கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புரட்சியிற் பூத்த பூ

Page 1


Page 2


Page 3

புரட்சியிற் பூத்த பூ

Page 4
வஸ்தியன் அச்சகம், பிரதான வீதி, யாழ்ப்பாணம்.

புரட்சியிற் பூத்த பூ
- கரவையூர் செல்வம்
அ. ம. தி. கள் பணிபுரிய அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்பட்டதன் நூற்று ஐம்பதாவது ஆண்டு நிறைவின் நினைவு இந்நூல்
17 - 2 - 1976

Page 5
அதிபர்களின் அனுமதியுடன் ஆக்கி, அச்சேற்றி அளிக்கப்படும் எனது அன்புப் படையல்.

எனது காணிக்கை
இலக்கியம் கற்க வழிவிட்ட
அருள் திரு அ. பெ(Dர்ணுண்டோ, அ. ம. தி.
*தொடர்புகள்’ கற்க ஊக்கிவிட்டாது" % °
அருள் திரு லூஷியன் சிமித், அ. ம. தி.
நூற்றண்டுகளாக ஈழத்தில் பணிபுரிந்த, புரியும்
அமலமரித் தியாகிகள் அனைவருக்கும்
எனது அன்புக் காணிக்கை.

Page 6

ஆசியுரை
ஆழ்வதற்காகப் பிறந்தவர் ஒரு சிலர். ஆளப்படுவதற் காகப் பிறந்தவர் ஏனையோர் என்ற நியதியை முடியாட் சிக்குப் பின்னரும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. "எமது தலைவிதி இதுதான்" என்று கூறி தமது வாழ்நாளில் முயற்சி எடுத்து முன்னேருமல் தமது "எழுத்தை நொந்த வண்ணம் வாழ்பவர்கள் இன்று மலிந்து வருகிருர்கள்.
அரச பரம்பரையிற் பிறந்தவனும் ஏழைகளின் நண்ப ஞகலாம், தன் சொந்த முயற்சியினல் வரலாற்றையே மாற் றலாம் என்பதை எடுத்துக் காட்டுவதுதான் "புரட்சியிற் பூத்த பூ. ' தனக்கே உடைத்தான சில முரட்டுக் குணங் களுடன் புனிதனுகி திருச்சபையை அழகு செய்யும் இயூஜீன் டி மசெனெட்டின் உண்மை வாழ்க்கை வரலாறுதான், இன்று உங்கள் கைகளில் நூல்வடிவில் கிடைத்திருக்கிறது.
அமலமரித்தியாகிகள் இலங்கை மண்ணில் காலெடுத்து வைத்து 128 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஈழத்திருச் சபையின் வளர்ச்சிக்கு அ.ம.தி.கள் செய்த பணி-சிறப்பாக மேல்நாட்டுத் துறவிகள் தங்களுக்குண்டான அனைத்தையுமே துறந்து தங்கள் எலும்புகளையுமே எம் மண்ணுக்குத் தந்து ஆற்றிய பணி-வரலாறு மறக்க முடியாததொன்று.

Page 7
இந்தப்பணிக்கு காரணமாக இருந்தவர் அ.ம.தி.கள் சபையை உருவாக்கிய ஆயர் இயூஜீன் டி மசெனெட். இவரைப்பற்றிப் பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனல் இவர் வாழ்க்கையை பலரும் அறியவில்லை. இக்குறையைப் போக்க எண்ணினேன். இன்று தமிழ்வளர்க்கும் இலட்சிய வாதி "கரவையூர் செல்வம்' தான் என் நினைவிற்கு வந்தவர்.
குருத்துவக் கல்லூரியிலே குறும்புகள் புரியும் மாண வணுக, அதே வேளையில் இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டவராக இவரை நான் நன்கு அறிவேன். இவ ருடைய எழுத்துத் திறனுக்கு இவர் மாணவனக இருந்த பொழுது எழுதிய "புரட்சியா மறுமலர்ச்சியா", "ஞாயி றிலும் வேலையா?' என்ற சிறிய நூல்களும், பல திரை யுலகத் தில்லு முல்லுகளினல் வெளிவராமல் இருக்கும் 'யேசுநாதர்' திரைப்படத்திற்கு இவர் எழுதிய கதை வசனமும் சான்றுகள்.
இலக்கியப் பட்டதாரியாகிய இவர், அண்மையில் நவீன சமூகத் தொடர்பு சாதனக் கலைகளிலும் பட்டதாரியாகி இலங்கை வானுெலி கத்தோலிக்க நிகழ்ச்சிகளில் அரும் பெரும் சேவை செய்து கொண்டிருக்கிருர். இவருடைய அண்மைப் படைப்புத்தான் மொட்டாகிப் பூவாகி உங்கள் கரங்களில் தவழ்கின்றது.
தனது வேலைகள் மத்தியில் எனது வேண்டுகோளைச் செய்து முடித்தமைக்கு என் நன்றி. இவரது சேவை எதிர் காலத்தில் இலங்கை கத்தோலிக்க தமிழ் இலக்கியத்திற்குக் கிடைக்க வேண்டுமென ஆசிக்கின்றேன். r
"கரவையூர் செல்வத்தின்' தனித்துவத்தை இப்ப டைப்பிலே காணக்கூடியதாக இருக்கிறது. ஆயர் இயூஜீனின் வாழ்வை இன்றைய இலங்கைச் சூழ்நிலையில் இளையோட விட்டு : புதியிருக்கிறர். ஆயர் இயூஜீனின் கண்ணுேட்
viii

டத்தில் இன்றைய ஈழப்பிரச்சினைகள் மிகவும் புரட்சி கரமான முறையிலே ஆராயப்பட்டிருப்பது ஒருசிலருக்கு மனவேதனையைக் கொடுத்தாலும், வரவேற்கத் தக்கது.
இப்புதிய படைப்பிற்கு வாசகப் பெருமக்கள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை. இன்று எமது மறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங் களினல் மனங் கலங்கித் தவிப்பவர்களுக்கு ஆயர் இயூஜீனின் வாழ்க்கை பதிலைக் கொடுப்பதாகவும், புது உலகம் சமைப் போம் எனத் துணிந்த இளைஞர்களுக்கு இவ்வாழ்வு உறு துணையாகவும் அமைந்துள்ளது. ஆயர் இயூஜீன் தமது வாழ்க்கையை எப்படி ஒரு சவாலாக ஏற்று வாழ்ந்து வெற்றி கண்டாரோ, அதே போல வாசகர்களும் தங்கள் வாழ்வைச் சவாலாக ஏற்று வெற்றிகாண என் ஆசீர் உரித்தாகுக!
நன்றி. வணக்கம்.
லூயி பொன்னையா, O. M. I., Ph., L., S. T. B. அமலமரித்தியாகிகளின் வடமாநில
முதல்வர்.
புனித அன்னுள் ஆலயம், பாண்டியந் தாழ்வு
யாழ்ப்பாணம்.
1 7 uᎯm6Ꭾ 1976.
ix

Page 8
FOREWORD
It was only on the 19th October, 1975, Mission Sunday that the diverse and colourful facets of the Apostolate of the Oblates of...Mary Immaculate received Papal sanction and the Church's Liturgical approval with the Beatification of their Founder, Blessed Charles Joseph Eugene De Mazenod. As Pope Paul has aptly described in his homily that day 'He was a man with a passionate love for Jesus Christ, who was wholeheartedly a man of the Church. In the aftermath of the French Revolution Divine Providence intervened to make him a pioneer in pastoral renewal. He was gripped by the urgent need of the young, the humble people, the rural people of the countryside. He wanted to be a poor people's priest and won over some companions to his cause who became Oblates of Mary Immaculate. As Bishop of Marseilles he gave full rein to his capabilities, watched over his priests' lives, preached in Provencal and defended the rights of the Church and the See of Peter. He was an authentic witness to the loly Spirit'.

But inspite of all these he remained human with his own weakness and feelings. The custom was then to raise a man to the altar before the Church set its seal of sanctity, by praising loud his heroic virtues which probably he did not practice. Such were the earlier biographies of Eugene by E. Baffy and his predecessors. Leflon however takes a realistic student approach placed as he was with authentic manuscripts for documentation. Aime Roche sets forth the personality of Eugene in its correct perspective and the sociological trends of the times.
It is in this last line of thought that the author Karavaiyoor Selvam wields his masterly pen to offer the present generation that the Man Eugene was not a blessed but fashioned himself to be one. With clarity of expression and in his inimitable poetic prose style, he brings home to the reader the Human' quality of Eugene De Mazenod. In so doing he has not blurred over historical data but has given a turn to the events of the past to flow into the stream of the present thinking public. What makes history is not facts, which are sacred but their interpretation to the modern research mind. The author has done full justice to this aspect. There is in this book no shying away from mundane realities. Being the first biography of De Mazenod to be published in Tamil, should consider it a landmark and a succesful enterprise.
The Superior General of the Oblates Fr. Fernand Jette in his speech on this historic occasion of Beatification said "Blessed Eugene De Mazenod was a big hearted man, a man of great dreams, a man after
Χί

Page 9
meeting Jesus Christ and the poor in Jesus Christ chose to give his life to Christ and the poor."
I am sure that readers who peruse this volume, a versatile production of the author, will be inspired to follow the sentiments expressed by the General, of orientating theirs towards Christ despite their human failings and assure us with confidence that saints are not born but made.
The author has done a signal service to the Congregation of the Oblates and the reading public in rendering this issue productive.
3. 3 ή. «Зianislaиs, с. т. i.
M. A. (Ed), B. A. (Hons) (Lond), Dip. Ed. (Cey.)
xii

ஆய்வுரை
செல்வத்தின் எழுத்து நெருப்புகள்
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் சென்னைப் பல் கலைக் கழகப் பச்சையப்பன் கல்லூரி வகுப்பறை ஒரு மாணுக்கர் தம் கட்டுரை ஒன்றை என்னிடம் நீட்டிஞர். கட்டுரையின் தலைப்பு "தமிழச்சியின் கத்தி ! கவிதைப் பாவி யம் பற்றி ஒரு சுவைஞரின் மதிப்பீடு அது. அதனை வாங்கி வீட்டிற்கு எடுத்துச் சென்ற நான் பிரித்துப் படிக் கத் தொடங்கினேன். அதிகமான பக்கங்களில் நிரம்பி இருந்தாலும், கட்டுரையைக் கீழே வைக்க மனம் இல்லை. நடை, அப்படித் துள்ளிக் குதித்தது. முற்றுமாக ஒரே மூச்சில் படித்து முடித்த நான் "நன்று என்ற குறிப் பெழுதி நெஞ்சில் விம்மிதம் பொங்க மகிழ்ந்தேன். மறு நாள், கட்டுரை எழுதியவரிடம் அதனைக் கொடுத்தேன். கொடுக்கும் போது நெஞ்சாரப் பாராட்டினேன்!
அன்று அந்தப் பாராட்டைச் சீராட்டைப் பெற்றவரே இன்று இந்த நூலாசிரியராக வளர்ந்திருக்கிருர் என்று எண்ணும் போது, என்னுள் பொங்கி வழியும் மகிழ்ச்சியை என்ஞல் எழுதிக் காட்ட முடியவில்லை!

Page 10
தமிழ் எழுத்தில் இளமைத் துடிப்பு இருக்கிறது: இருத் தல் வேண்டும். அத்தகு துடிப்பு மிக்க நடையை, அமைதி மிக்க, ஒர் இளந் துறவி எமுதிக்காட்ட முடியுமா? முடியும் என்பதற்குக் 'கரவையூர்ச் செல்வத்தின்" எழுத்துகளே
frt L.guth !
பேசி முடிக்கும் போதும், எழுதி முடிக்கும் போதும், "சங்கே முழங்கு! முரசே கொட்டு!" என்று செல்வம் கர்ச் சிக்கும் போது, கோழைக் கூனர்கள் கூட, வீர நிமிர்ச்சி கொள்வர் கொள்கிருர்கள்!
பிரெஞ்சு நாட்டு இயூஜீன் அடிகளார் பற்றிய வரலாறு இது. வரலாரு இது? ஓர் உரை நடைக் காவியமாக நூலை வடித்துச் செல்கிருர் செல்வம்! வரலாறு, படிக்கத் தெவிட்டு வது, அது புதுவடிவம் பெறும் போதுதான், தெவிட்டாற் தெள்ளமுது ஆகிறது.
சுற்றுலாவைப் போலத் ’தொடங்கி, அங்கே சந்தித்த இனிய குரவர் ஒருவரின் "கூறுதலாக இயூஜீன் அடிகளின் வாழ்க்கை, செல்வத்தால் சொல்லப்படுகிறது. குரவர் கூற் ருகக் கேட்கும் போது, இடை இடையே செல்வத்தின் நெஞ்சம், தன் தாய்த் தமிழ் மண்ணை எண்ணிக் குமுறு கிறது அக்குமுறல்கள் எவ்வளவு சத்தியமானவை!
வரதட்சினை பற்றிய செல்வத்தின் குமுறல் வரிகள் இவை:
"என்ன? இன்றுமா? அப்படியானல் நாங்கள் இரு நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வாழ்க்கையை நீங்கள் இப்பொழுதுதான் வாழ்கிறீர்களா?' பிரஞ்சுக்காரர் கேட் கிருர், எழுத்தாளர் செல்வம் எழுதுகிருர்,
"கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது. ஆயினும் உண்மையை ஒப்புக் கொள்வதில் தவறேதுமில்லை, என்ற துணிவில்.
xiv

"ஆமாம், நாங்கள் எப்பொழுதும் கொஞ்சம் பின்னல் தான்" (பக்கம் 23)
தமிழ்ப்புலத்தைப் பற்றிய முடிவான மதிப்பீடு செல் வத்தின் எழுத்தில் நிறைந்து நிற்கிறது. பிறிதோரிடத்தில்,
“ ‘பிரிக்க முடியாத ஒரே குருத்துவத்திலும் வகுப்பு வாதமும் வகுப்புப்போராட்டமுமா?. ஏன் இன்று மட்டும் இப்பாகுபாடுகள் இல்லையா' எனச் சாதீயத்தை எதிர்த்துக் கரவையூர்ச் செல்வம் கொடிபிடிப்பிப்பதைப் படித்துப் பாருங்கள். (பக்கம் 75)
வறியோர்க்கு நற்செய்தி நவில வந்த திருச்சபை எங்கே? ஓரினம் ஒரு மொழியைப் பேசும் ஒரே காரணத் துக்காக ஒதுக்கப்பட்டுப் படிப்படியாக அழிக்கப்பட்டு வரு கிறது. திருச்சபை இதுவரை என்ன செய்தது?" என்ற செல்வத்தின் விளுக்கள் தாம், எத்தனையோ இளைஞர்களின் இரத்தத் தோய்ப்புகள்! (பக்கம் 94)
நூல், இயூஜீன் வரலாறக மட்டும் இல்லை. வாட்டத் தைப் போக்கும் ஊட்டச்சத்தாக, முடங்கிக் கிடப்போரைத் தட்டி எழுப்பும் மணிப்பொறியாக இந்நூல் சமைந்துள்ளது. .
இயூஜீன் வரலாறே-புதுமையான வரலாறு. பிரபுக் குடும்பத்தில் பிறந்து, ஏழைமக்களுக்காகத் துறவி ஆனவர். பிறப்போடு பிறந்த குணங்களைத் துறக்க அவர் செய்யும் முயற்சிகள் வியப்பானவை. நெப்போலியனுக்கும், அன்று இருந்த திருச்சபைக்கும் இடையே நடந்த போராட்டத்தில் ஓர் இளந்துறவி பெற்ற பங்கையும் பாங்கையும் செல் வம் அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
வளமை மிக்க பிரபுக் குடும்பத்தைச் சார்ந்தவர், 122 நாள்கள் உண்ணு நோன்பு இருந்தது, 365 நாள்களும் மூன்று வேளை-அதற்குமேலும் உண்டு செழித்திருக்கும் நமக்கு வியப்பைத் தருகிறது.
xv

Page 11
அன்று பெருஞ்சாதனை புரிந்த இயூஜீன் கல்லறைஇன்று ஒரு சில கிழடுகள் மட்டும் தொட்டு முத்தி செய்து செல்லும் கல்லறையாக மாறி விட்டதே!-அன்றைய புரட்சி யிற் பூத்த பூ" இன்று காய்ந்த கம்புதான? (பக்கம் 14) என்று செல்வம் கலங்கும் கலக்கம் அர்த்த அழுத்தம் உள் ளதுதான். அப்படி என்ருல் நாம் ஒடித் துரத்துகிருேமே புகழ் என்ற ஒன்றை- அதுகூட நிலைக்காத ஒன்றுதான?
செல்வத்தின் எழுத்துகள் பேச்சைப் போலவே கூர்மை யானவை. ஆனல் நேர்மையானவை. இயூஜீனின் தாய்” சொத்து வருகிறது என்பதற்காக விவாகரத்தை GLDfb கொள்கிருள். அப்போது செல்வத்தின் எழுத்து எப்படி பதைக்கிறது பாருங்கள்!
'கணவனு? காணியா? அவளுக்கு இது ஒரு கேள்வியா?
சொத்து!
ஆகவே விவாகரத்து!" (பக்கம் 61)
இதைப் போலவே இன்னேர் இடம் "தரப்படுத்தல் என்ற சொல்லால் பல இளைஞர்களை, ஆற்றல் மிகுந்த வாலிபர்களை முன்னேற விடாது, வேண்டுமென்றே தரைப் படுத்தி அவர்களின்-இந்நாட்டில் எதிர்கால வாழ்வை இருள வைத்து விட்டார்களே!" (பக்கம் 95)
இப்படி இன்னும் பல!
புரட்சி மண்ணின் புதுமைப் பண் பாடிய ஒரு துறவி யின் வாழ்க்கை வரலாறுதானே என்று யாரும் கருதிட Gover LT. மெய்ம்மையைப் பிட்டுச் சொல்லப் போனல், இது ஓர் இன்றைய துடிப்புள்ள எழுத்தாளனின் எழுத்து! ஈழ மண்ணின் நெஞ்சாங்குலையை நாடிப் பார்த்து எழுதப்
பட்ட எழுத்துகள் கடந்த வரலாற்றைப் படிப்பதாக எண்ன
Xνi

வேண்டா! நடந்த வரலாற்றை, நடக்கின்ற வரலாற்றுப் பார்வையில், வருங்காலத்தில் வரலாற்றை நடத்த எழுதப் பட்ட படைப்பு இது வருங்கால வரலாற்றைப் படைப்ப தற்காக, நிகழ்கால வரலாற்றுப்பார்வையில் படைக்கப்பட்ட ஒரு கடந்த காலம் பற்றிய வரலாற்றுப் படைப்பு இது!
செல்வத்தின் பேணுமுனை ஈழத்தின் இன்றைய உணர்வுகளில் தோய்க்கப் பெற்று நெருப்புக் குழம்பைக் கக்குகிறது! தியாக வரலாற்றைச் சொல்லி: தியாகத் தீயில் குளிக்க அழைக்கிறது! جہ கும்பகருண உறக்கத்தில் முடங்கிக் கிடப்பவர்களை எழுத்துக் கரங்களால் எழுப்பி விடுகிறது! மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடத்துறங்கும் சீரிய சிங்கங்களை உசுப்பி விடுகிறது! நகர் தோறும், ஊர் தோறும், வீதி தோறும், வீடு தோறும் இருபதாம் நூற்ருண்டு இயூஜீன் அடிகள் பலரைப் படைத்துக் காட்டப் பரிவு செய்கிறது! ஆம் அவரது எழுத்து முத்தமிடும் யூதாஸ்களின் முகத்திரையைக் கிழித்தெறிகிறது! புனித சிலுவைச் சீடர்களுக்கு மலர்ப்பாதை சமைக்கிறது
அன்பன், பேராசிரியர் க. ப. அறவாணன்
B. O. L., M. A., M., Litt பச்சையப்பன் கல்லூரி, (). Fir2:07, 600010 தை 27, தி. பி. 2007
10 - 2 - 76
xvii

Page 12

என்னுரை
"வாழ்க்கை வரலாரு?. அதுவும் ஒராயருடையதா?. இன்றைய சூழலிலா?. எதற்காம்!" எனது மனங்கேட்டது.
"கட்டாயமாக இந்த வாழ்க்கை வரலாற்றைச் சுருக்க மாகத் தமிழில் எழுதவேண்டும்" இது எமது வடமாநில அ. ம. தி. முதல்வரின் உறுதியான வேண்டுகோள்.
'இது பெரிய சோதனையாகிவிட்டதே! எனது கொள் கைக்கு முரண்பட்டதாயிற்றே! என் செய்வது!" குழம்பியது என் சிந்தனை.
அரை மனம் குறைமனத்தோடு அய்மே ருேச், அ. ம. தி. அவர்கள் எழுதிய இயூஜீனின் வாழ்க்கை வரலாற்றை மேலெழுந்தவாரியாகப் படித்தேன்.
அவ்வளவுதான்!
இன்றைய எமது நாட்டுச் சூழலுக்கு மிக்கவேண்டிய நூல். இயூஜீனின் வாழ்க்கை நம்மனைவருக்கும் ஒரு மேல் வரிச் சட்டம். பெரியோரை, பின்நோக்கிப் பார்க்க வைக்கும்; இளைஞரை, ஆழமாகச் சிந்திக்கவைக்கும்; பக்தர் களை தங்கள் பக்தியையிட்டு மறுபரிசீலனை செய்யவைக்கும்.

Page 13
"எழுதுவதுதான்!" என்று முடிவாயிற்று.
முதல்வர் கால எல்லையொன்றையும் வைத்து விட்டார். ஆஞல், பின்நின்று அடிக்கடி ஞாபகப்படுத்தி வந்தார்.
அய்மே ருேச்சின் நூல் அடியெடுத்துத் தந்து அடித் தளமாக அமைய எழுதத் தொடங்கினேன்.
ஒருபெரிய பங்கில் இருந்து கொண்டு ஒரு நூல் எழுது வதென்றல்- சந்தையிலிருந்து எழுதுவது போன்ற உணர்வு தான் ஏற்படும்போல!
பல இடையூறுகள்-பல இடைவெளிகள்-பல அறுந்த தொடர்புகள்-கால எல்லையின் உறுத்தல்கள்!.
இவற்றின் எதிரொலிகள் நூலில் இல்லாமல் இல்லை.
எழுதெழுத அச்சேறிக் கொண்டிருந்த "பெருமையை ஒரு சில நூல்கள் தான் பெறும். இந்நூல் அந்த ரகத்தைச் சார்ந்தது. ஆனல் , "பெருமை கொள்ள முடியவில்லை!
எழுத உறுதுணை அளித்து, ஊக்குவித்து, ஆசியுரை அளித்து, குறைந்த விலையில் விற்பனை செய்ய பொறுப்பேற்ற முதல்வர் அருள் திரு. லூயி பொன்னையா, அ. ம. தி. அவர்களுக்கு என் அன்பு தோய்ந்த நன்றிகள். இந்நூலின் அச்சுப்பொறுப்பை ஏற்றுப் பெருமுதவி அளித்த அருள் திரு. ஏ. சிங்கராயர், அ. ம. தி. அவர்களுக்கும், இரவிர வாகக் கைப்பிரதி பார்த்து நல்ல பல ஆலோசனைகள் சொல் லிய ஆசிரியர் வ. இராசையா அவர்களுக்கும் எனது நெஞ்சு நிறைந்த நன்றிகள். கைகொடுத்துதவியூ பெரியோர்கள் நண்பர்களையெல்லாம் இப்பொழுது நன்றியுடன் நினைத்துக் கொள்ளுகின்றேன்.
ΧΧ

ஆய்வுரை தந்த எமது பேராசிரியர் க. ப; அற்வாணன் அவர்கள், அவ்வுரை நின்று என்னை ஊக்குவித்துள்ளார். செய்ததை வைத்துக் கொண்டு செய்ய வேண்டியதைச் சொல்லியுள்ளார். "முயல்வேன்" என்று நன்றி கூறுகிறேன்.
முன்னுரை தந்த அருள் திரு. எவ், யே, ஸ்ரனிஸ்லஸ், அ. ம. தி. அவர்களின் ஓர் ஆய்வுக் கட்டுரையை வைத்தே ஈழத்து அ. ம. தி. களின் வரலாற்றை மேலெழுந்த வாரி யாக வரைந்துள்ளேன். அடிகளாருக்கு என் நன்றிகள்,
குறுகிய காலத்தில் இந்நூலை இவ்வடிவிற் தந்த வஸ்தியன் அச்சக அன்புத் தோழர்கள், அதிபர் அனை வருக்கும் எனது இதயங் கனிந்த நன்றிகள்.
வாசகப்பெருமக்களே, எழுதிக்கொண்டிருந்த வேளை பல சிந்தனைகள்-உள்ளத்தில் ஊறியவை, உணர்வில் கலந் தவை-அவ்வப்பொழுது மனதை வருத்தியன. எனது சமு தாய உணர்வுகள் எனது நாட்டுப்பற்றை வருடியன. எனது மறையுணர்வுகள் எனது விசுவாசத்தைக் கிளறியன. அச்சிந்தனைகளை இவ்வாழ்க்கை வரலாற்றுடன் கலந்து விட் டேன். உங்கள் சிந்தனையைத் தூண்டி விட இக்கலப்பு வழி வகுக்குமென்பது எனது நம்பிக்கை, படியுங்கள், ஊன்றிச் சிந்தியுங்கள், செயற்பட விழையுங்கள்.
அநாவசியமான சம்பிரதாயங்கள், மூடப்பழக்கவழக் கங்கள், அவசியமற்ற சடங்குகள், தாழ்வு மனப்பான்மைகள், "அயலவர் என்ன சொல்வார்" என்ற பயங்கள் போன்றன வற்றிலிருந்து உங்களை மீட்டுக்கொள்ளுங்கள்!
இருளை வைது கொண்டிராமல் ஒரு சிறு ஒளியை யாவது உங்கள் உள்ளத்தில் ஏற்றுங்கள். அது, உங்கள் இல்லத்துக்கும் ஒளி கொடுக்கும்.
xxi.

Page 14
உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் உங்கள் சிந் தனைப் புரட்சியிற் பூத்த பூவாக மலரவேண்டும்! வீட்டிற்கும் நாட்டிற்கும் நறுமணங் கொடுக்கவேண்டும்! அதற்கு வழி வகுக்க என் எழுத்து சமையவேண்டும்!
இதுவே எனது நோக்கம்- எனது எதிர்பார்ப்பு
இதுவே எனது வாழ்த்து- அனைத்துக்கும் இறைவனருளை இறைஞ்சி
அன்பு வணக்கம் கூறி விடைபெறுவது
அன்புச் சகோதரன், Chaం ۵ ؟طیف به چو
புனித லூசியாள் பேராலயம், கொழும்பு, 13 I7 - 2 - 1976.
KK

உள்ளே . . . . .
1 துவங்கியது, பயணம்
2 அடித்த புயல் ஒய்ந்தது 7 3 இன்று இப்படியென்றல். அன்று எப்படியோ? 14 4 யார் இந்த இயூஜீன்? 19 5 சேரிப் பிரபு : 27 6 வெனிசின் விழாக்கோலம் 4. 7 புத்துயிர் தந்த புதிய உறவு 37 8 பிச்சையெடுப்பவனுக்குத் தெரிவு வேரு? 4品 9 பணமும் பொருளும் போதவில்லை. 5. 10 பதவி மோகம் 66 11 அழைப்பின் குரல் கேட்டார் 7. 12 அரும்பியது. புதிய மொட்டொன்று 80 13 அனுபவம் புதிது 99 14 இறித்தவ இளைஞர் கழகம் 108 15 துணையொன்று வந்தது 2.
16 எல்லைப் போர் 9

Page 15
17
18
19
20
2.
22
23
84
25
26
27
28
29
30
3.
32
38
வழிபாடா? வெறியார்வமா? மாறியது, வழி! மாற்றியது ஏனே? புதிய யுகம்
சென்று, வென்று வந்தார் ஆயரானர், இயூஜீன் இலட்சியவாதி இயூஜீன் அடித்த கரம் அணைத்தது குரைக்கும்; கடிக்காது . ஆயரின் வாழ்க்கையில் 'சிறு கதைகள்' எல்லைகள் விரிந்தன-சேவைகள் வளர்ந்தன கல்விச் சுதந்திரம் முடிந்த கதை தொடருமா?
இந்து சமுத்திரத்தின் முத்தல்லவோ!. அ. ம. தி. கள் ஆட்சி திசையெல்லாம் அ. ம. தி. கள் சொல்லிலும் செயலிலும் அவர் உருவம் கண்டேன்
பட்டமல்ல. வாழ்க்கைதான்.
Σιχίν
40
147
158
1.65
174
88
95
99
206
2.
222
231
238
248
256
路62
&67

துவங்கியது, பயணம்
சாதி, மத, பண, நிற, நில, கட்சி வேறுபாடுக ளேதுமின்றி மக்கள்நாடிச் செல்லும் ஒரு சில இடங் கள் இன்னும் இவ்வுலகில் உண்டு: இன்றும் அவை உண்டு. அப்படிப்பட்ட ஒர் இடந்தான் பிரான்சின் தென்பகுதியில் உள்ளஒரு சிறு கிராமம். அக்கிராமம் இன்று உலகப்பிரசித்திபெற்று, அனைத்துலக யாத்தி ரிகத் தலமாக மாறி, ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான மக்களைத் தன்வசம் இழுத்து வருகின்றது. பிரான்சில்இருந்துகொண்டு லூட்ஸ் (Lourdes) என் னும் அக்கிராமத்துக்குப் போகாமல் விடுவதா..?
மக்கள் மந்தை வெள்ளமாக நிற்கும் காலமாகிய திருநாட் காலத்தில் செல்லாததால், லூட்சின் அமைதியில் சிந்தித்துப் பயன்பெற்ற நான், அங்கி
l.

Page 16
ருந்து பிரான்சின் தென்கோடியிலுள்ள வணிகத் துறையில் பிரசித்திபெற்ற துறைமுகப் பட்டினமான மார்செயி (Marseile) செல்ல விரும்பினேன்.
மார்செயிபல்லாண்டுகளாக நான் கேள்வியுற்ற ஒரு பட்டினம்-ஒரு துறைமுக நகர். என் வாழ்க்கைக் கும் இந்நகருக்குமிடையே ஒரு தூரத்துத் தொடர் பும் உண்டு மார்செயிலுரட்சிலிருந்து ஏறக்குறைய 362 மைல் தொலைவிலிருந்தாலும், போக வேண்டு மென்ற அந்த வேட்கை தூரத்தைத் தூரமாமக் கணிக்கவில்லை.
புகைவண்டி (இப்பொழுதெல்லாம் இவ்வண்டி களிற் புகையேதுமில்லை) - மின்வண்டி கடு கதியிற் சென்றது; மார்செயி நகரத்தை நோக்கி. ஆட்டமோ, அசைவோ, அநாவசியமான சத்தங் களோ இன்றி மின்வண்டி மின் வேகத்திற் சென்றது.
கண்ணுடிகளினூடாக வெளியே பார்க்கின்றேன். பச்சைக் கம்பளத்தை நீட்டி விரித்துவிட்டாற்போல இரு பக்கங்களிலும் விரிகின்றன; திராட்சைத் தோட் டங்கள். பச்சையும் சிவப்புமென, பெரிதும் சிறிது மெனத் திராட்சைக் குலைகள் குலுங்கி நிறைகின்றன. அந்த மக்களின் உள்ளங்களும் குலுங்கி நிறைந்திருக் குமோ. தோட்டங்களின் மத்தியிலே ஆங்காங்கே சிறு கிராமங்கள் அழகுற அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் உயர்ந்திருக்கின்றது ஒரு கத்தோலிக்க ஆலயம். இந்த ஆலயத்தைச் சுற்றிச் சிறு சிறு வீடுகள். கோழி தன் குஞ்சுகளை அணைத்து வைத்திருப்பது போன்ற பொருள் பொதிந்த
- ? -

காட்சி, அது. ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு பெரிய குடும்பமாகவே காட்சிதருகின்றது. இயற் கையழகும், குழம்பாத பயணமும் சேர்ந்து எனது சிந்தனையைக்கிளறின.
தெரியாத ஊரில்.
தெரியாத ஊரொன்றுக்குப் போகின்றேன்! அங்கு என்னென்னவோ..! எப்படியெப்படியோ...! ஆயினும், மொழி ஓரளவு தெரியுமென்ற திருப்தி; எமது ‘இனம்' அங்குண்டென்ற நம்பிக்க்ை.
மார்செயி மின்வண்டி நிலையம். எங்கும் ஒரே பரபரப்பு. என்னுள்ளத்தில் சிறிது படபடப்பு. வெளியே வருகின்றேன். எதிர்ப்புறத்தில் மத்திய தரைக் கடல். அங்கிருந்து குளிர்மையான காற்று வீசுகின்றது. மின் வண்டி நிலையத்தின் இடது பக்கத்தில் காவற்துறை நிலையம். அங்கு நம்பிக் கையுடன் செல்லுகின்றேன். நான் செல்ல வேண் டிய முகவரியைக் கூறுகின்றேன். திசை தெளிவா கக் காட்டப்படுகின்றது.
'வாடகைக்குக் கார் பிடிப்போமா? உள்ளம் அவசரப்படுகின்றது.
‘'வேண்டாம். அவ்வளவு தூரமில்லையென்று சொல்லுகிருர்கள். பிறகேன் ரக்ஸி? காசும் மிஞ் சும். நடந்துபோவோம்’- அறிவு ஆறுதற்படுத்து கிறது.
- 8 -

Page 17
மார்செயி நகரத்துத் தெருவில் நடந்து போகின் றேன். வரவேண்டிய இல்லம் வந்தடைகின்றேன். வயதிற் பெரியவரொருவர் வாசலுக்கு வருகிருர், அன்போடு வரவேற்கிருர், ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொள்ளுகின்ருேம்.
‘இடம் பார்க்க வந்தீர்களென்று நம்புகி றேன் !’’ இது முதியவரின் கேள்வி.
“ஆமாம், நான் படிக்கும் காலத்திலேயே இப்பட்டினத்தைப்பற்றியும், இந்நகரைச் சுற்றி இருக்கும் ஒரு சில ஊர்களைப்பற்றியும் அறிந்திருந் தேன். ஆயினும், இவ்விடங்களுக்கெல்லாம் வருவே னென்று அப்பொழுது நான் கனவுகூடக் காண வில்லை; ஆனல், மேற்படிப்புக்காகப் பிரான்சுக்கு வரும்வாய்ப்புக் கிட்டியது; இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு . லூட்ஸ்வந்தேன். அங்கு வந்தபின் இங்கு வராமற் போவதா? அதனலேயே’’
G 系
நல்லது இப்போது எங்கே போகப்போ கிறீர்?
‘இரண்டு நாட்கள்தான் இங்கு தங்க முடியும். ஆகவே முதன்முதலாக நான் இந்த நகரத்து ஆச னக்கோவிலுக்குச் செல்லவேண்டும். 9 9
எனது முதிய நண்பரின் முகத்தில் ஆச்சரிய மேதும் ஏற்படவில்லை. எப்படியேற்படும்? அமல மரித்தியாகிகள் வாழும் அவ்வீட்டுக்கு அவரே தலை மைப் பொறுப்பு. ஆயினும், அவர் உடை அந்த நாட்டுமக்களின் உடையையே ஒத்திருந்தது. எமது நாட்டு நிலையை ஏனுே அப்பொழுது நினைத்துக் கொண்டேன்!
- 4 -

நான் மார்செயிப் பட்டினம் சென்று, ஆசனக் கோயில் செல்ல வழிகாட்டிய அம்முதிய குரவர், வழிப்பயணத்துக்கு, போகவர இரண்டு பயணச் சீட்டுக்களும் தந்து அனுப்பினர்.
நான் கண்ட கல்லறை
அவருக்கு நன்றிகூறி மார்செயி நகரம் சென்றேன். அங்கிருந்து கடற்கரையோரமாக நடந்து சென்றேன். கடலைப் பார்த்தபடியே கம்பீரமாக அழகுற எழுந்து உயர்ந்து நின்றது, ஆசனக்கோவில். முன்கதவுகள் மூடப்பட்டிருந்தமையால் பக்கத்து வாயிலொன்றி னுாடாகக் கோவிலுட் சென்றேன். கோவிலில் எதை யோதேடினேன்; கிடைக்கவில்லை! மூலைமுடுக்கெல் லாம்பார்த்தேன்; தேடியது பார்வையில் தட்டுப்பட வில்லை!
ஏமாற்றத்துடன் ஆசனக்கோவிலுக்கு அருகி லுள்ள குருமனையை நாடினேன். அங்கிருந்த முதிய குரவருக்கு என்னை அறிமுகம் செய்து நான் அங்கு சென்ற நோக்கத்தையும் விளக்கினேன். குரவர் என் னைப்பலமுறைகள் தலையிலிருந்து கால்வரை உற்றுப் பார்த்தார். உன்னிப்பாகப் பார்த்தார். பின்பு, யாரையோ அழைத்தார்; என்னைக் காட்டி, கூட் டிச் செல்லுமாறு வந்தவரைப் பணித்தார்.
வழிகாட்டியுடன் மீண்டும் கோவிலுள் நுழைந் தேன். ஆசனக்கோவிலில் உள்ள பலிப் பீடத்தின் அயலில் நிலக் கீழறைக்குச் செல்வதற்குப் படிக்கட்டு
5. man

Page 18
கள் அமைந்திருந்தன. அவற்றின் வாயிலில் இருந்த இரும்புப் படலையை வழிகாட்டியார் திறந்து விட்டு, வாயிலில் நின்றபடியே படிக்கட்டுகளைச் சுட்டிக் காட்டினுர்.
எட்டிப்பார்த்தேன். உள்ளே ஒரே இருட்டு!. வழிகாட்டியார் புரிந்து கொண்டார். விளைவு? ஒரு சிறு மின்விளக்குச் சிறிது ஒளி தந்தது. என் உள்ளத் திலும் சிறிது தெம்பு பிறந்தது. சற்றுத் தயக்கத் துடன் மெதுவாக, ஒவ்வொரு படியாகக் கடந்தேன். கீழிறங்கியதும்.
வெண்மையான ஒரு பெரிய சமாதி. நன்ருக உற்று நோக்கினேன்! ஒருமுறை அச்சமாதியை வலம் வந்தேன்; வாசகங்களைப் படித்தேன்; ச ற்றுநேரம் அங்கு கல்லாகச் சமைந்து விட்டேன். பல்லாண்டு களுக்குமுன் கேள்வியுற்றவை, நூல்களிற் படித் தவை, அத்தனையும் நிழற் படங்களாகி என் மனத் திரையில் சலனப்படமாக ஓடின

8
(s
i

Page 19

அடித்த புயல் ஓய்ந்தது
பிரான்சின் தென்கோடித் துறைமுகப் பட்டின மான மார்செயி நகரினுாடாகக் காட்டுத் தீ போன்று அந்தச் சோகச் செய்தி பரவியது. அன்று 1861 ஆம் ஆண்டின்வைகாசித் திங்கள் 21 ஆம் நாள்.
மாலையிருள் சூரியனைச் சிறிது சிறிதாகக் கவ்விக்கொண்டது. இருள் படரத் துவக்கியது. மார்செயி மறைமாவட்ட ஆயரின் வாழ்க்கை காலத்தால் கரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மரணமென்னும் இருள் அவரது புரட்சிகரமான ஒளிவீசிய வாழ்க்கையை மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது. அணைய இருக்கும் விளக்கை அணை யாமற் காக்க உள்ளங்கைகளாற் சுற்றி வேலி
சமைப்பது போன்று, ஆயரோடு இணைந்து பிணைந்து

Page 20
வாழ்ந்த நெருங்கிய நண்பர்கள் அவரது படுக்கை யைச் சுற்றிச் சூழ்ந்து நிற்கிருர்கள். அணையுமுன் பிர
காசமாகனரியும் தீபம் போன்று, இதோ, அந்த ஒளி
இப்பொழுது பிரகாசமாக எரிகிறது.
சூழ இருந்தோரைப் பார்த்து இயூஜின் சொல்கிருர்: “உங்களுக்குள் அன்பு. அன்பு. அன்பு செய்
யுங்கள். வெளியில் மக்களின் மீட்புக்காக ஆர்வத்
துடன் உழையுங்கள்!-’’
சொற்கள் பிறந்தன. இல்லை; வாழ்ந்து வாழ்ந்து, பல்வேறு அனுபவங்களைப் பெற்று, பக்குவப்பட்டு நிறை வெய்திய வாழ்க்கையின் முடிவிற் கண்டெ டுத்த முத்துக்கள் உதிர்ந்தன!
அல்ப்ஸ் மலைச்சாரலில் இருந்து எவ்வித அறிவித் தலுமின்றித் திடீரென்று எழுந்து வீசும் புயற்காற் றுப்போன்று தான் ஆயர் மசெனெட்டின் குணமும், போக்கும் அமைந்தன. அவரைத் தெரிந்தவர் அனை வரும் இதை நன்கு அறிவர்.
ஓங்கி அடித்த அப்புயற்காற்று அன்று மாலைக ஒய்ந்தது. சோ என்று பெய்த மழை நின்றது. குண் டுகளைப் பொழிந்த துப்பாக்கி புகைந்தது. கொழுந்துவிட்டெரிந்த தீ நூர்ந்தது. புரட்சிக் குரல் எழுப்பிய மாவீரனின் சிம்மக்குரல் தணிந்தது. எழுபத்தொன்பது ஆண்டுகளினூடாக வாழ்ந்து, வளர்ந்து, முதிர்ந்த அவரது வாழ்க்கை உதிர்ந்தது. ஒளி வீசிய திருவிளக்கு அணைந்தது. கூடிநின்ற நண் பர்களின் கண்களில் இருந்து கண்ணிர் முத்துக்கள் உருண்டுவிழுந்து சிதறின.!
- 8 -

பலவீனந்தான் பலமா?
அந்தக் கடுமையான குளிர்காற்றைப் போன்றே அவரும் கடுமையாக, விறைப்பாக இருந்தார். செல்லும் பாதையில் எதிர்ப்பட்டதை எல்லாம் அடித்து வீழ்த்தியது, அப்பேய்க்காற்று- அவரது அதிகார ஆணவப் போக்கு இதனல் ஏற்பட்ட கசிவுகள் எவ்வளவு கண்ணிர் சிந்திய கண்கள் எத்தனை! ஒருவேளை அவரதுஇந்தப் பெருத்த பலவீ னந்தான் அவரது பலமோ? ஆயினும், இப்பல வீனத்தை உாைர்ந்த அவர், அதை அடக்கி அழிக்க முனந்தார் என்பதற்கு அவரது வாழ்க்கையே சான்று பகர்கின்றது. இந்த ஆழ்ந்த அனுபவத்தி னின்று பிறந்த சொற்கள் தான் அவரது இறுதி வேண்டுகோள்.
அயலவரின் தேவைக்கெனத் தன்னை முழுமை யாகக் கொடுக்க வேண்டுமென்று அவரது உள்ளம் விழைந்தது. ஆனல், அறிவு, பிறப்பின் பெருமை, பிரபுக்களுக்கே உரிய அதிகாரப் போக்கு, பிடிவாதம், இலட்சியவெறி - அத்தனையும் சேர்ந்து அந்த உள் ளத்து ஆசையைத்தடுக்க முனைந்தன. இந்த உள்ளப் போராட்டத்தினுாடாக அவரது வீரவாழ்க்கை வளர்ந்தது. அது, தன்னுள்ளே தோன்றிய மாறு பட்டஅனுபவங்கள் - முரண்பட்ட இலட்சியங்கள்மாறிக்கொண்டிருந்த சூழல்கள் - தெரிவுகள் - முடிவுகள் - தொடர்புகள் - உறவுகள் - புரட்சி கள்- எதிர்ப்புகள்-தோல்விகள் - வெற்றிகள் அத் தனையும் நிரம்பிய வாழ்க்கை நிறைந்த வாழ்க்கை!
---- 9 سسس

Page 21
பிற் சந்ததிக்கு.
'தக்கார் தகவிலர் என்ப(து) அவரவர்
எச்சத்தாற் காணப்படும்’
- என்பது வள்ளுவனின் வாக்கு.
புருெவான்சின் பிரபு, மார்செயின் ஆயர் தன் சந் ததிக்கு விட்டுச்சென்ற எச்சமென்ன?
பிரெஞ்சுப் புரட்சியால் அழிந்த பிரான்சின் கிறித்தவத்தை மீட்டுத்தர எழுந்து வந்தது, வீரம் நிறைத்த ஒரு கூட்டம். அது ஆயர் இயூஜீன் வித் திட்டு வளர்த்த குடும்பம். வாழையடி வாழையாக, ஆண்டுகளினுாடாக வளர்ந்து, குளிர் மண்டிய வட துருவம் துவக்கி, வெய்யிலில் எரியும் ஆபிரிக்காவரை சேவை செய்ய - நற்செய்தி நவிலப் பெருகி வந் தது, துணிவு நிறைந்த ஒரு திருக்கூட்டம்! அது ஆயர் இயூஜினின் இலட்சியத்தில் வளர்ந்த அமல மரித் தியாகிகள் கூட்டம்.
இது மட்டுமா அவர் விட்டுச் சென்றது? சோர்ந்து தளர்ந்திருந்த மார்செயி மறைமாவட்டத் துக்கு அவர் புத்துயிர் தந்தார். அந்தப் புதுச் சக்தி யிலேயே அம் மறைமாவட்டம் ஆயர் இயூஜீனின் மறைவுக்குப் பின்னரும் பல்லாண்டுகள் வாழ்ந்ததுவாழமுடிந்தது.
- 10 -

புரட்சியிற் பூத்த பூ
அவரது காலச்சூழல் அவரது உருவாக்கலில் பெரும் பகுதியை வகுத்துக் கொடுத்தது. காலம் தந்த கொடையாக, பிரெஞ்சுப் புரட்சிதந்த பரிசர்க, புரட்சியிற் பூத்த பூவாக 19 ஆம் நூற்றண்டின் மாபெரும் புரட்சித் துறவியாக இயூஜீன் திகழ்ந்தார்.
அநீதியும் செல்வாக்கும் கொண்டு வாழ்ந்த ஒரு சமுதாயத்தைத் தகர்த்தெறிந்தது 1789 ஆம் ஆண்டுப் புரட்சி. பல்வேறு இடையூறுகளினுாடாகஆனல், உறுதியுடன் உருவாகியது, புதிய சமுதாய மொன்று காலத்தின் கோலத்தை உய்த்துணர்ந்து, வருங்காலத்தின் கோணத்தைக் கணித்து வாழக் கூடிய மனிதர்கள் வெகு சிலர். அவர்களுள் இயூஜீன் போன்றேர் முன்னணியில் நின்ற ஒரு சிலர்.
காலத்தின் அறிகுறிகளை அறிந்து வாழ்ந்தவர் இயூஜீன். சவாலை சமாளிக்கத் துணிந்தவர் புருெ வான்சின் பிரபு, சமுதாய உணர்வுடன் செயற்பட் டவர் மார்செயி மறைமாவட்ட ஆயர். அவரிடம் இயல்பாக அமைந்திருந்த அதிகாரப்போக்கும், நிறைந்த தன்னம்பிக்கையும் அவருக்குத் துணை செய்தன. அதே வேளை பல எதிர்ப்புகளையும் தேடித் தந்தன.
செத்தபின் வாழ்வா ?
வாழும்பொழுது வாழவிடாது செத்தபின் சிலை செதுக்கி வழிபடும் கூட்டம் அன்றும் இருந்தது: இன்
- I -

Page 22
றும் இருக்கிறது: இனியும் இருக்கும். ஆயர் இயூஜினை எதிர்த்தவர் பலர். முன்னேறவிடாது முட்டுக்கட்டை களாக நின்றவர் இன்னும்பலர். கூட்டாக ஆளவேண் டிய ஆயர்கள் பலர் கூட்டமாகவே எதிர்த்தனர். கூடி நின்று சேவை செய்யவேண்டிய குருக்கள் பலர் கூடி நின்றே தாக்கினர்.
ஆயரின் மறைவின் பின்னரே அவரது இலட்சிய மும், வாழ்க்கையும் மதிக்கப்பட்டன; போற்றப்பட் டன; புனிதராக்க வேண்டுமென்று முயற்சிகளும் எடுக்கப்பட்டன; நூல்கள் எழுதப்பட்டன; சிலை கள்செதுக்கப்பட்டன.
பார்த்தவுடன் விரும்பக்கூடிய ஒரு தன்மையை ஆயர், ஏனே தம்மில் வளர்க்கவில்லை. அவரை அணு கிச் செல்வது பலருக்கு ஒரு பிரச்சினையாகவே மாறி யது. சிலருக்குப் போர்க்களம் போகும் நடுக்கம் "இயல்பாகவே' ஏற்பட்டது.ஒருசிலரே அவரோடு நெருங்கிப்பழகினர்கள்.
அவர் முன்னிலையில் நிதானமாக நின்றவர் நண் பராயினர். நெருங்கியவர்கள் அவரது உள்ளத்தைப் புரிந்துகொண்டார்கள்; உண்மையை உணர்ந்து கொண்டார்கள்.'இலட்சியத்தைத் தெரிந்து கொண் டார்கள், முதற்படி கடந்து ஆயரை அணுகிவிட் டால், அவரது இரத்தத்தோடு இரத்தமாய்க் கலந்து விட்டஅவரது சேவை ஆர்வத்தை, நேர்மையை, நீதிக்கு வாதாடும் வெறியை அறிந்துகொள்வார்கள்.
- 12 -

இந்த இலட்சியவெறி மின்சக்தி போன்று அவரோடு பழகுபவர்கள் உள்ளங்களிலும் கலந்து விடும். ஆம்; அல்ப்ஸ் மலைச்சாரலில் எப்பொழுதுமே பேய்க் காற்று வீசுவதில்லை. அங்கு இதமான-கணி வான தென்றலுமுண்டு.
ஆயர் இயூஜீனை ஒருமுறை சந்தித்தபின்பு, ‘’சகோதரரே, நான் சின்னப்பரைக் கண்டேன்!’ என்று உற்சாகம் உந்த உவந்துரைத்தார், ஆயர் பே(b)ர்ட்டோ.
‘இயூஜீன் முன்னிலையில் என் கால்கள் விறைக்க இருப்பேன்; பின்பு கண்ணிருடன் அவரது இல்லிடமி ருந்து வருவேன்’ என்று கூறிய குரவர் டேவிற் அவர்கள் மேற்கொண்டு, ‘வெறி'யோடு சொன் ஞர் - “அடுத்த வினுடியே அவருக்காக நான் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தேன்’ என்று.
景 景 *
- 13 -

Page 23
இன்று இப்படியென்ருல்.
அன்று எப்படியோ ?
என் நினைவுக்கு வருகிறேன். இங்கு சமாதியான இந்த இயூஜீன் ஒரு காலத்தில் இதே ஆசனக்கோவி லில் ஆயராக இருந்து வழிபாடுகளை நடாத்தியிருப் பாரே...! இந்த மார்செயி மறைமாவட்டத்தை ஆட்சி செய்தாரே..! புரட்சிப்பாதையிற் சென்று இம்மறை மாவட்டத்துக்கு ஒரு புத்துயிர் அளித் தாரே..! அவரையும் அவரது புரட்சியான ஆட்சி யையும் இன்று எத்தனை மக்கள் அறிவார்கள்! பக்தி நிறைந்த ஒரு சில கிழடுகள் மட்டும் யாரோ ஒர் ஆயரின் சமாதியென்று தொட்டு முத்திசெய்து செல்லும் கல்லறையாக மாறிவிட்டதே இந்தக் கல்லறை 1 அன்றைய புரட்சியிற் பூத்த பூ, இன்று காய்ந்த கம்புதான ?

கோவிலைவிட்டு வெளியே வருகிறேன்; கால் போன போக்கிலேயே நடக்கிறேன். ஏதோ ஒரு தெரு. இரு பக்கமும் பார்த்துக்கொண்டே செல்லு கின்றேன்.
இவ்வளவு நாகரிகமான பிரான்சிலா இப்படி வீடுகள்? முன்னேறிய நாடு என்று கருதப்படும் இந்த நாட்டிலா இப்படியான தெருக்கள்? நம்பமுடியவில் லேயே !
தொழிலாளர் குடியிருக்கும் இல்லங்கள். அங்கே வறுமை வழிந்தது. இப்படிப்பட்ட ஏழைத் தொழி லாளர்கள் மத்தியில்தானே இயூஜீன் தொண்டு செய்ய முன்வந்தார் 1 இவர்களை இவர்கள் நிலையில் இருந்து மீட்கத்தானே அன்று அவர் புரட்சிக்குரல் எழுப்பினர்! முன்னேறிய ஒரு நாட்டில் இன்று இப்படி வறுமை யென்ருல் 150 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும்! “சோசியலிச’த் தத்துவங் கள் பரவி வளர்ந்திருக்கும் இன்றைய சூழலில் இப் படியொரு நிலையென்ருல், மன்னன் ஆட்சியில் இருந்த அன்றைய பிரான்சின் நிலை எப்படி இருந்தி ருக்கும்? அந்தச் சூழலில் - அதுவும் அரச பரம்பரை யில் பிறந்து ஏழைகளிடையே வாழ்வதென்ருல். நம்பமுடியவில்லையே!
அவர் பிறந்து இடம் செல்ல வேண்டுமென்ற வேட்கை பிறக்கிறது.
ஏக்ஸ் நோக்கி.
மார்செயிப்பட்டினம் வந்தேன் அங்கு- புருெ வான்சின் தலைநகரான ஏக்ஸ் செல்வதெப்படியென்று

Page 24
விசாரிக்கிறேன். செல்லும் வழியைத் தெளிவாகச் சொல்லுகிருர்கள். அக்குறிப்புகளின்படியே செல்கி றேன்.
அழகான பஸ், செளகரியமான பயணம். வழமைபோல யன்னல் அருகே இருக்கை கிடைக் கிறது. கண்கள் கண்ணுடியினூடாகப் பார்க்கின்றன.
மார்செயிப் பட்டினம் ஓடி மறைகிறது. பரந்து விரிந்த பூமி இருபக்கங்களிலும் விரிகிறது. முன்னே றும் பகுதிகள் என்று பார்த்தவுடனேயே புரிந்து விடு கிறது. ஆங்காங்கே கட்டடவேலைகள். மேடுபள்ளங் கள் நிரவப்படும் காட்சிகள். பின்னர் தூரத்தே காட்சிதந்தது ஒரு சிற்றுார். கட்டடங்கள் அவ்வள வாகத் தெரியவில்லை. உயர்ந்து படர்ந்து வளர்ந்த அழகிய பெரிய பச்சை மரங்கள். இடையிடையே அழகான அளவானகட்டடங்கள் - வீடுகள், கடை
956,
இருபது மைல்கள் ஒடி பஸ் நிற்கிறது. எல்லோ ரும் இறங்குகிருர்கள். நானும் இறங்குகிறேன்.
“இது என்ன இடம், ஐயா?’’
பஸ்சில் இருந்து இறங்கிய இன்னெரு சக பயணி என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிருர்.
பின்பு என்னைப் பார்த்து: “இது ஏக்ஸ் (Aix). நீர் எங்கு போகவேண்டும்?’’
‘நன்றி, ஐயா. நான் ஏக்ஸ்தான் போகவேண் டும்'-என்றேன்.
- 6 -

அவர் ஒருமாதிரியாகப் பர்ர்த்துவிட்டு, தன் வழியே சென்றுவிட்டார்.
வானம் கறுத்துப் பன்னீர் தெளித்து வரவேற் றது. நாற்றிசையும் பார்த்தேன். ஏக்ஸ் பட்டினத் தின் மையமான இடம். நாற்புறமும் பெரியதெருக் கள் சென்றன. பர்ர்க்க மிக அழகாக இருந்தது.
ஆனல் எத்தெருவில் நடப்பதென்றே தெரிய வில்லை. வழமைபோல் ஒரு முதியவரை அணுகி னேன். செல்லவேண்டிய முகவரியைச் சொல்லிப் பாதை கேட்டேன். ஒரு நீண்ட தெருவைக்காட்டி நேராக அத்தெருவிற் சென்று, அங்கு ஒரு குறிப் பிட்ட இடத்தைச் சொல்லி அதுதான் நான் செல் லவேண்டிய இடமென்று சொன்னர். ܀
நான் வரவேண்டிய இடத்தை அடைந்துவிட்ட மகிழ்ச்சி. -
ஏக்ஸ் ஒரு சிற்றுார்; மிக அழகான ஊர். செல் வம் நிறைந்தோர் வாழ்ந்த இடம். அவ்வூரினுள் உலாவும் போது கொழும்பில் உள்ள கறுவாத் தோட்டப் பகுதியில் செல்வதுபோன்ற ஓர் எண்ண மே தோன்றியது.
அதுவும் அத்தெருவில் நடந்தபொழுது ஏதோ சோலையில் நுழைந்து விட்டதுபோன்ற பிரமை. இரு பக்கங்களிலும் மரங்கள் உயர்ந்து, தெருவுக்கு மேலாகப் பந்தல் போட்டது போன்று அடர்த்தி யாக வளர்ந்திருந்தன. அது கறுவாத் தோட்டத் தின் 'கிறெகறி" வீதிதானே என்று மயக்கமுற் றேன்.
2 - 17 -

Page 25
சேரவேண்டிய இடம் வந்தது. மணி அடித் தேன். முதிய குரவர் ஒருவர் வந்து கதவைத் திறந்தார். என்னை உற்றுப் பார்த்தார். நான் என்னை அறிமுகம் செய்கிறேன்.
“அப்படியா, வாரும்! வாரும் பிரான்சுக்கு வந்த பின்னர் இங்கு வராமற் போவதா? உள்ளே வாரும்!'
ஏதோ பல்லாண்டுகளாகப் பழகியவர் போல, யாரோ பழைய நண்பரைப் பல்லாண்டுகளுக்குப் பின் சந்திப்பது போல அரவணைப்புடன் உள்ளே அழைத்துச் சென்ருர்,
அது பழைய வீடு ஆணுலும், மாடி வீடு. வெளியில் மழை பெய்தது. உள்ளே குளிராக இருந்தது. சூடான “கோப்பி வரவழைக்கப்பட் டது. அமரச் சொன்னர். அமர்ந்தேன். உடனேயே துவக்கினர் நீண்ட கதை யொன்றை.ஆம்; அது ஒரு நெடுங்கதை தொடர்கதை!
حس- l8ز حس

யார் இந்த இயூஜீன் ?
புருெவான்சின் தலைநகர் இந்த ஏக்ஸ் என்னும் சிற்றுார். 1782 ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் முதலாம் நாள் இந்த ஊரில் பிறந்தவர் இயூஜீன் டி மசெனெட். அவர் பிறந்த வீடு தெருவின் மறு
பக்கத்தில் உள்ளது.
இந்த மத்திய தரைப் பகுதிக்குத் தனியாக சில சிறப்புகள் உண்டு. வடமேற்கிலிருந்து வீசும் குளிர் காற்று பேய்க்காற்ருகக் கடுமையாக இருக்கும். ஆயினும், பரம்பரையாக இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கள் துன்பங்களையும், காலத்தால் ஏற் படும் கடுமையான இயற்கையின் விளைவுகளையும் மூடி மறைத்து மகிழ்வாக வாழப் பழகிக் கொண் டார்கள்.

