கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குளக்கோட்டன் தரிசனம்

Page 1


Page 2


Page 3

குளக்கோட்டன் தரிசனம்
(ஒர் ஆய்வு நோக்கு)
செல்வி க. தங்கேஸ்வரி (பி. ஏ. (சிறப்பு) தொல்பொருளியல்)
மட். மாவட்ட கலாசார உத்தியோகத்தர்.
அன்பு வெளியீடு
'தவபதி p '') ஆரையம்பதி - காத்தான்குடி.
- 1993 -

Page 4
அன்பு வெளியீடு - 3.
பதிப்புத் தரவுகள்
தலைப்பு : குளக்கோட்டன் தரிசனம்.
@l@み5 தொல்வியல் ஆய்வு.
ஆசிரியர் : செல்வி க. தங்கேஸ்வரி, B. A. (Hons.)
தொகுப்பு : இரா. நாகலிங்கம் (அன்புமணி)
அச்சுப்பதிவு : புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்,
மட்டக்களப்பு.
வெளியீடு : அன்பு வெளியீடு, ஆரையம்பதி.
பிரசுரத் தேதி : 15-06-93
அட்டை "அருள்"" (நா. அருட்செல்வன்)
பக்கங்கள் : 20 - 90 -- 12.
விலை : e. 50/-
BBLOGRAPHICAL, DATA
Title : “Kulak koddan Tharisan am” Category : Archeological Research.
Author : Miss. K. Thangeswary, B. A. (Hons.) Editing 卷 R. Nagalingam (Anbu mani)
Printers : St. Josephs Catholic Press, Batticaloa. Publishers : Anpu Veliveedu, Arayampathy. Date of Publication: 15-06-93.
Cover Design : “ “ ARUL”” (N. Arudchelvan)
Pages : 20 + 90 + 12.
Pricc : Rs... 50/-

சமர்ப்பணம்
என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய
எனது
அன்புத் தாயார் அருமைத் தந்தை வெ. திருமஞ்சனம் சி. கதிராமன்
ஆகியோருக்கு
இந்நூல்
எனது அன்புக் காணிக்கை.

Page 5

பொருளடக்கம்
அணிந்துரை rhw0 மதிப்புரை அறிமுக உரை VM எனது உரை Mam இதயம் நிறைந்த நன்றி இந்நூலாக்கத்திற்குப் பயன்பட்ட உசாத்துணை -
I.
II.
III.
IV.
V.
குளக்கோட்டன் அறிமுகம் ---
1. முன்னுரை -
குளககோட்டன் பற்றிய நூல்கள்.
2. குளக்கோட்டன் பற்றிய கதைகள்.
கோணேசர் கோயில் தொடர்புகள் مسی 1. கோணேசர் கோயில், 2. குமரிக்கண்டத் தொன்மை. 3. குளக்கோட்டன் திருப்பணிகள்.
திருக்கோணமலைத் தொடர்புகள் nguwo
1. தம்பலகாமம் 2. கந்தளாய் 3. கங்குவேலி 4. வெருகல் 5. பிற ஆலயங்கள்.
திருக்கோயில் தொடர்புகள் ---
மட். மான்மியம், கோணேசர் கல்வெட்டு.
I. 2. மகாசேனன் என்ற மயக்கம். 3. கல்வெட்டுப் பாடல்கள்.
கல்வெட்டுச் சான்றுகள் (திருக்கோணமலை) -
திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டுகள் கல்வெட்டின் மொழிபெயர்ப்பு. கோணேசர் கல்வெட்டு. பிரடரிக்கோட்டை கல்வெட்டு. கங்குவேலிக் கல்வெட்டு.
:
கல்வெட்டுச் சான்றுகள் (திருக்கோயில்) unwiwi».
1. தூண் கல்வெட்டு 2. ஆய்வாளர் கருத்து துண்டுக்கல்வெட்டு 4. ஆய்வாளர் கருத்து மாகோன் வகுத்த வன்னிமை (திருக்கோயில்)
மாகோன் வகுத்த வன்னிமை
Lă 5b
νε viii Χii Xν xvi
O
09
19
25
33
43
(கொக்கட்டுச்சோலை)

Page 6
VI. திருக்கோயில் கல்வெட்டுகளும்,
மாகோன் தொடர்பும் «- 53
1. திரிபுவனச்சக்கரவர்த்தி என்னும்
விருதுப்பெயர்.
2. விஜயபாகு என்னும் பெயர்கொண்ட
மனனர்கள்.
3. கோயில் அமைப்பு.
4. மாகோன் புகழ் மறைக்கப்பட்டது ஏன்?
VIII. மாகோனும் குளக்கோட்டனும் 8wn 61
1, மாகோன் வரவு. 2. குளக்கோட்டன் செயற்பாடுகள். 3. கலிங்கமாகனின் மறுபெயர்கள். 4. கூளங்கை அல்ல காலிங்கை.
IX, களக்கோட்டன் காலம் 69 ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
கல்வெட்டு நூல்கள் தரும் தகவல்கள். வரலாற்றுச் சான்றுகள். கல்வெட்டுச் சான்றுகள்.
பிற சான்றுகள்.
ளக்கோட்டன் பெயர் •u'au 79
குளக்கோட்டன் கல்வெட்டு. சோழவம்ச வழித்தோன்றல். சோழசங்கன் பெயர்கொண்ட மன்னர்கள். சோழகங்கனா? சோழ இலங்கேஸ்வரனா ? சோழகங்கனே குளக்கோட்டன். குளக்கோட்டன் தரிசனம்.
புகைப்படங்கள்
1. திருக்கோணேஸ்வரம், விக்கிரகங்கள்.
2. திருக்கோயில் ஆலயம்.
3. கொக்கட்டுச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம்
4. கல்வெட்டுகள் (கோணேஸ்வரம், கங்குவேலி,
திருக்கோயில்)
sa son JULIÉJ866ir w
குளக்கோட்டன் கால இலங்கை. குளக்கோட்டன் கால இந்தியா, கிழக்கிலங்கையின் முக்கிய இடங்கள். தம்பலகாமம் ஆலயம் .
அட்டைப்படம்
ఒ5ు 1. திருக்கோஹேண்ணு ஆலயம். 2. சமஸ்கிருதக் கல்வெட்டு.

அணிந்துரை
இந்து சமய கலாசார அமைச்சைச் சேர்ந்த செல்வி தங்கேஸ்வரி கதிராமன் தனது தாயகமாகிய மட்டக்களப்பில் பல ஆண்டுகளாகக் கலாசார உத்தியோகத்தராகக் கடமை யாற்றி வருகின்றார். மவாட்ட கலாசாரப் பேரவையின் செயலாளர் பொறுப்பும் அவரது.
கிழக்கு இலங்கையின் வரலாறு, க்லாசாரமாகிய துறை களில் தரமுள்ள ஆய்வுகள் நடாத்தி, விசாரணையின் பயனாக அறிவுலகம் அறியும் வண்ணம் பல ஆய்வரங்குகளில் கட்டுரை கள் சமர்ப்பித்தும் , துரல்களை வெளியிட்டும் வந்துள்ளார். தமக்கென, தனித்துவமுள்ள பாரம்பரியம் உண்டென்டதை மக்கள் மத்தியில் உணர்வு ரீதியாக நிலைநாட்ட, இத்தகைய ஆய்வுகள் அவசியம் என்பது இங்கு நினைவுறுத்தத்தக்கது. ஆகவேதான் செல்வி தங்கேஸ்வரியின் ஆராய்ச்சிச் சாதனை களைப் போற்றி வரவேற்க முன்வந்துள்ளேன்.
* மட்டக்களப்பின் வரலாற்றுப் பின்னணி', 'மாகோ னின் உண்மை வரலாறு', 'தான் தோன்றீஸ்வரம்' , ** திருக் கோயில் திருத்தலம்' , 'விபுலாநந்தர் தொல்லியல் ஆய்வு'' ,
**குளக்கோட்டன் தரிசனம்" எனபன அன்னாரது ஆராய்ச் சிப் பட்டியலை அலங்கரிப்பனவாக இருக்கின்றன. பின குறிப் பிட்ட இரண்டும் புத்தகங்களாக வெளிவந்துவிட்டன. இவற் றுள் அடங்கும் தகவல்கள், ஆய்வுமுறைகள் யாவும் புதிய ஆராய்ச்சியாளர்களை ஈர்த்து உற்சாகப்படுத்தவல்லவை.
ஆய்வுப் பணிகள் மட்டுமல்ல, தொழிலிலும் கடமை யுணர்வு எனும் அரியதோர் பண்பும் அவரிடம் உண்டு. அற நெறிப் பாடசாலைகளது வளர்ச்சி, சாகித் திய விழாக்கள், நூற் கண்காட்சிகள் முதலியவற்றுள் முன்னின்று உழைப்ப வர். கலைஞர்களைக் கெளரவிப்பதிலும், எழுத்தாளர் பல ரது படைப்புகளை வாசகரிடம் அறிமுகஞ் செய்வதிலும் விளம்பரமற்ற தொண்டு செய்பவர்.
வின்சன்ட் மகளிர் கல்லூரியில் நடுநிலைக் கல்வியை முடித்துக்கொண்டு செல்வி தங்கேஸ்வரி களனிப் பல்கலைக் கழகத்தில் தொல்லியல் சிறப்புப் பயிற்சிபெற்று பீ. ஏ. (ஆனர்ஸ்) பட்டம் பெற்றிருந்தார். ஆற்றலும் பண்பும்மிக்க பேராசிரியர் சேனக பண்டாரநாயகா அவரது கல்வியை நெறிப்படுத்தியவர். திரு. மாக்கஸ் டெர்னாண்டோ, திரு. சி. க. சிற்றம்பலம், திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம் ஆகியவர்களிடமும் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்தார். இத் தகைய கல்வியின் விளைவாக அடைந்த பக்கு வத் தி ன் பயனே செல்வி தங்கேஸ்வரியின் சாதனைகளும், பணிகளும், பண்பும்,
கலாநிதி ப. வே. இராமகிருஷ்ணன்.
பீடாதிபதி (கலை), B.A. (Cey), M. Phil., ( Lond.), கிழக்குப் பல்கலைக்கழகம், Ph. D. ( Lancaster)
5- 693.
—— V, ~—-

Page 7
மதிப்புரை
இந்நூலாசிரியை தமது சிறப்புக் கலைத் தேர்விற்குத் தொல்லியலைச் சிறப்புப் பாடமாகக் கற்றவர். இவ்வியலின் அடிப்படை விதிகளைப் பூரணமாக விளங்கிக் கொண்டதனால் நம் நாட்டின் வரலாற்றியற் குறைபாடுகளையும் அதனால் தொல்லியல் ஆய்வுகளின் முக்கியத்துவத்தினையும் விளங்கிக் கொண்டவர். எனவே நாமும் எம் வரலாற்றினை, எதிர்காலத் திற்குப் பிரச்சினைகளுடன் விட்டுச் செல்லக்கூடாது என்ற சிந் தனையுமுடையவராகக் காணப்படுகிறார். இவர் எண்ணங்கள் கைகூடுவதற்கு அவர் இன்று வகிக்கும் பதவியும் (கலாசார உத்தியோகத்தர், மட்டக்களப்பு மாவட்டம்) அனுசரணை யாக அமையலாயிற்று. அதனால் கிழக்கிலங்கை மக்களின் நாயக வழிபாட்டுக்குரியவனான குளக்கோட்டன் வரலாற் றினைப் பல் கோணங்களினின்றும் கண்ணோட்டமிட்டு ஆராய்ந்து 'குளக்கோட்டன் தரிசனம்' எனும் நூலினை வெளியிட்டுள்ளார். அதனை மக்கள் யாவரும் படித்தின்புறு வர் என்பதில் ஐயமில்லை.
மேலும் இந்நூலாசிரியை தமது பட்டத் தேர்வுக்கும் திருக்கோயில் வரலாற்றினை ஆய்ந்திருந்தார் என்பதும் குறிப் பிடத்தக்கது. அத்தருணம் இவர் சேகரித்த தொல்லியல், வரலாற்றியல் தடயங்களைக் கண்ணுற்று, இவற்றின் ஆய்வுத் திறனை உணர்ந்திருந்தேன். இனறு இவர் புதிதாக ஆய்வு செய்த விடயங்களையும் கண்ணுற்று அணிந்துரை கொடுப்ப தில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்நூலின் அத்தியாயங்கள் ஒழுங்கான முறையில் தக வல்களைத் தொகுத்துத் தருகின்றன. குளக்கோட்டன் அறி முகம், கோணேசர் கோயில் தொடர்புகள், திருகோணமலை தொடர்புகள், திருக்கோயில் தொடர்புகள், திருக்கோண மலைக் கல்வெட்டுச் சான்றுகள், திருக்கோயில் கல்வெட்டுச் சான்றுகள், மாகோனும் குளக்கோட்டனும் எனத் தகவல்களை விபரமாகத் தெரிவித்தபின் அவற்றிலிருந்து பெறப்படும் வர லாற்று உண்மைகளின் தொகுப்பாக குளக்கோட்டன் காலம், குளக்கோட்டன் பெயர் முதலிய அத்தியாயங்கள் எழுதப்பட் டுள்ளன. முக்கியமான கல்வெட்டுகள், ஆலய அமைப்பு முறை கள் முதலியவற்றின் புகைப்படங்களும் மற்றும் தேவையான வரைபடங்களும் இந்நூலில் இடம்பெறுகின்றன.
- vi

இவர் தமக்குக் கிடைக்கப்பெற்ற தொல்லியற் சடயங் களை (சிற்ப அமைதி - கோவிற் கட்டிடக்கலை - கல்வெட்டுகள்) நேரில் பார்வை செய்து தம் கருத்திற்கெட்டிய கோட்பாடு களை விபரிக்கிறார். கோவிற் கட்டிடக்கலை சிற்ப அமைதி பற்றி இன்னும் விரிவாக ஆய்தல் அவசியம். எனினும் இவ ருடைய கன்னி முயற்சி எதிர்கால ஆய்வாளர்களுக்கு வழி காட்டவல்லது.
இவர் தமது வாதங்களைத் தொகுத்துத் தரும் முறை யும், ஏற்கனவே நிறுவப்பட்ட சில தவறான முடிவுகளை நிரா கரிப்பதற்காக முன்வைக்கும் ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் வாதமிடுவதைப்போல அமைந்துள்ளன.
இவ்விடயத்தில் இவர் அதிக அக்கறையுடன் தொழிற் பட்டிருக்கிறார். அதனால் தமக்குக் கிடைத்த சிக்கலான வரலாற்றுத் தடயங்கள் ஒவ்வொ ன் றை யும் சீர்தூாக்கி ஆராய்ந்து குளக்கோட்டன், மாகோன், சோழகங்கன், "கலிங்க விஜயபாகு" முதலியோர் யார் என அறிய அயரா முயற்சி செய்துள்ளார். இறுதியாக சோழகங்கனே குளக்கோட்டன் என நிறுவுகிறார். இதுவரை நமக்குக் கிடைத்த சான்றுகளின் அடிப் படையில் இம்முடிவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாகே அமைகிறது.
அவரது ஆய்வுத் திறனும், தக்சரீதியான வாதங்களும், பிரபல ஆய்வாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ள கருத்துக் களை மறுதலிக்கும் முறையும் நம்மைப் பிரமிப்படையச் செய் கின்றன. w
தொல்லியல் துறையில் பட்டப் படிப்பும், பயிற்சியும், பேராசிரியர் சேனகா பண்டாரநாயக போன்றோரின் முறை யான வழிகாட்டலும் பெற்றபடியால் இவர் இவ்வாறு மிகத் திறமையாகத் தன் வாதத்திறனை வெளிப்படுத்தி அவற்றின் மூலம் தனது ஆராய்ச்சி முடிவுகளை நிறுவுகிறார். இது மிக வும் பாராட்டுக்குரியது. இத்துறையில் அவர் மேலும் ஈடு பட்டு வரலாற்று ஆய்வு நூல்களை வெளியிடுதல் தமிழ் மக்க ளுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.
தனபாக்கியம் குணபாலசிங்கம் (விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்)
மட்டக்களப்பு, 15-12-92.
- vii

Page 8
அறிமுக உரை
ஆய்வு நூல்களைப் படிக்கும்போது ஏற்படும் அலுப்பை யும் மனச்சோர்வையும் மீறி அவற்றை எழுதியவர்கள்மீது ஏற்படும் அபார மதிப்பு, ஆழ்ந்த பிரமிப்பு எப்போதுமே மேலோங்கி நிற்பதுண்டு.
எத்தனை தகவல்கள், எத்தனை மேற்கோள்கள், எத் தனை நூல்கள், எத்தனை ஆசிரியர்கள், எத்தனை வாதங் கள், எத்தனை பிரதிவாதங்கள். இவை எல்லாவற்றையும் எப்படி இவர்கள் சேகரிக்கிறார் கள், எப்படி இவற்றைக் கோத்தெடுக்கிறார்கள், எப்படி வகுத்துத் தருகிறார்கள்.
பல சந்தர்ப்பங்களில், தகவல்கள் குவிந்து இடியப்பச் சிக்கலாக, அவற்றின் மத்தியில் நின்றுகொண்டு இவர்கள் வாதம் புரிவார்கள்; ஆதிசேஷ ன்மீது நர்த்தனமிடும் கிருஷ்ண னைப்போல. நமக்கோ தலையும் விளங்காது வாலும் விளங் காது. தலையைப் “ ‘பிச்சிக்கிடலாம்' போல இருக்கும். எப் படியோ நூலை ஒருவாறு படித்து முடித்துவிடுவோம்.
பிற்காலத்தில் சில ஆய்வாளர்கள், இப்படி இல்லாமல் வகுப்பறைப் பாடம்போல இலகுவாக, எளிதாக, தர்க்ச ரீதி யாகத் தமது வாதப் பிரதிவாதங்களை முன்வைத்தார்கள். கலாநிதி க. கைலாசபதி, கலாநிதி செ. குணசிங்கம், கலாநிதி இந்திரபாலா போன்றோர் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர் கள். (கலாநிதி செ. குணசிங்கம் அவர்களின் செப்பேட்டு / கல்வெட்டு விளக்கங்கள் உதாரணங்கள்.)
இவ்வகையில் வரலாற்று ஆய்வு நூல்களைச் சுவைபடச் சொல்லும், எழுதும் மரபு இப்போது ஒரளவு வழக்கில் உள் ளது. இம்மரபில் காலடி எடுத்துவைத்துள்ள செல்வி தங்கேஸ் வரி கதிராமன், வரலாற்று ஆய்வுகளைச் சுவைபடச் சொல் வோர் வரிசையில் சேர்ந்து கொள்ளுகிறார். ஏற்கனவே 'விபுலாநந்தரின் தொல்லியல் ஆய்வுகள்" என்னும் தனது சிறு நூல்மூலம் விபுலாநந்தரின் ஆய்வுக் கட்டுரைகளை ஆர் வத்துடன் படிக்க வழிவகுத்த அவருடைய இரண்டாவது வரலாற்று ஆய்வுநூல் இது.
*" குளக்கோட்டன் தரிசனம்" என்ற இதன் தலைப்பே, நூலின் கருப்பொருளை, தொணிப்பொருளைச் சுவைபடச் சுட்டிக்காட்டுகிறது.
- viii -

குளக்கோட்டன் என்பவனைப்பற்றி ஒரு பெரிய கற்ப னைக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. அவன்மீது கொண்ட நாயக வழிபாடு காரணமாக, இல்லாத பொல்லாத கதைகள் எல்லாம் அவனைச் சுற்றிச் சோடிக்கப்பட்டுள்ளன. Myth என்று சொல்லும் அளவுக்கு நம்பமுடியாத கட்டுக்கதைகள், கர்ண பரம்பரைக் கதைகள் அவனை மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கின்றன.
**இந்தக் குளக்கோட்டன் பிரச்சினை ஒரு தீர்க்கமுடி யாத பிரச்சினையாக உள்ளது' எனப் பிரபல ஆய்வாளர் கலாநிதி செ. குணசிங்கம் தனது "கோணேஸ்வரம்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்,
இப்படியான இடியப்பச் சிக்கலுக்குள் துணிச்சலுடன் புகுந்து குளக் கோ ட் டன் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்ந்து அவன் வரலாற்றில் கதை எவ்வளவு, வரலாறு எவ்வளவு என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டியிருக் கிறார் செல்வி தங்கேஸ்வரி கதிராமன்.
சாதாரணமாக சில வரலாற்று நூல்களை மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டுத் தமது பட்டம் என்னும் கேடயத் துடன் வரலாறு எழுதுவோருக்கும், உரிய முறைப்படி தொல் லியல் துறையில் பட்டப் படிப்பைப் பூர்த்திசெய்து அதற் குரிய தகைமையுடன் (authority) வரலாறு எழுதுவோருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இந்த நூல்மூலம் கண்டு கொள்ளலாம். - g
குளக்கோட்டன் பற்றிக் காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்டுவந்த பல செய்திகளை இந்த நூல் தகர்த்தெறிகிறது. ஆனால் அதற்குத் தகுந்த ஆதாரங் கள் காட்டப்படுகின்றன.
இவற்றுள் மூன்று தகவல்கள் மிக முக்கியமானவை. அவை (i) குளக்கோட்டன் பூர்வீகம் (ii) குளக்கோட்டன் காலம் (ii) குளக்கோட்டன் பெயர்.
(i) குளக்கோட்டன் "கோணேசர் கல்வெட்டு" குறிப்பிடு வதுபோல வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மனு நீதிச் சோழ வம்சத்தவன் அல்லன். அவன் பிற்பட்ட சோழர் காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து இலங் கைக்கு வந்தவன்.
— ix -

Page 9
(i) அவன் குவேராஸ் அடிகளார் குறிப்பிடுவது போல, கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தவன் அல்ல; அவன் கி. பி. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்.
(ii) அவன் பெயர் குளக்கோட்டன் அல்ல; சோடகங்கன்
(சோழகங்கன்). -
இத்தகவல்கள் இந் நூலில் விரிவான ஆராய்ச்சியின் பெறுபேறாகத் தகுந்த ஆதாரங்களுடன் நிறுவப்படுகின்றன. இந்த ஆய்வில் பல பேராசிரியர்களும், கலாநிதிகளும் முன் வைத்த கருத்துக்களும் அடிபட்டுப்போகின்றன. எழுதுபவர் கள் முக்கியமல்ல; எழுதப்பட்டவையே முக்கியம் என்பதை இந்நூால் நிரூபிக்கிறது.
கே. ஏ. நீலகண்டசாஸ்திரி, ரி. வி. சதாசிவப்பண்டா ரத்தார், டாக்டர் மா. இராசமாணிக்கனார் முதலியோர் எழுதிய சேர, சோழ, பாண்டிய, பல்லவ வரலாறுகளைப் படித்துவிட்டுப் பண்டைத் தமிழர்களின் பழம்பெரும் நாகரிகம் பற்றிய பல தகவல்களைக்கூட நான் சேகரித்து வைத்திருந் தேன். இவற்றை முறை யாகத் தொகுத்திருந்தால் ஒரு முழுமையான நூலே எழுதியிருக்கலாம். அப்படிச் செய்ய வில்லை. ஆனாலும் அந்த அனுபவம் தங்கேஸ்வரி எழுதிய இந்த நூலைப் படிக்கவும், சுவைக்கவும், ஆலோசனை கூற வும், நூலைச் செம்மைப்படுத்தவும் எனக்குப் பெரிதும் உதவி யது எனலாம்.
இவரைப்பற்றி நான் சொல் வதை விட இவருடைய தொல்லியல் துறைப் பேராசிரியர் பிரபல சேனக பண்டார நாயக கூறுவதே பொருத்தமானதாகும். அண்மையில் அவ ரைச் சந்தித்தபோது, தொல்லியல்துறை முதுமாணிப் பட்டப் படிப்பை மேற்கொள்ளும்படி இவரை வற்புறுத்தியதுடன் அதற்கான ஆய்வுப் பொருளாக " " மட்டக்களப்பு வரலாற்று மூலங்களை' 'த் தேர்ந்தெடுக்கும்படியும் அவர் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறிய வாசகம்: "Thangeswary is an intelligent girl. She is the right person to do it'.
இதற்குமேல் இவருடைய ஆய்வுத்திறனைப்பற்றி, அறி வாற்றலைப்பற்றி நான் எதுவும் கூறவேண்டியதில்லை. இந் நூலைப் படிப்பவர்கள் அவரைப்பற்றி இன்னும் நன்றாக அறிந்துகொள்ளலாம். இந்நூலில் எழுதப்பட்ட நூல் விபரங் களும், சாசனக் குறிப்புகளும் அவற்றுக்குத் தக்க சான்றுக ளாகும். இவர் இவ்வளவு நாளும் தனது திறமையை வெளி
- X a

யுலகு அறிந்து கொள்ள முடியா த ப டி மறைதது வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அண்மையில் அவர் எழுதி வெளி யிட்ட "சுவாமி விபுலாநந்தரின் தொல்லியல் ஆய்வுகள்” என்ற சிறு நூல் இவருடைய திறமையை வெளிப்படுத்திவிட்டது.
ஏராளமான வரலாற்றுத் தகவல்களை அவர் சேகரித்து வைத்துள்ளார். " " மட்டக்களப்பின் வரலாற்றுப் பின்னணி', "மாகோனின் உண்மை வரலாறு', 'கொக்கட்டுச்சோலைத் தான் தோன்றீஸ்வர ஆய்வு', 'திருக்கோயில் திருத்தலம்' முதலிய ஆக்கங்கள் எழுத்துப் பிரதிகளாக உள்ளன. இவை யும் நூல்களாக வெளிவரும்போது இவருடைய திறமை இன்னும் விரிவாகத் தெரியவரும் என்பதில் ஐயமில்லை.
இந்நூலில் அவர் முன்வைக்கும் ஆய்வுக் குறிப்புகளும், தர்க்சரீதியான வாதப் பிரதி வா தங்களும் கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கவை. இவர் தொல்லியல் துறையில் தகைமை பெற்ற ஒருவர். அத்துறையில் முற்றிலும் ஈடுபாடுள்ள ஒரு வர் என்பதும் இங்கு மனங்கொள்ளத்தக்கது. ,
இரா. நாகலிங்கம்
(அன்புமணி) ** பார்வதி அகம்'', ஆரையம்பதி. 15-05-93.
- хі -

Page 10
எனது உரை
1974-78 ஆண்டுகளில் களனிப் பல்கலைக் கழகத்தில் நான் தொல்லியல் துறையில் பட்டப் படிப்பை மேற்கொண் டிருந்தபோது கிழக்கிலங்கை வரலாற்றுப் பின்னணி தொடர் பான பல்வேறு தகவல்களைச் சேர்க்கமுடிந்தது. இவற்றைத் தொகுத்து, வகுத்து மேற்கொண்டு ஆய்வுகள் செய்வதற்காகச் சேர்த்துவைத்திருந்தேன். '
சென் ற ஆண்டு (1992) எ னது 'விபுலானந்தரின் தொல்லியல் ஆய்வு" என்னும் சிறு நூல் வெளிவந்தது. இந் நூலைப் படித்த உயர் வகுப்பு மாணவ மாணவியரும் இன்னும் பலரும் எனது முயற்சியைப் பாராட்டியதுடன் இத்துறையில் மேலும் காத்திரமான பங்களிப்பை நான் செய்ய வேண்டும் என என்னை வலியுறுத்தினர். '
கச்சேரிக் கடமைகளில் அமுங்கிப்போயிருக்கும் எனக்கு இப்பணியில் ஈடுபடுவதற்கு வேண்டிய ஒய்வு கிடைக்கவில்லை. கடந்த மார்கழி - தை ஆகிய மாதங்களில் கடமை நிமித்தம் திருகோணமலை சென்றிருந்தபோது, இத்துறையில் சிறிது கவனம் செலுத்தமுடிந்தது. அதன் விளைவாக ஏற்கனவே நான் சேகரித்து வைத்திருந்த பல தகவல்களை மீளாய்வு செய்யவும், புதிய தகவல்களைச் சேகரிக்கவும் முடிந்தது. திருமலையைச் சேர்ந்த பல அன்பர்கள் இவ்வகையில் மிகுந்த உற்சாகத்துடன் எனக்கு உதவியும் ஒத்துழைப்பும் நல்கினர். திருமலையில் பல இடங்களை நேரில் சென்று பார்க்கமுடிந் தது. அதன் பயனாக ஒரு புதிய உத்வேகம் பிற ந் த து. குளக்கோட்டன் வரலாறு தொடர் பா க நான் சேகரித்து, வைத்திருந்த தகவல்களைப் புதுக்கி மிக விரைவாக நூலுரு வில் எழுதி முடித்தேன்.
இத்தகவல்களை நூலாக வடிவமைப்பதில் இத்துறை யில் மிகவும் ஈடுபாடு கொண்டவரும், நூலாக்கத்தில் இளந் தலைமுறையினரைத் தூண்டி ஊக்குவிப்பவருமான அன்புமணி ஐபா (திரு. இரா. நாகலிங்கம்) எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தார்கள். அவருடைய வழிகாட்டலில் இந்நூல் செம்மை யாக அமைந்தது.
இச்சந்தர்ப்பத்தில் ஆய்வுத்துறை பற்றி வாசகர்களைச் சிறிது ஆற்றுப்படுத்தவேண்டியுள்ளது.
- Xii -

(i)
(ii)
(iii)
(iv)
(v)
வரலாற்று ஆய்வுத்துறையில் எதையும் முடிந்த முடி பாகக் கொள்வதற்கில்லை. காலப்போக்கில் வெளி வரும் பல புதிய தகவல்களின் அடிப்படையில் பல
முடிவுகளை மாற்றவும், மீளாய்வு செய்யவும், ஏன்
நிராசரிக்கவும் வேண்டும். உதாரணமாக இலங்கையின் பிரபல வரலாற்று ஆய்வாளரான பரணவிதான அவர் களின் பல கருத்துக்கள் இன்று நிராகரிக்கப்படுவதை வரலாற்று ஆய்வாளர்கள் அறிவார்கள்.
வரலாற்றுச் சாசனங்களில் பல தவறான தகவல்களும் இடம்பெற்றிருக்கும். மிகவும் உ ன் னி ப் பா ன ஆய்வு நோக்குடன் இருந்தாலன்றி அவற்றை அப்படியே ஏற் றுக்கொள்ளும் ஆபத்து உண்டு. உதாரணமாக திருக் கோணேஸ்வரத் திருப்பணி செய்தவனும், "கந்தளாய்க் குளத்தைக் கட்டியவனும் மகாசேனன் என்ற தவறான தகவல் மகாவம்சத்தில் இடம்பெற்றுள்ளது. பல்வேறு அகச்சான்றுகள் புறச்சான்றுகளால் இத்தவறை இன்று திருத்தமுடிகிறது.
மேற்படி தவறான தகவலின் அடிப்படையில் 'மட்டக்
களப்பு மான்மியம்' எழுதியவர்கள் குளக்கோட்டன் வரலாற்றை மகாசேனன் வரலாறாக எழுதியுள்ளனர்.
நல்லவேளையாகத் திருமலை வரலாறுபற்றிக் கிடைக் கும் நூல்கள், கல்வெட்டுகள், சாசனங்கள்மூலம் மேற் படி வரலாறு மகாசேனனுடையது அல்ல; குளக் கோட்டனுடையதே என்று நிறுவ முடிகிறது.
வரலாற்று ஆய்வு நூல்களில் இன்னும் ஒரு பெரிய ஆபத்து உள்ளது. சில வரலாற்றாசிரியர்கள் தாம் வரித்துக்கொண்ட கருத்துக்களை இலகுவில் மாற்றிக் கொள்ளமாட்டார்கள். கிடைக்கும் தகவல்களை எல் லாம் தமது கருத்துக்குச் சார்பாக மாற்றிக்கொள்வ தற்குப் பெரும் பிரயத்தனம் செய்வார்கள். அதனால் உண்மை வரலாற்றை அறிந்துகொள்வதில் இடர்பாடு கள் ஏற்படுவது உண்டு. இந்நூலில் அவ்வாறான பல கருத்துக்கள் மறுதலிக்கப்படுவதைக் காணலாம்.
சில உண்மைகளை நிறுவுவதற்கு ஏற்கனவே கூறிய தகவல்களை, மேற்கோள்களை மீண்டும் கூற்வேண்டி
யிருக்கும். (பல வரலாற்று நூல்களில் வாசகர்கள்
- xiii

Page 11
(vi)
(vii)
(viii)
(ix)
(Χ)
இதை அவதானிக்கலாம்.) அவ்வாறே இந்நூலிலும் பல இடங்களில் ஏற்கனவே கூறப்பட்ட தகவல்கள், மேற்
கோள்கள், எடுத்துக்காட்டுகள் மீண்டும் மீண்டும் இடம்
பெறுகின்றன.
இந்நூலில் நிறுவப்பட்ட பல உண்மைகள் அனுமானத் திலும், ஊகத்திலும், இலக்கியச் சான்றுகளின் அடிப் படையிலும் அமைந்தவை. இவற்றுக்கு மாறான புதிய சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில் அவை மாற்றப்பட வேண்டிவை அல்லது திருத்தப்படவேண்டியவை என் பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
வரலாற்றுத் துறைபற்றிய நூல்கள், அத்துறையில் ஈடு - படுபவர்களைத் தவிர ஏனையோருக்குச் சிறிது கருக லாக, சுவாரஸ்யம் அற்றதாக இருக்கக்கூடும். என்னால்
முடிந்தவரை அவற்றைச் சுவைபட எழுத முயன்றுள்
ளேன். வரலாற்றுத் துறையில் ஈடுபாடு இல்லாதவர் களும் சற்றுப் பொறுமையைக் கடைப்பிடித்து இறுதி வரை வாசித்து இந்நூல் முன்வைக்கும் வரலாற்றுக் கோவையை உணர்ந்துகொள்ளுதல் பயனுள்ளது.
"கல்கி எழுதிய "பார்த்திபன் கனவு", "சிவகாமி யின் சபதம்" , ** பொன்னியின் செல்வன்" போன்ற வரலாற்று நாவல்களைப் படித்தவர்கள் பல்லவர் வர லாறு, பிற்காலச் சோழர் வரலாறு பற்றி ஒரளவு அறிந் திருக்கமுடியும். அந்த அறிவு இந்நூலில் கூறப்படும் பல்லவ சோழ வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொள்ள உதவும். ரி. வி. சதாசிவப்பண்டாரத்தார், கே. ஏ. நீலகண்டசாஸ்திரி, டாக்டர். மா. இராச மாணிக்கனார் முதலியோர் எழுதிய நூல்களில் விரிவான தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
இந்நூலில் மேற்கோளாகக் காட்டப்படும் சான்றாதாரங்
கள் பல நூல்களில் மட்டுமல்லாது பத்திரிகை / சஞ்சிகை
களில் வெளிவந்த கட்டுரைகள், கையெழுத்துப் பிரதி யாக உள்ள நூல்கள் முதலியவற்றிலிருந்தும் பெறப் பட்டன. இதனையும் அறிஞர்கள் கருத்திற்கொள்ள வேண்டும்.
பல பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் முன்வைத்த கருத்
துக்கள் இந்நூலில் மறுதலிக்கப்பட்டிருக்கின்றன. அத்
- xiv -

(Χi)
(xii)
18, நல்லையா வீதி,
தகைய மறுதலிப்புக்குத் தகுந்த கரணங்கள் கூறப்பட் டிருக்கின்றன. நடுநிலையில் நின்று இவை நோக்கப்பட வேண்டும் என மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்ளு
கிறேன். Y
穆, இந்நூல் தொடர்பான கருத்துக்கள், அபிப்பிராயங்கள், மறுதலிப்புகள், குறிப்புரைகள் முதலியன மிகவும் மன முவந்து வரவேற்கப்படுகின்றன. வரலாற்று உண்மை களைத் தரிசிப்பதில் இவை பெரிதும் உதவும்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு.
இறுதியாக இந்நூல் கருவாகி, உருவாகிப் பிரசவிக் கும் வேளையில் மருத்துவம் பார்த்து உதவியோர் பலர். அவர்களுக்குத் தனியாக நன்றி கூறி உள்ளேன். இவர் களைவிட முக்கியமாக நன்றிக்குரியவர்கள் இந்நூலை வாங்கிப் பயன்படுத்தவுள்ள வாசகர்கள். அவர்கள் இந்
நூலுக்குக் கொடுக்கும் ஆதரவே. தற்சமயம் என் கை
யில் எழுத்துப் பிரதிகளாக உள்ள "மட்டக்களப்பு வரலாற்றுப் பின்னணி", "மாகோனின் உண்மை வரலாறு', 'கொக்கொட்டுச்சோலைத் தான் தோன்
lஸ்வர ஆய்வு', 'திருக்கோயில் திருத்தலம்" முத லியவை நூலுருப் பெற ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வல்ல அருமருந்தாகும்.
க. தங்கேஸ்வரி
மட்டக்களப்பு. 15-06-93.

