கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: 1982ல் தமிழ் ஈழம்

Page 1
12.05
து மிக
畿 As
With acknowledgement: Deputy Surveyor General
 
 

32- ཚིག་ཅིག་ཐོ་ཐོ་ཐོ་རིང་H
ஈழம்
IL EELAM
to Mr J. R. Sinnatamby --Barridares of Ta,Til Eezhdar

Page 2

A bco 8? Published by EELAM TAMILS ASSOCIATION
53 ASHEN GROVE LONDON Sw19
... for TAMIL COORDINATING COMMITTEE 55 WARREN ROAD LONDON SW 19

Page 3
தமிழ்நழம்
FOREWORD
It has been said that in present day politics one year is an eternity.
So, we have adequate time to prepare and do the needful to usher in the new state of Thamil Eelam in 1982.
This book is in the nature of a report and record of our main activities from the inauguration of the Thamil Coordinating Committee in 1978.
We have no doubt that the following pages will inspire our people, particularly the young men and women, to rise up to heroic deeds and lead us all to freedom.
55, Warren Rd, London SW 19
November 17, 1980 T C C

1982-இல் தமிழீழம் பிரகடனம்
தமிழ் ஈழத்தின் புதிய அரசாங்கம் 1982ஆம் ஆண்டு சனவரியில் பொங்கல் தினத்தன்று உருவாகும் என்று அனைத்து வெளிநாடுகளிலுமுள்ள தமிழீழ விடுதலை இயக் கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, லண்டனில் நடைபெற்ற அதன் சிறப்புச் செயற்குழுக் கூட்டத்தில் நீண்டநேர விவாதத் தின் பின்னர் பிரகடனப்படுத்தியுள்ளது. வரலாற்றுப் பெருமைமிக்க இத்தீர்மானத்துக்கு உலகிலுள்ள சகல தமிழ் இயக்கங்களும் முழுப் பொறுப்பையும் நேரடியாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுத் தீர்மானம்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் அமைப்பாக த.வி.கூ. செயலதிபர் திரு. அ. அமிர்தலிங்கத்தினுல், அவர் லண்டன் சென்றிருந்தபோது அமைக்கப்பட்டதே இந்தத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்பது தெரிந்ததே.
இந்த இணைப்புக் குழுவின் அவசரக் கூட்டம் லண்டனில் 31-8-80இல் நடைபெற்றபோதே மேற்படி பிரகடனம் மிகப் பெரும்பான்மையோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒரே யொருவரே இதை எதிர்த்து வாக்களித்தார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுத் திருப்பு முனையாக அமையும் தீர்மானம் லண்டன் தமிழர் ஒருங்கிணைப் புக்குழு அமைப்பாளர் திரு. கிருஷ்ணு வைகுந்தவாசன் அவர் களால் சுதந்திரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத் தீர்மானம் பின்வருமாறு:-