Page 26
இந்நிலப்பரப்புக்கு உரிய இவ்வியல்புகள் இயூ ஜீனையும் பாதித்தன என்ருல் மிகைப்படக் கூறல் அன்று.இந்தப் புருெவான்ஸ் நகர்தான் இயூஜினுக்குத் திடீரெனப் பொங்கியெழும் ஓரியல்பையும், கற்பனை வளத்தையும் அளித்தது; நேர்மையான, நேரடியான பேச்சையும், சொல் வளத்தையும், கூருணர்வையும், விரைவான உள்ளுணர்வையும், புறமுக விசுவாசத் தையும் கொடுத்தது.
ஏக்ஸ் நகரத்துப் பெரிய பிரபு இவருடைய தந்தை சார்ள்ஸ் அன்ருவான் டி மசெனெட். பெரிய இடத்துக் குடும்பம் - பணக்கார வர்க்கம்-செல்வாக் குள்ள நிலை. இவர்களின் வாழ்க்கை முறை, சமுதா யக் கண்ணுேட்டம், இவர்களின் போக்கு ஆகிய அனைத்துமே இவர்கள் வாழ்ந்த சமுதாயப் பழக்கங் களால் உருவாக்கப்பட்டவையே. பெயரும் புகழும், பெருமையும் பதவியும், செல்வாக்கும் செருக்கும், அறிவும் அதிகாரமும், பேச்சும் பண்பும் பிரபுக்க ளுக்கே உரியனவாக, சமுதாயத்தின் மேல் மட்டத் தில் வாழ்வோர்க்கே உரியனவாக இருந்தன.
や怒 * 兴 。
இவ்விடத்தில் கதை நிற்கிறது. தெருப்புறத்தே அமைந்த யன்னலொன்றின் அருகே அழைத்துச் சென்ருர் முதிய குரவர். யன்னல்களைத் திறந்துவிட் டார். சில்லென்று குளிர் காற்று வீசியது. இதுதான் அந்த மத்தியதரைக் குளிர் காற்றே என்று ஒரு கணம் எண்ணினேன். குரவர் எதிர்ப்புறத்தில் ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டினர். கதை தொடர்ந்
5gil. . .
※ 景
-- 20 --س-

நகரின் முக்கியமான தெரு இத்தெரு. இத்தெரு ஒரத்திற்தான் அவரது வீடு. அழகான நாகரிகமான வீடு. வீட்டுக்குமுன் தோட்டம். வண்டிகள், ஊழி யர், குற்றேவேல் செய்யும் பணியாளர், காவற் காரர், வேலைக்காரர்-என்று கூப்பிட்ட குரலுக்குக் கூப்பிட்ட இடத்திலேயே சொன்னவேலை செய்ய ஒரு கூட்டமே அவர்களின் வாழ்க்கை முறையை, அவர் களின் 'இராச பரம்பரையைப் பறையடித்தோதின. இந்நிலைக்குரிய வீருப்பும் அவர்களிடம் இருந்தது. இது அவர்களின் பேச்சில்ே, நடையிலே, போக்கிலே காணப்பட்டது.
மதத்திலும், அரசியலிலும் டி மசெனெட் குடும் பம் ஒரு தனித்துவத்தையே நாடியது. சுதந்திரத்தை விரும்பியது. திருச்சபையினதும், மன்னனதும் உரிமைகளுக்காக அவர்கள் என்றுமே வாதாடினர் கள், வாழ்ந்தார்கள்.
景 - ※ - 米、
நான் குளிரில் நடுங்கினேன். அதை உணர்ந்து கொண்ட முதிய குரவர் புன்சிரிப்புடன் யன்னற் கத வுகளை அடித்துச் சாத்தினர். மீண்டும் உள்ளே அழைத்துச் சென்ருர். மற்ருெரு தடவை சூடான கோப்பி. அது குளிருக்கு இதமாக இருந்தது. பெரிய வரின் கதையும் உள்ளத்துக்கு உற்சாகமாக இருந் ტჩ ჭნI •
لاه در
兴
&
விரலுக்கேற்ற வீக்கம்
குடிசையில் குடியிருப்பவன் கோபுரத்தில் வாழக்கனவு கண் டால். பிரபுக்களின் வாழ்க்கை
- 21 -

Page 27
முறையில் பிரளவேண்டுமென்று வருவாய்க்கு மீறினல் - வரம்புக்கு மீறின வெள்ளத்தின் விளைவுதானே?
இந்த நிலைதான் டி மசெனெட் குடும்பத்திற் கும் நேர்ந்தது. விரலுக்கேற்ற வீக்கம் இருக்க வில்லை. இதனுல் வாழ்க்கை வறட்சி கண்டது.
இவர்கள் வகித்த பெரும் பதவிகள் பெய ரைத் தந்தன: பொருளைத் தர வில்லை. செல் வாக்கை அளித்தன. செல்வத்தை அளிக்கவில்லை. பதவிகளை கொடுத்தன: பணத்தைக் கொடுக்க
ஆகவே இந்நிலையை மாற்றியமைக்க டி மசெ னெட் குடும்பம் விரும்பியது. அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி-திருமணம்.
米 兴 مر 景
இவ்விடத்தில் கதை நிற்கிறது.
“உங்கள் ஊரில் சீதனம் என்று ஒன்று உண் டா?" - குரவர் கேட்கிருர்,
'உண்டாவா? எங்களூரில் இருப்பதுபோல வேறெங்கு உண்டு? மாப்பிள்ளைகளை மரக்கறி வித் ததுபோல சந்தையில் விற்கிருர்கள். காலத்துக்குக் காலம் விலைகள் ஏறி இறங்கும். ஒவ்வொரு உத்தி யோகத்துக்கும் ஒவ்வொரு விலை. அதிலும் இழுப றிகள், ஏலம் என்று பலவகை உண்டு. கலியாணத் தின் பின்னும் மாப்பிள்ளை மாமனுரை வருத்திக் காசுபறிக்கும் செயல்களும் உண்டு. இப்படிப்பட்ட திருமணங்களில் அன்பு, காதல் என்பதெல்லாம் என்னவோ! இவை பெருமளவில் வியாபார ஒப் பந்தங்கள் தான் !’’

முதிய குரவரின் கண்கள். விரிந்தன. நெற்றி அகன்றது.
“என்ன ! இன்றுமா? அப்படியானல் நாங்கள் இருநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த வாழ்க் கையை நீங்கள் இப்பொழுதுதான் வாழுகிறீர் g56TTP
கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது. ஆயி னும், உண்மையை ஒப்புக்கொள்வதில் தவறேது மில்லை என்ற துணிவில்
**ஆமாம். நாங்கள் எப்பொழுதும் கொஞ்சம் பின்னல்தான். அதுவும் இப்படிப்பட்ட பிரச்சினை களில் வெகு பின்னல்தான். ஆனலும், இப்போது கொஞ்சம் முன்னேற்றம். இபொழுது கூட்டுறவுச் சங்கங்களில் நாட்கூலிக்கு வேலை பார்ப்பவர்களுக் குக்கூடத் திருமணச் சந்தையிலை நல்ல விலை !' குரவருக்கு விளங்கவில்லை.
இப்பொருளைத் தொடராமல் அவரது கதை யைத் தொடருமாறு தூண்டினேன்.
'அது சரி, சுவாமி. இதற்கும் உங்களுடைய டி மசெனெட்டுக்கும் என்ன தொடர்பு?’’
兴 普
சீதையவள் வந்தாள் சீதனத்துடன்,
டி மசெனெட் குடும்பத்துக்குப் பணம் தேவைப் பட்டது. சார்ள்ஸ் அலெக்ஸ்சான்(ற) டி மசெனெட் டின் மகன் சார்ள்ஸ் அன்ருவான் டி மசெனெட்டுக்கு
- 23 -

Page 28
33 வயதாகிவிட்டது. அவருக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். இத்திருமணத்தில் மக னுக்குப் பணம் சேர்த்துக்கொடுக்க விரும்பினர் தந் தை - இயூஜினின் பேரப்பா. இரண்டையும் ஒரே கல்வில் விழுத்த முயற்சி செய்தார்.
இத்திருமணத்தில் மணமில்லை- பணமிருந்தது ஆகவே அங்கு திருமணமில்லை - 'திருப்பணமே' இருந்தது. ஆனல் இத்திருப்பணத்தைப் பெறுவ தற்கு ஒரு திருமணம் வேண்டி இருந்தது. ஆகவே தந்தை தன்மகன் அன்ருவானுக்குக் "கடை" பார்த் தார்.
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல மாறி-ருேஸ் ஜோஆன்னிஸ் என்ற நங்கை யொருத்தி அரங்கிற்கு வந்தாள். அவளிடம் குடும் பப்பெயரோ, புகழோ, பதவியோ இருக்கவில்லை. ஆணுல் டி மசெனெட் தேடிய பணமிருந்தது.
அவள் ஒரு மருத் துவக் கல்லூரிப் பேரா சிரியருடைய மகள், புருெ வான்சே புகழுமளவி ற்கு அழகும் இருந்தது. அத்துடன் பதினெட்டு வயது நிரம்பிய இளமையும் சேர்ந்தது. சீதனத் துடன் வந்த இந்த சீதேவியை தள்ளிவிட டி மசெனெட்டுக்குப் புத்தியில்லே பா?
1778 ஆம் ஆண்டு திரு மன ஒப்பந்தம் எழு தப்பட்டது. இப்படிப்பட்ட திருமணங்களை ஒப் பந்தம் என்றுதானே சொல்லவேண்டும்?
- -

சீதையவள் வந்தாள் சீதனத்துடன்

Page 29

மாறி-ழுேஸ் இயூஜினி ஜோ ஆன்னிஸ் பிரபு வின் சீமாட்டி யானுள். சார்ள்ஸ் அன்ரு வான் டி மசெனெட் சீதனத்தால் உயர்ந்ததாக எண்ணி ஞர். அவளுக்கு வேண்டியதெல்லாம் சமுதாயத் தின் உயர் படிகளில் உரச வாய்ப்புக்கள். அவனு க்கு வேண்டியதெல்லாம் பணம். இதற்குப் பெயர் திருமணம்.
பொருளாத்ார ரீதியில் பெரிய வேறுபாடு இருந்தது. கல்வி கலாச்சார அடிப்படையிலும் வேறுபாடுகள் இருந்தன. இருவருமே புத்திசாலி கள் தான். ஆயினும் மாறிருேசின் கல்வி மேலெ ழுந்த வாரியாகவே அமைந்து விட்டது. முர ணுக நல்லறிவு பெற்ற அன்ருவான் ஒரு சிறந்த பேச்சாளனுகவும், வாதாளஞகவும் திகழ்ந்தார்.
இவவேறுபாடுகளினூடாக இந்த இரண்டு
'நல்ல கத்தோலிக்கரும் மகிழ்வாகவே திரு மணத்தில் ஈடுபட்டுத் தொடர்ந்தார்கள் நல் லோர் வாழ்க்கையை. ஆனல் இல்லறத்தில் நல் லறம் அமையவில்லை. ஆமாம், நீடிக்கவில்லை அம்மகிழ்வு.
வளர்ந்த சூழல்
நாட்டில் ஏற்பட்ட புரட்சி, அதனுல் ஏற் பட்ட தாக்கம், நாடு கடத்தப்படல், பிரிவு, பொருளாதாரப் பிரச்சினை, அவளின் தளர்ந்த உடல்நிலை அனைத்தும் படிப்படியாக வளர்ந்து
- 25 -

Page 30
ஒன்று சேர்ந்து தாக்கின, அவர்களின் இல் வாழ் வை. மகிழ்ச்சி குன்றியது. மணம் குறைந்ததுஒப்பந்தம் உடைந்தது !
இச்சூழலில் வளரும் குழந்தையின் நிலை எப் படி அமையும்? உள இயலாரைக் கேட்டால் கதை கதையாகச் சொல்லுவார்களே! புருெ வான்சின் மண், சமுதாய வகுப்புப் பேதங்கள், செய்தொ ழில், குடும்பம், சூழல் அனைத்தும் சேர்ந்துதான் இயூஜீனின் குணங்களை உருவாக்கியன.
தீமைகளைத் தகர்த்து வேண்டாத குணங் களை விலக்கி, நன்மைகளை நாடி, நற்குணங்க ளையே வளர்க்கக் காலமெல்லாம் இயூஜீன் முனைந் தாலும், அவர் தமது மண்ணின் குணங்களை மாற்ற முடியாமல் பிடிவாதமுடையவராக ஆனல் தாராள மனப்பான்மை கொண்டவராக வே வாழ்ந்தார். - w
பிரச்சினைகளில் முடிவெடுக்கும் பொழுதெல் லாம் இயூஜின் தன் இரத்தத்தில் ஊறிய பிர புத்துவத்தைக் காட்டிவிடுவார். ‘வெட்டொன்று துண்டு இரண்டு’ என்றே அவர் முடிவுகள் இருக் கும். உயர் குடிப்பண்புகளால் அவர் நிறைந்தி ருந்தாலும், அழிந்து வந்த அந்தப் பிரபுத்துவ சமூகத்திலிருந்து காலத்துக்கு முன்னரே தம்மை வேறுபடுத்தி மக்களுள் மக்களாக நேர்மையுடன் வாழுமளவிற்குத் தம்மையே தாழ்மைப்படுத் திக்கொள்ள முயற்சிசெய்தார். வெற்றி கண் L l - тұтп?
- 26 -

சேரிப் பிரபு
புருெவன்சாலின் மொழியை நான்கு வய தில் நன்கு கற்றுக்கொண்டார், இயூஜீன். அந்த வயதிலேயே அவருடைய குணமும் ஒரளவு புலப்படலாயிற்று.
இவர்கள் ஒரு முறை குடும்பமாக "தியேட் டர் ஒன்றுக்குச் சென்றிருந்தார்கள். கீழிருந்த வர் யாரோ சத்தமிட்டபொழுது இயூஜீன் பொ றுமையிழந்து குரல் எழுப்பினர்.
'ஏய், க வன்ம். நான் அங்கு வந்தனென் ருல் .'
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்ருக நிகழ்ந்தன. இது தந்தைக்குக் கவலை யைத் தந்தது.

Page 31
இக்குழந்தை அர வஃணப்புகளே விரும்ப வில்ஃவ; அவை இல்ஃலயே என்று அழவு மில்ஃல
*அழுவதைவிட முரண்பிடித்துச் சத்தம் போடுவது நல்லது; அக் குழந்தையிடம் உறுதி உண்டு" - என்று தாய்வழிப் பாட்டஞர் சொன் ஞர்.
இந்த உறுதியுடன் தாயின் ஆழமான கூரு எணர்வுகளையும் பெற்றிருந்தார், இயூஜீன். அத ணுல் மற்றவர்களுடைய உணர்வுகளே ப் புரிந்து கொள்ளவும், மற்றவர்களுக்காக "உணரவும்' அவரால் முடிந்தது.
சிறுவன் இயூஜீன் நிலக்கரி அள்ளிச் செல் லும் ஒரு சேரிக் குழந்தையை, ஒருமுறை வீதியிற் சந்தித்தான். அந்த ஏழைச் சிறுவனின் கிழி லான உடை இப் பிரபுவின் குழந்தை உள்ளத்தை உருக்கியது. உடனேயே அவனுக்குத் தன்னுடை க*ளக் கழற்றிக் கொடுத்து, அவனுடைய நைந்த உடைகளே வாங்கித் தான் அணிந்து கொண்டார்.
இச்செய்தி தாய்க்குத் தெரியவந்தது. இந்” நிகழ்ச்சி தமது நிலைக்குத் தரக்குறைவாகத் தோன்றியது, அச்சீமாட்டிக்கு. உடனேயே குழந் தையை அழைத்து,
நீ ஒரு பிரபுவின் மகன் சேரிப்பை பன் மாதிரி நீ உடுத்தக் கூடாது' என்று கண்டித் தாள்.
ஒரு கணம், மெளனம். பின்பு பதில் வந்தது.
- 28 -

km
■“!sos:.
“シ
| –
*玖。
- |×|*** - "!------**| #33.. *),-,
-sae』o■- ***《)|-s. ... No !.*No..No—
------
No, No.|-No, .
,-)No,,) ****)
- , , ,|*** : *.-----|-
■
|- -----|×sae*)。|- |-|-*----
| –
*)
பிரபுவாவே
சேரிப்
*தான்

Page 32

'ரொம்ப நல்லது. அப்படியானல் நான் ஒரு சேரிப்பிரபுவாக இருப்பேன்."
இந்நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு பின்னர் அவர் மேற்கொண்ட பணியை முன்கூட்டிச் சொல்வதோ அன்றேல் வளரும் பயிரை முளை யில் தெரியும் என்று சொல்லவோ விரும்பவி ல்லை. தொட்டிற் பழக்கம் சுடுகாடு வரை என்று துணியவுமில்லை. ஆயினும் இச்சிறு வயதிலேயே அவரது இயல்பான குணங்களைக் கோடிட்டுக் காட்டாமல் இருக்கவும் முடியவில்லை.
நாடு கடத்தப் படல்
பிரெஞ்சுப் புரட்சி, தளர்ந்து தொங்கும் உயர் குடி ஆட்சியின் கதவுகளில் தட்டிக்கொண் டி (ருந்தது. ஆனல் உயர் குடி மக்கள் கண்மூடியே வாழ்ந்தார்கள். வெள்ளம் பெருகுவதை அவர் கள் கண்டும் கண்மூடியிருந்தார்கள்.
சார்ள்ஸ் அன்ரு வானும் தன்னுடைய சகாக் களைப் போன்றே காலத்தின் கோலங்களைப் பார்க் காமலே வாழ்ந்து வந்தார். அறிவும், பண்பும், திறமைகளும் இருந்தாலும் அரசியல் உணர்வு அன்ரு வானிடம் குறைவாகவே இருந்தது. தன் னுடைய பிரபு நிலையினுலும் தப்பித்துக்கொள் ளலாமென்று பகற்கனவு கண்டார்.
கனவு பலிக்கவில்லை. அனைத்தையும் இழந் தார்.
- 29 -

Page 33
இதே தெரு வால் புரட்சிக்காரர் எல்லாவற் றையும் புரட்டிச் சென்ருர்கள். அவர் வீட்டுக்கு முன்னிருந்த அழகு நிறைந்த இதே தெருவீதி யிலுள்ள ஒரு வீதி விளக்குக் கம்பத்தில் அன் ருவாஃனத் தூக்கிலிடுவார்களென்ற செய்தி அன் ருவானுக்கும் எட்டியது.
1790 ஆம் ஆண்டு. மார்கழித்திங்கள். குளிர் காலம். இரவோடு இரவாக, வேட்டைக்காரன் கோலத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பிரபு அன்ருவான் பிச்சைக்காரணுக ஒடி ஒழிந் தார். 26 நீண்ட வருட நாடுகடத்தல் அப்பொ ழுது துவங்கியது.
தந்தையின் பாதையில் தனயன்
வீட்டின் மேல் மாடியிலிருந்தே தெருவில் நடந்த புரட்சியின் விளைவுகளே இயூஜீன் கண் டிருப்பார். அப் புரட்சியின் தாக்கம் அவரது பிஞ்சுள்ளத்தில் அழியாச் சுவடுகளைப் பதித்துச் சென்றது. தன் தந்தையின் பக்கமே நின்று எதிரிகஃள எதிர்த்தார் இயூஜீன்.
திடீரென வேரூேர் செய்தியும் பரவியது, உயர் குடி மக்களின், பிரபுக்களின் பிள்ளைகளே பும் புரட்சிக்காரர் கொல்லத் திட்டமிட்டுள் ளனர் என்று.
1791 ஆம் ஆண்டின் துவக்க காலம், இக் கொடுரச் செய்தி நீளில் உள்ள அன்ருவான் அவர்
- 30 -

பிச்சைக்காரன் கோலத்தில் ஓடிய பிரபு

Page 34

களுக்கும் எட்டியது. பொய்யோ மெய்யோ! சிந்திக்க நேரமில்லை. தத்துவம் பேசி வாதிடும் வேளையுமல்ல. டி மசெனெட் குடும்பத்தின் நம் பிக்கை, முழுவதும் இயூஜினிலேயே தங்கியுள் ளது. ஆகவே மகனை அனுப்பிவிடும்படி அவசரச் செய்தி வந்தது. கப்பல் தலைவனும் இயூஜீனின் மாமனுமான லூயி இயூஜீன் டி மசெனெட்டின் உதவியுடன் மகன் தந்தையை வந்தடைந்தார்.
எட்டு வயதுடைய இயூஜீனுக்குக் கடின மான, கசப்பான காலம் எதிர் நோக்கியிருந் தது. இருபது வயது மட்டும் இப்படியொரு நிச் சயமற்ற-நிலையற்ற வாழ்க்கை.
அவருடைய ஐந்தே வயது நிரம்பிய ஒரே தங்கை நினெற்றின் பிரிவு இளம் உள்ளத்தை உருக்கியது. அன்புக்காக இதயம் துடித்தது.
அன்று சேரிப்பிரபுவாக இருப்பேன் என்று விருப்புடன் கூறினர். இன்று பணமில்லா ஓர் ஏழைப்பிரபுவின் மகனுக வாழவேண்டிய நிர்ப்பந்தமான நிலை,
புரட்சிக்காரரின் முற்றுகைக்கு ஒருபடி முன்ன ரேயே இயூஜீன் இடத்துக்கிடம் மாறி ஓடினர். இத ஞல் அவரது கல்வியும் பாதிக்கப்பட்டது. பாட சாலைப் படிப்பு பாதிக்கப்பட்டாலும் அதற்கு ஈடு கட்டும் முகமாக அவர் அனுபவப் பாடசாலையில் நன்கு கல்விகற்று வந்தார். நீஸ், ரூறின், வெனிஸ், நேப்பிள்ஸ், பலேர்மோ-என்று ஊர் மாறி ஊர்
- 31 -

Page 35
சென்ருர், அவ்வூர்களின் அழகும், பிறபண்புகளும் இயூஜினின் அனுபவ அறிவை வளர்த்தன. பரந்த மனத்தை வளர்த்தன. திறந்த உள்ளத்தைக் கொடுத்தன.
வெனிஸில் நடைபெற்ற கேளிக்கைகளும், பலேர் மோவில் நடைபெற்ற நாட்டியங்களும் இளைஞன் இயூஜினைப் பாதிக்காமல் இல்லை.
முறையான கல்வி
ரூறின். புதிய நாடு. அழகிய நகரம். வீட்டு வாசலில் இருந்து கொண்டு வீதி வழியே வரு வோர் போவோர் எல்லோரையும் இயூஜின் உன் னிப்பாகப் பார்ப்பார். அவர்கள் பேசுவதைக் கேட்பார். சில இத்தாலிச் சொற்களையும் பொறுக்கிக் கொண்டார். ܚ
மகனின் நிலை தந்தைக்குக் கவலை தந்தது. ஆகவே, என்ன செலவானுலும் மகனுக்கு முறை யான கல்வி அளிக்க முன் வந்தார். இளம் பிரபுக், களுக்கு என உள்ள ரூறின் கல்லூரியில் மகனைச் சேர்த்து விட்டார். குடும்பப் பெயர், புகழ் பதவி அனைத்தும் காப்பாற்றப்பட வேண்டுமென்பது அவரது அவா. புரட்சியின் முடிவில் பிரபுக்களின் பழைய நிலை மீட்டுத்தரப்படும் என்ற நம்பிக்கை அன்ரு வானுக்கு என்றுமே இருந்தது.
புதிய நகரில்,புதிய கல்லூரியில், புதிய சூழ் நிலையில் படிப்பது இயூஜினுக்கு ஒரு பிரச்சினை

யாக இருக்கவில்லை. மொழி வேறுபட்டாலும்
தமது உறுதி நிறைந்த முயற்சியால் வகுப்பில் முதலிடம் பெற்ருர்,
காலமும் நேரமும் சற்றும் த வருது ஒழுங் காகப் பாடசாலை சென்ற இளைஞன் இயூஜின் வகுப்பின் தலைவனுகக் கெளரவப்படுத்தப்பட் டான்,
1792-ஆம் ஆண்டு சித் திரைத் திங்களில்
தமது பத்தாவது வயதில் இயூஜீன் முதல் முறை யாகத் திருவிருந்தில் பங்கு கொண்டார்.
இரண்டு மாதங்கள் கழித்து ஆணித்திங்கள் மூன்
ரும் நாள் அவர் உறுதிப்பூசுதல் பெற்ருர்.
அமைதியான "இவ்வாழ்க்கையிலும் புயல்
அடித்தது.
- 33 -

Page 36
வெனிசின் விழாக்கோலம்
புரட்சிக்காரர் முன்னேறி வந்தனர். அத ணுல் இயூஜீனின் தாயும் தங்கையும் ஏக்ஸை விட்டு வெளியேறி ரூறின் வந்து சேர்ந்தார்கள்.
புரட்சி கொடியதாக மாறியது. பிரான்சின் மன்னன் 16ஆம் லூயி கொல்லப்பட்டான். இதைக் கேள்வியுற்ற அன்ருவான் அதிரவில்லை. ** மன்னன் நீடூழி வாழ்க!" என்று வாழ்த்தினர். அரசபரம்பரை மீண்டும் ஆட்சிபீடத்தில் ஏறும் என்பது அவரது ஆழ்ந்த நம்பிக்கை. புரட்சிக் காரர் ரூறினின் வாயிலில் வந்து விட்டார்கள். டி மசெனெட் குடும்பம் மீண்டும் ஒடியது.

பொருளாதாரத் தாக்கத்தினல் மிகக் குறைந்த செலவிலேயே பயணம் செய்ய வேண்டி இருந்தது. ஒரு பழைய படகொன்றையே வாட கைக்கு அமர்த்திக் கொண்டார்கள்.
1794ஆம் ஆண்டின் இளவேனிற் காலம். டி மசெனெட் குடும்பத்தைத் தாங்கிக் கொண்டு *போ நதி வழியாகப் பன்னிரண்டு நாட் பய ணம் செய்து வெனிசை அடைந்தது அப்படகு. இயூஜின், அவரது பெற்றேர், தங்கை நினெற், மாமன் லூயி இயூஜீன் (கப்பல் தலைவன்), மாமன் அருள் திரு வோ (f)ர்ச்சுனே, பேரன் முறையான மாமன்-மார்சேயி மறை மாவட்ட முதல்வர் ஆகிய அனைவரும் அப்படகிலேயே பயணம் செய்தார்கள்.
வெளியூர் மக்களால் வெனிஸ் நிரம்பி வழிந் தது. டி மசெனெட் குடும்பத்தினருக்கு ஒரு சிறு வீடும் கிடைக்கவில்லை. ஒரு நாய்வீடு கூட அகப் படவில்லை. இரண்டு நீண்ட இரவுகள் அப்படகி லேயே கழிந்தன. இவர்கள் குளிரில் இங்கு நடுங் கிக் கொண்டிருந்தார்கள். ஆனல், தூரத்தேமக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி வெறியிற் சத்தமிட்டு இரவைக் கழித்தார்கள். அது வெனி ஸின் விழாக் கோலம்.
கடலுடன் நகரம் திருமணம் செய்து கொள் ளும் ஆண்டுவிழா அப்பொழுது. இவ்விழா நீஸில் பெரு விழாவாகக் கொண்டாடப்பட்டது. வெனிஸே விழாக் கோலம் கொண்டது.
- 35 -

Page 37
வெனிஸின் களியாட்டவிழா, கற்பனைக்கெட் டிய அனைத்துக் குற்றங்களும் நாகரிகமாக இடம் பெற்ற விழா. ஆறுமாதங்களுக்கு நீடிக்கும் விழா. இளம் இரத்தமெல்லாம் புத்துயிர் பெறு வதற்கு அவ்வ்ப்பொழுது சிறிது ஓய்வும் உண்டு. இம்மடமையைப் பார்ப்பதற்கும், முடிந்தால் தாங்களும் கொஞ்சம் அனுபவிப்பதற்கும் அனைத் துலகிலிருந்தும் வெனிஸ் நகரத்தை நாடுவர்
பல மக்கள்.
அவர்களை முழுமையாக மறைப்பதற்காக அவர்களது கோலங்கள் முழுக்க முழுக்க மாறும்; உடைகள் மாறும்; மனித உணர்வுகளும் மாறும், அறிவும் மாறிக் குறையும்!
இக்களியாட்டங்கள் முடிந்ததும் டி மசெ னெட் குடும்பத்துக்கு வீடொன்று கிடைத்தது.
- 96 -

புத்துயிர் தந்த புதிய உறவு
இயூஜினுக்கு வெனிஸ் பிடிக்கவில்லை. நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழுவதையும், தமது பெற்ருே ரின் திருமண வாழ்க்கை உடையத் துவக்குவதையும் பார்க்கப் பார்க்க, வெனிஸ் வெறுப்பையும், மனத்தளர்ச்சியையும் தந்தது.
வீட்டில் நூல்களில்லை; ஆசிரியர்கள் இல்லை; நீண்ட விடுதலை, செய்வதற்கு ஒன்றுமில்லை, செல்வதற்கு இடமுமில்லை. வாழ்க்கையில் வெறுமையே விரவிக் கிடந்தது.
அவரது இந்த இருண்ட வாழ்க்கையில் ஒரே யொரு ஒளிக்கதிர் - அவரது அன்புத் தங்கை நினெற்.

Page 38
ஒருநாள் வழமைபோல இயூஜீன் தமது வீட்டு யன்னலருகே அமர்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்து பொழுது போக்கினர். திடீ ரென்று எதிர்ப்புறத்திலிருந்த கட்டிடமொன் றில் ஒரு யன்னல் திறந்தது. அங்கு ஒரு குருவா னவர் சிரித்த முகத்துடன் காட்சி தந்தார். இயூ ஜீனைப் பார்த்ததும் புரிந்து கொண்டார். உரை யாடல் ஒன்று இரு வரிடையேயும் மலர்ந்தது. திடீர் நம்பிக்கை பிறந்தது. இயூஜீன் தனது மனக் கவலைகளைக் கொட்டினர். இறுதியில்,
'படிப்பதற்கு ஒரு நூல்தானும் இல்லையே, சுவாமி'- என்று அழாக் குறையாகச் சொன்னர்.
குரவ்ர் உடனேயே உள்ளே சென்ருர், சென்ற வேகத்திலேயே திரும்பவும் யன்னலருகே வந்தார், கையில் நூலுடன். யன்னல் கம்பிகளி னுாடாகப் புத்தகத்தை நீட்டினர்.
இரவோடிரவாக நூலைப் படித்து முடித்த இயூஜீன், ஒரு இறைச்சித் துண்டைக் கவ்வி விழுங் கிய பின் பசியோடு மேசையிலுள்ள எச மான்ை ஆவலுடன் பார்க்கும் நன்றியுள்ள நாயைப் போல, விடியற்காலையில் யன்னல் அருகே வந்து எதிர்ப்புற யன்னலை ஆவலோடு நோக்கினர்.
எதிர் வீட்டு யன்னல்கள் திறந்தன. டொன் பா(b)ர் ரொலோ யன்னலருகே வந்தார். இயூஜீன் தான் படித்து முடித்த நூலே அவரிடம் திருப் பிக்கொடுத்தார்.
- 38 -

‘இன்னுமோர் நூல் தருவீர்களா?'
நூல் தருவதற்குப் பதிலாக அவர் இயூஜீனின் ஆசிரியராகவே மாறிவிட்டார். குரவர் டொன் பா(b)ர் ரொலோ லினெல்லி தமது குடும்பத்தாரு டன் வீட்டிலேயே இருந்தார். அவரது குடும் பத் தினர் வெனிஸ் நகரத்து வணிகர்; பணம்படைத் தோர். அவர்கள் இயூஜினைத் தங்களுள் ஒருவரா கவே வரவேற்ருர்கள். இயூஜீனும் நாளின் பெரும் பகுதி நேரத்தை அவர்களுடனேயே கழித்தார்.
டொன் பா(b)ர் ரொலோ ஒரு சிறந்த ஆசி ரியராக மாறினர். உடைபட்டுச் சிதறிய இயூஜி னின் வாழ்க்கை ஸினெல்லி குடும்பத்தினரின் உதவியால் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டு புத்து யிர் பெற்று வளரத் துவங்கியது.
குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசு
இயூஜீன் இக் குரவரின் சீடரானுர் வாழ்க்கை முறை கடுமையாக இருந்தது. ஒவ்வொன்றுக்கும் நேரம் குறிக்கப்பட்டது. பாடவகுப்புகள், படிப்பு, பொழுதுபோக்கு விளையாட்டுகள் ஆகி யவற்றுடன் புதிதாகச் செபத்திற்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. எல்லாவற்றையுமே உற்சாகத் துடன் வரவேற்ருர், இயூஜீன்.
ஒவ்வொரு வெள்ளியும், தபசு காலத்தில் வாரத்தில் மூன்று நாள்களும் விரதமிருந்தார்.
- 39 m

Page 39
அக்கடுமையான குளிருள்ள நாட்டிலும், சனிக் கிழமைகளில் ஒரே ஒரு கம்பளிப் போர்வையா லேயே தம்மை மூடிக்கொண்டு கற்றரையி லேயே உறங்கினர். சில, இரவுகளில் விறகுக ளின் மேலேயே படுத்து உறங்கினர்.
*ஒருவேளை இளைஞனின் உற்சாகம் கரைபு ரண்டு ஓடியிருக்குமோ” என்று நாம் நினைக்கவும் கூடும்.
இதே நாள்களையிட்டு இயூஜீன் பின்னர் மீள் நோக்கிப் பார்த்து என்ன சொன்னர்?
"அப்படிப்பட்ட ஒரு விரதமுறையால், ஒழுக்க வாழ்வால் எனது உடல்நிலை கிஞ்சித்தும் பாதிக்கப்படவில்லை. வெனிஸில் வாழ்ந்த நாளெல்லாம் அவ் வாழ்க்கை முறையைக் கடைப் பிடித்தேன். ஏன், என் அழைத்தல் கூட அங்கு தான் ஆரம்பித்தது.' *
அழைத்தலைப்பற்றிப் பேசும் பொழுது இவரது பெரிய மாமன் ஒருமுறை சொன்னது
ஞாபகம் வருகிறது. அவர், V
"எமது குடும்பத்தின் ஆண் வாரிசு நீ ஒரு வன் என்பதை நீ அறியாயோ? நீ குருவாக வேண்டும் என்று விரும்பினுல் எமது குடும்பப் பெயர் அழிந்து விடுமே” என்று கூறி இயூஜீனின் எண்ணத்தை மாற்ற முனைந்தார்.
இப்படிப்பட்ட கட்டங்களில் இயூஜீன் மெள னம் சாதிப்பது அவரது இயல்பல்ல.
- 40 m

'ஒரு குருவோடு ஒரு குடும்பப் பரம்பரை முடிவதை விட வேறு நல்ல முடிவேதுமுண்டோ?” என்று அவர் கூறி அவ்வுரையாடலுக்கே முற் றுப் புள்ளி வைத்தார்.
கடத்தலில் ஈடுபட்ட பிரபு
சந்தர்ப்பம் கிடைத்ததும் இயூஜினின் தாய் தன் மகளுடன் பிரான்சுக்குத் திரும்பி விட்டாள். இழந்த சொத்துகளில் ஏதாவது மீளுமோ என்ற ஆசை இவளேப் பிறந்த இடத்துக்கு அழைத்தது. பாசத்தை விடப் பணமே பெரிதாகியது சீமாட் டிக்கு.
ஒரு சதத்துக்கும் வழியற்ற சூழலில் அன்ரு வான் வணிகத்தில் ஈடுபட முனைந்தார். சித்திர வேலைப்பாடுகள், விலையுயர்ந்த கற்கள், புடை வண்ணச் செதுக்கு மணி, சரக்குவகை, உள்ளு டைகள், இரும்பு, நாய்த்தோல் முதலர் னவற்றி லெல்லாம் பலருடன் கூட்டாக வணிகஞ் செய்ய முன்வந்தார். அந்த முன்னை நாட் பிரபு.
போக்குவரத்து மிக ஆபத்தான நிலையை அடைந்தது. சுங்க வரித்துறையினர் வேலை நிறுத் தங்களில் ஈடுபட்டனர். ஆங்கிலேயர் கப்பல்க ளைத் தடுத்தனர். அன்ரு வான் இந்நிலையில் முறை யான வணிகத்தை விட்டுவிட்டு, கடத்தலில் கவ னத்தைச் செலுத்தினர். இதனுல் எத்தனையோ இரவுகள் காவலருக்குக் காதுகுத்தி வெனிஸ் நக ரத்துச் சந்து பொந்துகள் வழியாகவும், கால் வாய்கள் வாயிலாகவும் ஒடி ஒழிந்ததுமுண்டு.
- 41 -

Page 40
இவற்றையெல்லாம் தெரியாது இயூஜீன் டொன் பா (b) ர் ரொலோவின் கண்காணிப்பில் மகிழ்வுடன் வளர்ந்தார். கிறித்துவின் நற் செய்தி நவிலச் சென்ற வீரர்கள் வரலாறுகளை படித்துக் குவித்தார். இயூஜீனின் உள்ளத்திலும் ஒரு புதிய ஆசை உருவாகியது.
*அஞ்ஞானிகளை நானும் ஒருநாள் மனந்
திருப்புவேன். அதற்காகவே நான் என் வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும்.”*
- ஒருவேளை வெனிஸில் இன்னும் சில காலம் இருந்திருந்தால் தன் குருவின் அடிச்சுவட்டில் இயூஜீனும் இயேசு சபையைப் புதுப்பிக்க இலட் சியம் பூண்ட யேசுவின் விசுவாசச் சபையில் சேர்ந்திருப்பார். ஆனல் நேப்பிள்ஸ் பயணம் அவரது வாழ்க்கைப் பயணத்தையும் மாற்றி விட்டது.
தந்தையின் வணிகம் குன்றி வறுமையை நோக்கியது. பொ(b)ண்பாட் முற்றுகையிட்டதும் எஞ்சியதும் மிஞ்சவில்லை.
அது 1797 ஆம் ஆண்டு. கார்த்திகைத் திங் கள் 11ஆம் நாள். அன்ரு வான் வெனிசை விட்டு வெளியேறி நேப்பிள்ஸ் சென்ருர், இயூஜினும் கப்பல் தலைவனுன மாமன் லூயி இயூஜீனும் கூடச் சென்றார்கள். குரவர் வோ(f)ர்ச்சுனே புருெவான்சுக்குத் திரும்பிவிட்டார். பெரிய மாமன் 1795 இல் இறைவனடி சென்று புனித சில்வெஸ்ரோ ஆலயத்தில் அடக்கம் பெற்ருர்,

பிச்சையெடுப்பவனுக்குத் தெரிவு வேரு ?
அன்று புதுவருடம். 1798 ஆம் ஆண்டு. அது புதிய நாடு. நேப்பிள்ஸ் நகரம். தந்தையும் மக னும் வந்து சேர்ந்தார்கள். ஒரு சாதாரண உணவு விடுதியில் தங்கினர்கள். பெயர்ப்பலகை ஒன்றுதான் அவ்விடுதியில் சுத்தமாக இருந்தது.
உற்றர் உறவினரிடமிருந்து எச் செய்தியும் கிடைக்கவில்லை.
அஞ்சலகம் சென் ருர்கள். இரண்டு கடிதங்கள் அவர்களைக் காத்திருந்தன.
முதலாவது: நாடு திரும்பிய மாமன்-குரவர் வோ(f)ர்ச்சுனே
- 43 -

Page 41
புருெ வான்சில் நுழையும் தறுவாயில் அதிகாரிக ளால் பிடிபட்டார். அக்கணமே நாட்டை விட் டுத் துரத்தப்பட்டார். உயிர் தப்பியது போது மென்று அன்ருவானும், இயூஜீனும் தங்கி இருக் கும் நேப்பிள்ஸ் நகருக்கு வருகிருராம்.
இரண்டாவது:
அன்ருவான் முதலீடு செய்த வாணிகச் சங் கம் நொடிந்து பொருளக முறிவுக்குள்ளாயிற்று. அன்ருவான் கடனளியானர். பனையால் விழுந் தவனை மாடேறி மிதித்தது.
தாயிடமிருந்தோ, தங்கையிடமிருந்தோ எத்தகவலும் கிடைக்கவில்லை. இயூஜினின் இத யம் நொந்தது.
அன்ருவான் மிஞ்சியிருந்த பணத்தை எண் னிப் பார்த்தார். கணக்குப் போட்டார். ஆறு மாதங்களுக்குப் போதுமா என்பது சந்தேகம்!
இந்த இக்கட்டான நிலையைச் சமாளிக்க வேலை தேடினர், பிரபு அன்ருவானும், கப்பற் தலைவனும் இயூஜீனின் மாமனுமான லூயி இயூஜீ னும், சொகுசான வேலைக்காக அவர்கள் காத்தி ருக்கவில்லை. எவ் வேலையைச் செய்யவும் தயாரா ஞர்கள். நாட் கூலிக்கு வேலை செய்யவும் அவர் கள் பின் வாங்கவில்லை. பிச்சையெடுப்பவர்களுக் குத் தெரிவு வேறு உண்டா?
ஆணுல், எவ்வேலையுமே கிடைக்கவில்லையே.
ܝܘܡ 44 ܤܩ

நண்பரின், சுற்றத்தாரின் அனுதாபமும் ஆதரவும் இதயத்தைக் கனியச் செய்தன: ஆனல் வயிற்றக் குளிரச் செய்யவில்லையே!
இனித்ததொன்று ! கசந்ததொன்று!
சிசிலியின் அரசி மாறி கரோலின். பிரான் சின் 16 ஆம் லூயி மன்னனுக்கு மைத்துணி. அவள் அன்ருவானுடைய வறுமையையும், பரி தாப நிலையையும் கேள்வியுற்ருள். அன்புக் கரம்
பல முயற்சிகளின் முடிவில் அன்ருவான் தன் மனைவி இருக்குமிடத்தை அறிந்து தொடர்பு கொண்டார். தன் நிலையை விளக்கினர். மாறிருேஸ் பதில் மடல் தந்தாள். பொருளுதவி செய் வதாக உறுதியும் சொன்னுள். ஆயினும், இம் மடலின் தொனி-உள்ளத்தின் கடினத்தையும், உறவின் தூரத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று உணர்த்தியது - அன்ருவானின் உள் ளத்தையும் உறுத்தியது.
மாறி-றேஸின் நெருங்கிய உறவினனன - றேஸ் ஜோஆன்னிஸின் சிந்தனைகளே மாறியை மாற்றின. இவரின் போக்கு அவளின் இல்லற உறவையும் பாதித்தது.
கணவன் மனைவி இருவரிடையேயும் கடிதங்கள் பறந்தன. அன்ருவானின் மடல்களில் அன்பும் பற்
سحد 45 سے "

Page 42
றும் அள்ளிக் கொடுக்கப்பட்டன. பதிலாக மாறியின் உறைந்த இதயத்தையும், உலர்ந்த உள்ளத்தையுமே அவர் பெற்றர். அவர் மடல்கள் ஓடிச்சென்றன அவளே அள்ளி அரவணைக்க, அவளது பதில் மடல் கள் ஒதுங்கித் தடுத்தன அவ்வரவணைப்புகளே!
இயூஜீன் இதை உணராமலில்லை. ஒத்த வய துடைய நண்பர்களில்லை; தாயுமில்லை; தங்கையு L(
நாடும் புதிது; நாட்டுப்பழக்க வழக்கங்களும் வேறு.
வேலேயுமில்லை. பொழுதைப் போக்க வேறு வழி களுமில்லை. தனிமை, வெறுமை, தவிப்பு-அத்தனை யும் ஒன்று சேர்ந்து தாக்கின, அந்த இளம் உள் ௗத்தை. ஒடியாடித் துடிப்புடன் வாழவேண்டிய வயதில் ஒடிந்து நொடிந்து இப்படியொரு ஒதுக்கமா!
இயூஜீனின் புரட்சிப் போக்கு...! .
மாலேயிற் சில வேளைகளில் வெளியே சென் றர்கள் சந்திப்புக்காக, யாரை? பிரான்சின் வயது முதிர்ந்த அகதிகளே. அவர்களின் உரையாடல்கள் அனைத்தும் ஒரு கனவைச் சுற்றியே வட்டமிட்டன.- 'மன்னன் ஆட்சி திரும்பும்" - "மன்னன் ஆட்சி திரும்பும் - பாழடைந்த பழைய இசைத்தட்டு அதே வரியையே மீண்டும் மீண்டும் இசைத்தது.
一些台 一

இயூஜீனின் புரட்சிப் போக்கு!

Page 43

அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகருமல் லவா? இயூஜீனின் உள்ளத்திலும் ஓர் எண்ணம் ஆழமாகப் பதிய முனைந்தது. எவ்விதமாயினும் புரட்சி நிறுத்தப்படல்வேண்டும். அதைப் போர் வழி நின்று சாதித்தாலும் தவறில்லை என்று இயூஜின் சிந்திக்கத் துவங்கினுர்,
சொல்லிவைத்தாற்போல இந்நேரம் பார்த்து டொன் பா(b)ர்ரொலோவின் கடிதங்கள் வந்து குவிந்தன. “தனிமையை விலக்குக ! படிப்பைத் தொடர்க!' - இதுதான் அவரது மடல்களின் சாரம். குரவரிடம் தூரத்து நோக்கமொன்று என்றுமே இருந்து வந்தது. காலம் வந்ததென்று எண்ணி அதை அவிழ்த்து விட்டார் -
"இயேசு சபையினர் மீண்டும் எழுவார்கள். அவ்வாறு அவர்கள் எழும்வேளை அவர்களுக்கு இளை ஞர்கள் தேவை. யாருக்குத் தெரியும், ஒரு வேளை ஆண்டவன் உன்னையும் அழைக்கின்ருரோ!...”*
ஆனல், இறைவனது சித்தம் வேருகத்தான் இருந்தது.
நேப்பிள்ஸில் இயூஜீனுடைய வாழ்க்கை விபரீ தமாகவே முடிந்திருக்கும்!
அபுக்கி என்னுமிடத்தில் பிரெஞ்சுப் படையை நெல்சன் பிரபு தோற்கடித்தார். நேப்பிள்ஸ் வெற்றிவிழாக் கண்டது. அரசி மாறி கரோலின்
- 47 -

Page 44
புரட்சியை முற்ருக வெறுத்தாள். புதிய வெற்றி யானது வெறுப்பென்னும் அத்தீயில் எண்ணெய் வார்த்தது. மேலும் அதை விசிறி விட்டார், நெல் சன் பிரபு. விளைவு?. அரசி பிரெஞ்சுப் படைகளை மீண்டும் எதிர்த்தாள்.
பிரெஞ்சுப் படைகள் துவக்கத்தில் ஒரு சில பின்
வாங்கல்களுக்கு இடமளித்தாலும் இறுதியாக ஒன்று சேர்ந்து தாக்கின. இரு சிசிலியின் இரு தலை நகர்களையும் கைப்பற்றினர்.
சமயோசித புத்தி காத்தது
அரசவையில் ஒரே குழப்பம் அரசிக்கு நெருக் கமானேர் நெல்சன் பிரபுவின் கப்பல்கள் மூலம் நாட்டைவிட்டு ஒடமுயன்றனர். ஆனல், வழமை போல சாதாரண மக்கள் தான் ஒன்றுகூடி தம் நகரைக் காக்க முனைந்தனர்.
போர்த்துக்கீசிய கடற்படையின் ஒரு பகுதி நெல்சன் பிரபுவின் கடற்படையுடன் சேர்ந்திருந் தது. அப்படையின் கொடிக்கப்பலின் தலைவன், இயூஜீனின் மாமனன லூயிக்கு பழைய நண்பர். ஆகவே, அவரது கப்பலில் டி மசெனெட் குழுவின ருக்கு இடங்கிடைப்பது பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை.
- 48 -

குறிக்கப்பட்ட நேரத்தில் டி மசெனெட் குழு வினரின் பெட்டிபடுக்கையை எடுத்துச் செல்ல சில கப்பலோட்டிகள் கைவண்டியுடன் வந்தார்கள். இயூஜின் முன் செல்ல டி மசெனெட் குழுவினர் தொடர்ந்தனர். ஆனல், இவர்கள் கப்பலுக்கே றும் வழி அடைபட்டது. ஒரு கும்பல் அங்கு நின் றது. பலர் ஆயுதம் தாங்கி நின்றனர். அவர்க ளின் மனநிலை வரவேற்கக் கூடியதாக இருக்கவிலலை. ஒரு தவறன செயல், வேண்டாத அசைவு, பிழை யான சொல் - பெரிய புரட்சியையே அவ்விடத்தில் உருவாக்கிவிடும் சூழ்நிலை, அது.
சிந்தனைவேகம் இயூஜினுக்கு இயல்பானது. சம யோசித புத்தி அவரோடு கூடப் பிறந்தது. துணிவு அவரோடு வளர்ந்தது.
“போர்த்துக்கீயத் தளபதிக்கு வழிவிடுங்கள்! போர்த்துக்கீயத் தளபதிக்கு வழிவிடுங்கள்!"
விலகி நின்று வழி கொடுத்தது, வழியை மூடி நின்ற அக் கும்பல்.
டி மசெனெட் குழுவினர் கப்பலேறினர். ஆணுல், திடீரெனப் புயல் வீசியது. பயணம் பின்போடப் பட்டது. இந்நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு இயூஜீன் கப்பலை விட்டு இறங்கி நகரத்துள் சென் ருரர். அவசரத்தில் எடுக்கத் தவறிய தமது பொருள் களை விற்க முனைந்தார்.
கப்பல் செல்லத் தயாரானது. இயூஜின் அவ சரஅவசரமாக வந்து ஏறிக்கொண்டார். புயல்
4 - 49 -

Page 45
நின்றபாடில்லை. பயந்த கப்பலோட்டிகள் கைகளில் செபமாலைகளுடன் வலித்தனர். இளைஞன் இயூஜீன் அஞ்சாது நின்றன். கப்பல் நீரைக் கிழித்துக் கொண்டு சென்றது. இயூஜினின் சிந்தனை அதற்கு முன்னேயே ஓடியது.
- 50 -

பணமும் பொருளும்
போதவில்லை .
பலேர்மோ! புதுமையான நகரம். பிரமாண்ட மான கோவில்கள், தோட்டங்கள், அரண்மனைகள். இவ்வரண்மனைகளிலேயே காலமெல்லாம் ஆடிப் பாடி வாழ்ந்தனர் பிரபுக்களின் குடும்பத்தினர்.
இயூஜீனுக்கு 17 வயது. இளமை துடித்தது. பலேர்மோவின் சூழல் அழைத்தது. M.
போகுமிடமெல்லாம் இயூஜினுக்கு நல்ல நண் பர்கள் கிடைத்தார்கள். இம் முறை டி கணிசாருே என்ற கோமகன்-கோமகள் முதலியோர் நண்பரா யினர். கோமகள் நல்லவள் மட்டுமல்ல; பத்தியு டையவளாயுமிருந்தாள். இயூஜினைத் தன் சொந்த மகன் போன்று பராமரித்தாள்.

Page 46
இயூஜீனும் நேப்பிள்ஸின் கொடிய வறுமைப் பிடியிலிருந்து மீண்டு பலேர்மோவின் உயர்குடி வட் டங்களில் வலம் வரத் துவக்கினர். பிரபுக்கள் குடும்பத்திலேயே பிறந்த இயூஜினுக்குப் புதிய சூழல் அவ்வளவு புதுமையானதாகத் தோன்ற வில்லை.
டி கணிசாருேவின் அகத்தில் இயூஜீனிக்கு வேண் டிய அனைத்தும் இருந்தன: நிறைய இடம், விடு முறைக்குக் கிராமப் புறத்துக் கோடைஇல்லம், எண்ணிக்கையற்ற பணியாள்கள், அறுசுவை மிக்க உணவு. இயூஜினைப் பார்ப்பதற்கு ஒரு புரோகிதரே அமர்த்தப்பட்டார். இந்தப் புரோகிதரைப் பற்றி இயூஜீன் தந்தைக்கு எழுதினர்:
“படு மோசமான முட்டாள்; வாசிக்கவும் தெரி
யாது. ’’
இவ்வளவு வசதிகள் கிடைத்திருந்தும் இயூஜீன் மனம் நிறைந்து வாழவில்லை. w
தன் குடும்பத்தையிட்டு ஆழமாகச் சிந்திக்கத் துவங்கினர். தன் குடும்பப் பெருமையையிட்டு எண் ணினர். தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த தமது முன்னேரின் வாழ்க்கை வரலாற்றை உன்னினர். தன் பெயருக்கு முன்னுல் ஒரு கெளரவப் பட்டம் இருக்க வேண்டுமென்றுதான் இத்தனை தேடலும். இச் சூழலில் பொதுமக்கள் அவரை “இளங் கோமான் டி மசெனெட்’’ என்று அழைப்பதை நெஞ்சார வரவேற்ருர்.