Page 12
இவர்களுக்கு என் இதயம் நிறைந்த
10.
1.
2.
இந்நூல் ஆக்கத்தில் உடனிருந்து உதவிய இலக்கிய நெஞ் சர் திரு. இரா. நாகலிங்கம் (அன்புமணி) ஐயா அவர்கள்,
திருகோணமலையில் அரிய நூல்களை ஆய்வு செய்ய,
சகல வசதிகளும் செய்துதந்த இளைஞர் அருள்நெறி மன்றத் தாபகர் தொண்டர் ஐயா, திருக்கோணேஸ்வர ஆலயத்திலும், அதன் சுற்றுப்புறங் களிலும் ஆய்வு நடாத்த உதவிய அறங்காவலர் மு. கோ. செல்வராசா (சட்டத்தரணி) ,
ஆய்வுக்காகப் பல நூல்களைக் கொடுத்துதவிய திரு கோண்மலை நகரசபை நூல் நிலையப் பொறுப்பாளர் திரு. த. சிவபாதசுந்தரம், எனது பட்டப் படிப் பின் போது, ஆய்வு உத்திகளை விளக்கியதுடன், பல ஆவணங்களை அவ்வப் \போது கொடுத்தும் உதவிய பிரபல ஆய்வாளர் பேராசிரியர் சேனகா பண்டாரநாயக்க, தேசிய அரும்பொருள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி அபயவிக்கிரம, அரும்பொருட் காட்சிச்சாலை நூலகப் பணியாளர்கள், வழக்கம்போலவே இந்நூலை அழகுற அச்சிட்டுத்தந்த மட்டக்களப்பு சென். ஜோசப் கத்தோலிக்க அச்சகத் தினர், w "புரூப்" திருத்தி உதவிய எழுத்தாள நண்பர் கண. மகேஸ்வரன், அணிந்துரை வழங்கிய கிழக்குப் பல்கலைக்கழகப் பேரா
சிரியர் பி.வி. இராமகிருஷ்ணன், விரிவுரையாளர் திருமதி
தனபாக்கியம் குணபாலசிங்கம், அட்டைப்படம் வரைந்துதவிய ஓவியர் " " அருள்",
எனது இந்த இரண்டாவது நூலையும் வெளியீடு செய் யும் ஆரையம்பதி அன்பு வெளியீடு,
இந்நூலை வாங்கிப் படிக்கும் வாசகராகிய நீங்கள்.
- xvi -
 

இந் நூலாக்கத்திற்குப் பயன்பட்ட உசாத்துணை
இந்துநதி -
கிழக்குப் பல்கலைக்கழக வெளியீடு - 1987.
"ஊர்த்தொகை - சுந்தரர் தேவாரம்'
கதிரைமலைப் பள்ளு - குமாரசுவாமிப்பிள்ளை வ. - 1935.
கல்லெழுத்துக் கலை - நடன. காசிநாதன், எம். ஏ. - 1989. கைலாய மாலை - முத்துராஜ கவிராயர்.
கோணேசர் கல்வெட்டு -
கவிராஜவரோதயர் எழுதியது - 1916. பு. பொ. வைத்திலிங்கதேசிகர் பதிப்பு.
கோணேஸ்வரம் -
கலாநிதி. செ. குணசிங்கம் - 1972. சிந்தனை - பேராதனை பல்கலைக்கழகம் - 1968. தமிழர் வரலாறும் மக்கள் பண்பாடும் - டாக்டர். K. பிள்ளை.
தமிழ் நாட்டு வரலாறு - இறையரசன் - 1983.
திராவிடக் கட்டிடக் கலை -
கலாநிதி கா. இந்திரபாலா - 1970.
திருக்கேதீஸ்வர திருக்குட திருமஞ்சன மலர் -
திருக்கேதீஸ்வர ஆலய வெளியீடு - 1976.
திருக்கோணேஸ்வர ஆலய கும்பாபிஷேக மலர் - 1981.
திருக்கோணாசல திருப்பதிகம் (திருப்புகழ்) -
அருணகிரிநாதர் பாடியது. திருக்கோணாசல புராணம் -
முத்துக்குமாரப்பிள்ளை, தொகுப்பாசிரியர் - 1958. திருக்கோணாசல வைபவம் -
அகிலேசபிள்ளை எழுதியது. அழகைக்கோன் பதிப்பாசிரியர் - 1950.
- xvii

Page 13
திருக்கோணேஸ்வரம் -
வை. சோமஸ்கந்தர், அ. பூgஸ்கந்தராசா - 1954.
திருகோணமலைத் திருப்பதிகம் -
சம்பந்தர் பாடியது.
சோமசுந்தரத்தம்பிரான், பதிப்பாசிரியர் - 1953.
திருகோணமலைத் திருவுருவங்கள் -
Dr. W. LirrGavsöggrir — 1954.
திருகோணமலை மாவட்டத் திருத்தலங்கள் - 1982.
பண்டிதர். சி. வடிவேல்.
தெட்சணகைலாய புராணம் -
பண்டிதராஜர் எழுதியது. பு. பொ. வைத்திலிங்க தேசிகர் பதிப்பு - 1916,
தொல்லியல் ஆய்வும் திராவிடக் கட்டிடக் கலையும் -
திருமதி. த. குணபாலசிங்கம்.
பண்டைத் தமிழ் இலக்கியத்தில் சோழர்கள் -
நீலகண்டசாஸ்த்திரி. கே. ஏ.
u6i 60 Lu ஈழம் - வே. க. நடராஜா - 1970.
பாவலர் துரையப்பா நூற்றாண்டு விழா மலர் -
தெல்லிப்பளை - 1972.
மட்டக்களப்பு மான்மியம் -
F. X. C. நடராசா, பதிப்பாசிரியர் - 1952.
யாழ்ப்பாண வைபவமாலை -
குல. சபாநாதன், பதிப்பாசிரியர் - 1953.
நாட்டுப்புறத் தெய்வங்கள் -
டாக்டர். துளசி இராமசாமி - 1985
வரலாற்றுக்கு முற்பட்ட வடக்கும் தெற்கும் -
மு. பரமானந்தசிவம் - 1990.
வன்னியர் - கலாநிதி. சி. பத்மநாதன் - 1962.
வீரகேசரி - கட்டுரைகள் - பாலேந்திரா - 1963.
- xviii -

Ancient Jaffna -
By Muthaliyar Rasanayagam - 1926.
Ceylon and Malaysia -
By S. Paranavitana - 1966.
Ceylon Tamil inscriptions -
By A. Veluppillai - 1972.
Chola Pandian, Chola Gangan, Chola Elangeswaran, Chola Keralan -
By N. Sethuraman - 1986.
Conquesta or the Historic Tragey of the Island of Ceylon -
By Fr. Queroz – 1930.
Cuavamsa –
Editor, W. Geiger - 1930 - Colombo,
Dravidian India — By Sesha Iyanker.
Epigraphica Zeylanica Vol. 5 —
Editor, De M. D. Wickramasingha - 1933.
Extract from the Journal of jacques fabrice - Vansanden - 1786.
History of Ceylon - By Tennets - 1859.
History of Ceylon - Editor, W. J. F. Labrooy - 1968.
J. R. A. S. C. B - XXX No 80. - 1927 -
Codrington H. W.
Kingdom of Jaffna - By Dr. Indrapala - 1972.
The Lost Lemuria — By Scott Eliot.
Mahavamsa - Editor, W. Geiger - 1953 - Colembo.
- xix -

Page 14
Monograph of the Batticaloa District of the Eastern Province -
By S. O. Kanagaretnam.
Nagadipa and Buddhist Remains in Jaffna J. R. A. S. CB. XXV. No. 70 —
By P. E. Pieris — 1917.
Nikayasangraha - Wickramasinghe, Editor.
Origin of the Vanni- Dr. K. Indrapala.
South Indian Temple inscriptions -
By T. N. Subramaniyam - 1957 - Madras.
Tamil and English Dictionary -
By Winslow M. Rev. - 1862 - Madras.
Temporal and Spiritual Conquest of Ceylon -
By Fr. Queroz — Translated by S. G. Perera - 1930 - Colombo.
Trincomalee Bronzes - By W. Balendra - 1953.
The Taprobanian -- By Hugh Neville - 1885.
Vamsathipikasini - Editer, G. P. Malalasekara - 1935.
雛
— Xx —

(
,ጣ፥፵ጥ9
لیگهای جابجا من" و هفتم ه
soR-es
8.
வடிவிசடுை
வதாடகமு
గ్రీశభణ
மாகன், குளக்கோட்டன் காலத்து இலங்கை.

Page 15
شمس مامنامه لاشه... من
ཆེ་ aisaar
திருக்க்கோணமலைப் واصودمساده
Sifa o திருக்கோணமலை ܘ}
கோட்டிய4ாக்குடா
Λ
as மூதூர் , ادله عه بنیه ع- شمanپهند= Abspinus کیلیے لا۔ A' Y இலங்கைத் துறை (இலம்கீத் ஆாடி
دهد. به ضع عمیر لا و V از ང་ வேருகல்
། - - ། a ABarwng Canu cyfr
ariasTaTTs suiv ܠܗܚܶܢܫܐ *。 ها عقد
e.
” ధunny&#డిగా
ኳ கற்குடா' به او به nاست.
۹ . سه TYJ) dobogie
O வக்தாறுமூ,ை கிழக்கு 733நர்) சததுருகோள்ளுன் தண்டவள் வெளி DTST600T -மட்டிக்களப்புநகர்
:リ *"##raf დრყ به هواپی மட்டக்களப்புப் uctyడిగా 鹅 s ○ Gogurt. a a . . . ܫ O exillon, chuir di, if 。பிரிவு ஆசைப்பற்றை 宗}_二*踪 " كوم ة قة : ‘ :...+3( аурайкл 52 هيرة - مهما "عويلة . کسم ہے۔ : 擢黑 upද්දී 瑞器 -〜) undatQ8f S a.o.) Cur
cs , * سمهnمسك عليه * 基 نہ (சோறிக்கல்முனை რჩt:სცყაზ.A" 参考 ` ܟ anwo თSm (ყაბდ’’ -ܚ காாைதி: ༄པའི་ V,, NE.
Y. 2xp
ية.
w
\ சேனநாயக்க Խ V
சமுத்திரம்
வங்காளக் கடல்
Ffurflun ou
знibit-from
Y
نته لأهم مملـ3)
ur 2WAYO
é dt'(ფ)4ჩut&ის
உகந்தம&ல S.
w 雪4 − குமுண பூமுனை}
கிழக்கிலங்கை,
(நன்றி: மட்டக்களப்பு தமிழகம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

--
குளக்கோட்டன் அறிமுகம்
1. முன்னுரை
கிழக்கிலங்கை வரலாற்றில் குளக்கோட்டன் பெயர் தனித்துவமான ஒரு இடத்தை வகிக்கிறது. குளக்கோட்டன் என்ற பெயர்கூட விசித்திரமான ஒரு காரணப் பெயராக அமைந்துள்ளது. இவன் தன் காலத்தில் ஆற்றிய பணிகள் பற்றிப் பலவிதமாக விதந்துரைக்கப்படுகின்றன. இவ்வாறு குவிந்துள்ள தகவல்கள், குளக்கோட்டனின் உண்மையான வரலாற்றைத் தரிசிக்க முடியாதபடி, ஆய்வாளர்கள் பலரைத் தடுமாறச் செய்துள்ளன. சில ஆதாரமற்ற தகவல்கள் ஆய்வு களைத் திசைதிருப்பியும் விட்டுள்ளன. சில ஆய்வாளர்கள் ஆர்வமிகுதியால் உந்தப்பட்டு, அவனது காலத்தை மிகைப் படுத்தியும் கூறியுள்ளனர். இத்தகைய பின்னணியில் குளக் கோட்டன் பற்றிய உண்மையான, ஆதாரபூர்வம்ான வர லாற்றை அறியும் முயற்சியாக இக்கட்டுரை அமைகிறது.
இக்குளக்கோட்டு மன்னன் யார்? இவன் எங்கிருந்து வந்தான்? இவனுடைய பூர்வீகம் என்ன? இவனுடைய காலம் எது? இவன் எக்குலத்தைச் சேர்ந்தவன்? இவன் உண்மைப் பெயர் என்ன? இவன் ஆற்றிய சமய, சமூகப் பணிகள் எத் தகையவை? வரலாற்றில் இவனுடைய இடம் எது? ஈழத்து வரலாற்றிலும், கிழக்கிலங்கை வரலாற்றிலும் இவனுடைய சுவடுகள் எத்தகையவை? இக்கேள்விகளுக்கான விடைகள் நமது நோக்கத்தை நிறைவேற்றும்.

Page 16
இத்தகைய ஒரு முயற்சியின்போது காலம் காலமாக நிலைத்துவிட்ட சில கருத்துக்கள் நிராகரிக்கப்படலாம்; நம்பிக்கைகள் மறுதலிக்கப்படலாம். எனவே "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு" என்ற வள்ளுவர் வாக்கிற்கமைய நடுநிலை நின்று, இக்கருத்துக்களை அணுகுவதும், அதன் அடிப்படை யில் வரலாற்று உண்மைகளைத் தரிசிப்பதும் தகும்.
குளக்கோட்டன் வரலாறு தொடர்பாக கலாநிதி செ. குணசிங்கம், கலாநிதி இந்திரபாலா, கலாநிதி பத்ம நாதன், பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை, டாக்டர் பாலேந் திரா போன்ற பலர் ஆய்வுகள் செய்து தமது கருத்துக் களைத் தெரிவித்துள்ளனர்.
இவர்களது ஆய்வுகள், இருள் மண்டிக்கிடந்த குளக் கோட்டன் வரலாற்றில் ஓரளவு ஒளியைப் பாய்ச்சியுள்ளன. ஆனால் மேலும் பல உண்மைத் தகவல்களை அறியவேண் டும். தெளிவுபடுத்தப்படாத பல விடயங்களைத் துருவி ஆராயவேண்டும். வரலாற்றில் உள்ள சில இடைவெளிகளை நிரவல் செய்யவேண்டும்.
அதுமட்டுமல்ல, இதுவரை வெளிவந்துள்ள ஆராய்ச்சி முடிவுகளும் புதிய தகவல்களின் அடிப்படையில் மீளாய்வு செய்யப்படவேண்டும். சில முடிவுகளை இந்த மீளாய்வின் அடிப்படையில் திருத்திக்கொள்ளவேண்டியதும் அவசியம்.
குளக்கோட்டனைப் பெரும்பாலும் திருகோணமலை யுடன் இணைத்தே இதுவரை செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் அவனது பணிகள் திரு க் கோண மலை முதல் திருக்கோவில் வரை பரந்துள்ளன. திருக்கோணமலை, தம் பலகாமம், கந்தளாய், வெருகல், கொக்கட்டிச்சோலை, சங்க மங்கண்டி, திருக்கோவில் முதலிய இடங்களில் இவனது திருப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
ஒரு மன்னனுக்குரிய சிறப்புக்களோடு இவன் புகழ் பரவியுள்ளது. இவன் வகுத்த ஆலய நடைமுறைகள் இன் றும் வழக்கத்தில் உள்ளன. (தம்பலகாமம் ஆதிகோணநாய கர் ஆலயத்தில் இவை இன்றும் நடைபெறுகின்றன.)
குளக்கோட்டன் வரலாறுபற்றி அறிய உதவும் சில நூல்கள் வருமாறு: .
2

நூற்பெயர் நூலை எழுதியவர் எழுதிய ஆண்டு
. கோணேசர்
கல்வெட்டு கவிராஜவரோதயர் 02. மட்டக்களப்பு G. 9. 1952
மான்மியம் F. X. C. p5L-print FIT (பதிப்பு)
03. தெட்சண
கைலாயபுராணம் பண்டிதராசர் கி. பி. 1400 04. யாழ்ப்பாண
685) 6) I J 6.1 L DfT ó) 6) மயில்வாகனப் புலவர் கி. பி. 1736 05. கைலாயமாலை முத்துராச கவிராசர் கி. பி. 1591 06. GOp anu uLu nr u ft L6 வையாபுரி ஐயர் கி. பி. 1500 07. திருக்கோணாசல
வைபவம் வே. அகிலேசபிள்ளை கி.பி. 1889 08. திருக்கரசைப்
புராணம் வே. அகிலேசபிள்ளை (பதிப்பு) 09. திருக்கோணாசல கி. பி. 19ம்
புராணம் O. முத்துக்குமாரு நூற்றாண்டு 10. கோணமலை
அந்தாதி சு. ஆறுமுகப்புலவர் கி. பி. 1856
மேற்படி நூல்களில் கற்பனைகளும், கர்ணபரம்பரைக் கதைகளும் கலந்திருப்பதால், அவற்றினூடே விரவி நிற்கும் வரலாற்றுத் தகவல்களைக் கண்டறியவேண்டியது அவசியம். இவ்வகையில் குளக்கோட்டன் வரலாறு தொடர்பான உண் மைகளைக் கண்டறிவதில் பின்வரும் சாசனங்களும், கல்வெட் டுக்களும் பெரிதும் உதவுகின்றன.
கந்தளாய்க் கல்வெட்டு, குச்சவெளிக் கல்வெட்டு, திரியாய்க் கல்வெட்டு, கங்குவெலிக் கல்வெட்டு, பளமோட் டைச் சாசனம், பிரடரிக்கோட்டைச் சாசனம் முதலியனவும், குடுமியாமலைக் கல்வெட்டு, தென்னிந்திய கோயிற் சாசனங் கள் முதலியனவும் குளக்கோட்டன் தொடர்பாகவும், கோணேசர் கோயில் தொடர்பாகவும் பல தகவல்களைத் தருகின்றன.
2. குளக்கோட்டன் பற்றிய ‘கதை’கள்
முன் குறிப்பிட்ட நூல்களில் குளக்கோட்டன் பற்றிக் கூறப்படும் " " கதைகள்" சுருக்கமாக வருமாறு:
3

Page 17
1. “கோணேசர் கல்வெட்டு" கூறும் கதை:
மனுநீதி கண்ட சோழன் மரபில் வந்த வரராமதேவன் திரிகயிலைப் பெருமை கேட்டு, அங்கு வந்து தொண்டு செய்தான். பின்பு அவன் மசன் குளக்கோட்டு ராசன் மருங் கூரிலிருந்து குடிகளை மரக்கலமேற்றி, திருக்கோணமலை நகரில் குடியேற்றித் திட்டங்களும் செய்தான். (கோணேசர் கல்வெட்டுப் பாடல் 3-6).
குளக்கோட்டன் பின்னால், உன்னரசுகிரியில் (திருக் கோயில்) ஆட்சிபுரிந்த ஆடக செளந்தரியை மணம்புரிந்து, திருக்கோணமலை முதல் திருக்கோயில் வரை திருப்பணிகள் செய்தான். ஆடக செளந்தரியின் உதவியுடன் கந்தளாய்க் குளத்தைக் கட்டினான். கோணேசர் கோயில் நடைமுறைக் காக வயல்களை நிவந்தமாக வழங்கினான். தென்னிந்தியாவி லிருந்து தொழும்பர்களைத் தருவித்துக் குடியமர்த்தினான். 2
iர். தெட்சண கைலாயபுராணம் கூறும் கதை
வரராமதேவன் மச்சேந்திர புராணத்தில் கூறப்படும் கோணேசர் ஆலயத்தின் பெருமைகளைக் கேள்வியுற்று, ஈழம் வந்து திருகோணமலைச் சிகரத்தில் தூபியுடன், கோயிலியற் றிப் பூசை விழா முதலியன நடாத்தி, திருப்பணிக்குக் கொண்டு வந்த பொன்னைக் கிணற்றில் அடைத்துவைத்து, மகனுக்கு அறிவிக்கும்படி தூது அனுப்பிப் பரகதியடைந்தான். (இவனும் மனுவேந்தன் என்றே அழைக்கப்பட்டான்.) பின் அவன் மகன் குளக்கோட்டன் இலங்கைக்கு வந்து திருப்பணிகள் செய்தான் 3 இவன் 'பொன்னாரும் சிகரமும் பொற் கோபுரமும் பொருந் தியதிற் பன்னாகங்கவித்ததென மவுலிகளும் பல செய்தான்." குறித்த பாடல் வருமாறு:
தன்னாண்மைக் குவமையில்லாத்
தனிவேந்தன் வடகயிலை மின்னோங்கு குவடெனத்
தென்கயிலைக்கும் வேண்டுமெனப் பொன்னாருஞ் சிகரமும்
பொற்கோபுரமும் பொருந்தியதிற் பன்னாகங் கவித்ததென
மவுலிகளும் பல செய்தான். (பாடல்: 31)
4.

tiர். திருக்கோணாசல வைபவம் கூறும் கதை:
சோழமண்டலத்தில் ஆட்சி செய்த மனுநீதி கண்ட சோழன் வம் சத்தவ னாகிய வரராமதேவன் திருகோண மலைக்கு வந்து திருப்பணிகள் செய்தான். இவன் திரும்பிச் செல்லும்போது அதிக திரவியங்களைச் சேர்த்து வைத்து விட்டுச் சென்றான்.
பின்னால் இவனுக்கு ஒரு புத்திரன் பிறந்தான். இவனுக்கு நெற்றியில் ஒரு கொம்பு காணப்பட்டது. எனவே இவன் குளக்கோட்டன் என அழைக்கப்பட்டான். இவன் பிற்காலத் தில் தனது தந்தையின் திரவியங்கள்பற்றிய விபரம் அறிந்து திருகோணமலைக்கு வந்துசேர்ந்தான்.
இஃதிவ்வாறாகக் கலிங்க தேசத்தில், அசோக சுந்தரன் தம்பதிகளுக்குப் பிறந்த ஒரு குழந்தை சீவிமுடித்த குழலோடும் பற்களோடும் பிறந்தது. சோதிடர் சொற்படி இக்குழந்தை பேழையில் வைக் கப்பட்டுக் கடலில் விடப்பட்டது. இக் குழந்தை அப்போது உன்னரசுகிரியை (திருக்கோயில்) ஆண்ட மனுநேய கயவாகு மன்னனால் கண்டெடுக்கப்பட்டது. இக் குழந்தை வளர்ந்ததும் ஆடக செளந்தரி என்னும் பெயருடன் உன்னரசுகிரி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.
சந்தர்ப்ப வசத்தால் குளக்கோட்டன் ஆடக செளந் தரியைத் திருமணம் செய்தான். எனவே அவன் திருப்பணி உன்னரசுகிரியிலும் (திருக்கோயில்) இடம்பெற்றது. குளக் கோட்டன் உத்தரதேசம், மருங்கூர், திருநெல்வேலி முதலிய இடங்களிலிருந்து குடிகளைக் கொண்டுவந்து இங்கு குடி யமர்த்தினான்.4
iv. மட்டக்களப்பு மான்மியம் கூறும் கதை:
இதே வரலாறு "மட்டக்களப்பு மான்மியம்' என்னும் நூலிலும் கூறப்பட்டுள்ளது. ஆனால் குளக்கோட்டன் என்ப தற்குப் பதிலாக மகாசேனன் என மன்னனின் பெயர் குறிப் பிடப்பட்டுள்ளது. அவ்விபரம் வருமாறு:-
பிரசன்னாசித்து என்பவன் கலி வருடம் 3110 (கி.பி. 8) மட்டக்களப்புக்கு ஆட்சிக்கு வந்தான். இவனுடைய ஆட்சியின் போது புவநேக கயவாகு என்னும் கலிங்க இளவரசன், சோழ நாட்டு அரசன் திருச்சோழன் மகள் தம்பதி நல்லாள் என்ப வளை மணந்து புத்திரபாக்கியம் இல்லாமையால் யாத்திரை
5

Page 18
மேற்கொண்டு இராமேஸ்வரம் தரிசனை செய்து மட்டக் களப்புக்கு வந்தான். அவன் பிரசன்னாசித்துவிடம் முகமன் கொண்டாடி அவன் கோரிக்கைக்கு இணங்கி, தமிழகத்தி லிருந்து சிற்பிகளை வரவழைத்துத் திருக்கோயில் ஆலயத்திற் குத் திருப்பணி செய்தான்.
புவனேக கயவாகுவுக்குப்பின் அவன் மகன் மனுநேய கயவாகு (மேகவர்ணன்) கலி வருடம் 3150 (கி. பி. 48) உன் னரசுகிரி (திருக்கோயில் அல்லது நாகர்முனை) ராஜ்யத்தின் ஆட்சிக்கு வந்தான். அவனது ஆட்சியின்போது, கரைசேர்ந்த பேழை ஒன்றில் இருந்த பெண் குழந்தையைக் கண்டெடுத்து அவளுக்கு ஆடக சவுந்தரி எனப் பெயரிட்டு வளர்த்துவந் தான். மனுநேயகயவாகுவுக்குப் பின் ஆடகசவுந்தரி ஆட்சிக்கு வந்தாள்.
அப்போது மகாசேனன் திருகோணமலையில் திருப் பணி செய்துவந்தான். அவன் பின்பு ஆடக சவுந்தரியைத் திருமணம் செய்து அவளின் உதவியுடன் கந்தளாய்க் குளத் தைக் கட்டினான். அதன்பின் மகாசேனன் உன்னரசுகிரி சென்று ஆட்சிபுரிந்தான். அங்குள்ள ஆலயங்களுக்கும் திருப் பணி செய்தான்*
(இதில் குறிப்பிடப்படும் ம ன் ன ன் மகாசேனனாக இருக்கமுடியாது. ஏனெனில், மகாசேனன் இந்து ஆலயங்களை அழித் த வன். திருகோணமலையில் பிரமதேவதைகளின் கோயில்களை அழித்து மூன்று விகாரைகளை அமைத்தான் என மகாவம்சம் காட்டுகிறது. (மகாவம்சம் , 37ம் அத். 41வது குறிப்பு)
(V) "யாழ்ப்பாண வைபவமாலை" கூறும் கதை:
மனுநீதி கண்ட சோழன் மகன் குளக்கோட்டன் சாலி வாகன சகாப்தம் 358ல் (கி. பி. 436) திருகோணமலைக்கு வந்தான்.
குளக்கோட்டன் திருகோணமலையில் திருப்பணிகள் செய்து ஆலயக் கிரியைகள் தடங்கலின்றி நடைபெறுவதற் காக ஏழு கிராமங்களில் வயல்களை நிவந்தம் அளித்து, கணக்கு வழக்குகளை மேற்பார்வை செய்வதற்கு வன்னியர் களையும் குடியமர்த்தி நாடு திரும்பினான்.7 இவனது நாடு சோழமண்டலம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த நகர் என்பது சொல்லப்படவில்லை. உண்மைப் பெயரும் இல்லை.
6

இவ்வரலாறுகள் யாவும் கற்பனை கலந்தவை என் பதும் இவ்வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட சில கதைகள் நம்ப முடியாதவை என்பதும் உண்மையே. ஆனால் இக்கதைகளி ஹாடே பின்வரும் வரலாற்றுத் தகவல்களை நாம் தரிசிக்க முடிகிறது.
(அ) இவன் சோழவம்சத்தைச் சேர்ந்தவன். இந்தியாவி லிருந்து இலங்கைக்கு வந்தவன். ஆற்றல் மிகுந்த ଘ}} ଘts' }, (ஆ) திருகோணமலை முதல் திருக்கோயில் வரை
திருப்பணிகள் செய்தவன். (இ) ஆலயப் பணிகள் தடங்கலின்றி நடைபெறுவதற் காக வயல்களை நிவந்தம் அளித்த வன். அவ் வாறே இப்பணிகளை மேற்கொள்வதற்காக, இந்தியாவிலிருந்து சிலரைத் தருவித்துக் குடி யமர்த்தியவன். (ஈ) ஆடக செளந்தரியைத் திருமணம் செய்தவன். (உ) திருகோணமலையிலும், உன்னரசு கிரியிலும்
(திருக்கோவில்) ஆட்சிபுரிந்தவன். (ஊ) கந்தளாய்க் குளத்தைக் கட்டியவன்.
இவ்வரலாறுகளிலிருந்து தெளிவுபெற முடியாத சில விடயங்களைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
(அ) இவனது சொந்தப் பெயரும், ஊரும் தெரிய வில்லை. அதனால் இவன் மன்னனா அல்லது மன்னனுடன் வந்த ஒரு பிரதானியா என்பதும் தெரியவில்லை. இவனுக்கு அ தி கா ரங் க ள் கிடைத்த விதமும் தெரியவில்லை.
(ஆ) இவனுடைய காலம் நிர்ணயிக்கப்படவில்லை.
(இ) குளக்கோட்டன் என்னும் பெயர் வந்தமைக் கான காரணமும் முரண்பாடாகச் சொல்லப்படு கின்றன.
இவை பற்றியும் பின்னால் ஆராயப்படும்.
இவ்விடத்தில் வாசகர்களுக்குச் சில சந்தே கங்கள் ஏற்படலாம். கற்பனை கலந்த கதைகளும், கர்ணபரம்பரைக் கதைகளுமே முன் குறிப்பிட்ட நூல்களில் சொல்லப்படுகின் றன. இவற்றை எவ்வாறு வரலாற்றாதாரமாகக் கொள்ள முடியும் ? இவற்றை நிரூபிக்கக்கூடிய வேறு ஆதாரங்கள் D 67 lir? அகழ்வாராய்ச்சிகள் உண்டா? கல்வெட்டுக்கள் e-Göatl-tr?
7

Page 19
ஆம். இவை நியாயமான சந்தேகங்களே. ஆனால் ஒரு உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். கர்ண பரம்பரைக் கதைகள்மூலம் கிடைக்கும் அடிப்படைத் தகவல் கள் ஒரே மாதிரியானதாக இருந்து அவற்றிற்கு. வேறு ஆதா ரங்களும் இருப்பின் அவற்றை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.
இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் கிறீஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வரலாறு கூறுகிறது. இக்கதை பல ஆண்டுகள் வாய்மொழியாக்ச் சொல்லப்பட்டுப் பிற் காலத்தில் (கி. பி. 6ம் நூற்றாண்டு) மகாநாம தேரோ என்பவரால் தொகுக்கப்பட்டது. இதை ஒரு வரலாற்று நூலாக ஏற்றுக்கொள்ள முடியுமானால் அந்த அளவுக்கு மேற் படி நூல்களையும் நாம் ஏற்றுக்கொள்ளலாம் அல்லவா?
இலக்கியங்களும், கர்ணபரம்பரைக் கதைகளும் அப் படியே வரலாறாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவற்றி னுாடே வெளிப்படும் வரலாற்று உண்மைகள் மட்டுமே ஏற் றுக்கொள்ளப்படுகின்றன. அடிப்படையான ஒரு வரலாறு இல்லாமல் இக்கதைகள் உருவாக்கப்படுவதில்லை. கதை களாக அவை எழுதப்படும்போது சுவை சேர்ப்பதற்காகக் கற்பனை மெருகூட்டப்படுகின்றன என்பதும் நாம் அறிந்தவை. இதற்கு உதாரணமாக இராமாயணம், மகாபாரதம், சிலப் பதிகாரம் போன்ற பெரும் காப்பியங்களையே எடுத்துக் கொள்ளலாம். பிறமொழி இலக்கியங்களான இலியட், ஒடிசி, ஜூலியஸ்சீசர், கிளியோப்பட்ரா போன்ற இலக்கியங்கள் கற்பனை கலந்த வரலாற்றுக் கதைகள் அல்லவா?
அடிக்குறிப்புகள்: ܫ 1. கோணேசர் கல்வெட்டு - கவிராஜவரோதயர் எழுதியது.
அ. அளகைக்கோன், பதிப்பாசிரியர் - 1916 - பக். 19. 2. மேற்படி நூல் - பக், 2, 3. 3. தெட்சண கைலாயபுராணம் - பண்டிதரர்சர் - வைத்தி
லிங்க தேசிகர் பதிப்பு - பக். 31, 61, 71.
4. திருக்கோணாசல வைபவம் - அகிலேசபிள்ளை -
அ. அளகைக்கோன், பதிப்பாசிரியர் - 1950 - பக். 34,41.
5. மட்டக்களப்பு மான்மியம் - F. X. C. நடராசா, பதிப்
பாசிரியர் - 1952 - பக். 24-28.
. 6. MAHAVAMSA — Geiger - XXXVII — lué. 40, 41.
7. யாழ்ப்பாண வைபவமாலை - குல. சபாநாதன், பதிப்
பாசிரியர் - 1953 - பக். 4- 11.
8


Page 20
திருக்கோணேஸ்வர ஆலய விக்கிரகங்கள்
 

- I -
கோணேசர் கோயில் தொடர்புகள்
திருக்கோணமலை, திருக்கோணமாமலை, தி ரு க் கோணாசலம், திருக்குன்றாமலை, திரிகோணமலை, மச்சேந்' திரபர்வதம், மச்சேஸ்வரம், தட்சணகைலாசம் எனப் பல பெயர்களால் வழங்கப்பட்ட இத்தலத்தின் பூர்வீக நாமம் 'கோகர்ணம்' என்பதாகும். இப்பெயர் மகாவம்சத்தில் இடம்பெறுகிறது.
விஜயனின் உடன்பிறப்பான சுமித்தனின் அழைப்பின் பேரில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பாண்டு வாசுதேவன் வந்திறங்கிய துறைமுகம் 'கோகண்ணம்" என மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1. கோணேசர் கோயில்:
கோணேசர் கோயில் தொடர்பாகப் பல வரலாறுகள் உள. கர்ணபரம்பரைக் கதைகளும், இதிகாச புராணக் கதை களும் ஏராளமாக உள்ளன. விரிவஞ்சி அவற்றை'இங்கே விபர மாகக் கூறவில்லை. இக்கதைகள், வரலாறுகள்மூலம் கிடைக் கும் தக்வல்களில் முக்கியமானவற்றின் சுருக்கத்தை மட்டும் பார்ப்போம்.
1. இதிகாச புருஷனான இராவணன் தென் இலங்கை எனப் படும் திருக்கோவில் பகுதியில் ஆட்சிசெய்துகொண்டு தெட்சண கைலாசமாகிய திருகோணமலை கோணேசர் ஆலயத்தில் தரிசனை செய்துவந்தான் என்பது பிரபல மான ஒரு கர்ணபரம்பரைக் கதை.* (மட். மான்மியம்)
9

