கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுமைகள்

Page 1

LSL L LL SSSLL SSSLLL L LSLLL SL S L LSSSLLLLS f
MINANTARNANNAN
AAA
A.

Page 2


Page 3

சு  ைம க ள்
பரிசு பெற்ற | சிறுகதைகள்?
முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி, செயல் முன்னணி 17-A, பார்க் அவன்யு, கொழும்பு-5

Page 4
SUMAKAL
(Short Stories)
COPYRIGHT RESERVED
Published by:
MUSLIM WOMEN'S RESEARCH AND ACTION FRONT,
7A, Park Avenue,
COLOMBO-5
Publication No. 3 First Edition: February, 1993
Printed at : TA.J. PRESS 53, Nainiappan Street MADRAS-1

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி சித்திரலேகா மெளனகுரு அவர்கள்
மனமுவந்து வழங்கிய
1රණශූර්‍ෂීහ.
ஸ்லிம் மாதர் ஆராய்ச்சி, செயல் முன்னணி யினர் வெளியிடுகின்ற இச் சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் அறிந்தவரையில், தமிழில் முற்றிலும் பெண் எழுத்தாளர் களின் சிறுகதைகளைக் கொண்ட முதற் தொகுப்பாக இதுவே அமைகின்றது. சென்ற வருடம் இம் முன்னணி, பெண் எழுத்தாளர்களிடையே நடாத்திய சிறுகதைப் போட்டியின் விளைவே இத் தொகுப்பாகும். ஐந்து சிறுகதைகளைக் கொண்ட இத் தொகுப்பு பொதுவாக இன்று வானொலி, பத்திரிகைகள் ஆகியவற்றில் வெளி வரும் பெண்களது படைப்புகள் பற்றிய அவதானிப்பு களுக்கு அடிப்படையாக அமையத்தக்கது. இது மாத்திர மன்றி சமூகத்தில் தம்மை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பெண்கள் என்ன கருதுகிறார்கள், எவற்றை முக்கியமானதாகக் கொள்கின்றார்கள், அவை பற்றி எவ்வாறு உணருகிறார்கள் என்பது குறித்து இத் தொகுதி சில சுவையான தகவல்களைத் தருகிறது.

Page 5
இச் சிறு கதைகளை ஒரு சேர நோக்கும்போது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்ற சமூகத்தின் இரட்டை நிலைப்பாட்டினால் பெண்கள் பாதிக்கப் படுவது குறித்து அவர்கள் கொண்டுள்ள அதிருப்தி யாகும். ஆண் பெண்ணுக்கிடையிலான வேலைப் பிரிவினை. பெண்களுக்கு எதிரான வன்செயல், சீதனப் பிரச்சினை, பெண்ணின் சுயாதீன்மற்ற நிலை ஆகியவை என விரிவாக இந்த அதிருப்தி வெளிப்படுகிறது. அவை சரியானவைதானா என்ற வினாக்கள் எழுப்பப்படு கின்றன. இந்த நிலைமைகளையும், அநீதியையும் எதிர்த்துச் செயற்படும் பெண்ணுக்கு ஆதரவளிக்காத சமூகம் பற்றிய ஐயம் எழுகிறது.
* ஜெஸிலாவின் கணவன் ஜப்பார், காலை ஏழு மணிக்கே அவன் கடமை பார்க்கும் வங்கிக்குப் புறப்பட்டு விட்டான். அதிகாலை நான்கரை மணிக்கே படுக்கை விட்டு எழுந்து, சுபஹ"Pத் தொழுகை முடித்து, பகல் சாப்பாட்டையும் சமைத்து பார்சலாகக் கட்டிக் கொடுக்க, எடுத்துச் சென்ற ஜப்பார் மீண்டும் இரவு ஏழு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவான்.
ஆனால் ஜெஸிலாவோ வீட்டில் உள்ள அத்தனை வேலைகளையும் முடித்து, தான் படிப்பிக்கும் பாடசாலைக்குச் சென்று தமது வயிற்றுக்காகவும் சமூகத் துக்காகவும் உழைத்துவிட்டு வந்து மீண்டும் தன் குடும்பத்துக்காகவும் உழைப்பது அவள் இல்வாழ்க்கைக் குள் காலடி எடுத்து வைத்த கடந்த நான்கு வருடங் களாகப் பழக்கப்பட்ட ஒ ன் ற ர கி விட்டது." -சுமைகள். ያ "
* காலைக் குளிர் உடலைக் கொஞ்சம் நடுங்க வைக்க போர்வையைத் தேடி கைகளை வைத்துத்
4

துழாவும்போது தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த கடிகாரம் ரீங்காரமிட்டுத் தன் கடமையைச் செய்தது. * சே.இன்னும் கொஞ்சம் படுக்கலாம்னு பாத்தா. அதுக்குள்ள நாலரை மணி ஆயிடிச்சா ?" கொஞ்சம் வெறுப்புடனே கடிகாரமுள்ளை அமிழ்த்தி அலாரத்தை நிற்பாட்டுகிறாள்."அதுக்குள்ள நாலரையாயிடிச்சா. என்னைய ஐஞ்சரக்கு எழுப்பிடுங்க " என்று முணு முணுத்தபடியே போர்வையை இன்னும் கொஞ்சம் இழுத்துப் போர்த்தி மறுபுறம் புரண்டு படுக்கும் என் கணவரைப் பார்க்க எனக்குப் பொறாமையாக இருக் கிறது."-தீர்க்கப்படாத நியாயங்கள்.
* படுக்கையை விட்டு எழவே சோம்பலாக இருந்தது. குளிருக்கு. இதமாக இன்னும் சற்றுத் தூங்கி விட்டு காரியாலயத்திற்கு அரை நாள் மட்டமடிப்போமா என்று யோசித்தபோது, அன்றைய தினம் செய்து முடிக்க வேண்டிய அவசர வேலைகள் கண் முன் స్థిర பயமுறுத்த, எரிச்சலுடன் எழுந்து கொண்
-60
ஐந்து மணிக்கு எழுந்தாலே வீட்டுவேலை முடிந்து காரியாலயம் செல்லும்போது ஒன்பது மணியாகி விடும். இன்று ஏற்கனவே லேட். என்னதான் செய்வது?" -தப்புத் தாளங்கள்.
* சாமக்கோழி கூவையிலே எழும்பணும்' என்று பெண்களுக்கு அறிவுறுத்தும் சமூகத்தில் இந்த அறி வுறுத்தலை மறு கேள்வி கேட்காமல் பெண்கள் ஏற்றுக் கொள்வதையும், அவ்வாறானவர்களே இலட்சியப் பெண்கள் எனவும் இலக்கியம் முதல் சினிமாப்பாடல் வரை வற்புறுத்தும் நிலையில் மேற்காணும் கதைகளில் காணுகின்ற அதிருப்தி வெளிக்காட்டல் முக்கியமானது எனவே நினைக்கிறேன். இது பெண்கள் என்ற வகையில்
5

Page 6
மாத்திரமல்ல; யதார்த்தமான எண்ணங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிப்பது என்ற வகையில் இலக்கிய உருவாக்கத்திலும் முக்கியமான அம்ச மாகும்.
இந்த ஐந்து கதைகளிலும் மூன்றில் ஆண் பெண்ணுக்கிடையிலான தொழிற்பாகுபாடு குறித்த அதிருப்தியும் அது பெண்களை நவீன சமூகத்தில் எவ்வாறு இரட்டைச் சுமையைத் தாங்க வேண்டியவர் களாக ஆக்கிவிடுகிறது என்பது பற்றிய கருத்தும் வெளிப்பட்டுள்ளது. பெண் கள் எதிர்கொள்ளும் பிரச் சினைகளில் முக்கியமானவையை இனங்காண இது உதவுகிறது. −
" சுமைகள் " என்ற முதற் பரிசுச் சிறுகதை இப்பிரச்சினையின் இன்னோர் பரிமாணத்தையும் தரு கிறது. வீட்டு வேலையும் வெளிவேலையும் ஒரு சேரத் தருகின்ற இரட்டைச் சுமை தனது குடும்பத்தைச் சிறிதாகவே வைத்திருப்பதற்கு ஜெஸிலாவைத் தூண்டு கிறது. ஏற்கனவே இரு சிறு குழந்தைகட்குத் தாயான அவள், மேலும் கர்ப்பந்தரிக்காமலிருக்கும் பொருட்டு, கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துகிறாள். ஆனால், இது அவளது கணவனது கோபத்திற்குக் காரணமாகிறது. தனக்குத் தெரியாமல் இம் மாத்திரை களை அவள் பயன்படுத்தியதால் அவளை ஒழுக்கம் கெட்டவள் என்று அவன் ஏசுகிறான்.
இங்கு தனது சொந்த உடலிற்கூட எந்த உரிமையும் இல்லாமல் துன்புறும் பெண்கள்ைக் காண முடிகிறது. சமூக விழுமியங்கள், கலாசாரம் ஆகியவை எல்லாம் இவ்வகையில் ஒருங்கு சேர்ந்து பெண்களைக் கட்டுப்படுத்துகின்றன. இவற்றைப்பற்றி வினா எழுப்பும் பெண்கள் சமூக அநீதிக்கு உள்ளாகின்றனர். அல்லது இந்நிலை மாறாதா ? என்ற பெருமூச்சுடன் அடங்கிப் போகின்றனர்.

" தனது நியாய பூர்வமான நிபந்தனைகளைத் தன் கணவன் ஜப்பார் ஏற்றுக்கொண்டு தன்னை அழைத்துச் செல்ல வருவான் என எதிர்ப்ார்த்திருந்த ஜெஸிலாவுக்கு 'தலாக்' எனும் விவாகரத்து வழக்கிற் கான “காஸி" நீதிமன்றத்தின் அழைப்பாணைதான் கிடைத்தது. -சுமைகள்.
"ஏன் இவ்வளவு லேட் ? ஏன் இவ்வளவு லேட் ? ஏன் இவ்வளவு லேட் ? அவர் கேட்டது எனக்குப் பிடிக்கவில்லை. குற்றம் சுமத்தும் பாணியில், சந்தேகப் படும் பாணியில், சர்வாதிகாரச் சாயலில் அவர் கேட்ட வாதம் ? சே.ஆண்கள் எல்லோரும் ஒரே ரகமா ? ஒரு சில வினாடிகளில் இவர் கூட என்னைப் புரிந்து கொள்ளாமல். காலையில் இருந்து எத்தனை சிரமங்களை சகித்திருக்கிறேன். சின்னச்சின்ன ஆசைகளையெல்லாம் தியாகம் செய்து கடைமைக்காய், குடும்பத்துக்காய். உழைத்து.ஒரு வார்த்தை 1 இன்னைக்கு மழையோட ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பே.சரியான டயடா ? என்று ஒரு வார்த்தை கேட்டால் என்ன ?
"எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு இதே நிலைதானா ? இந்த நியாயங்கள் என்றுமே தீர்க்கப் படாதவைதானா ? விடை புரியா வினாக்கள் புழுவாய் மண்டையைக் குடைய, தலைவலி எட்டிப் பார்க் கிறது.
'மெளனமாய் உள்ளே சென்று உடை மாற்றி மாத்திரை ஒன்றை விழுங்கித் தலைவலிக்குத் தற்காலிக நிவாரணம் அளித்துவிட்டு வேலைகளை மீண்டும் தொடர்கிறேன்" -தீர்க்கப்படாத நியாயங் கள்.
இங்கு எடுத்துக் காட்டியவை பெண்களது யதார்த்தத்தைத் தொட்டுக் காட்டும் பகுதிகளாகும்.
7

Page 7
இவ்வகையில் இக் கதைகளில் காணப்படும் கருத்து. களும் உணர்வுகளும் முக்கியமானவையாகும். குடும்பம், அலுவலகம், சமூகம் ஆகிய இடங்களில் பெண்கள் எதிர்நோக்குகின்ற ஒழுக்கமுறை, அதிகாரம், சமயம், கலாசாரம் ஆகிய அம்சங்களால் சமூகத்தில் அவர்கள் அனுபவிக்கும் தாழ்த்தப்பட்ட நிலை என்பவையும் சிறு அளவிலாவது இக்கதைகளில் பிரதிபலிக்கின்றன.
1986-ம் ஆண்டு. தமிழில் முதன் முதலில் வெளியான பெண்களது கவிதைத் தொகுதியான *சொல்லாத சேதிகள்” என்ற நூலின் அறிமுகக் குறிப்பில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்:
"பெண்கள் தமது உணர்வுகளையும் எண்ணங் களையும், கருத்துகளையும், ஆற்றல்களையும் இயல்பாக வெளியிடுவதற்கும் தமது திறன்களை வளர்த்தெடுப்ப தற்கும் தமது ஆக்கங்களை தனிப்பட பிரித்து நோக்கு வது அவசியம் என உணரத் தலைப்பட்டுள்ளனர் பெண்களிடையே பெண் என்ற இந்த நிலைப்பாடு தோன்றியுள்ள இக்கால கட்டத்தில், நாம் பெண்களுக் கான ஒரு கலை, இலக்கிய நெறியை உருவாக்குவது முக்கிய தேவையாகும். இப் பெண்நிலைவாத நோக்கு நிலை பெண் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய அம்சமாகும்.பெண்களது படைப்புகளை ஒரு சேரத் தொகுத்து நோக்கும்போதுதான் அவற்றின் பண்புகளும் இயல்புகளும் தெரியவரும்; அவை மேலும் அடைய வேண்டிய வளர்ச்சி பற்றியும் ஆக்க முறைகள் பற்றியும் ஆலோசிக்கவும் உணரவும் வழி பிறக்கும்.”
இதே கருத்தை இங்கு மீண்டும் வற்புறுத்த நான் விரும்புகிறேன்.

பெண்களது ஆக்கத் திறன்களுக்கும் வெளிப் பாட்டிற்கும் எமது சமூகத்தில் அதிகளவில் அங்கீ காரமோ, ஊக்குவிப்போ கிடைப்பதில்லை. அவ்வாறு ஊக்குவிக்கப்படுவனவும் பெரும்பாலும் குடும்ப அங்கத் தவர்களின் நுகர்விற்குப் பொருத்தமானதாய் அமையும் தையல், பின்னல், கோலம் போடுதல் போன்ற கலைகள் தாம். கவிதை, கதை எழுதுவதை, ஓவியம் வரைவதைத் திருமணமானதும் நிறுத்திவிடும் எத்தனையோ இளம் பெண்களை நான் கண்டிருக்கிறேன். இதற்குப் போது மான ஊக்கம், வாய்ப்பு, நேரம் அவர்களுக்குக் கிடைக் காமற் போகிறது. எழுத்துத் தேர்ச்சி, பயிற்சியில் அதிகம் தங்கியுள்ளதாகும். இலக்கியத்தில் நுண்ணுணர்வையும் ஆழமான தேடலையும் வெளிப்படுத்துவதற்குஆதாரமாக அனுபவ விரிவு அமையும். ஆணைவிடப் பெண்ணுக்கு, இவற்றின் எல்லைகள் மிக மிகக் குறுகியே உள்ளன.
எனவே, பெண்களை எழுத்துத் துறையில் ஈடுபடுத்தவும் அவர்களது ஈடுபாட்டை வளர்க்கவும் மேலதிகமான முயற்சி தேவைப்படுகிறது. இந்த மூயற் சியை முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி, செயல் முன்னணி போன்ற அமைப்புகள் மேற்கொள்வது பாராட்டுக்குரிய தாகும்.
இத் தொகுதியில் அடங்கியுள்ள கதைகளில், படைப்புத் திறன் குறைந்தே காணப்படுகிறது. ஒரு சில கதைகள் மிகவும் செயற்கைத் தன்மை வாய்ந்தன வாகவும் உள்ளன. மொழிக்கையாளுகையில் தற் புதுமை இல்லை. இத்தகைய குறைபாடுகள் திருத்த முடியாதவையல்ல, அல்லது பெண் எழுத்தாளர்களுக்கு மாத்திரம் உரித்தானவையுமல்ல. தன்னுணர்வுடன் முயலும்போது. இலகுவில் நீக்கப்படக் கூடியவை uum SS5b.

Page 8
இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த வடிவத்தை (கவிதை, சிறுகதை, நாவல்) அவர்கள் கையாளுகிறார்களோ அதன் இயல்புகளைச் சரிவரப் புரிந்து கொள்ளுதல்தான். இதற்கு அந்தந்த வடிவங்கள் பற்றிய கல்வியும் அறிவும் அடிப்படையானவை: அத்துடன், காத்திரமான இலக்கியப் படைப்புகளுடன் ஏற்படுத்தும் பரிச்சயமும் முக்கியமானது. தமிழிலும் வேறு மொழிகளிலும் (மொழிபெயர்ப்புகளுடாவது) வெளியாகும் முக்கியமான இலக்கியங்களை, முடிந்த வரையில் பெற்று வாசித்தல் வேண்டும். இது எழுத் தாளர்களது ஆக்கத்திறமை அபிவிருத்தி அடைவதற்கு உதவும்.
1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி, செயல் முன்னணியினர் நடத்திய கருத்தரங் கின்போது சுமார் முப்பது பெண் எழுத்தாளர்களை ஒரு சேரச் சந்திக்க முடிந்தது. இவர்களில் பெரும்பாலான இளம் எழுத்தாளர்கள், தமிழில் எழுதும் முக்கியமான நவீன எழுத்தாளர்களை அறிந்திருக்கவில்லை. அத் துடன் தமிழ் இலக்கிய உலகில் காத்திரமான பெண் எழுத்தாளர் என்று கூறப்படுகிற அம்பை, ராஜம் கிருஷ்ணன் போன்றோரையும் தெரிந்திருக்கவில்லை. அவர்களது வாசிப்புப் பரப்பு அகலமோ, ஆழமோ உடையதாக இல்லை என்பதைக்குறிப்பிடவே இதனைக் கூறுகிறேன்.
எனவே, இவற்றை எல்லாம் தொகுத்து நோக் கும்போது, பெண் எழுத்தாளர்களையும் அவர்களை ஊக்குவிக்கின்ற பெண்கள் அமைப்புகளையும் மூன்று முக்கிய கடமைகள் எதிர் நோக்குகின்றன :
1. இலக்கியத்தில் காலம் காலமாகப் பெண் சித்திரிக்கப்படும் முறையினை மாற்றி, பெண்ணினது
10

தாழ்த்தப்பட்ட நிலையைப் பற்றி வினாக்களை எழுப்பும் இலக்கியங்களை உருவாக்குதல்.
2. பெண் எழுத்தாளரின் படைப்புத் திறனை வளர்த்தல்.
3. இவற்றின்மூலம் கணிக்கப்படக் கூடிய, தரம் வாய்ந்த, பெண்களின் இலக்கியத் தொகுதியை உருவாக்குதல்.
இக் கருத்துகளைச் செயற்படுத்தும் வகையில் இச் சிறிய தொகுதி ஒரு ஆரம்ப முயற்சியாகும். இம் முயற்சி மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
சித்திரலேகா மெளனகுரு
தமிழ்த்துறை, யாழ் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம்.
7-6-1991