தம்முடைய உருவாக்கலில் பெரிய ஒரு பொத் தலை இயூஜீன் கண்டார்.
உயர்குடி மக்களுக்கென்றே சில சமுதாயப் பழக்க வழக்கங்கள் - சம்பிரதாயங்கள் - சைகை கள்-செய்கைகள்- பேச்சு மொழி - போக்குகள்பொழுதுபோக்குகள் - விளையாட்டுக்கள் - என்று பல உண்டு. தந்தை இவற்றையெல்லாம் தமக்குச் சொல்லிக் கொடுக்கத் தவறிவிட்டதாகவே இயூஜீ னுக்குத் தோன்றியது. அது பெரியதொரு இழப் பாகவும், அவருக்குத் தென்பட்டது.
பெருமையுடன் வாழ்ந்த பெருமகன் டக் டி பெ(b)றி அப்பொழுது பலேர்மோ வந்தார். அர சவையில் அவர் பெண் பார்க்க வந்தார். பெண் பார்க்க வந்த இப்பெருமகனை இளைய கோமகன் இயூஜின் சந்தித்தார்; சல்லாபித்தார்.
இழந்த சொர்க்கத்தை - அரச பரம்பரையை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர வேண்டுமென்னும் தணிந்திருந்த வேட்கை இப்பொழுது மீண்டும் சுடர் விட்டெரியத் துவங்கியது, இரத்தத்தில் ஊறிய பிரபுப் போக்கு இயூஜினின் உள்ளத்தில் புத்துயிர் பெற்றது.
கோமகன் சந்தித்த இளவரசி
புனித ருேசாலியாவின் திருநாள் பலேர்மோ வில் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. இயூ ஜீன் காத்திருந்த நல்ல நேரமிது. பெரிய பாடற்
ー 53 ー

Page 47
பூசைகள், மாலை வழிபாடுகள், பவனிகள், வாண விளையாட்டுக்கள், குதிரைஒட்டம், குதிரைப்படை அணிவகுப்பு, உயர்குடி மக்களின் ஒன்று கூடல் எனப் பலப்பல புதிய முகங்கள் பலவற்றை இயூஜீன் அறிந்து கொண்டார். உயர்குடித் தொடர்புகளும் உறவுகளும் அவருக்கு இப்பொழுது வேண்டியிருந் தன.
பலேர்மோவின் சுற்ருடலில் உள்ள ஊரொன் றில் உயர்குடி மக்கள் ஒன்று கூடினர்கள், இயூஜி னுக்கு ஒரிடம் ஒதுக்கி வைக்கப்பட்டது; இளவரசி மாறி எமெலியின் அருகில் நங்கையின் வயதை இளங் கோமகன் மறக்கவே மாட்டார். இவருடைய வயதுதான் அவளுக்கும். தித்திக்கும் பதினெட்டு.
ஆணுல், விடமாட்டாரே குரவர் டொன் பா(b)ர்ரொலோ, இயூஜீனின் நினைவாகவே அவர் இருந்தார் போலும். மடல் மேல் மடல்.
"படிக்கிறீரா? உமது பொழுதை எப்படிக் கழிக்கிறீர்?. இறைவனுக்கு எதிராக எதையும் செய்யாதீர்; இறைவனின்றி எதையும் செய்யா தீர்!"
தாயையும் மீறிய தாயாள்ை !
பலேர்மோவில் பொழுதுபோக்குகளும், கேளிக் கைகளும் நிறைய இருந்தும், இயூஜீன் படிப்பைத் தொடர்ந்தார். அதிசயம்தான்; ஆயினும், உண்
- 54 -

மையே. அதற்குரிய மூலகாரணம் அவ்வீட்டுச் சீமாட்டி கணிசாருேவே. இயூஜீன் தன்னைத்தானே அறிந்ததைவிட, அவள் அதிகமாகவே இயூஜினை விளங்கிக் கொண்டாள். அவனின் உருவாக்கலில் இருந்த பொத்தல்களையும் புரிந்து கொண்டாள். அளவுக்கதிகமான தன் நம்பிக்கை கொண்டவன் இளைஞன் இயூஜீன் என்பதையும் அவள் தெரிந்து கொண்டாள். ஆகவே, இளைஞனின் கல்வி வளர்ச் சியில் அவள் மிகுந்த அக்கறை கொண்டாள். அவளே ஆசிரியையாகவும் மாறினுள்.
ஆன்மீகத் துறுையிலும் அச்சீமாட்டி ஒரு மேல்வரிச்சட்டமாகவே வாழ்ந்தாள். அவளுடைய வருவாய் முழுமையாக வறிய மக்களின் நலன் கருதியே செலவானது. 'இயூஜீன்தான் அவளின் பிரதிநிதியாகச் செயற்பட்டார். இதன் மூலம் வறுமையின் கொடுமையை நேரடியாகக் கண்டு கொண்டார், இயூஜீன்.
இச் செய்தி கேட்ட டொன் பா (b)ர்ரொலோ ஆறுதல் அடைந்தார். தங்கை நினெற்கூட அமைதி கண்டாள். அவள் தன் மடலொன்றில், 'அன்பின் அண்ணு, உண்மையிலேயே நீங்கள் மிக்க மகிழ்ச்சி யாக இருக்கிறீர்கள் போலத் தோன்றுகிறது. ஆணுல், நீங்கள் மிகவும் பக்தியுடையவராக முன் பிருந்தீர்கள். வயது முதிர்ந்த கிழ்விகளுடன் அல் லாமல் வேறெந்தப் பெண்ணுடனும் நீங்கள் கை குலுக்கியதுகூடக்கிடையாதே ! மறந்து விடாதீர் கள்!’’ என்று அழகாக எச்சரித்தாள்!
- 55 -es

Page 48
இயூஜீனின் பிற்கால மடல்களினூடாகப் பார்க்கும்பொழுது, அவர் இந்த மேலெழுந்த வாரியான கேளிக்கைகளிலிருந்து ஒதுங்கிக் கொண் டார் என்று அறிய வருகிறது. ‘அந்தக் கேளிக் கைகளுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடை யாது. அப்படிப்பட்ட சூழல்களில் சிக்கிவிட்டால் நான் அவற்றிலிருந்து விலகிக் கொள்வேன். என் எண்ணங்களையும் மாற்றிக் கொள்வேன். இச்செயல் சில வேளைகளில் கண்களைக் கசிய வைத்ததுமுண்டு. ’’
ஆயினும், பலேர்மோவில் இயூஜீனின் வாழ்க்கை ஒரு துறவியின் வாழ்க்கையென்று துணிய முடியாது. இல்லையென்ருல் இயூஜின் பட்டத்தையும் பதவி யையும் ஏன் விரும்பினர்? தமது பரம்பரைப் புகழ் நிறை தலைமுறைகளை ஏன் மீட்கத் துடித்தார்? பிரபுக்களின் சமூகப் பழக்கவழக்கங்களை ஏன் நாடி ஞர்? கண்களைக் கசிய வைப்பதற்காகவா இத்தனை யையும் அவர் கனவாகக் கண்டு நனவாக்க முனைந் தார்?
பலேர்மோவில் வாழும்பொழுது பெருந்தவறு களில் தவழாது இயூஜின் முறையான கேளிக்கை களில் திகழ்ந்து மகிழ்ந்தார் என்று நாம் துணிய லாம். புதிய அனுபவங்களை நாடினரா என்பது விவாதத்திற்குரியது. ஆளுனல், பலேர்மோவின் வாழ்க்கை நடைமுறைகளையிட்டு இயூஜீன், “அவற் றைப்பற்றி நான் பேசவும் விரும்பவில்லை. இறைவ னின் அளவற்ற இரக்கத்தினல் நான் அப்படிப் பட்ட ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றப்பட்டேன்
གཡས 56 ---

என்பது மட்டும் போதுமானது'' - என்று எழுதி யுள்ளார்.
மாறியது நெஞ்சம் ! −
மாற்றியது யாரோ?
டி கனிஷாருே சீமாட்டி 1802 ஆம் ஆண்டு வைகாசித் திங்களில் இறைவனடி சென்ருள். இயூஜி னுக்கு இப்பிரிவு மாபெரும் இழப்பு. இந்நாள் தொட்டு இயூஜீனின் மடலெதிலும் கிறித்தவ இயல் புகள் எதுவும். காணப்படவில்லை. அவருடைய ஆன் மீக வாழ்க்கையில் ஒர் அதிருப்தியான திருப்பம் ஏற்பட்டது. இதற்கு தாயிலும் மேலாக அவரில் அன்பு செய்த சீமாட்டி இறந்தது மட்டுமல்லக் காரணம். நாளுக்கு நாள் பணக்கார வர்க்கத்* தினரின் பழக்க வழக்கங்களில் ஊறி, பிரபுக்கள் வாழ்க்கைப்படிகளில் ஏறி வந்ததும் ஒரு காரண மாகும். தம்மைத் தாம் அறியாமலேயே அவர் மாறி வந்தார்.
அவரின் தாயார் அவரைப் பிரான்சுக்கு வரு மாறு நச்சரித்து வந்தாள். டி மசெனெட் குடும்பத் தினருக்கும் ஜோஆன்னிஸ் குடும்பத்தினருக்கு மிடையே இயூஜீன் ஓர் அடைமானப் பொருளானர். இயூஜினும் இதை உணராமலில்லை.
குடும்பப் போட்டிகள், வகுப்புப் போட்டிகள், இலட்சிய மோதல்கள் அனைத்தும் முட்டி மோதின.
سس۔ 57 , ۔۔۔۔۔

Page 49
இயூஜீனின் தந்தை பணத்திற்காகவே திரு மணம் செய்தாரென்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்தது. ஆனல், இப்பொழுது எல்லாம் முடிந் தது. நிரந்தரமான - கொடுமையான ஒரு பிரிவு தோன்றியது.
இயூஜீன் மார்செயி நோக்கிச் சென்ருர், 20 வயது நிறைந்த இளைஞனக, ஆனல், இதயம் உடைந்த இளைஞனகச் சென்ருர்,
தனிமையின் கொடுமை
- ஏழு ஆண்டுகள் தாயைவிட்டுப் பிரிந்த வாழ்வு.
பதினுெரு ஆண்டுகள் தாய்நாட்டைப் பிரிந்த வாழ்வு. ஆர்வமும், ஆசையும், அன்பும் ஒன்று சேர்ந்து தள்ள, தாய்ப்பாசமும் தாய்நாட்டுப் பற் றும் இழுக்க இயூஜீன் மீண்டும் பிரான்சுக்கு வந் தார்.
ஐயகோ! என்ன ஏமாற்றம் மார்செயி துறை
முகத்தில் அவரை வரவேற்க யாரும் வரவில்லை. மகனைப் பிரான்சுக்கு வா, வா என்றழைத்த தாய் கூட வரவேற்க வரவில்லை. இவ்வளவு தான் அவ ளின் புத்திரபாசம்!
நொந்திருந்த இளைஞனின் இதயம் மேலும் வலித்தது.
மார்செயி சுங்கச் சாவடியில் நுழைவுச் சீட் டைக் கொடுத்த பொழுது, அங்கிருந்த அதிகாரி

அவர் பெயரைச் சொல்லி அழைத்தார்.
*இளைய மசெனெட்’ அவ்வளவுதான்.
பரம்பரை பரம்பரையாக வந்த ‘டி’ அடிபட்டு எடுபட்டு விட்டது. கோமானும் இல்லை; பெரு மகனும் இல்லை; பிரபுவுமில்லை. இப்பொழுது அவர் சாதாரண இயூஜீன் மசெனெட். புரட்சியின் விளைவு!
வலித்த இதயம் வீங்கியது.
தந்தையின் நண்பர்கள் சிலருடன் மார்செயிப் பட்டணத்தில் நான்குநாள் தங்கினர். நெஞ்சம் பொறுக்கவில்லை! இதயம் தாங்கவில்லை! பிறந்த ஊராகிய ஏக்ஸ்சுக்கு அவர் பயணமானர்.
அவரைத் துறைமுகத்திற் சந்திக்கச் செல்லா மைக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. பரந்த மனத்துடன் இயூஜீன் அனைத்தையும் ஏற் றுக்கொண்டார். தாய், தங்கை, ஆச்சி, மாமி அனை வரையும் அரவணைத்து முத்தமிட்டார். -
ஆயினும் பிரச்சினைகள் எதுவும் தீரவில்லை. முரணுகப் பல புதிய பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டி இருந்தது. நாட்டின் புரட்சிப் படையில் சேருமாறு விரைவில் அழைப்பு வரும் முன் கூட்டியே ஏங்கினர். :
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் திடீர் முடிவுகள் எடுப்பதில் அவரது தாய் திறமையுடையவள்.
- 59 -

Page 50
இப்பொழுதும் ஒரு முடிவெடுத்தாள். நகரத்தின் எல்லையில் இருந்த தமது தோட்டத்துக்கு மகனை அனுப்பி வைத்தாள். படையில் சேரும் நேரம் வரும் பொழுது பதிலுக்கு வேருெருவரை அனுப்பிவைப்ப தென்று முடிவு. கிராமப்புறத்தில் தனிமையில் இருக்கவேண்டுமென்ருலும் வேறு பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாமென்ற எண்ணத் துடன் இயூஜின் இம் முடிவை ஏற்றுக்கொண்டார். அங்கு வெகு நாட்களுக்கு இருக்கவேண்டி வராது என்ற நினைப்புடன் சென்ழுர்,
அங்கு ஐந்து முழு மாதங்கள் இருக்கவேண்டி வந்தது.
அங்கிருந்து தன் தந்தைக்கு மடல் வரைந்தார்.
"என்னுல் இனியும் பொறுக்க முடியாது, அன் புள்ள அப்பா. தனிமையில் தவிக்கிறேன். மனச் சோர்வால் வாடுகிறேன்.'
“இந்நிலையை முன்கூட்டியே உணர்ந்திருந்தால், பலேர்மோவிலிருந்து வந்தே இருக்க மாட்டேன்’’- என்று தாய்க்கும் அறிவித்தார்.
தனிமை மகனைச் சாகடித்தது. ஆனல், அதை அத்தாய் புரியும் நிலையில் இல்லை. அவள் சுகம் தேடி ருேஸ் ஜோஆன்னிசுடன் உல்லாசப் பயணம் சென்றுவிட்டாள். மகனுக்குக் கேளிக்கை காட்டிக் கொண்டு நிற்க அவளுக்கு நேரமேது? மகனின் நிலையோ, அன்றேல் அவனின் போக்கோ அவளுக்
میستم 60 ... سه

குப் புரியவே இல்லை. மகனுக்கு இளமையும் சுக ! மும் இருந்தன. நகர்ப்புறத்தில் அமைந்த புனித லோறன்ரில் உள்ள வீடு இயூஜீனுக்கு அவரது பேரப்பா கொடுத்தது. வேறென்ன குறை? அனுப விக்க வேண்டியது தானே? இது தாயின் விசித்திர மான சிந்தனை!
கணவனு? கரணியா?
இயூஜினது பேரப்பா இறந்தும் அவரின் சொத் துக்கள் அனைத்தும் ஆள்வோரால் அபகரிக்கப்பட் டன. எவ்வளவு சொத்தை மீட்க முடியுமோ அவ் வளவையும் மீட்கப் பெருமுயற்சி செய்தார்கள், ஜோஆன்னிஸ் குடும்பத்தினர். இம் முயற்சியில் அவர்கள் பெரு வெற்றியையும் ஈட்டினர்கள். ஆணுல், மீட்ட சொத்தை நிர்வகிக்க டி மசெனெட் சீமாட்டி-இயூஜீனின் தாய் - விவாகரத்துச் செய்ய வேண்டியிருந்தது. - கணவன? காணியா? அவளுக்கு இது ஒரு கேள்வியா? சொத்து! ஆகவே, விவாக ரத்து.
இந்த மாற்றங்களாற் பயன் பெறப் போகிற வர்கள் இயூஜினும் நினெற்றுமே. அதாவது தந்தை யிடமிருந்து பெறப்போகும் சொத்துக்களைத் தாயி, டமிருந்து பெறுவார்கள். அவ்வளவுதான்.
ஆனல், பிரபு டி மசெனெட் கடனளியானர். ஏக்ஸ்சுக்கு அவர் திரும்பி வந்தால் கடன் கொடுத்
-. 61 "-س-

Page 51
தவர்கள் உயிர் எடுப்பார்கள். ஆகவே, தூரத்தில் தனிமையை விரும்புவதைவிட வேறு வழி தோன்ற வில்லை அப்பிரபுவுக்கு.
ஜோஆன்னிஸ் குடும்பத்தினர் எவ்வளவு அழ காக இப்படியொரு திட்டத்தைத் தீட்டி அதற்கு இயூஜீனின் தாயைப் பயன்படுத்திக் கொண்டார்கள். தாயையும் தந்தையையும் ஒன்று சேர்க்க இனி முடியாதவாறு பெரு முறிவு ஏற்பட்டுவிட்டது.
வெறுமையின் விளிம்பில்
இயூஜீனின் வாழ்க்கை நாட்டுப்புறத் தனிமை யில் எப்படி அமைந்தது? அவரே ஒருமுறை தன் தந்தைக்கு எழுதிய மடலொன்றில் குறிப்பிட்டுள் ளார். “எங்கள் இருவரிடையே மட்டும் இது இருக் கட்டும். நாளாந்தம் எமது தோட்டத்தைச் சுற்றி வலம்வரும் பொழுது, ஒரு கையில் பொல்லொன்றும் மறுகையில் கைக்குடையுமாக நான் வரும் காட்சி ஒரு நாட்டு நிலக்கிழார் போன்றுதாணிருக்கும்.’
18 ஆம் நூற்ருண்டுப் பிரபு போன்றுதான் அவர் அப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்தார். பிரெஞ்சுப் புரட்சியால் ஏற்பட்ட பெரு மாற்றங் கள் அவரைக் கிஞ்சித்தும் அணுகவில்லைப் போலும். அன்றேல் அவர் புரட்சியின் புதுமைகளை விரும்பாது பழமையின் உயர்வில் உலவ விரும்பினர் போலும். பிரபுவின் மகனல்லவா?
-- 62 صسسه

1803ஆம் ஆண்டின் இறுதியில் ஏக்ஸிலுள்ள ஜோஆன்னிஸின் இல்லம் வந்தார் இயூஜீன். தம் மைச் சூழ நரம்புக் கோளாறுடைய ஒரு கூட்டம் இருந்ததாக அவர் உணர்ந்தார். அவருடைய வார்த் தைகளில்:
தாய் - “அமைதியற்ற நிலையில் மனக் கொந் தளிப்புடன் சீறுவாள். பின்பு சோர்வுற்று அமிழ்ந்து விடுவாள்.'
மாமி - “வெளியுலக ஈடுபாடும், ஊதாரித் தனமும் உடைய இவள் சிலவேளைகளில் சத்தமிட்டு அலறிக் கொண்டு திரிவாள்'
இப்படிப்பட்ட சூழலில் ஓர் இளைஞனின் வாழ்க்கை எப்படி இருக்கும்? இயூஜீன் சமூகக் கழ கங்களில் தன் நேரத்தைப் போக்கலானுர். பல்வேறு கேளிக்கைகளில் அவர் காலத்தைக் கழிக்கலானர். தந்தைக்கு வரைந்த மடலில், “இந்த அழகான - கவர்ச்சியான நகரம் அளிக்கும் இன்பங்கள் அனைத் தையும் அனுபவிக்க நேரம் போதவில்லை. என் தாள் கள் நிரம்பி வழிகின்றன.’’ என்று குறிப்பிட்டார்.
ஆயினும், இளைஞனின் வாழ்க்கையில் இனந் தெரியாத வெறுமை குறுக்கிட்டது. ஏக்ஸின் சமூக வாழ்க்கையில் தன்னை மறக்க முயன்றும் தன் உள் ளத்தின் தாகத்தை மறுக்க முடியவில்லை. காலப் போக்கில் வெறுமை வளர்ந்தது. காலத்தில் தோன் றிய மேலெழுந்தவாரியான சிறு சிறு குறையான
- 63 -

Page 52
'நிறை கள் காலத்தினூடாக மறைந்தன. தான் மகிழ்வாக இருப்பதாகத் தனக்குத் தானே சொல்லி உறுதிப்படுத்த முயன்றர். ஆனல், கொடிய வெறுமை அவ்வப்பொழுது அவரைக் கொன்றது. அந்நேரங்களில் அவர் தனிமையில் ஒதுங்கிக் கொள் வார். சில வேளைகளில் தொடர்ந்து மூன்று வாரங் களுக்குக் கூட தனிமையிற் சென்று, தன்னுள் ஆழ்ந்து விடுவார்.
பெண்வடிவில் பணமா..?
ஒருவேளை திருமணம் வெறுமையை விலக்குமோ? ஜோஆன்னிஸ் குடும்பத்தின் பிடியிலிருந்தாவது நிச்சயமாக விடுவிக்கும். ஆயினும், பழைய பிரபுக் களுக்குரிய பாரம்பரிய முறைப்படிதான் தனது திருமணம் நடைபெறவேண்டுமெனச் சிந்தித்தார். இதுவும் ஒருவகைச் 'சாதிப் புத்திதான்!
திருமணம் அவர் நோக்கில் ஓர் ஒப்பந்தம் தான்; ஒரு வியாபாரந்தான். "எனது இரத்த வரிசை. உனது பணம்.’’ இரண்டும் வேண்டும்.
தந்தை மூன்றடி பாயத் தனயன் ஆறடி பாய்ந் தான்.
‘நான் தேடும் பெண் பெரிய பணக்காரியாக இருக்க வேண்டும்.’’ இயூஜின் தந்தைக்கு எழுதிய மடலில் இவ்வாறுதான் தனது இலட்சிய' மனைவியை வருணித்தார்.
- 64 --

அவரின் பெற்றேரின் அனுபவம் அவரைச் சிந்திக்கவைக்கவில்லை. அவர்கள் தேடி அடைந்த அதே விளைவையே இவரும் நாடினர்.
தேடலிற் கண்ட முதற் பெண்ணையிட்டு இயூஜீன் தமது தந்தைக்கு, “நான் எதிர்பார்த்ததை விட அவளிடம் பணம் கூட இருந்தது. அத்துடன் அழகும் நல்ல உடற்கட்டும் அமைந்தன-’’ என்று பெருமையுடன் எழுதினர்.
கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை. பெண் ணவள் புண்ணியஞ் செய்தவள்! அவள் எலும் புருக்கி இறந்துவிட்டாள். இவர் மனமுடைந்து அனைத்தையும் கைவிட்டார்.
ஆயினும் வலிய வந்தது இன்னென்று நாற்பது ஆயிரத்துடன்! இதைக் கேள்வியுற்ற இயூஜீன் சீறி ஞர். ‘நூற்றைம்பது ஆயிரத்தையாவது நான் தேடுகிறேன்; இங்கு நாற்பதாயிரமாம்! நாற்பதா யிரம்' வந்தது, வந்த வழிச் சென்றது.

Page 53
f0
பதவி மோகம்
“இலட்சியப்" பணம் பெண்ணுடன் வராத தினுல் இயூஜீன் சிசிலிக்குச் சென்ருர், பெரிய பதவியொன்றை நாடி.
பிரான்சில் இருந்து ஆவது ஒன்றுமில்லை. தன்னை மதியாத பிரான்சு, நெப்போலியனின் பிரான்சு, தனது பழம்பெருமைகளைப் பறித்துப் புரட்சியை வள்ர்த்த நாடு.-இந்த நாட்டில் ஏன் இருப்பான்?-இயூஜினின் சிந்தனை இது.
ஆமாம்; புரட்சி பறித்த பிரபுத்துவத்தை மீட்க வேண்டும். பெரிய மனிதனுகச் சமூகத் தில் வாழ வேண்டும். இதுவொன்றே அவரின் குறிக்கோள். s

சிசிலிக்குச் செல்வதற்குப் பயண நுழை வுச்சீட்டுப் பெற்ருக வேண்டும். அதற்குப் பரிசுக்குச் செல்லவேண்டும். கும்பிடப்போன தெய்வம் மீண்டும் குறுக்கே வந்தது. இவ்வேளை தான் அவரது மாமியாரும் பரிசுக்குச் செல்ல எண்ணினுள். துணை வேண்டியிருந்தது அவளுக்கு. அழைப்பை வரவேற்ருர் இயூஜீன்.
பயணம் பலன்தரவில்லை. அதிகாரிகள் நுழைவுச் சீட்டைத் தர மறுத்துவிட்டார்கள். ஏமாற்றத்துடன் ஏக்ஸ் திரும்பினர், இயூஜீன். இளமையின் சிறந்த காலம் பயனற்று, பொரு ளற்று வீணுகக் கழிந்தது.
இவ் வாழ்க்கையால் அவரது அடிப்படை விசுவாசம் ஆட்டங்கொள்ளவில்லை. என்ருலும் ஆன்மீக வளர்ச்சியை அது பெருமளவிற் பாதித் தது. அவரின் தாயை ஆட்டிப்படைத்து வந்த முேஸ்-ஜோ ஆன்னிசுடன் அவர் மத விடயங்க ளில் பலத்த விவாதங்களில் ஈடுபட்டார். இந்த விவாதங்களில் வெற்றி பெறுவதற்காக அவர் பல மறை நூல்களைப் புரட்டலானர்.
அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் தவறி நடக்கவில்லை. கேளிக்கைகளில் தவழ்ந்தாலும், பிரபுக்களோடு உலவ ஆசைப் பட்டாலும் அவர் பாலுறவு விடயத்தில் என் றும் எட்டவே நின்றுள்ளார். "இறைவன் தனது அளவுகடந்த இரக்கத்தினல் என்னை எப்பொ

Page 54
ழுதும் இப்படிப்பட்ட தவறுகளில் இருந்து காப் பாற்றியுள்ளார்' என்று இதுபற்றி அவரே குறிப்பிட்டுள்ளார்.
சில வருடங்களின் பின்னர் இயூஜீன் குருத் துவக் கல்லூரியிற் படித்துக் கொண்டிருக்கும் பொழுது தமது இந்த இளமைக் காலத்தைப் பின்னேக்கிப் பார்த்து மிகவும் துக்கமும் வெட் கமும் பட்டார். 'கடந்த காலக் கொடுமைகளில் உழன்றேன்' என்ருர், 'பன்றிகளின் உணவை உண்டேன்’ என்றும், 'கேவலமான பாவத்தில் மூழ்கினேன்’’ என்றும் அவரே சொல்லிச் சென் ரூர்.
普 铃 米
குரவர் கதை சொல்லி வந்தார். நான் என்னுள் சிந்தித்தேன். இயூஜினைப்பற்றி வந்த முந்திய வரலாறுகளும் இவற்றைச் சொல்ல வில்லையே! இயூஜினின் இவ்வெழுத்துகள் கொண்ட பகுதிகளை அவர்கள் ஒழித்து விட் டார்கள். இதல்ை அவர்கள் இயூஜீனுக்கு நன்மை செய்வதாக எண்ணித் தின்மையே செய் தார்கள்.
தொண்ணுரற்றென்பது புண்ணியவான்களை விட, மனந்திரும்பிய ஒரு பாவியினிமித்தம் விண்ணுலகு மகிழும் என்பது கிறித்துவின் வார்த்தைகள்.
- 68 -

இயூஜின் தமது பெலவினத்தைத் தாழ்மையோடு ஏற்றுக் கொண்டார். தமது குற்றங்குறைகளை அவர் பணிவோடு ஒப்புக் கொண்டார். இங்குதான் அவரது பலமே உண்டு. இங்குதான் அவர் உயர்வும் பண்பும் உண்டு. இங்குதான் அவரது புனிதத்துவ வாழ்வு முண்டு. .ܐܶ -
இந்தப் பேருண்மையைப் புரியாமல், புனி தர்களுடைய வரலாறுகளை எழுதுபவர்கள் அவர்கள் எப்படிப் புனிதர்களானர்களென் பதைக் கோடிட்டுக் காட்டத் தவறி விடுகிருர் கள். முடிவில் நன்கு வெள்ளையடிக்கப்பட்ட ஒரு சமாதிதான் நிற்கும்.
இயூஜீன் தமது பிற்காலத்தில் புரட்சிகர மான உரைகளை வழங்கியுள்ளார். அவற்றைப் புரிந்து கொள்ள இயூஜீனது உண்மையான குடும் பச் சூழல், அவர் வளர்ந்த சூழல், அவரது இளமைக்கால அனுபவங்கள், உள இயல்-சமூகஅரசியல் - இலக்கியச் சூழல்களில் அவரது வளர்ச்சி என்பன எவ்வளவு முக்கியமென்பதை இப்பொழுதுதான் உணருகின்றேன். நாம் வாழும் சூழல் எமது உருவாக்கத்தை எவ்வளவு பாதிக்கின்றது!
சிந்தனை குழம்புகின்றது. குரவர் கதையைத் தொடருகின்ருர்-ஆர்வத்துடன் கேட்கின்றேன்.
景 景 兴(
د س- "69 حس--

Page 55
என்னதான் இருப்பினும் இயூஜீனின் ஆன் மீக வளர்ச்சி குன்றியதுதான். அவரது சிந் தனகள், எதிர்பார்ப்புகள், ஆசைகள் அனைத் தும் மண்ணுலக சுகபோகங்களையே சுற்றி வந் தன. முன்பொருமுறை அரும்பிய குருத்துவ அழைத்தல் கருகி அழிந்துவிட்டது. செப ஆர் வம் அடிபட்டு விட்டது. கிறித்துவுக்கு வெகு தூரத்தில்தான் நின்றர்.
புனித சின்னப்பரைப்போன்று இயூஜீன் ஒரேயடியாக விழுந்தெழும்பவில்லை. மனமாற் றம் இரவோடிரவாக நடக்கவில்லை. படிப்படி யாக-இழுபட்டுப் பறிபட்டு-மெதுவாக ஆனல் மனமுறிவுகளுடன் - அதனல் ஏற்பட்ட நோவு களுடன் நடைபெற்றது, அவரது மனமாற்றம். இதற்கு அடிப்படைக் காரணம், ‘பெருமையும், பிரபுக்களின் போக்கும்’ என்று அவரே சொன் சூறா.

f f
அழைப்பின் குரல் கேட்டார்
1807 இல் இயூஜீன் ஏக்ஸில் சிறைப்பட்டோ ருக்கு சேவை செய்வதில் ஈடுபட்டார். ஆர்வம் அளவுகடந்தாலும் ஆணவம் அகலவில்லை.
சிறைப்பட்டோர் மத வாழ்க்கையில் ஏனே தானே என்று வாழ்ந்தார்கள்.இதைக் கண்ணுற்ற இயூஜீன் நிலையை மாற்றத் திடீர்த் திட்டம் தீட்டினர். பலிப் பூசையில் பங்குகொள்ளும் சிறைக்கைதிகளுக்கு மேலதிகமாக "சூப்' (soup) வழங்கப்படும். திட்டத்தை அவரே முன் நின்று செயற்படுத்தினர். அவரோடு சேவை செய்ய வந்தோர் அவரின் திட்டத்தை ஆதரிக்கவில்லை. முரணுக இத்திட்டத்தின் பலவீனத்தையும் சுட்
-- ' 71 سی۔

Page 56
டிக் காட்டினர்கள். இயூஜீன் முற்ருக விலகிக் கொண்டார். ‘விட்டால் குடுமி, சிரைத்தால் மொட்டை'யென்றே இயூஜீன் செயற்பட விரும் பினர் போலும்!
அனுபவமும், தெளிவான விசுவாசமும் பிற் காலத்தில் அவரை ஆழமாகச் சிந்திக்க வைத் தன. அதன் பின்னரே அவர் மனிதனை மதிக் கலானர்.
இயூஜீனது திட்டங்களும் படிப்படியாகப் பக்குவப்பட்டன. ஒருபக்கம் இழந்த அழைத் தலை அருட்டியது. மறுபக்கம் பிரபுக்களின் போக்குகளை விரும்பியது.
எதிலும் உயர் தரத்தையே - நாடினர். ஆன்மீகத் துறையிலும் உலகப் புகழ்பெற்ற குர வர் டுக்கிளே அவர்களையே நாடினர்.
மார்செயியில் அருள் திரு மகி அடிகளை அடிக்கடி சந்தித்தார். 'மிகத் தெளிவான நாள்களில் மத்தியான வெய்யில் போன்று உமது, அழைத்தல் ஒளிக்கின்றதே' என்று இயூஜினுக்கு நம்பிக்கையூட்ட அக்குருவானவர் நம்பிக்கையு டன் சொன்னுர், அது போதும். தெரிவு தெளிவானது,
ஆண்டவன் அழைத்தலை இனியும் தட்டிக் கழிக்கவோ, அன்றேல் தடுத்து நிறுத்தவோ,
- 72 -

முடியவில்லை. பரிசில் உள்ள. புனித சள்ப்பிஸ் குருமடத்தில் சேருவதற்கு ஆயத்தமானுர்,
மகனின் மனதைப் புரியாத - புரிய முனை யாத - புரிய முனையாமல் எட்ட இருந்த தாய் இன்னும் பெரிய இடத்துப் பெண்ணுென்றை தனது ஒரே மகனுக்குத் தேடி வந்தாள்.
இந்நிலையில் இயூஜீன் தனது விருப்பத்தைத் தெரிவித்து அன்னையின் அனுமதியைப் பெற பல முயற்சிகள் செய்ய வேண்டியதாயிற்று. இறுதியில் ஒரு ‘போய்ப் பார்த்து வா'வுடன் இயூஜீன் தாயிடமிருந்து விடைபெற்ருர், அவ ளுடைய நம்பிக்கை நலிந்து மெலிந்து சிதைந்து அழிந்தது. இயூஜீனின் அழைத்தல் தனது குடும் பத்துக்கேற்பட்ட ஒரு கேடாகவே அவள் இறுதி வரை எண்ணினுள்.
அவளுக்கு இறுதிவரை புரியாத புதிராக இருந்தது என்ன? தான் ஏன் குருவாக வர விரும் பினர் என்பதற்கு இயூஜீன் தந்த காரணம். *விசுவாசத்துக்குச் செத்துவிட்ட வறிய மக்களிடையே புத்துணர்வை ஊட்டிவிடவே" அவர் குருவாக விரும் பிஞர். ஏன் வறிய மக்கள் என்பதுதான் அப் பணக்கார சீமாட்டிக்குப் புரியாமல் இருந்தது. சின்ன வயதில் 'சேரிப் பிரபுவாக இருப்பேன்’ என்று சொன்ன இயூஜீனின் சொற்கள் அவளுக்கு ஞாபகம் வந்தன. “சரி, போனல் போகட்டும்! மகனின் உயர்குடிப் பிறப்பு படியாத பாமரமக்களை
- 73 -

Page 57
யெல்லாம் அடக்கி ஆளத் துணைபுரியும்" என்று அவள் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
நூலைப் போலச் சேலை; தாயைப்போலப் பிள்ளை’ என்பார்கள். சீமாட்டிக்குப் பிறந்த கோமகன் தாயைவிட கொஞ்சம்தான் உயர்ந் தார். இயூஜினும் தனது உயர் குடிப் பிறப் பால் உயர்வு மனப்பான்மையுடன்தான் வறி யோருக்கு சேவை செய்ய-தம்மை அர்ப்பணிக்க முன் வந்தார். ஆயினும், புனித சள்ப்பிஸ் குருத்துவக் கல்லூரியில் இவ்வெண்ணம் சிறிது சிறிதாக அழிந்தது. குருத்துவக் கல்லூரியில் குலப்பெருமை குலைந்தது.
குருத்துவக் கல்லூரியிலும்
குடிப்பெருமையா?
1808 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்கள் 12 ஆம் நாள் தனது 26 ஆவது வயதில் இயூஜீன் குருத் துவக் கல்லூரியில் கால் வைத்தார். அவரோடு அவரது குணங்களும் குருத்துவக் கல்லூரியில் நுழைந்தன. அவரது குணங்கள் மேலதிகாரிக ளுக்கும் பிரச்சினைகளைக் கொடுக்காமல் இருந் திருக்கா, அக்காலக் குருத்துவக் கல்லூரியில் இயூஜின் ஒரு தனிப்பிறவியாகவே தோன்றியி ருப்பார்.
- 74 -

குருத்துவக் கல்லூரியில். மாணவ வாழ்க் கையில் முழுக்க முழுக்க ஈடுபட அவருக்கு அதிக காலம் எடுக்கவில்லை. பிரான்சின் நாற் றிசையிலுமிருந்து, பலதரப்பட்ட சமூக நிலை களிலுமிருந்து வந்த அறிவுள்ள மாணவர்கள் பலர் அக்குருத்துவக் கல்லூரியிற் கல்வி கற்ருர் கள். பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகக் குருத் துவக் கல்லூரியிலும் பல புரட்சிகள் ஏற்பட் டன. புரட்சிக்கு முன் குருமாணவர்களிடையேயும் பல வகுப்புகளும் பகுப்புகளும் இருந்தன. பிரபுக்கள் என்றும், சாதாரணமாணவர் என்றும், அநாதை மாணவரென்றும் பிரிவுகள் இருந்தன. படிப்பின் முடிவிலும் குருமாணவரிடையே உயர்ந்தோர் தாழ்ந் தோரென்ற பாகுபாடு இருந்தது.
景 景 兴
குரவர் கதை சொல்லிக் கொண்டிருந்தார்.
* கத்தோலிக்க நாடாகிய பிரான்சிலும் இப்படியொரு நிலையா!' என்று என் சிந்தனை அலைகள் ஒன்றன் பின் ஒன்ருக எழுந்தன.
பிரிக்க முடியாத கிறித்துவின் ஒரே குருத்து வத்திலும் வகுப்பு வாதமும் வகுப்புப் போராட்ட UpLDm?
'அன்பில் ஒன்றுபட்டு வாழும் வாழ்க்கை யால் எனக்குச் சான்று பகருங்கள்’’ என்று கூறிய கிறித்துவின் ஆணையை சிரமேற் கொண்ட
அவரது சீடர்களாகிய குருமார் சான்று பகர்ந்த
- 75. -

Page 58
இலட்சணம் இதுவா? இந்நிலையை மாற்றி யமைக்க ஓர் இரத்தப் புரட்சி வேண்டியதா? சமூக சூழல் மாறினல் தான் குரு குலமும் மாறுமா?
ஏன், இன்று மட்டும் இப்பாகுபாடுகள் இல்லையா? எமது குருமாரிடையேயும் சரி, எமது துறவிகளிடையேயும் சரி சாதிப்பாகுபாடு, வறி யோர் பணக்காரர் பாகுபாடு, பதவிப் பாகு பாடு, செல்வாக்குப் பாகுபாடு, உயர்வு தாழ்வு மனப்பான்மைகள், படித்தவர் படியாதார் என்ற ஏற்றத் தாழ்வுகள் என்பன இல்லையா? ஒரு வேலைக்கு ஒரு வரை நியமிக்கும் பொழுது அவரின் தகுதியை விட, அவ்ரது சாதி, செல் வாக்கு முதலானவை கூடுதலாகக் கவனிக்கப் படுகின்றனவே! இதுவா கிறித்துவின் குருத்து வத்துக்கு சான்று பகரும் அழகு?
எமது நாட்டில் இனப்பாகுபாடு வளர்ந்து கொண்டே போகின்றது. இதை யாரும் மறுக்க முடியாது. இப்பாகுபாட்டைக் குரவர்களும் துறவிகளும் வளர்க்கவில்லையா? இந்த இரு இனங் களிடையேயும் இன்று இந்த நாட்டில் ஒற்றுமை யைக் கொண்டுவரக் கூடியவர்கள் கத்தோலிக்க மக் களே. அங்கு முன்னணியில் நின்று செயற்பட வேண் டியவர்கள் கத்தோலிக்க குருமாரும் துறவிகளுமே. ஆணுல், இதுவரை அவர்கள் ஏன் இப்பணியைச் செய்ய முன் வரவில்லை? ஒருவேளை அவர்களும் இப்பாகுபாட்டை வளர்க்க விரும்புகிருரர்களோ? வேலியே பயிரை மேய்கின்றதா?.
- 76 -

குரவர் குழப்புகிருர் என் சிந்தனையை,
*என்ன! என் கதை ‘போர்’ அடிக்குதோ ?*
'இல்லை, சுவாமி. நீங்கள் சொன்ன செய்தி என்னைச் சிந்திக்க வைத்தது. என் நாட்டின் இன்றைய நிலை ஞாபகத்துக்கு வந்து என் மனதை வாட்டியது' என்றேன்.
ஆயினும் இந்த உரையாடலை வளர்க்க விரும்பாது அவரின் கதையைத் தொடருமாறு கேட்டேன்,
* 兴
வறுமைப் பாதையிலே . . .
புரட்சியின் பின்பு புனித சள்ப்பிஸ் குருத் துவக் கல்லூரியின் முதலாவது முதல்வர் அருள் திரு எமெரி அவர்கள், புரட்சியின் போக்கை நன்கு புரிந்து கொண்டவர், அனைத்து மாணவர் களையும் ஒரே மாதிரியாகவே நடாத்தினர். இயூஜீன் இவரையும் இவரின் போக்கையும் ஏற் றுக்கொண்டார். அருள் திரு டுக்குளோ அடி களை இயூஜின் தமது ஆன்ம குருவாக ஏற்றுக் கொண்டார். இவ்விருவரின் துணையோடு இயூ ஜீனின் உருவாக்கல் உருவானது. படிப்படி யாகத் தன்னை மாற்றியமைத்துத் தம்மையே தாம் வெல்ல முயன்ருர், இயூஜீன்.
سست 77 سے

Page 59
வெனிசில் இருக்கும் பொழுது சில கடுமை யான கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தவர், இயூஜீன். குருத்துவக் கல்லூரியில் இப்பொழுது மேலும் கடுமையான கட்டுப்பாடுகளைத் தாமே தமக்கு விதித்துக் கொண்டார். இங்கு துவக்கிய இப் பழக்கங்கள் அவரது மரணப்படுக்கையீருக வளர்ந்தன. அவரது தபச் செயல்களை இங்கு பட்டியல் போட வேண்டிய அவசியமில்லை. சுருங்கக் கூறின், ஒராண்டுக்கு 120 நாட்கள் உண்ணுவிரதமிருந்தார்.
இப்படிப்பட்ட பழக்கங்களின் அடிப்படை யிலேயே வறுமையில் வாழ்ந்தார்; எளிமையில் வளர்ந்தார். உண்மையிலேயே படிப்படியாக அவர் ஒரு சேரித் தலைவனுகவே மாறி வந்தார். கடன் பெற்ற கட்டில் ஒரு மேசை, மூன்று பழைய கதிரைகள் அவரது அறையை அழகு படுத்தியன. W
ஒருமுறை பவுண் சங்கிலி ஒன்று அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. முன்பா யிருந்திருந்தால் இப்பரிசைப் பெற அவர் துள் ளிக் குதித்திருப்பார். ஆனல், இப்பொழுதோ - அவர் அதைப் பெற மறுத்துவிட்டார். அவருக்கு அது வேண்டியிருக்கவில்லை. இந்த உடலை மறைக் கவும், உடுக்கவும், அழகு செய்யவும் மக்கள் ஏன் பெருமளவில் நேரத்தைச் செலவிடுகிருர்க ளென்பது அவருக்கு இப்பொழுது புரியவில்லை! குடும்பச் சொத்துக்களால் பயனென்ன? புனித லோறன்ரில் உள்ள அவருக்கு உரிமையான வீடு ‘ஒரு கற்குவியல்' என்று இயூஜீன் தம் தாய்க்கு எழுதினர்.
- 78 -

தாய்க்கு எதுவுமே விளங்கவில்லை. ‘போய்ப் பார்த்து வா’ என்றுதானே அவள் தன் மகனை அனுப்பினுள். ஆனல், அது இப்படித் திடீரெனத் தலைகீழாக மாறுமென்று அவள் கனவு கூடக் காணவில்லை. மூன்று முழுத் திங்கள்கள் - இயூஜீனுக்கு முதற்பட்டம் கொடுத்தாயிற்று!
தாயின் கனவுகள் சிதறின.
மகளின் திருமணம் தாயைப் பொறுத்த அளவில் ஒரு வெற்றியே. ஆகவே, மகனுக்கும் அப்படியொரு நல்ல வாழ்க்கை அமையுமென அவள் ஆர்வத்துடள் எதிர்பார்த்தாள். ஆனல், இயூஜீன் உடுத்திய புதிய துறவியின் உடையும், அண்மையில் பெற்ற குருத்துவத்தின் ஆரம்பப் பட்டமும் அவரை அவளிடமிருந்து எங்கோ எடுத்துச் சென்றன.
‘நான் வெகுவாகக் கவலையும் ஏக்கமும் அடைகின்றேன்’ என்று தாய் தன் தனயனுக்கு மடல் வரைந்தாள்.
ஈராண்டுகளுக்கு எவ்வித உறுதியான (Մ գ வும் எடுப்பதில்லையென்றல்லவா அவர் தாய்க்கு வாக்குக் கொடுத்திருந்தார்? .
தந்தைக்கு ஏன் இதை அறிவிக்கவில்லை?
இயூஜீன் தந்தைக்கு அறிவிக்க முயற்சி யெடுத்தார். பயனளிக்கவில்லை. 1810 ஆம் ஆண்டுதான் தந்தைக்குத் தெரிய வந்தது, மகன் குருத்துவக் கல்லூரியிலென்று.
- 79 -

Page 60
12
அரும்பியது,
புதிய மொட்டொன்று!
அருள் திரு டுக்குளோ தன் மாணவர்களின் உருவாக்கலில் வெகு அக்கறையெடுத்தார். புற ஒறுத்தல்களில் இயூஜீன் இன்னும் ஆழமாக வளரஅத்தால் அகத்திலும் தன்னை ஒறுத்து மேலெழ அவர் துணை செய்தார். இயூஜீன் தன் உடன் மாணவர்களுடன் கலந்து பழகி 'தான்’’ என்ற நிலையைச் சிறிது சிறிதாக தவிர்த்துக் கொண்டார். தாழ்மை, அவர் வாழ்க்கையில் வேரூன்றத் துவங் கியது.
படிப்படியாகத் தன்னலத்தைத் தகர்த்துக் குருத்துவத்தை நோக்கி வளர்ந்தார், இயூஜீன். இம்முயற்சி மேலும் மேலும் அவரைப் படைத்தோ னிடம் அழைத்துச் சென்றது. “கடவுளின் கொடை

களை மனிதன் அறிந்தால்!..' என்றே அவர் அடிக்கடி சொல்லுவார்.
1809 ஆம் ஆண்டின் இறுதிமாதத்தில் அவர் உபதியாக்கோளுக்கப்பட்டார்.
புரட்சியின் விளைவாகக் குருமார் தொகை வெகுவாகக் குறைந்தது. ஆகவே, குறுகிய காலப் பயிற்சியின் பின்னர் பல குருமாணவர்களைத் திரு நிலைப்படுத்தினர். இவ்வுண்மையையும், காலத்தின் போக்கு எதிர்பார்த்தது எதையென்பதையும் நன் குணர்ந்த இயூஜின் தமது உருவாக்கலில் தாமே கவனம் செலுத்தலானுர். இதே காரணத்துக்காக குருவாகி விட அவர் அவசரப்படவுமில்லை.
தாம் ஏக்சுக்குத் திரும்பியதும் அங்குள்ள அனைத்துக் கண்களும் குருவான பிரபுவின் மக னையே வட்டமிடுமென்று அவர் நன்கறிவார். இம் முறை தமது வாழ்க்கையில் குறையேதுமிருக்கக் கூடாதென்பது அவரது இதய ஆசை. தமது பெயர், குடும்பப் புகழ் முதலானவற்றை அவர் முழுமை யாகத் துறக்கவில்லை. ஆயினும், அவற்றைவிட மறைப் புகழ், வறிய மக்களின் நலம் முதலிய யவற்றில் இப்பொழுது கூடிய பற்று அவரி டம் குடிகொண்டன என்பதை மறுப்பதற்குமில்லை.
புனிய சள்ப்பிஸ் குருமனையில், புதிய நண்பர் கள் இயூஜினுக்குக் கிடைத்தார்கள். அவர்களுள்,
டி பொ(b)னல்ட், டெனிஸ் அவ்வி(ர), டி குரலான், டி சொலாய், டி வோ(f)ர்பா(b)ன்-ஜான்சன்
6 - 8 -

Page 61
ஆகியோர் குறிப்பிடப்பட வேண்டியோர். இறுதியா கச்சொல்லப்பட்டவர் இயூஜீனின் சொந்த ஊரவர். இவர்தான் பின்பு புனித பாலத்துவ சபையைத் துவக்கியவர். இவர் குரு மாணவனக இருந்த பொழுதே குருமடத்தில் ஒரு குழுவை உருவாக்கி, அவர்களுக்குக் கிறித்தவ சேவை ஆர்வத்தை ஒரு வகை “வெறி'யுடன் ஊட்டினர். அவர் வாய் திறந் தால் சீனவைப் பற்றிய பேச்சாகவே இருக்கும். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திருமுழுக்குப் பெறக் காத்திருக்கிருர்கள் என்பதே அவரின் இள மைத் துடிப்பின் ஏக்கம். இயூஜீன் போன்ற மாண வர்கள் இவரது ஆர்வத்தில் அடிபட்டு எடுபட்டுப் போவார்கள்.
புனித 'சதியோ ?
இதே வேளை, அதே குருமடத்தில் வெகு இரக சியமாக இன்னேர் குழு இயங்கி வந்தது. அவர் கள் தம்மை “ஏஏ’’ (AA) - (அப்போஸ்தொலிக்க சங்கம்) - என்று அழைத்துக் கொண்டார்கள். நன்ருகப் பரீட்சிக்கப்பட்ட மிக நல்ல முன்மாதிரி கையான மாணவர்களையே இச்சங்கத்தில் சேர்த்துக் கொள்வார்கள். சட்டதிட்டங்களுக்குப் பிரமா ணிக்கமாக வாழ்ந்து குருமடக் குழுவினர் அனைவ ருக்கும் உயிரூட்டும் ஒரு கருக் குழுவாக இயங்க வேண்டுமென்பதே இவ்வியக்கத்தின் அடிப்படை நோக்கமாகும்.
82

1810 ஆம் ஆண்டு ஆனித் திங்களிலேயே இயூஜீன் தியாக்கோன் பட்டம் பெற்றிருந்தும், அவ்வாண்டின் இறுதித் திங்கள் ஈருக இவரை மேற்கூறிய சங்கம் ஓர் அங்கத்தவராகச் சேர்த்துக் கொள்ளவில்லை. குருமடத்துக்குள் ஒரு குழுவாக இயங்கிய இச்சங்கம் அக்குருமடத்துக் கட்டுப்பாடு களுக்கு மேலாக ஒரு கடுமையான அமைப்புக்குள் இயங்கியதென்பதற்கு இயூஜினின் அங்கத்துவம் ஓர் எடுத்துக்காட்டாகும்.
பொன்முடியும்
முள்முடியும் மோதின
நெப்போலியன் திருச்சபையைத் தாக்கினன். இரகசியமாகக் குருமனையில் இயங்கிய “ஏஏ’’ சங்கம் மன்றத்துக்கு வந்தது. பரிசுத்த தந்தையை (பாப்பரசர்) எதிர்த்த மன்னர் மன்னனின் திட்டங் களை மண்ணுக்க முன்வந்தது, இம் மாணவர் இயக் கம். அருள் திரு எமெரியின் தலைமையில் குரு மடமே திரண்டெழுந்தது. உரிமை உணர்வு உந்த எழுந்த மசெனெட்டுக்கு விசேட அழைப்பு வந்தது. அவரில் அவரது முதல்வருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.
1809 ஆம் ஆண்டின் கோடைக்காலம். திருத் தந்தையின் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பு பிரெஞ் சுப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. உடனேயே மன்னர் மன்னன் திருத்தந்தையால் திருச்சபையி
- 83 -

Page 62
லிருந்து விலக்கப்பட்டான். இச்செய்தியைக் குருமட முதல்வருக்கு அதிகாரபூர்வமாக அறிவித்தது, உரோமாபுரி. பொதுமக்களிடையே இச் செய்தியைப் பரப்பும் துணிகரமான செயலுக்கு இயூஜினே அழைக்
கப்பட்டார்.
திருத்தந்தை ஏழாம் பத்திநாதரை நெப்போ லியன் சவோனவில் சிறைவைத்தபின்பும், “ஏஏ’ சங்கம் ஏதோ ஒரு வழியாக அவருடன் தொடர்பு கொண்டது. மன்னர் மன்னன் இதையறியாமல் இல்லை. ஆனல், இது எங்ங்ணம் நடைபெறுகின்ற தென்பதை மன்னனுக்கு எடுத்து விளக்க யாராலும் முடியவில்லை.
புதிய பேரரசின் தலைநகரான பரிசில் திருத் தந்தையின் இல்லிடத்தை அமைத்து, தன் வழித் தோன்றல் உரோமாபுரியில் உலகியல் ஆட்சியை நிறுவவேண்டுமென்று பெரிய கனவு கண்டான், நெப்போலியன் பொ(b)ண்பாட்-செயினின் (Seine) புதிய சீசர். திருத்தந்தையைத் தன்னருகே வைத்து, புற ஆட்சியையும் அக ஆட்சியையும் தன் ஆட்சி யின் கீழ் ஒன்றுபடுத்தலாமென்று ஆசைப்பட்டான், பேராசை கொண்ட பெருமன்னன்.
உரோமாபுரியில் ஆட்சி செய்த கருதினல் மாரைப் படிப்படியாகப் பரிசுக்குக் கொண்டு வரச் செய்தான், நெப்போலியன். வந்தவர்கள் புதிய சூழலில் ஊறிப் பழகிய பின்னர், அவர்களே - அந்தக் கருதினல் மார்களே - திருத்தந்தையைத்
- 84 -

தம் வசப்படுத்திவிடுவார்கள். என்று அந்த மாமன்னன் கனவு கண்டான்! ஆனல், நடந்தது வேறு. நெப்போலியன் தான் பறித்த குழியில் தானே விழுந்து குழம்பினன். உரோமாபுரியில் இருந்து வந்த கருதினுல்கள் தாம் நாடுகடத்தப்பட் டவர்கள் என்றே எண்ணினர்கள். மன்னன் நிய மித்த ஆயர்களை, சவோணுவில் சிறையிருந்த திருத் தந்தை ஏற்றுக்கொள்ளவுமில்லை, உறுதி செய்யவு மில்லை. திருத்தந்தையின் அனுமதியின்றி எந்த நிய மனங்களும் செல்லுபடியாகா. இதனுல் இருபத் திரண்டு மறைமாவட்டங்கள் ஆயர்களின்றி அெ திப்பட்டன.
இதற்கோர் விடைகாண, ஏமாற்றமடைந்த மன்னன் ஒரு நடுநிலைக் குழுவை நியமித்தான்.
இத்தருணத்திலேயே பொறுப்பும் முக்கியமு மான வேலையொன்று இயூஜினுக்குக் கொடுக்கப் பட்டது.
உரோமாபுரிக் கருதினல்களிடையே இயூஜீன் நம்பிக்கையான gpCD5 தூதரானர். அவர் இத்தாலி நாட்டையும், இத்தாலி மொழியையும் நன்கறிந் திருந்ததுடன் இத்தாலிய உளஇயலையும் புரிந்து கொண்டவர்.
- குருமடக் குழுவின் ஒவ்வொரு அமர்வின் பின்
னும், குழுவின் தீர்மானங்களை ஒவ்வொரு கருதி
னலுக்கும் இயூஜீன் எழுத்தில் எடுத்துச் சென்றர்.
அவரை எவராலும் நிறுத்த முடியாது. காவலர்
- 85 -

Page 63
களின் கடுமையான கண்காணிப்புக்குட்பட்டாலும், இயூஜீன் எப்படியாவது வீட்டுக்கு வீடு சென்று கருதினல்களைச் சந்தித்தார்; செய்திகள் சொன்னர்; அவர்களை உற்சாகப்படுத்தினர். அச்சமயத்துக்கு இப்பணி பெரும்பணியென்றே சொல்ல வேண்டும். அதே வேளை இவர் புரிந்த இப்பணி பிற்காலத் துக்குப் பயன்பெறக்கூடிய நல்ல உறவுகளையும் உருவாக்கிக் கொடுத்தது என்பதையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும்.
1810 ஆம் ஆண்டு. மன்னதி மன்னனிடமிருந்து மீண்டுமோர் தாக்கல். மன்னன் தன் மனைவி ஜோசவி (t)ன்னை விவாகரத்துச் செய்து, ஒஸ்றியா வின் மாறி லூயிசாவைத் திருமணம் செய்து கொண்டான். முறையற்ற் இத்திருமணச் சடங் கிற்கு, வேண்டுமென்றே பதின்மூன்று கருதினுல்கள் சிறப்பிக்கச் செல்லவில்லை. மன்னனின் வெந்த புண் னில் இச் செயல் வேல் பாய்ச்சியது. பதின்மூன்று கருதினுல்களையும் சுட்டுத் தள்ளுமாறு மன்னன் கட்டளை கொடுத்தான். அரசனின் அவசரப் புத் தியை ஆறுதற்படுத்தினர், வவுச்சே என்ற அவரது ஆலோசகருள் ஒருவர். ஆயினும், அரசனின் ஆத் திரம் அடங்குவதாக இல்லை. ஆகவே, கருதினல் களின் பட்டங்களையும் பதவிகளையும் களையுமாறு கட்டளையிட்டான். அத்துடன் அவர்களின் சொத் துக்கள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டான், ஆணவங் கொண்ட அரசன். கருதினுல்களை ஒரு

சதக் காசுக்கும் வழியற்றவர்களாக்கினன். ஆட்சி யைக் கையில் வைத்திருப்பதால் எதையும் செய்து விடலாமென்று எண்ணிய சின்னப் புத்தி கொண்ட் அந்த மர்மன்னன்!
இயூஜீனுடைய வாலிப இரத்தம் துடித்தது. இளமை நீதிக்காக நின்றது. வறுமையின் எல்லைக் குத் தள்ளப்பட்ட கருதினல்கள் வாழ்க்கைக்கு வேண்டிய அத்தியாவசிய தேவைகளைக் கொண்டு வாழ ஆவன செய்ய முற்பட்டார், இயூஜீன்.
நெப்போலியனின் நெஞ்சில் வஞ்சம் வளர்ந் தது. புனித சள்பிஸ் குருத்துவக் கல்லூரி அவனது வஞ்சக எண்ணத்துக்குப் பலியானது. அக் கல்லூரி முதல்வர் அருள் திரு எமெரி அவர்களை இராஜி ணுமாச் செய்யுமாறு உத்தரவிட்டான். திருத் தந்தை ஏழாம் பத்திநாதருடன் அவர் நெருங்கிய இரகசியத் தொடர்பு கொண்டுள்ளார் என்பது மன்னனின் நெடுநாளைய சந்தேகம். குருத்துவக் கல்லூரியின் பேராசிரியர்களும் விலக வேண்டி வந் தது.
கல்லூரி முதல்வர் குரவர் எமெரி, கல்லூரியின் விடுதலை இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆயினும், அவர் அடங்கிவிடவில்லை. சில தினங் களுக்குப் பின்னர் பரிஸ் சென்று முன்னைய குருத் துவக் கல்லூரியின் அயலிற் குடிபுகுந்தார். இங் கிருந்து கொண்டு புனித சள்பிஸ் குருத்துவக் கல் லூரிக்கும் தலைமை கொடுத்து, வழிகாட்டியாக நின்று, உருவாக்கும் சக்தியாக வாழ்ந்தார்.
- 87 -

Page 64
மன்னனும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. ஆயர்களை நியமிக்கப் புதிய குழுவொன்றைக் கூட்டு வித்தான். திருச்சபையின் பொதுச் சங்கமொன் றைக் கூட்டுவிக்கவே அவன் உள்ளம் ஆசைப்பட் -g.
குரவர் எமெரியும் மன்னனின் திட்டங்களை அறிந்து அதற்கெதிராகச் செயற்பட்டு வந்தார். அவரது இரவு விளக்கு இரவுபூராக எரிந்தது என்று தான் சொல்லவேண்டும். நித்திரை கொள்ளும் நேரமா அது?
மன்னனின் திட்டம் வெற்றி கண்டது. 1811ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் 17ஆம் நாள் புதிதாக நியமித்த குழுவின் பொதுக்கூட்டம் ரியூலெறி என்னுமிடத்தில் கூடியது. ஆனல், நடந்த தென்ன? கூட்டத்தில் பங்கு கொண்டவர்களுள் அருள் திரு எமெரியும் ஒருவர். அதுமட்டுமல்ல; அவர் இரண்டு நீண்ட மணித்தியாலங்களுக்கு நெப்போலியனுடன் சொற்போர் நடத்தவும் செய்தார். அனைவரும் வியப் புறும் வண்ணம், எதிர்பாராத வேளையில், கடுஞ் சொற்களில் உண்மைகளை உரைத்தார். சொற்பொழி வின் பின் அவ்வறையை விட்டு வெளியே வந்த பொழுது மயங்கி விழுந்தார்!
வைத்தியர் வந்தனர். நம்பிக்கை இல்லையென் முர்கள். இரவு பகலாக அருகில் இருந்து தன் குரு
வுக்கு பணிவிடை புரிந்தார், இயூஜீன். புனித சள்பிஸ் குருத்துவக் கல்லூரியையும் திருச்சபையையும் மிக
- 88 -

