கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புவியியல் துறைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு

Page 1


Page 2


Page 3

புவியியல் துறைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு
ஸி. எம். ஏ. அமீன், B.A (Cey), Dip. in Hindi, Dip. in Hindi Ling. Appl. (India)
ஏசியன் ஏஜன்ஸிஸ்

Page 4
Title:
Author:
Published by:
Printed by:
First Edition:
Price:
Muslim Contribution to Geography (Tamil)
C.M.A. Ameen, B.A. (Cey), Dip. in Hindi, Dip. in Hindi Ling. Appl. (India)
ASIANAGENCIES, 33-1/11 Galli Road Colombo - 6 SRI LANKA
Essel Publishing House 7, Leith Castle South Street, Santhome, Madras 600 028 INDIA
April, 1992
RS. 40.00
This book is printed through the patronage and sponsorship of the Sri Lanka National Library Services Board. It should be noted that the Contents of this Book do not reflect the views of the National Library Services Board.
C Asian Agencies SBN 955 - 951 79 - 7 - X

கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள் உவந்தளித்த
அணிந்துரை
அறிவியல் துறையின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பணிகள் பற்றி விளக்கும் நூல்கள் தமிழில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இத்துறையில், ஆய்வு நோக்கில், ஆதாரபூர்வமான உசாத்துணை நூல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல்கள் தமிழ் மொழியில் மிகமிக அரிதாகவே உள்ளன. இந்நிலையில் ஜனாப் ஸி.எம்.ஏ.அமீன் அவர்கள் எழுதியுள்ள 'புவியியல்
துறைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு' எனும் நூல் ஒரு மகத்தான பங்களிப்பாகும். ஜனாப் அமீன் முஸ்லிம்களின் அறிவியல் துறைப் பங்களிப்புப் பற்றி ஆய்வு ரீதியான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் ஏற்கனவே எழுதிப் பிரசுரமாகியுள்ள, வானவியல் துறைக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பணி பற்றிய நூல் மிகச் சிறந்த ஒரு முயற்சியாக அமைந்து முஸ்லிம்களின் கவனத்தை ஈர்த்தது. முஸ்லிம்களால் போஷித்து வளர்க்கப்பட்ட மற்றொரு கலையான புவியியல்
3.

Page 5
துறைக்கு அவர்களின் பங்களிப்பு பற்றி விளக்கும் இந்நூல், தமிழ் மொழியில் இத்துறை பற்றிய விரிவான ஆய்வைக் கொண்டுள்ள முதல்நூலாகும். ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல், இஸ்லாத்தின் ஆரம்பகால முதல் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம் வரை முஸ்லிம்களின் புவியியல் பணியை மிக விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்து விளக்குகின்றது. வரலாற்றில் முஸ்லிம்களின் பிரவேசத்திற்கு முன்னர் நிகழ்ந்த கிரேக்கர்களின் புவியியல் பணிகளைப் பற்றிய ஆசிரியரின் விளக்கம், இத்துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பை உரிய முறையில் விளங்குவதற்கு ஒரு சிறந்த பொது பின்னணியாக அமைகின்றது. அதனைத் தொடர்ந்து முஸ்லிம்களைப் புவியியல் துறையில் ஆர்வஞ் செலுத்தத் தூண்டுதலாக அமைந்த காரணிகளை ஆசிரியர் விளக்கியுள்ளார். அராபியரின் இயற்கைச் சுற்றாடலும்-இஸ்லாமிய கருத்துக்கள், நடைமுறை செயற்பாடுகளும் இத்துறையில் மிக உயர்ந்தபங்கை வகித்ததை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அதனைத் தொடர்ந்து புவியியலின் முக்கிய பிரிவுகளான பிரதேசப் புவியியல், விஞ்ஞானப் புவியியல், கணிதப்புவியியல், மானிடப்புவியியல் போன்ற துறைகளுக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பல்வேறு பணிகள் மிக ஆதாரபூர்வமான அடிக்குறிப்புக் களுடன் விளக்கப்பட்டுள்ளது.
4.

எந்தவொரு பண்பாட்டு, கலாசார, அறிவு முயற்சிகளும் சூன்யத்தில் நிகழ்வதில்லை. அது ஒர் அறிவு, பண்பாட்டுப் பின்னணியிலேயே நிகழ்கின்றது. முஸ்லிம்களின் புவியியல் பங்களிப்புக்கு அடிப்படையாக அமைந்த இந்திய, கிரேக்க, பாரசீக புவியியல் மரபு பற்றி இந்நூலின் இரண்டாம் அத்தியாயம் விளக்குகின்றது. இந்த மரபைதம்மில் இணைத்து, இஸ்லாம்அவர்களுக்கு அளித்த உலக நோக்கினை அடியொட்டி முஸ்லிம் புவியியல் அறிஞர்கள் ஆற்றிய பங்களிப்பை மூன்றாம் அத்தியாயம் விளக்குகின்றது. அல்-குவாரிஸ்மி, அல்-கிந்தி, இப்னு குர்தாத்பிஹற். அல் யாக்கூபி அல்-மஸ்ஊதி, இப்னுஹவ்கல், அல்-முகத்தளி போன்றோரின் பணிகள் பற்றிச் சிறப்பாக இந்த அத்தியாயம் குறிப்பிடுகின்றது. நான்காம் அத்தியாயம் அல் பிரூனியின் புவியியல் பணிகளைப் பற்றி அவரது ‘கிதாபுல் ஹிந்த் என்னும் நூலைத்தழுவி விரிவாக விளக்குகின்றது. அத்தோடு அல்-இத்ரீஸி, யாக்கூத், அல்-கஸ்வீனி அபுல்பிதா, இப்னு கல்தூன் ஆகியோரின் புவியியல் பங்களிப்புகள் பற்றியும் இந்த அத்தியாயம் ஆராய்கின்றது. இப்னு மாஜித் சுலைமான் அல் மஹரி ஆகியோர் பற்றிய பல குறிப்புகளும் இதில் காணப்படுகின்றன. ஸ்பெயினைச் சேர்ந்த முஸ்லிம் புவியியல் அறிஞர்களின் பணி பற்றியும் துருக்கியரின்
5

Page 6
பங்களிப்பு பற்றியும் இந்த அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் கணித துறையின் வளர்ச்சிக்கும் வானவியலுக்கும் மிக ஆக்கபூர்வமான பணிகளைப் புரிந்துள்ளனர். இந்நூலின் 5ம் அத்தியாயத்தில் முஸ்லிம்களின் புவியியல் சார்பான கணித வானவியல் பணிகள் பற்றி ஆராயப்பட்டுள்ளது. இப்பணி பல்வேறு பிரதேசங்கள் நகரங்களை 6.D DE AL DITës வைத்து நிகழ்த்தப்பட்டமை விளக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் புவியியல் துறைக்கு ஆற்றிய மிகச் சிறந்த பணிகளுள் ஒன்றாக விளங்குவது புவியியல் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான படவரைகலையின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றிய பணியாகும். இப்பணி நவீன வசதிகள் அற்ற ஒரு சூழ்நிலையில் நிகழ்ந்தாலும், இப்பணியை எவ்வகையிலும் குறைவாக மதிப்பிட முடியாது என்ற கருத்தை ஆசிரியர் வலியுறுத்துகின்றார். பல்வேறு முஸ்லிம் புவியியல் அறிஞர்கள் இத்துறையில் ஆற்றிய பங்களிப்பு இந்த அத்தியாயத்தில் விரிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
பொதுவாகப் பார்க்குமிடத்து, 'புவியியல் துறைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு என்ற நூல் தமிழ் மொழியில் இத்துறையைப் பொறுத்தவரையில் உள்ள மிகப்பெரியதொரு
6

வெற்றிடத்தை நிரப்புகின்றது எனலாம். இத்துறை பற்றி மிக ஆதாரபூர்வமாகவும் மிக ஆழமாகவும் தமிழில் வெளிவரும் முதல் நூலாக இது விளங்குகின்றது. தமிழ் மொழியில் வெளிவரும் இஸ்லாமிய நூல்கள் பெரும்பாலும் அடிக்குறிப் புகளைக் கொண்டதாக அமைவதில்லை. இந்தப் பாரம்பரியம் இஸ்லாமிய தமிழ் நூல்களைப் பொறுத்தளவில் போதியளவு வளர்ச்சியடை யவில்லை என்றே கூறுதல் வேண்டும். ஜனாப் ஸி.எம்.ஏ.அமீன் எழுதியுள்ள இந்நூலின் சிறப்பம்சம் அதில் விளக்கப்படும் கருத்துக்களை உறுதிப்படுத்தும் அடிக்குறிப்புக்களை அது கொண்டிருப்பதாகும். இத்துறைப் பற்றி மேலும் ஆழமான ஆய்வு முயற்சியில் ஈடுபட விரும்புவோருக்கும் இந்நூலில் குறிப்பிடப் பட்டுள்ள விடயங்கள் பற்றி மேலும் கூடுதலான
தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர்க்கும் இந்த அடிக்குறிப்புகள் சிறந்த வழிகாட்டிகளாக அமைகின்றன.
நூலாசிரியர் இந்நூலை எழுதுவதற்கான தகவல்களைப் G6) நூல்களை, ஆய்வுக் கட்டுரைகளை அடிப்படையாக வைத்துச் சேகரித்துள்ளார். இவ்வாறு சேகரிக்கப்பட்ட தகவல்கள் மிகத் தர்க்க ரீதியாக தொகுக்கப்ட்டு, ஒழுங்கு படுத்தப்பட்டு, அழகிய நடையில் விளக்கப்படுவது இந்நூலின் சிறப்பம்சமாகும்.
7

Page 7
எனவே எத்தகைய கருத்து மயக்கமுமற்ற தெளிவான ஒரு சிந்தனையோட்டத்தை இந்நூலில் காணமுடியும் ஒருநாகரிகத்தைச் சார்ந்தமக்களின் பணி எவ்வாறு ஒரு வரலாற்றுப்பின்னணியில் நிகழ்கின்றது என்ற வரலாற்று உண்மையை இந்நூல் விளக்குகின்றது.
இன்று இஸ்லாமிய நாகரிகம்பல்கலைகழகத்தில் ஒரு பாடமாகப் போதிக்கப்பட்டாலும் இப்பாட நெறியைச் சிறப்பாகப் பயில்வதற்குத் துணை புரியக்கூடிய விரிவான, ஆழமான நூல்கள் காணப்படாமை ஒரு பெருங்குறையாகும்.
பங்களிப்பின் ஒரு முக்கிய துறைபற்றி மிக விரிவாகவும், ஆழமாகவும் எடுத்துரைக்கும் இந்நூல் இப்பாடநெறியைப் பயிலும் மாணவர்களுக்கு மிகப் பயனளிக்கும் என்பதில் எத்தகைய சந்தேகமுமில்லை. இத்தகைய ஒரு காத்திரமான அறிவு முயற்சியில் ஈடுபட்ட இந்நூலாசிரியரை மனமாரப் பாராட்டுவதோடு, இத்துறையில் மேலும் பல ஆக்கங்களை-அவர் படைத்தல் வேண்டுமென ஆசிக்கின்றேன். அல்லாஹ் அருள் புரிவானாக
-கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி.


Page 8
முன்னுரை
விஞ்ஞான வரலாற்றிலே கிரேக்கர்களைப் போன்று முஸ்லிம்களும் தமக்கென தனியானதொரு இடத்தைப் பெறுகின்றனர்.
அவர்கள் தமக்கு முற்பட்டோரது அறிவுப்
பாரம்பரியங்களைத் தன்னியற்படுத்தி, அவற்றின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்குமாக உழைத்திருக் கின்றனர். புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்திருக்கின்றனர்; புதியதும் முன்னேற்ற கரமானதுமான அறிவுத்துறை பங்களிப்புகளை விட்டுச்சென்றிருக்கின்றனர். முஸ்லிம்கள் ஆர்வம் காட்டாத எந்தவோர் அறிவுத்துறையும் இல்லை என்ற அளவிற்கு அவர்களின் அறிவுப்பணி எல்லாத்துறைகளிலும் விரவிப் பரந்திருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்தது அல்குர்ஆன் அளித்த துண்டுதலே. முஸ்லிம்கள் அறிவுப்பணியிலிருந்து ஒதுங்கிக் கொண்டமை

வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் துரதிர்ஷ்ட சம்பவமாகும்
அறிவுத்துறைகளுக்கு முஸ்லிம்கள் ஆற்றிய அரும்பணிகளைப் பற்றி மேலைத்தேச அறிஞர்கள் பலர் காத்திரமான பல நூல்களை எழுதியிருக் கின்றனர்; இத்தொடர்பில் ஜி.எச்.ஸார்டன், பேராசிரியர் ஹிட்டி றோபர்ட் பிரிபோல்ட் மொண்ட கோமரி வொட் போன்றோரைச் சிறப்பாகக் குறிப்பிட்டுக் காட்டலாம்.
ஆயினும், முஸ்லிம்களின் அறிவு-விஞ்ஞானத் துறைப் பங்களிப்பைப் பற்றித் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் போதிய பரிச்சயம் இல்லை. இவ்விடயம் பற்றிப் பொதுவாகக் கூறும் ஓரிரு நூல்களே கிடைக்கின்றன. தனித்தனித்துறைகளாக எடுத்து, விரிவான முறையில் ஆய்வு செய்யப்பட்ட நூல்கள் ஒன்றேனும் இதுகால வரை தமிழ் மொழியில் வெளிவரவில்லை. இவ்வகையில் ஒரு பாரிய வெற்றிடம் நெடுங்காலமாக இருந்து வந்திருக்கின்றது.
பல்கலைக்கழகத்தில் புவியியலை ஒரு பாடமாகக் கற்ற காலத்திலிருந்தே முஸ்லிம்கள் புவியியல் துறைக்குச் செய்த பங்களிப்பைப் பற்றி அறியவும், அறிமுகப்படுத்தவும் வேண்டும் என்ற உணர்வு என் உள்ளத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. அந்த உணர்வுக்கு வடிகால் அமைக்கும் வகையில்
10

Page 9
உருப்பெற்றதே புவியியல் துறைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு' என்ற இந்நூல்.
ஆறு அத்தியாயங்களாக இந்நூல் விரிகின்றது. முதல் அத்தியாயத்திலே வரலாற்று ரீதியாக புவியியலின் வளர்ச்சி பற்றிச் சுருக்கமான ஒரு விளக்கமும், புவியியல் துறையில் முஸ்லிம்களை ஈடுபாடு கொள்ளச் செய்த காரணிகளும், அவர்களின் பங்களிப்புப் பற்றிய ஒரு சுருக்கமான தொகுப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண் டாவது அத்தியாயம் முஸ்லிம்கள் புவியியலில் ஈடுபடுவதற்குக் களம் அமைத்துக்கொடுத்த epauiTSITUT நூல்களையும், முஸ்லிம் புவியியலாளர்களிடையே அவை ஏற்படுத்திய தாக்கங்களையும் பற்றிப் பேசுகின்றது. அதனை அடுத்துவரும் இரு அத்தியாயங்களும் ஆரம்ப நிலையிலிருந்து ஐரோப்பிய மறுமலர்ச்சி காலம் வரை முஸ்லிம்கள் புவியியல் துறைக்கு ஆற்றிய பணியை, அதன் முன்னேற்றத்தை விரிவாக ஆராய்கிறது. முக்கியமான புவியியலாளர்களையும் அவர்களது ஆக்கங்களையும் பற்றிக் கூறும் இவ்வத்தியாயங்களே இந்நூலின் பிரதான பகுதியாகும். இதனைத் தொடர்ந்து வானியற் புவியியல் பற்றிய அத்தியாயம் இடம் பெறுகிறது. புவியியலோடு தொடர்புடைய LIL-6A/60עי" கலையையும் அத்துறைக்கு முஸ்லிம்கள் ஆற்றிய
11

பணிகளையும் பற்றி ஆறாவது அத்தியாயம் எடுத்துக்கூறுகின்றது.
வாசிப்போரால் எளிதில் கிரகித்துக் கொள்ளக்கூடிய முறையில் எளிய நடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆயினும், புவியியல் துறைக்குரிய கலைச்சொற்களைப் பிரயோகிப்பது தவிர்க்க முடியாதது என்ற வகையில், உரிய இடங்களில் அவற்றை இடம் பெறச் செய்துள்ளேன். வாசகர்களின் வசதி கருதி ஒவ்வோர் அத்தியாயத்தின் இறுதியிலும் உசாத்துணைக் குறிப்புகளும் கொடுக்கப் பட்டுள்ளன.
வரலாற்றுப்புவியியல் மாணவர்களுக்கும், பாடசாலைக்ளிலும் பல்கலைக்கழகங்களிலும் இஸ்லாமிய நாகரிகத்தை ஒரு பாடமாக பயில்வோருக்கும் இந்நூல் பிரயோசனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்நூலுக்கு விரிவான ஓர் அணிந்துரையை வழங்கிய ஜாமி ஆ நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதிஎம்ஏ.எம். சுக்ரி அவர்களுக்குஎனது நன்றி உரித்தாகிறது.
-லீ.எம்.ஏ.அமீன்.
12

Page 10
பொருளடக்கம்
அறிமுகம்
முஸ்லிம்களின் புவியியற் பங்களிப்புக்கு
அடிப்படையாக அமைந்தஆக்கங்கள்.
9ம் 10ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த
புவியியலறிஞர்களும் அவர்களது ஆக்கங்களும் 11ம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம் வரை புவியியலின் வளர்ச்சி
புவியியற் சார்பான கணித, வானவியற் பணிகள்.
முஸ்லிம் புவியியலாளர்களும் பட வரைகலையும்
நூல் அட்டவணை
13

அத்தியாயம்-1
அறிமுகம்
அனைத்து விஞ்ஞானங்களையும் விட புவியியல் மிகவும் தொன்மைவாய்ந்தது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே பாபிலோனியர், யூதர், கிரேக்கர் போன்றோர் புவியியலை அறிந்திருந்தனர். எனினும், மத்திய காலப்பிரிவில் புவியியல் துறையின் வளர்ச்சிக்கு அரேபியர் பங்களிப்புச் செய்வதற்கு முன்னர் கிரேக்கர்களும், உரோமர்களும் அத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தனர். எனவே, ஆரம்பகாலப் புவியியல் வரலாற்றில் கிரேக்கர்கள் முதலாவது இடத்தைப் பெறுகின்றனர்.
கிரீஸில் நாகரிகம் செழித்தோங்குவதற்கு முன், மேற்கு ஆசியாவிலும், எகிப்திலும் ஆற்றுவடி நிலங்களைச் சார்ந்துநாகரிகவளர்ச்சிஏற்பட்டதை வரலாற்று ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. மனித நாகரிகத்தில் படிமுறை வளர்ச்சியோடு அறிவு, ஆராய்ச்சி முயற்சிகளும் வளர்ந்துவந்திருக்கின்றன. கிரேக்க நாகரிகம் கூட தனக்கு முற்பட்ட நாகரிகங்களின் தாக்கத்தால் மெருகடைந்த ஒரு நாகரிகமாகும். உதாரணமாக, கிரேக்கர்களது
14

Page 11
புராதன விஞ்ஞானமானது அரேபியாவிலிருந்து குடிபெயர்ந்த பாபிலோனியர்களிடமிருந்தே பெறப்பட்டது. ஆகவே, அரேபியர் ஐரோப்பா விற்குத் திருப்பிக் கொடுத்த விஞ்ஞானம், தம்மைச் சேர்ந்த, ஆனால், காலத்தால் தமக்கு முற்பட்டோரது சாதனையேயாகும். அவர்களிடமி ருந்தே கிரேக்கர்கள் ஒருமுறை கடன் வாங்கியிருந்தனர். இதே போன்று கிரேக்கர்களது புவியியலும் கடந்த காலத்திய கருத்துகளையும் பிறரது அனுபவங்களையும் அடிநிலையாகக் கொண்டிருந்தது. அரேபியரும் கிரேக்க கருத்து களையும், தமது அறிவு, அவதானம் என்பவற்றினையும் அடிப்படையாகக் கொண்டு புவியியலின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றினர்.
பண்டைய உலகில் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடைய மூன்று நடவடிக்கைகளினால், புவியியல் வளர்ச்சியடைந்தது. (1)புதிய நிலப்பகுதி முதலியவற்றைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப் படும் ஆய்வுப் பயணங்கள் இது புவி மேற்பரப்பினைப் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொள்ள வழிவகுத்துக் கொடுத்தது. (2) அறியப்பட்ட பிரதேசங்களைப் புறவரிப் படங்களாக வரைதல், (3) ” திரட்டப்பட்ட விடயங்களைப் பற்றி நுணுகி ஆராய்தல்; அண்மைக்கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பண்டைக்கால நாகரிகங்கள் அனைத்தும், கூடிய
15

அளவுக்கோ, குறைந்த அளவுக்கோ முதலிரண்டிலும் அக்கறை காட்டின. ஆனால், நுணுகி ஆராய்தல் என்பது மட்டும் பெரும்பாலும் கிரேக்கர்களுக்கே தனியுரிமையானதாக இருந்தது. இதனால், இவர்களையே முதலாவது புவியியலாளர்களாகக் கொள்ள முடியும்.
புவியியலின் பிரதான கிளைத்துறைகள்
கிரேக்கர்களால் நிலைநிறுத்தப்பட்டன. கணிதவியற் புவியியல், தாலேஸ் (Thales), gyGOTTě56mS DT6örur (Anaximander) அரிஸ்
டோட்டில் என்போரால் விருத்தி செய்யப்பட்டு, இரேடோஸ்தெனிஸ் (Eratosthenes) உடன் உச்ச நிலையை அடைந்தது. பொலிபியஸ் (polybius), பொஸிடோனியஸ் (Posidonius) 6 TaTG3. Tr பெளதிகப் புவியியல் அறிஞர்களாக விளங்கினர். அரிஸ்டோட்டிலின் மாணவர்களில் ஒருவரான தியோபிராஸ்டஸ் (Theophrastus) தாவரப் புவியியலைத்தொடங்கிவைத்தார். அகாதாஸிடஸ் (Agarthacides) பொஸிடோனியஸ் என்போர் மானிடப் புவியியல் பற்றி எழுதினர். மிலேடஸைச் சேர்ந்த ஹெகடியஸ் (Hecataeus), மானிடர் வாழ்ந்த உலகப் பகுதியினைப் பற்றிப் பிரதேச அடிப்படையிலான ஒரு பொது ஆய்வினை எழுதியதன் மூலம் பிரதேசப் புவியியலின் ஆரம்ப கர்த்தாவாகத் திகழ்கின்றார்
16

Page 12
கிரேக்கர்களை வெற்றிகொண்டதன் மூலம் எழுச்சி பெற்ற உரோமர்கள், விஞ்ஞான மனப்பாங்கு அற்றவர்கள், அவர்கள் கிரேக்கர்களைப் போன்று தத்துவ ரீதியான சிந்தனைகளில் அக்கறை காட்டவில்லை; வர்த்தக, நிர்வாகப் பிரச்சினைகளிலும் படையெடுப்பின் மூலம் , நாடுகளைக் கைப்பற்றுவதிலுமே ஈடுபாடுடையவர்களாக இருந்தனர். படையெடுப்பு நடவடிக்கைகளினாலும் குறிப்பாக, ஆசியப் பகுதிகளில் வியாபார மார்க்கங்களை விரிவுபடுத்தும் முயற்சிகளினாலும் உலகினைப் பற்றிப் புதிய தகவல்கள் பல அவர்களுக்குக் கிடைத்தன. ஆனால், அத்தகவல்களை விஞ்ஞான அடிப்படையில் ஒழுங்குபடுத்த அவர்கள் முயலவில்லை. பெரும்பாலான நூலாசிரியர்கள் வழிப்பயண நூல்கள் (tineraries) எழுதுவதிலும், இடவிளக்க அகராதிகள் (Topographical dictionaries) தயாரிப்பதிலுமே ஆர்வமுடை யவர்களாக இருந்தனர். எனினும், அவர்களில் இருவர் முதன்மையான இடத்தைப் பெறுகின்றனர். இவ்விருவரும் கிரேக்க மொழியிலேயே தமது ஆக்கங்களைப் படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுள் முதலாமவரான ஸ்ட்ரேபோ (கி.மு.63 கி.பி.36) என்பார், தமது காலத்திற்குரிய, புவியியல் அறிவினை ஏழு பாகங்களாகத்
ל1

தொகுத்தார். விடாமுயற்சியுடையவரான இவர், உரோம இராஜ்யம் எங்கனும் பிராயணம் செய்ததோடு, எதியோப்பியாவின் எல்லைப் புறங்கள் வரை கூட துணிந்து சென்றிருக்கின்றார். இவர் முக்கியமாகப் பிரதேசப் புவியியலாளராகவே கொள்ளப்படுகின்றார். இரண்டாமவரான தொலமி, ஒருகணிதப் புவியியலாளர். Geographike Syntaxis என்பது இவரது மகத்தான ஆக்கமாகும்.
66f6fuósåT Historia Naturalis GT6örp myyub, GourrióGurTaufulusňoGB Darraớ6ör De Chorographia என்ற நூலும் மேலே குறிப்பிட்ட ஆக்கங்களோடு ஒப்பிடும் போது, விஞ்ஞானப் பெறுமதியற்றவை. ஆயினும், அவை லத்தீன் மொழியில் எழுதப்பட்டமையால் மத்திய காலப் பிரிவின் ஆரம்பப் பகுதியில் கணிசமான முக்கியத்துவம் பெற்றிருந்தன.
காலப்போக்கில் உரோமானிய ஆதிக்கத்தின் கீழ் நிலவிய கிரேக்க கலாசாரம் கடுமையான நெருக்கடிக்குள்ளானது. அறிவுத்துறைகள் வளர்ச்சியடைய முடியாத சூழ்நிலையை, யூதம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களுக்கும் கிரேக்க இலட்சியங்களுக்குமிடையிலான ஒரு மோதலை அது எதிர்நோக்கிற்று.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய ஸொலினஸ் (Solinus) போன்ற புவியியல் அறிஞர்களும் குறிப்பிடத்தக்க ஆக்கம் எதனையும்
18

Page 13
படைக்கவில்லை. Lýsiv6ó (Beazley) uflsár சொற்களில் சொல்வதானால், இக்காலப்பிரிவில் தோன்றிய புவியியலாளர்களின் நோக்கம், அதிர்ச்சியூட்டுவதும் மகிழ்விப்பதுவுமேயன்றி அறிவூட்டுவதன்று.4
அடுத்து வந்த மத்தியகாலப் பிரிவு பொதுவாக விஞ்ஞான வரலாற்றைப் பொறுத்தவரையில் குறிப்பாகப் புவியியலைப் பொறுத்தவரையில் முக்கியமானது. கி.பி 5ம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரையான இம்மத்திய காலப்பிரிவில் ஒரு பொதுவான பிற்போக்குத் தென்படலாயிற்று. இதனால், ஐரோப்பிய வரலாற்றிலே இருண்ட காலம்' எனப்படும் காலகட்டம் படிப்படியாகத் தோற்றம் பெற்றது. இக்காலப்பகுதியில் கிறிஸ்தவ மதத்திற்கும் கிரேக்கர்களது இலக்கிய, விஞ்ஞான மரபுகளுக்கும் இடையிலான மோதல் வலுப்பெற்றது. ஜஸ்டீனியன் ஏதென்ஸில் &Tarotul L fig6.j6015605 (School of Athens) மூடியமை காரணமாகவும், கிறிஸ்தவ மதம் மாபெரும் வெற்றி பெற்று, மக்களிடையே செல்வாக்கும் பெற்றமை காரணமாகவும் அறிவு, விஞ்ஞான, ஆராய்ச்சி முயற்சிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாயின. கிறிஸ்தவ மதகுருமார்கள், விஞ்ஞான ஆராய்ச்சி பயனற்றது என்றும், மத நம்பிக்கைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடியது என்றும் மக்களை நம்பச் செய்ததோடு, மனித
19

உடலும் ஆத்மாவும் நிலையற்றவை, இழிந்தவை என்றும் பிரசாரம் செய்யலாயினர். இவற்றின் ஒருமித்த விளைவாக, விஞ்ஞான நடவடிக்கைகளின் உறைவிடமாகத் திகழ்ந்த அலெக்ஸாந்திரியா தனது முதன்மையை இழக்கலாயிற்று. இவ்வாறு ரோமானிய நடவடிக்கைகளினால் தாக்கத்திற்குள்ளான விஞ்ஞானம் கிறிஸ்தவ மதச் சார்பினால் மேலும் சீர்குலையலாயிற்று.
இதே காலப் பகுதியில் தான் புறச்சமயிகளான (Pagans) கிரேக்கர்களின் விஞ்ஞானக் கருத்துகளை முறியடிக்கும் நோக்கத்தோடு கொஸ்மஸ் (Cosmas) என்ற துறவி ஒரு புவியியல் நூல் எழுதினார். இவர் ஆரம்பத்தில் ஒரு கடலோடியாக இருந்து, மதகுருவாக மாறியவர். கடலோடியாக இருந்த போது, இவர் செங்கடலிலும் அதற்கு அப்பாலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.
புவி கோளவடிவானது என்ற கிரேக்கர்களின் கருத்தை ஆதாரபூர்வமாக மறுக்கும் வகையில் தான் S. 55476i Topographia Christiana என்ற ஏடாகூடமான நூலினை இவர் எழுதினார். இது இன்றும் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. உலகினைப்பற்றிய இவருடைய நோக்கு கிறிஸ்தவ மதச் சார்புடையதாகக் காணப்படுகின்றது.
20

Page 14
கொஸ்மஸின்படி உலகம் செவ்வகவடிவான பெட்டியின் உருவில் அமைந்ததாகும். பெட்டியினுள்ளே, சமுத்திரத்திலிருந்து மக்கள் குடியேறிய உலகு மேலெழுகின்றது. அது சுவர்க்கத்தினால் சூழப்பட்டிருக்கின்றது. வடக்கி லுள்ள கூம்புவடிவான ஒரு மலையினைச்சுற்றி சூரியனும் சந்திரனும் சுழன்று கொண்டிருக்கின்றன.5 இவ்வாறு அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்ட நகைப்புக்கிடமான கருத்துகளை இந்நூல் பொதிந்திருக்கின்றது. பீஸ்லி இவ்வாக்கத்தை படு முட்டாள்தனம் (Systemetic nonsense)" ETsar LSæL பொருத்தமாக வர்ணித்திருக்கின்றார்.
சுருங்கக் கூறின், இக்காலப்பகுதியில் விஞ்ஞானம், புவியியல் போன்ற அறிவு முயற்சிகள் அனைத்துக்கும் மாயாஜாலைக் கலைகள் என்ற பட்டம் சூட்டப்பட்டிருந்தது. இறைவன் மட்டுமே உண்மையானவன்,மனிதர்கள் அத்தனை பேரும் பொய்யர்கள்' என்பது தான் மத்திய காலத்தை சேர்ந்த மதப்பற்றுமிக்க கிறிஸ்தவர்களின் மூதுரையாக இருந்தது. உலகமுடிவுகி.பி.1000த்தில் நிகழுமென ஹேஷ்யம் கூறப்பட்டது. பூமி கோளவடிவானது என்பதும் அதற்கு எதிர் எதிர் முனைகள் இருக்கின்றன என்பதும் இகழப்படுவதற்குரிய விஷயங்களாக இருந்தன." இவ்வாறு கிறிஸ்துவ சகாப்தத்தின் ஆரம்ப
21

நூற்றாண்டுகளுக்குரிய புவியியலானது கிரேக்க ஞானமும், கிறிஸ்தவ மதமும் கலந்த ஒரு நூதனமான கலவையாக இருந்தது.
மத்தியதரைக்கடலைச் சூழவுள்ள, கிரேக்க மொழிபேசிய நகர வர்த்தக மாந்தர்களினூடாகவே கிறிஸ்தவ மதம் முதன் முதலில் பரவியதாகத் தோன்றுகின்றது. அதனையடுத்து, பின்னணி நிலப்பகுதிகளுக்கு ஊடுருவி, வெளி மாகாணங்களில் விசாலமான நாட்டுப் புறப்பகுதிகளுக்குப் பரவலாயிற்று. இவ்வாறு கிரேக்க விஞ்ஞானம் மிக முக்கியமான மையங்களில் நேரடி முன்னணித் தாக்குதல்களுக்கு உள்ளானது. இவ்வறிவீனக் குழப்பமும் முற்பட்ட கால அறிவினைக் கண்டனம் செய்ததன் காரணமாகவும் கிறிஸ்தவ உலகிலே விஞ்ஞானத்திலும் பகுத்தறிவு ரீதியான புவியியற் கருத்துகளிலும் ஒரு சிலரே ஆர்வங்காட்டி வந்தனர். நெஸ்டோரியர்களும்() மொனோபிஸைட்ஸ்களும்(+) அவர்களைச்
*NeStOrians இயேசுநாதர் தெய்வீகத் தன்மையும், மனிதத்தன்மையும் வெவ்வேறாகக் கொண்டிருந்தவர் என்ற முற்காலக் கொண்ஸ்டாந்தினோபிள் FLO முதல்வர் நெஸ்டோரியஸ் (கி.பி. 428) எண்பாரின் கோட்பாட்டாளர்.
+ Monophysites - இயேசுநாதரின் திருமேனியில் மனித இயல்பு மட்டும்தான் உள்ளதென்னும்
கோட்பாட்டாளர்.
22

Page 15
சார்ந்தோர் சிலரும் மட்டுமே கிரேக்க விஞ்ஞானத்தை ஓரளவாவது பாதுகாத்து வந்தனர்.8
இந்தச் சூழ்நிலையில்தான் வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஒரு மாபெரும் சம்பவம் நிகழ்கின்றது. அரேபிய மண்ணில் மக்காவில் அண்ணல் நபியவர்கள் பிறக்கின்றார்கள். ஒரு மதத்தை வாழ்க்கையின் அனைத்துத் துறைகளையும் தழுவிய ஒரு வாழ்க்கைத் திட்டத்தை அரேபியரிடம் முன்வைக்கின்றார்கள். அரேபியரின் சொல், செயல், சிந்தனை ஏன் வாழ்க்கையையே மாற்றியமைக்கின்றார்கள். காட்டுமிராண்டியான அவர்களை நாகரிகம் படைத்தவர்களாக மாற்றுகிறார்கள். இறுதியில் மதீனாவில் ஓர் ஒப்பற்ற இஸ்லாமிய அரசைக் கட்டியெழுப்புகின்றார்கள். *
காலப்போக்கில், மக்காவும் இஸ்லாமிய ஆட்சிக்குள் வந்துவிடுகின்றது. பெருமானாரின் மறைவினையடுத்து, நாற்பெரும் கலீபாக்கள் காலத்தில் பெரிய சாம்ராஜ்யங்கள் பல இஸ்லாமிய ஆளுகைக்கு உட்படுகின்றன. ep67g) நூற்றாண்டுகளுக்குள், பல்வேறுபட்டபகுதிகளைத் தனது ஆதிக்கத்திற்கு உட்படுத்தி, ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களையும் தழுவி அத்திலாந்திக் கரையிலிருந்து சீனாவின் எல்லைவரை
23

இவ்விஸ்லாமிய சாம்ராஜ்யம் மேலும் விரிவடை கின்றது. அவற்றிற்கிடையிலே நெருங்கிய அரசியல் ஒற்றுமை இல்லாத போதிலும், அவை பொது மதம், பொதுக்கலாசாரம் என்பவற்றால் இணைக்கப்பட்டிருந்தன. அம்மக்கள்-முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனையோரும் பரந்த ஓர் இராஜ்யத்தின் மக்களாகத் தம்மைக் கருதினர். மக்கா அவ்விராஜ்யத்தின் மத மையஸ்தலமாகவும், பக்தாத் கலாசார, அரசியல் மையஸ்தலமாகவும் திகழ்ந்தன.
முஸ்லிம்கள் பரந்த இராஜ்யம் ஒன்றினை நிறுவியதோடு நின்றுவிடவில்லை; கிரேக்க, உரோம நாகரிகங்களுக்குப் பிறகு கைவிடப் பட்டுப்போன, அறிவுப் பாரம்பரியத்திற்குப் புத்துயிரளிக்கக்கூடிய உன்னதமான சகாப்தத் தையே தொடக்கி வைத்தனர்.
அப்பாஸியர்களது ஆட்சி கலைகளும் விஞ்ஞானங்களும் வளர்வதற்கு மிகவும் உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது. இக்காலப்பகுதியே இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலப் பகுதியாகும். ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு பொற்காலமுண்டு. பெரிகிலியன் சகாப்தம் (Periclean era) ஏதென்ஸின் பொற்காலமானால், ஒகஸ்டன் சகாப்தம் (Augustan age) ரோமின் பொற்காலமானால், மன்ஸ்"ார் அரியணை ஏறியது முதல் முஃதஸிதின் இறப்பு
24

Page 16
வரை ஆறு கலீபாக்களின் ஆட்சிக்காலத்தை அடக்கியது - விரியும் காலப்பகுதியே அறிவுலக மகிமை வாய்ந்த இஸ்லாத்தின் பொற்காலமாகும்.9
இக்கலிபாக்கள் அறிவு ஆராய்ச்சிப் பணிகளுக்குப் பல்வேறு வகைகளிலும் ஊக்கம் அளித்தனர். கலீபா அல் மஃமூன் பக்தாதில் தாருல் ஹிக்மா என்ற நிறுவனத்தை ஸ்தாபித்து, பிற மொழிகளில் எழுதப்பட்டிருந்த புகழ்பெற்ற நூல்களை மொழிபெயர்க்கச் செய்தார். இம்மொழி பெயர்ப்பு முயற்சிகளில் பல்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்த கல்விமான்கள் ஈடுபட்டனர்.
பொதுவாகக் கூறுவதாயின், பாரசீக, கிரேக்க கலாசாரத்தின் செல்வாக்கே அறிவுலகில் முஸ்லிம்கள் மகத்தான பணி புரிவதற்கான தூண்டுதலைக் கொடுத்தது. ஹிட்டியின்படி, இவ்விழிப்புணர்ச்சி பெருமளவுக்கு அந்நிய செல்வாக்குகள் காரணமாக எற்பட்டது. சிறிதளவு இந்திய, பாரசீக, ஸிரிய செல்வாக்குகளும் பிரதானமாக கிரேக்க செல்வாக்குகளுமே காரணமாக அமைந்தன. பாரசீக ஸமஸ்கிருத ஸிரிய, கிரேக்க நூல்கள் அரபு மொழிக்குப் பெயர்க்கப்பட்டமை இதனை எடுத்துக் காட்டுகின்றது.10 நாகரிகப் படியில் சிறந்து விளங்கிய நாடுகளும் சமூகங்களும், விஞ்ஞான ஆராய்ச்சிப் பணிகள் செழித்தோங்கிய
25

