடிபணியப் படுத்தின், கால்வாயின் உபயோகத்தை யும், பிரிட்டிசுத் துருப்புக்களினதும் தளபாடங்களினதும் போக்கு வரவையும், பொருளாதாரத் தடையை விதிக்கவும் நன்கு பயன் படு மென அறிந்தவர்கள். அத் துறைமுகங்களை வெற்றி கொள்ள செய் யப்பட்ட முயற்சியுடன் வடக்கே இரண்டாவது போர் முனை திறந்தது. F'LufŮ GUTT :
செர்மனியர், ஒற்ருேபர் 9 இல் சரமாரியான குண்டுகளைப் பொழிந்து, அந்துவேப்பைக் கைப்பற்றினர் : பெல்சியம் முழுமையாக சரணடைந்தது. அதன் பின் நடந்தேறிய ஈப்பர் (Ypres) போரில் செர்மனியர் பின் வாங்கினர். மாண் போர், முதல் செர்மன் படை யெடுப்பைத் தடை செய்தது போன்று, ஈப்பர் யுத்தம் இரண்டாவது படையெடுப்பை நிறுத்தி வைத்தது. இடன்கேக்கு, கலே துறைமுகங் கள் அந்நிபரின் கைகளிலிருந்து பாதுகாக்கப் பெற்றன. எனினும் போர் மூண்ட மூன்று மாத காலத்தினுள் செர்மனியர் ஈட்டிய வெற்றிகள் அதி விசாலமானவை. பெல்சியம், நிலக்கரியும் இரும்பும் நிறைந்த வட பிரான்சு என்பவை போரின ஆரம்பத்திலேயே செர் மனிக்குச் செந்தமாயின. கிழக்குப் போர் முனை : தனன்பேக்குப் போர் :
மேற்றிசையில் பிரான்சுடனும் பிரித்தனுடனும் போர் புரிந்த அதே காலத்தில், செர்மனி, கிழக்கே இரசியாவுடனும் சமர் புரிய வேண்டிய அவல நிலைக்குள்ளாயிற்று. செர்மன் படைகள் தம் முழு அவ தானத்தை மேற்கு முனையில் செலவிட்டதைப் பயன் படுத்த திட்ட மிட்ட இரசியா, ஆகத்து 7 இல் ஐந்து இலட்சம் இரசியப் போர் வீரர்களை கிழக்குப் பிரசியாவின் மீது படையெடுக்குமாறு கட்டளை பிறப்பித்தது. அவை அந்நாட்டின் பெரும் பகுதியை வெற்றி கொண்டு, *கோனிக்க பேக்” (Konigsberg) 5&H Tub GNJ GOUr (p6ör(36or sólaw. கிழக்கே புது அபாயத்தைக் கண்ட செர்மனி, மேற்கிலிருந்த சில படை களைக் கிழக்கேயனுப்பிற்று ; வொன் கின்டன்பேக் (Won Hindemburg) இரசிய படைகளை தனன்பேக்குப் போரில் (Battle of Tannenburg) பரிபூரணமாக வெற்றி கொண்டார் ; 80,000 கைதிகளும், பல துப்பாக் கிகளும் தளபாடங்களும் செர்மனிக்குச் சொந்தமாயின. ஒசுத்திரியாவின் படுதோல்வி :
செர்மனி, தனன்பேக் போரில் ஈட்டிய வெற்றியின் மகிமை ஒசுத்
திரிய-அங்கேரிய பலவீனத்தினல் மங்கியது. இரசியா கிழக்குப் பிரசி யாவை ஆக்கிரமிக்க, ஒசுத்திரியா இரசியாவின் மேல் படையெடுத்து,

Page 193
348 புது உலக சரித்திரம்
போலந்தின் கேந்திர தானங்களைக் கைப்பற்ற முயன்றது. இரசியா, போலந்துக்குச் சுயாட்சி தருவதாக வாக்குப்பண்ணி, பத்து இலட்சம் போல்களை ஒசுத் திரியருக் கெதிராகத் திருப்பி விட்டது. ஒசுத்திரிய படைகள் பின் வாங்கின : இரசியர் அவைகளைத் துரத்திச் சென்று கலீசியாவை ஆக்கிரமித்தனர்.
மறு முனையில், ஒசுத்திரியா, சேபியா மேல் நடாத்திய படை யெடுப்பும் படுதோல்வியிலேயே முடிவடைந்தது. சேபியர் தம் எல்லை களைக் காத்து, டனியூப் நதிவரை ஒசுத்திரியரைத் துரத்தியடித்தனர்.
கிழக்கே அகழ்ப் போர் :
தனன்பேக்கு பெரு வெற்றிக்குப்பின் கின்டன்பேக், போலந்தின் வழியாக இரசியா மேல் ஆரம்பித்த எதிர்த் தாக்குதல், உவாசோவுக்கு மேற்கே தடைப்பட்டது. 1914 ஆம் ஆண்டின் முடிவில், மேற்கில் போன்று கிழக்கு முனையிலும் போல்திக்குக் கடலிலுள்ள இறீகா முதல், போலந்துக்கும் கலீசியாவுக்குமூடாக கரு ங் கடல் வரை 1125 மைல் நீளமான போர்முனையில் சமநிலையும் அகழ்ப் போர் முறையும் உருவாகின.
கடற் போர் :
இரு எதிரிகளுக்கும் கடற்பலம் அதி முக்கியத்துவம் வாய்ந்தது. 1913 இல் போர் மூண்ட காலத்தில், செர்மன் கடற்படை நிர்மா னிப்புத் திட்டங்களும், ஏற்பாடுகளும் பூர்த்தியில்லாத நிலையிலேயே யிருந்தன. எண்ணிக்கையிலும் பலத்திலும் அதிகமான கப்பல்களைக் கொண்ட பிரிட்டிசுக் கடற்படை, செர்மனியை அதன் குடியேற்றங்க ளிலிருந்து துண்டித்தது. ஆயத்தமின்மையினல், பூரண ஆச்சரியத்தில் அகப்பட்ட செர்மனி, தன் கடல் கடந்த குடியேற்றங்களையும் வெளித் துறைமுகங்களில் தங்கி நின்ற கப்பல்களையும் பாதுகாப்ப தில்லையெனத் தீர்மானித்தது.
தம் நாட்டை அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்தல், தன் படைகளை பிற நாடுகளுக்குக் கொண்டு செல்லல், வணிகக் கப்பல் களின் போக்குவரவைப் பாதுகாத்தல் எனும் தொண்டுகளுடன் செர் மன் கப்பற் படையையும், செர்மன் கரையோரங்களேயும் முற்றுகையிட பிரிட்டிசுக் கடற்படை பயன்பட்டது. மேலும் அஃது பிரித்தனின் வியாபாரக் கடற்பாதைகளைப் பாதுகாக்கவும், கள்ள வியாபாரத் தைத் தடை செய்யவும் உதவிற்று. அகில உலகத்தின் செர்மன் வணிகம் இங்கிலந்தின் சொந்தமானது. மத்தியதரைக் கடலில் பிரெஞ்சுக் கப்பற்படை காவல் புரிந்தது.

முதலாம் உலகப் போர் @49
செர்மனியின் கப்பற்படை செர்மன் நீர்களுக்குள்ளேயே முற்றுகை யிடப் பட்டமையினுல் கடற்போர்கள் மிகக் குறைவாகவே நடை பெற்றன. செர்மனிக்குத் திருப்பியழைக்கப்படாத யுத்தக் கப்பல் களே அதி கூடுதலான கெடுதிகளை விளைவித்தன. இவற்றுள் பேர் பெற்றவை எம்டன் (Emden), காள் சுறு என்ற இரண்டுமாகும். எம் டன், பதினன்கு பிரிட்டிசுக் கப்பல்களை ஆழ்கடலில் மூழ்கடித்த பின்பே கைப்பற்றப்பட்டது.
செர்மன் குடியேற்றங்கள் :
உலகின் பல பாகங்களில், நேசநாட்டுப் படைகள் செர்மன் குடி யேற்றங்களைத் தாக்கின ; பிரித்தன், தென் மேற்கு ஆபிரிக்காவை யும், கிழக்கு ஆபிரிக்காவையும் கைப்பற்றிற்று தோகோலந்து, கமறுTன்சு என்பவை பிரெஞ்சினரின் உடைமைகளாயின. யப்பான் ஆகத்து 23 இல் செர்மனிக்கெதிராகப் போர்ப் பிரகடனம் செய்து, பசிபிக் சமுத்திர செர்மன் குடியேற்றங்களை, விசேடமாக கியாச்செள துறைமுகத்தையும், சந்துங்கில் (Shantung) செர்மன் பகுதியையும் ஆக்கிரமித்தது.
யப்பானின் பகைமைக்கும் குடியேற்ற நாடுகளை இழந்தமைக்கும் கைம்மாருக செர்மனி 1914 நவம்பரில் துருக்கியின் ஆதரவைப் பெற்றது.
இங்கிலந்தும் பொதுநலவமைப்பும் :
மூண்ட போரின் முன், பிரித்தானியப் பொது நலவாயம் சின்னபின்னமாகப் பிளவுபடுமென அன்பர்களும் எதிரிகளும் எதிர் பார்த்த எண்ணங்கள் யாவும் பலியாமற் போயின. உலகத்தின் நாலா பக்கங்களிலும் சுயாட்சி பெற்ற ஆணிலங்கள், தம் தாயகத் துக்கு, போர் வீரர்களையும், பண, பொருள் உதவிகளையும் செய்ய முன்வந்தன. கனடா, ஒசுத்திரேலியா, நியூ சீலந்து என்ற மூன்று ஆனிலங்களும் மாத்திரமே பத்து இலட்சம் இராணுவ வீரர்களை ஈந்தன ; இந்தியா பதினைந்து இலட்சம் விசுவாசமுள்ள படை யினரை பிரித்தனின் நலனுக்காக உதவியது.
1915 ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் :
நேச நாடுகளுக்கு விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் மலர்ந்த 1915 ஆம் ஆண்டு, ஒரு மாயையாகவும், ஈற்றில் கெடுதி நிறைந்த தாகவுமே முடிந்தது. மாச் மாதம், மேற்கு முனையில் நியூவ் சப்ப வில் (Neuve Chapelle) நேச நாடுகள் ஈட்டிய ஒரு சிறு வெற்றி, அவர்களின் நம்பிக்கையை வானளாவ உயர்த்தியது ; செர்மன்

Page 194
350 புது உலக சரித்திரம்
வரிசைகளை எவ்வாருவது துளைத்து விடலா மென்றே அவை விசுவசித் தன. ஆனல் செர்மானியர், தீயுடனும் நச்சுப் புகையுடனும் நான்கு கிழமைகளாக இரண்டாவது ஈப்பர் போரை மிக உக்கிரமமாக நடாத் தினர். பிரித்தானியர், ஏராளமான பொருள், ஆட்சேதத்துடனேயே தம் நிலைகளைப் பாதுகர்க்க முடிந்தது.
யூனில் பிரிட்டிசுப் படைகள், செர்மானியரை ஆட்டோயிசு (Artois) எனுமிடத்தில் பலமாகத் தாக்கி, ஒரு பயனையும் காணுது போயினர் ; செற்றம்பர் மாதம் மீண்டு மொரு முறை தர்க்கி, நிறைந்த ஆட்சேதத்துடன் தோல்வியடைந்தனர்.
கிழக்கு முனை :
கிழக்கு முனையிலும் புது வருடம் நேச நாடுகளுக்கு வெற்றிகளு டனேயே ஆரம்பித்தது. துருக்கர், ஆமீனியாவின் வழியாக காக்கே சியன் மாகாணங்கள் மீது நடாத்திய ஆக்கிரமிப்பை நிறுத்தி, இர சியா ஒசுத்திரியாமேல் படையெடுத்துச் சென்று கிறக்கோ (Cracow) மாகாணத்தை அச்சுறுத்தியது. ஆனல் இவ்வாரம்ப வெற்றியின் பின் பல தோல்விகளே ஏற்பட்டன.
கிழக்குப் பிரசியாவிலிருந்து கின்டன்பேக், இரசியருக் கெதிராக ஒரு வன்மையான தாக்குதலை ஆரம்பித்து, பெப்ரவரியில் ஒரு பெரும் இரசிய படையை வெற்றி கொண்டு, 10,000 இரசியரை போர்க் கைதிகளாக்கினர். அங்கிருந்து போலந்துப் படையெடுப்பு ஆரம்ப மானது : ஆகத்து 4 இல் உவாசோ வீழ்ந்தது ; பிறெசு இலிற்ருே விசுக்கு குருெட்குே (Grodno) வில்ன முதலாம் பிரதேசங்களும் அடி பணிந்தன.
இப்போர் முடிவடையமுன் தெற்கேயும் ஒசுத்திரிய, செர்மன் துருப்புக்கள் இரசியரைத் தாக்கி, அவர்களது அணிகளை நிலைகுலை யச் செய்தன. போரின் முதல் ஒன்பது மாதங்களில் ஈட்டிய இலா பங்களையும் புது நிலப்பரப்புக்களையும் இரசியா இழக்க நேரிட்டது. செர்மனியின் புது கிழக்கு எல்லை, உவாசோவுக்கு கிழக்கே 200 மைல் களுக்கப்பால் அமைந்தது ; கலீசியா, போலந்து, மேற்கு போல்த் திக்குப் பிரதேசங்களை செர்மனிக்கு ஈந்த இரசியா, மீட்சியடைய முடியாத ஒரு படுதோல்வி நிலையைக் கண்டது.
1905 இல் போன்று, இத்தோல்வியும் இரசியாவின் உண்ணுட்டு விவகாரங்களில் பாரதூரமான விளைவுகளைப் பெற்றுத் தந்தது. இர சிய முடியாட்சியின் அந்திய காலம் நெருங்கி விட்டதென்பதை உணர்த்த சார் நாட்டில் சகல அதிகாரங்களையும் இழந்தார்.

முதலாம் உலகப்போர் 35
இரசியாவின் இப் படுதோல்விக்கான பிரதம காரணம் ஆயுதங் களும், போர்த்தளபாடங்களுமின்மையாகும். போர் ஆயுதங்களும், கருவிகளும் போதியளவு இருந்திருப்பின், அஃது வயது வந்த ஒரு கோடி போர்வீரர்களை எவ்வித இடைஞ்சலுமின்றி போர்க்களத்துக்கு அனுப்பிவைத்திருக்கலாம். ஆனல் போரின் ஆரம்பத்திலேயே இருந்த ஆயுதக் குறைவு, நாட்செல்லச் செல்ல பன்மடங்காக அதிகரித்தது. போர் முனைகளில் சேவை செய்த இராணுவத்தினரின் ஆயுதங்களும் தளபாடங்களும் 1914 திசம்பரில் அரைவாசியா கக்குறைக்கப்பட்டன. பயிற்சி பெற்ற வீரர்களில் மூன்றிலொரு பகுதியினர் மாத்திரமே துப்பாக்கிகளைப் பெற்றனர்.
3GS Guri GS Guri (Gallipoli Campaign) :
இரசியாவின் ஆயுதமின்மையைப் போக்கும் நோக்குடனேயே நேச நாடுகள் கலிப்போலிப் போரை ஆரம்பித்தன. வடக்கே செர்மனி போல்த்திக்குக் கடலை மூடியும், தெற்கே துருக்கி கருங்கடல் வாயிலை அடைத்தும், இரசியா நேச நாடுகளின் உதவியைப் பெருதவாறு தடைசெய்தன. எனவே நேச நாடுகள் தாதனலிசு நீரணையைத் துளைத்து, இரசியாவுக்கு ஒரு புதுப்பாதையை திறந்து விடலாமென திட்டமிட்டு, கலிப்போலியில் துரு க் கரு டன் போர் தொடுத் தன. ஆங்கிலரும் பிரெஞ்சினரும் துருக்கியரின் உறுதியான பாதுகாப் புக்களைத் தாக்கி முறியடிக்க முடியாமற் போகவே போர் கைவிடப் பட்டது. பல்கேரியாவின் போர்ப்பிரவேசமும் சேபியாவின் தோல்வியும் :
மேற்கிலும், கிழக்கிலும், தருக்கியிலும் நேச நாடுகள் தோல்வி யடைந்து, வலுவிழந்து நின்ற வேளையில், ஒற்ருேபர் மாதம் பல்கேரியா செர்மனியின் பக்கம் போரில் பிரவேசித்து, சேபியாமேல் படையெடுத் துச் சென்றது. வடக்கிலிருந்து ஒசுத்திரிய-செர்மன் படையெடுப் பையும், தெற்கிலிருந்து பல்கேரியரின் ஆக்கிரமிப்பையும் சேபியா மேற்கொள்ள முடியாத நிலையில், மண் கெளவியது. அதன் பின் ஒன்று சேர்ந்த ஒசுத்திரிய - செர்மன் - பல்கேரிய படைகள் மொன்றெ நெகிரோவை நோக்கி வெற்றிமுரசுடன் முன்னேறி, அந்நாட்டை யும் அடிமைப்படுத்தின. செர்மனி துருக்கியுடன் நேர்த்தொடர்பு கொண்டது. மெசப்பொற்றேமியப் போர் :
ஆங்கில-பேசிய எண்ணெய்க் கிணறுகளையும், சுவெசுக் கால்வா யையும் பாதுகாக்கும் நோக்குடன் மெசப்பொற்றேமியா, பலத்தீனம், சீரியா முதலாம் இடங்களில் துருக்கரை பிரித்தானியர் தாக்கினர்.

Page 195
曾52 புது உலக சரித்திரம்
சிறு அளவில் ஆரம்பித்த இப்போருக்கு இந்திய பிரித்தானிய அர சாங்கமே பொறுப்பேற்று நடாத்தியது. கலிப்போலியில் நடந்த போரின் தோல்வி நிச்சயமானதுடன், பிரித்தானியர் இப்போர் முனையை விசாலித்துத் தம் திறமையை நிரூபிக்க முனைந்தனர். ஒற் ருேபர் மாதம், ஆங்கிலர் பாக்டாட் நகரினுள் புகுந்தபொழுது, துருக் கர் அவர்களை குட் (Kut) வரை துரத்தியடித்தனர். அங்கு, திசம்பர் மாதம் ஒரு செர்மன் தளபதியின் கீழ் துருக்கிய படைகள் ஆங்கிலரை முற்றுகையிட்டு, 1916 இல் சரணடையைக் கட்டாயப்படுத்தின.
இத்தாலியின் போர்ப் பிரவேசம் :
நாலா பக்கங்களிலும் தோல்விகள் ஒன்றன்பின் ஒன்ருக ஏற்பட் டிருந்த வேளையில், மே மாதம், இத்தாலி நேச நாடுகளுடன் ஒன்று சேர்ந்ததே, நேச நாடுகள் கண்ட ஒரேயொரு ஆதாயமாகும். இத் தாலியின் போர்ப் பிரவேசத்துடன், சுவிற்சலந்து முதல் திறீகற்று (Trieste) ஈருக சுமார் 320 மைல் நீளமான ஒரு புதுப் போர்முனை அமைந்தது. இத்தாலி, ஒசுத்திரியருக்கெதிராக திறீசிற்று, திறெந் தீனே (Trentino) எனும் இடங்களில் படையெடுப்புக்களை நடாத் திற்று.
கடற் போர் :
1915 பெப்ரவரியில் செர்மனி, பிரித்தானியத் தீவுகளின் மேல் பொருளாதாரத் தடையை பிரகடனம் செய்து, அத்திட்டத்தை நிறைவேற்ற நீர்மூழ்கிக் கப்பற்போரை ஆரம்பித்தது. “யுத்தப் பரப்பில்" உள்ள நேசநாட்டுக் கப்பல்கள் எச்சரிக்கையின்றி மூழ் கடிக்கப்படுமென்றும், நடுநிலை நாடுகளின் கப்பல்கள் தம் பொறுப்பி லேயே தவிர்க்கப்பட்ட கடல்களினுள் பிரவேசிப்பனவென்றும் செர் மணி விதித்தது. இங்ங்ணம் ஆரம்பித்த நீர்மூழ்கிப் போர் பிரித்த னின் வணிகத்தை வெகுவாகப் பாதிக்கத் தொடங்கியது. முதல் ஆறு மாதங்களில் ஏறத்தாள 200 பிரிட்டிசுக் கப்பல்கள் ஆழ்கடல் களில் மூழ்கடிக்கப்பட்டன : பல நடுநிலை நாடுகளின் கப்பல்களும் மூழ்கின. மே 7 ஆம் நாள், 'இலுசித்தேனியா" (Lusitania) என்ற ஆங்கில பிரயாணிக் கப்பல், நூறுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களுடன் ஐறிசுக் கடற்கரைக்கு அருகாமையில் மூழ்கடிக்கப்பட்டது. அமெரிக் கர், செர்மானியரின் அட்டகாசத்தைக் கண்டு தாமும் போரில் பிர வேசிக்க நேரிடுமென முதன் முதலாகச் சிந்திக்கலாயினர். அமெரிக் கரின் கோபாவேசத்தைக் கருத்திற் கொண்டு குடிப்பதி உவில்சன் செர்மனிக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.

முதலாம் உலகப் போர் 35●
1916 ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் :
இவ்வாண்டு பிரித்தன், பிரான்சு, இத்தாலி, இரசியா என்ற நான்கு நேச நாடுகளும் ஒன்று சேர்ந்து செர்மனியை வட்டமிட்டுத் தாக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், செர்மனி, பிரான் சின் கதவுபோன்ற வேடனைத்(Werdun)திடீரென ஆக்கிரமித்தது. குண்டு வீச்சு, மனிதன் "இதுவரை கண்டறியாத அளவில் நடந்தது; முதல் 12 மணித்தியாலங்களில் பத்து இலட்சம் குண்டுகளை செர்மானியர் பொழிந்தனர் , ஐந்து நாள்களில் 80 சதுர மைல் பிரதேசத்தைக் கைப்பற்றி, வேடன் நகரத்திலிருந்து நான்கு மைல் தூரத்துக்குள் வந்திறங்கினர். எனினும் பிரெஞ்சினர் தம் நிலைகளில் ஒர் அங்கு லத்தையாவது விட்டுக் கொடுப்பதில்லையென்ற உறுதியுடன் நின்று சமர் புரிந்தனர் ஏழு மாதங்களாக இரு பகுதியினரும் தம் முழுச் சக்தியையும் பிரயோகித்து, கடுமையான சேதங்களுடன் கொடும் போர் நடாத்தினர். செர்மன் படைகள் மிக மெதுவாகவே முன் னேறின ஆனல் யூலை மாதம், சொம் நதியில் (Somme) ஆங்கிலபிரெஞ்சுப் படைகள் நடாத்திய இரண்டாவது படையெடுப்பின் பயனுக வேடன் பாதுகாக்கப்பட்டது.
சொம் நதிப் படையெடுப்பு அதி கூடுதலான இராணுவத் துருப் புக்களையும், ஆயுதங்களையும் கொண்டு ஆயத்தப்படுத்தப்பட்ட ஒரு மாபெரும் முயற்சியாகும். போரில் முதன் முறையாக நேச நாடுகள் எதிரிகளிலும் பார்க்கக் கூடுதலான துருப்புக்களையும், துப்பாக்கிகளை யும், ஆகாய விமானங்களையும் கொண்டு வலிமையுடன் போரிட்டது மாத்திரமின்றி, தாங்கிகளையும் (Tanks) முதலாவதாக உபயோகிக்க லாயின. இவ் வன்போர், பெருவாரியான சேதத்துடன் நவம்பர் ஈருக நீடித்தது. செர்மனி நூறு மைல் பிரதேசத்தை இழந்த பொழு திலும் அதன் உறுதி இன்னும் நிலைகுலையவில்லை. இதுவரை செர்மனி, மேற்கு, கிழக்குப் போர் முனைகள் இரண்டிலும் அடைந்த நட்டங் கள் அளப்பரியவை. இங்ங்னம் அது தன் முழுப் பிரயாசத்தையுஞ் செலவிட்டு நீண்ட காலம் போர் புரிய முடியாதென்பது கண்கூடு. போர் மூண்ட ஈராண்டுகளுக்குள் நாட்டின் செல்வமும் வெறுமை நிலையை அடைந்துவிட்டது. பிரித்தனின் பொருளாதாரத் தடை அதன் பொருளாதாரத்தை மேலும் அவலத்துக்குள்ளாக் கி ற் று. மேற்கு முனையில் நடைபெற்ற உக்கிரமமான போரின் பயணுக செர், மனி, களைப்படையும் எல்லையை நோக்கி வேகமாக முன்னேறியது. எனினும் செர்மனி ஈராண்டுகளுக்கு நின்று பிடித்தது. ஒசுத்திரியப் படையெடுப்பு :
மே மாதம் 14 ஆம் நாள், செர்மனி வேடனைத் தாக்கிய அதே நேரத்தில், ஒசுத்திரியர் இத்தாலியின் மேல் படையெடுத்துச்
5 2 و حمص -2

Page 196
354 புது உலக சரித்திரம்,
சென்றனர் ; மூன்று கிழமைகளுக்குள் வெனிசியாவில் வின்சன்சா (Wincenza) விலிருந்து 18 மைல் வரை முன்னேறினர். வெகு விரை வில் இரசியர் கிழக்கு முனையில் ஓர் உறுதியான தாக்குதலை ஆரம் பித்தமையிலுைம், இத்தாலியர் வன்மையான எதிர்ப்புக் காட்டியமை யி லுைம் ஒசுத்திரியர் தாம் முன்னேறி நின்ற நிலைகளிலிருந்து பின் வாங்க வேண்டிய கட்டாய நிலை எழுந்தது.
கிழக்குப் போர் முனை :
இரசியாவில் அமெரிக்கத் துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வந்திறங் கியதுடன் அதன் நிலை சற்று அபிவிருத்தியடைந்தது. யூன் நான்காம் நாள் இரசிய துருப்புக்கள் கலீசியாவுக்குள் புகுந்து பியூக்கோவினவை மீட்டு பல்லாயிரம் எதிரிகளைக் கைதிகளாக்கியது மாத்திரமின்றி, ஒசுத்திரியரையும் புற முதுகு காட்டிப் பின்வாங்கச் செய்தனர். இரசி யாவின் வெற்றிகளைக் கண்டு நேயர்களும் எதிரிகளும் ஒரே விதமாக வியப்படைந்தனர். கின்டன்பேக் உடனே செர்மன்-ஒசுத்திரிய படை களை நடாத்திச் சென்று, ஆகத்து அளவில் இாசிய முன்னேற்றத்துக்கு அணையிட்டார். இவை தாம் இரசியாவின் இறுதி வெற்றிகளாம் ; இரசியாவின் நரம்புகளில் புரட்சி உணர்வுகள் பாய ஆரம்பித்தன.
இரசியாவின் வெற்றிகள் ஒரு புது நண்பனை நேச நாடுகளுக்குப் பெற்றுக் கொடுத்தன. ஈராண்டுகளாக நடுநிலை வகித்த உறுர மேனியா, ஆகத்து மாதம் நேச நாடுகளின் பக்கமாய் போரில் இறங் கிற்று. ஆனல் அதன் கதை மிகச் சுருக்கமானதாகவும் சோகம் நிறைந்ததாகவுமே அமைந்தது. அவ்வாண்டு முடியமுன் ஒசுத்திரிய பல்கேரிய படைகள் பியூக்கறசை (Bukatest)க் கைப்பற்றி அதனை அடிபணியச் செய்தன ; உறுாமேனியாவும் சேபியாவைப் போன்று பூர னமான அடிமைத்தளைக் குள்ளாயிற்று. மாச் மாதம் நேச நாடுகள் போத்துக்கலில். இன்னுமோர் அன்பரைப் பெற்றன.
5L-sh Gunst :
சமுத்திரங்களில், இக்காலத்தில் நேசக் கட்சியினரின் கை மேலோங் கியது. உலகத்தின் கடற்பாதைகள் யாவும் நேய நாடுகளின் கைகளி லேயே இருந்தமையினல், இரசியாவும் இத்தாலியும் ஏராளமான ஆயுத, பொருள் உதவிகளைப் பெற வாய்ப்பும் பிறந்தது. ஆண்டு முழுதும் கடல்களில் தாக்குதல்களும் எதிர்த் தாக்குதல்களும் ஒய் வின்றி நடைபெறலாயின. யத்திலந்துப் (Jutland) போரில் ஒரே யொரு முறை பிரித்தானிய, செர்மன் கடற்படைகள் ஒன்றே டொன்று நேர்முகமாகப் பொருதின. மே 31 ஆம் நாள் சரித்திரத் திலேயே அதி பெரிய கடற்போர் ஆரம்பித்தது ; இப்போரில் ஈடு

முதலாம் உலகப்போர் 355
பட்டு நின்ற கப்பல்களின் அளவையும் எண்ணிக்கையையும் உலகம் என் றுமே கண்டதில்லை. இரு பகுதியினரும் கடும் நட்டங்களுக்குள்ளா யினர் ; இரு பகுதியினரும் இறுதி வெற்றி தமதேயென பாராட்டிக் கொண்டனர். செர்மன் படைகள், மூடு பனியின் மறைவில் கீல் துறை முகத்துக்குப் பின் வாங்கின ; பிரித்தன், தன் கடலாதிக்கத்தை பாதுகாத்துக் கொண்டது. 1917 ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் :
புது ஆண்டின் உதயத்துடன் மத்திய வல்லரசுகள் களைப்புற்ற நிலையை அடைந்தன. போரை வெகு சீக்கிரம் ஓர் உறுதியான முடிபுக்குக் கொண்டுவர நோக்கங் கொண்ட செர்மனி, தன் இறுதி ஆயுதத்தைப் பிரயோகித்தது. சனவரி மாதம் 9 ஆம் நாள், 'கட்டி லா நீர்மூழ்கிக் கப்பற்போர்' ஆரம்பமாகியது. பெப்ரவரித் தொடக்கத் தில் செர்மன் நீர்மூழ்கிக் கப்பல்கள், எல்லாக் கப்பல்களையும் கண்ட வுடன் மூழ்கடிக்கும் முயற்சியில் இறங்கின. கிழமை தோறும் நேச நாடுகளின் கப்பல்கள் 50 வீதமாக நடுச் சமுத்திரங்களில் மறைந் தன ; நடு நிலை நாடுகளின் உரிமைகளும் நிராகரிக்கப்பட்டன.
அமெரிக்காவின் பிரவேசம் :
செர்மனியின் அட்டூழியச் செயல்களை ஆட்சேபிக்கும் முகமாக ஐக்கிய அமெரிக்க இராச்சியங்கள், புதுப் பலத்துடனும், ஏராளமான பொருளுதவியுடனும் நேச நாடுகளின் பக்கம் சேர்ந்தது ; செர்மனி யின் சாவுமணியின் முதல் நாதம் கடல்களுக்கப்பாலிருந்து காற்றில் மிதந்து வந்தது. 1915 ஆம் ஆண்டு இலுசிற்றேனியாச் சம்பவத்தின் பின் ஈராண்டுகளாக பொறுமையுடனிருந்த அமெரிக்கா, தடையிலா நீர்மூழ்கிக் கப்பற் போரினல், தனக்கு விளைந்த நட்டங்களை மேலும் சகிக்கமுடியாத நிலையில் போரிற் குதித்தது. குடிப்பதி உவில்சன், ஏப்ரில் 2 ஆம் நாள், பேரவைக்கு முன் அமெரிக்கா 'உலகின் அமை திக்காகவும், அதன் மக்களின் விடுதலைக்காகவும். உலகில் சலா நாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும்' போர்புரிந்தே ஆக வேண்டு மெனக் கூறினர். பேரவையும் குடிப்பதியின் வேண்டுகோளை அங்கீ கரித்து, ஏப்ரில் 6 ஆம் நாள், செர்மனி மீது போர்ப் பிரகடனம் செய்தது. உடனே கட்டாய இராணுவ சேவை சட்டமாக்கப்பட்டு, ஐரோப்பியப் போர்முனைகளுக்கான போர்ப் படைகள் தயாராயின. 1918 மே முதல் அமெரிக்க சைனியங்கள் ஐரோப்பாவில் வந்திறங்க ஆரம்பித்தன. அமெரிக்காவின் போர்ப் பிரவேசத்துடன், அதன் படைப்பலம் யுத்தத்தின் முழுப் போக்கையும் மாற்றியது. அமைதி ஏற்பட்ட காலத்தில் ஏறக்குறைய இருபது இலட்சம் அமெரிக்க இராணுவ வீரர்கள் ஐரோப்பாவின் பல் வேறு பகுதிகளில் ஆயுதம் தாங்கி நிற்கக் காணப்பட்டனர்.

Page 197
356 புது உலக சரித்திரம்
1817 ஆம் ஆண்டு மத்தியில் அமெரிக்காவைப் பின்பற்றி, பல மத்திய, தென் அமெரிக்கக் குடியரசுகளும், சீன, சியாம், கிறீசு எனும் நாடுகளும் செர்மனிக் கெதிராகப் போரில் இறங்கின. நேச நாடுக ளின் இறுதி வெற்றி எவ்வித ஐயத்துக்கு மிடமின்றி, நிச்சயமாயிற்று.
இரசியப் புரட்சி :
அமெரிக்கா போர்ப் பிரகடனம் செய்வதற்குச் சற்று முன்பு இரசியா புரட்சிக் கோலம் பூண்டது. புரட்சியின் விவரங்கள் பிறி தொரு அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன.
இலெனினும், துருெசுக்கியும், பொல்சிவிக்கரும் ஆட்சியைக் கைப் பற்றியபின் திசம்பர் 15 ஆம் நாள், செர்மனியருடன் பிறெசு இலிற் ருே விசுக் (Brest-Litowsk) போர் நிறுத்த உடன்படிக்கை செய்யப் பெற்றது.
அமைதிப் பொருத்தனைக்கான பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப் பட்ட நேரத்தில், யூக்றேன் (சின்ன இரசியா) பெற்றே கிராட் அர சாங்கத்திலிருந்து பிரிந்து, செர்மனியுடன் தனித்து சமாதானம் செய்தது. இதனுல் இரசியா, செர்மனியின் நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டுச் சமாதானம் செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குள்ளாயிற்று.
எசுத்தோனியா, இலிவோனியா, கூர்லந்து, இலித்துவானியா, போலந்து எனும் இராச்சியங்கள் இரசிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றன. யூக்றேன் ஒரு சுதந்திரக் குடியரசாக அமைவுறும் என விதிக்கப்பட்டது. பாட்டம், ஆர்த்தகான், கார்சு என்ற காக்கேசிய மாகாணங்கள் சுய நிர்ணய உரிமையைப் பெற்றன. பின்லாந்துக்கும் யோச்சியாவுக்கும் சுதந்திரம் பெற்றுத் தரப்பட்டது. இங்ங்னம் இரசியா ஏறக்குறைய ஐந்து இலட்சம் சதுரமைல் நிலப்பரப்பை இழந்தது.
இவற்றுடன் இரசியா, செர்மனிக்கு ஒரு பெரிய நட்ட ஈட்டை யும் பொருளாதாரச் சலுகைகளையும் தர ஒப்புக்கொண்டது.
பிறெசு-இலிற்றேவிசுக் அமைதிப் பொருத்தன, போரின் அதி முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களிலொன்ருகும். ஒரு புறம் அஃது இரசியாவுக்குப் புரட்சியின் வேலையைச் செய்து முடிக்கவும், பழைய ஆட்சி முறையைப் பரிபூரணமாக மாற்றியமைக்கவும் வழி வகுத்தது. மறுபுறம் செர்மனிக்குக் கிழக்குப் போர்முனையில் வெற் றியை அளித்து, தன் துருப்புக்களை பிற போர் முனைகளுக்கு அனுப்ப வசதி செய்தது.

முதலாம் உலகப்போர் 357
பிற போர்முனைகள் :
யுத்த கால முழுவதும் முக்கியத்துவம் பெற்று நின்ற மேற்கு முனையில், 1917 பூராக செர்மனியும் நேச நாடுகளும் பல தாக்கு தல்களை மாறி மாறி நடாத்தின. அராசு (Arras) இறெயிம்சு (theins) மூன் ருவது ஈபபர் போர், கம்பிருய்ப் (Camprai) போர் யாவும் வெற்றி "தோல்வியன்றி பெரும் நட்டங்களுடன் முடிவடைந் தன. இத்தாலியில் வெனீசியா, அந்நியரின் கைக்குள் விழும் நிலையை அடைந்த பொழுதும், இறுதி வேளையில் இத்தாலியர் தம் நிலைகளை உறுதிப்படுத்தி, ஆபத்தைத் தடை செய்து, நாட்டைக் காத்தனர்.
மெசப்பொற்றேமியப் போரில் குட் மீட்கப்பட்டது : பாக்டாட் வீழ்ந்தது. எகித்திலிருந்து ஒர் ஆங்கிலப்படை சீரியாவுக்குள் நுழைந்து யெறுசலேமைக் கைப்பற்றியது.
1918 ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் :
1918 மாச் மாதம் இரசியா, பிறெசு இலிற்ருேவிசுக் உடன்படிக் கையையும், மே மாதம் உறுாமேனியா பியூக்கறக உடன்படிக்கையை யும் மத்திய வல்லரசுகளுடன் செய்து, இரு நாடுகளும் போரை விட்டு விலகின. எனினும் இந்நாடுகளைக் காவல் புரிய பத்து இலட் சம் செர்மானியர் பயன்படுத்தப்பட்டனர்.
க?ளப்புற்ற செர்மனி, போரைச் சீக்கிரம் முடிபுக்குக் கொண்டு வர எத்தனித்து, தன் முழுப் பலத்தையும் பிரயோகித்து மேற்கு முனையில் பல தாக்குதல்களை ஆரம்பித்தது. முதல் தாக்குதல் மாச் மாதம் வடக்கே பிரிட்டிசு-பிரெஞ்சுப் போர்முனையின் நடுவே தொடங்கியது. செர்மன் கவசப்படைகள் நேச துருப்புக்களைத் தவிடு பொடியாக்கிக் கொண்டு ஆமியன்சு நகரை நோக்கித் தங்குதடையின்றி துரிதமாக முன்னேறின. 1916, 1917 ஆண்டுகளில் நேச நாடுகள் ஈட்டிய வெற்றிகள் யாவும் மறைந்தன. நேச நாடுகள் மாசல் பொக்கு (Marshal Foch) என்பவரை ஆங்கில-பிரெஞ்சுப் படைகளின் பிரதம தளபதி யாக்கி ஒற்றுமையையும் ஒரு தலையான அதிதாரத்தையும் ஏற்படுத் தின : பலனும் கைமேல் கிடைத்தது. புது ஒற்றுமையினல் ஆமி யன்சு பாதுகாக்கப்பட்டது. ,
இாண்டாவது அதிசயத்துக்குரிய வன்மையான செர்மன் தாக்கு தல் இன்னும் வடக்கே ஏப்ரிலில் ஆரம்பமாயிற்று. பிரெஞ்சு, பிரிட் டிசு, போத்துக்கேய சைனியங்கள் நிலைகுலைந்து பின் வாங்கின. ஈப்
பரில் மீண்டும் செர்மன் முன்னேற்றம் தடைசெய்யப்பட்டது. மாச் சில் 80,000 அமெரிக்கர் பிரான்சில் வந்திறங்கவே நேச நாடுகளின் கை வலுத்தது.
А 25

Page 198
358 புது உலக சரித்திரம்
மே மாதம் அதேயளவு விசாலமான மூன்குவது தாக்குதல் தெற்கே தொடங்கியது. செர்மானியர் இறெயிம்சு (Rheims) என்ற நகரை நோக்கி முன்னேறி பரிசிலிருந்து நாற்பது மைல் தூரம்வரை ஊடு ருவிச் சென்றனர். செர்மன் குண்டுகள் பரிசின் மீது பொழிந்தன. பொக்கு, விமரிசையுடன் தன் படைகளை அணிவகுத்தும், அபாயத்துக் குரிய வாயில்களை அடைத்தும், எதிரிகளின் முன்னேற்றத்தை நிறுத் தினர். மே 28 இல், அமெரிக்க துருப்புக்கள் முதன் முதல் செர்மா னியருடன் நேர்முகப் போர் புரிய ஆரம்பித்தன ; அன்று தொட்டு நிலைமை, நேச நாடுகளுக்குச் சாதகமாக மாறிற்று ; அவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் சீக்கிரம் தாக்குதல்களாக மாறின.
யூலை மாதம் பொக்கு, ஒரே நேரத்தில் பல முனைகளில் தாக்குதல் களை ஆரம்பித்தார். செர்மர்னியர், தம் குறைந்துவரும் பலத்தை பல திசைகளில் செலவிட்டமையினல், எங்கும் பின்வாங்க நேரிட்டது. மாண் நதி, ஆமியன்சு, கின்டன்பேக் அரண் நிலைகளிலிருந்து எதிரி கள் துரத்தப்பட்டனர் ; அவர்களது தன் நம்பிக்கையும் உறுதியும் சீர் குலைந்தன.
அதே காலத்தில் நேச நாடுகள் மற்றும் முனைகளிலும் வெற்றி முரசு கொட்டின. யூன் மாதம் ஒசுத்திரியாவின் இத்தாலியப்படை யெடுப்பு முறியடிக்கப்பட்டது ; ஒற்ருேபரில் பூரண தோல்வியுடன் பின்வாங்கியது. பாலத்தீனத்தில் நேச நாடுகள் துருக்கரை வெற்றி கொண்டு புனிதத் தலங்களையும் சீரியாவையும் மீட்டன.
போரின் முடிபு :
செற்றெம்பர் மாதம் பல்கேரியா சரணடைந்ததுடன், இறுதி முடிபு சீக்கிரம் வந்தது. ஒற்ருேபர் முதல் எதிரிகள் ஒன்றன்பின் ஒன்முக அடிபணிந்தனர் ; ஒற்ருேபர் 31 இல் துருக்கி நிபந்தனையின் றிச் சரண் புகுந்தது ; நவம்பர் 4 ஆம் நாள், ஒசுத்திரியாவும் நிபந் தனையின்றித் தோல்வியை ஒப்புக் கொண்டது. செர்மனி, கர்வம் அடக்கியொடுக்கப்பட்ட நிலைமையில் தனித்து நின்றது. கடற்படை யில் ஒழுங்கீனம், சமூகவுடைமைவாதம், புரட்சி என்பன நாட்டை மேலும் அல்லற்படுத்தின. நவம்பர் 9 இல் கைசர் பதவியைத் துறந் தார் ; 11 ஆம் நாள் போர் நிறுத்தப் பொருத்தனை கைச்சாத் திடப்பட்டது.

வேர்சைச் சமாதானமும் சர்வதேச சங்கமும் 359
அதிகாரம் 22 வேர்சைச் சமாதானமும்
சர்வதேச சங்கமும்
1. வேர்சைச் சமாதானம்
செர்மனி, உவில்சனின் பதினன்கு குறிப்புத் திட்டத்தின் அடிப் படையில் அமைதிப் பொருத்தனை உருவாக வேண்டுமென்ற உத்தர வாதத்தின் மேலேயே சரணுகதியடைந்தது. எனவே 1919 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நேச நாடுகளினதும் வெற்றி நாடுகளினதும் பிரதிநிதிகள் இறுதிச் சமாதானத்தின் முதன்மைகளை முடிபு செய்யும் நோக்குடன் வேர்சையில் ஒன்றுகூடினர். இம்மாநாட்டுக்கு இரசி யாவோ எதிரிகளோ வரவழைக்கப்படவில்லை. இவ் வேர்சை மாநாட் டுடன் ஒப்பு நோக்கக்கூடிய மாநாடு, நெப்போலியப் போர் களின் பின் கூடிய வியன்ன மாநாடாகும். வியன்ன மாநாட்டில் சமாதான கர்த்தாக்கள், அரசர்களும் இளவரசர்களுமாவர். ஆனல் வேர்சை மாநாட்டில் முக்கியத்துவம் பெற்றவர்கள் ஆசிரியரும் எழுத் g5 (TGITC5LDirgor ol 'Go of it fair (Woodrow Wilson), d Gajóid, (Welsh) நியாயவாதி டேவிட் லொயிட் யோச்சு, பிரெஞ்சுப் பத்திரிகை நிரு பர் கிளமென்சோ (Clemenceau) இத்தாலியின் ஒலான்டோ (Orlando) எனும் நால்வராவர். ஒரு நூற்ருண்டின் உலக முன்னேற்றத்தை எடுத்துரைக்கும் பெரும் பேதமாய் இஃதமைந்தது.
plodi), Gof Gór U$60) cir (5 (5 fluá, 5 Git (Wilson's Fourteen Points):
போர் முடிவடைந்த பொழுது, சமாதானத்தின் பதங்களையிட்டு நேச நாடுகளின் மத்தியில் ஒரு பொது அபிப்பிராயமும் நிலவவில்லை. தனித்தனி எண்ணங்களும் ஆசைகளுமே ஒவ்வொரு நாட்டிலும் குடி கொண்டிருந்தன. போர், முடிபுக் கட்டத்தையெட்டுமுன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதானது, ஒற்றுமையைக் குலைக்கும், இராணுவ பலத்தைப் பாதிக்கும் என எண்ணப்பட்டது. நேச நாடு களிடமிருந்து உதித்த ஒரேயொரு சமாதானத் திட்டம் அமெரிக்க குடிப்பதி வுட்ருே உவில்சன் 1918 சனவரியில் பேரவைக்கு முன் சமர்ப்பித்த பதினன்கு குறிப்புக்களின் திட்டமாகும். உவில்சனின் சமாதான ஆவலானது உலகப் பரப்பில் பெரும் புகழ் பெற்றது. உவில்சன் ஐரோப்பாவுக்குத் தரிசனை தந்த பொழுது "நீதிமான் உவில்சன்" எனப் பட்டஞ் சூட்டி, பரிசு மக்கள் அவரை வரவேற்ற

Page 199
360 புது உலக சரித்திரம்
நிகழ்ச்சி இதனை வலியுறுத்தும். “அமெரிக்காவின் சக்தி எத்தேசத் துக்கும் எந்த இன மக்களுக்கும் இன்னல் விளைவிக்காது. ஆக்கிரமிப் புக்கும் சுயநல வேட்கைக்கும் இச்சக்தி பயன்படுத்தப்படமாட்டாது. சுதந்திரத்திலே மலர்ந்த இச்சக்தி, சுதந்திர சேவைக்கே அர்ப்பண மாகும்" என்று உவில்சன் தன் இலட்சியத்தை வரையறுத்து விளக் கினர். உவில்சனது சமாதானத் திட்டத்தின் பதினன்கு குறிப்புக்கள் பின்வருவன. இவற்றிற் பெரும்பாலானவை இரு பகுதியினராலும் அங்கீகரிக்கப்பட்டன.
1. வல்லரசுகள் இரகசிய சூழியல் முறைகளை அநுட்டிக்கலாகாது. அந்
தரங்க ஒப்பந்தங்களும் நடைபெறக் கூடாது. 2. போர்க் காலத்திலும் சமாதான காலத்திலும் சகல தேசத்தவருக்
கும் கடற் சுதந்திரம் கொடுத்தல். 3. சமாதானத்தை உருவாக்கும் நாடுகளுக்கு சம வர்த்தக உரிமை
யுண்டு. இறுப்புப் பட்டியல் தடைகளில்லை. ஆயுதங்கள் மிகக் குறைவான நிலைக்குக் குறைக்கப்படுதல். குடியேற்ற ஆதிக்கச் சிக்கல்களை நடுநிலை நின்று சீர் செய்தல். இரசியாவுக்குச் சுதந்திரமும் அந்நிய துருப்புக்களின் அகற்றுதலும். பெல்சியத்தின் சுதந்திரமும் அந்நிய துருப்புக்களின் நீக்கமும. அல்சாசு-உலொறேன் மாநிலங்கள் பிரான்சுக்குத் திரும்பக் கொடுபடல். 9. தெளிவான தேச அடிப்படையில் இத் தாலியின் புனர் நிர்மாணம்.
0.
10. ஒசுத்திரிய-அங்கேரிய அடிமை மக்களின் சுதந்திரம். 11. உறுாமேனியா, சேபியா, மொன்றிநெகிரோவிலிருந்து துருப்புக்
களை நீக்குதல் போல்கன் எல்லைகளின் மாற்றம். 12. துருக்கிய சாம்ராச்சியத்தில் துருக்கியரற்ற பிரசைகளுக்குச் சுய.
நிர்ணய உரிமை கொடுத்தல். 13. போலந்துக்கு கடலுக்குத் தடையற்ற நிலையான வழியும் ஒரு
சுதந்திரக் காவல் அரசாங்கமும், 14. சகல தேசங்களினதும் அரசியல் நிருணய உரிமையை உறுதிப்
படுத்த தேசங்களின் ஒரு பொதுச் சபையை நிறுவுதல்.
நேச உறவு நாடுகளும் இதே கருத்துக்களை வெளியிட்டமை யினல் இத்திட்டத்தை அகில உலகமும் அங்கீகரித்தது. செர்மனியும் எதிரிகளும் இத்திட்டத்தின் அடிப்படையிலேதான் இறுதிச் சமாதான உடன்பாடு செய்யப்பட வேண்டுமென ஒப்புக் கொண்டு, போர் நிறுத் தம் செய்தன. சமாதான மாநாட்டில் இரு கொள்கைகள் முதன்மை

- چه تا 6 قه
2968ሕ 9.YY Msgr 'ഝേ
ՁՄ6}ամ
போலந்து
ይn - ወff மேனியா
பூக்காரெசு"
பல்கேரியா (
KK
யதரைக் கட6 மத்தி as 签
1914-1918 போரின் பின் ஐரோப்பா

Page 200

வேர்சைச் சமாதானமும் சர்வதேச சங்கமும் 36 Ι
வகிக்க ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. ஒரு புறம் பாரபட்ச மற்ற நீதி சக ) நாடுகளுக்கும் வழங்கப்பட வேண்டுமென்ற கொள்கை தலையெடுத்தது. மறுபுறம் சமாதான மாநாடுகளுடன் எழும் சம பலம் மீண்டும் போர் மூளாது தடை செய்தல், பொருளாதார, நில நட்ட ஈடுகளை வெற்றி பெற்றேருக்கு வழங்குதல் என்ற கொள்கை கள் தலை தூக்கின. குடிப்பதி உவில்சன், ஐரோப்பாவின் நிலையை பூரணமாய் அறியாததாலும் தகுந்த நேரத்தில் ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க முடியாமற் போனதாலும், லொயிட் யோச்சு, கிள மென்சோ, ஒலன்டோ என்ற மூவரும் வெகு சாதுரியமாக அவரை ஏமாற்றினர். இறுதியில் வேர்சை மாநாடு வியன்ன மாநாட்டின் நோக்கங்களைக் கொண்டதாய் அமைந்தது. ஐரோப்பாவின் சமா தானப் பாதுகாப்பு, வெற்றி பெற்றேரின் நட்ட ஈடு, குற்றவாளி களுக்குத் தண்டனை, என்பவையே தலையான நோக்கங்களாய் உரு மாறின.
மாநாட்டின் முடிபுகள் :
நாட்டின வாதம் எனும் அடிப்படையிலேயே வேர்சை மாநாடு தன் தீர்மானங்களை மேற் கொண்டது; வியன்னு மாநாட்டில் எதேச் சாதிகாரக் கொள்கை அத்திவாரமாக நின்றது. இரு சந்தர்ப்பங்களி லும் வெற்றி பெற்றேருக்குச் சாதகமாயும், தோல்வியுற்றேருக்குப் பாதகமாகவுமே முடிபுகள் நிறைவேற்றப்பட்டன. புது நாடுகளின் தோற்றம் :
புதுச் சமாதான உடன்படிக்கைகளில் அமைவு பெற்ற நாட்டு எல்லைகள் உலகப் போருக்கு முந்திய காலத்து எல்லைகளிலிருந்து பெரி தும் வேறுபட்டனவாகக் காணப்பட்டன. வடக்கே பின் லந்து, எசுத் தோனியா, இலற்வியா இலித்துவானியா எனும் நாடுகள், இரசியப் பேரரசின் போல்த்திக்கு மாகாணங்களிலிருந்து சிருட்டிக்கப்பட்டன. ஒரு காலத்தில் போலந்து தேசம் இரசியா, செர்மனி ஒசுத்திரியா என்பவற்றிற்கு இழந்த துண்டுகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஐரோப் பிய படத்தில் தானிழந்த நிலையை மீண்டும் பெற்றது. தெற்கே செக்கோசிலவாக்கியக் குடியரசு பொகீமியா, மொறேவியா, சிலொ வாக்கியா, சைலீசியா, உறுாதீனியா என்னும் நிலப்பரப்புக்களில் வாழ்ந்த செக், சிலொவாக், செர்மன், மாகியர், உறுதீனியர், போல், யூதர் எனும் இனங்களின் ஐக்கியமாகப் பரிணமித்தது. யூகோசிலாவிய அரசு சேபிய, குருேட், சிலொவீன் இன மக்களின் ஐக்கியமாகத் தோற்றம் பெற்றது.
இம்மாற்றங்கள் அனைத்தும் நாட்டின வாதம் எனும் சக்தியின் மகத்தான வெற்றிகளாகவே அமைந்தன.

