கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலக வரலாறு 1

Page 1

寡a心国夏
கம்)
 ெ
#山鹉

Page 2


Page 3

உலக வரலாறு
(முதலாம் பாகம்)
字
全
இது
யாழ்ப்பாணம், பருத்தித்துறை திரு. த. இராமநாதபிள்ளை B. A.
அவர்களால் இயற்றி
யாழ்ப்பாணம் சைவப் பிரகாச யந்திரசாலையில் அச்சிடுவிக்கப்பெற்றது.
1951
Copyright Reserved (விலை ரூபா 5/

Page 4
நூலாசிரியர் த. இார மநாதபிள்ளை.
 

முன்னுரை
அருந்தமிழ் மறைகளையும் அருந்தமிழ்க் கலைகளையும் அமிழ் தினுமினிய அருந்தமிழ் மொழியினையும், அழகற்ற அடிமை வாழ்க்கையில் இன்பம் விழையும் கந்தமிழ் மக்கள் இகழ்ந்து தக் தாய் மொழியாகிய தமிழ்மொழியைப் பேசவே காணமுற்று எழுத்துக்கும் எழுத்தோசைக்கும் யாதொரு இயைபுமின்றி ஓர் எழுத்துக்குப் பல ஓசையும் ஓர் ஓசைக்குப் பல எழுத்து முடையதாய் இயங்கும் ஆங்கில மொழியை அல்லலுற்றுக் கற் கும் இக்கலிகாலத்தில் இயற்றமிழில் உலகவரலாறு என்னும் இந் நூலினை இயம்புவான் தொடங்குமுன் இந்நூலாராயும் முறைபற்றிச் சில குறிப்புக்களைத் தருதும். வரலாற்றுநூல் எழுதுவோன் வரலாற்று நூலினுக்கு இன்றியமையா கடை யில் எழுதுவதன்றிக் கற்றேர்க்கும் கல்லாதோர்க்கும் அரிச்சுவடி கற்கும் குழந்தைகளுக்கும் புலப்படக்கூடிய எளிய கடையில் எழுதுதலேப் போற்றதொழிக; எவ்வளவு எளியநடையில் எழுதினும் கற்க விருப்பமில்லாதோர்க்குச் சிருர்க்குரிய எளிய 15டையும் கடினமாகத் தோன்றுமாகலான், நூலோர் யாவரும் நூல்நுதலும் பொருளுக்கேற்ற நடையை ஆண்டு அணுவசிய மான திரிசொற்களைக் களைந்து இயன்றவளவில் எளியநடையில் எழுதுதலே சிறப்புடைத் தென்பது நுண்மாண்நழை புலமிக்க கல்வி நூலாசிரியருடைய கருத்தென்பதைக் கடைப்பிடிக்க. இதுநிற்க.
இந்நூல் கேட்போர் இயல் இசை நாடகமாகிய முத்தமிழினை யும் அகம் புறமாகிய இருவகை ஒழுக்கத்தினையும் ஓரளவாயி னும் ஆய்ந்தோராதல் கன்று. எழுத்தும் சொல்லும் பொருளும் கற்ற யாவர்க்கும் வரலாற்றுநூல் வாசித்தவுடன் புலப்படுமென மலையற்க. வரலாற்றுக் கல்வி என்பது இன்னகாலத்தில் இன்ன ஆண்டில், இன்ன காட்டில் இன்ன நிகழ்ச்சி நிகழ்ந்ததெனக் கற்றல் அன்று. இனி அரசகுடும்பத்தினர் வரலாறுகளும் சான்றேர், கலைஞர், புலவர், வணிகர் என்றற் ருெடக்கத்தோ ருடைய வாழ்க்கை வரலாறுகளும், காலத்துக்குக்காலம் மக்கட் கூட்டங்கள் நடாத்திய போர்வரலாறுகளும் வரலாற்று நூலின்

Page 5
II
கண் இடம் பெறுவனவாயினும் சரித்திர வாராய்ச்சிக்கு இவை யெல்லாம் இன்றியமையாதவை அல்ல. வரலாற்று நூலின் சிறப்புடை கோக்கம் யாதெனிற் கூறுதும்; நூல் கேட்போர் நூல் கேட்டலின் பயணுகத் தம் வாழ்க்கையைச் சீர்மையுறச் செய்தலே என்க. சனசமுகம் சீர்மையுற்ருலன்றி ஒருவன் நாக ரிகமாக வாழமுடியாதாகலான் சனசமுகத்தின் இயக்கங்களை ஆராய்தல் அவசியமாகும். பற்பல காலத்திலிருந்த மக்கட் கூட் டங்கள் என்ன என்ன இயக்கங்களில் ஈடுபட்டவை என்றும், எத்தகைய வாழ்க்கையை விரும்பியவை என்றும், என்ன பலன்களை அடைந்தவை என்றும் தெளிதல் சரித்திரக் கல்வி யின் மாநோக்கமாகும். இனி ஒர் மக்கட் கூட்டத்தினரின் ஒர் இயக்கம் அவர்களுடைய பிறிதோர் இயக்கத்தினை எங்ங்னம் பெயரச் செய்ததெனவும், எங்ங்னம் சிதைத்ததெனவும், இயக் கங்கள் ஒன்று ஒன்றற்குத் துணையாயினாவோ அன்றி முரணுகிக் கெடுநெறியிற் செல்லா நின்றனவோ எனவுப் , ஒரு நாட்டினரு டைய ஒர் இயக்கம் பிறிதோர் கா.டினரைக் கவர்ந்ததோ அன்ருே எனவும், ஒரு தேயத்தவருடைய காகரிகம் பிற தேயங் களிற் செறிந்ததோ அன்ருேவெனவும் மக்கட் கூட்டங்கள் தோன்றிகின்றழியும் வரலாற்றினையும் காரண காரிய முறை யாக ஆராய்தலே வரலாற்று நூலாராய்வோரின் முழு கோக்க மாகும். இனி இயக்கங்கள் காரண காரியத் தொடர்புடையவை என்பதையும் ஓர் இயக்கத்திற்குமுன் நிகழ்ந்த பல இயக்கங்க ளுள் ஒன்றும் பலவும் அதற்குக் காரணமாகும் என்பதையும் ஒரு தேசத்தில் ஒரு காலத்தில் நிகழும் ஒர் நிகழ்ச்சியின் பலன் பல தேசத்திற்குச் செறியும் என்பதையும் உதாரண முகத்தான் காட்டுதும்.
ஆரியர் புலம்பெயர்தல்
கி. மு. 2000 ஆண்டு தொடக்கம் கி. மு. 500 ஆண்டு ஈருக நிகழ்ந்ததோர் நிகழ்ச்சியின் பலாபலன்களை கி. பி. இருபதாம் நூற்றண்டில் காம் துய்த்தற்குரியோராக இருக்கிருேமென உரைக்கலாம். மேற் குறிக்கப்பட்ட காலத்தில் மத்திய ஆசியா விலுள்ள புற்றரைகளில் ஆடு, மாடு மேய்த்து நாடோடிகளாய் வாழ்ந்திருந்த ஆரிய மக்கள் தம் தேய சுவாத்தியம் மாறுத லடைந்ததன் பயனகவோ, பிற காரணத்தாலோ ஆரியானவை

ITI
விட்டுப் பிற நாடுகளுக்குப் புலம் பெயரத் தொடங்கினரெனக் கூறுட. இப் புலம்பெயர்தல் நிகழ்ந்த காலத்திலே மேல் காடு கள் என்னும் ஐரோப்பிய நாடுகளில் ஆரியர் குடியேறினர். அவ்வாரியர்கள் இக்காலத்து நாகரிக மக்களாக விருத்தியடைக் தனர். இப் புலம்பெயர்தல் நிகழ்ந்ததென ஆரியக் கூட்டத்தி னர் பலருடைய சரித்திரங்களால் புலப்படுகின்றது. அன்றியும் ஆரியம், பார்சியம், யவனம் இலற்றின் சிலாவ் செர்மானியம் ஸ்காந்திநேவியம் என்னும் பல மொழிகளையும் ஆராய்ந்த மொழிநூல் வல்லோர் யாவரும் இம்மொழிகளின் இலக்கண வமைப்புக்கள் ஒருதன்மையவெனவும் நாகரிகமுறத ஆதிமக் களுக்கும் இன்றியமையாச் சொற்களாகும் பெற்றேர் பெயர், உறவினர் பெயர், பஞ்சபூதப் பெயர், விலங்குப் பெயர் முதலி யவையெல்லாம் ஆதியிலுள்ள ஆரிய மொழியின் சிதைவுகளே எனவும் காட்டுகின்றனர். ஆரியர் பார்சியர், யவனர், உரோ மர், சிலாவோனியர், செர்மானியர், ஸ்காந்திநேவியர், இந்தியர் எனப் பல கூட்டங்களாகப் பிரிந்து பல தேயங்களுக்கும் புலம் பெயர்ந்து பலவிடங்களிலும் குடியேறிக் கமத்தொழிலை விருத்தி செய்து, நாகரிக முறையாக இன்று வாழ்கின்றனரெனத் துணி கின்றனர். ஆகலின் இப் புலம்பெயர்தல் இமயக்தொட்டு அல்பு மலைவரையும் உள்ள தேயங்கள் யாவற்றிலும் நடந்ததோர் நிகழ்ச்சியாகும். சுருங்கக் கூறின் வடபால் வாழ்ந்த ஆரியர் தென்பாலுள்ள நாடுகளுள் புகுந்து, ஆங்கு வாழ்ந்த மக்களைப் போரில் வென்று அடிமைகளாக்கி வாழ்ந்தனரென மொழிய லாம். இப்போர் இந்தியா, பார்சியா, யவனம், இத்தாலி முதலிய தேயங்களில் ஒரே காலத்தில் கடந்ததென மல்ே யற்க. அன்றி இந்திய தேசங்களில், ஆரியர்க்கும் தென்னவர்க்கும் கடந்த போரை அறிந்தே ஆரியக் கூட்டத்தினராகிய பார்சியர் தாமும் தம் காட்டிலுள்ள தென்னவராகிய சுமெரிய சாலடிய ரோடு பொருதனரெனவும் கருதற்க, வடபாலிருந்த ஓர் ஆரியக் கூட்டத்தினரைத் தம் சாதியாரெனவே அறியாமல் இருந்தனர் எனக் கூறலாம். யவனர்க்கும் யவன தேயத்துப் பழங் குடிகட் கும் கடந்த போர் கி.மு, 1000 அளவில் கடந்ததாக, உரோமர்க் கும் இத்தாலியப் பழங்குடிகட்கும் கடந்த போர் கி. மு. ஐந்தாம் நூற்ருண்டில் நிகழ்ந்திருத்தல் வேண்டும். இனி ஆரியர்க்கும் இந்தியப் பழங்குடிகட்கும் நடந்த போர் கி. மு. 3000 ஆண்டு

Page 6
IV
அளவில் நிகழ்ந்ததென்ப. வடவரே தென்னவரிலும் சீர்திருந்திய மக்களெனவும் வடவரே தென்னவரைப் போர்கள் யாவற்றிலும் வென்றவர்களெனவும் ஆசிரியர்கள் சிலர் செப்பினர். அக்கூற்று வரலாற்று வல்லோர் யாவராலும் இன்று போலியென இனிது காட்டப்படுகிறது. தென்னவராகிய திராவிட மக்களின் நாகரிக வாழ்க்கையைக் கண்டு ஆரியர் அழுக்காறுற்றனர் என்ப. மேலும் இந்துகதிக் கரையில் வசித்த தாசுயுக்கள் என்னும் திராவிடக் குழுவினர் பொன்னுபரணங்களே அணிந்து மேன் மாட வீடுகளில் வாழ்தலைக் கண்டும் அழுக்காறுற்றனர் என வேத வாக்கியங்களை ஆராய்ந்தோர் துணிகின்றனர். இஃதொரு புறமாக தென்னவராகிய சுமெரியசாலடியார் பார்சியரிலும் பார்க்க நாகரிகம் அடைந்திருந்தனரெனவும் யவனரிலும் பார்க்க மைசீனியரும் கிறீற்றத் தீவாரும் சீர்திருந்தி வாழ்ந்தனரெனவும் பண்டைப் பொருளாராய்ச்சி வல்லோர் காட்டுகின்றனர். இவ் வாராய்ச்சிகளின் துணிபு கானவராகிய மக்கட் குழுவினரே நாகரிகமுற்ற மக்களைப் போரில் பெரும்பாலும் வெல்லுவார்க ளென்னும் வரலாற்றுண்மையை வலியுறுத்து கின்றது. இது நிற்கத் தென்னுடுவந்த ஆரியரைத் தமிழர் பலமுறை புடைத் துத் துரத்தினர் எனவும் ஆரியர் போர்முறையை விட்டுத் தந்திர முறையால் தமிழ்நாடுகளுள் நுழைந்து சில விடங்களில் உறைந்தன ரெனவும் கூறுப. ஆதலின் வடபாலிருந்துவந்த ஆரிய காகரிகத்திலும் தென்பாலிருந்த தமிழ்நாகரிகம் சாலச் சிறந்த தென்பதையும் வடபாலிருந்து வந்து குடியேறியோரைத் தென்னவர் சீர்திருத்தினர் என்பதையும் வரலாறுகளைக் கற்றுக்
ST600T 35.
அவுணர்
இவ்வண்ணம் ஆரியக்கூட்டத்தினர் பிறசாதியாரோடு கலந்து தம் காகரிகத்தை இழந்தும் பிறர் நாகரிகத்தைத் தழுவியும் புதிய சாதியின்ராகி உலகிற் பல தேயங்களிலும் குடியேற்றங்களை நிறுவி அரசியல் நடாத்திவந்தனர். மேனுடு களில் ஆரியக் குழுவினராகிய உரோமருடைய அரசே வல்லரசா யிற்று. உரோமர் இத்தாலிய நாடுகளில் குடியேறியிருந்து மத்தித்தரைக் கடற்கரையிலுள்ள காடுகள் யாவற்றையும் தம் மாட்சிக்குள் கொணர்ந்தனர், உரோமருடைய ஆணை செருமனி

W
ஒழிந்த ஏனைய நாடுகள் எங்கும் சென்றதெனச் சொல்லலாம். இங்ங்னம் உரோமர் 15ாகரிகமும் அதன் வழித்தாய கதலிக் மத மும் ஐரோப்பா எங்கும் பரம்பிப் பல நூற்றண்டுகளாகத் திகழந்த காலத்தில் உரோமர் பலதேயத்து மக்களோடு வணிகம் நடாத்திப் பொருளிட்டிச் செல்வமுற்றிருந்தனர். உரோமர் காலக்கிரமத்தில் தம் பண்டைய அறத்தாற்றினின்றும் வழுவிச் சிற்றின்பம் விழைதலே வாழ்க்கையின் நோக்கமென எண்ணத் தொடங்கினர். அக்காலத்தில் உரோமர் பலமுறை கட்சிபிரிந்து போராடினர். உரோமருடைய தனிக்கோலரும் கொடுங்கோ லோச்சிக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் இன்பங் களில் தம் காலத்தைக் கழித்தனர். இத்தகைய சந்தர்ப்பத்தில் ஆசியாக் கண்டத்தில் இராட்டறி மங்கோலியா என்னும் மத்திய காடுகளில் வசித்த ஹ"ணர் என்னும் அவுணர் கி. மு. இரண் டாம் நூற்றண்டிற் சீனரைத்தாக்கச் சீனர் அவர்களை அஞ்சி 1800 மைல் நீளமான மதிலும், இடைஇடையே காவலரண் களும் கட்டிக் காவல்செய்தனர். பின்னர் அவுணர் கி. பி. பதினுெராம் பன்னிரண்டாம் நூற்றண்டுகளில் சீனதேயத்தி
னுள் நுழைந்து சீனத்தில் வல்லரசொன்றை காட்டி யிருந்தனர். இவ் வவுணரில் ஒருபாலார் கி. பி. 5ாலாம் நூற்ருண்டளவில் இந்து5தியைக் கடந்து குப்தகுடும்பத்து ஆழிவேந்தரை வென்று இந்தியரோடு கலந்தனர். அவுணருள் பிறிதோர் கூட்டத்தினர் உரோமருடைய ஆட்சி காடுகளை அணுகி எதென்ஸ், உரோம் முதலிய நகரங்களைத் தாக்கினர். அவுணருடைய வேந்தன் அற்றில்லா என்பவன் சனங்களைக் கொன்று திரிந்தானென்ப. அவுணர் செருமானியரின் போராற்றலுக்கஞ்சி உரோம நாடு களுக்குள் கி. பி. நாலாம், ஐந்தாம் நூற்ருண்டுகளில் புகுந்து உரோம ராச்சியத்தைப் பங்கப்படுத்தி அவுணராச்சியங்கள் பல காட்டினர். உரோமராச்சியம் அழிவெய்தியதாக மேலாபிரிக் காவிலும், ஐபீரியாவிலும், கொத்தரும் அவுணரும் தம் ஆணே யைச் செலுத்தினர். கல்லியாவில் செர்மானிய கூட்டத்தினர் குடிஏறி ஓர் வல்லரசை நாட்டினர். பிரித்தானியாவிலே கி. பி. நான்காம், ஐந்தாம், ஆரும், ஏழாம் நூற்ருண்டுகளில் வடக்கர் என்னும் கடற்கள்வர் குடியேறிப் புதியதோர் சாதியினராயினர். ஆதலின் கூணர் என்னும் ஒளணர் குடியேறிய தேயங்கள் எல் லாம் நாகரிக வாழ்வை இழந்தன. இங்ங்ணம் கி. பி. ஆரும்

Page 7
Wi
நூற்ருண்டு தொடக்கம் கி. பி. பன்னிரண்டாம் நூற்ருண்டு. வரையும் இடையிட்டகாலம் குழப்பக்காலமாக இருந்தமையால், மேனுட்டுமக்கள் கல்விகற்காதிருந்து கானவராயினர். அஞ் ஞானம் மிகுந்த அக்காலத்தில் உரோமன்கதலிக் குருமார் தம் ஆசிரமங்களில் யவனக் கல்வியை ஒம்பிவந்தனர். உரோமன் கதலிக் குருமாரும் துறவிகளும் கிறித்துமதத்தைப் பரப்பிக் கானவரைக் கிறித்தவராக்கி கல்லாற்றுப் படுத்தினர். அவுண ருடைய புலம் பெயர்தலே ஐரோப்பிய காடுகளில் புதிய சாதி களும், புதிய அரசுகளும், புதிய மொழிகளும், புதிய காகரிகங் களும் தோற்றுதற்குக் காரணமாயிற்றெனத் துணியலாம். வட வர், தேனர், செர்மானியர் என்னும் ஆரியசாதியினர் பலர் கி. பி. 400 முதல் - கி. பி. 1066 வரையும் இங்கிலாந்திற் குடியேறிக் கலந்திருந்து அங்கிலர் என்னும் சாதியினராகி அங்கில மொழி யைத் தோற்றுவித்தனர்.
இயக்கப் பின்னம்
இனி சமயக் கிளர்ச்சியால் புதிய நாகரிகம் தோற்றுமென்ப தைக் காட்டுதும். கி. பி. 8-ம் நூற்ருண்டில் முகமதியர் வல் லரசு நடாத்தத் தொடங்கி உரோம5ாடுகள் பலவற்றில் தம் பிறைக்கொடியை காட்டினர். ஐபீரியாவிலே முகமதியர் அவுணரைக் கலைத்தடித்து முகமதிய அரசை காட்டிக் கல்வியை வளர்த்தனர். முகமதியர் உரோமநாடுகளை மாத்திரம் தாக்கின ரன்றி இந்தியாவினுள்ளும் புகுந்து புதிய இராச்சியங்களை காட் டினர். முகமதியர் தம் சமயத்தோர்க்குச் சமத்துவம் அளித்துச் செல்வரையும் கல்கூர்ந்தோரையும் சமமாக எண்ணி நீதிசெலுத் தினராதலின் இந்தியர் பலர் முகமதியராயினர். கி. பி. 10-ம் நூற்ருண்டுமுதல் 15-ம் நூற்ருண்டுவரையும் முகமதியர் சீன தேயத்திலும் இந்திய சீனத்தீவுகளிலும் இந்திய சமுத்திராந்தத் தீவுகளிலும் வடமேலாபிரிக்காவிலும் ஆவணங்களை நிறுவி வணிகம் நடாத்தியது மன்றித் தாம்சென்ற விடமெல்லாம் முக மதியசமயப் போதனைகளைச் செய்து சீனவிலும் இந்தியசீனத் தீவுகளிலும் மலாக்காவிலும் பலகோடி சனங்களை முகமதிய ராக்கினர். இம் முகமதியர் சிற்பம், சித்திரம், வைத்தியம் சரித் திரம் முதலிய பல கலைகளை ஓம்பிக் கல்வியை வளர்த்தனரென்ப.

W
இனி, கி. பி. 1453-ல் முகமதியரில் ஒரு கூட்டத்தினராகிய
துருக்கர் பைசந்தியத்தைத் தாக்கிக் கைப்பற்றினராக அவ ணிருந்த யவனர் தம் ஏடுகளைக்கொண்டு இத்தாலியில் கல் வியை ஒம்பும் வள்ளல்களிடம் சென்றனர். இத்தாலியில் கி. பி. 11-ம் , நூற்ருண்டு தொடக்கம் கல்வி புத்துயிர் பெற் றது. ஆதலின் அவுணர் முகமதியர் முதலியோர் புலம் பெயர் தலே மேனுடெங்கும் நிகழ்ந்த கல்விப் புனருத்தாரணத்திற்குக் காரண மெனலாம். இனிக் கல்விப் புனருத்தாரணம் என்னும் இயக்கமே சமயக் கிளர்ச்சிக்குக் காரண மென்பதை விளக்கு வாம். இத்தாலி, பிராஞ்சு, ஜெர்மனி, இங்கிலாந்து என்னும் தேயங்களில் கி. பி. 14-ம், 15-ம் நூற்ருண்டுகளில் கல்வி புத் துயிர் பெற்றது. ஆங்காங்குக் கலாசாலைகளும் பல்கலைக் கழ கங்களும் அச்சுக்கூடங்களும் தோன்றின. கல்வி புத்துயிர் பெற்றதன் பயனகவே புதிய கலைகள் மேனடுகளில் தழைத் தோங்கின. பெளதிக நூலோரும், கணிதநூலோரும், மருத்து நூலோரும், நுண்கைவினைஞரும், கவின்கலேவல்லோரும் பல மொழிப் புலவர்களும் மேனுடெங்கும் மிகுந்தனர். கல்வியும், கலையும் வளரச் சமயவுணர்ச்சி புத்துயிர்பெற்றது. கற்ருேர் பலர் உரோமன்கதலிக்குருமார் கூறும் போதனைகள் தவருனவை என் பதையும் கதலிக் சமயக்கொள்கைகள் பல அ5ாகரிகமானவை எனவும் கதலிக்சமயவழிபாடு தீநெறியின்கண்ணே செலுத்து மொழிய, முத்திகெறியைக் காட்டாதெனவும் உரைத்தனர். ஆதலின் கி. பி. 15-ம், 16-ம் நூற்றண்டுகளில் மேனடுகள் எங் கும் உரோமன் கதலிக்மதக் கொள்கைகள் போலிஎனக் கண்டிக் கப்பட்டு பிரிவினைமதம் போதிக்கப்பட்டது. பிரிவினைமதக் கிறித்தவர் செர்மனிதேயத்தில் கலகம் விளைத்தனர். செர்மானி யர் இருகட்சியினராகப் பிரிந்து முப்பதாண்டுச் சமயப்போரை கடாத்தினர். பிராஞ்சு, இங்கிலாந்து என்னும் தேயங்களிலும் 17-ம் நூற்ருண்டில் இடையிடையே சமயக்கலகங்களும், போர் களும் நடந்தன.
இனி, கல்வியும், கலைகளும் கனி ஆராயப்பட்டு வந்த பெரு
முயற்சியின்பயணுகவே, கொடுங்கோலிலும் குடியரசு சிறந்த
தெனப் பிராஞ்சு, இங்கிலாந்து முதலிய தேயங்களிற் பிரசாரம்
செய்யப்பட்டது, குடிகளைக் காத்தோம்பாத கொடுங்கோலி
E3

Page 8
VI
லும் பார்க்கக் கல்வியின் வளர்ச்சியே பிராஞ்சிய அரசியற் புரட் விக்கு முக்கிய காரணமெனக் கூறலாம். கல்வியும் கலைகளும் வளர வளர யந்திரங்களைக்கொண்டு பண்டங்களைப் பெருங் தொகையாகவும் மலிவாகவும் ஆக்கப் பயின்றனராக, மேனடு களில் தொழிற்கட்சி, பொருட்கட்சி என இருகட்சிகள் தோன் றிப் போராடுகின்றன. கி. பி. 1917-ல் ரூஷ்யதேயத்திலே தொழிற்கட்சியார் என்னும் பொதுவுடைமைக் கட்சியர் தலை யெடுத்துப் பொருட்கட்சியாரை வென்று தம் சமதர்மக் கொள் கையை நாட்டி அரசியலை நடாத்தி வருகின்றனர். இங்ங்னம் சரித்திர நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்ருய் ஆற்றெழுக்காய்த் தொடர்ந்து வருதலை ஒர்ந்துகாண்க. மக்களுடைய சமுகத்தில் இயக்கங்கள் பல தோன்றுதலையும் ஓர் இயக்கம் எவ்வளவு காலம் நிலைக்கின்ற தென்பதையும் ஓர் இயக்கம் பிறிதோர் இயக் கத்தோடு இயைந்து வருவதையும் ஒன்று ஒன்றற்குக் காரண மாதலையும் தேர்ந்து தெளிக. இங்ங்ணம் காகரிகமும் ஒவ்வோர் தேயத்தில் தனித்தனி வளர்வதன்றி ஒரு தேயத்திலிருந்து பிறி தோர் தேயத்திற்குச் சென்றுசெறிந்து மக்கள் யாவர்க்கும் பயன் படுதலையும் நுணுகி ஆராய்ந்தறிக.
கலைச்செறிவு
இனி கலை எங்ங்னம் செறியும் என்பதை வரைகு தும், கி. பி. இருபதாம் நூற்ருண்டு சரித்திரக் கலை வளர்தற்கு உவந்த காலமாயிற்று. விலங்கியல் நூலை ஆய்தற்கு விலங்குகள் தேவைப்படுதலும் பொருட்டிரிபு நூலைப் பயிலுதற்குப் பரி சோதனைச் சாலைபும், லோகங்களும், கறள்களும், உப்புக்களும் எரிநீர்களும் எனப் பல்வகைப் பண்டங்கள் தேவையாதலும் போலச் சரித்திர நூலை ஆராய்தற்குச் சாசனங்கள் வரலாற் றுக் குறிப்புக்கள், கல்வெட்டுக்கள், மட்கலம், பொற்கலம் முத லிய கலங்களில் எழுதப்பட்ட ஓவியங்கள், புதைபொருட்கள் பழக்க வழக்கக் குறிப்புக்கள் முதலிய பண்டைப் பொருட் கள் தேவையாகும். இதகைய பொருட்களைத் தேடுதற்கு இருபதாம் நூற்ருண்டிற் பல வசதிகள் ஏற்பட்டன. நீராவி வண்டிகள், யந்திரக் கப்பல்கள், கெய்யெரிவண்டி கள், வானவூர்திகள், உதை வண்டிகள் முதலிய ஊர்தி

ΙΧ
கள் மலிவாக ஆக்கப்பட்டமையால் மக்கள் ஒரு தேசத்திலிருந்து பிறிதோர் தூர தேசத்திற்கு விரைவாகப் போக்குவரவு செய் யக்கூடியதாக இருக்கிறது. பல தேயங்களிற் சென்றிருந்து பல மொழிகளைக் கற்று ஒப்புநோக்கிய மொழிநூல் வல்லோர் உல கத்து மொழிகள் எல்லாம் இன்ன இன்ன இனத்தைச் சேர்ந் தவையென வகுத்துக் காட்டினர்.
இம் மொழிநூலாராய்ச்சியின் பயனுகவே, உரோமர், யவ னர், அங்கிலசாய்க்சனர், சிலாவோனியர், வடக்கர், ஆரியர் என்றற்ருெடக்கத்தினர் யாவரும் மத்திய ஆசியாவிலுள்ள ஆரி யான என்னும் காடுகளிலிருந்து பல காடுகளுக்கும் புலம் பெயர்ந்திருத்தல் வேண்டுமெனத் துணியப்பட்டது. இனிக் கல் வெட்டு நூல் வல்லோரும் சிற்பநூல் வல்லோரும், ஒவியநூல் வல்லோரும் உலகத்து கானுபக்கங்களுஞ் சென்று, பண்டைய நகரங்களை அகழ்ந்து பார்த்துத் தமக்கு வேண்டிய பண்டைப் பொருட்களை எடுத்து ஆராய்ந்து, கவின் கலைகளின் வரலாறு களை எழுதினர். இவ்வண்ணமே பழக்க நூல் வல்லோரும் மக்கட் கூட்டங்கள் பலவற்றின் பழக்கவழக்கங்களைப் படித்து இன்ன இன்ன சாதியினர் இன்ன இன்ன காலத்தில் இன்ன இன்ன பழக்க வழக்கங்களை உடையவராய் இருந் தனரெனச் செப்புகின்றனர். இத்தகைய ஆராய்ச்சிகள் எல் லாம் 19-ம் நூற்றண்டில் தொடங்கப்பட்டன. எனினும் 19 ம் நூற்ருண்டு மேனுட்டுச் சரித்திர வல்லோர் நாகரிகம் ஒரு தேயத்திலிருந்து பிற தேயங்களுக்குப் பரம்பும் என்னும் வரலாற்று உண்மையை உணர்ந்திலர். இரபேட்சன்', 'பிறஸ் கற்', 'இரைலர் முதலிய வரலாற்றுசிரியர்கள் நாகரிகம் சிலசில தேயங்களில் குறித்த, குறித்த காலங்களில் தோன்றி அழிந்தன எனவும், ஒரு தேயத்தின் நாகரிகம் பிற தேயத்திற்குச் செறிய வில்லை எனவும் உரைத்தனர். மேனுட்டுச் சரித்திர நூலாசிரியர் கள் சாதிகள் பல நாகரிகத்தால் ஒப்புடையவாக இருத்தலையும் ஒரு சாதியினர் வளர்த்த கலைகள் பிறிதோர் சாதியினரால் வளர்க்கப்பட்டதையும் கவனித்தனர். உதாரணமாக யவன சிற்ப முறைகளும் ஓவிய முறைகளும், உரோமருடைய முறை களோடு ஒப்புடையவாக இருத்தலைக் கண்டு, யவன நாகரிகத்தி லிருந்து உரோம நாகரிகம் தோன்றியதெனத் தெளிந்தனர். நாக

Page 9
X
ரிகம் ஒரு சனசமுகத்திலிருந்து பிறிதோர் சமுகத்தின்கண் சென்று செறியுமென்பதை அறியாதிருந்தனராதலின், ஆசிரி யர்கள் காகரிக வொப்பிற்குக் காரணமாகப் போலி நியாயங்கள் கூறினர். மனித சுபாவம் யாண்டும் ஒரேதன்மையதாகலின் ஒரு மக்கட் குழுவினருடைய காகரிகத்தோடும் கலை முறைகளோடும் பிறிதோர் கூட்டத்தினருடைய நாகரிகமும் கலைகளும் ஒப்பாயி ருத்தல்கூடுமென நவின்றனர். அன்றியும் உலகத்து மக்கள் எல் லோரும் ஆதாம் ஏவாள் என்னும் ஆதிப் பெற்ருரின் சந்ததி யினரே எனவும், பிரளயத்தில் கடவுளின் கருணை பெற்றுத் தப்பிய கோவா என்பவனின் சந்ததியாரே உலகெங்கும் பரம் பினரெனவும் பழைய பைபிள் என்னும் யூத கிறித்தவ சமய நூல் கிளந்தமையால் ஒரு தேயத்தோருடைய நாகரிகம் தூர தேய 9 தோ நடைய காகரிகத்தோடு பல ஒப்புக்கள் உடைய தாக இருத்தல் இயல்பே எனப் புகன்று, மேனுட்டுச் சரித் திர வாசிரியர் சிலர் தம் புல்லறிவைக் காட்டினர். இனி மக்கள் புலம்டெயர்தலே நாகரிகவொப்பிற்குக் கா ர ண மெனின், அது ஒக்கும். ஒரு காட்டில் வாழ்ந்த ஆரியக் கூட் டத்தினருடைய ஒரு கிளை இந்திய காட்டினுட் புகுந்தும் ஒருகிளே ஐரோப்பியாவினுட் புகுந்தும் இருவேறு சாதியின ராகத் தோன்றியிருக்கிருர்களாயினும் சிலச்சில நாகரிகப் பண்பு களால் ஒப்பாயிருக்கின்றனர். ஈண்டு இப்புலம் பெயர்தலால் விளைந்த நாகரிகங்களின் ஒப்பை ஆராய்கின்றிலம். இனிப் பல் வேறு சாதியினராகிய மக்கள் 5 கரிகத்தால் ஒப்புடையவரா யிருத்தற்குக் காரணம் என்னவெனின், இரு சாதிகள் ஒன்ருே டொன்று கலந்திருத்தல்கூடுமெனின் அது பொருந்தும். ஆனல் மக்கள் கடக்கமுடியாத பெருங் கடல்களும் பாலை நிலங்களும் இடையிட்ட இரு தூர தேயங்களில் வாழும் இரு வேறு சாதி யினர் நாகரிகத்தால் மிக ஒப்புடையவராயின் மக்கட் கூட்டத் தின் புலம்பெயர்தலே காரணமாகும் என்பது பொருந்தாது. ஆதலின் பிற காரணம் வேண்டப்படும். அக்காரணங் தெரியாது மயங்கிய இரபேட்சன், பிற்ஸ்கற், இரைலர் என்றற்ருெடக்கத் தோர் போலி நியாயங்களைக் கூறினர். இனி இருபதாம் நூற் முண்டில் இருந்த ஆசிரியர் எலியற் சிமித் என்பவர் பல நாக ரிகங்களைப் படித்து 5ாகரிகம் ஒரு தேயத்திலிருந்து பிற தேயங்

XIII
களுக்குச் செறியுமென்னும் கொள்கையை நாட்டினர். மக்கட் கூட்டங்கள் கூட்டமாகப் புலம்பெயராத இடங்கட்கும், வணி கர், சமயப் பிரசாரகர்கள், யாத்திரீகர், ஊர் காண்போர் முத லியோர் இடையிடையே சென்றனரெனவும் கலே இங்ங்ணம் ஒரு காட்டிலிருந்து பிற நாடுகளை அடையுமெனவும் ஒருகாலத் தில் ஒரு தேயத்தில் வளர்ந்து அழிவெய்திய கலை இங்ங்ணம் பிறிதோர் தேயத்தில் திரிபடைந்து நிலவுமெனவும் காட்டினர்.
பெளத்த சமயமும் அதன்வழித் தோன்றிய கலைகளும் கிரி யைகளும் பெளத்த காகரிகமும் பத்து தூற்ருண்டுகளில் இக் தியாவிலிருந்து வடக்கே சிதியா, இராட்டறி, மங்கோலியா, தீபத்து முதலிய தேயங்களிலும், மேற்கே பார்சியா, பாபி லோனியா முதலிய நாடுகளிலும், தெற்கே இலங்கைத் தீவி லும், கிழக்கே கீழ் இந்தியத் தீவுகளிலும், சீன தேயத்திலும் சீன தேயத்திலிருந்து ஜப்பான் தீவுகளிலும் பரவியிருத்தல், பெளத்தருடைய சமயநூல் வரலாறுகளாலும் சீனருடைய வர லாறுகளாலும் பாகியன் ஹியன்சங் முதலிய யாத்திரீகர் எழு திய குறிப்புக்களாலும் பெளத்த நாகரிகவாராய்ச்சி வல்லோ ருடைய குறிப்புக்களாலும் இனிது புலப்படும். பெளத்த பிக் குக்களே பிராமி இலிபிகளை எடுத்துச்சென்று சிங்களர்க்கு எழுத்துப் பயிற்றினர் எனவும், பிராமி இலிபி என்னும் அசோ கர் காலத்து எழுத்தே பெளத்தம் பரவிய பல நாடுகளில் பர வியதெனவும் பெளத்தரே சீனருக்கு ஒலியெழுத்தைக் கற்பித் தனர் எனவும் பெளத்த பிக்குக்களிடமே ஜப்பானியர் எழு தப் பயின்றனர் எனவும் ஆராய்ச்சி வல்லோர் துணிகின்றனர், இத்துணிபை வரலாறுகளில் ஆராய்ந்து காண்க. இனி முக மதிய சமயமும் நாகரிகமும் கி. பி. 9-ம் நூற்ருண்டுகளில், நாடு கள், ஆறுகள், காடுகள், வனுந்தரங்கள் கடல்கள் எல்லாம் கடந்து மேற்கே அத்திலாந்திக் சமுத்திரம் முதல் கிழக்கே பசு பிக் சமுத்திரம்வரையும் வடக்கே சைபீரியப் பணிகாடு தொட்டு தெற்கே கீழிந்தியத் தீவுகள் வரையும் செறிந்திருத்தல் பெரிய விநோதமென எண்ணலாம். முகமதியர் தம் போர்வலியால் தம் சமயத்தை மேலா பிரிக்க காடுகளிலும் ஸ்பெயின் தேயத்திலும் ஐரோப்பிய துருக்கியிலும் சிதியாவிலும், பார்சியாவிலும் இக் தியாவிலும் பரப்பினர் என்பது ஒருபுடை பொருந்துமாயினும்

Page 10
ΧΙΙ
கீழ் இந்தியத் தீவுகளினும் சீனக் கரை நாடுகளிலும் அங் நுனம் பரப்பினர் எனக் கூறுதல் தவறு. சீனக் கரைக்கு முக மதியப் படைவீரர் ஒருபோதும் போகவில்லை என்பது யாவர்க் கும் தெரியும். அன்றியும் போர் வலிமையால் நாட்டும் சமயம் ஒருபோதும் நிலைக்கமாட்டா தென்னும் உண்மையை நோக்கு வோர் முகமதிய சமயம் உலகெங்கும் ஒன்பதாம் நூற்றண் டில் பரம்பியதற்குக் காரணம் ஆராய்ந்து கண்டனர். முகமதி யர் யாண்டுச் சென்றனரோ ஆண்டு இருந்த நாகரிகத்தைத் தொலைத்துக் கலைகளைக் கெடுத்து நூல் நிலையங்களை எரித்துக் *குருன் ' நூலைக் கற்பித்தனர் எனப் பலர் கூறினும் அங் ங்ணம் கருதற்க, முகமதியர் பாபிலோனியாவிலே 'பக்தாத்” என் னும் தம் தலை5கரிலே பல கலைகளையும் ஒம்பினர் எனவும், அவண் பல கலாநிலையங்கள் பலகாலம் கல்வியைக் காத்து வங் தவையெனவும், ஸ்பெயின் தேயத்திலே 'கொர்டோவா" என் னும் நகரிலே காட்டப்பெற்ற பல்கலைக் கழகம் முகமதிய காகரி கத்தை மேனுடெங்கும் பரப்பியதெனவும், ஆராய்ச்சி வல்லுநர் வரைகின்றனர். முகமதியக் கலைஞரும், வணிகரும் கீழைத் தேய நாகரிகங்களை மேலேத்தேயங்களுக்கும் மேலைத்தேய நாகரி சங்களைக் கீழைத்தேயங்களுக்கும் கொண்டு சென்றனர் என் பதை நன்கு உணர்க. உதாரணம் ஒன்று காட்டுதும். எகிப்து தேயத்தில் எகிப்திய ஆழி வேந்தரால் காட்டப்பட்ட கலங் கரை விளக்கம் ஒன்று அலைச்சாந்திரியா நகரிலிருந்தது. அக் கலங்கரை விளக்கம் மிக உயரமானது. வெளிச்சம் நன்கு தெரி வதற்குப் பன்னிறக் கண்ணுடிகள் உடையதாக இருந்தது. அதைப் பார்த்து வியந்தே முகமதியர் தம் நெடிய கோபுரங் களைத் தம் பள்ளிகளில் அமைத்தனர் என்ப. இனி முகமதியர் கலைகளை ஓம்பியதோடு நில்லாது அக்காலத்துக் கிறித்து மதத்தின ரும் ஏனையோரும் வற்புறுத்தாத சமயக்கொள்கைகளை காட்டின ராதலின் ஏனைய சமயத்தினர் முகமதிய சமயத்தை விரும்பித் தழுவினர் எனினும் பொருந்தும். உரோமர் பல சாதிகளை அடி மையாக்கிக் கொடுங்கோலோச்சி இருந்து பல தெய்வங்களை வழிபட்ட காலத்தில், மக்கள் யாவர்க்கும் கடவுள் ஒருவரே ஒருவர் என்றும் தனிக் கடவுள் உண்டென்றும் போதித்து ஆண்டான் அடிமை என்பது சனசமுகத்தின் சிருட்டியொழி யக் கடவுளால் ஏற்படுத்தப்படவில்லை எனவும் கடவுளின்

XIf I
முன்னிலையில் மக்கள் யாவரும் சமத்துவமுடையோராய் எண் ணப்படுவரெனவும் தனிக் கடவுளாகிய அல்லாவின் ஆணைக் கமைந்து ஒழுகுவோர் வீடடைதல் திண்ணம் எனவும் அரா பிய முகமதியர் கனிவற்புறுத்தினராதலின் கொடுங்கோலான் வருந்திய குடிகள் யாவரும் சாதி வேற்றுமை வருண வேற் றுமை பாராது யாவர்க்கும் வீடளிக்கும் சற்சமயமாகிய முக மதிய மதத்தைத் தழுவினர் என ஆசிரியர் பலர் உரையா நிற் கின்றனர். கி. பி. ஏழாம் நூற்ருண்டிலே தமாஸ்கஸ்' என்னும் சிரிய நாட்டுத் தலைநகரிலே மூன்ரும் 'காலிவ்' என்னும் ஒது மன்' ஆண்ட காலத்திலே அங்ககரிலுள்ள கோயிலில் ஒருபக்கத் தில் 'குருன்’ என்னும் முகமதிய நூலும் ஒரு பக்கத்தில் “பைபிள்' என்னும் கிறிஸ்த்தசமய நூலும் ஒதப்பட்டன. ஒது மன், தாங்வம்சத்துச் சீன மன்னன் ஒருவனுக்குத் தூது அனுப் பினன். எரிசலம் நகரிலும் பலகாலம் கலகமின்றிக் கிறித்தவரும் முகமதியரும் வணங்கினர். உரோமன் கதலிக் போதகர் சிலரே சமய விரோதத்தைப் போதித்து மேனுட்டாரை முகமதியரோடு சமயப் போர் புரியும்படி தூண்டினர். ஆஸ்திகர் என்னும் மாயர்
ஒரு சாதியினர் பிறசாதிகளிடம் இருந்தே கலைகளையும் வித்தைகளையும் ஆசாரங்களையும் சமயக் கொள்கைகளையுங் கற் றுச் சீர்மையுறுதல் உலகவியல்பு என்னுங் கொள்கை வரலாற் முசிரியர் பலர்க்கும் உடன்பாடான பின்னரும் அமிரிக்கப் பழங் குடிகள் தம் நாகரிகத்தை யாவரிடம் கற்றனரென ஆசிரியர்கள் தெரியாது மயங்கினர். நாகரிகவளர்ச்சியை ஆராய்ந்துழிப் போலித் துணிபுகள் பல கற்றுணிபுகள்போல ஆராய்வோரின் மனத்தில் உதிக்குமாதலின் நாகரிக வாராய்ச்சி பல ஏதுக்களா லும் ஆராயப்படல் வேண்டும். மொழிநூல், உடல்நூல், அழகியல்நூல், பழக்க வழக்கநூல், சமயநூல் என்பனவற் றைத் தேர்ந்தே ஒரு சாதியார் இன்ன, இன்ன சாதியாரிடம் கலைகளைக் கற்ருர்கள் எனத் துணியலாம்.
15-ம் நூற்றண்டிலே துருக்கர் பைசாந்தியத்தைப் பிடித்து மத்தித்தரைக்கடல் வணிகத்தைத் தாம் செய்யத் தொடங்கி மேனுட்டு வணிகரைக் கீழைத் தேயங்களாகிய இந்தியா சீனு,

Page 11
XV
என்னும் காடுகளோடு பண்டம் மாறவிடாமல் தடுத்திருந்தனர். மேலேத் தேயத்தோர் இம்மை வாழ்க்கைக்கு வேண்டிய பண்டங் களை, இந்தியா, சீன என்னும் கீழைத் தேசங்களிலே பெற்று வந்தனராகலின், கீழைத் தேசங்களுக்குச் செல்வதற்குப் புதிய வழிகளைக் காண முயன்றனர். ஸ்பெயின் தேயத்து மாலுமி கொலம்பஸ் என்பவன், பூமி ஓர் உருண்டையா யிருக்குமென வும், மேனுட்டுக் கலைஞர் பூமி தட்டையாகும் என்பது பிழை யெனவும் எண்ணினன். பூமி உருண்டையாயின், மேற்கே அத்திலாந்திப் பெளவத்தைக் கடந்து சென்ருல் இந்தியக் கரைகளை அடையலாமென அவன் எண்ணினன். 1497-6i இந்தியக் கரையை அடையும் கோக்கமாக வாஸ்கோடிகாமா ஆபிரிக்காவைச் சுற்றித் தென்னுபிரிக்க முனையால் இந்துக் கடலை அணுகினன்; ஐரோப்பிய மாலுமிகள் தம் மரக்கலங் களிற் சென்று கடல்கடந்து அமரிக்கக் கீழ்க்கரையையும் தீவு களையும் கண்டு அத்தீவுகளை மேலை இந்தியத் தீவுகள் என வும் ஆங்கு வசித்த குடிகளைச் செவ்விந்தியர் எனவும் அழைத் தனர். வடஅமெரிக்காவிலுள்ள காடுகளிலும் தென்னமரிக் காவிலுள்ள காடுகளிலும் வசித்த வேடர்களே செவ்விந்தியர் எனப் பெயர்பெற்றனர். அவர்கள் பெருங் தொகையினரைப் பிரான்சியர் அங்கிலர் முதலியோர் வடஅமரிக்காவில் தாம் குடி யேறிய காலங்களில் சுட்டுத் தொலைத்தனர். ஸ்பெயின் தேசத் துக் கடலோடிகள் மத்திய அமரிக்காவையும், தென்னமரிக்கா வில் உள்ள மேல்கரைத் தேயங்களையும் கண்டனர். அங்காடு களில் வசித்தோர் ஆஸ்திகர் எனவும் இங்கர் எனவும் பெயர் பெற்றனர். இவர்கள் இருப்பாயுதம் இருட்புக்கருவி முதலிய வற்றை உபயோகிக்கவில்லை. இவர்கள் மெச்சிக்கோ, மத்திய அமரிக்க நாடுகள், பீரு முதலிய இராச்சியங்களில் ஓரளவு நாகரிக மடைந்த மக்களாக வாழ்ந்திருந்தனர். மெச்சிக்கரைக் கோட்டீஸ்' என்னும் ஸ்பானியப் படைத்தலைவன் வென்முன், மெச்சிக்கருடைய மன்னன் மந்திசுமா அரசைத் துறந்தான். அவனுடைய பொன் வெள்ளி முதலியவற்றை ஸ்பானியர் வெளவினர். பிசாருே என்னும் பிறிதோர் தலைவன் பீரு காட்டையும் அதன் அயல் காடுகளையும் கைப்பற்றி ஆங்கிருந்த திரவியங்களைக் கொண்டு திரும்பினன். ஸ்பானியர் பின்னர் தென்னமரிக்க நாடுகளில் குடியேற்றங்களை நிறுவி அவனிருந்த

XV
மக்களோடு கலந்து தாய்காட்டுக்குப் பொன் வெள்ளி முதலிய வற்றை நெடுங்காலம் அனுப்பி வந்தனர். இங்கரை ஸ்பானி யர் வென்ற வரலாறு ‘பிறஸ்கற்’ என்பவரால் விரிவாக எழு தப்பட்டுள்ளது. ஆசிரியர் பிறஸ்கற் எழுதிய வரலாறுகளைப் படித்தோர் இக்காகரிகத்தை ஆஸ்திகரும் இங்கரும் யாவரிடம் கற்ருரென வினவத் தொடங்கினர். அமரிக்கா ஆசியாக் கண் டத்திலிருந்து அத்லாந்திப் பெளவத்தாலும் "பசுபிக் பெளவத் தாலும் பிரிக்கப்பட் டிருத்தலால் இப்பெரிய சமுத்திரங்களை ஆதிகாலமக்கள் கடந்திருக்க முடியாதென ஆசிரியர்கள் விளம் பினராகலின் தமியராயிருந்தே ஆஸ்திகரும் இங்கரும் சீர்மை யுற்றனர் எனப் பலர் எண்ணினர். இவர்களுடைய நாகரிகம் கீழைத் தேயத்தோருடைய நாகரிகத்தோடு பலவாறு இயை புடைய தெனத் தெரிந்தோர் கீழைத் தேயத்தோர் மிகப் பழைய காலங்களில் அமரிக்காவில் குடியேறின ரெனக் கருதி னர். யூதர், பினிசியர், யவனர், ஆபிரிக்கர் என்போர் அமரிக் காவில் குடியேறி யிருக்கலாமெனப் போதிய ஆதார மின் றிப் பலர் புகன்றனர். பெளத்தர்கள் பலர் சீனத்திலிருந்தும் இந்தியாவிலிருந்தும் ஜப்பான் தீவுகளுக்குச்சென்று எழுத்துக் கற்பித்தனர் எனவும் பெளத்த தச்சரும், கம்மாளரும், சிற்பி களும், ஓவியரும் ஜப்பான் தீவுகளில் இறங்கித் தொழிற்கலை களையும் கவின்கலைகளையும் வளர்த்தார்கள் எனவும் இந்திய காட்டு வணிகரும் சமயபோதகர்களும் கணேசர் கருடர் அநு மார் முதலியோர் வழிபாடுகளை ஜப்பான் தீவுகளுக்குக்கொண்டு சென்றனர் எனவும் "அப்போல்ற் என்னும் ஆசிரியராலும் பிறராலும் கருதப்பட்டதாகலின், சீன5ாகரிகமேனும் இந்திய நாகரிகமேனும், பீரு, மெச்சிக்கோ முதலிய அமரிக்க தேயங் களுக்குப் பரவியிருத்தல் கூடுமென ஆசிரியர்கள் ஐயுறத் தொடங்கினர்கள்.
1860-ல் இரட்சல் என்பவர் யவன போர்வீரர் தலையில்
அணியும் இருப்புக் கிரீடங்கள் போன்ற மரக்கிரீடங்கள் கீழிக்
தியத் தீவுகளாகிய சாவகம் சுமத்திரா முதலிய தீவுகளிலும்
கீழிந்தியத் தீவுகளுக்கும் அப்பாலுள்ள சமுத்திராந்தத் தீவு
களிலும் "பசுபிக் பெளவத்தின் மத்தியில் உள்ள ஒளவைத்
தீவுகளிலும் காணப்படுகின்றன எனக் குறிப்பிட்டனர். இத்
C

Page 12
XVI
தகைய கிரீடங்கள் மத்தியஅமரிக்காவிலும் மெச்சிக்கோவிலும் காணப்பட்டவை எனப் 'பிறஸ்கற்” கூறினர். ஆகலின் யவன நாகரிகம் கீழைத் தீவுகளிலும் மத்திய அமரிக்காவிலும் பரம் பியதெனச் சிலர் எண்ணினர். யவனர் தமிழ்நாட்டிலும் சாவ கத்திலுள்ள சம்பா எனும் தமிழ் இராச்சியத்திலும் வணிகஞ் செய்தனராகலின், சம்பாநாட்டினர் யவன உரோமருடைய இருப்புக்கிபீடத்தைப் பார்த்தே தம் மரக் கிரீடங்களைச் செய் திருத்தல் கூடும். ஆயிரக்கணக்காயுள்ள கீழைத்தீவுகள் யாவற் றிலும் மெலனேசியர் என்னும் தென்னட்டு மக்கள் குடியேறி னர். ஆயிரக்கணக்கான மைல் தூரத்திற்கப்பால் உள்ள தீவு களுக்கும் பண்டையமக்கள் தம் சிறு மரக்கலங்களிற் சென்று குடியேறினர். இத்தகைய கடலோடிகள் ஒளவைத் தீவுகளே யும் "ஈஸ்த்தர் தீவுகளேயும் அடைந்தனர். இத் தீவுகளை அடைந்தோர் அப்பாலும் சென்று தென்னமெரிக்காவிலுள்ள பீரு நாட்டில் இறங்கியிருத்தல் வினுேதமன்று. இங்ங்ணம் வணிகர் சமுத்திராந்தத் தீவுகளிலிருந்து புறப்பட்டு இந்திய சீன நாகரிகங்களை அமரிக்காவில் பரப்பி யிருக்கலாம். இத் தீவுகள் சிலவற்றில் உள்ள குமார உபி(உபை) என்னும் இரு பூண்டுகள் பீரு தேயத்தில் அப்பெயரால் வழங்குதலை ஆராய்ச்சி யாளர் கவனித்தனர். பண்டைய எகிப்திலும் இந்தியாவிலும் ஒளஸ்திரேலியாவிலும் உபயோகிக்கப்பட்ட சக்கராயுதம் (boomerang) மெச்சிக்கோவிலும் பீருவிலும் உபயோகிக்கப் பட்டதெனத் தெரிகிறது. சக்கராயுதம் ஒர்வகை அஸ்திரம். அது சுழன்று சென்று தன் பகைவர்களைக் குத்தாவிட்டால் எய்தோனிடம் திரும்பிவரும். கல்ஃப் எறிந்தால் அது பிறை போன்ற பாதையால் எறிந்தோனிடம் திரும்புதல்போல் இச் சக் கராயுதமும் திரும்புதல் கூடும் என அறிக. இந்தியரைப் போலவே பீரு தேயத்து இங்கரும் மெச்சிக்கோ தேயத்து ஆஸ்திகரும் காதணி அணிதற்கெனத் துவாரங்களைப் பெருப்பித்தல் வழக்க மாக இருந்தது. சிதிய இந்தியரைப்போல ஆஸ்திகரும் இங்கரும் உடலைத் தகனஞ்செய்தனர். உடலைத் தீயிடுதற்கு மக்கள் பிறசா தியாரிடம் பயிலவேண்டிய அவசியமில்லை எனின், அது பொருந் தும். எனினும் ஆஸ்திகர் தீயிடும் முறையும் சிதிய இந்தியர் இயிடும் முறையும் ஒப்பா யிருத்தலால் இப்பழக்கம் இந்தியாவி லிருந்து கற்றுக் கொள்ளப்பட்டதாகும். இவர்கள் உடலைத்

XVII
தீயிடுதல் மாத்திரமன்றிச் சாம்பரை எடுத்துக் கலங்களில் இட்டு வைத்தனர். சிதிய இந்தியரைப்போல் இவர்களும் சாம்பலொடு இரத்தினக் கற்கள் இட்டுவைத்தனர். இவர்க ளுடைய இராசிச்சக்கரத்திலுள்ள உருவங்கள் சிதியர், இராட் டர், சீனர் முதலியோருடைய இராசிக்சக்கரத்திலுள்ள உரு வங்களைப் போன்றவை; மங்கோலிய ராட்டரைப்போல் இவர் களும் முயல், பாம்பு, காய், குரங்கு என்னும் உருவங்களைக் கீறினர். ஏனைய உருவங்கள் சில இந்திய இராசிச் சக்கரத்தில் உள்ளவை. இவர்களுடைய சில இராசிச்சக்கரங்களில் முதலே யும் எழுதப்பட் டிருக்கிறது. இங்ங்ணம் இராசிச் சக்கரத்தில் உள்ள உருவங்கள் ஆசிய நாடுகளிலிருந்து அமரிக்கா சென் றிருக்கலாமெனக் கூறுப. இதுநிற்க, பண்டைய கடலோடிகள் தம் கலங்களின் முன்னணியில் கண் வரைதல் வழக்கம். எகிப் தியர் கீழிந்தியத்தீவோர் முதலியோர் இக்கண் வரைந்தவண் ணமே பீருதேயத்தோரும் மத்திய அமரிக்கரும் வரைந்தனர் எனத் தெரிகிறது. இரும்பு அமரிக்காவில் இல்லையாகலின் அமரிக்கர் இருப்புக் கருவிகளை உபயோகிக்கவில்லை.
யானை குதிரை தேர் காலாள் என்னும் கால்வகைத் தாஃனயுடைய தமிழர் தம் 'அரசு' (chess) என்னும் ஓர் விளை யாட்டில் அத்தானைகளையும் அரசன் அமைச்சரையும் சுட்டுதற் குச் சிப்பிகளையும் இருபகை யரசென வைத்து விளையாடிக் காலம் போக்கினர். இவ்வரசு விளையாட்டு மேனுடெங்கும் பரம்பி யிருக்கிறதை அறிவோம். அதுபோல வடமேற்காபிரிக் காவிலும் மேனடுகளிலும் உள்ள சில விளையாட்டுகள் மெச் சிக்கோ பீரு முதலிய காடுகளிற் பொழுதுபோக்கும் கோக்கத் துடன் விளையாடப்பட்டன.
ஆஸ்திகர் என்னும் மெச்சிக்கருடைய நாகரிகத்தை மாயர் நாகரிகமென மேனுட்டார் அழைக்கின்றனர். மெச்சிக்க நாட் டார் சில சரித்திரக் குறிப்புகளை எழுதி வைத்திருந்தனர். அக் குறிப்புக்கள் பெரும்பாலும் கோட்டீஸ் என்பவன் ஆஸ்திக ரோடு பொருத காலத்தில் அழிவெய்தின. ஆஸ்திகருடைய சில ஒவியங்களை மேனுட்டுப் பொருட்காட்சிச் சாலைகளில் áSIT6ð0 6)ff"LC

Page 13
XVII
இனி ஆஸ்திகர் தம் காட்டில் இல்லாத ஒவியச் செடிகளை யும் மாடு குதிரை யானை என்னும் விலங்குகளையும் படம் தீட்டியிருத்தலை ஆராய்ச்சியாளர் கவனித்தனர். ஒரு நாட்டி லுள்ள பூக்களையும் கொடிகளையும் விலங்குகளையும் பார்த்து அக் காட்டினர் படங்களே எழுதல் இயல்பே. ஆனல் தம் காட்டில் இல்லாத விலங்குகளைப் பிற காட்டினருடைய படங் களைக் கற்றுத்தான் எழுதலாம். கற்பனையாலும் ஒவியர் சிலர் சில உருவங்களைக் கற்பித்து வரையலாம். உதாரணமாகத் தமிழர் பல தலைகளையும் கைகளையும் உள்ள தெய்வங்களையும் நரசிங்கம்போல விலங்குத் தலையையும், மனிதவுடலையும் உள்ள உருவங்களையும் புலிக்கால் முனிவர்போல மனிதத் தலையையும் விலங்குடலையும் உடைய உருவங்களையும் தம் கற்பன சக்தியால் படைத்திருக்கின்றனர். இத்தகைய படங்களும் உருவங்களும் சிலைகளும் இந்திய நாடுகளிலிருந்தே ஆஸ்திகராலும் இங்கரா லும் கற்றுக்கொள்ளப்பட்டவை எனத் தெரிகிறது. உதாரண மாக, ஓவியச் செடியாக எகிப்துகாட்டு ஓவியர் சூரியனைச் சுட் டுதற்கு ஒரு வட்டமும் அச்சூரியனைத் தாங்குதற்கு ஒருபக்கத் தில் பாம்பும் ஒருபக்கத்தில் பருந்தும் எழுதல் வழக்கம். இத் தகைய ஓவியச் செடிகள் வேருேர் காட்டில் எழுதப்பட்டிருந் தால் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் நாகரிகம் பரம்ப ஒரு வர் கலையை ஒருவர் கற்றிருத்தல்வேண்டும் என்பது ஒருதலை யாகும்; இந்திய முறை ஓவியமே யுக்கற்ருன் என்னும் மத்திய அமெரிக்க காட்டில் காணப்பட்டது. 1910-ம் ஆண்டில் மத்திய அமெரிக்க நாடுகளில் 'சான்சல்வடோர்" என்னும் காட்டிலும்
கோபான் என்னும் ஊரிலும் எடுக்கப்பட்ட கலங்களில் யானை
கள் (துதிக்கையுடன்) எழுதப்பட்டுள்ளன. நீண்ட மூக்கினை யுடைய விலங்கைப் பார்த்து யானைமுகம் எழுதப்பட்டதென உரைத்து இந்திய ஓவியம் அமெரிக்கரால் கற்கப்படவில்லை யெனத் துணிதல் பிழையாகும். கலங்களில் காணப்படும் யானை களில் எழுதப்பட்ட ஓவியச்செடிகொடிகள் இந்திய ஓவியர் எழு தும் செடிகொடிபோன்றவையாகலின், இந்திய ஓவியமே ஆஸ் திகராலும் இங்கராலும் கற்கப்பட்டதென்க. கோபான் என்னும் ஊரிலே ஒருகற்சிலே எடுக்கப்பட்டது. அக்கற்சிலை ஒர் ஆண்மகன் தலைப்பாகையும் மார்பில் ஆபரணங்களும் அணிந்து பதுமாச

XIX
னத்தில் இருத்தலைக் காட்டுகிறது. இக்கற்சிலையிலுள்ள தலைப் பாகை,இந்தியத் தலைப்பாகை முறையாகக் கட்டப்பட்டதெனத் துணியப்படுகிறது. இத்தகைய தலைப்பாகை அணிந்த ஒருவர் யா. யில் ஏறி உலாவும் பாவனையாக ஒரு படம் சாவகத் தீவில் எடுக்கப்பட்டதாகலின் இந்திய ஒவியமும் சிற்பமும் சாவகத் தீவின் வழியாக சமுத்திராந்தத் தீவுகளுக்குப் பரம்பியதென மொழியலாம். ஈண்டு சாவகம், சுமத்திரை பாலி முதலிய தீவு கள் கி. பி. எட்டாம் ஒன்பதாம் நூற்றண்டுகளில் தமிழரால் ஆளப்பட்டவை என்பதையும் தமிழ் வணிகரும் கலைஞரும் ஆங்குச் சென்று அகத்தியர், திருமால், சிவன் என்னும் கடவு ளர்க்குக் கோட்டம் கட்டினர் என்பதையும் தமிழ் வணிகர் கி. பி. மூன்ரும் நூற்ருண்டுகளிலே கீழிந்தியத் தீவுகளில் வணிகம் நடாத்தினர் என்பதையும் அறிக. இந்திய நாகரிகம் சாவகம் முதலிய தீவுகளில் செறிந்து பல ஆண்டுகளுக்குப் பின் சமுத்திராந்தத் தீவுகளில் பரம்பிப் பின்னர் இங்கருடைய நாடுகளிலும் பரவியிருக்கலாம். இங்கனம் இந்து நாகரிகம் அமெரிக்காவுக்கும் பரம்புதல் பண்டைய இந்தியருக்குத் தெரி யாமல் இருந்திருத்தல் கூடும். தமிழர் பாக்கு வெற்றிலை சுண் ணும்பு சேர்த்துச் சப்புதல்போல் சமுத்திராந்தத் தீவோர் பாக் குடன் பிறிதோர் இலையையும் சுண்ணும்பையும் சேர்த்துத் தின்றனர், பீரு நாட்டினர் புகையிலையோடு சுண்ணும்பு சேர்த் துத் தின்றனர். தாகங் தணிதற்கு கொக்கோ' என்னும் இலை தின்னுதல் இங்கருடைய கடலோடிகளின் வழக்கம். .
பிரளயக் கதை உலக மாதாக் கதை ஏழுலகக்கொள்கை போன்ற சமய சம்பந்தமான பழங்கதைகள் உலகெங்கும் பரவி யிருத்தலை அறிவோம். இந்து சமய சார்பான பழங்கதைகள் பீரு மெச்சிக்கோ என்னும் காடுகளில் பரவியிருக்கின்றன. ஒரு காலத்தில் வரையப்பட்ட படத்தில் ஆஸ்திகருடைய மழைத் தேவர் 'சாகு' என்பவர் நீரை ஒரு பாத்திரத்திலிருந்து சிந்து கின்றர். அம்மழை நிலத்தில் விழாமல் தடுத்தற்கு முயலும் ஓர் பாம்பை அத்தேவர் காலால் உழக்குகிறர். இப்படம் இக் திரன் பாம்பை உழக்கி மழை பெய்வித்தலோடு ஒக்குமென் பர். பிறிதோர் படத்தில் யானைத்தலைக் கடவுள் ஒரு பாத்திரத் தைக் கவிழ்த்து நின்று, பாம்பொன்றைக் காலின்கீழ் உழக்கு

Page 14
XX
கின்ருர். இவ்லோவியங்களும் சிற்பங்களும் இந்தியாவில் குப் தர் காலத்தில் 3-ம் நூற்றண்டில் வரையப்பட்டு எட்டாம் ஒன் பதாம் நூற்றண்டுகளில் தாங் வம்சத்தினர் செங்கோலோச்சிய காலத்திலே சீன நாடுகளில் பரம்பிப் பின்னர் கீழிந்தியத் தீவு களில் பரம்பியிருக்கலாம். மங்கோலிய ராட்டிறி என்னும் காடு களிலும் ஜப்பான் தீவுகளிலும் இருந்த பெளத்த சமயக் கொள்கை ஒன்று மெச்சிக்கோ முதலிய காடுகளில் போற்றப் பட்டதுபோலத் தெரிகிறது. அது வருமாறு;
ஆன்மா வீடடையுமுன் நரகங்களில் துன்புறுத்தப்படுதலை விளக்கும் சமயக் கதை ஒன்று படமாகச் சித்திரிக்கப்பட்டிருக் கின்றது. அதன் வருணனை வருமாறு; முதல் நிலையாக ஒரு மனிதன் உயிர் நீத்தல் என்னும் ஆற்றினைக் கடத்தலையும் இரண்டாம் நிலையாக அம்மனிதன் இரு மலைகள் இடையாகப் போதலையும் மூன்றும் நிலையாக அம்மனிதன் கூரிய ஆயுதங்கள் மிகுந்து கிடக்கும் ஓர் மலைமீது ஏறிச் சிகரத்தில் நின்று ஆறு தலையும் நான்காம் நிலையாகக் கூரிய கத்திகள் காற்றேடு வந்து விழுந்து அம்மனிதனின் முகத்தைப் புண்படுத்தலையும் காட்டும் காட்சி ஒன்று ஒர் படத்தில் வருணிக்கப்பட்டிருக்கின்றது. ஜப் பானிய பெளத்தர்களுடைய சமயத்தில் இத்தகைய கதை ஒன்று உண்டு. அக்கதையின் படமும் கிடைக்கின்றது. ஜப் பானியருடைய படமும் ஆஸ்திக இங்கருடைய படமும் மிக வும் ஒப்பாயிருக்கின்றன. ஆன்மா ஒரு யாற்றைக் கடந்து சென்று ஈர் இருப்பு மலைகளுக்கிடையில் தெரிக்கப்பட்டுப் பின் னர் மலைமீது ஏறிக் காற்றில் அகப்பட்டுக் கூரிய கத்திகளால் குத்தப்பட்டுத் துன்புறும் என ஜப்பானியர் எண்ணினர். இத் தகைய பல சான்றுகளை எல்லாம் நன்கு ஆராய்ந்த ஆசிரியர் ‘எலியற் சிமித்' முதலியோர், இந்திய நாகரிகமே சாவகம் முத லிய தீவுகளில் செறிந்து அப்பாலுள்ள சமுத்திராந்தத் தீவுகள் வழியாக பீரு மெச்சிக்கோ முதலிய நாடுகளை அடைந்ததெனத் துணிகின்றனர். ஆசிரியர் ‘எலியற் சிமித்' எகிப்திலிருந்தே பல கலைகள் கி. மு. 3400 ஆண்டுகட்குமுன் பல தேயங்கட்கும் சென்றவையெனத் துணிகின்றனர். அது ஒருபுடை ஒக்குமெனி னும் சிந்து தேயத்து நாகரிகம் எகிப்திய நாகரிகத்திலும் முந்தி யதாதல் கூடுமென 1939-ல் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

ΧΧΙ
ஆதலின் இந்து நாகரிகமே எகிப்தியரால் கற்கப்பட்டிருத்தல் கூடுமென எண்ண இடமுண்டு. இங்ஙனம் ஏனைய வரலாற்று இயக்கங்களை எல்லாம் ஆராய்ந்து காட்டில் இம் முன்னுரையே மிக விரிந்து ஒர் ஆராய்ச்சியாகுமென அஞ்சி விரியாது விடுகின் ரும். இனி ஒரு தேயத்தின்கண் பல தேயத்து நாகரிகங்கள் ஒரு காலத்தில் வந்து ஒருங்கு கலத்தல்கூடுமென்பதைக் கவனித்தல் வேண்டும்.
இதுகாறும் கூறியவற்ருல் இந்தியத் தமிழ் நாகரிகம் சீன ஜப்பான் முதலிய நாடுகளுக்குச் செறிந்ததையும் சாவகம் சுமத் திரை பாலி முதலிய தீவுகளில் டோற்றப்பட்டு சமுத்திராந்தச் சிறு தீவுகளில் மாத்திரம் காணப்படுவதன்றித் தென்னமரிக் காவிலும் மத்திய அமெரிக்காவிலும் துலங்குதலையும் கண்டு 15ம் மூதாதையரின் பெருமையை நாம் எண்ணி எண்ணி வியந்து பாராட்டாமல் வாழ்தல் என்னேயோ ? பண்டு தமிழர் ஏனைய மக்களைச் சீர்திருத்தித் தம் குமரிகாட்டை உம்பர்தம் உலகோவென யாவரையும் ஐயுறச் செய்தவாறு எதிர்காலத் தும் தமிழர் இடமைக்கும் மறுமைக்கும் பயன்தருங் கலைகளை ஆராய்ந்து மக்கள் யாவருள்ளும் முதன்மையடைந்து எனையோ ரையும் கல்லாற்றுப்படுத்திப் பசியும் பிணியும் போரும் ஒழித்து வாழ்தற்கு முயலுவாராக.
த. இராமநாதபிள்ளை.
>ఛ_

Page 15

WORLD HISTORY IN TAMIL:
Approval by Department of Education
Ceylon.
T. Ramanathapillai Esq.
POint Pedro
''Reference to your application of 3-3-45 I have to inform you that you have been Selected by the Research Council of Education to write in Tamil a Standard Text book On the above subject for the use Of teachers and post primary classes...’’
Director of Education
Colombo, l5-ll-45.
۰۰۰۰۰۰۰۰ هم می 'esaa-anoo o 9
T. Ramanathapillai Esq. Point Pedro.
* “Reference to your letter of l8-6-46 I have to inform you that the manuscript of the above book has been accepted by the Research Councill Of Education and that you will be given a subsidy.....”
Director of Education Colombo, 28-9-46,

Page 16

e
பொருளடக்கம்
Urlfh. பக்கம் 1.ம் அதிகாரம்: ஆதிகால மக்கள்
1. பூமியின் உற்பத்தி . . . 1 2. கற்கால மனிதர் 4. 3. சீர்திருந்திய மக்கள் 6 4. எகிப்தியர் ... . . 14 5. யூதர் A KI 21 , uഖങ്ങി 25 7. யவனரும் பார்சியரும் 36 8. ઈ60ાi 49 9. சீனர் அரசியல் ... , 5ნ 10. ஜப்பானியர் 6?
2-ம் அதிகாரம்: தமிழர்
1. இந்துதேயம் a 3 2. பண்டைக் காலத் தமிழர் 3. தமிழ் நாகரிகமும் தொல்காப்பியமும் a 83 4. கடைச்சங்கம் ... 90 5. தமிழர் வணிகமும் குடியேற்றமும் 98 3-ம் அதிகாரம்; ஆரியர்
1. ஆரியர் நாகரிகம் 103 2. இந்து நேமிவேந்தர் e 112 3. கெளதமபத்தர் 115 4. மாவீரர் 118 5. கிரேக்கர் வருகை 122 6. மோரியர் 126 7. அசோகன் ... 134 8. குழப்பக் காலம் 140 9. குப்தர்கள் 144 10. கருஷனும் சிற்றரசுகளும் 151

Page 17
ust lib
-2-
4-ம் அதிகாரம்; சிங்களர்
1.
இலங்கை மகாவம்சம்
பண்டைய அரசர்களும் பெளத்தமதமும்’
8. தமிழர் படையெடுப்பும் துட்டகமுனுவும் 4. சிங்களர் அரசியல்
5-ம் அதிகாரம்: உரோமர் குடியரசு
f
g
இத்தாலிய தேயப் பழங் குடிகள் gT3T356T இலத்தின் ஐக்கிய நகரங்கள் உரோமாபுரியின் உண்ணுட்டு வரலாறு 6ou 4. மசிடோனியர் ஆதிகால இலத்தின்நூல் வரலாறு கமவியக்கமும் உண்ணுட்டுக் கலகமும் மிதிருடாற்றிஸ்
யூலியஸ் கைசர்
6-ம் அதிகாரம்: உரோமர் தனிக்கோல்
1
á.
கைசர் அகஸ்தர் இலத்தின் செம்மொழிக் காலம் உரோமரின் வாழ்க்கை உரோமருடைய தமிழ்நாட்டு வாணிகம் கைசர் குடும்பத் தனிக்கோலர் பிளாவிய குடும்பத் தனிக்கோலர் நேர்வா, திராசன், அத்திரியன் பிற்கால இலத்தின்நூல் வரலாறு அந்தோநயினர்
கலகக் காலம்
பக்கம்
160 166 169 173
180 190 198 3.18 234 351 359 263 を2?? 880
296 310 314 335 331 346 35? 363 366 373

உ ல க வ ர ல |ா று
1-ம் அதிகாரம்: ஆதிகால மக்கள்
− 

Page 18
2 உல்க வர்ல்ாறு
தப் பூமியும் சனி ஞாயிறு செவ்வாய் புதன் வியாழன் சுக் கிரன் என்பவையும் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியவை எனக் கணக்கிடுகின்றனர் இந்த ஞாயிறும் அதைச்சேர்ந்த உ ரு ண்  ைட க ள் யாவும் 300,000000 ஆண்டுகட்குமுன்னர் ஒரே தீப் பிழம்பா யிருந்தன எனவும் அப்பிழம்பு ஒரு விண்மீனின் கவர்ச்சியால் பல உருண்டைகளாகப் பிரிந்ததெனவும் அவ்வுருண்டைகள் தீப் பிழம்புகளாகச் சுழன்றன என வும் செப்புகின்றனர். ஒரு உருண்டை காலக்கிரமத்தில் குளிர்ந்து பூமியாகவும் திங்களாகவும் பரிணமித்தது என வும் கூறுப. இந்தப் பூமி எத்தனே ஆண்டுகட்கு முன் குளிர்ந்து உயிர்வாழ்தற்குரிய இடமாபிற்றெனச் சொல்ல முடியாது. பனிப்பாறைகள் நிலப்பரப்பை இடையிடையே மூடிவந்தன எனவும் கடைசியாக 50000 வருடங்களுக்கு முன் பூமியின் பெரும்பகுதி பனிப்பாறைகளால் மூடப்பட் டிருந்ததெனவும் கூறுப. பூமிகுளிர மட்கண்டம் தோன் நிற்று. அம்மட் கண்டங்கள் புடை பெயரத்தொடங்கி மலைகளாகவும் பள்ளங்களாகவும் அமைந்தன. இம்மாறு தல் நெடுங்காலம் நிகழ்ந்த பின்னர் ஒருவாறு நிலையான மலைகளும் பெளவங்களும் தோன்றின.
பிரணிகள்
பழையகாலத்து மண் கண்டங்களை ஆராய்வார் அம் மட் கண்டங்களில் உருப்பதித்தும் என்புகளை விட்டும் அழி வெய்திய பிராணிகளை ஆராய்ந்து எத்தகைய பிராணிகள் முதன்முதல் நம் பூமியில் வாழ்ந்திருத்தல் கூடுமென ஆராய்ந்தனர். பிராணிகள் கடலில் தோன்றியிருக்க வேண்டுமென மட்கண்டநூலோர் கருதுகின்றனர். ஆதி யில் முதுகெலும்பில்லாப் பிராணிகளே தோன்றியிருக்க வேண்டுமெனவும், காலம் செல்லச்செல்ல அவை முது கெலும்புள்ள மீன்களாக விருத்தியடைந்திருக்கவேண்டு மெனவும் ஊகிக்கின்றனர். காலத்திற்கேற்ற கோலம்

பூமியின் உற்பத்தி 3,
உடையனவாகவே பிராணிகள் விருத்தியடைதல் இயல்பு. சூடு குளிர் கனம் முதலியவற்றுக் கேற்ப விருத்தியடை யாப் பிராணிகள் அழிவெய்தியிருக்கும். காலத்துக்குக் காலம் பூமி ஞாயிற்றைச்சுற்றிச் சுழலும் காலம் குறுகி யேனும் மீண்டேனும் இருக்கலாம். அன்றியும் கடல் தரையா யும் தரை கடலாயும் மாறியிருத்தலும் கூடும். இங்ஙனம்நிலைமாறுதலால், கடல்வாழ்பிராணி தரையிலும், தரைவாழ்பிராணி கடலிலும் வாழவேண்டி யதாக நேரிடு மாக லின் பிராணிகள் தரையிலும் கடலிலும வாழக்கூடிய ஆற்றல் உடையனவாக விருத்தி யடைந்தன. அப்பிராணி கள் நீரிலும் நிலத்திலும் சஞ்சரிக்கக்கூடிய தவளை முதலே முதலியன. தரையில்மாத்திரம் வாழக்கூடிய பிராணிக ளாகிய நகரும் பிராணிகள் முட்டையில் தோன்றுவன என வழங்கப்படும். முட்டையிலுள்ள கரு சூரியவெப்பத்தி னல் குஞ்சாகும். பண்டைக்காலத்து நகரும் விலங்குகள் சில இப்போதையவற்றினும் மிகப் பெரியவை என அவற் றின் என் புகளைக்கொண்டு காட்டுகின்றனர். நகரும் விலங்குகள் சில மரங்களில் ஏறிப் பயின்றபின்னர், பறத் தற்குச் சிறகு பெற்றன. அவற்றுள் சில வெளவால் முதலியவை. நகரும் பிராணிகளிலிருந்தே பறவைகள் தோன்றியிருத்தல்வேண்டும். காலவேற்றுமையால் முற் காலத்துப் பெரிய விலங்குகள் அழிவெய்தியிருத்தல் கூடும். பின்னர் முட்டையில் தோன்றும் விலங்குகளிலிருந்து கருப்பையில் தோன்றும் விலங்குகள் உதித்தன. கருப் ப்ையிற்றேன்றுவன தம் குட்டிகளுக்குப் பாலூட்டி வளர்ப்பன. கருப்பையிற்ருேரன்முவன விருத்தியடைந்து குரங்காகவும், குரங்குமனிதனுகவும், மனிதனுகவும் விருத்தியடைந்தன. ஜாவாவிலும் சீனவிலும் பிரான் ஸிலும் எடுக்கப்பட்ட உருவமுடைய குரங்குமனிதன் 25000 ஆண்டுகளுக்குமுன் இருந் தானம், வாலற்ற குரங்கு தான் மனிதனுக விருத்தியடைந்திருத்தல் கூடும்.

Page 19
4 உலக வரலாறு
2-ம் பாடம்-கற்கால மனிதர்
-a-has-y-
இனிச் சரித்திரகாலத்துக்கு முந்திய மக்களின் வாழ்க்கையைப்பற்றி ஆராய்வாம். அக்காலத்து மக்கள் உபயோகித்த கருவிகளாலும் அவர்கள் தீட்டிய படங்க ளாலும் அவர்கள் எத்தகையோர் என்பதை உணரலாம். கற்காலமக்கள் குரங்குகளினின்றும் வேறல்லர். அவர் களுக்குப் பேசவே தெரியாது. அவர்கள் விலங்குகள் போல் சத்தமிட்டனர். அவர்களுக்கு ஆயுதங்களே இல்லை. அவர்கள் ஆடையற்றவராயும் உணவைச் சமைத்து உண் ணத் தெரியாதவராயும் இருந்தனர். அவர்கள் ஏனைய விலங்குகளிலும் புத்திநுட்பம்வாய்ந்தோராதலின் வாழ்க் கைப்போரில் தப்பினர். பின்னர் மக்கள் கூட்டங் கூட்ட மாக வாழவும் சொற்களை ஆக்கவும் கல்லாயுதங்கள் செய்ய வும் தோலாடை அணியவும் தீயுண்டாக்கவும் தொடங் கினர். தீயின் உபயோகங்களை அறிந்தோர் தீயின் இன்றியமையாமையை உணர்ந்து அதைத் தெய்வமாக வணங்கினர். அதன் பின் மட்கலம் வனையவும் செங்கல் சு டவும் தொடங்கினர். கற்காலமக்கள் செய்த ஈட்டிகள் கோடரிகள் முதலிய கல்லாயுதங்கள் அவர்களின் என்புக் கூடுகளோடு சில இடங்களில் பண்டைப் பொருளாராய்ச்சி வல்லோரால் எடுக்கப்பட்டுள்ளன. கற்காலத்தோர் மீன் பிடித்தும் வேட்டையாடியும் சிவித்தனர். அவர்கள் பெரும்பாலும் குகைகளிலும் மரங்களிலும் உறங்கினர். பின்பு கற்களை அடுக்கிச் சிறு குகைகளாக்கவும் பயின் றனர். பகைவரினின்றும் தம்மைக் காத்தற்குச் சிலர் குளங்களில் மரங்களை நாட்டி அவற்றின்மீது சிறு குடிசை களை அமைத்து வாழ்ந்தனர். ஆல்பஸ் மலைப்பிரதேசங் களில் இத்தகைய குடிசைகள் காணப்படுகின்றன. இவ் வழக்கம் பற்றியே பாப்புவாதேயத்தோர் இன்றும்

கற்கால மனிதர் 5
உயர்ந்த மரங்களில் குடிசைகள் கட்டுகின்றனர் என்ப. மரங்களை எரித்தும் குடைந்தும் சிறு ஒடங்களும் ஆக்கத் தொடங்கினர். உணவு தேடலிலும் தம்மைக் காத்தலிலும் கற்காலமக்கள் தம் காலத்தைக் கழித்தனர் எனச் சொல்லலாம். சிலர் கல்லில் உருவங்களைக் கீறவும் மட் கலங்களில் உருவங்கள் தீட்டவும் தொடங்கினர். கல்லியா ஸ்பானியா தேசங்களில் உள்ள சில குகைகளில் கற்கால மக்கள் தீட்டிய உருவங்களைக் காணலாம். அவர் தாம் வணங்கிய தெய்வங்களையும் அக் குகைகளில் எழுதினர். நிலம் நீர் தீ வளி வான் ஆகிய பஞ்சபூதங்களின் மிகுதி யாலும் குறைவாலும் மக்கள் இடருற்றன ராகலின் கற் காலத்தோர் பஞ்சபூதங்களை வழிபட்டனர். தமது உண வுப் பொருள்களைக் கெடுக்காவண்ணம் நீர் வளி முதலிய வற்றைத் தெய்வமென எண்ணித் தொழுதனர். துஷ்ட தெய்வங்களுக்குச் சாந்தியாகப் பலியிட்டனர். நரபலி யிடுதல் அக்காலத்து மிகப் பொதுவான வழக்கம். பேய் பிசாசுகளே மக்திரத்தினுற் கட்டினர். காலம் செல்லச் செல்ல ஆடு மாடு மேய்க்கவும் அவற்றின் பாலை உண்ண வும் தொடங்கினர். பிற்காலத்து மக்கள் செம்புருக்கப் பயின்று செப்பாயுதங்கள் செய்தனர். அக்காலத்திலே தான் நெல்லு யவை கோதுமை முதலியன பயிரிடப் பயின் றனர். பயிரிடப் பயின் ருேரர் நீலாறு யுபிறேற்றிஸ் காவிரி மஞ்சளாறு முதலிய ஆறுகளின் கரைகளிலும் சமபூமி களிலும் வாழ்ந்தனர். பட்டிமேய்ப்போர் கூடாரங்கள் அடித்துத் தம் பட்டிகளோடு அலைந்து திரிந்தனராக, கமக்காரர் ஆற்றங் கரைகளில் நிலையான குடிகளாக வாழ்ந்தனர். இவர்கள் ஒய்வுநேரமுடையவராக லின், கலை களை ஆராய்ந்து நாகரிகமுறையாக வாழ்ந்தனர்.

Page 20
6 உலக வரலாறு
3-ம் பாடம் சீர்திருந்திய மக்கள்
எகிப்துதேசம் பாலை நிலமுடையதாதலின் பொருள் கள் அங்கு மழை காற்று முதலியவற்றல் அழிவெய்தாமல் இருக்கின்றன. எகிப்தில் கிடைக்கும் பொருள்களை ஆராய்ந்து பண்டைமக்கள் எங்ங்ணம் வாழ்ந்தன ரெனச் சொல்லல் இயலும். இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் மட்கலங்கள் கல்லாயுதங்கள் செப்புக் கருவிகள் முதலியவை மட்கண்டங்களிலும் குகை களிலும் மயானங்களிலும் கிடைக்கின்றன. முற்காலத் தோர் ஒரு பொருளைச் சுட்டிக்காட்ட விரும்பினல் அதன் உருவத்தைக் கீறிக் காட்டினர். அவ்வுருவங்களோ உரு வெழுத்தாகத் திரிந்தன. எகிப்திய உருவெழுத்துக்களை எகிப்திய பூசாரிகள் கிரியை செய்துழி உபயோகித்தன ராம். அவற்றிற்கு இக்காலத்தோரால் ஒருவாறு கருத் துரைக்கப்படுகிறது. பிற்காலத்து எகிப்தியர் பப்பீரஸ் என்னும் புல்லில் எழுதப்பயின்றனர். எகிப்தியருடைய முக்கோணக் கோபுரங்களில் சி த் தி ர - எழுத்துக்களைக் காணலாம். எகிப்தியரும் சுமேரியரும் வானைப் பார்த்து நாள் கிழமை மாசம் எனக் காலத்தை அளவைசெய்ய அறிந்தனர்; திசைகாட்டுங் கருவியை உபயோகிக்கும் முறையை எகிப்துதேசத்தார் சீனரிடமும் தமிழரிடமும் கற்றனர்போலும், வைத்திய நூலையும் கணிதநூலையும் தமிழரிடமே கற்றனர்போலும்; எகிப்தியர் இறந்தோர் உயிர்பெறுவர் என நம்பினராதலின் இறந்தோரின் உட 8லப் பாதுகாத்தனர். எகிப்தியர் பாதுகாத்து வைத்த உடம்புகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழிவெய் தாமல் இருக்கின்றன. என்ன வினுேதம் முக்கோணக் கோபுரங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் உடல்கள் எகிப்திய அரசருடையவை. அவ்வுடம்புகள் ஆராய்ச்சிவல்லோரால் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. அவ்வுடம்புகள் ஆங்கில மொழியில் மம்மி கள் எனப்படும். ஓரிடத்தில் பூனையின்

சீர்திருந்திய மக்கள்
மம்மி ஒன்றும் மனித மம்மியோடு எடுக்கப்பட்டதாம். உடம்புகளை அழியவிடாமல் பாதுகாக்கும் முறையைப் பண்டைய எகிப்தியர்மாத்திரமே அறிந்திருந்தனர்.
மேனட்டுக்கலைஞர் பண்டைய நாகரிகங்களுள் எகிப் திய நாகரிக்மும் சுமேரிய நாகரிகமும் சிறந்தவை எனச் சாற்றுகின்றனர். மேனுட்டார், திராவிடர் சீனர் முத லிய கீழைத் தேயத்தோரின் 5ாகரிகத்தை ஆராய்ந்து அறிந்திலரா கலின் மிகப் பழைய நாகரிகமாகிய தமிழரு டைய நாகரிகத்தைப்பற்றி ஒன்றும் கூறுகின்றிலர். சீனர் பண்டைக்காலந்தொட்டு இம்மை வாழ்க்கைக்கு வேண்டிய வித்தைகளையும் கலைகளையும் பயின்றபோதி லும் திராவிடராகிய தமிழரைப்போல் பதிஞானம் உணர்க் திலர். சீனர் துரேனியர் திராவிடர் என்போர் அக்கினிப் படையை உபயோகித்தனர். தமிழிலக்கியங்களில் ஆகாய வூர்திகளைப்பற்றிப் பலபடப் புனைந்துரைக்கப் படுகின்ற தாக லின், பழைய தமிழ்மக்கள் ஆகாயத்தில் பறக்கப் பயின்றிருத்தல் கூடும். இக்காலத்தில் மேனுட்டார் கட்டும் பெரிய வான வூர்தி போல் பண்டு செய்யப்படவில்லை. சிறு தூரம் பறக்கும சிறிய பொறிகள் செய்யப்பட்டிருக்கலாம். இனித் தமிழ்முனிவர்கள் பிராணுயாமஞ்செய்யப் பயின்று நீண்டகாலம் வாழும் உபாயத்தை அறிந்திருந்தனர் என் பது யாவரும் அறிந்த உண்மையே. எக்நோய்களையும் மாற்றும் காயகற்ப முறைகளும் தமிழ்மருத்துவர் பயின் றிருந்தனர் என்ப.
சுமேரியரோ எகிப்தியரோ முதன் முகல் சீர்திருக் தினரெனச் சொல்லமுடியாமல் இருக்கின்றது. யுபிறேற் றிஸ் ரைக்கிறிஸ் என்னும் நதிக்கரைகளில் வசித்தவர் களே முதன்முதல் சீர்திருந்திய மக்கள் என மேனட்டார் கூறுப. சுமேரியர் வதிந்த நாடாகிய பாபிலோனியா மேற்கூறிய இருநதிகளும் பாயும் நாடே. ஆங்குக் கற்கள் இல்லை. ஆகையால் சுட்ட செங்கற்களால் குடிசைகளும்

Page 21
8 உலக வரலாறு
கோயில்களும் கட்டப்பட்டன. சுட்ட செங்கற்களில் சுமேரி யர் தம் குறிப்புக்களை எழுதினர். அக்குறிப்புக்களில் காணப்படும் எழுத்துக்கள், ஆப்புப்போன்ற உருவின வாகலின், ஆப்பெழுத்துக்கள் எனப்படும். சுமேரியர் தம் நீதி முறை வணிகம் கமம் முதலியவற்றைப்பற்றிக் குறித்தனர். சுமேரியர் குதிரையேற்றமும் பயின்றனர் என அவர்களுடைய குறிப்புக்களால் புலப்படுகிறது. அசிரியர் சுமேரியருடைய நாட்டுட்புகுந்து சுமேரியரைத் தொ லே த் த ன ர். பாபிலோனிய இராச்சியத்தைத் தொலைத்த அசிரியர் இருப்புக்கருவிகளையும் ஆயுதங்களை யும் உபயோகித்தனர். சுமேரியர் தலைநகராகிய பாபி லோனில் சுவர்களில் சித்திரங்கள் எழுதப்பட்டன. சுமேரி யர் திராவிடரிடம் எழுதப்பயின்றனர் எனத் துணியப் படுகிறது. சுமேரியர் நாணயம் அச்சிடுமுன் சீனர் பெரிய அரசு நடாத்திப் பொன்னுணகம் உபயோகித்தனர் எனக் Al-O
சாலடியர் அசிரியரைத் துரத்திச் சுமேரியரோடு கலங் திருந்தனர். சாலடியர் யூதரை அடிமைகளாக்கினர் என வும் சாலடியர் வலிகுன்ற, யூதர் சுவாதீன மெய்தினர் என வும் கூறுவர். சுமேரியர் அசிரியர் சாலடியர் எகிப்தியர் என் போர் யாவரையும் அட்டுத்தொலைத்தோர் யாவரெ னின், 'இற்றையிற்றர்" என்னும் சாதியினரே. அவர் கள் பாபிலோன் நாட்டிற்கு வடக்கிலுள்ள மலைகளில் வசித்த ஒரு கூட்டத்தினராவர். இற்றையிற்றர் போர்த் தொழிலிலும் சிற்பத்திலும் சிறந்து விளங்கினர். கி. மு. 2000 ஆண்டுகட்குமுன் "அவர்கள் சுமேரியரையும் எகிப் தியரையும் வென்று அரசு புரிந்தனர். இற்றையிற்றர் வலிகுன்ற, கீமீற்ருத்தீவாரும் பினிசியரும் யவனரும் பார்சியரும் தலையெடுத்தனர். இவர்க ளெல்லாரையும் உரோமர் வென்றனர். உரோமர் பிரித்தானியாவைப் பிடித்த காலத்தில் பிரித்தானியர் செப்புக்காலத்தவர் போலவே வாழ்ந்தனர்.

சீர்திருந்திய மக்கள் 9 ஞாலம் பல ஊழிகளுக்கு முன் தோன்றியதெனத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. ஞாலத்தின் படைப்பைப் பற்றிப் பரிபாடல் ஒன்று,
"கருவளர் வானத்து இசையிற் றேன்றி உருவறி வாரா ஒன்றன் ஊழியும் உந்துவளி கிளர்ந்த வூழு முழியம் செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியு மவையிற் றுண்முறை வெள்ள மூழ்கி யார்தருபு மீண்டும் பீடுயர் மீண்டி யவற்றிற்கும் உள்ளி டாகிய விருகிலத் தூழியும’
எனப் பல ஊழிகள் உடையது உலகு எனக் கூறுகிற்கும்.
இங்ஙனம் ஊழிதோறும் நிலைதிரிந்துவந்த நம் உல கில் மக்கள் தோன்றிய இடம் யாதாயிருக்குமோ என ஆராய்வாம்.
மேனுட்டுக் கலைவல்லுநரான 'ஹைக்கல்’ என்பவர், இலமூரியா என்னும் ஒரு நிலப்பரப்பு தமிழ்நாடுதொட்டுக் கீழ்பால் சாவகம் சுமத்திராவரையும் மேல்பால் மடகாஸ்கர் வரையும் பரந்து கிடந்ததெனவும் அஃதே பூமியின் மிகப் பழைய கிலப்பரப்பெனவும் அதன் கண் தோன்றிய மக்களே உலகெங்கும் பரவினரெனவும் கூறுகின்ருரர். இவ்வாராய்ச்சியைத் தொடர்ந்த 'ஸ்கொற்றெலியற்" என் பவர் தென்னிந்தியாவிற்குக் கீழ்பால் இருந்த நிலப்பரப் பின் தெற்கே ஒரு மலை இருந்ததென்றனர். தென் னிந்தியாவுக்குத் தெற்கே கிடந்த நிலம் கடல்கொள்ளப் பட்டதெனத் தமிழ் இலக்கியங்கள் கூருரகிற்கும். இழந்த இலமூரியாவின் ஒருபகுதிதான் குமரிகண்டம். இல மூரியா அழிந்தபின்னும் அதன்பகுதி இருந்தது. அப் பகுதியில் தான் அழிந்த தமிழ்நாடு நாற்பத்தொன்பதும் பஃறுளியாறும் குமரியாறும் மகேந்திரமலையும் மதுரை
2

Page 22
O м உலக வரலாறு
நகரும் இருந்தன. தமிழ்நாடும் தமிழ்மொழியும் மிகப் பழையவை என்பது புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள உதாரணச்செய்யுள் ஒன்றல் வலியுறுத்தப்படு கிறது. அது, r
'பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர்-கையகலக் கற்ருேன்றி மண்டோன்ருக் காலத்தே வாளோடு முற்றேன்றி மூத்த குடி' என்பதாம்.
இந்துக்கள் அண்டங்களின் இயல்பை நன்குணர்ந்து அவற்றினைத் தம் தத்துவநூல்களில் கூறினர். சிவதரு மோத்தரம் அண்டங்களின் இயல்பைக் கூறுகின்றது. பூவுலகு ஏழு பெருந்தீவும் ஏழு பெருங்கடலும் உடையதா யிருந்ததாம். ஏழு பெருக் தீவுகளுள் நடுவணது நாவலங் தீவு. அந்நாவலந்தீவின் ஒரு பகுதியே குமரிகண்டம் சிவஞானமுனிவர் தம் மா பாடியத்தின் கண் அண்டங் களின் இயல்பை ஆராய்வான்தொடங்கி இந்துக்களின் அளவைக் கணக்கை இனிது விளக்கினர். அது வருமாறு:-
'சாளரத்திற்றேரன்றும் ஞாயிற்றின் கதிரின் அதி நுட்பமாய்த் தோன்றும் நுண்ணிய துகள் அணு எனப் படும். அது எண்மடங்கு கொண்டது திரிசரவணு. அஃ தெண்மடங்குகொண்டது கசாக்கிரம். அது எண்மடங்கு கொண்டது பூகை. அது எண்மடங்குகொண்டது யவை, யவைநெல்லகலம் எட்டுக்கொண்டது ஒரு அங்குலம். அங் குலம் இருபத்து நான்குகொண்டது ஒரு முழம். முழம் நான்குகொண்டது ஒரு வில். வில் இரண்டுகொண்டது ஒரு தண்டம். தண்டம் இரண்டாயிரம்கொண்டது ஒரு குரோசம். குரோசம் நான்குகொண்டது ஒரு G8uurgFéOT.” இவ்வளவையை இந்துக்கள் பண்டுதொட்டு உபயோகித் தனர். விண்மீன்களை முதன்முதல் அளந்தறிந்தோர்

சீர்திருந்திய மக்கள் I
இந்துக்களே. கஜலகளேயும் வித்தைகளையும் மாசற உணர்ந்து ஒழுக்கத்தால் மேம்பட்டோர் தமிழரே என்று இறுமாப்பெய்துவோமாக.
குமரிகண்டத்திலே வாழ்ந்த பழந்தமிழ்க்குடிகளே முதன்முதல் சீர்திருந்தி நாகரிகநிலையடைந்து வாழ்ந்த மக்களென அறிஞர் கூறுப. இக்கூற்று இக்காலத்தில் கி. பி. 1935 ஆராய்ச்சிவல்லோரின் துணிவுகளாலும் வலி யுறுத்தப்படுகிறது. சிந்து நதிக் கரையிலுள்ள மோகஞ் சதாரோ அரப்பா என்னும் நகரங்களைத் தோண்டியறிந் தோர் அந்நகரங்களில் வாழ்ந்தோருடைய கலன்களையும், சித்திரங்களையும், சிலைகளையும் பார்த்து அந்நகரத்தோர் மிக நாகரிகமடைந்த சாதியினரெனவும் அவர் இலிங்க வழிபாடுசெய்தவரெனவும் அவர்கள் ஆரியரல்லர் திராவிட ராதல் கூடுமெனவும் சுமேரிய பாபிலோனியருக்கு முன் னரே சீர்திருந்தினரெனவும் துணிகின்றனர். பண்டைக் காலத்துத் தமிழர் யாவருக்கும்முன் எழுதவும், கணக்கிட வும், கமஞ்செய்யவும், வணிகஞ்செய்யவும், நூல் நூற்க வும், கப்பல்கள் கட்டவும் அறிந்திருந்தனர் என்பதற்கு ஐயமில்லை. தமிழருடைய பழைய இலக்கணமாகிய தொல் காப்பியம் கிறீஸ்துவுக்குப் பலநூறு ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்டது. தமிழ்மொழி யுண்டாகி, இலக்கணம் தோற்றுதற்குமுன் சீர்திருந்தியமொழியாகப் பேசப்பட் டிருக்கவேண்டும். கி. மு. 5000 ஆண்டுகளுக்குமுன்னமே தமிழர் தத்துவஞானம் உணர்ந்து சிவனை வழிபட்டனரா யின், அவர்தம் நாகரிகத்தின் சிறப்பை எடுத்துரைத்தல் மிகையாகும். தமிழ்மொழியும் தமிழ் நாகரிகமும் மிகச் சிறந்தவையாதலாற்ருன் ஏனைய பண்டையமொழிகளும் நாகரிகங்களும் இறந்து ஒழிந்தபோதிலும் தமிழ்மொழி யும் தமிழருடைய நாகரிகமும் இறவாது இருக்கின்றன. தமிழ்நாட்டில் பாழாயிருக்கும் பண்டைநகரங்களைத் தோண்டிப்பார்த்தால் இவ்வுண்மைகள் எல்லாம் வலியுறும்.

Page 23
12 உலக வரலாறு
சுமேரியர் (பாபிலோனியர்
தமிழர் சீர்திருந்தியிருந்தகாலத்தே யுபிறேற்றிஸ் ரைக்கிறிஸ் என்னும் நதிக்கரைகளில் வதிந்த மக்களும் நாகரிகமடைந்தோராய் வாழ்ந்தனர். அம்மக்களே சுமேரி யர். அவருடைய தலைநகர் பாபிலோன் ஆகலின், சுமேரி யர் பாபிலோனியர் எனப்பட்டனர். சுமேரியர் தம் குறிப் புக்களை மண்ணேடுகளில் எழுதினர். எழுதியபின்னே செங்கற்களைச் சுட்டனர். கற்கள் கிடையாமையால் சுமேரி யர் செங்கல்சுடப்பயின்றனர். பண்டைப் பொருளாய்வோர் மண்ணேடுகளை எடுத்து, சுமேரிய மொழிகளுக்குக் கருத் துரைக்கப் பயின்றதன் பயனுக, சுமேரிய நாகரிகத்தின் வரலாறு இக்காலத் தோருக்குத் தெரியவருகிறது. கி. மு. 4000 ஆண்டுகட்குமுன்னரே சுமேரியர் கடிதமுறையை ஊரெங்கும் ஏற்படுத்தி உபயோகித்தனர் எனவும், நீர்ப் பாய்ச்சலை நூன்முறையாகச் செய்தனரெனவும் கூறுப. சுமேரியருடைய துறைமுகம் ஏரிது’ எனவும், கமத் தொழிற்களம் கிப்பூர் எனவும் தெரிகிறது. சுமேரியர் பண்டுதொட்டு ஆதித்தனையே வழிபட்டனர். செமிற்றிக் குழுவினராகிய அக்காடியர் சுமேரியரோடு கலந்தனர். அக்கலப்பைப்பற்றிய செய்திகள் தெரியவில்லை. சுமேரி யர் சிலகாலம் அசிரியாவையும் சிரியாவையும் ஆண்டனர். கி. மு. 3000 அளவில் கீழெல்லை பில் வதிந்த ஈலநாட் டோரும், மேலெல்லை பில் உறைந்த அமோறியரும் சுமேரியநாட்டைச் சூறையாடிக் கெடுத்தனர். செமிற்றிய ருடைய வேந்தன் 'ஹமுரபி' ஈல5ாட்டோரைத் துரத்திச் சுமேரியர் சுவாதீனத்தைக் காத்தான். அவன் எழுதிய கடிதங்களும் விதித்த பிரமாணங்களும் கிடைக்கின்றன. அவனுடைய ஆட்சிக்காலத்தில் வானநூல்களும் வைத்திய நூல்களும் இலக்கணங்களும் இலக்கியங்களும் இயற்றப் பட்டன. சுமேரியப்பெண்கள் சுவாதீனமுடைய ராய் வாழ்ந் தனர். 'இற்றையிற்றர் ஹமுரபியின் சந்ததியாரோடு பொருதனர். பின்பு சாலடியர் சுமேரியரைவென்று 576 ஆண்டுகள் அரசாண்டனர்.

சீர்திருந்திய மக்கள் 13
அசிரியர்
அசிரியர் பாபிலோனுக்கு வடபால் வதிந்தனர். அவ ருடைய நாகரிகம் பாபிலோனியருடைய நாகரிகத்தின் வழித் தோன்றிய தென்பர். அவர்கள் வாணிகத்தையும் போர்த்தொழிலையும் பெரிதும் போற்றினர். அசிரியர் கி. மு. 1000-ல் தம் ஆட்சியைப் பாபிலோனியாவிலும் சிரியாவிலும் நாட்டினர். அசிரியரை ஆரியர் அசுரர்
என அழைத்தனர்போலும்.
முதலாம் ஷல்மனே சரும் இரண்டாம் வில்மனே சரும் நடாத்திய போர்கள் அசிரியருடைய தலைநகராகிய ‘நினைவா நகரிலுள்ள சுவர்களில் சித்திரிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது ஷல்மனே சருடைய மகன் அசூர் தனபால் கலகம் விளைத் தானுக, மற்ருெரு மகன் நாலாம்ஷாம்ஷி இராமன் கலகக்காரரை அடக்கினன். அவன் ஆர்மீனிய ரோடு பொருதான். கி. மு. 745-ல் அசிரியருடைய இராச் சியம் தழைத்தோங்கியது. புலி என்னும் ஒரு படைத் தலைவன் அரசியலைச் சீர்திருத்தி ஆர்மீனியரை அடக் கியதுமன்றி இற்றையிற்றியரிடமும் பினிசியரிடமும் திறை பெற்ருரன். அவன் இறக்க வேருெரு படைத்தலைவன் கி. மு. 727-ல் அரசபதவியைப்பெற்ருரன். அவன்பெயர் சார்கன். கி மு. 705-ல் அவனுடைய மகன் சாமனேசர் (சென்னசரிச்) சாலடிய பாபிலோனியரோடும் யூதரோடும் சிடன் நகரத்துப் பினிசியரோடும் போர்நடாத்தினன். அவன் பாபிலோன் நகரைப் பாழாக்கியபின் எகிப்தை யும் பிடித்து 22 மாகாணமாகப் பிரித்துத் தேசாதிபதிகளே நியமித்தனன். அவனுடைய மக்கள் இருவர் அவனை கி. மு. 681-ல் கொன்றனர். அசிரியர் பின்னரும் எகிப்திய ரோடு பொருது தீபுநகரை அழித்தனர்.
சாலடியர் (பாபிலோனியர்)
கி. மு. 608-ல் சாலடியர் தலையெடுத்து அசிரியரைப் பாபிலோனி லிருந்தும் துரத்திச் சுவாதீனமாயிருந்தனர்,

Page 24
丑4 உலக வரலாறு
கி.மு. 605.ல் "நபுகத் நாச்சர் என்னும் சாலடியவேந்தன் சிரியாவை ஆண்டிருந்த "நெக்கோ’ என்னும் எகிப்திய தேசாதிபதியை வென்றன். நபுகத் நாசருக்குப்பின் செங் கோல் செலுத்தியவன் ‘நபடோனியஸ்' என்பான். அவன் சுமேரியக்கல்வியை வளர்த்தான். சுமேரிய பாபிலோனிய மொழி பண்டைக்காலத்து அரசியற் பொதுமொழியாக வும், வணிகருடைய பொதுமொழியாகவும் திகழ்ந்த தென்ப. பெல்ஷசார் அரசாண்டகாலை சாலடிய பாபி லோனியர் ஒழுக்கங் குன்றிக் கெட்டனரெனக் கூறுப. கி. மு. 6-ஆம் நூற்றண்டில் பார்சியர் ஈலத்தில் குடியேறி னர். இரண்டாம் சைரஸ் என்னும் பார்சிய மன்னன் மீடியரை அட்டுச் சிரியாவினுள் நுழைந்தனன். கி. மு. 538-ல் சைரஸ் சாலடிசரைச் செற்றுப் பாபிலோனிய தேசத்தையும் கைப்பற்றினன். சைரஸ் என்பவனுடைய மகன் முதலாவது கம்பீசிஸ் எகிப்தையும் தன் ஆட்சி நாடாக்கினன். பின்பு முதலாவது டேறியஸ் கி. மு 521-ல் அரசு கட்டிலேறிச் சின்னசியாவைப் பிடித்துப் பார்சிய ஆழிவேந்தனகி, யவனரோடு பொருதான். இப் பார்சி யரை இரானியர் என்பதும் உண்டு.
eliA. EMau mua
4-ம் பாடம்-எகிப்தியர்
ത്തrim
இற்றைக்கு 6000 ஆண்டுகட்கு முன்னரே எகிப்தியர் மிகச் சீர்திருந்திய நிலையடைந்திருந்தனரெனவும், யூதர் யவனர் உரோமர் என்றற் ருெரடக்கத்தோர் எகிப்தியரிடம் தம் நாகரிக வாழ்க்கைக்கு வேண்டிய பொருட்களைப் பெற்றதுமன்றி, அவரிடம் பல கலைகளையும் வித்தைகளை யும் கற்றனரெனவும், மேனட்டா சிரியர்கள் செப்பு கின்றனராக லின், எகிப்தியருடைய வரலாற்றை ஆராய் தல் பயனுடைத்தென்க. அன்றியும், தமிழ்நாட்டு மூவேந்தராகிய சேர சோழ பாண்டியர் செங்கோல்

எகிப்தியர் 15
செலுத்திய காலம் மிகப் பழையதென்பது ஒருதலையாக லின் தமிழருக்கும் எகிப்தியருக்கும் யாதேனும் தொடர்பு உண்டோ என்பதைத் தேர்தல் தமிழ்மொழிப் பற்றுடை யோர் யாவருக்கும் இன்பம் விளைக்கும் என்பதில் ஐயமில்லை. f
பண்டைப் பொருள் ஆராய்வோர் எகிப்தியருடைய முக்கோணக் கோபுரங்களுள் சேமிக்கப்பட்டிருக்கும் உடல்களையும் கலன்களையும் கருவிகளையும் ஆராய்ந்தும் அக்கோபுரச் சுவர்களில் தீட்டப்பட்டிருக்கும் சித்திரங் கட்கும் எழுத்துக்களுக்கும் பொருள் கூறியும், அக் கோபுரச்சாலைகளுள் கிடைக்கும் யானைக்கொம்பு கருங் காலித்துண்டு மு த லி ய வ ற் றி ல் எழுதப்பட்டிருக்கும் வரலாறுகளைப் படித்தும் எகிப்தியர் கி. மு. 5000 ஆண்டு கட்கு முன் நாகரிகநிலை யடைந்திருத்தல் கூடுமெனக் கருதுகின்றனர்.
எகிப்தியர் குரு மனேதோ என்பான் மீனன் முதலிய 330 மன்னரைப்பற்றிய ஒரு வரலாறு வரைந்தனன். அவ் வரலாற்றை யவனவாசிரியன் ஹாடோற்றஸ் கி. மு. 407-ல் படித்தனன். எகிப்தியர் யானைக்கொம்புகளிலும் கற் பாறைகளிலும் பப்பீரஸ் ஒலையிலும் கலன்களிலும் வேட்டையாடல், கப்பல்கட்டல், போராடல், தெய்வங் தொழுதல் என்ரு ற்போன்ற காட்சிகளைச் சித்திரித்தது மன்றி வரலாறுகளையும் எழுத்தாணியால் மேற்கூறிய பொருட்களில் வரைந்தனரெனவும் அறியக்கிடக்கின்றது. இனி எகிப்தியர் இறந்தோரின் உடம்புகளை அழியவிடா மல் காக்கும் வித்தையை உணர்ந்திருந்தனராகலின், எகிப்திய வேந்தருடைய உடல்களை நாம் இன்றும் காண லாம். பண்டைய எகிப்தியர் உபயோகித்த பொருட்கள் சில, உடம்புகள் சேமிக்கப்பட்ட சாலைகளில் கிடைக் கின்றன.

Page 25
6 உலக வரலாறு
ஆபிரிக்கப் பெருவனந் கரத்தின் வடகீழ்க்கரையி அலுள்ள தேசம் எகிப்தெனப்படும். எகிப்து கடலையும் வனுந்தரத்தையும் எல்லையாகவுடையதாகலின், கானவரி னின்றும் காக்கப்பட்டது. எனினும் சகாரா வனந்தரத் தில் 270 குடிகிலங்கள் உள வெனவும் அவண் உறையும் கானவர் எகிப்தினுள் நுழைந்து குறைபாடினரெனவும் கூறுப. எகிப்தின் தலைநகராகத் துலங்கிய மெம்பிஸ் என்னும் நகரை அக்கியர் கரும்பூமியெனப் பொருள் படும் அஹிப்தா (ஹகிப்தா) என்னும் பெயரால் வழங் கினர். அப்பெயர்தான் எகிப்தெனத் திரிந்தது. யவனர் நைல்நதியை நீலஸ் நதியெனவும், எகிப்தியர் அதை அப்பியெனவும், அசிரியர் அதை யாறு எனவும், நீலநதி யின் ஆற்றிடைக் குறையை எகிப்தியர் தம் மொழியில் யாறு முற்றம் எனவும் கூறினர். இவை தமிழ் மொழி யாதல காணக.
ஆதிகாலத்தரசர்
எகிப்தை ஆண்டமன்னருள் முதல்மன்னன் பெயர் மீனன். மீனனுடைய வம்சத்தினர் 250 வருடங்கள் ஆண்டனர். இவ்வம்சத்தினருள் ஒருவன் அகன். அவ னுடைய உடலும் கலன்களும் ஆயுதங்களும் புடைவை களும் பொன்னுபரணங்களும் நாகதம் என்னும் ஈமக்காட் டில் எடுக்கப்பட்டன. ஆதிகாலத்து ஓவியர் ஆடு மாடு மான் நரி சிங்கம் வாத்து மீன் முதலை என்பவற்றின் உருவங்களைத் தீட்டினர் எனத் தெரிகிறது. அக்காலத்து எகிப்தியர் குதிரை யையும் ஒட்டகத்தையும் உபயோகித் திலர் எனத் துணியப்படுகிறது.
இரண்டாம் வம்சத்தினருடைய ஆட்சிக்காலத்தில் நீல் நதியின் முகத் துவாரத்தில் பூமி பிளவுபட்டுப் பலர் இறந் தனர் எனவும், நதி பதினுெருநாள் தேன் வெள்ளம் பாய்ந்ததெனவும், மூன்ரும் வம்சத்தினரே முக்கோணக் கோபுரங்களைக் கட்டினமெனவும் அறிகிருேம். இம் முக்

எகிப்தியர் 17
கோணக் கோபுரங்கள் கைரோ நகருக்கு அணித்தாய கிஸ்கே என்னும் இடத்தில் கட்டப்பட்டுள்ளன. கூபு (கீயுபு) கட்டிய முக்கோணக் கோபுரம் 480 அடி உயர மானது. நரசிங்கக் கோபுரங்களும் கற்பாறைகளில் வெட் டப்பட்டன. ஒன்று 65 அடி உயரமானது. மேனுட்டார் இந் நரசிங்கம் யாதாகுமோவென மயங்குகின்றனர். நா சிங்கம் மனிதத்தலையும் சிங்கவுடம்பும் உடையது. நரசிங் கக் கோபுரத்தின் கீழ் கோயில் கட்டப்பட்டிருக்கும். வேங் தன் கூபு என்பவனுடைய ஞானி ஒருவன் 110 வயசினன். அவன், இரா என்னும் தேவனுடைய பூசாரி மூன்று குமாரரைப் பெறுவன் எனவும், அம்மூவரும் அரசு கட்டிலேறுவர் எனவும் அறிவித்தனன். இவ்வைந்தாம் வம்சத்தினருடைய காலத்தில் எழுதப்பெற்ற ஓலை ஒன்று லண்டன் பண்டைப்பொருட்காட்சிச் சாலையில் உண்டு மத்தியன் சாபு (பப்பி!) கானவரோடு பொருதான். ஏழாம் வம்ச வரலாற்றிலிருந்து மேன்மக்கள் பலர் குடியரசு முறையாக ஆண்டனர் எனவும், அக்காலத்தில் கிக்கஸ் என்னும் இடையர் எகிப்தினுள் புகுந்து தம்மாண்யைச் செலுத்தினர் எனவும் துணியப்படுகிறது.
கி. மு. 2000-ல் 12-ம் வம்சத்தினனுகிய இடைக்கால வேங் தன் ஆமன்காத்தப்பு 1 ஆண்டனன். அவன் எகிப்தை மாகாணங்களாகப் பிரித்துத் தேசாதிபதிகளே ஏற்படுத்தினன். அவன் காலத்தில் தணுதிகாரிகள் சிறந்த உத்தியோகத்தினர் என எண்ணப்பட்டனர். கோயிற் பூசைகளும் சமயக் கிரியைகளும் அரசாங்கத்தோரின் ஏவற்படியே நடைபெற்றன. அவனுடைய மகன் சன கரத் என்பான் நூபியரோடு பொருதான் எனவும், கர் ணுக் என்னும் நகரிலுள்ள ஹாமன் கோயிலைக் கட்டுவித் தான் எனவும் கூறுவர். ஆமன் காத்தப்பு 11-வதும் 111-வதும், சனகரத்து 11-வதும் என்போர் நீகிரோவரைத் தம் நாட்டினுள் புகவிடாமல் காத்தனர். ஆமன்காத் தப்பு II முதலைத்தலைத் தெய்வத்திற்கு ஒரு கோட்டம்
8

Page 26
8 உலக வரலாறு
நிறுவினன். 18-வது வம்சத்தினருடைய ஆட்சியில் தாய் வழி உரிமை போற்றப்பட்டது. பின்பு இடையர் 200 ஆண்டுகள் ஆணே செலுத்தினர். 17-வது வம்சத்தினர் இடையரைத் துரத்திச் சுவாதீனம் பெற்றுச் செங்கோ லோச்சினர். அக்காலத்தில் குதிரைப்படைகளும் தேர்ப் படைகளும் விற்படைகளும் உபயோகிக்கப்பட்டன. எகிப் தியர் கமத்தொழிலையே விருத்திசெய்தனர் எனவும், நிலைப்படை வைத்திருந்திலரெனவும், கூலிப்படையே நாட் டைக் காத்ததெனவும் கூறுப. வேந்தர் சிலர் புல்லினல் செய்த தலையணி அணிந்தனர் எனவும், சிலர் கூந்தல் வளர்த்தனரெனவும் தெரிகிறது. ஆமன்காத்தப்பு 1 ஹாமனுடைய பூசாரிகளைப் புரந்தும் நுபியரிடம் திறை பெற்றும் நேமியுருட்டினன். ததிமிஸ் என்னும் பெயரிய மூவேந்தர் இருந்தனர். மூன்ருவது ததிமிஸ் சிரிய நாட்டை யும் சைப்பிறஸ் தீவையும் திறைநாடாக்கினன். ஆமன் காத்தப்பு 11-வதும், ததீமிஸ் மூன்ருவதும், எதியோப்பிய ரோடும் பினிசியரோடும் பொருது வாகை சூடினர்.
எகிப்தியருடைய தெய்வங்கள்
ஆமன்காத்தப்பு III மெம்பிஸ், தீபு, கர்ணுக் என் னும் இடங்களில் கோயில்கள் கட்டுவித்தான். அவன் தீபுநகரில் நாட்டிய மம்மனுடைய சிலை 78 அடி உயர LDIT6OT ga. ஆமன் காத்தப்பு IV-வது பாபிலோனியரோடு பொருதான். அவன் காலத்தில் ஹாமனுடைய வழிபாட் டினும் குரியவழிபாடு பரம்பியது. எகிப்தியருடைய தெய் வங்கள் தமிழ்த் தெய்வங்களோடு மிக ஒப்புடையன. எகிப்தியர் சூரியனை இரா (Ra) என்னும் பெயரால் வணங் கினர். ஆதியில் ஓசிரிஸ் என்னும் நந்திதேவரின் வழிபாடே சிறப்புற்றிருந்தது. ஓசிரிஸ் என்னும் நந்தியின் மகன் ஹோரஸ் தன் சகோதரன் செற்று என்போனைக் கொன்ருரன். ஒசிரிஸ் தெய்வத்தின் மனைவியும் சகோ தரியுமான ஐசிஸ்தேவதை ஹோரஸ்தேவருக்குத் துணை

எகிப்தியர் 19 புரிந்தனள். நரித்தலைத்தேவரும் நாய்த்தலைத்தேவரும் குரக்குத்தலைத் தேவரும் சிறு தெய்வங்களாகத் தொழப் பட்டனர். ஐசிஸ் தேவதை தலையில் ஓர் உருண்டையும் பாம்பும் அணிந்திருக்கிறதாகச் சிலைகளில் காணப்படு கிறது. இத் தெய்வங்கள் எல்லாம் இராவின் வழிபாட் டைச் சேர்ந்தன. தெந்த ரா என்னும் இடத்தில் எழுங் தருளியிருக்கும் காதர் (என்னும்) காதற்றெய்வம் எடிபு என்னும் ஊரில் இருக்கும் ஹோரஸ் என்னும் தேவரிடம் சென்று ஐந்து நாள் தங்குதல் வழக்கம். ஆமன்காத்தப்பு IV ஓசிரிஸ் வழிபாட்டிலும் இராவழிபாட்டைச் சிறப்பித் தானகலின் தன் பெயரை அக்கன் அற்றன் என மாற்றி னன். அற்றன் என்பது சூரியனைச் சுட்டும். அவனுடைய காலத்தில் ஹாமன் வழிபாடு குன்றியது. ஐசிஸ் முதலிய சில தெய்வங்கள் உரோமர் கோயில்களிலும் இடம் பெற்றன.
எகிப்திய நேமிவேந்தர் ஆழிவேந்தன் இ ர மி சி ஸ் ( கீழெகிப்தையும் மேலெகிப்தையும் ஒருகுடைக் கீழாண்டான். இரயிசிஸ் 11 இற்றையிற்றரோடு பொருது எகிப்தியருடைய ஆட்சி யைச் சின்னசியாவில் காட்டினன். அவன் சட்டங்களை வகுத்து நீதிசெலுத்திய அரசியல்ஞானி எனப் பாராட்டப் பட்டான். ஹாமனுடைய உதவிபெற்று இற்றையிற்றரைக் கடிஷ்களத்தில் வென்று சமாதான உடன்படிக்கை எழுதினன். புலஸ்தினர் என்னும் கடற்கள்வரையும் தன் கப்பற்படையின் வலியால் ஒட்டிக் கலைத் தான். அவன் தூர்த்தரைத் தண்டித்துக் குடிகளைக் காத்தோம்பினன். அவனே எகிப்திய பேரோ என்னும் வேந்தருள் சிறந் தோன் என்ப. பண்டைக்காலங்தொட்டுக் கூலிக்கார ருக்கு நாணகமன்றித் தானியமே கூலியாகக் கொடுக்கப்
Lull-gi.

Page 27
20 உலக வரலாறு
எகிப்தியரின் இறுதிக்காலம்:-கி. மு. 1000-கி. மு. 30. கி. மு. 1000-ல் லிபியர் என்னும் வட ஆபிரிக்கர் எகிப்தினுள் புகுந்து 170 வருடம் ஆண்டனர். அவர் களேப்பற்றிய செய்திகள் தெரிகின்றில. பின்பு கி. மு. 750-ல் பியாங்கி என்னும் எத்தியோப்பியர்வேந்தன் எகிப் தில் தன்னுணையைச் செலுத்தினன். 7.ம் நூற்றண்டில் எதிப்தியருடைய வலி குன்றியதாக லின், சால்டிய பபி லோனியர் எகிப்தியர் ஆண்ட சின்னசிய நாடுகளைக் கைப்பற்றினர். கி மு. 601-ல் சால்டியவேந்தன் நபுகத் நேசர் சிரியா முதலிய நாடுகளில் தன் ஆணயைச் செலுத்தினன். எகிப்து தானியமிகு நாடாகலின், எகிப்தியருடன் யவனரும் பினிசியரும் உரோமரும் அரா பியரும் எதியோப்பியரும் பார்சியரும் தமிழரும் ப்ண்ட மாற்றுச்செய்தனர். பினீசியாவை ஆண்ட எகிப்தியர் தேசாதிபதி நெக்கோ என்பான் கி. மு. 6-ம் நூற்றண் டில் மாலுமிகள் சிலரை ஆபிரிக்காவைச்சுற்றிப் பிர யாணஞ்செய்யும்படி ஏவினன். அவன் நீல்நதியையும் செங்கடலையும் இணைத்தற்கு ஒரு வாய்க்கால் தோண்டும் படி ஏவினன் எனவும், 1200 கூலிக்காரர் இறந்தமை யால் அம்முயற்சி கைகூடவில்லை எனவும் அறியக்கிடக் கிறது.
கி. மு. 568 முதல் 525 ஈருரக சால்டிய பபிலோனி யரும் அவர்பின் பார்சியரும் எகிப்தில் பொருதனர். 525-ல் பார்சிய வேந்தன் டேறியஸ் 1 நீல்நதியையும் செங் கடலையும் ஒரு வாய்க்காலால் இணைத்தனன் எனக் கல் வெட்டு ஒன்று கூறுகின்றது. கி. மு. 415-ல் எகிப்தியர் கிரேக்க நாட்டோரை யவனர் என அழைத்தனர். யிவனக் கூலிப்படையின் உதவியால் எகிப்தியர் பார்சியரைத் துரத்திச் சிறிது காலம்சுவாதீனமா யிருந்தனர். பின்ன ரும் பார்சியர் கி. மு 343 முதல் 332 வரையும் எகிப்தை ஆண்டனர். கிரேக்கவேந்தன் அலைச்சாந்தர் பார்சி

y is if 21
யரைச்து ரத்தி எகிப்தைக் கிரேக்கருடைய ஆட்சிநாடாக்கி ன்ை. கிரேக்கவேந்தர் தொலைமிபதினல்வர் ஆண்டனர். கிரேக்கவம்சத்தினருள் முடிவில் ஆண்டபெண் கிளியப் பத்திரை 111 என்பவள் யூலியஸ் கை சரின் நண்பன் மாக்கஸ் அந்தோனி என்பானேடு ஊடியும் கூடியும் இன்புற்ருள். கி. மு. 32-ல் கிளியப்பத்திரை அகஸ்த ரோடு பொருது தோல்வி யடைந்து உயிர்நீத்தனள். அகஸ்தருடைய காலத்தில் யவனர் எகிப்தியருடைய துறை யாகிய பெரிகிசியிலிருந்து புறப்பட்டுத் தமிழ்நாட்டுத் துறைகளாகிய முசிறி, காவிரிப்பூம்பட்டினம், தொண்டி கொற்கை முதலியவிடங்களில் மிளகு பருத்தி அரிசி ஆரம் முத்து முதலிய பண்டங்கள் பெற்று ஏகினர் என அறியக் கிடக்கின்றது. உரோமர் எகிப்தை ஆண்டகாலத் தில் கிறிஸ்தமதம் பரம்ப, எகிப்தியருடைய மதம் சிர் கெட்டது. அங்கிலையில் அராபிய முகமதியரும் துருக்க முகமதியரும் எகிப்தைக் கைப்பற்றிப் பல நூற்ருரண்டுக ளாக ஆண்டனராக லின் எகிப்தியருடைய சுவாதீனமும் சமயமும் அழிவெய்தின.
~'
5-ṁ LI TIL ň-g5 if
யூதர் அராபியர் அபிசீனியர் அசிரியர் பினிசியர் என் போர் செமிற்றிய மொழிகளைப் பேசுபவராக லின், செமிற்றிக் கூட்டத்தினரெனக் கருதப்படுகின்றனர். நம் மெய்கண்டதேவர் சிவஞானபோதம் அருளிச்செய்வதற்கு 2000 ஆண்டுகட்கு முன் யூதர் என்னும் செமிற்றிக் கூட் டத்தினர் யூடியா என்னும் நாட்டிலே வதிந்தனர். அவ ருடைய மொழி ஈபூரு எனப்படும். ஈபூரு பிற்காலத்தில் அரமெயிக்கு என்னும் செமெற்றிக் மொழியோடு சிறிது கலந்தது. யூதர் தம் வரலாற்றைத் தம் மொழியில் or (լք திய பழைய ஏற்பாடு என்னும் பைபிள் நூலின்கண்

Page 28
92 உல்க வரலாறு
குறித்தனர். யூதர் ஏகோவர் என்னும் தனிக்கடவுளை வழிபட்டனர். ஏகோவர் பூமியையும் உவரியையும் வானே யும் ஞாயிற்றையும் திங்களையும் மனிதனையும் படைத்து ஏழாம் நாளாகிய சனிக்கிழமை ஆறியிருந்தனர். ஆகலின் யூதர் சனிக்கிழமையை ஒய்வுநாளாகக் கொண்டு கடவு 8ளப் பிரார்த்தித்தனர். மனிதர் பா வஞ்செய்தலைக் கண்டு கடவுள் சினந்து மழை வெள்ளத்தால் யாவரையும் அழித் தனர். இப்பிரளயத்தில் நோவா என்பவனும் அவன் குடும்பத்தினரும் கடவுளாற் காக்கப்பட்டனர். நோவா தன் கலத்தில் விலங்குகளையும் பறவைகளையும் வைத் திருந்தமையால் உலகிற் பின்னரும் உயிர்கள் பெருகின என்ப. இந்நோவாவின் சந்ததியினர் யூதர் எனப் பெயர் பெற்றனர். யூதர் தம்மையே கடவுள் ஏனைய மக்களிலும் விரும்பித் தெரிந்தனர் என்பர். பட்டி மேய்த்துக் கூடா ரங்களில் வசிக்கும் இவ்விடையர்களை எகிப்தியர் அடிமைக ளாக்கினர்போலும். யூதரை எகிப்தியரிடமிருந்து மீட் டற்கு ஏகோவா.மோசஸ் என்பானைத் தலைவனக நியமித் தனர். எகிப்திய மன்னன் யூதரை நாட்டைவிட்டு ஏக விடாது தடுத்தானக ஏகோவர் எகிப்தியரைப் பலவாறு ஒறுத்தனர். பின்பு மோசஸ் எகிப்திய மன்னனிடம் உத் தரவு பெற்று யூதரைக் கூட்டிச்சென்று செங்கடலைக் கடந்தான். கடல் கடத்தற்குக் கடவுள் கடலை வற்றப் பண்ணின ரெனவும் எகிப்தியர் பின்தொடர்ந்தனராகக் கடல் பெருகி அவர்களை நாசமாக்கிய தெனவும் பைபிள் கூரு நிற்கும். மோசஸ் என்பானுக்கு ஏகோவர் தீப்பிழம் பாகாச்சைணுயிக் குன்றில் தோன்றிப் பத்துக் கற்பனை க3ளக் கொடுத்தருளினர். அவற்றுள் பிறர் நயங் கருதிப் பிறரை நேசிப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, பொய் பேசாதே, பிறர்மனை விழையாதே என்பன சிறக் தவை. ஏகோவர் நீதிபதிகளை நியமித்து யூதரை நல்வழிப் படுத்தினர். யூதர் படிம வழிபாடு தவறானதென நம்பி னர். யூதருடைய முதன்மன்னன் பெயர் சோல். அவன்

யூதர் 23.
ஏகோவருடைய உதவியால் பகைவர்களை வென்றன் என வும், அவர் கட்டளையை ஒருமுறை மீறி யொழுகித் துய ருற்ருரன் எனவும், அவனுடைய துக்கத்தைத் தாவீது என் னும் சிறுவன் தன் இசை வன்மையாலும் நா வன்மையா லும் நீக்கினன் எனவும் கூறுப, இத்தாவீது என்னும் இடையன் ஏ கோவருடைய அருள் பெற்று பகைவராகிய பிலிஸ்தினியருடைய தலைவன் கோலியாதனைக் கவண் வீசிக் கல்லெறிந்து கொன்ருரன் என்ப. அவன் பழைய ஏற்பாட்டிலுள்ள கீர்த்தனங்களைப் பாடினன். தாவீதின் பின் அவன் ம்கன் சாலமன் முடிபெற்றன். சாலமன் புத்திசாலியெனப் புகழ் பெற்ருரன். அவன் எரிசலம் நகரைத் தலைநகராக்கி அவண் ஏகோவருக்கு ஒரு கோட் டம் எடுப்பித்தான். அக்கோயிலில் வழிபடுதற்கு பிற் காலத்தில் பூ தரும் கிறிஸ்தவரும் முகமதியரும் யாத்திரை செய்தனர். சாலமன் காமியாத லின் காமக்கிழத்தியர் பலரை வைத்திருந்தான். அவன் ஆண்ட காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து மயிலினது தோகை நெல்லரிசி முதலியவை யூடியா நாட்டிற்குக் கொண்டுபோகப்பட்டவை எனத் தெரிகிறது.
யூதர் அசிரியரோடு பொருது தோல்வியடைந்து தம் சுவாதீனத்தை இழந்தனராதலின் தம்மைக் காத்தற்கும் சிறை மீட்டற்கும் ஏகோவர் ஓர் இரட்சகரை அளிப்பர் என எதிர்பார்த்திருந்தனர். ஏகோவர் யூதரைமாத்திரம் நன்னெறிப்படுத்தற்கன்றி யாவரையும் இரட்சித்தற் கெனத் தன் குமாரன் ஏசுகிறீஸ்துவை உலகிற் பிறக்கும் படி சங்கற்பித்தார். ஏசுகிறீஸ்துவின் வாழ்க்கை வர லாற்றையும் உரைகளையும் புதிய ஏற்பாட்டில் வாசித் துணர்க. கிறிஸ்து பிறந்த காலத்தில்-இந்நூல் எழுது தற்கு 1950 ஆண்டுகட்கு முன் யூடியாதேயத்தில் உரோம ருடைய ஆழிவேந்தன் அகஸ்தரின் கீழ்படியரசனுக ‘ஏரட் என்பவன் ஆண்டான். ஏரட் என்பவன் தன் பதவியை ஏசு வெளவுவாரென அஞ்சி செங்கீரைப் பரு

Page 29
24 உல்க வரலாறு
வத்திலேயே ஏசுவைக் கொல்ல முயன்ருரனுக, மரியாளும் யோசேப்பும் ஏசுவை எகிப்து தேசத்திற்குக் கொண்டு சென்றனர். ஏசு கிறிஸ்து வளர்ந்து தன் நாடு திரும்பி னர். ஏசுகிறிஸ்து தான் மனிதகுமாரன் எனவும், தான் மனிதருக்காகத் தன்னுயிரைத் தியாகஞ் செய்வனெனவும் தன் சிஷ்யர் பன்னிருவர்க்குப் பலமுறை உரைத்தனர். உரோமருடைய ஆட்சியிலிருந்து தம்மை விடுதலையாக் காமையால், யூதர் ஏசுவை இரட்சகர் அல்லர் என மறுத் தனர். பூகருடைய ஒழுக்கத்தை ஏசு கண்டித்தனராக. யூதர் ஏசுவைக்கொல்ல முயன்றனர். அவருடைய சிஷ்ய ருள் ஒருவனகிய யூடாஸ் ஸ்காரியத் தன் 30 வெள்ளிக் காசு பெற்று அவரைப் பகைவருக்குக் காட்டிக்கொடுத் தான். கிறிஸ்து சிலுவையில் வெள்ளிக்கிழமை அறையப் பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்தமையால் கிறிஸ் தவர் ஞாயிற்றுக் கிழமையைக் கடவுளைப் பரவுதற்குச் சிறந்த நாளெனக் கருதுகின்றனர். கிறிஸ்துவினுடைய வாழ்க்கை வரலாற்றையும் நீதி யுரைகளையும் மத்தீயு, அலுரக்கு, மார்க்கு, யோன் என்னும் நால்வர் எழுதினர். கிறிஸ்துவினுடைய முதற் சிஷ்யனுன சிமியோன் பேதுரு வும் கிறிஸ்துமதப் பிரசாரகருள் சிறந்தோணுகிய பவுல் என்பானும் கிறிஸ்து மதத்தை யவன தேசத்தில் உப தேசித்தனர். இங்ஙனம் உரோமரும் கிரேக்கரும் கிறிஸ்து மதத்தைத் தழுவினராகலின் உரோமருடைய ஆட்சி நாடுகளாகிய மேனடுகள் யாவற்றிலும் கிறிஸ்து சமயம் பரம்பியதென்க. எரிசலம் நகரில் கம் சமயம் தோன்றிய தாகலான் அந்நகரை தாம் வணங்குதற்குரிய இடமென எண்ணி கிறிஸ்தவர் யாத்திரைசெய்து வருகின்றனர். பிற் காலங்களில் யூதர் மேனடுகளில் திரிந்து வட்டிக்குக் காசு கொடுத்துச் சீவனம்செய்து வந்தனர். ஆகலின் மேனுட் டார் இவர்களை வெறுத்தனர். காலஞ் செல்லச் செல்ல யூதர் மேனுட்டாரோடு கலந்து தம்மொழியை மறந்து மேனுட்டு மொழிகளைப் பேசத் தொடங்கினர். இத்தகை யோர் பெரும்பாலார் கிறிஸ்து மதத்தையும் தழுவினர் யூதர் குலத்தினர் வட்டி பெறுதலே தொழிலாக வாழ்த லான் செருமானியரால் 1983-ல் நாடுகடத்தப் பட்டனர்.

6-ம் பாடம்-யவனர்
ള്ളത്ത് എത്തമ
யவனர், யூதர், உரோமர் என்னும் முச்சாதியாரின் நாகரிகங்களின் பயனைத் துய்த்தே மேனட்டார் யாவரும் சீர்திருந்தின ரெனப் பண்டைச் சரித்திர வல்லோர் யாவ ரும் பகர்கின்றனர். ஐரோப்பியருடைய அரசியற் பிர மாணங்கள் உரோமருடைய நூல்களிலிருந்து தெரிக் தெடுக்கப்பட்டவையெனவும், அவரது சமயமாகிய கிறித்து சமயம் யூத சமயத்தின் வழித் தோன்றியதெனவும், அவ ருடைய இலக்கியங்களும் கலைகளும் யவன நூல்களைப் படித்தே எழுதப்பட்டவை யெனவும் வரலாற்ரு சிரியர்கள் உரைக்கின்றனர். உரோமர் தம் அடிமைகளாகிய யவன ரிடம் வித்தைகளைப் பயின்று மேனுட்டுலகிற்கு உதவினர். யவனருடைய பாடல்களுக்கு நிகராக இக்காலத்து மேனுட் டுப் புலவர்கள் புனைந்தாலும் அவர்களுடைய சிற்பச் சிலை களைப்போல இக்காலத்தவரால் அமைக்க இயலாது. இக் காலத்துப் புலவர்களும் ஓவியரும் சிற்பிகளும் நாடக வாசிரியரும் சரித்திர நூலோரும் தத்துவஞானிகளும் யவனருடைய கலைத்திறனை வியக்கின்றனர். இக் காலக் கலையா ராய்ச்சிக்கு யவனருடைய கலையாராய்ச்சி சிறிதும் நிகராகாதெனினும், யவனரே முதன்முதல் ஆராய்ச்சி களில் ஈடுபட்டனர் என்பதைக் கடைப்பிடிக்க, யவனர் அறஞ் செய்தலிலும் பொருளிட்டுவதிலும் இன்பம் நுகர் தலிலும் வீட்டிலக்கணம் ஆராய்தலிலும் தம்மில் மிக்கா ரின்றிச் சிறந்தனரா கிப் பிற சாதியாரின் நன்மதிப்பைப் பெற்று வாழ்ந்தனர். உரோமர் யவனதேசத்தை அடிமை நாடாக்கி ஆண்டபோதிலும் யவனருடைய நாகரிகம் உரோமருடைய மனத்தைக் கவர்ந்தது. யவனருடைய நாகரிகம் உரோமரால் புரக்கப்பட்டு உலகெங்கும் பர விற்று. இத்தகைய யவனருடைய அரசு கிலைகுலைந்ததற் குக் காரணம் ஒற்றுமையின்மையே. யவன தேயத்துச்
4.