ஜ"ந்தேசாப்பூர் போன்ற மையங்களும் முஸ்லிம்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்திருந் தமையால் இச்சமூகங்களின் அறிவுப் பாரம்பரியங்களை முஸ்லிம்கள் பெற முடிந்தது.
இவ்வாறான செல்வாக்குகளின் அடிப்படையில் வளர்ச்சியடைந்த விஞ்ஞானங்களுள் புவியியலும் ஒன்றாகும். Ν
எனினும் அரேபியரின் புவியற் பாரம்பரியம்
மிகவும் தொன்மை வாய்ந்தது. இஸ்லாத்திற்கு
முற்பட்ட கால அரபுக் கவிதைகளில் கடற்பயணம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. குர்ஆனிலும் கடற்பயணத் துறைக்குரிய சொற்களும், கப்பல்கள் தோணிகள் சம்பந்தமான வர்ணனைகளும் காணப்படுகின்றன. நட்சத்தி ரங்கள் போன்ற விண்பொருட்கள் பற்றிய அறிவின் துணைகொண்டு நடைபெறும் தரைமார்க்கப் பிரயாணங்களுக்கும் கடற் பிரயாணங்களுக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது. சொற்பமான விவசாயத்தையும் நாடோடிப் பொருளாதாரத் தையும் உடைய உள்நாட்டு அரேபியர், புவியின் புற அமைப்பு, பாலைநிலத் தாவரங்களின் விலங்கு களினதும் பரம்பல், மேய்ச்சலுக்கான வாய்ப்பு
களும் அவற்றின் அளவுகளும் என்பனபற்றி பரிச்சயம் உடையவர்களாக இருந்தனர். எனவே,
புவியியல் விடயங்களில் அரேபியருக்கு இருந்த ஆர்வம் மிக ஆழமானது. எனினும் புவியியல்துறை
26

Page 17
அரேபியரிடையே வளர்ச்சியடைவதற்கு மேலும் பல காரணங்கள் தூண்டுதலாக அமைந்தன.
அரேபியரிடையே புவியியற்துறை
வளர்ச்சியடைவதற்குச் சாதகமாக அமைந்த காரணிகள்
அரேபியரின் இயற்கைச்சுற்றாடலும், தொழுகை, ஹஜ் போன்ற கட்டாய மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமும், அவர்களது வர்த்தக ஈடுபாடும், ബക1 பிரதேசங்களை அறியவும், அவதானிக்கவும் வேண்டுமென்ற ஆவலும், கிரேக்க, ரோம, இந்திய அறிவுப் பாரம்பரியங்களும், விஞ்ஞானத்தையும் கலைகளையும் வளர்க்க வேண்டுமென விரும்பிய கலீபாக்களின் வேணவாவும், பரந்து விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யமும் புவியியல் துறையில் முஸ்லிம்களை ஈடுபாடு கொள்ளவும் அதனை வளர்க்கவும் தூண்டுகோலாக இருந்தன.
அரேபியர் வாழ்ந்த சூழ்நிலை புவியியல் தொடர்பான விஷயங்களில் ஆர்வங் காட்டத்தூண்டியது; நிலையான நட்சத்திரங்கள், கிரகங்கள், ஏனைய விண்பொருட்களின் இயக்கங்கள் LJOjo) 96) மாற்றங்கள் போன்றவற்றைப் பற்றிய அறிவு அவர்களுக்குத் தேவைப்பட்டது. யுத்த நோக்கங்களுக்காகவோ
27

வர்த்தகம் போன்ற ஏனைய நோக்கங்களுக்காகவோ அவர்கள் அகன்றவனாந்திரப்பரப்பில் பிரயாணம் செய்வதற்காக இவற்றைக் கவனமாக அவதானித்து வந்தனர். பாலைவன வாசிகளின் செல்வமான கால்நடைகளைப் புதியதும் சிறந்ததுமான மேய்ச்சல் நிலங்களைத் தேடி அடிக்கடி இடத்திற்கிடம் சாய்த்துச்செல்ல வேண்டி யிருந்தது. பாலைவனத் தாவரங்களையும் விலங்குகளையும் பற்றிய அறிவினை இவ்வாறான இடப் பெயர்ச்சிகள் மூலமே அவர்கள் பெற்றுக் கொண்டனர். ஆகவே, அரேபியரின் இயற்கைச்சூழ்நிலையானது புவியியல் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்தத் தூண்டியது.
முஸ்லிம்களைப் புவியியலில் ஈடுபாடு கொள்ளத் தூண்டிய மற்றும் ஒரு காரணி இஸ்லாத்தின் கட்டாயக் கடமையான ஹஜ்ஜாகும். விசாலமான பரப்பினை அடக்கிய இஸ்லாமிய இராஜ்யத்தின் பல்வேறு பெளதீக சமூகச் சூழல்களைச் சேர்ந்த பல்வேறு இனங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான யாத்திரீகர்கள் வருடந் தோறும் ஹஜ் செய்வதற்காக மக்காவில் கூடியமை அவர்களுக்கிடையே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் பிரயாண அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. எனவே, ஹஜ் மார்க்க ஒருமைப் பாட்டை விருத்தி செய்யும் சக்திவாய்ந்த ஒரு
28

Page 18
காரணியாக மட்டுமன்றி வர்த்தக உறவுகளை வலுவடையச் செய்து, தாருல் இஸ்லா' த்தின் அனைத்துப் பகுதிகளையும் பற்றிய அறிவையும் இஸ்லாமியரிடையே பரப்பியது.
மேலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கஃபாவின் திசையை நோக்கித் தொழுவதற்கும், அதனை நோக்கிப் பள்ளிவாசல்களை அமைத்துக்கொள்வதற்கும், கஃபாவின் திசையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டிய அவசியமானது புவியியற் கல்வியை இன்றியமையாததாக ஆக்கியது. இதனைவிட பரந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பல்வேறு இடங்களில் நிலைகளைச் சரியாக நிர்ணயிப்பதற்கும் புவியியலில் அக்கறை காட்டவேண்டியிருந்தது.
இஸ்லாமிய ஆட்சியின் கீழிருந்த அல்லது இவ்விராஜ்யத்திற்கு அண்மையிலிருந்த நாடுகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டிக்கொள்ளவும், அவற்றை அவதானிக்கவும் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் விசாலமான இவ்விராஜ்யம் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்தது.
(på6u LDIT85 பிற கலாசாரங்களின் செல்வாக்கினால் முஸ்லிம்களுக்குக் கிடைத்த கிரேக்க, இந்திய, பாரசீக, ஸிரிய நூல்கள் முஸ்லிம்களிடையே புவியியற்துறை வளர்ந்து
29

செழிப்படையப்பெரிதும் உதவின. இதனைப்பற்றி அடுத்த அத்தியாயம் ஆராய்கிறது.
பாலைவன வாசிகளுக்கு வானவியலில் மிகுந்த ஆர்வமிருந்ததோடு அதில் பயன்பாடும் அதிகமாக இருந்தது. இதற்கும் கணிதத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு நட்சத்திர நிலைகளைப் பற்றிய அறிவே அகல நெடுங்கோடுகளை நிர்ணயிக்க உதவுகின்றது. இவ்வகையில், வானவியிற் புவியியலும் படவரை கலையுமே முதன் முதலாக அவர்களது கவனத்தை ஈர்த்தன.11 தொடர்ந்து பிரயாண நூல்கள், பாதை விளக்க நூல்கள், பிரதேசப்புவியியல் நூல்கள், புவியியல் அகராதிகள் போன்ற புவியியலின் பல்வேறு கிளைத்துறைகளைச் சேர்ந்த நூல்கள் தோன்றலாயின. எனினும், தொகுத்து நோக்கும் போது, முஸ்லிம்கள் புவியியலுக்கு ஆற்றிய பங்களிப்பினை நான்கு பிரிவுக்குள் அடக்கி விடலாம். அவையாவன:
1. பொதுப்புவியியலும் பிரதேசப் புவியியலும் 2. விஞ்ஞானப் புவியியலும் ஆராய்ச்சிக்
கட்டுரைகளும் 3. மானிடப் புவியியலும் சமூகப் புவியியலும் 4. படவரை கலை
30

Page 19
பிரதேசப் புவியியல்
இப்பிரிவினுள் பாதைவிளக்க நூல்கள் (கிதாபுல் மஸாலிக் வல் மமாலிக்) நாடுகளைப் பற்றிய நூல்கள் (கிதாபுல் புல்தான்), அகராதிகள், அன்றாட நிகழ்ச்சிக் குறிப்பேடுகள் (Diary), பிரயாணக் குறிப்புகள் என்பவற்றினை அடக்கலாம்.
இப்னு குர்தாத்பிஹ் (ஏ.912) என்ற புவியியலாளரே பாதை விளக்க நூல்கள் எழுதுவதைத் தொடங்கி வைத்தார். அரபு உலகின் பிரதான வர்த்தகப் பாதைகளைப் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை இவர் முன்வைத்தார். சீனா, யப்பான், கொரியா ஆகிய நாடுகளைப் பற்றிய வர்ணனைகளையும் இவரது நூல் கொண்டிருக்கின்றது. இத்தொடரில் பிற்காலத்தில் தோன்றிய பாதை விளக்க நூல்களுக்கு இந்நூல் முன்னோடியாகவும், முன்மாதிரியாகவும் அமைந்தது. அல்மர்வாருஸி (இ887), ஸராக்ஸி (3).889), அபூஸைத் அல்-பல்கி (இ933) போன்றோரும் குறிப்பிடத்தக்க பாதை விளக்க நூல்களை எழுதிய ஆசிரியர்களாவர். அல்-பல்கி, கிதாபுல் அஷ்கால் (தேசப்பட நூல்) என்ற நூலையும் எழுதியுள்ளார்.
அபுல் பராஜ் அல்-பக்தாதி (இ922), அல்-ஜெய்ஹானி (ஏ.893-907) ஆகியோர் இருவரும் அரசிறை (கிதாபுல் கராஜ்) பற்றி இரு நூல்களை
31

எழுதினர். பல்கி, அல்-இஷ்தக்ரி இப்னு ஹவ்கல் (977) ஆகியோர் புற உருவப்படங்களோடு கூடிய வர்ணனை புவியியலை முன்வைத்தனர். முஸ்லிம் ஸ்பெயினில், கோர்டோவாவைச் சேர்ந்த அல்-பக்ரி (இ1094) இதே நுட்பத்தைப் பின்பற்றி பாதை விளக்க நூல் ஒன்றினையும் புவியியல் அக்ராதியையும் எழுதினார்.
பாதை விளக்க நூல்களில் உள்ள விடயங்கள் விரிவுபடுத்தப்பட்ட வகையில், நாடுகளைப் பற்றிய நூல்களும் புவியியல் அகராதிகளும் விவரத் தொகுப்பு நூல்களும் அமையலாயின. அல்-யஃகூபி (891) இவ்வகையைச் சேர்ந்த நூல்களை எழுதியோருள் மிகப் பிரபல்யமானவர். கிதாபுல் புல்தான்' என்ற இவரது நூலிலே இடவிளக்கவியல் சார்ந்த விபரங்களும் பொருளியல் சார்ந்த விபரங்களும் காணப்படுகின்றன. அரேபியாவி லிருந்து வட ஆபிரிக்கா வரையிலுள்ள பிரதேசங்கள் பற்றியும் அவற்றிலுள்ள நகரங்கள் பற்றியும் இவர் எழுதினார். அல்-பலாதுாரி (AL-Baladhure) (869), goi)-alpigiT6f(902), glogy ருஸ்தா (903) இப்னு அல்-ஹாயிக் (இ945) முஹல்லபி (985) ஆகியோர் இவ்வகையைச் சேர்ந்த நூல்களை எழுதிய மற்றும் சில ஆசிரியர்களாவர். பாரசீக மொழியில் எழுதப்பட்ட ஹ"தூதுல் ஆலம்' (ஏ.982) என்ற நூல் பிரதேசஅடிப்படையில் உலகப் புவியியலை முன் வைக்கின்றது. மேற்கத்திய
32

Page 20
இஸ்லாமிய உலகிலே அல்-தாரிகி (973), கிரானடாவைச் சேர்ந்த அல்-ஸ"ஹற்ரி (1137), அல்-முனஜ்ஜிம் (இ.1068) என்போர் நாடுகளைப் பற்றிய நூல்களை எழுதினர். LIITéorinës அல்-ஹமவியால் (124) எழுதப்பட்ட 'முஃஜமுல் புல்தான் குறிப்பிடத்தக்கதொரு சிறந்த புவியியல் நூலாகும்.
கடற்பயணமும் புவியியற் குறிப்புகளும்
முஸ்லிம் மாலுமிகளும், புவியியலாளர்களும், வர்த்தகர்களும், கடற்பயணிகளும் வெகு தொலைவிலுள்ள நாடுகளுக்குப் பிரயாணங்களை மேற்கொண்டு அருமையான புவியியற் தகவல்களை அடக்கிய பல நூல்களை ஆக்கியளித்து, பிரதேசப்புவியியல், வர்ணனைப் புவியியல் (Descriptive Geography) Gustairp 560psiellégi பங்களிப்புச் செய்துள்ளனர். இவ்வகையில், ஆரம்பகாலப்பிரிவைச் சேர்ந்த ஸ"லைமான், இப்னு ஷாஹற்ரியார் ஆகிய கடலோடிகளின் நூல்கள் குறிப்பிடத்தக்கவை. முறையே சீனா, இந்தியா பற்றிக்கூறும் அக்பாருல் ஸின்', 'அக்பாருல் ஹிந்து' என்பன ஸ"லைமான் என்னும் வர்த்தகரின் அனுபவங்களை அடியொற்றி எழுதப்பட்டவையாகும். இந்தியாவைப்பற்றிக் கூறும் 'அஜாயிபுல் ஹிந்து என்னும் நூல் இப்னு
33

ஷாஹற்ரியாரினால் (953-54) எழுதப்பட்டது. பிற்காலப் பிரிவைச் சேர்ந்த கப்பலோட்டிகளான அஹ்மத் இப்னு மாஜித் (1489), ஸுலைமான் அல் மஹற்ரி (16ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதி) ஆகியோர், தமக்கு முன் சென்ற முஹம்மத் இப்னு ஸாதான், ஷஹற்ல்இப்னு அபான் உட்பட பல பெரிய கடலோடிகளின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர்.12 மாஜித், மஹற்ரி என்போரை யடுத்து, நூலாசிரியர்களும் இந்துசமுத்திரத்தில் கப்பலோட்டுவதில் வல்லவர்களுமான பீர்ரஈஸ், ஸெய்யித் அலி அல் ஸிபாக்ஸி (1551) என்போர் முக்கியமானவர்களாகத் திகழ்கின்றனர். Y
இந்திய உப கண்டம், தென்கிழக்காசியா, ஏனைய பிரதேசங்கள் பற்றி அல்-மஸ்ஊதி எழுதிய பிரயாணக் குறிப்பு குறிப்பிடத்தக்கது. இது கவர்ச்சியான இலக்கியப்பாணியில் எழுதப் பட்டுள்ளது. தங்கப் புன்னிலங்களும் இரத்தினச்சுரங்கங்களும் (947) என்ற இந்நூல், வரலாறு, புவியியல் தொடர்பான மகத்தானதொரு கலைக்களஞ்சியமாகும் அல்-இஷ்தக்ரி , இப்னு ஹவ்கல், அல்-மக்திஸி(986), நாளிர் குஷ்ரூ (1003) அலி அல்-ஹராவி (1214) ஆகியோரும் சிறந்த பிரயாணக் குறிப்புகளை எழுதிய ஆசிரியர்களுள் சிலராவர். 14ம் நூற்றாண்டு தொடக்கம் 16ம் நூற்றாண்டு வரை தோன்றிய கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஹாபிஸ் அப்ரூ, அப்துல் ரஸ்ஸாக்
34

Page 21
ஸமர்க்கந்தீ அபுல் பஸ்ல் அல்லாமீ, அமீன் அஹற்மத் ராஸி ஆகியோர் குறிப்பிடத்தக்க பிரயாணக் குறிப்புகளை எழுதினர். ஸ்பெயின், மேற்கத்திய இஸ்லாமிய உலகு வட ஆபிரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுள் அல்-மாஸினி, அல்-அந்தலூஸி (1169) வலன்ஸியாவைச் சேர்ந்த இப்னு ஜுபைர் (இ.1217), இப்னு ஸஈத் அல் மஃரிபி (இ.1275) ஆகியோரும் மற்றோரும் தாம் கண்ட உலகினைப் பற்றிச் சிறப்பான வர்ணனைகளை எழுதியிருக்கின்றனர். மொரோக்கோவைச் சேர்ந்த சம்ஸ"த்தீன் இப்னு பதூதா (இ.1377) வின் பிரயாணக் குறிப்புகளோ ஒப்பற்றனவாகக் காணப்படுகின்றன.
விஞ்ஞானப் புவியியல்.
புவியியற் கோட்பாடுகளை ஒழுங்கு முறையாக எடுத்துக் காட்டுதல், ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்தல், இயற்கைத் தோற்றப்பாடுகளைப் பற்றி விமர்சன ரீதியான பரிசீலனைகளை மேற் கொள்ளல் என்பன முஸ்லிம்களது புவியியற் பங்களிப்பின் சிறப்பியல்பினை எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாறான முயற்சிகள் பத்தாம் நூற்றாண்டிலேயே குறிப்பிடத்தக்க அளவு நடந்தேறியிருக்கின்றன. அல்-குவாரிஸ்மியின்
35

‘விஞ்ஞானங்களின் திறவு கோல்கள்’ (Mafath al-ulum), இப்னு அல்-நதீமின் 'கலைக்களஞ்சியம் (அல்-பிஹிரிஸ்க்) இக்வானுஸ் ஸபாவின் 'பிரபல்யம் வாய்ந்த ஆய்வுக்கட்டுரைகள்' என்பன இத்தகைய நூல்களாகும். மானிடச் செயற் பாட்டிலும், மிருகங்களின் தொழிற்பாட்டிலும்
செல்வாக்கினையும் உடல்நலம், பொருள் வளம் என்பனவற்றிற்கு அதனோடு உள்ள
தொடர்பினையும் இவை வலியுறுத்தின. மஸ்ஊதீ நில நடுக்கங்கள், பல்வேறு புவிச்சரிதவியற் தோற்றப்பாடுகள் என்பன பற்றிய விளக்கங்களை அளித்துள்ளார். ஆற்றின் தின்னல்வட்டம், கடல்களின் தோற்றம், பெருக்குவற்று போன்றன பற்றியும் ஆராய்ந்திருக்கின்றார்.
கல்விமானும், மருத்துவ அறிஞரும், மாபெரும் தத்துவஞானியுமான இப்னு ஸினா (980-1037), இயற்கைத்தோற்றப்பாடுகளில் ஆழ்ந்த அக்கறை காட்டினார். . மலைகளினதும், பள்ளத்தாக்குகளினதும் தோற்றம் பற்றிய அவரது கருத்துகளும், கணிப்பொருள்களையும், புவிச் சரிதவியற் பிரச்சினைகளையும் பற்றிய அவரது ஆய்வுக்கட்டுரைகளும் மறுமலர்ச்சிக்காலம் வரை மேற்கு ஐரோப்பாவில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்தன.13 பேரறிஞரான அபூ ரய்ஹான் அல் -பிருனி (973-1048) எழுதிய பல நூல்களுள்
36

Page 22
கிதாபுல் ஹிந்து, கானுனுல் மஸ்ஊதி, பண்டைய சமூகங்களின் காலக்கணிப்புமுறை (Chronology o Ancient Nations) ஆகிய நூல்களும், அட்சரகணிதம், பெறுமதி வாய்ந்த கற்கள் பற்றிய நூல்களும் விஞ்ஞானங்களுக்கு அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளாகும். அவருக்குப்பின்னர், பெரும் புவியியல் அறிஞரான அல்-இத்ரீஸி தோன்றினார். இவர் எழுதிய '5/6mübanoğ56ü (pajığTās” (Nuzhat al-Mustaq), பிரபல்யம் வாய்ந்த ஒரு விஞ்ஞானப் புவியியல் நூலாகும். இவர் நோர்மானிய மன்னன் இரண்டாம் ரோஜரின் அரசசபையில் பல ஆண்டுகளைக் கழித்தார். அல்-இத்ரீஸியின் புவியியல் நூலும், பிரயாணக்குறிப்புகளும், இவரால் வரையப்பட்டஉலகப்படமும் இவர் மிகப் பெரும் புவியியலாளர் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
இவரை அடுத்துத்தோன்றிய புகழ்பெற்ற புவியியலாளர்கள் பின்வருமாறு: அல்-கஸ்வீனி (இ.1283), அபுல் பிதா (பி.1273), ஹம்துல்லாஹ் முஸ்தவ்பி (1340), அல்-திமிஷ்கி (இ.1327). அல்-கஸ்வீனியின் 'அண்ட அமைப்பியல் (அஜாயிபுல் மக்லூகாத்) மத்திய காலத்தில் மட்டுமன்றி தற்காலத்திலும் பிரபல்யம் வாய்ந்ததாகத் திகழ்கின்றது. தக்வீமுல் புல்தான்' எனும் நூலின் ஆசிரியரான அபுல் பிதா, தனது
37

நூலின் மொழிபெயர்ப்புகளின் வாயிலாக ஐரோப்பாவிலே நன்கு அறியப்பட்ட ஒருவராவார். முஸ்தவாபி, பாரசீக மொழியில் நுஸ்ஹாதுல் குலூப்" என்னும் புவியியில் நூலை எழுதினார். ஹ"லாகுவின் பேரனாரின் காலத்தில் முஸ்லிம் நாடுகளின் மீது தாத்தாரியரின் படையெடுப்பு நிகழ்ந்த பின்னரே இந்நூல் எழுதப்பட்டது. ஹாபிஸ் அப்ரூவின் "ஸ"ப்ததுல் தவாரிஹற்', அண்ட அமைப்பியல் பற்றிக் கூறுகின்ற ஒரு நூலாகும். இது 1414ல் தைமூரின் காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்டது.14
கணிதப் புவியியலும் படவரைகலையும்
வானவியற் புவியியல், கணிதப் புவியியல் என்பன ஆரம்பத்தில் கிரேக்க, பாரசீக, இந்திய செல்வாக்குகளுக்கு உட்பட்டிருந்த போதிலும், காலப்போக்கில் முஸ்லிம்களின்அறிவாற்றல், அனுபவம் என்பவற்றின் அடிப்படையில் வளர்ச்சியடையலாயின. பூமியின் உருவம், அளவு, அசைவுகள், அகல நெடுங்கோடுகளின் கணிப்பு, நட்சத்திரங்களினதும் ஏனைய விண் பொருட் களினதும் நகர்ச்சி போன்றனவே கணிதப் புவியியலுக்கான விடயங்களாக அமைந்தன.
38

Page 23
அல்மஜெஸ்ட் என்ற பெயரில் மேற்குலகில். இன்று அறியப்படுத்துகின்ற தொலமியின் Megale Syntaxis Mäthematike GT6Tp gimi Gü SF6ötlugsTiib நூற்றாண்டின் முன்னைய அரைப் பகுதியில் மொழிபெயர்க்கப்பட்டது. இதனையடுத்து, கணிதப் புவியியல் துறையில் அல்-பத்தானி அல்-ஹாஸிப், அல்-நஹாவந்தி யெஹியா பின் மன்ஸ"ார், அல்-மர்வாருஸி, மாஷா அல்லாஹற். அல்-குவாரிஸ்மி அல்-கிந்தி, அபூ மஃஷர், அல்-மஹானி, மூஸா இப்னு ஷாகீரின் புத்திரர்கள் போன்றோர் ஈடுபட்டு உழைத்தனர்.
கலீபா அல்-மஃமூனின் காலத்தில் பூமியின் அளவை நிர்ணயிக்கும் முகமாக 36 பாகை வட அகலக் கோட்டில் ஒரு பாதையை அளவிட்டமை, கணிதப் புவியியல் துறையில் நிகழ்ந்த மகத்தானதொரு சம்பவமாகும். வானவியல், புவியியல் நடவடிக்கைகளுக்காக நத்மூர் சமவெளியில் ஒரு வானாராய்ச்சி நிலையம் கட்டப்பட்டது. ஏனைய அளவீடுகளுக்குப் பின்னர் பூமியின் சுற்றளவு 25,009 மைல் எனவும், விட்டம் 6,500 மைல் எனவும் கணக்கிடப்பட்டது". ஒரு பெரிய உலகப் படமும் வரையப்பட்டது. அது
* தற்காலக் கணக்கீடுகளின்படி மத்திய கோட்டி
னுடாகப் பூமியின் சுற்றளவு 24,902 மைல்; முனைவுகளினுடாக 24,860 மைல் மத்திய கோட்டில் பூமியின் விட்டம் 7.927 மைல்.
39

இப்போது கிடைக்கவில்லை.15 பிற்பட்ட காலங்களில் இப்னு அல்-ஆலம், அல்-ராஸி, அல்-கூஹி அபுல்வபா ஆகியோரும் இத்துறைக்குப் பங்களிப்புச் செய்தனர்
கெய்ரோவில் அல்-அஸிஸ், அல்-ஹாகிம் ஆகியோரின் காலப்பகுதிகளில் பலவானாராய்ச்சி நிலையங்கள் நிறுவப்பட்டன. இப்னுயூனுஸ், இப்னு அல்-ஹைதம் போன்ற மேதைககள் இங்கே பணியாற்றினார்கள். கிழக்கில் இப்னு ஸினாவும், இந்தியாவில் (பாகிஸ்தானின் வடபகுதி) அல்-பிரூனியும் பூமியின் அளவீடுகளில் ஈடுபாடு கொண்டிருந்தனர். வட ஆபிரிக்காவிலும், ஸ்பெயினிலும் கூட பல அறிஞர்கள் இப்பணியில் ஆர்வம் காட்டினர். அல்-மர்ராகூஷி, அல்-மஜ்ரிதி அல்-ஸர்காலி (1029-1088), ஜாபிர் (Geber) இப்னு Lugogotan ib (AVenpace), 904 ugsy (5623,5 (AVerroes, இ.1198) ஆகியோர் கணிதப்புவியியல் சம்பந்தமான நூல்களை எழுதியிருக்கின்றனர். ஸெல்ஜுக் குகளின் காலத்தில் உமர் கையாம் பெரும் கணிதவிற்பன்னராகவும், வானவியல் அறிஞரா கவும் திகழ்ந்தார்.
ஸமர்கந்திலிருந்த உலுக்பெக்கின் வானாராய்ச்சி நிலையமும், மரகாவிலிருந்த நாஸிருத்தீன் அல்-தூஸியின் பெரும் வானாராய்ச்சி நிலையமும் விஞ்ஞானப் பணிகளுக்கான மையஸ்தலங்களாகத் திகழ்ந்தன. கலீபா அல்-மஃமூனின் காலத்திலிருந்து
40

Page 24
ஏறக்குறைய 600 வருடங்களுக்குள், கிட்டத்தட்ட20 வானாராய்ச்சி நிலையங்கள் கட்டப்பட்டன."
படம் வரைதலை முஸ்லிம்கள் புவியியலின் ஒரு பொதுவான அம்சமாகக் கருதினர். அவர்களது புவியியல் நூல்களும், படங்கள் பலவற்றைக் கொண்டனவாக இருந்தன. இவற்றுள் பல இன்று கிடைக்கவில்லை. அல்-பல்கி, அல்-இஷ்தக்ரி, இப்னுஹவ்கல், அல் பிரூனி அல்-இத்ரீஸி ஆகியோரால் வரையப்பட்ட படங்கள் பிரபல்யம் வாய்ந்தவைகளாகும். எறியங்கள் (Projection) பற்றியும் அவர்கள் ஆராய்ச்சி செய்தனர். இதனைவிட கடற்பரப்பு, பாதைகள் பற்றிய விளக்கப்படங்கள் (Sea Charts) வரைவதிலும், கப்பல் ஒட்டக்கலை சார்ந்த நூல்கள் எழுதுவதிலும் கூட முஸ்லிம்கள் உலகிற்கு முன் மாதிரியாகத் திகழ்ந்தனர்.
மானிடப்புவியியலும் சமூகப் புவியியலும்
மேலே குறிப்பிட்ட நூல்களிற் பல மானிடப் புவியியல், சமூகப் புவியியல் சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கியிருக்கின்றன. பெளதீகச் சூழலினதும், கலாசார சூழலினதும் செல்வாக்குகள், பங்கு என்பன பற்றி அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்த நோக்கின் உச்ச நிலையை இப்னு கல்தூன் எழுதிய கிதாபுல் இபர்
41

எனும் நூலில் காணலாம். குடியிருப்புகள், நகராக்கம், விவசாயப் புவியியல், பொருளாதாரப் புவியியல் என்பன பற்றியும் இவர் எழுதியிருக்கின்றார்.
முஸ்லிம் புவியியலாளர்கள் விருத்தி செய்த அறிவும் கருத்துப் படிவங்களும் பல வழிகளின் மூலம் ஐரோப்பாவைச் சென்றடைந்தன. இவை மேலைத் தேசச் சிந்தனையாளர்களை மேற்கொண்டும் ஆய்வுகளைச் செய்யத் தூண்டிவிட்டன. பூமியின் உருவம், பருமன், அசைவுகள், புவிச் சரிதவியற் செயற்பாடுகள், சமுத்திரங்கள், காலநிலை, தாவரங்கள், மிருகங்கள் என்பவற்றின் பரம்பல், ஆபிரிக்காவிலும் தூர கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் உள்ள முன் கண்டறியப்படாத நிலங்களைப் பற்றிய அறிவு என்பவற்றோடு தொடர்பான விடயங்களே குறிப்பாக மேற்குலகின் கவனத்தை ஈர்த்தன. முஸ்லிம்களிடமிருந்து பெற்றுக் கொண்ட புவியியல் அறிவு மேற்கத்திய கிறிஸ்துவர்களுக்குப் பிற்காலத்தில் ஆய்வுப் பயணங்களையும், கண்டு பிடிப்புகளையும் மேற்கொள்ள உதவியாக அமைந்தன. ஜே.எச்.கிரெமர்ஸ் கூறுவது போன்று, "உலகவர்த்தகம், புவியியல் அறிவு, புதிய நிலப்பகுதிகளைக் கண்டறிதல் ஆகிய துறைகளில் ஐரோப்பா, தனது கலாசார மூதாதையர்களாக அவர்களையே (முஸ்லிம்கள்) கொள்ள வேண்டும்.
42

Page 25
வர்த்தகம், கப்பலோட்டல் சம்பந்தப்பட்ட சொற்களிற் பல அரபு மூலத்திலிருந்து தோன்றியிருப்பதைக் கொண்டு, இத் துறைகளில் இஸ்லாம் எமது நவீன நாகரிகத்தில் ஏற்படுத்தியிருக்கின்ற செல்வாக்கினைக் கண்டு கொள்ள முடியும். இச் செல்வாக்கின் அளவினை இத்துறைகளின் வரலாற்று ரீதியான வளர்ச்சியை ஆராய்வதன் மூலம் மட்டுமே நிரூபிக்க முடியும் அதன் மீதுதான் நடைமுறையிலுள்ள எமது புவியியல் அறிவு விரிவடைந்திருக்கின்றது."
உசாத்துணைக் குறிப்புகள்
1. Dr. Robert Briffault, The making of
Humanity, p.194
2. Art., "Geography in the Nineteenth Century' By George Tatham in the Geography in the 20th Century, Edited by Griffith Taylor, P28
3. Ibid., p.30
4. Ibid.
5. Collins Cencise Encyclopedia of Explora
tions, p.85 ۔۔۔۔
6. Nafis Ahmad, Muslim Contribution to Geog
raphy, p.3
7. Ibid., pp.3-4
8. Ibid., p.4
9. K. Jamil Ahmad, Heritage of Islam p.7
43

1O. 1.
12.
13. 14. 15. 16. 17.
Philip. K.Hitti, History of the Arabs, p.306 Nafis Ahmad, Muslim COntribution tO Geography, p. 12 Nafis Ahmad, Muslim and the Science of Geography, p.6
Ibid., pp 7-8
Ibid., p.8
Ibid., p.9
Ibid., Art., "Geography and Commerce by
J.H.Kramers in The Legacy of Islam, p.82
44

Page 26
அத்தியாயம்-2 முஸ்லிம்களின் புவியியற் பங்களிப்புக்கு அடிப்படையாக அமைந்த ஆக்கங்கள்
முஸ்லிம்களின் புவியியற் பாரம்பரியம் பழமை வாய்ந்ததாக இருந்தாலும், விஞ்ஞான அடிப்படையிலான புவியியல், அப்பாஸியர் காலத்தில், அதிலும் சிறப்பாக பக்தாத் இஸ்லாமிய இராஜ்யத்தின் தலைநகராக அமைந்திருந்ததில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது. ஈரான், எகிப்து, இந்தியா போன்ற நாகரிக வளர்ச்சியடைந்த நாடுகள் வெற்றி கொள்ளப்பட்டதன் மூலம் அவ்வந்நாட்டு மக்களினது விஞ்ஞான , கலாசார முயற்சிகளைப் பற்றிய நேரடியான அறிவை அரேபியர் பெற்றனர். எனினும், பிற சமூகத்தவர்களினது அறிவைப் பெறுவதற்கான செயல் முறைகளும் அதனைத் தன்னியற் படுத்தும் முயற்சியும் அபூ ஜஃபர் அல்-மன்ஸ"ாரின் காலத்தில்தான் ஆரம்பமாயிற்று.
அல்-மன்ஷுர்ர், வானவியல், புவியியல், கணிதம், மருத்துவம் போன்ற பல்வேறு விஞ்ஞானத்துறைகள் சம்பந்தமான பிற மொழி
45

நூல்களை அரபு மொழியில் பெயர்ப்பதில் தீவிர ஈடுபாடு காட்டினார். அவரால் தொடங்கி வைக்கப்பட்ட இப்பணி ஏறக்குறைய 200 ஆண்டுகளாக இஸ்லாமிய உலகிலே நிலை பெற்றிருந்தது.
முஸ்லிம்களின் புவியியற் பங்களிப்புக்கு அடிப்படையாக அமையக் கூடியவகையில் இந்திய பாரசீக, கிரேக்க நூல்கள் பல அரபு மொழியில் பெயர்க்கப்பட்டன. இதன் மூலம் இச்சமூகங்களினது புவியியல் அறிவை அரேபியர் பெற்றதோடு, பிற்காலத்தில் தோன்றிய புவியியல் நூல்களிலும் இவற்றின் செல்வாக்கினைக் காண முடிந்தது.
இந்தியமூலங்கள்
அல்-மன்ஸ்"ாரின் காலத்தில் சூரிய சித்தாந்தம் எனப்படும் சமஸ்கிருத நூல், அரபு மொழியில் பெயர்க்கப்பட்டது. இதன் மூலமே இந்திய வானவியல், புவியியல் பற்றிய وypهلأ அரேபியர்களை வந்தடைந்தது. மேலும், இக்காலப் பிரிவில் இப்றாஹீம் பின் ஹபீப் அல் பஸாரியால் (171 / 786க்குப் பின்) எழுதப்பட்ட கிதாபுல் ஸிஜ், முஹம்மத் பின் மூஸா அல்-குவாரிஸ்மியால் எழுதப்பட்ட அல்-ஸிந்ஹந்துல் ஸஹீர், அபூ அப்துல்லாஹற் அல்-மர்வாஸி அல்
46

Page 27
பக்தாதியால்(மூன்றாம்,ஒன்பதாம் நூற்றாண்டின் பின்னைய அரைப்பகுதியில்) எழுதப்பட்ட அல்-ஸிந்து ஹிந்து ஆகிய நூல்களுக்கும், ஏனையவற்றிற்கும் இந்நூலே அடிப்படையாக அமைந்தது.1
கந்தக் கடையகவும், ஆரியப்பட்டரால் எழுதப்பட்ட ஆரியப்பட்டியமும் இக்காலப் பிரிவில் மொழிபெயர்க்கப்பட்ட மற்றைய சமஸ்கிருத நூல்களாகும். சூரிய சித்தாந்தமும் ஏனைய வானவியல் நூல்களும் அரபு மொழியில் பெயர்க்கப்பட்டதனால், முஸ்லிம்கள் இந்தியப் புவியியல் பற்றிய பரிச்சயத்தைப் பெற்றனர். இவற்றின் மூலம் உஜ்ஜைனி (Ulain) லிருந்து நெடுங்கோடுகள் கணக்கிடுதலை அவர்கள் கற்றுக் கொண்டனர்.2
அதே நேரத்தில் ஆரம்ப கால அரபுப் புவியியல் அறிஞர்கள், உலகிற்குஒருமையம் இருக்கிறதுஎன்ற கருத்தை இந்தியாவில் இருந்து பெற்றுக் கொண்டனர். அம்மையம் அவர்களால் அரீன் (Arin) என்ற பெயரால் வழங்கப்பட்டது. இது இந்திய நகரமான உஜ்ஜைன் என்பதன் திரிபாகும். இங்கே ஒரு வானாராய்ச்சி நிலையம் இருந்தது. இந்நகரத்தினூடாகச் செல்லும் நெடுங் கோட்டில்தான் 'உலக உச்சி இருக்க வேண்டுமேன நம்பப்பட்டது.3 ஆனால், பெரும்பாலான முஸ்லிம் புவியியல் அறிஞர்கள் உலகத்தின் மத்திய
47