Page 201
362 புது உலக சரித்திரம்
உடன்படிக்கைகள் :
பகிரங்கமாய் நிறைவேற்றப்பட்ட வெளிப்படையான உடன் படிக்கைகளைப் பற்றி உவில்சன் பறை சாற்றினர். 1919 - 20 ஆம் ஆண்டு உடன்படிக்கைகள் வெளிப்படையானவை என்பது உண்மை ; ஆனல் அவை பகிரங்கமாய் நிறைவேற்றப்படவில்லை. அடைபட்ட கதவுகளின் பின்னேயே விவாதங்களும், உரையாடல்களும், தீர்மானங் களும் நிறைவேறின. பத்திரிகை நிருபர்கள் தடுக்கப்பட்டார்கள். செர்மனிக்கு கலந்து கொள்ளும் தருணம் தரப்படவில்லை. பல மாதங் களின் பின் உடன்படிக்கையை முதன் முறையாக செர்மனிக்குக் காட்டி ஆட்சேபனைகளை அறிவிக்குமாறு நிர்ப்பந்தித்தனர். சில சலுகைகள் வழங்கப்பட்டதன் மேல், செர்மன் பிரதிநிதிகள் குறிக்கப் பட்ட கோட்டில் கைச்சாத்திட்டனர். ஏனைய நாடுகளுக்கும் இவ் வண்ணமே நடைபெற்றது.
மாநாட்டின் முடிபுகள் பின்வரும் ஐந்து ஒப்பந்தங்களில் அடங்கின.
செர்மனியுடன் வேர்ச்சை உடன்படிக்கை (யூன் 28, 1919) 2. ஒசுத்திரியாவுடன் செயின் செர்மயின் உடன்படிக்கை (Treaty
of Saint Germain), Golffö. 1 0, 1919. 3. அங்கேரியுடன் திரயனன் உடன்படிக்கை (Treaty of Trianon)
யூன் 4, 1920. 4. பல்கேரியாவுடன் நியூலி உடன்படிக்கை (Treaty of Neuily)
நவம்பர் 27, 1919,
5. glCD555uyl-6i Gdf iro5 D-L-6i, ULg diapas (Treaty of Sevres)
ஆகத்து 10, 1920.
செர்மனி :
செர்மனி அல்சாசு, உலொறேன் என்ற இரு மாநிலங்களைப் பிரான்சுக்கு கொடுத்தது. இதன் அண்மையிலிருந்த சார் (Saar) என்ற நிலக்கரிப் பிரதேசம் பதினைந்து ஆண்டுகளுக்குச் சர்வதேச சங்க நிரு வாகத்தின்கீழ் நிறுவப்பட்டு, அதன் பயனை இக்காலம் முழுவதும் அனுபவிக்க பிரான்சு உரிமை பெற்றது. கால எல்லை முடிந்ததும் அஃது எப்பக்கம் சேர விரும்புகிறதென்பது குடியொப்பத்தினல் தீர்க்கப்படும் என்றும் விதிக்கப்பட்டது. 1935 இல் செர்மனியுடன் சேர அது வாக்களித்தது. மேலும் இறைன் நதி நிலங்களிலும், அதன் மேற் புறத்தும், நேச நாடுகளின் படையொன்று, பதினைந்து ஆண்டுகளுக்கு நிறுவத் திட்டமிடப்பட்டது. எல்லாக் காலத்தும் இறைன் மேற்கு பிரதேசக் கோட்டைகளை அமைக்கவோ, இராணு

வேர்சைச் சமாதானமும் சர்வதேச சங்கமும் 363
வத்தை நிறுத்தவோ தடை விதித்து, அதனை நடுநிலைப் பிரதேசமாக் கினர். 1936 இல் இவ்வமைப்பை இற்லர் உருவழித்தார். அவ் வாண்டு செர்மனி தன் மேன் மாகாணத்தினுள் துருப்புக்களை யனுப்பி இவ்வொழுங்குகளை நிராகரித்தது. பிசுமாக்கின் காலத்தில் பிரசியா செல்சுவிக்கை இணைத்தது. வேர்சை உடன்படிக்கைப் பிரகாரம் இப் பிரதேசம் யாருட்ன் ஒன்றுபட விரும்புகிறதென்பதைத் தீர்மானிக்க குடியொப்பம் நடாத்தத் திட்டமிடப்பட்டது. வடபகுதி தென்மாக் குடனும், தென்புறம் செர்மனியுடனும் இணைந்தன. கிழக்கே மெமல் (Memel) பிரதேசம் இலித்துவானியாவின் கைகளில் அடைக்கலப் பொருளாய் அளிக்கப்பட்டது. 1923 இல் இலித்துவானியா மெமலைத் தனதாக்கிக் கொண்டது. மேற்குப் பிரசியாவின் பெரும்பாகம் போலந்துக்குக் கொடுபட்டதல்ை செர்மனி இரு பகுதிகளாய் துண்டிக் கப்பட்டது. இரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட இடைகழியை (Corridor) போலந்து போல்த்திக்குக் கடல்வரை பெற்றது. டன்சிக் நகரம் சருவதேச சங்க ஆணையின்கீழ் ஒரு சுதந்திர நகராயிற்று. போசன் பிரதேச விளை நிலத்தின் பெரும்பாகம் போலந்துக்காயிற்று. தென் கீழ் செர்மனியின் தொழில் சுரங்கப் பிரதேசமான மேல் சைலீ சியா, குடியொப்பத்தின் மூலம் செர்மனிக்கும் போலந்துக்கு மிடையில் தெரிவு செய்யும்படி 1921 இல் அநுமதி கிடைத்தது. பட்டினம் கிராமம் என்பவற்றின் வாக்களிப்புக் கிணங்க இப் பிரதேசமானது இரு நாடுகளுக்கு மிடையே பிரிக்கப் பட்டது. செர்மன் குடியேற்ற நாடுகள் அனைத்தும் பிரித்தன், பிரான்சு, நியூசீலந்து, ஒசுத்திரேலியா, தென் ஆபிரிக்கா, பெல்சியம், முதலான அரசுகளின் கீழ் பொறுப்பாணை
5T G9g, 6mTTags (Mandated Territories) l-9/60) LDG Gollu, ibp60T.
ஒசுத்திரியா :
ஒசுத்திரியா தென்  ைத ரோ ல் (Southern Tyrol), திரியேசு, (Trieste), இசுத்திரியா என்ற நிலப்பரப்புகளையும், செர்சோ (Cherso) இலுசின் (Lussin) என்ற தீவுகளையும் இத்தாலிக்கு அளித்தது. அது கடற்கரைத் தீவுகள் முதலியவற்றை யுகொசிலாவியாவுக்குப்பறி கொடுத்தது. பொகீமியா, மொறேவியா, ஒசுத்திரிய சைலீசியா, கீழ் ஒசுத்திரியாவின் ஒரு பகுதி முதலாம் நிலப்பரப்புகளை செக்கோசில வாகியா பெற்றது ; போலந்து கலீசியாவை அபகரித்தது ; பியூக்கோ வினவை உறுாமேனியா ஆக்கிரமித்தது. இங்ங்னம் ஒசுத்திரிய நிலப் பரப்பின் பெரும் பகுதி ஏழு நாடுகளுக்கிடையே கூறுபோடப் பட்டது : 31,000,000 பிரசைகளைக் கொண்ட நாடு, 6,000,000 மக்களைக் கொண்ட ஒரு சிறு நாடாக அமைவு கொண்டது.

Page 202
364 புது உலக சரித்திரம்
அங்கேரி :
ஒசுத்திரியாவைப்போன்று அங்கேரியின் நிலப்பரப்பும் பல நாடு களினல் சூறையாடப்பட்டது. அதன் குடிசனம் 21 கோடியிலிருந்து 8 கோடியாகக் குறைந்தது. அது திரான்சில்வேனியாவை உறுாமேனி யாவுக்கும், குருேசியா (Croatia) வை யுகொசிலாவியாவுக்கும், சுலொ வக் மாகாணங்களை செக்கோசிலாவாகியாவுக்கும் பறிகொடுத்தது.
பல்கேரியாவும் துருக்கியும் :
பல்கேரியா கடற்கரையைக் கிறீசுக்கும், மேற்கே சிறு நிலங்களை யுகொசிலாவாகியாவுக்கும் கொடுத்தது.
துருக்கி, சீரியா, பலத்தீனம், மொசப்பொற்றே மியா, எகித்து முதலாம் நாடுகளைக் கை நெகிழ விட்டது. ஐரோப்பாவில் கொன்சு தாந்திநோபிளை மாத்திரம் வைத்திருக்க அனுமதி பெற்றது.
இராணுவ, பொருளாதார நிபந்தனைகள் :
செர்மன் படையின் எண்ணிக்கை ஒரிலட்சம் போர் வீரர்களையும் அதிகாரிகளையும் கொண்டதாய்க் குறைக்கப்பட்டது : கட்டாய இராணுவ சேவை நிறுத்தப்பட்டது. இறைன் நதியின் கிழக்கே முப்பது மைல் அகலமான நிலப்பரப்பு இராணுவ அமைப்பற்ற நிலமாக வேண்டுமென்றும் போர்க் கப்பல்களின் தொகை குறைய வேண்டுமென்றும், எலிகோலந்தின் இராணுவப் பாதுகாப்பு எடுக்கப் பட வேண்டுமென்றும் புது நிபந்தனைகள் கூறின. செர்மன் கடற் படையையும் பெரும்பாலான வியாபாரக் கப்பல்களையும் இங்கிலந் துக்கு ஈந்தது. இத்துடன் குடி மக்களுக்கு விளைக்கப்பட்ட கொடூரங் களுக்குப் பரிகாரமாய் ஒரு பெரும் நட்ட ஈட்டை வழங்க வேண்டு மென்றும் செர்மனி நிர்ப்பந்தப்படுத்தப்பட்டது. அமைதிப் பொருத் தனையின் முறிகளை நிறைவேற்றுவதற்கு உத்தரவாதமாக இறையின் நதியின் கிழக்குக் கரையை பதினைந்து ஆண்டுகளுக்குத் தம் மேற் பார்வையின் கீழ் நிருவகிக்க நேச நாட்டினர் முடிபு செய்தனர்.
இவ்வண்ணம் ஒசுத்திரியாவும் படைகளைக் குறைத்தது. கட்டாய இராணுவ சேவையை நிறுத்தியது. போர்க் கருவிகள், விமானங்கள், கப்பல்கள், தளபாடங்களின் உற்பத்தியையும் தடை செய்தது. அங்கேரியின் மீதும் பல்கேரியாவின் மீதும் இத்தடைகள் விதிக்கப் பட்டன.
இறுதியாக சர்வதேச சங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டு மென்றும் வேர்சை அமைதிப் பொருத்தனையில் ஒரு முறி சேர்க்கப் பட்டது.

வேர்சைச் சமாதானமும் சர்வதேச சங்கமும் 365
உடன்படிக்கையின் பலாபலன்கள் :
வேர்சை சமாதான உடன்படிக்கைகளின் நில, பொருளாதார, விதிகள் பல அரசியல், பொருளாதார பிரச்சினைகளுக்கு வழி காட்டின. இப் பிரச்சினைகளே போருக்குப்பின் வந்த முதல் பத்து ஆண்டுகளில் ஐரோப்பாவின் அமைதியைக் கலக்கின. சமாதான உடன்படிக்கைகள் பிரகடனம் செய்யப்பட்டதுடன் உலகில் அமைதி ஏற்பட்டு விட வில்லை. பல பிரச்சினைகள் இன்னும் தீராத நிலையிலேயே இருந்தன: சில சந்தர்ப்பங்களில் சமாதான விதிகள் மீறவும் பட்டன : அவற்றின் காரணமாக போர்களும் சச்சரவுகளும் மலிந்தன. நிலங் களை இழந்த தேசங்கள் மனம் புழுங்கின : இலாபமடைந்த நாடு கள் தமக்குக் கிடைத்த ஆதாயங்களுடன் திருப்திப்படவில்லை. எதிரி களாகப் போர் புரிந்த நாடுகளுக்கிடையேயும், நேச நாடுகளாக இயங் கியவற்றிற்கிடையேயும் ஒரே விதமாக ஏராளமான பிரச்சினைகள் தலைகாட்டின. செர்மனி மீது விதிக்கப்பட்ட பெரும் நட்ட ஈட்டின் காரணமாகவும், 1923 இல் உறுார் (Ruhr) மாகாணத்தைப் பிரான்சு தன் கைவசம் வைத்திருக்க முயற்சித்ததன் காரணமாகவும் பிரெஞ்சு --செர்மன் பகைமை குறைந்தபாடில்லை. இதே உறுரர் பிரச்சினை தான் ஆங்கில-பிரெஞ்சு நட்புறவு சீராக அமைவதற்கும் ஒரு முட் டுக் கட்டையாயிற்று. ஐக்கிய அமெரிக்கா, வேர்சைச் சமாதான உடன்படிக்கையை அங்கீகரிக்க மறுத்ததனலும், சர்வதேச சங்கத்தில் சேர பின்நின்றதனலும் ஆங்கில-பிரெஞ்சு-அமெரிக்க ஒப்பந்தத்தை நிராகரித்ததனலும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பெரும் ஏமாற்றத் தையும் சீற்றத்தையும் கொண்டன.
கிழக்கு ஐரோப்பாவில் நிலப்பரப்புக்கள் புதிதாக நிர்ணயிக்கப் பட்டதல்ை எழுந்த பிரச்சினைகள் இவற்றையும் விட பன்மடங்கு சிக்கலானவை. இப்பிராந்தியத்தில் மாற்றமடையாத எல்லைகளைக் கொண்ட நாடு ஒன்றுமேயில்லை ; எட்டுக் கோடி மக்கள் ஓர் அரசி லிருந்து பிறிதொன்றுக்கு மாறினர்.
மேல் சைலீசியா, டான்சிக், போலிசு இடைகழி எனும் நிலங்களை யிட்டு செர்மனிக்கும் போலந்துக்குமிடையில் கடுமையான அபிப் பிராய பேதங்கள் நிலவின.
பின்லந்து, எசுத்தோனியா, இலற்வியா, இலித்துவானியா எனும் சுதந்திர நாடுகளின் நிர்மாணிப்பைப் பற்றி போட்டிகளும், சச்சரவு அளும் மலிந்தன. பின்லந்து ஆலன்டுத் தீவுகளைப் பெற சுவீடனுடன் போட்டியிட்டது : கரீலியாவின் உரிமையையிட்டு இரசியாவுடன் மோதியது. வில்ன நகரைத் தனதாக்க இலித்துவானியா போலந் துடன் சமர் புரிந்தது ; வேர்சை முறிகளை மீறி 1923 இல் மெமல் பிரதேசத்தை ஆக்கிரமித்தது.

Page 203
366 புது உலக சத்திரம்
இரசியா உண்ணுட்டுப் போருடன் அல்லற்பட்டு ஒழுங்கை நிலை நாட்ட முனைந்த அதே நேரத்தில் ஆசியாவையும் ஐரோப்பாவையும் பொதுவுடைமை வாதத்தின் வழிக்கு இழுக்க முயற்சித்தது.
செயின்ட் செர்மெயின் உடன் படிக்கையினல் செர்மனியைக் காட்டிலும் ஒசுத்திரியாவே அதி கூடுதலான நட்டத்தையடைந்தது ; அரசியல், பொருளாதாரத் துறைகளிலும் அதி கீழ் கட்டத்தை எய் தியது. ஒசுத்திரிய வமிசம், சைனியம், பேரரசு யாவும் மறைந்தன. அங்கேரியின் நிலப்பரப்பும் மிகவாகக் குறைக்கப்பட்டது. அது பல மாகாணங்சளை யூகோசிலாவியாவுக்கும், உறுமேனியாவுக்கும், செக்கோ சிவவாகியாவுக்கும் இழந்தமையை சகிக்க முடியாது மனம் புழுங்கி யது. உறுfமேனியாவும் இரசியாவும் பெசரேபிய உரிமைக்கு போரிட் டன. பல்கேரியா, ஈசியன் கடலுக்கு வழி தேடும் முயற்சியிலும், தேச அடிப்படையில் தானிழந்த பல்கேரிய மக்களைக் கொண்ட நிலங் களையும் திருப்பிப்பெறக் கங்கணங்கட்டி நின்றது.
யூகோசிலாவியா, கிறீசு, அல்பேனியா, இத்தாலி எனும் நாடுகள் அதிநியாட்டிக் கடற்கரையின் உரிமையையிட்டு வாக்குவாதப்பட் டன. 1908 இல் வல்லரசுகள் அல்பேனியாவுக்கு வழங்கிய சுதந் திரத்தை 1919 இல் நிராகரித்து, அதனை இத்தாலி, யூகோ சிலாவியா, கிறீசு எனும் நாடுகளுக்கிடையே பங்கிட்டன. ஆனல் தம் சுதந்திரத்தைப் பாதுகாக்க நோக்கங் கொண்ட அல்பேனியர் சொற்ப காலம் வாளேந்திப் போர் புரிந்து 1920 இல் சுய நிர்ணய உரிமையை நிலை நாட்டினர்.
இத்தாலியும் யூகோசிலாவியாவும், பியூம் (Fiume) என்ற நகரத்தின் உடைமைக்காக முரண்பட்டன.
துருக்கி, கிரேக்கரை சின்ன ஆசியாவிலிருந்து துரத்த ஆயுதம் தாங்கிப் போரிட்டது. தூர கிழக்கில், செர்மன் உடைமையான சன்ரங் (Shantung) யப்பானுக்குக் கையளிக்கப்பட்டதைக் கண்டு சீனத் தேச வாதிகள் மனம் நொந்தனர். புதிதாக அமைவு பெற்ற செக்கோ சில வாகியா, யூகோசிலாவியா எனும் நாடுகளில் அரசியற் கொந்தளிப் புக்கள் நிறைந்த “சிறுபான்மைப் பிரச்சினைகள்” தலை தூக்கின.
இக் காரணங்களினலேயே வேர்சை உடன்படிக்கை இன்னுமொரு போருக்கான வித்துக்களை உள்ளீடாகக் கொண்டதென கூறப்பட் டுள்ளது. எனினும், வேர்சை சமாதான உடன்படிக்கை நாட்டின வாதத்துக்குப் பெரும் மதிப்பைத் தந்தது.

வேர்சைச் சமாதானமும் சர்வதேச சங்கமும் 367
நாட்டினவாதத்தின் வெற்றி :
வேர்சையில் நாடுகளுக்குப் புது எல்லைகளையிட்டு அமைதிப் பொருத்தனைகளை உருவாக்கிய வல்லரசுகளுக்கு நாட்டினவாதமே பிர தம வழிகாட்டித் தத்துவமாக அமைந்தது. போல்த்திக்கு நாடுகளின் தாபிதம், போலந்து, செக்கோசிலவாகியா, யூகோசிலாவியா எனும் நாடுகளின் சிருட்டிப்புக்கள், செர்மனி, ஒசுத்திரியா என்பவற்றின் எல்லைக் குறைப்பு, உறுாமேனியா, இத்தாலி, பிரான்சு முதலியவற் றின் எல்லை அதிகரிப்பு இம்மாற்றங்களனைத்தும் நாட்டினவாதத்தை அடிப்படையாகக் கொண்டே ஏற்பட்டவை. 19 ஆம் நூற்ருண்டின் மத்தியில் இத்தாலியும், செர்மனியும் ஐக்கியப்பட்டபின், நாட்டின வாதமென்ற தத்துவம் இதைப்போன்ற ஒரு மகத்தான வெற்றியைக் கண்டதில்லை.
வேர்சை மாநாட்டுக்குப் பின்பும் ஐரோப்பாவின் பெரும் பகுதி களில் நாட்டினவாதமே தேசங்களின் எதிர்கால அரசியல், பொருளா தாரப் பூட்கைகளுக்கு அடித்தளமாய் அமைந்தது. விசாலமான பாது காப்புத் திட்டங்கள், காப்பு வரிகள் நாடுகளைச் சுற்றி எழுந்தன. இத்தாலியில் பாசிசம், செர்மனியில் தேச சமூகவுடைமைவாதம், யப்பானின் ஆள்புலப் படர்ச்சி, விழிப்புற்றெழுந்த சீனு, புதுத் துருக்கியில் புரட்சி என்பன யாவும் நாட்டினவாதம் எனும் வித்தி லிருந்து முளைத்தெழுந்த விருட்சங்களாகும்.
2. சர்வதேசச் சங்கம்
சர்வதேசச் சங்கத்தைப் பற்றிய கருத்து இருபதாம் நூற்ருண் டில் நவமாகத் தோன்றிய புதிரன்று. உலகப் போர்கள் ஒழிந்து, சச்சரவுகள் நீங்கி மனித சமுதாயம் ஒற்றுமையுடன் வாழவேண்டு மென்ற உயர் கொள்கை பன்னெடுங்காலமாக மக்கள் உள்ளங்களில் இடம் பெற்றிருந்தது. பிரெஞ்சு மன்னனன என்றி (1589-1610) இயற்றிய “பெரும் அரசமைப்பு' (The Grand Design), ஒல்லாந்து சட்ட அறிஞர் கியூகோ கிருேட்டியசு (Hugo Grotius) இயற்றிய “போர், சமாதானம் ஆகியவற்றின் நியாயம்’ (1625), இம்மனு வேல் காந்து (Emmanuel Kant) என்பவரின் “நிலையான சமாதானம்' (1795) எனும் நூல்களிலெல்லாம் சர்வதேச சங்க அமைப்புச் சிந்தனை உதயமானது; இச் சிந்தனை 1815 இல் சாதனையாக உருப் பெற் றது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப்பின் ஐரோப்பாவை கிறித்தவ கோட்பாடுகளின் அடிப்படையில் ஆட்சி செய்ய திருவுடன் படிக்கையை வல்லரசுகள் உருவாக்கின. பத்து ஆண்டுகளுக்குள் அம் முயற்சி வீண்

Page 204
368 புது உலக சரித்திரம்
போயிற்று. அதன் பின்னர் ஐரோப்பா பழைய வழமையைப் பின் பற்றி ஒவ்வொரு நாடும் தன் சுயேச்சைப்படி சர்வதேச விவகாரங் களை அனுட்டித்தது.
சர்வதேச சங்க அமைப்பு :
வேர்சை உடன்படிக்கைக்குப்பின் ஏற்பட்ட சர்வதேசச் சங்கம் இதற்கு முன் சென்ற அமைப்புக்களிலும் மேலான உன்னத நோக் கங்களையும் கருத்துக்களையும் உள்ளிடாய்க் கொண்டது. அகில உல கத்தையும் உட்படுத்தி, சர்வதேச அமைதியையும் ஒத்துழைப்பையும் பூர்த்தியாக்க அஃது ஒரு நிலையான தாபனமாக அமைய வேண்டு மென்பதே அதன் தலையான நோக்கம். ஒவ்வோர் அங்கத்துவ நாடும் * சர்வ தேசங்களிடையே கூட்டுறவை யுண்டாக்கவும், போரின் உத வியை நாடுவதில்லையென உறுதி செய்வதன் மேல் சர்வதேச சமா தானத்தையும், உறுதியையும் தாபிக்கவும்’ ஒப்புக் கொண்டது.
சர்வதேச சங்கம் முன்னைய மற்றேணிக்கினதும் காசல்றீயினதும் மாநாட்டு முறையிலும் பார்க்கச் சிக்கல்கள் நிறைந்தது. அங்கத்துவ நாடுகளனுப்பிய பிரதிநிதிகளைக் கொண்ட பொதுச் சபையும், ஒன் பது உறுப்பினரைக் கொண்ட நிருவாக சபையும் பிரதம நிறுவகங் களாய் அமைந்தன. நிருவாக சபையில் பிரித்தன், பிரான்சு, இத் தாலி, அமெரிக்கா, யப்பான் எனும் ஐந்து பேரரசுகள் நிரந்தரமான உறுப்பினர்கள். மிகுதித் தானங்கள் பிற நாட்டு அங்கத்தினரால் நிரப்பப் பெற்றன. இச்சபை எந்த அவசரமான கருமத்தையும் உடன் தீர்மானிக்கவும் நடவடிக்கை யெடுக்கவும் அதிகாரம் பெற்றது. நிலை யாக சேவை செய்யும் ஒரு காரியாலயமும் செனீவா (Geneva)வில் அமைந்தது. இக் காரியாலயம் பொதுச் சபைக்கும் நிருவாக சபைக் கும் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும் வேலையை மேற்பார்வை செய்தது.
1920 இன் இறுதியில் சங்கத்தின் பிரதான உறுப்பாக ஒரு சர்வ G5 F fig Loair glib (International Court of Justice) g5 ITS dist பட்டது. இஃது ஆண்டு தோறும் ஏகில் (The Hague) கூடிற்று. ஒன்பது ஆண்டுக் காலத்துக்குக் கடமையாற்றும் பதினெரு நீதிவான்கள் மன் றுக்கு நியமிக்கப் பெற்றனர். நிருவாக சபை சிபார்சு செய்யும் சர்வ தேச சச்சரவுகளைச் சமாதான முறையில் தீர்த்து வைப்பதே அதன் தலையாய கடமை. அங்கத்தினர், நீதி மன்றின் தீர்ப்பைக் கேட்டு மூன்று மாதங்கள் கழியு முன்னர் போரிடுவதில்லையென்றும், இவ் விதியை மீறி நடக்கும் நாடு, சங்கத்தின் ஏனைய அங்கத்தினருடன் போர் தொடுப்பதற்குச் சமானமாகக் கருதப்படுமென்றும் பிரமா ணம் செய்திருந்தன.

வேர்சைச் சமாதானமும் சர்வதேச சங்கமும் 369
சங்கத்தின் ஆரம்ப வெற்றிகள் :
திருவுடன் படிக்கையைப் போன்று சர்வதேச சங்கம் ஆரம்பத்தில் ஒரளவு வெற்றியைக் கண்டது. ஐக்கிய அமெரிக்க அரசு பிரதிநிதித் துவம் பெருத காரணத்தினல் சங்கம் பலவீனப்பட்டபோதிலும், அது 1926 இல் செர்ம்னியை அனுமதித்து, 1933 ஆம் ஆண்டளவில் அமெ ரிக்காவையும் இரசியாவையும் (இதுவும் 1934 இல் அனுமதிக்கப்பட் டது) தவிர ஏனைய பேரரசுகள் அனைத்தையும் உட்படுத்தியது சங் கம், ஆரம்ப நிலையில் தேசங்களுக்கிடையே எழுந்த சிறு பிரச்சினை களைச் சித்திகரமாய்த் தீர்த்து வைத்தது. ஆலந்துத் தீவுகளை (Aகand Islands) யிட்டு சுவீடனுக்கும் பின்லந்துக்குமிடையே ஏற்பட்ட தக ராறு சுமுகமாகத் தீர்ந்தது. செர்மனியும் போலந்தும், மேல் சைலீ சிய மாகாணத்தை ஆட்சேபித்த பொழுது, அதன் முடிபு நிருவாக சபைக்கு முன் வரவே, அதனல் நியமிக்கப்பட்ட ஒரு விசேட விசா ரணைக் குழு பிரச்சினையைத் தீர ஆராய்ந்து, செர்மனியினதும் போலந்தினதும் எல்லைகளைத் தெளிவாக வரையறுத்தது. சங்கம் மும்முறைகளில் போல்கன் தீபகற்பத்தில் சமாதானத்தை நிலைநாட் டியது. 1921 இல் யூகோசிலாவியா, அல்பேனியாவை ஆக்கிரமிப் பதைத் தடுத்து வைத்தது. 1923 இல் இத்தாலி தான் கிறீசின்மேல் படையெடுக்கப் போவதாக மிரட்டிய பொழுது, சங்கம் தலையிட்டு வெற்றிகரமாகப் போர் அபாயத்தை நீக்கியது. மீண்டும் 1925 இல் பல்கேரியாவுக்கும் கிறிசுக்குமிடையே ஏற்பட்ட தகராறையும் நன் முறையில் தீர்த்து வைத்தது. ஈராக் (Iraq) குக்கும் துருக்கிக்கு மிடையே ஏற்பட்ட எல்லைப் பிரச்சினையும் சங்கத்துக்கு முன் வந்த பொழுது, நீண்ட விசாரணையின் பின் ஒரு விசாரணைச் சபை செய்த முடிபுகளை இரு பகுதிகளும் ஒப்புக் கொண்டன.
சங்கத்தின் பெலவீனம் :
உலகின் சிறு நாடுகள் சங்கத்தின் ஆணையை மதித்து, அதன் முடிபுகளை ஏற்க ஆயத்தமாக நின்றன. ஆனல் பேரரசுகளின் ஆக்கிர மிப்பு நோக்கங்கள் தலைப்பட்ட பொழுது, அது ஒன்றுமே செய்ய முடியாத நிலைக்குள்ளாயிற்று. தன் தீர்ப்புக்களை நிறைவேற்றுவிக்க ஓர் இராணுவ அமைப்பு இல்லாமற் போனதே, சங்கத்தில் உள்ள பெரிய குறைபாடுகளில் ஒன்ருயிற்று. இக் காரணத்தினலேயே சங்கம் யப்பான், இத்தாலி, செர்மனி, இரசியா எனும் வல்லரசுகளின் ஆள் புலப்படர்ச்சித் திட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாது போயிற்று. யப்பான் 1931 இல் மஞ்சூரியாமேல் படையெடுத்தது; செர்மனி 1936 இல் இறைன் பிரதேசத்தை ஆக்கிரமித்து, அதில் படையை யிருத்தியதுடன் 1938 இல் ஒசுத்திரியாவையும் செக்கொசிலோவாகியா
உச - 26

Page 205
370 புது உலக சரித்திரம்
வையும், 1939 இல் மெமலையும் போலந்தையும் வலிமையாக இணைத் தது. 1939 இல் இரசியா பின்லந்தினுள் நுழைந்தது. வல்லரசுகளின் இந் நடவடிக்கைகளினல், சர்வதேச சங்கம், உலகத்தில் அமைதியை யும் சம நிலையையும் தாபிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தோல்வி யடைந்தது. 1935 ஆம் ஆண்டு, அபிசீனியப் போரில் இத்தாலி குற்ற வாளியெனத் தீர்ப்புக் கூறி, அந் நாட்டுக் கெதிராகப் பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதிக்க முயன்றும், பயன் பெறவில்லை. அதேபோல 1939 இல் இரசியா பின்லந்தின் மீது படையெடுத்தமைக்காக, சங்கத்தினின்று அகற்றப்பட வேண்டுமென ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. -
சர்வதேச சங்கத்தை எதிர்த்து, அதன் தீர்மானங்களை அலட்சியம் செய்வது சுலபமான கருமமானதினல், ஒன்றன்பின் ஒன்ருக வல்லரசு கள் அதை விட்டு விலகின. 1933 மார்ச் மாதம் யப்பான் வெளி யேறியது; செர்மனியும் அதேயாண்டிலும், இத்தாலி 1939 இலும் சங்கத்தை விட்டுத் தாமாக நீங்கின. 1940 அளவில் உலக வல்லரசு களில் பிரித்தன், பிரான்சு என்ற இரு நாடுகள் மாத்திரமே சங்கத் தின் ஆதரவாளர்களாய் எஞ்சி நின்றன. அவ்வாண்டுக்குள், சங்கமும் வேர்சையில் வெற்றி பெற்ற இங்கிலந்தும் பிரான்சும் அமைத்த அரசியல் ஏற்பாடுகளை பாதுகாக்கும் கழகமாகவும், அவர்களது ஐரோப்பிய ஆதிக்கத்தை ஆதரிக்கும் தாபனமாகவும் உருமாறியது. தோல்வியடைந்த நாடுகள், தம் மான பங்கத்தின்மேற் கட்டப் பெற்ற அமைப்பை ஆதரிக்கச் சித்தம் கொள்ளவில்லை ; ஆரம்பம் முதலே அவை, சங்கத்தை ஒரு சார்புடைய அமைப்பென்றே முடிவு செய்தன. இதனல் சங்கம் ஒரு சர்வதேசத் தாபனம் என்ற முறையில் பூரண தோல்வியே கண்டது.
எனினும் சர்வதேச சங்கத்தின் அத்திவாரத்திலேயே, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐக்கிய நாட்டமையம் என்ற பிறிதொரு சர்வதேசத் தர்பணம் கட்டப்பட்டது. முந்தியதன் தோல்வியின் சரித்திரத்திலிருந்தே பிந்தியது நல்வழியைக் கடைப்பிடிக்க முயலு கின்றது.

இரசியாவில் சீர்திருத்த புரட்சி இயக்கங்கள் 37.
அதிகாரம் 23
இரசியாவில் சீர்திருத்த, புரட்சி இயக்கங்கள் (1855-1918)
கிறைமியன் போர், ஐரோப்பாவின் 19ஆம் நூற்ருண்டு வரலாற்றை இரு பெரும் கூறுகளாய்ப் பிரிக்கும் ஒரு மூல நிகழ்ச்சியாகும். இக் கூற்றனது இரசிய வரலாற்றுக்கு மிகவும் பொருத்தமானது. கிறை மியப் போரில் இரசியாவின் தோல்வியானது முதலாவது நிக்கலசின் ஆட்சி முறையின் முழு மதிப்பையும் இழக்கச் செய்தது. அன்று முளைத்த சனநாயக இயக்கம், இன்றுவரை ஏதோ ஒருவகையில் இர சிய உண்ணுட்டு வரலாற்றின் பிரதான போக்காய் அமைந்துள்ளது.
முதலாம் நிக்கலசு (1825-55):
ரிக்கலசின் ஆட்சிக் காலத்தின் முப்பது ஆண்டுகளும், சர்வாதிகாரத் தைப் பாதுகாப்பதிலேயே கழிந்தன. சர்வாதிகாரத்தை ஆதரிக்கவே வெளியுலகில் அவரது படைகள் பயன்படுத்தப்பட்டன. உண்ணுட்டில் தாராண்மைவாதத்தை அடக்கவும், அழிக்கவும் வேண்டிய நடவடிக் கைகள் யாவும் மேற்கொள்ளப்பட்டன. இரசியாவின் மேற்கு எல்லை களில் ஒரு கடின அறிவுக் கட்டுப்பாட்டை நிறுவி, அரசியலையும் தத் துவஞானத்தையும் உள்ளீடாய்க் கொண்ட பிற நாட்டு இலக்கியங் கள் தன்னட்டினுள்ளே பிரவேசிக்கவிடாது தடுத்தார். இரசியப். பிரசைகளின் வெளிநாட்டுப் பிரயாணங்கள் தடை செய்யப்பட்டன. உண்ணுட்டுப் பத்திரிகைகளுக்கும் விலங்கிடப்பட்டது. புரட்சி மனப் பான்மையுடைய எழுத்தாளரின் சுதந்திரம் பூட்டப்பட்டது. பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டங்களும் பேராசிரியர்களும் காலத்துக்குக் காலம் பரிசீலிக்கப்பட்டனர். இராணுவப் பாடசாலைகளின் எண் ணிக்கை அதிகரிக்கப்பட்டது. விரும்பினவர்களைக் கைதிகளாக்கவும், சிறைசெய்யவும் நாடுகடத்தவும் பொலீசு அதிகாரிகளுக்கு அதிகாரங் கள் வழங்கப்பெற்றன. அரசியல் அடிப்படையிலிருந்து மக்களின் எண்ணங்களை மடைமாற்றும் இரசிய இலக்கியங்கள் மனப்பூர்வமாய் ஆதரிக்கப்பட்டன. இராணுவத்தினரைப் போன்று எண்ணங்களிலும் பழக்க வழக்கங்களிலும் இரசிய மக்கள் பயிற்றப்பட்டனர். '.
இதைத் தொடர்ந்து கிறைமியன் போரில் இரசிய மகாசருவாதி காரியின் துருப்புக்கள் மேற்கத்திய தாராண்மை வாதப் பட்ைகளால் தோற்கடிக்கப்பட்டன. அதிகாரிகளின் கபடத்தாலும் அளவு மீறிய களவினலும் இரசிய திறைசேரி வெறுமையாயிற்று. பொதுமக்களி

Page 206
372 புது உலக சரித்திரம்
ஞல் பூசிக்கப்பட்ட இராணுவ இலட்சிய வீரன் மக்களைத் தோல்விப் படுகுழியில் தள்ளினன். இரசிய சர்வாதிகாரம் வெட்கித் தலை கவிழ்ந்து நின்றது.
போருக்கு முன் புகைந்து கொண்டிருந்த அதிருப்தி தோல்விக்குப் பின்னர் சுடர்விட்டு எரிய ஆரம்பித்தது. கைப்பிரதிகளின் மூலம் தாராண்மைக் கொள்கைகள் விதைக்கப்பட்டன. பிரெஞ்சுப் புரட் சிக்கு முன்பு பிரெஞ்சு மக்களின் உள்ளங்களில் ஏற்பட்ட துணிவும் மலர்ச்சியும் போல, இரசிய மக்களையும் ஒரு புத்துணர்ச்சியும் அச்சமின் மையும் ஆட்கொண்டன.
1. சீர்திருத்த இபக்கமும் அதன் இறுதித் தோல்வியும்
இரண்டாம் அலெக்சாந்தர் (1855-81) :
1855 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முதலாம் நிக்கலசு காலமானர். இரண்டாம் அலெக்சாந்தரின் சிம்மாசன ஏற்றத்துடன் நவீன சீர் திருத்தங்களின் காலம் பிறந்தது. புதிய சார் அவரது தந்தையைப் போன்று இராணுவப் பிரீதி படைத்தவரல்லர். அன்பும் கருணையும் மனிதாபிமானமும் நிறைந்தவர். இரசியாவின் மீது அவர் அளவி றந்த பற்று வைத்திருந்தார். இரசியாவின் அவமானத்தை தன்னு டையதாய் மதித்து, பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்றினர். கொள்கைகளும் தத்துவங்களும் அவரை அடிமைப் படுத்தவில்லை. ஆட்சியின் ஆரம்பத்தில் அவர் வெளியிட்ட சீர்திருத்தங்கள் உண்மைத் தேவைகளின அடிப்படையில் ஒழுங்கு செய்யப்பட்டன வேயன்றி, சனநாயகக் கருத்துக்களால் உந்தப்படவில்லை. GS முன்னிலையில் உன்னத நிலை வகித்த இரசியா, தன் மகிமையை மீண்டும் பெறவேண்டுமாயின் நாட்டின் பொருளாதாரக் கட்டுக்கோப்பு திருத்தியமைக்கப்படல் வேண்டுமென்பதை அ வர் நன்குணர்ந் திருந்தார். அவருடைய திட்டங்களில் புது யுகத்தின் உற்சாகம், சீர்திருத்தப் போக்கு, அரசாதிகார நிதானம் யாவும் பொதிந்திருந் தன. தன்னெண்ணத்துக்கப்பால் எதற்கும் அவர் தன்னை அர்ப் பணிக்க விரும்பவில்லை.
அலெக்சாந்தரின் முற்போக்குக் கொள்கை :
முப்பது ஆண்டுகளுக்கு முன் இராணுவப் புரட்சியின் போது முதலாம் நிக்கலசினல் கைது செய்யப்பட்ட வீரர்கள் சைபீரியாவி லிருந்து விடுதலையாகி, வெளியேறியமை இவரது ஆட்சியின் ஆரம்ப

இரசியாவில் சீர்திருத்த புரட்சி இயக்கங்கள் 379
முயற்சியாயிருந்தது. இரசியாவின் இயற்கைச் செல்வங்களை அபி விருத்தி செய்தமை இரண்டாம் சீர்திருத்தமாய் அமைந்தது. தொடர்ந்து தொழில் , வணிக முயற்சிகளின் விருத்திக்கு புகைவண்டி வீதிகள் அமைக்கும் திட்டங்கள் பூர்த்தியாயின. கிறைமியன் போரில் இரசியாவின் தோல்வி, போக்குவரவு வசதியீனத்தால் நிகழ்ந்தது என்பதை அலெக்சாந்தர் நன்கறிவார். இரசியாவின் அவமானத் துக்கும் பொருளாதார மேம்பாட்டுத் தடைக்கும் அடிமை முறை என்ற சமுதாய இன்னல் பிரதான காரணமாய் இருந்ததால் அதை உடனடியாகச் சீர்திருத்த முற்பட்டார்.
இரசியாவின் ஊழிய முறை (Serfdom) :
இரசிய குடிசனத்தில் 4 கோடி மக்களின் அரைப்பங்கினர் ஊழி யர்கள். இவர்களில் ஏறக்குறைய 2 கோடி மக்கள் முடிக்குச் சொந்த மானவர்கள் மிகுதியினர் திருச்சபை, ஏனைய தாபனங்கள் என்பவற் றின் அடிமைகள். சாரின் நிலங்களில் சேவை செய்தோர் நிலைமை தனி யுரிமையாளரின் நிலங்களில் கடமையாற்றியவர்கள் நிலையிலும் பார்க்க மிக மேலானது. அவர்கள் கடுமையான வரி விதிப்பு, கட்டாய ஊழி யம், நிர்ப்பந்தமாகப் பணம் பறிக்கப் பட்டமை என்பனவற்றிற்கு இலக்காயிருந்தனர். இடம் விட்டு இடம் பெயரவும், கா னி களை வாங்கி விற்கவும் அவர்களுக்கு உரிமையில்லை. கிராமச் சமூகங்களாய் கூடி வாழவும், வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபைகளால் ஆட்சி செய்யப்படவும் உ ரி  ைம பெற்றிருந்தனர். அவர்களுக் கெதிராய் இணைக்கப்பட்ட இன்னல்களுக்குப் பரிகாரம் தேட மார்க் கமின்றி யாவற்றையும் சகிக்க வேண்டிய பரிதாப நிலைக்குள்ளானர் கள். இரசிய அடிமைச் சட்டப் பிரகாரம் உரிமையாளர், அடிமைகள் மீது ஊழியத்தைச் சுமத்தவும் வரி விதிக்கவும், தனிப்பட்ட சேவை களைப் பெறவும் அதிகாரம் பெற்றிருந்தார்கள். தம் எண்ணப்படி அவர்களை விற்கவும், நாடு கடத்தவும், தலையை மழித்து, இராணுவப் போர் வீரராய்ச் சேர்க்கவும் உரிமை பூண்டிருந்தனர். இரசிய ஊழி யர்களின் நிலை, புரட்சிக்கு முந்திய பிரெஞ்சு மூன்ரும் குடித்திணையின் நிலையிலும் பார்க்கப் பன் மடங்கு பரிதாபமானது.
ஊழியரின் விடுதலைச் சட்டம் :
1861 ஆம் ஆண்டு ஊழிய முறை நிராகரிப்புச் சட்டத்தின் பய னய் 35,000,000 ஊழியர் சுதந்திரம் பெற்றனர். நான்கு ஆண்டு களின் பின் வேருெரு கண்டத்தில் இதற்கீடான ஒரு கட்டளை பிறப் பிக்கப்பட்டது. அந்நூற்ருண்டின் வரலாற்றில் ஐக்கிய அமெரிக்க அரசின் கடிப்பதி ஆபிரகாம் இலிங்கனின் நாமமும் சர்வாதிகாரி
A 26

Page 207
374 புது உலக சரித்திரம்
யான சார் இரண்டாம் அலெக்சாந்தரின் நாமமும் இச்சட்டம் நிறைவேறிய தின் காரணமாய் எக்காலத்தும் அழிக்க முடியாதபடி
பொறிக்கப்பட்டுள்ளன.
அலெக்சாந்தரின் சுதந்திரச் சட்டம் மூன்று தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவது தனி மனிதனின் சுதந்திரம். ஊழியர் எசமானர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலையடைந்து சுதந்திரக் குடிகளாயினர். இரண்டாவது தத்துவத்தின்படி சுதந்திரம் பெற்றவர்கள் நில உரிமையையும் பெற்றமையினல் பிரபுக்கள் தமது நிலத்தின் ஒரு பகுதியை இழந்தனர். சீவைேபாயக்கக்கு வழியற் m வகுப்பு நாட்டில் கட்டவிழ்க்கப்பட்டதனல் வேதனங்கள் குறையவும் சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு ஈடு செய்யவும் வேண்டியதா யிற்று. இவற்றை மேற்கொள்ள, பிரபுக்களின் நிலங்களின் ஒரு பகுதி விவசாயிகளின் வசம் சேரவேண்டியதென்பது அலெக்சாந்தரின் திட்ட மாயிற்று. சமாதான நீதிபதிகள், பிரபுக்களுடன் சமரசம் பேசி விவசாயி களின் நில அளவுகளை நிர்ணயிக்குமாறு கட்டளையிடப்பட்டனர். மூன்ரு வது அம்சத்தின்படி நிலங்கள் தனிப்பட்ட விவசாயிகளின் சொந்த மாய் விடப்படாது அவை கிராமச்சங்கங்களின் அதிகாரத்தில் விடப் Lu L -Gior. கிராமச்சங்கங்கள் பிரதியாண்டும் பிரபுக்களுக்கு கட்ட வேண்டிய நட்ட ஈட்டுக் கட்டணங்களுக்குப் பொறுப்பேற்றது. பிர புக்களிடமிருந்து நிலத்தைப் பெற்ற அரசாங்கம், கிராமச் சங்கங் களுக்கு கடன் நிதியுதவியது.
இவ்வேற்பாடுகளால் சமூக, பொருளாதார நெருக்கடி குறைக் கப்பட்டது; சீவனுேபாய வழி திறக்கப்பட்டது. நிலங்கள் கிராமச் சங்கத்தின் பொதுவுடைமையாக்கப்பட்டதால் நட்ட ஈடு செலுத்தும் பொறுப்பு விவசாயிகளின் கையில் விடப்பட்டது. புதுச் சட்டத்தின் வெளியமைப்பு புரட்சிகரமாகத் தோற்றிய போதிலும், விவசாயிகள் பெரும் ஏமாற்றத்தையே கண்டனர். வரிகள் வளர்ந்தனவேயன்றி, பொருளாதார நிலையில் உயர்வு தென்படவில்லை; வரிகள் அநீதி யானவையென்று விவசாயிகள் குறை கூறினர் ; கிராமச் சங்கங் களின் அதிகாரம் பிரபுக்களின் அதிகாரத்துக்கு நிகராகி, தரப்பட்ட சுதந்திரம் போலியாக்கப்பட்டது.
பிற சீர்திருத்தங்கள் : 镇
அடிமை நீக்கும் சட்டத்தைத் தொடர்ந்து வேறு பல சீர்திருத் தங்களும் எழுந்தன. பொது சன அபிப்பிராயம் தேச விவகாரங்களை நிர்ணயிக்கும் அனுமதி பெற்றது. பல்கலைக் கழகங்கள், வெளிநாட் டுப் பிரயாணங்கள் மேல் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விலக்கப்பட்

இரசியாவில் சீர்திருத்த புரட்சி இயக்கங்கள் 37.5
டன : பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது : இராணுவக் கப்பற் படைகள் புது நிருவாகம் பெற்றன ; ஆண்டு தோறும் வரவு செலவுத் திட்டம் வெளியிடும் முறை ஆரம்பமானது. யாவற்றிலும் மேலாக நீதி, உள்ளூராட்சி நிருவாகங்களில் ஏற்பட்ட சீர்திருத்த அமைப்புக்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை.
நீதி நிருவாகத்தின் புனர் நிர்மாணம் :
இரசியாவின் நீதி நிருவாகம் இலஞ்ச ஊழல்களால் மலிந்து காணப்பட்டது. இரகசிய நடவடிக்கைகள், சம்பிரதாய ஏற்பாடுகள் ஏரா ளமாயிருந்த நீதிமுறை இவைகளைந்தெறியப்பட்டு ஆங்கில, பிரெஞ்சு அடிச்சுவட்டில் முற்றிலும் புதிய தொரு நிருவாக அமைப்பு உரு வானது. அரசாங்க நிருவாகம் நீதி நிருவாகத்திலிருந்து வலுவேருக் கம் பெறவே, நீதிபதிகளுக்குச் சுதந்திரப் பாதுகாப்பு அளிக்கப்பட் டது; நடுவர் முறை முதன்முதல் இடம் பெற்றது. சட்டத் தொகுப்பு தயாரிக்கப்பட்டு விசாரணைகள் இலகுவாக்கப்பட்டன. சமாதான நீதி வான்கள் மூலம் சிறு குற்றங்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புப் பெற்றன. இப்புதிய சட்டங்களை நிருவகிக்க புதிய மனிதரை வேண்டிய அளவு நியமிக்க இரசியாவால் முடியவில்லை. பயிற்றப்பட்ட அதிகாரிகளின் குறைவால் ஒழுங்கான இயக்கம் சிறிது காலம் தடைப்பட்டது. அட்டைபோல ஒட்டியிருந்த இலஞ்சப் பழக்கத்தை அகற்றுவது கடினமாயிற்று. காலப் போக்கில் இலஞ்சம் குறைந்தது. புதிய கருத் துக்கள் மெல்ல மெல்ல வேரூன்றவே, நீதிச் சேவைகள் நனகுணரப் பட்டன.
உள்ளுராட்சி முறையில் மாற்றங்கள் : -
மேலும் உள்ளூராட்சி முறையைப் பன் முகப்படுத்தவும் இலகு. வாக்கவும் தல தாபன விவகாரங்களில் சுயவாட்சி வழங்கவும் நட வடிக்கைகள் எடுக்கப்பட்டன. செமித்வோக்கள் (Zemstwos) எனும் புதிய தல ஆட்சிச் சபையில், பிரபுக்கள், நடு வகுப்பினர், விவசாயி கள் ஒருங்கே பிரதிநிதித்துவம் பெற வழி வகுக்கப்பட்டது. இப் புதுச் சபைகளில் ஒரு பிரிவான மாவட்டச்சபை (District Council) மக்கள் வாக்குரிமையினல் தெரிவு செய்யப்பட்டது. மாகாணசபை (Provincial Council) மாவட்டச்சபை மூலம் தேர்ந்தெடுக்கப் lull-gil.
சுருங்கக் கூறின் இரசியாவை மேல் நாடுகளின் முன் வரிசையில் உயர்த்தி வைத்த மகா பீற்றர் செய்த தொண்டுகளைப் போன்று இரண்டாம் அலெக்சாந்தர், ஊழிய முறை நீக்கம், நீதி, தலபாலன நிருவாகம் எனும் துறைகளில் செய்த சேவைகள் மகத்தானவை.