வும் நேசித்த அவரின் இதயத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று இயூஜின் வேண்டுகோள் விடுத்தார். சத்திரசிகிச்சை நிபுணன் லேனெக் குரவருக்குச் சத்திரசிகிச்சை கெய்தார். இயூஜீன் அப்பொழுதும் அவர் அருகிலேயே இருந்தார்.
தமது இதயத்தையும் பாதுகாக்க வேண்டு மென்று தன் வழி வந்த பின்னேர் கேட்பார்க ளென்று அப்பொழுது இயூஜீன் நினைக்கக் காரண மேதுமில்லையல்லவா?
நெப்போலியனின் கனவும் நனவானது. பொதுச் சங்கமும் கூடியது. ஆனல், (நெப்போலி யனின் வெற்றிகளில் எல்லாம் ஒர் ஆனல்’ என் பதும் கலந்துதான் இருக்கும் போலும்!) மன்னன் எதிர்பார்த்த அளவுக்குச் சங்கம் வெற்றி கொடுக் கவில்லை. ஆகவே, அச்சங்கம் செல்லுபடியாகாது என்று கூட்டுவித்தவனே கலைத்தும் விட்டான்.
புனித சள்பிஸ் குருத்துவக் கல்லூரி ஆசிரியப் பெரு மக்கள் தன்னைத் தாக்கிவருவதை அறிந்த அர சன், அவர்கள் அனைவரையும் கல்லூரியில் இருந்து நீக்கினன். v
கல்லூரி ஆசிரியப் பெருமக்கள் நெப்போலியனை விட ஒரு படி முன்னேயே சென்று சிந்தித்துச் செயற்பட்டார்கள். நெப்போலியனின் முடிவுகளை யும், தீர்வுகளையும் முன்கூட்டியே சிந்தையில் தெரிந்ததினுல், தங்களைத் தொடர்ந்து குருத்துவக் கல்லூரியை நிர்வகிக்க வேண்டியவர்களை ஏற்கனவே
- 89 -

Page 65
நியமித்து விட்டார்கள். அதுவும் ஒரு புரட்சிகர மான நியமனம்! குருத்துவக் கல்லூரி மாணவர்க ளுள் சிறப்பும், அறிவும், ஆற்றலும், துடிப்பும், துணிவும் கொண்ட ஒருவனேயே கல்லூரி முதல்வ ராக்கினர்.
யார் அந்த மாணவன்?
மாணவரே
கல்லூரி முதல்வரசனுர் !
இயூஜின் டி மசெனெட்தான் அம்மானவன்! புனித சள் பிஸ் குருத்துவக் கல்லூரியின் முதல்வி ராகவும் இயக்குனராகவும், கல்லூரிப் பேராசிரியர் குழுவினுலேயே ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப் பட்டு நியமனம் பெற்றர். புரட்சியின் மத்தியிற் பூத்தது ஒரு பூ, !
இம்முடிவு இளைஞன் இயூஜினே மகிழ்ச்சி வெள் ளத்தில் ஆழ்த்தியது. ஆயினும், அவர் தம்மை இழக்கவில்ல்ை. புரட்சிச் சூழலில், மன்னனின்" எதிர்ப்பில், இப்புதிய பதவி எவ்வளவு கனமானது, பொறுப்பானது, ஆபத்தானது என்பதை அவர் நன்குணர்ந்தார். சவாலாக வந்த இப்பொறுப்பை சமாளிக்க அவர் அப்பதவியை ஏற்றுக்கொண்டார். குருத்துவத்தையும் நாடினுர்,
ஆணுல், யார் இயூஜீனே திருநிலைப்படுத்துவது? இயூஜீனப் பொறுத்தமட்டில் இது ஒரு பெருங் கேள்வி.
- 90 -

"குருவோடு குடும்பப் பரம்பரை முடியட்டும்
y

Page 66

கருதினுலும் பேராயருமான மோரி அவர்க ளால் இப்புனிதச் சடங்கு நிச்சயமாக நிறைவேற் றப்படக்கூடாது. பரிசுத்த தந்தையினல் அவர் தள்ள்ளிவைக்கப்பட்டவர், மாமன்னனல் ஏற்றி வைக்கப்பட்டவர். தமது பதவிக்காக கொள்கை யில் கோழையான, இலட்சியமற்ற இதயங் கொண் டவரான ஒருவரது துணிவற்ற கரங்களால் புனித அபிஷேகமா? இயூஜீன் இதை அடியோடு வெறுத் தார். அவரால் இதை நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.
அப்படியானல் திருச்சடங்கை நடத்துவது u Ji trip
தமது பழைய குடும்ப நண்பரும் ஏமியன்சின் ஆயருமான ஆயர் டெமாண்டொல் அவர்களை அழைத்தார், இயூஜீன். ஆயரும் மகிழ்வுடன் சம்ம தம் தந்தார். 1811 ஆம் ஆண்டின் இறுதித் திங் கள் 21ஆம் நாள் இயூஜீன் டி மசெனெட் அவர்கள் திருநிலைப்படுத்தப்பட்டார். n
关 笼 ※
வரலாற்றைக் கதையாக்கிச் சொல்லிவந்த குரவர் இப்பொழுது பல்லெல்லாம் தெரியச் சிரித்
தார். வயதின் முதுமை ரேகைகள் முகத்தில் சுருங்கி விரிந்தன - மலர்ந்து சிரித்தன.
"நேரம் போனதே தெரியவில்லை' என்ருர்,
-- Il 9 س---س

Page 67
'உண்மை"ெசுவாமீ" கதை சுவையாக மட்டு மல்ல; சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருக்கி
*என்றேன் ظه றது: றன:
‘சரி, கொஞ்ச நேரம் சிந்தியும். நான் போய்ச் சாப்பாட்டிற்குச் சொல்லிவிட்டு வருகிறேன்' என்று கூறிச் சென்ருர்,
போகும் பொழுது “கோவில் அப்பக்கத்தில் உள்ளது' என்று எதிர்ப்புறத்தைச் சுட்டிக் காட் ஞர். •
குறிப்பை உணர்ந்து கொண்டேன். ஆகவே, அந்தக் கோவிலுக்குப் போனேன். அங்கு முழந்தா ளிட்டு, ஒரு முறை கோவிலைச் சுற்றி கண்களை ஓடவிட்டேன். சிறிய கோவில். துப்புரவாகவும், அழகாகவும் வைத்திருந்தார்கள். பலிப்பீடத்துக்கு நேரே ஒரு பெரிய சிலுவை; அச் சிலுவையில் தொங்கியது, கிறித்துவின் உருவம். மரண வேத னையை அனுபவிக்கும் காட்சியை சிற்பி அழகுறச் செதுக்கியிருந்தான்.
குரவர் கதையில் சொன்னவையெல்லாம் மீண் டும் என் மனத்திரையில் ஓடின. ஒவ்வொரு வரி' யும் என்னிடம் பல சிந்தனைகளைச் சிதறிவிட்டது.
சிதறிய சிந்தனைகள் . . .
தவற்றை யார் செய்தாலும் அது தவறுதானே? மன்னன் செய்தால் மட்டும் அது குற்றமற்றுப்
م ۔ 92 ----

போய்விடுமா? ஆட்சி தன் கையில் என்பதனல் ஆள்வோர் எதையும் எப்படியும் எப்பொழுதும் செய்யலாமா? அது கொடிய அரசு மக்களைக் கொல்லுமரசு. இதை உணர்ந்தார்கள், புனித சள்பிஸ் குருத்துவக் கல்லூரி முதல்வர்; அவரோடு கூட்டாகச் சேவை செய்த பேராசிரியர்கள்; அவர் களின் கூட்டுருவாக்கலில் வளர்ந்த மாணவர்கள் ! விளைவைப் பாராது மன்னனையும் மன்னனின் திட் டங்களையும் அவர்கள் எதிர்த்தார்கள்! தாக்கினர் கள் பதவியையும், பெயரையும், புகழையும், செல் வாக்கையும் கிஞ்சித்தும் மதியாது, உண்மைக்காக - நீதிக்காக - கொள்கைக்காக-கிறித்துவுக்காகத் தங்கள் உயிரையும் திரணமாகக் கருதி சேவையில் ஈடுபட்ட அத்தியாகச் செம்மல்களை, கிறித்துவின் உண்மையான சீடர்களை நினைத்து இறைவனுக்கு நன்றி நல்கினேன்! அவர்களை நினைத்து வீர வணக்கம் செலுத்தினேன் !
“இவ் வீரர்களை உலகிற்கு அளித்த இறைவா! உமக்கு நன்றி! என் இதயத்தில் நன்றி!'
*”...?இன்று و 6 ونهائي "
என் நினைவுகள் என் நாடு வந்தன.
எமது நாட்டில் இன்று பல பிரச்சினைகள் தலை தூக்கியுள்ளன: ஒரு சில தவிர்க்க முடி யாதவை. வேறுபல பல்வேறு கட்சிகளால் அவ் வப்பொழுது சுயநலங் கருதி உருவாக்கப்பட்
டவை. ஆகவே, இவை தீர்த்து வைக்கப்படலாம்; தீர்த்து வைக்கப்பட வ்ேணடும்.

Page 68
தீர்த்துவைக்கத் திருச்சபை முன் வருகின் றதா? ஆள்வோர் யாராக இருந்தாலும், என்ன செய்தாலும் நாம் அனைத்துக்கும் "ஆமா’ப் போடும் ஆசாமிகளாகி விட்டோமே! நாம் செள கரியமாக வாழ்ந்தால் போதும் என்று ‘நிம்மதி யாக இருக்க விளைகின்ருேம். நாட்டிற் பிரச் சினையென்றதும் புனித சள் பிஸ் குருத்துவ்க் கல்லூரி முதல்வர் இரவு பகலாக ஓய்வின்றி, நித்திரையின்றி, கடுமையாக உழைத்தார். கார ணம்: "நித்திரை கொள்ளும் சூழலில் இல்லை’ - GTair (psi.
இன்று ஈழத்துத் திருச்சபை எப்படி நிம் மதியாக நித்திரை கொள்ளுகின்றது? நாட்டில் அநீதியான சட்டங்கள்" நிறைவேற்றப்படுகின்
றன. -
மலைநாட்டில் மக்கள் பசியால் பிணமாகிருர் கள். இந்நாட்டுக்கு உழைத்த-உழைக்கும் கரங் கள் பிச்சையெடுக்கவும் முடியாமல் தவிக்கின் றன. தொழிற் சங்கங்கள் சமத்துவமும் சமதர் மமும் பேசி, செல்வத்திற் செல்வாக்குடன் வாழுகின்றன. வறியோர்க்கு நற்செய்தி நவில வந்த திருச்சபை எங்கே? ۔
ஓரினம் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசும் ஒரே காரணத்துக்காக ஒதுக்கப்பட்டு, படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது. திருச் சபை இதுவரை என்ன செய்தது?

ஓரினத்தில் பிறந்த கார்ணத்துக்காக குற் றம் செய்யாத வாலிபர்கள் பலர் விசாரணை யின்றி மறியலில் வைத்து வதைக்கப்படுகின் ருர் கள். வாலிப இயக்கங்கள் பலவற்றை நடாத்தி, அனைத்துலக மாநாடுகளில் நீதிக்காக வாதிட வேண்டுமென்று சொல்லி வரும் திருச்சபை ஈழ நாட்டில் இதுவரை செய்ததென்ன? திருச்சபை யின் வாலிப இயக்கங்கள் எங்கே?
தரப்படுத்தல் என்ற அளவு கோலால் பல இளைஞர்களை, ஆற்றல் மிகுந்த வாலிபர்களை முன்னேறவிடாது, வேண்டுமென்றே தரைப் படுத்தி, அவர்களின்-இந்நாட்டின் - எதிர்கால வாழ்வை இருளவைத்துவிட்டார்களே! நீதியி னிமித்தம் பசிதாபமுள்ள திருச்சபை இதுவரை வாயே திறக்கவில்லையே! ஏன்?
ஆள்வோருடன் ஆடினுல்தான் பதவிகளை வகிக்கலாம்! பட்டங்களைப் பெறலாம்! செல் வாக்குடன் வாழலாம்! வெளிநாடுகளுக்குப் போய் அனைத்துலகப் பிரச்சினைகளைத் தீர்க்க வழிவகைகளைச் சொல்லிக் கொடுக்கலாம்! வெளி நாட்டுப் பணத்தை வருவித்து உள்நாட்டில் பிச்சை' கொடுக்கலாம் ! நிலையங்களையும் அமைப்புகளையும் உருவாக்கி அங்கு முடி சூடா மன்னர்களாக ஆட்சி செய்து தம்மையும் தம் மைச் சார்ந்தவர்களையும் வளர்க்கலாம்! இடித் திடித்துக் கோவில்களைக் கட்டலாம்! பின்னர் அவற்றை வெள்ளையடிக்கலாம்!
- 95 -

Page 69
இதுவா கிறித்துவின் நற்செய்தி நவிலும் கொள்கை? இதற்குத்தான திருச்சபை?
“ஓரினம் மட்டுமல்ல, பல இனங்கள் அழிந் தால்தான் என்ன? ஆண்டவன் சித்தம் அதுவல் லவா? அதை நாம் மாற்ற முடியுமா?’ என்று வேதாந்தம் பேசி எம்மையே நாம் மறக்க முனை கின்ருேமா? அல்லது மனச்சாட்சியை - அந்த ஆண்டவன் குரலொலியை - மறுக்க முனைகின் G3(g? DIT ?
எது உண்மை? எது அழைத்தல்? எது கிறித் தவ வாழ்வு..?
உள்ளம் குழம்புகின்றது !.
மதம் என்ற புனிதமான போர்வையில் அமைப்புக்கள், கோவில்கள்,கற்பனைகள், சட்டங் கள், சடங்குகள் என்று மலைபோல இவற்றையே வளர்த்து, இவற்றல் காப்பாற்றி வளர்க்கப் படவேண்டிய கிறித்துவின் ம னிதாபிமானக் கொள்கைகளைக் கோட்டை விட்டுவிட்டோமே!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் இப்படிப்பட்ட ஒரு சூழலில் தானே கிறித்து தோன்றினர்? இதே பிரச்சினைகளைத்தானே அவர் நேரடியாகச் சந்தித்தார்? சட்ட-சடங்கு மனப்பான்மையை அவர் வன்மையாகக் கண் டித்தார். போலியான விசுவாசத்தை அவர் வேரோடு அறுக்கச் சொன்னர். ஆணுல் இன்று நடப்பதென்ன..?
- 96 -

மன்னுதிமன்னனின் முறைகெட்ட திருமணத் துக்குச் சமூகமளிக்காத ஆயர்கள் போன்று பல ஆயர்கள் இன்றும் தோன்றவேண்டும். புனித சள் பிஸ் குருத்துவக் கல்லூரி முதல்வர் போன்று பல குருக்கள் இன்று வாழவேண்டும். அக்குருத்து வக் கல்லூரியில் பேராசிரியர்களாக இருந்த ஏனையத் துறவற ஆசிரியர்கள் போன்று எமது துறவிகள் மாறவேண்டும். அக்கல்லூரி மாணவர் போன்று எமது கத்தோலிக்க மக்கள் துணிவோடு-கொள்கைப் பற்றேடு வளரவேண்டும்.
நெஞ்சில் உறுதி தோன்றுகிறது. கோவிலில் இருந்த என்னைக் குரவர் அழைக் கின்றர். அவர் பின்னலேயே மெளனமாக உணவகத்துக்குச் செல்லுகின்றேன். அங்கு வந்த மற்றக் குரு மார்களுக்கு நான் அறிமுகம் செய் யப்படுகின்றேன். மலர்ந்த முகங்களுடன் கை குலுக்கல்கள்! என் சுகத்துக்காக அவர்களும் நானும் நல்ல திராட்சை இரசம் அருந்துகின்ருேம். உண்மையிலேயே சுகமாகத்தான் இருக்கின்றது. முதிய குரவர் தன்னருகில் என்னை உட்கார வைத்திருக்கின்றர். விருந்தோம்பல் நன்ருகவே இருக்கின்றது.
உணவு சுவைக்கின்றது. ஈழ வழநாடு பற்றி சில வினக்கள். சுருக்கமான விடைகள். பிரான் சில் அதுவரை நான் பெற்ற அனுபவங்கள். இவை பற்றி சில கேள்விகள். பதில்கள். இவற் றுடன் உணவும் முடிகின்றது.
7 - - 97

Page 70
அவ்வறையைவிட்டு வெளியே வந்து அன்னை மேரியின் சிலைக்குமுன்னுல் அன்னையவளை வாழ்த் திப் பாடுகின்ருேம். அதன் பின் முதிய குரவர் என்னைப் பொதறைக்கு அழைத்துச் செல்லு கின்ருர், இருவரும் அமர்கின்ருேம். கதை தொடர்கின்றது.
--- 98 س--

f3
அனுபவம் பு திது
இயூஜீன் திருநிலைப்படுத்தப்பட்ட அன்று அவ ரின் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. ‘நான் ஒரு குரு; ஒருவர் குருவாக இருந்தால்தான் இதன் பொருள் புரியும். இந்த எண்ணமே அன்பும் நன் றியும் நிறைந்த ஓர் உலகிற்கு என்னை எடுத்துச் செல்லுகின்றது! அதுவும் ‘எப்படிப்பட்ட பாவி நான்’ என்ற சிந்தனை உதிக்கும் பொழுது அந்த அன்பும் நன்றியும் எல்லை கடந்து நிற்கின்றன’’ என்று அன்று மாலை அவரே தமது கைப்பட எழுதி யுள்ளார்.
念 - 1S
1.
3.
AA
உண்ட களை தீர்க்கவோ, தின்றது சமிக்கவோ, உறைகுளிர் போக்கவோ, தூங்காமற் கதை கேட்

Page 71
கவோ. நானறியேன்! மீண்டும் “கோப்பி சுடச் சுட வந்தது. ஒரு மாதிரியாகச் சுவைத்தது! உடலுக்குச் சுகம் தந்தது. ஒரு கணம் என் சிந் தனை எங்கோ படர்ந்தது. s
இந்த அன்பைத்தான் வள்ளுவனும் “அன்பிற் குமுண்டோ அடைக்குந் தாழ்?' என்று தமது குறலில் யாத்துள்ளார் !
இயூஜீனின் பிற்கால வாழ்க்கையைப் பார்க் கும் பொழுது சில உண்மைகள் தெரிகின்றன. இந்த அன்புதான் மிக ஆழமாக அவருள்ளத்தில் விதைந்து, வளர்ந்து, மலர்ந்து, காய்த்து, கணித் திருக்க வேண்டும்! இந்த அன்புதான் அவருக்குத் துணிச்சலையும் வீரத்தையும் கொடுத்திருக்க வேண் டும்! இந்த அன்புதான் உயிரையே தியாகம் செய் யுமளவிற்கு அவருக்குத் தியாக உள்ளமொன்றை உருவாக்கிக் கொடுத்திருக்க வேண்டும் !
‘ஒருவன் தன் நண்பனுக்காகத் தன்னுயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு வேறில்லை' என்று இயேசு தமது அன்புச் சீடர்களுக்கு, இறுதிப் பிரியாவிடை உணவின்பொழுது அன்பொழுகச் சொன்ன உள்ளமுருக்கும் பொன்மொழிகள் என் ஞாபகத்துக்கு வந்தன. அம்மகான் சொன்னதைச் செயலிற்காட்டினர்.
‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு’’ ۔-
-என்று தானே. வள்ளுவத்
- 100 -

தமிழ்மகனும் அன்பிற்கு இலக்கணம் வகுத்தான். இவ்விலக்கணத்துக்கு இலக்கியமாக வாழ முனைந் தார், இயூஜின் 1.
மேற்கொண்டு என் சிந்தனையை வளர விட வில்லை அந்த முதிய குரவர். அவர் கதையைத் தொடரலானுர்:
关 兴 兴
ஆயர் டெமாண்டொல் இளங்குரவர் இயூஜீ னைத் தமது மறைமாவட்டத்திலேயே சேவைக்கு அமர்த்த ஆசைப்பட்டார். தமது மறைமாவட் டத்து முதல்வராகப் (Vicar General) பணிபுரியும் படி அழைத்தார், இயூஜீன. ஆனல், அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார், முன்பெல்லாம் பதவிகளைத் தேடிச் சென்ற அந்தப் பிரபு. சிறிய வயது, குறுகிய அனுபவம், புனித சள் பிஸின்பாற் கொண்ட அன் பும் ஈடுபாடும், வறியோருக்கு வாழ்வளிக்க வேண்டுமென்ற துடிப்பு, அநாதைகள் மேற் கொண்ட அநுதாபம் ஆகிய இவை அனைத்தும் அவரை வேறெங்கோ அழைத்தன.
இலட்சியப் போக்கு இயூஜினை ஈர்க்க, புனித சள்பிஸ் குருத்துவக் கல்லூரியில் காலாண்டு காலம் கடமை புரிந்தார். செய்வேனென்று சொன்ன சில முக்கிய பணிகளைச் செய்து முடித்தார். புதிய பாடத்திட்டமொன்றை வகுத்தளித்தார். ஆகவே, பள்ளியாண்டின் முடிவில் அவர் “விடுதலை பெற்று ஐப்பசித் திங்களில் புருெவான்சுக்குந் திரும்பினர்.
- 101 -

Page 72
சொந்த ஊரில் வரவேற்பில்லே
எந்தத் தீர்க்கதரிசியும் தன் சொந்த நாட்டில் வரவேற்கப்படுவதில்லை. இயூஜீனின் சொந்த மறை மாவட்டம் ஏக்ஸ். அம்மறைமாவட்டப் பேராயர் ஜோவ்வி(ff)றே மனதார விரும்பவிலலை, புதிய குர வரின் வருகையை. ‘இவரைவிட வேருேர் குரவரை மறைமாவட்டம் பயன்படுத்திக் கொள்ளலாம். தலைக்கணங் கொண்ட, உணர்ச்சி வசப்பட்ட, ஒழுக் கக் கட்டுப்பாடுடையவன் என்று பெயர் பெற்ற ஒரு டி மசெனெட்டாக இம்மறைமாவட்டத்துக்கு வரவேண்டும்? பேராயர் இருதலைக் கொள்ளியெறும் பானுர்,
பேராயரின் பெரும் பிரச்சினையை வந்தவரே தீர்த்துவைத்தார். தாம் விரும்பும் வேலையைப் பேராயரிடம் தாமே கேட்டார். எந்த ஒரு பங் கிற்கும் தம்மைப் பொறுப்பாக்க வேண்டாமென் ருர், பொறுப்புள்ள குருப்பதவி எதுவுமே தமக் கல்லவென்றார். நன்கு உருவாக்கி அமைக்கப்பட்ட எந்தவொரு அமைப்பிலும் தமக்கென்ன வேலை யென்றர். ‘புடிங்’ மேலுள்ள முந்திரிகை வத்தலா கவோ, கேக் மேலுள்ள “ஜசிங்காகவோ தாம் அமர விரும்பவில்லையென்ருர்,
தாழ்மையும் எளிமையுமான ஒரு சிறு பணி யைத் தமக்களிக்குமாறு பணிவுடன் வேண்டினர் முன்னைநாட் பிரபு.
- 102 -

இவனை என்ன செய்வதென்று செய்வதறியாது செயலற்றிருந்த பேராயருக்கு, அறையினுள் அடை பட்டு மூச்சடங்கிக் கிடந்தவனுக்குக் கதவு திறந்து விட்டாற் போன்ற விடுதலை உணர்வுதான் ஏற்
பட்டது.
பேராயர் பெருமகிழ்வுடன் வரவேற்ருர், புதிய வரின் சிறிய வேண்டுகோளை. 'இப்படிப்பட்டவனை மறைவில் வைப்பதுதான் புத்திசாலித்தனம்’ என்று முடிவு செய்தார், அதிகாரமும் வெளியுலக உறவு களுமே முக்கியமெனக் கருதிய அந்த ராஜதந்திரி.
புரட்சிப் பொறிகள்
தமது ஆற்றலையும், உள்ளக்கிடக்கையையும், இலட்சியத்தையும் வெளிக்காட்ட சுதந்திரமாகத் திரிய வேண்டுமென்பது குரவர் டி மசெனெட்டின் ஆசை. இது அவருக்கு - அவரைப்போன்ருேர்க்கு வேண்டியிருந்தது. கட்டிவைத்த பங்குபோன்ற அமைப்புக்களில் ‘பூசாரி வேலை செய்வதால் பய னேது? அதிகாரத்தையும் ஆட்சியையும் சுமுகமாக நடாத்துவதற்கு அடிவருடி, அடிபணிந்து அலுவல கங்களில் அமர்வதில் அர்த்தமென்ன? இது அவரது சிந்தனை.
புரட்சியின் முன்னைய காலத்திற் பிறந்து வளர்ந்து அக்காலத்தின் போக்குகளில் ஊறித் திளைத்தாலும், அவை புரட்சியின் பின்னைய காலத் துக்கு ஒவ்வாதென்பதை இயூஜீன் நன்கறிந்தித்த்ச்
- 103 -

Page 73
தார். அனைத்துத் துறையிலும்- எல்லாக் கோணங் களிலும் இது ஒரு புதிய யுகம். ஆனல், ஏகாதி பத்தியத்தில் ஊறிவிட்ட திருச்சபையோ கம்பீர மாக எழுந்து நின்று ஒரு சிறு வட்டத்தினருக்கு மாத்திரம் சிரம் தாழ்த்திச் சேவை செய்தது. பெரும்பான்மையினரான பொதுமக்களிடையே திருச்சபை, எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை-ஏற்படுத்த முனையவில்லை. முள்முடியைப் போதிக்க வேண்டிய திருச்சபை, பொன்முடி தரித் தோருக்குப் பாவாடை விரித்தது. பாடுபட்ட கிறீத்து வின் கரடு முரடான சிலுவையைச் சுமக்கவேண்டிய திருச்சபை பொன்னுலும் தங்கத்தாலும் செய்த அழகிய சிலுவைகள் கொண்டு தம்மை அழகுபடுத்தி யோரைச் சுமந்தது! VA
எக்ஸ்சுக்கு வந்த இயூஜீன் தமது தாய்வீட்டி லேயே குடியிருந்தார். ஆனல், பல புதிய நியதி கள் வகுக்கப்பட்டன; அநாவசியமான சந்திப்புகள் இல்லை; மேலெழுந்தவாரியான கூட்டங்கள் இல்லை; விசேட உணவு வகைகள் இல்லை. இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதணுல் தனது தாயைச் சுற்றி, வரும் ஈய்க் கூட்டம் தன்னை ஓர் அநாகரிகமான வன் என்று கருதினுலும் அதைத் தூசென்றும் துரும்பென்றும் கருதி வாழத் தலைப்பட்டார், பிரபு மகன். அவர்களும் அவர்களது வாழ்க்கை முறையும் தமது சேவைக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருக் கக் கூடாதென்பதே இயூஜீன் நோக்கமாகும்.
இந்த ஒத்துவராத் தனித்துவம் எங்கே செல் கிறதோ என்பது அவரைச் சூழ இருந்தோரின்
- : 0 l| حصحه

ஆவல். அவர்களின் அந்த ஆவல் நீடித்துநின்று ஏங்க வேண்டியிருக்கவில்லை.
அவ்வாண்டின் தபசு காலம்; குரவர் இயூஜீனின் பேருரைகள் புரட்சிப் பொறிகளாகத் தெறித்தன. ஏக்ஸின் பணக்காரவர்க்கம் மிரண்டு சீறியது! உயர் குலக் குடிகள் வெகுண்டு வெறுத்தன! பிரபுக்கள் வட்டம் ஏமாற்றமடைந்து எதிர்த்தது! சொன்னது தான் சொன்னர்; போயும் போயும் நகரின் தொழி லாளர் கூட்டத்துக்கா அப்பேருரைகள் முழுவதை யும் வழங்கவேண்டும்? பஃனயால் விழுந்த பிரபுக் களை, இயூஜீனின் புரட்சிப் பொறிகள் காளையாகி ஏறி மிதித்தன! அப்படி என்னதான் இந்த இயூஜீன் டி மசெனெட் சொல்லியிருப்பார்?
*ஏக்ஸ்நகர வேலைக்காரப் பெண்களே! உலகின் கண் நீவீர் யார்? உங்களுக்கு ஊதியம் தருவோ ருக்கு நீங்கள் அடிமைகளாகிக் கூலிவேலை செய்யும் கூலிப்பட்டாளம். வெறுக்கப்படுபவர்கள். அநீதி யாக நடந்தப்படுபவர்கள். உங்களிடம் அதிக வேலை வாங்குவோராலேயே அவமதிக்கப்படுபவர்கள்: தவ றுதலாக நடத்தப்படுபவர்கள். அவர்கள் விட் டெறியும் ஈனப்பணத்துக்கு நீங்கள் மாரடிப்பதஞல், உங்களை அநீதியாக நடத்துவது தங்கள் உரிமை யென்று அவர்கள் கருதுகிருர்கள்.'
வலிமையும் உறுதியும் கொண்ட இயூஜீனது போக்கு அவரது 'சாதி’யினின்று அவரை விலக்கி வைத்தது. பிரபுக்கள் குடும்பத்திற் பிறந்து வளர்ந்த இயூஜீன் வறியோரின் குருவானர். ஆயினும், அவர்
- 105 --.

Page 74
முழுக்கமுழுக்க ஒரு மனிதனுகவே வாழ்ந்தார். அவ்வப்பொழுது அவர் எரிமலையாகி வெடித்த துண்டு.அவர் இரவோடிரவாகப் புனிதனுகி விட வில்லையென்பதற்கு இதுவுமோர் சான்று.
ஏக்ஸ் நகரத் தொழிலாளப் பெண்களுக்கு அவர் தொடர்ந்துரைத்தார்:
“விசுவாசத்தின் முன் நீங்கள் யார்? சொல்லு கிறேன் கேளுங்கள்! நீங்கள் கிறித்துவுக்குச் சொந்த மான - ஆனல், மிக்க வறிய மக்கள்; அவரது நொந்த மக்கள்: அவரது துரதிஷ்டமான மக்கள்; அவரது துன்புறும் மக்கள்; நீங்கள்.அவரின் நோயுற்ற புண்பட்ட மக்கள். எனது சகோதரிகளே, எனதன் புச் சகோதரிகளே, எனது மதிப்புக்குரிய சகோதரி களே, துரதிஷ்டத்தினல் துன்புறுவோரே, எனக்குச் செவிமடுங்கள்!
‘நீங்கள் இறைவனின் மக்கள். கிறித்துவின் சகோதரிகள். அவரது முடிவில்லா ஆட்சிக்கு உரிமையாளர்.’’ என்று, திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறித்தவனின் உரிமைகளையும் உணர்த் தினர், இயூஜீன். மாற்றமேதுமின்றி, நம்பிக்கை யிழிந்து செத்துக் கிடந்த மக்களுக்கு இயூஜினின் குரல் புத்துணர்வு தந்தது; அவரது சொற்கள் புது வாழ்வைக் காட்டியன. நம்பிக்கையூட்டியது. புதுப் பாதை காட்டியது.
குரவர் டி மசெனெட்டின் தபசு கால மறை யுரைகள் புதியன. புருெவன்சாலின் வறியோர்க்கே
- 06 -

அவரது உரைகள் வழங்கப்பட்டாலும், அவை அச் சமுதாயச் சுற்ருடலையும் மீறி அதற்கு அப்பாலி
ருந்தவர்களையும் பாதித்தது. இயூஜினைத் தமது
சமூகத்தின் யூதாஸ் என்று எண்ணிய பெரியோரும்
அவரை அண்டி வந்தனர். மரியாதை தந்தனர்.
இப்பணி துவக்கிய சில தினங்களுள் இயூஜீனின் கண்கள் இன்னேர் திசையிலும் நோக்கின. ஏகா திபத்தியக் கல்லூரிகளிற் கல்வி கற்று வந்த ஆயி ரக்கணக்கான வாலிபர்கள் கிறித்தவக் கல்வியைப் பெறவில்லை. அவர்களிடம் இயூஜீன் சென்ருர், ஆனல், அவர்களோ இருகரங்கூப்பி இவரை வர வேற்கவில்லை. அவ்வமைப்புக்களின் அதிகாரத்தில் இருந்தோர் இயூஜீனை அலட்சியப் படுத்தினர்; சில வேளைகளில் வெறுத்து எதிர்த்தனர்; ஒதுக்கித் தள் ளினர்.
- 107 -

Page 75
f4
கிறித்தவ இளைஞர் கழகம்
இயூஜீன் விரைவாகவும் - ஆனல், வெகு ஜாக் கிரதையாகவும் ஒரு வாலிப இயக்கத்தைத் துவக் கினர். இப்படிப்பட்ட இயக்கங்கள் ஆபத்தானவை யென்று எண்ணி, சக்கரவர்த்தியின் காவலர் அவற்றை மோந்து பிடித்து அழித்தனர். இதனல் இயூஜீனின் வாலிப இயக்கம் ஒரு பக்திச் சய்ை உருவில் வளர்ந்து, தொழிலாளியின் மகனெருவன் பிரபுவின் மகனுெருவனைச் சந்திக்க வாய்ப்பளித்தது. செருப்புத் தைப்பவன் மகனும் நீதிபதியின் மகனும் உரையாட வழிவகுத்தது, இந்த இளைஞர் இயக்கம்.
இதேவேளை சிறைப்பட்டோரைச் சந்திக்கச் சென்ழுர், இயூஜீன். எங்கெங்கு தேவையோ அங் கங்கே இயூஜீனின் சேவை, தேவையை நிறைவு

செய்யச் சென்றது. சேவையை விஞ்சித் தேவை நிற்குமென்பது வெள்ளிடமலை.
சக்கரவர்த்தியின் பெயரும் புகழும் மங்கியது. எதிரிகள் முன்னேற நெப்போலியன்ரின் எல்லைகள் குறுகின. பரிசுத்த தந்தை, கருதினல்கள், இன்னும் நூற்றுக்கதிகமான போர்க் கைதிகள் ஆகியோரை நெப்போலியன் புருெவான்சில் தள்ளினன்.
இயூஜீன் டி மசெனெட் இவர்களுக்கு உதவ ஓடினர். மரணத்தின் வாயிலில் நின்றேரிடமிருந்து ஒருவகை விஷக் காய்ச்சல் (typhus) இயூஜீனப் பற்றிக் கொண்டது. இயூஜீனின் நிலை நம்பிக்கை யற்று போன பொழுது, அவரின் இயக்கத்து வாலி பர் இறையருளை நம்பிக்கையுடன் ஒருமனதாக இறைஞ்சினர். நாட்பலிப் பூசைகள் அவரின் உடல் நலத்துக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டன.
1814 ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் 3 ஆம் நாள் வாலிப இயக்கத்தினர் தமது இயக்குநரின் நற்சுகம் கண்டு நன்றி நல்கினர்; விழாவெடுத்தனர்.
இதே நாளில் பதினெட்டாம் லூயி மன்னன் பெயரோடும் புகழோடும்"கம்பீரமாக பரிசில் நுழைந் தான் என்ற செய்தி மன்னன் ஆட்சிக்குக் காத்தி ருந்தோர் உள்ளத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த் தியது.
“மன்னர் நீடுழி வாழ்க 1 கொடுங்கோலன் வீழ்க' - தோல்வியுற்ற சக்கரவர்த்தி எப்பாவுக்குப்
一 109一

Page 76
போகும் வழியில் கேட்டவை, இவை. நெப்போலி யனின் ஆட்சி முடிந்தது. மன்னர் வந்துவிட்டார்! புருெவான்சில் ஒரே மகிழ்ச்சியும் கொண்டாட்ட மும் ஒரு வகை “வெறி' பிடித்து மக்கள் ஆடினர்.
திருப்பணிகள் தத்தம் மறைவிடங்களிலிருந்து வெளிவரலாம். மக்கள் முன் பணிகள் மலரலாம்.
காத்திருந்த குரவர் டி மசெனெட் துள்ளியெ ழுந்தார். காலத்தை வீணுக்க அவர் விரும்பவில்லை. அவரது இயக்கம் பக்திச்சபை என்ற போர்வையை வீசியெறிந்தது. “கிறித்தவ இளைஞர் கழகம்' என்ற பெயருடன் பெருகி வளர்ந்தது!
புதிய கழகம் எவரையும் கண்மூடிக்கொண்டு உறுப்பினராகச் சேர்க்கவில்லை. ஒவ்வொரு இளைஞ னும் கவனமாகப் பேட்டி காணப்பட்டான் - ‘உரைத்துப் பார்க்கப்பட்டான் ! தகுதியுள்ளவன் என்று கணிக்கப்பட்டதும், கழகத்தின் கடுமையான 544 சட்டங்களையும் கடைப்பிடித்தொழுக உறுதி பூண்டபின் கழகத்தின் அங்கந்தவனுக்கப்பட்டான்.
பல கணிகள் விலக்கப்பட்டவையென இச் சட டங்கள் சொல்லின. ஆபத்தான நண்பர்கள், பிசாசின் கோவில்களான நாடக மன்றங்கள், அநா வசியமானதும் குழப்புவதுமான கூட்ட நாட்டங் கள், அத்துமீறிய சுவைமிகு உணவு வகைகள், கேளிக்கை விருந்துகள், உலோகாயத நாட்டங்கள்இத்தகையவை விலக்கப்பட்ட கணிகளாகின.
விலக்கப்பட்ட கனிகள் இருந்தால் உண்ணக் கூடிய கனிகளும் இல்லாமலா போகும்? நாட்பலிப்
- 110 -

பூசை, கால்மணி நல்வாசினை, நற்கருணைச் சந் திப்பு, வாரத்துக்கொருமுறையாவது ஒரு செப மாலை, இருவாரங்களுக்கொருமுறை பாவமன்னிப் புச் சடங்கு என்பன அவை. ஞாயிறுகள் முழுமை யாகப் பக்திக் காரியங்களிற் கழிந்தன. செய்ய வேண்டிய ஒவ்வொன்றும் மிக நுணுக்கமாக எழுதி வைக்கப்பட்டன.
慧威
y
爷、
兴
கொட்டாஞ்சேனையில் நான் துவக்கிய கழ கத்தை ஏனே இவ்வேளையில் நினைத்துக் கொண் டேன். இப்படி 544 சட்டங்களை நான் உருவாக்கி யிருந்தால் 544 மணித்துளிகளாவது என் கழகம் வாழ்ந்திருக்குமா என்பது சந்தேகந்தான். இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட சட்டங்களை விரும்பு வார்களா? ஆணுல், ஒன்றுமட்டும் உண்மை. ஒன் றைச் சாதிக்கவேண்டுமாயின் சட்டதிட்டங்கள், கடுமையான அமைப்பு என்பன நிச்சயமாக வேண் டும். "சுதந்திரம், சுதந்திரம்' என்று சத்தமிடும் பொதுவுடமையினர் ஆட்சியில் உள்ள கட்டுப்பாடும், அடிமைத்தனமும் வேறெந்த அமைப்பிலும் இல்லை யென்பது பலரின் அனுபவம். "துப்பாக்கி முனை’’ யில் அவர்கள் செயற்படுகிருர்கள் என்பது உல கறிந்த உண்மை. அதேவேளை ‘சட்டங்களும் கட்டுப் பாடுகளும் மனிதனுக்கே ஒழிய, மனிதன் அவற்றுக் காகவல்ல என்ற கிறீத்துவின் கொள்கை, மனிதாபி மானக் கொள்கை என்பதை மறந்து விடல் கூடாது.
- 111 -

Page 77
இன்றைய சிந்தனையை வைத்து அன்றைய செயல்களை அளப்பது முறையல்ல. அன்றைய சூழ் நிலைக்கு, முறைகெட்ட வாழ்க்கையில் வளர்ந்து வந்த சமுதாயத்துக்கு அப்படிப்பட்ட சட்டங்கள் வேண்டியிருந்தன. அவ்வியக்கம் வெற்றி கண்டதே இதற்குச் சான்ருகும்.
景 关
நகரமே குரவரின் புதிய இயக்கத்தைப்பற்றிப் பேசியது. அவ்வியக்கம் 300 அங்கத்தவர்களுடன் பூத்துக் குலுங்கியது. இளைஞர் தங்கள் இயக்கு நரைப்பற்றி நன்றகவே சொன்னர்கள்: உற்சாகம் பொங்க அவரை வாழ்த்தினர்கள்.
புதிய ஆசை
இவ்விளைஞர் பணி இயூஜினை ஏனைய பணிகளில் நின்று எடுத்துவிடவில்லை. நற்செய்தி நவிலும் பெரும்பணியை அவர் திறமையுடனும் வெற்றியுட னும் செய்து வந்தார். ‘பணி, பணி, பணி!" என்று வாழ்ந்த இயூஜீன் தன்னை மறந்தார். அனைவருக்கும் அனைத்துமாகவும், தனக்கு எதுவுமின்றியும் வாழ்ந் தார். இது நல்லதல்ல; அகத்துக்கும் புறத்துக்கும் பயனளிப்பதுமல்ல.
எங்காவது ஒரு முனிவரகத்தில் தன்னை முழுமை யாக முனிவனுக்கி, மறைந்த வாழ்க்கை வாழ வேண்டுமென்ற புதிய ஆசையொன்று உழைத்துக் களைத்த இளங் குரவருக்குத் தோன்றியது.
- 12 -

இயூஜீனின் குருத்துவக் கல்லூரி நண்பர் டி வோ (t)ர்பா(b)ன்-ஜான்சன் சீனவைப் பற்றிய கனவுகளை மறந்து விட்டார். இவர் மறப்பதற்கு திருத்தந்தை ஏழாம் பத்திநாதரும் ஒரு காரணந் தான.
சீனவை மறந்தவர் பிரான்சையிட்டுச் சிந்தித் தார். பிரான்சின் குருக்கள் சிலரை ஒன்று கூட்டி *பிரான்சின் மறைபரப்பாளர்’’ என்ற பெயருடன் சபை ஒன்றைத் துவக்கினர். முனிவரகத்தை மறந்து தமது சபையிற் சேருமாறு இயூஜினை இவர் வற் புறுத்தி வேண்டினர்.
முனிவரகத்தை இயூஜீன் மறந்தார். ஆனல், நண்பனின் புதிய சபையிற் சேரவில்லை. ஒருவேளை தானே ஒரு சபையைத் துவக்க வேண்டி வருமோ என்று இயூஜீன் ஒரு கணம் எண்ணினர். அப்படித் துவக்கினல் அச்சபையினர் புருெவான்சில் மட்டுமே பணிபுரிவர்.
குரவர் டி மசெனெட், பூ(b)ஷ்-இ-றேன் பகுதிகளில் நற்செய்தி நவில ஆயத்தம் செய்தார். இப்பகுதியில் இயூஜினின் தாய்மாமன் முக்கிய பதவியிலிருந்தார்.
திடீரென்று செய்தி வெளியானது: "சக்கர வர்த்தி நாட்டுக்கு வந்து சேர்ந்தார்!’’
ருேஸ்-ஜோஆன்னிஸ் இடியேறு கேட்ட நாகம் போலானர். ‘அந்த மிருகம் செத்து விட்டதாக
8 ・ - 113 -

Page 78
நாம் எண்ணினேமே? ஆனல், அவன் வந்துவிட்
டான்! இங்கு எமது பணிக்கு ஒரு முடிவு வந்து விட்டது' என்று ருேஸ்-ஜோஆன்னிஸ் வெறுப்புடன் விழித்தார்.
குரவர் டி மசெனெட் வியப்படையவில்லை, வெறுப்படைந்தார். ‘இதென்ன நாடு! விசுவா சத்தை இழந்தால் மதிப்பு மரியாதை நம்பிக்கை அனைத்துமே அழிந்துவிடுமே!’ என்று இயூஜீன் வரைந்தார்.
சரிந்த சாம்ராஜ்யம்
1815 ஆம் ஆண்டு மூன்றும் திங்கள், முதலாம் நாள் கேன்சுக்கருகாமையிலுள்ள கோ (g)ல்வ் - ஜ"வான் என்னுமிடத்தில் நெப்போலியன் தரை கண்டு, நாட்டில் நுழைந்தான். அவ்விடத்தில் நின்ற மன்னன் தலைமேல் - உயரத்தில்-கழுகொன்று வட்ட மிட்டது! பரிசுத்த் ஆவி அவனை ஏவாவிட்டாலும், கழுகு அவனை ஏவியது. - அவனும் தீர்க்கதரிசி யானுன்!
“கழுகு கோபுரத்துக்குக் கோபுரம் பறக்கும்; பரிசின் மிகப்பிரசித்தி பெற்ற நொத்திறடாம் கோபுரம் ஈருகப் பறக்கும்' என்ருன்.
பேரரசரின் வார்த்தைகள் செயல் வடிவம் பெற்றன. கடினமான டியூறன்ஸ் பள்ளத்தாக்கைக்
نسس۔ 114 ... -----۔

கடந்து, அல்ப்ஸ் வழி கி(g)றேநோபிள் சென்று அவன் பரிசைக் கைப்பற்றினன். படிப்படியாக நாட்டைக் கைப்பற்றி வெற்றிமேல் வெற்றி கண்டு, வாகை சூடிச் சென்ற மாமன்னனை வழிநெடுக வாழ்த்தொலிகள் வரவேற்றன: “சக்கரவர்த்தி வாழ்க!'
சக்கரவர்த்தியின் நாட்கள் கணக்கிடப்பட்டன. எண்ணி நூறுநாள்கள். வோ(w)ட்டலூ வில் வெலிங் டனின் படை நெப்போலியனை நெருக்கியது சக்கர வர்த்தியின் சாம்ராஜ்யம் சரிந்தது! புருெவான்சின் அரசவை மகிழ்ந்தது. ருேஸ்-ஜோஆன்னிஸ் நிம் மதியாகப் பெருமூச்சு விட்டார்.
“ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பிவிட்டோம்' என்று அவர் எண்ணினர். “பழைய பயங்கர வாதிகள் தமது வாள்களைத் தீட்டுகிறர்கள், புருெ வான்சின் பிரபுக்கள் வாள் தீட்டும் முறை இப் பொழுது வந்துள்ளது' என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டார் ருேஸ்-ஜோஆன்னிஸ்.
மன்னன் கடும் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்ட பொழுதுகூட குரவர் நிறைவடைய
வில்லை.
நேப்பிள்ஸில் நல்லபடியாக அனைத்தும் நடந் தன. மூருவைத் தூக்கிலிட்டதொன்றே போது
- 115 -

Page 79
மான சான்றகும். ‘தங்கள் கொடுமைகளினலேயே கொழுத்த இப்படிப்பட்ட கள்வரை அப்படித்தான் தண்டிக்கவேண்டும். கடவுள் ஒருவராலேயே இப்படிப்பட்ட குற்றங்களை மன்னிக்க முடியும். மன்னன் மன்னிப்பதற்கு யார் உரிமை கொடுத் தார்கள்?’ இயூஜீனின் குரல் கம்பீரமாகக் கேட் L-தி
மன்னன் குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தான். ஆயினும், குரவர் டி மசெனெட் என்னும் குமுறிய எரிமலை இன்னும் புகைந்து கொண்டுதாணிருந்தது! நேப்பிள்ஸின் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார் கள். அதையே இயூஜீன் மேற்கோள் காட்டினர்; தனது கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டினர்.
“மியூரு என்பவனை நேப்பிள்ஸில் தூக்கிலிட் டார்கள். கொடுமைகளில் ஊறி, குற்றங்களில் வளர்ந்து, அக்கிரமங்களில் படுத்த கயவர்கள் அப் படித்தான் தண்டிக்கப்படவேண்டும். அரசியலைப் பொறுத்தவரை அவ்வளவுதான் சொல்ல உண்டு. எனக்கிருக்கும் நேரமோ குறைவு. செய்யவேண்டிய இதைவிட முக்கியமான பணிகளோ நிறைய உண்டு’’ என்று கூறி இயூஜீன் விடை பெற்ருர்,
இவர் அரசியலில் நின்று அச்சூழலில் விடை பெற்றது ஓரளவுக்கு நல்லது. இவருடைய எரி மலை போன்ற குணத்துக்கு அந்நேர அரசியல் மிக ஆபத்தாகவே முடிந்திருக்கும்.
- 116 -

சிலுவையில் தன்னை அறைந்து கொன்ற கொடிய யூதர்களைப் பெருமனங்கொண்டு மன்னித்த மாணிக்கக் கோயிலெங்கே, இந்த இயூஜீன் என்ற எரிமலை எங்கே !
景 景 景
இவ்விடத்தே நான் குறுக்கிடுகின்றேன்.
'அப்படிச் சொல்லக்கூடாது சுவாமி. அவர் நீதிக்காக நின்றர். கிறித்து தனக்கெதிராகச் செய்யப்பட்ட தீமைகளை மன்னித்தார். ஆணுல், சமுதாயத்துக்கெதிராக இளைக்கப்பட்ட கொடு மைகளை மிக வன்மையாகக் கண்டித்தார். கோயிலில் வணிகஞ் செய்தோரை விரட்டி அடிக்கவில்லையா? பொதுமக்களை வருத்திய பரி சேயர், சதுசேயரை விரியன் பாம்பின் குட்டி கள் என்றும், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை களென்றும் கூறவில்லையா? ஏன், சுவாமி அவர் களுக்கு "ஐயோ, கேடு’’ என்று அவர் கண்டிக்க வில்லையா?’ என்று வா திட்டது எனது குரல்.
முதியவர் என்னை உற்றுப் பார்க்கின்ருர், நெற்றி சுருங்கிக் கண் இமைகள் உயர் கின்றன. 'இளம் இரத்தம் துடிக்குது! போகப்போக சரிப்பட்டு வரும். நல்ல பிள்ளையாக நடக்க
வேண்டும்!’ என்று எச்சரித்தார் முதியவர்
**நீங்கள் ப்ப சொல்லிச் சொல்லித்
lதானே நாங்கள் பேசாமலிருந்து விடுகிருேம்,
- 17 -

Page 80
வெறும் ‘பூசாரி வேலையோடு ஒடுங்கி விடுகி ருேம், அதற்காகவா கிரீத்து எம்மை அழைத் தார்? அவ்வாறுதான் கிறித்து வாழ்ந்தாரா? அவரது சீடர்கள் என்ன செய்தார்கள்? நான் நினைக்கிறேன்: - இயூஜீனப்போன்ற குருமார் பலர் இன்று உலகெங்கும் தோன்றவேண்டும். அல்லது குருமார்களே வேண்டாம்.’’ என்றேன் உறுதியுடன்,
*தம்பி! தம்பி! இப்படி எல்லோருக்கும் சொல்லாதேயும்! பேசும்பொழுது அக்கம் பக்கம் பார்த்துப் பேசும். உம்முடைய இயூஜீன் அப்படி வாழ்ந்ததினுல்தான் அவரைப் புனிதராக்க எவ்வளவு கஷ்டம்! எவ்வளவு காலம்! தெரி யுமோ??’ என்று வாதிட்டார் முதியவர்.
'யார், யாரைப் புனிதராக்குவது? அவர் இறந்த அந்த நேரமே இறைவனடி சேர்ந்திருப் பார். பிற கென்ன புனிதராக்குவது? இப்படி நீங்கள் ஆக்கப்போய்த்தான் ஒன்றுமே சரியாகச் சமைபடுவதில்லை!" என்று சிரித்துக்கொண்டே கூறினேன்.
அனுபவங்கொண்ட முதியவர் புரிந்து கொண்டார் போலும் ! என் தோளில் தட்டி அன்பொழுகச் சொன்னுர்:
** இளங்கன்று பயமறியாது. ஆனலும், கவ னமாகவும் புத்திசாலித்தனமாகவும் நடந்து கொள்ளவேண்டும். வெளியே இருக்கும் எதிரிகளை விட, உள்ளே இருக்கும் ‘நண்பர்கள் ஆபத்தான
- 118 -

வர்கள்! எச்சரிக்கையாகவும் விவேகமாகவும் வாழ வேண்டும்; நான் உமக்காக மன்ரு டுவேன்." என்று பாசத்துடன் கூறினர் குரவர்.
குரவர் திடீரென்று மெளனமாகிவிட்டார். எதையோ இழந்தது போன்ற கவலை அவரது முகத்தில் தோன்றியது.
ஒரு சில மணித்துளிகள் அமைதி நிலவியது.
அமைதியை அவரே கலைத்தார். கதையைத் தொடர்ந்தார்:
* * சமுதாய நோக்கு வேண்டும்
அரசியல் வாதிகள் சாதிக்க முடியாததை இயூஜீன் தமது மறை உரைகளாற் சாதித்தா ரென்றே சொல்லவேண்டும். ஒரு சிலருடைய துணையுடன் புரட்சியின் பின்பு ஒரு புதிய பிரான்சை உருவாக்க அவர் முனைந்து வந்தார்.
மறையுரைகள் மோட்சத்தையும் நரகத் தையும், பாவத்தையும் புண்ணியத்தையும் பற்றியதாக மட்டும் இருக்கக் கூடாது. சமுதாய சீர்திருத்தத்துக்காக, மக்கள் மகிழ்வுடன் வாழ அவை வழிவகுத்துக் கொடுக்கவும் வேண்டும்.
இயூஜீன் டி மசெனெட்டின் நேர்மை அரசி யலில் மிகத் துணிச்சலான தென்பதை இங்கு
ം 119 ഞ

Page 81
கோடிட்டுக் காட்டவேண்டும். அதனலேயே மறையுரையாகவும் அவை மலர முடிந்தன. அவர்கடுமையாக இருந்தாரென்றல் அதற்கு ஒரே காரணம் அக்காலத்துக்கு அக்கடுமை வேண்டியிருந்தது; வேறு வழியில்லை.
**நான் எவ்வளவுக்கெவ்வளவு ஓர் அரச பரம்பரையினனே, அவ்வளவுக்கவ்வளவு ஒரு கத்தோலிக்கன்' - என்று இயூஜீனே ஐயந்திரி பறக் கூறியுள்ளார்.
- 20 -

15
துணையொன்று வந்தது
தனியாகத் தமது இலட்சியத்தைச் சாதிக்க முடியாதென்ற பேருண்மை அவருக்கு உள் ளங்கை நெல்லிக்கனிபோன்று புலனயிற்று. ஒரு குழு தேவைப்பட்டது. ஆனல், இயூஜீனுடன் கூட்டுச் சேரத் தயங்கினர்கள், மற்றவர்கள். காரணம்: இயூஜீனின் இலட்சியத்திற்கு வரவேற் பிருந்தாலும் அவருக்கு வரவேற்பிருக்கவில்லை.
இவர் அழைப்புகள் அனுப்பினர்; ஏற்றுக் கொள்ள யாருமில்லை.
இறுதியில் ஒரு பதில் வந்தது. பதில் போட் டவர் ஒரு குரவர். போள் கென்றி ரெம்பியேர் என்பது அவரது பெயர். ஆர்ள்ஸ் என்னுமிடத்

Page 82
தில் பணிபுரிந்து வந்த இக் குர வருக்கு இயூஜீனது இலட்சியம் பிடித்துக் கொண்டது. தனது குருத் துவத்தில் எதையோ இழந்து, காலத்தை கழித்து வந்த ரெம்பியேர் அவர்களுக்கு இயூஜி னுடைய புதுப்பணி நிறைவளிக்கும் போல இருந்தது. −
காலத்தைக் கடத்தாது கடமையில் இறங்க இரவோ டிரவாக ரெம்பியேர் தமது மறை மாவட்டத்தை விட்டு ஏக்ஸ் வந்தார். இயூஜி னுடன் சேர்ந்தார். அன்று 1815 ஆம் ஆண்டின் இறுதித் திங்கள் 27ம் நாள்.
இவரைத் தொடர்ந்து இன்னும் சிலர் வந்து சேர்ந்தனர் புதிய குழுவில்.
ஏக்ஸில் ஒரு பழைய கார்மேல் சபை மடத்தை விலைக்கு வாங்கினர், இயூஜீன். மடத் தோடு இணைந்து ஒரு சிறு கோவிலுமிருந்தது. (நான் சென்ற கோவிலும், நாமிருந்து உரை யாடிய வீடும் இவை தான்). கோவில் அழகாக இருந்தாலும் புதுப்பிக்கக்கூடியதாக இருக்க வில்லை. கூரை பாழடைந்து தோன்றியது. ஏனைய பகுதிகள் அதைவிட நல்லதென்று கூறுவதற் கில்ல்ை.
- I22 -

சபையின் நோக்கம்
"புருெ வான்சின் மறைபரப்பாளர் சபை' என்ற பெயருடன் இவர்கள் கூட்டுச் சேர்ந்தார் கள். தம்மை ஒரு சபையினராக ஏற்றுக் கொள்ளும்படி அம் மறைமாவட்ட அதிகாரி களைக் கேட்டுக்கொண்டார்கள்.
இவர்களுடைய நோக்கங்கள்:
முதலாவது: அங்கத்தவர்களின் கூட்டு (குழு) வாழ்க்கை.
இரண்டாவது: கிராமங்கள் தோறும் தியா னங்கள் நடாத்தி நற்செய்தி நவில்வதுடன் ஏக்ஸின் இளைஞர்களுக்கு வேண்டிய மறைப் பணிகள் புரிவது. குறிப்பாகச் சொன்னல் இச் சுபைக்கும் ஒரு துறவற சபைக்கும் எந்தவித மான தொடர்போ உறவோ இல்லை. இது ஒரு துறவறச்சபை அல்ல.
துறவற வாக்குத்தத்தங்கள் இன்றி எங் |வனம் இப்பணிகளை வெற்றிகரமாகச் செய்ய முடியுமென்ற சந்தேகம் இயூஜீனுக்குத் துவக் கத்திலேயே இருந்தாலும், அவர் அவ்விதிகளை அங்கத்தவர் மேற் சுமத்த விரும்பவில்லை. அவ ருடைய சந்தேகம் வலுத்தது. குழுவின் பணிகள் அனைத்தும் ஆடலுக்குப் பின்னணியாக இசைக் கும் வெறும் இசைக்கருவிகளாகவே தோன்றின.
- 123 -

Page 83
ஏதோ ஒரு வெறுமை அப்பணிகளில் இழைந் தோடியதாகவே இயூஜின் உணர்ந்தார். ஆகவே, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் துற வற வாக்குத்தத்தங்கள் பற்றித் தமது அங்கத் தவர்களுக்குச் சொல்லி வந்தார்.
1816 ஆம் ஆண்டின் முதல் திங்கள் முடிவில் புருெ வான்சின் மறைபரப்பாளர், மறை மாவட் டத்தால் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப் பட்டார்கள். மறைமாவட்டத்துக்குரியோராய் மறைமாவட்டக் குருக்கள் கூடிய சபையாகவே அங்கீகரிக்கப்பட்டார்கள். இச்சபையில் இவ் வேளை ஐவர் அங்கத்துவம் வகித்தார்கள் என் பது இவ்விடத்தே குறிப்பிடப்படல் வேண்டும்.
புதிய விளக்கும்ாறு நன்கு கூட்டுமென் பார்கள். உற்சாகம் நிறைந்த கல்லூரி மாண வர்கள் புதிதாகத் தங்கள் மாணவர் இல்லம் சென்றது போன்று, இவர்களும் புதிய உற்சா கத்துடன் பழைய வீடொன்றுக்குக் குடி புகுந் தார்கள்.
பொதறிை அங்கே, உணவகம் இங்கே என்று வீட்டின் அறைகள் பாகுபடுத்தப்பட்டன. மாலேயில் அவர்கள் ஒன்று கூடுவதற்கு ஒரு மெழுகுவர்த்தி மட்டும் அவர்களுக்கு ஒளிதந் தது. இரண்டு பீப்பாக்கள் மேல் ஒரு கரடு முரடான பலகை சேர்ந்து உணவகத்து மேசை
一 (24 一

யாகக் காட்சியளித்தது. எளிய உணவு. ஆன லும் நன்ருக உண்டார்கள். புதிய உற்சாகம், புதிய வாழ்க்கை. துணிவுடன் துவக்கினர், புதிய (5(ւք 60) 6մ,
நீடிக்கவில்லை, அவர்களின் துவக்க நிலை. உற்சாகம் உலர்ந்தது. துறவற த்தில் ஏற்படும் கொடுக்கல் வாங்கலுக்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. துவக்க காலத்தில் பல துன்பங் களை, இடையூறுகளைத் தங்கள் சிரிப்பால் மேற் கொண்டு வந்தார்கள். ஆனல், அச்சிரிப்பொலி கள் குறைந்தன. வாழ்க்கையின் கரடுமுரடான பாதையில் ஒவ்வொருவரும் செல்லவேண்டி வந் தது. அவர்களுடைய தத்தளிக்கும் இந்நிலையில் அவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக, குன் றின்மேற் தீபமாக நின்று வழிகாட்டியவர், அவர்களின் தலைவன் இயூஜீன் டி மசெனெட் அவர்களே.
எரிமலை ஆறுமா !
1816 ஆம் ஆண்டின் புனித வாரச் சடங்கு களைத் திருத்தி அமைக்கப்பட்ட தங்கள் கோவி லில் நடாத்தினர்கள். புனித வியாழன், 11-4-1816 என்று பொறிக்கப்பட்ட சிலுவை யொன்று அந்த நாள் ஞாபகத்தை இன்றும் கொண்டு வருகின்றது. இந்தப் புனித வியா
ہے۔ 125 -۔

Page 84
ழனுக்கு இவ்வளவு பெருமையா? இல்லை அவ்வ ளவு சிறப்பா?
ஆமாம், அதே இரவு. குரவர்கள் டி மசெ னெட்டும் ரெம்பியேரும் நற்கருணைக்கு முன்னி லையில் திருவிழிப்பு வழிபாட்டில் ஈடுபட்டார் கள். அவ்வழிபாட்டின் முடிவில் ஒருவர் ஒரு வருக்கு அமைவதாக (அமைச்சல் என்னும் வாக் குத்தத்தம்) வாக்களித்தார்கள். இரவு பூராக, இருவரும் இரவின் அமைதியில்-இலட்சிய வாழ்க் கையையிட்டுச் சிந்தித்தார்கள், செபித்தார்கள்.
இவ்வாறு, இரவு முழுவதாக வழிபாட்டில் திருவிழிப்பிருப்பது இயூஜீனுக்குப் புதியதல்ல. அவரது குருத்துவ வாழ்க்கையில் இப்படி அடிக் கடி நிகழ்ந்துள்ளன. i
இவ்விரவு இருவரும் சேர்ந்தார்கள், ஓரி லக்கைவைத்து. தங்கள் சிறுசபையின் எதிர் காலத்தை ஆண்டவன் திருப்பாதத்தில் ஒப்ப டைத்தார்கள். தம்மோடு உள்ள மற்றச் சகோ தரக் குருக்களும் தம்மைப் போன்று முழுமை யாக இறைவனுக்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்று இருவரும் சேர்ந்து செபித்தார் des 6T. W
இயூஜீன்-புருெவன்சாலின் எரிமலை-எப்படித் தான் இன்னுெருவருக்கு அமைந்து நடப்பாரோ? அக்குழுவின் தலைவர் அவர், இருப்பினும்
126

குழுவிலுள்ள- அதுவும் தனக்குக் கீழுள்ள இன் னெரு வருக்கு அமைவதாக வாக்குக் கொடுத் துள்ளார். அது அதிசயமான அமைச்சல்! இது அபூர்வமான அமைச்சல்! எரிமலை ஆறியதோ!
இடைவிடாவேலை, நற்செய்தி நவிலல்; இளைஞருடன் பலபணிகள், சொந்த வாழ்வில் கடினமான விரதம் நிறைந்த வாழ்க்கை. இத் தனையும் சேர்ந்து கம்பீரமான இயூஜீன வருத் தியது! இரத்த வாந்தி யெடுத்தார். இந்நிலை கண்ட ரெம்பியேர் தன் அதிபரை ஒய்வுபெற அனுப்பினர். அமைச்சல்! இயூஜீன் அமைந்தார். அந்த நூற்ருண்டின் அதிசயம் இதுவோ!
ஒய்வில் சில நாட்கள்! பொறுக்கவில்லை அந்த எரிமலைக்கு மடலொன்று வரைந்தார், தமது குழுவினருக்கு. ‘நீரின் நின்று வெளியேற் றப்பட்ட மீனகத் துடிக்கின்றேன்" ଶ ନାଁ o। துவக்கிய இயூஜீன், தொடர்ந்தால் கடினமான சொற்கள் பிறந்துவிடுமோ என்று அஞ்சி, ' என்னை ஏற்றுக்கொள்ளுமாறு இறைவனிடம் இறைஞ்சுங்கள்' என்று முடித்தார் தமது மடலை.
குடியிருந்த வீடு திருத்தம் பெற்றது. புதி' யவர்கள் அறுவர் அவ்வாண்டிலேயே இக்குழு வில் வந்து சேர்ந்தார்கள். ஒருவர் தான் நிலைத்து நின் ருர், .