Page 9

புதியுறு
amN
முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி, செயல் முன்னணி சார்பில் இச் சிறுகதைத் தொகுதியை வெளியிடுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இச் சந்தர்ப்பத்தில் இச்சிறுகதைத் தொகுதி உருவான பின்னணி பற்றிச் சிறிது கூறவிரும்பு கிறோம்.
எமது முன்னணி, சமூகத்தில் பெண்களை எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் அவர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாகவே நோக்கும் சமூகக் கருத்து நிலை பற்றியும் அக்கறை கொண்டுள்ளது. இந்த நிலைமையை மாற்றுவதிலும் பெண்களது முன்னேற்றத்திற் கான நிலைமைகளை உருவாக்குவதிலும் ஈடுபட முனை கிறது.
W இத்தகைய அக்கறை, செயலார்வம் ஆகியவற்றின் காரணமாகவே, 1990-ம் ஆண்டு, ஜனவரி மாதம் தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர்களுக்கான ஒரு கருத்தரங்கினை ஒழுங்கு செய்தோம். பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் மூலகாரணத்தை விளக்க முயற்சிப்பது இக் கருத்தரங்கின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
பெண் எழுத்தாளர்களது சிந்தனையில், சமூகத்தில் பெண்களது நிலை குறித்து விளக்கமும் அவர்கள் அடைய
13

Page 10
வேண்டிய முன்னேற்றம் குறித்துத் தெளிவும் உறுதியும் ஏற்பட்டால், அது அவர்களது படைப்புகளிலும் வெளிப் படும் என நம்புகிறோம். இத்தகைய கருத்துகளைத் தாங்கி வெளிவரும் படைப்புகள், அவற்றை நுகர்வோர் சிந்தையில் சிறிதளவாவது சலனத்தையும் முன்னேற்றகரமான வினாக் களையும் ஏற்படுத்துதல் சமுகத்தில் பெண்களது தாழ்த்தப் பட்ட நிலையை மாற்றுவதற்கான முதற்செயல்களில் ஒன்றாய் அமையும் என்ற நம்பிக்கையும் எமக்குண்டு. அதாவது, இலக்கியத்தைப் படிப்போர் அதனுள் பொதிந் திருக்கும் கருத்துக்களால் தாக்கமுறவே செய்வர், இந்தத் தாக்கம் பெண்களைப் பொறுத்தவரை முன்னேற்றமான ஒரு பாதிப்பாக அமைந்தால், அது அவர்களது கருத்து நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என நாம் நம்புகிறோம்.
இதனாலேயே, மேற்கூறிய கருத்தரங்கு - அதில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள், கருத்துகள் ஆகிய வற்றை அவதானித்ததன் பின்னர் - பெண் எழுத்தாளர் களிடையே ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தும் எண்ணத்தை எமக்கு ஏற்படுத்தியது.
பெண்கள் தமது பிரச்சினைகளில் முக்கிய மானவைகளாக எவற்றைக் கருதுகிறார்கள்; அவை பற்றி என்ன உணருகிறார்கள் என்பதை அறிவது மாத்திரமன்றி அவர்களது எழுத்தார்வத்தைத் தூண்டுவதும் இப் போட்டி யினது நோக்கமாக அமைந்தது.
இப் போட்டி பற்றி 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தினோம். ஆனால், அக் காலப் பகுதியிலிருந்து எமது நாட்டின் வடகிழக்குப் பகுதி களில் ஏற்பட்ட போர் நிலைமைகளால், அப் பகுதிகளைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களின் பங்கு பற்றுதல் குறை
14

வாகவே இருந்தது. இத்தகைய துர்ப்பாக்கிய நிலை குறித்து நாம் மனம் வருந்துகிறோம்.
இச் சிறுகதைப் போட்டிக்கு, 28 சிறுகதைகள் வந்தன. அவற்றுள் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வற்றையும் இன்னும் இரு கதைகளையும் சேர்த்து ஐந்து சிறு கதைகளை இத் தொகுப்பில் பிரசுரிக்கிறோம். பெண் என்ற நிலையிலிருந்து இந்த எழுத்தாளர்கள் தமது உணர்வுகளை யும் கருத்துகளையும் வெளிக்காட்டும் ஒரு தொகுதியாகவும் இதனை நாம் கருதுகிறோம். ஆனால் இது முழுமையான இலக்கியத்தரம் வாய்ந்த ஒரு சிறுகதைத் தொகுதி என நாம் உரிமை கோர முயலவில்லை. எனினும், பெண் எழுத்தாளர்களது படைப்புகளை அடக்கிய சிறுகதைத் தொகுதி என்ற வகையில் இது முக்கியமானது; ஏனை யோருக்கும் உந்துதல் தரவல்லது எனப் பெருமைப்படு கிறோம்.
osur Lurrur . SAMO6ULTur
இணைப்பாளர், முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி, செயல் முன்னணி

Page 11
eklifikiT....
முதற் பரிசு பெற்ற சிறுகதை Sir GODLAD36 GAT “::
-ஹஎபீனா வஹாப்
இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை
இதற்காகத்தானா?
-எம். ஏ. ரஹீமா
மூன்றாம பரிசுபெற்ற சிறுகதை
தப்புத் தாளங்கள்
-ஃபாத்திமா ரஜாப்
Gu aður 1.0GUTd
-இர்ஃபானா ஜப்பார்
தீர்க்கப்படாத நியாயங்கள்
-ஃபெளவியா யாளபீன்
பக்கம்
17
26
32
46
 

ރިހަ
O
gr 6O O G 6"
-ஹளபீனா வஹாப்
ஜெஸிலாவின் கணவன் ஜப்பார் காலை ஏழு மணிக்கே அவன் கடமை பார்க்கும் வங்கிக்கு புறப்பட்டு விட்டான். அதிகாலை நான்கரை மணிக்கே படுக்கை விட்டு எழுந்து சுபஹ0த் தொழுகை முடித்து, பகல் சாப்பாட்டையும் சமைத்து பார்சலாகக் கட்டிக்கொடுக்க எடுத்துச் சென்ற ஜப்பார் மீண்டும் இரவு ஏழு மணிக்குத்
தான் வருவான். m
ஆனால் ஜெ ஸில ா வே ரா வீட்டில் உள்ள அத்தைைன வேலைகளையும் முடித்து தான் படிப்பிக்கும் பாடசாலைக்கும் சென்று தமது வயிற்றுக்காகவும், சமூகத்துக்காகவும் உழைத்து விட்டு வந்து மீண்டும் தன் குடும்பத்துக்காகவும் உழைப்பது அவள் இல்வாழ்க்கைக் குள் காலடி எடுத்து வைத்த கடந்த நான்கு வருடங்களாக பழக்கப்பட்டுவிட்ட ஒன்றாகிவிட்டது.
‘மாமி . சின்னத்துக்கு பாலுக்கு சுடுதண்ணி
ஃப்ளாஸ்க்கில் ஊத்தி இருக்கன். குடிக்கக் குடுக்கிறதுக்கு சுடுதண்ணி ஆறவைச்சி வடிச்சு பெரிய ஜொக்கில ஊத்தி
17.

Page 12
வெச்சிருக்கன். அதத்தான் குடிக்கிறதுக்கு குடுங்க. பச்சத் தண்ணியைக் குடுத்திராதைங்க..'வழக்கம் போல தனது கணவனின் தாயிடம் சொல்லிக்கொண்டு தன் மூன்று வயதுக் குழந்தைக்கும், ஆறு மாத கைக்குழந்தைக்கும் முத்தமாரி பொழிந்து, கைப்பையைத் தூக்கி தோளில் கொழுவிக்கொண்டு முக்காட்டை சரிசெய்து கொண்டு புறப்பட்டாள் ஜெஸிலா. Y.
'ஓ. என்ன. பிள்ளயஞக்கு பச்சத் தண்ணி குடுக்க வேணாம் எண்டு ஒடர் போட்டுட்டுப் போறா. மூத்த புள்ளயையும் நாங்க தானே வளத்தம் . மற்றதையும் நாங்கதானே வளர்க்கிறம். காக்கா விடியக் குள்ள பேங்குக்கு போனா ராவைக்கு வீட்ட வருவார். இவ ஏழரை மணிக்கு ஸ்கூலுக்கு போனா பின்னேரம் மூன்று மணிக்கு வருவா. அதுவரைக்கும் நாங்கதானே பிள்ளையள வளர்க்கிறம். பிள்ளையள ள அவ்வளவு அக்கறை இருந்தா வேலையை உட்டுட்டு வீட்டில இருக்கவேண்டியதுதானே.”
ஜெஸிலாவின் கணவனின் தங்கை சொன்ன இந்த வார்த்தைகள், சிவப்பு மை பேனாவை மறந்து வைத்து விட்டுச் சென்று திரும்ப எடுத்துச் செல்ல திரும்பி வந்த ஜெஸிலா காதுகளில் விழுந்தன
"ஆமா...நான் வேலையை விட்டால் உன் நானா வின் மானமே கப்பல் ஏறிடும். அவர்ட சம்பளத்தில அரை வாசி பஸ்சுக்குப் போக வரவும், அவர் சிகரெட் ஊதுறத் துக்கும் போயிடும். நான் பக்கத்தில் உள்ள ஸ்கூலுக்குப் போய் எடுக்கிற சம்பளமும் இல்லாவிட் டால் உன் நானா வாழ்க்கையை ஓட்டத்தெரியாமப் பிதுங்கி நிற்கத்தான் வேண்டியிருந்திருக்கும். இப்படி தனக்குள் நினைத்துக் கொண்டு பெருமூச்செறிந்தாள்.
18

ஜெஸிலாவின் மூத்த மகள் ஒன்றரை வயதாயிருந்
தபோது அவளுக்கு ஏற்பட்ட சோதனை அவளுக்கு மறக்க முடியாதது மட்டுமல்ல, ஒரு படிப்பினையுங்கூட. தொடர்ந்து பத்து நாட்களாக வாட்டிய காய்ச்சலில் மகள் குற்றுயிராய்க் கிடந்தாள். எடுத்த - மருந்துகள் எதற்குமே குணமாகவில்லை. அன்று பாடசாலை விட்டு வந்ததும் அவளது மகள் குற்றுயிராய்க் கிடந்ததைக் கண்டு தூக்கி தோளிலே போட்டுக்கொண்டு பெரிய ஆஸ் பத்திரிக்கு ஓடினாள். அதன் பலன் தான் அவளது மகள் ‘தைபோயிட்' எனும் நெருப்புக்காய்ச்சலால் பீடிக்கப் பட்டிருப்பதை கண்டுபிடித்து குணப்படுத்தியமையாகும். தான் வீட்டிலே முழு நேரமும்இருந்தால் பிள்ளைகளைக் கரிசனையாய்க் கவனிக்கலாந்தான், ஆனால் அதுமுடியாத காரியமாயிற்றே. அதனால்தானே கொதிக்க வைக்காத நீரைக்கொடுக்க வேண்டாம் என்று இப்படி திரும்பத் திரும்பச் சொல்லவேண்டியிருக்கின்றது. ஜெஸிலாவின் மனம் வேதனைப்பட்டது.
“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ என்ற முதுமொழியில் நம்பிக்கை கொண்ட ஜெஸிலா பாடசாலையில் படிப்பிப்பதில் கூடிய சிரத்தை எடுத்துக்கொண்டிருந்தாள்.
ஜெஸிலாவின் பிள்ளைகள் இரண்டும் வீட்டு வராந்தாவில் அவளின் மாமியின் கண்காணிப்பில் இருந்து கொண்டிருந்தன,
பக்கத்துவிட்டு மரீனாவும், அவளது கைக் குழந் தையோடு வந்து இருந்து கொண்டிருந்தாள்.
‘என்ன தாத்தா. என்னத்தயன் செய்யிற. மவன் புள்ளயளோட கஷ்டப்படுகதோ.” ஜெஸிலா வின் மாமியின் வயதொத்த, பக்கத்து வீட்டு வளிலத்தும் மாதான் இப்படி விசாரித்துக்கொண்டு வீட்டு வாசலில் நின்றாள்.
19

Page 13
'ஒ. வேற என்னத்த செய்யுற. மருமோளும் ஸ்கூலுக்குப் பெய்த்தா. பிள்ளயள நாமதானே பாத்துக் கோணும். வேற யாரன் இருக்கிய. வந்து உக்காருங்க தாத்தா...'
"இரிக்கத்துக்கெல்லாம் நேரமில்ல ." இப்படிக் கூறியவாறு வந்து உட்கார்ந்து கொண்டாள் வளிலத்துத் தாத்தா.
"தாத்தாக்கு இப்பிடியும் ஒரு விதியன். மருமவள் குடுத்துவைச் சவதான், நீங்கதான் கஷ்டப்படுறயள். மருமக்கள்தான் மாமிக்கு உதவி செய்யோணும் இது ஒங்களுக்கு அந்தப் பாக்கியத்தக் காணல்லையே. ஆரோ பெத்த புள்ளயள நீங்க பாத்துச் சாத்துச் செய்யோணு மெண்டு அல்லா ஒங்கட தலையிலே எழுதி ஈக்காக்கும்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த மரீனா, "மருமக ளோடு மாமியையும், மதினியையும் கொழுகிவிடப் பார்க்கிறாள். பொல்லாத சகுனி." என்று நினைத்தவாறு ஜெஸிலாவிடம் ஒரு எச்சரிக்கையாக இந்தச் சம்பவத் தைச் சொல்லி வைத்திருந்தாள்.
இன்று காலையில் நடந்த சம்பவத்தை நினைத்த ஜெஸிலாவுக்கு மரீனா சொன்ன அன்றைய இந்தச் சம்பவத்தோடுதான் மாமியும், மதினியும் இப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பது புரிந்துபோயிற்று.
ஜெஸிலாவின் கணவன் ஜப்பாரின் அண்ணன் தூரத்துக் கிராமமொன்றில் திருமணம் செய்து மனைவியின் வீட்டிலே வாழ்ந்து வருகின்றான். அன்று அவனது தாய் வீட்டுக்கு இரண்டொரு நாள் தங்கிச் செல்லும் நோக்கில் குடும்பத்தோடு வந்திருந்தான்,
ஜெஸிலாவுக்கும் அது பாடசாலையின் ஆண்டி றுதிப் பரீட்  ைச க ள் நடைபெற்றுக் கொண்டிருந்த
சமயம்.
20

அன்று அவளுக்கு பரீட்சை மேற்பார்வைக் கடமையும் கொடுக்கப்பட்டிருந்ததால் அவளால் லீவு போடமுடியாத நிலை. கணவன் ஜப்பாருக்குச் சாப்பாடும் சமைத்துக் கட்டிக்கொடுத்து அனுப்பிவிட்டு, அவளும் வேலைக்குப் போகத் தயாராகியபோதுதான் அவளின் கணவனின் அண்ணனின் குழந்தைகள் படுக்கை விட்டு எழுந்துகொண்டன.
“என்னத்தயன் புள்ள . இண் ட க் கி லீவு போடுங்களன். மச்சானும் குடும்பத்தே வந்து நிக்கிற." மாமிதான் கூறினாள்.
'ரெண்டு நாளும் ஸ்கூலுக்குப் போகல்லத்தானே மாமி. இண்டக்கி எனக்குத்தான் சோதினைப் பொறுப்புத் தந்திரிக்கி. கட்டாயம் போகோனும் மாமி."என்று கூறிய வாறு அவளது கணவனின் அண்ணனின் பிள்ளைகளுக்கு தேனீர் தயாரித்துக்கொடுத்தாள்.
அந்தத் தேனிரை ஜெஸிலாவின் மாமி தொட்டுப் பார்த்துவிட்டு "என்ன புள்ள இது. இப்பிடிச் சுட்டா அந்த பிஞ்சுப் புள்ள இந்த தேத்தண்ணிய எப்பிடிக் குடிக்கிற?. கொஞ்சம் ஆத்திக் குடுத்தா என்ன ஒங்கட கை நொந்தாபோவும்?. நீங்க எப்பவுமே அப்படித்தான். என்ர மகன் பிள்ளை குட்டிகளோட இஞ்ச வந்து நிக்கது உங்களுக்கு புறியம் இல்லத்தான். அதுதான் ஒருகிழமை லீவு போட்டுக்கிட்டு நிக்காம இப்படி ஸ் கூ லு க் கே ஒடுறயள்.” கண்களை உருட்டி வாயால் மாமி பொரிந்து தள்ளினாள்.
வந்த சலிப்பை அடக்கிக் கொண்டு, வந்திருந்த தன் கணவனின் அண்ணனிடமும் அவனின் மனைவியிட மும் ஜெஸிலா கூறிவிட்டு பாடசாலைக்கு கிளம்பினாள்.
அன்று இரவு படு க்  ைக க் கு ப் போகப் போனபோது ஜெஸிலா கணவனை உற்றுப் பார்த்தாள்.
21

Page 14
அவன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவர்களின் குழந்தைகள் இரண்டும் சுவர் ஒரமாக இருந்த கட்டிலில் ஒரு கரையில் உறங்கிக்கொண்டிருந்தன.
'ஏய். தூக்கமா? இங்கே. தூக்கமா..? சன்னமாகக் குரல் கொடுத்தாள் ஜெஸிலா
உடம்பை முறுக்கி, வளைத்து, கண் க ைள த் திறந்து அவளைப் பார்த்தான் ஜப்பார்.
அன்று நடந்த சம்பவம், அதற்கு முன்பு அவள் பக்கத்து வீட்டுச் சினேகிதி மரீனா மூலமாக அறிந்த செய்திகள் அனைத்தையும் கே ரா ர்  ைவ ய ர க த் தன் கணவனிடம் சொன்னாள்.
"நான் உங்கட உம்மாவையும், தங்கச்சியையும் குறைசொல்ல வரல்ல. இந்த சூழலில் நான் தொழிலுக்கு போறதையும், அதனால நம்மட புள்ள குட்டிகள உங்கட உம்மாவும் தங்கச்சியும் பார்த்துக்கிறதையும் நம்மட பக்கத்து வீட்டவங்களுக்குப் பார்க்கச் சகிக்காமத்தான் இப்பிடியெல்லாம் கூடாத புத்தி சொல்லிக் கொடுக்க றாங்க. கொஞ்சம் யோசிச்சா எல்லாருக்குமே புரியும் ஆனா. நான் அதை எப்படி உங்கட உம்மாவுக்கும் தங்கச்சிக்கும் சொல்லிக் குடுக்கலாம்?. அது மட்டுமில்ல நாம கலியாணம் முடிக்கின்ற போது உங்கட தங்கச்சிக்கு பன்னிரெண்டு வயசுதான். ஆனால் இப்ப அவளுக்கு பதினேழு பதினெட்டு வயசாகுது. அவளும் குமர்தானே. அவளுக்கும் நம்மளைப் பார்க்கிறபோது கொஞ்சம் பொறாமையும் வரத்தான் செய்யும்.
அதனாலதான் சொல்லுறன். நாம தற்காலிகமா ஒரு வீட்டைப் பக்கத்தில வாடகைக்கு எடுத்துக்கிட்டு இருப்பம். உங்கட தங்கச்சியை கலியாணம் முடிச்சுக் குடுத்திட்டு உங்கட உம்மாவோட சேர்ந்து வாழுவம், இல்லையெண்டால் நம்மட வாழ்க்கைய பொறாமைக் காரங்க சீரழிச்சிடுவாங்க."
22