Page 30
26 உலக வர்லர்று
சிற்றரசர்கள் ஒன்றுசேர்ந்து ஓர் ஆழிவேந்தனுக்குக் கீழமைந்து அரசியலை நடாத்தி யிருந்தால், யவனர் உரோமரைத் தோல்வி யடையச்செய்து தம் சுவாதீனத் தைக் காத்திருத்தல்கூடும். யவன நகர்கள் ஒவ்வொன்றும் ஆழிவேந்தனுக்குக் கீழமைந்து தம் சுவாதீனத்தை இழப்பதிலும், சிற்றரசாக இருக்க விரும்பின. அந்நகர் களுள் ஏதென்ஸ் நகரே மிகப் புகழ்பெற்றது. ஸ்பாட்டா நகர் போரில் முதன்மை பெற்றிருந்தது. யவனர் தேசீயம் என்பதை உணர்ந்திலர். யவன மொழியில் தேசீயமும் நகர்வாழ்க்கையும் ஒருபொருட் கிளவியாக எண்ணப்பட்டன. நகர்ப்பெயர் விகுதியாகும் போலீஸ் என்னும் யவனமொழிக்கு இவ்விரு கருத்துக்களும் உண்டு. யவனர் ஒருமுறை மாத்திரம் ஒன்றுசேர்ந்து தம்மைப் பிறதேசத்தவர் கீழ்ப்படுத்தாது காத்துக் கொண்டனர். அங்ஙனம் திரண்டு தம் பகைவராகிய பார்சியரைத் துரத் தியபின் தம்முள் முரண்பட்டனர். சொற்ப காலம் ஏதென்ஸ் நகர் தலையெடுத்தும் சொற்பகாலம் ஸ்பாட்டா நகர் தலையெடுத்தும் வந்தன. முடிவில் யவன நகர் யாவும் மசிடோனியருடைய ஆட்சியை ஏற்றன.
யவனர் தம்மை எலனியர் எனவும் தம்நாட்டை எல்லாஸ் எனவும் வழங்கினர். யவன நாடுகளில் ஒன்ருரகிய எப்பிரஸ் நாட்டில் ஒரு பகுதியில் வசித்தோரை உரோமர் அறிந்து அவரைக் கிரேக்கரென அழைத்தனர்; பின்னர் அப் பெயரையே யவனர் யாவருக்கும் சூட்டினர். யவனர் பிறரைப் புலப்படாத மொழிபேசுவோர் என்னும் பதத் தால் குறித்தனர். எல்லாஸ் என்னும் யவன தேசம் ஐரோப்பாக் கண்டத்தில் தென்திசையிலுள்ள ஒரு குடா நாடு. மலையும் மலைசார்ந்த இடமுமாகலின் யவன நாடு குறிஞ்சி நிலமாயிற்று. நாடு சுவாத்தியமானது; மண் செழிப்பானது; யவனநாடு குடாக்கள் பலவுடைய கடற் கரை யுடையதாக லின், துறைகள் பல தோன்றின. ஆதி யில் வசித்த குடிகள் யவனர் டோரியர் எயோலியர் என

U66 ም7
முப்பிரிவினர். யவனமொழி சிறப்புற்று வளர்ந்தது. போர்வித்தை டோரியரால் பாராட்டப்பட்டது. யவன ருடைய தலைநகர் ஏதென்ஸ; டோரியருடைய தலைநகர் ஸ்பாட்டா; எயோலியர் பல குழுவினராக இருந்தனர். அவர்களுள் சிறந்தோச் தீபர். தீபருடையநகர் தீபு எனப் படும்.
மேற்குக் கரைப் பிரிவாகிய எப்பிரஸ் நாட்டில் சாத் திரம் சொல்லும் டடானுக்கோயில் உளது. யவனருடைய கயிலையங்கிரியாகிய ஒலிம்புமலை வடகீழ்க்கரையில் உளது. பாக்கியநாட்டில் கலைத்தேவதைகள் பிரியமுடன் வசிக் கும் பாணர்சஸ்மலை உளது. தென்னடு பிலப்பு என்னும் அரசனின் பெயரால் பிலப்பனிசஸ் என்னும் பெயர்பெற் றது. அதுவே ஸ்பாட்டருடைய5ாடு. குடகரைத் தீவுகளில் யவனரும் குணகரைத் தீவுகளில் டோரியரும் குடியேறி
6.
யவனபூசகர் தம்தேவர்களின் ஏவல்களைக் கூறினர். வானுக்கு அதிதேவதையாகிய சேயஸ்'தான் முதற்கடவுள். அவருடைய தேவி கீரா என்னும் பூமாதேவி. கட8லக்காக் கும் டமீற்றரும் பூகம்ப காரணகிைய பசிடனும் இசைக் கடவுளாகிய அப்பலோவும் அபிரோடிற்றி என்னும் காம தேவதையும் பலால் அதிணி என்னும் ஞானதேவதையும் ஆறிஸ் என்னும் போர்த்தேவதையும் ஆட்டமிஸ் என்னும் வேட்டைக்தேவதையும் ஹேர்மிஸ் என்னும் தேவதூதனும் பாதாளத்தில் ஆளும் புளுற்ருேவும் பிரதானமான தெய்வங் கள். வனதேவதைகள், நீரரமகளிர், வரையரமகளிர் இடையர் தெய்வமாகிய ஆட்டுக்காற்றெய்வம், பாக்கஸ் என்னுங் களித்தேவர், எஸ்கிலாபியஸ் என்னும் மருத்து வர், முதற்கடவுளின் மகனுகிய கராக்கில்ஸ் என்னும் வீரத்தேவர் என்பவை யவனருடைய சிறுதெய்வங்க ளாயின. களித்தேவரையும் வீரத்தேவரையும் நாடக நூலாசிரியன் அரிஸ்தபானுல் இழித்து வசைப்பாட்டுக்கள்

Page 31
28 உலக வரலாறு
பல பாடியுள்ளான். நான்காண்டுக் கொருமுறை பெருக் தேவர்விழாவாக விளையாட்டுக்கள் நடைபெற்றன. இவ் விளையாட்டு முதன்முதல். காலோட்டம் ஒன்ருரய் இருந்து, பின்னர், பாய்தல், மல்யுத்தம், ஈட்டியெறிதல், தேரோட் டல், குதிரையேற்றம் எனப் பெருகிற்று. விஜளயாட்டுக்கள் ஐந்து நாட்கள் நடைபெறும். அதில் முதன்மை அடைக் தோர்க்குப் பரிசாக ஒலிவுமரத்தின் கிளையொன்று அளிக்கப்படும். யவன நாடுகள் யாவற்றிலிருந்தும் வீரர் களியாட்டத்தில் பங்குபெறச்சென்றனர். இவ் விழாக் களைப்பற்றிப் புலவரான பிண்டார் செய்யுட்கள் பல இசைத்திருக்கின்றனர். களித்தேவர் விழாவைப் பாணர் கொண்டாடினர். பாணர் தம் இசையாற்றலைக் காட்டியும், கூத்தர் தம் ஆடற்றிறனைக்காட்டியும், புலவர், தம் பாடற் றிறனைக்காட்டியும் பரிசுபெற அவாவினர். விழா முடிவில் யவனர்கூடி வீதிவலஞ்செய்தனர். திருவிழாக்காலங்களில் கோயிலகிகாரிகள் பணஞ்சேகரித்தனர். யவனர் பலரும் ஒருவழிப்பட்டுத் தம் சமயத்திற்காக அக்கியரோடு போர் புரிந்தனர். புகழ்பெற்ற டெல்பிக் கோயிலிற் சாலினி ஒருத்தி கிடங்கில் வைத்த முக்காலியொன்றிற் குந்தியிருந்து பலிகளையேற்று நறுமணங்கமழும் புகைகளைச் சுவாசித் துத் தெய்வமுற்று ஓலமிட்டலறிச் சாஸ்திரஞ்சொல்லு வாள். அக்கோயிற் பூசகருக்குமாத்திரம் அவளுடைய பேச்சு விளங்கும். அக்கோயிலில் வணங்குதற்கு இந்தியா முதலிய வேற்று நாட்டு வேந்தரும் சென்றனராம். யவன ருடைய மிகப் புராதன கோயில் டடானுவே. யவனர் தம் பாரம்பரிய வரலாற்றின்படி தசாலி நாட்டினின்றும் போங் தனர். எலேனியரின் மூதாதை தியூக்காலியன் எனப்படு வன். உலகுமுழுதும் மழைவெள்ளத்தால் அழிந்தபோதி லும் தியூக்காலியனும் அவன் பெண் பிராவும் முதல்வனின் அருள்பெற்றுத் தப்பினர். இவர்களிலிருந்தே மானிட சமுகம் புனருத்தாரணஞ் செய்யப்பட்டதென்பு.

யவனர் 29
வரலாற்ருரசிரியர்கள் யவனருடைய சரித்திரத்தை கி. மு. 1100 ஆண்டுதொட்டுத் தொடர்கின்றனர். ஆக லின் யவனருடைய நாகரிகம் மிகப் பழையதாகின்றது. பண்டைப் பொருளாராய்ச்சி வல்லோர் மைசின என்னும் பாழுரைத் தோண்டித் தம் ஆராய்ச்சியின் முடிபாக யவ னர் கி. மு. 2000 ஆண்டுகளுக்கு முன்னமே மாட மாளிகைகளும் கோட்டைகோபுரங்களும் அமைக்க வல் லாராய்ச் சீரியநிலையில் இருந்தனர் எனச் செப்புகின் றனர். கிறீற்றத்தீவில் கோசஸ் என்னும் பாழுரை ஆராய்க் தோர் ஆங்குள்ள சில கல்வெட்டுக்களைக்கொண்டு யவனர்க்குமுன் அந்நாட்டில் வேருெருசாதியார் நாகரிக முற்றிருந்தனர் எனக் கருதுகின்றனர். பழைய எழுத் துக்களில் வரையப்பட்டமையால் அக் கல்வெட்டுக்களின் கருத்து விளங்க முடியாமல் இருந்து கி. பி. இருபதாம் நூற்ருரண்டில்தான் தெளியப்பட்டது. அவ்வெழுத்துக்கள் யவனலிபிகள் அல்ல. யவனகாட்டுள் ஆரியர் வடக்கிருந்து தென்னடு புக்கனர் எனத் தெரிகின்றது. யவனருடைய வாழ்க்கையைப்பற்றி இலியட்ஒடிசி என்னும் இதிகாசங்களே வாசித்து அறியலாம். இவ் விதிகாசங்கள் அந்தகனுகிய கோமர் என்னும் புலவராற் புனந்துரைக்கப்பட்டன. கோமர் யவனருள் ஒரு பகுதியினரை ஆக்கியர் எனப் பெயரிட்டனர். இலியட்டின் கதை வருமாறு:-
அகமன்னன் என்பவன் ஆக்கியர் என்பவரை ஆண் டிருந்தான். அவன் தம்பி மணிலேயன்எலன் என்னும் அழ கிற் சிறந்த மங்கையை விவாகஞ் செய்திருந்தான். அக் காலத்திற் காமதேவதையும் ஞானதேவதையும் முதல்வி யும் ஒருங்கு இருந்தனராக அவர் மத்தியில் பொற்பழ மொன்று விழுந்தது. அதன் கண் "இப்பழம் அழகிற் சிறந்தவளுக்கு உரியது' என வரையப்பட்டிருந்தமையின் மூவரும் கலகப்பட்டு நடுவுகிலைமையோனை வேண்டி உரோஜமா நகரத்து இளங்கோவாகிய பரிஸ் என்பா னிடஞ்சென்று தாம் முறையே அழகினையும் ஞானத்தை

Page 32
30 உலக வரலாறு
யும் செல்வத்தையும் அளிப்பரென வாக்களித்தனர். பரிஸ் காமதேவி சார்பாகத் தீர்ப்புச்சொல்லி அத்தேவியின் உதவிபெற்று எலனென்னும் அழகியைக் கவர்ந்து ஏகி னன். இவ்வாறு பிறர்மனை விழைந்தகே உரோஜமகா யுத்தத்திற்கு ஏதுவாயிற்று. அகமன்னன் குறுகில மன் னரையும் வீரரையுங் கூவித் தன் குமரி இபிசினியாவைக் கடற்றெய்வத்திற்குப் பலியிட்டு நன்முகூர்த்தம் பார்த்துப் புறப்பட்டான். போர் பத்தாண்டு நீடித்தது. ஆக்கிய யவனர் உரோஜமா நகரை முற்றுகையிட்டனர். அக்கிலீஸ் என்னும் வீரனும் அகமன்னனும் பிறைசிஸ் என்னும் அடி மைப்பெண் நிமித்தம் கலக்கப்பட்டுப் போரை வெறுத்த னர். பின்னர்த் தன் நண்ப ைெருவனைக் கெக்ரர் என்னும் பகைவர் தலைவன் கொன் ருரன் என அக்கிலீஸ் கேள்வியுற் முறுச் சிறியெழுந்து தேவதை யொன்றின் உதவியால் கெக்ாரைக் கொன்று மதில்eது இழுத்துத் திரிந்தான். (யவனர் வீரருடைய உடம்புக்குச் செய்யும் மரியாதையை அறிந்திலர் போலும். பகைவரைப் போரில் வெல்ல முடியாதென்பதை அறிந்து வீரன் ஒடீசியஸ் தந்திரத் தால் நகருட் புகுந்தான். யவனர் மரக்குதிரை ஒன்று செய்து அதன் வயிற்றுள் வீரர்சிலரை யடைத்து கிறுத் தித் தம் கப்பல் ஏறிப் பாய்வலித்துச் சென்றனர். உரோஜர் மரக்குதிரையை நகருள் இழுத்தனர். அன் றிரவு யவனர் திரும்பிவந்து நகருட் புகுந்து அயர்க் துறங்கும் வீரர்களைக் கொன்றுகுவித்து நகருக்குத் தீயிட் டனர். இவ் விதிகாசங்களிலிருந்து யவனமன்னர் சம யத்தை வளர்க்கும்படி பூசாரியர்களைக் கற்பித்தும் படைத் தலைமை வகித்து நாட்டைக் காத்தும், நீதிபதிகளை ஏவி நீதி செலுத்தியும் வந்தனர் எனத் தெரிகிறது. மேன் மக்கட் சபையும் பொதுசனச் சபையும் அரசியலை நடத் தின. யவனர் இனத்தோரைக் கோறல் மறமெனவும் குறையாடல் அறமெனவும் எண்ணினர். ஆதிகாலச்து யவனர் நாணகம் வழங்கவில்லை யெனவும், நாணகத்திற் குப் பதிலாக ஆடுமாடுகளை உபயோகித்தனர் எனவும்

ய்வனர் 31
பூகோள நூல் கற்றிலர் எனவும் பினீசிய எகிப்திய கல் வெட்டுக்களால் அறியலாம்.
ஸ்பாட்டர் சரித்திரகாலம் கி. மு. 1100 ஆண்டுடன் தொடங்குகிறது. டோரியர் பலப்பரீசஸ் குடாநாட்டில் குடியேறினர். வடதீவுகளில் அயோனியரும் தென்மீவு களிலும் சின்னசியாக் கரையிலும் டோரியரும் குடியேறி னர். கி. மு. ஏழாம் நூற்ருரண்டில் யவனர் எலனியர் என் னும் நாமம் பெற்றனர். கி. மு. 850 ல் ஸ்பாட்டா நகரத் தில் டோரியர் குலதிலகமாக லிக்காக்கஸ் என்னும் குரிசில், தோன்றினன். தன் மருகனின் அரசைக் கவர எண் ணினு னெனச் சிலர் கூறினராக, அவன் நாடு துறந்து எகிப்து இந்தியா முதலிய நாடுகளுக்குச்சென்று அறிவு முதிர்ந்து தன் நாடு திரும்பி நற்பிரமாணங்களையும் திருத்த முறைகளையும் நல்கினன். ஸ்பாட்டர் யாவரும் போர் புரி யப் பயிலுதல் வேண்டும். பெற்ருரர் தம் ஆண் குழவிகள் பிணியராயின் குன்றின் மீது வீசிவிடுவார். குழவிகள் உருநலம் வாய்ந்தோராயின் ஏழாண்டு கிறைவேறிய வுடன் அரசாங்கத் தாரால் வளர்க்கப்படுவர். சிறுவர்க்குச் சுவையற்ற உணவும் சிற்ருரடையுமே அளிக்கப்படும். சிறுவர் வெறுங்காலாலேயே நடக்கவேண்டும். சிறுவர்கள் அகப்படாமல் களவுசெய்யப் பயிலவேண்டும். அகப்படின் மூடரெனத் தண்டிக்கப்படுவர். சிருரரின் தைரியத்தையும் மனவலியையும் அளத்தற்காக அவரை அடித்துவருத்து தல் வழக்கம். அச்சமின்றி அடிவாங்குவோர்க்குப் பரிசு அளிக்கப்படும். வீரச்சுவை விரவிய பாடல்களைச் சிறு வர் மனனஞ் செய்வார்கள். அவர்கள் போர்முறைகளைப் பயின்ற பின்னர் முப்பதா மாண்டில் குடிகளுக்குரிய உரிமைகளைப் பெற்றுவாழ்வர். ஆடவர் உருவிற் பொலிந்து வளரும் பெண்டிரை மணஞ்செய்து வீரர்களைப் பெறக்கடவர். 'நும்பரிசத்துடனேனும் மேலேனும்வருதி” யென மகனைப் போர்க்களத்துக் கேவுதல் ஸ்பாட்டக் தாயின் இயல்பாம். ஸ்பாட்டர் வணிகத்தைத் தவிர்த்

Page 33
3. உலக வரலாறு
துக் கமத்தொழில் செய்வர். கி. மு. 300-ல் ஸ்பாட்டர் தொகை 10,000. குடிகளுள் ஒவ்வொருவருக்கும் அர சாளும் அங்கத்தினரைத் தெரிவுசெய்யும் உரிமையுண்டு. அறுபதுவயது முதிர்ந்த வயோதிகர் இருபத்தறுவர் அமைச்சராகத் தெரியப்படுவர். அருஸ்தத்தீமன் என்னும் அரசனுக்கு இட்டைப் பிள்ளைகள் பிறந்தமையால் ஸ்பாட்டா இணைவேந்தரால் ஆளப்பட்டது. ஸ்பாட்ட ருடைய அடிமைகளுக்குத் தெரிவுரிமையும் ஸ்பாட்ட ருடன் மணஞ்செய்யு முரிமையும் அளிக்கப்படவில்லை, ஸ்பாட்டர் மைசீனகாட்டைக் கைப்பற்றிய பொழுது அரசகுமாரத்தி ஒருத்தியைப் பலியிடும்படி டெல்பிக் கோயிலில் ஒரு வாக்குப் பிறந்தது. அரிஸ் தத்தீமன் தன் மகளைப் பலியிட்டான். மைசீனியர் அரிஸ்தlனனின் தலைமை யில் பகைத் தெழும்பினராக, ஸ்பாட்டர் எதீனியரிடம் உதவிகேட்டனர். எதீனியர் அழுக்காறுற்று உதவி செய்ய விருப்ப மில்லாமையல் திரத்தியஸ் என்னும் ஒரு கொண்டி உபாத்தியை அளித்தனராம். ஸ்பாட்டர் நொண்டி பாடிய பாட்டுக்களைக் கேட்டுத் துணிவு பெற் றுப் பகைவரைவென்று அடியில்லாக் குழியில் இட்டனர். அரிஸ்தமினன் ஒருவன்மாத்திரம் குழியில் மூன்று நாள் உண வின்றிக் கிடந்து தன் மரணத்தை எதிர்பார்த் திருந்தான். மூன்ருரம் நாள் பிணம் தின்னும் நரியொன்றின் வால்பற்றி அவன் வெளியேறினனும். ஸ்பாட்டர் பின்னர் ஆர்க்கிவ் நாட்டையும் கைப்பற்றினர்.
கி. மு. 9-ம் நூற்றண்டில் பினீசியர் அசிரியருடன் போர்புரிந்து இளைத்தமையால், பினிசியருடைய கப்பற் படைவலி குறைந்தது. யவனர் இஃதுணர்ந்து பிறநாடு களிற் குடியேறத் தொடங்கினர். கி. மு. (900) தொளா யிரத்தில் இத்தாலி நாட்டிற் குடியேறிக் கோமாயி நகரை நாட்டினர். கி. மு. 734-ல் ஸ்பாட்டர் இரறந்தம் கக்கீரா என்னும் நகரங்களை இத்தாலிய நாட்டிலும் சிராக்கூசப்

யவனர் 33
பட்டினத்தைச் சிசிலித் தீவிலும் அமைத்தனர். 580-ல் சிசிலித் தீவில் அக்கிரிக்கந்தம் என்னும் துறையிலும் குடி யேறினர். கி. மு. 720-ல் ஆக்கியர் சிபாரிஸ் நகரிலும் மாசீலா என்னும் கல்லிய நாட்டிலும் குடியேறினர். ஸ்பாட்டர் பைசாந்தியம் என்னும் நகரை நிறுவிய வரலாறு வருமாறு:- ஸ்பாட்டவீரர் தாம் மைசீனுநாட்டைக் கைப் பற்ருரமல் வீடுதிரும்புவதில்லை யெனச் சத்தியஞ் செய்தமை மசால் ஆங்குப் பலகாலம் கழித்து அங்கியப்பெண்களுடன் களிக்க நேரிட்டது. பிற சாதியாரிடம் பிறந்த பிள்ளைகள் ஸ்பாட்டா நாட்டில் அந்நியராகவே எண்ணப்படுவாராத லின் அப்பிள்ளைகள் பைசாந்தியத்தில் குடியேறினர்.
கி. மு. 700 முதல் கி. மு. 500 ஈருரக யவன நாடுகளில் கொடுங்கோலர் பலர் ஆண்டனர். ஒரு கொடுங்கோலனின் மகளை மணஞ் செய்தற்கெனப் பலர் அவன்மாளிகையில் இறங்கினர்; அவருள் எதீனியர் இருவரை அரசன் தெரிங் தான். ஒருவன் தன் ஆடற் றிறனைக்காட்டி முடிவில் தலைகீழாக கின்ருரன். உடனே அரசன் எழுந்து உன் ஆட்டம் உனக்குக் கேட்டைவிளைவித்ததென விளம்பி மகளை மற்றவனுக்கு அளித்தானம். கொறிந்து நகரத்துக் கொடுங்கோலன் தன்கொடுங்கோலை எங்ஙனம் நிலைக்கச் செய்யலாம் என அறியும்படி மிலிற்றஸ்தீவுக் கொடுங்கோல னிடம் தூதரை அனுப்பினன். அவன் தூதரை ஒரு வயலூடே கூட்டிச்சென்று உயர்ந்துவளர்ந்த பயிர்களைக் கிள்ளிவிட்டான். அச்செயலைத் தூதர்தம் அரசனுக்கறி விக்க அரசன் அவன் கருத்துணர்ந்து தன்னுட்டுப் பிர புக்கள் சிலரைக் கொன்ருரன். அக்கொடுங்கோலன் தன் மனைவியைக் கொன்று தன்மகனைக் கக்கீராத்தீவுக்கு நாடு கடத்தினன். சில ஆண்டுகட்குப்பின் தன் மகனை அரச பதவியை ஏற்கும்படி கேட்டான். மகன் தான் தன் தந்தை நாட்டிலிருக்குந்துணையும் வீடுதிரும்புவதில்லை என விடைகூறினன். உடனே தந்தை கக்கீராத் தீவுக்குச் செல்ல, மகன் ஊர்க்குச்சென்று ஆண்டான்,

Page 34
34 உலக வரலாறு
யவனர் வரலாறு
Ifшf
கோமர் தம் இதிகாசத்தில் எதீனியரைப்பற்றி ஒன் றும் குறிக்கவில்லை. ஏதென்ஸ் நகரத்தையாண்ட தீசியஸ் என்னும் ஒரு வேந்தன் அயல்நாட்டாரை வென்று புகழ் பெற்றிருந்தான். ஏதென்ஸ் நகர்க் கோட்டை கடற்கரையி லிருந்து 5ாலு மைல் தூரத்திலுளது. அகநகரிலும் புற நகரிலும் வாழ்ந்த மக்கள் படைவீரர் வித்தை வல்லோர் இடையர் தொழிலாளர் என நான்குவகுப்பினர். ஒன்ப தின்மர் சபையொன்று தம்முள் மூவரைத் தெரிந்து அர சியலே நடாத்திற்று. மேன்மக்களே பெரும்பாலும் உத்தியோகம் பெற்றனர். கி. மு. 632-ல் ஏழைகள் மிக வும் கஷ்டப்பட்டனர். அச்சமயத்தில் சைலன் என்பான் எளியரை அளிப்பான் எனச் சொல்லிச் சனங்க3ளத் தன் வசப்படுத்திக் கொடுங்கோல்செலுத்த எண்ணினன். அவன் விளையாட்டுவிழாவில் முதன்மைபெற்றுத் துலங்கி னன். மகாக்கிள்ஸ் என்போன் சைலனப் பலிபீடத்தின் முன் கொன்று வீழ்த்தினன். கொன்ருேரனை நாடு கடத் தலே பிராயச்சித்தமெனச் சோலன் என்னும் புத்திசாலி சொன்னன். கி. மு. 624-ல் பிரமாணங்கள் வகுக்கப் பட்டன. அக்காலத்தில் எவ்வகைக் குற்றத்திற்கும் மரண தண்டனை விதித்தல் வழக்கமாயிருந்தது. அது நிற்க எதீ னியர் மகரர்நாட்டை வெல்லமுடியாதென்பதை யுணர்ந்து அப்போர்தொடர்தல் குற்றமென விதித்தனர். சோலன் பைத்தியக்காரன்போல் நடித்துப் போர்செய்யும்படி சனங்களைத் தூண்டினன். எதீனியர் தோல்வியடைந்து பின்னர் ஸ்பாட்டரின் துண்பெற்று வென்றனர். அக் காலத்தில் எதீனியர், குன்றவர் பரதவர் வேளாளர் என மூன்று பிரிவினராகிக் கலகப்பட்டனர்; குன்றவர் கடன் பட்டுத் தம் கிலங்களை யிழந்து ஏழைகளாயினர். அவர் பெண்டிர் அடிமைகளாக விலைப்பட்டனர். கி. மு. 594-ல் சோலன் கடன்கொடுக்க வேண்டியதில்லையென முரசறை

யவனர் வரலாறு 35
வித்தான். அவ்வறிக்கையின் பின் நிலமும் பெண்ணும் பொறுப்பாகக் கடன் பெறக்கூடாதெனப் பிரமாணம் விதிக்கப்பட்டது. பெற்ருரர் தம் பிள்ளைகளுக்கு யாதே லும் ஒரு தொழில் கற்பிக்கவேண்டுமெனவும் விதிக்கப் பட்டது. செல்வர் படைத் தலைவராயும் எளியர் படை யாளராயும் சேவிக்கலாம். சோலன் பல சீர்திருத்தங் களைச் செய்த பின் பத்தாண்டுகள் பிறதேச சஞ்சாரஞ் செய்தான். தன் திருத்தமுறையின் பலாபலன்களை அறி தற்குப் பத்தாண்டு கழிந்தபின் திரும்பினன். வேளாள ரும் பரதவரும் கலகப்பட்டேயிருந்தனர். மேன்மகன் பேசி யஸ்திருற்றஸ் என்பவன் கொடுங்கோலனுக அரசு செலுத் தற்கு எண்ணுகிருரன் எனச் சோலன் சனங்களுக்கு அறி வித்தனன். பேசியஸ்திருரற்றஸ் தன் உடம்பில் தானே ஊறுசெய்துகொண்டு தன் பகைவர் ஊறுபடுத்தினர் எனக் கதறினன். உடனே எதீனியர் அவனுக்கு ஐம்பது மெய் காப்பாளரைக் கொடுத்தனர். மகாக்கிள்ஸ் இக் கொடுங் கோலனைத் துரத்தினனென யவன சரித்திர வாசிரியரான ஹரடோற்றஸ் கூறுகிருரர். பேசியஸ்திருரற்றஸ் வீயா என்னும் ஒரு மங்கையை ஞானதேவதையைப்போல அலங்கரித்து, அவளோடு வீதிதோறுஞ்சென்று, "நகரத்தோரே பேசி யஸ்திருரற்றஸ் என்னும் தலைவனை வரவழையுங்கள்? எனக் கத்தினன். அவன் சனங்களை இங்ஙனம் ஏமாற்றி, இரண்டாமுறையும் கொடுங்கோலோச்சினன். அவன்மக் கள் அவனையும அவன் மனைவியையும் பகைக்கச் செய்தன ராக அவன் மாமன் அவனைத் துரத்தினன். பத்தாண்டு கழிந்த பின் பேசியஸ்திருரற்றஸ் மரதன் களத்தில் வெற்றி யடைந்து கி. மு. 529 வரையும் கொடுங்கோலோச்சினன். அவனுடைய ஆட்சியில் கமத்தொழில் விருத்தியடைந்தது; கலைகள் வளர்ந்தன; கோமருடைய பாடல்கள் தொகுக்கப் பட்டன; அரசனும் சோலன் சாற்றிய அரசியன்முறை யைத் தழுவினன். அவன் பின் மூன்று கொடுங்கோலர் ஆண்டனர். ஐசக் கோரஸ் என்னும் மேன்மகன் ஓர்

Page 35
36 உலக வரலாறு
அமைச்சனனன். அவன் சனங்களைப் பத்துக் குழுவாக வகுத்து ஒவ்வொரு குழுவையும் பத்துப்பிரிவாக்கினன். அவன், “கொடுங்கோலோச்சுவார் நாடுகடத்தப்படுவர்' என விளம்பரஞ்செய்தான். பெரும்பாலார் ஒருவனைக் கொடுங்கோலன் என எண்ணினுல் அவன் நாடுவிட்டு நீங்கவேண்டும். இவ்வண்ணம், எந்தக்குடி மகனையுங் துரத்தலாம். கிளியத்தீனஸ் என்னும் கொடுங்கோலன் இவ் வாறே நாட்டினின்றுந் துரத்தப்பட்டான். கிளியத்தீனஸ் பார்சியரிடம் துணைவேண்டினன். அக்காலத்தில் தீபர் எதீனியரோடு பகைத்தனர். ஸ்பாட்டரின் கொடுங் கோலன் கிளியeனன் தீபருக்குத் துணைபுரிந்தான்.
7-ம் பாடம்-யவனரும் பார்சியரும்
பார்சியர் என்னும் இரானியர்
யவனருடைய சின்னசியாக் குடியேற்ற நாடுகளை லிடியநாட்டு வேந்தன் கிரீசஸ் என்பான் தன்னட்சிக்கு உட்படுத்தினன். அக்காலத்தில் ரைக்கிறீஸ் நதிக்கரையில் கிருமிக்கப்பட்ட நினைவா நகரில் அசிரிய வேந்தன் சேன சரிப்பு என்பான் யூதரைச் சிறையிட்டிருந்தான். அவ னைச் சிதியர் வலிகுன்றச்செய்தனர். கி. மு. 625 - ஆம் ஆண்டில் மீடர் பாபிலோனியர் என்னும் இருசாதியார் அசிரியருடைய தலைநகராகிய நினைவாநகரை நூறினர். அக்காலத்து அசிரிய வேந்தன் சாடனுப்பாலன் என்பான் தன் மனைவி மக்களையும் ஆடையாபரணங்களையும் எரியி லிட்டு இறந்தானும். பாபிலோனிய அரசன் நபுகத்நாசர் என்பான் எகிப்தையும் யூத நாட்டையும் கைப்பற்றினன். அவனுடைய அரசு நிலைகுலைந்த பின் கி. மு. 550-ல் பார் சியர் தலையெடுத்துச் சைரஸ் என்பானை அரசனுக்கிச் சுவாதீனம் பெற்றனர். சைரஸ் என்பவனுடைய தாய்

ய்வனரும் பார்சியரும் 37 ஒரு மீட்டர்கோன் மகள். சைரஸ் மீட்டரையழிப்பானென ஒரு சாத்திரம் இருந்தது. ஆதலின் அவனை ஓர் இடைய னிடம் கொடுத்தார்கள். சைரஸ் படைத்தொழிற் பயிற்சி பெற்றுப் பார்சியருக்குத் தலைவனனன்.
கிரீசஸ் பார்சியரோடும். ஸ்பாட்டரோடும் நட்புப் பூண் டான். காலிஸ் நதியைக் கடந்தால் கிரீசஸ் ஒரு இராச்சி யத்தை அழிப்பானென டெல்பிக் கோயிலில் ஓர் உரை பிறந்தது. சைரஸ் கிறீசஸ் என்பவனை வென்ருரனுக, அவன் டெல்பிக்கோயிலிற் பிறந்த உரை பிழைபட்ட தென்ருரன். அதற்கு விடையாகக் கோபிற்பூசாரி பின் வருமாறு கோயிலிற் பிறந்த வாக்கியத்தை விளக்கினன். அது, 'இராச்சியத்தை அழிப்பான் என்பதின் கருத்தை மீயுணர்ந்திலை; உனது இராச்சியத்தை யழிப்பாய் என்றே நாம் கருதினேம்" என்பதே. இது கிற்க.
சைரஸ் கி. மு. 540ல் பாபிலோன் நகரை மோதிப் பின்னர்ச் சிதியரோடு போர்புரிந்து ஆண்டான். அவன் மகன் கம்பீசஸ் பினிசிய நாட்டையும் எகிப்து நாட்டையும் பார்சியருடைய ஆட்சிக்குட்படுத்தினன். அவன் மகன் டேறியஸ் கி. மு. 521ல் அரசு கட்டிலேறிச் சூசா நகரைத் தலைநகராக்கினன். அவன் தன் இராச்சியத்தை இருபது மாகாணமாகப் பிரித்துத் தேசாதிபதிகளையும் ஏற்படுத்தி னன். அவன் பொன் நாணகங்களை வழங்கி இந்து நதி தொடக்கம் யவனகுடாநாடுவரையும் தன் ஆட்சி யை ச் செலுத்திய பொழுதிலும், சிதியரை வெல்லமுடியாதிருந் தான். தீவுகளில் வசித்த யவனர் பார்சியரைத் துரத்திச் சுவாதீனம்பெற எண்ணினர். அவர்கள், ஒருவன் தலையை மழித்து மறைக்கடிதம் வரைந்து எதீனியரிடம் துணை வேண்டுதற்கு அவனை அனுப்பினர்கள். பார்சியர் யவன ருடைய கப்பல்களை கி. மு. 496ல் உடைத்தனர்; கி. மு. 492ல் பார்சியர் படையெடுத்து யவன தேசத்தில் இறங்கி னர். பார்சியருடைய கப்பல்கள் (முந்நூறு) புயலில் அகப்

Page 36
38 உலக வரலாறு
பட்டு உடைந்தன; இருபதினுயிரம் படைவீரர் மாண்டனர்; எனினும் பார்சியர் எதீனியரிடம் திறைவேண்டித் தூது அனுப்பினர். எதீனியர் தூதனைக் கிடங்கிற்றள்ளினர். பார்சியர் வெகுண்டு 1,00000 வீரரை அறுநூறு கப்பல் களில் ஏற்றிக்கொண்டு ஏதென்ஸ் நகரை அழித்தற்குச் சென்றனர். எதீனியர் கலங்கிப் பீடிப்பிடிஸ் என்பவனை ஸ்பாட்டரிடம் துணைபெற்று வரும்படி விரைந்தனுப்பி னர். அவன் இரண்டு நாளில் 150மைல் ஓடினன். ஸ்பாட் டர் நிறையுவாமுன் தாங்கள் புறப்பட முடியாதென்று மறுமொழியளித்தனர். மரதன் களத்தில் 9000 எதீனிய ரும் 1000 தீபரும் பெ ரி யதோ ர் பார்சியப்படையைக் கொன்று குவித்தனராம், பார்சியருடைய நிலப்படை தோற்றபோதிலும் கடற்படை ஏதென்ஸ் நகரைத் தாக் கிற்று. மிலிற்றியாடிஸ் பார்சியரைப் பின்னருங் கலைத் தான். பார்சிய வேந்தன் டேரியஸ் இறந்த பின், சேர்ச் சிஸ் என்பான் போரைத் தெடர்ந்தான். மிலிற்றியாடிஸ் எகிப்தியரைப் பார்சியருக் கெதிராகத் தூண்டுதற்குச் சென்று, வழியில் பேரஸ் என்னும் தீவில் இறங்கினன். அத்தீவுக் கோயிலுள் ஆடவர் செல்லுதல் விலக்கப்பட் டிருந்ததாயினும், தேவராட்டி யொருத்தியின் ஏவற்படி அவன் புகுந்தான். புகுந்தவன் மனம் நொந்து வீழ்ங் தான். அவன் துடையில் மரத்துண்டொன்று ஏறிற்று.
கி. மு. 481ல் பார்சியர் ஏதென்ஸ் நகரை யழித்தற் கென நாற்பத்தாறு தேசங்களிலிருந்து படைதொகுத்த னர். அவர்களுக்குத் துணைப்படையாகப் பினிசியர் கொடுத்த கப்பல்கள் உடைந்தன. எனினும், பார்சியப் படையினர் யவன தேசத்தில் இறங்கினர். பகைவருடைய தொகை ஐந்து இலட்சம் என்பர்; அப்படை நீர் மொண்டதால் பல நதிகள் வற்றின என்பர். பார்சிய ருடைய பாசறை இருபத்தைந்துமைல் நீளமுடையதா யிருந்த தாம். யவன சாதியார் பலரும் எதீனியருக்கு உதவி புரிந்தனர். எதீனியர் ஒற்றர்மூலம் பார்சியப் படையின்

யவனரும் பார்சியரும் 39
நோக்கங்களே அறிந்தனர். சேர்ச்சிஸ் ஒற்றரைப்பிடித் தும் கொல்லாது விட்டான். எதீனியர் டெல்பிக்கோயில் சென்று சாத்திரங்கேட்டு மரச்சுவர்களே காப்பாற்று மென மறுமொழி பெற்ருரர்கள். ஸ்பாட்டரும் சாத்திரங் கேட்டு உங்கள் இணேவேந்தரில் ஒருவன் இறவாவிடில் த ஜலநகரழியும் என விடைபெற்றனர். தர்மப்பயிலாயி என்னும் வெந்நீர்க்குன்றின் அயலில் லியனிதாஸ் என் னும் வீரனும் முந்நூறு ஸ்பாட்டரும் தீபர் பாக்கியர் என் போரின் துணைப்படையினருமாகப் பத்தாயிரம் வீரர் பார்சியரை எதிர்த்து நின்றனர். அப்போர்க்களம் இரண்டு மைல் நீளமான பள்ளம். அப்படைக்கு 271 கப்பல்கள் துணையாக நின்றன. பார்சியருடைய படை சூரியனை மறைக்குங் தன்மையதென ஒருவன் சொல்ல வேந்தன் லியனிதாஸ் "அங்ஙனமாயின் நிழலிற் போர்செய்யலாம்? என விடைகூறினனம்; அப்போரில் யவனவீரர்யா வரும் தொலைந்தனர்; 20000 பார்சியர் இறந்தனர். எதீனியர் சிலர் கோட்டையில் பெண்களையும் குழந்தைகளையும் விட்டுச் சென்றனர். சிலர் கப்பலேறிச் சென்றனர். பார்சியர் நகருக்குங் தீயிட்டனர். பார்சியக்கப்பல்கள் ஒடுங்கிய கடலில் அகப்பட்டு எதீனியக்கப்பல்களால் உடைக்கப்பட்டன. அடுத்த ஆண்டும் பார்சியப்படைவீரர் யவனதேசத்தில் இறங்கினர். அப்படையை ஸ்பாட்டர் அழித்தனர். ஸ்பாட்டருடைய வேந்தன் பார்சியரோடு நட்புக்கொள்ள எண்ணினுனென எதீனியர் அஞ்சினர். தம் நகரைக் காத்தற்காக எதீனியர் மதில்கட்டினர். ஸ்பாட்டர் மதில் கட்டப்பட7 தெனக் கற்பித்தனர். தமிஸ் தக்கிளிஸ் என்னும் எதீனியன் மதிலைக்கட்டும்படி எதீனி யரை ஏவித் தான் ஸ்பாட்டா சென்று மதில்கட்டப்பட வில்லையென ஸ்பாட்டரை ஏமாற்றி, அவர்கள் அதை நம்புமாறு துரதரையனுப்பி யறியலாமென்றும் சர் ற்றி, ஸ்பாட்ட ஒற்றர் வந்தால் அவரைச் சிறையிடும்படி எதீனி யரையும் ஏவி, இவ்விரகால் காவலரண்களையமைத்தனன்.

Page 37
40 உலக வரலாறு
எதீனியர் மேன்மக்கட்கட்சி குடியரசுக்கட்சியென இருகட்சிய ராயினர். ஒருசாரார் ஸ்பாட்டரோடு பகை நன்றெனவும் ஒருசாரார் நட்பு நன்றெனவும் வாதித் தனர். ஸ்பாட்டர் எதீனியரை அழிக்க வெண்ணினர். ஸ்பாட்டர் புலம்பெயருமுன் ஸ்பாட்டாநாட்டிற் பூகம்பம் நிகழ்ந்தது. அடிமையொருவனைக் கோயிலிற் கொன்ற தற்காகப் பசிடன் சினந்து பூகம்பத்தை யுண்டாக்கினன் என ஒரு பழங்கதையுண்டு. இக்குழப்பக்காலத்தில் அடிமைகள் தி ரண்டெழுந்து சுவாதீனம்பெற எண்ணி னர். ஸ்பாட்டர் அடிமைகளை ஒருவாறு அடக்கினர்.
ஏதென்ஸ்நகரில் பெரிக்கிளியன் என்னும் அரசியல் ஞானி சில சீர்திருத்தங்களைச் செய்தான். அக்காலத்து எதீனியரின் தொகை 500,000 அவருள் அக நகரில் வசித் தோர் 100,000 என்ப. எதீனியர் தீபரை அடக்கினராக, கொறிந்தியர் ஸ்பாட்டரின் துணைபெற்று எதீனியரோடு போர்புரிய எழுந்தனர். தீபரும் பாக்கியரும் ஸ்பாட்டரோடு சேர்ந்தனர். தீவுகளிலுள்ள குறுநிலமன்னர் எதீனியருக் குத் துணைபுரிந்தனர். பெரிக்கிளியன் ஏதென்ஸ் நகரைக் காத்தான். ஸ்பாட்டர் வயல்களை அழித்தனர். நகரில் கொள்ளை நோய் பரம்பிற்று. கி. மு. 426ல் ஸ்பாட்டா பின்னரும் பூகம்பத்தால் இடருற்றது. ஸ்பாட்டருடைய கப்பல்களை எதீனியர் உடைத்தனர். அன்றியும், அடிமை களும் ஸ்பாட்டாவிற் கலகம் விளைத்தனர். பதினோாண்டு நிகழ்ந்த உண்ணுட்டுப் போரால் யவனர் கெட்டனர். 426ல் அல்சிபியாடிஸ் ஆர்க்கியரை அடக்கும்படி ஸ்பாட்ட ரைத் தூண்டினன். ஸ்பாட்டர் ஆர்க்கியரை வென்றனர். அல்சிபியாடிஸ் எதிர்த்தபோதிலும், ஏனைய அமைச்சர்கள் ஸ்பாட்டரோடு போர்புரிய எண்ணினர். எதீனியர் ஸ்பாட்ட ருடைய குடியேற்ற நகரமாகிய சிருரக்கூசாப் பட்டினத் தைப் பிடிக்க முயன்றனர். அல்சிபியாடிஸ் நாடுகடத்தப் பட்டமையால் ஸ்பாட்டாநாடு சென்றிருந்தான்; பின்னர்

யவனரும் பார்சியரும் 4
எதீனியர் தாய் நாடு திரும்பும்படி அவனை அழைத்தனர். ஸ்பாட்டர் பார்சியரின் துணைபெற்று எதீனியரோடு போர்புரிந்தனர். 404ல் ஸ்பாட்டருடைய தலைவன் லிசாங் தர் என்பவன் ஏதென்ஸ் நகரை முற்றுகை யிட்டான். ஸ்பாட்டர் நகருள் நுழைந்து குறையாடி அரசியலைக் குழப் பிக் கொடுங்கோஜல நாட்டி யே கினர்.
கி. மு. 404ல் பார்சிய வேந்தன் இரண்டாம் டேரியஸ் இறந்தான். அவன் மகன் ஆட்டசாச்சிஸ் அரசனுனன். டேரியஸினுடைய இளைய குமாரனன சைரஸ் என்பான்’ தன் தமையனேடு கலகப்பட்டு ஸ்பாட்டா தேசத்திற் கூலிப் படையினைச் சேர்த்தான். யவன சரித்திர ஆசிரியின் சன பன் என்பான் அப்படை வீரருள் ஒருவன். சனபன் இப் படையின் வரலாற்றைக் கூறினன். 401ல் 100,000 வீர ரோடு சைரஸ் புறப்பட்டான். இடைவழியிற் கூலிப்படை பகைப்படையாக மாறிற்று. பின்னர் அது யூபிறிற்றிஸ் நதியையடைந்தது. குனுச்சாக்களத்தில் நடந்த போரில் சைரஸ் தோல்வியடைந்தான், ரேக்கப்படை வீடு திரும் பிற்று. பார்சியர் இடையிடை தாக்கினராக, வீரர் சன பனைத் தலைவனுக்கினர்கள். படைவீரர் கருங்கடலை அடைக் தனர். சனபன் ஏதென்ஸ் நகரிற் சென்று தன் குரு சோக்கிறிற்றிஸ் என்பவருக்குக் கொலைத் தண்டனை விதிக்கப் பட்டதை அறிந்தான்.
சோக்கிறிற்றிஸ் 469ல் பிறந்தார். அவரது தொழில் சிற்பம். அவர் உண்மையறிய விழைந் து தத்துவங்களை ஆராய்ந்தார்; இம்மை வாழ்க்கையில் எது சரி எது பிழை எது நன்மை எது தீமை என்பவற்றை வரையறுக்க முயன் றனர். டெல்பிக்கோயிலார் அவரை மானுடருட் சிறந்த ஞானியென மதித்தனர். அவர், 'நான் அறியாமையில் மயங்கியிருப்பதை உணர்ந்தேனேஒழிய வேறென்றையும் உணரவில்லை" யென உரைத்தனர். அவருடைய முறை கேள்விமுறையெனச் சொல்லப்படும். அவருடைய மாணுக்
6

Page 38
42 உலக வரலாறு
கருட் சிறந்தோர் பிளேற்ருேர, சணபன், கிறிற்றியாசு, அல்சிப்பியாடிஸ் என்போர். கொடுங்கோலன் கிறிற்றி யரசு குருவை விரோதித்தான். சோக்கிறிற்றிஸ் இளைஞர் மனத்தைப் பாழாக்கினரெனச் சிலர் சான்று கூறி அவ ரைச் சிறையில் இட்டு நஞ்சூட்டினர். அவர் இம்மை வாழ்க்கையை முழுமனத்தோடுந் துறந்தார்.
உண்ணுட்டுப் போர்கள்
ஸ்பாட்டர் கி. மு. 399ல் பார்சியரோடு போர்புரிந் தனர். எதீனியரும் தீபரும் கொறிந்தியரும் ஸ்பாட்ட ரிடம் அழுக்காறுற்று உதவிபுரியவில்லை. எதீனியர், கொறிந்தியர் முதலியோருடைய துணைபெற்று ஸ்பாட்ட ருடன் போர்க்கெழுந்தனர். எதீனியர் ஸ்பாட்டருடைய கடற்படையை அழித்தனர். ஸ்பாட்டர் கொறிந்து நகருக்கருகில் வெற்றியடைந்தனர். தீபரையும் எதீனி யரையும் தவிர ஏனைய யவனசாதியார்யாவரையும் ஸ்பாட் டர் அடக்கியாண்டனர்; அன்றியும், கி. மு. 382ல் தீபு நகரைப் பிடித்தனர். எதீனியர் துணையுடன் தீபர் போர்க் கெழுந்து பின்னரும் தோற்றனர். ஸ்பாட்டர் எதீனிய ரோடு போர்செய்தனர். கி. மு. 371ல் ஸ்பாட்டரும் தீப ரும் துணையின்றிப் பகைத்தனர். போர் மூண்டது. எப்பாமிகண்டாஸ் என்னும் தீபருடைய படைத்தலைவன் வாகை சூடினன்.
உடனே யவன நாட்டினர் பலரும் ஸ்பாட்டரோடு பகைத் தெழுந்தனர். தீடர் தழைத்தோங்கினராக எதீனி யரும் கொறிந்தியரும் அழுக்காறுற்றனர். எப்பாமினண் டாஸ் மசிடோனியரை வெருட்டித் துணை பெற்றன். ஸ்பாட்டரும் எதீனியரும் சேர்ந்து அவனை எதிர்த்தனர். ஸ்பாட்டர் தோ ல் வி யடைந்தாலும் நீபர்தலைவன் எப்பாமினண்டாஸ் கொல்லப்பட்டான்.

யவனரும் பார்சியரும் 43
LD5A GL i GifQuif
ஸ்பாட்டரும், தீபரும், எதீனியரும் ஒருவரோ டொரு வர் போர்செய்து தளர்ந்த நிலையில் மசிடோனியர் படை யெடுத்து யவனதேச முழுவதிலும் தம் ஆண்யைச் செலுத்தினர். இம்மசிடோனியர் சுத்த யவனரல்லர். கி. மு. 359ல் பிலிப்பு மசிடோனியர் தேசத்தை ஆண்டு தன் படையைப் போர் முறைகளிற் பழக்கினன். இதற் கிடையில் யவன நாட்டிற் சமயப்போர் நடந்தது. பாக் கியர் டெல்பிக்கோயிலைக் கைப்பற்றினர். பாக்கியருக்கு எதீனியரும் ஸ்பாட்டரும் துணைபுரிந்தபோதிலும் தீபர் அவர்களே வென்றனர். தீபர் மசிடோனியரையும் போரில் வென்றனர். பின்பு பிலிப்பு தீபரை வென்றன். எதீனிய ருள் புகழ்பெற்ற நாவலன் டெமஸ்தனிஸ் என்பான் மசிடோனியர் யவனதேச முழுவதிலும் தம் ஆட்சியைச் செலுத்துவரெனத் தெரிகிறதாக லின் தீபர், எதீனியர், ஸ்பாட்டர் முதலியோர் ஒருங்குசேர்ந்து மசிடோனி யரைத் தொலைக்கவேண்டு மெனச் சொற்பொழிவு நிகழ்த்தினன். பிலிப்பு பாக்கியரை வென்றன். யவன நாட்டார் பிலிப்பைச் சமயக்கிரியை நடாத்தும் சபைக் குத் தலைவனுக்கினர். எதீனியருக்கும் மசிடோனியருக்கு மிடையில் கி. மு. 340ல் போர்மூண்டது. இப்போர் மூன முஞ் சமயப்போர் என்று சொல்லப்படும். டெமஸ்தனிஸ் நாவலனுடைய ஏவற்கு இணங்கி எதீனியர் தம் பகைவ ராகிய தீபரோடு நட்புக்கொண்டனர். கி. மு. 338ல் பிலிப்பு இருசாதியாரையும் சுரோனியாக்களத்தில் முறிய அடித்தான். யவனருடைய சுவாதீனம் இதனுடன் தொலைந்தது. எதீனியர், தீபர், கொறிந்தியர் என்போர் அடங்கி யிருந்தனர். ஸ்பாட்டர்மாத்திரம் மசிடோனி யரை எதிர்த்தனர். பிலிப்பு யவனரை வென்றபின் பார்சியரோடு போர்புரிய எத்தனித்தான்.)

Page 39
44 உலக வரலாறு
59ianjar Ti
பிலிப்பின் சுற்றத்தார் பிலிப்பைக் கொன்ருரர்க ளாயினும், அவன் மகன் அலைச்சாந்தர் பகைவரை வென்று அரசாண்டான். அச் சமயத்தில் தீபர் பகைத் தெழும்பினராக, அலைச்சாந்தர் தீபுநகரைச் சாம்பராக்கி னன். யவனரை இங்ஙனம் அச்சுறுத்தியபின் அலைச் சாந்தர் பார்சியரோடு போர்புரிதற்குப் புறப்பட்டான். அலைச்சாக்தர் 30000-காலாட்படையும் 5000-புரவிப்படை யும் திரட்டிக்கொண்டு எதிரிகளைத் தேடித்திரிந்தான். அலைச்சாந்தர் குதிரையேற்றத்தில் மிகப் புகழ்பெற்ருேர னவன். ஒருமுறை குடிமகன் ஒருவன் பிலிப்புக்குப் புரவியொன்றை அளித்தானுக, அதனை ஏறிச்செலுத்து வா ரொருவருமின்றியிருக்க, அலைச்சாந்தர் தந்தை தடை செய்யவும் கேளானுய் அப்புரவியிலேறிச் சவாரிவந்தான். மேலும், உலகமுழுவதையும் ஒருகுடைக்கீழ்த் தான் ஆள வேண்டுமென அலைச்சாந்தர் விழ்ைந்தான். கி. மு. 336-ல் பார்சியருடைய அரண்மனையில் டேரியஸ் என்பான் அரச னக வீற்றிருந்தான். டேரியஸ் யவனக் கூலிப்படையும், பினீசிய எகிப்தியத் துணைப்படைகளுமாக 500,000 படையுடன் அலை ச்சாந்தரை எதிர்த்தான். அப்போரில் டேரியஸ் அஞ்சியோடினன். அலைச்சாந்தரின் படையில் 1000 வீரரே மடிந்தனர். பார்சிய அரசியும் அவள் புத்திரி களும் அலைச்சாந்தர்வசமாயினர். கி.மு.332-ல் அலைச் சாந்தர் ரயர்ப் பட்டினத்தை முற்றுகையிட்டான். அலைச் சாந்தர் எருசலநகர் சென்று வணங்கினனென யூத சரித் திர வாசிரியனுன யோசப்பு எழுதினன். பின் அலைச் சாந்தர் எகிப்து நாடடைந்து பார்சியரை ஆங்கிருந்து துரத்தி அலைச்சாந்திரியா என்னும் நகரை அமைத்தான். கி. மு. 331-ல் யூபிறற்றிஸ் நதியைக் கடந்து அரபிலாக் களத்தில் டேரியஸ் என்னும் வேந்தனைப் பின்னரும் புடைத்தான். இதில் 40000-பார்சியர் மடிந்தனராம். மசிடோனியா தேசத்திலிருந்து 15000-வீரரைத் துணைப்

யவனரும் பார்சியரும் 45 படையாக அலைச்சாந்தர் பெற்ருரன். அலைச்சாந்தர் டேரியஸ் வேந்தனைக்கொன்று அரசருக்குரிய முறைப் படி அவனுடம்பைத் தீயிலிட்டான்; பின்னர்ச் சிதியநாடு புக்குச் சிதியரை வென்ருரன்.
அலைச்சாந்தர் பார்சியருடைய நடை உடை முதலிய வற்றைப் பின்பற்றி ஒரு பார்சியப்பெண்ணை விவாக ஞ் செய்து கொண்டான். தன் படை வீரரையும் அவ்வண் ணஞ் செய்யும்படி ஏவினன். தன் ஏவலைப் பொருட்படுத் தாது பகைத்தெழுந்த வீரரை அலைச்சாந்தர் கொன்ருரன். மசிடோனிய வீரர் சிலர் அரசனை வெறுத்தனர். அரிஸ் காத்திலின் மருகன் கலிஸ்தீனஸ் அலைச்சாந்தரைச் சேயஸ் தேவரின் குமாரனெனத் தொழுத ஒரு தத்துவ ஞானியை இழித்துப் பேசினன். அலைச்சாந்தர் அதைக் கேள்வியுற்றவுடனே அவனைக் கொன் ருரன். இவன், இத் தகைய பல பாவங்களே ச்செய்து கொடுங்கோல் புரிந் தான். கி. மு. 327ல் படையோடு இவன் இந்து நதியைக் கடந்தான். போரஸ் என்னும் இந்திய வேந்தன், யானைப் படையை முன்னணியில் நிறுத்தி இன்னெரு போர்புரிங் தான். யானைகள் புண்பட்டுப் பன்டயணி குலைந்தது. போரஸ் புண்பட்டு வீழ்ந்ததும் அவனுடைய யானை அவனை யெடுத்துச் சென்றதாம். அலைச்சாந்தர் அப் போரைப் பெரிய வெற்றியாக எண்ணவில்லை. இந்திய வேந்தனேடு உடன்படிக்கை எழுதிப் பெற்றுக்கொண்டு திரும்பினன். இந்து நதியை நீலநதியின் கிளையென அலைச் சாந்தர் நினைத்ததிலிருந்து கிரேக்கர் பூகோள நூல் கற்றில ரென ஊகிக்கலாம். கிரேக்கர் இந்துநதியைக் கடந்து போர்புரிய மறுத்தனர். அலைச்சாந்தர் கி. மு. 326-ல் ஒன்பது மாதம் இந்துநதிவழிப் பிரயாணஞ்செய்து இந்து சமுத்திரத்தையடைந்து பார்சியநாடு திரும்பினன், அலைச் சாந்தர் தன் 33-ஆம் வயதில் சுரநோயால் இறந்தான். யவனதே சம், சின்னுசியா, எகிப்து, பார்சியா, ஆப்க னிஸ்தானம் என்னும் தேசங்கள் உட்பட்ட பெரிய இராச்

Page 40
46 உலக வரலாறு
சியம் அலைச்சாந்தர் இறந்தவுடன் நிலைகுலைந்தது. அலைச் சாந்தரின் மூன்ருரம் மனைவியாகிய ருெரக்சானுவும், டேரிய அனுடைய மகளாகிய இரண்டாம் மனைவியும் கலகப்பட்ட 6Öfff"
யவனர் பகைத்தெழுந்து மசிடோனியருடன் போர் புரிந்தனர். அலைச்சாந்தருடைய படைத் தலைவர்கள் தம் முட் கலகப்பட்டனர். கலகமுடிவில் மூன்று இராச்சியங் கள் நிலைத்தன. மசிடோனியாவையும் யவன நாட்டை யும் அந்திப்பட்டர் ஆண்டான். சிரியா தேசத்தை அங் திக்கோன் ஆண்டான். எகிப்தைத் தலைமி ஆண்டான். ஸ்பாட்டநாடு சுவாதீனமாகவே யிருந்தது. மசிடோனியா ராச்சியம் உள்நாட்டுக் கலகங்களால் வலி குறைந்து சீர் கெட்டது. யவன நாட்டார் பலரும் ஒருவரோடொருவர் பகைத்துக் கலகம் விளை த் து க் கொண் டே யிருந்தனர். இதையறிந்த உரோமர் யவனநாடு பலவற்றையும் கி. மு. 2-ஆம் நூற்ருரண்டில் தம் ஆட்சிக்குட்படுத்தினர்.
யவனநூல் வரலாறு
யவனருடைய பழைய நூல்கள் யாவும் செய்யுளுருவ மாகவே அமைந்தன. கி. மு. 800 - ல் இலியட்டு, ஒடிசி என்னும் இரண்டு தொடர்நிலைச் செய்யுள்கள் தோன் றின. அடுத்த "நூற்ருரண்டில் ஈசியஸ் என்பான் ஒழுக்க நூலொன்றை இயற்றினன். கொடுங்கோ லாசர் புலவர் களைப் புரந்தனர். அகப்பாடல்களும் புறப்பாடல்களும் மலிந்தன. சபோ என்பார் பாடிய அகப்பாட்டுக்கள் காமச் சுவை மிக்கன. பின்டாரிஸ் என்னும் புலவன் அலைச்சாங் தர் தீபரை வென்றதைப் பாடினன். கொறிந்துநகரத்து ஆரியன் களிப்பாட்டுப் பாடினன். அவன் பாடல்கள் அழுகைச்சுவை விரவியவை. துன்ப வியல்நாடகங்கள் நடிக்கப்படுமுன் ஆடு பலியிடப் படுதலால் நாடகக் கூத்தை ஆட்டைக் குறிக்கும் யவனமொழியால் வழங்கினர்.

யவனரும் பார்சியரும் 47
நாடக ஆசிரியர்களிற் சிறந்தோர் கி. மு. 525-க்கும் கி. மு. 450-க் கும் இடையில் தோன்றினர். யுறிப்பிடீஸ் என்போ னும் அஸ்ஸtலஸ் என்பவனும் நாடக நூல் வல்லோரெனப் புகழப்பெற்றனர். கி. மு 444-ல் அரிஸ்தபானன் என்பான் நகைச்சுவைசெறிந்த இன்பவியல் நாடகங்கள் பல எழுதி னன். 280 ல் தியோகிறிற்றஸ் என்பான் பள் எனும் நூலை இயற்றினன். கி. மு. 471-ல் தியூசிடிஸ் என்போன் யவன சரித்திரத்தை வசனநடையில் எழுதினன். சனடன் கி.மு. 262-ல் அவ்வரலாற்றைத் தொடர்ந்தான்.
கலைஞர் வரலாறு
கி. மு. 6-ம் நூற்ருரண்டிலே யவன தேசத்திலும் யவனருடிைய குடியேற்ற நாடுகளிலும் கலைவல்லோர் பலர் தோன்றினர். கணித வல்லோன் பிதாக்கோராஸ் தத்துவஞானியாகவும் திகழ்ந்தான். தேல்ஸ், பார்மினிடீஸ், அனச்சக்கோ ராஸ், அனுச்சிமாந்தர் எம்படக்கிள்ஸ் என் போர் பஞ்ச பூதங்களி லிருந்தே உலகு உற்பத்தியான தென விளம்பினர். ஏராக்கிளிற்றஸ் தீயிலிருந்தே நீரும் நீரிலிருந்தே நிலமும் தோன்றியவை எனவும் உலகு என்பது ஒரு சக்தியினது (தீயினது) அசைவே எனவும் விளம்பினன். பிறப்பிறப்பு இல்லை யெனவும் பிறப் பிலேயே இறப்பு உண்டெனவும் பொருட்கள் கணங் தோறும் தோன்றிகின்று அழிகின்றன எனவும் விளக் கினன். இக் கலை நூல்களைக் கற்றுணர்ந்தே சோக் கிறேற்றிஸ் பிளேற்றே அரிஸ்தாத்தில் என்போர் தத் துவ நூல்களை ஒதினர்.
யவனர்வாழ்க்கை
குடியானவன் ஒவ்வொருவனும் போர்முறைகளிற் பயிலல் வேண்டும்; அரசினர்க்கு ஆலோசனை கூறும் அவையத்தாரைத் தெரிந்தெடுக்குங் காலங்களில் வாக் களிக்கும் உரிமையும் அவனுக்குண்டு. யவன நாட்டில் அடிமைகளும் விலைப்பட்டனர். கடைவீதியில் வீணர் வீண்

Page 41
48 உலக வரலாறு
பொழுது போக்கினர். யவனதேசமெங்கும் வீரர் போர்த் தொழில்பயிலும் கழகங்கள் நிறுவப்பட்டன. அக்கழகங் களில் ஓடுதல், பாய்தல், மல்யுத்தஞ்செய்தல், ஈட்டியெறி தல் முதலிய படைப்பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கே அணிநூலும் கற்பிக்கப்பட்டது. தேர்கடாவுதல் வேட்டை Bாடுதல் கோழிப்போர் பார்த்தல் கவருடல் என்பன யவனருடைய விளையாட்டுக்களுட் சில. ஆடவரும் பெண் டிரும் அளவளாவுதலில்லை. யவனர் எண்ணெய்தேய்த்து நீராடுவர். உண்ணும்போது இடக்கையிற் சாய்ந்து படுத் திருப்பர். குடிவகைபாவித்தபின் விறலியரின் ஆடல் பாடல்களைக் கண்டு கேட்டு இன்புறுவர். பாம்பாட்டுதல் முதலிய வித்தைகளையும் கண்டு களிப்பர். பெண்களுக் குத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட வில்லை. பிள்ளைகளை வளர்த்தலும் வீட்டுப்பணிசெய் வதுமே அவர்கள் கடமை. பெண்கள் நூல் நூற்றனர். அடிமைகள் தோட்டவேலை, சுரங்கவேலை, காவற் ருெரழில் முதலியன செய்தனர். தகப்பன் தன் பிள்ளையைத் துறந்து விடலாம். பிள்ளை பிறந்த பத்தா நாள் பெயரிட்டு விருந்து கொண்டாடுதல் வழக்கம், ஆருவதாண்டு கழிந்த பின் அடிமைகள் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்வர். பாடசாலைகளிற் கணிதம் எழுத்து தேகப் பயிற்சி இசைநூல் அணிநூல் முதலியன கற்பிக்கப்படும். அரைநாள் கல்விப்பயிற்சியும் அரை நாள் தேகப்பயிற்சி யும் 15டக்கும். இளைஞர் பதினரும்வயதில் மயிரைக் குறுகக் கத்தரித்துக்கொண்டு போர்முறை பயிலுவர். இருபதாம் வயதிற் குடியுரிமை பெறுவர். யவனருடைய உடை அடிவரை மறைந்த ஓர் அங்கியும் ஒரு போர்வை யுமே. அவர் மிதிதடியணித லுண்டு. வழிச்செல்வோர் தலையணி அணிதலுமுண்டு. அடிமைகள் வலக்கையையும் தோளையும் மூடாது விடுவர். ஆடவர் வீசையும் தாடியும் வளர்த்தல் வழக்கம். பண்டையவனர் பெரிய இல்லங்கள் அமைக்குமாற்றலுடையரா யிருந்தனரென்று விளக்கும் ஆதரவுகள் அகப்படாவிடினும், ஓவியம் சிற்பம் முதலிய

ম 49
துறைகளில் அவர் சிறந்து விளங்கினரென்று அறிய லாகும். பீடியாஸ் என்னும் சிற்பி பாதீனன் என்னும் கோயிலைக் கட்டினன். யவனர் பரம்பொருளாகிய பதியின் சொரூபத்தை ஆராய விரும்பவில்லை எனவும் பார்முதற் பூதத்தால் ஆக்கப்படும் உலகிலுள்ள வனப்புக்களையும் இயற்கை விதிகளையும் கற்றுணர்ந்து இம்மை வாழ்க்கை யில் இன்புற்றனர் எனவும் கூறலாம்.
8-ம் பாடம்-சினர்
-سسسسه حسستیتசீனர் நாகரிகம்
சீனர் தம் நாகரிகம் சாலச் சிறந்ததெனவும் தாமே இப் பூவுலகில் சீர்பெற்று வாழும் மக்களெனவும் தம் சுதந்த ரத்தைத் தாம் ஒரு பொழுதும் இழந்தில ரெனவும் பிற சாதியாருக்குத் தாம் அஞ்ச வேண்டியதில்லை என வும் தம் ஆழிவேந்தர் தேவகுலத்தினரெனவும் நம்பியிருக் தனர். இது எங்ஙனமாயினும், சீனர் இற்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன்னரே பெரியதோர் இராச்சியத்தை நாக ரிக முறையாக நடத்தினர் என்பதற்கு ஐயமில்லை. உரோ மர் சீனரோடு வணிகம் செய்தனரெனவும் அவர்களேச் சீனரெனவே அழைத்தனரெனவும் உரோமருடைய வர லாறுகள் கூருரகிற்கும். பண்டம் மாறு தற்கும் சமயநூல் கற்றற்கும் சீனர் இந்து நாடுகளுக்கு வந்தனர் எனத் தெரிகிறது. தமிழரோடு தாம் செய்த வணிகத்தைப் பற் றிச் சீனர் தம் மொழியில் எழுதிவைத்த செப்பேடுகள் சில கிடைக்கின்றன. காவிரிப்பூம்பட்டினம் தொண்டி முதலிய துறைகளில் சீனர் இறங்கி மிளகு முத்து முத லிய பண்டங்க3ளக் கலங்களில் ஏற்றிச் சென்றனர் என அவ்வேடுகள் உரைக்கின்றன. மங்கோலிய சீனரே முதன் முதல் அச்சிடுதல் பயின்றன ரெனவும் வெடிமருந்தை யரைத்து அக்கினிப் படையை உண்டாக்கி உபயோகித் தன ரெனவும் அறியக்கிடக்கின்றது.
7

Page 42
50 உலக வரலாறு
சீனு தேசம்
சீனதேயம் இமயமலைக்கப்பால் வடகிழக்குத் திக்கில் உள்ள பெரியதேசம், சீன தேயத்தில் நிலக்கரியும் இரும் பும் அதிகம் உண்டென மொழிப. சீனநன்னடு நிலவள மும் நீர்வளமும் உடையது; கமத்தொழில் செய்தற்குத் தகுந்தது; கோதுமை நெல் சரும்பு பருத்தி முதலியன விளையும் நாடாகத் திகழ்கின்றது. இங்கு, பட்டுநூற் புடைவைகள் பண்டுதொட்டு நெய்யப்படுகின்றன. சீனத் துப் பெரிய ஆறுகள் போக்குவரவுக்கு ஏற்ற பாதை யாயின. யாங்கிஸ்தியாங் என்னும் ஆற்றிலும் உவாங்கோ என்னும் மஞ்சள் ஆற்றிலும் மரக்கலங்களும் கப்பல்களும் 3000 மைல் செல்கின்றன. இத்தகைய போகபூமி மக்கள் தம் நாகரிக வாழ்க்கையை நடத்தற்கு ஏற்றது என்பது கூருரமலே அமையும்.
I İFT 5
சீனர் மஞ்சள் நிறத்தின ரெனவும் வட்ட முகத்தின ரெனவும் கருமயிரினரெனவும் அழகிய இமையினரென வும் கருவிழியினரெனவும் சிறப்பிக்கப்படுகின்றனர். ஆக லின் சீனர் துரேனிய கூட்டத்தினராதல் ஒழிய, மங் கோலியமாதல் பொருந்தாது. சீனருடைய வடமேற் கெல்லையில் வசித்த மங்கோலியர் சீனத்தைக் கைப்பற்றி, ஆண்டு சீனரோடு கலந்தமையால் சீனரைச் சிலர் மங் கோலிய ரெனக் கருதினரென ஒழிக. சீனர் தமிழரைப் போல் ஒரு தனிக்குழுவினராகவே வாழ்ந்தனர்.
சீனர்மொழி
சீனர் கி. மு. 2897-ல் எழுதத் தொடங்கினரென ஆராய்ச்சி வல்லோர் மொழிகின்றனர். மூங்கிலில் சீனர் எழுதப் பயின்றனர். கி. மு. 105-ல் சீனர் கடுதாசியில் எழுதுகோலால் எழுதத் தொடங்கினர். சீனருடைய எழுத்துக்கள் ஒலிக்குறிப்புகளல்ல. சீனமொழியில் ஒவ்

சீனர் 5) வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தில்லை. சீனவெழுத்து ஒவ்வொன்றும் ஒரு பதமாகும். சீன எழுத்துக்கள் கீழிருந்து மேலாகவும் வலமிருந்து இடமாகவும் எழுதப் படும். சீனர் தம் பதங்களைக்கொண்ட அகராதி ஒன்றை கி. பி. 100-ல் இயற்றினர். சீனர் இலக்கிய இலக்கணங் களைக் கற்று இயற்கை யாராய்ச்சியில் ஈடுபட்டனராயி ணும், தத்துவநூல்களை ஆராய்ந்திலர். அவருடைய சமய நூல்கள், சமயக்கிரியை வரவேற்பு விழாவிருந்து தேரோட் டல் வில்வித்தை: முதலியவற்றை விரித்து விளக்கு
கின்றன.
Gr 320
கி. மு. 2000 ஆண்டுகட்கு முன்னரே சீனத்தில் வெண்கலப் பாத்திரங்கள் உபயோகிக்கப்பட்டன. 1119.ல் பட்டுப் புடைவை நெய்யப்பட்டன. பண்டைக் காலத் திலேயே சுவர்களிலும் கற்பாறைகளிலும், தேர்ப்போர் வேட்டையாடல் மீன்பிடித்தல் என்ருரற்போன்ற காட்சி கள் சித்திரிக்கப்பட்டன. அப்படங்களில் யானை ஒட்ட கம் குரங்கு முதலிய விலங்குகள் எழுதப்பட்டன. கி. மு. 20-ல் சிலைகளும் சிற்பிகளால் அமைக்கப்பட்டன. இதுகாறும் கூறியவற்ருரற் சீனர் சீர்திருந்திய மக்களென் பதும் நாகரிக வாழ்க்கைக்குரிய கலைகளையும் வித்தை களையும் ஓம்பினர் என்பதும பெறப்படும். இனிச் சீன ருடைய சமய வரலாற்றையும் அரசியல் வரலாற்றையும் சுருக்கிக் கூறுவாம்.
Mí FIDulúð
சீனர் சமய நூல்களைத் தேர்தலிலும் அறம் பொருள் இன்பங்களையே பெற முயன்றனர். சீனர் பல தெய்வங் களேத் தொழுதனர் எனக் கூறமுடியாது. அவர்கள் ஆதி காலங் தொட்டுத் தனிக்கடவுள் ஒருவர் உண்டென நம்பி யிருந்தன ரெனச் சொல்லலாம். அத் தனிக்கடவுளை வழி படுதற்குப் பூசாரிகள் தேவைப்படவில்லை. கி. மு. 6-ம்

Page 43
52 உலக வரலாறு
நூற்ருரண்டில் தேயோமதமும் கன்பூசியமதமும் பாம்பின. பின்பு இவ் விருமதங்களும் குன்றப் புத்தமதம் நனி வளர்ந்தது.
உண்மைநெறி என்னு’ தேயோமதம்
தேயோமதம் லேயோற்ஸ் என்பவரால் நாட்டப்பட்டது. அவர் பிறந்த ஆண்டு கி. மு. 601. அவர் ஒதியவை வரு மாறு. தனிநிலையாயுள்ள பொருள் ஒன்று உண்டு. அது ஒன்றே ஒன்றுதான் சத்து. அது சுத்தமானதும் நித்த மானதும். அந்த ஒன்றிலிருந்தே இரண்டு தோன்றின. அவ் விருபொருளும் ஆண் பெண் கியதியின்மை என முப்பொருளாயின. அம் முப்பொருட்களிலிருந்து உலகத் துப் பல விகற்பப் பொருள்க ளெல்லாம் தோன்றின. இம்மதம் இந்துக்களுடைய சுத்தாத்துவித மதத்துடன் எத்துணை ஒப்புடைய தென்பது ஆராயற்பாலது. இம் மதம் கல்லா மக்களைக் கவரத் தக்கதன்முகலின் அழி வெய்தியது.
கன்பூசியமதம்
கி. மு. 550-ல் லிங்வாங் வம்சத்தினர் செங்கோ லோச்சிய காலத்திலே லூகாட்டிலே கன்பூசியர் தோன்றி னர். அவர் அரசாங்கசேவை செய்து கி. மு. 517-ல் அப் பதவியைத் திறந்தார். பின்பு அரசாங்கத்தின் கட்டிடங் க3ளப் பரிசோதனைசெய்யும் உத்தியோகச்தராய் அமர்ந் தார். பின்னர் ஓர் நீதிபதியாயினர். ஏதிலார் அவரை அப் பதவியினின்றும் நீக்கினர்; அதன்பின் கன்பூசியர் சீனதேயம் எங்கும் திரிந்து ஞானுேபதேசஞ் செய்தனர். அவர் கி. மு. 483-ல் உயிர்நீத்தார். கன்பூசியர் கோயில் பெற்று வணங்கப்பட்டனர். கன்பூசியர் தத்துவங்களை ஆராய்ந்து பொழுதுபோக்கவில்லையெனவும் நல்லொழுக் கத்தை 5ணி வற்புறுத்தினரெனவும் கூறுப. அவர் இறந்தபின் அவர் நுதலிய மதம் திரிபடைந்தது. அவ ருடைய சந்தானத்தில் சிறந்தோன் மென்ஷி என்போன்.

சீனர் 53
இவன் கி. பி. 371-ல் பிறந்து பல நூல்களை இயற்றினன். அந்நூல்கள் கி. பி. 1033-ல் மிகவும் பாராட்டப்பட்டன சீனர் தம் ஆழிவேந்தர் சூரிய சந்திர குலத்தோராதலின் தவறிழைக்கும் இயல்பினரல்லரென நம்பியிருந்தபோதி லும், மென்ஷி, ஆழிவேந்தர் செங்கோல் பிழைத்தால் அவரை அரசபதவியினின்றும் நீக்குதல் அவசியம் என வற்புறுத்தினர். இது கிற்க, கன்பூசியர் எழுதிய நூல்கள் பதினறு என்ப. ஒன்று மறுமையைப்பற்றிக் கூறுகின் றது. ஒன்று கி. மு. 2000 ஆண்டுகட்குமுன் நிகழ்ந்த வற்றைச் செப்புகின்றது. ஒன்று தேசிய கீதங்களை அடக்கியுள்ளது. மூன்று நூல்கள் கிரியைகளை விளக்கு கின்றன. ஒன்று சீனருடைய அரசியல் வரலாற்றை உரைக்கின்றது. ஒன்று கன்பூசியர்க்கும் சிஷ்யர்க்கும் இடையில் நடந்த சம்பாஷணையைக் கூறும். ஒன்று பெற் முரைப் பேணலைப்பற்றியது. ஒன்று எசமானனுக்கும் பணியாளனுக்கும் உள்ள நட்பின் இயல்பை ஆராய்கின் றது. ஒன்று அரசியல் ஞானத்தை உணர்த்துகின்றது. ஒன்று கல்வியைப்பற்றியது. ஒன்று நிகண்டு. ஒன்று அறங்களை வரையறுக்கின்றது. ஒன்று சரித்திரநூல். தத்துவஞானி மென் ஷியும் தன் உபதேசத்தை ஒரு நூலாக வகுத் தான். கன்பூசியர் எழுதிய 16 புத்தகங் களும் கி. பி. 200-ல் மறைந்துபோயின. பின்னர் அவை ஆராய்ச்சி வல்லோரால் வெளியிடப்பட்டன. வெளிவந்த நூல்கள் சில குறைவாகவே இருக்கின்றன. சிலபகுதி சேதமடைந்தனபோலும்,
புத்தமதம் கி. மு. 126-ல் சாங்சியன் என்பவன் சீனர்க்குப் புத்த சமயத்தைப் போதித்தான். கி. பி. 61-ல் ஆழிவேந்தன் மிங்-தி தூதர் சிலரைக் கூவி இந்துநாட்டிற்குப் போய்ப் பிக்ஷ"க்களையும் பெளத்த நூல்களையும் பெற்றுவரும்படி ஏவினன். இந்திய பெளத்த நூல்கள் பல மொழிபெயர்க் கப்பட்டன. கி. பி. 385-ல் சீனர் பெருங் தொகையினர்

Page 44
54 உலக வரலாறு
காவியணிந்து புத்த சங்கங்களே நிறுவத்தொடங்கினர். கி. பி. ஐந்தாம் நூற்றண்டில் புத்தமத ஆராய்ச்சிசெய்த பெரியோன் பாகியன், மங்கோலியா ராட்டிறி இந்தியா இலங்கை என்னும் தேசங்களில் யாத்திரைசெய்தனன். சங் என்னும் வேந்தன் புத்தமதத்தைப் புரந்தனன். பின்பு ஹிசுவான்சாங் இந்தியா சென்று கி. பி 687-ல் பெளத்த நூல்களை எடுத்து ஏகினன். அவை சீன மொழி யில் பெயர்க்கப்பட்டன. அக்காலத்தில் சீனத்தில் 3716 பெளத்தமடங்கள் இருந்தன. கி. பி. 714-ல் பெளத்தர்கள் துன்புறுத்தப்பட்டனர். சின் வம்சத்தினனுகிய ஆழிவேக் தன் வூதி செங்கோலோச்சியகாலத்தில் அரசவையில் பெளத்தருக்கும் கன்பூசியருக்கும் வாதம் கடந்தது. வூதி அரசு துறந்து வானப் பிரஸ்தனனன். கி. பி. 845-ல் ஆழிவேந்தன் வாசங் 4600 மடங்களே இடித்தான். அக் காலத்தில் பிக்ஷ-க்களும் பிக்குணிகளுமாக 260,00 மக் கள் துறவறவாழ்க்கையை விடும்படி ஏவப் பெற்றனர். பின்பு கி. பி. 11-ம் நூற்றண்டில் பெளத்தமதம் ஒரு வாறு தலையெடுத்தது. ஹ"பணர்வேந்தன் குபிலைக்கான் பெளத்தமதத்தைத் தழுவித் தேயோ மதத்தைக் கண்டித் தான். அவனுடைய ஆட்சிக்காலத்தில் சீனவில் 42,318 பெளத்தப்பள்ளிகள் இருந்தன. தாள்வு என்போன் தரை வழியாக இந்தியாவந்து பல நூல்கள் பெற்றுக் கடல்வழி யாகத் தாய்நாடு திரும்பினன். கி. பி. 1600-ல் கன்பூசிய மதத்தின்ர் அரசரைத் தூண்டிப் பெளத்தரைத் துன் புறுத்த எண்ணினர். வேந்தர் ஒரு மதத்தினரையும் துன் புறுத்த விரும்பவில்லை. கி. பி. 1644-ல் மாம்சுவம்சத்து முதல்வேந்தன் ஷன்ஷி பெளத்த மதத்தைப் புரங் தான். அக்காலத்துப் பெளத்தரே சீனருக்கு ஒலி யெழுத்துக்களை உணர்த்தினர். பெளத்த மதத்தைக் கற்றுக் கன்பூசிய மதத்தினர் தம் மதத்தைத் திருத்தினர். ஆழிவேந்தர் பெரும்பாலும் பெளத்த மதத்தைத் தழுவினர். அவர் தம் சாச்சடங்குகளில் பெளத்தமதக் கிரியைகளையே

சீனர் அரசியல் 55
செய்வித்தனர். சுவர்க்க லோகத்துக் கரைசேர்க்கும் ஒடக்காரனுக்கென இறந்தோர் வாயில் ஒரு காசு இடுதல் வழக்கம். பெளத்தமதம் இந்து நாட்டில் இந்து சமயத் துடன் கலந்து மறைந்தபோதிலும், சீனதேசத்தில் பரம்பி நிலவுகின்றது.
9-ம் பாடம்-சீனர் அரசியல்
ஆதிகாலம்
சீனருடைய கணக்கின்படி கன்பூசியர் என்னும் சமயகுரவர் பிறக்குமுன் 3,276,000 ஆண்டுகளுக்குமுன் இப்பூவுலகு படைக்கப்பட்டதாகும், முதன்முதல் படைக் கப்பட்டான் பான்-கு என்பவன். அவன் அண்டம் என்னும் முட்டையில் பிறந்தான். அவனுடைய குமாரர் மூவரின் சந்ததியார் சுவர்க்கத்தையும் பூலோகத்தையும் ஆளு கின்றனர். பூஹி ஆண்டகாலத்திலே கி. மு. 2850-ல் மனிதர் சமையல்செய்து உண்ணவில்லை. ஆடவன் ஒரு பெண்ணுடன் கூடி, குடும்பமாக வாழவில்லையாகலின், அக்காலத்தவர் தம் தந்தைகளை அறியாது தாய்மாரோ டேயே வாழ்ந்தனர். வேந்தன் பூஹி வேட்டையாடல் மீன்படுத்தல் பட்டிமேய்த்தல் என்னும் தொழில்களைக் கற்பித்தான். அவன் மஞ்சள்நதியிலிருந்து எழுந்த பாம்புக் குதிரையிடம் சில வரைதல்களைப்பெற்று எழுத்துக்களைக் கற்பித்தான் என்ப. அவனுடைய தலைநகர் மோஹனுன் தேசத்துள்ள கைபெங்பூ என்பது. அவன் பின் தலைமை வகித்த ஷென்னங்கு (கி. மு. 2787-2697) ஏர் பூட்டி உழு தலைக் கற்பித்தான், அவன் மூலிகைகளை ஆராய்ந்து மருத்துநூல்களை எழுதினன். அவன் பின் அரசுசெலுத் திய கு-வாங்-தி (கி. மு. 2597) மரத்தாலும் மண்ணுலும் உலோகங்களாலும் கலன்கள் செய்யும் முறைகளைக் காட்டி னன். ஒடங்களும் வண்டிகளும் அக்காலத்திலே செய்யப் பட்டன. பட்டுநூலாடையும் செய்யப்பட்டது. இவ்வள வில் ஆதிகாலத்து வரலாறு முற்றிற்று. V

Page 45
56 உலக வரலாறு ஹீசியவம்சம்
கி. மு. 2887-ல் செங்கோலோச்சிய ஏவேr என்பவன் தன் மகனுக்கு இராச்சியத்தை அளிக்கவில்லை. அவன் ஷன் என்பவனே அரசபதவிக்குத் தகுந்தோன் எனக் கண்டு அவனுக்கே முடியை அளித்தான். அவனுடைய தலைநகர் பிங்யாங்பு. ஹரீசிய வம்சத்தினர் கொடுங்கோ லோச்சியமையால் சலப்பிரளயங்கள் நிகழ்ந்தன என்ப. மஞ்சள்நதியின் வெள்ளத்தால் தலைநகர் ஏழுமுறை இடம் மாற்றப்பட்டது. கி. மு. 2205-ல் யூ என்னும் வேங் தன் சீனுதேயத்தின் பெரும்பகுதியை ஒருகுடைக் கீழ் ஆண்டான். ஹீசியவம்சத்தினர் பதினெண்மர் ஆண்ட னர். அக்காலத்தில் வானநூலோர் கிரகணம் ஒன்றைக் கணக்கிட்டறியாமையால் தண்டிக்கப் பட்டனர், ஹிசிய வம்சத்துக் கடைவேந்தன் சோசின் பெருங்காமியாகலின் குறுகிலமன்னரால் கொல்லப்பட்டான்.
bishI dir L1
கி. மு. 1122-ல் சோநாட்டுப் பா என்னும் மன்னன் அரசு கட்டிலேறினன். அவனுடைய தந்தை சாங் என் பான் சோசின் என்பானுடைய குற்றங்களைக் கண்டித்தா னகலின், சிறையிடப்பட்டிருந்தான். பா தன் பட்டப் பெயராகத் தனிக்கோலன் எனப் பொருள்படும் உவாங் என்னும் பெயரைச் சூடினன்; தன் உடன் பிறந்தோ அனுக்கு அமைச்சுப்பதவியை நல்கினன். சோசின் என் பானைக் கொல்லுதற்கு உதவிபுரிந்த நண்பர்களுக்கு நிலங்கள் அளித்தான். அவனுடைய ஆட்சியிலேதான் முதன்முதல் கொலை நடந்த தென்ப, கி. மு. 1038 லூ என் ணும் குறுகிலமன்னன் தன் சகோதரனல் கொல்லப் பட்டான். ஆழிவேந்தன் அக்கொலை செய்தோனத் தண்டித்தற்கு ஆற்றல் இல்லா திருந்தான். கி. மு. 1001 முதல் 947 வரைக்கும் மின்வாங் என்பான் ஆழியுருட்டி னன். அவன் காலத்தில் கண்டனையாகப் பொருளிறக்க விதிக்கும் வழக்கம் தொடங்கியதாக, ஒழுக்கம் குன்றிய தென்பர்.

சீனர் அரசியல் 57 யங் என்னும் கானவர் கி. மு. 946-ம் ஆண்டுக்கும் கி மு. 770-ம் ஆண்டுக் கும் இடைப்பட்ட காலத்தில் ஆறு வேந்தர் ஒருவர்பின் ஒருவர் ஆண்டனர். அங்கியர் சீனவைப் பிடித்தற்குப் படையெடுத்த்னர். அவர் யங் என்னும் சாதியார், ஆழி வேந்தன் தன் மகனுக்கு உரிமையை மறுத்துத் தன் காமக்கிழத்தியின் மகனுக்கு அரசை அளிக்க எண்ணின ணுக, குடிகள் யங் என்னும் சாதியாரின் துணையோடு பகைத்தெழுந்து ஆழிவேந்தனைக் கொன்றர்கள். கி. மு. 770-ல் அக்கானவர் ஒருவாறு துரத்தப்பட்டனர். பிங்வாங் என்பான் கான வருக்கு அஞ்சியிருந்த காலத்தில் குறுகில மன்னர் ஆழி வேந்தனுக்கு அமைந்தொழுகவில்லை. குறுகிலமன்னர் பலமுறை படையெடுத்துக் கலகம் விளைத் தனர். கி.மு. 770 முதல் கி. பி. 220 ஈருரன காலத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர், அக்காலத்திலே נi grup Tוז986O தான் கன்பூசியர், லேயோற்ஸ், மென்ஷி என்போர் ஞானுேப தேசஞ் செய்தனர்.
d'Asir')ls Jsb கி. மு. 200-ல் சின் வம்சத்தினர் ஆளத் தொடங்கினர். வேந்தன் ஷி உவாங் தி இராச்சியத்தைப் பல மாகாண மாகப் பிரித்து, அரசியலை நடாத்தினன். சமயக்கல்வி யைச் சனங்கள் போற்றினராக லின், அவன் படைப் பயிற்சி குன்றுமென எண்ணினன். தன் அரசைக் காத் தற்குப் புத்தகங்களை எரித்தல் அவசியமென எண்ணிச் சமயநூல்கள் பலவற்றை எரித்தான்.
மருத்து நூல்களும் எதிர்கால சாஸ்திரநூல்களும் பயிர்நூல்களும் மென் ஷி எழுதிய நூல்களும் எரிக்குத் தப்பின. கன்பூசிய மதத்தினர் ஆழிவேந்தரை விரோ தித்துக் குறுகிலமன்னருக்குத் துணைபுரிந்தமையால் துன் புறுத்தப்பட்டனர். எரியில் இடுதற்குப் புத்தகங்கொடாத 460 அறிஞர் உயிரோடு புதைக்கப்பட்டனர். அமைச்சன் லிசு அறிஞரைத் துன்புறுத்தும்படி புத்தியுரைத்தனன்.
8

Page 46
58 உலக வரலாறு
சீனர் மதில் இன்றும் வியப்பினை விளக்கும் மதில்(கூ) ஒள என் னும் கானவரைத் தம் நாட்டினுள் நுழையவிடாமல் காத் தற்கு ஆழிவேந்தன் ஷின்ஷிஉவாங் என்பவனல் கி. மு. மூன் ருரம் நூற்றண்டில் கட்டப்பட்டது. அக் கூவென் போரே ஹகுணராயினர். அக்காவன் மதில் முதலில் 200 மைல் நீளமும் 80 அடி உயரமும் 25 அடி அகலமும் உடை யது. அம்மதில் கட்டப் பத்தாண்டு கழிந்தன. பின்பு அம் மதில் 1800 மைல் நீட்டப்பட்டது. 10,000 மக்கள் கூடு தற்குரிய மண்டபம் ஒன்றுங் கட்டப்பட்டது. உவாங் தி வேந்தனுக, பகைவர் யாண்டும் கலகம் வி?ளத்தனர். கி. மு. 207-ல் சே. யோ. கேயோ என்னும் வித்திலன் வேக் தனைக் கொன்ருரன்.
DGirlff Job
கி. மு. 206 முதல் கி. பி. 24 வரை ஹான் வம்சத்தி னர் அரசாண்டனர். கி. மு. 206-ல் லியுபாங் என்பான் ஆழிவேந்தனயினன். அவன் பட்டம் கே யோசு என்பது. கி. மு. 193-ல் அவன் இறந்தான். அவனுடைய மகன் இளைஞனகலின், தாய் அரசியலை நடத்தினுள். ஏழு வரு டம் கழியுமுன் இளஞன் இறந்தானகத் தாய் முடி பெற்று அரசாண்டாள். அரசி தன் கொழுநனின் காமக் கிழத்தியின் கைகால்களே வெட்டிக் கண்ணைப் பிடுங்கி நாவையும் காதுகளையும் அரிந்தனள், அவ்வண்ணம் மானபங்கப் படுத்தியபின் அவளே ச் சாணக்குன்றில் இட்டனள். அரசி இறக்த பின் அவளுடைய கொழுநனின் மற்ருெரு காமக்கிழத்தியின் மகன் வேந்தனனன். அவன் பெயர் வெந்தி என்பது. அவன் யாதொரு புத்தகத்தையும் எரிக்கப்படாதென விளம்பினன். அவன் வாசகசா8ல ஒன்றை நிறுவினன். அவன் நீதிப் பிரமாணங்களை முறை வகுத்துக் கொடுங்குற்றம் செய்தோருக்கே கொலைத்தண் டனை விதிக்கலாமென முரசறைவித்தான். அவன், 6ጭG5,

சீனர் அரசியல் B9
வன் குற்றத்திற்காகக் குற்றஞ் செய்தவனுடைய குடும்பத் தினரைத் தண்டிக்கும் வழக்கத்தை நிறுத்தினன்.
ஹன்னர் (அவுனர்)
உவாங்ணு என்னும் ஹஅணர் சீனருடைய நாடுகளில் குறையாடினர். ஹாDணர் ராட்டறி மங்கோலியா என் னும் தேயங்களில் பட்டிமேய்த்துத் திரிந்த நாடோடிகள். அவர்கள் பெரிய அரசை நாட்டிச் சீனரை வென்றது மன்றி உரோமருடைய இராச்சியத்திலும் குறையாடினர் இந்த ஹ"Dணர் கூட்டத்தினரே இந்து நாடு புகுந்தனர். ஹ"5)ணரையே இந்தியர், அவுணர் என அழைத்தனர் போலும். இது கிற்க.
கி. மு. 156-ல் சிங் தி என்னும் மன்னன் ஹகுணப் பெண்ணை மணமுடித்தபோதிலும் சீனருக்கும் ஹDண ருக்கும் நட்பு ஏற்பட்டிலது. கி. மு. 140-ல் வூதி என்னும் வேந்தன் ஹகு)ணரோடு பொருதான். சீனர் சாங்சங் என் னும் தூதனை அனுப்பி ஒக்கஸ் நதிக்கரையில் வதியும் சிதிரியரிடம் துணையிரந்தனர். இந்த சாங்சங் என்பவனே திராட்சைப்பழம் மாதுளம்பழம் என்பவற்றைச் சீனநாடு களுக்குக் கொண்டுபோனன். அக்காலத்திலே சீனர் பார்த்தியரோடு நட்பா யிருந்தனர். கொச்சின் சீனுவும் தொங்கின் 5ாடும் சீனருடைய ஆட்சி நாடுகளாயின. அவை கி பி. 1000-ல் சுவாதீனம் பெற்றன.
கி. மு. 73-ல் ஆண்ட வேந்தன் சேயோ நிலவரியைப் பெருது விட்டான். சிறைச்சாலைக் கணக்கன் ஒருவன் ஹசுவான் தி என்பவனைத் தீவினையாளரின் கையிலிருந்து தப்பவைத்தான். ஹசுவான் தி எ ன் பவ ன் வேந்த னைவுடன் சிறைக் கணக்கனின் மகளை மணந்து இராணி பாக்கினுனம். கி. பி. 6-ஆம் ஆண்டு யுவான் என்னும் வேங் தன் ஹகு)ணரோடு பொருதான். அவன் இறந்த பின் செங் தி என்பவனும் ஆய் இத்தி என்பவனும் அரசுசெலுத்

Page 47
60 உலக வரலாறு
தினர். அவ்விருவரும் சிறுவர்களாகலின் அவர்களுடைய பாட்டி பிதிெ அரசியலை நடத்தினள். அவருடைய அமைச் சன் வசங்மாங் அவளை நஞ்சூட்டிக் கொன்று அரசை வெளவினன். அவன் நூல்நிலையங்கள் பல நாட்டினன். கி. பி. 23-ல் பகைவர் அவனைக் கொன்றனர்.
fjb jb JJ 5 Gir
கி. பி. 23 முதல் கி. பி. 221 ஈருரக உள்ள காலத்தில் மற்ருெரு ஹான் வமிசத்தினர் அரசாண்டனர். அக் காலத்தில் பெண்கள் பலர் அரசு கட்டில் ஏறினர். அரசி கள் வித்திலரை அமைச்சராக்கி அரசியலை நடாத்தினர். அக்காலத்தில் வித்திலர் 20^0பேர் கொல்லப் பட்டன ராத லால் மக்களை வித்திலராக்குதல் பெருவழக்கா யிருந்தது போலும். மக்களை வித்திலராக்கும் வழக்கம் சீனராலும் துருக்கராலும் உரோமராலும் அராபியராலும் கையாளப் பட்டது. வேந்தன் சியன்தி என்பானைப் படைத் தலைவன் தங்சே என்பவன் கொன்று அரசு கட்டில் ஏறினன். கி. பி. 192-ல் தங்சோ கொல்லப்பட்டான். செம்மார் குலத்தினன் ஒருவன் படைச்சேவைசெய்து கி. பி. 155-ல் ஒரு தலைவனனன். அவனே தங்சோ என்பவனைக் கொன்று அரசு புரிந்தான். சீன பல அரசுகளாகப் பிரிய, அரசியற் குழப்பங்கள் மிகுந்தன.
தென் சீனவில் ஓர் இராச்சியம் நாட்டப்பெற்றது. அதன் தலைநகர் நரங்கிங். ஆங்கு சுன்சுயான் அரசனனன். அவனுடைய வம்சம் வூ எனப் பெயர்பெற்றது. அவன் தென் சீனவில் ஆண்ட காலத்தில் வடசீனராச்சியத்தை வைவம்சத்தினர் ஆண்டனர். மற்ருெரு அரசு மேற்குச் சீனுவில் ஷிஹான் என்பானுல் நாட்டப்பட்டது. இம்மூன்று இராச்சியங்களும் கி. பி. 265-ல் இகலாயின. மூன்றும் ஒன்றே டொன்று பொருது அழிவெய்தின. அக்காலத் தில் துங்கூசியர் என்னும் கானவர் சீனநாடுகளில் குறை யாடினர். பின்பு வடசீனு தென்சீனு என ஈர் அரசுகள்

சீனர் அரசியல் 6.
நிலைத்தன. வடசீன கீத்தே(கதே) எனப் பெயர்பெற்றது; வடசீனவில் கி. பி. 420-ல் சங்வம்சத்தினர் ஆண்டனர். தென்சீனவில் லியங்வம்சத்தினரும் அவர்பின் சென்வம்சத் தினரும் அவர்பின் சுயி வம்சத்தினரும் அரசாண்டனர்.
தாங்வம்சம்
கி. பி. 589-ல் யாங்சியன் என்னும் படைத் தலைவன் அரசை வெளவினன். அவனுடைய மகன் த கப்பனைக் கொன்று வேந்தனுயினன். அவன் கி. பி. 805-ல் நீர் வாய்க்கால்களை அகழ்வித்தான். அவன் அறிஞனுயினும் சிற்றின்பப்பிரியனும். இவனுடைய வம்சம் தாங்வம்சம் எனப் பெயர்பெற்றது. தாங் வம்சத்தினர் கல்வியை வளர்த்தனர் அவர்காலம் சீனமொழியின் செம்மொழிக் காலமெனப்படும். புலவன் லிதைபோ என்பவனும் புல வன் துபி என்பவனும் பாடசாலைகள் பல கிறவினர். வேந்தன் லியுவான் வித்தைவல்லோரையும் கலைவல்லோ ரையும் புரந்தான். அவன் மகன் கி. பி. 618-ல்  ையோசுங் என்னும் நாமத்தைத் தரித்தான். கையோ சுங் தன் தந்தையின் காமக்கிழத்தியாகிய வூகெள என்பவளிடம் புத்திகேட்டான். அவள் பிறிதோர் காமக்கிழத்தியின் அவயவங்களை வெட்டினள். கையோசுங் இறக்க வூகெள கொடுங்கோல் செலுத்தித் தன் குமாரரைக் கொன்ருள். கி. பி. 705-ல் அவள் கொல்லப்பட்டாள். பின்பு 21 ஆண்டு வனவாசம் செய்திருந்த சங்சங் என்பான் அரசபதவியைப் பெற்றன். அவன் தன் மனைவிக்கு அஞ்சி நடந்தான். அங்ஙனம் ஒழுகியபோதிலும் அவனை அவள் நஞ்சூட்டிக் கொன்றனள். கி. பி. 713-ல் லங்சி அரசனனன். அவன் ஆடம்பர வாழ்க்கையை வெறுத்தோன். அவன் தன் குமாரரின் காமக்கிழத்தியாகிய யாங்கைபை என்பவளிடம் புத்தி கேட்டொழுகினன்; அவள் அணிதற்கு இரத்தினம் வாங்கிப் பொருளெல்லாம் செலவுசெய்தான். வேந்தனைச் சேவித்த படைவீரன் ஒருவன் இடித்துரைத் தானக அவ னைக் கொல்லும்படி வேந்தன் கற்பித்தான். அவ்வளவிற்

Page 48
62 உலக வரலாறு
குழப்பம் தொடங்கியது. ஒருவர்பின் ஒருவராகப் படைத் தலைவரே முடிபெற்றனர். கி. பி. 919-ல் சேயோசங் அர சாண்டான்; கி. பி. 923. அவனை லிற்ஷன்ஷி கொன்று முடிபெற்ருரன். கூத்தர் கலகம் விளைத்து லிற்ஷன்ஷி என்பவனைக் கொன்றனர். கி. பி. 932-ல் தான் முதல் முதல் அச்சிடுதல் தொடங்கியது. ப்த்தாம் நூற்ருரண்டுச் சீனருடைய நாணகங்கள் இலங்கையில் பலவிடங்களில் எடுக்கப்படுகின்றன.
fra Fů
சின் வம்சத்து முதல்வேந்தன் ஷி-சிங்பங் என்பான் கித்தரிடம் துணை பெறுதற்கு ஆண்டொன்றுக்கு 300,000 பட்டாடைகள் கொடுத்தானும், கித்தர் அவனைக் கலைத் தனர். சீனர் கித்தரோடு பன்முறை பொருதனர். கி. பி. 976-ல் தைசங் என்பான் கித் தரைக் கலைத்தோட்டினன். அவன் மகன் செங்சங் என்பான் கித் தருக்குப் பொருள் கொடுத்து நட்பாக்கினன். கி. பி. 1064முதல் 1068வரை யும் இங்சங் ஆண்டான். பின்னர் வெண்சங்செக் சிறுவனுக லின் அவன் தாய் அரசியலை நடத்தினுள். கி. பி. 1086 முதல் 1100 வரையும் வித்திலரே அமைச்சராகி அரசி ய8ல் நடத்தினர். கி. பி. 1126.ல் கின்னர் படையெடுத் துச் சீனவேந்தனைப் பிடித்தேகினர். கி. பி. 1127-ல் கேயோசங் என்பான் காங்சிங் என்னும் தலைநகரில் அரசு புரிந்தான். அவன் கின்னருக்கு அஞ்சி காங்செள என்னும் நகரை இராசதானியாக்கினன். அவன் கின்னரை நட் பாக்குதற்கு இருநாடுகளை அவர்களுக்கு அளித்த்ான்.
மங்கோலிய ஹ9ணவேந்தன் சிங்கிஸ்கான்
கின்னரை ஹ"Dணர் நெருக்கினர். கி. பி. 1230-ல் ஹஅணர் பீக்கிங் நகரைக் கைப்பற்றினர். ஹகு)ணர் மன் னன் சிங்கிஸ்கான் மங்கோலியா ருஷியா துருக்கி சீனு என் ணும் தேசங்களை ஆண்டான். அவன் இறவா மருந்து தேடினனும், அவன் இறந்தபின், அவனுடைய மூன்ருரம்

சீனர் அரசியல் 63.
மகன் ஒகோதை அரசனகித் திபேக்தையும் தனது ஆட்சி நாடாக்கினன். கி. பி. 1238-ல் அவன் கின்னரைக் கலைத்ததுமன்றிச் சீனர்வேந்தன் சங் என்பவனையும் சயித் தான். சீனர் தம் சுவாதீனத்தை இழந்தபோதிலும் அவர் கள் தம் நா க ரி க த் தை அழியவிடவில்லை. ஹDணர் சீனரை வென்றனராயினும் சீனரோடு கலந்து தம் Bாக ரிகத்தை இழந்தனர்.
ஆழிவேந்தன் குபிலைக்கான்
ஹDணவேந்தருள் புகழ்பெற்றேனன குபிலக்கான், கி. பி. 1260-ல் ஆழியுருட்டினன். அவனுடைய சந்ததி யார் யுவான் வம்சத்தினர் எனப் பெயர்பெற்றனர். அவர் களுடைய ஆணே இந்தியசீன என்னும் குடா நாடெங்கும் சென்றது. கி. பி. 1251-ல் குபிலைக் கான் ஜப்பான் தீவு களைப் பிடிக்கும்படி தன் கப்பற்படையை ஏவினன். கப் பல்கள் புயலில் அகப்பட்டு உடைந்தன. குபிலைக்கான் மங்கோலியமொழியில் சீன நூல்களைப் பெயர்ப்பித்தான். உலகமுழுவதும் பிரயாணஞ்செய்து பார்த்த இத்தாலியன் மார்க்கோப்போலோ குபிலைக்கானுடைய அவையைத் தரி சித்து ஆங்கு 17 ஆண்டு அரசாங்கசேவைசெய்திருந்து பல குறிப்புக்கள் எழுதினன். சீனமும் கடாரமும் இந் திய சீனுவும் திபேத்தும் குபிலைக்கானுடைய ஆட்சி நாடுகளாயினவாம். குபிலைக்கான் புத்த மதத்தை ஆதரித் தான.
மங்கேர்லிய ஆழிவேந்தன் தீமூர்
இராட்டறிமன்னர் குபிலைக்கானுக்குத் திறையளித் திருந்தனர். தீமூர் என்பவன் ஆழிவேந்தருக்குத் திறை கொடாது சுவாதீனணு பினன். இத் தீமூர் தடமார்பன், வெற்றிவேலன், படைவல்லோன் எனப் புகழ்பெற்ருரன். தீமூர் மங்கோலியவேந்தருள் புகழ்மிக்கோன், அவன் மங் கோலியா, ராட்டறி வடசீனு, துருக்கி, பார்சியா என் னும் நாடுகளை ஆண்டான். தீமூர் ஒருமுறை இந்தியாவி

Page 49
64 உலக வரலாறு
னுட் புகுந்து கங்கைக் கரைவழிச்சென்று சூறையாடி ஏகி னன். தீமூர் அரசு புரிந்த காலத்தில் சீனுவில் புத்தமதம் புத்துயிர்பெற்றது. தீமூர் துஞ் சி ய பின் மங்கோலியரு டைய வலி குன்றியது.
fŘ)ů Fů) رகி. பி. 1368-ல் சன்யுவான்சங் மங்கோலியரைக் கலைத் துப் பீக்கீங்நகரில் அரசாண்டான். அவன்தான் மிங்வம்
சத்தை நாட்டியவன். அவன் அன்னநாட்டாரிடம் திறை பெற்ருரன், மிங்வம்சத்தினர் ஆண்டகாலத்தில் மங்கோலி யரும் சீனரும் இடைவிடாது பொருதனர். ஜப்பானியரும் சீனருடைய கரைநாடுகளில் இறங்கிச் சூறையாடினர். மிங் வம்சத்தினர் கலைகளை ஓம்பினர். கி. பி. 1409-ல் விண் ணுால் பூகோள நூல் என்பவை ஐவரால் இருபதின்மரின் துணையோடு 60 புத்தகமாகத் தொகுக் கப்பட்டன. ஒவி யமும் புரக்கப்பட்டது.
மாஞ்சுவம்சம்
கி. பி. 1515-ல் போர்த்துக்கேயர் பீக்கிங் என்னும் தலைநகரில் பண்டமாற்றுச் செய்யத்தொடங்கினர். அக் காலத்தில் மஞ்சூரியாவில் உறைந்தோர் சீனத்துட்புகுந்து மிங்வம்சத்தினரைப் புடைத்துக் கலைத்தனர். பின்பு கி. பி. 1583-ல் மாஞ்சியர் இருகட்சியினராகிப் போராடினர். சினர் நுர்க்காச்சு என்பானுக்கு எதிராக கிக்கான் என்பா னுக்குத் துணைபுரிந்தனர், நுர்க்காச்சு வென்றியடைந்து கி. பி. 1616-ல் சீனரோடு போர்தொடர்ந்தான். அவன் முக்டன் நகரைப் பிடித்து தன் இராசதானியாக்கினன். தைசாங் என்பான் பீக்கிங் நகரைத் தாக்கினன். நகரத் தோர் கட்சி பிரிந்து கலகப்பட்டனர். அத் தருணத்தில் மாஞ்சியர் வை) ககுவான் என்னும் களத்தில் வென்று பீக் கிங் நகரைப் பிடித்தனர். கி. பி. 1645-ல் மாஞ்சியர் நாங் கிங்நகரையும் கைப்பற்றி ஆங்கிருந்த மன்னனையும் கொன் றனர். சீனத்தில் மாஞ்சுவம்சத்தினர் மூன்று நூற்றண்டு

சீனர் அரசியல் 65
அரசு புரிந்தனர். கி. பி. 1662-ல் மாஞ்சுவேந்தன் காங்ஷி மங்கோலியரோடு போர்புரிந்தான். அவன் நீதிப்பிரமா ணங்களை முறைவகுத்துச் செங்கோலோச்சினன். கி. பி, 1736-ல் அரசு புரிந்த சியென்லிங் மங்கோலியரோடு பொரு தான். அக்காலத்தில் இமயமலைச்சாரலில் வதியும் நீர்வள நாட்டினர் சீன ரோடு பகையாயினர். கி. பி. 1796-ல் சீனத்தில் சியாங்சிங் என்னும் மாஞ்சுமன்னன் ஆண் செலுத்தினன். அவன் ஆண்டகாலத்தில் கலகக்காரர் அரசியலைக் குலைக்கச் சூழ்ச்சி செய்தனர்.
சீனரும் மேனுட்டாரும்
19-ஆம் நூற்றண்டில் மேனுட்டார் சீனரோடு வாணி கஞ்செய்ய விரும்பினர். ஆங்கிலதூதன் ஒருவன் சீன வேந்தனின் அவையில் நிலத்தில் வீழ்ந்து மரியாதை செய்ய நேரிட்டது. அங்ஙனம் மரியாதை செய்தலை ஆங் கிலர் வெறுத்தனர். கி. பி. 1846-ல் ஆங்கிலர் சீனமன் னருடைய வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் சீன ரோடு அபின்வியாபாரம் செய்தனர். சீனர் அபின்வியா பாரத்தை நிறுத்தமுயன்றனராக ஆங்கிலர் போர்முர சறைக்தனர். ஆங்கிலர் இந்தியப்படைகளே ஏவிப் போரை நடாத்தினர். சீனர் கட்சிபிரிந்த கலகப்பட்டிருந்தமை யால் தோல்வியடைந்தனர். கி. பி. 1858-ல் ஆங்கிலர் தம் படைவலியால் ஐந்து துறைகளில் பண்டம் மாற்றும் உரிமைபெற்றனர். இதை அறிந்த பிரான்சியரும் சீனரை வெருட்டி வணிகவுரிமை பெற்றனர். பின்னர் செர்மானி யரும் ருஷியரும் சில துறைகளில் தம்மாணேயைச் செலுத் தத் துணிந்தனர்.
w கிறித்துமதம்
கி. பி. 505-ல் உரோமரும் கிரேக்கரும் சீனத்துக்குச் சென்று பட்டுப் பெற்றனர். கி. பி. 845-ல் உரோமரு டைய வாணிகம் கெட, அராபியர் வாணிகம்செய்யத் தொடங்கினர். அராபியர் பல ர் சீனத்துறைகளில்

Page 50
66 உலக வரலாறு
உறைந்து முகமதியமதத்தைப் பரப்பினர். கி. பி. 1248-ல் கதலிக்கர் சமய முதற்குரு இன்னசந்து என்பவரும், பிரஞ்சு தேச மன்னன் லூயி என்பவனும் சிங்கிஸ்கானுக்குத் தூது அனுப்பினர். கத லிக்கர்குரு பிராஞ்சிஸ்சேவியர் தம் மதப்பிரசாரம் செய்வதற்குச் சீனத்திற்குச் சென்ருரர். கி. பி. 17-ஆம் நூற்ருரண்டில் கிறித்தவர் மதவேற்றுமை பாராட்டிக் கலகப்பட்டமையால் சீனவேந்தரால் துன்புறுத் தப்பட்டனர். மேனுட்டுப் பலவகைக் கிறிஸ்தவமதத்தின ரும் தத்தம் மதத்தைப் பரப்ப முயன்றமையால் கலகம் விஜளந்தது. சீனர் பெருந்தொகையினர். கத லிக்கர் மதத் தைத் தழுவினர். Α
கிறிஸ்தவ மதத்தினன் சன்யாட்சென் மாஞ்சு வேந்த ணுக்கு எதிராகச் சூழ்ச்சிசெய்தான். சீனவரசியற்புரட் சிக்குச் சன்யாட்சென் என்பவனே பாத்திரன் என மொழியலாம். 1912-ல் குடிகள் வேந்தனைக் கலைத்துக் குடியரசை நாட்டினர். மேனுட்டார் கட்சிகளுக்குப் படைக் கலங்கள் உதவிப் பொருளிட்டினர். சீனர் வடசீனர் தென் சீனர் எனப் பிரிந்து அமர்புரிந்தனர். அதன்பின் 1932-ல் ஜப்பானியர் சீனரை ஒட்டிக் கலைத்து மஞ்சூரியாவைத் தம் ஆட்சி நாடாக்கினர். ஜப்பானியர் அவ்வளவில் கில் லாமல் சீனம் முழுவதையும் ஆளமுயலுகின்றனர். 1938-ல், ஜப்பானியர் சீனக்கடலில் தம்மாணையைச் செலுத்த வெண்ணிச் சீனத்தின் தலைநகராகிய காங்கிங் நகரையும் வணிகத் துறைகள் பலவற்றையும் கைப்பற்றினர். இங்ங் னம் ஜப்பானியரும் ஆங்கிலர் முதலிய மேனுட்டினரும் சீனத்துறைகளிற் ச்ெய்யும் வணிகத்தைத் தாம் கைப்பற்ற முயலுகின்றனர்.

ஜப்பானியர் 67
10-ம் பாடம்-ஜப்பானியர்
சீனதேசத்திற்கு வடகிழக்கில் நான்கு பெருந்தீவுகள் உள. அத்தீவுகளில் வசிப்போர் ஜப்பானியர் எனப்படுவர். அக் நான்கு தீவுகளையும் சுற்றியிருக்கும் 3000 சிறு தீவு களும் ஜப்பானியருக்கே உரியன. ஜப்பான்தீவுகள் சுதந்திரமானவை. ஆங்கு வானம் பிழையாது மாதங் தோறும் மழைபெய்யும். கொறியர் ஜப்பான்தீவுகளில் குடியேறியிருக்கலாம். சீனர் ஜப்பான் தீவுகளில் குடி யேறினரெனத் தெரியவில்லை. தீவுகளில் உறைவோர் மீன்படுத்தல் இயல்பே. ஜப்பான்கடல் 240 மைல் நீளமும் இயற்கை வனப்புமுடையது என்ப. ஜப்பான் தீவுகளில் 51 எரிமலைகள் உண்டு. ஓர் ஆண்டில் அவண் ஏறக்குறைய 5000 பூகம்பங்கள் நிகழும். பூகம்பம் நிகழ்ந்தால் தீயாலும் நீராலும் அழிவுநேரிடும். ஜப்பானியர் கருமயிரினர், மஞ் சள் நிறத்தினர், சிறிய உருவினர்; 5 அடியினும் உயர்ந்து வளரார்; ஜப்பானியர் தம் உடம்பையும் இல்லத்தையும் சுத்தமாக வைத்திருப்பர். உலகில் பிறசாதியார் ஒருவரும் ஜப்பானியரளவு சுத்தத்தைப் பொருட்படுத்தவில்லை என் பர் மேனுட்டார். ஜப்பானியத் தாய்மார் தம் பிள்ளைகளை அரசபக்தி உடையவர்களாக வளர்த்தலோடு கில்லாமல் அகச்சுத்தம் புறச்சுத்தம் இரண்டையும் குறிக்கொள்ளும் படியும் வீரத்தைப் போற்றும்படியும் கற்பிப்பர். அன்னி யருக்கு ஜப்பானியர் மிக மரியாதைகாட்டுவர். ஜப்பானி யர் போர்ப்பிரியர், போர்க்களத்திற் சிறையாதலிலும் இறத்தலை விரும்புவர்; எசமானன் இறந்துழி அவனுடைய பணியாளரும் இனத்தோரும் துஞ்சுவர். கி. பி. 646-ல் இவ்வழக்கம் கண்டிக்கப்பட்டது. ஜப்பானியர் கி. பி. 8-ம் நூற்ருரண்டுவரையும் எழுத வாசிக்கத் தெரியா திருந்தனர்.
ஜப்பானியர் தம் முதல்வேந்தன் பெயர் சிம்மு என வும் அவன் கி. மு. 660-ல் ஆண்டனனெனவும் கூறுப,

Page 51
68 உல்க வரலாறு
ஜப்பானியருடைய வரலாறுகள் சில நம்பத்தக்கவையல்ல வென்பது வெளிப்படையாகும். கி. பி. 500-ல் தான் ஜப் பானியர் சீர்திருந்தியநிலை யடைந்தனர் எனக் கூறலாம் என்ன? கி. மு. 220-ல் ஜப்பானியர் சீன வேந்தருக்குத் துரது அனுப்பினரெனவும் சீனர் ஜப்பானியரைக் கான வர் என எண்ணிப் பொருட்படுத்தாது விட்டனர் எனவும் சீனருடைய வரலாறுகள் கூருகிற்கும்.
கி. பி. இரண்டாம் நூற்றண்டில் ஜப்பானியர் மாடு குதிரை மு த லிய நாட்டுமிருகங்களை உபயோகிக்கத் தெரியாதிருந்தனர். ஜப்பானியருடைய போர்க்கருவிகள் அம்பும் வில்லுமே. ஜப்பானியர் பச்சைகுத்தித் தம் முகத் தின் அழகைக் கெடுத்தனர். தலைமயிரைக் குடுமியாக முடிந்தனர். காலணியின்றியே நடந்தனர்; கையாலேயே சாப்பிட்டனர். களவென்பதை ஜப்பானியர் கேட்டும் அறியார்; நீதிமன்றங்களில் வழக்குரைத் தலையும் மிக வெறுத்தனர். ஜப்பானியப்பெண்டிர் தம் கற்பை நனி காத்தனர்; தம் கொழுநர்க்குத் தொண்டுசெய்ய முன்னிற் பர். ஆதிகாலத்தில் மாந்திரிகப்பெண் பிறிகு அரசு செலுத்தி 1000 ஏவலாளரைக்கொண்டு பணி செய்வித் தனள் என்ப.
ஜப்பானியருடைய சரித்திரத்தின்படி பத்தாம்வேந் தன் சுஜின் (கி. மு. 97-30) நெல்வயல்களுக்கு நீர்பாய்ச்சு தற்கு ஒரு வாய்க்காலை அகழத்தொடங்கினன். அவ் வாய்க்காலைச் சுயிமின் என்பவன் கி. பி. 70-ல் கட்டிமுடித் தான். கி. பி. 201-ல் இராணி ஜிங்கோகொக்ஸ் கொறியா மீது படையெடுத்தனள். அவளுடையமகன் ஒஜின் கொறி யர் நாகரிகத்தையும் முன்னேர் வழிபாட்டையும் பரப் பினன்.
ஜப்பானியரின் அரசியல்
குடிகள் தலைமைக்காரருக்கு அமைந்தும் தலைமைக்
காரர் வேந்தனுக்கமைந்தும் ஒழுகினர். ஜப்பானியர்

ஜப்பரீனியர் 69
சீனரைப் பின்பற்றித் தம் வேந்தரைத் தெய்வமென எண்ணி அவர்களை அணுகவில்லை. வேந்தன் தன் மாளி கையில் வசித்தனன். வேந்தனைக் காணவே முடியாது. மேன்மக்களே அரசியலை நடத்தினர். கி. பி. 689-ல் நீதிப் பிரமாணங்கள் வகுக்கப்பட்டன.
கி. பி. 900 முதல் 1200 ஈருரக பூஜிவாரா சுகவரா என்னும் இருமேன்மக்கட் குடும்பத்தினர் இருகட்சியரா கப் பிரிந்து போராடினர். தையரா என்பவன் செங் கொடியுடனும் மீனமத்து என்பவன் வெண்கொடியுடனும் இருகட்சிக்கும் தலைவராகிப் போரை நடாத்தினர்கள் முடிவில் மீனமத்து தையராவை வென் ருரன். கி. பி. 1220-ல் அரசியலை நடாத்திய ஹேஜஸ் குடும்பத்தலைவன் ஷோகன் என்னும் பட்டப்பெயரைப் பெற்ருரன். கி. பி. 1275-ல் மங்கோலியநேமிவேந்தன் குபிலைக்கான் ஜப்பா னேப் பிடித்தற்குப் படையெடுத்தனன். அவனுடைய கப் பல்கள் புயலில் அகப்பட்டு உடைந்தன. கி. பி. 1834-ல் ஹேஜஸ் குடும்பம் ஷோகன் எ ன் னு ம் அமைச்சுப்பத வியை இழந்தது. ஜப்பானியவேந்தன் பட்டம் மிக்காடோ என்பது. கி. பி. 1400-ல் கோடியாகோ என்னும் மிக் காடோ காமா நகரைத் தலைநகராக்கினன். பின்பு வட பகுதியில் ஒரு வேந்தனும் தென்பகுதியில் மற்றொரு வேந்தனும் அாசாண்டனர்.
கி. பி. 1586-ல் இடியோஷி என்னும் குடிமகன் ஒரு வன் கோபநாகன் என்னும் தலைவன் கீழ்ச் சேவித்தனன். இடியோஷி கோபநாகன் இறந்த பின் அவனுடைய குமா ரரோடு பொருது எடோ என்னும் இடத்தில் இருந்து அர சாண்டான். கி. பி. 1592-ல் இடியோஷி கொறியா தேசத்தின்மீது படையெடுத்து அதன் தலைநகரைப் பிடித் தான். ஜப்பானியருடைய கப்பல்களைக் கொறியர் உடைத் தனராக, ஜப்பானியர் தம்நாடு திரும்பினர். இடியோஷி தன் குடிகள் கிறிஸ்து மதத்தைத் தழுவக்கூடாதெனக் கற்பித்தனன். கி. பி. 1593-ல் இடியோஷி இறந்தான்

Page 52
70 உலக வரலாறு
golulra f... Li. 1542-I616.
இடியோஷியின் மகன் இடியோரியை ஐயயாசு என் பவன் வென்று கி. பி. 1603-ல் ஷோகன் என்னும் பதவி யைப் பெற்ருரன். பின்னரும் இடியோரி படை சேர்த்தா கை, அவனை கி. பி. 1615-ல் ஐயயாசு வென்முன். கி. பி. 1616-ல் ஐயயாசு இற ந் தா ன். ஐயயாசு செங்கோல் செலுத்தியகாலை பிருன்சிஸ் சேவியர் என்னும் கதலிக் கர் குருவும் ஏனைய கத லிக்கரும் ஒல்லாங் தரும் ஜப்பான் தீவுகளில் இறங்கினர் எனவும் ஆங்கு உபசாரம் பெற்றில ரெனவும், நாட்டைவிட்டு நீங்கும்படி ஏவல் பெற்றன ரெனவும் தெரிகிறது. ஐயயாசுவின் காலத்து மேன்மக்கள் டேமியர் என்போரும் சமூரியர் என்போரும் என இருவகுப் பினராயினர். சமூரியர் டேமியரிலும் செல்வத்தால் குறைந்தோர். இச் சமூரியர் என்போருக்குப் பொதுக் குடிகளாகும் கமக்காரர் அரசிறைகொடுத்தனர். ஷோ கன், டேமியர் சமூரியர் என்னும் மேன்மக்களின் துணை யோடு அரசியலை நடாத்தினன். மிக்காடோ யாதொரு அதிகாரமுமின்றிப் பெயரளவில் வேந்தனுயிருந்தனன். ஜப்பானியர் நவசுவர்க்கங்கள் உண்டென நம்பினராக லின் தம்வேந்தருடைய மாளிகையிலும் இல்லங்கள் ஒன் பது பிரிவினராகக் கட்டினர். மாளிகை 12 வாயில்களே உடையதெனவும் 80 சாலைகள் உடையதெனவும் கூறப் படும். வேந்தனுடைய தேர் 10,000 என்ப. வேந்தனு டன் பேசவிரும்பும் மேன்மக்கள் ஷோகன் மூலமாகவே பேசலாம்.
இது நிற்க, ஐயயாசு என்பவன் எகிஜின் இற்ருடா கீயி ஒவாரி மீற்ருே என்னும் ஐந்து குமாரரைப் பெற்றன். எகி ஜின் இடியோஷியால் தனது உரிமைக்கு உரியன் என நியமிக்கப்பட்டமையால் தந்தையின் உரிமையை இழந் தான்; மிற்றே பகைவர் குலத்தில் மணமுடித்தமையால், உரிமையிழந்தான். ஐயயாசு ஷோகன் பதவியைத் தன்

ஜப்பானியர் 7
மகன் இற்ருடாவுக்கு அளித்தான். அவனுக்குச் சந்ததி யில்லாவிடின், கீயி ஒவாரி என்போரின் சந்ததியார் உரிமைபெறுவர். ஆனல் மிற்றே ஷோ கனைப் பட்டத் தைத் துறக்கச்செய்யும் அதிகாரமும் வேந்தனுடன் நேரே பேசும் உரிமையும் பெற்றனன். கி. பி. 1661-ல் மீற்றுகூமி என்பான் ஜப்பானியர் சரிதையை விரிவாக எழுதினன். இற்ருரடாவின் மகன் ஐயமிக்கு என்பான் அரசியலை முறைப்படி நடத்தினன்.
கி. பி. 1715-ல் இற்ருரடாவின் சந்ததி அற்றதாக, கீயி என்பவனுடைய சந்ததியார் ஷோகன் பதவியைப் பெற் றனர். ஜப்பானில் தலைமைக்காரரின் இராசதானிகளே. நகரங்களாயின. நகரங்கள் நகரசங்கமின்றி யிருந்தன ஜப்பானியருள் போர்க்தொழிலை வழி வழியாகச்செய்யும் கஷத்திரியரே முதல்வருணத்தினர்; கலைஞரும் மருத்து வரும் வித்தை வல்லோரும் பூசாரிகளும் கமக்காரரும் வணிகரும் இடை வருணத்தினர்; கடைவருணத்தவர் கூத்தரும் இழிதொழிலாளரும். மூத்தமகனுக்கே தந்தை யின் உரிமைகள் அளிக்கப்பட்டன. தந்தையின் தொழிலை வருணந்தவருமல் மகன் செய்தல் மரபு. இவ்வண்ணம் வருணம் காக்கப்பட்ட தெனினும் சாதி வேற்றுமை. பாராட்டப்படவில்லை.
ஜப்பானியரின் சமயம்
ஜப்பானியர் தம் மூதாதையரை வணங்கினர். அவர் மதம் ஷிந்தோமதமெனப்படும். கி. பி 552-ல் கொறியர் வேந்தர் புத்தரின் படங்கள் சிலவற்றை மிக்காடோ கிமிலி என்பானுக்கு அளித்தான். கி. பி. 673-ஆம் ஆண்டுக் கும் 686-ஆம் ஆண்டுக்கும் இடையிட்டகாலத்தில் பெளத்த மதம் வளர்ந்தது. கோபோதைஷி என்னும் அருச்சகன் 8-ஆம் நூற்ருரண்டில் சீனுவில் பிரயாணம்செய்து எழுத்துக் கற்றுத் திரும்பினன். அவனே ஜப்பானியரை எழுதப்

Page 53
72 உலக வரலாறு
பயிற்றினன். பின்பு மூதாதையர் வழிபாடும் புத்தர்வழி பாடும் கலந்தன. கட்சிப்போர் நீடித்து நடந்தகாலத்தில் பெளத்தமதம் நனிபரம்பியது. ஷோகர் யாவரும் பெளத்தமதத்தை வளர்த்தனர். கி. பி. 1571-ல் பெளத்த சங்கங்கள் சிதைந்தன. ஷோகனுடைய ஆதிக்கம் குன் றப் பெளத்தமதமும் குன்றியது, கி. பி. 1870-ல் மிக் காடோ பெளத்தமதத்தைக் கண்டித்து மூதாதையர்வழி பாட்டிற்குப் புத்துயிர் அளித்தான்.
கிறிஸ்துமதம்
கி. பி. 1581-ல் ஜப்பானில் கிறிஸ்தவர்கோயில்கள் 200 இருந்தன. ஐயயாசு ஷோகன்பட்டம் பெற்றவுடன் கிறிஸ்தவரைத் துன்புறுத்தினன். அவனும் இற்ருரடாவும் அங்கிய கிறிஸ்தவரைக் கொல்லும்படி ஏவினர். அரசியற் குழப்பங்களால் பெளத்தமதமும் வலிகுன்றியதாக, கத்தோலிக்கமதம் ஜப்பானில் வேரூன்றியது. அக்காலத் தில் போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் வருத்தப்பட்டனர். கி. பி. 1873-ல் ஜப்பானியர் கிறிஸ்தவரைத் துன் புறுத்தப்படாதென மிக்காடோ கற்பித்தான். ஒல்லாங் தரே ஜப்பானியரோடு நட்புப்பூண்டு பண்டமாற்றுச் செய்யும் உரிமைபெற்றிருந்தனர். பின்னர் அமெரிக் கரும் மேன்ட்டார்யாவரும் போர்முரசறைந்து ஜப்பானி யரை வெருட்டி வணிகவுரிமை பெற்றனர். G. 9. 19-ஆம் நூற்றண்டின் இறுதியில் வேந்தனுடைய கட்சிக் கும் ஷோகனுடைய கட்சிக்கும் போர் ஆரம்பித்தது. பொதுசனங்கள் வேந்தனையும் மேன்மக்கள் பலர் ஷோக னையும் சார்ந்தனர். முடிவில் வேந்தர் தம் உரிமையைப் பெற்றனர்; மேன்மக்கள் தம் பதவியை இழந்தனர். கி. பி. 1852-ல் முற்ருேகிற்ருே 123-ஆம் வேந்தனுயினன். அவனுடைய தலைநகர் தோக்கியோ, ஜப்பானியர் மேனடு சென்று மேனுட்டாரின் அரசியல்முறை போர்முறை களைப் பயின்று தம் நாட்டைச் சீர்திருத்தினர். தலை

இந்துதேயம் 73
மைக்காரருடைய அதிகாரம் கெட்டது. மேன்மக்கள் குன் றக் குடியரசு ஏற்பட்டது. நல்லரசு ஏற்பட்டதாகக் கல்வி வளர்ந்தது. ஜப்பானியர் மேனுட்டு யந்திரங்களைச் செலுத் தவும் தாம் அவற்றை ஆக்கவும் பயின்று தமது இராச்சி யத்தை ஒரு வல்லரசாக்கினர். ஜெர்மானியருடைய போர் முறைகளில் ஜப்பானியர் பயின்றனர். ஜப்பானியர் ஆங்கிலரின் நட்புப்பெற்று ருஷியரை கி. பி. 1904-ல் வென்றனர். ஜப்பானியர் 50 ஆண்டுகளில் அரசியலைத் திருத்தியதுமன்றி மேனுட்டுக் கலைகளையும் கற்று மேனுட் டாருக்கு கிகராகி மேனட்டாரை அச்சுறுத்தியது வியப் பின்ன விளைக்கின்றது.
2-ம் அதிகாரம்: தமிழர்
1-ம் பாடம்-இந்துதேயம்
பண்டுதொட்டு இந்துக்கள் வசிக்கும்தேயம் இந்து தேயம் எனப்படும். இந்துதேயத்தின் எல்லைகள் காலத் துக்குக்காலம் கடற்கோளாலும் பிறநாட்டாரின் படை யெடுப்பாலும் மாறிவந்தன. அம்மாறுதல்களைச் சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடாமையால் அவ்வெல்லைகளைக் கூற இயலாது. இக்காலத்தில் ஆங்கிலரால் ஆளப்படும் இந்தி யாவின் எல்லைகள் பண்டைய இந்துதேகத்தின் எல்லேக ளோடு ஒருபுடை ஒக்குமாகலால் அவ்வெல்லைகளை ஈண் டுக் குறிப்பாம். வடபால் இமயமலையையும் இந்துக்குஷ் மலையையும், தென் பால் தென்கடலையும் எல்லையாக வுடையதேயம் இந்துதேயம் எனப்படும். இந்துதேயத் தைக் கிழக்கில் கடாரமும் வடகிழக்கில் சீனுவும் வட மேற்கில் ஆரியானவும் துருக்கியும் பார்சியாவும், மேற் கில் அராபிக்கடலுக்கப்பாலுள்ள ஆபிரிக்கதேயங்களும், தெற்கில் இலங்கையும் தென்கிழக்கில் சாவகம் சுமத்
O

Page 54
74 உலக வரலாறு
திரா முதலிய தீவுகளும் சூழ்ந்திருக்கின்றமையால் இந்து தேயம் உலகமத்தியில் உளதெனலாம்.
கி. மு. 3-ஆம் நூற்ருரண் டி ல் யவனர் இந்துதேயத்தை இந்தியாவெனவே அழைத்தனர். இந்தியா வடபுறம் இக்து கங்கை யென்னும் யாறுகள் பாயும் சமபூமியாகவும், தென்புறம் பீடபூமியாகவும், இருகூரு யமைந்துள்ளது. இந்தியா தன்னகத்தே மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சிநிலத்தையும், கடலும் கடல்சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்தையும் காடும் காடுசார்ந்த இடமுமாகிய முல்லை நிலத்தையும், வயலும் வயல்சார்ந்த இடமுமாகிய மருதநிலத்தையும், குறிஞ்சியும் முல்லையும் திரிந்த இடமா கிய பாலைநிலத்தையும உடையதாகத் திகழ்கின்றது. இவ் வைவகை நிலங்களையும் உடைய இந்துதேயம் வடதிசை யில் 1600 மைல் நீண்டுகிடக்கின்ற இமயமலைத்தொடரா லும் ஏனைய திசைகளில் 3400 மைல் நீண்டிருக்கும் கட லாலும் காக்கப்பட்டிருக்கிறதெனலாம்.
இந்துதேயம் மிகப்பெரியதாதலாலும் மழை மிகுந்த தேயமாதலாலும் இந்துதேயத்து ஆறுகள் மிகப் பெரி யவையாயின, அவ்வாறுகளைக் கடல்கள் எனவே கூற வேண்டும். . இந்து நதியும் கங்கை நதியும் காலத்துக்குக் காலம் இடம்பெயர்ந்து பாய்கின்றமையால் கரைகளிற் பண்டு கட்டப்பட்ட நகரங்களின் திசைகளை அறியக்கூடா மல் இருக்கின்றது. இந்துநதியின் ஒருகிளையின் பள்ளமே 85 மைல் அகலமாயிருந்ததென்பதை அறிந்துளோமாக லின் பெரிய யாறுகள் புலம்பெயர்தலால் விளையும் மாறு தல்களை நாம் ஒருவாறு ஊகித்து உணரலாம். பழைய பாடலிபுரம் கங்கையும் அதன் கிளையாகிய சோணு நதியும் சந்திக்குமிடத்திற் கட்டப்பட்டதாம். அப்பாடலிபுரத்தி லிருந்து 12 மைலுக்கு அப்பா லிலேதான் இக்காலத்தில் அவ்விரு ஆறுகளும் கலக்கின்றன.

இந்துதேயம் 75
வடபால் ஆறுகள் புலம்பெயர்கலால் மாறுதல் கள் நிகழ்ந்தபோலத் தென்பாற் கடற்கோள்கள் பல நிகழ்ந்தமையாற் பட்டினங்களின் திசைகள் மாறுத லடைந்தன. கடல், படைத்தல் காத்தல் அழித்தல் என் னும் முத்தொழிலையுமுடையதாக லின், பண்டு கடற்கரையி லிருந்த காயல் என்னும் பட்டினம் இன்று கடற்கரையி லிருந்து 3 மைல் தூரத்திலுள்ள பாழுராயிருக்கின்றது.
இந்துதேயத்தின் கண் பல்வேறு சாதியினரும் பல் வேறு மதத்தினரும் பல்வேறு மொழியினரும் வாழ்ந்தன ராகையால், இந்துதேயத்தின் வரலாற்றைக் குறைவின்றி வரையமுடியாது. அன்றியும் இந்து நாடுகளிற் பலவகை அரசுகளும் தோன்றி நின்று அழிவெய்தியமையாலும் இந்துக்களின் வரலாற்றைத் தொடர்பாக எழுதுதல் இய லTது.
இனி, ஏனைய நாட்டார் தம் சரித்திரத்தை ஆராய் வதுபோல் நம் நாட்டினர் ஆராய்கின்றில ராதலாலும் அறி யக்கூடிய வரலாறுகளையும் நாம் அறியாதிருக்கின்றேம். தாய்நாட்டுப்பற்றும் தாய்மொழிப்பற்றும் வளரவளரத் தாய்நாட்டின்வரலாறும் நுணுகி ஆராயப்படுதல் கூடும்.
இந்துக்களின் வரலாறு எழுதப்பெற்றிலதாதலாலும் இந்தக் கூட்டத்தினர் பலபிரிவாகப் பிரிந்து பல்வேறு மொழிகளைப் பேசுதலாலும் இந்து சமுகம் என ஒரு மக் கட் கூட்டம் ஒருபோதும் இருந்ததில்லை என மேனுட்டார் இகழ்ந்து கூருரகிற்கின்றனர். இந்துக்களின் வரலாற்றை நன்கு ஆராய்ந்தறிவோர் இந்துக்கள் பண்டுதொட்டுச் சீர்திருந்தி நாகரிகமுறையாக வாழ்ந்திருந்தனர் என்பதை நன்கு உணர்வர்.
யவனவாசிரியன் மகாஸ்தனிஸ் என்பான் தான் இந்து தேயத்தைத் தரிசித்தகாலத்தில் இந்துதேயத்தில் 118 அரசுகள் இருந்தன எனவும் இந்துக்கள் கலைகளை

Page 55
76 உலக வரலாறு
ஆராய்ந்து தெளிந்தனரெனவும் எழுதினன். சமயநூல் களைத் தேர்தலில் இந்துக்களைப்போற் பிறிதொரு சாதி யினரும் முயன்றிலர் என்பதை ஒருவரும் மறுக்கத்துணி கின்றிலர். இந்துசமயத் தத்துவநூல்களை ஏனையமதத் தினர் ஆவலோடு கற்கின்றனர். அவற்றினைக் கற்றும் சிவலிங்கத்தின் சொரூபத்தை இன்னும் தெளிகின்றிலர்.
இந்துக்களுடைய சிறந்த கோயில்கள் வடக்கே கைலாயம், காசி, கயை, வடமதுரை என்பவையும் தெற்கே காஞ்சி, தில்லை, மதுரை என்பவையுமாகப் பல வுள. சிவன் முருகன் திருமால் இந்திரன் என்னும் தெய்வங்கள் கோயில்பெற்றன. கணேசர் வழிபாடு பிற் காலத்தில் தோன்றியதாகும்.
இந்துக்கள் ஆரியர் திராவிடர் என இருபெரும் பிரி வினர் என வரலாற்ற சிரியர்கள் கூறுப. திராவிட இந் துக்களின் சரிதையைத் தாம் கற்றிலராதலின், திராவிட நாகரிகமோ ஆரியநாகரிகமோ எது சிறந்ததெனக் கூற முடியாதென வின்சென்டு ஸ்மித் விளம்பினர். அவர் வட இந்தியருடைய வரலாற்றைப் பலகாலம் படித்து ஒருநூல் எழுதினர். அந் நூலைச்சார்ந்து வடவிந்திய வரலாற்றை வரைகுதும். வடவிந்தியவரலாற்றில் அலைச்சாந்தர் வரு கையின் பின் கிகழ்ந்தவற்றையே வரைகுதும். திராவிடர் என்னும் தென்னிந்தியருடைய வரலாறு கல்வெட்டுக்களே யும் நாணயங்களையும் சிலைகளையும் புராணங்களையும் இலக் கியங்களையும் ஆராய்ந்து எழுதப்பட்டுளது. பிற்காலத் தமிழருடைய வரலாற்றை ஆசிரியர் கீலகண்ட சாஸ்திரியார் எழுதிய வரலாற்றைத் தழுவி வரைவோம். சோழர் வரலா மறும் பாண்டியர் வரலாறும் சாஸ்திரியாரால் ஆங்கிலத் தில் எழுதப்பட்டன.