Page 208
376 புது உலக சரித்திரம்
பிற்போக்குவாதத்தின் தோற்றம் :
எனினும் இந்தப் பூரிப்பு நெடுங்காலம் நீடிக்கவில்லை. 1866 முதல் அலெக்சாந்தரின் ஆட்சிப்போக்கு திரும்பியதுடன் சீர்திருத்த உணர்ச்சியும் தளர்வுற்றது. 1863 ஆம் ஆண்டு ஏற்பட்ட இரண்டா வது போலிசுப் (Polish) புரட்சியும் இதற்கொரு காரணமாய் அமைந் தது. ஒரு புறம் எதேச்சாதிகாரிகள் சீர்திருத்தங்கள் மலிந்துவிட்டன என அபிப்பிராயம் தெரிவித்தனர். மறுபுறம் சூனியவாதிகள் (Nihi -lists) தம் இலட்சியக் கனவுகளை நனவாக்கும் முயற்சிகளில் இறங் கினர்.
gbaoful Gust 56 (Nihilism):
1862 முதல் சூனியவாதம் பல்கலைக் கழகங்களில் மிக அமைதி யாக வளர்ந்து வந்தது. “சூனியவாத இயக்கத்தினன் எவ்வித அதி காரத்துக்கும் தலை வணங்காதவன். ஒரு தத்துவக் கொள்கையானது எத்தகைய பயபக்தியுடன் இணைக்கப்பட்டிருந்த போதிலும் அதன் மீது நம்பிக்கை பூண்டு, அதனை ஏற்க ஆயத்தமற்றவன்' என்ற வியாக்கி யானம் தரப்பட்டது. சாரின் சர்வாதிகாரம், அரசாங்க நிருவாகம், திருமறையின் தூய்மை, சமுதாயக் கடமைகள் யாவும் சூனியவாதி களினல் ஆட்சேபிக்கப்பட்டன. பழைய மனுேபாவத்தை வேரோடு கல்லியெறிந்து ஒரு நவமான சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென் பதே அவர்களது எண்ணமாகும்.
எதனையும் விஞ்ஞான முறையில் தருக்க ரீதியாக ஆராய வேண்டுமென்பது அவர்களது அடிப்படைத் தத்துவமாகும். சூனிய வாதமானது சகல சார்புகளிலுமிருந்து விவேகத்தை உறிஞ்சியெடுப் பதற்கு நடைபெறும் போராட்டம். அது மனிதனின் 'பரிபூரண தனித்துவம்' என்று ஒரு நூலாசிரியர் வர்ணித்தார்.
சில ஆண்டுகளின் பின்னர் (1860-70) சூனியவாதமானது புரட்சி இயக்கமாக உருவெடுத்தது. 1866 இல் சாரைக் கொல்ல சதி முயற்சிகள் நடைபெற்றன. 1870 ஆம் ஆண்டு பரிசுச் சமிதி (Paris Commune) யின் எடுத்துக்காட்டு, அகிலம் என்ற சமூகவுடைமைச் சங்கத்தின் பிரசாரம் என்பவற்றின் பயனக இரு பிரதான கருத்துக் கள் தோன்றின. ஒன்று சமூகவுடைமைவாதம்; மற்றது ஆட்சியறு வாதம் (Anarchism). சமூகவுடைமைவாதிகள் சாத்வீக முறையில் விவசாயிகளுக்கு அறிவு புகட்ட முயன்றனர். மசீனியின் இத்தாலிய இளைஞரைப்போன்று, சமூகவுடைமைவாதிகள், மக்களுடன் கூடிவாழ்ந்து நாட்டின வாதத்தையல்ல, சமூக, பொருளாதார சுதந்திரங்களைக் கற் பிக்க வேண்டுமென்ருர், அவர்களின் தலைவர் இலவ்ருேப் (Layoff). மறுபுறம் ஆட்சியறவாதிகள், பக்கூணின் (Bakunin) என்பாரின் தலை

இரசியாவில் சீர்திருத்த புரட்சி இயக்கங்கள் 377
மையில், விவசாயிகளைப் புரட்சியிலிறங்குமாறு தூண்டினர். ஆரம் பத்தில் சமூகவுடைமைவாதிகளின் கருத்துக்களே பொதுமக்களைக் கவர்ந்தன. இறுதியில் அவர்களது பிரசாரம் பொலீசுப் படையின ருக்கு எட்டியதால் சூனியவாதிகள் பலர் கைது செய்யப்பட்டனர். 1863 க்கும் 1874 க்குமிடையில் 150,000 பேர் சைபீரியாவுக்கு நாடு கடத்தப் பெற்றனர்.
பயங்கர நடை முறைகள் :
இப்பிரசார இயக்கம் தோல்வியுற்றதுடன், சூனியவாதிகள் பயங் கர நடைமுறைகளைக் கைக்கொள்ளத் தலைப்பட்டனர் ; வார்த்தைகள் பயனற்றவை என்று உணர்ந்தபின் அவர்கள் செயல் மூலம் தொழிற் பட ஆரம்பித்தனர். பலத்தைப் பலத்தினுல் தான் எதிர்ப்பதே பயன் தர வல்லது என்ற நம்பிக்கை பிறந்ததுடன் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பு ஏற்படலாயிற்று. 1876-78 ஆண்டுகளில் பரிசில் போன்று பல வீதிப் புரட்சிகளும் கலகங்களும் உண்டாயின. ஆனல் அரசாங் கம் இவற்றை வெகு இலகுவாக இராணுவ உதவி கொண்டு நசுக்கி விட்டது. சூனியவாதம், சாத்வீக முறைகளைவிட்டு ஒரு விசாலமான இரகசிய சதி இயக்கமாக மாறியது. அரசாங்க அதிகாரிகள் பலர் அவர்களது கோபாவேசத்துக்குப் பலியாயினர். இரகசியப் பொலீசின் தலைமையதிகாரி பட்டப்பகலில் பெற்றே கிருட் வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். சாரைக் கொல்ல நான்கு முயற்சிகள் செய்யப் பட்டன.
சாரின் மறைவு :
மூன்ருவது கொலை முயற்சிக்குப் பின்னர், பலாத்காரம் பயனற் றதென உணர்ந்த அலெக்சாந்தர், சூனியவாதிகளை சமாதான வழியில் அடக்கத் திட்டமிட்டார். 1881 இல் ஓர் அரசமைப்புத் திட்டம் வகுக்கப் பெற்று, சாரின் கைச்சாத்தைப் பெற்று பிரசுரமாக ஆயத்தமான வேளையில், சடுதியாக அதற்குத் தடை யேற்பட்டது. அவ்வாண்டு மார்ச் 13 ஆம் நாள், அலெக்சாந்தர் பெற்ருேகிருட் வீதியின் வழியாக திரும்பிக் கொண்டிருந்த வேளையில், ஒரு போலிசு மாணவன் எறிந்த குண்டு அவரைப் படுகாயத்துக்குள்ளாக்கிற்று. அறிவில்லா நிலையில், அலெக்சாந்தர் அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு உயிர் நீத்தார்.
மூன்றம் அலெக்சாந்தர் (1881-94) :
இரண்டாம் அலெக்சாந்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்
இரசியாவில் சமூக மாற்றங்களைப் பற்றிய பிரச்சினையை நிறுதிட்டத்
துக்குக் கொண்டு வந்தது. கொலையின் வழியில் புரட்சி வாதிகளுக்

Page 209
378 t-lֆ] உலக சரித்திரம்
கெதிராக எழுந்த எதிர்ப்பை மூன்ரும் அலெக்சாந்தர் தனக்குச் சாதகமாக நன்கு பயன்படுத்திக் கொண்டார். மூன்ரும் அலெக் சாந்தர் தோற்றத்திலும், கம்பீரத்திலும், ஆண்மையிலும் உண்மை யாகவே சாரின் பிரதியுருவம்.
மூன்ரும் அலெக்சாந்தர் வெளி நாடுகளில் வெற்றிகளை யீட்டவோ அன்றேல் சர்வதேச சூழ்ச்சித் திட்டங்களில் பங்குபற்றவோ நாட்டங் கொண்டாரிலர். நிகழ்வு நிலையை மாற்றமின்றி பாதுகாக்க வேண்டு மென்பதே அவரது நோக்கம். அவரது உற்ற ஆலோசகர் (Constantin Pobeydomostsev) வடிகட்டின ஒரு சுத்தமான எதேச்சாதிகாரி. அரச னும் ஆலோசகரும் ஒன்று சேர்ந்ததுடன், பிற்போக்குவாதமும் வல் லாட்சியும் பதின்மூன்று ஆண்டுகளுக்கு அமைந்தன. நாடு இரகசியப் பொலீசாரின் உதவியுடன் ஆட்சி செய்யப்படலாயிற்று. அவர்கள் சூனியவாதிகளைச் சிறைப்படுத்தியும், நாடு கடத்தியும், கொலை செய் தும் வந்தனர். கல்வியும் பத்திரிகைகளும் தணிக்கை செய்யப்பட்டன. நீதி மன்றங்களில் நடுவர் முறை நீக்கப்பட்டது. அமைக்கப்பெற்ற காலம் முதல் நன்கு சேவை செய்த செமித்துவோக்களின் அதிகாரங் கள் குறைக்கப்பட்டன. அலெக்சாந்தர் செய்திருந்த விவசாயச் சீர்திருத்தங்களிலும் பழைய மானிய முறையின் அமைப்புக்கள் புது ரூபத்தில் புகுத்தப்பட்டன : விவசாயிகளைக் கட்டுப் படுத்துவதற்காக பழைய நிலக்கிழார்களில் பலர் நிலத் தலைஞர்களாக (Land Cap. tains) நியமிக்கப்பட்டு, மக்களை விசாரணையின்றிச் சிறையிலடைக்கக் கூடிய அளவு அதிகாரத்தைப் பெற்றனர்.
இரசியாவுக்கு கைத்தொழிற் புரட்சியின் வருகை :
மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட கைத்தொழிற் புரட்சியின் மாற்றங்களைக் கேட்டோ கண்டோ அறியாத இரசியா, மூன்ரும் அலெக்சாந்தரின் காலத்தில் தான் தொழில் விருத்தித் துறையில் முதற் காலடி எடுத்து வைத்தது. நாட்டின் இயற்கை மூலங்களைப் பயன்படுத்த வல்ல எந்திரத் தொழில் முறைகளை ஏற்படுத்தத் திட் டங்கள் உருவாக்கப்பட்டன. இலகுவான போக்குவரவு வசதிகளை மக்களுக்குப் பெற்றுத்தர புகையிரத வீதிகள் அமைக்கப்பட்டன. ஆலைத்தொழில் மு  ைற க் குத் தேவையான மூலதனத்தை பிரெஞ்சு நிதி நிருவாகிகள் கொடுத்துதவ முன்வந்தனர். இவ்வுதவியே இரசி யாவுக்கும் பிரான்சுக்குமிடையில் இருவர் நட்புறவு (Dual Aliance) முற்றுப்பெற வழி காட்டியது. கைத்தொழிற் புரட்சியின் வருகை யுடன், பிற ஐரோப்பிய நாடுகளில் போன்று இரசியாவிலும் ஆலைத் தொழில் முறையுடன் சம்பந்தப்பட்ட இன்னல்களும் தலைகாட்டின.

இரசியாவில் சீர்திருத்த புரட்சி இயக்கங்கள் 379
நகரங்கள் காளான்கள் போல முளைத்தன ; தொழிலாளர் ஒன்று கூடினர்; தொழிற் சங்கங்களும் வேலை நிறுத்தங்களும், முழு மாற்று வாதமும் இரசிய பொருளாதார அரங்கில் தோற்றின. தொழிலாள ரின் அதிருப்தியின் மத்தியில் பொதுவுடைமைக் கருத்துக்கள் பரவின
இரண்டாம் நிக்கலசு (1894-1917) :
சார்களில் கடைசியானவரான இரண்டாம் நிக்கலசு, தன் தந்தை
யின் சிம்மாசனத்தில் 1894 ஆம் ஆண்டு அமர்ந்தார். தந்தையைப் போன்று தன் ஆட்சியின் ஆரம்ப காலத்தில், நிகழ்வு நிலையைப் பாதுகாப்பதிலேயே காலத்தையும் நேரத்தையும் செலவிட்டார். தம் இழிவான பொருளாதார நிலையில் சலிப்படைந்த மக்கள், பொதுவுடைமைத் தத்துவங்களில் ஒரு சுவர்க்கத்தைக் காணலாயிளர். யப்பானியப் போரில் தோல்வியும் அதன் பயன்களும் :
1904 ஆம் ஆண்டு இரசியா, யப்பானுடன் போரில் பொருதிய துடன் இரசிய வரலாற்றில் ஒரு புதுத் திருப்பம் ஏற்பட்டது. இப் போர்க் காலத்தில் ஏற்பட்ட பல தோல்விகள் இரசியாவின் பெல வீனத்தையும், திறமைக்குறைவையும் நேர்மையின்மையையும் சுட்டிக் காட்டின. போட் ஆத்தர் இழக்கப்பட்டமை, மக்களின் உள்ளங்களில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த தீயில் எண்ணெயை வார்த் ததுக்குச் சமானமாயிற்று. தொழிலாளர் புரட்சிக்கோலம் பூண்டனர். 1905 ஆம் ஆண்டுக் கலகங்கள் :
செயின்ட் பீற்றசுபேக்கில் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்தனர். 1905 ஆம் ஆண்டு 'செஞ்ஞாயிறு" (Red Sunday) எனப் பெயர் பெற்ற 22 ஆம் நாள், கேப்பன் அடிகளின் (Fr. Gapon) தலைமையில் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளரின் ஊர்வல மொன்று செயின்ட் பீற்றசுபேக்கில் சாரின் மாளிகையை நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில், துருப்புக்கள் துப்பாக்கிப் பிரயோ கஞ் செய்து கலகக்காரரைக் கலைத்து விட்டனர். இதைக் கண்டு மக்களின் கோ பம் கரைபுரண்டெழுந்தது. இரு மாதங்களாக நாட்டில் ஆட்சியறவு நிலவியது. பல அரசாங்க அலுவலாளர்கள் மக்களின் கோபத்துக்குப் பலியாயினர் : பல நகரங்களில் வேலை நிறுத்தங்கள் ஏற்பட்டன : சாரின் மாமஞன கோமகன் சர்கியசும் (Grand Duke Sergius) (ogs TyfanrGMTifaðir G0 sulai udrt Girl Gowri.
முதல் பாராளுமன்றம் (Duma) :
இந் நடவடிக்கைகளைக் கண்டு சார், தன் கொள்கையை மாற்றத்
திட்டமிட்டு, 1905 ஆகத்து 19 இல், டூமா என்ற பொதுமக்கள் மன்
றத்தை அமைக்கத் தான் சித்தங் கொண்டதாக வெளியிட்டார்.

Page 210
380 புது உலக சரித்திரம்
ஆணுல் வாக்காளரின் தகைமைகள் வெகுவாக உயர்த்தப்பட்டமை யினுல் டூமாமை ஒரு பொதுமக்கள் மன்ற மெனக் கருத முடியாமற் போயிற்று ; கிளர்ச்சி தொடர்ந்து நடைபெற்று வரலாயிற்று. ஒற் ருேபரில் ஒரு பொது வேலைநிறுத்தம் ஏற்பட்டது. புகையிரதங்கள், பத்திரிகைகள், வியாபாரம், தொழில், மின்சாரம் முதலாம் துறைகள் பரிபூரணமாக ஒத்துழைத்தமையினல் இரசியா நிறுதிட்ட நிலையை எய்தியது. சாரும் பல புதுச் சலுகைகளை ஈந்தார். வாக்காளர் தகைமைகள் குறைக்கப்பட்டதுடன் டூமாவுக்குச் சட்டமாக்கும் அதிகார மும் வழங்கப்பட்டது. ஆனல் தாராண்மை வாதத்தை நோக்கி ஏற்பட்ட முன்னேற்றம் வெகு விரைவில் மறைந்தது. இரு மாதங்க ளுக்குள் முதல் டூமா கலைக்கப்பட்டது.
இரண்டாம் மூன்றம் நான்காம் டுமாக்கள் :
இரண்டாவது டூமா 1907 இல் கூடிற்று. அதிலும் எதிர்க்கட்சி யினரே பெரும்பான்மையினராக இருந்தமையினல், சார் அதையும் தன் சித்தத்துக்கு வளையச் செய்ய முடியாமற் போகவே, அதுவும் கலைந்தது. டூமாவின் சம்மதமின்றி ஒரு புது வாக்குரிமைத் தகுதிச் சட்டம் அமுல் நடத்தப்பெற்று. மூன்றுவது டூமா 1907 முதல் 1912 வரை இயங்கியது.
2. இரசியப் புரட்சி
மத்திய ஐரோப்பாவில் நாட்டினவாதம், சனநாயகம் எனும் இரு தத்துவங்களுக்கு பெரும் வெற்றிகளை ஈட்டித் தந்த முதலாவது உல கப்போர், இரசியாவில் சமுதாய, பொருளாதார மாற்றங்களுக்கும், புது அரசியல், நாட்டின இயக்கங்களுக்கும் வழியைத் திறந்து விட் டது. பிரெஞ்சுப் புரட்சிக்குப்பின் உலகில் ஏற்பட்ட சமூக எழுச்ஓ களில், இரசியப் புரட்சியுடன் ஒப்பிடுவதற்கு வேருென்றில்லை. அஃது இரசியாவின் அமைப்பை அடித்தளம் வரை மாற்றியமைத்தது மன்றி, உலகில், பாரதூரமான விளைவுகளை யுண்டு பண்ண வல்ல ஒர் இயக் கத்தையும் ஆரம்பித்து வைத்தது.
புரட்சிக்குரிய காரணங்கள் :
இரசியப் புரட்சியை "வருவித்த காரணங்கள் பெரும்பாலும் 18 ஆம் நூற்றண்டில் பிரெஞ்சுப் புரட்சியை உண்டு பண்ணிய கார ணங்களைப் போன்றவை. பிரான்சில் போன்று, இரசியாவிலும் சார் கள் திறமையற்ற கொடூர வல்லாட்சி முறைக்கே தம்மை அர்ப் பணம் செய்தனர். பல சந்தர்ப்பங்களில், பிற நாடுகளுடன் நடந்த போர்களில் இரசிய இராணுவமடைந்த படு தோல்விகள், சருவாதி

இரசியாவில் சீர்திருத்த புரட்சி இயக்கங்கள் 38
கார ஆட்சி முறையின் திறைமையின்மையையும் விவேகமின்மையையும் தெளிவாக எடுத்துரைத்தன. கிறைமியப் போரிலும், இரசிய-யப்பானி யப் போரிலும் இரசியா அடைந்த தோல்விகள் சாரின் ஆட்சியின் தகு திக் குறைவை நிரூபித்ததுடன், மக்கள் உள்ளங்களில் அதிருப்தியை யும் குடிகொள்ளச் செய்தது. இந்த அதிருப்தியை முதலாவது உலக யுத்தம், புரட்சியாக உருமாற்றியது. சாரின் சருவாதிகார ஆட்சி, முதல் உலகப் போரில் ஏற்பட்ட நெருக்கடிகளை மேற் கொள்ள முடி யாமற் போயினமை, புரட்சிக்குரிய தலையான காரணங்களிலொன்று.
இரண்டாவது, பிரான்சிற் போன்று இரசியாவிலும் சமூக அமைப்புக்கள் உயர் குலத்தோரை, கீழ் வகுப்புக்களிலிருந்து ஒரு மேற்கொள்ள முடியாத பிளவினல் பிரித்து வைத்தன. 19 ஆம் நூற்ருண் டின் மத்திய காலம் வரை இரசிய சமுதாயமானது பிரபுக்கள், ஊழியர், குருவாயம் எனும் மூவர்க்கங்களாக, அதி விசாலமான ஏற் றத் தாழ்வுகளுடன் நிலைத்து நின்றது. நிலத்தின் பெரும் பகுதி பிரபுக்களுக்கும் திருச்சபைக்குமே சொந்தமானது ; உயர் அரசாங்க உத்தியோகங்களை பிரபுக்களே நிருவகித்தனர். ஊழியர் பிரான்சின் மூன்றம் குடித்திணையைப் போன்று வறு  ைம யிலும், தரித் திரியத்திலும் உருண்டு புரண்டனர். அவர்கள் விடுதலை பெற்ற காலத்தில்கூட அவர்களது பொருளாதார நிலை அதி சொற்பமாகவே விருத்தியடைந்தது. இப்பேர்ப்பட்ட அதிருப்தியான நிலையில், ஊழி யர்கள், தமக்கு விமோசனம் பெற்றுத் தரப் போவதாகக் கூறும் எந்த இயக்கத்தையும் மனப்பூர்வமாக ஆதரிக்க ஆயத்தமாக விருந் தனர்.
இறுதியாக, மீண்டும் பிரான்சிற்போன்று இரசியாவிலும் ஓர் அறிவுப் புரட்சி, மக்களின் உள்ளங்களைப் புரட்சிக்கு தயார் செய்து பதப்படுத்தி வைத்திருந்தது. சார்கள், இரசியாவினுள் மேற்கு ஐரோப்பிய சீர்திருத்த, முழுமாற்ற வாத எண்ணங்கள் புகாவண்ணம் பலமான தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்த போதிலும், மேற்கின் உதாரணங்களும், சிந்தனைகளும் நாட்டினுள் நுழைந்து, அரசாங்கத்துக்கு முழு எதிரான ஓர் இயக்கத்தை ஆரம்பிக்கக் காரணங்களாய் அமைந்தன. இரசியாவில் ஓர் இலக்கிய மறுமலர்ச்சி மலர்ந்தது. தொல் சுத்தோய் (Tolstoy), தேர்கனேவ் (Tugenew), தொகத்தேவ்சிக்கி (Dostoievsky) எனும் எழுத்தாளர்களின் பிரபல்யம் பெற்ற காவியங்கள், இரசிய இளைஞர்களின் உள்ளங்களையும் சிந்தனை களையும் கொள்ளை கொண்டன. நாட்டில் கல்வியும், அறிவும், தாராள சிந்தையும் படைத்த வகுப்பினர், மேற்கு நாடுகளில் போன்ற அரசியல் சீர்திருத்தங்களை வேண்டி நின்றனர். மாட்சினதும் பக்கூனி னதும் (Bakunin) போதனைகளினல் தூண்டப்பட்டு இயங்கியவர்கள்

Page 211
382 புது உலக சரித்திரம்
சமூகவுடைமை வாதத்தையும், ஆட்சியறவையும் ஆசித்தனர். இரசியா வின் நிகழ்வு நிலையிலமைந்த நிறுவகங்கள் யாவையும் முழுமையாகத் தகர்த்தெறிய வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுந்த சூனியவாதம், இவ்வறிவுப் புரட்சியின் நேர் பயன்களில் ஒன்ருகும். சூனியவாதம் பலாத்காரத்தினல் பூண்டோடு களைந்தெறியப் பட்டது ; ஆனல் சமூகவுடைமைவாதம் நிலைத்தது.
சமூகவுடைமைவாதம் பரவுதல் :
1880 க்குப் பிற்பட்ட ஆண்டுகளில் கைத்தொழில் முறைகளில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்களின் பயனக எழுந்த புது தொழி லாள வர்க்கத்தினரிடையே சமூகவுடைமைக் கருத்துக்கள் வேரூன்றி வளர்ந்தன. மக்சிம் கோர்க்கி (Maxim Gorky) போன்ற எழுத்தாளர் களினல் பிரசாரம் செய்யப்பட்ட மாட்சினுடைய தத்துவங்கள், தொழிலாளரின் ஆதரவை நிறையப் பெற்றன ; புரட்சிவாத சமூகவுடைமைவாதம் அதிசயத்துக்குரிய முறையில் வளர்ந்து பல் அறிவாளிகளையும் தன் பக்கமாய்க் கவர்ந்தது. 1895 இல் நிறுவப் பெற்ற தொழிலாளரின் சமூகக் குடியாட்சிக் கட்சி (Workmen's Social Democratic Party) பிற நாடுகளில் போன்று, சமூகவுடைமை வேலைத் திட்டங்களையும் நடைமுறைகளையும் இரசியாவிலும் வகுத்தது நடுவகுப்பு முழு மாற்ற வாதிகளின் வழிகாட்டலின் கீழ் கிராமப்புற விவசாயிகளும், நகரங்களின் தொழிலாளர்களைப்போன்று, 1901 இல் ஒரு சமூக புரட்சிவாதக் கட்சியை நிறுவி, பிரபுக்களின் விசாலமான விளைநிலங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டுமென்றும், அவை விவசாயிகளுக்கிடையே சிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட வேண்டு மென்றும் கற்பித்தனர்.
பொல்சு விக்கரும் மென்சு விக்கரும் :
1903 ஆம் ஆண்டில் சமூகக் குடியாட்சிக் கட்சி, ஒழுங்குகளையும் நடைமுறைகளையும் பற்றி எழுந்த வேறுபாட்டினல், இரு கூறுகளாகப் பிளவுபட்டு, இலெனினின் தலைமையில் முழுமாற்றவாதிகள், கட்சியி லிருந்து விலகினர். இவர்கள் பொல்சிவிக்கர் (Bolshewiks) என்று பெயர் பெற்றனர் ; பொல்சவிக் என்ற பதம் “பெரும்பான்மை யினர்' என்றே பொருட்படும். கட்சியின் மிதவாதிகள் மென்சு விக்கர் (Mensheviks) அல்லது சிறுபான்மையினர் என அழைக்கப்பட்டனர். பொல்சிவிக்கர், மாட்சின் கொள்கைகளிலிருந்து அணுவளவேனும் விலகாது ஒழுக வேண்டுமென்றும், எக்காரணத்தையிட்டும், அவர்கள் வேறெந்தக் கட்சியுடனும் இணைதலாகாது என்றும், அவ்வாறு நடப் பதன் மூலமே தொழிலாள வர்க்கத்தின் புரட்சியை உண்டுபண்ண

இரசியாவில் சீர்திருத்த புரட்சி இயக்கங்கள் 383
முடியுமென்றும் கூறினர். தமக்குக் கிடைக்கும் முதற் சந்தர்ப்பத்தி லேயே பலாத்கார, புரட்சி மார்க்கங்களின் வழியாக தொழிலாள வர்க்கத்தின் வல்லாட்சியை அமைக்க வேண்டு மென கங்கணங்கட்டி நின்றனர்.
மென்சு விக்கர், தம் கொள்கைகளிலும் நடைமுறைகளிலும் சாத்வீக முறைகளையே ஆதரித்தனர்; அவர்கள் பொல்சிவிக்காைப் போன்று தீவிர முழு மாற்றவாதிகள் அல்லர் சமூகவுடைமைவாதத்தின் இறுதி வெற்றியை மெதுவான, படிப்படியான மாற்றங்களின் மூலமே ஏற்படுத்த நோக்கங் கொண்டனர். அதற்கிடையில் இரசியாவில் வல்லாட்சியை சிம்மாசனத்திலிருந்து இறக்க எக்கட்சியுடனும் ஒத் துழைக்கத் தயாராக நின்றனர், பொல்சிவிக்கரின் இரு பெரும் தலைவர்கள் இலெனினும் துருெ சுக்கியுமாவர்.
விளடிமீர் இலிச் உலியனேவ் (Vladimir Ilyich Utianov) என்பவரே பிற்காலத்தில் இலெனின் என்ற புனைப்பெயரைப் பூண்டார். இலெனின் 1870 ஆம் ஆண்டு ஏப்ரில் 22 ஆம் நாள், சிம்பிர்சுக் (Simbirsk) எனும் ஊரில் ஆறு குழந்தைகளுள்ள குடும்பத்தில் இரண்டாவது மகனகப் பிறந்தார். மூத்தோன் உவிலியனேவ், 1887 ஆம் ஆண்டில் மூன் றவது அலெக்சாந்தரைக் கொலைசெய்ய முயற்சித்து, கைதியாக்கப்பட்டு, தூக்குமேடையில் உயிர் நீத்தார், சிம்பிர்சுக் பாடசாலையில், திறமைக்குத் தங்கப்பதக்கம் பெற்ற இலெனின் பதினருவது பிராயத்தில் காசான் பல்கலைக் கழகத்தில் நியாயதுரந்தர மாணவனுகச் சேர்ந்தார். அங்கு புரட்சி இயக்கமொன்றில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதுடன் பல்கலைக் கழகப் படிப்பு முற்றுப்பெற்றது. காசான் மாகாணத்தில், இலெனின், இரகசியப் புரட்சிப் பிரச்ாரக் கூட்டங்களில் மெதுவாகத் தனக்கென ஒரு தனிப்பெயரையும் மதிப்பையும் பெற்றர் மாட்சின் பொதுவுடைமைப் பனுவலையும் இரசிய மொழியில் மொழிபெயர்த்தார். தனிமை யில் சட்டப் பரீட்சைகளுக்கும் ஆயத்தம் செய்து, 1891 ஆம் ஆண்டு பீற்றேகிராட் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவனகத் தேறினர். 1893 இல் நாட்டுப்புற வாழ்வைத் துறந்து, பீற்றேகிராட்டில் வக்கீல் தொழிலை ஆரம்பித்தார். இலெனின், வக்கீல் தொழிலிலும் மேலாக நகரத்துத் தொழிலாளர் மத்தியில் மாட்சு வாதத்தைப் பிரசாரம் செய்வதிலேயே கூடுதலான நேரத்தையும் காலத்தையும் செலவிட்டு, அவர்களுடைய அபரிமிதமான செல் வாக்கைப் பெற்றர். பின்பு சுவிற்சலாந்து, பரிசு, பேனின் முதலாம் நகரங்களைத் தரி சித்து, அங்கெல்லாம் வசித்த இரசிய மாட்சுவாதிகளே ஒருங்கு கூட்டி, இரசியாவின் தொழி லாள இயக்கத்திற்கு ஆக்கந் தரவல்ல ஒர் அமைப்பை எற்படுத்துவதில் முனைந்தார். 1895 இல் தாயகம் திரும்பிய இலெனின் ஒரு தொழிற்சாலைத் தொழிலாள வேலை நிறுத் தத்துக்குத் தலைமை தாங்கிய பொழுது, அரசாங்கம் அவனைக் கைது செய்து, 14 மாத காலம் சிறையில் வைத்தது. சிறை வாசத்தின் பின்னர் சைபீரியாவுக்கு, மூன்று ஆண்டு 8ளுக்கு நாடு கடத்தியது. அங்குதான் அவர் தன்னைப்போன்று புரட்சிவாதத்துக்காக நாடு கடத்தப்பட்ட குறுப்சக்காயா (Krupskaya) எனும் பெண்மணியை மனம் புரிந்தார். 1900 இல் மியூனிக் சென்று அங்கு ‘இசுக்ரா" (Tskra) எனும் பத்திரிகையின் ஆசிரியரா ஒர். இசுக்ரா என்பது தீப்பொறி என்று பொருட்படும். இப்பத்திரிகை இரசியாவின் பல பகுதிகளுக்கும் இரகசியமாக அனுப்பப்பட்டு விநியோகிக்கப் பெற்றது. அதைப் படித்த தொழிலாளர் தம் விமோசனத்துக்கான காலம் மிக அண்மையிலிருந்ததென உணர்ந் தனர். 1902 முதல், இலண்டனில் குடியேறிய இலெனின் அங்கிருந்து பத்திரிகையைத் தொடர்ந்து பிரசுரித்து வரலாயினுர், இக்காலத்தில்தான் இலண்டனில் கூடிய சமூகக் குடி

Page 212
384 புது உலக சரித்திரம்
யாட்சிக் கட்சியில் ஏற்பட்ட பிளவினல் இலெனின், பொல்சிவிக்கர் கட்சியின் தலைவனனன். இதற்குப் பின் மென்சுவிக்கரின் பலத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டதன் பயனக 1904 இல் ‘முற்போக்கு", (Vperyod) எனும் பத்திரிகையின் ஆசிரியரானர்.
லியன் துருெசுக்கி (Leon Trotsky), இரசியாவில் பொதுவுடைமைப் புரட்சியைச் சிருட்டித்து, சோவியத் அரசாங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர். இவர் தென் இரசி யாவில் எலிசவெத்சிராட் (Elizawatgrad) எனும் ஊரில் ஒரு யூத குலத்தில் 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய இயற் பெயர் இலைபா டாவிடோவ் பிரொன்சிற்றின் (Leibக Davidow Bronstein). துருெசுக்சி, ஒடேசா (Odessa) பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ருர். 1898 இல் படிப்பு முடிந்த சமயம் அவர் ஒரு சமூகவுடைமை வாதியானதன் காரணத்தினுல், தாய் தந்தையர் அவரை ஏற்க மறுத்துவிட்டனர். இவருடைய புரட்சிவா தக் கருத்துக்களைக் கண்டு அரசாங்கம், 1900 இல் சைபீரியாவுக்கு நாடு கடத்தியது. 1902 இல் சைபீரியாவிலிருந்து தப்பிய துருெசுக்கி, இலண்டனுக்குச் சென்று, அங்கே இலெனி னுடன் ஒன்று சேர்ந்து இசுக்ரா பத்திரிகையை நடாத்த அவருக்கு உதவிசெய்து வந்தார். 1903 இல் இருவருக்குமிடையில் அபிப்பிராய பேதங்கள் எழுந்ததன் பயனுக, துருெசுக்கி 1905 இல் இரசியாவுக்குத் திரும்பி, அவ்வாண்டு உண்டான புரட்சியில் பங்குபற்றினுர், அர சாங்கம் அவரைக் கைது செய்து மீண்டும் சைபீரியாவுக்கு நாடு கடத்தியது. ஆணுல் சைபீரியாவுக்குப் போகும் வழியில் தப்பி, வியன்னுவுக்குச் செனறு பிராவ்டா (Pravda) எனும் பத்திரிகையை நடாத்தினர்.
1914 இல் உலகப் போர் மூண்டபொழுது, துருெசுக்கி பிரான்சுக்குச் சென்று ஒரு போர் எதிர்ப்புப் பிரசாரத்தை ஆரம்பித்தார். அதனுல் பிரான்சிலிருந்து சிபெயினுக்கும், அங் கிருந்து அமெரிக்காவுக்கும் சென்று வசித்து வந்தார். 1917 மார்ச்சில் துருெசுக்கி இரசியா வுக்கு மீண்டு, இலெனினுடன் ஒன்று சேர்ந்து ஒற்ருேபர் புரட்சியை நடாத்தி வெற்றி கண்டார். புது அரசாங்கத்தில் பிற நாட்டு அமைச்சராகவும், பின்பு போர் அமைச்சராக வும் சேவை செய்தார். அவருடைய முயற்சியினலேயே இரசிய செஞ்சேனை பல மகத்தான வெற்றிகளை ஈட்டித் தந்து, புரட்சியை எதிரிகளின் கையிலிருந்து காத்தது.
இருபதாம் நூற்ருண்டு மலர்ந்த பொழுது, இரசிய சருவாதி காரத்தை ஆட்சேபிக்க வல்ல சக்தி சமூகவுடைமை வாதத்திலிருந் தன்று. தாராண்மை வாதத்திலிருந்தே, ஊற்றெடுத்தது. செமித்து வோக்கள், பொது மக்களினல் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம், கூட்டுப் பொறுப்புள்ள மந்திரம், சமூகச் சமுத்துவம், பத்திரிகைச் சுதந்திரம், மதச்சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் எனும் சீர் திருத்தங்களை உள்ளீடாகக் கொண்ட ஒரு நிரலை அமைத்து, அவற்றைப் பெற்றுத் தருமாறு சாரை வற்புறுத்தின. ஆனல் சார் நிக்கலசு அக்கோரிக் கைகளுக்குச் செவி சாய்க்க மறுத்தார் ; அவரது அரசாங்கம், தம் மைச் சூழ்ந்து ஒன்றுபட்ட சக்திகளின் வேகரத்தை உணராது, அடக்கு முறைகளையே கையாண்டது. காலத்தின் போக்கை உணர மறுத்த நிக்கலசின் கண் மூடித்தனமும் புரட்சிக்கான முக்கிய காரணங்களி லொன் ருகும்.
நீண்ட காலம் அருக்கூடின புயல், மேகங்கள் 1905 இல் திடீ ரெனப் புரட்சி மழையைப் பொழியவே, நாட்டின் நாலா பக்கங் களிலும் கலகங்களும் குளப்பங்களும் மலிந்தன. சார் பாராளுமன்ற

இரசியாவில் சீர்திருத்த புரட்சி இயக்கங்கள் 385
ஆட்சி முறையை அங்கீகரிக்கத் தன் சம்மதத்தைத் தந்தார்." இத் தாராண்ம்ைச் சீர் திருத்த இயக்கத்தின் தோல்வி முன் ப்க்கங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. இரசியப் புரட்சியின் வருகை :
சாரின் சர்வாதிகார ஆட்சியின் அடித்தளத்தில் இரசிய-யப்பானி யப் போர் ஏற்ப்டுத்திய பெலவீனம், உலகப் போரின் வருகையுடன் பெரும் பிளவாக மாறிற்று. 1915 ஆம் ஆண்டு, உலக்ப் போரில் இரசியா அடைந்த தோல்வி, சாரின் உறுதியின்மையையும், நேர்ம்ை யின்மையையும், சொல்லார் சொற் கேட்டு நடக்குந் தன்மையையும் தெளிவாக எடுத்தியம்பின.
ஆயுதங்களினதும், தளபாடங்களினதும் குறைவுக்கெதிரே மக்கள் கூக்குரலிட்டனர். சார், செர்மனியுடன் தனிப்பட்ட சமாதானம் செய்ய விரும்புவதாக வதந்திகள் அடிபட்ட பொழுது, நிலை அதி கீழ்க் கட்டத்தை எய்தியது. இரசியாவின் எதேச்சாதிகாரிகள், யுத்தத் தோல்வி புரட்சியைக் கொண்டு வருமென உணர்ந்து போரைத் தொடர்ந்து நடாத்த விரும்பினரிலர். மேலும் இரசுபுட்டின் (Rasputin) என்ற கீழ்க் குலத்துச் சந்நியாசி, சாரையும் சாறினவையும் ஆட்டி வைக்கக் கூடிய செல்வாக்கை அரண்மனையில் பெற்றன். நிக் கிலசும் அவரது மனைவியும் அவனது சொல் கேட்டே நடந்து வருவ் தைக் கண்டு பிரபுக்களும் அரண்மனை உத்தியோகத்தர்களும் வெறுப் புக் கொண்டனர். 1916 இல் இரசுபுட்டின் சுட்டுக் கொல்லப்பட் டான். அதிகாரிகளுடைய திறமைக் குறைவாலும், கொடுங்கோன் மையினலும் கலகம் உண்டாயிற்று. விவசாயிகள் கிளர்ச்சி செய் தனர் ; தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்தனர் : இராணுவத் தினர் யுத்தத்தைத் தொடர்ந்து நடாத்த மறுத்தனர். நாட்டில் பஞ்சமும் உணவின்மையும் மக்களின் துன்பங்களைப் பன்மடங்கு அதி கரித்தன. .
1917 மார்ச் 8ஆம் நாள், பெற்ருேகிராட்டில் ஏற்பட்ட "பாண்"கல கங்களைத் தொடர்ந்து, துன்புற்ற தொழிலாளர் புரட்சியைத் தாமாகவே ஆரம்பித்தனர். பெற்ருேகிராட் இராணுவத் துருப்புக்கள் கலகத்தை அடக்க அழைக்கப்பட்ட பொழுது அவர்களும் புரட்சிக்காரருடன் சேர்ந்து கொண்டனர். டூமா ஒரு தற்காலிக அரசாங்கத்தை அமைத்து நிலையைச் சமாளிக்க முயன்றது. டூமாவின் வற்புறுத்தலின் பேரில் சார், மார்ச் மாதம் 15 ஆம் நாள் பதவியைத் துறந்தார்.
ஒற்ருேபர் புரட்சி :
மார்ச் மாதம் அமைக்கப்பட்ட தற்காலிக அரசாங்கத்தை மென்சு
விக்கர், கெரென்சிக்கி (Kerensky) யின் தலைமையில் ஏற்று நடாத்
தினர். கெரென்சிக்கி, ஒரே நேரத்தில் யுத்தத்துக்கு விரைவான்
al-F 27

Page 213
388 புது உலக சரித்திரம்
முடிபைக் காணவும், புரட்சியைச் சனநாயகப் பாதையில் வழிநடத் தவும் திட்டமிட்டார். அவருடைய சாத்வீகப் போக்கு பொல்சு விக்கருக்குப் பிடிக்காமற் போனமையினல் அக்கட்சியின் தலைவர் களான இலெனினும் துருெ சுக்கியும் 1917 ஆம் ஆண்டு நவம்பரில் அரசாங்கத்திட மிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றினர். நவம்பர் 7 ஆம் நாள் முன் ஏற்பாடுகளின்படி பெற்ருேகிராட் தொழிலாள ரும், போர் வீரர்களும் அரசாங்கக் காரியாலயங்களைக் கைப்பற்றி னர். * புரட்சிக்காரருக்கு முன் தற்காலிக அரசாங்கம் சூரியனைக் கண்ட பணிபோல் மறைந்தது' என்று அங்கிருந்த ஓர் ஆங்கிலர் நிலையை வர்ணித்தார். அரசாங்கத் துருப்புக்கள் இலகுவில் மேற் கொள்ளப்பட்டன : கெரென்சிக்கி ஓட்டம் பிடித்தார். அதிகாரம் முழுவதும் இலெனின், துருெசுக்கி ஆகிய இருவரின் கையில் குவிந் தது. புதிய அரசாங்கத்துக்கு இலெனின் தலைவரானர் : துருெசுக்கி வெளிநாட்டு அமைச்சரானர். இவ்வாருக இரண்டாவது புரட்சி வெற்றி பெற்றது : இரத்தம் சிந்தாமல் அரசியல் அதிகாரம் கை மாறிற்று. அக்காலத்தில் இரசியாவில் நடைமுறையிலிருந்த பழைய கிரேக்க பஞ்சாங்கத்தின்படி புரட்சி நடந்தேறிய நவம்பர் 7 ஆம் நாள், ஒற்ருேபர் 25 ஆம் நாளாக இருந்தமையினல் அஃது ஒற்ருேபர் புரட்சி எனும் பெயரைப் பெற்றது.
இரசிய தேசத்தில் பொல்சுவிக்கர் மிகச் சிறிய சிறுபான்மையின ராகவே இருந்தனர். ஆனல் பிரான்சின் யக்கோபினரைப் போன்று உறுதியும் திட்டமுமுள்ளவர்கள். உடனே உண்ணுட்டு வேலையை இலெனின், மாட்சின் பொதுவுடைமை வாதத்தின் அடிப்படையில் மாற் றியமைப்பதுடன் ஆரம்பித்தார். அரசாங்கம் தனிப்பட்டவர்களின் நிலங்களைப் பறிமுதல் செய்து, விவசாயிகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது. தொழிற்சாலைகளும், வேலைத்தலங்களும் நட்ட ஈடின்றி. நாட்டுரிமை யாக்கப்பட்டு தொழிலாளரின் மேற்பார்வையில் விடப் பட்டன. எல்ல்ாப் பிரசைகளுக்கும் வேலை கட்டாயமாக்கப்பட்டது. பழைய இரசிய அரசாங்கத்தின் கடன்கள் யாவும் நிராகரிக்கப்பட் டன. இரசிய வைதீகத் திருச்சபையின் சொத்துக்கள் பறிமுதலாயின. இவ்வாறு இரு மாத காலத்துக்குள் பொல்சுவிக்கர் இரசியாவின் பழைய தாபனங்களைச் சிதைத்து, அரசியல் சமுதாய பொருளாதா ரத் துறைகளில் முற்றிலும் புதிதான அத்திவாரத்தில், இரசியாவைக் கட்டியெழுப்ப முனைந்தனர்.
பிறக இலித்தொசுக்கு உடன்படிக்கையும் பிறநாடுகளின் எதிர்ப்பும் :
இலெனினுடைய நோக்கங்கள் நிறைவேறுவதற்கு வெளிநாட்டுச் சமாதானம் இன்றியமையாத முதல் தேவையாயிற்று. எவ்வளவு

இரசியாவில் சீர்திருத்த புரட்சி இயக்கங்கள் 38.
விரைவில் சாத்தியப்படுமோ, அவ்வளவு கெதியில் சமாதானத்தை ஏற்படுத்த இலெனின் விரும்பினர். செர்மனியும் இரசியாவின் பலவீனத்தைக் கண்டு, பிறக இலித்தொசுக்கு உடன்படிக்கையில் (Treaty of Brest Litowsk) மிகக் கடினமான நிபந்தனைகளை விதித்தது. பொல்சுவிக்கர் அகில உலகப் பொதுவுடைமைப் புரடசிக்காகப் பிரசாரம் செய்தமையினல் முதலாளித்துவ அரசுகள், தம் எல்லைகளுக்குள் தொழிலாளர், இரசிய முன்மாதிரியைப் பின்பற்றிக் கலகங்களை விளை வி ப் பர் என்று அஞ் சினர். மே லும் இலெனின் கடன்களை நிராகரித்ததும் அவர்களது கோபத்தை அதிகரிக்கச் செய்தது. எனவே வல்லரசுகள் புது சோவியற் அரசாங்கத்தை அங்கீகரிக்க மறுத்ததுடன், இரசிய விவகாரங்களில் தலையிடவும் திட்ட மிட்டன. புரட்சியின் எதிர்ச் சக்திகளுக்கு உதவி செய்யும் நோக்கு டன் நேய நாடுகளின் துருப்புக்கள் வட இரசியாவில் இறக்கப்பட்டன. யப்பானிய துருப்புக்கள் கிழக்கெல்லையில் விளடிவத்தொக்கை (WadiVostok) கைப்பற்றின. தெற்கில் பிரான்சு எதிரிகளுக்கு உதவியது ; போலந்து புரட்சி செய்யுமாறு தூண்டப்பட்டது. உண்ணுட்டிலும் அரசாங்கத்தின் சடுதியான தீவிர மாற்றங்கள். நாலா பக்கங்களிலும் பலமான எதிர்ப்பையுண்டு பண்ணின. நிலப்பிரபுக்கள், முதலாளிகள், வியாபாரிகள், மதக்குரவர் தம் சொத்துக்கள், உரிமைகள், எல்லாவற் றையும் எதிர்ப்பின்றிக் கைவிட மறுத்தனர். ஒரு வகுப்பு மற்ற வகுப்பின்மேல் போர்தொடுத்தது; பலர், நாட்டைவிட்டு வெளியேறி னர். மூலதன மின்மையினல் தொழில் நிலையங்களில் பொருளுற்பத்தி தடைப்பட்டது. விவசாயிகள் மேலதிகமான தானியத்தைக் கொடுக்க மறுத்தமையினல் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானேர் ப சி யின் கொடுமையால் மடிந்தனர். நாலா பக்கங்களிலும் ஒழுங் கீனம், பழிவாங்கல், உண்ணுட்டுக் கலகம் தாண்டவமாடின. இப் பேர்ப்பட்ட உள். வெளி எதிர்ப்புக்களின் முன், புது அரசாங்கம் மண் கெளவுமோ என்ற அச்சம் கூட எழுந்தது.
புது அரசாங்கத்தின் வெற்றி :
ஆனல் சிறந்த அரசியல்வாதியும் இராசதந்திரியுமான இலெனின், நிதானமான மதியூகத்துடன் இரசியாவையும் தனது கட்சியையும் எதிர்த்த பிரச்சினைகளைத் தீர்க்க முற்பட்டார். ஓர் உன்னத சர்வாதி காரத்தை நாட்டில் ஏற்படுத்துவதன் மூலம் இலெனின் தன் நோக் கங்களில் சித்தியடைந்தார். உண்ணுட்டு எதிரிகளை அடக்குவதற்குப் பலாத்காரத்தைப் பிரயோகிக்க அவர் தயங்கவில்லை. பிரான்சின் பொது சனச்சேம நிருவாக சபையைப் போன்று, செக்கா (Chekh) என்ற புரட்சி நீதிமன்றம் ஆயிரக்கணக்கான மக்களைக் கொலைக்குத் தீர்த்தது. பிரான்சில் போல நாட்டின் உள்ளும் புறமும் எதிர்ப்பு

Page 214
388 புது உலக சரித்திரம்
அதிகரிக்கவே, பயங்கர ஆட்சியின் கொடுமைகளும் அதிகரித்தன. சார் இரண்டாம் நிக்கலசு, 1918 யூலை மாதம் ஒரு துப்பாக்கிக் குண் டுக்கு இரையாக்கப்பட்டார். இவ்வழிகளில் பொல்சுவிக்கர் பழைய பிரபுத்துவ சக்திகளின் பலத்தையும் உறுதியையும் முறித்த பின்பும் ஐந்து ஆண்டுகளுக்கு இரசியா, உள், வெளி நாட்டு எதிரிகளுடன் போர் புரிய வேண்டிற்று. உண்ணுட்டுப் போரில் பொல்சுவிக்கர் வெற்றி பெற்றதற்குப் பிரதான காரணம் இராணுவத்தின் பலமே யாகும். ஆரம்பத்திலேயே பொல்சுவிக்கர் மொசுக்கோ, மத்திய இரசியா, பீற்ருேகிராட் போன்ற பலமான மத்திய பகுதிகளைத் தமதாக்கிக் கொண்டனர். எதிரிகள், அங்குமிங்குமாகத் தனித்தனியே பல இடங்களில் தொடர்பின்றிப் போர் புரிந்தமையினல், துருெ சுக்கி செம்படை (Red Army) வீரரின் உதவியுடன் எதிர்ப்புக்களை முறியடித்தார். இரசிய நிலப்பரப்பின் பகுதிகள் ஒவ்வொன்முக வெற்றி கொள்ளப்பட்டு, இவை ஒரு கூட்டாட்சி யமைப்புக்குள் கொண்டுவரப்பட்டன. 1919 அளவில், மேற்கத்திய அரசுகளும் இரசி யாவைப் போன்ற ஒரு லிசாலமான நிலப்பரப்பை வெற்றி கொள் வது சுலபமான கருமமன்று என்று உணர்ந்து, தம் துருப்புக்களைத் திருப்பியழைத்தன.
புது அரசமைப்புத் திட்டம் :
இரசியாவில், இலெனின், அரசியலதிகாரத்தை முழுமையாகப் பொதுவுடைமைக் கட்சியின் கையில் வைத்திருப்பதில் பூரணவெற்றி கண்டார். சோவியற் இரசியாவின் அரசமைப்பு, 1918 ஆம் ஆண்டு யூலை மாதம் 10 ஆம் நாள், சோவியத்துக்களின் மாநாட்டில் உரு வாக்கப்பட்டது. இரசிய சர்வாதிகாரம் ஒரு விசித்திர தன்மை யுடையது. பெயரளவில் அது தொழிலாள வர்க்கத்தின் சர்வாதி காரம் (Dictatorship of the Proletariat) 6 T 6örgpl s9y60)up di 35 "ŭu"l-gy. ஆனல் பல கோடி மக்களைக் கொண்ட ஒரு வகுப்பு சாதாரண கருத் தின்படி சர்வாதிகாரத்தை நடத்துவது முடியாத கருமமாகும். மற்ற வகுப்புக்களைப் பார்க்கிலும் தொழிலாளருக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டன. முதலாளிகள், வியாபாரிகள், குரவர், நிலச் சொந் தக்காரர் போன்ற சுரண்டுபவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. விவசாய, தொழில், போர்வீர வகுப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதி களைக் கொண்ட 'சோவியற்" என்ற சபைகளே வெளித் தோற்றத் துக்கு ஆட்சி புரிந்த ன . ஒவ்வொரு கிராமமும் ஒரு சோவி யற்றினல் ஆட்சி செய்யப்பட்டது. கிராம சோவியற்றுள் 1000 கிராம வாசிகளுக்கு ஒரு பிரதிநிதியென்ற முறையில் மாவட்ட (Disb. rict) சோவியற்றுக்கு உறுப்பினரைத் தெரிவு செய்தது. இவை

இரசியாவில் சீர்திருத்த புரட்சி இயக்கங்கள் 389
மாகாண சோவியற்றுக்கும் அவ்வாறே, இறுதி அகில இரசிய சோவி usbpy disaffair LDIT F60) LJ (All Russian Congress of Soviets) 6.160) ut தெரிவுகள் நடந்தன. இம் மாசபை, ஒரு மத்திய நிருவாகக் குழு (Central Executive Committee) 606 uf b g (15 uj5756825uyuh (Board of People's Commissars) Go),5foy GeFüg551. gibs gyr2ufb jól . டம் உண்மை நடைமுறையில் முக்கியத்துவமற்றது, ஏனெனில் சோவி யற்றுக்கள் அனைத்தும் தமக்குப் பொதுவுடைமைக் கட்சி சமர்ப்பித்த வேலைத் திட்டங்களை ஆமோதிப்பதைவிட வேருெரு கடமையையும் செய்யவில்லை. இந்த ஒரு கட்சி முறை நாட்டின் அதிகாரத்தைக் கட்சி முதலாளிகளின் கையில் ஒப்படைத்தது. கட்சியின் அதிமுக்கி யத்துவம் வாய்ந்த இலெனின், இரசியாவின் முடிசூடா மன்னனுர்,
A 27

Page 215
390 புது உலக சத்திரம்
அதிகாரம் 24
ஐரோப்பிய ஆள்புலங்களில் சுதந்திர இயக்கங்கள் (1914-1955)
செர்மன் பேரரசின் மறைவு :
1914-18 உலகப்போருக்கு முந்திய ஆண்டுகளில், பெரிய பிரித் தன், இரசியா, பிரான்சு, செர்மனி, ஐக்கிய அமெரிக்க அரசு எனும் நாடுகளே உலகின் தலைசிறந்த பேரரசுகளாக இலங்கின. போரின் பயணுக செர்மனி, ஏகாதிபத்திய அரசுகளின் வரிசையிலிருந்து நீக்கப் பட்டது. அதன் கடல் கடந்த உடைமைகள் யாவும், பத்து இலட்சம் சதுர மைல் பரப்பளவுக்கு மேலதிகமான நிலங்கள் பறிபோயின. அவை வெற்றி பெற்ற நாடுகளுக்கிடையே பகிரப்பட்டு, சர்வதேச சங்கத்தின் ஆணையின்கீழ் புரப்பகங்களாக (Protectorates) பரிபால னம் செய்யப்படுவதற்கு ஏற்பாடுகள் நிறைவு பெற்றன. செர்மன் கிழக்கு ஆபிரிக்காவை பிரித்தனும் பெல்சியமும் தமக்கிடையே பகிர்ந்து கொண்டன. தோகோலந்தையும் கமறுான்சையும் பிரித்தா னியாவும் பிரான்சும் பெற்றன. செர்மன் தென்மேற்கு ஆபிரிக்கா, தென் ஆபிரிக்க ஐக்கியத்துடன் இணைக்கப்பெற்றது. துர கிழக்கில், பூமத்திய ரேகைக்கு வடக்கே அமைந்த பசிபிக் தீவுகளையும், சன்ரங் (Shantung) கின் செர்மன் உரிமைகளையும் யப்பான் அபகரித்தது. பூமத்திய ரேகைக்குத் தெற்கே அமைந்த தீவுகளை ஒசுத்திரேலியாவும், செர்மன் சமோவாவை நியூசிலந்தும் முறையே பெற்றன.
துருக்கிய பேரரசின் ஆள்நிலங்களில் சில, பிரெஞ்சின்ரதும், பிரித்தானியரதும் ஆளுகைக்குள் இடம் பெற்ற ன. பிரான்சு சீரியாவை, அது 1936 இல் சுதந்திரம் பெறும் காலம்வரையும் ஆட்சி செய்தது. பிரித்தன் ஈராக்கையும், பலத்தீனத்தையும் ஆட்சி செய்து, அவற்றிற்கு முறையே 1927 இலும் 1948 இலும் சுயநிர்ணய உரிமை களை வழங்கலாயிற்று.
பிரித்தானியப் பொது நலவாயத்தின் தோற்றம்:
முதலாவது உலகப் போர், பிரித்தானிய பேரரசின் ஒற்றுமையை யும் வலிமையையும் உணர்த்திய அதே காலத்தில், அதன் வளர்ச்சி யில் ஒரு புது அத்தியாயத்தையும் திறந்து விட்டது. அந்த உக்கிரம மான கொடும் போரில், பிரித்தானிய ஆணிலங்களும், இந்தியாவும், துருப்புக்களையும் பொருள்களையும் உதவி, ஏகாதிபத்தியத்தை எதிரி

ஐரோப்பிய ஆள்புலங்களில் சுதந்திர இயக்கங்கள் 89 ፲
களிடமிருந்து காப்பதில் பெரும் பங்கெடுத்தன. போர் முடிவெய்திய காலையில் கனடா, ஒசுத்திரேலியா, தென் ஆபிரிக்கா, நியூசிலந்து என்ற நான்கு ஆணிலங்களும் பூரண சுயவாட்சியும் ஆதிபத்திய அதிகார மும் படைத்த தனி நாடுகளாக சர்வதேச மாநாடுகளில் கருதப்பட்டன : வேர்சை அமைதிப் பொருத்தனையில் தனிப்பட்ட நாடுகளாக ஒப்ப மிட்டன : சர்வதேச சங்கத்திலும் அங்கத்துவம் பெற்றன.
ஆணிலங்களின் புதுப் பதம், 1926 ஆம் ஆண்டு நடைபெற்ற Gug pra, Los T5 Tig si (Imperial Conference) G56flour 5 6160) T யறுக்கப்பட்டது. “பெரிய பிரித்தனும் அதன் ஆணிலங்களும் பிரித் தானிய முடியிடத்து பொதுவான இராசவிசுவாசம் என்பதனல் ஒற்றுமையடைந்து, பிரித்தானியப் பொதுநலவாயத்தின் அங்கத் தவர்களாக யதேச்சையாக ஒன்று சேர்ந்துள்ள போதிலும், அவை தம், உள் நாட்டு, வெளி நாட்டு விவகாரங்களில் சுய நிருவாகச் சமூகங்கள் சம மதிப்புடையவை ஒன்றுக் கொன்று தாழ்ந்தவை யல்ல" என மகாநாட்டைக் கூட்டுவித்த பல்பர் பிரபு (Lord Balfour) விளக்கந் தந்தார். இவ்வியாக்கியானம் 1931 ஆம் ஆண்டு பிரித் தானிய பாராளுமன்றத்தில் நிறைவேறிய உவெசுமினித்தர் நியதிச் F L - L - ö. 6) 6iv (Statute of Westminster) (yp6Opiù Lug- G3Friji 35Ü ull-gil.
உவெசுமினித்தர் நியதிச்சட்டம் :
1867 முதல் 1930 ஆம் ஆண்டு ஈருக ஆணிலங்கள் எவற்றை யெல்லாம் சாதித்தனவோ, அவற்றிற்குச் சட்ட முறை அங்கீகரம் அளித்தது, உவெசுமினித்தர் நியதிச் சட்டம். பிரித்தானிய பாராளு மன்றம், உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்கள் யாவற்றிலும் ஆணி லங்களுக்கு பூரண சுதந்திரமிருப்பதை அங்கீகரித்தது. இதன் பயனுக ஆணிலங்கள் எவ்விடயத்திலும் தாம் விரும்பியவாறே நடந்து கொள்ளப் பூரண உரிமை பெற்றன.
ஒட்டாவா மகாநாடு :
இதே காலத்தில் பொதுநலவாய நாடுகளிடையே கூடுதலான பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நோக்குடன் பேரரசு மகாநாடு, 1933 ஆம் ஆண் டு ஒட்டாவா நகரத்தில் கூடிற்று. 1929-32 ஆண்டுகளில் உண்டான பொருளாதார நெருக்கடி பொது நலவாய நாடுகளை வெகுவாகப் பாதித்தமையினல், ஆணிலங்கள், ஐக் கிய இராச்சியத்தினுள் தம் பொருள்களை விற்பனை செய்வதில் சம வாய்ப்புப் பெற வேண்டு மென்றும், ஒல்வோர் ஆணிலமும் தன் அதி சிறந்த உற்பத்திப் பொருளிலேயே மேலான அவதானம்

Page 216
Ꮽ92 புது உலக சரித்திரம்
செலுத்த வேண்டுமென்றும் மகாநாடு ஒப்புக் கொண்டது. 1929 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை நியூபவுணிலாந்து மே ற் கொள்ள வழியின்றி அல்லற்பட்டதன் காரணத்தினல், அதன் அர சமைப்பு 1933 இல் இடை நிறுத்தப்பட்டு, 1949 இல் கனடாவின் கூட்டாட்சியமைப்பில் பத்தாவது இராச்சியமாக இணைக்கப் பெற் றது. இவ்வாறு நியூபவுணிலாந்துக்கும் ஐக்கிய அரசுக்கு மிடையே நிலவிய நேரடி உறவுகள் நீங்கின.
தென் அயலந்துக் குடியரசும், வட அயலந்து ஐக்கியமும் :
1922 ஆம் ஆண்டு, தென் அயலந்கின் 26 மாநிலங்கள் (Counties) சுதந்திரம் பெற்று, பொதுநலவாயத்திலிருந்து விலகி, அய லந்துக் குடியரசை நிறுவின. இரண்டாம் உலகப்போர் மூண்ட காலை ஆணிலங்களில் அயலந்துக் குடியரசு ஒன்று மாத்திரமே நடுநிலை வகித்தது. வட அயலந்தின் ஆறு மாநிலங்கள் ஐக்கிய இராச்சி யத்துடன் சம பங்காளியாக உவெசுமினித்தர் பாராளுமன்றத்துக்குத் தம் பிரதிநிதிகளை அனுப்பும் உரிமையைப் பெற்றது.
இந்தியச் சுதந்திர இயக்கம் :
19 ஆம் நூற்ருண்டின் பின் அரைப் பகுதியில் மேனுட்டுக் கொள்கைகளும் அரசியல் உணர்ச்சியும் நாட்டில் பரவியதன் விளை வாக 1885 திசம்பர் 28 ஆம் நாள், இந்தியத் தேசீய மாசபை (Indian National Congress) GM LLJ LUGN -9sióG 5ř56îr SP6ð7 go G3SF třfög நிறுவினர். நாளடைவில், மாசபை இந்தியாவுக்கு “சுயராச்சியம்" பெற் றுத்தருவதையே தன் இறுதி இலக்காகக் கொண்டது. நாட்டில் பெருகி வந்த கிளர்ச்சியைத் தணிக்கை செய்யும் நோக்குடன் பிரித்தானிய அர சாங்கம், 1909 இல் மின்ருே--மோர்லி சீர்திருத்த விதியை வழங்கி யது. புது விதியின்படி ஆள்பதி நாயகத்தின் சபையில் 60 அங்கத் தினர் வரை சேர்க்க அனுமதிக்கப்பட்டதுடன், முதன் முறையாக அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைமையும் கையாளப்பட் டது. மாகாணச் சட்டசபைகளிலும் உத்தியோகப்பற்றற்ற அங்கத் தினரே பெரும்பாலோராக இருக்கவும் ஏற்பாடுகளாயிற்று. வரவு செலவுத் திட்டம் பற்றி விவாதிக்கவும், கேள்விகள் கேட்கவும் சட்ட மன்ற அங்கத்தினர்கள் உரிமை பெற்றனர். முகம்மதியருக்கு தனிப் பட்ட தொகுதி அமைப்பைப் பிற்போக்கானதென வற்புறுத்தியதுடன் மாசபை அச்சட்டத்தை ஆதரிக்க மறுத்தது. பெரும்பாலான மக்க ளும் புது விதியை ஒரு பிற்போக்கான சட்டமென்றே முடிவு கட்டி னர். மக்கள் கிளர்ச்சி மறுபடியும் ஆரம்பமாயிற்று.