Page 21
11.
i ij.
இராவணன் தனது தாயாருக்கு சிவலிங்கம் கொண்டு வருவதற்காகக் கைலயங்கிரிக்குச் சென்று சிவலிங்கம் பெற்றுக்கொண்டு வருகையில், இடையில் சிவலிங்கத்தை இழந்து தெட்சண கைலாயம் வந்து இறைவனை வழி பட்டான். இறை வ ன் காட்சி கொடுக்காதபடியால் மலையின் தெற்குப் பகுதியில் வாளால் வெட்டினான். கோணைநாதர் பெருவிரலால் மலையை ஊன்றினார். இராவணன் மலையின்கீழ் நசுக்கப்பட்டு அவதியுற்று * சாமகானம் பாடி வரம்பெற்று மீண்டான். (திருக் கோணாசல வைபவம், தெட்சண கைலாய புராணம்
முதலிய நூல்களில் இக்கதை காணப்படுகிறது.)?
கி. பி. 6ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்
படும் மகாவம்சத்தில், கோகண்ணம் என்னும் துறை முகம் மகாகந்தர ன்ன்னும் ஆறு கடலுடன கலக்கும் இடத்தில் அமைந்திருந்தது எனக் குறிப்பிடப்படுகிறது. இது திருகோணமலைத் துறைமுகத்தைக் குறிக்கிறது. இங்கு கோகர்ண சிவர் லயம் அமைந்திருந்தது. மகா சேனனால் இடிக்கப்பட்ட கோவில்களுள் ஒன்று திரு கோணமலையில் இருந்த சிவலிங்கக் கோயில் என "மகா
வங்ஸதிக*" குறிப்பிடுகிறது.4
விஜயன் இலங்கைக்கு வருவதற்குமுன், ஈழநாட்டில் ஐந்து சிவாலயங்கள் இருந்தன. அவை - மகாதித்தா விற்கு அண்மையில் இருந்த திருக்கேதீஸ்வரம், சிலாபத் தில் உள்ள முனீஸ்வரம், மாந்தோட்டைக்கு அருகில் உள்ள தண்டேஸ்வரம், பெரிய கொட்டியாரக்குடா வுக்கு எதிராயுள்ள திருக்கோணேஸ்வரம், காங்கேசன் துறைக்கு அண்மையில் உள்ள நகுலேஸ்வரம் என்பன ouптub.5
a கி. பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்த
ரால் பதிகம் பாடப்பட்ட தலங்களுள் திருக்கோணேஸ் வரமும் ஒன்று.8 கி. பி. 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்திநாயனார் பாடிய ஊர்த்தொகையில் 3 வது பாடலில் " + மா கோணத்தானே? " எனக் கோணேசப் பெருமான் குறிப்பிடப்படுகின்றார்.7 அவ்வாறே கி. பி. 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் தன்னு டைய திருப்புகழில் திருக்கோணமலைபற்றிக் குறிப்பிடு கிறார்.8
10

கோணேசர் கோயிலை இட்டு மற்றொரு முக்கியமான தகவல் உண்டு. இக்கோயில் அமைப்பில் மலை அடிவாரத் தில் ஒன்று, நடுப்பகுதியில் ஒன்று, மலை உச்சியில் ஒன்று ான மூன்று கோயில்கள் இருந்தன. இவை கடல்கோள்களின் போது மூழ்கி இருக்கலாம்.
டாக்டர் W. பாலேந்திரா, ஸ்பெயின் நாட்டின் தலை நகரான லிஸ்பனில் உள்ள அஜுடா நூதனசாலையில் 1952ம் ஆண்டு பார்வையிட்ட ஒரு படத்தில் மூன்று கோயில்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.9 அதில் மலை உச்சி யில் உள்ள கோயிலிலேயே அலங்கார சிற்பவேலைகள் காணப் படுகின்றனவாம்.
1961ம் ஆண்டு மைக்வில்சன், றொட்னி ஜொன் கிளாஸ் ஆகியோர் திரைப்படம் ஒன்று எடுப்பதற்காகத் திருகோண மலைக் கடலில் சுழியோடியபோது, அங்கே கோயில் தூண் கள், தளங்கள் முதலியன இருப்பதாகக் கண்டனர். அவர்கள் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் திரு. ஆர்தர் சி. கிளார்க் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களில் இருந்து, பண்டையக் கோணேசர் ஆலயம் கடலில் மூழ்கி இருக்கவேண் டும் என்பது புலனாகிறது. குளக்கோட்டன் புனரமைப்புச் செய்வதற்கு முன்பு இவ் வழி வு ஏற்பட்டிருக்கவேண்டும். போத்துக்கேயத் தளபதியால் அழிக்கப்பட்ட கோயில், பின் 'னர் அமைக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
பல ஆய்வாளர்கள், போர்த்துக்கேயர் காலத்தில் ஏற்பட்ட அழிவை மட்டுமே க ரு த் தி, ற் கொள்கின்றனர். கடற்கோளினால் ஏற்பட்ட அழிவுபற்றிக் கவனம் செலுத்த வில்லை. கடற்கோளினால் இவ்வாலயம் அழிவுற்றதென் பதற்காதாரமான பல தகவல்கள் இன்று நமக்குக் கிடைத் துள்ளன.
2. குமரிக் கண்டக் காலத் தொன்மை:
மேற்படி தகவல்களிலிருந்து பண்டையக் கோணேசர் ஆலயம் கடல்கொண்ட குமரிக்கண்டத்தில் இருந்திருக்கவேண் டும் என ஊகிக்கமுடிகிறது. கடற்கோளினால் குமரிக்கண்டம் அழிவுற்றபோது எஞ்சிய ஒரு நிலத் திணிவாக மீந்திருந்த இலங்கைத் தீவில் கோணேசர் கோயில் நிலைபெற்றிருக்க வேண்டும். இதுதொடர்பான சில கருத்துக்கள் வருமாறு:
11

Page 22
(9)
(乌)
வரலாற்றுக் காலத்துக்கு முன், உலகில் பல கடற் கோள்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் 12,000 ஆண்டு களுக்கு முன் ஒரு கடற்கோளும், 7000 ஆண்டுகளுக்கு முன் மற்றொரு கடற்கோளும், 5000 ஆண்டுகளுக்கு முன் இறுதிக் கடற்கோளும் ஏற்பட்டதாகச் சில ஆய் வாளர்கள் கூறுகின்றனர்.10 வேறு சிலர் ஐந்து கடற் கோள்கள் ஏற்பட்டது எனக் கூறுகின்றனர். வெசினர் என்பவர் ஐந்து கடற்கோள்கள் ஏற்பட்டன என்றும், டெனன்ற் என்பவர் மூன்று கடற்கோள்கள் ஏற்பட் டன என்றும் கூறுகின்றனர். கடற்கோள்கள் நிகழ்ந்த காலங்களும் வெவ்வேறு விதமாகக் கூறப்படுகின்றன.
டெனற் என்பவரின் கூற்றுப்படி,
(1) முதலாவது கடற்கோள் கி.மு. 2378ம் ஆண்டிலும் (i) இரண்டாவது கடற்கோள் கி.மு. 504ம் ஆண்டிலும் (i) மூன்றாவது கடற்கோள் கி.மு. 306ம் அண்டிலும் ஏற்பட்டன. இவற்றுள் முதலாவது கடற்கோளில் இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்தது என்றும், இரண் டாவது கடற்கோளில் இலங்கைக்கு அதிக அழிவு
இல்லை என்றும், மூன்றாவது கடற்கோளின்போது
இலங்கைக்குப் பாரிய அழிவு ஏற்பட்டதெனவும் டெனற் கூறுகிறார்." இம்மூன்றாவது கடற்கோள் ஏற்பட்டபோதே கோணேசர் ஆலயமும் அழிந்திருக்க வேண்டும் எனக் கொள்ளலாம்.
(இ) இராவணனது காலம் கி. மு. 6000 ஆண்டு எனவும்,
(*)
கி. மு. 3544ல் கடற்கோள் ஏற்பட்டது எனவும், அதில்
இலங்கையில் பெரும்பகுதி அழிவுற்றது எனவும் டாக்
டர் W. பாலேந்திரா கூறுகிறார். இதில் கோணேசர் ஆலயம் உட்பட இலங்கையின் பெரும்பகுதி கடலுக் குப் பலியானதெனவும் கூறப்படுகிறது. மேலும் இரர் மாயண காலத்துக்குப் பின்னர் பெரும் கடற்கோள் ஏற்பட்டு இலங்கையின் பெ ரும் பகுதியைக் கடல் கொண்டதாக "ராஜாவலிய' என்னும் பாளி - மொழி வரலாற்று நூல் கூறுகிறது.?
கோணேசர் கோயில் கட்டப்பட்ட காலம் கி. மு. 3541ம் ஆண்டு என்பது குல. சபாநாதன் அவர்களின் கருத்து. கோணேசர் ஆலயம் மிகவும் தொன்மை யானது எனவும், திருகோணமலை நா க ரீ க மு ம், மொஹஞ்சதாரோ நாசரீகமும் ஏறக்குறைய ஒரே காலத்தவை எனவும் அவர் கூறுகிறார்."
12

(உ) மூன்றாவது கடற்கோளின்போது பெரியதொரு ஆலயம் கடலில் மூழ்கியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆலயம் கோணேசர் ஆ லய மே என்பதைத் தற் போதைய அகச்சான்றுகள், புறச்சான்றுகள் நிரூபிக் கின்றன. (ஊ) இராவணன் வெட்டு என்று அழைக்கப்படும் மலைப் பிளவும், தற்போது மலைப்பூசை நடைபெறும் பாறை யின் பிளவுகளும் ஒரு கடற்கோளின்போது மலைகள் பிளவுபடும் தன்மையில் அமைந்துள்ளன. இப்பாறை யின் எதிர்ப்புறம் உள்ள பாறைக்கு அடியில் ஆதி கோணேஸ்வர ஆலயத்தின் மூலஸ்தானம் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. . . .
(எ) இப்பாறைகளுக்கு இடையில் க ட ல் பரந்திருக்கும் இடமே ஆதிக்கோயில் இருந்த இடம் என்பது ஆய் வாளர் கருத்து. h−
இவ்விடத்தில் குமரிக்கண்டம்பற்றி ஒரு சிறு குறிப்புக் கூறவேண்டும். குமரிக்கண்டம் என்பது லெமுரீயாக்கண்டம் ஆகும். உலகில் முதன்முதல் உயிரினங்கள் தோன்றிய இடம் இதுவே என்பது ஆய்வாளர் கருத்து. இக்கண்டம் கிழக்கே கிழக்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா வரையும், மேற்கே ஆபிரிக்கா வரையும், தெற்கே தென்துருவம் வரையும் பரந் திருந்த ஒரு பெரும் நிலப்பரப்பாகும்.*
கடற்கோளினால் இக்கண்டம் சின்னாபின்னமாக்கப் பட்டபோது, சிதறிய மக்கள் வடக்கே இடம்பெயர்ந்து சென்று, சிந்துவெளி, மொஹஞ்சதாரோ, சுமேரியா போன்ற நாகரீகங்களை உருவாக்கினர். நிலத்திணிவாக எஞ்சியிருந்த இலங்கைத் தீவில் இருந்த பூர்வ குடிகள் இயக்கர், நாகர் எனக் கருதலாம். .
ஆரியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே, திராவிட மக்கள், இமயம் முதல் குமரி வரை கோட்டைகளையும், நகரங் களையும் உருவாக்கி, உயர்ந்த நாசரீகத்துடன் வாழ்ந்தவர் கள் என்பதை சட்டர்ஜி போன்ற பிரபல ஆய்வாளர்கள் பலர் அறுதியிட்டுக் கூறியுள்ளனர். பபிலோனியா முதல் குமரி முனை வரை திராவிடர்கள் வாழ்ந்தார்கள் என்பதை சேஷ ஐயங்கார் போன்ற ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். 16
ஆகவே குமரிக் கண்டத்திலிருந்து பிரிந்த நிலத்திணி வான இலங்கைத் தீவில் அமைந்த கோணேசர் ஆலயம் மிக வும் தொன்மை வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை.
3

Page 23
இவ்வாறு குமரிக்கண்டக் காலத் த்ொன்மை உடையது கோணேசர் கோயில் எனக் கூறும்போது, இது ஒரு மிகைப் பட்ட கூற்றாகத் தோன்றும். ஆயினும் க்டல்கோள்கள் இடம் பெற்ற காலத்தைக் கருத்திற்கொண்டால் அத்தகைய எண் ணம் ஏற்படாது.
கோணேசர் ஆலயம் இவ்வளவு தொன்மை உடைய தால் குளக்கோட்ட மன்னன் காலமும் இதே காலமாக இருக்க வேண்டும் என்று கருதுவது தவறு. கோயிலின் தொன்மைக்குச் சான்றுகள் உள. ஆனால் குளக்கோட்டன் காலத்துக்கு அவ் வாறு சான்றுகள் இல்லை. w
கோணேசர் கோயிலைக் கட்டியவன் குளக்கோட்டன் என்று கொள்வதாலேயே இந்த மயக்கம் ஏற்படுகிறது. உண் மையில் குளக்கோட்டன் இக்கோயிலைக் கட்டினானா அல் லது திருப்பணிகள் மட்டுமே செய்தானா என்பது பின்னால் ஆராயப்படும்.
மிகத் தொன்மையான கோ ணே சர் கோயிலுக்குக்
காலத்துக்குக் காலம் திருப்பணிகள் நடைபெற்றுவந்துள்ளன என்பதற்குப் பல்வேறு தொல்லியல் ஆதாரங்களும் வரலாற் றாதாரங்களும் இப்பகுதியில் உள்ளன.
இறுதியாக இக்கோயில் அழிக்கப்பட்டது போத்துக் கேயர் காலத்தில் என்பது நாம் அறிந்ததே. போத்துக்கீசத் தளபதி அசவிடேர் அழித்ததாகக் கூறப்படும் மூன்று தலங் கள்பற்றி குவரோஸ் அடிகளார் குறிப்பிடுகிறார்.7 அவை - ரைக்கோணமலை, ரைக்கோயில், ரைக்கேதீஸ்வரம் என்பன. இவை முறையே, திருக்கோணமலை, திருக்கோயில், திருக் கேதீஸ்வரம் எனப் பொருள்படும். ஆ னா ல் கோணேசர் கோயிலை அழித்தவன் டொன் கொன்ஸ்ரான் ரைன் சாடி நொற்ாஹா (கொன்ஸ்ரான்ரைன் டீசா) (1618 - 1630) என் பவன், கி. பி. 1624ல் இது நடந்தது.
3. குளக்கோட்டன் திருப்பணிகள்:
கி. பி. 1624ல் போத்துக்கேயத் தளபதி கொன்ஸ்ரான் ரைன்டீசா கோணேசர் கோயிலை இடிப்பித்தான் எனவும், அப்போது ஆலயத்திலிருந்த கல்வெட்டுப் பிரதி ஒன்றை அவன் போத்துக்கேய மன்னனுக்கு அனுப்பிவைத்தான் எ ன வும். தெரியவருகிறது. அச்செய்தியில் மனுராசா (அல்லது மாணிக்க
14

ராசா) என்னும் மன்னன் இலங்கையை ஆண்ட காலத்தில் (கி. மு. 1300) கோணேசர் கோயில் கட்டப்பட்டது எனக் கூறப்பட்டுள்ளது."
எனவே இக்கோயிலைக் குளக்கோட்டன் கட்டினான் என்பதற்கில்லை. ஆனால் கோணேசர் கோயிலுடன் குளக் கோட்டனைத் தொடர்புபடுத்தும் சில செய்திகள் இக்கோயி லைக் குளக்கோட்டன் கட்டினான் எனவும், வேறு சில . செய்திகள் இதை மறுதலித்து, ஏற்கனவே இருந்த கோயி லுக்குக் குளக்கோட்டன் திருப்பணிகள் செய்தான் எனவும் கூறுகின்றன. எவ்வாறாயினும் குளக்கோட்டன் செய்த திருப் பணிகள்பற்றி "கோணேசர் கல்வெட்டு' என்னும் நூல் விரிவாகக் கூறுகிறது. இந்நூல் கி. பி. 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவரான கவிராஜவரோதயர் என்பவரால் இயற் றப்பெற்றது என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.
இந்நூலின்படி குளக்கோட்டன் செய்த திருப்பணிகளின் விபரங்கள் வருமாறு:1?
மேற்படி கோயில் திருப்பணிக்காகக் குளக்கோட்டன் மருங்கூர், காரைக்கால், சிந்துநாடு போன்ற இடங்களிலிருந்து குடிமக்களைக் கொண்டுவந்து திருகோணமலையில், குடியமர்த் தினான்.
இவர்களைப் பராமரிப்பதற்காக வன்னிமைகளையும் கொண்டுவந்து, கட்டுக்குளம்பற்று, கொட்டியாரப்பற்று, தம்பலகாமப்பற்று என்னும் இடங்களில் குடியேற்றினான்.
கோணேசர் கோயிலுக்குச் செய்யவேண்டிய தொண்டு கள்பற்றியும் அவ்ன் வரையறுத்துக் கொடுத்திருந்தான். இதன்படி தொழும்பர்கள் செய்யவேண்டிய கடமைகள் வரு மாறு:
1. தானத்தார் - இவர்கள் அன்றாடம் கோயில் வரவு
செலவுகளைக் கவனித்தல் வேண்டும். 1. வரிப்பத்தார் - இவர்கள் பட்டாடை கொய்தல், கூட்டல், பத்திர புஷ்பமெடுத்தல், மெழுகு த ல் முதலிய பணிகளைச் செய்தல் வேண்டும்.
இவை தவிர, கணக்குகள், மானியங்கள் முதலியவற்றைப் பரிசீலனை செய்வதற்கான ஒழுங்குகள், குயவன், நாவிதன், ஏகாலி, வள்ளுவன் முதலியோர் செய்யவேண்டிய பணிகள் பற்றிய ஏற்பாடுகளும் செய்யப்ப்ட்டன.
5

Page 24
கோயிலில் நடைபெறவேண்டிய நித்திய, நைமித்திய
கிரிகைகள் குறைவின்றி நடைபெறுவதற்கு வேண்டிய நிவந் தங்களையும் ஒதுக்கீடு செய்து அதற்கான விதிமுறைகளை யும் வகுத்துக் கொடுத்தார். குளக்கோட்டன், கோயில் வரு மானத்துக்காக வயல்களை வழங்கியதுடன், அவ்வயல்களுக்கு நீர் கிடைப்பதற்காக அல்லைக்குளம், வெண்டரசன்குளம், கந்தளாய்க்குளம் ஆகியவற்றையும் வெட்டிக்கொடுத்தான். குளங்களிலிருந்து நீர்ப்பாசன வசதிகளும் செய்து கொடுக்கப் LL-t-68.
0.
1.
அடிக்குறிப்புகள்:
மகாவம்சம் - தமிழாக்கம் எஸ். சங்கரன் - மல்லிகைப் பதிப்பகம் - 1962 - அத்: 8, குறிப்பு: 12 - பக். 105. மட்டக்களப்பு மான்மியம்- F. X. C. நடராசா, பதிட பாசிரியர் - 1952 - பக். 5. w
(а) திருக்கோணாசல வைபவம்- அ. அகிலேசபிள்ளை - தொகுப்பு: அ. அளகைக்கோன்-1950 - பக். 24-31,
(b) தெட்சண கைலாயபுராணம் - கவிராஜவரோதயர்தொகுப்பு: அ. அளகைக்கோன் - தெரிசனாமுத்திச் சுருக்கம் - பக்: 42.
Vamsathipikasini, Commentary on , the Mahavamsa
(PTS). II - G. P. Malalasekara, Editor - London -
Nagadipa and Buddhist Remains in Jaffna - J. R. A. S. CB XXVI. No 70 — P. E. Pieris — 1917 — Luši. 17-18.
சம்பந்தர் தேவாரம் - திருகோணமலைப் பதிகம்.
சுந்தரர் தேவாரம் - ஊர்த்தொகை - 3வது பாடல்.
. அருணகிரிநாதர் திருப்புகழ் - திருக்கோணாசலத் திருப்
பதிகம். திருகோணமலைத் திருவுருவங்கள் - Dr. W. பாலேந்
திரா - மொழிபெயர்ப்பு: குல. சபாநாதன் - 1954 - பக். 8. ܀
வரலாற்றுக்கு முன் வடக்கும், தெற்கும் - பரம்ானந்தசிவம் - பக். 29.
History of Ceylon - by Tennet - Pg. 10,
16

,
9.
4.
9.
.
7.
9.
9.
கோணேசர் ஆலய வரலாறு - அதன் புராதன நிலையும் இன்றைய நிலையும் - வீரகேசரி, கட்டுரை - 17, 24, 31
for fij 1963. V− திருக்கோணமலைத் திருவுருவங்கள்-குல. சபாநாதன்uji. 9-10.
“Lost Lemuria” — By Scott i Eliot — 18.
வரலாற்றுக்கு முற்பட்ட வடக்கும் தெற்கும் - சட்டர்ஜி - பக். 19.
Dravidian India — By Sesha Iyankar -- Luši. 44. Conquesta or the Historic Tragedy of the Island of
Ceylon - Queroz Rev. - uá. 323.
Temporal and Spiritual Conquest of Ceylon'- Fr. Queroz -- Ajuda Library — Codex 51 - Chapter 7.
கோணேசர் கல்வெட்டு - கவிராஜவரோதயர் பாடல்,
- 56.
17

Page 25


Page 26
ர் ஆலயம்
ஆதிகோணைநாயகர்
635 TLDuo
g5LDu
 

-- III -
பிற திருகோண மலைத் தொடர்புகள்
1. தம்பலகாமம் தொடர்புகள்:
குளக்கோட்டனால் பெரும் அளவில் திருப்பணிகள் செய்யப்பட்ட கோயில் திருகோணமலை கோணேசர் கோயில். எனினும் அவனால் கோணேசர் கோயிலுக்கு என வகுக்கப் பட்ட சட்ட திட்டங்கள் இன்றும் நடைமுறைப்படுத்தப்படும் இடம் தம்பலகாமம் ஆதி கோண நாயகர் ஆலயம் ஆகும். போத்துக்கேயத் தளபதி கோணேசர் கோயிலை இடித்த போது பூசகர்களும், பக்தர்களும், அக்கோயிலிலிருந்த விக் கிரகங்களை முடிந்தவரை மீட்டெடுத்து, அவற்றைக் கிணறு களிலும், குளங்களிலும், பிற இடங்களிலும் மறைத்து வைத் தனர். அதில் ஒரு விக்கிரகம் தம்பலகாமம் சுவாமி மலையில் வைத்து வணங்கப்பட்டது. அதுவே பின்னர் ஆதிகோண நாயகர் ஆலயத்துக்கு மாற்றப்பட்டது.
ஆதிகோணநாயகர் ஆலயத்துக்குச் சிறிது தூரத்தில், தீனேரி, பாண்டியூற்று ஆகிய இடங்களிலும் பண்டைய ஆல யங்களின் இடிபாடுகள் காணப்படுகின்றன. 'கோணேசர் கல் வெட்டு' என்னும் நூலில் கூறப்பட்டுள்ள கோயில் நடை முறைகள் யாவும் தம்பலகாமத்தில் பரம்பரை பரம்பரையாகப் பேணப்பட்டுவருகின்றன.
குளக்கோட்டனால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப் பட்ட குடிகளின் பரம்பரையினர் இங்கு தொடர்ந்து பணி
19

Page 27
செய்து வருகின்றனர். கோணேசர் கல்வெட்டில் குறிப்பிடப் பட்டபடி பாசுபதர், தான்த்தார், வாரியப்பத்தர் போன்ற தொழும்பாளர்களின் பணிகள் இன்றும் தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன. சட்ட திட்டங்கள் பேணப்படு கின்றன.
குடிகளையும், வன்னிமைகளையும், ஏனைய தொழும் பாளர்களையும் குடியமர்த்திய குளக்கோட்டன், அல்லைக் குளம், வெண்டரசன்குளம், கந்தளாய்க்குளம் முதலியவற்றை யும் கட்டி வயல்களையும் வழங்கி, அவ்வயல்களுக்கான நீர்ப் பாசன வசதிகளையும் செய்துகொடுத்தான். அத்துடனமை யாது இக்குளங்களுக்குக் காவல் தெய்வங்களையும் பிரதிஷ்டை செய்துவைத்தான்.? -
திருக்குளத்து வேள்வி செய்யும்போது -
** மன்னுபச்சைப் பட்டுவரின் மழையுதவும்
சிவப்பு மகா வெயிலே காட்டும்" எனக் கோணேசர் கல்வெட்டில் கூறியுள்ளபடி, பச்சைக் கொடி காட்டினால் மழையும், சிவப்புக் கொடி காட்டினால் வெயி லும் வரும். இன்றும் அவ்வழக்கம் நடைபெறுகிறது. கோணே சர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சகல பூசைகளும் இன் றும் இங்கு நடைபெற்றுவருகின்றன.
கோணேசர் கல்வெட்டில் வகுத்துள்ளபடி தானத்தாரின் சந்ததியினர் வெளி நிர்வாகத்தையும், வரிப்பத்தாரின் சந்ததி யினர் உள் நிர்வாகத்தையும், இருபாகை முதன்மைக் குருக்கள் குடியினர் பூசை, திருவிழா முதலியவற்றையும், புலவன் மர பினர் தேவார பாராயணத்தையும், கங்காணம் வகுப்பினர் வெளிவிவகாரங்களையும், அடப்பன்மார், தானத்தார், வரிப் புத்தார் ஆகிய மூன்று வகுப்பினரும் சேர்ந்து வேள்விகள் முதலியவற்றையும் கவனித்துவருகின்றனர்.
2. கந்தளாய் தொடர்புகள்:
கோணேசர் கோயில் திருப்பணிகள் முடிந்த பின்னர்
குளக்கோட்டன் தம்பலகாமம், கந்தளாய், வெருகல் முதலிய
தலங்களில் உள்ள ஆலயங்களிலும் திருப்பணி செய்தான்.
ஆலயத் திருப்பணிகள் தடையின்றி நடைபெறவேண்டும் என்
பதற்காக, குளங்களை வெட்டியும், வயல்களை நிவந்தம்
அளித்தும் வசதிகள் செய்தான் என்ப்தை முன்னர் பார்த் தோம்.
20

இவ்வகையில் அவன் கட்டிய கந்தளாய்க்குளம் விசேட கவனத்தைப் பெறுகிறது.
அல்லைக்குளம், வெண்டரசன்குளம் ஆகிய் இரு குளங் களையும் கட்டியபின் அவற்றில் நீர் போதாமையால், அவன் கந்தளாய் குளத்தைக் கட்டி, மகாவலி கங்கை நீர் அதில் சேர் வதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்தான். அளவில் பெரியதான இக்குளத்திலிருந்து வயல்களுக்கு நீர் பாய்ச்சு வதற்காக அமைக்கப்பட்ட மதகு (Suice) அமைப்புக்கள் இன் றும் அக்குளத்தருகே பாதுகாத்து வைக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம். இவ்வகையில் இக்குளத்தின் அமைப்பு இன்றைய பொறியியல் நிபுணர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கந்தளாய் பகுதியில் தமிழர் குடியேற்றம் சிறப்புற் றிருந்தமைக்குச் சான்றாகப் பல தொல்லியல் தடயங்கள்" உள்ளன. கந்தளாய் கல்வெட்டு, பழமோட்டை கல்வெட்டு போன்றவை இத்தொடர்பில் குறிப்பிடத்தக்கன.
கி. பி. 1010ல் இராஜேந்திர சோழனால், கந்தளாய் சிவன் கோயில் கட்டப்பட்டது." சோழர் ஆட்சியினை வலி யுறுத்தும் சின்னங்களாக இக்கோயிலில் காணப்படும் விக்கிர கங்களும், சிற்பங்களும் மற்றும் தடயங்களும் அமைகின்றன. இக்கோயிலைவிட, கந்தளாய் குளம் கட்டியதில்தான் குளக் கோட்டன் பெயர் பெரிதும் தொடர்புபட்டுள்ளது. கந்தளாய் குளத்தைக் கட்டி முடித்த குளக்கோட்டன் அதன் உபயோ கத்துக்கான ஆணைகளையும் பிறப்பித்துள்ளான். அவை கோ ணேசர் கல்வெட்டு என்னும் நூலில் குறிப்யிடப்பட்டுள்ளன.
குளத்தைக் கட்டிமுடித்தபின் மகாவிஷ்ணுவின் ஆணைப் படி குளத்திற்குக் காவலர்க விநாயகர், காளமாமுனி, புலத்தி யர், மங்கலர், வீரபத்திரன், வதனமார், வைரவர், ஆண் ணன்மார், பூதங்கள், ஐயனார், சக்திகிாவலர்கள், கன்னி மார், பத்தினி, காளி என்னும் தெய்வங்களும் இக்குளக்கட்டில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டன. இக்காவல் தெய்வங்க ளுக்கு ஒருவருடத்தில் மடையும், மறு வருடத்தில் பொங்கலு மாக வேள்வி செய்யும் படியும் குளக்கோட்டன் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது இன்றும் நடைமுறையில் உள்ளது என அறிகிறோம்.
திருக்குளத்து வேள்வி செய்யும்போது, பூசைகள் அனு மார் கருடன் துணையோடு ஆரம்பிக்கப்படும். 'கட்டாடி" எனப்படும் பூசாரிகள் மந்திரங்கள் சொல்லிக் கயிறு எடுத்துக்
2.

Page 28
கொடுக்க அவற்றைக் கொண்டு விவசாயிகள் காட்டுக்குச் சென்று மாடுகளைப் பிடித்துப் பால் கறந்துவந்து பொங்கல் இடுவார்கள் எனச் சொல்லப்படுகிறது. ஆயிரம் வெற்றிலை, ஆயிரம் பாக்கு, அதற்கேற்ற பழம், பூ முதலியன படைக்கப் பட்டு இவ்வேள்வி நடைபெறுகிறதாம்.
சுவாதியம்மாள் என்னும் தெய்வத்திற்கு "ஆலடி வேள்வி" யும், பத்தினி அம்மாளுக்கு ஐயனார் வேள்வியும் இங்கு நடை பெறுவதாயும், இவையெல்லாம் கோணேசர் கல்வெட்டில் உள்ள ஆணைப்படியே நடைபெறுவதாயும் சொல்லப்படு கிறது.
இத்தெய்வங்கள் அனைத்தும் இந்தியாவில் "கிராம தேவதைகள்” எனக் கூறப்படும். இத்தேவதைகளின் வழிபாடு, காரைக்கால், சிந்துநாடு, மருங்கூர் போன்ற கிராமங்களில் மிகவும் பிரபலமானவை என்பதும் இங்கு கவனத்தில் கொள் ளத்தக்கது.
3. கங்குவேலித் தொடர்புகள்
மூதூர்ப் பிரதேசத்தில் அமைந்துள்ள கங்குவேலி என் னும் கிராமத்தில் அகத்தியர் தாபனம் என்னும் பழமை வாய்ந்த ஆலயம் ஒன்று உண்டு. இக்கோயிலின் முன்பாக உள்ள ஒரு கல்வெட்டில் இக்கோயிலுக்கு நிவந்தமாகச் சில வயல்கள் அளிக்கப்பட்ட செய்தி காணப்படுகிறது. (முழு விபரம் "கல்வெட்டுச் சான்றுகள்: திருகோணமலை" என்ற அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.)
, இச்செய்தியில் உள்ள வாசகங்கள் ஏனைய திருகோண மலைக் கல்வெட்டுக்களில் உள்ளதுபோல அமைந்துள்ளன. புரோகிதர், சாதித்தானத்தார், வரிப்பத்தார் ஆகியோர் முன் னிலையில் பிரகடனம் செய்யப்பட்டதாக அது கூறுகிறது. திருகோணமலை வன்னியர்களும், ஏழு பகுதி அடப்பர்களும் கூடித் தீர்மானிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதி லிருந்து குளக்கோட்டன் ஏற்பாட்டுக்கமைய இந்த நிவந்தம் வழங்கப்பட்டது புலனாகின்றது.
இங்குள்ள பல கோயில்களில் குளக்கோட்டன் திருப் பணிகள் செய்து, அவற்றின் நாளாந்த பூசைகள் முதலியன தங்குதடையின்றி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய் யும் சம்பிரதாயம் இந்தக் கங்குவேலிக் கல்வெட்டிலிருந்து பெறப்படுகிறது.
22

மூதூர், கந்தளாய் பகுதிகளிலும், திரியாய் முதலிய பழம்பெரும் கிராமங்களிலும் காணப்படும் கோயில்களின் இடி பாடுகள் குளக்கோட்டனால் திருப்பணி செய்யப்பட்ட பல புரதான கோயில்கள், பிற்காலத்தில் அழிந்துபட்டன என் பதை எடுத்துக்காட்டுகின்றன.
4. வெருகல் ஆலயத் தொடர்புகள் :
கிழக்கு மாகாணத்தில், திருக்கோணமலை - மட்டக் களப்பு மாவட்டங்களின் எல்லையில் உள்ளது இக்கோயில். இக்கோயில் குவேனி காலத்தைச் சேர்ந்தது என்பது ஒரு கர்ணபரம்பரைக் கதை. கந்தளாய்க் குளத்தைக் கட்டிய குளக் கோட்டன் விவசாயம் செய்வதற்காக சிந்து நாட்டிலிருந்து ஒலரைக் கொண்டுவந்து திருகோணமலையில் குடியமர்த்தி னான் என்பதை முன்னர் பார்த்தோம். இவர்கள் தம்பல காமம் தொடக்கம் வெருகல் வரை குடியேற்றப்பட்டனர். இந் தியாவிலிருந்து குளக்கோட்டனால் கொண்டுவரப்பட்ட தனி யுண்ணாப் பூபால வன்னியன் ஆட்சியின்கீழ் விவசாயம் செய்த சிந்து நாட்டவர்கள், கோணஸ்வரர் ஆலயத்திற்கு நெல் அனுப்பினர். இவர்கள் ஈச்சிலம்பற்றை, மல்லிகைத்தீவு, பள் ளிக்குடியிருப்பு, கங்குவேலி, திருமங்கல்ாய், இலங்கைத்துறை, ளிெவெட்டி, சம்பூர், மூதூர் போன்ற இடங்களில் குடியமர்ந்து வெருகல் பகுதியையும் பரிபாலனம் செய்துவந்தனர்.
மேற்கூறப்பட்ட கிராமங்கள் யாவும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த தமிழ்க் கிராமங்கள் என்பதும், இக்கிராமங்களில் சைவ ஆலயங்கள் அழிந்துபோன நிலையில் காணப்படுவதும் நமது சிந்தனைக்குரியவை.
வன்னியர்களின் வருகைக்குப்பின் இப்பகுதிக் கிராமங் கள் சிறப்புடன் திகழ்ந்தமையும், பின்னால் ஏற்பட்ட அந் நியர் படை எடுப்பால் இவை அழிந்துபட்டமையும் கவனத் திற் கொள்ளப்படவேண்டும்.
இப்பகுதிகளில் முறையான அகழ்வாராய்ச்சிகள் மேற் கொள்ளப்படின் குளக்க்ோட்டன் திருப்பணிகள்பற்றி மேலும் မှီနီ சான்றாதாரங்கள் கிடைக்கலாம் என்பதில் சந்தேக
ᎧᏂᎧ ᎧᏈᎧ ᎧᏓ) .
5. பிற ஆலயங்கள் :
குளக்கோாட்டனால் திருப்பணி செய்ய அழைத்துவரப் பட்டவர்கள் கட்டுக்குளம்பற்று, ஈச்சிலம்பற்றை, மல்லிகைத் தீவு, ஆனைத்தீவு, பள்ளிக்குடியிருப்பு. கங்குவேலி, திருமங் கலாய், சிந்துவெளி, இலங்கைத்துறை, கிளிவெட்டி, சம்பூர்,
23