Page 85
இயூஜீன் மறைமாவட்டமொன்றின் மறை மாவட்டக் குரவராக இருந்தும் அம் மறைமா வட்டச் சட்டதிட்டங்கள், சம்பிரதாயங்களுக் கப்பாற் சென்று ஓரளவு சுதந்திரத்துடன் உல வினர்: செயற்பட்டார். மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத இரண்டுங்கெட்டான் நிலை யிலிருந்த ஏனைய மறைமாவட்டக் குருமார் இயூஜினையும் இயூஜீனின் போக்கையும் எதிர்த் தனர். கண்டன வார்த்தைகள் வாரி வழங்கப் பட்டன. V
இயூஜீனின் விட்டுக்கொடாத் தன்மையும், அதிகாரப்போக்கும் நெருப்பில் நெய்வார்த் தது போலிருந்தது.
முதிய குரவர்கள் தங்கள் தங்கள் பதவிக ளில் செளகரியமாக இருக்கவே முனைந்தார்கள். ஆனல், புரட்சியிற் பிறந்து வளர்ந்து, உறுதி யும் இரும்பு இதயமுங் கொண்ட இயூஜீன் போன்ற புதிய குரு மார் தலைமுறை, தமது முன்னைய தலைமுறையினரின் பால் அனுதாபங் காட்ட முடியவில்லை. அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. இப்போக்கும் பலருடைய வெறுப்பையும் எதிர்ப்பையும் இயூஜினுக்குத் தேடித்தந்தன.
அது மட்டுமா?
சும்மா இருந்தோரையும் சுரண்டி விட் டாரே!
-س 128 -س--

எல்லைப் போர்
இயூஜீன் பங்குவேலை செய்யக் கண்டிப்பாக மறுத்து விட்டார். ஆனல், தனது இல்லிடத் துடன் இணைந்திருந்த கோயிலைப் பொதுமக்கள் வழிபாட்டுக்குத் திறந்துவிட்டார். அத்துடன் நின்றரா? தமது நற்செய்தி நவிலும் நன்முறை யால், பொருளும் பக்தியும் நிறைந்த வழிபாட் டால் ஆயிரக்கணக்கான மக்களே தமது ஆல யம் வரச் செய்தார், எல்லைவைத்து, கோடிட்டு அமைக்கப்பட்ட நகரிலுள்ள பங்குகளில் இருந்து பெரும்பான்மையான மக்கள் பங்கே அல்லாத இவரின் ஆலயத்துக்கு வழிபட வந்தார்கள். மற்றக் குருக்களின் கண்ணுேட்டத்தில் இது மன் னிக்க முடியாத குற்றமாக்கப்பட்டது.
9 - 129 -

Page 86
தமது இளைஞர் இயக்கத்திலுள்ளோர் தமது
கோயிலில் புதுநன்மை பெறவும், உறுதிப் பூசுதல் பெறவும் அனுமதி அளிக்கவேண்டுமென்று இ ஜீன் கேட்டுக்கொண்டார்.
பங்குக்குரவர்களால் - தங்கள் பங்குகளில் முடிசூடா மன்னர்களாக வாழ்ந்தவர்களால் - இனியும் பொறுக்க முடியவில்லை. தங்கள் உரி மைகளில் அளவுக்குமீறிக் கைவைத்தது மட்டு மன்றி, இது மன்னிக்க முடியாத துன்மாதிரிகை யும் கேவலமான போட்டியும் என்று கருதினர் கள். メ
குருமனைகளில் பேசப்பட்ட ஒரே பொருள் இதுதான். குருமாரின் கமயற்காரப் பெண்களும் சட்டையை வரிந்து கட்டுக் கொண்டு சந்திக்கு வந்துவிட்டார்கள். மனதார அவர்கள் ஆசைப் பட்டதொன்றுண்டு: “தங்கள் மதிப்புக்குரிய பங்குக் குருமாரிடையே எப்பொழுது ஒரு மோதல் வரும்! உண்டகளை தீரப் பார்த்து மகி ழலாமே! நாளெல்லாம் பேசி விவாதிக்க ஒரு நல்ல பொருளாமே!’
அவர்கள் ஏமாறவில்லை. காத்திருந்த வேளை விரைவிலேயே வந்தது.
மோல்ராவின் புனித அருளப்பரின் பங்கு ஏக்ஸிலுள்ள பங்குகளில் ஒன்று. இப்பங்கிலேயே இயூஜீனின் சபை தங்கிய வீடும் அதனேடு
- 130 -

இணைந்த கோயிலும் இருந்தன. அப்பங்குக் குர வர் இயூஜீனப் பழிவாங்க நேரத்தையும் காலத் தையும் எதிர்நோக்கியிருந்தார்.
இதுவா பக்தி?
அது புனித இரட்சகர் ஆசனக் கோயில். அன்று அக்கோயிலில் உறுதிப்பூசுதல், இயூஜி னின் இளைஞரில் சிலரும் அன்று உறுதிப் பூசுதல் பெற வந்தார்கள். இந்த இளைஞர்கள் ஆசனக் கோயிலில் உறுதிப்பூசுதல் பெற வந்தது அவர் களுக்குக் கொடுக்கப்படும் சலுகை யென மேற் கூறிய பங்குக்குரவர் கருதினர்
ஆசனக் கோயில் மக்களால் நிரம்பி வழிந் தது. பங்குக் குரவர் சூழலையும் மறந்தார். தமது நிலையையும் மறந்தார். 'இங்கு யாருக்கும் சலு கைகள் கொடுக்கப்பட மாட்டாது. இந்த இளை ஞர்கள் அனைவரும் கிறித்துவின் ஒரே மந்தையில் சேரட்டும்! அவர்களும் மற்றவர்களுடன் ஒரே இடத்தில் இருக்கட்டும்?' என்று சத்தமிட்டார்
பலிபீடத்தைச் சுற்றி மாணவர் ஒர் அரை வட்டத்தில் நிற்குமாறு பணித்தார் டி மசெ னெட்டின் ஆதரவாளரும், மறைமாவட்ட முதல் வருமான அருள் திரு கி(g)கோ (g) ன்.

Page 87
இப்பொழுது பலகுரல்கள் ஆங்காங்கே கேட்
t_- ფინჩ :
'அங்கில்லை! பலிபீடத்தைச் சுற்றியுள்ள இடம் புனிதமானது!’’
ஆசனக்கோயில் அமைதி இழந்தது. எங்கும் ஒரே பரபரப்பு!
வீதியில் நின்ற காடையர் சிலரைக் கோயி லுக்கு அழைத்து வந்தனர், சில குருமார்கள்.
கைகலப்புகள்! பக்தி முத்தினுல் பிசா சென் பர்! புனித இடமென்று கூக்குரல் எழுப்பிய வர்கள் இப்பொழுது அதேயிடத்தைப் போர்க் களமாக்கினர்கள். ஒருவேளை அவர்கள் இதைப் ‘புனிதப் போர்!’ என்ற்ழைப்பார்களோ?
脊 景 景
என் சிந்தனை என் நாட்டிற்கோடியது.
இதே பிரச்சினை இன்னும் எமது பங்குகளில் இருக்கின்றனவே! வெறும் பெயருக்காகவும், புக் ழுக்காகவும் வழிபாடுகள் நடத்தப்படுவ தில்லையா? கிறித்துவை சரிவரப் புரிந்து கொள் ளாதவர்கள் யார் யாருக்கோ வெல்லாம் ஆள் சேர்த்து வழிபாடுகள் நடத்தவில்லையா?
கட்சிகள் கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பது போல லொறிகளில் ஆட்கள் கொண்டு வந்து கோயிலை நிரப்பினலும் அதிசயப்படுவதற்கில்லை!
- 132 -

உண்மையான மத மென்ன, கிறித்துவின் போதனையென்ன, என்பதை மக்களுக்கு உணர்த் தாமல் அவர்களை இன்னும், இன்றும் இந்த விஞ்ஞான உலகிலும் ஏமாற்ற முனைகின்ருேம! இது முறையா? இது பக்தியா? இது மதமா?
கோயிலுக்குக் கோயில் போட்டி போடுகிருர் களே! கீரைக்கும் எதிர்க்கடை வேண்டும் என் பார்கள். புனிதருக்குப் புனிதர் எதிர்க்கடை வேண் டுமோ? பங்குகளில் பங்குக் குரவர்கள் தமது எல்லை களைக் காப்பாற்ற முனைவது போல தமது மக்களின் வாழ்க்கை நலனைக் காப்பாற்ற முனைகிருர்களா? இவர்கள் என்ன முடிசூடா மன்னர்களா? இல்லை. எல்லைக் காவலர்களா?
சிந்தனைக்குரிய வினக்கள்தான். குரவர் மேற் கொண்டு சிந்திக்கவிடவில்லை.
关 兴
숨.
ஆசனக் கோயிலில் நடந்த கைகலப்புகள் ஆவ லாதி பேசும் 'பக்தர்' கூட்டத்துக்கு கிடைத்தற் கரிய செய்தி! பத்திரிகையை முந்திக்கொண்டார் கள்! நகர் முழுவதும் இதேபேச்சு
மக்கள் கட்சிகளாகப் பிரிந்தார்கள்.
“இயூஜீன் கைகலப்புகளில் கலக்கவில்லை. அவ ரது இளைஞருடன் அவர் ஒதுங்கிக் கொண்டார்’’- என்றது ஒரு கட்சி.
一 及母岛 一

Page 88
"ஆவது முழுவதும் அவனுற்தானே!’ என்றது எதிர்க் கட்சி.
மறைமாவட்ட முதல்வர் இயூஜீனுக்கு உறுதி யளித்தார்.
மசெனெட்டின் மாணவர் அவரின் கோயிலி லேயே புதுநன்மை பெற்றனர். இம்முறை இயூஜீன் நேரகாலத்துடன் ஒவ்வொரு இளைஞனின் பங்குக் குரவருக்கும் மடல்வழி நின்று செய்தியை அறிவித் தார்.
மதிப்புக்குரிய பங்குக் குரவர்கள் அனைவரிட மிருந்தும் பதில்கள் வந்தன: சூடாக இருந்தன.
விடுவாரா இயூஜீன்? எரிமலையானர்! சூடாகவே இவர் பதிலும் சென்றது.
இவரின் இம்மடல் பரிசில் உள்ள மதபீடத் துக்கும் சென்றுவிட்டது! ۔۔۔۔۔۔
மறைமாவட்ட அதிகாரிகளின் துணையில்லை யென்ருல் இயூஜினின் முயற்சிகள் அனைத்துமே அழிக்கப்பட்டுவிடும்!
இதேவேளை ஏக்ஸ் மறைமாவட்டம் ஆயரின்றி இருந்தது. வர இருக்கும் புதிய ஆயர் இயூஜீனின் சபையை ஆதரிப்பாரா? இது இயூஜீனின் பெரிய
சங்கடமான சந்தேகம்!
- 134 -

பரிசில் உள்ள மதபீடம் இயூஜீனின் சபைக்கு அதிகாரபூர்வமான அனுமதி அளித்தது. அவ் வளவுதான். இயூஜினுக்கெதிராக வந்த கடுமை யான எதிர்ப்புகள் அனைத்தும் ஒன்றுசேர்க்கப்பட்டு வைக்கப்பட்டன! மறைமாவட்டப் பிரச்சினையில் தலையிடுவது நல்லதல்ல என்று பரிஸ் எண்ணியது. அவர்கள் தங்கள் சண்டைகளைக் கோயிலின் பின் னறையில் தீர்த்துக்கொள்ளட்டும் என்று பரிஸ் தப்பித்துக் கொண்டது. w
அரையவியல் போன்ற இத்தீர்மானங்கள் இயூஜீனுக்கு அவ்வளவு ஏற்றதாகத் தெரியவில்லை"
அவர் தீவிரமாகச் சிந்தித்தார். இராஜதந்தி ரியாகவும் மாறினர்!
மாமன் ஆயரானுல் . . .
'மாமனர் அருள் திரு வோ(f)ர்ச்சுனே ஆயரா ஞல் 1.' இயூஜினின் பிரச்சினை தீரும் !
இயூஜினுக்குப் பல பதவிகள் ஒன்றன்பின் ஒன் ருக வந்ததுண்டு. ஆனல், அனைத்தையும் அவர் தூக்கியெறிந்துவிட்டார். இப்பொழுது தனது மாம னருக்கும் ஒரு பதவி கொடுக்க வேண்டுமென்று எண் ணினர். அம்மாமனர் இன்னும் பலேர்மோவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்தார். அவரின்
- 135 -

Page 89
விருப்பு வெறுப்புகளை அறியாமலேயே மருமகன் செயலில் இறங்கினர்.
செய்திகள் காற்றில் கேட்டன! “அருள் திரு வோ (f)ர்ச்சுனேதான் LDrtiG39Ful6óT sguptmblo”
மாமனருக்கும் செய்தி எட்டியது. செய்வதறி யாத மாமனர் மருகருக்கு மடல் வரைந்தார். மாமனுரின் தடுமாற்றத்தை உணர்ந்த மருகர் பக் கம் பக்கமாகப் பதில்மடல் வரைந்தார்.
“இந்த இக்கட்டான நிலையில் மார்செயி மறை மாவட்டத்துக்கு நீங்கள் வேண்டும். மறுமலர்ச் யை இம்மறைமாவட்டம் காணவேண்டும். ஆட்சி செய்ய நல்லொரு குழுவை நான் இப்பொழுதி ருந்தே ஆயத்தம் செய்கின்றேன். இச் செயலில் ஆண்டவன் சித்தத்தைப் பார்க்க வேண்டும். இப் படிய்ொரு தியாகத்தை இப்பொழுதே செய்யா விடில் ஆண்டவன் அழைப்பைத் தட்டிக்கழித்த பெரும்பாவத்தைக் கட்டிக்கொள்ள நேரிடும்' என்று, அன்பு, ஆதரவு, துணை, "பயமுறுத்தல்' அத் தனையையும் சேர்த்துக் கடிதமெழுதினர் இயூஜீன்.
இயூஜீனின் மடல் கண்டு மாமனர் பயத்துட னும் நடுக்கத்துடனும் "ஆமென்' என்ருர்,
செய்தி பரவியது!
- 136. --

“நியமனம் பெற்ற ஆயர்' என்ற அடை மொழியுடன் பலேர்மோவுக்கு கடிதங்கள் வரத் தொடங்கின.
1817ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் 27 ஆம் நாள். வோ(t)ர்ச்சுனே மார்செயியில் வந்து இறங் கினர். அவரோடு இயூஜீனின் தந்தையும், கப்பற் படைத் தலைவனும் மாமனுமான லூயி-இயூஜீனும் நியமனம் பெற்ற புதிய ஆயருடன் மார்சேயியில் வந்து சேர்ந்தார்கள். ஒருவகைப் பெருமிதம் அவர் களின் முகங்களில் தோன்ருமலில்லை,
༣་
அரசியலார், திருச்சபைப் பெரியோர்கள் நிய மனம் பெற்ற ஆயருக்குத் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.
கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை! மாம ஞரின் புதிய நியமனம் இன்னமும் அதிகார பூர்வ மாக அறிவிக்கப்படவில்லையென்ற துயரமான செய் தியை மருகரே சொல்லவேண்டி வந்தது. -
1801 ஆம் ஆண்டு செய்துகொண்ட திரு உடன் படிக்கையின்படி மார்செயி மறைமாவட்டம் தடை செய்யப்பட்டது. இத்தடை நீக்கப்படும்வரை ஆய ரின் நியமனம் பின்போடப்பட்டது.
ஏமாற்றமடைந்த குரவர் ஏக்ஸ் சென்றர். அங்கு இயூஜீனின் இல்லிடத்தில் தங்கினர்.
-- l37 ----

Page 90
இயூஜீனின் தந்தையும் மாமன் லூயி இயூஜீனும் மார்செயியிலேயே தங்கிவிட்டார்கள். இயூஜீன் டி மசெனெட் தமது முக்கிய பணியான நற்செய்தி நவிலும் பெரும் பொறுப்பை மேற்கொண்டார்.
அக்காலத்தில் கட்சி அரசியலையும் மதத்தையும் கலப்பதுண்டு. மறையுரைகளின் முடிவில் “கிறித்து நீடூழி வாழ்க! சிலுவை நீடுழி வாழ்க!' என்று மட்டு மல்ல “மன்னனும் அவனது குடும்பமும் நீடூழி வாழ்க!' என்று வாழ்த்துவதும் ஒரு பழக்கமாகவே வந்துவிட்டது. இயூஜின் தமது பிரபுத்துவத்துடன் வாழ முனைந்தாலும் தமது மறை உரைகளை அதற் காகப் பயன்படுத்தியவரல்ல. மறை உரைகளின் முடிவில் மன்னனை வாழ்த்தியவருமல்ல.
மக்களோடு மக்களானுர்
சமூக கிராம சூழல்களுக்குத் தம்மை மாற்றி யமைக்கக்கூடிய ஒரு பெருந் திறமை இயூஜினிடம் இருந்தது. மக்களின் எதிரொலிகளுக்குச் செவி மடுத்து அவற்றிற்கேற்ப தமது முறைகளை மாற்றிக் கொண்டார். ஒருபணியென்ருல், அங்கே பொது மக்களும் பணியாளர்களும் சேரவேண்டும். ஆகவே அவருடைய முறை’ என்று ஒன்றைப் பிரித் தெடுத்துக் கூறுவது கடினம். -
தடைகளைத் தகர்த்து, சுவர்களை நீக்கி, ஆளுக் காட் தொடர்பை ஏற்படுத்துவது அவரது சிறந்த பணி. பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர், மக்களுக்கும்
- IB8 അ

குருக்களுக்கும்மிடையே ஒரு இடைவெளி தோன்றி யது. குரவர்கள் தமது கோயிற் பணி முடித்து, குருமனையில் ஒதுங்கினர்கள். இந்தச் சூழலில், இயூஜின் வீட்டுக்கு வீடு சென்று, மக்களைச் சந்தித் தார். இயூஜினும் அவரோடு சேர்ந்த குருக்களும் பங்குகளில் ஞானெடுக்கம் நடத்தும் பொழுது, அவர்கள் தட்டாத கதவுகளில்லை. விரும்பியோ விரும்பாமலோ மக்கள். இவர்களுடன் உரையாடி, பின்னர் தமது கவலைகளையெல்லாம் இவர்களிடம் சொல்லி ஆறுதல் அடைந்தார்கள்.
இத்தால் பங்கொன்றின் நிலையைச் சிறிது நேரத்தில் எடுத்துரைக்கக்கூடிய அறிவையும் அனு பவத்தையும் பெற்ருர்கள்.
தாங்கள் எந்த மக்களுக்கு மறைப்பணி புரி கின்ருர்களோ அம்மக்களுடன் தங்களை இணைப்பது இயூஜினுக்கு அவசியமாகத் தோன்றியது.
- 139 -

Page 91
17
வழிபாடா? வெறியார்வமா ?
1789 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த ஒரு பாவ மன்னிப்புப்பவனி என்ற பழஞ் சடங்கை மீண்டும் புதுப்பிக்கத் திட்டமிட்டார் இயூஜீன்.
யூதமக்கள் தங்கள் பாவங்களை ஒரு செம்மறி யின் மேலிட்டு அச்செம்மறியைப் பாவப்பலியாக அர்ப்பணிப்பதுண்டு. அதே போன்று மக்கள் தங் கள் பாவங்களைக் குரவர் ஒருவரின் தோளிலிட, குரவர் 'பாவிமனிதனகி’ சிலுவையின்முன் முழந் தாளிட்டு இறைவனின் இரக்கத்தையும் மன்னிப் பையும் இறைஞ்சுவார்.
இச்சடங்கையே இயூஜீன் புதுப்பிக்க விரும்பி னர். தானே அப்பாவிமனிதனக மாறுவார். திருச்

சடங்குக்குரிய உடைகளின்றி, காலணியின்றி, தோளில் பாரமான சிலுவையுடன் இயூஜின் நக ரத்தினூடாக, குப்பை கூழத்தினுாடாக, கரடுமுர டான ஒழுங்கைகளினூடாக, வறிய மக்கள் வாழும் அழுக்கேறிய தெருக்களினூடாக, மக்கள் பின் தொடர அமைதியிற் செல்வார்.
பார்த்து நிற்கும் மக்களின் உணர்ச்சிகள் புலன் களுக்கெட்டும் ! .
பவனியின் முடிவில் கோயில் வந்து பலிபீடத்
தின் முன் முகங்குப்புற விழுந்து மெளனத்தில் செபிப்பார். v
பின்னர் பீடத்தின் பின்னறையினுட் சென்று, தமது உள்ளங்கால்களைத் தடவி விடுவார்.
இது மறைபணியின் வெறியார்வமா? அன் றேல், பயித்தியகாரத்தனமான வெறும் பகட்டார வாரமா? அன்றேல், பக்தி முத்திய சித்தக் கோளமுா?
சொல்வது கடினம். இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டவரைப் பொறுத்தே ஒரு முடிவைச் சொல்ல (tքւգսյւb.
இயூஜினைப் பொறுத்தமட்டில்
உணர்ச்சிவசப்பட்ட தெற் குவாசி, உணர்ச்சி வசப்பட்ட தெற்குவாசிகள் மத்தியில் அவரது
ஒவ்வொரு செயலிலும் உறுதியான கொள்கைப்
- 141 -

Page 92
பிடிப்பு இருந்தது. தமது ஒவ்வொரு செயலாலும் தமது மக்களுடன் அவர் நற்தொடர்பை, நல்லு றவை ஏற்படுத்திக்கொண்டார். அவரது செய்கை கள் அவர்களுடன் பேசியது. செய்தியொன்று சொன்னது. அதுதானே முக்கியம்!
அவர் சிலுவை சுமந்து செல்லும்பொழுது கடின நெஞ்சுடைய மனிதர்களும் தங்கள் ஒற்றை விர லால் கண்களிலிருந்து கசிந்த கண்ணிர்த் துளியைத் துடைத்து விடுவார்கள். s
நல்ல பயன்வருமெனத் திட்டவட்டமாகத் தெரிந்து கொண்டால் மட்டுமே, இப்படிப்பட்ட செயல்களில் அவர் இறங்குவார். அதுவும் கவனத் துடன் செயற்படுவார்.
இயூஜீனின் தந்தைக்கு இவை கோணங்கிக் கூத்தாகவே தோன்றின. ஆகவே, இவற்றைக் கைவி டும்படி மாமன் வோ(f)ர்ச்சுனே மூலம் சொல்லு வித்தார்.
"நாம் செய்யத் துணியாததை, நம்மிட்ம் இல்லாத புண்ணியச் செயலையே அவர் செய்கின் ருர், அவரை அவரது போக்கில் விட்டுவிடுங்கள்’’ என்று மாமனர் பதில் கூறினர்.
வோ (f)ர்ச்சுனே மறைமாவட்ட முதல்வருடன் இதுபற்றி உரையாடினர். முடிவில், குளிர்காலத் திலும் பனிக்காலத்திலும் காலணியின்றி சிலுவை சுமக்கக் கூடாதென்று இயூஜீனப் பணித்தார்கள்.
- 142 -

ஆடல் மகளிர்
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதில் புருெ வான்சின் மறைப்பரப்பாளர் கைதேர்ந்தவர்கள்.
இப்படிப்பட்ட "சிலுவைப் பாதை’’களின் முடிவில் இவர்கள் மறையுரைகள் வழங்குவார்கள். புருெவான்சுக்கே உரிய ஒரு சில நடனங்கள் இருந் தன. புருெவான்சின் பெண்கள் பெரிதும் விரும்பி ஆடிய நடனங்கள் அவை. மறையுரைகள் இவற் றைக் கண்டித்தன. அப்பெண்களும் இரவோடிர வாக - ‘இனி ஆடுவதில்லை' - என்று வாக்களிப் பார்கள். இதைத் தொடர்ந்து மரியாயின் சபை யிலும் சேர்ந்து கொள்வார்கள். இதைத் தொடர்ந்து மகிழ்வுணர்ச்சி உந்தக் கண்ணீர் பெரு குவதுமுண்டு.
இது 19ஆம் நூற்றண்டு உணர்ச்சி மிக்கக் கட்டற்ற கற்பனைக்காலம்! கண்ணிர் தாராளமாக உளற்றெடுத்த காலம்!
திடீரென்று சூடானல் திடீரென்று ஆறியும் விடுமோ! திடீர் உணவுகள் திடீர்ச்சுவை கொண்ட வையோ! - திடீர்ப்பாவமன்னிப்பு-மனத்தாபம் - திடீரென முடிந்து விட்டது. இரவோடிரவாக அளித்த வாக்கை மறந்து ஆடத்துவக்கினர் ஆடல் மகளிர்!
- 143 -

Page 93
மறைப்பரப்பாளர் முயற்சியில் காவற்துறையின ரும் கலந்து கொண்டார்களோ அன்றேல் ஆடல் மகளிர்பாற் கொண்ட அனுதாபமோ!
றேவியோரென்ற படைத்துணைத்தலைவன், ‘இனி ஆடோம் என்று வாக்களித்தவர்களும், அவ் வாறு வாக்களியாதவர்களும்,- எல்லோரும் சேர்ந்து ஆடவந்துள்ளார்கள்’ என்று சொல்லியுள்ளார். இச்செய்தி போரமைச்சர் ஈருகச் சென்றதென்ருல், இயூஜீனின் மறைப்பரப்பாளர் தொடுத்த போர் எத்துணைத் தாக்கத்தை ஏற்படுத்தியதோ!
கிராமப்புறத்தைப் பொறுத்தமட்டில் மறைப் பரப்பாளர் தங்களை மாற்றியமைக்க முனைந்தனர். குறிப்பாக, மறையுரைகளில் பெருமாற்றம் செய் தனர். மக்களுக்கு மறையுண்மைகளைத் தெளிவாக உணர்த்துவதுதான் முக்கியமான செயல். வார்த் தையென்னும் உணவை அள்ளிக் கொடுத்தால் மட் டும் போதாது: குழைத்து ஊட்டிவிடவேண்டும். அது உள்ளிறங்க உதவவும் வேண்டும்.
பேச்சுவன்மையில் இயூஜீனுக்கு நிறைந்த நம்பிக் கையிருந்தது. அவரிடம் இத்திறமை சிறப்பாக இருந்தது. தனது மறையுரைகளை நன்கு ஆயத்தம் செய்தார். ஆனல், மறையுரை வழங்க வந்த பொழுது துணைக்கு எதையும் எடுத்துச் செல்ல
- 144 -

வில்லை. கேட்க வந்த மக்களுடன் அவர் நேரடி யாகப் பேசினர். குழாயில் நீர் வந்தது போல, சொற்கள் உதிர்ந்தன. அரசியல் மேதையும் வரலாற் முசிரியருமான தியேர், இயூஜீனின் பேச்சைக் கேட்ட பின்பு **பிரான்சின் மிகச் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவர்' எள்று குறிப்பிட்டுள்ளார்.
கடினமான வாழ்வு
பேச்சுவன்மை, புறச்சடங்குகள் வேண்டும். ஆனல், அவற்றேடு நின்றுவிடாது, சொன்னதைச் செய்ய வேண்டும். வார்த்தைகளை வாழ்க்கையில் வடிக்கவேண்டும். அதனலேயே தமது குழுவினருக்கு அவர் கடினமான விதிகளைக் கொடுத்தார்.
மூன்றுவார மறைபரப்புப் பணியில் ஈடுபடும் பொழுது, அவர்களின் நாளாந்த செயற்திட்ட மென்ன? م"
காலை நான்கு மணிக்குத் துயிலெழல். காலை முழுவதும் கோயிலில். பிற்பகலிலும் மாலையிலும் பாவமன்னிப்பு, நோயாளிகளைச் சந்தித்தல், மறை யுரைகள். இரவு பதினெரு மணிக்கு ஒய்வு.
எளிமையான உணவு. தபசு காலத்தில் விரதம்.
ஒருமுறை உடல்நலங்குன்றியிருந்தார் இயூஜீன். ஆயினும் விரதத்தை விடவில்லை. இறுதியில் இவ ரின் ஆன்மகுருவும், வைத்தியரும் சேர்ந்து வற்
10 - 145 -

Page 94
புறுத்திய பொழுது சிறிதளவு சோறு, அல்லது *சுப்”, அத்துடன் ஒரு தோடம்பழமும் உண்டார்.
இயூஜினின் மரக்கட்டிலில் மெத்தையில்லை. குளிரான நாட்டில் எவ்வளவு கடினமான ஓர் ஒறுத் தல் என்பது அந்நாடுகளில் அனுபவப்பட்டவர்க ளுக்கு நன்கு புரியும். தனது உடலை இயூஜீன் மிகவும் வருத்தினர்.
இவ்வேளை மாமன் வோ (f)ர்ச்சுனே ஏக்ஸில் வாழ்ந்தார். ஆயராகும் நாளை எதிர்நோக்கியிருந் தார். வயது எழுபதென்றலும் அவர் இயூஜீனின் குழுவினருடன் சேர்ந்து அதே செயற்திட்டங்களில் தானும் பங்கு கொண்டார்.
“கடந்த இருபத்தேழு ஆண்டுகள் என்னல் திருச்சபைக்கு எப்பயனுமில்லை. இப்பொழுதுதான் நான் அதற்கு ஈடுசெய்கின்றேன்' என்று வோ(t)ர்ச் சுனே அவர்கள் மார்சேயியிலுள்ள தமது தம்பிக்கு எழுதிய மடலிற் குறிப்பிட்டுள்ளார்.
தந்தையும் மாமனும் சேர்ந்து இயூஜீனின் போக்கை மாற்றி அமைக்க முயன்ருர்கள். முடிய வில்லை. அவருடைய பயங்கரமான பிடிவாதத்தை அவர்களால் எதுவுமே செய்ய முடிய வில்லை.
“ஒரு பிச்சைக்காரன் கூட இயூஜீனின் கால னிகளை அணியமாட்டான். அவை அவ்வளவு கேவ லமானவை !’’ என்று மிக்க மனவருத்தத்துடன் பிரபு டி மசெனெட் தன் மகனையிட்டு எழுதினர்,
-س- 146 س--

18
மாறியது. வழி!
மாற்றியது ஏனுே?
ஒரு தலைமுறைக்கு முன்னர் நடந்த மறைபரப்புப் பணி போன்றுதான் இவர்களுடைய பணியும் அமைந்தது. வெற்றிகளும் தோல்விகளும் கலந்தன. நன்மைகளும் தீமைகளும் மாறி மாறி வந்தன. ஆனல், ஒன்றுமட்டும் உண்மை. இயூஜீன் டி மசெ னெட்டின் காலத்தில் நடைபெற்ற மறைபரப்புப் பணிகளுள் இயூஜீனுடைய பணி மிகச் சிறப்பானது என்பதிற் கிஞ்சித்தும் ஐயமில்லை. இக்காலத்து மிகச் சிறந்த மறைபரப்பாளர் என்று ஒருவரைத் தெரிவதாக இருந்தால் நிச்சயமாக அவர் இயூஜின் டி மசெனெட் அவர்களே. அவர் ஆயிரத்தில் ஒருவர்.

Page 95
இயூஜீனுடைய குழுவினரிடம் பல பலவீனங் கள் இருந்திருக்கலாம். ஆனல், மற்றவர்களிட மில்லாத ஒரு பெருங் கொடையை இவர்கள் பெற் றிருந்தார்கள். தாங்கள் பணிபுரியச் செல்லுமிடத்து மக்களுக்கேற்ற முறையில் தங்களை மாற்றியமைப்பது இவர்களின் தனிச் சிறப்பு.
மறைபரப்புப்பணியுடன் இயூஜின் நின்றுவிட வில்லை. புதிய துறைகள் மலர்ந்து வரவேற்றன. 1818 ஆம் ஆண்டு. லோவிலுள்ள மரியன்னையின் புனித பதியை நிர்வகிக்க இயூஜின் அழைக்கப்
பட்டார்.
இவ்வழைப்பு இயூஜீன ஆழமாகச் சிந்திக்க வைத்தது. பிறிதோர் இடத்தில் பணியென்றல் அங்கோர் குழுவை நியமிக்க வேண்டும். பொதுப் பிணைப்பொன்று இல்லாவிடில் சபை குலைந்து அழிந்துவிடும். சபையின் அங்கத்தவர் எங்கிருப் பினும் அவர்கள் அனைவரையும் துறவற வாக்குத் தத்தங்களால் ஒன்ருகப் பிணைக்கலாம். ஆணுல், குழு விலுள்ள மற்றவர்களும் இவ்வாறு சிந்திப்பார்களா?
இயூஜின் தமது அங்கத்தவர்களிடம் ஆலோசனை
கேட்டார். முன்பின் அவ்வளவு சிந்தியாது, வேண் டிய மாற்றங்களைச் செய்யுமாறு அவர்கள் சொன் ஞர்கள்.
புனித லோறன்ரில் உள்ள குடும்பத்தின் பழைய வீடு சென்று, அந்த அமைதியிலும் தனிமையிலும் பன்னிரண்டு நாட்களில், புதிய அமைப்பு விதித்
- 148 -

தொகுதியொன்றை உருவாக்கிக்கொண்டு வந்தார். இத்தொகுதி புனித அல்வோ(phன்சஸ்சுடைய அமைப்பையே பெரும்பாலும் ஒட்டியிருந்தாலும் இயூஜீனின் தனித்துவம் அங்கு இல்லாமலில்லை.
ஐப்பசித் திங்கள் 24ஆம் நாள் தமது சபையின் ஆறு அங்கத்தவர்கள் முன்னிலையில் இயூஜீன் தமது புதிய விதிகளைப் படித்தார்.
முதற்பகுதி முழுமையாகவும் ஏகமனதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வாக்குத்தத்தங்கள் பற் றிய இரண்டாவது பகுதியை இருவர் மட்டுமே ஏற்றுக் கொண்டார்கள்.
நால்வர் எதிர்த்தனர். ‘நாங்கள் வந்தது ஒரு துறவற சபையில் சேரவல்ல. மறைமாவட்டக் குருக்கள் சேர்ந்த சபையென்று தொடக்கத்தில் திட்டவட்டமாகக் கூறப்பட்டது. இப்பொழுது ஏன் இந்த மாற்றம்?’’ இது அவர்களின் கேள்வி.
இயூஜீன் விட்டுக்கொடுப்பாரா? நினைத்ததை நடத்தியே முடிப்பவராச்சே,
திட்டமொன்று தீட்டப்பட்டது.
இவர்கள் சபையில் சேர்ந்த, ஆனல் குருக்கள் அல்லாத, மூன்று குருமாணவர்கள் உள்ளார்கள். விரைவில் குருக்களாகி சபையில் அங்கத்துவம்
வகிக்கப் போகிறவர்கள். அவர்களுக்கு வாக்குரிமை
- 149 -

Page 96
கொடுக்கப்படவேண்டும். இது இயூஜீனின் திடீர்
முடிவு
இயூஜீனின் கணக்குத் தவறவில்லை. மாணவர்
மூவரும் இயூஜீன ஆதரித்தனர்.
வாக்கெடுப்பின் முடிவு-6 : 4
எதிர்த்த நால்வருள் இருவர் கட்சி மாறினர்1 இறுதி வாக்கெடுப்பில்-8 : 2
எஞ்சிய இருவருள் ஒருவர் தற்காலிகமாக வாக்குத்தத்தங்கள் எடுப்பதாகக் கூறினர். மற்றவர் சிந்திக்க நாட் கேட்டார்.
பேராயர் போ(b)செ ஏக்ஸ் மறைமாவட்டப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவர் இயூஜி னின் குழுவுக்குத் தடையாக இருக்கவில்லை. ஆனல், உதவவும் முன் வரவில்லை. வழமைபோல மறை மாவட்டக் குருக்கள் இயூஜினை எதிர்த்து வந்தனர். இப்பணியில் அவர்கள் வளர்ந்து வந்தார்க, ளென்றே சொல்ல வேண்டும். இவர்களுடைய எதிர்ப்பு இயூஜீனின் வளர்ச்சிக்கு எருவாக மாறி Lugl. ܚ
பணியிலும் பேதமா
உள்ளுக்குட் புகைந்து கொண்டிருந்த எதிர்ப்பு 1820 ஆம் ஆண்டின் இளவேனிற் காலத்தில் பற்றி
حسن 150 سب

வெளியே எரியத் தொடங்கியது. டி வோ()ர் பா (b)ன்-ஜான்சனுடைய மறைப்பரப்பாளரும், டி மசெனெட்டுடைய மறைப்பரப்பாளரும் கூட்டாக ஏக்ஸ்- மார்செயியில் ஒரு மறைப் போதனை வாரத்தை (mission Week) நடத்தினர். முன்னை யோர் தூயபிரெஞ்சு மொழியில், சமுதாயத்தின் மேல் மாடியில் உள்ள நாகரிக மக்களுக்குப் போதித் தனர். பின்னையோர் மக்கள் மொழியான புருெ வன்சாலில் இரு நகரத்துப் பொதுமக்களுக்கும் போதித்தனர்.
இவர்களின் போதனையின் விளைவென்ன?
‘பிரான்சின் மறைப்பரப்பாளரை மார்செயி யில் நிறுத்த வேண்டும் !’’ இது இவர்களின் ஆதர வாளர்களின் ஏகோபித்த குரல்.
விடுவார்களா இயூஜீனின் ஆதரவாளர்கள்?
இயூஜீனின் குழுவுக்கும் சம உரிமைகள் வழங்க வேண்டுமென்று இவர்களும் வாதாடினர்.
இருமுனைத் தாக்கலுக்கு உட்பட்ட ஏக்ஸின் பேராயர் மார்செயியில் இரு சபைகளையும் நிறுவ அனுமதி அளித்தார்; தப்பிக்கொண்டார் ஆயர் அவர்கள்.
இவளா வாழ்க்கைத் துணை:
சார்ள்ஸ் அன்ருவான் டி மசெனெட் - இயூஜீ னின் தந்தை - நோய்வாய்ப்பட்டிருந்து, அந்நேரம்
- 151 -

Page 97
மனித்தாபூழ் அடைந்து மன்னிப்புப் பெற்று, 'நல்ல கிறித்தவனக’ உயிர் நீத்தார்: நீண்ட காலமாக அவர் மறைப்பற்று இல்லாதிருந்தவர்.
குரு மகனும், குருச் சகோதரனும் அவரின் இறுதி வேளையில் ஆறுதலாக இருந்தார்கள்.
மனைவியோ என்றும்போல் இறுதியிலும் எட் டவே நின்று விட்டாள். எவ்வுதவியும் கொடுக்க மறுத்துவிட்டாள். இவளா வாழ்க்கைத் துணை?
“இன்பத்திலும் துன்பத்திலும் நோயிலும் நலத்திலும்.’’ அவை கலியாணப் பலி பூசையுடன் முடிந்த சடங்கு அவர்களது வாழ்க்கையில் கலக் காத சொற்கள். w " ʻ
குருச்சகோதரரே கடன்பட்டு (500 வி()ருங்ஸ்) இயூஜீனின் தந்தையினது சிகிச்சைக்கும், பின்னர் அடக்கத்துக்குமாகச் செலவு செய்தார்.
பணத்தை நாடிப் பெண் தேடியவருக்கு இறு தியில் பணமும் கிடைக்கவில்லை: அப்பெண்ணும் துணையாக வரவில்லை.
பழிக்குப் பழியோ?
தம்பியை இழந்து தனியனஞர் குரவர் வோ (f)ர்ச்சுனே. எதிர் பார்த்த பதவியும் கிடைக்க
- 152 -

வாழ்க்கையில் விரக்தியே ஏற்பட்டது.
விரக்தியில் ஒர் ஒளி தோன்றியது.
1824 ஆம் ஆண்டின் தொடக்க மாதம். அருள் திரு வோ (f)ர்ச்சுனே அவர்கள், அதிகார பூர்வமாக மார்சேயியின் ஆயராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு ஆடித்திங்களில் அவர் ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட்டார்.
ஆயர், நியமனம் பெற்றதுமே செயற்படத் தொடங்கினர். வயதுதான் எழுபத்து மூன்று ! ஆனல், செயலில் அவர் இளைஞராகவே தோன்றி ஞர்.
பிரான்சின் மறைப்பரப்பாளருடைய திறமை களும் சேவைகளும் மேற்கொண்டு மறைமாவட்டத் துக்குத் தேவையில்லையென்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லிவிட்டார் புதிய ஆயர்.
ஆயருக்கெதிராகச் செய்யப்பட்ட பொய்ப் பிரச்சாரத்தை மேற்கூறிய சபையினர் நன்கு அறிந் திருந்தார்கள். ஆவன செய்ய அவர்கள் மனம் இடங் கொடுக்கவில்லை. அப்படிப்பட்ட மறைப்பணி செய் வோருக்குத் தமது மறைமாவட்டத்தில் இடமில்லை யென்ருர், ஆயர். பின்னலிருந்து குத்தும் கோழை களை அவர் வேண்டாமென்ருர்,
நேர்மையும் துணிவுங் கொண்ட மறைமாவட் டக் குருக்கள் கூடிய ஒரு குழுவொன்றையே புதிய ஆயர் விரும்பினர்.இப்படியொரு குழு இருக்கின்ற
- 53 -

Page 98
தென்ற உணர்வோடுதான் ஆயர் துணிந்து செயற் பட்டார் என்று சொல்ல இடமுண்டல்லவா?
அருள் திரு டி மசெனெட் அவர்களும், அருள் திரு. ரெம்பியேர் அவர்களும் மார்செயி மறை மாவட்ட முதல்வர்களானர்கள். இவர்களை நிர் வாகத்தில் விட்டுவிட்டு ஆயர் புருெவான்சில் உள்ள தமது பங்குகளைச் சந்திக்கச் சென்ருர்,
"டி மசெனெட்டைத்
தரக்கிலிடு!"
சில காலத்துக்குப்பின் ஏக்ஸ் வந்தார், ஆயர். தான் பண்போடு எழுதிய மடலுக்குப் பிரான்சின் மறைப்பரப்பாளர் எவ்வித பதிலையும் காட்டவில்லை யென்பதை உணர்ந்தார். ஆம், அவர்கள் அவ் விடத்தைவிட்டு ஓரங்குலந்தானும் நகரவில்லை.
ஆயரின் கோபம் பொங்கியது!
பேணுவினுற் சொன்னுற் கேட்கமாட்டார்கள்!. ஆகவே, செங்கோலைக் கையிலேந்தி அதிகார பூர்வ மாக தமது மறைமாவட்டத்திலிருந்து அச்சபை யினரை அகற்றினர். அவர்களது கோயிலும் மூடப் பட்டது.
நினைத்தது நடக்கவில்லை! அச்சபையின் ஆதர வாளர்கள் சீறியெழுந்தனர்.
- 54 -

“பிரான்சின் மறைப்பரப்பாளர் நீடூழி வாழ்க!'
"ஆயர் வீழ்க!' இவை அவர்களின் முழக்கங் கள்! கோஷங்கள்!
ஆயரகத்தைச் சுற்றி சுலோக அட்டைகளும் தொங்கவிடப்பட்டன!
‘வீடு விற்பனைக்கு!’ ‘டி மசெனெட்டைத் தூக்கிலிடு
yo
காவலர்கள் தலையிட்டனர்!
மேலெழுந்த வாரியாக அமைதி நிலவியது. ஆணுல், உள்ளுக்குள் கொந்தளிப்புத் தணியவில்லை. சமுதாயத்தின் உயர்மட்டம் மனதார வெறுத்தது, புதிய நிர்வாகத்தை.
காலப்போக்கில் ஆயரைப் பொதுவாக ஏற்றுக் கொண்டார்கள், பொதுமக்கள். ஆணுல், அவரின் மருமகனை அவர்கள் மன்னிக்கவுமில்லை, மறக்கவு மில்லை! வெறுக்கவுமில்லை என்று சொல்ல அவர்கள் இடம் வைக்கவுமில்லை. v
ஏன் இந்த எதிர்ப்பு?
ஆயரை எதிர்த்தமைக்குக் காரணம் காட்டப் பட்டது. புதிய ஆயர் தமது முதிய வயதில் தமது மருமகன் சொற்படிதான் ஆடுவார்: அந்த மரு மகன் தனது சபையின் நன்மையையே முன்வைத்து அனைத்தையும் ஆட்டுவிப்பார். இறுதியில், மறை
. 155 അ

Page 99
மாவட்டம் அவரின் சபையின் காலடியில் சர ணடைய வேண்டும். இதை ஏற்க முடியாது.
கற்பனையில் பிரச்சினையை வளர்த்து, அதற்கு மற்றவர்களைப் பலியாக்க முனைந்தார்கள் பெரியோர் கள்-சமுதாயத்தின் மேல்மட்டத்தில் இருந்து கொண்டு “கீழே பார்த்தறியாத பணக்கார வர்க்கம்.
ஆனல், உண்மையான காரணமென்ன?
டி மசெனெட் வறியோர் மத்தியில் பணி புரிந் தார். ஆள்வோர் செய்யும் அநீதிகளைச் சுட்டிக் காட்டினர். ‘முதலாளிகளை நம்பி, அவர்களின் இரக்கத்தில் வாழ்வதல்ல பாமர மக்களின் விதி: தமது உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறுவது அவர் களது உரிமை. பெறும் பிச்சையல்ல’’ என்று முழங் கிஞர் இயூஜின்,
பெரும்பான்மை சிறுபான்மைக்குப் பிச்சை கொடுப்பதல்ல-உரிமை கொடுக்க வேண்டும். ஒவ் வொரு மனிதனும் தனது மொழி பேசி, விரும்பிய வாறு வழிபட்டு, தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்து நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் நல்ல வணுக வாழ முயற்சி செய்வதே மனிதாபிமான வாழ்க்கை. இவ்வுண்மைகளைப் படியாத, சிந்திக் காத பாமர மக்களுக்கு அவ்வுண்மைகளை விளக் கிஞர் இயூஜீன்.
எங்கே 1 பொதுமக்கள் தங்களுக்கெதிராக எழுந்து விடுவார்களோ. ? தமது உரிமைகளை
- 156 -

உணர்ந்த மக்கள் உரிமை கேட்டு வந்தால் தங்க ளது மேல்மட்ட வாழ்க்கை தரைமட்டமாகி
விடுமே..?
பாதுகாப்பு வேண்டும்! 4. மசெனெட் போன் ருேரை வளர விடக்கூடாது. அவருக்கு ஆதரவளிப் போரை அதிகாரத்தில் இருக்க அனுமதிக்கக்
கூடாது.
இவையே உண்மையான காரணங்கள்.
அத்துடன் குருத்துவப் பொருமையும் இல் லாமலில்லை.
- 157 -

Page 100
f 9
புதிய யுகம்
மாமனும் மருமகனும் நிலைமையை நன்ருகப் புரிந்து கொண்டார்கள். ஒன்ருகச் செயற்பட் டார்கள். மார்செயி மறைமாவட்டப் பொதுமக் களின் நாடித்துடிப்பை, இதய தாகத்தை அறிய முற்பட்டார்கள், இருவரும்.
பிரெஞ்சுப் புரட்சியின் முடிவில் பொருளாதாரசமூக-மதத் துறைகளில் புதிய வளர்ச்சியொன்று மலரத் தொடங்கியது.
உற்பத்தித் தொழில்கள் புதிதாக உருவாயின. இயந்திரங்கள் நிறுவப்பட்டன. அங்கே இயந்திர யுகம் ஒன்று வளரத் தலைப்பட்டது.