பண்டைக்காலத் தமிழர் 77
2-ம் பாடம்-பண்டைக்காலத் தமிழர்
நீண்ட தலையினையும் மீண்ட மூக்கினையும் செம்மயிரி
னையும் மங்கிய விழியினையும் உடைய ஆரியக் கூட்டத்தின ரைப்போன்றவரல்லர் தமிழர்; தமிழர் கருமயிரும் கருவிழி யும் நெடுங்கண்ணும் செவ்வாயும் உடைய திராவிடக்குழுவி னர். தமிழ்நாடும் தமிழ்மொழியும் மிகப் பழையவை என் பது தமிழில்க்கியவாராய்ச்சிகளாற் புலப்படும். தமிழ்வேந் தர் ஆணே 2000 ஆண்டுகட்கு முன் குமரி தொட்டு இமயம் ஈருரகச் சென்றதென,
'தென்குமரி வடபெருங்கற்
குணகுட கடலா வெல்லை'
என்னும் மதுரைக்காஞ்சியடிகளாலும்,
*வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தென்னுஅ துருகெழு குமரியின் தெற்கும் குனஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்’ என்னும் புறப்பாட்டடிகளாலும் தெளிவாகின்றது.
ஆதிகாலந்தொட்டுத் தமிழர் குமரிக் கண்டத்திலும் நாகத்தீவிலும் வாழ்ந்தனர். நாகத்தீவு ஈழத்தின் வடபாலுள்ள யாழ்ப்பாணத்தைச் சுட்டும் என்பது பருத்தித்துறையின் அண்மையிலிருக்கும் திருமால்கோயி லின் புறத்தே 1938-ல் அகழ்ந்து எடுக்கப்பட்ட பொற் றகட்டினம் கருதப்படும். அத் தகட்டைத் தன்னகத்தே பெற்ற பெளத்தகோயில், நாகத்தீவின் அரசனும் வாகா யகன் (வாசபன்) என்பவனுடைய அமைச்சன் இசைக் கிரியன் என்பவனல் கட்டப்பட்டதென அத் தகட்டில் எழுதப்பட்டுளது. வகாயாகன் (வசபன்) கி. பி. முதல் நூற்ருரண்டில் இலங்கையில் ஆண்ட அரசன் என்பது மகா வம்ச நூலால் தெரிகிறது.

Page 56
78 உலக வரலாறு
தமிழ்க்குடிகள் வங்கத்திலுள்ள தமிழுக் என்னும் ஊரிலும் இராசமகாலிலும் நாகபுரத்திலும் சிந்துப்பிர தேசத்திலும் பாஞ்சாலையிலும் பலுச்சிஸ்தானத்திலும் குடியேறியிருந்தனர்.
மோகஞ்சோதாரோவையும் அதற்கு 400 மைல் அப் பாலுள்ள அரப்பாவையும் அகழ்ந்துபார்த்த ஆராய்ச்சி வல்லுநர் ஆண்டுச் சிவசின்னங்களும் சித்திர எழுத்துக்க ளும் காணப்படுவனவாகையால் ஆங்கிருந்தோர் தமிழரா வர் என மொழிகின்றனர். மேற்கூறிய இரு நகரங்களி லும் சுட்ட செங்கற்களால் பல அடுக்குடைய வீடுகள் கட் டப்பட்டிருந்தன எனவும், அந்நகரத்து வீடுகள் மிக அகன் றவை யெனவும், அவ்வீதிகளுக்குக் கீழ் அழுக்குநீரும் மழைவெள்ளமும் போகும் குழாய் வாய்க்கால்கள் (சலதா ரைகள்) அமைக்கப்பட்டிருந்தன எனவும், நகரமக்கள் பொன்னபரணங்கள் அணிந்தோரெனவும், கி.மு. 2800க்கு முன்னரே அம்மக்கள் மிகவும் சீர்திருந்தியிருந்தனரென வும், அந் நகரங்களை அகழ்ந்து பார்த்த பண்டைப் பொரு ளாராய்ச்சி வல்லோராகிய மார்ஷல் மக்கே முதலியோர் துணிகின்றனர். அந் நகரங்களில் இலிங்கங்கள் செப்புக் கருவிகள் பொன்னபரணங்கள் யானைத்தந்தச் சீப்புக்கள் மயிர்மழிக்கும் சிறு கத்திகள் முதலியன பெருந்தொகை யாக எடுக்கப்படுகின்றன. இந்த இந்து நாகரிகம் சுமேரிய நாகரிகத்தோடு காலத்தாலும் கலையறிவாலும் ஒத் திருக் கின்றதெனக் கருதப்படும். சுமேரியர் தமிழரோடு நெருங் கிய தொடர்புடையவர் என ஆராய்ச்சி வல்லுநர் கூறுப்.
சிந்துதேயத்தில் வசித்த தசுயுக்கள் பொன்னுபரணங் களையணிந்து சீர்மைபெற்றிருத்தலை ஆரியர் கண்டு அழுக் காறுற்று அவர்களைக் கெடுக்கும்படி தம் தெய்வங்களைப் பரவினர் என வேத சுலோகங்கள் உரைக்கின்றன. இத் தசுயுக்கள் திராவிடக்கூட்டத்தினரே,

பண்டைக்காலத் தமிழர் 79
இனிப் பலுச்சிஸ்தானத்தில் வதியும் ஒரு மக்கட் கூட் டத்தினர் பேசும் பிரா கிமொழி தமிழ்மொழி ஒன்றுடன் மாத்திரம் ஒப்புமிகுந்துளதால் அம்மக்களும் தமிழ்க்கூட் டத்தினர் எனக் கருதப்படுவர்.
இனித் தமிழ்நாடு கடற்கோளால் சுருங்கியதென்பது உண்மை. இலமூரியா என்னும் குமரிக்கண்டம் கடலால் கொள்ளப்பட்டது. கடற்கோள்கள் நிகழ்ந்தன என்பது களவியலுரையாலும் வலியுறுத்தப்படுகிறது. முதற் கடற் கோளின் முன் அகத்தியர் பாண்டியன் துணையோடு முதற்சங்கம் கிறுவித் தமிழ்மொழியைச் சீர்பெறச் செய் திருத்தல் கூடும். முதற்சங்கம் காய்சினவழுதிமுதற் கடுங் கோன் இருக ஆண்ட 89 பாண்டியர் செங்கோலோச்சிய காலத்தில் நிலவியது. முதற்சங்கம் 4440 யாண்டுகள் நிலைத்ததென் ப. முதற் சங்கத்திற் கவியரங்கேறிய புலவர் கள் 549 பேர் என்ப. அவருள் எழுவர் பாண்டியர். முதற்சங்கத்தின் இறுதிக் காலத் தி ல் நிலந்தருதிருவின் பாண்டியன் அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப் பட்டது. தொல்காப்பியர் காலத்திலே ஆரியர் வடநாடு களிற் குடியேறினராகத் தமிழ்நாடு சிறுத்தது. அக் காலத்தில் பாண்டியர் தலைநகராகிய மதுரை கடலால் கொள்ளப்பட்டது.
"வடவேங்கடங் தென்குமரி யாயிடைத்
தமிழ்கூறு கல்லுலகத்து’
எனத் தொல்காப்பியத்திற்குப் பாயிரமுரைத்த பனம்பார னர் கூறுதலாலும்,
வேங்கடங் குமரி தீம்புனற் பெளவமென் றிக்கான் கெல்லை தமிழது வழக்கே’
எனச் சிகண்டியார் கூறுதலானும் தமிழ்பேசப்பட்ட நாடு களின் எல்லை வரையறுக்கப்படுதல் காண்க.

Page 57
80 உலக வரலாறு
இரண்டாங்கடற்கோள் கி. மு. ஐந்தாம் நூற்ருரண் டுக்குமுன் நிகழ்ந்திருக்க வேண்டும். அக்கடற்கோளால், பஃறுளியாற்றினையுடைய 49 தமிழ்நாடுகள் அழிந்தன. அதன்பின்னர்க் கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச்சங்கம் பாண்டியரால் கிறுவப்பட்டதாகும். அக்காலத்திலே ஆரி யர் தமிழரோடு கலக்கத்தொடங்கினர். இடைச்சங்கப் புலவர்கள் 3700 பேர்; அங்கத்தவர் 59 பேர்; அரசர்கள் வெண்டேர்ச்செழியன் முதல் முடத்திருமாறன் இருக 59 வேந்தர் என்ப. அவருள் கவியரங்கேறினர் ஐவர் பாண் டியர் என்ப. மூன்ரும் கடற்கோள் கி. மு. மூனருரம் நூற் ருரண்டில் நிகழ்ந்ததென்ப.
"நெடியோன் குன்றமுந் தொடியோள் பெளவமுக்
தமிழ்வரம் பறுத்த தண்புன ஞட்டு’ எனத் தமிழ்நாட்டெல்லை கூறினர் இளங்கோவடிகள். தன் நாடுகள் சிலவற்றைக் கடல் கொண்டதாகப் பாண்டி யன் குணடூர் முத்தூர் என்னும் இரு நாடுகளைச் சோழனி டம் பறித்தான். கடைச்சங்ககாலங்தொட்டுத் தமிழ்நாடு வேங்கடத்தையும் கடலையும் எல்லையாகவுடைத்தாய் இருக் கின்றது. கடைச்சங்ககாலத்தில் முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதிவரையுள்ள 49 வேந்தர் 1850 ஆண்டு இப்போதுள்ள மதுரையில் ஆண்டனர். சங்கம் இரீஇய புலவர் 49 என்ப. அவருளிட்டு 449 புலவர் பாடினர்.
ஆரியர் தமிழ்நாட்டினரைத் தென்னவரெனவும் திரா விடரெனவும் வழங்கினர். பாணினிக்கு வடமொழியை அருளியகாலை அதற்கு இணையாகிய மதுரத் தென் மொழியை அகத்தியனர்க்குத் தமிழ்க்கடவுளாகிய சிவ பெருமான் ஓதினர் என்ப.
தமிழ் தெலுங்கு கன்னடம் துளு குடகு மலையாளம் என்னும் செப்பஞ்செய்யப்பட்ட ஆறு திராவிட மொழிக ளுள் தமிழ்மொழியே தலைசிறந்ததாகும். செப்பஞ்செய்

பண்டைக்காலத் தமிழர் 81
யப்படாத திராவிடமொழிகளும் பல உள. துடா, கோடா, கொண்ட், கூயி, ஒராயன், இராசமகால், பிராகி என் னும் பாஷைகள் தமிழினத்தைச் சேர்ந்தவை என அறி ஞர் கால்டுவெல் துணிகின்றனர்.
ஆரியபாஷையின் கலப்பினல் திராவிடமொழிகள் சில திரிபடைந்தன; சில அழிவெய்தின. ஆந்திரம் வேதத் திற் குறிக்கப் பட்டுளதாதலின் அதுதான் முதற் பிரிந்த தாகும்.
ஆரியர் இந்து நாடுகளிற் புகுந்தனராகத் திராவிடக், குழுவினர் சிலர் குன்றுகளில் ஒதுங்கினர். குன்றுகளில் ஒதுங்கியோர்பேசும் மொழிகள் செப்பஞ்செய்யப்படாத திராவிடமொழிகளாயின. ஆரியர் மெல்லமெல்லத் தென் னடு புகுந்தனராகக் கன்னடமும் துளுவும் குடகும் மலை யாளமும் பிரிந்தன. மலையாளம் கி. பி. பதினேராம் நூற்றண்டிலேதான் பிரிந்ததெனத் தெரிகிறது.
தமிழ் மிகப்பழையமொழியாதலின் ஆதிகாலத்தில் எழுதப் பெருரமல் இருந்தது, தமிழ்மொழிகளைச் சுட்டு தற்குப் பண்டைத் தமிழர் சித்திா வெழுத்துக்களை உப யோகித்தனர். தமிழர் தாம் கருதும் பொருள்க&ளப் படங் கீறிக் காட்டினர். அப்படங்களே உருவெழுத்துக்க ளாயின. அவ்வுருவெழுத்துக்களே புள்ளிகோடு முதலிய வையாகத்திரிந்து ஒலியெழுத்துக்களின் குறியீடாயின. தமிழர் தம் ஒலியெழுத்துக்களை வட்டெழுத்துக்கள் எனப் பெயரிட்டனர். தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் சில வட் டெழுத்துக்களில் எழுதப்பட்டிருத்தலை அறிக. ஆரியர் கலப்பினுல் இப்போதுள்ள கிரந்த எழுத்துக்கள் வழங் கப் படுகின்றன.
தமிழ்நாடு பண்டுதொட்டுப் பாண்டிமண்டலம் சோழ
மண்டலம் சோமண்டலம் எனப் பிரிக்கப்பட்டது. இம்
மண்டலங்கள் நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. சுத்தமாக
ll

Page 58
82 உலக வரலாறு
வும் இலக்கண முறையாகவும் பேசப்படும் தமிழ் செங் தமிழ் எனப்பட்டது. செந்தமிழ்நாடு வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின்மேற்குமான எல்லைக்குட்பட்ட நாடாகுமென்ப. இலக்கணமரபின்றிப் பேசப்படும் சமிழ் கொடுந் தமிழ் எனப்பட்டது. கொடுந்தமிழ்நாடுகள் பன்னிரண்டென்பது,
*தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி
பன்றி யருவா வதன்வடக்கு-நன்ருய சீத மலாடு புனஞடு செந்தமிழ்சேர் ஏதமில்சீர்ப் பன்னிருநாட் டெண்’ என்னுஞ் செய்யுளாற் புலப்படும்.
பண்டைக்காலத்துத் தமிழர் தொகை தெரிகின் றிலது. இக்காலத்துத் திராவிடர் தொகை வருமாறு:
1931ல் எடுத்த கணக்கின்படி தமிழர் 2,00,00,000. இரண்டுகோடி மக்கள் எனக் காணப்பட்டனர். இலங் கைத் தமிழர் 15 இலட்சம் எனக் காணப்பட்டனர். ஆங் திரர் 2,60,00,000 எனவும், மலையாளத்தார் 90,00,000 எனவும், துளுவர் 5,00,000 எனவும், கன்னடர் 1,90,00, 000 எனவும் கணக்கிடப்பட்டனர்.
3-ம் பாடம்-தமிழ்நாகரிகமும் தொல்காப்பியமும்,
தொல்காப்பியம் நிலங் தருதிருவிற் பாண்டியனவைக் களத்தே அதங்கோட்டாசானென்னும் நல்லிசைப்புலவர் கேட்ப, அரங்கேற்றப்பட்டதெனத் தொல்காப்பியருக்கு ஒருசாலைமாணுக்கரான பனம்பாரனர் கூறிய பாயிரத்தாற் புலப்படுகின்றது. ஏ னை ய பல சங்கநூல்கள்போலத் தொல்காப்பியமும் செல்லரித்தேனும் கடல் கொள்ளப்பட்

தமிழ் நாகரிகமும் தொல்காப்பியமும் 83
டேனும் எரிந்தேனும் அழிந்திருப்பின், பண்டைத் தமி ழரை நாகரிகமற்றவர் என அறிவிலிகள் பகர்ந்திருப்பர். 15ந்தமிழ் மூதாதையர் அறிஞராக லின் பனையோலையின் மாத்திரமன்றிச் செப்பேடுகளிலும் கற்பாறைகளிலும் எழுதினராகலின், தமிழ் நாகரிகத்தின் தொன்மையும் பெருமையும் இன்று இனிது தெளிவாகின்றன. தமிழர் எழுத் துஞ் சொல்லும் ஆராய்வதுடன் நில்லாமல் பொருளை யும் ஆராய்ந்து இலக்கணத்தின் பாற்படுத்தினர். உலக வழக்கிலிருந்த நிகழ்ச்சிகள் செய்யுள் வழக்காயினவாக லான் அகப்பொருளும் புறப்பொருளும் கூறும் நூல்கள் சரித்திரவுண்மை மிகுந்துள்ளவை என்பதை ஒர்ந்துணர்க.
போர்முறை
தமிழர் போர்புரிந்துழியும் மூர்க்கராக ஒழுகவில்லை ள்ன்பதும் போர்மீதி வழுவாது ஒழுகினர் என்பதும் அறிய லாகும். ஆயுத மற்ருேரனெருவனுடன் தமிழ்ப்போர்வீரன் ஒருபொழுதும் அமர்புரியான். தமிழ்த் தாய்மார் தம் குமா ரர் போரில் இறந்துபட்டனராயினும் துயருருரர். முதுகிற் புண்படாமல் இறந்ததைக் கேள்வியுற்று வீரத்தாய்மார் மகிழ்ச்சியடைந்தனர் எனப் புறப்பாட்டுக்கள் முழங்கா கிற்கும். தமிழ்வேந்தர் போர்முரசறையுமுன் பிற நாட்டுக் குடிகளுக்கு அறிவித்தே போர்தொடங்கினர்.
"ஆயர் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் சருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெருதீரும் எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்’-புறநானூறு.
என வள்ளுவரால் முரசறைவித்தல் மரபாகலால், தமிழ ரின் போர் நீதி எவ்வளவு சிறந்ததென்பது விளங்கும். தமிழர் விற்படை வேற்படை தேர்ப்படை குதிரைப்படை கப்பற்படை என ஐவகை மூலப்படைகள் உடையராயிருக் தனர். வேழங்களும் அவர்களாற் செலுத்தப்பட்டன,

Page 59
84 உலக வரலாறு
தமிழ்மக்கள் போர்தொடங்க, ஆநிரை கவர்தல் வழக்கம். கிரைகவருமுன் விருச்சியோர்தல் உண்டு. தமிழரும் உரோ மரைப்போல் விரிச்சி ஒர்ந்தே போர்க்களத்திற்குப் புறப் படுதல் வழக்கம். நிரைகொள்ளு நற்கு எழும் வீரர் தாம் குறித்த பொருளின் பயன் அறிதற்கு நற்சொல்லாய்தலை விரும்பி நிமித்திகனை ஏவி நிமித்தம்பார்ப்பர். இவ்விருச்சி யோர் தற்குமுன் வினை மேற் செல்லும் வீரர் மன்றின் கண் மலரும் நெல்லும் தூவிச் செம்மறியாட்டைப் பலியிட்டுக் கொற்றவை முதலிய போர்த் தெய்வங்களைக் கைகூப்பி வணங்கி நன்மொழி யாதேனும் பெற்றே ஏகுவர்.
“அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசை யின்வண் டார்ப்ப நெல்லொடு காழி கொண்ட நறுவீ முல்லை யரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப' என்னும் முல்லைப்பாட்டடிகளால் தமிழர் கிமித்தம் பார்த் தனர் எனத் தெரிகிறது. விரிச்சி விலக்கிப் போர்மேற் செல்லலும் உண்டு. வீரர் கொடுவில் இடனேந்தி ஏற்றி னம் நிற்கும் நிலைகருதி ஆகோளொன்றேகுறித்துக் கரந்து செல்வர். பகைவர் தங்கருத்துணரின் தமக்கு அழிவு நேரிடுமென அஞ்சினரல்லர்; தம் குறிக்கோளை மாற்றர் உணரின், தம் ஆகிரைகொண்டு ஒளிப்பாராகலான், காரி யக்கேடு நிகழுமென அஞ் சியே வீரர்கரந்துசெல்வர். நிரை கவர்தலும் வெட்சித்திணை என்னும் ஒழுக்கமாகும். ஒற்று ராய்தற்கு நள்ளிருட்கண்சென்று அறிந்து வருதலாகிய வேய் என்னும் துறையும், மாற்றரசனுடைய நகரவாயிலி லிருந்து ஒருவரும் புறப்படாதவாறு ஊர்மருங்கே இறுத்த லாகிய புறத்திறை என்னும் துறையும், விரைவாகப் பரிக டாவி எரிகொளுவுதல் முதலிய செயல்களால் அரண்க%ள யழித்துப் புறஞ்சேரியிடத்து கிரைகாப்போரைக் கொல் லுதலாகிய ஊர்கொலை என்னும் துறையும் வெட்சித்திணை யின் முக்கியத் துறைகளாகும். இவ்வண்ணம் ஒவ்வொரு

தமிழ் நாகரிகமும் தொல்காப்பியமும் 85
திணையிலும் பல துறைகளுண்டு. ஒவ்வொரு திணைக்குரி யோரும் தத்தம் திணைக்குரிய பூக்களைச் சூடுதல் வழக்கம்.
இனி மண்ணிடத்துள்ள வேட்கையால் இருவேந்தர் 5ளத்திற் போராடல் வஞ்சித் திணை எனப்படும். அரணே வளைத்தலும் அதனை உள்ளிருக்கும் வேந்தன் காத்தலும் உழிஞைத்திணை எனப்படும். யானை குதிரை காலாள் என் னும் மூவகைத்தானையோடு புகழ்கருதிக் களங்குறித்துப் பொருதல் தும்பைத் திணையாகும். பகைவரைக் கொன்று ஆரவாரித்தல் வாகைத்திணையாகும். போர் ஒழிக் த புறப் பொருள்களைக் காஞ்சித்திணையும் பாடாண்டிணையும் புகலா கிற்கும். வீட்டின்பம் விளக்கும் நோக்கமாக அறம் பொ ருள் இன்பம் இவற்றின் நிலையாமை என்றிவற்றைக் கூறல் காஞ்சித்திணையின் பாற்படும். போரில் விழுப்புண் பெற்று அதைக் கிழித்திறத்தல் மறக்காஞ்சி என்னும் துறையாகும். பரிசில்வேண்டிப் புலவனுெருவன் புரவல னெருவன் குணுதிசயங்களைப் பாடுதல் பாடாண் என்னும்
திணையாகும்.
நடுகல் (வீரக்கல்) இறந்த வீரரின் புகழை நாட்டற்கு வேந்தர் கல் லெடுத்து அவர் வீரச்செயலைச் சிலையிலெழுதி நடுதல் வழக்கம். நடுகல்லில் வீரன் பெயரும் பீடும் எழுதப்படும். போரில் இறப்போர் வீரசுவர்க்கம் புகுவாராகலின், நடு கற்களை வழிபடுதலும் உண்டு. பண்டைத் தமிழர் மானத் தைத் தம்முயிரினும் ஓம்பினர். தோல்வியடைந்தோரும் தம்நோக்கங்கள் சித்திபெருதோரும் வடக்கிருந்து வீர' சுவர்க்கம் அடைந்தனர். வேந்தரும் அந்தணரும் ஆரஞ ருற்றுழி, வடக்கிருந்தனரெனப் புறநானூற்றுச் செய்யுட் களாலும் புலப்படும். வடதிசையைப் பார்த்திருந்து ஆசை. யாவற்றையும் வென்று ஐம்புலன்களையும் ஒடுக்கி உண்ணு திருந்து உயிர்துறத்தல் தமிழ்நாட்டில் வழக்கமாயிருந்தது.

Page 60
86 உலக வரலாறு
FIDIJsb
தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர் அருவவழி பாடும் உருவவழிபாடும் செய்துவந்தனரெனக் கூறலாம். இயமம் நியமம் ஆசனம் வளிநிலை தொகைநிலை பொறை கிலை கினைதல் சமாதி என்னும் அட்டாங்க யோக முறை யைத் தமிழர் தழுவி அருவப் பொருளாகவும் த த் துவங் கடந்த பொருளாகவும் பற்றற்ற பொருளாகவும் உள்ள கந்தழியின் நிலையை அடைய முயன்றனர். கந்தழி என் பது பற்றற்ற நிலையாகிய சிவத்தின் பெயராகும். ஐவகை நிலத்துச் சனங்கள் தத்தம் நிலத்திற்குரிய தெய்வங்களே யும் வணங்கினர். நெய்தல் கிலத்து நுளேயர் (பரதவர்) சுறவுக்கோடு மட்டு வ ரு ண னை வழிபட்டனரெனவும் குறிஞ்சி நிலத்து எயினர் (குன்றவர்) முருகனுக்குத் தினை மாவும் ஆட்டிரத்தமும் அளித்து வழிபாடாற்றின ரென வும், முல்லைநிலத்து இடையர் திருமாலுக்கு ஆனந்தளித்து ஆராதனை செய்தன ரெனவும், மருதநிலத்து வேளாளர் வானுக்கு அதிதேவதையாகிய இந்திரனைப் பரவினரென வும், பாலைநிலத்து ஆறலைகள்வர் கொற்றவையை வழிபட் டன ரெனவும் அகநூல் கூரு நிற்கும். மயிலேறி விளையாடும் முருகவேள் தமிழருடைய சிறந்த தேவராயி னர். பிற்காலங்களிற் சாத் கன் காளி காமன் முதலி, யோரும் கோட்டம் பெற்றனர். பண்டைக்காலத்திற் பூசாரிகள் செய்யுங் கிரி யை க ள் மிகக் குறைவே. ஒவ்வொரு நிலத்தினரும் பொங்கலிட்டு மலர் தூவிப் பழங் களைப் படைத்தி அருட்பாக்களைப் பாடி ஆ வே ச ங் கொண்டு எழுந்தாடித் தெய்வங்களைத் தொழுதனர். சமயக் கிரியைகள் ஒழிந்த சமுகக் கிரியைகளும் மிகச் சிலவே. குழந்தைகளுக்கு நாமமிடுதல், அன்னமளித்தல், வித்தியாரம்பஞ் செய்வித்தல் முதலியவை இக்காலத்திற் போல் ஆடம்பரமாகச் செய்யப்படவில்லை. மணக்கிரியை கள் சாக்கிரியைகள் சிராத்தக்கிரியைகள் முதலியவை நல்ல கிரியைகளாயினும், ஊதியம் நோக்கியே இக்காலத்

தமிழ் நாகரிகமும் தொல்காப்பியமும் 87.
தவரால் செய்யப்படுகின்றன. கிரியை செய்வதால் விளை யும நன்மை தீமைகளே இண்டு ஆய்தல் பிறிதொன்று மொழிதல் என்னும் குற்றத்தின்பாற்படும்.
மனமுறை
பண்டைத் தமிழ்மக்களின் மணமுறைகளும் அக வொழுக்கமும் ஏனைய மக்களின் முறைகளிலும் ஒழுக்கங் களிலும்பார்க்க மிகச்சிறந்தன. ஒருபெண்ணின் சம்மதம் பெற்று அன்பாற் கூடியொழுகாது ஒருத்தியை ஒருவன் வலிந்துகொள்ளுதல், இராக்கதமணமென இழித்துரைக் கப்படும். இம்முறை அசுரராலும் அரக்கராலும் கையாளப் பட்டதேயன்றி நன்மக்களால் விரும்பப்பட்டதன்று. அவ் வொழுக்கம் தமிழ் நாட்டில் மிக அருகியே நிகழ்ந்தது. மூத்தாளையும் கள்ளுண்டாளையும் துயின்ற8ளயும் கூடுங் கூட்டம் பைசாசமணம் என விலக்கப்பட்டது. ஒத்த காமத் தின் மிக்கும் குறைந்தும் வருதலால் ஆரிய்மணங்களாகிய பிரமம் பிராசாபக்தியம் ஆரிடம் தெய்வம் ஆசுரம் சுயம் வரம் என்பன தமிழ்நாட்டில் அருகியே வழங்கின. அரசர் அரசிளங்குமாரைக் கூவி அவிர்களுள் விரும்பியோரைத் தேர்ந்துகொள்ளும்படி தம்மகளிரைக் கற்பித்தல் சுயம் வரம் எனப்படும். நளனைத் தமயந்தி சுயம்வரத்தாலடைந் தனளன்ருே இந்துப்பெண்கள் சுதந்திரமுடையோர் எனக் காவியம் எழுதிய ஆசிரியர் கருதினர். சுயம்வரம் உலகவழக்கிலும் இருந்திருத்தல் கூடும். ஆயர்குலத்தார் கொடிய விடையைத் தழுவும் வீரனுக்குத் தம் மகளிரை வது வைசெய்து கொடுத்தலும் உண்டு. இவ்விடைதழுவல் ஏறுகோடல் எனப்படும். கண்ணபிரான் நப்பின்னையை இங்ஙனம் மணந்தான். வில்வீரன் குறித்ததோர் இலக் கினை எய்து தலைவியைப்பெறுதலும் உண்டு. இவ்வண் ணம் இராமன் சீதையைப் பெற்றனன் என வான்மீகி வருணித்தனர். கொல்லேறுகோடலும் வில்லேற்றுதலும் ஆசுரம் என வழங்கப்பட்டது. வேள்வியா சான் வேத விதிப்படி அங்கியங்கடவுள் சான்ற க, "நீ இவளை இங்வ

Page 61
88 உலக வரலாறு
னம் பாதுகாக்க, நீ இங்ஙனம் இவருக்குக் குற்றேவல் செய்க" என்ருற்போன்ற இல்லொழுக்கச்துக்குரிய இலக் கணங்களைத் தலைவன் தலைவியர்க்குத் தந்தை தாயரின் விருப்பப்படி கற்பித்து மணமுடித்தல் பிராசாபத்தியம் எனப்படும். 48 யாண்டு பிரமசரியங்காத்தானுக்குப் பன்னிராட்டைப்பிராயத்தா8ளப் பூப்பெய்தியபின் வேத விதிப்படி விவாகஞ்செய்வித்தல் பிரமம் எனப்படும். கக் கான் ஒருவனுக்கு ஆவும் ஆனேறும் பொற்கோடும் பொற்குளம்பும் உடையவையாகச் செய்து அவற்றினிடை யிலே பெண்ணே நிறுத்தி அவைபோற் பொலிவீராகவென வாழ்த்தித் தானமாகக்கொடுத்தல் ஆரிடமாகும். வேள்வி யா சானுக்குக் கன்னியை அலங்கரித்துத் தீமுன்னர்க் கொடுப்பது தெய்வம் எனப்படும். மேற்கூறிய ஆரிய மணங்கள் தமிழ்நாட்டிற் புகுந்த ஆரியராற் கையாளப் பட்டன. ஒத்த அன்புடையராகிய தலைவனும் தலைவியும் தெய்விகமாகக் கண்டு கூடுதல் கங் கருவம் என ஆரியரால் பாராட்டப்பட்டது. துஷ்யந் தன் சகுந் தலையைக் கந்தருவ முறையாக மணந்தான் எனக் காளிதாசர் வருணித்தனர். இக் கந்தருவ மணத்தைத் தமிழர் களவுமணம் எனவும் மணங்களுட் சிறந்ததெனவும் உயர்ந்தோருடைய மண மெனவும் சிறப்பித்தனர். இம்மணமுறையையே மேனுட் டார் பெரிதும் தழுவுகின்றனர். தமிழ்மணமாகிய கள வொழுக்கம். ஆரியரால் கண்டிக்கப்பட்டுப் பிற்காலத்தில் தமிழ்நாட்டில் வழக்கற்றது. உலகவழக்கற்றபோதிலும் இக்களவே தமிழ்நூல்களில் இன்றும் பேசப்படுகிறது.
அகவொழுக்கம் உருவாலும் திருவாலும் குலத்தாலும் குணத்தாலும் அறிவாலும் அன்பாலும் ஒத்த தலைவனும் தலைவியும் தெய்விகமாக ஒருவரையொருவர் சந்தித்துக் கூடுதல் கள வெனப்படும். தலைவனுெருவன் வேட்டையாடித் தமியனுக, மலைச்சாரலில் வந்து, அவண் திணைப்புனங்காத்தும் தம் தோழியரோடு விளையாடியும் தமியளாகப் பூக்கொய்தும்

தமிழ் நாகரிகமும் தொல்காப்பியமும் 89
இன் புற்றிருக்கும் தலைவியை எதிர்ப்பட்டு 'அணங்கு
கொல் ஆய்மயில்கொல் கணங்குழைமாதர்கொல்’ என ஐயமுற்றுத் தேறி, வண்டோ ச்சி மருங்கண்ணந்து புணர்ந்து பிரிந்து பின்னரும் அம்மெய்யுறு புணர்ச்சியை விரும்பித் தன் பாங்கரின் உதவியாலும் தோழியரின் உதவியாலும் பகற்குறி இரவுக்குறிகளை உணர்ந்து தலைவியுடன் பிற ாறியாமற் கூடுதல் களவொழுக்கமாகும். இவ்வொழுக்கம் அலராயின் தலைவி இற்செறிக்கப்படுவள். தலைவி அதற்கு ஆற்ருது இறந்து படுவள் எனத் தோழியால் உணர்த்தப் பெற்ற தலைவன் தோழியரிடம் வரைவுகடாவி அவருதவி யால் த?ல விபி க் சப்மதம்பெற்றுத் தன்னில்லத்திற்குப் பிறரறியாமல் அவளைக் கூட்டிச் செல்லுதல் உடன் போக் கெனப்படும். பின்னர் இருவர் பெற்ருேரரும் மனமுவந்து தலைவன் தலைவியரை இல்வாழ்வில் இருக்கச்செய்தல் கற் பியல் எனப்படும். களவொழுக்கத்திற் கூடல் குறிஞ்சி யெனவும் ஊடல் மருத மெனவும் ஆற்றியிருத்தல் முல்லை எனவும் பிரிதல் பாலையெனவும் இரங்கல் நெய்தல் என வும் ஐவகை ஒழுக்கங்கள் வகுக்கப்பட்டன. பரத்தை யரை விரும்பியும் பொருள் தேடும் நோக்கமாகவும் ஓதல் காரணமாகவும் அரசியற் சேவைப்பொருட்டும் தலைவர் தம் தலைவியரைப் பிரிதல் உண்டு. இனிக் காமத்தீயால் வருந்தும் மகளிரை மூடச் சனங்கள் பேய்க்கோட்பட்டாள் என எண்ணிக் குமரக்கடவுளின் பூசாரியாகிய வேலனே அழைத்துப் பார்ப்பித்தல் வெறியாடல் எனப்படும். காம முணராச் சிறுமியைக் காதலித்தல் கைக் கிளே எனப் படும். அது ஒருதலைக்காமம் எனவும் பெயர்பெறும். நங்கை யொருத்தியின் உருவிலும் திருவிலும் மயங்கிய ஒருவன் அவளன்பைப் பெற்றிலனயின் வரைபாய்ந் திறத்தலும் உண்டு. காதலியின் காதலைப்பெரத காத லன் தான் மடலேறுவன் என அறிவிப்பன். மடலேறு வோன் திகம்பானுய் உடலெங்கும் நீறுபூசித் தானே அவளுருவத்தைக் கிழியிலே தீட்டித் தன்னையும் எழுதிக்
12

Page 62
90 உலக வரலாறு
கைப்பிடித்து ஆகாரகித் திரையின்றி அக்கிழிமேற் பார் வையும் சிங்கையும் இருத்தி வேட்கைவயத்தனய் வேறுணர் வின்றி மழை வெய்யில் காற்றுக்கு அஞ்சாது நிற்பனென் பர். அரசனேனும் ஊர்ப்பெரு மக்களேனும் அங்கினம் மடலேறுவோனுக்கு அத்தலைவியை மணம்பேசித் தலைவி யின் பெற்ருேரர் சம்மதத்தைப் பெற்றுக்கொடுப்பர். மட லேறிய ஒருவனை ஒருத்தி மறுத்தாளாயின் பின்பு அவளை ஒருவரும் மணஞ்செய்யார்.
இதுவரையும் களவுமணம் தமிழ்நாட்டிற் பெருவழக்கா யிருந்த தெனவும் அதே சிறந்த மணமென உலகவழக் கிலும் செய்யுள் வழக்கிலும் பாராட்டப்பட்ட தெனவும் தமிழ்ப் போர்முறைகளே தலைசிறந்தவையெனவும் த மி ழர்தத்துவ நூலாராய்ச்சியிற் சிறந்து ஒரு தனிக்கடவு ளாகிய சிவனை வழிபட்டனரெனவும் ஆரியரின் ஒழுக்கங் களைப்பற்ருரது தம்மொழுக்கத் திறனையுணர்ந்து இறுமாப் புடையராயிருந்தனரெனவும் கூறினுேம். இனித் தமிழ் மக்களோடு கலந்து அவர்களின் ஒழுக்கங்களைக் திரிபட்ை யச் செய்த ஆரியரின் ஆதிவரலாற்றை ஆராயத்தொடங்கு முன் கடைச்சங்ககாலத் த மி ழ ரி ன் நாகரிகத்தை ஆராய்ந்து கூறுவோம்.
Aed M pu
4-ம் பாடம்-கடைச்சங்கம்
9 JÄLJá).
கடைச்சங்கப் புலவர்களால் இயற்றப்பட்ட பத்துப் பாட்டாலும் எட்டுத்தொகையாலும் சங்ககாலத்துத் தமிழ் வேந்தரைப் பற்றிய செய்திகள் பல தெரிகின்றன. உதி யஞ்சேரலாதன் என்னுஞ் சேர மன்னன் பாண்டவர்க் கும் கெளரவர்க்கும் சோறளித்தானெனப் புகழப்பட்

கடைச்சங்கம் 91.
டான். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் முதலிய தமிழ் வேந்தர் சிலச்சில காலங்களில் இமயந் தொட்டுக் குமரி யீருரகத் தம்மானையைச் செலுத்தினரெனப் புற நானூற் றச் செய்யுட்களும் பதிற்றுப்பத்துச் செய்யுட்களும் கூர கிற்கும். இனி,
‘கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ் செய்தனையவர் நனந்தலை கல்லெயில்’ என்னும் புறப்பாட்டடிகளால் "தெவ்வருடைய அகலிய விடத்தையுடைய அரண்களைக் கழுதை பூட்டி உழுது பாழ் படுத்தினை' யெனப் பாண்டியன பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடுதலைக் காண்க. கடல் பிறக்கோட்டிய சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று அவந்தி நாட்டு வேந்தனேடும் மகத நாட்டு வேந்த னேடும் நட்பா கி அவர் உவந்தளித்த பட்டி மண்டபமும் கொற்றப் பந்தரும் பெற்றுத் தன்னேடு பகைத்த ஆரிய வரசர் கன கவிசயரைச் சிறையாக்கி அவர்தலையில் கற் சுமத்தி வந்தான் எனச் சிலப்பதிகார வடிகளால் அறியலா கும். ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் ஆரியரை முறிய வடித்தானெனத் தெரிகிறது. அவனு டைய புகழை நல்லிசைப் புலவர் பலர் பாடியுள்ளனர். இந் நெடுஞ்செழியன் கற்று வல்லோனகிப் பல பாடல்கள் இயற்றினன்.
“வேற்றுமை தெரிந்த காற்பா லுள்ளுங் கீழ்ப் பா லொருவன் கற்பின் மேற்பா லொருவன் அவன்கட் படுமே.” என நெடுஞ் செழியன் பாடினன். இத்தகைய வரசன் இறைகொள்ளு நெறியை அறிந்து செங்கோலோச்சினன். என்பதற்கு என்ன ஐயம்?
நக்கீரர் மாங்குடி மருதர் குடபுலவியனுர் கல்லாடனர் முதலியோர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டி

Page 63
92 உலக வரலாறு
யன் நெடுஞ்செழியனைப் புகழ்ந்து பாடினர். அவன் இரு பெரு வேந்தரோடும் ஐம்பெரு வேளிரொடும் பொருது வென்ருரன் என மதுரைக்காஞ்சியில் இனிது கூறப்பட் டுளது. அவன் இளைஞனுயினும் பெரும் வீரனுகத் திகழ்ச் தான். அவன் தொண்டிக்கோ மாந்தரஞ் சேரல் இரும் பொறையைப் பிணித்தான். புறப்பாட்டுக்களால் பூதப் பாண்டியன் தேவி கொழுநனிறக்கத் தீப் பாய்ந்தனள் எனத் தெரிகிறது. சோழவரசருள் உருவப்பஃறேர் இளஞ் சேட்சென்னியின் மகன் கரிகாற் பெருவளத்தான் காவிரிப்பூம் பட்டினத்தில் ஆழி வேந்தனுகச் செங்கோ லோச்சினன். அவன் பாண்டியனையும் சேரனையும் வெண் ணில் என்னும் களத்தில் வென் ருரன் எனப் பொருநராற் றுப்படை கூறும். இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் தமிழ்நூல் தொகுத்த உக்கிரப்பெருவழுதியும் பெரிய வேந்த ராதல் வேண்டும். தமிழ் வேந்தர்கள், படைத்தலை வர், அமைச்சர், தூதுவர், ஒற்றர், பார்ப்பார் என்னும் ஐம்பெருங் குழுவுடையரா யிருந்தனர். அரண்மனையில் எண்பேராயத்தினர் சேவித்தனர். கடைச்சங்க காலத்துச் சோழருடைய தலை நகர்கள் காவிரிப்பூம் பட்டினமும் உறையூருமே. பாண்டியர் தலை நகர் மதுரையே; சேரர் தலை நகர் வஞ்சியே; இக் நகர்கள் மூதூர்க ளெனப்பட் டன. காவிரிப்பூம் பட்டினத்தின் மாட மறு குச் 2ளயும் ஆங்கு வசித்த பல்வ்கைத் தொழிலாளரையும் பல்வேறு சாதியி னர் ஆகிய வணிகரையும் இளங்கோவடிகள் இனிது வரு ணித்தனர். வஞ்சியின் மாடமறுகுகளைக் கூல வாணிகன் சாத்தனர் மணிமேகலையில் வருணித்தனர். அந் நகரங் கள் மதில்களாலும், அரண்களாலும், அகழிகளாலும், மிளே களாலும் காக்கப்பட்டன. மதில்களில் அமைக்கப்பெற்ற குரங்குப்பொறி, புலிப்பொறி, இடங்கணிப்பொறி முத லியன யந்திரவல்லோரால் செய்யப்பட்டன. சில பொறி கள் அழல் வீசுவன, சில சுடுமண் வீசுவன, சில ஈயம் உருக்கித் தெளிப்பன, சில கல்லெறிவன. அந் நகரங்

கடைச்சங்கம் 93.
களில் அரியும் அரனும் கே ர ட் ட ங் க ள் பெற்ற னர். காமன், இந்திரன், ஐயனர் என்போரும் வணங் கப்பட்டனர். சந்திகளில் காவல் புரியும் சதுக்கப் பூதங் கள் தீவினையாளரைத் தம்பாசத்தாற் கட்டின. கள்வர் தாம் களவு செய்த பொருளை நகர்க்கதவால் வெளியே கொண்டு போகவியலாது, நகர்க்காவலர் சந்திகடோறும் அல்லும் பகலும் திரிந்தனராதலின் களவு மிகக் குறைக் தது. நகரவீதிகள் ஆறுகிடங் தன்ன அகன்ற வீதிகள் என மொழியப்படுகிறது. நகர வீதிகளைக் காவலர்கள் சுத்தமாக வைத்தனர். வீதிதோறும் தொழிலாளர் தத் தம் ஆவணங்களை யமைத்து இருந்தனர். அறிஞரும் கலை ஞரும் வினைஞரும் வணிகரும் நகரங்களில் மிகுந்தனர். மறையவர் வேதம் ஒதும் ஆச்சிரமங்களும் கலைஞர் கலை பயில் கழகங்களும் சமயக் கணக்கர் வாதிக்கும் மன்றங் களும் வாட்போர் பயிலும் கழகங்களும் யானை யேற்றம் குதிரை யேற்றம் வில்வித்தை பயிலும் வீதிகளும் மிகுந் தன.
நகரத்தில் தேர் கடாவுதலால் விளையும் ஆர்ப்பொலி யும் யானைகளின் பிளிற்றெலியும் குதிரைகளின் கனைப் பொலியும் கடைவீதிகளில் கொள்வோர் கொடுப்போரின் கம்பலையும் பல்வேறு தொழிலாளரின் இரைச்சலும் ஒன்றுகலந்து ஒலித்தன. வீதிதோறும் பன்மீன் விலை ஞரும், வெள்ளுப்புப் பகரும் உமணரும், காழியரும், கூவி யரும், மைக்கிணவிலைஞரும், பாசவரும், வாசவரும் உலா வினர். செம்பு செய்ஞ்ஞரும், பொன்செய் கொல்லரும், மரங்கொல் தச்சரும், கஞ் சகாரரும், அருங்கலன் சமைப் போரும் வெள்வளை போழ்நரும் இலங்குமணி வினை ஞரும் கம்மியரும் பல் வேறு நுண்கை வினைஞரும் தத்தம் மறுகுகளில் இரீஇயினர். வேத்தியல் பொது வியல் அறிந்த நடிகரும் ஆடல்வல்ல கூத்தரும் பாடல் வல்ல பாணரும் சத்துவம்வல்ல விறலியரும் ஓவியரும் சிற்பிகளும் தத்தம் மறுகுகளில் உறைந்தனர். எண்

Page 64
94 உலக வரலாறு
வகைக் கூலம் விற்போரும் மறையோரும் வேளாளரும் போர்வீரரும் காவற்காரரும் தத்தம் வீதிகளில் வதிந் தனர். புகைவிரிங் தன்ன ஆடை நெய்வோரும் செம்மா ரும் சுண்ணமும் வண்ணமும் விற்கும் மாதரும் வரைவின் மகளிரும் சத்தம் மறுகுகளில் வசித்தனர். நகர்ப் பக் கங்களில் செய்குன்றங்களும் இள மரக்காக்களும் விளை யாட்டு வீதிகளும் நன்னீரிடங்களும் மலிந்து கிடந்தன. அழகிய சாளரங்களையுடைய மேன் மாடங்களும் கோயிற் கோபுரங்களும் நகரினை அணிபெறச் செய்தன. பண் டைத் தமிழர் மாலை யணிக லில் விருப்புடையராதலின் நகரெங்கும் பூந்தோட்டங்கள் உண்டாக்கப்பட்டன. அகிற் புகை நகரெங்கும் நறுமணங் கமழச் செய்தது. இத் தகைய நகரங்கள் பலவுடையதாதலின் தமிழ்நாடு இந்திர லோகமெனவும் போக பூமியெனவும் அழைக்கப்பட்டது.
s கடைச்சங்ககாலத்துத் தமிழ்மக்கள் நீதிதவற தொழு
கின ரென்பது பின்வரும் பட்டினப் பாலையடிகளால் இனிது பெறப்படும்.
"கொலை கடிந்தும் களவுநீக்கியும்
அமார்ப் பேணியும் ஆகுதி யருத்தியும் நல்லானுேடு பகடு ஒம்பியும் நான் மறையோர் புகழ்பரப்பியும் பண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும் புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக் கொடு மேழிகசை உழவர் நெடு நுகத்துப் பகல்போல நடுவு நின்ற நன்னெஞ்சினுேர் வடுவஞ்சி வாய் மொழிந்து தமவும் பிறவும் ஒப்பநாடிக் கொள்வது உம்மிகை கொள்ளாது கொடுப்பது உம் குறையாது பல்பண்டம் பகர்ந்து வீசுக்
தொல் கொண்டித் துவன்று இருக்கை”

கடைச்சங்கம் 95
இத்தகைய நன்மக்கள் தமிழ்நாட்டிலன்றி எந்நாட்டில் உண்டார் கொல்!
திருக்குறள்
கடைச் சங்ககாலத்தில் தமிழ் ஓர் உயர்தனிச் செம் மொழியாகத் துலங்கிற்று. இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் சிறப்புற்று வளர்ந்த காலத்திலேயே ஒப் பற்ற ஒழுக்க நூல்ஒன்று தெய்வப்புலமைத் திருவள் ளுவ நாயனரால் இயற்றப்பட்டது. அந்நூல் சீரிய ஒழுக்கத்தினை குறள் வெண்பாவால் உரைக்கின்றதாத லின் திருக்குறள் எனப் பெயர் பெற்றது. தமிழ் மொழி யில் இயம்பப்பெற்ற நூல்கள் யாவற்றிலும் மாத்திர மன்றி பிறமொழிகளில் எழுதப்பெற்ற ஒழுக்க நூல்கள் யாவற்றிலும் பார்க்கத் தலைசிறந்ததாக மிளிர்கின்றது. இயற்றமிழின் நலத்தை நாட்டற்கும் தமிழருடைய நாக ரிகத்தின் சொரூபத்தைக் காட்டற்கும் தமிழ்ச்சுவையை ஊட்டற்கும் இந் நூல் ஒன்றுமே போதும். இந்நூல் மேனுட்டார் கீழ் நாட்டார் மேன்மக்கள் கீழ்மக்கள் என் னும் உலக மாந்தர் யாவர்க்கும் ஒப்பப் பொதுவாய ஒழுக் கத்தைக் கூறுகின்ற காதலின், உலகிற்சிறந்த பல்வேறு , மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுளது. திருக்குறள் நுதலும் ஒழுக்கம் சைவ மதத்தினர்க்கு மாத்திரமன்றி பல்வேறு மதத்தினர்க்கும் பல்வேறு சாதியினர்க்கும் பல் வேறு வருணத்தினர்க்கும் அமைவுடைய தென் ப. மனு தர்ம சாஸ்திரம் ஆரியப் பிராமணரின் நன்மையைப் போற்றி அவர்களின் ஒழுக்கத்தினை வரைகின்றதாக, தமிழ் வேதமாகிய திருக்குறள் தன்னகத்தே இல்லறத் திற்கு இன்றியமையாத இன்பத்தையும் அவ் வாழ்க் கைக்கு வேண்டிய அரசியலின் இலக்கணத்தையும் ஆராய்வதுடன் கில்லாது துறவறத்தின் சொரூபத்தை பும் இயம்பும் நூலாகத் துலங்குகின்றது. அது அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று இலகூதியங்களையும்

Page 65
96 உலக வரலாறு
கூறும் பகுதிகளை உடையதாதலின் முப்பால் எனப் பெயர் பெற்றது. திருக்குறட் செய்யுட்கள் 1330 உம் பொய்யா மொழிகள் எனக் கூறவும் வேண்டுமோ? கடைச் சங்கப்புலவர்கள் திருவள்ளுவ மாலையைப் பாடி மதிப்புரை அளித்தனர் போலும். திருக்குறளுக்குப் பதின்மர் உரை செய்தனர். அவற்றுள் பரிமேலழகர் உரை முத னுாலாசிரியருடைய நடைபோல் சுருங்கச் சொல்லல் என் ணும் அழகுடையதாய் மிகவும் பயிலப்படுகிறது.
இயற்றமிழ்
திருக்குறள் இயற்றப்படு முன்னரே எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்பவற்றின் செய்யுட்கள் சங்கப் புலவர் களால் ஒதப்பட்டன. சிலப்பதிகாரம் மணிமேகலை என் னும் காவியங்கள் கடைச்சங்க காலத்து முடிவில் இயற் றப்பட்டவை. இவ் வியற்றமிழ்க் காவியங்கள் தமிழ்மொழி கடைச்சங்க காலத்திலேயே ஒப்பற்ற உயர் தனிச் செம் மொழியாக இருந்ததென்பதற்குச் சான்ருரக இருக் கின்றன. முதற் சங்கத்தாராலும் இடைச்சங்கத்தாரா லும் இயம்பப்பட்ட முது காரை, முதுகுருகு களரியா விரை, மாபுராணம், இசைநுணுக்கம், பூதபுராணம் முதலி யவை கடைச்சங்க காலத்தில் அழிவெய்தியவை போலும். சில இசை யிலக்கணங்களும் நாடக விலக்கணங்களும் அடியார்க்கு ‘நல்லார் உரையெழுதிய காலத்தும் இருந் தன. கடைச்சங்கம் குலைந்தபின்னர் பெருங் தேவனர் பாரதமும் சமண முனிவர்கள் காலடியாரும் திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணியும் பாடினர்.
இசைத்தமிழ்
இயற்றமிழ்போல் இசைத் தமிழும் ஒப்பற்ற தென் பது உணரற்பாலது. தமிழிசை வல்லோர் தம் இசை வன்மையால் யானை, புலி, கரடி முதலிய காட்டு விலங்கு களைத் தம் வசப்படுத்தினராம். பொருநர் பாலைப் பண்

கடைச்சங்கம் 97
ணேப் பாடினராயின் ஆறலைகள் வரே தங் கையிலுள்ள வாளே, நழுவவிட்டுத் தந் தொழிலை மறந்து அன்புற்று உருகுவாராம். இசைத் தமிழ்ப் பாட்டைக்கேட்கும் கயவர் களே தம் பொருளை இசைவல்லார்க்கு ஈவாராம். சங்க காலத்தில் இசைக் கருவிகளின் வகை எண்ணிறந்தன. அவற்றுள் யாழ்கள் நான்கு. பேரியாள் 21 நரம்புடையது; மகரயாழ் 19 நரம்புகளை யுடையது, சகோடயாழ் 14 நரம்புடையது; செங்கோட்டியாழ் 7 நாம்புடையது. யாழா சிரியர் குழலாசிரியர் ஆடலாசிரியர் பாடலாசிரியர் முதலி யோரின் இலக்கணங்களையும் இசைக்கருவிகளின் அமைப் பையும் தம் முரையில் அடியார்க்கு நல்லார் விரித்து விளக்குகின்றனராக லின், ஆண்டுக் காண்க. தமிழ்ப் பாடல்கள் பண்ணுக்கிசையப் பாடப்படுவன. பண் 7 சுரங் கொண்டது. ஸட்சம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ் சமம், தைவதம், நிஷாதம் என்பன வடமொழிகள்: தென்மொழியில் அவை குரல், துத்தம், கைக்கிழை, உழை, இளி, விளரி, தாரம் எனவழங்கின. பண்டு நெட் டெழுத்து ஏழும் சுரங்களைச் சுட்டின. பெரும் பண்கள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம் நெய்தல் என 5 என்ப. பாணரும், கூத்தரும், விறலியரும் தமிழ் வேந்தர் மூவ ரிடமும் வேளிர்களிடமும் சென்று தம் பாடற்றிறனையும் ஆடற்றிறனையும் காட்டிப் பரிசில் பெற்றனர். அரசர்களே பாணர்களே வரவேற்றுப் பட்டாடை யுடுத்திப் பொற்கிண் ணத்தில் மது வளித்து அரசவையி லிருத்தி யானைகளும் ஊர்களும் அளித்தார்களாயின் இசைத்தமிழின் திறத்தை எண்ணி யெண் ணி இசை விருப்புடையோர் இறும்பூது எய் துதல் வியப்போ? பாணர் தாம் பரிசில் பெற்றமுறையைத் தம் நண்பருக் கெடுத்துக் கூறி அரசவை சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்தினர்.
நாடகத் தமிழ் கடைச் சங்கத்தோர் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் வளர்த்தனர். தமிழ் நாடகங்க ளெல்லாம்
3

Page 66
98 உலக வர்லாறு
அழிவெய்திய போதிலும் இயல் இசை நாடகம் என்று சொல்லக்கூடிய சிலப்பதிகாரம் ஒன்றுமே முத்தமிழின் சுவையைக் காட்டும் தனிச் சிறப்புடைய நூலாகத் திகழ் கின்றது. இளங்கோவடிகளின் இசைப் பாடல்கள் போல் மேனுட்டார் போற்றும் ஆங்கில நாடகவாசிரியர் ஷேக்ஸ் பியரும் பாட வல்லரோவென ஆசங்கிப்பார் பலருளர். கானல்வரி வேட்டுவவரி உரைப் பாட்டுமடை யென் ருரற் போன்ற இசைப் பாடல்களுக்குப் பிறிதோர் நூலின் பாடல்கள் நிகராகா. தமிழ்ப் பரத நூல்கள் கூறும் ஆடல் களை விறலியர் எங்ங்ணம் பயின்று ஆடுகின்றன ரென மேனுட்டார் இன்றும் ஆச்சரியப்படுகின்றனர். ஆடற் கூத்தின் வகைகளையும் நாடகக்கூத்தின் வகைகளையும் நவச்சுவைகளின் இலக்கணங்களையும் சிலப்பதிகார வுரை யிற் காண்க.
5-ம்பாடம்-தமிழர் வணிகமும் குடியேற்றமும்
ஆதியில் நெய்தல் நிலங்களில் வசித்த தமிழர் மீன் படுத்தலே தொழிலாக வுடையராய் இருந்தனர். மீன் படுக்கும் திமிலர் உபயோகித்த சிறு ஒடங்கள் காலஞ் செல்லச் செல்ல மரக்கலங்களாக விருத்தி யடைந்தன. நெய்தல் நிலத்துமக்கள் கடல்வணிகஞ் செய்யத் தொடங் கினர் எனலாம். கொற்கையில் முத்துக் குளிக்கத் தொடங்கிய காலந்தொட்டுக் கொற்கை ஓர் பெருந்துறை யாயிற்று. காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, முசிறி என் னும் துறைகளிலிருந்து தமிழ்வணிகர் மரக்கலங்களிற் சென்று சிந்து தேயத்துறைகளிலும் சுமேரிய தேயத் துறைகளிலும் எகிப்து தேBத் துறைகளிலும் பினிஸிய தேயத் துறைகளிலும் பண்டம்மாறிப் பொருளீட்டினர். தமிழ்நாட்டுத் தேக்கந்துண்டு சுமேரியா தேசத்திலே

தமிழர் வணிகமும் குடியேற்றமும் 99
முகையீரென்னு மிடத்தில் ஆராய்ச்சி வல்லோரால் எடுக் கப்பட்டது. தமிழர் யூதரோடும் வணிகஞ்செய்து மயில், குரங்கு அரிசி முதலியன விற்றனர்.
பினிஸியர் ‘ரையர்சிடன்’ என்னுந் துறைகளிலிருந்து புறப்பட்டுச் செங்கடல் கடந்து இந்துக்கரை யடைந்து மயிற்ருேகை, தேக்கமரம், மிளகு, முத்து, பட்டு, பருத்திப் புடைவை முதலிய பண்டங்களைப் பெற்றுச் சென்றனர், அதன்பின் எகிப்தியரும் யவனரும் உரோமரும், மிளகு, முத்து, ஆரம், எண்ணெய், பருத்தி நூலாடை முதலிய பண் டங்கள் பெறுதற்குத் தம் மரக்கலங்களில் வந்து தமிழத் துறைகளில் இறங்கினர், யவனர் தமிழ்நாட்டுப் பண்டங் களைக்கொண்டு சென்றதுமல்லாமல் தமிழ்க் கலைகளையும் தமிழ்மொழிக%ளயும் கொண்டு சென்றனர். அரிசி, கறுவா என்னும் தமிழ்மொழிகள் ஒரிசா கறுப்புவா, என்னும் யவன மொழிகளாயின. கி. மு. 400 ல் யவனர் சிந்து தேயத்திலும் தமிழ்நாட்டிலும் பண்டமாற்றுச் செய்தன ரெனக் கெளத்திலியர் தாம் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிட்டனர். தமிழ் நாட்டிலும் கலிங்கநாட்டிலும் நெய் யப்பட்ட புகைவிரிந்தன்ன நுண்ணிய மஸ்லின் புட்ைவை களே எகிப்திய மன்னரால் விரும்பி யணியப்பட்டன. உரோமவாசிரியர் மூத்த பிளினி என்பவர் உரோமர் தமிழ ரிடம் மிளகும் முத்தும் மணியும் பட்டும் பெறுதற்குப் பெருந்தொகைப் பொன்செலவு செய்தன ரெனக் கவன்ற னர். உரோமர் ஆடம்பர வாழ்க்கையை விரும்பியே விலை யுயர்ந்த முத்துமாலைகளையும் பட்டா டைகளையும் இரத்தி னங்களையும் வாங்கித் தம்பொருளை வீண்செலவு செய்தன ரெனப் பிளினி எழுதினர். யவனர் த்மிழ்த் துறைகளில் இறங்கி தோற்குப்பிகளில் மதுக்கொணர்ந்து தமிழர்க்கு விற்றனர். யவனர் செய்த விளக்குகளும் பாவைகளும் தமிழ்த்துறைகளில் விற்கப்பட்டன. யவனர் தமிழ்ப் பட் டினங்களில் ஆவணங்களை யமைத்திருந்தனர். யவனர் தமிழ் வேந்தர்க்கு யந்திர வல்லோராயும் மெய்காப்பாள

Page 67
100 உலக வரலாறு
ராயும் சேவித்தனரெனத் தெரிகிறது. உரோமருடைய பொன்னணயங்கள் பெருந்தொகை தமிழ் நாடுகளிலும் இலங்கையிலும் இன்றும் ஆராய்ச்சி வல்லோரால் எடுக் கப்படுகின்றன. உரோமரும் யவனரும் தமிழரோடு செய்த வாணிகத்தைப்பற்றி உரோம வரலாற்றின் கண் விரித் துரைத்தாம். ஆண்டுக் காண்க.
கடைச்சங்க காலத்திலே தமிழ்நாட்டு மூவேந் தரும் கப்பற்படை வைத்திருந்து தந்துறைகளைக் காத்தனர். தமிழ்க் கப்பற்படைவீரர் கடற் கள்வரைத் தொலைத்துத் தமிழர் மேனுட்டா ரோடும் கீழ்நாட்டாரோடும் செய்த வணி கத்தைக் காத்தனர். திரைகடலோடித் திரவியம் பெற் றோருள் தமிழ்மக்களே முதன்மை பெற்றனரென மொழி யலாம். மேற்கே யவனதே சத்திலும் ஆபிரிக்க நாடுகளி லும், கிழக்கே கடாரம் காழகம் சாவகம் சுமத்திரை பாலி முதலிய தேயங்களிலும், தமிழர் தம் கடைகளை நாட் டினர். கம்போடியா, சையம், சீனம் என்னும் தேயங் களிலும் தமிழர் கடைச்சங்க காலத்தில் வணிகஞ் செய் தனர். கீழைத் தேயங்களிலிருந்து தமிழர் உணவுப் பொருட்களும் கறிச்சரக்குகளும் பட்டாடைகளும் பெற்ற னர். சீனர் தம் பட்டாடைகளைக் கொணர்ந்து சமிழ்த் துறைகளில் விற்றனர். தமிழர் மிளகு முக்து முதலியவற் றைச் சீனத்துறைகளில் விற்றனர். சீன யாத்திரீகன் பாகி யன் சீனத்திற்கு இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த மரக்கலத்தில் 200 தமிழ் வணிகர் சென்றனரென எழுதி னன். திராவிட மக்கள் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா என்னுங் தேசங்களில் குடியேறி யிருத்தல் கூடுமெனப் பலர் அபிப்பிராயப்படுகின்றனர்.
தமிழர் குடியேற்றம் கடைச்சங்க காலத்திலே தமிழர் மரககலங்களில்
சென்று வணிகம் நடத்தினர் எனக் கூறினும், கடல் வணிகத்தைக் காத்தற்குச் சேர சோழ பாண்டியர்கள் கப்

தமிழர் வணிகமும் குடியேற்றமும் O
பற் படைகள் வைத்திருந்தனர். அக் கப்பற்படைகள் முசிறி தொண்டி கொற்கை சாலியூர் காவிரிப்பூம்பட் டினம் முதலிய துறைகளைக் கடற்கள் வர் அணுகாமலும் பிறதேயத்தோர் கடல்வழி வந்து தமிழ்நாட்டில் குறை யாடாமலும் காத்தன. அக்கப்பற் படைகளின் உதவி யால் தமிழர் பல குடியேற்றங்களை நிறுவக்கூடியதாயிற்று. வடவிந்தியர் யாதொரு குடியேற்றமுமின்றி யிருக்கத் தென்னிந்தியர் கீழ்த் திசை யெங்கும் குடியேற்றங்களை நாட்டினர். சோழரும் பாண்டியரும் இலங்கையிற் பல முறை குடியேற்றங்களை நிறுவினர். தமிழர் தென் மேற்கே மாலைதீவுகளிலும் இலக்கத்தீவுகளிலுங் குடி யேறினர். தென்கிழக்கே சாவகம் பாலி முதலிய தீவுகளி லும் இந்திய சீனக் குடா நாட்டிலும் குடியேறினர்.
கி. பி. 2-ம் நூற்றுண்டிலே காழகக் குடாநாட்டின் தென்கரையில் சம்பா என்னும் இராச்சியம் சம்பா என் னும் தலைநகரை உடையதாயிருந்தது. இச் சம்பா நாடு களில் சிந்துக்கள் வசித்தனரென யவனவாசிரியன் தொலமி எழுதியிருக்கிருரன். கம்போசம் என்னும் கம் போடியா தேயத்திலும் இந்துவைதிகமதம் பரவியிருந் தது. கம்போடியாவிலே அங்கோர் என்னும் இடத்தில் இந்துக் கோயில் ஒன்று பாழாயிருக்கிறது. கி. பி. 1000 வரையும் கம்போதாவை ஆண்ட அரசர் சமஸ்கிருதப் பெயர்களையே சூடினர். சயவர்மன், யசோவர்மன், இந்திர வர்மன், சூரியவர்மன் முதலியோர் அங்கோரைத்தலை நகராயுடையராய் இருந்தனர்போலும். கோயில்களிலுள்ள கல்வெட்டெல்லாம் சம்ஸ்கிருத மொழியிலேயே எழுதப் பட்டன. பெளத்த மதம் இந்து மதத்தின் ஒரு கிளையாக எண்ணப்பட்டபோதிலும் அதிகம் பரம்பவில்லை. கி. பி. 5-ம் நூற்றண்டில் புத்தகோசர் பாளி மொழியிலிருந்து புத்த நூல்களைக்கற்று உபதேசித்தனர். அக்காலத்தில் உருத்திரவர்மன் பவவர்மன் மகேந்திரவர்மன் முதலி யோர் சம்பாவில் ஆண்டனர். 626-ல் இசினவர்மன் கல்

Page 68
102 உலக வரலாறு
வெட்டு ஒன்றைப் பொறித்தான். சீன யாத்திரீகன் சுவான்சங் (631-33)ல் சம்பாபுரத்தைத் தரிசித்தவனம். பிற்காலத்தில் இச் சம்பாதேயத்தைச் சீனர் ஆழிவேந் தன் குபிலைக்கான் ஆட்சி நாடாக்கினன். பிற்காலங் களில் இந்திய சீனவில் பெளத்தம் பரம்பியது. சம்பா நாடு இக்காலத்தில் அன்னம் எனப்படும்.
பல்லவர்களும் சோழர்களும் சாவகம் முதலிய தீவு களில் குடியேற்றங்களை நாட்டினர். சாவகத்தீவிலே பரபத்தூரிலே இந்துக் கோயில்கள் பல கட்டப்பட்டன. சாவகத்தீவிலே கி. பி. 450-ல் பொறிக்கப்பட்ட கல்வெட் டால் தருமபுரத்தில் தமிழருடைய அரசு நிலைத்ததெனத் தெரிகிறது. அரசர் பூர்ணவர்மன், சந்திரபாகி கோமுகி என்னும் இரு நீர்வாய்க்கால்களை அகழ்ந்து கமத்தொழிலை விருத்தி பண்ணினன். சீன யாத்திரிகன் பாகியன் இலங்கையிலிருந்து 200 வணிகரோடு கப்பலேறி சாவகத் தில் இறங்கினன். அவன் சாவகத்தில் பெளத்தம் பரவ வில்லை யெனவும் இந்துமதமே பரவியிருந்த கென்றும் குறித்தான். கி. பி. 423-ல் காசுமீர மன்னன் குணவர்மன் சாவகத்தில் பெளத்த மதத்தைப் பரப்ப முயன்ருரன். அவன் எண்ணம் கைகூடவில்லை. வைதிக வழிபாடே அங்கே பரம்பியது. சிவன், விஷ்ணு, அகத்தியர் என் னும் தேவர்கள் கோயில் பெற்றனர். அக் கோயில்களை இன்றும் காணலாம். சாவகத்தீவிலே கலிங்க நாட்டிலே பிறிதோர் அரசு 6-ம் நூற்றாண்டில் தழைத்தது. சாவக வரசர் சீனருக்குத் தூது அனுப்பினர். சீமா என்னும் ஓர் அரசியும் கலிங்கத்தில் அரசு புரிந்தனள். அந்நாட் டில் களவு நிகழவில்லை என அராபியர் எழுதியிருத்தல் கவனிக்கற்பாலது. 782-ல் சாவகமன்னன் சஞ்சையன் சிவன்கோவிலைப் புதுப்பித்தான். அவன் சுமத்திரை, மலாக்காபாலி என்னும் நாடுகளைக் கைப்பற்றி ஆண் டான். 863-ல் எழுதிய கல்வெட்டில் பத்திரலோகம் என் ணும் கோயில் அகத்தியரால் கட்டப்பட்டதென்று எழுதப்

ஆரியர் நாகரிகம் 103 பட்டிருக்கிறது. 11ம் நூற்ருரண்டில் இராமாயணமும் பாரத மும் சாவகமொழியில் பெயர்க்கப்பட்டன. சாவக இள வரசர் தென்னிந்தியாவில் கல்வி பயின்றனர் எனத் தெரி கிறது. பாலித்தீவில் இன்றும் நடிக்கப்படும் ஆடல்கள் தமிழ்க் கூத்தென்பதற்கு ஐயமில்லை. சாவகத்தில் நிலைக் திருந்த பூரீவிஜய என்னும் சைலைந்திர இராச்சியம் 14-ம் நூற்ருரண்டில் வலிகுன்றியது. இது சோழரால் நாட்டப் பட்டது. இவ்விராச்சியம் நிலை குலைந்த பின் மாகாஜி பாதம் என்னும் அரசு தலையெடுத்திருந்தது.
3-ம் அதிகாரம்: ஆரியுச்
1-ம் பாடம்-ஆரியர் நாகரிகம்
ஆரியர் வருகை இலத்தின் மொழியில் ஆர் என்னும் பகுதி உழு என் ஆணும் பொருள் படுதலால் ஆரியர் என்னும் பதம் உழவுத் தொழிலுடையோரைச் சுட்டுமென்பது பொருந்தும். ஆரி யர் தம் பிற ப் பி ட மா கி ய ஆரியானுவிலிருந்து புலம் பெயர்ந்து சிந்துக்கரைகளில் உறைந்தபின்னரே உழவுத் தொழிலை அறிந்திருத்தல் கூடும். ஆரியர் இந்தியாவினுள் புகுமுன் ஆடு மாடு மேய்க்கும் ஆயராகவே வாழ்ந்து புற் றரைகளைத் தேடி அலைந்து திரிந்தனர். ஆரியக் கூட்டத் தினர் ஒருபாலார் மேனடுகளே நோக்கிச் சென்று யவன தேசத்திலும் உரோம தேசத்திலும் ஜேர்மனியிலும் இங் கிலாந்திலும் குடியேறினர்; ஒருபாலார் இந்து நதிக் கரை யின் நீர்வளத்தையும் நிலவளத்தையும் கண்டு வியப்புற்று அவண் குடியேறினர். இந்து நதிக் கரைகளில் குடியே றிய ஆரியர் கங்கைக் கரைகளிலும் குடியேற்றங்களே நாட்டினர். ஆரியர் சிந்து தேசத்தில் வதிந்த தாசுயுக்கள் என்னும் ஓர் தமிழ்க் கூட்டத்தினரோடு அளவளாவி, அர

Page 69
104 உலக வரலாறு
சினியரிடம் கல்விபயின்று சீர்மையுற்றனர். பிற்காலங் களில் ஆரியர் என்னும் பதம் ஒழுக்கத்தாலும் அறிவா லும் மேம்பட்டோரைக் கருதிற்று. தாசுயுக்கள் செல்வ முற்று அழகிய மேன் மாடங்கள் உடைய இல்லங்களில் வசித்து இன்புறுதலை ஆரியர் கண்டு அழுக்காறுற்றனர். தாசுயுக்களை ஆண்ட அரசரிடம் கலைகளைக் கற்றபோதி லும் ஆரியர் நன்றியில்லாதோராய் தாசுயுக்களைக் கெடுக் கும்படித் தம் தேவர்களே இறைஞ்சினர். வேதங்களைக் கற்றுணர்ந்தோர் ஆரியர் வாளி என்னும் இயவை நெல் 2லப் பயிர் செய்தனர் எனக் கூறுகின்றனர். அதர்வ வேதத்தில் நெல்லைப்பற்றியும் கூறப்பட்டுள்ளது.
ஆரிய நாகரிகம்
ஆரியர் சிந்துநதிக் கரையில் குடியேறிய காலம் கி. மு. 2000 ஆதல் கூடும். இங்ஙனம் ஆரியர் பண்டைக் காலந் தொட்டே சிந்து நாடுகளில் 'குடியேறி அரசரைத் தெரிந்து இராச்சிய பரிபாலனஞ் செய்தனரென்க. அம்பு, வில், ஈட்டி, தண்டு, மழு என்னும் ஆயுதங்கள் பண்டு உபயோகிக்கப்பட்டன. வில்வீரர் தேர் ஊர்ந்தனர்; வாள் வீரர் குதிரை ஊர்ந்தனர். ஆரியர் ஆடை நெய்யப் பயின் றதுமன்றிப் பொன்பைரணங்களும் வெண்கலக் கருவிக ளும் செய்யவும் அறிந்தனர். ஆரியர் தம் தேவுக்களுக்குப் பலியிடும் நோக்கமாக யாகங்கள் செய்தனர். யாகங்களில் ஆடு மாடு குதிரைகள் பலியிடப்பட்டன. புருஷமேதமும் செய்யப்பட்டதெனத் தெரிகிறது. சியாபர்ணசாயகயனன் ஓர் ஆண்மகனைப் பலிபிட்டான் என ச் சத பாத பிராமணம் உரைக்கின்றது. நரபலியிடுதல் இதிகாசங்களிலும் குறிக் கப்பட்டுளது. நரபலியிடுதல் முனிவர்களால் கண்டிக்கப் பட்டு கிறுத்தப்பட்டது. வேள்வி இயற்றுவோர் தேவுக் களுக்கும் விருந்தினருக்கும் அவிப்பாகம் கொடுத்தல் வழக்கம். வேள்விசெய்தலைத் திருவள்ளுவ நாயனுர் பாராட்
- é

ஆரியர் நாகரிகம் 105
'அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணுமை நன்று’
எனக் கொல்லாமை என்னும் அறத்தினை கனிவற்புறுத்தி னர். குதிரை யிறைச்சியையும் மாட்டிறைச்சியையும் ஆரி யர் விரும்பி'யுண்டனர். பின்னர் ஆரியர் பால் பழம் இலை குழைகளையும் உண்ணத் தொடங்கினர். உணவுப் பண்டங்களை இயவை நெல்லிலிருந்து ஆக்கினர். ஆரியர் ஊன் உண்பதில் மாத்திரமன்றி மதுபானஞ் செய்தலிலும் மிக விருப்புடையராய் இருந்தனர். சோமரசத்தைத் தாம் பருகியதுமன்றித் தம் தேவர்கோணுகிய இந்திறனுக்கும் அளித்தனர். இந்திரன் சோமபானஞ்செய்து தைரிய முடையவனகித் தன் பகைவரை வென்ருரன் என ஆரியர் பாடினர். சோமா என்னும் பூண்டு இக்காலத்தில் கிடைக் கின்றிலது. ஆரியர் இந்திரன், அக்கினி, பிரமா, விஷ்ணு, உருத்திரன், சந்திரன், சூரியன் என்னும், தேவர்களைத் தொழுதனர். ஆரியர் சமய நூல்களைக் கற்றுத் தம் வழி பாட்டினைச் சீர்திருத்தினர் எனத் துணியலாம். ஆரியமக் கள் மனைவியர் பலரை மணமுடித்தனர். ஆரியருடைய ஆசுரம் பிரமம் முதலிய மண முறைகள் சிறப்பற்றவை யென முன்னர்க் காட்டினும், சுகாதாரமும் வைத்தியமும் தமிழரிடமே ஆரியர் கற்றனர். ரோடுதல் உண்ணுதல் முதலியவற்றிலும் தமிழரையே பின்பற்றினர் போலும்; தமிழரிடமே யோகாப்பியாசஞ் செய்யப் பயின்றனர்.
வேதம் வேதங்கள் பண்டைய ஆரியருடைய பாடல்கள். இருக்கு யசுர் சாமம் அதர்வம் என்னும் நான்கு வேதத்தையும், வேதாந்தம் எனப்படும் 108 உபநிடதத் தையும், வேதத்தின் ஆறு அங்கங்களாகிய சிட்சை சந்தம் வியாகரணம் நிருக்தம் கல்பம் சோதிடம் என்பவற்றையும், ஆயுள்வேதம், தனுவேதம், கந்தருவவேதம், அர்த்த சாஸ் திரம் என வகுக்கப்பெற்ற உப வேதங்களையும் இராமா
14

Page 70
i06 உலக வரலாறு
யணம் பாரதம் என்னும் இதிகாசங்களையும் மனுதர்ம சாஸ்திரத்தையும் வேதமெனப் பெயரிடுதல் வழக்கப0ாத லின், வேத மென்பது அறிவு (கலை) என்னும் பொரு ளுடையதாம் என்ப. ஈண்டு வேகம் என்பது ஆதிகாலத் தில் ஆரியர் இசைத்த சமய பாடல்களாகிய இருக்கு யசுர் சாமம் அதர்வம் என்னும் நால்வேதத்தையே சுட்டும். கி. மு. நான்காம் நூற்றண்டில் இருந்த கெளத்திலியர் இருக்கு யசுர் சாமம் என வேதம் மூன்றென மொழிக் தனர். அதர்வ வேதப் பாடல்கள் மிகப் பழையவை. அவற்றுள் மாந்திரிகப் பாடல்கள் பல என்ப. அதர்வ வேதப் பாடல்கள் சொன்னய மில்லாதவை யாகலின், காலத்தால் ஏனைய மூன்று வேதங்களின் பாடல்களிலும் முந்தியவை எனத் துணியப்படும். 'நான் நாகர் உலகுக் குச் சென்றேன்; அவருடைய நஞ்சுக்கும் அஞ்சமாட் டேன்’ என்றற்போன்ற பாடல்கள் சிறப்பில்லா நடையில் பாடப்பட்டவை என்ப. சாமவேதப் பாடல்களும் யசுர் வேதப் பாடல்களும் பெரும்பாலும் இருக்குவேதப் பாடல்களி லிருந்து எடுக்கப்பட்டவையாம். சாம வேதத் தில் சோம பானத்தையும் பலியிடுதலையும் பற்றிய சுலோ கங்கள் மிகுந்திருக்கின்றன. யசுர் வேதத்தில் சிவனையும் கங்கையையும் பற்றிய தோத்திரங்கள் காணப்படுகின்றன. இருக்குவேதம் 1017 சுலோகங்களை உடையது; பத்துப் புத்தகமாக வகுக்கப்பெற்றது. பத்தாம் புத்தகம் சமய சம்பந்த மில்லாத இம்மை வாழ்க்கையைப்பற்றிக்கூறும் சுலோகங்கள் பல உடையது. வேத கீதங்கள் இயற்கைப் பொருளாகிய நிலம் நீர் தீ வளி வான் என்பவற்றைப் புகழ்ந்து துதிகூறுகின்றன. இம்மை வாழ்க்கைக்கு வேண்டிய பொருட்களை ஈயும்படி ஆரியர் அக்கினி இங் திரன் முதலிய தேவுக்களை இரந்தனர்.
இவ்வேதங்கள் நான்கும் இற்றைக்கு 5000 ஆண்டு களுக்குமுன் இசைக்கப்பட்டவை என மேனுட்டாசிரி யர்கள் மொழிகின்றனர். மேனட்டார் தம்மை ஆரிய வகுப்பினரென எண்ணியிருத்தலால் ஆரிய வேதங்களே

ஆரியர் நாகரிகம் 107 மிகப் புகழ்ந்துரைக்கின்றனர். இந்த ஆரிய வேதங்கள் தேவார திருவாசகமாகிய தமிழ் நான்மறைகளுக்கு ஒருபோ தும் நிகராகா என்பதை உணர்க. தேசத்தொண்டன் திலகர் வேதங்கள் 10,000 ஆண்டுகளுக்குமுன் ஒதப்பட் டவையெனக் கணக்கிட்டனர். வேதங்கள் சுயம்பு, என்று முள்ளவை, அழிவில்லாதவை எனப்படும். இஃதென்னை யோவெனின், வேதப்பொருள் உண்மை என்பதே என்க. எழுதப்படுமுன் வேதப்பாடல்கள் இசைக்கப்பட்டமை யாலும் வேதப்பாடல்களே கெட்டுருப்பண்ணி ஒதுதல் வழக்கமாதலாலும் வேதங்கள் எழுதாக்கிளவி எனப்படும். வேதங்களும் உபநிடதங்களும் ப தி பசு பாசங்களின் இயல்பை ஆராய்கின்றன. வேதம் சிந்தித்துத் தெளியப் படுமாகலின் சுருதியெனப்படும். கேட்கப்படும் நூல்கள் ஸ்மிருதி எனப்படும். ஸ்மிருதிகள் ஆரியர் எழுதப்பயின்ற காலத்தில் ஏட்டுரூபம் பெற்றவை. மனு தர்ம சாஸ்திரம் முதலியவை மிருதிகள். வேதம் வேதாந்தம் என்பவற் றுடன் முரணும் நூல்கள் உண்மைப்பொருளைக் கூரு தவை என இத்துக்கள் எண்ணுகின்றனர். தென்னிந்தி யர் இன்றும் வேதங்களே ஆப் த வாக்கியங்கள் அல்ல என மறுக்கின்றனர். தமிழர் தம்பாடல்கள் வேதங்களிலும் காலத்தால் முந்தியவை எனவும் நலத்தால் சிறந்தவை யெனவும் தமிழின் தொன்மையை உணராதோரே வேதப் பாடல்களைப் புகழ்கின்றனரெனவும் உரைக்கின்றனர். இது நிற்க, உபநிடதங்களும் பிராமணங்களும் உரைநடை யில் எழுதப்பட்டவை. பிராமணங்கள் காடுகளில் கட்டப் பட்ட ஆசிரமங்களில் பயிலப்பட்டமையால் ஆரணியகம் எனப்பெயர் பெற்றன. உபநிடதங்கள் பதி பசு பாசங் களின் இலட்சணங்களை ஆராயும் தத்துவநூல்கள். சன கன் முதலிய கூடித்திரியர்களே உபநிடதங்களை ஆராய்ந்த னர். யவனருடைய தத்துவநூல்களே அவற்றிற்கு கிக TíT 45 tT • தத்துவம் அசி என்னும் சாந்தோக்கியத்தின் உரையே உரைகள் யாவற்றிலும் சிறந்ததென்பதை உய்த் துணர்க. பிரமம் பிரபஞ்சத்திற்குக் காரணம் எனக்

Page 71
108 உலக வரலாறு
காட்டும் ஐதரேயோ உபநிஷதம் இருக்கு வேதத்திலும் அன்னமயகோசம் பிராணமயகோசம் மனேமயகோசம் விஞ்ஞானமயகோசம் ஆனந்தமயகோசம் என்பவற்றை ஆராயும் தைத்திரிய உபநிடதம் யசுர்வேதத்திலும் பர மான்மா சீவான்மாக்களின் இலக்கணங்களை இயம்பு கின்ற சாந்தோக்கிய உபநிடதம் சாமவேதத்திலும் சாக் கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் என்னும் அவத்தைகளை விளக்கும் மாண்டுக்கிய உபநிடதம் அதர்வ வேதத்திலும் சேர்க்கப்பட்டுள்ளன.
9JIIDIIIDIÍ
வேதகாலத்து ஆரிய மொழிக்கும் இதிகாச காலத்து ஆரிய மொழிக்கும் பல வேற்றுமைகளுண்டு. வேதகாலச் சொற்கள் பல இதிகாச காலத்தில் வழக்கற்றன. இதிகா சச் செய்யுள்கள் திருத்தமான நடையில் எழுதப்பட்டன. இராமாயணம் ஆரியமொழியில் முதன் முதல் இயற்றப் பட்ட காவியம் என்ப. அது 3000 ஆண்டுகட்குமுன் வால்மீகி முனிவரால் ஏழு காண்டமாகப் பாடப்பட்டிருக்க லாம். பின்னர் முதலாங் காண்டமும் இறுதிக் காண்ட மும் சேர்க்கப் பட்டவையாகும். கதையோடு தொடர் பில்லாத கட்டுரைகள் இராமாயணத்தில் மிகச் சிலவே காணப்படும், ஏழு காண்டங்களும் 24,000 சுலோகம் உடையன. ஒரு சுலோகம் இரண்டு அடியுடையது. ஆரி யர் பாட்டுடைத் தலைவன் இராமனை விஷ்ணுவின் அவ தாரமென நம்பி வணங்கினர். அங் நூல் அரச தர்மத்தை யும் சகோதர நேசத்தையும் கற்பையும் விளக்கும் நோக்கமாகவே இயற்றப்பட்டது. இராமாயணம் ஆரி யத்தினின்றும் உதித்த கிளைமொழிகளில் மொழி பெயர்க் கப்பட்டது. இந்தி மொழியில் துல்சிதாஸ் இராமா யணத்தை மொழிபெயர்த்தனர். இராமாயணத்தின் கதை வருமாறு. அயோத்தி நகரில் அரசாண்டிருந்த தசரதன். கோசலை சுமத்திரை கைகேயி என மும்மனைவியரை மண முடித்திருந்தான். இராமன் முதல் மனைவியின் மகனதலின்

ஆரியர் நாகரிகம் 09
பட்டத்திற்கு உரியனனன். கைகேயி தன் மகன் பரத்னை இளவரசனுக்க வெண்ணிக் கூனிபால் புத்திகேட்டு இரா மனை நாடு கடத்தும்படி அரசனே இரந்தனள். இராமன் தன் தந்தையின் சொல்லைக்காத்தற்கு அரசவையைத் துறந்து கற்புக்கரசியாகிய தேவி சீதையுடனும் சகோ தரன் இலட்சுமணனுடனும் ஆரணியமடைந்து வசித்தழி, இலங்கை வேந்தன் இராவணன் சீதையைக் கவர்ந்து ஆகாய மார்க்கம் சென்ருரன். இராமர் ஆரஞருற்றுத் தெற்குநோக்கிச் சென்று பாண்டிநாட்டை விலகிச் சென்று வாலியைக் கொன்று சுக்கிரீவனை நட்பாக்கி அநு மான் முதலிய வானரங்களின் துணை பெற்று இலங்கை புக்குப் பொருது வாகை சூடித் தன் இல்லக் கிழத்தியுடன் புலம் பெயர்ந்தான்.
இராமாயணப் பாடல்களால் ஆரியர் யாகஞ் செய் கலைத் தடுக்கும் திராவிடரோடு பகையாகினர் எனவும், தென்னுட்டாரோடு ஒருமுறை பொருது வென்றனரென வும் கருதப்படும். இராமாயணம் எழுதப்பெற்ற காலத் தில் குரு சிஷ்ய முறையாகவே கல்வி பயிற்றப்பட்டது. அரசிளங்குமரர் வில்வித்தையைக் குருவிடம் பயின்றனர்.
பாரதம்
மாபாரதம் இராமாயணத்தின் பின் எழுதப்பட்டதென ஆராய்ச்சி வல்லோர் அபிப்பிராயப்படுகின்றனர். ஆனல் பாரதம் கூறும் சம்பவங்கள் இராமாயண காலத்திற்கு முன் நிகழ்ந்தவை எனத் தெரிகிறது. ஆரியர் இந்து கங்கைச் சமபூமிகளில் குடியேறிப் பெருகி இருகட்சியின ராகி அமர்புரிந்தனர். பாரதம் ஒரு புலவனுலன்றிப் பல ரால் பாடப்பட்டதெனக் கருதப்படுகிறது. அது 100,000 சுலோகம் உடைய காவியம். அதன் நோக்கம் அரச தரு மத்தை விளக்குதலே. மா பா ர த ச் சுலோகங்களைத் தொகுக்கோன் வியாசமுனிவன். மாபாரதம் பதிணெண் பருவங்களாகப் பிரிக்கப்பட்டுளது. அரிவம்சம் என்னும்

Page 72
110 உலக வரலாறு
பத்தொன்பதாம் பருவம் பிற்காலத்தவரால் செருக்கப் பட்டது. பாரதக்கதையோடு சம்பந்தமில்லாக் கட்டுரை கள் பல காவியத்தில் இடம் பெற்றன. பாரதக்கதை வருமாறு. அந்தகனகிய திருத ராட்டிரன், துரயோதனன் முதலிய நூறு புதல்வரை உடையோன், அஸ்தினபுரத்தில் அரசு புரிந்திருந்தான். அவனுடைய குலத்தினர் கெளரவ குலத்தினர் எனப் பெயர் பெற்றனர். அக் கெளரவர் பாண்டுவின் மக்களாகிய யுதிஷ்டிரர் வீமன் அருச்சுனன் நகுலன் சகாதேவன் என்னும் பாண்டவர் ஐவரோடும் பகையாயினர். இவ் விரு கட் சி யின ரு ம் டெல்லியின் வடக்கேயுள்ள குருகேஷத்திரக் களத்தில் பொருதனர். அக்களத்தில் 18 போர் நடந்தன. போர்முடிவில் யுதிஷ் டிரன் வெற்றி பெற்று இந்திரப்பிரஸ்தத்தில் அரசாண் டான். பாரதகாலத்தோர் வில் தண்டு தேர் யானை நஞ்சு அக்கினி என்னும் படைகளை உபயோகித்தனர்.
பாரதத்தில் செருகப்பட்ட கட்டுரைகளுள் நளன் சரிதையும் சகுங் கலை சரிதையும் மிகச்சிறந்தவை. பகவத் கீதை என்னும் தத்துவ நூலும் செருகப்பட்டுளது. அதை அரசியல் ஞானியாகிய கிருஷ்ணர் விசயனுக்குப் போர்க்களத்தில் உபதேசித்தனராம், அது துறவறத்தி லும் இல்லறமே சிறந்ததெனவும் மக்கள் தத்தம் கடமை க3ளச் செய்தலே நன்னெறியெனவும் வற்புறுத்துகின் றது. கிருஷ்ணர் இருகட்சியாரையும் நட்பாக்க முயன்று தூதுசென்ற கதை நன்முக வருணிக்கப்பட்டுளது. கிருஷ் ணர் இருகட்சியாரையும் நட்பாக்க முடியாமல் பாண்டவர் கட்சியைச் சார்ந்து வெற்றியை இந்தார். பாரதம் இற் றைக்கு 2500 ஆண்டுக்ட்கு முன் எழுதப்பட்டிருக்கலாம்.
சரித்திர வாராய்ச்சி
இராமாயணமும் பாரதமும் புலமை மிக்கோரால் புனைந்துரைக்கப்பட்ட காவியங்களாகையால், அவை கூறும் சம்பவங்கள் எல்லாம் உண்மையாக நிகழ்ந்தவை

ஆரியர் நாகரிகம் 111
அல்ல. காவியங்கள் வருணிக்கும் சம்பவங்களிலிருந்து சில சரித்திரவுண்மைகளைத் துணியலாம். ஆரியருடைய இதிகாசங்களால் ஆரியர் கட்சிப்போர்புரிந்து அரசியல் நடாத்தி அசுவமேதம் புருஷமேதம் என்பவற்றைச்செய்து களித்தனர்ெணவும் பிரமா விஷ்ணு இந்திரன் உருத்திரன் அக்கினி முதலிய தேவுக்களைத் தொழுதன ரெனவும் அறியக் கிடக்கின்றது. இனி ஆரியர் இதிகா சகாலத்துக்கு முன்னரே சீர்மையுற்றிருந்தன ரென்பது ஆராய்ச்சி களால் வலியுறுத்தப் படுகிறது.
1932-ல் சீனருடைய பழைய பேரெயிலின் கண் யப் பானியருடைய வெடி குண்டுகள் விழுந்தன. மதில் வெடிக் கச் சீனருடைய பழைய ஏடு ஒன்று வெளிவந்தது. அவ் வேடு வேதங்கள் மனுநூல் பரிணுமம் விருத்தி காயகல்பம் முதலிய ஆரியக் கலைகளை ப்பற்றிய குறிப்புக்கள் உடை யது. அந்நூல் சீனரால் சீன மதில் கட்டப்ப்டுமுன் பயிலப் பட்டதெனக் கருதப்படுகின்றது. ஆரிய நாகரிகம் சீனத் திற்பரவப் பல நூற்றண்டுகள் சென்று இருக்குமாகலால், ஆரிய நாகரிகம் சீனர் மதில்கட்டுமுன் இந்தியாவில் பல நூற்ருரண்டுகளுக்குமுன் சிறந்திருத்தல் வேண்டும்.
சாதிவேற்றுமை (தீண்டாமை)
ஆதித் தமிழ் மக்கள் ஐவகை கிலத்தினராகித் தத்தம் தொழில்களை நடாத்தி ஒருவரை யொருவர் இகழாமல் நேசித்திருந்தனர் எனத் தொல்காப்பியம் புலப்படுத்து கின்றது. ஆரியர் தமிழ் நாடுகளுள் புகுந்த பின்னரே சாதிவேற்றுமை தமிழ் நாட்டில் தோன்றியது. சாதிகளை யும் தொழில்களையும் ஒழுக்கங்களையும் வரையறுத்த காலத்தில் வருணங்கள் நன்னேக்கத்துடன் வகுக்கப்பட் டிருக்கலாம். ஒவ்வொரு தொழிலிலும் சிறந்தோர் தங் தொழிலைத் தம் பிள்ளைகளுக்குக் கற்பித்தல் இலகு வாகையால் இந்து சமுக வளர்ச்சிக்கு சாதிவகுத்தல் துணையாயது. ஒவ்வொரு வருணத்தினரும் தம் ஆசிரம

Page 73
112 உலக வரலாறு
விதிப்படி ஒழுகினல் இந்து சமூகம் தழைத் தோங்குதல் கூடும். அரசர் அரசியலையும் அந்தணர் ஓதுதலையும் வைசியர் வணிகத்தையும் வேளாண்மையையும் குத்திரர் பணிசெய்தலையும் முறைப்படி செய்வாாாயின் இந்நான்கு வருணங்களையும் கொண்ட இந்து சமுகம் இனிது வளரு மென்பதற்கு ஐயமில்லை. வணிகருடைய பிள்ளைகள் ஒதுதலைச் செய்வதிலும் பார்க்க அந்தணருடைய பிள்ளை கள் அதை இலகுவாய்ச் செய்கின்றனரல்லவா? ஒவ்வொரு சாதியினரும் தத்தம் தொழிலில் சிறந்தோராயினும் ஒரு சாதியினர் ஏனைய சாதியினரை இகழ்ந்தாரல்லர். ஒரு சாதியினர் பிற சாதியினரோடு மணவுரிமை யுடையவரா யிருந்தனரெனத் தெரிகிறது. பிற் காலங்களில் ஆரியப் பிராமணர் தாம் ஏனைய சாதிகளிலும் சிறந்தன ரென வெண்ணித் தம்மைக் காத்தற்கும் பிறரைக் கெடுத்தற் கும் வருத்தமின்றிப் பொருள் தேடற்கும் வழி தேடினர். ஆரியப் பிராமணர் சில சாதிகள் தீண்டாச் சாதிகள் என் மும் அவை ஓதுதல் செய்யக்கூடாதென்றும் நாட்ட முயன்றனர். அங்நோக்கமாகவே மநுநூல் எழுதப்பட் டது. பிரமாவின் வாயிலிருந்து பிராமணரும் தோளி லிருந்து இராசினியரும் காலிலிருந்து வைசியரும் பாதத்தி லிருந்து குத்திரரும் பிறந்தன ரெனப் புனைந்தனர். இங் நனம் உயர்ந்த சாதியினர் இழிந்த சாதியினர் தம்மைத் தீண்டலாகாதென வற்புறுத்திச் சாதிப்பகையை வளர்த்
தனா. mamam. Howna
2-ம் பாடம்-இந்துநேமிவேந்தர்
ஆரிய இராச்சியங்கள்
பாஞ்சாலை தேயத்திலுள்ள பாழுர் சிலவற்றை அகழ்ந்து பார்த்த ஆராய்ச்சியாளர் தக்சிலை (தச்சிலை) எனப் பெரியதோர் நகர் கி. மு. ஏழாம் நூற்றண்டு செழிப் புற்று மிக உந்நத நிலையில் இருந்ததெனத் துணிகின்

இந்துநேமிவேந்தர் 113
றனர். அங்கேரில் பல்கலைக் கழகங்கள் பல இருந்தவை என்பர். அக்காலத்திலே அவந்தி நாட்டிற்கு உச்சினிமா நகர் தலைநகராகவும் கோச8ல நாட்டிற்குச் சிறவஸ்தி தலை நகராகவும் இருந்தனவாம். இவ்விராச்சியங்கள் வலிகுன்ற மகத ராச்சியம் தழைத்தோங்கியது. மகத ராச்சியத்தொடு பெளத்தமும் வளர்ந்ததெனலாம். பெளத்த நூல்கள் மகத மொழியாகிய பாளிமொழியில் எழுதப் பெற்றன.
fů i JE T Jair: 955 Tůů 582-554
காசியிலிருந்த சிசு நாகன் என்னும் ஓர் மன்னன் கி. மு. 642-ல் மகத நாட்டில் ஓர் அரசை நாட்டினன். அவ னுடைய இராசதானி காயாவில் உள்ள இராச கிரகம் என் னும் நகரே. அவன் குலத் துதித் தோன் ஒருவன் பெயர் பிம்பிசாரன் என்பது. பிம்பிசாரனைச் சுரநிகன் என்ப தும் உண்டு. பிம்பிசாரன் அங்கராச்சியத்தின் மீது படை யெடுத்து வெற்றி யடைந்தான். அவன் அமண் சமயத் தினன். அவன் கி. மு. 582 முதல் கி. மு. 554 ஈருரக உள்ள 23 ஆண்டுகள் செங்கோலோச்சினன். அக்காலத் திலே பார்சியவேந்தன் 1-ம் டேறியஸ் பார்சிய விரிகுடாவி லிருந்து இந்து நதிக் கடலுக்குச்செல்லும் வழியை அறியும் படி கரியாண்டுநாட்டு “ஸ் ைகலாச்சு" என்பவனை ஏவினன். அம்மாலுமி இந்து நதியைக் கரைப்பாதையால் அடைந்து ஆங்குக் கப்பல்கட்டிப் பாயெடுத்துக் கடல்கடந்து பார்சி யாவை அடைந்தானும். முதலாம் டேறியஸ் என்பவ னுடைய மகன் சேர்ச்சிஸ் யவனரோடு பிளாற்றேயாக் களத்தில் அமர் செய்தபொழுது இந்திய வில்வீரரும் அவன் படையில் சேவித்தனராம். அக்காலத்தில் இந்து நதிக்கு வடபாலுள்ள தேயம் பார்சியருடைய ஆட்சி நாடா யிருந்தது. அந் நாட்டினர் கரோஷ்தி பாஷை, பேசினர்.
அசாதசத்துரு ஆட்சிக்காலம் கி. மு. 554-527
554-ல் பிம்பிசாரன் மகன் குனிகன் என்னும் 'அசாதசத் துரு அரசு கட்டி லேறினன். அவன் 27 ஆண்டு
15

Page 74
114 உலக வரலாறு
கள் ஆண்டான். அவன் சோணுற்றில் பாடலி என்னும் கோட்டையைக் கட்டினன். அக்கோட்டை பாடலிபுரம் என்னும் நகராயிற்று. அசாதசத்துரு கோசலைநாட்டு அரசகுமாரியை மணந்து அங் நாட்டை மகதத்தோடு இஃணத்தான். அசாதசத்துருவின் தாய் இலிச்சாவியர் குலத்தினள். இலிச்சாவியர் பாடலிபுரத்திற்கு 27 மைல் தூரத்திலுள்ள வைசலே என்னும் நகரில் உறைந்திருந்த னர். வைசலை நகர் 10 மைல் சுற்றளவுடையது. பசாரா வுக்கு அணித் காயுள்ள பாழுர்தான் வைசாலை என்பர். இவ் வைசாலையில் வதிந்த இலிச்சாவியர் சாக்கியர் எனப் பெயர் பெற்றனர். சாக்கியர் ஆரியர் அல்லர் என்பது வெளிப்படை. சாக்கியர் துரேனியராதல் கூடும். சாக் கியர் நீர்வள தேயத்தில் கி. பி. 7-ம் நூற்ருரண்டு வரையும் அரசுபுரிந்தனர். இது கிற்க, அசாதசத்துருவின் மகன் த ரசாகன் கி. மு. 527-ல் முடி பெற்ருரன். த ரசாகன் மகன் உதயன் கி. மு. 503-ல் அரச பதவியைப் பெற்றுக் கங் கைக் கரையில் கூசுமபுரத்தை அமைத்தனன்.
பெளத்தரும் சமணரும் அசாத சத்துருவைத் தத்தம் சமயத்தினன் என்பர். அசாதசத்துரு தன் தந்தை பிம்பி சாரனைக் கொன்ருன் என்பது பெளத்தருடைய பாரம் பரியக்கதை, அமணர் அசாதசத்துரு தெய்வபக்தி நிறைந்திருந்து 80ஆண்டு செங்கோலோச்சினன் என்பர். அவனுடைய் ஆட்சிக்காலத்தில் கெளதம புத்தருடைய மைத் துனன் தேவதத்தன் பெளத்தகுருமாருள் சிறந்தோ கைத் துலங்கினன். பெளத்தமும் சைனமும் இந்துமதத் திற்கு முரணுன கொள்கைகளை நாட்டியவை எனக் கரு தற்க. இந்து சமய ஈற்கொள்கைகள் சில பிராமணரால் மறைக்கப்பட்டவை யெனவும் இந்துக் கிரியைகள் அள வுக்கு மிஞ்சியவை எனவும் அவற்றினைக் கண்டித் தற்கே புத்தமும் சமணமும் எழுந்தவை எனவும் மொழிப.
புத்த மதத்தை நாட்டிய கெளதம புத்தரும் சமண சமயத்தை நிலை நிறுத்திய வர்த்தமான மாவீர தீர்த்தங்கர

கெளதமபத்தர் 623-543 115
ரும் பிம்பிசாரனுடைய காலத்தில் வாழ்ந்தனர் எனலாம். அசாதசத்துரு புத்தருடனும் மாவீரருடனும் அளவளாவிச் சமய விஷயங்களைப்பற்றிப் பேசினன் என்பதற்கு ஐய மில்லை. புத்தர் அசாத சத்துரு ஆண்டகாலத்தில் கி. மு. 543-ல் பரகதியடைந்தார். மாவீரர் கி. மு. 527-ல் சுவர்க் கம் புகுந்தனர் எனக் கரைவேலைக் கல்வெட்டால் தெரி கிறது.
3-ம் பாடம்-கெளதம புத்தர்
கி. மு. 623-543
அருந்தவக் குரிசில் சாக்கிய முனிவர் கெளதம் புத் தர் இலிச்சாவியர் என்னும் சாக்கிய குலத்தில் தோன்றி னர். சாக்கியர்கள் குன்றவர்கள்; சிசு நாக குலத்தினர்; இலிச்சாவியர் கூட்டத்தினர் என முன்னர்க் கூறினுேம். சிசு நாகர் ஆரியர் அல்லர் என்பது மலையிலக்கே. சிசு நாகர் ஆரியக்கூட்டத்தினர் அல்லரா கலின், அவர்கள் இராசினிய குலத்தினின்றும் வழுவியோர் என ஆரியப் பிராமணர் எழுதினர். அவர்கள் ஆரியர் அல்லாாகையால் ஆரியப் பிராமணரின் கிரியைகளையும் யாகங்களையும் மெச்சாமல் புத்த சமண மதங்களைத் தழுவினர் எனச் சொல்லலாம். ஆரியப்பிராமணருடைய வைதிக சமயம் கிரியை மிகுந்து இழிவடைந்த காலத்தில் பூர்வ மீமாஞ்சை கூறும் யாகம் முதலிய போலி வணக்கத்தையும் கிரியைகளையும் தொலைத் தற்கெனச் சாக்கிய முனிவர் கெளதம புத்தர் அவதரித் தனர்.
புத்தருடைய இயற்பெயர் சித்தாத்தர் எனவும், அவர் கபிலவஸ்து என்னும் நகரில் அரசியல் நடாத்திய சுத்தோ தனன் என்னும் சிற்றரசனின் புதல்வர் எனவும், அவர் அரசவை வாழ்க்கையை வெறுத்துத் தன் மனைவியையும் குழந்தையையும் துறந்து காயை சென்று கடுந்தபம் புரிந்து காடுகடோறும் திரிந்து ஆங்காங்குள்ள ஆசிரமங்

Page 75
116 உலக வரலாறு
களில் வசிக்கும் முனிவர்களிடம் தத்துவஞானம் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தனரெனவும் பெளத்தர்கள் பகருகின் றனர். புத்தர் போதி நீழலில் இருந்து சிந்தித்து உடம்பை வருத்தல் மூடத்தன்மை யென உணர்ந்தன ரெனவும் dial-Ot. புத்தர் யாதொன்றும் நிலையாத நிர்வாண கிலையை அடைதலே பரகதியென உபதேசித்தனர் என மேனுட்டார் உரைக்கின்றனர். த த் து வ ஞானமுணரா மேனுட்டாருக்குப் புத்தமதக் கொள்கைகள் சிறந்தவை யாகத் தோற்றுதல் விகோ தமன்று. புத்தர் தியானத்தி லிருந்து நாலாம் சாமத்தில் அரக த் நிலையை அடைந்தனர் எனப் பெளத்த சரித்திரகாரர் சாற்றுகின்றனர்.
புத்தருடைய தத்துவஞானக் கொள்கைகள் எத்தன் மைய வாயினும் ஆகுக'; அவர் ஆரியர் தீவளர்த்து ஆயிரக் கணக்கான ஆடு மாடு குதிரைகளைப் பலியிடுதலைக் கண்டு துன்புற்றனர் என்பதற்கு ஐயமில்லை. புத்தர் கொலை கடிந்து அன்பு என்னும் அஹிம்சா தர்மத்தை வற்புறுத் தினர். சீவகாருண் ணியம் பெளத்தர்களால் இந்தியா முழு வதும் முதன் முதல் உபதேசிக்கப்பட்டது. மனிதர் எவ்வு யிர் மாட்டும் அன்புடையோராய் ஒழுகுதல் அவசியமென் பது பெளத்தர்களால் நிலை காட்டப்பட்டது.
காசிக்கு அணித் தாயுள்ள சரநாதம் என்னும் இடத் தில் புத்தர் ஐந்து சிஷ்யரைக் கூவிப் பெளத்த சங்கத்தை நிறுவினர். புத்தர் இந்து சமயத்தை நல்லாற்றுப்படுத்திப் பிராமணருடைய அனவசியக் கிரியைகளினின்றும் காத்த னர் எனக் கூறலாம். இந்து சமயத்தினர் புத்தர் புகன்ற உண்மைகளைக் கடைப்பிடித்துத் தம் சமயத்தைச் சீர்ப் படுத்திக் கொல்லாமை விரதத்தைக் கையாண்டனர். புத் தர் 45 யாண்டு உபதேசஞ் செய்து திரிந்து 80 ஆண்டு நிறைந்து கூசிநகரில் உயிர் நீத்தார். புத்த சமயம் நான பக்கங்களிலும் பரவியது. புத்த சங்கத்தோர், தம் சம யத்தை இந்தியாவில் மாத்திரமன்றி இலங்கையிலும்

கெளதமபுத்தர் 623-543 117
பர்மாவிலும் இந்திய சீனுவிலும் தீபத்திலும் சீனவிலும் ஜப்பான் தீவுகளிலும் துருக்கியிலும் காந்தாரத்திலும் காட்டினர்.
புத்த சமயம் இந்து நாடுகளில் அழிவெய்திய போதி லும் ஏனைய கீழைத் தேயங்களில் இன்றும் பரம்பியிருத்த லைக் காண்க. கடவுள் உண்டோ இல்லையோ என்னும் வாதம் புத்தருடைய மனத்தைக் கவர்ந்ததன்று. ஒழுக்கச் சீர்திருத்தம் செய்வதே புத்தருடைய நோக்கமா யிருந் தது. புத்தர் ஒதிய திரிபிடகங்கள் பெளத்த நூல்களுள், சிறந்தவை. பெளத்த சங்கத்தோர் கடவுளின் உண் மையை ஆராயாத ஈணுயன மதத்தினர் எனவும், புத்தரே போதிசத்துவராகும் இரட்சகர் என நம்பும் மகாயன மதத்தின ரெனவும் இரு பிரிவினராயினர். பிற் காலங் களில் பெளத்தர்கள் புத்தரைக் கடவுளெனத் தொழு தனர். வடவிந்தியாவில் மகாயனமும் இலங்கையில் ஈனு யணமும் பரம்பின. தமிழ் நாடுகளில் கி. பி. 2-ம் நூற் ரூரண்டு முதல் 5-ம் நூற்றண்டு ஈருரகப் புத்தம் நனி பரம்பி யிருந்தது. பெளத்தர்கள் தத்துவங்களை ஆராய்ந்து நால் வகையராயினர். அவர் தாம் வைபாடிகர், செளத்திராங் கிகர், மாத்தியமிகர், யோகசாரார் என்ப. அவர்கள் ஞாதிரு இல்லையெனவும் ஞேயம் இல்லை யெனவும் ஞாதிரு ஞேயங்கள் இல்லையெனவும் பல்வேறு சூனியவாதங்களை உரையா நின்றனர். மணிமேகலை என்னும் காவியம் பெளத்தப் பள்ளிகள் தமிழ் நாடெங்கும் நாட்டப்பட்டவை என்பதைக் காட்டா நிற்கும். தமிழர் ஆரிய வேதங்களே ஆப்தமெனக் கொள்ளாமையால் பெளத்தம் தமிழருடைய உள்ளத்தை வசீகரித்ததெனத் துணியலாம். பெளத்தர் கள் கன்மத்திலும் பிறவியிலும் நம்பினர். பிறவிக்கட8ல மீந்துதலே வாழ்க்கையின் மா நோக்கமென்பர். மனம் வாக்குக் காயம் என்னும் திரிகரண சுத்தியைப் பெறுதலே தத்துவ ஞான வாராய்ச்சியிலும் மேம்பாடுடைய தென்பர். திரிபிடகங்களுள் வினைய பிடகம் பிக்குக்களின் ஆசா

Page 76
18 ല.സെക് ഖണ്ഡg
ரத்தையும் தர்ம பிடகம் பெளத்தர்களுக்குச் சிறப்பாகும் ஒழுக்கங்களையும் அபிதர்மபிடகம் கன்மம் முதலிய தத்து வங்களையும் தேர்கின்றன. பிடகம் என்பது கூடை எனப் பொருள்படும்.
கொல்லாமை வெளவாமை பிறர்மனை விழையாமை பொய் சொல்லாமை புறங்கூருமை குற்றங்கூருர மை தூஷி யாமை கள்ளாமை பகையாமை அறியாமைவிலக்கல் என் னும் பத்துக் கற்பனைகள் நல்லொழுக்கத்தை விழைவோர் யாவர்க்கும் இன்றியமையாதவை எனப் புத்தர் வற்புறுத் தினர். மேற்கூறிய அறங்களோடு மூத்தோருக்கு மரியா தையும் வாய்மையும் யாவர்மாட்டும் அன்பும் இரக்கமும் சிறப்புடைய ஒழுக்கமெனச் சாற்றப்பட்டன. மனிதன் சுத்த நம்பிக்கையும் சுத்த எண்ணமும் வாய்மையும் நல் வினையும் நன்னெறியாகப் பொருள் தேடலும், நன் முயற்சியும் நன் மரியாதையும் தியானமும் உடையணுகி அவற்றிற் பயின்று நன்னெறி யடைவானக என்பதே புத்தருடைய பிரார்த்தன. இன் பங்களில் அளவுகடவாம லும் மெய்வருத்தத்தில் அளவுகடவாமலும் ஒழுகுதலே மனிதனின் மா நோக்கமாகுமென்பர். இத்தகைய ஒழுக் கத்தினையே கி. மு. நான்காம் நூற்ருரண்டிலே யவன வாசிரியர் அரிஸ்தாத்தில் தன் ஒழுக்க நூலின்கண் சம னராய்தல் அளவுகடவா தொழுகுதல் அடக்கமுடைமை என்னும் தலையங்கங்களில் விரித்து விளக்கினர்.
4-ம் பாடம்-அமண் சமயகுரவர் மாவீரர் கி. மு. 600-527
பெளத்தரிலும் பார்க்கச் சமணரே கொல்லாமை விரதத்தைத் தம் வாழ்க்கையாலும் போதனையாலும் சிறப் பித்துக் காட்டினர். பார்சவநாதர் கடுந் துறவற நிலையம்

அமண் சமயகுரவர் மாவீரர் 600-527 19
ஒன்றை நிறுவினர். அதன்வழித் தோன்றியதே அமண் சமயம். அமண் சமயத்தை முறைவகுத்து நாட்டியவர் மாவீரர். வைசாலை நகரிலே இலிச்சாவியர் குலத்திலே அரச குடும்புத்திலே மாவீரர் அவதரித்தார். அவர் பார்சவ நாதருடைய நிலையத்திலிருந்து தத்துவங்களைத் தேர்ந்து தன் நாற்பதாம் வயசிலே சைன சங்கத்தை நாட்டினர். அவர் சமண் சமயமாகிய ஆருகத சமயத்தைப் பரப்புவான் தொடங்கி மகத நாட்டில் போதித்திருந்தனர். மகதத்தில் மாத்திரமன்றி அங்கத்திலும் விதேயத்திலும் மாவீரர் உப தேசம் செய்தனர். அவர் பாவா என்னும் ஊரிலே தன் இறுதிக்காலத்தைக் கழித்தனர். அவர் இம்மை வாழ் வைத் துறந்த காலத்தில் 14,000 சமணர் இருந்தனர் என்ப. மாவீரருடைய தாயார் மகத திேயத்து அரச குடும் பத்தினராதலின், மாவீரர் மகதத்தில் நன்கு ஆதரிக்கப் பட்டனர். சமணர் மனிதன் நல்வினை தீவினை இரண்டும் செய்யும் இயல்பினன் என்பதை நன்கு உணர்ந்தனர். பெளத்தர்களைப் போல் புாைன் மறுத்தலையும் கொல் லாமையையும் நல்லொழுக்கத்திற்கு இன்றியமையாதவை என வற்புறுத்தினர். ஆனல் சமணர் மெய்வருத்தலிலும் ஐம்புலவின் பங்களைக் கடிந்து புலன்களை அடக்குதலிலும் உடையின்றியும் உணவின்றியும் துன்புறுதலிலும் இன் பம் விழைந்தனர். சைனர் பரமான்மா இல்லையெனவும் ஒவ்வொரு உடம்பிலும் ஒவ்வொரு சீவான்மா உண்டென வும் நம்பினர். சைனருடைய இக் கொள்கை மேனட்டுத் தக்துவ ஞானி "லீபினிச்சு" என்பவருடைய கொள்கை யோகி ஒருபுடை ஒப்புடையது. சைனர் மிருகங்களும் தாவரங்களும் ஆன்மாக்கள் உடையவை என நம்பினர். உலோகங்களும் வளியும் தீயும் உயிருடையவை என எண் ணினர். பூரண நிலை யடையும் சீவான்மா பரமான்மா வாகும். அரசனுயினும் சரி குடிமகனயினும் சரி யாதொன் றையும் கொல்லக்கூடாது. ஒவ்வொருவரும் தத்தம் கடமை யைச் செய்தலே சன்மார்க்கம். தீவினையாளரைத் தண்

Page 77
120 உலக வரலாறு
டித்தல் அரசதர்மம் என்பது வற்புறுத்தப்பட்டது. சம னர் புத்தரைப்போல் சாதி வேற்றுமை காட்டலைக் கண் டித்தனர். சமணர் வெள்ளாடை அணியும் சுவேதம் பர ரெனவும் ஆட்ையணியாத் திகம்பரரெனவும் இரு பிரிவின ராயினர். சமணர் உண்ணு விரதம் இருந்து உயிர் நீத்தல் தர்மம் என எண்ணினர். இக் கொள்கையைப் பெளத்தர் மிகவும் கண்டித்தனர். சமண் சமயம் இந்து நாடெங்கும் பரம்பியது. தமிழ்நாட்டில் சமணர் கி. பி. 9-ம் நூற்ருரண்டு வரையும் ஆதரவு பெற்றனர்.
சமண் சமயத்தைப்பற்றிச் சீவக சிங் தா மணி யில் வாசிக்கலாம். சமணர்களையும் பெளத்தர்களையும் அழுக்கு நிறைந்தவரெனத் தேவாரங்கள் நனிகண்டிக்கின்றன. அவை நாத்திகமதங்களாக லின்; சைவசமயகுரவரால் கண் டிக்கப்பட்டன. பக்தி மார்க்கத்தை நாட்டிய நாயன்மார்ச ளும் சமணசமயத்தைத் தலையெடுக்காவண்ணம் பெரு முயற்சி செய்தனர். சமணமும் சைவமும் தமிழ் நாட்டில் பல நூற்ருரண்டுகளாகப் போர்புரிந்தனவெனலாம். தமிழர் பலர் சமண சமயத்தைத் தழுவி அருகனை வழிபட்டனர். தமிழ்ச் சமணர் இலக்கிய விலக்கணங்களை எழுதித் தமிழ் மொழியை வளர்த்தனர். சமணர் நாடகக் கலையை ஆத ரிக்கவில்லை யெனவும் நாடகம் பார்ப்பதால் ஒழுக்கம் குன்றுமெனப் போதித்து, நாடகத் தமிழைக் குன்றச் செய்தனரெனவும் கருதப்படுகிறது. ஆசீவகப் பள்ளிகள் இந்து தேயம் எங்குந் தாபிக்கப்பட்டன. சமண சமய குரு மார் பெரும்பாலும் தமியராகக் குன்றுகளில் வசித்தனர். கன்னட நாட்டில் சிரவண வேற்கொலையிலே சமண தீர்த் தங்கரர் பலர் இருந்தனர். ஆங்குள்ள அமணருடைய சிறந்த கோயில்களுள் பார்சவ நாதருடைய கோயில் சிறந் தது. சிரவணவேற்கொலையில் அமணருடைய தீர்த்தங்கரர் இருபத்து நால்வரின் கற்சிலைகள் மிக அழகாக எழுதப்பட் டிருக்கின்றன.

அமண் சமயகுரவர் மாவீரர் 600-527 121
5586 sir dß. (p. 500—30O
சிசு நாகர் குலத்தோர் பதின்மர் மகத நாட்டில் ஆண்டனர். அவர்களுள் நந்திவர்த்தனன் மகாநந்தி என் னும் இருவேந்தர் 83 வருடங்கள் செங்கோலோச்சினர். பின்பு, மகாபதுமனும் அவன் குமாரர் எண்மரும் அரசு கட்டிலேறினர். அவர்கள் நூருரண்டு அரசு புரிந்தனர். அவர் ஆண்டகாலம் கி. மு. ஐந்தாம் நூற்ருரண்டாகும். கடைசியாக ஆண்ட நந்தியைச் சந்திரகுப்த மோரியன் கொன்றன். நந்தியைக் கொல்லும்படி குப்தனுடைய அமைச்சன் விஷ்ணுகுப்தன் ஏவினன். விஷ்ணுகுப்த னைச் சாணக்கியரெனவும் கெளத்திலிய ரெனவும் அழைத் தல் உண்டு. குப்தர் கொன்ற நந்தி பார்ப்பாரை வெறுத் தனனெனவும் கஷத்திரியன் அல்லனெனவும் பிராமணர் கூறுகின்றனராகலின் அவன் பெளத்தரையேனும் சமண ரையேனும் ஆதரித்தவனுதல் கூடும். நந்திகள் பெரிய ஆழிவேந்தராய் இருந்து செங்கோலோச்சி இந்து சம யத்தை வளர்த்ததுமன்றிப் பெளத்தம் சமணம் என்னும் மதங்களையும் புரந்தனர். நந்திகள் யாகஞ் செய்தலையும் உயிர்க்கொலை செய்தலையும் கிரியை செய்வதில் நேரங் கழித்தலையும் கண்டித்திருத்தல் கூடும். குப்தன் கொன்ற நந்தி 20,000 புரவிகளும் 2,00,000 காலாட்களும் 2000 தேர்களும் 3000 யானைகளும் வைத்திருந்தனர் எனக் கிரேக்கர் உரைத்தனர். இந் நந்திகள் பஞ்ச பகாரியி லுள்ள தூபிகளைக் கட்டுவித்தனர் என்ப. கடை நந்தி கி. மு. 322-ல் இராச்சிய பரிபாலனஞ் செய்தனன். கரைவேலைக் கல்வெட்டால் நந்திகள் கி. மு. நாலாம் ஐந்தாம் நூற்ருரண்டுகளில் நேமியுருட்டினரெனத் தெரி கிறது. நந்திகள் கலைகளைக் காத்தோம்பினர் என அர்த்த சாஸ்திரம் உரைக்கின்றது. அBந்த ஆண்டுக் கணக்கு இந் நந்திகளின் பின்பு வழங்கியதாதல் கூடும்.
6

Page 78
122 உலக வரலாறு
5-ம் பாடம்-கிரேக்கர் வருகை கி. மு. 327
---g3Sasso---
கடைநந்தி மகத நாட்டை ஆண்டகாலத்தில் கிரேக்க நேமிவேந்தன் அலைச்சந்தர் பார்சியாவின் மீது படை யெடுத்துவந்து இந்து நாட்டிலும் பொருதனன். இந்தியச் சரித்திரகாரர் ஒருவரும் கிரேக்கர் படையெடுப்பைப் பொருட்படுத்தவில்லை. கிரேக்கர் தம் வரலாறு எழுதாது விட்டிருந்தால் கிரேக்கர் இந்து தேயத்தினுள் புகுந்தனர் என்பதே தெரியாமல் இருக்கும். சிக்காந்தர் என்று சொல் லப்படும் அலைச்சாந்தர் இந்தியாவின் செல்வத்தைக் கேள் விப்பட்டு இந்துக்குஷ் மலையை கி. மு. 327-ம் ஆண்டு வைகாசியில் கடந்தனர். வருகின்ற வழியில் எதிர்த் தோரை எல்லாம் இரக்கமின்றிக் கொன்று 326-ல் இந்து நதியை அணுகினர். இந்து நதியில் ஒடங்களை நிறுத்திப் பாலம் அமைத்து நதியை ஒகிந்து என்னும் இடத்தில் கடந்தனர். அக்காலத்தில் பாஞ்சாலைகாட்டுத் தலைநகரா கிய தக்சிலையில் ஆப்பி என்னும் அரசன் செங்கோல் செலுத்திஇருந்தான். ஆம்பி அயலாரோடு பகைத்திருந் தான். ஆகையால் அவன் அலைச்சாங் தரைவரவேற்று 3000 மாடுகளும் 10,000 ஆடுகளும் கொடுத்தான். தக்சிலையில் வசித்த குடிகள் ஆரியர். அவர்கள் பிராமணமதத்தினராக லால் ஆடுமாடுகளைப் பலியிட்டனர். பெளத்த சாதகர் கதை களால் தக்சிலை கல்விக்கு உறைவிடமாக இருந்ததெனத் தெரிகிறது. அந்நகரில் கலைபயில் கழகங்கள் பல இருந் தன. பதினெண் கலைகளும் வேதங்களும் அவண் வளர்ந் தனவெனத் துணியப்படும். நகரைச் சிறிது காலத்துக்கு முன் அகழ்ந்து பார்த்தோர் அது 12 மைல் அகல நீள முடையதா யிருந்திருத்தல் வேண்டுமென்றனர். அலைச் சாந்தரோடு வந்த அரிஸ்திபூலஸ் இந்தியாவைப்பற்றிச் சில குறிப்புக்கள் எழுதினன், அவற்றினைப் படித்த ஸ்தி ராபோ என்னும் ஆசிரியன் இந்தியருடைய வழக்கங்கள்

கிரேக்கர் வருகை 327 123
நூதனமானவை என எழுதினன். நல்கூர்ந்தோர் தம் புத்திரிகளே விவாகஞ்செய்து கொடுக்கும் இயல்பில்லாமல் கடைவீதியில் விற்றனராம். கடைவீதியில் முழவுதொட் டும் சங்கு ஊதியும் சனங்களைக் கூவிக் கன்னிகளை விற்ற னர். கன்ன்ரி ஒருத்தியைக் கொள்ள விரும்புவோன் பிற் பக்கத்தைப் பார்த்து விருப்பங்கொண்டால் ஆடையை நீக் கித் தோள்களையும் பார்க்கலாம். இங்ஙனம் கன்னி ஒருத் தியைத் தெரிந்தவன் முலைவிலை பேசிய பின் விரும்பிய பெண்ணைக் கூட்டிச்செல்வன். பிறிதோர் அநாகரிகமான வழக்கமும் குறிப்பிடப்பட்டது. பிணங்களைப் பறவை கட்கு இரையாம்படி வெளியில் வீசி விடுதல் வழக்கமாம். ஆடவர் பெண்டிர் பலரை மணமுடித்தனரெனவும், பெண் டிர் சிலர் கொழுநர் இறந்துழித்தீப்பாய்ந்தனர் எனவும் அறிகின்ருேரம். இது கிற்க
அலைச்சாந்தர் பூரு என்னும் வேங் கனேடு அமர் செய் தனர். வேந்தன் பூரு ஆறரை அடி உயரமெனவும் அவ னுடைய வீரரும் மிக உயர்ந்த உருவினரெனவும் யானைப் படையைக் கண்டு கிறேக்க புரவிப் படைகள் அஞ்சின எனவும் கிரேக்கர் கூறுப. அலைச் சாந்தர் ஐடாஸ்பிஸ் என்னும் நதியைக் கடந்து பூருவின் படையைக் காரிக் களத்திற் சந்தித்தான். பூரு 30,000 காற்படையோடும் 4,000 குதிரைப் படையோடும் 300 தேர்களோடும் 200 யானைகளோடும் அணிவகுத்து நின்றன். தொடக்கத்தில் பூரு வென்றபோதிலும், இடையில் வேழங்கள் அங்குசத் திற்கு அடங்காமற் குழப்ப, படை அணிகுலைந்து தோல்வி யடைந்தது. 12000 இந்துக்கள் மாண்டனரெனவும் 7000 இந்துக்கள் சிறைப்பட்டனரெனவும் கிரேக்கர் எழுதினர். இது நம்பத்தக்கதன்று. பூரு ஒன்பதிடத்தில் புண்பட்ட போதிலும் போரை விடாது தொடர்ந்தான். அலைச் சாங் தர் பூருவோடு நட்புப்பூண்டார். கிரேக்கர் இந்து வீரரை அஞ்சி இந்துக்களோடு போர்புரிய மறுத்தனராக, அலைச் சாந்தர் கடற்கரை மார்க்கம் பார்சியாவுக்குத் திரும்பினர்.