Page 4
4
1982ஆம் ஆண்டில் தமிழ் ஈழம், ஈழத்தமிழர்களின் தீர்மா னமும் பிரகடனமும்:
*8000 சதுர மைல் பரப்பில் வாழும் 35 இலட்சம் சிறு பான்மை ஈழத்தமிழர்கள், இலங்கையில் 110 இலட்சம் பெரும் பான்மைச் சிங்கள பெளத்தர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு வருவதாலும்;
“தொல்பெருங்காலத்திலிருந்தே சிங்களவர்களும் தமிழர் களும் வெவ்வேறு பட்ட மொழிகளையும் மதங்களையும் கலாச் சாரங்களையும் வரையறுக்கப்பட்ட பூகோள எல்லைகளையும் கொண்டிருந்தும் பிரிட்டிஷார், தமக்கேயுரிய குணத்துடன் இந்த இரு வேறு தேசிய இனங்களின் வேறுபாடுகளையும் காணுதது போல நடித்துக்கொண்டு தமது காலனித்துவ நிர்வாக இணைப்பு வசதிக்காக ஒரே ஆட்சியைத் திணித்த தாலும்;
“எதிர்பார்க்கப்பட்டது போலவே பிரிட்டிஷார் இலங் கைத் தீவைவிட்டு வெளியேறியதும், இணைந்து வாழ விரும் பாத இரண்டு தேசிய இனங்களும் ஒற்றையாட்சி அரசிய லமைப்பின் கீழ் விடப்பட்டதையடுத்து பெரும்பான்மைச் சிங்கள இனம், தமிழ்பேசும் மக்களின் புதிய எசமானர்களாகத் தம்மை ஆக்கிக்கொள்ளும் முறையில் ஜனநாயக தத்துவங் களையே தலைகீழாக மாற்றி விட்டதாலும்;
“சுதந்திரத்துக்கு முன்பு வரை ஏனைய இலங்கை மக்களைப் போலவே சகல அரசியல் உரிமைகளையும் அனு பவித்து வந்த தேயிலை, ரப்பர்த் தோட்டத் தொழிலாளர். களான 10 இலட்சம் தமிழ் மக்களின் குடியியல் உரிமைகள் அபகரிக்கப்பட்டு, அவர்கள் நாடற்றவராக்கப்பட்டதாலும்;
*1956ஆம் ஆண்டு சிங்களத்தை மட்டுமே தீவு முழுவதும் ஒரே உத்தியோக மொழியாக்கியதன் மூலம், பல்லாயிரக் கணக்கான தமிழ் அரசாங்க ஊழியர்களுக்கு பாரதூரமான துன்பம் விளைவித்து, அவர்கள் அந்நிய நாடுகளுக்குச் சென்று

5
குடியேற நிர்ப்பந்தம் ஏற்படுத்தியும் திறமை வாய்ந்த தமிழர் களை அரசாங்க சேவையிலிருந்து திட்டமிட்டு வெளியேவிட்டும்
வந்ததாலும்;
“பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகளால் ஒரு நூற்ருண்டுக்கு முன் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட இந்தியர்களின் வம்சாவளியினராக தோட்டத் தொழிலாளர்களாகத் தமிழர்கள் இருந்தபோதிலும் அவர்களில் மிகப் பெரும்பாலோர் தமது மூதாதையர் நாடான இந்தியாவுடன் எவ்வித தொடர்புமற்று இலங்கையையே சொந்த நாடாகக்கொண்டிருந்தும் 1964ஆம் ஆண்டு இத்தமிழர்களைக் கட்டாயமாக நாடு கடத்த மனிதத் தன்மை, மனித உணர்வுகூட இன்றி அரசாங்கம் முடிவு செய் துள்ளதாலும்;
*1975ஆம் ஆண்டு அந்நியத் தோட்டங்களைத் தேசிய மயமாக்கி, தமிழ்த் தொழிலாளர்களை வெளியேற்றி அவர் களைப் பிச்சைக்காரர்களாக்கும் நிலைக்கு நிர்ப்பந்தித்ததாலும்; *1960-61ஆம் ஆண்டுகளில் பாடசாலைகளைத் தேசிய மயமாக்கியதன் மூலம் பெளத்தரல்லாதோரின் கல்விக்கும், ஏனைய தமிழர்களின் கல்விக்கும் எதிராகப் பாரபட்சமான கொள்கைகளைப் பின்பற்றியதாலும்;
“சிங்களப் பெரும்பான்மை மாவட்டங்களில் தமிழ்ப் பாடசாலை பலவும் மூடப்பட்டு, பின்னர் அவை சிங்களப் பாட சாலைகளாகத் திறக்கப்பட்டதன் பெறு பேருக தமிழர்களை சிங்கள மொழி மூலம் கல்வி கற்க நிர்ப்பந்தித்ததாலும், Ꮠ
“பல்கலைக்கழக அனுமதிக்கு திறமை அடிப்படையைப் புறக்கணித்து சிங்கள மாணவர்களுக்குச் சாதகமாகவும், தமிழ் மாணவர்களுக்குப் பாதகமாகவுமுள்ள தரப்படுத்தல் முறையை 1971ஆம் ஆண்டு அரசு அமுலுக்கு கொண்டு வந்ததாலும்;
“பாராளுமன்றத்திலுள்ள பெரும்பான்மையான தமிழ்ப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்போ ஆலோசனையோ இன்றி பெளத்த மதத்துக்கும் சிங்கள மொழிக்கும் முதலிடம் அளிக்