பகுதி பற்றிய கருத்தினை, இஸ்லாமிய உலகின் மையமான மக்காவை உள்ளடக்குகின்ற வகையில், ஒரு புதிய முறையில் மாற்றியமைத்தனர்.
இந்தியாவிடமிருந்து முஸ்லிம்கள் பெற்றுக் கொண்ட வேறு சில புவியியற் கருத்துகள் பின் வருமாறு: ஆகாயத்தின் நாளாந்தச் சுழற்சி ஒரு தோற்றப்பாடேயாகும். பூமி தனது அச்சில் சுழல்வதனாலேயே அவ்வாறு தோன்றுகின்றது. பூமியின் மேற்பரப்பில் நிலமும் நீரும் சரி சமமாக இருக்கின்றது. பூமத்தியரேகைக்கு வடக்கிலுள்ள பகுதியில் மட்டுமே மக்கள் குடியேற்றம் இருக்கின்றது.
பாரசீகச் செல்வாக்கு
அரேபியரது புவியியலிலும் LIL-616)] கலையிலும் ஈரானியச் செல்வாக்கை எடுத்துக் காட்டுவதற்கான போதிய சான்றுகள் அவர்களது புவியியல் ஆக்கங்களில் காணப்படுகின்றன. ஆனால், ஈரானியரது அறிவு அரேபியரை வந்தடைந்த உண்மையான வழிமுறை பற்றி விரிவாக ஆராயப்படவில்லை. ஜே.எச். கிரெமர்ஸ் எடுத்துக் காட்டுவது போல, 9ம் நூற்றாண்டில் அரேபியரது புவியியலில் கிரேக்க செல்வாக்கு உச்சநிலையை அடைந்திருந்தது. ஆனால், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்
48

Page 28
இருந்து கிழக்கின் செல்வாக்கு மேற்கின் செல்வாக்கினை விடக்கூடுதலாகக் காணப்பட்டது. பெரும்பாலான நூலாசிரியர்கள் ஈரானிய மாகாணங்களைச் சேர்ந்தவர்களாததால், இச் செல்வாக்கு பிரதானமாக ஈரானில் இருந்தே ஏற்பட்டிருக்கவேண்டும் ஜுந்தேசாபூர் இன்னமும் அறிவாராய்ச்சிகளுக்கான மிகப்பெரும் மையமாகத் திகழ்ந்து கொண்டிருந்தது. இக்காலப் பிரிவில் ஈரானின் சிலபகுதிகளில் இருந்துவந்தவானவியல், புவியியல், வரலாறு போன்ற துறைகளைச் சேர்ந்த பாரசீக ஆக்கங்களையும் ஏனைய துறைகளைச் சேர்ந்த ஆக்கங்களையும் பற்றி அரேபியர் அறிந்திருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. இவற்றினுள் சில அரபு மொழியில் பெயர்க்கப்பட்டன. இத்துறையில் எழுந்த ஆக்கங்களுக்கு இவை அடிப்படையாக அமைந்தன.4
அரபுப் புவியியலாளர்களால் பின்பற்றப்பட்டு வந்த பாரசீகப் புவியியற் கருத்துக்கள், மரபுகள் பலவற்றுள் 'ஏழு கிஷ்வார்கள்’ (KishWars) பற்றிய கருத்து மிக முக்கியமானது. இம்முறைப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிஷ்வாரைக் குறிக்கும் வகையில் கேத்திரகணித முறைப்படி அமைந்தஏழு சம வட்டங்களாக உலகம் பாகுபடுத்தப்பட்டது.5 உலகத்தை வட்ட வடிவான 9J(Լք பிராந்தியங்களாகப் பாகுபடுத்தலானது ஏழு
49

மடங்காகக் குறிக்கப்படும் ஆன்ம இயல் சார்ந்த படிநிலை அமைப்பின் பிரதிபிம்பமாகும்.6 கிரேக்க (pappu'gyub (Schame of the Climates) utprés, கிஷ்வார் முறையிலும் காணப்படுகின்ற ஏழு என்ற குறியீட்டு இலக்கத்தின் முக்கியத்துவத்தை முஸ்லிம் புவியியலறிஞர்கள் நன்கு அறிந்திருந்தனர். இஸ்லாமிய காலப் பிரிவைச் சேர்ந்த புவியியல் அறிஞர்களிடம் இக்கருத்தின் தாக்கத்தைக் காணமுடிகின்றது. எனினும், ஏழு பிராந்தியங்கள் 6 rairp aradavorë,605 (Concept) LIT SGautaufurt களுக்குரியது. பண்டைக் காலத்தில் பாபிலோனிய மக்கள் ஏழு கிரகங்கள், ஏழு நாட்கள் என்று குறிப்பிட்டுப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஏழு என்ற இலக்கத்தை தெய்வீகத் தன்மை வாய்ந்ததாக அவர்கள் கருதினார்கள்.7
மேலும், கடல், கடற்பயணம் பற்றி எழுதப்பட்ட அரபு நூல்களிலும் படவரை கலையிலும் பாரசீக மரபுகள் ஆழ்ந்த செல்வாக்குச் செலுத்தின என்பதனை இவற்றிலுள்ள சொற்பிரயோகங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அதாவது இத்துறையைச் சேர்ந்த நூல்களிலுள்ள பல அரபுச் சொற்கள் epGuở சொற்களில் இருந்து 897שחj_ן தோன்றியிருக்கின்றன. விரிவஞ்சி இவற்றுக்கான உதாரணங்கள் இங்கே தரப்படவில்லை.
50

Page 29
கிரேக்க நூல்கள்
கிரேக்க மூல நூல்களைப் பொறுத்தவரையில் தொலமியின் 'Geography முஸ்லிம்களுக்கு மிகவும் பரிச்சயமானதாக இருந்தது. இந்நூலும் 60LGJaou& (tyre) Grig (Marinos) LDrfKBaOTITomSlait புவியியல் நூலும்பலதடவைகள் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டன. மேலும், அவர்கள் பிளேட் டோவின் Timaeus, அரிஸ்டோட்டிலின் Meteorology, De Caelo Guiu išsiš56061Tuyuh நன்கு அறிந்திருந்ததோடு, இந்நூல்களில் பொதிந்திருந்த புவியியல் தகவல்களுடனும் நன்கு பரிச்சயம் பெற்றிருந்தனர். ஸ்ட்ரேபோ போன்றோரின் வர்ணனைப் புவியியல் ஒரு போதும் அரபுமொழியில் பெயர்க்கப்படவில்லை.8 தொலமியின் Geography 874-க்கு முன்னர்
குறிப்பாக யாக்கூப் பின் இஸ்ஹாக் அல்-கிந்தியாலும் தாபித் இப்னு குர்ரா (இ901)வாலும் நேரடியாகவோ அல்லது சிரிய மொழியினூடாகவோ பல முறை அரபு மொழியில்
பெயர்க்கப்பட்டிருக்கிறது. தொலமியால் எழுதப்பட்ட அல்-மஜெஸ்ட் டெற்ராபிபிலன் (Tetrabiblon) என்பன முஸ்லிம்
புவியியலாளர்களால் பயன்படுத்தப்பட்ட மற்றும் இரண்டு நூல்களாகும்.
51

முஸ்லிம் புவியியலறிஞர்கள் மத்தியில் தொலமியின் நூல்கள் மிகுந்த செல்வாக்குச் செலுத்தின. ஆயினும், தொலமி எகிப்தியரிடமிருந்தும், பினிசியரிடமிருந்துமே பெருமளவு தகவல்களைப் பெற்றார். அவருக்கு முற்பட்ட்- கிரேக்க புவியியலறிஞர்களும் பிரயாணிகளும் கூட ஏனையவற்றோடு, நைல், எதியோப்பியா, உலகின் ஏழு பிராந்தியங்கள் போன்ற பல விடயங்களை உள்ளடக்கிய, புவியியலின் மரபு வழி வந்த கோட்பாடுகளின் மெய்ம்மையை நிரூபிப்பதற்கு எகிப்திய, பபிலோனிய மக்களிலேயே தங்கியிருந்தனர்.9
எவ்வாறாயினும், மேற்கூறப்பட்ட ஆசிரியர்களது நூல்களும், கிரேக்க வானவியல் அறிஞர்கள், தத்துவஞானிகள் போன்றோர் பலரது நூல்களும் அரபு மொழியில் பெயர்க்கப் பட்டதனால் கருத்துப் படிவங்களின் உருவிலும், கோட்பாடுகளின் உருவிலும், வானாராய்ச்சி முடிவுகள் என்ற உருவிலும் பல்வேறு தகவல்களும் விடயங்களும் முஸ்லிம்களுக்குக் கிடைக்கலாயிற்று. இவை பிற்பட்ட காலங்களில், முஸ்லிம்களது புவியியல், விஞ்ஞான அடிப்படையில் வளர்ச்சி அடைவதற்குப் பெரிதும் துணை செய்தன.
கணிதவியல் புவியியலுக்கான மூலாதாரங் களைப் பெருமளவுக்குக் கிரேக்க நூல்களில் இருந்தும், வர்ணனைப் புவியியலுக்கான
52

Page 30
மூலாதாரங்களைப் பாரசீக ஆக்கங்களில் இருந்தும் முஸ்லிம்கள் பெற்றுக் கொண்டனர். சில வேளைகளில் கிரேக்கர்களினதும், பாரசீகர்களதும் கருத்துகளுக்கு அல்லது முறையியலுக்கு (Methodology) இடையிலே ஒருவகையான போட்டி காணப் பட்டது.உதாரணமாக, பாரசீகர்களதுகிஷ்வார்முறையைப் பின்பற்றுவதா அல்லது கிரேக்கர்களது cimes முறையைப்
பின்பற்றுவதா என்பதில் குறிப்பாக
இத்தன்மையைக் காணமுடிந்தது.
ஏனைய அறிவுத்துறைகளைச் சேர்ந்த
கல்விமான்களைப் போல் -9|Մւյւն
புவியியலாளர்களும் தமது அறிவிற்குக் கிரேக்கர்களிலேயே தங்கி இருந்தாலும், அவர்களுக்குத் தெரிந்திருந்த Ф 6Х35, கிரேக்கர்களுக்குத் தெரிந்ததைவிட மிகப் பெரிய தாக இருந்தது. கிரேக்கர்களோ, கடைசி வரை கஸ்பியன் கடலுக்குக் கிழக்கில் உள்ள நாடுகளைப் பொறுத்தவரை தெளிவற்ற கருத்தையே கொண்டி ருந்தனர். இந்தோசீனாவுக்கு வடக்கிலுள்ள ஆசியாவின் கீழைக் கரையைப் பற்றி அவர்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை.
உசாத்துணை நூல்கள்
1. Encyclopaedia of Islam, Vol.II, P576

Seyyed Hossein Nasr. Islamic Science, p.38 Hitti, op .cit., p.384 Encyclopaedia of Islam, Vol.II, p.577
bid. S. H.Nasr., op.cit., p.37 Abbas MahmOüd al-akkad, The Arab's Impact on European Civilisation, p.47 8. S. H.Nasr, op.cit., p.38 9. Al-Akkad, op.cit., p.47 10. V.V. Bartold, Mussulman Culture, p.53
54

Page 31
அத்தியாயம் -3 9ம்-10ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த புவியியலறிஞர்களும் அவர்களது ஆக்கங்களும்
வானவியல், புவியியல் தொடாபான கிரேக்க நூல்கள் அரபு மொழியில் பெயர்க்கப் பட்டதையடுத்து, குறிப்பிடத்தக்க வகையில் புவியியல் துறை வளர்ச்சியடையலாயிற்று. கி.பி.9ம் நூற்றாண்டு முதல், ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலப் பிரிவு வரை விரியும் ஏழு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட காலப் பகுதிக்குள் பெருந்தொகையான புவியியல் அறிஞர்கள் தோன்றி, இத்துறையின் வளத்துக்கும், வளர்ச்சிக்குமாக உழைத்தனர். எனினும், இவ்வத்தியாயம் 9ம் 10-ம் நூற்றாண்டுகளில் தோன்றிய புவியியல் அறிஞர்களையும் அவர்தம் ஆக்கங்களையும் மட்டும் சுருக்கமாக ஆராய்கிறது.
பின்வரும் மூன்று பிரதான தலைப்புக்களில் விடயங்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
1. கணிதப்புவியியல்
2. பொதுவான புவியியல் நூல்கள்
3. கடற்பிரயாணமும் அதனோடு
தொடர்புடைய நூல்களும்
55

கணிதப் புவியியல்
முதலாவது அத்தியாயத்தில் குறிப்பிட்டது போன்று இடங்களையும், திசைகளையும் சரியாக நிர்ணயிக்க வேண்டியிருந்தமையால், ஆரம்பத்தில் முஸ்லிம்கள் கணிதப் புவியியலிலேயே கவனம் செலுத்தினர்.அவர்களது கணிதப் புவியியலில் பெரும் பகுதி, ஒரு புறத்தில் வானவியல் துறையின் சாதனைகளோடும், மறுபுறத்தில் புவியின் அமைப்பு, அளவு என்பவற்றோடு சம்பந்தப்பட்ட புவிப்பாத்தியலோடும் (GEODESY) தொடர்பு
6) II 6,
தொலமியின் 'புவியியல்', 'அல்மஜெஸ்ட் ஆகிய நூல்களின் அடிப்படைக் கூறுகளை அவர்கள் புனராய்வுசெய்ததோடு, தமது அறிவு, அவதானம் என்பவற்றினை அடியொற்றி அவற்றிலே திருத்தங்களையும் செய்தார்கள். r
கிரேக்க நூல்களில் கூறப்பட்டிருந்ததற்கேற்ப அரேபியர் பொதுவாக அகல, நெடுங்கோடுகளைக் கணித்த போதிலும், சமவிராக்கால முன்னிகழ்ச்சியைத் திருத்தியமைத்தனர். நடைமுறையில் பிரதம நெடுங்கோடு கனரித்
* FLD65urrids Gu (Precession of the equinoxes)
முன்னிகழ்ச்சி: விண்வெளியில் புவியினது அச்சின் திசை மிக மெதுவாக மாறிக் கொண்டிருப்பதால், சவவிராக் காலங்களில் ஏற்படும் படிப்படியான மாற்றம்
56

Page 32
தீவுகளுக்கூடாகச் செல்வதாக நம்பப்பட்டது. ஒரு நெடுங்கோடு நான்கு நிமிடங்களுக்குச் சமமானதாகக் கொள்ளப்பட்டது. நெடுங் கோட்டைக் கணிப்பதற்கும் அதில் திருத்தங்களைச் செய்வதற்கும் சந்திர கிரகணங்களை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். இஸ்லாமிய இராஜ்யத்தைச் சேர்ந்த பல்வேறு இடங்களில் சந்திர கிரகணம் கட்புலனாகும் நேரத்தைக் கொண்டு, இடங்களின் நிலைகள் நிர்ணயிக்கப் பட்டன. ஏனைய பல இடங்களில் அகல நெடுங்கோடுகளையும் அவர்கள் நிச்சயித்தார்கள். கிரேக்கர்கள் விட்ட பிழைகளையும் திருத்தினார்கள்." −
கலீபா அல்மஃமூனின் காலத்தில் ஸின்ஜார் சமவெளியிலும் அல்ராக்கா என்ற இடத்திலும் புவியியல் அறிஞர்களும் புவிப்பாத்தியலாளர்களும் வெளிக்கள ஆய்வினை மேற்கொண்டு ஒரு பாகைக்குரிய தூரத்தைக் கணித்தனர். இது இக்காலப் uirfelilei) நிறைவேற்றப்பட்ட மகத்தானதொரு சாதனையாகும். இதன்படி ஒரு
IIT605 56 மைல்களுக்குச்() சமமானது’ எனவும்
இதே அடிப்படையைக் கையாண்டு பூமியின்
*
இன்றைய கணிப்பீட்டின்படி ஏறக்குறைய 69.17 மைல்களாகும்
57

சுற்றளவு ஏறத்தாழ 25,009 மைல் எனவும் அவர்கள் கண்டறிந்தனர். பூமியின் விட்டம், ஆரம் என்பனவும் கணிக்கப்பட்டன.
வானவியற் புவியியல் நூல்களில் முஹம்மத் பின் மூஸா அல்-குவாரிஸ்மி (இ835)யால் ஏறத்தாழ 830ல் எழுதப்பட்ட கிதாப் ஸ"ரத்துல் அர்ள்’ முக்கியமானது. அல்-மஃமூனின் ஆணையின் பேரில் அல்-குவாரிஸ்மியாலும் மற்றும் 69 விஞ்ஞானிகளாலும் உருவாக்கப்பட்ட உலகப் படம் ஒன்றினையும் இந்நூல் அடக்கியிருந்தது. இப்படம் இன்று கிடைக்கவில்லை. Y
அகலக்கோடு, நெடுங்கோடு என்பவற்றை அல்-குவாரிஸ்மி அதிகளவுக்கு தொலமியைப் பின்பற்றியே விளக்கியுள்ளார். ஆனால், இஸ்லாத்தின் எழுச்சிக்குப் பிறகு தோன்றிய சில இடங்களின் புவியியல் நிலைகளையும், இந்நூல் தருகின்றது.மேலும், குடியேறிய உலகினை ஏழு பிரிவுகளாக அல்லது காலநிலைப் பிரதேசங்களாகப் பாகுபடுத்தல் போன்ற ஏனைய செல்வாக்குகளுக்கான சான்றுகளையும் இந்நூல் கொண்டிருக்கின்றது. இப்பிரிவு முறை தொலமியின் நூலில் காணப்படவில்லை? இந்நூலில் இஸ்லாமிய சகாப்தத்துக்குரிய புவியியற் பெயர்களோடு பெருந்தொகையான பழைய பெயர்களும் காணப்படுகின்றன. எனவே, இது கலிபா முஃதஸிமின் காலத்தில்
58

Page 33
எழுதப்பட்டிருக்க வேண்டுமெனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.
அல்-குவாரிஸ்மியின் புவியியல் 14ம் நூற்றாண்டு வரை தோன்றிய முஸ்லிம் புவியியல் அறிஞர்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்தது. புவியியல் ஆராய்ச்சியை மேற்கொள்ளவும், தனித்தன்மை வாய்ந்த பல ஆக்கங்களை உருவாக்கவும் இந்நூல் அவர்களுக்கு உதவிற்று. ஸ்ட்ராஸ்பர்கில் (Strassburg) பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இந்நூல், லத்தீன் மொழிபெயர்ப்பொன்றினோடு கூடியதாக நல்லினோவால் பதிப்பிக்கப்பட்டது எந்தவோர் ஐரோப்பிய சமூகத்திற்கும் தனது விஞ்ஞானச்
செயற்பாட்டின் ஆரம்ப நிலையில் இத்தகையதொரு நூலை உருவாக்க முடியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
பிரபல வானவியலறிஞரான அல்-பர்ஹானி (கி.பி.837-861) தமது நூலை வானவியல் நோக்கிலேயே வரைந்தார். இவர் 'காலநிலைப்
பிரதேசங்கள்' (Climates) eli IIL6)Luloi உலகினை வர்ணித்தார். அஸ்ட்ரோலேப், நிழற்கடிகாரம் என்பன பற்றியும் எழுதியிருக்கின்றார்.
இதே காலப் பிரிவைச் சேர்ந்த மற்றிரு கணிதவியற்-புவியியற் அறிஞர்கள், புகழ்பெற்ற அரபுத் தத்துவஞானியான அல்-கிந்தி
59

(கி.பி.831-870)யும், அபுல் மஃஷரும் (இ886) ஆவர். அல்-கிந்தியால் எழுதப்பட்ட ரஸ்முல் மஃமூர் மினல் அர்ள்” (குடியேறிய உலகினைப் பற்றிய வர்ணனை), ரிஸாலா பில் பிஹார் வல் மாத் வல் ஜஸர் (கடலும் அதன் பெருக்குவற்றும்) ஆகிய இரு புவியியல் நூல்களும் குறிப்பிடத்தக்கவை. அபூமஃஷர் இந்து சமுத்திரம், அரபிக்கடல் ஆகியவற்றில் வீசுகின்ற மொன்சூன் காற்றுகள் பற்றியும் சமுத்திர நீரோட்டங்கள், பெருக்குவற்று என்பன பற்றியும் எழுதியுள்ளார்.'அபீமன்ஸுார், அல்-மர்வாஸி என்போரும் இக்காலப் பிரிவில் கணிதப்புவியியல் துறைக்காக உழைத்தகுறிப்பிடத் தக்க அறிஞர்களாவர்.
பொதுவான புவியியல் நூல்கள்
ஒன்பதாம் நூற்றாண்டிலே நாடுகளைப் பற்றிய நூல், இராஜ்யங்களையும் பாதைகளையும் பற்றிய நூல்' என்பன போன்ற தலைப்புகளில் நாடு களைப் பற்றி விளக்கிக் கூறும் நூல்கள் பல வெளியாகின. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புவியியல் நூல்கள் பெருமளவுக்கு முந்திய நூல்களைப் பின்பற்றி எழுந்த போதிலும், ஒன்பதாம் நூற்றாண்டுக்குப்பின் பெறப்பட்ட இஸ்லாமிய நாடுகளைப் பற்றிய தகவல்களையும் சேர்த்திருக்கின்றன. இக்காலப் பிரிவைச் சேர்ந்த
60

Page 34
பெரும்பாலான நூலாசிரியர்கள் பிரயாணிகளாகவும் திகழ்ந்தனர். இந்நூல்கள் இஸ்லாமிய நாடுகள் அல்லாத பிற நாடுகளைப்பற்றி அதிகம் கவனம் செலுத்தவில்லை. ஆனால், புவியியல் விடயங்களை முறைப்படி ஆராய்வதோடு படங்கள் பலவற்றையும் இணைத்திருக்கின்றன. எனினும், ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட பொதுவான புவியியல் நூல்களைப் பரும்படியாக இருபெரும் பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம்.
1. உலகினைப் பற்றிப் பொதுவாகவும் ஆனால், அப்பாஸிய இராஜ்யத்தைப் பற்றி மிக விரிவாகவும் கூறும் நூல்கள். ஏனைய இஸ்லாமிய நூல்களில் காணப்படாத மதச்சார்பற்ற தகவல்களை வழங்க இந்நூல் ஆசிரியர்கள் முயன்றிருக்கின்றார்கள். எனவே, இவ்வகுப்பைச் சேர்ந்த நூல்களை, இக்காலப் பகுதியில் தோன்றிய மதச்சார்பற்ற புவியியல் நூல்கள் என்று குறிப்பிடலாம். இந்நூல்ஆசிரியர்கள் அப்பாஸிய இராஜ்யத்தின் இடவிளக்கவியல் (Topography), பாதை முறைமை என்பன பற்றி விளக்கியதோடு கணிதப்புவியியல், வானவியற் புவியியல், பெளதீகப் புவியியல், மானிடப் புவியியல், பொருளாதாரப் புவியியல் என்பனவற்றையும் உள்ளடக்கியிருக்கின்றனர். இப்னு குர்தாத்பிஹம், அல்-யஃகூபி இப்னு -96ö-Litsafb (1BN - AL - FAKH), SSTLDT,
61

அல்-மஸ்ஊதி என்போர் இவ்வகுப்பினைச் சேர்ந்த புவியியலாளர்களாவர். இக்காலத்தில் புவியியல் துறையில் ஈராக் மிக முக்கியமான மையமாக இருந்தமையாலும், பல புவியியல் அறிஞர்கள் இதனைச் சேர்ந்தவர்களாக இரு ந்தமையாலும் வசதி கருதி இவர்களை ஈராக் குழுவினர்' என அழைக்கலாம். இவர்களிலும் இரு பிரிவினரை இனம் காண முடியும்.
அ) வடக்கு தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு திக்குகளையும் பின்பற்றிய
வைத்ததோடு, பக்தாதை உலகின் மையமாகவும் கருதியோர்,
ஆ) பல்வேறு இக்லிம் (பிரதேசங்)களுக்கு இணங்க அதனை ஒழுங்குபடுத்தியதோடு, மக்காவை உலகின் மையமாகக் கருதியோர். 2.அல் இஷ்தக்ரி இப்னு ஹவ்கல், அல்-முகத்தஸி ஆகியோரின் ஆக்கங்கள் மதச்சார்புடையனவாகக் காணப்படுகின்றன. இந்நூலாசிரியர்கள் அனைவரும் அபூஸைத் அல்-பல்கியைப் பின்பற்றியமையால், இவர்களுக்கு பல்கிக் குழுவினர் என்ற பெயர் கொடுக்கப்படுகின்றது. இவர்கள் இஸ்லாமிய உலகினைப் பற்றியே விரிவாக எழுதினர்.
62

Page 35
குதாமா, இப்னு ருஸ்தா, இப்னு அல்-பாகிஹ என்போர் தமது ஆக்கங்களில் ஈராக்குக்கு அன்றி, அரேபியாவுக்கும், மக்காவுக்குமே முதலிடம் கொடுத்திருக்கின்றனர். உதாரணமாக, குதாமா தனது நூலில் மக்காவுக்கு மிக முக்கியமான இடத்தை அளித்திருக்கின்றார். பக்தாத் நகரிலிருந்து வெளிநோக்கிச் செல்லும் வீதிகளைப் பற்றி விளக்கமுன்னரே மக்காவை நோக்கிச் செல்லும் வீதிகளைப் பற்றி விளக்கம் கொடுத்திருக்கின்றார். இஸ்லாமிய இராஜ்யத்தின் தலைநகர் அமைந்துள்ள மாகாணம் என்ற வகையிலேயே ஈராக்குக்கு முக்கியத்துவம் வழங்கினார். அரசியல், பரிபாலன நோக்கில் மட்டுமே அதனை முக்கியமானதாக அவர் கருதினார். இதே தன்மையை இப்னு ருஸ்தாவின் நூலிலும் காணமுடியும்
இப்னு குர்தாத்பிஹற்
புவியியலின் தந்தை என அழைக்கப்படத்தக்க இப்னு குர்தாத்பிஹ (இ.கி.பி.912) அரபு மொழியில் புவியியல் எழுதுவதற்கான முறையையும் முன்மாதிரியையும் வகுத்துக் கொடுத்தவராவார்.” பாரசீகக் குடும்பம் ஒன்றினைச் சேர்ந்த இவர், பக்தாதில் வளர்க்கப்பட்டார். இங்கேயே புகழ்பெற்ற இசைக் கலைஞரான மெளஸிலைச்
63

சேர்ந்த இஷாக் என்பவரின் பரிச்சயத்தைப் பெற்று, இலக்கியம், சங்கீதம் என்பவற்றைப் பயின்றார். பின்னர், அல்-ஜிபால் LDT&ITGOOT55air தபாற்சேவைப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். தமது இராஜ்யத்தைப் பற்றியும் அதிலுள்ள பயன்பாட்டுக்குட்பட்ட கடல் Lחחםébéh தரைமார்க்க வழிகள் பற்றியும் ஒரு விபரத்தை வரையும்படி அல் மஃமூனால் இடப்பட்ட கட்டளையின் அடிப்படையில் " வல் மமாலிக் (பாதைகளும் இராஜ்யங்களும்) என்ற நூலை கி.பி.844க்கும் 848க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதினார். 912 அளவில் இவர் காலமானார்.
இந்நூல் அறியப்பட்ட உலகின், குறிப்பாக இஸ்லாமிய உலகின் பிரதான பாதைகளை விவரிக்கின்றது. இவர் அண்மைக் கிழக்கின் செய்தித் தொடர்புகளைப் பற்றியும், இடைமாற்று fiat Guildsteig (RelayStations) LD55uiaioig, தூரங்களையும்(பாரசீகத்தில் ஆறு மைல்களுக்கு ஒன்றும், சிரியாவிலும், எகிப்திலும் பன்னிரெண்டு மைல்களுக்கு ஒன்றும்) அறிந்திருந்தார். பக்தாதிலிருந்து கிழக்காகச் செல்லும் பாதைகள் அவருக்கு நன்கு பரிச்சயமாயிருந்தன. அரசியல் ரீதியாகப் பிளவு பட்டிருந்த உலகிலே எவ்விதம் பொருளாதார ஒருமைப்பாடு நிலவிற்று
அல்-மஸாலிக்
64

Page 36
என்பதனை இப்னு குர்தாத்பிஹ எடுத்துக் காட்டுகிறார்.'
பிரதான வர்த்தக மார்க்கங்களைப் பற்றிச் சுருக்கமான ஒரு விளக்கத்தை இந்நூல் கொடுக்கின்றபோதிலும், சீனா, ஜப்பான், கொரியா போன்ற தூரப் பிரதேசங்களைப் பற்றிய தகவல்களையும் தருகின்றது. சீனாவின் இறக்குமதி ஒழுங்கு முறை, அந்நாட்டு முஸ்லிம்களின் வாழ்க்கை போன்ற குறிப்புகளும் இதில் காணப்படுகின்றன.
குடியேறிய உலகின் எல்லைகளைப் பற்றிய வர்ணனைகளைக் கொண்டும், கிரேக்க கருத்தின் அடிப்படையில், அரூபா, லூப்யா, இத்யூபியா, இஸ்கூத்தியா என்ற வகையில் கண்டங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதைக் கொண்டும் தொலமியின் ஆக்கத்தில் இவருக்கு மிக்க பரிச்சயம் இருந்தமை தெளிவாகின்றது,' "
இந்நூலில் உண்மையான தகவல்களோடு கற்பனைகளும் கலந்திருக்கின்றன. ஆயினும் இப்னு அல்-பாகிiற், இப்து ஹவ்கல், அல் மஸ்ஊதி போன்ற பிற்காலப் புவியியல் அறிஞர்களால் இந்நூல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. துரதிர்ஷ்டவசமாக இந்நூலின் சுருக்கமான மொழிபெயர்ப்பொன்றே இன்று கிடைக்கின்றது.
O5

அல்-யஃகூபி
பிரபல்யம் வாய்ந்த வரலாற்றாசிரியரும், புவியியல் அறிஞரும், பிரயாணியுமான அல்-யஃகூபி, அப்பாஸிய ஆட்சியாளரான அல்-மன்ஸ"ாரினால் உரிமையிடப்பட்ட வாழிஹற் என்பவரின் சந்ததியில் தோன்றியவர். கி.பி.873 வரை ஆர்ம்னியாவிலும், குராசானிலும் வாழ்ந்தார். குராசானிலே தாஹிரீக்களின் ஆட்சி உரிமை பறிபோகும்வரை அவர்களிடம் சேவை புரிந்தார்." அதன் பின்னர் தனது உலகச் சுற்றுப் பிரயாணத்தை ஆரம்பித்தார். இறுதியாக எகிப்திலே குடியேறி 897ல் அங்கேயே காலமானார். 891-2 ல் எகிப்தில் இருந்தபோதுதான், கிதாபுல் புல்தான்(நாடுகளைப்பற்றிய நூல்) என்னும் புவியியல் நூல்ை எழுதினார். இவரே சரியாகவும் முறையாகவும் நாடுகளைப் பற்றி ஆராய்ந்து எழுதிய முதல் புவியியலாளராகத் திகழ்கின்றார்.
இவர் இராஜ்யத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும்-ஆர்மினியா, குராசான், எகிப்து, மேற்கு நாடுகள் என்பவற்றோடு இந்தியாவுக்கும் சென்றார். புனித யாத்திரை செய்யச் செல்கின்றவர்களிடமும் செய்துவிட்டுத் திரும்பி வருகின்றவர்களிடமும் நாடு-நகரங்கள், இடைத் தங்கல் நிலையங்களுக்கிடையிலுள்ள தூரங்கள், அவ்வப் பகுதிகளில் வாழ்கின்றமக்கள், அவர்களது விவசாயம், நீர்ப்பாசனம், உடை, கல்விமுறை
66

Page 37
என்பனபற்றிவினவுவதற்கு இவர் தயங்கமாட்டார். இந்நூலை எழுதுவதற்கு நீண்ட காலமாக நான் உழைத்திருக்கிறேன். உரிய இடத்தில் தகவல்களைச் சேர்த்தேன். நம்பத் தகுந்த சாட்சிகளைப் பேட்டி காண்பதன் மூலம் அத்தகவல்களைச் சரிபார்த்தேன்' என்று அவரே குறிப்பிடுகின்றார்."
கிதாபுல் புல்தான் பக்தாத், ஸமர்ரா ஆகிய நகரங்களைப் பற்றிய வர்ணனையோடு ஆரம்பிக்கின்றது. பின்னர் ஆசிரியர் ஈரான், தூரான், வட ஆப்கானிஸ்தான் பகுதிகளைப் பற்றிக் கூறுகின்றார். மேற்கு அரேபியாவையும், தென் அரேபியாவையும் அடுத்துக் குறிப்பிடுகின்றார். அதன் பிறகுபஸ்ரா, தொடர்ந்து மத்திய அரேபியா, பின்னர் இந்தியா, சீனா, பைஸாந்திய இராஜ்யம், சிரியா, எகிப்து, நூபியா, மஃரிப் பற்றிய விளக்கங்கள் இடம் பெறுகின்றன. ஸிஜிஸ்தானையும் குராசானையும் பற்றிய வர்ணனையோடு நூல் முடிவடைகின்றது. 15
இராஜ்யத்தின் எல்லைப்புறங்களை நோக்கிச் செல்லும் பாதைகளையும், அவற்றுக்கு அண்மையில் உள்ள நிலப்பகுதிகளையும் விளக்குவதே இந்நூலின் நோக்கமாகும். ஈரானுக்கு ஊடாகச் செல்லும் பெரு வழிகளைப் பற்றிய விவரங்கள் இந்நூலில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.
67

இப்பெரு நூல் இடவிளக்கவியல் பற்றிய தரவுகள், பொருளாதாரத் தரவுகள், புள்ளிவிபரங்கள் என்பவற்றால் நிரம்பியுள்ளது. ஆசிரியர் மிகுந்த சிரமத்தோடு உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவிய வரிவிதிப்பு முறை பற்றிய விளக்கங்களையும் இந்நூலில் கொடுத்துள்ளார்." இந்நூலிலும், விடயங்களை ஒழுங்கு படுத்தியுள்ள முறை இப்னு குர்தாத்பிஹற் உடையதை ஒத்திருக்கின்றது. மத்தியகாலப்பிரிவில் பெருவழக்காக இருந்த புவியியல் தொடர்பான கற்பனைக் கதைகள் எதனையும் கிதாபுல் புல்தானில் காணமுடியாது. இதில்தான்
இந்நூலின் மகத்துவம் தங்கியிருக்கின்றது. மேற்குலகின் கவனத்தைப் பெற்ற நூல்களில் இதுவும் ஒன்றாகும். பிற்காலத்திய ஆசிரியர்களுக்கு இவரது நூல் மூலாதார நூலாக அமைந்தமையால், சில வேளைகளில் அரபுப் புவியியலின் தந்தை' எனவும் இவர் அழைக்கப்படுகின்றார்.'
கிதாபுல் புல்தான் 1861ல் லைடனில் (LAIDEN) வெளியிடப்பட்டது, மஃரிப் பற்றிக் கூறும் பகுதி எம்.ஐ.டிகூஜே என்பாரினால் லத்தீன் மொழியிலான விளக்கவுரையுடனும், சொல்லட்ட வணையுடனும் கூடியதாக, 1892ல் லைடனில் வெளியிடப்பட்டது. ஆனால், இந்தியா, சீனா, பைஸாந்திய இராஜ்யம் என்பவற்றைக் கூறும் அத்தியாயங்கள் இன்று கிடைக்கவில்லை.
68

Page 38
GESTUDIT
ஈராக் குழுவைச் சேர்ந்த குதாமா இப்னு ஜஃபர் அல்காத்திப் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளராவார். கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய குதாமா, பக்தாதில் அரசிறைக் கணக்காளராகப் பணியாற்றினார். இவர் கி.பி.928ல் கிதாபுல் கராஜ் என்ற பெயரில் நிலவரி பற்றிக் கூறும் நூல் ஒன்றினை எழுதினார். இந்நூலின் 11ம் அத்தியாயத்தினை அப்பாஸிய இராஜ்யத்தின் தபால் நிலையங்களையும் பாதைகளையும் பற்றிக் கூறுவதற்காக ஆசிரியர் ஒதுக்கியுள்ளார்.
இந்நூலின் பிரதான நோக்கம் இஸ்லாமிய இராஜ்யத்தைப் பற்றியும் குறிப்பாக பைஸாந்திய இராஜ்யத்தோடு ஒட்டிய எல்லைகளைப் பற்றியும் விளக்குவதாகும். இவரது நூல் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளதாயினும், எல்லைப் பாதுகாப்பு போன்ற விடயங்களும் கவனத்துக்கு எடுக்கப்பட்டுள்ளன. அப்பாஸிய இராஜ்யத்தைச் சூழவுள்ள இராஜ்யங்களையும் அங்கு வாழும் LD59,606T'u பற்றிய வர்ணனைகளையும் இந்நூல் பொதிந்துள்ளது.
69

இப்னு அல்-பாக்கிஹற்
இஷ்ஹாக் இப்னு அல்-பாக்கிஹ 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு பிரதான புவியியலறிஞராவார். இவர் ஈரானிலுள்ள புகழ்பெற்ற நகரமாகிய ஹம்தானில் பிறந்தார். அப்பாஸிய ஆட்சியாளரான அல்-முஃதஸிமின் காலத்தில் இவர் பிரபல்யம் வாய்ந்த புவியியலாளராகத் திகழ்ந்தார். ஏறத்தாழ 902ல் கிதாபுல் புல்தான் என்னும் நூலை எழுதினார். இது ஈரானினதும் அதனைச் சேர்ந்த பகுதிகளினதும் புவியியல் பற்றிக்கூறும் முக்கியமான ஒரு நூலாக இருக்கவேண்டும் எனத் தோன்றுகின்றது.*
அல்-முகத்தளி, யர்க்கூத் என்போர் இவரது நூலைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.” அலி இப்னு ஜஃபர் ஷைஸரி என்பவரால் சுருக்கியெழுதப்பட்ட இந்நூலின் பிரதியொன்றே இன்று கிடைக்கக்கூடியதாய் உள்ளது.
இப்னுருஸ்தா
அபூ அலி அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு இஷாக் இப்னு ருஸ்தா கி.பி 903ல் வரலாறு, புவியியல் என்பவற்றோடு தொடர்புடைய சிறு கலைக்களஞ்சியம் என வர்ணிக்கத்தக்க நூல் ஒன்றினை எழுதினார். அல்-அஃலாகுல் நபீஸா
70