ஐரோப்பிய ஆள்புலங்களில் சுதந்திர இயக்கங்கள் 393
இவ்வாறு போருக்கு முன்பே ஆரம்பித்த சுதந்திர இயக்கம், போர் நடைபெற்று வந்த காலத்தில் புது உத்வேகம் பெற்றது. போரில் இந்தியர்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெறும் நோக்குடன் 1914 ஆகத்து 20 இல், பிரித்தானிய அரசாங்கம் ஒர் அதிகார அறிக்கை மூலம் இந்தியர்களுக்கு பொறுப்பாட்சி அளிப்பதே தம் நோக்கமென்றும், அதற்குப் படிப்படியான முறைகள் கையாளப் படுமென்றும் அறிவித்தது. இவ்வாக்குறுதியை நிறைவேற்றும் நோக் குடன் மொன்றேகு (Montague) இந்தியாவுக்கு வந்து, பிரச்சினையைப் பரிசீலனை செய்து, 1919 ஆம் ஆண்டு இந்திய அரசியல் விதியை வெளியிட்டார். புது விதியின்படி, இந்திய மத்திய அரசாங்கத்தில் இரு அவைகளைக் கோண்ட பாரர்ளுமன்றம் நிறுவப்பட்டது. மேற் சபை யில் 60 உறுப்பினரும், கீழ்ச்சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேர் உட்பட 140 உறுப்பினர் இருப்பரென விதிக்கப்பட்டது. மாகாண மன்றங்களின் அமைப்பிலும் ஒருவிதப் பொறுப்பாட்சி அங்கீகாரம் பெற்றது. இம் மன்றங்களின் 100 உறுப்பினரில் 70 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவும், அரசியல் நிருவாகத்தின் ஒரு பகுதியை மன்றங்சளிலிருந்து அமைக்கப்பட்ட அமைச்சர்களே நிருவகிப்பர் என்றும் புது விதி கூறிற்று. இவ்வாருக 1919 ஆம் ஆண்டு விதி, இந்தியாவில் பொறுப்பாட்சியின் வளர்ச்சிக்கு முதல் வித்தை இட்டது.
இந்திய தேசிய மாசபை, இந்த அரசியல் சீர்திருத்த விதியை புறக்கணித்து \தேர்தலில் கலந்து கொள்ளவும் மறுத்துவிட்டது.
பஞ்சாப் படுகொலை :
1919 ஆம் ஆண்டு பிறிதொரு சம்பவமும் மாசபையின் கோபத்தை அதிகரிக்கக் காரணமாயமைந்தது. அவ்வாண்டு மாசபையின் கூட்டம் அமிர்தசரசில் நடைபெற ஏற்பாடுகள் பூர்த்தியான பொழுது, மாநாடு அங்கு நடைபெறுமாயின் கலவரம் ஏற்படலாமென அஞ்சிய பஞ்சாப் ஆள் பதி, மாசபையின் தலைவர்களை இரகசியமாக வெளியேற்றினர். கிளர்ச்சி ஓங்கவே, ஆங்கிலர் பலர் தாக்கப்பட்டனர் ; அரசாங்கத் தார், சலியன்வாலாபாக்கில் செய்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மாண்டனர். இதைப்போன்ற வேறு பல சம்பவங்களினலும் மக்களிடையே பரபரப்பு அதிகரிக்கலாயிற்று. படுகொலையைப் பற்றி விசாரணை செய்த ஒரு மாசபைக்குழு, பஞ்சாப் ஆள்பதியையும் இந்திய வைசிராயையும் வேலையிலிருந்து நீக்கும்படி பிரிட்டிசு அரசாங்கத்தை வேண்டி நின்றது. ஆனல் அவை பிரித்தானிய அரசாங்கத்தின் செவிக்கேறவில்லை. மாசபை, 1919 ஆம் ஆண்டுச் சட்டத்தை நிராகரித்தமைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

Page 217
394 புது உலக சரித்திரம்
அன்றியும் மாசபை, காந்தியின் ஆதரவில் 1920 இல் ஒத்துழை யாமை இயக்கத்தை ஆரம்பித்தது. ஆனல் தம் கொள்கைகளுக்கு முழு மாமுகச் சில தொண்டர்கள் செளரிச்செளராவில் 21 பொலீ சாரைக் கொலை செய்தமையினல் மகாத்மா மனம் நொந்து இயக் கத்தைப் பின்போட்டார். 1922 இல் காந்தி சிறைப்படுத்தப்பட்டார்.
மகாத்மா காந்தி :
இருளில் மூழ்கிக்கிடந்த இந்திய சமுதாயத்தைப் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் சென்ற தலைவர்களுள் காந்தி தலை சிறந்தவர். சாதாரண மனித உருவிற் பிறந்து, வளர்ந்து அமர நிலையடைந்த அவரது புதுமை வாழ்வு ஒரு புனிதச் சிததிரம்.
1869 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்கள் இரண்டாம் நாள், போர்பந்தர் எனும் ஊரில் காந்தி அவதரித்தார். கரம் சந்திர காந்தியெனும் பெருமகனரும் புத்தலிபாய் எனும் குணவதியும் அக்குழந்தையைப் பெறும் பாக்கியம் பெற்றனர்.
காந்தி போர்பந்தரில் ஆரம்பக் கல்வி பயின்றர். எழாம் பராயத்தில் தந்தை யின் இடமாற்ற காரணத்தால் இராச கோட்டை ஆரம்பப்பள்ளி யொன்றில் சேர்க்கப்பட் டார். பதின் மூன்றம் பருவத்தில் கசுத்து ரிபாய் என்னும் பெண்மணியை மணந்தார். திருமணத்தின் பினனர் ஒர் உயர் நிலைக கல்லூரியில் கல்வி கற்றர் பதினரும் பருவத் தில் தன் தந்தையை இழந்தார். 1888 இல் சீமைக்குச் சென்று கலை பயின்று 'பரித்தர்" பட்டத்தைப் பெற்றர். பின்னர் தாயகம் மீண்டு பம்பாய் உயர் நீதி மன் றத்தில் வக்கீலாய்க் கடமையாற்றினர்.
தாதா அப்துல்லாக் கம்பனியாரின் வழக்கொன்றினை நடாத்தும் முகமாக , காந்தி தென்னுபிரிக்காவுக்குச் சென்றர். அங்கே வாழ்ந்த இந்திய மக்கள் ஆங்கிலே யரின அடிமைகளாய் அனுபவிக்கும் இன்னல்களைக் கண்டு மனம் நொந்தார். அதே தரு ணத்தில் நேத்தால் சட்ட மன்றத்தில் இந்தியரின் வாக்குரிமையை நிராகரிக்கும் சட்டமும் நிறைவேறியது. இந்தச் சட்டத்தை எதிாத்து மக்கள் துயர் துடைக்க முனைந்து **இந்திய மா சபை" என்றெரு தாபனத்தை நிறுவியுழைத்தார். மூன்றண்டுகளின் பின்னர் 1896 இல் தாயகம் திரும்பினர். பம்பாய், கல்கத்தா, சென்னை முதலாம் இடங்களுக்குச் சென்று தலைவர்களையும், பத்திரிகை ஆசிரியர்களையும் தரிசித்து தென்னபிரிக்க இந்திய மக்களின் அவலநிலையை விளக்கி அனுதாபத்தைத் திரட்டினர். 1899 இல் நிகழ்ந்த ஆங் கில-போயர் யுத்தத்தில் அவர் மருத்துவ சேவையாற்றி அதி செல்வாக்குப் பெற்றர். 1903 இல் மூன்றம் தடவையாகத் தென்னபிரிக்காவுக்கு வந்து இந்திய மக்களின் நலவுரி மைப் போராட்டத்தில் தலையிட்டார். 1906 ஆம் ஆண்டு அனுமதிச் சீட்டுப் பெற்றே ஒவ் வோா இந்தியனும் வசிக்க வேண்டு மென்ற மானக்கேடான காப்புச் சட்டம் இயற்றப் படட்தைத் தொடர்ந்து, காந்தி சட்ட மறுப்பு இயக்கத்தை (சத்தியாக்கிரகம்) ஆரம் பித்தார். 1910 இல் இங்கிலாந்துக்குத் தூது போனர் ; பயன் கிடைக்கவில்லை. இயக்கம் வலுப் பெற்றது ; அரசாங்கம் நிலை தளர்ந்தது ; இதன் பயனுய் சிமட்சு-காந்தி ஒப் பந்தம் நிறைவேறியது. 1914 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகம் பூரண வெற்றி கண்டது. 1915 இல் தாயகத்தின் விடுதலைத் தொண்டைத் தலைமேற் கொண்டு இந்தியாவுக்குத் திரும்பினர்.
அன்பு, அகிம்சை, எளிமையின் உருவமாய் மக்களின் விடுதலை யொன்றையே குறிக் கோளாகக் கொண்டு மகத்தான சேவை புரிந்தார். “தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடு தலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை வாழ் விக் க வந்த காந்தி மகாத்மா” என்று இந்திய மக்கள் அவரை ஏகோபித்துப் போற்றினர்கள்.

ஐரோப்பிய ஆள்புலங்களில் சுதந்திர இயக்கங்கள் 395
1915 மே 25 ஆம் நாள், ஆகமதபாத்தில் சபர்மதி ஆச்சிரமத்தைத் தாபித்து கதரியக்கத்தை ஆாம்பித்தார். இத்தருணத்திலே தான் இரவீந்திர நாத் தாகூர் காந் திக்கு மகாத்மா என்ற பட்டத்தைச் சூட்டிக் கெளரவித்தார்.
1923 இல் சி. ஆர். தாசு , மோதிலால் நேரு முதலிய மாசபைத் தலைவர்கள், பாராளுமன்றத்துக்குச் சென்று அரசாங்கத்தை எதிர்ப் பதே சிறந்த வழியென கருத்திற் கொண்டனர். காந்தியடிகள் இதை எதிர்த்த போதிலும், மாசபையில் பெரும்பான்மையோர் ஆத ரவு காட்டியமையினல், அவர்கள் சட்ட மன்றத்துக்குச் சென்று சுயராச்சியக் கட்சியை அமைத்து, அங்கு பலமான எதிர்ப்புக் காட்டி வந்தனர்.
பிரித்தானிய அரசாங்கம் இந்திய அரசியல் திட்டத்தில் மேலும் செய்ய வேண்டிய மாற்றங்களைப் பரிசீலனை செய்யுமாறு 1927 இல் சர், யோண் சைமன் (Sir John Simon) தலைமையில் ஒரு விசார ணைச் சபையை அனுப்பியது. ஆனல் அச்சபையில் இந்தியரொருவ ரும் சேர்க்கப்படாத காரணத்தினல், மக்கள் ஒத்துழைக்க மறுத் னர். 1930 இல் காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தை ஆரம்பித் தார். பூரண சுயராச்சியம், இந்திய மக்களின் மறுக்க முடியாத பிறப்புரிமையென்றும், அதைப் பெறுவதற்கு அறப்போர் தொடுக்க வேண்டுமென்றும் மாசபை தீர்மானித்தது. அவ்வாண்டு மார்ச் 12 ஆம் நாள், காந்தியடிகள் 79 தொண்டர்களுடன் தண்டியெனுமிடத் திற்கு நடையாகச் சென்று உப்புச் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித் தார். நாடெங்கும் மாசபைத் தொண்டர்கள் இதைப் பின்பற்றவே அரசாங்கம் காந்தியையும் தொண்டர்களையும் சிறையிலடைத்தது.
1935 ஆம் ஆண்டு இந்திய அரசியல் விதி :
இதனிடையே இங்கிலந்தில் 1929 ஆம் ஆண்டு தொழிற் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. சைமன் விசாரணைச் சபைக்கு நாட் டில் ஆதரவின்றிப் போனதனல், இந்திய மக்களின் விருப்பத்திற்கு ஆதரவு காட்டிய அக்கட்சி, இங்கிலந்தில் ஒரு வட்டமேசை மாநாட் டைக் கூட்டிற்று. ஆனல் மாசபை கலந்து கொள்ள மறுத்தது. வைசிராய் ஏர்வின் பிரபு (Lord Irwin) அரும்பாடுபட்டுக் காந்தி யடிகளுடன் காந்தி-ஏர்வின் ஒப்பந்தத்தை ஏற்படுத்திய பின்னரே காந்தி இரண்டாவது மாநாட்டிற்கு மாசபையின் தனிப்பெரும் பிரதி நிதியாகச் சென்ருர் ; ஆனல் பல பிரச்சினைகள் தீராத நிலையிலிருப் பதைக் கண்டு தாயகம் திரும்பினர் , திரும்பியதும் சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் ஆரம்பித்தது. 1932 இல் மூன்ரு வது வட்ட மேசை மாநாடு இலண்டனில் கூடியது. அதில் நிறைவேறிய தீர்மா னங்களை பிரிட்டிசு அரசாங்கம் 1935 இல் இந்திய அரசியல் விதியாக அங்கீகரித்தது.

Page 218
396 புது உலக சரித்திரம்
மாகாணங்களில் மந்திரிகளின் கீழ் முழுப் பொறுப்பாட்சி அமைய 1935 ஆம் ஆண்டுச் சட்டம் இடம்கொடுத்தது. ஏழு மாகாணங்களில் தேசிய மாசபை மந்திரிசபைகளை அமைத்து ஆட்சி செலுத்தியது. இம் மாகாணங்களின் ஆட்சியிலிருந்தே இந்து-முசிலிம் தகராறுகள் முளைத்தன. இந்திய தேசிய மாசபை மந்திரிசபைகள், முசிலிம்களுக்கு பல இன்னல்களை விளைவித்தன வென்று முகமது அலி சின்னுவும் முசிலிம் வீக்கும் புகார் செய்தனர் : பாகித்தான் பிரிவினைக் கொள்கை யும் உருப்பெற்றது.
இரண்டாம் உலகப் போரும் அதன் விளைவுகளும் :
1939 இல் உலகப்போர் தொடங்கவே இந்தியச் சட்டசபைகளு டன் கலக்காமல் பிரித்தன் இந்தியாவையும் இப்போரில் இணைத்ததன் காரணமாக, காந்தியடிகளின் ஆலோசனையின் பேரில் மாகாணங்களி லுள்ள மாசபை மந்திரி சபைகள் பதவியைத் துறந்தன. இதையடுத்து காந்தியின் தலைமையில் மீண்டும் சட்டமறுப்பு இயக்கமும், வெள்ளையர் நாட்டை விட்டு அகல வேண்டுமென்ற கிளர்ச்சியும் வலுப்பெற்றன. போரில், யப்பானியப் படர்ச்சியினல் இந்தியாவிற்கும் அபாயம் நெருங்கவே, 1942 இல் கிறிப்சு விசாரணைச்சபை (Cripps Mission) இந்தியாவுக்கு வந்து, போருக்குப்பின் அமைக்கப்பட வேண்டிய அரசமைப்புத் திட்டத்தைப்பற்றி இந்தியருடன் கூட்டாலோசனை நடத்தியது. ஆனல் உடனடியாகப் பொறுப்பாட்சியை அங்கீகரிக்க மறுத்த தல்ை, காந்தி சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினர். நாடு எங்கணும் “ஆங்கிலேயர், நாட்டை விட்டகலுக' என்ற கூக்கு ரல் நாளாந்தம் அதிகரித்து வந்தது. அரசாங்கம் அடக்குமுறைகளைக் கையாளவே, கிளர்ச்சி பரவிற்று ; பாகித்தான் பிரச்சினை பற்றிய வேற்றுமையும் வளர்ந்தது.
1945 இல் போர் முடிவெய்தியவுடன், பிரித்தனில் பதவிக்கு வந்த தொழிற் கட்சியின் தலைவர் திரு. அட்லி, இந்தியாவுக்கு சுயராச்சியம் அளிக்க வேண்டியது இன்றியமையாததெனக் கூறினர். 1946 இல் இந்தியாவுக்கு வந்த மூவரடங்கிய அமைச்சர் விசாரணைக்குழு (Cabinet Mission) சமரசப் பேச்சுவார்த்தைகள் நடாத்தியும் முசிலிம் லீக்தேசிய மகாசபை தகராறைத் தீர்க்க முடியாமற் போயிற்று. 1947 இல் நேரு இந்துக்களின் சார்பில் பிரிவினையை ஏற்றுக் கொண் டார். ஆங்கில அரசாங்கம் இந்தியா, பாகித்தான் என்ற இரு ஆணிலங்களை அமைத்து, இந்தியச் சுதந்திர விதியை நிறைவேற்றியது.
இந்திய சுதந்திர விதியின் பிரதான முறிகளாவன :
1. 1947 ஆகத்து 15 முதல் இந்தியா, பாகித்தான் எனும் இரு ஆணிலங்கள் அமைக்கப்படும், கிழக்கு வங்காளம், மேற்குப் பஞ்சாப், சிந்து, பிரிட்டிசு பலுக்கித்தான்

ஐரோப்பிய ஆள்புலங்களில் சுதந்திர இயக்கங்கள் 397
என்பன ஒன்று சேர்ந்து பாகித்தானகும். எல்லை நிருணயிப்பதற்கு நியமிக்கப்படும் ஒரு விசாரணைச் சபையின் திட்டப்படி வங்காளமும், பஞ்சாப்பும் பிரிக்கப் பெறும். எஞ்சிய இடம் பாவும் இந்திய ஆணிலத்தைச் சார்ந்தவையாகும்.
2. பிரிட்டிசு இந்தியாவிலுட்பட்டிருந்த நாடுகளில் அரசியல் பொறுப்பு யாதொன் றும் பிரிட்டிசு அரசாங்கத்துக்கு 1947 ஆகத்து 15 முதல் கிடையாது. இந்த ஆணிலங்கள் விரும்பினலொழிய பிரிட்டிசு பாராளுமன்றத்தின் சட்டம் ஒன்றும் அமூலிலிராது. பிரிட்டிசு அரசாங்கம் தன் அமைச்சர் வாயிலாக அலுவலாளர்களை நியமிப்பதும் நிறுத்தப்படும்.
3. 1947 ஆகத்து 15 முதல் இந்திய சுதேச அரசுகளில் பிரிட்டிசாரின் மேலாட்சி யும், ஆதிக்குடிப் பிரதேசங்கள் மீதுள்ள அதிகாசமும் நீங்கும்.
இந்தியாவின் சுதேச அரசுகள் தம் விருப்பப்படி இரண்டிலொரு ஆணிலங்களுடன் இணைந்தன. ஐதராபாத் ஆயுத பலத்தினல் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது, கசுமீர் இன் னும் ஒர் ஆட்சேபனைக்குரிய மாகாணமாக இருந்து வருகிறது.
இவ்வாறு படைக்கலகம் நடந்த 89 ஆண்டுகளுக்குப்பின் பிரித் தானிய ஆட்சி இந்தியாவிலிருந்து நீங்கியது இந்தியக் காரியால யம் மூடப்பட்டது. “சூரியன் சாய்வதையே கண்டறியாதது” எனப் புகழ் பெற்ற பிரித்தானியப் பேரரசின் இன்னுமொரு பிரதான பகுதி சுதந்திரம் பெறலாயிற்று.
இலங்கை :
இந்தியாவில் சுதந்திர உணர்ச்சி உண்டான அதே காலத்தில் இலங்கையிலும் கிளர்ச்சி பரவலாயிற்று. அக்குழப்பத்தைச் சமா தானப் படுத்தும் நோக்குடன் 1912 இல் சில சீர்திருத்தங்கள் அங்கீ கரிக்கப்பட்டன. அச்சட்டத்தின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தினர்களும், சிங்கள, தமிழ் நடுத்தர வகுப்பினரும் சட்டசபை யில் இடம் பெறலாயினர் ; எனினும் சபையில் உத்தியோகப் பற் றுள்ள அங்கத்தினரே பெரும்பான்மையினராயிருந்தனர். சீர்திருத் தக் கிளர்ச்சியை வலியுறுத்தும் நோக்குடன் 1917 இல் இலங்கைச் சீர்திருத்தச் சங்கமும், 1919 இல் இலங்கைத் தேசிய மகாசபையும் நிறுவப்பெற்றன. இந்தியாவில் ஏற்பட்ட மிந்தோ- மோர்லி திருத் தங்களின் அடிச்சுவட்டில் 1920 இல் ஒரு சில திருத்தங்கள் மேற். கொள்ளப்பட்ட போதும், மக்கள் அவற்றுடன் திருப்தியடைந் தாரிலர்.
1928 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் விசாரணைச் சபையினர் சட்ட சபைக்கும் மந்திரத்துக்கும், கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தை வழங்கினர். இரண்டாவது உலகப்போரின் முடிவில் இத்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்ட அதே காலத்தில் இலங்கையும் ஆணிலப் பதத்தை எய்தியது. 1945 ஆம் ஆண்டு சோல்பரிப் பிரபுவின் தலை மையில் வந்த விசாரணைச் சபை இங்கிலந்தின் பாராளுமன்ற ஆட்சி

Page 219
398 புது உலக சரித்திரம்
முறையைப் போன்ற அமைப்புக்களை இலங்கைக்குப் பெற்றுத் தந் தது. 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை உண்மை ஆணிலப்பதத்தைப் பெற்றது.
TLD . .
1886 ஆம் ஆண்டு நடந்தேறிய மூன்ருவது பர்மியப் போரின் டயனுக, பர்மிய அரசன் சிறைப்படுத்தப்பட்டு இந்தியாவுக்கு அனுப் பப்பட்ட பின், பர்மாவில் ஆங்கில ஆட்சி நிலைத்தது. இவ்வாறு முழுத் தேசமும் ஆங்கிலருக்குச் சொந்தமாகவே, அது ஒர் ஆள் பதியின் கீழ் தனி நாடாக அமைவு பெற்றது. 1935 இல் பர்மாவில் பொறுப்பு வாய்ந்த உண்ணுட்டு சட்ட மன்றங்களும், அமைச்சர் குழுவும் அமைக்கப்பட்டன.
இரண்டாவது உலகப்போர் மூழவே, யப்பான் 1942 இல் பர் மாவை அடிமைப்படுத்தி, மூன்று ஆண்டுகளாக அங்கு ஆட்சி புரிந் தது. போர் முடிவடைந்த பின்னர், தொழிற் கட்சி, பர்மிய பிரத மர் அவுங்சானுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து, 1947 சனவரி யில் சுதந்திரத்தை வழங்கியது. பொதுநலவமைப்பில் இடம் வகிக்க அன்றேல் பிரித்தானியத் தொடர்புகளை அறவே துண்டிக்க பர்மா வுக்குச் சுயாதீனம் கொடுக்கப்பட்டது. 1948 சனவரியில் பர்மா ஒரு சுதந்திரக் குடியரசாயிற்று.
இரண்டாம் உலகப் போருக்குப்பின் :
இரண்டாம் உலகப்போரின் பின் ஆசிய அரசியலரங்கில் பல சிக்கல்கள் நிறைந்த பிரச்சினைகள் தலைகாட்டின. அங்கெழுந்த புதுப் பிரச்சினைகளுக்கு இரு பிரதான சக்திகளே அடித்தளமாயமைந்தன. முதலாவது, மேற்கத்திய அரசுகளின் சாம்ராச்சிய அமைப்புக்களின் தேய்வுடன், புதுச்சுதந்திர அரசுகள் எழுச்சி பெற்று, தாம் ஈட்டிய சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும், தம் நாடுகளின் அபிவிருத்தியை வளர்ப்பதிலும் முனைந்தன. இரண்டாவது, பொதுவுடைமை வாதம், இப்பிராந்தியத்தில் புது வெற்றிகளையும் சாதனைகளையும் நிலை நாட்டக் கங்கணம் கட்டி நின்றது.
1945 இல் ஐக்கிய அரசு பிலிப்பைன் தீவுகளில் சுயாட்சியை அனுமதிக்கவே, அஃது ஒரு சனநாயகக் குடியரசாயிற்று. 1946 இல் பிரித்தன், யோதான் (Jordan) மேல் வைத் திருந்த ஆணையைக் கைவிட் டது ; பிரான்சு, சீரியாவுக்கும் இலெபனனுக்கும் (Lebanon) சுயாட்சி வழங்கியது. இசரு யேல் (Israel) அண்மை அரபு அரசுகளுடன் புரிந்த வன்போர் 1948 இல் முடிவடைந்த பின்னர், அங்கு குடியரசு தாபிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஆள்புலங்களில் சுதந்திர இயக்கங்கள் 399
உலகப் போருக்குப்பின் பொதுவுடைமை வாதம், ஆசிய நாடுகளில் ஒரு தலையான பிரச்சினையாக உருமாறியது. யப்பானிய பேரரசின் மறைவுடன், இரசியா குறில் தீவுகளையும், வட கொறியாவையும் ஆக்கிரமித்தது. 1945 க்கும் 1949 க்கு மிடையில் மாவோ சே துங்கின் சீனப் பொதுவுடைமைப் படைகள், முழு சீன நிலத்தையும் வெற்றி கொண்டன : சீயாங்கை சேக்கின் தேசிய சீன அரசாங்கம், போமோ சாத் தீவுக்குத் துரத்தப்பட்டது.
1946 இல் ஒ-சீ-மின் என்பவரின் தலைமையில் இந்தோசீனப் பொதுவுடைமைப் படைகள், பிரெஞ்சினருக்கெதிராக நீண்டபோரை ஆரம்பித்தன. எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1954 இல் பிரான்சு, இந்தோசீனவின் மூன்று இணைப்பு அரசுகளான கம்போடியா இலாவோசு, வியற் நாம் என்பவற்றிற்கு சுதந்திரம் வழங்கியது. அதேயாண்டில் பிரான்சு வட வியற்நாமை பொதுவுடைமைவர்திகளின் கையில் ஒப்படைத்தது தென் வியற்நாம் 1955 இல் குடியரசாயிற்று.
1950 இல், வட கொறிய பொதுவுடைமைவாதிகள், தென் கொறியாவை ஆக்கிரமித்தமையினுல் எழுந்த கொறியப்போரே பொது வுடைமை வாதிகளுக்கெதிராக எழுந்த அதி முக்கிய சமராகும். ஐக்கிய அமெரிக்க அரசு, தென் கொறியாவுக்கு உதவி தர உடனே விரைந்தது; ஐக்கிய நாட்டு அமையமும், பொதுவுடைமைவாதிகளின் ஆக்கிரமிப்பே போருக்கான காரணமெனத் தீர்த்தது. ஐக்கிய நாட்டுக் கொடியின் கீழ் பல நாடுகளின் படைகள் தென் கொறியாவில் போர் புரிந்தன. போரின் முடிவில் 1953 ஆம் ஆண்டுச் சமாதானத்தில் தென் கொறியாவின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது.
சுதந்திர உலகின் சனநாயக அரசுகள், பொதுவுடைமை வாதத் துக் கெதிராகப் போர்ப் பிரகடனம் செய்த அதே நேரத்தில், ஆசிய நாடுகளின் பொருளாதார நிலையையும் விருத்தி செய்ய நோக்கங் கொண்டன. ஐக்கிய அமெரிக்க அரசு மாத்திரமே கோடிக் கணக்கான டாலர்களை இப்பிராந்தியத்தில் இறைத்தது. ஐக்கிய நாட்டமையமும் பொருளாதாரத் துறையில் பின் நிற்கும் நாடுகளை முன்னேற்றப் பாதையில் வழிநடத்த ஒரு விசேட தொழில் நுட்ப உதவித் திட் டத்தையும் மேற்கொண்டது.
பல நாடுகள் தம்மைப் பொதுவுடைமை வாதத்திலிருந்து பாது காத்துக் கொள்ளும் நோக்குடன் பல நட்புறவு அமைப்புக்களையும் ஏற்படுத்தின. 1952 இல் துருக்கி வட அத்திலந்திக்கு ஒப்பந்த அமைப்பில் (NATO) சேர்ந்தது. 1954 இல் துருக்கியும் பாக்கித்தா னும் ஒரு பிராந்திய நட்புறவு அமைப்பை உருவாக்கின : 1955 ஆம் ஆண்டு ஈரான், ஈராக், பிரித்தன் அதில் இணைந்தன. 1954 இல்

Page 220
400 புது உலக சரித்திரம்
ஐக்கிய அமெரிக்க அரசு, தென் கிழக்கு ஆசிய நட்புறவு அமைப்பை (SEATO) ஏற்படுத்த முன்வந்தது. நாளடைவில் இவ்வமைப்பு பாக் கித்தான், பிலிப்பைன்சு, தாய்லந்து என்ற ஆசிய நாடுகளையும் ஒசுத் திரேலியா, பிலிப்பைன்சு, பிரான்சு, பிரித்தன், நியூசீலந்து எனும் ஐந்து புற ஆசிய நாடுகளையும் கொண்டது.
ஆசிய நாடுகளில் சில, பொதுவுடைமை வாதத்தினதும் மேற்கு வல்லரசுகளினதும் தலையீடுகளை விலக்கும் நோக்குடன், மத்திய வழியைக் கடைப்பிடிக்க முனைந்தன. இந்தியா, இலங்கை, அரபு நாடுகள் இப்பேர்ப்பட்ட நடு நிலைப் பூட்கையின் பிரதான ஆதர வங்கங்களாகும். இவை குழந்தைப் பருவத்தை விட்டுப் பக்குவ நிலையை அடைந்துவிட்டன என்பதற்கு 1955 ஆம் ஆண்டு பன்டுங் நகரில் கூட்டப்பட்ட ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் மாநாடு போதிய சான் ருகும். பிரசித்தி வாய்ந்த இம்மாநாடு, வெள்ளை நாடுகளல்லாத உலகின் 66 சதவீத மக்களையுடைய ஆசிய, ஆபிரிக்கக் கண்டங்களின் 29 சுதந்திர நாடுகளை ஒன்று படுத்தியது.
1957 இல் மலாயா பொதுநலவாயத்தில் சுதந்திர பதத்தை எய் தியது.

ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் 401
அதிகாரம் 25
ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் (1919-1939)
உலகப் போரில் நேச நாடுகள், அதி விசாலமான பொருள், உயிர், பணச் சேதத்துடனேயே மத்திய வல்லரசுகளைத் தோற்கடித்தன. உள, ஆன்ம, சரீர பலம் குன்றிய நிலையில் வெற்றி பெற்றவர் களும் தோல்வியுற்றவர்களும், தம் இரணங்களைக் குணப்படுத்துவதி லும், தம் நாடுகளின் உள்ளும் புறமும் எழுந்த பிரச்சினைகளைத் தீர்ப் பதிலும் முழு அவதானத்தையும் திருப்பினர். வேர்சை உடன்படிக்கைக் கும் 1939 இல் ஆரம்பித்த புது உலகப் போருக்கும் இடைப்பட்ட இருபது ஆண்டுகளின் வரலாறு சிக்கலான, அரசியல், சமுதாய, பொருளாதாரப் பிரச்சினைகள் மிக்கவை.
முதலாவது உலகப் போரின் அடிச்சுவட்டில் தோற்றிய அரசி யல் விளைவுகளும் அதி பார தூரமானவை. இவ்வாண்டுகளில், புரட் சிகளினல் அன்றேல் நீண்ட கால அமைதியீனத்தினல் பாதிக்கப் படாத நாடு ஒன்றுமேயில்லை யெனக் கூறலாம். புயற் காற்றினுல் முதிர்ந்த கணிகள் மரங்களிலிருந்து உதிர்வது போல, போரினல் பல முடிகள் சிம்மாசனங்களிலிருந்து உருண்டன. 1917 ஆம் ஆண்டுப் புரட்சி, இரசியாவில் சாரின் ஆட்சியைக் கவிழ்த்தது. 1918 ஆம் ஆண் டுத் தோல்விகள் ஒசுத்திரியா-அங்கேரியிலும், செர்மனியிலும், புரட்சி களை விளைத்தன. ஒசுத் திரிய சக்கரவர்த்தி சாள்சும், செர்மன் கைசர் உவில்லியமும் தம் முடிகளைத்துறந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இத்தாலியின் அரசன் சொற்ப காலம் ஆட்சி செலுத்திய பின்னர், 1922 ஆம் ஆண்டு பாசிச வெற்றியினுல் முடி துறந்தோடினர். போல் கன் தீபகற்பமும் புரட்சிவாதத்தினுல் மீண்டும் மீண்டும் அதிர்ந்தது. துருக்கியுடன் போர் புரிந்து படு தோல்வியடைந்த கிறீசிலும் புரட்சி, முடியாட்சியைச் சிதைத்தது. புரட்சியின் சுழல் வேகத்தில் அகப் பட்ட துருக்கியும் சுலு தானைப் பதவியிலிருந்து நீக்கி, வல்லாட்சியை ஏற்படுத்தியது. சிபெயினின் உண்ணுட்டுக் குழப்பம், பிறிமோ டி இறி வேரா (1923-30) வின் வல்லாட்சியின் கீழ் தற்காலிகமாகக் குணம் பெற்று, 1930 இல் அவரது வீழ்ச்சியுடன், முடியாட்சி அழிய, குடி யாட்சி உதயமாயிற்று. சீனுவில் புரட்சியும் கலகமும் ஒன்றே டொன்று கைகோத்து முன்னேறின. அயலாந்தில் உண்ணுட்டுப் போரும், இந்தி யாவிலும் பலத்தீனத்திலும் கிளர்ச்சிகளும், பிரித்தானியப் பொது
உச -28

Page 221
402 புது உலக சரித்திரம்
நலவாயத்தின் அமைதியைக் குலைத்தன. பிரித்தனிலும் பிரான்சிலும் சமூகவுடைமைவாத இயக்கங்களும் தொழிற் கிளர்ச்சிகளும் இரு நாடுகளின் சம நிலையைப் பாதித்தன.
1. இரசியாவில் பொதுவுடைமைவாதம்
இரசியாவில் உண்டான பொல்சிவிக்குப் புரட்சி, புது அரசியல், பொரு ளாதார இயக்கங்களை அந்நாட்டில் ஆரம்பித்து வைத்தது. பாட்டாளியி னரின் சருவாதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டுமென்பதே புரட்சியின் அரசியற் சித்தாந்தம். தொழிலாளர் எனும் ஒரு வகுப்பினரைத் தவிர, பிற வகுப்புக்கள், பாட்டாளிகளின் சருவாதிகாரத்துக்குப் பங்கம் விளை விக்க வல்லவையென எண்ணிய பொல்சுவிக்கர், அவற்றை வேருடன் களைந்தெறியத் திடம் பூண்டனர். பொல்சுவிக்கு வாதம் அரசியல் சன நாயகத்தை ஏற்படுத்த வேண்டுமென்றல்ல, பாட்டாளிகளின் வல் லாட்சியைச் சிருட்டிக்க வேண்டுமென்ற நோக்கத்தையே தன் இலட் சியமாகக் கொண்டது. அதன் பொருளாதாரக் கோட்பாடு, மாட்சிய சமூகவுடைமைவாதம் எனும் அத்திவாரத்தில் கட்டப்பெற்றது ; தனிப்பட்ட முதலாளித்துவம் எனும் அமைப்புத் தகர்த்தெறியப் பட்டு, அதற்குப் பதிலாக நாட்டின் நிலங்களையும், உற்பத்தி மூலங்களை யும் நாட்டுரிமையாக்க வேண்டு மென்றே கருமமாற்றியது.
இந்த அரசியல், பொருளாதாரக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே பொல்சுவிக்கர் இரசியாவின் சமூக, பொருளாதார அமைப்புக்களில் அதி விசாலமான மாற்றங்களைப் புகுத்தினர். ஆனல் அவர்கள் வகுத்த நாட்டுரிமையாக்குத் திட்டம் பூரணமாக வெற்றி பெறு முன்னர், பல இடையூறுகள் முளைத்தன.
புதுப் பொருளாதாரப் பூட்கை :
ஆரம்பத்தில் இலெனின் அமைக்க முயன்ற இலட்சிய மாட்சு சமுதாயத் திட்டம் புதிய அரசாங்கத்தைப் பரிபூரணமாகப் பரிசோதித் தது. விளைநிலங்களை விவசாயிகள் தமதாக்கிக் கொண்டனர் : பயிர் விளைவின் ஒரு பகுதியை அரசாங்கம் வரியாகக் கேட்டபொழுது, விவ சாயிகள் உற்பத்தியைக் குறைத்தனர். 1921 ஆம் ஆண்டு இரசியா வில் ஒரு மிகப் பயங்கரமான பஞ்சமும் ஏற்பட்டது ; ஐந்து கோடி மக்கள் பட்டினியின் வசப்பட்டு மாண்டனர். தொழில் உற்பத்தியும் சீர்குலைந்தது. பொருள்களின் விலை உச்ச நிலைக்கு உயரவே "சோவி யற் அரசாங்கம் வீழ்க’ என்ற ஆவேசக் குரல் எங்கும் ஒலித்தது. அபாயகரமான இப்பொருளாதார நிலையைச் சீர்ப்படுத்த வேண்டு மாயின், தன் இலட்சியத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டுவது

ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் 403 அவசியமென்பதை இலெனின் உணர்ந்தார். 1921 ஆம் ஆண்டு நடை பெற்ற பொதுவுடைமைக் கட்சியின் மாநாட்டில் புதுப் பொருளாதாரப் பூட்கை, விவாதத்தின் பின் அங்கீகரிக்கப்பட்டது. இத்திட்டம், தூய பொதுவுடைமைக்கும் முதலாளித்துவத்துக்குமிடையே ஒரு மத்திய வழியைக் கடைப்பிடித்தது. விவசாயிகள் தம் நிலத்தின் விளைச்சலில் ஒரு பகுதியை விரியாக இறுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்; 1924 இல் இவ்வரி பணமாக மாற்றப்பட்டது. மேலதிகமான விளைபொருள் கள் சந்தை விற்பனைக்கு அனுமதி பெற்றன ; சிறிய தொழிலகங்கள் முதலாளித்துவ முறையில் இயங்க உரிமை பெற்றன; பெரும் தொழிற் தாபனங்கள், பொதுச் சேவைகள் நாட்டுரிமையாக்கப் பட் டன; வியாபாரத்தில் ஒர் அளவு தனி முயற்சி ஏற்றுக் கொள்ளப் பட்டது. இத்திட்டமானது, ஒரு தற்காலிகமான அமைப்பென்றே இலெனினும் பொதுவுடைமைத் தலைவர்களும் கருதினர். அவர்கள் எதிர்பார்த்த பலனும் கைக்கெட்டியது. உற்பத்தி பெருகி போருக்கு முந்திய நிலைமை உருவாகியது பேரழிவைத் தடைசெய்து, பொல்சு விக்கு அரசாங்கத்தைப் பாதுகாக்கும் கருவியாக இத்திட்டம் அமைந்தது. தான் உருவாக்கிய திட்டத்தின் பலாபலன்களைக் கண்டு அனுபவிக்கு முன், சனவரி மாதம் 21 ஆம் நாள், இலெனின் மறைந் தார். பொல்சுவிக்குப் புரட்சியின் தாபகரென்றும், புது இரசியச் சிற்பியெனறும் இலெனின் அழியாப் புகழைப் பெற்ருர். பொது வுடைமைவாதிகள் அவரை ஒரு தெய்வீக நிலைக்கு உயர்த்திப் பூசனே செய்து வருகின்றனர்.
துருெசுச் கி-சிற்றலின் இகல் :
இலெனினுக்குப்பின் இரசியாவில் முதன்மைபெற்று இலங்கியவர் து குெ சுக்கி என்பவரே. துருெ சுக்கி சிறந்த பண்பாடுடையவர், சலியாத எழுத்தாளன், பரந்த ஞானம் படைத்தவர், மாட்சீய தத்துவங்களில் தளராத நம்பிக்கையும் உறுதியும் பூண்ட தீவிர புரட்சிவாதி. துருெசுக்கி, இலெனினைப் போன்று சந்தர்ப்பத்துக்கும் சூழ்நிலைக்கும் இயைய தம் அடிப்படைக் கொள்கைகளை மாற்றி யமைக்க ஆயத்தமான வரல்லர். அகில உலகமும் புரட்சியினல் மாற்ற மடையும் வரை இரசியாவில் பொதுவுடைமை அரசாங்கத்தை அமைக்க முடியாதென்றே அவர் நம்பினுர், ”。
துருெசுக்கியின் கொள்கைகளுக்கு எதிர் மறையாக சிற்கு வின் போன்ற மிதவாதிகள், கைக்கெட்டிய வெற்றிகளை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதல் வேலையாக இருக்க வேண்டு மென்றன்ர். 1922இல் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளனுகத் தேர்ந்தெடுக்கப் பட்ட சிற்ருலின், அன்றுமுதல் அக்கேந்திர தானத்தை தன் எழுச்

Page 222
404 புது உலக சரித்திரம்
சிக்காகப் பயன்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் இலெனின் மரணப் படுக்கையிலிருந்தபொழுது, நாட்டின் நிருவாகத்தை இயக்க சிளுேவியேவ் (Zinoview), கமனேவ் (Kamanew), சிற்ருலின் என்ற மூவர் நியமிக்கப்பட்டனர். இம் மூவரில் அதி குறைந்த பிரபல்யம் வாய்ந்தவர் சிற்றலினே.
இலெனின் இறந்த சில ஆண்டுகளுக்குள் துருெசுக்கி வாதிகளுக் கும், சிற்றலின் வாதிகளுக்கு மிடையே ஒரு நீண்ட அசுரப்போர் ஆரம்ப மாகியது. துருெசுக்கி மீது கொண்டிருந்த அச்சத்தின் விளைவாக நிருவாக அதிகாரிகள் மூவரும் ஒன்று:சேர்ந்து, அவரது பலத்தை முறிக்கத் திட்ட மிட்டனர். இரு பகுதியினரும் இரக்கம் காட்டவுமில்லை, கேட்கவுமில்லை. சிற்றலினுக்கு கட்சியின் பலம் உறுதுணையாக விருந்தது. பொது வுடைமைக் கட்சியின் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் துருெசிக்கியின் கோட்பாடுகள் கண்டனத்துக்கிலக்காயின. 1927 இல் சிற்றலின், துமுெசுக்கியை கட்சியிலிருந்து விலக்கினர் ; 1929 இல் நாடு கடத்தினர். துருெசிக்கி மெ ச் சிக் கோ வி ல் சரண் புகுந்து பின் ன ரும் சிற்றலினைத் தாக்கி எழுதினர். அவருடைய ஆதரவாளர்கள் நான் as Tih sysa'i, 52.5 (Fourth International) iio) 65,607 it. gp15uai, சிற்றலினின் சூழ்ச்சியினல், 1940 ஆம் ஆண்டு ஓர் அனமதேய மனித னின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகி, உயிர் நீத்தார்.
சிற்றலினின் எழுச்சி :
இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே சிற்றலினுடைய அதிகா ரம் உறுதி பற்று வளர்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது. அவர் தன தாக்கிய அதிகாரத்தை 29 ஆண்டுகுளுக்கு, இறுதி மரணம்வரை சற் றேனும் தளரவிடவில்லை.
சிற்ருவின் :
சிற்ருலினின், உண்மையான பெயர் யோசேப் விசாரியனேவிச் ஐக்கோசுவிலி. அவர் இர சிய எண்ணெய்க் கேணியொன்றின் அருகேயுள்ள ஒரு சிறு குடிசையில் 1879 இல் பிறந்தார். குழந்தைப் பருவத்தில் தந்தையை இழந்து, தாயின் அணைப்பிலேயே வளர்ந்தார். அவரை ஒரு குருவாக்கிவிட வேண்டுமென்ற ஆசை தாயின் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிந்தது. அவளது துண்டுதலின் பயனகப் பல்லாண்டு கர்லம் ஒரு சமய சித்தாந்தக் கலாசாலையிற் கல்வி பயின்று வந்தார். காள் மாட்சின் "மூலதனம்" என்ற நூலை வாசித்ததன் பயனுய் *பதினைந்தாவது பராயத்தில் அவரது வாழ்வின் குறிக்கோள் நிலைமாறித் திரும்பியது. அன்று முதல் காள் மாட்சின் ஆதரவாளர்களுடன் சேர்ந்து அந்தரங்க வேலை செய்து வர லாயினர். வறுமையின் மடியில் உழலும் மக்களையும், உற்ருர் உறவினரின் பரிதாப நிலை மையையும் கண்ணுற்று அவர் மனமடிவு கொண்டார். புரட்சிகரமான நோக்கங்கள் அவ ரிடம் தலையெடுத்தன. கல்லூரித் தலைவர்கள் அவர்தம் புரட்சி மனுேபாவத்தைக் கண்டு, கல்லூரியில் நின்றும் வெளியேற்றினர். அடுத்த 25 ஆண்டுகள் தீவிரவாதிகளினது வாழ்க்கை போன்று அவரும் புரட்சிவாதத்தையே மேற்கொண்டு வாழ்ந்தார். பசியும், பட் டினியும் அவரைப் பயமுறுத்தவில்லை ; அவரது இலக்குக்கு இடறல் ஏற்படுத்தவுமில்லை

ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் 405
புரட்சி உபந்நியாசங்களிலும் எழுத்திலும் அவரது திறமைகள் வளர்ந்தன. எட்டு ஆண்டு கள் சிறைவாசத்தையும் அனுபவித்தார். 1905 ஆம் ஆண்டு அரசாங்க எதிர்ப்புக் கிளர்சசி தோல்வி பெறவே இலெனின், துருெசுக்கி போனற பெரியார்கள் நாட்டை விட்டு ஒட்டம் பிடித்தனர். ஆனல சிற்றலினே நாட்டினுள்ளேயே கரந்துறைந்தார். ஆறு தடவைகள் அவர், சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்ட போதிலும், ஐந்து முறை அங்கிருந்து தப்பி ஓடி னர். இறுதியில் வட துருவத்திற்கு 18 மைலுக்கு அப்பாலுள்ள ஒரு குடிசைக்கு அனுப் பப்பட்டார். தப்பிச் செல்ல வழி காணுத அவர், ஒயாத வேலையை உறுதுணையாகக கொண்டு நான்கு ஆண்டுகளைக் கழித்தார். 1917 ஆம் ஆண்டு எற்பட்ட புரட்சியினபோது அவருக்கு விடுதலை கிடைத்தது.
"சிற்ருல்" எபன்து உருக்கு எனப் பொருள்படும். இரசிய வரலாற்றில் அவர் ஒர் இரும்பு மனிதனுகவே இலங்கினர்.
இரசியாவில் "இரும்பு மனிதன்” தான் கட்டுப்படுத்தி, வழி நடாத்திய பொதுவுடைமைக் கட்சியை, தன் சொல்லுக்கு மறுப் புக் கூருத ஒரு தலையாட்டிப் பொம்மையாக மாற்றினன். சிற்றலின் தன் வழியில் நின்ற, அல்லது வழியில் நிற்பதாகக் காணப்பட்ட எதிரி கள் யாவரையும் எந்த விதமான ஈவோ இரக்கமோ காட்டாது பல வந்தமாக அகற்றினர். அவருடன் அரசாங்கத்தை நடாத்த நியமிக் கப்பட்ட இரு தலைவர்களையும் தேசத் துரோகிகள் எனக் குற்றஞ் சாட்டி, 1936 இல் சுட்டுக் கொலை செய்த பின்னர், நாட்டின் நிக ரற்ற சருவாதிகாரியானன். 1937 இல் செம்படையில் நடந்த ஒரு சுத்திகரிப்பில் ஐயப்பட்ட தளகர்த்தர்கள் மாண்டனர். சருவாதி காரத்தை அமைப்பதுடன் திருப்திப்படாத சிற்றலின், இரசிய மக் களின் வாழ்வின் சகல துறைகளையும் கட்டுப்படுத்த முனைந்தார். இலக்கியம், கலை, வி ஞ் ஞா ன ம் எ னு ம் பகுதிகள் யாவும் சிற் ருலினின் கண் காணிப்பின் கீழ் வந்தன. தானே, இலெனினதும அவரது கோட்பாடுகளினதும் உரிமையாளன் எனக் கற்பித்த சிற்ருலின், துருெசிக்கியை பரநெறியாளனென மானபங்கப் படுத்தியும், அவரது ஆதரவாளரை ஒடுக்கியும், அவரது நாமத்தை 1917 ஆண்டுப் புரட்சி வரலாறுகளிலிருந்து நீக்கியும், அவற்றில் தன் மகிமையை நிலைநாட்ட சரித்திரத்தைப் புதிதாக எழுதுவித்தார். சிற்றலின் ஓர் அறிவாளி. இர சிய நாட்டின் பிதா, மக்களின் கண் கண்ட தெய்வம் என்றெல்லாம் பொதுவுடைமைக் கட்சி ஆராதிப்பதை சிற்ற லின் மறைமுகமா வளர்த்தார்.
ஐந்தாண்டுத் திட்டங்கள் :
1928 ஆம் ஆண்டு, முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தை சிற்ரு
லின் நடை முறையில் நிகழ்த்த ஆரம்பித்தார். இத்திட்டம் ஈரம்
சங்களைக் கொண்டது. முதலாவது ஆதிகால உற்பத்தி முறை
களைப் பின்பற்றி வறுமையின் அடிப்படையில் வாழ்ந்து வந்த தனி
விவசாய முறைக்குப் பதிலாய்க் கூட்டுப் பண்ணே இயக்கத்தை ஆரம்
A 28