Page 79
124 உலக வரலாறு
அலைச்சாந்தர் 2000 கப்பல்கட்டி இந்துநதிவழி 12,000 படை வீரரோடு சென்று சிபிபுரத்தை நண்ணி மழவரை வென்று 500 தேர்களும் 1000 பரிசங்களும் 100 வெண் காசும், பருத்தியாடைகளும், முதலைத்தோல்களும், ஆமை யோடுகளும் பெற்றனர். இந்தியர் வேங்கைகளும் சிங்கங் களும் அளித்தனராம். அலைச்சாந்தர் இந்துநதி முகத் துவாரத்தில் பாதாளம் என்னும் நகரில் கின்று கியார்க் கஸ் என்பானைக் கப்பல்களோடு கடல்மார்க்கமாகப் பார்சி யாவை அடையும்படி ஏவியபின், படையோடு தரைமார்க் கம் பார்சியாவுக்குப் புலம் பெயர்ந்தான்.
பிறசாதியாராகிய கிரேக்கரோடு இந்துக்கள் பொருத போதிலும், அரசியலறிவும் அநுபவமும் பெற்றிலர். இந்தி யர் தம் குறைகளை உண ர வில் லை. போர் முறையை யேனும் அரசியல் முறையையேனும் இந்துக்கள் மாற்ற வில்லை. இனி பெளத்த சிலைகள் கிரேக்க சிற்பமுறையைத் தழுவியே எழுதப்பட்டன என மேனட்டார் மொழிகின்ற னர். அக்கூற்று ஆராயற்பாலது. அது உண்மையாயினும், அலேச்சாந்தர் படையெடுத்ததனுற்ருரன் அந் நன்மை விஜளந்ததெனக் கூறுதல் பொருந்தாது. என்னை அலைச் சாந்தர் படையெடுக்கு முன்னரே யவனர் இந்து நாடுகள் பலவற்றில் இறங்கி வணிகஞ் செய்தனரெனத் துணியப் படுகிறதல்லவா? அலைச்சாந்தரின் வருகையின் பின்தான் யவனரும் இந்துக்களும் ஒருவரோடு ஒருவர் கலந்து, ஒரு வர் நாகரிகத்தையும் கலைகளையும் ஒருவர் பயின்றனர் என்னும் மேனுட்டாசிரியர் கூற்றுப் பொருந்தாக் கூற் றென விடுக, பெளத்தமும் வைதிகமும் யவன மதத்தைச் சீர்திருத்தியதென மேன்ட்டார் மொழிப. இது நிற்க,
அலைச்சாந்தர் படையெடுத்த காலத்தில் பாஞ்சாலை யில் ஏழு அரசுகள் இருந்தன. அவற்றுள் சில குடியரசு கள். மழவநாடு குடியரசு முறையைத் தழுவிய நாடுகளுள் ஒன்று. இவ்வேழு அரசுகளும் ஒன்ருேரடொன்று இ கலா

கெளதமபுத்தர் 623-543 125
கவே இருந்தன. இந்திய வரலாறுகளை இந்துக்கள் எழுதாமையால் இந்துதேச நிகழ்ச்சிகளை ஒருவரும் விரித்துரைக்கவில்லை. கிரேக்கர் எழுதிய குறிப்புக்க ளாலும் கெளத்திலியர் அர்த்த சாஸ்திரத்தில் எழுதிய குறிப்புக்களாலும் இந்தியரும் கிரேக்கரும் அக்காலத்தில் பண்ட மாற்றுச் செய்தனர் எனப் புலப்படுகிறது.
கி. மு. 4-ம் நூற்றுண்டு வணிகம் கி. மு. 4-ம் நூற்ருரண்டிலே தென்னிந்தியர் வடவிந் தியரோடு வணிகஞ் செய்தனர். கீழைத் தேயத்தோரும் வடவிந்தியரோடு வணிகம் நடாத்தினர். அங்கம் கலிங் கம் காருடம் என்னும் நாடுகளிலிருந்து வடவிந்தியாவுக் குக் கொண்டு வரப்பட்ட யானைகளே திறமானவை. கடைத் தரமான யானைகள் கதியவார் குசரம் என்னும் தேயங்களி லிருந்து வந்து விலையாகின. தமிழரே ஏனைய இந்துக்களிலும் பார்க்க வணிகத்தால் பொருளிட்டினர் எனக் கெளத்திலியர் மொழிந்தனர். வடவிந்தியர் ஏற்று மதி செய்த பண்டங்கள் கம்பளங்களும் தோல்களும் குதிரைகளுமே, தென்னிந்தியர் ஏற்றுமதி செய்த பண் டங்கள் பொன், முத்து, வைரம், இரத்தினம், பவளம், சங்கு, மிளகு என்பன. பட்டு மதுரையிலிருந்தும் கொங் கத்திலிருந்தும் காசியிலிருந்தும் சீனத்திலிருந்தும் ஏற்று மதியானது. இந்தியத் துறைகளில் அந்நியர் இறங்கு தற்கும் நீங்குதற்கும் அரசாங்கத்தாரிடம் உத்தரவு பெற வேண்டும், அக்கால இந்து காணகங்கள் சதுரமானவை; பெருந்தொகை வெள்ளி நாணகங்களும் பொன் நாண கங்களும் அச்சிடப்பட்டன. நாணகங்கள் மீன், புலி, யானை, சூரியன் என்னும் இலச்சினை உடையன. அந் நாணகங்களுள் மீன், புலி என்னும் இலச்சினை உடை யவை தமிழ் நாட்டு நாணகங்கள். இது நிற்க. r
பாஞ்சால தேயத்தோர் இந்திரனையும் வடமதுரையி லிருந்தோர் பலராமரையும் கங்கையையும் வணங்கினர்

Page 80
126 உலக வரலாறு
எனவும், பார்ப்பார் சமயக் கிரியைகளே நடாத்தியதுமன்றி அமைச்சராய் அமர்ந்து அரசியலையும் நடாத்தினரென வும், பார்ப்பார் ஊன் தின்றனர் எனவும், அரசினர் மரங் கள் வணக்கத்துக்குரியவை யாக லின், அவற்றினை காத் தோம்பினர் எனவும் சரித்திர வாசிரியர் ஸ்திராபோ எழுதினர்.
6-ம் பாடம்-மோரியர்
சந்திர குப்தன் நந்தி குலத்தினன் என்ப. அவன் மகதத்திலிருந்து நாடுகடத்தப் பட்டான். அவன் அரசியல் ஞானியாம் கெளத்திலியரிடம் புத்திகேட்டனன். அவன் அஆலச்சாந்தர் ஏகியபின் இருந்த கிரேக்க வேந்தரை ஆரியானவினின்றும் கலைத்து நந்தியைக் கொன்று பாடலி புரத்தில் அரசாண்டான். பார்சிய நாட்டை ஆண் டிருந்த கிரேக்க மன்னன் செலுக்கியஸ் கிற்கேற்றர் படை யெடுத்து இந்து நாட்டினுள் புகுந்து தோல்வி யடைந்தான். அவன் கபுல் காந்தாரம் என்னும் நாடுகளே இழந்தான். இந் நாடுகளைச் சந்திரகுப்தன் பறித்த பின் செலுக்கியனேடு நட்பாயிருந்தனன். செலுக்கியஸ் பாடலி புரத்தில் தூதனய் அமரும்படி மகாஸ்தனிஸ் என்பவனை அனுப்பினன். மகாஸ் தனிஸ் இந்திய பூமி சாஸ்திரத்தை யும் அரசியலையும் வணிகத்தையும் பற்றி எழுதினன். அவன் எழுதிய புத்தகங்கள் அழிவெய்திய போதிலும் அவற்றைப் பிறர் படித்து எழுதிய நூல்கள் இன்றும் கிடைக்கின்றன.
சந்திரகுப்தன் கெளத்திலியரின் துணையுடன் 24 ஆண்டுகள் நேமியுருட்டினன். அவன் ஆண்டதேசம் கங்கை தொடக்கம் பார்சியாவரையும் பரந்து கிடக்கும் தேசமாகும். ஆரியானவும் பாஞ்சாலையும் கதியவாரும் மகதமும் குப்தருடைய ஆட்சியை ஏற்றவை யாக லின்,

மோரியர் 2
நருமதை யாற்றுக்கு வடபால் உள்ள இந்து தேயங்கள் எல்லாம் குப்தருடைய ஆட்சிக்குட்பட்டன எனலாம். உரோம சரித்திரவாசிரியன் யஸ்த்தின் சந்திரகுப்தன் கிரேக்கரைக் கலைத்த பின் கொடுங்கோலோச்சினன் என அறியாது கூறினன். கி. மு. 298-ல் குப்தருடைய மகன் பிந்து சாரன் ஆழிவேந்த னயினன். தரநாதன் என்னும் தீபத்து நாட்டு வரலாற்ரு சிரியன் கெளத்திலியர் பிந்து சாரனுடைய அமைச்சனுகவும் அரசியலை நடாத்தினன் என உரைத்தனன்.
சந்திர குப்தன் சமண சமயத்தை ஆதரித்தனன். பத்திரபாகு என்னும் சமண முனிவன் பன்னிராண்டு வற்கடம் நிகழுமென அரசனுக்கு மொழிந்தான் எனவும், வற்கடம் தொடங்க, 12,000 சமணரக்ை கூட்டிக்கொண்டு தென்னடுபுக்கான் எனவும், சந்திர குப்தன் அரசு துறந்து முனிவரோடு சென்று கன்னட நாட்டில் சரவண வேற் கொலை என்னும் வெண் சமணருடைய இருக்கையில் தங்கி யிருந்தனனெனவும், பத்திரபாகு ஒடுங்கியபின், குப்தர் 12 ஆண்டு துறவியாக வாழ்ந்து உண்ணுவிரதம் இருந்து ஒடுங்கினரெனவும் சமணர் சாற்றுகின்றனர்.
பிந்துசாரன் பகைவரைக் கெடுத்தனன் எனவும், அந்தியோக்கஸ் சோற்றர் என்னும் கிரேக்க மன்னனேடு நட்பாயிருந்து டிமாக்கஸ்" என்பவனைத் தன்னவையில் தூதனுக வரவேற்ருரனெனவும் அறியலாகும். எகிப்திய கிரேக்க மன்னன் தொலைமி பிலடெல்பஸ் என்பவன் பிந்து சாரனுக்குத் தூது அனுப்பினனம்.
மோரியருடைய அரசியல்
கி. மு. 5-ம் நூற்ருரண்டு தொடக்கம் கி. பி. 5-ம் நூற் ருரண்டுவரையும் நிலைத்திருந்த செங்கோலின் இயல்பை இயம்புவாம். மோரிய ஆழிவேந்தரீன் ஆற்றல், படை மாட்சி, அமைச்சு, உண்ணுட்டரசியல், அரசவை யொழுக்

Page 81
128 உலக் வரலாறு
கம், தண்டரீதி, வணிகம், சமயம் என்பவற்றை எல்லாம் சந்திரகுப்த மோரியனுடைய அமைச்சனுகிய கெளத்திலி யர் தாம் எழுதிய அர்த்தசாஸ்திரத்தின் கண் ஆராய்ந் தனர். அர்த்த சாஸ்திரக் கூற்றுக்கள் யவனருடைய குறிப்புக்களாலும் அசோகருடைய கல்வெட்டுக்களாலும் வலியுறுத்தப்படுகின்றன. மோரியர் அரசியலைப் பல பகுதியாக வகுத்து ஒவ்வொரு பகுதிக்கும் அமைச்சரை நியமித்து அவர்மூலம் அரசியலை ஒழுங்காக நடாத்தினர். மோரியர் தம் அரசைக் காத்தற்குப் பெரிய நிலைப்படை வைத்திருந்தனர். படைவீரர் அரசாங்கத்தாரிடம் கூலி பெற்றனர். அப்படையின் வலி ஒப்பில்லாதது. பிற் காலத்தில் ஆண்ட முகமதிய ஆழிவேந்தன் அக்பாரின் படையே அதற்கு நிகராகாது. மோரியர் ஒற்றரை நிய மித்து அவர் மூலம் எல்லைகளில் நிகழும் செய்திகளை அறிந்தனர்.
Lur Liù! Jü.
மோரியருடைய தலைநகர் பாடலிபுரம். அது ஒன்பது மைல் அகல நீளமுடையதாய் கங்கைக்கரையில் அமைக்கப் பெற்றது. அது மதிலாலும் மரத் தூண்களாலும் அகழியா லும் காக்கப்பட்டது. நகர் 64 வாயில்களும் 570 கோபு ரங்களும் உடையதெனின், அது எவ்வளவு பெரியதென் பதை உற்று நோக்கி உணர்க. நகரஞாயிலைச் சுற்றித் தோண்டப்பட்ட அகழி சோணுற்று நீரால் கிறைக்கப்பட் நகரில் அபாரியத்தர் சயத்தர் என்னும் சைன • اقے தேவர்கள் கோயில் பெற்றனர்; இந்து தேவராகிய சிவ னும் குபேரனும் அசுவினிகளும் கோட்டம் பெற்றனர்; பெளத்த சைத்தியங்களும் பல கட்டப்பட்டன.
அரசனுடைய மாளிகை மரத்தால் கட்டப்பட்டது. பொற்கொடிகளும் வெள்ளிப் பறவைகளும் மாளிகைத் தூண்களே அலங்கரித்தன. நகரச் சோலைகளில் மீன் வளர்க்கும் கேணிகளும் கட்டப்பட்டன. மாளிகை பார்

மோரியர் 129
சிய தலைநகரான சூசா நகரத்து மாளிகையிலும் அழகாய தெனக் கிரேக்கர் மதித்தனர். அரசர் முடிபெறுங்காலை அரண்மனையில் இருந்து எண்ணெய் வைக்கப்பெற்று அபி டேகக் கிரியை செய்யப்பெற்றனர். எண்ணெய் வைத்தல் l u mr if6Rutu வழக்கமாதல் கூடுமென்ப,
மேரியர் தனிக்கோல்.
மோரிய வேந்தர் தனிக்கோலராகவே நேமியுருட்டின ரெனலாம். வேங் கருடைய ஆஞ்ஞையை ஒருவராலும் எதிர்க்க முடியாது. வேந்தர் பிராமணரை மரியாதை செய்தபோதிலும் அரசியற் காரியங்களில் பிராமணரு டைய சொல்லைப் பொருட்படுத் தாது விட்டனர். பிராம ணர் கொலை பாவம் செய்தாலும் கொலைத் தண்டனைக்குத் தப்புதல் கூடுமென அர்த்த சாஸ்திரம் கூரு நிற்கும். பிரா மணரைக் கொல்லாமல் நாடு கடத்துதல் வழக்கம். அரச துரோகம் செய்வோர் பிராமணராயினும் நீரில் விழுத்திக் கொல்லப்படுவர்.
வேந்தன் தான் விரும்பிய அமைச்சர்களைத் தெரிய லாம். அரசாங்கத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் அமைச்சர் நால்வரே நியமிக்கப்படுவர். வேந்தனுக்கு அமைச்சர் புத்தி யுரைப்பினும் வேந்தருடைய ஏ வலை யே அமைச்சர் செய்யவேண்டும். அமைச்சர் புரோகிதர் படைத்தலைவர் ஒற்றர் துரதுவர் என்னும் ஐம்பெருங் குழுவினரோடு ஆராய்ந்தே அரசியல் நாடாத்தப் பெற்றது.
9 FSDS).
வேந்தருடைய அரசவை மாளிகையில் மூன்று அடி அகல நீளமான பொற்பாத்திரங்கள் இருந்தன. வேந்தர் பொற்பல்லக்கையும் வேழத்தையும் ஊர்திகளாகக் கொண் டனர். உலாவும்பொழுது நுண்ணிய மசிலின் ஆடைகளை அணிதல் வழக்கம். சில சமயங்களில் பொன்னடைகளும் செங்கிற ஆடைகளும் அணிதல் உண்டு. சந்திரகுப்தனு

Page 82
130 உலக வரலாறு
டைய காலத்தில் பெண்கள் மெய்காப்பாளராயும் வில்வீர ராயும் சேவித்தனர். முனிவர்கள் சூதாடலையும் வேட்டை யாடலையும் கண்டித்தபோதிலும், வேந்தர் வேட்டையாடு தலில் மிகப் பிரியமுடையவராயிருந்தனர். வேந்தருடைய காடுகளில் குடிகள் வேட்டையாடினல் கொல்லப்படுவர். சனங்கள்ை இன்புறுவித்தற்கு வாட்போர்க் காட்சியும் விலங்கு வேட்டையும் காட்டப்பட்டன. தேர்ப்பந்தயங்க ளும் நடைபெற்றன. தேர்களில் குதிரைகளையும் மாடு களையும் ஒருங்கு பூட்டி ஒட்டுதலுண்டு. தேரோடும் வீதி 18,000 முழத்திற்குக் குறையாத சாம். சணிகையர் பலர் அரசவையில் சேவித்தனர். அவர்கள் பூமாலை தொடுப் போ ராயும் நடனம் செய்வோராயும் பணியாற்றினர். குற்றேவல் செய்வோர் சிலர் நீரேந்தி நின்றனர்; சிலர் குடை பிடித்தனர்; சிலர் ஆடை ஏந்தி கின்றனர்; சிலர் விரை ஏந்தி நின்றனர்; சிலர் விசிறியால் விசுக்கி நின்ற னர். அரசவையில் பணியாற்றும் பெண்கள் அரசன் ஊர்வலம் செய்யும்பொழுது கூடிச் சென்றனர்.
5)
மோரியர் ஆட்சிபுரிந்த காலத்தில் காற்படை தேர்ப் படை புரவிப்படை வேழப்படை என நால்வகைச் சேனை களும் நனி பயிற்றப்பட்டன. அரண்களை உடைத் தற்கும் காற்படைகளைக் கலைத் தற்கும் குதிரைப்படைகளை வெருட் டுதற்கும் யானைப்படைகள் தேவையாயின. வில்வீரர் தேரிலிருந்து பகழிகளை எய்தனர். கி. பி. ஏழாம் நூற் ருண்டில் இந்தியாவில் யாத்திரை செய்த சீனன் ஈயன் சங் தேர்ப்படைகளைக் குறிப்பிடாமையால் தேர்ப்படை கள் பிற்காலங்களில் உபயோகப்படவில்லை எனக் கருதப் படும். சந்திரகுப்தன் 600,000 காற்படைகளும், 9000 யானைகளும், 30,000 புரவிகளும் நிலைப்படையாக வைத் திருந்தான். பன்ட வீரர் பத்தாகவும் நூருரகவும், ஆயிர மாகவும் கூட்டம் கூட்டமாக வகுக்கப்பட்டனர். அமைச்

Gunnfui m 31
சர் கூட்டம் ஒன்று படை சேர்த்தல் பயிற்றல் கூலி கொடுத்தல் முதலியவற்றைக் கவனித்ததென மகாஸ் தனிஸ் எழுதினர்; ஒவ்வொரு விஷயத்திற்கும் ஐவர் கூட் டங்கள் தெரியப்பட்டன. கப்பற்படை தொகுத் தற்கு ஓர் ஐவர் கூட்டம் இருந்தது. ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத் திற்குப் படையனுப்புதலையும் உணவளித்தலையும் ஓர் ஐவர் கூட்டமே கவனித்தது. குதிரைப்டடை, தேர்ப் படை, காலாட்படை, யானைப்படை என்னும் நான் கினை யும் தொகுத்துப் பயிற்றுதற்கு நாலு ஐவர் சபைகள் கிய மிக்கப்பட்டன. இங்ஙனம் முப்பது அமைச்சர்கொண்ட சபை, படை சேர்த்தல் பயிற்றல் முதலியவற்றினைச் செய்தது.
யானையில் மூன்று வில்வீரர் ஏறினர்; தேரில் இரு குதிரை பூட்டியும் நாலு குதிரை பூட்டியும் கடாவினர். ஒரு தேரில் வில்வீரர் இருவருக்குமாத்திரம் இடமுண்டு. காற் படை வீரர் வாள் ஈட்டிகொண்டு பொருதனர். மெய்காக் கும் பரிசங்களும் உபயோகிக்கப்பட்டன. குதிரைகளும் எருதுகளும் கோவேறு கழுதைகளும் பாரம் இழுத்தன. புண்பட்ட வீரரை எடுத்துச்சென்று சிகிச்சை செய்தற்கு மருத்துவர் கூட்டம் ஒன்று நிறுவப்பட்டிருந்தது.
தண்டநீதி தீவினையாளர் நனி தண்டிக்கப்பட்டனர். களவு என் பதை இந்துதேயத்தில் தாம் கேள்விப்படவில்லையென கிரேக்கரும் சீனரும் எழுதினர். செங்கோல் செலுத்தப் பட்டமையாலும் நாடு செழித்திருந்தமையாலும் செல்வ மிகுந்தமையாலும் தருமம் மிகுந்தமையாலும் களவு கண் டிக்கப்பட்டமையாலும் ஒருவரும் களவு செய்திலர். சாணக் கியர் கள் வரை வருத்தும் முறை பதினெண் வகையின வென்பர். கள் வர் கை கால் ஒடிக்கப்படுவர். கள்வரைக் கொல்லுதலுமுண்டு, பார்ப்பார் களவு செய்தால் அவர் களைக் குறிசுட்டு விடுதலும் சுரங்கங்களில் வேலைசெய்ய

Page 83
132 உலக வரலாறு
விடுதலுமுண்டு. குற்றஞ்செய்யும் பார்ப்பாரை நாடு கடத் திலும் வழக்கம். கொலைசெய்வோரும் கன்னம் வைப் போரும் குளக்கட்டுடைப்போரும் கொலைத்தண்டனை பெறுவர். சிறையிலிடப்பட்டோரை வருத்தும் காவலரும் தண்டம் பெறுவர் இனி நாநூனியில் விழும் தேனைச் சுவை யாதார் இல்லாமைபோல் கைக்கூ லிபெற வசதியுள்ள சம யங்களிற் கைக்கூலிபெருரத உத்தியோகத்தர் இல்லை யெனச் சாணக்கியர் பகர்ந்தனர். கடலில் ஓடும் மீன் நீர் பருகுகின்றதோ இல்லையோ எனக் காணமுடியாதவாறு போல் உத்தியோகத்தர் பொருள் வெளவுத8லக் காணமுடி யாதெனச் சாணக்கியர் விளம்பினர். பொய்க்கணக்குப் பதிதல் கைக் கூலிபெறுதல் என்றற்ருெரடக்கத்து நாற்பது வகையாகப் பொருள் வெளவினரென அர்த்த சாஸ்திரம் நவில்கின்றது. மறைக்கடிதங்கள் மூலமும் தீவினை செய் வோரை அறிதல் வழக்கம்; தீவினைகள் வரைவின் மகளிர் மூலம் அறியப்பட்டன. தீவினையாளர் சான்று ஆராயப் பட்டபின் நனி தண்டிக்கப்பட்டனர்.
56560
தலைநகர் நான்கு வட்டாரமாகப் பிரிக்கப்பட்டு நான்கு காவற்றலைவரால் காக்கப்பட்டது. அக் காவற் றலைவர்க் குக்கீழ் பதிகாவலர்கள் பலர் சேவித்தனர். நாற்பது குடும் பங்களுக்கு ஒரு காவலனை நியமித்தல் வழக்கம். காவற் காரர் சனத்தொகை யெடுத்தல், குடிகளின் வருமானத் தைக் கணக்கிடுதல், சுகாதாரத்தைக் கவனித்தல், தீக் காவல் செய்தல், எனப்பலவேறு கடமை யுடையவரா யினர். ஐவர்சபை ஆறு நகர வீதிகளை அமைத்தல், சுங் கம் பெறுதல், விலையைக் கட்டுப்படுத்தல் முதலிய காரியங் களைக் கவனித்தன. கைத்தொழிலையும் தொழிலாளரின் கூலியையும் கவனித்தற்கு ஓர் ஐவர் சபையும், கவின் கலைகளையும் தொழிற் கலைகளையும் ஒம்புதற்கு ஒரு சபை யும், அங்கியர்களுக்கு உணவு அமளி மருந்து முதலியவை அளித்து ஓம்புதற்கு ஒரு சபையும், பிறப் பிறப்புப் பதி

மோரியர் 33
தற்கு ஒரு சபையும், அளவைக் கலன்களையும் கிறைகளை யும் பண்ட மாற்றுதலையும் முறைப்படி செய்கின்றனரோ எனத் தேர்தற்கு ஒரு சபையும், ஆயம் பெறுதற்கும் சுங் கம் பெறுதற்கும் பத்திலொரு கடமை பெறுதற்கும் ஒரு சபையும் என ஐவர் சபைகள் ஆறு நிறுவப்பட்டன. ஆழிவேந்தன் அசோகன் அங்காடிகள் ஆறுகள் நீர் வாய்க்கால்கள் தெருவீதிகள் வேட்டையாடல் விறகு வெட் டல் சுரங்கவேலை தச்சுவேலை என்பவற்றின் மேற்பார் வைக்கென அமைச்சர் நால்வர் கொண்ட காரிய நிருவாக சபைகளை நியமித்தனன். YA
குடி ஒவ்வொருவனும் நிலவுரிமை யுடையனய் இருக் தனன். கிலம் அரசனுக்கு உரியதன்று என்பது கொள்கை. அரசாங்கத்தார் கில வருமானத்தில் நாலி லொன்று பெறுதல் வழக்கம். பிற்காலத்தி லிருந்த முகமதிய வேந்தன் அக்பார் மூன்றி லொன்று பெற்றன னதலின், மோரியர் அதிகம் அரசிறை பெற்றுக் குடிகளை வருத்தவில்லை என்பது புலப்படும் என்னை வயல்களுக்கு நீர்ப்பாய்ச்சுதற்கு ஒரு சபையும் தெருவீதிகளை அளந்து மைல்கள் குறிக்கும் கற்களை நாட்டற்கு ஒரு சபையும் இருந்தவை என்ருரல் மோரியர் செங்கோல் செலுத்தினர் என்பதை மறுக்கவும் முடியுமோ? பெரியதோர் வீதி பாடலி புரத்திலிருந்து தக்க சிலைக்குச் சென்றதாம். பாடலிபுரத்து நகர வீதிகளே மிக அகன்றவை. மதுக் கடைகளின் மேற்பார்வைக்கென ஓர் உத்தியோகத்தன் நியமிக்கப்பட்டனன். விழாக்காலங்களில் மது வடித்தற்கு நாலுநாள் உத்தரவு கொடுக்கப்படும். நகர வீதிகளில் மதுபானஞ் செய்வோர் வெறியாடக்கூடாது. கடைகளில் நறுமணங்கமழும் வாசனைத் திரவியங்களும் பூக்களும் சொரியப் பட்டிருக்கும்; கொள்வோரை வரவேற்பதற்கு ஆசனங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இனி அக்காலத் தில் சாங்கியம், உலோகாயதம் யோகம் என்னும் தத்து வக்கலை ஒன்றும், சாமம் இருக்கு யசுர் என்னும் மூன்று

Page 84
34 உலக வரலாறு
வேதமாகிய கலை ஒன்றும், தண்டரீதியாகிய அர்த்த சாஸ் திரக்கலை ஒன்றும் என மூவகைக்கலைகளும் பயிலப்பட்டன. இங்ஙனம் இந்தக்களின் அரசியன்முறையை அர்த்தசாஸ் திரம் விரித்துரைக்கின்றது. அர்த்த சாஸ்திரம் உரைக்கும் அரசியன் முறை பயனற்றதெனப் பானகர் கண்டித் தனர். அம்முறைகளை நன்முறைகளெனக் காமந்த கர் புகழ்ந்தனர். இவ் வண்ணம் செங்கோலோச்சிய நற் குலத்து ஆழிவேந்தன் பிந்த சாரனுக்கு அருந்தவப் புதல்வனக அசோகன் பிறந்தான்.
7-ம் பாடம்-ஆழிவேந்தன் அசோகன் ஆட்சிக்காலம் கி. மு 273-232
அசோகவர்த்தனன் கி. மு. 273-ல் ஆழிவேந்தனகி 41 ஆண்டு செங்கோல் செலுத்தினன். தந்தை செங்கோ லோச்சிய காலத்தில் அசோகன் தக்க சிலையிலும் உச்சினியிலும் உபராசனுக இருந்தனன். அசோக னுடைய மூத்த சகோதரன் சுசிமன் முடி தனக்குரிய தெனக் கிளந்தானகலின், அசோகனுடைய அபிடேகம் உடனே கிறைவேறவில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு கி. மு. 269-ல் தான் அக்கிரியை நிறைவேறிற்று. அசோகன் பெளத்த மதத்தைத் தழுவுமுன் தீநெறியில் சென்ருரன் என்பது பெளத்தர் சிருட்டித்த கதையென ஒழிக. அசோகன் தன் சுற்றத்தாரையும் உடன் பிறந் தாரையும் நேசித்தான் என்பதற்கு ஐயமில்லை.
9 GJ. Sir 2D 5 Gir
அசோகன் எழுதிய கல்வெட்டுகள் போல் நீதியுரைக் கும் கல்வெட்டுக்கள் உலகில் வேறு கிடையா. அக்கல் வெட்டுக்களால் என்ன ஆண்டில் என்ன செய்தான் என்பது அங்கை நெல்லிக்கனிபோலத் துலங்குகின்றது.

ஆழிவேந்தன் அசோகன் ஆட்சிக்காலம் 273-232 135
அசோகனுடைய நாணயங்களில் அவர்பெயர் எழுதப் படவில்லை. அசோகன் கலிங்கரோடு பொருது கலிங்கத் தைத் தன் ஆட்சி நாடாக்கினன். அப்போரில் கலிங்கரை அஞருறுத்தியதை அசோகன் வயசு சென்ற காலத்தில் கினைந்து உள்ளம் உருகித் துன்புற்றனம். அசோகன் இளைஞனயிருந்த காலத்தில் வேட்டை யாடுதலிலும் ஊன் உண்பதிலும் கூத்துப் பார்த்தலிலும் களித்தான் எனப் பெளத்தர் கூறுப. அவன் இளமையில் இன்பம் விழைக் திருத்தல் கூடும். பின்பு கலிங்கருடைய துயரைக்கண்டு மனம் உருகி நன்னெறியடைதற்கு முயன்றனன். கற் பாறையில் எழுதப்பெற்ற 13-ம் உரை அசோகனுடைய துயரையும் புத்த மதத்தினருடைய உபதேசங் கேட்டுத் துயர் நீங்கியதையும் விரித்துரைக்கின்றது. கலிங்கப் போரில் 1000,000 கலிங்க வீரர் மாண்டனர்; 150,000 சிறையாயினர். பிற தேயங்களைக் கைப்பற்றுதல் வெற்றி யன்மெனவும் பிறர் மனசைக் கன் வயப்படுத்தலே புகழ் தற்குரிய தெனவும் அசோகன் சாற்றினன். அசோ கன் புத் த ம த த்  ைத த் தனது ஆட்சி நாடுக ளில் பரப்பியதுமன்றிப் புத்த மதத்தை உபதேசிக்கும் படி தமிழ் 5ாடுகளுக்கும் ஈழத்திற்கும் எகிப்து சிரியா என்னும் மேலைத் தேயங்களுக்கும் கடாரம் காழகம் சாவகம் என்னும் கீழைத் தேயங்களுக்கும் பிக்கு களே அனுப்பினன். அசோகன் தன் தேசாதிபதிகளைச் செங்கோல் செலுத்தும்படி கற்பித்தான். சொந்தப் பிள்ளைகளை எவ்வளவு அன்புடன் வளர்க்கிருேமோ அவ் வாறே குடிகளைக் காத்தோம்பல் வேந்தர்கடன் என் ரூரன். எல்லைப் புற ங் க ளி ல் வதியும் அயலோரின் 5ட்பை விரும்புதல் அவசியமென மொழிந்தனன். அர சாங்கத்தில் உத்தியோகத் தராய் அமர்வோர் வீண் பொழுது போக்கக் கூடாதெனக் கற்பித்தான்.
அசோகனுடைய கல்வெட்டுக்கள் பாண்டியர் சோழர் சேரர்களைப்பற்றியும் கொற்கையில் முத்துக்குளித்தலைப்

Page 85
36 உலக வரலாறு
Lu issuyth குறிப்பி டு கின் றன. 14 கல்வெட்டுக்களில் அசோகனுடைய உரைகளை வாசிக்கலாம். ஏழு தூண் கள் அரசனுல் எழுப்பப்பெற்றன. அவற்றிலும் சில உரைகள் எழுதப்பெற்றன. கலிங்க நாட்டில் இரண்டு உரைகள் உண்டு. அசோகன் வடமதுரையிலிருந்த உபகுப் தரிடம் உபதேசங் கேட்டான். ஒருமுறை தரை என்னும் நீர்வாள தேயத்திற்கு யாத்திரை செய்தான். அவ்வியாத் திரையின் ஞாபக சின்னமாக ஒரு தூண் கட்டுவித்தான். அவ்வியாத்திரை செய்தபின் மா மி ச போசனத்தை வெறுத்தான்; வேட்டையாடலைக் கண்டித்தான்; எருது களே வித்தடித்தல் பாதகமென விளம்பினுன்; உயிர் வாதொன்றையும் கொல்லக் கூடாதென உரைத்தான். இங்ங்ணம் நன்னெறிப்பட்டு அசோகன் செபதபஞ் செய்து தன் அரசைக் து ற ந் தா ன் எனப் பெளத்தர் கூறுப. அசோகன் துறவியானன் என்னும் கூற்று சான்று பெற்றிலது. தென் பூமியிலுள்ள கல்வெட்டால் வேந்தன் பெயர் அசோகன் எனத் தெளிவாகின்றது. தக்கண நாடும் அதனைச் சேர்ந்த தமிழ்நாடும் தவிர்க் த ஏனைய இந்து நாடுகள் எங்கும் அசோகனுடைய ஆணை சென்றது. கலிங்கம் வங்கம் அங்கம் மழவம் பாஞ்சாலை புருஷபுரம் காந்தாரம் ஆரியானு என்னும் நாடுகள் எல்லாம் அசோகனுடைய ஆட்சிக்குட்பட்டன. தர்மத்தை நாட்டற் குத் தர்மக் கணக்கர் என்னும் பிரசாரகர்களைப் பல நாடு களில் ஏற்படுத்தினன். பெற்ருர்க்குப் பிள்ளைகள் கீழ்ப் படிய வேண்டுமெனவும் வாய்மை கடைப்பிடித்தல் அவசிய மெனவும் குருவை வணங்குதல் அறத்தாறெனவும் சிவ காருண்யம் காட்டினுற்ருரன், பரகதியடையலா மெனவும் வேந்தருடைய ஓர் உரை விளம்புகின்றது. அசோகன் தன் குடிகளின் உடனலத்தையும் ஆன்ம லாபத்தையும் பேணினன்; யாத்திரீகர் ஆறுதற்கு மடங்கள் கட்டுவித் தான்; வழிதோறும் நிழல் மரங்கள் நாட்டுவித்தான்; தாகம் ஆறுதற்கு கூவல் தோண்டுவித்தான்; மக்களுக்

ஆழிவேந்தன் அசோகன் ஆட்சிக்காலம் 273-232 137
கன்றி மாக்களுக்கும் மருந்துச்சாலைகள் ஏற்படுத்துவித் தான்; உத்தியோகத்தர் ஊர்தோறுஞ் சென்று தர்மக் தைப் போதிக்க வேண்டுமெனக் கற்பித்தான். அசோகன் பெளத்தரைச் சாலப் புரந்தபோதிலும் ஏனைய மதத்தின ரைத் துன்புறுத்தினுன் அல்லன். ஆசீவகர்க்குக் கையுறை கொடுத்துக் காத்தோம்பினன். குடிகள் தேவையின்றி இன்புற்றிருந்தால் கோ இன்புறுதல் கூடுமென்பது அசோகனுடைய முழு5ம்பிக்கை. அசோகன் தானே நேர் முகமாக நீதிவிசாரணை செய்தல் உண்டு. “காசு என்குடி களின் சுகத்தைப் பேணினுற்றன் சுவர்க்கம் அடை வேன்" என அசோகனுடைய உரை ஒன்று கூரு நிற்கும். அசோகன் அர்த்தசாஸ்திரம் சாற்றும் அரசியன் முறை யைத் தழுவி அரசியலை நடத்தினன் என்ப. கான் உண வருந்தும் வேளையாயினும் சரி, ஆறியிருக்கும் சமயத்தி லாயினும் சரி, பூங்காவில் தன் காதலியுடன் உலாவும் போதாயினும் சரி, ஊர்தியில் ஊர்வலம் செல்லும் போதாயினும் சரி, குறைமுறை கேட்போர் வாயிலில் நின் ரூரல் தனக்கு உடனே அறிவிக்க வேண்டுமெனக் காவ லரைக் கற்பித்தான். தமது கருமத்திலும் குடிகளின் கருமத்தையே வேந்தர்முதல் கவனிக்க வேண்டுமென அசோகன் அறைந்தனன்.
கவின் கலைகள்
ஆழி வேந்தருடைய செங்கோல் தழைத் திருக்கும் காலம் கவின் கலைகளும் வித்தைகளும் வளர்த்தற்குரிய காலமாகும். மோரியருடைய காலம் பா வல்லோரையும் கலை வல்லோரையும் புரக்கும் புரவலருடைய காலமாகத் திகழ்ந்தது. இல்லமைத்தல் சிற்பம் சித்திரம் எழுதல் என் னும் வித்தைகள் அரசவையில் ஆதரவு பெற்றன. பார் சியருடைய வித்தை வல்லோரிலும் கலைஞரிலும் இந்தியக் கலைஞரும் வித்தை வல்லோரும் சிறந்தவர் எனக் கிரேக்கர் எழுதினர். மோரியருடைய சிற்பமும் சித்திரமும் பெரும் பாலும் மரத்தில் செய்யப்பட்டமையால், அழிவெய்தின.
8

Page 86
13S உலக் வரலாறு
பாழுர்களைத் தோண்டிப்பார்த்தால் கற்சிலைகளும் செப் புச் சிலைகளும் கி டை க் க க் கூ டும். வடவிந்தியாவிலே அசோகருடைய காலத்திலே மரவீடுகளன்றிக் கல்வீடு களும் கட்டப்பட்டவை எனத் தெரிகிறது. சரநாதம் என் னும் நகரத்தில் காணக்கிடக்கும் சிற்பச் சிலைகள் அசோக னுடைய காலத்தவை எனக் கருதப்படும். ஆங்கு எடுக்கப் பட்ட சிலை ஒன்று இந்தியக் கலைவன்மையை இனிது விளக்குகிறது. பெரியதோர் மணிமேல் அமைத்த சக்கரத்
தில் சிங்கம் நாலு கல்லில் எழுதப்பட்டன. அச்சிங்கம்
நாலும் தர்மசக்கரத்தைக் காக்கின்றனவாம். சிங்கச் சிற் பம் மிக அழுத்தமானதெனச் சிற்பவல்லுநர் செப்புகின் றனர். அச் சித்திரங்கள் பளிங்கால் செய்தவைபோல் ஒளி வீசுகின்றன. அச் சிங்கங்களை வெண்கலச் சிலைகள் எனப் பார்ப்போர் மயங்குகின்றனர்.
அசோகர் காலத்திலும் பின்பும் மலைப்பாறைகளில் பெளத்த கோயில்கள் குடையப்பட்டன. எல்லோராவில் 14 புத்த கோயில்கள் உண்டு. அவற்றுள் ஒன்று 85 அடி நீளம் 45 அடி அகலம் 34 அடி உயரமாம். பம்பாய்க்கு அணித்தாயுள்ள சால்செடி என்னும் ஊரிலே பல கோயில்கள் உண்டு. க ர சி க் என்னும் பஞ்சவடியில் பெளத்த குருமார் வசித்தற்கு மடங்கள் (பள்ளிகள்) கட் டப்பட்டன. தாராவிலும் பெளத்த கோயில்கள் பாழா யிருக்கின்றன. அசந்தாவில் குடையப்பட்ட பெளத்த ஆலயங்களே மிக அழகிய சிற்பங்களையும் சித்திரங்களையும் உடையன. அசந்தாவிலே தப்திருதிக் கரையிலே இந்தி யாத்திரி மலையிலே பல ஆலயங்கள் குடையப்பட்டன. கம்பீரமாக ஓங்கியிருக்கும் இரு பருவங்களுக்கிடையிலே செங்குத்தான பாகத்திலே கோயில்கள், மண்டபங்கள், கோபுரங்கள், சித்திரத் தூண்கள் முதலியவை குடையப் பட்டன. ஆங்குள்ள சுவர்களில் எழுதப்பட்ட உருவங்கள் இந்திய ஓவியரின் கலைத்திறத்தைக் காட்டும் சான் ருரக இருக்கின்றன. பூணணியும் மகளிரும் மெல்லிய ஆடை

ஆழிவேந்தன் அசோகன் ஆட்சிக்காலம் 273-232 139
யணியும் மகளிரும் பல்வகைப் பூக்களும் மாக்களும் மிக அழகாகச் சித்திரிக்கப்பட்டன. ஒவியங்கள் சில இயற்கை யமைப்பைக் காட்டுகின்றன; சில கலைவல்லோரின் புல மையையும் சிருட்டிவன்மையையும் காட்டுகின்றன.
சிலையெழுதுதற்குப் பெருங்கற்களை இடம்பெயர்த்துச் சென்றனராகலின் அக்காலத்து யந்திரவல்லோர் சிறந் தோராதல் வேண்டும். பொன்னுரணங்கள் நுண்கை வினைஞரால் செய்யப்பட்டன. கி. மு. 250-ல் செய்யப் பட்ட அணிகலன்கள் சில (டையடோற்றஸ்) என்னும் கிரேக்க வேந்தனின் நாணயங்களோடு எடுக்கப்பட்டன.
அசோகருடைய கல்வெட்டுக்கள் மிகத் திருத்தமாக வரையப்பட்டவை. உரைகள் பொது சனங்கள் உணரும் பொருட்டு நாட்டு மொழிகளில் எழுதப்பட்டன. உரை களில் பிராமி எழுத்துக்களே உபயோகமாயின. கல்வி பெளத்தப் பள்ளிகளில் பிக்குக்களால் ஊட்டப்பட்டது. அக்காலத்தில் கலைபயில் கழகங்களும் சமயநூல் உப தேசிக்கும் நிலையங்களும் நாடெங்கும் மிகுந்தன.
அசோகருடைய வம்சத்தினர்
அசோகனுடைய மரணத்தின் விபரம் தெரியவில்லை. அசோகன் தக்சிலையில் இறந்தான் எனத் தீபத்துப் பெளத்தருடைய கதை ஒன்று உண்டு. அசோகனு டைய குமாரருள் ஒருவன் திவாரன் என்பது ஒரு கல் வெட்டால் தெரிகிறது. குணுலன் என்னும் வேருேரர் குமாரனைப் பற்றிய பல கதைகள் உண்டு. காசுமீரச் சரிதை அசோகனுடைய குமாரன் சாலோகன் காசு மீரத்து அரசியலை நடத்தினன் என உரைக்கின்றது. சாலோகன் சிவனையும் ஈசான தேவியையும் வழிபட்டா னென அறிகிருேரம், அவன் மிலேச்சரைத் தனது நாட்டி னின்றும் துரத்தினன். அசோகன் இறந்த பின் அசோக னுடைய இராச்சியம் சிறிய இராச்சியங்களாகப் பிரிந்தது,

Page 87
140 @_6u田 வரலாறு
மகதத்தில் அசோகனுடைய பேரப்பிள்ளை தசரதன் அரசு புரிந்தான். உச்சினியில் குணுலன் மகன் சாம் பிராதி ஆண்டான். அவன் சமண் சமயத்தைப் புரக் தான். அசோகனுடைய வம்சத்தினரைப் பற்றிப் பல கதைகள் உளவாயினும், அவர்கள் புகழ் பெற்ருே ராகத் தெரியவில்லை. அவர்களுள் பிரியத்திரதன் என்னும் மகத வேங்கன் கி. மு. 185-ல் தன் படைத்தலைவன் புஷ்ப மித்திர சுங்கனுல் கொல்லப்பட்டான்.
8-ம் பாடம் - குழப்பக்காலம்
ji ili i
சுங்கன் அரசாண்டகாலை கபுல் நகரில் அரசு புரிந்த மேனந்தர் என்னும் கிரேக்க மன்னன் யமுனை வரையும் சென்று சூறையாடின்ை. சுங்கன் அவனைக் கலைத்தடித் தான். சுங்கன் தின் வெற்றிவிழாக் கொண்டாடி அசுவ யாகஞ் செய்தான். சுங்கனேடு கலிங்க தேயத்துக் கருவேலன் என்னும் மன்னன் பொருது வெற்றியடைந் தான். சுங்கர் குலத்தினர் மகதத்தில் கி. மு. 73 வரை யும் ஆண்டனர். சுங்க குலத்துக் கடைவேந்தன் தேவ புத்தி இந்து மதத்தைத் தழுவி பெளத்தப் பள்ளிகள் பலவற்றை இடித்தான். அவனுடைய காலத்தில் இலக் கண வல்லோன் பதஞ்சலி இருந்தான் என்ப. தேவ புத்த சுங்கனை அவனுடைய அமைச்சன் வாசுதேவன் என்னும் ஓர் பிராமணன் கொன்று இராச்சிய பரிபா லனஞ் செய்தான். வாசுதேவன் குலத்தினர் நால்வர் 45 ஆண்டுகள் அரசு செலுத்தினர். அவர்களைத் தெலுங் கர் தொலைத்தனர். ካ"
தெலுங்கர்
தெலுங்கராவோர் தென்னுட்டில் வதியும் ஓர் திரா
விடக் கூட்டத்தினரே. தெலுங்கர் என்னும் ஆந்திரர்

குழப்பக்காலம் i4i
அசோகனுடைய காலத்திலேயே வலி மிகுந்திருந்தனர். முப்பது தெலுங்க மன்னர் 400 ஆண்டு அரசு புரிந்தனர் எனத் தெலுங்க சரிதை கூரு நிற்கும். தெலுங்கருடைய ஆட்சி நாடுகள் கீழ்கடல் முதல் மேல் கடல் ஈருரகப் பரந்து கிடந்த தேயங்களாகும். தெலுங்க மன்னர் இந்து மதக் தைக் காத்தனர். சாதி வேற்றுமை தெலுங்க நாட்டில் வேரூன்றியது. கெளத்தமி புத்திரன் யாஞ்ஞ பூரீ கி. பி. 166 தொடக்கம் 196 ஈருரக ஆண்டான். அவன் மிகக் கீர்த்தி பெற்றவன். அவன் மகதத்தையும் தன் ஆட்சி நாடாக்கி யிருக்கலாம். அவனுடைய வம்சத்தினர் கி. பி. 225-ல் தொலைந்தனர்.
if ($] &&ii
அஜலக்சாந்தர் இறந்த பின் கிரேக்க படைத்தலைவர் பக்திரியத்திலும் ஆரியானுவிலும் சிகிரியாவிலும் எகிப்தி லும் அரசாண்டனர். கிரேக்கர்கள் தாம் ஆண்ட நாட் டினரோடு மணஞ் செய்து கலந்து கிரேக்க நாட்டுத் தொடர்பை மறந்தனர். பார்சியர் கிரேக்கரைக் கலைத் துச் சுவாதீனமாயினர். ஆர்சாகருடைய குலத்தினர் பார்தியாவில் 400 ஆண்டுகள் அரசு புரிந்தனர். இப்பார் தியருக்கு உரோமர் மிக அஞ்சினர். கி. பி. 266-ல் சாசானிய குலத்தினர் அரசை வெளவினர்.
பக்திரியம் டையடோற்றஸ் என்னும் கிரேக்க மன்ன னல் ஆளப்பட்டது. பக்திரியம் ஆரியான காந்தாரம் துருக்கி என்னும் நாடுகள் மிகச் செழிப்பாயிருந்தவை. அவை பண்டு ஆயிரம் நகரங்கள் உடையவை என்ப. பக்திரிய மன்னன் யுதிடீ மிஸ் என்பான் சிரிய மன்னன் அந்தியோக்கனேடு கலகப்பட்டான். அந்தியோக்கஸ் வலிமிகுந்து கபுல் நகரிலும் குறையாடினன். கி. மு. 203-ல் யுதிடீமிஸ் என்பவனுடைய மகன் டெமற்றியஸ் பக்திரியத்தையும் ஆரியானவையும் ஆண்டதுமன்றி பாஞ் சாலையிலும் சிறு பகுதியைத் தனது ஆட்சிக்குட்படுத்தி

Page 88
142 உலக் வரலாறு
னன். அவனை கி. மு. 175-ல் யூக்கிறிற்றிஸ் என்பான் கலைத் தடித்தான். யூக்கிறிற்றிஸ் என்பானுடைய வம்சத் தினர் 40 அரசருடைய நாணயங்கள் எடுக்கப்பட்டன. மேனந்தர் என்னும் மன்னன் 150-ல் ஆரியானவிலும் குறையாடினன்.
பின்னர் அந்தியால்கிடாஸ் என்னும் மன்னன் கி. மு. 140 முதல் கி. மு. 130 இருரன பத்தாண்டுகள் ஆண்டான். தக்க சிலையில் ஆண்ட கிரேக்க மன்னன் 'டையன் என் பவனுடைய மகன் எலிக்டோறஸ் அந்தியால் கிடாஸ் என் பவனுடைய அவையில் துாதனுக இருந்தான்.
கி. மு. 130-ல் சாக்கியர் பக்திரிய கிரேக்க மன்னரை அட்டுத் தொலைத்தனர். அதன்பின் கி. பி. 20-ல் கபுல் நகரில் கந்தபேணிஸ் என்னும் கிரேக்கப் பெயரோடு ஒரு மன்னன் ஆண்டான். அவனுடைய ஆட்சிக் காலத் தில் கிறிஸ்தகுரு தோமாஸ் கபுலில் உபங்கியாசஞ் செய்து இருந்து கொலையுண்டான் என ஒருகதையுண்டு. கபுல் நகரைத் தோமாஸ் ஒருபோதும் கண்டதில்லை யெனவும் அவன் கொல்லப்படவில்லை யெனவும் கிறிஸ்தவர் பலர் உரைக்கின்றனர்.
குஷன் குலத்தினரும் சீனரும்
கி. மு. 170-ல் சீனத்தின் மேற்பாகங்களிலிருந்து யுவேச்சி என்னும் சாதியர் துரத்தப்பட்டனர். அவர்கள் ஆரியானவில் வசித்த சாக்கியரைத் துரத்தினர். யுவேச் சியருடைய ஒரு கிளையினர் குஷன் குலத்தினர் எனப் பெயர் பெற்றனர். கி. பி. 40-ல் குஷன் குல வேந்தன் குஜலகார கட்பீசிஸ் (1) கபுல் நகரில் அரசாண்டான். அவன் பாஞ்சாலையைத் தன் ஆட்சி நாடாக்கினன். கி. பி. 77.ல் அவன் மரிக்க கட்பீசிஸ் (11) அரசனுனன். அவனைச் சீனர் ஜென் காயோ சிங் என அழைத்தனர். அவனுடைய நாணயங்கள் பல எடுக்கப்பட்டன. அவன்

குழப்பக்காலம் 43
சீனருடைய ஆழி வேந்தன் 'வூதி யோடு பொருதான். பின்பு சீனர் வேந்தன் "பாஞ்சாலையோ? படையெடுத்துப் பார்தியா வரையும் சென்று தன்னுட்சியை நாட்டினனுகக் கட்பீஸ் அஞ்சினன். அவன் சீனரோடு நட்பாயிருக்க விரும்பிச் சீன வேந்தனுடைய மகளை மணமுடிக்க விழைங் தான். அவ் விருப்பத்திற்குச் சீனர் இசையவில்லை, சீனர் வேந்தன், கட்பீசிஸ் என்பவனை வென்று திறை பெற் ரூரன். கி. பி. 86-ல் ஆண்ட சீனவேந்தன் ஒற்றி யென் பவனேடு கபுல் மன்னர் நட்பாயினர்.
பெளத்த வேந்தன் கனிஷ்கன்
கி. பி. 120-ல் குஷன்குல மன்னன் கனிஷ்கன் சீன ரைக் கலைத்து ஆரியான முழுவதையும் ஆண்டான். கி. பி. 152-ல் சீனர் தாம் பக்கிரிய நாட்டை இழந்தன ரெனக் கவலைப்பட்டனர். கனிஷ்கன் புருஷ புரத்தைத் தன் தலை நகராக்கினன். அவன் பெளத்தப் பள்ளிகள் கட்டிப் பெளத்தரை ஆதரித்தான த லின் பெளத்தர் அவ னைப் புகழ்கின்றனர். அவன் பாதியரோடும் மேல் சீன ரோடும் போர் புரிந்தான். கனிஷ்கன் பெளத்த குருமார் கூட்டமொன்றைக் கூட்டிச் சமயக் கொள்கைகளை முறை வகுத்தான். காசுமீர தேயத்துப் பெளத்தர் சமய நூல் க2ளச் செப்பேடுகளில் எழுதி வைத்தனர். கி. பி. 1-ம் நூற்ருரண்டின் பின் புத் தருடைய சிலைகளை வணங்குதல் பெருவழக்காயிற்று. புத்தருடைய பாதம் எழுதப்பட்ட பாதபங்கய மலைகளும் பெளத்த கோயில்களாயின. இப் பிறவி தப்பினல் வேறு பிறப்பில்லை என்னும் நம்பிக்கை கெட்டு மறுபிறவி உண்டென்னும் நம்பிக்கை பெளத்த, ருள் பரவியது. பெளத்தர்கள் போதிசத்துவர் காலத்துக் குக் காலம் ஆன்மாக்களை நல்லாற்றுப்படுத்தும் பொருட் டுத் தோன்றுவர் என நம்பத் தொடங்கினர். இங்ங்ணம் வட நாடுகளில் ஈணுயனம் அழிய, மகாயனம் தழைத்தது. புதிய புத்தமதக் கொள்கைக%ள நாகர்ச்சுனன் முறை வகுத்தான். தென்னிந்திய நாட்டினரும் பெளத்த மதத்

Page 89
144 உலக வரலாறு
தைக் காத்தனர். அசுவ கோஷரும் வாசுமித்திரரும் பெளத்த நூல் வல்லோராகத் துலங்கினர். அசுவகோஷர் இசை வல்லோனுகவும் புகழ்பெற்றனர். சாரகன் என் னும் மருத்துவ நூலோன் அக்காலத்தினன் என்ப, பெளத் தர் சிற்பக்கலேயையும் வளர்த்தனரெனலாம். புருஷபுரத் திற் கட்டப்பட்ட கோபுரம் 400 அடி உயரமானது. அது மரத்தினுல் கட்டப்பட்டது. அக் கோபுரச் சிற்பம் கிரேக்க முறையைத் தழுவியது என்ப. அக்காலத்தில் இந்தியச் சிற்பமுறை அமராவதி முறையெனப் பெயர்பெற்றது.
கி. பி. 262-ல் கனிஷ்கன் மகன் குவிஷ்கன் அரசு கட்டில் ஏறினன். அவன் அச்சிட்ட நாணகங்களில் யவ னத் தெய்வங்களின் உருவங்களையும் இந்துத் தெய்வங்க ளின் உருவங்களையும் காணலாம். அவனுடைய ஆட்சிக் காலத்தில் யவன மதமும் இந்து மதமும் கலந்தன போலும், வாசுதேவன் 1 ஆண்ட காலத்தில் இராச்சி யம் நிலைகுலையப் பெளத்த மதமும் குன்றத் தொடங்கி
s
குஷன் குலத்தோருடைய ஆட்சிக்காலத்தில் உரோ மர் இந்தியரோடும் சீன ரோடும் வணிகம் செய்தனர். அவ்வணிகம் உரோமருடைய ஆட்சி நாடுகளுக்கும் ஆரி யானுவுக்கும் இடையில் இருந்த பல்மீர தேயத்துக்கு ஊடாக நடைபெற்றது. வணிகர் பண்டங்களை ஒட்டகங் களில் ஏற்றிக் கூட்டம் கூட்டமாகச் சென்றனர்.
9.ம் பாடம்-குப்தர்கள்
குப்தர்களும் சம்ஸ்கிருத மறுமலர்ச்சியும் குஷன் குலராச்சியம் ஏன் குன்றியதெனத் தெரி கின்றிலது. பார்சியர் வலிமிகுந்தனராகக் குஷன் குலத் தினர் வலிகுன்றினர் எனக் கருதப்படுகிறது. குஷன்

குப்தர்கள் 320-647 145
குலத்தோருடைய கல்வெட்டுக்கள் ஒன்றும் கிடைக்க வில்லை. கி. பி. 320-ல் குஷன்குல ராச்சியம் அழிவெய் தியதெனலாம். மகததேய வேந்தன் சந்திரகுப்தன் 1. குஷன் குலத்தினருடைய நாடுகள் பலவற்றைத் தனது ஆட்சிக்குட்புடுத்தினன். அவன் இலிச்சாவியருடைய குலத் தில் மணமுடித்து இலிச்சாவியருடைய உதவியைப் பெற் ருரன். அவன் மணமுடித்த இலிச் சாவிய அரசகுமாரியின் பெயர் குமாரதேவி, அவளுடைய உருவமும் நாணயங்க ளில் அச்சிடப்பட்டது. கி. பி. 340-ம் ஆண்டளவில் சங் திரகுப்தன் மரணமடைந்தான். சந்திரகுப்தன் மகன் சமுத்திரகுப்தன் நாற்பதாண்டு செங்கோலோச்சினன். அவன் பகையரசரை வென்று குதிரையாகஞ் செய்தான். அவ்வியாகத்தை நினைவு கூர்தற்குக் குதிரை இலைச்சினை யிட்ட நாணயங்களை அச்சிடுவித்தான். அவன் தக்கணத் தின்மீது படையெடுத்துப் பல்லவ மன்னனேடும் பொரு தான். அவனுடைய ஆணை பிரமபுத் கிர திே தொடக்கம் கருமதையாறு வரையுஞ் சென்றது. காசுமீரம் சுவாதீன மாயிருந்ததாயினும் குஷன் குலத்தினர் ஆழிவேந்தன் சமுத்திரகுப்தனுக்குத் திறையளித்தனர். சிங்கள வேங் தன் மேகவம்மன் சமுத்திரகுப்தனுடைய நட்பைப் பெறு வதற்கும் புத்த காயாவில் ஈழத்து யாத்திரீகர் தங்குதற்கு மடங்கட்டற்கு உத்தரவு பெறுதற்கும் தூது அனுப்பினுன். சந்திரகுப்தன் அவ் வேண்டுகோட்கிணங்கினன். சமுத் திரகுப்தன் வைஷ்ணவனுயினும் வா சு ப ந் து என்னும் பெளத்த குருவைப் புரந்தான். சமுத்திரகுப்தன் வீணை வாசிக்கும் உருவினனக நாணகங்களில் காணப்படுகிருரன். ஆதலின் அவன் இசைப்பிரியன் எனக் கருதப்படுகிறது. அவன் வயசு முதிர்ந்து இறந்தான். அவன் இறந்த நாள் தெரிகின்றிலது.
கி. பி. 380 அளவில் சமுத்திரகுப்தனின் மகன் ஒரு வன் அரசியலை நடாத்து தற்குச் சிறந்தோன் எனத் தெரி யப்பட்டான். அவன் பெயர் சந்திரகுப்தன் 11. அவன் தனது ஆற்றலை வியந்து விக்கிரமாதித் தன் என்னும் பெய
19

Page 90
146 உலக வரலாறு
ரைத் தரித்தனன். நானகங்களில் அவன் சிங்கங் கொல் லும் வீரனுகக் காணப்படுகிருரன். அவன் மழவ நாட்டை யும் சாக்கிய நாட்டையும் தனது ஆட்சிக்குட்படுத்தினன். அவன் பரோசு, சோபாதை என்னும் மேற்றுறைகளில் சுங்கம் பெற்ருரன். உண்ணுட்டு நகர்களுள் உச்சினி நகர் மிகவும் கீர்த்திபெற்றது. அம் மாநகர் அவந்தி நாட்டின் தலைநகராகவிருந்தது. கி. பி. 2-ம் நூற்ருரண்டுத் தொடக் கத்தில் உச்சினி வேந்தர் பூநாகர் நாகபாணரென்போர் ஆந்திரவேந்தன் கோத்திர மித்திரனல் புடைக்கப்பட்ட னர். அதன் பின்பு 128-ல் மழவதேய மன்னன் உருத் திரதாமன் மேற்கிந்தியா முழுவதிலும் தன்னுணையைச் செலுத்தினன். அவன் குவிஷ் கனுக்குத் திறையளித்திருத் தல் கூடும். அவனுடைய சந்ததியாரைச் சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் வென்று கி. பி. 413 வரையும் ஆண்
66
இரண்டாம் சந்திரகுப்தன் மகன் குமாரகுப்தன் கி. பி. 415-ல் அரச பதவிசைப் பெற்ருரன். அவன் பகை வரை வென்று குதிரையாகஞ் செய்தனன். கி. பி. 445-ல் குமாரகுப்தன் மகன் ஸ்கந்தகுப்தன் முடி பெற்றன். அவன் 480 வரையும் அரசாண்டான். அவனுடைய காலத் தில் அவுணர் இந்து காடுகளில் குறையாடினர். அவுண ரின் கொடுமையால் இந்து ராச்சியங்கள் பல அழிவெய் தின. ஸ்கந்தகுப்தனுடைய சந்ததியார் குறுகில மன்ன ராக அரசாண்டிருந்தனர். பரத கண்டத்துட் புகுந்த அவு ணர் வெண்கூணர் எனப்படுவர். அவர்கள் பல அரசுக இளத் தொலைத்து 50 ஆண்டுகள் குறையாடித் திரிந்தனர். கி. பி. 530 அளவில் குப்தர் குலத்து மன்னன் பாலாத்தி யன் என்பான் அவுணரை ஒட்டிக் கலைத்தான்.
இந்துக் கல்வி கி. பி. 850-550 குப்தர்காலம் சம்ஸ்கிருத பாஷையின் செம்மொழிக் காலமாயிற்று. அக்காலத்தில் இந்து சமயமும் புத்துயிர்பெற்

குப்தர்கள் 320-647 147
றது. கொற்றம் பிழையாது செங்கோல் செலுத்தப்பட்ட தாகலின், கலைகளும் கல்வியும் வளர்ந்தன. இரண்டாம் சங் திர குப்தனுடைய அவையில் பிராமணருடைய ஆதிக்கம் பெருகியது. அவனுடைய அவையில் அறிஞரும் கலைஞ ரும் புலவரும் இருந்தனர். புலவன் காளிதாசன் இலக் கியம் பல இயம்பினுன். அவன் எழுதிய நாடகங்களுள் சகுந்தலை சிறந்தது. ஆங்கிலப் புலவன் சேக்ஷ்பிய ருடைய நாடகங்களிலும் காளிதாசருடைய நாடகங்கள் சிறந்தவையென ஆங்கிலர் பலர் அபிப்பிராயப் படுகின் றனர். வாயுபுராணம் குப்தருடைய காலத்தில் எழுதப் பட்டிருத்தல் கூடும். கணித நூல்களும் விண்ணுரல்களும் மருத்து நூல்களும் இயற்றப்பட்டன. கி. பி. 467-ல் கணக்குநூல் அறிஞர் ஆரியபக்தர் பிறந்தார். 505-ல் கலைஞர் வராகமிகிரர் பிறந்தார். இவர்கள் யவன கணக்கு முறைகளையும் கற்றனர். அக்காலத்தில் சிற்பிகளும் ஒவியரும் நனி ஆதரிக்கப்பட்டனர். அக்காலத் கில் சர நாதத்தில் கற்கோயில் ஒன்று கட்டப்பட்டது. டெல்லியில் நாட்டப்பட்ட தூண் இரும்பினுல் செய்யப்பட்டது. வெண் கலச் சிலைகளும் வார்க்கப்பெற்றன. நாளந்தையில் உள்ள பெளத்தருடைய சிலைகள் கி. பி. 5-ம் நூற்ருண்டில் எழு தப்பட்டவை என்ப. அவற்றுள் கெளதமபுத்தருடைய சிலை ஒன்று 80 அடி உயரமானது. அசாங் தாக்குடை வரைக ளில் பல சிலைகள் எழுதப்பட்டன. அசாந்தாவில் ஓவியரால் எழுதப்பட்ட சித்திரங்களைப் பார்ப்போர் அவ்விடத்தை விட்டு ஏகுவதில்லை. அதே காலத்தில் இலங்கையில் சிகிரி யாவில் எழுதப்பட்ட சித்திரங்களும் மிக அழகியவை. பெளத்தருடைய சித்திரங்களில் காணப்படும் மகளிரின் அமைப்பும் ஆடைகளும், ஆசனங்களும் வியப்பினை விளைப்பன. ஆங்கு எழுதப்பட்ட மலர்களும் கொடிகளும் பறவைகளும் உயிர் உள்ளவைபோலத் தோன்றுவன.

Page 91
148 உலக வரலாறு
பாகியன் (பாஹியன்) ஆழிவேந்தன் சந்திரகுப்த விக்கிரமாதித்தியன் செங்கோலோச்சிய காலத்திலே கி. பி. 339-ல் சீனயாத் திரிகன் பாகியன் பெளத்த சங்க வொழுக்கங்களை உணர்த் தும் வினையபிடகத்தைப் பெறுதற்குச் சீனவிலிருந்து இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தான். பாகியன் கோபி என்னும் பாலை நிலத்தைத் தாண்டித் துருக்கி என்னும் சிதிய நாடுகளில் தங்கி பெளத்த நூல்களை ஆரர்ய்ந்து மகாயன பெளத்தத்தைக் கற்ருரன். பின்பு அவன் ஆரியானவி லிருந்து புருஷ புரத்திற்கு ஊடாகவக்தி தக்க சிலையில்வைகி ஆங்குள்ள பெளத்த குருமாரோடு அள வளாவினன். அதன் பின் அவன் பாடலி புரத்தில் மூவாண்டு கழித்தான். பின்னர் வங்கத்திலுள்ள தமிழுக் என்னும் துறையில் கப்பலேறி இலங்கையிலிறங்கிப் பெளத்த நூல்களைக் கற்றுக் கடல்வழியாகச் சாவகக் தை நண்ணிச் சீனுவுக்குச் சென்றன். பெளத்த நூலா ராய்ச்சி அவன் முழு மனசையும் கவர்ந்ததால், அவன் தரிசித்த நாடுகளில் இருந்த அரசரின் பெயரைக் குறித்திலன். அவன் சில நகரங்களைப்பற்றிக் காத்திராப்பிரகாரம் சில குறிப்புக்கள் எழுதினன். அவை சரித்திர நூலோர்க்குப் பயன் படுகின்றன. மகத தேயத்து நகரங்கள் மிகப் பெரியவை எனவும் செல்வ மிகுந்தவை எனவும் ஆங்குத் தருமசாலைகள் மிகுந்தவை எனவும் யாத்திரீகரும் வழிப் போவாரும் தங்கும் மடங்கள் இந்து நாடெங்கும் கட்டப் பட்டவை எனவும் இலவச வைத்தியசாலைகள் பல பாடலி புரத்தில் இருந்தவை எனவும் எழுதினன். பாடலிபுரத் தில் ஈனுயனமகப் பள்ளிகளும் மகாயன மதப் பள்ளிகளும் இருந்தவ்ை என மொழிந்தான். யமுனைக்கரைகளில் பெளத்த மதம் பரவியிருந்த தென்றன். பாகியன் சம்ஸ் கிருதமும் கற்றனன் என்பர்.
பாகியன் குப்தருடைய அரசியலை மிகவியந்து கூறி னன். இந்து 5ாடுகள் சுவாத்தியமானவை எனவும் சனங்

குப்தர்கள் 320-641 49.
கள் செல்வமுற்று இருந்தன ரெனவும் செங்கோல் வழு வாது அரசு செலுத்தப்பட்டதெனவும் பாகியன் உரைத் தனன். இந்து நாடுகளின் முடிக்குரிய நிலங்களைப் பண் படுத்துவோரிடம் வருமானவரி பெறப்பட்டதெனவும் அரசனுடைய மெய்காப்பாளர்க்குக் கூலி கொடுக்கப்பட்ட தெனவும் எழுதினன். உயிர்க்கொலை அரிதினும் அரி தெனவும் மதுபானம் விலக்கப்பட்ட கெனவும் வெண் காயம் உள்ளி சேர்ந்த உணவைப் பலர் உண்ணுர் எனவும் எழுதினன். இந்துக்கள் பன்றிகளும் கோழிகளும் வளர்க்கவில்லை எனவும் கடைவீதிகளில் இறைச்சிக் கடை களைக் காணவே முடியாதெனவும் விளம்பினன். சண்டா ளர் என்னும் இழி குலத்தோர் புறச் சேரிகளில் வசித் தனர் எனவும் அவர்கள் மேற் குலத் தாரோடு கலவாது வாழ்ந்தனர் எனவும் மேற்குலத்தோர் இருக்கும் வீதி களில் உலாவும்போது தம் வரவை அறிவிக்கும் பொருட்டு தட்டையில் தட்டுவார்களெனவும் பிராமணர் இழி குலத் தினரைக் காணுமல் இருக்க விரும்பினர் எனவும் எழுதி னன். யாதொரு சமயமும் கண்டிக்கப்படவில்லை எனவும் விரும்பிய சமயக் கொள்கைகளைக் குடிகள் அநுசரிக்கலா மெனவும் பாகியன் எழுதிய குறிப்புக்களால் தெரிகிறது. கள்வரைப்பற்றிப் பாகியன் யாதொன்றும் எழுதவில்லை. ஆனல் தீவினையாளர்க்குக் கை கால் ஒடித் தல ஒழிய, கொலைத் தண்டனை விதிக்கப்படவில்லை எனப் பாகியன் வியந்து கூறினன்.
இந்துக் கல்வியும் சம்ஸ்கிருத மொழியும் சீனவிலும் பார்சியாவிலும் பல நூற்ருரண்டுகளாகக் கற்கப்பட்டன. கி. பி. முதலாம் நூற்ருரண்டில் இருந்த ஆசிரியர் அஷ்வ கோஷ் எழுதிய நாடக நூல் ஒன்று கோபி என்னும் பெருஞ்சுரத்தில் உள்ள ஓர் ஊரில் எடுக்கப்பட்டது. அவர் ஆரிய மொழியில் புத்த சரிதை என ஒரு நூல் எழுதினர். இந்துக் கலைகளைக் கற்றற்கும் பெளத்த சமய நூல்களைக் கற்றற்கும் சீனர் பலர் இந்தியாவிலுள்ள பல்கலைக் கழகங்

Page 92
150 உலக வரலாறு
களில் கற்றனர். அக்காலத்தில் நாளந்தை உசேயினி அமராவதி காசி முதலிய இடங்களில் பல்கலைக் கழகங்கள் கிலைநாட்டப் பட்டன. இந்திய அறிஞரும் கலைஞரும் சீனவுக்குச் சென்று கலைகளை ஆராய்ந்தனர். கி. பி. 67-ல் காசியப்ப மதங்கன் சீனு சென்று அரசன் மிங்தி என் பவனைத் தரிசித்தான். புத்தபத்திரர், ஜினபத்திரர், குமரசீவர், பரமார்த்தர், ஜீன குப்தர், போதிதர்மர் முதலி யோர் சீனசென்றனர். குமரசீவர் சம்ஸ்கிருதத்திலிருந்து 47 நூல்களைச் சீன மொழியில் பெயர்த்து உதவினர். அவ ரிடம் பாகியன் சமய நூல்களைக் கேட்டுத் தெளிந்தான். கி.பி. 600-ல் சீனகுப்தர் 37 நூல்கள் சீனமொழியில் எழுதினர் எனத் தெரிகிறது. இந்தியாவைத் தரிசித்து நாளந்தையில் கற்ற 'யுவான்சங்" என்னும் சீன யாத்திரி கன் (சியுகி) மேலைத்தேய வாசு என்னும் நூல் ஒன்று எழுதினன். அவன் எழுதிய வரலாறு இந்திய வரலாறே. இந்தியர் அக்காலத்தில் இலக்கணம் மருத்து நூல் அளவை நூல் தத்துவஞானம் இயற்கையாராய்ச்சிகள் முதலிய பலகலைகளையும் ஆராய்ந்தனர் என யுவான் சங் (ஈயன் சங்) என்பவன் எழுதினன். கி. பி. 671-ல் இற்சிங் என்னும் சீனன் கடல்வழியாகவந்து தாமிரலிப்தி என்னும் துறை யில் இறங்கி இந்தியப்பல்கலைக் கழகங்களைத் தரிசித்தான். அவன் சம்ஸ்கிருத மொழிகளை நன்கு கற்ருரன். பெளத்த சமயமும் நியாயம் வைசேஷிகம் பூர்வமீமாம்சம் சாங்கியம் யோகம் வேதாந்தம் என்னும் அறு சமயங்களும் சீனரால் கன்கு ஆராயப் பட்டன.
இந்தியகணிதம் பக்தாத் என்னும் பல்கலைக்கழகத் தில் அராபியரால் நன்கு ஆராயப்பட்டதெனத் தெரிகிறது. அராபியரும் பார்சியரும் சம்ஸ்கிருத மொழி கற்றனர் எனப் புலப்படும். கி. பி. 5-ம் நூற்ருரண்டு முதல் 12-ம் நூற்ருரண்டு வரையும் இக்துக் கணித நூல்கள் பல இயற் றப் பட்டன. சூனியம் என்பதும் ஓர் இலக்கமாக கணிதங் களில் பயிலப் பட்டது. 5-ம் நூற்ருரண்டில் அபதஸ்தம்

கருஷனும் சிற்றரசுகளும் 151
பர் காத்தியாயனர் என்போர் கணிதநூல் வல்லோராகத் திகழ்ந்தனர். ஆரியபக்தர் என்னும் வானநூல் வல்லோர் கி. பி. 476-ல் எழுத்துக் கணிதம் ஒன்று இயம்பினர். 522-ல் பாஸ்கரர் ஓர் கணித நூல் இயற்றினர். பிரமகுப் தர் 628-ல் க்ணித நூல்களை ஆராய்ந்தனர். 12-ம் நூற் ருரண்டில் பாஸ்கர் என்பவர் லிலாவதி என்னும் கணித நூலும் ஓர் எழுத்துக் கணிதநூலும் ஒரு வானநூலும் இயம்பினர். இங்ஙனம் கணிதக்கலை இந்தியாவிலிருந்து அராபியர் மூலம் கிரேக்கு முதலிய மேனடுகளுக்குப் பரவிய தென அமைச்சர் நேரு ஆங்கிலத்தில் எழுதிய உலகவர லாற்றில் கூறுகின்றனர்.
Mmr (nhmar anoma
10-ம் பாடம்-கருஷனும் சிற்றரசுகளும்
- 2سیسی مسیحجمعیت -estadas
9600í (91)))))))
அவுணர் துருக்கிராட்டறி என்னும் மங்கோலிய நாடு களில் வசித்தனர். மாடு குதிரை மேய்த்தலே அவர் தொழில். கி. பி. 300 தொடக்கம் கி. பி. 800 வரையும் அவுணர் (Huns) நாகரிகமடைந்த உலகு முழுவதிலும் உலாவிச் சூறையாடினர். கிழக்கே சீன் ரைத் தாக்கினரா கச் சீனர் அஞ்சிப் பெரிய மதிலைக்கட்டிக் காவலரண்களே அமைக் துத் தம்மைக் காத்தனர். அவுணர் மேற்கே உரோம ராச்சியத்தை அழித்தனர். அவுணருள் ஒரு சாதி யினர் வெண் கூணர் என்போர் கி. பி, 5-ம் நூற்ருரண்டு களில் இந்து நாடுகளுள் நுழைக்தனர். அவுணர் கபுல் நகரைப்பற்றிப் பார்சியாவினுள் புகுந்தனர். கி. பி. 455-ல் குப்தர் அவுணரை இந்தியாவினுள் வரவொட்டாது தடுத்தனர். கி. பி. 500ன் பின்பு வெண்கூணர் தோர மானன் என்னும் தலைவனின் கீழ் மழவ தேயத்தின்மீது படையெடுத்தனர். அவனுடைய மகன் மிகிரகுலன் பாஞ்

Page 93
152 உலக வரலாறு
சாலை தேயத்தில் சாகலே நகரை இராசதானியாக்கி இருந் தான். மழவ மன்னன் யசோதர்மன் மிகிரகுலனைத் தன் தேயத்தினின்றும் ஒட்டிக் கலைத் தான்.
கருஷன்
கி. பி. 6-ம் 7-ம் நூற்ருரண்டுச் சம்பவங்கள் சீன யாத் திரீகன் ஈயன்சங் எழுதிய வரலாற்றலும் பாணகர் இயற் றிய கட்டுரைகளாலும் தெளிவாகின்றன. குறையாடித் திரிந்த அவுணர் பலர் வடவிந்தியாவில் குடியேறி இந்துக் களோடு கலந்து சீர்திருந்தினர். தானேஸ்வார் என்னும் இடத்தில் ஆண்ட ஒர் மன்னன் பெயர் பிரபகாரவர்த்த னன். அவனுடைய இளைய மகன் கர்ஷவர்த்தனன் கி. பி. 606-ல், 17 ஆண்டுப் பராயத்தினனயினும், அரசபதவியை ஏற்ருரன். அவன் அவுணரைக் கலைத்துத் தன் தமக் கையை மீட்டான். அவன் கன்னியகுப்தா என்னும் 5 கரைத் தலைநகராக்கினன். அவன் பகை மன்னரை அடக்குதலில் ஐந்தாண்டு கழித்தான். அவன் கருமதை யாற்றுக்கு வடடால் உள்ள நாடுகளில் தன் ஆணையைச் செலுத்தினன். கருஷன் (கருடன்) 50 யானைகளும் 20,000 குதிரைகளும், 50,000 காலாட்களும் நிலைப்படையாக வைத்திருந்தான். அவனுடைய ஆட்சி நாடுகள் மேல் கடல் தொடக்கம் கீழ் கடல் வரையும் இருந்தன. வடக்கே புருஷபுரத்துக்கு அப்பாலும் அவன் ஆண் சென்றது. ஆருரம் நூற்ருரண்டிலே சளுக்கியர் வடமேல் காட்டினின் றும் வந்து தக்கணத்தில் ஓர் அரசை நாட்டியிருந்தனர். சளுக்கியருடைய தலைநகர் தமிழ்த்திருத்தொண்டர் புரா ணம் கூறும் வாதாபி. சஞக்கியர் வேந்தன் புலிகேசி 11 7-ம் நூற்றண்டில் அரசு செலுத்தினன். கி. பி. 620-ல் புலிகேசி மிடல் மிகுந்து இருந்தான். ஆழிவேந்தன் கரு ஷன் இப்புலிகேசியின் வலிகானிய வந்தான். 620-ல் நடந்த போரில் புலிகேசி 11 கருஷனுடைய மிட்லே அடக் கினன். அதன் பின் கருஷன் கருமதையாற்றைக் கடக்கத்

கருஷனும் சிற்றரசுகளும் 153
துணியவில்லே. கருஷன் தன் 48-ம் வயசில் கி. பி. 646-ல் இறந்தான். வடநாட்டிலிருந்து வருவோர் ஆரியராயினும் சரி, துருக்கராயினும் சரி, தென்பூமியில் தம்மிலும் வலி மிகுந்தோரால் புடைக்கப்பட்டன ரெனலாம்.
கருஷனுடைய தலைநகர் கங்கைக்கரையிலுள்ள கன் பகுப்ஜா. அது கடிநகராயிருந்தது. அந்நகரின் கண் 100 புத்தப் பள்ளிகள் இருந்தன. இந்துக்கோயில்களும் மடங் களும் நூற்றுக்கணக்காக இருந்தன. கருஷ ன தனது இராச்சியத்திற் பிரதானமான இடங்களைத் தரிசித்துப் பார்த்தல் வழக்கம். குழலோர் கீதம்பாட, வள்ளுவர் முழவம் கொட்ட, பணியாளர் சூழ்ந்து சிற்பக் கருஷன் பவனிவந்து தன்னை வரவேற்றற்கென அமைக்கப்படும் மூங்கிற்சாலைகளில் தங்குவன். கருஷன் உபராசர்களே நியமித்துக் குறுநிலமன்னரிடம் திறைபெற்றுச் செங்கோ லோச்சினன். ஹியன்சங் என்னும் சீன யாத்திரீகன் கருஷனுடைய அரசியலைப் புகழ்ந்திருத்தலைக்காண்க. அக் காலத்தில் அங்கநாட்டில் நாளந்தையில் ஒரு கல்விக்கழ கம் இருந்தது. ஆங்குப் பெளத்தபிக்குக்களே கல்வியை ஒம்பினர். கருஷனே கற்றறிந்த அறிஞனயினன். அவன் "நாகானந்த" என்னும் நாடகத்தை இயற்றினன். கருஷன் ஆதரித்த புலவர் பானகர் ஒரு கட்டுரை எழுதினர். அக் கட்டுரையிலிருந்து க ரு ஷ னு  ைட ய குணுதிசயங்களை ஊகித்து உணரலாம். கருஷன் இந்து மதத்தினணுயினும் சூரியனையும் சந்திரனையும் புத்தரையும் தொழுதான்.
PFC Girl
ஈயன் சங் என்னும் யுவன்சங் சீன வேந்தனின் கட் டளையை மீறிச் சீனத்திலிருந்து கி. பி. 629ல் புறப்பட் டான். அவன் அப்போது 24 வயசினன். அவன் 3000 மைல் கடந்து கபுல் நகரை அடைந்தான். அவன் பின்பு இந்து நாடுகளில் பலவாண்டுகள் கழித்துப் பத்துப் புத்தகம் எழுதினன். அவன் இந்தியா முழுவதும் திரிந்து பெளத்த
.20

Page 94
154 உலக வரலாறு
நூல்களேத் தேர்ந்து தெளிந்தபின் தரைமார்க்கமாகப் பமீர்ப்பீடபூமியைக் கடந்து சீனத்திற்குப் புலம்பெயர்ந் தான். அவன் தாய்நாடு சென்று வேந்தனின் நட்பைப் பெற்றிருந்து 64-ம் வயசில் இறந்தான். ஈயன் சங் என் பவனைக் காணும்படி அறிஞரைக் கனேசி பிரியாக் என் ஓம் இடங்களில் கூடும்படி கருஷன் கற்பித்தானும்.
தீபத்து
ஈயன் சங் தாய்நாடு திரும்பியபின் கருஷனுடைய அவையில் வாங்கியன் சி என்னும் சீனன் தூதனக இருந் தான். கருஷன் இறக்க, அமைச்சன் ஒருவன் அரசை வெளவ, தூதன் நீர்வாளத்திற்கு ஓடினன். நீர்வாளம் அக்காலத்தில் தீபத்து வேந்தருடைய திறைநாடாக விருங் தது. தீபத்தியர் வந்து அரசு வெளவிய அமைச்சனைக் கொன்றனர். தீபத்து வேந்தருள் சிறந்தோன் சறங்சான் காம்போ. அவன் 629 முதல் 650 வரையும் நீர் வாளத்தில் தன்னுணையைச் செலுத்தினன். அவன் நீர்வாளதேயத்து அரசகுமாரி ஒருத்தியையும் சீன தேசத்து அரசகுமாரி ஒருத்தியையும் விவாகஞ் செய்திருந்தான். அவன் இந்துக் களின் நெடுங்கணக்கைத் தம் மொழியில் புகுத்தினன். தீபத்துமொழி அத்துடன் சீர்மையுற்றது. அவனே லோசா நகரை அமைத்தான். லாசா நகரில் பெளத்தமதம் வளர்ந்து திரிபடைந்தது.
g) Gafui
கி. பி. 7-ம் நூற்றுண்டுக்கும் 12-ம் நூற்ருரண்டுக்கும் இடையிட்ட காலத்தில் இந்து இராசினியர் குலம் அழி வெய்திய தெனலாம். ஆரியப் பிராமணர் ஓதல் ஒதுவித் தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்னும் அறு தொழிலை விட்டுத் தருணம் வாய்த்தகாலை அரசியலை நடத்த முயன்றனர். அமைச்சராய் அமர்ந்து அரசியலை நடாத்தும் பிராமணர் அரசியற் குழப்பக் காலங்களில் அரசை வெளவினர். பிராமணர் இராசினியர் என்னும்

கருஷனும் சிற்றரசுகளும் 55 கூடித்திரியரொடு மணவுரிமை யுடையராகினர். இங்ங்ணம் இராசினியர் பிராமணரோடு சிறிது கலந்தனர். பிரா மணர் வேறு பல சாதிகளோடும் கலந்தனரெனலாம். ஐரேனியப் பூசாரிகள் மாகி எனப்பட்டனர். பிராமணருள் ஒரு கிளையினர் நாகப் பிராமணர் எனப்பட்டனர். பிரா மணருடைய ஆசாரங்களை அநுட்டித்து ஒழுகுபவர்யாவ ரும் பிராமணர் எனப்பட்டனர். இது கிற்க பிராமண ருடைய கலப்பினல் இராசினியர் தம் சிறப்பியல்புகளை இழந்தனர். அத்துடன் தீபத்தியர் அவுணர் சிதியர் ஐரேனியர் துருக்கர் என்னும் பிறசாதியினர் இந்து நாடு களுள் புகுந்து இந்திய மன்னரைக் கொன்று இராச்சியங் களை நாட்டி இராசினியருடைய மகளிரை மணந்து தாமும் இராசினியராயினர். சுத்த இராசினியரைப் பத்தாம் நூற்றாண்டின் பின் காணவியலாதெனக் கருதப்படுகிறது. போர்களில் இராசினியர் தொலைந்தனராக அவர்களைச் சேவித்த படைத்தலைவர்கள் சிற்றரசுகளை நாட்டித் தம்மை இராசினியர் என அழைத்தனர். வடமேற்கிந்தி யாவிலே சிற்றரசர்கள் கி. பி. 10-ம் நூற்றண்டிலே மிகுந் தனர். இச் சிற்றரசர்கள் சுத்த ஆரியர் அல்லர் எனக் காட்டினம். இச் சிற்றரசர்கள் இராசபுத்திரர் எனப் பட்டனர். இராசபுத்திரர் பிராமணரொடு கலவாமல் இருந்து ஒரு சாதியினராக எண்ணப்பட்டனர். இராச புத்திரர்கள் ஆரியர், அவுணர், சிதியர், துருக்கர் முதலிய பல சாதியினர் என்ப. இராசபுத்திரர் பலர் துருக்க முக மதியரோடு,பொருது தொலைந்தனர். அங்கிலர் ஆட்சியில் மகாராசாக்களா யிருப்போர் பலர் தாம் இராசபுத்திரரின்
சந்ததியாரெனப் பகர்கின்றனர்.
வடவிந்திய இராச்சியங்கள்:
கனுேசி கருஷன் இறந்தபின் கனேசி என்னும் கன்னிய குப்ஜாவில் அரசியற் குழப்பம் கால்கொண்டது. 731-ல் பகைவர் மிகுந்தனராக வேந்தன் யசோவர்மன் சீன

Page 95
156 உலக வரலாறு
ரிடம் துணையிரங் தான். 740-ல் யசோவர்மனைக் காசுமீர மன்னன் லாலாதித்தியன் வென்றன். யசோவர்மன் பின் ஆண்ட மன்னனை லாலாதித்தியனுடைய மகன் வென்றன். இங்ஙனம் கனேசிமன்னர் வலிகுன்றிய காலத்தில் வங்க . வேந்தர் தலையெடுத்தனர். 810-ல் வங்கவேந்தன் தர்மபா லன் கனேசி மன்னனை வென்று தனக்கு இசைந்த ஒருவ ணுக்கு அரசை அளித்தான். வங்கவேந்தன் நியமித்த அர சனைப் பீமாவில் அரசு செலுத்திய நாகபாதன் கொன்று கனேசியைப் பிடித்தான். இந்நாகபாதர் பிராத்திகார குலத்தினர். இப்பிராத்திகாரர் என்னும் இராசபுத்திரர் தாம் ஆபூக் என்னும் குன்றினுக்கு அண்மையிலுள்ள தீக் குழியிலிருந்து பிறந்தோரின் சந்ததியார் எனக் கிளர்ந்த னர். பிராத்திகார குலத்தினன் முதலாவது ாேகபாதன் 725-ல் குசரத்தில் ஓர் சிற்றரசை நாட்டினன். இக்காகபாத ருடைய சந்ததியில் தோன்றிய நாகபாதன் என்னும் மன்னன் தான் 816-ல் கனேசியைப் பிடித்தான். கனேசி யில் பிராத்திகாரகுலத்தினர் ஆண்டனர். Guit Fair என்னும் மிகிர்பிராத்திகாரன் கி. பி. 840 தொடக்கம் 890 வரையம் கனேசியில் ஆண்டான். போ சர் இமயமுதல் இந்து கங்கை யமுனை வரையும் உள்ள நாடுகளை ஆண்டு ஆழிவேந்தனயினர். போசர் குதிரைப் படையும் ஒட்ட கப்படையும் வைத்திருந்தனர். அவர் வைணவ மதத்தி னர், இலக்குமியை வழிபட்டனர்; ஆதிவராகத்தை நாண யங்களில் இலச்சினையாக இட்டனர். அவருடைய அவை யில் தக்கணத்துப் புலவர் இராசசேகரன் உபசாரம் பெற் ரூரன். அப்புலவன் போசருடைய மகன் மகேந்திர பால லுக்குக் கல்வி கற்பித்தனன். அப்புலவன் பிராகிருதத் தில் கர்ப்பூம் மஞ்சரி என்னும் நாடகத்தை இயற்றினன். மகேந்திரபாலன் கி. பி. 890 தொடக்கம் 903 வரையும் ஆண்டான். அவன் மகன் மகிபாலன் நீண்டகாலம் கனேசியில் ஆண்டனன். 916-ல் மகிபாலனை இராட்டிர கூடமன்னன் மூன்ரும் இந்திரன் வென்று கனேசியைப் பிடித்தான். மகிபாலன் பின்னரும் கனேசியில் சுவாதீன

க்ருஷனும் சிற்றரசுகளும் 15? மாக இருந்து அரசு புரிந்தான். மகிபாலனுடைய மகன் மூலரா சன் என்பவன் குசரத்தில் உபராசனக விருந்து தந்தையோடு விரோதித்து சுவாதீனமாயினன் என்பர். மூலராசன் பகைஞரின் நெருக்கத்தால் குசரத்தைத் தனது இராசதானியாக்கினன் என்ப. மூலராசனுடைய சந்ததி யார் சோளங்கியர் எனவும் சளுக்கியர் எனவும் பெயர் பெற்றனர். w
பிராத்திகார குலத்தினர் முகமதியரோடு பொருது 1090-ல் தொலைந்தனர். அதன் பின் காகதாவாலர் என் னும் கதியவார் குலத்தினர் கனேசியில் அரசுபுரிந்தனர். கதியவார்குலத்து மூன்ருரம்வேந்தன் கோவிந்த சந்திரன் 1160-ல் வல்லரசனயினன். அவனுடைய பேரப்பிள்ளை தான் காசிராசன் சயச்சந்திரன். சயச்சந்திரன் முகமதி யரோடு பொருது கொலையுண்டான். இச் சயச்சந்திர னுடைய மகளைப் பிரிதிராசா காதலித்துத் தந்தையின் விருப்பத்திற்கு மாருக 1175-ல் கவர்ந்து சென்றனன். பிரிதிராசன் விக்கிரமராசனின் சகோதரனுடைய மகனும். விக்கிரமராசன் IV சம்ஸ்கிருத மொழியை வளர்த்தனன். இது கிற்க; 1182-ல் பிரிதிராசன் சாண்ட்லர் குலத்தின ரொடு பொருதுவென் ருரன். பின்பு அவன் கோரிமுகமது என்பவனேடு அமர்புரிந்தான். அவன் இந்துமொழியில் எழுதப் பெற்ற சாந்திரேயிசா என்னும் தொடர்நிலைச் செய்யுளின் பாட்டுடைத் தலைவனுயினன் என்ப.
வங்கம் 7-ம் நூற்ருரண்டிலே வங்கத்திலே ஆதிகுரன் என்னும் அரசன் இலட்சுமணவதியில் அரசாண்டான். அவன் இந்துமதத்தினன். 750-ல் குடிகள் கோபாலன் என்னும் ஒருவனை அரசனகத் தெரிந்தனர். அவனுடைய மகன் வங் கத்தோடு அங்கத்தையும் ஆண்டான். அவன் மகாயன பெளத்தத்தைப் புரந்தான். அவனுடைய மகன் தர்ம பாலன் மீண்டகாலம் வல்லரசனுயிருந்தான். தர்மபாலன் கனேசி மன்னனை வென்று ஆழியுருட்டினன். அவனுடைய

Page 96
158 உலக வ்ரல்ாறு படைத்தலைவன் லாவசேனன் அசாம் நாட்டையும் கலிங்க நாட்டையும் கைப்பற்றினன். தருமபாலனுடைய மகன் தேவபாலன் மீண்டகாலம் செங்கோலோச்சினன். அவன் குளம் தொட்டு வளம் பெருக்கிக் குடிகளைக் காத்தோம்பி னன். இப்பாலர்குலத்து ஒன்பதாம் மன்னன் மகிபாலன் 978-ல் அரசபதவியைப் பெற்றன். இம் மகிபாலனை ஆழி வேந்தன் இராசேந்திரசோழன் 1023-ல் வென்று கங்கை கொண்ட சோழன் என்னும் விருதுப்பெயரைப் பெற்றன். மகிபாலன் மகன் நாயபாலன் தீபத்து மன்னனுக்குத் தூது அனுப்பினன். பாலர் குலத்தினர் தமிழரோடு அமர்புரிந்து வலிகுன்றினராக, வலாலசேனர் என்னும் பிராமண குலத் தினர் 1103-ல் வங்கத்தாசை வெளவினர்.
வங்கத்துக்கு அப்பாலுள்ள அசாம் நாட்டைக் கி. பி. 4-ம் நூற்ருரண்டில் சமுத்திர குப்தன் கைப்பற்றினன். வேதகாலத்துத் தந்திரமதம் அவண் பரம்பியிருந்தது. அங்கு பெளத்தம் போதிக்கப்பட்டதாயினும் சக்தி வழி பாடே தலையெடுத்தது. அசாம் காட்டினரை முகமதியர் முரடரென எண்ணினராம்.
S T Jf Jób காசுமிர வரலாற்றை 12-ம் நூற்ருரண்டி லிருந்த கலி யாணன் என்னும் பிராமணன் எழுதினன். அந்நூலின் பெயர் அரசதரங்கனி. காசுமிரம் மோரியருக்கும் குஷன் குலத்தினருக்கும் குப்தர்களுக்கும் திறையளிக்கும் நாடா கவே இருந்தது. காசுமிரமன்னர் இடையிடையே தம் சுவாதீனத்தை இழந்தும் பின்பு பெற்றும் அரசுபுரிந்த னர். காசுமிரமன்னர் கருஷனுக்கும் திறையளித்தனர். காசுமிர மன்னருள் சிறந்தோன் லா லாதித்தியன். அவன் கன்னேசி மன்னனைப் புடைத்தான். துருக்கர் காசுமிரத் தைப் பிடித்துக் குடிகளை முகமதியராக்கினர்.
மத்திய விந்தியா கி, பி. 850 முதல் 1200 வரையும் மத்திய நாடுகளில் சாண்டலர் குலத்தினர் அரசுபுரிந்தனர். அவர்கள் கட்
参

கருஷனும் சிற்றரசுகளும் 1.59
டிய அமண்கோயில்களைக் கசோர் என்னும் இடத்தில் இன்றும் காணலாம். அக் கோயில்கள் பல அரசன் தங்க னல் கட்டப்பட்டவை. சாண்டலர் குலத்தினர் கொண்டர் என்னும் சாதியினர் எனக் கருதப்படுகின்றனர். அவர் கள் வடக்கு 'நோக்கிச் சென்று ஜஜகாபதி என்னும் நகரை யமுனைக் கரையில் அமைத்தனர். அவர்கள் குசர நாட்டுப் போ சராசருக்குத் திறையளித்து இருந்து பத்தாம் நூற்றாண்டில் சுதந்திரம் பெற்றனர். 11-ம் நூற்ருரண்டுத் தொடக்கத்திலே மன்னன் இராசகீர்த்தி மகாகோசலை தேசத்து அரசன் கன்னதேவரை வென்ருரன். அக் கீர்த்திவர்மனுடைய ஆதரவில் 1065-ல் பிரபுத்த சந்தி ரோதயம் என்னும் நாடகம் நடிக்கப்பட்டது. அந்நாடகம் வேதாந்தத்தைக் ககை மூலம் போதிக்கின்றது. சாண்டல் மன்னன் பரமார்த்தி என்போனைக் குற்புடின் இடாக்" என்னும் சோனகன் வென்ருரன். பின்பு 1564-ல் துர்க்க வதி என்னும் அரசி செங்கோலோச்சியிருந்து அக்பா ருடைய தானைத் தலைவன் அசாவ்கானை எதிர்த்துப் போரா டிப் புகழ் பெற்றனள்.
மழவம் V.
மழவநாட்டிலே 1060-ல் இராசபோ சர் ஆண்டார். அவர் சம்ஸ்கிருதம் கற்றுப் புலவர்களைப் புரந்தார். அவ ருடைய தலைநகர் தாரா. போசர் கட்டுவித்த போசபுரக் குளம் 250 சதுரமைல் என்ப. முகமதியர் படையெடுத்து அக் குளத்தைப் பாழாக்கினர். அக்குளம் கிரவப்பெற்று பிற்காலத்தில் அங்கிலருடைய நீராவி வண்டில் ஒடும் பாதையாயிற்று.
டெல்லி
கி. பி. 993-ல் டெல்லி ஓர் சிற்றரசா யிருந்தது. டெல்லியில் தோமார குலத்தினர் ஆண்டனர். வட மதுரையிலிருந்த இருப்புத்தூண் நிலை பெயர்க்கப்பட்டு டெல்லியில் 5ாட்டப்பட்டது. டெல்லியின் அண்மையில்

Page 97
160 உலக வரலாறு
பாரதம் கூறும் இந்திரப்பிரஸ்தம் இருந்ததென்ப. டெல்லி முகமதியருடைய இராசதானியாக இருந்தது. அங்கிலத் தேசாதிபதிகள் டெல்லியைத் தம் இராசதானியாக்கிக் கொண்டனர். இத்துடன் வடவிந்திய இந்து இராச்சியங் களின் வரலாறு முற்றுப் பெற்றது. இனித் தென்னவர் வரலாற்றைத் தொடர்வாம்.
4.ம் அதிகாரம்: சிங்களர்
1-ம் பாடம்-இலங்கை மகாவம்சம்
ஈழத்துப் பழங்குடிகள்
இற்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன்னர் நிகழ்ந்த மட்கண்டப் புடைப் பெயர்ச்சியாலும் கடற்கோளாலும் இலங்கை குமரிக் கண்டத்தில் கின்றும் பிரிந்து ஒரு தீவா யது. மேனுட்டு மட்கண்ட நூலார் மத்திய இலங்கையி லுள்ள மலைப்பாறைகளை ஆராய்ந்து அவைமிகப் பழையவை எனவும் தமிழ்நாட்டு மலையின் தொடர்ச்சி யாதல் வேண்டுமெனவும் மொழிகின்றனர். ஆரியர் 6விந்தியாவினுள் புகுந்து குடியேறி அரசியல் நடாத்தி வடமொழியை வளர்த்து இராமாயணம் எழுதிய காலத் திற்கு முன்னரே இலங்கை இந்தியாவினின்றும் பிரிந்த தாதல் வேண்டும். அநுமான் மகேந்திர மலையிலிருந்து இலங்கை பாய்ந்திானகையாலும் இராமர் அண்கட்டிக் கடல் கடந்தாராகையாலும் இராமாயணம் எழுதிய காலக் துக்கு முன் இலங்கை இந்தியாவிலிருந்து மன்னுர்க் கடலா லும் பாக்கு நீரிணையாலும் பிரிக்கப்பட் டிருத்தல் வேண் டும். இலங்கைத்தீவு இப்போதைய தீவிலும் பெரிய தென எண்ணப்படும். கி.மு. 500 அளவில் கிகழ்ந்த கடற் கோளிலும் இலங்கைத் தீவின் சில பகுதிகள் கடற்கோட் பட்டன. y

இலங்கை மகாவம்சம் 161
இராமாயணக் கதையால் இலங்காபுரம் என்னும் தலைநகரில் இராவணன் என்னும் வேந்தன் அரசாண்டிருக் தனன் எனத் தெரிகிறது. அவன் திராவிடன் எனவும் இந்து மதத்தினன் எனவும் தன் இசைவன்மையால் சிவனைப் பிரிய்ப் படுத்தினன் எனவும் பலர் அபிப்பிராயப் படுகின்றனர். இலங்கைக் குடிகளை இயக்கர் நாகர் என ஆரியர் பெயரிட்டனர். மகாவம்ச வரலாற்ருரனும் இலங் கைக் குடிகள் நாகர் இயக்கர் என இரு சாகி பினரெனத் தெரிகிறது. கடைச்சங்க நூலாகிய மனிமேகலையாலும் இலங்கையில் நாகரும் இயக்கரும் வதிந்தனரெனப் புலப் படுகின்றது. நாகர் வடமேற் பாகங்களிலும் இயக்கர் தென் கீழ்ப் பாகங்களிலும் வசித்தனர்.
நாகர்
நகர் என்னும் மொழி நாகர் என்னும் மொழியி லிருந்து மருவிய தெனவும் நாகரே முதன் முதல் 広 35 T வாழ்க்கை செய்தனரெனவும் நாகலோகத்தைத் தரிசித்த பிறசாதியினர் நாகருடைய நகர வாழ்க்கையின் சிறப் பைக் கண்டு வியப்புற்றுத் தாமும் நகரங்களை நாட்டி நாகரிகமாக வாழத் தொடங்கினரெனவும் மொழியலாம். நாகர் சீர்மையுற்றிருத்தலை வேதகாலத்து ஆரியர்கண்டு தம் வேதங்களிலும் இதிகாசங்களிலும் புராணங்களிலும் புகழ்ந்தமையாலும் தமிழ் மக்களும் தம் கூட்டத்தினராகிய நாகர் வாழும் நாகலோகம் இந்திரலோகத்திலும் பார்க்கப் போகந் துய்த் தற்குச் சிறந்த இடமெனச் சங்க விலக்கியங் களிலும் தமிழ்க் காப்பியங்களிலும் உரைத்தமையாலும் நாகருடைய நாகரிகமே ஏனைய நாகரிகங்களிலும் பார்க் கப் பழமையானதெனக் கூறலாம். இனி மகாவம்சம் நாக மன்னன் ஒருவன். புத்தரை வரவழைத்து உபதேசம் கேட்டணனென மொழிகின்றமையால், நாகர் மிகச் சீர்மையுற்றிருந்தனர் என்பது இனிது புலப்படுகின்றது. தமிழ்நாட்டு மன்னர் தமிழ்நாட்டு நாகரோடு மணவுரிமை உடையோரா யிருந்து ஒன்று கலந்தன ராகையாலும்
2.

Page 98
162 உலக வரலாறு
நாகன் என்னும் பெயர் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பெருவழக்கா யிருந்து வருகின்றமையாலும் நாகர் தமிழ்க் கூட்டத்தினர் என்பது அங்கை கெல்லி போலத்தெளிவா கின்றது. இந் நாகர் நாகம் என உருவகப்படுத்திய குண் டலி சக்தியை வழிபட்டனராதலின் சைவ மதத்தினர் எனக் கருதப்படுவர். நாகர் சிவனை வழிபட்டனராதலின்; நாகர் நாகபாம்பைத் தொழுதனர் அல்லர் என்பதையும் நாகம் என்பது குண்டலியைச் சுட்டும் என்பதையும் ஓர்க் துணர்க.
இலங்கையின் பெயர்கள்
இலங்கைத் தீவைத் தமிழர் ஈழம் எனவும் ஆரியர் தாமிரபர்ணித் தீவெனவும் பெயரிட்டனர். யவனர் தாமிர பரணி என்பதைத் திரித்துத் தப்பிரபான் என வழங்கினர். மணிமேகலை யாசிரியர் சாத்தனர் சமந்த கூடம் என்னும் பாத பங்கயமலை இரத்தினத் தீவில் உளதெனச் சாற்றினர். வால்மீகியினுடைய இலங்கைதான் ஈழமெனவும் தப்பிர பான் எனவும் இரத்தினத் தீவெனவும் பண்டுதொட்டுப் பெயர் பெற்றது என்க.
சிங்களச்சாதி தோன்றியபின் இலங்கையைச் சிங் களத்தீவு எனச் சிலர் குறித்தனர். சிங்களத்தீவு என் பது சிலான் எனத் திரிபெய்தியதெனச் சிங்களர் சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். அது பொருந்தாது. என்னே! யவனரும் உரோமரும் ஈழத்தைச் சேரனுடைய கரை வழிவந்தடைந்து சேரன் தீவு என அழைத்தனர் எனவும் சேரன் தீவுதான் சேலன்தீவு எனப் போத்துக்கேயராலும் சிலான் என அங்கிலராலும் அழைக்கப் படுகிற தெனவும் கருதல் பொருத்தமாகும். இனி இலங்கை என்னும் பெயரே பண்டுதொட்டு வழங்கியது என்பதைக் கடைப் பிடிக்க.
வணிகம் இலங்கை உலகின் மத்தியில் இருப்பதால் பண்டு
தொட்டு வணிகத்திற்குப் பெயர் பெற்றிருந்தது. இரத்

இலங்கை மகாவம்சம் 163
தினம், மிளகு, கறுவா, பாக்கு, தேங்காய், எண்ணெய், முத்து, மெல் முதலிய பண்டங்களை மாதோட்டம் முதலிய பழைய துறைகளிலிருந்து யவனரும் பார்சியரும் அராபி யரும் இந்தியரும் சீனரும் ஏற்றிச் சென்றனர் எனத் தெரிகிறது. இலங்கையிலிருந்து தூதர் பண்டு தரைப் பாதையாலும் கடற் பாதையாலும் சீன தேயத்திற்குச் சென்றனராம். பெரிப்புளுஸ் என்னும் நூலை எழுதிய யவன வாசிரியன் யவனர் இலங்கை மக்களோடு செய்த வணிகத்தைப் பற்றி விரித்துரைக்கின்றனன். கி. பி. 50-ல் இலங்கையிலிருந்து தூதர் உரோமா புரிக்கும் சீனத் திற்கும் சென்றனர் எனத் தெரிகிறது. தமிழர் ஈழத்தி லிருந்து உணவுப் பொருட்களைப் பெற்றன ரெனச் சங்க விலக்கியங்களே சான்று கூறுகின்றன. கறுவர பெறு தற்கே போத்துக் கேயரும் ஒல்லாந்தரும் அராபியரும் அங்கிலரும் பல நூற்றாண்டுகளாகப் பொருதன ராகலின்; இலங்கையின் வணிகத்தைப்பற்றி விரித் தெழுத வேண் டியதில்லை என விடுகின்றனம். ஈண்டு கைசர் குடும்பத்து உரோம தனிக்கோலருடைய பொன் னுணகங்களும் சீனத்து 11-ம் நூற்ருரண்டுச் சங் வம்சத்தினருடைய நாண கங்களும் இலங்கையில் பாழான நகரங்களில் எடுக்கப் படுகின்றன என்பதை அறிக.
(.i. F[IIéir
சிங்கள மன்னர் வரலாறும் அவர்கள் பெளத்த மதத்தை வளர்த்த வரலாறும் பெளத்த பிக்குக்கள் எழு திய மகாவம்சம் என்னும் நூலால் தெளிவாகின்றன. அதனைத் தொடர்ந்து சிங்களவரின் வரலாற்றைச் செப்பு வாம். விசயனும் 700 வீரரும் கலகக் காரர் எனத் தம் நாட்டில் கின்றும் நாடுகடத்தப்பட்டு இந்தியாக் கரையில் ஓரிடத்திலும் குடியேற முடியாமல் ஈழத்திலே கி. மு. 543-ல் குடியேறினர். அவர்கள் ஆரியரோ திராவிடரோ எனத் தெரிகின்றிலது. அவர்கள் புத்தளத்தில் இறங்கி இளைப்பாறிய தருணத்தில் ஓர் நாயைக் கண்டு அதைத்

Page 99
64 "உலக் வரலாறு
தொடர்ந்து சென்ருரல் ஊரை அடையலா மென்று எண் ணினர். விசயனும் அங்ஙனம் நாயைத் தொடர்ந்துபோய் ஓர் குளக்கரையில் கடவுளை வழிபடும் ஓர் பெண்ணைக் 656R LIT 60.
அப்பெண் குவேனி (கூவன்னு) என்னும் யக்கவரசி. குவேனி விசயனையும் அவனுடன் வந்த 750 வீரரையும் பிடித்து ஓர் குகையினுள் இட்டனள். விசயன் குவே னியை மண முடித்துப் புத்தளத்திற்கு அண்மையிலிருந்த தமனநுவரா என்னும் 5 க ரி ல் அரசாண்டிருந்தான். இலங்கை குடியேறிய விசயன் கலிங்க நாட்டு அரசகுடும் பத்தினன். விசயனுடைய தந்தை, சிங்கபாகு என்னும் பெயரினணுதலின், விசயனுடைய சந்ததியார் சிங்களவர் எனப் பேயர்பெற்றனர். சிங்கம் வங்கத்து அரசகுமாரியை மணந்து சிங்கபாகுவைப் பெற்றமையால் அச் சந்ததி யினர் சிங்களர் எனப் பெயருடையராயினர். இக் கதை யால் சிங்களர் வீரராயினர் என்பது புலப்படுகிறது. விச யன் யக்கத்தலைவர் பலருடன் பொருது வென்ருரன். பின்பு விசயன் குவேனியைக் காடுகலைத்துப் பாண்டியனு டைய மகளை மணமுடித்து இருந்தான் எனவும் குவேனி யும் பிள்ளைகளும் காட்டில் அலைந்து இருந்து வேடரா யினர் எனவும் பழங்கதை கூரு கிற்கும். யக்கர் பேசிய மொழி ஈழு சிங்களத்தின் தாய்மொழி எனப்படும். விசய னுடன் வந்த 750 வீரரும் பாண்டி நாட்டில் பெண்பெற்ற னர் என்ப. விசயன் பாண்டி நாட்டிலிருந்து கலைவல்லோ ரையும் சிற்பிகளையும் ஒவியரையும் வரைவழைத்தனன் என்ப. விசயனுக்குப் பிள்ளைகள் இல்லாமையால் தன் மரணகாலத்தில் தன் தந்தைக்குத் தூது அனுப்பினன். சிங்கபுரத்திற்குச் சென்ற தூதன் திரும்புமுன் விசயன்
இறந்தான்.
குடியேற்றம் பழைய குடியேற்றங்களுள் அநுராதகாமம் மகா காமம் கலியாணியா என்பவை சிறந்தன. காமம் என்

இலங்கை மகாவம்சம் 165
பது கிராமம் என்பதன் சிதைவு, இனி, விசயன் இறக்க, உபதீசன் என்பவன் உடதிசாநுவரா என்னும் நகரி லிருந்து அரசியலை நடத்தினன். ஓர் ஆண்டு கழியுமுன் சிங்கபாகுவின் இளைய மகள் 'சுமித்தா தன் இளைய குமா ரன் 'பாண்டுவாசனை’ உபதிசையில் ஆளும்படி அனுப்பி ள்ை, பாண்டுவாசன் கெளதம புத்தருடைய இனத்தின ருள் ஓர் பெண்ணே விவாகம் செய்தான். அப் பெண்ணின் சகோதரர் அறுவர் இலங்கை வந்து பல பகுதிகளிற் குடி யேறினர். அப்பகுதிகள் இராமகோன உருகுனை திகாயை உருவேலை அநுருத்தை விசித்த காமம் எனப் பெயர்பெற்
றன.
வன்னியர்
வன்னியர் என்னும் தமிழர் இலங்கையில் குடியேறி னர். வன்னியரின் வரலாறு வருமாறு: மனுநீதிகண்ட சோழ குலத்துக் குளக்கோட்டன் திரிகோணமலையிலுள்ள சுவாமியைத் தரிசிக்கச் சென்ருரன். அவ்வாலயம் பழுதும் றிருந்தமையால் அதைப் புதுப்பித்தான். அவ்வாலயத்திற் கெனப் பல விளை நிலங்கள் தானமாகக் கொடுத்தான். அவ்வயல்களுக்கு நீர்ப்பாய்ச்சு தற்கு ஒர் ஏரி கட்டினன். அவன் அவ் வயல்களைச் செய்வித்தற்கு ஐம்பத்தொரு வன்னியசாதிக் குடும்பங்களே வன்னியில் குடியேற்றினன் என்ப. வன்னியர் தலைவன் மருங்கூரிலிருந்து வந்த தனி யுண்ணுப் பூபாலன் என்பர். பெரிய குளத்தையும் கோயி " லையும் கட்டியமையால், அரசன் குளக்கோட்டன் எனப் பெயர் பெற்ருரன். பாண்டியன் தன் மகளே விசயனுக்கு ஈந்தபொழுது வந்த குடிகள் சிலர் வன்னியராயினர். அவ் வன்னியர்கள் மதுரை திரிசிராப்பள்ளி தஞ்சை முதலிய இடங்களிலிருந்து வறியவரைக் கொணர்ந்து குடியேற்றிக் கமஞ் செய்தனர். வன்னியர்கள் பெருகி அரசு நடாத் தினர். இவ் வன்னியர்கள் விசயன் இலங்கை வந்த காலத்தோ அதன் பின்னரோ வன்னியில் குடியேறின ரென்பது தெரிகின்றிலது,

Page 100
66 உலக வரலாறு 2-ம் பாடம் - பண்டைய அரசர்களும்
பெளத்தமதமும்
பண்டு இலங்கையில் இராசரத்தை மாயரத்தை உரு குனே என மூன்று இராச்சியங்கள் நிலைத்தன. தெதுரு ஓயாவுக்கும் மாவலிகங்கைக்கும் வடபாலுள்ள நாடு இராச ரத்தை யெனவும், தென்பால் காளு கங்கை வரையும் உள்ள நாடு மாயரத்தையெனவும், காளு கங்கைக்குத் தென்பாலுள்ள நாடு உருகுனையெனவும் பெயர் பெற்றன. இவ்விராச்சியங்களுள் இராசரத்தையே வலி மிகுந்தது. ஏனைய இரண்டும் பெரும்பாலும் இராசரத்தையில் ஆளும் மன்னரின் உபராசரால் ஆளப்பட்டன. இம் மூன்று அரசுகளுக்கும் முறையே அனுராதபுரம், கலியாணி, மகா காமம் என்னும் நகரங்கள் தலைநகராயின.
பாண்டுகாபயன்
பாண்டுவாசன் முப்பதாண்டு அரசு புரிந்து மடிய, அவ னுடைய மக்கள் ஒன்பதின்மருள் மூத்தோன் அபயன் அர சனனன். அவனுடைய ஆட்சிக்காலத்தில் அரச குடும்பத் தினர் கட்சி பிரிந்து கலகப்பட்டனர். அபயனுடைய சகோதரன் மகன் பாண்டுகாபயன் தந்தையின் சகோதர ரைக் கொன்று அரசு கட்டில் ஏறுவன் என ஒரு வாக்கு இருந்தது.
பாண்டுகாபயனை ஓர் பிராமணன் வளர்த்து வில் வித்தை குதிரையேற்றம் முதலியவற்றைக் கற்பித்தான். பாண்டுகாபயன் போர் முரசறைய அபயன் அஞ்சி அவனே மாவலிகங்கைக்குத் தென்பாலுள்ள நாடுகளை ஆளும்படி இறைஞ்சினன். அபயனுடைய சகோதரர் அதைக் கேள்வியுற்றுச் சினந்து அபயனைக் கலைத்துக் தம்முள் ஒருவனகிய தீசனுக்கு அரசை அளித்தனர். பாண்டு காபயன் தன் தந்தையின் சகோதரர் எழுவரோடு பொருது வென்றன். அவன் யக்கரின் துணைபெற்றுத்

பண்டைய அரசர்களும் பெளத்தமதமும் 167
தந்தையின் சகோதரர் எழுவரைக் கொன்று கி. மு. 437-ல் வாகை சூடினன். அவன் யக்கர் செய்த நன்றியை மறக்கவில்லை. யக்கருடைய தேவுக்களை அவன் வழிபட் டான். பாண்டு காபயன் உபதிசையை விட்டு அநுராத புரத்தைத் தல்ை நகராக்கினன். ஆங்குச் சயவீவா "கமினி வீவா’ என்னும் இருகுளம் தொட்டான் என்ப. அநுராத புரம் நான்கு புறநகர் உடையதாயிருந்தது. நகரில் ஈமக் காடும் கொலைக் களமும் தாபிக்கப் பட்டன. பாண்டு காப யன் 70 ஆண்டு அரசியலை நடாத்தினன்.
பெளத்தமதம் பாண்டு காபயனுடைய மகன் முத்த சிவன் 60 ஆண்டு ஆண்டான். அவன் மகாமேகம் என்னும் சோலையை w
காட்டினன். அவன் கி. மு. 301-ல் துஞ்ச, அவன் மகன் தேவநம்பியதீசன் முடி பெற்றன். தேவநம்பியதீசனு டைய காலத்தில் இலங்கையில் புத்த சமயம் பரம்பியது. கெளதம புத்தர் யக்கரை வெருட்டற்குப் பிந்தனை என் னும் இடத்தில் ஒருமுறை தோன்றினர் எனவும், நாகவர சர் இருவர் இரத்தினக் கட்டிலை வெளவிக் கலகப்பட்டன ராகக் கலக நாசஞ் செய்தற்கு ஒருமுறை தோன்றினரென வும் கல்யாணி நகரத்து நாகமன்னன் வேண்டுகோட் கிணங்கிப் புத்த மதத்தை உபதேசித்தற்குக் கடைசியாக இலங்கை வந்தனரெனவும் பெளத்தர் கூறுப. கலியாணி நாக மன்னனைக் காணவந்தகாலை புத்தர் சமந்த கூடத் தில் இறங்கினர் என்ப. அவண் அவருடைய அடியைக் காண்க. இக் கதைகள் பெளத்த சமயாபிமானிகளால் புனைந்துரைக்கப் பட்டன.
வடவிந்திய ஆழிவேந்தன் பியதாசன் என்னும் அசோ கன் கி. மு. 247-ல் பெளத்த சங்கத்தைக் கூட்டிப் பெளத் தக் கொள்கைகளை முறைவகுத்து பெளத்த மதத்தைப் பரப்ப முயன்ருரன். அசோகனுடைய தம்பி மகேந்திரன் இலங்கையில் உபதேசஞ் செய்யும்படி கட்டளை பெற்ருரன்,

Page 101
168 உலக வரலாறு
மகேந்திரனை மகாவம்சம் மிகுந்தன் எனவும் அசோக னின் மகன் எனவும் கூறுகின்றது.
தேவ நம்பிய தீசனுடைய ஆட்சிக்காலத்தில் அற் புதங்கள் பல நிகழ்ந்தவையாம். பூமியிலிருந்து திரவியங் கள் வெளிவந்தன; முத்து இரத்தினம் முதலியவை கரை யில் மிகந்தன; அநுராத புரத்தில் மூன்று மூங்கில் முளைத்தன; ஒரு மூங்கிலில் பொன்மயமான செடி ஒன்று படர்ந்தது; ஒன்றில் பல்வேறு நிறத்த பூக்கள் மலர்ந்தன; ஒன்றில் பல்வேறு பறவைகள் இருந்து கீதம்பாடின.
தேவநம்பியதீசன், துன்ப மறியாதவன் எனச் சொல்லப்படும் தீசன் அசோகனுடைய நட்பைப் பெற விழைந்து, தன் மருகன் மகாஅரித்தா என்பவனைத் தூது அனுப்பினன். அவன் இரத்தினமும் தேர்க்கம்பும் வலம் புரிச் சங்கும் அசோகனுக்கு அளித்தானம். சிங்களத் தூதர் நாகதீபத்தை யடைந்து அந் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து பாடலிபுரத்திற்குச் சென்று அசோகனத் தரிசித்தனராம். அசோகன் அவர்களை வரவேற்று வாளும் முடியும் கொடுத்துப் புத்தியுரைகளும் கூறினன் என்ப. இங்ஙனம் தேவநம்பியதீசன் புத்த மதத்தைப் பரப்பிய அசோகனேடு நட்பா யிருந்தனன்.
தீசன் வேட்டையாடச் சென்று தமியனுக நின்ற தருணத்தில் மிகுந்தலை என்னும் குன்றில் மிகுந்தனிடம் உபதேசம் பெற்றுப் பெளத்த மதத்தைத் தழுவினன். அவன் மகாமேகக்காவை பெளத்த பிக்குக்களுக்கு அளித்தான். பிக்குக்கள் வசித்தற்கு மகாவிகாரை என் னும் பள்ளியைக் கட்டினன். கி. மு. 245-ல் புத்தருடைய எலும்பை "அசோகனிடம் பெற்றுத் தூபராம சைத்தியத் தில் வைத்தனன். தீசனுடைய சகோதரன் மனைவி அநுலா என்பவளும் 500 பெண்களும் புத்த மதத்தைத் தழுவினர். பெண்களைப் புத்த சங்கத்தில் சேர்த்தற்கு மிகுந்து அசோகனிடம் உத்தரவு பெற்ருரன். மிகுந்துவி

தமிழர் படையெடுப்பும் من 5 ساتاني னுவும் 69
னுடைய தங்கை சங்கமித்திரை புத்த மடத்தில் பெண் க3ளச் சேர்த்தற்கு வந்தபொழுது புத்தர் அரகத் நிலை யடைந்து சிறப்பித்த அரசமரத்தினது கிளை ஒன்றைக் கொணர்ந்தாள். அக்கிளே அநுராத புரத்தில் மகா மேகக்காவில், நாட்டப்பட்டு வெள்ளரசெனப் பெயர் பெற் றது. அவ் வெள்ளரசைப் பெளத்தர் இன்றும் வணங்கு கின்றனர். பெளத்தர்கள் அரகத்கிலை என்னும் கிர் வாணம் அடையவிரும்பும் ஈனுயண மதத்தினர் எனவும் ஆன்மாக்களுக்கு உதவி புரிதற்கென, இடையிடையே பிறக்கும் போதிசத்துவராக விரும்பும் மகாயனரெனவும் இரு பிரிவினராயினர்.
தீசன் இறந்தபின் அவன் தம்பி உதயன் அரசபதவி யைப் பெற்றரன். உதயன் மரித்தபின் அவன் தம்பி மகா சிவன் அரசனுனன். அவன் பின் அவன் தம்பி குரதீசன் அரசனுணுன்.
3-ம் பாடம்-தமிழர் படையெடுப்பும் துட்டகமுனுவும்
சூரதீசனுடைய ஆட்சிக் காலத்தில் தமிழர் தமிழ் நாட்டிலிருந்து வந்து இராசரத்தையைப் பிடிக்க முயன் றனர். சூரதீசன் தன் புரவிப் படைக்குத் தலைவராகச் சேனன் குதிகன் என்னும் இருவரை கியமித் திருந்தான். அவ்விருவரும் சூரதீசனைக் கொன்று 22 ஆண்டு ஆண் டனர். அவ் விருவரையும் முத்த சிவனுடைய ஒன்பதாம் மகன் அசீலன் கொன்ருரன். அசீலன் பத்தாண்டு அரசி யலை நடாத்தினன்.
கி. மு. 145-ல் சோழநாட்டு அரசிளங் குமரன் எல்லா
ளன் மாவலிகங்கையின் வழிவந்து சிங்களரைப் புடைத்து
அசீலனைக் கொன்று இராசரத்தையில் 44 ஆண்டு
22

Page 102
170 உலக வரலாறு
செங்கோ லோச்சினன். எல்லாளன் மாயாத்தை மன்ன ரிடமும் உருகுனே மின்னரிடமும் திறை பெற்ருரன். அவன் 32 அரண்கள் கட்டிக் காவல் புரிந்தான். மாதோட் டம் என்னும் பட்டினம் எல்ல ளனுல் மன்னர்க் கரையில் அமைக்கப்பட்ட தென்ப. எல்லாளன் இந்துவாயினும் பெளத்தரைத் துன்புறுத்தவில்லை. பெளத்தர் அவ. அறுடைய செங்கோலைப்பற்றி மிக வியந்து எழுதினர். எல்லாளன் மனுநீதிகண்ட சோழனுக்கு ஒப்பாவான் எனப் புகழப்பட்டான். இது கிற்க.
மகரநfக்ன்
தேவநம்பிய தீசன் அரசு புரிந்த காலத்தில் அவன் தம்பி மகா நாகன் உப ராசனுக நியமிக்கப்பட் டிருந்தான். தேவநம்பிய தீசனுடைய கோப்பெருங் தேவி தன் மகன் குழந்தையாக லின் தன் கொழுநன் இறக்க, மகாநாகன் அரசை வெளவக் கூடுமென அஞ்சி மகாநாகனை நஞ் சூட்ட எண்ணினள். நஞ்சு கலந்த மாம்பழத்தை மகா நாக னுக்கு அளிக்க, அவனுடன் இருந்த தீசனுடைய அர சிளங் குழந்தை அதைத் தின்று இறந்தது. மகா நாகன் உருகுனைக்கு ஒடித் தப்பினன். அவன் மாகமத்தைத் தலைநகராக்கி உருகுனேயில் அரசு செலுத்தினன். அவன் துஞ்சியபின் அவன் மகன் யத்தலாகத்தீசன் உருகுணை யில் அரசன யிருக்தான். அவன் கல்யாணி என்னும் நகரை நாட்டினன். கலியாணி கடற் கரையிலிருந்து 15 மைல் உண்ணுட்டில் 5ாட்டப்பட்டதாம். இக் கல்யாணி இக்காலத்தில் கலனி எனப்படும். -
துட்டகமுனு (துட்ட கிராமணி) எல்லாளன் அசாண்ட காலத்தில் யதலகத் தீசனு டைய பேரன் காவன்ன தீசன் உருகுனேயில் அரசு செலுத்தி யிருந்தான். அவன் கலியாணி நகரத்து விகார தேவி என்னும் அரசிளங் குமரியை மண முடித்துக் கமுனு (கமினி) தீசன் என்னும் இரு குமாரரைப் பெற்

தமிழர் படையெடுப்பும் துட்டகமுனுவும் 171
ருரன். மூத்தோன் கமுனு பன்னிராட்டைப் பிராயத்தின ணுகிய காலத்தில் காவன்ன தீசன் மக்கள் இருவரையும் அழைத்து பெளத்த பிக்குக்களைப் புரக்கும் படியும் ஒருவ GB pitG ஒருவர் நட்பாயிருக்கும்படியும் தமிழரோடு 65 யாமல் அரசியலை நடாத்தும் படியும் புத்தி யுரைத்தனனும், கமுனு தமிழரோடு நட்பாயிருக்க முடியாதென மறுத் தனன் எனவும் ஒருபக்கம் கடலும் ஒருபக்கம் தமிழரும் தன்னை நெருக்கத் தான் எங்கனம் ஆறு கலா கப் படுத் திருக்கலாமெனத் தன் தாயொடு வாதாடினன் எனவும் கட்டுரை உண்டு. கமுனு என்னும் காமனி (கிராமணி) என்பது கிராமத் தலைவன் எனப் பொருள்படும்.
#{pg]]ỉ6Î LJ8DLI0ĩLf:
கமுனு இள வயசிலேயே குதிரை யேற்றமும் யானை யேற்றமும், படைக்கலங்களும் பயின்று தமிழரோடு போர் புரிய எண்ணினன். பத்து வீரர் ஆட்டகமுனுவின் தோழ ராயினர். நந்தி மித்திரன் பெளக்க மகச் சின்னங்களை இகழும் தமிழரைத் தண்டித்தலில் விருப்புடையனப் அநு ராத புரத்தில் உலாவினன்; சூரகிமலன் நடை கடியனுக லின், தூர நாடுகளுக்கு விரைந்து செல்லக் கூடியவன், மகாசேனனும் கோதாயம்பரனும் மரங்களை வேரோடு பிடுங்கக் கூடிய வீரராயினர். சேரபுத்தா பயன் தன் 16 அடி நீளத் தண்டால் பனைமரத்தை அடித்து வீழ்த்தக் கூடியவன். பாரனன் மானினும் விரைந்து செல்லும் இயல்பினன். வேலுசுமணன் குதிரையேற்றத்தில் ஒப்பா ரில்லாதவன். கஞ்சதேவன் முடவனுயினும் காட்டெருமை யைக் கையால் தூக்கி வீசும் ஆற்றல் உடையவன். பூச தேவன் குதிரை மயிரை இலக்குப்பார்த்து அம்பு எய்யும் வல்லமை யுடையவன். வாசவன் பதின்மர் உயர்த்த முடி யாத சுமையை எடுக்கக் கூடியவன். இக் தோழர் பதின் மருள் ஒவ்வொருவரும் பதின் மரைத் தெரிந்தனர். அப் பதின்மர் ஒவ்வொருவரும் பதின்மரைத் தெரிந்தனர். இவ்வண்ணம் துட்டகமுனு 11,110 வீரரைத் தெரிந்து

Page 103
172 உலக வரலாறு
படைக்கலங்களில் பயிற்றினன் என்ப. காவன்னதீசன் தமிழரோடு போர் புரியப்படாதெனத் தடுத்தானகத் துட்ட கமுனு தந்தையைப் பேடிஎன இகழ்ந்து அரசவையை விட்டு நீங்கினன். இங்ஙனம் துட்டன் எனப் பெயர் பெற்று கொத்தமல்லி மலைகளில் காலங் கழித்தான். காவன்ன தீசன் மரிக்கத் துட்ட கமுனுவும் அவன் சகோ தான் தீசனும் கட்சிப்போர் நடாத்தினர். கமுனு வென்று அரசனுனன்.
C
பின்னர் கமுனு மாவலி கங்கையைக் கடந்து விசித்த புரத்தைத் தாக்கினன். அவன் மூன்றுமாசம் நகரை வளைந்துகின்று பொருதான்; நகரைப் பிடித்துத் தமிழ ரைக் கொன்ருரன்; பல அரண்களைப் பிடித்தபின் அநு ராத புரத்தை நோக்கினன். எல்லாளனும் அவன் படைத் தலைவன் தீகசங் துவும் படைவகுத்து கின்றனர். தீக சக்து சிங்கள வீரர் பலரைக் கொன்று குரகிமலனேடு பொரு தான். குரகிமலன் அவனைக் கொண்ருரனுகத் தமிழர் முது கிடத் தொடங்கினர். எல்லாளனும் கமுனுவும் யானையி லிருந்து தனிப்போர் செய்தனர். எல்லாளன் கொலே யுண்டானுகத் துட்டகமுனு அவனுடைய வீரத்தை மெச்சி உடம்பைத் தகனஞ் செய்து ஞாபக சின்னமொன்று எழுப்பினன். அச் சின்னத்தை வழிச் செல்வோர் யாவ ரும் வணங்கிச் செல்ல வேண்டு மென்பது கமுனுவின் கட்டளையாம். எல்லாளனுடைய மருகன் தமிழரைக் கூவிப் போர்முர சறைந்தான். கமுனு பின்னரும் வெற்றியடைந் தான். துட்ட கமுனு இலங்கை முழுவதையும் ஓர் குடைக்கீ ழாண்டு பெளத்த மதத்தைப் புரங் கான். அவன் செப் போடு வேய்ந்த மண்டபத்தையும் ரூவன் வலிசாயை என் னும் துளயியையும் கட்டினன். அம் மண்டபம் 250 அடி உயர நீள அகல முடையதாய்க் கற்றுரண்களின்மீது ஒன்ப தடுக்கு உடையதாகக் கட்டப் பட்டது. ஒன்பது மாடங் களிலும் பிக்குக்கள் வசித்தனர். யானைத் தந்தத்தினல்

சிங்களர் அரசியல் 178
செய்யப்பட்ட சிங்காசனம் மண்டப மத்தியில் வைக்கப் LJLIL-4M ut. அச் சிங்காசனத்தின் வெண்குடைக் கீழ் யானைத்தங்க விசிறி ஒன்று வைக்கப் பட்டதாம். ரூவன் வலிசாயை என்னும் மகாதூபி 270 அடி உயரமானது. அத் தூபி தன்னகத்தே பொன்னல் இழைக்கப்பட்ட அரச மரமும் புத்த சிலைகளும் உடையதாம். மகாதூபி கட்டி முடியுமுன் துட்டகமுனு இறந்தான். தூபி பெளத்த சின்ன முடையது; விகாரை பெளத்த பிக்குகள் வசிக்கும் மடம் 6T60 D60 a.
4-ம் பாடம்-சிங்களர் அரசியல்
ത്ത്-- அரசன் இறந்தால், அரசு அரசனின் மகனுக்கே உரியது. ஆனல் அரசனுடைய தம்பி அரசனுடைய குமா ரனிலும் மூத்தோனபின், அவனுக்கே முடி அளிக்கப் படும். அரசிளங்குமரன் தன் சிற்றப்பன் மரித்தபின் அர சைப் பெறுவன். அரசனுடைய குமாரனும் தம்பியும் வயசு முதிர்க்தோராயின், இருவரும் முடிபெற விழைந்த னர். இவ்வண்ணம் அரசகுடும்பத்தினர் கட்சி பிரிந்து கலகப்பட்டு ஒருவரை ஒருவர் கொன்றனர்.
இக் கலகங்களில் குடிகளும் சில சமயங்களில் பங்கு பெற்றுக் கட்சிப்போர் நடாத்தினர். பிற்காலங்களில் பெண்களும் முடிபெற்று அரசியலை நடாத்தினர். அரசு நடாத்தற்கு அரசன் ஐம்பெருங்குழு ஒன்று கூட்டிப் புத்திகேட்டல் வழக்கம். இக்குழு போர், கரைக்காவல், வணிகம், கமம், சமயம் முதலியவற்றை நடாத்தியது. அர சன் இக் குழுவினரிடம் புத்திகேட்டான் ஒழிய, இவர் களுடைய ஏவலுக்கு அமைந்து ஒழுகவில்லை, பண்டைத் தலைவனும் உபராசர் என்னும் இளங்கோவும் புரோகித னும் தலைமைக் கணக்கனும் ஐம்பெருங்குழுவின் உறுப் பினராயினர். வணிகத்தையும் கமத்தையும் நடாத்தும்

Page 104
74 உலக வரலாறு
அமைச்சரும் இம் மத்திய அரசியற்குழுவுக்கு உறுப்பின ராதல் உண்டு. பெரும்பாலும் அரச குடும்பத்தினரே படைத் தலைவராயினர். சில சமயங்களில் படைத் தலை வன் அரசனைக் கொன்று முடியை வெளவினன். இனி, கிராமங்களில் கிராமச் சபைகள் (கன்சபைகள்) கிராமவர சியலை நடாத்தின. கிராமச்சங்கங்கள் குளந்தொட்டு வளம் பெருக்கி அரசிறை பெற்றுத் தீவினையாளரை ஒறுத்துக் குடியோம்பின. இச் சபைகளே கிராமத்துக் கோயில்களே யும் மேற்பார்த்தன. இவ்வரசியல் முறை வடவிந்தியாவி லும் தமிழ் நாட்டிலும் கையாளப்பட்டமையால், சிங்களர் இந்தியரிடமே அரசியல் முறையைக் க்ற்றுக்கொண்டனர் எனலாம். போர் நடக்குங் காலங்களிலும் கிராமவரசியல் குழப்பமின்றி நடந்தது எனச் சொல்லப்படும்.
தமிழ்த்தலைவர் ஐவர்:
பாண்டியர் துட்டகமுனுவின் பின் அவன் தம்பி சாத்ததீசன் 18 ஆண்டு அரசு புரிந்தான். அவன் மகாதூபியின் முடியைக் கடடி முடித்தான். அவனுடைய ஆட்சிக்காலத்தில் செப் போட்டு மண்டபம் தீப்பற்றி எரிந்தது, அரசன் அதை ஏழு அடுக்குமாடமாகக் கட்டுவித்தான். துட்டகமுனுவின் மகன் ‘சாலி வ்ருணந்தப்பி மணஞ் செய்தமையால் அரச பதவியை இழந்தான் என்ப. சாத்த தீசனின் பின் ஆண்ட மூவரும் பெளத்தமதத்தைப் புரந்தனர். அம்மூவரின் பின் சாத்ததீசனின் மகன் வலகம்பாகு 1 அரசு கட்டிலேறி னன். வலகம்பாகு துட்டகமுனு இறந்து 33 ஆண்டு கழிந்தபின் அரசனைன். அவன் ஆண்ட காலத்தில் தமிழ்த்தலைவர் எழுவர் படையெடுத்து வந்து வலகம்பாகு வைக் கலைத்தனர். இத் தலைவர்களுள் ஒருவன் பெயர் பழையன்மாறன். அரசன் மனைவி சோமதேவி தமிழர் கைப்பட்டனள். தமிழ்த்தலைவர் இருவர் இந்தியாவுக்குக் திரும்ப, ஐவர் ஈழத்தில் ஆண்டனர். வலகம்பாகு 15

சிங்கள அரசியல் 175
ஆண்டு உருகுனையில் வனவாசஞ் செய்தான். தமிழ்த் தலைவர் ஐவரும் ஒருவரோடு ஒருவர் கலகப்பட்டனர். கடைசியாக ஆண்டிருந்தவனை வலகம்பாகு கொன்று அர சைப் பெற்றன்.
வலகம்பாகு பூசாரிகளுக்கு கிலமளித்தான். தம்புலை யில் ஒரு குன்றில் கோயில் குடைந்தான். அக்குடைவரை யில் விசயனுடைய வரலாறும் துட்டகமுனுவின் வரலாறும் தீட்டப்பட்டன. வலகம்பாகு சோமாதேவியைச் சிறை நீக்கியதை நினைவு கூர்தற்குச் சுவர்ணராமதூபியை எழுப் பினன். கி. மு. 87-ல் அவன் அபயகிரித் தூபியைக் கட்டி னன். அது 412 அடி உயரமானது. அபயகிரி விகாரை யில் இருந்த மகாயனமதப் பெளத்த பிக்குக்கள் உபதே சித்த கொள்கைகள் ஈனுயன மதத்தவராகிய மகாவிகாரப் பிக்குக்களின் கொள்கைகளோடு பேதமாயின. மகாவிகா ரைப் பிக்குக்கள் பெளத்தக் கொள்கைகளை புத்தகமாக முறைவகுத்து எழுதினர். 500 பிக்குக்கள் அலுவிகாரை யில் கூடித் திரிபிடகங்களை ஆராய்ந்தனர். மகாவிகாரைப் பிக்குக்கள் ஈணுயன மதத்தையும் அபயகிரி விகாரைப் பிக் குக்கள் மகாயன மதத்தையும் பரப்ப முயன்றனர். புத்த ருடைய நூல்கள் திரிபிடகங்கள் எனப்படும். ഴ} ഞഖ வினைய பிடகம், தர்மபிடகம் அபிதர்மபிடகம் என்பன. வினையபிடகம் பிக்குக்களின் ஆசாரத்தையும் வழிபாட்டை யும் செப்பும்; தர்மபிடகம் கொல்லாமை நல்வாழ்க்கை என்பவற்றை விளக்கும்; அபிதர்மம் அரகத் என்னும் நிர் வாண நிலையைக் கூறும். அரகத் கிலேயடைந்தோர் ஏனே யோரை அங்கிலையை அடையச்செய்தற்குப் போதிசத் துவராகப் பிறத்தல் உண்டு. இக் கொள்கையில் நம்பி யோர் மகாயன மதத்தினர் எனப்படுவர். ஈனயன மதத் தோர் அரகக் நிலையடைந்தபின் போதிசத்துவராகப் பிறத்தல் அவசியமில்லை என்பர்.

Page 105
176 உலக வர்லாறு குழம்பக்கசலம் வலகம்பாகு கி. மு. 17-ல் இறந்தானக, அவன் மரு மகன் மகாகுலன் அரசனுனன். வலகம்பாகுவின் மகன் நாகன் ஆறலைத்துத் திரிந்தானகலின் குறைநாகன்' எனப் பட்டான். மகாகுலன் மரித்த பின் குறைநாகன் அரசபதவி யைப் பெற்றன். பன்னிராண்டு கழிந்த பின் அவனை அவன் மனைவி அநுலா நஞ்சூட்டினள். மகாகுலனின் மகன் குட தீசன் மூவாண்டு ஆண்டான். அவனையும் அநுலா நஞ்சூட் டினள். அதன் பின் அநுலா ஐயாண்டு அரசுபுரிந்தாள். அவள் ஆண்ட காலத்தில் 32 கணவரைக் கண்டனளாம். அவள் தன் கணவரை வெறுத்த நேரத்தில் நஞ்சூட்டிக் கொன்றனள். மகாகுலனின் இளைய மகன் மகாலன் தீசன் அவளைக் கொன்ருரன். மகாலன் தீசன் 16 அடி உயரமான மதில் ஒன்றை அநுராதபுரத்தைச் சுற்றி எழுப்பினன்.
மகாலதீசன் மரித்தபின் அவன் மகன் சமயபத்தி மிகுந்த பத்தியன் 1 அரசுபுரிந்தான். அவன் கோயில் களைப் புதுப்பித்தான்; பூந்தோட்டங்களை நாட்டினன்; பூமாரியால் ரூவன்வலிசாயை ஒருமுறை மறைத்தான்; பத் தியன் இறந்தபின் அவன் சகோதரன் மகாதேலிய மானன் அரசனனன். அவன் பத்தி மிகுந்து அரசியலைக் கவனியா திருந்துழி அவனை அரசியலைக் கவனிக்கும்படி பிக்குக்கள் புத்தி கூறினரெனத் தெரிகிறது. அவன் விகாரைகளும் சைத்தியங்களும் தூபிகளும் பல கட்டி னன். அவன் தன் குதிரைகளும் யானைகளும் பிள்ளைகளும் பிக்குக்களுக்கே உரியவையென விளம்பினன். தானும் பிக்குக்களைச் சேவித்தற்கே பிறந்தான் என்ருரன்.
மகாதே லியமானன் இறந்தபின் ஆதகமுனு அரசாண் டான். அவன் மிருகங்களைக் கொல்லப்படாதெனக் கற்பித் தான். அவன் பழ மரங்களே நடும்படி ஏவினன். அவனை வவன் தம்பி கனிராசநூதீசன் கொன்ருரன், தீசன் பின்

சிங்களர் அரசியல் 177
அவன் மருமகன் குலாபயன் அரசனனன். அவன் சிறிது காலம் ஆண்டபின் அரசனுடைய சகோதரி சிவாலி அரசி யானுள். நாலு மாசம் கழியுமுன் அவளை ஆதகமுனுவின் மருகன் இளநாகன் கொன்ருரன். இளநாகன் இலம்பகரு ணர் என்னும் குலத்தினரைத் தூபி ஒன்றைக் கட்டும்படி ஏவி, இழிகுலத்தோன் ஒருவனை மேற்பார்வைக்கு நியமித், தானுக, இலம்பகருணர் பகைத்தெழுந்து இளநாகனப் பிடித்துச் சிறையிட்டனர். அவன் தப்பி ஓடி அங்கிய ரிடம் துணைபெற்றுப் பகைவரைப் புடைத்து ஆறுவருடம் ஆண்டனன். இளநாகன் மகன் 'சந்தமுகுனு கி 9. 101-ல் அரசு கட்டிலேறினன். அவன் மினிகிரிக் குளத் தைத் தோண்டினன். அவனை அவன் தம்பி யசாலலாக தீசன் கொன்ருரன். யசாலலா கதீசனை ஒத்த உருவினன் சுப்பன் என்பான் அரச மாளிகையில் காவலனுகச் சேவித் திருந்தான். அரசன் வாயில் காப்போனுடைய ஆடை களை அணிந்து தன் உடைகளையும் அணிகலன்களையும் சுப்பனை அணியச்செய்து அரண்மனையில் இருத்தி மேன் மக்கள் அவனை அரசனென மயங்கி மரியாதை செய் வதைக் கண்டு மகிழ்தல் உண்டு. ஒருநாள் சுப்பன் அரசு கட்டிலேறி விளையாடிய பொழுது தண்டச் சேவகரை ஏவி அரசனைக் கொல்வித்தான். சுப்பன் ஆறு வருடம் அரசு புரிந்து வாசபனல் கொல்லப் பட்டான்.
GIT OF MJG
வாசபன் விசயனுடைய குலத்தினன். அவனுடைய ஆட்சிக் காலத்தில் இசைக்கிரியன் என்னும் அமைச்சன் நாகத்தீவில் புத்தர் கோயில் ஒன்று கட்டினன் எனப் பருத்தி புரத்து விஷ்ணு கோயிலில் கி. பி. 1138-ல் எடுக் கப்பட்ட பொற்றகட்டால் தெரிகிறது, வாசபன் (வாஹ யாகன்) வேளாளரை ஒம்புதற்கு 11 குளங்களும் 12 நீர் வாய்க்கால்களும் கட்டினன். நகர மதிலே 41 அடி உயரத் திற்கு எழுப்பினன். அவன் 44 ஆண்டு அரசு புரிந்தான்,
23 s

Page 106
178 உலக வரலாறு
அவன் பின் கி. பி. 2-ம் நூற்ருரண்டில் அவன்மகன் வங்க நசிகதீசன் அரசு புரிந்தான். அவன் ஆண்டகாலத்தில் தஞ்சையில் அரசு செலுத்திய சோழமன்னன் படை யெடுத்து வந்து சூறையாடி 12,000 - சிங்களரைச் சிறை யிட்டு ஏகினன்.
இக்காலத்தில் சிங்களர் யாழ்ப்பாணத்தில் குடியேறிப் புத்த கோயில்கள் கட்டினர். யாழ்ப்பாணத்திற் பலவிடங் களில் புத்த கோயில் என்னும் காணிப் பெயர்கள் இருத் தல் இதற்குச் சான்ரு கும். வில், காமம், வத்தை என் னும் விகுதியுடைய பெயர்கள் எல்லாம் சிங்களப் பெயர் களே. அப் பெயரினையுடைய யாழ்ப்பாணக் கிராமங் களில் சிங்களர் சிலகாலங்களில் வசித்தனர் என்ப. கந்த ரோடையில் பண்டைய சிங்கள 5ாணகங்கள் எடுக்கப்படு கின்றன. அந் நாணகங்கள் சில மீள் சதுரவடிவமும் சில சட்சதுர வடிவமும் சில வட்ட வடிவமுமுடையன.
Gul GJG I. கயவாகு கி. பி. 113-ல் அரசனன். அவன் வங்கநசிக தீசனுடைய மகன். கசபாகு (கயவாகு) தமிழ்நாடு சென்று சோழ மண்டலத்தில் தன் கொடியை நாட்டிச் சிங்களரைச் சிறை மீட்டதுமன்றி 12,000 வீரரை அடிமையாக்கிக் கொணர்ந்தனன் என மகாவம்சம் கூரு நிற்கும். இது சிங்களர் தாம் முன் அடைந்த தோல்வியை மறைத்தற் குக் கட்டிய கதை எனவிடுக. கயவாகு சேரன் செங்குட்டு வன் அவையிலிருந்து கண்ணகி வழிபாட்டைக்கண்டு வந் தனன். அவன் காலத்தில் பத்தினி தேவிக்குப் பல கோயில்கள் ஈழத்தில் கட்டப்பட்டன. அவை கீழ்க்கரை யில் உள்ளன. இக் கயவாகுவையே சிலப்பதிகாரம் சுட்டு கின்ற தென்பதில் ஐயமில்லை.
ID TO Garib கயவாகுவின் பின் ஆறு மன்னர் ஆண்டனர். அவர் கள் பின் கி. பி. 215-ல் வோகாரதீசன் அரசு புரிந்தான்.