Page 29
மூதூர் முதலிய கிராமங்களில் குடியமர்ந்து பற்பல கோயில் திருப்பணிகளை மேற்கொண்டதாக முன்னர் குறிப்பிட்டோம்.
இவ்வாறே கிழக்கிலங்கையில் உள் ள கொக்கட்டிச் சோலை, கோயில் போரதீவு கோயில் முதலிய பழமை வாய்ந்த ஆலயங்களிலும் குளக்கோட்டனின் திருப்பணிகள் நடைபெற் றுள்ளன. இவை பற்றிய பூரண விபரங்கள் கிடைக்காவிட்டா லும், இக்கோயில்களில் பின்பற்றப்படும் பூசை ஒழுங்குகள் சாதிப் பகுப்பு, குடுக்கை கூறுதல் முதலிய சம்பிராதாயங்கள் குளக்கோட்டன் வகுத் த முறைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். 'மட்டக்களப்பு மான் மியம்' என்னும் நூலில்’ இவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் மாகோன் பற்றிய விபரங்களும் உள்ளன.
"மட்டக்களப்பு மான்மியம்" என்பது பழைய ஏடுகள், கல்வெட்டுகள் போன்றவற்றின் தொகுப்பாகப் ப் ல் வேறு காலங்களில் வாழ்ந்தவர்களால் எழுதப்பட்ட ஒரு நூலாகக் கொள்ளலாம். எனவே இவற்றில் உள்ள பல் தகவல்களைத் துருவி ஆராய்ந்து உண்மைகளைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
குளக்கோட்டன் காலத்தில் தமிழர்கள் பரந்து வாழ்ந்த
கிராமங்களில் அவனது திருப்பணிக்கரம் நீண்டுள்ளது என்ப தை நாம் ஊகிக்கலாம். இக்கிராமங்கள் பல இப்போது மட் டக்களப்பு மாவட்டத்திற்கு வெளியே இருந்தாலும், இவை யாவும் கிழக்கிலங்கையின் தமிழ்க்கிராமங்கள் என்பதை நினை வில் கொள்ள வேண்டும்.
அடிக்குறிப்புகள்
1. கோணேசர் கல்வெட்டு - கவிராஜவரோதயர் எழுதியதுதொகுப்பாசிரியர்: வைத்தியலிங்க தேசிகர் - 1931 - 5ம் பாடல் - பக். 4-42. w 2. மேற்படி நூல் - பக். 30-31, 3. பளமோட்டைக் கல்வெட்டு, கந்தளாய் கல்வெட்டுEpigraphica Zeylanica - de M de wikramasinghe ---- பாவலர் துரையப்பா நூற்றாண்டு விழா மலர் - Dr. கா. இந்திரபால கட்டுரை. 4. 'திருகோணமலை மாவட்டத் திருத்தலங்கள்"" -
பண்டிதர் இ. வடிவேல் - பக். 54. 5. கோணேசர் கல்வெட்டு - கவிராஜவரோதயர் -
தொகுப்பு: வைத்தியலிங்க தேசிகர் - 1931 - பாடல் 26- 32. 6. நாட்டுப்புறத் தெய்வங்கள் - எழுதியவர்: டாக்டர் துளசி
இராமசாமி - பக். 11.
24


Page 30
திருக்கோயில் சிவசுப்பிரமணியர் ஆலயம்
 

- IV —
திருக்கோயில் தொடர்புகள்
திருகோணமலையிலிருந்து ஹபறணை வழியாக சுமார் 325 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கோயில். இந்த இரு நகரங்களும் இலங்கையின் கிழக்குக் கரையோரமாக உள்ளன. இக்கோயில்பற்றியும், தி ரு க் கோ னே ஸ் வர ம் போன்றே, இராவணனுடன் சம்பந்தபபடுத்தும் கர்ணபரம் பரைக் கதைகள் உள்ளன.
திருக்கோயிலுக்கு அருகாமையில் இராவணன் கோட்டை இருந்ததாகவும், திருக்கோயில் அவனுடைய வழிபாட்டுத்தல மாக இருந்தது எனவும் S. O. கனகரெத்தினம் குறிப்பிட் டுள்ளார். இலங்காபுரி என்னும் நகர் இலங்கைத் தீவின் கீழ்பாகத்திலிருந்தது எனவும், இராவணன் இந்நகரைத் தலை நகராகக் கொண்டிருந்தான் எனவும் அவர் கூறுகிறார். அந் நகரின் மாடங்கள் கடலில் சலமட்டத்திலிருந்து அதிக ஆழத் தில் இல்லாமையினால் ஆங்கிலேயர் அங்கு இரண்டு கலங்க் ரை விளக்கங்களை நிறுவினர் எனவும், அவை இப்போதும் திருக் கோயிலுக்கு எதிரே கடற்புறத்தே தோன்றுகிறது எனவும் கதை உண்டு.2 இலங்காபுரி இங்கு இருந்தது என்பதை ** மட் டக்களப்பு மான்மியம்' என்னும் நூல் குறிப்பிடுகிறது.
தென் இலங்காபுரி என்பது மட்டக்களப்புப் பிரதேசம் எனவும், இப்பகுதியில் திருக்கோவில், மாமாங்கேஸ்வரம், உசந்தைமலை, மண்டூர் முருகன்கோயில், கொக்கட்டிச்சோலை முதலிய தலங்கள் புகழ்பெற்று இருந்தன எனவும் திருமதி கனபாக்கியம் குணபாலசிங்iம் கூறுகிறார்.
25

Page 31
1. மட்டக்களப்பு மான்மியம்,
கோணேசர் கல்வெட்டு தரும் தகவல்கள் :
இக்கோயில் சம்பந்தமாகக் கூறப்படும் பிறிதோர் வரலாறு மட்டக்களப்பு மான்மியத்தில் உண்டு. அதன் விபரம் வருமாறு:
ஆதியில் திருக்கோயில், "நாகர்முனை" என வழங் கியது. இப்பிரதேசத்தைப் 'பிர்ச்ன்னாசித்து" என்பவன் ஆண்டு கொண்டிருக்கும்போது புவனேக கயவாகு என்னும் பெயரை யுடைய கலிங்க குமாரன் ஒருவன் திருக்கேதீஸ்வரத்திலும், திருகோணமலையிலும் த ரி ச னை செய்துகொண்டு நாகர் முனைக்கும் வந்தான். அப்போது அங்கு பழுதுபட்டுக்கிடந்த சுப்பிரமணியர் ஆலயத்தினைத் திருத்தித் தரும்படி பிரசன் னாசித்து அவனைக் கேட்க, அவன் வேண்டுகோளுக்கிணங்கி புவனேக கயவாகு, சோழநாட்டில் உள்ள தனது மாமன் திருச் சோழனுக்குச் செய்தி அனுப்பி, சோழநாட்டிலிருந்து சிற்பி களை வரவழைத்து ஆலயத்தைத் திருத்திக் கொடுத்தான். அதனால் மகிழ்ச்சியுற்ற பிரசன்னாசித்து "புன்னரசி' என்னும் பகுதியை அவனுக்கு நன்கெர்டையாகக் கொடுத் தான். அதுவே "உன்னரசுகிரி என வழங்கப்பெற்றது. இது மட் டக்களப்பு மான்மியத்திலுள்ள வரலாறு. "கோணேசர் கல் வெட்டு' நூலில் பின்வரும் வரலாறு கூறப்படுகிறது.
புவனேக கயவாகுவின் மகனான, மனுநேய கயவாகு உன்னரசுகிரியை ஆட்சிசெய்யும் காலத்தில், கடலில் அடைந்து வந்த பேழை ஒன்றிலே இருந்த பெண் குழந்தையை எடுத்து வளர்த்து ஆடக செளந்தரி எனப் பெயரிட்டு ஆட்சி உரிமை யைக் கொடுத்தான்.
ஆடக செளந்தரி உன்னரசுகிரியை ஆட்சி செய்த காலத் தில் குளக்கோட்டன் திருகோணமலையில் கோயில் கட்டுவதை அறிந்து, அவனை அழித்துவருமாறு தனது படையை அனுப் பினாள். குளக்கோட்டன் அவர்கள் முயற்சியை முறியடித்த துடன் ஆடக செளந்தரியைத் திருமணம் செய்து, உன்னரசு கிரியின் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றான். இவ்வரலாறு "கோணேசர் கல்வெட்டு" என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.
2. "மகாசேனன்" என்ற மயக்கம் :
கோணேசர் கல்வெட்டில் கூறப்படும் இவ்வரலாறு, மட் டக்களப்பு மான்மியத்திலும் இடம்பெறுகிறது. ஆனால் இவ்
26

வரலாற்றில் "குளக்கோட்டன்" என்பதற்குப் பதிலாக "மகா சேனன்" என்று கூறப்பட்டுள்ளது.8
இதே வரலாறு தெட்சணகைலாய புராணத்தில் "குளக் கோட்டன்" என்ற பெயருடன் இடம்பெறுகிறது. இந்நூலில் புவனேககயவாகு, மனுநேயகயவாகு முதலியோர் திருக்கோ ணேஸ்வரத்துக்குச் செய்த தானதருமங்கள் பற்றியும் குறிப் பிடப்படுகிறது. ஆனால் காலம் வேறுபடுகிறது.
மட்டக்களப்பு மான்மியத்திலே இவனது காலம் க்லி ஆண்டு 3107 எனக் குறிப்பிடப்படுகிறது. அதேசமயம் குளக் கோட்டன், ஆடகசெளந்தரி ஆகியோரது மகனே சிங்ககுமார்ன் என்ற விடயம் மட்டக்களப்பு மான்மியம், கோணேசர் கல் வெட்டு ஆகிய இரு நூல்களிலுமே தெளிவாகக் கூறட்பட்டுள் ளது. . . . .
புவனேககயவாகு, மனுநேய கயவாகு என்னும் இரு கலிங்க மன்னர்கள் திருக்கோயிலுக்கு ஆற்றிய திருப்பணி களையும், அவர்கள் திரு க் கோயிலுடன் கொண்டிருந்த தொடர்புகளையும் "மட்டக்களப்பு மான்மியம்", "கோணே சர் கல்வெட்டு’, ‘தெட்சணகைலாய புராணம் ஆகிய மூன்று நூல்களும் ஒரேமாதிரியாகக் கூறுவதனால் இவற்றில் உள்ள அடிப்படை உண்மைகளை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.
மேலும் "கோணேசர் கல்வெட்டு" எனும் நூலில் கயவாகு என்னும் பெயர் பல இடங்களில் வருகிறது. இது மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு கலிங்க இளவரசர்களையும் குறிப்ப தாகக் கொள்ளலாம். இவர்கள் சோழர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்சளாகவும்.திருக்கோயில் திருப்பணிகளுடன் தொடர்புடையவர்களாகவும் இருப்பது கவனத்தில்கொள்ளத் தக்கது. இவர்களைத் தொடர்ந்து குளக்கோட்டன் திருப். பணிகளை மேற்கொண்டிருக்கலாம் என்பதும் ஏற்றுக்கொள் ளக்கூடியதே. ஆனால் இங்கு கவனத்திற்கொள்ளவேண்டிய முக்கிய விடயம் மகாசேனன் பெயர் மட்டக்களப்பு மான் மியத்தில் இடம்பெறுவதாகும். மேற்குறித்த நூல்களில் ஒரே மாதிரியான சம்பவங்களுடன் குளக்கோட்டன் பெயர் இடம் பெற்றிருக்க, மட்டக்களப்பு மான்மியத்தில் மட்டும் மகா சேனன் என்ற பெயர் இடம்பெறுவது ஆய்வுக்குரியது.
"மகாவம்சம்" குறிப்பிடும் சிங்கள மன்னனான மகா சேனன் காலம் கி. மு. 2ம் நூற்றாண்டு. இவன் மகாயாண பெளத்த சமயத்தைச் சேர்ந்தவன். இவன் தேரவாத பெளத்த
27

Page 32
விகாரைகளை மட்டுமல்லாது திருகோணமலை சிவன் கோயி லையும் இடித்தவன் என மகாவம்சம் கூறும். இதுபற்றிய விப ரம் மகாவம்சத்தின் உசாத்துணை நூலாகிய வம்சதீபிகாசினி (Vamsathappakasini) யில் விபரிக்கப்பட்டுள்ளது.7
ஆனால் மட்டக்களப்பு மான்மியம் குறிப்பிடும் மகா சேனன் கலிங்க நாட்டிலிருந்து வந்தவன் என்பதும், இவனு டைய தந்தையின் யெயர் வீரசேனன் என்பதும், மட்டக்களப்பு மான்மியம் தரும் தகவல்களாம். இவன் புத்த விகாரைகளை இடிப்பித்தவன் எ ன் பதும் கவனத்திற் கொள்ளத்தக்கது. எனவே இவன் மகாவம்சம் கூறும் சிங்கள மன்னன் மகா சேன னாக இருக்கமுடியாது. உண்மையில் இந்த மகாசேனன் வைதூலிய சைவத்தைச் சேர்ந்தவன். இத்தகவலைச் சில ஆய் வாளர்கள் தவறாக வைதூலிய சமயம் எனப் பொருள்கொண்டு இவன் பெளத்தத்தின் ஒரு பிரிவான மகாயான சமயத்தைச் சேர்ந்தவன் எனக் கருத்துக்கொண்டுள்ளனர். இது தவறான கருத்து என்பது சொல்லாமலே விளங்கும். N
எனவே குளக்கோட்டன் என்பவனே மட்டக்களப்பு மான்மியத்தில் மாசேனன் என இடம்பெற்றிருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை.
3. கல்வெட்டுப் பாடல்:
திருக்கோயில் வரலாற்றையும், கிழக்கிலுள்ள ஏனைய கோயில்களின் வரலாறுகளையும் குளக் கோ ட் டனுட ன் தொடர்புபடுத்தும் செய்திகள் பலவுள. 'கல்வெட்டுச் சான்றுகள்' என்னும் அத்தியாயத்தில், மாகோன் தொடர் புடைய இரு கல்வெட்டுகள் விளக்கப்படுகின்றன. மாகோனும் குளக்கோட்டனும் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். மட்டக்களப்பிலே குளக்கோட்டனுடைய திருப்பணிகள் இடம் பெற்ற கோயில்களாக, திருக்கோயில், கொக்கட்டுச்சோலை, வெருகல் போன்ற ஆலயங்களும் குறிப்பிடப்படுகின்றன.
திருக்கோயில் திருப்பணி பற்றிக் கூறும் கல்வெட்டுப் பாடல் ஒன்று வருமாறு:?
சீர்மேவு இலங்கைப் பதிவாழ்வு தரு செல்வமும் சிவநேச இரு சமயமும்
செப்புதற்கரிதான மாணிக்க கங்கையும் செகமேவு கதிரை மலையும்
28

ஏர்பெறும் தென்கையிலை வாழ் கோணலிங்கம் நேர்மைதான் தோன்று லிங்கம் வெற்றியுனை மயூர சித்திர சங்காரவேல் வெள்ளை நாவற் பதியதாம் பேர் பெறும் தென் திருக்கோயில் சிவாலயமும் சிவபூசை தேவாரமும் செய்திருமுறைகள் என்றென்றும் நீடூழி காலமும் தேசம் தளம்பாமலும் ஏர் பெருகு பரிதிகுலராசன் குளக் கோட்டன் எவ்வுல்கமுய்வதாக ஏழு கோபுரம் கோயில் தொழுவார் தினம் தேட எங்கெங்கு மியற்றினரே.
இப்பாடலில் இடம்பெறும் "சிவநேச இரு சமயம்", "மாணிக்க கங்கை' , ' கதிரமலை" என்னும் பதங்கள் நமது கவனத்துக்குரியன. இவை கதிர்காமத்தையும் குளக்கோட்ட னுடன் தொடர்புபடுத்துகின்றன. இப்பாடலில் வெள்ளை நாவற்பதியாம் பேர்பெறும் திருக்கோயில் என்று குறிப் பிடப்படுகிறது. (வெள்ளை நாவற்பதி என்பது வெருகலம் பதியைக் குறிக்கும் என்பாருமுளர்).
இப்பாடலில் கூறப்பட்டவற்றுள், 'தேவாரப் பதிகம் பாடுதல்', கோபுரம் அமைத்தல் முதலியன கி. பி. 7ம் நூற் றாண்டுக்குப்பின் இடம்பெற்ற செயற்பாடுகள் என்பதைக் கவனத்திற்கொள்ளவேண்டும். சோழர்காலத்திலேதான் ஆல யங்களுக்கு உயரமான கோபுரம் அமைக்கும் வழக்கம் ஏற்பட் t-gil. '' . . . . . . ஏர் பெருகு பருதிகுலராசன் குளக் கோட்டன் ?? எனக் குறிப்பிடப்படுவதால், இவன் சோழர் குலத்தவன் என் பது பெறப்படுகிறது. மேலும் சம்பந்தர் திருக்கோணேஸ் வரப்பதிகம் பாடியது கி. பி. 7ம் நூற்றாண்டு ஆகும்.
இதுபோன்ற மற்றுமொரு பாடல் 'தட்சண கைலாய புராணம்" என்னும் நூலில் உள்ளது. அதுவருமாறு:0
** பார்தாங்கு கோயிலும் பொன்மண்டபமுங்
கோபுரமும் பரற்குநாட்டி பேர்தாங்கு மாயனுக்கு மலங்கார
வாலய மொன்றியற்றிமுந்துங் கார்தாங்கு திருக்குளமும் பாவநாசச்
சுனையுங் கண்டகண்டன் சீர்தாங்கு குளக்கோட்டனென்னும்
சோழகங்கனை நற்சிந்தைவைப்பாம்.
29

Page 33
இப்பாடலிலிருந்து குளக்கோட்டனின் மறு பெயர் சோழகங்கன் என்பது தெரியவருகிறது.
"கோணேசர் கல்வெட்டு" பாடல் ஒ ன் று குளக் , கோட்டன் சோழநாட்டரசன் வரராமதேவனின் மகன் எனக் கூறுகிறது. வர ராம தேவன் திருகோணமலைச் சிகரத்தில் கோயில் கட்டியதையும் குறிப்பிடுகிறது."
குளக்கோட்டனுடைய ஆட்சி கிழக்கிலங்கையில் வடக்கே திருகோணமலை முதல் தெற்கே திருக்கோயில் வரை பரந் திருந்ததென்பதையும் மற்றொரு "கோணேசர் கல்வெட்டு’ப் பாடல் கூறுகிறது.?
Af
LLLLLL LL LLL LLL LLLLLLLL LL 00L LLLLL0 ae w a o es so d s vow » a. v.
திரமுறு மேற்குச் சிறந்த முனிச்சுரந் தரைபுகழ் தெற்குச் சங்கமக்கண்டி உரமிகு கிழக்கு உகந்த வங்காளம் ஏற்றுணைக்கோணை யிறைவனுக்காமென நாற்றிசைச் சூலமு. நாலுகனாட்டி
LLLLLLLL00LL LL00L L00L LLLLLL LLLLLL SLLLLLLLL LLL L00 LLLLL 0S
இப்பாடலில் குளக்கோட்டன் திருப்பணி பரந்திருந்த இடங்களின் எல்லைகளும் குறிப்பிடப்படுகின்றன. வடக்கே கோணேஸ்வரம், தெற்கே சங்கமக்கண்டி, கிழக்கே வங்காளம், மேற்கே முனீஸ்வரம் ஆகியவை குளக்கோட்டனின் திருப்பணி விரிந்த பிரதேசத்தின் எல்லைகளாக இப்பாடலில் குறிப்பிடப் படுகின்றன.
இதன்படி குளக்கோட்டன் திருப்பணிகள் இலங்கையின் கிழக்குப் பகுதியில் மட்டுமல்லாது மேற்கிலும் (முனிச்சுரம்) இடம்பெற்றது என்ற உண்மை வெளிப்படுகிறது. எனினும், திருகோணமலையும், திருக்கோயிலும் இவற்றுள் முக்கியமான இடங்களாகக் கணிக்கப்படுகின்றன.
திருகோணமலையைப் போலவே திருக்கோயிலும் இவ னது திருப்பணியில் முதன்மைபெற்ற ஒரு இடமாகிறது என் பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும்.
மேலும் உன்னரசுகிரி எனப்படும் இராட்சியப் பிரிவிலே தான் சங்கமக்கண்டி, திருக்கோயில் போன்ற இட ங் கள் அமைந்திருந்தன. எனவே குளக்கோட்டனுடைய தொடர்பும்
30

ஆட்சியும் திருகோணமலைப் பிரதேசம் மட்டு ம ல் லா து, தெற்கே திருக்கோயில்வரை பரவி இருந்தமை தெளிவாகிறது.
"ஏர் பெருகு பருதிகுலராசன் குளக்கோட்டன்' எனத் திருக்கோயில் திருப்பணிபற்றிய கல்வெட்டுப் பாட லிலும், "பருதி குலத்துதித்த குளக்கோட்டிராமன்' எனக் கோணேசர் கல்வெட்டிலும் வரும் சொற்றொடர்களின் ஒற் றுமை ஊன்றிக் கவனிக்கத்தக்கது. குளக்கோட்டன் சோழ வம்சத்தவன் என்பதும், திருக்கோயிலிலும், திருக்கோணேஸ் வரத்திலும் இவன் திருப்பணிகள் இடம்பெற்றன என்பதும் இரண்டு வெவ்வேறு நூல்களில் ஒரே மாதிரியாக இடம்பெறு வது கவனத்துக்குரியது.
இவ்விரு திருப்பதிகளுக்கும் இடையில் உள்ள வெருகலம் பதி, கொக்கட்டுச்சோலை, போரதீவு, மாமாங்கேஸ்வரம், மண்டூர், உகந்தை முதலிய கிராமங்கள் கிழக்குக்கரை ஒரமாக உள்ளன. இப்பதிகளிலும் குளக்கோட்டன் திருப்பணிகள் இடம் பெற்றமை ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளன.
திருக்கோணேஸ்வரம், திருக்கோயில் ஆகிய இரு பிர தேசங்களும் குளக்கோட்டன் திருப்பணியில் இணைவது. திருக் கோயில் (உன்னரசுகிரி) அரசியான ஆடக செளந்தரியைக் குளக்கோட்டன் திருமணம் செய்தான் என்ற செய்திக்கும் மறைமுகமான ஆதாரமாகிறது.
திருக்கோணேஸ்வரம், தி ரு க் கோ யி ல் ஆலயங்களின் கட்டிட அமைப்பில் உள்ள ஒற்றுமை, கல்வெட்டு வாசகங் களில் உள்ள ஒற்றுமை முதலியன பிறிதோர் அத்தியாயத்தில் விள்க்கப்படுகின்றன. இவையெல்லாம் திருகோணமலை முதல் திருக்கோயில் வரை குளக்கோட்டனே திருப்பணிகளைச் செய் தான் என்பதற்கு வலுவான ஆதாரங்களாகின்றன,
அடிக்குறிப்புகள்:
1. Monograph of the Batticalọa District of the Easterni
Province - by S. O. Canagaretnam - Page 7.
2. மட்டக்களப்பு மான்மியம் - F. х. с. நடராசா, பதிப்
பாசிரியர் - 1952 - பக். 5.
3. தொல்லியலாய்வும் திராவிடக் கட்டிடக் கலையும் -
திருமதி த. குணப்ாலசிங்கம் - பக். 8.
. 1

Page 34
0.
ll.
2.
மட்டக்களப்பு மான்மியம் - F. X. C. நடராசா, பதிப் பாசிரியர் - 1952 - பக். 24-28, கோணேசர் கல்வெட்டு - கவிராஜவரோதயர் ஆக்கம் - தொகுப்பாசிரியர்: வைத்திலிங்க தேசிகர்-பாடல்: 3-6. மட்டக்களப்பு மான்மியம் - F. X, C. நடராசா, பதிப் பாசிரியர் - 1952 - பக்கம் 24-28. (a) Mahavamsa - Translation by Geiger — XXXVIII. —
40-41. (b) Vamsathipikasini Commentary on the Mahavamsa (PTS Il London) - G. P. Malalasekara, Editor - 1935 - P. 685. மட்டக்களப்பு மான்மியம் - F. X. C. நடராசா, பதிப் பாசிரியர் - 1952 - பக். 25.
கொக்கட்டுச்சோலை தான்தோன்றீஸ்வரர் கட்டுரை ۔--
திருக்கேதீஸ்வர திருக்குடத் திருமஞ்சன மலர் - பக். 196-197
தெட்சணகைலாய புராணம் - பதிப்பாசிரியர் வைத்தி லிங்க தேசிகர் - 1916 - பக். 2.
கோணேசர் கல்வெட்டு - கவிராஜவரோதயர் எழுதி
யது - பதிப்பாசிரியர் வைத்திலிங்க தேசிகர் - 1916 -
LIrrl-do I – Léh. I.
மேற்படி நூல் - ஆசிரியப்பா - பக். 10.
32


Page 35
ପୈତକ
ஸ்வரக் க
க்கோனே
திரு
 

— V — கல்வெட்டுச் சான்றுகள்
(திருக்கோணமலை)
குளக்கோட்டனுடைய காலம், பெயர், செயற்பாடுகள் முதலியவற்றுக்காதாரமான சில கல்வெட்டுக்கள்பற்றி முந்திய அத்தியாயங்களில் பார்த்தோம். அவற்றினூடே அறியக்கூடிய வரலாற்றுத் தகவல்களைத் தெளிவுபடுத்துமுகமாக, அக்கல் வெட்டுக்களைப்பற்றிச் சற்று விரிவாகக் கூறவேண்டியது அவசியமாகிறது. அவ்வகையில், சில முக்கியமான கல்வெட்டு களை மட்டும் இங்கு ஆராய்வோம்.
குளக்கோட்டன் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட பின் வரும் கல்வெட்டுக்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.
1. கோணேசர் கோயில் கல்வெட்டு.
2. பிரடரிக் கோட்டையின் சிதைந்த சமஸ்கிருதக்
கல்வெட்டு.
3. கங்குவேலிக் கல்வெட்டு. 4. திருக்கோயில் கல்வெட்டு (தூண் கல்வெட்டு). 5. திருக்கோயில் கல்வெட்டு (சதுரக் கல்வெட்டு).
1. திருக்கோணேசர் ஆலயக் கல்வெட்டு
திருக்கோணேசர் ஆலயத்தின் இரண்டு முக்கியமான கல்வெட்டுகள் ஆய்வாளர் பார்வைக்குக் கிடைத்துள்ளன. இவற்றுள் ஒன்று தமிழிலும், மற்றையது வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளது. இவற்றுள் ஒன்று, கி. பி. 1624ல் கோணே சர் ஆலயத்தை இடித்துக் கட்டப்பட்ட திருகோணமலை பிரடரிக் கோட்டை வாசலில் பொருத்தி வைக்கப்பட்டபடி
33

Page 36
உள்ளது. கோட்டையைக் கட்டும்போது, கல்வெட்டு எழுத் துக்களைக் கவனத்தில் கொள்ளாததால், அதுவும் சேர்த்துக் கட்டப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. (கல்வெட்டு கோணேசர் ஆலயத்தின் தூண் ஒன்றிலேதான் பொறிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.) "
இக்கல்வெட்டின் பிரதிபற்றிப் போத்துக்கேய நாட்டின் அரச சாசனவியலாளர் ஈ. பி. றெய்மார்ஸ் என்பவர் கூறி யுள்ளபடி திரு கோண மலையிலிருந்து போத்துக்கேயர் கொண்டுசென்ற சுவடிகளில் இது காணப்பட்டதாகக் குவ ரோஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். பின்பு இக்கல்வெட்டு பற்றி கொட்றிங்ரன், கிருஷ்ணசாஸ்திரி, முதலியார் இராச நாயகம் போன்றோர் ஆய்வுக் கருத்துக்களை வெளியிட்டுள்ள னர். அவர்கள் கருத்து வருமாறு:
கிருஷ்ண சாஸ்திரி என்பவர், இக்கல்வெட்டின் எழுத் தமைப்பினைக் கொண்டு, இக்கல்வெட்டு கி. பி. 16ம் நூற் றாண்டைச் சேர்ந்ததென்று கூறுகிறார். ஆனால் குடுமியா மலை சாசனத்துடன் ஒப்பிடும்போது, இதில் பொறிக்கப் பட்டுள்ள இரு கயல்களும் கி. பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கருத இடமுண்டு. இது, சடையவர்மன் வீரபாண்டியன், சிங்கள அரசனான முதலாம் புவனேக பாகுவை அடக்கி, திருகோணமலையில் பொறிக்கப்பட்டது எனக் கருதப்படுகிறது.*
இக்கல்வெட்டு, பிற்கால நிகழ்ச்சிகள்ை முனசுட்டியே தெரிவிக்கும் ஒரு தீர்க்கதரிசனப் பாடலாக உள்ளது. இக் கல்வெட்டின் விபரம் வருமாறு: '
(i) கல்வெட்டு வாசகம்:
ன னே குள 5Tll Cup -5 ரு ப பணி யை
னனே பறங்கி ககவே மனன ன பொ ன ன ձձr եւ ա Օ Ք0 தே வை த
ரை
56
34

(2) கல்வெட்டின் மொழிபெயர்ப்புகள் :
இதனைப் பின்வருமாறு திருத்தியமைத்துள்ளனர்.
(மு)ன்னே குள(க்) (கோடன்) மூட்டு(ந்) (தி)ருப்பணியை(ப்) o
- 1 க்கல்வெட்டில் இட்டு (பின்னே பறங்கி (பி) |ಿಸಿ: எழுத்துக்களில் (ரி)க்கவே மன்ன(வ) நிெறை எழுத்துக்கள் தவிர (பி)ன் பொண்ணு(த) ஏனையவை எம்முறையில்
(த)னையியற்ற (வழி) புகுத்தப்பட்டன என்பது (த்தே வைத்(து) சிந்தனைக்குரியது. (எண்ணு)ரே பின்
(னரசர்)கள்.
மேற்படி கல்வெட்டு நான்கு வகையில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. அவற்றின் விபரம் வருமாறு: −
(அ) குவரோஸ் பாதிரியார் மொழிபெயர்ப்பு :
முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை பின்னே பறங்கி பிரிக்கவே - மன்னவ பின் பொண்ணாத தனையியற்ற வழித்தே வைத்து எண்ணாரே பின்னரசர்கள்.? -
இம்மொழிபெயர்ப்புடன் குவரோஸ் அடிகளார் ஒரு குறிப்பையும் வெளியிட்டுள்ளார். அதாவது, மனுராசா என் னும் இலங்கையின் சக்கரவர்த்தி, கோணேசர் கோயிலைக் கட்டியதாகவும், அவனுடைய காலம் கி. மு. 1300 எனவும், பிற்காலத்தில் பிராங்கோஸ் (பறங்கியர்) இக்கோபுரத்தை அழிப்பார்கள் என்றும், அதன்பின்பு அக்கோயிலை எவருமே கட்டியெழுப்பமாட்டார்கள் என்றும் இப்பாடல் கூறுகிறது. குளக்கோட்டனை மனுவேந்தன் அல்லது மனுநீதி கண்ட சோழன் எனவும் குவரோஸ் அடிகளார் குறிப்பிடுகிறார். இதே குறிப்பு கி. பி. 1624ல் இக்கோயிலை அழித்த போத் துக்கேயத் தளபதி கொன்ஸ்ரான்ரைன் டீசா என்பவன், போத்துக்கல்லுக்கு அனுப்பிவைத்த டயறிக் குறிப்பிலும் காணப்படுகிறது. இக்கூற்று அவனால் மக்களிடமிருந்து வாய் மொழியாக அறியப்பட்டதாக இருக்கவேண்டும். எனவே இதன் உண்மைத்தன்மை மறு பரிசீலனைக்குரியதாகும்.
35

Page 37
(ஆ) கொட்றிங்ரன் மொழிபெயர்ப்பு :
முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை பின்னே பறங்கி பிரிக்கவே - மன்னவயின் பொண்ணாத தனையியற்ற வழித்தே வைத்து எண்ணார் வருவேந்தர்கள்."
(இ) முதலியார் இராசநாயகம் கூறுவது:
முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை பின்னே பறங்கி பிரிப்பானே - பொன்னரும் பூனைக்கண் செங்கண் புகைக்கண் ஞண்டபின் தானுந் தமிழாய் விடும்.*
(*) பாரம்பரியமாகக் கூறப்பட்டுவருவது
முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப் பின்னே பறங்கி பிடிக்கவே - மன்னாகேள் பூனைக்கண், செங்கண் புகைக்கண்ணன் போனபின் மானே வடுகாய்விடும்.
இம்மொழிபெயர்ப்பு வின்ஸ்லோ அகராதியிலும் காணப் படுகிறது. இவ்வகராதியில் யார் மூலம் இப்பாடல் இடம் பெற்றது என்பது தெரியவில்லை. வாய்மொழியாகக் கேட்ட ஒருவரே இதைச் செய்திருக்கலாம்.
இப்பாடலின் கருத்து எவருக்கும் புரியக்கூடியது. முற் காலத்தில் குளக்கோட்டன் என்னும் மன்னன் திருப்பணி செய்த இவ்வாலயத்தைப் பிற்காலத்தில் பறங்கியர் என்னும் சாதியினர் அழிப்பார்கள். அதன்பின் இக்கோயிலைக் கட்டுவ தற்கு வேறு அரசர்கள் எவரும் எண்ணமாட்டார்கள்.
பாடலின் வாசகங்கள் மாறினாலும் பிரதான கருத்தில் எவ்வித மாற்றமுமில்லை. கல்லிலே எழுத்துக்கள் அழிந் திருந்தபடியால் அவற்றை இட்டு நிரப்ப எடுத்த முயற்சியில் இத்தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை எவரும் இலகுவாக ஊகித்துக்கொள்ளலாம். எவ்வாற யினும் பாடலில் பொதிந் துள்ள தீர்க்கதரிசனம் கவனத்துக்குரியது.
3. “கோணேசர் கல்வெட்டு” பாடல் கூறுவது:
'கோணேசர் கல்வெட்டு" என்னும் நூலிலும் இவ் விடயம் கூறப்பட்டுள்ளது. அப்பாடல் வருமாறு:7
36


Page 38
திருகோணமலை பிரடரிக்கோட்டை சமஸ்கிருதக் கல்வெட்டு
(நன்றி : தொல்பொருள் திணைக்களம்)
 