Page 223
406 புது உலக சரித்திரம்
பித்தல். 1930 இல் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் பலவந்த மாக இப்பண்ணைகளில் அமர்த்தப்பட்டனர் ; நிலத்தின் 4/5 பகுதி பெரும் கூட்டுப் பண்ணைகளாய் மாற்றப்பட்டன. 50 இலட்சத்துக்கு அதிகமானேர், பணக்கார வேளாளர், நாடு கடத்தப் பட்டனர். இரண் டாவது, சோவியற் யூனியன் தன் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முதலாளித்துவ நாடுகளின் கால்பிடித்து வாழும் நிலைமையை அகற் ) வும், அந்நிய ஆக்கிரமிப்பை மேற் கொள்ளவும், கனத் தொழில்கள் (Heavy Industries) அபிவிருத்தி செய்தல். இவ்வடிப்படையில் உற் பத்திக்குத் தேவையான சுரங்கங்கள், மின்சார நிலையங்கள், எஃகு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. தொழிலாளர் பலவந்தமாய் திரட்டப்பட்டனர் ; கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் அவர்கள் உழைக்க வேண்டியவர்களாயினர். உற்பத்தியின் அளவு அசாத்திய நிலை யில் நிர்ணயிக்கப்பட்டு அவற்றை நிறைவேற்றும்படி தொழில் நிலைய அதிகாரிகள் நிர்ப்பந்திக்கப் பட்டனர்; இதன் காரணமாய் தொழிலா ளர் ஈவிரக்கமின்றி வதைக்கப்பட்டார்கள். நினைத்தபடி உற்பத்தி அளவுகளை அரசாங்கம் நிறைவேற்ற முடியாக் காரணத்தால் தொழில் நிபுணர்கள், அாசாங்க அலுவலாளர், பொருளாதார உறுப்பினர் பலர் சைபீரியாவுக்குக் கடத்தப்பட்டனர்; துப்பாக்கிக்கிரையாயினர் சிலர். இவ்வண்ணம் ஐந்தாண்டுத் திட்டத்தில் மக்கள் சுமந்த இன்னல் கள் அனந்தம்; அவர்களது தியாகம் ஈடிணையற்றது.
இத்திட்டக்தின் கீம் பாமர மக்கள் பட்ட துயரை ஈடு செய்யும் நோக்குடன் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் 1934 இல் ஆரம் பிக்கப்பட்டது. மக்களின் வாழ்க்கை வசதிகளையும் தேவைகளையும் செள கரியங்களையும் தரும் பொருள்களை உற்பத்தி செய்வதே இத்திட்டத் தின் உள்ளிடாம். எண்ணிய பிரகாரம் சகல துறைகளிலும் இத்திட்டத் தின் நல்வளர்ச்சி தோற்றியது. தொழில், வியாபாரம், குடிசனம், கூட் டுப் பண்ணைகள், சங்கங்கள், நகரங்கள் பெருகி வளம் பெற்றன. கல்வி யும் விஞ்ஞானமும் உச்சநிலை எய்தின. வரலாறு கண்டிராத வகை யில் ஒரு பலம் வாய்ந்த நவீன எந்திரத் தொழில்மய நாடாக, இக் குறுகிய காலம், இரசியாவை மாற்றியமைத்தது.
பிறநாட்டுப் பூட்கை :
இரசியாவின் எல்லைகளினுள் பிற நாடுகளின் பிரசாரம் தடை செய்யப்பட்டபோதும், அதன் உதவியும், அதிருப்தியையூட்டும் பிரசார மும் அதன் அகிலங்கள் போன்ற சர்வதேச அமைப்புக்களின் வாயிலாக, உலகெங்கணும் பொதுவுடைமைவாத இயக்கங்களுக்குக் கிட்டின. அது, பல நாடுகளில் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் பொது ஷடைமைவாதத்தின் மேன்மைக்காக உழைக்கும் பல குழுக்களின்

ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் 407
ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்றது. இப்பேர்ப்பட்ட "ஐந் தாம் படையினர்" இரசியாவின் தூண்டுதலினல் கிளர்ச்சி, சூழ்ச்சி, ஒற்ருடல், புரட்சி எனும் வழிகளில் பொதுவுடைமைவாதத்தை நிலைக் கச் செய்ய ஆயத்தமாக அணி வகுத்து நின்றனர். சிபெயினில் அவர் கள் வெளியரங்கமாக உண்ணுட்டுப் போரில் பங்கு பற்றினர் ; மற்றும் நாடுகளில் அரசியல் கிளர்சிகளையும், பொருளாதார ஒழுங்கீனத்தை யும் ஏற்படுத்தினர். இப்பேர்ப்பட்ட பிறநாட்டுப் பூட்கை தான், ஈற் றில் இரசியாவின் எல்லைகளைச் சுற்றி, மேற்கிலும் கிழக்கிலும் பல பொதுவுடைமை அரசுகளை நிறுவ வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. ஆசுயாவிலும் ஆபிரிக்காவிலும் நாட்டுமக்களின் விடுதலைப் போராட் டங்களுக்கு : ரு தூண்டுதலாயும் அதிருப்திப்பட்ட சக்திகளை ஒன்று திரட்டும் வல்லபமாயும் பொதுவுடைமைவாதம் விளங்கியது.
1930 க்குப்பின் செர்மனியினதும் யப்பானினதும் எழுச்சுகளைக் கண்டு வெகுண்ட இரசியா, மேற்கு வல்லரசுகளின் நட்பைப்பெற அரும்பாடுபட்டு, பிரான்சுடன் ஒர் ஒப்பந்தம் செய்ததுடன், சர்வ தேச சங்கத்திலும் அனுமதி பெற்றது. நாற்சி இயக்கம் அபாயகர மான வேடம் பூணவே, இரசியா, செர்மனிக்கெதிராய் ஒரு பொது முன்னணி அமைக்க வேண்டுமென வற்புறுத்தியது. ஆனல் சடுதியாக 1939 ஆகத்தில் அது செர்மனியுடன் அணுக்கிரமிப்பு உடன்படிக்கை யொன்றைச் செய்தது.
2. இத்தாலியில் பாசிசம்
இத்தாலிய பாசிசம் முதல் உலகப் போருக்குப்பின், பொது வுடைமைவாதத்துக்கு மறுப்பாகத் தோற்றி அதனிடமிருந்து வெற்றி யைப் பறித்துக்கொண்ட ஓர் இயக்கம் மாத்திரமன்று ; அது தேசப் பற்றில் முளைத்து, அதனல் வளர்க்கப்பட்டு, அமைதியீனத்திலிருந்து ஒற்றுமையையும், ஒழுங்கையும், உறுதியான ஆட்சியையும் ஏற் படுத்த முயன்ற ஓர் இயக்கமுமாகும். போரின் பயனப் நாட்டின் பொருளாதாரம் அறவே சீர்குலைந்தது. போர்வீரர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினல் நாட்டில் அலைந்து திரிந்தனர். புரட்சிவாத சமூகவுடைமைவாதிகளும், பொதுவுடைமைவாதிகளும் அமைதியீனத் தைப் பயன்படுத்தி, தொழிலாளர் மத்தியில் அதிருப்தியை வளர்த்து, தொழிற்சாலைகள், வங்கிகள், வர்த்தக நிலையங்கள் முதலியவற்றைக் கைப்பற்ற முயற்சித்தனர். வேலை நிறுத்தங்கள், கலகங்கள் சர்வ சாதாரணமாயின. இத்தாலியின் நிதிநிலை சீர்கெட்டது; அரசாங்க மும் நிலையைச் செப்பனிட முடியாது தடுமாறியது.

Page 224
4.08 புது உலக சரித்திரம்
முசோலினியும், பாசிசவாதிகளின் எழுச்சியும் :
1919 ஆம் ஆண்டு மிலானில் பெனிற்ருே முசோலினி நிறுவிய பழைய போர்வீரர்களின் சங்கத்திலிருந்தே பாசிசம் (Fascism) உரு வாகியது. கறுப்புச் சட்டைகளைத் தம் உடையாகவும், பழைய உருே மானிய அதிகாரக் கருவியைத் (Fasees) தம் சின்னமாகவும் கொண்ட இவ்விளைஞர்கள், நாட்டில் தலைகாட்டிய கலகங்களையும், சச்சரவுகளை யும் பலாத்காரத்தினுல் அடக்க முற்பட்டனர். அவர்களது தலைவன் ஒரு சாதாரண கொல்லனின் மகன் ; போருக்கு முன் ஒரு தீவிர சமூகவுடைமைவாத பத்திரிகை நிருபராக இருந்து, பின் கொள்கை வேறுபாடுகளினல் கட்சியை விட்டு விலகலானன். பாசிசவாதத்துக் குக் குறிப்பிட்ட கொள்கைகளோ, திட்டங்களோ கிடையா. “பாசிச வாதிகள் எந்தக் குறிப்பிட்ட கொள்கைகளுக்கும் கட்டுப்படாத வர்கள் ; இத்தாலிய மக்களின் எதிர்கால சுபீட்சம் எனும் ஒரே யொரு இலட்சியத்தை நோக்கி இடையருது முன்னேறுபவர்கள்' என முசோலினி 1921 இல் குறிப்பிட்டார். மக்கியா வலியைப் போன்று, முசோலினி பாசிசத்தை நாட்டுத் தற்பெருமை எனும் அக்திவாரத்திலேயே கட்டியெழுப்பினர். அரசாங்கம் அதிகாரமின்றித் தடுமாறிய காலத்தில் இத்தாலி, சமூகவுடைமைவாதிகளுக்கும் பாசிச வாதிகளுக்குமிடையே நடைபெறும் சமரின் களமாக மாறியது. பாசிசவாதிகளின் உறுதியான நடவடிக்கைகளில்ை அவர்களது செல் வாக்கும் அதிகாரமும் ஓங்கி வளர்ந்தன ; 1921 ஆம் ஆண்டுத் தேர் தலில் நிறைந்த வெற்றியும் பெற்றனர். அடுத்த ஆண்டு. முசோலினி யும் அவரது கறுப்புச்சட்டை வீரர்களும் அரசாங்கத்தைக் கைப்பற் றும் நோக்குடன் தலைநகரத்தின் மீது படையெடுத்தனர்.
முசோலினி, இத்தாலியின் முதலமைச்சன் :
முசோலினியினதும் பாசிச வாதிகளினதும் செல்வாக்கையும் பலத் தையும் நன்குண்ர்ந்த இத்தாலிய அரசன் விற்றர் இம்மானுவேல், அவர்களை அன்புடன் வரவேற்று, முசோலினியைத் தன் முதல் அமைச்சராக்கிர்ை. அதிகார பதவியை எய்திய முசோலினி, தன் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதிலேயே முழு அவதானத்தை யும் செலவிட்டார். சில ஆண்டுகளுக்கு, பாராளுமன்றத்தின் வெளிப் போர்வையைப் பாதுகாத்தார் ; அதன் பின் மிக மெதுவாகத் தன்னை நாட்டின் தணியதிகாரம் படைத்த வல்லாளனுக ஆக்கிக் கொள்ளும் முயற்சியில் இறங்கினர். தன் பாசிச கட்சி ஒன்று நீங்கலாக, ஏனைய அரசியற் கட்சிகள் சட்டத்துக்கு விரோதமானவையாக்கப்பட்டன : பாசிசக் கட்சி தயாரித்த வேலைத் திட்டத்தின் அடிப்படையிலேயே வாக்காளர் பாராளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தனர். வேறு

ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் 409
பல வழிகளில் நாட்டின் அரசியலதிகாரம் அவரது கைகளிலேயே குவிந்தது. வர்த்தகத் தாபனங்களும் தொழிற் சங்கங்களும் அரசாங்க கட்டுப்பாட்டுக்குக் கீழ்ப்பட்ட சிந்திக்கலியங்களாக (Syndicates) அமைக்கப் பெற்றன. பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், பத்திரிகை கள், வானெலி, திரைப்படக்காட்சி யாவும் அரசாங்க மேற்பார் வைக்கு உட்படுத்தப்பட்டன. தனி மனிதன் தான் அங்கமாகிய சமூ கத்திற்காகவே விாழக் கட்டாயப் படுத்தப்பட்டான். கவூர், மாசினி, கரிபால்டி என்ற தியாகிகள் அரும்பாடுபட்டு இத்தாலிய மக்களுக்குப் பெற்றுத் தந்த சுதந்திரம் முழுமையாக மறைந்தது. 1922 முதல் 1944 இல் அவரது இறுதி வீழ்ச்சி வரை, முசோலினி இத்தாலியின் உண்மைச் சர்வாதிகாரியாகவே திகழ்ந்தார், முசோலினியின் வல்லாட்சி :
பாசிச வாதிகள், தாம் பெற்ற அதிகாரத்தைப் பலாத்காரத்தினு லேயே நாட்டில் நிலைநாட்ட முற்பட்டனர். இத்தாலி முழுவதும் பாசிச மயமாக வேண்டு மென்பதே முசோலினியின் திட்டம். பலாத் காரத்தைப் பகிரங்கமாகப் புகழ்ந்து பாராட்டினர் முசோலினி ; கொலை, சித்திரவதை, சொத்து நாசம், தீவைத்தல் போன்ற அட்டூழியங்களி ஞல் பாசிச வாதிகள் இத்தாலிய மக்களின் உறுதியையும் சனநாய கப் பிரியத்தையும் முறித்தனர். பாராளுமன்ற எதிர்க்கட்சி அங்கத் தினரை அடித்தும் துன்புறுத்தியும் அவர்களேத் தன் சித்தத்துக்கு அடிபணியச் செய்தார். 1925 இல் நிறைவேறிய **விசேட சட்டங் கள்’ எதிரிகளை அடக்கியொடுக்குவதற்கு வேண்டிய அதிகாரங்களை அரசாங்கத்துக்குப் பெற்றுத் தந்தன. “குற்றவாளிகள்' விசேட நீதி மன்றங்களில் விசாரணை செய்யப்பட்டுத் தண்டனை, சிறைவாசம், நாடுகடத்தல் எனும் தீர்ப்புக்களைப் பெற்றனர். இங்ங்ணம் அரசாங் கத்தின் எதிரிகள் அகற்றப்பட்டபின் உண்டான வெற்றிடங்களை பாசிச வாதிகளே நிரப்பினர். போப்பாண்டவருட ன் இணக்க உடன்படிக்கை :
1870 இல் உருேம் வெற்றிகொள்ளப்பட்ட நாள்முதல் இரு நாடு களுக்குமிடையே நிலவிய பகைமை 1929 இல் முசோலினி போப் பாண்டவருடன் செய்து கொண்ட இணக்க உடன்படிக்கையினுல் (Lateran Accord) நீங்கியது. இவ்வுடன்பாட்டின் பிரகாரம் முசோ லினி, வத்திக்கான ஒரு தனிச் சுதந்திர அரசாக ஏற்றுக் கொண் டார் : பாப்புவும் உருேமைத் தலைநகராகக்கொண்ட இத்தாலிய அரசாங்கத்தை அங்கீகரித்தார். இவ்வாறு முசோலினி பாப்புவுடன் செய்துகொண்ட உடன்பாடானது, 1801 இல் நெப்போலியன் செய்த ஒப்பந்தத்தைப் போன்று மதி நுட்பமும் அரசியல் விவேகமும் நிறைந்தது.

Page 225
40 புது உலக சரித்திரம்
முசோலினியின் பொருளாதாரப் பூட்கை :
நாட்டின் அரசியலதிகாரத்தைத் தன் வசப்படுத்தியபின், முசோ லினி பல விசாலமான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு தேச வளத்தைப் பெருக்கவும், மக்களின் ஆசைகளைத் திருப்திப்படுத் தவும் முயன்ருர், அரசின் தனி ஆட்சிக் கொள்கையுடன் சமூகவுடை மைக் கோட்பாடுகளில் சிலவற்றை ஒன்று சேர்த்தே, முசோலினி தன் கட்சியின் பொருளாதாரப் பூட்கையை உருவாக்கினர். அவ ரது கொள்கைகளில் சமூகவுடைமைத் தத்துவங்களிலிருந்து வேறு பாடுகள் நிறைய இருந்தன. தனிப் பொருளுடைமை இன்றியமை யாததென்றும், அதனுலேயே பொருளாதார வளர்ச்சி ஏற்படுமென வும் நம்பினர். பொதுவுடைமை ஏற்படுவது பொருளாதாரத்துக்குத் தீங்கு விளைவிக்கும் ; ஆனல் அதனை அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் அமைத்து நடாத்தினல் பொருளாதாரம் செழிக்கும் என்றர் முசோ லினி. நாட்டின் வளத்தை விருத்திசெய்வது, பொருளிட்டும் வழி களைப் பெருக்குவது, அரசாங்கத்தை ஊக்கமும் தேர்ச்சியுமுள்ளவர் களைக் கொண்டு நடாத்துவது, கல்வி முறையைத் திருத்தியமைப்பது, தொழிலாளரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, விவசாயத்தின் நிலையைச் சீர் செய்வது, பொதுமக்களை அரசாங்க அதிகாரத்தினுள் சிக்கனமாக வாழ வழி வகுப்பது போன்ற உயர்ந்த இலட்சியங்களை பாசிசவாதிகள் கடைப்பிடித்தனர். அவர்களது அயராத பிரயாசத் தினுலும் உழைப்பினலும் நகரங்கள் புதுப்பிக்கப்பட்டன; வீதிகள் சுத்திகரிக்கப்பட்டன : பிச்சை எடுப்பது நீக்கப்பட்டது சதுப்பு நிலங் கள் விளைநிலங்களாக்கப்பட்டன : தேச நிதிநிலை திருந்தியது.
பிறநாட்டுப் பூட்கை :
பாசிசம், தீவிர நாட்டின உணர்ச்சியெனும் அத்திவாரத்தில் கட் டப் பெற்றமையினல், அது மக்களின் அபிமானத்தைப் பெற, போர்க் கோலம் பூணுது இருக்க முடியவில்லை. 1930 க்குப்பின் முசோலினியின் பேரரசுவாதமும், மத்தியதரைக்கடல் திட்டங்களும் ஐரோப்பாவை அச்சுறுத்தவும், அமைதியைக் குலைக்கவும் வல்ல பிரச்சினைகளாயின. 1935 இல் முசோலினி அபிசீனியாவுடன் ஒர் எல்லைத் தகராறைச் சிருட்டித்து, அதனை ஆக்கிரமித்துத் தனதாக்கினர். சர்வதேச சங்கம் இத்தாலியின் இந்த அடாத செயலைக் கண்டிக்கவே, அது சங்கத்தை விட்டு வெளியேறியது.
இப்போருக்குப் பின்னர் முசோலினி, இங்கிலந்துடனும் பிரான் சுடனும் பகைமை பூண்டு, செர்மனியின் பக்கம் சாய்ந்தது. I936 gãy 2 ..Garib-3u6i6iv øy i Sr. (Rome-Berlin Axis) D(5 GIJirátu ugl ; அடுத்த ஆண்டு யப்பானும் அதில் சேர்ந்தது.

ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் 41
இரண்டாவது உலகப்போர் மூண்டு, பிரான்சில் பலம் சிதைந்த துடன் 1940 இல் முசோலினி சேர்மனியுடன் ஒன்று சேர்ந்து பிரான் சுக்கும் இங்கிலந்துக்குமெதிராகப் போரில் குதித்தான்.
3. செர்மனியில் நாற்சிசம்
செர்மனியில் ஏற்பட்ட தேசிய சமூகவுடைமைப் புரட்சி, ஆரம்ப நிலையில் இத்தாலிய பாசிசம் என்ற மாதிரியைப் பின்பற்றுவதாகவே காணப்பட்டது. அதிலிருந்தும் இரசிய பொதுவுடைமை வாதத்தி லிருந்தும் சில விசேட தத்துவங்களை நாற்சிசம் கடன் வாங்கிய பொழுதும், அது செர்மன் சூம் நிலைக்கும், பிரச்சினைகளுக்கும், தேச சுபாவத்துக்கும் ஏற்ற ஒரு பிரத்தியேக அமைவைப் பெற்றது.
Gd6MILDT (59.uLuis GMs (Weimar Republic) :
பிசுமாக் சிருட்டித்த செர்மன் சக்கிராதிபத்தியம் 1919 இல் அழிந்தொழிந்ததுடன், கைசரும் கூட்டாட்சியமைப்பின் இளவரசர் களும் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டனர். 1919 இல் ஒரு தேச மன் றம் வைமாரில் கூடி ஒர் அரசமைப்புத் திட்டத்தை வரைந்தது. மக் களினல் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிப்பதி, ஈரவைகளைக் கொண்ட பாராளுமன்றம், மக்கள் மன்றத்துக்குப் பொறுப்பு வாய்ந்த அமைச் சர் குழு எனும் சனநாயகத்தின் சிறந்த பண்புகள் யாவும் புதுத் திட்தித்தில் இடம் பெற்றன. இவ்வமைப்புக்கள் சாதாரண சூழ் நிலையில் செர்மனியில் வேரூன்றி இருக்கலாம். ஆனல் செர்மனியின் அக்கால இக்கட்டான நிலையில் சனநாயக முறை உறுதிபெற கால மும் சூழ் நிலையும் வாய்ப்பானவையல்ல. ஒன்றன் பின் ஒன் ரு க நெருக்கடிகள் செர்மனியை மலை போல எதிர்த்து நின்றன. தேச நிதி முறை சீர்குலைந்தது ; அளவுக்கு மிகுதியாகச் செர்மனி ஒடுக்கப் பட்டமையினுல், எங்கும் அமைதியின்மை தலை காட்டியது ; பொரு ளாதார நெருக்கடி வளர்ந்து , நாட்டின் வளம் குன்றியது ; வேலை யில்லாத் திண்டாட்டம் பெருகியது ; வறுமை நாடெங்கும் பரவி யது. குடியரசைக் கவிழ்க்க முயன்ற கட்சிகள் திட்டமிட்டு நாட்டில் குழப்பங்களை உண்டு பண்ணின. இப்பேர்ப்பட்ட சீர் கெட்ட நிலை யில் வைமார் குடியரசின் தேசிய குடியரசுவாதிகள் பன்னிரண்டு ஆண்டுகளாக நாட்டை எதிர்த்து நின்ற உள், வெளி, ஆத்மீக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுடன் பயனின்றிப் போராடினர் மறுபுறம் அந்நிய வல்லரசுகளும் எதிரிகளும் வேர்சை உடன்படிக் கையின் முறிகளை நிறைவேற்றுமாறு ஓய்வின்றிச் செர்மனியை வற் புறுத்தி வரலாயின. முதல் நான்கு ஆண்டுகளில் (1919-23) ஆட்

Page 226
412 புது உலக சரித்திரம்
சேபனை, சாத்வீக எதிர்ப்பு, நாணயவீக்கம் எனும் வழிகளில் தன் கடன்களைத் தட்டிக் கழிக்க முயற்சித்தமையினல், அதன் பொருளா தார நிலை மேலும் சீர்கெட்டது. பிரான்சு கோபம்கொண்டு, பெல்சியத் தின் உதவியுடன் உறுார் (Ruhr) மாநிலத்தில் ஓர் இராணுவப்படையை இருத்தியது ; இதனல் செர்மனி மேலும் அவமானத்தையும் இன்ன லையும் அடைந்தது. செயற்கைப் பணவீக்கத்தை ஏற்படுத்த முயன்ற மையினல் நாட்டில் நிதியறவு ஏற்பட்டதுடன் பொருளாதாரம் சீர் குலைந்தது நடு வகுப்பினரும் பலியாயினர்.
செர்மனியின் பூட்கை மாற்றம் :
அதன் பின்னர், சித்தொசுமானின் (Stresemann) வழிநடத்தலின் கீழ், செர்மனி தான் கடைப்பிடித்த பூட்கையை விட்டு, 1929 இல் அவ ரது மரணம்வரை ஐந்து ஆண்டுகளுக்குத் தன் ப்ழைய பகைவர்க ளுடன் ஒத்துழைக்கவும் அவர்களது உதவியைப் பெறவும் திட்ட மிட்டுச் செயலாற்றியது. ஐக்கிய அமெரிக்க அரசின் டோசுத் திட் டத்தை (Dawes Plan) ஏற்றுத் தன் நிதிநிலையை அந்நியர் மேற் பார்வை செய்வதை, செர்மனி அனுமதித்தது ; பிரான்சுடன் லொக் கார்னே உடன்படிக்கையில் (Locarno Treaty) கைச்சாத்திட்டது. இதைத் தொடர்ந்து செர்மனி பிறநாட்டவரின் ஆதரவையும், நம் பிக்கையையும் அனுதாபத்தையும் பெற ஆரம்பித்தது. பிறநாடுக ளிடம் ஏராளமான கடன் நிதிகளைப் பெற்று, அது தன் கைத் தொழில், பொருளாதாரம், சமூகசேவைகள் என்பனவற்றைச் சீர் திருத்தியமைத்தது. வேர்சை உடன்படிக்கையின் சில முறிகளும் திருத்தம் பெற்றன. இறைன் நில த் தி ல் நிறுத்தப் பெற்றிருந்த இராணுவப் படைகள் 1926 இல் நீக்கப்பட்டன : அவ்வாண்டு செர் மனி, சர்வதேச சங்கத்திலும் அனுமதிக்கப்பட்டது. மிகுதிப் படை யிருப்புக்கள் 1929 இலும் 1930 இலும் செர்மன் நிலத்திலிருந்து விை பெற்றன.
நாற்சிக் கட்சியின் ஆரம்பம் :
சர்வதேச அரங்கில் செர்மனியின் நிலை உயர்ந்தது. ஆனல் அவ் வுயர்வு மக்களின் துன்பங்களையோ நாட்டில் பெருகி வந்த வேலையில் லாத் திண்டாட்டத்தையோ ஈடு செய்ய முடியவில்லை. 1929 31 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார வறட்சியுள் செர்மனியும் அகப் பட்டு வெகுவாக அல்லற்பட்டது ; அதன் அவலநிலை பன்மடங்கு பரிதாபகரமாயிற்று. இவ்வாறு கரைபுரண்டு மலைபோலெழுந்த பிரச் சினைகளைக் குடியரசு தீர்க்க முடியாத நிலையில் தத்தளித்தது. இந் நிலையில்தான் செர்மன் மக்களுக்கு விமோசனத்தைப் பெற்றுத் தருவ

ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் 43
தாக வாக்குப்பண்ணிய தேசிய சமூகவுடைமைக் கட்சி (National Socialist party) நாட்டில் முளைத்தது. தாம் கட்டுப்படுத்தமுடியாத பொருளாதார இன்னல்களினலும், கொடுமைகளினலும் வருந்திய பாமரர், பாட்டாளிகள், நடு வகுப்பினர் ஆயிரக்கணக்கில் புது நாற்சி இயக்கத்தினல் கவரப்பட்டனர். 1930 ஆம் ஆண்டுத் தேர்தலில் நாற்சிவாதிகள் நாட்டு மன்றத்தில் 105 தானங்களைக் கைப்பற்றினர். 1932 இல் இற்லர் குடிப்பதிப் பதவிக்கு இன்டன் பேக் (Hindenburg) குடன் போட்டியிட்டுத் தோல்வி கண்டார் ; எனினும் அவரது கட்சி 230 இடங்களைக் கைப்பற்றி, பாராளுமன்றத்தில் அதி பெரிய கட்சி யாயிற் று. 1933 இல் இற்லர் செர்மனியின் மண்டிலநாயகராக நிய மிக்கப்பட்டார்.
TLS T TT T SSLLLLLL LLLLLLLLS L000 TT TTT TTTTrT T SSLlmLLLLCLS எனும் சிறு நகரில் பிறந்தார். பதினன்கு வயதில் தந்தை இறந்தார் ; சில ஆண்டு களுக்குப்பின் தாயாரும் இவ்வுலகை விட்டு நீங்கினள். அதன் பின்பு எதாவது கைத் தொழிலைக் கற்று வாழும் பொருட்டு வியன் ஞவுக்குச் சென்றர். அங்கு ஒரு சாதாரண கூலி பாளாகச் செங்சல் சுமந்து, எனி எறிக் கற்களைக் கொத்தனுக்குக் கொடுத்தார். அங்கிருந்து மூனிக் (Munich) நகரத்துக்குச் சென்று சித்திரங்கள் வரையும் கலையில் தேர்ச்சி பெற்றுச் சீவனத்துக்கு வேண்டிய பொருளைச் சம்பாதித்தார்.
இந்நிலையில் 1914 ஆம் ஆண்டு திடீரென இடி முழக்கத்துடன் பெரும்போ! மூண்டது. இற்லரும் உடனே படையிற் சேர்ந்து, பயிற்சி பெற்றுப் போர் முனேக்குப் புற. பட்டார். போரில் காட்டிய வீரத்துக்காக இரும்புச் சிலுவை (1ron Cross) எனும் பதக் கத்தைப் பெற்றர். இந்த மேன்மை பொருந்திய அடையாளம், அன்று முதல் அவரது மார் பின் இடப்பக்கத்தில் நீங்கா இடத்தைப் பெற்றது. போரில், நச்சுப் புகையிஞ்றல் துன பப்பட்டு குருடன் போலாகி மருத்துவ நிலைய மொன்றிற்கு அனுப்பப்பட்டார். குணமடைந்த பின், இற்லர் மூனிக்கு நகருக்குச் சென்று, அங்கு ஆறு தொழிலாளரைக் கொண்டு அமைக்கப் பெற்ற தேசிய சமூகவுடைமைக் கட்சியில் எ ழ ஈ வது அங்கத்தவராகச் சேர்ந்தார் ; விரைவில் கட்சியின் தலைவருமானுர் நா வன்மை படைத்த உன்னத பேச் சாளனுக மாறினர் இற்ல்ர். மோட்டார் வாகனத்திலும், புகைவண்டியிலும், விமானத் திலும் ஊர் ஊராக, கிராமம் கிராமமாகச் சென்று தன் பிரசங்கங்களினல் மக்களின் இத யங்களைக் கவர்ந்தார். ஆறு பேருடன் ஆரம்பித்த கட்சி, ஆயிரமாகவும், இலட்சமாகவும் ஆருய்ப் பெருகி, செர்மன் பாராளுமன்றத்திலேயே அதி பெரிய கட்சியாயிற்று. சுவசுத் திக்கா (Swasika) என்ற கொழுக்கி போன்ற குருசை, இற்லர் தன் கட்சியின் அை
பாளமாகக் கொண்டார்.
இற்லரின் வல்லாட்சி :
நாட்டின் அதிகார பீடத்தையடைந்த இற்லர், சூழ்ச்சி, பலாத் காரம், தந்திரம், சூது எனும் உபாயங்களைக் கையாண்டு தன் அதி காரத்தை ஆட்சேபனைக்கு இடமின்றி உறுதிப்படுத்திக் கொண்டார். மின்னல் வேகத்தில் நாட்டின் வல்லாளனுக மாறிய இற்லர், செர் மனியையும், செர்மன் மக்களின் வாழ்க்கை முறையையும் புது அத்தி வாரத்தில் கட்ட முனைந்தார்.

Page 227
414 புது உலக சரித்திரம்
1933 பெப்ரவரியில் இறைகுசாக்கு (Reichstag) என்ற பாராளு மன்ற கட்டடம் தீக்கிரையாகி எரிந்தொழிந்த பொழுது, அது பொது வு டைமைக் கட்சியினரின் செயலே என நாற்சிக் கட்சியினர் குற்றஞ் சாட்டினர். மன்றத்திலிருந்த பொதுவுடைமை வாதிகளும், செர்மனி யில் நூற்றுக் கணக்கானுேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின் குடிப்பதி, மண்டில நாயகர், அமைச்சர் சபை என்பவற்றிற்கு நான்கு ஆண்டுகளுக்குத் தனியரசு அதிகாரம் வழங்கும் ஒரு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இற்லரின் ஆட்சிப் பு ர ட் டு வெற்றி பெற்றது ; அவரே நாட்டின் சருவாதிகாரியானர். நாற்சிக் கட்சி யொன்று நீங்கலாக, ஏனைய கட்சிகள் யாவும் சட்டத்துக்கு விரோதமானவை யாக்கப்பட்டன. இரசியாவில் போன்று செர்மனி யிலும் கட்சி, அரசாங்கம், நிருவாகம் யாவும் ஒன்றுகின.
இவ்வாறு, இத்தாலியில் முசோலினி அதிகாரத்தைக் கைப்பற்ற பல ஆண்டுகளாக எடுத்த முயற்சிகளை இற்லர் ஒருசில கிழமை களில் செய்து முடித்தார்.
இற்லர் குடிப்பதியாதல் :
1934 ஆகத்தில் வயது பொன குடிப்பதி இன்டன் பேக் காலமான துடன் இம்லர் செர்மனி பின் குடிப்பதியுமா னர். குடிப்பதியாகவும், மண்டில நாயகராகவும், இராணுவத்தின் தனித் தலைவராகவும், திகழ்ந்த இற்லர், தன்னை பியூறர் (Feuhter) என அழைத்தவாறு, செர்மனி யைத் தனியாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அரசாங்கத்தினதும் கட்சியினதும் தலைவர் அவரே ; சட்டமியற்றல், நிருவாகம், நீதி குலம் எனும் முத்துறைகளிலும் சர்வ வல்லபம் படைத்தவர் அவரே, ; , பதினன்கு அமைச்சர்களை ஆலோசகர்களாக மாற்றினர் ; உள், பிற நாட்டுக் கொள்கைகளை உருவாக்கியவரும் அவரே. இவ்வாறு செர்மனி யில் ஒரு கட்சியும் ஒரு தலைவரும் நாட்டின் சர்வ அதிகாரிகளாயினர்.
இற்லரின் இன ஒதுக்கல் பூட்கை :
பயங்கர ஆட்சி, கொடுங்கோன்மை, பிரசாரம், பாசாங்கு, தீவிர வாதம் எனும் ஆயுதங்களைக்கொண்டே இற்லர், தன் அதிகாரத்தை மேலும் விரித்து, உறுதிப்படுத்தினர். மக்களின் குடியியல், அரசியல் உரிமைகளை நிராகரித்தும், யூதர், பொதுவுடைமைவாதிகள், தாராண் மைவாதிகள், கத்தோலிக்கர் எனும் சமூகங்களை அடக்கியொடுக்கியும் இற்லர் சனநாயக உலகத்தின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண் டார். அவர், நாட்டுப் பெருமையிலும், இனப்பெருமையே மேலானது என்ற ஒரு தீவிர இன ஒதுக்கல் கொள்கையையும் பரப்பினர். உல கத்தின் எல்லா இனங்களிலும், ஆரிய இனமே மேம்பாடுடையதென்

ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் 45
றும் செர்ம ன் இனத்தைத் தாழ்த்தக் காரணமாக அமைந்த யூதரை அழித்தொழிக்க வேண்டுமென, நாற்சிசவாதிகள் கற்பித்தனர். இவ்வாறு செர்மானியரின் கோபாவேசத்துக்கு இலக்கான யூதர் எல் லாப் பதவிகளி பிருந்தும் நீக்கப்பட்டனர். ஆசிரியர்கள், நியாயவாதி கள், வைத்தியர்கள், தொழில் விற்பன்னர்கள், விஞ்ஞானிகள் யாவ ரும் நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டனர்.
இற்லரின் பிறநாட்டுப் பூட்கை :
இற்லர், பிற்காலத்தில் செர்மனியை ஐரோப்பிய வல்லரசுகளின் உயர் நிலைக் கு உயர்த்த வேண்டுமெனும் நோக்கத்திலேயே தன் முழு அவதானத்தையும் செலவிட்டார். செர்மனியின் மேன்மைக்காக தான் வகுத்த திட்டத்தை “என் போர்’ (Mein Kampf) எனும் நூலில் ஏற்கனவே வெளியிட்டிருந்தார். பிரெஞ்சு எல்லைகளில் ஆரம்பித்து, இரசியா ஈருக வியாபித்துக்கிடக்கும் 'மகா செர்மனியை'ச் சிருட் டித்து, அதை “ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைக்கச் செய்ய வேண்டும்' என்பதே அவரது இலட்சியக் கனவு. அக்குறிக்கோளை அடைவதற்கு அவர் மூன்று படிகளையும் வகுத்திருந்தார். அவையா வன, வேர்சை உடன்படிக்கை விதிகளை அகற்றுதல், செர்மன் மொழி யைப் பேசும் மக்கள் அனைவரையும் புது அரசில் (Reich) இடம் பெறச் செய்தல், செர்மன் எல்லைகளைக் கிழக்கே இரசியாவரை பட ரச் செய்தல் என்பவையாகும். முதல் ஆறு ஆண்டுகளில் அணுப்பு தல், ஏமாற்றுதல் போன்ற முறைகளைக் கையாண்டு தன் திட்டத்தை நிறைவேற்றினர். எனினும் அவர் தன் கனவை முற்றுப்பெறச் செய் வதற்கு போரையே எதிர்பார்த்தார் என்பதில் ஐயமில்லை.
செர்மன் இராணுவ வலு மேலோங்கலும்
ஒசுத்திரிய ஆக்கிரமிப்பும் : இற்லர், 1933 ஆம் ஆண்டு, செர்மனியைச் சர்வதேச சங்கத்தி லிருந்து விலக்கி, தன் இலக்குகளைப் பெறுவதில் முனைந்தார். 1935 இல் வேர்சை உடன்படிக்கையின் ஆயுதப் பரிகரண விதிகளைப் பகிரங்க மாக நிராகரித்துக் கட்டாய இராணுவ சேவையை ஏற்படுத்தினர். பிரான்சின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது, 1936 மார்ச் 7 ஆம் நாள், செர்மனி இறைணிலந்துப் பிரதேசத்தை அரண் செய்தது.
இற்லர், 1938 பெப்பிரவரியில் பலாத்காரமாய் ஏசுத்திரியாவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தார் ; செக்கோசிலொவாகியாவையும் பய முறுத்தினர். இற்லர் இவ்வாருக நடந்துகொண்ட வேளையில், சன நாயக உலகம் பிளவுபட்டும் வேறு பராக்குகளில் ஈடுபட்டும் நின்றது. இற்லர், வேர்சை உடன்படிக்கையின் விதிகளை ஒவ்வொன்முக நிரா

Page 228
416 புது உலக சரித்திரம்
1919 ġdik 3Gardea &g Gatu ஆண் புலப்
ULF F F (1933-39,
arriv நிலத்தில் kodu-u Fù to is salar
4. కి
ал:teFй, вrtii/.ter. 1938
. r23
8}b , I مولا
சே.கே சிலோவகிய
N ετ τ και ίίύίο
a -tak
ܐܸܨ¬
レー $••ቾ ጲ'x & % ጳ
as 933
y W ༣ ན་ W WW༽ རི་རེད།༽ '... . \\R رده مرت F ... 3 من ولات،
ஃ.' இத்தாளி
கரித்தபொழுது, பலர் அவரது செயல்கள் நியாயமானவை என்றே சமாதானங் கூறினர். அதேவாறு அவர் செர்மன் மொழியைப் பேசிய மக்களைக்கொண்ட நிலங்களை இணைத்தபொழுது, அது தேச அடிப்படையில் முறையான செயலென்றனர். இவற்றிலும் மேலாக இற்லர், தான் பொதுவுடைமைவாதத்தின் சென்ம விரோதியென்று காட்டிக் கொண்டமையினல், பலம்வாய்ந்த செர்மனிதான், ஐரோப் பாவை இரசியக் கரடியிடமிருந்து காக்க வல்லது எனக் கூறி அவரது நடவடிக்கைகளை ஆதரிக்கவும் துணிந்தனர். இவ்வாறு ஆரம்ப நிலையில் மேற்கத்திய சனநாயக வல்லரசுகள் இற்லரினல் எழக்கூடிய அபா யத்தை உணரவுமில்லை, அதைத் தடை செய்வதற்கு ஒத்துழைக்கவு மில்லை.
சுடெற்றன் நிலப் பிரச்சினையும் மியூனிக் மாநாடும் :
இற்லர். 1938 இல் ஐரோப்பிய படத்தைத் திருத்தியமைக்க முற் பட்ட பொழுதுதான், அச்சம் முதன் முதலாக சில வல்லரசுகளின் மனதில் எழுந்தது. ஒசுத்திரிய ஆக்கிரமிப்பின் பின், அல்வாண்டு, இற்லர், சுடெற்றன் நிலத்தை (Sudetenland) தன் ஆடசியில் இணைக்க வேண்டுமென ஒரு கோரிக்கையை செக்கோசிலொவாகியா வுக்கு விடுத்தார். உலகப் போரின் அபாயத்தைக் கண்ட பிரித்த
 

ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் 4.
னின் சேம்பளினும் (Chamberlain), பிரான்சின் டலாடியரும் (Daladier) இற்லரை மியூனிக்கில் (Munich) சந்தித்து, செற்றம்பர் 9 ஆம் நாள், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, சுடெற்றன் நிலத்தை செர்மனிக்கே கையளித்தனர். சேம்பளின் ஒரு கையிற் குடையையும் மறு கையில் மியூனிக் ஒப்பந்தத்தையும் வைத்துக்கொண்டு, “நாம் எங்களுடைய காலத்தில் சமாதானத்தைப் பெற்றுவிட்டோம்” என அக மகிழ்ந்தார். ஆனல் இம்மகிழ்ச்சி வீண் கனவாயிற்று. இற்லர், தான் செக்கோ சிலொவா கியாவின் மிகுதியைக் கெளரவிக்க மியூனிக்கில் கொடுத்த உறுதிமொழியை மீறி, 1939 மார்ச் 15 ஆம் நாள், அந்நாடு முழு வதையும் தனதாக்கி, செர்மனியுடன் இணைத்தார்.
இதையடுத்து மெமல் துறைமுகத்தையும் கைப்பற்றவே, இற்ல ரின் உண்மையான இயல்பு வெளிப்பட்டு நின்றது ; ஐரோப்பாவில் அமைதி நீடிக்குமென்ற எண்ணம் மறைந்தது. காலம் கடந்து விழிப் படைந்த பிரித்தனும் பிரான்சும் தம் படைப்பலத்தைப் பெருக்கும் முயற்சியில் வெளிப்படையாக ஈடுபட்டன : துருக்கி, a pT மேனியா, போலந்து எனும் நாடுகளுடன் உடன்படிக்கைகள் பூர்த்தி யாயின ; இங்ங்ணம் இணைந்தவை உறவு நாடுகள் (Alies) என் றழைக்கப்பட்டன. மறுபுறம் செர்மனியும், இத்தாலியும், யப்பாஅம் "அச்சு அரசுகள்’ என்ற பெயருடன் ஒற்றுமை பூண்டன.
போலந்து :
இற்லர், 1939 மார்ச்சில், சுதந்திர ந க ரா ன டான் சிக்கைத் (Danzig) தனக்குத் தருமாறு பன்முறை போலந்தை வற்புறுத்தி னர். அதனுடன், செர்மனியிலிருந்து கிழக்குப் பிரசியாவுக்குச் செல்ல போலந்தினுாடாக ஒரு புகையிரத வீதியையும் அமைக்க உரிமை கோரினர். ஆனல் போலந்து இவற்றைக் கொடுக்க மறுக்கவே, உறவு நாடுகள் போலந்துக்கு உதவி தருவதாக உறுதி மொழி கூறின.
1939 ஏப்ரலில் பிரித்தனும் பிரான்சும் இரசியாவுடன் நேச உடன்படிக்கை செய்ய முயற்சித்து ஏமாற்றமே யடைந்தன. தன் மேற்கு எல்லேயைப் பெருக்கும் முயற்சிக்கு ஆங்கில நட்பு இடையூறக இருக்குமென எண்ணிய இரசியா, சுய நல நோக்கங்களினல் தூண்டப்பட்டு, ஆகத்து 23 இல் செர்மனியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
தன் கோரிக்கைகளுக்குப் போலந்து செவிசாய்க்க மறுத்ததைக் கண்ட இற்லர், 1939 செற்றம்பர் முதலாம் நாள், தன் படைகளை போலந்துக்குள் முன்னேறும்படி கட்டளையிட்டார் ; gev vab உலகப்போர் ஆரம்பமாகியது. பிரித்தனும் பிரான்சும் தாம் போலந் துடன் செய்திருந்த உடன் படிக்கைகளுக் கிணங்க, இரு நாள்களுக்குப் பின்னர் போர்ப் பிரகடனம் செய்யலாயின.
●-ーg 29

Page 229
鲨夏8 புது உலக சரித்திரம்
4. சிபானிய உண்ணுட்டுப் போர்
சிபானியாவின் உண்ணுட்டு வரலாறு தனிப்பட்ட விசேட மெதுவும் பெற்றதன்று. 20 ஆம் நூற்றண்டில் ஐரோப்பாவிலெழுந்த அனைத் 5T Giorgoup egyrő 5Gir (Totalitarian States), 5 lib 62 6560) p60) ult Luft . சிப்பதற்கு அந்நாட்டை ஒரு போர் அரங்கமாகப் பயன்படுத்த முற் பட்டதனலேயே, அதன் சரித்திரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
19 ஆம் நூற்றண்டில் சிபெயின் :
19 ஆம் நூற்ருண்டில் சிபெயின், நெப்போலியனை வெற்றி கொண்ட பின்னர், தாராண்மைக் கருத்துக்கள் அங்கு உயர்வு பெற் றன. 1812 ஆம் ஆண்டு சிபானிய மக்கள் பெற்ற தாராள அர சமைப்பு, 1820 ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்ட பின்னர், அந்நாடு நிகழ்வு நிலையைப் பாதுகாப்பதிலேயே காலத்தையும் நேரத்தையும் செலவிட்டது. 19 ஆம் நூற்ருண்டு சிபெயினில், நிலமானிய முறை மையும் அதன் இன்னல்களும் நிலைத்து நின்றன ; 18 ஆம் நூற்ருண் டுப் பிரெஞ்சு சமுதாய அமைப்பில் போன்று, சிபெயினில் பிரபுக் களும் நிலக்கிழாரும் விசேட உரிமைகளுடைய இரு வகுப்புக்களாக இயங்கினர், கத்தோலிக்க திருச்சபை, நிலம், வாணிபம், கல்வி ஆகிய வற்றின் மீது தனிப்பட்ட ஆதிக்கம் செலுத்தி வந்தது. இராணுவம், செல்வாக்கும் செருக்கும் பெற்று, ஊழல்களில் ஊறி நின்ற ஆளும் வர்க்கத்துக்கு உறுதுணையான பெரும் அரசியல் சக்தியாக விளங்கிற்று.
உலகப் போருக்குப் பின் சிபெயின் :
முதலாவது உலகப் போரின் அடிச்சுவட்டில், ஏனைய ஐரோப்பிய நாடுகளில் போன்று சிபெயினிலும் சமூகக் கொந்தளிப்பும், பொரு ளாதார நெருக்கடியும், வேலையில்லாத் திண்டாட்டமும் தலைதூக்கின. தாராண்மைக் கருத்துக்களுடைய அரசன் 13 ஆம் அல்போன்சோ (Alphonso Xi), நாட்டில் அமைதியை நிலைநாட்ட முடியாமற் Guita, Ga, gyari 9opGuor ug- g)AúGa) a a (Primo de Rivera) 676öTurr ரின் வல்லாட்சியை நாட்டில் அனுமதித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் குடியரசுவாதிகள், தாராண்மைவாதிகள், சமூகவுடைமை வாதிகள், பொதுவுடைமைவாதிகள் யாவரும் ஒன்று திரண்டு, 1931 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டினர். இறிவேராவும் அரசனும் நாட்டைவிட்டு ஓட்டம் பிடிக் கவே, அவ்வாண்டு ஏப்ரில் மாதம் 14 ஆம் நாள், ஒரு தற்காலிக அரசாங்கம், குடியரசைப் பிரகடனம் செய்தது. அங்கமைந்த இடதுசாரிச் சனநாயக அரசாங்கத்தில் மானுவேல் அசான

ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் 4.
(Manuel Ajana) முதலமைச்சரானர். புது அரசாங்கம் மானிய முறைமை, கத்தோலிக்க திருச்சபை, இராணுவம் எனும் அமைப்புக்களை சீர்திருத்தும் நோக்குடன், பல சட்டங்களை இயற்றியது.
சிபானிய உண்ணுட்டுப் போர் :
அரசாங்கத்தின் தீவிரப் போக்கை எதிர்ப்பதற்காக வலது சாரிகள் ஒற்றுமைப்பட்டு, 1933 ஆம் ஆண்டுத் தேர்தல்களில் வெற்றி பெற்று முந்திய அரசாங்கத்தின் சட்டங்களை நிராகரித்து, பழைய நிலையை மீண்டும் நிலை நாட்ட முயன்றனர். இடது சாரிகள் இப் போக்கை வன்மையாக எதிர்த்து, 1934 இல் நாடெங்கணும் கலகங்களை உண்டு பண்ணினர் ; 1936 இல் “மக்கள் முன்னணி" அரசாங்கத்தையும் நிறுவினர். அரசாங்கத்தை எதிர்க்கத் திடம் பூண்ட வலது சாரிகள், ! பலாத்கார வழிகளைப் பின்பற்றத் தீர்மானித்து, இராணுவப் புரட்சி யொன்றைச் சிருட்டித்த காலையில் அப்புரட்சிக்கு தளபதி பிராங்கோ (General Franco) தலைமை தாங்கினர். இவ்வாருக பொதுவுடைமை வாதத்தின் பக்கம் சாய்ந்த அரசாங்கத்துக்கும், முசோலினியின் பாசிச முறையை ஆதரித்த பிராங்கோவுக்கு மிடையே மூண் ட போர், மூவாண்டுகளுக்கு (1936-39) நீடித்தது.
பாசிசமும் பொதுவுடைமை வாதமும் மோதுதல் :
பிறநாடுகளின் தலையீட்டினல் சிபானிய உண்ணுட்டுப் போர், பாசிச வாதிகளுக்கும் பொதுவுடைமை வாதிகளுக்கு மிடையே நடை பெறும், வன் சமராக உருமாறியது. இரசியா, போர் வீரர்களையும் ஆயுதங்களையும் அளித்து, சிபானிய அரசாங்கத்துக்கு உதவி செய்த அதே நேரத்தில் செர்மனியும், இத்தாலியும் புரட்சிக்காரருக்குத் துணை புரிய முன் வந்தன. இத்தாலிய அல்லது செர்மன் செல்வாக்கு சிபெனியில் வெற்றி பெறுவதைத் தடை செய்ய பிரான்சு இரசியாவை மறைமுகமாக ஆதரித்தது. இப்போர், ஈற்றில் 1939 ஆம் ஆண் டு பிராங்கோவுக்கு பூரணமான வெற்றியில் முடிவெய்தியது. இவ்வாறு எதிர்காலத்தில் அதி விசாலமான அரங்கில் நிகழவிருக்கும் அதி பெரிய நாடகத்துக்கு சிபானிய உண்ணுட்டுப் போர், நிலையறியும் காட்சியாக அமைந்தது.
5. துருக்கியும் முசுதபா கெமாலும்
ஒரு நூற்ருண்டு காலமாகப் பலவீனத்தின் மத்தியில் வாழ்ந்த துருக்கி, ‘ஐரோப்பாவின் நோயாளி' என வர்ணிக்கப்பட்ட அந் நாடு, பெரும் பாலும் நேச நாடுகளின் ஆதரவினலேயே உயிர் தப்பி