சிங்களர் அரசியல் 179
அவனுடைய காலத்தில் மகாவிகாரைப் பிக்குக்களுக்கும் அபயகிரிவிகாரைப் பிக்குக்களுக்கும் இடையிற்கலகம் ஏற். பட்டது. அபயகிரிவிகாரைப் பிக்குக்கள் சில புதியகொள் கைகளை வைத் தூலியன் என்னும் ஓர் இந்தியப் பிராமண னிடம் கற்ற்னர். அக் கொள்கை மகாயன பெளத்தக் கொள்கையாகும். மகாயனம் புத்தர் போதிசத்துவராக ஆன்மாக்களை ஆட்கொள்ளுதற்கு இடையிடையே அவ தரிப்பர் என ஒதும். வோகார தீசனுடைய தம்பி அபய 5ாகன் தமயனைக் கொன்று முடிபெற்ருரன். அவன் தமிழரிடம் துணைபெற்று அரசியலை நடாத்தினன். அவன் இறந்தபின் வோகார தீசனுடைய மகனும் பேரனும் ஒருவர்பின் ஒருவர் அரசாண்டனர்.
இலம்ப கருணர் (முயல் வம்சத்தினர்)
இலம்ப கருண குலத்தினர் மூவர் அரசனைக் கொன்று அரசை வெளவி ஒருவர்பின் ஒருவர் ஆண்டனர். அவர்க ளுள் சங்கதீசன் நான்காண்டு அரசு புரிந்தான். அவன் பின் பூரீ சங்கபோதி அரசுகட்டி லேறினன். அவனுடைய ஆட்சிக் காலத்தில் வான்மழை மறுத்தது; செங்கண் என் னும் கண்ணுேய் பரவியது. செங்கட் பசாசிற்குச் சாந்தி செய்தற்கே சிங்களர் பேயாட்டம் ஆடத் தொடங்கின ரென்ப. பூரீ சங்கபேரதி தீவினையாளரைக் கொல்லாது விட்டனன். அமைச்சன் அரசனை வெறுத்துத் தலை கொய் தான். இக்காலத்தில் சிங்க வம்சத்தினர் முயல்வம்சத்துச் சிங்களரோடு பகைத்தனர் போலும்.
IDETGI Frst கோதாபயின் அரசனுகி அபயகிரிப் பிக்குக்களைக் துன்புறுத்தினன். 60 பிக்குக்கள் நாடு கடத்தப்பட்டனர். சங்க மித்திரன் என்னும் வைத் தூலிய மதத்தினன் அரச வையில் உபசாரம் பெற்று அரசகுமார்க்குக் கல்வி கற் பித்தான் மூத்தோன் மகாயணமதம் என்னும் வைத்

Page 107
80 உலக வரலாறு தூலிய மதத்தை வ்ெறுத் தான். இ8ளயோன்மகாசேனன் அம் மதத்தைச் சார்ந்தான். கி. பி. 227-ல் மகாசேனன் அரசபதவியைப் பெற்ருரன். “ சங்கமித்திரன் அரசவையில் ஆதரவுபெற்று மகாவிகாரைப் பிக்குகளைத் துன்புறுத்தும் படி அரசனை ஏவினன். குடிகள் மகாவிகாரை மதத்தைச் சார்ந்து அரசனை விரோதித்தனராக அவர்களே நட்டாக்கு தற்கு அரசன் மதம் மாறினன். نقش3یہ۔ தருணத்தில் சங்க மித்திரனைத் தீவினையாளன் ஒருவன் கொன்ருரன். பின்பு அரசன் செப்புமாளிகையைப் புதுப்பித்தான். இந்துக்க ளுடைய தேவாலயங்களைப் பெளத்த விகாரைகளாக்கி னன். அவன் சேதவன தூபியைக் கட்டினன். யக்க ருடைய கோவிலுக்கும் ஓர் கோபுரம் கட்டிக் கொடுத் தான். மகாசேனன் 16 குளக் தொட்டான் ஆகலின், கமத் தொழிலை 15ணி புரங் தான் எனத் துணியப்படும். அவன் கர்ரகங்கையை மறித்துக்கட்டி மின்னேரியாக் குள" மாக்கினன். மகாசேனன் கி. பி. 304-ல் மரித்தான். மின்னேரியில் மகாசேனன் கோயில் பெற்று வணங்கப்பட் டான் என்பர். மகா சேனனேடு மகாவம்ச வரலாறு முடிவு பெற்றது. கி. பி. 304-ம் ஆண்டின் பின் அரசு புரிந்தோர் சுலுவம்சத்தினர் (சிறு வம்சத்தினர்) எனப் பெயர் பெற்றனர்.
5-ம் அதிகாரம்: உரோமர் குடியரசு. 1-ம் பாடம்-இத்தாலிய தேயப் பழங்குடிகள்
9 GJ Di மேலைத் தேயங்களுள் மத்தித்தரைக்கடற் பக்கங்களி லுள்ள நாடுகளே நாகரிகமடைந்து சிறப்புற்றேங்கியவை என்பது பண்டைய வரலாற்று வல்லோர் யாவருக்கும் ஒப்ப

இத்தாலியதேயப் பழங்குடிகள் 81
莎品 * 9E3
முடிந்த கொள்கை. எகிப்தியர், பினிசியர், யவனர் என் போர் முசிறி, காவிரிப்பூம்பட்டணம், கொற்கை முதலிய துறைகளில் இறங்கித் தமிழ் நாட்டிாரோஜ வாணிகஞ் செய்து தமிழருடைய நாகரிகத்தையும், கல்வி முறைகளை եւյմ, தெய்வ் வழிபாடுகளையும், பழக்க வழக்கங்களையும் மேலைத் தேயத்திற்குக் கொண்டுசென்றனர் என்பதை மேற்கூறியோரின் மிெழிகளில் தமிழ்ச் சொற்கள் வழங்கு கின்றமையாலும், தமிழ் நூற்கள் அவர்களைப்பற்றிக் கூறு கின்றன்மயாலும் கருதலாம். இனி எகிப்தியர், பினிசியர், யவனர், எற்றுாரியர், காதாக்கினியர் முதலியோரின் பண்டை நாகரிகங்களின் பயனைத் துய்த்தற்கு எழுந்த மக் கட் கூட்டத்தினர் உரோமரென வரலாற் ருரசிரியர்கள் கூரு நிற்கின்றனர். இத்தாலிய தேயத்தைக் காடுகெடுத்து நாடாக்கிக் குளங் தொட்டு வளம் பெருக்கியோர் உரோமரே,
உரோமருட்ைய காணகங்கள் தமிழ்நாட்டுப் பழைய ஊர்களில் அகழ்ந்து எடுக்கப்படுகின்றமையால் உரோமர் பண்டைக் காலத்தில் தமிழரொடு வணிகஞ் செய்தனர் என்பதற்கு ஐயமில்லை. உரோம வரலாற் ருரசிரியருள் ஒரு வராகிய பிளினி (Pliny) கீழைத் தேயத் துப் பொருள்க&ள உரோமர் வாங்குவதினல் ஆண்டுதோறும் பல கோடி பொன் செலவாகின்றதெனக் கவலைப்பட்டனர். இது நிற்க, உரோமர் தம் வலியால் பிறதேயத்தாரை அடக்கி அவர்களின் நாகரிகத்தைத் தழுவியும், தம் நாகரிகத் தைப் பரப்பியும் ஆண்டனர். ஆங்கிலர் உரோமருடைய நாகரிகத்தையும், அரசியல் முறைகளையும் கையாளுகின்ற னர். ஆகையால் உரோமர் வரலாற்றைத் தமிழர் கற்றல் பயனுடைத்தாகும்'
இத்தாலி W மத்தித்தரைக் கடலைத் தெற்கெல்லையாக உடைய மூன்று ஐரோப்பிய குடா நாடுகளுள் நடுவணது இத்தாலி யாக் குடா நாடாகலான் உரோமர் யவன குடா காட்டா

Page 108
182 உலக வரலாறு . 灘
ரோடும் மற்றைய குடா நாட்டாரோடும் இலகுவாய்ப் பண்டமாற்றுச் செய்து அவர்களுடைய வித்தை நூல்களை யும், ஆராய்ச்சி நூல்களையும் கற்றுக் தமது நாகரிகத்தை வளர்த்தனர். இத்தாலியா தேயத்திற்கு மேற்கெல்லை யாகிய கடலை ரைமீனியன் கடலென்றும், கிழக்கெல்லை யாகிய கடலை அத்திரியாட்டிக் கடலென்றும் உரோமர் வழங்கினர். குடக்கும், குணக்கும், தெற்கும் கடலை எல்லை யாகவும், வடக்கில் அல்ப்பைன் மலைத்தொடரை எல்லை யாகவும் உள்ள தேயம் இத்தாலியாக்குடா நாடெனப் படும். இத்தாலிய தேசத்தின் கீழ்க்கரை மலையும் மலை சார்ந்த இடமுமாக லின் குறிஞ்சி நாடாயிற்று. அம் மலை களை அப்பினைன் மலைத்தொடரெனக் கூறுப. அப்பி னைன் மலைச் சிமையங்கள் ஏழாயிரம் அடி உயரமானவை. அம் மலைக்கு மேற்குள்ள நாடு சமபூமி. அச் சம பூமியில் கம்பேனியா, எற்றுாரியா என்னும் மருத நிலங்களையுடைய நாடுகள் பலவுள. வடக்கின் கண்ணுள்ள அல்ப்பைன் மலை இத்தாலியாவிற்கு ஓர் இயற்கை யரணுகும். அல்ப்பை னுக்கு மேலைப் பக்கத்திலுள்ள தேயம் கல்லிய தேயம். கீழைப் பக்கத்துச் சம பூமி இத்தாலிய கல்லிய நாடென வழங்கப்பட்டது. கீழ்ப் பக்கத்துக் கல்லிய நாடு போநதி யைத் தெற்கெல்லையாக உடையது. இப் போநதி அல்ப் பைன் மலையில் உற்பத்தியாகி இலம்பாடிச் சம பூமியிற் பாய்ந்து அத்திரியாட்டிக் கடலொடு கலக்கும் சங்கமத் துறையில், உரோமருடைய இராச்சியம் அழிந்த பின்னர் வெனிஸ் நகரம் அமைக்கப் பெற்றது. இவ் வெனிஸ் நகரம் ஒரு குடியரசாகி வியாபாரத்தாற் செல்வமுற்றிருந்து பதி னன்காம் நூற்ருரண்டில் ஓட்டொமான் துருக்கரை இத்தா லியா தேயத்துட் புகவிடாது தடுத்தது. வெனிஸ் வரலாற் றைச் செப்புதல் பிறிதொன்று மொழிதலாகும்.
அல்ப்பைன் கணவாய் வழி உட்புகுந்த ஆரியர் மலைப் பாகங்களில் வசித்தனர். எற்றூரிய சம பூமியில் வாழ்ந்த

இத்தாலியதேயப் பழங்குடிகள் 83
மக்கள் நாகரிகமுடைய நன்மக்களாயினர். எற்றுாரியர் கமத் தொழிலை விருத்தி செய்து, நாடு நகரங்களை அமைத் துச் சிறப்புற்றேங்கினராக, வடவித்தாலியாவில் நுழைந்த ஆரியர் அலைந்து திரியும் இடையராய்த் தம் பட்டிகளையே மேய்த்தனர். ஆரியர் கி. மு. 2000 ஆண்டுகட்குமுன் ஐரோப்பிய நாடு புக்கனரென ஆரியர்கள் கூறுப. ஆரி யர்கள் வட இத்தாலியாக் குகைகளிலும் குன்றுகளிலும் வசித்த புலையரை வேற்றுப் புலங்களுக்குக் கலைத்தனர். அப்புலையர் மனிதருடைய ஊனத்தின்னும் ஒரு மூர்க்க சாதியாரென அறியக்கிடக்கிறது. அப்புலையர் பெலாஸ்கி யர் எனப்படுவர். அப்பெலாஸ்கியராற் கலைபட்டோர் தென்னித்தாலியாவில் வசித்தனர். அவர்கள் சிக்கூலியர் எனப் பெயர் பெற்ருரர்கள். இத்தாலியா நாட்டிற் குடி யேறிய ஆரியர் உம்பிரியரென அழைக்கப்பட்டனர். உம் பிரியருடைய உடை தோல்; ஆயுதம் கல், கோல் முதலி யன; தொழில் கிரைமேய்த்தல். அவர்கள் வெண்கலம் இரும்பு முதலியவற்றல் கலங்களும் ஆயுதங்களும் ஆக்க, யவனரிடமும் கீழைத் தேயத்தாரிடமும் பழகினரெனத் தெரிகிறது. உம்பிரியரை எற்றுாரியர் நெருக்க, எற்றுாரி யரைக் கல்லியர் நெருக்க, யாவரும் தென் இத்தாலியாவை நோக்கினர். இந்த எற்றுாரியர் ஆரியரோ அல்லரோ எனத் துணியமுடியாமல் இருக்கிறது. எற்றுாரியர் தம்மைத் தம் மொழியில் திரா சினியர் என வழங்கினர். அவர்கள் சின்னுசியாவிலுள்ள ரிரா (திரா) என்னும் நகரத்தினின் றும் போந்தனர் என்பது பாரம்பரியம். திரா நாட்டினின் றும் வந்தமையால் யவனர் அவர்களைத் திரானியர் என அழைத்தனர் போலும், எற்றுாரியர் கமத் தொழில் செய் தும், சமயக் கிரியை நூல்களை ஒதியும், நிமித்த நூல்கள் கற்றும் அரசியலை நடாத்தினர். எற்றுாரியருடைய கிரியை நூல்களுக்கும் நிமித்த நூல்களுக்கும் உரோமரும் அமைந்து ஒழுகினர்கள் என 5ன்கு புலப்படுகின்றது. விழாக்காலங்களில் எற்றுாரியர் காட்டிய வாட்போர்க் காட்

Page 109
84 உலக வரலாறு
சிகளை உரோமரும் விழைந்து அக்காட்சிகளில் தாமும் இன்புற்றனர். கி. மு. 500-ம் ஆண்டளவில் எல்லாத் திசையும் பகைவர் எழுந் தமையால் எற்றுாரியர் வலி குன்றினர். இலத்தினரும், உரோமரும், கல்லியரும், உம் பிரியரும், சம்கிதியரும் பலதிக்காலும் நெருக்க, எற்றுரிய ருடைய இராச்சியம் கிலைகுலைந்தது.
இத்தாலியா தேயத்துப் பதியெழுவறியாப் பழங்குடி கள் உம்பிரியர், ஒஸ்கோசபேலியர், இலத்தினர் என மூவகுப்பினர். ஒஸ்கோசபேலியருடைய ஒரு கிளை சபீனி யர். ஒஸ்கர் சனத்தொகை மிகுங்காலத்தில் பிறக்கும் குழந்தைகளைக் கொல்லுதல் வழக்கம். இருபதாம் ஆண் டெய்திய இளைஞர்களைப் புதிய இல்லங்களைத் தேடும்படி தம் ஊரினின்றும் அகற்றுவர். ஒஸ்கோசபேலியர், ஆக்குவியர், கேணிக்கியர், மார்சியர் எனப் பல்கினர். சம்நிதியர் உம்பிரியர் இனத்தைச் சேர்ந்தவரே. சம்நிதி யர் பெருகிக் கம்பேனியா நாடுகளைக் கடந்து, தென் னித்தாலியாவில் வதிந்து லுக்கேனியர் எனப்பெயர் பெற் றனர். இனி இலத்தினரும் சபீனியரும் உரோமரும் ஒரு கூட்டத்தினரே. -
கி. மு. 800-ம் ஆண்டு யவனர் கிரேக்க நாட்டினின் றும் பெயர்ந்து கம்பேனியா நாட்டில் குடியேறிக் கூமாயி நகரை அமைத்தனர். கி. மு. 743-ல் இாேசிய நகரையும், 710-ல் குருேரற்றேரன நகரையும், 600-ல் சிபாரிஸ் நகரை யும் நிறுவினர்கள். கி. மு. 400-ல் கல்லியரும் வடபால் வந்திறங்கி போ நதிக் கரையில் தங்கினர்கள். உரோமர் கி. மு. 753ம் ஆண்டில் உரோமா புரத்தை அமைத்தன ரெனப் பழங்கதைகள் கூறுகின்றன.
உரோமாபுரத்தின் ஆதி வரலாறு
இரைபர் நதி முகத்துவாரத்தில்கின்று பதினறு மைல் தூரத்தில் அங்கதிக்கரையில் எழுகுன்றுகள் உண்டு. அக்

இததாலியதேயப் பழங்குடிகள் 185
குன்று கண்மிசை அமைக்கப்பட்ட காவலரண் உரோமன் புரமாகும். ஏழுகுன்றுகளையும் இக்காலத்திற் காணவிய லாது. குன்றுகளுட் சில தீ, வளி, நீர் முதலிய இயல் பேதுக்களால் அழிவெய்தி யிருக்கக்கூடும். உரோமர் தம் உற்பத்தி வரலாற்றை மறந்து சில பழங்கதைகளை நம்பி அவற்றினைத் தம் வரலாறென எழுதி வைத்தனர். உரோ மரது ஆதி வரலாறு வேர்சிலியஸ் எழுதிய காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. வேர்சிலியஸ், அகஸ்தஸ் என்னும் தனிக்கோலனின் அரசவை வித்துவா னுகையால் அகஸ் தஸ் தேவ வம்சத்தினன் என நாட்டுதற்காக ஏணியாஸ் என்னும் உரோஜ தலைவனின் சந்ததியில் தோற்றின னெனப் புகழ்ந்து ஏனிட் என்னும் இதிகாசத்தைப் பாடி னன். உரோமா புரத்தின் ஆதி வரலாற்றை ஏனிட் இதி காச வரலாற்றைச் சார்ந்து கூறுதும்.
கிரேக்க மன்னர்களுள் துலங்கிய அக மன்னனுக்கு மெனிலேயஸ் என ஓர் உடன்பிறந்தான் இருந்தான். அவன் மனைவிதான் மானிடப் பெண்களுள் அழகிற் சிறந்த எலன் என்பவள். அப் பெண்ணே ரோஜமாநகரத்து இளங்கோ பாரிஸ் கவர்ந்து சென்றனன். முதற் கடவுள் யூப்பிற்றரின் தேவி யூனேவும், கலைமகள் மினேர்வாவும், வீனஸ் என்னும் காமதேவதையும் தமக்குள் யார் -9 Մ) (5 வாய்ந்தவரெனப் பாரிஸ் என்பவனிடம் கேட்க அவன் மூவருள் காமதேவதையே அழகிற் சிறந்தவளெனத் தீர்த் தான். அக்காம தேவதையின் நன்கொடையாக எலனைப் பாரிஸ் பெற்றன். கிரேக்க தலைவர் யாவரும் யுத்தத்திற்கு ஆரவாரித்தனர். அவ்யுத்த வரலாற்றைக் கிரேக்க இதி காச மாகிய இலியட் என்னும் நூலில் வாசிக்கலாம். ےy 5 மன்னன் தானைகளைப் படகேற்றிக் கடல் கடத்தற்குச் சாந்தியாகத் தன் தனிக் குமரியைப் பலியிட்டுச் சின்னசி யாக்கரை சேர்ந்து பேர்காமம் என்னும் ரோஜமா நக ரைச் சூழ்ந்தான். கிரேக்கரும் உரோஜரும் பத்து ஆண்டு கள் பொருதனர். ரோஜதலைவன் கெக்ரரைக் கிரேக்க
24

Page 110
86 உலக வரலாறு
வீரன் அக்கிலீஸ் கொன்றனயினும், கெக்ரரின் தம்பிமார் பாரிஸ் முதலிய நாற்பத்தொன்பதின்மர் போரை நடாத் தினர்கள். கிரேக்கர் ரோஜமா நகரத்தைக் கைப்பற்ற இயலாது கலங்கினர். பத்தாம் ஆண்டு ஒடிசியஸ் என்னும் கிரேக்கவீரன் நகருட் புக ஓர் உபாயங் கூறினன். ஒரு மரக்குதிரை செய்து அதனுள் வீரர் பலரை அடைத்து விட்டுக் கிரேக்கர் வீடு போவார்போலக் கப்பலேறி அகன்
றனர். உரோஜரில் ஒரு சாரார் பகைவருடைய குதிரை யைத் தொட்டாலும் கேடுவிளையும் என்றனர்; ஒரு சாரார் குதிரையை நகருட் செலுத்தின் தமது வெற்றிக்கு அடை யாளமாகுமெனக் கிளந்தனர். பகைவர் தம் நாடேகினர் என்றெண்ணி உரோஜர் குதிரையை நகருள் இழுத்து வெற்றி விழாக் கொண்டாடினர்கள். அன்றிரவு உரோ ஜர் இனிது உறங்க எண்ணினர். குதிரையினுள் இருந்த கிரேக்க வீரர் நள்ளிருள் யாமத்தில் வெளிவந்து கணைய மரத்தை நீக்கி நகரவாயிலைத் திறந்து மரக்கலத்தில் ஏகிய வீரரை உள்ளேற்று நகரவீதிகள் தோறுஞ் சென்று உரோஜரைக் கொன்று நகருக்குத் தீயிட்டு அழித்தனர்.
பாரிஸ் இறந்தபின் அவன் சகோதரர் சிலரோடு கூடி வாழ்ந்த எலனை மெனிலேயஸ் திரும்பவும் மனைவியாக ஏற் முன். நகர் எரிய உரோஜ வீரர் சிலர் தப்பி ஓடினர். ஏனியாஸ் என்னும் உரோஜ வீரன் தனது தங்தை அன் கயிசைத் தோளி லிட்டுத் தன் சுற்றத்தாரோடு கப்பலே றிப் புது நாடுகளைத் தேடி அலைந்தான். வீனஸ் என்னுங் காமதேவதை ஏணியிாஸ் வீரனின் தாயாகையால் அவ னுக்கு இத்தாலியா தேசத்தை அளிக்கும்படி பூப்பிற்ற ரிடம் வரம்கேட்டுப் ப்ெற்றனள். யூனே தன் செறுநரை அழித்தற்கெண்ணி வாயுதேவனகிய ஏயோலனது உதவி வால் ஒரு புயல் எழுப்பி, உரோஜருக்கு இடுக்கண் விளைத் தனள். சமுத்திரதேவன் நெப்ட்யூன் (Neptune) தனது கடலில் பிறர் அதிகாரம் செலுத்துவதைக் கண்டு
வெகுண்டு சூலாயுதத்தால் அடித்துத் திரை கடலை அடக்கி

இத்தாலியதேயப் பழங்குடிகள் 87
ன்ை. இவ்வ்ண்ணம் ஏனியாஸ் பலகாலம் அலேந்து ஆபிரிக் காக் கரையில் எற்றுண்டான். ஏனியாஸ் கா தாக்கா என் னும் பட்டினத்தி லிறங்கி இராணி டைடோவின் முன்றில் அடைந்து தன் வரலாற்றைச் செப்பினன். டைடோ அவனை உபசரித்து மோகித்தாளாக, அவன் அவளொடு சிலகாலங் கழித்தான். பின்னர், தாயின் ஏவ8லக் கேட்டுத் தலைவியைப் பிரிந்து தனக்கு வாக்களிக்கப்பட்ட இத்தா
லியா தேசத்திற்குப் புறப்பட்டான். ஏனியாஸ் பிரிந்ததை
டைடோ அறிந்து ஆற்றளாகித் தீப்பாய்ந்தாள். ஏனியஸ்
இத்தாலியாக் கரை அடைந்து இலத்தின் நாட்டில் இறங்கி லவினியஸ் என்னும் மன்னனுல் உபசரிக்கப்பட்டு, அவன்
மகள் லவினியாவை மணம் புரிந்தான். லவினியாவைக் காதலித்த ரேணஸ் ஏனியாசோடு பொருது தோற்ருரன். ரேணஸ் இரண்டாம் முறையும் ஏனியா சோடு யுத்தஞ் செய்தானென்றும் அவ் யுத்தத்தில் ஏனியாஸ் மறைந்தன னென்றுந் தெரிகிறது. ஏனியாஸ் கீழுலகு சென்று தன் முன்னேரையும் உரோஜ யுத்தத்தில் இறந்த வீரரையும் தனது பிற்சந்ததியாராகும் உரோமரையும் கண்டு மகிழ்ந்த முறையாகப் புலவன் வேர்சிலியஸ் அகஸ்தஸை முகமன்
கூறி அகஸ்தஸ் ஏனியாசின் வம்சத்தவன் என நாட்டி ன்ை. உரோமர் நரகமுண்டென நம்பினரென்றும் பாவஞ் செய்தோர் கல்லுருட்டல், சில்லிற் சுழல்தல், நெருப்பில் எரிதல் முதலிய தண்டனைக்குட்படுவரென நம்பினர் என் முறும் ஏனிட் இதிகாசத்தாற் புலப்படுகிறது. இத் தண்டனை களே வேர்சிலியஸ் நன்கு வருணிக்கின்றனர். இது நிற்க,
ஏனியாஸின் மகன் அஸ்கானியாஸ் லவினியம் நகரை அரசாண்டு, பின்னர், அல்பா லோங்கா என்னும் புது நகரொன்றை அமைத்தான். ஏனியாஸின் பன்னிரண் டாங் தலைமுறையாகத் தோன்றிய புருரக்கஸ் அல்பாலோங் காவில் ஆண் செலுத்தினன். அவன் மக்கள் நூமிற்றர் அனுலன் என்னும் இருவர் தம்முள் முரண்பட்டு, மூத் தோன் மகளாகிய றேயாசில்வியாவை இ8ளயோனகிய

Page 111
188 உலக வரலாறு
அனுலன் வெஸ்தாத்தேவியின் சேவைப் பெண்ணுக்கி னன். தேவராட்டிகள் கன்னியராக கிறைகாத்தல் மர பாயினும், அப் பெண் போர்க்கடவுள் மார்ஸ் என்போ னுக்கு இரட்டைக் குழந்தைகளைப் பயந்தாள். அக் கும் றத்திற்காக அவளை அனுலன் கொல்வித்தான். அவ ளின்ற இரட்டைக் குழந்தைகளை ஒரு தொட்டிலில் வைத்து இரைபர் நதியிலிட்டான். பலற்றையின் குன்றில் அத் தொட்டில் கரைசேர, தன் குட்டிகளை இழந்த ஒ5ா சொன்று அக் குழவிகளைப் பாலூட்டி வளர்த்தது. ஓநாய் முலைகொடுத்த விநோதத்தைக் கண்ட இடையன் ஒருவன் அக் குழந்தைகளைத் தானெடுத்துச் சென்று உரோமியு லுஸ் உரேமுஸ் எனப் பெயரிட்டு வளர்த்தான். அவ்விரு வரும் வலிய இடையராகிக் களவுக் குற்றஞ் சாட்டப் பெற் றனராய் நூமிற்றர் முன்னிலையில் கின்றனராக, அவர்களே அவன் தன் பேரப்பிள்ளைகளென அறிந்தான். பின்பு உரோமுலுஸ், உரேமுஸ் என்போர் அனுலனைக் கொன்று தம் பாட்டனுக்கு அரசுரிமை அளித்தனர். உரோமுலுஸ் என்போனும் அல்பாலோங்காவை நீங்கிப் புதிய நகரொன்றைத் தாம் வளர்ந்த இடத்தில் அமைக்க நினைந்து முகூர்த்தம் பார்த்து கின்றுN உரேமுஸ் الملكي பிணந்தின்னிப் பறவைகளையும் உரோமுலுஸ் பன்னி ரண்டு பறவைகளையும் கண்டனாாகையால் உரோமுலுஸ் தேவரிடம் அனுமதி பெற்ருரன் ஆயினன். உரோமுலுஸ் ஒரு சிறு நகரைப் பலற்றையின் குன்றில் அமைத்து கில வரணைக் கட்டினன். உரேமுஸ் அப் புரிசையை கிந்தித் துக் கடந்தமையால் உடன்பிறந்தோனல் கொல்லப்பட் டான். உரோமாபுரம் கட்டப்பட்டது கி. மு. 753 என்ப உரோமர் அவ்வாண்டை முதலாண்டாகக் கொண்டனர். இனி அல்போலோங்காவிலிருந்தும் குடிகள் சிலரை உரோமுலுஸ் குடியேற்றியும் நகருக்குச் சனங்கள் போதா மையால் வேந்தராஃணக் கமையாத கள்வர் மறவர் முதலி யோர்க்கு தனது நகரம் ஏமவரணுகுமென உரோமுலுஸ் பறைசாற்றிக் குடிகளைப் பெற்ருரன். அவர்களுக்குப்

இத்தாலியதேயப் பழங்குடிகள் 89
பெண்கள் இல்லாமையால் கவன்றன். தீயோருக்கு சபீ னியர் பெண் கொடுக்க மறுத்தனராதலின் உரோமுலுஸ் பெண்களை யெடுத்தற்கு ஒர் உபாயம் ஆலோசிப்பானயி னன். கொன்சஸ் என்னும் தெய்வத்திற்கு விழா நடத்து வேமென உரோமுலுஸ் சபீனியரை அழைக்க, அவர்கள் தம் மகளிரொடு வந்தார்கள். விழா நடந்துழி பெண் வேண்டினேர் தாம் விரும்பிய பெண்களை இராக்கத முறையாக மணஞ் செய்தனர். இவ்வண்ணம் மகளிரை இழந்த பெற்ருேரர் தமது அரசன் ரையிற்றஸ் றேற்றிய னுக்கு முறையிட்டனர். கயினியர் கிறீஸ்த்துமேனியர் அந்தெணுயி என்னும் ச பீனிய சாதிகள், உரோமரோடு பொருது தோற்றனராக, ரையிற்றஸ் றேற்றியன் சேனை யோடு சென்று ரோமா நகரத்தைச் சூழ்ந்து கின்றன். உண்ணகர் ஸ்யூறியஸ் இரர்றிப்பஸ் என்பவனின் காவலில் இருக்ததென்றும் அவன் மகள் சபீனியர் இடக்கையி லணிந்த பொன்னணிகளை விழைந்து அரண்வாயிலைக் காட்ட பகைவர் நுழைந்து நன்றியாகத் தமது இடக்கைப் பரிசங்களால் அவளை இடித்துக் கொன்றனரென்றும் ஒரு கட்டுரை உண்டு; இனி, சபீனியர்க்கும் உரோமருக் கும் போர் நடந்துழி உரோமர் தோல்வியடையுஞ் சமயத் தில் வதுவைகள் போர்க் களத்துக்குச் சென்று தம் கண வர்க்கும் பிதாக்களுக்கும் இடையில் கின்று குலைந்த கூந்தலராய் நீர் உகுத்த கண்ணினாாய்த் தம் பால்வாய்க் குழந்தைகளை யேந்திக் கையேட்டிச் சமாதானம் இரந்து பெற்றனரென வேருேரர் இனிய கதையுண்டு. சபீனியர் சிலர் உரோமா நகரத்தில் குடியேறினர்களென்றும் றைற்றல் மரித்தபின் உரோமுலுஸ் இரு சாதிக்கும் வேந்தனனனென்றும் ஒரு கடும் புயலில் மறைந்தானென் நூறும் ஒரு கோயில் அவனுக்கு அமைக்கப்பட்டதென்றும் பழங்கதை செப்பும்.
இனி உரோமுலுஸ் உரோமிரை மேன்மக்கள் கீழ் மக்களாகப் பிரித்தன னெனவும், மேன்மக்களே இராமி

Page 112
190 உலக வரலாறு
னிஸ் தித்தீஸ் இலுக்குரீஸ் என மூன்று சாதிகளாக வகுத் தன னெனவும், ஒவ்வொரு சாதியையும் பத்தினங்களாக வும் ஒவ்வொரு இனத்தையும் பத்துக் குழுக்களாகவும் ஒவ் வொரு குழுவையும் பத்துக் குடும்பங்களாகவும் வகுத் தான் எனவும் பழங்கதை கூறு மாதலின், உரோமாபுரம் மூன்று சாதிகளையும் முப்பது இனங்களையும் முந்நூறு குழுக்களையும் 3,000 குடும்பங்களையும் உடையதாயிற்று. இக் குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட முதியோரே மேன்மக்கட் சபையங்கத்தினராதற்கு உரிமை யுடை யோர். 3000 காற்படையும் 300 குதிரைப்படையும் இக் குடும்பங்களினின்று தெரியப்பட்டன. அவை மூன்று கூட்டம் சேனையாயின. கீழ்மக்களை இங்ஙனம் வகுக்க வில்லை. இஃதெல்லாம் புனைந்துரை என்பது வெளிப்படை. உரோமெனப் பெயர் வந்தமைக்குக் காரணங் தெரியாமை யால் உரோம் என்னும் - பதத்திற்கு ஊலுஸ் விகுதி கொடுத்து உரோமுலுஸ் என்போரின் பேரால் நகருக்கு காம கரணஞ் செய்யப்பட்டதென மொழிக்தனர். இலத் தின் மொழியில் பெயர்ச் சொற்கள் ஊலுஸ் என்னும் பகு திப் பொருள் விகுதிபெற்று வேறு பெயர்ச் சொற்களா தல் இலக்கணமுறை யென்பது உணரற்பாலது. இனிக் கீழ்மக்களுக்கு உரிமைகளை மறுத்தற்காகத் தொன்று தொட்டே கீழ்மக்கள் உரிமைக ளில்லாதவர்களாய் இருந் தனரென மேன்மக்கள் வற்புறுத்தினர். அங்கனம் வற் புறுத்துதற்கு உரோமுலுஸ் அங்ங்னம் வகுத்தனனென மேன் மக்கள் கட்டுரை செய்தனர் என்பதும் பொருந்தும்.
2-ம் பாடம்-அரசர்கள் hIIDI Ullusiv
உரோமுலுஸ் மறைந்த பின் ஒரு வருடகாலமாக வேக் தனுக்குப் பிரதியாக ஐந்துநாளைக் கொருமுறை ஒரு தலை

சிங்களர் அரசியல் 19
வனைத் தெரிந்தனர். பின்னர் நூமா பம்பிலியஸ் என்னும் சபீனிய மகனுெருவனுக்கு அரசுரிமை அளித்தனர். அவன் ஆட்சிக்காலம் 715 - 673 கி. மு. என்ப. நூமா கலை களையும் வித்தைகளையுங் கற்றுப் பண்டங்களேயாக்கும் வித்தைகளைப் புறந்தான். சமயக் கிரிமைகளையும் ஒழுங் காக முறைப்படுத்தினன். கம்பேனிய நாட்டில் வசித்த
பிதாக்கொருரஸ் என்னும் கலைஞனிடம் ஞானங் கற்றுப் பின்பு ஏகோரியா என்னும் தேவதையிடம் விஞ்ஞானங் கற்று விளங்கித் தனது தெய்வத் தன்மையைக் காட்டுதற் காகச் சனங்களைக் கூவி மட்குடங்களைப் பொற்குடங்க
ளாக்கினன். நூயா மாக்கியனைச் சமயக் கணக்கனுக்கி ன்ை. தேவர்களின் ஆண்களை அறிதற்காகப் புள் கிமித்
தம் பார்க்கும் கிமித்திகர் கூட்டமொன்றை நிறுவினன். போர்த்தேவன் மார்ஸ் என்பவருக்கும், யுப்பிற்றருக்கும், குவைஹீனஸ் என்னும் உரோமுலுஸ்உக்கும் கோட்டங்க ஆளச் சமைத்துச் சாலினிகளைச் சேவை செய்யும்படி கிய மித்தான். வெஸ்தா தேவிக்கும் தீவளர்க்கும் அரிவை யரை நியமித்தான். சாலினிகள் கற்பு கிலை தவரு திருத்தல் வேண்டும். போர்த்தேவனது பூரீ பரிசத்தைப் பன்னிரு வர் காத்தனர். இருமுகக் கடவுள் யானஸ் என்பவனும்
ஒரு கோட்டம் பெற்றன். இருமுகக் கடவுளின் கோட்ட
வாயில் போர்க்காலத்தில் திறந்தும் சமாதான காலத்தில்
அடைக்கப்பட்டும் இருந்தது. நிலத்தைப் பங்கிட்டதை
நினைவு கூர்தற்காக எல்லைத்தேவனுக்கும் ஓர் கோட்டம்
கட்டப்பட்டது. பாணர் தட்டார் தச்சர் சுவர்கட்டுவோர்
சாயக்காரர் செம்மார் கன்னுர் குயவர் எனப் பல கூட்டத்
தினராகத் தொழிலாளரை வகுத்தது நூமா எனக் கூறுப.
ஆண்டைத் திங்கள் கிழமை நாளாகப் பிரித்ததும் நூமா
என்ப. நூமா காற்பத்திரண்டு ஆண்டுகள் செங்கோல்
செலுத்தியபின் துஞ்சினன். --
துல்லஸ் கஸ்தீலியஸ் நூமாவின் அரசு கட்டில் ஏறிய துல்லஸ் கஸ்திலியஸ் என்பான் போர்ப் பிரியன். துல்லஸ் உரோம வம்சத்த

Page 113
92 's ഖഖ്g
வன். அல்பாலோங்காவின் கமக்காரருக்கும் உரோமக் கமக்காாருக்கும் கலகம் ஏற்பட்டதாக அல்பாவின் வேர் தன் மெற்றஸ் என்பானும் உரோமர்வேந்தன் துல்லஸ் என்பானும் போரை நிறுத்தி வீரரைத் தெரிந்து அவர் களின் தனிப் போரால் வெற்றி தோல்வியை நிச்சயிக்க உடன்பட்டார்கள். உரோமவீரர் கொருற்றிய சகோ தரர் மூவர் குயிருரற்றிய சகோதரர் மூவரை எதிர்த்தனர். கொருற்றிய மூவருள் இருவர் இறந்தனர். இறக்கவும் கொருற்றியன் தமியனுக நின்று தன் செறுமர் மூவரை யும் ஒவ்வொருவராகக் கொன்று அவர்களுடைய ஆடை களையுங் அணிகலங்களையும் ஏந்தி வெற்றிக் கோலத்துடன் வந்தான். அவன் தங்கை தன் காதலனின் ஆடையைத் தமயன் கையிற்கண்டு துயருற்று அழுதாளாக கொருரற் றியன் தனது பெரு வெற்றியில் தங்கை மகிழ்கின்றிலள் எனச் சீற்றங்கொண்டு அவளை ஈட்டியா லெறிந்து கொன் ருரன். நீதிபதிகள் கொருரற்றியனுக்குக் கொலைத் தண்டனை விதித்தனரென்றும் அரசன் சனங்களின் விருப்பத்தைக் கேட்க, கொருற்றியின் வீரனுகையாலும் அவன் தந்தை தான் மக்கள் மூவரையும் ஒரேநாளில் இழக்க நேரிட்ட தெனப் புலம்பியமையாலும் சனங்கள் இரங்கி கொருற்றி யனை மன்னிக்கும்படி வேண்டினரென்றும் பழங்கதைகள் கூறும். வீயரும் பிடேனியரும் உரோமரோடு பகைத்து மெற்றஸ் என்னும் வேந்தனின் துண்வலியில் நம்பிப் போர்க்கெழுந்தனர். மெற்றஸ் உரோமருக்குத் துணை புரியுமாறு வந்து போர்க் களத்தில் தனது படைவை வாளாவிருக்கச் செய்தானகையால் கஸ்திலியஸ் அவனைச் சிறைப்படுத்திக் காட்டுக் குதிரைகளின் கால்களிற் கட் டிக் கிழிப்பித்தான். கஸ்திலியஸ் அல்போலோங்காவின் குடிகளைக் கயிலியன் குன்றிற் குடியேற்றினன். ஊரில் ஓர் நோய் பரவியதாக, கிரியை நூல்களை ஆராய்ந்து சாந்திகளைச் செய்வித்தான். சாந்தியாக யுப்பிற்றர் என் ணும் வியாழ பகவானுக்குப் பலியிடும்போது இடியே பட்டு இறந்தான்.

அரசர்கள் 193
அங்கஸ் மாக்கியஸ்
நூமா பம்பிலியஸின் போன் அங்கஸ் மாக்கியஸ் அர சுரிமை பெற்ருரன். மாக்கியஸ் போரை வெறுத் கான். இலத்தீனரை அவங்தையின் குன்றிற் குடியேற்றினன். ரைபர் நதி கடலோடு கலக்குமிடத்து ஒஸ்தியா என்னும் துறைமுகத்தை அமைத்தான். போர் தொடங்குமுன் போர் முழங்கும் தூதுவர் மூலமாக யுத்த வறிக்கை பண் ணும் வழக்கத்தை நிலை நாட்டினன்.
இராக்குவீனியஸ்
கொறிந்துத் தென்னகரத்துக் கொடுங்கோன் மன் னன் சிபதிலேனல் காடு கடத்தப்பட்ட பிரபு தெமருட்டஸ் இத்தாலிய நாட்டிற் குடியேறினன். அவன் மகன் லுக் குமோ என்பவன் இரனுக்குயில் என்னும் எற்றாறியப் பெண்ணுெருத்தியை மணம் புரிந்தான். அந்நியனெனப் புறக்கணிக்கப்பட்டுத் தன் மனைவியோடும் உரோமா புரத்தை யடைந்து வாழ்ந்தான். உரோமாபுரத்துக்குச் செல்லும் வழியில் அவனுடைய தலைப்பாகையை ஒரு கழுகு கொத்தியெடுத்துத் திரும்பவும் தலையிலிட்டதைக் கண்ட இானுக்குயில் கிமித்தநூலறிவுடையவள் ஆகை யால் தன் கணவனுக்குச் சுககாலம் வருமென எதிர்பார்க் திருக்தாள். அங்கஸ் என்னும் அரசனேடு லுக்குமோ நட்பாகி லூசியஸ் இராக்குவீனியஸ் என்னும் பெயர் பெற்று வேந்தனுக்குத் தொண்டு புரிந்தான். அங்கஸ் அவனைத் தன் மக்களுக்குக் காவலனுக்கினன். அங்கஸ் இறந்தபின் சனங்கள் காவலனது ஊக்கத்தை மெச்சி அவனுக்கே முடிசூட்டினர்கள்.
இராக்குவீனியஸ் சபீனியரையும் இலத்தினரையும் எற்றுாறியரையும் அடக்கி அவருட் சிலரை உரோமாபுரத் திற் குடியேற்ற எண்ணி முச்சாதிகளொடு வேறு சாதி களையுங் கூட்டத் தொடங்கினன். அற்றஸ் நாவியஸ் என் ணும் கிமித்திகன் 'எடுத்துக்கொண்ட மாற்றம் தேவர்க்
25

Page 114
191 உலக வரலாறு
கேற்கா? தென்ருரன். வேந்தன் நிமித்திகனை நோக்கி 'கினைத்த காரியம் சித்தியாகுமோ அல்லவோ? என்று கேட்டுச் சித்தியாகு மெனவிடை பெற்று, "இதோ சாஃணக்கல்லும் மயிர் மழிக்கும் கத்தியும் உண்டு. கத்தி யால் கல்லை வெட்டுவா’யென மொழிந்தான். கிமித்திகன் உடனே வெட்டிக் காட்டினன். அது கண்டு வியப்புற்ற வேங் தன் அரசியின் முறையை மாற்றமல் சாதிகளின் சனத் தொகையை மாத்திரம் கூட்டினன். நகரில் நாளங் காடிகளும் அல்லங்காடிகளும் விளையாட்டு முற்றங்களும் அமைத்தான். இங்ஙனம் நேமியுருட்டுவோன் மாளிகையில் ஓர் அடிமைச் சிறுவன் இருந்தான். அவன் பெயர் சேவி யஸ் துல்லியஸ். ஒரு நாள் அச்சிறுவன் துயின்றுN தலை தீப்பற்றி எரிந்ததைக் கண்ட இரணுக்குயில் 'இச் சிறுவன் புகழ் பெற்றுப் பெருங் தலைவனுவான்' என மொழிந்தனள். இராக்குவீனியஸ் தன் மகளை சேவியல் துல்லியனுக்கு மணஞ் செய்தான். உடனே அங்களின் மக்கள் தமது அரசுரிமையைப் பிறனுள்வதாவென நினைந்து இராக்குவீனியஸைக் கொல்லும்படி தீவினையாளரை ஏவி னர்கள். வேந்தன் இறந்ததும் இரணுக்குயில் குடிகளைக் கூவி 'நும் வேந்தன் இறந்திலன்" எனச்சொற்று, சேவி யஸை உப வேந்தனுக நியமித்தாள்.
சேவியஸ் துல்லியஸ்
சேவியஸ் செங்கோல் செலுத்தியமையால் குடிகள் உவந்து அவனுக்கே அரசுரிமை அளித்தார்கள். அரசன் பல திருக்தங்களை ஏற்படுத்திக் குடிகளைப் படைத் தொழி லில் நன்கு பழக்கினன். அக்காலத்து உரோமர் தொகை 80,000. அரசன் படையைப் புதிதாக வகுத்ததுமன்றி நகரை மதிலாலும் அகழியாலும் காவற்படுத்தினன். அர சன் இரு புத்திரிகளைப் பெற்ருரன். ஒருத்தி சாந்த குண முடையவள், ஒருத்தி அகங்காரி. இராக்குவீனியஸ் தன் குமாரரிருவருள் சாதுவாகிய அரன்ஸ் என்போனை அகங் காரியான பெண்ணுக்கும் பேராசையுள்ள லூசியனைச்

அரசர்கள் 95
சாந்த குணமுடையாளுக்கும் மணமுடித்தான். இருவ ரையும் தத்தம் குணத்தில் அளவு கடவாமல் கிற்கச் செய்ய எண்ணினன். அவ்வெண்ணம் பிழைத்தது. என்னை லூசியஸ் தன் மனைவியை இகழ்ந்து தன் சகோதரன் மனைவியின் அகங்காரத்தை மெச்சி அவளைக் காமுற்றரன். அவளும் அவனைக் காமுற்று அவனது மனைவியைக் கொல்லும்படி துளண்டினள். அவ்வாறு தீத் தொழில் செய் வான் சேவியஸ் மேன்மக்கட் சபையை அணுகும் நேரம் பார்த்து அவனையுங் கொன்ருரன். சேவியஸின்மகளும் லூசியசும் இறந்தோனுக்கு மரியாதை செய்யாது பிணத் தின் மீது தமது தேரைச் செலுத்தினர்கள். ஆதலின் அவ் வீதி அன்று தொட்டுக் கொட்ட வீதியென வழங்கிற்று.
லூசியஸ் இராக்குவீனியஸ்தான் காமுற்ற அகங்காரி யுடன் வாழ்ந்து அரசாண்டான். மேன்மக்களைக் கொலைக் குத் தீர்த்தும் கீழ்மக்களைக் கோயில்களிலும் வீதிகளிலும் ஊழியஞ்செய்வித்தும் ஆண்டான். ஆகையால் அவனைச் சனங்கள் தருக்கனென அழைத்தார்கள். லூசியஸ் இராக் குவீனியஸ் வெய்யோனகினும் தன் இராச்சியத்தைப் பெருக்கினன். காபியை என்னும் இலத்தீன் நகரொன்றை உபாயத்தால் தன் ஆணைக்குட்படுத்தினன். தன் மகன் செக்ச்ரஸ் என்பானைப் பொய்ப் பகை பூண்டு நகரினின் நூறும் அகற்றினன். செக்ச்ரஸ் தந்தை தன் விரோதி யென்பதை அறிவித்துக் காபியைக்குச் சென்று சனங் களைத் தன் வசமாக்கித் தலைமை பெற்ற பின் நகரைத் தந்தையிடம் ஒப்புவித்தான். இராக்குவீனியஸ் வல்சிய ரோடு போர் புரிந்து அவர் நாடுகளில் உரோமரைக் குடி யேற்றினன்.
அவன் ஒரு நாள் தன்வீட்டில் பாம்பொன்றைக் கண்டு தன் குமாரர்களை டெல்பிக் கோயிலுக்குச் சென்று நிமித் தம்கேட்டு வரும்படி அனுப்பினன். அரசகுமாரரொடு யூனியஸ் புறூட்டனுஞ் சென்ருரன். கடவுளை யாவரும் வணங்கிகிற்ப, "எவன் தனது அன்னையை முதலில் முத்த

Page 115
196 உல்க வரலாறு
மிடுகிருரனே அவனே அரசுரிமை பெறுவனென அசரீரி பிறந்தது." உடனே புறூட்டன் பூமாதேவியே உலக மாதாவென நினைத்துத் தரையில் வீழ்ந்து நிலத்தை முத்த மிட்டானம். இது நிற்க,
9JSOJj III. A
இராக்குவீனியஸ் ஆடியா நகரை முற்றுகையிட்டு கின்றுN உடனிருந்த மேன்மக்கள் சிலர் தத்தம் மனைவி யரின் கற்பைப் புகழ, அதைத் தேரும்படி மேன்மக்கள் பலர் புறப்பட்டனர். அரசகுமாரரின் மனைவிகள் புலன் வழிச் சென்று கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறி யும் இன்பங்களில் காலங்கழித்ததையும் இராக்குவினியஸ் கொலாற்றையினன் மனைவி லுக்கிறீசியா என்பாள் தம் தோழிகளோடு நெசவு செய்துகொண் டிருந்ததையும் கண் டனர். இளங்கோ செக்ச்ரஸ் லுக்கிறீசியாவை மோகித் துக் காமபரவசனகி நள்ளிருள்யாமத்து அவள் சேக்கை சேர்ந்து அருந்ததியன்னளிடம் தன் வேட்கையைக் கூற, கற்புடை நங்கை மறுத்தனள். *ஓர் அடிமையைக் கொன்று உன் பக்கலில் விழுத்தி உன்னையுங் கொன்று உன் கற்பை இகழ்வேனெனச் செக்ச்ரஸ் லுக்கிறீசி யாவை வெருட்டிப் புணர்ந்தான். மறுகாட் காலை கற் பின் கொழுந்தாகிய லுக்கிறீசியா ஆறிய கற்பினளாகி ஆற்ருரத் துன்பம் நேரிட்டதெனத் தந்தைக்கும் கொழுந னுக்கும் அறிவித்தாள். அவர்கள் வந்து சேர்ந்தவுடன் நிகழ்ந்த இழிபை உணர்த்தியபின் தற்கொலை புரிந்தாள். அலுக்கிறீசியாவின் அறக்கற்பை மெச்சிய யூனியஸ் புறூட் டன் இளங்கோவின் கொடுஞ்செயலைத் தண்டிக்குமாறு சனங்களை வேண்டினன். சனங்கள் திரண்டு இராக்குவீ னியஸ் என்னும் வேந்தனை நகருட் புக விடாமல் அரண் வாயிலை அடைத்தார்கள். இச் செய்தி கிகழ்ந்தது கி. மு. 510 என்ப. அடுத்தவாண்டு செக்ச்ரஸ் காபியையில் கொலேயுண்டான். உரோமபுரமும் குடியரசு முறையைத் தழுவிற்று. வேந்தர் வேண்டாமெனச் சனங்கள் ஆர்ப்

அரசர்கள் 19
பரித்தனராதலின், மேன்மக்கள் இரு தலைவர்களைத் தெரிந்து அரசியலை நடத்தினர். முதன்முதல் இணைத் தலைவராக (Consuls) யூனியஸ் புறுரட்டன் என்போனும் இராக்குவீனியஸ் கொலாற்றையினஸ் என்போனும் கிய மிக்கப்பட்டனர். கொலாற்றையினஸ் வேந்தர் குடும்பத் தைச் சேர்ந்தோணுகையால் சனங்கள் அவனை வெறுத்த னர். புறூட்டன் அவனை நாடு துறந்து செல்லும்படி புத்தி கூறினன். அவனும் நாட்டினின்றும் நீங்கினன். புறூட் டஸின் குமாரரும் வேறு இளைஞர் சிலரும் (9 tỹ.ư1 IréFrt:6ì யில் விளையாட்டு முதலிய வேடிக்கைகள் இல்லையென் வருந்தி இராக்குவீனியஸ்ஸைத் திரும்பவும் வேந்தனக்க முயன்றனர். புறுரட்டஸ் இதையறிந்து தன் குமாரரைச் சிரச்சேதம் செய்வித்தான். வீயரும் எற்றுாரியரும் இராக் குவீனியசுக்குத் துணை புரிந்தனர். புறுரட்டஸ் அவர்க ளொடு பொருது வென்ருரன். இணைத் தலைவன் பப்பிளி யஸ் வலேறியஸ் தன் வீட்டை அரணுக்கினனெனச் சனங் கள் கூச்சலிட அவன் 'அரசுரிமையை விழைவோர் யாவ ராயினும் கொலைத்தண்டனைக்கு ஆளாவாரென' முர சறைவித்தான். அத்துடன் கொலைத் தண்டனை விதிக்கப் பட்டோருக்குச் சனங்களிடம் முறை வேண்டும் உரிமை யுண்டென்றும் சனங்களுக்கு மன்னிக்கும் உரிமை யுண் டென்றும் அறிவித்தான். இவ்வுரிமைகளைப் பொது சனங் களுக்கு அளித்தானுகையால் தேசநேசனெனப் பட்டம் பெற்ருரன்.
அக்காலத்தில் இராக்குவீனியஸ் எற்றுரிய வேந்தன் லாறு ஸ்போர் சீனவிடம் துணேவேண்டினன். லாறுஸ் போர் சீன தானையுடன் புறப்பட்டு உரோமரைக் குளுசியக் களத்தில் வென்று இரைபர் ஆற்றை அணுகினன். மேன் மக்கட் சபை பாலத்தை அழிக்கும்படி கற்பித்தது. பாலத்தை உடைக்குக் துணையும் ஒருசியஸ் கொக்கிள்ஸ் என்போனும் ஏர்மீனியஸ், லூசியஸ் எனும் வேறிரு வீரரும் பாலத்தில் கின்று எற்றுாரியப் படை முழுவதையும் தாக்

Page 116
198 உலக வரலாறு
கிப் போர் செய்தனர். பாலம் உடைந்த பின் கொக்கிள்ஸ் கவசத்தோடு ஆற்றில் விழுந்து நீந்தித் திரும்பினன். போர்சீன உரோமா நகர்முன் பாசறை அமைத் திருந்தா கை அவனைக் கோறற்குச் சென்ற உரோமன் மூசியஸ் என்போன் அரசன் பக்கலில் இருந்த அமைச்சன் ஒருவனை அரசனென மயங்கிக் கொன்ருண். மூசியஸ் உயிருக்கஞ்சா னகி வேந்தனைக் கோறற்கு 300 இளைஞர்கள் சத்தியஞ் செய்திருக்கின்றனர் என்றும் ஒருவர் பின் ஒருவராய் வரு வாரென்றும் வஞ்சினங்கூறித் தன் வார்த்தையை உண்மை யெனக் காட்டுதற்குத் தன் கையை அழற்கலத்தில் புதைத் தான். போர்சீனு அவன் வீரக்சைப் போற்றி உரோம ரொடு உடன்படிக்கை யெழுதிச் சென்றன். இங்ஙனம் உரோமர் குடியரசு நிலைத்ததும் உரோமா புரத்தின் வேங் தர்கால வரலாறு முற்றிற்று.
3-ம் பாடம்-இலத்தின் ஐக்கிய நகரங்கள்
(Consuls) இணைத் தலைவரது ஆட்சி இருவேந்தர் மன மொத்து ஒரு நாட்டை ஆளுதலொடு ஒக்கும். இணைத் தலைவர் இருவரும் ஒப்பான உரிமைகளை உடையராக, ஒரு வரது அதிகாரத்தை ஒருவர் அடக்கும் ஆற்றல் உடைய ராய் அதிகாரத்தால் ஏனைய தலைவருள் ஒப்பாரும் மிக்காரு மின்றி அரசியலை நடாத்தினர். இணேத் தலைவரே போர்க் களத்தில் படைத் தலைமை வகித்தும் முறை குறைவேண் டும் குடிகளுக்கு நீதி செலுத்தியும் ஆண்டார்கள். பகை வர் மிகும் காலத்திலும் பகைவர் வலிமிகும் காலத்திலும் உரோமர் தனித் தலைவர் ஒருவரை கியமித்தல் வழக்கம். தனித் தலைவனை முடிசூடாத மன்னன் எனச் செப்பலாம். தனித் தலைவனுக்கு எல்லா உரிமைகளும் ஆற்றல்களும் உண்டு. தனித் தலைவன் தான் கினைந்தவாறு ஆட்சி செய்யலாம். என்ன? தனித் தலைவனைத் தண்டித்தற்கு

இலத்தின் ஐக்கிய நகரங்கள் 199
ஒருவருக்கும் உரிமையில்லை. தனித் தலைவனகத் தெரியப் பட்டோன் செறுநரைப் புடைத்துக் குடியோம்பிய பின் தலைமையைத் துறந்து அரசியலைச் சனங்களிடம் ஒப்புவிப் டான். கி. மு. 501-ம் ஆண்டில் இலத்தின் நகரங்கள் இக லாகுமென நினைத்து உரோமர் தனித்தலைவனை நியமித் தார்கள். சிலர் முதன் முதல் தனித் தலைவனுக்கப்பட்ட வன் மான்லியஸ் வலேறியஸ் என்றும் சிலர் ரையிற்றஸ் லாட்டியஸ் என்றும் கூறுகின்றனர். கி. மு. 496-ல் தனித் தலைவன் அவுலஸ் பொஸ்தூமியஸ் இலத்தினரை வென்ற னன். அப்போரில் கஸ்ரர் போலக்ச் என்னும் இரட்டைத் தேவர்கள் உரோமருக்கு உதவி புரிந்தனர் என அறிகி ருேரம். கி. மு. 493 தொடங்கி கி. மு. 328-ம் வருடமளவும் இலத்தின் நகரங்கள் ஓர் ஐக்கியக் கூட்டமாக தமது நாட் டைக் காத்தும் பகைவரை எதிர்த்தும் ஒற்றுமையாக இருந்தன. இலத்தினர் கூட்டத்தில் 30 நகரங்கள் சேர்ந் தன. பொதுக் காவலுக்காக ஒவ்வொரு நகரமும் தத்தம் ஆற்றலுக் கேற்பப் படையும் பொருளும் அளித்தல் தமது கடமையாகக் கொண்டன. பெரும்பாலும் அப்பொதுப் படைக்கு உரோமரே தலைவராகத் தெரியப்பட்டனர். உத வித் தலைவர்களும் கீழ்த்தலைவர்களும் இலத்தினர்களே. கேணிக்கியருக்கும் இலத்தினருக்கும் ஆக்குவியருக்கும் வல்ஸ்கியர் பொதுப் பகைவரா கையால், கேணிக்கியர் இலத்தின் கூட்டத்தாரோடு நட்பானர். கேணிக்கியர் எற் றுாரியரோடும் பகைத்தமையால் இலத்தின் கூட்டத்தில் சேர்ந்தார்கள் எனலாம்.
Garful G. J. GTGio
கி. மு. 428-ம் ஆண்டு வல்ஸ்கியருடைய நகராகிய பிடேனுயி நகரை இலத்தினர் நாசமாக்கின ராகலின், வல்ஸ்கியரோடு உரோமர் இகலாகினர். உரோமர் தலை வன் மாக்கியஸ் வல்ஸ்கியர் தலைவன் ஒளபிடியனை நெருக் கித் தலைநகரின் காவன் மதிலேறிக் கடும்போர் செய்து

Page 117
200 உலக வரலாறு
பகைவரால் குழப்பட்டுத் தனியே பகைவரோடு பொருது நின்றன். அவ்வயின் எருமை மறம் செய்து கொறியொலி என்னும் வல்ஸ்கியர் தலைநகரைக் கைப்பற்றியமையால் உரோமர் மாக்கியனுக்குக் கொறியலானஸ் என்னும் பட் டத்தை அளித்தார்கள். கொறியலானஸ் மேன்மகன கை
யால் பொதுச் சனங்களின் நன்மையை ஒருபோதும் கரு தாதவனகிக் கீழ் மக்களால் வெறுக்கப்பட்டான். அக் காலத்தில் கீழ்மக்கள் மேன்மக்களோடு கலகப்பட்டுக் கொறியலானஸ் என்னும் வீரனை நகரினின்றும் அகற்றி னர்கள். கொறியலானஸ் தனது எதிரியைச் சந்தித்து நட் புக் கூர்ந்து சேனதிபதி யாக்கப்பட்டு பதினெரு இலத்தின் நகரங்களைக் கைப்பற்றியபின் உரோமபுரத்து வாயிலில் பாசறை அமைத்தான். அப்போது உரோமர் கலங்கி அவனது சினேகிதர் மூலமாக அவன் சினத்தைத் தணிக்க முயன்றனர். கொறியலானஸ் மூர்க்கனகையால் கொண் டது விடாது அவண் கின்ருரன். மேன்மக்கட் சபையார் அவனுடைய தாயையும் மனைவியையும் சமாதானம் இரந்து வரும்படி அனுப்ப, தாய் முழந்தாளிட்டு இரந்தும் மறுத் தானுக, தாயானவள் “மீ என் மகனல்லன் உன் தாய் ஒரு வல்ஸ்கியப் பெண்" என வசை மொழிந்தாள். அவ் வசை கேட்ட கொறியலானஸ் உள்ள முருகி உரோமரொடு உடன்படிக்கை எழுதினன். வல்ஸ்கியர் உடனே கொறிய லானஸைக் கொன்ருரர்கள் என ஒரு கதையுண்டு.
தேசத்தொண்டர்
459-ஆம் ஆண்டில் மினுசியஸ் என்னும் உரோமர் படைத்தலைவன் ஆக்குவியரோடு பொருது தோற்றனன். அப்போது சனங்கள் கின்கினுட்டஸ் என்னும் வீரனைத் தோட்டத்திலிருந்து அழைத்து, தனித் தலைவனக்கினர் கள். அவன் நகரவாசிகளை எல்லா முயற்சிகளையும் விட்டுப் போருக்கு ஆயத்தம் செய்யும்படி ஆஞ்ஞாபித்து ஒரு படை சேர்த்து ஆக்குவிய நாடு புக்கு அக்காட்டை யடக் கியபின் தனித் தலைமையை ஒப்புவித்துத் தன் கமத்துக்

இலத்தின் ஐக்கிய நகரங்கள் 20
குத் திரும்பினன் எனவும் ஒரு கதையுண்டு. இக்கட்டுரை களின் உண்மை ஆராயற்பாலன.
இனி கி. மு. 477-ல் எற்றுாரியர் உரோமரோடு போர் செய்தனர். பேவியர் என்னும் குழுவினர் பெருமிதங் கொண்டு தாமே அப்போர் முழுவதையும் நடத்தச் சென்று கிறமோனக் களத்தில் ஒருவன் ஒழிந்த 300 மக் களும் மாண்டனர் என்றும் ஒருவனே தப்பியோடி அக் குடும்பத்தை அழியாமற் காத்தனன் என்றும் கட்டுரை யுண்டு.
கி. மு. 405-ல் உரோமர் வீயை நகரத்தாரோடு பகை யாகிப் பத்து வருடமாகப் போர் செய்தனர். எட்டா மாண்டு உரோமர் தலைவன் கமிலஸ் நகரைச் சூழ்ந்து நிற் கையில் உரோமன் ஒருவன், "அல்பன் வாவியின் கீரைக் கடலுக்குப் பாய்ச்சினலொழிய, வீயா நகரத்தை உரோம ர்ால் அழிக்க முடியா’ தென்னும் விதி வாக்கியத்தைக் கேட்டுச் சொன்னன். கமிலஸ் அங்ஙனம் செய்து பத்தா மாண்டு ஒரு கிலச் சுரங்க மறுத்துச் சென்று வியை நக ரைக் கைப்பற்றினன். நகரில் கிடைக்கும் குறையில் பத்தி லொரு பங்கு தெய்வங்களுக்கென நேர்ங் கான். அப் பகுதி யைப் படைவீரர் கவர்ந்தமையால், கமிலஸ் கோபித்து உரோமபுரக்தைத் துறந்து பிற நாட்டில் வசித்தான். பின்பு கல்லியர் எற்றுாரியரைத் தாக்க, பேவியர் என்னும் உரோம தூதர் இருவர் நா வீரம் பேசி வாளுருவினர். கல் லியர் உரோம தூதர் இங்கினம் ஒழுகினர்களென மேன் மக்கட் சபைக்கு முறையிட்டனர். சபை அவர்களைக் கண்டியாது விட்டமையால், கல்லியர் உரோமாபுரத்தை முற்றுகை யிட்டனர். உரோம குடிகள் கமிலஸை அழைத்து உரோம நகரத்துக்கு மீண்டு கல்லியரைத் துரத்தும்படி இரங்தனர்.
இக்கதைகள் யாவும் பொய்யே. வல்ஸ்கியர் உரோ
மரை வென்றமையால் அவ்வெற்றியைப் பகைவர் உரோ
மர் தலைவன் மாக்கியனது வலிமையால் பெற்றனர் எனக்
26

Page 118
2O2 உலக வரலாறு
காட்டி வல்ஸ்கிவரின் புகழைக் குறைத்தனர் போலும். கின்கினட்டஸ் ஒரு நாளையில் ஆக்குவிய நாடடைந்து அவரை அடக்குதல் நம்பத் தக்கதன்று. அல்பன் வாய்க் காலை உரோமர் அக்காலத்தில் திருத்தி அகழ்ந்தனர் என்பது கமிலஸ் என்னும் தலைவனின் கதையால் விளங்கு கின்றது. கல்லியர் உரோமரை வென்ற இழிவைக் சரத்தற் பொருட்டு கமிலஸ் நாடு துறந்த கதையைக் கட் டினர் என்பது பொருத்தமாகும். இலிவியஸ் என்னும் உ ரோ ம வரலாற்ருர கிரிவன் உ ரோ ம ன கை யால் உரோமர் தலைவர்களே அளவு கடந்து புகழ்ந்தனன் வேந்தர் காலத்து நடந்த உற்பாதங்களும், அதிச யங்களும் பொய்க் கதைகள் என்பது கூருரமலே அமையும். ஆதி காலத்தில் உரோமரை எற்றுாறியர் வென்று ஆண்டனர் எனக் கருது தற்கு இடமுண்டு. கல்லி யர் வரவுக்கு முன் எழுதப்பட்ட வரலாறுகள் உரோம புரத்தைக் கல்லியர் தாக்கின காலத்தில் அழிவெய்தியமை யால், கி. மு. 890-ஆம் ஆண்டு முன் நிகழ்ந்தவையாகக் கூறப்பட்ட செய்திகள் எல்லாம் பழங்கதையொழிய 9 - 1662f60l.D'éis 6 T6) 60 67 6OT6DITLD i
கல்லியர் வரவும் இலத்தினர் உட்பகையும்
கி. மு. 890-ஆம் ஆண்டு செனேணியர் என்னும் ஒரு கல்லிய சாதியார் போ நதியைக் கடந்து இத்தாலியாவி' னுட் புகுந்து உரோமாபுரத்தைத் தாக்கினர். இக்கல்லி யர் வரவுடன் உரோமரது சரித்திரகாலம் தொடங்குமென வரலாற்ற சிரியர் யாவரும் கூறுகின்றனர். ஆலியா வென் னும் சிற்ருரற்றுக் கரையில் கல்லியர் உரோமர் படையை அடியோடே அழித்து வந்து உரோமா புரத்தைச் சூழ்ந் தனர். புற மகரில் வாழ்ந்த உரோமர் எற்றுறியா நாட் டிற்கு ஒடித் தப்பினர். உரோமருடைய வயல்கள், வீடு கள் எல்லா வற்றையும் கல்லியர் பாழாக்கினர். பெண் கள், குழந்தைகள், வயோதிகர் முதலியோரை ஏமவாணு

இலத்தின் ஐக்கிய நகரங்கள் 203
கிய உள்ள ரணில் வைத்து வீரர்கள் மதிலைக் காத்தனர். கல்லியர் புற நகரத்துட் புகுந்து ஒருவரையும் காணுமல் சினந்து ஆங்கிருந்த வயோதிக மேன்மக்கள் சிலரைத் தாடியாற் பற்றிக் கொன்றனர் என ஒரு கதை உண்டு. கல்லியர் சீர் திருந்தாத மூர்க்கர் என்பதை இக்கதை வலி யுறுத்துகின்றது. இனி வீரனெருவனல் தெய்வீகமாக உள்ளாண் காப்பாற்றப்பட்டது என்பதை வேருேரர் கதை உணர்த்துகிறது. அரண் காவலர் உறங்கும் நேரம் பார்த் துக் கல்லியர் குன்றின்மிசை ஏறினராகக் குன்றின் கண், உறைந்த சில தாராக் கோழிகள் கொக்கரித்தமையால், மான்லியன் என்னும் வீரன் துயில் எழுந்து கல்லியன் ஒரு வனைத் தன் பரிசத்தால் இடித்து விழுத்த, தனி வரிசை யாக ஏறினராகலின் கல்லியர் யாவரும் ஒருவர் மேல் ஒரு வர் விழுந்து இறந்தனர்.
கல்லியர் உரோமரையும் இலத்தினரையும் வென்றன ராகையால், உரோமருக்கு எட்டுத்திக்கிலும் பகைவர் எழுந்தனர். துணைவரான இலத்தினரும் இகலாயினர். சிற்சில பகை நாடுகள் தம்முள் முரண்பட்டமையால் உரோமரும் களை தீர்ந்து தழைத்தனர். அக்காலத்தில் கமி லஸ் தனித் தலைவனனன். உரோமர் கி. மு. 389-ம் ஆண்டு ஆக்குவியர் வல்ஸ்கியர் எற்றுாரியர் முதலியோரை வென்று எற்றுாரிய நாடுகள் சிலவற்றை ஆட்சி நாடாக்கி நெப்பெற்றி, சத்திரியம் என்னும் இரு நகரையும் உரோம குடியேற்ற நாடாக்கி அவ்விரு நகரையும் வடவெல்லைக் காவல் அரண்க ளாக்கினர் என இலிவியின் வரலாறு செப்புகின்றது. தெற்கே ஹேணிக்கியரை வென்று சாற் றிக்கம் என்னும் குடியேற்ற நாட்டை அமைத்தனர். அக் குடியேற்ற நாடுகளில் இலத்தினரைக் குடியேற்றமையால் இலத்தினர் உரோமரைப் பகைத்தனர். இரைபூர், (பிருயி நெஸ்தி) முதலிய இலத்தின் நகரங்கள் போர் தொடங்கின. அக்காலத்தில் கல்லியரும் இடையிடையே திரண்டு உரோ மரோடு பொருதனரென அறிகிருேரம், கல்லியரின் அக்

Page 119
204 உல்க வரலாறு
கிரமத்தைப்பற்றி விரிவாக ஒன்றும் தெரியவில்லை. கி. மு. 367-329-ம் ஆண்டுகள் அறு முறை பொருதார்கள் என இலிவி எழுதியுள்ளார்.
கி, மு. 367-ம் ஆண்டு கமிலஸ் வயசால் முதிர்ந்து கிழ வனுனலும் கல்லியரோடு பொருது அவரைக் களத்தில் வென்றன். கி. மு. 361-ம் ஆண்டு உரோமவீரன் மான் லியஸ் கல்லிய வீரன் ஒருவனைத் தனிப் போரில் கொன்று அவனுடைய ப்ொற்சங்கிலியைத் தான் அணிந்தமையால் பொற்சங்கிலியனெனப் பெயர் பெற்றனென இலிவி புகழ் கின்ருரர். 349 கி.மு. கமிலஸ் என்பவனின் மகன் பியூறியஸ் கமிலஸ் கல்லிய படையைத் துரத்தினன். அப் போரில் காக்கை ஒன்று உரோமவீரன் வலேறியனேடு பொருத கல்லிய வீரனுடைய கண்ணைக் கொத்தியமையால், வலேறி யஸ் கல்லியனைக் கொன்ருரன். அவ்வெற்றியின் பின் வலே றியஸ் காக்கையன் என்னும் பட்டம் பெற்ருரன். இ லிவி யஸ் உரோம வீரரைப் புகழ்தல் வழக்கமெனக் கூறினுேம்,
கி. மு. 356-ம் ஆண்டு எற்றுாரியர் உரோமரோடு அமர்க்கெழ காயஸ் மாக்கியஸ் உருத்திலியன் தனித் தலைவ கை நியமிக்கப்பட்டான். ஐந்து வருடமாக யுத்தம் நீடித்த தென்றும் எற்றுாரியர் 307 உரோமரைத் தமது கோயிலில் பலியிட்டனரென்றும் உரோமரும் பதிலுக்குப் பதிலாக 388 எற்றுTரியரைச் சதுக்கத்தில் பலியிட்டனர் என்றும் கி. மு. 351-ம் ஆண்டு சமாதானம் எழுதப்பட்ட தென்றும் தெரிகிறது. i
இலத்தின் யுத்தம் 340 கி. மு. -828 கி. மு. 340-ல் இலத்தின் நாட்டுத் தலைவர் அன்னியஸ், மினுசியஸ் என் போர் உரோமபுரத்துச் சபையிடம் தூதராகச் சென்று உரோமருக்கும் இலத்தினருக்கும் தாய்மொழி ஒன்ரு கை யாலும் இலத்தினர் உறுநராகலாலும் இலத்தின் குடி களுக்கும் தெரிவுரிமை மணவுரிமை முதலியவற்றை ஈய வேண்டுமென இரந்தனர். உரோமர் இவ் வேண்டு

இலத்தின் ஐக்கிய நகரங்கள் 205
கோளுக் கிணங்காமையால் இலத்தினர் கம்பேனியரிடம் துணைபெற்று உரோமரோடு இகலாகிப் போர் முரசு அறைந்தனர். சில இலத்தின் நகரங்கள் நொதுமலா யிருந்தன. கி. மு. 340-ம் ஆண்டுத் தலைவர்கள் மான் லியஸ் என் போனும், பப்பிளியஸ் டீசியஸ் முஸ் என்போனும் படையொடு சென்று வெகுவியஸ் எரிமலை யண்டையில் போர்புரிந்து இலத்தினரை வென்றனர். அப்போரில் நிகழ்ந்த செய்தியொன்று கவனிக்கற்பாலது. பாசறையி லிருந்த வீரரைப் போர் தொடங்குமுன் தனிப்போர் செய் யக் கூடாதெனப் படைத் தலைவன் கற்பித்தும் தலைவன் மகன் மான் லியஸ் தனிப் போர்செய்து எதிரியைக் கொன் ருரனுகையால் போர்க்காலப் பிரமாணத்தின்படி படை நீதி செலுத்திய தங்தை தன் மகனைக் கொன்ருரன். அப்போரில் உரோமருடைய படை முதுகிட்டதென்றும் டேசியஸ் முஸ் பகைவரைத் தனியே எதிர்த்து உயிர் இழந்தா னென்றும் அறியக் கிடக்கின்றது. கி. மு. 328-ம் ஆண்டு இலத்தின் நாடுகள் ஒருவகைச் சுதந்தாமுமின்றி உரோமருடைய ஆட்சி நாடாயின.
இத்தாலிய தேசத்து ஆட்சிவரலாறு
கி. மு. மூன்ருரம் நூற்ருரண்டில் உரோமர் தமது ஆட் சியை இத்தாலியதேச முழுவதும் செலுத்தினர். அவர், பிறசாதியினர் யாவரையும் வென்று அவர்கள் நாடுகளில் தம்மக்களைக் குடியேற்றினர். இந்நூற்ருரண்டில் உரோம குடியரசு மிகு வலிமைபெற்று மத்தியதரைக்கடற் பாகங் களில் பிறநாட்டாரோடு பகைத்துப் போர்புரிந்தது.
சம்நிதியர்
சம்நிதியர் உரோமருடைய அயலோராயினும் வேற் றினத்தைச் சேர்ந்த ஒரு கூட்டத்தினரே. சம்கிதியர் சமயப்பற்ருரலும், ஒழுக்கத்தாலும் சிறந்தோரென அறிகி ருேரம். சபேலியர், உம்பிரியர், சம்நிதியர்; என்போர்
ஒரு குழுவினரே. சம்நிதியர் வீரத்தால் புகழ்பெற்ருே

Page 120
206 உலக வரலாறு
ாாயினும் தம்முள் ஒற்றுமையின்மையால் உரோமரால் அடக்கப்பட்டனர். கி. மு. ஐந்நூறில் சம்நிதியர் எற்றுாறி யரைத் துரத்திக் கம்பேனிய கிரேக்கரை அடக்கி அவர்கள் நாடுகளிலும் குடியேறினர்கள்.
முதலாம் சழ்நிதிய யுத்தம். கி. மு. 326-321
கி. மு. 343-ஆம் ஆண்டில் கிரேக்க நாகரிகத்தைத் தழுவிய கப்புவா நகரத்தோர் உரோமருதவியை வேண், டித் தூதனுப்பினராக, உரோமர் அவ்வேண்டுகோளுக் கிணங்கிச் சம்கிதியரோடு போர் தொடங்கினர்கள். உரோ மருடைய இணைத்தலைவரே படைத் தலைமை வகித்தல் வழக்கமாதலால் 343-ஆம் ஆண்டில் இணைத்தலைவரில் ஒருவனன வலேறியஸ் காக்கையன் என்பான் சம்கிதிய நாடு சென்று அவர்களைக் கவரிஸ்மலையில் நிகழ்ந்த போரில் வென்ருரன். மற்ற இணேத்தலைவன் அவுலஸ் ஏணிலியஸ் கொசஸ் என்பான் வேருேர் களத்தில் சம்நிதியரை வென் ருரன். இருதலைவரும் தம் படையை ஒருங்கு சேர்த்துப் பகைவரை ஸ-வெஸ்பாப் பேரில் வென்றனர். இலிவியஸ் என்பார் தம்வரலாற்றுள் இப்போரில் நாற்பதினுயிரம் சம் நிதியர் மாண்டனரெனக் கூறினர். இப்பெருஞ் சேனை அழிந்ததோவெனப் பலர் ஐயுறுகின்றனர். கப்புவா நக ரின் மூலப்படை நகரத்தலைவனெடு வேறுபட்டுப் பகைப் படையாக மாறிற்று. சில இலத்தின் நகரங்களும் உரோம ரொடு பகைக்கலாயின. அக்காலத்தில் உரோமர் கம்பே னிய நாடுகளையும் தமது ஆட்சிக்குட்படுத்தினர். கி. மு. 827-ஆம் ஆண்டில் கூமாயி நகரத்துக் கிரேக்கர் சிலர் நியாப்போலி, பலியர்ப்போலி என்னுமிடங்களிற் குடி யேறினர்கள். கிரேக்கக்குடிகள் கப்புவாவில் கலகம் விளைத்தனர்; ஆகலின் உரோமர் கப்புவா நகரத்தோருக் குத் துணைபுரிந்து கிரேக்கருடைய குடியேற்ற நாடுகளைக் கைப்பற்றினர். கி. மு. 326-ஆம் ஆண்டுமுதல் மறுபடியும் சம்நிதியரும் உரோமரும் பொருதணராயினும், அவர்,

இலத்தின் ஐக்கிய நகரங்கள் 207
களுள் வெற்றி தோல்விகள் நிகழவில்லை. 324-ஆம் ஆண் டில் உரோமர் சம்நிதியரைப் புடைத்தனர். கி.மு. 321-ஆம் ஆண்டில் நிகழ்ந்த போரில் உரோமர்படை நாசமாயிற்று. இஃனத் தலைவரான பொஸ்தூமியனும், கல்வினனும் கோல்வி யடைந்தமையால் சம்நிதியருடைய தலைவனன காயஸ் பொந்தியனேடு உரோமர் தலைவர்கள் உடன் படிக்கை செய்துகொண்டார்கள். மேன்மக்கட் சபையார், அவ்வுடன்படிக்கையை ஏற்காமல் தலைவர் இருவரையும் பொந்தியனிடம் ஒப்புவித்தனர். பொந்தியன் தன் பெருங், தன்மையைக் காட்டற்கு அவர்களை யாதொரு தீங்கும் செய்யாது விடுதலைசெய்தான். உண்மை இவ்வாறிருப்ப, இலிவியஸ் என்பார் உரோமர் வென்றனர் என எழுதினர். கி. மு. 315-ஆம் ஆண்டில் பேவியுஸ் என்பான் உரோம நாட்டுத் தனித் தலைவனுகிப் போர் நடாத்தியும் பல நகரங் கள் சம்நிதியர் கைப்பட்டன.
இரண்டாம் சம்நிதிய யுத்தம் கி. மு. 314-304.
கி. மு. 314ல் உரோமர் தலையெடுத்துச் சம்நிதிய நாட்டினுட் புகுந்தனர். கி. மு. 310ல் உரோமர் சில சிறு மரக்கலங்களில் சென்று கம்பேனியத்துறையில் கொள் ஆள கொண்டனர். கி. மு. 308ல் உரோமர்தலைவன் டேசியஸ் முஸ் என்பான் வெற்றியடைந்தான். ஏணிக்கியர் அவ னுக்குத் துணைவராயினர். கி. மு. 304ல் சம்நிதியர் சமா தானமடைதற்கு உரோமரிடம் துரதுவரை அனுப்பினர் கள். போர்முடிவில் உரோமர் பல குடியேற்றங்களே நாட்டினர். メ
மூன்ரும் சம்நிதிய யுத்தம் கி. மு. 298-290.
கி. மு. 298-ஆம் ஆண்டுத்தலைவர்கள், டேசியஸ்முஸ் என்போனும் றூவிலியஸ் என்போனும் ஆவர். டேசியஸ் முஸ், விருத்தர் வாலிபர் எல்லாரையும் சேர்த்து 60,000 படை வீரரோடு போர்க்குப் புறப்பட்டான். சம்நிதியர்

Page 121
208 உலக வரலாறு
கல்லியரின் துணைபெற்றர்கள். கல்லியரின் படைக்கு உரோமர் மிகவும் அஞ்சினர்களாயினும், உரோமர் வெற்றி யடைந்தார்கள். கி. மு. 291-ல் உரோமர் தென் இத்தாலியாவிலும் வெனிசியாவிலும் வேறு பல இடங் களிலும் 25,000 குடிகளைக் குடியேற்றி ஆட்சி நாடுகளைக் காத்தார்கள். இவ்வண்ணம் உரோமர் கம்பேனியா நாட் டையும் சம்கிதியநாட்டையும் தமது ஆட்சிக்குட்படுத்தித் தென்னித்தாலியா முழுவதிலும் தமது ஆண்ணயைச் செலுத்தத் தொடங்கினர்கள்.
கம்பெனியசநாட்டு வரலாறு.
கி. மு. 1040-ஆம் ஆண்டு யவனர் கம்பெனியாBாட் டிற் குடியேறினர்கள். அவர்களுடைய நகர் கூமாயி என்பது. இந்நகரிற் குடியேறிய யவனர், யவனதேசத்து யூபோயியா நாட்டினின்றும் போந்தனரெனப் பழங்கதை கள் கூறும். இக் கிரேக்கர் நாளடைவிற் பெருகிப் பாதினுப்போலி, நீயாப்போலி என்னுமிடங்களிற் குடி யேறினர்கள். கி. மு. 748-ஆம் ஆண்டு வேறேர் கிரேக் கக் கூட்டத்தினர் மெசின நீரிணையால் வந்து ரெசியம் நகரை அமைத்தார்கள். கி. மு. 710ல் வேறு கிரேக்கக் கூட்டத்தினர் குருேரற்றேன, இராறந்தம், சிபாரிஸ் என் னும் நகரங்களை ஸ்தாபித்தார்கள். இக்கிரேக்கர் பெரு கிப் பெற்றியால் பொசிடன் முதலிய இடங்களிற் குடி யேறிச் சிறு நகரங்களை அமைத்தனர். ஸ்பாட்டா தேசத் துக் கிரேக்கவம்பர் இராறங்தத்திற் குடியேறினர்; அவர் கள் ஏணிக்கியாவிலும் பரவினர். பார்சியரால் துரத்தப் பட்ட சின்னசியாக் கிரேக்கர் 683-ஆம் ஆண்டு லொக்கிரி யிலும் 543-ஆம் ஆண்டு வேலியாவிலும் குடியேறினர். மேற்கூறிய சிபாரிஸ் நகரத்தார் பெருகி 441-ஆம் ஆண் டில் தூறியி என்னும் நகரத்தில் வசித்தனர். இத் தூறி யரே 14000 வீரரையுடைய யவனராயின், இத்தாலியா நாட்டில் வசித்த கிரேக்கரின் செல்வத்தையும் வலியை யும் கூறவும்வேண்டுமோ? நீர்வளம் கிலவளம் பொருந்திய

இலத்தின் ஐக்கிய நகரங்கள் 209
இந்நாடுகளில் யவனர் குடியேறிப் பெருகியமையால் இக் குடியேற்றநாட்டார் தம்நாட்டைப் பெரிய கிரேக்க நாடென வழங்கினர். கி. மு. 500-ஆம் ஆண்டுவரையும் கிரேக்கர் பிறசாதியாரொடு பகையாமல் வாணிகம் கமம் முதலிய தொழில்களால் பொருளிட்டிச் சீவித்தார்கள். பின்னர் எற்றுரியக் கடற்கள் வராலும் பினிசியக் கடற்கள்வரா லும் நனிவருத்தப்பட்டனர்; மேலும், சம் நிதியராலும் நெருக்கப்பட்டார்கள். கிரேக்கர் தம் கப்பற்படைவலியால் பினிசியரையும் எற்றுரியரையும் அடக்கினர்கள்; ஆயி னும், சம்கிதியருக்கு மிகவும் அஞ்சினர்கள். கி. மு. 420-ல் கூமாயிருகர் சம்நிதியர்வசமாயிற்று. இராமந்தம் என்னும் கிரேக்க நகர் அத்திரியாட்டிக் கடற்பக்கத்துப் பட்டினங்க ளோடு பண்டமாற்றுச்செய்து செல்வமுற்று வளர்ந்தது.
கி. மு. 338-ல் இராறங் தநகரக் கிரேக்கர் லுக்கேனிய ருக்கு எதிராகத் தம் தாய்நாட்டாராகிய யவனரிடம் துணே வேண்டினர். யவனதேசத்தில் எப்பிரஸ் என ஒரு சிறு நாடுண்டு. எப்பிரஸ்நாட்டு வேந்தன் அலைச்சாந்தர் என் Luar 6ör இரரறந்த நகரத்தாருக்குத் துண் புரிந்தான். இவ் வலைச்சாந்தர் யவனமன்னருட் புகழ்பெற்ற பெரிய அலைச் சாந்தரின் மாமன். இரண்டாம் சம்நிதிய யுத்தத்தில் இரா றந்த நகரத்தார் சம்கிதியரோடு பகையாமலும் உரோம ருக்கு உதவிசெய்யாமலும் நொதுமலராயிருந்தனர்.
கி. மு. 285.ல் லுக்கேனியர் தூறிய நகரத்தைத் தாக் கினர். அஞ்ஞான்று, கல்லியரும் எற்றுாரியரும் சம்கிதி யரும் இராறந்த நகரத்தாரும் ஒருங்குசேர்ந்து உரோம ருக்குப் பகைவராக எழுந்தனர். உரோமர் முதன் முதற் கல்லியரை அடக்கினர்கள். கல்லியர் முதலிற் செந்தீனக் களத்தில் தோல்வியடைந்தாலும் பத்தாண்டு கழிந்தபின் பின்னரும் போருக்கு எழுந்து உரோமருடைய குடி மேற்ற நகராகிய அரற்றியத்தைக் கைப்பற்றினர். கோணி லியஸ் டலபெல்லா போநதியைக் கடந்து கல்லியநாடு

Page 122
210 உலக வரலாறு
புகுந்து கல்லியரை அடியோடு அழித்தான். உரோமர், செனேனிய கல்லியரில் ஆடவரைக் கொன்று பெண்களை யும் குழந்தைகளையும் அடிமைகளாக்கினர். அத்தருணத் தில் போயியென்னும் கல்லியர் உரோமர்மேற் படை யெடுத்துச்சென்று வாடிமோ வாவிக்கரையில் தோல்வி யடைந்தனர். கி.மு. 298-ஆம் ஆண்டு தொடங்கி 282-ஆம் ஆண்டு வரையும் நடத்திய போரில் உரோமர் கல்லியரைச் செயித்தார்கள். கல்லியரை உரோமர் அடக்க, இராறந்த நகரினர் உரோமருடைய பகைத்திறங் தெரியாமற் சோம்பி யிருந்தனர். கல்லிய யுத் தம் முடிந்தபின் உரோமர் கிரேக்க நகரங்களைக் கைப்பற்ற முயன்றனர்; கி. மு. 282-ல் லொக்கிரி, குருே ற்றேன, ரெசியம் முதலிய நக ரங்களை அடக்கியும் இராறந்தத்தைத் தப்பவிட்டார்கள். இராறந்தத்து வணிகர் உரோமராட்சியே தாம் பொரு ளிட்டற்குத் துணையாகுமென எ ன் னி உரோமரிடம் நகரை ஒப்புவிக்க முயன்றனர்; இஃதறிந்த ஒற்றர்கள் நகரத்தலைவர்கட்கு அறிவித்தனர்; தலைவர்கள் துறையில் நின்ற உரோமருடைய கப்பல்களைக் கைப்பற்றி உரோம ருக்கு எதிராகப் போர் முரசறைந்து பிரஸ் வேந்தனிடம் துணை வேண்டினர்கள்,
வேந்தன்பிரஸ்
வேந்தன்பிரஸ் என்பவனுடைய தந்தை அயாசிடிஸ் என்பான் தன் மைத்துனனுன மகாவீரன் அலைச்சாந்த ருக்குத் திறைகொடுத்து எப்பிரஸ் நாட்டை ஆண்டான். அயரஸிடிஸ் ஒரு போரில் மடியப், பிரஸ் என்பான் சிறு வனுயிருந்தமையால் குளோக்கஸ் என்னும் ஒரு சுற்றத்தா னிடம் வளர்ந்தான். ' சின்னசியாவில் அந்திக்கோனஸ் என்னும் வேந்தன் மகன் பொலியாக்கிாேற்றிஸ் என் பான், பிரஸ் என்பானுடைய சகோதரியை மணஞ்செய் தானக பிரஸ் என்பான் சின்னசியாவுக்குப் போனன். கி. மு. 310-ல் எகிப்துவேந்தன் தொலமி என்பான் அங் திக்கோனைக் கொன்று வெற்றிப்பறை கொட்டியதன்றிப்

இலத்தின் ஐக்கிய நகரங்கள் 21
பிரஸ் என்போனையும் அலைச்சாந்திரியா நகரிற் சிறையிட் டான். பிரஸ் என்னும் வீரன் மிக்க அழகனுகையால், தொலமியின் மனைவியருள், கண்ணுேட்டமுள்ள பெரினிசி என்பாள் கரு ஃண கூட ர் ங் து அவனைச் சிறைவீடுசெய்து தொலமியின் மகள் அந்திக்கோனுவுக்கு மணுளனக்கினுள். அவன் தொலமியிடம் பொருளுதவியும் படையுதவியும் பெற்று எப்பிரஸ் நாடடைந்து தனது அரசுரிமையைப் பெற்றன். கி. மு. 296-ஆம் ஆண்டில் பிரஸ் செங்கோல் செலுத்தத் தொடங்கிப் படைமாட்சியால் கி. மு. 287-ஆம் ஆண்டு மசிடோனியா தேசத்தையும் கைப்பற்றி ஆறு திங்கள் ஆண்டான். அதன்பின் ஐந்து வருடம் சோம்பி யிருந்து காலத்தைக் கழித்தான். அவன் கீழ்த்திசையை அடக்கவியலாதென்றெண்ணி மேற்றிசையை நோக்கின னதலால், அவன் இராறந்த நகரத்தாரனுப்பிய தூது வரை வரவேற்று உரோமருக்கெதிராக இராறந்த நகரத் தார்க்குத் துணைபுரிய உடன்பட்டான்.
பிரஸ் 3000 வீரரை மைலோவின் தலைமையில் அனுப்பினன். கி. மு. 281-ல் 25,000 கிரேக்க வீரரோடு பிரஸ் இராறந்த நகரத் துறையில் இறங்கி அந்த நகரத்தி லுள்ள உரோமர்களைவென்று அங்கே தன் பாசறையை அமைத்தான். வலேறியஸ் இலைவீனஸ் என்னும் உரோ மர் 50,000 படையாளரோடு அவனை எதிர்த்தார். கெராக் கிளிசா நகரைக் காத்தற்காகப் பிரஸ் சிரஸ் என்னும் அருவிக்கரையில் கின்றன். இலைவீனஸ் அருவிகடந்து தன் புரவிப்படையால் கிரேக்கப் புரவிப்படையைக் கலைக் தான். உரோமர் காலாட்படை கிரேக்கர் காலாட்படையை ஏழுமுறை தாக்கியும், கிரேக்கர்காலாட்படை அசைய வில்லை. பிரஸ் தன் யானைப்படையால் உரோமருடைய புரவிப்படையை ஒட்டியதன்றி அவருடைய காலாட் படையையும் அழித்தான். கிரேக்கர்சேனையில் 4,000 வீர ரும் உரோமர்சேனையில் 7,000 வீரரும் மாண்டனர். உரோமர் தலைவன் இலைவீனஸ் தோல்வியுற்ற தன்ப.ை

Page 123
212 உலக வரலாறு
யோடு வெனிசியாவில் தங்கினன். இப்ப்ோரில் பிரஸ் வெற்றியடைந்தாலும் உரோமருடைய படைத்திறமறிந்து சமாதானம்பேசும்படி தன் அமைச்சன் சினியாஸ் என் போனைத் தூதனுப்பினன். அப்பியஸ் குளோடியஸ் என் பான் வயதுமுதிர்ந்து கண்பார்வைகெட்டும் பழைய ஊக் கத்தோடு மேன்மக்கட்சபையேறி யுத்தத்தைத் தொடர வேண்டுமெனச் சொற்பொழிவுசெய்து தூண்டினன். பிரஸ் உரோமா புரத்தையணுகி 37 மைல் தூரத்தில் கின்றும் இத்தாலியரது துணைபெருமையால் இராறந்த நகரத்திற் குத் திரும்பினன். இதற்கிடையில் உரோமர் எற்றுாறி யரை அடக்கினர்கள். கி. மு. 281-ல் அக்குவியத்தில் டேசி யஸ்முஸ் என்பவனுடைய மகனைத் தலைவனுகக்கொண்ட 80,000 உரோமர் 80,000 கிரேக்கரோடு பொருதார்கள். இரண்டு நாள் போர்கிகழ்ந்தது. அப் போரிலும் யானைப் படையின் வலிமையால் பிரஸ் வெற்றியடைந்தான், ஆயி னும், அப்போரில் 3,000 வீரரைப் பிரஸ் இழந்தான். பின்னர், மடிகாரணமாகவோ எப்பிறஸ் நாட்டு உட்கல கத்தின் காரணமாகவோ பிரஸ் இராறந்த நகரத்திற் காலங்கழித்தான். அக்காலத்திற் சிசிலித்தீவினரான கிரேக்கர் அந்நாட்டுக்கு அதிபனுகும்படிபிரஸ் என்பானை வேண்டினர்கள். சிசிலித்தீவின் மேற்குப்பாகத்தில் இருந்த காதாக்கினியர் கிழக்குப்பாகத்திலிருந்த கிரேக்கரை நெருக்கித் தீவு முழுவதையும் வெளவக்கருதினர்கள். சிருரக் கூசாப் பட்டினத்துக் கொடுங்கோன் மன்னன் அகதோக் கிள்ஸ் காதாக்கினியரை எதிர்த்தான். பிரஸ் அகதோக் கிள்ஸ் என்னும் வேந்தனுடைய மகளை விவாகஞ் செய்து கொண்டமையால், கிரேக்கர்யாவரும் பிரஸ்வேந்தனுடைய உதவிபெற்றுக் காதாக்கினியரை வெல்லலாமென எண் ணினர்கள். இத்தாலிதேசத்துக் கிரேக்கர் முழுமனத் தோடு உதவி புரியாமையால் பிரஸ் என்பான் இராறந்த நகரத்தினர் துணை வேண்டவும் மறுத்துச் சிசிலித்தீவுக்குச் சென்ருரன்.

உரோமாபுரியின் உண்ணுட்டு வரலாறு 213
சிசிலித்தீவின் பழங்குடிகள்
வரலாற்றுக் காலத்துக்குமுன் சிசிலித்தீவில் வாழ்ந்த மக்கள் இத்தாலியா தேசத்துப் பழங்குடிகளின் ஒரு கிளேயினராதல்கூடும். சிசிலித்தீவின் மேற்குப் பகுதி களில் சிக்கானியரும் கிழக்குப்பகுதியில் சிக் கூலியரும் வடமேற்குப்பகுதியில் எலிமியரும் வசித்தார்கள். இவர்கள் எங்கிருந்து சிசிலியிற் குடியேறினர்கள் எனத் தெரிய வில்லை. எலிமியர் தாம் உரோமகுலத்தினரென நம்பினர். சிலர் சிசிலித்தீவின் பழங்குடிகளைச் சாடினித் தீவிலிருந்து, வந்தனரென்றும் சிலர் இத்தாலியா தேசத்திலிருந்து வந்தனரென்றும் துணிகின்றனர். கிறிஸ்து பிறப்பதற் குப் பல நூற்ருரண்டுகளுக்குமுன் வந்தேறிய கிரேக்க ருக்கே சிசிலித்தீவின் பழங்குடிகள் யாவரெனத் தெரி யாது. சிக்கானியரை ஐபீரியக் குடாநாட்டாரென ஆசிரி யர் தூசிடிஸ்கூறுகின்றனர். ஆப்பிரிக்காக்கண்டத்து மேற் குப்பாகமாகிய லிபியா நாட்டுக் காதாக்பட்டினத்துப் பினி சியர் சிசிலியரோடு வியாபாரஞ்செய்து மொத்தி, பனுரு மஸ், சோலி என்னும் துறைகளில் உறைந்தனர். மேற் குப்பாகங்களிற் பினிசியரும் கிழக்குப் பாகங்களிற் கிரேக் கரும் குடியேறினர்கள்.
4-ம் பாடம்-உரோமாபுரியின்
உண்ணுட்டு வரலாறு
உரோமாபுரியும் அதன் குடிகளும்
தாய்நாட்டுக் குடிகளையும் ஆட்சி நாட்டுக் குடிகளையும் ஒரு குடைக் கீழ் ஆளும் முறைகளில் உரோமரது அரசி யன் முறையே சிறந்ததெனின் அது ஒருவாறு பொருக் தும். சிலர் ஆட்சி நாடுகளிடம் திறைவாங்குதலொழிய அந்நாடுகட்குத் தம் அரசியற் கடமைகளைச் செய்கின்

Page 124
214 உலக வரலாறு
றிலர்; சிலர் ஆட்சி நாடுகளை அடிமை நாடுகளாக எண்ணி ஒரு சுதந்திரமும் அளியாமல் கொடுங்கோல் செலுத்து கின்றனர். உரோமர் வெற்றியாற் பெற்ற நாடுகளில் எங் நனம் செங்கோல் செலுத்தினர் என்பதை நோக்கு வோம். உரோமர், பழங்குடிகளென்றும் குடியேற்றக் குடிகளென்றும் உரோம நாட்டுக் குடிகளாதற்கு உரிமை பெற்ருேரர் என்றும் குடியுரிமை பெருகோரென்றும் பல பிரிவுடைய ஒரு பெருங்குழுவினராக லின் அப்பகுப்புக் களின் சிறப்புரிமைகளைப்பற்றி ஆராய்தல் அவசியம். பிற சாதியாரை வென்று துணைவராக்கலும் தம் குடிகளாக்க லும் அடிமைகளாக்கலும் என்னும் பல்வேறு முறைகளை உரோமர் கைக்கொண்டனர். உரோமராட்சிக்குட்பட்ட பிறசாதியார் சுயாதீனத்தை யிழந்து உரோமநாட்டுக் குடி களின் சிற்சில உரிமைகளை மாத்திரம் பெற்றனர்.
உரோம நாட்டுக் குடிகள் தெரிவுரிமையுடையோரென் றும் தெரிவுரிமையில்லாதோரென்றும் இருபிரிவினராயி னர். தெரிவுரிமையுடைய குடிகள், நிலம் வாங்கல் விற்றல் ஆட்சிசெய்தல் என்னும் பண்டமாற்றுரிமையும் Tus Com. mercii” d (8 TITLD 15 TL (Bis குடிகளுக்குரிய மணவுரிமையை யும் (lus Conubi) அமைச்சராகுமுரிமையும் கொலைத் தண்டனைக்கு எதிராக முறைகேட்கும் உரிமையும் சமய உரிமையும் எனப் பல உரிமைகளுடையோராய் வாழ்ந்த னர். தெரிவுரிமையில்லாதோர், பண்டமாற்றுரிமையும் மணவுரிமையும்மாத்திரம் உடையவராயிருந்தனர். துணை நாட்டாருக்கு இப்பண்டமாற்றுரிமையும் மணவுரிமையும் அளித்தல் வழக்கம். மணவுரிமையென்பது மேன்மக்கட் குலத்தில் மணஞ்செய்து மேன்மக்கட் சபைக்கு அங்கத் தினராகும் உரிமை, கீழ்மக்களுக்கு அவ்வுரிமை அளிக் கப்படவில்லை. தெரிவுரிமை என்பது தலைவர்களைத் தெரிந் தெடுக்கும் உரிமை. உரோமர் பொது மக்கட்சபை மூல மாகவும் படைவீரருடைய சபைமூலமாகவும் தெரிவுசெய்த னர். பொதுமக்கட் சபையை வகுப்பினர்சபை எனினும்

உரோமாபுரியின் உண்ணுட்டு வரலாறு 215
பொருந்தும். உரோமர் வகுப்பு வகுப்பாகச் சென்று தெரிவுகளை நடாத்தினர். இவ்வகுப்பினர்சபை போர் தொடங்கல் சமாதான உடன்படிக்கையை அங்கீகரித்தல் பிரமாணங்களையாக்குதல் என்னும் உரிமைகளையுடையது. படைவீரரின் சபை படையிற் சேவைசெய்யும் வீரரை அங்கத்தினராகவுடையது. படைவீரர் நூறு நூறு கூட்ட மாகித் தலைவர்களைத் தெரிந்தெடுத்தல் உண்டு. இவ் விரு சபைகளின் உரிமைகளையும் மேன்மக்கட்சபை பெரும்பா லும் கவர்ந்தது.
தெரிவுரிமையுடைய உரோமநாட்டுக் குடிகள்
அடிமைகளுக்கு அடிமை நீங்கியவழியும் தெரிவுரிமை யுடைய உரோமநாட்டுக் குடிகளாகும் உரிமையில்லை. உரோமாபுரியில் வசிக்கும் உரோமரும், குடியேற்றநாட் டில் வசிக்கும் உரோமரும் துணைநாடுகளில் வசிக்கும் மக் களும் உரோமக்குடிகள் எனப்படுவர். இலத்தீன் நாடுக ளெல்லாம் இத்தகைய நாடுகளாயின. உரோமர் தாம் போரில் வென்ற நாடுகளில் உரோம5ாட்டு மக்களுள் நல் கூர்ந்தோரைக் குடியேற்றுதல் வழக்கம். அக்குடியேற்ற நாடுகள் உரோம ராச்சியத்தின் கா வ ற் கோட்டைக ளாயின. அக் குடியேற்ற நாட்டார் தேர்தற்காலங்களில் உரோமாபுரிக்குப் போய்த் தெரிவுசெய்யும் உரிமையுடைய வர்கள். அக்குடியேற்ற நாடுகள் உரோமாபுரத் தலைவர்க ளாலேயே ஆளப்பட்டன.
தெரிவுரிமையில்லாதோரும் சில நாடுகளிற் குடியேற் றப்பட்டனர். இத்தகைய குடியேற்ற நாடுகளில் நகர சபையே கூடக்கூடாது. கிராமச்சங்கங்களும் இந்நாடு களுக்கு மறுக்கப்பட்டன. இந்நாடுகளில் உரோமர் ఓ வர் தாம் விரும்பிய பிரமாணங்களை ஏற்படுத்திக் கொடுங் கோல் செலுத்தினர்.

Page 125
216 உல்க வ்ரலாறு
உரோமருடைய குடியேற்றநாடுகள்
இங்ங்ணம் உரோமர் தம்குடிகளாலும் இலத்தீன்
கணேக் குடிகளாலும் பலகுடியேற்ற நாடுகளே இத்தாலி தேசமெங்கும் நாட்டினர். கி. மு. 305-ல் இலத்தீனியர் உரோமரோடு பகைத்தமையால் உரோமநாட்டுக் குடிக ளாகும் உரிமை இலத்தீனியருக்கு முழுதும் மறுக்கப்பட் டது. உரோமர்தலைவர்கள், உரோமாபுரிக் குடிகளை இத் தாலியாதேசத்து நெய்தல் நிலங்களாகிய கடற்கரையை யடுத்த நாடுகளிலும், இலத்தீன்குடிகளே மலைப்பக்கங்களி ஆலும் குடியேற்றினர்கள். குடியேறும் மக்களுக்கு வயல் கிலங்களும் புல்வளரும் நிலங்களும் அளிக்கப்பட்டன. தோல்வியடைந்தோருடைய கழனிகளையும் புற்றரைகளை யும் இங்கினம் தமது தெரிவுரிமையுடைய குடிகளுக்கு உரோமர் அளித்தனர். தோல்வியடைந்த நாட்டோரைத் தெரிவுரிமையில்லாத குடிகளாக உரோமர் ஆண்டனர். இங்ங்ணம் பல நாடுகளை வருடந்தோறும் வென்று தம் குடி களைக் குடியேற்றி உரோமர் தமது ஆணேயைச் செலுத் தித் தமது நாகரிகத்தையும் பரப்பினர்கள்.
உரோமநாட்டுக் கீழ்மக்களது வர்ழ்க்கைப்போராட்டம்
சரித்திரகாலத்திற்கு முன்னரே உரோமர் மேன்மக் கள் கீழ்மக்கள் என இருபிரிவினராகிக் கலகப்பட்டனர். கீழ்மக்களின் வாழ்க்கைகிலையை ஈண்டு ஆராய்வோம். கீழ்மக்களுக்குக் கு திரை வீர ரா க ச் சேவைசெய்யும் உரிமை யில்லை; மேன்மக்கட்சபைக்கு அங்கத்தினரைத் தெரிந்தெடுக்கு முரிமையும் இல்லை. மேன்மக்களே அர சியலை நடாத்தியும் கிலம் முதலியவற்றைக் கீழ்மக்களைக் கொண்டு உழுவித்துப் பண்படுத்தியும் வந்தார்கள். கீழ் மக்கள் சிறு கமங்களை உடையோராயிருந்தும், மழையின் மையாலும் பல போர்களிற் சேவைசெய்யவேண்டியவர் தளாயிருந்தமையாலும் மேன்மக்களின் கொடுமையாலும்

உரோமாபுரியின் உண்ணுட்டு வரலாறு 217
கடன்காரர்களாகிச் சிறைச்சாலைகளில் இடப்பட்டனர். குறிக்கப்பட்ட காலத்துக்குள் கடன்காரர் கடனை இறுக்கா விட்டால் அடிமைவேலை செய்யவேண்டுமென்பது பிர மாணம். அந்தப் பிரமாணத்தால் கீழ்மக்களின் வாழ்க் கைத் துயரங்களை நாம் ஒருவாறு உணரலாம். கீழ்மக்கள் மேன்மக்களோடு பந்திபோசனஞ்செய்ய இயலாது. மேன் மக்கள் கீழ்க்குலப் பெண்களை மணந்தால் அவருடைய பிள்ளைகள் தெரிவுரிமை யில்லாத கீழ்மக்களாகவே எண் ணப்படுவர். கீழ்மக்களைத் தலைவர்களாக ஒருபொழுதும் தெரிவுசெய்யாமையால் பிரமாணங்களைத் தமது நன் மைக்கே மேன்மக்கள் ஏற்படுத்துகின்றன ரென்பதைக் கீழ்மக்கள் அறிந்து கி. மு. 495-ல் மேன்மக்களோடு ஒத் துழையாமல் உரோமாபுரியினின்றும் நீங்கி ஒத்துழையா மலையில் தங்கினர்கள். அக்காலத்தில் வல்சியரோடு உரோ மர் பகைத்தமையால் மேன் மக்கள் கீழ்மக்களையழைத்து, அவர்களுக்கு இரண்டுகீழ்மக்கட் காவலரைத் தெரிக் தெடுக்கு முரிமையை யளித்தனர். கீழ்மக்கட் காவலன் கீழ்மக்களைத் தலைவர்கள் உத்தியோகத்தர் முதலியோ ருடைய அநீதிகளினின்றும் காக்கும் வல்லமையுடையவன். அக்கீழ்மக்கட் காவலரை வருடமொருமுறை வகுப்பினர் சபையிற் கூடும் பொதுசனங்கள் தெரிவுசெய்தார்கள். இணைத்தலைவர் (consul) ஒரு கீழ்மகனைத் தண்டித்தால் அக்கீழ்மக்கட்காவலர் அத்தண்டனையை நிறுத்தலாம். இணைத்தலைவர் யாதாயினும் பிழைசெய்தால் அவர்களைத் தண்டிக்கும் உரிமை கீழ்மக்கட் காவலர்க்குமாத்திரம் உண்டு. இணைத்தலைவரின் அரசியன்முயற்சிகள் எதை யும் கீழ்மக்கட்காவலர் தடுக்கலாம். ஒரு கீழ் மக்கட்காவ லன் இணைத் தலைவருள் ஒருவன் தீர்ப்பைத் தடுக்க, மற் றக்காவலன் தடுத்த காவலனைத் தடுத்தானுயின், இணைத் தலைவருள் ஒருவன் தான் எடுத்துக்கொண்ட முயற்சியைச் செய்யலாம். இவ்வுபாயத்தால் மேன்மக்கள் கீழ்மக்கட் காவலரை ஒருவரோடொருவர் மாறுபடச் செய்து தம்
28

Page 126
218 உல்க வ்ரலாறு
எண்ணங்களை நிறைவேற்றிவந்தனர். கீழ்மக்கட் காவல ருக்குப் ரேரணைகளைப் பிரேரித்துப் பிரமாணங்களே யுண்டாக்கும் உரிமையில்லை. பிற்காலங்களிற் கீழ்மக்கட் காவலர் கீழ்மக்கட்சபையில் பிரமாணங்களைப் பிரேரித் தார்கள். கீழ்மக்கட் காவலர் சொற்பொழிவு செய்யும் போது ஒருவரும் குழப்பஞ் செய்யக்கூடாது. கி. மு. 471-முதல் கி. மு. 449 வரை மேன்மக்களும் கீழ்மக்களும் (curiala) வகுப்பினர் சபையில் ஒருங்கு கூடுதல் வழக்க மென அறியக்கிடக்கிறது. இங்ஙனம் ஒருங்கு கூடியிருத்த லால் கீழ்மக்களும் உரோமர் வகுப்பினராகப் பிரிக்கப் பட்டிருத்தல்வேண்டும் என்பது வெளியாகும். அவ்வகுப் பினர் சபைக்கு வகுப்புக்கள் ஒவ்வொன்றும் தத்தம் பிரதிநிதிகளைக் தெரிந்தெடுக்கலாம்; தலைவர்களைத் தண் டிக்கும் ஆற்றலொழியப் பிரமாணங்களைப் பிரேரிக்கும் உரிமை வகுப்பினர் சபைக்கு அளிக்கப்படவில்லை. பிற் காலங்களிற் பிரமாணங்களே ஆக்கும் உரிமையும் வகுப் பினர் சபை பெற்றது. கீழ்மக்கள் தெரிவுரிமை பெற்றும் பொருளின்மையால் அதை உபயோகிக்க இயலாதிருந் தனர். குறிக்கப்பட்ட பொருளுடையோருக்கே தெரி வுரிமை யளிக்கப்பட்டதாகலின் உரோமநாட்டு மக்களெல் லாருக்கும் தெரிவுரிமை அளிக்கப்படவில்லை என்பது வெளிப்படை.
கீழ்மக்களுக்குப் பிரமாணங்கள் யாவை என்றும் குற்றங்கள் எத்தன்மையவென்றும் தெரியாமையால், சம யப்பிரமாணங்களையும் அரசியற்பிரமாணங்களையும், பிற பிரமாணங்களேயும் முறைப்படுத்தி நூல்களாக வகுத்தற்கு கி. மு. 451-ஆம் ஆண்டு கணக்கர் பதின்மர்கூட்டம் ஒன்று, அப்பியஸ்குளோடியனுடைய ஆதரவின் கீழ் அமைக்கப்பட் டுப் பிரமாணங்களைப் பன்னிரண்டு புத்தகங்களாக எழு திற்று. பிரமாணங்களை நூலாகத் தொகுத்தது மக்கள் யாவருக்கும் ஒரு பெரிய நன்மையாயிற்று.

உரோமாபுரியின் உண்ணுட்டு வரலாறு 219
கீழ்மக்கள் தங்கள்குறைகளைத் தெளிந்து அவற்றைப் போக்கிக்கொள்ளுவதற்காகக் கூட்டங்கூடுதல் வழக்கம். கீழ்மக்கள் இங்ஙனம் கூடுதற்குப் பிரமாணமில்லையாயி ணும் காலக்கிரமத்தில் இக் கூட்டம் பிரமாணங்களை ஆக் கும் உரிமைகள் சிலவற்றைப் பெற்றது. வலேறியஸ் ஒரு சியஸ் என்போனின் பிரமாணத்தால் கீழ்மக்கட்சபை யின் தீர்மானங்கள் மேன்மக்கள் கீழ் மக்கள் என்னும் உரோமநாட்டுக் குடிகள் யாவருக்கும் பிரமாணமாகும் என அறிவிக்கப்பட்டது. கி. மு. 445-ல் கீழ் மக்களும் இணைத் தலைவராகத் தெரிந்தெடுக்கப்படும் உரிமை பெற்றனர். கி. மு. 339-ல் பப்பிளியுஸ் பைலோ என்னும் கீழ்மகன் இண்த்தலைவருள் ஒருவனகத் தெரிந்தெடுக்கப்பட்டான். தேசநேசன் மான் லியஸ் கீழ்மக்கள் கடன்களைத் தன் பொருளைக்கொடுத்துத் தீர்க்தான். அவன் கீழ்மக்கட் குலத்துக் கமக்காரரின் நன்மைக்காகவும் முயன்று புகழ் பெற்ருரனுக, மேன்மக்கள் அவ்னை மலையினின்று வீழ்த் திக் கொன்றனர். கஸியஸ் பொது நிலங்களிற் கீழ்மக்கள் கடமைகொடாமலே தம்முடைய பட்டிமாடுகளை மேய்க்க உத்தரவளித்தற்குத் தீர்மானமொன்றைப் பிரேரித்தா னகையால் அவனும் கொல்லப்பட்டான்.
கி. மு. 367-ஆம் ஆண்டில் இலிசினியஸ் ஸ்தாலோ இணைத் தலைவருள் ஒருவன் கீழ்மகனுதல்வேண்டுமென் னும் பிரமாணத்தை ஏற்படுத்தினன். பிரமாணக்கணக் கர் பதின்மரில் ஐவர் கீழ்மக்களாதல் வேண்டு மென்பதை யும் தீர்மானித்தான். உழுவித்துண்ணும் வேளாளர், தம் வயல்களில் ஊழியஞ்செய்வோருள் ஒத்த தொகையின ராகக் கீழ்மக்களை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பது பிரமாணமாயிற்று. மேன்மக்கள் அடிமைகளை மலிவாக வாங்கித் தம் கமங்களில் ஊழியஞ்செய்வித்தனராகையால், கீழ்மக்கள் தொழிலற்றுத் துயருற்றனர்; கீழ்மக்களுக்குத் தொழில் கொடுப்பதற்கு இப்பிரமாணம் அவசியமாயிற்று. கீழ்மக்கள் பூசாரிகளாகும் உரிமையும் கிரியைகளே நடத்

Page 127
220 உலக வரலாறு
தும் குருவாகும் உரிமையும் பெற்றனர். பின்பு கீழ்மக்க ளுக்கு உரிமைகள் மிகுந்தனவென மேன்மக்கள் ஆர வாரித்து இவ்வுரிமைகளைக் குறைக்க முயன்றனர். இங்க னம் குறைத்தற்காக இணைத்தலைவருக்கு வேலைமிகுந்த தெனக்கூறிக் கீழ்த் தலைவர்களைத் (Praetors) தெரிந்து கீழ்த்தலைவர்களே நீதிவிசாரணை செய்தற்குரியரென மேன்மக்கள் தீர்மானித்தார்கள். பிற்காலத்தில் உள் நாட்டுத்தலைவர் புறநாட்டுத்தலைவர் சிறுபடைத்தலைவர் சுகாதாரத்தலைவர் அங்காடித்தலைவர் விதித்தலைவர் நீர்த் தலைவர் அளவைத்தலைவர் எனக் கீழ்த்தலைவர் பலர் தெரிந்தெடுக்கப்பட்டனர். இக்கீழ்த் தலைவருக்குக் கீழ் கிராமத் தலைவர்கள் (aedies) விழாக்களே நடாத்தற்கும் தெருக்காவல் செய்தற்கும் ஏற்படுத்தப்பட்டார்கள்.
இனி மேன்மக்கட்சபையின் அங்கத்தினர் மேன் மக்களோ அல்லரோ எனவும், அங்கத்தினராதற்கு வைத் திருக்கவேண்டிய பொருள் கிலம் முதலியவற்றை உடைய வரோ அல்லரோ எனவும் ஆராய்தற்கு உரிமைக்கணக்க னுெருவன் வேண்டுமென கிச்சயிக்கப்பட்டது. உரிமைக் கணக்கன் மேன்மக்கட்சபை யங்கத்தினராகும் உரிமை யில்லாதோரைச் சபையினின்றும் நீக்குமாற்றலுடைய வன். புதுமேன்மக்களை அங்கத்தினராக்கும் உரிமையும் அவனுக்குண்டு. பிரமாணங்களை மீறியொழுகுபவரையும் தண்டிக்கும் ஆற்றல் உடையவனகலின் உரிமைக்கணக் கன் ஒருபெருந் தலைவனவன். உரிமைக்கணக்கன் உரோம நாட்டுக்குடிகள் எல்லாருடைய உரிமைகளையும் கணக்கிட் டுத் தேர்ந்து பிரமாணங்களின்படியே உரிமைகளைக் குடி கள் செலுத்து கிருரர்களா என்பதை விசாரணைசெய்தான். காமம், கொலை, களவு முதலிய குற்றங்கள் செய்யும் தீயோருக்கு மேன்மக்கட்சபைக்கும் வகுப்பினர்சபைக் கும் வீரர்சபைக்கும் உறுப்பினரைத் தெரிவுசெய்யும் உரிமைகளே மறுக்கும் ஆற்றலுடையவனதலின் உரிமைக்

உரோமாபுரியின் உண்ணுட்டு வரலாறு 221
கணக்கன் பெரிய அதிகாரியானன். இங்ஙனம் சமயம் ஒழுக்கம் ஆசாரம் முதலியவற்றை உரிமைக்கணக்கன் காத்துவந்தான். உரிமைக்கணக்கர் சிற்சிலகாலங்களில் மட்டும் தெரிந்தெடுக்கப்பட்டனர்.
கி. மு. 339-ஆம் ஆண்டில் கீழ்மக்கள் பல உரிமை க%ளச் செலுத்தினர் என்று தெரிகிறது. கீழ்மகன் பைலோ தனித்தலைவனுக நியமிக்கப்பட்டான். முற்காலங்களில் மேன்மக் கட்சபை அங்கீகரியாத தீர்மானம் ஒன்றும் լգմ மாணமாகாது. பைலோவின் தீர்மானத்தால் கீழ்மக்கட் சபையின் தீர்மானங்கள் பிரமாணங்களாயின. பைலோ நயந்த பிரமாணங்கள் பின்வருமாறு: 1. கீழ்மக்கட் சபையின் பிரமாணங்கள் பிரசைகள் யாவர்க்கும் ஒத்த பிரமாணங்களாகும். 2. மேன்மக்கட்சபை படைவீரர் சபைத் தீர்மானங்க%ளப் பேணுதல் வேண்டும், 8. உரிமைக் கணக்கர் இருவர் தெரியப்படின் ஒருவன் கீழ்மகனதல் வேண்டும். இப்பிரமாணங்களால் கீழ்மக்கள் மேன்மக்கட் குரிய உரிமைகள் யாவற்றையும் பெற்றனர். கி.மு. 311-ல் கீழ்மக்கள் பல உரிமைகளைப் பெற்றனர். கி. மு. 287-ல் கீழ்மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தை நடாத்தித் தாம் பெறவேண்டிய எஞ்சிய உரிமைகள் யாவற்றையும் பெற் ருரர்கள். இங்ஙனம் உரிமைகளைப் பெற்ருரலும் கீழ்மக்கள் நெடுங்காலமாக வறியோரா யிருந்தமையால் மேன்மக்க ளால் துன்புறுத்தப்பட்டே யிருந்தனர். பிற்காலங்களிற் கீழ்மக்கள் மேன்மக்கள் என்னும் பிரிவுகள் தொழிற்கட்சி பொருட்கட்சிகளாக மாறின. உலகில் வாழ்க்கைப் போராட்டம் எப்பொழுதும் உண்டென்பதையும் மக்கள் கட்சிகளாகப் பிரிந்து கலகப்படுதல் இயல்பென்பதையும் இக் கீழ்மக்களின் கலகத்தால் நாம் உணரலாம்.
உள்நாட்டு நிகழ்ச்சிகள்
கி. மு. 267-ல் பொருட்கணக்கர் (Quaestors) 5ால்வர் தெரிந்தெடுக்கப்பட்டனர். பொருட்கணக்கர் தொழிற்

Page 128
222 உலக வரலாறு
படைக்குக் கூலி கொடுத்தலும் அரசிமைகளைத் தொகுக் தலும் போரிற் சேவித்தலும் என்பர். முறைவேண்டி னர்க்கும் குறைவேண்டினர்க்கும் நீதி செலுத்தற்குத் துண்த்தலைவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவர் நகரத் தலைவராகவும் நாட்டுத்தலைவராகவும் சேவித் தனர். இத் துணைத் தலைவர்களே படைவீரர் சபை தெரிந் தெடுத்தது. படைவீரர் சபை பழைய முறைப்படி குதி ரைப் படையில் 18 வகுப்பும், முதற்பிரிவில் 80 வகுப்பும், இரண்டு மூன்று நான்கு ஐந்து பிரிவுகளில் 90 வகுப்பும், பாணர் கூத்தர் யந்திரஞ் செலுத்துவோர் பாகர் முதலி யோருடைய வகுப்பு ஐந்துமாக 193 வகுப்புக்களையுடை யது. மேற்கூறிய வகுப்புக்களுக்கு அங்கத்தினராவோர் அளவுபட்ட பொருளுடையராக இருத்தல் வேண்டும். இச் சபையினரைத் தெரிந்தெடுக்கும் முறை கி. மு. 240-ல் திருத்தப்பட்டது. 35 சாதியினரான உரோமருள் ஒவ் வொரு சாதியையும் ஐந்து ஐந்து வகுப்பாக்கி ஒவ்வொரு வகுப்பையும் இளைஞர் வயோதிகரென இருபிரிவாக்கி 350 வகுப்புக்களே அரசாங்கத்தார் நூதனமாக ஏற்படுத்தினர். 18 வகுப்புக்களாலாகிய குதிரைப்படை இப்பிரிவுகளுக் குப் புறம்பாயிற்று. பாணர் முரசினர் பாகர் முதலியோர் ஐந்து வகுப்பினராகவே பிரிக்கப்பட்டனர். இங்ஙனம் பொதுமக்கள் 373 வகுப்பினராயினர். பழைய முறை யின்படி 193 வகுப்பில் 98 வகுப்பு மேன்மக்களுக்குரியன. புதிய முறையின்படி 373 வகுப்பில் 88 மேன்மக்களுக்கா கும். இவ்வண்ணம் கீழ்மக்களின் உரிமை பெருகியது. இவ் வகுப்பு ஒவ்வொன்றும்தாம் விரும்பியதலைவர்களைத் தெரிந் தெடுக்கும். அங்ஙனம் தெரிங் தெடுக்கப்பட்டுள்ளோரில் எவன் பெருக்தொகையான வகுப்புகளால் தெரிந்தெடுக் கப்படுகிருரனே அவனே தெரிக் தெடுக்கப்பட்டவனுவான். 356 GiôuLui GLI nif
கி. மு. 322-ல் பிளாமினியஸ் என்பான் கல்லிய நாடுகள்
சிலவற்றைக் கீழ்மக்களுக்கு அளிக்கவேண்டுமெனப் பிரே

உரோமாபுரியின் உண்ணுட்டு வரலாறு 223
ரித்தான். மேன்மக்கட் சபை, பிரேரணையை எதிர்த்திது. படைவீரர் சபை பிரேரணையை அங்கீகரித்தது. கி. மு. 225-ல் போயி என்னும் கல்லியர் போர்க்கெழுந்தனர். அல்புமலைக் கல்லியரும் லிங்கோனியரும் வெனிசியரும் துணையாயினர்கள். உரோமர் மிகவும் அஞ்சிச் சமயக் கணக்கரிடம் நிமித்தங்கேட்டனர். அவர்கள் சாந்திகளை மொழிந்தனர். சாந்தியாக இரு கல்லியரையும் இரு கிரேக் கரையும் கடைவீதியில் உயிரோடு புதைத்தனர். கல்லியர் உரோமருடைய காவற் குடியேற்ற நகரங்களைக் கடந்து குளுசியத்தைக் கிட்டினர். குளுசியத்தில் உரோமர்படை யிரண்டனிடையில் அகப்பட்டுக் கல்லியர்படை காசமா யிற்று. அப்போர்க்களம் தெலாமன் எனப்படும். அப் போரில் 40,000 வீரர் மாண்டார்கள். கி. மு. 223-ல் பிளாமினியஸ் என்பான் போவதியைக் கடந்து போர்புரிய எண்ணினன். பிரயாணத்திற்குப் பார்த்த சகுனம் பொருந்தாதென மொழியப்பட்டது. பல உற்பாதங்களும் நிகழ்ந்தன. பிற்கேனத்தில் ஒரு ஆறு இரத்தமாய் ஓடிய தெனவும், எற்றுறியாவில் வான் தீப்பற்றி எரிந்ததென வும், வேருேரரிடத்தில் மூன்று திங்கள் தோன்றினவென வும் கூறப்பட்டுளது. பிளாமினியஸ் என்னும் தலைவனை நிமித்திகர் தடுக்கவும் அவன் கல்லியநாடு சென்று வெற்றி யோடு திரும்பினுன் கீழ்மக்கட் கட்சியினராகிய பிளா மினியஸ் தலைவனுயிருத்தலை மேன்மக்கள் விரும்பாமை யால் நிமித்தம் பொருக்தாத தென மொழிந்திருக்கக்கூடும். கி. மு. 222-ல் கல்லியர் விரிடோமாறஸ் என்னும் தலைவனேடு போ நதியைக் கடந்தனர். மாக்கேலஸ் என்பான் இவ்வீர னேடு தனிப்போர்செய்து வென்ருனுகையால் ஊர்வலம் பெற்ருரன். மேன்மக்கள் அவனை மிகவும் பாராட்டினர்கள்.
இலிறியர் போர் ஹத்திரியாடிக் கடலிற் கடற்கள்வரும் ஆறலைப்போ ரும் மிகுந்தமையால் உரோமர் கீழ்கரையைக் காத்தற்குத்

Page 129
224 உலக வரலாறு
தெற்கே பிரண்டுசியம் முதலாக வடக்கே அத்திரியா இருக உள்ள இடங்களிற் காவல் நகரங்களை அமைத்தனர். கி. மு. 280-ஆம் ஆண்டு இசாத்தீவார் ஆறலைக்கப்பட்டு வருந்தி உரோமரிடம் முறையிட்டனர். உரோமர் சகோத ரர்களாகிய கொறுங்கர் இருவரைக் கள்வர் நாடாகிய இலி றியா தேசத்திற்குத் தூதராக அனுப்பினர்கள். அங்கே அரசுபுரிந்திருந்த அரசி இரேயுற்ற என்பவள் குறை கொள்ளுதலும் ஆறலைத்தலுமே தம் தொழிலெனக் கூறித் தூதரில் ஒருவன் தம்மை நாவினுற் சுட்ட வடுவுக்கு ஆற்றுளாகிக் கொறுங்கன் ஒருவனைக் கொல்வித்தாள். அதனல் வெகுண்ட உரோமர் படையொடு செல்ல அரசி சமாதானம் வேண்டினள். பின்பு 219-ஆம் ஆண்டிலும் இலிறியர் போர்செய்யத் தொடங்கினர். உரோமர் தலை வன் அமீலியஸ்போலன் என்பான் அவர்களை அடக்கி இலி றிய நாட்டை ஆட்சி நாடாக்கினன்.
5-ůb Lur Lůh-Zásof6RuLIíř.
யவனர் குடியேற்றங்கள்
கி. மு. 735-ஆம் ஆண்டில் தியோக்னிஸ் என்பவன் யவனர் சிலரொடு சிசிலிக்குச் சென்று எற்றின எரிமலைச் சாரலிற் குடியேறினன். கொறிந்தியர் சிருரக்குசாப் பட்டி னத்திற் குடியேறினர்கள். கி. மு. 690-ல் கிறீற்றுத் தீவார் கேலாவில் தங்கினர்கள். இக் கிரேக்கக் குடிகள் பெருகிப் பழங்குடிகளை மேற்குப்பக்கத்திற்குத் துரத்திய தன்றி வேறு பல இடங்களிலும் குடியேறினர்கள். இவ் வண்ணம் பினிசியர்வசம் இருந்த சிசிலி கிரேக்கராட்சிக் குட்பட்டது. பினிசியர் பட்டினமான அக்கிரிக்கந்தம் சிருக்குசாப் பட்டினத்தோடு பகைகொண்டது. கி. மு. 485-ல் சிருக்குசாப் பட்டினத்தை ஆண்ட மேன் மக்களே அங்கிருந்த அடிமைகள் திரண்டு அடக்க எத்தனித்தாராக,

36ਘ 225
மேன்மக்கள் கேலா நகரத்துக் கேலா என்னுங் கொடுங் கோலனிடம் துணைவேண்டினர்கள். கி. மு. 480ல் கேலா சிருக்குசாவில் அரசு புரிந்து பினிசியரையும் வென்றன். கேலா இறந்தபின் அவன் தம்பி ஹபிருேர வேந்தனனன். ஹயிருேர கி. மு. 474-ஆம் ஆண்டு எற்றுாறியரோடு பொரு தான். ஹயிருே இறந்தபின் சிருரக்கு சாப்பட்டினத்தில் குடிகள் அரசியலை நடத்தினர். பினீசியர் இக்காலத்தில் கிரேக்கரை நெருக்கினர்கள். டையோனிசியஸ் என்னும் கொடுங்கோலன் கிரேக்க நகரங்கள் எல்லாவற்றையும் ஒரு குடைக் கீழாண்டு பினிசியரோடு போர்செய்தான். அவன் பின் அவன் மகன் இரண்டாவது டையோனிசியஸ் அர சாண்டான். கி. மு. 853-ஆம் வருடமளவில் பலகலகங்களி ல்ை அரசியல் குலைய நேரிட்டது. பின்னர்க் கொறிந்திய ருதவியால் சிருக்குசாப்பட்டினத்தார் குடியரசை நாட்டி னர். அக்காலத்தில் 600 அமைச்சர்கொண்ட சபை நாட்டை ஆண்டது. கி. மு. 325ல் அகதோக்கிள்ஸ் என் னுங் கொடுங்கோலன் சிருக்குசாப்பட்டினத்தில் ஆணே செலுத்தினன். அவன் பினிசியர்வசமாயிருந்த கொக் கீராத்தீவைப் பிரஸ் வேந்தனுக்கு நன்கொடையாகக் கொடுத்தான். பிரஸ் கி. மு. 287-ல் சம்கிதியரும் எற்றுறி யரும் துணைவேண்டவும் மறுத்துக் காதாக்கினியரான பினிசியரோடு போர்செய்ய எத்தனித்தான். பிரஸ் தன் படையோடு சிசிலியில் இறங்கினன். சிருக்குசாப்பட்டி னத்தை முற்றுகையிட்டிருந்த பினிசியர் கிரேக்கப்படை யைக் கண்டு அஞ்சியோடினர்கள். சிசிலித்தீவுக் கிரேக் கர் யாவரும் பிரஸ்வேந்தனை வரவேற்ருரர்கள். லிலிபே யம் என்னும் ஒரு பட்டினத்தைத் தவிர ஏனைய துறைக ளெல்லாம் கிரேக்கர்வசமாயின. பினிசியர் சமாதானத்தை விரும்பினர். சில நகரங்கள் அழுக்கா மற்றுப் பிரஸ்வேந்த ணுக்கு ன்திராகப் பகைத்தமையால் கி. மு. 286-ல் சம்நிதி யர் பிரஸ்வேந்தனுடைய உதவியை வேண்டப் பிரஸ் இத் தாலியாவுக்குத் திரும்பினன். கி. மு. 275-ல் சம்கிதியர்
29

Page 130
226 உலக வரலாறு
மிகவும் இளைத்தனர். பிரஸ் தன்மூலப்படை தொலைந்தமை யால் ஒருகூலிப்படையைச் சேர்த்து வெனிசியாநகரின் பக்கல் உரோமரோடு பொருதான். இப்போரில் உரோம ருடைய வில்வீரர் பிரஸ்வேந்தனுடைய யானைப்படையை வென்றமையால் பிரஸ்வேந்தன் தோல்வியடைந்தான். அதன்பின் சம்நிதியரும் கிரேக்கரும் உரோமரால் ஆளப் பட்டனர். பிரஸ் இத்தாலியா நாட்டைவிட்டு நீங்கித் தனது நாட்டுக்குச் சென்று அங்கிருந்து பல கிரேக்க நாடுகளை அடக்கி ஆண்டான். பின்பு பிரஸ் ஸ்பாட்டாநாட்டுக் கோட்டையொன்றை முற்றுகையிட்டுகிற்கையில் ஸ்பாட்டா நகரப் பெண்ணுெருத்தி தன்மகன் வாளால் வெட்டுண்ட தைக் கண்டு வேந்தனைச் செங்கல்லால் எறிந்து கொன்ருரள்.
If II
பினிசியர் பர்சியவிரிகுடாவிலிருந்து புறப்பட்டுச் சிரியா நாட்டுக்கரையில் கி. மு. 2000 ஆண்டுவரை குடி யேறினர்கள் என்ப. சிரியாநாடு பினிசியநாடாயினது. அந்நாடு 180 மைல் நீளமும் 40 மைல் அகலமுமுடைய தாய்க் கிழக்கில் லபனன்மலையையும் மேற்கில் மத்திய தரைக்கடலையும் எல்லையாகவுடையதாயிருந்தது. அந் நாடு மலையும் கடலும் வனமும் இயற்கையாண்களாயமையப் பெற்ற தாகையால் பகைவரால் நலிவெய்தாததாயிற்று. பினிசியர் பெரிய ராச்சியாதிகாரத்தை நடத்த ஆசைப்பட வில்லை; வாணிகஞ்செய்து திரவியந்தேடலே பினீசியரின் நோக்கம். பினிசிய மரக்கலங்கள் மத்தியதரைக்கடலெங் கும் ஓடின. இங்ங்ணம் பொருள் தேட விழைந்த பினிசியர் தேசாந்தரங்களுக்கு வியாபாரநோக்கமாகச் சென்றனர். மத்தியதரைக்கடல்வழியாகச்செய்யும் வாணிகம் முழுவதும் பினிசியர்கையில் இருந்தது. கருங்கடல் தொடக்கம் ஜபீ ரியா வரையும் உள்ள நகரங்கள் தீவுகள் எங்கும் பினிசியர் சென்று தங்கள் ஆவணங்களை அமைத்துப் பண்டமாற்றுச் செய்தனர்; சைப்பிரஸ்தீவின் செம்பையும் கிறீஸ்தேசத்

பினீசியர் 227
துச் சாயத்தையும் சாகஸ்தீவின் பொன்னையும் லொறியாத் தீவின் வெள்ளியையும் கவர்ந்து யவனதே சமுழுவதும் ஆங்காங்கு ஆவணங்களமைத்தனர். சில கிரேக்கநாட்டுத் துறைகளின் பெயர்கள் பினிசிய மொழிகளாலமைந்திருப் பது அறியற்பாலது. உற்றிக்காவில் ஒரு துறை கி. மு. 1140-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பினீசியர் சாலமன் காலத்தில் ஜிப்ரால்டர்நீரிணையால் சென்று அட்லாண்டிக் கடலை அடைந்து ஜபீரியாக்குடாநாட்டின் துறையாகிய காடிஸ்பட்டினத்தில் பொன்னேற்றி எருசலம் கோயிலுக் குக் கொணர்ந்தனர் என அறிகிருேம்.
பின்னர் யவனரும் பண்டமாற்றினம் பொருள் தேடலாமென உணர்ந்து பினிசியருக்குப் பகைவராயினர். இரையர் சிடன்முதலிய பட்டினங்களில் வசித்த பினிசி யர், அசிரியரின் நெருக்கத்தால் அவற்றை நீங்கி ஆபிரிக் காவில் கி. மு. 853-ஆம் ஆண்டு காதாக்கோ என்னும் புதிய பட்டினமொன்றை அமைத்தனர். கா தாக்கோ என் பது கர்தாஸ் கிர்தாஸ் என விரிந்து, பினிசியமொழியில் புதிய பட்டினம் எனப் பொருள்படும்.
இக் காதாக்கோப்பட்டினத்தின் ஆதிவரலாற்றை வேசிலியஸ் ஏனிட்காப்பியத்தில் இயம்பினர்.
காதாக்கோப்பட்டினம்
இரையர்ப்பட்டினத்து வேந்தன் சிக்கியன அவன் மைத்துனன் பிக்மாலியன் கொன்ருரனுக, அவன் மனைவி எலிசா என்னும் டைடோ சில செல்வரோடு புறப்பட்டுத் துயினிஸ்குடாவில் காதாக்கோ நகரத்தைக் கண்டனள். இரையர் தலைநகரமாகலான் அங்குள்ள கோயில்களுக்குக் காதாக்கினியர் பொருள் அளித்தனர் என்றும் இரைய ரைப் பெரிய அலைச்சாந்தர் கைப்பற்றியபோது பினீசி யரை வரவேற்று அவருக்குத் தம் நகரத்தில் இல்லம் அளித்தனர் என்றும் அறிகின்றுேம். துயினிஸ் மிகச்

Page 131
228 உலக வர்லர்று செழித்த நாடாயினும், காதாக்கினியர் ஆபிரிக்கரையே கமத்தொழில் செய்யவிட்டுப் பண்டமாற்று ஒன்றினலேயே பொருளிட்டினர். காதாக்கினியர் அட்லாந்திக் கடற்றீவு களுக்கும் ஆபிரிக்காவின் மேற்குக்கரைத் தீவுகளுக்கும் சென்று பொன் யானைத்தந்தம் குரங்கு முதலியன கொணர்ந்தனரென்றும் பிரித்தானிய தேசத்திற்குச் சென்று ஈயம் வாங்கினரென்றும் அறிகிருேரம். இவ்வாறு காதாக்கினியர் பெருகி இராச்சியம் நடத்தவுங் தொடங்கி னர்கள். ஆபிரிக்காவின் மேற்குப் பகுதியும் சாடினியா கோசிக்கா சிசிலி முதலிய தீவுகளும் காதாக்கினியர் ஆட்சிக்குட்டட்டன. சிசிலித்தீவில் காதாக்கினியர் கிரேக்கரோடு பொருதனர். உரோமர் காதாக்கினியரைப் பினீசியர் (போயினி) எனவே வழங்கினர்.
அரசியல்முறை
காதாக்கினியர் அரசியன் முறையை யவன தேசத் துப் பெருங் தத்துவஞானி அரிஸ்தாதில் ஆராய்ந்து வரைந் தனர். வயோதிகர் கூட்டம் ஒன்றே அரசிய8ல மடத் திற்று. அக்கூட்டத்திற்கு 28 பிரதிநிதிகள் தெரிந்தெடுக் 651l1l1l601lifə
அக்கூட்டத்தினரே போர்தொடங்குதற்கும் கிறுத்து தற்கும் உத்தரவளிக்கவேண்டும். அரசியலை இருதலைவர் மூலமாக அக் கூட்டம் நடத்திற்று. பொதுமக்களுக்கு அர சியலுரிமைகள் ஒன்றுமில்லை. பிற்காலத்தில் நூற்றுவர் சபை பிரமாணங்களையாக்கும் வல்லமை யுடையதாயிற்று, அச்சபை நூற்றுநான்கு பிரதிநிதிகளை உடையது. பிரதி நிதிகளே ஐவர்குழுக்கள் (பஞ்சாயங்கள்) தெரிந் தெடுத் தன. ஐவர்சபைகள் நம் கிராமச்சங்கங்களை ஒத்தன.
பினீசியரது தெய்வ வழிபாடு
பினிசியர் ஞாயிற்றிற்கு மக்கட்பலி யளித்தனர். யவ னர் முற்காலத்தில் இப்பலி கொடுத்துவந்து பின்னர் அது

LSadfຫົມຕໍ່ 229
கூடாவொழுக்க மெனக் கைவிட்டனரா கையால் பினீசியர் இப்பலி கொடுத்ததைக்கண்டு அவரை வன்னெஞ்சரென இகழ்ந்தனர். பினிசியர் மலித்தா என்னுந் திங்களையும் வழிபட்டனர். மலித்தா, அஸ்டாட்டி, உரோமரது வீனஸ். யவனரது அபிருேடிற்றி என்பன ஒரு தன்மைத் தெய் வங்களே. இரையர்நகரிலும் மெல்காத்தென்னும் தெய் வம் வணங்கப்பட்டமையால் கொறிந்தி நகரத்தார் வணங் கிய மெல்காத் தெய்வமும் பினிசியர் தெய்வமேயாகும்.
sulfor USDLIDI f பினிசியர் செல்வத்தைக் கண்ட உரோமர் அழுக்கா றுற்று அவரொடு போர்செய்யத் தொடங்கினர். பினிசியர் படையிற் சேவைபுரிதலை வெறுத்தனர். கூலிப் படையே அவர் படை. படைத் தலைவர்கள் பினிசியராகவே இருந் தனர். படைத் தலைவருக்குப் போரைத் தாம் எண்ணிய வாறு நடத்தும் உரிமை அளிக்கப்பட்டதாயினும், தோல்வி யடைந்தால் அவர் தண்டிக்கப்பட்டனர். சில வேளைகளில் அவர்க்கு மரணதண்டனையும் விதிக்கப்பட்டது. பினிசி யர் செல்வ மிகுதியால் பலதேசத்து வீரர்களுக்கும் கூலி கொடுத்துப் பெருங்கூலிப் படைகளை வைத்திருந்தனர். கல்லியர் கம்பேனியர் யவனர் நுமிடியர் ஆபிரிக்கர் முதலி யோர் பினிசியப் படையிற் சேவித்தனர். காற்றிலும் விரைந்துசெல்லும் நுமிடியர் குதிரைப்படையும் அரக்க ரனைய கல்லியர் வேற்படையும் லிகுரியர் கவுண்படையும் ஒப்பற்ற கூலிப்படைகளாயின. அவற்றுடன் யானைப் படையும் பழக்கப்பட்டது. தரைப்படை எவ்வளவு பெரி தாயினும் பினிசியர் தம் கடற்படையையே நம்பி யிருந்த னர். கப்பல்களே அவருடைய காவ லாண்கள். பினி சியர் கப்பற்படை எண்ணிறந்தது. ッ
முதற் பினிசிய யுத்தம் கி. மு. 265-244.
முன்னர்க் கூறியவாறு சிசிலித்தீவின் மேற்குப் பாகத்திற் பினிசியரும் கிழக்குப் பாகத்தில் கிரேக்கரும்