Page 39
(பெறுமதியான பொருள்கள்) எனப்படும் இந்நூலின் ஏழாம் பாகம் (தற்போது பிரித்தானிய நூதன சாலையில் இருக்கிறது) புவியியல் பற்றியதாகும்.
பிரதேசப் புவியியல் பற்றிக்கூறும் பகுதியின் ஆரம்பத்திலேயே இவரும் குதாமாவைப் போல் மக்காவையும் மதீனாவையும் வர்ணிக்கின்றார். உலகினைப் பற்றிப் பொது விபரங்களை அளிப்பது இந்நூலின் பிரதான நோக்கமாகத் தென்படுகின்ற போதிலும், இஸ்லாமிய உலகினைப் பற்றிய விவரங்களோடு, பிரதேச அடிப்படையில் இஸ்லாமிய உலகின் எல்லைக்கப்பாலுள்ள பல நாடுகளைப் பற்றிய விவரங்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
அல்-அஃலாக்குல் நபிஸாவில் புவியியலைப் பற்றிப் பேசும் பகுதி அதிக அளவுக்கு வானவியற் சார்புடையது. உதாரணமாகப் பூமியைப் பற்றி ஒரு விளக்கத்தில் நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். பூமியும் பந்துபோல் உருண்டையானதும் திண்மையானதுமாகும். வானகோளங்கள் இயங்கும் கோளப்பரப்பி லுள்ளேயே அது காணப்படுகின்றது. இதற்கு அவர் காட்டும் அத்தாட்சியும் இத்தகையதே. பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரேநேரத்தில்" சூரியன், சந்திரன், மற்றக் கிரகங்கள் என்பன உதிப்பதோ, மறைவதோ இல்லை என்பதே
77

இதற்கான சான்றாகும். மேற்குப் பகுதிகளில் அவை மறைவதற்கு முன்னரே கிழக்குப் பகுதிகளில் அவை உதிக்கின்றன. அண்டவெளியில் நிகழ்கின்ற சம்பவங்கள் மூலம் இது நிரூபணமாகின்றது. கிழக்கில் ஒன்றும் மேற்கில் ஒன்றுமாக நெடுந்தொலைவிலுள்ள இரு நாடுகளில் இருந்து சந்திரகிரகணத்தை அவதானிப்பது போன்றே ஒரு சம்பவம் நிகழும்போது கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒரு நாட்டில் மூன்று மணி நேரம் அது அவதானிக்கப்பட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள தூரம் எவ்வளவாக இருக்கின்றதோ, அவ்வளவுக்கு மேற்குப் பகுதியைச் சேர்ந்த ஒரு நாட்டில் குறைந்த மணி நேரங்களே அது அவதானிக்கப்படலாம் என்றுதான்
இந்நூல் கடல்கள், ஆறுகள், காலநிலை போன்றவற்றை பற்றியும் விளக்கம் தருகின்றது. தூஸ் வரை சென்ற குராஸான் பாதையைப் பற்றியும் அதன் கிளைப் பாதைகள் பற்றியும், குறிப்பாக இஸ்பஹான், ஹிராட் வரை சென்ற கிளைப்பாதைகள் பற்றியும் பக்தாதில் இருந்து கூபா, பஸ்ரா, ஷிராஸ் வரை சென்ற பாதைகளைப் பற்றியும் அவர் சுருக்கமாக விளக்கம் அளித்திருக்கின்றார். மேலும், இப்பாதைகளில் இருந்த தங்கல் நிலையங்களையும் சரியான தூரங்களைப் பற்றிய விபரங்களையும் இப்பாதை
72

Page 40
ஊடறுத்துச் சென்ற பிரதேசங்களின் தரைத் தோற்றம் பற்றியும் வர்ணித்துள்ளார். மறைந்து போன பல நகரங்களின் நிலையங்களை நிர்ணயிக்க இவ்விபரங்கள் உதவியிருக்கின் றன.'
அல்-மஸ்ஊதி
முஸ்லிம் பிளினி என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகின்ற அபுல் ஹஸன் அலி பின் ஹ"சைன் அல்-மஸ்ஊதி, பிரபல்யம் வாய்ந்த கல்விமானும், புவியியலாளரும், பிரயாணியு цолтоuтfї. V−
இவர் 9ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பக்தாதில் பிறந்தார். பெருமானாரின் புகழ்வாய்ந்த தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் சந்ததியில் தோன்றிய இவர், முஸ்தஸிலாப் பிரிவைச் சேர்ந்த RC5 அராபியாவார்.* இளம் வயதிலேயே பிரயாணம் செய்யும் ஆசையால் உந்தப்பட்டு தரைமார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் உலகின் பல பகுதிகளுக்கும் பிரயாணங்களை மேற்கொண்டார். இவர் ஏறக்குறைய இருபது வருடங்கள் பிரயாணத்தில் செலவிட்டார். இவர் அரபிக்கடல், இந்து சமுத்திரம், சீனக்கடல் என்பவற்றில் பிரயாணம் செய்தார். தரை மார்க்கமாக இந்திய உய கண்டத்துக்குச் சென்று
73

பஞ்சாப், சிந்து, மக்ரான்கரையோரம், வடஇந்தியா, தீபகற்ப இந்தியா ஆகிய பகுதிகளைத் தரிசித்தார். பின்னர், இலங்கைக்கும், சான்ஸிபாருக்கும், தென்கிழக்காசியாவுக்கும் சென்றார். மீண்டும் கிழக்குமுகமாக கஸ்பியன்கடலின் கரையோரங்கள் வரை சென்றார். வழியில் பலஸ்தீன், ஸிரியா, சின்னாசியா ஆகிய இடங்களைத் தரிசித்தார். இறுதியாக இவர் எகிப்துக்குப் பயணமானார். புஸ்தாக் நகரில் ஹிஜ்ரி 345 (கிபி 956)ல் காலமானார்.* w
அல் மஸ்ஊதி பிரதானமாகப் பொதுப்புவியியல், மானிடப் புவியியல் ஆகியவற்றிற்கே பங்களிப்புச் செய்துள்ளார். அப்பாஸிய இராஜ்யத்தின் முறையான இடவிளக்கவியல் பற்றியோ, பாதைகள் பற்றியோ, தபால் நிலையங்கள் பற்றியோ அவர் எழுதவில்லை. ஆனால், மத்தியகாலப்புவியியலுக்கு அவர் ஆற்றிய மிகப்பெரும் சேவைகளில் ஒன்று யாதெனில், தமக்கு முன்சென்ற பிரபல்யம் வாய்ந்த முஸ்லிம்புவியியலாளர்கள் பற்றி மிகச் சிறந்ததோர் ஆய்வினை முன்வைத்ததாகும். இதற்கான தகவல்களை ஆரம்பகாலப் புவியியல் நூல்களிலிருந்தும், பிராயணக்குறிப்புகளி லிருந்தும், கடற்பயணம் பற்றிய நூல்களிலிருந்தும் பெற்றுக்கொண்டார். தமது பிரயாணங்களின் போது திரட்டிய விபரங்களின் மூலமோ அல்லது
74

Page 41
தாம் சந்தித்த நபர்களின் மூலமோ இத்தகவல்களை உறுதிப்படுத்திக்கொண்டார். தற்போது கை யெழுத்துப் பிரதிகளே கிடைக்காத பல ஆசிரியர்களின் ஆக்கங்கள் பற்றியும் இதில் குறிப்பிடப்படுகின்றது.
முரூஜ"த் தஹப் வ மஆதினல் ஜவாஹிர் (பொன் வயல்களும், இரத்தினச்சுரங்கங்களும்) என்பது இவரால் எழுதப்பட்ட முக்கியமான ஒரு நூலாகும்.பிரபஞ்சவியல், வரலாறு , புவியியல் ஆகியன ஒருங்கிணைக்கப்பட்ட geCD கலைக்களஞ்சியம்’ என இதனைக் கூறலாம். அல்-மஸ்ஊதின் பிரயாண அனுபவங்களும், அவதானங்களும் பொதிந்த இந்நூல் தகவல்களுக்கான மூலாதாரம் எதனையும் புறக்கணிக்காத, ஆசிரியரின் விரிந்த உளப்பாங்கு காரணமாகவும் அவரது உண்மையான ஆய்வறிவார்வம் காரணமாகவும் குறிப்பிடத் தக்கதொன் று? என ஜோர்ஜ் ஸார்டன் எழுதுகின்றார். கி.பி 947ல் பூரணப்படுத்தப்பட்ட இந்நூல் 956ல் மீளாய்வு செய்து சீராக்கப்பட்டது. 1861-77ல் ஒன்பது வால்யூம்களைக் கொண்ட இதன் பிரான்சிய மொழிபெயர்ப்பு பாரிஸில் வெளியிடப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்நூல் இன்று கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது.
75

பரிணாம வளர்ச்சிப் பிரச்சினைப் பற்றி ஆராய்கின்ற மற்றொரு நூலில் (கிதாபுல் தன்பீஹ் வல் இஷ்ராப்) மஸ்ஊதி, புவிச்சரிதவியல் கட்டமைப்பு (Geologicalformations) தன்மைபற்றி ஆராய்ந்திருப்பதோடுமக்ரான், ஸிஜிஸ்தான் ஆகிய இடங்களில் காற்று விசையாலைகள் (windmils) இயங்கியமை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்."
மனிதவாழ்வில் பெளதீக சூழலின் செல்வாக்கிற்கு அல்-மஸ்ஊதி கணிசமான முக்கியத்துவம் அளித்தார். காலநிலை, தரைத்தோற்றம், தாவர வளர்ச்சி, மண், frr
என்பன ஏற்படுத்தும் பலமான செல்வாக்கினை அவர் கண்டு உணர்ந்தார். நாடோடி வாழ்க்கை, நகர சமூகங்களின் வாய்ப்புகள், சூழ்நிலைகள் என்பவற்றோடு தொடர்பான அவரது ஆராய்ச்சிகள் மிகச் சிறந்தவையென மாபெரும் சமூகவியலறிஞரான இப்னு கல்தூன் 27 குறிப்பிடுகின்றார். முரூஜ"த் தஹப், கிதாபுல் தன்பீஹம் ஆகிய இரு நூல்களும் அவரது கூரிய அவதானத்துக்குச் சான்று பகர்கின்றன. அல்-மஸ்ஊதின் ஆக்கங்கள் மத்தியகால ஐரோப்பிய புவியியலாளர்களின் கட்டுக் கதைகள், நூதனமான சம்பவங்கள் என்பவற்றினை விட மிகவும் உயர்வானவையென28 பேர்னால் (Bernal) தமது 'வரலாற்றில் விஞ்ஞானம்' என்ற நூலிலே வரைகின்றார்.
76

Page 42
பொஹீமியாவில் முஸ்லிம் வர்த்தகர்கள் சுறுசுறுப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக இவர் எழுதுகின்றார். 29 மஸ்ஊதியே ஏரல் கடல்பற்றி முதன் முதலாகக் குறிப்பிட்டவராவார். ஐரோப்பாவைப் பற்றி அவருக்குத் தெரியாது. ஆனால், கோக்கேஸஸ் பகுதிகளுக்குச் சென்றார். அங்கே, பாகு (Baku) வுக்கு அயலில் நப்தா (இரச கற்பூரம்) எரிக்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். இவரின் கருத்துப் படி ஸோமாலிலாந்துக் கரைக்கு அப்பாலுள்ள இந்து சமுத்திரமே மிக மோசமானது. "நான் அடிக்கடி கடற்பிரயாணத்தில் ஈடுபட்டிருக்கிறேன். சீனக்கடல், ரூம் கடல், கஸார் (கஸ்பியன்), அல்-கொல்ஸ~ம் (செங்கடல்), யெமன் கடல் ஆகிய கடல்களிலெல்லாம் பிரயாணம் செய்திருக்கிறேன். j607TGü 6vaš78 5L6i (The Sea of the Zanj) gTait எல்லாக் கடல்களையும் விட மிக அபாயகரமானது
என்பதைக் கண்டே 30
தமது அனுபவம், அவதானம் என்பவற்றின் வெளிச்சத்தில் எத்தகைய அடிப்படையுமற்றவை எனத் தான் கண்டஅரபுப் புவியியலாளர்களது சில கோட்பாடுகளையும், கருத்துகளையும் எதிர்த்ததன் மூலம் புவியியலின் தரத்தினை இவர் உயர்த்தினர்ர். தொலமி போன்ற கிரேக்க நூலாசிரியர்களது காலம் கடந்த கோட்பாடுகளைப் பற்றிய
ファ

ஐயப்பாடுகளை ஏழப்ப இவர் ஒருபோதும் தயங்கியது இல்லை
அல்-ஜைஹானி
இப்னு குர்தாத்பிஹைப் போன்று இக்காலப்பிரிவில் அரபுப் புவியியல் வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்திய மற்றொரு பிரபல்யம் வாய்ந்த புவியியலாளர், அபூ அப்துல்லாஹம் முஹம்மத் இப்னு அல்-ஜைஹானி இவர் கி.பி 892 முதல் 907 வரை ஸ்மானியர்களின் (Samanid) கீழ் மந்திரியாகப் பணியாற்றினார் இவர் எழுதிய கிதாபுல் மஸாலிக் பீ மர்பாதுல் மமாலிக் இன்று கிடைக்கவில்லை. இந்நூல் ஏழு வால்யூம்களாக இருந்தது என்று நம்பப்படுகிறது. இந்நூலைப் பற்றிப் பிற்காலத்தில் வாழ்ந்த புவியியல் ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்ததைக் கொண்டே இதன் தன்மையையும் உள்ளடக்கத்தையும் பற்றி அறிய முடிகின்றது. அல்-மக்திஸி, நாடுகளினது மூலவளங்கள், இயற்கைத் தோற்றப் பாடுகள், செய்தித் தொடர்புகள், மக்கள் என்பன பற்றி இந்நூலிலுள்ள விபரங்களைப் புகழ்ந்துரைத் துள்ளார். இந்து நதிப் பள்ளத்தாக்கு, தீபகற்ப இந்தியப் பகுதி ஆகியவற்றைப் பற்றியும் இதிலே அவர் எழுதியிருக்கின்றார்? மந்திரி என்ற சிறப்புரிமை படைத்த நிலையில் புகாராவில்
78

Page 43
இருந்து கொண்டு தமது நூலை எழுதியமையால், தமது சமகால ஆசிரியர்களை விட மத்திய ஆசியா, தூரகிழக்கு என்பவற்றின் உள்ளகப் பகுதிகளைப் பற்றிய ஆராய்ச்சி நிலைக்களனை விரிவு படுத்த இவரால் முடிந்தது. ஆசியாவின் பல பகுதிகளை விபரிப்பதற்கு அல்-இத்ரீஸி இந்நூலைட் பயன்படுத்தியிருக்கலாமென நம்பப்படுகிறது.*
ஹ"தூதுல் ஆலம்
ஹ"தூதுல் ஆலம் (உலகின் எல்லைகள்) உலகப் புவியியல் பற்றி கி.பி 892ல் பாரசீக மொழியில் எழுதப்பட்ட மிக ஆரம்ப காலத்துக்குரிய நூலாகத் தோன்றுகின்றது. இந்நூலாசிரியரின் பெயர் தெரியவில்லை. இது 1892ல் சமர்க்கந்துக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் 1937ல் மினோஸ்கியால் பதிப்பிக்கப்பட்டது. இந்தியா, திபெத், சீனா, துருக்கிஸ்தான், கீழைவால்கா, கோக்கேஸஸ், ஸ்பெயின், கிழக்கு ஐரோப்பா ஆகிய நாடுகளின் புவியியல் பற்றி இந்நூல் கூறுகின்றது. ஆப்கானிஸ்தானையும், அதனைச் சூழவுள்ள பிரதேசங்களையும் பற்றிய விரிவான வர்ணனைகளை இந்நூலில் காணலாம் குடியேறிய உலகின் பல்வேறு பகுதிகளைப் பற்றி விளக்கு முன் கடல்கள், தீவுகள், ஆறுகள், மலைகள் பாலைவனங்கள் போன்றவற்றை விளக்குவதற்காக
79

ஆசிரியர் பல அத்தியாயங்களை ஒதுக்கியுள்ளார். அல்-இஷ்தக்ரி பல்கி, குர்தாத்பிஹற் ஆகியோரின் நூல்கள் இந்நூலாசிரியரால் Liu Git படுத்தப்பட்டுள்ளன. குடியேறிய உலகினை உலகின் பகுதிகளாகவும் புறம்பான நாடுகளாகவும் பாகுபடுத்தியிருப்பதே இந்நூலாசியரின் சுய ஆற்ற்லை எடுத்துக் காட்டுகிறது.
பல்கிக் குழு
அல்-பல்கி, இப்னு ஹெளக்கல், அல்-முகத்தளி, அல்-இஷ்தக்ரி ஆகியோர் பல்கிக் குழுவைச் சேர்ந்த பிரதான புவியியலாளர்களாவர். இவர்கள் புவியியலுக்கு இஸ்லாமிய சாயலைக் கொடுத்து விளக்கினர். இஸ்லாமிய உலகினைப் பற்றிய புவியியலிலே முக்கியமாக இவர்கள் அக்கறை காட்டினர். குர்ஆனில் தரப்பட்டுள்ள புவியியல் கருத்துக்களையும், நபிகள் நாயகத்தினதும், அவர்தம் தோழர்களினதும் பொன்மொழிகளில் வந்துள்ள புவியியல் கருத்துக்களையும் அதிகமாக வலியுறுத்தி எழுதினார்கள்.
'பிலாதுல் இஸ்லாத்தைப்பற்றிய விரிவான விவரணத்தைக் கொடுப்பதே பல்கிக்குழுவினரின் பிரதான, லட்சியமாக இருந்தது. எனவே, அவர்கள் இதனை இருபது இக்லிம்களாகப் பிரித்தனர். இஸ்லாமியருக்கு உரியதல்லாத நாடுகளைப் பற்றி
80

Page 44
அறிமுகக் குறிப்புகளிலேயே பொதுவான முறையில் விளக்கினார்கள். இம்மாகாணங்களின் பாகு பாட்டிற்கு அடிப்படையாக அமைந்தது ஈரானிய கிஷ்வார் முறையோ, கிரேக்கர்களது காலநிலைப் பிரதேசங்களோ அன்று. அது பிரதேச ரீதியிலும், முற்ற முழுக்க பெளதீக ரீதியிலும் செய்யப்பட்ட பாகுபாடாகும். எனவே, புவியியல் வளர்ச்சியில் பல்கி குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட பிரதான மாற்றமாக இதனைக் கருதலாம். ஒரு வகையில் இது ஒரு நவீன பாகுபாட்டு முறையாகும்.
இனி இக்குழுவைச் சேர்ந்த புவியியலாளர்களது பங்களிப்பைச் சுருக்கமாக ஆராய்வோம்.
அல்-பல்கி
அபூ ஸைத் அஹ்மத் பின் ஷ"ஹற்ல் அல்-பல்கி, பல்குக்கு அயலில் உள்ள ஷாமிஸ்த்தான் என்னும் இடத்தில் பிறந்தார். கல்விக்காக ஈராக் சென்ற இவர், அங்கே எட்டு வருடங்களைக் கழித்தார். புகழ்பெற்ற தத்துவஞானியான அல்-கிந்தியிடம் வரலாறு, தத்துவம் என்பவற்றைப் பயின்றார். தாயகம் திரும்புவதற்கு முன்னர் பல்வேறு இடங்களுக்கும் நீண்ட பிரயாணங்களை மேற்கொண்டார். பின்னர் ட்ரர்ன் ஸொக்ஸியானா, குராஸான் என்பவற்றினை ஆட்சி செய்த ஸமானிய வம்சத்தினரின் அரச
81

சபையில் புகழ்பெற்ற கல்வி மானாகத் திகழ்ந்தார். கி.பி.934ல் இவர் காலமானார்.
இவர் ஏறத்தாழ 43 நூல்களை எழுதினார். அவற்றுள் கணிசமான மதிப்பினைப் பெற்ற ஒரு நூல் "ஸ"வருல் அகாலிம்' ஆகும். விசேடமாக வரையப்பட்ட தேசப்படங்களின் அடிப்படையில் புவியியல் நூல் எழுதும் முறையை இவர் தொடங்கி வைத்தமையால், தமது நூலுக்குகிதாபுல் அஷ்கால் அல்லது ஸ"வருல் அகாலிம் 6ᎾᏂnᎢᎧu) நிலைப்பிரதேசங்களின் விளக்கப்படங்கள்) எனப் பெயரிட்டார். இந்நூல் 920 திலோ அல்லது சற்றுப் பிந்தியோ எழுதப்பட்டது. இது இன்D கிடைக்கவில்லை. அல்-இஷ்தக்ரி இப்னு ஹவ்கல், அல்-மக்திஸி போன்றோர் இவரைப் பின்பற்றியே தமது ஆக்கங்களைப் படைத்துள்ளனர். எனினும், அவர் (பல்கி) பல பெரிய நகரங்களைக் குறிப்பிடாமல் விட்டதாகவும் அவர் பிரயாணம் செய்தவரே அல்லர் என்றும், அவர் வரைந்த அறிமுகம் தவறானது என்றும் அல்-முகத்தஸி கூறுகின்றார்.' கிதாபுல் மஸாலிக் வல் மமாலிக் என்ற நூல் ஒன்றினையும் இவர் எழுதினார்.
82

Page 45
அல்-இவர்தக்ரி
கிபி 10ம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான இவரது வாழ்க்கை வரலாற்றைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. இவரும் அதிகளவு பிரயாணங்களை மேற்கொண்டு தமது அனுபவங்களை அடியொற்றி அல்-மஸாலிக் வல் மமாலிக் என்னும் நூலை எழுதினார். இநநூல் முக்கியமாக அல்-பல்கியால் எழுதப்பட்டஸ"வருல் அகாலிம் என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.இந்நூலில் படங்கள் பலவும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாடும் தனித்தனி வர்ணம் தீட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவரது படங்களில் மத்தியதரைக்கடல் வட்டமாக அல்லது நீள்வளைய வடிவில் காணப்படுகிறது. இப்படங்கள் பல்கியால் வரையப்பட்டபடங்களை ஒத்து இருக்கின்றன. பல்கி குழுவைச் சேர்ந்த ஏனைய புவியியல் அறிஞர்களுக்கு இவரது நூல் நம்பகமான தகவலைத் தரும் ஆக்கமாகத் திகழ்ந்தது. இந்நூல், பாரசீக மொழியில் பெயர்க்கப்பட்டதோடு பாரசீக மொழியில் எழுதப்பட்ட புவியியல் நூல்கள் பலவற்றிற்கு அடிப்படையாகவும் அமைந்தது.
83

இப்னு ஹவ்கல்
அல்-முகத்தளி, இப்னு ஹவ்கல் ஆகியோரின் ஆக்கங்கள் 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த அராபியப் புவியியலின் உச்சநிலையைக் குறிப்பதாக அடெம் மெஸ் எழுதுகிறார்?
அபுல்காஸிம்முஹம்மத் இப்னுஹவ்கல்முப்பது வருடங்களுக்குமேலாக இஸ்லாமிய உலகெங்கிலும் பிரயாணம் செய்தார். 943ல் பக்தாதிலிருந்து தமது பிரயாணத்தை ஆரம்பித்தார் மேற்கு ஸஹாராவைத் தவிர மற்றெல்லா இடங்களையும் தரிசித்தார். * W
இப்பிரயாணங்களின் போதெல்லாம் இப்னு குர்தாத்பிஹற். அல்-ஜைஹானி, (EESTLDT ஆகியோரின் ஆக்கங்களைத் தம்மோடு கூடவே எடுத்துச்சென்றார். முதல் இரு நூல்களும் அவரது கவனத்தைக் கவர்ந்தமையால் ஏனைய பயன்மிக்க விஞ்ஞானங்களிலோ ஹதீஸ்களிலோ கவனம் செலுத்த முடியாமல் போனதாக அவர் 9.றுகின்றார். ァ
கி.பி 952ல் இஷ்தக்ரியைச் சந்தித்தார். தமது ஆக்கத்தையும் படங்களையும் சீர்செய்யுமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று, இப்னு ஹவ்கல் முழுப்புத்தகத்தையும் திருத்தி எழுதி, விரிவாக்கி அல்-மஸாலிக் வல் மமாலிக் என்ற பெயரில் வெளியிட்டார். இந்நூல் படங்களோடு கூடியதாக இருந்தது. படவரைகலையைப் பொறுத்தவரையில்
84

Page 46
இவர் தனித்தன்மையோடு செயலாற்றினா ரேயன்றி, குருட்டுத்தனமாக மற்றவர்களைப் பின்பற்றவில்லை. இவரது உலகப்படம் வட்டவடிவமானதாக இல்லாது நீளவட்டமான உருவில்’ அமைந்திருந்தது. இவரது நூல் பல நூற்றாண்டுகளாக இவருக்குப் பின் தோன்றிய புவியியல் அறிஞர்களுக்கு நம்பத்தகுந்த தகவல்களை வழங்கும் மூலாதாரமாகத் திகழ்ந்தது.
மொரோக்கோவில் இருந்து சீனாவரை பாலைவனம் விரிந்து கிடக்கிறது என்ற கருத்தை இவர் வற்புறுத்தினார். மேலும், சீன மலைத்தொடர்கள் திபெத்திய, பாரசீக, ஆர்மீனிய,' ஸிரிய மலைத்தொடர்களுடனும் முகத்தம், வட ஆபிரிக்க தொடர்களோடும் இரண்டறக் கலந்துள்ளன என்றும் வலியுறுத்தினார்.”
அல்-முகத்தலி
10ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல்யமான புவியியலாளர்களில் அபூஅப்துல்லாஹ் முஹம்மத் இப்னு அஹ்மத் அல்-முகத்தளமியும் ஒருவர். இவர் அராபியப் புவியியலை ஒரு புதிய அத்திவாரத்தில் கட்டியெழுப்பியதோடு, அதற்கு ஒரு புதிய அர்த்தத்தையும் விரிவான நிலைக்களனையும்" வழங்கினார்.
85

பலஸ்தீனைச் சேர்ந்த இவர் 947-9486) ஜெரூஸலத்தில் பிறந்தார். இதனாலேயே அல்-முகத்தளி (சில வேளைகளில் அல்-மக்தஸி) என அழைக்கப்படுகின்றார். இருபது வயதினராக இருந்தபோதே ஒரு புவியியல் அறிஞராக வேண்டும் எனத் தீர்மானித்துவிட்டார். சிறந்த புவியியல் நூல் எழுதுவதற்குப் பிரயாணம் செய்யவும், பல்வேறு இடங்களை அவதானிக்கவும் வேண்டும் என்பதை உணர்ந்தார். இந்நோக்கத்தோடு இருபது வருடங்களை இவர் பிரயாணத்தில் கழித்தார். ஸ்பெயின், ஸிஜிஸ்தான், இந்தியா தவிர்ந்த இஸ்லாமிய உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் இவர் சென்றார்."
ஒருபோதும் தான் இஸ்லாமிய இராஜ்யத்திற்கு அப்பால் செல்லவில்லையென்பதையும் சுய அவதானங்களின் அடிப்படையில் தமது ஆக்கம் அமைந்துள்ளது என்பதையும் அவரே ஒத்துக்கொள்கிறார். யாசிப்பதையும், மரண தண்டனைக்குரிய குற்றங்கள் இழைப்பதையும் தவிர, RCD5 பிரயாணி எதையெல்லாம் அனுபவிப்பானோ அனைத்தையும் அல்-முகத்தளி அனுபவித்தார். தமது பிரயாணத்திற்காக அவர் 10,000திர்ஹம்களைச் செலவிட்டார்."985ல் தமது 40வது வயதில் பர்ஸ் பகுதியைச் சேர்ந்த ஷிராஸில் இருந்து கொண்டு அஹ்ஸனுல் தகாஸிம் பீ மஃரிபத்துல் அகாலிம் (காலநிலைப் பிரதேசங்கள்
86

Page 47
பற்றிய அறிவின் மிகச்சிறந்த பிரிவுகள்) என்ற புவியியல் நூலை எழுதினார். ܫ
இந்நூல் இஸ்லாமிய உலகின் புவியியல் நிலைமைகளையும், மானிட நிலைமைகளையும் பற்றிய ஒரு வர்ணனையாகும். தாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டபிரதேசத்தின் தோற்றப்பாடுகள் முதற்கொண்டு சுரங்கங்கள், மக்களின் மொழிகளும் இனங்களும், பழக்கவழக்கங்களும், மதங்களும், மதப்பிரிவுகளும், பிரதேச ரீதியான பிரிவுகள், பாதைகளும் தூரங்களும் போன்றவற்றைப் பற்றியெல்லாம் இவர் எழுதினார்.
LIL6 வழிகாட்டியாகப் பயன்படுத்த விரும்பியோரினதோ-அல்லது நூலின் உள்ளடக் கத்தைப் பற்றி உடனடியாக ஒரு கருத்தினைப் பெறவிரும்பியோரினதோ நன்மையை நாடி தமது நூலின் அறிமுக உரையிலேயே ஒரு சுருக்கத்தையும், மாவட்டங்கள் இக்லிம்கள் பற்றிய ஒர் அட்டவணையையும் கொடுத்ததோடு, புவியியல் கலைச்சொற்களையும், பிரயோகிக்கப்பட்டி ருக்கின்ற சில சொற்கள், சொற்றொடர்களின் குறிப்பான கருத்துக்களையும் அல் முகத்தளி விளக்கியுள்ளார். அரபுப்புவியியலாளர்களுள் ஒருசிலரே இவ்வாறான தகவல்களை உள்ளடக்கி யிருக்கின்றனர்." அல்-இஷ்தக்ரி இப்னு ஹவ்கல் ஆகியோரைப் போலன்றி அல்-முகத்தளி இஸ்லாமிய இராஜ்யத்தை (அரேபியர்களுக்கு
87

ஏழும், அஜமிகளுக்கு ஏழுமாக) பதினான்கு இக்லிம்களாகப் பிரித்தார்.
தமது நூலுக்குரிய தகவல்களைப் பெற்றுக் கொண்ட மூலாதாரங்களின் தன்மைகளுக்கு ஏற்ப இந்நூலை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
அ) அவர் தாமாக அவதானித்தவை ஆ) நம்பத்தகுந்தோரிடமிருந்து கேட்டறிந்தவை இ) குறிப்பிட்ட விடயம் பற்றி நூல்களின் வாயிலாகத் தாம் அறிந்தவைகள். குர்தாத்பிஹம், ஜைஹானி, பல்கி, ஹம்தானி ஜாஹிஸ் ஆகியோரின் நூல்களை இவர் பயன்படுத்தியுள்ளார். எனினும் அவர்களது நூல்களிலுள்ள சிறந்த அம்சங்களையும் குற்றம் குறைகளையும் அப்படியப்படியே ஆராய் ந்திருக்கின்றார்?
இவர் தமது நூலிலே தேசப்படம் ஒன்றினையும் இணைத்திருந்தார். அது துரதிர்ஷ்டவசமாக இன்று கிடைக்கவில்லை. இப்படத்தில் பரிச்சயமான வழிகளுக்கு நீல நிறமும், பாலைவனத்திற்கு மஞ்சள் நிறமும், கடல்களுக்கு பச்சைநிறமும், ஆறுகளுக்கு நீல நிறமும் மலைகளுக்கு வெளிர் சாம்பல் நிறமும்
பூமி ஏறத்தாழ கோள உருவான தென்றும் மத்திய கோட்டினால் இரு சமப்பகுதி களாக பிரிக்கப்பட்டிருக்கிறதென்றும், மத்திய
88

Page 48
கோட்டிலிருந்து, ஒவ்வொரு முனைக்கும் 90 பாகைகளைக் கொண்ட 360 6) சுற்றளவுடையது' என்றும் இவர் கருதினார். மேலும் தென்னரைக்கோளம் பெருமளவு நீர்ப்பரப்பினாலும், வடவரைக்கோளம் நிலப்பரப் பினாலும் ஆனவை என்றும் குறிப்பிட்டார்.45
அரபுக்கடல், செங்கடல் ஏனைய கடல்களினது கடல்படுக்கைகளைப் பற்றிய அவரது குறிப்புகள் கப்பலோட்டிகளுக்குமிகவும் பிரயோசனமானவை; மத்திய கோட்டிற்கு அப்பாலுள்ள நைல் நதியின் உற்பத்தி ஸ்தானம் பற்றி குறிப்பிடத்தக்க விபரங்களை இவர் அளித்துள்ளார். பட்டிணங்களையும் நகரப் பகுதிகளையும் பற்றிய அவரது ஆராய்ச்சிகள் நவீன நகரப்புவியியல் அறிஞர்களின் பாராட்டைப் பெறும் தகுதி வாய்ந்தவை." தமது பிறந்தகமான ஜெருஸலத்தைப் பற்றிய அவரது வர்ணனைகளோ மிகச்சிறப்பானவைகளாகத் திகழ்கின்றன.
அல்-முகத்தளி தரைக்கீழ் நீர், நீர்ப்பாசனம், சீர்திருத்தப்பட்ட பயிர்கள், ஒட்டுமரங்கள் (Grafted trees) போன்ற விடயங்களிலும் ஆர்வ முடையவராக இருந்தார். பொருளாதாரப் பண்டங்கள், அவற்றின் பங்கீடு என்பன பற்றிய குறிப்புகள் அக்காலப் பொருளாதாரப் புவியியல் அறிவை வளப்படுத்துவனவாக அமைந்தன. மேலும், இஸ்லாமிய உலகின் பிரதான
89

துறைமுகங்கள் பற்றியும், வர்த்தகம் பற்றியும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்."
இந்நூல் மிகப் பெறுமதியானதும் புதிய னவுமான தகவல்களை உள்ளடக்கியிருக்கின்றது° என்று பேராசிரியர் ஹிட்டி எழுதுகின்றார். எந்தக்காலத்துக்குமுரிய மிகப்பெரும் புவியியல் அறிஞர்' என ஸ்ப்ரெஞ்சர்” இவரைப்பற்றி வர்ணித்துள்ளார்.
கொன்ஸ்தான்திநோபிலில் ஒன்றும், பெலினில் ஒன்றுமாக இந்நூலின் இரு பிரதிகள் இன்று கிடைக்கின்றன. இவரது நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1897க்கும் 1910க்கும் இடையில் நான்கு வால்யூம்களாக வங்காளத்தில் Asiatic Society யால் வெளியிடப்பட்டது.
வேறு சில புவியியல் அறிஞர்கள்
இதுவரை ஆராயப்பட்டமுக்கியமான புவியியல் அறிஞர்களை விடமேலும் பலர் இக்காலப்பிரிவில் தோன்றி, புவியியல் துறையின் வளர்ச்சிக்காக பணியாற்றியிருக்கின்றார்கள். இவர்களுள் சிலர் புவியியல் அறிஞர்களாவர். வேறு சிலர் பிரயாணிகளாவர்; இன்னும் சிலர் வரலாற்று ஆசிரியர்களாவர்; இவ்வரலாற்று ஆசிரியர்கள் தமது நூல்களில் புவியியலோடு தொடர்பான விடயங்களையும் ஆராய்ந்தனர். இறுதியாக,
90

Page 49
இக்வானுல் ஸபாவைச் சேர்ந்த பெயர்குறிப்பிடாத அறிஞர்களும் புவியியல் தோற்றப்பாடுகள் பலவற்றை விளக்கியிருக்கின்றனர். இவர்களைப் பற்றிய சுருக்கமான விளக்கம் கீழே தரப்படுகிறது.
புவியியல் விடயங்கள் பற்றி முஸ்லிம்களால் எழுதப்பட்டவற்றுள் மிகப் பழைமையானவை ஹிஷாம் பின் முஹம்மத் அல்-கல்பி (இ820) யினுடையதாகும். வரலாற்று ஆசிரியரான இவர் புவியியல் விடயங்கள் பலவற்றையுள்ளடக்கிய பத்து நூல்களை எழுதினார். அவற்றுள் ஒரு சில பகுதிகளே இன்று கிடைக்கின்றன. மற்றொரு வரலாற்று ஆசிரியரான அல்பலாதுரி (இ892)யும் தமது நூல்களின் பல்வேறு இடங்களில் புவியியல் தொடர்பான விடயங்களை ஆராய்ந்துள்ளார். இவற்றோடு புதூஹத்துல் புல்தான் (862) கிதாபுல்புல்தானுல் கபீர், கிதாபுல் புல்தானுல் ஸ்கீர் ஆகிய நூல்களும் இவரால் எழுதப்பட்டுள்ளன. இந்நூல்கள் இப்போது கிடைக்கத்தக்கனவாக இல்லை.
இப்னு பழ்லான், அபூ துலப் (10ம் நூற்றாண்டு) ஆகியோர் பிரயாணிகளாவர். இப்னு பழ்லான், கலிபா அல்-முக்ததிரால் பல்காரர்களின் அரசனிடம் தூவராக அனுப்பப்பட்டார். பக்தாத் திரும்பிய பிறகு தனது பிரயாண அனுபவங்கள்ை நூலுருவில் வரைந்தார். அதுகாலவரை எவரும் அறிந்திராத வொல்கா, கஸ்பியன் பகுதிகளைப்
91