Page 5
6
கும் அரசியலமைப்பு ஒரு தலைப்பட்சமாக நிறைவேற்றப் பட்டதாலும்;
*1972ஆம் ஆண்டின் அரசியலமைப்பு 1978ஆம் ஆண்டு மற்ருேர் அரசியலமைப்பினுல் மாற்றியமைக்கப்பட்டபோதி லும் அதற்கு தமிழ் மக்கள் பங்காளிகளாக மறுபடியும் மறுத்து விட்டதனுலும்;
“ஐ. நா. பொதுச் சபையில், 1978 அக்டோபர் ஐந்தாம் திகதி, தமிழர் பிரச்சினை ஏற்கெனவே எழுப்பப்பட்டு விட்ட தாலும்;
*ஈழத் தமிழர்களின் முயற்சியினுல் நிறைவேற்றப்பட்ட “மசசூசெட்ஸ்’ தீர்மானத்தினுலும், பிரகடனத்தினுலும் எமது பிரச்சினை அனைத்துலக ஆதரவை மேலும் ஈட்டிவிட்டிருப்பத ஞலும்,
*1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் சிறீலங்கா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அபிவிருத்திச் சபை கள் சட்டம், தமிழ் மக்களை மேலும் மேலும் அடிமையாக்கும் ஒரு சூழ்ச்சி நிறைந்த திட்டம் என்பதாலும்;
*உலகெங்கும் வாழும் பல கோடிக்கணக்கான தமிழ் மக்களின் இதயத்தையும் உயிரையும், உணர்வுகளையும் அபி லாஷைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் ஒருங் கிணைப்புக்குழு, புதிய தமிழீழ அரசு, 1982ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று நடைமுறைக்கு வரும் என்று இத்தால் தீர்மானித்துப் பிரகடனம் செய்கிறது.
“அத்துடன் உலகெங்குமுள்ள ஆறு கோடித் தமிழ் மக்களையும் இத்தினத்தின் முக்கியத்துவத்தைக் கவனித்து அந்நாளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் உறுதியோடு பங்கேற்குமாறு அழைக்கின்ருேம்.”
இத்தீர்மானம் வெளிநாட்டுச் செய்தி நிருபர்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமைச் செயலகத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டது.
நன்றி: சுதந்திரன்-14-9-80