9.
'நீ சொல்லுறது சரிதான் ஜெஸிலா , என்று அவன் சொல்லிக்கொண்டாலும, ஜெஸிலாவுக்கு நன்றாக தெரியும் எப்படியும் இவர் உம்மாவிடமும் கதைத்துத்தான் எதையும் முடிவு செய்வார் என்பது:
' ஜெஸிலா..!" பைத்தியம் பிடித்தவன் போல சப்தமிட்டுக் கூப்பிட்ட அவள் கணவன் ஜப்பார் அவளின் ஸ்கூல்"ஹேண்ட் பேக்"கைச் சோதனையிட்டு கொண்டிருந்தது தெரிந்தது
'இதெல்லாம் எ ன் ன டீ ? . இதையெல்லாம் பாவிக்க உனக்கென்ன பைத்தியமா பிடிச் சிருக்கு.?” ஜெஸிலாவின்  ைக ப்  ைப யி ல் அவள் வைத்திருந்த கருத்தடை மாத்திரை அட்டையைக் காண்பித்தவாறு கேட்டான் ஜப்பார்.
தலை கவிழ்ந்து மெளனமாக நின்றாள் ஜெஸிலா.
'என்னடி..? நான் கேக்கிறேன். நீ ஏதோ பத்தினி மாதிரி பேசாமலிருக்கிறாய்?" ஜப்பார் நா யா ய் க் குரைத்தான்.
பொறுமையை இழந்த ஜெஸிலோவின் வாய் வார்த்தைகளை வெளிப்படுத்தத் தொடங்கியது.
'கருத்தைடை மாத்திரை பாவித்தால் மட்டும் அவள் வேசை என்றா அர்த்தம். தொழில் செய்யுறதுக்கு மத்தியில இப்பவே ரெண்டு பிள்ளையள சுதந்திரமா வளர்க்க முடியாமலுக்கும், ஒரு வேலைகாரிய வெச்சுக் கிறதுக்கோ, தனிக்குடித்தனம் நடத்துறதுக்கோ ஒரு சுதந்தரம் இல்லாமலிருக்கும் போது, வருஷத்துக்கொரு பிள்ளையைப் பெத்து என்னையும் அந்த பிள்ளைகளை யும் கஷ்டப்படுத்தவா நி ைன க் கிறிங் க ? நீங்க “றி லிஜிய ஸ்’  ைட ப் பா” இருக்கலாம். ஆனா.
23

Page 15
அதுக்காக ரெண்டுபேரும் தொழில் பார்க்கிற நாம வருஷத்துக்கொரு பிள்ளையைப் பெற்றுக் கஷ்டப்பட வேண்டும் என்பது புத்திசாலித்தனமல்ல."
"என்னை எதிர்த்துப் பேசவுந்துவங்கிட்டியாடி. என்ர உம்மாவோடயும், தங்கச் சியோடயுமே உனக்கு வாழத் தெரியாமல் இருந்து.இப்ப என்னோடயும் வாழத் தெரியாமல் வாதாட வாறியாடி.."
வஸிலத்தும்மா போன்ற அக்கம்பக்கத்தவர்க ளின் அநியாயமான கோள்ச் சொல்களைக் கேட்ட ஜெஸிலாவின் மாமியும், மதினியும் தம் மனக்குறையை வெளிப்படுத்துமாப் போல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜெஸிலாவின் கணவனோடு சேர்ந்து வார்த்தைகளால் தாக்கித் தள்ளினர் ஜெஸிலாவை.
என்றுமில்லாதவாறு ஜெஸிலா தனது மக்களோடு ஒரு "ட்ரவலிங் பேக்" கையும் சிரமப்பட்டுத் தூக்கிக் கொண்டு வருவதைக் கண்ட அவளது வயதுசென்ற தாயும், தகப்பனும் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந் தனர்.
"ஏ. மகள், மச்சான் வரல்லையா?. ஏன் தனியா வந்தே.?" தாய் அன்புடன் விசாரித்தாள்.
ஜெஸிலாவின் கண்கள் கண்ணிரைச் சொரிந் தனவே தவிர அவளது வாயிலிருந்து வார்த்தைகளே வெளிவரவில்லை. மூக்குச் சிந்தி, விக்கி விக்கி அழுதாள்.
“ஏண்டி அழுவுறாய்? . விஷயத்த வாயத் தொறந்து சொல்லேன் . " தகப்பனின் அன்பினால் பிறந்த அதட்டல் இது.
'எனக்கு அவர்ட வீட்டில இருக்க ஏலாது வாப்பா. நான் 'ஜொப்" செய்யுறது அவர்ட அல்லசல்லில
24

உள்ள அதிகம் பேருக்குப் பொறாமை. ரெண்டு பேரும் உழைக்கிறம் எண்ட எரிச்சல் வேற. பக்கத்துப் பொம் புளயஸ் மாமிக்கும், மதினிக்கும் இல்லாத பொல்லாதது களையெல்லாம் சொ ல் லி க் குடு த் து என்னோட வெறுப்பை உண்டாக்கிட்டாங்க. நான் மா மி க் கிட் ட என்ர பிள்ளயள ஒப்படைச்சிட்டு வேலைக்குப் போக லாம். ஆனா. அவர்களுக்கு என்னால கட்டளை போட முடியாது. உதாரணத்துக்கு சுட்டு ஆறின தண்ணியத் தான் பிள்ளையஞக்குக் குடுங்க என்று அழுத்திக் கூற முடியாது. சுத்தமில்லாத தண்ணி குடிச்சதால என்ர மூத்த மகள் தைபோயிட் பிடிச்சிக் கஷ்டப்பட்டது வாப்பாவுக்கு ஞாபகந்தானே. எடுபிடி வேலைக்கு ஒரு பிள்ளய வெச்சிருந்தா இப்பிடியான விஷயங்களை சொல்லிக்குடுத்துச் செய்யலாம். இதனாலயம், மாமி, மதினி என் மேல கொண்ட திடீர் வெறுப்பைச் சமாளிக்க வுந்தான்தனியாக ஒரு இடம் எடுத்து கொஞ்ச காலத்துக்கு பிள்ளைகள் கொஞ்சம் பெருக்கும் வரைக்கும் இருப்பம் எண்டு அவருகிட்ட கேட்டேன். ஆனா. அவர் உம்மா டயும் தங்கச்சிரயும் சொல்லத்தான் கேட்கிறார். எனக்கு அங்க இருக்க ஏலாது.” மற்றவைகளை தாயிடமும் தகப்பனிடமும் வெளிப்படையாகச் சொல்லமுடியாமல் விக்கி விக்கி அழுதாள்.
"சரி, சரி எதுக்கும் கொஞ்ச நாள் இங்கேயே இருந்து ஸ்கூலுக்குப் போய்வா. அவர் வரட்டும், நானும் பெரிய வங் களை க் கூட்டி அவரோட கதச்சுப் பார்க்கிறன்.”
ஆனால் ஜப்பாரோ 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்றே நின்றான்.
தனது நியாயபூர்வமான நிபந்தனைகளை தன் கணவன் ஜப்பார் ஏற்றுக்கொண்டு தன்னை அழைத்துச் செல்ல வருவான் என எதிர்பார்த்திருந்த ஜெஸிலாவுக்கு, 'தலாக்' எனும் விவாகரத்து வழக்கிற்கான 'குவாஸி" நீதிமன்றத்தின் அழைப்பாணை தான் கிடைத்தது.
(()))
--
25

Page 16
C arxa=a. D இதற்காகத்தானா?
எம். ஏ. ரஹீமா
பெயரை சரியாக எழுதி இருக்கிறோமா? என்பதை மீண்டும் சரிபார்த்து கொள்கிறான் வளிர். 'ஈ' எழுத் தொன்று விடுபட்டுப்போயிருக்க மனம் படக்கென்று அடிபட்டுக் கொள்கிறது.
"ஒரு டீச்சருக்கு மாப்பிள்ளையாகப் போகும் எனக்கு சே தனக்குள்ளேயே நொந்து கொள்கிறான்.
சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே மீண்டும் மீண்டும்."அப்பாடா இப்போ சரி’
ஒரு வித சந்தோசமும்தான். பெருமிதத்தோடு கண்ணர்டி முன் வந்து நிற்கின்றான், கேர்ட்டும் சூட்டு மரக மாப்பிள்ளை கோலத்தில், அட நான் இவ்வளவு அழகா, சட்டென்று திரும்பிப் பார்த்து கண்ணாடிக்குள், தெரிந்த உருவத்துக்கு ஒரு முத்தமும் கொடுத்து, தனக்குள் ஒரு அசட்டுச் சிரிப்பும் சிரித்துக் கொண்டு கூடவே முர்ஸிதாவை நினைத்துக் கொள்கின்றான்.
26

"அன்ன உம்மா பொண்ணுரட்டுல இருந்து ஆள்கள் காருல வந்தெறங்குறாங்க." - சின் ன வ ள் ஹிதாயா குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே ஓடி வருகிறாள். •
'வாங்க . வாங்க."
தடபுடலான வரவேற்புக்களோடு வீடு அமர்க் களப்படுகிறது.
பழங்களும் வேறு இனிப்புகளும் குவிக்கப்பட்ட ஐந்தாறு மரவைகளை ஏந்திக்கொண்டு அவர்கள் உள்ளே நுழைகிறார்கள்.ஹஸன் சீதனப்பேழையுடன் கூடிய பண மரவையை விரிப்பில் வைத்துவிட்டு, சற்றே அப்பால் நின்றிருந்த மாப்பிள்ளையைப் பார்க்க, அசட்டுச் சிரிப் பொன்று வளிரிடம் பிறந்து நெளிகிறது. ஹஸனும் பதிலுக்கு சிரித்துகொண்டே மாப்பிள்ளையின் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்கிறான். மனம் ஏனோ முர்ஸிதா தாத்தாவை நினைத்துக் கொள்கிறது.
இஸ்லாமிய வரன்முறையை மிகவும் நேசித்து அதனோடொன்றிய வாழ்வு வாழ விரும்பிய தாத்தாவுக்கு தானும் சேர்ந்து மாறு செய்வதுபோல மனசு கஷ்டப் படுகிறது. முரண்பாடான சமூக நடைமுறைகளை வெல்ல முயற்சித்து முப்பத்தைந்து வருடங்களை கடத்திய தாத்தா இன்று மாறி விட்டாளா?. மனம் கேட்கிறது.
'இல்லை, இல்லை" என்று உடனே கத்த வேண்டும் போல ஓர் உணர்வு பிறந்து அடங்கிப் போகிறது. இனிமேலும் கட்டிக்காக்க முடியாது என்ற உம்மாவின் அதட்டல். அடுத்தடுத்துக் காத்து நிற்கும் தங்கைகளின் கேள்விக்குறி நிறைந்த முகங்கள் . எல்லாம்தானே தாத்தாவை மசிய வைத்தன. புறப்பட்டு
27

Page 17
வருவதற்கு சற்று முன்பு கூட அவள் அவளாகத்தானே இருந்தாள். அப்போது கூறிய அந்த வார்த்தைகள்.
'தம்பி அவங்க தரப்போற ம ஹ ர க் கூட அவங்கட சொந்தப் பொருளா என்னால கணக்கெடுக் கேலாது. ஏனென்டா எங்களுட்ட இருந்து ஆயிரக்கணக் குல எடுத்துட்டுத்தான் ஒரு சொற்பத்த அவங்க மஹரா தரப்போறாங்க. தேவை என்டு சீதனம் எடுக்குற இவங் களுக்கு நாங்க மஹரயே விட்டுக் கொடுக்கிறதுதான் மேல் எண்டு எனக்குப்படுது”
**எல்லாரும் ரெடி மகன். நீங்க அங்க என்ன செய்றிங்க?" உம்மாவின் கட்டளைக்கு கீழ்பட்டு, தாத்தாவுக்கு பதிலும் சொல்லத் தெரியாமல், சமாதனமும் சொல்லத் தெரியாமல், புறப்பட்ட போது கனமான பாறையொன்றின் அழுத்தத்துக்கு ஆட்பட்டுப்போன நெஞ்சும் நினைவுகளும் இன்னும் அவனுக்கு நொந்து கொண்டுதாணிருக்கின்றன.
“என்ன மச்சான் எனனமோ பெரிசா யோசிச்சுக் கொண்டிருக்கிறீங்க. உங்கட க ல் யாண ம் எப்போ என்டா?"
மாப்பிள்ளையின் தம்பியொருவரின் கேலிப் பேச்சில் அவன் தழலை உணர்ந்து சிரிக்கிறான். வட்டிலப் பமும், வாழைப்பழமும் இன்னும் எ ன் னெ ன் ன மோ வெல்லாம் நடமாட, வீடியோக்காரர்களின் விதவிதமான படப்பிடிப்புக்களோடு அவ்விடம் அமர்க்களப் பட்டுக் கொண்டிருக்கிறது.
"நேரமாவுது, காவின் எழுதுவமா"?
மாப்பிள்ளையின் வாப்பாவின் கேள்வியோடு
ரெஜிஸ்ட்ரார் காவின் புத்தகத்தை விரித்து விடுகிறார்.
28

மணமக்களின் விபரங்கள் வாய் மொழிமூலம் வரிசைப்பட்டுக் கொள்கின்றன.
'மஹர்.?”
'நூத்தியொரு ரூபா...”
ரெஜிஸ்ட்ராரின் கேள்விக்கு மாப்பிள்ளையின் வாப்பா மிடுக்கோடு பதில் கூறுகிறார். ஹஸனுக்குள் ஒரு கோபம் எழுந்து 'தம்’ பிடித்து நின்று கொள்கிறது.
நூறு வருடங்களுக்கு முன்பும் கொடுக்கப்பட்ட அந்தத் தொகை இன்னும் எத்தனை கெட்டித்தனமாகக் கட்டிக்காக்கப்படுகிறது பணத்தின் பெறுமதி நிமிடத்துக்கு நிமிடம் தேய்ந்து மாய்ந்து போய்க்கொண்டிருக்கும்போது சீதனத்தின் தொகை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டி ருக்கும்போது இது ம ட் டு ம் இன்னும் . இன்னும் . அப்படியே 'சே'
"தாத்தாவை மணக்கோலத்தில் காண வேண்டும்"
உம்மாவின் ஏக்கம் நினைவுக்கு வர ஹஸன் மிகவும் கஷ்டப்பட்டு நி த ர ன த்  ைத வரவழைத்துக் கொள்கிறான்.
"சீதனம் எழுதுறதா?”
“எழுதுறதாவா? இது என்ன கேள்வி.
அவன் வியப்போடு ரெஜிஸ்ட்ராரைப் பார்க்கிறான்.
'சிலபேர் எழுதுகிறதில்ல. நீங்க எப்டியோ, உங்க சம்பந்தியோடு கதைச் சிட்டு சொல்லுங்க."
ரெஜிஸ்ட்ரார் ந  ைட மு  ைற யை அவனுக்கு விளக்குகிறார்.
29

Page 18
*சீதனப்பணம் பத்தி காவின் கொப்பில எழுதுற தும் எங்களுக்கு விருப்பமில்லை'
மாப்பிள்ளையின் வாப்பா அடித்துச் சொல்ல, சீதனப் பேழையைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் சாச்சாவை அவன் ஏறிட்டுப் பார்க்கிறான்.
“தேதி"குறித்து, ஊரழைத்து விருந்தும் வைத்து, நடு சபையில் நாலு பேரறிய கைநீட்டி எடுக்கிற போது குறையாத கெளரவம், லாச்சிக்குள் போட்டுப் பூட்டிக் காக்கப்படப்போகும் காவின் தாளில் எழுதும்போது மட்டும் குறைந்து விடுமா? ஆச்சரியமாய் இருக்கிறது அவனுக்கு.
இனிமேலும் அவனுடன் ஒட்டி நிற்கப் பயந்து போன பொறுமை மெல்ல நழுவிக்கொள்கிறது.
'ஏன் எடுக்கப்போறத எழுதமாட்டென்றீங்க?" அமைதியாகவே கேட்கிறான் அவன்.
'அதுதான் சம்பந்தி, கெளரவமில்ல என்டு சொல்லுறமே. நான் மாப்புள்ளய பெத்த வாப்பா, நாங்க சொல்றத நீங்க கேக்கத்தான் வேணும்.'
'நீங்க என்ன சொல்றீங்க..?
ஹஸனின் கேள்வியை எதிர்பார்த்திராத மாப் பிள்ளை திருதிருவென்றுவிழித்துக்கொண்டேசொல்கிறார்.
'வாப்பா வாப்பா .. சொல்ற மாதிரிதான்."
சுயசிந்தனையே இல்லாமல் போய்விட்டதோ? ஹஸனுக்குள் எரிச்சல் பற்றிக்கொண்டு வருகிறது.
மூத்தவர்களின் முரண்பாடான ஆலோசனைகள்,
அறிவுரைகளில் அந்தச் சபை அப்போது குழம்பித் தவிக்கிறது.
30

"நாளெக்கி பின்னக்கி ஏடாகூடமா எது சரி நடந்து, காவின் உடுபட்டுப்போனா இந்த காசிக்கி என்ன கதி.”
யாரோ ஒருவர் இன்னொருவரிடம் ரகசியமாகக் கூறியது அறைந்தாற்போல் காதுகளில் ஒலிக்கிறது.
இதற்காக, இதற்காகத்தானா?.? ஹஸன் தனக்குள் சிதறிப் போகிறான்.
“தாத்தா இந்த நயவஞ்சகர்களுக்கு உன்னை நான் தாரை வார்க்க மாட்டேன்." உறுதியான உள்ளத் தோடும் கனல் தெறிக்கும் பார்வையோடும் கதிரையை விட்டு விருட்டென்று எழுந்து நிற்கிறான் அவன். சுற்றி இருப்போர்கள் திகைத் துப்போய் பார்க்க, யாரையும் லட்சியம் செய்யாமல் சாச்சா கையில் வைத்திருந்த சீதனப்பேழையை தன் கைக்கு எடுத்துக்கொண்டு பார்வையாலேயே அவரை எழுப்பி விடுகிறான். தான் கொண்டு வந்து வைத்த மரவையைத் தூக்கிக்கொண்டு நிமிர்ந்த தலையோடு வாசலை நோக்சி விறு விறு என்று நடக்கின்றான். உம்மாவிடமிருந்து கேட்கப்போகும் வசைமொழிகளைப் பற்றி அச்சமேயில்லாமல் தாத்தா விடமிருந்து ஒரு வரவேற்புக் கீதத்தைக் கேட்கமுடியும் என்ற நம்பிக்கையோடு அவன் நடக்கின்றான்.