Page 132
230 உலக் வ்ரல்ாறு
ஆட்சிசெய்தனர். கி. மு. 269-ஆம் ஆண்டு ஹயிருே என் னும் இளைஞன் செங்கோல் செலுத்தினன். ஹயிருேர கேலாவின்வழி வந்தவனுகையால் சனங்கள் அவனை நேசித்தனர். ஹயிருேர மயிலாயிருகரை முற்றுகையிட்டு மமேட்டையினரை வென்ருரன். பினிசியரிடம் துணைபெற் றும் ஆற்ருமல் மமேட்டையினர் உரோமரிடம் துணையிரங் தார்கள். துணைசெய்தல் முறையோவென மேன்மக்கட் சபையில் பெரியதோர் வாதம் நிகழ்ந்தது. ஒருசாரார் ஹயிருே, ரேசியத்தை அடக்குதற்கு உரோமருக்கு உதவி செய்தானகையால் தாம் நன்றிமறந்து அவனுக்கு எதிராக எவ்வாறு போர்செய்யலாமென வினவினர்கள். ஒரு சாரார் பினிசியரை மமேட்டையினர் வெறுத்தமையால் பினிசியர் ஹயிருேவுக்கு உதவிசெய்வாரென்றும் அவரு டைய கப்பற்படையை வெல்லவியலாதென்றும் போர்செய் தல் தக்க தன்றென்றும் இடித்துரைத்தனர். வேறுசிலர், இதுகாறும் உரோமர் கடல்கடந்து போர் செய்யவில்லை; இப்போது இப்புது வழக்கத்தை ஏன் கைக்கொள்ள வேண்டும்? என வாதித்தனர். அன்றியும், மமேட்டையினர் நம்முடைய துணைவருமல்லர்; ஆகையால் அவருக்குத் துணைபுரிதல் அவசியமன்று எனவும் உரைத்தனர். இஃ தொருபுறமாக, வேருெருசாரார் மமேட்டையினருக்குத் துணேகின்று பினிசியரோடு பொராவிடின் உரோம ருடைய வியர்பாரம் கெடுமென முழங்கினர். இவ்வண் ணம் மேன்மக்கட்சபை ஒரு தீர்மானமும் செய்யா தொழிந்தது. அப்பியஸ் குளோடியஸ் புல்லியஸ்பிளாக்கஸ் என்னும் இணைத்தலைவர்கள் வகுப்புச் சபையினரிடம் போர்செய்தற்கு அனுமதி பெற்ருரர்கள்.
கி. மு. 265-ஆம் ஆண்டு குளோடியஸ் சிசிலித்தீவில் இறங்க முயன்றன். மெசினநகரத்தோர் பினீசியர்படைத் தலைவன் ஹன்னேவை நகருள் வரவேற்றனர். குளோடி யஸ் மெசின நகருட் புகுந்து ஒரு கூட்டம் நடத்தி ஹன் னேவை ஏமாற்றி வரவழைத்துப் படையோடு நகரைவிட்டு

LါcါFél[ul† 231
நீங்கும்படி வெருட்டினன். ஹன்னே தன் உயிர்க்கு மோசம் நேரிடுமென எண்ணி அதற்கு உடன்பட்டான். காதாக்கினியர் இக் குற்றத்திற்காக ஹன்னேவைக் கொன்றனர் என இலிவியஸ் என்பார் எழுதியிருக்கின் றனர். இது கிற்க. வேருெரரு ஹன்னேவும் ஹயிருேரவும் சேர்ந்து மசினுவைச் சூழ்ந்தார்கள். அப்போது அப்பியஸ் குளோடியஸ் பினீசியரைத் துரத்தினன். கி. மு. 263-ல் ஒட்டாக்கிலியஸ் கிராசுசும், வலேறியஸ் என்போனும் 40,000 படையோடு சிருரக்குசாப் பட்டினத்திற்குச் சென் றனர். ஹயிருே நடுநடுங்கி உரோமரோடு உடன்படிக்கை செய்துகொண்டான். அன்றுதொட்டு ஹயிருே உரோம ரோடு நட்பாகிச் சாகுந்துணையும் உரோமர் துணைவ னனன். கி. மு. 262-ல் பினீசியர் ஹன்னேவின் தலைமை யில் ஒரு படையைச் சாடினித் தீவுக்கும் ஹனிபாலின் தலைமையில் ஒரு படையைச் சிசிலித்தீவுக்கும் அனுப்பி னர்கள். உரோமர் அக்கிரிக்கந்தத்தைத் தாக்க எண் ணினர். ஹன்னே நகரைக் காத்தற்கு 50,000 படையோடு வந்து தோல்வியுற்று முதுகிட்டான். உரோமர் நகரை யழித்து 25,000 சனங்களை அடிமைகளாக விற்றனர். ஹனிபால் உதவிசெய்யாமல் விட்டான். சிசிலிமுழுவதும் உரோமர் வசமாயிற்று. பினீசியக் கடல்வீரர் இடை யிடையே சிசிலித்துறைகளில் தோன்றிக் கொள்ளை கொண்டனர்.
D_GIIIDÍ dLÍ1ISDL
துறைமுகங்களைக் காத்தற்காக உரோமரும் நாவாய் க3ளக் கட்டினர்கள். உரோமர் முதலில் நாவாய்களைக் கட்டத் தெரியாதவர்களா யிருந்தனரென்றும், பின் கரை மீதுமோதி உடைந்த பினீசியக்கப்பல் ஒன்றைப் பார்த்தே தாமும் கப்பல் கட்டப் பழகினர்களென்றும், பழகிய வுடன் 120 நாவாய்களைக் கட்டிக் கடல்வீரரைப் பழக்கி னர்களென்றும் இ லிவியின்வரலாறு கூருரகிற்கும். இவ் வரலாறு நம்பத்தக்கதன்று. எங்ஙனமாயினும், உரோம

Page 133
232 உலக வரலாறு
ரும் கிரேக்கரும் எற்றுாறியரிடமே கப்பல்கட்டப்பழகின ரென்பது வெளிப்படை. உரோமர் பினீசியரோடு கடற் போருக்குத் துணிந்தது வியக்கத்தக்கது. பண்டைக்காலத் தில் விரைந்து பாய்களை விரித்தும் வலித்தும் மாற்றியும் கப்பலைத் திருப்பமுடியாமையால் கப்பலோடு கப்பலே மோதியே போர்புரிந்து வந்தனர். கப்பலோடு கப்பலை மோதியும் முன்னணியால் இடித்தும் கப்பல்களைக் கவிழ்த் தலே போர்முறையாயினும், உரோமர் புதிய முறை யொன்றை ஆண்டனரென்று தெரிகிறது. அது, கம் கப்பலிலிருந்து பகைவர்கப்பல்களுக்கு ஏணிகள் முதலிய வற்றின் வழியாகச்சென்று கப்பலின் மேல் கட்டி லிருந்து வாட்போர் புரிதல்ே. கி. மு. 261-ல் கோணிலியஸ் ஸ்கிப்பி யோவின் கப்பற்படைதோற்றது. கி. மு. 260-ல் தூயிலி யஸ் என்னும் உரோமர் கடல்வீரன் மயிலாயிக்கடலில் ஹனிபாலை எதிர்த்துப் புதியமுறையால் போர்செய்து வென்முன். பினீசியரது 136 கப்பலில் 50 கப்பல்கள் உடைந்தன. மேன்மக்கள் தூயிலியஸ் என்னும் தலைவ னுக்கு வெற்றிவிழா நடத்துமாறு உத்தரவளித்தார்கள். வெற்றிவிழாவில் தலைவர் தம் வெற்றியை மக்கள் கினைவு கூர்தற்கு ஊர்வலம் வருதல் வழக்கம். இவ்வாறு வெற்றி யடைந்த உரோமர் எதிரிகளின் உடைந்த கப்பல் களின் முன்னணிகளை ஒரு தூணில் அமைத்தார்கள்.
ஹமில்கார் என்னும் பினிஸியர்தலைவன் திறப்பானத் துறையை மதிலாலும் பொறியாலும் காவற்படுத்தினன். அத்துறையை ஹனிபாலும் 350 கப்பல்களோடு காவல் புரிந்தான். உரோமர்தலைவன் அற்றிலியஸ் இாகூலஸ் 150,000 கடல்வீரரை 330 கப்பல்களில் ஏற்றிச்சென்று ஹனிபாலோடு பொருதுவென்றன். இரகூலஸ் ஆபிரிக் காவில் இறங்கி 25,000 வீரரை உரோமர்தலைவன் வல் சோனுவின் தலைமையின் கீழ் உரோமநகருக்குத் திருப்பி யனுப்பினன். 150,000 காலாட்படையோடும் 500 குதி ரைப்படையோடும் 40 கப்பல்களோடும் இரகூலஸ் பினீசி

பினிசியர் 233
யரை அடக்கமுயன்ருரன். பினீசியர் சாந்திப்பஸ் என்னும் கிரேக்கனைப் படைத்தலைவனுக்கினர்கள். சாந்திப்பஸ் 12,000 காலாட்படையும் 4,000 குதிரைப்படையும் 100 யானைப்படையும் சேர்த்து உரோமரை வென்று தலைவன் இரகூலஸைச் சிறையிட்டான். இச்செய்தியைப்பற்றி ஒரு பழங்கதையுண்டு, பினீசியர் இரகூலஸை ஐந்துவருடம் சென்றபின் உரோமாபுரிக்கு அனுப்பிச் சமாதானம் வேண்டினரென்றும் அவன் உரோமரைப் போர் தொட ரும்படி தூண்டித் தன் சொற்றிறம்பாமற் காத்தற்குக் காதாக்காப்பட்டினத்திற்குத் திரும்பினன் என்றும் சமா தானமாகாமையால் பினிசியர் இரகடலஸைச் சிலுவையி லறைந்தோ நீரில் அமிழ்த்தியோ கொன்றனரென்றும், கட்டுரைகள் கூறுகின்றன. இக்கட்டுரை9ை இலிவியஸ் எழுதியுள்ளார். வரலாற்ற சிரியா பொலிபியஸ் இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை; ஆகையால் இக்கதை பொய் யென்பதில் ஐயமில்லை. இர கூலஸின் மனைவி, ஹமில்கார் பொஸ்தார் என்னும் பினீசியர் இருவரை ஒரு சிறுமாடத் தில் அடைத்து உணவுகொடாது வருத்தினள் என்றும், பொஸ்தார் இறந்தபின்னும் பிணத்தை மிகவும் அவமதித் தனளென்றும் அடிமைகள் சிலர் அச்செய்தியை அரசாங் கத்தாருக்கு அறிவித்தார்களென்றும் அறிகிருேரமாகை யால் இக்கொடுரச் செயலை மறைத் தற்காகப் பினீசியர் இரகூடலஸை வருத்தினர்களெனக் கட்டுரை வரையப்பட் டது எனக் கருதப்படும்.
கி. மு. 254-ல்உரோமர்230 கப்பல்களோடுசென்றுபன ருமம்என்னும் பட்டினத்தைக்கைப்பற்றி 18,000 அடிமை களே நகருக்குக்கொண்டுவந்தனர். கி. மு. 253-ல் இஃணத்தலை வர்சேவியஸ் காவிப்பியோ, செம்பிருேரனியஸ் பிளிசோ என்போர் 250 கப்பலோடு ஆபிரிக்காவுக்குப் புறப்ப்ட்டுக் கடலின் பெருக்கையும் வற்றையும் பார்த்துத் துணுக்கும் றுத் திரும்பினர்கள். கி. மு. 251-ல் உரோமர்தலைவன் மெற்ருரலஸ் பகைவ்ருடைய யானைப்படையைக் கலக்கிப்
80

Page 134
234 உலக வரலாறு
பகைவர்தலைவன் அஸ்துருபாலை வென்று 20,000 பினிசி யரை வென்றன். அடுத்த ஆண்டு பினீசியர் லில்லி பேயம் நகரைச் சூழ்ந்தனர். அந்நகரைக் குளோடியஸ்புல் கர் என்னும் உரோமர்தலைவன் அணுகினன். கிமித்தம் பார்த்தபொழுது குருவிகள் உண்ணுமையால் கிமித்திகன் துர்கிமித்தமெனக் கூறினன் 'உண்ணுவிட்டால் குடிக் கட்டும்" எனப் பகர்ந்து புல்கர் அக்குருவிகளை கடலில் வீசும்படி கூறினன். தலைவன் புல்கர் தோல்வியடைந் தான். அதன்பின் உரோமர் கப்பல்கட்டவில்லை. கடற் போரில் உரோமர் பெரும்பாலும் தோல்வியடைந்தனர் எனத் துணியலாம். கி. மு. 247-ல் ஹமில்கார் பார்கா என்னும் பினீசியப் பெருந்தலைவன் தோன்றினன். பார்கா என்பது மின் ன ல் எனப் பொருள்படும். ஹமில்கார் உரோமருடன் எதிர்த்துப் போராடினன். கி. மு. 244-ஆம் ஆண்டில் ஆபிரிக்கர் அரசபக்தி குறைந்து தம்மை ஆண்ட பினீசியரோடு விரோதித்தமையால் உள்நாட்டுப்பகைவரை அடக்குதலில் பினீசியர் கவனம்செலுத்தினர்கள். கி. மு. 242-ஆம் ஆண்டில் உரோமர்தலைவன் கற்றுலஸ் அன் னேவை வென்ருரன். இதனுடன் முதற்போர் முடிந்தது. பினீசியர் சிசிலித் தீவைவிட்டு நீங்கவும் உரோமருக்கு 2,200 பொன் கொடுக்கவும் உடன்பட்டார்கள். இப் போரில் 56,000 பினீசியர் மாண்டார்கள்.
ஹமில்காரின் தனித்தலைமை
கூலிபெருமையால் பினீசியருடைய கூலிப்படை பகைப்படையாக மாறிக் காதாக்காப்பட்டினத்தைச் சூழ்ந் தது. உற்றிக்கா நகரத்தார் காதாக்காப் பட்டினத்தாருக் குத் துணைபுரிந்தனர். உடனே கடலிப்படை உற்றிக்கா நகரையும் சூழ்ந்தது. பினீசியர் உள்நாட்டுக் கலகத்தை யும், கூலிப்படையையும் அடக்க இயலாது கலங்கினர். பின்னர் ஹமில்கார்பார்காவை நகரத்தலைவனுக்கினர்கள். ஹமில்கார் பகைவரை வேரோடு அழித்தான். கூலிப்படை நகரவாசிகளைத் துன்புறுத்திப் பல இடும்பை செய்தமை

இரண்டாம் பினிசிய யுத்தம் 235
யால் ஹமில்கார் இரக்கம் காட்டாமல் பகைப்படை முழுவ தையும் அழித்தான். கி. மு. 238-ல் நாற்பதினயிரம் கூலி வீரர் மாண்டனர். ஹமில்கார் செங்கோல்செலுத்திப் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தினன். சாடினித் தீவிலுள்ள கூலிப்படையும் பினீசியரோடு பகைத்தது. தீவிலிருந்த குடிகள் உரோமரிடம் முறையிட்டனர். உரோமர் உடன் படிக்கையைப் பொருட்படுத்தாமல் சாடினித்தீவைத் தம் ஆட்சிக்குட்படுத்தினர். ஹமில்கார் உள்வேர்த்துத் தரு ணம் பார்த்திருந்தான். ஒன்பது வயதுச் சிறுவனகிய தன் மகன் ஹனிபாலை அழைத்து உரோமரோடு ஒருபோதும் நட்பாகக்கூடாதென்று உறுதிமொழி பெற்ருரன்.
இரண்டாம் பினிசிய யுத்தம்
ஐபீரியதேச நிகழ்ச்சிகள் பகைப்படையாக மாறித் தீங்குவிளேத்த கூலிப் படையை அடக்கிய ஹமில்காரின் ஆற்றலையும் சிசிலித் தீவில் அவன் செய்த வீரச்செயல்களையும் மெச்சிய அர சாங்கசபையோர் ஹமில்காரைச் சேனபதியாக்கி இராச்சி யத்தைப்பெருக்கும்படிஏவினர்கள். ஹமில் கார் ஆபிரிக்கா வனந்தரத்தில் திரவியங்தேட இயலாதென உணர்ந்து ஐபீரி யக் குடாநாட்டிற்குப் புறப்பட்டான். ஹமில்கார் கடல் கடந்துகாடுகெடுத்து நாடாக்கி ஐபீரியப்புலையரைவீரராக்கி உரோமாபுரத்த்ை அழித்தற்கு எண்ணினன். கி. மு. 237-ல் காடிஸ் துறையில் பாசறை யமைத்திருந்து அரசு செலுத்தி கி. மு. 228-ஆம் ஆண்டு ஒரு போரில் மடிங் தான். ஹமில்காரின் மருகனும் துணைவனுமாகிய ஹஸ் துருபால் தன் மாமன் நோக்கத்தைத் தன் சிரமேற் கொண்டு ஐபீரியாவிலுள்ள பல நாடுகளையும் அடக்கிப் புதிய காதாக்கோ வென்னும் பட்டினத்தையும் அமைத் தான். அவன் புதிய காதாக்கோப் பட்டினத்தை அடுத்து

Page 135
236 உலக வரலாறு
ஒரு வெள்ளிச்சுரங்கம் அகழ்வித்தானக, உரோமர் அழுக் காறுற்று ஹஸ்துருபாலை வெருட்டினர்கள். வெருட்டவும் ஹஸ்துருபால் உரோமரைப் பொருட்படுத்தாமல் காதாக் கினியரின் ஆட்சியை ஐபீரியாவில் நிலைநாட்டினன் . கி. மு. 221-ல் ஹஸ்துருபாலை ஐபீரியன் ஒருவன் குத்திக் கொன்ருரன். சாகுந்தத் துறையோர் காதாக்கினியராகிய பினீசியருக்கு மாருக உரோமரிடம் துணைவேண்டினர் கள். சாகுந்தத்திலுள்ளார் உரோமரோடு உறவுகொண் டாடினர்களாதலாலும், சாகுந்தம் இத்தாலிதேசத்திற் குக் கிட்டியதாதலாலும் அதை உரோமர் காத்தார்கள்.
ஹனிபால்
ஹமில்காரின் மகன் ஹனிபால் 28 ஆண்டுகிரம்பிய இளைஞனுனன். பாசறையிலிருந்து ஹமில்காரிடமும் ஹ துருபாலிடமும் போர்முறைகளில் பழகினவனுகையால் படைவீரர் ஹனிபாலை நேசித்து அவன் தலைமையை எதிர்பார்த்திருந்தார்கள். அவன் பசி பிணி பனி முதலிய வற்றை எள்ளளவும் பொருட்படுத்தவில்லை; எவ்வித இடை யூற்றுக்கும் அஞ்சானகி வீரச்செயல்களிற் சிறந்த தலைவ னக விளங்கினன். ஹனிபாலின் வீரத்தையும் விவேகத் தையும் படைத்தலைமையையும் புகழாதாரில்லை. போர் நடாத்தலிலும் அரசியல்செலுத்தலிலும் அவன் ஒப்பாரும் மிக்காரு மின்றித் தந்தை உவக்கத்தகுந்த மைந்தனனன். பண்டைக் காலத்துப் படைத்தலைவர் யாவரினும் ஹனி பாலே படைத்தலைமையிற் சிறந்தோனெனச் செப்பலாம், அலேச்சாந்தர் பெரிய வெற்றி வேந்தணுகித் தனிக்கோ லோச்சினையினும் ஹனிபாலளவு வீரமும் நுட்பபுத்தியும் அறிவும் உடையவனல்லன் எனலாம். உரோமர் சிலர் அழுக்காறுகாரணமாக ஹனிபாலைக் கொடுங்கோலன் என்றும் கண்ணுேட்டமில்லாதவ னென்றும் கூறினர்கள். ஹனிபால் காட்சிக்கெளியன்; கடுஞ்சொல்லனல்லன் என் பதும் சாந்தகுணம் அருள் இரக்கம் முதலிய நற்குணங்கள் உடையோ னென்பதும் அவன் சொற்செயல்களால்

இரண்டாம் பினீசிய யுத்தம் 237
இனிது புலப்படும். கி. மு. 218-ஆம் ஆண்டு ஹனிபால் சாகுந்தத்தைச் சூழ்ந்துகின் ருரனக, உரோமர் அவனைத் தடுத்தற்குத் தூதரை அவனிடம் அனுப்பினர்கள். ஹனி பால் அத் தூதரை வரவேற்காது திருப்பினன். உடனே உரோமர் காதாக்கோப்பட்டினத்தை ஆளுஞ் சபையின ரிடம் பேவியஸ் என்னும் தூதனை அனுப்பினர்கள். அச் சபை ஹனிபால் தவறிழைக்கவில்லை யெனத் தீர்மானித் தது. பேவியஸ் ‘சமாதானம் வேண்டுமோ, போர் வேண்டுமோ? விரும்பியதைக் கேண்மின்" என முழங்கி னைக, "விேர் விரும்பியதைத் தருக" எனப் பினீசியர் ஆரவாரித்தனர் என்று இலிவியஸ் எழுதியுள்ளார். இக் கதை கட்டுரையே. காதாக்கினியர் பொருள்குன்றி இளைத்தகாலத்தில் செருக்குற்றிருந்தனர் என மொழிதல் பொருந்தாது. அன்றியும் காதாக்கினியரின் ஆட்சிநாடு கள் உட்பகையுடையவா யிருந்தமையால் காதாக்கினியர் கி. மு. 218-ல் போர்தொடங்க ஆயத்தமா யிருக்கவில்லை யெனத் துணியலாம்.
ஹனிபால் கிரேக்கவேந்தன் பிலிப்பை நட்பாக்கி னன். கிரேக்கரும் ஹனிபாலின் துணைபெறுதற்காகத் துணைசெய்ய உடன் பட்டார்கள். ஹனிபால் 20,000 ஐபீரி யரை ஆபிரிக்கா காட்டுக் காவலுக்கு வைத்தும் 15,000 ஆபிரிக்கரை ஐபீரிய நாட்டுக் காவலுக்கு வைத்தும் துணைப்படைக்கு ஒழுங்குசெய்தபின், 90,000 காலாட் படையும் 12,000 குதிரைப்படையும் 37 யானைப்படையும் கொண்டு கி. மு. 218-ல் மே மாதம் போருக்குப் புறப்பட் டான். ஐபீரியர் சிலர், பகையாக அவர்களை அடக்கு வதற்குச் சிலபடையை கிறுத்தி, 50,000 காலாட்படை யோடும் 9000 குதிரைப்படையோடும் களிறுகளோடும் கல்லியநாடு புக்கான் இத்தாலிய தேசத்துக் கல்லியர் உரோமரோடு பகைத்திருந்தமையால் அவரது துணையைப் பெறுதற்காகக் கடல்மார்க்கத்தைவிட்டுத் தரைவழியால் கல்லியநாட்டை அடைந்தான். இக்காலத்தில் பிரஞ்சு

Page 136
238. உலக் வரலாறு
தேசமென வழங்கும் கல்லியநாட்டில் ஹனிபால் கானவ ரோடு பொருது அவருட் சிலரை நட்பினராக்கியும், தன் படைவீரரில் கோழை மக்களை நிற்கும்படி ஏவியும் ருேரன் நதியை விரைந்தடைந்தான். இதற்கிடையில் உரோமர் 24,000 காலாட்படையும் 1800 குதிரைப்படையும் சேர்த் தார்கள். இத்தாலியதேசத்துத் துணை நாடுகள், 40000 காலாட்படையும் 4400 குதிரைப்படையும் துணைப்படை யாகச் சேர்த்தன. இணைத்தலைவர்களுள் செம்பிருேரனி யஸ் என்பவன் சிசிலித்தீவுக்கும் கோணிலியஸ் ஸ்கிப் பியோ என்பவன் ஐபீரியாவுக்கும் புறப்பட்டனர். கீழ்த் தலைவன் மான்லியஸ் கல்லியரோடு மியூற்றினுக்களத்தில் பொருது தோல்வியடைந்தான். ஸ்கிப்பியோ அதைக் கேள்விப்பட்டு அவனுக்குத் துணைப்படை யனுப்பினன். பின்னர் ஹனிபால் ருேரன் நதியைக் கடந்தானெனக் கேட் டும் தனக்குக் குறிக்கப்பட்ட களம் ஐபீரியாவாகையால் மேன்மக்கட்சபையின் ஏவலை மீறித்திரும்புதல் குற்றமாகக் கொள்ளப்படுமென எண்ணி ஐபீரியாகாட்டிலே நின்றன். ஹனிபால் இத்தாலிக்குட் புகுந்தானென அறிந்த பின் னர்த்தான் ஸ்கிப்பியோஉரோமாபுரத்திற்குத்திரும்பினன்.
இது நிற்க, ஹனிபால் முன்னெருவரும் கடவாத அல்புமலையைத் தாண்டினன். மலைவழியில் வீரர்பலரை இழந்தான். பிணியால் வீரர் பலர் இறந்தனர். களிறுகள் பல இறந்தன. காடு கடந்துழிப் படைவீரர்கள் பனியா லும் மலைவழிப் பருக்கைக்கற்களாலும் வருந்தினர். ஊக்க முடையார்க்கு ஊன்றுகோல் வேண்டாவாதலின் ஹனி பால் மலைகடந்தான். எந்தக்கணவாயால் கடந்தானென நிச்சயமாகச் சொல்ல இயலாது. ஆசிரியர் பொலிபியஸ் என்பார் ஒரு வழியையும் இ லிவியஸ் என்பார் பகைவ ருடைய சிறையிலிருந்த உரோமனெருவனிடம் கேட் டறிந்து வேருெரு வழியையும் தத்தம் வரலாற்றிற் குறிப் பிட்டனர். இரு ஆசிரியரும் ஹனிபால் முேன்நதியை அரோசியாவென்னும் இடத்திற் கடந்தான் எனக் கூறு

இரண்டாம் பினிசிய யுத்தம் 239
கின்றனர். இலிவியஸ் எழுதிய வரலாற்றின்படி ஹனிபால் செனிவாக்குன்றின் வழியாலாவது, கெனிஸ்குன்றின் வழியாலாவது சென்றிருத்தல்வேண்டும் என்று அறிய லாம். பொலிபியஸ் ஹனிபால் வந்த வழியைப்பற்றி விரீ வாக எழுதவில்லை, கி. மு. 218-ல் ஸ்கிப்பியோ, ரிசினஸ் என்னும் சிற்றற்றங்கரையில் நடந்த சிறுபோரில் தோற் ருரன். அப்பொழுதே ஹனிபாலின் போர் தொடங்கியது. ஹனிபாலும் தனது இத்தாலியப்போர்வரலாற்றை எழுதி னைகலின் அப்போர்வரலாறு ஒருபாற்கோடாது எழுதப் பட்டது. ஐபீரியா நாட்டில், ஸ்கிப்பியோ நடத்திய போர் வரலாறு உரோமரால்மாத்திரம் எழுதப்பட்டதாகையால் ஸ்கிப்பியோவைப் புகழ்ந்திருத்தல் இயல்பே.
w ஹனிபாலின் வரவைக் கேள்வியுற்ற உரோமர்படை பிளாக்கெந்தியாவில் ஒளித்தது. ஹனிபால் கல்லியரிடம் துணப்படைபெற்று உரோமர்படையைப் பின்தொடர்ந்து தெரிபி ஆற்றுக் கரையில் ஸ்கிப்பியோவின் படை யோடு பொருதான். தான் புண்பட்டிருந்தமையாலும், பினிசியப் புரவிப்படையைச் சமவெளியில் வெல்லவியலா தாகலானும், ஸ்கிப்பியோ போர்புரிய விரும்பவில்லை. இணேத்தலைவருட் செம்பிரோனியஸ் போர்க்கெழும்படி உற்சாகப்படுத்தினனுகையால், உரோமர் போர்க்களத்துக் குச் சென்றனர். ஹனிபால் தனது தம்பி மாகோவைச் சில புரவிப்படையோடு ஒரு மறைவிடத்தில் ஒளித்திருக்கச் செய்து வேருெரு சிறிய புரவிப்படையைச் செம்பிரோனி யஸை ஏமாற்றிப் பின்தொடரப்பண்ணும்படி வைகறை யிற் செலுத்தினன். செம்பிரோனியஸ் என்னும் தலைவ னுக்கு இக்கபடம் புல ப் படா மை யா ல் அவன் சிறு படையை இலகுவில் வெல்லலாமென எண்ணிப் பின் தொடர்ந்தான். உரோமர் உணவருந்தாமலும் பனிபெய் தலைப் பொருட்படுத்தாமலும் போருக்குச் சென்றனர். களத்தில்கின்ற பினிசியர்படை இருபதாயிரம் காலாட் படையும் பதினெண்ணுயிரம் புரவிப்படையும்; உரோமர்

Page 137
240 உலக வரலாறு
படை முப்பதாயிரம் காலாட்படையும் நாலாயிரம் புரவிப் படையும் என்ப. சற்றுநேரம் வெற்றி தோல்வி தெரியாமல் கடும்போர் நிகழ்ந்தது. பத்தாயிரம் உரோமர் ஒடித் தப்பி னர்கள். செம்பிரோனியஸ் தன் தோல்வியை மேன்மக் கட் சபைக்கு அறிவியாதிருந்தனன். ஹனிபால் தென் னித்தாலியைத் தன் போர்க்களமாக்கும் நோக்கத்தோடு சென்ருரன்.
கி. மு. 217-ஆம் ஆண்டில் நடந்த தேர்தலிற் கம வியக்கத் தலைவன் பிளாமினியஸ் என் போனுடைய கட்சி யாரும் மேன்மக்கட் கட்சியாரும் கலகப்பட்டார்கள். மினூ சியஸ் தனித்தலைவனுகவும் பிளாமினியஸ் கீழ்மக்கட்டலைவ கைவும் கியமிக்கப்பட்டாராக, ஒரு எலி கீச்சிட்டபடியால் தேர்தல் முறையல்லாததெனத் தீர்க்கப்பட்டது. இரண் டாம்முறை நடந்த தேர்தலில் பிளாமினியஸ் இணைத் தலைவ ருள் ஒருவனனன். பலதுர்கிமித்தங்களை நிமித்திகர் கூறவும் பொதுமக்கள் பிளாமினியஸையே தலைவனுகத்தெரிந்தெடுத் தனர். மேன்மக்கள் யாதேனும் குற்றஞ்சொல்லிக்குழப்பஞ் செய்வரென வெண்ணிப் பிளாமினியஸ் தெரிந்தெடுக்கப் படுமுன்னரே அரிமியத்திற்குப்போனன். தலைவனுக நிய மிக்கப்பட்டபின் அவன் அறெற்றியத்தில் ஒரு சதுப்பு நிலத்திற் பாசறையமைத்தான். படைவீரர் துயிலின்றி வருந்தினர். ஹனிபாலின் படைவீரரும் வருந்தினர்கள். ஹனிபால் ஒருகண் பார்வையிழந்தான். உரோமாபுரத் தைக் காத்தற்குப் பிளாமினியஸ் பின்தொடர்வானென் றெண்ணி ஹனிபால் முன்சென்று இரசிமீனஸ் ஏரிக்கறை யில் அவனை எதிர்பார்த்திருந்தான். காடடர்ந்த இரு குன்றுகளுக்கிடையில் உள்ளதோர் ஒடுக்கமானபாதை யால் பிளாமினியஸ் செல்லநேர்ந்தது. ஹனிபால் குன்றின் கண் தன் படைவீரரை மறைத்துவைத்துப் பிளாமினி யஸின் படையை அவ்வழியிடைப் புகவிட்டுப் பொறியிற் பிடித்தாற்போல அகப்படுத்தினன். பினீசியப்படை வீரர் நான்குபக்கமும் சூழ்ந்துகின்று உரோமர்படையில் ஒரு

இரண்டாம் பினிசிய யுத்தம் 241.
வரையும் தம்பவிடாமல் கொன்றர்கள். 15000 உரோ மர் மாண்டார்கள், 15000 பேர் சிறைப்பட்டனர்; பினி சியப்படைவீரரில் 1500 வீரர்மாத்திரம் கொல்லப்பட்டார் கள். உரோமர்தலைவன் பிளாமினியஸ் போரில் துஞ்சி னன். மற்ற இணைத்தலைவன் சேவியஸ் ஒடித்தப்பினன்
GLI a II gio
ஒருதலைவன் இறந்தமையாலும் மற்றைத்தலைவன் எவ்விடம் இருக்கிருரனெனத் தெரியாமையாலும் மேன் மக்கள் கூடிப் பேவியஸ் என்பவனைத் தனித்தலைவனுக நியமித்தனர். ஹனிபால் உரோமாபுரத்தை முற்றுகை யிடுகற்கு வேண்டிய தோமரம், கிடுகு முதலிய படைக ளில்லாமையால் தென்னித்தாலிக்குச் சென்று ஆறியிருந்' தான். பேவியஸ் ஹனிபா லின் பின் தொடர்ந்துதிரிந்து நாள் கடத்தம் முறையைத் தழுவினன். பேவியஸ–0க்குக் கோபமூட்டிப் போர்புரியப்பண்ணு வித்தற்காகக் கம்` பேனியநாட்டுர்களை ஹனிபால் தீயிட்டான். ஊர்கள் அழற்படுதலைக் கண்டும் பேவியஸ் போர்செய்யப்படா தெனத் தன் கீழ்த்தலைவர்க்குக் கற்பித்தான். இங்ஙனம் பேவியஸ் ஹனிபாலின் பின்தொடர்ந்தும் ஹனிபால் போர்க்கு எத்தனிக்க முதுகிட்டும் பின்பு பின்தொடர்ந் தும் காலத்தைக் கழித்தானகையால், காலங்கடத்துவோன் என்னும் பட்டத்தைப்பெற்ருரன். ஹனிபால் ஆப்பூலி யாவுக்குச் செல்லும் வழியில் ஒரு பள்ளத்தாக்கில் அவனை அகப்படுத்தலாமெனஎண்ணிப் பேவியஸ் விரைந்தான். ஹனிபால் இதையுணர்ந்து தப்புதற்கு உபாயத்தை யோசித்தான். ஹனிபால் 2000 எருதுகளின் கொம்பில் எரியும் சூள்களைக் கட்டித் துரத்தினனகப் பேவியஸ் பினீசியப்படை விரைந்து செல்கின்றதென எண்ணிப் பின்தொடர்ந்தான். பேவியஸ் இச்குதை உணருமுன் ஹனிபால் அப்பள்ளத்தாக்கினின்றும் அகன்று விலகி ன்ை, இதன்பின் பேவியஸ் ஹனிபாலைப் பின் தொடர்ச்
31

Page 138
242 உலக வரலாறு
தால் அவன் சூழ்ச்சியில் அகப்படவேண்டுமென அஞ்சிப் பாசறையில் தங்கினன்.
ஆப்பூலியா நாட்டில் தானியம் சேகரிக்கப்பட்டிருந் தமையால் ஹனிபால் கூதிர்காலத்தை அந்நாட்டிற் கழித் தான். பேவியஸ் பெரும்போர் செய்யாது சிறுபடைகளைச் சந்தித்த வழிப் பொருது காலம்போக்குதலை அறிந்த மேன் மக்கட்சபையினர் அவனை வெறுக்கத் தொடங்கினர்கள் பேவியஸ் கீழ்மக்கட்டலைவன் மினூசியஸ் என் போனிடம் படையை ஒப்புவித்துவிட்டு உரோமாபுரத்திற்குக் கிரியை ஒன்று செய்யப்போனன். மினூசியஸ் ஹனிபாலின் சிறு படையொன்ருேரடு பொருது வென்ருனுகையால் மேன்மக் கள் மினூசியனைப் பேவியஸோடு இணேத்தலைவனுக்கினர் கள். பேவியஸ் சினந்து படையை இரண்டாகப் பிரித் தான். வெவ்வேறு பாசறையில் இருதலைவரும் இருந்தமை யால் தலைவர் கலகப்பட்டாரென ஹனிபால் ஊகித்தறிந்து, மினூசியஸ் என்னும் தலைவனை முறியப் புடைக்க நினைத் துப் போர்க்கெழுந்தான். போரில் மினூசியஸ் தோல்வி யடைதலைக்கண்டு பேவியஸ் உதவிபுரிந்து படையைக் காப்பாற்றினன். உடனே மினூசியஸ் போர்த்துறைத் தலைமையைத் துறந்து கீழ்த் தலைவனனன் .
கன்னுயித் தோல்வி
கி. மு. 216-ஆம் ஆண்டு உரோமர் பெருஞ்சேனை திரட்டினர்கள். வாரோவும் அமீலியஸ்போலனும் இணைத் தலைவர்களாகத் தெரிந்தெடுக்கப்பட்டார்கள். மேன்மக் கட்சடையார் ஹனிபாலை எதிர்த்துப் போர்செய்யும்படி கற்பித்தனர். அமீலியஸ் போலஸ் 50,000 வீரரோடு சென்று கன்னுயிக்களத்திற் பகைவரைச் சந்தித்தான். ஹனிபாலும் மூவகைத்தானையோடும் போர்க்களத்தில் கின்றன். நடுவில் காலாட்படையும் ஒருசார் உரோம ருடைய குதிரைப்படையும் ஒருசார் துண் நாட்டுக் குதிரைப் படையுமாக உரோமர்படை அணிவகுக்கப்பட்டது. ஹனி

இரண்டாம் பினீசிய யுத்தம் 243
பால் ஆப்புமுனையாகக் கல்லியர் வேற்படையை முன்னணி யாக நிறுத்திக் கல்லியர் குதிரைப்படையை இடத்திலும் ஆபிரிக்கக் குதிரைப்படையை வலத்திலும் நிறுத்தினன். உரோமர் குதிரைப்படை முதுகிட்டு ஓடியதாயினும், உரோமர் காலாட்படை கல் லிவர்படையை நெருக்கிற்று. ஆபிரிக்கக்குதிரைப்படை உரோமர்குதிரைப்படையைக் கலைத்துப் பின்பக்கத்தாற் பெயர்ந்து உரோமர்காலாட் படையைச் சூழ்ந்தது. இவ்வண்ணம் உரோமர் தம் பகை வர்நடுவில் அகப்பட்டனர். பினீசியர் நாலுபக்கத்திலும் உரோமரை வளைத்துக் கொன்றனர். 10000 வீரரும் வாரோத்தலைவனும் ஒடித் தப்பினர்கள். 20000 உரோமர் சிறைப்பட்டனர். பெருந்தொகையான மக்கள் இறந்த னர். 80 மேன்மக்களும் துஞ்சினுர்கள். அமீலியஸ் போலஸ் என்னும் தலைவனும் இறந்தான். பினிசியப் படையில் 6000 காலாட்படையும் 200 குதிரைப்படையும் அழிந்தன. கன்னுயிப் பெரும்போரில் உரோமர்படை முழுவதும் அழிவெய்திற்று எனக் கூறலாம்.
இணைத்தலைவன் ஒருவன் இறந்ததும் கீழ்த்தலைவர் கள் பலர் மாண்டதும் மேன்மக்கட்சபையின் தொகை குறைந்தது. தமது சரித்திரத்தில் கன்னயிக் களத்தில் தோல்வியடைந்ததுபோலத் தாம் ஒருமுறையும் தோல்வி யடையவில்லையென உரோமர் ஆரஞருற்றுக் கலங்கினர் கள். உரோமாபுரத்தோர் தமது முடிவுகாலம் கிட்டிய தெனப் புலம்பினர். துணுக்குற்ற சனங்கள் வீதிகளில் கூட்டங்கூட்டமாக நின்றனர். இங்கினம் நகரவாசிகள் யாவரும் துயர்க்கடலில் மூழ்கினர். பெண்கள் வீதிதோ றும் அழுது திரிக்தனர். லத்தீனியர் துணைப்படை அனுப்பியமையானும் இத்தாலி தேசமுழுவதும் பரம்பிய உரோமர்குடிகளும் துணைபுரிந்தமையாலும் உரோமர் தேறி யுத்தத்தை நடத்தற்குத் துணிந்தனர். பேவியஸ் பெரியோனிடம் புத்திகேட்க, அவன் யாவரையும் அஞ் சன்மின் எனத் தேற்றிப் பெண்களை இல்லங்களுக்குச்

Page 139
244 உலக வரலாறு
செல்லும்படி கற்பித்து 8000 அடிமைகளைப் படைவீர ராக்கிச் சிறையிலிருந்து 6000 தீவினையாளரையும் விடுதலை செய்து ஒருபடையாக்கி யூனியர்ஸ்பேரா என்பவனைத் தலைவனுக நியமித்துப் போர்கடத்தும் முறையைத் தழுவும் படி ஏவினன்.
ஹனிபால் தனது தம்பி மாகோவை வெற்றிகளே அறிவித்துப் படைசேர்த்துவரும்படி கா தாக்கோப்பட்டி னக்துக்கு அனுப்பினன். ஹனிபால் உரோமாபுரியை நோக்காமல் சிறுநகரங்களே ஒவ்வொன்ருக முற்றுகையிட் டுக் கைப்பற்றினன். மாகர்பால் என்னும் இளைஞன் தான் தலைவனுயின் இவ்வளவில் உரோமாபுரத்தில் வெற் றிக்கொடியை நாட்டியிருப்பேன் என வீரங்கூறினன். ஹனிபால் அவனுடைய அறியாமையை இகழ்ந்து நகைத் தான். உரோமாபுரியின் மதில்களையும் அரண்களையும் தாக்குதற்கு அடுபடைகளும் தடுபடைகளும் துணைக்கருவி களும் பெருந்தொகையான காலாட்படையும் நெடுங்காலக் திற்குவேண்டும் உணவும் இல்லாமையால் ஹனிபால் தென்னித்தாலிய நகரங்களைத் துண்யாக்க முயன்ருரன். சம்நிதியரும் லுக்கேனியரும் ஏணிக்கியரும் உரோமருக்கு எதிராக எழுந்து பினிசியருக்குத் துணைபுரிந்தனர். ஹனி பால் கி. மு. 216-ல் தென்னித்தாலிய நாட்டுப் பெருநக ரான கப்புவாக்கரை முற்றுகைசெய்து கைப்பற்றினன்.
கி. மு. 215-ல் பேவியஸ், கிருரக்கஸ் என்போர் இணைத்தலைவராயினர். கிருரக்கஸ் அன்னேவின் சிறு படையை வென்ருரன். அடுத்தவாண்டு அன்னே வெனவர் தத்தில் தோல்வியடைந்தான். கி. மு. 213-ல் ஹனிபால் இராறந்தப்புறஞ்சேரியில் தங்கினன். வேந்தன் பிலிப்பு அப்போலானவில் உரோமரோடு பொருது தோல்வி யடைந்தானகையால் பினிசியருக்குத் துணையொன்றும் செய்யாதிருந்தான். இத்தருணத்தில் கல்லியரும், எற்றுாறி யரும் உரோமருக்கு விரோதமா யெழுந்தனர்.

இரண்டாம் பினீசிய யுத்தம் 245 A star Clini f. p. 214 -210
உரோமருடைய நண்பன் ஹயிருே, உரோமர் போரில் தோல்வியடைந்ததையறிந்து வேற்படைகளும் விற்படை களும் துணைப்படைகளாக அனுப்பினன். தன் குடி களுக்கு மிடிநிகழுங் காலத்து உதவிசெய்து செங்கோல் செலுத்தினன். உரோட்டுத்தீவு பூகம்பத்தால் அஞருற்ற தாக ஹபிருே அத்தீவாருக்குப் பொருளுதவி செய்தான். கலைவல்லுநரையும் ஆராய்ச்சிவல்லுநரையும் ஆதரித்து அறிஞர்புரவலன் எனப் புகழ்பெற்ருரன். அவன் வயது முதிர்ந்து கி. மு. 214-ல் இறந்தான். அவனுடைய பேரன் அரசுரிமையைப் பெற்றன். சிசிலிமுழுவதையும் அவ னுக்கு அளிப்பதாகப் பினீசியர் வாக்குத்தத் தஞ்செய் தனர். அவன் உரோமரோடு பகைத்துப் பினிசியரோடு நட்டாயினன். சிருரக்கூசாப்பட்டினத்தோர் உரோமர் கட்சியாராகித் தம் வேந்தனைக் கொன்றனர். பின்னர் எப்பிசிடிஸ், இப்போக்கிறிற்றிஸ் என்னும் இரு பினீசியத் தலைவர்கள் தலைநகரில் தலைமைபெற்று உரோமரோடு போர் நடாத்தினர்கள். மேன்மக்கட்சபை மாக்கேலஸ் என் னும் தலைவனைச் சிசிலியில் யுத்தம்செய்யும்படி கற்பித் திது. சிருரக்கூசாப்பட்டினம் ஒருபக்கத்தில் கடலால், காக்கப்பட்டது. ஏனைய பக்கங்களில் நகர் அகழியாலும் மதிலாலும் காக்கப்பட்டிருந்தது. யவனகணிதவல்லுநன் ஆர்க்கிமிடிஸ் பல யந்திரங்களையும் பொறிகளையும் மதிலின் மீது அமைத்தான். இடங்கணிப்பொறி கணேசமரம் முதலியவற்ருரல் தரைப்பக்கமதில்களைக் காத்தான். கடல் முகத்தில் அாண்டிலும் தொடக்கும் வைத்துக் கப்பல்களை அணுகவொட்டாது காத்தான். அாண்டிற்பொறிகள் கப், பல்களக் கொளுவித் தூக்கிக் கடலில் ஆழ்த்தியமையால், உரோமர்கடல்வீரர் ஒரு கயிற்றைக் கண்டாலுமே அஞ்சி ஓடினர்கள். மாக்கேலஸ் பட்டினத்தை அணுக அஞ்சிச் சூழ்ந்திருந்தான். எப்பிசிடிஸ் பினிசியரிடம் 25000 வேற் படையும் 3000 குதிரைப்படையும் பெற்று நகரக்கட்சி

Page 140
246 உலக வரலாறு
களே அடக்கி ஆண்டனன். இப்போக்கிறிற்றிஸ் 10000 படையோடு புறப்பட்டுக் கிமில்கோவுக்குச் சென்ருரன். நகரத்தோர் ஒருவிழாக் கொண்டாடியகாலமறிந்து மாக் கேலஸ் ஏணிகள்வைத்து மதின்மீதேறினன். பினீசியப் படை நோயால் வருந்திக் குன்றியதாக, எப்பிசிடிஸ் அக்கிரிக்கந்தத்துக்குச் சென்ருரன். சிருக்கூசாவில் த8ல வர் இல்லாமையால் கலகம் விளைந்தது.
மாக்கேலஸ் நகரத்து அரண்களை ஒவ்வொன் ருரய்ப் பற்றி நகருட்சென்று நகரத்தோரைக் கொன்ருரன். கணிதவல்லுநன் ஆர்க்கிமிடிஸ் என் போனும் கொல்லப் பட்டான். படைவீரர் நகரெங்கும் உலாவிச் குறைகொண் டனர். சித்திரங்கள் சிலைகள் கலன்கள் அணிகள் முதலிய பொருள் யாவற்றையும் உரோமர் கொள்ளே கொண்டு போனர்கள். சிருக்கூசாப்பட்டினம் சீர்கெட்டழிந்தது.
அக்கிரிக்கந்தத்தில் பினிசியத்தலைவன் முயிற்றினிஸ் உரோமரொடு பொருது வென் ருரன். கி. மு. 210-ல் முயற்றினிஸ் அன்னேவோடு சேர்ந்து உரோமரைப் பின் னரும் புடைத்தன். பினிசியத் தலைவர் ஒருவரில் ஒருவர் அழுக்காறுற்றுப் பிரிய, அக்கிரிக்கந்தமும் உரோமர் கைப்பட்டது. இவ்வண்ணம் சிசிலியில் உரோமர் தமது ஆட்சியை நிலைநாட்டினுர்கள்.
ஐபீரியயுத்தம்: கி. மு. 218-214 சகோதரர்களாகிய ஸ்கிப்பியோ என்போர் இருவர் இன் சொற் சொல்லல் வேறுபடுத்தல் அளித்தல் ஒறுத் தல் என்னும் உபாயங்களைக் கையாண்டு ஐபீரியரை அடக்கினர். அன்னேவை வென்றதுமன்றி கி. மு. 217-ல் ஒருகப்பற்போரிலும் அவர்கள் வெற்றியெய்தினர். கி. மு. 216-ல், ஹனிபாலின் தம்பி ஹஸ்துருபாலையும் ஐபேராக் களத்தில் வென்ருரர்கள். கி. மு. 215-ஆம் ஆண்டு இலிற் றேக்காவிலும் உரோமர் பினிசியரை வென்றனர். இலி வியஸ், ஸ்கிப்பியோ என்போரைப் பெரும் வீரரெனப்

இரண்டாம் பினிசிய யுத்தம் 247
புகழ்ந்தனர்: ஸ்கிப்பியோவென் பாருள் ஒருவன் இரண்டு கப்பலோடு ஆபிரிக்காவுக்குத் துணிந்து சென்றன் என வும் ஒரு கதையுண்டு. ஸ்கிப்பியோ ஆபிரிக்க வேந்தன் சிபாச்சிடம் துணைவேண்ட அப்பொழுதிலேயே ஹஸ்துரு பால் கிஸ்கோவும் சிபாச்சிடம் துணைவேண்டினன் என் ஆறும், ஸ்கிப்பியோ நாவல்லமையாலும் சாதுரியத்தாலும் துண்பெற்றன் எனவும் இலிவியல் எழுதிய வரலாறு கூறுகின்றது. ஸ்கிப்பியோ என்னுங் குழுவினர் இலிவி பஸ் என்னும் புலவனைப் புரந்தமையால் இவ்வரலாறு நம் பக்தக்கதன்று, நடந்த உண்மை யென்னவெனில் ஹஸ் துருபாலும் மாகோவும் ப  ைட சேர்த்து உரோமரைப் புடைத்து ஸ்கிப்பியோ என்றழைக்கப்படும் சகோதரரிரு வரையும் கொன்றனர் என்பதே. கி. மு. 207-ல் ஸ்கிப்பி யோவின் மகன், ஸ்கிப்பியோ ஐபீரியாவுக்குத் தலைவனுக நியமிக்கப்பட்டான். இந்த ஸ்கிப்பியோவும் சிபாச்சு வேம் கனிடம் துணைபெற்ருரன். ஸ்கிப்பியோ புதிய காதாக் கோவை மோதிக் கைப்பற்றினன். மாகோ காடிஸ் துறைக்குப்போய் ஆங்குள்ள கோயிலுள் நுழைந்து, பொன்முதலிய விலையுள்ள பொருள்களைக்கொண்டு படை திரட்டி ஆபிரிக்காவுக்குத் திரும்பினன். கி. மு. 204-ல், ஸ்கிப்பியோ இணைத்தலைவருள் ஒருவனகி உற்றிக்காவுக் குச் சென்ருரன். சிபாச்சுவேந்தன் ஹஸ்துருபாலின் மகள் சபனிஸ்பாவை மணஞ்செய்து பினிசியரைச் சார்ந்தான். சிபாச்சின் எதிரி மசினிசா என்பான் உரோமருக்குச் சார் பாயினன், மசினிசா ஸ்கிப்பியோவின் துணையோடு சிபாச் சைவென்று தான் முன் காதலித்த சபனிஸ்பாவை மணஞ் செய்துகொண்டானென ஒருகதை உண்டு. இதுநிற்க.
இத்தாலியக் களம் கி. மு. 212-ஆம் ஆண்டு இராறந்தம் ஹனிபாலின்
ஆட்சியை ஏற்றது. உரோமர் கப்புவாநகரை முற்றுகை யிட்டனர். ஹனிபால் உரோமாபுரியை நோக்கிச் செல்ல

Page 141
248 உலக வரலாறு
உரோமர் கப்புவாவைவிட்டு ஹனிபாலைப் பின்ருெரடர்ந்த னர். லுக்கேனியாவில் ஹனிபால் உரோமரைப் புடைத்து 15000 வீரரைக் கொன்ருன், ந8லவன் புலிவியல் 18000 படையோடு ஹனிபாலை எதிர்த்துத் தோல்வியடைந்தான். கி. மு. 211-ல் உரோமர் கப்புவாநகரைப் பின்னரும் முற் றுகையிட்டனர். ஹனிபால் கப்புவாசகரத்தாருக்குத் துணை புரியமாட்டாமல் உரோமாபுரத்தை நண்ணினன், உரோ மர்படை பின்ருெரடராது கப்புவா நகரத்தைத் தாக்க, நகர் உரோமர்வசமாயிற்று. கி. மு. 211-ல் இலை வீனஸ் மசி டோனியா தேசத்திற்குச் சென்று அயிற்றே லிய கிரேக் கரை வேந்தன் பிலிப்புக்கு எதிராகத் தூண்டினன். 210ல் இலைவீனஸ் மாக்கேலஸ் என்போர் இணைத்தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் சம்கிதியநாட்டுச் சில நகரங்களை அடக்கினர்கள். ஹனிபால் தலைவன் கெந்து மாலனையும் 13,000 வீரரையும் கேடோனியாவிற் சந்தித்து முரிய அடித்தான். கி. மு. 209-ல் உரோமர் இராறந்தத் தைத் தாக்கினர்கள். அடுத்த ஆண்டு அந் நகர் உரோமர் வசமாயிற்று. பின்னர் உரோமர் லொக்கிறி நகரை முற் றுகையிட்டனர். ஹனிபால் பெற்றியாலாவில் உரோமி ரோடு பொருது வென்றன். அப்போரில் தலைவன் மாக் கேலஸ் இறந்தான். ஹனிபால் தலைவனின் உடலைத் தக னஞ்செய்து முறைப்படி கிரியைகளைச் செய்வித்தான். இவ் வெற்றிகளைக் கேள்வியுற்ற இலத்தீனியரும் எற்றுாறி யரும் ஹனிபாலுக்கு உதவிபுரிந்தனர்.
ஒரஸ்துருபால் கி. மு. 208-ல் உரோமர் நீரோவை 12,000 படை யோடு ஐபீரியாவுக்கு ஏகும்படி கற்பித்தனர், ஹனி பாலின் தம்பி ஹஸ்துருபால் அல்புமலையைக் கடந்து கல்லி யருடைய துணைபெற்று 48,000 காலாட்படையோடும் 8000 குதிரைப்படையோடும் உரோமாபுரத்தை நோக்கிச் சென்ருரன். இதற்கிடையில் நீரோ இத்தாலியாவுக்குத்

இரண்டாம் பினிசிய யுத்தம் 249
திரும்பி இணைத்தலைவருளொருவனேடு தென்னித்தாலி யாவிலே வைகினன். ஹஸ் துருபால் தான் துணேப்படை யோடு வந்துசேர்ந்ததை அறிவித்துத் தன்னை எப்பிரியம் என்னும் இடத்தில் சந்திக்கும்படி தமயனுக்குத் தூதனுப்
பினன். அத்தூதர் நீரோகையில் அகப்பட்டனர். நீரோ பினிசியப்படை இரண்டும் சந்திக்குமுன் பொருதல் அவ சியமென எண்ணித் தெரிந்தெடுத்த ஒருபடையோடு தென் னித்தாலியாவிலிருந்து வடபால் விாைக் தான். வடவித் தாலியாவிலே இ லிவியஸ் சலினேற்றஸ் என்னும் இணைத் தலைவருளொருவன் ஹஸ்துருபாலே எதிர்த்தற்குப் பாசறை யமைத்திருந்தான். பக்கத்தில் நீரோவும் தன் பாசறையை அமைத்தான். இரண்டு பாசறைகளையும் கண்ட ஹஸ்துரு பால் தமையன் தோல்வியடைந்திருக்கக்கூடுமென ஐயுற்று மெற்ருேரறஸ் நதிவழியே சென்ருரன். காடடர்ந்த சதுப்பு நிலமாக லின் வழிதெரியாமல் இராக்காலமுழுவதும் பினி சியர்படை அலைந்தது. உரோமர் தம் படையை வைகறை யில் அணிவகுக்தனர். ஹஸ்துருபால் ஐபீரியரை வலத் திலும் கல்லியரை இடத்திலும் நிறுத்திப் பொருதான். பினீசியர் தோற்ருரர்கள். ஆசிரியர் பொலிபியஸ் 10000 பினிசியர் இறந்தனர் என்றும், ஆசிரியர் இலிவியஸ் 45000 வீரர் இறந்தனர் என்றும் எழுதினர்கள். நீரோ ஹஸ்துருபாலின் தலையை வெட்டி எடுத்துச்சென்று ஹனி பாலின் பாசறையுள் எறிந்தான். ஹனிபால் இக் கையற்ற நிஜலயில் முதுகிட்டான். கி. மு. 204-ல் பினீசியர்மா கோவை யும் ஹனிபாலையும் காதாக்கோபட்டினத்தைக் காத்தற்குத் திரும்பும்படிஅழைத்தனர். ஹனிபால் தான்பதினைந்துவருட மாகச்செய்த போர்வரலாற்றைச் செப்பேடுகளில் வரைந்து லுக்கேணிய முனையில் அமைக்கப்பட்ட பூனேதேவியின் கோவிலில் பதித்து ஆபிரிக்காவுக்குப் பெயர்ந்தான். ஹனிபால் யுத்தவரலாற்றைக் கிரேக்க மொழியிலும் பினிசிய மொழியிலும் எழுதினனுகலின், பொலிபியஸ் என்னும் வரலாற்ருரசிரியன் அவ்வரலாற்றைப் படித்தான்.
82

Page 142
250 உலக வரலாறு
போர்முடிவு
ஹனிபால் தன் படையை மாகோவின் படையோடு சேர்த்துப் பாசறையமைத்து மாரிக்காலத்தைக் கழித் தான்; கி. மு. 202.ல் மசினிசாவை ஹனிபால் அடக்கி னன்; பின்பு சாமா என்னும் களத்தில் உரோமர்படை யோடு தனது கடைசிப்போரைச் செய்தான். 50000 வீரர் களே மூன்றுவரிசையாக நிறுத்தினன். முதல் வரிசையில் கூலிப்படைவீரராகிய லிகூறியர் கல்லியர் ஐபீரியர் என் போர் நின்றனர். இரண்டாம் வரிசையில் ஆபிரிக்கரும் காதாக்கினியரும் நின்றனர். மூன்ருரம் வரிசையில் ஹனி பாலின் பழைய வெற்றிவீரர் கின்றனர். தூசிப்படை யாக 80 யானைப்படைகள் கின்றன. இருபக்கங்களிலும் குதிரைப்படைகள் கின்றன. ஸ்கிப்பியோ 30,000 படை யோடு முன்வரிசையைத் தாக்க முன்வரிசையோர் முது கிட்டனர். முன்வரிசைவீரரும் இரண்டாம்வரிசை வீரரும் தம்முள் முரண்பட்டுப் பொருதனர். பினிசியர்படை அணி குலைந்து தோற்றது. ஹனிபால் சமாதானம்செய்தற்குத் தூது அனுப்பும்படி சபையாருக்கு அறிவித்தான். ஸ்கிப்பியோ ‘ஆபிரிக்கன் எனப் பட்டம்பெற்று வெற்றி விழாக் கொண்டாடினன். இரண்டாம் பினிசியயுத்தமுடி வில் எழுதப்பட்ட உடன்படிக்கை உரோமாது கொடு மையைக் காட்டுகின்றது. பினிசியர் பத்துக்கப்ப2லத் தவிர ஏனையவற்றை உரோமருக்கு அளிக்கவும், 10000 பொன் (Talents) திறையளிக்கவும் மசினிசாவை நுமிடியா நாட்டுக்கு வேந்தனுக்கவும், ஐபீரியாவை உரோமருக்கு அளிக்கவும், உரோமரது உத்தரவின்றிப் பிறநாட்டா ரோடு போர்செய்யாம லிருக்கவும் உடன்பட்டார்கள். போரின் முடிவில் உரோமர் இத்தாலியா முழுவதையும் ஐபீரியாவையும் ஆட்சி செய்தனர். உரோமர் குடிகளில் காற்பங்கினர் இறந்து தொலைந்தனர். சிறு கமக்காரரும் குறைந்தனர். ஊர் முழுவதும் தொழிலற்ற விரரும் வீண ரும் முரடரும் அடிமைகளும் நிரம்பினர். உரோமர்

மசிடோனியர் 251
வேளாண்மையைக் கைவிட்டு ஆடுமேய்த்தலை விழைந்த னர். உரோமர்த8லவர்கள் திரவியந்தேடலே நோக்க மாகக் குடிகளைத் துன்புறுத்தினர்கள். யுத்தகாலத்தில் மேன்மக்கட்சபையே சகல அதிகாரங்களையுஞ் செலுத்திய தாகலின் ப்ொதுசன சபையான வகுப்பினர் சபை பல உரிமைகளை இழந்தது.
6-ம் பாடம்-மசிடோனியர்
யவனதேசம்
யவனர் பண்டைக்காலந்தொட்டே நாகரிகமடைந்த மக்கட் சாதியினராக மதிக்கப்பட்டனர். கணிதநூல்வல் லோர் இயற்கைநூல் வல்லோர் பெளதிகநூல்வல்லோர் தத்துவநூல்வல்லோர் கவின் கலேவல்லோராகிய பலரும் யவனநாட்டோரே. இயலிசை நாடகமென்னும் முக் தமிழும் சிறப்புற்ருேங்கியகாலத்தே யவனப் புலவர்களும் இசைப்பாட்டுக்களையும் காப்பியங்களையும் நாடகங்களை யும் இயற்றி யவன மொழியைச் சிறப்பித்தனர். ஒவியர் சிற்பர் யந்திரஞ் செலுத்துவோர் முதலிய வித்தை வல் லோர் பற்பல நுட்பமான வேலைகளைச் செய்தனரெனத் தெரிகிறது. உலகிற் புகழ்பெற்ற கலைஞர் பலரும் யவனரே. சாக்கிரட்டீஸ் பிளேற்ருே அரிஸ்தாதில் முத லிய ஞானிகளும், ஹோமர் யுறிப்பிடிஸ் முதலிய புலவர் களும் டெமஸ்தனிஸ் நாவலனும் தெ மிஸ்டோக்கிளிஸ் அமைச்சனும் அலேச்சாந்தர் முதலிய படைத் தலைவரும் ஒப்பற்ற பெருமக்களெனக் கூறலாம். அலைச்சாந்தர் கிரேக்கநாடுகள் யாவற்றையும் ஒரு குடையின் கீழ் ஆண்டு, பர்சியரைவென்று சின்னசியா பர்சியா எகிப்து முதலிய தேசங்கள் யாவற்றையும் ஆட்சி செய்தார். அவர் இந்து நதிவரையும் வந்தனர் என அறிகிருேம். அவர் மேலை காடுகள் காகரிகமற்றனவாதலின் அவற்றை அடக்கக்

Page 143
252 உலக வர்லfறு
கருதவில்லை. அலைச்சாந்தர் மரிக்கவே கிரேக்கர் தனிக் கோலும் நிலைகுலைந்தது. சிற்றரசர்கள் திசைதிசை தோறும் எழுந்தனர். யவனகேசத்திற் சிற்றரசுகள் மிகுந்தன. அலைச்சாந்தருடைய தந்தையின் நாடான மசிடோனியா ஒரு சிறு இராச்சியமாயிற்று. ஸ்பாட்டா எபிரேஸ் திறேஸ் முதலியவை குறுநிலமன்னரால் ஆளப் பட்டன. வேறு சில நகரங்கள் குடியரசு முறைகளைக் தழுவின. பல சிற்றரசுகள் சேர்ந்து அயிற்றேரலியர் கூட்டமென ஒர் ஐக்கியக்கூட்டமாக நிலைத்தன. வேறு பல குறுநிலமன்னரும் குடியரசு நகரங்களுஞ் சேர்ந்து ஆக்கியர் கூட்டமென கி ஜல த் த ன. சிற்றரசுகளும் கொடுங்கோலரசுகளும் குடியரசுகளும் ஐக்கியக்கூட்டங் களும் ஒன்ருேரடொன்று இகலாயின.
Djf (BLIGIñO i ui5db dâ. (p. 200—197
மசிடோனியாவை அலைச்சாந்தர்வழிவந்தோணுகிய பிலிப்பஸ் ஆண்டான். பிலிப்பஸ் ஹனிபாலுக்குத் துணை புரிய எண்ணியும் கிரேக்க நாட்டுக் கலகங்களால் துணைப் படைகள் நல்கா திருந்தான். கி. மு. 214-ல் தலைவன் இலைவீனஸ் கிரேக்கநாட்டுக்குச் சென்று குறுகிலமன்னர் ஒருவரோடொருவர் மாறுகொள்ளும்படி வேற்றுமைப் படுத்தினன் என முன்னர்க் கூறினேம், ஆக்கியர் பிலிப் பின்பக்கம் சார, அயிற்றேரலியர் ஆக்கியரோடு பகைத் தமையால் உரோமர்கட்சியைச் சார்ந்தனர். ஸ்பாட்டா நாட்டுக் கொடுங்கோலன் மக்கினதாஸ் பிலிப்போடு பகைத்தான். ஏதென்ஸ் நகரும் மசிடோனியாவோடு பகையாயிற்று. சின்னசியாவிலுள்ள பேர்காம் நாட்டு மன்னன் அத்தாலஸ் உரோமருக்குப் பொருளுதவிசெய்து சிரியா நாட்டுவேந்தனுக்கு எதிராகப் படையுதவிபெற்றன். கி. மு. 211-ல் கல்பாவும் இலைவீனனுடைய உபாயத்தைப் பின்பற்றி உரோமரது அதிகாரத்தை நாட்டினன். கி. மு. 205-ல் கலகம் ஒழிந்து சமாதானம் ஏற்பட்டது. பிலிப்பஸ்

மசிடோனியர் 253
நாட்டை நன் மாதிரியாக ஆண்டு வீரரைப் படைப்பயிற்சி யிற் பழக்கினன். அக்காலத்து எகிப்துவேந்தன் தாலமி அவுலேற்றிஸ் சிறுவனுகையால் எகிப்தையும் சைப்பிறஸ் தீவையும் சிரியா வேந்தன் அந்தியோக்கனும் பிலிப்பும் பங்கிடக் கருதினராக, காலமி உரோமரிடம் துணை வேண்டினன். அச்சமயத்தில் ஏதென்ஸ் நகரத்தாரும் பிலிப்புக்கு எதிராக உதவிபெறுதற்கு தூதரை உரோமா புரத்திற்கு அனுப்பினர்கள். கி. மு. 200-ல் மேன்மக்கட் சபையோர் மசிடோனியரோடு யுத்தஞ்செய்யவேண்டு மெனத் தீர்மானஞ் செய்தனர். இச்சந்தர்ப்பத்தில் இரண் டாம் மசிடோனியயுத்தம் தொடங்கியது. உரோமர்துணை வன் அத்தாலஸ் உடனே துணையனுப்பினன். அயிற் ருே லியரும் ஆக்கியரும் நொதுமலாயிருந்தனர். பிலிப்பஸ் கொறிந்து நகரை முற்றுகையிட்டான். கி. மு. 199-ல் தன் படை சிறிதாகையால் போரை நீட்டித்தான். அடுத்த ஆண்டு பிளாமினியஸ் தன் படையோடு இறங்கி அயிற் ருேரலியரிடம் துணைப்படைபெற்றுப் பிலிப்பை அவோ என்னும் பள்ளத் தாக்கில் வென்ருரன். பிலிப்பு சமா தானம் வேண்டினன். பிளாமினியஸ் பின்னரும் பிலிப் பைச் சேனசைபல்லாயிக்களத்தில் வென்றன். கி. மு. 197-ல் எழுதிய உடன்படிக்கையின்படி பிலிப்பஸ் பிறநாடு களை இழந்ததுமன்றி உரோமருடைய உத்தரவின்றிப் பிறநாட்டாரோடு யுத்தஞ் செய்யும் உரிமையையும் இழே தான். அதனுடன் 1000 பொன் (Talents) உரோம ருக்கு இறுக்கவும் உடன்பட்டான். பிளாமினியஸ்
ரேக்கநாட்டிற் செய்த ஏற்பாட்டைச் சிற்றரசர் வெறுத்து உரோமரோடு உட்பகையாயிருந்தனர். அயிற்ருேரலியர் தாம் உதவிசெய்தமைக்கு வெகுமதி காத்திருந்தும் பெருர மையால் உரோமரோடு உட்பகையாயினர். ஆக்கியர் அயிற்ருேரலியர் முதலியோரின் வலிமை மிகுமென எண்ணி மசிடோனியரின் படைகளை உரோமர் அதிகம் குறைக்க வில்லை,

Page 144
254 உலக வரலர்று
&f uur uissn f, p. 191-190.
சிரியாவேந்தன் அந்தியோக்கனை ஹனிபால் உரோம ருக் கெதிராகத் தூண்டிக்கொண்டே அவன் கோயிலில் வைகினன். கி. மு. 190-ல் அயிற்ருே லியர் தாம் உரோம ருக்கு எதிராகத் துணைசெய்வதாக ஒற்றன்மூலமாக ச் சிரியாநாட்டு வேந்தனுக்கு அறிவித்தார்கள். அந்தியோக் கஸ் பிலிப்போடு போர்புரியக் கிரேக்க நாட்டில் இறங்கி னன். உரோமர் பிலிப்புக்கு உதவிசெய்தனர். அத்தா லஸ் என்னும் சிறு மன்னனும் உரோமர் துணைவனகை யால் பிலிப்புக்குத் துணைப்படை யனுப்பினன். ஆக்கியர் அயிற்றே லியரின் பகைவரா கையால் உரோமர்பால் சார்ந் தனர். உரோமர் தலைவன் கிளாபிறியோ 40000 படை யோடு சென்று அந்தியோக்கஃனத் தேமாப்பயிலாயிக் களத்தில் வென்றனன். கி. மு. 190-ல் ஸ்கிப்பியோ மக் னிசாவிலே அந்தியோக்கனை வென்ருரன். இவ்வண்ணம் சின்னசியா நாடுகள் உரோமராட்சிக்குட்பட்டன. அந்தி யோக்கஸ் 15000 பொன் கப்பங்கட்டினன். சில நாடுகளை யும் இழந்தான். பேர்காமா நாட்டு அத்தாலஸ் என்னும் மன்னனுக்குப் பிரதியுபகாரமாகச் சில நாடுகள் அளிக்கப் பட்டன.
மூன்ரும் மசிடோனியோ யுத்தம். கி. மு. 171-168.
உரோமர் சின்னுசியா நாடுகளே அடக்கித் தம்மாணை யைச் செலுத்தினர்கள். கி. மு. 189-ےg b ஆண்டு, வல்சோ என்னும் தலைவன் கலேசியர் என்னும் சின்னசியா நாட் டாரை அடக்கினன். தலைவன் நொபிலியர் அயிற்ருேரலி யரை யடக்கினன். பிலிப்பஸ் இறந்த பின் பிலிப்பின் அரண்மனையில் பிலிப்பின் மகன் பேர்சியஸ் அரசு புரிந் தான். பேர்சியஸ் மசிடோனிய நாட்டின் படை குடி கூழ் முதலியவற்றைப் பலவழியாலும் பெருக்க முயன்ருரன். அயிற்றே லியர் சிரியர் காதாக்கினியர் முதலியோரை பேர்

மசிடோனியர் 255
சியஸ் நட்டாராக்கினன். கி. மு. 107-ல் கிருரசஸ் என்னும் தலைவனின் படையைப் பேர்சியஸ் ஒசாக்குன்றில் வென் ரூன். அவன் உரோமரோடு உடன்படிக்கை செய்து கொள்ள விரும்பினன். கிருரசஸ் மறு த் து ப் போர்க் கெழுந்து பின்னரும் பாலானுக் களத்தில் தோல்வியடைந் தான். கி. மு. 170-ல் படைத் தலைமையை ஒஸ்தியஸ் என் னும் தலைவனிடம் ஒப்புவிக்கும்படி மேன்மக்கள் கிரு சஸ் என்னும் தலைவனுக்கு அறிவித்தனர். கி. மு. 169 ல் கன் னயிப்போரில் மாண்ட பவுலஸ் என்போன் மகன் பவுலஸ் தலைவனுக நியமிக்கப்பட்டான். உரோமர் தெம்பி என் னும் ஊரைப்பற்றி கின்று பித்தனவில் பொருது 20,000 பகைவரைக் கொன்ருரர்கள். உரோமர் மசிடோனியா தேசத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்து நான்கையும் திறையளிக்கும் நாடுகளாக்கினர். உரோட்ஸ்தீவார் பேர் சியஸ் என்னும் வேந்தனுக்குத் துணைபுரிந்தமையால் தம் சுயாதீனத்தை இழந்தனர். பேர்காமம் உரோமருக்கு உதவிசெய்தும் ஒரு நன்றியும் பெறவில்லை. மூன்ருரம் யுத்த முடிவில் மசிடோனியா உரோமரது ஆட்சி நாடாயிற்று.
நான்காம் மசிடோனிய யுத்தம். கி. மு. 149 -146.
கி. மு. 149-ஆம் ஆண்டு, ஒருவன் தான் பேர்சியன் மகனென விளம்பி மசிடோனிய ராச்சியம் தனது உரிமை யாகலால் உரோமரைத் துரத்தத்தொடங்கித் தெசாலியி லிருந்த உரோமர் கீழ்த்தலைவனை வென்று படை சேர்த், தான். கி. மு. 148-ல் உரோமர் கலைவன் மெற்றஸ் அவ ஜனச் சயித்து மசிடோனியாவை உரோமரது ஆட்சிநாடாக் கினன். இது நிற்க. ஆக்கியர் கூட்டம் ஸ்பாட்டாவுக்கு எதி ராக்ப் போர்செய்ய, உரோமர் மேன்மக்கட்சபை போரை நிறுத்தும்படி கற்பித்தது. பின்னர் கி. மு. 146-ஆம் ஆண்டு ஆக்கியர்கூட்டம் ஸ்பாட்டா நாட்டாரோடு போருக் கெழுந்தது. உரோமர் ஆக்கியிரை அடக்கிக் கொறிந்து நகரை அழித்து ஆங்குள்ள சித்திரப்படங்கள் சிலைகள்

Page 145
256 உலக வரலாறு
அருந்தொழிலமைந்த கலன்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு உரோமபுரத்துக்குச் சென்றனர். ஆக்கியர் கூட் டத்தின் நா டு கள் உரோமருடைய ஆட்சிகாடாயின. கிரேக்கதேசம் சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. இங் Bனம் கிரேக்கர் தம்முள் ஒற்றுமையில்லாமையால், தம் மோடு கல்வியாலும் பயிற்சியாலும் ஒப்பில்லாத உரோம ருக்கு அடிமையாகித் தம் நாகரிகத்தை இழத்தற்குரிய நெறியிற் செல்லா நின்றனர். கிரேக்கர் சுயாதீனமிழந்தா ராயினும் கிரேக்கரது நாகரிகம் உரோமரால் தழுவப்பட் டது. பின்னர்ப் பல நூற்ருரண்டுகளுக்குப்பின்பு, கிரேக் கர் ஒட்டோமன் துருக்கரின் கொடுமையால் அழிவெய்தி 6of
glfu Gigih
பினிசிய யுத்தகாலத்தில் அடக்கப்பட்ட கல்லியர் திரண்டெழுந்து முயிற்றினுக்களத்தில், கி. மு. 193-ஆம் ஆண்டு தோல்வியடைந்தனர். உரோமர் இத்தாலியக் கல் லிய நாடு முழுவதையும் அடக்கி, லிகூறியரையும் அடக்கி னர்கள். லிகூறியர் இத்தாலியக் கல்லிய நாட்டிற்கும் கல் லிய நாட்டிற்கும் இடையிலுள்ள சிறு நாட்டில் வசித்த வில்வீரர். உரோமர் ஐபீரியதேசத்திற்கும் இத்தாலியா தேசத்திற்கும் இடையான பாகங்களையும் தம் ஆட்சிக்குட் படுத்த எண்ணினர். ஐபீரியர் உரோமருடைய பழக்கவழக் கங்களையும் அரசியல்முறையையும் வெறுத்தனர். கி. மு. 196-ல் உரோமர் கீழ்த் தலைவன் ஒருவனை ஐபீரியர் கொல்ல மேன்மக்கட் சபையோர் கேற்ருேரவை ஐபீரியரை அடக் கும்படி கற்பித்தனர். பலவாண்டுகளாக ஐபீரியரை அடக்கவியலாமையால் போர் நீடித்தது. கி. மு. 179-ல் கிருரக்கஸ் தயவாலும் தந்திரத்தாலும் உரோமராட்சியை நாட்டினன். கி. மு. 153 - ஆம் ஆண்டு சுல்பீசியஸ் கல்பா லூசித்தானியவிாரைப் பிறநாடுகளில் குடியேறுவ தற்குக் கூடும்படி எமாற்றியழைத்துக் கூடினுேரை ஒருங்கு கொன்ருரன். ஐபீரியர் யாவரும் சீற்றங்கொண்டு

மசிடோனியர் 257
மறத்தொழில் வீரன் விரியாதனைத் தலைவனுக்கினர்கள். கி. மு. 143-ல் நுமாந்தியர் போர்க்கெழுந்து மாசியஸ் என் னும் தலைவனையும் அவன் படையையும் சூழ்ந்தனர். உரோமர்தலேவன் படையைக் காத்தற்காகச் சமாதானத் திற்கு உடன்பட்டு இழிவடைந்தான். மேன்மக்கட்சபை யார் அவ்வுடன்படிக்கைக்கு உடன்படாமல் தலைவனைப் பகைவரிடம் ஒப்புவித்தார்கள். கி. மு. 134-ல் ஸ்கிப்பியோ அமீலியானஸ் என்போன், ஐபீரியரின் ஆற்றலைக் காணிய சென்ருரன். கி. மு. 133. ஸ்கிப்பியோ நுமாந்தியா நகரையும் அழித்தான். உரோமர் ஐபீரியரை ஒருவாறு அடக்கியும் அவர்கள் மூர்க்கம் அகஸ்தஸ் என்பவருடைய காலம்வரையும் அடங்கியதன்று.
போக்கியஸ் கேற்ருே போக்கியஸ் கேற்றே இரண்டாம் பினிசியயுத்தத் தில் ஒரு இளைஞனகப் படையிற் சேவித்தான்; அவன் பின்னர் மேன்மக்கட்சபை யங்கத்தினனுகி ஸ்கிப்பியோ வின் எதிரியானன்; கி. மு. 205-ல் பொருட்கணக்கணுகத் தெரியப்பட்டான். கி. மு. 195-ல் கேற்ருேர கீழ்த்தலைவ ணுகத் தெரியப்பட்டு ஐபீரியாவிற்குச் சென்றன். பின் கிலா பிறியா என்னும் தலைவனேடு கிரேக்கநாடுசென்று மசிடோனிய யுத்தத்தில் கீழ்த்தலைவனுகச் சேவித்துத் தேமோப்பைலாயி வெற்றியிலும் பங்குபெற்றன். கி. மு. 184-ல் கேற்ருே உரிமைக்கணக்கணுகத் தெரியப்பட்டான். உரிமைக்கணக்கனகக் கடமையைச் செலுத்தியகாலைச் சிலர் கேற்ருேரவை வெறுத்து நாடு கடத்தவும் முயன்ற னர். பொதுமக்கள் அவன் ஒழுக்கத்தையும் சீலத்தையும் போற்றினராகையால் கேற்றே தீங்குகளுக்குத் தப்பி னன். கேற்ருே தலைவர் எத்திறத்தாராயினும் குற்றஞ் செய்துழிச் சபையில் எழுந்து அவர்களைக் கண்டிக்கும் ஆண்மையுடையவனுக விளங்கினன். கா தாக்கோப்பட் ്.ങ്ങTtb தழைத்தோங்கியதாகையால் சொற்பொழிவு நிகழ்த்தும்போதெல்லாம் காதாக்கோப் பட்டினத்தை
83

Page 146
258 உலக வர்லாறு
அழிக்கவேண்டும், அழித்தாற்ருரன் உரோமராச்சியம் நிலைக்குமென வற்பு பூத்தினன்; அவன் 80 வயசினனகி கி. மு. 149-ம் ஆண்டு துஞ்சினன். அவனது ஆண்மை கொடை அளிமுதலிய நற்குணங்களைப் பொதுமக்கள் நனி பாராட்டினர்கள்.
மூன்றும் பினீசிய யுத்தம்
காதாக்கோப்பட்டினம் களை தீர்ந்து செல்வமுற்று வலிமை பெற்றுத் தழைத்தோங்குதலை எதிர்பார்த்த உரோமர் பட்டினத்தின் வளர்ச்சியையும் பெருக்கத்தையும் இடையிடையே தமக்கு அறிவிக்குமாறு மசிகிசாவுக்குக் கட்டளையிட்டு நுமிடியா நாட்டை அவனுக்கு அளித்தனர். மசினிசா உரோமருடைய ஆதரவோடு பினிசியரை வருத் தத்தொடங்கினன். ஹனிபாலின் செங்கோன்மையால் காதாக்கோப் பட்டினம் உறுகண் தீர்ந்தது. கி. மு. 195-ல் பினிசியர் உரோமருக்கு இறுக்கவேண்டிய திறை முழு வதையும் அளிக்கத் துணிந்தனர். இஃதுணர்ந்த கேற்ருேர காதாக்கோப் பட்டினத்தை அழிக்கவேண்டுமெனச் சொற். பொழிவுகள் செய்தனன். மிசிகிசாவின் செருக்கை அடக் குதற்குக் காதாக்கினியர் எத்தனித்தனராக, உரோமர், இடையிட்டு வெருட்டத் தம் வலியையும் மாற்ருரர் வலியை யும் உணர்ந்த காதாக்கினியர் சமாதானம் இரந்தனர். உரோமர் காதாக்கினியரின் கிலப்படை கப்பற்படை களைக் குலைக்கவேண்டுமெனக் கட்டளையிடக் காதாக்கினி யர் அதற்கு உடன்படவில்லை. உரோமர் உடனே பொரு தற்கு எத்தனித்தனர். கி. மு. 148-ல் உரோமருடைய தலைவன் பிசோ என்பான் ஆபிரிக்காவில் இறங்கினன். அவன் ஒரு வெற்றியும் பெறவில்லையாதலாற் கிரேக்க நாட்டை வென்ற அமீலியஸ் போலனுடைய மகன் கோணிலியஸ் ஸ்கிப்பியோ என்பானே இணைத்த8லவரில் ஒருவனகத் தெரிந்தெடுத்துக் காதாக்கோப் பட்டினத்தை நூறும்படி மேன்மக்கட்சபை ஏவிற்று. ஸ்கிப்பியோ காதாக்கோ நகரைச் சூழ்ந்துகின்று மகாலியா என்னும்

ஆதிகாலத்து இலத்தீன் நூல் வரலாறு 259
புறநகரைக் கைப்பற்றி உண்ணகரைத் தாக்கினன். கி. மு. 146-ல் அவன் மதிலேறி நகராண்களைக் கைப்பற்றினன். நகரத்தோர் வீதிகடோறும் போர்புரிந்து இறந்தனர். காதாக்கினியர் தம்முடைய இல்லங்களையும் கோட்டங்களே யும் தாய்நாட்டையும் காத் கற்காகப் போர்செய்து மாண்ட னர். ஸ்கிப்பியோ, கோயில்கள் வீதிகள் மதில்கள் யாவற் றையும் இடித்துத் தூளாக்கித் தீயிட்டு இங்கிலம் பாழாகக் கடவதெனச் சபித்தான். இப்போரில் பினிசிய நகரான உற்றிக்கா உரோமருக்குத் துணைபுரிந்து சுயாதீனம் பெற். றது. இவ்வளவில் உரோமர் ஆபிரிக்கா முழுவதிலும் தம்மாணயைச் செலுத்தினர்.
a·a·sa·
7-ம் பாடம்-ஆதிகாலத்து இலத்தீன் நூல் வரலாறு
கிரேக்க குடியேற்ற நாடுகள் உரோமரது ஆட்சிக் குட்படுமுன் கிரேக்க மொழியோடு இலத்தீன் மொழி கலக்க வில்லை. கி. மு. 207-ஆம் ஆண்டுக்குமுன் இலத்தீன்மொழி இலத்தீன் காட்டிலும் உரோமாபுரத்திலும் பேசப்பட்டது. அக்காலத்தில் இலத்தீன் மொழியில் இலக்கண இலக்கியங் கள் இயற்றப்படவில்லை. சில சிறு கீர்த்தனங்களும் வரிப் பாடல்களும் பாடப்பட்டு ஏட்டுவழக்காகாமல் அழிந்தன வெனப் புலவன் என்னியஸ் கேற்ருே என்பான் கவலையும் ருரன். பேவியஸ் பிக்கர் என்பவர் தம் காலத்திலும் அப் பாட்டுக்கள் நாட்டுப்பக்கங்களில் பாடப்பட்டனவெனக் கூறினர். பிற்காலத்தில் பெரும்புலவர்களான சிசருே வேசி லியஸ்.ஹெசருசியஸ் முதலியோரும் மேற்கூறிய கருத்துடைய வர்களாக இருக்தனரெனத் தெரிகிறது. அப்பாட்டுக்களில் நுவல்பொருள் வீரரும் வீரச்செயல்களுமாதலான் அவை புறப்பாட்டுக்களே. உரோமியூலுஸ் உரோமாபுரத்தை கிழவிய கதைகள் பாடப்பட்டன. இக்காலத்துக் கிடைக்

Page 147
260 உலக வரலாறு
கும் இலத்தீன் நூல்கள் யாவும் கி. மு. 270-க்குப் பின் எழுதப்பட்டவையே. பெரும்பாலும் இலத்தீன் புலவர்கள் கிரேக்க நூல்களே அடியொற்றியே இலத்தீன் நூல்களை இயற்றினர். சிறுவர்க்குக் கல்வி கற்பிக்கும் பொருட்டும் சிற்சில சிறு நூல்களே இயற்றினர்கள். பண்டைக்காலத் திற் கல்விக்குப் பெருமையில்லாமையால் இத்தாலியாவி லும் புலவர்களை ஒருவரும் ஆதரிக்கவில்லை. தலைவர்களும் வள்ளல்களும் தம்மைப் புகழ் தற்பொருட்டுக் கவிஞரைப் புரந்தனர். ஸ்கிப்பியோக் குடியினர் என்னியஸ் என்னும் புலவனை ஆதரித்தனர் என அறிகிருேரம். ஆதிகாலத்துப் புலவர் சிலரைப்பற்றியும் அவர் இயற்றிய நூல்களைப்பற்றி யும் சிறிது ஆராய்வோம்,
புலவன் அன்ருேனிக்கஸ்
இலிவியஸ் சலினேற்றர் என்னும் புரவலன் அன்ருேனிக் கஸ் என்னும் பன்னிராட்டைப் பிராயத்து அடிமைச் சிறு வணை இராறந்த நகரில் பெற்று உரோமாபுரத்துக்குக் கொண்டுவந்தனன். அன்ருேனிக்கஸ் சிறுவர்க்குக் கல்வி கற்பிக்கும் உவாத்தியானன். இலத்தீன்மொழியில் நூல் கள் இல்லாமையால் அவன் கிரேக்கர் காப்பியமாகிய ஒடிசியை மொழிபெயர்த்துக் கற்பித்தான். அவனது மொழிபெயர்ப்புநூல் பல குற்றமுடையது; சொற்சுவை பொருட்சுவை இசைகலம் நகைச்சுவை முதலியன இல்லா தது. அவனது மொழிபெயர்ப்பாகிய ஒடிசியை ஹொருசி யஸ் என்னும்:புலவன் தான் சிறுவயதிற்கற்று வருந்தினன் என மொழிந்தனன். அன்ருேனிக்கஸ் ஆபிரிக்கனென ஐயுறுதற்கிடனு முண்டு. கி. மு. 240-ல் அன்ருேரனிக்கஸ் அவலச்சுவை விரவிய பல நாடகங்களை இயற்றினன். கி. மு. 207-ஆம் ஆண்டு அவனை ஹஸ்துருபாலின் தோல்வியைப் பாடும்படி அரசாங்கத்தார் வேண்டினர்.
நீயஸ் நாவியஸ் கி. மு 269 197.
கீயஸ் காவியஸ் என்பான் அன்ருேனிக்கஸ் என்னும் புலவன் காலத்தவன்; கம்பேனியநாட்டவன்; முதற் பிணி சியயுத்தத்தில் உரோமர்படையிற் சேவித்தவன். இவன்

ஆதிகாலத்து இலத்தீன் நூல் வரலாறு 261
கி. மு. 255-ல் பல நாடகங்கள் இயற்றினுனென்று தெரி கிறது. நாடகங்கள் கிரேக்க மொழிபெயர்ப்புக்களாயினும் நகைச்சுவை செறிந்தவை யென்றும் சொன்னயம் உடையவையென்றும் தெரிகிறது. நாவியஸ் ஸ்கிப்பி யோவை வஞ்சப்புகழ்ச்சிசெய்து கிந்தித்தமையால் உரோ மாபுரத்தினின்றும் அகற்றப்பட்டான். இவன் வனவா சத்தை உற்றிக்கா நாட்டிற் கழித்து ஒரு காப்பியத்தை இயற்றினன். அக் காப்பியமே இலத்தீன்மொழியில் முதன்முதல் எழுதப்பட்ட காப்பியமாகும். அக்காப்பியம் முதற்பினீசியப்போரை வருணிக்கின்றது. அது இக் காலத்திற் கிடைக்கின்றிலது. வேசிலியஸ் என்னும் புல வன் ஏனிட்காப்பியத்தில் அக்காப்பியத்திலிருந்து சில காட்சிகளை எடுத்தோ தினனென ஆராய்ச்சிவல்லோர் செப்புகின்றனர். டைடோ என்னும் தலைவியது காதை அந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டதெனச் சொல்லுகிருரர் கள். நாவியஸ் கிரேக்கமொழிக் கலப்பைத் தடுக்க முயன்றனனென்று அவனது ஞாபகச்சின்னமாக வரைந்த கல்வெட்டொன்ருரல் தெரிகிறது.
இலத்தீன் நாடகங்கள் விழாக்காலங்களில் இத்தாலியதே சக்தார் கூடிக் களித்தனர். அக்காலங்களில் நகைச்சுவை விரவிய இன்ப வியல் நாடகங்கள் நடிக்கப்பட்டன. எற்றுறியநாட்டு நாடகங்கள் காமச்சுவை மிகுந்தவையெனவும் கம்பேனிய நாட்டு நாடகம் கலைச்சுவைமிகுந்து விளங்கியவையென வும் இத்தாலியாதேசத்தில் இவ்விருவகைக் கூத்துக்களும் நடிக்கப்பட்டனவெனவும் அறியக்கிடக்கிறது. இத்தாலி யரால் நகைச்சுவை பெரிதும் போற்றப்பட்டதாகையால் ஏனையசுவைகள் விரவிய நாடகங்கள் விருத்தியடைய ఎమఓు. இலத்தீன் நாடகங்கள் சொன்னயம் பொருண யம் இல்லாதவையாகும்; படிப்பினைகளையும் ஒழுக்க மேன்மைகளையும் புகட்டாமல் நகைச்சுவையின் பாறபடும்
விகடச்சுவை ஒன்றையே அவை போற்றின. கி. மு.

Page 148
262 உலக வரலாறு
363-ல் அரசாங்கத்தினர் ஒருநாடகவரங்கை நிறுவினர். அன்ருேனிக்கஸ் காவியஸ் முதலியோர் நாடகங்களை அந்தச் சாலையில் நடிப்பித்துக் காட்டினர். என்னியஸ் என்னும் புலவன் பழங்கதைகளை நாடகமுறையாக எழுதினன். துன்பவியலைக் கூறும் நாடகங்களை உரோமர் பொருட் படுத்தவில்லை; கதை தழுவிவரும் கூத்திலும்பார்க்க விஞ் சைக்கூத்து, கயிற்றரட்டம், விலங்குவேட்டை, மற்போர், வாட்போர் முதலியவற்றை மிகவும் விழைந்தனர். உரோ மர் முற்காலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியில்லாத வர்களாகையால் வீண் விளையாட்டிற் பொழுதுபோக்கி னர்கள்.
கி. மு. 254-184 மக்கியஸ் புளோற்றஸ் என்பான் மா விற்குங் தொழிலால் தன் வாழ்க்கைக்குவேண்டும் பொருளை ஈட்டினன். ஒழிவு நேரங்களில் பல நாடகங் க3ள இயற்றினன். அந்நாடகங்களுள் இருபது நாடகங் கள் கிடைக்கின்றன. அவை கிரேக்க மொழிபெயர்ப்பென ஆக்கியோன் எழுதிவைத்தனன். அந் நாடகங்கள் விகடச்சுவைசெறிந்தவையாகையால், கள்வர் வீண்செல வுக்காரர் ஏமாற்றுங் காதலர் மனைவியின் கற்பைச் சமு சயிக்கும் கணவர் கயவர் முதலியோரே அவற்றில் பாத்திரங்களாயினர். இல்வாழ்க்கைக் கதைகளே நடிக்கப் பட்டன. அந்நாடகங்கள் அறிவை வளர்க்கவில்லை. அன்றி யும், அந்நாடகங்கள் உண்டுடுத்துப் புணர்ந்து களித்தலே இல்வாழ்க்கையின் நோக்கமென வற்புறுத்தின. நாடகங் களில் கிரேக்கமொழிகள் பல எறின. இலத்தீன் நாட கங்கள் கிரேக்க நாடகங்களளவு சிறப்புடையனவல்ல வென்று கூறலாம்.
இலத்தீன் உரைநூல்கள் நாகரிகமடையாத நாடுகளில் உரைநூல் அருமை யாகவே இயற்றப்படும். பண்டைக்காலம் செய்யுள் வளர் தற்கேற்ற காலமாதலின் உரைநூல்கள் பெருகவில்லை. பண்டைக்காலத்தோர் தோற் புத்தகங்களிலும் ஏடுகளி

கமவியக்கமும் உண்ணுட்டுக் கலகமும் 263
லும் எழுதினராகையால் உரைநூல்களை எழுதவில்லை. பேவியஸ் பிக்ற்றர், சின்சியஸ் அலிமென்றஸ் என்னும் இருவர் உரோமாபுரத்தின் வரலாற்றைக் கிரேக்கமொழி யில் எழுதினர்கள். அவர் நூல்கள் வரலாற்றுமுறையாக உரையாமல் சில போர்க்குறிப்புக்களையே நுவலுகின்றன. சமயக்கிரியைகள் விழாக்கள் முதலியவற்றைப்பற்றிச் சில குறிப்புக்கள் குறிக்கப்பட்டன. காரண காரிய முறை யாகச் சரித்திரங்கள் ஆராயப்படவில்லை. தோற்புத்தகங் களே உரோமருடைய ஏடுகளென்பது அறியற்பாலது. இவ்வரலாற்றில் கி.மு. 203-ஆம் ஆண்டுக்கு முன்னிருந்த புலவர்களைப்பற்றியே செப்பினுேம், பெரும்புலவர்கள் தோன்றியகாலம் பிற்காலமாகையால் இலத்தீன் செம் மொழிநூல் வரலாற்றைப் பின்னர்க் கூறுவோம்.
8-ம் பாடம்-கமவியக்கமும்
உண்ணுட்டுக் கலகமும்
உரோமர் கி. மு. 2-ஆம் நூற்ருரண்டில் இத்தாலியா தேசம் முழுவதும் பரவியிருந்தமையால் வகுப்பினர்சபை அடிக்கடிகூட வசதியில்லாதிருந்தது. மேன்மக்கட்சபை பல அதிகாரங்களையும் உரிமைகளையும் கவர்ந்தது. பொரு ளிட்டலும் காத்தலும் வகுத்தலும் மேன்மக்கட்சபையின் உரிமையாயின. சமயக்கிரியைகள் வழிபாடு முதலியவற் றின் பிரமாணங்களும் மேன்மக்களின் கொள்கைப் படியே விதிக்கப்பட்டன. போர்ப்படை சேர்ப்பதும் தலைவரை நியமிப்பதும் சமாதான உடன்படிக்கைகள் செய்லுதுமாகிய பல அதிகாரங்களையும் மேன்மக்கட் சபையே நடத்தியது. மேன்மக்கட்சபை மேன்மக்களின் நன்மைகளையே கருதியதொழியப் பொதுமக்களின் முன் னேற்றத்தைப் பொருட்படுத்தவில்லை. கீழ்மக்கள் மேன் மக்களோடு கலகப்பட்டுக்கொண்டே யிருந்துவந்தனர்.

Page 149
26红 உலகி வ்ரல்ாறு
கி. மு. 180-ஆம் ஆண்டு வில்லியா அனுஸிஸ் என்பவ னுடைய கட்டளையால் போரில் சேவியாத பத்துக்குடிகள் அரசாங்கத் தலைவராகம்கும் உத்தியோகத் தராதற்கும் உரிமையுடையரல்லர் எனத் தீர்மானஞ் செய்யப்பட்டது. அன்றியும் முதன்முதல் பொருட்கணக்கராகி இருவருடம் கழிந்தபின் கீழ்த்தலைவராகியோரே பின் இருவருடம் கழிந்தபின் இணைத்தலைவராதற்கு உரிமையுடையோ ரெனவும் தீர்மானிக்கப்பட்டது. ஒவ்வொரு உத்தியோ கத்தையும் நடத்தியபின் இரண்டுவருடகாலம் கழிந்த பின்னரே ஒருவன் மற்றொரு உயர்ந்த உத்தியோகத்த கைத் தெரிந்தெடுக்கப்படலாம். ஒருவன் பொருட் கணக்கணுதற்கு 28-ஆண்டு செல்லவேண்டுமாதலால் இணைத்தலைவன் ஆதற்கு 34 வயதினனுதல்வேண்டும்.
இனி ஹனிபாலின் யுத்தகாலத்தில் வயல்கள் செய் கையின்றிப் பாழாகியமையாலும் கிராமங்கள் எரிக்கப்பட் டமையாலும் கமக்காரர் தம் கிலைகெட்டுக் குன்றினர். சிறு கமக்காரர் குன்ற, மேன்மக்கட் செல்வர்கள் வயல் க3ளப் பெற்றுப் பயிர்விளைவியாமல் ஆடு மாடு மேய்ப்பிக் கத் தொடங்கினர்கள். அடிமைகளையே மேய்ப்போராக அமைத்தனராகையால் சிறு கமக்காரர் தொழிலற்றனர். அடிமைகளும், கீழ்மக்களும் ஊண் உடை துயிலின்றி அஞருற்றுத் திரிந்தனர். அ டி மை க ள் மிக மலிவாகக் கிடைத்தனராகையால் மேன்மக்கள் நூற்றுக்கணக்கான அடிமைகளை வைத்திருந்தனர். அடிமைகள் மலியக், கூலிக்கு வேலைசெய்து வாழ்ந்தோர் தெருக்களில் முயற்சி யின்றி அலைந்து திரிந்தனர். இங்கினம் சிறு கமக்காரர் நிலமிழந்து தொழிலற்றுக் கடன்பட்டுச் சிறைச்சாலையில் வருந்தினர். தொழிலற்றே ரே நகரவீதிகளில் உலாவித் திரிந்தனர். இத்தாலியா தேசத்துப் பல நாடுகளிலும் தொழிலற்ற கீழ்மக்கள் உரோமாபுரத்துக்குச் சென்று செல்வர்களிடம் ஊண் உடை முதலியவை பெற்றுத் தெருக்களில் துயின்றனர். இத்தகையோரின் பழக்கவழக்

கமலியக்கமும் உண்ணுட்டுக் கலகமும் 265
கங்கள் கெடுதல் ஆச்சரியமன்று. இத்தகையோர் பொரு ளுக்காக எத்தன்மையான தீய செயல்களையும் செய்யும் தீவினையாளராயினர். தெருக்களில் வசிக்கும் மக்கள் தமக்கு ஊணும் உடையும் விளையாட்டுக் காட்சியும் அளித் தாற்போதுமெனத் தெருக்களில் இரந்து திரிந்தனர். தலைவராவோர் தெருவில் வசிக்கும் மக்களால் தாம் தெரிக் தெடுக்கப் பெறுதற்காக அவர்களுக்குத் தேர்தல் நிகழுங் காலத்தில் உணவூட்டியும் காட்சிகள் காட்டியும் இன்புறு வித்தார்கள். கொலைக்குத் தீர்க்கப்பட்டோர் புலி சிங்கம் கரடி முதலிய விலங்குகளின் மத்தியில் இடப்பட்டவராய் வருந்துவதை உரோமர் பார்த்துக் களித்தார்கள். வாட் போர்க்காட்சி காண்பதற்காக அடிமைகளை வாட்போரிற் பழக்கினர்கள். கீழ்மக்கள் இத்தகைய வீண்விளையாட்டுக் களைக் கண்குளிரக்கண்டு காலம் கழித்தனர். இவ்வாறு தெருவில் வசிக்கும் மக்கள் மிகப்பெருகிக் கலகம் விளைத் தற்குத் தருணம்பார்த்திருந்தனர். மேன்மக்கட் சபையின ரைக் குற்றங்கூறி வைதற்கும் முற்பட்டனர். கீழ்மக்க ளின் நிலைமையையுணர்ந்த தேசநேசர் சிறுகமங்களில் அவர்களைச் சிறு கமக்காரராக நாட்டமுயன்றனர்.
உரோமருடைய ஆட்சி நாடுகள் சிற்சில உரிமைகளை மாத்திரம் பெற்றுத் துணைநாடு, கிறைதரும் நாடு, சுயாதீன நாடு எனப் பல பிரிவினவாயின. சில நாடுகள் சுயாதீன நாடுகள். சுயாதீனமாடுகள் துணைநாடுகள் எனவும்படும். துணைநாட்டோர் தத்தம் ஊருக்கேற்ற கட்டளைகளை ஆக்கி உண்ணுட்டு அரசியலை நடத்தினர்கள். துணே நாடுகள் திறைகொடாதிருத்தற்கு உரிய உடன்படிக்கையுடையன. சிற்சில துணைநாட்டோர் திறைகொடாதாராயினும் எழுத்து உடன்படிக்கையால் உரிமை பெருமையால் தம் சுயாதீ னத்தை இழப்பினம் இழப்பர். மேன்மக்கட்சபை ஆட்சி நாடுகளில் தாம் எண்ணியவாறு அரசு செலுத்தலாம். திறையளிக்கும் நாடுகளே ஆளும் தலைவர்கள் தாம் எண் ணியவாறு ஆட்சிசெய்து பொருளிட்டலாம். திரவியம்
84

Page 150
266 உல்க் வ்ரீலாறு
தேடல் நோக்கமாக இவ்வாட்சிநாடுகளுக்கு உரோமர்தலை வர் செல்லவிரும்பினர். இவ்வாட்சிநாடுகளில் உரோமர் குடியேறலாம். உரோயருடைய ஆட்சி நாடுகளே ஆண்ட தலைவர்கள் சனங்களே நனிவருத்திப் பொருள் சேகரித்த மையால் அப்படித் திரவியந்தேடல் தண்டிக்கப்படத்தக்க செயலென ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. உரோமர் தம் ஆட்சி நாடுகளில் அரசிறைகளையும் கடமைகளையும் கூறி விற்றனர். வணிகர் அரசாங்கத்தினரிடம் கடமை வாங்கும் உரிமை பெற்றுப் பொதுமக்களிடம் அரசிறை களைத் தாம் பெற்றனர். கீழ்மக்களைப்போல் இத்தாலியா தேசத்தோரும் மிடியுற்றனர். இத்தாலியநாடுகளில் சிறு கமக்காரர்களைக் குடியேற்றத் தேசத்தொண்டர் பலர் எழுகதனா.
கி. மு. 149-ஆம் ஆண்டு இறைபீறியஸ் கிராக்கஸ் என்னும் கீழ்மக்கட் காவலனுெருவன் கமக்காரர் நயம் கரு தும் பிரேரணையொன்றைப் பிரேரித்தான். அது, செல் வரின் கமங்களில் தொழில்செய்வோரில் இரண்டில் ஒரு பங்கினர் சுயாதீனமுடைய உரோமராக இருத்தல்வேண்டு மென்பதும் பொதுமக்களுக்குப் பொது நிலங்களைப் பங் கிட்டுக் கொடுத்தற்கு ஒரு சபை ஏற்படுத்தப்படுமென் பதும், ஒரு உரோமனும் ஐந்நூறு ஏக்கர் கிலத்திற்கு மேல் வைத்திருக்கப்படாதென்பதும் ஆம். இப்பிரே ரணையை மேன்மக்களின் தூண்டுகோலால் ஒக்ராவியஸ் என்னும் கீழ்மக்கட்காவலன் எதிர்த்தான். யாதியாது கீழ் மக்கட் காவலன்ஒருவனுல் தடுக்கப்படுகிறதோ அது அது பிரமாணமாகாது என்ப்து உரோமர் அரசியல் முறையாக லாற் கிராக்கஸ் ஒன்றுஞ்செய்ய இயலாமல் முனிந்து தலை வர்களின் பிரேரணைகள் யாவற்றையுந் தடுத்தான். இது கிற்க, பேர்காமத்து மன்னன் அத்தாலஸ் தன் மரண சாதனத்தால் தனது நாட்டை உரோமருக்கு அளித்தான். கிராக்கஸ் அங்காட்டை உரோமர் படைவீரருக்கு அளிக்க

கமவியக்கமும் உண்ணுட்டுக் கலகமும் 267
எண்ணினன். கமவியக்கத்தைத் தொடங்கிப் பொதுமக்க ளுக்காக முயன்றமையால் பொதுமக்கள் அடுத்தவாண்டும் தன்னைக் காவலனுகத் தெரிந்தெடுப்பார்களெனக் கிராக்கஸ்" எதிர்பார்த்திருந்தான். கசிக்கா என் போன் தேசநேசன் கிராக்கனைக் கொன்ருரன். கி. மு. 131-ஆம் ஆண்டில் அத் தாலஸ் என்போன் மகன் அரிஸ்தோனிக்கஸ் பேர்காமம் தனக்கு உரியதெனக்கூறிப் போருக்கு எத்தனித்தான். லூகியஸ் கிருசஸ் என்னும் உரோமர்ச8லவன் பேர்காமத் துக்குச் சென்று பொருது தோல்வியடைக் தான். அடுத்த ஆண்டு பெர்ப்பென்னு என்பான் சென்று பேர்காமத்தை ஆட்சி நாடாக்கினன். கி. மு. 123-ஆம் ஆண்டு கிராக்கஸ் என்பவன் மகன் காயஸ்கிராக்கஸ் என்பான் தந்தையெடுத்த தொண்டைத் தான் செய்யத் தொடங்கினன். காயஸ்கிராக் கஸின் பிரேரணைகள் வருமாறு:-
1. அரசாங்கத்தினர் பொதுஜனங்களுக்குத் தானி யத்தைக் கடைவிலையிலும் குறைந்த விலைக்கு விற்க வேண்டும்.
2. கமப்பிரமாணம் கீழ்மக்கட்சபையால் அங்கீ கரிக்கப்பட்டபின் மேன்மக்கட்சபையால் அங்கீகரிக்கப் படவேண்டும்.
3. நல்கூர்ந்த இத்தாலியரை இராறந்தம் காதாக் கோ முதலிய இடங்களிற் குடியேற்றவேண்டும்.
4. படையிற் சேவைசெய்யுங் காலம் குறைக்கப்பட வேண்டும்.
5. பொருள்வரிகளைக் கடமைக்கு மேலதிகமாகப் பெற்று நாட்டோரைத் துன்புறுத்தும் தலைவர்களைத் தண்டிக்க வேண்டும்.
6. சின்னுசியா நாட்டு அரசிறைகளை உரோமாபுரத் தில் விற்கவேண்டும். (காயஸ் கிராக்கஸ் இடைப் பிரிவின

Page 151
268 உலக வரலாறு
ரைக் கீழ்மக்கள் பக்கத்துக்குத் திருப்புதற்காக இந்த ஆருரக் தீர்மானத்தைப் பிரேரித்தான்).
7. இத்தாலியருக்கு உரோமர்குடியாகும் உரிமை களே அளிக்கவேண்டும். (இந்த ஏழாம் தீர்மானத்தால் இடைப்பிரிவினர் sirroio GTrás6ño என்பவனுக்கு விரோதிகளானர்கள்.)
இத்தாலியருக்கு உரிமையளித்தலை உரோமர் கீழ்மக் கள் விரும்பவில்லை. கி. மு. 121-ஆம் ஆண்டு உரோமர் காயஸ்கிராக்கனைக் கலகமொன்றிற் கொன்றனர். காயஸ் இறந்தபின் மேற்காட்டிய பிரேரணைகளை மேன்மக்கள் பொருட்படுத்தாது விட்டனர். காயஸ் தூர்த்தரையும் தெருவில் வசிக்கும் மக்களையும் கமக்காரராக்க முயன்று தன்னுயிரையும் இழந்தான்.
IDIs Li
உரோமர், கீழ்மக்கள் மேன்மக்கள் என இருகட்சி யினராகப் பிரிந்து கலகப்பட்டுப் போர்புரியவும் தொடங் கினர். கீழ்மக்கட்கட்சி குடியரசுக்கட்சி யெனப்படும். குடியரசுக்கட்சியினருள் மாரியஸ் என்னுந் தலைவன் பெரிய யுத்தவீரன். கி. மு. 111-ஆம் ஆண்டு உரோமர் நுமிடியாநாட்டை யுகுர்த்தா அட்கேபால் என்னுஞ் சகோதரர் இருவருக்கும் அளித்தாராக, யுகுர்த்தன் உடன்பிறந்தானுக்குரிய நாட்டை வெளவிக் கேட்டா வென்னும் நகரைச் சூழ்ந்து அட்கேபாலைக் கொன்று துமிடியா நாடு முழுவதையும் ஒருகுடைக்கீழ் ஆண்டான். மேலும் "அவன் பக்கஸ் என்னும் மன்னன் மகளை மணந்து காதாக்கோ நாடொழிந்த லிபியா நாடு முழுவதையும் ஆட்சிசெய்தான். உரோமர் மெற்றேலஸ் என்னும் தலை வனை அவர்களே அடக்கும்படி அனுப்ப யுகுர்த்தா சமா தானம் வேண்டினன். மெற்றேலஸ் மறுத்துப் போரை நடத்தினன். கி. மு. 108-ஆம் ஆண்டு யுகுர்த்தா குதிரைப் படைகளை உபயோகித்து உரோமரை வென்ருரன். குடியர

கமவியக்கமும் உண்ணுட்டுக் கலகமும் 269
சுக்கட்சி தலையெடுத்தமையால் மாரியஸ் கி. மு. 107-ஆம் ஆண்டு இணேத்தலைவனனன். அவன் யுகுர்த்தாவை அடக் குதற்குப் படையோடு சென்ருரன். சுல்லா என்னும் வீரன் உரைத்த உபாயங்களால் மாரியஸ் என்னும் தலைவன் படை அழியாமல் தப்பியது. கி. மு. 105-ஆம் ஆண்டு மாரி யஸ் யுகுர்த்தாவின் இவளிப் படைக்கு உரோமர் குதிரைப் படை நிகராகா தெனப் படைத்திறங் தெரிந்தாணுதலின் சூழ்ச்சியால் யுகுர்த்தாவைப் பிடித்தற்குச் சுல்லா என்பவ னேடு ஆலோசித்தான். மாமன் பக்கஸ் மூலமாக மாரியஸ் யுகுர்த்தாவை ஒரு கூட்டத்திற்கு அழைத்துச் சிறைப் படுத்தினன். அவ் வீரச்செயல் செய்தபின் மாரியஸ் ஊர் வலஞ்செய்து கொண்டாடினன்.
f[i][i].fluí
கி. மு. 113-ல் தானியூபி நதிக்கரையில் வசித்த கிம்பிரியர் தம்மூரைத் துறந்து மேற்கு நோக்கிச் சென்று வடவித்தாலியில்தோன்றி உரோமர்தலைவனை வென்றனர். வென்றும் இச்தாலியாவுட் புகாமல் ஏகினர்கள். கி. மு. 109-ஆம் ஆண்டு யூனியஸ் சில்வானுஸ் என்பான் கிம்பிரிய ரை எதிர்த்தானுக, கிம்பிரியர் நாடு இரந்தனரென்றும் சில் வானுஸ் நகைத்துப் பழித்தானென்றும் கூறுப. கி. மு. 105-ஆம் ஆண்டு லோங்கினஸ் கசியஸ் என்பான் கிம்பிரி யரோடு பொருது மாண்டான். கிம்பிரியர் ஸ்கோறஸ் என் னும் உரோமர் தலைவனையும் வென்றனர். பின்பு மச்சிமஸ், காய்ப்பியோ என்னும் உரோமர் தலைவரையும் வென்றனர். பின்பு மச்சிமஸ், காய்ப்பியோ என்னும் இரு தலைவர்களையும் கிம்பிரியர் அரோசியக்களத்தில் வென்று ஐபீரியதேசம் சென்றனர். தோல்விக் குற்றங் காரணமாகக் காய்ப்பியோவினது நிலங்களே மேன்மக் கட்சபை கவர்ந்தது. கிம்பியர் ஐபீரியரால் துரத்தப்பட்டு வடக்குக் கல்லியநாடு புக்குப் பெல்காயி நாடடைந்து ஆங் கிருந்து துரத்தப்பட்டு இத்தாலியாவைப் பின்னரும் நோக்கினர்.

Page 152
270 உலக வரலாறு
கி. மு. 102-ழ் ஆண்டு நான்காம்முறை மாரியஸ் இணைத்தலைவனுகத் தெரிந்தெடுக்கப்பட்டான். கிம்பிரியர் மூர்க்கரா கையால் உரோமசேனை நடுக்க முற்றதெனினும் மாரியஸ் சேனையை உற்சாகப்படுத்திச் சென்று ருேரன் நதிக்கரையில் கிம்பிரியரைப் புடைத்துக் கலைத்தான். கிம் பிரியர் ஒரு பகுதியார் போ நதிக்கரை யடைய, தலைவன் கற்ருரலஸ் என்பான் தானையோடு புறங்கொடுத்தான். கி. மு. 101-ஆம் ஆண்டு மாரியஸ் கிம்பிரியர் படையை வென்று நாசமாக்கினன். இவ்வெற்றிகளால் தலைவன் மாரியஸ் புகழ்பெற்ருரணுகிப் பலமுறை இஃணத்தலைவ னைன். மாரியஸ் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தோனகை மால் குடியரசுக் கட்சியினர் தலையெடுத்தனர். மாரியஸ் தலைமை வகித்தும் கீழ்மக்களுக்கு ஒரு நன்மையுஞ் GsFuů nasledo&ad.
கி. மு. 104-ஆம் ஆண்டு அடிமைகள் தம் தலைவர்கள் செய்யும் இடும்பைகளைத் தாங்கமுடியாமல் போர்க்கெழுந்து மாரியஸ் என்னும் தலைவனுல் அடக்கப்பட்டனர். சற் றேனியஸ் என்பான் கீழ்மக்களைக் குடியேற்ற வேண்டு மெனப் பிரேரித்தான். மாரியஸ் தன் கட்சியை எதிர்த்த சற்றேனியஸ் என்னும் தேசத்தொண்டனைக் கொன்ருரன். இ. மு. 95.ஆம் ஆண்டு இத்தாலிய ரெல்லாம் உரோமா புரத்தைவிட்டு நீங்கும்படி மேன்மக்கட் சபையோர் தீர் மானித்தனர். கிராக்கஸ் என்னும் கமவியக்கத் தலைவனை எதிர்த்துக் கொன்ற டுறுசுஸ் என்போன் மகனன டுறுசுஸ் என்பான் குடியரசுக் கட்சித் தொண்டனகி அரசாங்கத்தினர் கீழ்மக்களுக்குத் தானியக்கொடை குடி நிலமளித்தல் குடியோம்பல் முதலியன செய்யவேண்டு மெனப் பிரேரித்தான். டுறுசுஸ் இத்தாலியர் யாவர்க்கும் உரோமர் குடியாகும் உரிமைகளை அளிக்கவேண்டு மெனப் பிரேரித்தமையால் பொதுமக்கள் அவனை வெறுத்தனர். இஃதுணர்ந்த மேன்மக்கள் பொதுமக்களை ஏவிக் கிளர்ச்சி பண்ணி டுறுசுஸ் என்னும் தொண்டனைக் கொன்ருரர்கள்.

கமவியக்கமும் உண்ணுட்டுக் கலகமும் 271
sù CLIri di qp. 90-88 இடைப்பிரிவினரும் கீழ்மக்களும் ம்ேன் மக்களும் இத்தாலியக் குடிகளுக்கு உரோமர்குடியுரிமை அளித்தா னெனச் சினந்து சனசமுக முன்னேற்றத்துக்கு ஈடு பட்டு உழைத்துவந்த டுறு சஸ் என்பவனைக் கொன்ருரர்க ளாக, இத்தாலியர் இனித் துயரம் சகிக்கமுடியாதென வெண்ணிப் போர்க்கெழுந்தனர். டுறுரசுஸ் என்னும் தொண்டனுடைய துணேவரை மேன்மக்கள் விசாரணை செய்து அரசபக்தி யில்லாதாரெனத் தண்டித்தனர். அக் கொடுங் கோன்மையால் மேன்மக்கள் இத்தாலியரது கோபாக்கினிக்கு நெய்வார்த்தார்களெனக் கூறலாம்,
கடும்போர் தொடங்கிற்று. தென் இத்தாலியரும் மத்திய இத்தாலியரும் எங்கும் போர்க்கோலத்தோடு திரண்டனர். கம்பேனியாவிலும் எற்றுாறியாவிலும் நிலங் களையுடைய செல்வர்கள் மிகுந் திருந்தமையால் அந்நாட் டோர் அமைதியாகவே யிருந்தனர். மேன்மக்களுக்கு எதிராக எழுந்த இத்தாலியர் ஒரு ஐக்கியக் கூட்டமாகிக் கோர்ப்பினியத்தைத் தலைநகராக்கிச் சபையொன்றை நிறுவித் தலைவர்களையும் தெரிந்தெடுத்தனர். பம்பாடி யஸ் சைலோ என்னும் ஒரு மார்சியன் மத்தியநாடுகளுக் கும், பப்பியஸ்முயிற்றிலஸ் என்னும் ஒரு சம்கிதியன் தென் இத்தாலிய நாடுகளுக்கும் தலைவராக நியமிக்கப் பட்டனர். மத்தியநாட்டுத் தலைவனை எதிர்த்துச் சயித் தற்கு றுற்றிலியஸ் லுப்பஸ் என்பவனையும் தென்இத் தாலியநாட்டுத் தலைவனச். சயித்தற்கு யூலியஸ்கைசரை யும் மேன்மக்கட் சபையோர் நியமித்தனர். வடக்கி லிருந்த லுப்பஸ் போரிற் றுஞ்சினன். தெற்கிலிருந்த யூலியஸ்கைசர் தோல்வி யடைந்தார். தென் இத்தாலியத் தலைவன் முயிற்றிலஸ் மேன்மக்கட்சபையினர்க்கு நட் பாண நகரங்களே நெருக்கி வருத்தினன். மேன்மக்கள் இத்தாலியருக்கு உரிமைகளை அளிக்காவிட்டால் அவர்

Page 153
372 உல்க வரலாறு
களைத் தாம் ஆளவியலாதென உணர்ந்து சில உரிமை களை அளித்தார்கள். இதுகாறும் அரசாங்க விரோதிகளை விசாரணைசெய்யும் உரிமை இடைப் பிரிவினரிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சிறு சபையின் உரிமையாயிருங் தது. இச்சபையினரைத் தெரிந்தெடுக்கும் உரிமை பொது ஜன சபைக்கு உரியதாகுமெனப் புளோற்றியஸ் பிரே ரித்தான். அவ்வளவில் பூலியஸ்கை சரது தீர்மானத்தால் தெரிவுரிமை இத்தாலிய ரெல்லாருக்கும் அளிக்கப்பட்டது. மேற்கூறிய தீர்மானம் செய்யப்பட்டு இரண்டுமாதங்கள் செல்லுமுன் இத்தாலியர் யாவராயினும் பகைதுறந்து உரிமைகளை வேண்டுவாராயின், உரிமைக்ள் அளிக்கப் படுமெனப் புளோற்றியஸ் பைப்பிரியஸ் என்பான் தீர் மானித்தான்.
கி. மு. 89-ஆம் ஆண்டு, இஃணத்தலைவன் பம்பியஸ் ஸ்ருரபோ அஸ்கூலம் நகரைப் பாழாக்கினன். படைத் தலைவனன சுல்லா கம்பேனியா நாடடைந்து முயிற்றிலஸ் என்பவனைச் செற்ருரனுக, பம்பாடியஸ் என்பவன் இத் தாலியப்படை முழுவதற்கும் தலைமை பெற்றுப் போரை நடாத்தினன். கி. மு. 88-ஆம் ஆண்டு, இத்தாலியப்படை வலிகெட்டுத் தோல்வியடைந்தது. பம்பாடியஸ் என்பவ னும் இறந்தான். இவ் வித்தாலியிக்கட்சி யுத்தத்தின் Lu Yeo) 35 இத்தாலியக்குடிகள் யாவரும் தாம்தாம் கவர்ந்த பல உரிமைகளையும் பெற்றனர். 300,000 வீரர் மாண் டார்களென்றும் 80,000 குடிகள் உரிமை பெற்றனரென் மும் வரலாறுகள் கூறும். யுத்தமுடிவில் இத்தாலியர் உரோமசாதிகளுள் எட்டில்மாத்திரம் சேர்க்கப் பட்டன ராகையால் கட்சிக்கலகம் பின்னரும் இடையிடையே மூண்டது.
கோணிலியஸ் சுல்லாவை மேன்மக்கள் மிதிருடாற் றிஸ் என்னும் மன்னனுக்கு எதிராகப் போர்புரியும்படி ஏவினர்கள். மாரியஸ் தன்னைத் தலைவனுக நியமிக்க

கமவியக்கமும் உண்ணுட்டுக் கலகமும் 273
வில்லையெனச் சினந்தான். சுல்பீசியஸ் றுரவஸ் என்னும் மேன்மகனுெருவன் இத்தாலியரை 35 சாதிகளிலுஞ் சேர்க்கவேண்டுமெனவும் சுல்லாவை நிறுத்தி மாரியஸைத் தலைவனக கியமிக்கவேண்டுமெனவும் பிரேரித்தான். இப் பிரேரணையை இணைத் தலைவரும் மேன்மக்களும் எதிர்த் தார்களாயினும், இத்தாலியர் ஆரவாரத்துடன் திரண்டு
ரேரணையைத் தீர்மான மாக்கினர்கள்.
கோலா என்னும் இத்தாலிய நகரை முற்றுகையிட் டிருந்த சுல்லா, குடியரசுக்கட்சியினரை அடக்குதற்குப் படையோடு உரோமாபுரத்திற்குச் சென்று சுல்பீசியஸ் றுTவஸ் என்பவனைக் கொன்று மாரியஸ் என்னும் வீரனைச் சிறைப்படுத்தினன். சிறையிலிருக்கும் மாரியஸைக் கொல் லும்படி கிம்பிரிய அடிமையொருவனைச் சுல்லா ஏவினன். அவ்வடிமை ஈட்டியை ஓங்கிச்செல்ல, மாரியஸ் ʻʻiğunu ar umr கிம்பிரியரைச் செற்ற என்னேக் கொல்லவந்தாய்?" என உரப்ப, அடிமை நடுநடுங்கித் தீரும்பினன். மாரியஸைக் கொல்லுதல் தேவருக்கு விருப்பமில்லையென எண்ணி மேன்மக்கள் அவனை விடுதலையாக்கினர். கி. மு 88-ஆம் ஆண்டு சுல்பீஸிeஸினுடைய தீர்மானம் பிரமாணமன் றென்று சுல்லா அறிக்கையிட்டுக் கீழ்மக்கட் சபையின் பிரேரணை பிரமாணமாதிற்கு மேன்மக்கட் சபையால் அங் கீகரிக்கப்படவேண்டுமென்றும் அறிவித்தான்.
அவ்வருடம் சுல்லாவின் கட்சியை எதிர்த்த தலைவன் சின்ன என்பவன் இணேத்தலைவனகத் தெரிபட்டான். சுல்லா சின்னசியா யுத்தத்தை நடாத்தற்குப் புலம் பெயர்ந்தானுக, சின்ன நாட்டினின்றும் அகற்றப்பட்ட குடியரசுக் கட்சியினருக்குத் தம் நாட்டிற்குத் திரும்புவ தற்கு உத்தரவளிக்க முயன்ருரன். மற்ற இணைத்தலைவன் ஒக்ரேவியஸ் அவனை எதிர்த்தான். இணைத்தலைவர் இருவ ரும் கடைவீதிகளிற் கலகப்பட்டனர். கலகத்திற் சின்ன கட்சியார் தோல்வியடைய, அரசியன்முறைகட்கு மாருக
85

Page 154
27. உலக வரலாறு
மேன்மக்கள் சின்னவை இணைத்தலைமையைத் துறக்கும் படி ஏவினர். இத் தருணத்தில் நோலா நகரத்தை முற் றுகையிட்டிருந்த படை சின்னுவின் கட்சியைச் சார்ந்தது. வீரன் மாரியஸ் சின்ன கட்சியைச் சா. ர் ந் து தனது தானையை உரோமாபுரிவாயிலில் நிறுத்தினன். மேன்மக் கள் சின்னவையும் மாரியஸையும் குருதியாடவேண்டா மென வேண்டிக் தலைவர்கள் இருவரையும் நகரத்துள் ஏற் றனர். நகர்க்கதவைத் தாழிட்டு அடைத்தபின் குடியரசுக் கட்சியினர் . மேன்மக்களைத் தேடித் தேடிக் கொன்றனர். ஒக்ராவியல், வேர்செல்லாப் போர்வீரன் கற்றலஸ் முதலி யோருங் கொல்லப்பட்டார்கள்.
கி. மு. 87-ஆம் ஆண்டு மாரியஸ் ஏழாம் முறை இணைத் தலைவனுகத் தெரியப்பட்டான். மாரியஸ் சொற்பகாலத்தில் இறந்தானுக, சின்ன தலைவனகிச் சுல்பீஸியஸின் பிரமா ணங்களே நாட்டிச் சுல்லாவின் படைத் தலைமையை நீக்கு தற்குப் பிளாக்கஸ் என்னும் படைத் தலைவனைச் சின்னசி யாவிற்குப் போகும்படி கற்பித்தான். பிளாக்கஸ் என்ப வனுடைய படை தலைவனைப் பகைத்துச் சுல்லாவின் கட்சி யைச் சேர்ந்தது. சுல்லா தான் உரோமாபுரம் திரும்பு வான் என மேன்மக்கட்கு அறிவித்தான்.
கி. மு. 83-ஆம் ஆண்டு கோணிலியஸ் ஸ்கிப்பியோ சம்கிதியப் படையோடு சுல்லாவின்படையை எதிர்த்தான். சுல்லா 30000 படையோடு பிறண்டு சியத்தில் இறங்கி ஒரு தலைவனைப் புடைத்து மற்றைத்தலைவனைத் தன் கட்சியைச் சேரும்படி அழைத்தான். பம்பியஸ் என்னும் படைத் தலைவன் குடியரசுக்கட்சித் தலைவனுகிய நோர்பாலஸ் என் பவனை வென்ருரன். ஸ்கிப்பியோவின் படை சுல்லா கட்சி யைச் சார்ந்தது. கி. மு. 82-ஆம் ஆண்டு சுல்லா கம்பே னியா நாடடைந்து குடியரசுக்கட்சியினரை அடக்கி உரோ மாபுரத்துக்குச் சென்ருரன். குளுசியத்தில் கார்போ என் னுந் தலைவன் சுல் லாவோடு பொருது வென்றான். பின்பு

கமவியக்கமும் உண்ணுட்டுக் கலகமும்
கார்போவின் படையைச் சுல்லா வென்றன். சுல்லா சம் நிதியர் படையை வென்று உரோமாபுரத்தைக் காத்தது மன்றி கோலா நகரத்தையும் அடக்கினன். சுல்லா குடி யரசுக்கட்சியினரை அடியோடே அழித்தற்கு எண்ணி மேன்மக்கட்குப் பகையாக எழுந்த நாடுநகரங்களில் உரி யோரை விலக்கி அந்நாடு நகரங்களில் தனக்குரிய தொல் வீரரைக் குடியேற்றினன். மேன்மக்கள் காட்டை ஆளும் படி சுல்லாவைத் தனித் தலைவனுக்கினர்கள்.
சுல்லாவினுடைய ஆட்சியில் கீழ்மக்கட்காவலர் தெரிங் தெடுக்கப்படாமையால் சுல்லாவின் தனித் தலைமை கொடுங் கோன்மையெனக் கூறப்படும். சுல்லா தான் நினைத்த, வாறு பிரமாணங்களே ஆக்கிக் குடியரசுக்கட்சியினரைச் துன்புறுத்தினன். 5000 மக்களை அரசபக்தி இல்லாதா ரெனக் கொல்வித்தான்.
சுல்லாவின் தனித் தலைமை
சுல்லா கீழ்மக்கட் காவலரைக் கீழ்மக்கட் சபையில் யாதொரு தீர்மானமும் பிரேரிக்கக்கூடாதெனக் கட்டளை யிட்டான். அதனுடன் வீரர்சபையின் தீர்மானத்தைத் தடுக்கும் ஆற்றல் காவலர்க்கு இல்லையெனவும் மறுத்தான். இடைப்பிரிவினின்று தெரிந்தெடுக்கப்பட்ட சபைக்கு நீதி விசாரஃணசெய்யும் உரிமை இல்லையென மறுத்து, அவ் வுரிமை மேன்மக்கட் சபையினர்க்கே உரியதென “ஒரு பிர மாணத்தை ஆக்கினன். கொலை, களவு செய்யும் தீவினை யாளரைத் தண்டித்தற்குச் சில நீதிபதிகளையும், நிலங்கவர் தல் ஆசாரக் குற்றம் முதலியனசெய்தாரைத் தண்டித்தற் குச் சில நீதிபதிகளையும் ஏற்படுத்தினன். ஒரு தலைவரும் இரு தொழில்கள் செய்யக்கூடாதெனக் கட்டளை பிறப்பித் தான்.
கீழ்த் தலைவர் எண்மரை நகரத் தலைவராகவும் பிறநாட் டுத் தலைவராகவும் ஏற்படுத்தினன். ஒரு வருடங் கழிந்த பின் அவர்கள் ஆட்சி நாடுகளுக்குத் தேசாதிபதிகளாக

Page 155
276 உலக வரலாறு
அனுப்பப்படுவர் என்றும் அறிவித்தான். இத் தேசாதி பதிகள் செங்கோல் செலுத்துகின்ருரர்களோவென விசா ாஃண செய்தற்கு ஒரு சிறுசபை ஏற்படுத்தப்பட்டது. கி. மு. 79-ல் சுல்லா தன் சீர்திருத்த முறைகளை நாட்டிக் குடியரசுக் கட்சியினரை அடக்கினன். அடக்கியபின் கூமாயி நகரத்துக்குச் சென்று ஆறியிருக்க எண்ணினன்.
கி. மு. 78 - ஆம் ஆண்டு சுல்லா இறந்தானுக, லைப் பிடஸ் கீழ்மக்கட் காவலர்க்குப் பழைய உரிமைகளை அளிக்கவேண்டுமென்று பிரேரித்தான். அதனுடன் நாடு கடத்தப்பட்ட குடியரசுக்கட்சியினர்க்கு நாடு திரும்புதற்கு விடையளிக்க வேண்டுமெனவும், அரசாங்கத்தினர் வறி யோர்க்குத் தானியக் கொடையளிக்க வேண்டு மெனவும் பிரேரித்தான். மேன்மக்கள் தானியக்கொடையளித் தற்கு உடன்பட்டார்கள். லைப்பிடஸ் இஃணத்தலைவனுகத் தெரிந் தெடுக்கப்படாமையால் சாடினியாத் தீவுக்கேகி ஆங்கு அரசாங்க விரோதியாயிருக்கும் சேட்டோறியனுடைய கட் சியைச் சேர்ந்தான்.
குடியரசுக்கட்சி வலுத்தகாலத்திலும் கீழ்மக்கள் தாம் பெறவேண்டுய உரிமைகள் எல்லாவற்றையும் பெறவில்லை. கீழ்மக்கள் ஒழுக்கங்குன்றித் தூர்த்தராயும் தீவினையாள ராயும் குடியராயும் களியராயும் மடியராயும் வெறியராயும் வேடிக்கை விரும்பினராயும் சிற்றின்பம் விழைந்து ஊணுக் கும் வாட்போர்க் காட்சிக்குமாகத் தமது தெரிவுரிமைகளே அபேட்சகர்களின் நற்குணங்களையும் தேசாபிமானத்தை யும் தேராது செலுத்தித் தமக்கும் தமது சந்ததியாருக்கும் உரோமராச்சியத்துக்கும் உரோம நாகரிகத்துக்கும் கேடு விஜளத்தார்கள். மேன்மக்களும் தம் சாதியாரான கீழ்மக் களுக்கு உரிமைகளை அளியாமல் இறுதியில் அக்காரணத் தால் தமக்குங் கேடுவிளைத்துக்கொண்டார்கள்.
ஒரு சாதி முன்னேற்றமடைய வேண்டுமானல் அச் சாதியினரான மக்கள் யாவரும் ஒருங்கு தழைத்து ஓங்கும்

மிதிருடாற்றிஸ் 277
வழிவகைகளைத் தெரிந்து பொது நன்மைக்குரிய சனச மூகச் சீர்திருத்தங்களே ஏற்படுத்தவேண்டு மென்பது இக் கீழ்மக்கள் வாழ்க்கை வரலாற்ருரல் இனிது புலப்படு கின்றது.
9-ம் பாடம் - மிதிருடாற்றிஸ்
மீதிருடாற்றிய யுத்தம், 1, 11.
கி. மு. 95 - ஆம் ஆண்டு மிதிருடாற்றிஸ் என்பான் பொங்கஸ் என்னும் நாட்டிற்கு அரசனகி மிகவும் ஆற் றலுடையவனுய்க் கருங் கடற்கரை நாடுகளைத் தன் கப் பற் படையாற் கலக்கினன். அவன் கப்படோக்கிய நாட்டிற்குத் தன் மகனை மன்னனுக நியமிக்க, அக் நாட்டு மக்கள் உரோமருதவியோடு அரியோபாசனஸ் என் போன வேந்தனக ஏற்றர்கள். ஆர்மீனிய தேசத்து வேந்தன் இரைக்கிருனிஸ் மிதிருடாற்றிஸ் என்னும் மன்னனேடு ஒன்றுபட்டு அரியோபாசனஸ் என்போனைத் துரத்த, உரோமர் மீட்டும் அவனுக்குக் கப்படோக்கிய நாட்டரசுரிமையை அளித்தார்கள். கி. மு. 88 - ல் மிதிருடாற்றிஸ் தன் மகள் கிளியோபாத்திராவை ஆர்மீனிய தேச வேந்தனுக்கு மணஞ்செய்து தந்து அவனுடைய துணையைப் பெற்ருரன். மேலும், கடற்கள்வரையும் துணே வராக்கிக்கொண்டான். கிரேக்கரின் துணையையும் ஒற்ற ரால் உசாவினன். உரோமர் கீழ்த் தலைவன் ஆக்கூலி யஸ் என்போனே மிதிருடாற்றிஸ் வென்று சிறையிட்டா கை, சின்னசியா நாட்டோர் யாவரும் உரோமருக்குப் பகையாக எழுந்தனர். மிதிருடாற்றிஸ் 80,000 உரோமர் குடிகளைக் கொன்று கி. மு. 81 - ஆம் ஆண்டு பேர்கா மத்தைத் தன் தலைநகராக்கிக்கொண்டு கிரேக்கரை உரோமருக்கு விரோதமாகத் தூண்டினன். இவ்விவரங் களே அறிந்த மேன்மக்கட்சபையோர் மிதிருடாற்றிஸ்

Page 156
  

Page 157
280 உலக வரலாறு
வாள் வீரர் போர். கி. மு. 73-71.
கி. மு. 73 - ல் வாட்போர்ப் பயிற்சிக் கழகத்தில் பயிலும் வீரர் உரோமரோடு பகைத்தெழுந்து ஸ்பாடக்கஸ் என்னும் வீரனைத் தலைவனுக்கினர்கள். இஃதறிந்த அடி மைகளும் தங் தொழில் விட்டு வாட் படையினரோடு சேர்ந்தார்கள். கி மு. 71 - ஆம் ஆண்டு ஸ்பாடக்கஸ் தென் இத்தாலியா முழுவதிலும் தனது ஆணேயைச் செலுத்தினன். கிருரசஸ் என்னும் செல்வன் உரோமர் படைத் தலைவனகச் சென்று வாள்வீரரை வென்றன். பம்பீயஸ் தலைவனும் வாள்வீரரோடு பொருது வென்றன். கிருரசஸ் தலைவனும் பம்பீயசும் தத் தம் படையோடு உரோமாபுரத்திற்குச் சென்று மேன்மக்கட்சபையினரை வெருட்டினர்கள். பம்பீயஸ் கிருரசஸ் என்னும் இரு தலைவர்கள் சுல்லாவின் தீர்மானங்களை அழித்துக் கீழ் மக்கட்காவலருக்கு அவர்களுடைய பழைய உரிமைகளை அளித்து உரிமைக் கணக்கன் ஒருவனைத் தெரிந்து அர சாங்கத் தலைவர்களின் உரிமைகளை ஆராயும்படி கற் பித்துத் தாமும் இணைத் தலைவராகி அதிகாரஞ் செலுத் தினுர்கள்.
· ··
10-ம் பாடம்- யூலியஸ் கைசர்
நாவலன் சிசருே : கி. மு. 166-48 சிசருேர என்பான் அரிம்மியம் என்னும் மகரில் வசித்த ஒரு இடைப்பிரிவினன் மகன். இவன் சொற் பொழிவாற்றலுடையவன்கி உரோம நாவலருள் சிறந்து ஒப்பாருமிக்காரு மின்றித் திகழ்ந்தான்; நீதிமன்றங்க ளில் நியாயதுரக்தானகிப் பொருளீட்டினன்; கி. மு. 66 - ல் ஒரு கீழ்த் தலைவன கப் பம்பீயஸின் கட்சியைச் சார்ந்து மானிலியஸ் கொணர்ந்த பிரேரணையை வழி மொழிந்து பம்பீயஸ் என்பானைச் சின்னசியாவுக்குத்

யூலியஸ் கைசர் 281
தலைவனுக அனுப்பினன். அவன் மேன்மக்கட் கட்சி குடியரசுக் கட்சி இரண்டையும் சாராமல் நடுநிலைமை வழுவாமல் பொது நன்மையைக் கருதினன் சிசருே அர சியல் செலுத்திய வரலாற்றை வந்துழிக் காண்க.
காயஸ் யூலியஸ் கைசர் : கி. மு. 102-44.
காயஸ் யூலியஸ் கைசர் மேன்மக்கட்குலத் துதித்தோ னயினும் குடியரசுக் கட்சியையுஞ் சார்ந்த வன், கைச ரின் மாமி, யூலியா மாறியஸ் என்னும் கலை பனின் தாயாத லாலும் கைசர் சின்ன என்னும் தலைவனின் மகளை மணஞ் செய்துகொண்டமையாலும் குடியரசுக் கட்சியினனுகப் பாராட்டப்பட்டான், கைசரைச் சின்னுவின் மகளை மணஞ்செய்துகொள்ள வேண்டாமெனத் தான் தடுக்கவும் அக்கட்டளையைப் பொருட்படுத்தாமல் அவன் மணஞ் செய்துகொண்டதைக் கேள்வியுற்ற சுல்லா 'மாறியஸ் என்னும் தலைவன் போன்ற வீரரின் வன்மை இக் கைசர்ச் சிறுவன் மிடலுக்கு ஒப்பாகாது," எனக் கூறினன். சுல்லா கொடுங்கோல் செலுத்திய காலத்தைக் கைசர் ஆபிரிக்கா தேசத்துக் காட்டிற் கழித்தான். சுல்லா இறந்தபின் கைசர் தாய்நாட்டுக்குத் திரும்பும்பொழுது கடற்கள்வர் கைப்பட்டு, "மூடராகிய நூம்மைத் தொலைப் பேனென' அ வர் க ளை ப் பயமுறுத்தினுனென்றும், பொருள் கொடுத்து விடுதலையடைந்து பின்னர் உரோமர் படையோடு சென்று அக்கள் வரை அட்டுத் தன் வாக்கை நிறைவேற்றினுனென்றும் கட்டுரைகள் விளம்புகின்றன. அவன் பின்பு அளர்த்தரோடு கூடிப் படிற்றெழுக்கம் பூண்டு வீணுகக் காலத்தைக் கழித்து அக்கூடாவொழுக் கத்தின் பயனுகக் கடன்காரனனன். கி. மு. 68ம் ஆண்டு அவன் பொருட் கணக்கணுகத் தெரிந்தெடுக்கப்பட்டான். பம்பீயஸ் மேன்மக்கட் கட்சியைச் சார்ந்தானுகக், கைச ரைப் பொதுமக்கள் ஒரு வீரனகவே மதியாமையால் கிருர சஸ் என்னும் செல்வனேக் குடியரசுக் கட்சித் தலைவ னெனப் பாராட்டினர்கள்.
86

Page 158
282 உலக வரலாறு
கற்றிலினுவின் கலகம். கற்றிலின அரசியலைச் சீர்திருத்த முயன்ருரனகக்
கைசரும் கீழ்மக்கட் கட்சியைச் சார்ந்தாணுகிப் பம்பீய லின் கட்சியை எதிர்த்தான். பொதுமக்கள் கற்றிலின கைசர் என்போரைத் தலைவராகத் தெரிந்தெடாமல் சிசருேரவை இணைத் தலைவருள் ஒருவனுக கி. மு. 64-ம் ஆண்டுத் தேர்தலில் தெரிந்தெடுத்தார்கள். கைசரின் நண் பன் அந்தோனியே கீழ்த் தலைவருள் ஒருவனகி மசிடோ னியாவை ஆளப்போனன். இது கிற்க, கற்றிலின அர சாங்கத்திற்கு விரோதியாகிக் கலகம் விளைத் தற்குச் சூழ்ச்சி செய்தான். காலவன் சேவியஸ் நூறுல்லஸ் கம்பேனிய நிலங்களைக் கீழ்மக்களுக்களித்தற்குப் பதின்மர் சபையை நிறுவி அதற்குத் துணையாக 200 இடைப்பிரிவினரைத் தெரிந்தெடுக்க வேண்டுமெனவும் அச்சபையின் செல வுக்கு மசிடோனியாவிலுள்ள பொது நிலங்களை விற்றுப் பொருள் வருவாயைப் பெறவேண்டுமெனவும் கூறினுணுக, சிசருே அப்பிரோஃணயை எதிர்த்தான். பொதுமக்கள் பம்பீயின் கட்சியைச் சார்ந்தனராதலின், அப்பிரே ரஃணயை அங்கீகரிக்கவில்லை. கற்றிலின வம்பப் பாத்த ரையும் தீவினையாளரையும் தன் கேளிராகிய தூர்த்தரை யும் கூவியதன்றி, எற்று றிய நாட்டாரிடம் துண்பெறு தற்கு ஒற்றரையும் அனுப்பினன். அவ்வாண்டுத் தேர்த லில் கற்றிலின பொதுமக்களின் நன்மைக்காகவும் தேசத் தொண்டு செய்தற்காகவுமே தான் தலைமை வேண்டிய தாகச் சாற்றியும் குடிமக்கள் கற்றிலினுவை ஒரு கீழ்த் தலைவனுகவும் தெரிந்தெடுக்கவில்லை. சிசருே கற்றிலின வின் முயற்சியை அறிந்து அவன் அரசாங்கத் துரோக மென்னுங் குற்றம் இழைத்தானென மேன்மக்கட் சபை யில் சான்று கூறினன். மேன் மக்கட் சபையார் கற்றி லினுவைத் தாய்நாட்டிற்குப் பகைவனெனத் தீர்மானித்து அவனைச் சிறையிடும்படி அந்தோனியோவை ஏவினுர் கள். கற்றிலின சனிபகவானின் விழாக் காலத்தில் குடி

யூலியஸ் கைசர் 283 யரசை நாட்ட வேண்டுமெனத் தன் கட்சியாருக்கு அறி வித்து அலபுருேக்கியக் கல்லியரிடம் துணைபெறுதற்குக் கடிதம் அனுப்பினன். அலபுருேக்கியர் அக்கடிதத்தைச் சிசருே விடம் இடுவித்தனர். கற்றிலின கலகம் விளைக்கு முன் சிசருேர மேன்மக்களுக் கறிவித்துக் கற்றிலின வையும் அவன் துணைவரையுஞ் சிறையிட்டான், சிசருேர மேன் மக்கட்சபை முன்றிலில் வழக்குரைக்கக் கைசர் கற்றிலினுவையும் அவன் துணைவரையும் மன்னிக்கவேண்டு யெனக் கேட்டானென்றும், கேற்ருே அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கவேண்டுமென்று வாதித்தானென வும் அறிகிருேரம், இங்ஙனம் சபையில் வாதம் நடந்து முற்றுப்பெறுமுன் சிசருே கற்றிலின முதலியோரைச் சிரச்சேதஞ் செய்வித்தான். இவ்வண்ணம் சிசருே கற்றி லின முதலியோர்களைக் கொல்வித்தது முறையன்று. கற்றிலினவின் கட்சியார் தோல்வி யடையக் குடியரசுக் கட்சியாரின் ஆற்றலுங் குன்றியது. பம்பீயஸ் எகிப்தி லிருந்து மீண்டு ஆங்குத் தான் பெற்ற வெற்றிக்காக ஊாவலம வநதான.
pli da. Lib.
பம்பீயஸ் இணைத் தலைவருள் ஒருவனுகத் தெரிந்தெடுக் கப்பட்டான். லுக்கூஎஸ், கேற்ருே என் போர் பம்
பீயஸின் எதிரிகளாகையால் பம்பீயஸின் சின்னசியா நாட்டு அரசியல் ஒழுங்குகளை ஒவ்வொன் ருரகத் தேர்தல் அவசியமென வாதித்தனராக, ஐபீரியாவில் தேசாதிபதி யாகவிருந்து பொருள் தேடிப் பெயர்ந்த கைசரின் துணே யையும் கிருசஸ் என்னும் செல்வனின் துணையையும் பம் பீயஸ் வேண்டினன். கிருசஸ், பம்பீயஸ், கைசர் என் னும் மூவரும் ஒருகூட்டமாகி அரசியலை மூவர் கூட்டத் தால் நடாத்து தற்குத் துணிந்தார்கள். இம்மூவருங்கூடிய முதற்கூட்டம் கி. மு. 60-ஆம் ஆண்டில் கிகழ்ந்தது. கி. மு. 59-ம் ஆண்டு கைசர் இணைத்தலைவனகி மேன்மக்கள் பழ்

Page 159
284 உலக வரலாறு
பீயஸ்-க்கு மறுத்தவற்றையெல்லாம் தன்னதிகாரத்தால் அளித்தான். இங் நுணம் கம்பேனியகிலங்களைப் பம்பீய ஸின் படைவீரருக்குக் கைசர் அளித்தற்குப் பதின்மர் சபை தெரிந்தெடுக்கப்பட வேண்டுமென்றும் பம்பீயஸின் சின்னுசியா நாட்டு அரசியல் ஒழுங்கை மேன்மக்கட்சபை அங்கீகரிக்கவேண்டுமென்றும் கைசர் பிரேரித்தானுக, மேன்மக்கட்சபை அகற்கு உடன்படாமையால் அவன் படைவீரர்சபையில் அப்பிரேரணையைப் பிரேரித்துத் தீர் மானமாக்கினன். கைசர், கல்லியா இலீறியா என்னும் நாடுகளுக்குத் தேசாதிபதியாகவேண்டுமெனப் பிரேரிக் கப்பட்டான். இங்ஙனம் கைசர் பல காலமாக விழைந்த படைத் தலைமையைப் பெற்ருரன், கைசர் மூவர் கூட்டத் தைப் பலப்படுத்தற்குக் தன் மகளே பம்பீயஸுக்கு மனைவி யாக அளித்தான். கி மு. 58-ம் ஆண்டு குளோடியஸ் புல்கர் என்னும் மேன்மகனது தீர்மானத்தால் கைசர் கல்லியாவை ஆளு தற்கும் பம்பீஸ் இக்தாலிய நாட்டு அரசியலை நடாத் தற்கும் கேற்றே சைப்பிறஸ்தீவை ஆளுதற்கும் நியமிக்கப் பட்டனர்.
குளேடியஸ் மைலோ என்போரின் கட்சிக்கலகம்.
கி. மு. 62-ம் ஆண்டு கைசர் சமயத் தலைவனகத் தெரிந்தெடுக்கப்பட்டான். கைசரின் இல்லத்தில் ஒரு தேவதைக்கு விழா நடந்துழி ஆடவர் அவ்விழாவிற் சேர் தல் முறையன்ருரயினும் குளோடியஸ், கைசரின் மனைவி யின் அணைவால் வீணை கையேந்திப் பெண்வேடம் பூண்டு, விழாக் கொண்டாடினன். அவ்வேடம் அறிந்த சிலர் உடனே அவனை இல்லத்தினின்றும் அகற்றினர்கள். அவ் வாசாரக் குற்றத்தைச் சிசருே எடுத்துரைத் தான். சிச ருேரவின் சாட்சியைப் பொய்ச்சான்றெனக் காட்டுதற்குக் குளோடியஸ் தான் அவ் விழாக்காலத்தில் வேற்றுப் புலத்தில் இருந்தானென நாட்ட முயன்றம் சிசருேர அவ்வுரையைப் பொய்யுரையென விளக்கினன். அன்று

யூலியஸ் கைசர் 285
தொட்டுக் குளோடியஸ் தான் கீழ்மகனெனக் கூறிக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்து சிசருே பம்பீயஸ் முதலி யோரை எதிர்த்தான்.
குடிகள். யாவருக்காயினும் பொதுமக்களின் அனுமதி யின்றிக் கொலைத்தண்டம் விதிப்போன் யாவனுயினும் நாடுகடத்தப்படுவானென ஒரு பிரேரணையைக் குளோடி யஸ் பிரேரித்தான். அப்பிரமாணம் சிசருேவின் பெய ரைச் சிறப்பாகச் சுட்டாவிட்டாலும் சிசருே நாடு நீங்கிப் பிற நாட்டிற் சஞ்சரித்தான். குளோடியஸ் சில தீவினை யாளரோடு கூடி நாடோறும் கொலை களவு கள் காமம் தீயி நிதல் என்னுந் தீவினைகளைச் செய்தனன். மேன்மக்க ளின் மானத்தைத் தன சிரமேற்கொண்ட மைலோ என் போன் ஒரு கட்சி சேர்த்துக் குளோடியஸின் கட்சியை எதிர்த்தான். மன்றங்களிலும் மறுகுகளிலும் முச்சந்தி களிலும் நாற்சந்திகளிலும் நாடோறும் இரு கட்சியாருங் கலகப்பட்டனர். சிசருே முதலியோர் தாய்நாடு திரும்பு தல் அவசியமென்று பம்பீயஸ் மொழிந்து மைலோவின் துணையால் பிரேரணையைத் தீர்மானமாக்கினன். சிசருே வைச் சனங்கள் கைகொட்டி வரவேற்றனரென்று சிசருேர வின் கடிதங்களால் அறியலாம். பம்பீயஸ் படைத்தலைமை விழைந்தும் அது பெருமையால் தானியத் தலைமையை ஐக் துவருடத்திற்கு ஏற்ருரன். கி. மு. 56-ம் ஆண்டு சிசருே கைசரின் சீர்திருத்தப் பிரமாணங்களைத் தேர்ந்து களையவேண்டுமென அறிவித்தான். பின்பு சிசருே பம்பீயஸ் கிருரசஸ் என்போரின் தலைமையில் 200 மேன் மக்கள் ஒரு கூட்டங்கூடி பம்பீயஸும் கிருரசஸ்-ம்ெ இணைத் தலைவராகிக், கிருரசஸ் சிரியா நாட்டிற்கும் பம் பீயஸ் ஐபீரியா நாட்டிற்கும் படைத் தலைவராகவேண்டு மெனத் தீர்மானஞ்செய்தனர். இத்தீர்மானத்தைக் கேற்ருே எதிர்த்தான். அக் கூட்டத்தோர் கைசருக்கு இவ்வொழுங்கு பிரியமாகாதென எண்ணி அவனைத் திருப்திசெய்வித்தற்காக அவனுக்குக் கல்லியநாட்டுப்

Page 160
286 உலக வரலாறு
படைத் தலைமையை 5 வருடத்திற்கு அளித்தனர். கி. மு. 52-ஆம் ஆண்டு மைலோ இணைத் தலைவருள் ஒருவன தற்கு விரும பினனுக, குளோடியஸ் கலகம் விளைத்து அக்கல கத்திற் புண்பட்டு இறந்தான். குளோடியஸின் கட்சியார் மைலோவின் வீட்டிற்குத் தீயிட்டனராக, மேன்மக்கள் பம் பீயஸைத் தனித்தலைவனுக நியமித்தார்கள்.
கி. மு. 53-ம் ஆண்டு கிருரசஸ் சிரியாதே சத்திற்குச் சென்றான். பார்தியா நாட்டு வேந்தன் மிதுருடாற்றிஸ் தனது சகோதரன் ஒருேர டிஸ் என்பவனுக்கு எதிராகச் சிரியா நாட்டு உரோம தேசாதிபதி கபினியஸ் என்பவ னுடைய துணையை இரக் கான். கபினியஸ் அக்காலத் தில் தொலைமி அவுலேற்றிஸ் என் போனுக்கு எகிப்து நாட்டின் அரசுரிமையை அளிக்கமுயன்ருரன். இதற் கிடையில் மிதுருடாற்றிஸ் கொல்லப்பட்டான், கிருரசஸ் உரோமர் யாவரிலும்பார்க்கப் பொருட்செல்வம் உடை யோனபினும் பொருணசையினற் சிரியா நாட்டில் பெரும் தொகைத் திரவியந்தேடலாமென்று எண்ணினன். கிருர சஸ் யுபிறேற்றிஸ் நதியைக் கடந்து வனுங் கரத்தில் வழி தெரியாமையால் பார்த்தியனுெருவன் வழிகாட்டச் சென் ருரன். அவ்வழிகாட்டினேன் ஒருே டிஸ் என்பவனின் ஒற்றன். அவுன் கிருரசஸ் என்னும் தலைவனை ஏமாற்றி நீங்கினன். ஒருேரடிஸ் படையெடுத்துச் சுரத்தின் வழிகளே நன்று அறிந்தோனகையால் கிருரசஸ் என்பவனுடைய படையை நாசமாககி அவனையுங் கொன்று உரோம ருடைய துவ சங்களையும் கைப்பற்றினன். இப்போர் நடந்தது கர்காயிக் களத்தில் என்க. உரோமர் இத் தோல்வி பெரிய அவமானத்தை விளைத்ததென எண்ணித் துயருற்றனர். பிற்காலத்துப் புலவர்கள் தலைவர்களைப் பார்த்தியரை அடக்கும்படி தூண்டினர்கள். கிருரசஸ் இறந்தமையாலும் மேன்மக்கட்கட்சியைப் பம்பீயஸ் சேர்ந் தமையாலும் மூவர் கூட்டங் குலைந்தது.