u
லண்டன் தீர்மானம்
தமிழீழநாட்டின் விடுதலைப் போராளிகளினதும், தமிழீழ விடுதலை விரும்பிகளினதும் இதயங்களைக் குளிர வைத்திடும் வரலாற்றுப் பெருமைமிக்க தீர்மானமொன்றை லண்டனில் இயங்கும் தமிழீழ தேச பக்தர்கள் தீர்க்கமான ஆலோசனையின்
பின்னர் நிறைவேற்றி, அதை அகில உலகமும் அறியப் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் எடுத்துள்ள முடிவு நமது காதிலே தேன்பாய்ச்சு கிறது; நாடி நரம்புகளிலே முறுக்கேற்றுகிறது; புதிய தன்னம் பிக்கையை தமிழினத்துக்குக் கொடுக்கிறது. வீழ்ச்சியுற்ற நாட்டில் எழுச்சியை ஏற்படுத்துகிறது; விசையொடிந்த தேகத் தில் புதிய வேகத்தைத் தோற்றுவிக்கிறது.
ஆம். 1619ஆம் ஆண்டு படையெடுத்து வந்த அந்நிய னிடம் யுத்தமுனையில் பறிகொடுத்ததும்-மீண்டும் 1972 ஆம் ஆண்டு தமிழீழ மக்கள் மீளப்பெற்றதுமான இறைமை உயிர் பெறப்போகிறது.
உலக அரங்கில் தமிழீழ விடுதலைக்கான ஆதரவையும், உதவிகளையும் திரட்டிவரும் வெளிநாட்டு ஈழ விடுதலை இயக் கங்களின் ஒருங்கிணைப்பாக லண்டனில் இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - தமிழீழ சுதந்திரப் பிரகடனத்துக்கு நாள் குறித்துவிட்டது.
உலகின் முதலாவது சுதந்திரத் தமிழ் நாடாக மலரப் போகும் புதிய தமிழீழ அரசு உருவாகும் நாள் பகிரங்கப் ப்டுத்தப்பட்டுவிட்டது. -
ஆம், 1982ஆம் ஆண்டு சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று சுதந்திரத் தமிழீழத்தின் புதிய அரசு

Page 6
8
உருவாகும் என்று லண்டன் தமிழர் இணைப்புக்குழு, பொறுப் போடு தீர்மானித்து, உலகநாடுகளுக்கு முன்னறிவித்தல் கொடுத்துள்ளது. -
உலகின் ஆறுகோடித் தமிழர்களின் உள்ளங்களையும் இத் ர்மானம் ஆர்த்தெழ வைத்திடும் என்பதில் ஐயமில்லை.
ஆாதolதழ 点 C
சிறீலங்கா அரசின் அபிவிருத்திச் சபைகள் தமிழீழ மக்களை மேலும் மேலும் அடிமைச் சங்கிலிக்குள் பிணைக்கும் ஆபத்து நிறைந்தது என்றும் அத்தீர்மானம் சுட்டிக்காட்டி யிருக்கிறது.
1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலை, சர்வஜன வாக் கெடுப்பாகத் தமிழீழ மக்கள் பயன்படுத்தி, சுதந்திர இறைமை யுள்ள மதசார்பற்ற சோசலிசத் தமிழீழ அரசை நிறுவுவதற்கு எடுத்த உறுதியான முடிவு, 1982 பொங்கல் திருநாளன்று செயல் வடிவம் பெறவிருக்கிறது. தமிழீழத் தேசீய மன்றம் தோன்றவிருக்கிறது.
விடுதலையென்பது தந்தை செல்வா கூறியதுபோல - வில்லங்கமானதுதான் என்ருலும் இதைவிட வேறு வழியில்லை. இரத்தம், வியர்வை, கண்ணிர், பசி,துன்பம், வறுமை,சாக்காடு ஆகிய இவற்றினூடாகத்தான் சுதந்திரத் தாயின் கோவிலுக்கு நாம் செல்லமுடியும். தற்காலிக சுகங்களில்தமது கவனத்தைத் திருப்புவது, அடிப்படை இலட்சியத்தைப் பின்தள்ளிவிடும்.
லண்டன் தீர்மானம், மிகவும் காத்திரமானது; பொறுப் புணர்வுடன் கூடியது; மிகவும் புனிதமானது. தமிழ்ஈழ மக்க ளிட்ட ஆணைக்கு அமைவானது; 400 ஆண்டுகால அடிமை வாழ்வுக்கு முடிவு கட்டும் தெய்வீகத் தீர்மானம் அது!
இத்தீர்மானம் நடைமுறைக்கு வர இன்னும் 15 திங்களே எஞ்சி உள்ளன; இதற்கிடையில் செய்ய வேண்டிய பணிகளோ ஏராளம் உள்ளன. தமிழீழத்திலும் வெளிநாடுகளிலுமுள்ள