Page 19
ܓ====ܡܛܠܣ̈ܒܫܶܡܝ
O () O J5 I 25 தாளங்கள -ஃபாத்திமா ரஜாப்N==="-
காலையிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. சிலு சிலுவென வீசிய இளங்காற்று இன்னுங் கொஞ்சம் இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கேன் என்றது. ஆனால் கடிகார முட்களோ "நாங்கள் எந்தக் காற்று மழைக்கும் ஒயவேமாட்டோம்" என்று கூறுவது போல் ஏழு மணியைச் சமீபித்துக் கொண்டிருந்தன. படுக்கையை விட்டு எழவே சோம்பலாக இருந்தது. குளிருக்கு இதமாக இன்னும் சற்று தூங்கிவிட்டு காரியால யத்திற்கு அரைநாள் மட்டமடிப்போமா என்று யோசித்த போது அன்றைய தினம் செய்து முடிக்க வேண்டிய அவசர வேலைகள் கண் முன் தோன்றிப் பயமுறுத்த, எரிச் சலுடன் எழுந்து கொண்டேன்.
ஐந்து மணிக்கு எழுந்தாலே வீட்டு வேலை முடிந்து காரியாலயம் செல்லும் போது ஒன்பது மணியாகி விடும். இன்று ஏற்கனவே லேட். என்னதான் செய்வது?
32

சமையல் செய்ய நேரம் போதாது. வெளியில் சாப்பிட்டு கொள்வோம் என்றுஎன்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். சமீப காலமாக இது எனக்கொரு செள கரியமாகப் போய்விட்டது. கணவர் தொழிற்கல்வி சம் பந்தமாக ஆறு மாத வெளி நாட்டுப் பிரயாணத்தை மேற் கொண்டிருக்கிறார். மகன்மார் இருவரும் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கின்றனர். வீட்டில் நானும், அம்மாவும் மட்டுமே. அதனால் சமையல் பற்றிய கவலை இல்லாமல் ஹாய்யாகக் குளிக்கச் சென்றேன். அப்படி இப்படி என்று தயாராகி வெளியில் வந்தபோது வழமையாக என்னை அழைத்துச் செல்லவரும் வாகனத்தைக் காணவில்லை. காத்திருந்து பார்த்துச் சலித்துவிட்டது மட்டுமல்ல நேரமும் ஒடிக்கொண் டிருந்தது. அதனால் பஸ்ஸிலாவது போய் விடுவோம் என பஸ்தரிப்பிடம் நோக்கிச் சென்றேன்.
காலை நேரத்தில் பஸ்ஸில் அலுவலகம் செல்வது என்பதே ஒரு தனிக்கலை. ஆண்கள் எப்படியோ.. பெண்கள் உடை கசங்காமல்.தலை கலையாமல். கைப்பை, குடை தவறிவிடாமல் ஏறி, பயந்து இறங்கி O 8 O O O 4 AQ O KU {O O 9 அப்பப்பா நாட்டியக் கலையில் தேறியவர்கள் கூட நிலை தடுமாறிவிடுவார்கள். வழக்கமாய் நான் வாக னத்தில் செல்லும்போது காணும் காட்சிகள் இவை. காலநேரத்துக்குள் கடமைக்குச் செல்ல வேண்டுமே என்ற தவிப்பில் கிடைத்த பஸ்ஸை நழுவ விட மனமில் லாமல் தள்ளிப் பிடித்து ஏறி ஒற்றைக் காலையாவது ஊன்றிக் கொள்ளத் தவிக்கும் பெண் உத்தியோகத் தர்கள் ஒருபுறம், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆபத் பாந்தவர்களைப் போன்ற போர்வைக்குள் ஒளிந்தபடி தமது கைகளைக் கதவுகளுக்கு குறுக்காக வைத்து காவல் காப்பது போன்ற அற்ப சுகத்திற்கு அலையும் சில ஆண்கள் ஒரு புறம்
33.

Page 20
தைரியமில்லாத பெண்கள் பஸ்சுக்கு அருகில் ஓடிவருவதும், பின்னர் நெரிசலைக்கண்டு பயத்தோடு பின்வாங்குவதும். பார்த்துப் பார்த்தே சலித்துவிட்ட காட்சிகள். இவற்றை இன்று நானும் அனுபவிக்க வேண்டுமே என்று நினைத்த போது சற்று உதறலாகத் தான் இருந்தது. ஆயினும் காரியாலய நேரத்தைவிட சற்று தாமதமாகவே நான் வந்தபடியாலும், சிணுசிணுத்த மழை காரணமாகவும் வந்த பஸ்ஸில் அவ்வளவாகக் கூட்டம் இருக்கவில்லை. ஒரு வழியாக முண்டியடித்து ஏறிக்கொண்டது மட்டுமன்றி ஒரு இருக்கையும் கிடைத்துவிட்டது. (இன்று கட்டாயம் ஒரு லாட்டரி சீட்டு வாங்க வேண்டும்) உஸ் அப்பாடா. அந்தக் குளி ரிலும் எனக்கு வியர்த்தது. கொஞ்ச நேரம் ஆசுவாசப் படுத்திக்கொண்டு கையில் வைத்திருந்த புத்தகத்தில் ஆழ்ந்தேன்.
யார் யாரோ பஸ்ஸில் ஏறினார்கள், இறங்கி னார்கள். ஒரு ஐந்து நிமிட நேரம் போயிருக்கும். எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த இருவ ரது சம்பாஷணையில் நான் கடமை புரியும் நிறுவனத் தின் பெயர் அடிபடவே என்னையறியாமலே என் காதுகள் கூர்மையாயின.
*’ என்னடா சுஹைட் ஒரே அந்த ஆபீஸ் பக்கம்
சுற்றுகிறாய். ஏதும் பிரச்சினையா ?”
* பிரச்சினை ஒன்றும் இல்லையடா, ஐயா போ னால் மயங்காத ஆளும் இருக்கிறார்களா
6T66T60T 2' இவர்கள் எதைப்பற்றிக் கதைக்கிறார்கள், யாரை பற்றி கதைக்கிறார்கள் என்பது புரியவில்லை. தொடர்ந்து விஷயத்தைக் கேட்காவிட்டால் மண்டையே வெடித்து விடும் போல் இருந்தது. அசெளகர்யமாய் இருந்தாலும்
34

பரவாயில்லை என்று இன்னும் கொஞ்சம் முன்னாலே நகர்ந்து அமர்ந்தேன்.
"சும்மா பொய் பேசாதடா, என்னவாவது கடன் விண்ணப்பிக்கப் போயிருப்பாய்; இதற்கு ஏன் இவ்வளவு தயங்குகிறாய்”
எங்கள் நிறுவனம்பற்றி இந்த இடத்தில் உங்க ளுக்குக் கொஞ்சம் சொல்லி வைக்கவேண்டும். அது தனியார் முதலீட்டினால் இயங்கும் ஈட்டு நிறுவனமாகும். மிகப் பரந்த அளவில் பங்குதாரர்களைக் கொண்டது. வட்டிக்கு கடன் கொடுத்தல், சாமான்களை வாங்கி விற்று தவணை முறையில் வதுவித்தல், காணிகள் அடவு பிடித்தல் என பலவித பணம் சம்பந்தப்பட்ட வேலைகள் இங்கு நடைபெறுகின்றன.
' இல்லையடா எடுத்த கடனுக்குத் தவணை சொல்லத்தான் போனேன். போன மாதம் ஒரு கடிதம் வந்தது. இரண்டு கிழமையில் காசை கட்டாவிட்டால் வழக்குப் போடப்போவதாக. அலறியடித்துக்கொண்டு போய் விசாரித்துப் பார்த்தேன். என்ட பைல் வேலை செய்ற பெண்ட பெயர் மிஸ் சலீம். சும்மா ஒரு சிரிப் புத்தான் சிரித்தேன். ஆளே அவுட். இப்ப பார்க்கணுமே அவட குழைவையும் நெளிவை யும்.எப்படியாவது இது சம்பந்தமாக மானேஜ ருடன் கதைத்து இன்னும் கொஞ்சம் தவணை எடுத்துத்தாறேன் என்று சொல்லியிருக்கிறாள் என்றால் பார்த்துக் கொள்ளேன்.
அவர்களது பேச்சு தொடர்ந்தது. ஆயின் எனது கவனம் சட்டென்று தடைப்பட்டது. மிஸ் சலீம் என்று குறிப்பிட்டது ராபியாவை. எனக்கு ஆச்சர்யமாக இருந்
35

Page 21
தது. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் அடக்கமான பெண்ணாயிற்றே ! அதுவும் எனக்கு கீழ் வேலைபார்க்கும் லிகிதர்களில் ஒருத்தியாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் அவளை எனக்குத் தெரியும். எதிர்த்துப் பேசியதைக்கூட நான் கேட்டதில்லை. நல்ல அழகியுங்கூட. அப்படிப்பட்டவளைப்பற்றி இந்த மனிதன் என்ன அப்படி கூறுகிறான்? என்னால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ராபியாவின் குடும்பநிலை என் கண்முன் தோன்றியது.
ராபியாவின் குடும்பத்தை எனக்கு வெகு நாட்க ளாகவே தெரியும். எங்கள் வீட்டுக்கு பக்கத்து தெரு வில் மிக நல்ல நிலையில் வாழ்ந்த குடும்பம் அவர்க ளுடையது. அவளின் தந்தையின் நல்ல மனதையும் அப்பாவித்தனமாக அடுத்தவர்மீது நம்பிக்கை வைக்கும் தன்மையை தமக்குச் சாதகமாய் பயன்படுத்திக் கொண்ட அவளது உறவினர்கள், கூடியிருந்தே குழிபறித் தனர். கடைசியில் சொத்து பூராவையும் சூறையாடிக் கொண்டு அவர்களை நடுத்தெருவில் தள்ளிவிட்டனர்.
உள்ளது ஒரே பெண் என்று பொத்திப்பொத்தி வளர்த்த செல்வமகளை முட்டாள்தனத்தால் நடுவீதிக்கே கொண்டு வந்துவிட்டேனே என்ற துயரம் ராபியாவின் தந்தையை அரிக்க மிகச் சீக்கிரத்திலேயே அவரும் அவர் களை அநாதைகளாக்கிவிட்டு கண்ணை மூடிவிட்டார்.
துணையின்றி தவித்த ராபியாவின் தாயாரைக் காணச் சகியாத எனது தந்தை ராபியாவை அருகிலுள்ள கான்வெண்டில் இலவசமாகக் கல்வி கற்க ஏற்பாடு செய் ததோடு அவளது தாயாரை எங்கள் வீட்டிலேயே அம்மா வுக்குத் துணையாக வைத்துக்கொண்டார். அதற்குப் பின்னால் அவளும் கஷ்டப்பட்டுப் படித்துசித்தியடைந்து இங்கே வேலை பார்க்க வந்த பிறகுதான் தனது தாயை தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டாள் இருபத்தி ஐந்து
36

வயதாகியும் யாரையும் ஏறெடுத்துப் பாராதது மட்டுமல்ல "என் தாய் என்னை குருடனோ முடவனோ யாருக்கு மனப்பூர்வமாகக் கல்யாணம் செய்துவைக்கின்றார்களோ அவர்தான் என் கணவர் " என்று வெளிப்படையாகக் கூறுபவள். அப்படிப்பட்ட ராபியாவை இவன் இப்படிக் கூறுகிறான். எனக்கு இருப்பே கொள்ளவில்லை. எப் போது இதைப்போய் அவளிடம் கேட்போம் என்று இருந்தது. அந்த ஆளின் பெயரை மட்டும் மனதில் நன்றாக இருத்திக்கொண்டேன்.
ஆபீஸ் போனபிறகு அங்கிருந்த அவசர வேலை கள் இந்தச் சம்பவத்தைக் கொஞ்சம் மறக்கடித்தாலும் பகல்உணவு இடைவேளையில் திரும்பவும் ஞாபகத்திற்கு வரவே பியூனை அனுப்பி ராபியாவை வரவழைத்தேன். அவசரப்பட்டு கூப்பிட்டுவிட்டேனே தவிர எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஏனென் றால் ராபியா ஒரு சின்னவிஷயத்தையும் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளும் சுபாவம் கொண்டவள். எனவே கச்சிதமாகத்தான் இவளைக் கையாள வேண்டும் என்று முடிவு செய்தேன்.
* உட்காருங்க ராபியா. உம்மோட கொஞ்சம்
கதைக்க வேண்டும்"
* சொல்லுங்க மேடம் "
* உமக்கு கீழே உள்ள கடன் பைல்கள்ல சுஹைட் என்ற பெயர் வரக்கூடிய ஏதேனும் பைலில் சமீபகாலத்தில் கடன் கட்டப்படாமல் இருக்கின்றதா ? ? ராபியா கொஞ்ச நேரம் யோசித்தாள். சுஹைட் என்ற பெயரை இரண்டொருமுறை உச்சரித்துப் பார்த்து
சட்டென்று பிரகாசமானாள்.
37

Page 22
"ஆமா மேடம் இன்றைக்கு காலைகூட அந்த ஆள் வந்து காசு கட்ட தவணை கேட்டார். நான் இதைப்பற்றி மானேஜரிடம் கதைத்தேன் ஆ அவர் ஒரு மாதத்துக்குமேலே தவணை தர முடியாது என்று சொல்லச்சொன்னார். நானும் அதையே அந்த ஆள்கிட்ட சொன்னேன்.
ஆள் அதற்கு என்ன சொன்னார் ? ஒரு زgظ ہلاقے ‘‘
மாதத்தில் கடனை கட்டுவாராமா?"
* அதுதான் மேடம் எனக்குப் பெரிய தலையிடி, அந்தாளுக்கு ஏதோ பணக்கஷ்டமாம். ஆறு மாதம் தவணை கேட்டுத் தரட்டாம். தான் நாளைக்கு வாறன் என்று போயிருக்கிறார்.”
இதற்கு மேல் என்ன கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஏதோ கேட்க வேண்டுமேயென்று கேட்டேன்.
" ஆறுமாதம் தவணை கிடைக்குமா? எங்கட கம்பெனிச் சட்டபடி மூன்று மாதம்தானே ஆகக்கூடிய காலம் ?"
"ஆமா மேடம் அது எனக்குத்தெரியும். அதனால தான் இன்றைக்கும் மானேஜரோடு கொஞ்சம் கதைச்சுப்பார்த்து குறைஞ்சது மூன்று மாத மாவது எடுத்துக் குடுப்பம் என்றுதான் பேசாமல் விட்டேன். அந்த மனிதரைப் பார்த் தால் ரொம்ப பாவமாயிருக்கிறது மேடம்'
எனக்கு சிரிப்பு வந்தது. யாருக்கு யார் பாவம்! ஒரு அநுதாபபூர்வமான உதவி எந்த அளவுக்குத் திசை திருப்பப்பட்டது எனநினைக்கும்போது ராபியாவின் முட்
38

டாள்த்தனத்தின் மீது எனக்கு கோபங்கூட வந்தது. அவளே திரும்பவும் கேட்டாள்.
" ஏன் மேடம் ஒரு நாளும் இல்லாமல் இந்த பைலை மட்டும் விசேஷமாக விசாரிக்கிறீர்கள் ஏதும் பிரச்சினையா? '
* பிரச்சினை பைலில் இல்லை ராபியா, உன்னில்
தான்"
*" என்னிலையா? ' ராபியா முகமே கருத்து
விட்டது
"பயப்படாதீர் உம்மைப்பற்றி நல்லாவே தெரி யும். அதனால்தான் கூப்பிட்டு விசாரித்தேன்’
என்று கூறி அன்று காலை பஸ்ஸில் நடந்த சம்பவத்தைக் கூறி முடித்தேன். ராபியாவின் முகத்தில் ஈயாடவில்லை. அவள் மேல் பிழையில்லைதான். இருந் தாலும் இனிமேலாவது கொஞ்சம் ஜாக்கிரதையாக உணர்வுடன் இருக்கட்டும் என்பதற்காகவே இந்த சம்ப வத்தை கூறினேன். பின்னர்,ஒருவாறு சமாதானப்படுத்தி அவளை அனுப்பிவிட்டேன். அத்தோடு சரி அதன்பின் இதனை நான் முற்றாகவே மறந்துவிட்டேன்.
வழமையான இரண்டு வேலை நாட்கள் ஓடி மறைய மூன்றாவது நாள் மதிய உணவு வேளை என் அறைக்கு வெளியே ஏதோ கசாமுசாஎன சப்தம் கேட்க ஏதும் பிரச்சினையோ என எட்டிப் பார்த்தால் ராபியா ஒரு பக்கம் அழுது கொண்டிருந்தாள். மற்ற சக அலுவலர்கள் அவளிடம் ஏதேதோ கேட்பதும் சமாதானப்படுத்துவது மாக இருந்தன்ர். இந்த நிலையில் அவளைக் கூப்பிட்டு ஏதும் விசாரிக்க முடியாதபடியால் கொஞ்ச நேரம் கழித்து அவளை வரவழைத்தேன். அழுது அழுது அவள் முகமே வீங்கிப் போயிருந்தது.
39

Page 23
" என்ன நடந்தது ராபியா, ஏன் அழுகிறீர்"
* மேடம் நீங்க அன்றைக்குச் சொன்ன அந்த ஆள் இன்றைக்கு காலைல வந்தார். எனக்கு அவன்ட முகத்தைப் பார்த்துக் கதைக்கவே முடியல மேடம்.” முடிக்காமல் விசும் பத் தொடங்கிளாள்.
* சரி சரி குழந்தைப் பிள்ளை மாதிரி அழாமல் விஷயத்தைச் சொல்லும் நீர் அவனை ஏதும் ரைசிப் போட்டீரா ? '
" இல்லை மேடம் அன்றைக்கு நீங்க சொன்ன பிறகு நான் மனேஜரிடம் மூன்றுமாதத்தவணை கேட்க நினைத்ததே எனக்கு மறந்து போய் விட்டது. மேலும் எனக்கே அந்தாள் மீது இனம்புரியாத வெறுப்பு ஏட்பட்டுவிட்டபடி யால் நான் இதைப்பற்றி ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று காலையில் அவன் வந்தபோது ஒரு மாதத்திற்கு மேல் தவணை தரமுடியாது என்று மனேஜர் சொனனதாகச் சொன்னேன்.”
* அதற்கு அவன் என்ன சொன்னான் ?' 'நீங்க தானே பெரிசா இன்னும் தவணை கேட்டுத் தாறன் என்று சொன் னிர்கள் ?" என்று
என்னையே திரும்பிக் கேள்வி கேட்கத் தொடங்கினான். எனக்கு நல்ல ஆத்திரம் வந்தது. நீர் என்னநினைத்துக்கொண்டு இங்கே வந்து இப்படி சத்தம் போடுகிறீர்? அதற்கெல் லாம்வேறுஆளைப்பாரும் அல்லது மனேஜரை கண்டு தவணை கேளும் என்று முகத்திலடித் தாற்போல் சொன்னேன், அதற்கு அந்த ஆள் ஜி. எம்மிடம் போய் நான் அவனை தாறு
40