** சேர்ந்தபின்னர் மறையோர்கள் கோணைநாதர்
திருப்பூசை வெகுகாலஞ் செய்யு மற்றால் மாந்தளிர் போன் மேனியுடைப் பறங்கி வந்து
மஹாகோணைப் பதியழிக்க வருமந்நாளி லேய்ந்த தென்பாற் கழினி மலையென் றொன்றுண்டாங்
கீசனுக்கு மாலய மங்கியற்றப் பின்னர் w கோந்த துறை சேரொல்லாந்தர் பிடிக்கு மந்நாட் குலவுசிங்க விரவி குலங்குறைந்து போமே".
(45ub Lint L–6v) **போனபின்ன ரிலங்கைமுற்றும் வடுகராள்வார்
புகழிலங்கை தணிபுரக்கு முலாந்தா மன்னன் தானிலங்கு மரசிங்கனுக்குத் தடையென் றெண்ணி
தரியலனைக் கடலிடையே தள்ளிவிட்டுத் தேன் மரு மலங்கல்புனை வடுகன்றானுஞ்
செப்பிய மாற்றரசு மகிழ்கொண்டே கோணை மான பரனகமகிழ் பொற்கோயிலுக்குள்
மாதனத்து மீதுவைத்து வணங்குவாரால்."
(46ம் பாடல்)
கோட்டையில் உள்ள கல்வெட்டுச் சாசனமியற்றிப் பல நூறு வருடங்களுக்குப் பின்பே மேற்படி நூல் (ஏடு) எழுதப் பட்டது என்பதால், இச்செய்தி மேற்படி கல்வெட்டிலிருந்தே பெறப்பட்டிருக்கவேண்டும் எனக்கொள்ளலாம்.
இக்கல்வெட்டின்மூலம் (சாசனத்தின்மூலம்) கோணேசர் கோயிலைக் குளக்கோட்டன் கட்டினான் என்பதைவிட, கோணேசர் கோயிலுக்குக் குளக்கோட்டன் திருப்பணி செய் தான் என்ற கருத்தே மேலோங்கி நிற்பதைக் காணலாம்.
4. திருகோணமலை பிரடரிக் கோட்டையின்
சிதைந்த சமஸ்கிருதக் கல்வெட்டு:
மேற்படி கல்வெட்டுப்பற்றி டாக்டர் எஸ். பரணவிதான எழுதியுள்ள விளக்கத்தின் சுருக்கம் வருமாறு : (Ep. Zey. Vol. - V. pp. 170 — 177).
1945ம் ஆண்டு இராணுவத்தினர் பிரடரிக் கோட்டையி னுள் அகழ்வு செய்தபோது இது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரத்தில் அலங்கார வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கதவின் துண்டு (Door Jamp). 1% அடி உயரம். ஒவ்
37

Page 39
வொரு வரியும் சராசரி 13'. 4ம், 5ம் வரிகள் அழிந்துள்ளன. ஒவ்வொரு எழுத்தும் 4 - 18" வரை உள்ளது. 7 வரிகள் உள்ளன. ஒரு சமஸ்கிருத சுலோகத்தின் முதல் 2 அடிகளாக இருக்கலாம். இது சோடகங்க என்னும் மன்னன் இலங்கைக்கு. வந்த ஆண்டுபற்றிக் குறிப்பிடுகிறது. வாசகம் வருமாறு:
கல்வெட்டின் வாசகம் விளக்கம்
. Svasti Sri Devas-Sri-Co Hail Prosperity. In the da Gamgah ksiti-tala-tita year Sambhu-pụspe. (ieKam-prapya Lankam aja one thousand one hundred Yyam Sakeb (d) e (sa) and forty five) of the Saka Mbh P Kiva-bh era, when the sun was in u-houspe K1ya- avana the mansion of aries Hasta. Ravahu Hasta-bhe-Me being the constellation (in (Sa) Lagne Gokarne. conjunction with the moon,
and the point of the ecliptic at the horizon
(lagna) being aries the illustrious Codagangadeva having arrived in the unconqurable Lanka the forehead ornament of earth.
"சக வருடம் 1145 சம்பு புஷ்பம் ஆண்டு (mpu puspe) சூரியன் மேட ராசியில் நிற்க, அந்த நட்சத்திரம் கூடிய நாளில், இலக்கினம் உதயமாகும்போது வெள்ளிக்கிழமை அதிகாலையில் சோடகங்கதேவ என்னும் மன்னன். . இலங் கைக்கு கோசர்ணவில். செய்வதற்கு வந்தான்' எனக் கலாநிதி பரணவிதான கொள்கிறார். சக வருடம் என்பது கி. பி. 78ம் ஆண்டு. எனவே சக வருடம் 1145 என்பது கி. பி. 1223 ஆகும். −
இக்காலம் இலங்கையின் வடக்குப் பகுதியைத் தன் ஆட்சியின் பிடியில் வைத்திருந்த மாகோன் என்னும் அரச னின் காலத்துள் வருகிறது. சோடகங்கன் திருகோணமலை யைச் சிலகாலம் தன் ஆட்சியினுள் வைத்திருந்து இக்கோயி லுக்கு (கோணேஸ்வரம்) நிவந்தம் அளித்தபோது இக்குறிப் பும் பொறிக்கப்பட்டிருக்கலாம். கோகர்ண திருகோணமலை யைக் குறிப்பிடுகிறது. மகாவம்சத்தில் குறிப்பிட்டபடி சோட
38

கங்கன் என்பவன் கலிங்க நாட்டிலிருந்து இலங்கைக்கு வந் தான் எனவும், கலிங்க நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து குடியேறியவர்கள் ஈஸ்வரன் வழிபாட்டையும் கொண்டு வந் இருக்கவேண்டும் எனவும் டாக்டர் பரணவிதான கூறுகிறார். இக்கருத்தில் சில தவறுகள் உள்ளன.
ஈஸ்வர வழிபாடு கிறீஸ்துவுக்கு முற்பட்ட காலத்தி லேயே இலங்கையில் இருந்தது என்பதும், விஜயன் இலங் கைக்கு வருவதற்கு முன்பே, ஈழத்தில் ஐந்து சிவாலயங்கள் இருந்தன என்பதும் வரலாற்று உண்மைகள்.?
இதில் குறிப்பிடப்படும்" சோழகங்கன் யார் என்பதை இந்திய - இலங்கை வரலாறுகளால் அறியமுடியவில்லை எனக் கலாநிதி பரணவிதான அவர்கள் கூறியபோதும், பிற்கால ஆய்வாளர்கள் இதுபற்றிய ஆய்வுகளை நடாத்திச் சில திட்ட வட்டமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இத்தொடர்பில், கலாநிதி இந்திரபாலா, கலாநிதி வேலுப்பிள்ளை, கலாநிதி குணசிங்கம் போன்றோர். வெளி யிட்ட முடிவுகள் இந்நூலின் பிறிதொரு அத்தியாயத்தில் இடம்பெறுகின்றன. இதன்படி இச்சோழகங்கன், புகழ்பெற்ற சோடகங்கதேவ, கி. பி. 1223ல் மாகோனுடன் இலங்கைக்கு வந்திறங்கிய்வன் என நிறுவப்பட்டுள்ளது. இவனே குளக் கோட்டன் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோணேஸ்வரத்துடன் தொடர்பு படும் இந்த இரண்டு கல்வெட்டுகளும், குளக்கோட்டனைச் சூழ்ந்துள்ள கர்ணபரம்பரைக் கதைகள், புராண இதிகாசக் கதைகளி னுாடே வரலாற்று உண்மைகளைத் தரிசிப்பதற்கு வலுவான வரலாற்றுச் சான்றுகளாக அமைகின்றன.
பல அழிவுகளுக்கு மத்தியில் தப்பிப்பிழைத்த இவ்விரு கல்வெட்டுகளும் ஆதாரபூர்வமான அகச்சான்றுகளாக இருப்ப தால், இவற்றின் துணைகொண்டு மேலும் பல வரலாற்றுச் சான்றுகளைத் தொடர்புபடுத்துவது சாத்தியமாகின்றது. எனவே இக்கல்வெட்டுகளின் முக்கியத்துவம் நன்கு உணரப் படவேண்டும்.
5. கங்குவேலிக் கல்வெட்டு:
கி. பி. 1786ல், திருகோணமலையில் பரதம அதிகாரி யாக இருந்த ஜாக்குவஸ் பாப்ரிஸ் வான் சான்டின் என்பவரது டயறிக் குறிப்பிலிருந்து மேற்படி கல்வெட்டுப்பற்றிய விபரம் தெரியவருகிறது."
39

Page 40
திருகோணமலைப் பட்டினத்திலிருந்து 16 மைல் தொலைவில் உள்ள மூதூர்ப் பகுதியில் அமைந்துள்ளது கங்கு வேலி என்னும் கிராமம். இங்கு ஒரு பழைய கோயிலுக்கு முன் மேற்படி கல்வெட்டு காணப்பட்டதாக வான் சாண்டின் குறிப்பிடுகிறார். இக்கோயில் அகஸ்தியர் ஸ்தாபனம் என்னும் பழமைவாய்ந்த ஆலயம் ஆகும். வான் சான்டின் அவர்களின் குறிப்பு வருமாறு:9 (ஆங்கிலத்தின் மொழிபெயர்ப்பு)
"இங்குள்ள பழைய கோயிலுக்கு முன் ஒரு துண்டுக் கல்வெட்டுக் காணப்படுகிறது. இது மணற் கல்லால் (Sand Stone) ஆனது. இதில் ஒரு பக்கம் பழைய திரி சூலக் குறி ஒன்றும், இரண்டு பக்கங்களில் எழுத்துக் களும் பொறிக்கப்பட்டுள்ளன."
இக்கல்வெட்டில் திரிசூலம் காணப்படுகிறது. இம்மக்கள் கூற்றுப்படி இச்சின்னம் யுத்தத்துக்குரிய ஆயுதமாகும். இது கடலுக்கும் பூமிக்கும் அதிபதியாகிய யுத்தக் கடவுள் வயிரவ ரின் ஆயுதமாகும். இது "நெப்டியூன்” (Neptune) தேவதை யின் திரிசூலத்தைப்போன்றது. அபே கோஜர் (Abbe Coger) என்பவரதும், சொனற் (Sonet) என்பவரதும் கூற்றுப்படி, இந்தியாவிலிருந்தே கிரேக்கர்கள் தமது சமயத்தைப் பெற் றார்கள் என்பதற்கு இது மேலும் ஒரு வலுவான ஆதார மாகிறது." இவ்வாறு வான் சான்டின் குறிப்பிட்டுள்ளார். இவரது கூற்றுப்படி, இக்கல்வெட்டின் வாசகம் வருமாறு: மேற்குப் பக்கம் :
மலையில் வன்னியனாரும் எளுநிலை அடப்பாகளும் கூடித் மீ பிரானார் கொணை நாதனுக்கு கங்குவெலி யில், வெளியும் பல நடப்டும், பூரீ ஆகவிட்டொம். இதுக்கு யாதொருவனாகிலும் அகுதம் நினைத்தவர்கள் கெங்கை.
தெற்குப் பக்கம் :
கரையில காரம் பசுவைக் கொண்ட பாவம் கொளக் கடவராகவும் யிப்படிக்கு இரண்டு முதன்மையும் தானம் வரிப்பத்தும்.
இதுபற்றி வான் சான்டின் மேலும் கூறுவது: திருகோணமலை வன்னியர்களும், கங்குவேலியின் கிரா மத் தலைவர்களும் (அடப்பனார்) இந்த வயலையும் அதன் பிரயோசனங்களையும் கோணைநாதருக்கு அர்ப்பணித்துள்ள னர். இதை மறுதலிப்பவர்கள் அல்லது இப்பிரயோசனங்
40


Page 41
கங்குவேலிக் கல்வெட்டு
 

களைத் தமதாக்கிக்கொள்பவர்கள் மகா பாதகம் செய்தவ ராவர். இப்பிரகடனம் 2 புரோகிதர், சாதித் தானத்தார், வரிப்பத்தர் ஆகியோர் முன்னிலையில் செய்யப்பட்டது.
இக்கல்வெட்டின் திருந்திய வாசகம் வருமாறு:
முதற்பக்கம் (மேற்குப்புறம்) :
(திரிகோண) மலையில் வன்னியனாரும், ஏழு பகுதி அடப் பர்களும், கூடித் (தீர்மானிப்பது) பிரானார் கோணை நாதனுக்கு, கங்குவேலியில் (வயல்) வெளியும், பல நடைபாடும் பூரீ (நிவந்தம்) ஆகவிட்ட்ோம். இதற்கு யாதொருவனாகிலும் அகுதம் (தீங்கு) நினைத்தவர்கள் கங்கை.
மறுபக்கம் (தெற்குப் பக்கம்) :
கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவம் கொள்ளக் கடவராவர். இப்படிக்கு இரண்டு முதன்மையும் தானத் (தாரும்) வரிப்பத்தர்களும்.
இக் கல் வெட் டி ல் குறிப்பிடப்பட்டுள்ள் "எளுநிலை அடப்பாகளும்" என்பது " "ஏழு நிலையான அடப்பர்களும்" என வரவேண்டும். 'கூடித் மீ" என்பது 'கூடித் தீர்மா னிப்பது' என வர வேண்டும். நெடில் எழுத்துக்சள் எல்லாமே குறில் எழுத்தில் கூறப்பட்டுள்ளன. பூரீ என்பதற்கு எவ்வித கருத்தும் புலப்படாதபோதும் "நிவந்தம்" எனக் குறிப்பதாகக் கொள்ளலாம். • S.
தென்னிந்தியக் கல்வெட்டுக்களிலே, முன்புறம் சூரிய, சந்திரர், திரிசூலம் என்பன இடம்பெறும். இக்கல்வெட்டில் திரிசூலம் மட்டும் இடம்பெற்றுள்ளது. ஆகவே இத்திரிசூலம் இக்கல்வெட்டிலே குறிப்பிட்டுள்ள முதன்மை, தானத்தார், வரிப்பத்தர் ஆகியோருக்கு உரிய வம்ச சின்னமாக அமைய லாம். அல்லது குறித்த ஆலயத்துக்குரிய சின்னமாகக் கொள்ள
, (o) s TLD .
இக்கல்வெட்டிலும், இக்காலப் பகுதிக்குரிய ஏனைய கல்வெட்டுக்களைப்போலவே, தீங்கு செய்வோருக்கு சாபம் கொடுக்கப்படுகிறது.
இக்கல்வெட்டின் எழுத்து அமைப்பினைக் கொண்டு, பாண்டித்தியம் பெறாத ஒருவரால் இக்கல்வெட்டு எழுதப் பட்டது எனக் கொள்ளலாம். "வ" போன்ற எழுத்துக்கள் கி. பி. 12ம் நூற்றாண்டுக்குரிய எழுத்துக்கள்போலுள்ளன. இவ்விபரங்களைக்கொண்டு இது கி. பி. 12ம் நூற்றாண்டுக் குரிய் ஒரு கல்வெட்டு என மிகச் சுலபமாகக் கூறிவிடலாம்.
41

Page 42
மேலும், திருக்கோயில் கோயில் வளவில் உள்ள 3 கல் வெட்டுக்களில் காணப்படுவதுபோல், இறுதியில் சாபம் இடம் பெறுகிறது. எழுத்தமைப்பும் அக்கல்வெட்டுக்களை ஒத்திருக். கிறது.
எனவே கலிங்க மாகன் திருக்கோவில் (உன்னரசுகிரி) பகுதியில் திருப்பணி செய்ததும், குளக்கோட்டன் என்னும் சோழகங்கன் திருக்கோணமலையில் திருப்பணி செய்ததுமான காலப்பகுதியாக இதைக்கொள்ளலாம். குளக்கோட்டன் திரு கோணமலையில் திருப்பணி செய்த காலத்தில், இக்கங்கு வேலிக் கோயில், கந்தளாய் சிவன் கோயில் முதலியவை சிறப்புற்றிருந்தன என்பதையும் இக்கல்வெட்டுமூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. o
அடிக்குறிப்புகள் : 1. The Temporal and Spiritual Conquest of Ceylon -
Fr. De Queyroz — Translated by S -J. Perera — Bode 1 - Colombo - 1930 - P. 378. 2. தென் இந்திய கோயிற் சாசனங்கள் -
ஏ. ஆர். 356 ஒக், 1906. 3. The Temporal and Spiritual Conquest of Ceylon -
Fr. De Queyroz — Translated by S. J. Perera — Bode 1 - Colombo - 1930 - P. 378. 4. The Inscription at Fort Fredrick Trincomalee, J R A S. CB XXX No. 80 - Codrington H. W - Colombo - 1927 — PP. 448 - 451. 5. Ancient Jaffna — Rasanayagam C. — 1926 — P. 326.
6. Tamil and English Dictionery - Winslow M. Rev. -
Madras - 1862 - PP. 259. 7. கோணேசர் கல்வெட்டு - பதிப்பாசிரியர்: வைத்திலிங்க
தேசிகர் - 1873 - பக். 7, 8 - பாடல் 45 - 46. 8. Sanskrit inscription from Trincomalee - Paranavitana S
E. Z. Vol. v. No. 14 - PP. 170 - 173. - 9. Nagadipa and Buddhist Remains in Taffna - J R.A.S.
CB. XXVI. No. 70 — P. E Pieris — PP 17-18 10. Extract from the Journal of the Jacques fabrice van sanden chief officer of Trincomalee in the year 1786. Vol. 1115-- Colombo - Dutch Records 1786 - Thursday May. 25.
42


Page 43
திருக்கோயில் தூண் கல்வெட்டுகள்
(நன்றி: தொல்பொருள் திணைக்களம்,
 

- V -
கல்வெட்டுச் சான்றுகள் (திருக்கோவில்)
திருக்கோவில் கோயில் வளவில் நான்கு கல்வெட்டுக் கள் காணப்படுகின்றன. அவற்றுள் இரண்டு முக்கியமானவை: ஒன்று தூண் கல்வெட்டு, மற்றது துண்டுக் கல்வெட்டு ஆகும்.
1. தூண் கல்வெட்டு:
இக்கோயில் வளவில் க்ாணப்பட்ட ஒரு சதுரத் தூணில் கல்வெட்டொன்று பொறிக்கப்பட்டுள்ளது. இத்தூண் 5 அடி உயரமானது. இதில் மூன்று பக்கங்களிலும் தமிழ் எழுத்துக் கள் பொறிக்கப்பட்டுள்ளன. நான்காவது பக்கம் ஒரு மயி லின் உருவம் ஆயுதம் ஒன்றுடன் காணப்படுகிறது. அதன் விபரம் வருமாறு:
(அ) கல்வெட்டு வ்ாசகம்.
பக்கம் "அ" பக்கம் "ஆ"
கல்வெட்டு எழுத்தும் கல்வெடடு எழுத்தும்
விளக்கமும் விளக்கமும்
O it சிவனன் - சிவனணி
பூரீசங் - பூgசங் சங்கர்க - சங்கர (க்)
கபோ - கபோ கோயி - கோயி
திபரும - திபரம லுககு - ஆலுக்கு (தொடர்ச்சி மறுபக்கம் (தொடர்ச்சி மறுபக்கம்
43

Page 44
ரானுதி -ரானதி றிபுவன - றிபுவன
சசகதிரு - ச்சக்கிர
வததக - வத்திக ளபூரீவி - ளயூரீவி சயவர - சயபா குதேவ - குதேவ ரகுஆ - ரு குஆ னடுப - ண்டுப
த தாவ - த்தாவ
திலதை - தில்தை மரதம - மாதம்
20தியதி - 20தியதி
கொடு - கொடு தவ்ோ - தவொ
விலஏ - விலஇ
தைதன - ன்ததன் மததுக - மத்துக் குஅகி - குஅகி தமசெ - தமசெ(ய்)
தரணுகி - தாணுகி
லகெங் - ல்கெங்
கைகக - கைக்க
ரையில - ரையில்
கராமப - காராம்ப சுவைக - சுவைக்
கொறத - கொன்ற பரவதணு - பாவத்தை தகெரள - தகொள்
65. G. - GT35-6). ராகவும - ராகவும்
(ஆ) இக்கல்வெட்டுக்களின் விளக்கம் வருமாறு:
பக்கம் “அ“ பூரீசங்கபோதி பரமரான திரிபுவனச் சக்கர
வர்த்திகள் பூரீ விஜயபாகு தேவற்கு, ஆண்டு பத்தாவ தில் தை மாதம் 20 திகதி.
பக்கம் "ஆ" சிவனான சங்கரக் கோயிலுக்கு கொடுத்த வொவில இந்த தர்மத்துக்கு அகிதம் செய்தானகில், கெங்கைக் கரையில் காராம் ப்சுவைக் கொன்ற பாவத் தைக் கொள்ளக்கடவராகவும். w
இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வோவில என்ற இடப்பெயர் சிங்கள "வோவில" என்பதன் திரிபு என்பது எஸ். ஒ. கனகரட்னம் அவர்களின் கருத்தாகும். மேலும் *வோவில" என்று குறிப்பிடப்படும் இடம் தற்போது இக்கல்வெட்டு வைக்கப்பட்டுள்ள கோயிலுக்குத் தெற்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது என எஸ். ஒ. கனகரட்னா வும், ஹ்யூ நெவிலும் கருதுகின்றனர்.
மேலும் இக்கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுக் கப்பட்ட இந்த "வோவில தமிழில் "வோவில்" எனப் பெயர் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இக்கல்வெட்டு தம் பிலுவில் பகுதியில் உள்ள கோயில் ஒன்றினைச் சேர்ந்த
44

கல்வெட்டு எனின் மேற்படி கருத்துத் தவறானதாகும் என பேராசிரியர் இந்திரபாலா கருதுகிறார்.2 ஆனால் தற்போது இப்பகுதியில் உள்ளோர் வோவில என்ற ஓர் இடம் இருந்த தாகத் தமக்குத் தெரியாது எனக் கூறுகின்றனர்.
இக்கல்வெட்டின் காலம் சம்பந்தமாகவும், இதில் குறிப் பிட்டுள்ள விஜயபாகு சம்பந்தமாகவும் ' கலாநிதி வேலுப் பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்.
" . பூரீ சங்கபோதி என்னும் பெயர், அனேக சிங்கள அரசர்களுக்கு அரச பதவிப் பெயராகவும் உள்ளது. முதலாம் விஜயபாகு இப்பெயரைக் கொண்டிருந்தான். பெரும்பாலும் சோழர் இலங்கையைக் கைப்பற்று முன்னர் ஆண்ட அனு ரதபுர மன்னர்கள் அபய சலா மேவன் என்னும் புெயரையும், முதலாம் விஜயபாகுவுக்குப் பின் வந்தோர் பூரீ சங்கபோ என்னும் பெயரையும் பதவிப் பெயராகக் கொண்டனர். குறிப்பாக பராக்கிரமபாகு, நிசங்கமல்லன் முதலியோர் இப்பெயரைக் கொண்டிருந்ததைக் காணமுடிகிறது"
2." ஆய்வாளர் கருத்து:
திரிபுவனச் சக்கரவர்த்தி என்பது பெரும்பாலும் கி.பி. 12ம் நூற்றாண்டுச் சோழர் கல்வெட்டுக்களிலேயே காணப் படுகிறது. ஹ்யூ நெவிலும் இக்கல்வெட்டு மூன்றாம் விஜய பாகு அல்லது ஆறாம் விஜயபாகு (கி. பி. 1398 - 1410) ஆட்சி ஆண்டைக் குறிப்பது எனக் கருதுகின்றார்.4
(அ) கலாநிதி வேலுப்பிள்ளை மேலும் கூறுவது: விக்கிரம சிங்கா கொடுத்துள்ள அரச பட்டியலின்படி, விஜய பாகு எனப் பெயருடையோர் பலர் ஆண்டனர். முத லாம் விஜயபாகுவிற்குப் பின்வந்தோர் எல்லோரும் மிகக் குறுகிய காலமே ஆண்டனர். ஏழாம் விஜய பாகு கி. பி. 16ம் நூற்றாண்டில் கோட்டை இராச தர்னியை ஆண்டவன். இவனுடைய ஆட்சி தென்பகு திக்குப் பரவவில்லை. நாலாம் விஜயபாகுவின் பெயர் இப்பட்டியலில். இடம்பெறவில்லை. எனவே இக்கல் வெட்டில் குறிப்பிட்ப்படும் விஜயபாகு ஐந்தாம் விஜய பாகு அல்லது ஆறாம் விஜயபாகுவாக இருக்கலாம். இவ்வாறு கலாநிதி வேலுப்பிள்ளை கூறுகின்றார்.
45

Page 45
sale.)
5ft 6
(9)
ஆனால் இக்கல்வெட்டுச் சம்பந்தமாக, பேராசிரியர் இந்திரபாலா கூறுவது: 'இலங்கையிலேயே விஜயபாகு என்ற பெயரைத் தாங்கிய மன்னர் அறுவர் ஆட்சி புரிந்துள்ளனர். அவர்களில் முதலாம் விஜயபாகுவும், ஆறாம் விஜயபாகுவுமே பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிபுரிந்தனர். இக்கல்வெட்டு 'பத்தாவது ஆண்டில்” எனக் குறிப்பிடுவதால், இவ்விருவருள் ஒருவனே இக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் விஜயபாகுவாக இருக்க வேண்டும். மேலும் சங்க போதி என்ற சிம்மாசனப் பெயரை இருவரும் தாங்கி இருந்தாலும், முதலாவது
விஜயபாகு திரிபுவனச் சக்கரவர்த்தி என்ற விருதுப்
பெயரைப் பயன்படுத்தவில்லை. மேலும் இக்கல்வெட் டின் எழுத்துக்கள் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த காரணத்தால் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னன் ஆறாம் விஜயபாகுவாக இருக்கவேண்டும். இவன் காலம் கி. பி. 1519 ஆகும்.’ இவ்வாறு பேரா சிரியர் இந்திரபாலா குறிப்பிடுகிறார்.
மேற்படி கருத்துக்கள் மறுபரிசீலனைக்குரியவை. அதற் காரணங்கள் வருமாறு:
கலிங்க விஜயபாகு என்ற பெயருடன் மர்கோன் என் பவன் இலங்கையில் இருபத்தொரு வருடம் ஆட்சி
டிரிந்ததாக "சூளவம்சம் குறிப்பிடுகிறது. மாகோன்
(<毁)
ஒரு புசழ்பெற்ற தமிழ் அரசன். எனவே இது மாகோ னுடைய ஆட்சிக் காலத்தில் பொறித்த கவ்வெட்டாக, இருக்கமுடியும். இக்கல்வெட்டில் பெரும்பாலும் கி. பி. 13ம் நூற்றாண் டுக்குரிய எழுத்துக்கள் காணப்படுவதோடு, "அ", "இ" போன்ற சில எழுத்துக்கள் மிகவும் வளர்ச்சி அடை யாத முறையில் 8ம், 9ம் நூற்றாண்டுக்குரிய எழுத்துக் கள் போன்றும் காணப்படுகின்றன. w
(இ) இக்கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள சிவஞான சங்கரர்
கோயிலுக்குக் கொடுத்த "வோவில" என்பதை, சிவ
ஞானசங்கரர் என்னும் பெயருடைய ஒரு வ ர் இக்
கோயிலுக்குக் கொடுத்த "வோவில’ எனவும் கருத்துக் கொள்ளமுடியும் என இந்திரபாலா நினைக்கிறார். அப்படிக் கொண்டால், இரண்டாவது கல்வெட்டில் "சிவஞான சங்கரிகள் சிறி விஜயபாகு தேவருக்கு' என்று பொறிக்கப்பட்டுள்ளது முரணாக அமையும்.
46


Page 46
திருக்கோயில் துண்டுக் கல்வெட்டு
(நன்றி: தொல்பொருள் திணைக்களம்)
 

மேற்குறித்த காரணங்களால், இக்கல்வெட்டில் குறிப் பிட்டுள்ள விஜயபாகு, மாகோன் என்று கொள் வ தே பொருத்தமானது. இக்கல்வெட்டில் இடம்பெறும் 'திரிபுவ னச் சக்கரவர்த்தி' என்ற அடைமொழி கி. பி. 12ம் நூற். றாண்டு காலத்து மெய்க்கீர்த்திகளில் இடம்பெறுவது என் பதும் இக்கருத்தை மேலும் வலியுறுத்துகிறது.
மாகோனும், குளக்கோட்டனும் சமகாலத்தவர் என் பதும், இருவருக்கும் உள்ள தொடர்பும் (ராஜன்-உபராஜன்) பிறிதொரு அத்தியாயத்தில் விபரிக்கப்பட்டுள்ளன.
3. துண்டுக் கல்வெட்டு:
ஏறக்குறைய 2 அடி நீள அகலமுடைய சற்சதுரக் கருங் கல் துண்டிலே இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டில் சுமார் 12 வரிகள் இருந்திருக்கலாம். ஆனால் மிகவும் அழிவுற்ற நிலையில் இக்கல்வெட்டு இருப்பதால், எல்லா வரிகளையும் வாசிக்கமுடியாதுள்ளது. முதல் எட்டு வரிகளிலும் உள்ள எழுத்துக்களை மட்டுமே வாசிக்க முடி கிறது. V (அ) கல்வெட்டு வாசகம்:
றி மதசங்க பேரதி வரமராளு திறி புவன சகதிரிய வததிகள ான சிவ ஞான சங்கரிககள் , சிரி விசய வாகு தேவருகு யாணடு கயவதிலனுத மாயததி திருககோயில சிததிரவே லாயுத சுவாமி கோயிலுககு
கிளகசூ கடல ளாமேறகு தலை .
(ஆ) கல்வெட்டு விளக்கம்:
பூரீமத சங்கபோதி வர்மரான திரி புவனச் சக்கரவர்த்திகள்ா ன சிவஞான சங்கரிகள் ழறி விஜயபாகு தேவருக்கு யாண்டு உய வதில் தைமாயத்தி திருக்கோயில் சித்திரவே லாயுத சுவாமி கோயிலுக்கு கிளக்கு கடலகு மேற்கு தலை.
47

Page 47
(இ) திருத்திய வாசகம்:
யூரீமத் சங்கபோதி வர்மரான, திரிபுவனச் சக்கரவர்த்தி க்ளான சிவஞான சங்கரிகள், ழரீ விஜயபாகு தேவருக்கு, பத்தாவது ஆண்டு தைமாதத்தில், திருக்கோவில் சித்திர வேலாயுதசுவாமி கோயிலுக்கு கிழக்கே கடலும் நேர்
மேற்கு தலைக்கல்.
இக்கல்வெட்டின் இறுதி வரிகளின் எழுத்துக்கள் அழிந்து விட்டபடியால் முற்றாக இதன் நோக்கம் என்னவெனக் கூற முடியாவிட்டாலும் 'சித்திரவேலாயுத சுவாமி கோவிலுக்குக் கிழக்கே கடலும், மேற்கு தலைக்கல்" என்று கூறியிருப்ப" தால் ஏதோ ஒரு எல்லை குறித்த நிவந்தம் அல்லது திருப் பணிபற்றி இக்கல்வெட்டுக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
4. ஆய்வாளர் கருத்து:
கலாநிதி இந்திரபால, கலாநிதி வேலுப்பிள்ளை ஆகிய இருவரும் இக்கல்வெட்டைப் பதினாறாம் நூற்றாண்டுக்குரிய தாகக்கொண்டு இக்கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள விஜய் பாகு ஆறாம் விஜயபாகு என்றே கருதுகின்றனர்.7 சைவர்கள் இவனுக்கு 'சிவஞானசங்கரர்" என்ற விருதைக் கொடுத் திருக்கலாம் என்று இந்திரபாலா கூறுகிறார். . இக்கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. சில கண்டி மன்னர் களைச் சைவர்கள் மதித்துப் போற்றியதை வரலாற்றில் நாம் பார்க்சிறோம். அதற்குக் காரணம் அம்மன்னர்கள், நாயக்கர்சளாக இருந்ததும் சைவத்திற்கு ஆதரவளித்ததுமே ஆகும். ஆனால் இந்த விஜயபாகு அப்படி அல்ல.
எனவே இக்கல்வெட்டில் சுறப்பட்டுள்ள விஜயபாகு வும் மாகோன் என்றே எண்ணமுடிகிறது.
மேலும் பெயர்களைக் கொண்டு மட்டும் கல்வெட்டு களின் காலத்தை நிர்ணயிக்கமுடியாது. எழுத்தமைப்பு, வாசகத்தின் அன்மப்பு முதலியவையும் கவனத்திற் கொள் ளப்பட்டு நன்கு பரீசீலிக்கப்படவேண்டும்.
இக்கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள், நெடில் குறி லாகவும் 'ந' வுக்குப் பதில் "ன" வும் இடம்பெறுகிறது. "மாசத் தில்" என்பது " மாயத்தில்" என்றும் எழுதப்பட்டுள்ளது. இத்தகைய எழுத்தமைப்பு உள்ள கல்வெட்டுக்கள் கி.பி. 12ம்:
48

நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கொள்ளலாம். மேலும் 'திரி புவனச் சக்கரவர்த்தி" என்ற அடைமொழியும் இக்கூற்றை உறுதிப்படுத்துகிறது.
5. மாகோன் வகுத்த வன்னிமை (திருக்கோவில்)
மாகோன், திருக்கோவில் நிர்வாகம், தொண்டுக்ள் தொடர்பாக வகுத்த வன்னிமை பற்றிச் சில கல்வெட்டுப் பாடல்கள்மூலம் அறியமுடிகிறது. அவற்றுள் இரு பாடல் களைக் கீழே தருவாம். இப்பாடல்கள் மட்டக்களப்பு மான் - மியத்தில் குளிக்கல்வெட்டுமுறை என்ற பகுதியில் உள்ளன. ?
(அ) கண்டனெடு சருகுபில்லி கட்டப்பத்தன்
கருதரிய கவுத்தனு மந்தியாயன்
மண்டலத்தில் பொன்னச்சி வயித்தியென்று
கோவசியர் மக்களிலே வருணமாக்கிப்
பண்டு முறை தவறாமல் ஏழு குடியாய் பகுத்தீசர் பணிபுரியப் பரவணியாய்
அண்டர் தமைச் சாட்சி வைத்துத் தத்தம் வாங்கி
அரனகத்து ஊழியராய் அமைத்துச் சொல்வார்.
(2b Luftt-di)
(ஆ) சொல்லரிய விளக்கேற்றல், பூவெடுத்தல்
தூசகற்றல், சாணமிடல், அணிவிளக்கல் நல்லமலர் மாலைகட்டல் மேளம் மீட்டல்
நற்சந்தன மரைத்திடுதல் நெல்லுக்குத்தல் துல்லியமாய் வளர்ச்சி விகை ஏந்திச்செல்லல்
தானிகட்டல் அமுது வைத்தல், முதன்மை பார்ப்பான் வல்லபதம் நீர் வார்த்தல் அகத்தில் தொண்டு
புரியுமென்று மாகோனும் வகுத்துப் பின்னும்,
(3ம் பாடல்)
இப்பாடல்களில் குறிப்பிட்டுள்ளபடியே இன்றும் திருக் கோவில் பகுதியில் குடிகள் வகுக்கப்பட்டு, கோவில் நிர்வா கம் நடைபெறுகிறது. இவ்வாறு மாகோன் வன்னிமை வகுத் தது கலி ஆண்டு 4250 (கி. பி. 1148) என்று மட்டக்களப்பு மான்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது." ஏற்கனவே நாம் குறிப்பிட்ட மாகோன் காலத்திற்கும் (கி. பி. 1215), இங்கு குறிப்பிடப்படும் ஆண்டுக்கும் உள்ள வித்தியாசம் கலி ஆண்டுக் காலக் கணிப்பில் ஏற்பட்ட தவறு என்றே கொள்ளவேண்டும்.
49