9
விடுதலை இயக்கங்கள் விடுதலை நாளை நோக்கி வேகமுடனும் விரைவாகவும் இன்றிலிருந்து செயற்பட வேண்டும்.
“ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று”
இந்தியச் சுதந்திரத்துக்கு முன்பே நம்பிக்கையோடு புரட்சிக் கீதமிசைத்தான் பாரதி. அவன் எண்ணத்தைச் செய லாக்க இலட்சோபஇலட்சம் தியாகிகள் தம்மை அர்ப்பணித்துப் பாரதத் தாயின் அடிமை விலங்கை ஒடித்தெறிந்தனர். தமிழீழ மக்களும், அதே நம்பிக்கையுடன் தியாகச் சிந்தையுடன், விடுதலை வேள்விக்குத் தம்மைத் தயார் படுத்திக் கொள்வார்
kiss Tes
நன்றி. சுதந்திரன் 21-9-80
தமிழ்நாடு வரவேற்கிறது
தமிழீழ விடுதலைப் பிரகடனத்தை லண்டன் மாநகரில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிறைவேற்றியவுடன், உலகெங் கும் வாழுகின்ற தமிழர்கள் இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்தியுள்ளார்.
தமிழ்நாட்டில். மதுரைமாநகரில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பெருமகிழ்ச்சியுடன் கலந்து கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை விழாவில் திரு. வைகுந்தவாசன் கலந்துகொண்டு பேசினுர், அவருக்கு இந்திய நாடாளுமன்றத் துணைச்சபாநாயகர் திரு. ஜி. இலட்சு மணன் பொன்னுடை அணிவித்தார். விழாக்காட்சிகளையும் தீர்மானத்தையும் அடுத்து வரும் பக்கங்களில் காணலாம்.

Page 7
- T---- - - |-
,
|3 - 53
 
 
 

3.
3.
. :
:: 3.
""
- 。
് ... 23
:
| 3 }

Page 8
E .
""
്
݂ ݂ ݂ ݂
~)
...:
 
 

மதுரைத் தீர்மானம்
தமிழ் ஈழ விடுதலே
இலண்டன் தமிழர் ஒருங்கினேப்புக்குழு அமைப்பாளர் திரு. கிருட்டினு வைகுந்தவாசன் அவர்களைப் பாராட்டி, உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க இந்தியக் கிளேயின் சார்பில் 12-10-80 ஞாயிறன்று காலே 10 மணி அளவில், மதுரை தல்லாகுளம் இலட்சுமி சுந்தரம் அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு இந்தியக் கிளேச்செயலாளர் திரு. கவிஞர் மதுரைக் கூத்தன் தலேமை தாங்கினுர்,
இந்தியப் பாராளுமன்றத் துணைத் தலைவர் திரு ஜி. இலட்சுமனன், தொழிற்சங்கத் தலைவரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் காப்பாளருமான திரு. க. சுப்பு, மதுரை அர்பன் மாவட்ட இந்திரா காங்கிரஸ் தலேவர் ஆ இரத்தினம் ஆகியோர் முன்னிலேயில், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பொதுச் செயலாளர் திரு. கு. தமிழ்மன்னன் முன்ெ மாழிய, "அனல் மு. விவேகானந்தன், சிவகெங்கை அ. க. இராமச்சந் திரன்ஆகியோர் வழிமொழிய பல்லாயிரக்கணக்கான மக்களின் கரவொலிக்கிடையே ஒ ரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
"தமிழ் மன்னர்களாம் எல்லாளன் முதல் சங்கிலியன் வரை செங்கோலோச்சிய தமிழ்ஈழம் என்னும் திருநாடு கொடுங்கோலர்களாம்.அன்னியர்களால் அடிமைப்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையினைத் தகர்த்தெறிந்து மீண்டும் தமிழராட்சி நிறுவிட, இலண்டன் தமிழர் ஒருங்கிணேப்புக் குழுவினர் 31-8-30 அன்று இலண்டன் மாநகரில் கூடி 1982-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்