பற்றிய நம்பகமான தகவல்களை இந்நூல் கொடுத்தது. ஸமானிய அரசசபையில் கவிஞராக விளங்கிய அபூதுலப் என்பவர் இவ்வரச சபைக்கு இந்தியாவிலிருந்து விஜயம் செய்த நல்லெண்ணத்தூதுக் குழுவுடன் இந்தியா சென்று காஷ்மீர், காபுல், ஸிஸ்தான் என்னும் இடங்களையும், polyurti, கொரமண்டல் கரையோரங்களையும் தரிசித்துவிட்டு நாடு திரும்பியதும் அஜாயிபுல் புல்தான் என்னும் நூலை எழுதினார். யாக்கூத், கஸ்வீனி போன்றோர் இந்நூலைப் பயன்படுத்திக் கொண்டனர்.
புகழ்பெற்ற அரபுத்தத்துவஞானி அல்-கிந்தியின் மாணவர்களுள் ஒருவரான அல்ஸராக்ஸி (இ899) அல்-மஸாலிக்வல் மமாலிக், ரிஸாலா பில் பஹ்ர் வல் மியாஹற் வல் ஜிபால் (கடல்களும், நீர் நிலைகளும், மலைகளும்) ஆகிய நூல்களை எழுதினார். இந்நூல்கள் இரண்டும் காலத்தால் அழிந்துபோய்விட்டன.
அல்-ஹாயிக் (இ945), எழுதிய கிதாப் ஜஸிரத்துல் அரப்" என்னும் நூல் அரேபியாவின் பெளதீக அம்சங்கள், குடியிருப்புகள், செய்தித் தொடர்புகள் என்பன பற்றிகூறுகிறது. முஹஸ்லபி என்ற புவியியல் அறிஞர், பாத்திமிய்யக் கலிபாவான அல்-அஸிஸுக்காக சூடானின் புவியியல் பற்றிக் கூறும் நூல் ஒன்றினை வரைந்தார். இதுவே சூடானின் புவியியல் பற்றி
92

Page 50
எழுந்த முதலாவது நூலாகும். சூடானைப் பற்றிய விபரங்களைப் பெறுவதற்கு யாகூத் இதனைப் பயன்படுத்திக்கொண்டார். இப்னு ஸெராபியன், ஈராக் பற்றியும் மெஸபடோமியாவின் பாதை, கால்வாய் முறைகள் பற்றியும் கூறும் ஒரு நூலை (945) எழுதினார். லிஸ்ட்ரேன்ஜ் தனது புகழ்பெற்ற இரு நூல்களையும் எழுதுவதற்கு இதனைப் பயன்படுத்தினார். அர்ராம் இப்னு அஸ்பைஜ் அஸ்ஸ"லமியினால் இருநூல்கள் எழுதப்பட்டன. இவற்றுள் ஒன்று, கிதாப் அஸ்மாஃ திஹாமா வ மகானிஹா (845) இது அராபியாவைச் சேர்ந்த திஹாமாவிலுள்ள மலைகளைப் பற்றி கூறுகிறது. மற்றொன்று ஜெஸிரதுல் அரப்; அல்-மர்வாஸி (இ887) கிதாபுல் மஸாலிக் வல் மமாலிக் என்னும் நூலை எழுதினார். இதனைப் பற்றிய வேறு விபரங்கள் கிடைக்கவில்லை.
இக்வானுஸ்ஸபாவைச் சேர்ந்த பெயர் அறியப்படாத நூலாசிரியர்கள் பகுத்தறிவுரீதி யான நோக்குடையவர்கள், அவர்கள் பெளதிக அம்சங்களையும் அந்த அடிப்படையிலேயே நோக்கினர். உதாரணமாக, வளிமண்டலவியற் தோற்றப்பாடுகள், மழை பருவக்காலங்கள், வளிமண்டலம், புவிச்சரிதவியல் செய்முறைகள், அரிப்பு, வானிலையழிவு (weathering) என்பன பற்றி அவர்கள் திறந்த மனத்தினராய் விளக்கமளித்தனர்." −
93

கடற்பிரயாணமும் அதனோடு தொடர்புடைய நூல்களும்
இக்காலப்பிரிவில் அரேபியாவையும், பாரசீகத்தையும் சேர்ந்த கடலோடிகள் ஜாவா, சுமத்திரா, இந்தியா, gaOTIT போன்ற வெகுதொலைவிலுள்ள நாடுகளுக்குக் கடல் மார்க்கமாகப் பிரயாணங்களை மேற்கொண்டு, அதனடிப்படையில் பல நூல்களை ஆக்கி, பிரதேசப்புவியியல், வர்ணனைப் புவியியல் என்பனவற்றின் வளர்ச்சிக்கு உதவினர்.
கடல்மார்க்கமாகப் பிரயாணங்களை மேற்கொள்வதற்குச் &FI755LDITs, அமைந்த காரணிகள் இரண்டு; முதலாவதாக, விசாலமான நிலப்பரப்பினை அடக்கிய முறையில் வளர்ச்சி பெற்றிருந்த இஸ்லாமிய இராஜ்யமும், தேசீய, இன, நிற குல பேதங்கள் அற்றவகையில் அவ்விராஜ்யத்தைச் சேர்ந்த மக்களிடையே நிலவிய மத ஒற்றுமையும்; இரண்டாவதாக, அரபு வர்த்தகர்களின் வியாபார நடவடிக்கைகள் விரிவடைந்திருந்தமை
ஆதிகாலம் தொட்டே அரேபியர் ஒரு புறத்தில் (இந்தியா, சீனா, போன்ற) கீழை நாடுகளுக்கும் (எகிப்து, ஸிரியா, ரோம் போன்ற) மேலை நாடுகளுக்கும் இடையே வியாபார நடுவர்களாகப் பணியாற்றிவந்தனர். ஆனால், பக்தாத், அப்பாஸிய இராஜ்யத்தின் தலைநகராக அமைந்தமையும்,
94

Page 51
பஸ்ரா, ஸிராப் (Sira) ஆகிய துறைமுகங்கள் விருத்தி செய்யப்பட்டதையும் அடுத்து, கிழக்காகச் சீனா வரையும், ஆபிரிக்காவின் கிழக்குக் கரையான ஸோபாலா (Sofala) வரையும் இப்போது அரேபியரின் வர்த்தக நடவடிக்கைகள் விரிவடைந் திருந்தன. அவர்கள் பாரசீகரிடமிருந்து கப்பலோட்டும் கலையைப்பயின்று, அதில் நிபுணத்துவமும் பெற்றனர். 9ம் நூற்றாண்டளவில் அரேபியக் கப்பலோட்டிகள் மொன்சூன், வியாபாரக் காற்றுகள் என்பன பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர்களாக ஆகிவிட்டனர். அவர்களது கப்பல்கள் கரையோரமாக மட்டும் செல்லவில்லை. அரேபியாவிலிருந்து நேரடியாக இந்தியாவுக்கே சென்றனர். மேலும், செங்கடல், மத்தியதரைக்கடல், கருங்கடல், கஸ்பியன்கடல் ஆகியவற்றிலும் நைல் நதி, சிந்துநதி என்பன உட்பட கப்பல் செல்லக்கூடிய பெருந்தொகையான ஆறுகளிலும் அவர்கள் பிரயாணம் செய்தனர்.”
அழியாது எஞ்சியிருக்கின்ற இக்காலத்தைச் சேர்ந்த பிரயாணக்குறிப்புக்களுள் மிகப் பழைமை வாய்ந்தது சுலைமான் எனும் வர்த்தகருடையவையாகும். இவர் (கடல் மார்க்கமாக) இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிரயாணம் செய்து, தனது பிரயாண் அனுபவங்களையும், தான் கண்டு கேட்டு அறிந்தவற்றையும், அக்பாருல் ஸின் வல் ஹிந்து
95

என்ற பயண நூலில் (850) வர்ணித்தார். ஸிராபைச் சேர்ந்த அபூ ஸைத் அல்-ஹஸன் என்பவரால் திரட்டப்பட்டதும், சரிபார்க்கப்பட்டவையுமான ஏனைய குறிப்புகளோடு சேர்ந்து 916ல் 'ளில்லிலதுத் தவாரிஹற்’ என்ற பெயரில் முதல் தடவையாக இது பிரசுரிக்கப்பட்டது.
அபூ ஸைத் செல்வவளமுள்ள ஒரு நபராக இருக்கவேண்டும். அவர் பிரயாணங்களை மேற்கொள்ளவில்லையாயினும், பிரயாணிகள், வர்த்தகர்கள் என்போரிடமிருந்து தகவல்களைத் திரட்டுவதிலும், அவற்றைப் பதிந்து வைத்துக் கொள்வதிலும் தீவிரமான ஆர்வம் காட்டிய ஒருவர். இந்தோ சீனா, கிழக்கிந்தியக் தீவுகள் போன்றவற்றின் பெளதிக அமைப்புகள், இடவிளக்கவியல் என்பனபற்றி நாகரிக உலகம் முதன்முதலாக இக்குறிப்புகள் மூலமே அறிந்து கொண்டது.* சீனா உன்னதமான gCD5 நாகரிகத்தைக் கொண்டிருந்தது என்றும், அங்கே கல்வி கற்பது ஒவ்வொருவர் மீதும் கட்டாயக்கடமையாக்கப்பட்டிருந்தது என்றும், அதுவும் இலவசமாக வழங்கப்பட்டது என்றும் இக்குறிப்புகளில் இருந்து தெரியவருகிறது.
அதே காலப்பிரிவைச் சேர்ந்த புஸ"ர்க் இப்னு ஷாஹற்ரியார் (கி.பி.912-1009) என்பவரால் 953 அளவில் எழுதப்பட்ட அஜாயிபுல் ஹிந்து (இந்தியாவின் அற்புதங்கள்) என்னும் நூலும்
96

Page 52
குறிப்பிடத்தக்கதொன்றாகும். கிழக்கிந்தியத் தீவுகளிலும், இந்து சமுத்திரத்தின் ஏனைய பகுதிகளிலும்அரேபியக் கடலோட்டிகள் புரிந்த சாகசச் செயல்கள் பற்றி ஏராளமான கதைகளை இந்நூல்தருகின்றது. கற்பனைவளமுடைய நூலாக இது தென்படினும், இந்தியாவின் புவியியல் வரலாற்றைப்பற்றியும், ஜாவா,சுமத்திரா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் பற்றியும் இந்நூல் எடுத்துக் கூறுகின்றது.
இவ்வாறு கடற்பயணம் மூலமாகப் பெறப்பட்ட அறிவு மரபுரிமையாக முஸ்லிம்களுக்குக் கிடைத்த கிரேக்க ஆக்கங்களில் காணப்பட்ட குறை பாடுகளை நேரடியாக அவர்களுக்கு எடுத்துக் காண்பித்ததோடு? கிரேக்க பாரசீக, இந்திய மூலகங்களின் துணையோடும், தமது சொந்த ஆராய்ச்சி, அவதானம் என்பவற்றின் துணையோடும் மேற்கொண்டு இத்துறையின் வளர்ச்சிக்கும், விருத்திக்கும் அவர்கள் செய்ய வேண்டிய பணியையும் உணர்த்திற்று.
உசாத்துணை நூல்கள்
References
1. Nafis Ahamad, Muslims and the Science of
Geography, pp. 16-17. 2. Ibid., p. 17 3. Sir Thomas Arnold, The Legacy of Islam,
p.84
97

1O. 11.
12. 13.
14.
15.
16.
17.
18.
19. 20.
21.
Philip K. Hitti, History of the Arabs, p.384 K. Jamil Ahmad, Heritage of Islam, p. 108 Nafis Ahamad, Muslim Contribution to Geography, p.24 Nafis Ahmad, Muslims and the Science of Geography, p.18 Encylcopaedia of Islam, Vol.lp.580
Ibid., p.580
R. Briffault, The Making of Humanity, p. 193 Collins Concise Encyclopedia of Explorations, p.154 Encyclopaedia of Islam, Vol.II, p.580 W. Montgomery Watt, The Majesty that was Islam, p.185 S. Khuda Bakhsh, THe Renaissance of Islam, p.276 See Art. "Traveller Al-Yaqubi" in the Muslim World by K.A. Waheed. Vol 16. No.27 (20th January 1979)
bid Collins Concise Encyclopedia of Explorations, p. 154 Nafis Ahmad, Muslims and the SCience Of Geography, pp. 18-19
Hitti, Op.cit p.385 Al-Akkad, The Arab's Impact on European Civilisation, pp.50-51 Nasfis Ahmad, Muslim Contribution to Geography, p.28

Page 53
22.
23.
24. 25.
26.
27. 28. 29.
30.
31. 32.
33.
34. 35. 36. 37. 38.
39. 40.
41
Jamil Ahmad, Hundred Great Muslims p.693 Nafis Ahmad, Muslims and the Science of Geography. p. 19 S.H. Nasr, Islamic Science, p.40 Jamil Ahmad, Hundred Great Muslims, p.695 Nafis Ahmad, Muslims and the Science of Geography, p.20
Ibid., P63
Ibid., P62 Mohammad Abdur Rahman Khan, A Brief Survey of Muslim Contribution to Science and Culture, p.36 Collins Concise Encyclopedia of Explorations, p.184 Encyclopaedia of Islam, Vol.1 p.581 Nafis Ahmad, Muslims and the SCience Of Geography, p. 19 Nafis Ahmad, Muslim COntribution tO Geography pp.29-30 S. Khuda Bakhsh, op. cit. p.275 Ibid., p.276
bid
Encyclopaedia of Islam, Vol.II, p.582 Art. "Geography and Commerce' by J.H. Kramers in The Legacy of Islam, p.89 S. Khuda Bakhsh, op. cit., p.277 Hitti, op.cit, p.386 . S. Khuda Bakhsh, op. cit p.276
99

42. 43.
44. 45.
46.
47. 48. 49. 50.
51. 52.
53.
Encyclopaedia of Islam, Vol.II p.582 Nafis Ahmad, Muslim Contribution to Geography. p.34 S. Khuda Bakhsh, op. cit., p.277 Nafis Ahmad, Muslim Contribution tO Geography, p.35 Nafis Ahmad, Muslims and the Science of
Geography, p.64
bid.
Hitti, op.cit, p.386 K.Jamil Ahmad, Heritage of Islam, p. 110 Nafis Ahmad, Muslims and the Science of Geography, p.23 Encyclopaedia of Islam, Vol.II p.582 Mohammad Abdur Rahman Khan, op.cit., p.35
S. H. Nasr, op.cit., p.42
100

Page 54
அத்தியாயம்-4 11ம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம் வரை புவியியலின் வளர்ச்சி
11-ம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலம் வரையிலும் அதற்குப் பின்னரும் முதல்தரமான பல புவியியல் அறிஞர்கள் தோன்றி இத்துறையின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்புச் செய்திருக்கின்றனர். இக்காலப்பிரிவில் கீழை இஸ்லாமிய உலகில் மட்டுமின்றி, வடமேற்கு ஆபிரிக்கா, (மக்ரிப்), ஸ்பெயின் (அந்தலூசியா) போன்ற பகுதிகளிலும் புவியியற் பணிகள் நடைபெற்றன. மறுமலர்சசிக் காலப் பகுதியையடுத்து துருக்கியரும் புவியியல் வளர்ச்சியில் பங்குகொள்ளலாயினர்.
6) நூற்றாண்டுகளைக் கொண்ட இக்காலப்பிரிவில் உலகப்புவியியல், பிரதேசப் புவியியல், வானியற் புவியியல்,
அண்டஅமைப்பியல் போன்ற துறைகளைச் சார்ந்த
நூல்களும், கடல், கரைப் பிரயாணங்களுடன்
தொடர்புடைய நூல்களும், புவியியல்
அகராதிகளும் தோன்றின. படவரை கலையிலும்
107

அதிகளவு முன்னேற்றம் காணப்பட்டது. மாமேதை அல்-பிரூனி அல்-இத்ரீஸி யாக்கூத் அல்ஹமவி, அல்கஸ்வீனி அபுல் பிதா, பீரிரஈஸ். ஹாஜிகலிபா போன்ற மாபெரும் புவியியல் அறிஞர்கள் இக்காலப்பிரிவைச் சேர்ந்தவர்களே.
அல்-பிரூனி
முஸ்லிம்களின் ஆரம்பகாலப் புவியியல் வரலாற்றின் உச்ச நிலையாக 11-ம் நூற்றாண்டைக் கொள்ளலாம். இக்காலப் பிரிவில் கிரேக்கர்களிடமிருந்தும் ஏனையோர்களிடம் இருந்தும் அரேபியர் பெற்றுக் கொண்டதும், தமது பிரயாணம், அவதானம் ஆராய்ச்சி என்பவற்றின் மூலமாகத் தாமாகவே விருத்தி செய்து கொண்டதுமான புவியியல் அறிவு மிக உயர்ந்த தரத்தை எட்டியிருந்தது. ஆயினும், ஏறக்குறைய இரு நூற்றாண்டுகளாக வளர்ச்சியடைந்து கொண்டு வந்த புவியியல் நூல்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் திகழ்வது, மாமேதை அல்-பிரூனியின் ஒப்புயர்வற்ற ஆக்கங்களாகும். இவர், ஏககாலத்தில் கலாசாரப் புவியியல், வர்ணனைப் புவியியல், வானவியற்புவியியல் ஆகியவற்றில் வல்லவராகத் திகழ்ந்தார்:
102

Page 55
அல்-பிரூனி மத்திய ஆசியாவைச் சேர்ந்த, அக்காலை புகழொளி வீசிய குவாரிஸ்ம் என்னும் நகரத்தில் கி.பி.972-ல் பிறந்தார். முதலில் கிரேக்க அறிஞர் ஒருவரிடமும், பின்னர் அபூ நஸ்ர் என்பவரிடமும் கல்வி பயின்றார். அறிவுப் பணியின் ஆரம்ப பிரிவிலேயே புவியியலிலும், அதன் பல்வேறு அம்சங்களிலும் ஆர்வம் காட்டினார்.அல்-பிரூனி அரபு, பாரசீகம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதினார். ஹீப்ரு மொழி சிரிய மொழி ஆகியவற்றை அவர் அறிந்திருந்தார். இந்தியாவில் இருந்தபோது சமஸ்கிருதத்தையும் கற்றார். ஸுல்தான் மஹ்மூத் கஸ்னி, குவாரிஸ்ம் நகரைக் கைப்பற்றி, அல்-பிரூனியைத் தன் தலைநகரத்துக்குக் கூட்டிவரமுன்னரே, அவர் புகழ் பூத்த கல்விமானாகத் திகழ்ந்தார். ஜுர்ஜான் , மீதியா (Media), குராசான் ஆகிய இடங்களுக்கெல்லாம் இவர் சென்றார். பழங்காலச் சமூகங்களின் காலக் கணிப்பு முறை(அல்-அஸருல் பாக்கியா) என்னும் நூலை ஜுர்ஜான் மன்னராகிய ஷம்ஷ"ல் மஆலியின் glpfgF சபையில் இருக்கும்போது எழுதி முடித்தார்’ (கிபி 1000)
ஸ"ல்தான் மஹமூத் இந்தியாவுக்குப் படையெடுத்துச் சென்றபோது இவரையும் அழைத்துச் சென்றார். அல்-பிரூனியின் அறிவுப் பணியிலே ஒரு திருப்பு முனையாக அமைந்தது இப்பிரயாணம் ஏறக்குறைய பதினாறு
103

வருடகாலம் இங்கு தங்கியிருந்தார். இக்காலத்தில்தான் அந்நாட்டிற்குரிய மொழியான சமஸ்கிருதத்தைக் கற்றார். வானவியல் பற்றிய சமஸ்கிருத நூல்களை மொழிபெயர்த்தார். கானூனுல் மஸ்ஊதி போன்ற நூல்களுக்கான தகவல்களைத் திரட்டிக் கொண்டார். அனைத்தையும் விட இந்தியாவைப் பற்றிய ஓர் அருமையான நூலை எழுதினார். தஹ்கீக் மா பில் ஹிந்து என்ற இந்நூல் அல்-பிரூனியின் இந்தியா (கிதாபுல் ஹிந்து) என்ற பெயரிலேயே, இன்று புகழ் பெற்றிருக்கின்றது. *
ஸ"ல்தான் மஸ்ஊதின் காலத்தில் கஸ்னியில் வாழ்ந்தபோது அல்-கானூனுல் மஸ்ஊதி என்னும் சிறப்பு மிக்க நூலை எழுதினார். மேற்குலகில் Canon Masudicus என்னும் பெயரில் இந்நூல் அறியப்படுகின்றது. ஸுல்தான் மஸ்ஊதியைத் தொடர்ந்து வந்த ஸ"ல்தான் மெளதுாத் என்பவரின் ஆட்சிக்காலத்தில் கிதாபுல் தப்ஹீம், கிதாபுல் ஜமாஹிர் பில் மஃரிபத்துல் ஜவாஹிர் (பெறுமதி மிக்க கற்கள்) என்ற பெறுமதி வாய்ந்த இரு நூல்களை எழுதினார். அவரால் எழுதப்பட்ட மற்றொரு குறிப்பிடத்தக்க நூல் கிதாபுல் ஸைதானா (Kitab-ul-Saydana). துருக்கியைச் சேர்ந்த அஹ்மத் ஸ்கீ வாலிதீ உட்பட பல நவீன கல்விமான்கள் கணிப்பொருளியல், உலோகத் தொழிற்கலையியல் (Metalurgy) கோளப்
104

Page 56
பாத்தியல்" (Geodesy) போன்றவற்றோடு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டுள்ள அல்-பிரூனியின் பிரபல்யம் குறைந்த நூல்களைப் பற்றிக் கருத்துரை வரைந்திருக்கின்றனர்.
பல்திறப்புலமை வாய்ந்த இவரது ஆக்கங்கள் ஓர் ஒட்டகச் சுமையைவிட அதிகமாக இருக்கவேண்டும் எனக் கூறப்படுகிறது. ஏறக்குறைய 114 நூல்களை இவர் எழுதியுள்ளார். அவற்றுள் 27 மட்டுே இன்று எமக்குக் கிடைக்கின்றன. w
புவியியல் துறையைப் பொறுத்தவரை அல்-பிரூனியின் பங்களிப்பின் முக்கியத்துவம் இரு மடங்காகும். முதலாவதாக, அவர் தமது காலம் வரையிலான புவியியல் அறிவினைப் பற்றி விமர்சன ரீதியான ஒருசுருக்கத்தை முன்வைத்தார். புவியியல் துறைக்கு கிரேக்கர்களினதும் இந்தியர்களினதும், ஈரானியர்களினதும், அத்தோடு அரேபியர்களினதும் பங்களிப்பினை அவர் நன்கு அறிந்திருந்தமையால், இதனைப் பற்றி ஓர் ஒப்பீட்டாய்வினைச் செய்தார். இரண்டாவதாக, ஒரு வானவியல் அறிஞர் என்ற வகையில், பெருந்தொகையான நகரங்களின் புவியியல் நிலைகளைக் கணித்ததோடு, ஓர் அகலக் கோட்டுப் பாகைக்குரிய தூரத்தையும்
A.
பூமியின் பரப்பளவைக் கணக்கிடுதலைப் பற்றிய கணிப்பியல்
105

அளவிட்டார். இவ்வாறு அவர் அராபிய வானவியல் வரலாற்றின் முக்கியமான கோளப் பாத்தியல் நடவடிக்கைகள் மூன்றில் ஒன்றினை நிறைவேற்றியிருக்கின்றார்."
அல்-பிரூனியின் அளவீடுகள் பெருமளவு செம்மை வாய்ந்தவை. புவியின் சுற்றளவைப் பற்றிய அவரது கணிப்பீடு நவீன கணிப்பீட்டிலிருந்து 70 மைல்களாலும், மத்திய கோட்டில் புவியின் விட்டத்தைப்பற்றியகணிப்பீடு 12மைல்களாலுமே குறைவுபடுகின்றன?
அல்-பிரூனியின் காலத்துக்கு முன்பு, சந்திர கிரகணங்களைக் கொண்டு நெடுங்கோடுகளைக் கணிப்பது பொதுவாகப் பின்பற்றப்பட்டு வந்த முறையாகும். இதனால் வழுக்கள் நேர்ந்தன. பெரு நிலப்பரப்புக் கணிப்பீட்டு முறையை (Terrestrial Method of Calculation) ga/Gu (p56ir upgolai எடுத்துக்காட்டியதாகக் கூறப்படுகின்றது. அல்-பிரூனி, புள்ளிகளுக்கிடையிலுள்ள மிகக்குறைந்த நேர்க்கோட்டுத் தூரத்தையும், ஒவ்வொன்றினது அகலக் கோடுகளையும் சரியாக நிர்ணயித்துவிட்டு, அத்தரவில் இருந்து நெடுங் கோட்டிலுள்ள வித்தியாசத்தைக் கணித்தார். இடைநிலையிலுள்ள பல்வேறு புள்ளிகளின் நெடுங்கோடுகளுடன், அலெக்சாந்திரி யாவுக்கும், கஸ்னாவுக்கும் இடையில் நெடுங்கோடுகளுக்கான தூரங்களின் பழைய இலக்கங்களை இவ்வாறு
106

Page 57
திருத்தியமைத்தார். தொலமியின் 'அல்-மஜெஸ்ட் என்னும் நூலுடன் ஒப்பிடக்கூடிய தமது புகழ்பெற்ற கானூனுல் மஸ்ஊதியின் ஓர் அத்தியாயத்தில் இக்கணிப்பீட்டை அல்-பிரூனி விளக்கியுள்ளார்.
பூமி தனது அச்சில் சுழல்கிறதா, இல்லையா? என்பது பற்றி அவர் ஆராய்ந்து விளக்கினார். பெறுமதிவாய்ந்த கற்களினதும், பதினெட்டு உலோகங்களினதும் தன்னீர்ப்பை (Specific gravity) சரியாகக் கணித்தார். இயற்கை நீருற்றுக்கள், ஆட்டீசியன் கிணறுகளின் செயல் முறையினையும்விளக்கினார்.ஆறுகளின் தன்மை, அவற்றின் தோற்றம், ஒட்டம், அவற்றின் வற்றுப் பெருக்கு வருடாந்த ஏற்ற இறக்கம் என்பன பற்றி அவர் நன்குஅறிந்திருந்தார். அவைபற்றிச் சரியான விளக்கத்தையும் கொடுத்தார். இத்தோற்றப் பாடுகள் பற்றி நவீன விஞ்ஞானம் குறிக்கின்ற அதே சொற்களாலான விளக்கங்களை வாசிக்கும்போது உண்மையிலே ஆச்சரியமாக இருக்கிறது என்று ஒர் ஐரோப்பிய அறிஞர் கூறுகின்றார்."
புவியியலின் ஓர் அங்கமான படவரை கலையிலும் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார். கடல்களின் அமைவு நிலையைக் காட்டுவதற்காக கிதாபுல் தப்ஹீம்' என்ற நூலிலே வட்ட வடிவமான படமொன்றை இணைத்திருந்தார் பழங்காலச் சமூகங்களின் காலக் கணிப்புமுறை
107

என்ற நூலில் பல படங்கள் காணப்பட்டன. புவி, வான் என்பவற்றிற்குரிய படவெறியங்களுக்கான (Projection) முறையொன்றினையும் அவர் உருவாக்கினார்’
அல்-பிரூனியின் இந்தியா
அல்-பிரூனியின் மகத்தான புவியியல் பங்களிப்பினை எடுத்துக்காட்டும் தலைசிறந்த நூலாகத் திகழ்வது இந்தியாவைப் பற்றி எழுதப்பட்ட கிதாபுல் ஹிந்த் ஆகும். இது ஒரு பிரதேசப் புவியியல் நூலாகும். இந்தியாவின் மத்திய காலப் புவியியல் வரலாற்றை அறிவதற்கு இந்நூல் பெரிதும் துணை புரிகின்றது.
இந்நூலிலே, அல்-பிரூனி, இந்தியாவின் பெளதீக உறுப்புக்களை மட்டுமன்றி, சமூக அமைப்பு முறை, மத நம்பிக்கைகள், ஹிந்துக்களின் விஞ்ஞான முயற்சிகள் என்பவற்றையெல்லாம் விளக்கி யுள்ளார். 18ம் நூற்றாண்டுவரை அவர் விளக்கிய முறைக்கு ஈடாக யாருமே விடயங்களை முன் வைக்கவில்லை. இந்நூலின் பல அத்தியாயங்கள் வானவியல், அண்ட அமைப்பியல் (Cosmography) பற்றிவிரிவாகவிளக்குகின்றன. கணிப்பொருளியல், புவிச் சரிதவியல் (Geology) போன்ற விடயங்களும் இதில் ஆராயப்பட்டுள்ளன. இந்நூலிலே இந்து
108

Page 58
கங்கைச் சமவெளிஉருவான முறைபற்றிஅல்-பிரூனி கொடுக்கின்ற விளககம் பெருமளவுக்கு விஞ்ஞான ரீதியானதாகும். ஆரம்பத்தில் கடற்படுக்கையாக இருந்து, பின்னர் படிப்படியாக அடையற் படிவுகளால் நிரம்பியதனாலேயே இப்பெரும்
சமவெளி உருவானதாக அவர் கருதுகின்றார்.
வட இந்தியச் சமவெளி
இது பற்றி அவர் தருகின்ற விளக்கம் பின்வருமாறு: 'தெற்கில் மேலே குறிப்பிடப்பட்ட இந்துசமுத்திரமும் மற்றையமுன்று பக்கங்களிலும் உயர்ந்த மலைகளும் இதன் எல்லைகளாக இருக்கின்றன. அம் மலைகளில் இருந்து ஆறுகள் கீழ் நோக்கிப் பாய்கின்றன. நீங்கள் இந்தியாவின் மண்ணை உங்கள் கண்களால் பார்த்து அதன் தன்மையைப் பற்றி ஆராய்ச்சி செய்வீர்களாயின் நிலத்தில் எவ்வளவு ஆழத்திற்குத் தோண்டினாலும் அங்கே அகப்படுகின்ற வட்ட வடிவமான கற்களை எடுத்துப் பார்த்தால் மலைகளுக்கு அருகிலும், விரைவோட்டப்பகுதியிலும் அவை பெரியனவாக இருக்கும். மலைகளில் இருந்து வெகு தூரத்திலும், ஆறுகள் மெதுவாகச் செல்லும் இடங்களிலும், அவை சிறியனவாக இருக்கும். ஆற்று முகங்களில், sifr தேங்கி நிற்கின்ற இடங்களிலும், கடலையடுத்தும் அவை மணலாக நொறுக்கப்
109

பட்டிருக்கும். இவற்றையெல்லாம் எடுத்துப் பார்க்கும்போது இந்தியா ஒரு காலத்தில் கடலாக இருந்திருக்கின்றது என்பதையும், அது ஆறுகளின்
வண்டல்களினால் நிறைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்ளாதிருக்க முடியாது."
மத்திய ஆசியா, வட மேற்கு இந்தியா என்பவற்றிற்குக் குறுக்காகச் செல்லும் மலைத் தொடர்களைப் பொறுத்தவரையில், அவற்றின் பரப்பினைப் பற்றிய அல்-பிரூனியின் கருத்து பெரும்பாலும் சரியானது' 1
இந்தியாவின் ஆறுகள் வடக்கில் உள்ள குளிர்ந்த மலைகளில் இருந்தோ அல்லது கிழக்கிலுள்ள மலைகளில் இருந்தோ உருவாகின்றன எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆறுகளைப் பற்றி அல்பிரூனி விரிவாக இந்நூலில் ஆராய்கின்றார். அவற்றின் உற்பத்தித் தாபனங்களும், செல்லும் வழிகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. அவற்றின் பெயர்களையும், அவை ஊடறுத்துப் பாயும் பிரதேசங்களையும் பற்றிய தகவல்களை அவர் பெற்றுக் கொண்ட மூல நூல்களையும் கொடுத்திருக்கின்றார்.
மேலும், இந்நாட்டில் வாழும் மிருகங்களைப் பற்றியும் சுருக்கமான விளக்கம் கொடுத்திருக்கின்றார். இதனைவிட பனாரஸ், கானேஜ் (Kana) முல்டான், லாகூர், பெஷாவார்,
110

Page 59
உஜ்ஜைன் போன்ற தொகையான பட்டினங்கள், நகரங்களைப் பற்றியும் எழுதியிருக்கின்றார். ஆங்கா, ஸோம்நாத், லொஹாரானி (Loharan) போன்ற துறைமுகங்களையும் அவர் குறிப்பிட மறக்கவில்லை. f
பிரூனி முழுக்க முழுக்க இந்தியாவின் புவியியல் கூறும் நூலாக இதனை (கிதாபுல் ஹிந்த்) வரையவில்லை. மாறாக ஏலவே கூறினாற்போல மதம், தத்துவம், இலக்கிய பழக்கவழக்கங்கள், சட்டங்கள், சோதிடம், வானவியல், காலக்கணிப்பு முறை, புவியியல் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. எவ்வாறெனினும், புவியியல் அம்சத்தைப் பொறுத்த வரையில் கிதாபுல் ஹிந்த்' என்னும் நூலை ஒரு சிறந்த பிரதேசப் புவியியல் நூலாகவும் கொள்ள முடிகின்றது.
அல்-இத்ரீஸி யாக்கூத் அல்-ஹமவி ஆகியோர் 11-ம், 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ் பெற்ற மற்றிரு புவியியல் அறிஞர்களாவர்.
அல்-இத்ரீஸி
அல்-இத்ரீஸி(அபூ அப்துல்லாஹம் முஹம்மத் பின் முஹம்மத் பின் அப்துல்லாஹற் பின் இத்ரீஸி அல்-ஷரீப்) மேற்கத்திய இஸ்லாமிய உலகைச் சேர்ந்தவர். கி.பி.1099ல் ஸ்பானோ அராபியப்
If I

பெற்றோருக்கு ஸியூட்டா என்னும் இடத்தில் பிறந்த இவர், அந்தலூஸியாவில் உள்ள கோர்டோவாவில் கல்வி பயின்றார். 1166ல் பாலெர்மோவில் காலமானார்.
இஸ்லாமிய நாடுகளிலும், ஐரோப்பாவிலும் இவர் பரவலாகப் பிரயாணங்களை மேற்கொண்டார். பின்னர் ஸிஸிலியை ஆட்சி செய்த கிறிஸ்தவரான நோர்மானிய மன்னர் இரண்டாம் ரோஜரினால் (Roger-II) பாலெர்மோவின் அரச சபையில் பணியாற்றும்படி அழைக்கப்பட்டார். தாராளத் தன்மையும் அறிவுத் திறனும் வாய்ந்த இம்மன்னர் புவியியலில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தார்.
இக்காலத்தில் பாலெர்மோ கிழக்குக்கும், மேற்குக்குமிடையே ஓர் இணைப்புப் பாலமாக அமைந்திருந்தது. மேலும், மத்திய தரைக்கடலில் அராபிய o 60(53,65th அரபியல்லாத உலகுக்குமிடையே, கலாசாரத் தொடர்புகள் சந்திக்கின்ற இடமாகவும் இருந்தமையால், புவியியல் தகவல்களைத் திரட்டுவதற்கு மிக வாய்ப்பான சூழ்நிலை காணப்பட்டது.
கீழையுலகிற்குரிய தன்மையில் தனக்காக ஒரு புவியியல் நூலைத் தயார் செய்வது ரோஜரின் விருப்பமாக இருந்தது.' இதற்கான தகவல்களைப் பெறுவதற்காகப் பலர் பல திசைகளுக்கும் அனுப்பப்பட்டனர். அல்-மஃமூனைப் போன்று
I 12

Page 60
மிகப் பெரிய ബക1 படமொன்றைத் தயாரிக்குமாறும் அவர் கட்டளையிட்டார். இதற்கிணங்க, 1154ல் அல்-இத்ரீஸி, நுஸ்ஹத்துல் முஷ்தாக் பீ இக்திராக்குல் ஆபாக்"(Nuzhat al-Mushataa fi lkhtiraa al-Afaa) atoörgy b löII66u வரைந்தார். கிதாபுல் ருஜாரி அல்லது ரோஜரின் நூல் என்பதே இதன் பிரபல்யமான பெயராகும். நூலாசிரியரே குறிப்பிடுவது போல், உலகினைச் சுற்றிவர விரும்பியோரின் மகிழ்ச்சிக்காகவே இது எழுதப்பட்டது. மன்னர் ரோஜர், அறியப்பட்ட உலகின் வர்ணனையொன்றைத் தயாரிக்கும் பணியை, ஒரு முஸ்லிம் கல்விமானுக்கு ஒப்படைத்தமை, முஸ்லிம்களின் அறிவு நுட்பம் எவ்வளவு உயர்வாக மதிக்கப்பட்டது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.*
இத்ரீஸி இந்நூலை எழுதுவதற்குத் தமது ஆயுள் முழுவதையும் செலவிட்டார். இவரது ஆதார மூலகங்களில் ஒரு பகுதி நூல்களில் இருந்து எடுக்கப்பட்டது. இரடோஸ்தனிஸின் நூலையும் குறிப்பாகத் தொலமியின் நூல்களையும் அவர் வாசித்தார்; அல்-குவாரிஸ்மி போன்ற தமக்கு முன் சென்ற படவரைகலைஞர்களிடமிருந்து அவர் தகவல்களைப் பெற்றுக் கொண்டார். மேலும், சிலுவைப்போர்களால் வளமூட்டப்பட்ட கிறிஸ்தவர்களின் புவியியல் அறிவினையும் அவர் பயன்படுத்திக் கொண்டார்." மொத்தத்தில்
113

அல்-இத்ரீஸியின் நூல், வானவியற் புவியியல், வர்ணனைப் புவியியல் ஆகிய இரண்டினதும் ஒத்திசைவுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது? இந்நூலில் எழுபது படங்கள் இருக்கின்றன. இந்நூல் LJL LieseóGe5 விளக்கவுரையாக அமைந்துள்ளதால் படங்களே ஓரளவிற்கு மிக முக்கியமான பகுதியாகும்"
அல்-இத்ரீஸியின் நூலின் முக்கியமான கையெழுத்துப் பிரதிகளில் ஒன்று பாரிஸிலும் மற்றொன்று ஒக்ஸ்போர்ட்டிலும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. தெரிந்த அளவில் இவரது நூலின் முதலாவது மொழிபெயர்ப்பு 1619ல் ரோமில் வெளியிடப்பட்டது.
இரண்டாம் . ரோஜரின் கட்டளைப்படி அல்-இத்ரீஸியால் வரையப்பட்ட உலகப்படத்தை அவர் வெள்ளித்தட்டில் பொறிக்கச் செய்தார். இது 11 1/2அடி x 5 அடி அளவாக இருந்தது. ரோஜரின் மரணத்துக்கு ஆறு வாரங்களுக்கு முன்னரே அது பூரணப்படுத்தப்பட்டது. வெள்ளியிலான alsTaarGstartli (Celestial Sphere) 66irg56060Tuyub இவர் தயாரித்தார்.
பல புவியியல் அறிஞர்கள் மறுத்துக் கொண்டிருந்த வேளையிலும், கஸ்பியன் கடல் ஓர் உண்ணாட்டுக் கடல் என்பது அல்-இத்ரீஸிக்குத் தெரிந்திருந்தது. அவரின் வார்த்தைகளில் சொல்வதானால், தபரிஸ்தான் கடல் (கஸ்பியன்)
114