மாறாய் பேசியதாகப் பொய்புகார் சொல்லி.' திரும்பவும் ஒரு மெல்லிய விசும்பல் அவள் வாயிலிருந்தும் புறப்பட்டது.
* அதற்கு ஜி. எம். என்ன சொன்னார் ?”
*ஜி. எம். இதைப்பற்றி என்னிடம் என்ன ஏது என்றுகூட சரியாக விசாரிக்கவில்லை மேடம். வாடிக்கையாளரை அவமதித்ததாக என்னை ஏசி சஸ்பெண்ட் பண்ணிவிட்டார்."
நான் மெல்ல அவளை ஆசுவாசப்படுத்தினேன். இதைப்பற்றி நானே ஜி. எம்மிடம் கதைப்பதாக வாக் களித்தேன். நான் அன்று கூறிய விஷயம் நீறுபூத்த நெருப்பாக அவள் மனதில் இருந்தது இன்று அவனைக் கண்டவுடன் நெருப்பாகக் கொட்டிவிட்டது. அதன் விளைவே இந்த சஸ்பெண்ட் உத்தரவு. நான் ஊதிய நெருப்பு அந்தப் பெண்ணை எரிப்பது பாவம், அதனை அணைப்பது தான் நல்லது என்ற எண்ணத்தில் ஜி. எம் மைத் தேடிச் சென்றேன்.
" உள்ளே வரலாமா சார் ”
" யேஸ் கம் இன். யார் மிசஸ் ஹனிபாவா நானும் உங்களைக் கூப்பிடத்தான் நினைத் தேன். உங்கட கீழே வேலை பாாக்கிற அந்த ராபியா."
நான் சட்டென்று இடைநிறுத்தி sig5 னைப்பற்றித்தான் பேச வந்ததாகக் கூறினேன் மேற்கொண்டு நான் என்ன சொல்லப் போகிறேன் என்பதைக் கேட்க அவர் தயாரானார், மூன்று நாட் களுக்கு முன்னால் நடந்த சம்பவத்தை ஒன்று விடாமல் ஒப்பித்தேன்.
41

Page 24
"நீங்க சொல்றதைப் பார்த்தால் அந்தப் பெண் ராபியாவின் கோபத்தில் ஒரு நியாயம் இருக் கிறதுதான் இருந்தாலும்.
என்ன இருந்தாலும் என்று நான் அவரைப் பார்க்க, தொடர்ந்தார்.
* மிசிஸ் ஹனிபா உங்களுக்குத் தெரியும் தானே எங்கட நிறுவனம் தனியார் நிறுவனம், இதில் எங்கட வாடிக்கையாளர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்பதே எங்கட முக்கிய நோக்கம்"
'உண்மைதான் சார். இருந்தாலும்.
' கொஞ்சம் பொறுங்க மிசிஸ் ஹனிபா. நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப்பேசுங்க.இங்கே எங்கட வாடிக்கையாளர் மூலம் வரும் லாபத் தில்தான் இந்த நிறுவனமே நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் எங்களுக்கு முக்கியம். அப்படி இருக்கும்போது நாங்கள் தான் கொஞ்சம் சமாதானமாய்ப் பேசி அவர் களை திருப்தி செய்யவேண்டும். அவர்களை நல்லவிதமாய் நடத்தி எங்கள் நிறுவன லாபத் திற்கு வழிதேட வேண்டுமே தவிர இப்படி திடீரென்று எரிச்சல்பட்டு நிலைமையை மோச மாக்கக்கூடாது. இது மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்று தான் நான் சஸ்பெண்ட் ஒடர் அனுப்பினேன்."
எனக்குச் சுறுசுறுவென்று கோபம் ஏறியது. அவனைத் திருப்தி செய்ய வேண்டுமாம் . பஸ்ஸில் நடந்த உரையாடலை இவ்வளவு விரிவாகச் சொன்ன பிறகும் ஜீ. எம் கூறுகிறார். ஏன் சொல்லமாட்டார்?
42

இந்த இடத்தில் இருப்பது அவரது மனைவியாகவோ அக்கா தங்கையாகவோ மகளாகவோ இருந்தால் இதே வார்த்தை வருமா ? நான் மெளனமாக மனதிற்குள் கூறு வதை ஜி. எம் தவறாய்ப் புரிந்து கொண்டாரோ என்னவோ. x
"பார்த்தீர்களா மிசிஸ் ஹனிபா நான் சொல்வது சரியென்று இப்ப உங்களுக்கும் தோன்றுகிறதுதானே. நாங்கள் இவர்களைப் பயிற்றுவிக்கும்போதே இதெல்லாம் சொல்லித் தானே வேலைக்கே சேர்க்கிறோம். இப்ப இப்படி பேசுவது சரியா ?’
ஏதோ அவர் சொல்வதுதான் சரியென்றும் அதை நானும் ஏற்றுக் கொண்டேன் என்ற ரீதியில் அவர் பேச்சு செல்லவே எனக்கு இன்னும் எரிச்சலாய் இருந்தது.
* எது நல்லது சார்? வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாம் கிள்ளுக்கீரைகள்.சிரித்த வுடன் யார் பின்னாலும் போகிறவர்கள் என்று ஒருவன் செர்ன்னால் தன்மானமுள்ள எந்தப் பெண்ணாவது அவனுக்கு உதவிசெய்வாளா? சேச்சே . அவன் பேச்சைக் கேட்டு எனக்கே இரத்தம் கொதிக்கிறது. அவளுக்கு எப்படியிருக்கும். அதிலும் ஒரு கன்னிப் பெண் அவள். இதேபோல் அவன் வேறு என்னவெல்லாம் சொல்வானோ 9H] யாருக்குத் தெரியும் ?" .
என்னை அறியாமலே மேசையில் ஓங்கித்தட்டி விட்டேன் போலிருக்கிறது. ஜி. எம் என்னை விநோத
மாய் பார்த்தார்.

Page 25
* உத்தியோகம் என்று வந்துவிட்டால் இதை யெல்லாம் பார்க்கக்கூடாது மிசிஸ் ஹனிபா."
* உத்தியோகம் என்று வருவது உழைக்கிறதற் காக சார். மானம் போகும்படி நான்கு பேரிடம் கதை கேட்க அல்ல. வாடிக்கை யாளரை திருப்தி செய்ய வேண்டும் என்பது எங்கள் நிறுவன கொள்கை தான். அதனை நான் மறுக்கவில்லை. அதற்காக அந்தத் திருப்திபடுத்தல் எனற வார்த்தையை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும் என்று நீங்கள் எதிர்பார்க்கவும் முடியாது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கவும் கூடாது. இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா சார் ?" ஜி. எம்மின் முகத்தில் இப்போது கோப ரேகைகள் படர ஆரம்பித்தன. நாங்கள் எப்படிப் போனால் அவருக்கு என்ன ? அவ ருக்கு அவர் பதவிதான் முக்கியம்; நிறுவனம் தான் முக்கியம்.
'மிசிஸ் ஹனிபா. முதலில் யாரிடம் பேசுகிறீர்கள் என்பதைக் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொண்டு கதையுங்கள். ஜி. எம். என்ற வகையில் உங்களையும் வேலையைவிட்டே விலக்க என்னால் முடியும் "
எனக்கு எங்கிருந்து தான் அல்வளவு ஆவேசம் வந்ததோ தெரியவில்லை.
* ஆமா சார், நாங்கள் மத்தளங்கள் போல் இரண்டு பக் க மும் அடிவாங்குகிறோம். அதனை உங்கள் நிறுவன நன்மைக்காகத் தாளம் என்று ரசிக்கிறீர்கள். ஆனால் ஒன்று
44

மட்டும் நினைவில் வைத்திருங்கள். இவை எல்லாம் தப்புத்தாளங்கள் என்று நீங்கள் உணரும் காலம் விரைவில் வரும். எந்த நாளும் நாங்கள் அடிவாங்க முடியாது.திருப்பி அடிக்காவிட்டாலும் எதிர்த்தாவது நிற்க வேண்டும் என்கிற உண்மை எங்களுக்குப் புரிந்து விட்டது. வர்றேன் சார் "
சரேலென்று எழுந்து வெளியில் வந்து விட்டேன்.அன்று பிற்பகலிலேயே எனக்கும் ஒரு. சஸ்பெண்ட் ஓடர் வந்துவிட்டது.
45

Page 26
حس۔سیح سےحصہ
பெண் மனம்
-இர்ஃபானா ஜப்பார்
'~=ఈవస్రాత్రా—==*
மாலை மயங்கிக் கொண்டிருக்கும் இனிய வேளை அது சுகந்த மாலைப் பொழுதின் ரம்மியமான ஆக்ரவழிப்பில் தன்னையே மெய்மறந்திருந்தாள் ஸ்ருதி. தம் கூடு நே:க்கி களிப்போடு கலைந்து செல்லும் புள்ளி னங்களின் அழகிய கோலம் அவள் மனதை நிறைத்தது. சந்தோஷக் கனவுகளுடன், தொழிலகங்களை விட்டும் கலைந்து செல்லும் ஜனவெள்ளம் ! துள்ளித் திரியும் புள்ளி மான்களாய் இளம் சிறார்கள். ஸ்ருதியின் ஹிருதயம் ஆனந்த பைரவியில் அமிழ்ந்து கொண்டது.
* ஸ்ருதி கண்ணம்மா, என்ன யோசனை ?" அன்பொழுகக் கேட்கும் அப்பாவின் குரலால், கனவுகள் கலைய நினைவில் மீளுகிருள். " ஓ ! டாடி, ஸ்வீட் மார்ட் அடையாளமிடப்பட்ட பை.என்ன விசேஷம் ?" தந்தையின் கரங்களில் தவழ்ந்த பையைக் கண்டதும் அவள் வாயிலிருந்து வினா எழும்புகிறது.
சந்தோஷப் பூக்கள் செறிந்த முகத்தோடு ஸ்ருதியின் தந்தை சுப்பிரமணியம் மகளுடைய விழிகளில்
46

பரவசத்தைக் கலந்தார். ’ ஸ்ருதி.சென்ற கிழமை நீ கலந்துகொண்ட நேர்முகத்தேர்வில் தெரிவாகிவிட்டா யாம். என்னுடைய நண்பர் விஸ்வநாதன் மூலமாக வங்கியிலிருந்து ஒஃபீஸிற்கு போன் வந்திருச்சு. நாளைக்கு நியமனக் கடிதம் வீடுதேடி வரும் கண்ணம்மா ". தந்தையின் சந்தோஷத்தைக் கிரகித்துக் கொள்ள முடியாமல் திணறிப்போனாள் அவள்.
* ஓ! கடவுளே, நன்றிப்பா..” என்றவள், * அம்மா !” என்று கூறிக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.
இத்தனை நேரமும் தந்தையும் மகளும் நடத்தும் நாடகத்தை மெளனமாக ரசித்துக்கொண்டிருந்தவர், மென்மையாகச் சிரித்துக்கொண்டார், கட்டியணைத்து முத்தமிடும் மகளை பரிவோடு தழுவிக்கொண்டார். * என் கண்ணம்மாவுக்கு என்றுமே தவறாதுடா " என்று வாயாரப் புகழ்ந்தார்.
டியூஷன் முடிந்து தங்கை ஸ்வப்னா வீடு வரவும், அந்த இல்லமே குதூகலத்தில் நிறைந்து காணப் பட்டது. இரவு சாப்பாட்டு மேசையில்.சந்தோஷம் அவர்களுடைய தட்டுக்களில் பரிமாறப்பட்டது.
ஸ்ருதிக்கு தனக்கு வேலை கிடைத்திருப்பது பற்றி மகிழ்ச்சி கட்டுக்கடங்கவில்லை. சுப்பிரமணியம் - சுலக்ஷனா தம்பதியருக்கு மூத்த மகளாக ஜனனித்தவள் ஸ்ருதி. ஸ்வப்னா இளையவள். தமக்கு ஆண் மக்கள் இல்லையென்ற குறையை அவர்கள் மகள்களிடம் காட் டவேயில்லை. சாதாரண குமாஸ்தாவாக வேலை பார்த்த சுப்பிரமணியத்திற்கு வசதி வாய்ப்புக்கள்மிகவும் குறைவு என்றாலும், தம் சக்திக்கு மீறியே ஸ்ருதியை சகல கலை களிலும் பயிற்றுவித்தார். கொழும்பில் பிரபலமான மகளிர் கல்லூரியில் கல்வி கற்ற ஸ்ருதி, உயர்தர
47

Page 27
வர்த்தகப் பிரிவில் திறமையாகச் சித்தி எய்தியும் பல்கலைக்கழக அனுமதி கிட்டவில்லை.
தொடர்ந்து படிக்க வாய்ப்பிருந்தும், அவள் படிக்க விரும்பவில்லை. தன்னுடைய தந்தை தன்னால் படும் கஷ்டம் போதும்; அவள் தன்னுடைய முடிவில் தீவிரமானாள்.
" அப்பா ! இத்தனை காலமும் நீங்கள் பட்ட கஷ்டத்தைத் துடைத்தெறியப்போகிறேன்.பெண் என் றால் எல்லோருக்குமே இளக்காரமாகப் போய்விட்ட இந்தக் காலத்திலே.என் பெற்றோர்க்கு சுமையாகாமல் ஒர் ஆண் துணையைப் போன்று அவர்கள் கஷ்டத்தில் தோளோடு தோளாக நின்று உதவப் போறேன்.”
ஆமாம்! இப்போ எனக்கு வேண்டியதெல்லாம் ஒரு தொழில்தான். உழைப்பு உழைப்பு என்று இரவு பகல் பாராமல் உதிரத்தையே செலவிடும் என் தந்தைக்கு ஒரு சிறு நிம்மதி வீட்டையே கோயிலாக எண்ணி வயழும் என் அருமைத் தாய்க்கு ஒரு சின்ன ஓய்வு; எனவே வேலை தேடும் படலத்தில் தீவிரமானேன். அப்பாவின் நண்பர் ஒருவரின் சிபாரிசில் வங்கியொன் றுக்கு மனுப்போட்டு, பதில் வரவும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுவிட்டேன். அப்பாடா ! என் மனத்திலிருந்து நிம்மதிப் பெருமூச் சொன்று வெளிப்பட்டது.
** என்ன ஸ்ருதி? தட்டுல கையை வைத்துக் கொண்டு பலமான யோசனை ?' தாயின் குரல் கேட்க வும் நினைவுச் சூழலிலிருந்து விடுபட்டுக்கொள்கிறாள் அவள்." ஒ.ஸாரிம்மா." அவசரமாகச் சாப்பிட்டு முடித் தவள், தாய்க்கு ஒத்தாசை புரிந்துவிட்டு தன்னுடைய அறைக்குப் போய் கட்டிலிலே சாய்ந்து கொள்கிறாள். கையிலெடுத்த புத்தகத்திலே மனம் பதியவில்லை.
43

இமைகள் தூங்க மறுத்து அடம்பிடித்தன. ஏனோ இன்று அவளால் எதிலுமே ஒன்றிப் போக முடியவில்லை.
கட்டிலுக்கு நேரே இருந்த சுவற்றில் அவள் விழிகள் பதிந்தன. பெரிதுபண்ணி பிரேம்பண்ணப்பட்ட பெற்றோரின் கல்யாணப் புகைப்படம்". கம்பீரமிக்க அப்பாவுக்கருகில் நின்றிருந்த அமைதியே உருவான தாயைக் காணும்போது அவளின் இதயத்தில் சந்தோஷ ராகங்கள் ஊற்றாய்ப் பிரவாகமெடுக்கும் ! ஒ! அம்மா, என்ன பெண்ணிவள் ; தாய் என்ற சொல்லின் மகத்து வத்தை அணு அணுவாக உணர்த்திக்கொண்டு ; பெண் என்றால் இப்படித்தான் வாழவேண்டும் என்பதற்கு வரைவிலக்கணமாக்கப்பட்ட சிருஷ்டி ! இந்தக் காலத் தில் படித்தவர்களிடம் தான் பண்பு இருக்கிறது என்ற சித்தாந்தத்தை உடைத்தெறிந்துவிட்டு, ஆழ்ந்த மனப் பக்குவம் மூலமான அமைதியே உருவாக, உயரிய பண்பே உறைவிடமாக, ஒழுக்கமே அணிகலனாக, உயரிய மனைவியாக, உன்னத தாயாக, வளைய வந்து கொண்டிருக்கும் தன் தாயை நினைத்து அவள் இதயம் பெருமையால் பூரிக்கும்.
அனுபவ அறிவால் மட்டுமன்றி, தன்னுடைய செய்கைகளினாலேயே மகள்களுக்கு ஒழுக்கத்தைப் புகட்டி விடும் பாங்கு, புரிந்துகொள்ளக்கூடிய விதமாக, சாத்வீகமான முறையில் அறிவு போதிக்கும் நேர்த்தி : எதையும் ஆழ்ந்து, ஆராய்ந்து முடிவெடுத்து செயல் படுத்தும் திடமான மன உறுதி. தன்னுடைய குடும்பத் தின் மேல் திகட்டத்திகட்ட அன்பு புகட்டிடும் நேசமிக்க உயரிய குணம் !
அப்பா மட்டுமென்ன...? அம்மாவுக்குத் தான் சற்றும் சளைத்தவரல்லர் என்ற பாசத்தை அடைமழை யாகப் பொழிந்து கொண்டு. அம்மாவிடம் ஒரு அதட்டல் உருட்டல் ம் ஹாம்ெ.இருவரினதும் நேச மிக்க பலமான
49

Page 28
பந்தத்தில் ஒரு சிறு சச்சரவையேனும் ஸ்ருதி கண்ட தில்லை. எத்தனை உயர்ந்த மனிதர் டேடி கண்ணம்மா கண்ணு என்று தன் குழந்தைகளுக்கு அன்பைப் பொழிந்து கொண்டு 1 எத்தனை உயர்வான, அன்பான குடும்பம் அவர்களுடையது. அது ஒரு ஸ்வர்ண பூமியாக, குடும்பமே ஒரு கோயிலாக, அவர்களது இல்லறமென்ற நல்லறம் இனிமையாக நகர்ந்துகொண்டிருக்கும் மகிழ்ச்சி நிறைந்த கால கட்டம்.
கற்பனா உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்த ஸ்ருதியை, தூக்கம் மெதுவாக இமைகளை அழுத்துகிறது. நித்ரா தேவியின் அன்பான அரவணைப்பில் அவள் மெதுவாக ஆழ்ந்துபோகிறாள்.
காலம் தான் எதற்கும் காத்திருப்பதில்லையே! ஸ்ருதிக்கு தொழில்கிடைத்தும் வருடம் ஒன்று கடந்து விட்டது. தொழில் பார்க்கும் இடத்தில் அவளுக்குப் பல கசப்பான சம்பவங்கள் ஏற்பட்டன. வக்கிர மனம் படைத்த ஆண்களின் கழுகுப் பார்வையிலிருந்து தப்ப அவள் மிகுந்த பிரயத்தனப்பட்டாள். பெண்கள் வெளி யிறங்கி விட்டாலே கேவலமாகப் பார்க்கும் ஆண்களின் முன்னால் அவள் தலைகுனிந்ததென்னவோ, உண்மை தான் !
மாலையில் வீட்டுக்கு வந்த அவள் தனக்கு நேர்ந்த அவலங்களை எண்ணி மாய்ந்து போனாள். மொட்டை மாடியில் இதமான நிலவின் வருடலில் குடும்பம் சகிதமாக அமர்ந்து நீண்ட நேரம் இதைப் பற்றி விவாதிப்பாள். தொழிலுக்குச் செல்லவேண் டாமெனத் தந்தை சொல்லும்போது, ' குடும்பத்துக்கு உதவுமுகமாக பணம் சம்பாதிக்கச் செல்கிறேனே தவிர, அலங்காரமாகப் போய் நின்று என்னைக் கவர்ச்சிப்
50