Page 9
14
பெருநாளன்று தமிழ்ஈழ அரசு நிறுவுவதென்றும் விடு தலைப் பிரகடனம் செய்வதென்றும் ஒருமனதாகத் தீர்
மானம் நிறைவேற்றியுள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த இலண்டன் தீர் மானத்தை நாங்கள் ஒருமனதாக ஆதரிக்கிருேம் என்று
இம்மக்கள் மாமன்றம் முடிவெடுக்கிறது.
1982ல் அமையவிருக்கும் தமிழ் ஈழ அரசிற்கு இந்தியப் பேரரசு முதல் முதலில் அங்கீகாரம் வழங்கிட வேண்டுமென்றும் இந்தியப் பேரரசை இம்மாமன்றம்
வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறது.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
இந்தியக் கிளை
12-10-80 70, மூர் தெரு, சென்னை-1, தமிழ்நாடு
தலைவர் : வழக்கறிஞர் அ. மு. சம்பந்தம் B. A., B. L. திருச்சி
துணைத்தலைவர்கள்
வழக்கறிஞர் K. P. பெரியசாமி B. A., B. L., மதுரை. P. V. சுப்பிரமணியன், B. E., சென்னை களந்தை வேலன், B. A., பம்பாய் V. தேவராசன், B. E., டெல்லி K. K. சாமிநாதன், M. Sc., கல்கத்தா
செயலாளர் : கவிஞர் மதுரைக் கூத்தன், மதுரை
துணைச் செயலாளர்கள்
‘அனல்’ மு. விவேகானந்தன், மதுரை நெடுமிடல் B. Sc., தகடூர் வேங்கட வீரமணி B. E., சென்னை பாலஜனதிபதி, B. Sc., B. L., குமரி புலவர் ம. செ. இராவணன், கோவை
பொருளாளர் : அ. கு. மதிவாணன், Ex. M. C. மதுரை

தமிழீழப் பிரச்சினையைத் தரணியறியச் செய்ய
ஐ.நா மன்றத்தில் நடந்த
கிருட்டினலீலை
இலங்கைத் தமிழர்கள் ‘தமிழ் ஈழம்" தனிநாடு கேட்டு உள்ளார்கள். இக்கோரிக்கையை உலகமறியச் செய்தவர் இலண்டனில் வாழும் இலங்கைத் தமிழர் திரு கிருட்டினு வைகுந்தவாசன் அவர்களாவார். இவர் ஆபிரிக்காவின் ஜாம்பியா நாட்டில் 7 ஆண்டு ஒரு மாவட்ட நீதிபதியாகவும், பின்பு அங்கு உயர் நீதிமன்றப் பதிவாளராகவும் பணியாற்றி யவர். இலங்கை உச்ச நீதிமன்றத்திலும் சென்னை உயர் நீதி மன்றத்திலும் வழக்குரைஞராகப் பணியாற்றியவர்.
திரு. வைகுந்தவாசன் ‘தமிழீழம்' பிரச்சினைபற்றி உலக நாடுகள் பேரவையில் பேசத்திட்டமிட்டு, அதைத் தன்னுடைய மதிநுட்பத்தாலும், மகத்தான துணிவாலும் கடந்த 1978ம் ஆண்டு அக்டோபர் 5-ல் நிறைவேற்றவும் செய்தார். அது ஒரு சுவையான நிகழ்ச்சியாக அமைந்தது. பி.பி.சி. லண்டன் வானெலி அதன் உலகச் செய்திகளில் இந்நிகழ்ச்சியைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டது. பல நாட்டுச் செய்திதொலைக்காட்சி நிருபர்களும் அவரைப் பேட்டி கண்டனர்; பன்னுட்டு வானுெலி, தொலைக்காட்சி நிலையங்களும் அவ்வ திசய நிகழ்ச்சியை ஆர்வத்தோடு ஒலி-ஒளி பரப்பின. உலக நாடுகளின் கவனத்தை தமிழீழப் பிரச்சினையின்பால் விழச் செய்த திரு. வைகுந்த வாசனின் வரலாறுச் சாதனையை விவரித்து, பிரபல அமெரிக்கப் பத்திரிக்கையாளர் திரு பி.பி. கூப்பர் என்பார் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து வெளியாகும் “வெளியுலகில் இந்தியா” (India Abroad) என்ற