Page 48
6. மாகோன் வகுத்த வன்னிமை
(கொக்கட்டுச்சோலை)
* மட்டக்களப்பு மான்மியம்" என்னும் நூலில் தற் போது மண்முனைப்பற்று என வழங்கப்படும் கொக்கட்டுச் சோலைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பு குறிப்பிடப்பட்ட குளிக் கல்வெட்டு முறையைத் தொடர்ந்து, பெரிய கல்வெட்டு, பங்கு கூறும் கல்வெட்டு, சாதித் தெய்வக் கல்வெட்டு, ஆசாரிகள் கல்வெட்டு முதலிய பாடல்கள் மாகோன் நிர்ணயித்த நடைமுறைகளை விளக்கு கின்றன. ܫ
"முற்குகர் வன்னிமை" என்ற பகுதியில் கொக்கட்டுச் சோலைப் பகுதிக்கு நிர்ணயிக்கப்பட்ட சாதி முறை விளக் கப்படுகிறது. சிங்களக்குடி, வெள்ளாளக்குடி, செட்டிகுடி, நாவிதர், கரையார், சீர்பாதர், பண்டாரப்பிள்ளை, தட் டார், கம்மாளன், பறையன் முதலிய் சாதியினரின் குடிகள், கடன் மகள் முதலியன இப்பாடல்களில் சொல்லப்படுகின்றன. இந்நடைமுறை இன்றும் கொக்கட்டுச்சோலைப் பகுதியிலுள்ள கிராமங்களில் பின்பற்றப்படுகின்றன.
குடுக்கை கூறுதல், பங்கு வாங்கும் விபரம், பங்கு தடுக்கும் முறை முதலிய பாடல்களும் இதில் உள்ளன.
மாகோன் வகுத்த இந்நடைமுறைகள், குளக்கோட்டன் திருப்பணி செய்த கோயில்களிலும் பின்பற்றப்படுகின்றன. எனவே இவ்விருவரும் வெவ்வேறு இடங்களில் ஒரேவிதமான நடைமுறை இருக்கும் வகையில் இத்திட்டங்களை வகுத்
தனர் எனக் கொள்ளலாம்.
இப்ப்ாடல்களில் கந்தளை, மாவலி முதலிய திருகோண மலைப் பகுதிக் கிராமங்களும் இடம்பெறுகின்றன. இந்நூலில் உள்ள தகவல்களைத் துருவி ஆராயும்போது கிழக்கிலங்கைக் கிராமங்கள் பலவற்றில் மாகோன், குளக்கோட்டன் ஆகி யோரது திருப்பணிகள், செயற்பாடுகள், ஆட்சி அதிகாரம் நன்கு நிலைபெற்றிருந்தன எனக் கொள்ளலாம்.
50

10.
11.
அடிக்குறிப்புக்ள்:
(a) The Taprobanian - Volume I - by Hugh Neville -
4 .P س- 1885 (b) Monograph of the Batticaloa District - S. O.
Kama garetnam - P. 4. "ஈழநாட்டுத் தமிழ் சாசனங்கள் கட்டுரை' - பேரா சிரியர் இந்திரபாலா - சிந்தனை - ஜூலை அக்டோபர் இதழ் - 1968 - பேராதனை - பக். 42. Ceylon Tamil Inscriptions - Part I - by Dr. A. Velupillai - Page 2. . The Taprobanian — Volume I - i by Hugh Neville — 1885 - Page 4. Ceylon Tamil Inscriptions - Part I - by Dr. A. Veluppillai - Page 2. சிந்தனை - ஜூலை, அக்டோபர் 1968 இதழ் - பேரா தனை - கா. இந்திரபாலா - பக். 42. (a) Ceylon Tamil Inscriptions - Part I - by Dr. A. Veluppillai - Page 5. . . . (b) சிந்தனை - ஜூலை, அக்டோபர் 1968 இதழ் - 'ஈழநாட்டுச் சாசனங்கள்' என்ற கட்டுரை --
by Dr. 9) 53a LJT GDт – pp. 40-41.
ஈழநாட்டுச் சாசனங்கள் - சிந்தனை, ஜ"லை, அக்டோ பர் இதழ் - தா. இந்திரபாலா - பேராதனை-பக். 42.
மட்டக்களப்பு மான்மியம் - F. X, C. நடராசா, பதிப்
பாசிரியர் - 1952 - பக். 70, 71.
மட்டக்களப்பு மான்மியம் - F. х. с. நடராசா, பதிப்
பாசிரியர் - 1952 - பக். 71.
மட்டக்களப்பு மான்மியம் - F. X. C. நடராசா, பதிப் பாசிரியர் -1952 - பக். 70 - 112.
51

Page 49

கொக்கட்டுச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம்
(நன்றி: மட்டக்களப்பு தமிழகம்)

Page 50

- VII -
திருக்கோயில் கல்வெட்டுக்களும் மாகோன் தொடர்பும்
1. திரிபுவனச் சக்கரவர்த்தி என்னும் விருதுப்பெயர்:
திருக்கோயில் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருக் கும் "திரிபுவனச் சக்கரவர்த்திகள் பூரீ விஜயபாகு தேவற்கு" என்ற வாசகம் ஆய்வுக்குரியது. 'திரிபுவனச் சக்கரவர்த்தி கள்' என்னும் பட்டம், சோழர் பாண்டியர் காலத்தில், மன்னன் கடவுளின் பிரதிநிதி என்ற கருத்துப்படத் தென்னிந் தியாவில் வழங்கியது. W
பின்னர் ராஜராஜ சோழன் காலத்தில், "மெய்க்கீர்த்தி கள்" எழுதப்பட்டபோது, சக்கரவர்த்திகளைக் குறிப்பிட இப்பதம் உபயோகிக்கப்பட்டது. இப்பதம் தென்னிந்தியக் கல்வெட்டுக்களில் சாதாரணமாகக் காணப்படுகிறது. இச் சம்பிரதாயம் சீனர்களிடம் முன்பு இருந்தது.
சீனர்கள் அரசனைக் கடவுளின் பிரதிநிதியாகக் கருதி னர். எனவே அவர்கள் அரசனை ‘தேவராஜ்" என அழைத் தனர். இவ்வழக்கு "குஷாணர் போன்றோர்முலம் இந்தியா வுக்கு வந்திருக்கவேண்டும்.
குஷாணர் என்போர் மத்திய ஆசியாவிலிருந்து வந்து இந்தியாவில் குடியேறிய ஒரு கூட்டத்தினர். இவர்கள் சீன ரைப் பின்பற்றி "தேவராஜ்' என்ற பதத்தின் நேரடி மொழிபெயர்ப்பான "மகேஸ்வர", "சர்வஞ்சர" என்னும் பதங்களைத் தங்கள் கல்வெட்டுக்களிலும், காசுகளிலும்
S3

Page 51
பொறித்தனர். இதைப் பின்ப்ற்றியே சோழரும், பாண்டிய ரும் தமது கல்வெட்டுக்களில், அரசன் கடவுளின் பிரதிநிதி என்ற கருத்துப்பட ** திரிபுவனச் சக்கரவர்த்திகள்” (மூன்று உலகங்களுக்கும் அதிபதி) என்ற விருதுப் பெயரை வழக்கில் கொண்டனர். எனவே இலங்கையிலும் இவர்களால் பொறிக் கப்பட்ட கல்வெட்டுக்களில் இம்மரபு பின்பற்றப்படுகிறது.
ஆகவே திருக்கோயில் ஆலயத்தில் உள்ள கல்வெட்டுக் களும் ஒரு தமிழ் மன்னனாலேயே பொறிக்கப்பட்டது என் பது சந்தேகத்துக்கிடமின்றித் தெளிவாகிறது. அதேசமயம் இக்கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள "பூரீ சங்கபோதி வர்மரான' என்ற சிங்கள மன்னர்களின் விருதுப் பெயரும் ஆராயப்பட வேண்டியது.
முதலாவது கல்வெட்டில் "பூரீ சங்கபோதி வர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் பூரீ விஜயபாகு தேவற்கு ஆண்டு பத்தாவதில், சிவஞான சங்கரர் கோவிலுக்குக் கொடுத்த வோவில" எனவும், இரண்டவது கல்வெட்டில் 'பூீரீமத் சங்க போதி வர்மரான சிவஞான சங்கரிக்கள் பூரீ விஜய பாகு தேவற்கு" எனக் கூறப்பட்டுள்ளது. இரண்டுக்குமுள்ள வித்தி யாசத்தைக் கவனிக்கவேண்டும்.
முதலாவது கல்வெட்டில் கடவுளைக் குறிக்கும் " "சிவ ஞானசங்கரர்" என்பது, இரண்டாவது கல்வெட்டில் அரச னைக் குறிப்பதாகவுள்ளது. இக்கல்வெட்டிற்கு வி ள க் கம் கொடுக்கும் பேராசிரியர் இந்திரபாலா, இக்கல்வெட்டு ஆறா வது விஜயபாகுவினுடையது (கி. பி. 1897 - 1409) எனவும், அவருக்கு சைவர்கள் 'சிவஞான சங்கரர்?" என்ற விருதைக் கொடுத்திருக்கின்றனர் எனவும் கூறுகிறார்.
இக்கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஏனெனில், தமிழ் மன்னர் கள் சிங்கள மக்களின் ஆதரவைப் பெறும் பொருட்டு இவ்வாறு சிங்கள விருதுப் பெயர்களைக் கொண் டிருந்தமையை இலங்கை வரலாற்றில் காணுகின்றோம். உதாரணம்: கலிங்க மன்னன் நிசங்கமல்லன் பெளத்தத்தை ஆதரித்ததோடு, தனது பெயரைக்கூட, கல்வெட்டுக்களில் "பூரீசங்கபோ கலிங்க பராக்கிரமபாகு" எனப் பல்வேறு விருதுப் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான். புசழ்பெற்ற சோழ மன்னனான ராஜராஜசோழன் பொலநறுவையில் 'இராஜ ராஜப் பெரும்பள்ளி' எனப்படும் பெளத்த விகாரையை நிறுவி உள்ளான். கோட்டை அர்சன் ஆறாம் பராக்கிரம பாகுவின் சேனாபதியாக இருந்து யாழ்ப்பாணத்தை வெற்றி
54

கொண்ட சண்பகப் பெருமாள் என்பவன். "பூரீசங்கபோதி புவனேகபாகு" என்ற விருதுப் பெயரைக் கொண்டிருந்தான். ஆனால் பெளத்த மன்னர்கள் 'சிவஞான சங்கரர்" என்ற இந்துக் கடவுளர் பெயரைத் தமது விருதுப் பெயராகக்
கொண்டிருந்தனர் என்பது பொருத்தமற்றது.
2. விஜயபாகு என்னும் பெயர்கொண்ட
மன்னர்கள் :
விஜயபாகு என்னும் பெயரைக்கொண்ட மன்னர்கள் அறுவர் இலங்கை வரலாற்றில் இடம்பெறுகின்றனர். இவர் களது காலம் சம்பந்தமாக ஆண்டுகள் சில நூல்களில் மாறு படக் கூறப்பட்டுள்ளன. அவைபற்றிய நூல்களின் பெயர் விபரங்கள் அடிக்குறிப்பு விளக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் விபரம் வருமாறு.
. . முதலாம் விஜயபாகு (கி. பி. 1055 - 1110)?
இலங்கை வரலாற்றில் நீண்டகால ஆட்சியைக்கொண்ட இவன், தன் வாழ்நாள் முழுவதும் தமிழருக்கெதிராகப் போர் தொடுத்தவன். சோழ மன்னரை இலங்கையி லிருந்து விரட்டியபடியால் சிங்களவர்களால் 'போற்றப் பட்டவன். எனவே இவன் திருக்கோயில் திருப்பணி களைச் செய்திருக்கமுடியாது. மேலும் இவன் 'பூரீ சங்க போதி" என்ற பெயரைப் பெற்றிருந்தானே அன்றி திரி புவனச் சக்கரவர்த்தி என்ற விருதுப் பெயரைப் பெற் றிருந்ததாகத் தெரியவில்லை.
11. இரண்டாம் விஜயபாகு (கி. பி. 1186 - 1187)
இவன் ஆட்சிக்காலம் 2 வருடங்கள் மட்டுமே ஆகிறது. இவன் பொலநறுவையைத் தலைநகராகக்கொண்டு ஆண்டவன். இவனே பண்டித விஜயபாகு எனப் பெயர் பெற்றவன். திருக்கோவில் கல்வெட்டு பத்தாவது ஆட்சி ஆண்டில் பொறிக் கப்பட்டதாக க் குறிப்பிடுவதால், இரண்டு வருடங்கள் மட்டுமே ஆட்சிபுரிந்த இவன் மேற் படி கல்வெட்டைப் பொறித்தவனாக இருக்கமுடியாது.
1. மூன்றாம் விஜயபாகு (கி பி. 1232 - 1236)
இவன் தம் பதே னியா வைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்தவன். ஐந்து வருடங்கள் மட்டுமே இவன்
55

Page 52
{V.
vi.
ஆட்சி நிலைத்திருக்கிறது. இவன் தமிழ் மக்கள் வாழ்ந்த வன்னிப் பிரதேசங்களுடன் ஓரளவு தொடர்பு உடைய வன். மாகோன் இராஜரட்டையை ஆட்சிசெய்த காலத் தில் இவன் மாயரட்டையில் உள்ள சீகள வன்னியை அடக்கி ஆட்சிபுரிந்தான் எனப் 'பூஜாவலிய கூறுகிறது. (பூஜாவலிய- ஏ. வி. சரவீர பதிப்பு. கொழும்பு 1921).
மேலும் இவன் வன்னி அரசன் என்ற நிலையை அடைந்து
மாயரட்டையில் ஆதிக்கம் செலுத்தினான் எனச் "சூள வம்சம் கூறுகிறது. இவ்வாறு இவன் தமிழரோடு தொடர் புடையவனாக இருந்தபோதும், இவனுடைய ஆட்சிக் காலம் ஐந்து வருடங்கள் மட்டுமே நீடித்துள்ளதால், இவனும் பத்தாவது ஆட்சி ஆண்டில் திருக்கோயில் கல்வெட்டைப் பொறித்தவனாக இருக்கமுடியாது.
நான்காம் விஜயபாகு (கி. பி. 1271 - 1273)
இவன் அனுரதபுரத்திற்குப் போனபோது, வன்னியர் இவனைச் சேவித்துத் திறை செலுத்தியதாகச் 'சூள வம்சம்' கூறுகிறது. இவன் போசத் விஜயபாகு என அழைக்கப்பட்டான். இவனும் தம்ப்தேனியாவில் இருந்து ஆட்சிபுரிந்த ஒரு மன்னன். ஆனால் இவனது ஆட்சிக் காலம் மூன்று வருடங்கள் என்பதால், இவனும் பத்தா வது ஆட்சியா ன் டி ல் திருக்கோவில் கல்வெட்டைப் பொறித்தவனாக இருக்கமுடியாது.
ஐந்தாம் விஜயபாகு (கி. பி. 1335 - 1347)
இவன் கம்பளையில் இருந்து ஆட்சிபுரிந்தவன். " சவுலு விஜயபாகு" என்னும் பெயரையும் கொண்டிருந்தவன்.
இவன் காலம் மா கோன் காலத்துக்கு மிகவும் பிந்தியது. இவனுடைய ஆட்சிக்காலமும் 13 ஆண்டுகள் எனினும்
திருக்கோவில் வரை இவனுடைய ஆட்சி பரவவில்லை. ஆகவே இவனும் திருக்கோவில் கல்வெட்டைப் பொறித்
தவனாக இருக்கமுடியாது.
ஆறாம் விஜயபாகு (கி. பி. 1397 - 1409)7.
இவ்ன் அநேக இடங்களைக் கைப்பற்றிப் பல வருடங்கள்
நி ற ரு
கோட்டையிலிருந்து ஆட்சி செய்தவன். ஆனால் ஏற் கனவே குறிப்பிட்டபடி "சிவஞான சங்கரர்" என்ற விரு துப் பெயர்பெறும் அளவுக்கு இவன் தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. எனவே இவனும் திருக்கோவில் கல்வெட்டைப் பொறித்தவனாக இருக்க முடியாது.
56

ஆசவே திருக்கோவில் கல்வெட்டுக்களில் கூறப்படும் விஜயபாகு இந்த அறுவரில் எவருமல்ல என்பது தெளிவாகி ADğil •
ஆகவே திருக்கோயில் கல்வெட்டைப் பொறித்தவன் ஒரு தமிழ் மன்னன். அவன் தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்றவன். சைவக் கோயில்களுக்குத் திருப்பணி செய்யும் மனப்பாங்கு கொண்டவன். பத்து ஆண்டுகளுக்குமேல் ஆட்சி செய்தவன். இப்படிப்பட்டவன், மட்டக்கள்ப்பு மான்மியம் கூறும் மாகோன் என்பதில் ஐயமில்லை. மாகோன் திருக் கோயில் பகுதியுடன் தொடர்பு கொண்ட வன். அப்பிர தேசத்தில் ஆட்சிபுரிந்தவன் என்ற விபரங்களை ஏற்கனவே கூறியுள்ளோம்.
ஆனால் அவன் பொறித்த கல்வெட்டில் மாகோன் என்ற பெயர் இடம்பெறாது "விஜயபாகு" என்ற பெயர் இடம்பெற்றது எப்படி? மாகோன் என்னும் கலிங்க மன்னன் இலங்கையில் ஆட்சிபுரிந்த சோழ மன்னர்கள் கைக்கொண்ட மரபுப்படி, பெளத்தர்களின் ஆதரவைப் பெறும்பொருட்டு "பூரீ சங்கபோதி'. 'விஜயபாகு" என்னும் விருதுப் பெயர் களைக் கொண்டிருக்கலாம். சோழமன்னன் என்பதால் திரி புவனச் சக்கரவர்த்தி என்ற விருதுப் பெயரைச் சேர்த்திருக் கலாம்.
மேலும் "விஜய காலிங்கைச் சக்கரவர்த்தி" என மாகோன் தன் பெயரைக் குறிப்பிட்டுள்ளான். அவன் திருக் கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் காரணமாக **சிவஞான சங்கரர்" என்ற அடைமொழி கொடுத்திருக்கலாம். இவ் வாறு, சிங்கள விருதுப்பெயர் சேர்ந்தமைக்கான விளக்கத்தைத் தெரிந்துகொண்டால் மேற்படி திருக்கோயில் கல்வெட்டு களைப் பொறித்தவன் மாகோன் என்பதை ஏற்றுக்கொள் வதில் எவ்வித தடையும் இருக்கமுடியாது.
சூழ்நிலை காரணமாகப் பல வரலாற்றுச் சான்றுகள் மறைந்துகிடந்தாலும், அனுமான அடிப்படையில் மேற்படி கூற்றைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவமுடிகிறது.
3. கோயிலின் அமைப்பு:
திருக்கோயில் ஆலய அமைப்பும் ஒரு வரலாற்றுச் சான்றாக அமைகிறது. இக்கோயில் அமைப்பு பொலன் னறுவை 1ம் சிவ தேவாலயத்தினைப்போன்ற கட்டிட அமைப்
57

Page 53
பைக் கொண்டது. பொலன்னறுவை சிவ தேவாலயங்கள் ராஜராஜசோழன் காலத்தில் அமைக்கப்பட்டவை. அக்கால சோழர் கோயிலைப்போன்றே அக்கோயிலும் கற்பக் கிரகம், அந்தராளம், அர்த்தமண்டபம் என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டது. எனினும் இதில் உள்ள யாளி வரிசை, கீர்த்தி முகம், தேவகோஷ்டம், தாமரைப் போதிகை போன்ற அம் சங்கள் பிற்காலச் சோழர் காலத்துக் கோயில் அமைப்பின் சாயலைக் கொண்டதாக உள்ளன. பிற்பட்ட பாண்டியர் காலத்திலும் இத்தகைய கோயில் அமைப்புக்கள் காணப்படு கின்றன. Y · ·
இக்கோயில் அமைப்பினைப் பாண்டியர் காலத்துக் குரியதாகவ்ே பேராசிரியர் இந்திரபாலா குறிப்பிடுகிறார்.8 பிற்காலப் பாண்டியர் இலங்கையில் தொடர்புகொள்ள ஆரம் பித்த காலம் கி. பி. 13ம் நூற்றாண்டு ஆகும். இக்காலமும், மாகோனுடைய காலமும் (கி. பி. 1215 - 1236) கமகால மாகும். மேலும் மாகோன் 21 வருடங்கள் இலங்கையை ஆண்டதாக "சூளவம்சம் குறிப்பிடுகின்றது.? (மாகோன் 44 வருட காலம் ஆண்ட தாக லியனகமகே கூறுகிறார்." "பூஜாவலிய நூலில் உள்ள குறிப்பின்படி மாகோன் ஆட்சிக் காலம் 40 வருடங்கள் என டாக்டர் பரணவிதான கூறு கிறார். 10A · w - . மேற்கூறிய சான்றுகளும், திருக்கோயில் கல்வெட்டு களில் குறிப்பிடப்படும் விஜயபாகு மாகோன் என்றே எண்ண வைக்கின்றன. விஜயபாகுவின் 10வது ஆட்சி ஆண்டு என இக்கல்வெட்டுகள் குறிப்பிடுவது மாகோனின் 10வது ஆட்சி ஆண்டு என்றே கொள்ளமுடியும். இதை உறுதிப்படுத்து வதற்கு மேலதிக சான்றுகள் கிடைக்காம்ற்போனது துர திர்ஷ்டமே. இலங்கை வரலாற்றுப் பதிவுகளை ஊன்றிக் கவனிப்பவர்கள் இதற்கான காரணங்களையும் ஓரளவு புரிந்து கொள்ளமுடியும்.
4. மாகோன் புகழ் மறைக்கப்பட்டது ஏன்?
மாகோனுடைய ஆட்சிக்காலம் 21/40 / 44 வருடங்கள் என ஏற்கனவே குறிப்பிட்டோம். இத்தகைய நீண்ட ஆட்சிக் காலம் ஒரு மன்னனின் சிறப்பையும், இவனது நேர்மையான ஆட்சியையும் மறைமுகமாகப் புலப்படுத்துகிறது. அத்தகைய ஒரு மன்னன், திரிபுவன்ச் சக்கரவர்த்தி என வர்ணிக்கும் அளவு புகழ்பெற்றிருந்த மன்னன், இலங்கை வரலாற்றில் தகுந்த இடம் பெறாமல் போனது ஏன்? ஏனைய சிங்கள மன்னர் களைப் போல் வரலாற்றில் பிரசித்தி பெறாமல்
58

போனது ஏன்? இவனுடைய பிற கல்வெட்டுகளும், சாசனப் பதிவுகளும் கிடைக்காமல் போனது ஏன்? இது சிந்தனைக் குரியது.
கலிங்க மாகன் சிங்கள மக்களின் எதிரியாகவே மகா வம்சத்தில் சித்தரிக்கப்படுகிறான். கி. பி. 1215ல் கலிங்க விஜயபாகு அல்லது கலிங்க மாகன் என்னும் அரசன், இலங்கை மேல் படை எடுத்துவந்து பொலன்னறுவையைப் பாழாக்கி, அங்கிருந்து அரசாண்ட பாண்டிய குலத்தரசனைக் கொன்று (பராக்கிரம பாண்டியன்) பெளத்த ஆலயங்களை இடித்து, புத்த பிக்குகளை அவ்விடத்திலிருந்து துரத்தி, மற்றும் கொடுந் தொழில்களைச் செய்து, பழி பாவத்திற்கஞ்சாதவ னாய், கி. பி. 1236 வரை ஆண்டான் எனச் சூளவம்சம் கூறுகிறது."
மாகோன் இலங்கைக்கு வந்த காலத்தில் கிழக்கிலங்கை யில் சிங்க்ளவர், கலிங்கருடைய ஆலயங்களை இடித்தும், கலிங்சர் வாழும் இடங்களைத் தாக்கியும் கலிங்கரைத் துன் புறுத்தினர். இதைப் பொறுக்கமுடியாத மாகோன், பெரும் படை திரட்டிக்கொண்டுவந்து தனது மக்களைப் பாதுகாக் கும் முயற்சியில், சிங்களவருக்கு எதிராகச் செயற்பட்டான். சைவ ஆலயங்களை அழித்த சிங்களவரைப் பழிவாங்குவதற் காக, பெளத்த ஆலயங்களை இடித்தான்.
இச்செயற்பாடுகள் இவன் மீது சிங்களவரினதும், புத்த பிக்குகளினதும் வெறுப்பைத் தூண்டியிருக்கும் என்பதில் ஐய மில்லை. எனவே பெளத்தபிக்குவினால் (மகாநாம தேரோ) எழுதப்பட்ட மகாவம்சத்தில் மாகோனுக்கு எதிரான குறிப்பு கள் இடம்பெற்றிருப்பதில் ஆச்சரியமில்லை. இதேபோன்று இவன் புகழை இருட்டடிப்புச் செய்யும் முயற்சிகளும் இடம் பெற்றிருக்கலாம். இக்காரணங்களினால் மாகோன் பற்றிய சாசனப் பதிவுகள் மறைக்கப்பட்டிருக்கலாம்.
குள் க்கோட்டன் வரலாறு கூறவந்த இந்நூலில் கலிங்க மாகோனைப் பற்றிய விளக்கம் எதற்காக என்ற கேள்வி எழவே செய்யும். கலிங்க மாகோனுக்கும், சோழவம்சக் குளக் கோட்டனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வரலாற்று இடிபாடுகளில் புதையுண்டுபோன சில ஏடுகள் புரட்டப்பட்ட தால் இத்தொடர்பு நமக்குத் தெரியவருகிறது. உண்மையில் குளக்கோட்டனைவிட இலங்கை வரலாற்றில் மிகுந்த முக்கி யத்துவம் பெறவேண்டியவன் மாகோன்ே. ஆனால் வரலாற் றில் குளக்கோட்டன் பெற்ற பிரசித்திகூட மாகோன் பெற
59

Page 54
வில்லை. மாகோன் இல்லாவிட்டால் குளக்கோட்டன் இல்லை என்ற வரலாற்று உண்மை பலருக்குத் தெரியாது.
மாகோன், குளக்கோட்டன் ஆகியோரது இணைந்த செயற்பாடுகளும், தனித்தனி செயற்பாடுகளும் இலங்கை வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இவ்விருவ ரதும் இணைப்பினால் கிழக்கிலங்கை குறிப்பாகத் தமிழர் கள் பெற்ற நன்மைகள் பல. திருக்கோணமலை முதல் திருக் கோயில் வரை விரவிய பணிகள் முதலியவற்றுக்கு இவ்விரு வரதும் இணைந்த செயற்பாடுகளே முக்கியமான காரணி களாகும். w
அடிக்குறிப்புகள்:
1. சிந்தனை - 'ஈழநாட்டுச் சாசனங்கள்' - கட்டுரை --
ஜூலை-அக்டோபர் இதழ் - பேராசிரியர் இந்திரபாலா -
1968 - பேராதனை. 2. (a) History of Ceylon Vol. I - Part II - “Chronological
list of Ceylon kings' - W. J. F. Labrooy. (b) Epigraphica Zeylanica Vol. III — Chronological list. (c) கைகர் மொழிபெயர்ப்பு - சூளவம்சம் அரசபட்டியல். மேற்குறிப்பிட்ட நூல்கள்.
திராவிடக் கட்டிடக் கலை - பேராசிரியர் கா. இந்திர பாலா - கொழும்பு - 1970 -பக். 38.
9. கைகர் மொழிபெயர்ப்பு - சூளவம்சம் - அத். LXXIX
பக். 132 - குறிப்பு 54 - 64.
O. The Decline, of Polonnaruwa and the Rise of Damba
deniya - Colombo - 1968 - Chapter II. -
10A. History of Ceylon - 56) it p55) Lug 600Tag Toor
pp. 619-22.
11. கைகர் மொழிபெயர்ப்பு - சூளவம்சம் - அத். LXXIX
பக. 132 - குறிப்பு 54-64.
60

- VIII -
மாகோனும் குளக்கோட்டனும்
1. மாகோன் வரவு:
கி. பி. 12ம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்து சேர்ந்த ஒரு மன்னனைப்பற்றி மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. அவன் பெயர் மாகோன் என்பதாகும். கிழக்கிலங்கை வர லாற்றில் இவன் முக்கிய இடம்பெறுகிறான். வட இலங்கை வரையும் இவனது ஆட்சி பரவி இருந்திருக்கிறது.
மாகோனைப்பற்றிய வரலாற்று மூலங்களை ஆராயும் போது கிழக்கிலங்கையுடன் இவன் கொண்டிருந்த தொடர் புகள் நேரடியான வரலாறுகளாக, மட்டக்களப்பு மான்மியத் தில் விபரிக்கப்படுகிறது. அவ்விபரம் வருமாறு: V
மட்டக்களப்பில் சுகதிரன் என்பவன் ஆட்சி செய்த போது கலிங்க மன்னன் மூன்றாவது புத்திரன் மாகோன் மணிபுரத்தில் (யாழ்ப்பாணம்) இறங்கி, சிங்கன் குலத்தவரை எதிர்த்து வெற்றிகொண்டு, தோப்பாவையைக் (பொலன் னறுவை) கைப்பற்றி, அணிகங்கனை வாளுக்கிரையாக்கி, பெளத்த ஆலயங்களை இடித்துத் தள்ளி, கதிர்காமத்திலும், விஜயதுவீபத்திலும் சிவாலய முன்னிரும் 'பெற்று பல திட்டங் கள் செய்து, வட இலங்கை என இராமேஸ்வரத்தை இலங்கை யோடு சேர்த்து, தோப்பாவையை (பொலன்னறுவை) ஆண் டான். - இவ்வாறு "மட்டக்களப்பு மான்மியம்’ கூறுகிறது.
இது நடந்தது கலி வருடம் 4250 (கி. பி. 1148) ஆகும். ஆகவே இக்காலம் கி. பி. 12ம் நூற்றாண்டு ஆகிறது. கி. பி.
61

Page 55
1209ம் ஆண்டில் அணிகங்கன், ஒரு தளபதியால் வெற்றி கொள்ளப்பட்டு, லீலாவதி என்பவள் ஆட்சிபீடம் ஏறிய போதே பராக்கிரம பாண்டியன் அவளைத் தோற்கடித்து, ஆட்சியைக் கைப்பற்றினான். அப்போதுதான் மாகோனின் பெரும் படை எடுப்பு நிகழ்ந்தது. இதனை 'பூஜாவலிய", "சூளவம்சம்" போன்ற சிங்கள பாளி வரலாற்று நூல்களும் குறிப்பிடுகின்றன.2 8
ஆனால் டாக்டர் பரணவிதான மட்டும் ஒரிடத்தில் மாகோனுடைய படையெடுப்பை, மலாய் நாட்டைச் சேர்ந்த வர்களுடைய படையெடுப்பு எனக் கூறுகிறார். இவர் இப் படிக் கூறுவது விசித்திரமாக உள்ளது. காரணம், ‘பூஜா வலிய" மாகோனைக் கேரள நாட்டவன் எனக் கூறுகிறது. "சூளவம்சம்" இப் படையெடுப் பில் ஈடுபட்டவர்களைத் "தமிழ் போர் வீரர்கள்’ என்று கூறுகிறது.*
ஆகவே, மாகோன் மலாய் நாட்டிலிருந்து வரவில்லை, இந்தியாவிலிருந்தே வந்தான் என்பது தெளிவாகிறது.
இந்த மாகோனுடன் பல வீர இளைஞர்கள் வந்த தாகவும், அவனிடம் துணைப் பயிற்சி பெற்றதாகவும் அறிகி றோம். இதற்கு ஆதாரமான பல தகவல்கள் உள்ளன. அவை வருமாறு: s
(அ) S. பரணவிதான என்பவர் History of Ceylon என்னும் pit 65di 67 (up Sugirot “The Dambadeni Dynasty" 6T657g), th கட்டுரையில் மாகோனுடைய காவற்படை கொட்டி யாரம் (Kotthasara), கந்தளாய் (Gangalata), க்க்கல (Kakala), பதவியா (Padavia), குரு ந் தன் குளம் (Kurundi), DIT GOT FT G) (Manamata), GAJ GÓ735 ft Libb (Valikagama), திருகோணமலை (Gona), ஊரான்துறை (Sukarantitha) போன்ற இடங்களில் இருந்ததாகவும், மாகோனுடன், அவனுடைய உபராஜனாகிய ஜயபாகு என்பவனும் வந்திறங்கியதாகவும் கூறுகிறார். மாகனும், ஜயபாகுவும் பொலன்னறுவையில் தொடர்ந்து ஆட்சி செய்தனர். **எழு அத்தனகளுவம்ச' என்னும் நூல் பொல்னறுவையில் இருந்த எதிரிப் படைகள் பற்றிக் குறிப்பிடும்போது நூற்று ஆயிரக்கணக்கான சோழ, பாண்டிய போர்வீரர்களைக் கொண்டிருந்தது எனவும், அவர்களுக்கு அரசனும், உபராஜனும் இருந்தனர் என வும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அரசனான மாகனின் மறு பெயர் விஜயபாகு எனவும் குறிப்பிடுகிறார்.
62

(ஆ) "மட்டக்களப்பு மான்மியம்" என்னும் நூலில் மாகோ
(g)
(F)
(2)
னைப்பற்றிய விபரங்கள் ஏராளமாக உள்ளன. மட்டக் களப்பில் வன்னியர்களைக் குடியேற்றியதும், மட்டக் களப்பில் முக்குவ வன்னிமை வகுத்ததும், புத்தூர், மருங்கூர், காரைக்கால், காளிகட்டம் முதலிய இடங்
களிலிருந்து முக்குவரை அழைத்துவந்ததும், அவர்களின்
படைத் தலைவர்களுக்கு வன்னிமை பட்டம் அளித்த தும், மட்டக்களப்பு முக்குவ வன்னிமைபற்றிக் கூறும்
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதுபற்றி கலாநிதி பத்மநாதன் தனது 'வன்னி யர்' என்னும் நூலில் விபரமாகக் கூறியுள்ளார். இவர் "சூளவம்சத்தையும் ஆதாரமாகக் கொண்டு, மாகோ னுடன் வந்த உபராஜனே குளக்கோட்டன் எனக் கருத் துத் தெரிவித்துள்ளார்.7
e
"மட்டக்களப்பு மான்மிய'த்தில் காணப்படும், பிறி
தோர் கல்வெட்டுப் பாடல் திருக்கோவிலில் மாகோன்
வகுத்த குடிகள் பற்றியும், அவர்கள் ஊழியம் பற்றியும்
கூறுகிறது. குளிக் கல்வெட்டுமுறை (குடிக் கல்வெட்டு)
என்னும் இக்கல்வெட்டுப் பாடலில் 'மாகோன் அரச ஊழியம் வகுத்தது' என்னும் பகுதியின் இரண்டாவது பாடல் திருக்கோயில் பிரதேசத்தில் உள்ள குடிமுறை பற்றியும், மூன்றாவது பாடல் தொண்டுகள்பற்றியும்
கூறுகிறது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பண்டைய கோவிற் கட் டிடக் கலை அம்சங்களை ஆராயும்போது, குளக்கோட் டன் தொடர்புகள் வெளிப்படுகின்றன. இவ்வாலயங் களில் குளக்கோட்டன் திருப்பணிகள் செய்ததாகக் கல்
வெட்டுகள் கூறுகின்றன. திருக்கோயில், கொக்கட்டுச்
சோலை ஆலயங்களின் கட்டிட அமைப்பும் ஒரே மாதிரியாக இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
மாகோன் ஈழத்தின் பெரும் பகுதியை ஆட்சிசெய்த காலத்தில் குளக்கோட்டன், திருக்கோயில் பிரதேசத் தில் உன்னரசுகிரி ராணியாகிய ஆடகசவுந்தரியைத் திருமணம் செய்து, உன்னரசு கிரியை ஆண் ட தா கக் 'கோணேசர் கல்வெட்டு" என்னும் நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. மாகோனுடைய அனுசரணை இன்றி குளக் கோட்டன் இவ்வாறு செய்திருக்கமுடியாது.
63 .