பொருளாக்க இல்லையப்பா " என்று அவருடைய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவாள்.
காலம் நகர்கிறது.
தந்தை தனக்கு வரன் தேடுவதில் மும்முரமாக ஈ டு பட் டி ரு ப் ப  ைத ஸ்ருதி அறிந்துகொள்கிறாள். பெற்றோர் தனக்கு நல்லதைத்தான் செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அவள் வெறுமனே இருத்து விட்டாள்.
அரசு அலுவலகம் ஒன்றில் வேலைபார்க்கும் மாப்பிள்ளை பேசி முடிக்கப்பட்டு, சம்பிரதாயமான சம்பவங்கள் நடைபெற்றதன்பின், ஒரு சுபயோகமான முகூர்த்தத்தில் சங்கர் என்னும் அழகான வாலிபன், ஸ்ருதியை மூன்று முடிச்சிட்டு தன்னுடைய மனைவி யாக்கிக்கொள்கிறான்.
ஸ்ருதி என்னும் அழகிய மலர் அன்போடு ஒன்றிப் போயிருந்த அழகிய குடும்பத்தைப் பிரிய மன மின்றிப் பிரிந்து புக்கக வாசத்திற்காக பட்டணம் நோக்கிப் பாதம் பதிக்கிறது.
தொழில் பார்க்கும் பெண்ணைத்தான் மாப் பிள்ளை வீ ட் டா ரு ம் விரும்பியதால்.அவள் தன் னுடைய பணியை கொழும்புக் கிளைக்கு மாற்றிக் கொண்டு சேவையைத் தொடர்கிறாள்.
நாட்கள் நகருகின்றன .
தன்னுடைய கணவன், மற்றும் குடும்பத்தினரின் சுயரூபத்தை அறிந்து கொண்ட ஸ்ருதி அதிர்ந்து
51

Page 29
போகிறாள். அம்மாவையும் அப்பாவையும் போல . அன்னியோன்யமாக வாழவேண்டும் என்ற அவளின் கன வுக் கோட்டை மணற்கோட்டையாகி விட்டது. அன்பு என்பது அவளுக்கு மருந்துக்கும் கிடைக்க வில்லை.
தன்னுடைய தாயின் நிர்பந்தத்திற்காகத்தான் சங்கர் தன்னை மணம் முடித்தான் என்பதை அறிந்த போது, அவள் உள்ளம் எரிமலையாகக் குமுறியது. சங்கர் தாய்க்கு மூத்த மகன் . அடுத்து ஒரு காலேஜ் செல்லும் அலங்காரச் சிட்டு. மாமியார் ஹாயாக உட்கார்ந்திருக்க.நாத்தனார் விதவிதமான அலங்காரங் களில் காலேஜ0க்குக் கிளம்பிவிட, வேலைப் பழு முழு வதும் ஸ்ருதியின் தலைமேல் விழுகிறது.
அதிகாலையிலேயே எழுந்துவிட்டால் ப ம் பர மாய்ச் சுழலவேண்டும். மருமகள் வந்துவிட்டாள் என்ற நினைப்பில் வேலைக்காரியையும் சேர்ப்பதில்லை. மாமி யாருக்கு வேலை செய்து செய்தே அலுத்துவிடுகிறது அவளுக்கு. இடையிடையே மாமியாரின் அதிகாரம் வேறு ! அவள் சம்பாதிக்கும் பணமும் வேண்டும் ! அவளுடய உழைப்பும் வேண்டும் ! அத்தனையும் செய்தாலும் பரவாயில்லை. கணவனின் அன்பாவது தாராளமாகக் கிடைப்பதென்றால். அதுவும் கேள்விக் குறியாகும்போது . தாயிடம் கற்ற பாடம். அவள் எல்லாவற்றையுமே பொறுத்துக்கொள்கிறாள்.
காலமாற்றத்தால் ஸ்ருதி ஒரு ஆண்குழந்தைக்குத் தாயாகிறாள் . சங்கரின் போக்கு இன்னும் . இன்னும் மாறித் தான் போகிறது. இரவு நீண்ட நேரம் கழித்துத் தான் வீடு வருவான். அவனுக்கு மனைவி, குழந்தை என்ற நினைப்பே இல்லை ! குழந்தை கிடைத்தபின் ஸ்ருதியின் நிலைதான் தர்மசங்கடமாகி விட்டது. காலை
52

யில் எழுந்தால் வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு, குழந்தைக்குத் தேவையான அனைத்தையும் செய்துவிட்டு அரக்கப்பரக்க பஸ் பிடிக்க ஓடவேண்டும். மாலையில் வீடு வரும்போதே . வீடு அமளிதுமளிப் பட்டிருக்கும். எல்லாவற்றையும் துப்புரவு பண்ணி விட்டு நிமிரும்போது இடுப்பு வேதனையில் தேயும். இடையில் ஒஃபீஸிலும் இன்முகத்தோடு நடக்கவேண் டிய கட்டாய நிலை.
ஸ்ருதிக்கு எல்லாமே வெறுத்துவிடுகிறது. இடை யில் கணவனைப் பற்றிய வதந்திகள் அவள் செவி களுக்கு எட்டியபோது இடிந்துபோகிறாள். சங்கரின் பாராமுகத்தை அவள் புரிந்துகொள்கிறாள். ஆம் ! அவனுடைய ஒஃபீஸில் பணிபுரியும் சாந்தி என்ற பெண்ணுடன் அவன் பல வருடங்களாகத் தொடர்பு வைத்திருக்கிறான் என்ற செய்திதான் அது. இதுபற்றி சங்கர் அவளிடம் நேரிடையாகவே கதைக்க வந்தபோது அவள் உள்ளம் எப்படி நொறுங்கிப் போயிருக்கும் ?
கணவனுக்கு மனைவியின் மேல் பிடிப்பு இல்லா விட்டால் அவன் வேறு ஒருபெண்ணையும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் பெண் இதே காரியத்தைச் செய் யத் துணிந்தால் . இந்த சமூகம் அவளை எப்படி எல்லாம் வதைத்துவிடும்.? சே 1 என்ன உலகம் இது? ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா ? பெண் என்றால் எல்லோர்க்குமே இளக்காரமாகிப் போய் விட்டதுதான் . கணவனின் நிர்ப்பந்தம் உக்கிரமான நிலையில் . பொறுமையின் எல்லையில் நின்று எதிர்த்து வாதிடத் துணிந்தாள்.
" என்னங்க இது நியாயம் ? ஒரு பெண் தன் னுடைய ஆசைகள், அபிலாஷைகள் எல்லாவற்றையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டுத் தானே புகுந்த வீடு வருகிறாள். அவளுடை மன்மையான உணர்வுகளை
53

Page 30
மதிக்க வேணாம் ! அட்லீஸ்ட் ஒரு பெண்ணாகவாவது மதிக்க வேண்டாமா ?” முகம் முழுவதும் இரத்தச் சிவப்பாக கேட்டுவிட்டு நிறுத்தினாள் ஸ்ருதி.
" என்ன ! இன்னைக்கு வாய் ரொம்பத்தான் நீளுது. இந்தப் பேச்சுக்கெல்லாம் மசிகிறவன் நான் இல்லை ! " ஆண் என்ற ஆ ன வ த் தி ல் மிரட்டும் கணவனை விழிகளில் நீர்த்திரையிட நோக்கினாள்
* நீங்களே யோசித்துப் பாருங்கோ எந்தப் பெண் தான் தன்னுடைய கணவனை இன்னொரு பெண் ணுக்கு தாரைவார்க்க விரும்புவாள். உங்களுக்கு ஏன்.? இந்த சமுதாயத்திற்குக் கூட, இதுநியாயமாகப் படலாம். ஆனா.என்னைப் போன்ற பெண்ணுக்கு இதுதான் கொடிய சித்திரவதை ! என்னால் இதற்குச் சம் மதிக்கவே முடியாதுங்க . " வெடித்து வரும் விம்மல் களை மிகுந்த சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள்.
"ஸ்ருதி." தொனியில் அதிகாரம் தொனித் தது, "நான் நினைத்ததைச் செயல்படுத்துகிறவன். சாந்தியை விட்டு விட்டு உன்னோடு மட்டும் வாழ்வேன் என்று பகற்கனவு காணாதே ! அவள் தான் என் வாழ்வில் நிஜம், அதை தெய்வமே வந்தாலும் மாற்ற முடியாது. அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழவிருப்பமென் றால் தொடர்ந்து இங்கே இருக்கலாம். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது உன்னுடைய பிறந்த வீடு. ஆனா.எக்காரணத்தை முன்னிட்டும் குழந்தையைக் கொண்டுபோக முடியாது. ஓ.கே !” மிரட்டிவிட்டுச் செல்லும் கணவனை கண்ணிரோடு நோக்கினாள்
** சே! என்ன மனிதன் இவன் ? இவனை விட்டுக் கொடுத்து வாழனுமா ? அவங்களுக்கு மட்டு
54

மென்ன கொம்பா முளைத்திருக்கு ? “ எட்டும் அறிவி னில் ஆணுக்கு பெண்ணிங்கு இளைப்பில்லை காண்” என்று கூறியிருந்தும் எத்தனை கேவலமாக பெண் மதிக்கப்படுகிறாள்..? நினைத்து நினைத்தே வெகுண்டு போகிறாள் அவள்.
அடுத்துவந்த தினங்கள் எல்லாம் மிகத் துன்ப மயமாகத்தான் கழிந்தன.
ஸ்ருதியின் வாழ்வே இயந்திரமாக மாறிவிட் டிருந்தது குழந்தை சதீஷ் நடக்கும் வயதை எட்டி விட்டதனால் அவனை மேய்ப்பதே பெரும்டாடாகிவிடு கிறது. அரக்கப்பரக்க அனைத்தையும் முடித்துவிட்டு பஸ் பிடிக்க ஓடினால், நெருக்கியடித்துக்கொண்டு செல்லவேண்டிய பரிதாப நிலை 1 வக்ரமனம் படைத்த ஆண்களின் இடிப !டுகளையும் வியர்வை நாற்றத்தை யும் பொறுத்துக்கொண்டு வெளியே வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்.
அங்கே . தான் அமர வேண்டிய இடத்தில் அந்த சாந்தி, சங்கரின் இடுப்பை வளைத்துக்கொண்டு தினமும் ஸ் கூட்டரின் பின்னால் அமர்ந்து செல்லும் லாவகம் ஸ்ருதி தினமும் காணும் சங்கதிதான். என் றாலும் மனம் விரக்தியின் விளிம்புக்குச் செல்கிறது.
அலுவலக வேலைகளில் ஒன்றிவிட்டு மிகுந்த களைப்புடன் வீட்டுக்கு வந்தாலோ ஆதரவாய் ஒரு வார்த்தை, ஒரு சிநேகப் பார்வை . ம் ஹ0ம். பாசத் தீபத்தில் திகட்டத் திகட்ட வீட்டில் ஒளிர்ந்த அவ ளுக்கு, இங்கே வெறும் பூஜ்யம் தான் வாழ்க்கையானது. அவள் வளர்ந்த வீட்டின் சூழ்நிலை அவளைப் பொறுமையின் சிகரமாக்கியது. கணவனும், மனைவியும் பறவையின் இரு இறக்கைகள் போல . ஒரு சிறகு
55

Page 31
ஒடிந்தால் பறவை எப்படிப் பறக்கும் ? இதே நிலை தான் ஸ்ருதிக்கும். ஆண் துணையின்றி. கணவன் வீட்டில் வாழ அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை. இனி, அவள் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டிய கால கட்டம்.பொறுமைக்கும் எல்லையுண்டு அல்லவா !
இப்போது சில நாட்களாக சங்கர் வீட்டுக்கு வருவதுமில்லை. சாந்தியின் வீட்டிலேயே கொட்ட மடிப்பதாக அறிகிறாள். கடல் சாக்கடையாக மாறி விட்டால், கங்கை தன்னுடைய பாதையை மாற்றிக் கொள்ளத்தானே வேண்டும்.இனி, அவள் என்ன செய்யவேண்டும் என்ற முடிவைத் தீர்மானித்து விட்டாள்.
அடுத்த நாள்.
வங்கிக்கு விடுமுறையை அறிவித்துவிட்டு, நகரில் இருக்கும் பிரபல வக்கீல் ஒருவரிடம் சட்ட நுணுக்கங்களைப் பற்றி அறிந்துகொள்ளச் சென்றாள். நல்ல வேளை. அன்று அவர் தம்முடைய அலுவலகத் தில் நின்றிருந்தார். ஸ்ருதி தன்னுடைய பிரச்சினைை அவரிடம் எடுத்தியம்பினாள்.
திருமணம் நடைபெற்ற வருடம் ; குழந்தையின் வயது; கணவனுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் இருக்கும் தொடர்பு பற்றி.விளாவாரியாக ஒப்புவித்த அவள் வக்கீலிடம் கேட்டது ஒரே ஒரு கேள்வியைத் தான.
'ஸார் நான் பிறந்த வீட்டை நாடினாலும், தன்னுடைய குழந்தையைக் கொண்டுபோக வேண்டா மென என் கணவர் கட்டளையிடுகின்றார். நான் குழந்தையை அழைத்துச் சென்றால் ஏதேனும் பாதிப்பு உண்டா..?”
56

அவளின் கேள்வியைப் புரிந்துகொண்ட வக்கீல் நீண்ட நேரம் சிந்தனையிலாழ்ந்துவிட்டு. இப்படிக் கூறினார். "மிஸஸ் ஸ்ருதி.குழந்தைக்குக் குறிப்பிட்ட வயது ஆகும்வரை குழந்தை தாயிடம் தான் இருக்க வேண்டுமென சட்டம் கூறுகிறது. அதன் பின்னரும் குழந்தை விரும்பும் பட்சத்தில் தாயிடம் இருக்க அனுமதி உண்டு. ஆனாலும். மிஸஸ் ஸ்ருதி. நீங்கள் வீட்டை விட்டுப் போவதாக எடுத்த முடிவை கொஞ்சம் மறு பரிசீலனை செய்யலாமில்ல.இன்னொரு பெண்ணுடன் வாழ்வதாக ஆதாரம் உண்டென்றால், அதற்காக வழக்குத் தொடர்ந்து அவரை உங்கள் கணவராக மட்டுமே வாழ சட்டத்தின் பலாத்காரத்தைப் பிர யோகிக்க முடியும்."
அவரின் பேச்சைக் கேட்டு விரக்தியுடன் சிரித்தாள் ஸ்ருதி. " சட்டம் மூலம் கட்டாய நிர்ந்பந்தத் தில் வாழும் வாழ்க்கையில் என்ன ஸார் பிரயோசனம்.? இல்லமென்பது மனம் இரண்டும் ஒன்றாய் இணைந்து இன்புற்றிருக்க வேண்டுமேயொழிய கட்டாயத்திற்காக வாழ்கிற அர்த்தமில்லாத வாழ்க்கையல்ல ஸார். என்னால் தனித்து வாழ முடியும். என் சுய பலத்தில் நிற்கக்கூடிய-என்னை நானே காப்பாற்றிக்கொள்ளக் கூடிய-என்னுடை சுயதேவை என்பதை நானே பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவில் - என்னுடைய பொருளாதார வசதி இருக்கு. அந்தத் திடம். தன்னம்பிக்கை, தைரியம் எல்லாமாக என் மகனையும் பாதுக்காத்துகொள்ற மன உறுதி எனக்கு இருக்கு ஸார் . " நீண்ட நேரம் பேசியதில் அவளுக்கு மூச்சு வாங்கியது.
* உங்கள் மன உறுதியைப் பாராட்டுறேன். மிஸஸ் ஸ்ருதி ! சட்டம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், நீங்கள்
57

Page 32
என்னைத் தேடி வரலாம். ஒ. கே . . " ரொம்ப நன்றி ஸார் . " கை கூப்பி விடை பெற்ற ஸ்ருதி தெளிந்த மனதும், நேர்பார்வையும் கொண்டவளாய் பாதையில் இறங்கி நடக்கிறாள்.
ஸ்ருதி எல்லாவற்றையுமே கச்சிதமாகச் செய்து முடித்தாள். தன்னுடைய வங்கி மாற்றல் உத்தரவை. சொந்த ஊருக்கே மாற்றிக்கொள்ள மிகுந்த கஷ்டப் பட்டாள். எல்லா விடயங்களும் சாதகமாக அமைந்த தன் பின்னர் ஒரு நாள்.
மாமியார் கோயிலுக்குச் சென்றுவிட, நாத்த னார் காலேஜ"0க்குப் பறந்துவிட . தன்னுடையதும் குழந்தையினதும் . அத்தியாவசியப் பொருட்களை மாத்திரம் ஒரு பெட்டியில் திணித்துக்கொண்டு . சங்கருக்கு ஒரு மடல் வரைந்தாள்.
அன்புள்ள . (கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை) மகனையும் அழைத்துக்கொண்டு பிரிந்து செல்கிறேன். சட்ட ஆலோசகர் ஒருவருடன் கலந்தாலோசித்த நில் மகன் குறிப்பிட்ட வயது ஆகும் வரை என்னிடம் வளர்வதுதான் சட்டம் என்றார். என்னை மடக்குவதாக எண்ணி . வழக்கு அது இது என்று அலையாதீர்கள் ! தாங்கள் தான் மாட்டிக்கொள் வீர்கள். ஜாக்கிரதை இனியும் இந்தப் போலி வாழ்க்கை எனக்குத் தேவையில்லை என் தொழிலைக்கொண்டு என்னால் தனித்து வாழ முடியும் 1 நெளியும் புழுக்கள் என்று எங்களை எடைபோட்டுவிட்டீர். அது நிமிரும் காலம் ஒன்று உண்டு. எங்கள் திடமும் மன உறுதியும் சாதாரணமில்லை. சட்டத்தின் துணையோடு போகி றேன். வாழ்ந்து காட்டுகிறேன். என் மகனையும் உயர்ந்த ஸ்தானத்தில் நிமிர்த்திக் காட்டுகிறேன். w
- ஸ்ருதி
58