Page 230
A 20 புது உலக சரித்திரம்
வாழ்ந்தது. எனினும் 1914-18 போரில் அது செர்மனியுடனும் ஒசுத் திரியாவுடனும் ஒன்று சேர்ந்து, நேச நாடுகளுக்கு எதிராகப் போர் புரிந்து, படு தோல்வியடைந்த வரலாறு முன் அதிகாரங்களில் விவ ரிக்கப்பட்டன. அப் போரிலிருந்து எழுந்த எதிர்பாராத விளைவுகளில் ஒன்று துருக்கியில் ஏற்பட்ட மறுமலர்ச்சியாகும். இம் மறுமலர்ச்சிக் கான வித்துக்கள் உலகப் போருக்கு முன்னரே 'இளம் துருக்கர்" இயக்கத்தில் காட்சியளித்த வரலாறும் முன் கூறப்பட்டுள்ளன. எனி னும் 20 ஆம் நூற்ருண்டிலே துருக்கியின் வரலாற்றில் உண்டான புது இயக்கங்களுக்கு சேவ்ரூ உடன்படிக்கையும் (1920) கிரேக்கரின் படை யெடுப்புமே உடன் காரணங்களாய் அமைந்தன.
கிறீசின் படையெடுப்பு :
சேவ்ரூ உடன்படிக்கையின் முறிகளின்படி கி ரீசு , கிழக்குத் திறேசையும் (Eastern Thrace) அதிUயநோபிளையும் துருக்கியின் செலவில் சம்பாதித்துக் கொண்டது. கிறீசின் புது எல்லைகள், கொன் சுதாந்திநோபிள் நகரத்திலிருந்து ஒரு சில மைல்கள் வரை படர்ந் திருந்தமையினல், கிறிசு அக்கேந்திர தானத்தையும் தனதாக்கப் பேராசை கொண்டது. சமாதான நியமங்கள், தாதனலிசிலிருந்து மாமோருவரை நீடித்த கடலணை, சர்வதேச ஆதிகாரத்தின் கீழ் நிருவகிக் கப்படல் வேண்டு மென்றும், அப்பிரதேசத்தினுள்ள இராணுவத் தளங் கள் அழிக்கப்பட வேண்டு மென்றும் விதித்தன. சின்ன ஆசியாவில் ஒரு கிரேக்க சாம்ராச்சியத்தை அமைக்க நோக்கங் கொண்ட கிறிசு, பிரித்தானிய கடனுதவியுடன் உடன்படிக்கையின் முறிகளை நிறை வேற்ற முன்வந்தது. பிரிட்டிசுக் கப்பல்களில் சின்ன ஆசியாவில் வந்திறங்கிய கிரேக்க படைகள், துருக்கரை இலகுவாக வெற்றி கொண்டு, அங்கு தம் நிலையை உறுதிப் படுத்திக் கொண்டன.
grij65 (TU (T& &LULGOof (Angora Pact):
இங்ங்னம் துருக்கி மீது விதிக்கப்பட்ட மானபங்கமும், சிமீர்ணு வில் பழைய விரோதிகளான கிரேக்கர் நிலைபெற்றமையும், துருக் கியில் ஒரு வல்லபம் பொருந்திய நாட்டின இயக்கத்தை ஆரம்பிக்கக் காரணங்களாயமைந்தன. கமால் பாசா இவ்வியக்கத்தின் தலைவரா ஞர்; 1921 ஆம் ஆண்டு அங்கோராவில் ஒரு தேச மன்றத்தைக் கூட்டி **அங்கோராக் கூட்டணி" என்று அழைக்கப்படும் விஞ்ஞா பனத்தை வரைந்தார். கொன்சுதாந்திநோபிளுக்கு பூரண சுதந் திரம் வேண்டு மென்றும், முசிலிம்கள் பெரும் பான்மையோராக வாழும் ஒட்டோமன் பேரரசின் பகுதிகள் துருக்கிய ஆட்சியின் கீழ் ஐக்கியப்பட வேண்டு மென்றும் தீர்மானங்கள் நிறைவேறின. உண்

ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் 42建
மையில் இத் தீர்மானங்கள், சேவ்ரூ உடன்படிக்கையின் விதிகளை ஏற்க மறுத்ததுடன், முசுதபா கெமாலும் அவரது வீரர்களும் துருக்கி யைப் பூரணமாகத் தமதாக்கப் போவதாகக் கூறினர்.
கிரேக்கரின் படையெடுப்பும் அதன் தோல்வியும் :
கிறீசின் பழைய மன்னர் கொன் சுத்தந்தின் (Constantin) சிம்மாசனத்துக்கு மீண்டதும், முதல் அமைச்சர் வெனிசலோசு பதவி யைத் துறந்து வெளியேறினர். இதுகாலம்வரை, வெனிசலோசு, கிரேக்க படையைக் கரையோரங்களிலேயே நிறுத்தி, உண்ணுட்டினுள் படையெடுப்பது மடைமைத்தனம் என்று திட்டமிட்டே கருமமாற்றி வந்திருந்தார். ஆனல் இதற்கு முழு மாறக, துருக்கியில் கோற்றிய புது எதிர்ப்பை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டுமெனத் தீர்மா னித்த அரசர், தன் படைகளைக் கெமாலின் தலைநகரான அங்கோராவை நோக்கிப் படையெடுக்குமாறு கட்டளையைப் பிறப்பித்தார் ; 1921 இல் கிரேக்கரின் தாக்குதலும் ஆரம்பமாகியது. ஊர், ஊராகக் கைப் பற்றிக் கொண்டு துரிதமாக முன்னேறிய கிரேக்கர், ஈற்றில் அங்கோ ராவைச் சுற்றியமைந்த பீடபூமியை மேற்கொள்ள முடியாது தடைப் பட்டனர்.
1922 இல், கெமால் மலைகளிலிருந்து ஒரு வன்மையான தாக்குதலை ஆரம்பிக்கவே, கிரேக்க படைகள் தோற்கடிக்கப்பட்டுப் பின்வாங்கின. கெமாலின் படையெடுப்பு பூரண வெற்றியில் முடிவடைந்தது. அடுத்த மாதம், கெமால், சிமீர்ணுவையும் தாக்கி, வெற்றிகொண்டு அந்நகரைத் தீக்கிரையாக்கினர்.
உலோ சேன் உடன்படிக்கை :
இங்ங்ணம், சின்ன ஆசியாவில் நிலவிய கிரேக்க ஆட்சிக்கு முற் றுப் புள்ளியிட்ட கெமால், தன் வெற்றிப் படைகளை நீரணையை நோக்கி நடாத்திச் சென்ருர் ; அங்கு சில பகுதிகள் பிரித்தானிய, பிரெஞ்சு, இத்தாலிய இராணுவத்தினரின் ஆணையின்கீழ் இருப்பதையும் கண் டார். கெமாலின் வரவைக் கண்ட பிரெஞ்சினரும் இத்தாலியரும் காலதாமதமின்றி பின்வாங்கினர் ; பிரித்தானியப் படைகள் மாத் திரமே உறுதியாக நின்றன. இலொயிட் யோச்சு, ‘நீரணையின் சுதந் திரத்தை" இறுதிவரையும் பாதுகாக்கப் போவதாக வீரம் பேசினுரி. ஆனல், அவர் இரகசியமாக துருக்கியரின் கோரிக்கைகளை ஏற்று, 1922 ஒற்ருேபர் 11 ஆம் நாள், ஒரு போர் நிறுத்த உடன்படிக்கை யைச் செய்தார். ஒராண்டுக்குப் பின்னர், உலோசேன் உடன்படிக்கை (Lausanne Agreement), 1923 யூலை 24 இல் கைச்சாத்திடப் பெற்றது.
A 29

Page 231
422 புது உலக சரித்திரம்
உலோசேன் உடன்படிக்கையில், கெமாலின் அங்கோராத் தீர்மா னங்கள் யாவும் அங்கீகாரம் பெற்றன. கிழக்குத் திறேக, அதிநிய நோபிள், கொன்சுதாந்திநோபிள் எனும் நிலங்களையும் நகரங்களையும் துருக்கி திரும்பப் பெற்றது. துருக்கிய மக்கள் வாழாத நாடுகளான அரேபியா, ஈராக், பலத்தீனம், சீரியா எனும் நாடுகளின் மீது துருக்கி தான் வைத்திருந்த ஆதிக்கத்தைக் கைநெகிழ விட்டது.
இவ்வொப்பந்தம் கெமாலுக்கும் துருக்கிச்கும் பெரும் வெற்றி களாம். ஏனெனில் அந்நியரின் ஆதிக்கமும், தலையீடும் அந்நாட்டி லிருந்து நீங்கின; தவிர, துருக்கி ஒரே இனத்தினரையும், மதத்தை யும், ஒற்றுமையையுமுடைய கட்டரசாக உருப் பெற்றது.
கெமாலின் உண்ணுட்டுப் பூட்கை :
வெளிநாட்டு விவகாரங்களில் பூரண வெற்றிவாகை சூடிய, கெமால் தன் அவதானத்தை உண்ணுட்டினுள் திருப்பி, துருக்கியின் மத்தியகால மதச்சார்புடைய அரசாங்கத்தின் பாழடைந்த அத்திவாரத்தைத் தகர்த் தெறிந்து, ஒரு நவீன அரசை நிர்மாணிக்கும் வேலையை மேற்கொண் டார். கெமால், தன் இலட்சியத்தை “அந்நிய கட்டுப்பாடுகளிலிருந் தும். தன் பழைய வரலாற்றின் இருளிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரே பண்பும் இயல்புமுடைய துருக்கி-அதாவது துருக்கி ஐரோப்பா வின் உயிருள்ள கையையும், இசிலாமின் இறந்துபோன கையையும் தன் அங்கத்திலிருந்து துண்டிக்க வேண்டும்" என வரையறுத்தார். உலோசேன் ஒப்பந்தத்துடன் இவ்விலட்சியத்தின் முதற்பாதி நிறை வேறி நின்றது. அதன் மிகுதிக்கு உயிரூட்டும் முயற்சியில் கெமால் உடனடியாக இறங்கினர்.
கெமாலின் வேலைத்திட்டம் ஆறு நோக்கங்களைக் கொண்டிருந் தது. மக்கள் கட்சியின் கொடியின் செந்நிறப் பின்னணியில் இவ் வாறு நோக்கங்களும், ஆறு வெள்ளை அம்புகளாகச் சித்தரிக்கப் பட் டிருந்தன. முதலாவது அம்பு குடியரசு வாதத்தைக் குறிப்பிட்டது. துருக்கியில் முடியாட்சி அழிந்து, அதனிடத்தில் கெமாலை முதற் குடிப் பதியாகக் கொண்ட குடியரசு தாபிதமாயிற்று. இரண்டாவது தத் துவமான நாட்டி ைவாதம் “நாட்டின் எல்லைகளுக்குள் வாழும், துருக் கிய மொழியைப் பேசும், நாட்டின் இலட்சியங்களைத் தனதெனக் கொள்ளும் ஒவ்வொருவனும் துருக்கன் எனக் கணிக்கப்படுவான்' என்று இயம்பியது. அவரது மூன்றுவது குறிக்கோள் சனநாயகமாகும்; நாட்டின் அரசதிகாரம் மக்களிலேயே வீற்றிருக்கிறதெனக் கெமால் கற்பித்தார். நான்காவது நோக்கமான பொருளாதாரக் கட்டுப்பாட் டின் கீழ், நாட்டின் பொளாதாரத்தை விருத்தி செய்ய, போக்கு வரவு, சுரங்கங்கள், தொழிற்சாலைகள் என்பனவற்றை அமைக்க அர

ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் 423
சாங்கம் திட்டமிட்டது. ஐந்தாவதாக, அரசியலிலிருந்து மதச்சார்பு கள் களையப்பட்டன : புதுக் குடியரசு ஒரு மதச்சார்பற்ற அரசாங்க மாக அமைவு பெற்றது. இறுதியாக புரட்சிவாதக் கொள்கை *நாட்டின் நிருவாகக் கருமங்களில் மாற்றங்களை மெதுவாக ஏற்படுத் தவோ, பரிணுமத் தத்துவங்களுக்கிசைய நடக்கவோ கட்சி உத்தர வாதம் தரமாட்டாது' எனக் குறிப்பிட்டது.
கடைசிக் கொள்கைக்கிசையவே, ஒரு கீழ்த்தேய இனத்தை மேற்கு நாடுகளின் அடிச்சுவட்டில் விரைவாக முன்னேறச் செய்யவேண்டு மென்ற நோக்குடன், கெமால் பல புரட்சிகரமான மாற்றங்களைக் கட் டளையிட்டார். முசிலிம்கள், துருக்க தொப்பி (Fez) அணிவது தடை செய்யப்பட்டது வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுதலை நாளாக்கப்பட்டது முசிலிம்கள் ஒன்றுக்கு மேலதிகமான பெண்களை மணக்கும் உரிமை நிராகரிக்கப்பட்டது. பெண்கள் முக்காடு (Purdah) அணிவதை விட்டு, ஆண்களுடன் சம அரசியல் உரிமைகளையும், சமூக நிலையையும் பெறலாயினர். கெமா லின் மாற்றங்களில் அதி முக்கியத்துவம் வாய்ந்தது, பழைய அரபிக் எழுத்துக்களுக்குப் பதிலாக இலத்தீன் மொழியின் எழுத்துக்களை கட் டாயமாகப் புகுத்தியதாகும். கெமாலின் பெருமை :
துருக்கியின் மறுமலர்ச்சி, அந்நாட்டுத் தலைவரின் புருடத்துவப் பயனென்றே கூறுதல் வேண்டும். அவரது வழிநடாத்துதலில் கதுருக்கி ஒரு கட்சிமுறை ஆளுகைபெற்ற சருவாதிகார அரசாக நிருமாணம் பெற்றது. கல்வி, கலாச்சாரம், சமூகம் எனும் துறைகளில் மக்கள் போதியளவு சுயாதீனம் பெற்றமையினல், துருக்கிய அரசு, இத்தாலிய, செர்மன், இரசிய சருவாதிகார அரசுகள் போன்று அமையவில்லை. பல நூற்ருண்டுகளின் இசீர்கெட்ட நிலைமையைச் செப்பனிடுவதற்கு சர்வாதிகாரப் போக்கு அகத்தியமானது என்பதை யுணர்ந்து, அர சாங்க நிருவாகம் புது அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டது. புதிய நீதிச் சட்டங்கள் அநுட்டானம் பெற்றன. போக்குவரத்து, நிதிநிலை, விவசாயம், தொழின்முறைகள் யாவும் புனரமைப்புற்றன. துருக்கித் தலைவரின் சீர்திருத்தங்களில் மிக முக்கியமானது, அங்கோராவைத் தலைநகராக்கியமையாகும்.
1932 ஆம் ஆண்டு "தற்போதைய நிலையில் மக்கள் அரசியல் ஈடுபாடற்றவர்களாயிருக்கட்டும் ; விவசாயத்திலும் வர்த்தகத்திலுமே அவர்கள் அவதானம் நிலைக்கட்டும் ; இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் நான் ஆட்சி புரிய வேண்டும்" என்று அவர் தமது அபிப்பிராயத்தை வெளியிட்டார். ஆனல் நினைவு பூர்த்தி யடையுமுன் 1938 இல் அவர் மரண நித்திரையாகினர்.

Page 232
犁绕星 புது உலக சரித்திரம்
6. தூர கிழக்கில் சீன-யப்பானிய இகல்
யப்பானும் முதல் உலகப் போரும் :
சீனுவில் புரட்சியும், முதலாவது உலகப் போரும், யப்பானுக்குத் தன் பேரரசு வேட்கையைப் பூரணப்படுத்த ஓர் அரிய சந்தர்ப்பத் தைப் பெற்றுத் தந்தன. இரசியாவும் ஐரோப்பிய வல்லரசுகளும் தம் பூரண அவதானத்தை ஐரோப்பியப் போரில் செலுத்தி நின்ற காலத்தில், ஆசியாவிலும் குறிப்பாகப் பிளவுபட்டுக் கிடந்த சீனவிலும் தன் ஆள்புலத்தைப் படரச் செய்ய யப்பான், தனக்குக் கிடைத்த தரு ணத்தை நன்கு பயன்படுத்த உறுதி பூண்டது.
பிரித்தனின் நண்பன் என்ற முறையில், யப்பான் தாமதமின்றி 1914 ஆகத்து 23 இல், செர்மனிக் கெதிராகப் போர் பிரகடனம் செய்தது. அது, சீனவிலுள்ள சன்ரங்கை ஆக்கிரமிக்கவும். செர்மன் செல்வாக்குப் பிராந்தியமான கியாச்செளவைக் கைப்பற்றவும் படை களை உடனடியாக அனுப்பிற்று. செர்மனிக் கெதிராகப் போர் செய் யும் போர்வையின் கீழ், யப்பான் சீனவின் நடு நிலையைக் குலைத்து, அதன் எதிர்ப்பையும் மதியாது, சன்ரங்கில் உறுதியாகத் தன்னைத் தாபித்துக் கொண்டது.
அதன் பின்னர் 1915 இல் யப்பான், சீனவின் மீது இருபத்தி யொரு உரிமைச்" சாதனத்தைத் திணிக்கும் முயற்சியில் இறங்கியது. சன்ரங், மஞ்சூரியா, கிழக்கு மங்கோலியா எனும் பிரதேசங்களின் மேல் பூரண ஆணை செலுத்த அதிகாரம், சீனவை மேற்பார்வை செய்யும் உரிமை, சீனக் குடாக்கள், துறைமுகங்கள், கரையோரம் என்பவற்றைப் பாதுகாத்தல், யப்பானிய ஆலோசகரின் நியமனம், யப்பானிய போர்க்கருவிகளை வழங்குதல், பொருளாதாரச் சலுகை கள் என்பவை யப்பான் கோரிய இருபத்தியொரு உரிமைகளில் முக் கியமானவை. இவ்வுரிமைகளை யூவான்-சீ-கை ஏற்பின், அவரது அர சுரிமை எண்ணங்களுக்குத் தாம் ஆதரவு காட்ட ஆயத்தமாக இருப் பதாகவும், மறுப்பின் அது சீன மீது போர் தொடுக்கத் தயங்கமாட் டாதென்றும் யப்பான் அச்சுறுத்தியது. இச்சாசனம் சீனவில் பிர சுரிக்கப்பட்ட பொழுது, அங்கு அதற்கெதிராக ஒரு பெரிய கூக்குர லும் எதிர்ப்பியக்கமும் எழுந்தன. வல்லரசுகள் கூட யப்பானிய கோரிக்கைகளின் விசாலத்தை ஆட்சேபித்தன. அமெரிக்க எதிர்ப் பைப் பொருட்படுத்தி, யப்பான் சில உரிமைகளைக் கைநெகிழ விடச் சம்மதித்தது. மிகுதியை 1917 மே மாதம், யுவான்-சீ-கை ஏற்றர். ஆனல் அது யுவான்-சீ-கையுக்கும் யப்பானுக்குமிடையே ஏற்பட்ட ஓர் உடன்படிக்கையாகவே கணிக்கப்பட்டது. சீன பாராளுமன்றம் அதை நிறைவேற்ற மறுத்துவிட்டது.

ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் 425
ਲਗ ਸੰਗ :
பின்பு, யப்பான் தான் பெற்ற இலாபங்களுக்கு வல்லரசுகளின் தனிப்பட்ட சம்மதத்தைப் பெறும் நடவடிக்கைகளைக் கையாண்டது. விசேடமாக சீனவில் செர்மன் நிலங்களையும் உரிமைகளையும் பற்றிய பிரச்சினையைத் தீர்க்க நேச நாடுகளே அதிகாரம் படைத்தவர்கள் எனும் உண்மைன்ய யப்பான் உணரலாயிற்று. 1917 இல் செர்மன் நீர்மூழ்கிக் கப்பற் போரினல் வெகுவாக நட்டமடைந்த நேச நாடுகள், தம் வியாபாரக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்குடன், யப்பானிடம் புது நீர்மூழ்கிகளை வேண்டி நின்றன. இங்கிலந்து, பிரான்சு, இத்தாலி மூன்றும், சன்ரங்கின் மீது தன் உரிமையை ஆதரிக்க உறுதிமொழி கூறியபின்பே, யப்பான் நேச நாடுகளின் வேண்டுகோளை அங்கீகரித்தது. அதேவிதமாக 1917 இன் முடிவில் ஐக்கிய அமெரிக்க அரசும் யப்பானிய உரிமையைச் சமாதான மகா? நாட்டில் அங்கீகரிக்க ஒப்புக்கொண்டது.
சீனுவின் போர்ப்பிரவேசம் :
நேச நாடுகளின் நல்லெண்ணத்தைப் பெறவும், யப்பானின் மிரட்டலிலிருந்து உயிர் தப்பவும், சீனு 1917 ஆகத்து 14 ஆம் நாள், செர்மனிக் கெதிராகப் போர்க்கணை தொடுத்தது.
வேர்சை அமைதிப் பொருத்தனையில் செர்மன் உரிமைகள் அனைத் தும் யப்பானுக்கே கையளிக்கப்பட்டன. இவ்வாறு 1894-95 இல் சீன-யப்பானியப் போருடன் ஆரம்பித்த யப்பானின் ஆள்புலப்படர்ச் சிப் படலம் 1919 இல் முடிவெய்தியது. ஏகாதிபத்திய வேட்கையில் யப்பான் முதல் உச்சத்தை எட்டித் தொட்டது. நான்கு வல்லரசுகளின் ஒப்பந்தம் :
1920 ஆம் ஆண்டு, பெரிய பிரித்தன், ஐக்கிய அமெரிக்க அரசு, பிரான்சு, யப்பான் எனும் நான்கு நாடுகளின் வங்கிகளும் நிதி நிறு au găsebb 96ă pi Gorrij5 g (Four Power Consortium), 9(696)săr 59 விவகாரங்களைச் சீர்ப்படுத்தத் திட்டமிட்டன. உவாசிந்தன் மகாநாடு :
1921 ஆம் ஆண்டு ஆயுதப் பற்றறவு எனும் விடயத்தை ஆராய் வதற்காக உவாசிந்தனில் கூடிய மகாநாடு, பசிபிக் பிரச்சினையையும் விவாதித்து, சில திட்டவட்டமான முடிபுகளுக்கு வரலாயிற்று. பெரிய பிரித்தனுக்கு, அதன் கிழக்கு சமுத்திரப் பாதைகளேப் பாது காப்பதற்கு நன்கு பயன்பட்ட ஆங்கில-யப்பானிய நட்புறவு, பிரித் தன், அமெரிக்கா, பிரான்சு, யப்பான் எனும் நாடுகளை உட்படுத்திய "நால்வர் நட்புறவு’ ஒப்பந்தமாக விரிக்கப்பட்டது.

Page 233
426 புது உலக சத்திரம்
தவிர, ஒர் ஒன்பது வல்லரசுப் பட்டயம் (பெல்சியம், பிரித்தன், பிரான்சு, இத்தாலி, யப்பான், ஒலந்து, போத்துக்கல், சீன, அமெ ரிக்கா என்பவற்றுக்கிடையே) பசிபிக்கில் நாடுகளின் தேச எல்லைகளை மதித்து நடக்கவும், 'திறந்த வாயில் பூட்கையை உறுதிப்படுத்தவும், சீனவினது ‘சுதந்திரத்தையும், முழுமையையும் ஆதிபத்திய உரிமை களையும் மதித்து நடக்கவும் உறுதி மொழி கூறின. இவ்விரு ஒப்பந் தங்களும் சீனவை மேலும் ஆக்கிரமிப்புக்களிலிருந்து ஒருசில ஆண்டு களுக்குப் பாதுகாத்தன. 1926 ஆம் ஆண்டு, பதின்மூன்று நாடுகளைக் கொண்டு பீக்கிங்கில் கூடிய ஒரு சர்வதேச மகாநாடு, சீனவில் அந் நியரின் ஆள்புல ஆட்சியையும் ஆக்கிரமிப்பையும் பரிபூரணமாக நிரா கரித்தது.
சீனவில் பொதுவுடைமை வாதத்தின் தோற்றம் :
1915 இல் யுவான்-சீ-கை மறைந்தபின் நாட்டில் ஒழுங்கீனமும் குழப்பங்களும் மலிந்தன ; உண்ணுட்டு ஆட்சியறவினல் சின்ன பின்ன மாகி பிளவு படும் நிலையைச் சீன எய்தியது. அங்கு, வடக்கே யமைந்த பழைய அரசாங்கமும், தெற் கே சுன் யாட்சென்னின் புரட்சி வாத தேச குவாமிந்தாங்கு அரசாங்கமும் ஒன்ருேடொன்று பொருதி நின்றன. வட பகுதிகளில் பல இராணுவ ஆள்பதிகள் படைகளை நிருவகித்து. ஒருவரோடொருவர் போர் செய்தனர் : அதே நேரத்தில் அவர்கள் பீக்கிங்கில் பெயரளவில் இயங்கி வந்த மத்திய அரசாங்கத்தின் மீதும் ஆணை செலுத்த முயன்றனர்
தெற்கே, சுன்யாட்சென் கந்தனில் (Canton) நிறுவிய கோமிந் தாங்கு அரசாங்கம், வட பிராந்தியத்தைக் கைப்பற்றி, நாட்டை ஒற்றுமைப்படுத்த வேண்டு மென்ற உயர் நோக்குடன் இயங்கியது உண்ணுட்டு ஐக்கியத்தையும், உறுதியையும் பெற்றுத்தர இங்கிலந் தும், அமெரிக்காவும் பின் நிற்கவே, சுன்யாட்சென், இரசியா தர முன் வந்த உதவியை ஏற்ருர் : சீன அரசியல் வரலாற்றின் குழப்ப நிலைக்குள் இன்னுமோர் புதுச் சக்தி புகுந்தது. இரசிய பொருள், தொழில் நுட்ப உதவிகளுடன் குவாமிந்தாங்கு அரசாங்கம் துரித மாக முன்னேறியது. மிக்கேல் பொருேடின் என்ற சோவியத் இரா ணுவ அதிகாரி சீன வீரருக்குப் பயிற்சியளித்து, ஒரு கட்டுப்பாடு டைய இராணுவ அமைப்பை உருவாக்கினன். 1921 இல் சீனத் தொழிலாளர், சீனப் பொதுவுடைமைக் கட்சி  ைய நிறுவினர் : 1923 இல் குவோமிந்தாங்கு அரசும் பொதுவுடைமைக் கட் சி யு ம் ஒன்று சேர்ந்து ஐக்கிய புரட்சி முன்னணியை உருவாக்கின. கூட்டணி யில் பொதுவுடைமைக் கட்சியின் பலமும் செல்வாக்கும் படிப்படி

ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் 427
யாக உயர்ந்தன. இந்நிலையில் தான் சுன்-யாட்-சென் காலமானர். அவரது சீடனுன சியாங்-கை-செக் (Chiang-Kai-Shek) குமிந்தாங் குக் கட்சியின் தலைவரானர்.
சியாங்-கை-சேக்கும் பொதுவுடைமைவாதிகளும் :
சியாங்-கை-சேக்கின் தலைமையில் குமிந்தாங்குத் தேசியப்படை 1926 ஆம் ஆண்டு கன்ரனிலிருந்து, வடக்கே பீக்கிங்கை நோக்கிப் புறப்பட்டது. அவை வட பிராந்தியத்து இராணுவத் தலைவர்களையும் சனக் கும்பல்களையும் இலகுவாக வெற்றி கொண்டன : 1927 இல் நான் கிங் நகரைக் கைப்பற்றிய சியாங், அங்கு தேசிய அரசாங்கத்தை நிறு வினர் ; 1929 இல் பீக்கிங்கை வெற்றி கொண்டு, அதற்கு பீப்பிங் (*வட சமாதானம்') என நாமஞ் சூட்டினர். இவ்வெற்றிகளினல் இறு மாப்படைந்த தாராண்மைவாதி சியாங், சடுதியாகப் பொதுவுடைமை வாதிகளுக் கெதிராகப் போர்க்கணை தொடுத்தார். பொதுவுடைமைக் கட்சி, தொழிலாளரையும் விவசாயிகளையும் கொண்ட செம்படையை நிறுவியதுடன் சியாங்-கை-சேக்குக்கும் பொதுவுடைமைக் கட்சிக்கு மிடையே உண்ணுட்டுப் போர் ஆரம்பமாகியது.
சீன-யப்பானியப் போர் :
சீனவில் எழுந்த உண்ணுட்டுப் போரினல் சீனு மேலும் பெல வீனப்பட்டு நின்ற தருணத்தை யப்பான் நன்கு பயன்படுத்தத் திட்ட மிட்டு, அதன் வடகிழக்குப் பகுதிகளை ஆக்கிரமித்தது. 1932 இல் யப்பான், மஞ்சூரியாவை வெற்றி கொண்டு, அதனை மஞ்சூக்குவோ என்ற 5 r 0 த்துடன் தன் ஆதிக்கத்தின் கீழ் தனிக் குடியரசாக அமைத்தது. சீன, யப்பானின் அடாத செயலை ஆட்சேபித்து, சர்வ தேச சங்கத்துக்கு முறையிட்டது. 1933 இல் யப்பான், சர்வதேச சங்கத்திலிருந்து விலகி, யெகோல் (Jehol) மாகாணத்தையும் அடி மைப் படுத்தி, அதை மஞ்சூரியாவுடன் இணைத்தது.
யப்பானின் படர்ச்சி :
யப்பான், 1936-37 ஆம் ஆண்டுகளில் செர்மனியுடனும் இத்தாலி யுடனும் ஒன்று சேர்ந்து, இரசியாவுக்கெதிராக கொமின்றேன் பகை மைக் கூட்டணியை (Anti-Comintern-Pact) ஏற்படுத்தியது. இப்புது உடன்படிக்கையிலும், அமெரிக்காவின் நடுநிலைக் கொள்கையிலும், தன் படைப் பலத்திலும் அபார நம்பிக்கை வைத்த யப்பான், 1937 இல், ஒரு துணிவுகரமான ஆக்கிரமிப்புத் திட்டத்தில் இறங்கியது. இத்துணிவே அதனை 1942 இல் முழு மேற்கு பசிபிக் பிராந்தியத்தின் அதிபதியாக்கி, ஈற்றில் 1945 ஆம் ஆண்டு, அழிவின் வாயிலில் கொண்டு போய் விட்டது.

Page 234
428 புது உலக சரித்திரம்
யப்பான், இங்கிலந்துடனும் அமெரிக்காவுடனும் போர் தொடுக்கு முன்னர், 1941 திசம்பர் ஈருக தொடர்ச்சியான வெற்றிகளை ஒன் றன்பின் ஒன்முக ஈட்டி, சீனுவின் வட பிராந்தியத்தை அடிமைப் படுத்திற்று. சங்காய், அங்கெள (Hankow), நன்கிங் எனும் நகரங் கள் வெற்றி கொள்ளப்பட்டன : கொரியா முதல் இந்தோ-சீனம் ஈருக சீனக் கரையோரத்தின் பிரதான துறைமுகங்கள், வீதி கள் , புகையிரதப் பாதைகள் யாவும் யப்பானின் கையில் சிக்குண்டன. கீழ்க் கரையிலிருந்து துரத்தப்பட்ட குடியரசு அரசாங்கம், மேற்கு மலைப் பிரதேசங்களில் “சுதந்திரச் சீன அரசை' நிறுவியது.
யப்பானின் கடல் வலிமைக்கும், தொழில் வளத்துக்கும், உன் னத தேர்ச்சி பெற்ற கவசப்படைகளுக்கு மெதிராக சீன எவ்வித எதிர்ப்பையும் காட்ட முடியாத பரிதாப நிலைக்குள்ளாயிற்று. எனி னும் தன் பொதுவுடைமை-குடியரசு வேறு பாடுகளை போர்த்து сурц உருப்பெற்ற புதுச் சீன அரசாங்கம், ஆச்சரியத்துக்குரிய ஒரு போரை நடாத்தி வந்தது. அது தன் விடுதலைப் போருக்கு பிற நாட்டி னரின் உதவியையும், இந்தோ-சீனு, பர்மா, இரசியா எனும் அயல் நாடுகளிலிருந்து பெறக் கூடிய பொருளுதவியையும் நம்பியே உயிர் வாழ்ந்தது. ஆனல் யப்பான், பிற நாட்டுத் தொடர்புகளுக்கான வழிகளை ஒவ்வொன்ருகக் கத்தரித்தது. இந்தோ சீனப்பாதை 1940 இலும், பர்மாப் பாதை (Burma Road) 1942 இலும் மூடப்பட்டன. இவ்வாறு நாலா பக்கங்களிலும் முற்றுகையிட்டு சீனவை ஈ ற் றி ல் சரணடையச் செய்யலாம் என்றே யப்பான் எதிர்பார்த்தது.
ஆனல் அதற்கிடையில் ஐக்கிய அமெரிக்க அரசுக்கும் யப்பானுக்கு மிடையே எழுந்த தகராறுகளின் விளைவாக, யப்பான் 1941 திசம் பர் 7 ஆம் நாள் யப்பானிய, விமானங்கள் பேள்ஆயர் (PearlHarbour) என்ற கப்பற் தளத்தைத் தாக்கின. இரண்டாவது உல கப் போரும் ஒரு புதுக் கட்டத்தை எய்தியது.
7. உலக அரசியலரங்கில் அமெரிக்காவின்
பிரவேசம்
உண்ணுட்டுப் போரின் பயன்கள் :
அமெரிக்கா அரசியலரங்கில் சுதந்திர நாடாக இடம் பெற்ற நாள் முதல், அதை எதிர்த்து நின்ற இரு பிரச்சினைகளுக்கு உண்ணுட் டுப் போர் விடை இறுத்தது. அடிமை நிலை நீக்கம் நிகழ்ந்த பின்னர் அமெரிக்கா புரட்சித் தத்துவங்களின்படி சுதந்திர, சம உரிமைக ளுடைய பிரசைகளின் நாடாய் திகழவேண்டுமென்று முடிபு செய்யப்

ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் 429
பட்டது. ஆற்றல், விவேகம் என்பவற்றுக்குத்தக முன்னேறும் சம தருணமும் வாய்ப்பும் நீக்கிரோக்களுக்கும் பெற்றுத் தரப்பட்டது : வெள்ளையரைப் போன்று அரசமைப்புத் திட்டத்தின் முன் சுதந்திரம், சுகவாழ்வு தேடும் உரிமை என்பன, நீக்கிரோக்களுக்கு அளிக்கப்பட்
67.
இரண்டாவத், அமெரிக்காவின் "அரசியலமைப்பு அழிக்க முடி யாத இராச்சியங்களின் அசைக்க முடியாத ஐக்கியமாக" இருக்கு மென்று தீர்க்கமான முடிபும் ஏற்பட்டது. இராச்சியங்களின் ஆதி பத்தியக் கொள்கை நிராகரிக்கப்பட்டது; எந்த இராச்சியமும், விரும் பிய பிரகாரம் ஐக்கியத்தை விட்டு விலக உரிமையற்றது என்பதை இறந்தகால நிகழ்ச்சிகள் எடுத்தோதின. சனநாயகமும் குடியாட்சி முறையும் எதிர்காலத்தை வெற்றிகொண்டு நின்றன.
அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றம் :
அரசமைப்புத் திட்டம், எல்லைகள் என்பவற்றல் நாட்டில் எழுந்த தகராறுகள் அகன்றபின், அமெரிக்கா தன் இயற்கை வளத்தைப் பெருக்குவதிலும், செல்வத்தை விருத்தி செய்வதிலும் முழு அவதானத் தையும் செலுத்தியது. இவ்விரு முயற்சிகளின் புலனுரக்கமே, அடுத்த ஐம்பது ஆண்டு வரலாற்றின் அடிப்படை அம்சமாக மிளிர்ந்தது. கைத்தொழில் முன்னேற்றம் வியப்புக்குரிய வேகத்தில் வளர்ந்தது. பொருளாதாரம், அரசியல் எனும் துறைகளில் இணையற்று விளங்கு வதற்கான திட்டங்கள் உருவாகின. உண்ணுட்டுப் போருக்கும் முத லாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் விவசாயக் குடி யரசு, கைத்தொழில் நாடாய் மாற்றமெடுத்தது. நாட்டின் பல பாகத்தும் இரும்புச்சாலைகளும், தொழில் நிலையங்களும், புகைவண்டி வீதிகளும், பண்ணைகளும் எழுந்து பல்கிப் பெருகி, நாட்டின் அமைப் பையே மாற்றிவிட்டன. மூலப் பொருள்களை குறைவறப்பெற்ற ஜக் கிய நாடுகள், தொழில் துறையில் இத்தகைய உன்னத முன்னேற் றம் பெற்றது வியப்புக்குரியதன்று. எஃகு அரசர் கானகி (Canegie), எண்ணெய்க் கோடீசுவரர் யோண் D, ருெக்பெலர் (John D. Rockefeller), Qra, si Tafsir 6Taira Gut" (Henry Ford) Gurairo முதலாளிகள் பாரிய தொழில் நிலையங்களைப் படைத்தனர்.
இருபதாம் நூற்ருண்டின் தோற்றுவாய் வரை, ஐரோப்பிய விவ காரங்களில் தலையிடாத ஒரு தனித்துவ அமைதிப் போக்கு அமெரிக் காவில் காணப்பட்டது. புதிய நிலங்கள் மேற்கே தொடர்ந்து திறக் கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டன. 1889 க்கும் 1890 க்கும் இடைப்பட்ட ஈராண்டுகளில், ஆறு இராச்சியகள் ஐக்கியத்தில்

Page 235
430 புது உலக சரித்திரம்
இணைந்தன. பசிபிக் கடற்கரை வரையும் ஒரு புகைவண்டி வீதி திறக் கப்பட்டது : நாட்டின் நாலா பக்கங்களிலும் சிலந்திவலைப் பின்னல் போல, பல வீதிகள் துரிதமாக அமைக்கப் பெற்றன. மேற்கே படை யெடுத்த சனப் பெருக்கத்தால் மந்தை மேய்த்தலுக்குப் ப தி லா ய் கோதுமைப் பயிர் விளைச்சல் ஆரம்பிக்கப் பட்டது. சுருங்கக் கூறின் உண்ணுட்டு விவகாரங்களில் விருத்திகள், மின்னல் வேகத்தில் நிறை வேற்றிப்பட்டன.
குடியேற்ற நாட்டுப் பிரச்சினைகள் :
வெளிநாட்டு விவகாரங்களில் அந்நியர் குடியேற்றமும், வேறு தனிப்பட்ட பிரச்சினைகளும் நாட்டை எதிர்த்து நின்றன.
உண்ணுட்டுப் போரின் பின், முறையே சீனரும் யப்பானியரும் அமெரிக்க பசிபிக் கரையோரங்களில் ஏராளமாய்ப் படையெடுத்துக் குடியேறினர். இவர்களது வருகையால் சொற்ப வேதனக் கூலியா ள ரையும் ஓர் அந் நிய நாகரிகத்தையும் அமெரிக்கா காணலாயிற்று. காலப் போக்கில் சீனக் குடியேற்றத்தைத் தடை செய்ய, அமெரிக்கா பல சட்டங்களை இயற்றி, இறுதியில் 1892 ஆம் ஆண்டு, புதுக் குடி யேற்றத்தை அறவே நிறுத்தியது.
இருபதாம் நூற்ருண்டுடன் யப்பானியரின் குடியேற்றப் பிரச்சினை தாம், அமெரிக்கரின் அவதானத்தைப் பெரிதும் ஈர்த்தது. முன் போலவே குடியேற்றத் தடைச் சட்டங்கள் உருவாகி, 1924 இல் யப்பானியரின் வருகை முற்ருகத் தடைப்படுத்தப்பட்டது.
1850 முதல் 1900 வரை, அமெரிக்காவின் கீழ்க்கரையில் அந்நிய இனங்கள் குடியேற ஆரம்பித்தன. செர்மனி , பிரித்தன், அய லந்து, சிக்கன்டிநேவிய நாட்டு மக்கள் ஆயிரம் ஆயிரமாக வந் திறங்கி புது இல்லங்களையும் புது நாகரிங்களையும் ஏற்படுத்தினர். இறுதிக் காலத்தில் இர சியா, இத்தாலி, போலந்து, ஒசுத்திரியா, தென் கீழ் ஐரோப்பிய மக்களும் அமெரிக்கா மீது குடியேற்றப் படை யெடுப்பை தொடர்ந்து நடாத்தினர்.
நியூயோக் துறைமுகத்தில் சுதந்திர தேவியின் சிலை முன்பாக **களைப்புற்ற ஏழைகளான, துயரத்தில் உழலும் சுதந்திர வேட்கை கொண்ட இன்னலும், களைப்பும், சுதந்திர ஏக்கமும், நிறைந்த ஏழை மக்களை என்னிடம் அனுப்புங்கள். நிற்க நிழலற்றவராய், அலைகடலாற் புறக்கணிக்கப்பட்டவர்களாய், உங்களால் ஒதுக்கி உதாசீனப் படுத்தப் பட்டவர்களை என் தங்க வாயிலில் நின்று, தீபமேந்தி, அணைத்து, வரவேற்க ஆவல் கொண்டுள்ளேன்” என்று பொறிக்கப்பட்டுள்ள மணி மொழிகள், எண்ணற்ற மக்களின் குடியேற்றத்தால் உண்மை யாக்கப்பட்டன.

ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் 43
இங்ங்ணம், 19 ஆம் நூற்றண்டின் இறுதிவரை, அமெரிக்கா வெளிநாட்டு விவகாரங்களில் ஒருவித சிந்தனையுமின்றி, தன் மகத்தான தனித்துவப்பூட்கையில் பெருமிதங் கொண்டது. ஆனல் புது நூற்ருண் டின் ஆரம்பத்திலே, அது புதுக் குடியேற்றங்களை நிறுவுவதிலும் வெளி விவகாரங்களில் திட நடவடிக்கை எடுப்பதிலும் தீவிர முனைப்புக் காட்டியது. RA
அமெரிக்காவின் பேரரசுவாதம் :
1897 இல் ஒழுங்கீனமான கியூபாத்தீவின் ஆட்சிப் பிரச்சனையி லிருந்து, அமெரிக்காவுக்கும் சிபெயினுக்கும் போர் மூண்டது. போரில் அமெரிக்கா பெற்ற வெற்றி, கியூபாவுக்கு அமெரிக்கப் பாதுகாப்பின் கீழ் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது ; அன்றியும் புவட்டோ இறிக்கோ, பிலிப்பைன் தீவுகள், குவாம், அவாய் முதலாம் தீவுகளை அமெரிக்கா சொந்தமாக்கியது. அமெரிக்க வரலாற்றில் இப்போரானது ஒரு புதிய திருப்பத்தை உண்டு பண்ணியது ; ஐக்கியத்துக்கு வெளிப்பட்ட குடி யேற்றங்கள் அமெரிக்காவின் நேராட்சிக்குள் முதன் முதலாகக் கொண்டுவரப்பட்டன.
அடுத்த 40 ஆண்டுகளில் கரிபியன் கடலின் முழு ஆதிக்கம் அமெரிக்காவுக்குக் கிடைத்தது ; அது தொடர்ந்து பிலிப்பைன் தீவுகள் வழியாக முன்னேறி வந்து, யப்பானிய விவகாரங்களிலும் தலையிட லாயிற்று. இவ்வாறு, சருவதேச அரங்கத்தில் ஒரு ஏகாதிபத்திய வல்லர சாக, தனியிடத்தைச் சுவீகரிக்கும் முயற்சியில் அமெரிக்கா, முதன் முதலாகக் கால்வைத்தது.
அமெரிக்கா, தனித்துவப் பூட்கையைக் கைவிடல் :
அமெரிக்க குடிப்பதிகளில், இருபதாம் நூற்றண்டில் பிரபல்யம் பெற்றவர்கள், தியோடோர் உறுரசுவெல்ற் (Theodore Roosevelt), வுட்ருே உவில்சன் (Woodrow Wilson), பிராங்ளின் உறுரசுவெல்ற் (Franklin Roosevelt) 6Taird epaigntauri.
தியோடர் உறுரசுவெல்ற்றின் காலத்தில் (1901-09), அமெரிக்கா வில் மட்டுமின்றி ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்க அரசு, தன் மொன்ருேக் கோட்பாடுகளைக் கைநெகிழ்ந்து, ஐரோப்பிய, ஆசிய விவகாரங்களில் உட்புகுந்தது. 1904-05 ஆம் ஆண்டுகளில் இரசிய யப்பானியப் போரில் தலையிட்டது; 1906 ஆம் ஆண்டு மொறக்கோ பிரச்சினையில் பிரவேசித்து, அல்சசிருசில் சமாதான நியமங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியது. புது வெளிநாட்டுக் கொள்கையின் பிரதான பயன், கரிபியன் கடலிலும், மத்திய அமெ ரிக்காவிலுமே காணப்பட்டது; அத்திலாந்திக், பசிபிக் சமுத்திரங்களை

Page 236
4.32 புது உலக சரித்திரம்
இணைக்கும் பணுமாக் கால்வாயின் ஏற்பாடுகள் அங்கு மேற்கொள்ளப் பட்டபின். அப்பிரதேசத்திலுள்ள மேற்கிந்தியத் தீவுகளிலும், நிலப் பரப்புக்கள் மீதும் அமெரிக்கா தன் ஆதிக்கத்தை நிலைநாட்டி, கால்வா யின் மீது ஏகபோக உரிமைகளைச் சுவீகரித்துக் கொண்டது.
குடிப்பதி உவில்சின் காலத்தில் அமெரிக்கா, 1914 - 18 ஆம் ஆண்டு முதல் உலகப் போரில் பிரவேசித்து, போரின் முடிவில் உவில்சன் வெளியிட்ட சமாதானத் திட்டம், வேர்சை உடன்படிக்கை யில் அதி முக்கிய இடம் வகித்தது.
அமெரிக்காவில் மீண்டும் தனித்துவப் பூட்கை :
போருக்குப் பின்னர், தனித்துவக் கொள்கையை மீண்டும் கடைப் பிடிக்க ஆரம்பித்த அமெரிக்கா, பழைய உலக வல்லரசுகளின் போட்டி களில்தான் குறுக்கிடுவது பெரும் பிழையென்றுணர்ந்தாற்போல், அது நேச நாடுகளுக்குக் கொடுத்திருந்த உத்தரவாதங்களை நிராகரித்தது. மேலும் அது உலக சமாதான பாதுகாப்பளிக்கும் சர்வதேச சங்கத்தில் பங்குபற்ற மறுத்ததுமன்றித் தன்னைப் போர்க்கோலம் பூணச்செய்த உவில்சனையும் பதவியிலிருந்து நீக்கியது. போருக்குப் பின்னர் ஏற்பட்ட புனர் நிர்மானங்களில் பங்குகொள்ளப் பின்வாங்கி, தனிமையைப் பாது காப்பதே தன் ஒரே ஒரு இலட்சியமெனக் கொண்டது.
அமெரிக்காவும் ஐரோப்பாவும் :
1937 இல் பிராங்ளின் உறுரசுவெல்ற் குடிப்பதியானதும் இந்த மனுே நிலை சற்று மாற்றமடைய ஆரம்பித்தது. அமெரிக்க வரலாற் றில் மும்முறை, 12 வருடங்களாக குடிப்பதிப் பதவியை நிருவகித்த பெருமை மிக்க பிராங்ளின் உறுரசுவெல்ற், உலகப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் புது முறை ஏற்பாட்டை (New Deal) ஆரம்பித்து அதன் வாயிலாக உலக நாடுகளுக்கு விமோசனம் அளித் தார்.
தூரகிழக்கில் அமெரிக்க-யப்பானிய இகல் :
1930 க்குப் பின்னர் தனித்தியங்கும் கொள்கையில் தலைதூக்கி நின்ற அமெரிக்கா, தூர கிழக்சில், யப்பானின் ஆக்கிரமிப்புத் திட்டங் களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் நின்றது. யப்பான் தன் அடாத செயலால் அமெரிக்காவின் அனுதாபத்தை இழந்து, தூர விலகிச் சென்றது. 1937 இல் மீண்டும் யப்பான் சீனவைத் தாக்கிய பொழுது, இராணுவத் தலையீடின்றி அமெரிக்க அரசாங்கம், சீன-யப்பானியத் தகராறுகளை நிவிர்த்திக்க முயன்றது. ஆனல் ஒவ் வொரு முயற்சியின் போதும், போரின் அபாயம் நெருங்கிக்கொண்டே

ஈருலகப் போர்களின் இடையாண்டுகள் 433
வந்தது. தன் திறந்த வாயில் பூட்கையை மீண்டும் வற்புறுத்தி, புதிய யப்பானிய அரசை அங்கீகரிக்க மறுத்த அதே நேரத்தில் பசி பிக் தீவுகளைப் பலப்படுத்தவும் கப்பற்படையை அதிகரிக்கவும் முற் பட்டது; யப்பானிய வாணிப உடன்படிக்கையைத் துண்டி க்து, அதற்குப் போர்த் தளபாடங்களை மறுத்தது ; தன்னகத்திருந்த யப்பா னியச் சொத்துக்க்ளைப் பறித்து அதன் தொடர்புகளுக்குப் பமைாக் கால்வாயை மூடியது. ஆயினும் 1941 வரை பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தே இருந்தன. 1941 இன் இறுதியில் சீைைவ விட்டு யப்பான் வெளியேற வேண்டுமென்று அமெரிக்கா வற்புறுத்தியது ; வற்புறுத்தலின்மேல் யுத்தப்பிரகடனக் கட்டாயமும் எழுந்தது. திசம் பர் 7 ஆம் நாள், யப்பானிய விமானங்கள் பேள். ஆபர் மீது குண்டு மாரி பொழிந்தன. அமெரிக்கா உடனே போரில் குதித்தது ; சில தினங்களுள் செர்மனியுடனும் இத்தாலியுடனும் போ ர் க்க ணை தொடுத்து, தனித்தியங்கும் தன் கொள்கையைப் பூரணமாய்க் கைவிட்டது.
0ز سه F-2

Page 237
434 புது உலக சரித்திரம்.
அதிகாரம் 26 இரண்டாம் உலகப் போர் (1939-45)
தன் சாதனைகளிலும் வெற்றிகளிலும் அளவிலா பெ ருமி தங் கொண்ட இற்லர், செர்மனியின் எல்லைகளைப் படரச் செய்வதற்கு வேண்டிய சூழ் நிலையும் சந்தர்ப்பமும் அணுகி விட்டனவெனச் சந் தேகத்துக்கிடமின்றி உறுதியாக நம்பினர். “இத்துணை வல்லபம் படைத்த அல்லது செர்மன் மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய என்னைப் போன்ற ஒரு வீரனைக் காண்பது அரிதிலும் அரிது. இழப் பதற்கோ நேரமில்லை. ஆதலின் என் காலத்திலேயே போர் வந் தாக் வேண்டும்” என இற்லர் 1939 ஆம் ஆண்டு, தன் தளபதி களுக்குக் கூறினர். எனவே 1939-45 போர், இற்லரின் போராகும். சந்தர்ப்பத்தைக் கைநெகிழ விடாது, தன் கட்சியின் அதிகாரச் செருக்கின் மிகுதியாலும், அதில் பூரண நம்பிக்கை வைத்தமையி னலுமே, ஒரு தனி மனிதனின் திட்டமிட்ட செயல்களினல் உலகப் போர் மூண்டது. செர்மனியின் பூரண ஆயத்தம்:
இற்லர், போலந்தைத் தாக்குவதற்கு நேரத்தையும் சந்தர்ப்பத் தையும் வெகு திறமையுடன் தேர்ந்தெடுத்தபொழுது செர்மனியின், பொருளாதாரம், இராணுவம், மக்கள் தம் உணர்ச்சி யாவும் போருக் குப் பரிபூரணமான ஆயத்த நிலையிலிருந்தன. நாட்டின் பொருளா தாரம் நெருக்கடியின்றிப் போர் நிலைக்கு மாற ஆயத்தமான தறுவா யிலும், அதன் இராணுவம் நான்கு ஆண்டுப் பயிற்சியின் பின்னர் துப்பாக்கி முனையில் தம் திறமையைச், சாதனையில் நிரூபிக்கத் துடி துடித்தும் நின்றன ; ஆகாய விமானப் படையின் நிலையும் ஆயுத உற்பத்தியின் அபரிமிதமான பெருக்கமும் திருப்தியளித்தன. இராணு வத்தின் மீது நாற்சிக் கட்சியின் ஆதிக்கம் சந்தேகத்துக்கிடமின்றி பூரணமான உயர்வு பெற்றிருந்தது ; போலந்தின் ஆக்கிரமிப்புத் திட்டங்களும் ஆயத்தமானதுடன், செர்மன் இராணுவப் பட்டாளங் கள் பல, இரகசியமாகப் போலந்தின் எல்லைகளில் ஒருமுனைப்படுத்தப் பட்டிருந்தன. இக்காரணங்களினலேயே போரின் ஆரம்ப வெற்றிகள் யாவும் இற்லருக்கே உரித்தாயிற்று. போலந்துப் படையெடுப்பு :
செற்றம்பர் மாதம் முதலாம் நாள் அதிகாலை 4-40 மணிக்கு செர்மன் ஆகாய விமானங்கள் போலந்தின் புகையிரதப் பாதைகள், பாலங்கள், வீதிகள், இராணுவத் தளங்கள், தொழிற்சாலைகள் மீது

இரண்டாம் உலகப் போர் 435
குண்டுகளைச் சரமாரியாகப் பொழிந்தன; ஐந்து மணிக்கு செர்மன் படை கள் ஐந்து முனைகளில் போலந்தினுள் படையெடுத்தன. போலந்தின் ஆகாயப்படை உடனே நிர்மூலமாக்கப்பட்டு, செயல் திறமையை இழந்தது. செர்மனியிலும் பார்க்க போலந்து இராணுவத்தின் எண் ணிக்கை, போர்க்கருவிகள் என்பனவற்றில் மாத்திரமினறி, புதுப் போர் முறைகளிலும் அதி தாழ்ந்த நிலையில் காணப்பட்டமையினல், அதன் மேற்குப் பாதுகாப்பு அரண் ஒரு கிழமைக்குள் தகர்க்கப்பட்டது. இரசிய-செர்மன் உடன்படிக்கையின் பிரகாரம், செற்றம்பர் 17 ஆம் நாள் இரசிய படைகள் போலந்தின் கிழக்கு எல்லைகளை ஆக்கிரமிக் தன. இவ்வாறு முன்னும் பின்னும் நெருக்கிடைப்பட்ட போலந்தின் வீழ்ச்சி நிச்சயமாயிற்று. குண்டுகளினலும் தீயினலும் தரைமட்ட மாக்கப்பட்ட உவாசோ 28 ஆம் நாள் சரணடைந்தது ; போலந்து முழுமையாக ஒற்ருேபர் 6 ஆம் நாள் அடிபணிந்தது. 500,000 போலந்துத் துருப்புக்கள் செர்மன், இரசிய முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர் : 50,000 வீரர்கள் நாட்டைவிட்டு ஓட்டம் பிடித்து. பின் னர் பிற போர்முனைகளில் தோற்றலாயினர். 18 ஆம் நூற்றண்டில் கத்தறினும் மகா பிறடறிக்கும் செய்தது போன்று, இற்லரும் சிற்ரு லினும் தமக்கிடையே போலந்தைப் பகிர்ந்து, அதன் பெயரை நான் காம் முறையாக ஐரோப்பிய படத்திலிருந்து அழித்தனர்.
போலந்தில் செர்மன் மின்னற் போர்" (Blitzkrieg) என்ற நவீனப் போர்முறை மிக வெற்றிகரமாகக் கையாளப்பட்டமை நிரூ பிக்கப்பட்டு நின்றது. முன் நடந்தேறிய ஆக்கிரமிப்புக்களைப் போன்று போலந்தின் வெற்றியும் அங்கீகரிக்கப்படும் என்ற எண்ணத்துடன் இற்லர், மேற்கு வல்லரசுகளுடன் சமாதானம் செய்ய முயற்சித்த பொழுது, பெரும் ஏமாற்றத்தையே அடைந்தார். போலந்து ஆக் கிரமிப்பின் பயனுக, இற்லர் அதி விசாலமான ஒரு போரை நடாத்த வேண்டிய தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்துக்குள்ளானர். புதுப் போரின் தன்மைகளை இற்லரோ அவரது இராணுவ அதிகாரி களோ சரிவர உணர்ந்தாரிலர்.
இற்லரின் மேற்குமுனைத் தாக்குதல் நவம்பர் 12 ஆம் நாளுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனல் அத்திட்டம் 14 முறை பின்போடப் பட்டு, இறுதியாக 1940, மே 10 இல்தான் ஆரம்பமாகியது. இந்த இடைவேளையில், மேற்கு அரசுகள் தவணை கடந்த இராணுவ ஆயத் தங்களையும் பாதுகாப்புக்களையும் துரிதமாகப் பலப்படுத்தும் முயற்சி களில் முனைந்தன. இரசியாவும் பின் லந்தும் :
1939-40 மாரி காலத்தில், எதிரிகள் தற்பாதுகாப்பு ஏற்பாடு களைப் பூர்த்தி செய்யும் முயற்சிகளுடன் ஈடுபட்டு நின்ற வேளையில்

Page 238
436 புது உலக சரித்திரம்
இாசியா, இற்லரின் நட்பில் உறுதி பூண்டு, போல்த்திக்குக் கடலைச் சூழ்ந்திருந்த எசுத்தோனியா, இலற்வியா, இலிதுவானியா, பின் லந்து எனும் சிறு குடியரசுகளைத் தனக்குப் போர் வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வற்புறுத்தியது. பின்லந்து ஒன்று மாத்திரமே இரசியப் பயமுறுத்தலை வன்மையாக எதிர்க்கத் துணிந்து வீரம் பேசியது ; பயன், நவம்பர் 30 ஆம் நாள், இரசியப் படைகள் பின்லந்தின் மீது படையெடுத்தன. பிற நாடுகளின் அபிமானத்தையும் சிறு பொரு ளுதவியையும் பெற்றுப் பின்லந்து, மாரிகாலம் முழுவதும் இரசியாவை வன்மையாக எதிர்த்துப் போராடிற்று. சர்வதேச சங்கம், இரசியா வின் அங்கத்துவத்தை நிராகரித்து, பின்லந்துக்கு எந்த நாடும் இராணுவ உதவி அளிக்கலாமெனக் கட்டளையைப் பிறப்பித்தது. ஆனல் 40 இலட்சம் மக்கள், 17 கோடிக்கு அதிகமான மக்களைக் கொண்ட ஒரு வல்லரசை எவ்வளவு காலம் எதிர்க்க முடியும் ? பின்லந்து, 1940 மார்ச்சில் அடிபணிந்து, 15 ஆம் நாள் இரசியாவுடன் சமாதானம் செய்து கொண்டது.
நோவேப் படையெடுப்பு :
ஏப்ரில் 9 ஆம் நாள், செர்மனி சடுதியாக தென்மாக்கு, நோவே என்ற இரு சிக்கந்தினேவிய நாடுகளின் மேல் படையெடுத்தது. தன் கப்பல், விமானப் படை நிலையங்களைப் பிரித்தனுக்கு எவ்வளவு அண்மையில் அமைக்க முடியுமோ, அவ்வளவு அருகாமையில் அமைப் பது தான் செர்மனியின் நோக்கம். படையெடுப்பின் சில மணித்தி யாலங்களுக்குள், தென்மாக்கு வீழ்ந்தது. அதன் பின்னர் செர்மன் போர்க்கப்பல்கள், விமானங்கள், இராணுவப் படைகள் யாவும் ஒரே முகமாக முன்னேற்பாடுகளின் பிரகாரம் நோவேக் கரைப் பிரதேசம் முழுவதையும் ஓய்வின்றித் தாக்கின. நோவேயின் பரிதாப நிலையைக் கண்டு, பிரித்தன் உதவிசெய்ய முன்வந்தது : ஒரு வார முடிவில் ஆங்கிலப் படைகள் நோவேயின் மத்திய பாகத்தில் வந்திறங்கின. ஆனல் நோவேத் துருப்புக்கள், என்ன செய்வதென்று திட்டமின்றித் தடுமாறி ஈற்றில் போரே புரியாது சரணடைந்தன. இதற்கிடையில் மேற்கு ஐரோப்பாவில் நேசநாடுகளின் நிலை பெரும் அபாயத்துக் குள்ளான போது, பிரித்தானிய படைகள் நோவேயிலிருந்து பிரான் சைக் காக்க அனுப்பப்பட்டன. யூன் 10 ஆம் நாள், நோவே அடி பணிந்தது.
மே மாதம் 10 ஆம் நாள், இங்கிலந்தில் ஒரு பெரும் மாற்றம் நடந்தேறியது ; அன்று தினம், நெவில் சேம்பலேனின் (Neville Chamberlain) சாதுவான தலைமைக்குப் பதிலாக வின்சன் சேர்ச்சில் (Winston Churchil) என்ற உற்சாகம் நிறைந்த புதுப் பிரதமரை இங்கிலந்து வரவேற்றது.