Page 56
(ஊ) குளக்கோட்டன் சோழவம்சத்தைச் சேர்ந்தவன் என்ப தால், மாகோன் இவனுக்கு விசேட அதிகாரங்களைக் கொடுத்திருக்கலாம். அதன் காரணமாக இவன் சுத்ந் திரமாகச் செயற்பட்டிருக்கலாம்.
2. குளக்கோட்டன் செயற்பாடுகள்:
கிழக்கு மாகாணத்திலுள்ள பண்டைய கோயில்களின் கட்டிடக்கலை அம்சங்களை ஆராயும்போது பிற்காலச் சோழர் கட்டிடக்கலை அம்சங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் களில் குளக்கோட்டன் திருப்பணிகள் செய்ததாகக் கல்வெட்டு கள் கூறுகின்றன. எனவே திருகோணமலையில் திருப்பணிகள் செய்த இவன், மாகோன் விருப்பத்திற்கிணங்க, கிழக்கிலங் கைக் கோயில்களிலும் திருப்பணிகள் செய்திருக்கலாம். கட் டிடக்கலை அமைப்பை நோக்கும்போது கொக்கட்டிச்சோலை, திருக்கோயில் ஆலயங்களில் ஒற்றுமை காணப் படுகிறது. எனவே இவ்விரு ஆலயங்களும் சமகாலத்தவை எனக்கொள்ள Gantub.
கி. பி. 5ம் நூற்றாண்டில், அழியும் பொருட்களால் கட்டப்பட்ட இவ்வாலயங்களில், கி. பி. 12ம் நூற்றாண்டில், குளக்கோட்டன் திருத்தியமைத்துத் திருப்பணிகள் செய்திருக்க லாம். திருக்கோயில் ஆலயம், கொக்கட்டிச்சோலை ஆலயம் ஆகியவற்றில் காணப்படும் ஒரேமாதிரியான கட்டிட அமைப்பு, இக்கோயில்களில் திருப்பணி செய்தவன் குளக்கோட்டனே என்பதை எடுத்துக்காட்டுகிறது.
மாகன் ஈழத்தின் பெரும்பகுதியை ஆட்சிசெய்த காலத் தில், இக்குளக்கோட்டன் மட்டக்களப்புப் பிரதேசத்தில் உன் னரசுகிரி இராட்சியத்தில் ஆட்சி செய்த ஆடகசவுந்தரி என் னும் அரசியைத் திருமணம் செய்து உன்னரசுகிரியை ஆட்சி செய்ததோடு திருக்கோயிலிலும் திருப்பணி செய்திருக்கலாம்.
3. கலிங்கமாகானின் மறு பெயர்கள்:
கிழக்கு மாகாண அரசியல் வரலாற்றிலும், சமய வர லாற்றிலும் அதிக தொடர்புகொண்டுள்ள கலிங்க மாசனுக்கு இன்னொரு பெயர் காலிங்க விஜயபாகு என்பதாகும்.? இத னைச் சிங்கள நூல்கள் குறிப்பிடுகின்றன. ** நிகாய சங்கிரக” என்னும் நூலில் மாகனின் பெயர் 'காலிங்க விஜயபாகு" எனப்படுகிறது. வேறு சில நூல்கள் காலிங்க விஜயபாகு என் பது சிங்கை ஆரியன் எனக் குறிப்பிடுகின்றன. ஆனால் அங்கும்
64

"சிங்கை ஆரியன்" என்ற வம்சப் பெயர் இறுதியாக வரு வதை நோக்கவேண்டும். "காலிங்க விஜயபாகு" என்பது தமிழ் மரபுப்படி ' விஜய காலிங்க' என வம்சப் பெயர் இறுதி யாக வருவதை நோக்கவும். குலோத்துங்க சோழன், சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் என்பதுபோல, இங்கும் "விஜய காலிங்கன்" அல்லது "விஜயபாகு காலிங்கன்" என வம்சப் பெயர் இறுதியாகக் கூறப்பட்டிருக்கவேண்டும். பின்னர் இந்தக் 'காலிங்க' என்ற பெயர் திரிபுபட்டோ அல்லது மருவியோ கூளங்கை என மாறியிருக்கலாம். இதனையே சுவாமி ஞானப் பிரகாசரும், கலாநிதி இந்திரபாலாவும் கூறுகின்றனர்."
கலாநிதி இந்திரபாலா கூறுவது- "யாழ்ப்பாண வைபவ மாலை'யில், கூளங்கை ஆரியன்" என்று கூறப்பட்டவன், ** மட்டக்களப்பு மான்மிய'த்தில் "காலிங்க ஆரியன்" எனக் குறிப்பிடப்படுவதினால் 'விஜயகாலிங்க' என்ற பெயருடைய மாகோன், யாழ்ப்பாணத்தை ஆண்ட முதலாவது ஆரியச் சக்கரவர்த்தி எனக் கருதப்பட்டான். யாழ்ப்பாண இராட்சியம் கலிங்கத் தொடர்பு உள்ளவர்களால், கி. பி. 1262க்கு முன்பு ஸ்தாபிக்கப்பட்டிருக்கவேண்டும். இவ்வாறு கலாநிதி இந்திர பாலா கூறுகிறார்.
இக்கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஏனெனில், இந் தக் காலிங்கத் தொடர்பு, மாகனாலும், அவனது சகாக்க ளாலுமே ஏற்பட்டது. மாகனது சகாக்களில் ஒருவன் குளக் கோட்டன். மாகனது சகாக்களில் ஒருவனாகத் திருகோண மலை சமஸ்கிருத சாசனத்தில் குறிப்பிடப்படுபவனும்,சோழகங் கன் அல்லது குளக்கோட்டன் எனத் தமிழ் வரலாற்று ஏடு களில் குறிப்பிடப்படுபவனும் ஒருவனே என்பதில் ஐயமில்லை. இக்கருத்துக்கு மாறான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்க வில்லை. •
மாகனது மறு பெயர் காலிங்க விஜயபாகு என்பதற்கு விளக்கம் தரும் முதலியார் இராசநாயகம், பின்வருமாறு கூறுகிறார்" - -
**விஜயகாலிங்க சக்கரவர்த்தி" என்பது மாகனுடைய முழுப் பெயராகும். 'காலிங்க விஜயபாகு" என்பது சிங்கள நூல்களில் மாகனைக் குறிக்கும் பெயராகும். சிங்கை ஆரிய னைக் கூளங்கைச் சக்கரவர்த்தி எனக் குறிப்பிடக் காரணம், அவன் யுத்தத்தில் கையை இழந்தமையே. கூளங்கை என்பது காலிங்கை என்பதன் திரிபாகும். விஜயகாலிங்கச் சக்கரவர்த்தி என்பது தவறாக விஜய கூளங்கைச் சக்கரவர்த்தி எனப்பட்டது. அவர் மேலும் கூறுவதாவது
65

Page 57
** மயில்வாகனப் புலவரே தனது நூலில் காலிங்கச் சக்கரவத்தி என்பதைத் தவறாகக் கூளங்கைச் சக்கரவர்த்தி எனக் கூறியுள்ளார். எனவே "யாழ்ப்பாண வைபவமாலை" யில் விஜய கூளங்கைச் சக்கரவர்த்தி என்று சொல்லப்பட்டிருப் பவன் காலிங்கமாகனே. ஒரு தேசம் முழுவதையும் தன்கீழ் வைத்து ஆளுந் திறமை இருந்தாலொழிய சக்கரவர்த்தி என் னும் பட்டத்தைச் சூட்டிக்கொள்ளமுடியாது."
இவ்வாறு முதலியார் இராசநாயகம் கூறுகிறார்.
4. கூளங்கை அல்ல காலிங்கை:
ஆகவே காலிங்க விஜயபாகு, விஜய காலிங்கச் சக்கர வர்த்தி, விஜய காலிங்கன், விஜய கூளங்கை ஆரியன், விஜய பாகு காலிங்கன் முதலாம் பெயர்கள் காலிங்க மாகனையே குறிப்பிடுகின்றன என்பது பெறப்படுகிறது.
கலாநிதி இந்திரபாலா குறிப்பிடும் மாகனுக்கும், மட்டக் களப்பு மான்மியத்திலே குறிப்பிடப்படும் மாகனுக்கும் வேறு பாடு காணப்படுகிறது. 'மட்டக்களப்பு மான்மிய'த்தில் சோழநாட்டைச் சேர்ந்த காலிங்கை ஆரியன் என்று ஒருவ னின் வரலாறு கூறப்படுகிறது. அதன்பின்பே காலிங்க மாக னுடைய வரலாறும், ஆட்சி விபரமும் விரிவாகக் கூறப்படு கின்றது. "மட்டக்களப்பு மான்மியம்' பல ஆசிரியர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டது. ஆகவே இவ் விருவரையும் ஒருவர் எனவே கொள்ளவேண்டும். இவ்வாறே மயில் வாகனப் புலவரும் இவனைக் கூளங்கை ஆரியனாகத் திரிபுபடக் கூறியிருக்கலாம்.
மட்டக்களப்பில் வழங்கும் மரபுக் கதைகள் பல மாக னுடன் சம்பந்தப்படுகின்றன. மாகன் காலிங்க மரபினன். காலிங்கர் வங்கருடன் கலந்ததினால், அவர் க ள் தம்மை 'காலிங்க குலம்' எனப் பிற்காலத்தில் குறிப்பிட்டனர். அதனால் "காலிங்கர்" என்ற பெயரால் 'மட்டக்களப்பு மான்மியம்" தென்னிலங்கைக் கலிங்கரைக் குறிப்பிடுகிறது.
இதிலிருந்து, மாகனதும் கலிங்கரதும் ஆட்சி எவ்வளவு தூரம் இப்பகுதியில் நிலைத்திருந்தது என்பது தெரியவருகிறது. "மட்டக்களப்பு மான்மியம்' தரும் தகவல்களின்படி, மாக னது ஆட்சிக் காலம் கி. பி. 1215 - 1242 (27 ஆண்டுகள்) ஆகும். அதில் குறிப்பிடப்படும் அணிகங்கனது ஆட்சியாண்டு கி. பி. 1209 ஆகும். எனவே இது ஓரளவு சமகாலமாகிறது.?
66

ஏனைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மாகனையும் மட்டக்களப்பு மான்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகனை யும் ஒன்றெனக் கொண்டு நோக்கும்போது, திருக்கோவிலில் உள்ள இரு கல்வெட்டுக்களிலும் குறிப்பிடப்படும் விஜயபாகு என்னும் பெயர் மாகனுடையது என்றே கொள்ளவேண்டும். திருக்கோயிலில் மாகோனால் வகுக்கப்பட்ட விதிமுறைப் படியே இன்றும் ஆலய நிர்வ்ாக நடைமுறைகள் மேற்கொள் ளப்படுகின்றன. · “፡
மாகனுடைய உபராஜனாகிய குளக்கோட்டன் இக் கோயிலைத் திருத்தி அமைத்துத் திருப்பணிகள் செய்திருக்க லாம் அல்லது மாகோன் ஆணைப்படி மேற்படி திருப்பணி களை மேற்கொண்டிருக்கலாம். எவ்வாறாயினும் திருக்கோயில் திருப்பணிகளுடன் குளக்கோட்டன் பெயர் தொடர்புபடுவதை "கோணேசர் கல்வெட்டு’, ‘மட்டக்களப்பு மான்மியம்" முத லிய நூல்களின் குறிப்புகளில் பார்த்தோம்.
பெயர்க் குழப்பங்களிலிருந்து விடுபட்டு இச்செய்திகளை நோக்கும்போது, மாகோன் ஒரு பெரும் மன்னனாக இலங்கை யில் ஆட்சி செய்தபோதும் அவனுடைய உபராஜனாகிய குளக்கோட்டன் பெற்ற வரலாற்றுப் புகழை மாகோன் பெற வில்லை என்பதையும், குளக்கோட்டன் திருக்கோணேஸ்வரத் திருப்பணிகளுடன் சம்பந்தப்பட்டு வரலாற்றில் பிரசித்திபெற, வரலாற்று இருட்டடிப்பு முயற்சிகளினால் மாகோனுக்கு அத் தகைய புகழும் கீர்த்தியும் கிடைக்காமற்போனதையும் ஒரு வாறு உணர்ந்துகொள்ள முடியும்.
குளக்கோட்டனை மகாசேனன் என மாற்றும் முயற்சி வரலாற்றில் இடம் பெற்றுள்ள தைப் பார்த்தோம். அது போலவே மாகோனும் சிங்களப் பெயர்களைப் பெறுகிறான். அக்கால பெளத்த சிங்கள சூழலை மனதில்கொண்டு பல வரலாற்றுத் தகவல்களை ஊடுருவி நோக்கவேண்டியது நமது கடனாகும்.
அடிக்குறிப்புகள் :
1. மட்டக்களப்பு மான்மியம் - F.X.C. நடராசா, தொகுப்
unt Garfu u rit — il 952 - Ludi. 52, 53.
2. கைகர் மொழிபெயர்ப்பு - சூளவம்சம் - அத். LXXIX
பக், 132 - குறிப்பு 54 - 64. 3. Ceylon and malaysiya - Paranavitana S. - Ludii. 82.
67

Page 58
O.
1.
2.
கைகர் மொழிபெயர்ப்பு - சூளவம்சம் - அத். LXXIX பக், 132 - குறிப்பு 54 - 64.
History of Ceylon Vol. I. - Editor, W. J.F. Labrooy - Colombo - 1968 - uš. 619.
மட்டக்களப்பு மான்மியம் - F.X.C. நடராசா, தொகுப் பாசிரியர் - 1952 - பக். 95 - 98.
வன்னியர்-பேராசிரியர் சி. பத்மநாதன் - பக். 44.
மட்டக்களப்பு மான்மியம் - F.XC. நடராசா, தொகுப்
பாசிரியர் - 1952 - பக். 70-71.
நிகாயஸங்கிரஹய - ஸ்மரநாயக்க, பதிப்பாசிரியர் - கொழும்பு - 1960 - பக். 87, 313.
Origin of the Vanni - Dr. K. Indrapala. யாழ்ப்பாண இராட்சியத்தின் தோற்றம் - பக். 50. Ancient Jaffna — Muthaliyar Rasanayagam C. - Ljš. 329.
மட்டக்கள்ப்பு மான்மியம் - F.x.C. நடராசா, தொகுப்
umr 8rfurth — Lu dö. 52 - 53.
68


Page 59
ko S. S3 7ళZ*?డో Maxxx/
சோழர்காலத்தில் தென்இந்தியா slip ಖ್ವಿ தி
(நன்றி: "தென்னிந்திய வரலாறு')
ஆரோக்கியசாமி.
 
 
 
 
 

- IX —
குளக்கோட்டன் காலம்
குளக்கோட்டன் யார் என்பதை அறிவதற்கு, அவன் காலத்தை அறிவது அவசியம். ஏற்கனவே விபரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டும், அவற்றோடு தொடர்புடைய அகச் சான்றுகள், புறச்சான்றுகளைக் கொண்டும் இவன் காலத்தை நிர்ணயிக்கலாம். தொல்லியல் உத்திகளின் மூலம் இவ்வாறு காலக்கணிப்புச் செய்வது யாவரும் அறிந்த செய்தி. ஆலயங் களும், அவற்றோடு தொடர்புடைய விபரங்களும் இவ்வகை யில் நமக்குப் பெரிதும் உதவுகின்றன.
1. கல்வெட்டு நூல்கள் தரும் தகவல்கள்:
'கோணேசர் கல்வெட்டு" என்னும் நூலின்படி குளக் கோட்டனின் காலம் கலி ஆண்டு 512 (கி. மு. 2590) ஆகும். இந்நூலில், குளக்கோட்டன் பெயரும், அவன் செய்த திருப் பணிகளும், வன்னியர் குடியேற்றம், வன்னிமை வகுப்பு முத லிய விபரங்களும் இடம்பெறுகின்றன.
'திருக்கோணாசலபுராணம்" என்னும் நூலும் இவன் காலத்தை கி. பி. 2590 எனக் குறிப்பிடுகிறது. (இந்நூல் கி. பி. 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.)
"யாழ்ப்பாண வைபவமாலை' இவன் காலத்தை கி. பி. 5ம் நூற்றாண்டு எனக் குறிப்பிடுகிறது. (இந்நூல் கி. பி. 18ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.)
முதலியார் இராசநாயகம் இவனுடைய காலம் கி. பி. 436 எனக் குறிப்பிடுகிறார். ஆனால் குளக்கோட்டன் தொடர் பான ஆய்வுகளை மேற்கொண்ட குவரோஸ் அடிகளார் இவன் காலம் கி. மு. 1300 எனக் குறிப்பிடுகிறார்.
69

Page 60
இவ்வாறு குளக்கோட்டனுடைய காலம் சம்பந்தமாக வெவ்வேறு கருத்துக்கள் கூறப்பட்டிருந்தாலும் சம்பவங்கள் பெரும்பாலும் ஒரேமாதிரியாக அமைந்திருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
காலம் சம்ப்ந்தமாக இலக்கிய நூல்களில் கிடைக்கும் தகவல்கள், தவறுடையவையாக இருப்பதால், தொல்லியல் ஆய்வில் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. வேறு சான்றுகள் மூலம் ஊர்ஜிதமாகும் தகவல்கள் மட்டுமே காலக் கணிப்புக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
முதல் அத்தியாயத்தில் நாம் சுட்டிக்காட்டியதுபோல, கோணேசர் கோ யி ல் தொன்மையானதாக இருப்பதால் அதனோடு தொடர்புபடும் குளக்கோட்டன் காலத்தையும் மிகத் தொன்மையானதாகப் பலர் கணிக்கின்றனர். சிலர் ஆர்வமிகுதியாலும் காலத்தை மிகைப்படுத்திக் கூறுவதுண்டு.
எனவே கிறிஸ்துவுக்கு முற்பட்டதாகக் குளக்கோட்டன் காலத்தைக் கணிப் ப தை அப்படியே ஏற்றுக்கொள்வதற் கில்லை. இதற்கான சில காரணங்களை ஆராய்வோம.
2. வரலாற்றுச் சான்றுகள்:
(அ) மேலே குறிப்பிட்டுள்ள கோணேசர் கல்வெட்டுப் பாட லில் "ஏர்பெருகு பருதிகுலராஜன் குளக்கோட்டன்’ என்றும், ! "பருதி குலத்துதித்த குளக்கோட்டன்' என்
றும் கூறப்படுகிறது. இத்தகைய வர்ணனை பிற்காலச்
சோழர்காலத்து வழக்கு ஆகும். கி. பி. 10ம் நூற்றாண்டு ராஜராஜசோழன் (கி. பி. 985) காலத்துக்குப்பின் எழு தப்பட்ட மெய்க்கீர்த்திகளில் இவ்வழக்குப் பயிலப்படு வதை நாம் பார்க்கிறோம்.
(ஆ) ஆலயங்களுக்குக் கோபுரம் அமைக்கும் வழக்கம்:
பிற்காலச் சோழர் காலத்திலேயே இது ஆரம்பிக்கப்பட் டது. ராஜராஜசோழன் அமைத்த தஞ்சைப் பெருங் கோயில், ராஜேந்திரன் அமைத்த ராஜராஜசோழேச் சுரம் முதலியவற்றை இதற்கு உதாரணமாகக் கொள்ள லாம். இக்காலம் கி. பி. 10ம் நூற்றாண்டு ஆகும்.
(இ) வன்னியரைக் குடியமர்த்தல்:
குளக்கோட்டன் வன்னியரைக் குடியமர்த்தியதாகவும், வன்னிமை வகுத்ததாகவும் கோணேசர் கல்வெட்டுக்
70

«(RF)
கூறுகிறது. வன்னியர் என்ற வகுப்பினர் நிரந்தரமாக இலங்கைக்கு வந்ததும்; குடியேறியதும் கி. பி. 12ம் நூற்றாண்டுக்குப் பின்புதான் என்பது வரலாறு. (வன்னி யர் குடியேற்றம்பற்றி "யாழ்ப்பாண வைபவமாலை"
யும் குறிப்பிடுதல் கவனத்தில் கொள்ளத்தக்கது.7 )
பரராசசேகரன், செகராசசேகரன் தொடர்பு:
கோணேசர் கல்வெட்டுப் பாடல் தெரிவிக்கும் மற் றொரு முக்கியமான தகவல் நமது கவனத்துக்குரியது. * 1.பரராசசேகரன், செகராசசேகரன் என்பவர்கள் திரிகைலைக்கு (கோாணஸ்வரம்) வடமேல் இராட்சியம் பண்ணிக்கொண்டிருப்பவர்களாம். இவர்கள் கோணேஸ் வரப் பெருமைகேட்டு வந்து வணங்கி, குளக்கோட்ட னுக்குப் பல ஐஸ்வரியங்களையும் கொடுத்து மீண்ட sorrj” ”8
இத்தகவலின்படி, குளக்கோட்டன், பரராசசேகரன் செகராசசேகரன், காலத்தவன் என்றாகிறது. இவர்கள் கி.பி. 1215க்குப் பிற்பட்டவர்களே, (செகராசசேகரன் 1 காலம் கி. பி. 1215-1240, பரராசசேகரன்-1 காலம்
(உ) ஆரியச் சக்கரவர்த்திகள் அளித்த நன்கொடை:
(esa)
(67)
ஆரியச் சக்கர வர்த் திகள் கோணேசர் கோயிலுக்கு அளித்த நன்கொடைகள்பற்றியும் இக் கல்வெட்டுப் பாடல் கூறுகிறது.? ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் கி. பி. 12ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்பதும் வரலாறு.
'கைலாயமாலை" தரும் தகவல்:
யாழ்ப்பாணத்தில், யாழ்ப்பாணன் இறந்தபின், பாண்டி
மளவன் என்னும் பிரதானி, பொன்பரியூர் போய் பாண்டிய இளவரசன் ஒருவனைக் கூட்டிவந்தான் என் றும், இவனே யாழ்ப்பாணத்தின் முதலாவது ஆரிய அரசன் என்றும் "கைலாயமாலை" கூறுகிறது."
u ri i tij u T GUT Gonshu Guid Tson Gh)”
இதே தகவலை "யாழ்ப்பாண வைபவமாலை"யும் வேறொரு விதமாகக் கூறுகிறது. இந்த அரசன் சோழ அரசன் எனவும், இவனே பின்னர் செகராசசேகரன் எனவும், சிங்கை ஆரியன் எனவும் அழைக்கப்பட்டான்.
71

Page 61
இவனது பரம்பரையே பின்னால், ஆரியச் சக்கரவர்த்தி
கள் என அழைக்கப்பட்டனர். - இவ்வாறு யாழ்ப்
பாண வைபவமாலை சுறுகிறது. சுவாமி ஞானப்பிர காசரும் இக்கருத்தை வலியுறுத்துகிறார்.
(ஏ) கூளங்கைச் சக்கரவர்த்தி:
வி. குமாரசாமி என்பவர் தமது 'கதிரைமலைப்பள்ளு" என்னும் நூலில் செகராசசேகரனுடைய காலம் சுந்தர பாண்டியனுடைய காலம் எனவும், சுந்தரபாண்டிய னுடன் போரிட்டபோதே அவன் தன் கையை இழந்து கூளங்கைச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டதாகவும் கூறுகிறார். இவனுடைய காலம் கி. பி. 1251-1271 ஆகும்.2
(ஐ) பரராசசேகரன்;
பரராசசேகரன் கி. பி. 1224ம் ஆண்டுக் காலப்பகுதி யைச் சேர்ந்தவன். இது மட்டக்களப்பு மான்மியம் குறிப்பிடும் மாகன் வாழ்ந்த காலமாகும். குளக்கோட் டன் வன்னியரைக் குடியேற்றிய காலமும் இதே காலப் பகுதியில் அடங்குகிறது. எனவே குளக்கோட்டன் இக் காலப்பகுதிக்குரியவனாக - அதாவது 12ம் - 13ம் நூற் றாண்டுக்கு இடைப்பட்ட காலத்துக்குரியவன் ஆகிறான்.
(ஒ) கொக்கட்டுச்சோலைப் பகுதிக் குடியேற்றம்:
குளக்கோட்டன் கொக்கட்டுச்சோலை, வெருகல், திருக் கோயில் முதலிய கோயில்களுக்கும் வன்னிமை வகுத்த தாகச் சில நூல்கள் கூறுகின்றன. கொக்கட்டுச் சோலையில் மாகோனால் வகுக்கப்பட்ட விதிமுறை களே இன்றும் நடைமுறையில் உள்ளன. எனவே வடக்கே (அதாவது திருகோணமலைப் பகுதியில்) குளக் கோட்டன் வன்னிமை வகுக்க, கிழக்கே மாகோன் வன் ணிமை வகுக்கிறான் என்பது புலனாகின்றது. இது தன் னுடைய விதிமுறைகள் எங்கும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக, மாகன் வகுத்த திட்டமாக வும் இருக்க்லாம்.
3. கல்வெட்டுச் சான்றுகள் வெளிப்படுத்தும்
உண்மைகள்:
* கல்வெட்டுச் சான்றுகள்' என்னும் அத்தியாயத்தில் ஐந்து கல்வெட்டுகள்பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன.
72

இக்கல்வெட்டுகளும், குளக்கோட்டன் காலம்பற்றிய தகவல் களைத் தருகின்றன.
(அ)
(<级)
கோணேசர் கோயில் கல்வெட்டு: இக்கல்வெட்டின் வாசகம் வருமாறு:
"முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே - மன்னவயின் பொண்ணுத தணையியற்ற வழித்தே வைத்து எண்ணுரே பின்னரசர்கள்.""
இக்கல்வெட்டிலிருந்து குளக்கோட்டன் கோணேசர்
கோயிலுக்குத் திருப்பணி செய்தான் என்பது தெரிய
வருகிறது. * இக்கல்வெட்டின் வாசக அமைப்பு முறையி
லிருந்து இது மிகவும் பிற்பட்ட காலத்துக்குரியது என்
பதை மிகச் சுலபமாக ஊகித்துவிடலாம். இத்தகைய
மொழிநடை கி. பி. 12ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். (இத்தீர்க்கதரிசனத் தில் குறிப்பிட்டபடி இக்கோயில் கி. பி. 1624ல் போத் துக்கேயத் தளபதி கொன்ஸ்டான்டைன் டீசாவால்
அழிக்கப்பட்டது.)
பிரடறிக்கோட்ட்ை சிதைந்த சமஸ்கிருதக் கல்வெட்டு:
இக்கல்வெட்டில் "சக வருடம் 1145 சம்பு புஷ்பம் ஆண்டு சோடகங்கன் என்னும் மன்னன் இலங்கைக்கு வந்தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.18 இவ்வாண்டு கி. பி. 1223 என்பதும், சோடகங்கன் என்னும் மன்னன் குளக்கோட்டன் என்றும் " " கல்வெட்டுச் சான்றுகள்' என்னும் அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது.
(இ) கங்குவேலிக் கல்வெட்டு:
கங்குவேலி அகத்தியர் தாபனக் கோயிலில் காணப்படும் இக்கல்வெட்டு, வாசக அமைப்பில் திருக்கோயில் கல் வெட்டுகளை ஒத்தது. கி. பி. 12ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது. கலிங்க மாகன் திருக்கோயிலில் திருப்பணி. செய்த காலத்தில், குளக்கோட்டன் திருகோணமலை யில் திருப்பணி செய்தமைக்கு ஆதாரமாக இக்கல் வெட்டு, கோயில் ஒன்றுக்கு வயல்கள் நிவந்தம் அளிக் கப்பட்டதைக் கூறுகிறது.*
73

Page 62
(RF)
(2-)
(eam)
திருக்கோயில் தூண் கல்வெட்டு:
"பூரீசங்கபோதி பரமரான திரிபுவனச் சக்கரவர்த்தி கள்." என்று இக்கல்வெட்டு ஆரம்பமாகிறது. இத் தகைய அடைமொழி கி. பி. 12ம் நூற்றாண்டுச் சோழர் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. எனவே மாகோன், குளக்கோட்டன் ஆகியோர் இக் காலப் பகுதிக்குரியவர்கள் என்றாகிறது.
திருக்கோயில் துண்டுக் கல்வெட்டு:
இக்கல்வெட்டும் "பூரீமத் சங்கபோதி வர்மரான திரி புவனச் சக்கரவர்த்திகளான சிவஞான சங்கரிகள் , ' என்று ஆரம்பமாகிறது. எனவே இதுவும் கி. பி. 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு ஆகும். மாகோன், குளக்கோட்டன் இக்காலப்பகுதிக்குரியவர் ஆகின்றனர்.
கோயில் அமைப்புகள்: குளக்கோட்டன், மாகோன் ஆகியோர் திருப் பணி செய்ததாகச் சொல்லப்படும் திருக்கோயில் அமைப்பு பிற்காலச் சோழர் காலக் கோயில் அமைப்பை ஒத்தது. இதுவும் குளக்கோட்டன் கி. பி. 12ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவன் என்பதை நிரூபணம் செய்கிறது. இவ் வாறே இவர்கள் திருப்பணி செய்த கொக் கட்டுச் சோலை ஆலயமும் பிற்காலச் 'சோழர் காலக் கோயில் அமைப்பைக் கொண்டது.
4. பிற சான்றுகள்:
i.
மாகோன் காலம்:
மாகோனும், குளக்கோட்டனும் சம காலத்தவர்கள் என்பதையும், மாகோனுடன் உபராஜனாக வந்தவனே குளக்கோட்டன் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். மாகோன் வரலாறு மட்டக்களப்பு மான்மியத்திலும் இடம்பெறுகிறது. மாகோன் இலங்கை யில் ஆட்சி செலுத்திய காலம் (கி. பி. 1215-1236) கி. பி. 12ம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். எனவே அவனுடன் வந்த குளக்கோட்டன் கி. பி. 12ம் நூற்றாண்டுக்கு முற்பட்டவனாக இருக்கமுடியாது.
74

.
ஆடகசவுந்தரி:
குளக்கோட்டன் ஆடகசவுந்தரியைத் திருமணம் செய்த தாக ஒரு செய்தி கூறுகிறது. கோணேசர் கல்வெட்டு, மட்ட க் களப்பு மான்மியம் முதலிய நூல்களில் இச் செய்தி இட்ம்பெறுகிறது. ஆடகசவுந்தரி, உன் ன ர சு கிரியில் ஆட்சிபுரிந்தவள். இவளுடைய காலம் கி. பி. 12ம் நூற்றாண்டு ஆகும். எனவே குளக்கோட்டன்
காலமும் கி. பி. 12ம் நூற்றாண்டாகிறது.
மட்டக்களப்பு மான்மியம்:
மட்டக்களப்பு மான்மியம், காலத்தால் பிற்பட்ட ஒரு நூல். இந்நூல், மட்டக்களப்புப் பிரதேசத்தில் ஆட்சி புரி ந் த பல மன்னர்களைப்பற்றிக் கூறுகிறது.
இவர்களுள் குளக்கோட்டன் ஒருவனாக இடம்பெற வில்லை. ஆனால் குளக்கோட்டன் வ ர ல |ாறு மகா சேனன் வரலாறாகக் கூறப்படுகிறது. ஆனால் மகா
சேனன் காலத்தால் மிகவும் முற்பட்டவன், எனவே இவன் மகாசேனன் அல்ல குளக்கோட்டனே. அத்தோடு
மாகோன்பற்றி இந்நூலில் விரிவாகக் கூறப்படுகிறது.
மாகோன், குளக்கோட்டன் ஆகியோரது இணைந்த செயற்பாடுகள் மூலம் குளக்கோட்டனின் கால மும் நிரூபணமாகிறது.
IV. சந்தேக விளக்கம்:
மாகோன், குளக்கோட்டன் (சோழகங்கன்) இலங்கைக்கு வந்த காலம் (கி. பி. 12ம் நூற்றாண்டு) பிற்காலச் சோழர் காலம் ஆகும். இக்காலகட்டத்தில், ராஜேந்திர சோழன் (கி. பி. 1032-1070) வகுத்த நடைமுறை - அதாவது தமது ஆட்சிக்குட்பட்ட பிறநாடுகளுக்கு ராஜப் பிரதிநிதிகளை அனுப்பும் வழக்கம்-இருந்தது. எனவே மாகோனோ, சோழகங்கனாகிய குளக்கோட் டனோ, தாமாக இலங்கைக்கு வந்தது எப்படி என்பது சிலர் எழுப்பும் கேள்விகள்.
அதற்கான பதில் வருமாறு: மாகோன் கலிங்க நாட்டைச் சேர்ந்தவன். எனவே அவன் சோழ அரசுப் பிரதிநிதியாக வந்திருக்கமுடியாது. சோழகங்கனாகிய குளக்கோட்டன் மாகோனுடன் உபராஜனாக வந்த
ஒருவன். எனவே இவனும் சோழராஜப் பிரதிநிதியாக
வந்திருக்கமுடியாது.
75

Page 63
0.
இன்னும் சிலர் மாகோனே குளக்கோட்டன் என்றும், மகாசேனனே குளக்கோட்டன் என்றும் ஊகங்களைத் தெரி வி க் கி ன் ற ன ர், இவை தவறான ஊகங்கள். ஏனெனில் குளக்கோட்டன் உண்மைப் பெயர் புகழ் பெற்ற சோடகங்கதேவ அல்லது சோழகங்கன் என்பது பிறிதொரு அத்தியாயத்தில் (அத். X) நிறுவப்படுகின் றது. இதற்கு ஆதாரமாகப் பல சான்றுகள் காட்டப் படுகின்றன.7 “ ۔
குளக் கோ ட் டன் காலம் பற்றிய தெளிவைக் கொண்டு குளக்கோட்டன் பெயரையும், அவ ன து பெயரைக்கொண்டு அவனது வரலாற்றுப் பின் ன ை யையும் நன்கு தெரிந்துகொள்ளமுடிகிறது. இவை அடுத்த அத்தியாயத்தில் விபரமாகக் கூறப்படுகின்றன.
அடிக்குறிப்புகள்:
கோணேசர், கல்வெட்டு - கவிராஜவரோதயர் எழுதி யது - தொகுப்பு: வைத்திலிங்கதேசிகர்-1916- பக் 4. திருக் கோணாசல பு ராணம் - முத்துக்குமாரசாமிப் பிள்ளை எழுதியது - தொகுப்பு: அழகைக்கோன் - 1950 - பக். 23-31. யாழ்ப்பாண வைபவமாலை - தொகுப்பு: குல. சபா நாதன் - 1953 - கொழும்பு - பக். 8, 12. Ancient Jaffna — Muthaliyar Rasanayagam — P. 227.
The Temporal and Spritual Conquest of Ceylon - Fr. Queyroz — A juda Library — Codex 51 – Chapter 7.
P. 3 18. , கோணேசர் கல்வெட்டு - கவிராஜவரோதயர் எழுதி
யது - தொகுப்பு: வைத்திலிங்க தேசிகர் - 1916 - பக். 1 - 4. யாழ்ப்பாண வைபவமாலை - குல. சபாநாதன் பதிப்பு - 1953 - கொழும்பு - பக். 4, 8. கோணேசர் கல்வெட்டு - பக். 20.
- Ljš. 20.
கைலாயமாலை - முத்துராஜ கவிராயர் எழுதியது - பக். 5.
76