பத்திரமாக மடித்து மேசையில் வைத்துவிட்டு, கதவைத் தாளிட்டு, சாவியைப் பக்கத்து வீட்டில் ஒப் படைத்துவிட்டு வெளியேறினாள்.
ஸ்ருதி என்னும் அழகிய பறவை இல்லற வாழ்வை கிரகித்துக்கொள்ள முடியாமல் பறந்து விட்டது. ጎ
அழகிய காலை மலர்ந்த வேளையில், அவள் தன்னுடைய சொந்த ஊருக்குக் காலடி எடுத்து வைத்தாள்.
ஸ்ருதியையும், மகனையும் கண்ட அவளுடைய வீட்டினரோ அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்ட னர். சிந்திக்கத் தெரிந்த பெற்றோர் ஆதலால் அவளு டைய பிரச்சினையைப் பற்றி அறிவு பூர்வமாக ஆராய்ந்து மகளையும் பேரனையும் தங்களுடனேயே தங்க வைத் துக்கொள்ள முடிவு செய்தனர். மகள் வாழ்ந்த அவல வாழ்வை எண்ணித் துவண்டு போனார்கள். ஐயோ! அழகான கிளியை வளர்த்து பூனையின் கையில் கொடுத்துவிட்டோம் என மாய்ந்து போனார்கள்.
ஸ்ருதியின் வாழ்வு தெளிந்த நீரோட்டமாய் தொழிலுக்கும் சென்று கொண்டு குழந்தையையும் கவனித்துக்கொண்டு வீட்டு வேலைகளையும் இடைக் கிடையே புரிந்துகொண்டு அன்பான குடும்பத்தின் நேசத்தை அனுபவித்துகொண்டு மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது.
அவள் இப்படி வாழ்றது சமூகத்தின் கண் களுக்கு உறுத்தாமல் இருக்குமா என்ன ? அவளையும் கொடிய வார்த்தைச் சாடல்களால் விளாச ஆரம்பித்த
59

Page 33
னர். அவள் வெளியே செல்லும்போது, யாராவது நல்ல கருமங்களுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்களா னால், உடனே உள்ளே போய்க் கதவைச் சாத்திக் கொள்வார்கள். ‘வாழாவெட்டி முன்னுக்கு வர்றா. போன காரியம் உருப்பட்டாப் போலத்தான்” என்று பெண்களின் வாயிலிருந்து ஈட்டியாகப் பாய்ந்து வரும் வார்த்தைகளைக் கேட்டு அவள் இதயமே ரணகளமாகி விடும்.
இந்தக் கொடுமையை என்னவென்பது? மனதில் ஊறிப்போன இந்த சமுதாய விஷத்தூவல்களை ஒரு புதிய வெற்றிப் பிரவாகம் பெருக்கெடுத்து, மாற்றி யமைத்து புதிய விழிப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்தக் கேடுகெட்ட சமூகம் மாறப் போவதில்லை.
தன் வாழ்க்கை முறையை நிர்ணயிக் துக்கொள் ளும் உரிமை அந்தப் பெண்ணுக்கு அளிக்கப்பட வேண்டுமே தவிர, சமூகத்துக்கல்ல ! . மனித நேயம் வளர்ந்த இனங்களில் பெண் ஒரு பிரச்சனையாவதில்லை. பொருளாதாரச் செம்மையுடைய சமுகங்களில் அவள் கெளரவம் கேள்விக்குறியாவதில்லை! அவளுக்கு மன முதிர்ச்சி வேண்டும். பொருளாதாரச் சுதந்திரம் வேண் டும். இன்று என்னை இழிவுபடுத்தும் இந்தச் சமூகத் துக்கு முன்னால் நானும் . வாழ்ந்துகாட்ட வேண்டும் என்னுடைய களங்கத்தைத் துடைத்தெறிய வேண்டும். அவள் திடமனதுடன் எதையும் எதிர்கொண்டு வெற்றி பெறத் துணிந்து நின்றாள். வருடம் ஒன்று உருண்டோடி விட்டது .
ஸ்ருதியின் மனதைப் பாரிய பிரச்சினையொன்று ஆட்கொள்கிறது. தன்னால் தன்னுடைய தங்கையின்.
60

திருமண வாழ்வு தடைப்படுவதை எண்ணி துயால தேய்ந்து போகிறாள். பெற்றோரின் கலங்கிய விழிகளும், தங்கையின் வாடிய வதனமும் அவளைச் சித்ரவதை செய்கிறது. தன்னால் அவர்கள் படும் அவலத்தை அவளால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. ? இந்த ஊரில் இனியும் வாழ்ந்தால் அவள் இதயம் வெடித்து விடாதா என்ன..? பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து தன்னுடைய வங்கி அனுபவத்தினைக் கொண்டு மலையகத்தில் வங்கியொன்றுக்கு விண்ணப்பித்து, பெற் றோர் தடுத்தும் கேளாது-நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றியும் பெறுகிறாள்.
வாழா வெட்டி என்று சமூகம் ஒதுக்கிய நிலை யில், தன்னுடைய தங்கை கன்னியாகவே வாழ அவள் பார்த்துக்கொண்டிருப்பாளா ... ? பெற்றோர் தடுக்க மறுத்துவிட்டு, குழந்தையுடன் அவள் மலையகம் புறப் பட்டுவிட்டாள்.
ஆண்டுகள் பல ஓடி மறைந்துவிட்டன .
மலையகத்தின் தலைநகரான கண்டியில் இப் போது ஸ்ருதி சொந்தமாகவே ஒரு வீடு கட்டி முடித்து விட்டாள். கண்டி . பிரபல ஆண்கள் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்த மகன் சதீஷ் இப்போது . கொழும்பு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவ னாக இருக்கிறான். மிகவும் திறமைசாலியான அவன் புகழ் விளையாட்டுத்துறையில், கல்வித்துறையில் மிகவும் பிரபல்யமாகியது. ஸ்ருதி மகனிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளையெல்லாம் சொல்லி அறிவுபூர்வமாக உணரவைப்பாள்.
அவர்கள் கொழும்பிலிருந்து சொந்த ஊருக்கு சொல்லாமல் போனதன் பின்னர், சங்கரிடமிருந்துதான்
61

Page 34
ஒரு செய்தியும் இல்லை . சதீஷ் கருவாக இருக்கும் போதே அப்பா இறந்துவிட்டதாக . அவள் மகனிட மும் மலையகத்திலும் நடித்துக்கொண்டாள் . அப் பாவைப் பற்றி அம்மா ஏற்றிவைத்த விஷம் அவனுக்கு பிஞ்சுப் பருவத்தினை மறக்கடித்தது.
நாட்கள் நகர்கின்ற வேகத்தில் ஒரு நாள் . அவளுடைய அப்பா திடீரென வந்து ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். 'அம்மா ஸ்ருதி . உன் கணவர் சங்கர் நேற்றுப் பலத்த பைக் ஏக்ஸ்டென்டில் இறந்து போய்விட்டாராம். எனக்கு உடனே செய்தி வந்தது. நீயும் சதீஷ"0ம் வரும்வரை காத்திருக்கிறாங்களாம். புறப்படம்மா . “ அழைக்கும் தந்தையை நிமிர்ந்து பார்த்து, மறுத்துவிட்டாள் ஸ்ருதி. "என்னால் முடியா தப்பா. யாரோ ஒருத்தர் இறந்ததற்கு நான் எதுக்காகப் போகணும்?"
'யாரோ ஒருத்தர் இல்லையம்மா ; அது உன் கணவர். சம்பிரதாயத்துக்காகவாவது நீ போய்த்தானே
ஆகணும்?”
"ம்.கணவர்? யார் அப்பா கணவர்.? இந்தப் பூமனசைத் தீயிலே போட்டு வாட்டி எடுத்த அந்த மனிதருக்கு கண்ணிர் அஞ்சலி செலுத்தப் போக வேண்டுமா ? இத்தனை காலமாக உள்ளத்தில் உறுதி யோடும், உடம்பில் துணிவோடும் வாழ்ந்து கொண்டிருக் கிறேனே ? என் குழந்தையை வாழ்க்கையின் உயர்ந்த ஸ்தானத்தில் நிமிர்த்திக் கொண்டிருக்கிறேனே ! அந்த மனிதர் எங்களைப் பற்றி ஏன் தன் குழந்தையைப்
62

பற்றியாவது கவலைப்பட்டாரா? இந்தப் போலிச் சம்பிரதாயங்கள் எ ங் க ஞ க் கு த் தேவையில்லை யப்பா..!"
ம்.ஸ்ருதி மனசு எத்தனை வேதனைப்பட் டிருக்கும் ? எத்தனை சோகங்களை அவள் விழுங்கி யிருப்பாள்..? தன் கணவனின் சாவுக்கு ஒரு பெண் போக மாட்டேன் என்று சொல்கிறாள் என்றால்.அவள் எத்தனை அடிபட்டிருக்கவேண்டும். அவள் மனசு எத்தனை வேதனையை விழுங்கியிருக்க வேண்டும்? :
சுப்பிரமணியத்தின் இதயம் வேதனையில் சிதறியது. பூவை மிதிச்சி நாசமாக்கியவனுக்கு பாத பூஜை தேவையில்லை. காலத்தையொட்டி சில சம்பிர தாயங்களை மீறுவதில் தப்பில்லை.அவர் மகளைக் கனிவுடன் நோக்கினார்.
"ஸ்ருதி, நீ கலங்காதேயம்மா, இத்தனை கால மும் நீ காத்து வந்த திடமும் மன உறுதியும் என்னையே மனங்கலங்க வைக்கிறது. உன் மகன் உயர்ந்த ஸ்தானத் தில் வளர்ந்துகொண்டிருக்கிறான். இனி, நீ கவலைப் படத் தேவையில்லை”.
"ஆமாம் அப்பா இந்த சமூகம் எங்களைச் சாக்கடைக் குவியல்களாக எண்ணிவிட்டது. எங்கள் தைரியத்தால், தன்னம்பிக்கையால் நாங்கள் உயர்வோம் என்று அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. இனி, எனக்குக் கவலை இல்லையப்பா" ஸ்ருதி மலர்ந்து சிரித்தாள்,
63

Page 35
இந்தச் சமூகம் பெண்ணுக்குப் பூட்டியிருக்கும் அடிமை விலங்குகள் அத்தனையும் உடைபடவில்லை யென்றாலும்.பெண் தன்னுடைய சுய முயற்சியால் முன்னேறும் பிரகாசமான எதிர்காலம் நம் முன்னே விரிந்து கிடக்கிறது. சவால்களை ஏற்று வெற்றிகொண்ட ஸ்ருதியைப் போல.ஒவ்வொரு பெண்ணும் துணிந்து நின்றால்.பெண்ணுலகம் தாழ்ந்துவிடாது. காலம் மாறிக் கொண்டு இருக்கிறது. பெண்கள் உலகமும் விசாலமாகிக் கொண்டு வருகிறது. பெண் உரிமைகள் உயர்த்தப்படு கிறது.ம். அதில் ஸ்ருதியைப் போன்ற பெண்களின் வெற்றி ஸ்திரமாகட்டும்.!
64
 

தீர்க்கப்படாத நியாயங்கள்
-ஃபெளஸியா யாளபீன்
==
புதிய நாளொன்றின் விடியலுக்காய் கிழக்கு வானம் தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தது. எங்கோ தூரத்தில் நேரங்காலத்தோடு விழித்துக்கொண்ட குயில் ஒன்று இதமாக குரல் கொடுக்க நான் விழித்துக்கொள் கிறேன். காலைக் குளிர் உடலைக் கொஞ்சம் நடுங்க வைக்க, போர்வையைத் தேடி கைகளை வைத்து துழாவும்போது தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த கடிகாரம் ரீங்காரமிட்டு தன் கடமையைச் செய்தது. * சே .இன்னும் கொஞ்சம் படுக்கலாம்னு பாத்தா.அதுக் குள்ள நாலர மணி ஆயிடிச்சா ?" கொஞ்சம் வெறுப் புடனே கடிகார முள்ளை அமிழ்த்தி அலாரத்தை நிற் பாட்டுகிறேன்.
படுக்கை அறையில் பரவியிருந்த மெல்லிய நீல நிற 'னைட் பல்பின்” ஒளியில் எனது ஐந்து வயது மகன் அனஸ் எனது கழுத்தைக் கட்டிப்பிடித்தபடி உறங்குவது தெரிந்தது. நாலரை அடித்துவிட்டது. இனி
65

Page 36
உறங்குவது சாத்தியமில்லை. மகனின் கைகளை மெது வாக எடுத்து தலையணை ஒன்றை அவனுக்கு அணை யாக்கி, மெல்ல எழுந்திருக்கிறேன். அப்போதுதான் மலர்ந்த தாமரை போல் மென்மையாக கண்மூடி உறங் கும் மகனின் குறும்புக் கன்னத்தில் "இச் " சென்று இதழ் பதிக்கிறேன்.
அதிக்குள்ள நாலரயாயிடிச்சா ... என்னைய ஐஞ்சரைக்கு எழுப்பிடுங்க ' என்று முணுமுணுத்தபடியே போர்வையை இன்னும் கொஞ்சம் இழுத்துப் போர்த்தி மறுபுறம் புரண்டு படுக்கும் என் கணவரைப் பார்க்க எனக்குப் பொறா  ைம ய ர க இருக்கிறது. "இந்த ஆம்புளைங்க தான் எவ்வளவு கொடுத்து வைச்சவங்க. எனக்கும்தான் ஆறு மணி வரை போர்த்திக்கொண்டு படுக்க ஆசை . ஒரு நாள் சரி முடியுதா " பெருமூச் சொன்றை செலவிட்டவாறே தொட்டிலில் நுளம்பு வலைக்குள் உறங்கும் மகள் அஸ்மாவைப் பார்க்கிறேன். நிம்மதியாக விரல் தப்பி உறங்கும் மகளை சிறிது நேரம் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு பெண் ஒவ்வொரு குழந்தையையும் பெற்றெடுக் கும்போது அவள் அடையும் துன்பங்கள், கஷ்டங்கள். சிரமங்கள்தான் எத்தனை ? இதனை நிச்சயமாய் எந்த ஆணும் உணர முடியாது.
நேரம் போவதை உணர்ந்து பாத்ரூமை நோக்கி நடக்கிறேன். கூதல், குளிர் எல்லாம் பார்த்துக்கொண் டிருக்கும் நேரமா இது ? குளித்த பின் காலை உணவை தயாரித்து, தொடர்ந்து பகல் சாப்பாட்டையும் முடித்து * லஞ்” பொக்ஸை ரெடி செய்து, கணவனையும், மொன்டிஸ்ஸரி போகும் மகனையும் எழுப்பிவிட்டு நானும்தயாராகி எட்டுமுப்பதுக்குள் ஒபீஸில் நின்றேஆக வேண்டும். தொடர்ச்சியான வேலைகளின் சுமை
66

லேசாக அழுத்த சோம்பலையும் குளிரையும் வலுக்கட் டாயமாக அகற்றி சவரின் பூப்பூவான திவலைகளுக்குள் அடக்கமானேன். குளிர் நீருக்கு சிலிர்த்த உடம்பு பின் அடங்கிப் போனது.
பம்பரமாகச் சுழன்று எட்டு மணிக்கு எல்லா வேலைகளையும் முடித்து ஸ்கூட்டரில் செல்லும் மகனை யும் கணவனையும் வாசலுக்கு வந்து வழியனுப்பிய பிறகு தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அலுவ லகத்திற்கு செல்ல சேலையை எடுத்து உடலில் சுற்றும் போது அஸ்மா அழத் தொடங்கினாள். அந்த நேரத்தில் யார் மீது எரிச்சல் படுவது, கோபப்படுவது என்று புரியவில்லை. அவசர அவசரமாக சேலையை உடுத்தி குழந்தையை தூக்கி கொஞ்சம் ஆசுவாசப்படுத்தினேன். குழந்தையைப் பார்த்துக்கொள்ள வரும் ஆயாவை இன் னும் காணவில்லை. عر
'சே . எட்டுப் பதினைஞ்சாச்சி. இந்த மனுசிய இன்னும் காணல்ல . இவ எப்பoபும் இப்படித்தான் கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாம . " ஆயாவை மனதுக்குள் ஏசும்போதே தூரத்தில் அவள் வருவது தெரிகிறது.
மானசீகமாக
" மன்னிச்சிடுங்க நோனா . நேத்து ராவு அவரு குடிச்சிட்டு வந்து ஒரே ரகலயா போச்சி . அதனால் இன்னக்கி சொனங்கிருச்சி நோனா " பணிவாக கூறும் அவளை ஏசுவதில் பிரயோசனமில்லை. பாவம், ஏற் கனவே அவள் நொந்துபோயிருக்கிறாள். கணவனைப் பிரிந்து வாழாவெட்டியாக வாழுவதை விட. கணவனின் இம்சைகளைச் சகித்து, அவனுடனேயே காலம் கடத்தும் இவளைப்போன்ற அப்பாவிகள் இன்னும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதை இவர்களது அறி
67

Page 37
யாமை என்பதா? அல்லது பண்பாடு, கலாச்சாரம், சமூகம், சம்பிரதாயம் என்று இவர்கள் தமக்குத் தாமே போட்டுக்கொண்ட கட்டுப்பாடுகளா என்று புரிய வில்லை. இந்த ஆராய்ச்சி எல்லாம் பிறகு வைத் துக்கொள்வோம். இப்போது நேரம் போகிறது. v.
"ச ரி ஆயா .. நா போயிட்டு வாறேன். புள்ளைய பத்துரமா பாத்துக் க. டென் ஓ குளோக் குக்கு பால் அடிச்சி குடு . ஸிக்ஸ் அவுன்ஸ் போதும். அப்புறம் உருள கெழங்கு ஒன்னு அவிச்சி வச்சிருக் கேன். அது . பன்னென்டு மணிக்கெல்லாம் தீத்திவிடு. அப்புறம் . வந்து. கஞ்சி கொஞ்சம் காச்சி வைச் சிருக்கேன். அத கொஞ்சம் தடாக்கி ரெண்டு மணிக் கெல்லாம் புள்ளைக்கு குடுத்திடு . புள்ளைக்கு, வயித்து வலி அப்பிடின்னு ஏதாவது அழுதா . ஸ்ரெப் வைச் சிருக்கேன்.மத்ததெல்லாம் தெரியும் தானே” கொஞ்சம் அவசரமாக ஆனால் கண்டிப்பாகக் கட்டளையிட்டேன். " என்ன நோனா நீங்க . எல்லாம் நீங்க சொல்லணுமா? நானா செய்யமாட்டேனா . ஏம் மேல நம்பிக்கை இல்லையா " அவள் குழைந்தாள். நம்பிக்கை இல்லா மலா இத்தனை நாளும் இவளை நம்பி வீட்டையும் குழந்தையையும் தனியே விட்டு விட்டுப் போகிறேன் ?
* ஆயா" பத்திரமா பாத்துக்க . கதவைப் பூட்டிக்கோ. தொறந்துபோட்டு இருந்திடாத என்ன ?” மீண்டும் அவளை எச்சரித்துவிட்டு கைப்பையை எடுத் துக்கொண்டு பாதையில் இறங்கினேன். சே. காலை யில் இருந்து எத்தனை அவஸ்தை . இத்தோடு இது முடியப்போகிறதா. அரக்கப் பரக்க பஸ்சைப் பிடித்து ஆபிஸ் போய்சேர்ந்து.பின். இதெல்லாம் தேவை தானா..? நிம்மதியாக இருந்து அஸ்மாவை கவனிக்க முடியவில்லை. அனஸ"டைய மழலை மொழிகேட்டு கிழமமுடியவில்லை. இந்தக்கவலைகளையெல்லாம் ஒத்தி
: 68

வைத்துவிட்டு அலுவலகம் போய்ச் சேர்வதில் அவசர மானேன்.
அலுவலக அறைக்குள் நுழைந்தபோது அநேக மாக எல்லா சீட்டுகளும் நிறைந்திருந்தன. " ஏன் லேட் ?" கேட்காமல் கேட்கும் பார்வைகளைத்தவிர்த்து பெயரை சைன் பண்ணும்போது அங்கே சின்னதாய் சிகப்புக் கோடு தெரிந்தது. பியூன் வந்து மனேஜர் அழைப்பதாய் சொல்ல . தயங்கி பின் உள்ளே நுழைந்தேன். அந்த ஏ. சீ. ரூமிலும் வியர்ப்பதைப் போன்றிருந்தது. அவர் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கத் தோன்றவில்லை. என் பிரச்சினைகளை அவரிடம் கூறி நியாயம் பெறலாம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கவில்லை.
" இனிமேல் இந்தமாதிரி பொடுபோக்காக நடந் துக்கக் கூடாது! ஒ. கே. திஸ் இஸ் தி லாஸ்ட் வோனிங் போ யூ". இறுதியாக அவர் எச்சரித்தார். மறுபடியும் வந்து இருக்கையில் அமர்ந்தபோது ' என்ன இன்னைக் கும் மானேஜர்கிட்டால டோஸா?” என்பதைப் போன்ற ஏளனப் பார்வைகள் என்மீது படர்ந்தன. எரிச்சலோடு பைல்களைப் புரட்டினேன்.
நான் என்ன வேண்டுமென்றா இப் படி யெல்லாம் நடந்துகொள்கிறேன்? எனக்கும் உம்மா என்றோ மாமி என்றோ யாராவது துணையாக, ஆறுத லாக இருந்தால் அவர்களிடமாவது ஒரு சில வீட்டுப் பொறுப்புக்களை ஒப்படைக்கலாம். இது நாலு மணியி லிருந்து நானே எல்லாவற்றையும் கவனித்து . ஆயா வரும்வரை காத்திருந்து. அவளும் வராவிட்டால், அவ் வளவுதான். அன்றையதினம் ஒபிஸ் கட்!அப்படி எனக்கு உம்மாவோ மாமியோ இல்லாமலில்லை. இருவருமே இருக்கிறார்கள். எங்கள் திருமணத்தில். இவர்களுக்கு கொஞ்சமூம் உடன்பாடு இல்லை.
6.