மக்கள் தொகை பெருகியது. 1821 ஆம் ஆண்டு 109, 483 மக்கள் வாழ்ந்த நகரத்தில், 1824 ஆம் ஆண்டு 117,964 மக்கள் வாழ்ந்தார்கள்.
பழைய கட்டடங்கள் உடைக்கப்பட்டன; புதி யவை தோன்றின. இவற்றிற்கேற்பப் பழைய பங்கு எல்லைகள் மாற்றப்பட்டன. புதிய பங்குகள் புதிய எல்லைகளுடன் தோன்றின.
பழைய பிரபுக்கள் இறந்தனர். அவர்களுடன் பிரபுத்துவமும் இறந்தது. முந்திய நடுத்தர வகுப் பினர் முன்னேறினர். புதிய நடுத்தர வகுப்பினர் விருப்புடன் வளர முனைந்தனர்.
பாமர மக்கள் பொதுவாக புருெவன்சால் மொழியையே பேசினர்.அவர்களிடையே படிப்பறிவு வளரவில்லை. நாளிதழ்களைக்கூடப் பொதுமக்கள் படிப்பதில்லை. வளரும் நாட்டில் இவர்கள் பின் தங்கியே நின்றர்கள்.
ஞாயிறு பலிபூசையுடன் பொதுவாக மத அனுட்டானம் முடிந்துவிடும். பழைய சமயச் சடங் குகளையும், பெரிய கொண்டாட்டங்களையும் மக்கள் பெரிதும் விரும்பினர். மக்களை விடக் குருமார் விரும்பினர் என்று சொன்னலும் தவருகாது.
இவர்கள் எவ்வளவு தூரம் மதக் கொள் கைகளில் ஊறி வளர்ந்தார்கள், எவ்வளவு தூரம் புற வழிபாட்டிலும், சிலை வழிபா ட் டிலும் மேலெழுந்த வாரியாகப் பங்கு கொண்டு அதையே மத வாழ்க்கையென்று நம்பினர்கள் என்
- 159 -

Page 101
பனவற்றையெல்லாம் கணிப்பது கடினம். காலத் தின் கோலத்தையும் மக்களின் போக்கையும் அளவு கோலாக்கினல், பின்னையது முன்னையதை விஞ்சி விடுமென்பதில் மட்டும் முரண்பட்ட அபிப்பிராயங் கள் இல்லை.
அநாதை விடுதிகள், வாழ்க்கையில் ஏமாற்ற மடைந்த- ஏமாற்றப்பட்ட அபலை மகளிர் அகங்கள் போன்ற அமைப்புக்களைத் திருச்சபை நிர்வகித்து வந்தது. அவை அனைத்தும் காலத்தாற் பின்தங்கிய வையாகவே செயற்பட்டன.
காலத்திற்கேற்ற ஒரே ஓர் இயக்கம் செல்வந் தராயுள்ள ஆடவர்களுக்கென இயங்கியது. வாலிப ஆண்களுக்கு நல்லதொரு கழகத்தைக் குரவர் அல்மான் நடத்தினர்.
வறிய மக்களுக்கோ என்றைக்கும் போல ‘பிச்சை’தான் கிடைத்தது.
மார்செயி மறைமாவட்டம் குருக்களின்றித் தவித்தது. நூற்றெழுபது குருமார்களே முழு மறை மாவட்டத்துக்கும் பணிபுரிந்தார்கள். இவர்களுள் ஐப்பது வீதத்திற்கு மேற்பட்டோர் அறுபது வய துடையோர்: இம்மறைமாவட்டத்தில் புருெவான் சின் மறைப்பரப்பாளர் உட்பட மூன்று ஆடவர் துறவறச் சபைகள் இயங்கின; ஒரு சில துறவறச் சகோதரிகளும் பணிபுரித்தார்கள்.
மாமனும் மருமகனும் அழைத்தல் பற்றி அக் கறை எடுத்தார்கள். குருத்துவக் கல்லூரி ஒன்றைக்
- 160 -

கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு குருவானவரும் இப்பணிக்குப் பண உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டார். ஒரு சிலர் மறுத்தாலும் குருத்துவக் கல்லூரி உருப் பெற்று வளர்ந்தது. பின்னின்று பின்னிழுக்கும் ஒத் துழையாச் சக்திகளைப் பின்நோக்கிப் பார்ப்பதில்லை, இயூஜீன் டீ மசெனெட்.
புனித ஊழலோ ...?
ஆயர் வோ(t)ச்சுனே அவர்களை நியமனத்துக்கு முன்னரேயே நெடுங்காலமாக ஆதரித்து வந்த குரவர்கள் அனைவரும் பட்டங்களாற் கெளரவிக் கப்பட்டார்கள்.
தேர்தலிற் கட்சி அபேட்சகருக்காக இரவு பகலாய் உழைத்தவர்கள், தேர்தலிற் கட்சிக்காகத் தோற்றவர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பெரும் பதவி வகிப்பதில்லையா? கூசா தூக்கினவர்கள், குடைபிடித்தவர்கள், அடிவருடியவர்கள் குறைந் தது ஒர் ஆசிரியர் பதவியிலாவது (ஆசிரியம் இன்று அவ்வளவு கீழ்த்தரமாகி விட்டது) அமர்த்தப்படு வதில்லையா? இவையெல்லாம் பழக்கமாகி, இப் பொழுது சர்வசாதாரணமாகி, இனிமேல் சட்டமும் ஆகிவிடுமோ? ஏனென்று கேட்க யாருமில்லையென் முல் ஆட்சியிலிருப்போர் எதையும் சாதிக்கலாம் தானே?
11 - 161 -

Page 102
நகர முன்னேற்றத்தோடு மறைமாவட்ட நிர் வாகமும் சீர்திருத்தி அமைக்கப்பட்டது. அது ஈடுகொடுத்து வளர்ந்தது. ܀-
உள்ளும் புறமும் எதிர்த்தது!
இரு பெரும் பொறுப்புக்களை ஒரே வேளையில் நிறைவேற்ற முனைந்தார், இயூஜீன் டி மசெனெட்.
ஒன்று: தமது மறைமாவட்டத்தைக் காலத் திற்கேற்ற வாறு மாற்றி அமைப்பது. இரண்டு: அரும்பி மலர்ந்து வளர்ந்துவரும் தமது சபையை முறையாக நிர்வகிப்
l-liġi .
இதனுலேயே சிலர் அவரைத் தவருகப்புரிந்து கொண்டார்கள். தமது சபையின் நலன் கருதியே மறைமாவட்ட நிர்வாகத்தை இயூஜீன் கட்டுப் படுத்துகிருரென்று ஒரு சிலர் எண்ணினர்கள். இது எதிர்க்கட்சியின் தாக்குதல்.
சொந்தக் கட்சியும் குற்றஞ் சாட்டியது.
‘சபையின் முதல்வரைக் காணவே முடிவ தில்லை. இயூஜீன் மறைமாவட்ட முதல்வராக இருப்பதாலும், அதனலே பல தடவைகள் அவர் நீண்ட நாட்கள் சபைக் குழுவிலிருந்து விலகி வாழ் வதாலும் சபைக்கு நன்மையெதுவுமில்லை' என்ருர் கள் சபையினர்.
- 162 -

"தமது சொந்தப் புகழ் விரும்பி இயூஜீன் பதவிகளை விரும்புகிருரோ!' என்பது இன்னெரு குற்றச் சாட்டு.
ஆயர் வோர் (f)ர்சுனேயின் நியமனம் சபைக்கு நன்மை பயக்கும் என்று எண்ணியவர்கள் இன்று அதே நியமனம் தங்கள் சபையின் வளர்ச்சியைப் பாதிப்பதைப் பார்த்து மனம் நொந்தனர்.
கசிந்த இரத்தம்
இயூஜீனின் நிலை பரிதாபத்திற்குரியதாயிற்று!
சபையினின்று அங்கத்தவர்கள் விலகிச் சென் (ηrt 56ίτ.
ஆயர்கள் பலர் இயூஜீனின் சபையை ஒரு குருத் துவ விடுதியாக்கினர்,
ஏக்ஸின் பேராயர் இயூஜினைப் பற்றிய தமது அபிப்பிராயத்தைப் பகிரங்கமாகவே, "இழிவான பரிசேயன், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை' என்று டுெத்துரைத்தார்.
இயூஜின் வழமைக்குமாருக, பதிலடி கொடுக்கா திருந்தார். பொறுமையைக் கடைப்பிடித்தார்! ஆயினும், செயற்படாமல் இருக்கவில்லை.
1823 ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்களின் முதல்வெள்ளி. இயூஜீன் தமது சபையினருடன்
- 163 -

Page 103
அன்றைய நாளைக் கழித்தார். ஒரு சிறு துண்டு ரொட்டியும், தண்ணிருமே அவர் அன்று அருந் தினர். குழுவினர் முன்னிலையில் அவர் தம்மைத் தாமே அடித்து, தமதுடலை வருத்தினர். இரத்தம் கசிந்தது; பார்த்துக் கொண்டிருந்தோருடைய இத யமும் கரைந்தது.
சபை மீண்டும் ஒன்று சேர்ந்தது.
ஏக்ஸின் பேராயரும் இயூஜினைப்பற்றி இப் பொழுது நன்கு அறிந்து கொண்டார். தெரியாமற் செய்த குற்றத்துக்காக-இயூஜீனின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதுக்காக இயூஜினிடமே மன் னிப்புக் கேட்டார். அந்தக் குற்றத்திற்கு ஈடுசெய்யச் சந்தர்ப்பங்களையும் எதிர்நோக்கி இருந்தார்.
இவற்றைத் தொடர்ந்து ஒரு புற அமைதி நில வியது. இந்த அமைதி வரவேற்க வேண்டியது கூட.
- 164 -

20
சென்று, வென்று வந்தார்
சபையைப்பற்றிய பிரச்சினை ஒன்று தலை தூக் கியது. உரோம் அதிகாரபூர்வமாக இச்சபையை அங்கீகரிப்பதா இல்லையா?
அங்கீகாரத்தை இயூஜின் மனமார விரும்பினுர், ஆளுனுல்.
விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில அங்கத் தவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு எப்படி உரோம் சென்று அங்கீகாரம் கேட்பது?
அருள் திரு அல்பி(b)ணி அவர்கள்தான், இயூஜீ னின் தோள்தட்டி, வீரமெழுப்பி, உறுதியளித்து, உற்சாகம் கொடுத்து, 'சென்றுவா’ என்று அனுப்பி வைத்தார். இந்தப் பக்கத்துணையும், நெஞ்சுறுதியும்

Page 104
இயூஜீனுக்கு அப்பொழுது இன்றியமையாதனவாக இருந்தன.
உரோமில் பதின்மூன்ரும் லியோ டி மசெ னெட்டை ஆதரவோடு வரவேற்றர். அங்கே முத லில் அங்கீகாரமல்ல அனுதாபமே கிடைத்தது. 'காலமெல்லாம் வைதுகொண்டு, எம்மைப் பூண் டோடு அழித்துக் கண்டோடு சுவர்க்கம் அனுப்பக் காத்திருப்போரின் கரங்களை வலிமைப்படுத்துகிறீர் கள். அங்கீகாரம் இல்லேயென்ருல் இச்சபை அழிய வேண்டியதுதான்’ இயூஜீன் வலியுறுத்தினர்.
அனுதாபம் ஆதரவாக மாறியது. ஆதரவு அனுமதியாக மலர்ந்தது. அங்கீகாரத்தைப் பெறு வதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதையும் திருத்தந்தை அவர்களே சொல்லிக் கொடுத்தார் கள். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலிருந் தது, இயூஜீனுக்கு.
சில நாள்கள் ஓடி மறைந்தன. திருத்தந்தையின் எண்ணம் தெளிவானது.
**இச்சபையை நான் விரும்புகிறேன். இச்சபை யினர் செய்யும் பெரும்பணியை நானறிவேன். அவர்களுக்கு நான் உதவ வேண்டும்’ என்று திட்ட வட்டமாகச் சொன்னர்.
1826 ஆம் ஆண்டு மாசித் திங்கள் 17 ஆம் நாள். அது ஒரு பொன்னள். வரலாறு படைத்த நன் ஞள் !
ســــه I66 س

ஆயர்கள் மூவர் பெருமெதிர்ப்புத் தெரிவித்த போதிலும் அதிகார பூர்வமாக இயூஜினின் சபை இந்நாளில் அங்கீகரிக்கப்பட்டது.
ஆனல், புதிய பெயரில் இயங்கத் தொடங்கி
LЈgil.
'அமல மரியின் மறைப்பரப்புத் தியாகிகள் !'
இவர்களே இன்று அமலமரித் தியாகிகள் (அ. ம. தி.) என்று அழைக்கப்படுகிருர்கள்.
பெருமரமாகிய திருச்சபையுடன் இக்கிளை ஒட்டவைக்கப்பட்டது. டி மசெனெட் செயற்பட இனித் தடையென்ன ! தடங்கலென்ன ! எதிர்ப் பென்ன 1 மறுப்பென்ன !
சபை அங்கீகரிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் ஒடிமறைந்தன. குரவர் டி மசெனெட் மக்கள் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். தமது சபையின் வளர்ச்சிக்காகவும், தமது மறை மாவட்ட மறுமலர்ச்சிக்காகவும், இவற்றினூடாகத் திருச்சபையின் மகிழ்ச்சிக்காகவுமே அவர் தம்மை அர்ப்பணித்தார்.
கால நேரம் பாரது இரவு பகல் என்று நோக் காது உழைத்தால் உடல் தாங்குமா? ‘முடிந்தது அவரது வாழ்க்கை' என்று சொல்லுமளவுக்கு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆயினும், காலன் வரவில்லை அவரது காலத்தின் கணக்கை முடித்துக் கொள்ள. m
- 167 -

Page 105
உடல் நலம் சிறிது ஏற்பட்டதும் மீண்டும் உற்சாகமாகச் செயற்படத் துணிந்தார், இயூஜீன். 'சுகவீனமுற்ற இந்த உடலை நன்ருக உலுப்பி எடுக்க வேண்டும்' என்று அவர் காரணங்காட்டி ணுர், பொறுமையிழந்த குரவர் ரெம்பியேர் தமது அதிபரை அனுப்பி வைத்தார் சுவிற்செர்லாந்துக்கு, ஓய்வு பெறுவதற்காக.
வாழ்க்கையே கசந்தது!
இயூஜின் சுவிற்செர்லாந்தில் இருந்த பொழுது அல்ஜியேர்ஸில் பிரெஞ்சுக்காரருக்குப் பெரு வெற்றி யென்று கேள்வியுற்று, மகிழ்ச்சிக் கடலில் மிதக்க லானர். இதற்கு நாட்டுப்பற்று என்று சொல்வதை விட், ‘இனி ஆபிரிக்காக் கண்டம் தமது சபையின் சேவைக்குத் திறந்து விடப்படும்’ என்ற எண்ணமே முக்கிய காரணம் என்று சொல்ல வேண்டும்.
மார்செயியிலும் மக்கள் பெருமகிழ்ச்சி கொண் டார்கள். துறை முகப்பட்டினமான மார்செயியின் வணிகம் வளர்வதற்கு இவ்வெற்றி வழி வகுக்கு மென்பதே இம்மக்களின் மகிழ்ச்சிக்குக் காரணம்.
இன்பமும் துன்பமும் கலந்து வரும் என்பார் கள். மகிழ்ச்சியில் மிதந்த மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. வேருேர் செய்தி.
பத்தாம். சார்ள்ஸ் பரிஸ் நகரை விட்டு ஓடி விட்டார்.
- 168. -

டக் டி ஓர்லியன்ஸ் ஆட்சியில் அமர்ந்து கொண் டார்.
1830 ஆம் ஆண்டின் ஆடிப் புரட்சி இயூஜினை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது: அதே வேளை அவருக்கு வெறுப்பையும் கோபத்தையும் அளித்தது. வீ(f) றிபேர்க்கிலிருந்து மாமனுருக்கு எழுதிய மடலில், ‘நாட்டை விட்டு ஓடிவிடும். புதிய ப(b)ரிகேட் டின் மன்னனை ஏற்பதாக இருந்தால் தொடர்ந்து அங்கே இரும்’ என்று குறிப்பிட்டார். “பதவியிலி ருந்து கொண்டு, மன்னனை எதிர்ப்பதினுல் ஏற்படக் கூடிய விளைவுகளைத் தாங்கிக்கொள்ளும் வயதல்ல, மாமனரின் வயது," என்று இயூஜீன் எண்ணிய படியாலேயே அவ்வாறு எழுதினர்.
புதிய மன்னனின்பால் இயூஜினே ஒரு முடிவுக்கு வரவில்லை. ஏற்பதா? நிராகரிப்பதா?
உரோமிலிருந்து எட்டாம் பத்திநாதர் சுற்ற றிக்கை அனுப்பினர். புதிய மன்னன் லூயி-ஃபி லிப்பை பிரான்சின் கிறித்தவ மன்னனுக ஏற்றுக் கொண்டதாகவே அச்சுற்றறிக்கை சொல்லாமற் சொன்னது.
திருத்தந்தையின் சுற்றறிக்கை இயூஜீனுக்குக் கசந்தது. வாழ்க்கையிலே அவருக்கு மிக்க கசப் பான சம்பவம் இதுவாகவே தோன்றியது.
கத்தோலிக்க சமயத்தையும் பூ(b)ர்பொ(b)ன் ஏகாதிபத்தியத்தையும் இணைத்தே ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர், வளர்ந்தவர், இயூஜீன். அச்சூழலில்
- 169 -

Page 106
ஊறியவர். ஒரு பிரெஞ்சுக்காரனின் பெருமை அதுவென அவர்கள் இரத்தத்தில் ஊறிய பாரம் பரிய உண்மை. இப்பொழுது மறுப்பதா?.
ஆம்; திருத்தந்தைபாற் கொண்ட பிரிக்க முடி யாத பற்று அவர் ஒன்ருக ஏற்றுக்கொண்ட இரு அமைப்புகளில் ஒன்றை விடுமாடு சொல்லிற்று. காலத்தினுாடாக வளர்ந்தபொழுது இதயம் விரும் பிய பலவற்றை அவர் தியாகம் செய்ததுண்டு. நெஞ்சம் நேசித்த சிலவற்றை விலக்கியதுமுண்டு. ஆனல், இவ்வளவு ஆழமாக ஊன்றிப் பதிந்த ஒரு கொள்கையை இரவோடிரவாக உதறிவிடுவதென் ருல்.
உணர்ச்சிகள் தடுமாறின! நெஞ்சு வலித்தது! இதயம் நொந்தது! சிந்தை சிதறியது!
ஆயினும், அவர் தம்மை முழுமையாக இழந்து விடவில்லை.
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி ஒன்று கூட்டி ஞர். நெஞ்சை உறுதிப்படுத்தினர். இதயத்தைக்
கடினமாக்கினர். சிந்தையை ஒருமுகப்படுத்திச் சிந்திக்க வைத்தார்.
'திருச்சபையின் தனிமுதல் தலைவர் ஆணை கொடுக்கும் பொழுது ஒருவன் தன்னுடைய கொள் கைகளை, அபிப்பிராயங்களை சற்று மாற்றியமைப் பதில் கெளரவக் குறைவேதுமில்லை' என்று இயூ ஜீன் அறிவித்தார்.
- 170 -

முன்பிருந்த எரிமலை, பிடிவாதம், தலைக்கணம்; பிரபுத்துவம் ஆகிய அனைத்தும் இப்பொழுது எங்கே? வியப்பாக இருக்கிறது!
இயூஜீன் தமது கொள்கைகளை, அபிப்பிராயங் களையெல்லாம் மறுபரிசீலனை செய்யத் தொடங்கி ஞர்.
புதிய ஏகாதிபத்தியம் திருச்சபைக்குப் பத்தி யப்படவில்லை.
மார்செயியில் மறைமாவட்ட அமைப்பு வேண் டியதில்லையென்றும், இருக்கும் ஆயருடன் மறை மாவட்டம் இல்லாமற் போக வேண்டுமென்றும் பெரிதாகப் பலர் குரலெழுப்பினர்.
எண்பது வயதைக்கடந்த ஆயர் வோ(f) ர்ச்சுனே அவ்வளவு இலகுவாக ஏகாதிபத்தியத்தின் ஏவுதலுக்கு அடிபணிந்து உயிர் விடுவதாக இல்லை! நாட்டில் நடக்கும் சோக நாடகத்தை எழுத்தில் வடித்து உரோமுக்கு அனுப்பி வைத்தார், ஆயர்.
அந்த முதிய ஆயர் திட்டமொன்றையும் தீட் டினார்.
முதியவரின் புதிய திட்டம்
“அருள் திரு இயூஜீன் டி மசெனெட் அவர்களை ஆயராக்க வேண்டும். ஆனல், "அழிக்கப்பட்ட மறை
一 I7J 一

Page 107
மாவட்டத்'துக்கெனவே அவரை நியமிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நியமனம் பிரான்சு நாட்டின் அதிகாரத்துக்கும் உட்படாது. புதிய ஆயர் மார் செயியில் இருக்க வேண்டுமென்ற நியதியுமில்லை. இப்படிப்பட்ட ஓர் ஆயர் எனது வேலையையும் இலகுவாக்குவார். எனது மறைவின் பின்னர் இப் பகுதியில் குருமாணவர்களைத் திருநிலைப்படுத்துவார். அம்மறை மாவட்டத்துக்கு அதிகார பூர்வமாக ஓர் ஆயரை நியமிக்கும் காலம் வரும்வரை இப்படிப் பட்ட ஓர் ஆயர்தான் வேண்டும்.’’ தூரநோக்குடன் வகுக்கப்பட்ட திட்டம்.
திட்டம் உரோமுக்கு அனுப்பப்பட்டது. திருத் தந்தை தமது ஆலோசனைக் குழுவுடன் கலந்துரை யாடிய பின்னர் இத்திட்டத்தை முழுமையாக மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். ‘ஆனல், மிக இரகசியமாகவே இத்திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும் என்றது உரோம்.
புதிய ஏகாதிபத்தியத்தின் நிலையென்ன என் றறிவதற்கு இயூஜினை ஆயராக்குவது நல்லதென உரோமுக்குத் தெரிந்தது. அதேவேளை ஆள்வேr ரிடமிருந்து வரும் எதிர்ப்புக்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் பொறுப்பும் கடமையும் இயூஜினை மட்டுமே சாரும். உரோம் தப்பித்துக் கொள்ளும். ஆம்; குறுக்கு வழியிற் சென்றது தலை மைப்பீடத்தின் சிந்தனை.
உரோம் பெரிதும் சுயநலத்தோடுதான் செயற் பட்டது. இது திருச்சபையின் தலைமைப் பீடத்தின் பொறுப்பற்ற, தாய்மையற்ற செயல்! .
- 172 -

ஆனல், ஒன்றுமட்டும் நல்லதாகச் செய்தார்பிள் இயூஜினை உரோமுக்கு அழைத்தார்கள். புதிய திட் டத்தை விளக்கி, அதனுல் வரக்கூடிய அனைத்து விளைவுகளையும் விரிவாகவே விளக்கினர்கள்.
துணிந்த பின் மனம் துயரங் கொள்ளுமா? அல் லது பின்வாங்குமா? பின்வாங்குதல் டி மசெனெட் குல வரலாற்றில் இல்லாத சொல்! திருத்தந்தையின் நிர்வாக ஆலோசனைக் குழு இறுதியில் தனது பக் கமே துணைநிற்குமென்ற நம்பிக்கையுடன் புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டார், குரவர் இயூஜீன்.
எவ்வளவு ஆழமான கடலில் தான் கால்வைக் கின்ருர் என்பது இயூஜினுக்குத் தெரிந்ததா?.
“ ‘புனித கடல் (Holy See) ஆழமானுல்தான் என்ன? அதில் ஆழ்ந்து போனுருன் என்ன? அது தானே மோட்சம்’ என்று எண்ணினரோ!
ஒன்றுமட்டும் நிச்சயமாகத் தெரியும். திருத் தந்தை தமது நிலைமையைத் தெளிவாக்கி விட்டார். திருத்தந்தைபால் பற்றும் பாசமும் கொண்ட, இயூ ஜீன் திருந்தந்தையின் திருவாட்சியைக் காப்பாற் றும் கடமை தனக்குண்டென்று எழுந்தார். ஆயர் களை நியமிப்பதில் தமக்கும் பங்குண்டு என உரிமை பேசும் பிரான்சின் ஆள்வோரது உரிமை எல்லை மீறுகிறதென்று சுட்டிக்காட்டத் தமக்குப் பொறுப் புண்டென்று முன் வந்தார்.
இளங்கன்று பயமறியாது.
சவாலாக வந்தது புதிய பதவி; சமாளிக்க வேண் டும், புதிய பதவியின் மூலம்.
حسسہ 173 سسس۔

Page 108
2f
ஆயரானுர், இயூஜின்
1832 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்கள் முதலாம் நாள். திருத்தந்தை பதினரும் கிறெகறி இயூஜினை அல்ஜீரியாவின் ஐக்கோசியாவின், இல்லாத ஒர் அமைப்புக்கு, ஆயராக நியமித்தார். பிரெஞ்சு ஆட்சிக்கு இந்த நியமனம் பற்றி எச்செய்தியும் அறிவிக்கப்படவில்லை. ரியுனிசியா, றிப்பொலிற்ரு னியா என்னும் இரு மறை பணித்தலங்களுக்கும், மறைப்பணிச் சந்திப்பாளராகவும் இயூஜினை இதே நாளில் விசுவாசப் பரப்புதல் சபை நியமித்தது.
சூழவரக் கூடிவந்த பிரச்சினைகள், கவலைகள் அனைத்தையும் மறந்து மறுத்து, ஆயராகத் திரு நிலைப்படுத்தப்படும் வைபவத்துக்குத் தம்மை ஆயத் தம் செய்து வந்தார், இயூஜீன்.

‘நான் குருவானபொழுது பெற்ற பரிசுத்த ஆவியின் ஏவுதல்களை இதுவரை நன்கு உணர்ந்து பின்பற்றவில்லை. ஆனல், இப்பொழுது அனைத் தையும் அவர் என்னிற் சீர்ப்படுத்தி விடுவார். அவ ருடைய ஏவுதல்களை இனி நான் தட்டிக்கழிக்காத வாறு அவர் என்னில் ஆழமாகவும் உறுதியாகவும் உறைவார்’’ என்று இயூஜீன் நம்பிக்கையுடன் எழுதியுள்ளார்.
அவரது உள்ளத்தில் ஓர் உறுதி ஏற்பட்டு விட்டது. அவரது இலட்சியம் தெளிவாகிவிட்டது. அவரும் துணிந்து விட்டார். அத்துடன் ஓரளவு அதிகாரமும் சேர்ந்து விடுகிறது.
டொன் பா(b)ர்ரொலோ வெனிஸில் இயூஜீ னுக்கு உறுதுணையாக இருந்து குருத்துவத்தின் ஆசையை அப்பொழுதே இயூஜீனுக்கு ஊட்ட முனைந்தவர்-அடக்கம் செய்யப்பட்ட புனித சில் வெஸ்ற்ரோ ஆலயத்தில் (உரோம்), ஐப்பசித் திங் கள் பதின்நான்காம் நாள், அருள் திரு இயூஜீன் டி மசெனெட் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஆள்வோரின் சதித்திட்டம்
புதிய ஆயர் மார்செயி வந்தார். வரவேற்பும் மரியாதை மதிப்பும் இல்லாமல் இல்லை. ஆனல், ஆயரின் "தேன் நிலவை' நீடிக்க விடவில்லை, எதிர்க் கட்சியினர். ܖ
-س- I75 --

Page 109
றேன் நதிக்கரைப் பொறுப்பாளர் திரு. தொமஸ் அவர்கள் புதிய ஆயரின் செயல்களை ஒர் அசைவும் விடாது அனைத்தையும் பரிசிலுள்ள மறை முதல்வருக்கு அறிவித்து வந்தார். புதிய ஆயரின் நியமனம் பற்றிய தகவல் எதையுமே இது வரை பெருத மறைமுதல்வர் வரிதவருது அனைத் தையும் உள்நாட்டு அமைச்சுகளுக்கும் வெளிநாட் டுத் தூதரகங்களுக்கும் அறிவித்து வந்தார்.
உரோம் தான் கொடுத்த வாக்கைக் காப் பாற்றி, உறுதியாக நின்றது, தனது கொள்கையில்.
வெறுப்பை உருவாக்கக்கூடிய முறையில் செய்தி களைச் சொல்வதில் திரு. தொமஸ் அவர்கள் பயிற்சிபெற்று வளர்ந்தவர். முப்படை அதிகாரி களுடன் பத்திரிகைகளும் ஒருமித்து ஆயரைத் தாக் கின.
ஆயரின் ஒவ்வொரு சொல்லும், செயலும் கவ னமாக அவதானிக்கப்பட்டு வந்தன. அவற்றிற்குப் பாதகமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. அவ ருடைய சொற்பொழிவுகள் சிதைக்கப்பட்டு, இடம் பெயர்த்து மேற்கோள்களாகக் காட்டப்பட்டன. மார்செயியின் மத்திய அரசாங்க அதிபர் கொலை செய்யப்பட்டபொழுது, அப்பழி சுற்றி வளைத்து ஆயரின் மேற் போடப்பட்டது. ஆயரின் குடும்பச் சூழல் ஆதாரமாக எடுத்துரைக்கப்பட்டது. இப்ப டிப் பல தரப்பட்ட குற்றச்சாட்டுகள் பலகோணங் களிலிருந்து ஆயருக்கெதிராக வீசப்பட்டன. ஆள் வோரையும் புதிய ஏகாதிபத்தியத்தையும் கவிழ்க்க
- 176 -

ஆயர் திரைமறைவில் சதித்திட்டம் வகுக்கிறர் என்பது எல்லாவற்றிலும் பெரியதொரு குற்றச் சாட்டு.
உரோமிலுள்ள பிரெஞ்சுத் தூதரகத்திலிருந்து பிரான்சின் நிர்வாகச் செயலாளருக்கு அறிக்கை ஒன்று வந்தது. ‘அந்த ஆயரின்மேல் சுமத்தப் பட்ட குற்றங்கள் நிறைய உள்ளன; அத்துடன் அவை பாரதூரமானவை; குற்ற நீதிமன்றத்தில் வழக்குத்தொடர அவை போதுமானவை,' என்று அவ்வறிக்கை வெந்த புண்ணில் வேல் பாச்சியது.
எதிர்ப்பு வளர்ந்ததும் உரோம் ஆட்டங்கண் டது. திருத்தந்தை ஆரும் கிறெகறி, ஆயர் இயூஜினை மார்செயியிலிருந்து இடம் மாற்றினர்.
உரோமுக்குச் சென்ற ஆயர் இயூஜீனுக்கு விறைத்த வரவேற்புத்தான் கொடுபட்டது. ஆயரின் வினுக்களுக்கு மிகச்சுருக்கமான விடைகள்தான் கிடைத்தன. திருத்தந்தைகூட உற்சாகத்துடன் ஆயரை வரவேற்கவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் சாட்டுபவ ராக மாறினர்.
பிரெஞ்சு நிர்வாகம் செய்த வேலையை ஒவ் வொன்ருக எடுத்து விளக்கினர், ஆயர் இயூஜீன். அவர்களைக் கலந்தாலோசியாது உரோம் தன்னை ஆயராக்கி மார்செயியிக்கு அனுப்பியதால் ஆத்தி ரம்கொண்ட புதிய ஏகாதிபத்தியம் உரோமை
12 - 177 -

Page 110
எதிர்த்துச் செய்யும் சதிதான் இத்தனை குற்றச் சாட்டுகளும் என்று, இயூஜின் தமக்கெதிரான குற் றச்சாட்டுகளை அச்சுவேறு ஆணிவேருகப் பிரித்து விரித்து விளக்கினர். இக் குற்றச்சாட்டுகளைக் கொண்டு ஆயரை நீக்கி, பரிசுத்த தந்தையின் முகத் தில் கரி பூசுவதே ஏகாதிபத்தியத்தின் குறிக்கோள் என்றும் எடுத்துக் காட்டினர், ஆயர்.
போதும் !
திருச்சபையின் தனிப்பெரு முதல்வருக்கு உண்மை புரிந்தது. அவர் உடனேயே ஆயரை மீண்டும் அவரது (அழிக்கப்பட்ட) மறைமாவட்டத் திற்கே அனுப்பிவைத்தார்.
மார்செயி மனம்மாறவில்லை. ஒரு பேயைத் துரத்தினல், அப்பேய் சென்று மேலும் ஏழு பேய் களுடன் வரும் என்பதுபோல, எதிர்ப்புகள் கடுமை யாக வளர்ந்தன. இயூஜீனின் பிரஜாஉரிமையைப் பறிக்க முனைந்தார்கள், ஆள்வோர்.
மறைமாவட்ட முதல்வர் என்ற முறையில் அவருக்கு வளங்கப்பட்ட செலவுப்பணம் நிறுத்தப் பட்டது. பின்பு வாக்காளர் பட்டியலில் இருந்து ஆயரின் பெயர் நீக்கப்பட்டது.
பொறுமைக்கும் அளவுண்டு. குட்டக் குட்டக் குனிபவனும் மடையன். (குட்டியவன் மடையன் என்பது ஏற்கனவே புரிந்து விட்டது!):
பொங்கியெழுந்தார், நாட்டுப் பற்றுக்கொண்ட இயூஜீன். உரோமின் துணை கிடைக்குமென்ற நம்
-- 178 -

பிக்கையுடனும், இரு சட்டத்தரணிகளின் துணையு டனும் நீதி மன்றம் சென்ருர், நீதி கேட்பதற்கு,
காட்டிக் கொடுத்தது
தலைமைப் பீடம்
‘'நீதியினிமித்தம் பசிதாகம் உள்ளோர் பேறு பெற்றேர்’ என்று கிறித்துவின் நற்செய்தியை நானிலத்தில் நவிலவேண்டிய திருச்சபையின் தலை மைப் பீடம், நீதிக்காக வாதிடப் பயந்து, அனுதா பத்தை மாத்திரம் அள்ளிக்கொடுத்தது ஆயருக்கு. உரிமை கேட்கச் சென்றவனுக்கு, பிச்சை கொடுத்து சமாதானப்படுத்த முனைந்தது திருச்சபையின் மேலி
1-ம்.
தான் கொடுத்த வாக்குறுதியைத் தானே மறந் தது, எலும்பற்ற முதுகு கொண்ட உரோமையின் நிர்வாகம். கொள்கையில் கோழையாகிக் குன்றிக் குனிந்தது, கொள்கைக்காக உயிர் கொடுக்க வேண் டிய திருச்சபையின் தலைமைப்பீடம். ஆள்வோாரின் அடிவருடி வாழத் தனது சொந்தக் குழந்தை யையே பலியாக்க முனைந்தது, தாய்த் திருச்சபை யின் தாய்மையை இழந்த தலைமைச் செயலகம். தான் வளர்த்த வீரனைத் தானே காட்டிக் கொடுத் தது திருத்தந்தையின் வீரமற்ற - துணிவற்ற - ஆண்மையற்ற ஆலோசகர் குழு. சிலுவைக்குச் சான்றுபகர வேண்டிய திருச்சபையின் தலைமைப் பீடம் ஏகாதிபத்தியத்திற்கு அடி பணிந்து எடிபிடி வேலை செய்தது.
簧 , 景 景
- 179 -

Page 111
அன்றைய நிலை, இன்னும் மாறியதெனப் பெருமை கொள்ள முடியவில்லையே!
என் சிந்தனை என் நாட்டிற்கு ஓடுகிறது.
உரிமையா? பிச்சையா ?
ஈழத்துச் திருச்சபை இன்று தனது உரிமை களைக் கேட்கின்றதா? இல்லை, பெற்றுக்கொண்ட ‘பிச்சையுடன் செளகரியமாக வாழுகின்றதா? கிறித்தவக்கல்வி புகட்டுவது எமது உரிமை என்ருல், ஏன் பாடசாலைகளைக் கொடுத்தார்கள்? கல்வியில் பாகுபாடில்லை என்ருல், கிறித்தவக் கல்வி என்ற ஒன்று இல்லை என்றல், ஏன் ஒரு சில தனியார் பாடசாலைகளை இன்னும் நடத்துகிறர்கள்?
வேலை நியமனங்கள் எழுபத்தைந்து வீதம் பெளத்தர்களுக்கென்றல், இருபத்தைந்து வீதம் ஏனைய மதத்தவர்களுக்குப் ‘பிச்சையா அன்றேல் அவ்வளவுதான் அவர்களின் உரிமையா?
ஈழத்துத் திருச்சபை இதுவரை வாய்திறவாத தன் காரணம் என்ன? கிடைக்கும் ‘பிச்சை'யும் கிடையாமற் போய்விடுமே என்ற பயமா? அன்றேல் இவ்வளவுதான் எமது உரிமை என்ற திருப்தியா?
திருச்சபையின் மேல்மட்ட ஆட்சியில் இருப்ப வர்கள் கூட சிலவேளைகளில் உரிமை வழங்குவதற் குப் பதிலாக பிச்சை கொடுக்கிருர்களே!
- 180 -

சிறுபான்மை, பெரும்பான்மை நாட்டில் உள்ள பிரச்சினை. அரசியல் நன்மைகளுக்காக, சுயநலன் களுக்காக அத்தலைவர்கள் இப்பாகுபாட்டை வளர்க் கிருர்கள். அதேவேளை ‘சோசியலிசம்’ பேசுகிருர்கள். ஆனல், ஆண்டவன் முன்னிலையிலும் - அவனின் திருக்கோயிலிலும் சிறுபான்மை, பெரும்பான் மையா? அவன்முன்னிலையிலும் பணக்காரன், வறி யவன் பாகுபாடா? அவன் சந்நிதானத்திலும் உயர் W சாதி, தாழ்சாதிகளா?
ஆண்டவன் பெயரைச் சொல்லி, அவனுக்கு மதமெழுப்பி, அம்மதத்தை அமைப்புக்குட்படுத்தி, அவ்வமைப்பைக் கட்டிக்காத்து வளர்க்க "புனித ஆட்சி செய்யும் "புனித ஆள் (ழ்)வார்'களும் உரிமை வழங்குவதற்குப் பதிலாகப் பிச்சை கொடுக்கிருர் 5G56TIT?
சாதி, மொழி, வேறுபாடின்றி எமது ஆலயங் களில் வழிபட முடிவதில்லையே!
வாரத்துக்கொருமுறை அன்றேல் மாதத்துக் கொருமுறை தங்கள் மொழியிலே புரிந்து வழிபட சிறுபான்மையொன்றிற்கு அனுமதி கொடுத்தபின், ஏதோ செயற்கரிய செயலைச் செய்துவிட்ட மாதிரிக் கொக்கரிக்கிருர்களே! இவர்கள் கொடுத்தது பிச் சையா, அன்றேல் உரிமையா? .
கோயிலிலும் சரி, கோயிலைச் சுற்றிவளரும் ஏனைய துறைகளின் நிர்வாகங்களிலும் சரி, சிறு பான்மை பெரும்பான்மையென்ற பாகுபாடுகள்
மதத்துக்கே இழிவு! நவிலும் நற்செய்திக்கே முரண்!
- 181 -

Page 112
"இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பரிசுத்த தந்தையின் பிரதிநிதியாக ஈழத்தில் கடமைபுரிப வரிடம் செல்லலாமா?’ என்று பல தடவைகளில் பல கத்தோலிக்க பெரியோர்.முன்வந்தனர்.
محصہ۔
அப்பாவி மக்கள் இவர்கள்!
அந்தப் பிரதிநிதி என்ன செய்வார்? அவருக்கு எவ்வளவு உரிமையுண்டு? அவற்றில் எவ்வளவை செயற்படுத்த அவருக்கு அனுமதியுண்டு?
திருநாட் பெருநாட்களில் கோலத்தைக் கூட்டு வதற்கு வருகை தந்து வண்ண வண்ண உடையில் காட்சிதருவதற்கும், பரிசளிப்பு விழாக்களிலும், திறப்புவிழாக்களிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவும் தானே பிரநிதி! سی.حسببر
கைப்பொம்மை அவர்! பாவம்! அவரையேன்
இங்கிழுப்பான்?
(அச்சாகிக்கொண்டிருக்கும் பொழுது வந்த செய்தியின் விளைவு இச் சேர்க்கை).
அதுவும் இப்பொழுது எங்களது ஆள்வோர் வத்திக்கானுடன் ‘நல்லுறவு வைத்துள்ளார்கள். அந்தப் பிரதிநிதி இப்பொழுது அரசியல் ரீதியாக - அதிகாரபூர்வமாக ஒரு தூதுவர். ஆகவே ஆள் வோருக்குக் கசக்கும் பிரச்சினைகள் அவருக்கும் கசந் தாக வேண்டும். அன்றேல் அந்த நல்லுறவு கசக்கும்!
س- 182 -س-

இதிலெல்லாம் பரிசுத்த ஆவியின் பங்கென்ன? ஒருவேளை இந்த நவீன இராஜதந்திர உறவுகளைப் புரிந்து கொள்ள முடியாமல்.
இப்படியே சிந்தித்தால் இன்னும் பலவினுக்கள் பல கோணங்களிலிருந்து தோன்றும்.
கதை சொல்லிவந்த குரவர் கதையைத் தொடருகின்ருர்.
兴 兴 兴
ஆட்சி வாழ.
ஆண்டி பலியா ?
இயூஜீன் நீதிமன்றம் செல்வது இராஜதந்திரம் ஆகாது என்று உரோமையிலுள்ள 'இராஜா'க்கள் முடிவு செய்தனர். இயூஜின் தமது வழக்கைத் திருப்பி யெடுத்துக் கொள்ள வேண்டுமென்ருர்கள், அந்த 'இராஜா'க்கள்.
எந்தத் திருச்சபையின் நலனுக்காக, அதுவும் குறிப்பாக உரோமிலுள்ள மத்திய நிர்வாகத்தின் தன்மானத்தைக் காப்பாற்ற, ஆயர் இயூஜின் உழைத்தாரோ, அந்த நிர்வாகம் அவரையே பலி யாக்கியது, தனது செளகரியத்திற்காக-பாதுகாப் புக்காக.
தொட்டிலில் இருந்த குழந்தையைத் தீண்ட வந்தது, நாகம். தன்னை வளர்த்தோர்க்கு நன்றிக்
- 183 -

Page 113
கடனுக அந்நாகத்தைக் கீரி கொன்றது. அவசர புத்தி கொண்ட வீட்டுக்காரி விபரம் அறியாது, கீரியின் வாயில் இரத்தத்தைக் கண்டதும் தனது பிள்ளையைக் கீரி தீண்டியிருக்க வேண்டுமென்று முடிவு செய்து கீரியைக் கொன்ருளாம்.
அவள் விபரம் அறியாது அவசரப்புத்தி கொண்டு அவ்வாறு செய்தாள்.
ஆனல், இங்கே விபரம் அறிந்த, அறிவுடைய ஆலோசகர் குழு செய்ததென்ன?
ஆயர் இயூஜீன் மனமுடைந்து தலை குனிந்தார்.
'திருத்தந்தையின் விருப்பத்துக்கு அடிபணி வதைவிட வேறென்ன செய்ய முடியும் எனது நலன்களையும், கெளரவத்தையும் அவரின் கரங்களில் ஒப்படைக்கின்றேன்’ என்று உரோமுக்கு மடல் வரைந்தார், முன்னைநாள் எரிமலையாகிய பிரபு.
இவ்விடயத்தில் மனித உணர்வுகளை அவ்வளவு சுலபமாகக் கட்டுப்படுத்த முடியுமா? கட்டுப் படுத்த வேண்டுமா? கட்டுப்படுத்துவது நல்லதா?
உளஇயலார் விடை பகரட்டும்!
“என்னை வதைத்து, அதனிமித்தம் நான் உரோ முக்கு நாடு கடத்தப்பட்டு வாழவேண்டி வந்தால், இறைவனெருவனைத் தவிர வேறுயாரும் நன்மை சொல்ல மாட்டார்கள். ஆறுதல் பெறவோ, ஆசி கள் வேண்டவோ யாரையுமே அணுக முடிவதில்லை.
- 184 -

யாரையுமே என்னுல் நம்ப முடிவதுமில்லை,' என்று இயூஜீன் மிக்க மன வேதனையுடன் மடலொன்றில் எழுதியுள்ளார்.
அவர் இவ்வாறு உணரவில்லையென்ருல் அவர் மனிதனேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். உரோமின் பொறுப்பற்ற செயல் எவ்வளவு
தூரம் அவரைப் பாதித்துள்ளதென்று நன்முகத் தெரிகின்றது.
ஒரு குருவினுடைய வாழ்க்கையில் இப்படியான சம்பவங்கள் நடப்பதுண்டு. யாருடைய நலன்கருதி (மனிதாபிமான அடிப்படையில் மட்டும்) காலமெல் லாம் உழைக்கின்ருர்களோ அவர்களே ஒரு சிறு சுயநலன்கருதி குருமார்களைப் பலியாக்கி விடுகிருர் கள். இப்படி நொந்த குருமார் தனிமையில் தங் கள் கவலைகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத தவிப்பில், செய்த சேவைக்கெல்லாம் கிடைத்த பரிசு இதுதான் என்ற வெறுமையில் படும் வேதனை எவ்வளவு !
பரிசுத்த தந்தையின்பால் இயூஜின் வைத்த பற்றும் பாசமும் நம்பிக்கையுமே அத்தந்தைக்காக அவர் தமது எதிரிகளால் மிதிக்கப்பட வழிவகுத் தன: தன்மானத்தை இழக்க வாய்க்கால்களாய் சமைந்தன.
வித்து விழுந்து முளைத்தால் ஒழிய வளர்ச்சி யில்லையா? பெரிய வெள்ளிகளைச் (Good Friday) சந்தித்துத்தான் உயிர்த்த ஞாயிறுகளைக் காண
حسسه 85 ill -اس

Page 114
வேண்டுமா? சிலுவையைச் சுமந்துதான் சாக வேண் டுமா? கல்வாரி மலேயைக் கண்டுதான் அப்பாற் செல்லவேண்டுமா?
வித்து முளைத்தது
விழுந்த வித்து முளேத்தது.
இயூஜீனின் சபையைச் சார்ந்த அருள் திரு. ஜோசவ் கிபேர்ட் (பின்னர் பரிசின் கருதினுலும் பேராயருமானவர்) தமது சபையின் மூலேக்கல்லேவித்தை-அழிக்க ஆள்வோரை விடுவாரா? நடந்த அனேத்தையும் குரவர் ஐயந்திரிபற விளக்கியுரைத் தார், இராணி மாறி - எமெரிக்கு.
பதினெட்டு வயதில் பலேர்மோவில் சந்தித்த இளமைத்துடிப்பும், ஆர்வமும் கொண்ட இயூஜீனே இராணியவள் மறக்கவில்லை. தித்தித்த பதினெட் டில் அவள் பெற்ற நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்க வில்லே.
1835 ஆம் ஆண்டு இயூஜினுடன், பிரெஞ்சு நிர்வாகமும் சமாதானம் செய்துகொண்டது.
ஈராண்டுகளின் முடிவில், மாமன் வோ ()ர்ச் சுனே அவர்களின் மறைவின் பின்னர் ஆயர் இயூஜீன் மார்செயி மறைமாவட்ட ஆபரானுர், 1837 ஆம் ஆண்டின் கிறித்து பிறந்த நினைவு விழாவுக்கு முன் தினம் இந்த நியமனம் உறுதியானது.
- 85 -

உண்மை/ம், திேயுெ பின் குல்.
சிலுவையின் பாதைதா?

Page 115

குழப்பம் முடிந்தது. இயூஜீன் செய்த தியா கங்கள், பட்ட கஷ்டங்கள், பெற்ற அனுபவங்கள், சந்தித்த மனிதர்கள் அனைத்தும் சேர்ந்து இயூஜி னின் போக்கை, அவரது பழக்கவழக்கங்களை, - ஒரே சொல்லில் வடித்தால் - அவரையே மாற்றி அமைத்துவிட்டன.
வித்தொன்று விழுந்து, தன்னையிழந்து, புத்து யிர் பெற்று, புத்துருக்கொண்டு முளைத்தது -வளர்ந் தது-புத்தம்புது மலராக மலர்ந்தது! புரட்சியிற் பூவொன்று பூத்தது! சூழ இருந்த அனைவருக்கும் நறுமணம் தந்தது! நற்செய்தி நவின்றது! நற் சேவை புரிந்தது!
- 187 -

Page 116
22
இலட்சியவாதி இயூஜீன்
இயூஜினுக்கு வயது ஐம்பத்து ஐந்து. அவர் மார்செயி மறைமாவட்ட மக்களுக்கு ஆயரானுர், தாமே துவக்கிய அமலமரித் தியாகிகள் சபைக்குத்
தாயும் தந்தையுமானுர் !
புரட்சிக்குப் பின்னர் வளர்ச்சியடைந்து வரும் சமுதாய எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டவர், புதிய ஆயர். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்பத் தம்மை மாற்றியமைக்கப் பழகிக் கொண்டவர். ஆயினும், கூடப்பிறந்து நெடுங்காலம் ஊறி வளர்ந்த கோபம் அவ்வப்போது எரிமலையாகி வெடிக்காமலில்லை.
தாயினது அன்பைப்போன்று இயூஜீனது அன்பு மென்மையாகவும், மிருதுவாகவும், அதேவேளை

அவரது இயல்பான குணத்திற்கேற்ப விறைப்பாக வும், கடினமானதாகவும் இருந்தது.
தமது முதற்பார்வையாலேயே அவர் மக்களைத் தமது பக்கம் ஈர்த்ததுமுண்டு: எதிர்த்து தம்மிட மிருந்து ஒதுக்கியதுமுண்டு.
தமது மறைமாவட்ட மக்களுக்காகவே அவர் வாழ முனைந்தார். "தந்தை தனது பிள்ளைகளில் அன்பு செய்வதுபோல் நானும் அவர்களில் அன்பு செய்யவேண்டும்; எனது செளகரியங்களை, விருப்பு களை, ஒய்வுகளை, வேண்டுமானுல் வாழ்க்கையையே அவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும்' என்று அவர் எழுதினர்.
ஒரு வேலையைப் பாரமெடுக்க முன்னர் புதிய அலுவலர் வரவுசெலவுகளைப் பார்ப்பதும், பெற வேண்டியன-கொடுக்கவேண்டியனவற்றைப் பார்ப் பதும் பொதுவான செயல். அதுபோன்று புதிய ஆயரும் தமது வாழ்க்கையில் அவற்றைக் கணக் கெடுத்தார். w
*வீணுக்கல், மனித பலவீனம், வணிகம், ஏமாற்றம், விரக்தி, வெறுமை மனித இனத்தின் பால் வெறுப்பு போன்றன சேர்ந்து எனது இள மையின் ஆர்வத்தை அழித்து விட்டன’’ என்று ஆயர் தமது கணக்கின் முடிவைச் சொன்ஞர்.
கொடுப்பதைவிடப் பெறவேண்டியவையே கூடி இருந்தன. தாழ்மையுடன் முழந்தாளிட்டார். 'இறைவா, எனக்குத் துணை செய்யும். என்னை
- 189 -

Page 117
மீட்க வாரும், என் தெய்வமே!’ என்று உருக்க மாகவும், உறுதியுடனும் செபித்தார்.
இப்படிப்பட்ட ஒரு நேர்மையான தாழ்மையி ஞல் அவர் அனைத்து மக்களுக்கும் துணைவனனர். மக் களின் மேல் அனுதாபங் கொண்ட ஆயர் படிப்படி யாக வளர்ந்து மக்களுடன் சேர்ந்து அனுபவப்பட வும், அவர்களோடு அவர்களது பிரச்சினைகளை உணர வும் தம்மைப் பழக்கிக் கொண்டார்.
"அவர்களின் மூலமே எனது மீட்புக்கு உழைக்க வேண்டும்’ என்று கூறிய ஆயர் ‘அவர்களை இரட்சிப்பதன் மூலமே என்னை இரட்சிக்க வேண் டும்' என்றும் எழுதியுள்ளார்.
தொடக்கத்திலிருந்தே தமது மக்களை முன் னணிக்குக் கொண்டுவர ஆயர் பயமின்றி உழைத் தார்.
'குவிந்துவிட்ட வேண்டாத பழைய பழக்க வழக்கங்களை முற்ருகக் களைய வேண்டும். ஆனல், இரவோடிரவாக அனைத்தையும் மாற்ற நான் விரும்ப வில்லை' என்றும் எழுதி வைத்துள்ளார் , புதிய ஆயர்.
உறுதியாகவும், திடமாகவும் செயற்பட வேண் டும். அதனல் அன்பற்றிருக்க வேண்டியதில்லை. இது பலவீனமல்ல. ஆயரின் கடமை ஆளுவது என்ற உண்மையைப் பொதுமக்கள் அறிந்திருக்க வேண் டும். இவ்வழி நின்று செயற்பட விழைந்தார், அவர்- மார்செயியின் புதிய ஆயர்.
- 190 -

ஆயரின் கடந்தகால வரலாற்றை வைத்து ஒன்றைமட்டும் திட்டவட்டமாகக் கூறலாம்.
தமது கொள்கையிலிருந்து அணுவும் பிசகாமல் நடந்தார், பிரபு மகன் இயூஜீன் டி மசெனெட்.
உண்மை கட்டதடா . . .
எப்படிப்பட்ட மறைமாவட்ட ஆயரகத்தில் இயூஜீன் நுழைந்தார்? மார்செயியின் ஆயரகம் இயூ ஜீனுக்கு புதிதல்ல. மாமனர் ஆயராக ஆட்சி செய்த பொழுது இயூஜீனும், ரெம்பியேரும்தானே மறைமாவட்ட முதல்வர்களாகச் செயற்பட்டவர்
95GT.
செளகரியங்களுக்காக விட்டுக் கொடுப் பதும், பலவீனமாக நடந்து கொள்வதும் இவர்களாட்சியில் முற்ருக விலக்கப்பட்டன. ஆயரின் அதிகாரத்துவத்தை இவர்கள் வலுப் படுத்தினர்கள். ஒத்துவராதவை ஒதுக்கிவைக் கப்பட்டன. தடையாக நின்றவை தள்ளிவைக் கப்பட்டன. ஏனென்று வாதிட்டவர்களை எட்ட வைத்தார்கள். சட்டங்கள், உத்தரவுகள், கட் டளைகள், கண்டனங்கள், தண்டனைகள், விலக் கல்கள், ஒதுக்கல்கள், நீக்கல்கள் என்று ஆய ரகச் செயலகத்திலிருந்து மாரி மழையாகப் பொழிந்தன, தீர்ப்புக்கள். இவர்களது ஆட்சி யில் ஒரு முறை ஒரே நாளில், இயூஜீன் மட்டும்
ஆறு தடையுத்தரவுகளை வழங்கியுள்ளார்.
7/மம்ப கழி'
?I91 -- (pDit if --س

Page 118
ஆயராகச் செயலகத்தின் கருக்குழுவின ரைக் கணக்கிடுவதா? அன்றேல் அம்மறை மாவட்டத்தில் பணிபுரிந்த குருமார்களையும், துறவிகளையும் கணக்கெடுப்பதா? இல்லை, அது காலத்தின் கோலம்" என்று சொல்லி சமா தானப்படுத்துவதா?
மார் செயி மறைமாவட்டம் பல்லாண்டு களாகத் தலைவர் இன்றிக் கவனிக்கப்படாம லிருந்தது. இவ்வேளை அங்கு பணிபுரிந்த குரவர் கள் ஓரளவு தான்தோன்றித்தனமாக வளர்ந்து விட்டார்கள். புரட்சியினுல் தாக்குண்ட நகரங் களில் இருந்து வெளியேறிய பல குருமார் துறை முகப் பட்டினமான மார் செயியில் வந்து குவிந் தனர், தரை வந்து சேரும் அழுக்குப் போன்று. இக்குரவர்கள் அனைவரும் முன்மாதிரிகையாக வாழ்ந்தார்களென்று சொல்வதற்கில்லை. ஆகவே, அடித்தளத்திலிருந்து ஒரு சீர்திருத்தம் ஏற்பட வேண்டியிருந்தது.
மார் செயியின் சொந்தக் குருக்கள் பெரும் பாலும் உறுதியுடையவர்களாகவே இருந்தார் கள். ஆனல், அவர்களிடம் ஓர் இலட்சியப் போக்கோ, அன்றேல் சேவையின் ஆர்வமோ, ஆவலோ அவ்வளவாக இருக்கவில்லை.
இப்படிப்பட்ட குருக்களுக்குத் திடமான ஒரு நிர்வாகம் தேவைப்பட்டது. அதையே அளித்தார்கள் மாமனும், மருமகனும்.
- 192 -

ஆனல், அவர்கள் சரியான வழியிற் செயற் L u li ' l fr fi 95 GTr?
இயூஜீன் ஆயராக மறை மாவட்டப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்வேளை அம்முறை களை மறுபரிசீலனை செய்தார்.
அவர்களின் நோக்கம் நல்லதாகவே இருந் ܀ 27 5܂
தூய்மையான குருத்துவத்தை நிலைநாட்டு வதே அவர்களது இலட்சியம். ‘சில வேளைக ளில் அளவுக்கதிகமாகக் கடினமாக நடந்து கொண்டோம்” என்று இப்பொழுது ஆயர் நினைத்தார்.
ஒழுங்குகளுக்காகப் பங்குப் பணிகள் பலி யாக்கப்படவில்லை. தன்னுடன் பணிபுரிந்த குரு மார்களைத் தமது சகோதரர்களாகக் கருதி, அவர்களது துன்ப துயரங்களில், இன்னல்கள் இடையூறுகளில் இயூஜின் பங்கு கொண்டவர். இவற்றை மறுக்க முடியாது.
இயூஜீன் மறைமாவட்ட முதல்வராக இருந்த பொழுது, தனித்தனியாக வாழ்ந்த குருமாரைப் பங்கின் அடிப்படையில் ஒரு குழுவாகக் கூட்டப் பெருமுயற்சி செய்தார். அவர்கள் தங்கள் உணவையும், கவலைகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதே இயூஜீனுடைய ஆசை. காலத்தை முந்திய இச் சிந்தனை அக்காலத்தில் வாழ்ந்தோரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
13 - 193 -

Page 119
ஆயரான பொழுது தமது குருக்களை இதற்கு ஆயத்தம் செய்தார். அவர்களும் இவ் வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டார்கள்.
பங்குகளின் வருவாயைப் பொறுத்த அள வில் அனைத்துக் குரவர்களும் சமமாக வாழ வழி வகுத்தார், மறைமாவட்ட முதல்வரான
இயூஜீன்.
பொருமையும் கோபமும் கொண்ட குரவ்ர் ހ மாட்டீன் அவர்கள், தமது பத்திரிகையில் இயூ ஜீனைக் குற்றம் சாட்டினர். இளங் குரவர்கள் பால் இரக்கங்காட்டி வளர்ந்து வரும் குரவர்க ளைத் தமது பக்க மிளுக்க இஜியூன் முயற்சி செய்கிரு ரென பத்திரிகையில் எழுதினர்
தவற்றை உணர்ந்தபொழுது அக்குரவர் உடனேயே மன்னிப்புக் கேட்டு மடல் வரைந் தார்.
இம்மடலுக்கு முதல்வரிடமிருந்து பதிலும் வந்தது.
'அன்பின் நண்ப. உமது கடிதத்தைப் படித்ததும் உடனேயே உமது இல் லிடம் வந்து உமக்கு ஆறுதல் சொல்லவேண்டுமென விழைந் தேன். நாம் சமாதானமாக வேண்டும். உமது குற்றத்தையேற்று மன்னிப்புக் கேட்டது பெருங் காரியம், அதுவே போதுமானது’ என்று அன் பும் ஆதரவும் பரிமளிக்கக் கடித மனுப்பினர்.
- 194 -

23
அடித்த கரம் அணைத்தது . . .
மறைமாவட்ட முதல்வர்தான் அமலமரித் தியாகிகள் சபைத் தலைவருமாவார். பின்தங் கல்கள், ஏமாற்றங்கள், விலகல்கள் மாறி மாறி வந்தன. இச்சபையின் இருபத்தொரு வருட வாழ்க்கையில் இருநூற்று ஐந்து பேர் சேர்ந்தார் கள். ஆனல், நாற்பத்து இரண்டு பேர் மட்டுமே துறவற வாக்குக் கொடுத்து முழு அங்கத்தவர் களாக வாழ்ந்தார்கள். இவர்கள் பத்துக் குழுக்களாகப் பகுக்கப்பட்டுப் பத்து அமலமரித் தியாகிகளாகங்களில் வாழ்ந்தார்கள்.
பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை.
"எண்ணிக்கை யல்ல தரமே முக்கியமானது" என்று சொல்லி ஆறுதற்படவும் இடமில்லை.