Page 61
புறத் தொடர்பற்றது. ஏனைய கடல்களோடு இணைந்ததொன்றல்ல. அதனுடைய நீர் உவர்ப்பானது. பெருக்கு வற்றுக்கள் இதில் ஏற்படுவதில்லை'
ஸெய்ன்ட் மார்டின் நூதனசாலையில் இருக்கின்ற, அல்-இத்ரீஸியால் வரையப்பட்ட ஒரு படம், நைல் நதி ஏரிகளில் இருந்து பாய்வதைக் குறித்துக் காட்டுகின்றது. ஹெரடோட்டஸின் காலத்தில் இருந்து அதுவரை தோன்றிய புவியியல் அறிஞர்கள் அனைவரும் நைல் நதியின் உற்பத்தி ஸ்தானத்தையும் egegil வெள்ளப் பெருக்கெடுப்பதற்கான காரணங்களையும் அறிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அல்-இத்ரீஸி நைல் நதியின் நீளத்தை ஒரளவு திருத்தமாகக் கணித்தார். மேலை எகிப்தில் அஸ்வான் வரை அதன் நீளம் 900 பர்ஸங்குகள்" என்பது அவரின் கணிப்பாகும். NA
மேலும், இவர் தமது படங்களில் லபோகா, ஒனேகா ஆகிய ஏரிகளையும் வொல்கா, நேவா, டொன், நீஸ்டர் (Dniester) டினிப்பர் ஆகிய ஆறுகளின் போக்குகளையும் பைக்கல் ஏரியையும் ஏறத்தாழச் சரியாகக் குறித்தார்."
ஒரு பர்ஸங்கு (Parasang) 7000 யாருக்குச் சமமானது
115

ஸார்ட்டனின்படி ரவ்துல் உன்ஸ் வநுஸ்ஹத்துல் நப்ஸ் என்ற சிறப்புடைய மற்றொரு நூலையும் அல்-இத்ரீஸி எழுதியுள்ளார். பல தொகுதிகளைக் கொண்ட பாதை விளக்க நூலான இது, இரண்டாம் ரோஜருக்குப் பின்னர் வந்த ஸிஸிலி மன்னரான இரண்டாம் வில்லியத்துக்குச்
சமர்ப்பணம் செய்யப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்நூலைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை."
யாக்கூத்
மிகப் பிரபல்யம் வாய்ந்த மற்றொரு புவியியல் அறிஞரான யாக்கூத் அல்-ஹமவீ (1179-1229)யின் பங்களிப்பும் ஈடிணையற்றதாகும் கி.பி.1179ல் கிரேக்கப் பெற்றோருக்கு இவர் பிறந்தார். இவர் சிறுவராக இருந்தபோது 9/L4–60LDLITsü பிடிக்கப்பட்டு ஹமாவைச் சேர்ந்த வர்த்தகர்
ஒருவரால் விலைக்கு வாங்கப்பட்டார். இதனாலேயே ஹமவி என்று இவர் அழைக்கப்படுகின்றார்.
அவரது எஜமான் அவரை பக்தாத்துக்குக் கூட்டி வந்து, கல்வி பயிற்றுவித்து, தமது ஊழியராக அமர்த்திக் கொண்டார். தமது எஜமானிடம் பிரயாண லிகிதராகப் பல வருடங்கள் பணிபுரிந்த பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
116

Page 62
பதாடர்ந்து உக்பரீ என்பவரிடம் மாணவராக இருந்து கல்விபயின்றார். பின்னர் அவர் ஒருபுத்தக வியாபாரியாக மாறியதோடு, தானே புத்தகங்கள் 6T(ԼքՖ வேண்டுமெனவும் தீர்மானித்துக் கொண்டார். 1213ல் தப்ரீஸ், மோஸ"ல், ஸிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்குப் பிரயாணம் செய்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு டமஸ்கஸில் இருநது கிழக்கு முகமாகப் பிரயாணம் செய்து, அடுத்த வருடம் நிஷாப்பூருக்கு வந்து சேர்ந்தார். மர்வ் நகரில் அரிய பல நூல்களை வாசித்தார். இவ்வாறு எழுதுவதற்கான அத்தனை ஆயத்தங்களையும் செய்து கொண்டர் பல்க் நகரில் இருந்தபோது, தாத்தாரியர் படையெடுத்து வருவதை அறிந்து (1220-ல்) மோசூல் நகருக்கு விரைந்துசென்றார். அத்தோடுமுஃஜமுல் புல்தான் (நாடுகளின் அகராதி) என்ற தமது நூலை எழுத ஆரம்பித்தார். இந்நூல் 1224ல் அலப்போவில் எழுதிப் பூர்த்தி செய்யப்பட்டது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு அங்கேயே அவர் 95ITGULDIT60TITit.
முஃஜமுல் புல்தான் ஒரு புவியியல் அகராதியாகும். இந்நூலில் புவியியற் பெயர்கள் அனைத்தும் அகரவரிசையில் தரப்பட்டுள்ளன. விஞ்ஞான வரலாற்றுக்கு அறிமுகம் என்ற நூலிலே ஸார்ட்டன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். முஃஜமுல் புல்தான் மிக முக்கியமான அரபு
117

நூல்களில் ஒன்றாகும். இது புவியியல் மட்டுமன்றி, வரலாறு, இனப் பரப்பியல் (Ethnography), இயற்கை வரலாறு போன்ற விடயங்களும் பொதிந்துள்ள ஒரு களஞ்சியமாகும். இந்நூலின் முற்பகுதி ஏழு கால நிலைப் பிரிவுகள், பூமியின் அளவு, கணித பெளதிக அரசியற் புவியியல் என்பனபற்றிக் கூறும் ஓர் அறிமுகத்தையும் கொண்டிருக்கின்றது?
இதனைவிட 13ம் நூற்றாண்டில் ஸ்பெயினிலிருந்து ட்ரான்ஸொக்ஸியானா வரை காணப்பட்ட இஸ்லாமிய நாடுகளையும், இந்தியாவையும்பற்றி விரிவான விளக்கங்களை இந்நூல் தருகின்றது' அதாவது இஸ்லாமிய உலகின் கலாசாரமும், சுபிட்சமும் மொங்கோலியர் கைகளில் வீழ்ச்சி அடைவதற்குச் சற்றே முற்பட்ட காலத்திற்குரிய அதன் நிலைமையை இந்நூல் எடுத்துக் கூறுகின்றது. இஸ்லாமிய கலைக்களஞ்சியம் எடுத்துக் காட்டுவது போல் இந்நூல் அரபு வரலாற்றுப் புவியியல் மாணவர்களுக்கு இன்றும் கூட இன்றியமையாத ஒர் உசாத்துணை நூலாகத் திகழ்கின்றது.*
முஃஜமுல் உதபா (அறிஞர்களின் அகராதி) என்பது இவரால் எழுதப்பட்ட மற்றொரு நூலாகும். இந்நூலிலும் பயன் மிக்க புவியியல் விவரங்கள் காணப்படுகின்றன. சுருங்கக் கூறின்,
118

Page 63
மத்திய காலப் புவியியல் ஆசிரியர்களுள் யாக்கூத்துக்கு மகத்தானதோர் இடமுண்டு
நாஸிரே குஷ்ரூ
நாஸிரே குஷ்ரு பாரசீகத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு பிரயாணி இவர், பல்க் நகருக்கு அயலில் கி.பி. 1003ல் பிறந்தார். பல்க் தொடக்கம் இந்தியா வரையுள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு ஊடாகவும் பலஸ்தீன், ஹிஜாஸ் ஆகிய பகுதிகளிலும் இவர் பிரயாணம் செய்துள்ளார். இந்தியாவில் ஸ-ஸுல்தான் மஹ்மூதின் அரச சபையிலும் சிறிது காலம் பணியாற்றினார். 1045-ல் இவரால் எழுதப்பட்ட பிரயாணக் குறிப்பேடு (ஸபர்நாமா) மிகப் புகழ்பெற்றதாகும். இது பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஜெரூஸலத்தைப் பற்றி இந்நூலில் தரப்பட்டுள்ள வர்ணனை சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. சிலுவைப் போர்களுக்கு முற்பட்ட கால ஜெரூஸலத்தின் மக்கள் வாழ்க்கையையும், நிலைமைகளையும் அவர் வர்ணித்துள்ளார். எகிப்தைப் பற்றிய புவியியற் குறிப்புக்களும் சிறப்பானவை. லீ ஸ்ட்ரேன்ஜ் இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். நாஸிரே குஷ்ரூ கி.பி 1060 அல்லது 1061ல்,
· 95/T6hDL DIT607 Trifo.
1 19

அல்-கஸ்வீனி
ஸகரிய்யா இப்னு முஹம்மத் இப்னு மஹமூத் அபூ யஹ்யா அல்-கஸ்வீனி 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப் பிரபல்யமான ஒரு புவியியல் அறிஞர். வட ஈரானில் உள்ள கஸ்வீன் என்னும் இடத்தில் 1203ல் பிறந்தார். இவர் தூய அரபு இனத்தைச் சேர்ந்தவர். இறுதி அப்பாஸிய கலீபாவான முஃதஸிமின் காலத்தில் வாஸித், ஹில்லா ஆகிய பகுதிகளுக்குப் பிரதம நீதிபதியாகப் பணியாற்றினார். 1283ல் இவர் காலமானார்.
'அஜாயிபுல் புல்தான் (நாடுகளின் அற்புதங்கள்) ஆதாருல்பிலாத்'(வரலாற்றுப்புவியியல்),'அஜாய புல் மக்லுகாத் வங்ராயிபுல் மெளஜ"தாத் (அண்ட அமைப்பியல் அல்லது படைப்பினங்களின் அற்புதங்கள்) ஆகிய நூல்களிலேயே அல்-கஸ்வீன் புகழ் தங்கியுள்ளது’ இறுதியாகத் தரப்பட்ட நூல் ஒழுங்கான அண்ட அமைப்பியல் பற்றிய்து, எனினும், இந்நூல் இரு பகுதிகளை அடக்கியிருக்கிறது.
1) விண்பொருட்களைப் பற்றிக் கூறும் பகுதி 2) புவிப் பொருட்களைப் பற்றிக் கூறும் பகுதி மிக முக்கியமான மலைகள், தீவுகள், கடல்கள், ஆறுகள், நீருற்றுக்கள் என்பன பற்றி இந்நூல் வர்ணிப்பதைக் கொண்டு, புவியியல் சார்ந்த அதிகமான விடயங்களையும் இது உள்ளடக்கியிருக்கின்றதெனலாம்.
120

Page 64
*ஆதாருல் பிலாத் வ அக்பாருல் இபாத் என்ற தனது மற்றொரு நூலிலே ஏழு கால நிலைப் பிரதேசங்களுடன் கூடியதாகப் பூமியைப் பற்றிய விபரணத்தை அல்-கஸ்வீனி கொடுத்திருக்கின்றார். பெளதீகத் தோற்றப்பாடுகள், குறிப்பிட்ட நாடுகளினது மக்களின் வாழ்வும் வரலாறும் என்பன பற்றியும் இந்நூல் எடுத்துக் கூறுகின்றது. இது கி.பி1250ல் எழுதப்பட்டது.
அல்-கஸ்வீனி, பல ஸ்பானிய முஸ்லிம்புவியியல் அறிஞர்களின் ஆக்கங்களைப் பயன்படுத்திக் கொண்டார். முஸ்லிம்களுக்குரியதல்லாத நாடு களையும், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளையும் பற்றிய தகவல்களை அந்தலூசியப் பிரயாணியான இப்ராஹீம் அல்-தார்டுவீ(இ.1085) யிடமிருந்து பெற்றார். ஆபிரிக்காவின் உள்ளகப் பகுதிகளைப் பற்றிய விபரங்களைப் பெற ஸ"லைமாணி என்பாரிலேயே தங்கியிருந்தார். அல்-கஸ்வீனியின் ஆக்கங்கள் அக்கால இஸ்லாமிய உலகைச் சேர்ந்த கல்விமான்களிடையேயும், அரபு பாரசீக, துருக்கிய மொழிகளைப் பேசிய மக்களிடையேயும் பெரும் செல்வாக்குச் செலுத்தின.
责
இந்நூலின் மிகப் பழைய பதிப்பு அஜாயிபுல் புல்தான் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
121

அல-திமிஷ்கி
அல் திமிஷ்கி, (இ.1327) நூஹ்பதுல் தஹர் பீ அஜாயிபுல் பர் வல்பஹற்ர்" என்ற பெயரில் புவியியல் தன்மைவாய்ந்த அண்ட அமைப்பியல் பற்றிய ஆக்கமொன்றினை வரைந்தார். இந்நூலில், திமிஷ்கி பெருந்தொகையான புதிய இடங்களை வர்ணித்திருக்கின்றார். மலபார், கொரமண்டல் கரையோரங்களின் புவியியலைப் பொறுத்தவரை நூல் ஆசிரியர் தரும் விவரங்கள் சிறப்பானவை. தமது நூலை எழுதுவதற்கு மஸ்ஊதி, இப்னு ஹெளக்கல், யாகூத் போன்ற பலரின் ஆக்கங்களை அவர் பயன்படுத்திக் கொண்டார். முஹம்மத் ஹ"ஸைன் நயினார், 1942ல் சென்னையில் வெளியிட்ட தீபகற்ப இந்தியாவைப் பற்றிய நூலுக்கு தென் இந்தியாவைப் பற்றி அல்-திமிஷ்கி தந்துள்ள விவரங்களைப் பயன் படுத்திக் கொண்டார்.
அபுல் பிதா
அபுல் பிதா (இஸ்மாயில் இப்னு அலி இப்னு
மஹற்மூத் இப்னு ஷஹன்ஷாஹற் இப்னு ஐயூப்
இமாதுத்தீன் அல்-ஐயூபி), டமஸ்கஸில் கி.பி.1273ல்
பிறந்தார். இவர், எகிப்தை ஆட்சி செய்த
ஐயூபிகளின் ஒரு கிளையான ஹமத் என்னும் அரச
குடும்பத்தைச் சேர்ந்தவர். தக்வீமுல் புல்தான்'
122

Page 65
என்ற பெயரில் உலகப்புவியியல் பற்றிக் கூறும் நூலொன்றினை 1321ல் இவர் எழுதினார். இந்நூல் பழைய நூல்களை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதிலும், முன்னைய நூல்களிற் காணப்படாத பெருந்தொகையான புதிய விபரங்களும் இதில் காணப்படுகின்றன. மேலும், இந்நூல் இடங்களுக்குரிய அகல நெடுங் கோடுகளைத் தருவதோடு, பிரதேச அடிப் படையிலேயே விடயங்களை அணுகுகின்றது. திட்டப்படியான அமைப்பில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள இந்நூல், மானிடப் புவியியல், வர்ணனைப்புவியியல் என்பவற்றை யெல்லாம் உள்ளடக்கியிருக்கின்றது.24
அதிர்ஷ்டவசமாக இந்நூல் காலத்தால் கரைந்துவிடாது எஞ்சியிருக்கின்றது. சென்ற நூற்றாண்டிலே ஐரோப்பாவின் கவனத்துக்குள் ளானது Renaud என்ற பிரஞ்சு நாட்டு அறிஞர் தக்வீமுல் புல்தானுக்கு ஓர் அறிமுக உரை. எழுதியதோடு, அதனுடைய பொருளடக்கம்
பற்றிய மதிப்புரையொன்றினையும் வழங்கினார்.*
ஹம்துல்லாஹ் முஸ்தவ்பி
14ம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த
புவியியல் அறிஞரான ஹம்துல்லாஹ் முஸ்தவ்பி
பாரசீக மொழியில் நுஸ்ஹத்துல் குலூப்
123

(உள்ளங்களின் உவகை) என்ற நூலை எழுதினார். ஹ"லாகுவின் கொள்ளுப் பேரனான ஸ"ல்தான் அபூ ஸஈத் இல்கானின் காலத்தில் (கி.பி.1340) இந்நூல் வெளிவந்தது.
நுஸ்ஹதுல் குலூப் இஸ்லாமிய உலகின் பெளதிகப் புவியியலையும் மானிடப் புவியியலையும் கூறுகின்றது. விசேட அக்கறையோடு ஈரானையும் மத்திய ஆசியாவையும் பற்றிக் கூறும் பகுதிகளை, ஆசிரியர் எழுதியிருக்கின்றார். 9J(Լք கடல்களையும் அதிலுள்ளதீவுகளையும்பற்றிவிரிவானகுறிப்புகள் இதில் காணப்படுகின்றன. இந்நூலில் வருகின்ற தென் கிழக்காசியாவின் மிருகங்களையும், தாவரங்களையும் பற்றிய வர்ணனைகளும் சுமத்திரா, ஜாவா, யப்பான் ஆகியன பற்றிய குறிப்புகளும் அருமையானவை. வெந்நீர் ஊற்றுக்கள், பாகு (Baku) வின் எண்ணெய் வயல்கள் என்பன பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
முக்கியமான புவியியற் குறிப்புக்கள் அடங்கிய strfGs Søndst (Tarikh-i-Guzidah) GTsirp வரலாற்று நூலொன்றினையும் முஸ்தவ்பி 6 Iš: Gesärprř.
124

Page 66
அப்துர் ரஸ்ஸாக் அல்-ஸமர்க்கந்தீ
அப்துர்ரஸ்ஸாக் அல்-ஸ்மர்க்கந்தீ, 1413ல் ஹேரட்டில் பிறந்து அங்கேயே 1482ல்காலமானார். 1441ல் இந்தியாவுக்குத் தூதுவராக அனுப்பப்பட்டார். மூன்று வருடங்கள் இங்கு தங்கியிருந்து விட்டு 1444ல் திரும்பி வந்ததும் 'மத்லஉல் ஸஃனதன் வ மஜ்மஉல் பஹற்ரைன்' என்னும் நூலை எழுதினார். இந்நூலின் ஒரு பகுதி ஹாபிஸ் அப்ரூவின் ஆக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், அவரது காலத்துக்குரியமிகமுக்கியமான புவியியல் நூல்களில் ஒன்று எனக் கூறமுடியும்.
ஹாபிஸ் அப்ரூ
சக்ரவர்த்தி தைமூரின் நண்பரும், சகாவுமான ஹாபிஸ் அப்ரூ (இ.1429) புகழ்பெற்ற பாரசீக வரலாற்று ஆசிரியரும், புவியியல் அறிஞருமாவார். இவரது ஆக்கமான சுப்ததுல் தவாரிஹ் (zubdat-al-Tawarikh) பாரம்பரிய அண்ட அமைப்பியலும், புவியியல் விபரங்களும் பொதிந்த ஒரு நூலாகும். இவர் தமது நூலை எழுதுவதற்கு பல்கி இஷ்தக்ரி ஆகியோரின் ஆக்கங்களைப் பயன்படுத்தி இருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது. மொரோக்கோவில் இருந்து கிர்மான் வரையுள்ள பகுதிகளின் புவியியல் விபரங்களை இந்நூல்
125

கூறுகின்றது. எனினும் குராஸான், ட்ரான்ஸொக்கியானா என்பன பற்றிக் கூடுதலான தகவல்கள் காணப்படுகின்றன. அக்கால நிலமைகளையும் நிகழ்ச்சிகளையும் கூறுகின்ற இந்நூல் உயர்தரமான்து எனப் புகழ் பெற்ற ரஷ்ய அறிஞர் பாட்ஹோல்ட்க்ருதுகின்றார்.
இப்னு பதூதா
இக்காலப்பிரிவில் பெரும் பிரயாணிகள் பலரும் தோன்றினர். அவர்களுள் இப்னுபதுாதா உலகப் புகழ் பெற்றவர். 'நுப்ஹத்துல் நுஸ்ஸார் எனப்படும் இவரது பிரயாண நூல் மிகவும் சுவாரஸ்யமானது. இதனையொரு புவியியல் நூல் எனக் கூற முடியாதெனினும், புவியியல், இட விளக்கவியல் பற்றிய விரிவான தகவல்கள் இதில் காணப்படுகின்றன. மேலும், மதம், வரலாறு, இனப் பரப்பியல்(Ethnography) போன்ற விடயங்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
இப்னு பதூதாவின் இயற் பெயர் முஹம்மத் என்பதாகும். இப்னு பதூதா என்பது குடும்பப் பெயர். மொரோக்கோவில் இன்றும் கூட இப்பெயர் குடும்பப் பெயராக வழங்கிவருகின்றது.
இவர் மொரோக்கோவைச் சேர்ந்த தன்ஜியர் (Tanger) என்னும் இடத்தில் கி.பி.1304 பெப்ரவரி மாதம் 24ம் தேதி பிறந்தார். புகழ் பெற்ற
126

Page 67
பிரயாணியான மார்க்கோபோலோ இவருடைய சமகாலத்தவர். மார்க்கோபோலோ இறக்கும்போது இவருக்கு வயது இருபது இருபத்தோராவது வயதில் (கி.பி.1325) தமது பிரயாணத்தை ஆரம்பித்து 51வது வயதில் (1354) தாயகம் திரும்பிய இப்னு பதூதா, ஏறக்குறைய முப்பது வருடங் களைப் பிரயாணத்தில் கழித்திருக்கின்றார்.
வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, சின்னாசியா, தென் ரஷ்யா, அரேபியா, கிழக்குஆபிரிக்கா, மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான், ஈரான்,குராஸான் , இந்தியா, மாலைத் தீவுகள், இலங்கை , வங்காளம், தென்கிழக்காசியா, தென்சீனா, வடசீனா போன்ற தூரப்பிரதேசங்களிலெல்லாம் பிரயாணம் செய் திருக்கின்றார். கிழக்கிந்திய பிரயாணங்களில் இருந்து திரும்பி வந்ததும் அந்தலூசியாவுக்குச் சென்றார். தொடர்ந்து ஸஹாராவைக் கடந்து திம்பக்டு, நைகர் போன்ற பகுதிகளுக்குப் பிரயாணமானார். ஆனால், மார்க்கோபோ லோவைப் போல் கண்டறியப்படாத நிலங் களையோ, அற்புதங்களையோ கண்டுபிடித்ததாக இப்னு பதூதா பெருமை பேசவில்லை’6
1354ல் இப்னு பதூதா தமது பிரயாணங்களை முடித்துக் கொண்டு பெஸ் நகரை வந்தடைந்ததும், 2l இனான் ஸ"ல்தானிடம் தனது பிரயாண் அனுபவங்களைக் கூற, அவர் தமது பிரதான காரியதரிசிகளுள் ஒருவரான இப்னு ஜூஸைக்கு
127

அவற்றை எழுத்தில் பொறிக்குமாறு பணித்தார். இதுவே, இன்று எமக்குக் கிடைத்துள்ள இப்னு பதூதாவின் பிரயாண நூலாகும். இறுதியாக இப்னு பதூதா மொரோக்கோவைச் சேர்ந்த நகரமொன்றில்காதியாகநியமிக்கப்பட்டார். அங்கு 1368ல் அல்லது 1369ல் அவர் காலமானார்.
இப்னு பதூதா பிரயாணம் செய்திருக்கின்ற தூரம் 75,000 மைல்கள் என யூல் (ஸேர் ஹென்றி யூல் 1820-89) கணித்திருக்கின்றார். நீராவியின் பிரயோகம் நடைமுறைக்கு வந்த காலத்துக்கு முன்னால் இவ்வளவு தூரம் எவருமே பிரயாணம் செய்ததில்லை’ மார்க்கோபோலோ பிரயாணம் செய்த தூரத்தைவிட இது கணிசமான அளவு அதிகமானது. மேலும், இத்தூரம் பூமியை மூன்று தடைவை சுற்றிவருவதற்குச் சமமாகும்.
இவரது நூல் ஒரு பிரயாண நூலாக இருந்தபோதிலும், பயனுள்ள பல புவியியல் விபரங்களைத் தருகின்றது. பல்வகைப்பட்ட இயற்கைச் சூழ்நிலைகளைப் பற்றியவர்ணனைகள், தூரத்துநாடுகளின் விளைபொருட்கள், ஏற்றுமதிப் பொருள்கள், பெருநகர்கள், துறைமுகங்கள் , கடற்பாதைகள் என்பன பற்றி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சீனக்கடல், இந்து சமுத்திரம், அரபிக்கடல், செங்கடல் ஆகியவற்றில் நடைபெற்ற கப்பற் போக்குவரத்து முஸ்லிம்களின்
128

Page 68
கையிலேயே இருந்தது என்பதற்கு இவரது பிரயாண அனுபவங்கள் சான்று பகர்கின்றன.
இலங்கையைப் பற்றிக் கூறும்போது இலங்கைத் தீவின் எல்லாப் பகுதிகளிலும் மாணிக்கக் கற்கள் கிடைக்கின்றன.அவற்றுள் சில சிவப்பு நிறமானவை, சில மஞ்சள் நிறமானவை. சில நீல நிறமானவை.* 6T6 இப்னு பதுதா குறிப்பிடுகின்றார்.
மற்றொரு பிரயாணியான இப்னு பாத்திமா ஆபிரிக்காவில் உள்ளகப் பகுதிகளில் பிரயாணங்களை மேற்கொண்டு 1250 அளவில் தமது அனுபவங்களை நூல் வடிவில் வெளியிட்டார். இந்நூல் இன்று கிடைக்கக் கூடியதாக இல்லை. ஆனால் கி.பி.1274 அளவில் இப்னு ஸஈத் என்ற ஆசிரியர் தமது 'கிதாபுல் ஜுக்கிராபிய்யா பில் அகாலிம் என்ற நூலை எழுதுவதற்கு இதனைப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகின்றது.
இப்னுகல்தூன்
அறிவைத்தேடும் முகமாக பிரயாணம் செய்யும் மரபு மீண்டும் இஸ்லாமிய உலகின் மேற்குப் பகுதிகளில் தென்படலாயின என்பதற்கு இப்னு கல்தூனின் பிரயாணங்களும், அவரால்,
எழுதப்பட்ட நூல்களும் சான்று பகர்கின்றன.
129

எனினும், புவியியலைப் பொறுத்தவரை, உலகின் கலாசாரத்தோடு தொடர்புடைய அவரது கருத்துக்களும், சமுதாயம், குடியிருப்புகள் என்பவற்றில் செல்வாக்குச் செலுத்தும் பெளதிக கலாசார சூழல்கள் பற்றிய அவரது கருத்துக்களும் முக்கியமானவை.
கிதாபுல் இபர்’ என்ற நூலிலும், அந்நூலுக்கு அவரால் எழுதப்பட்ட முன்னுரையிலும் மேலே குறிக்கப்பட்ட அவரது நோக்கினைக் காணலாம். இவற்றுள் மனிதன் கூடி வாழ்வதற்கான தேவை, உலக கலாசாரத்தின் பரம்பல், மனிதனது வாழ்க்கை, அவனது கலை, அவனது நிறம் என்பவற்றில் கால நிலையின் செல்வாக்கு, உணவு அரிதாகவோ அல்லது அபரி மிதமாகவோ கிடைப்பதனால், அது மனிதர்களிலும் அவர்களது பண்புகளிலும் ஏற்படுத்துகின்ற மாறுதல்கள், வேறுபட்ட இயற்கை சூழ்நிலைகளில் மனிதர்களின் குடியிருப்புக்களும் இருப்பிடங்களும் அமைதலைப் பற்றிய ஆராய்ச்சி’* போன்றன இப்னுகல்தூனின் புவியியல் தொடர்பான கருத்துக்களாகும்.
ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குச் சற்று முன்னதாக sLGourl" i "L/65u5u Gölcü (Nautical Geography) முஸ்லிம்கள் கணிசமான முன்னேற்றம் எய்தியிருந்தனர். இத்துறையில் அஹ்மத் இப்னு
130

Page 69
மாஜித், ஸுலைமான் அல்-மஹற்ரி ஆகிய இருவரினதும் பங்களிப்பு மகத்தானதாகும்.
இப்னு அல்-மாஜித்
கடற்சிங்கம் என வர்ணிக்கப்படும் இப்னு அல்-மாஜித் மத்திய காலப் பிரிவைச் சேர்ந்த மிகப் பெரும் கடலோடியாகக் கொள்ளப்படுகின்றார். இவர் 15Lמ நூற்றாண்டின் பின்னைய அரைப்பகுதியைச் சேர்ந்தவர். பிறந்த இறந்த திகதிகள் பற்றிய விபரம் சரியாகத் தெரியவில்லை. இவர் கடலோடுவதில் புகழ் பெற்றிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தகப்பனாரும் பாட்டனும் கடலோடுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள். செங்கடலில் கப்பலோட்டுவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் எனப் பெயர் பெற்றவர்கள். இவர்கள் கப்பலோட்டுதலோடு தொடர்புடைய பல நூல்களை எழுதினார்கள்0 ஆனால், இப்னு மாஜிதோ, இக்கலையில் தகப்பனையும்பாட்டனையும்கூடமிஞ்சிவிட்டார். தான் வாழ்ந்த காலத்திலேயே இந்து சமுத்திரத்தில் கப்பலோட்டுவதில் நிபுணத்துவம் பெற்றவர் என்ற பெயரையும், புகழையும் சம்பாதித்துக் கொண்டார். இப்னு மாஜித் கடலோட்டப் புவியியல், கடலோட்ட வானவியல் பற்றிய நூல்களை எழுதினார். அல்-பவாஇத் பீ உஸ"ாலி இல்மில்
131

பஹற்ர் வல் கவாஇத்' என்னும் நூல் இவரது 50 வருட அனுபவத்தின் பின்னர் எழுதப்பட்டது இக்கலைபற்றி கவிதையாகவும், உரைநடையாகவும் அவரால் எழுதப்பட்ட ஆக்கங்களின் எண்ணிக்கை இருபத்தைந்து ஆகும்? ஸெய்யித் ஸ"லைமான் நத்வி இவரால் எழுதப்பட்ட 15 நூல்களைப் பற்றிய விப்ரங்களை அரபோங்கீ பஹற்ரீ தஸ்னிபாத் என்னும் (உர்துற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இவரது முக்கிய நூலான கிதாபுல் பவா gi'(Principles of Navigation) 1489-906) 6Tupg நிறைவு செய்யப்பட்டது. இந்நூல் கப்பலோட் டலைப்பற்றியகோட்பாட்டிலானதும்நடைமுறை சார்ந்ததுமான அறிவின் பொழிப்பாகத் தோன்று கின்றது. கப்பலோட்டலின் தோற்றம் பற்றிய புராணக் கட்டுக்கதை, சந்திரனின் இயக்கங்கள், காந்த ஊசி, இந்து சமுத்திரக் கடல் வழிகள், அச்சமுத்திரத்திலும் சீனக் கடலிலும் உள்ள பிரதான துறைமுகங்களுக்குரிய அகலக் கோடுகள் என்பன பற்றி இந்நூல் கூறுகின்றது.மேலும், இந்தியாவின் மேற்குக் கரை (மடகஸ்கார், சுமத்திரா, ஜாவா, போர்மோஸா , இலங்கை , சன்சிபார், பஹற்ரைன், ஸொகோந்திரா போன்ற) பத்து பெரும் தீவுகள், இரு வழியாகவும் ஆரம்பமாகின்ற திகதிகளுடன் மொன்சூன் காற்றுக்கள் என்பன பற்றியும் இது விவரிக்கின்றது. இறுதியாக செங்கடலில் நங்கூரமிட்டுத்
132

Page 70
தங்குவதற்கான இடங்கள், ஆழமற்ற பகுதிகள், கடலடித்தளப்பாறைகள், திட்டுக்கள் என்பனபற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.*
ஹாவியத்துல் இக்திஸார் பீ உஹ"ால் இல்மில் பிஹார்’ என்ற மற்றொரு நூல் 1462-ல் எழுதப் பட்டதாகும். நிலம் சமீபத்தில் இருப்பதை எடுத்துக்காட்டும் அடையாளங்கள், சந்திரனின் பட்சங்கள்(கட்டங்கள்), அராபியர், பண்டைய எகிப்திய கிறிஸ்தவர்கள், பைஸாந்தியர், பாரசீகர்கள் ஆகியோரின் கணக்கீட்டுப்படியான வருடங்கள். நட்சத்திரங்கள் தோன்றக்கூடிய மாதங்கள், அவற்றினது அகலக் கோடுகளின் உறுதியான தன்மை, அவற்றின் மறைவு, சுமத்திரா, சீனா, தைவான் வரை இந்தியக் கரையோரம் வழியாக உள்ள கடல் மார்க்கங்கள், இந்து சமுத்திரத்தின் கரையோரமாகவுள்ள பல்வேறு தீவுகள், சமுத்திரத்தைச் சூழ உள்ள துறைமுகங்கள் இப்படிப்பட்ட பல்வேறு விடயங்கள் பற்றி இந்நூல் எடுத்துக் கூறுகின்றது.*
இவரது ஏனைய நூல்கள் ஏடன் குடாவில் கப்பலோட்டுதல், அரபுக் கடலில் கப்பலோட்டுதல், உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் சமுத்திரங்களில் இருந்தும் கிப்லாவின் திசையை அறிதல், உர்ஸா விண்மீன் குழு விண்கோளம் gurgs,Gir(Signs of Zodiac) all - 65657l fairs6it, சில நட்சத்திரங்களை வழிகாட்டியாகக் கொண்டு
133

கப்பலோட்டுதல், கடலோடிகளுக்கான பொது அறிவுறுத்தல்கள், பெரும் அகழிகள், திட்டுக்கள் என்பவற்றைக் கண்டறிதல் போன்றவற்றை விளக்குகின்றன.
G. Ferrand GT6T untir 1921-23Eyyub 1925 Eyub இப்னு மாஜிதின் நூல்களைப் பாரிஸில் Goa6full “ LITrir. T.A.Shumovsky 6 TGör gp UranuuGB b இவரது நூல்கள் மூன்றினை ரஷ்ய மொழி பெயர்ப்பு, விளக்கவுரை, குறிப்புக்கள் என்பவற்றோடு சேர்த்து ரஷ்ய மொழியில் பதிப்பித்தார்.
"கடலோட்ட விஞ்ஞானம் பற்றி எழுதிய நவீன ஆசிரியர்களுள் இப்னு மாஜித் காலத்தால் முற்பட்டவராவார். உதாரணமாக, செங்கடலைப் பற்றி அவர் கொடுத்த விவரணங்களைப் பொறுத்தவரை, அவரை யாரும் மிஞ்சிவிடவும் இல்லை. அதுபோன்று யாரும் விளக்கம் கொடுக்கவும் இல்லை. மொன்சூன்கள், உண்ணாட்டுக் காற்றுகள், (PUp Djögl சமுத்திரத்தையும் கடப்பதற்கான கடல் வழிகள், அகலக்கோடுகள் பற்றிய விபரங்கள் என்பன, இக்காலத்தில் எதிர்பார்க்கப்படக் சுடிய விளக்கங் களேபோன்று சரி நுட்பமானதாகவும், விரிவான தாகவும் காணப்படுகின்றன." என அவரது நூல்களை வெளியிட்ட G. Ferrand குறிப்பிடுகின்றார்.
134

Page 71
இப்னு மாஜித் வஸ்கொடிகாமாவுக்கு மலிந்தி" (Maind) என்னும் இடத்தில் இருந்து கலிகட் வரை வழிகாட்டியிருக்கின்றார். இவ்விபரம் இப்னு மாTதின் நூல்கள் எதிலும் காணப்படவில்லை. ஆயின், சமகால அராபிய, போர்த்துக்கீச மூலங்களைக் கொண்டு இவ்விடயம் நிரூபணமாகின்றது?
ஸுலைமான் அல்-மஹற்ரி
இப்னு மாஜிதுக்குப் பின்னர் ஸ"லைமான் மஹற்ரி என்ற பிரபல கடலோடி தோன்றினார். இவர் 16ம் நூற்றாண்டின் முன்னைய அரைப் பகுதியை சேர்ந்தவர். இவரது ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றி அதிகமாக எதுவும் தெரியவில்லை. ஆனால், பெரும்பாலும் பாரிய சமுத்திரங்கள் அனைத்திலும் இவர் பிரயாணம் செய்திருக்கின்றார்.
கடலோட்ட விஞ்ஞானம், நட்சத்திரங்கள், கிரகங்கள், கடல் வழிகள், காற்றுகள், கரையோரப் பகுதிகள்என்பன பற்றி ஐந்து நூல்களை இவர் எழுதினார்.
* ஆபிரிக்காவின் கீழைக் கரையில் உள்ள ஓர் இடம்
** கேரளாவில் உள்ள ஓர் இடம்
135

'உம்ததுல் மஹ்ரீய்யா பீ ளப்துல் உலூமுல் பஹற்ரீய்யா' என்ற பெயர் தாங்கிய நூல் கடலோட்ட வானவியல், அரபுக்கடல், கிழக்கு ஆபிரிக்கக் கரையோரப் பகுதிகள், வங்காள-மலாயா விரிகுடா, இந்தோசீனக் கரை யோரங்கள் என்பனவற்றிலுள்ள கடல் வழிகள், மடகஸ்காருக்கும், லக்காடிவ் (Laccadive) மாலைத் தீவுகள், அந்தமான், இலங்கை, நிகோபார், சுமத்திரா, ஜாவா, போர்மோஸா, மொலூக்கஸ், ஸெலிபஸ், பண்டா, போர்னியோ, திமூர் (Timur) என்பன உட்பட இந்து சமுத்திரம் பசிபிக் சமுத்திரம் என்பனவற்றிலுள்ள பெருந் தொகையான தீவுகளுக்கும் செல்கின்ற கடற் பாதைகள்’போன்றவற்றைப் பற்றிக் கூறுகின்றது.
இதே நூலின் ஐந்தாவது அத்தியாயம், துருவ நட்சத்திரம், செங்கடல், அரேபியாவின் கிழக்குக் கரை, இந்தியாவின் மேற்குக் கரை, ஆபிரிக்காவின் கிழக்குக் கரை, இலங்கை, வங்காள விரிகுடா என்பவற்றில் உள்ள துறைமுகங்களின் அகலக் கோடுகள் பற்றி கூறுகின்றது’
ஆறாவது அத்தியாயம் , இந்து சமுத்திரத்தில் வீசுகின்ற மொன்சூன்களைப் பற்றி விரிவாகக் கூறுவதோடு, இந்தியா, பர்மா, மலாயா என்பனவற்றின் கிழக்கு மேற்குக் கரைகளில் வீசுகின்ற இருவகையான மொன்சூன்களைப் பற்றியும் விளக்கமாக வர்ணிக்கின்றது.
136