Page 38
ஆரம்பத்தில் நான் இவரை விரும்புவதாகக் கூறியபோது, அதிகமாகக் கோபப்பட்டது உம்மாதான். என் நானா ஒரு பெண்ணை விரும்புவதாகக் கூறிய போது சந்தோஷமாக அதை ஏற்றுக்கொண்ட உம்மா வால் என் விருப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எவ்வளவுதான் படித்திருந்தாலும் பதவி வகித்தாலும் எனக்குரிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க எனக்குத் தகுதியில்லை. முடிவு செய்யும் சுதந்திரம் எனக்கில்லை என்று கூறும் உம்மாவின் கூற்றுக்கள் எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை. வெளியில் சென்று தொழில் பார்க்கும் பெண்ணால் குடும்பப் பொறுப்பை சரிவரக் கவனிக்க முடியாதென்ற மாமியின் கொள்கை எனக்கு முரண்பாடாக அமைய, மாமியும் முகம் திருப்பிக்கொண்டார். அதனால் துணைக்கு என்று சொல்ல ஒருவரும் இல்லாமல் நானும் இவரும் தனித்துப் Guit G560T Tub.
சே.என்ன இது. இதையெல்லாம் இப்போது ஏன் நினைக்கிறேன். இந்தப் பைல்களையெல்லாம் கிளியர் செய்து இன்றைக்கே கொடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அது வேறு தொல்லை. பைல்களுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும்போது வீட்டு நினைவு வருகிறது. காலையில் வரும்போது அஸ்மா இடைவிடாது அழுது கொண்டிருந்தாள். இப்போது குழந்தை தூங்கியிருக் குமா ? ஆயா பால் அடித்துக் கொடுத்திருப்பாள். என்றாலும் ஒருமுறை வீட்டுக்கு டெலிபோன் செய்து பார்த்தால் என்ன ? டெலிபோனை நெருங்கி ரிசீவரை எடுத்து எண்களைச் சுழற்றி மறுமுனை எடுக்கப்படும் வரை காத்திருந்தேன். ரிங் போய்க்கொண்டே இருந்தது. எடுப்பதாய்க் காணோம். பொறுமையை இழந்து ரிசீவரை பொருத்திவிட்டு மீண்டும் வந்து இடத்தில் அமரும் போது எண்ணங்கள் கோலமிட்டன.
, 70

இவ்வளவு நேரம் பெல் அடித்துக்கொண்டே இருந்தும் இந்த ஆயா என்ன செய்துகொண்டிருக் கிறாள் ? குழந்தையை தூங்கவைத்துவிட்டு இவள் பாட்டுக்கு பக்கத்து வீடு, எதிர் வீடு என்று கதையளக்க போய்விட்டாளோ, இன்று போனதும் இவளைக்
கொஞ்சம் கண்டித்து வைக்கவேண்டும். எண்ணிய படியே வேலைக்குள் மூழ்கினேன்.
* மிஸ்.வாங்களேன்.கேண்டீனுக்கு போய்
என் கூட ஒரு கப் டீ, குடிச்சிட்டு வரலாம்'. குரல் கேட்டு நிமிர்ந்த என் பார்வைக்கு ஹெட் கிளார்க்கு இக்பால் தெரிந்தான். அந்த நேரத்தில் தடாக ஏதாவது குடித்தால் நல்லது என்று தொண்டையும் ஆசைப் பட்டது. ஆனாலும் " இல்ல.நீங்க போங்க மிஸ்டர் இக்பால்.இந்த பைல் முடிச்சிட்டு நான் அப்பறமா வாறேன் ” என்று அவனுடன் கேண்டின் போவதைத் தவிர்த்தேன். 'நாங்கல்லாம் கூப்புட்டா வரமாட் டீங்க.." என்று அவன் ஒரு மாதிரியாக இழுத்துக் கொண்டே சென்றது எனக்குப் பிடிக்கவில்லை. அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் ? ஏதோ இவனுக்கு மறுத்து வேறு யாராவது அழைத்தால் நான் போவேன் என்பதைப் போல். சே.என்ன ஆண்கள் இவர்கள். அவன் அழைத்தால் அதை ஏற்பதும் மறுப்பதும் என் விருப்பம். தங்களுடைய விருப்பத்தை என்மீது திணிப் பதுபோல். அதை மறுக்கும்போது எங்கள் மீது வீணா பழி சுமத்தி. கேவலமாய் எடைபோட்டு. எங்கள் பிரச்சினை இவர்களுக்கு தெரியுமா ?.
இந்த இக்பாலோடு இரண்டொரு நாள் தொடர்ந்து கேண்டீன் போக.அதை இங்குள்ள கழுகுக் கண்கள் தப்பாய் எடுத்து.முதுகெலும்பில்லாத யாரோ ஒருவன் அதை மொட்டைக் கடிதமாய், அசிங்கமாய் எழுதி வீட்டுக்கு அனுப்ப, அது இவர் கையில் கிடைத்து
71

Page 39
என்னைக் குற்றவாளியாய் நிறுத்தி.ச்சீ.நினைக்கக் கூட விரும்பாத நடந்து, முடிந்த சம்பவங்கள் இவை. அந்தக் கொஞ்ச நாளும் தெளிந்த நீரோடையாய் இருந்த எங்கள் வாழ்க்கையில் தான் எத்தனை சலனங் கள். இந்த உண்மை விளம்பிகளும், ஊர்க் குருவிகளும் எப்படித்தான் எல்லா இடங்களிலும் ஊடுருவினார் களோ.இப்படி எழுதி நிம்மதியான குடும்பங்களைக் கலைப்பதில் என்னதான் இலாபம் இவர்களுக்கு ? என்றாலும் இவர்மீதுதான் எனக்கு அதிக கோபம் ! எவ்வளவு காலம் என்னுடன் பழகி இருக்கிறார். சுமார் ஐந்தரை வருடங்கள் அவருடன் வாழ்ந்திருக்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்ட மனைவி யின் கூற்றைவிட இன்று எவனோ எங்கிருந்தோ எழுதிய கடிதத்தில் நம்பிக்கை இவருக்கு. அந்த ஒரு கணத்தில் எரிமலையாய் வெடித்து நியாபம் கேட்ட என்னை அடித்து.வேண்டாம் ! வேண்டாம் ! இப்போது அதை யெல்லாம் நினைக்கவே வேண்டாம்.
அலுவலக சுவர்ச் கடிகாரம் நாலரை என்று நேரம் காட்டியது. கைப்பையை எடுத்துக்கொண்டு வெளிக்கிளம்பும்போது தலை லேசாகக் கனத்தது. நெற்றிப் பொட்டுக்களின் விண் விண் என்று வேதனை கிளம்பியது. அதற்கு ஏற்றாற்போல் வானமூம் கறுத்து கருமேகக் கூட்டங்களுடன் பெரிய மழையொன்றை பூமிக்கு பொழியத் தயாராகிக்கொண்டிருந்தது. சிறிது தூரம் நடந்ததுமே சிலு சிலு என்று ஆரம்பித்த மழை சோவென்று கொட்ட ஆரம்பித்தது. கைப் பைக்குள் அடக்கமாகி இருந்த குடையை விரித்துப் பிடித்தபடியே பஸ் ஸ்டாண்டை அடைந்தேன். தலைவலி இன்னும் அதிகரிப்பதாய் தோன்றியது. மனதில் ஏற்பட்ட வீணான சிந்தனைகள் தான் தலைவலிக்குக் காரணம் என்பதை உணர்ந்திருந்தேன். இனிமேல் இப்படி அனாவசியமாக மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளக்கூடாது.
72

தீர்மானித்துக் கொண்டிருக்கும்போது மழை இன்னும் வேகமாய் ஊத்தியது.
தலைவலி அதிகரிக்க, மாத்திரை ஏதாவது போட்டால் தேவையில்லை என்றிருந்தது. மழைக்கு அடக்கமாய் குடைக்குள் ஒருக்களித்து கைப்பையைத் திறந்து பார்த்தேன். நல்லவேளை பெனடோல் கிடந்தது. இதைப் போட்டால் தலைவலி கொஞ்சமாவது குறையும். இல்லாவிட்டால் இதே இடத்தில் மயங்கி விழுந்தாலும் வியப்பில்லை. பெனடோல் போட தண்ணிருக்கு எங்கு போவது ?
பஸ் ஸ்டாண்டின் எதிராய் தெரிந்த அந்த டீக்கடை கண்ணில் பட்டது. மழைக்குப் பயந்துஅந்தக் கடையின் தாழ்வாரத்தில் சிலர் அடைக்கலம் தேடி இருந்தனர். பஸ் ஏதும் வருவதாய்க் காணோம். அதற்குள் அந்தக் கடைக்குப் போய் வரலாம். சாலையைக் கடந்து கடையை அடைந்தேன். குடையை மடித்து உள்ளே நுழைந்ததும் சிறிது தயங்கினேன். தெரிந்த முகங்கள் ஏதாவது இருந்தால் வீண் தொல்லை. அப்பாடா ! அப்படி ஒருவரும் இல்லை. எல்லாம் புது முகம்தான். தண்ணிர் மட்டும் கேட்டால் தருவார்களா ? அதுவும் இந்கக் கொட்டும் மழை நேரத்தில். ஒரு மாதிரி யாகப் பார்க்கமாட்டார்களா ? g5-Tés 625 5 le குடித்தால் பரவாயில்லை.
டீக்கும் சுடு நீருக்கும் சொல்லிவிட்டு பொறுமை யின்றி வினாடிகளை செலவிட்டுக்கொண்டே மேசையில். காத்திருந்தேன். அந்த நேரம் பார்த்தா அவர்கள் வர வேண்டும் ? அந்த மூவரும் நேராக நான் இருந்த மேசையை நோக்கித்தான் வருகிறார்கள். முகத்தில் ஓர்
73

Page 40
முரட்டுத்தன்மை ஒட்டி இருந்தது. பார்த்ததும் பயம் வரும் தோற்றம்.
ஒருவன் என்னைப் பார்த்து "ஹலோ" என்று லாவகமாகக் கூற, மூவரும் கதிரைகளை இழுத்து அமர்ந்து கொண்டார்கள். ' யாரிவர்கள்? ஏன் எனக்கு ஹலோ கூறவேண்டும் ' மனதுக்குள் சர்வரைத் திட்டிய படி இருந்தேன். திடீரென்று என் கால்களுக்குள் ஏதோ ஊருவதைப்போல் தோன்ற சட்டென்று கால்களை இழுத்து எடுத்தேன். ' புட் போல் அடிக்கலாமா " என்றான் ஒருவன். 'டேய் புள்ளி மான்டா " என்றான் மற்றவன். ' .ச்சி கன்றி ப்ரூட்ஸ். ராஸ்கல்ஸ் "
வாய்விட்டே ஏசியபடி எழுந்து விறு விறு என நடந்தேன். ' வேறு எவனுக்காகவாவது காத்துக்கிட் டிருப்பா...இப்ப நாம வந்ததால பத்தினி வேஷம் ". அவர்களில் யாரோ ஒருவன் உரத்துக் கூறுவது கேட்டது. இடையில் மறித்து "மேடம் டீ ?" என்ற கேள்விக்குறி யோடு நிற்கும் சர்வரை "நீயும் ஒன் டீயும் ” என்று எரிச்சலாய் ஏசியபடி நகர்ந்தேன்.
எங்குதான் பெண்களை நிம்மதியாக விட்டார் கள் ? நல்ல வேளை எனக்காகவே காத்திருந்ததுபோல் பஸ் வந்து நின்றது. அந்த நெரிசலுக்குள் கொஞ்சமாய் நெளிந்து ஏறிக்கொண்டேன். -
பஸ்ஸை விட்டு விடுதலையாகி இறங்கியபோது மழை விட்டிருந்தது, மழை நீரை அதிகமாய் வாங்கிய தரை, சக்சக் என்று கால்கள் பட ஓசை எழுப்பியது. புதிதாக நிறைய குளங்கள் முளைத்ததைப்போல் ஆங் காங்கே பாதையில் நீர் தேங்கி நின்றது. மிக அவதான மாய் சகதிகளைக் கடந்து நடந்தேன். இப்படித்தான் சமூகத்தில் இருக்கும் அழுக்குகளை பெண்கள் அவதான
74

மாய்க் கடக்க்வேண்டும் என்று நினைத்துக்கொண் GSL6ir.
வாச்ல் படியை ஏறியதுமே அவரின் முக்ம் தெரிந்தது. கைகளில் விரிக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த அந்த கிரிகெட் செய்திகள் அடங்கிய பேப்பருக் குப் பின்னால் பாதி மறைந்தும் மீதி மறையாமலும் தெரியும் அந்த முகத்தைப் பார்த்ததுமே இன்று ‘மூட்' அவ்வளவு நன்றாக இல்லை என்று தெரிந்தது. என்னைக் கவனித்ததாய் அவர் காட்டிக்கொள்ள வில்லை. சின்னச் சின்னக் கட்டிடங்கள் செய்து ப்ளொக்ஸ் விளையாடிக்கொண்டிருந்த மகன் அனஸ் தான் ஓடிவந்து கால்களைக் கட்டிக்கொண்டான். " உம்மா வந்தாச்சி.உம்மா வந்தாச்சி ’ இப்போதும்
அவர் பார்க்காமலேயே " ஏன் இவ்வளவு லேட் ?” கேட்டார். ஒரு கணத்தில் அந்தக் கேள்வி என்னை சுக்குநூறாய் உடையச் செய்தது. " ஏன் இவ்வளவு
லேட் ? ஏன் இவ்வளவு லேட் ? ஏன் இவ்வளவு லேட் " அவர் கேட்டது எனக்குப் பிடிக்கவில்லை. குற்றம் சுமத்தும் பாணியில், சந்தேகப்படும் பாணியில், சர்வாதி காரச் சாயலில் அவர் கேட்ட விதம் ? ஓ.ஆண்கள் எல்லோரும் ஒரே ரகமா ? ஒரு சில வினாடிகளில் இவர் கூட என்னைப் புரிந்துகொள்ளிாமல். காலையிலிருந்து எத்தனை சிரமங்களைச் சகித்திருக்கின்றேன். சின்னச் சின்ன ஆசைகளை யெல்லாம் தியாகம் செய்து கடமைக்காய்.குடும்பத்துக்காய். உழைத்து. ஒரு வார்த்தை 1 இன்னைக்கு மழையோட ரொம்பக் கஷ்டப் பட்டிருப்பே. சரியான டயடா ? என்று ஒரு வார்த்தை கேட்டால் என்ன? இதே நிலையில் இவர் இருந்து. வேலை முடித்துக் களைப்பாக இவர் வரும் நேரத்தில் வந்ததும் வராததுமாய் நான் அதே கேள்வியைக் கேட்டால்.
75

Page 41
எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு இதே நிலை தானா? இந்த நியாயங்கள் என்றுமே தீர்க்கப்படாதவை தானா ? விடை புரியா வினாக்கள் புழுவாய் மண்டை யைக் குடைய, தலைவலி எட்டிப் பார்க்கிறது.
மெளனமாய் உள்ளே சென்று உடை மாற்றி, மாத்திரை ஒன்றை விழுங்கி, தலைவலிக்கு தற்காலிகமாக நிவாரணம் அளித்து வீட்டு, வேலைகளை மீண்டும் தொடர்கிறேன்.
 


Page 42


Page 43
'
பெண்களது ஆக்கத்தி வெளிப்பாடுதான் அவர்க: கியப் படைப்பு. இந் நூ முன்னர் பெரும்பாலும் யாகவே வழங்கிவந்த இலக்கிய மரபு, எழுத்தறில் டன் எழுத்து இலக்கி விரிவடைந்துள்ளது.
பெண்கள் எழுதுகிறார் மாத்திரமல்ல முக்கியம். அ சமூகத்தில் அன்றாடம் நெருக்கடிகளை எவ்வாறு கிறார்கள், அவற்றுக்கு எள் வடிவம் கொடுக்கிறார்கள் முக்கியமாகும்.
இவ்வகையில் எமது பெண்களின் முன்னேற்றத் மாகக் கொண்ட கலை பெண்களின் படைப்புகள் கப்பட வேண்டும்.
=மெள. சித்

றனின் ஒரு எளின் இலக் ற்றாண்டுக்கு வாய்மொழி பெண்களின் பின் பரவலு பங்களுக்கும்
༥ ༈ ། கள் என்பது வீர்கள் தாம் அனுபவிக்கும் ) நோக்கு ப்வாறு கிரேல. " என்பதும்
சமூகத்தில் தை நோக்க பத்திறனுள்ள ஊக்குவிக்
திரலேகா
ரு. 50