Page 10
6
ஏட்டில் சிறப்பித்தெழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக் கத்தை இங்கே தருகிருேம்.
Dதிய உணவு வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. உலக நாடுகள் பொதுச் சபையில் சைப்ரஸ் நாட்டு அதிபர் 1 மணி நேரம் உரையாற்றினர். பின்பு சூரிநம் நாட்டுப் பிரதம மந்திரி பேசிமுடித்தார். நூற்றிஐம்பது நாட்டுப் பிரதிநிதிகளும் அந்த இருவரின் பேச்சுக்களையும் பொறுமையே பெரிதெனக் கேட்டு அமர்ந்திருந்தனர். அடுத்துப் பேச வேண்டியது இலங்கை நாட்டின் வெளி விவகார அமைச்சர். இலங்கை அமைச்சரின் பேச்சைக் கேட்டுவிட்டு பிரதிநிதிகள் மதிய உணவிற்குக் கலைந்து செல்ல இருந்தனர்.
உலக நாடுகள் பொதுச் சபை வழக்கப்படி அங்கு கேட்கவி ருக்கும் பேச்சுகளின் நகல்கள் முன்னதாகவே எல்லாப் பிரதி நிதிகளுக்கும் வழங்கப்பட்டுவிடும். அந்த நகல்களை படித்திருந் தால்; பொதுவாக எல்லோருக்குமே யார், என்று, என்ன என்ன பேசுவார்கள் என்பது முன்பே தெரிந்திருக்கும். உலகின் ஏதாவது ஒரு பகுதியில் முக்கிய நிகழ்ச்சிகளோ சம்ப வமோ நடைபெற்று, அப்பகுதியைச் சேந்த பிரதிநிதி அதைப் பற்றி பேச இருந்தாலொழிய பொதுச்சபையில் குழுமியுள்ள பிரதிநிதிகள் தங்கள், காதுகளில் பொருத்தியுள்ள ஒலிபரப்பு கருவிகளை இயக்கக் கூட வருத்தப்படுவார்கள்.
பலநாடுகளின் அதிபர்கள் பிரதமமந்திரிகள், வெளி விவகார அமைச்சர்கள் உள்ளிட்டு, பொதுச்சபை நடக்கும் போது சுமார் 2,000 பிரதிநிதிகள் அங்கு குழுமியிருப்பார்கள். அனைவருமே ஒருவருக்கொருவர் பழகின முகமல்ல. எனவே இலங்கை வெளிவிவகார அமைச்சர் எப்படி இருப்பார் என்று யாருக்குமே தெரியாது.
பொதுச்சபைத் தலைவரும் இலங்கை வெளி விவகார அமைச்சரைப் பேச வரும்படி அழைத்தார். கனத்த உருவமும் ஒரளவு நரைத்தமுடியும்கொண்ட திரு. வைகுந்தவாசன் சபை