இரண்டாம் உலகப் போர் 437
மேற்கு ஐரோப்பியப் போர் :
போர் மூண்ட முதல் ஏழு மாத காலமாக, மேற்கு ஐரோப்பா வில் பிரதான நிகழ்ச்சி யொன்றும் ஏற்படவில்லை. இக்காலத்தில் பிரெஞ்சினர், மாகினுே அரணை (Maginot Line) அமைத்துத் தம் கிழக்கு எல்லையைச் செர்மன் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டு நின்றனர். ஆனல் செர்மனி, முதல் உலகப் போரில் போன்று பிரான்சைத் தாக்க வேறு திட்டம் வகுத்தது. செர்மனி, 1940 மே 10 ஆம் நாள ன் று, ஒலந்து பெல்சியம், இலக்சம்பேக் எனும் நாடுகளைத் தரையாலும், ஆகாயத் தாலும் தாக்கி, மேற்குமுனைப் போரை ஆரம்பித்தது ; 150 மைல் நீளமான போர் முனையின் பல இடங்களில் செர்மன் படைகள் உட் புகுந்தன. ஒல்லாந்தர், நீரணைகளைத் திறந்து விட்டனர் : பெல்சியர் மியூசி (Meuse) பாலங்களை உடைத்தனர் ; இரு நாடுகளும் பிரித்த னிடமும் பிரான்சிடமும் உதவி கோரி நின்றன. பிரெஞ்சு எல்லை களைக் காத்து நின்ற ஒன்பது பிரித்தானிய சைனியங்களும் (B. B, F.), இருபத்தியொரு பிரெஞ்சு சைனியங்களும், தம் காவலிடங்களை விட்டு, இடதுபக்கமாகத் திரும்பி, பெல்சியத்தினுள்ளும் ஒல்லாந்தினுள்ளும் பிரவேசித்தன. ஆனல் செர்மன் தாக்குதலின் வன்மையாலும், வேகத்தினுலும் பெல்சிய, நெதலந்து நாடுகள் ஒவ்வொன்றகத் தீக் குச்சிகள் போல நொருக்கப்பட்டன. ஒல்லாந்தின் பெயர்பெற்ற நீர்ப் பாதுகாப்பு அமைப்புக்கள் பயனை இழந்தன ; நகரங்களும், துறை முகங்களும் குண்டு வீச்சினல் நாசமாயின : செர்மன் படைகள் ஆகாய மார்க்கமாக இறங்கி, எதிர்ப்புக்கள் யாவையும் மேற் கொண்டன. மே 14 ஆம் நாள், உருெட்டர்டாம் (Rotterdam) நகரம் முறையான குண்டு வீச்சினல அழிந்தது; யூற்றெக் (Utrecht) மீதும் இதே பயங்கர நடவடிக்கை கையாளப்படுமென செர்மனி அச்சுறுத்தி யதுடன், 15 ஆம் நாள், ஒலந்து சரண் புகுந்தது.
ஒலந்து இழக்கப்பட்டது . ஆனல் பெல்சியர், ஆங்கில-பிரெஞ்சு உதவியுடன் வீரப்போர் புரிந்தனர். பிரெஞ்சுப் படைகளின் இயக் கத்தினல் செடான் பிரதேசம் பாதுகாப்பின்றித் திறந்து கிடப்பதைக் கண்ட இற்லர், “கரிநாள்” ஆன மே 14 ஆம் நாளன்று, ஒரு படையை அவ்வழியாகப் பிரான்சைத் தாக்குமாறு கட்ட%ளயிட்டார் செர்மன் தாங்கிகளும் கவசப்படைகளும், வியப்புக்குரிய வேகத்துடன் திறந்து கிடந்த நிலப்பரப்பை ஊடுருவிச் சென்றன. அவை 18 ஆம் நாள் ஆமியன்சை அடைந்தும், சொம் (Somme) நதியைக் கடந்தும், யாதொரு தங்குதடையுமின்றி பிரிட்டிசுக் கால்வாயை நோக்கி முன்னேறின.

Page 239
4.38 புது உலக சரித்திரம்
இடன்கேக்கு முற்றுகை :
எதிர்பாராத இந்தத் தாக்குதல், பெல்சியத்திலிருந்த நேசநாட் டுப் படைகளைப் பிரான்சிலிருந்த படைகளிலிருந்து துண்டித்துத் தனி மைப் படுத்தியது. குறடு போன்ற செர்மன் இயக்கத்தின் இரு முனை களும் மூட ஆரம்பித்தன. மே 28 ஆம் நாள், பெல்சிய மன்னன் சர ணடைந்த பின், பெல்சியத்தில் தனிமையாக அகப்பட்ட துருப்புக் களின் நிலை அவலமாயிற்று. பெல்சியப் படைகளும் பக்கம் மாறின. பிறிதொரு மார்க்கமுமின்றி ஆங்கில-பிரெஞ்சுப் படைகள், கடல் மார்க்கமாக இடன்கேக்குத் துறைமுகத்திலிருந்து இங்கிலந்து திரும்பத் கிட்டமிடப்பட்டது. அங்கிருந்து ஆர். ஏ. எப் (R. A. R.) விமானங் களின் பாதுகாப்பின்கீழ் 3 இலட்சம் போர்வீரர்கள் நிச்சயமான மர ணத்தின் வாயிலிலிருந்து மீட்கப்பட்டனர்.
பிரான்சின் வீழ்ச்சி :
இதற்கிடையில், தன்னிலும் இரு மடங்கு அதிகமான ஆட்பல மும், எந்திர சக்தியும் கொண்டிருந்த செர்மனியை, பிறநாடுகளின் உதவியின்றி வெற்றி கொள்வது அசாத்தியமானது என உண ரப்படவே பிரான்சின் எதிர்ப்பு மனப்பான்மை மறைந்தது. இது போதாதென, யூன் 10 ஆம் நாள், இத்தாலி, பிரான்சுக்கும் இங்கிலந் துக்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து, நோய்வாய்ப்பட்ட பிரான் சை மத்திய தரைக்கடல் வழியாகத் தாக்கியது ; 14 ஆம் நாள், சுவக்த்திக்கக் கொடி பரிசின் மேற் பறந்தது. 17 ஆம் நாள், பிரான்சின் வீழ்ச்சிக்குத் தலைமை தாங்கும்படியாகத் திருப்பியழைக் கப்பட்ட தளபதி பெற்றெயின் (Marshal Petain), சமாதானத்தை வேண்டி நின்றர். 1918 இல் செர்மானியர், வேர்சை உடபடிக்கை யில் கைச்சாத்திட்ட, ஒரு நூதனசாலையிலிருந்த அதே புகைவண்டி கொம்பியேன் (Compiegne) என்னும் அதே இடத்துக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு 22 ஆம் நாள், செர்மன்-பிரெஞ்சு சமாதான உடன் படிக்கை ஏற்படலாயிற்று. இங்ங்ணம், இற்லர், மாகினே அரணைத் தொடாமலே, 1870 ஆம் ஆண்டு பிரெஞ்சுப்-பிரசியப் போரிலும் பார்க்க மகத்தான ஒரு வெற்றியை ஈட்டினர். இதன் பின்னர், பிரெஞ்சுத் தளங்கள், பிரித்தனைத் தாக்க ஆகாயப்படை நிலையங் களாகவும், துறைமுகங்கள், பிரித்தனின் வணிகத்தை நாசஞ்செய்ய வல்ல நீர்மூழ்கிக் கப்பல் நிலையங்களாகவும் மாற்றப்பட்டன. பிரான் சின் வட பகுதியும், மேற்கில் 70 மைல் அகலமான கடற்கரைப் பிர தேசமும் செர்மனியின் நேர்முக ஆட்சிக்குட்படுத்தப்பட்டன. பிரான் சின் மிகுதி, விச்சியைத் (Yichy) தலைநகராகக் கொண்டு பெயரள வில் சுதந்திரம் பெற்று விளங்கியது ; ஆனல் 1942 நவம்பரில் இது

இரண்டாம் உலகப் பேர்ர 439
வும் அடிமைப்படுத்தப்பட்டது. டி கால் (de Gaulle) இங்கிலந்தில் சாண் புகுந்து, பிரெஞ்சு எதிர்ப்பு இயக்கத்தை (French Resistance Movement) ஆரம்பித்தார்.
செர்மன் வெற்றிகளின் பயன்கள் :
பிரான்சு அடிமைப்படுத்தப்பட்ட வேகம், நாற்சிக் கட்சியினர் எண்ணங்களைக் கூடத் தாண்டி, இற்லரின் வெற்றிகளின் சிகரமாக அமைந்தது. ஒராண்டுக் காலத்துக்குள் இற்லர், மேற்கு ஐரோப்பாவை தன் ஆட்சிக்குள் கொண்டு வந்தார் ; திட்டமிட்டபடி இது ரை நடந்த ஆறு படையெடுப்புக்களும் பூரண வெற்றிகளுடன் முடிவெய்தின. இாசியாவின் எல்லை முதல் சிபெயின் ஈருக, ஐரோப்பிய கண்டம் இற்லரின் காலடியில் கிடந்தது ; அவரது சித்தம் நோவே தொடக்கம் இத்தாலி வரை சட்டமாயிற்று.
இர்லரின் நண்பர்கள் தத்தம் பிராந்தியங்களில் கூடிய துணிவுடனும் நம்பிக்கை யுடனும் முன்னேறினர். தூர கிழக்கில், யப்பான், ஆசிய புது ஒழுங்கை”ப் பிர கடனம் செய்தது ; இத்தாலி, எகித்திலும், வட, தென் ஆபிரிக்காவிலும் தன் பேராசைகளைப் பூர்த்தி செய்வதில் மு?னந்தது. சிபெயின், தஞ்சியரைத் தனதாக்கி, சிப்ருேல்ற்றரையும், பிரெஞ்சு ஆபிரிக்காவின் பகுதிகளையும் வெற்றி Aெ 7 ஸ் ள , போரில் பிரவேசிக்கத் தருணம் பார்த்து நின்றது. இரசியா, இலித்து வானியாவை அடிமைப்படுத்தி, போல்த்திக்குப் பிராந்தியத்தைப் பூரணமாக வெற்றி கொண்டது மாத் திரமின்றி போல்கன் பிரதேசத்தில் பெசரேபியாவையும் வட பியூக்கோவிஞலையும் தனக்குத் தருமாறு உறுமேனியாவை பலவந்தப் படுத்தியது. பல்கேரியாவும், அங்கேரி யும் உறுமேனியாவிடம் உரிமையுடன் புது நிலங்களைக் கேட்டு நின்றன. இற்லர் தலையிட்டு, *" வியன் ஞக் கொடையில்" (Vienna Award) தென் டொப்றுசாவை பல்கேரியாவுக் கும் திரான்சில்வேனியாவை அங்கேரிக்கும் பகிர்ந்து கொடுத்தார்.
பிரித்தனின் தளராத உறுதி :
ஆங்கிலக் கால்வாய்க்கப்பால், இங்கிலந்து, சமாதானத்தையோ அன்றேல் சரண்புகுதலைப் பற்றியோ சற்றேனும் சிந்திக்காது, மீண் டும், முயற்சியினல் தன்னையும், முன்மாதிரியினல் ஐரோப்பாவையும் பாதுகாக்க ஆயத்தமாயிற்று. அந்நாட்டின் தலைமையில், சேச்சில் நா வன்மையுடனும், தளராத திட சித்தத்துடனும், எ தி ரி க்கு ச் சவால் விடுத்தார். அவர், தூக்கத்திலிருந்த பிரிட்டிசு மக்களைத் தட்டி யெழுப்பி, வீரத்தையும் துணிச்சலையும் அவர்கள் உள்ளங்களில் மலரச் செய்தார். “துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் எடுங்கள் ; அவற் றின் பயய்ை இரத்தத்தையும், கண்ணிரையும் பெறுங்கள். இவற்றைவிட உங்களுக்குத் தருவதற்கு ஒன்றுமேயில்லை" என்ருர்.
fg,5 Taifu CUTir (Battle of Britain):
மேற்கு முனையில் போர் முடிவெய்தியதும், இங்கிலந்துக் கெதி ராகப் பெரிய விமானப் போர் ஆரம்பமாகியது. 1940 யூன் மாதம் முதல் ஒரு நாளைக்குச் ச ரா ச ரி நூறு இலுப்ட்வாப (Luftwatte) விமானங்கள் இங்கிலந்தின் கப்பல்கள், துறைமுகங்கள் முதலியவற்

Page 240
440 புது உலக சரித்திரம்
றின் மீது குண்டுக%ளப் பொழிந்தன. நாளடைவில் விமானங்களின் எண்ணிக்கை 200 ஆகவும் 500 ஆகவும் அதிகரித்து, ஆகத்து முடி வில் ஒரு தினம் 1000 விமானங்கள் இங்கிலந்தின் விமானத் தளங் கள், ஆர். ஏ. எப் ஐயும் அதன் நிலையங்களையும், இலண்டன் நகரம், இலண்டன் துறைமுகம் முதலியவற்றைத் தாக்கின. இதன் பின்னர் நாட்டின் ஏனைய பிரதான நகரங்களும், துறைமுகங்களும் செர் மானியரின் குண்டு வீச்சுக்குக் குறியாயின. அடுத்த சில வாரங்களில் சவுத்தம்ரன், செப்பீல்டு, பேர்மிங்காம், பிறித்தல் (Bristol), இலி வப்பூல் போன்ற நகரங்கள் முறை முயைாக 500 க்கு மேற்பட்ட விமானங்கள் மணித்தியாலக் கணக்காகக் குண்டுகளைப் பொழிந்து பெரும் அழிவை விளைவித்தன. இலண்டன் நகரமே அதி கடுமையான தாக்குதலுக்கு இலக்காயிற்று செற்றம்பர் 7 முதல் நவம்பர் 3 வரை, 57 இரவுகளிலும் இலண்டன் தொடர்பாக, சில நாள்களில் பகலி லும் ஒய்வின்றிக் குண்டு வீச்சினல் தாக்கப்பட்டு, தரை மட்டமா யிற்று.
எனினும் இலுப்ட்வாப் இங்கிலந்தையோ அதன் மக்களின் மன உறுதியையோ அழிக்க முடியவில்லை. 1941 சனவரி முதல், இங் கிலந்தும் கடுமையான ஓர் எதிர்த்தாக்குதலை ஆரம்பித்தது. பேளின், இடான்சிக், பிறெமன், உறுார் போன்ற செர்மன் நகரங்கள் இலண் டனின் கதியை அடைந்தன. இவ்வாறு பிரித்தானியப் போருடன், இற்லரின் தொடர்பான வெற்றிகளின் வரலாற்றில் முதல் முறிவு ஏற்பட்டது.
மத்தியதரைப் போர்க்களம் :
இத்தாலியின் போர்ப் பிரவேசம், பிரான்சின் வீழ்ச்சி, சிபெயின் செர்மணியுடன் ஒன்று சேரக் கொண்ட எண்ணம், யாவும் ஒருங்கு கூடி மத்தியதரைப் பிரதேசத்தில் நிலவிய அரச வலுச் சம நிலையைக் குலைத்தன. இங்கிலந்து, தன் பேரரசின் நிலையைப் பாதுகாப்பதற் கும், எகித்து, ஏடன், இந்தியா, கிழக்கு ஆபிரிக்கா முதலாம் இடங் களுக்குச் செல்லும் பாதையைக் காவல் பண்ணவும், மத்திய தரைப் பிராந்தியம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததென உணர்ந்தது. ஆரம்பம் தொட்டேசேச்சில், இதன் கேந்திரத் தன்மையை உணர்ந்த மையினல், இது முக்கியத்துவம் வாய்ந்த நான்கு போர் முனைகளில் ஒன்ருக இடம் பெறலாயிற்று.
இத்தாலியின் எகித்திய படையெடுப்பு செற்றம்பர் 13 ஆம் நாள் ஆரம்பமாகியது; இத்தாலிய படைகள் இலிபியா பாலைவனத்திலிருந்து எகித்தின் எல்லைப்புறங்களைத் தாக்கின. பின்னர் போர் நான்கு மாத காலம்சிடி பருனியில் (Sidi Barrani) சம நிலையைப் பெற்றது, திசம்பரில்

இரண்டாம் உலகப் போர் 44五
வேவலின் (Wavel) பிரித்தானியச் சைனியங்கள் சிடி பருனியில் திடீர்த் தாக்குதலைத் தொடக்கி, இத்தாலியரைத் துரத்தியவண்ணம் முன் னேறி, 1941 மார்ச் அளவில் இத்தாலிய சிறனேக்கா (Cyremaica) வை முழுமையாக வெற்றி கொண்டன. ஏப்ரிலில் தளபதி உருெமலின் (Marshal Rommel) 8b செர்மன் துருப்புக்கள் கப்பல்களிலும் விமானங் களிலும் வந்திறங்கவே, பிரித்தானியரின் முன்னேற்றம் தடைப்பட்டது.
1941 இன் ஆரம்பத்தில் சூடானிலும் கெனியாவிலுமிருந்து பிரித் தானியப் படைகள் முன்னேறி சோமாலிலந்து, எறித்திறியா, கிழக்கு ஆபிரிக்கா முதலாம் இடங்களிலிருந்து இத்தாலியரை வெளியேற்றின. இங்ங்னம் ஆபிரிக்கப் போர் முனையில் ஆரம்ப வெற்றிகள் பிரித் தானியருக்கே உரித்தாயின.
முசோலினியின் கிரேக்க படையெடுப்பு :
ஒரு சிறு தீப்பொறிதானும் ஐரோப்பாவில் பெ ரும் தீயை மூட்ட வல்ல போல்கன் பிரதேசத்தில் இரசிய முன்னேற்றமும், இத் தாலியின் பேராசைகளும் ஒன்றேடொன்று பொருதி நின்றன. அவை தம் திட்டங்களைத் தடை செய்ய வல்லன என அறிந்திருந்த இற்லர், போல்கன் பிராந்தியத்தில் முசோலினி, தலையிடலாகா தென ஏற் கனவே எச்சரிக்கை செய்திருந்தார். ஆனல் செர்மனியினதும் இரசி யாவினதும் அளப்பரிய வெற்றிகளைக் கண்டு பொருமை கொண்ட முசோலினி, 1940 ஒற்ருேபர் 28 இல், இற்லரின் ஆலோசனையின்றி கிறீசின் மேல் பாய்ந்தான். கிறீசின் இராணுவம் சிறியதாயினும், அது வீரத்துடன் சமர் புரிந்து, இத்தாலியரை அல்பேனியாவுக்கு அடித்துத் துரத்திற்று.
இரசியா மீது ஒரு பெரும் படையெடுப்பை நடாத்தத் திட்ட மிட்டுக் கொண்டிருந்த இற்லர், போல்கன் பிராந்தியத்தைத் தன் ஆணையின் கீழ் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை நன்குணர்ந் தார் ; இத்தாலியருக்கு கிறீசிலும் வட ஆபிரிக்காவிலும் உதவி புரி யக் கடமையும் பட்டார். இற்லர், தன் படைகளை அங்கேரி, பல் கேரியா எனும் இராச்சியங்களினூடாக நடாத்திச் சென்ற வேளை யில், யூகோசிலாவியா அவரது முன்னேற்றத்தைத் தடை செய்ய முனைந்தது. இற்லர் உடனே அதனை இரு கிழமைகளுக்குள் வெற்றி கொண்டு, நண்பர்களுக்கிடையே பகிர்ந்தார். அதன் பின்னர் கிறீ சுக்குள் புகுந்தார். ஆல்ை, ஏற்கனவே பிரித்தன், கிரேக்கரின் விருப் பங்களுக்கு மாறகத் தன் ஆபிரிக்க படைகளின் ஒரு பகுதியைக் கிறீ சுக்குள் திருப்பி, ஒரு போல்கன் போர் முனையை ஏற்படுத்திற்று,

Page 241
442 புது உலக சரித்திரம்
ஆனல் செர்மன் துருப்புக்கள், ஆங்கில-கிரேக்க படைகளின் எதிர்ப்பை சீக்கிரம் மேற்கொண்டு, இன்னுமொரு இடன்கேக்குப் போன்ற நிகழ்ச்சியில், ஏப்ரில் முடிவில், 44,000 போர் வீரர்களைக் கிறீசிலிருந்து வெளியேற்றின. 1941 யூன் மாதம், பிரித்தானியர் கிறீற் தீவிலும் ஒர் எதிர்ப்பை உண்டு பண்ணி, அங்கும் தோல்வியே கண்டனர்.
ஐரோப்பாக் கண்டத்தில் செர்மனியின் எதிரிகளின் கைவசம் ஓர் அங்குல நிலம்தானும் இல்லாத நிலையைக்கண்டு, இற்லர் இறுமாப் பும் பெருமிதமும் கொண்டார்.
செர்மனி, இரசியாவின் மேற் பாய்தல் :
1939 ஆகத்தில் உண்டான இரசிய-செர்மன் நட்புறவு முதல், இரு நாடுகளும் பொருளாதார, இராணுவத் துறைகளில் பூரண ஒற்றுமையுடன் ஒத்துழைத்து வருவதாக வெளிப்பார்வைக்குப் பட் டது ; ஆனல் உள்ளே இரு நாடுகளின் உள்ளங்களிலும் பொருமை யும், அவநம்பிக்கையும், அச்சமும் நாளாந்தம் வளர்ந்து கொண்டே வரலாயின. புது நிலங்களை வெற்றி கொண்டு முன்னேறி வந்த இரு நாடுகளும், போலந்தின் பங்சிடடினல் ஒரு பொது எல்லையைப் பெற்றன. ஆகத்து உடன்பாட்டின் விதிகளை மீறி, போல்த்திக்கு, போல்கன் இராச்சியங்களே ஆக்கிரமித்த இரசியா, மேலும் ஆக் கிரமிப்புத் திட்டங்களைக் கொள்வதைக் கண்டு, இற்லர் ஐயமும் கோப மும் கொண்டார். மறுபுறம் சிற்ருலினும் செர்மனியின் போல்கன் பிராந்தியத் தலையீட்டை ச ந் தே க க் கண்களுடன் நோக்கினர் ; 1940 இல் அச்சு-தோக்கியோ உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்ட பொழுது அவரது ஐயம், உறுதியாயிற்று.
போல்கன் அமைதியீனத்தின் மறைவில், இரசிய எல்லைகளில் அணிவகுத்து நி ன் ற செர்மன் படைகள், 1941 யூன் 22 இல், சோவியற் யூனியனை நான்கு முனைகளில் தாக்கின : இரசிய-செர் மன் போர் மூண்டது. செர்மன் படைகளோ எதிர்ப்புக்களை தகர்த் தெறிந்த வண்ணம் மிக விரைவில் முன்னேறின. ஆகத்து மத்தியில் ஒரு படை சுமொலன்சுக்கை (Simolensk) அடிபணியச் செய்து : மொசுக்கோவை நோக்கி கால் எடுத்து வைத்தது ; இரண்டாவது படை, கீவ் (Kiew) நகரத்துக் கருகாமையை அடைந்தது ; வடக்கே மூன்றுவது படை, இலெனின் கிமூடை நோக்கி ஊடுருவிச் சென்றது. தெற்கே நான்காவது படை, ஒடேசா (Odessa), கெர்சன் (Kherson) நகரங்களைக் கைப்பற்றி, நீப்பர் நதியைக் கடந்தது. மாரிகாலத்தில் இரசியாவில் அகப்படலாகாதெனத் திட்டமிட்ட இற்லர், அதி விரை

இரண்டாம் உலகப் போர் 443
வான முன்னேற்றத்தைக் கட்டளையிடவே, நவம்பர் மாதம் செர்மன் துருப்புக்கள் மொசுக்கோவின் கிறெம்லினைக் கண்டனர். ஆனல் இர சியா, வீரத்துடன் போர் புரிந்து தன் தலைநகரைக் காத்தது.
திசம்பர் 7 ஆம் நாள், இற்லர் மாரிகாலப் போரை நிறுத்து மாறு கட்டளை பிறப்பித்தார். அன்று தினம், இரசியர் செர்மனி யருக் கெதிராக “வன்மையான தாக்குதலை ஆரம்பித்துக் கடும் நட் டத்தை விளைவித்தனர். செர்மன் படைகள் நிலை தடுமாறும் வேளை யில் இற்லர் நேர்முகமாகத் தலையிட்டு, செர்மன் நிலைகளை ஒரு பூர ணமான பின்வாங்கலிலிருந்து உறுதிப்படுத்தினர். 1942 மார்ச் வரை யில் இரசியா 500,000 சதுர மைல் நிலத்தைப் பகைவர்களிட மிருந்து மீட்டது. குளிர் காலம் முடிவடையவே இரசியாவின் முன் னேற்றமும் தடைப்பட்டது.
இதுகாலம் வரை இங்கிலந்தினதும் நேச நாடுகளினதும் பகை வனக இருந்த இரசியா, நண்பனக மாறியதுடன், முழுச் சர்வதேச நிலையும் உருமாறியது. பிரித்தன், சிற்ருலினுடன் அரசியல் தொடர்பை ஏற்படுத்தி, இரசியாவுக்குப் பொருளுதவி தர முன் வந்தது. அமெரிக் காவும், இரசியாவின் உணவு, தளபாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இணங்கிற்று. பேர்சியாவுக் கூடாக இரசியாவுக்கு ஒரு புது வழி திறக்கப் பட்டது.
மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா :
செர்மனியின் தூண்டுதலில்ை புரட்சி ஏற்பட்டு, 1941 ஏப்ரில் 3 ஆம் நாள், செர்மன்-ஈராக் நட்புறவு எழுந்தது. செர்மனி, ஈராக் கின் மண்ணெய்க் கிணறுகளை பிரித்தானியரின் ஆதிக்கத்திலிருந்து கைப்பற்றியது. ஆனல் மே மாதத்துக்குப் பின் ன ர் ஆங்கிலரும், பிரெஞ்சு டி கோல் படைகளும் ஒற்றுமையாக ஈராக், சீரியா, ஈரான் ஆகிய நாடுகளை முற்றுகையிட்டு வெற்றி பெற்றனர். மேற்கு ஆசி யாவில் செர்மனியின் செல்வாக்கு அறவே துண்டிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக உறவு நாடுகளின் ஆதிக்கம் ஓங்கியது.
வட ஆபிரிக்காவில், உருெமலின் (Rommel) வருகையுடன் நேச நாடுகளின் நிலை அபாயத்துக் குள்ளாயிற்று, அச்சு நாடுகள் பிரித் தானியர் கைப்பற்றியிருந்த நகரங்கள் யாவையும் ஒன்றன்பின் ஒன் முக மீட்டு முன்னேறின. 1941 நவம்பரில் பிரித்தானியத் தாக்குதல் மீண்டும் புது உத்வேகம் பெற்று வலுவடைந்தது ; பிரித்தானிய ஆகாய விமானங்கள் அச்சு நாடுகளின் நிலையங்களை உக்கிரமமாகத் தாக்கின உருெமலின் ஆபிரிக்கப்படை (Afrika Korps) தோற் கடிக்கப்பட்டு, செர்மானியர் சிறனேக்காவிலிருந்து துரத்தப் பட் LGÖTT.

Page 242
444 புது உலக சரித்திரம்
பேள் ஆபரும் பசிபிக் போரின் ஆரம்பமும் :
செர்மனி, இரசியாவைத் தாக்கித் துரிதமாக வெற்றிகளை ஈட்டி முன்னேறுவதையும், ஐரோப்பியப் பேரரசுகள் தம் ஆசிய ஏகாதிபத் தியங்களைப் பாதுகாக்க முடியாத நிலையிலிருப்பதையுங் கண்ட யப் பான், பசிபிக்கில் எஞ்சி நின்ற வல்லபம் பொருந்திய அமெரிக்க ஐக் கிய அரசைத் தாக்கத் துணிந்தது. 1941 திசம்பர் 7 ஆம் நாள், யப்பானிய விமானங்கள் பேள் ஆபர் என்ற அமெரிக்கக் கப்பற் படைத் தளத்தைத் தாக்கின. அதே நேரத்தில் ஏனைய ஐரோப்பிய குடியேற்ற நாடுகளையும் ஆக்கிரமித்த யப்பான், ஆறு மாத காலத் தினுள் தென்கிழக்கு ஆசியாவின் அதிபதியாயிற்று. யப்பானின் இச் செயல் அமெரிக்காவைப் போரில் நேர்முகமாக ஈடுபடச் செய்து, போரை ஓர் அகில-உலகப் போராக்கியது.
பேள் ஆபரில் அமெரிக்கக் கப்பற்படையை மூழ்கச் செய்த யப் பானியப் படைகள், குவாம், வேக் ஏனைய அமெரிக்க பசிபிக் தீவு கள் அனைத்தையும் ஆக்கிரமித்தன. ஆசிய கண்டத்தில், யப்பானியர் சாங்காய், ஒங்கொங்கு, வட மலாயா முதலாம் பகுதிகளுக்குள் நுழைந்தனர் அவர்கள் பிரித்தன், நெதலந்து ஆகிய நாடுகளுக் கெதிராகவும் போர்ப் பிரகடனம் செய்தனர் : திசம்பர் 11 ஆம் நாள், செர்மனியும் இத்தாலியும் யப்பானுடன் ஒன்று சேர்ந்து, அமெரிக்கா மீது போர்க்கணை தொடுத்தன.
1941 மாரி காலத்தில், யப்பானின் முன்னேற்றத்தைக் கண்டு உலகமே பிரமிப்படைந்தது. நத்தார் தினத்தன்று ஒங்கொங்கும் சர வாக்கும் அடிபணிந்தன. சில கிழமைகளுக்குள் இந்தோச் சீனு, தாய்லந்து, மலாயா, பிரித்தானிய, டச்சு கிழக்கிந்தியத் தீவுகளான சுமாத்திரா, போனியோ, சரவாக், செலிபீசு எங்கும் யப்பானின் *சூரியக்” கொடி பறந்தது ; பிரித்தானிய சிங்கப்பூரின் வீழ்ச்சியின் பின்னர், 1942 சனவரி 15 இல், பர்மா மீது படையெடுப்பு ஆரம்ப மாகியது ; மார்ச் 8 இல் இறங்கூன் (Rangoon) சரணடைந்தது ; ஏப்ரிலில் அமெரிக்கரிடமிருந்து பிலிப்பைன் தீவுகள் பறிக்கப்பட்டன. யப்பான், ஒசுத்திரேலியத் துறைமுகங்களின் மீதும் குண்டுகளை வீசி அக்கண்டத்தையும் ஆக்கிரமிக்கப்போவதாக மிரட்டியது : ஏப்ரிலில் இலங்கையிலும் குண்டுகள் வீழ்ந்தன. யப்பானியக் கப்பல்கள், வங் காள விரிகுடாவுக்குள் பிரவேசித்த பொழுது, இந்தியாவும் ஆக்கிர மிப்புக்குத் தயாராகியது. மே மாதம் முதலாம் நாள், பர்மா அந் நியரின் கைவசமாயிற்று ; தாய்லந்து யப்பானுடன் ஒத்துழைக்கச் சம்மதித்தது. தென்கிழக்கு ஆசியாவிலும் மேற்கு பசிபிக்கிலும் பூரண வெற்றிகண்ட யப்பான், இப்பிராந்தியத்தின் அதிபதியானது.

445
Goys' G3Luntrit
TGOJOT LITLD 2
இ
(¿?-6861) soos arī Igogosuriņrn qoopfig dae
s
திராகத்
ககுப
அதி விசாலமான
ற்கெ *வெள்ளை மனித
وتقييم Tلإ6
2 ங்க T
ல்
அது மகக
தி திய அதே ஆயுத
ఉుడి),
த்
னின்' கொடூர ஆட்சியிலிருந்து விடுவிக்கும் பெயரிலேயே தூரகிழ
ல் வேக
மின்ன ன்படுத் ம் செல்லவி
ன்,
l I Ul II
8
--
ம் யப்பா
所
எனினு வெற்றிகளை
திரும்ப அதி நேர

Page 243
448 புது உலக சரித்திரம்
பிராந்தியத்தின் இரப்பர், எண்ணெய், வங்கம் (Tin) முதலிய பொருள் கள் விலையும் நாடுகளை வெற்றிகொண்டு அவற்றைக் கைப்பாவைகளி ல்ை ஆட்சி செய்ய ஏற்பாடுகள் செய்தது. இவ்வாறு தோற்றம் பெற்ற புது ஏகாதிபத்தியத்தில் காயங்களை விளைவிக்க நூறு பல வீனமான இடங்களிருந்தன. சீனவில், சுங்கிங் அரசாங்கம் இன்னும் யப்பானை எதிர்த்தே போராடி வந்தது. அமெரிக்க விமானங்கள், அசாம் வழியாக ஏராளமான பொருளுதவியை ஈந்தன. 1942 கோடை காலத்தில் அமெரிக்க விமானங்கள் தோக்கியோ வைத் தாக்க ஆரம் பித்தன. ஆகத்து 7 இல் அமெரிக்க கடற்படையொன்று சொலமன் தீவுகளில் வந்திறங்கியது, அதன் நான்கு கப்பல்களை (Cruisens) யப் பான் குவாடல் கால்வாயில் மூழ்கடித்தது. இதைத் தொடர்ந்து தரையிலும், கடலிலும், வானிலும் கடும்போர் நிகழ்ந்தது ; 1943 பெப்ரவரியில் யப்பானியர் சொலமன் தீவுகளிலிருந்து வெளியேற்றப் பட்டனர். ஒசுத்திரேலிய துருப்புக்கள் எதிரிகளை நியூகினியிலிருந்து துரத்தினர். இவ்வாறு 1942 இன் இறுதிமுதல் தூரகிழக்கில் யப் பானியரின் கொடி பல நாடுகளிலிருந்து இறக்கப்பட்டது.
சிற்ருலின் கிராட்டுப் (Staligrad) போர் :
ஆபிரிக்காவிலும், தூர கிழக்கிலும் வெற்றிமேல் வெற்றியைக் கண்ட இற்லர், இரசியப் போர் முனையில் ஒரு திடமான முடிபைக் காண வேண்டு மென்று திட்ட மிட்டார். புது இரசியத் தாக்குதலை ஒரு குறுகிய முனையில் நடாத்தி, இரசியப் படைகளை முறியடித்து, காக்காசசு வழியாக எகித்திலிருந்து முன்னேறி வரும் உருெமலைச் சந் தித்து, மத்திய கிழக்கில் தன் ஆதிக்கத்தை நிலை நாட்ட வேண்டு மென்றே மனக் கோட்டை கட்டினர்.
1942 மே மாதம் புதுப்படை யெடுப்பு ஆரம்பமாயிற்று ; யூலை முதல் தேதியன்று செபத்தைப்போல் வீழ்ந்தது ; ஆகத்தில் சிற்ரு லின் கிராட் என்ற பிரதான நகரம் முற்றுகையிடப்பட்டது. இங்கு இரு மாதங்களாக இரசியப் போரின் விளைவை நிர்ணயிக்க வ ல் ல க டு ஞ சமர் நடந்தே ஹி யது. இர சி ய ரு ம் தம் முழு வலி மையையும் உறுதியையும் பயன்படுத்தி நகரைக் காத்தனர். 1942 நவம்பர் 22 இல், இரசியர்கள் மாரி கால எதிர்த்தாக்குதலை ஆரம் பித்து, சிற்றலின்கிராடுக்கு வடக்கிலும் தெற்கிலும் செர்மன் ஆரும் படையைத் துண்டித்து, 1943 சனவரி 31 இல் அதனைச் சரணடை யச் செய்தனர். செர்மனி, இதுவரை அ  ைட ந் த தோல்விகளில் இதுவே அதி முக்கியமானது. அன்று தொட்டு இரசியர் படிப் படி யாக செர்மனியரின் பலத்தை முறித்து, முன் இழந்த நகரங்களை ஒவ் வொன்முக மீட்டு, நவம்பர் 13 இல், போலந்தின் எல்லையிலிருந்து 60 மைல் வரை முன்னேறினர்.

இரண்டாம் உலகப் போர் 447
வட ஆபிரிக்கப் போர் முனை :
1942 இன் ஆரம்பந் தொட்டு உருெமல், “ஆபிரிக்க படைகள்' (Afrika Korps) என்ற பெயர் போன செர்மன் சைனியங்களுடன் பிரித்தானியரைத் தோற்கடித்து, யூன் மாதம் தொப்றுக் (Tobruk) என்ற நகரை 20,000 கைதிகளுடன் கைப்பற்றினர் ; பிரித்தானியர் பழையபடி எகித்துக்குள் பின் வாங்கினர் ; அதி சிரமப்பட்டு யூலை மாதம், செர்மானியரின் முன்னேற்றம். எல் அலமெயின் (El Alamein) எனுமிடத்தில் நிறுத்தப்பட்டது. -
கிழக்கு முனையில் செர்மன் தாக்குதலின் வன்மையைக் குறைப் பதற்காக, மேற்கு ஐரோப்பாவில் ஒரு போர் முனையை அமைக்கு மாறு சிற்றலின், சேச்சிலையும் உறுாசுவெல்ற்றையும் ஒயாது வற் புறுத்தினர். ஐரோப்பாவில் புது முனையை அரம்பிப்பது சாத்திய மற்றது என உணரப்பட்டமையினல், புது ஆக்கிரமிப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது.
எல் அலமெயின் போருக்குப் பின்னர், உருெமலும், நேசநாடு களும் ஒர் உக்கிரமமான மோதுதலுக்குத் தயாராயினர். மூன்ரு வது படைக்கு (Third Army)த் தலைமை தாங்கிய மொன் கொமறி (Monegomery) ஒற்ருேபரில் எல் அலமெயினில் எதிர்த்தாக்குதலை ஆரம்பித்தார். நவம்பரில் உருெமலின் படைகள் தடுமாற ஆரம் பித்த காலத்தில், அமெரிக்கப் படைகள் வட ஆபிரிக்காவின் கரை களில் வந்திறங்கி, அச்சுநாட்டுப் படைகளைத் தூனிசியா (Tunisia) வரை துரத்திச் சென்றன. அபாயத்தைக் கண்ட இற்லர், பிரான்சின் வழியாக தூனிசியாவுக்குள் ஏராளமான படைகளைக் கொட்டி, நேச நாட்டினரின் முன்னேற்றத்துக்கெதிராக அணைகட்ட முயன்ருர், எனினும் நீண்ட ஆறுமாத கால போருக்குப்பின் செர்மன் படைகள் தூனிசியாவில் சரணடைய ஆயத்தமாயின ; மறுபுறம் மொன்கொம நீயும் உருெமலை கிழக்கிலிருந்து தூனிசியாவரை துரத்திக்கொண்டு வந்தார். ஈற்றில் இரு புறங்களிலும் நசுக்கப்பட்ட உருெமலும் அச்சு நாட்டுப் படைகளும், மே 13 ஆம் நாள், 250,000 கைதிகளுடன் அடிபணிந்தன.
சிசிலிய இத்தாலியப் படையெடுப்பு :
வட ஆபிரிக்காவில் பூரண மெற்றி கண்ட நேச நாட்டினர், “அச்சு நாடுகளின் மென்மையான அடிவயிற்றை'த் தாக்குதற்காக, சிசிலி மீது படையெடுக்க ஆயத்தமாயினர். நீண்டகால குண்டு வீச் சின் பின்னர், நேசநாட்டுத் துருப்புக்கள் 1943 யூலை 9 இல் சிசிலிக் குள் பிரவேசித்து, தீவை முற்றுகையிட்டு ஆகத்து 17 இல் அதனைக் கைப்பற்றின.

Page 244
448 புது உலக சரித்திரம்
வட ஆபிரிக்காவின் வீழ்ச்சியையும் சிசிலியின் முற்றுகையையும் கண்ட இக்தாலியர், தம் நாட்டில் குழப்பக்தை உண்டு பண்ணி யூலை 26 இல் முசோலினியைக் கைகியாக்கினர். ஆல்ை இற்லரின் படைகள், அவரை மீட்டு லொம்பாடியின் அதிபதியாக்கினர். விற் றர் இம்மானுவேலின் கட்டளைப்படி புதுப் பிரதமரான படோக் லியோ (Badoglio) நேசநாட்டினருடன் இரகசியச் சமாதான பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து, செற் றம்பர் 3 ஆம் நாள் போர் நிறுத்த உடன்படிக்கையை ஒழுங்கு செய்தார். மன்னனின் சூழ்ச்சியை அறிந்த செர்மானியர், இத்தாலிய துருப்புக்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிக் து, அவர்களை ஆயிரக்கணக்கில் கூலிவேலை செய்ய செர்மனிக்கு அனுப்பி, உருேமைக் கைப்பற்றி, முழுத் கீபகற்பக்கையும் தம் அதி காரத்தின் கீம் நிருவகிக்தனர். தென் இத்தாலியில் இறங்கிய நேச நாடுகளின் துருப்புக்கள். இத்தாலியினூடாகப் பவனி போல், முன் னேறலாமெனக் கொண்ட எண்ணம் பகற் கணவர்யிற்று இதற்கு எதிர்மாருக அவை கடும் போர் புரிந்த பின்பே எவ்வொரு சாகை முன்னேற முடிந்தது. 1944 யூன் 2 இல், உருேமாபுரி கைப்பற்றப்
it -t-.5/ மேற்குப் போர்முனையில் அமெக்கரின் தோற்றம :
1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பேளினில் இரவுபகலா கக் குண்டு மழை பொழிந்தது. ஆயிரக்கணக்கான அமெரிக்க, பிரிட் டிசு விமானங்கள் தமது சுமைகளைப் பேளினுக்கு மேல் கவிழ்த்துக் கொட்டிவிட்டுத் திரும்பின. குண்டுமழை ஒயத் தொடங்கியதும், நீண்டகாலமாகத் தயார் செய்யப்பட்டிருந்த நேச நாடுகளின் மேற்குத் தாக்குதல் யூன் மாதம் 6 ஆம் நாள் ஆரம்பமாயிற்று. நோமண்டி (Normandy) க் கரையில் 50 மைல் நீளமான பிரதேசம் கடும் விமானத் தாக்குதலில்ை சுத்திகரிக்கப்பட்ட பின்னர், 4,000 கப்பல்கள் துருப் புக்களை இறக்கின. கொற்றென்றின் (Cotentin) தீபகற்பம் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர், நேசநாட்டுப் படைகள் விசிறிபோல மின் வேகத்தில் முன்னேறின. யூலை 26 இல் அமெரிக்கக் கவசப்படைகளும் வந்திறங்கிய மூன்று வாரங்களுக்குள், செர்மானியர் பிரான்சையும் பரிசையும் விட்டுப் பின்வாங்கினர். அமெரிக்கர் பெல்சியத்தினுள்ளும் தென் ஒல்லாந்தினுள்ளும் நுழைந்தனர். செற்றம்பர் 15 அளவில் நேச நாடுகள் பிறசல்சு, அந்துவேப்பு, இலக்சம்பேக் முகலாம் நகரங் களைக் கைப்பற்றி, செர்மன் எல்லைகளை நோக்கி விரைந்தன. இரசிய வெற்றிகள் : W
இதற்கிடையில் கிழக்கு முனையிலும் இரசியா, கொடர்பான பல வெற்றிகளை ஈட்டியது. அது பின் லந்து, உறுர மேனியா, பல்கேரியா எனும் மூன்று நாடுகளையும் தாக்கி, போரிலிருந்து விலகச் செய்தது ;

இரண்டாம் உலகப் போர் 449
பெசரேபியா, பியூக்கோவின, போல்த்திக்கு இராச்சியங்கள் வெற்றி கரமாக மீட்கப்பட்டன. 1945 சனவரியில் உவாசோ இரசியரின் கையில் சிக்குண்டது : பெப்ரவரி 12 இல் அங்கேரி அடிபணிந்தது, யூகோசிலாவியாவில் இரசியாவினல் பயிற்றப்பட்ட தீற்குே (Tito) வெற்றி பெற்றர்.
Luf? Sj (8 UT :
இக்காலத்தினுள் தூரகிழக்கிலும் யப்பானின் வலிமை குன்ற ஆரம்பிக்கவே, யப்பானியரைத் தம் இடங்களிலேயே தாக்க நேச நாடு கள் ஏற்பாடுசெய்தன. 1944 முதல், ஆள் பலத்திலும் பொருள் பலத்தி லும் வலிமை பெற்ற நேச நாட்டுப் படைகள், பாதுகாப்பு முறைக%ளக் கைவிட்டு, எட்டுத் திக்குகளிலும் எதிர்த் தாக்குதல்களை ஆரம்பித் தன. சொற்களினல் வருணிக்க முடியாத கடுஞ்சமர் புரிந்து, அமெ ரிக்கர் பசுபிக் தீவுகளை ஒவ்வொன்முக மீட்டனர். சனவரியில் மாசல் தீவுகள், யூனில் மரியானசு தீவுகள், செற்றம்பரில் பாலோ தீவுகள், திசம்பரில் பிலிப்பைன் தீவுகளில் சிலுமுறையே மீட்கப்பட்டன.
1945 பெப்ரவரியில் லூசான் தீவு தாக்கப்பட்டு வீழ்ந்தது : யூலையில் பிலிப்பைன் தீவுக் கூட்டம் முழுமையாக அமெரிக்கருக் காயிற்று; போனியோ ஆக்கிரமிக்கப்பட்டது. அதே நேரத் தில் பிரித்தானியப் படைகள் பர்மாவை ஊடுருவிச் சென்றன. அடுத்தபடியாக, அமெரிக்கர் யப்பானியரைத் தம் “வீட்டிலேயே’ தாக்கக் கூடிய விலிமையைப் பெற்றனர். ஈவோ, ஒக்கினவாத் தீவுகள் கைப்பற்றப்பட்டு, அங்கு விமானத் தளங்கள் அமைக்கப்பட்டதன்மேல் அத் தளங்களிலிருந்து புறப்பட்ட விமானங்கள், யப்பானிய நகரங்கள் மேல் ஓயாது குண்டுகளைச் சரமாரியாகச் சொாந்தன.
செர்மனியின் நிலைகுலைவு :
நேச நாடுகளின் ஓய்வற்ற விமானத் தாக்குதலினலும், பல முன்ை களிலும் செர்மனிக்கு உண்டான தோல்விகளினலும், செர்மன் மக்க ளின் பூரிப்பும் உறுதியும் திடமான சித்தமும் மறைந்தன ; அரசாங் கத்துக்கெதிராகப் பகைமை முளை கொண்டது. 1944 யூலை 20 இல் இற்லரைக் கொலை செய்வதற்குக் கையாளப்பட்ட சதித்திட்டம் வெற்றி பெறவில்லை. இற்லரும், மதியிழந்த மனிதனைப்போலப் பழி வாங்கி, இராணுவத்தை அடக்கி, அதனைத் தன் சித்தத்துக்கு அடி
பணியச் செய்தான்.
1945 இல் ஆரம்பமான நேச நாடுகளின் விசாலமான தாக்குத
லுடன் செர்மனியைச் சுற்றி நாலா பக்கங்களிலும் வட்டம் ஒடுங்கத்
தொடங்கியது. கொலோன், இறைன், உறுார் பிரதேசங்கள் முறையே
உ~ச 31

Page 245
450 புது உலக சரித்திரம்
வீழ்ந்தன. இரசியா, கிழக்கிலிருந்து பிரசியா, வியன்ன, இலீப்சிக், சைலீ சியா என்பவற்றை ஒன்றன்பின் ஒன்ருகக் கைப்பற்றி, ஏப்ரில் 23 இல் பேளினிலிருந்து 30 மைல் தூரம்வரை முன்னேறியது.
இரு மருங்கிலும் தாக்கப்பட்ட செர்மானியர் சரணடைய ஆயத்தமாயினர். பேளினில், இற்லர், ஒரு நம்பிக்கையையிழந்த சூதாட்டக்காரனைப் போன்று, மே முதலாம் நாள், தன் இறுதித் திட்டத்தை ஆயத்தப்படுத்தினர். அன்று தினம், ஈவா பிருன் (Evs Braun) என்ற பெண்மணியை மணம் புரிந்த தன்மேல் இருவரும் தற் கொலை புரிந்து கொண்டனர். இருவரினதும் சடலங்கள் மண்ணெய் ஊற்றப்பட்ட கட்டைகளில் சுட்டெரிக்கப்பட்டன. "உலகையாளப் பிறந்தவன் நான்' என்று இறுமாப்புக்கூறிய இற்லர், ஒரு பிடி சாம்பலானன்.
இற்லரின் மறைவுடன் செர்மன் இராணுவம் முழுமையாக எங் கும் சரணடையத் தொடங்கியது. மே 2 இல், பேளின் நகரம் இரசி யர் கைவசமாயிற்று ; அதே தினம் இத்தாலி நிபந்தனையின்றிச் சர ணடைந்தது. இறெயிம்சு எனுமிடத்தில் செர்மன் தரை, கடல், ஆகாயப் படைகள் நேச நாட்டுத் தளபதிகளுக்கு அடிபணிந்தன. இதைப் போன்ற ஒரு பிரமாண்டமான தோல்வியை ஐரோப்பிய வர லாறு என்றும் கண்டதில்லை. நாற்சி இராட்சதன் அடித்து வீழ்த் தப் பட்டான்.
போரினல் ஏற்பட்ட பேரழிவின் விளைவாக, செர்மனி ஒரு சுடு காடாகவும் இடுகாடாகவும் மாறியது. பட்டினம், நகரம் எனக் குறிப் பிடப் பட்டிருந்த ஒவ்வோர் இடமும் ஏறத்தாழத் தரைமட்டமாக் கப்பட்டிருந்தது. இந்த மாயானச் சூழ் நிலையில் தான் நேச நாட் டுப் படைகள் எட்டுத் திக்குகளிலுமிருந்து செர்மனிக்குள் வெற்றி முரசுடன் பிரவேசித்தன. போரினல் 50 இலட்சம் குடியிருப்பு இல் லங்கள் நாசமாக்கப் பட்டன என்று மதிக்கப்பட்டது. “உலகாள" எண்ணிய செர்மன் மக்கள், பொருளாதார வாழ்வை இழந்தவர் களாய், எதிர் காலம் அற்றவர்களாய், குற்றுயிர் நிலையில் சரணுகதி யடைந்தனர். யப்பானின் தோல்வி :
துார கிழக்கிலும் 1945 ஆகத்தில், முடிபு சடுதியாக வந்தது. அம். மாதம் 6 ஆம் நாள், அமெரிக்கா இருே சீமா (Hiroshima) என்ற நகரத்தின் மேல் அணுக்குண்டை வீசி, 80,000 பேரை அழித்தது ; நகரத்தின் நான்கு சதுர மைல் பிரதேசம் நாசஞ் செய்யப்பட்டது. 8 ஆம் நாள், இரசியா, யப்பானுடன் செய்திருந்த நடுநிலை ஒப்பந் தத்தை நிராகரித்து, போர்ப்பிரகடனம் செய்யலாயிற்று. 9 ஆம்

இரண்டாம் உலகப் போர் 451
நாள். நாகசக்கி (Nagasakt) என்ற நகரத்தின் மேல் இரண்டாவது அணுக்குண்டு வீழ்ந்தது. அணுக்குண்டுகளின் அளப்பரிய அழிவுச் சக் தியைக் கண்டு யப்பானியர் திகிலடைந்தனர் : 14 ஆம் நாள், யப் பானிய அரசாங்கம் நிபந்தனையின்றிச் சரண்புகுந்தது. சமாதான உடன்படிக்கைகள் :
போர் நட்ைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே நேச நாடு களின் (பிரித்தன், இரசியா, அமெரிக்கா) தலைவர்கள், தெகிருன் (1943), யால்த்தா (1945), பொட்சு டாம் (1945) எனும் இடங்களில் மாநாடு கூடி, சமாதான நிபந்தனைகளைப் பற்றி உரையாடினர். பொதுத் தத் துவங்கள் வரையறுக்கப்பட்ட போதிலும், நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிறைய இருந்தன. பொட்சுடாம் மாநாட்டில், சமா தானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஒரு பிற நாட்டு அமைச்சர்க missiv dispth (Council of Foreign Ministers) pổulu Lóläissülu "l-gy. 1947 இல் இத்தாலியுடனும், அச்சு நாடுகளின் சாரகங்களான உறுT மேனியா, ப்ல்கேரியா, அங்கேரி, பின் லந்து என்பவற்றுடனும் தனித் தனி சமாதான உடன்படிக்கைகள் நிறைவேறின. செர்மனி :
1945 ஆம் ஆண்டு யால்த்தாவில் நடந்த மாநாட்டில் செர்மனியின் மேல் விதிக்கப்பட வேண்டிய நிபந்தனைகளும், ஒழுங்குகளும் வரை யறுக்கப்பட்டன. போரின் முடிவில் செர்மனி நான்கு வலயப் பகுதி களாக (Zones) பிரிக்கப்படுமென்றும், இவற்றின் மேல் முறையே பிரித்தன், அமெரிக்கா, இரசியா/பிரான்சு எனும் நான்கு நாடுகளும் ஆணை செலுத்தும் என்றும் ஏற்பட்டிருந்தது. நேச நாடுகளின் ஆதிக் கத்துக்குட்பட்ட வலயங்கள் மேற்குச் செர்மனி என்றும், இரசிய ஆதிக்கத்துக்குட்பட்ட வலயம் கிழக்கு செர்மனி என்றும் பெயர் பெற்றன. பேளின் நகரம் நான்கு வல்லரசுகளின் அதிகாரத்தின் கீழ் நிருவகிக்கப்பட்டது.
மேற்கு செர்மன் குடியரசின் நிலப்பரப்பு 96,000 சதுர மைல் சனத்தொகை 550 இலட்சம். பொதுவுடைமைக் கிழக்கு செர்மனியின் நிலப்பரப்பு 41,600 சதுர மைல் : சனத்தொகை 170 இலட்சம. தவிர நேச நாட்டினர், போர்க் குற்றவாளிகளை விளங்குவதற்கு நியூறம்பேக் (Nuremberg) இல் ஓர் இராணுவ நீதிமன்றத்தை அமைத்து ,நாற்சிக் கட்சியின் பத்து உயர் அதிகாரிகள் மீது மரணதண்டனை விதித்தனர். யப்பான் :
யப்பானிய எல்லைகள் நான்கு தீவுகளுக்குள்ளேயே அடக்கப் பட்டன : சீன தானிழந்த நிலப்பரப்புக்கள் யாவையும் மீட்டது. ஒரு புது அரசாங்கம் ஏற்படும்வரை, அமெரிக்காவின் தளகர்த்தர் மாக் ஆதர் (MacArthur) யப்பானிய நிருவாகத்தைப் பொறுப்பேற்று நடாத்துவரென விதிககப்பட்டது. “போர்க் குற்றவாளிகள்” விசாரணை யின் பின் தூக்கிலிடப்பட்டனர்.