யூலியஸ் கைசர் 287
கல்லியநாட்டு யுத்தம்,
கைசர் கல்லியயுத்த வரலாற்றை எளியநடையிற் சிறு வர்களுங் கற்றற்குரிய நூலாக எழுதினன். கல்லியருடைய ஆசாரம் பழக்கம் தெய்வவணக்கம் மணமுறை போர் முறை அரசியன் முறை முதலியவற்றைப்பற்றி அந்நூல் கூறுகின்றது. அது, கைசர் சாம பேத தானதண்டத்தா ஓம் தன் வீரத்தாலும் கல்வியரை அடக்கினுன் என உரைக்கின்றது. எல்வித்தியரைக் கிம்பிரியர் நெருக்க, அவர்கள் மேன்மக்கட் சபையிடம் துணேவேண்டினர்களாக, சபை கடத்தியதாகையால் எல்வித்தியர் தம்நாடு துறந்து பிறநாடுகளுக்கு ஏகினர்கள். கிம் பிரியர் இத்தாலியாவி னுள் புகுவரென்று உரோமர் அஞ்சினர். உரோமர் சபை கிம்பிரியரைத் துரத்தும்படி கைசரை ஏவிற்று. கிம்பிரியர் யூரு ம?லயை அடைந்து செக்குயினியநாட்டுக் கூடே செல்லக் கைசர் படையொடு கடிதுசென்று பிபி ரூரற்றி நகர்க்கணிமையில் கிம்பிரியரோடு பொருது வென் ருரன். சர்மானியக் கூட்டத்தினர் ரையின் நதியைக் கடந் தனராக' கைசர் அவர்களை ஒட்டித் துரத்தினன். கி. மு. 57-ம் ஆண்டு பெல்கா யிருகர்க் கல்லியர் 4,000 படை யினைச் சேர்த்துக்கொண்டு போர்க்கெழுந்தனரென்பதைக் கைசர் கேள்வியுற்று ஆங்குச்சென்று ஒருசாதியாரை ஒருசாதியார்க் கெதிராகப் பேதப்படுத்திக் கல்லியரை அடக்கினன். கல்லியநாட்டு வடபாகத்தில் வசிக்கும் வெனிரியர் கடல்வீரரா கையால் கைசர் கப்பற்படைசேர்த் துச்சென்று அவர்களே அட்டுப் பலரை அடிமைகளாக்கி விற்றனன். இங்ஙனம கல்லிய5ாடு உரோமர து ஆட்சி நாடாயிற்று.
பிரித்தானியத் தீவார் கல்லியருக்குத் துணைபுரிந் தமையால் அவரைத் தண்டித் தற்கே கைசர் கடல்கடந்து g. (p. 54-ம் ஆண்டு டீவன் கரையில் இறங்கினன். கப் பல்களைக் கண்டவுடன் பிரித தானியர் கடற்கரையில்

Page 161
288 உலக வரலாறு
திரண்டுசூழ்ந்தனர் என்றும் உரோமர் கடல்வீரர் கப்பல் களினின்றும் இறங்கவே அஞ்சினராக, கழுகுக்கொடி வீரன் பரவையில் குதித்தானென்றும் குதித்தவுடன் கழுகுக்கோலைக் காத்தற்கு வீரர் யாவரும் குதித்து உவரி யில் கடும்போர்புரிந்து பிரித்தானியரைக் கலைத் தனரென் றும் கைசர் எழுதிய வரலாறு செப்புகின்றது. பிரிக் தானியர் மூர்க்கரா கையாலும் கானவராகையாலும் அவர்க ளது நாடு திரவியந்தேடற்குரிய நாடன் ருரதலாலும் கைசர் கல்லிய நாட்டிற்குத் திரும்பினன். அக்காலத்திற் பிரித் தானியர் மரவுரி தோலுரியுடைய எயினராகவும் ஆடை யற்ற கானவராகவும் காடுகளிலும் குன்றுகளிலும் வசித் துக் குருவிச்சையைத் தொழுதனர் என்று கைசரின் வர லாறு கூறுகின்றது. எங்ங்ணமாயினும், பிரித்தானியா தேசத் கோரும் அவர்க்கு அணிகரான கல்லியரும் ஓரினச் சாதியினராவர். பிரித்தானியருக்குச் செம்புருக்கத் தெரியு மென்றும் கல்லியருடைய சமயக் கிரியைகளையே அவரும் கைக்கொண் டொழுகின ரென்றும் தெரிகிறது. கல்லிய ரைப்போல் பிரித்தானியரும் கேர்ப்போரில் வீரராயிருந் தனர். நாடு நகரங்கள் பிரித்தானியாவில் இல்லையென வும் கைசர் மொழிந்தனன், கைசா தேம்ஸ் நதிப்போரில் கசிவிலான ஸ் என்னும் வீரனைச் சயித் துப் பின் கல்லியா வுக்குத் திரும்பினன். ஐடுயி என்னும் கல்லிய சாதித் தலைவன் டிவிற்றியாக்கஸ் என்பான் உரோமர்பக்கத்தைச் சார்ந்தானக, அவன் தம்பி டும்னேறிக்கு என்போன் உரோமரோடு உட்பகையாகியதைக் கைசர் அறிந்து அவனைச் சிரச்சேதஞ்செய்வித்தனன். இதுகிற்க, கைச ரின் படைகள் கூதிர்க்காலத்தில் ஆங்காங்கே பாசறை களில் பிரிந்திருந்ததை உணர்ந்த பெல்காயி நகர்க் கல் லியர் உரோமர்ைத் துரத்தற்குக் தருணம்வாய்த்ததெனக் காலந்தாழ்க்காது போர்க்கெழுந்தனர். எபிரானியர்தலை வன் அம்பியோமிக்கு என்போன் சபினஸ் கொற்று என் னும் உரோமர்தலைவனுக்குக் கைசரின் பாசறைக்குச்

யூலியஸ் கைசர் 289
செல்ல உதவிசெய்வான்போல வழிகாட்டிச்சென்று காட டர்ந்ததோர் பள்ளத்தாக்கில் தன் படையாற் சூழ்ந்து உரோமருடைய படை முழுவதையும் அழித்தான். அஃதன்றிச் சிசருேவின் தம்பி குயின் றஸ் சிசருேரவை யும் இவ்வண்ணம் ஏமாற்ற முயன்றனன். கைசர் இச் செய்திகளை அறிந்து துணைப்படையோடு முடுகினன். இலைபியேனஸ் என்னும் தலைவன் தெரிவேறியர் என்னும் கல்லியரோடு பொருது வென்ருரன், கைசர் வடக்குக் கல் லியரோடு பொருது வென்ருரன், கைசர் வடக்குக் கல்லி யரை ஒருவாறு அடக்கினனுக, மத்திய கல்லியர் வேர் கிங்கிற்றேரிக்கு என்னும் தலைவன் கீழ்ப் போர்க் கெழுக் தனர். அவன் உரோமர் படைகளுக்கு உணவில்லாமல் பண்ணுதற்கு வயல்களையும் தானிய மாடங்களையும் பண். சாலைகளையும் ஊர்களையும் தீயிட்டு அழித்தான்; கல்லிய வீரருக்கு அவனது உபாயம் மாதெனத் தெரியாமையால் அவிகந்தம் என்னும் நகரை அழிக்கவிடாது கலகப்பட் டனர். வேர்கிங்கிற்ருேறிக்கு கேர்கோவியா நகரத்தை அடைந்திருந்தான். இலாபியேனஸ் படையோடு கைசரின் உதவிக்குச் சென்ருரன், கைசர் கல்லியரைச் சயித்து உரோமரது ஆட்சியை காட்ட ஒழுங்குகள் செய்தான். இத்தாலியாவிலே குளோடியஸ் இறந்ததையும் பம்பீ தனித் தலைவனுக அதிகாரத்தைச் செலுத்துத8லயும் முன்னரே அறிந்தமையாலும் கல்லியரை அடக்கி முடிந்த வுடன் கைசர் இத்தாலியா தேசத்திற்குப் புறப்பட்டான். கைசர் தன் படையோடு உரோமா புரத்திற்குச் சென்று தனது தலைமையை நாட்டுதற்கு எண்ணினன்.
s'. A. C.
கி. மு. 54-ம் ஆண்டு கைசரின் மகள் (பம்பீயின்
மனைவி) மரித்தனள்; கிருரசஸ் கர்காயிப்போரில் மடிக்
தான்; கைசர் கல்லியரை அடக்கிகின்ருன்; இங்ஙனம் மூவர்
கூட்டம் குலைந்த தெனலாம். பம்பீயும் மேன்மக்களும்
87

Page 162
290 உலக வரலாறு
மனமொத்தனராகிக் கைசரின் வலியைக் கெடுக்க முயன் றனர். கேற்ருேரவும் பம்பீகட்சியைச் சார்ந்த சனகலின், கைசர் தன் கல்லியநாட்டுத் தலைமைக்கு வரையப் பட்ட கால முடிவில் தன்னை எதிர்க் கட்சியார் அடக்க முயல்வாரென எண்ணினன். சுல்லாவின் பிரமாணத் தின்படி கைசர் பத்து வருடத்திற்கு இணைத்தலைவனுகத் தெரிவுபெற வியலாதென அறிந்து தன்னை இலிறியா தேசத்திற்குத் தேசாதிபதி யாக்கும்படி வேண்டினன். மாக்கேலஸ் என்பான் இணைத் தலைவரில் ஒருவனனன். அவன் கைசரைப் படையைக் குலைக்கும் படி ஏவினன். இங்ஙனம் அடுத்த தெரிவு காலம் வரையும் கைசர் பதவி யின்றிச் சாதாரண மனிதனுக இருக்கவேண்டும், ஆத லால் கைசர், தன் நண்பன் அங்கோனியோவைக் காவ லனுக்கு உரிய உரிமையைச் செலுத்தி மாக்கேலஸ் என்னும் தலைவனின் தீர்மானத்தைத் தடுக்கும்படி தூண்டினன். அந்தோனியோ அங்ங்ணங் தடுக்க, மேன் மக்கள் கலகம் விஜள காலமாதலால் பிரமாண நீதியை நிறுத்திப் போர்க் காலத்துப் படைமீதியே செலுத்தப்படு மென முரசறைவித்தனர். கைசர் கட்சியார் கல்லிய நாட் டிற்கு ஓடினர்கள். சிசருேர, சிலீஷியா என்னும் சின் னசியா நாட்டில் தேசாதிபதியாக ஆண்டு உரோமாபுரத் திற்குத் திரும்பி வந்து பம்பீகட்சியைச் சேர்ந்தான்; கி. மு 49-ஆம் ஆண்டு கைசர் தன் படையோடு தாய் நாடு புக்குத் தன் படைவீரரின் ஒழுக்க மேன்மையாலும் நடத்தையாலும் பொதுமக்களைத் தன் வசப்படுத்தினுன் கைசர் விரைந்து படை யெடுத்தனன். பொதுமக்கள் விரைந்து கைசருடைய கட்சியைச் சார்ந்தனர். பம்பீ மனங் கலங்கித் தன் படையோடு கிரேக்க தேசத்திற்குச் சென்ருரன், ஐபீரியா தேசத்திலே பம்பீகட்சியார் போர்க் கெழுந்தமையால் கைசர் அங்குச் சென் று இலேடாப் போரில் அவர்களே வென்று கி மு. 48-ம் ஆண்டு உரோமா புரத்தினுட் புகுந்தான். உரோமாபுரத்தை இலைப்பிடஸ் மகன் இலைப்பிடஸ் கைசர் கட்சியினகிைக் காத்தான்

யூலியஸ் கைசர் 291
சனங்கள் கைசரைத் தனித்தலைவ னெனத் தொழுத னர். கைசர் எபிறஸ் நாட்டிற்குச் சென்று திராச்சியத் தில் பம்பீயின் படையொடு பொருது தோல்வி யடைக் தான். பின்பு அந்தோனியின் துணைப்படையைப் பெற் றுக் கைசர் பம்பீயோடு பொருது பார்சாலியக் களத் துப் பெரும்போரில் வெற்றி யடைந்தான். பம்பீயின் அகிக வெள்ளத்தில் 15000 வீரர் இறந்தனர்; 22000 வீரர் சிறைப் பட்டனர். பம்பீ எகிப்து நாட்டிற்கு ஓடி அங்குத் தாலமி டையோ நிசி என்பானல் கொலையுண்டான். கி. மு. 47-ம் ஆண்டு கை சர் எகிப்தில் இறங்க, அலைச்சந்திரியா நகரத் துப் பம்பீகட்சியார் அவனை நெருக்கினர்கள். கைசர் பம்பீகட்சியினரை சீலாற்றுக்கரைப் போரில் வென்று எகிப்து நாட்டைத் தாலமியின் தங்கை கிளியோப் பத் திரைக்கு அளித்துச் சின்னசியாவுக்குச் சென்றன்.
கைசர் ஆசியாவில் இறங்கிப் பஸ்போறஸ் நாட்டில் பார்மா சீஸ் என்னும் குறுநில மன்னனைச் செல்லாப் போரில் வென்று, ‘போனேன், பார்த்தேன், பயங் தோடினர்கள்’ எனத் தன் போர் வலியை வியக் தெழுதினன். அதன்பின் கைசர் உரோமா புரத்திற் குப் பெயர்ந்தானக, சனங்கள், ‘கின் வாழ்நாள் முழுவ தும் கீழ்மக்கட் காவலனுகும் உரிமையும் தனிக் தலைமை உரிமையும் செலுத்துவா மாக” என வாழ்த்தி ஆரவாரித் தனர். சிசருே வைக் கைசர் மன்னித்து அரசியல் முயற்சி களில் தலைபிடாமல் வாழும்படி கற்பித்தான். ஆபிரிக் காவில் பம்பீயின் குமாரர் செக்ச் ரஸ்பம்பீயும் நீயஸ்பம்பீ யும், கேற்ருே லாபியேனஸ் ஸ்கிப்பியோ முதலிய துணைவ ரோடு 1,60,000 படையைச் சேர்ந்திருந்தனர். கைசர் ஆபிரிக்காவிற்குச் சென்று அப்படையைப் புடைத்தான். கேற்ருே உற்றிக்காவுக்குப் போய்த் தற்கொலை புரிந்து கொண்டானதலால், கேற்றே உற்றிக்கன் எனப் பெயர் பெற்ருரன், கைசர் வெற்றிவேற் கையணுய்ப் புலம்

Page 163
293 உல்க வரலாறு.
பெயர்ந்து, தன்ன டடைந்து, வெற்றிவிழாக் கொண் டாடி, ஊர்வலஞ் செய்தான். பம்பீயின் குமாரர் கி. மு. 45-ஆம் ஆண்டு ஐபீரியா தேசத்தில் முண்டாக் களத் தில் தோல்வியுற்றனர். இலயியேனஸ் என்னும் வீரனும் மேஸ்பம்பீயும் போரில் மடிந்தனர். செக்ச் ரஸ்பம்பீ ஓடியொளித்தான்.
கைசரின் அரசியற்சீர்திருத்தங்கள்.
ஆதிகாலத்தில் நல்லாசென நாட்டப்பட்ட குடியரசு காலக்கிரமத்தில் உருத்திரிந்து பின்பு மேன்மக்கட் குழு வரசாகிப் பின்பு கொடுங்கோ லரசாயிற்று. உரோமராச் சியச் செல்வமுழுவதையும் 2000 மேன்மக்கள் தம்வீட்டுப் பொருளாக வெண்ணி உரிமைகள் எவற்றையும் பொது மக்களுக்கு மறுத்துக் குடிகளை வருத்தித் தாம் இன்புற்று வாழ்ந்தார்கள். உரோமர் கீழ்மக்கள் பசிப்பிணியால் துயருற்று உழந்தனர். இத்தாலிய நாடுகள் நகரங்க ளெங்கும் அடிமைகள் மிக்கனர். உரோமரது ஆட்சி காடுகளில் தேசாதிபதிகள் ஆறலைக்குங் கள்வர்போலப் பொருணசையாற் குடிகளை வருத்தினர்கள். இத்தாலிய நாடுகளில் போர்க்காலத்தில் போர் வீரர்கள் இல்லங் களில் ஊணுஞ் சேக்கையும் பெற்றுத் தங்கினராதலின், நகரமாக்தர் வருந்தினர். வயல்கிலங்களைப் பண்படுத்தாமல் போர்த்தொழிலே தொழிலாக உரோமர் ஆண்டாண்டு தோறும் யுத்தஞ்செய்தமையால், கமங்கள் கழனிகளெல் லாம் பாழாகக் கமக்காரர் தொழிலின்றித் துயருற்றனர். தொழிலற்ற சனங்கள் தெருச்சனங்களாகத் தெருக்களில் உண்டுடுத்து உறங்கினர்கள். இத்தகைய நாட்டை கல்லாற் றுப்படுத்தல் ஒருவர் வாழ்க்கைக் காலத்தில் இயலாத செயல். எத்தகைய அரசியல்முறை இங்கிலைக்கேற்கு மென்றும், அன்னியக் குடிகளையும் உரிமைகள் பெருரத உரோமக் குடிகளையும் தேசாதிபதிகளின் கொடுங்கோலி னின்று எங்ங்ணம் காத்தோம்பலாம் என்றும் கைசர்
ஆலோவித்தனன்.

யூலியஸ் கைசர் 293
கி. மு. 44-ஆம் ஆண்டு கை சர் தனித்தலைமையும் காவற் றலைமையும் ஒருங்குபெற்றுத் தனிக்கோல் செலுத்தி மேன்மக்கட் சபையை ஒரு மந்திரச்சுற்றமாக்க எண்ணிச் சபை அபகரித்து நடத்திய உரிமைகள் யாவற் றையும் தான் வெளவினன். மேன்மக்கட்சபை பிர மாணங்களே ஆக்கும் உரிமையை இழந்தது. பொருட் கணக்கரில் சிலரை நியமிக்கும் உரிமையும் கீழ்த்தலை வரை நியமிக்கும் உரிமையும் மேன்மக்கட்சபைக்கு அளிக்கப்பட்டன. கைசர் தனித் தலைமையைச் செலுத்திப் பொருட்கணக்கரில் சிலரைத் தான் கியமித்தனன். தொழிலற்ருேரரைத் தோட்டங்கள் முதலிய பொதுநிலங் களில் வேலைக்காக அமர்வித்தான். தொன்னகரங்க ளாகிய கொறிந்து காதாக்கோ முதலிய இடங்களில் உரோமர் கீழ்மக்களைக் குடியேற்றினன். இவ்வண்ணம் 80,000 தொழிலற்ருேரரைக் கைசர் தொழிற்றுறையில் ஈடுபடுத்தினுன் கைசர் தீவினையாளருடைய கூட்டங்க3ளக் கலைத்தனன். கடன்பட்டோர் குறித்த காலஞ்சென்ருரலும் கடனைக் கொடுத்தலே கடமையெனத் தீர்மானஞ்செய்து அறிவித்தான். வேளாண்மை பெருகவும் நாடு மலியவும் வழிவகைகளைத் தேர்ந்தான். இடையர் முதலான கூலிக் காரரில் மூன்றில் ஒருபங்கினர் சுயாதீன உரோமராக இருக்கவேண்டுமென்றும் முரசறைவித்தனன். அடிமை கள் மலிந்தமையால் உரோமர்மேன்மக்கள் அடிமை க3ளக்கொண்டே பணிசெய்வித்தனர்.
இத்தகைய சனசமுகச் சீர்திருத்தங்களாலும் அரசி யன்முறைச் சீர்திருத்தங்களாலும் உரோமர்குடிகளைக் கைசர் காத்தோம்பினன். அன்னியராகிய கிரேக்கர், கல்லியர், ஆபிரிக்கர், ஐபீரியர், எகிப்தியர், ஆரியர் முதலி யோருக்கும் உரோமர் குடியாகும் உரிமைகளே அளித் தான். சின்னசியா காட்டில் அரசிறையை வழக்கம்போல விற்பனவு செய்யாமல் தலைவர்களை நேரேபெறும்படி எட்டளேயிட்டான். இவ்வண்ணம் ஆட்சிகாட்டோரையும்

Page 164
294 உலக வரலாறு
திறை செலுத்தும் நாட்டோரையும் ஆண்டு கைசர் செங் கோல் ஒச்சினன். கி. மு. 44-ம் ஆண்டு இவ்வொழுங்கு களே எல்லாஞ் செய்து முன்பு பார்தியாதேசத்தில் உரோம ரடைந்த அவமானத்தை நினைந்து அங்கே உரோமரின் வெற்றிக் கொடியை நாட்டற்குப் புறப்பட எத்தனித்தான். அந்தோனியோவை நகரத் தலைவனுக்கித் தன் தங்கை அற்றியாவின் மகளின் மகன் ஒக்ராவியஸ் என்போனைத் தனித் தலைமைக்கு உரியனுக நியமிக்க எண்ணினன். சிலர், கைசர் அரசனகி ஆளுதற்கு எண்ணுகிருரனென கினைத்துக் கைசரைக் கொல்லுதற்குச் சூழ்ச்சிசெய்தார் கள். புறுாட்டஸ் முதலிய கைசரின் நட்டார் சிலரும் கைச ருக்கு விரோதிகளாயினர். கசியஸ் தூண்டினனுகத் தீவினையாளர் ஒருங்குகூடிக் கைசரை மேன்மக்கட் சபைக்கு அவைத தலைமைவகிக்க அழைத்துச் சபையிற் கொன்றனர். கைசர் புறுரட்டஸ் என்னும் நண்பனை நோக்கி, "நீயும் என்னைக் கொல்ல நினைந்தனையோ? என மொழிந்து இறந்தானெனச் சிலர் கூறுப.
மூன்ரும் கட்சியத்தம்.
புறுரட்டஸ் முதலியோர் குடியரசை நாட்டவேண்டு மென்னும் நல்ல நோக்கத்தோடே கைசரைக் கொன்ற னர், கைசர் இறந்த பின் எங்ஙனம் குடியரசை நாட்டலா மென்பதை அவர்கள் ஆராய்ந்திலர். கைசர் இறந்தவுடன் என்ன முறையாகச் செங்கோல் ஒச்சவேண்டு மெனத் தெரியாது மயங்கினர்கள். உரோமராச்சியம் பெருகியமை யால் முடியுடைவேந்தனே தனிக்கோல் செலுத்தவேண்டு மென்பதை அறியாது 5கரை ஆண்ட குடியரசே இராச்சிய பரிபாலனம் செய்தற்கு ஒத்ததென நினைத் தனர். அவர்கள் மேன்மக்களாசைக் குடியரசென மயங் கினர். குடியரசு முறையாய் ஆளுதற்குத் தலைவர்கள் தங்கயங்கருதாத நன் மக்களாக இருத்தல்வேண்டும். அத னுடன் குடிகளும் தம் தெரிவுரிமைகளை அரசாங்கதன்

யூலியஸ் கைசர் 295
மையை யுணர்ந்து செலுத்தும் அறிவுடையரா யிருத்தல் அவசியம். உரோமர்குடிகள் அவ்வறிவுடையரல்லர்; ஊணும் காட்சியும் நன்கொடையாகப்பெற்றுச் சோம்பித் திரிதலே பேரின்பமெனத் தெருச்சனங்கள் கினைத்தார் கள். கைசரின் மரணம் குழப்பத்திற்கும் கலகத்திற்கும் கருப்பமாயிற்று.
சிசருே வெளிவந்து செங்கோலைச் செலுத்துமின் என ஏவினன். குருதியாடாதீர்களெனத் தலைவர்கள் யாவரையும் வேண்டினன். கைசரின் சீர் திருத்தங்களைப் பிரமாணமாகவே கோடல் வேண்டுமெனப் பறைசாற்று வித்தான். தலைவர்கள் கைசரின் பிரேதத்தைத் தகனஞ் செய்யும்படி கைசரின் நண்பன் மார்க்கஸ் அந்தோனி யோவுக்கு உத்தரவளித்தனர். புறூட்டஸ் கசியஸ் என் போரைக் கிரேக்கநாட்டுத் தேசாதிபதிகளாகக் செல்லும் படி மேன்மக்கட்சபை கட்டளையிட்டது. பொதுமக்கள் ஆயிரக்கணக்காகக் கைசரின் மரணக் கிரியைகளைச் செய் தற்குத் திரண்டார்கள். அந்தோனியோ எழுந்து கைசர் பொதுமக்களுக்காகத் தன் சீவியகால முழுவதும் உழைத் தனனென்றும், அவன் நிலங்களையும் வயல்களையும் இள மரக்காக்களையும் பூம்பொழில்களையும் மாடங்களையும் மன் றங்களையும் நீராடுந்தொட்டிகளையும் கோயில்களையும் இல்லங்களையும் நன்கொடையாகப் பொதுமக்களுக்கே அளித்தனனென்றும் மரணசாசனம் ஒன்றை வாசித் தான். அந்தோனியோ தன் நாவல்லமையால் சனங்களைத் தன் வசப்படுத்திக் கைசர், தேசநேசன் வெற்றிவேற் றடக்கையன், செங்கோலன், கண்ணுேட்டமுடையன், காட்சிக்கெளியன், கடுஞ்சொல்லனல்லன்' என வற்புறுத் திக் கைசரின் புண்களைக் காட்டி இவ்வொப்பற்ற தலைவ னும் பரகதி அடைந்தானே எனப் புலம்பினன். ஆங் காங்குக் கடைவீதிகளிலும் நாற்சந்திகளிலும் அங்காடி களிலும் கூடிய சனங்கள் இவ்வண்ணம் தூண்டப்பட்டு வெகுண்டு, கொள்ளி கையேந்தியவராய்ப் புறூட்டஸ்

Page 165
296 உலக வரலாறு
கசியஸ் முதலியோரைத் தேடிக் காணுது, அவர்கள் இல் லங்களுக்குத் தீயிட்டனர். சனங்களை அடக்க ஒருவராலும் முடியாதிருந்தது. அந்தோனியோ, ஒக்ராவியஸ் என் போனக் கல்லியநாட்டினின்றும் அழைத்துப் படை சேர்த்துப் போர்க் கெழுந்தான்.
புறுரட்டஸ் கசியஸ் என்னும் தலைவர்களும் தம் கட்சி யினரைக் கூவிப் படைசேர்த்தார்கள். புறுரட்டஸ்-ம்ே கசியஸ்-Cம் முயிற்றினப்போரிலும் பிலிப்பிப்போரிலும் தோல்வியடைந்தனர். அந்தோனியோ சிசருேரவைக் கி. மு. 43-ஆம் ஆண்டு கொல்வித்தான். ஒக்ராவியஸ் மேன்மக்கட்சபையைக் குலைத்து, அந்தோனியோ இலைப் பிடஸ் என்போரைத் துணைவராக்கி ஒரு மூவர் கூட்டத்தை நாட்டினன். கி. மு. 42-ஆம் ஆண்டு குடியரசுக்காலம் முடிச்தது.
6.ம் அதிகாரம் உரோமர் தனிக்கோல்
1-ம் பாடம்-கைசர் அகஸ்தர்
JGð Líb pli fi. Lüb
மார்க்கஸ் அந்தோனியா கிரேக்கநாடு எகிப்து சின் னுசியா முதலிய கீழ்த்திசை ஆட்சி நாடுகளை ஆளுதற் கும் இ8லப்பிடஸ் ஆபிரிக்காவை ஆளுதற்கும் ஒக்ராவியஸ் இத்தாலியா ஐபீரியா கல்லியா முதலிய நாடுகளே ஆளுதற்கும் உடன்பட்டனர். ஒக்ராவியஸ் தன் விர குக்குப் பலமுறை கிலமளித்ததால், அவனைச் சனங்கள் வெறுத்தனர். அந்தோனியோவின் தம்பி அரசியஸ் நக ரத்தாரோடு சேர்ந்து இலைப்பிடஸைத் துரத்தினன். ஒக்ராவியஸ் அவனைப் பெரூசியாவிற்குச் செல்லச் செய் தான். கி.மு. 40-ம் ஆண்டு செக்ரஸ் பம்பீ கப்பற்படையி

கைசர் அகஸ்தர் 297
னுதவியால் துறைமுகங்களில் குறைகொண்டான். பம்பீ யின் நண்பன் டொமீசியஸ் எகெனுெபோர்பஸ் என்பான் கிரேக்க நாட்டுக் கரைகளில் ஆறலைத்தான். கீழைத் தேசங்களுக்குத் தலைவனுகி எகிப்து தேசத்திலிருந்து கிளியோப்ப்த்திரையின் மையலில் மயங்கிக் களித்துக் காலம் கழித்த மார்க்கஸ் அக்தோனியோ, தன் சகோ தான் இறந்தமையாலும், தன் மனைவி புல்வியா அடிக் கடி திரும்பும்படி இரந்தமையாலும், தனக கிலையை உணர்ந்து, ஒக்ராவியஸ் தனிக்கோல் நடாத்த எண்ணு கிருரனென அறிந்து, இத்தாலியா நாட்டிற்குத் திரும்பி னன். அந்தோனியோ, செக்ரஸ் பம்பீயோடு சேர்ந்து பிரண்டுசியத்தில் இறங்கினன். புல்வியா இறந்தாளாக, ஒக்ராவியஸ் அந்தோனியோவை அழைத்துக் கொண் டாடித் தனது தங்கை ஒக்ராவியாவை மணஞ்செய்து கொடுத்து மூவர் கூட்டத்தைப் புதிதாக நாட்டினன். ஒக்ராவியஸ் தானே தனித்துப் பம்பீயோடு பொருதற்கு உடன்பட்டான். அந்தோனியோ மறுபடியும் கிளியோப் பத்திரையொடு கூடிக் களித்தான். இங்ஙனம் அக் தோனியோ அன்னமன்ன நடையாளொடு ஊடியுங் கூடியும் ஐம்புல வின்பம் நுகர்ந்து காலங் கழித்தமை யால் உரோமர் தம் கொற்றவீரன் அந்தோனியோவை வெறுக்கத் தொடங்கினர்.
பம்பீயை ஒக்ராவியஸ் அடக்க வியலாமல் அவனுக் குச் சிசிலி சாடினியா கோர்ச்சிக்கா என்னுங் தீவுகளையும் கிரேக்க நாட்டில் ஆக்கியாவையும் அளித்தான். ஆக்கிய நாடு அங்தோனியோவின் ஆட்சி நாடாகையால் அக் தோனியோ உடன்படாமல் அமர்செய்ய எழுந்தான். விப் சேனியஸ் அக்கிரிப்பா படைத் தலைவனகிப் பம்பீயை வென் முன். இலைப்பிடஸ் என்பான் கப்பற்படையின் உதவியால் அதிகாரம் செலுத்த எண்ணி, ஒக்ராவியஸ் என்னும் தலை வனேடு பகைத் தான். ஒக்ராவியஸ், இலைப்பிடஸ் என்னும் தலைவனையும் வென்முன், அந்தோனியோ ஆர்மீனியா
38

Page 166
293 உலக வரலாறு
நாட்டோரை வென்று, அலைச்சாந்திரா நகரில் ஒரு போலி வெற்றிவிழா நடத்தி, நகர்வலஞ் செய்தான்; தனது நாடுகள் கிளியோப்பத்திரைக்கு உரியவை யெனக் கூறினன். கி. மு. 32-ஆம் ஆண்டு அந்தோனியோவும் ஒக்ராவியஸ் என்னும் தலைவனும் போர்க் கெழுந்தனர். 500 கப்பற் படையோடும் 100,000 கீழ்நாட்டுப் படை யோடும் அந்தோனியோ ஒக்ராவியஸ் என்னும் தலைவனை எதிர்த்தான். ஒக்ராவியஸ் கிரேக்க நாடு சென்று அக்ரியம் என்னும் களத்தில் அந்தோனியோவை வென்றன்.
கிளியோப்பத்திரை கைசரையும் அந்தோனியோவை யும் மயக்கியவாறு ஒக்ராவியஸ் என்பவனையும் மயக்க எண்ணினுள். அவ்வெண்ணம கைகூடாமையால் சிறை யிருத்தலிலும் சாதல் நன்றென நினைத்துத் தற்கொ அல புரிந்து கொண்டாள். தலைவி இறத்தற்கு முன்னரே அந்தோனியோ, கிளியோப்பத்திரை இறந்தாளென ஓர் அரவங்கேட்டு வாளில் வீழ்ந் திறந்தான். எகிப்து நாடு உரோமருக்குத் தானிய மளிக்கும் நாடாகையால் ஒக்ராவி யஸ் எகிப்தை அரசாளும்படி இடைப்பிரிவினன் ஒருவனை நியமித்து மேன்மக்க ளொருவரும் அங்குச் செல்லப் படாதென விதித்தான். எகிப்திலிருந்து ஆசியாவுக்குச் சென்று பம்பீயின் ஒழுங்குகள் குழம்பா திருத்தலைக் கண்டு மாற்றங்கள் செய்யாது உரோமாபுரத்தை நோக் கினன். மேன்மக்கட் சபையோர் ஒக்ராவியஸ் என்னும் தலைவனைத் தனித் தலைவனுக வணங்கிக் கொலுவிருக்கும் போதெல்லாம் கண்ணி குடுமாறும் சிவந்த ஒலியல் அணியு மாறும் வேண்டினர். ஒக்ராவியஸ் என்னும் தலைவன் பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடுமாறும் விதித்தனர், ஒக்ராவியஸ் வெற்றிவிழாப் பெற்று ஊர்வலம் வந்தான். ஒக்ராவியஸ் சமாதானம் நிலைத்ததென்று யானஸ்தேவன் கோட்டை வாயிலை அடைத்தான். இங்ஙனம் யானஸ் தெய்வத்தின் வாயில் உரோமர் வரலாற்றில் மூன்றும் முறை அடைக்கப்பட்டது என்ப. ஒக்ராவியஸ் படை

கைசர் அகஸ்தர் 299
வீரர் ஒவ்வொருவருக்கும் 1000 பொன் கொடுத்துத் தனிக்கோலை நாட்டினன்; கோயில்களும் பொருட் காட் சிச் சாலைகளும் அம்ைக்க எண்ணினன்; பிற நாடுகளை ஆளும்படி தேசாதிபதிகளை அனுப்பி, கி. மு. 27-ஆம் ஆண்டு தனித் தலைமை புரிந்தான்.
தனித்தலைவன் கைசர் அகஸ்தஸ்
தனித் தலைவன் அகஸ்தஸினுடைய இயற்பெயர் ஒக் ராவியஸ் கைசர் எனப்படும், ஒக்ராவியஸ், தனித் தலைவ கைச் செங்கோல் செலுத்திய காயஸ் யூலியஸ் கைசரின் மருகனவன். ஒக்ராவியஸ் தனித் தலைமை எய்தியபின் தனனை வளர்த்த குடும்பத்தின் பெயராகிய கைசர் என் னும் பெயரையும் புனைந்தான். அவனுடைய ஆட்சிக் காலத்திலேயே ஒக்ராவியஸ் என்னும் பெயர் வழக்கற்றுக் கைசர் என்னும் பெயர் பிரபலமாயிற்று. ஒக்ராவியஸ் கைசரை மரியாதைக் குரியோனெனப் பொருள்படும் அகஸ்தஸ் என்னும் பெயரால் ஆசிரியர்கள் வழங்கின ராதலின் அவனுடைய முழுப்பெயர் ஒக்ராவியஸ் கைசர் அகஸ்தஸ் எனபதாகும். பிற்காலங்களில் கைசர் என் னும் பதம் தனிககோலன தற்கு உரியோனைச் சுட்டிற்று. அக்ரியக்களத்தில் அந்தோனியோவை வென்று தன் படைமாட்சியால் தனிக்கோலாசு செய்தமையால் அகஸ் தஸைப் படைவீரர் தனித் தலைவன் எனத் தொழுதனர். தனித்தலைவன் என்னும் பெயர் தனிக்கோலோச்சிய ஆழி வேந்தனைக் குறிக்கும்.
அகஸ்தஸ் மதிநுட்பத்தாற் புகழ்பெற்றிலனயினும் அடக்கமுடையவனுக விளங்கினன்; சிறந்த போர்வீரன் அல்லுனபினும், தன் பகைவரை அடக்கினன்; செங்கோல் செலுத்தலிற் பயிற்சியில்லாதவனுயினும் தனிக் கோலை நாட்டினன்; எங்ஙனமாயினும், யூலியஸ் கைசரைப் பின் பற்றி மனமொழி மெய்களில் கிறை தவருரது முறை யுணர்ந்து கேமியுருட்டினன். அகஸ்தஸ் ஆழ்ந்த அறிவில்

Page 167
300 உலக வரலாறு
லோனுயினும் பல நூல்களை வாசித்துணர்ந்தவன். யவன மொழியில் நனி பயின்ருேரணல்லனயினும், அகஸ்தஸி அனுடைய உரைநடை எளியதும் இலக்கண வழுவில்லா ததுமாயிருந்ததெனக் கூறப்படுகிறது. கல்வி கேள்வி யுடைய நேமி வேந்தனயினும் அக்காலத்து உரோமர் யாவரையும்போல் நிமித்த நூல்களை அவன் நம்பினன். அகஸ்தஸ் புலன்வழிச் சென்று ஊண் உடை முதலியவற் றில் இன்பம் விழையவில்லை. அகஸ்தஸைப் பிறர்க்குதவி செய்யும் வள்ளல் எனவும் சிலர் கூறுப. அகஸ்தஸ் குறு கிய தோற்றமும் அதற்கேற்ற அமைப்பும் அழகும் பொருந்தியோனென அறிகிருேம். தேக சுகமின்மையால் அவனுடைய முகம் வெளிறியதென்பர். அகஸ்தஸ் காட்சிக் கெளியன் எனவும் கடுஞ்சொல்லனல்லன் எனவும் பாராட் டப்பட்டான். அகஸ்தஸினுடைய அமைச்சர் விப்சேனி யஸ் அக்கிரிப்பா என்போனும் சின்னியஸ் மசினுஸ் என் போனும் அரசியலை நடத்தினர்கள்.
விப்சேனியஸ் அக்கிரிப்பா அக்ரியக்களத்துப் போரி லும் செக்ச்ரஸ் பம்பீயின் போரிலும் படைத்தலேமை வகித்து உதவிசெய்தான். அக்கிரிப்பா மேன்மக்கட் குலத்துதித்தோனல்லனயினும், கோயில்களையும் இல்லங் களையும் அழகியல் நூன் முறைப்படி அமைப்பித்துச் சிற்பிகளையும் ஒவியரையும் புரந்தான். அக்கிரிப்பா முதலமைச்சனுக அதிகாரஞ்செலுத்தலில் இன்பம் விழைந் தான். மசினுஸ் அதிகாரஞ்செலுத்த விரும்பினேனல்லன். அவன் படைக்கலம் பயின்ருேரனுமல்லன்; எனினும், அரசியன் முறைகளை நன்கு உணர்ந்தோனகையால் அகஸ்தஸ் அவனை அமைச்சனுக்கினன். மசினஸ் அகஸ் தஸினுடைய உயிர்ச்துணேவனக இருந்தான். மசினஸ் இடைப்பிரிவினனகப் பிறந்தபோதிலும், அமைச்சனுயி னன். அமைச்சனகிய பின்பும் அவன் மேன்மகனுக ஆசைப்படவில்லை; உண்டுடுத்துக் களிக்க விரும்பின ஒயினும் காலமும் இடமும் அறிந்து ஒழுகினன்; கல்வி

கைசர் அகஸ்தர் 301
யறிவுடையோனகலின், புலவர்களே ஆதரித்தான். இத் தகைய அமைச்சருடைய வாயுறை மொழிகளைக்கேட்கும் வேங் தன் ஞாலங்கருதினும் கைகூடும். அகஸ்தஸ் அங் கியரோடு பொருது ஆட்சிநாடுகளைக் கூட்டுதலில் பய னில்லையென உணர்ந்து உள்ளநாடுகளைக் காத்துக் குடி யோம்பிச் செங்கோல் செலுத்த முயன்றனன்.
அக்கிரிப்பா கி. மு. 28-ஆம் ஆண்டு கீழ்த்தலைவனகி அகஸ்தஸினுடைய சகோதரியாகிய ஒக்ராவியாவின் மகள் மாசல்லாவை மணஞ்செய்துகொண்டான்; பின்பு கீழ்த் திசை நாடுகளைத் தலையெடுக்கவிடாது அடக்கி ஆண்டனன். எகிப்திய இராணி கிளியோப்பத்திரை இறந்தபின், இடைப்பிரிவினரையே தேசாதிபதிகளாக அகஸ்தஸ் அனுப்பினன். எகிப்து தானிய நாடாக லின் மேன்மக்கள் எகிப்திற்குச் செல்லக் கூடாதென அறிக்கையிட்டான். மேன்மக்களை எகிப்துக்குத் தேசாதிபதிகளாக்கினல் அவர் கள் தன்னைப் பகைக்கக்கூடுமென அகஸ்தள் எண்ணினுன் போலும். கோணிலியஸ் கல்லஸ் என்னும் ஓர் இடைப் பிரிவினனே தேசாதிபதியாக நியமிக்கப்பட்டான். கல்லஸ் இசைப்பாட்டுக்கள் இசைக்கும் வல்லோன் எனப் | 5p பெற்றன். எகிப்திய கற்கோட்டங்களில் தன் பெயரைக் கல்லஸ் பொறித்தானுக, அலைச்சாந்திரியா நகரில் கலகம் விளைந்தது. அகஸ்தஸ் கல்லஸை நீக்கிப் பெற்ருேரனியஸ் என்போனை நியமித் தான். அவன் அராபியவனந்தரத் தில் திரவியம் உண்டெனக் கேள்விப்பட்டுத் தேடும்படி ஒருபடையை ஏவினன். அப்படை வனுந்தரத்தில் அழி வெய்திற்று. பின்பு பெற்ருேரனியஸ் எக்தியோப்பிய நாட்டு அரசியோடு பொருதான். அரசி தோல்வியடைந்தபோதி லும் திறைகொடுக்க உடன்படவில்லை. தன்னுத் தரவின் றிப் போர் நடாத்தக்கூடாதென அகஸ்தஸ் தேசாதிபதிக ளுக்கு அறிவித்தான்; எகிப்தியருக்கு உரோமர்குடி at G3b உரிமையை மறுத்தான்; எகிப்தியருடைய திர

Page 168
302 உலக வரலாறு
வியங்களே வெளவித் தன் படைவீரருக்குக் கூலி கொடுத்தான்.
கீழைத்தேயங்களை அடக்கியபின் அகஸ்தர் கி. மு 29-go, ubi ஆண்டு உரோமாபுரிக்குத் திரும்பினன். அங் நாட்களில் இலைப்பிடஸ் என்பவனுடைய மகன் அகஸ்தஸ் கைசரைக் கொல்ல எண்ணினுன். மசினஸ் அதை அறிந்து அவனைச் சிறையிட்டு அகஸ்தஸிடம் ஒப்புவித் தான். அகஸ்தஸ் அவனுக்குத் கொலைக்கண்டனை விதித் தான். அகஸ்தஸ் மேன்மக்கட்சபையை இணக்கிக் கொள்ளக் கருதி ஆட்சி நாடுகள் சிலவற்றை ஆளும்படி அவர்களை ரவினன். மேன்மக்கள் அகஸ்தஸைத் தனிக் கோலனென வணங்கினர்கள். அகஸ்தஸ் கைசரின் வெற்றிவிழாவை மூன்று நாள் கொண்டாடும்படி மேன் மக்கட்சபை தீர்மானித்தது. கி. மு. 27-ஆம் ஆண்டு அகஸ்தஸ் ஏழாம்முறை இஃணத் தலைமையும் உரிமைக் கணக்குத் தலைமையும் பெற்றனன். கலகக்காலங்களில் படைநீதிசெலுத்துதல் வழக்கம். சாதாரண பிரமாணங் களால் கலகக்காலங்களில் தீவினையாளரை அடக்கமுடியா தா கலின் தலைவன் கினைந்தவாறு பகைவரை நீதி விசாரணையின்றித் தண்டித்தல் உண்டு. இங்ஙனம் தலை வன் சொல்லையே பிரமாணமாகக் கொள்ளாதோரைத் தலைவன் தான் கினைந்தவாறு தண்டித்தல் படைமீதியோ டொக்கும். படைத்தலைவன் படைவீமனைத் தண்டிக்கும் வண்ணம் அரசாங்கத்தோர் தம் குடிகளைக் கலகமடக்கு வதற்காகத் தண்டித்தல் படைமீதியாகும்.
உண்ணுட்டரசியல்
உரோமர் உரோமாபுரம் அமைக்கப்பட்ட ஆண்டை முதலாம் ஆண்டென எண்ணிக் காலவரையறைசெய்தனர். இ லிவியஸ் அவ்வாறே தன் வரலாற்றில் ஆண்டுகளை இணைத தலைவர்களின் பெயரால் வழங்கினர். பின்னர் மேனுட்டில் கிறீஸ்துமதம் பரவியபின கிறீஸ்து பிறந்த

கைசர் அசஸ்தர் 303
ஆண்டே முதலாண்டென எண்ணப்பட்டது. கி. ப. 27 ஆம் ஆண்டு ஒக்ராவியல் கைசர் தனித் தலைமைச் செங்கோலைச் செலுத்தத் தொடங்கினன். மினூசியஸ் பிளாங்கஸ் என் போன் கைசர் சமாதானத்தை நிலைநாட்டியதற்காக அகஸ்தர் என்னும் பட்டத்தைக் கைசர் ஒக்ராவியனுக்கு அளிக்க வேண்டுமென மேன் மக்கட் சபையில் பிரேரித் தான். இப் பெயர் கைசர் தெய்வமாகியதையும் தேசபக்தி யுடையோ னென்பதையும் உணர்த்துகின்றது. தனித் தலைவனுகப் பத்தாண்டு அரசியலை நடாத்தும்படி மேன் மக்கள் கைசரை வேண்டினர். தனித் தலைவனுக்குப் படைத் தலைமை உரியதாக லின் எல்லை நாடுகள் யாவும் தனிக்கோலனுடைய ஆட்சி நாடாயின. மேன்மக்கட் சபை இத்தாலியையும் வேறு சில நாடுகளையும் ஆளும் உரிமை யைப் பெற்றது. எனினும் ஆட்சிநாட்டுத் தலைமையும் உண்ணுட்டுத் தலைமையும் தனிக்கோலனுக்கே உரியவை யென வற்புறுத்தப்பட்டது. உண்ணுட்டுத் தலைமையைச் செலுத்து தற்குத் தனித் தலைமை யில்லாமையால் வருந்திய அகஸ்தஸ் கீழ்மக்கட் காவலனுகும் உரிமை தனக்குண் டென இயம்பினன்; கி. மு. 23-ல் மேன்மக்கட் சபை யைக் கூட்டும் உரிமையைப் பெற்று அச்சபைக்குத் தலைமை வகித்துத் தன் பிரேரணைகளே ஏனையோரின் பிரோஃணகளுக்கு முன் பிரேரிக்கப்படு மெனச் செப்பி னன். இணேத் தலைவருக்குப் பின்செல்லும் தண்டச்சேவ கர் பன்னிருவர் கைசர் பின்னும் சென்றனர். தனிக் கோலனை முடிசூடா வெந்தனெனக் கூறலாம். தனிக் கோல் சிற்சில சமயங்களில் கொடுங்கோலாசல் இயல்பே. உரோமருடைய அரசியலில் வகுப்பினர் சபையும் மேன் மக்கட்சபையும் பிரமாணங்களை ஆக்கும் உரிமையுடையன. இணைத் தலைவர் (Consuls), கீழ்க் தலைவர் (Praebors), கீழ் மக்கட்காவலர் (Tribunes), பொருட்கணக்கர் (Quaestors), தெருத்தலைவர் (Aedies) முதலியோர் பழைய முறைப் படியே தெரிந்தெடுக்கப்பட்டனர். தனிக்கோலர் இணைத்

Page 169
SO4. உலக வரலாறு
தலைமைப் பதவியும் உரிமைத் தலைமைப் பதவியும் (Censorship) பெற்று அரசியலை நடத்தினர்கள். மேன்மக் கட் சபையின் உரிமைகள் குன்றத் தனிக்கோலரின் உரிமைகள் பெருகின. தனிக்கோலன் தவ றிழைக்குங் தன்மையன் அல்லனகலின் தனிக்கோலனைத் தண்டிக்கும் உரிமை ஒருவருக்கும் இல்லை. தனிக்கோலனை இறந்த பின்னரே தண்டிக்கலாம். எவ்வாறெனில் தனிக்கோல னுக்குக் கோட்டம் நிறுவரது தெய்வமாகும் உரிமையை மேன்மக்கட்சபை மறுக்கலாம். தனிக்கோலன் மரித்த பின் பிறிதோர் தனிக்கோலன் தெரியப்படுந் துணையும் தலைவர் இல்லையெனவே கூறலாம். ஒருவன் தனிக்கோல னதற்குப் படையின் உதவியும் மேன்மக்கட் சபையின் சம்மதமும் பெறவேண்டும். தனிக்கோலர் தம் குமாரரை யேனும் சுற்றத்தாரையேனும் நண்பரையேனும் கைச ராக்கி இளங்கோவுக்குரிய உரிமைகளை அளித்து வந்த னர். கணிக்கோலர் செங்கிறப் போர்வை அணிதலும் கண்ணிகுடுதலும் வழக்கம்; ஊர்வலஞ்செய்து வெற்றி விழாவை நடத்தும்போது செங்கோலை ஏந்திச் செல்வர். மெய்காப்பாளர் பலர் தனிக்கோலரைச் சூழ்ந்து நிற்பர். குடியரசுக் காலத்தில் யுப்பிற்றர் முதலிய தெய்வங்களின் பெயரால் நீதிமன்றத்தில் சத்தியம் செய்யப்பட்டது. தனிக் கோற் காலத்தில் கைசர் தெய்வமாகலின் தனித்தலைவன் பெயராலும் சத்தியம் செய்யப்பட்டது. தனித் தலைவன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மேன்மக்களைப் போல் தனிக்கோலர் குடிகளுக்கும் நண்பருக்கும் சுற்றத்தாருக் கும் காலை வரவேற்புச் செய்து கொடை யளித்தனர். மேன் மக்கள் பலர் தனிக்கோலரின் கட்டாராதல் இயல்பே. அம் மேன் மக்களைத் தனிக்கோலன் முத்தமிட்டு இலச்சினை பதித்த மோதிரம் அளித்தல் உண்டு. தனிக்கோலன் தனது சிலையையும் தனது நாட்டாரின் சிலைகளையும் நாட்டுதல் வழக்கம். தனிக்கோலன் உரோமர் படைகள் யாவற்றுக்கும் தலைவன். கீழ்த் தலைவர்கள் தேசாதிபதி கள் முதலிய யாவரையும் ஏவி அரசியலை நடத்துவோன்

கைசர் அகஸ்தர் 305
தனித் தலைவனே, நாணயம் அச்சிடும் உரிமையும் தனிக் கோலனுக்கு உரியது. அகஸ்தஸ் தன் இலச்சினையைப் பதித்த பொன்னணயமும் வெள்ளி நாணயமும் அச்சிட்டான்.
மேன்மக்கட்சபை
தனிக்கோலர் மேன்மக்களைத் தெரிந்தெடுத்து மேன் மக்கட் சபைக்கு உறுப்பினராக நியமித்தனர். அகஸ்தஸ் 400 உறுப்பினரையுடைய மேன்மக்கட்சபையைக் கூட்டி னனும். தனிக்கோலன் உரிமைக்கணக்கணுத லின் தான் விரும்பியோரையே அங்கத்தினராக்குவான். மேன்மக்கட் குலத்தில் பிறவாதோரையும் தனிக்கோலர் மேன்மக்கட் சபைக்கு அங்கத்தினராக்கினர்கள். படையில் சேவித் தோர் கிராமத்தலைவராகலாம்; பின்னர்ப்பொருட்கணக்க ராகலாம்; பின்னர்க் கீழ்த்தலைவராகவும் தேசாதிபதிக ளாகவும் தெரிந்தெடுக்கப்படலாம். அகஸ்தஸ் மேன்மக் கட்சபையைச் சிறு கூட்டமாக வகுத்து அமைச்சர் கூட் டங்களை ஏற்படுத்தினன். மேன்மக்கட்சபை சமயப் பிர மாணங்களே ஆக்கும் உரிமையையும் ஆட்சி நாடுகள் சில வற்றை ஆளும் உரிமையையும் உடையதாக இருந்தது. மேன்மக்கட்சபைக்கு நீதிவிசாரணைசெய்யும் உரிமை உரிய தெனினும் தனிக்கோலர் தாம் நினைந்தவாறே நீதிசெலுத் தினர். தனிக்கோலர் மேன்மக்கட்சபைக்கு உரிமைக3ள அளித்தும், சிலசமயங்களில் அளித்த உரிமைகளைக் கவர்ந்தும் அரசியலை நடாத்தினர்கள்.
இடைப்பிரிவினர் இடைப்பிரிவினர் குடியரசுக்காலத்தில் குதிரைப் படையினராகச் சேவித்தனர். அவர்கள் மூன்றுவகுப் பினர். ஒரு வகுப்பார் இடைப்பிரிவினராதற்கு வேண்டிய பொருள் உடையராயிருந்து வாணிகஞ்செய்தனர். ஒரு வகுப்பார் குதிரைகளையுடையராய்ப் போர்ச்சேவைசெய் தனர். ஒரு வகுப்பார் அரசாங்கத்தினரிடம் குதிரைபெற்
39

Page 170
806 blewa sh;Teufg
அறுப் போர்ச்சேவைசெய்தனர். அகஸ்தஸ் இடைப்பிரிவிற் சேரவிரும்புவோர் குடிப்பிறந்தவராயும் பொருளுடையவ ராயும் இருத்தல்வேண்டுமென விதித்தன்ன். மேன்மக்கள் இடைப்பிரிவினராகலாம் எனவும் இடைப்பிரிவினர் மேன் மக்களாகலாம் எனவும் அகஸ்தஸ் கூறினன். குதிரை பெறும் இடைப்பிரிவினர் ஆடித்திங்கள் 15 ஆம் திகதி போர்க்கடவுளின் கோவிலிற்கூடி ஊர்வலஞ்செய்து போர்த்தேவனுக்குப் பலியிடுதல் வழக்கம். இடைப் பிரிவினருடைய இஷ்டதெய்வங்கள், கஸ்தோர் பொலக்ச் என்னும் இரட்டைத்தேவர்கள். அரசியலைச் செலுத்தும் உரிமை இடைப்பிரிவினருக்கு அளிக்கப்படவில்லை. சிவப் புக்கோடிட்ட உத்தரீயம் பொன் மோதிரம் முதலியவை இடைப்பிரிவினரின் சிறப்பணிகளாம். அகஸ்தஸ் கட்டிய கூத்துமண்டபத்தில் இடைப்பிரிவினர் 14 வரிசை பெற் றனர். அகஸ்தஸ் இடைப்பிரிவினரைச் சிறுபடைத் தலைவ ராகவும் நியமித்தனன். அகஸ்தஸ் மீதிவிசாரணைசெய்யும் சபைக்கு இடைப்பிரிவினரையும் அங்கத்தினராக்கினன். ஆட்சி நாடுகளின் அரசிறைகளை இடைப்பிரிவினராகிய வணிகர், தலைவர்களிடம் விலைக்குவாங்கித் தாம் அரசிறை களைக் குடிகளிடம் பெற்றனர். அகஸ்தஸ் அந்தோனி யின் துணைவேண்டி அந்தோனியின் மனைவி புல்வியாவின் மகள் குளோடியாவை மணந்துகொண்டான்; மாமியுடன் கலகப்பட்டுத் தன் மனைவியைத் துறந்து ஸ்கிறிப்போனி யாவை விவாகஞ்செய்துகொண்டான். ஸ்கிறிப்போனியா இருமுறை விவாகஞ்செய்து கொண்டவளாபினும், அவளை மணந்தால் தன் பதவியை நிலைநாட்டலாமென அகஸ்தஸ் எண்ணினன். பின்பு இலிவியஸ் குளோடியஸ் என்போ ணுடைய விதவை லிவியாவோடு கூடிவாழ்ந்தான். அகஸ் தஸ் தன்பிள்ளைகள் இறந்தமையால் தன் மருகன் மாகேல னைக் கைசராக்கினன்; அவனுக்குத் தன் மகள் யூலியாவை மணம்செய்துகொடுக்க எண்ணினன். அவன் இறந்தானுக, அக்கிரிப்பா யூலியாவை விவாகஞ் செய்துகொண்டான்.

கைசர் அகஸ்தர் 307
அக்கிரிப்பா இறந்தானுக அவனுடைய பிள்ளைகள் குழந்தைகளாதலின் அகஸ்தஸ் இரைபீறியஸைக் தனிக் கோலனுதற் குரியன் என விளம்பினன். இரைபீறியஸ் தன் மனைவியைத் துறந்து யூலியாவை மணந்துகொள்ளும் படி கட்டளை பெற்றன். யூலியா வம்புப் பரத்தரோடு தெருவீதிகளில் அல்லும் பகலும் திரிந்தாளாக, அகஸ்தஸ் அவளை நாடுகடத்தினன்.
உள்நாட்டு வரலாறு
மசினுஸ் நல்லமைச்சனுகிச் செங்கோலோச்சினுன்; பொய்ச்சான்று கூறும் ஒற்றரின் உதவியின்றிக் குடி களின் குறைகளை அறிந்து கிவிர்த்தி செய்தும் மேன் மக்களே அஃணத்தும் கீழ்மக்களுக்குக் காட்சி யளித்து இன்புறுத்தியும் அரசியலை நடத்தினன். கி. மு. 8-ஆம் ஆண்டு மசினஸ் இறந்தான். அகஸ்தஸ் தன் துணேவர் இருவரும் இறந்தன ரெனத் துயருற்றன். மேன்மக்கள் சிலர் அரசபக்தி இன்றித் தலைவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். கி மு. 23ல் பங்கியஸ் காயிப்பியோவும் முரீனுவும் கொல்லப்பட்டனர். கி. பி. 4-இல் சின்ன குடி யரசை நிறுவ நினைத்த போதிலும் மன்னிக்கப்பட்டான். அகஸ்தஸ் தானே சமயகுருவென அறிவித்துச் சம யாசாரங்களைச் திருத்தினன். அப்போலோத் தேவ னுக்கு ஆலயம் அமைப்பித்தான். யூலியஸ்கை சரும் ஒரு தெய்வமாகத் தொழப்பட்டான். சமாதானதேவதை, போர்க்கடவுள், யூனே முதலிய தெய்வங்களுக்குப் புதிய கோயில்கள் கட்டப்பட்டன. - -
செல்வர்கள் சிற்றின் பங்களில் ஆழ்ந்து தம் இல் வாழ்க்கைக் கடன்களைச் செய்ய விரும்பாமல் காமக்கிழத் தியரோடு கூடிக் களித்தனர். உரோமர்குடிகள் குறைந் தனராக, இல்லறம் கடத்துவோர்க்கு வெகுமதிகள் கொடுக்கப்பட்டன. விவாகஞ்செய்து கொள்ளாதாருக்கும் மக்கட்பேற்றை விரும்பாதோருக்கும் தண்டனைகள் விதிக்

Page 171
308 உலக வரலாறு
கப்பட்டன. கி. மு. 18-ம் ஆண்டு வியபிசாரம் தீயொழுக்க மெனவும் தண்டிக்கத் தக்கதெனவும் சட்டம் ஏற்படுத் தப்பட்டது. கி. மு. 17-ம் ஆண்டு நூறு வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்படும் விழாவினை ஊமெடுத்ததாக, மற்போர் வாட்போர் வேட்டை தேரோட்டம் திருவிழா முதலிய காட்சிகள் நடைபெற்றன. அகஸ்தஸ் கட்டிய காட்சி மண்டபத்தில் பெண்களுக்குப் பிரத்தியேகமான இடம் வகுக்கப்பட்டது. மேன்மக்களும், gaol. 9 if வினரும், கீழ்மக்களும் வெவ்வேறன வரிசைகளில் ஆச னம் அமைக்கப் பெற்றனர். இத்தாலியா நாடெங்கும் கடிதம் அனுப்புவதற்குரிய வசதிகளுடன் தெருக்கள் அமைக்கப்பட்டன. ஆனல் பொதுமக்களின் கடிதங்களே அரசாங்கத்தினரின் பண்டிகள் எடுத்துச் செல்லவில்லை. இக்காலத்தில் சுயாதீனம் பெறும் அடிமைகள் பொருள் கொடுக்கவேண்டும். சுயாதீனம் பெற்ற அடிமைகள் நாட் டுப் பக்கங்களில் வாணிகஞ் செய்யலாம். அவர்கள் நெருப்புத்தணிக்கும் அழற்காவலராகலாம். இத்தாலி நாட்டைக் காத்தற்கு நிலைப்படை அவசியமென அகஸ்தஸ் எண்ணினன்; தன் மெய்காவலுக்குச் செர்மானியபடை ஒன்றையும் நிறுவினன், இக்காவல் வீரருக்கு ஏனைய படைவீரரிலும் பார்க்க இருமடங்கு கூலி அளிக்கப்
•ה2 - וישנו
ஆட்சிநாடுகள்
அகஸ்தஸ் தனிக்கோலோச்சிய நாடுகள் மேற்கே அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கிழக்கே யுபிறிற்றிஸ் நதியையும் வடக்கே சர்மன் கடலையும் தெற்கே ஆபிரிக் கப் பெருவனந்தரத்தையும் எல்லையாக உடையன. வெற்றியால் பெறப்பட்ட நாடுகளும் இத்தாலியத் துணைநாடுகளும் ஆட்சி நாடுகளாயின. ஆட்சி காட் டுக் குடிகள் உரோமரும், உரோமர் குடியேற்றக் குடி களும், உரோமர் குடியாதற்கு உரிமைபெற்ருேரரும், தெரிவுரிமை பெருரத ஆட்சிகாட்டுக் குடிகளும், சுயாதீனம்

கைசர் அகஸ்தர் 09
பெற்ற அடிமைகளு மெனப் பலதிறப்பட்டனர். தனிக் கோலன் நேரே ஆண்டநாடுகள், சிரியா கல்லியா ஐபீரியா எகிப்து என்பன. மேன்மக்கட்சபை ஆண்ட நாடுகள் சிசிலி, நுமிடியா, இலிறியா, மசிடோனியா, சின்னசியா என்பன. பிற்காலங்களில் மேன்மக்கள் நல்லரசு செலுத் தாமையால் ஆட்சி நாடுகள் யாவும் தனிக்கோலராலேயே ஆளப்பட்டன. உரோமர் கிரேக்கரின் நாகரிகத்தைப் பின்பற்றினராகலின் கிரேக்கரிடம் கண்ணுேட்ட முடைய ராயினர்; கிரேக்கரிடம் திறைபெறவில்லை. அகஸ்தஸின் காலத்தில் யூடியா தேசத்தை ஹொட் என்பவன் ஆண் டனன். ஹொட் கிரேக்க நாகரிகத்தைப் பரப்ப, யூத சமயகுரு அரசனேடு பகைத்தனன். எகிப்து தேயத்தில் கமமும் வாணிகமும் விருத்தி யடைந்தன. அலைச்சந்திரியா நகரில் கல்லூரிகளும் சழகங்களும் தழைத்தோங்கின.
é9][Il160í i
பாதியர் ஐரேனிய இனத்தைச்சேர்ந்த சாதியார். அவர்களுடைய மதம் சொருரஸ்திரியம். அவர்கள் பார்சி யரின் அயலோரா கையால் பார்சியரின் நாகரிகத்தைத் தழுவினர். இக் காலத்தில் பாதியர் குறுநிலமன்னரை வென்று திறைபெற்றிருந்தனர். உரோமர் தனிக்கோல் செலுத்தும் நிலத்துக்கும் பாதியர் இராச்சியத்திற்கும் இடையே எல்லையாக உள்ளது யுபிறிற்றிஸ்ருதி. ஆர் மீனிய தேசத்தை உரோமரும் பாதியரும் ஆட்சிசெய்ய முயன்றனர். கி. மு. 58-ல் உரோமர்படை பாதியரால் சயிக்கப்பட்டது. அப்போரில் இழந்த துவசத்தை கி. மு; 20-ல் அகஸ்தஸ் பாதியரோடு நட்பாகி உடன்படிக்கை எழுதிக்கொண்டு பெற்ருரன். மேற்கே அகஸ்தஸ் றையின் நதியைக்கடந்து சர்மானியரை அடக்குவான் புகுந்தான். யூலியஸ் கைசரின் குறிப்புக்களால் சர்மானியர் வேட்டைத் தொழில் செய்யும் புலையரெனவும், வேளாண்மைசெய்யாக் கானவரெனவும் அறிகிருேரம், சர்மானியர் நிரைமேய்க்

Page 172
30 உலக வரலாறு
கும் இடையராக லின், இறைச்சியும் பாலும் வெண்ணெயும் அவருடைய முக்கிய உணவாயின. கி. மு. 12-ல் இளைஞன் டுறுரசஸ் கைசர், சர்மானியரை அடக்க முயன்று சர்மானியநாடுபுக்கு அமர்நடாத்தி வென்று புலம்பெயர்க் தான். இவ்வெற்றி காரணமாக, டுறு சஸ்கை சருக்குச் சர்மானிக்கஸ் என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. அடுத்த வாண்டு முகூர்த்தம் நன்ருயில்லையென நிமித்திகன் கூற வும் போருக்குப்புறப்பட்டு வழியில் புரவியால் இடறுண்டு விழுந்து காலொடிந்து இறந்தான். கி. பி. 4-ம் ஆண்டு இரைபீறியஸ் சர்மானியரை அட்டுத் திரும்பினன். கி. பி. 6-ம் ஆண்டு சர்மானியக் கூட்டத்தினருள் ஒருவராகிய மக்கிறமேனியர் உரோமரோடு இகலலாயினர். அவர்க ளுடைய தலைவன் மறபடாறஸ் 70,000 வேற்படையும், 4000 புரவிப்படையும் திரட்டிப் பயிற்றி இலிறியநாட்டு அரண்கள் சிலவற்றைக் கைப்பற்றினன். இரைபீரியஸ் அவனேடு பொருதுவென்று ஊர்வலம் வந்தான். வேருெரரு சர்மானியக் கூட்டத்தினர் அரிமினியஸ் என்பவனைத் தலைவனுக்கிப் போர்தொடர்ந்தனர். மீறபடாறஸ் நொதும லாக இருந்தானக அரிமினியஸ் உரோமர்தலைவன் வாறஸ் என்பவனேக்கொன்று வாகைசூடினன். அகஸ்தஸ் சர் மானியரை வெல்லமுடியாதென உணர்ந்து போரை கிறுத்தினன்.
2-ŭb LI LITL — Iŭb இலத்தின் செம்மொழிக்காலம் உரோமர் அயலோரை அடக்கிப் பிறநாடுகளைத் தம் ஆட்சிக்குட்படுத்தி அவற்றில் தம்நாட்டுமக்களைக் குடி
யேற்றித் தழைத்தோங்கிச் செல்வமுற்றிருந்தகாலம் அகஸ்தஸ் செங்கோலோச்சிய காலமாதலால் அக்காலமே
மொழிவளர்தற்குரிய காலமாகும். இலத்தின் மொழியும்

இலத்தின் செம்மொழிக்காலம் 311
உரோமராச்சியத்தோடு ஓங்கிவளர்ந்து தனிக்கோற்காலத் தில் ஒருதனிச் செம்மொழியாயிற்று. மேனுட்டு மொழி களுள் யவனமொழிக்கு ஒப்பாக கிற்றற்குரியது இலத் தின் ஒன்றுமே. அது செம்மொழியாகியகாலத்துப் பாடப் பெற்ற அக்ப்பாட்டுக்களானும் புறப்பாட்டுக்களானும் உரோமருடைய வாழ்க்கைச்சிறப்பையும் போர்த்திறத் தையும் நாம் அறியலாம். உரோமரது ஒழுக்கத்திறனை ஆய்தற்கு அவருடைய நாடகங்கள் சிறந்தவை. உரோமர் தத்துவநூல் கற்றிலரென்பது இலத்தின் நூல் கற்ருேரர் யாவருக்கும் புலப்படும். உரோமருடைய காப்பியங்களும், உரைநூல்களும், இசைநூல்களும் மிகவும் போற்றற் பாலன. இலத்தின் மொழி இலக்கண வரம்புபெற்றமொழி யாயினும் பால்வகுத்தமுறை சிறந்ததன்று. அஃறிணைப் பொருள்களை ஏதுவின்றி ஆண், பெண், பொது, அலி யென நான்குபால்களாக வகுத்தமையால் நூல்கற்போர் பெரிதும் இடர்ப்படுகின்றனர். தமிழ்மொழிபோலக் காலங்காட்டும் விகுதிகளும் வேற்றுமையுருபுகளும் உடையதெனினும், இலத்தின் மொழியில் பண்புப்பெயர் கள் அருகி வழங்குதலான் அது தமிழ்மொழிக்கு ஒப்பா காது. ஐபீரியமொழி, பிரஞ்சுமொழி, அங்கிலமொழி முதலியவை இலத்தின்மொழியின் பேருதவியின்றி இயங்காமையாலும் இலத்தின் பழங்கதைகளும் தெய்வ வழிபாடும் கட்டுரைகளும் மேற்கூறிய மொழிகளில் பரந்து கிடப்பதாலும் இலத்தின் நூல் வரலாற்றை ஆராய் தல் பயனுடையதாகும். இலத்தின் செம்மொழிக்காலத் துப் புலவர்களைப் பிரபுக்கள் ஆதரித்தமையால் பல நூல் கள் ஆக்கப்பட்டன. அகஸ்தஸின் அமைச்சன் மசினுஸ் புலவரின் புரவலனகத் துலங்கினன்.
அவன் ஆதரித்த புலவர் கூட்டத்தில் செங்காப் புலவர்கள் பலர் இருந்தனர். அவர்களுள் கவியரங்
கேறினேருள் சிறந்தோர் வேசிலியஸ், ஒருசியஸ்,

Page 173
312 உலக வரலாறு
தக்கர், ஒவிடியஸ், இரைபியூலஸ் முதலிய கவிஞரும் அணிநூல் வல்லோன் மெசாலாவும் உரை நூலாசிரியன் இ லிவியஸ் முதலியோரும் ஆவர். சபை இரீஇய புலவர்கள் சிறந்த காப்பியங்களும் வரலாறுகளும் வசைநூல்களும் பள் என்னும் பிரபந்தங்களும் இயற்றினர். 9. (p. 75-கி. பி. 5-ல் அசினியஸ் பொல்லியா இயற்றிய நாட கங்கள் அழுகைச்சுவை மிகுந்தவை. இவர் கைசர்-பம்பீ யுத்த க்தையும் பாடினர். பம்பினியல் வேசிலியஸ்மாருே வடவித்தாலியில் மந்துவர என்னும் ஊரில் கி. மு. 75-ல் பிறந்தான். அவன் தந்தை ஒருசிற்பி. வேசிலியஸ் அகஸ்தஸ் என்பவனுடன் கற்ருேரன் என்பர். உள்நாட்டுப் போரில் வேசிலியஸ் இழந்த வயல்களை அகஸ்தஸ் திருப்பி அளித்தனன். வேசிலியஸ் இடையர் வாழ்க்கையைச் சிறப்பித்துச் சிறுபாடல்களும் பள்ளுகளும் பாடினன். கி. மு. 30-ஆம் ஆண்டு அவன் ஏனிட்டு என்னும் பெருங் காப்பியத்தை எழுதத் தொடங்கினன். அந்நூல் இயற்ற 10 ஆண்டுகள் கழிந்தன. அந்நூல் 12 காண்ட முடை யது; அழகிய அறுசீரடிகளால் இயற்றப்பட்டது. உவமை, உருவகம், தற்குறிப்பு உயர்வுநவிற்சி முதலிய அணிகள் விரவிய காப்பியமென ஏனிட்டு புகழப்படுகின்றது. அந் நூலின்கண் உரோஜமா யுத்த வரலாறும், ஏனியாஸ் பெரியோனின் கடற்பிரயாணமும் உண்டாட்டும் கீழுல கக் காட்சிகளும் வருணிக்கப்பட் டிருக்கின்றன. கைசர் உரோஜ குல்த்தினர் என்பதும் உரோமர் அரக்கரை வென்ற உம்பரால் நேசிக்கப்பட்டவர் என்பதும் கூறப் பட்டன. கை சருக்கு முகமன் கூறும் நோக்கத்துடனும் தாய்நாட்டைப் புகழும் நோக்கத்துடனும் இக்காப்பியம் எழுதப்பட்டது.
வேறியஸ் றுவஸ் கி. மு. 74-கி. பி. 14
இவர் வேசிலியஸ் என்பவரின் நண்பர். இவர் கைசர் மூதலியோர் பாட்டுடைத் தலைவராகப் பல காப்பியங்களை இயற்றினர்.

இலத்தின் செம்மொழிக்காலம் 313
ஒருசியஸ் பிளாக்கஸ் தென்னித்தாலியில் வெனி சியா நகரில் கி. மு. 65-ல் பிறந்தான். கி. மு 42-ல் ஒக்ராவியனுக்கு எதிராகப் பிலிப்பி என்னும் களத்தில் படைவீரனுகச் சேவித்தான். 33-ல் மசினஸ் இப் புலவ் னுக்குக் கமம் ஒன்று அளித்தான். ஒருசியஸ் நாட்டு வாழ்க்கையைச் சிறப்பித்துப் பாடினன். யவன யாப்பு முறையை இப்புலவன் கழுவினன்; தலைவர்களின் தீ யொழுக்கத்தைக் கண்டித்து வசை நூல்கள் பல இயற் றினன். உரோமர் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐம்புல வின் பங்களில் ஆழ்ந்தனர் எனக் கண்டித்தனன். ஒருசியஸ் கி. பி. 13-ல் துஞ்சினன்,
இரைபியூலஸ் (கி. மு. 54-கி. பி. 19) என்பான், டேலியா என்னும் தலைவிமீது காமச்சுவைவிரவிய பல பாடல்கள்ே ஐஞ்சீரடியான் இசைத் தான். பாட்டுடைத் தலைவியின் உண்மைப்பெயர் பிளானியா என்பது.
புறப்பேட்டியஸ் கி. மு. 45-கி. பி. 15-ல் ஆடல் பாடலிற் சிறந்த ஒஸ்தீயா என்னும் பரத்தையைக் காமுற் றுச் சிந்தியா என்னும் புனைப்பெயர்கொடுத்துப் பல பாடல்கள் இயற்றினன். ஒவிடியஸ் நாசோ கி. மு. 49-ல் இடைப்பிரிவினர்குலத்தில் உதித்தான்; கொறிணு பாட்டுடைத்தலைவியாகக் காமச்சுவை செறிந்த பல பாடல் களே இசைக்தனன். காமவாராய்ச்சி என்னும் நூலின் கண் காதலர் காதலிகளுக்கு ஒவிடியஸ் அறிவுபுகட்டினன். தலைவிகள் என்னும் நூலில் கற்புடைமகளிர் பனிமப்பி, டைடோ முதலிய பெண்கள் தம் தலைவர்களுக்கு வரைந்த உரைகளைச் சிறப்பித்துச் செப்பினன். ஒவிடியஸ் இயற் றிய பழங்கதைகளும், கட்டுரைகளும் இன்பம் பயப்பன. யாது காரணமாகவோ தோமிநாட்டுக்கு அகஸ்தஸ்ஸால் இவன் நாடுகடத்தப்பட்டானுக், இவன் தான் செய்த குற் றத்தை மன்னிக்குமாறு தனிக்கோலனிடம் கேட்கும்படி தன் மனைவியை ஏவினன். உரைநூலாசிரியன் இாையிற்
40

Page 174
314 உலக வரலாறு
ஹஸ் இலிவியஸ் (59 கி. மு.-17 கி. பி.) என்பான் வட வித்தாலியிலே பட்டாவியத்தில் பிறந்தான். இவன் எழுதிய உரோமர்வரலாற்றின் 142 பாகங்களில் 35 பாகங் கள் கிடைக்கின்றன. வரலாறு ஆராய்ச்சிக்குறைவுடைய தாயினும் சொன்னயமுடையது. இசினியஸ் இத்தாலிய நகரங்களின் வரலாற்றை எழுதினன். வானநூல் ஒன் றும் இசினிட்ஸ் இயற்றினன். நிகண்டு இயற்றிய வாறஸ் பிளாக்கஸ் என்போனும் தத்துவஞானி செக்ரஸ்நிகர் என் போனும் அணிநூல்வல்லோன் போக்கியஸ்தாலோவும் கிரேக்க சரித்திரவாசிரியன் பொலிபியஸ் என்போனும் பூமிசாஸ்திரம் எழுதிய ஸ்திராபோவும் இக்காலத்தவரே.
3-ம் பாடம்-உரோமரின் வாழ்க்கை
கல்விகற்கும் முறை
அரசாங்கத்தோர் பிள்ளைகளைக் கற்பிக்கும்படி நிர்ப்பந்திக்க வில்லையெனினும், உரோமர் தம் பிள்ளை களைப் பாடசாலைகளுக்கு அனுப்பிக் கற்பித்தனர். ஏழாண்டு சென்றபின்புதான் பிள்ளைகள் பாடங்கேட் டனர். சிறர் குழவிப்பருவத்தில் சிற்றில் இழைத்தும் சிறுதேர் உருட்டியும் பாவைப்போர் நடாத்தியும் பல வாறு ஓடி ஆடிப் பாடி விளையாடிக் களித்தல் அவர்களின் வளர்ச்சிக்கு ஏதுவாகும் என உரோமர் நன்கு உணர்ந் தனர்போலும். ஒழுக்க நூல் வல்ல நம் அருந்தவப்பிராட்டி ஒளவையார் இயற்றிய ஆத்திகுடியின் "இளமையிற்கல்" என்னும் அருஞ்சொற்ருெரடரை உரோமர் அறிந்திலர் எனக் கருதலாகாது, என்ன? 'இளமையிற்கல்' என்பது பால்வாய்க் குழவிகளைச் சுட்டிற்றன்று. சிருரர் ஏழுவய தளவும் பெற்றரோடு கூடிக் கலந்து 'இட்டுந் தொட்டுங் கவ்வியுக் தழந்தும் குறுகுறு நடந்தும்" இன்புறுங் கால மாகலான், அன்னுரைப் பாடசாலையில்வைத்துத் துடியடக்

உரோமரின் வாழ்க்கை 35
கித் துன்புறுத்தல் அவர்களுடைய தேகவளர்ச்சிக்கும் ஐம்புலவளர்ச்சிக்கும் உள்ளத்தின் விருத்திக்கும் இடை பூரு கிப் பெருங்கேடு விளைக்குமன்ருே ஈண்டு இவ் வுண் மையை விரித்துரைத்தல் பிறிதொன்றுமொழிதலாகுமாக லான் விரியாது விடுகின் ருேரம். இனி உரோமர் தம் சிறு பிள்ளைகளைக் கலவன் பாடசாலைகளிலேயே கற்பித்தனர். இக்காலத்திற் கல்விப்பயிற்சிமுறைகளில் தேர்ச்சி யடைந்த ஆசிரியர் சிலரும் மேற்கூறிய முறையே சிறந்த தென வற்புறுத்துகின்றனர். இது நிற்க.
பண்டைக்காலத்தில் உயர்தரக்கல்விகற்போர் சிறு தொகையினராதலின், இத்தாலியநாட்டிலும் சிலரே கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கற்றனர். இத்தாலியநாட்டிலே தனிக்கோற்காலத்திலே சிறுபாட சாலைகள் மிகுந்தன. அச்சிறுபாடசாலைகளில் படிப் போரின் கம்பலை மிக அருவருக்கத்தக்கதென ஆராய்ச்சி வல்லுநர் செப்புகின்றனர். இலக்கண இலக்கியம் கற்றுக் கொடுக்கும் வித்தியாசாலைகளும் பல இருக்தனவென அறிகிறுேம். அவ்வித்தியா சாலைகளில் மாணவர் அணி நூல்வல்லோரிடம் சொற்பொழிவுசெய்யப் பயின்றனர்.
அதன்பின் இலக்கண இலக்கிய அறிவிற்சிறந்தோர் எதென்ஸ் நகரத்துக் கல்லூரியிற் கற்கச்சென்றனர். உரோமர் சிறுவயதிலேயே யவனமொழியைக் கற்ருரர்கள். முற்கூறிய சிறுபாடசா ஜலகளில் விடுதலை நாட்கள் மிகக் குறைவு. பங்குனிமா தத்தில் ஐந்து நாட்களும் மார்கழியில் ஏழுநாட்களுமே விடுதலை5ாட்களாயின. விழாநாட்கள் சில விடுதலை நாட்களாகவே கொள்ளப்பட்டன. பாடசாலை களில் மாணவர் ஆசிரியருக்குக் கீழ்ப்படிக்கி பாடசாலை யொழுங்குகளுக்கு இசைங் தொழுகினர். ஆசானுக்கு மாணவர் கீழ்ப்படிந்து இருவென இருந்து எழுவென எழுந்து போனர்கள். ஒழுங்கீனம் கண்டிக்கப்பட்டது. களி மடி மானிகளும் தண்டிக்கப்பட்டனர். உரோமநாடு

Page 175
3. உலக வரலாறு
களிலே உபாத்தியாயர்களுக்கு மாணவரைத் தண்டிக் கும் உரிமை உண்டு. தண்டிக்கவேண்டிய சிறுவன நால் வர் பிடிக்க, உபாத்தியாயர் பிரம்புை ஓங்கி முதுகிலும் குறங்கிலும் அடித்தல் வழக்கம், உரோமர் கல்விப்பயிருக் குக் கண்ணிர் அவசியமென எண்ணினர்போலும், மேன் மக்களின் பிள்ள களை அடிமைகள் வைகறையில் துயி லெழுப்பி உணவூட்டிப் பாடசாலைகளுக்குக் கூட்டிச் சென்றனர்.
தனிக்கோற்காலத்தில் உரோமர் தத்துவஞானமும் கற்றனர். சிசறே, சிறிசிப்பஸ் முதலியோர் ஸ்ரோயிக் மதத்தைத் தழுவினர். இம்மதத்தோர் மானமிழப்பதிலும் தற்கொலைபுரிந்துகோடல் நன்றென எண்ணினர். நீதி செலுத்தலிலும் தம் கடமையைச் செய்தலிலும் அவர் மிக ஊக்கமாயிருந்தனர். எப்பிக்தெற்றஸ் என்னும் தத்துவ ஞானி ஐம்புல வின் பங்களைக் கடிந்து உறிச் சமணர் போல் வாழ்ந்து மிகவும் உபசரிக்கப்பட்டான்; மாக்கஸ் ஒள நீலி யஸ் என்னும் தனிக்கோலன் அவருடைய நூல்களைப் படித்துத் தேர்ங்தான். முற்காலத்துத் தனிக்கோலர் தத்துவஞானிகளேக் தீவின8ாளரெனவும் குடியரசுக் கட்சியினரெனவும் எண்ணி அவர்களை நாடுகடத்தியும் கொலைத் தண்டனை விதித்தும் துன்புறுத்தினுர்களாக, பிற்காலத்துத் தனிக்கோலர் அவர்களைச் சான் ருே ரெனவும் க்ன் மக்களெனவும் ஓம்பினுர்கள் மாக்கஸ் ஒளறிலியஸ் ஞானிகளைப் பேணினன், அவன் காலத் தில் பெண்களும் தத்துவநூல் கேட்டனர்.
உரோமருடைய சமயம் தற்கெசலைபுரிதலேப் பாவ மெனக் கண்டிக்கவில்லே, அரசாங்கத்தோரும் தற்கொலை புரிய முயல்வோரைத் தண்டிக்கவில்லை. பெரும்பாலும் உரோமர் ஞானுேபதேசங்களை வெறுத்துச் சாத்திரம் நிமித்தம் முதலியவற்றை நம்பி மூடராகவே வாழ்ந்தனர். பொதுமக்கள் சிற்றின்பம் விழைபவராக லின் தத்துவஞானி களேப் பித்தரென வெறுத்தனர். ஸ்ரோயிக் மதத்திற்கு

உரோழரின் வாழ்க்கை 37
மறுதலையாகிய மதம் எப்பிக்கூறிய மதம். அம்மதம் ஒரு வகை உலகாயதமதமே. உரோமர் பலர் உலகாயதமதத் தையே தழுவி, உண்டு டுத்துப் பெண்டிரோடு கூடிக களித்துவாழ்தலே வாழ்வென நம்பினர். உயிரென்பது நிலையற்ற ஒரு தோற்றமென உரோமர் நம்பினர். பொது மக்கள் யுபிற்றர் முதலிய பல தெய்வங்களை வழிபட்டனர்.
துத்தெய்வங்களுள் பல யவனதெய்வங்களே.
உரோமருடைய கஃகளும் வித்தைகளும்
தனிக்கோற்காலத்து உரேமர் சிற்பிகளையும் ஓவி யரையும் கவின் கலவல்லோரையும் வித்தை வல்லோரையும் நனிபேணினர், உரோமர் பண்டுதொட்டு யவனரிடம் கலையா ராய்ச்சியிலும் வித்தைப் பயிற்சியிலும் பயின்றனர். _உரோமர் யவனரளவு திறமடையவில்லை என்பது திண் ணம். கவின் கலேகளும் வித்தைகளும் குடியரசுக்காலத் திலும்பார்க்கத் தனிக்கோற்காலத்தில் புரக்கப்பட்டன. இசை சிற்பம் சித்திரம் சிலையமைத்தல் முதலிய கவின் கலைகளும் நாவாயோட்டல் இல்லங்கட்டல் கலன்வனதல் அணிகலன் சமைத்தல் முதலிய வித்தைகளும் ஓங்கி வளர்ந்தன. மதில்களைச் சித்திரித்தல் ஆகி காலந்தொட்டே வழக்கமாயிற்று. உரோஜமாயுக்தக்காட்சிகள் பலவும் ஒடீசியனுடைய வீரச்செயல்களும் பிறவும் மதில்களிற் சித்திரிக்கப்பட்டன. ஒடிசியஸ் ஒற்றைக்கண்ணரக்கரு ழைச்சென்று அவர்களுடைய பிலம்போன்ற வாய்க்குக் தப்பிய வரலாறும் குயிலினுமினிய குருவிப்பெண்களின் உரைகளுக்குச்செவிகொடாது ஏகியவரலாறும் நீரரமகளிர் வரையரமகளிர் மீன் வாற்பெண்கள் பொழில் பொய்கை க3ளக் காக்கும் இயக்கப்பெண்கள் முதலியோருடன் அளவளாவிய வரலாறும் வருணிக்கப்பட்டன. ஒடீசிய னுடைய துணேவச் சிலர் ஐம்புலவின் பங்களில் மயங்கி உண்பதும் குடிப்பதும் துயில்வதும் புணர்வதுமே மேன் மையான நல்லொழுக்கமென எண்ணினராதலால் சேர்சி

Page 176
318 உலக வரலாறு
என்னும் மாந்திரிகப்பெண் அவ்வீரரைத் தன் விஞ்சை யால் இலகுவில் மயக்கிப் பன்றி நாய் கரடி முதலிய விலங்குகளாக நிலைமாற்றிய வரலாறும் மிக அழகாக எழுதப்பட்டதெனக் கலைவல்லோர் செப்புகின்றனர். சேர்சி ஒடீசியன நரியாக்க முயன்றதும் அவன் அவளேயும் அவளுடைய ஆயப்பெண்களையும் வெருட்டி அவளைத் தண்டிக்கக் கருதிப் பூங்குழல்பற்றி வாளுருவியதும் மிக அழகாகத் தீட்டப்பட்டதென்பர். ஒவிடியஸ் புலவன் எழுதிய நிலைமாற்றம் என்னும் நூலிலுள்ள சிலகாட்சி களும் நன்கு எழுதப்பட்டன. கற்பின் தேவதை டையன நீராடுதலை அக்ரியன் காணுதலும் அவளது சாபத்தால் அவன் கலைமானக மாறிக் தன் வேட்டைநாய்களால் துரத் தப்படுதலும் சுவர்களில் சித்திரிக்கப்பட்டன. கீறிற்ருரக் தீவு மன்னன் மைனஸ் என் போனின் மனைவி பசுபாயி விடையணதலும் அங்ஙனம் அவள் சூல்கொண்டு ஈன்ற மனித விடையை (Minotaur) வானில் பறக்கப்பயின்ற தாயதாலஸ் என்னும் யங் திறவல்லோன் ஒரு குகை யமைத்து அதில் வைத்ததும், மன்னன் மகள் அரியாத் தினி வழிகாட்ட வீரன் தீசியஸ் குகையினுட்புகுந்து மானிடவிடையுடன் பொருது வென்றதும் நன்கு எழுதப் பட்டன என்றும் அறிஞர் பலர் கூறுப. தலைவர்கள் தத் தமக்குச் சில அமைப்பித்தனர். கோயில்களிலும் பல சிஜலகள் சாட்டப்பட்டன. கப்பிற்றல் என்னும் குன்றில் நாட்டப்பட்ட காமதேவதையாகிய வீனஸ் என்னும் தெய் வத்தின் சிலை மிகச்சிறந்ததெனச் சிற்பவல்லோர் செப்பு கின்றனர். அச்சிலையில் வீனஸ் என்னும் காமதேவதையை ஆடையற்ற ஏந்திள முலையாளாகவும் அத்தன்மையை உணர்ந்து அகங்கரித்தவளாகவும் எழுதிய சிற்பி மிக வல்லோனதல் வேண்டுமென்பர். கேர்க்கியூலஸ் வெற்றி வேற்றடக்கையனக எழுதப்பட்ட சிலையுஞ் சிறந்தது. உரோமர் தம் யுத்த வரலாறுகளைச் சுதையால் படிவம் அமைத்தும் வருணித்தனர்.

உரோமரின் வாழ்க்கை 319
OG Jr (DGD) LUI PLJEdb fi iš SD) 5
பண்டுதொட்டு உரோமர் முழுத்தம் பார்த்து வந்தனர். 'இரவு வில்லிடும் பகல்மீன் வீழும்" என்றவாறு பல உற்பாதங்கள் காயஸ் யூலியஸ்கை சர் காலத்தில் நிகழ்ந் தனவென அறியக்கிடக்கின்றது. இ லிவியஸ் தாம் எழுதிய உரோமர்வரலாற்றில் பல உற்பாதங்கள் நிகழ்ந் தனவெனக் கூறியுள்ளார். குருதி மழைபெய்தல், கன் மழைபொழிதல், gy iffuD r நகர்வீதி பில் உலாவுதல், இரட்டைத் தலைப் பிள்ளைகள் பிறத்தல், அரவங்கள் ஒன்றையொன்று விழுங்குதல், உருமேற உருமுதல், வானவர் விசும்பிற் போர்புரிதல், இரைபராறு இரத்த வெள்ளமாகப் பாய்தல் முதலியவை ஆண்டாண்டு நிகழ்ந் துழி நிகழ்ந்துழிக் கூறப்பட்டன. உற்பாதங்களுக்குச் சாந்திசெய்தல் வழக்கம். பகைவரை உயிரோடு புதைத் தல், மக்கட்பலியிடுதல், கூத்தாடல், தெய்வங்களைப் பரவுதல், விழாக்கொண்டாடல் என்னுஞ் சாந்திகள் உரோமராற் செய்யப்பட்டன. வீயா நகரை அழித்தற் கென உரோமர் செய்த சாந்தி மிக அநாகரிகமானது; கன்னியர் இருபதின்மர் திகம்பரராய், ஆடிப் பாடிக் கோயில் கோயில்தோறுஞ் சென்று தேவரை இறைஞ் சிக் களித்தனரென இலிவியஸ் எழுதினர். சில தெய் வங்களின் விழாக் காலங்களில் ஆடவர் ஆடையற்றவ ராய்த் தெய்வமேறினேராய்த் தெருக்களில் ஓடி மலடி க3ளத் தொட்டால் மலடிகளும் குற் கொள்வா ரென்பது அவர்களுடைய கொள்கை. குடியரசுக் காலத்தில் உரோ மர் புண்ணிமித்தம் பார்த்தனரெனவும் அறியக் கிடக் கின்றது. எலி கீச்கிடுதல், வாசிகள் கனைத்தல், வேழங் கள் ஆர்த்தல் முதலியவை துர்நிமித்தங்கள் என மொழி யப்பட்டன. தலைவர்கள் நிமித்திகரிடம் கிமித்தங்கேட்டே போருக்குப் புறப்பட்டனரெனவும் எத்தொழில் செய்ய முயலும்போதும் நிமித்த நூல்களை ஆராய்தல் வழக்க மெனவும் தெரிகின்றது.

Page 177
820 உலக வர்ல்ாறு
9 GJIT (DTL
உலகிலுள்ள பலவேறு தேயத் தாரும் பலவேறு வரு ணத்தாரும் பல்வேறு முயற்சியாரும் உரோமாபுரத்தில் உறைந்தனர். பசிப்பிணியால் வருந்தும் கிரேக்கரும் பச்சைகுத்தும் பிரித்தானியரும் அரேபியா தேசத்து வணிகரும் ஆபிரிக்காக் காட்டுக் கரியமக்களும் கானவ ராகிய ஐபீரியரும் ஜர்மானியரும் எதியோப்பியரும் எகிப் தியரும் பினிசியரும் அங்காடிகளிலும் நகர்ச்சதுக்கங் களிலும் காணப்பட்டனர். கிரேக்கர் சகலகலைகளிலும் வித்தைகளிலும் பயின்று யந்திர மியக்குதல் முதற் குற்றேவல் செய்தல் ஈருரன பல்வகைத் தொழில்களாலும் பொருளிட்டினர். ஆடல் பாடல் செய்யும் கூத்த ராயும் இன்னிசை யிசைக்கும் பாணராயும் நாவாயோட்டல், கப்பல் கட்டல், இல்ல மமைத்தல்; பாலமமைத்தல், நீர்க் குழா யமைத்தல் முதலியவற்றைச் செய்யுங் தொழிலாள ராயும் கடுந்தேர் கடாவுடு ராயும் யானைப்பாகராயும் கல்லா வி8ளஞரைக் கல்விபயிற்றும் உபாத்தியாயராயும் உயர் தரக் கல்விகற்பிக்கும் ஆசிரியராயும் மருத்துவராயும் கலைஞராயும் ஓவியராயும் சிற்பராயும் செங்கோலோ ச்சும் அமைச்சராயும் கிரேக்கர் இத்தாலிநாட்டிலும் உரோம ருடைய ஆட்சி நாடுகளிலும் பொருளிட்டி வாழ்ந்தனர். உரோமாபுரம் தலைநகரா கையால் பெருங் தொகையான மக்களை யுடைத்தா யிருந்தது. பள்வகைத் தேயத்தோரும் தொழிலாளரும் ஒருங்குவதியும் நகரங்களில் தொற்று நோய்கள் பெருகுதல் இயற்கையே. கி.மு. 23-ல் தொற்று நோயால் உரோமாபுரத்தார் பீடிக்கப்பட்டனர். கி. பி. 65-லும் 75-லும் கொடியதோர் தொற்று நோயால் Bாடோறும் ஆயிரக்கணக்கான சனங்கள் மாண்டனர். ஒளரீலியஸ் என்னும் தனிக்கோலன் காலத்தில் உரோம நாடுகளில் நாடோறும் பத்தாயிரம் மக்கள் இறந்தன ரென்ப. சனங்களுக்குச் சுகாதாரமுறை தெரியாமையி லுைம் நகரத்தில் வறியோர் மிகுந்தமையாலும் தெருக்

உரோமரின் வாழ்க்கை 831
கள் ஒடுங்கியவையாதலாலும் தொற்றுநோய்கள் இலகு வில் பரவின. வீதிகள் ஒடுங்கியவை யாகையால் பண்டம் மாறச்செல்வோர் அபாயகிகழுமோவென அஞ்சியே சென்றனர். நாளங் காடிகளில் காழியர் கூவியரின் இரைச்சலும் ‘கொள்வோர் கொடுப்போரின் கம்பலையும் சகிக்க முடியாதென்பர். இராவழிநடப்போர் இருட்டில் ாடந்தனர். அப்போது உப்பரிகைகளில் வசிப்போர் குப்பைகளை வழிச்செல்வோர்மீது வீசுதலும் உண்டு. மேல் வீட்டோர் சாளரங்கள் வழியாகக் கற்களையும்
ஒடுகளையும் தெருவில் தள்ளிவிடுவர்.
உரோமரின் இல்லங்கள்
கீழ்மக்கள் சிறுகுடிசைகளில் வாழ்ந்தனர். மேன் மக்களின் இல்லங்கள் நாட்டுவீடு நகரவீடு என இருவகைய வாயின. வில்லா என்னும் இல்லங்கள் செல்வர்களால் சு கத்திற்தேற்ற இடங்களில் மலைச்சாரல்களிலும் ஆற்றங் கரைகளிலும் தண்ணறுஞ்சோலைகளிலும் அமைக்கப் பட்டன. நகர வீடுகள் இரண்டடுக்குமுதல் பல அடுக்குக ளுடையன. அவை மரத்தால் கட்டப்பட்டவையா கையால் இலகுவில் அழல்வாய்ப்பட்டன. உரோமாபுரம் நீரோ காலத்தில் தீப்பற்றியபின் கல்வீடுகள் அமைக்கப்பட்டன. இனி, நாட்டு வீடுகள் மேலடுக்கில்லாத மனைகள். அவ் வீடுகளிலே நடுப்பகுதி வெளிமுற்றமாக இருக்கும். முற் றங்களில் நீர்தெளிக்கும் சிவிறிகள் அழகிய உருவின வாய் அமைக்கப்பட்டிருக்கும். சேக்கை மாடங்களும் விருந் தினரை ஒம்பும் மாடங்களும் உத்தியோகமாடங்களும் அடிசிற்சாலைகளும் ஊணருந்தும் மன்றத்தைச்சுற்றி அமைந்திருக்கும். ஊணருந்தும் மன்றத்திலே குடும்பத் தோர் யாவரும் ஒருங்கு கூடியுண்பர். உண்ணுமுன் இல் லுறைதெய்வங்களுக்குச் சிறு துளிகள் படைத்தல் வழக் கம். தொழிலாளரும் கமத்தோரும் வணிகரும் இங்ஙனம்
•ಣ್ಣ ಹಾರಿಕ ಶಿವಾ.

Page 178
322 உலக வரலாறு
நீராடுந் தொட்டிகள்
அரசாங்கத்தோர் நீராடும் மாடங்களைப் பல நகரங் களில் அமைத்தனர். உரோமர் நீராடுதலில் மிகப்பிரிய முடையவர்கள். மேன்மக்கள் நீராடச்சென்ருரல் இரண்டு நாழிகைசெல்லும். நீராடும் மாடங்களில் சேவிக்கும் அடிமைகள் நீராடுவோரின் உடை அணிகலன்கள் முதலிய வற்றை நீக்கி ஒரு மாடத்தில் இடுவர். அடுத்தமாடத்தில் நீராடுவோர் எண்ணெய் தேய்க்கப்படுவர். பின்னர்த் தண்ணீரிலேனும் வெந்நீரிலேனும் இரண்டிலுமேனும் மூழ்கிச்செல்லுவர். மேன்மக்கள் சிலர் மெய்கழுவுதற்கும் அடிமைகளை நியமித்தனர். சில இடங்களில் நீராடுங் தொட்டிகள் பெண்களுக்கெனத் தனியாக அமைக்கப் பட்டன. மேன்மக்கள் சீராடும்தொட்டியில் கீழ்மக்கள் ரோடக்கூடாது. ஒருமுறை ஒரு த8லவன் மனேவி நீராடச் சென்று கீழ்மகன் ஒருவன் மேன்மக்களுக்குரிய தொட்டி யில் நீராடுதலைக்கண்டு அவனைச் சேவகரால் அடிப் பித்தாளாம்.
si Gg LD fair o GDIG
பாடசாலைக்குச் செல்லும் மாணவர் சேவல் கூவுமுன் எழுந்து காலையுணவுண்பர். பொதுமக்கள், காலையுண வைச் சூரியனுதித்து இரண்டு நாழிகை கழிந்தபின் உண் பர். ஒரு துண்டு கோதுமையப்பத்தை உப்போ டேனும் தேனேடேனும் அவர்கள் உண்பர். அதனுடன் திராகைடி ரசத்தையும் பருகுவர். கோதுமையப்பத்தை மீனேடும் கோழியிறைச்சியோடும் உண்ணுதலும் அவர்கள் வழக் கம். முக்கிய உணவை உரோமர் நண்பகலின் பின் உண் பர். பகலுணவுண்பதில் அவர்கள் இரண்டு நாழிகை கழிப் பர். ஒளனருந்தும் மன்றத்திற் கட்டில்களே கிரைகிரை யாக வைத்துப் சாய்ந்திருந்தே உண்பர். ஆட்டுவெண்ணெ யோடும் முட்டையோடும் உண்ணத்தொடங்கல் அவர் வழக்கம். பல்வகைச் சூட்டிறைச்சிகளே ஒன்றன்பின்

உரோமரின் வாழ்க்கை 323
ஒன்ருரக அடிமைகள் ஏந்திகிற்பர். பின்னர்ச் சிற்றுண்டி களும் பண்ணிகாரங்களும் பழங்களும் உண்ணப்படும். மேன்மக்கள் ஒவ்வொன்றையும் உண்டவுடன் விரல்களைக் கோதுமையப்பத்திண்டுகளில் துடைப்பர். அவ்வப்பத் துண்டுகள் நாய்களுக்கு உணவாகும்.
விருந்தோம்புவோர் ஒன்பதின் மரை அழைத்தல் வழக்கம். அழைக்கப்பட்டோர் தம்முடன் ஒருவரையேனும் இருவரையேனும் அழைத்துச்செல்லலாம். விருந்தினர் கள் தம் செருப்புக்களைக் களைந்தபின் உத்தரியத்தோடு சாய்ந்திருந்தே உண்பர். காண்டி முள் என்னும் இக்கால மேனட்டு முறையாக உரோமர் உண்ணவில்லை என்பது கூருரமலே அமையும். உணவு உண்டபின் விறலியர் கூத்தர் முதலியோரின் ஆடல்பாடல்களைக் கண்டுங் கேட்டுங் களிப்பர். விருந்தினர் தம் வீட்டுக்குத்திரும்பும் போது, விருந்தளித்தோரிடம் கையுmைபெற்றுச் செல் வர். மேன்மக்கள் தம் குடிகளுக்குக் கொடையளித்தல் வழக்கம் குடிமக்கள் இடையிடையே சென்று வணக்கஞ் செய்து பரிசில்பெயவர். உரோமர் உண்டிசுருங்கல் அழகென்பதைச் சிறிதும் சிந்தித்திலர். உரோமருடைய ஊணுசையைப் புலவர்கள் தம் நூல்களிற் கண்டித்தனர். "ஒரு சியஸ், யூவினல் என்போர் தாமெழுதிய நூல்களிற் சிற்றின் பங்களைக் கண்டித்தனர். மேன்மக்கள் சி&னச் சுருர வொழிய வேறு சுருரவினை உண்ணுர் எனவும் வளர் பிறையில் காய்க்கும் அப்பிளேயே தேடித்திரிவரெனவும் ஆறுமாசம் ஊறிய மறவையே குடிப்பரெனவும் ஒருசியஸ் கண்டித்தனன். உரோமர் அளவுகடந்து சுவையின்பம் விழைந்தனரென்பது இலக்கியங்களால் இனிது புலப்படு கின்றது.
if i "Gids.T. As Gir ܗ
உரோமர் காட்டுமிருகங்களைப் பொரவிடுதலில் இன் புற்றனர். கொலைத்தண்டம் விதிக்கப்பட்டோரை விஜ்ள யாட்டு முற்றத்தில் ஒ5ாய் உழுவை முதலிய காட்டுவிலங்கு

Page 179
324 உலக வரலாறு
களினிடையே இட்டு வேடிக்கைபார்த்தனர். உரோமர் வாட்போர்க் காட்சியிலும் இன் புற்றனர். வாட்போர்க் கழகத்தில் பயின்ற வீரர் காட்சி காட்டற்காக, விளையாட்டு முற்றத்தில் பொருது உயிர் நீத்தனர். ஆயிரக்கணக்கான அடிமைகள் இக்காட்சிகளுக்காக வாட்போர் பயிற்றப் பெற்றனர். ஆடவரும் மகளிரும் இக்தகைய காட்சி காணுதலில் மகிழ்ந்தனர். தனிக்கோ லாட்சிக் காலத்தில் உரோமர் தேர்ப்பந்தயத்திலும் களித்தனர். தனிக்கோ லர் பெருந்தொகைப் பொருள் செலவிட்டுத் தேரோடும் வீதிகள் அமைத்துத் தேர்கடாவும் பாகரையும் பயிற்றினர் கள். அகஸ்தஸ் கட்டிய பெரிய விளையாட்டு மண்டபத்தில் ஆடவருக்கும் பெண்டிருக்கும் வரிசை வரிசையாக ஆச னம் அமைப்பித்தனன். அம்மண்டபம் ஐயாயிரம் மக்க இளக் கொள்ளக் கூடியதாம். உரோமர் நகைச்சுவை இன் பச்சுவை விரவிய நாடகங்களிலும் இன்புற்றனர் என்பது இலத்தீன் நூல்களால் வெள்ளிடை மஜலபோலத் தெரிகின் றது. இக்காட்சிகளைக் காட்டற்குத் தலைவர்கள் செலவு செய்தனர். வருடாந்தத் தேர்தலில் தெரிந்தெடுக்கப் பெறுந் தலைவர்கள் யாவரும் சனங்களின் வாக்கைப் பெறுதற்காகக் காட்சிகளே நடாத்தினர்கள். தெருச்சனல் கள் ஊணுக்காகவும் காட்சிக்காகவும் தமது தெரிவுரிமை, க8ள உபயோகிக் கனர். தெருச்சனங்கள் தலைவராக விரும்புவோர் தேசத்தொண்டரோ அல்லரோ எனத் தெளியாமல் காட்சியளிப்போரையே தெரிந்தெடுத்தனர். இத்தகைய குடிகளுள்ள 5ாட்டில் குடியரசு ஒருபோதும் செங்கோலாகாது. இங்ங்ணம் உரோமருடைய குடியரசு சிற்சில காலங்களில் தெருச்சனங்களின் அரசாகவும் சில காலங்களில் மேன் மக்களின் அரசாகவும் விருக்தியடைந்து கெட்டது. பின்னர் கிலைத்த தனிக்கோலாட்சி கொடுங் கோலாயிற் றென்பது சனிக்கோற்கால வரலாற்றைப் படிப்போர் யாவருக்கும் புலப்படும்.

உரோமருடைய தமிழ்நாட்டு வாணிகம் 325
4 ம் பாடம்-உரோமருடைய
தமிழ்நாட்டு வாணிகம்
தனிக்கோற்காலத்திலே உரோமர் கீழைத்தேயத் தாரோடு வாணிகஞ்செய்யத் தொடங்கினர். யவனர் தமிழ்நாட்டில் இறங்கித் தமிழரோடு வாணிகஞ் செய்தனர் என்பது அகநானூறு புறநானூறு பத்துப்பாட்டு முதலிய சங்க நூல்களாலும் சிலப்பதிகாரத்தாலும் புலப்படுகின் றது. தமிழர் முதன்முதல் யவனரோடு பழகினராதலின் உரோமரையும் யவனரெனக் கருதியிருத்தல்கட்டும். உரோ மர் யவன நாடுகளிலும் எகிப்திலும் பரவியிருந்தன ராத லின் இந்தியருடன் வாணிகஞ் செய்தனரென்பது மிகை யாகாது. உரோமருடைய வாணிகத்தைப்பற்றி”ஆசிரியர் மூத்த பிளினி (கி. பி. 70) எழுதுங்காலை உரோமர் இந்திய ருக்குப் பெருந்தொகையான பொன்னைக் கொடுத்துப் பட்டாடைகளையும் மிளகு இலவங்கம் முதலியவற்றையும் முத்து இரத்தினம் முதலிய விலையுயர்ந்த பொருள்களையும் வாசனைப் பொருள்களையும் பெற்றனர் எனக் கவ8லப்படு கின்றனர். லண்டன் பல்கலைக் கழகத்துப் பண்டைவரலாற் ரு சிரியர் உவாமிங்ரன் என்பார் இலத்தின் கிரேக்க நூல் களே ஆராய்ந்து, உரோமரும் யவனரும், சீனர் இந்தி யர் என்னும் கீழைத் தேயத்தாரோடு பன்னூற்ருரண்டுகள் வாணிகம் நடாத்தினர் எனச் செப்புகின்றனர். பெரிபுளூஸ் என்னும் நூல் எழுதிய கிரேக்க ஆசிரியரும், உரோம ஆசிரியரான பிளினியும் உரோமர் கீழைத்தேகத்தாரோடு செய்த பண்டமாற்றைப்பற்றி விரித்தெழுதியுள்ளார்கள் இப்பாலுஸ் என்னும் யவனன் செங்கடலூடாகச் சென்று அராபிக்கடலிற்புக்குச் சோழகம் தென் மேற்கிலிருந்து பெயரும் பருவக்காற்றென உணர்ந்தான் என மேற்கூறிய ஆசிரியர் இருவரும் கூறுகின்றனர். செங்கடலை எரி திரையன் கடல் என அவர் கூறினர். சோழகக்காற்றை

Page 180
826 உலக வரலாறு
யவனர் இப்பாலுஸ் என்னும் பெயரால் வழங்கினராம், இப்பாலுஸ் என்னும் பெயர் அராபிக்கடலையும் சுட்டிற்று.
எகிப்தியர் செங்கடற்கரையில் பெருநிசி என்னும் துறைமுகத்தை நிறுவினர். பெருகிசித்துறையிலிருந்து சேரநாட்டிலுள்ள முசிறி என்னும் பட்டினத்தை நாற்பது காளில் அடையலாமென்ப. கி. மு. 608-ல் எகிப்திய நேமிவேந்தனுக்குக் கீழ் நெக்கோ I என்பவன் தேசாதி பதியாயிருந்தான். அவனுடைய ஆணேப்படி எகிப்திய மாலுமி ஒருவன் ஆபிரிக்காக் கண்டத்தைச் சுற்றிக் கடற் பிரயாணம் செய்தனன் எனத் தெரிகிறது எகிப்திர மன்னன் இராமசிஸ் (1 செங்கடலயும் நீல்நதியையும் இணைத்தற்கென ஒரு வாய்க்கால் தோண்டினனென எகிப்திய சரித்திாங் கூறுகின்றது. யவனர் எகிப்து நாட்டைக் கைப்பற்றி யாண்டகாலத்தில் செங்கடலையும் மத்தியதரைக்கடலையும் இத்தகைய ஒரு வாய்க்காலால் இஃணத்தல் அவசியமென உணர்ந்தனர். எகிப்தை ஆண்ட யவன மன்னன் தாலமி 1 என்பான் கி. மு. 284-ல் மேற்கூறிய வாய்க்காலைப் பின்னரும் அகழ்வித் தான். இங்ங்ணம் யவனர் தம் கப்பல்களிற் புறப்பட்டு நீல நதிவழியால் வந்து வாய்க்காள்வழியாகச் செங்கடலைச் சேர்ந்தார்கள். யவனர் செங்கடலூடாகச் சென்று பர்சிய விரிகுடாத்துறைகளிலும் கென்னிந்தியத் துறைகளிலும் பண்டமாற்றி ஏகினர். நீல் நதியின் வாய்க்கால் ஆயிரம் ஆண்டுகள் உபயோகிக்கப்பட்டதெனத் தெரிகிறது. உரோமாபுரத்திலிருந்து புறப்பட்டு புற்றையோ லித் துறை வழியாய் நீல்நதியின் முகத்துவாரத்திலுள்ள அலைச்சா ந் திரியா நகரில் இறங்க, இருபது நாட்செல்லும், அலைச்சாங் திரியாவிலிருந்து நீல் நதிவழியாலோ தரைவழியாலோ சென்று செங்கடலிலுள்ள துறைசாகிய பெருகிசியில் கப்பலேறி ஆடிமாசம் புறப்பட்டால் புரட்டாசியில் தமிழ் நாட்டை அடையலாம். சோழகம் கின்று வாடைதொடங்

உரோமருடைய தமிழ்நாட்டு வாணிகம் 827.
கியபின் மாலுமிகள் முசிறியிலிருந்து மார்கழிமாதம் புறப் பட்டுப் பங்குனிமாதத்தில் எகிப்தை அடைவார்கள்
மரக்கலத்திற் செல்லும் யவன வணிகர் எத்தியோப் பியரோடும் இந்தியரோடும் பண்டமாற்றுச் செய்தனர். மகாஸ்தனிஸ்டமாஸ்கஸ் என்னும் இருவர் பாடலிபுரத்தில் செங்கோலோச்சிய சந்திரகுப்தனுடைய அரசவையில் தூதராயிருந்தனரெனவும் சந்திரகுப்தனின் போன் அசோ கன் எகிப்துதேயத்துத் தாலமி II என்போனுக்கும் சிரியாதேசத்து அந்தியோக்கஸ் 11 என் போனுக்கும் தூது அனுப்பினன் எனவும் தெரிகின்றது. இந்தியநாட்டு மன்னர் ஏவிய தூதர் பலர் ஆழிவேந்தன் அகஸ்த ஸைக் கண்டனர். 600 குறுநிலமன்னரை ஆண்ட பாண்டியன் ஒருவன் அகஸ்தஸ் சக்குத் தூது அனுப்பி அகிஸ்தஸை யேனும் அவனுடைய தூதரையேனும் தன்ஃன்க் காணு மாறு வேண்டினனும், அப்பாண்டியன் கொடுத்த கையில் லாச் சிறுவனுெருவனைப் பூகோள நூலாசிரியன் ஸ்திராபோ என்போன் நான் கண்டனன் எனக் கூறு கிருரன். டையோக்கசியா என்பானும் புளுற்றக்கஸ் என்பா னும் இந்தியாவிலிருந்து வேங்கைகள் கொடையாக அளிக்கப்பட்டன எனக் கூறினர்.
தரைமார்க்கமாகவும் உரோமரும் யவனரும் சீன ருடனும் இந்தியருடனும் வாணிகஞ்செய்தனர். லுக்கூலஸ் பம்பீயஸ் என்போர் தாைமாாக்கமாகச் செய்யும் வாணி கத்தைக் காத் தற்கே சின்னசியா நாடுகளே உரோம ருடைய ஆட்சி நாடாக்கினர். காஸ்பியன் கடலிலிருந்து ஒக்சஸ் நதிவழிச் சென்று பின் தரைவழியாக ஒட்டகக் களின் மீது சென்று இந்து நதியை யடைந்து பின்னர்க் கங்கைக் கரையிலுள்ள பாடலிபுரத்தில் யவனர் வாணிகஞ் செய்தனர். யவனர் ஒக்சஸ்நதியிலிருந்து தரைவழிச் சென்று சீனுதேசமடைந்து பட்டாடைகள் பெற்றுத் திரும்பினர்.