Page 72
  

Page 73
நுணுகி அவதானித்தும் தமது ஆக்கங்களைப் படைத்தனர். இவ்வகையில் அல்-பக்ரி, அல்-ஸ"ஹற்ரி அல்-மாஸினி, அல்-முனஜ்ஜிம் போன்றோரைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். இப்னு ஜுபைர் என்ற புகழ்பெற்ற பிரயாணியும் இப் பகுதியைச் சேர்ந்தவரே. இறுதியாக, வடமேற்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த இப்னு ஸஈத், அல்மஃரிபியும் குறிப்பிடத் தகுந்த ஒரு புவியியல் அறிஞராவார். ஸ்பெயின், மஃரிப் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பிரபல்யம் வாய்ந்த (அல்-இத்ரீஸி, இப்னுகல்தூன் போன்ற) பெரும் புவியியல் அறிஞர்களையும் இப்னு பதூதா போன்ற உலகப்புகழ்பெற்றயாத்திரிகளையும்பற்றி ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
முஸ்லிம் ஸ்பெய்ன் தோற்றுவித்த புவியியல் அறிஞர்களுள் காலத்தால் முற்பட்டவர் அபூ உபைத் அப்துல்லாஹ் இப்னு அப்துல் அஸிஸ் அல்-பக்ரி ஆவார். இவர் கி.பி.1040ல் கோர்டோவாவில் பிறந்து அங்கேயே 1094-ல் காலமானார் 'புவியியல் அகராதி பாதைகளும் இராஜ்யங்களும் (அல்-மஸாலிக் வல் மமாலிக்) ஆகிய இரு நூல்களையும் இவர் எழுதினார். வட ஆபிரிக்காவைப் பற்றி முஹம்மத் அல்-தாரிகி (இ.கி.பி.973) எழுதிய நூலை அல்-பக்ரி தமது நூலை எழுதுவதற்குரிய பிரதான மூல நூலாகப் பயன்படுத்திக் கொண்டார். மேலும், அடிமை
139

வியாபாரியும், யூதவர்த்தகருமான இப்ராஹிம் பின் யாஃகூப் என்பவரின் நூலையும் இவர் பயன் படுத்தியுள்ளார். அல்-பக்ரி எழுதிய அல்-மஸாலிக் வல்மமாலிக் என்ற நூலில் ஆபிரிக்காவைப் பற்றிய பகுதி மட்டுமே பதிப்பிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு புவியியல் அறிஞரான முஹம்மத் பின் அபூபக்ர் அல்-ஸ"ஹற்ரிகிரானடாவைச் சேர்ந்தவர். ஜ"க்ராபிய்யா (புவியியல்) என்ற பெயரைத் தமது நூல்களுக்கு இட்ட புவியியல் அறிஞர்கள் சிலருள் இவரும் ஒருவர். இவர் கிதாபுல் ஜ"க்ராபிய்யா' என்ற நூலை எழுதினார். இது கலீபா அல்-மஃமூன் காலத்திய புவியியலாளர்களால் தயாரிக்கப்பட்ட புவியியல் நூலைப் பயன்படுத்தி அல்-பஸாரி அல்-குமரி ஆகியோரால் எழுதப்பட்ட நூலின் விரிவான உருவாகும். எனினும் இந்நூல் கிரேக்கர்களின் இக்லிம்ஸ்’ அடிப்படையில் எழுதப்பட்டதாகும்.
அபூ ஹாமித் முஹம்மத் அல்-மாஸினி (கி.பி.1080-1769) என்பார் ஸ்பெய்னைச் சேர்ந்த மிகப் புகழ் பெற்ற ஒரு புவியியல் அறிஞராவார். 1080ல் கிரானடாவில் பிறந்த இவர் 1169-ல் டமஸ்கஸ்ஸில் காலமானார். பல புவியியல் நூல்களை இவர் எழுதினார். துஹற்பத்துல் அல்பாப் வநுக்பத்தில் அஃஜாப் என்ற நூலிலே, ரஷ்யாவுக்கும் அதனையடுத்துள்ள பகுதிகளுக்கும் சென்ற பிரயாணத்தை வர்ணித்திருக்கின்றார்.
140

Page 74
நுக்பத்துல் அத்ஹான் பீ அஜாயி புல் புல்தான் என்ற மற்றொரு நூலிலே ஸ்பெயின், ஆபிரிக்கா, அர்த்பில், டமஸ்கஸ், கஸ்பியன் கடலோரம், தர்பந்து, கஸார்களின் பிரதேசம் என்ப வற்றினூடாகச் செய்த பிரயாணங்களைப் பற்றி எழுதியுள்ளார். இவற்றை விட அல்-மஃறிப் அன் பஃழ் அஜாயிபுல் புல்தான், துக்பத்துல் கிபார் பீ கஷ் ஆருல் பஹார் ஆகிய நூல்களும் இவரால் எழுதப்பட்டுள்ளன. இறுதியாகக் குறிப்பிடப்பட்ட நூல் கடற்பிரயாணங்களைப் பற்றிக் கூறுகின்றது.
கி.பி.951க்கும் 1063க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த இன்னுமொரு புவியியல் அறிஞரான அல்-முனஜ்ஜிம் புகழ்பெற்ற பல நகரங்களைப் பற்றி ஒரு நூல் எழுதினார். இந் நூலின் பெயர் கிதாப் ஆகாமுல்மர்ஜான் பீதிக்ருல் மதாஇன்அல்-மஷ்ஹ"ரா பிகுல் DITøör' (நகரங்களைப் பற்றிய புவியியல் அகராதி) என்பதாகும். அல்-இதிரீஸி, இப்னு கல்தூன் போன்ற பெரும்புவியியலாளர்களும் அறிஞர்களும் இந்நூலைப் பயன்படுத்தியுள்ளமை, இதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது.
வலன்சியாவைச் சேர்ந்த அபூ முஹம்மத் அல்-அப்தாரி என்பார் கி.பி.1289ல் வட ஆப்பிரிக்காவினூடாக மக்காவுக்குச் சென்று திரும்பி வந்து தமது பிரயாண அனுபவங்களை நூலுருவில் வரைந்தார்.
141

இப்னு ஜுபைர் என்ற யாத்திரிகரும் தமது பிரயாண நூலிலே புவியியல் தொடர்பான விடயங்களை எழுதியிருக்கின்றார். இவர் வலன்சியாவைச் சேர்ந்தவர். (கி.பி. 1145) சீயூட்டாவிலும் பின்னர் கிரனடாவிலும், சட்டம், இலக்கியம் என்பவற்றைப் பயின்ற பின்னர் கிரனடாவில் அல்-முவஹற்ஹிதூன் இளவரசன் ஒருவரிடம் அந்தரங்கச் செயலாளராகப் பணிபுரிந்தார். 1783-க்கும் 1185க்கும் இடைப்பட்ட காலத்தில் எகிப்து, ஈராக்ஸிரியா, சிசிலி போன்ற நாடுகளைத் தரிசித்தபடி இப்னு ஜுபைர் கிரனடாவில் இருந்து மக்காவுக்குச் சென்று திரும்பினார்.தொடர்ந்து 1189 முதல் 1191 வரை ஒன்றும், 1217ல் மற்றொன்றுமாக, கிழக்குமுகமாக, இரு பிரயாணங்களை மேற்கொண்டார். 1217ல் செய்த பிரயாணத்தின் போது அலெக் சாந்திரியாவை வந்தடைந்ததும் அங்கு அவர் காலமானார்.
அவர் மேற்கொண்ட முதலாவது பிரயாணத்தைப் பற்றி அவரால் எழுதப்பட்ட ரிஹாலத் இப்னு ஜுபைர்' என்னும் பிரயாண நூல் மிகச் சிறப்பானது. கிழக்கிலும், மேற்கிலும் அந்நூல் மிகப் புகழ் பெற்றிருந்தது. மத்தியதரைக் கடலைச் சூழ்ந்திருந்த முஸ்லிம் பிரதேசங்களின் புவியியல், வர்த்தக, கலாசார நடவடிக்கைகளைப் பற்றிய விபரங்களை இந்நூல் முன் வைக்கின்றது.
142

Page 75
அல்-அப்தரி, அல்-பலவி, இப்னு அல்-காதிப், அல்-மக்ரீஸி,அல்-பாஸி,அல்-மக்கரி, இப்னு பதுதா போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களும் வரலாற்று ஆசிரியர்களும் இந்நூலைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
இப்னு ஸஈத் அல்-மஃரிபி (இ.கி.பி.1274) என்ற புவியியலாளர் கிதாப் ஜுக்ராபி பில் அகாலிம் (பல்வேறு நாடுகளின் புவியியல்) என்ற நூலை எழுதினார். இந்நூலின் ஒரு பகுதியே இன்று எஞ்சியிருக்கின்றது. இந்நூலில் புதிய இடங்கள் பலவற்றின் அகலக்கோடுகளும், நெடுங்கோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. தமது நூலை எழுதுவதற்கு மேற்கு ஆபிரிக்கக் கரையோரமாக இப்னுபாத்திமா செய்த பிரயாணங்களைப் பற்றி எழுதிய நூலையும் இவர் பயன்படுத்திக் கொண்டார். அல்முவஹற்ஹிதூன்களின் காலத்துக்குப் பின்னர் வட ஆபிரிக்காவில் ஏற்பட்ட குடியிருப்புக்களைப் பற்றிய விளக்கங்களை இந்நூலில் இருந்து பெறக் கூடியதாக இருக்கிறது.
மேற்கு ஐரோப்பா, ஆர்மினியா போன்ற இடங்களிலும் தாத்தாரியர்களால் கைப்பற்றப் பட்ட பல பகுதிகளிலும் இவர் பரவலாகப் பிரயாணங்களை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
143

இவ்வாறு முஸ்லிம் ஸ்பெயினைச் சேர்ந்த புவியியல் அறிஞர்கள் புவியியல் துறையின் வளர்ச்சிக்கு அளப்பரிய சேவை ஆற்றியிருக்கின்றனர்.
****勒
துருக்கியரின் புவியியற் பணி
துருக்கியர்கள் எழுச்சியுற்று மேற்கு ஆசியா, தென்கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளில் அவர்களது ஆதிக்கம் மேலோங்கியிருந்தபோது, புவியியல் நூல்கள் தோன்றுவதற்கான சூழ்நிலை காணப்பட்டது. பெரும்பாலும் 14ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்தே துருக்கியரின் பங்களிப்பினைக் காணமுடிகின்றது. இவர்கள் அண்ட அமைப்பியல், வர்ணனைப் புவியியல், சமுத்திரவியல் பற்றிய நூல்களையும், பிரயாண நூல்களையும் எழுதினர்
துருக்கிய ஆட்சியாளர்கள் புவியியற் பணிகளை ஊக்குவிப்பதற்குப் பேராதரவு நல்கினர். புவியியற் கையெழுத்துப் பிரதிகள் தொகுக்கப்பட்டன. பிரதிகள் தயாரிக்கப்பட்டன. படங்களும் வரையப்பட்டன.
கஸ்வீனி அபுல்பிதா, இப்னு அல்வர்தி, அல்-இஷ்தக்ரி போன்றோரின் நூல்களும் தொலமியின் புவியியல்' நூலும் மொழி
144

Page 76
பெயர்க்கப்பட்டதோடு, இக்காலத்துக்குரிய புவியியல் அறிவினைத் தொகுத்துரைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ر
இப்னு அல்-ஆஷிக், அல்-கஸ்வீனியின் 'அஜாயிபுல் மக்லூகாத் போன்ற முற்பட்ட கால நூல்களின் முன்மாதிரியைப் பின்பற்றி 'மனா ஸிருல் ஆலம்' (உலகக் காட்சிகள்) என்னும் நூலை எழுதினார். எனினும், அனடோலியா, பால்கன் பகுதிகளைப் பற்றிய புதிய தகவல்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தகவல்கள் முன்னைய நூல்களிற் காணப்படவில்லை. 'இந்நூல் 1598ல் எழுதி நிறைவு செய்யப்பட்டது. இது மேலுலகு, கீழ் உலகு ஆகியனபற்றிக் கூறும் இரு பகுதிகளை அடக்கியிருக்கின்றது. 6) IIT60TLD (heaven) வானவாசிகள், விண்பொருட்கள் என்பனபற்றி முற்பகுதி கூறுகின்றது. இப்பகுதி உண்மையில், ஓர் அறிமுகமாகவே விளங்குகின்றது. ஆயின், கீழ்
உலகு - அதாவது பூமியையும் அதில் வாழ்வோரையும் பற்றிக் கூறும் இரண்டாம் பகுதியே இந்நூலில் பெரும்பகுதியாக
இருக்கின்றது. அதாவது, சமுத்திரங்கள், தீவுகள், , சதுப்பு நிலங்கள், ஏரிகள், ஆறுகள், நீருற்றுக்கள்,
வெப்ப நீருற்றுக்கள், மலைகள் என்றிவ்வாறு இயற்கைப் பொருட்களின் அடிப்படையில், மத்திய காலத்தில் கையாளப்பட்ட முறைப்படி ஒழுங்கு படுத்தப்பட்ட பிரத்தியேகமான வர்ணனைகளை
145

யடுத்து, பூமியைப் பற்றிய பொதுத் தகவல்களை அடக்கியுள்ள இப்பகுதி, இறுதியாக வர்ணனைப் புவியியலின் பிரதான அம்சமாகிய நகரங்களைப் பற்றிய விபரங்களைக் கொண்டிருக்கின்றது. இப்பகுதியில் தரப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் தொலமியின் ஏழு கால நிலைகளின் அடிப்படையிலே ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.43
ஸெய்யித் அலி அக்பர் கிதாஈ என்பவரால் பாரசீக மொழியில் எழுதப்பட்ட கிதாய்-நாமா மற்றொரு குறிப்பிடத்தக்க நூலாகும். 1516ல் இது எழுதப்பட்டது. 1506-08ல் ஆசிரியர் சீனாவுக்கு மேற்கொண்ட பிரயாணத்தைப் பற்றி இந்நூல் வர்ணிக்கின்றது. முதலாம் ஸாலிமுக்கு இது அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்நூல் துருக்கி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.கடல் சார்ந்த புவியியல், கப்பலோட்டல் ஆகிய துறைகளில் உதுமானியத்துருக்கர் தற்படைப்பான (Origina) பல நூல்களை எழுதினர். அவர்களுள் [ $rfፃ முஹியித்தீன் ரஈஸ் (g), 1554) என்பாரைப்பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.
இவரால் தயாரிக்கப்பட்ட படங்கள் மிக முக்கியமானவை. இவற்றில் ஆப்பிரிக்கா, அமெரிக்கா என்பனவற்றை எடுத்துக்காட்டும் படங்கள் அடங்கியிருக்கின்றன; நவீன கல்விமான்களையே திகைப்பில் ஆழ்த்தக் கூடியனவாக இவை காணப்படுகின்றன. 44
146

Page 77
இவற்றை கெய்ரோ ஸ"ல்தானாக இருந்த முதலாம் ஸாலிமுக்கு (1517) அவர் அன்பளிப்புச் செய்தார்.
பீரீ ரஈஸ் ‘பஹ்ரீய்யா' என்ற பெயரில் மத்திய தரைக் கடலில் கப்பலோட்டல் பற்றிய கைந்நூல் ஒன்றினையும் எழுதினார். 129 அதிகாரங்கள் அடங்கியுள்ள இந்நூலில் ஒவ்வோர் அத்தியாயமும் ஒவ்வொரு படத்தைக் கொண்டிருக்கின்றது. இதில் மத்திய தரைக் கடலையும் அதன் அனைத்துப் பாகங்களையும் பற்றிச் சரியான விவரணத்தை அவர் கொடுக்கின்றார். இந்நூலிற் பெரும்பகுதி இன்று கிடைக்கவில்லை."
இதனையொத்த வகையில் கடல் சார்ந்த புவியியல், இந்து சமுத்திரத்தில் கப்பலோட்டல் பற்றிய நூலொன்றினை, காத்திபே ரூமி என அழைக்கப்படும் ஸெய்யதீ அலி ரஈஸ் (இ.1562) 1554ல் எழுதினார். சமுத்திரம் என்ற பொருளையுடைய 'அல்முஹீத் என்பதே இந்நூலின் பெயர். வாஸ்கோடிகாமாவுக்கு கலிகட் வரை வழிகாட்டிய தென் அரேபிய மாலுமிகளின் அனுபவங்களையும், sno vapal LDTair அல் -மஹற்ரியினால் எழுதப்பட்ட அல் உம்தத்துல் மஹ்ரீய்யா' என்னும் நூலின் சில பகுதிகளின் மொழி பெயர்ப்புக்களையும் அலி ரஈஸ் தடிது நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார். இதே இனத்தைச் சேர்ந்த இன்னுமொரு நூல் ஸெய்யித் நூஹ் என்பவரால் எழுதப்பட்ட கிதாப்
147

பஹற்ருல்ஸ்அஸ்வத் வல் அபியழி (கருங்கடல், வெண்கடல் பற்றிய நூல்) என்பதாகும். நான்காவது முஹம்மதின் ஆட்சிகாலத்தில் இந்நூல் எழுதப்பட்டது.
பிற்காலத்திய உதுமானியரது புவியியல் மரபு 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹாஜி கலிபாவின் பிஹான் நியூமா என்னும் நூலோடு உச்சநிலையடைந்தது. மத்திய காலப் புவியியல் மரபில் இருந்து நவீன புவியியலாகமாறிக்கொண்டு செல்வதை இந்நூல் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.46 இந்நூல் முதன்முதலாக 1732-ல் ஸ்டாம்பூலில் அச்சிடப்பட்டது. இறுதியாக இரு பிரயாண நூல்களைப் பற்றிக்குறிப்பிடல்வேண்டும் அவற்றுள் ஒன்று 'மிர்அத்துல் மமாலிக்" இந்நூலாசிரியரான ஸெய்யித் அலி ரஈஸ். இந்தியாவுக்கு மேற்கொண்ட பிரயாணத்தை இது வர்ணிக்கின்றது. இந்நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பு 1899-ல் லண்டனில் வெளியிடப்பட்டது.
மற்றையது பத்து வால்யூம்களாக எழுதப்பட்ட ஸெயாஹத் நாமா (பிரயாண நூல்) அல்லது தாரி கே ஸெய்யஹற் (பிரயாணியின் வரலாறு அவ்லியா செலிபி என அழைக்கப்படும் அவ்லியா இப்னு * இந்நூலாசிரியர்கியாதிப் செலபி’ (Klatib Cheleb)
என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றார்.
148

Page 78
தர்வேஷ் முஹம்மத் ஸில்லி இதனை எழுதினார். முஸ்லிம்களது இலக்கியம் அனைத்தையும் விட இது ஒப்பற்ற ஆக்கமாகும்.47 என இஸ்லாமிய கலைக் களஞ்சியம் (ஆங்கிலம்) இதனைப் பற்றி குறிப்பிடுகின்றது. அவ்லியா செலிபி 40 வருடங்களாக (1631-1670) உதுமானிய இராஜ்யமெங்கிலும் பிரயாணம் செய்ததோடு ஐரோப்பா, பாரசீகம் ஆகிய பகுதிகளிலும் பிரயாணங்களை மேற்கொண்டார். அவரது நூல் அவரது காலத்துக்குரிய, மிக முக்கியமான வரலாற்றுப் பதிவேடாகவும் விளங்குகின்றது.48
இவ்வாறு துருக்கியர்கள் புவியியல் வளர்ச்சிக்குத் தொண்டாற்றினர். சென்ற நூற்றாண்டின் இறுதிப் பகுதிவரை வர்ணனைப் புவியியல், பிரதேசப் புவியியல் ஆகியவற்றில் அவர்கள் அக்கறையோடு ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
References: 1. Encyclopaedia of Islam, Vol.II p.584 2. S.H. Nasr, Islamic Science, p.42 3. Nafis Ahmad, Muslims and the Science of
Geography, p.29 4. Encyclopaedia of Islam, Vol.II, p.584 5. See Art. “Al-Biruni, A Great Muslim Scientist” by M. Aminuddin in the Journal of
Rabetat al-Alam al-Islami, Vol. 2. No.7
(May 1975)
149

Nafis Ahmad, Muslim Contribution to Geography, p.114 Art. "Persian Science" by C. Elgood in the Legacy of Persia Ed. A.J.Ardberry, pp.299-800
Vide foOtnOte 5 Nafis Ahmad, Muslim Contribution to Geog
raphy, p.130
1O. 11. 12.
13. 14.
15. 16. 17.
18. 19.
2O. 21.
22. 23.
24.
Ibid. p.66
Ibid., p.65 Sir Thomas Arnold, The Legacy of Islam, p.89
Ibid. Collins Concise Encyclopedia of Explorations, p. 155
Arnold. op.cit p.90
Ibid Collins Concise Encyclopedia of Explorations, p. 156
bid Nafis Ahmad, Muslims and the Science of Geography, p.30 Jamil Ahmad, Heritage of Islam, p.113 Nafis Ahmad, Muslim Contribution to Geography, p.49 Encyclopaedia of Islam, Vol. II. p.585 Nafis Ahmad, Muslims and the Science of Geography, p.31 Encyclopaedia of Islam, Vol. II, p.585
A5ひ

Page 79
25.
26.
27. 28. 29.
30. 31.
32.
33. 34. 35. 36.
37. 38. 39. 40. 41.
42. 43. 44. 45. 46. 47. 48.
Nafis Ahmad, Muslims and the Science o Geography, p.32 w Collins Concise Encyclopaedia of Explorations, p.147 H.A.R. Gibb, Ibn Battuta, p.9
ibid, p.257 Nafis Ahmad, Muslims and the Science of Geography, p.34 Encyclopaedia of Islam, Vol. Ill, p.856 Mazamin-e-Seyyed Sulaiman Nadhvi, Partl, p.339 Nafis Ahmad, Muslim Contribution to Geography, p. 125 Encyclopaedia of Islam, Vol.III p.856 Ibid., p.858 -
bid Jamil Ahmad, Hundred Great Muslims, p.715
Ibid., pp.7.15-716
ibid., p.716
IbiCd
|OiC Mazamin-e-Seyyed Sulaiman Nadhvi, Part l, p.347
S. H. Nasr, p.44 Encyclopaedia of Islam, Vot. II p.588 S.H. Nasr, pop 44-45 Encyclopaedia of Islam, Vol.II p.588 S. H. Nasr, p.45 Encyclopaedia of Islam, Vol.II p.589
Ibid.
151

அத்தியாயம் - 5 புவியியற் சார்பான கணித, வானவியற் பணிகள்
பல்வேறு இடங்களின் அகல, நெடுங்கோடுகளை நிர்ணயித்தல், பெருக்குவற்று, கிரகணங்கள், பூமியின் அளவு, அசைவுகள் என்பனவற்றை ஆராய்தல், அட்டவணைகளைத் தயாரித்தல் போன்ற பணிகளில் கணித விற்பன்னர்களும் வானவியல் அறிஞர்களும் ஈடுபாடு கொண்டனர். அவர்களுள் சிலர் புகழ் பெற்ற புவியியல் அறிஞர்களாவர். எவ்வாறெனினும், இவை புவியியலோடு நெருங்கிய சம்பந்தமுடையதாலும், இவை புவியியலாளர்களின் கவனத்தைப் பெற்றதனாலும் புவியியற் சார்புடைய கணித, வானவியற் பணிகளைப் பற்றி சுருக்கமாக ஆராய்வது பொருத்தமானது.
பாலைப் பெரு வெளியிலே நாடோடிகளாக வாழ்ந்து வந்த நாகரிகமற்ற அரேபியர்களுக்கு விண்வெளியிலே கண்சிமிட்டிக் கொண்டிருந்த நட்சத்திரங்கள் வழிகாட்டிகளாகப் பயன்பட்டன. ஆனால், இஸ்லாத்தின் ஒளி வரண்ட பாலைவனத்தையே ஜோதி மயமாக்கியபோது
152

Page 80
உலகாயதத் தேவைகளோடு மார்க்கத் தேவைகளும் சேர்ந்து வானத்தோற்றப்பாடுகளில் மேலும் அதிக கவனத்தைச் செலுத்துமாறு அவர்களைத்
ஆயினும், அப்பாஸியர் காலத்தில்தான் முதன் முதலாக ஒரு விஞ்ஞானம் என்ற நிலையில் வானவியல் வளர்ச்சி காணத் தொடங்கியது. வானவியல் o III- அனைத்து விஞ்ஞானங்களுக்கும், அறிவு ஆராய்ச்சிப் பணிகளுக்கும் பக்தாதே மையஸ்தலமாகத் திகழ்ந்தது. பிற்பட்டகாலங்களில் எகிப்து, கிழக்குப் பிரதேசங்கள், அந்தலூசியா, வட ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலும் இப்பணி நடைபெற்று வந்தது.
முஸ்லிம்களது வான்வியல்-கணித பணிகளிலே இரு அம்சங்கள் காணப்பட்டன. அவற்றிலிருந்தே அவ்ர்களது கணிதப் புவியியல் விருத்தியடைந்தது. எல்லாவற்றிற்கும் முதலில் நட்சத்திரங்கள், கிரகங்கள் பற்றிய அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், அட்டவணைகள், காலண்டர்களைத் தயாரிக்கவுமாக 6T6 ஆராய்ச்சிகள் நடாத்தப்பட்டன. பல்வேறு இடங்கள் முக்கியமான நகரங்கள் என்பவற்றின் அகல நெடுங்கோடுகளை நிர்ணயித்தல், பழைய கணிப்பீடுகளில் காணப்பட்ட பிழைகளைத் திருத்தல் என்பன இதன் மற்றைய அம்சமாகும்.

பூமியில் தூரங்களை அளவிடுதலும், அதனோடு தொடர்பான புவிப்பாத்தியல் நடவடிக்கைகளும் இதனோடு சேர்த்துக் கொள்ளப்பட்டன. இதன் விளைவாகவும் தேசப்படங்கள் வரையவேண்டிய தேவை எழுந்தது.1
பக்தாத்ஜுந்தேசாப்பூர் மையம்
அல்-மன்சூர், ஹாரூன் அல்-றசீத் அல்-மஃமூன் போன்ற அப்பாஸியக் கலிபாக்கள், அறிஞர்களை ஆதரித்து, அறிவு முயற்சிகளுக்கு ஊக்கமளித்தனர். அல்-மஃமூன் பக்தாதிலே தாருல் ஹிக்மா' என்னும் மொழிபெயர்ப்பு நிலையத்தை ஸ்தாபித்து, கிரேக்க, பாரசீக, இந்திய மூல நூல்களை மொழிபெயர்க்கச் செய்தார். தாருல் ஹிக்மாவிலே பல்வேறு சாதிகளையும், இனங்களையும் சேர்ந்த பிரபலமான கல்விமான்கள் இடம் பெற்று இருந்தனர்.2
வானியலைப் பொறுத்தவரை முதலில் இந்திய, பாரசீக நூல்களும் பின்னர் கிரேக்க நூல்களும் 9DJU மொழியில் பெயர்க்கப்பட்டன. பிரஹ்மஸ்புத்தளித்தாந்த (Brahmasphuta -siddhanta), 655356.pLus (Khanda- khadyaka) போன்ற இந்திய நூல்கள் இப்ராஹிம் அல்-பஸாரி யாகூப் இப்னு அல்-தாரிக் என்போரால் மொழிபெயர்க்கப்பட்டன. ஈரானிய வானவியலும் தொடர்ந்து அறிமுகமாயிற்று எட்டாம்
154

Page 81
நூற்றாண்டிலேயே முஸ்லிம்களுக்கு கிடைக்கப்பெற்ற தொலமியின் நூல்கள் வானவியலுக்கு உறுதியான அத்திவாரத்தை அமைத்துக் கொடுத்தது. Megale Syntaxis Mathematike என்ற தொலமியின் பிரதான வானவியல் நூல், ஹ"னைன் இப்னு இஷாக், தாபித் இப்னு குர்ரா போன்றோரால் பலதடவை அரபு மொழியில் பெயர்க்கப்பட்டது. இன்றுவரை அல்மஜெஸ்ட் (Almagest) என்ற அரபுப் பெயரில் அது மேற்குலகில் அறியப்படுகிறது.3இவரது வேறு பல நூல்களும் மொழிபெயர்ப்புக்குள்ளாயின. இதன் விளைவாக ஒன்பதாம் நூற்றாண்டளவில் இந்தியர், பாரசீகர், கிரேக்கர் என்போரது வானவியல் மரபுகளுடனும், அவற்றின் மூலமாக பழங்கால பாபிலோனிய, எகிப்திய வானவியல் மரபுகளுடனும் முஸ்லிம்கள் நன்கு அறிமுக முடையவர்களாயினர்.4 இவ்வாறு முஸ்லிம்கள் வானவியல், துறையில் இறங்கிச் சிறப்பாக செயலாற்றுவதற்கான களம் அமையலாயிற்று.
வானாராய்ச்சியாளர்கள்
இ.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப் பகுதியில் தென்மேற்குப் பாரசீகத்திலுள்ள
ஜுந்தேசாப்பூரில் ஒரளவு சிறந்த உபகரணங் களோடு முறைப்படியான வானாராய்ச்சிகள்
155

நடைபெற்றன? இங்கே வானாராய்ச்சிகளில் ஈடுபட்டநஹாவந்த் (இறப்புகி.பி.835 அல்லது 845) முஸ்தமல்' எனப்படும் அட்டவணைகளைத் தயாரித்தார். இவை கிரேக்க, இந்திய அட்டவணைகளை விடச் சிறந்தனவாக இருந்தன.
ஆயினும், மஃமூனின் காலத்தில் பிறமொழி
ஆக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டதையும், பாக்தாத், டமஸ்கஸ் ஆகிய இடங்களில் வானாராய்ச்சி நிலையங்கள் ஸ்தாபிக்கப்
பட்டதையும் அடுத்து குறிப்பிடத்தக்க வானவியற் புவியியற் பணிகள் நடைபெற்றன. மேலும், பின்வரும் அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றிய ஆய்வினை" மேற் கொள்வதற்காக வானாராய்ச்சிக் குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.
அ. பல்வேறு அகலக்கோடுகளில் அடுத்தடுத்து வருகின்ற இரு நெடுங்கோடுகளுக் கிடையி. லுள்ள தூரத்தை கணித்தல். ஆ (காணக்கூடிய) நட்சத்திரங்களையும், அவற்றின் நிலைகளையும், சூரியனைச் சார்ந்தமைந்துள்ள கோள்களின் உதயம், மறைவு என்பவற்றையும் கிரகங்களை 66örgy Gottisglésiraorai (Conjunction) நட்சத்திரங்களின் l îuerre அளவு என்பவற்றையும் அட்டவணைப்படுத்தல். இ சரியான காலண்டரைத் தொகுத்தல்
156

Page 82
ஈ. கோள்களின் இயக்கம் பற்றிய
அட்டவணைகளைத் தயாரித்தல்
உ பூமியின் பருமனை அளவிடல்
மஃமூனின் கீழ் பணியாற்றிய வானாராய்ச்சி யாளர்களின் குழுவினால் 'ஸிஜ்ஜுல் மாமூனி என்னும் அட்டவணை தயார் செய்யப்பட்டது. யஹற்யா இப்னு அபீ மன்ஸ"ார், காலித் இப்னு அப்துல் மலிக் அல் மர்வானி, ஸனத் இப்னு அலி, அல்-அப்பாஸ் இப்னு ஸாஇத் அல்ஜவ்ஹரி போன்றோர் இக்குழுவில் அங்கம் வகித்தனர். இவர்களது அட்டவணைகள் மூல உருவிலே இன்று காணப்படவில்லை. மேலும், கடினமான புவிப்பாத்தியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஓர் அகலக்கோட்டுப் பாகை அளவிடப்பட்டது. தக்ழுர், ராக்கா ஆகிய இடங்களுக்கு மத்தியிலே
செய்யப்பட்ட ஏககால அவதானங்களின் விளைவாக, ஏறத்தாழ 36 பாகை வட அகலக்கோட்டிலே இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது. முடிவு உண்மையான அளவை விடச் சிறிதளவே கூடுதலாக இருந்தது. அதாவது2877அடிகளே'மிகையான பெறுமதியாக வந்தது.
பக்தாதில் பணியாற்றிய ஆரம்ப காலப்பிரிவைச் சேர்ந்த முன்னோடிகள் யாகூப் பின் இஸ்ஹாக், அல்-கிந்தி (கி.பி.813-870) அபூமஃஷர் (இறப்பு 886), அல்குவாரிஸ்மி, அல்பர்ஹானி(இ861) என்போர்
157

குறிப்பிடத்தக்கவர்களாவர். இவ்விஞ்ஞானிகள் அனைவரும் அரபு விரிய கிரேக்க, பாரசீக, சமஸ்கிருத மொழிகளில் பாண்டித்யம் பெற்றிருந்தனர்.
அல்-குவாரிஸ்மி (இ835) கிரேக்க, இந்திய மூல நூல்களைப் பயன்படுத்தி கிதாபுல் ஸிஜ், கிதாப் ஸ"ரத்துல் அர்ள் என்ற பெயர்களில் நூல்களை எழுதியதோடு, அஸ்ட்ரோலேப் பற்றியும் இரு நூல்களை வரைந்தார். மஃமூனின் காலத்தில் நடைபெற்ற புவிப்பாத்தியல் நடவடிக்கைகளிலும் பங்கு பற்றினார். ஐரோப்பாவின் ஆசிரியர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்ற அல்-பர்ஹானி அட்டவணைகளைத் தயாரித்ததோடு, அஸ்ட் ரோலேப் பற்றியும் இரு நூல்களை எழுதினார். அல்-கிந்தி ஏறக்குறைய இருநூறு நூல்களின் ஆசிரியர். இவரது புவியியல் நூல்களைப் பற்றி ஏற்கனவே குறிப்பிடப்பட்டு விட்டன.அபூமஃஷர் அல்பல்கி (ஐரோப்பாவில் Albumase என்ற பெயரால் அழைக்கப் படுகின்றார்). அட்டவணை களைத் தயாரித்ததோடு, கிதாபுல் மத்கல் (வானவியலுக்கோர் அறிமுகம்) என்ற நூலையும் எழுதினார். இதனைவிட பெருக்குவற்று, நீரோட்டங்கள், சமுத்திரங்கள், பருவக்காற்றுக்கள் என்பன பற்றியும் எழுதினார். சந்திரனின் செல்வாக்கினால் பெருக்குவற்று ஏற்படுவதாக முதன் முதலில் விளக்கியவர் இவரே"
158

Page 83
அல்-மாஹானி (கி.பி.85468)சந்திர சூரிய கிரகணங்கள் கோள்களின் ஒருங்கிருக்கை (கோள்களை ஒன்று சேர்த்துகாணல்) பற்றி ஆராய்ந்தார்.
இக்காலப் பிரிவில் கலீபா அல்-மஃமூனின் கட்டளையின் பேரில் வானாராய்ச்சியாளர்களும் புவியியலாளர்களும் சேர்ந்து உலகப்படம் ஒன்றினை வரைந்தனர். இது இப்போது கிடைக்கக் கூடியதாக இல்லை.
மூஸா இப்னு ஷாக்கீரின் புத்திரர்களான முஹம்மத்,அஹற்மத், ஹஸன் ஆகியோர் பக்தாதில் ஒரு வானாராய்ச்சி நிலையத்தை நிறுவி, கி.பி 850-860 வரை அவதானங்களை மேற்கொண்டனர். இவர்களால் தயாரிக்கப்பட்ட அட்டவணைகள் இஸ்லாமிய உலகிலே தரம் வாய்ந்தனவாகக் கருதப்பட்டன. செங்கடற்கரையில் ஒரு பாதையை அளவிட்டு பூமியின் அளவையும் கணித்தனர். இதுவோ கிறிஸ்தவ ஐரோப்பா பூமி தட்டையானது என்பதை உறுதி செய்த காலப்பகுதியாகும்” அடுத்து முக்கிய இடம் பெறுபவர் அல்-பத்தானி கிரேக்கர்களிடையே தொலமி எவ்வளவு முக்கியம் பெறுகின்றாரோ அவ்வளவு முக்கியத்துவம் அரேபியர்களிடையே அல்-பத்தானிக்குண்டு. இவர், யூப்ரடிஸ் நிதிக் கரையில் உள்ள அல்-ராக்கா என்ற இடத்தில் கி.பி.877918 வரையும் வான அவதானங்களையும்,
159

ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். இவரால் தயாரிக்கப்பட்ட அட்டவணைகள் அல்-குவாரிஸ்
மியின் அட்டவணைகளையும் இந்திய அட்டவணைகளையும் விடச் சிறந்தவை; 13-ம் நூற்றாண்டில் ஸ்பானிய மொழியில்
பெயர்க்கப்பட்ட இவ்வட்டவணைகள் மிகப் பெரிய வானவியல் அறிஞர் என்ற பெயரை இவருக்குப் பெற்றுக் கொடுத்தது.
தாபித் பின் குர்ரா (இ.கி.பி.813), ஹபஷ் அல் ஹாஸிப் என்போர் பக்தாதில் பணியாற்றிய, ஆரம்ப காலப் பிரிவைச் சேர்ந்த வானாராய்ச்சியாளர்கள் ஆவர்.
இப்னு அல்-ஆலம் (இ.கி.பி.988) அப்துர் ரஹற்மான் அல்ஸ"ாபி (இ.கி.பி.986) அல்-ராஸி போன்றோர் 10-ம் நூற்றாண்டின் இறுதிப்பிரிவில் பக்தாதில் பணியாற்றிய வானவியல் அறிஞர்களாவர். அதே நேரத்தில் புவைஹித் ஸ"ல்தான்களான அப்துத்தவ்லா, ஷாரா புத்தவ்லா ஆகியோரிடம் அல்-கூஹி (இ.கி.பி.1004), அபுல் வபா(இ998) ஆகியோர் கடமையாற்றி வந்தனர். இப்னு அல்ஆலம் தன்னாலேயே செய்யப்பட்ட உபகரணங்களின் உதவியால் சுய அவதானங்களின் அடிப்படையில் upil 1 - வணைகளைத் தயாரித்தார். ஆனால், இவரது ஆக்கம் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அப்துர் ரஹ்மான் அல்-ஸ"ாபி, நிலையான
160

Page 84
விண்மீன்களைப் பற்றிக் கூறும் அல்-கவாகிபுல் ஸாபிதா என்னும் நூலை வரைந்தார்
இது நோக்கல் வழி வானவியலைப் பொறுத்தவரை தலை சிறந்ததொரு நூலாகக் கருதப்படுகிறது. கோடைக்குரிய கணநிலை நேரம், இலையுதிர் காலச் சமவிராக்காலம் பற்றிய அல்-கூஹியின் ஆய்வுகள் மிக முக்கியமானவை. அபுல் வபாவின் ஸிஜ்ஜ"ஹற்ஷாமில் இக்காலப் பிரிவைச் சேர்ந்த சிறந்ததொரு வானவியல் அட்டவணையாகும். அல் குஜாந்தி (கி.பி.992) ஹாரூன் பின் அலி, அபூ இஸ்ஹாக் ஆகியோரும் இக்காலப் பிரிவுக்குரியவர்களே. சுருங்கக் கூறின் பக்தாத் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக வானியல்,கணிதப் புவியியலுக்கான மிகப் பெரிய மையமாகத் திகழ்ந்து வந்தது.
எகிப்து-கெய்ரோ மையம்
எகிப்தை ஆட்சி செய்த பாதிமீய்யக் கலிபாக்களான அல்-அஸிஸ், அல்ஹாகிம் ஆகியோர் வானவியல் முதலான அறிவுத் துறைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டினர். அல்-அஸிஸ் 996-ல் கெய்ரோ வானாராய்ச்சி நிலையத்தை ஸ்தாபித்தார். இங்கே பணியாற்றிய இப்னு யூனுஸ் என்ற புகழ் பெற்ற வானாராய்ச்சியாளர், ஸ"ஜ்ஜ"ல் ss 5
161

அல்-ஹாகிமி என்ற பெயரில் அட்டவணைகளைத் தயாரித்தார். கிரேக்கரும் சீனரும் கூட இவற்றைப் பயன்படுத்தினர். எகிப்தில் பணிபுரிந்தமற்றுமொரு பேரறிஞரும், வானவியலாளருமான இப்னு அல்ஹைதம் வளிமண்டலம் பற்றிய அரிய உண்மைகளை வெளியிட்டார். புவியீர்ப்புக் கேர்ட்பாட்டையும் இவர் நன்கு விளக்கியிருந்தார்.
கீழைப்பகுதி
கீழைப்பகுதியைச் சேர்ந்த மாமேதை அல்-பிரூனியின் புவியியற் பங்களிப்பைப் பற்றி நான்காம் அத்தியாயத்தில் விரிவாகக் குறிப்பிடப்பட்டது. அக்கால வானவியற் கணிதத்துறையிலும், அவர் ஒப்பாரும் மிக்காரும் அற்ற வல்லவராகத் திகழ்ந்தார். 6AİTGRT அவதானத்திலும், கோட்பாட்டியலான கணக்கீடு களிலும் மட்டும் ஆர்வம்காட்டியதோடு நில்லாது, குவாரிஸ்ம் நகரிலும், இந்தியாவிலும் புவிப்பாத்தியல் நடவடிக்கைகளையும் மேற் கொண்டார். அல் கானூனுல் மஸ்ஊதி இவரால் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்கதொரு வானவியல் நூலாகும். 'கிதாப் மாபில் ஹிந்து'கிதாபுல் தப்ஹீம் லி அவா இல் ஸினா அத் அல்-தன்ஜிம் , 'அஸருல் பாக்கியா' என்பன அவரால் எழுதப்பட்ட வேறுசில முக்கியமான நூல்களாகும்.
162

Page 85
உண்மையில், கருவிகளின் பயன்பாடு, அவற்றை அமைத்தல், அகல, நெடுங்கோடுகளை நிர்ணயித்தல், புவிப் பாத்தியல் அளவீடுகள், தூரங்கள் போன்ற விடயங்களில் பதினைந்துக்குக் குறையாத நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.' 0
அல்-பிரூனி இந்தியாவில் இருந்தபோது பஞ்சாப்பில் உள்ள ஜேலம் மாவட்டத்தில் தனிப்பட்ட முறையில் புவிப்பாத்தியல் அளவீடுகளை நடத்தினார். பூமி, அதன் அச்சுகள், அதன் இயக்கங்கள் என்பன பற்றி ஆராய்ந்தார். ஹிந்து முறைப்படி அகல நெடுங்கோடுகளை நிர்ணயிக்கின்ற பிரதான அம்சங்களை அவர் தொகுத்தளித்தார். முதல் தடவையாக கானூனுல் மஸ்ஊதி என்ற நூலிலே பூமி தனது அச்சில் சுழல்வதைப்பற்றி ஆராய்ந்தார். புவிச் சுற்றுகை காரணமாகவே விண் பொருட்களின் தோற்றமும், மறைவும் நிகழ்வதாக அவர் விளக்கம் கொடுத்ததார்.'
கீழை இஸ்லாமிய உலகினைச் சேர்ந்த மாபெரும் தத்துவ ானியான இப்னு ஸினா (இ. 103 வானவியல், பெளதீகம் ஆகிய துறைகளிலும் மிக்க ஆர்வமுடையவராக இருந்தார். பிரபட்சத்தில் பூமி, விண்பொருட்கள், மத்தியகோடு போன்ற விடயங்கள் பற்றி இவர் எழுதினார். தொலமியின் அல்மஜெஸ்ட்டை விமர்சன ரீதியாகப்
163

பரிசோதித்ததோடு, கருவிகளின் பிரயோகம் பற்றிய நூல்களையும் வரைந்தார். 12
பிரசித்தி பெற்ற ஸ"ாபித்துவக் கவிஞரான உமர் கையாம் (ஏறத்தாழ கி.பி.517-1723) உண்மையில் பெரும்கணித விற்பன்னரும் வானாராய்ச் சியாளருமாவார். ஸெல்ஜுக் மன்னரான ஜெலாலுத்தீன் மலிக் ஷாவின் (ரை அல்லது நைஸாப்பூர் என்னும் இடத்தில் கட்டப்பட்ட) வானாராய்ச்சி நிலையத்தில் இவர் பணிபுரிந்தார். இவரால் திருத்தியமைக்கப்பட்ட காலண்டருக்கு ஜெலாலி காலண்டர்’ எனப் பெயரிடப்பட்டது. இது ஜுலியன், கிரிகோரியன் ஆகிய காலண்டர்களை விடத் திருத்தமானதாகக் கருதப்படுகிறது.
இஸ்லாம் தோற்றுவித்த மிகப் பெரும் வானாராய்ச்சியாளர் நாஸருத்தீன் தூஸி. இவர் கி.பி1201ல் தூஸ் நகரிலே பிறந்தார். ஹ"லாகுவின் நட்பினைப் பெற்ற இவர் ஒரு வானாராய்ச்சி நிலையத்தைக் கட்டும்படி அவரைத் தூண்டினார். இதன்படி 1259ல் அஸ்ரபைஜானிலுள்ள உர்மியா ஏரிக்குப் பக்கத்தில், மரகா என்ற இடத்தில் ஒரு வானாராய்ச்சி நிலையத்தை ஹ"லாகு கட்டுவித்தார். இதன் முதலாவது இயக்குநராக நாஸருத்தீன் தூஸி கடமையாற்றினார். குத்புதீன் அல்-ஷிராஸி, முஅய்யதுத் தீன் அல்-உர்தி, முஹியத்தீன் அல்மஃரிபி போன்ற பிரபலமான
164

Page 86
விஞ்ஞானிகளோடு பாஒமுன்ஜி என்ற சீன நாட்டு வானாராய்ச்சியாளரையும் அவர் தம்மோடு சேர்த்துக் கொண்டார். இக்காலப்பிரிவில் முஸ்லிம்களது விஞ்ஞானச் சிந்தனையின் செல்வாக்கு சீனாவிலும் காணப்பட்டது என்பதையே இது ஊர்ஜிதப்படுத்துகிறது.
நாஸிருத்தின் தூஸி பன்னிரண்டு வருட கால வான அவதானத்தின் பின்னர், 'ஸிஜ்ஜ"ல் இல்கானி என்ற பெயரில் புதிய வானவியல் அட்டவணைகளைத் தொகுத்தார். இவை இப்னு யூனுஸின் அட்டவணைகளைப் பின்பற்றியனவாக இருந்தாலும், பல திருத்தங்களும் செய்யப் பட்டுள்ளன. அட்டவணைகள் லத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்டு 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த லத்தீன் அறிஞர்களைச் சென்றடைந்தது. இவரது அட்டவணை சீனா உட்பட ஆசியாவெங்கிலும் பிரபல்யம் பெற்று இருந்தது. தஸ்கிரா பீ இல்ம் அல்-ஹைஆ என்ற பெயரில் வானவியல் நூலொன்றினையும் இவர் எழுதினார். தொலமியின் கோள் இயக்கக் கோட்பாட்டிலுள்ள குறைகள் இதில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. தூஸி 1924ல் காலமானார். அவருக்குப் பின்னரும் பல்லாண்டுகளாக மரகாவில் வானாராய்ச்சிபு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன.
165

முஸ்லிம் ஸ்பெயினும், வட ஆபிரிக்காவும்
கணிதவானவியற் புவியியலுக்கான மற்றொரு பிராந்தியமாக முஸ்லிம் ஸ்பெயின் திகழ்ந்தது. இங்கே 10ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து கோர்டோவா, ஸெவில்லி, பொலேடோ, கிரானடா என்பன பிரதான கலாஞான மையஸ்தலங்களாக விளங்கின. ஆட்சியாளர்களின் ஆதரவு அறிவு முயற்சிகளுக்கு உறுதுணையாக நின்றது. முஸ்லிம் ஸ்பெயினைச் சேர்ந்த மஸ்லமா அல்-மஜ்ரிதி அல்-ஸர்காஸி, ஜாபிர் இப்னு அப்லாஹ், அல்பித்ருஜி இப்னு ருஷித் ஆகியோர் வானவியல்-புவியியல் துறை வளர்ச்சிக்காக உழைத்த பேரறிஞர்களாவர்.
மஸ்லமா அல்-மஜ்ரிதி (இ.கி.பி.1007) அல்-பத்தானியின் அட்டவணைகளின் சுருக்க மொன்றினைத் தயாரித்தார். இவை பிற்காலத்தில் அல்பான்சோ" அட்டவணைகளது ஆசிரியர் களால் பெரிதும் பயன்படுத்தப் பட்டன.* மேலும், தொலமியின் நூலுக்கு SCB
* காஸ்டைல் நாட்டரசனான பத்தாவது
அல்போன்சோ பெருந்தொகையான அறிஞர்களைக் கூட்டி பிரபல்யமான அரபு வானவியல் நூல்களை தொகுக்குமாறு கட்டளையிட்டான். அவர்களால் தயாரிக்கப்பட்ட அட்டவணைகளே அம்மன்னரின் பெயரைக்கொண்டு அல்பான்சோ அட்டவணைகள் என்று வழங்கப்படுகிற க.
166

Page 87
விரிவுரையையும் அஸ்ட்ரோலேபைப் பற்றி ஒரு நூலையும் இவர் எழுதினார். அல்-குவாரிஸ்மியின் கோள் அட்டவணையையும் திருத்தியமைத்தார். டொலேடோவில் பிறந்து, அங்கேயே பணியாற்றிய அல்-ஸர்காலி (கி.பி.1029-1088), புகழ்பெற்ற போலேடன் அட்டவணைகளை அமைத் தவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர். ஜாபிர் இப்னு அப்லாஹ் (இ. ஏறத்தாழ கி.பி.1740-1150) கிதாபுல் ஹைஆ என்னும் நூலை எழுதினார். புகழ்பெற்ற தத்துவ ானியான இப்னு ருஷ்த் (இ. 1199) விண்பொருட்களின் இயக்கம் பற்றிய ஒரு நூலையும், தொலமியின் அல் மஜெஸ்ட் பற்றிய சுருக்க நூலொன்றினையும் வரைந்தார். இப்னு பஜ்ஜா (Avenpace) (இ.1129), அல் பித்ருஜி என்போர் வானவியல்-புவியியல் பற்றி எழுதிய மற்றும் சில அறிஞர்களாவர்.
Goll -- ஆபிரிக்காவும் விஞ்ஞானச் செயற்பாடுகளில் பின் நிற்கவில்லை. இப்பகுதியைச் சேர்ந்த வானாராய்ச்சியாளர்களுள் அபூ அலி அல்-ஹஸன் இப்னு உமர் அல்-மர்ராகூஷி சிறப்பிடம் பெறுகின்றார். கி.பி.1030ல் இவர் தமது வானவியல் ஆக்கங்களை முன் வைத்தார். இவரது நூலான ஜாமிஉல் மபாதி மிகவும் புகழ்பெற்றதாகும். விஞ்ஞான வரலாற்றுக்கு அறிமுகம் என்ற நூலிலே அதன் ஆசிரியர் ஸார்ட்டன் கணிதப்புவியியலுக்குமிகமுக்கியமான
767

பங்களிப்பாக14 இந்நூலைக் குறிப்பிடுகின்றார். அல் மர்ராகூஷி வானாராய்ச்சிக்கு உதவும் உபகரணங்கள் பற்றிய நூலொன்றினையும் எழுதினார்.
இவ்வாறு உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த முஸ்லிம்கள் கணிதவானவியற் புவியியலுக்கு மகத்தான தொண்டாற்றி இருக்கின்றனர். அவர்களால் எழுதப்பட்ட கணிதவானவியற் புவியியல் நூல்களிற் பல இன்று கிடைக்கவில்லை. இன்னும் சில ஐரோப்பாவில் இலத்தீன் முதலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதோடு, அவற்றை எழுதிய ஆசிரியர்களின் பெயர்களும் மறைக்கப்பட்டுள்ளன. மேலும், சில நூல்களின் கருத்துக்களை ஐரோப்பியர் திருடி தமது பெயர்களில் அவற்றை வெளியிட்டனர். எனினும், முஸ்லிம்களின் அறிவுப் பணியை முற்றாக மூடிமறைக்க அவர்களால் முடியவில்லை.
உசாத்துணை நூல்கள்
Reference: 1. Nafis Ahmad, Muslim and the Science Of
Geography, pp.39-40 K. Jamil Ahmad, Heritage of islam, p.35 S.H. Nasr, islamic Science, p.97
bid, PK. Hitti, History of the Arabs, p.373.
168

Page 88
11. 12. 13.
14.
Art. "Muslim Contribution to Astronomy and Optics" By A.H. Rizvi in The Journal pf Rabitat al-Alam al-Islamic,Vol.3 No.3 (January 1976) Nafis Ahmad, Muslim Contribution to Geography, p.91 Mohammad Abdul Rahman Khan, A Brief Survey of Muslim Contribution to Science and Culture, p.14 Ameer Ali, The Spirit of Islam, p.374-375
. Nafis Ahmad, Muslims and the Science of
Geography, p.44
bid.
bid. Nafis Ahmad, Muslim Contribution to Geography, p.99
Ibid., p. 100
169

அத்தியாயம்-6 முஸ்லிம்புவியியலாளர்களும் படவரைகலையும்
நவீன புவியியலில் இருந்து படவரைகலையை வேறுபடுத்தி நோக்குவது இயலாது. கிரேக்கர் காலம் தொட்டே புவியியலோடு அதுவும் வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது. ஆயினும், இன்று பல்வேறு நுட்பங்களையும் முறைகளையும் பின்பற்றி வெவ்வேறுவகையான தேவை களுக்கேற்ப வெவ்வேறு வகையான படங்கள் வரையப்படுகின்றன. விளக்கப்படங்கள், ஓரங்குலப் படங்கள், விமானப்படங்கள், புள்ளிவி பரத்தரவுகளை எடுத்துக் காட்டும் படங்கள் என நவீன படவரைகலை விரிவடைந்து கொண்டு செல்கிறது. ஆயினும், முஸ்லிம்களின் படவரைகலை பற்றிப் பேசும்போது, அவர்கள் வரைந்த உலகப்படங்கள் பற்றியே (தேசப்படங்கள்) இங்கு பேசப்படுகிறது.
முஸ்லிம்களால் வரையப்பட்ட படங்களை நவீன உலகப்படங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றைக் குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது. ஏனெனில், இப்படங்கள் பல நூற்றாண்டுகளுக்கு
170

Page 89
முன்னர், நவீன சாதனங்களின் துணையின்றியே வரையப்பட்டன. மேலும், உலகினைப்பற்றிய பாபிலோனிய, கிரேக்க கருத்துப் படிவங்களும், தொலமியின் உலகப்படமும் ஆரம்பகாலப்பிரிவில் அவர்களது படங்களிலே தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. காலப்போக்கில் முஸ்லிம் களது அறிவு, அனுபவம் என்பவற்றால் படங்களிலிருந்த பிழைகளை நீக்கியதோடு, மேலதிக விபரங்களையும் சேர்த்தனர். எனவே, படவரைகலையின் வரலாற்று ரீதியான வளர்ச்சியில் முஸ்லிம்புவியியலாளர்கள் தமக்கென ஓர் இடத்தை பெற்றுக்கொள்கின்றனர். ஆயினும், வானவியற் புவியியல், வர்ணனைப் புவியியல், பிரதேசப்புவியியல் போன்ற துறைகளில் அவர்கள் அடைந்த வளர்ச்சியை இத்துறையில் அடையவில்லை.
புவியின் அளவைச் சரியாக நிர்ணயித்த ஆரம்ப கிரேக்க புவியியலாளரான இரடொஸ்தெனிஸ் என்பவரே அறியப்பட்ட உலகின் முதலாவது படத்தை அகல நெடுங்கோடுகளையொத்த கோடுகளைக்கொண்டு வரைந்தார்.' எனினும், புராதன உலகின் மிகச்சிறந்த படவரை, கலைஞராகக் கொள்ளப்படுவர், தொலமியே அவருடைய நூல்கள் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றது போலவே, அவரது ul-Jila (of ஆரம்பகால முஸ்லிம்
171

புவியியலாளர்களைப் படவரைகலையில் ஈடுபாடு கொள்ளச் செய்தன.
சமுத்திரம் சுற்றி வளைத்திருக்கின்றது என்றதொரு பொதுவான கருத்து நீண்டகாலமாக நிலவி வந்தது ஏனெனில், முஸ்லிம் வியாபாரிகளும், கடலோடிகளும், வெற்றிவீ ரர்களும் எத்திசையாக நுழைந்தார்களோ, அங்கெல்லாம் அத்திலாந்திக் பகுதியிலிருந்து இந்து சமுத்திரம், பசுபிக்சமுத்திரங்கள் வரை பரந்துநின்ற சமுத்திர பரப்பு இருக்கவேண்டுமெனத் தோன்றியது. யதார்த்தபூர்வமான இவ்வனுபவம் பழங்கால பாபிலோனிய, கிரேக்க மரபுகளால் வலுப்பெறலாயிற்று. ஆயினும், ஆரம்ப காலப்பிரிவில் முஸ்லிம்களால் வரையப்பட்ட படங்களிலேயே சில முன்னேற்றங்கள் தென்படத் தொடங்கின. உ-மாக இப்னு ஹெளக்கல், அல்-மக்திஸி, அல்-இத்ரீஸ் ஆகியோராலும் ஏனையோராலும் வரையப்பட்ட படங்களைக் குறிப்பிடலாம். இந்து சமுத்திரம் நாலாபாகங் களிலும் நிலத்தினால் சூழப்பட்டது என்பதும், ஆபிரிக்காவும் தென்கிழக்காசியாவும் ஒன்றோ டொன்று தொடர்புடையன என்பதுமான தொலமியின் கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டமை ஒரு முக்கியமான மாற்றமாகும். புதிதாகக் கண்டறியப்பட்ட கடல்கள், குடாக்கள், தீவுகள் என்பவற்றின் பெயர்கள் அவர்களது படங்களில்
172

Page 90
தோன்ற ஆரம்பித்தன. அரேபியரால் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்ட கடற்பயணங்களே இதற்குக் காரணமாகும்*
இஸ்லாத்துக்கு முற்பட்ட கால அரேபியர், பல நூற்றாண்டுகளாக இந்து சமுத்திரத்தின் வட பகுதியிலும், தென் சீனக் கரையோரங்களிலும் கப்பலோட்டி வந்தனர். இஸ்லாத்தின் வருகை காரணமாகவும், தொடர்ந்து நூறு ஆண்டு களுக்குள் அதற்குக் கிட்டிய வெற்றிகள் காரணமாகவும், சமுத்திரங்களிலே முதன்மை வாய்ந்த கப்பலோட்டிகளாக அவர்கள் திகழ்ந்தனர். தரைமார்க்கமாகவும் அவர்கள் நீண்ட பிரயாணங்களை மேற்கொள்ளலாயினர். நிர்வாகத் தேவைகள், வரி அறவிடுதல் போன்ற நோக்கங்களுக்காக விரிவான புவியியல் விபரங்கள் அவர்களுக்கு அவசியமாக இருந்தன.
இப்புதிய அறிவு முஸ்லிம்களது பட வரைகலைக்கு பின்னணியாக அமைந்தது. அஸ்ட்ரோலேப், திசைம்காட்டி என்பவற்றின் பாவனையும், காற்று, வானிலைபற்றி அவர்களுக்கு இருந்த அறிவும், வர்த்தக நோக்கங்களுக்காகக் கப்பலோட்டலை பழக்கப்பட்ட தொழிற்பாடாக ஆக்கின. எனவே, முஸ்லிம்களின் படங்களை இருவேறு காலப்பகுதிகளாகப் பிரித்து நோக்கலாம்.
1. ஆரம்ப காலப்பகுதி
173

2. பிற்பட்ட காலப்பகுதி ஆரம்பகாலப் பிரிவை சேர்ந்த படங்கள் மிக எளிமையானவையாக இருந்தன. காலம் செல்லச் செல்ல அதிகமதிகமான படங்கள் வரையப்பட்டன. அவை புதிய விபரங்கள் பலவற்றையும் எடுத்துக்
antil 1960s.
உமையாக்களின் காலத்தில் தேசப்படங்களை வரைவதற்கான ஆரம்ப முயற்சிகள் சில மேற்கொள்ளப்பட்டன. இக்காலப்பிரிவில் ஒரு தொகுதித் தேசப் படங்களில் இருந்து 'ஈரானியத் தேசப்படத் தொகுதி" தயாரிக்கப்பட்டது. அல்-பலாதூரி (புதூஹுல் புல்தான்) இப்னு அல்பாக்கிஹற் ஆகியோரின் ஆக்கங்களிலிருந்து இவை பற்றிய விபரங்களைப் பெறமுடிகின்றது.
அப்பாஸியர் ஆட்சிகாலத்தில் ஆரம்பப் பிரிவில், கலீபா அல்-மஃமூனின் கட்டளைக் கிணங்க முஸ்லிம் கல்விமான்களினதும், விஞ்ஞானிகளினதும் முயற்சியால் 'அல் -ஸ"ாரத்துல் மஹ்மூனிய்யா' என்ற பெயரில் பிரபல்யம் வாய்ந்தோர் ബക് L ul b வரையப்பட்டது. இது தொலமியின் படத்தை ஒத்திருந்தது என்றும், ஆனால், கூடுதலான விபரங்களைக் கொண்டிருந்தது என்றும் கூறப்படுகின்றது. இப்படம் இன்று
174

Page 91
அல்-குவாரிஸ்மிமிக ஆரம்பகாலத்தைச் சேர்ந்த படவரை கலைஞர்களுள் ஒருவர். உண்மையில், கிதாப் ஸ"ாரதுல் அர்ள்’ என்ற இவருடைய புகழ்பெற்ற நூலானது தேசப்படங்களுக்குரிய விளக்கமாகவே அமைந்திருந்தது. இவரது படங்களில் அகல நெடுங்கோடுகள் காணப்படவில்லை. இவர் நைல் நதியியன் பட மொன்றினையும் வரைந்தார். அல்-ஸ"ாரத்துல் மஃமுனிய்யா என்னும் உலகப்படத்தை வரையும் முயற்சியில் ஈடுபட்ட எழுபது பேர்களில் இவரும் ஒருவர் என நம்பப்படுகிறது.
தொடர்ந்து அல்-ஜைஹானி, அல்-மஸ்ஊதி போன்றோரால் படங்கள் வரையப்பட்டன. அரேபியத் தீபகற்பம், அதன் புற எல்லைப்பகுதிகள் என்பவற்றை எடுத்துக் காட்டும், அல்-ஜைஹானியின் படம் செம்மையானதன்று. அல்-மஸ்ஊதியின் உலகப்படமும் நேர்த்தியான தாக இல்லை. ஆயினும், தொலமியின் படத்தோடு ஒப்பிடும் போது, அறியப்பட்ட உலகினைப் பற்றி முன்னையதைவிடத் தெளிவான தோற்றத்தை இப்படம் தருகிறது. மேலும், இது ஆபிரிக்காவைத் தென் கிழக்கு ஆசியாவிலிருந்து பிரித்துக்' காட்டுவதோடு, வடக்கேயுள்ள மத்தியதரைக்கடல், மக்ரிப், அந்தலூஸ் ஸகாலிபா (Saqaiba) என்பவற்றையும், கிழக்கிலுள்ள இந்தியா, சீனா ஆகிய நாடுகளையும் எடுத்துக் காட்டுகிறது. நைல்
175

நதியும் அதன் மூலங்களும் இப்படத்தில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. அல்ஜெய்ஹானி, அல்-மஸ்ஊதி ஆகியோரின் படங்களிலே அளவுத் திட்டமோ, அகல நெடுங்கோடுகளோ காட்டப்படவில்லை.
பல்கிக் குழுவினரின் வருகையோடு படவரைகலையின் அடுத்த L 19: GLADGODD தொடங்குகின்றது. அல்-பல்கி, இப்னு ஹெளக்கல், அல்-இஷ்தக்ரி என்போர் இக்குழுவைச் சேர்ந்த புவியியலாளர்களாவர். இவர்கள் பல்கியைப் பின்பற்றி தமது ஆக்கங்களை எழுதினர். படங்களையும்அவரைப்பின்பற்றியே வரைந்தனர்.
பல்கியின் தேசப்படத்தொகுதி பின்வரும் படங்களை உள்ளடக்கியிருந்தது; ஓர் உலகப்படம்: அரேபியாவின் படமொன்று; இந்து சமுத்திரம்: மக்ரிப் (மொரோக்கோ, அல்ஜீரியா போன்றன), எகிப்து, ஸிரியா, மத்தியதரைக்கடல் என்பவற்றைக் காட்டும் படங்கள், கீழை இஸ்லாமிய உலகினையும், மத்திய இஸ்லாமிய உலகினையும், எடுத்துக் காட்டும் ஏறக்குறைய72 படங்கள். கால நிலைப் பிரதேசங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட பல்வேறு நாடுகளை வர்ணிக்கும் அவரது புவியியல் நூலானது, அவரது படங்களுக்கு விளக்கமாக அமையும் வகையில் எழுதப்பட்டதாகும்.4 இதனாலேயே, அவர் தமது நூலுக்கு கிதாபுல் அஷ்கால் அல்லது "ஸ"வருல்
176

Page 92
அகாலிம் (காலநிலைப் பிரதேசங்களின் விளக்கப்படங்கள்) எனப்பெயரிட்டார். இப்படங்கள் எவையுமே இன்று கிடைக்கவில்லை. ஆனால், அதிர்ஷ்டவசமாக அல்-இஷ்தக்ரியும், இப்னு ஹெளக்கலும் இப்படங்களிற் சிலவற்றை பயன்படுத்தியதோடு பிரதிபண்ணியும் வைத்திருந் தனர்.
பல்கியைப் பின்பற்றிப் புவியியல் நூல் எழுதியவர்களுள் அல்-முகத்தளி காலத்தால் பிற்பட்டவர். இவர் முஸ்லிம் உலகினைப் பதினான்கு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றை யும் தனித்தனிப் படமாக வரைந்தார். இப்படங்களில் பரிச்சயமான LIT60556it சிவப்பாலும், மணற்பிரதேசங்கள் மஞ்சள் நிறத்தாலும், உவர் நீர்க்கடல்கள் பச்சை நிறத்தாலும், முக்கியமான் ஆறுகள் நீல நிறத்தாலும், பிரதான மலைகள் வெளிர் சாம்பல் நிறத்தாலும் அடையாளமிடப்பட்டுள்ளன.
பாரசீக மொழியில் ஹ"தூதுல் ஆலம் என்னும் நூலை எழுதிய அநாமதேய ஆசிரியரும், படத்திற்குரிய விளக்கமாக அமையக்கூடிய வகையிலேயே தனது புத்திகத்தை வரைந்தார்.
பிரபல்யம் மிக்க புவியியலாளரும், மாமேதையுமான அல்-பீருணி, கடல்களின் அமைவு நிலையைக் காட்டுவதற்காக கிதாபுல் தப்ஹீம்' என்ற நூலிலே வட்ட வடிவமான
777

உலகப்படமொன்றினை வரைந்திருந்தார். அல்அஸருல் பாக்கியா என்ற மற்றொரு நூலிலும் பல படங்களை இணைத்திருந்தார். தமது புவி வான் படங்களை வரைவதற்கான படவெறியங்கள் சிலவற்றையும் அவர் வகுத்துச் சென்றார்.
அல்-பிரூனிக்குப் பின்னர் அல்-இத்ரீஸி மிக முக்கியமான படவரைஞராகக் கொள்ளப் படுகின்றார். இவர், தமது ஏழு காலநிலைப் பிரிவுகளையும் எடுத்துக் காட்டும் வகையில் எழுபது படங்களை வரைந்ததோடு, வானகோளம் ஒன்றினையும் வெள்ளியிலான பூகோளம் ஒன்றினையும் அமைத்தார். பூகோளத்தில் தமது ஏழு காலநிலைப் பிரிவுகளையும் அடையாளம் செய்தார். ஓர் உலகப்படத்தை வெள்ளித் தட்டு ஒன்றிலும் பொறித்தார்.5 அவரால் வரையப்பட்ட படங்களிற் சில இன்னும் கிடைக்கின்றன. இவை படங்களை வரைவதில் அவருக்கு இருந்த நிபுணத்துவத்தை மட்டுமின்றி, உலகினைப் பற்றிப் பொதுவாகவும் மேற்கத்திய உலகினைப்பற்றிக் குறிப்பாகவும் அவர் பெற்றிருந்த அறிவினையும் பிரதிபலிப்பனவாகவுள்ளன. பிரித்தாலயா, பிரான்ஸ், நோர்வே, பால்டிக்கடல், சைபீரியா என்பவற்றின் அமைவு நிலையினை அவர் குறிப்பிட்டுக் காட்டினார்."
Z75

Page 93
சுருங்கக் கூறின், இவரது படங்கள் கிழக்கத்திய இஸ்லாமிய உலகினைவிட மேற்கத்திய இஸ்லாமிய உலகினையே சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.
அல்-கஸ்வீனி அல்-வர்தீ போன்றோரும் பல்கிக் குழுவினரைப் பின்பற்றிப்படங்களை வரைந்தனர். அப்துர் ரஹ்மான் அல்ஸ"ாபி (கி.பி.1040) கெய்ரோவில் இரு வானகோளங்களைச் செய்தார். மவ்ஸிலைச் சேர்ந்த இப்னு ஹ"லா (கி.பி.1275) வெண்கலத்தினாலான பூகோள உருண்டை ஒன்றைச் செய்தார். அல்-கஷ்தாரி என்பவரும் (கிபி.133335) திவான் லுகத்துல் துர்க் என்ற நூலிலே உருண்டை ' வடிவான உலகப் படமொன்றை வரைந்திருந்தார்.
ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குச் சிறிது முற்பட்ட காலத்தைச் சேர்ந்த முஸ்லிம் கப்பலோட்டிகளான அஹ்மத் இப்னு மாஜித், ஸுலைமான் மஹ்ரி என்போரின் ஆக்கங்கள் இந்து சமுத்திரம், அரபுக்கடல், சீனக்கடல், செங்கடல், மத்தியதரைக்கடல் என்பன பற்றிய விரிவான அறிவை முஸ்லிம்களுக்கு கொடுத்தன. கடலோட்டப்புவியியல், கடலோட்ட வானியல் பற்றிய இவர்களது நூல்கள் பிற்காலத்தில் தோன்றிய துருக்கிய கடலோடிகளுக்கும், புவியியலாளர்களுக்கும் மிகவும் உதவின.
779

துருக்கிய புவியியலாளரான பீரி முஹியல் தீன் ரஈஸ், முஸ்லிம்களது படவரைகலையின் உச்சக்கட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில், தற்கால புவியியல் அறிஞர்களையே ஆச்சரியத்தில் மூழ்க வைக்கக் கூடிய படங்களை வரைந்தார்.
16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவரால் வரையப்பட்ட வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா என்பவற்றின் படங்கள் தற்கால உலகப் படங்களோடு ஒப்பிடக் கூடிய பெருமை பெற்றவையாகத் திகழ்கின்றன. மேலும், 129 அத்தியாங்களைக் கொண்ட தமது பஹ்ரீய்யா' என்ற நூலிலும், ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒவ்வொரு படத்தை இணைத்திருந்தார். உண்மையில், பீரி ரஈஸின் பணி முஸ்லிம்களுக்கு பெருமையையும், புகழையும் ஈட்டிக் கொடுக்கக் கூடியது என்பதில் ஐயமில்லை.
முஸ்லிம்களால் வரையப்பட்ட படங்களில் பெரும்பாலானவை காலவெள்ளத்தால் அழிக்கப் பட்டு விட்டன. எஞ்சியுள்ள ஒரு சில படங்கள், படவரைகலையில் அவர்கள் காட்டிய ஆர்வத்தையும், அத்துறையில் அவர்கள் ஆற்றிய அரிய சாதனைகளையும் உலகிற்கு எடுத்துக் காட்டக் கூடியனவாகத் திகழ்கின்றன.
780

Page 94
உசாத்துணை நூல்கள்
References:
1. 2.
3. 4.
Book of Knowledge, Vol II p.43. Nafis Ahmad, Muslims and the Science of Geography, p.57.
Ibid., p.59 Nafis Ahmad, Muslim Contribution to Geography, p.129.
ibid., p.130. Nafis Ahmad, Muslims and the Science of Geography, p.60.
181

BIBLOGRAPHY
Abdur Rahman Khan, Mohammad
A Brief Survey of Muslim Contribution to Science and Culture, Lahore, 1959.
Ahmad, Jamil
Heritage of Islam, Ferozsons, Lahore Pakistan, 1956.
Ahmad, Jamil
Hundred Great Muslims, FerOZSons, Lahore, 1967
Ahmad, Nafis
Muslim contribution to Geography, Sh.Mohammad Ashraf, Lahore, Pakistan, 1972.
Ahmad Nafis
Muslims and the Science of Geography, University Press Ltd, Bangladesh, 1980.
Al-Akkad, Mahmoud, Abbas
The Arabs impact on European Civilisation Translated by Ismail Cashmiry-Muhammad al-Hadi, The Supreme Council for Islamic Affairs, Cairo, U.A.R.
Anneer Ali
The Spirit of Islam, Chatto & Windus, London, 1974.
Arberty, A.J.,
The Legacy of Persia, Oxford University Press, 1953.
Arnold and Guillaume
The Legacy of Islam, Oxford University Press, London, 1960.
Bartold, VV,
Mussulman culture, Translated from the Russian by Shahid Suhrawardy, University of Calcutta, 1934.
Brifault, Robert, Dr.,
The Making of Humanity, Islamic Book Foundation, Lahore, Printed in England 1919, Printed in Pakistan 1980.

Page 95
Collins Concise Encyclopedia of Explorations Encyclopedia of Islam
Gibb, H.A.R.,
Ibn Battuta Travels in Asia and Africa, Geroge Routledge & Sons Ltd., London, 1929.
Hitti, Philip, K,
History of the Arabs, Macmillan & Co. Ltd., London, 1960.
Khuda Bakhah, S.,
The Renaissance of Islam-Translated from the German of Adam Mez, Islamic Book Service, Lahore, 1978.
Nadvi, Sulaiman, Moulana
Mazamin-e-Seyyed Sulaiman Nadvi, (Urdu) Patna, India.
Nasr, Hossein, Seyed
Islamic Science-An illustrated Study, Wold of Islam Festival Publishing Company Ltd., England, 1976
Taylor, Griffith,
Geography in the 20th Century, Methuen & Co. Ltd., London, 1965.
Periodicals: メ
Rizvi, A.H. Prof., "Muslim Contribution to Astronomy and Optics", The Journal of Rabitat al-Alam al-Islami, Vol.3 No.3 (January 1976, Mecca, K.S.A.
Waheed, K.A.,
"Traveller al-Yaqubi", The Muslim World, Vol.16 No.27 (January 20, 1979), Pakistan.


Page 96


Page 97


Page 98
33-t1/11 Galli ROaC
A SUBSDARY OF MUD EDUCATIONAL FO ISBN 955-95
 

6 SRI LANKA
日
■ 旧 |= 真 [−]
■ ()
LII 目 目 L 风弼》 丽|
别班多 다.■ | ||『
ColorTibo