Page 120
அங்கத்தவர்களையிட்டு சிறப்பாகக் கூற ஒன் றுமேயிருக்கவில்லை. கோடிட்டுக் காட்டவோ, அன்றேல் மேற்கோள் காட்டவோ அவர்கள் ஒன்றையுமே சாதிக்கவில்லை.
பெரும்பான்மையான அங்கத்தவர்கள், குருக்களாகப் பங்குகளிலே சுதந்திரமாக, குறிக் கோளற்றுக் காலத்தைக் கழித்தவர்கள். இப் படிப்பட்டவர்கள் தீடீரெனத் துறவற சபை யிற் சேர்ந்து கட்டுப்பட்டு இலட்சியமொன்றை ஈடேற்றுவது கடினமாதே. அதனுலேயே டி மசெனெட்டின் ஆர்வத்துக்கும் துடிப்புக்கும் , இலட்சியப் போக்குக்கும் ஏற்பத் தங்களை மாற் றியமைக்க முடியாது, ஈடுகட்ட இயலாது ஒவ் வொருவராக விலகி சென்ருர்கள்.
டி மசெனெட் கண்ட இலட்சியக் கனவுகளை நனவாக்க ஒரு சிலரே வீரத்துடனும், ஆர்வத்து டனும், முன்வந்தனர்.
டி மசெனெட்டின் ‘அன்பு மகன்' எனப் பெயர்பெற்ற அருள் திரு. மேரியஸ் சுஸேன் இவர்களுள் ஒருவர். இளமையிலேயே சபையிற் சேர்ந்த இவர், அமலமரித் தியாகிகளின் இலட் சியத்துக்காகத் தம்மை நன்கு ஆயத்தம் செய்து கொண்டார். இருபத்தேழு வயதில் மார் செயி அ. ம. தி. கள் குழுவின் தலைவரானர். குருத்து வத்துக்கு ஆயத்தம் செய்து வந்த அறுவருக்குப் பொறுப்பாகவும் இருந்தார்.
- 196 -

மேரியஸ் சுஸேன் சதாசகாய மாதாவின் பெயரில் புதிய கோயில் ஒன்று கட்டுவித்தார். தரையில் மட்டுமன்றி மக்கள் உள்ளங்களிலும் கோயில் கட்ட இவர் பெருமுயற்சி செய்து வந்தார். .m.
இவரது ஆர் வந்தான் நகரத்து மக்களை யெல்லாம இவரது கோயிலுக்கு அழைத்தது.
மின்னமல் முழங்காமல் இயூஜின் திடீரென இக் குழுவிற்கு வருகை தந்தார். அ. ம. தியாகிகள் குழுவை அவசர அவசரமாகக் கூட்டுவித்தார். அங்கே அனைவர் முன்னிலையிலும் அவர்களின் அதிபரை வன்மையாகக் கண்டித்தார். பின்னர் சுஸேன் அதிபர் பதவியிலிருந்து நீக்கி விட்டார்.
ஏன் இவ்வளவு கண்டிப்பு?
துறவறத்தின் ஒழுங்குகள் சிலவற்றை மீறி சுஸேன் சில மறைப்பணிகளில் ஈடுபட்டு விட் டார். அவ்வளவுதான்! ۰ په
அமைப்பைக் காப்பாற்றச் சட்டங்களும், ஒழுங்குகளும்!
ஒழுங்குகளைப் பாதுகாக்க மனிதர் பலியா?
சட்டங்கள் மனிதனுக்கா? மனிதன் சட்டங் களுக்கா? மீண்டும் அதே பிரச்சினை.
குரவர் சுஸேன் நோய்வாய்ப்பட்டார். கடு மையான உழைப்பு. ஓய்வு உறக்க மற்ற சேவ்ை. இறுதியில் பாயும் படுக்கையுமானர்.
- 197 -

Page 121
செய்தி இயூஜீனுக்கு எட்டியது.
ஓடோடி வந்தார். மகனின் அருகில் அமர்ந்து இரவு பகலாய்ப் பணிவிடை புரிந்தார், மார் செயியின் மறைமாவட்ட முதல்வர்.
அடித்த கரந்தான் அணைக்கும்.
விளக்கு அதிகமாக எரிந்து விட்டது. எண் ணெய் தீர்ந்து விட்டது! −
வயதோ முப்பதுதான்.
இயூஜீனல் இந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த இளங் குரவரில் அவர் எவ் வளவோ நம்பிக்கைகளை முதலீடு செய்திருந் தார்.
‘என்னுள் ஏற்பட்ட துன்பத்தை, நோவை, முறிவை நான் வெளிக்காட்டியிருந்தால் மக்கள் என்னை ஒரு பைத்தியக்காரன் என்று எண்ணி யிருப்பார்கள்’’ என்று டி மசெனெட் தமது மன நிலையை எழுத்தில் வடித்தார்.
கோர்சிக்காவின் மறைப்பரப்பாளனும், அதி சயப் பிறவியுமான அருள் திரு சார்ள்ஸ் டொமி னிக் அல்பி(b)ணி, வருங்கால ராஜதந்திரியும் பரி சின் கருதின லும் பேராயருமான ஜோசவ்கென்றி கி(g)பே(b)ர்ட் போன்ருேர் அ. ம. தி. சபையின் தொடக்காலத்து அங்கத்தவர்களுள் குறிப்பிடப்பட வேண்டிய வேறிருவர்.
- 198 -

24
குரைக்கும்; கடிக்காது. . .
* யார் அங்கே?' குகையிலிருந்து கர்ச்சித் தது சிங்கம்.
"ஆ. நா. நான். நான் தான், ஆண்டகை அவர்களே!' நடுங்கியது வெளியில் நின்றவரின் குரல்.
"நானிங்கிருப்பதாக உமக்கு யார் சொன்
னது? ஓர் ஆயருக்கு ஒரு நிமிட ஓய்வு தானும் இல்லையா?* - ஆயரின் பதிலொலி.
'ம. மன். மன்னிக்க வேண்டும், ஆண் டகை அவர்களே! நான் போய் வருகிறேன்!" விட்டால் போதுமென்ற உணர்வுடன் வெளியில்
இருந்து வந்தது குரலொலி,

Page 122
'நில்லும்! வந்ததுதான் வந்து விட்டீர். பொது அறையில் எனக்காகக் காத்திரும் !' உள்ளிருந்து வந்தது அதிகார ஒலி.
அன்று ஆயரகம் வந்தவர் குரவர் சார்ள்ஸ் -ஒகஸ்ற் ரிமோன் டேவிட் அவர்கள். மார் செயி நகரத்து இளந் தொழிலாளர் மத்தியில் இவர் பணிபுரிந்து வந்தார். அப்பணி கடினமாக இருந்தது. பயனளிப்பதாகக் குர வருக்குத் தோன்றவில்லை. அயராது உழைத்த ரிமோன்டேவிட் சோர்வடைந்து, ‘இனி முடியாது’ என்ற நிலையில் ஆயரகம் வந்தார், தமது கவலைகளே யெல்லாம் சொல்லி ஆறுதல் பெறுவதற்கு.
ஆயரின் மனநிலை..? ஒரு கணம் சிந்தித்தார். 'தவமுன மனிதனிடம் வந்து விட் டேனே?...'
"வாரும், உள்ளே!” ஆயரின் அழைப்பொலி. இது குரைக்கிற நாய்: கடிக்காது. அதுவும் நெருங்கிச் சென்றுவிட்டால் குழைந்து நட்புக் கொண்டு விடும். V
ரிமோன் டேவிட் தயக்கத்துடன் ஆயரின் அறையினுட் சென்ருர்,
என்னென்னவோ எல்லாம் சொல்ல வேண் டும் என்று எண்ணி வந்த குரவர், ஆயர் முன் னிலையில் நின்று தடுமாறினர். தமது மனச்
- 200 -

சோர்வை ஆயர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது ஒரே ஆவல்.
குரவரின் நாக்குத் தடுமாறியது. குரல் கம் மியது. தொண்டை அடைத்தது. சொற்கள் தொடர்பிழந்து கொட்டின.
ஆயர் நிதானமாகக் கேட்டார், குரவரின் கதையை. நிலமையைப் புரிந்து கொண்டார். அவ்வப்பொழுது ஆறுதலான வார்த்தை யொன்றை அன்போடு சேர்த்துக் கொண்டார்.
குரவர் உற்சாகம் பெற்ருர், பயமின்றித் தமது கவலைகளை, மனச்சோர்வுக்குரிய காரணங் களை விரிவாக விளக்கியுரைத்தார்.
பொறுமையுடன் செவிமடுத்த ஆயர் குர வருக்கு ஆறுதல் அளித்து, இறுதியில் "இப்படி யான பிரச்சினைகள் வந்தால் உடனேயே வந்து என்னுடன் உரையாடும். என்னுல் முடிந்த உதவியைச் செய்வேன். நான் இங்கிருப்பது அதற்குத் தானே!’ என்று அன்பொழுகச் சொன்னர்.
குரவர் டேவிட் பிற்காலத்தில் இந்த நாள் ஞாபகத்தை மீட்டுரைத்த பொழுது, "அவர் என்னை அரவணைத்தார்; அவரது கண்ணிர் எனது கன்னங்களில் வழிந்தது. மக்களிடையே இப்படி யொரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வேறு ஒரு மனிதனை நான் என் வாழ்க்
a 20I -

Page 123
கையில் காணவேயில்லை" என்று நன்றியோடு நவின் முர்.
மக்களோடு மக்களானர்
மக்கள் ஆயர். . .
*எனது நேரம் முழுவதும் மக்களைச் சந்திப் பதிலேயே செலவாகிறது. இது மிக்க அவசியந் தான். தமது மக்களுக்காகவே ஆயர் தமது வாழ்க் கையைக் கொடுக்க வேண்டும். வந்தவர்கள் மன நிறைவோடும், மகிழ்வோடும் செல்வதைப் பார்க்கும் பொழுது எவ்வளவு ஆறுதலாக இருக் கும்' ஆயர் தமது நாட்குறிப்பில் எழுதிச் சென்றர்.
அவர் தம்மைச் சந்திக்க வந்தவர்களை மட் டும் சந்தித்தவரல்லர்; தாமாகச் சென்றும் மக் களைச் சந்தித்தார்.
வழிபாடுகளின் முடிவில் ஆயர் மக்களுடன் மக்களாகி, அவர்களுடன் கலந்து உரையாடு வதிற் பேரார்வம் கொண்டார்.
ஒருமுறை மார் செயியின் கிழக்குப் பக்க மாக உள்ள ஒரு துறைமுகப் பட்டினத்தில் ஆயர் தங்கியிருந்தார். வழமைபோல மாலை யுணவின் பின் அவர் பட்டினத்தின் சந்து பொந்துகளினூடாக நடந்து சென்ருர்,
- 202 -

தொழிலாளர் கூடி நின்று பொழுதுபோக் கும் இடங்கள் அவை.
*நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் புன்முறுவலுடன் என்னை வரவேற்ருர்கள். பல ருடன் நான் உரையாடினேன். துணிச்சலான ஒரு சிலர் என்னுடன் தொடர்ந்து வந்தார்கள். ஆங்காங்கே நின்ற மக்கள் செப்பியவை சில என் செவிகளுக்கும் எட்டின.
'ஒய், இவர் நல்ல அன்புள்ளவராக இருக் கிருர்! ஆனல், இவர் பெருமை பிடித்தவர், மண்டைக்கனம் கொண்டவர் என்றுதானே நாம் காலமெல்லாம் கேள்வியுற்ருேம்!’ என்ருர் கள், அத் தொழிலாளிகள்.
இயூஜினே இந்த அனுபவத்தைத் தமது நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.
ஆயருக்கே தமது குணங்கள் ஓரளவு தெரிந்திருக்கக்கூடும். ஆகவே, மக்கள் தம்மை ஏற்றுக்கொள்ளுகிருர்கள் என்ற எண்ணம் அவ ருக்கு மகிழ்ச்சி தந்திருக்கவேண்டும். அதனு லேயே இக்குறிப்பை அவர் எழுதியுள்ளார் போலும்.
தொழிலாளர் கடின வேலை செய்பவர்கள். பெரும்பாலும் குறைந்த ஊதியம் பெறுபவர் கள். தங்களுடைய கஷ்டங்களைத் திருச் சபையோ, திருச்சபையின் மேல்மட்டத்தில் இருந்து ஆட்சி புரிவோர்களோ அறிய மாட்டார்
- 203 -

Page 124
கள் என்பது அவர்களது எண்ணம். ஆகவே, ஆயரொருவர் தங்களது தெருவில் தங்களுடன் உலவி உரையாடியதை அவர்கள் மகிழ்ச்சியு டன் ஏற்றுக்கொண்டார்கள்.
இது பெரும்பாலும் நடக்காத செயலல் லவா? அத்தி பூத்தாற்போல, திருநாள் பெரு நாள்களில் கணையாழி முத்தி செய்யக் கியூ வில் நின்று பழக்கப்பட்டவர்களல்லவா ? இன் னும் பலர் தூரத்தே நின்று எட்டிப்பார்த்துப் பெருமூச்சு விட்டவர்கள் அல்லவா? ஆயர்கள் வாழ்ந்த மாளிகைகளும், அவர்கள் உலவிய மேல்மட்டக் கூட்டங்களும், அவர்களது பழக்க வழக்கங்களும் பொதுமக்களுக்கு - குறிப்பாக ஏழைத் தொழிலாளர்களுக்கு ஏணிவைத்தா லும் எட்டாத கொப்புகள்ளல்லவா? இப்படிப் பட்ட ஒரு சூழலில் தொழிலாளர் தெருவிலே, மாலை வேளையிலே, அத்தொழிலாளர்களிடையே ஆளோடு ஆளாக ஆயரொருவர் உலவினர்; உரையாடினர் என்ருல். தொழிலாளரின் மகிழ்ச்சியை என்னவென்பது.
இயூஜீன் இதயம் இல்லாதவர் அல்லர்; நண்பனே, பகைவனே யாருமே இக்குற்றச் சாட்டை அவர்மேல் சுமத்த முடியாது.
ஆயரகம் அனைத்து மக்களுக்காகவும் திறந்து விடப்பட்டது. மார்செயி துறைமுகத் தொழி லாளியானுலும் சரி, நகரத்தின் பெயர் பெற்ற சட்டத்தரணியானலும் சரி ஆயரின் முன்னிலை
- 204 -

யில் அனைவரும் சமமே. ஆயரைச் சந்திப்பதற்கு முன் கூட்டியே அறிவிக்க வேண்டிய அவசிய மில்லை. பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் அவர் முதலிடம் கொடுக்கவும் இல்லை.
காலை பத்து மணி தொடங்கி பிற்பகல் இரண்டு மணிவரை ஆயர் வருவோரைச் சந் திப்பார்.
ஆயர் முன்னிலையில் சென்றதும் யாருக்கும் ஒரு நெருக்கமான உறவு ஏற்பட்டு விடும்.
மேற்கூறிய குரவர் ரிமோன் - டேவிட் அவர்களுடைய ஆரம்ப அனுபவம் விதிவிலக்கு.
அவ்வப்பொழுது கர்ச்சிப்பது அவரோடு பிறந்தது. உடனேயே கனிந்து இனிப்பது அவ ரோடு வளர்ந்தது. மார் செயி மக்களுக்கு இது நன்கு புரிந்திருந்தது.
- 20 -

Page 125
25
ஆயரின் வாழ்க்கையில்
" சிறு கதைகள்"
ஆயரை ஏமாற்றுவது அவ்வளவு சுலபமா னதல்ல.
ஒரு முறை ஒர் இளைஞன் மார்செயியின் வடக்கே பரிசுக்குச் செல்ல எண்ணினன். ஆனல் கையிற் போதிய பணமில்லை. 'ஆயரை அணு கினல்.” தனது சிந்தனை தனக்கு முன்னே செல்ல, அவன் ஆயரகம் சென்ரு ன்.
'ஆண்டகை அவர்களே! நான் பரிஸ் சென்று என் மாமனுரான ஆயரொருவரை அவசியமாகச் சந்திக்க வேண்டும். உங்களால்
- 206 -

(/) Lậ- ti! Lf T(696i) கொஞ்சம் பண உதவி .' இளை ஞன் வார்த்தைகளை முடிக்கவில்லை.
ஆயர் முந்திக் கொண்டார்.
"அப்படியா!' வியந்த ஆயர் தொடர்ந் தார். “உமது மாமா இப்பொழுதான் இங்கு வந்து சென்ருர், நான் உடனடியாக உமது விருப்பத்தைத் தெரிவிப்பேன்’ என்று புன் னகையுடன் கூறினர்.
இளைஞன் எப்படி வெளியே சென்றன்! எந்தக் கதவால் சென்ருன் என்பது ஆயருக்குப் புரியாத புதிரானது! அவன் இருந்ததைக் கண் டார். பின்னர் வெறுங் கதிரையைக் கண்டார். எளிமையையும், உண்மையையும், ஆயர் பெரிதும் விரும்பினுர், மற்றவர்களிடமும் அவற்றை எதிர்பார்த்தார். மரியாதைக் குறை வாக யாராவது நடந்து கொண்டால் உடனேயே அதைச் சொல்லாமற் சொல்லி விடுவார், பிரபு மகன் மார்சேயியின் ஆயர்.
ஒரு முறை ஒரு விற்பனையாளர் ஆயரகம் வந்தார். வந்ததும் வராததுமாக அங்குள்ள இருக்கையொன்றில் படுக்காத குறையாக அமர்ந் தார்.
‘ஐயா, நீர் கட்டாயமாக உட்காரத்தான் வேண்டுமென்ருல் இங்குள்ள இக்கதிரைகளில் ஒன்றைத் தயவு செய்து தூக்கிச் செல்லும்' என்று ஆயர் கூறினர்.
வந்த வருக்கு முகத்தில் அசடு வழிந்தது!
- 207 -

Page 126
தேவையில் சேவையானுர்
தேவை என்று வந்தால் ஆயர் சேவை யென்று மாறுவார். ஆயர் பணிக்குமுண்டோ அடைக்கும் தாழ்? என்று வியப்புறுமளவிற்கு அவர் பணிபுரிந்தார்.
"பணத்தை அள்ளிக் கொடுப்பது இலகு வானது. ஆனல், இந்த வறிய மக்களை நேருக்கு நேராகச் சந்தித்து உதவிய பின்னர் இவ்வளவு தானே செய்ய முடிந்தது! இதற்கு மேல் செய்ய முடியவில்லையே' என்று எண்ணும் பொழுது. நெஞ்சு நோகிறது; என்னல் தாங்கிக் கொள்ள முடியவேயில்லை. இந்நிலையில் அமர்ந்து உண வருந்த முடியுமா?.” ஆயர் தமது குறிப்புகளில் ஒன்முக இதை எழுதியுள்ளார்.
இக்காரணத்தினுல்தான் அவரது உணவும் வெகு எளிமையாக அமைந்ததோ !
ஆயர் பெரும்பாலும் ருெட்டியுடனும், சூப்புடனும்ே தமது உணவுவை முடித்துக் கொள்வார். விருந்தாளிகள் வந்தால் மட்டும் சுவையான உணவு மேசைக்கு வரும்.
வெள்ளிக்கிழமைகளிலும், தபசு காலத்தி லும் ஆயரின் மாலை உணவு ஒரு துண்டு ருெட் டியும், வெறும் தண்ணிருமே!
அவரது உணவு ஒறுத்தல் அவரின் உடல் நலத்தைப் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டிய
- 208 -

வர்களுக்கு 'இறைவன் எனக்கு நற்சுகத்தைத் தந்துள்ளார். நான் என் மக்களுக்காக ஒறுத் தல்கள் செய்ய வேண்டும்" என்று கூறுவார்.
நெஞ்சிலிருந்து நற்செய்தி
நற்செய்தி நவில்வதில் விசேட கவ னம் எடுத்தார். மக்கள் மொழியிலேயே பேசி ஞர். மணித்தியாலக் கணக்கிற் பேசுவார். ஆயினும், சரியான சொல்லை சரியான இடத் தில் பயன்படுத்திக் கொள்ளுவார்.
மக்களும் ஆர்வத்துடன் கேட்பார்கள். குழந்தைகளும் சரி, பெரியோர்களும் சரி பராக் கின்றி அவர் குரலைச் செவி மடுப்பார்கள்.
*உங்கள் முறை என்ன?’ என்று ஆயரின் மறையுரைகள் பற்றி வினவினர்கள்.
‘மக்களது அனுபவங்களைச் சொல்லுகி றேன். அவர்களுடைய பிரச்சினைகளை நான் உணரு கிறேன்” - இதுதான் அவரது பதில், அதுதான் அவரது முறை!
ஆயர் சொன்னவை நூல்களிலிருந்து அல்ல,
அவர் நெஞ்சில் இருந்து வந்தன. ஆகவே, அவை பிற நெஞ்சங்களை அவர்பால் ஈர்த்தன.
ஒரு முறை கோயிலில் வழிபாடு முடிந்து ஆயர் வீடு திரும்புகையில் மக்கள் பேசியது ஆயர் செவி யில் பட்டது.
l4 - 209 ? --

Page 127
அவர்கள் ஆயரின் மறையுரைகளை புனித அம் புருேளின் மிகத் திறமையான மறையுரைகளுடன் ஒப்பிட்டுப் பேசினர்.
அப்பொழுது இயூஜீன் ஒன்றுமே சொல்ல வில்லை. வீடு வந்ததும் தமது நாட்குறிப்பில்.
“அம்புருேசுக்கும் எனக்கும் எவ்வளவோ தூரம். பாவியாகிய எனக்கு ஆண்டவன் பெரும் பணியொன்றைத் தந்துள்ளார். அத்துடன் கட மையுணர்வையும் அவர் எனக்கு அளித்துள்ளார்' என்று எழுதியுள்ளார்.
- 210 -

26
எல்லைகள் விரிந்தன
சேவைகள் வளர்ந்தன
புரட்சியின் பின்னர் நாட்டிலே கைத்தொழில் வளர்ந்து விரிந்தது. தொழிற்சாலைகள் ஆங்காங்கே
எழுந்தன. இவற்றைச் சுற்றிப் புதிய குடியிருப்புக் கள் தோன்றின.
ஆலயங்கள் அனைத்தும் நகரத்திலேயே இருந்
தன. பழைய பங்கின் எல்லைகள் பயனற்றுப் (3 untu GOT.
வோ (f)ர்சுனே விட்டுச் சென்றது - நானுTறு வறிய மக்கள். அவர்களைப் பராமரிக்க எண்பத்து
ஐந்து வி()ருங்ஸ்.

Page 128
புதிய ஆயர் செயற்பட்டார். புதிய குடியிருப் புக்களில் புதிய ஆலயங்கள் எழுந்தன. புதிய எல் லைகளுடன் இருபத்தெட்டுப் புதிய பங்குகள் பகுக் கப்பட்டன.
பழைய துறைமுகத்திற்கெதிரே நின்ற குன்றின்
ம்ேல் ஒன்றும், புதிய துறைமுகத்தைப் பார்த்த வண்ணம் இன்னென்றுமாக இரு பேராலயங்களைக் கட்டுவிக்கத் துணிவுடன் தொடங்கினர், ஆயர் இயூஜீன்.
கற்களை உடைத்துக் கோயிலைக் கட்டுவிப்பதி லும், மக்களின் எதிர்ப்புக்களை உடைத்து அவர் களை ஒன்று சேர்ப்பது மிகக் கடினமாகவே தோன் றியது.
பொதுத் தேர்தலில் எல்லாம் மார்செயியின் பேராலயம் பிரச்சினைக்குரியதாக்கப்பட்டது.
இந்தச் சலசலப்புகளுக்கு அஞ்சாது இயூஜீன் தமது எண்ணத்தை வலியுறுத்தினர். அவரைச் சந்திக்கச் செல்லும் அனைவருக்கும் அவர் புேச் சோடு பேச்சாகச் சொன்னர்:
"மார்செயியிக்கு ஒரு பேராலயம் நிச்சயமாக வேண்டும், அவ்வளவுதான்.'
சொன்னவர் இயூஜீன் டி மசெனெட்
கல்மேற் கல் வைத்து, உறுதியுடன் எழுந்தது பேராலயம். இயூஜீனின் பிடிவாதக் கற்கள் அவை!
---- 212 س----

ஆயரின் உயர்ந்த கொள்கைகளின் கோபுரங்கள் அப் பேராலயத்தின் கோபுரங்கள்! ஆயரின் உருவத் தின் பிரதிபலிப்பே அப்பேராலயம்.
வெறும் கற்கோவில் கட்டுவதுடன் ஆயர் ஒய்ந்து விடவில்லை. மார்செயி மறைமாவட்டத்துக் குப் புது ஆலயங்களை விடப் புத்துணர்வுகளே வேண்டியிருந்தன. அம்மக்களைத் தட்டியெழுப்பி அவர்களை நற்செய்திக்கேற்பச் சிந்திக்க வைக்க மறைப் பரப்பாளர்கள் பலர் வேண்டி நின்றனர்.
ஆறு ஆண்கள் துறவறச் சபைகளும், இருபத்து நாலு பெண்கள் துறவறச் சபைகளும் நிறுவப் பட்டன. ஒரு சில அழைக்கப்பட்டன. வேறு சில தாமாகவே வருகை தந்தன. இன்னும் சில மறை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டன. இச்சபைகளின் துறவிகள் பல்வேறு துறைகளிற் பணிபுரிந்தார்கள்.
ஆயர், தாமே ஒரு சபையைத் தொடக்கி அச் சபைக்கு முழுப் பொறுப்பாளராக இருந்தும், அவர் வேறு சபைகளை வரவேற்கத் தயங்கவில்லை. சேவை தான் அவருக்கு முக்கியமாகத் தோன்றியதே யொழிய சபையல்ல. அவர் வளர்க்க விரும்பியது இறைமக்களை! தமது சபையை அல்ல.
இந்தப் போக்கு இந்தச் சபையில் இன்னும் உள்ளதென்பதனைப் பெருமையுடன் சொல்லித் தான் ஆகவேண்டும். எங்கு தேவையோ அங்கெல் லாம் அ. ம. தி. கள் சேவையென்று விரைந்து செல் வார்கள். தேவையில்லையென்று அடியாமல் அடித்து
མ--273 བསང་ལ་གང་

Page 129
விரட்டும்பொழுது சேவையில்லையென்று சென்று விடுவார்கள். தமக்கென்று - தம் சபைக்கென்று இவர்கள் மறைமாவட்டங்களில் ‘உரிமை” பேசுவ
தில்லை.
சேவைசெய்த மறைமாவட்டத்திலேயே இருக்க ‘பிச்சை'யாக அனுமதி அளித்தால் அங்கே மானத் தோடு வாழ்வார்கள்.
சேவைக்கு ஊக்கமுண்டு
ஆயர் இயூஜீனின் மறைமாவட்டத்தில் பணி புரிந்த துறவற சபைகளுக்கு அவரே வழிகாட்டி யாகவும், உள்ளிருந்து உந்தும் சக்தியாகவும் இருந் தார். அளவுக்கு மீறி ஆர்வங் கொண்டவர்களைப் பின்னின்று அமைதிப்படுத்தவும் சோர்வுற்றுப் பின் தங்குவோரை முன்னின்று ஊக்குவிக்கவும் ஆயர் பின்வாங்குவதில்லை.
நல்ல முயற்சிகள் அனைத்தையும் அவர் ஆத ரித்து உதவியளித்தார்.
புதிய சபையொன்றைத் தொடங்குவதாகச் சொல்லி அறிவுரை பெற ஆயரிடம் வந்தவர்களை, ஆயர் வரவேற்று உற்சாகமளித்தார். அச்சபையின் எதிர்காலம் நன்முக அமையாது என்று " தெரிந் தாலும், "இவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத் தால் என்ன? அதனல் இழப்பொன்றுமில்லையே சபையொன்று நூற்ருண்டுகளினூடாக வளர
- 214 -

வேண்டுமென்ற நியதியேதுமில்லையே! ஒரு மனித னுக்கு உதவுவதாக இருந்தாற் கூட அது நல்லது தானே?’ என்றுதான் ஆயரது சிந்தனை படரும்.
ஆயரின் சபையிலிருந்த ஒருவரே ஒரு புதிய சபையொன்றைத் தொடக்க முன்வந்தார். அவரது முயற்சிக்கு ஆயரின் அனுமதிமட்டுமல்ல; ஆசீர்வாத மும் கிடைத்தது. 'அமலோற்பவ சகோதரிகள்’’ என்னும் பெயருடன், பார்வையற்ருேரைப் படிப் பித்து அவர்களை வாழவைப்பதே இச்சபையினரின் முக்கிய நோக்கம்.
இன்றைய சூழலில் மக்களுக்குக் கிறித்துவின்
நற்செய்தியைச் சொல்வதானல், புதிய வழிவகை கள் கையாளப்பட வேண்டும். புதிய துறைகளிற் பணிபுரிய வேண்டும். சமுதாய உணர்வோடு செயற்பட வேண்டும். இவ்வழிவகைகளைக் கையாள் வோரை ஆயர்கள் ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும். தங்கள் செளகரியங்கள், அமைப்புக்களின் பாதுகாப்பு முதலானவற்றை எண்ணி செய்ய வேண்டியனவற் றைச் செய்யாமல் விடலாகாது.
குருக்களிடையே புத்துணர்ச்சி
மறைமாவட்டக் குருக்களிடையே ஆயர் பெரிய தொரு சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். ஆய பின் மிக்க சிறப்பான தொண்டு இதுவென்று துணி
யலாம்.
- 215 -

Page 130
காலத்தின் கோலத்தையும், போக்கையும், குரு மார்கள் அறிய வேண்டும். மக்களுடைய ஏக்கங் கள், எதிர்பார்ப்புக்களை இவர்கள் உணர வேண் டும். இதற்கான வழிவாய்க்கால்களை ஆயரே திறந்து விட்டார்.
சமுதாய உணர்வின்றி சமுதாயத்திற்கு எங்ங் னம் சேவை செய்ய முடியும்?
இதற்காகவே ஆயர் குருமட மாணவர்கள்பால் விசேட கவனம் செலுத்தினர் போலும். ஒவ் வொரு மாணவனையும் பற்றி தனித்தனியாக அவர் அறிந்திருந்தார். அவர்களுடைய வளர்ச்சி யில் அவர் அக்கறையெடுத்தார்.
குருமார் தங்கள் மறையுரைகளை நன்கு ஆயத் தம் செய்யவேண்டுமென்பது ஆயரின் ஆசை. தொகுப்பு நூல்களிலிருந்து எடுத்துச் சொல்லாமல், மக்கள் பிரச்சினைகளை நற்செய்தி ஏடுகளுடன் தொடர்புபடுத்தி கிறீத்துவின் போதனையைத் துணிவு டனும், நேர்மையுடனும் எடுத்துரைக்க வேண்டு மென்பது ஆயரின் வேணவா.
‘விசுவாசத் தளர்ச்சிக்கும், வாழ்க்கை முறை கெடுவதற்கும் அடிப்படைக் காரணம் நாம் சொல்ல வேண்டியனவற்றைச் சொல்ல வேண்டியபொழுது சொல்லாமல் விடுவதே. எமது மறையுரைகளில் சமுதாய உணர்வு கிஞ்சித்தும் காணப்படுவதில்லை.
- 216 -

ஞாயிறு தோறும் நாம் வழங்கும் மறையுரை கள் மக்களுக்குப் புரிவதில்லை. அவர்களுக்கு இம் மறையுரைகள் அலுப்புத் தட்டிவிடுகின்றன. பலி பூசைக்குக் கூடியிருக்கும் மக்கள்பால் எமக்கொரு கடமையுண்டு. அவர்களை ஏமாற்றுவது பெரும் பாவம். பொதுமக்கள் இப்படிப்பட்ட குருமார்களைப் பற்றி என்ன நினைக்கிருர்கள்? “இவர்கள் பேசுவது இவர்களுக்கே விளங்குவது இல்லை. இவர்கள் எதைப் பற்றிப் பேசுகிருர்களென்று இவர்களுக்கே தெரிவ தில்லை’ என்று கணக்கிடுகிறர்கள். இப்படிப்பட்ட சூழலில் மக்கள் மறையுரையின்போது எழுந்து செல் லாமல் வேறென்ன செய்வார்கள்? ஒரு வேளை கோயிலுக்கே வராமல் விட்டு விடுவார்கள்’’ இவை இயூஜீனின் வார்த்தைகள்.
மறையுரைகள் நன்முகவும், நேர்மையாகவும், மக்கள் மொழியிலும் அமைய வேண்டுமென்பதில் அவர் மிகுந்த அக்கறையெடுத்தார்.
குருமார்களின் தனிமையை நீக்குவதற்காக ஆயர் குழு வாழ்க்கையை மீண்டும் அறிமுகஞ் செய் தார். மறைமாவட்ட முதல்வராக இருந்த பொழுது அவர் இத்துறையில் எடுத்த முயற்சி தோல்வி கண் டது. இப்பொழுதும் அதற்குப் பலத்த எதிர்ப்புக் கள் தோன்றின. விட்டுக் கொடுப்பது ஆயருக்கு இயல்பாக வராதது ஒன்று. இறுதியில் அவ்வெதிர்ப் புக்களை அவர் முறியடித்தார்.
- 217 -

Page 131
அஞ்சினர், ஆள்வோர்
மறைமாவட்டத்தில் தமது மக்களை வழிநடத்து வதும், வெளியில் புறத்தாக்குதல்களிலிருந்து அம் மக்களைக் காப்பாற்றுவதும் ஓர் ஆயரின் நீங்காக் கடமையென்பது ஆயர் இயூஜீனின் கொள்கை.
பின்னைய பணியில் ஆயர் இயூஜீன் ஒரு "சண்டைக்காரன்’ என்ற பெயரையும் பெற்ருர், அவர் ஏற்படுத்திய தர்க்கம் மார்செயி மறைமாவட் டத்தின் அயற் பட்டினங்களில் மட்டுமல்ல, நாடு முழுவதிலுமே எதிரொலித்தது.
வெளியிலிருந்து திருச்சபைக்கு ஒரு சிறு தாக்கு தல் ஏற்பட்டாலும் போதும், ஆயரின் குரல் நாற் றிசையிலும் போர்க்களப் பீரங்கிகளாக முழங்கத் தொடங்கிவிடும். அதனல் எதிரிகள் அவருக்கு அஞ்சி னர்கள். நண்பர்கள் அவரது நிழலை நாடினர்கள்.
அமைச்சர்கள், மன்னர்கள், சக்கரவர்த்திகள் ஆகியோரும் இயூஜீனின் சவாலை ஏற்றேயாகவேண்டி யிருந்தது. ஆயர் இயூஜீன் இப்பெரும் புள்ளிகள்ை யெல்லாம் பகிரங்கமாகவே தலைகுணிய வைத்த துண்டு.
இந்த அமைச்சுக்களும் அரசுகளும் ஆயரை படிப்படியாக மதிக்கத் தொடங்கினர்.
ஆயர் இயூஜீன் தமது பழைய கொள்கைகளை அடியோடு கைவிட்டுவிட்டார். இராமன் ஆண்டா லென்ன, இராவணன் ஆண்டாலென்ன என்ற நோக்
-سس- 218 ، س

குடன், திருச்சபையின் நலனுக்காகவும் திருத்தந் தையின் நற்பெயருக்காகவும் அவர் எங்கும், எப் பொழுதும், பேசுவதற்கும், தண்டிப்பதற்கும் தயா ராகவே இருந்தார்.
திருச்சபைக்குக் கட்சி அரசியல் நல்லதல்ல. யார் ஆட்சியில் இருந்தாலும், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதெனக் கண்டால் அவ்வாட்சியின் அக்கொள்கைகளை ஆதரித்து வளர்க்க திருச்சபைக் குக் கடமையும் பொறுப்பும் உண்டு. அதே வேளை ஆட்சியாளரின் கொள்கைகளோ திட்டங்களோ நேர்மையற்றவை, நீதியற்றவை, உண்மையற் றவை, நாட்டிற்குத் தீமை விளைவிப்பவை எனக் கண்டால் முன்னின்று எதிர்ப்பவர்கள் கிறித்தவர் களாகவே இருக்க வேண்டும். இது கிறித்துவின் பணி.
இன்று நீதி, நேர்மை, உண்மை என்று பேசி ஞலேயே புரட்சிக்காரன் என்று சொல்லுமளவிற்கு அந்த உந்நத பண்புகளுக்கு நாம் கொடுக்கும் மதிப்பு குன்றிக் குறைந்து வருகின்றது. திருச்சபையும் தனது ஒரு சில அமைப்புக்களையும், ஆட்சியையும், காப்பாற்றுவதற்காக எதையும் ஏற்றுக்கொள்ளு மளவிற்குப் பலவீனம் அடைந்துள்ளது.
இந்நிலை மாற இயூஜீன் போன்ற ஆயர்கள் தோன்ற வேண்டும். ஆட்டுவிக்க ஆடும் பொம்மை கள் அல்ல; வெறும் ‘பூசாரிகள்’’ அல்ல கிறித்தவக் குருக்கள்; கிறீத்துவின் கொள்கைகள்-மனிதபிமா னக் கொள்கைகள்-பரவ வேண்டுமானல் இயூஜினைப்
- 219 --

Page 132
போன்ற துணிவு படைத்த குருமார்கள் தோன்ற வேண்டும்.
"விலக்கிய கல்லே மூலைக்
கல்லாய் அமைந்தது"
ஆயராகி ஒரு சில ஆண்டுகளிலேயே ஆயர் இயூஜீன் பிரான்ஸ் நாட்டிலே ஒரு முக்கிய இடத் தைப் பற்றுக் கொண்டார். நாட்டின் ஏனைய ஆயர்கள் அவருடைய ஆலோசனையைக் கேட்க வந் தார்கள். ஆணுல், அதே வேளை பிரான்சின் பிரச் சினைக்குரிய ஆயரும் இயூஜீனகவே இருந்தார்.
அவரோடு கூட்டாட்சி செய்த ஏனைய மறை மாவட்ட ஆயர்கள் பலர், அவரின் அபிப்பிராயங் கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவற்றை அறிய மிக்க ஆவல் கொண்டார்கள். பத்திரிகையாளர் கருத்து அறியக் காத்து நின்ருர் கள். கட்டுரையாளர், நாடகத்தார் ஆர்வத்துடன் ஓடோடி வந்தார்கள். 彰
ஆயர் இயூஜின் தமது அபிப்பிராயமொன்று தவறு என்று கண்டால் உடனேயே எதிரியின் பக் கம் சென்று மன்னிப்புக் கோருவதுடன், அவரது அபிப்பிராயத்துக்காக வாழ்த்தும் தெரிவிப்பார்.
ஒரு முறை வாங்கிறேயின் ஆயர், “எமது முன்னணி வீரர்களுள் மிகவும் துணிச்சலும், வலி மையும் கொண்ட வீரர் நீர்தான்’ என்று ஆயர்
------یہ 220 ۔۔۔۔۔

இயூஜீனப் பாராட்டினர். அப்ப்ொழுது, 'தாங்கள் வாழ்த்துக்கு நன்றி; ஓர் எதிரி தூங்குகிறபொழுது தாங்கள் வாழாவிராது துணிவோடு போராட வாழ்த்துகிறேன்’ என்று வாழ்த்த வந்தவரை வாழ்த்தி, உற்சாகம் அளித்து தமது வீரத்தையும், துணிவையும், அவருடன் பகிர்ந்து கொண்டார், ஆயர் இயூஜீன்.
ஆயர் இயூஜின், 1837 ஆம் ஆண்டு தொடங்கி 1861ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை பெரும் பாலும் அனைத்துப் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டார் என்று தெரிய வருகிறது. அங்கெல் லாம் கிறீத்துவின் நற்செய்தியை நிலைநாட்டினர். இந் நிகழ்ச்சிகளிலெல்லாம் அவரே சிறப்பு விருந்தி னராகவும் விளங்கினர்.
܂ -- 1 22 ܗܝܕܗ

Page 133
27
கல்விச் சுதந்திரம்
இக்காலத்திலேயே பிரான்சின் கல்விச் சுதந்தி ரம் பெரும் விவாதத்திற்குரியதாயிற்று.
இயூஜீன் இல்லாத விவாதமா?
கத்தோலிக்க மக்களின் கல்விச் சுதந்திரிம் நெப்போலியனல் பறிக்கப்பட்டது.
கத்தோலிக்க பத்திரிகைகளின் எதிர்ப்பாலும், பொது மக்களின் அபிப்பிராயத்தாலும் லூயி பிலிப் பின் ஆட்சி இரு மசோதாக்களை உருவாக்கியது. மேலெழுந்தவாரியான நோக்கில், அம்மசோதாக் கள் கல்விச் சுதந்திரத்தை அளிப்பது போன்று தான் தோன்றின. ஆணுல், பல்கலைக் கழகங்கள் விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை.

ஆயர் இயூஜீனின் உள்ளுணர்வு உண்மையை உணர்ந்து கொண்டது. பகிரங்கமாக மசோதாக் களை எதிர்த்தார்; பத்திரிகைகளுக்கும் அறிக்கை விடுத்தார். ஆயர்கள் பலர் இயூஜீனுக்கு ஆதரவ ளித்தனர்.
ஒரு சிலர் “விட்டுக் கொடுப்பதுதான் நல்லது: அன்றேல், கிடைப்பதுவும் கிடையாமற் போய் விடும்' என்று வாதிட்டார்கள். ‘பிச்சை போதும் உரிமை வேண்டாமென்பது இக் கோழைகளின் குழைவு. அது மட்டுமல்ல; "பத்திரிகைகளுக்கெல் லாம் செய்தி கொடுக்கக் கூடாது. ஆள்வோரின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது’ என்று நடுங்கினர், இவ்வாயர்கள்.
இயூஜினின் துடித்த இரத்தம் கொதித்தது, இக்கோழைகளின் சொற்கேட்டு!
‘விட்டுக் கொடுப்பதில்லை; அனைவருக்கும் கேட்க நாங்கள் குரல் எழுப்புவோம். திருச்சபைக்கு நீதி கிடைக்கு மட்டும் நாங்கள் உரிமைக் குரல்எழுப்புவோம். இதற்கு இன்று சிறந்த வழி பத்தி ரிகைகளே.
“ஒடு ஏந்திப் பிச்சை கேட்க வரும் ஆண்டிக ளல்லர், நாங்கள். மேசையிலிருந்து விழும் சூப்பிய எலும்புகளைப் பொறுக்க வருபவர்களும் அல்லர், நாங்கள். திருச்சபையின் உரிமைகளையும் நலன்க ளையும் காப்பாற்றும் கடமையும், பொறுப்பும் கொண்டவர்கள், நாங்கள்’. இடி முழங்கியது. அது பிரான்சின் நாற்றிசையிலும் பரவி அதிர்ந்தது.
--سی۔ 223 مس۔

Page 134
பிரான்சின் ஆயர்கள் அனைவரும் ஒன்று சேர வில்லை.
கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு ஒதுங்கி, நலமுடன் வாழ முனைந்தன, கொள்கையற்ற, முது கெலும்பற்ற அந்த வெறும் பொம்மைகள்!
ஆயர் இயூஜீன் எழுப்பிய எதிர்ப்பைக்கண்ட ஆள்வோர் பழிவாங்கினர்கள். கல்வியில் ஆள்வோ ருடன் போட்டி போட்டுச் சிறப்பாகச் சேவை செய்த இயேசு சபையினரைப் பாடசாலைகளிலிருந்து விரட்ட முற்பட்டனர், ஆட்சி தங்கள் கையில் என்ற ஆணவங் கொண்ட ஆள்வோர்.
"நான்தான் அவர்களை அழைத்தேன். நான் தான் அவர்களுக்கு இப்பணி செய்ய அதிகாரம் அளித்தேன். அவர்கள் எனக்கு வேண்டும் !' பதிலடி கொடுத்தார், மார்செயியின் ஆயர்.
அறிக்கை மேல் அறிக்கைகள் அனுப்பினுர், ஆயர் டி மசெனெட்.
தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முற்பட்டனீர், ஆள்வோர்.
அதே உரிமையும் சுதந்திரமும் திருச்சபைக் குண்டென்று வாதிட்டார், மார்செயி மறைமா வட்ட ஆயர்,
ஆள்வோரின் பத்திரிகைகள் ஒன்று சேர்ந்து தாக்கின ஆயரை.
, 1 224 -

கத்தோலிக்கப் பத்திரிகைகள் ஒன்று கூடித் தாங்கின ஆயரை.
ஆள்வோர் இரகசியமாக உரோமுடன் பேச்சு வார்த்தைகள் நடாத்தினர்.
கத்தோலிக்க மதத்தின் தலைமைப் பீடமான உரோமையையும் ஆயர் இயூஜீன் எச்சரித்தார்!
‘சமாதானத் தூது என்று வருவோரை இனங் கண்டு கொள்ளுங்கள். அவர்கள், காட்டிக் கொடுக் கும் எட்டப்பர் கூட்டம். தமது சுயநலன்களுக் குத் திருத்தந்தையைப் பயன்படுத்த வரும் நரிக் கூட்டம், அது. பதினைந்து வருடங்களாக நாங்கள் அவர்களை அறிந்து என்றும் எட்ட வைத்துள்ளோம். நீங்களும் அங்கே உங்களைக் காப்பாற்றிக் கொள் ளுங்கள்’’ என்று மடல் வரைந்தார்.
இராஜ தந்திர நல்லுறவை நாடின தலைமைப் பீடம் கொள்கைகளை, உரிமைகளை. இலட்சியங்களை மறக்க முனைந்தது. தந்திரமாகத் தப்பித்து ‘இராஜா” வாக வாழ விரும்பியது, மேல் மட்டம்.
ஆயர் இயூஜீன் இப்படிப்பட்ட பிரச்சினைகளில், அதுவும் திருச்சபையின் உரிமைகளில், ஈடுபடும்
பொழுது அவரது அகராதியில் விட்டுக்கொடுப்பது என்ற சொல்லே காணப்படுவதில்லை.
1848 ஆம் ஆண்டு மாசித்திங்களின் புரட்சி லூயி-பிலிப்புவின் ஆட்சியைக் கவிழ்த்தது.
15 一 225一

Page 135
("யாரும் கலங்கள்ல்லை; கண்ணிர் விடவில்லை,' என்று வைர நெஞ்சுடைய இயூஜீன் தமது நாட் குறிப்பில் எழுதி வைத்தார்.
,兴 普 关
ஒரு கணம் என் சிந்தனை என் நாட்டிற்கு ஓடியது.
எங்கள் பாடசாலைகள்.
எங்கள் ஆயர்கள் விட்டுக் கொடுக்கவில்லை முத லில், உரிமையை நிலை நாட்டினர்.
இந்த நாட்டுக் கத்தோலிக்க உலகமே திரண் டெழுந்தது. ஆயர்களுக்கு வேண்டிய ஆதரவளித் தது. சொற்களில் அல்ல, செயல்களில்! ஆனல் காட் டிக் கொடுத்தது, ஆயர் குழு.
ஆள்வோருடன் ஆயர்கள் செய்த ஒப்பந்த மென்ன? இரவோடிரவாக கொள்கைள் மாறியன, ஏன்? திடீரென்று விட்டுக் கொடுத்ததன் மர்ம மென்ன?
ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதா? திருச்சன்பக் குச் சலுகைகள் கிடைத்தனவா?
ஒரு சில கல்லூரிகளை மட்டும் தனியாக வைத்து நடத்துவதேன்? கொள்கைக்காகவா? பெருமைக் காகவா?
பாடசாலைகளை ஆள்வோர் எடுக்கக் கூடா தென்று ஆயர்கள் அற்றைநாள் குரல் எழுப்பியதும்,
دیتے۔ 226 سے

அவர்களுக்கு ஆதரவு தந்தவர்கள் பாமர மக்கள்ரழைகள்-ஆயன் குரலுக்கு என்றுமே அடிபணிந்து வாழும் மக்கள். W
இன்று இதே மக்களின் குழந்தைகளுக்கு அந் துத் திருச்சபையின் தனியார் பாடசாலைகளில் இட மில்லையே; வருந்திக் கடன்பட்டு கொடையென்று கொடுத்தாலும் இடமில்லையே.
அன்று இயூஜீன் டி மசெனெட் போன்று ஓர் ஆயர் ஈழத்திலிருந்திருந்தால்.
இன்றும் எமது ஈழத்துத் திருச்சபை இராஜ தந்திர நல்லுறவை நாடித்தானே தனது கொள்கை களிலிருந்து நழுவி வாழுகின்றது? அன்றுபோல் இன்றும் மேல் மட்டத்தில் ஆலோசனை வழங்கும் குழுவினர் எட்டப்பர் கூட்டந்தானே? உண்மை யான, நேர்மையான, நீதியான ஆலோசனைகளை வழங்கினல் என்றும் ஆண்டியாகவே வாழ வேண் டும். 'தந்திரமான வழிவகைகளை எடுத்துரைத்தால் 'இராஜா'க்களாக வாழலாம் அல்லவா? அதனல் தான் இதற்கு இராஜ தந்திரம் என்று பெயர் வைத்தார்களோ?.
மேற்கொண்டும் என் நாட்டில் என்னைச் சஞ் சரிக்க விடவில்லை அந்த முதியவர்.
அவருக்கு நல்ல ஒராள் கதை கேட்கக் கிடைத் தது போலும்?
கதை தொடர்ந்தது.
景 资 兴
۔۔۔۔۔۔۔ 227 ---

Page 136
:[[2]|[[])[OJმრტ [1ჩMIDJ
1852 ஆம் ஆண்டின் முடிவுக்கு முந்திய திங்கள். லூயி நெப்போலியனை ஆட்சிப் பீடத்தில் அமர வைப்பதை ஆயர் டி மசெனெட் ஆதரித்தார், இது, ஆயரின் இளமைக்காலப் போக்குக்கும். குலப் பழக் கத்துக்கும் முரணுன செயல்.
இப்பொழுதெல்லாம் ஆயர் நாட்டின் நலனையே நாடினர்; குலப் பழக்கங்களையோ, குடிப் பெருமை யையோ, சுயநலக் கொள்கைகளையோ அல்ல.
1848 ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் புரட் சிக்குப் பயந்து உரோமிலிருந்து ஓடிய ஒன்பதாம் பத்திநாதரை மீண்டும் உரோமுக்கு வரவழைத்து அவருக்கு உரிய இடத்ன்த வழங்கியவன், இந்த லூயி நெப்போலியன்.
ஒன்பதாம் பத்திநாதரும், லூயி நெப்போலி யனும் ஆயருக்கு நல்ல நண்பர்கள் ஆஞர்கள். பல நற்காரியங்களைச் செயற்படுத்த இயூஜீன் இந் நட்பை அவ்வப்பொழுது பயன்படுத்திக் கொண் டார். * V
லூயி நெப்போலியன் (சக்கரவர்த்தி மூன்ரு வது நெப்போலியன் என்று ஆங்கில உலகுக்கு அறி முகமானவன்) இயூஜீன் டி மசெனெட்டை சாம் ராஜ்யத்தின் மேல் சட்டசபை அங்கத்தவராக நிய மித்தான்.

பட்டத்தையும், பதவியையும் சார்ந்து பல்லி மித்துப் பணிபுரியும் பரம்பரையில் இயூஜீன் பிறக்க வில்லை; வளரவுமில்லை; வாழவுமில்லை.
திருத்தந்தைக்குக் கொடுக்கவேண்டிய ஆதரவை மன்னன் கொடுக்காததால் இயூஜீன் அம் மன்ன னைக் கண்டிக்க இரண்டு முறை சிந்திக்கவில்லை. இத்தகைய விடயங்களிலெல்லாம் அவர் இரண்டு முறை சிந்திப்பதேயில்லை.
திருச்சபையின் தலைமை ஆட்சியையும், மதத் தின் நலனையும், என்றும் காப்பாற்றிய இயூஜீனத் திருத்தந்தை கருதினுலாக்கிக் கெளரவிக்க முன்வந் தார்.
இறுதியில் உண்மை வென்றது! நேர்மை நிலைத் தது! நீதி நிலைபெற்றது!
சிலுவையின் பாதையிற் சென்ற இயூஜீன் இவ் வுலக வாழ்விலேயே உயிர்த்த ஞாயிற்றைக் கண் ц—тгі.
முள்முடியைக் காப்பாற்ற முனைந்த இயூஜினுக் குப் 'பொன் முடியும்' கிடைத்தது. "சிவப்புத் தொப்பியும் வந்தது. புனித பட்டமும் காத்திருக் கிறது.
நூற்றுக்கு நூறு.
திடீரென்று உரோமும், பரிசும் மோதின.
- 229 -

Page 137
சிவப்புத் தொப்பி வந்த வழியிலேயே தடைப் பட்டு நின்றது.
திருத்தந்தைக்கும் மன்னனுக்குமிடையே ஏற் பட்ட தகராறுகள் தீர்க்கப்படும் வரை இயூஜீனது தலை சிவப்புத் தொப்பியின்றியே காட்சிதர வேண்
டியதாயிற்று.
அவர் காத்திருந்திருப்பார்.
ஆணுல், காலன் காத்திருக்கவில்ஃப்,
1881 ஆம் ஆண்டு, அன்று வைகாசித் திங்கள் 21 ஆம் நாள். ஐயகோ !
புரட்சியிற் பூத்த பூ உதிர்ந்து விட்டது!
景
: -
.
s "... " ܨܪ.. . . . . " - 9.
- 250 -

நினத்ததை நடத்தியே முடித்தவன்

Page 138

28
முடிந்த கதை தொடருமா?
முதியவர் தமது நீண்ட தொடர் கதையைத் திடீரென முடித்து விட்டது போன்றே எனக்குத் தோன்றியது.
“என்ன சுவாமி, அதற்குள்ளாகக் கதையை முடித்து விட்டீர்கள்!' என்று ஆர்வத்துடன் கேட் டேன்.
“இது போதும் தம்பி! கதாநாயகன் இறந்த துடன் கதை முடிய வேண்டியது தானே 1. நேரமும் பதினென்றைத் - தாண்டி விட்டது! போய்த் தூங்கும். நாளைக்கு நீர் போகவேண்டு மல்லவா’’ தந்தைக்குரிய பாசத்தோடு அந்த முதிய குரவர் சொன்னர்.