Page 181
328, உலக வரலாறு
கடல்மார்க்கமாகச்செய்யும் வாணிகத்தையும் தர்ை மார்க்கமாகச் செய்யும் வாணிகத்தையும் காத் தற்கே அகஸ்தஸ் பாதியரோடு போர்புரிந்தனன் எனச் சரித்திர வாசிரியன் தாலமியும் ஸ்திராபோவும் உரைக்கின்றனர். யவன ஆசிரியர்கள் இலங்கையின் அளவை மிகுத்துக்கூறு கின்றனர். இலங்கை தென்ன பிரிக்காவோடு இஃணக்கப் பட்டிருக்குமோ வென ஐயுற்றனர். செனக்கா என்ப வன் இலங்கையிலிருந்து ஆபிரிக்காவைச் சுற்றி உரோமா புரத்தை விரைந்து அடையலாமென எண்ணினன். யவனன் ஒருவன் இலங்கையில் இப்பூர் என்னும் இடத்தில் இறங்கினன் எனவும் இலங்கை மன்னன் கி. பி. 41ல் தூது அனுப்பினுன் எனவும் யவனர் கூறுப. தனிக்கோலன் டொமீசியானஸ் என்பவன் காலத்திலிருந்த மாசாலிஸ், குவிந்திலியன், ஸ்ராசியஸ் என்னும் ஆசிரியர் கள் உரோமரும் யவனரும் இக்கியரோடு பண்டமாற்றினர் என நுவன்றனர். யவனர் கடற்கள் வருக்குத் தப்பிக் கலங்கரைவிளக்கங்களைக் கவனிக் து முசிறியிலும் தாமிர பர்ணியின் முகத்துவாரத்தில் நிறுவப்பட்ட கொற்கையி லும் காவிரிப்பூம்பட்டினத்திலும் கரூவூர் எனப்படும் வஞ்சியிலும் இறங்கினர்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் யவனர் இருக்கை புறம்பானதென இளங்கோவடி ஸ் விளம்பினர். யவனர் வாணிகஞ்செய்த துமன்றி மெய் காப்பாளராக ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முத லிய மன்னர்பால் ஊழியம் செய்தனர் எனவும் அறியக் கிடக்கின்றது. யவனர் தம் பாவை விளக்குகளையும் குப்பி யில் கொண்டுவரும் மதுவினையும் தமிழருக்கு விற்றனர். தமிழரிடம் யானைக்கொம்பு முத்து மிளகு இரத்தினம் தூசு என்பவற்றைப் பொன்னணயம் கொடுத்துப் பெற் றனர். ஈண்டு யவனரைப்பற்றித் தமிழ்நூல்கள் கூறும் செய்திகளுட் சிலவற்கை குறித்தல் ஏற்புடைத்தாம். அவை:-

உரோமருடைய தமிழ்நாட்டு வாணிகம் 329
அல்ை:-
'GFJGui
சுள்ளியம் டிேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமா னன்கலம் பொன்னெடு வந்து கறியோடு பெயரும் வளங்கெழு முசிறி யார்ப்பெழ வளைஇ அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய நெடுகல் யானை யடுபோர்ச் செழியன்" (புறம், 149)
'கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியாற் கரைசேர்க்குந்து மலைத்தாரமும் கடற்ருரமும் தலைப்டிெய்து வருகர்க்கீயும் புனலங்கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்’ முழங்குகடன் முழவின் முசிறி யன்ன' (புறம், 344)
யவன ரியற்றிய வினைமாண் பாவை கையேக் தையக னிறைய கெய்சொரிந்து' (கெடுகல்வாடை)
'யவனர் நன்கலந் தந்த தண்கமழ் தேறல் பொன்செய் புனைகலத் தேந்தி நாளு மொண்டொடி மகளிர் மடுப்ப" (டறம், 5f)
என்பனவாம்.
இனி உரோமர்புலவன் ஒருசியஸ் என்பான் இந்தியத் தூதர், அகஸ்தஸை கி. மு. 25லும் கி. மு. 17ஆம் கண் டார்கள் எனக் கூறுகிருரன். உரோமர் சேரநாட்டில் கறி மூடைகள் ஏற்றினர்கள் எனவும் முசிறி என்னும் பட் டினத்தில் அகஸ்தஸ–0 க்குக் கோவில் கட்டினர்களென வும் தெரிகிறது. இலங்கையிலிருந்து முத்தும் இரத்தின மும் யானைக்கொம்பும் சங்கும் ஏற்றப்பட்டன. இவ்வாணி கம் முறையே யவனராலும் உரோமராலும் அராபிய ராலும் கடத்தப்பெற்றது.
42

Page 182
330 உலக வரலாறு
தென்னிந்திய நாணயங்கள் உரோமநாடுகளில் கிடைக் கப் பெருமையால் தமிழர் உரோமரிடம் பெரும்பாலும் பண்டம் வாங்கவில்லை என ஊகிக்கப்படுகின்றது. உரோம ருடைய நாணயங்கள் தமிழ் 5 டுகளில் கிடைப்பனவாகை யால் உரோமர் பண்டம் வாங்கினரெனக் கருதப்படுகின் றது. குடியரசுக்காலத்தவரான உரோமருடைய காண யங்கள் வடமேற்கு இந்தியாவில் அகப்பட்டன. அகஸ் தஸ்முதல் நீரோ ஈருரன தனிக்கோலருடைய தங்கநாணயங் கள் தமிழ்நாட்டிற் பலவிடங்களில் ஆராய்ச்சிவல்லோரால் கண்டெடுக்கப்பட்டன. தனிக்கோலர் இரைபீறியஸ், காயஸ், நீரோ என்போரின் இலச்சினே பதிக்கப்பெற்ற நாணயங்கள் கோயமுத்தூரில் கண்டெடுக்கப்பட்டன" இரைபீறியஸின் நாணயங்கள் 100 கிடைத்தன. அகஸ் தஸின் நாணயங்கள் 453 கிடைத்தன. இலங்கையில் எடுக்கப்பட்ட நாணயங்கள் கி. மு. 8-ம் நூற்ருரண்டுமுதல் கி, பி. 5-ம் நூற்ருரண்டுவரை அச்சிடப் பட்டவை.
மரக்கஸ் ஒளறிலியஸ்காலங்தொட்டு உரோமர் தமிழ ரோடு செய்த வாணிகம் குன்றியதெனக் கருதப்படுகிறது. பிற்காலத்துத் தனிக்கோலருடைய நாணயங்கள் தமிழ் நாடுகளில் கிடைக்கவில்லை. பகைவர் மிகுந்தமையாலும் தொற்று நோயால் உரோமர் பீடிக்கப்பட்டமையாலும் கிறித்தவர் முத்து வைரம் பட்டுமுதலியவற்றை அணிதலைக் கண்டித்தமையாலும் உரோமர் வாணிகம் குன்றியதென லாம். உரோமர் பின்வரும் பண்டங்களுக்குச் சுங்கம்பெற் ரனரெனக் கூறப்படுகிறது .அப்பண்டங்கள் பெரும்பா லும் தமிழ்நாடுகளிலிருந்து மேலைத் தேயங்களுக்கு ஏற்றப் பட்டன. சிங்கம், காண்டாமிருகம், கிளி, மயில், பாம்பு, மூலிகைகள், மிளகு, இஞ்சி, எண்ணெய், அரிசி, பருத்தி, நுண்ணிய ஆடைகள், வைரம், இரத்தினம், ஆமையோடு, சாயம், சந்தனம், வாசனைப் பொருள்கள் என்பவை தமிழ் நாட்டுத் துறைமுகங்களிலிருந்து மேனுடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

கைசர் குடும்பத் தனிக்கோலர் S3
அரிசி, இஞ்சி என்னும் மொழிகள் இலத்தின் மொழி யிலும் யவனமொழியிலும் வழங்கப்படுதல் ஈண்டு நோக்கற் பாலது. கருங்கறி வெண்கறி நெடுங்கறி என்னும் மூன்று வகை மிளகும் ஏற்றுமதி செய்யப்பட்டன. கொத்தர் வேந்தன் அலாறிக்கு என்பான் உரோமரிடம் பொன் னும் 3000 மூடை மிளகும் திறையாகப் பெற்றன். மிளகு சுரநோய்க்கு மருந்தெனவும் இத்தாலியிற் பயிரிடப்பட்ட மிளகு காரமில்லாததெனவும் பிளினி கூறுகின்ருரர். இலங்கையிலிருந்து கிராம்பு, இரத்தினம், சங்கு, மல்லி, எண்ணெய், தேன், தேங்காய், சருக்கரை, பாக்கு முதலி யண் ஏற்றுமதியாயின எனத்தெரிகிறது. இதுகாறும் பண்டைக்காலத்திற் கீழைத்தேயத்தாருக்கும் மேனுட் டாருக்கு மிடையில் நடந்த வாணிகவரலாறு சுருக்கிக் கூறப்பட்டது:
5-ம் பாடம்-கைசர்குடும்பத் தனிக்கோலர்
இரைபீறியஸ். ஆட்சிக்காலம் கி. பி. 14-கி பி. 37.
இாைபீறியஸ் கைசர்ப்பட்டம் பெற்றிருந்தமையா லும் துணைவனென அகஸ்தஸ்ஸினல் சுட்டப்பட்டமையா லும் தனித்தலைமைப் பதவியைப் பெற்றன். இரைபீறி யஸ்ஸின் மருகனுகிய சர்மானிக்க ஸ-ஸும் அவன் தாய் அக் கிரிப்பீனுவும் அயல்நாட்டில் வதிந்தார்கள். சர்மானிக்கஸ் சனங்களால் நேசிக்கப்பட்டமையாலும் கைசராதற்கு உரிமையுடையோனகலாலும் இரைபீறியஸ் அவனைத் தனது எதிரியாக எண்ணினன். இரைபீறியஸ் படைத் தலைமையால் பெறும் உரிமையைச்செலுத்தி மேன்மக்கட் சபையைக் கூட்டினன். தனிக்கோல் செலுத்த விருப்ப மில்லான்போல் இரைபீறியஸ் நடித்தானுயினும், மேன் மக்கள் தனிக்கோலனுக்குரிய உரிமைகள் யாவற்றையும்

Page 183
332 உலக வரலாறு
அவனுக்களித்தனர். அகஸ்தஸின் வழிபாட்டிற்கு ஒரு கோயில் கட்டும்படி மேன்மக்கட்சபை உத்தரவு கொடுத் தது. அகஸ்தஸ் தன்பொருளில் மூன்றிலொருபங்கைத் தன் மூன்ருரம் மனைவி இலிவியாவுக்கும் எஞ்சியதை இரை பீறியஸ் கைசருக்கும் நன்கொடையாக அளித்தான். அகஸ்தஸ் இறந்தவுடன் றையின்பேரியாற்றுப்படையினர் தம் கூலி கூட்டப்படவேண்டுமெனக் கிளர்ச்சி செய்தனர். இரைபீறியனுடைய மகன் டுறு சஸ் வீரரோடு கலந்து பேசி வீரர் சிலரைத் தண்டித்துக் கலகத்தையடக்கினுன் வேருெரருபடை இரைபீறியஸைக் கயவனென எண்ணிச் சர்மானிக்கஸைத் தலைவனென வாழ்த்தியது. சர்மானிக் கஸ் படையை ஒருவாறு சமாதானப்படுத்தினன். கி. பி. 16ல் அரிமீனியஸ் என்னும் சர்மானியத்தலைவன் உரோமர் படையை வென்றன். சர்மானிக்கஸ் வீரரை உற்சாகப் படுத்தி அரிமீனியஸைப் போரில் வென்ருரன். இரைபீறி யஸ் சர்மானிக்கஸ்"க்கு இணேத்தலைமைப்பதவியை அளித் தான்; கி. பி. 17ல் றையின் நதிப்படையின் பகைக்கஞ்சிப் படையை மூன்ரு கப்பிரித்து மூன்று தலைவரை நியமித் தான்.
பாதியநாட்டிலே வெனேனிஸ் வேந்தனுயிருந்தான். அவனே மிடியா நாட்டுவேந்தன் ஆட்டபானிஸ் சிறையிட்டா ணுகி ஆர்மினிய தேயத்தோர் சிறையிலிருக்கும் அரசனைத் தங்களுக்கு அரசனக அளிக்கும்படி உரோமரிடம் வேண் டினர். சர்மானிக்கஸ் ஆர்மினிய தேயத்திற்குச்சென்று பொந்தஸ்நாட்டுவேந்தன் மகன் சீனேவுக்கு அரசளித்துப் பாதியவேந்தனேடு அளவளாவியிருந்து எகிப்து தேயத் துக்குத் திரும்பினன். சர்மானிக்கஸ் எகிப்தில் பிணி வாய்ப்பட்டிறந்தானுக, இரைபீறியஸ் துக்கப்படவில்லை. இரைபீறியஸ் தூண்ட, பிசோ சர்மானிக்கஸ்ஸோடு கலகப் பட்டான். பிசோவிற்குத் தனிக்கோலன் உதவிசெய்யா திருந்ததை உணர்ந்த மேன்மக்கள் விசாரணைசெய்து டிசோவைத் தண்டிக்க எண்ணினர். இதையறிந்த பிசோ

கைசர் குடும்பத் தனிக்கோலர் 333
தற்கொலைபுரிந்துகொண்டிறந்தான். இரசிற்றஸ் என்னும் வரலாற்ற சிரியன், சர்மானிக்கஸைக் குணசீலன் எனவும் இரைபீறியனைத் துக்கசொரூபியெனவும் மொழிந்தனன்.
கைசர் குடும்பத்தைச்சேர்ந்த இலிபோ டுறு சஸ் என்னும் மேன்மகன் ஒருவன் விஞ்சையர் பலரோடு கலக் தானக, அவனுடைய கேளிருள் ஒருவன் இரகசியமாக அவனைப் பின் ருெரடர்ந்து சென்று அவன் செயல்களை யறிந்து தனிக்கோலனுக் கறிவித்தான். தலைவன் ஒற் றரை ஏவி இலிபோவினுடைய வினைகளை உசாவினுனே யன்றி அவனைத் தண்டிக்கவில்லை என்றும் அவனுக்குப் பதவிகளை அளித்தான் என்றும் பின்னர்த் தன்னை ஒற்றி யறிந்ததைத் தெரிந்து இ லிபோ தற்கொலைபுரிந்துகொண் டனன் என்றும் அறிகிருேரம். Y
கி. பி. 22ல் ஆபிரிக்காதேசத்து இரைக்பிறினஸ் என்னும் தலைவன் அமர்க்கெழுதலும் பீசஸ் என்னும் உரோமர்தலைவன் அவனை அடக்கினன். கல்லியர் அவ் வாண்டு பகைமை பூண்டனராகி அடக்கப்பட்டனர். கி.பி. 26ல் திறேக நாட்டார் பகைத்தெழுந்து சபினஸ் என்னும் உரோமர்தலைவனுல் அடக்கப்பட்டனர். கி. பி. 22ல் தென் னித்தாலிய அடிமைகள் துயராற்றது போர்க்கெழுந்து கொல்லப்பட்டனர்.
உரோமர் பெருகினராக, வகுப்பினர் சடை கூடுதல் கஷ்டமாயிற்று. அச்சபையின் உரிமைகளை மேன்மக்கட் சபை பெற்றது. நகரில் கலகம் விளையாமல் காத்தற்கு நகர்க்காவலன் ஒருவன் கியமிக்கப்பட்டான். இரைபீறி யஸ் தனக்கு அதிகாரஞ் செலுத்த விருப்பமில்லையென நடித்து மேன்மக்கட்சபையை உரிமைகள் யாவற்றையும் செலுத்தும்படி ஏவினன். மேன் மக்கட்சபை தேசகாவ லன் என்னும் பட்டத்தை இரைபீறியஸ–0க்கு அளித்த தாக இரைபீறியஸ் அப்பட்டத்திற்குத் தான் தகுதி யில்லாதவனென உரைத்தனன்; தனது தாய்க்குக்

Page 184
334 உலக வரலாறு
கோயில் அவசியமில்லையெனவும் அறிவித்தான்; பொருட் செலவில் கவனமாயிருந்து கோயில்கட்டாமலும் தானஞ் செய்யாமலும் செங்கோல்செலுத்தினன். கீழ்மக்கள் இத் தகைய தலைவனை வெறுத்தனரென்பது ஆச்சரியமன்று. சின்னசியாவிலே பல நகரத்தோர் பூகம்பத்தால் மிடியுற்று வருந்தினராக, இரை பீறியஸ் அவர்களுக்குப் பொருளுதவி புரிந்தான். கி. பி. 38-ல் படைகள் யாவும் தலைவர்களுக்கு அடங்கி ஒழுகவேண்டுமென இரைபீறியஸ் வற்புறுத்தி னன். தனிக்கோலன் தன்னடுகளில் செங்கோலோச்சின னக, மேன்மக்கள் ஆட்சிசெய்யும் நாட்டோர் தங்களை மேன்மக்கள் வருத்துகிருரர்களென முறையிட்டனர். தனிக் கோலனுண இரைபீறியஸ், குடிகளின் பொருளைத் தேசாதி பதிகள் வெளவக் கூடாதென முரசறைவித்தான்; பொருளை விரும்பிக் குடிகளைத் துன்புறுத்துவோரை ஒறுத்து நீதிசெலுத்தினன்; கொலைக்குத் தீர்க்கப்பட் டோரை ஒன்பது நாள்சுழியுங் துணையும் கொல்லப்படா தெனப் பிரமாணம்விதித்தான்; அரசாங்கத்தோரை வேளாளரைப் புரக்கும்படி ஏவினன்; சாத்திரஞ்சொல் வோர், நிமித்திகர், வாள்வீரர், கூத்தர், பாத்தர் முதலி யோரைக் கண்டித்தான்; இத்தாலியில் குடியேறிய யூதர் படைச்சேவையை வெறுத்தனராகையால், அவர்களே வருத்தற்குப் பிரமாணங்களை ஆக்கினன்; தன்வீட்டுச் செலவைச் சுருக்கினன்; மேன்மக்களையும் செலவைச் சுருக்கும்படி ஏவினன்; சமயக்கிரியைகளை ஒழுங்காக நடாத்துவித்தான்; தனது செங்கோலிற் குறைகூறு வோரை அரச துரோகிகளெனத் தண்டித்தான்; ஒற்றர் க2ள ஏற்படுத்தி அவர்க்ள் மூலம் அரசாங்க விரோதிகளை அறிந்தான். ஒற்றர் நல்லோரையும் பொய்ச்சான்று கூறித் தண்டித்தனராக; மேன்மக்கள் இரைபீறியஸைப் பகைக்கத் தொடங்கினர்.
சர்மானிக்கஸின் தங்கையைத் தன்மகன் டுறு சஸ் என் போனுக்கு இரைபீறியஸ் மணமுடித்துவைத்தனன்,

கைசர் குடும்பத் தனிக்கோலர் 885
மந்திரி செயானஸ் என்பேர்ன் மணமகள் தனிக்கோல னுக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்கிருளென இரை பீறியஸ–0க்கு உரைக்கவும், அவன் அவ்வுரையைப் பொருட்படுத்தவில்லை. கி. பி. 23ல் டுறு சஸ் இறந்தான். பன்னிரண்டுவருடங்களுக்குப்பின் செயானஸ் என்னும் அமைச்சனும் டுறு சஸ் என்னும் இளங்கோவின் மனைவி யும் டுறு சஸ் கைசரை நஞ்சூட்டிக்கொன்றனர் என வெளி வந்தது. இரைபீறியஸ் தன் மகன் டுறுரசஸ் என்பவனு டைய குமாார் சிறுவராயிருந்தமையின் சர்மானிக்கஸின் குமாரர்களைக் கைசர்களாக வளர்த்தான். இது கிற்க.
இரைபீறியஸ் மேன்மக்கள் பலரை ஒற்றிக் கொன் ரூன். கி. பி. 26-ல் ஒற்றர் சிலர் சர்மானிக்கஸின் மனைவி அக்கிரிப்பீன அரச துரோகம் விளைத்தாள் என வழக் குரைத்தனர். இங்கினம் அரச பக்திகுன்றியதாக, தனிக் கோலன் உரோமாபுரத்தை நீங்கிக் கப்பிறியாத்தீவில் தமியனுய்க் காலத்தைக்கழித்தான். தனிக்கோலனை வெறுத்தோர் அவன் காமலீலைசெய்யப் போய்விட்டான் எனக் கூறினர். அக்கிரிப்பீனுவும் சபினஸ் என்போனும் அரச துரோகஞ்செய்தன ரெனச் செயானஸ் சான்று கூற, மேன் மக்கள் சபின்ஸ் என்பவனைக் கொன் ருரர்கள். செயானஸ் தனிக்கோலனுதற்கு முயலுகிருரனென இரை பீறியஸ் ஐயுற்று அவனைக் கோறம்கு உபாயங்தேடினன். மக்கிருே என்போனே நகர்க்காவலனுக்கி அவ்வுரிமை வேண்டுமானல் செயானஸ் என்பவனைக் கொன்று பெறும்படி இரைபீறியஸ் ஏவினன். கி. பி. 33-ல் செயா னஸ் என்னும் அமைச்சனை மேன் மக்கட்சபைக்கழைத்து அரச துரோகம் என்னும் குற்றம் உரைக்க, மேன்மக்கள் அவனை உடனேகொல்வித்தனர். இரைபீறியஸ், சர் மானிக்கஸின் மகன் காயஸ் கமலஸ் கைசருக்குத் தன் பொருளை எழுதிவைத்துக் கி. பி. 87-ம் ஆண்டு உயிர் மீத்தான்,

Page 185
336 உலக வரலாறு
நகர்க்காவற் படைத்தலைவன் மக்கிருேவின் உதவி யால் காயஸ் தலைமைப்பதவியை எய்தினன். காயஸ் மேன் மக்கட்சபையைக் கூட்டி இரைபீறியஸின் சாக்கொண் டாட்டத்தை நடத்திக் கோயில் அமைத் தற்கு உத்தரவு கேட்டான். மேன்மக்கட்சபையினர் தனிக்கோலனுக்குக் காவலுரிமையை அளித்துச் சாவிழாக்கொண்டாடற்கும் உத்தரவளித்தனராயினும், கோட்டம் நிறுவ உடன்பட் டிலர். சனங்கள் யாவரும் காயஸ் வாழ்கவென வாழ்த்திக் களித்தனர். காயஸ் ஒற்றர்களைக் கலைத்து இரைபீறியஸி னல் காடுகடத்தப்பட்டோரைத் தாய்நாட்டுக்குத் திரும்பும் படி அழைத்தனன். குளோடியஸ் என்னும் ஒருவன் புகழ்பெற்றிலனயினும், கைசர் குடும்பத்தினனுகையால், அவனுக்குக் காயஸ் இணைத் தலைமைப் பதவியை அளித் தனன். காயஸ் தன் சுற்றத்தாரை நேசித்துப் பொரு ளுதவிசெய்தான். காய ஸ் தனக்குத் தேசகாவலன் என்ற பட்டம் வேண்டாமென மொழிந்து தன் படை வீரருக்கும் கீழ்மக்களுக்கும் தானஞ்செய்து குடியோம் பினனுகையால், பொது சனங்கள், 'காயஸ் நீடுழி வாழ்க’ எனக் கோயில்களில் பிரார்த்தித்தார்கள். காயஸ் மெலிந்த உடம்பினன்; கால் சிறிது ஊனமுற்றவன்; ஆகையால் காலிகூலா எனப்பட்டான்.
காயஸ் வாள்வீரரோடு கலந்து களித்தான்; கூத்தர் முதலியோரோடும் கூடிக் களித்தான்; குற்றஞ்சாட்டப் பட்டோரை வருத்துவதிலும் இன்புற்ருரன். காயஸ் புலன் வழிச்சென்று வரைவின் மகளிரோடு புல்லியும் புலந்தும் களித்து ஊற்றின்பஞ் சுவைத்தான். இவ்வாழ்க்கை காரணமாகக் காயஸ் நோய்வாய்ப்பட்டான். இதையறிந்த சனங்கள் துயர்க்கடலில் மூழ்கினர். காயஸ் சுகமடைந்த வுடன், சனங்கள் கோயில்களுக்குச்சென்று தேவரைப் பரவிப் பலிகொடுத்து ஆடியும் பாடியும் குதிரைப்பந்தயம் நடாத்தியும் அல்லும் பகலும் சாறயர்ந்து கொண்டாடினர் கள். காயஸ் வாட்போர்க்காட்சி, குதிரையோட்டம், ஆடல்

கைசர் குடும்பத் தனிக்கோலர் 837
பாடல் முதலியவற்றில் இன்டம் விழைந்தனன்; இன்னியம் இயம்ப, விறலியர் வீணை வாசிக்க, இசையின்பம் நுகர்க் தான். சனக கூட்டங்களில் காயஸ் தானே ஆடிப்பாடிக் கூத்தரைப்போல் நடித்தான். தேர்ப்பாகர் கட்சியாகித் தேர்கடாவின்ர் என்றும் காயஸ் பச்சைக் கட்சியாரைச் சார்ந்தான் எ ன் று ம் சரித்திரநூல்கள் கூருகிற்கும். காயஸ் தனது தங்கைமார் மூவரோடும் முயங்கினனென வும் வரலாறுகள் கூ யம்; இருவரோடு கூடினன் என்ப தில் ஐயமுண்டாயினும் டுறு சில்லாவை மிகவும் காதலித் தான் என்பதில் சற்றேனும் ஐயமில்லை; அவளைக்கண வனைப்பிரிந்து தனது மாளிகையில் இருக்கச்செய்தனன்; அவள் இறந்தா ளாக ஆற்ருரணுகித் தேற்றவும் தேருரன கித் துயருற்றுப் புலம்பித் திரிந்தான்.
காயஸ் மூன்றுமனே வியரை ஒருவர்பின் ஒருவராக மணந்தான். அம்மூவரும் பிறர்மனைவியராயிருந்தவரென் பது அறியற்பாலது. உரோமர் பிறர்மனை 5மத்தலைத் தீயவொழுக்கமெனக் கண்டித்தாலும், ஆடவரும் பெண்டி ரும் பிறரை இச்சித்த காலைத் தாம் மணந்தவரைப்பிரிந்து இச்சித்தோரை மணந்தனர். காயஸ் ஒரு பித்தன்; முதற்கடவுள் யூற்பிற்றரின் கோயிலையடைந்து தானே முதற்கடவுளெனக் கூறித் தேவனை அமர்க்கழைத்தனன்; அன்றியும், தனக்கோர் கோயிலமைத்துத் தனக்ன முதற் கடவுளென வணங்கும்படி முரசறைவித்தனன். யூதர் காயஸ் என்னும் தனிக்கோலனை முதற்கடவுளென வணங்க விரும்பாமல் குறையிரந்தனராக, காயஸ் அவர்களுடைய தூதர்களைப் பரிகாசம் பண்ணினன். கி. பி. 39ல் காயஸ் நீர்க்குழாய் ஒன்று கட்டுவித்தான். பேயாயி சீரி&ணயில் கப்பல்களை கிரை கிரையாக கிறுத்தி அவற்றின் மீது பலகைகளைப் பரப்பிப் பாலம் 5ட்டித் தனது தேரைச் செலுத்தினன். கைசர் அகஸ்தஸ்முதலியோரை இலிவியல் வேசிலியஸ் என்னும் நூலாசிரியர் புகழ்ந்துரைத்திருத் தலைக் காயஸ் அறிந்து அழுக்காறுற்று அவ்வேடுகளை
48

Page 186
338 உலக வரலாறு
வாசக ச4%லகளில் வைக்கவேண்டாமெனக் கற்பித்தான்; பொருள் வேட்கையால் ஒற்றர்களே ஏற்படுத்திச் செல்வரை வருத்தினன். இங்கனம் காயசஸ் வெய்யோனுனன்; புதிய சுங்கங்களும் அரசிறைகளும் இறுக்கும்படி முரசறைவித் தான். நகரக்காவற் படைத்தலைவன் தனிக்கோலனைக் கி. பி. 40ம் ஆண்டு கொன்ருரன்,
குளோடியஸ் ஆட்சிக்காலம் கி. பி. 41-54
தனிக்கோலனைக்கொன் ருேரர் அரசியலை நடாத்தற்கு ஒருவரையுந் தேர்ந்தெடுக்கவில்லை. காயஸ்-Cம் தனக்குப் பின் தலைமைவகித்தற்கு ஒருவரையும் நியமிக்கவில்லை. மேன்மக்கட்சபையும் படைவீரரும் யாதுசெய்யலாமென ஆலோசித்தனர். 41-ம் ஆண்டு இணைத் தலைவர்கள் மேன் மக்கட்சபையைக் கூட்டி நகரைக் காத்தனர். மேன்மக் கட்சபை காயஸ் கொடுங்கோலனெனத் தீர்மானித்தது; ஒருசாரார் குடியரசை ஏற்படுத்தவேண்டுமென்றும் ஒரு சாரார் தனித் தலைவன் ஒருவனைத் தெரிந்தெடுக்கவேண்டு மென்றும் வாதித்தனர்; எங்ஙனமாயினும், தனிக்கோல னேக் கொன்ற கயிறு என் போனுக்கு ஒருவரும் யாதொரு தீங்கும் செய்யக் கூடாதென விதித்தனர். இஃதிங்நுன மாகக் காவலுக்கமைந்த படைவீரர் தனித்தலைவனை நிய மித் தற்கு முயன்றனர். வீரர் சிலர் இல்லங்களுள் சென்று குறைகொண்டுழி, ஒருமாடத்தில் குளோடியஸ் தன்னுயி ருக்குக் கேடுவிளையுமோவென அஞ்சி மறைந்திருந்த தைக் கண்டனராகி, ' எங்கோ வாழ்க குளோடியஸ் வாழ்க’ எனத் தொழுதேத்தினர்கள். படைவீரர் குளோடியஸைக் கொண்டுசென்று பாசறையில் விட்ட னர். குளோடியஸ் தலைமைப்பதவியை இச்சிக்கவில்லை யாயினும், பலரும் பலமுறை தூண்ட உடன்பட்டுப் போர் வீரருக்கு 1500 பொன் அளிக்க வாக்குக் கொடுத்தான். மேன் மக்கள் ஒன்றுஞ்செய்ய வியலா திருந்தனர். 'காயஸ் என்னும் பித்தனைக்கொன்று குளோடியஸ் என்னும்

கைசர் குடும்பத் தனிக்கோலர் 339
மூடனையா தலைவனுக்கினிர்கள்' எனக் கயிருர கூறினன். கயிருர படைவீரராற் கொல்லப்பட்டான்.
குளோடியஸ் சர்மானிக்கஸின் கம்பியாகிய டுறு சஸ் என்பவனின் குமாரன். குளோடியஸ் மனவலிமையில் லான் எனவும் பேசும்போது நடுங்கும் இயல்பினன் எனவும் இகழப்பட்டான்; எனினும் குளோடியஸ் ஒரு அறிஞன். அவன் ஏற்றுறியர்வரலாற்றை 20 புத்தக மாகவும் பினிசியர்வரலாற்றை 8 புத்தகமாகவும் எழுதி னன். குளோடியஸைக் கற்றறிமூடனென எண்ணி அடிமைகளும் மனைவியரும் ஏமாற்றமுயன்றனர். குளோ டிரஸ் அவ்வளவு மூடனல்லன் என்பது உணரற்பாலது.
குளோடியஸ் அகஸ்தஸின் தங்கையாகிய ஒக்ராவி யாவின் வழிவந்த வலேரியா மெசாலினுவை மணந்தான். பின்னர், தன் மகளே அகஸ்தஸின் குடும்பத்திற் றேரன் றிய சைலானஸ் என் போனுக்கு மணஞ் செய்விக்க எண்ணினன். டல்மேசியா 5ாட்டுத் தேசாதிபதியான கமிலஸ் ஸ் கிறிபோனியஸ் என்பான் தன்னைப் பகைத்தா கைக், குளோடியஸ் தலைமைப்பதவியைத் துறக்க எண்ணி னன். படைவீரர் இதையுணர்ந்து பகைவனைக் கொன் றனர். கி. பி. 47-ல் குளோடி யஸ் கப்பற்போர்க்காட்சி, வாட்போர்க்காட்சி, விளையாட்டுக்காட்சி முதலியவற்றை நடத்தினன்; தானியங்களைச் சேகரித்துத் தன் பண்டக சாலைகளை நிரப்பினுன்; உரோமாபுரத்தின் துறைமுகத் தைப் பெரியகப்பல்களை ஏற்கத்தக்கதாக அகழ்வித்தான்; ஆட்சிநாட்டுக்குடிகளுக்குப் பல உரிமைகளை அளித்தான்; பிரித்தானியாவை வென்று ஆட்சி நாடாக்கினன்; தம் தெய்வத்தை வணங்கலாமென யூகருக்கு உத்தரவு கொடுத் தான். -இவ்வண்ணமி குளோடியஸ் செங்கோல் செலுத்தி ன்ை.
சுயாதீனமடைந்த கிரேக்க அடிமைகளே தனிக் கோலரின் அமைச்சராயினர். அக்கிரேக்கர் நூல் கற்ற

Page 187
340 உலக வரலாறு
விவேகிகள். திரவியந்தேடல் அவர்களின் நோக்கம் குளோடியஸினுடைய மனைவி மெசாலின அமைச்சரின் துணேவியாயினள். அவள் நாக்கீசஸ் என்னும் அமைச்ச னேடு கூடினுளெனச் சிலர் கூறினர் இருவருமே செனக் காவை நாடுகடாத்தினர். சைலானஸ் குளோடியஸை க் கொல்லுதற்கு வாள் ஓங்கினனெனக் கனுக்கண்டோ மென்று நாக்கீசஸ் என்னும் அடிமையும் மெசாலிவுைம் சான்றுரைத்துச் சைலானஸ் என்பவனைக் கொல்வித்த னர். சைலான ஸ் குளோடியஸைக் காணச்செல்லக் குளோடியஸ் அவன் தன்னைக் கொல்லுதற்கே எதிர்ந்தா னென நம்பி அவனுக்குக் கொலைக் தண்டனை விதித் தான் என்பதுகதை, மெசாலினு வேறு பல மேன்மக் க8ளயும் கொல்வித்தனள். அவள் சிலியஸ் என்பவனேடு கூடிக் களித்தனள். கி. பி. 48 ல் அவனே டு அவள் ஒரு போலி மணக்கிரியை நடத்தினள். சிலியஸ் குளோடிய ஸைக் கொன்று மெச* லினுவின் மகன் பிரித்தானிக்கனை இளங்கோ ஆக்குதற்கு இணங்கினன் எனக் கட்டுரைகள் கூறும். முன்னர்க் கூறிய மணக்தைச் சிலர் தனிக்கோல னுக்கறிவிக்க, மெசாலின தன் பிள்ளைகளைத் தனிக்கோல
முடிவில் சிலியஸ் கொலைத் தண்டம் விதிக்கப்பட்டான். இவ்வளவில் நாக்கீசஸ் மெசாலினவை ஒற்றத்தொடங் னென். மெசாலின அலர் பரம்புகலைப் பொருட் படுத்தா மல் பரத்தரோடு கூடிக் களித்தாள். நாக்கீசஸ் தன் னுயிர்க்கஞ்சித் தீவினையாளரை ஏவி மெசாலினுவைக் கொல்வித்தான்; அதன் பின் குளோடியஸை வேருேரர் மனைவியை விவாகம் செய்து கொள்ளும்படி ஏவினன். அமைச்சருள் ஒருவனுன கலீசஸ் என்போன் கலி கூலா வின் மனைவி லொல்லியா பெளலினுவை மணஞ்செய்து கொள்ளும்படியும் பல்லாஸ் என்னும் வேருேரர் அமைச்சன் அக்கிரிப்பீனவை மணஞ்செய்துகொள்ளும்படியும் தூண்டி னர்கள். இங்கினம் கிரேக்க அடிமைகள் அமைச்சரா

கைசர் குடும்பத் தனிக்கோலர் 34
யிருந்து அரசியலை நடாத்தியதுமன்றித் தனிக்கோலனின் குடும்பவிஷயங்களிலும் தலைபிட்டனர். ஆசிரியர்கள் யாவ ரும் அக்கிரிப்பீன தலைவியாக அதிகாரம் செலுத்தினுள் ஆதலால் அக்கிரிப்பீன சான் மெசாலினவைக் கொல் வித்தனள் எனக் கருதுகின்றனர்.
அக்கிரிப்பீன தன் மகன் நீரோவுக்குக் குளோடி யஸின்மகள் ஒக்ராவியாவை மணஞ்செய்வித்தற்காகச் சைலானஸ் ஆசாரமில்லாதவன் எனச் சான்று சொல்லும் படி உரிமைக் கணக்கன் விற்றேலியனை ஏவினள். அக் கிரிப்பீனு தன் மருமகளாதலின் அவளை மணக்கலாமோ வெனக் குளோடியஸ் ஆலோசித்தனன். மருமகளே விவாகஞ்செய்தல் உரோமர்நாட்டின் வழக்கமன்று. உரிமைக் கணக்கன் விற்றேலியஸ் மேன்மக்கட்சபையில் எழுந்து மருமகளே விவாகஞ்செய்தல் குற்றமன்றென ஒரு விரிவுரைசெய்தான். அதன் பின் குளோடியஸ் அக்கிரிப் பீனவை மணம் புரிந்துகொண்டான். லொல்லியா பெள லீனவை அக்கிரிப்பீன கொல்வித்தாள். அக்கிரிப்பீன இராணியாக அரசு செலுத்த ஆசைப்பட்டனள்; தனது உருவை நாணயங்களில் பதிப்பித்தாள். கி. பி. 50ல் அவள் தன் மகன் நீரோவை இளங்கோவாக்கினள்; மெசாலினவின் மகன் பிரித்தானிக்கஃன இளங்கோவாக்க வில்8ல. இச்சந்தர்ப்பத்தில் கி. பி. 54ல் குளோடியஸ் இறந்தான். அவனுக்கு அக்கிரிப்பீன நஞ்சூட்டினள் என ஒரு கதை உண்டு. செனக்கா என்னும் புலவன் தனது நாட்டுக்குத் திரும் புத நிற்கு உத்தரவுபெறுதற்காகக் குளோடியஸை வியந்து ஒரு வியாசம் எழுதியும் உத்தரவு பெற்றிலன், குளோடியஸ் இறந்தவுடன் குளோடியஸ் தேவலோகஞ்சென்ற வரலாறு என ஒரு வசைநூல் இயற்றி குன்,
குளோடிவஸ் பிரித்தானியாவைக் கைப்பற்றுதற் குப் புளோட்டஸ் என்னும் படைத் தலைவனை அனுப்பி ன்ை. அப்படையில் சேவித்த கல்பா, வெஸ்பாசியானஸ்,

Page 188
342 உலக வரலாறு
என்னும் இருவர் பிற்காலத்தில் தனிக்கோலராயினர். கி. பி. 44ல் குளோடியஸ் பிரித்தானியாவில் இறங்கிப் போர்நடத்தினன். கமலடுனம் என்னும் இடத்தில் பிரித் தானியர் தோல்வியடைந்தனர். குளோடியஸ் இவ்வெற் றியை நினைவுகூர்தற்கு வெற்றிப்பந்தர் ஒன்றை உரோமா புரத்தில் அமைத்தனன்; தன் மகனுக்குப் பிரித்தானிக் கஸ் என்னும் பட்டத்தை ஈந்தான். புளோட்டஸ் உரோ மாபுரத்தில் ஊர்வலஞ்சென்ருரன். கறற்ருரக்கஸ் என்னும் பிரித்தானியவிரன் கடும்போர் செய்தும் உரோமர்கைப் பட்டான். குளோடியஸ் இறந்தபின் பெளவீனஸ் மேற்குப் பிரித்தானியாவை அடக்கினன். போயிடீசியா என்னும் வீரமங்கை பின் தலைமையில் கிழக்குப்பிரித்தானியர் போர் செய்தனர். அக்காலத்தில் இலண்டன் சிறுநகரா யிருக் தி அதி.
GJr. p. fia D f (fl. 5'-f. f. 68.
குளோடியஸ் கி. பி. 54ல் துஞ்சினனுக, அக்கிரிப்பீன. வும் நகர்க்காவற்படைவீரரும் நீரோவைத் தனிக்கோல னெனத் தொழுதனர். குளோடியஸின் மகன் பிரித் தானிக்கனை யாவரும் புறக்கணித்தனர். நீரோ காவற் படைக்குத் தான் கொடை அளிப்பானென வாக்களித்து மேன்மக்கட்சபையைக் கூ ட் டி க் குளோடியஸ" க்குக் கோயில்கட்ட உத்தரவுபெற்ருரன். நீரோவின் தந்தை தன் வாழ்க்கை சீர்கெட்டதென உணர்ந்து தனக்குப் பிறக்கும் பிள்ளைகளால் நாட்டுக்குக் கேடுவிளையுமென்று சொன் னன் என ஒரு கதை உண்டு.
நீரோவின் தாய் தானே எல்லா உரிமைகளையும் செலுத்தி அரசுபுரிய எண்ணி நக்கீசஸ் முதலிய அமைச் சரை அகற்றினள். நீரோவின் ஆசிரியன் செனக்கா அமைச்சனுயினன். செனக்காவும் பூ றஸ் என்னும் வேருேரர் கிரேக்கனும் அக்கிரிப்பீனுவின் எதிரிகளாயினர், நீரோ அரசியல் செலுத்தலைப்பற்றிக் கவலையில்லோனுய்

கைசர் குடும்பத் தனிக்கோலர் 343
அக்கிரி என்னும் பெண்ணுெருத்தியுடன் கூடிக் களித் தான். அக்கிரிப்பீன நீரோவைச் சினந்துபேச, நீரோ தன்னைக் கண்டியாத செனக்காவின் சொற்கேட்டு அக் கிரிப்பீனுவின் துணைவனை பல்லாஸ் என்னும் அடிமையை நாடுகடத்தினன். அதன் பின் அக்கிரிப்பீன பிரித்தானிக் கனே தலைவனுவதற்கு உரிமையுடையவன் எனக் கலகம் வி&ளத்தனளாக, நீரோ பிரித்தானிக்கனை நஞ்சூட்டிக் கொன்று அக்கிரிப்பீனுவை அரசமுன்றிலிலிருந்து அகற் றினன்.
நீரோ செனக்காவை அரசியலே நடாத்த விட்டுச் சிற் றின்பங்களில் அழுந்தினன். ரோ இராக்காலங்களில் பலப்பல வேடம் பூண்டு நகரில் உலாவிப் பையரவல்குலா ரைப் புல்லிக் களித்தானுக, நகரத்து இளைஞர் சிலரும் வேடம்பூண்டு நீரோ வின் பெயரால் விலைமாதரில்லங்களில் நுழைந்து களித்தனர். நீரோ தன் மரியாதையை இழந் தான் என அலர் பரவியது.
கி. பி. 58ல் நீரோ ஓ தரவின் மனைவி பப்பியா சபின வுடன் தொடர்புடையனணுன். அவள் ஒதாவை மணஞ் செய்தற்காக முன்னெரு கணவனைப் பிரிந்தவள். நீரோ தன்னைக் கா முற்றதை நினைந்து ஒதாவையும் பிரிய முயன் ருரள், பப்பியா சபினுவுடன் கூடிக் களிப்பதைத் தன் தாய் இகழ்ந்தாளாக, நீரோ தன் தாயை ஒடத்திலேற்றிக் கட லில் வீழ்த்தினன். அக்கிரிப்பீன நீந்திக் கரையேறிய வுடன் தீவினையாளராற் கொல்லப்பட்டாள். அவள் மேன் மக்களைத் துன்புறுத்தினள் ஆகலின் மேன் மக்கள் அவ இளக் கொன்றதற்காக நீரோவுக்கு நன்றி கூறினர்.
கி. பி. 62ல் பூறஸ் இறந்தான். அதன் பின் நீரோ செனக்காவின் சொல்லை மீறத்தொடங்கினுன், நீரோ காயஸ் கலி கூலாவைப்போலச் சபையில் ஆடலாலும் பாடலாலும் கழிபேரின்பம் விழைந்தான். காவற்படைத் தலைவன் இரைகலினஸ் நீரோ வைப்போல் சிற்றின்பம்

Page 189
344 உலக வரலாறு
விழைவோனகையால் நீரோவின் சிநேகிதனனுன். இரு வரும் புளோற்றஸ் என்னும் மேன்மகன் ஒருவனைக் கொன் ரூரர்கள். இரைகலினஸின் உதவியால் நீரோ பப்பியாச பினுவை மணந்துகொண்டான். சனங்கள் தங்கள் வெறுப் பைக் காட்டுதற்கு நீரோவின்மகள் ஒக்ராவியாவின சிலை க3ளத் தொழுதார்களாக, நீரோ தன் காமக்கிழத்தியைக் கொல்வித்தான். அக்கிரிப்பீனவைக் கொன்ற அனிற்றிக் கஸ், பப்பியா சபின தன்னேடு கூடினுளெனப் பொய்ச் சான்று கூறினனுக, பப்பியா சபின கொல்லப்பட்டாள். இது கிற்க. நீரோ ஒரு விழாக்கொண்டாடி, அவ்விழாவில் பிதடோறஸ் என்னும் இளைஞன் பெண்ணுக, ஒரு மணக் கிரியை நடத்தினன். இங்ஙனம் நீரோ பலராலும் வெறுக் கப்பட்டான். மேலும், அக்காலத்தில் பொன் இல்லாமை மால் நாடு மிடியுற்றது.
நீரோவும் பொருளை யடையவிழைந்து கலிகூலாபோல் புதுவருவாய்களைத் தே ராமல் ஒற்றரை ஏற்படுத்திப் பிறர் பொருளே வெளவினன். கி. பி. 64-ம் ஆண்டு உரோமா புரம் தீப்பற்றி எரிந்தது. ஐந்து நாளாகத் தீ தணிய வில்லை. நகரின் அரைப்பாகம் அழற்பட்டுச் சாம்பளா யிற்று. யூபிற்றருடைய கோட்டமும், டையணுவின் கோட்டமும், வெஸ்தாத் தேவியின் கேசட்டமும் அழல் வாய்ப்பட்டு அழிந்தன. கெருப்பைத் தணித்தற்கு நீரோ தன்னல் இயன்றவரை முயன்ருனுயினும், சிலர் நீரோவே நகருக்குத் தீயிட்டானெனக் கூறினர்கள். அழலவிந்த பின் iš 3 ar சனங்களுக்குப் பொருளுதவி புரிந்தனன். நீரோ ஆறு கிடந்தன்ன பெருந்தெருக்களே அமைப்பித்தான். கற்சுவர்களால் இல்லங்களை அமைக் கும் படி அறிவித்தான். சிலர் கிறிஸ்தவர்களே நகருக்குத் தீயிட்டனர் என்று எண்ணிக் கிறிஸ்தவர்களே வருத்தினர் கள். பப்பியாசபின யூகர்பக்கத்தைச் சார்க்தவளாகை யால் கிறீஸ்தவரை வருத்தும்படி ஏவினுள். பல வழிகளா

கைசர் குடும்பத் தனிக்கோலர் 345
லும் அரசாங்கத்தின் பொருள் செலவாக, மீரோ ஒற்றரை
கி. பி. 64-ம் ஆண்டு யூனியஸ் தோர்க்குவாற்றஸ் அரச விரோதம் என்னும் குற்றத்திற்காகக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டான். மேன்மக்களை ஒற்றியமை யால், இரைகலினஸ் நீரோவின் பெருந்துணேவனனன். மேன்மக்கள் நீரோவை வெறுத்தாராகிக் கல்பேனியஸ் பிசோவைத் தலைவனுக்க எண்ணினுர்கள். நகர்க்காவற் படைத்தலைவருள் ஒருவனை நூவஸ் மேன்மக்கட்கட்சி யைச் சார்ந்தான், றுாவஸ் சீரோவை மேன்மக்கட் சபைக்கழைத்துக் கொல்லக்கருதினன். நூறு வஸ் கட்சி யில் ஒருவன் இதை நீரோவுக்கு அறிவித்து அறரவஸ் என்ப வனைக் கொல்வித்தான். நீரோ செனக்காவுக்கும் கொ8லத் தண்டனை விதிக்கச் செனக்கா நஞ்சுபருகி உயிர்நீத்தான்.
நீரோ கிரேக்க நாடு சென்று தனது ஆடற்றிறத்தைக் காட்டக் கிரேக்கர் மிகவும் வியந்தனர். நீரோ மிகவும் உவந்து கிரேக்கநாட்டுக்குச் சுயாதீனம் கொடுக்கப்பட்ட தென முரசறைவித்தான். கிரேக்கர் தாம் திறையளிக்க வேண்டியதில்லையென மகிழ்ந்தனர்.
கி. பி. 88-ம் ஆண்டு யூலியஸ்வின் டெக்ச் என்னும் கல்லியன் 100,000 படைவீரரைச்சேர்த்துப் போர்க்கெழுச் தான். றையின் நதிப்பக்கத்துத் தலைவன் வெசிணியஸ் அவனை எதிர்த்தான். ஐபீரியதேசத்துத் தேசாதிபதியாகிய கல்பாவும் உட்பகையானன். கல்பா 73 வயதினனுயினும் தனித்தலைவன் ஆவான் எனப் பலர் முகமன் கூறினர் கள். ஐபீரியாவிலிருந்து ஒரு தனிக்கோலன் தோற்றுவர் னென்று ஒரு தேவவாக்கியம் எழுந்தது. அகஸ்தஸ் கல்பா ஒரு தலைவனவன் என விளம்பினன் என்ப. 筆。
இதற்கிடையில் பஞ்சம் உண்டாக நீரோ பலவாறு துயருற்று அலைச்சாந்திரியாவுக்குச் சென்று வசிக்க
44

Page 190
346 உலக வரலாறு
கினைத்தான். மெய்காப்பாளர் தலைவன் கிம்பிடிமஸ் சபின, இரைகலினஸ் என்னும் தலைவனைப் பொய்ச்சான்று கூறிக் கொல்வித்தான். நீரோ அரசு துறந்து செல்லு கிருரனென, கிம்பிடிஸ் அலர் பரப்பினன். கி. பி. 68-ம் ஆண்டு பகைவர் மிகுந்தமையால் நீரோ தற்கொலை புரிந்தான்.
நீரோ தூர்த்தணுயினும், பலரைக் கொன்ருரனுயிலும், நீரோவின் அமைச்சர் செங்கோல் செலுத்தினர். கைசர் குடும்பத்தில் தனிக்கோல் செலுத்த ஒருவருமில்லையாகை யால் தலைவர்கள் பலர் எழுந்து கலகப்பட்டனர். உரோம ரது தனிக்கோலே நிலைகுலையும் போலத் தோன்றிற்று. ஆட்சிநாடுகள் பலவற்றை ஆளுதற்குத் தனிக்கோலாட்சி இன்றியமையாததென மேன்மக்கள் உணர்ந்தமையாலும் படைவீரர் தம் தலைவரே ஆட்சிசெய்யவேண்டுமென நிச்ச யித்தமையாலும் தனிக்கோல் பின்னரும் தழைத்தோங் கியது.
6-Ib Lu Lr Ltd
பிளாவிய குடும்பத் தனிக்கோலர்
கல்பர
நீரோ இறந்த பின் ஒருவர்பின் ஒருவராக நான்கு த8லவர் ஒரேகாண்டில் தனிக்கோலோச்சினர். கல்பா தன் படையோடு ஐபீரியா காட்டினின்றும் புலம்பெயர்ந்து உரோமாபுரத்தை நோக்கிச் செல்ல நகர்காவலர் கல் பாவை வேந்தனென வாழ்த்தினர்கள். மேன்மக்கட் சபை யும் கல்பாவுக்குத் தனிக்கோலுரிமையை அளித்தது. கல்பா நல்லொழுக்கமுடையோனுயினும், தனிக்கோலோச் சும் ஆற்றல் இல்லாதவன். தலைவர்கள் பல திக்கிலும் பகைத்தெழுந்தமையாற் கெட்டொழிந்தான். கல்பா அரசு கட்டிலேறுமுன்னர் றையின் நதிப் பக்கத்

பிளாவிய குடும்பத் தனிக்கோலர் 347
துத் தலைவன் தனிக்கோல் தனக்கே உரியதென முழங்கி னன். இஃதொருபுறமாக, நகர்காவற்றலைவன் கிம்பிடியஸ்ச பினு தான் தனிக்கோலன் காயஸ் என்பவனுடைய காமக் கிழத்தியின் குமாரனெனக் கூறி அரசுரிமையைப் பெற விழைந்தான். கல்பா காவற்படைக்குக் கொடையளிக்க வாக்குக் கொடுத்தமையால் காவற் படைவீரர் கல்பாவைத் தனித் தலைவனெனத் தொழுதனர். கல்பா உரோமா புரத்தை அணுகிக் கடல்வீரரைச் சந்தித்துப் பகைஞ ரெனக் கருதிப் பொருதான். பலதிக்கிலும் பகைவரெழுங் தமையாலும் கல்பா வயோதிகனுகையாலும் மேன்மக்கள் அவனை இளங்கோ ஒருவனை நியமிக்கும்படி வேண்டினர். கல்பா பிசோ என்பவனுக்கு இளங்கோப் பட்டத்தை அளித்தான். ஒதோ இத்துணையும் கல்பாவுக்குத் தரணே புரிந்தோனுயினும் தன்னே இளங்கோவாக்காமையால் கல் பாவைப் பகைத்துக் தன் படைவீரரைத் தன்னைத் தனித் தலைவனுக்கும்படி தூண்டினன். காவற்படைத் தலைவர் 'ஒதோ வாழி' என ஏத்தினராதலின், கட்சி யுத்தம் தொடங்கியது. கல்பாவுக்குத் துணைவ ரில்லாமையால் கொல்லப்பட்டான். மேன்மக்கட் சபையோர் உடனே ஓதோவுக்குத் தலைமைப் பதவியை அளித்தனர்.
ஓதோ
றையின் நதிப் பாசறையிலிருந்த படை வீரர் தம் படைத்தலைவன் விற்றேலியனைத் தனித்தலைவனுக்க எண்ணி னர்கள். விற்றேலியஸ் தனிக்கோலோச்ச எண்ணியிருக்க வில்லையாயினும், படைவீரர் தூண்ட உரோமாபுரத்தை நோக்கினன். ஒதோ போர்க்கெழுந்து கைக்கீனு என்னும் எதிர்க்கட்சித் தலைவனை வென்றன். பின்பு ஓதோவின் படையும் கைக்கீனுவின் படையும் பிறமோனநகரண்மை யிற் சந்தித்துப் பொருதன. போர் முடிவில் ஓதோவின் படைவீரர் புறங்கொடுத்தோடினர்கள். ஒதோ தன் கட்சி யார் தோல்வியடைந்தாரென வுணர்ந்து உயிர் மீத்தான்.

Page 191
348 உலக வரலாறு
ஓதோவைப் பொதுமக்கள் வெறுத்தனர். ஆகலின் கல் பாவின் சிலைகளுக்குக் கண்ணியும் தாரும் சூட்டிக் தொழுதார்கள். விற்றேலியஸ் தன் கட்சியார் வென்றன. ரெனக் கேள்வியுற்று 60000 படையோடு கல்லிசர் நாட் டுக்கூடாகச்சென்று உரோமாபுரத்தை யணுகினன். விற் றேலியனே யாவரும் தனிக்கோலனென வணங்கினுர்கள்.
வெஸ்பாசியன் வரவு
மேற்கு நாட்டுப் படைகள் தத்தம் தலைவர்களேத் தனிக்கோலராக்கியதை அறிந்த கிழக்கு நாட்டுப் படை வீரர் தம் தலைவர்களைத் தனிக்கோலராக்க எண்ணினுள் கள். கீழ்பாலிருந்த படை மூசியானுஸ் என்பவனைத் தனிக் கோலனென வாழ்த்த, அவன் மறுத் தானுக, யூடியா நாட் டுத் தலைவன் பிளாவியஸ் வெஸ்பாசியனத் தனிக்கோலனுக் கினர். எகிப்து நாட்டிலுறைந்த சேனை வெஸ்பாசியனு டைய கட்சியைச் சார்ந்தது. வெஸ்பாசியன் தனது தானையோடு கிற மோனுவை அடைந்தான். பெற்றி யாக்கத்தில் நிகழ்ந்த போரில் விற்றேலியனுடைய கட்சி யார் தோல்வியுற்றனர். அத்தோல்வியைக் கேள்வியுற்ற விற்றேலியஸ் வெஸ்பாசியன ஆணைசெலுத்தவிட்டுத் தனது அதிகாரத்தைத் துறக்கவெண்ணினன். ஆனல் அவனுடைய கட்சியோர் போரைத் தொடரும்படி அவனை உரோமாபுரத்தில் கிறுத்தினர். வெஸ்பாசியன் தலைநக ரைச் சூழ்ந்து பொருது தீயிட்டான். போரில் 50000 விரர் மாண்டனர். விற்றேலியனுந் துஞ்சினன்.
கல்லியர் விரோதம்
இங்கனம் இத்தாலியதேசத்தில் கட்சியுக்தம் நடக் கும் தருணம்பார்த்துக் கல்லியரும் றையின் நதிச் சர்மானி மரும் தம் சுயாதீனத்தைப் பெறுதற்கு முயன்றனர். யுலி யஸ் சிவிலிஸ் என்பவன் வெஸ்பாசியனுடைய கட்சியைச் சார்ந்தான் போல் நடித்துப் படைகள் சேர்த்தான். அவன்

பிளாவிய குடும்பத் தனிக்கோலர் 849
கல்லியரிடம் துணைபெற்று வெற்ருரன நகரை மோதியபின் பட்டாவியத்தில் தங்கினன். கல்வியகாட்டில் கிளாசிக்கஸ் என்பான் கல்லியர்யா வரையும் உரோமருக்கு விரோதிக ளாக்கிப் படைசேர்த்தான். சர்மானியர் கல்லியருக்குத் துணைசெய்யவில்லை, பகைப்படைகளே அடக்கும்படி வெஸ் பாசியன் செறியாலிஸ் என்பவனை ஒரு படையோடு அனுப்பி னன். செறியாலிஸ் வெற்றணுவில் சிவிலிஸ் என்பவனுடைய பகைப்படையை வென் ருரன். சிவிலிஸ் வேறு துணேப் படைகள் பெருமையால் றையின் ஆற்றுக் கட்டை யிடித்து, பட்டாவியத்தைக் காவல்செய்தான். ஒருபால் மிளேயும் ஒருபால் ஆறும் அங்காட்டிற்கு இயற்கை In 167 as 67 it gaor. செறியாலிஸ் கிளாஸிக்கஸின் படையை அடக்கிச் சிவிலிஸ் என் போனுடைய படையையும் அடக்கிக் கல்லியர்காட்
டில் உரோமருடைய ஆணேயைச் செலுத்தினன்.
எரிசலம் நகர்
யூத சமயம் தழைத்தோங்கிய நகர் எரிசலம். யூத சம யத்தின் கொள்கைகளைப் பழையேற்பாடு என்னும் நூலில் வாசித்தறியலாம். யூதர் ஒரு தனிக்குழுவினர். வாக்" கோப்பு என்பவன் தனது நாடு வற்கடஞ்சென்றதாக, குடும்பத்தோடு எகிப்திற்குச் சென்று எகிப்து மன்னருக் குத் தொண்டுசெய்து ஆங்குப் பலகாலமிருந்தனனென், றும் அவர்சந்ததியார் அடிமைகளாகவே எகிப்து நாட் டோரால் எண்ணப்பட்டனர் என்றும் யூதரின் கடவுள் யெகோவா கருணே கூர்ந்து எகிப்து மன்னனைத் தண்டித்துப் பல நோய்களால் வருத்தியபின் மோசஸ் என்னும் தலைவ. ணுக்கு சைனயிக் குன்றிலெழுந் சருளி யூத ரது பத்து ஒழுக்கப் பிரமாணங்களையும் அறைந்து யூதரை எகிப்தி லிருந்து யூடியா நாட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கற் பித்தாரென்றும் யூத வரலாறுகள் கூறும். யூதர் அவ் வாஞ்ஞைப்படி செங்கடலைத் தாண்டினரென்றும் எகிப்தி Bப் படை பின்தொடர அவரைக் கடல்பெருகி அழித்த

Page 192
350 உலக வரலாறு
தென்றும், யூதருக்குக் கடல் வற்றி வழிகொடுத்ததென் றம் அறிகிருேரம். இவ்யூதரின் பழக்க வழக்கங்களும், ஆசாரங்களும் யூடியா நாட்டு அயலோரின் ஒழுக்கங்க ளோடு மிகவும் வேற்றுமையானவையென்றும், அது கார ணமாக யூதரைப் பிறசாதியர் வெறுத்தனரென்யூ ம், யூத ரும் ஏனையோரைக் கானவர் எனப் பழித்தனரென்றும், யூதருக்குக் கடவுள் பகைவருடைய நகரங்களை அழிக்க வும் பகைவரை வெல்லவும், உதவி செய்து அரசியலை நடத்தற்குத் தலைவரையும் நியமித்தாரென்றும், அறிகி ருேரம், அத்தலைவர் பின்னர் மன்னரானர்கள். அம்மன்ன ருள் சலோமன் எரிசலத்தைக் கட்டினன். யூதர் பன்றி. யிறைச்சி யுண்ணுமையாலும் விருத்தசேதனம் என்னும் நுனித்தோலைக் கத்தரிக்கும் கிரியை செய்தமையானும் உரோமரும் யூதரை வெறுத்தனர். யூதரும் தம் சுயாதீ னத்தை ஒருநாளைக்குப் பெறலாமென எண்ணினராதலின் தம் கடவுள் தலைவராக ஒருவரை அருளுவரென்று எதிர் பார்த்திருந்தனர். ஏசு கிரீஸ் துவைத் தீர்க்கதரிசியென யூதர் எண்ணவில்லை. ஆகலின் யூதர் அவரைக் கொன்ற னர். பூதர் போர்த்தொழில் வல்லோராதலால் எரிசலத்தை, அரண்களாலும் மதில்களாலும் காவற்படுத்தியிருந்தனர். காயஸ்கலிகூலாவை யூதர் கனிவெறுத்தனர். கி. பி. 66-ம் ஆண்டு எரிசலம் நகரில் இரு கட்சியர் கலகப்பட்டனர். ஒருசாரார் உரோமருக்கு அமைந்து வாழ விரும்பினர். அனேனியாஸ் என்னும் பூசாரித் தலைவனும் இக்கட்சியைச் சேர்ந்தான். வேருெரு சாரார் உரோமரோடு பொருது தம் சுயாதீனத்தைப் பெற விரும்பினர். இக்கட்சியார் சமயாபிமானிகள், மறவர், கள்வர், ஆறலைப்போர் முதலி யோர் என்ப. அனேனியாஸ் என்னும் குருவின் மகன் எலி யாசர் இக்கட்சியைச் சேர்ந்தான். அனேணியாஸின் கட்சி வர் எகரட் அகிரிப்பாவின் உதவியைப் பெற்றனராயினும் செறுநரை வெல்லவியலாதிருந்தனர். சமாதானம் விரும் பிய யூதரை எதிர்க்கட்சியார் கொன்றனராதலின் கீரோ

பிளாவிய குடும்பத் தனிக்கோலர் 351
கல்லஸ் என்னும் தலைவனைக் கலக நாசஞ் செய்யும்படி கற் பித்தனன். கல்லஸ் எரிசலம் நகர் கள்வர் மூர்க்கர் வீரர் அபிமானிகள் உள்ளிட்ட கட்சியர் கையிலிருந்தமையால் அதன் மதிலை உடைக்க இயலாது திரும்பினன். கல்லஸ் தலைவனுக்குப் பதிலாக வெஸ்பாசியன் சென்ருரன். கி. பி. 68-ம் ஆண்டு வெஸ்பர சியஸ் யூதரின் அயலோரை அடக்கி கின்றுழி, நீரோ இறந்தானெனக் கேள்விப்பட்டு தனிக் கோலுரிமையைப் பெற எண்ணிச் சின்னுசியாவிலிருந்து புறப்பட்டான். இஞ்சி குழ்க் த எரிசலத்தைக் காவல் செய்திருந்த மூர்க்கர் தலைமை நடாத்திக் கலகம் விளைத் தனர். வெஸ்பாசியன் தனிக்கோலுரிமை பெற்றபின், வெஸ்பாசியன் மகன் ரையிற்றஸ் எரிசலம் நகரைப் பம்பிப் பொருது சூழ்ந்துகின்றன். புறமதிலைக் கைப்பற்றியபின் நகர் வாயிலில் கொடும்போர் செய்து, செறு மரை உழக்கி நகருட் புகுந்தான்; உரோமர் எரிசலம் கோயிலையும் மாட மறுகுகளையும் இடித்துத் துகளாக்கித் தீயிட்டார். யூதசம யக் கிரியைகளையும் கொள்கைகளையும் முறை வகுக்கும் சமயக் கணக்கர் சங்கத்தையும் உரோமர் கலைத்தனர். பூகர் நகரழிந்தபின் உரோமர் நாடுகளெங்கும் பரவியும தமது சிறப்பாசாரங்களை மறவாதிருந்தனர்.
பிளவியல் வெஸ்பாசியனஸ் ஆட்சி கி பி 69 - 77
கி. பி. 69-ஆம் ஆண்டு, புதியதோர் குடும்பம் தனிக் கோலுரிமை பெற்றது. ரையிற்றஸ் பியாவியஸ் வெஸ்பாசி யானஸ் கட்சி யுத்த முடிவில் வெற்றிவேற்கை வேந்த னுனன். வெஸ்பாசியானஸ் அகஸ்தரது அரசியன் முறை யைப் பெரிதும் தழுவினன். வெஸ்பாசியானஸ் சிறந்த குலத்தோனல்லனயினும் படைத்தொழில் வல்லோனகிப் படைத் தலைவனுக கியமிக்கப்பட்டான். வெஸ்பாசியானஸ் பிளேவியா டொமிற்றிலாவை மணம் புரிந்து ரையிற்றஸ் டொமிசி யானஸ் என்னும் ஈர் ஆண்மக்களையும் டொமிற்றில்லா என்னும் மகளையும் பெற்றன். தன் மனைவி துஞ்சியபின் வெஸ்பா

Page 193
352 உலக வர்ல்ாறு
சியன் கயினி என்னும் சுயாதீனம் பெற்ற அடிமையொருத்தி யோடு இல்லறம் நடத்தினன். இவ்வடிமைப் பெண் வெஸ் பாசியன் விவாகஞ் செய்யுமுன் அவனது காமக்கிழத்தி மாயிருந்தவள். கி.பி. 70-ம் ஆண்டு வெஸ்பாசியன் உரோ மாபுரத்துப் பழைய இல்லங்களே இடித்து, புது இல்லங் களேக் கட்டுவித்தான். தன் மூத்த மகன் ரயிற்றஸ் என் போன இளங்கோவாக்கி உரிமைகள் பல அளித்தான். மேன்மக்கட்சபையை அடக்குதற்குக் கீழ் மக்கட் காவ லுரிமையும் இணைத் தலைமையுரிமையும் உரிமைக் கணக் குரிமையும் செலுத்திப் புது மேன்மக்களைச் சபைக்கு அங்கத்தினராக்கினன். தனிக்கோல் கொடுங்கோ லென உரைக்கும் எதிர்க்கட்சியரின் தலைவன் கொல்விடியஸ்பிறிஸ் கஸ் என்போனைச் சிரச்சேதஞ் செய்வித்தான். கயிக்கினு வின் கபடத்திற்கஞ்சி அவனையுங் கொல்வித்தான்.
வெஸ்பாசியனல் அமைக்கப்பட்ட புதுக்கோட்டங் களுள் சமாதானத்தேவதையின் கோயிலொன்று அழற் பட்டெரிந்த மண்டபத்திற்குப் பிரதியாக புதிய தொன்று கட்டப்பட்டது. தலைவன் இத்தாலியிரையே மெய்காப்பாளராக ஏற்படுத்தினுன், கிரேக்கரைத் திறை யளிக்கும்படி கற்பித்தான். கி. பி. 77-ம் ஆண்டு பாதியர் சிரியரோடு பொருதணராக உரோமர்தலைவன் திராசானஸ் (Trajanous) அவர்களை அடக்கினன். வெஸ்பாசியானஸ் தனிக்கோ8ல நிலைநாட்டி 70 வயதினனகி கி. பி. 7-ம் ஆண்டு இறந்தான். உரோமர் வெஸ்பாசியனுக்கும் கோவில் கட்டிப் பூசித்தனர்.
ரையிற்றல் ஆட்சிக்காலம் கி. பி. 77-81. ரையிற்றஸ் தலைவனுகக் தெரிந்தெடுக்கப்பட்டான். ரையிற்றஸ் எரட் அகிரிப்பாவின் தங்கை பேசினியாவைக் காதலித்தான். குடிகள் அவள் யூத சாதியினளென்றும் அவ்விவாகம் தமக்கு வெறுப்பு விளைக்குமென்றும் காய் டினராதலின் அவளை யூடியா காட்டிற்கு அனுப்பினன்

பிளாவிய குடும்பத் தனிக்கோலர் 353
ரையிற்றஸ் தன்வண்மையால் சனங்களைத் தன்னை நேசிக் கப்பண்ணினன். பொதுசனங்களுக்கென நீராடும் மாடங் கள் பல அமைத்தான். அத்துடன் நூறு நாள் விழாருடக் திக் காட்சிகள் பல காட்டினன். அக்காட்சிகளில் 50000 விலங்குகள் கொல்லப்பட்டமையால் காட்சிகள் பல காட் டப்பட்டவையென்பது கூருரமலே அமையும். மணல்முற்றத் தில் நீர் பாய்ச்சிக் கப்பற்போர் நடத்திக்காட்டிக் குடி களே மிகவும் இன்புறுத்தினன். கி. பி. 80-ம் ஆண் டு உரோமாபுரத்தி னெருபகுதி தீப்பற்றியது. அதற்குமுன் 79-ம் ஆண்டில் வெசுவியஸ் எரிமலை எரிந்து பம்பியா ஏர்க்குலேனியம் என்னும் இரு நகரங்களைச் சாம்பலாக்கி யது. அந் நிகழ்ச்சிக்கு நூலாசிரியன் இரண்டாவது பிளினி உடன் சான்று. பிளினி எரிமலை எரிந்த காட்சியை அழ காக வர்ணித்தான். மேற்கூறிய இருநகரங்களும் மண்ணு லும் உருகிய கற்களாலும் சாம்பராலும் மூடப்பட்டு 1900-ம் ஆண்டு ஆராய்ச்சிவல்லவரால் அகழப்பட்டன. உரோம ருடைய வாழ்க்கையைச் சிறப்பித்துக்காட்டும் கலங்களும், கலைத்திறங்காட்டுஞ் சிலைகளும், இழைகளும், நுண்கை வினைஞரின் அருந்தொழில்வாய்ந்த அணிகளும் இந் நகரங் களின் மேல் அமைந்த மட்கண்டங்களில் அகழ்ந்தெடுக்கப் படுவன. கலன்கள் சிற்பச்சிலைகள் முதலியவை மட்கண் டத்தில் அழிவெய்தாவாகையால் பண்டைக்காலத்துப் பொருள்கள் பாதுகாக்கப்பட்டுப் பிற்காலத்தாரால் ஆராயப் படுகின்றன. இது கிற்க, ரையிற்றஸ் தன் வீண்செலவின் பயனைத் துய்த்தற்குமுன் கி. பி. 81-ம் ஆண்டு இறந்தான்.
டொமீசியனஸ் ஆட்சி கி. பி. 81-96.
விற்றேலியஸ் உரோமாபுரத்தைத் தாக்கியபொழுது
டொமீசியானஸ் நகர் நீங்கியோடி உயிர்பிழைத்தனன்.
தந்தை வெஸ்பாசியன் ரையிற்றஸ் என்பவனுக்கு இளங்
கோவிற்குரிய பல உரிமைகளையுமவிக்க டொமீசியானஸ்
தமையன்மீது அழுக்காறுற்றுத் தந்தையின் முன்
னிலேமை நீங்கிச் சிறியதோர் இல்லத்தில் வசித்தான்,
46

Page 194
354 உலக வரலாறு
தமையன் தனிக்கோலனுகியும் தன்னை இளங்கோவாக்க வில்லையெனத் துயருற்றன். ரையிற்றஸ் தன்மகளே மணம் புரியும்படி தன் தம்பி டொமீசியனைக் கேட்க, டொமீசி யன் மறுத்தான். டொமீசியன் வேருேரர் பெண்ணேக் காத லித்ததும் மறுத்ததற்கு ஓர் காரணமாகும். கி. பி. 81-6 ஆண்டு டொமீசியன் தனிக்கோலுரிமை பெற்றன். மேன் மக்களுடைய உரிமைகள் காவற்றையும் கவர்ந்தான். $କOTø ஆட்சிக் காலத்தில் உரிமைக் கணக்கனுக அதிகாரஞ்செலுத்தி மேன்மக்களே அடக்கினன்' பெரும் பாலும் இணைத்தலைமையுரிமையையும் உபயோகித்தான். மேன்மக்கட் சபையின் அங்கத்தினரைக் கொலைசெய்யும் ஆற்றல் தனிக்கோலருக்கு இல்லையென மேன்மக்கட்சபை மொழிய, டொமிசியஸ் அவ்வாற்றல் தனிக்கோலருக்கு உண்டென வற்புறுத்தினன். தனிக்கோலன் இரைபீரி மனைப்போல் டொமிசியனும் நுண்ணறிவுடையோனுய் மேன்மக்களைப் பொருட்படுத்தாது தனிக்கோலோச்சினன். அவன் காவற்படைத்தலைவரின் ஆற்றலையும் மிகவிடாது காத்தான். வறியோருக்கு ஊணளித்தான். கி. பி. 88-ம் ஆண்டு அவனுக்கு விரோதியாகச் சற்றேணனஸ் எழுந்து கொல்லப்பட்டான். டொமிசியன் மக்கட்பேறின்மையால் துயருற்றன். மேன்மக்கள் தன்னைக் கொன்று அரசியலை நடத்த விரும்புவரென எண்ணித் தலைவர்களை ஒற்றரால் ஒற்றினன். இங்ஙனம் வெய்யோன் எனப் பெயர்பெற் ருரன். வரலாற்ரு சிரியன் இரசிற்றஸ் டொமிசியனேக் கொடுங்கோலனெனக் கண்டித்தான். ஸ்ரோயிக்கர் என்னும் தத்துவஞானிகள் ஐம்புலவின்பத்தை வெறுத்து, கடமை யைச்செய்தலே நல்லொழுக்கமென நம்பினர். அம்மதத் தோர் அரசியன் முறைகளுள் குடியரசே சிறந்ததென உபதேசித்தனராதலின், டொமிசியன் அத் தத்துவஞானி கள் யாவரையும் அரசவிரோதிகளென எண்ணி வருத் தினன். தன் மனைவி பரிஸ் என்னும் கூத்தனுெருவனேடு கூடினள் என ஐயுற்று அவளைத் துறந்தான். குடியரசுக்

பிளாவிய குடும்பத் தனிக்கோலர் 355
கட்சியாரும் மேன்மக்களும் வெவ்வேறு காரணத்தால் தனிக்கோலனை வெறுத்தனர். கி. பி. 96-ம் ஆண்டு டொமிசியனை கேர்வ ஈட்டியாற்குத்த, டொமிசியன் அவ னுேடு மல்லுக்கட்ட, நேர்வாவின் கேள்வர் டொமிசியசீனச் சூழ்ந்து கொன்றனர். மேன்மக்கட்சபை தனிக்கோல னின் மரணத்தைக் கொண்டாடவேண்டாமென அறிக்கை யிட்டது. பிரேதத்தைத் தலைவருக்குரிய கிரியைகள் செய் யாது சுடுகாட்டிலிட்டனர். படைவீரர் டொமிசியனே நேசித்தனர். டொமிசியன் குடிகளைக் காத்தோம்பினுன் என்பதில் ஐயமில்லை. அவன் தீயொழுக்கத்தையும் ஆசாரக் குறைவையும் தண்டித்தான். கி. பி. 83-ம் ஆண்டு வெஸ் தாத் தேவதையின் சாலினி ஒருத்தி கோர்ணிலியா என் பாள் கற்புகிலை வழுவினளெனச் சான்றுபெற்றமையி னல் அவளே உயிரோடு புதைக்கும்படி கற்பித்தான். யூதர் கிறிஸ்தவர் முதலிய பிறமதத்தோரை டொமிசியன் துன் புறுத்தவில்லையாயினும் கீழைத்தேசத் தெய்வவழிபாட் டைக் கண்டித்தான்.
lpHILC IIIdry.
வெஸ்பாஸிய பிளாவிய குடும்பத் தனிக்கோலருடைய காலத்தில் பிரித்தானியாவிலும் சர்மானியாவிலும் உரோ மர் போர் புரிந்தனர். கி. பி. 70-ம் ஆண்டு கல்லியரை யடக்கியபின் செறியாலிஸ் பிரித்தானியாத் தீவு சென்று காந்திய சாதியரோடு பொருதான். கி பி. 78-ம ஆண்டு அக்கிரிக்கோலா படையெடுத்து மோனுச்சிறுதீவைக் கைப் பற்றி வடமேற்குப் பிரித்தானியரை அடக்கினன். கி. பி. 80-ம் ஆண்டு அவன் கலிடோனியநாட்டுச் சிலேட் ஆறுவரை யுஞ் சென்று உரோமருடைய கழுகுக்கொடியை நாட்டி னன். பின்னர் அயர்லாந்துத்தீவை ஆட்சிநாடாக்க எண்ணினன். தனிக்கோலன் டொமிசியஸ் உத்தரவு கொடாமையால் அவ்வெண்ணம் நிறைவேறவில்லை. உரோம ரது பூகோள நூலின்படி அயர்லாந்து ஐபீரியா விற்கும் பிரித்தானியாவுக்கு மிடையிலுள்ள தாதலின் அந் நாடெங்கும் உரோமர் தமது ஆட்சியைச் செலுத்த விரும்பினர். கி. பி. 83-ம் ஆண்டு அக்கிரிக்காலா கலி

Page 195
356 உலக வரலாறு
டோனியாாடு புக்கான். கிருரப்பியன்குன்றப்போரில், 10000 கலிடோனியர் மடிந்தனர், உரோமருள் 360 வீரர் மாத்திரம இறந்தனர். கி.பி. 85-ம் ஆண்டு அக்கிரிக்கோலா வின் தலைமை முடிவெய்தியது. அக்கிரிக்கோலாவின் மருகன் இரசிற்றஸ் அவனுடைய வரலாற்றை எழுதின னகையால் அவனைச் சிறந்த படைத்தலைவனெனப் புகழ்க், தான்.
இனி, சர்மானிய நாட்டுச் செய்திக ஆளச் செப்புவாம். டொமிசியன் சர்மானியரை உரோம நாடுகளுட் புகாமற் றடுத்தற்கு றையின் ஆற்றுக்கரைமுதல் சர்மானியநாட்டு எல்லேயீருரக ஒரு மண்மதில் அமைத்தான். இம்மதிலின் கண் இடையிடையே அமைக்கப்பட்ட காவலரண்கள் இன்றுங் காணக்கிடக்கின்றன. டொமிசியஸ் சர்மானிய தேசத்திற்கு அயலான டேசியா நாட்டாரோடும் பொரு தான். டேசியர் தானியூபி நதிக்கரையில் வாழ்ந்த ஒரு சர்மானிய சாதியார். டேசியர்தலைவன் டெக்கபாலன் பெரும் வீரன். அவன் உரோமருடைய பகைஞரான சேட்புலத் துப் பாதியரிடம் ஒற்றரை யனுப்பித் துணைவேண்டினன் அன்றியும் கணியோரையும் நட்பாக்கிப் படைத்துணைபெற் ருரன். டெக்கபாலன் கானவராகிய டேசியரை யவன உரோம யுத்த முறைகளிலும் அரசியன் முறைகளிலும் சனசமூகவாழ்க்கைத் திருத்தமுறைகளிலும் பழக்கினன். கி. பி. 85-ம் ஆண்டு சபினஸ் என்னும் உரோமர்தலை வனைக் கொன்ருரன். டொமிசியன் பஸ்கஸ் என்னுந் த8ல வனைப் போர்கடத்தும்படி கற்பித்தான். பஸ்கஸ் தோல்வி யடைந்து போர்க்களத்தில் மடிந்தான். பின்பு உரோமர் சேனதிபதி யூலியன் தப்பாயிப்போரில் டெக் கபாலனே வென்ருரன். அக்காலத்தில் மக்கிறமேனியரோடும் உரோ மர் போர்செய்தமையால், டெக்கபாலனெடு டொமிசிய உடன்படிக்கை எழுதினன். இக்காலத்தில் டேசியநாடு உரோமேனியா என அழைக்கப்படுகிறது.

கேர்வா திராஜன் அத்திரியன் 85
7-dib Li TarLibநேர்வா திராஜன் அத்திரியன்
GSST ifu Y GÍ J.J T - ef isf D b f. i 96-99
விருத்தணுகையால் மேன்மக்கட்சபைக்கு அமைந்து ஒழுகுவானென எண்ணிக் கொக்கியஸ்கேர்வாவை தனிக் கோலைச் செலுத்தும்படி, மேன்மக்கள் தெரிந்தெடுத்த னர். நேர்வா மேன்மக் கட்சபையினரைக் கொலைக்குத் தீர்க்கவில்லையென வாக்களித்தான். டொமிசியணுல் நாடு கடத்தப்பட்டோரை நாடுதிரும்பும்படி வரவழைத்தான். மிடிக்காலமாக லான், நேர்வா அரசிறைகளைக் குறைத் துப் பொருட்செலவில் மிகாமலுங் குறையாமலும் அள வொடு கின்ருரன். அவனுடைய ஆட்சியில் அரசியல் பிழையாது நாடு தழைத்தது. நேர்வா ஒவ்வொரு நக ரிலும் பாடசாலைகளைக் கட்டி வறியபிள்ளைகளுக்குச் கல்விகற்பித்தான். டொமிசியனைக் கொன்றவரைப் பழி வாங்குதற்கு கல்பேணியஸ்கிருசஸ் சூழ்ச்சி செய்தானதை யால் நேர்வா தன் பின் சேங்கோல் செலுத்தற்கு ஒரு வனே கியமித்தான். தனக்குக் குமாரரில்லாமையால் திராஜன் என்னும் படைத்தலைவனை இளங்கோ ஆக்கினன் .ெ பி. 99-ல் நேர்வா மரிக்க, மேன்மக்கள் திராஜனைத் தனித் தலைவனுக்கினர்கள்.
திராஜன் ஆட்சிக்காலம் கி. பி. 99-117.
திராஜன் ஐபீரியாக்குடாநாட்டிற் பிறந்துவளர்ந்த
சேவித்துப் புகழ்பெற்ருரணுகையாலும் டேசியர் யுத்தத் திலும் சேவித்தானகையாலும் பொதுச்சனங்களால் நேசிக்கப்பட்டான். தனிக்கோலுரிமைபெற்றவுடன் டேசி வர் யுத்தத்தைத் தொடர்ந்தான். ஈண்டுச் சர்மானியரின் நாகரிக கிலையைப்பற்றி இரசிற்றஸ் எழுதிய வரலாறு

Page 196
358 உலக வரலாறு
நோக்கற்பாலது. சர்மானியர் வேடிக்கை விருப்பினால் லர். வேளாண்மையும் கிரைமேய்த்தலுமே அவர்களு
டைய தொழில்கள். அவர்கள் சிறு குடிசைகளில்
வாழ்ந்தனர். அரசாங்கத்தார் வயல்களையும் கமங்களையும்
ஆண்டாண்டு வெவ்வேறு கமக்காரர்களுக்கு அளித்தனர். அங்ஙனம் ஆண்டாண்டு வயல்களை அளித்த நோக்கம்
யாதெனின், செழிப்பான நிலங்களை யாவரும் பயன்படுத்தி
காட்டில் வறுமை செல்வம் மிகாமல் காத்தற்காகவே. சர்மானியர் நகரவாழ்க்கையை அறிந்திலர். அவருடைய
அரசியல்நடாத் துஞ்சபை நிறைநிலாவன்று கூடுதல் வழக்
கம். நாட்டுத் தலைவர் யாவரும் தத்தம் சிறுபடைகளைப்
பயிற்றி அவர்களைத் தம் குடிகளாகக் காத்தோம்பினர்.
சர்மானியர் வேற்படை புரவிப்படைகளை நன்று பயிற்
றினர்.
முதலாம் டேசியர் யுத்தம் கி. பி. 101-ல் ஆரம்பமாகி
102-ல் முடிந்தது. டேசியரும் ஒரு சர்மானிய சாதியரெனி
னும் சர்மானியரளவு சீர்திருத்தமடைந்தவரல்லர். திரா
ஜன் டேசியர் காடுபுக்கு சாமிகத் தூசா என்னும் தலை நகரை நோக்குவான், வழியிலுள்ள இருபிக்கவூரைக் கைப் பற்றினன். பின்னர் மாரிகாலம் போர்செய்தற்குத் தகா தகாலமாகையால் திராஜன் திரும்பினன். இளவேனிற் காலத்தில் திராஜன் தலைநகரை முற்றுகையிட்டானுக, டேசியர் தலைவன் டெக்கபாலன் மதிலைக் காத்தற்கு வைத்த பொறிகளை அகற்றவும் திறைகொடுக்கவும் உடன் பட்டான். இரண்டாம் டேசியர் யுத்தம் கி. பி. 105-ல் நிகழ்ந்தது. டெக்கபாலன் உரோமரை வெல்லுதற்கு உபாயங்தேடி ஒற்றரைத் துணைப்படை சேர்க்கும்படி ஏவினன். தலை5கரை மிளையாலும் பொறியாலுங் காவற் படுத்தினன். திராஜன் டேசியர்தலைவனின் உட்பகையை அறிந்து டேசியாவை ஆட்சிநாடாக்க எண்ணினன். போர் தொடர்தற்குத் தானி யூபிப்பேராற்றில் ஒரு பாலங் கட் டினன். பின்பு பெரும்படையோடு சென்று தலைநகரை

கேர்வா திராஜன் அத்திரியன் 35豹
முற்றுகையிட்டுத் தீயிட்டழித்தான். இவ்வெற்றியை நினை வுகூர்தற்கு 100 அடி உயரமான வெற்றித் தூண் ஒன்றை உரோமாபுரத்திலெழுப்பி டேசியர்போரைச் சுதையால் சித்திரித்தான்.
திராஜன் வெற்றிவேற்றடக்க்ையன், வரைமார்பன், திணிதோளன், கழுகுமூக்கினன், மறத்தொழிற்பிரியன் எனப் புகழப்பட்டான். அவன் மேன்மக்கட்சபையின ரோடு கலகஞ்செய்யாமல் ஒழுகினன். உரிமைக்கணக்க கைத் தெரிவில் தெரியப்பட்டிலனுயினும் அவ்வுரிமை தனக்கு இயற்கையாக உள்ளதெனவெண்ணி மேன்மக் கட்சபைக்குப் புதிய அங்கத்தினரை கியமித்தான். ஒரு பாற்கோடாது நீதிசெலுத்தினன். பொருள்வருவாய்களை ஓம்பிப்பொருளை ஈட்டி வகுத்தலிலும் ஊக்கமாகவிருந் தான். வறிய குடிகளுக்குக் கொடையளித்தான். கொடை சோம்பலுக்குக் காரணமாகையால் வரலாற்று வல் லோர் கொடையளியைக் கூடா ஒழுக்கமெனக் கண் டிக்கிருரர்கள். திராஜன் ஆட்சிநாடுகளை ஒறுத்து இத்தா லியநாட்டை ஓங்கப்பண்ணினன். வியாபாரத்தை விருத்தி செய்து சங்கம்பெற்றுப் பொருள் ஈட்டினன். இத்தாலி யாவில் அங்காடிகள் பல அமைத்தான். ஆட்சி காடுகளைத் தேசாதிபதிகளின் கொடுங்கோலினின்றுங் காத்தான். பிதினியர் காட்டை மேன்மக்கட்சபை ஒறுத்து ஆண்டமை யால் அதைத் தனிக்கோலனுடைய ஆட்சி நாடாக்கினன். எல்லா முயற்சிகளையும் மடியின்றித் தானகவே கவன மெடுத்து கடத்தினன். கடிதங்களைத் தன் கையாலேயே எழுதினன். இரண்டாம் பிளினிக்குத் திராஜன் எழுதிய கடிதங்களும் அவனுக்குப் பிளினி எழுதிய கடிதங்களுங் கிடைக்கின்றன. பிதினியாவிலே பிளினி தேசாதிபதி யாக அரசியல் நடாத்தியகாலத்தில் கிரீஸ்தவரைத் தான் தண்டிக்கவேண்டுமோவெனக் கேட்க, கிறீஸ்தவர்களைத் தேடித் தண்டிக்கவேண்டாமென்றும் யாவராயினும் அவர் களேத் தீயோர் அரசவிரோதிகள் உரோம சமய விரோ

Page 197
860 உலக வரலாறு
திக ளெனச் சான்று கூறினல் விசாரணை செய்து தண் டிக்கவேண்டுமென்றும் திராஜன் விடையெழுதினன். இங் னைஞ் செங்கோலோச்சிய திராஜன் போர்ப்பிரியனுகை மால் 115-ஆம் ஆண்டு ஆர்மினியாவை வென்று 116ஆம் ஆண்டு பாதியரின் செருக்கையும் அடக்கினன். கி. பி. 117-ஆம் ஆண்டு சின்னசியாவடைந்து பிணியாலிறந்தான்.
ஹட்றியசனுஸ் (அத்திரியன்) ஆட்சிக்காலம் d. , 117-138
திராஜன் வயசுமுதிர்ந்தோனயினும் இளங்கோவாக ஒருவனையும் நியமிக்காமல், பாதியரைப் புடைத்து, அரேபி மரை அடக்கிப் புலம்பெயர்ந்து, சின்னசியாவில் இறந்தா னகையால் மேன்மக்கள் யாரைத் தனிக்கோலனுகத் தெரிக் தெடுக்கலாமென ஆலோசித்தார்கள். திராஜன் அத்திரி மனை நேசித்தானகையாலும் திராஜன்மனைவி புளோற்றின திராஜன் தனது மரண சாதனத்தில் அத்திரியனுக்குத் தனிக்கோலுரிமை யளித்தானென அறிவித்தாளாகையா லும் அத்திரியன் திராஜகுடும்பத்தினனுகையாலும் தனிக் கோலனுகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். அத்திரியன் தான படைவீரருக்குக் கொடையளிப்பான் என வாக்குறுதிசெய் யப் படை வீரரும் அத்திரியனைத் தனிக்கோலனென வாழ்த்தினர்கள். அத்திரியன் ஏதென்ஸ்நகரில் கற்ருரனுரை யாலும் கிரேக்கருடைய ஆசாரங்களைப் போற்றினணுகை யாலும் கிரேக்கனென வழங்கப்பட்டான். இவன், ஆட்சி நாடுகள் யாவற்றுக்குஞ் சென்று அங்குள்ள காட்சிக இளக் கண்டு குடிகளிடம் கண்ணுேட்ட முடையவனுய்ச் செங்கோ லோச்சினுன்.
அத்தீரியன் நாடுகாணுதல் அத்திரியன், தானியூபிநதிக் கரையில் வதியும் பகை ஞரை அடக்கப்போனுணுக, இரைகிறீனஸ் என்பவன் அவனை அவன் வேட்டையாடும்பொழுதேனும் வேட்பிக்கும்பொழு

நேர்வா திராஜன் அத்திரியன் 36
தேனும் கொல்லத் தருணம்பார்த்திருந்தான். இதை யுணர்ந்த மேன்மக்கள் அவனையும் அவன் கேளிரையும் சிரச்சேதஞ் செய்தனர். கி. பி. 121 - ஆம் ஆண்டு அத்திரியன் நாடுகாணப் புறப்பட்டான்; மேற்றிசை நோக்கிச்சென்று, 122 - ல் பிரித்தானியாவில் தங்கி, ஐபீரிய கல்லிய நாடுகண்டு, பின்பு கிரேக்க நாடடைந்து,
துக்குத் திரும்பினுன். கி. பி. 128 - ம் ஆண்டு ஆபிரிக்க நாடுகளையும் காணிய சென்ருரன். பின்னர் 129 - ஆம் ஆண்டு கீழ்த்திசைநோக்கிச்சென்று, கிரேக்கநாடு எகிப்து ஆண்டு உரோமா நகரத்துக்குப் புலம்பெயர்ந்தான். பிரித்தானி யாவிலே கலிடோனியரை அக்கரைப்படுத்தற்குக் கல்லா லும் மண்ணுலும் மதிலமைத்து இடையிடையே அரண் களும் கட்டிக் காத்தான். அம்மதில் இங்கிலாந்திற்கும் கலிடோனியாவிற்கும் எல்லையாகிப் பிரித்தானியத் தீவை இருகூருக்கிய செனத் தெரிகிறது. அத்திரியன் சர்மா னியதேச மதிலையும் புதுப்பித்தான். கிரேக்கநாட்டைக் கண்டபோது கிரேக்கநாட்டுப் பழைய விளையாட்டுக்களே ஏற்படுத்தினன். எகிப்தில் கழித்த காலத்தில் அத்திரி யன் காதலித்த இளைஞனெருவன் நீல்நதியில் அமிழ்ந் திறந்தனனுக, அச்சிறியோனுக்கு ஒரு கோயில் அமைப் பித்துப் பூசனை செய்வித்தான். கி. பி. 131 - ம் ஆண்டு யூதர் பகைத்தெழும்ப, யூதரை எருசலத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறைக்குமேற் செல்லக்கூடாதெனக் கற்பித்தான்.
அத்திரியனது உள்நாட் டரசியல்
அத்திரியன், கடித கிலேயங்களை ஏற்படுத்தித் தேசாந்
தரங்களில் நடக்குஞ் செய்திகளை யெல்லாம் அறிந்
தான். படைவீரரை வீரர்க்குரிய ஒழுக்கவரை மறைகளைக்
கடவாது தம் தலைவர்க்குக் கீழ்ப்படிக் தொழுகும்படி
பண்ணினுன் அரசாங்கத் தலைவர்களேயும் செங்கோள்
46

Page 198
362 உலக வரலாறு
செலுத்தும்படி கற்பித்து, திே செலுத்தாதோரை ஒற்றர் மூலம் அறிந்து தண்டித்தான்; நகர்காவற் றலைவனுக்கு உரிமைகள் பல அளித்து, அவனைத் தனிக்கோலனுக்கு அடுத்த தரத்தினனுக மதித்தான்; சான்ருேரர் சிலரைக் கூவி அமைச்சர்குழு ஒன்றை நிறுவினன்; மேன்மக்கட் சபையை அதிகாரஞ் செலுத்தவிடாது, தானே எல்லா அதிகாரங்களையும் செலுத்தினன்; கடன்பட்டோர் அர
சாங்கத்தினர்க்கு இறுக்கவேண்டிய கடன்களை இறுக்க
வேண்டியதில்லை யென விளம்பினன்; மேன்மக்கட் சபை
யினரையும் இணைத்தலைவர் கீழ்த்தலைவர் சமயக் கணக்கர்
முதலியோரையும் அரசியல் நடாத்தும்போது உச்தரீ யத்தை அணிந்திருக்கும்படி கற்பித்தான், கல்வி பயிற்
று தற்கு வித்தியாசாலைகளை ஏற்படுத்தினன்; காமதேவ
தைக்கும் உரோமாபதித் தேவதைக்கும் வேறு பல தெய்
வங்களுக்கும் கோட்டங்கள் சமைப்பித்தான். அத்திரியன்
தன் மகன் 7 வயதுச் சிறுவனகையால், வேறஸ் என்பவனை
இளங்கோவாக்கினன்; வேறஸ் வயது முதிர்ந்து இறந்தானக
அந்தோகயினஸ் என்னும் மேன்மகனுெருவனை இளங்கோ
வாக நியமித்தான்; கி. பி. 138-ல் அத்திரியன் காலஞ்
சென் ருரன். படைவீரர் அத்திரியனைப் போற்றியமைனா
லும் அந்தோ நயினஸ் இரந்து கேட்டமையாலும் மேன்மக்
கள் அத்திரியனுக்குக் கோயிலமைக்தனர்.
8-ம் பாடம் பிற்கால இலத்தின் நூல் வரலாறு
அகஸ்தரின் காலம் இலத்தின் மொழியின் செம் மொழிக் காலமெனக் குறிப்பிட்டோம். இனிப் பிற்
காலத்து இலத்தின் நூல் வரலாற்றைத் தொடருவாம்: காயஸ் கலிக்கூலாவின் காலந்தொட்டு வெஸ்பாசியன் காலம்

பிற்கால இலத்தின் நூல்வரலாறு 363
வரையும் குழப்பம் மிகுந்தமையாலும், புலவர்களைக் கொற்ற வேந்தரும் வள்ளல்களும் புரக்காமையாலும், இலத்தின் மொழியும் ஒருவாறு வளர்ந்து முதிர்ந்தமையா லும், பிற்காலத்து லத்தின்மொழி நலங்குன்றித் தேய்ந்த தெனலாம். '
கைசர் குடும்பத் தனிக்கோலர் காலத்துக் கவியரங் கேறிய வேந்தர், குளோடியஸ் என்பவனும் கீரோ என்பவ னும் என்க. குளேFடியஸ் சில வரலாறுகள் எழுதினன். நீரோ சில பாடல்கள் பாடினன். கேர்பியுலோ, பெளலினஸ் என்போர் எழுதிய வரலாறுகள் சிறப்பில்லாதவை. அவை காலக்கிரமத்தில் அழிவெய்தின. றுாவஸ் அலைச்சாக்தர் வர லாற்றைப் பத்துப் பாகமாக எழுதினன். தத்துவ ஞானி யாகவும் அமைச்சனுகவும் திகழ்ந்த செனக்கா உரை நூலாசிரியனுகவும் விளங்கினன். செனக்காவின் தந்தை ஒரு அணிநூல் வல்லோன். செனக்கா இயற்றிய வியாசங் களும் ஞான நூல்களும் ஆழமுடையனவல்ல. தத்துவங் கள் அந்நூலின் கண் மாசற ஆராயப்படவில்லை. செனக்கா வீரச்சுவையும் அழுகைச் சுவையும் செறிந்த நாடகங்கள் பல இயற்றினன். செனக்கா எழுதிய ஆவேச கேர்கியூல்ஸ், அகமன்னன், யூடிப்பஸ், மீடியா எனப்படும் நாடகங்கள் யவன நூல்களிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவைகளே. செனக்கா நகைச்சுவையும் இன்பச் சுவையும் விரவிய நாடகங்களும் பல எழுதினன்.
கொமிலஸ் என்னும் ஐபீரிய நாட்டுத் தலைவனுெருவன் வேளாண்மையைப்பற்றிச் சிலநூல்கள் எழுதினன். வேசிலி யஸ், ஒருசியஸ், லுக்கிறீசியஸ் முதலிய செந்நாப் புலவர்கள் பாடிய பாடல்களுக்கு அலேறியஸ் புருேபஸ் உரையெழுதி னன். கி. பி. 34-ல் தேவியஸ்பிளாக்கஸ் புலவர்கள் மீது வசை நூல்கள் இயற்றினன். அவை சொன்னயம் இல்லாதவை. லூக்கஸ் என்பவன் கைசர் பம்பிப் போரைக் காப்பிய மாக இயற்றினன். அக்காப்பியத்தைக் குவின்றிலியஸ் என் னும் அணிநூல் வல்லோன் சொற்பொழிவே யன்றிச்

Page 199
364 உலக வரலாறு
செய்யுளல்லவெனக் கண்டித்தான். பெற்ருேனியஸ் ஆயிற்றர் நகைச்சுவை விரவிய வசைநூல்கள் பலவற்றை இயற்றி னன்.
பிளாவியர் காலத்துப் புலவர்கள்
பிளாவியர் மூவரும் தாய்மொழியை வளர்த்துப் புல வர்களைப் புரந்தனர். மூத்த பிளினி வட இத்தாலி நாட் டிற் பிறந்தான். பிளினி பலநூலறிஞனெனவும் நுண் ணறிவாளனெனவும் பாராட்டப்பட்டான்; அவன் சர்மா னிய யுத்த வரலாற்றையும் தன்காலத்து உள்மாட்டுச் சரித் திரத்தையும் எழுதினன். பயிர்நூல் விலங்கியல் நூல்களும் இயற்றினன். கி.பி. 71-ம் ஆண்டு பெளதிக நூல் பூகோள நூல் மக்கள் விருத்திநூல் எனப் பல நூல்கள் எழுதினன்; சர்வம் பிரமம் என்னும் நம்பிக்கையுடையோனகி ஆதித் தனே உலக முழுவதற்கும் முதலெனச் சாற்றினன்.
பலேறியஸ் பிளாக்கஸ், சிலியஸ் இத்தாலிக்கல் என்னும் இரு சிறு புலவர்கள் முறையே அகஸ்தரைப்பற்றிய காப்பியமும் பினிசியர்போரைப்பற்றிய காப்பியமும் இயற்றினர். கி. பி. 69-ம் ஆண்டு உரோம நகர் அழற்பட்டதைப் பப்பியஸ் ஸ்ராற்றியஸ் வர்ணித்தான். வலே றியஸ் மாசாலியஸ் ஐபீரியா நாட்டிற் பிறந்து வறுமையால் வருந்தினன். அவன் வஞ்சப் புகழ்ச்சியணிகள் செறிந்த வசை நூல்கள் பல இயற்றினன். அவனுடைய நண்பன் அறக்தியஸ்ரெல்லா என்பான் வலக்தைலா என்பவளேக் காமுற் றுக் காமச்சுவை விரவிய பாடல்களைப் பாடினன். பின்பு அவளே மணம்புரிந்துகொண்டான்.
திராஜன் காலத்துப் புலவர்கள்
கி. பி. 55-ம் ஆண்டு யூவினுல் தீயொழுக்கத்தைக் கண் டித்து வசை நூல்கள் பதினறு எழுதினன். கோணிலியஸ் இரசிற்றஸ் என்னும் வரலாற்ருசிரியன் கி. பி. 98-ம் ஆண்டு இணைத் தலைவர்களுள் ஒருவகைத் தெரிந்தெடுக்கப்பட்

பிற்கால இலத்தின் நூல்வரலாறு 365
டான். அவன், கைசர் குடும்பத் தனிக்கோலர் வரலாற் றைச் செப்பினன்; தன் மாமன் அக்கிரிக்கோலாவின் வாழ்க்கை வரலாற்றையும் விளம்பினன்; சர்மானியரின் சரித்திரத்தையும் எழுதினன். கி. பி. 78-ம் ஆண்டு அவன் 115 வரலாறுகளைப் பிரசுரஞ் செய்தான். அவனுடைய உரைநடை சுருங்கச் சொல்லல் என்னும் அழகுடையது. அவனுடைய வரலாறுகள் ஆராய்ச்சிக் குறைவுடையன. பிளினியின் மருகன் இளைய பிளினி குவின்றிலியன் என்னும் அணிநூல் வல்லோனுக்குப் பொருளுதவி செய்தான். பிளினி சில கடிதங்கள் வரைந்தான். யோசேபஸ் என்னும் யூதன் கிரேக்க மொழியில் தன் வாழ்க்கை வரலாற்றையும் ஈபுருமொழியில் யூதருடைய வரலாற்றையும் எழுதினன். புளுற்ருக்கஸ் என்னும் கிரேக்கன், ஏதென்ஸ் நகரத்துப் பல் கலைக் கழகத்திற் கற்றன். அவன் கிரேக்கர் தலைவரும் உரோமர் தலைவருமான பலருடைய வாழ்க்கை வரலாறு களே இயம்பினன். வியாசங்கள் பல எழுதியதுமன்றி. யவன நூல்கள் பலவற்றை இலத்தின் மொழியில் மொழி பெயர்த்தான்.
அத்திரியன் காலத்துப் புலவர்கள்
தனிக்கோலன் அத்திரியனும் நூல்கள் சில எழு தினன். கிரேக்க மொழியை வளர்த்தற்காக ஒரு கழக மேற்படுத்தினன். அக்கழகத்தில் அணிநூலோரும் தத்துவ நூலோரும் கவிஞர்களும் குழுமித் தத்தம் நூல்களைப் படித்து அரங்கேற்றினர்கள். கழகத்துக் கவிஞர்கள் பண்டைக்காலத்து நடையைப் போற்றினர்கள். அக்தோ கயினன் தத்துவஞானம் போதிப்பதற்காகத் தத்துவ நூல் வல்லோர் பலரை ஓம்பினன். மேலும், குதர்க்கர் மருத்து வர் இலக்கண நூலோர் அணிநூலோர் முதலியோரிடம் அரசிறை பெருரது விட்டான். மாக்கஸ், அவுறிலியஸ் ஞானக் தைப்பற்றிப் பல வியா சங்கள் எழுதினன். முன்குவிலஸ் கைசரது வாழ்க்கை வரலாற்றை எழுதினன். புளோற்றஸ்

Page 200
366 உலக வரலாறு
என்னும் பெயருடன் ஒரு புலவனும் ஒரு வரலாற்ருரசிரிய னும் இருந்தார்கள். பிறக்தோ என்னும் அணியாசிரியன் அவுறிலியனுடைய ஆசிரியனென்பர். மினுேசியஸ் பெலிச் என்பான் கிறிஸ்தவ மதத்திற்கோர் மன்னிப்பென ஒரு நூலை நுதலினன். எரியானஸ் இந்திய பூமிசாஸ்திரத்தை கவன மொழியில் எழுதினன். கி. பி. 160-ல் ஐப்பியஸ் உரோமா நகரத்தின் வரலாற்றை யெழுதினன். அலெக் சாந்திரியா நகரத்துத் தொலைமி வானநூலொன்று இயற்றி ன்ை. 117-ம் ஆண்டு அரிஸ்திடிஸ் என்னுங் குதர்க்கன், தெமிஸ்டோக்கிள்ஸ் என்னும் அமைச்சனுடைய வரலாற்றை யவன மொழியில் எழுதினன். அரிஸ்திடிஸ் பொருள் நயத் திலும் சொல்நயத்தைப் பாராட்டி விரிவுரைசெய்து பொரு ளிட்டினன். 125-ம் ஆண்டு லூக்கீயஸ் என்னும் அணிநூல் வல்லோன் காத்திக மதத்தை நாட்டுதற்குத் தேவர் சம்பா ஷணை என்னும் நூலை எழுதினன். அந்நூல் அழகிய இனிய எளிய நடையில் எழுதப்பட்டது. யவன மொழி யின் செம்மொழிக்காலம் யவனருடைய சுயாதீனம் அழிக் தவுடனே முடிந்ததெனலாம். இலத்தின் மொழி கி. பி. 3-ம் நூற்ருரண்டுடன் தேயத் தொடங்கியதெனலாம். இவ் வளவில் இலத்தின் நூல் வரலாறு முற்றுப்பெற்றதென 6Did numer
9-ம் பாடம் - அந்தோநயினர்
அந்தோநயினன் ஆட்சிக்காலம் கி. பி. 131-161
அந்தோ நயினனுடைய ஊர் கல்லியா நா போ. அவன் கி. பி. 147-ல் மாக்கஸ் ஒளறிலியஸ் என்னும் தத்துவ ஞானியை இளங்கோவாக்கி, மரபுபற்றிக் கைசரென அழைத்தான். அந்தோ நயினன் அரசியல் செலுத்தலில் திறமை வாய்ந்தோனல்லன். அவன் போர்ப்பிரியனல் லன். அவன் பொய் களவு கள் காமம் அரச துரோகம் என்னும் குற்றஞ் சாட்டப்பட்டோரை அடித்தும் இடித்

அந்தோகயினர் 387
தும் சுட்டும் வெட்டியும் துன்புறுத்தலாகாதெனக் கட்டளை. விடுத்தான். அவன் சமயப் பக்தி மிகுந்தோனுயினும் புறச் சமயத்தோராகிய கிறீஸ்தவர் முதலியோரைத் துன் புறுத்த விரும்பவில்லை. தன் மனேவி தவளவாண்முகத் தா8ள மிகவும் காதலித்தான். கி.பி. 140-ல் மனைவி இறந்த பின் அவளுடைய தோழியோடு கூடிக் களித்தான் தோழி சுயாதீனம் பெற்ற அடிமையாயினும், மணவுரிமை பெற இயலாதாகையால் மனைவியாகவில்லை.
மாக்கஸ் ஒவறிலியஸ் ஆட்சிக்காலம் கி. பி. 161-180
அந்தோநயினன் கி. பி. 161- ஆம் ஆண்டு இறக்க, மசக்கஸ் அவுளிலியஸ் தனிக்கோலைப் பெற்ருரன். மாக்கஸ் தலைநகரிற் பிறந்து அந்தோநயினனுல் வளர்க்கப்பட்டான். புலன்வழிச் சேறலைக் கடிந்து கடமையைச் செய்து கல் வினைப்பயனைத் துய்த்தலே நல்வாழ்க்கை எனக் கூறும் ஸ்ரோயிக் மதத்தினனுகித் தியானத்திற் காலங்கழித்தான். அவன் கேலன் என்னும் மருத்துவனேடும் அளவளாவி னன். தத்துவநூல் வல்லாரோடு கலந்து பேசுதலில் இன் புற்ருரன். தன்னயங் கருதல் தவறென்றும், பொதுநயங் கருதலே கல்லொழுக்கமென்றும் முழு நம்பிக்கையுடைய வன்; ஞான நூல்களையும் ஒழுக்க நூல்களையும் படித்து இன்புற்று அரசியலைப் பொருட்படுத்தாது விட்டான். தன் தம்பி லூசியஸ் அவுறிலியஸ் என்பவனைத் தன்னுேடொத்த தலைவனுக்கினன். இருவரும் இணைத்தலைவராகத் தனிக் கோலோச்சினர். மாக்கஸ் ஒளறிலியஸ் அத்திரியனைப் போலப் போரை வெறுத்துக் கொடையளித்தலிலும் கோட்டம் அமைத்தலிலும் பொருளைச் செலவுசெய்தான். 6. 9. 165-ub ஆண்டு பாதியர் போர்க்கெழுந்து a G3trurucif படையை முறிய அடித்தனர். பின்னர் உரோமர் சேனை குருக்களத்தில் வென்றியடைந்தது. இரிசிபன் என்னும் பாதியர் தலைநகரை உரோமர் கைப்பற்றினர்கள். உரோ >மர். படை தொற்று நோய்வாய்ப்பட்டு அழிவெய்தியது.

Page 201
868 உலக வரலாறு
தொற்றுநோய் உரோமருடைய ஆட்சி நாடுகளிலிருந்து இத்தாலியாவிலும் பரவியது. உரோமர் நகரத்திலும் இக் நோய் நனிபரவிற்று. பெருந்தொகையினரான சனங்கள் மாண்டனர். நாடோறும் ஆயிரக் கணக்கான சனங்கள் இறந்தனர்.
மக்கிறமேனியர் கி. பி. 166-ம் ஆண்டு போர் தொடங்கி னர். போரில் உரோமர்சேனை தோல்வியடைந்தது. அடுத்த ஆண்டு தலைவரிருவரும் போர்க்களத்திற்குப் புறப் பட்டனர். கி. பி. 169-ல் அலூசியஸ் மரிக்க, மாக்கஸ் உரோமாபுரத்திற்குத் திரும்பினன். கி. பி. 170-ல் மக்கிற மேனியர் தோல்வியடைந்தனராக, மாக்கஸ் சர்மானிக்கன் என்னும் பட்டத்தைப் பெற்ருரன். மக்கிறமேனியர் சர்மானிய சாதியராதலின் இப்பட்டம் சர்மானியரை வென்ருேரனென்பதைச் சுட்டும்.
சிரியநாட்டுத்தேசாதிபதி மாக்கஸ் இறந்துபட்டா னென அலர் பரப்பினன். அவனை மேன்மக்கட்சபை யோர் கொல்வித்தனர். மாக்கஸ் அச்செய்தியைக் கேள் விப்பட்டு, அவனை மன்னித்திருக்கலாமென மொழிந்தான். கி. பி. 180-ம் ஆண்டு இரண்டாம் மக்கிறமேனியர்போர் நடந்தது. சற்றேணஸ் என்னும் உரோமர் தலைவன் சர் மானியரோடு பொருது வாகைசூடினன், பாசறையில் மாக்கஸ் அவுரீலியஸ் பிணியால் இறந்தான். அவன் மகன் கொம்மோடஸ் உரோமாபுரத்திற்கு விரைந்தான். இக்காலத்தில் கிறிஸ்தவசமயம் அலைச்சாந்திரியாநகரிலும் உரோமாபுரத்திலும் பரவியது. அரசாங்கத்தினரால் கிறிஸ்து சமயவழிபாடு கண்டிக்கப்பட்டது.
அந்நியமதக்கலப்பு
அந்தோகயினர் ஒளறிலியர் என்னும் தனிக்கோலர்காலத் தில் அங்கியதேசத்துச் சமயவழிபாடுகள் கண்டிக்கப்பட வில்லை. நானுவித ஆராதனைகளும் பரவின. பல்வேறு

அந்தோகயினர் 369
தெய்வங்களும் வணங்கப் பட்டன. அத்தெய்வங்களைப் பொதுசனங்கள் வணங்கினராயினும், தத்துவஞானிகள் அவற்றை அஞ்ஞானிகளின் தெய்வங்களென இகழ்ந் தனர். அரசாங்கத்தோர் அவ்வாராதனைகள் தம்மாட் சியை நிலைநாட்டுவன என்று எண்ணிக் கண்டியாது விட்டனர். பலதெய்வக் கொள்கையும் தனித்தெய்வவழி பாடும் பிளேற்றேரவின்மதமும் உலகாயதமதமும் எனச் சமயவழிபாடுகள் பெருகின. தத்துவ நூலோர் பிற நாட்டுத்தெய்வங்களைப் பொருட்படுத்தாமலும் உண்ணுட் டுப் பண்டைக்கிரிவைகளை இழித்து நகையாடாமலும் தாம் தம தியானத்தில் அழுந்தினர்.
உரோமராட்சி பல நாடுகளிலும் பரவியதாக, அந் நாடுகளில் வணங்கப்படும் தெய்வங்கள் இத்தாலியநாட்டி ணுள் நுழைந்தன. யவனநாட்டுச் சேயஸ் எகிப்துநாட்டுப் பாக்கஸ் பினீசியநாட்டுப் பரிதி : என்றற்ருெரடக்கத்துத் செய்வங்கள் பல இத்தாலியதேசத்திலும் கோயில்பெற் றன. தனிக்கோலர் பலர் கல்லியர், நரபலியளிப்பவு ரென எண்ணினராதலின், கல்லியசமயத்தை அழிக்க முயன்றனர். எவ்வெவ்வூர்களுக்கு உரோமர் சென்ருரர் களோ அங்கங்கெல்லாம் தம் சமயம் மொழி பழக்க வழக்கங்கள் முதலியவற்றை உடன்கொண்டே சென்றனர். உரோமருடைய கட்டிட அமைப்புக்களே ஐரோப்பிய தேசங்கள் பலவற்றிலும் இன்றும் காணலாம். அரசாங்கத் தினர்மாத்திரமன்றிச் செல்வர்களும் மாளிகைகள் கட்டிச் சிற்பர்முதலியோரைப் புரந்துவந்தனர். இத்தகைய செல்வ ருட்சிறந்தோன் அரடோற்றஸ் அற்றிக்கஸ் என்னும் б?Q5 வள்ளல். இச்செம்மலின் தந்தை ஏதென்ஸ் நகரின் பிறந்த ஒரு கிரேக்கன். அவனுக்கு ஒரு புதையல் அகப்பட்டது. அவன் தன் மகனை இன் முறையிற் கற்பித்தான். அற்றிக் கஸ் அறிவிற்சிறந்து பெரிய வள்ளல் ஆகினன்; நீர்க் குழாய் ஒன்றை உரோமாபுரத்தில் அமைத்து மக்களே
47 w

Page 202
370 உலக வரலாறு
வசியப்படுத்தித் தேர்தலில் இஃணத்த8லமைப்பதவியைப் பெற்றன் ; பின்னர் உரோமருடைய தனிக்கோ லாட்சி செல்லும் பல நாடுகளிலும் கோயில்கள் கட்டுவித்தான். உரோமர் ஆட்சி உன்னத நிலையிலிருந்த அக்காலத்தில் பெருநகர்கள் 1 197 என க் கூறு ப. பெண்கள் தம் அணிகளுக்காக எண்ணுருயிரம்பொன் செலவுசெய்தன Jr (r tib.
இனி, உரோமர் தனிக்கோல் தேய்ந்து பின்னர் இரு கூருரகிக் காலக்கிரமத்தில் அழிவெய்திய வரலாற்றைத் தொடர்வரம்.
மாக்கஸ் ஒளறிலியன் என்னும் தனிக்கோலனைப் பலர் ஞானி வேடம்பூண்டு ஏமாற்றிச் சமயக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசி முகமன் கூறிப் பொருளும் பதவியும் பெற் றுத் தம் வாழ்நாளைப் போக்கினர். மாக்கஸ் தத்துவ ஞானியாயிருந்தும் பலரால் ஏமாற்றப்பட்டான். அவன் தன் மனைவி, மகன், தம்பி முதலிய சுற்றத்தாரின் ஒழுக் கத்தைக் கண்டிக்கவில்லை. மாக்கஸ் தத்துவ ஞானியாத லின் ஆடம்பர வாழ்க்கையை வெறுத்தான். அவன் மனை வியோ ஐம்புலவின் பங்களை வெறுத்தாளல்லள். அவள் உருநலன் வாய்ந்தோர் இழிகுலத்தோராயினும் காமுறு வள். ஒளறிலியன் தன் மனைவி எத்தகையளெனவுணராது அவளை நனிபுகழ்ந்தான். தன் மனைவியே இல்லக்கிழத்தி களிற் சிறந்தவளென நம்பினன். இப்பெருமனைக் கிழக் தியை அளித்த கடவுளை யென்றும் கினைந்து துதித்தான். அவள் இறந்தவுடன் அவன் துன்பக் கடலில் மூழ்கினன். மேன்மக்கட் சபை உடனே அவளுக்குக் கோயில் அமைத்து வழிபாடு ஏற்படுத்தியது.
Bú s Liv
மாக்கஸ் ஒளறிலியனுடைய மகன் இம்மடஸ் தன் குலத் தைக் கெடுக்கவே பிறந்தான். தத்துவ ஞானிகளிடம் கற் றும் பயன் எய்திலன். கி பி. 180-ல் கம்மடஸ் 15-ம் வய

அந்தோகயினர் 8ጝ1
தில் தலைமைப் பதவியைப் பெற்று மக்கிறமேனியரோடு போர் நடாத்தப் புலம்பெயர்ந்தான். அரசனேடு கூடிச் சென்ற தூர்த்தர் பாசறை வாழ்வின் துன்பங்களைப் பல படப் புனைந்தும் தனிக்கோலின் புகழே பகைவரைக் கெடுக்கப் போதுமெனப் புகன்றும், ஐம்புலவின் பங்களின் சுவையை எடுத்துரைத்தும் வேந்தனை உரோமாபுரம் திரும் பும்படி புத்தி கூறினர். அமைச்சர் சிலர் போரை நடாத் தினர். இது இவ்வாருரக லூசிய்ஸ் வேறஸ் என்போனின் கைம்பெண்ணும் மாக்கஸ் என்னும் தனிக்கோலினின் தங்கையுமாகிய லூசில்லாவென்பாள், கமமடஸ் என்னும் வேந்தனைக் கோமற்குத் தீயோனெருவனை ஏவினுள். சற் றேனஸ் என்னும் வீரனெருவன் வேந்தனைக் கொல்ல முயன்றன். கிளியாக்தர் என்னும் அடிமையொருவன் வேங் தல்ை மதிக்கப்பெற்றிருந்தான். அவன் தகுதியில்லோ ருக்கு உத்தி யோகங்களை அளித்தான். 189-ம் ஆண்டு கக ரில் வற்கடம் நிகழ்ந்தது. கிளியாக்தர் காவல் வீரரைப்
பொதுசனங்களைத் திரளவிடாது கலைக்கும்படி ஏவினன். - கம்மடஸ் சிற்றின் பத்தில் அழுந்தி யாதுத் தெரியாது மயங்கி யிருந்தான். அவனுக்குத் தமக்கை வதில்லாவும் அவனது காமக்கிழத்தியாகிய மாக்கியாவும் ஊர்நிலையை யெடுத்துரைக்கத் துணிந்தனர். கம்மடஸ் ஏர்க்கியூ லுஸ் என்னும் தேவனின் நாமத்தைத் தான் புனைந்து, காட்சிக்களத்தில் விலங்குகளைத் தன் கையாற் கொன்று தற்புகழிற் களித்தான். அன்றியும், புகழ்பெற்ற போலன் என்னும் வாள்வீரன் பெயரால் தன்னை அழைக்கும்படி கற்பித்தான். பல நூறு மேன்மக்களைக் கொன்று கொடுங் கோலனுணுன். இக் கொடுங்கோலனை அTசில்லா நஞ்சூட்டித் தலை திருகுவித்தாள். தலை திருகிய தீயோன் லாயற்றஸ் என்போன், வேந்தன் இரத்தக் குழாய் வெடித்து இறந்தானென மொழிந்து, காவலர் தலைவன் பேட்டினுஸ் என்பவனுக்குத் தலைமைப் பதவியை நல்கினன். மேன்மக்கள் கம்மடஸ் என்னும் கொடுங்கோலனை வழி

Page 203
372 உலக வரலாறு
படக்கூடாதெனத் தீர்மானஞ் செய்தனர். வேந்தன் உடலைக் கொளுக்கியால் இழுத்துச் சென்று வாள்வீரர் உடையணியும் மண்டபத்தில் இட்டனர். பேட்டினுஸ் 86 நாள் அரசாண்டபின் காவலராற் கொல்லப்பட்டான்.
10-ம் பாடம் - கலகக் காலம்
reaps in
உரோமாபுரியின் காவலர்கள் தலைமைப் பதவியைப் பொருள் நனி கொடுப்போர்க்கு அளித்தல் வழக்கம். பேட்டி னுஸ் இறந்தபின் டிடியஸ் யூலியானஸ் என்னும் தனவா லுக்கு உத்தரீயத்தை அளித்தனர். தனவான் உண்டா டிக் களித்தாலும் தன் உயிர்க்கஞ்சித் துயிலின்றியிருந் தான். பிரித்தானியாவையாளும் படைத்தலைவன் குளோடி யஸ் அல்பினஸ், சிரியா நாட்டுத் தலைவன் பெஸ்கன்னியஸ் நிகர் பன்னேனிய நாட்டுத் தலைவன் சப்டீமஸ் சவரஸ் என்போர் தலைமைப் பதவியைப் பெற விரும்பினர்கள். சவரஸ் 400 காசு ஒவ்வொரு வீரனுக்கும் நல்கித் தனக்கே தனிக்கோ லூரியதென முரசறைவித்தான். யூலியானஸ் பயந்து சவ ரஸ் என்னும் தலைவனேக் கொல்லும்படி தீவினையாளரை ஏவினன். சவரஸ் 600 வீரரொடு மாளிகை புகுந்து வேந் தனை நீராடும் மண்டபத்தில் சிரச்சேதஞ் செய்தான். த8ல வன் நிகருக்குத் தான் மண்பனென கடித்துக்காட்டி அவ னையும் கொல்வித்தான். அல்பினனையும் இவ்வண்ணம் தொலைக்க முயன்ருரன்.
சவரஸ் மந்திரம் கனவு சாத்திரம் என்பவற்றில் நம் பிக்கையுள்ளவன். வேந்தனின் இரண்டாம் மனைவி புலி பாடம்மா என்பாள் கலைஞரையும் வித்தை வல்லோரையும் புரந்தாள். அவள் வனப்பு வாய்ந்தவளாயினும் கற்பில் லாள். அவளுடைய மக்கள் கராக்காலா கேதன் என்னும் இரு வினர் தம்முட் கலகப்பட்டு, நடிகர் வாள்வீரர் முதலி

கலகக்காலம் 373
யோரை இரு கட்சியாக்கினர். தகப்பன் சவாஸ் இருவர்க் கும் தலைமைப் பதவியை அளித்தான். இங்ஙனம் மூன்று தலைவர்கள் ஆண்டனர். கராக் காலா தன் தந்தையைக் கொல்ல முயன்றன். எனினும் தந்தை தன் மகனைத் தண் டிக்கவில்லை. கராக்காலனை ஐரோப்பிய ஆபிரிக்கா நாடு களையும், கேதனை ஆசிய நாடுகளையும் ஆளும்படி தந்தை ஆஞ்ஞாபித்து இறந்தான்.
கராக்காலன் தன் தம்பியின் உயிரைக் கவர்ந்து, அவன் கட்சியினரை ஆயிரக் கணக்காகக் கொன்று, கொடுங்கோலோச்சினன். மக்கிறீனஸ் என்னும் அமைச்சனை அரசாளவைத்துத் தான் நாடு காணிய சென்றன். கரகாயி என்னும் ஊரில் சந்திரனை வணங்கச் செல்லும் வழியிலே அரசனைக் கொல்லும்படி மாசாலிஸ் என்னும் ஒரு வீரனை அந் நன்றியற்ற அமைச்சன் ஏவினன். இங்கனம் கி. பி. 217.ம் ஆண்டில் மக்கிறீனஸ் என்னும் அமைச்சன் வேந்தனனன். மக்கிறீனஸ் தன் மகனை, பத்துவயதினன யிருந்த போதிலும் இளவரசாக்கினன்.
பின்பு கராக்காலனின் இராணி யூலியா இறந்தாள். அவளுடைய தங்கை யூலியா மீசா என்பவளுக்கு சேமியா மம்மியா என இரு மகளிர் இருந்தனர். சோமியாவின் மகன் பசியானஸ் சிரியா தேசத்தில் சூரியசன் கோயில் ஒன்றில் பூசாரியாய் அமர்ந் திருந்தான். அவனைத் தாய் கராக் காலனுக்குப் பிறந்தவன் எனக் கூறினள். அரசன் தன் காலத்தை வாளா கழிக்கப் பகை ஒருபுறம் வளர்க் தது. மெய்காப்பாளர் பகைவரை எதிர்த்தனர். பசியானஸ் என்பவனும் முன்னணியில் கின்று போர்புரிந்தான். கமிஸ் என்னும் ஒரு வித்திலன் (Eunuch) படை வகுத்த லில் அநுபவ மில்லோனுயினும் தன் திறமையாற் போரை நடாத்தினன். மக்கிறீனஸ் அஞ்சியோடினன். இருபது நாள் அரசாண்டபின் அவனும் அவன் மகனும் கொல்லப் பட்டனர். இவ் வெற்றியை ஒரு விக்கிரகத்தின் சக்தியால்

Page 204
374 உல்க் வர்லாறு
தான் பெற்ருரனெனப் பசியானஸ் நினைத்தான். அவ் விக்கிரகம் லிங்கம்போன்ற ஒருகல், அது சூரியதேவன், எகபாலஸ் என்பவனுடைய விக்கிரகம், பசியானஸ் இவ் விக்கிரகத்தைக்கொண்டு வீதிவலஞ்செய்து வீதிதொறும் பொற்பொடி தூவினன். அஸ்டாற்றி என்னும் மதிதேவதை யைச் சூரியபகவான் விவாகஞ்செய்த திருநா8ள உரோமா புரத்திற் கொண்டாடினன். பசியானஸ் ஏகபாலஸ் என் னும் பெயரைச் சூடினன். காமக்கிழத்திகள் பலரோடு
பணிசெய்யும் கன்னியொருத்தியைக் கற்பழித்தான். பெண்களுடைய நடையுடை பாவனைகளை விரும்பிப் பெண் மையை அவாவினன். வீரர் அவனை வெறுத்து அவன் மைத் துனனும் மம்மியாவின் மகனுமாகிய அலெக்சாந்தனை வேங்தனுக்க விரும்பினர். அலெக்சாந்தனுக்கு இளவரசுப் பட்டத்தை நல்கும்படி வேந்தனுக்குத் தாய் புத்திமதி கூறினள். அலெக்சாங் தன் கொல்லப்பட்டான் என ஒரு கதை பரவிற்று. உடனே காவலர் வேந்தனையும் தாயை யும் கொன்று வீழ்த்தினர். அவன் உடலை ரைபர்கதியில் எறிந்தனர். அலெக்சாந்தன் பதினேழாவது ஆட்டைப் பராயத்தினனுயினும் தலைமைப் பதவியை ஏற்றன். அவன்தாய் பதினறு மேன் மக்களைத் தெரிந்து அமைச்ச ராக்கி அரசியலை நடாத்தும்படி ஏவினள். அரசனே அல்பியன் என்னும் வழக்குநூல் வல்லோன் கற்பித்து வந்தான். காவலர் தலைவன் அப்பியஸ். அரச துரோகம் விளேத்தனன். அவனே அலெக்சாந்தர் எகிப்துக்குத் தேசாதிபதியாக்கிச் சிலகாலஞ் சென்றபின் கொல்வித் தான். சரித்திர ஆசிரியன் டையன் கசியஸ் பன்னேனிய நாட்டிற் பாசறையிட் டிருந்த படைக்குத் தலைவன யிருந் தான். அப்படை பகைத்தெழுந்தது. வேந்தன் சென்று உரையாடிப் படையை நட்பாக்கினன்.
தனிக்கோ லாட்சிக்குட்பட்ட திரேசுநாட்டிற் பிறந் தோனயினும் மச்சுமியன் அன்னியகுலத் துதித்தோனென


Page 205
376 உலக வரலாறு
அளித்தனர். இக்காலத்தில் பெண் காவல் செய்யும் வித் திலர் (Eunuch) அரண்மனையில் மிகுந்தனர். இவர்கள் அரசனை ஒரு வீணனெனத் தூற்றினர். கோடியானஸ் இவர்களுடைய புத்திமதி கேளாது தன்வயத்தனகித் தனது அணிநூலாசிரியன் மகளை மணந்தான். ஆசிரிய னைக் காவலருக்குத் தலைவனுக்கிப் பார்சியரோடு போர் புரியப் புறப்பட்டான். ஆசிரியன் மசித்தில் இறக்க, பிலிப்பு என்னும் அராபியன் காவற் படைக்குக் தலைவனனன். படைவீரர் வேந்தனைக் கொன்று பிலிப்பை வேந்தனென வணங்கினர்.
பிறநாட்டு வரலாறு
அக்காலத்தில் பார்சிய நாட்டில் ஆட்டசாக்கிஸ் அா சாண்டான். அவனுடைய ஆட்சியில் சமயக் கட்சிகள் பல்கின. பூசாரி ஒருவன் மதுவைக் குடித்து அயர்ந்தான். எழுந்த பின் தான் சுவர்க்கம் சென்றனன் எனவும் பழைய சுருஸ்திசமயமே உண்மையானதென அறிந்தனன் எனவும் உரைத்தான். அக்கதையைப் பல கட்சியினரும் நம்பிப் பழைய வழிபாட்டை நாட்டினர். சுருஸ்தியருடைய மதத் தைப்பற்றி யவனவாசிரியன் எரடோற்றஸ் பின் வருமாறு கூறுகின்றனன். காலம் ஆதியும் அந்தமும் இல்லாத ஒரு திரவியமெனவும் புத்தி (மனம்) என்பது அகண்டாகாரப் பொருளெனவும், நன்மை தீமை புத்தியினின்றும் தோன் றியவெனவும் ஒர்மத் து என்னும் நன்மையும் அக்கிரமம் என்னும் தீமையும் யாண்டும் போராடுகின்றனவெனவும் சுருஸ்தியர் செப்பினர். கோயில்களில் தெய்வங்களே வணங்காமல் மலையே தேவரின் இருப்பிடமென எண்ணி னர்போலும். சுருஸ்தியர் அக்கினி வழிபாடு செய்தன ரெனவும் சொல்லப்படுவர். பார்சியர் யாவரும் எரியையும் ஒளியையும் வழிபட்டனர்.
இம்மதத்தைத் தவிர்த்து ஏனைய மதங்களை ஆட்ட சாக்கிஸ் கண்டித்தான். அவனுடைய ஆட்சி யூபிறெற்

க்லகக்காலம் 377
றிஸ் கதிதொடங்கி இந்து கதிவரையும் சென்றதாம். கி. பி. 233ல் அவன் உரோம தணிக்கோலன் அலைச்சாக்தரை வென் றிருத்தல் வேண்டுமென ஊகிக்கப்படுகிறது. அவன்மகன் சப்போர் அரசு கட்டில் ஏறினன். பார்சியர் படையுடன் பூசாரிகளும் வித்திலரும் பணியாளரும் சென்றமையால் படையினது வீரம் சிலசமயங்களிற் கேடுற்றது. பார்சியக் குதிரைப்படை மிகப் புகழ்பெற்றது. பார்சியர் கிழக்குத் திசையில் உரோமராட்சியை அழிக்க முயன்றனராக, சர் மானியரும் கொத்தரும் மேற்குத் திசையில் எழுந்தனர். றையின் நதிதொட்டு தானியூபி ஆறுவரையும் காண வராகிய சர்மானியரும் கொத்தரும் உலாவினர். அந்நாடுகளிலிருந்த சர்மானியர் தென்னடு நோக் ଜଜotif. சரித்திரவாசிரியன் ரசிற்றஸ் மொழிந்தவாறு சர்மானியர் முற்காலங்களில் ஆடு மாடு மேய்த்துச் சமவெளிகளிலே வசித்தனர். உண்பதும் உறங்குவதும் குடிப்பதும் போர்புரிதலுமே அவர்கள் தொழில், சர்மானி யர் சுவாதீனமாக இருக்கவிரும்பும் சாதியார். அடிமைச் சாதியாக ஒருபோதும் இரார். சர்மானியப் பெண்கள் இல் லப்பணிகளைச் செய்து பத்தினிகளா யிருந்தனர். சர்மானி யர் சூரியசந்திரரை வணங்கினர். இச்சர்மானியர் உரோம ருடைய போர்முறைகளில் பயின்று உரோமரை எதிர்த் Ꭶ60Ꮃ IᎢ .
உண்ணுட்டு வரலாறு
,ெ பி. 249-ல் மச்சிமஸ் என்பவன் பிலிப்போடு விரோ தித்தான். காவலர் பிலிப்பைக் கொன்று டேசியஸ் என்ப வனே வேந்தனுக்கினர். டேசியஸ் கொத்தரோடு போர் புரிந்தான். கொத்தர் டேசியனையும் அவன் மகனையும் வென்றனர். டேசியன்மகன் அகஸ்திலியன் அரசனனன். அவனுடைய அமைச்சன் கல்லஸ் என்பவன் பொன் கொடுத்துக் கொத்தரை நட்டராக்கியபின் தன் வேந்த னேக் கொல்வித்தான். அமீலியானஸ் இதை அறிந்து
48

Page 206
38 உலக வரலாறு
கல்லஸ் என்பவனை எதிர்த்து அவன் மகனை வென்று கொன்ருரன். வலேறியன் என்னும் ஒரு படைத் தலைவன் கல்லஸ் என்பவனுடைய கட்சியைச் சார்ந்து அமீலியனை எதிர்த்தான். போர்வீரர் வலேறியனையும் அவன்மகன் கல்லியானஸ் என்பவனையும் தனிக்கோல ரெனத் தொழு தனர். இத்தருணத்தில் கொத்தர் ஸ்பெயின் தேசத்துட் புகுந்து குறையாடினர். கல்லியானஸ் சர்மானியப் பெண் பிப்பாவை மணம் புரிந்தான்.
கொத்தரில் ஒருபாலார் பாஸ்பரஸ் நீரிணை வழியால் நுழைந்து கிரேக்க நாட்டிற்புகுந்து ஏதென்ஸ் நகரைத் தாக்கினர். அவர்கள் நகரத்து நூல்நிலையத்திற்குத் தீயிட வெண்ணினராக, கொத்தர்தலைவன் கற்றிலனுயினும், நூல்களை எரிக்கப்படாதெனத் தடுத்தான். தனிக்கோலன் கல்லியானஸ் கொத்தரும் பார்சியரும் நெருக்கிய போதி லும், அரசியலில் மனத்தைச் செலுத்தாது, புளோற்றினஸ் என்னும் தத்துவஞானியோடு ஞானம் பேசிக் காலத்தைக் கழித்தான். 19 தலைவர் விரோதித் தெழுந்தனராயினும், மேன்மக்கட் சபையினர் தாம் தெரிந்தெடுத்த வேந்தனை வெறுத்திலர். உரோமர் தனிக்கோல் உள்நாட்டுக் கலகங் களாலும் அயலோரின் நெருக்கடியாலும் பங்கப்பட்டது. கி. பி. 250 முதல் 268 ஈருரன காலத்தில் பிளேக்குநோய் உரோமர்கா டெங்கும் பரம்பிற்று. நாளொன்றுக்கு உரோமாபுரத்திலேயே 500 சனங்கள் இறந்தனராம், பொதுமக்கள் செங்கோல் கோடிற்றெனக் கதைத்தனர். தானியூபி மாகாணங்களில் தேசாதிபதியாக அமர்ந்திருந்த ஒளறியோலஸ் என்போன் கல்லியேனஸ் என்னும் வேந்தனைக் கொன்று குளோடியஸ் என்பவனுக்குத் தலைமைப் பதவியை நல்கினன். குளோடியஸ் கொத்தரை வென்றன். அவ னுடைய தம்பி குவிந்திலியன் 17 நாள் அரசாண்ட பின்
துறந்தான். ஒளறியோலஸ் 4 வருடம் ஆண்டு சர்மானிய ரோடு போராடினன்; கொத்தரைக் கல்லியா தேசத்தி

கலகக்காலம் 379
னின்றும் கலைத்தான், சைேபியாவின் இராச்சியத்தை யும் அழித்தான். ஒளறியோலஸ் வீரரைச் சூதாடப் படாது, குடிக்கப்படாது, குறைகொள்ளப்படா தெனக் கற்பித்தான். அவன் கொத்தரோடு உடன்படிக்கை எழு திக்கொண்டு 20,000 வீரருக்குத் தன் படையிற் சேவிக்க உத்தரவு அளித்தான். கொத்தர் இனத்தைச் சேர்ந்த அலிமானியர் என்னும் ஒரு சாதியார் இத்தாலியா கே சத்தி னுட் புகுந்து துரத்தப்பட்டனர். கி. பி. 327-ல் ஒளறி யோலன் உரோமாபுரத்தின் மதில்களைப் புதுப்பித்தான். பின்பு பல்மீராகாட்டு அரசி சனபியாவோடு போர்செய்தற் குப் புறப்பட்டான். அரசி அழகிற் சிறந்தவள்; லற்றின், கிரேக்கு, சிரியா என்னும் மொழிகளைக் கற்றுணர்ந்த வள்; ஹோமர், பிளேற்ருே, என் போரின் நூல்களே வாசித்தறிந்தவள். அவள் ஒடிநாதனைக் காதலித்தாள். இருவரும் வேட்டையாடுதலில் மிகப் பிரிய முள்ளவர்கள். வேட்டையாடும்பொழுது ஒடிஈாதன் கொல்லப்பட்டான். சனபியா அராபிய தேசம் முழுவதிலுஞ் செங்கோல் செலுத்தினுள். பின்னர் உரோமரை எகிப்து தேசத்தி னின்றும் துரத்தினள். 273-ம் ஆம் ஆண்டு ஒளlயோலன் அவளைச் சிறைப்படுத்தினன். விடுதலையான பின் சன பியா இத்தாலியா தேசத்தில் வாழ்ந்தாள். அவளுடைய பெண்பிள் ஆளகள் உரோமமாட்டு மேன்மக்களை மணஞ் செய்துகொண்டனர். அளவுக்குமிஞ்சி அரசிறை பெற்ற தேசாதிபதி ஒருவனே ஒளறியோலன் தண்டித்தான். அத் தேசாதிபதி ஒளறியோலனைக் கொல்வித்தான். இளவய தில் இறத்தலே உரோமருடைய தனிக்கோலரின் விதி போலும். உரோமர் தனிக்கோலர் கொடுங்கோலராயி னுஞ்சரி; செங்கோலராயினுஞ் சரி; தம் காலச்திற்குமுன் யமன் கையில் அகப்பட்டனர்.
.ெ பி. 275-ல் உரோமராச்சியம் அரசரின்றி யிருந் தது. மேன்மக்கட்ச.ை ஒருவரை நியமிக்கப் படைவீரர் ஒருவரைத் தெரிந்தெடுத்தனர். ரசிற்றஸ் என்னும் சரித்

Page 207
380 உலக வரலாறு
திரவாசிரியன் குலத் துதித்தோணுகிய ரசிற்றஸ் என்னும் வயோதிகனுக்குப் போர்வையளித்தனர். அவன் 75 வயதி னன். ஆறுமாதம் ஆண்டபின் உயிர்நீத்தான். அவ னுடைய சகோதரன் புளோறியானஸ் அரியணே ஏறினன். பின்னர் புருேபஸ் என்னும் படைத்தலைவன் அரசனனன். அவன் சர்மானியரைக் கல்லிய நாட்டினின்றும் ஒட்டிக் கலைத் தான்; 16,000 சர்மானியரைத் தன் படையிற் சேர்த்துப் பலவிடங்களிலும் சேவிக்கும்படி பணித்தான்; இப்பதினருயிரம் வீரரையும் ஒரு நாட்டிற் சேவிக்க விட் டால் பகைவராதல் கூடுமென எண்ணி, அவர்களைச் சிறு கூட்டங்களாகப் பிரித்து, எட்டுத் திக்கிற்கும் அனுப் பினன். புருேரபஸ் உள்நாட்டுப் பகைவர் பலரை அடக்கி, கி. பி. 281-ஆம் ஆண்டு வெற்றிவிழாக் கொண்டாடினன். அவ்விழாவில் வாட்போர்க்காட்சி நடைபெறவில்லை. வாள் வீரர் தங்களைத் தாங்களே கோறல் பேதைமை என எண் ணித் தம் காவலரைக் கொன்று வீதிதோறும் கலகஞ் செய்து திரிந்தனர். அரசனுடைய கிலைப்படை கலகத்தை அடக்கிற்று. பகைவர் குன்றினராக, புருேரபஸ் படைவீரர் களைத் திராட்சைக்கொடி நட்டுக் கமத்தொழில் செய்யும் படி ஏவினன். படைவீரர் மறுத்துப் பகைத்தெழுந்து புருேரபஸ் என்னும் வேந்தனைக் கொன்று தம் தலைவன் காரஸ் என்போனுக்குத் தனிக்கோலை அளித்தனர். காரஸ் மேன்மக்களை எள்ளளவேனும் பொருட்படுத்தின னல்லன். தான் தனிக்கோலன் என்பதை மேன்மக்க ளுக்கு அறிவித்தான். 'என் தலை வெண்டலையாயவாறு நும் பார்சியநாடும் வெறுமையாம்படி மரங்களை வெட்டி வீழ்த்தி யழிப்பல்" எனப் பார்சிய தூதரிடம் சொன்னன். கி. பி. 283-ஆம் ஆண்டு பார்சிய தேசத்தில் பாசறை யிட் டிருந்தான். அரசன் பாசறையில் இறந் திருந்ததை வீரர் ஒருநாட் காலை கண்டனர். படைவீரர் அவன் குமா ரரை உரோமாபுரத்திற்குத் திரும்பும்படி வேண்டினர். மூத்தகுமாரன் கரீனஸ் கூத்தரோடும் பாணரோடுங்கூடிக்

கலகக்காலம் S8.
களித்தான்; வரைவின் மகளிர் பலரை அரசமாளிகையில் இருத்தினன்; காட்சிகண்டு இன்புறுதற்குப் பெரியதோர் விழா நடத்தினன். அவ்விழாவில் ஆபிரிக்காக் காட்டுச் சிங்கங்களும் அராபியா வனந்தரத்து ஒட்டகங்களும் இந் தியநாட்டு வேங்கைகளும் கொல்லப்பட்டன. இளையகுமா ரன் நூமேறியனை அவன் மாமன் அரியஸ் அப்பர் என்னும் காவற்றலைவன் கொன்ருரன். டையக்கிளிசியன் தான் அக் கொலேயிற் சேரவில்லையென விளம்பி, அப்பரைக் கொன் முன்; பின்பு கரீனஸ் என்னும் வேந்தனை வென்று அரசனனன்.
GDLuis Glf our
டையக்கிளீசியனுடைய பெற்ருேரர் அடிமைகள். பார் சியப் போரில் டையக்கிளிசியன் தன் பேராற்றலைக் காட் டினன். அதனுல் தேசாதிபதியாக்கப்பட்டான். பின்பு இஃணத் தலைமைப் பதவியை எய்தினன். முடிவில் தனித் தலைமைப்பதவியைப் பெற்ருரன். டையக்கிளிசியன் தன் கருமமே கண்ணுயிருந்தனன்; பாத்திரம் அறிந்து ஈகை செய்தான்; தன்னை எதிர்த்தோரைத் தண்டியாமல் கட்டா ராக்கி அரசியல் நடாத்தினன். மாக்சிமியன் என்போனைத் தன்னுடன் தலைமைவகிக்கும்படி தெரிந்தெடுத்தான். தான் சேயஸ் என்னும் தெய்வத்தின் அவதாரம் எனவும், துணேவன் மாக்சிமியன் எர்க்கியூலஸ் என்னும் தெய்வத்தின் அவதாரம் எனவும் பகர்ந்தான். கலேறியஸ் கன்ஸ்ராந்தியல் என்னும் இரு இளைஞருக்குக் கைசர்ப்பட்டத்தை நல்கி கல்லியா சர்மானியா என்னும் எல்லைப்புறத் தேசங்களைக் காக்கும்படி ஏவினன். கலேறியனைத் தன் தலைவியைத் துறக்கும்படி ஏவித் தன் மகளே அவனுக்கு அளித்தான். கன்ஸ்ராந்திவஸ் மாக்சிமியனுடைய மகளே மணந்தான். தனிக்கோலன் டையக்கிளிசியன் சின்னசியா எகிப்து என்னும் நாடுகளைக் காத்தான். மாக்சிமியன் இத்தாலி ஆபிரிக்கா என்னும் நாடுகளைக் காத்தான். கரோசியஸ் என்னும் கப்பற்படைத்தலைவன் சர்மானியரைப் பிரித்தா

Page 208
382 உலக வரலாறு
னியாதேசத்தை அணுகவிடாது துரத்தினன். அவன் சர் மானிய ரிடம் குறையாடிக்கொண்டவற்றைத் தன் பொருட்டுச் செலவு செய்தான். மாக்சிமியன் அவனைத் தண்டிக்க எண்ணினன். கரோசியஸ் கி. பி. 287-ஆம் ஆண்டு பிரித்தானியாவில் சுவாதீனமாயிருந்தான். அத் தேசத்தை ஏழுவருடம் ஆண்டு இறைபெற்றன், uprdi SR மியனும் டையக்கிளிசியனும் அவனைத் துணைவன் என ஒப்புக்கொண்டனர். இதற்கிடையில் அலெக்ரஸ் என்போன் கரோசியசனைக் கொன்ருரன். கி. பி 296-ல் கன்ஸ்ராந்தியஸ் என்போனை வென்ருரன். இது கிற்க. கறேலியஸ் கொத்தரை எல்லேப்புறத்தினின்றும் துரத்தினன். மாக்சிமியன் மேல் ஆபிரிக்கரை அடக்கினன். டையக்கிளிசியன் பார்சிய ரோடு போர்புரிந்தான். பார்சியர் தம்முள் முரண்பட்டன ராகித் தோல்வி யடைந்தனர். கி. பி. 296-ல் கார்சிஸ் என்னும் பார்சிய வேந்தன் கலேறியஸ் என்னும் தலைவனை வென்றன். டையக்கிளிசியன் பார்சியரோடு சமாதான ஞ் செய்துகொண்டு உரோமாபுரந்திரும்பி வெற்றிவிழாக் கொண்டாடினன். டையக்கிளிசியன் 21 ஆண்டு செங் கோல் ஒச்சியபின் அரசைத் துறந்து தன் பிறப்பிட மாகிய இலிறியா தேசத்தில் இளைப்பாறினன்.


Page 209


Page 210

* sae
|× 燕)