11.
2.
13.
卫4。
15.
18.
17.
யாழ்ப்பாண வைபவமாலை - குல. சபாநாதன் - பக். 30-31.
கதிரமலைப்பள்ளு -S. W. குமாரசுவாமி - பக். 130. மட்டக்களப்பு மான்மியம் - F. K. C. நடராசா, பதிப் பாசிரியர் - பக். 53, 54, 94, 95. The Temporal and Spritual Conquest of Ceylon - Fr. De Queyroz - Translated by S.J. Perera - Bode I - Colombo - 1910 - P. 378.
Sanskrit Inscription from Trincomalee - Paranavithana S. - EZ. - Vol. V. – No. 114 - uá. 170- 173.
Extract from the Journal ot the Jucques Fabrice Van Sanden 1786- Dutch Records-1976-Thursday May 25.
(i) Sanskrit Inscription from Trincomalee — Paranavithana S. - E. Z. Vol. V. - No. 114 - பக். 170 - 173. (ii) History of Ceylon 1950 - W. J. F. Laboory,
Editor - Vol. II. — P. 619. (ii) கோணேஸ்வரம் - கலாநிதி செ. குணசிங்கம் -
- d. 1 II - 1 Î3.
77

Page 64

- X
குளக்கோட்டன் பெயர்
G35rr(3600rgrti கல்வெட்டிலே குளக்கோட்டன் செய்த திருப்பணிகளும், வன்னியர் குடியேற்றம், வன்னிமை வகுத் தல் முதலிய தகவல்களும் இடம்பெறுகின்றன.
மேலும் இக்கல்வெட்டிலே, முன்னர் குறிப்பிடப்பட்ட புவனேககயவாகு என்னும் மன்னன், முனிசுரப் பகுதியிலும் திருப்பணிகள் செய்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு சிவாலய்ம் கட்டிப் பூசை செய்யும் நாளில் திருக்கைலை நாதன் பெருமை கேட்டு, திருக்கோணேஸ்வரம் வந்து பாவ நாசச் சுனையில் நீராடிப் பூசைகள் செய்து தன் நகரம் போய்ச் சேர்ந்தான் எனக் கூறப்படுகிறது.
இந்தப் புவநேககயவாகுவின் மகன் மனுநேய கயவாகு என்பவன் பேழையில் கண்டெடுத்த பெண்தான் ஆ டக செளந்தரி, குளக்கோட்டன் ஆடகசெளந்தரியைத் திருமணம் செய்து உ ன் ன ர சு கி ரி ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். கோணேசர் கல்வெட்டுக் கூறும் இத்தகவலை ஏற்கனவே
umrtš Gostib.
1. குளக்கோட்டன் கல்வெட்டு:
குளக்கோட்டன் பற்றிய மற்றொரு பிரபலமான கல் வெட்டு சிதைந்த நிலையில் திருகோணமலைக் கோட்டை யில் வைத்துக் கட்டப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டின் விபரம், கல்வெட்டுச் சான்றுகள் (திருக்கோணமலை) என்னும் அத்தியாயத்தில் கொடுக்கப் பட்டுள்ளது. 'முன்னே குளக்கோட்டன் மூட்டுந் தி ரு ப் பணியை." என ஆரம்பிக்கும் இக்கல்வெட்டுக்கு விளக்கம்
79

Page 65
கொடுத்த பலர் குளக்கோட்டன் பெயர் சம்பந்தமாகப் பல தவறான ஊகங்களைத் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கல்வெட்டின் மொழிபெயர்ப்பில் குவரோஸ் அடிகள் ஒரு செய்தியைக் குறிப்பிட்டுள்ளார். அதாவது மனு ராசா என்னும் இலங்கையின் சக்கரவர்த்தி கோ னே சர் கோயிலைக் கட்டியதாகவும், அவன் காலம் கி. மு. 1300 என வும் அவர் குறிப்பிடடுள்ளார்.?
மனுராசா என்பவனால் கோணேசர் கோயில் கட்டப் பட்டது என்ற செய்தி மேற்படி கோயிலை அழித்த போத் துக்கேய தளபதி கொண்ஸ்ரான்ரைன் டீசா போத்துக்கல் லுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனு அல்லது மனுராசா எனப் போத்துக்கேயத் தளபதி குறிப்பிட்ட விபரத்தைக்கொண்டு அதை மனுநீதி கண்ட சோழன் அல்லது மனுவேந்தன் எனக் குவரோஸ் அடிகளார் கூறுகின்றார். לי W
போத்துக்கேயத் தளபதி எவ்வாறு இச்செய்தியைப் பெற்றிருக்கக்கூடும்? நிச்சயமாக அவன் வரலாற்று ஆதாரங் களைக்கொண்டு இதை எழுதியிருக்கமுடியாது. மேலும் மினு வேந்தன், மனுநீதி கண்ட சோழன், வீதிவிடங்கன் என்ற பெயர்கள் நீதிக கதையில் இடம் பெறுகின்றன வேயன்றி சோழ வரலாற்றில் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களிலிருந்து இப்பெயர்பற்றி ஒருசில வரிகளை அறியமுடிகிறதேயன்றி அவர்களைப்பற்றிய விபரமோ, வரலாறோ ஆதாரபூர்வமாக அறியமுடியாதுள்ளது.* -
இப்பின்னணியில் இவர்களை வரலாற்றுப் பாத்திரங் களாக ஏற்றுக்கொள்வதும், அதன் அடிப்படையில், குளக் கோட்டனை மனுவேந்தனோடு சம்பந்தப்படுத்திக் கூறுவதும் பொருத்தமற்றது. எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது"
2. சோழவம்ச வழித்தோன்றல்:
இவ்வரலாறு "யாழ்ப்பாண வைபவமாலை'யில் Gör வருமாறு கூறப்படுகிறது. "மனுநீதி கண்ட சோழன் மகன் குளக்கோட்டன் திருகோணமலையை அடைந்து கோணேசர் ஆலயத்தைத் தரிசித்து, தம்பலகாமத்தில் பழுதுபட்டுக்கிடந்தி
80

சிவாலயத்தைத் திருத்திக் கட்டினான்." இதில் இவனது காலம் சாலிவாகன சகாப்தம் 358 (கி. பி. 436) எனக் குறிப் பிடப்பட்டுள்ளது. குளக்கோட்டனை மனுநீதி கண்ட சோழ னின் மகன் எனக் குறிப்பதும் இங்கு கவனத்தில் கொள்ளத் தக்கது*
குளக்கோட்டனை மனுநீதி கண்ட சோழனுடன் சம்பந் தப்படுத்தும் மற்றொரு தகவலை Dr. W. பாலேந்திரா தருகிறார். அவர் 1963, மார்ச் 17, 24, 31 ஆகிய தேதி களில் "வீரகேசரி"யில் எழுதிய ஒரு கட்டுரையில் பின்வரு மாறு குறிப்பிடுகிறார். −
"சோழர் வரலாற்றுக்கால வரிசைப்படி கி. மு. 2700ம் ஆண்டு மனுநீதி கண்ட சோழன் பரம்பரையில் வந்த பிரிய விருத்தன், வரராமதேவன், வீதிவிடங்கன் ஆகியவர்களுக்குப் பின் கி. மு. 2600 முதல் கி. மு. 2500 வரை குளக்கோட்டன் அரசு புரிந்ததாகத் தெரிகிறது. பின்பு கி. மு. 2300ம் ஆண் டளவில் கடற்கோள் ஏற்பட்டது என்று ஆரியர் சதபத ப் பிரமாணப்படியும், பாபிலோனிய வரலாற்றுப்படியும் அறிகி றோம்' என அவர் கூறுகிறார்.
இவ்வாறு குளக்கோட்டனை மனுநீதி கண்ட சோழன் காலத்துக்கு இழுத்துச்செல்வது சரியானதா, த ர் க் க ரீதி யானதா என்பதுபற்றிச் சிந்திக்கவேண்டும். இவ் வா று மீளாய்வு செய்யப்படவேண்டிய வரலாற்றுத் தகவல்கள் பல வுள. ஆனால். ஆர்வம் மிகுந்த இக்கதைகளிலிருந்து குளக் கோட்டன் சோழ வம்சத்தைச் சேர்ந்தவன் எனக் கொள்ள லாமே தவிர, மனுராசா என்றோ, மனுநீதி கண்ட சோழன் மகன் என்றோ சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாதது.
வரலாற்றுக்கு முற்பட்ட கால சோழர் செய்திகள் புராணக் கதைகள் வாயிலாகவே கிடைக்கின்றன. இவை எந்த அளவு உண்மை எனக் கணிக்கமுடியாது. தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், மனுநீதி கண்ட சோழன், சிபி, காந்தன் போன்ற ஒருசில . மண்னர் பற்றி மட்டுமே இலக்கிய நூல்கள் வாயிலாக சிறிது அறியமுடிகிறது.7 (மணி மேகலை வரி - 1 - 9 சிலப்பதிகாரம்) ஆகவே இங்கு வன்னிய ரைக் குடியேற்றிய, கோணேசர் ஆலயத்திற்கு திருப்பணி செய்த குளக்கோட்டனை கி. மு. முற்பட்ட காலத்தவனாகக் கொள்வது பொருத்தமானதல்ல. (விஜயாலயன் காலத்தி லிருந்துதான் ஒழுங்கான சோழர் வரலாறே ஆரம்பமாகிறது.)
81

Page 66
குளக்கோட்டன் திருகோணமலை முதல் திருக்கோயில் வரை பல கோயில் திருப்பணிகளைச் செய்தவன் என்பதனை ஏற்கனவே பார்த்தோம். இவன் இந்தியாவின் மனுநீதி கண்ட சோழன் வழித்தோன்றல் எனக் காட்ட எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக இவன் பெயர்பற்றியும் தவறாகக் கூறப்பட்டுள்ளது. குளமும் கோட்டமும் அமைத்தவனாகை யால் குளக்கோட்டன் என்ற காரணப்பெயர் இவனுக்கு நிலைத்திருக்கலாம். ஆனால் இது அவனது உண்மைப் பெய ராக இருக்கமுடியாது. எனவே இவனுடைய உண்மைப் பெய ரைக் கண்டறிதல் அவசியம்.
ஏற்கனவே சில ஆய்வாளர்கள் இம்முயற்சியில் இறங்கி சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அவற்றுள் முக்கிய மானது "சோழகங்கன்" என்னும் பெயராகும். இவ்வகை யில் "சோழகங்கன்", "கோடகங்கதேவ", "சோழகங்குமாரன்" முதலிய பெயர்களுடன் இவன் சம்பந்தப்படுத்தப்படுகிறான்.
ஆனால், சோழகங்கன்" என்ற பெயருடன் பல மன் னர்கள் வெவ்வேறு காலத்தில் வரலாற்றில் இடம்பெறுகின் றனர். கால ஆராய்வின்போது குளக்கோட்டன் காலம் எது என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே வெவ்வேறு கால கட்டத்தில் "சோழகங்கன்" என்ற பெயருடன் வாழ்ந்த மன் னர்கள் பற்றிய விபரங்களை ஆராய்ந்து அவனது , உண்மைப் பெயரை அறியவேண்டும்.
இவ்வாறு ஆராயும்போது சோழர் வரலாற்றில் விருதுப் பெயர்கள் வழங்கும் முறை, விருதுப் பெயர்களால் குறிக்கப் படுபவர்களின் பதவிநிலை முதலியன பற்றியும் நாம் சிந் திக்கவேண்டும். சோழகங்கன் என்னும் பெயருடன் இலங்கை வரலாற்றில் இடம்பெறுவோர் விபரம் வருமாறு:
3, சோழகங்கன் என்னும் பெயர்கொண்ட் மன்னர்கள்:
(அ) சோழகங்க குமாரன்:
இவன் இரண்டாம் கயபாகுவின் காலத்தில் அவனது அரண்மனையில் வசித்த இளவசரன். இவனது காலம் கி. பி. 1132 - 1153. இவனே "சூளவம்சம் குறிப்பிடும் சோழகங்க குமாரன் ஆவான்.
(ஆ) நிசங்கமல்லனின் மருகனான சோழகங்கன்:
இவன் பொலன்னறுவையை ஆண்டவன். (கி. பி. 1196– 1197) விக்கிரமபாகு மன்னனைக் கொன்றுவிட்டு ஆட்
82

சிக்கு வந்தவன். இவனது பெயர் "சோடகங்க" என வும் வழங்கப்படுகிறது.”
(இ) முதலாம் இராஜேந்திரனின் 3வது மகனான சோழகங்கன்
(AP)
(2-)
(Rai)
(στ)
இவன் 'உடையார் சோழகங்கதேவ" என அழைக்கப் பட்டான். இவன் கி. பி. 1037 - 1054 வரை கங்க நாட்டை ஆண்டவன். இலங்கையுடன் இ வ ன து தொடர்பு மிகவும் குறைவு."
முதலாம் குலோத்துங்க சோழனின் மகனான சோடகங்கன்:
குலோத்துங்க சோழனின் காலம் கி. பி. 1070 - 1120 ஆகும். எனினும் இந்த சோடகங்கன் இலங்கையுடன் கொண்டிருந்த தொடர்புபற்றிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை."
மதுராந்தகத் தேவன் என்னும் சோழகங்கன்: இவன் முதலாம் ராஜராஜசோழனின் சித்தப்பா முறை யானவன். இரண்டாம் ராஜேந்திர சோழன் காலத்து மணிமங்கலச் செப்பேட்டில் இவன் பெயர் சோழகங் கன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவன் இலங்கையோடு சம்பந்தப்படவில்லை.12
ஜயபாகு என்னும் சோழகங்கன்: ஜயபாகு என்பவன் சோழகங்கன் என்ற பெயரால் குறிக்கப்படுகிறான். இவனும் திருகோணமலை சமஸ் கிருத கல்வெட்டில் குறிப்பிடப்படும் சோழகங்கனும் வெவ்வேறு என S. பரணவிதான அவர்கள் கூறுகிறார். மாசனுடன் உபராஜனாக வந்து இறங்கியவனும் இவன்ே என்பது அவர் கருத்து. மாசனும் ஜயபாகுவும் பொல நறுவையில் தொடர்ந்து ஆட்சி செய்தனர். அரசன் என்பது மாகனையும், உபராஜன் என்பது ஜயபாகுவை யும் குறிக்கிறது எனக் கருத்துத் தெரிவிக்கின்றார்.19
பாண்டியரின் சாமந்தனான சோழகங்கதேவ: இவன் பிங்கல நாட்டுக் கலிங்க குலத்தவனாக இருக் கலாம் என்பது கலாநிதி. பத்மநாதன் அவர்களின் கருத்து. இவன் ஈழத்தில் கொண்ட தொடர்புகள் பற்றி அறியமுடியவில்லை. ஆனால் இவன் ஒரு வன்னி அரசன் என்பது புலனாகின்றது. *
83

Page 67
(ar)
(ஐ)
சோடகங்க தேவ:
திருகோணமலை சமஸ்கிருத கல்வெட்டில் குறிப்பிடப் படும் இவன் புகழ்பெற்ற "சோடகங்கதேவ' எனப்
பெயர்கொண்டவன். இவன் கி. பி. 1223ல் இலங்கைக்கு
வந்த சோழகங்கன். Dr. S. பரணவிதான அவர்கள் குறிப்பிடும் "சோழகங்கனும் இவனாக இருக்கலாம்.
பேராசிரியர் இந்திரபாலாவும் கி. பி. 1223ல் ஈழத்தில் வந் திறங் கியதாக க் கூறப்படுபவனும், "சூளவம்சம்"
குறிப்பிடும் சோழகங்கனும் இவனே எனக் கூறுகிறார். 18
மேற்கண்ட சோழகங்கர்களைப்பற்றி ஆராயும்போது இலங்கையில் தொடர்புகொண்டிருந்தவனும், கி. பி. 1223ல் இலங்கைக்கு வந்திறங்கியவனுமான சோழகங் கனே குளக்கோட்டன் எனக் கொள்ளலாம். "சூளவம் சம்’ குறிப்பிடுபவனும், மாகோனுடன் உபராஜனாக, அல்லது தனியாக வந்திறங்கியவனும், திருகோணமலை, சமஸ்கிருதக் கல்வெட்டில் குறிக்கப்படுபவனும் புகழ் பெற்ற சோடகங்கதேவ எனக் குறிப்பிடப்படுபவனு மாகிய இவனே குளக்கோட்டன் எனக் கொள்ளுதல்
பொருத்த்முடைத்து. ஏனெனில் மாகனது காலமும்
(கி. பி. 1215 - 1236), இவனுடைய காலமும் ஒத்துப் போகிறது.
கலாநிதி செ. குணசிங்கம் தரும் ஆய்வுக் குறிப்புகள்:
சோழகங்கன் தொடர்பாகக் கலாநிதி செ. குணசிங்கம் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். குளக்கோட் டன் "சோழகங்கன்" என்னும் பெயரைப் பெற்றிருந் தான் எனக் கூறும் இவர், குளக்கோட்டனை கி. பி. 12ம் நூற்றாண்டுக்குரியவனாகக் கருதுகிறார். இவனே
திருக்கோணமலை சமஸ்கிருத கல்வெட்டுக் கூறு ம் குளக்கோட்டன் என்பது இவரது கருத்தாகும்."
4. சோழகங்கனா? சோழ இலங்கேஸ்வரனா?
மேற்கூறிய கருத்துக்களுக்கு மாறாகச் சில கருத்துக்
களைப் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை தெரிவித்திருக்கிறார். சலாநிதி செ குணசிங்கத்தின் கூற்றை ஏற்றுக்கொள்ளும் இவர், இந்த சோழகங்கன், குளக்கோட்டன் அல்லவென்றும், முத லாம் இராஜேந்திர, சோழனின் நான்காவது மகனான சோழ இலங்கேஸ்வரனே குளக்கோட்டன் என்றும் இவர் கூறுகிறார்.
84

இவன் சுமார் கால் நூற்றாண்டுக்காலம் இலங்கையை
ஆண்டவன் என்பது இவரது கூற்று. செ. குணசிங்கம் குறிப் பிடும் சோழகங்கனும், "கோணேசர் கல்வெட்டு குறிப்பிடும் குளக்கோட்டனும் சோழ இலங்கேஸ்வரனே என்பது இவரது வாதம். இதற்கு அவர் கூறும் ஆதாரங்கள் வருமாறு:
(i)
(ii)
(III)
இந்த சோழ இலங்கேஸ்வரன் பின்னர் தமிழகம் திரும்பி வீரராஜேந்திர ச்ோழன்’ என்ற பெயருடன் சோழப் பேரரசன். ஆனான் எனச் சேதுராமன் என்பவர் கூறி யிருப்பது.? தெட்சணகைலாய புராணத்தில் மட்டுமே குளக்கோட் டனுக்கு மறுபெயர் "சோழகங்கன்" எனக் கூறப்பட் டிருப்பது, . "மட்டக்களப்பு மான்மியத்தில் குளக்கோட்டன் பெயர் இல்லாமல் "மகாசேனன்" என்னும் சிங்கள மன்னனின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது.
இக்கூற்றுக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல என்
பதைப் பின்வரும் விளக்கங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
குளக்1ே.ாட்டன் சோழ இலங்கேஸ்வரன் அல்ல என்பதற்கான ஆதாரங்கள்:
(i)
(II)
சோழ மன்னர்கள் தமது ஆட்சிக்குட்பட்ட பிரதேசங் களுக்கும், வெளிநாடுகளுக்கும் தமது பிரதிநிதிகளை அனுப்பும்போது வம்சப் பெயர்களும், கெளரவ ப் பெயர்களும் இறுதியில் வருவது மரபு. (உ+ம்: முத லாம் ராஜேந்திரனின் நான்கு புதல்வர்களின் பெயர் களும் முறையே, சோழபாண்டியன், சோழகேரளன், சோழகங்கன், சோழ இலங்கேஸ்வரன் என அமைந்துள் ளன.)
இலங்கேஸ்வரன் என்ற பெயர் பொதுவாக இலங்கை யைச் சேர்ந்த மன்னர்களைக் குறிப்பதற்கு சோழ மன்னர்கள் பயன்படுத்திய விருதுப்பெயர் ஆகும். (உ+ம்: சோழரால் பிடிக்கப்பட்ட சிங்கள மன்னனா கிய ஐந்தாம் மகிந்தனை, சோழ இலங்கேஸ்வரன் என ஒரு சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.)
இவ்வாறே இராஜாதிராஜன் காலத்தில் இலங்கை யின் தென் பாகத்தில் ஆட்சி நடத்திய விக்கிரம பாண்
85

Page 68
(iii)
(iv)
(v)
(vi)
கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளான்.
டியன் என்பவனும் "இலங்கேஸ்வரன்" என்றே சோழர்
சிங்கள மன்னனான இரண்டாம் கயபாகுவும், தமிழ் கல்வெட்டுகளில் "இலங்கேஸ்வரன்' எ ன் றே குறிப்பிடப்பட்டுள்ளான். கண்டி மன்னர்களும் தம்மை "இலங்கேஸ்வரன்" எனக் கூறிக்கொண்டனர்.?
மேலே (1)ல் குறிப்பிடப்பட்டுள்ள முதலாம் ராஜேந் திரனின் நான்கு புதல்வர்களின் பட்டியலிலிருந்து சோழகங்கனின் சகோத்ரனே சோழ இலங்கேஸ்வரன் என்பது பெறப்படுகிறது. எனவே இவன் காலம் குளக் கோட்டன் காலத்திற்கு முற்பட்டது.
குளக்கோட்டன் வன்னியரைக் குடியமர்த்தியது பற் றிய ஏராளமான சான்றுகளை முன்னரே பார்த்தோம். வன்னியர் காலம் கி. பி. 12ம் நூற்றாண்டுக்குப் பிற் பட்டது. எனவே அதற்கு முற்பட்ட கா லத் தி ல் வாழ்ந்த ஒரு மன்னனை (இலங்கேஸ்வரனை) குளக்
கோட்டனாக இனம் காண்பது எவ் வகை யி லும்
பொருத்தமுடையது அல்ல.
(குளக்கோட்டன் வன்னியரை இலங்கையில் குடி யமர்த்தியது பற்றி "மட்டக்களப்பு மான்மியம்", "South Indian Inscriptons”, “ Garr Georgii 56)Qsul -G)”, "யாழ்ப்பாண வைபவமாலை", * G0) at unt Litr u - Go" , *கு ள வம் ச ம்", "வன்னி உபட்ட", "பூஜாவலிய , "Kingdom of Jaffna முதலிய நூல்கள் விரிவாகக் கூறு
கின்றன.)
"சோழ இலங்கேஸ்வரன்’ எனப் பேராசிரியர் வேலுப்
பிள்ளை குறிப்பிடும் சோழகங்கனின் காலம் கி. பி. 1037 - 1054 ஆகும். இந்தச் சோழ இலங்கேஸ்வரனின் சகோதரனும், முதலாவது ராஜேந்திரனின் மசனுமாகிய சோழகங்கன் தொடர்பு இலங்கையில் காணப்பட வில்லை. கங்க நாட்டிலேதான் அவன் ஆட்சி செய் தான்.2
சோழ இலங்சேஸ்வரன் என்ற பெயருடன் வேறு மன் னர்கள் கி. பி. 12ம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த தாக எவ்வித வரலாற்று ஆதாரங்களும் இல்லை.
86

5. சோழகங்கனே குளக்கோட்டன்:
மேலே ஆராயப்பட்ட சான்றுகளின்மூலம் நிறுவப்படும்
உண்மைகள் பின்வருமாறு:
(/(وہ)
(<器)
(g))
குளக்கோட்டன் வன்னியர் காலத்துடன் தொடர்புடை யவன். எனவே இவன் கி. பி. 12ம் நூற்றாண்டுப் பிற் பகுதியைச் சேர்ந்தவன். இக்காலப்பகுதியில் இலங்கைக்கு வந்திறங்கியவர்களில் சோழகங்கன் என்பவன் கி. பி. 1223ல் வந்தவன்.
சூளவம்சம் குறிப்பிடும் மாகனது தளபதிகளில் ஒருவ
னாக வந்திறங்கிய சோழகங்கன் காலமும், திருகோண
மலை சமஸ்கிருத கல்வெட்டுக் குறிப்பிடும் சோழகங் கனாகிய குளக்கோட்டன் காலமும், குளக்கோட்டன் வன்னியரைக் குடியேற்றிய காலமும் சம காலமாக உள்ளன. "
எனவே கி. பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ
கங்கனே குளக்கோட்டன் என்பது சந்தேகமின்றி நிரூபண மாகிறது.
6. குளக்கோட்டன் தரிசனம்:
முந்திய அத்தியாயங்களில் கூறப்பட்ட தகவல்களைப்
பின்வருமாறு தொகுத்து நோக்குவதன்மூலம் உண்மையான குளக்கோட்டனை நாம் தரிசிக்கமுடியும்.
(l)
(ii)
குளக்கோட்டன் என்னும் மன்னன் பற்றிப் பலவித மான கர்ணபரம்பரைக் கதைகள் உருவாகி, அவனது வரலாற்றுப் பின்னணியை மறைத்துள்ளன. வரலாற் றுச் சான்றுகளைத் துருவி ஆராய்வதன்மூலம், பல புதிய தகவல்களை அறியமுடிகிறது.
குளக்கோட்டு மன்னனின் கோணேசர் கோயில் தொடர்புகளை ஆதாரமாகக்கொண்டு அவன் காலம் மிகைப்படுத்திக் கூறப்படுகிறது. கோணேசர் கோயில் குமரிக் கண்ட க் காலத் தொன்மையுடையதாயினும், குளக்கோட்டன் காலம் மிகவும் பிந்தியது. ஏனெனில் கோணேசர் கோயில் திருப்பணியுடன் மட் டு மே தொடர்பு ைடயவன் குளக்கோட்டன்.
87

Page 69
(iii)
(iv)
(v)
இவ்வாறே தம்பலகாமம், கந்தளாய், வெருகல், கொக் கட்டுச்சோலை, போரதீவு, சங்கமங்கண்டி, திருக் க்ோயில் முதலிய கிழக்கிலங்கைக் கிராமங்களில் குளக் கோட்டனுடைய திருப்பணிகள் இடம்பெற்றுள்ளன.
திருகோணமலையைப் போலவே திருக்கோயிலிலும் குளக்கோட்டன் திருப்பணிகள் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. மாகோன் (காலிங்க விஜயபாகு) என் பவனுடன் இணைந்து குளக்கோட்டன் இத்திருப்பணி களைச் செய்துள்ளான். ஆனா ல் 'மட்டக்களப்பு மான்மியம்' குளக்கோட்டன் பெயரை மகாசேனன் எனத் திரிபுபடுத்திக் கூறியுள்ளது.
குளக்கோட்டன் இலங்கைக்கு வருவதற்குக் காரண மாக் இருந்தவன் மாகோன். ஆனால் அவன் பெளத்த மதத்திற்கு எதிராகச் செயற்பட்டமையால் அவ ன் வரலாற்றுப் பெருமை இருட்டடிப்புச் செய்யப்பட்டுள் ளது. குளக்கோட்டன் செய்த பணிகள் தொடர்பாகப் பல கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன. அவற்றுள் திருக் கோணமலையில் உள்ள 3 கல்வெட்டுகள் குறிப்பிடத்
தக்கவை.
(vi)
(vii)
(viii )
(ix)
இவ்வாறே திருக்கோயில் ஆலயத்தில் உள்ள இரு கல் வெட்டுக்கள் மாகோன் பணிகள் பற்றிக் குறிப்பிடுகின் றன. கல்வெட்டுப் பாடல்களும் இதற்குச் சான்றாகின் றன.
திருக்கோயில் கல்வெட்டுகளைப் பொறித் தவ ன்
காலிங்க 'விஜயபாகு எனப்படும் மாகோன் என்பதற்கு
வலுவான ஆதாரங்கள் உள்ளன. குளக்கோட்டனின் செயற்பாடுகளின் பின்னணியில் மாகோனின் அதிகார மும் வழிகாட்டலும் இருந்தன.
மாகோன் காலத்தில் கி. பி. 1223ல் இலங்கைக்கு வந்த, ஒரு உபராஜனே குளக்கோட்டன். கலிங்க மாசனுக்கு, காலிங்க விஜயபாகு, விஜயகாலிங்கச் சக்கரவர்த்தி, விஜயகாலிங்கன் முதலிய பெயர்களும் உள. குளக்கோட்டன் இதுவரை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்தவனாகக் கணிக்கப்பட்டு வந்துள் ளான். ஆனால் வரலாற்றுச் சான்றுகளின்படி அவன் காலம் கி. பி. 12ம் நூற்றாண்டுப்பகுதி ஆகும்.
88

(x)
குளக்கோட்டனுடைய உண்மைப்பெயரி சோழகங்கன் (புகழ்பெற்ற சோழகங்கதேவ) என்பதாகும். அவன் சோழவம்சத்தவன் என்றாலும் மனுநீதி கண்ட சோழன் மகன் அல்ல. அவன் பிற்காலச் சோழர் காலத்தவன்.
(Cypsib pyth)
அடிக்குறிப்புகள்:
0.
II ,
2.
3.
பிரட்ரிக் கோட்டை வாயில் இடதுபுறத் தூண்.
Spritual Conquest of Ceylon - Fr. Pieris - edition - Father Queyroz - p. 5l.
Spritual Conquest of Ceylon - Fr. Pieris - edition - Father Queyroz - p. 51.
மணிமேகலை சிலப்பதிகாரம்,
யாழ்ப்பாண வைபவமாலை - மயில்வாகனப் புலவர் எழுதியது - மொழிபெயர்ப்பு: குல. சபாநாதன் - .9 . ژیلا مس - l953
வீரகேசரி கட்டுரை - 1963 மார்ச் 17, 24, 31 திகதி.
(i) பண்டைத் தமிழ் இலக்கியத்தில் சோழர்கள் -
நீலகண்ட சாஸ்திரி - பக். 45.
(i) தமிழ்நாட்டு வரலாறு - இறையரசன் - பக். 134.
கைகர் மொழிபெயர்ப்பு - மகாவம்சம். - அத். LXIX குறிப்பு 238 - பக். 306.
கைகர் மொழிபெர்ப்பு - சூளவம்சம் 1. - அத். LXXX
- பக். 129 - குறிப்பு 29 - Part 1.
Chola Pandian, Chola Gangan, Chola Langeswaran, Chola Keralan -- N. Sethuraman - uji,. 46.
தமிழக வரலாறும் மக்கள் பண்பாடும் - டாக்டர் K. பிள்ளை - பக். 288.
தென் இந்திய கோயிற் சாசனங்கள் பகுதி 11. தொகுதி K 57. இரண்டாம் இராஜேந்திர சோழன் காலத்து மணிமங்கலம் செப்பேடு, - பக். சய-சக. History of Ceylon. Vol. I. - W. J. F. Labrooy, EditorLuji. 613 - 622.
89

Page 70
夏4。
5.
6.
17.
18.
19.
20.
2.
வணனயர் - கலாநிதி சி. பத்மநாதன் - பேராதனை -
Luji. 28. Fragmentary Sanskrit Inscriptions from Trincomalee - E. Z - Vol. V - Dr. S. Paranavitana - pp. 170 - 173. யாழ்ப்பாண இராட்சியத்தின் தோற்றம் - கலாநிதி கா. இந்திரபாலா - கண்டி - 1972 - பக். 52. கோணேஸ்வரம் - கலாநிதி செ. குணசிங்கம் - பேரா தனை - 1973 - பக். 1113, 83 - 92. இந்துநதி - கிழக்குப் பல்கலைக்கழக வெளியீடு-1987
uj. I6-17. Chola Pandian, Chola Gangan, Chola Langeswaran, Chola Keralan -- N. Sethuraman - Luái,. 46. கந்தளாயில் கண்டு பிடிக்கப்பட்ட சோழ இலங்கேஸ் வரன் கல்வெட்டு - பாவலர் துரையப்பா நூற்றாண்டு விழா மலர் - 1972 - பகுதி 11, - பக். 1 - 9. Chola Pandian, Chola Gangan, Chola Langeswaran, Chola Keralan - N. Sethuraman - 1986 - Luláš. 46.
 


Page 71


Page 72
மட் மாவட்ட கலாசார உத்தி செயலாளர். பல கலை (
செய்துவருபவர்.
இந்து சமய கலாசார அமைச்சி பாடசாலைகளின் வளர்ச்சிக்கு வர், சாகித்ய விழாக்கள்,
றில் காத்திரமான பங்களிப்
பல நூல் வெளியீடுகளுக்கு உழைப்பவர். கலைஞ்ர்கள் போற்றி மதிப்பவர். அவர்கள்
கிழக்கிலங்கை வரலாறு தெ மேற்கொண்டுவருபவர். பல
"விபுலாநந்தர் தொல்வியல் தரிசனம்", "மட்டக்களப் மாகோவின் உண்மை வ ஆய்வு', "திருக்கோயில் தி ஆசிரியை (முதல் இரு நூல்
- LJ SJT LI
T T
Composed
 

1 - \ " سے
t 54 - t ېيمf
நூலாசிரிய்ை,
ங்ானிப் பூல்கலைக்கழக தொல்வீப்ஸ் சிறப்பு பட்ட
டதாரி. பேராசிரிபூர் சோக பண்டாரநாயகா, திரு. மார்க்கஸ் பெர்னாண்டோ,
திரு. சி. க. சிற்றம்பலம், திருமதி தன பாக்கியம் குணபாலசிங்கம் முதலி யோர் இவரது ஆசிரியர்கள்.
யோகத்தர், கலாசாரப் பேரவைச் இலக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு
*ன் உத்தியோகத்தர் அறநெறிப் ந ஆக்கமும் ஊக்கமும் அளிப்ப நூல் கண்காட்சிகள் முதலியவற் புச் செய்து வருபவர்.
துப் பின்னணியில் நின்று ஓயாது இலக்கியவாதிகள் முதலியோரைப் கெளரவத்திற்கு வழிவகுப்பவர்.
ாடர்பாக, விரிவான ஆய்வுகளை
ஆப்வுக் கட்டுரைகளை எழுதியவர்.
ஆய்வு' , 'குளக்கோட்டன் பின் வரலாற்றுப் பின்னணி" , ரலாறு', 'தான் தோன்றிஸ்வர ருத்தலம்" முதலிய நூல்களின் கள் அச்சில் வெளிவந்தவை).
தை கங்கேஸ்வரி கந்தையா.
m R | || r || ||
5. 5riarh.