Page 139
சென்று தூங்க ஏனே எனக்கு மனம் வரவில்லை.
கதையின் தாகமோ, அன்றேல் கோப்பியின் வேகமோ தெரியவில்லை.
'மூன்று மணித்தியாலங்களுக்கு இந்தத் திரைப் படம் ஒடியிருக்குமா?. கதாநாயகன் இறந்தால் என்ன? அவனுக்கு ஒரு மகன் இருப்பதாகச் சொல்லி அவனுடைய வாழ்க்கையைத் தொடர்ந்து சொன் ஞல். ’ என்று என் மனம் அங்கலாய்த்தது.
நமது தமிழ்த் திரைப்படங்கள் என் நினைவுக்கு வந்தன.
‘சரி போய்த் தூங்கும் 1 பொ(b)ன்நுஆர் மொன்வி)ேறேர்’ குரு புன்னகையுடன் இரவு வணக்கம் கூறினர்.
‘மேர்ஸி பொ(b)க்கு பொ(b)ன்நுஆர் மொன் பேர்’ நன்றிநிறைந்த நெஞ்சுடன், மகிழ்ச்சி பொங்க இரவு வணக்கம் கூறி விடை பெற்றேன்.
பிரான்சில் கோடைக்காலம்.
இரவு குறைந்து பகல் கூடியிருக்கும்.
பொழுது விடிந்தது.
காலை உணவை முடித்துக் கொண்டு, வீட்டி லுள்ள அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டேன்,
கதை சொன்ன முதிய குரவருக்கு விசேட நன்றி நவின்று பிரிந்து வந்தேன்.
- 232 -

‘பஸ் மார்செயியிப் பட்டினம் வந்து நின்றது. "பஸ்ஸை விட்டு இறங்கினேன். என்னையறியாம லேயே நான் நடந்தேன்.
மார்செயியியை விட்டுச் செல்லுமுன் அந்த ஆச னக் கோயிலைப் பார்க்க வேண்டும் என்று உள்ளத் தில் ஓர் அவா.
மார்செயியின் ஆசனக் கோயில்!
வானத்தை முத்தமிட எழுந்து நின்றன, உயர்ந்த கோபுரங்கள். வந்தோரையெல்லாம் வர வேற்க கரங்களை அகல விரித்து நின்றது. அப்
பேராலயம்.
அங்கு நான் கற்களைக் காணவில்லை. ஆயர் இயூஜீன் கட்டியெழுப்பிய மறைமாவட்டத்தின் பல் வேறு கட்டங்களைக் கண்டேன். அவரின் அயரா உழைப்பின் உறுதியைக் கண்டேன். எதிர்ப்புக்கள் எவ்வளவுதான் வந்தாலும் அஞ்சாநெஞ்சுடன் நிமிர்ந்து நின்று எதிர்த்துப் போராடிய அவரது வைராக்கியத்தைக் கண்டேன். உண்மைக்காக, நீதிக்காக வாழ்ந்த அந்த இலட்சிய வீரனுக்கு இறுதியிற் கிடைத்த கெளரவங்களை, அவ்வாலயத் தின் ஒவ்வொரு கோபுரத்திலும் கண்டேன். அவற் றுள் ஒரு கோபுரம் மிக உயர்ந்து நின்றது. ‘இது தான் அவருக்குக் கிடைக்கவிருக்கும் புனிதத்துவப் பட்டமோ’ என்று கனவும் கண்டேன்.
கோயிலுக்கு எதிர்ப்புறமாக இருந்த கடலைப் பார்க்கிறேன்.
- 233 -

Page 140
மத்திய தரைக் கடல். கடலை நோக்கி நடக்கிறேன், அங்கு பல கப்பல்கள் சிறிதும், பெரிதுமாகக் காட்சி தருகின்றன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே நிற்கிறேன்:
இக்கடலைத் தாண்டித்தானே நாற்றிசையும் சென்ருர்கள், இயூஜீனின் அமலமரி தியாகிகள்.
ஆமாம் எமது கதாநாயகனுக்கு ஒரு மகன் உண்டு. அவன் இக்கடலைத் தாண்டி எத்தனையோ நாடுகளுக்குச் சென்று அரும் பெரும் சேவைகளைச் செய்திருக்கின்றன். உலக வரலாற்றில் தன் தந்தை யின் பெயரையும், புகழையும் ஐயந்திரிபற வரைந் துள்ளான்.
கரையில் வந்து அடிக்கும் அலைகள் போன்று என் எண்ண அலைகள் ஒன்றன் பின் ஒன்ருக தவழ்ந்து வந்து எம்பிக் குதித்து, எதிர்ப்புறமாக பின் நோக் கிச் செல்கின்றன.
兴 景
திக்கெட்டும் செல்ல
தளமொன்று வந்தது
1841 ஆம் ஆண்டு 'பிரெஞ்சுக் கனடா'வின் பெரிய பட்டினமான மொன்றியோலின் ஆயர்,
- 234 -

உரோமுக்குச் செல்லும் வழியில், மார்செயியில் தங்கினர்.
ஆயர்களின் உரையாடலின் பொழுது, மார் செயியின் ஆயர் ஒரு மறை பரப்பாளர் சபையைத் தொடக்கியதாக மொன்றியோலின் ஆயர் அறிய வந்தார்.
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததென அவர் உணர்ந்தார்.
விடாப்பிடியாக தமக்குக் குருமார் தேவை யென வலியுறுத்தினர்.
இயூஜினின் நிலை தர்மசங்கடத்துக்குரியதா யிற்று. விருந்தாளியாக வந்த ஆயரின் வேண்டு கோளை மறுக்க முடியவில்லை. அதேவேளை குருமாரை அனுப்புவதற்கு அவரின் சபை ஆயத்தமாகவும் இல்லை;
சபையின் அங்கத்தவர்களிடமே ஆலோசனை கேட்டார்.
அதிசயம் !
ஏகமனதாக முடிவு !
'ஏற்றுக்கொள்வோம்!" என்று அங்கத்தவர் கள் அனைவரும் சேர்ந்து ஒரே குரல் எழுப்பினர்.
இம்முடிவு, மிக முக்கியமானதொன்று.
சபையின் எதிர்காலமும் காப்பாற்றப்பட்டது.
- 235 -

Page 141
“அனைத்துக் கண்களும் உங்களையே பார்க்கும். இம் மக்கள் மனங்களில் பதியும் உங்களைப் பற்றிய முதல் எண்ணங்களைக் கொண்டே, அவர்கள் உங் களைக் கணக்கிடுவார்கள் அவ்வெண்ணங்களை மாற்று வது மிகக் கடினம்’’ தமது பிள்ளைகள் கடல் கடந்து கனடா செல்லுமுன் இறுதியாகத் தந்தை சொல்லிய அன்பு வார்த்தைகள், இவைகளே.
“மொன்றியோல் எமது சபையின் தளமாக அமையலாம். அங்கிருந்தே நாம் திக்கெட்டும் சென்று நற்செய்தி நவில வேண்டியும் வரலாம்.' என்று ஆயர் தமது கனவுகளை வார்த்தைகளிற் வடித்தார்.
ஆயர் இயூஜீனின் கணக்குத் தவறவில்லை. ஒரு பக்கத்தில், "அமலமரித் தியாகிகள் வேண்டும்’ என்று அழைப்புக்கள் குவிந்தன.
மறு பக்கத்தில், கனடாவின் இளைஞர் பலர்
அமலமரித் தியாகிகள் சபையில் சேருவதற்கு ஆவல் கொண்டனர். •
கனடா சென்ற குருமார் - பெருகினர் - பர வினர்.
இந்தியப் பழங்குடி மக்களைச் சந்திக்குமளவிற்கு
அவர்களது எல்லைகள் விரிந்தன.
1845 ஆம் ஆண்டு ஆடித் திங்கள் 24ஆம் நாள் இரு அ. ம. தி. கள் மொன்றியோலில் இருந்து
வடக்கே சென்றர்கள்.
- 236 -

பரந்து விரிந்த புல்வெளிகள்-அடர்த்தியான காடுகள் - பனிப்படலமான நீண்ட பிரதேசங்கள்இவற்றிடையே ஆங்காங்கே ஒரு சில பழங்குடிகள்.
அ. ம. தி. கள் முன் விரிந்திருந்த நிலப்பரப்பு எல்லையற்றது. ஆனல், எல்லைகாண முனைந்தார்கள் அ.ம. தி. கள்.
மிகத் துணிவான முயற்சி அவர்களுடையது!
இன்றுவரை அம்முயற்சியில் நின்று அவர்கள் பின்வாங்கியவர்களல்லர்!
காலத்தினுாடாக வளர்ந்துள்ளார்கள் அ. ம,
தி. கள்.
பூகோளம் காணுத பூமியைக் கண்டார்கள். அங்கெல்லாம் மனிதர் வாழ்வதைக் கண்டார்கள்.
தேவையென்று வந்தால் சேவையென்று மாறு வது அ. ம. தி. களோடு ஊறி வளர்ந்தது.
புதிய மொழிகள், புதிய பழக்க வழக்கங்கள், புதிய உணவுகள், புதிய பிரச்சினைகள்.
நாடோடிகளுடன் ஒடி நாடோடிகளானர்கள் அமலமரித் தியாகிகள்-இயூஜினின் அன்பு மக்கள்.
- 237 -

Page 142
29
இந்து சமுத்திரத்தின்
முத்தல்லவோ ! . .
நொத்றடாம் டெ லொசியேயிலுள்ள அ. ம. தி. களைப் பயிற்றுவிக்கும் அகம் மாணவர்களால்
நிறைந்தது.
1847 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்கள் 20ஆம் நாள் மற்றுமோர் பயிற்சி நிலையம் நான்சியில் நிறுவப்பட்டது.
மறுநாள் அ. ம. தி.கள் குழுவொன்று மார் செயி துறைமுகத்திலிருந்து நீண்டதோர் பயனத் தைத் தொடக்கியது ஆசியா நோக்கி.

جT
NGE
Nኅ Nኾ
॥
ரின் இலட்சியம்
நற் செப்தி -
இமயூஜீன
哑 涉 西* 沙 H=|- -- = | te ** * ± 호표

Page 143

எதற்கும் அஞ்சாது, விட்டுக்கொடுக்காது, உறுதியுடனும் கடினத்துடனும் வாழ்ந்த ஆயர் இயூஜீன் டி மசெனெட்டிடம் ஒரு பெரிய பலவீனம் இல்லாமல் இல்லை.
- வறியோர் -
ஆயரால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு சொல். வைரம் நிறைந்த அவரது நெஞ்சு இளகி விடும், உறுதியுள்ள அவரது உள்ளம் உருகி விடும், இச் சொல்லைக் கேட்டதும். முடியாததையும் செய்ய முயல்வார். இல்லாததையும் கொடுக்க விழைவார், ஏழைகள் பால் அவருக்கு அவ்வளவு இரக்கம், அனுதாபம், அன்பு.
ஈழத்தின் இருண்ட காலம்
ஈழத்தின் மறைத் தொண்டனுகிய அருள் திரு ஜோசவ் வாஸ் அவர்களுடன் இந்திய நாட்டில் இருந்து வந்த போதகர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்து கொண்டிருந்தார்கள்.
ஈழத்துத் திருச்சபையின் இருண்ட காலமாகிய இக்காலத்தில், விசுவாச ஒளியை ஏற்றி வைத்த பெருமை இப்போதகர்களை, சிறப்பாக, ஜோசப் வாஸ் அவர்களையே சாரும்.
புதிதாக வந்த மறைமாவட்டக் குருக்களை மக்கள் வரவேற்கவில்லை. அவர்களும் மறைப்பணி யில் ஆர்வம் உடையவர்களாகக் காணப்படவில்லை.
- 239 -

Page 144
ஈழத்துக் கத்தோலிக்க மக்கள், மேல் நாட்டை அண்ணுர்ந்து பார்த்தனர்! - ‘தொண்டர்கள் வரு வார்களா?' என்ற ஏக்கத்துடன்1.
தெற்கில் பணிபுரிந்து வந்த இத்தாலி நாட் டைச் சேர்ந்த அருள் திரு பெற்றக்கினி அவர்க ளுக்கு, கோவைக் குருக்கள் என்ருல் ஓர் "அலேர்ஜி.
பெற்றக்கினி கொழும்பு மறைமாவட்டத்துக் குத் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். இதைக் கோவைக் குருக்கள் எதிர்த்தனர்: அமைய மறுத் தனர்.
பிரச்சினை உரோமுக்குச் சென்றது.
இராஜ தந்திரத் தீர்வு வந்தது.
பெற்றக்கினி யாழ்நகர் வந்தார். ஆனல், அதே வேளை கொழும்புக்குத் துணை ஆயராகவும் இருந் தார்! இந்த ‘இரண்டும் 1849 ஆம் ஆண்டு நிகழ்ந் தது. く
யாழ் மறைமாவட்டத்தில் பணிபுரிய பெற்றக் கினி அவர்களுக்கு குருக்கள் தேவைப்பட்டனர்.
குருக்கள் எங்கிருந்து வருவார்கள்?
ஈழமும் இயூஜினும்
மேல்நாடு சென்ற பெற்றக்கினி அவர்கள் ரள்ளின் ஆயரைச் சந்தித்தார். குருக்கள் இல்லாப் பிரச்சினையை எடுத்துரைத்தார்.
一 240 一

'நீர் ஏன் மார்செயியிக்குப் போகவில்லை? அங் கோர் ஆயர் இருக்கிறர். உலகைப் போன்று பரந்து விரிந்த இதயங் கொண்டவர். ஆனல் கவனமாக இருக்க வேண்டும். உமது தேவைகள் வறிய மக்க ளுக்கு என வலியுறுத்த வேண்டும். அதுதான் சொல். வறிய மக்கள். நீர் கேட்பது கிடைக்கும்’ என்று அவ்வாயர் உறுதியும் உற்சாகமும் அளித்தார்.
பெற்றக்கினி மார்செயியின் ஆயரைச் சந்தித்
தாா.
'உமக்கு உதவ எனக்கு ஆசைதான். ஆனல்.’
ஆயர் இயூஜீன முடிக்கவிடவில்லை பெற்றக் இனி,
"மதிப்பிக்குரிய ஆண்டகை அவர்களே! நான் கேட்பது அவசரமானது. வறிய மக்களின் மீட்புவறிய மக்களென்ருல்.வறுமையிலும் வறுமை. உலகிலேயே இதைப் போன்ற வறுமை வேறெங்கும் இல்லையெனலாம். அவர்களுக்கு மறைப்பரப்பா ளர்களைக் கொடுங்கள். ஆண்டவன் பெயரால் கொடுங்கள்’’ என்று தமது கோரிக்கையை வலி யுறுத்தினர், பெற்றக்கினி.
ஆழ்ந்த அமைதி. ஆனல் நீடிக்கவில்லை.
“உங்களுக்கு உடனேயே அக்குருக்கள் கிடைப் பார்கள்,' இயூஜீன் உறுதியாகச் சொன்னர்.
16 - 241 -

Page 145
அருள் திரு செமேரியாவின் தலைமையில், ஜோசவ் சியாமின், லூயி கீற்றிங், சகோதரர் கஸ்பார் டி ஸ்ரெவா (ph) னிஸ் ஆகியோர் ஈழம் வந்து சேர்ந்தனர்.
ஈழத்தில் பிரச்சினை காத்திருந்தது.
ஏற்கனவே ஈழத்தில் பணிபுரிந்து வந்த மேல் நாட்டுக்குருக்கள் புதியவர்களை வரவேற்கவில்லை, அதுவும் வருபவர்கள் ஒரு துறவற சபையைச் சார்ந்தவர்களென்ற உண்மை மேலும் கசந்தது.
அ. ம. தி. கள் யாழ்நகர் வந்து சேர்ந்தார்கள்.
அன்று - 1848 ஆம் ஆண்டு மாசித் திங்கள் நாலாம் நாள்.
சோதனை மேல் சோதனை
யாழ் மறைமாவட்டத்தின் அன்றைய எல்லை கள் மிக விரிந்திருந்தன. வடக்கே பருத்தித்துறை, கிழக்கே திருமலை - மட்டுநகர், மேற்கே சிலாபம், தெற்கே குருநாகல் என்று 13,542 சதுரமைல் கொண்டதாக இருந்தது. அ. ம. தி. கள் வருவ தற்கு முன்னர் இம்மாவட்டத்தில் பணிபுரிந்தவர் கள் பதினெரு குருமார். மேல் நாட்டவர் ஐந் தென்ருல், கோவைக் குருக்கள் அறுவரானர்.
མཁལ་མ 242 --

""
தாலி நாட்டவரானதினல், மேல்நாட்டுக் குருக்கள் அனைவரையுமே இத்தாலியரென்ருர்கள், கோவைக் குருக்கள்.
அ. ம. தி. கள் இரு பிரச்சினைகளைச் சந்தித்தார் கள். ஒரு பக்கத்தில் கோவைக் குருக்கள் முள்ளா கக் குத்தினர். மறுபக்கத்தில் இத்தாலியர்-பிரென் சுக்காரர் என்று துறவற சபைகளிடையே சண்டை.
இது போதாதென்று இயேசு சபைக் குருக் ளும் வந்து சேர்ந்தார்கள்!
ஈழத்திலேயே அழைத்தல்களை வரவழைத்து, ஈழத்தவரையும் பணியிற் சேர்க்க வேண்டுமென்பது செமேரியாவின் இலட்சியம். பெற்றக்கினி அதற்கு அனுமதியும் ஆசீரும் அளித்தார்.
குரு மடத்துக்கென இரு குரவர்களைத் தருமாறு இயூஜீனுக்குக் கோரிக்கையொன்று சென்றது.
தாராள மனத்துடன் ஆயர் இயூஜீன் மூவரை அனுப்பிவைத்தார்.
மூவரும் எட்ட இருக்கும் பங்குத்தளங்களுக்குச் சென்ருர்கள்!
நாகபட்டினம், பாண்டிக்சேரி போன்ற இடங்க ளில், "இயேசு சபையினர் எங்ங்ணம் கல்லூரிகளை நடத்துகிருர்கள்' என்று பார்த்துவர செமேரியா அவ்விடங்களுக்குச் சென்றிருந்தார்.
- 248 -

Page 146
இவ்வேளை அ. ம. தி. களை அடியோடு அகற்றச் ‘சதி யொன்று உருவானது.
'மறைமாவட்டக் குருக்களே வேண்டும்' என்று சிலர் வாதிட்டனர்.
ஸ்பெயின் நாட்டவரான ஒறுனவும், கிருசியா வும் (ஒரு துறவற சபையைச் சார்ந்தவர்கள் - Cistercians), ‘அ. ம. தி. கள் வேண்டாம்' என்று வலியுறுத்தினர். மேலும், ‘இயேசு சபையினர் வரட் டும்’ என்று அழைத்தனர்.
ஸ்றிக்லண்ட் என்ற ஆங்கில இயேசு சபைக் குரவர் ‘பிச்சையெடுக்கும் போர்வையில், ஈழத்தில் கல்லூரி யொன்று கட்டுவதற்குரிய வாய்ப்புகளை ஆராய்ந்தார். செமேரியாவை தூர இடத்துக்கு அனுப்பி விடுமாறு பெற்றக்கினியை எச்சரித்தார்.
பெற்றக்கினி இதற்கெல்லாம் அடிபணியவில்லை.
செமேரியாவையே தமது செயலராக்கினர்.
1857 இல் இவரையே மறைமாவட்ட முதல்வ ருமாக்கினர்.
திடீரென்று ஊர்காவற்றுறை, மன்னர் போன்ற இடங்களுக்கு நாலு இயேசு சபையினர் வரவழைக்கப்பட்டனர்.
செமேரியாவின் நிலை பரிதாபத்துக்குரிய தாயிற்று.
--ܤ 244 --

செய்திகள் இயூஜீனுக்குச் சென்றன. அவர் உணர்வுகள் கோபமாகப் பொங்கி எரிந்தன!
இயேசு சபை முதல்வருக்கு மடல்கள் பறந்தன. ஆங்கில இயேசு சபைக் குரவர் ஸ்றிக்லண்ட்டின் செயல்கள் (சதிகள்) கண்டிக்கப்பட வேண்டும்’ என் ருர் இயூஜீன்.
ஸ்றிக்லண்ட், மார்செயினுாடாகச் செல்லும் பொழுது இயூஜினைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டுக்
கொண்டார்.
ஈழம் வரும் நாலு இயேசு சபையினரையும் நல் மனதுடன் ஏற்றுக் கொள்ளுமாறு செமேரியாவுக்கு இயூஜீன் எழுதினர்.
கோவைக் குருமார்கள் “கோபக் குருமார்’ களாகச் செயற்பட்டார்கள். வைக்கோற்பட்டடை நாய்கள் போன்று தாங்களும் ஒரு பணியை நிறை வாகச் செய்யாமல், நல்மனதுடனும் ஆர்வத்துட லும் செய்ய வந்தவர்களையும் குழப்பிக் கொண்டும், மக்களை அ. ம. தி. களுக் கெதிராக எழும்படி தூண்டிக் கொண்டுமிருந்தார்கள், நற்செய்தி நவின்று கிறித்துவுக்குச் சான்று பகர நாடு விட்டு நாடு வந்த கோவைக் குரவர்கள்.
நாட்டில் நடப்பவை அனைத்தையும் செமேரியா வரிவிடாமல் இயூஜீனுக்கு எழுதி வந்தார்.
கிழக்கின் உளஇயலும், தர்க்க இயலும் மேற் குக்கு அவ்வளவு எளிதாகப் புரியவில்லை இயூஜீனுக்கு ஈழத்தின் பிரச்சினைகள் விளங்கவில்லை!
一 245 一

Page 147
இயூஜினின் ஒவ்வொரு பதிலிலும், 'ஈழம் பூராக அ. ம. தி. கள் சேவை படர வேண்டும் அந்நிய மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு நற்செய்தி நவில வேண்டும்!’ என்ற தமது கனவை எழுத்தில் வடித்து வந்தார்.
வடக்கின் வெப்பம் வந்தவர்களை வாட்டியது. வாந்திபேதி வேறு விரட்டியது.
விளைவு.
1851 ஆம் ஆண்டு வதிரியம்பதியில் லேடியே முதற்பலியானர். 1855 ஆம் ஆண்டில் மாதகலில் லாகோம்ப் தொடர்ந்தார். சியாமின் 1853 ஆம் ஆண்டிலும், வி(f)ளேறின் 1861 ஆம் ஆண்டிலுமாக இறைவனடி சென்றனர். ஈழத்து முதல் அமலமரி தியாகியான சகோதரர் போள் பூரி (சிங்களவர்) 1861 ஆம் ஆண்டில் ஈழத்துப் பங்கைப் பலியாகக் கொடுத்தார். w
தொடர்ந்து அ. ம. தி. கள் வருவார்களா?
“கொழும்புக்கும் அ. ம. தி கள் செல்ல வேண் டும்" என்று ஆயர் இயூஜின் வலியுறுத்தி வந்தார்
"ஒரு வேளை யாழ் மறைமாவட்டம் முழுமை யாக அ. ம. தி. களின் கண்காணிப்பில் இருந் தால்.” இயூஜீனின் சிந்தனை விரிந்தது.
உரோமுடன் தொடர்பு.
செமேரியா யாழ் மறைமாவட்டத் துணை ஆய ராக நியமிக்கப்பட்டு இயூஜீனலேயே மார்செயியில் திருநிலைப்படுத்தப்பட்டார்.
- 246 -

ஆயர் பெற்றக்கினி இதை வரவேற்கவில்லை: தடுக்கப் பல முயற்சிகள் செய்தார். தோல்விதான் கிடைத்தது.
1857 ஆம் ஆண்டு. ஆடித்திங்கள் 2 ஆம் நாள். தான் செய்த பணிக்குப் படைத்தோனிடம் பரிசு பெறச் சென்று விட்டார், பெற்றக்கினி.
-- 247 سمه

Page 148
30
அ. ம. தி. கள் ஆட்சி
ஆயர் செமேரியா யாழ் மறைமாவட்டப் பொறுப்பை ஏற்றர். மக்கள் மொழியான தமிழை நன்கு கற்ற ஆயர் தமது முதற் சுற்றுமடலையே தமிழில்தான் எழுதினர்.
அ. ம. தி. களின் தனிப்பணியான மறைப்பரப்பு வாரங்கள் (mission Week) நடாத்தப் பெற்றன. ஆயர் செமேரியா அவர்களே பலவற்றை முன் நின்று நடாத்தினர். அ. ம. தி. களை வெகுவாக எதிர்த்த ஊர்காவற்றுறையையே தமது பணியின் முதலிடமாகத் தெரிந்து கொண்டார், ஆயர்.
ஆலயத்துட் பிரவேசிக்க ஆயருக்கும் அவரது குருக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது, அப் பங்கு மக்களால்,

இயூஜினின் உருவாக்கமல்லவா? 4 t6 dl «8 0 48 Qr a =
செமேரியா விட்டுக் கொடுக்கவில்லை.
எண்ணி நாற்பது நாட்கள் ஆயரும் இரு குரு மாரும் அப்பங்கில் பெரும் பணி புரிந்தனர். நற் செய்தி நல்கினர். மக்களை வீடுவீடாகச் சென்று சந்தித்தனர். பக்தி முயற்சிகளில் அவர்களை ஈடு படுத்தினர்.
எதிர்த்த மக்கள் மனந்திரும்பினர். பயன் பெற் றனர்.
உற்சாகம் கொண்ட அ. ம. தி. கள் ஆர்வ
முடன் வேற்றிடங்களுக்கும் சென்ருர்கள். வலி காமம், நெடுந்தீவு, திருமலை, மட்டுநகர், யாழ்நகர், மாந்தோட்டம், சிலாபம், போளவத்தை என்று மாறிமாறி இப்பெரும்பணி வளர்ந்தது.
19ஆம் நூற்ருண்டின் தொடக்க காலத்திலேயே ‘பாதிரி வேதத்தினர் என்று அழைக்கப்பட்ட "புரொட்டஸ்ரன்ஸ்’, நல்ல பாடசாலைகளை நிறுவி விட்டனர். இவற்றிற்கு சளைக்காமல் தங்கள் பாட சாலைகளை நடாத்த வேண்டுமென்பது அருட் திரு பொன்ஜினுடைய பேரவா.
பொன்ஜின் அவர்களை இந்நாட்டின் கல்வி வர லாறு மறக்க முடியாது,
கல்வித்துறையில் அரும் பெரும் சேவைகள் புரிந்தவர், அவர். நாடே அவரின் திட்டங்களையும், கொள்கைகளையும் வியந்து வரவேற்றது.
- 249 -

Page 149
இவற்றைக் கேள்வியுற்ற இயூஜீன், உண்மை யிலேயே மகிழ்ச்சி அடைந்தார். அவரின் திட்டங் கள் விரிந்தன. ஈழத்துத் திருச்சபையில் அவர் தனி அக்கறை எடுத்தார். C
கொழும்பில் அ. ம. தி. கள்
செமேரியாவைக் கொழும்புக்குத் துணை ஆய ராக்கி, பொன்ஜினை யாழ்ப்பாணத்தின் ஆயராக்க வேண்டும். இது இயூஜீனின் திட்டத்தின் அடுத்த
கட்டம்.
கொழும்பு இத்திட்டத்தை வன்மையாக எதிர்த் தது. அ. ம. தி. கள் கொழும்புக்கு வேண்டாம் என்பது கொழும்பில் ஆட்சி செய்த கயிற்ருனே, பிருவி இருவருடையவும் உறுதியான எதிர்ப்பு.
இதே வேளை, கொழும்பு மறைமாவட்டத்தில் பணிபுரிய குருக்களும் இல்லை. எங்கெங்கோ எல்லாம் தேடினர்கள், கிடைக்கவில்லை. இறுதியில் வேண்டா வெறுப்புடள் அ. ம. தி. களை அழைத்தனர். இயூ ஜீனைக் கேட்காமல் உரோமைக் கேட்டார் பிருவி
டி மசெனெட் இந்த நேர்மையற்ற செயல வரவேற்கவில்லை.
ஆயினும், மக்கள் நலன் நாடி அவர் பெரு மனங் கொண்டு குருக்களை அனுப்பி வைத்தார்.
பிருவி, அதிகாரத்தையிட்டும் ஆட்சியையிட் டுமே அதிகமாகச் சிந்தித்தார்.
- 250 -

"கொழும்பில் உள்ள அ. ம. தி. கள் யாழ்ப்பா ணத்திலுள்ள அதிபர் ஒருவரால் நடாத்தப்படுவா ரானல், படிப்படியாக யாழ் அ. ம. தி. கள் கொழும் பில் நுழைந்து விடுவார்கள். அதன் பின்னர். 9 y பிருவிக்குப் பயமாகவே இருந்தது.
‘வடக்கிலிருந்து எதுவும் வந்து தெற்கில் நுழை யக் கூடாது; அதுவும் ஆட்சியில் அமரக் கூடாது' என்பதில் பிருவிக்குப் பிறவியிலிருந்தே ஒரு வியாதி போலும் !
இன்று மட்டும் என்ன ! நிலை மாறியதா?
வடக்கிலிருந்து யாரும் தெற்கின் ஆட்சியில் அமரக்கூடாது. வடக்கு வளரக் கூடாது. வடக்கில் உள்ளவர்கள் உயரக் கூடாது. ஆணுல், வடக்கை வைத்துத் தெற்கு ஆளலாம், வளரலாம், உயர லாம். தெற்குக்கு, வடக்கு என்றுமே,ஓர் "அலேர்ஜி" தானே? ஆனல், அதேவேளை "தெற்கும் வடக்கும் ஒற்றுமையாக வாழவேண்டும்’ என்று பேசுவதும் ஏனே ?
திருப்பணி புரியும் திருத் தொண்டர்களிடை யேயும் “திருத்தந்திர' அரசியலோ? அதுதான் திருச்சபை கிறித்துவுக்கு நற்சான்று பகரத் தவறு கிறதோ? அன்றேல் திருச்சபை பகரும் சான்றில் சத்தியமில்லையோ?
கொழும்பு வந்த அ. un. தி. கள் சிங்கள மொழி Yx யைக் கற்ருர்கள். மக்களோடு மக்களானுர்கள். இது அவர்கள் தந்தை, இயூஜீன் அளித்த பரம்
- 251 -

Page 150
பரைச் சொத்து. மக்களிடையே நல்ல வரவேற் பும் பெற்ருர்கள்.
கோவைக் குருக்களின் வயிற்றெரிச்சலை எழுப் புவதற்கு வேறு காரணங்களும் வேண்டுமா?
குற்றங்காணப் புலன்களைத் தீட்டினர்கள், கோவைக் குருக்கள். செய்திகளுக்கு கால், மூக்கு வைத்து வெறுப்பை வளர்த்து வந்தார்கள்.
சேவையைப் பார்த்து மகிழ்ந்து ஊக்குவிக்க வேண்டிய ஆயர்களே கோவைக் குருக்களுடன் சேர்ந்து அங்கலாய்த்தார்கள்! எதிர்த்தார்கள். கண் டனம் தெரிவித்தார்கள். அ. ம. தி. களை முற்ருகக் கொழும்பில் இருந்து நீக்கி விட முயற்சி எடுத் தார்கள். உரோமுக்கு முறைப்பாடுகள் அனுப்பி ஞர்கள். இந்த அபூர்வப் பிறவிகளான ‘மறைத் தொண்டர்கள்.
ஆனல், உண்மை வென்றது.
தோல்வியை ஏற்கும் சக்தி நல்லவர்களின் சொத்து! பழி வாங்குவது மற்றவர்களுடன் பிறந்த் புத்தி صبر
அ. ம. தி.கள் மிகவும் பின் தங்கிய - வறுமை யால் வாடிய பங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட் டார்கள். ஆயரகத்திலிருந்து ஒரு சதமாவது அவர் களுக்குக் கொடுக்கப்படவில்லை.
பெரியவர்களின் சின்னச் செயலுக்கு அ. ம. தி.
கள் பயப்பிடவில்லை.
حسب 252 - سـ

அவர்கள் பணி தொடர்ந்தது. சேவை வளர்ந்
பிருவி போன்றேர் தொடர்ந்து எதிர்த்தனர். முடியாத் தன்மையில், பழி சுமத்த அவர் உரோ முக்கே சென்ருர் காலன் வந்து வழியிலேயே அவ ரைக் 'காப்பாற்றி விட்டான்!
சூழல் கொழும்பில் நல்லதாக இல்லாதபடி யால் 1866 ஆம் ஆண்டு அ. ம. தி. கள் கொழும்பில் இருந்து விலக்கப்பட்டார்கள்.
மீண்டும் 1883 இல் அதிகார பூர்வமாக கொழும்பு மறைமாவட்டம் அ. ம. தி. களிடம் ஒப்
படைக்கப்பட்டது.
அ. ம. தி. களின் பெரும்பணி காலத்தினூடாக வளர்ந்தது. எல்லைகள் விரிந்தன. கிறித்தவ மக்கள் தொகை பெருகின. அவர்கள் கூடி வழிபட ஆலயங் கள் எழுந்தன. அவர்களை உருவாக்கப் பாடசாலை களும், கல்லூரிகளும் அமைந்தன. அவர்களுக்குப் பணி புரிய அவர்களிடமிருந்தே அழைத்தல்கள் வந்தன. அவர்களைக் குருமாராக உருவாக்க குருத் துவக் கல்லூரிகள் அமைந்தன.
மறைமாவட்டங்களை சிறப்பாக உருவாக்கி மறைமாவட்டக் குருக்களை வளர்த்தனர், அ. ம. தி. கள்.
-- 258 -

Page 151
உழுது, விதைத்து,
வளர்க்க மட்டுமா ... ?
இன்று யாழ் மறைமாவட்டமும், சிலாபமும் மறைமாவட்டக் குருக்களாலும், அவர்களின் ஆயர் களாலுமே நிர்வகிக்கப்படுகின்றன. அடுத்தது கொழும்பு என்பதில் ஐயமேது ?
இன்று ஒரு சில மறைமாவட்டங்களில், மறை மாவட்டக் குருக்கள், அ. ம. தி. கள் என்ற வேறு பாடின்றி சகோதரங்களாகப் பல குருமார் பணி புரிகிருர்களென்ற உண்மையை இவ்விடத்தே குறிப் பிடல் வேண்டும்.
இவ்வுறவு நீடித்து வ்ளர வேண்டும்.
கல்வித் துறையிலும், நற்செய்தி நவில்வதிலும் இந்நாட்டில் அரும்பெரும் சேவை செய்துள்ளார் கள் அ. ம. தி. கள் என்பது மறுக்க முடியாத பேருண்மை. இவர்களின் சேவையைப் பறைசாற் றிக் காலத்தால் அழியாத சின்னங்கள் பல நாட் டின் பல்வேறு பகுதிகளிலும் காட்சிதருகின்றன.
குருத்துவ மாணவர்களைப் பயிற்றுவிக்கும் கல் லூரியொன்றை பல்லாண்டுகள் அ. ம. தி. கள் தான் இந்நாட்டில் சிறப்பாக நடத்தி வந்தார்கள். அதுவும் ஈழம் பெற்றெடுத்த அறிவுக் களஞ்
சியங்கள் சிலரால் நன்ருக வளர்க்கப்பட்டது.
سس۔ 254 --

மறுமலர்ச்சியும், புத்துணர்ச்சியும், புத்தொளி யும் பெற்று வளரும் திருச்சபையுடன் ஈழத்திருச் சபை பின்நிற்காது முன் நின்று வளர வழிகோலிய பேராசிரியப் பெருமக்களை இங்கு நன்றியோடு நினைவு கூருகின்ருேம்.
புதுமையை விரும்பாத பெரியோர், உண்மை கசந்ததால், அப்பேராசிரியர்களைப் புரியத் தவறிய தால், இன்று அவர்களின் அரும்பெரும் சேவை அந்நிய நாடுகளுக்கே பயன்தருகின்றது.
நாடு கடத்தப்பட்டார்களோ!.
‘தீர்க்கதரிசிகள் சொந்த நாட்டில் வரவேற் கப்படுவதில்லை!' -
தேவையில்லையென்றதும் சேவையில்லையென்று சென்றுவிடுவது அ. ம. தி. களுடன் ஊறிய பழக்கம்!
குருமடம் இன்று அவர்கள் பொறுப்பில் இல்லை. எந்தவொரு மறைமாவட்ட இயக்கமோ, நிலையமோ அவர்கள் கண்காணிப்பில் இல்லை. அவர்கள் கவ லைப்படவும் இல்லை. அதே வேளை பல மறைமா வட்டக் குருக்களும் கடினமான பங்குகளில், வறட் சியான இடங்களில் இன்று பணிபுரிந்து வருகிருர்கள்.
அ. ம. தி. கள் இன்று புதிய நிலங்களை - வறட் சியான நிலப்பரப்புகளை நோக்கிச் செல்கின்றனர் . உழுது, விதைத்து, வளர்க்க.
அறுவடை செய்து அனுபவிக்க ஆட்கள் எப் பொழுதும் உண்டு!
- 2);

Page 152
31
திசையெல்லாம் அ. ம தி. கள்
திக்கெட்டும் சென்ற அ. ம. தி. களின் திக்கு கள் அனைத்தையும் எண்ணிப்பார்க்கின்றேன். நாற் பத்து நாலு நாடுகள் 1-6648 அ. ம. தி. கள்! அங் கெல்லாம் சென்று, அவர்களின் வாழ்க்கை முறை களைப் பார்த்து அவர்கள் செய்யும் பணிகளை அறிந்து அவர்களின் வேறுபட்ட, மாறுபட்ட சூழல்களைப் புரிந்து எமது தாய் மொழியில் வடித்தால்.
எஸ்கிமோ மக்களிடம் பணிபுரியச் சென்ற அ. ம. தி. கள் இருவரை, அம்மக்கள் பலியாக்கி உண்டார்களே!

முப்பத்து எட்டு வயதுடைய அ. ம. தி. ஒருவர் வடதுருவத்தில் பயணம் செய்யும் வேளை உண்ண உணவின்றி உயிர் துறந்தாரே!
மற்றுமொரு குரவர் தான் உடுத்திய உடை யையே உணவாக உண்ட வேளை உயிர் நீத்தாரே!
அந்தத் தியாகச் செம்மல்களையெல்லாம் நினைத் துப் பார்க்கின்றேன்.
தென் அமெரிக்காவின் வெவ்வேறு நாடுகளி லும், லாஒஸ் போன்ற ஆசிய நாடுகளிலும் ஆள் வோரின் அநீதிகளை நேரடியாகவே எதிர்த்துப் போராடி இறந்த, நாடுகடத்தப்பட்ட, சிறைப் பட்ட அ. ம. தி. களை எண்ணிப் பார்க்கின்றேன் .
அங்கெல்லாம் சென்று அல்லலுறும் அ. ம. தி. களைச் சந்தித்து, அவர்களின் செயல் முறைகள், பணிகள், ஏக்கங்கள், தவிப்புகள், தாகங்கள், நம் பிக்கைகள், எதிர்பார்ப்புகள். முதலியனவற்றை அறிந்து, வாழும் தியாகிகளின் வரலாறுகளை செந் தமிழ் வார்த்தைகளில் வடித்து, எழுத்துகளில் கோத்து அச்சிலேற்றி, நூலில் தொடுத்தால்.
எண்ணங்கள் எங்கோ போகின்றன.
மார்செயி துறைமுகத்தில் அலைகள் மாறிமாறி எழுந்து வந்து கரையில் மோதுகின்றன.
இத்துறைமுகத்திலிருந்துதானே, இந்த மத்திய தரைக்கடல் வழியாகத்தானே பிரான்ஸ் நாட்டு
17 - 257 -

Page 153
அ. ம. தி. கள் பலநாடுகள் சென்றர்கள். அதே எண்ணம் அவ்வலைகளுடன் கலந்து எழுந்து பின் நோக்கிச் செல்லுகின்றன.
ஆங்கில நாடு, அயர்லாந்து, அமெரிக்கா என்று எத்தனை நாடுகளுக்கு அ. ம. தி. கள் சென்ருர்கள்!
அமெரிக்காவின் தென் கோடியில் உள்ள ரெக் சஸ், ஞாபகத்துக்கு வந்தது. காரணம்: அந்த மாநிலம் கடுமையான சோதனையை அ. ம. தி. களுக்குத் தந்தது. அங்கு பல அ. ம. தி. கள் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர், அந்நாட்டு நோயின் கொடுமையால்.
அமெரிக்கா சென்ருர்கள். கனடா சென்றர்கள். ஐரோப்பா சென்ருர்கள் ஆசியா வந்தார்கள். ஆபிரிக்கா மட்டும் விதிவிலக்கா?
இல்லை, தென் ஆபிரிக்காவும் சென்ருர்கள் அ. ம. தி. கள்.
ஆபிரிக்காவும் கடுமையாகவே இருந்தது. பணி கள் பல செய்தும் பயன் கொடுக்கவில்லை அந்தத் 'தங்கச்சுரங்கங்கள்’!
இயூஜீன் மடல்மேல் மடல் வரைந்தார். ஒவ் வொரு மடலிலும் ஊக்கமளித்தார், உற்சாகம்
ஊட்டினர்.
- 258 -

‘வலப்பக்கம் தடைப்பட்டால் இடது பக்கம் செல்லுங்கள். இடதும் தடைப்பட்டால் நேர் பாதையில் செல்லுங்கள். அதுவுப் தடைப்பட்டால் வேறுபக்கம் பாருங்கள். தேங்கி நிற்காதீர்கள் முன் சென்று கொண்டே இருங்கள். முயற்சிமேல் முயற்சி செய்து கொண்டேயிருங்கள். பின் வாங்குவது எமது சபையில் நாம் காணுததொன்று' ஆயர் இயூஜீன் போர்க்களத் தலைவகை நின்று தமது படைகள் முன் செல்ல பின்நின்று ஊக்குவித்தார். இன்னேர் முனை யில், முன்நின்று அவரும் முன்னேறிச் சென்றவர்; இறுதிமட்டாக அவ்வாறு சென்றுகொண்டிருந்தவர்.
தென் ஆபிரிக்காவின் அ. ம. தி. ஆயர் பின் வாங்கவில்லை. முயற்சிமேல் முயற்சி..அடிமேல் அடி. அம்மி நகராமலா போகும்?
அன்று பயன்தராத பகுதிகளெல்லாம் இன்று அமோக விளைச்சல்களைத் தருகின்றன.
ஆணும் , பெண்ணும்
சேராவிட்டால், . திருப்பணியிலும் ஆணும் பெண்ணும் சேரா
விட்டால் நிறைவிருக்காது. உள இயலார் இதை மறுத்துச் சொல்லார்!
1857 ஆம் ஆண்டு இந் நிறைவு அ. ம. தி. களுக்குக் கிடைத்தது! ,
259

Page 154
பிரான்சில் போ(b)ர்டோ என்னும் பேரூர் ஒன்று. அவ்விடத்தே அருள் திரு பியேர் பி(b)யென் வெணு என்பவர் பெண்களுக்கு ஒரு துறவற சபை யைத் தொடக்கினர்: பெயரும் சூட்டினர்;
'திருக்குடும்பச் சகோதரிகள்."
“இச்சகோதரிகளின் சபையை டி மசெனெட்டின் சபையுடன் இணைக்கவேண்டும் என்ற தமது ஆசையை பி(b)யென்வெனு இயூஜீனுக்கு எடுத் துரைத்தார்.
நீட்டிய கரத்தை ஏற்றுக் கொண்டார், இயூ ஜீன் டி மசெனெட்.
அன்று தொடக்கி இன்றுவரை தி. கு. சகோ தரிகள் அ. ம. தி, களுடன் தோளோடு தோள் நின்று-ஆயினும் கொஞ்சம் தள்ளி நின்று (துறவற சபையல்லவா?)- பெரும்பணி புரிந்து வந்துள்ளார் ‹ዳ፩6፲፫ .
அ. ம. தி. கள் "அவர்களுடைய சுவாமிகள் என்று அயலவர் சொல்லுமளவிற்கு திருக்குடும்பச் சகோதரிகள் ஈழத்திலும் அ. ம. தி. களுடன் இணைந்து செயற்பட்டிருக்கிருர்கள்.
"அவர்கள், எங்களுக்கு சகோதரிகளும் தாயு மாவார்கள். ஒரு வார்த்தையில் கூறவேண்டுமானுல் அவர்கள் பெண்கள். பெண்மைக்குரிய ஆழமான அன்பு, அனுதாபம், ஆதரவு, உள்ளுணர்வு, தியா கம் அனைத்தையும் கொண்டவர்கள், எங்கள் சகோ
- 260 -

தரிகள்' என்று இயூஜீன் டி மசெனெட் அவர்களே சொல்லியுள்ளார்.
இன்று இக்கூற்றுக்கு விதிவிலக்குகள் தான் கூடவோ?
பல பெண் துறவிகள் பெண்மையை மறுத்து துறவறத்தை வாழ முயற்சி செய்கிருர்களா? ஐயோ, பாவம் இறுதியில் பெண்மையுமின்றித் துறவறமு மில்லையே!
மத்தியதரைக் கடலினுடாக பின் நோக்கிச் சென்ற என் சிந்தனைகள் மீண்டன.
- 26 -

Page 155
32
சொல்லிலும் செயலிலும்
அவர் உருவம் கண்டேன்
மார்செயி கடற்கரையோரமாக நடந்தேன். அ. ம. தி. கள் சபையைத் தொடக்கிய ஆயர் இயூஜீன் டி மசெனெட், எப்படிப்பட்ட உருவங் கொண்டவராக இருப்பாரோ?’ என்று என் கற் பனையைத் தட்டி விட்டேன்.
பார்த்த படங்கள் பல ஞாபகத்துக்கு வந்தன.
பிரபு மகன், கடின உள்ளம், பிடிவாதம்.அதே வேளை அன்பு கொண்ட இதயம், இலட்சியப் போக்கு. எல்லாம் கலந்த உருவமா?.
அவரின் கூற்றுக்கள் சில அந்த நேரம் ஞாப கத்துக்கு வந்தன. அக்கூற்றுக்களையும் அப்படங் களையும் சம்பந்தப்படுத்திப் பார்த்தேன்.

'அடங்கிய ஆற்றலுடன். எரியும் திரிகள் எனக்கு வேண்டாம் என் சபைக்கும் வேண்டாம். நீங்கள் எரியவேண்டும், கொழுந்துவிட்டெரிய வேண்டும், சூடுதர வேண்டும், ஒளி கொடுக்க வேண் டும். அல்லது வெளியே செல்லவேண்டும்' என்று நேரடியாகவே தமது சபையினருக்குச் சொல்லி விட்டார் அந்த அபூர்வ மனிதன்.
பிறிதொரு தருணத்தில், ‘நான் எனது இத யத்தால் வாழுகிறேன். எனது மனம் எனது இத யத்தில் உண்டு’ என்று நெஞ்சுருகச் சொன்னர், அன்புள்ளம் கொண்ட அந்த அதிசய மனிதர்.
புனிதராகுமுன் மனிதராகுங்கள் t
'தங்களை நேசிக்கும் ஒரு தந்தையை உம்மில் அம்மாணவர்கள் காணவேண்டும். ஆகவே அவர் களுடைய மனித பலவீனங்களுக்கு நீர் இடங் கொடுக்க வேண்டும். காலத்துக்கு முன்னரே அவர் களைப் புனிதர்களாக்க முயற்சி செய்தீர்!’ அ. ம. தி. களின் பயிற்சி நிலையத்தின் முதல்வரொருவருக்கு இயூஜீனின் அனுபவ அறிவு உறுதியுடன் எடுத்து ரைத்தது.
இன்றைய அதிபர்களும், முதல்வர்களும், தலை வர்களும், வழிகாட்டிகளும், இவ்வுரையை உணர்ந்து கொண்டட்ால்...
- 263 -

Page 156
அவர்கள் தங்கள் மாணவர்களை, இளைஞர்களை, 。 தமக்குட்பட்டவர்களைப் புனிதராக்குமுன் மனித ராக்குவார்கள்.
பக்தர்கள் பெரும்பாலும் மனிதராக வாழுமுன் புனிதராக வாழ முயற்சிக்கின்றர்கள். இது உண் மையான பக்தியா?
இன்று பலர் எழுதி வைக்கப்பட்ட செபங்களில் தங்களை மறந்து, இரவிரவாக விழிப்பிருந்து 'தூங்கி தங்கள் பிரச்சினைகளில் நின்று தப்பியோட முனை கின்றர்கள். இது என்னவென்று கேட்டால், “அது ‘கரிஸ் மற்றிக்’ செபம்’ என்று விளங்(க்)காமற் சொல்லுகிருர்கள். இதில் என்ன அருளோ? அன் றேல் இது என்ன கொடையோ ?
சமுதாய உணர்வு கொண்டு இவர்கள் செபிக் கிருர்களா? அப்படியானல் வரவேற்க வேண்டும்.
கிறித்து தமது வாழ்க்கையில் அவ்வப்பொழுது ஒதுங்கித் தனியாகச் சென்ருர் ! தன்னுள் சென்று அங்கே உறையும் தெய்வத்துடன் உரையாட. இறைவனுடன் ஒன்றிக்க.
ஆனல், அவர் சமுதாயத்திலிருந்து முற்ருக ஒதுங்கிச் செல்லவில்லையே!
சமுதாயப் பிரச்சினைகளில் முழுமையாக ஈடு பட்டவர் கிறித்து. அவ்வாறு ஈடுபட அவருக்கு இறையருள் வேண்டியிருந்தது. துணிவு, வீரம், தைரியம், வைராக்கியம், அன்பு மன்னிக்கும் மனப்
- 264 -

பான்மை அனைத்தும் வேண்டியிருந்தன. இவற்றைப் பெறவே அவர் தனிமையிற் சென்ருர் - செபித்தார்ஆழமாகச் செபித்தார். அதனலேயே "என் தந் தையே, நான் குடித்தாலொழிய இத் துன்பக்கலம் அகல முடியாதெனில் உமது விருப்பப்படியே ஆகட் டும்' என்று ஆழமாகவும், உறுதியாகவும். மரண வேதனையிலும் அவரால் செபிக்க முடிந்தது. இது வன்ருே உண்மையான செபம். - - -
சங்கங்கள், கருத்தரங்குகள், கூட்டங்கள், என்று எமது பெரியோர் - வழிகாட்டிகள் நாட்டி லும் அடிக்கடி கூடி, நாடுவிட்டு நாடு சென்று அனைத்துலக நாடுகளிலும் அடிக்கடி கூடி - உரை யாடி - தெளிந்த உண்மைகளை, புரிந்த உண்மைக ளைப் பெரிய வார்த்தைகள் கொண்டு புரியாதபடி விளக்கி, மனிதாபிமானக் கொள்கைகளை மறுத்து, வேறேர் உலகில் வாழுகின்றர்கள்!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கரிசம்’ என்று புதிதாகப்பெயரிட்டு வீட்டுக் கூரைகளில் நின்று ஒலமிடுகிறார்கள். ஆனல் தமக்குட்பட்டவர்களின் ஆக்க சக்திகளை, ஆண்டவன் கொடைகளை அவர் கள் விருத்தி செய்து வளர்க்க இவர்களே முட்டுக் கட்டைகளாகி விடுகிருர்களே! அவர்களின் இலட் சியத்தை அவர்கள் வாழ இப்பெரியோர் விடுவ தில்லையே! அவர்களை வளரவிடக் கூடாதென்பது தான் இவர்களின் கரிசமோ?
மனித வாழ்க்கையை மனிதாபிமானக் கொள் கைகளுடன் நிறைவாக வாழ்வதுதான் புனிதத்து வம். இத்கத்துவத்தைத்தான் வள்ளுவனும்,
سسسه 265 حس

Page 157
‘‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்'
என்ற குறளில் சமைத்துச் சென்றன்.
இவ்வழி வாழ்ந்த இயூஜீன் டி மசெனெட் ஒரு சாதாரண மனிதன். மனித பலவீனங்களோடு வாழ்ந்தவர் - இலட்சிய நோக்கோடு வளர்ந்த ஒரு
புரட்சி வீரன்-இன்று புனிதர் வரிசையில் சேர்க் கப்படுகின்றர்.
- 266 -

33
பட்டமல்ல . . .
வாழ்க்கைதான் 1 . . .
1975 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்கள் பத்தொன் பதாம் நாள் உரோமாபுரியில் பெரிய கொண்டாட் டம். vn
நூற்றுப் பதினுன்கு ஆண்டுகளுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்த இயூஜீன் டி மசெனெட் அவர் களுக்கு அன்று முத்திப்பேறுபட்டம்.
அதாவது, ஆளும் திருச்சபை அன்னரைப் புனிதர் வரிசையில் அதிகாரபூர்வமாகச் சேர்த்துக்
கொள்ளும் கட்டம்.
இது திருச்சபையின் புற அமைப்பின் கட்டம்.

Page 158
அவரைப் புனிதராக்கினுல்தான் . அவரது வாழ்க்கை இன்று வாழ் சமுதாயத்துக்கு ஒரு மேல் வரிச் சட்டமாக அமையவேண்டுமென்ற ஒரு கட் டாயமில்லை. ஆனல் கடினமான, கட்டுக்கோப்பான அமைப்பைக்கொண்ட திருச்சபையே இயூஜீனின் வாழ்க்கை முறையை, அவரின் இலட்சியத்தை, அவரின் பணியை ஏற்றுக்கொண்டதன் அத்தாட்சி தான்) இந்தப் பட்டம்.
வறியோர்க்கு நற்செய்தி நவில்வதுதான் அவ ரது இலட்சியம்.
யார் இந்த வறியோர்?. எது வறுமை?
6ரதர வறுமை? VM
யார் வறியோர்?
பண வறுமை ஒன்றுதான் வறுமையா? உண்ண உணவின்றி சாவதும், உடுக்க உடையின்றித் தவிப் பதும், இருக்க இடமின்றி ஏங்குவதும்தான் Ghiya), Du IIT? w
மனித உரிமைகளை இழந்தோர், இழப்போர் வறியோர் இல்லையா? சிறுபான்மையென்று ஒதுக் கப்படுவோர் வறியோர் இல்லையா? தாழ்ந்த சாதி யென்று தள்ளிவைக்கப்பட்டோர் வறியோர் இல்லையா?
வேலையற்றேர் வறியோர் இல்லையா?
இந்த நாட்டுக்கு உழைத்து உழைத்து ஓடாகி இன்று நாடுகடத்தப்படுவோர் வறியோர் இல்லையா?
- 268 -

இவர்கள் அனைவரும் மீட்கப்பட வேண்டியவர் களே!
சிந்தனை இழந்து மந்தைக் கூட்டமானேர் வறி யோர் இல்லையா? சட்டங்களுக்கும், சடங்குகளுக் கும் அடிமைப்பட்டு வாழ்வோர் வறியோர் இல் லையா? மதவெறிகொண்டு மக்களை மதத்திற்கு அடிமையாக்குவோர் வறியோர் இல்லையா?*அயலவர் என்ன சொல்வார்?’ என்ற பயத்தில் சொல்ல வேண்டியதை சொல்லவேண்டிய ந்ேரத்தில் சொல் லாதோர் வறியோர் இல்லையா? செய்ய வேண்டியன வற்றைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் பின்வாங்குவோர் வறியோர் இல்லையா?
இவர்கள் அனைவரும் மீட்கப்பட வேண்டியவர் களே!
சமத்துவம் மறுக்கப்பட்டோர், சுதந்திரம் இழந் தோர், சமுதாய உணர்வற்றேர், இறையுணர் விழந்தோர் அனைவரும் வறியோரிலும் வறியோரே!
நீதியற்ற சமுதாயத்தை உருவாக்க முனைவோர், உண்மையை அழிப்போர், அன்பை அலட்சியம் செய்வோர், நேர்மையை நெருக்குவோர், சத்தி யத்தைச் சாகடிப்போர், பொதுநலங் கருதாதோர் அனைவரும் வறுமையிலும் கேவலமான வறுமையை அனுபவிப்போரே.
இவர்கள் அனைவரும் மீட்கப்பட வேண்டிய வர்களே! -
செல்வத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டு “சோசலிசம்’ பேசும் அரசியல் வாதிகள்,
نسس۔ 269

Page 159
தொழிலாளர் உரிமைக்காக் வாதாடி முதலாளிக ளான தொழிலாளர் தலைவர்கள், சமுதாயப் பிரச் சினைகளில் கிஞ்சித்தும் ஈடுபடாது வெறும் சடங்கு களையும், சட்டங்களையும் கடைப்பிடித்து வாழ முனையும் மதத் தலைவர்கள் - இவர்கள் அனைவரை யும் வறியோர் என்றுதான் அழைக்க வேண்டும்.
‘இவர்கள் அனைவரும் மீட்கப்பட வேண்டிய வர்கள்’ என்றுதான் இயூஜீனும் சொல்லுவார், அவர் உயிர்பெற்று வந்தால், இவர்கள் மத்தியிற் தான் தனது போரை - பணியத் தொடங்குவார்.
எனது செபமும் . . . வாழ்த்தும்
இயூஜீன் டி மசெனெட் வழிவந்த அமல மரித் தியாகிகளே!
கிறித்துவை வழிபட்டு வாழும் கிறித்தவ மக் களே!
V எங்கே உங்கள் பணி? எங்கே உங்கள் துணிவு? கிறித்தவ - (அ. ம. தி.) - அழைத்தல்?
இயூஜீனப் பட்டத்தால் கெளரவிக்கு முன்னர் உங்கள் பணியால், சேவையால், வீரவாழ்க்கையால் சிறப்பியுங்கள். அவரது புரட்சிகரமான வாழ்க் கையைப் பின்பற்றுவதன் மூலம் அவரை உலகுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
படத்தால் அவரது உருவத்தைக் கொடாமல், உங்கள் வாழ்க்கையால் அவரது இலட்சியத்தை
- 270 -

உலகுக்கு உணர்த்துங்கள். வழிபாட்டுக்குச் சிலை களைச் செதுக்கிக் கொடாமல் அவரது பாதையில் வழிபட்டுச் செல்ல அவரது வாழ்க்கை முறையை
உங்கள் வாழ்க்கையில் செதுக்கிக் கொடுங்கள்.
“முத்திப்பேறுபெற்ற இயூஜீன் டி மசெனெட்டே!
உமது சபையினருக்கும் அவர்களோடு வாழும் அனைத்து மக்களுக்கும் துணிவையும், வீரத்தையும், உமது இலட்சிய வெறியையும் இறைவனிடம் பெற் றுக்கொடும்.
புனிதராகுமுன் நீர் செய்யும் பெரிய புதுமை இதுவாகட்டும் !'
நான், என் மனத்தில் செபிக்கின்றேன்.
மார்செயி கடலோரமாக நடந்து சென்று மின் வண்டி நிலையத்தை அடைகின்றேன்.
உரோமாபுரி செல்லும் வண்டி ஆயத்தமாக நிற்கின்றது.
வண்டியில் ஏறி அமர்கின்றேன்.
யன்னலினுாடாகத் தூரத்தே தெரியும் மார் செயி ஆசனக்கோயிலைக் கடைசி முறையாகக் காண் கின்றேன்.
மின்வண்டி நகர அப்பேராலயம் சிறிது சிறி தாகக் குறைந்து மறைகின்றது. - - -
- 271 -

Page 160
ஒருவேளை சந்தர்ப்ப சூழ்நிலைகளினுல், இக் கோயில் இடிபட்டு அங்கே கல்மேல் கல் இல்லாமல் (ểLJfr#Gl'IT ữ. அன்றேல் காலத்தினூடாக இக் கோயில் கரைந்தும் போகலாம்.
ஆணுல், இக்கோவிலேக் கட்டியவர், திருச்சபை யின் பணிக்கென்று ஒரு துறவற சபையைக் கட்டி வளர்த்துக் கொடுத்தவர், இயூஜீன் டி மசெனெட்அன்றைய புரட்சியிற் பூத்த பூ-வாடாது, உதிராது, கருகாது, காலத்தால் கரையாத கலங்கரை விளக் காக ஒளி தந்து நிற்கும், அத்திருவுருவம்,
"தக்தார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்' என்ற திருவள்ளுவர் இயற்றிய குறள் என் ஞாபகத்துக்கு வருகின்றது.
"இயூஜீனின் இலட்சியம் அவரது சபையாகிய அமலமரித் தியாகிகள் சபை வழி நின்று தொடரும்-- வளரும் - பல புதிய புரட்சியிற் பூத்த பூக்களாக மலரும் - காய்க்கும் - கணிக்கும் - இனிக்கும். '
எனது உள்ளம் மனமார வாழ்த்துகின்றது.
மின்வண்டி வேகமாகச் செல்கின்றது, உரோ மாபுரி நோக்கி.
தொடர்கின்றது, எனது டயனம்.
(இந் நூாவின் முடிவு. உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம். )
- 29 -
407

- - -
|-53 = } | ()No. ---- -----啊| .ae . |- ( No o
|- --,
· · -
■,-)
| –│ ├.
,...) ( )
.:No.
|×
);|-
;)|-|-
No) o·||-
os |- ) |-No
(-
|-- - D ... ··· --
– ( – ) ----
( )|(~~~~, ,
| –, ! s. ) ( ) F = |
வாசுகு
வி
சுரையாத கலங்கரை
g

Page 161


Page 162


Page 163
'இது ஓர் இன்றைய துடிப்புள் ஈழமண்ணின் நெஞ்சாங்குலே, பட்ட எழுத்துக்கள், வருங் பதற்காக, நிகழ்கால வரலா கப்பட்ட ஒரு கடந்த காலம் ப இது "
What makes history is not hul their ir terpretatic yn 10 L The auth i'r has ddine full
-
... F, E,
இது ஒரு வரலாற்று நூa:ள்: புரட்சி உருவாவது சிந்தனே'யி இன்றைய சூழ்நியிேல் இன் i இதயத்தில் படியவேண்டிய வர
- புறக்கோட்

ள எழுத்தாள6ளின் எழுத்து! யை நாடிப் பார்த்து எழுதப் கால வரலாற்றைப் படைப் ற்றுப் பார்வையில் படைக் ற்றிய வரலாற்றுப் படைப்பு
- பேராசிரியர் ஆ. ப. அறவாணன்
T. C. L., -i, P, ..., M.I., I,
facts, which arc sacred he modern research mind.
justic: ' () this a spect ''
Fr, F. J. Stanislaut 0, rn, i i1. B. A. - 4 Hm .. ' Land). TIN: -, E-, i.e. y 3
3; வழிகாட்டும் நூல் பின் விழிப்பினில் றைய இளேஞர்களின் Fலாறு "புரட்சியிற் பூத்த பூ"
Fட கிறித்தவ இாேஞர் கழகத் தஃவ'