Page 246
452 புது உலக சரித்திரம்
அமெரிக்கா, பிரித்தன், பிரான்சு, நெதலந்து அரசுகள் தம் (கடியேற்ற நாடுகளைத் திரும்பிப் பெற்றன. ஒரு சுதந்திர அரசாங்கம் நிருவகிக்கப்படும் காலம் வரை அமெரிக்க துருப்புக்களும், இரசிய படைகளும் கொரியாவை மேற்பார்வை செய்யவும் முடிவுண்டாயிற்று.
போரின் விளைவுகள் :
இரண்டாவது உலகப்போரின் விளைவாக அகில உலகிலும் வல்ல ரசுகளின் அரச வலுச்சமநிலை பூரணமாக நிலை மாறியது. அச்சு நாடுகளினதும் அதன் சாரகங்களினதும் வீழ்ச்சியின் பயணுக, கிழக்கு ஐரோப்பாவில் உண்டான வெற்றிடத்தை இரசியா நிரப்பியது. 1945 க்கும் 1948 க்கும் இடைப்பட்ட மூவாண்டுகளில், கிழக்கு ஐரோப்பாவில் ஏறத்தாழ பத்துக்கோடி மக்கள் பொதுவுடைமை ஆட்சிக்குட்படுக்தப்பட்டனர். போலந்து, உறுர மேனியா, பல்கேரியா, அங்கேரி, செக்கோசிலொவாக்கியா, கிழக்கு செர்மனி எனும் நாடுகள் அனைத்திலும் சோவியற் இரசியாவின் கீழ் “மக்கள் குடியரசுகள்' நிறுவப்பட்டன.
தூரகிழக்கிலும், சீனுவில் பொதுவுடைமை வாதம் ஓர் அதி பெரிய வெற்றியை ஈட்டியது. 1946 இல் சியாங்-கை-சேக்கின் அரசாங்கத்துக்கும் பொதுவுடைமை வாதிகளுக்குமிடையில் மூண்ட அசுரப் போர் 1949 வரை நீடித்தது. அவ்வாண்டு ஒற்ருேபர் முதலாம் நாளன்று மாவோ-சே-துங்கின் தலைமையில் “மக்களின் சீனக் குடியரசு" நிறுவப் பெற்றது. சியாங்-கை-சேக், போமோசாத் தீவுக்கு ஒட்டம் படித்து, அங்கு ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்தார்.
இரசியாவின் பகைமையையும், ஐரோப்பாவிலும் தூரகிழக்கிலும் அதன் ஆள்புலப்படர்ச்சித் திட்டங்களையும் கண்ட பிரித்தனும், அமெரிக்காவும் தமக்குள்ளே உறுதியான ஒற்றுமையை நிலவச் செய்த துடன், ஐரோப்பாவிலும் தூரகிழக்கிலும் பிராந்திய பாதுகாப்புத் திட்டங்களை அமைக்க முற்பட்டன (NATO, SEATO). இவ்வாறு கிழக்குக்கும் மேற்குக்குமிடையே மூண்ட பகைமை தண்போராக ACold War) jug-53/ 6u(55)pg.
இன்று உலகத்தை எதிர்த்து நிற்கும் சகல பிரச்சினைகளும்-செர் மனியின் ஐக்கியம், போல்கன் பிராந்திய நாடுகளின் சுதந்திரம், ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் எகித்தினதும் அராபிய மக்களி னதும் பேராசைத் திட்டங்கள், குடியேற்ற நாடுகளின் புனர்நிர் மாணம் இவையனைத்தும், அமெரிக்க-இரசிய இகலினல் சிக்கல்கள் நிறைந்தனவாய்ப் பரிணமித்துள்ளன.

உலக சமாதானம் 453
அதிகாரம் 27
D 6)d சமாதானம்
மானிட வரலாற்றில் இருபதாம் நூற்ருண்டு, போர்களும் போர்ப் பீதியும் நிறைந்த காலமாகும். அஃது அரைப்பருவம் அடையுமுன்பே மனித நாகரிகத்தை முழுமையாக அழிக்கவல்ல, குரூரமும் நாசமும் நிறைந்த இரு கோரப் போர்கள் நடந்தேறிவிட்டன. அவை மனித சமுதாயம் படுகுழிக்கு எவ்வளவு அருகில் நிற்கிறது என்பதையும், இப் பேராபத்திலிருந்து மீள, உலகமக்கள் யாவரையும் கவலையுறச் செய்யும் போர்களுக்கு உடனடியாகத் தீர்வு காணவேண்டிய அவசி யத்தையும் வலியுறுத்துகின்றன. மனிதன் அணுக்குண்டு ஊழியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இற்றை நாளில், உலகின் சர்வதேச மக்க ளும் ஒரு கூட்டான சம்மேளனத்திற் பங்கு பற்றித் தத்தம் நாட்டு முன்னேற்றத்துடன் உலகின் ஒருமித்த அமைதியையும் முன்னேற்றத் தையும் வளர்க்கவேண்டிய கட்டாய குழ்நிலை ஏற்பட்டுள்ளது.
போர்கள் நிகழுங் காலங்களிலெல்லாம் மனிதன் போர் நிகழா திருக்க வழியுண்டா என ஆராய்வதுண்டு. நெப்போலியன் வீழ்ச்சி யுற்றபோது முதலாவது அலெக்சாந்தர் கிறித்துவ நாடுகளின் கிரு வுடன் படிக்கையை உருவாக்கினர். முதலாவது உலகப்போர் முடி வில் உவீல்சனின் பதினன்கு குறிப்புக்களின் ப்படையில் சர்வதேச சங்கம் உருப்பெற்றது. 56 தேசங்களை அங்கித்தினராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்தாபனத்தில் தோல்வியுற்ற நாடுகளும் இரசி யாவும் காலக்கிரமத்தில் அங்க நாடுகளாக சேர்த்துக் கொள்ளப்பட் டன வெனினும், அமெரிக்கா இதில் இறுதிவரை ஈடுபடவில்லை. மேலும் பல சந்தர்ப்பங்களில் வல்லரசுகள் பல, அவையில் தங்களுக்கெதிரான பிரச்சினைகள் எழும்பொழுது அவற்றிலிருந்து விலகிக் கொள்வதும் பழக்க மாகிவிட்ட படியால், இச்சங்கம் ஆக்கபூர்வமாக எதனையும் சாதிக்க இயலாது போய்விட்டது. உலக அமைதி ஏற்படச் செய்வதற் குள்ள முயற்சியில் 1925 இல் சுவிற்சலந்தில் உலொக்கார்னே (Locarno) என்ற இடத்தில் ஐரோப்பிய நாடுகளில் முக்கியமானவை களுக்கிடையே ஏற்பட்ட அனக்கிரமிப்பு ஒப்பந்தமும் குறிப்பிடத் தக்கது. 1928 இல் அமெரிக்கா உட்பட இன்னும் பல நாடுகளும் அதில் சேர்ந்தன. கெல்லாக் ஒப்பந்தம் எனப் பெயர்போன இந்த ஒப்பந்தமும் நீடித்து நிற்க இயலாது சீரழிந்தது. இதற்குக் காரணம் இந்த ஒப்பந்தப்படி ஆக்கிரமிப்பு விலக்கப்பட்டிருந்த போதிலும் தற்பாதுகாப்புக்காக யுத்தஞ் செய்வதை இது5 தடுக்க ဓါီဇု 1946 இல் சங்கம் கலைக்கப்பட்டு விட்டதாயினும், அதன்
A Sl • S" ,ו "י יו

Page 247
454 புது உலக சரித்திரம்
காலத்தில் பல தேசத்து மக்களும் இத்தகைய ஒர் உலகப் பொது மேடை இருக்க வேண்டியதன் அவசியத்தை உணரச் செய்வதில் மாத்திரமாவது அது வெற்றியடைந்தது என்றே கூறவேண்டும். ஏனெனில் அபிப்பிராய பேதம் ஏற்படுங் காலங்களில் பல நாட்டவ ரும் மனம்விட்டுப் பேசுவதிலும் அரசியலல்லாத, உணவு, பொருளா தாரம் ஆகிய துறைகளில் பல நாட்டிலுமுள்ள தகவல்களைச் சேக ரித்துக் கொடுப்பதிலும் இத்தாபனம் ஓரளவு வெற்றி கண்டிருந்தது உண்மையாகும்.
அத்திலாந்திக்குச் சாசனம் :
1941 ஆம் ஆண்டு 14 ஆம் நாள், குடிப்பதி உரூசுவெல்ற்றும் சேச்சிலும் அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஓரிடத்தில் சந்தித்து, அத்திலாந்திக்குச் சாசனத்தை உருவாக்கினர். அப்பட்டயத்தில் இடம் பெற்ற விதிகள் எட்டு.
1. தரை அல்லது பிறமார்க்கமான ஆக்கிரப்பை ஒழித்தல். 2. குறிப்பிட்ட மக்கள் சுயேச்சையாகத் தெரிவிக்கும் விருப்புக்களன்றி எவ்விதமான நிலப்பரப்பு மாற்றமும் செய்வதில்லையென்ற உடன்பாடு. 3. தமக்குகந்த ஓர் அரசியல் முறையைத் தேர்ந்தெடுப்பதற்கு எல்லா மக்களுக்கும் உரிமை ; பலாத்காரமாக இறைமை (Sovereign) உரிமைகளும் தன்னுட்சி உரிமைகளும் பறிக்கப்பட்டோருக்கு அவற்றை மீண்டும் பெற்றுக் கொடுத்தல். 4. வாணிபத்திலும், உலகத்தின் மூலப் பொருள்களைப் பெறுவதிலும்
எல்லா நாடுகளுக்கும் சம வாய்ப்பு. 5. பொருளாதாரத் துறையில் எல்லா நாடுகளுக்குமிடையே ஒத்
துழைப்பு. 6. நாற்சிக் கொடுங்கோன்மை ஒழிக்கப்பட்டபின், மக்கள், தம் நாட்டு எல்லைகளுக்குள் அமைதியாகவும், அச்சம், பஞ்சம் என்பவற்றி லிருந்து விடுதலை பெற்று வாழ்வதற்கு வேண்டிய சமாதான ஏற்பாட்டை மக்களுக்குப் பெற்றுத்தரல். 7. எல்லா மக்களும் கடல்களையும் சமுத்திரங்களையும் எவ்வித
தடையுமின்றிக் கடப்பதற்கு சுதந்திரம். 8. எல்லாத் தேசங்களும் பலத்தை உபயோகிக்கும் முறையைக் கை
விட பிரயத்தனம் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை. அச்சு நாடுகளுக்கு எதிராகப் போரிட்டு வந்த 26 தேசப் பிரதி நிதிகள், 1942 ஆம் ஆண்டு சனவரி மாதம், அத்திலாந்திக்கு சாச னத்திற் கூறப்பட்ட கொள்கைகளைத் தாம் ஏற்றுக் கொண்டதாகத்

உலக சமாதானம் 455
தெரிவித்து, ஐக்கிய நாடுகள் பிரசுரத்திற் கையொப்பமிட்டனர். அதனுடன் வாழ்க்கை, விடுதலை, சார்பின்மை, சமய சுதந்திரம் ஆகிய வற்றைக் காப்பதற்கும், தத்தம் நாடுகளிலும் பிறநாடுகளிலும் மனித உரிமைகளையும் நீதியையும் நிலைநிறுத்துதற்கும், எதிரிகளைப் பூரண மாக வெல்வது இன்றியமையாததெனத் தாங்கள் உறுதியாகக் கருது வதாகவும் ஒப்புக்கொண்டனர். மொசுக்கோப் பிரகடனம் :
மேற்கூறப்பட்ட உவாசிந்தன் பிரகடனத்தைத் தொடர்ந்து, இரசியா, அமெரிக்கா, பிரித்தன், சீன எனும் நாடுகளின் பிரதிநிதி கள் 1943 ஒற்றேபரில் மொசுக்கோவில் மாநாடு கூடி, அதன் முடிவில் மொசுக்கோப் பிரகடனத்தை வெளிப்படுத்தினர். இப்பிர கடனம் உலகத்தில் சர்வதேச அமைதியையும் ஏமத்தையும் பாது காப்பகற்கு, அமைதியில் ஆவல்கொண்ட நாடுகள் யாவும் ஒன்று சேர்ந்து, அதிவிரைவில் ஒரு சர்வதேச அமைப்பை ஏற்படுத்த ஆவன செய்ய வேண்டுமென வற்புறுத்தியது. Libu Loir 55, (Dumbarton Oaks) Los BITG) : .
ஒராண்டுக்குப் பின்னர் 1944 நவம்பர் மாதம், நான்கு வல்லரசு களின் பிரதிநிதிகள் அமெரிக்காவில் டம்பட்டன் ஒக்சு எனுமிடத்தில் சந்தித்து, திட்டமிடப்பட்ட சர்வதேச அமைப்பின் கட்டுக்கோப்பை வரைந்தனர். அங்கு விவாதித்துத் தெரிவிக்கப்பட்ட யோசனைகளை ஆதாரமாகக் கொண்டு “பட்டயம்’ (Charter) வரையப்பட வேண் டும் என்றும், புது அமைப்பு “ஐக்கிய நாட்டேைம்" எனப் பெய ரிடப்படும் என்றும் தீர்மானம் செய்யப்பட்டது. யால்த்தா (Yalta) மாநாடு :
இதற்குப் பின்னர், அமெரிக்காவின் உறுரசுவெல்ற், பிரித்தனின் சேச்சில், இரசியாவின் சிற்ருலின் என்ற “பெரிய மூவர்' கிறைமிய தீபகற்பத்தில யால்த்தா எனுமிடத்தில் 1945 பெப்ரவரி 11 ஆம் நாள் சந்தித்து, டம்பட்டன் ஒக்சுத் தீர்மானங்களை ஒருசில மாற்றங் களுடன் அங்கீகரித்தனர். அதனுடன் ஐக்கிய நாட்டமையத்தின் பட்டயத்தை வரையறுக்க சான் பிரான்சிசுக்கோவில் உலக தேசங் களின் மகாநாடொன்றைக் கூட்டுவதென்றும் முடிவு செய்யப்
ul l-gl. s IT GÓT (GJIT Gör fasi š; (35 T (San Francisco) DIT 5 TG :
இந்த அழைப்பிற் கிணங்க, 50 தேசங்களின் பிரதிநிதிகள் சான் பிரான்சிசுக்கோவில், 1945 ஏப்ரில் 25 முதல் யூன் 26 வரை, இரு மாதங்களாக மாநாடு கூடி, ஐக்கிய நாடுகளின் பட்டயத்தை வரைந்

Page 248
456 புது உலக சரித்திரம்
தனர். சான் பிரான்சிசுக்கோவில் வரையப்பெற்ற பட்டயம் 1945 ஆம் ஆண்டு யூன் மாதம் 27 ஆம் நாள், பிரசுரிக்கப்பெற்றது. அதில் 19 அதிகாரங்களும், 111 முறிகளும், ஒரு பூர்வபீடிகையும் இடம் பெற்றன. அந்தப் பூர்வபீடிகையில் கண்டிருப்பதாவது :
*ஐக்கிய நாட்டமையத்தின் பொது மக்களாகிய நாங்கள், நமது வாழ்நாளில் இருமுறை மனித குலத்துக்குச் சொல்லொணுத் துன் பத்தை விளைவித்த யுத்தக் கொடுமை, இனிவரும் சந்ததிகளையும் பீடிக்காதபடி தடுத்துப் பாதுகாக்கவும்,
சீவாதார உரிமைகள், மனித கண்யம், பண்பு, ஆண்களுக்கும் பெண்களுக்கும், வல்லரசுகளுக்கும் சிறு நாடுகளுக்கும், சம உரிமைகள்இவற்றில் எல்லாம் திட நம்பிக்கையை ஊர்சிதம் செய்யவும், ஒப்பந்தங் களுக்கும் சர்வதேசக் கோட்பாடுகளுக்கும் மதிப்பும், இவை மூலம் அற நெறிக்கு வேண்டிய நிலைமையையும் தோற்றுவிக்கவும், சமூக மேம் பாட்டுக்கும், மேலான வாழ்க்கைத் தரத்துக்கும் வழி வகை காணவும், திட உறுதி பூண்டிருக்கிருேம். எனவே சம்பந்தப்பட்ட அரசாங் கங்களின் பிரதிநிதிகளாகிய நாங்கள், உரிய அதிகாரங்களைப் பூரண மாகப் பெற்று, சான் பிரான்சிசுக்கோ நகரத்தில் முறையாகக் கூடி, இந்தப் பட்டயத்தை ஏற்றுக் கொண்டு, ஐக்கிய நாட்டமையம் என்ற உலக தாபனத்தை நிறுவுகிருேம்.”
நோக்கங்கள் :
முதலாவது முறி, தாபனத்தின் நான்கு நோக்கங்களை வரை யறுக்கிறது. அவையாவன : உலகில் சமாதானத்தையும், ஏமத்தையும் பராமரித்து வருவது ; தேசங்களுக்கிடையே நேச நல்லுறவுகளைப் பேணி வளர்ப்பது ; நாடுகளுக்கிடையே சமூக , பொருளாதார, கலாச்சாரத் துறைகளில் காணும் பிரச்சினைகளை ஒத்துழைப்பின் மூலம் தீர்த்து வைப்பது மக்கள் அனைவருக்கும் சீவாதார உரிமை களும் ஆதார சுதந்திரங்களும் கிட்டும்படி செய்து அவற்றை மதித்து நடக்கும்படி செய்தல்.
இரண்டாவது முறி, அங்க நாடுகள் அனைத்தும் சுயாட்சி அதி காரமும் சம இறைமையும் உள்ளவை யென்றும் தேசாதேச உறவு களில் அவை வேறு நாடுகளுக் கெதிராகப் பலாத்காரத்தை உப யோகிக்கவோ, உபயோகிக்க மிரட்டவோ கூடாதென்றும் கூறுகிறது.
இன்னும் சமாதானத்தை நிலை நாட்ட அவசியமிருந்தாலன்றி, எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் ஐக்கிய நாட்டமையம் குறுக்கிடாது என்றும் கூறப்பெற்றுள்ளது.

உலக சமாதானம் 457
ஐக்கிய நாட்டமையத்தின் அமைவு :
மேற் கூறப்பட்ட நோக்கங்களை ஈடேற்றுவதற்காக மாசபை, ஏமக்கழகம், பொருளாதார சமூக நலக்கழகம், நம்பிக்கைப் பொறுப் புக் கழகம், சர்வதேச நீதி மன்றம், காரியாலயம் எனும் ஆறு உறுப் புக்களாக அமைவு பெற்றன. தவிர, பொருளாதார சமூக நலக் கழகத்தின் பொது மேற்பார்வையின் கீழ் இயங்கும் விசேட தாபனங் களும் உள.
அங்கத்துவம் :
1942 சனவரி முதல் நாளன்று வெளியான பிரகடனத்தில் ஒப்ப மிட்ட நாடுகள் அல்லது சான் பிரான்சிசுக்கோ மாநாட்டில் கலந்து கொண்டு, பட்டயத்தில் கையொப்பமிட்டு அதை உறுதிப்படுத்திய நாடுகள் அனைத்தும், ஐக்கிய நாட்டமையத்தின் பூர்வ அங்கத்தினர் இவற்றைவிட சமாதானத்தில் நாட்டமும் பட்டயத்தின் கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாகவுமிருக்கும் ஏனைய நாடுகள் யாவும் ஐக்கிய நாட்டமையத்தில் சேரலாம் ; அவை தம் பொறுப்புக்களை நிறைவேற்றக்கூடியவை என்பதை மாசபை கருதுவ தாக இருக்கவும் வேண்டும். எந்த நாட்டின் கோரிக்கையையும் ஐந்து பெரிய வல்லரசுகளில் (Big Five) ஒன்று நிராகரிக்க அதிகாரம் படைத்தது.
o Gobu (General Assembly) :
மாசபை தான், அங்க நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சர்வ தேச பாராளுமன்றம். சபையில் ஒவ்வோர் அங்க நாட்டுக்கும் ஒரே வாக் குத் தான் உண்டு. மாசபை ஆண்டுக்கொருமுறை கூடும்; ஆனல் ஏமக் கழகத்தின் கோரிக்கை, ஐக்கிய நாட்டமையத்தின் பெரும்பான்மை அங்கத்தினரின் கோரிக்கை, பெரும்பான்மை அங்கத்தினரின் ஆதரவு டன் ஓர் அங்கத்தினரின் கோரிக்கை, எனும் காரணங்களினல் மாசபை யின் விசேடக் கூட்டம் அழைக்கப்படலாம். சாதாரண விடயங்களில் மாசபையின் தீர்மானம் எதற்கும் சபையில் பிரசன்னமாயிருக்கும் பெரும்பான்மையோரின் ஆதரவு போதுமானது. ஆனல் முக்கிய விட யங்களில் மாசபையின் தீர்மானம் எதற்கும் மூன்றில் இரண்டு அங்கத்தி னரின் வாக்கு அவசியமாம். ஐக்கிய நாட்டுப் பட்டயத்தின் கட்டுக் கோப்புக்குட்பட்ட விடயங்களையும், உலகில் சமாதானத்தையும் ஏமத் தையும் பராமரிப்பதற்குமான விடயங்களையும் விவாதிப்பதற்கு மா சபைக்கு அதிகாரமுண்டு. ஏமக்கழகத்தின் நிரந்தரப்பதமில்லாத அங்கத்தினர் ஆறுபேர், சமூகப் பொருளாதார சபையின் 18 அங்கத் தினர்கள், நம்பிக்கைப் பொறுப்புக் கழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட

Page 249
458 புது உலக சரித்திரம்
வேண்டிய அங்கத்தினர்கள், செயலாளர்-இவர்களைத் தேர்ந்தெடுப்ப தும் மாசபையின் பொறுப்பாகும். மேலும் அமையத்தின் நிதி நிரு வாகத்தை மேற்பார்வை செய்தல், எல்லா உறுப்புத் தாபனங்களின் அறிக்கைகளை ஏற்றுப் பரிசீலனை செய்தல் என்பவை மாசபையின் பிற கருமங்களாகும்.
GJ LD5, 5gs to (Security Council) :
*உலகில் சர்வதேச சமாதானத்தையும் ஏமத்தையும் பரா மரித்து வரும் தலைமையான பொறுப்பு, ஏமக் கழகத்தையே சாரும். இச்சபையில் ஐந்து நிரந்தர அங்கத்தினர்களும், நிரந்தர மல்லாத அங்கத்தினர்கள் ஆறு பேரும் உண்டு. “பெரிய ஐவரான' சோவியற் இரசியா, சீன, பிரித்தன், பிரான்சு, ஐக்கிய அமெரிக்க அரசு ஆகியவை நிரந்தர அங்க நாடுகளாகும். நிரந்தர மல்லாத தாபனங்களுக்கு ஈராண்டுக்கொரு தடவை மாசபை, அங்கத்தினரைத் தேர்ந்தெடுக்கும். ஏ ம க் கழக ம், ஐக்கிய நாட்டமையத்தின் அங்க நாடுகள் சார்பில் இயங்கும் மன்றமாகும். இச் சபையின் தீர்ப் புக்குக் கட்டுப்பட்டு நடக்கவும், சர்வதேச அரங்கில் சமாதானத்தை யும் ஏமத்தையும் பராமரிக்கவும் சபை கோருமேயானல், படைகளை யும், இதர உதவிகளையும் வசதிகளையும் செய்து கொடுக்க அங்க நாடு கள் கடமைப் பாடுடையவை. சபையின் ஒவ்வோர் அங்கத்தினருக்கும் ஒவ்வொரு வாக்குண்டு. நடைமுறை விடயங்களில் தீர்மானம் ஏதும் நிறைவேறுவதற்கு ஏழு வாக்குகள் அவசியம். நடை முறை விட யங்கள் தவிர, இதர விடயங்களின் நிறைவேற்றுக்கு ஏழு வாக்குகள் தேவை ஆணுல் இந்த ஏழிலும் ஐந்து நிரந்தர அங்கத்தினர்களின் வாக்குகளாக இருத்தல் வேண்டும். எனவே பெரிய ஐவரில் ஒவ் வொரு நாடும், தனக்கு விருப்பமில்லாத சபையின் தீர்மானங்களை இரத்துச் செய்ய அதிகாரம் படைத்தது.
ஏமக்கழகத்தின் ஆதரவில் இராணுவ அதிகாரிகளின் நிருவாக சபை (Military Staff Committee) ஒன்றுண்டு. ஐந்து நிரந்தர நாடு களின் பிரதம அதிகாரிகள் இச்சபையில் இடம் பெற்றிருப்பதனல் எல்லோருக்கும் சம்மதமான முடிபுகளைக் காண்பது அரிது.
பொருளாதார சமூக நலக் கழகம்
(Economic and Social Council) : மாசபையின் ஆணைக்கும் அதிகாரத்துக்கு முட்பட்டு இயங்கும் இச்சபை சமூக, பொருளாதார, கலாசார, கல்வி, சுகாதார விட யங்களில் ஐக்கிய நாட்டமையத்தின் நடவடிக்கைகள் அனைத்துக்கும் பொறுப்பு வகித்து வருகிறது. எல்லாத் தேசங்களுக்கும் பொதுவான

உலக சமாதானம் 459
பொருளாதார, சமுதாய, சுகாதாரப் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் தேடவும், இனம், பால், மொழி, மதம் ஆகிய வேறுபாடுகளின்றி எல்லோரும் மனித உரிமைகளை அனுபவிக்கச் செய்யவும், கலாச்சார, கல்வி விடயங்களில் சர்வதேசங்களையும் ஒத்துழைக்கச் செய்யவும் இக் கழகம் முயலுகிறது.
பல விசேட் தாபனங்கள் இச்சபையின் கீழ் இயங்குகின்றன. இவை உலகத்தின் தேச அரசாங்கங்கள், பொருளாதாரம், சமூகம் கலாசாரம், கல்வி, சுகாதாரம், பிற துறைகள் என்பனவற்றில் விரி வாகப் பணியாற்றும் நோக்குடன் தமக் கிடையே செய்து கொண்ட ஒப்பந்தங்களின் பயணுகவே எழுந்தவை. இவற்றுள் கீழ்க்கண்ட தாபனங்கள் முக்கியமானவை :
சர்வதேச தொழிலாளர் தலத் தாபனம் (IL 0) ஐக்கிய நாடுகள் உணவு விவசாயத் தாபனம் (FA 0) ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான கலாசாரத் தாபனம் (U N E SCO) உலக சுகாதாரத் தாபனம் (WHO)
FriaG5 F 6 i3 (International Bank)
இவைபோன்ற இன்னும் வேறுபல சர்வதேச அமைப்புக்களும் ஏற்பட்டுள்ளன ; புதுத் தேவைகளுக்கியைய புது அமைப்புக்கள் புதுக் கருமங்களுக்காக நிறுவப்படலாம்.
நம்பிக்கைப் பொறுப்புக் கழகம் (Trusteeship Council):
ஐக்கிய நாட்டமையத்தின் அங்க நாடுகள், சுயாட்சி பெற்றிராத நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கும், முன்னேற்றத்துக்கும் ஆவன செய்து உதவுவது தம் கடமையென, பட்டயத்தின் வாயிலாக ஒப்புக்கொண் டுள்ளன. அப்பிரதேச மக்கள் துரிதமாக சுயாட்சி பெற வகை செய் யவும், அவர்களுக்கு அநீதி ஏதும் இழைக்கப்படாமல் காக்கவும், அவர்களை நேர்மையாக நடத்தவும், தேசாதேச அமைதியை நிலை பெறச் செய்யவும், அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வும், ஆராய்ச்சிக்கு ஊக்கமளிக்கவும் அங்க நாடுகள் கடமைப்பட் டிருக்கின்றன.
சர்வதேச சங்கத்தின் பொறுப்பிலிருந்த பிரதேசங்கள், இரண்டா வது உலகப் போரில் பகைவர் வசமிருந்து வெற்றிகொள்ளப்பட்ட பிரதேசங்கள், நம்பிக்கைப் பொறுப்புக்கழகத்தின் பரிபாலனத்தில் தாமாகச் சேர்க்கப்பட்ட பிரதேசங்கள், இவை மாத்திரமே நம்பிக் கைப் பொறுப்புப் பரிபாலன முறையின் கீழ் அமைக்கப் பெற்றன. 1947 ஆம் ஆண்டு நிறைவேறிய நம்பிக்கைப் பொறுப்பு உடன்படிக்

Page 250
460 புது உலக சத்திரம்
கைகளின் பிரகாரம் பெரிய பிரித்தன், தங்கனிக்கா, சமறுான்சு, தோகோலந்து எனும் நாடுகளைப் பரிபாலனம் செய்கிறது ; பிரான்சு கமறுான்சு, தோகோலந்துப் பிரதேசங்களின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது : உறுவான்டா-உறுன்டி {Ruanda-Urundi) பெல்சிய பாது காப்பின் கீழ் விடப்பட்டது : நியூகினி, ஒசுத்திரேலியாவினதும், மேற்கு சமோவே நியூ சீலந்தினதும் மேற்பார்வையின் கீழ் அமைவு பெற்றன. மாசல், மரியான, கரோலின் தீவுக் கூட்டங்களின் பொறுப்பை ஐக்கிய அமெரிக்கா ஏற்றது.
Gf6)]Gg,8 sög u) að spúð (The International Court of Justice) :
15 நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச நீதி மன்றமெனும் ஐக்கிய நாடுகளின் பிரதான நீதி பரிபாலன மன்றம், நெதலன்சிலுள்ள *ஏக்' (The Hague) நகரில் இருந்து வருகிறது. நீதிமன்ற தாபிதச் சட்டத்துக்கு அங்க நாடுகள் அனைத்தும் அங்கீகாரம் தந்துள்ளன. தேசங்கள் தாக்குதல் செய்யும் வழக்கில் காணப்படும் விடயங்களை யும், ஐக்கிய நாடுகள் பட்டயத்திலும், அமுலில் உள்ள ஒப்பந்தங்க ளிலுமுள்ள விடயங்களையும் விசாரிக்க நீதி மன்றத்துக்கு அதிகார முண்டு. வழக்குகளில் சம்பந்தப்பட்ட நாடுகள் நீதி மன்றத் தீர்ப்புக்கு உட்பட்டு நடந்து கொள்வதாக முன் கூட்டியே உறுதி கூறவேண்டும்.
மாசபையும் ஏமக்கழகமும் அதனிடமிருந்து எவ்விடயத்தைப் பற்றியும் சட்ட பூர்வமான அபிப்பிராயங்களை ஆலோசனை வடிவில் நீதி மன்றத்திடமிருந்து பெறும் அதிகாரமுடையவை.
G5 u905üd (Secretariat) :
ஏமக் கழகத்தின் சிபார்சின் பேரில், மாசபை நியமிக்கும் பொதுச் செயலாளரையும் (Secretary-General), தாபனத்துக்குத் தேவையான இதர அலுவலாளரையும் கொண்டது செயலகம்.
பொதுச் .ெ யலாளரே ஐக்கிய நட்டமையத்தின் பிரதம அதிகாரி யாகப் பணியாற்றுகிருர், சர்வதேச அமைதிக்கும், ஏமத்துக்கும் அபாயம் விளைவிக்குமெனத் தனக்குப்படும் எவ்விடயத்தையும் ஏமக் கழகத்தின் அவதானத்துக்குக் கொண்டு வருவதும், ஐக்கிய நாடுகளின் கருமங்கள் சம்பந்தமாக, ஆண்டு அறிக்கை யொன்றை மாசபைக்கு முன் சமர்ப்பிப்பதுமே அவரது பிரதான கடமைகளாகும்.
1946 பெப்ரவரி மாதம் முதல்தேதியன்று நோவேயைச் சேர்ந்த திரிக்வி இலீ (Trygve Lie) என்பவர் ஐந்தாண்டுகளுக்கு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1950 நவம்பரில் அவரே இன்னும்

உலக சமாதானம் 46五
மூவாண்டுகளுக்குப் பதவியிலிருந்து வரவேண்டு மெனத் தீர்மானமா யிற்று. 1953 ஏப்ரிலில் பொதுச் செயலாளகைத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாக் அமசீல்டு (Dag Hammaskjold), 1961 இல் அகால மரணத்துக் குள்ளானர்.
சர்வதேச சங்கமும் ஐக்கிய நாட்டமையமும் :
இங்ஙனம்" தோற்றம் பெற்ற ஐக்கியநாட்டமையம், சர்வ தேச சங்கமெனும் அமைப்பின் அத்திவாரத்திலிருந்தே கட்டியெழுப்பப்பட்ட போதிலும், அதன் அமைப்பு முந்தியதிலும் பார்க்கச் சற்றுச்சிக்கலானது என்பது புலனுகும். முக்கிய அதிகாரங்கள் ஏமக்கழகத்தினிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு வல்லரசுகள் ஏகோபித்துத் தீர்மானம் செய்தாலன்றி அவற்றை உபயோகிக்க முடியாது ; பெரிய ஐவரில்" ஏதேனுமொன்று, தன் "இரத்து அதிகாரத்தை" (Power o Veto) உபயோகித்து எத்தீர்மானத்தையும் நிராகரித்து விடலாம். ஐக்கிய நாட்டமையத்தின் சாதனைகள் :
ஐக்கிய நாட்டமையம், ஆரம்பந் தொட்டே, இக்கால வரலாற் றுடன் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய நிலைக் குள்ளாயிற்று. இத்தாபனம், தொழில்புரிய ஆரம்பித்த காலையில் இரசியாவின் பிடிவாதத்தினல் அதி திருப்தியைத் தரவில்லை ; அந் நாடு ஏமக்கழகத்தில், 1946-47 எனும் ஒராண்டில் தன் த்து அதி காரத்தை 22 தடவைக்குக் குறையாமல் பிரயோகித்தது. இத்தடை இருந்துவந்த போதிலும், இக்கட்டான சூழ்நிலைகளில் அது பல அரிய கருமங்களைச் சாதித்துள்ளது. அங்கத்தினர்களுக்கிடையே எழுந்த சமர்க ளைத் தீர்த்தல், அவசர நடவடிக்கைகளை விலக்கல், மத்தியட்சம் வகித்தல் என்பவையே அது கையாண்ட முறைகளாகும்.
ஐ. நா. க்கு முன்வந்த முதல் முக்கியத்துவம் வாய்ந்த தகராறு களில் ஒன்று, ஈரானுக்கும் சோவியற் யூனியனுக்குமிடையே எழுந்த பிரச்சினையாகும். ஒப்பந்தத்தின் மூலம் போர்க் காலத்தில் ஈரானில் நிறுத்தப்பெற்றிருந்த இராணுவத் துருப்புக்களை, இரசியா திருப்பி யழைக்க மறுத்தமை, அதன் உண்ணுட்டு விவகாரங்களில் இரசியா தலையிட்டமைக்குச் சமான மென ஈரானின் பிரதிநிதிகள் முறையிட் டனர். மொசுக்கோ இக்குற்றச்சாட்டுக்கு மறுப்புக் கூறியதுடன், தனது பிரதிநிதியையும் ஏமக்கழகத்திலிருந்து திருப்பியழைத்தது. ஆனல் ஏமக்கழகம் சோவியற் மிரட்டலுக்கு அடிபணியாது, உறுதி யுடன் கருமமாற்றி, சோவியற் படைகளை ஈரானிலிருந்து பின்வாங் கச் செய்தது. சீரியாவும், இலெபனனும் இதேவிதப்பட்ட குற்றச் சாட்டுக்களைச் சமர்ப்பித்ததன் விளைவாக, ஐ. நா. தலையிட்டு, பிரித் தானிய, பிரெஞ்சுப்படைகளை அந்நாடுகளிலிருந்து விலகச் செய்தது.

Page 251
462 புது உலக சரித்திரம்
1947 இல் இந்தியாவும் ஒசுத்திரேலியாவும் இவற்றிலும் மேலான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையைக் கிளப்பின. இது டச்சுக் குடியேற்றங்களான சுமாத்திரா, மதுரா, யாவா எனும் தீவுகளில் உண்டான சுதந்திர இயக்கத்தினுல் இந்தோனேசியாவுக்கும் ஒலந் துக்குமிடையே எழு ந் த தகராருகும். அத்தீவுகளில் மூண்ட போரை, ஒலந்து, ஓர் உண்ணுட்டுப் பிரச்சினையென்று வருணித்து, ஐ. நா. இன் தலையீட்டைத் தட்டிக்கழிக்க முயற்சித்தது ; ஆனல் ஏமக்கழகம், இரு பகுதியினருக்கும் ஒரு போர்நிறுத்தற் கட்டளையை விடுத்து, பிரச்சினையை ஆராய முற்பட்டது. இரு பகுதியினரும் கட் டளையை ஒப்புக்கொண்ட போதிலும், போர் ஓயவில்லை. 1948 இல் பெல்சியம், ஒசுத்திரேலியா, அமெரிக்கா எனும் மூன்று நாடுகளைக் கொண்ட ஒரு விசாரணைச் சபையை ஐ. நா. நியமித்ததன் விளை வாக, ஏகில் (Hague) ஒரு வட்டமேசை மாநாடு கூட்டப்பட்டது. இந்தோனேசியா சுதந்திரம் பெற்று, குடியரசாயிற்று.
uG)š860Tü (SJä f&OT :
பலத்தீனத்தின் ஆட்சிப் பொறுப்பை இங்கிலந்து கையேற்ற நாள் முதல், அண்மைக் கிழக்கில் அராபியருக்கும் யூதருக்கு மிடையே மூண்ட சமர் அதி சிக்கல்கள் நிறைந்த விடயமாயிற்று. பிரச்சினை யைச் சுமுகமாகத் தீர்க்க முடியாத நிலையில், பிரித்தன் அ த னை ஐ. நா. இன் முன் சமர்ப்பிக்கவே, ஐ. நா. 1947 இல் ஒரு விசேட பலத்தீன விசாரணைச் சபையை நியமித்தது. அச்சபை, யூத, அராபிய பகுதிகளெனப் பலத்தீனம் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டு மெனச் சிபார்சு செய்தது. அதன் பின்னர், பிரித்தானியர் நாட்டை விட்டு நீங்கவும், விசாரணைச் சபை அதற்குப் பொறுப்பேற்கவும் வேண்டு மென ஐ. நா. பணித்தது. ஆனல் அதற்கு முன்னரே, யூதர், இசற வேல் எனும் சுதந்திர அரசைப் பிரகடனம் செய்து நின்றனர் : அராபியரும், யூத அரசின் மேல் போர் தொடுத்தனர். மூ ன் ட போரை நிறுத்தவும், அமைதியை நிலை நாட்டவும் மாசபை, பிரபு (3Luoor @- jib 60op (Count Bernadotte) LDj 967 Lull "F5 TT 35 piju u Lój, 35g. அவருடைய முயற்சியின் பயணுகவே பிரச்சினை தீர்க்கப்பட்டது.
இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையே காசுமீரத்தைப் பற்றி எழுந்த தகராறும் ஐ. நா. க்கு முன் வந்த பொழுது, அஃது இரு கட்சிகளுக்கு மிடையில் நடை பெற்ற போரை நிறுத்தியது ; ஆனல் பிரச்சினை இன்னும் தீராத நிலையிலேயே இருந்து வருகிறது. இரு நாடுகளும் பிரச்சினை, நட்பு முறையில் தீர வேண்டு மென்பதை ஒப்புக் கொண்டுள்ளன. மாசபை, ஆண்டு தோறும் தென் ஆபிரிக்

உலக சமாதனம் 463
காவின் நிறக் கொடுமையைக் கண்டித்துத் தீர்மானங்களை நிறை வேற்றுகிறது ; ஆனல் அதை அமுல் செய்வதற்கு வழியின்றி அல் லற்படுகிறது.
கொரியப் பிரச்சினை :
யப்பானியப்ர் சரணடைந்த காலத்தில், இரசியாவும் அமெரிக் காவும் கொரியாவின் வட, தென் பகுதிகளின் ஆட்சிப் பொறுப்பை யேற்றன. 1948 திசம்பர் 12 இல், மாசபை கொரியாவில் ஐக்கி யத்தை ஏற்படுத்தவும் நேச தேசப் படைகளைப் பின் வாங்கச் செய் யவும் ஒரு விசேட விசாரணைக் குழுவை நியமித்தது. ஆனல் Gol.-- கொரியா, விசாரணைச் சபையைத் தன் எல்லைகளுக்குள் அனுமதிக்க மறுத்தமையினல், 1948 இல் ஐ. நா. தென் கொரிய அரசாங்கம் ஒன்று தான் சட்டரீதியான தென்று முடிபு செய்தது. 1950 இல் இரு பகுதியினருக்கு மிடையில் போர் மூண்ட பொழுது பொதுவுடை மைச் சீன வட கொரியாவுக்கு உதவி புரியத் தலைப்பட்டது. ஐ. நா. இன் வேண்டுகோளுக் கிணங்க பல நாடுகளின் படைகள் ஐ. நா. கொடியின் கீழ் போர் புரிந்து, பெரும் வெற்றியை ஈட்டின. ஐ. நா. உம் அதன் முதல் உண்மையான பரிசோதனையில் வெற்றி வாகை சூடியது ; அதன் உறுதியும், தீர்மானமும், இராணுவ பல மும் உலகுக்குமுன் நிரூபிக்கப்பட்டு நின்றன.
இங்கிலந்தும் பிரான்சும் எ கித்தை ஆக்கிரமித்தல் :
1952 ஆம் ஆண்டு யூலை மாதத்தில் எகித்தில் நடைபெற்ற இராணுவப் புரட்சிக்குப் பின்னர் தளபதி அப்துல் நாசர் (Col. Abdul Nasser) அதிகாரத்துக்கு வந்தார். நாட்டின் பொருளாதாரத்தை உறுதியான அடிப்படையில் அமைக்க நோக்கங்கொண்ட நாசர், விவசாயத் தொழில் உற்பத்தி, நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு சர்வ தேச வங்கியிடமிருந்து நிதி உதவி பெற முயற்சித்தார். 1956 பெப் ரவரியில், சர்வதேச வங்கியும் எகித்துக்கு 7 கோடி டாலர் வரை கடன் கொடுக்கச் சம்மதித்தது. ஆனல் அவ்வாண்டு யூலையில், எகித்தின் பொருளாதாரம் உறுதியற்றதெனக் கூறி, அமெரிக்காவும் பிரித்தனும், சர்வதேச வங்கி எகித்திற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவ தற்கில்லை யென அறிவித்தன. அசுவான் அணைத்திட்டத்துக்கும் ஏனைய பொருளாதாரத் திட்டங்களுக்கும், சூவெசுக் கால்வாயின் வருவாயைப் பயன்படுத்தத் திட்டமிட்ட நாசர், 1956 யூலை 27 இல் அதனை நாட்டுரிமையாக்கினர். பிரித்தனும் பிரான்சும் ஆத்திரங் கொண்டன : கால்வாயில் வேலை செய்துவந்த பிரிட்டிசு, பிரெஞ்சு வழிகாட்டி மாலுமிகள் தம் பதவிகளைத் துறந்தனர். ஐ. நா. இன்

Page 252
464 புது உலக சரித்திரம்
ஏமக்கழகத்தில் எகித்திற்கு எதிராகப் பிரித்தனும் பிரான்சும், பிரித்த, னுக்கும் பிரான்சுக்கும் எதிராக எகித்தும் மாறிமாறிப் புகார் செய்தன. ஏமக்கழகம் இரு புகார்களையும் பரிசீலனைக்கு எடுத்தது. சமரசப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பிரித்தன் எகித்திற்கு எதிராக இசிரவேலைத் தூண்டிவிடும் திட்டத்தில் இறங்கியது ; 1956, ஒற்ருேபர் 29 இல், இசிரவேலும் ஆக்கிரமிப்பில் பிரவேசித்தது. பிரித்தனும், பிரான்சும் சூவெசுக் கால்வாய்ப் பிரதேசத் திலிருந்து 10 மைல்களுக்கப்பால் எகித்து, தன் படைகளை 24 மணி நேரத்திற்குள் பின்வாங்கச் செய்ய வேண்டுமென இறுதிக் கூற்றை விடுத்தன. ஒற்ருேபர் 31 ஆம் நாள், பிரித்தனும் பிரான்சும் சூவெசு, கைரோ மீது குண்டுகளை வீசித் திடீர்த் தாக்குதலை ஆரம்பித்தமையை' அமெரிக்கா, இரசியா, இந்தியா முதலாம் நாடுகள் வன்மையாகக் கண்டித்தன. ஐ. நா. பாசபை, நவம்பர் 2 ஆம் நாள் கூடி, போரை நிறுத்த, பிரான்சும் பிரித்தனும் இசிரவேலும் எகிப்திலிருந்து வெளி யேற வேண்டு மெனத் தீர்மானித்தது. சில நாள்களுக்குள் தளபதி it in 637 air (General Barnes) gait ga)60) rudi) ag. 5 T. "பொலீசுப் படை' எகித்து சென்றது ; நெருக்கடி தணிந்தது.
ஐ. நா. இன்று கொங்கோவின் ஒற்றுமையையும் சுதந்திரத்தையும் நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு நிற்கிறது.
இங்ங்ணம், கடந்த 15 ஆண்டுகளில் ஐக்கிய நாட்டமையம் கொரியா, இந்தோனீசியா, சூவெசு ஆகிய இடங்களில் மற்ருெரு மகாயுத்தம் மூண்டு விடாது தடுத்துக் காத்துள்ளமை குறிப்பிடத் தக்கது. கசுமீர், தென்னபிரிக்கா, அல்சீரியா முதலாம் பிரச்சினைகளில் ஐ. நா. தக்க பரிகாரங்கள் செய்ய இயலாதிருந்து கொண்டிருப்பது உண்மையே யென்றலும், உலக சமாதானம், இந்த உந்நத தாபனத் தின் கரத்திலேயே இருந்து வருகிறதென்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
ஐக்கிய நாட்டமையத்தின் எதிர்காலம் எத்தகைமைத்து ? அது வலிமை பெற்று உலக அமைதியை நிலைநிறுத்தும் கருவியாகுமா ? அல்லது முன் இருந்த சர்வதேச சங்கத்தைப் போலச் சீர் குலைந்து மூன்ருவது உலகப்போரைத் தோற்றுவித்து மறையுமா ? இவை தாம், இன்று சமாதான நாட்டங்கொண்ட உலக மக்களின் நாவிலு உள்ளத்திலும் இடம் ப்ெற்றுள்ள தலையான வினுக்களாம்.
ஆசீர் வாதம் அச்சகம் சக புத்தகசாலை 32, கண்டி வீதி, யாழ்ப்பாணம்.


Page 253


Page 254