17
யில் ஓரிடத்தில் இருந்த ஒரு பிரதிநிதியின் இருக்கையைவிட்டு எழுந்து மேடையை நோக்கி நடந்தபோது யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. இலங்கையிலிருந்து வந்திருந்த பிரதி நிதிகளுக்கு மட்டும் எங்கோ ஏதோ தவறு நடக்கிறது எனப் புரிந்திருக்கலாம். S.
மேடையில் வைகுந்த வாசனை சபைத் தலைவரான கொலம் பியா நாட்டைச் சேர்ந்த இண்டேலிசியோலிவியேஞ புன்ன கையுடன் வணங்கி வரவேற்ருர். பதிலுக்கு வைகுந்தவாசனும் வழக்கம்போல தலையிலிருந்து இடுப்புவரை சிறிது குனிந்தாற் போல் செய்து மரியாதை தெரிவித்தார்.
“சபைத் தலைவர் அவர்களே, உலகத் தலைவர்களே -வைகுந்தவாசன் முழுங்க ஆரம்பித்தார். அப்படிப்பட்ட ஆரம்பம் சபையில் வழக்கத்திற்கு சிறிது மாறுப்பட்டது. உல கத்தலைவர்களை உடனே யாரும் பேச்சின் ஆரம்பத்தில் அழைத்து விடமாட்டார்கள். சபைத் தலைவரும் அவருடைய நாடும் பேச்சின் ஆரம்பத்தில் “ஜனநாயகத்தின் சின்னங்கள், ஜனநாயக மரபுகளின் எடுத்துக்காட்டு’ என்று புகழ்ந்துரைக் கப்படுவார்கள். வைகுந்த வாசன் இதைச் செய்யவில்லை. அவருக்கு அவசரம் ஆணுல் இந்தச் சிறு மாறுதலை சபையில் கூடியிருந்தவர்கள் பொதுவாக அலட்சியம் செய்து விட்டார் கள். இலங்கை வெளிவிவகார அமைச்சர் அப்படி என்ன ஒரு அசாதாரணமான விவரத்தைக் கூறப் போகிருர்!
*தமிழ் ஈழம் போன்ற ஒடுக்கப்படும் சிறுபான்மை மக்களின் நாடுகள், உலக நாடுகளின் உச்ச சபையான இங்கு தங்கள் குறைகளைக் கூருமல் வேறு எங்கு சொல்வது? தயவு செய்து என்னை ஒரு நிமிடம் பேச அனுமதியுங்கள்” வைகுந்தவாசன் பேச்சைத் தொடர்ந்தார்.
தமிழ் ஈழமா? உலக நாடுகள் அமைப்பில் அப்படி ஒரு நாடு எப்போது அதிமதிக்கப்பட்டது? வியப்பாலும் குழப்பத்
2

Page 11
18
தாலும் சபைத் தலைவரின் முகம் நெளிந்தது. சபையில் பிரதி நிதிகள் வரிசையிலும் முணு முணுப்புகள் தோன்றிப் பரவின.
“என் பெயர் கிருஷ்ணு. இந்தியாவிற்கும் இலங்கைக் கும் இடையே உள்ள 25 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட “தமிழ் ஈழம்’ நாட்டில் இருந்து பிரதிநிதியாக வந்துள்ளேன். இலங்கை அரசு கிறுபான்மை இனத்தோரைத் துன்புறுத்தி ஒடுக்கும் கொள்கையைத் தொடர்ந்து கடைப் பிடித்து வருகிறது.”
பொதுச்சபை ஊழியர் ஒருவர் பரபரப்புடன் சபையின் ஒலி பெருக்கிகள் இயங்குவதைத் தடைசெய்தார். பேசுவது இலங்கை வெளியுறவு அமைச்சர்தான் என்ருல் நிச்சயம் அவருக்கு மண்டையில் ஏதோ கோளாறு பாதுகாப்பு அதிகாரி கள் பொதுச்சபையின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் இப்போது மேடையை நோக்கிப் பாய்ந்தனர். எந்தச் சலனமுமின்றி வைகுந்த வாசன் தொடர்ந்தார்:
“தனிநாடாக வாழ்வதற்கு எங்களுக்குள்ள உரிமையை நாங்கள் உபயோகித்து அறிவித்துள்ளோம். தமிழர் பிரச்சினை இந்தியப் பகுதியின் அமைதியை அச்சுறுத்திக்கொண்டுள்ளது. உலகத் தலைவர்களாகிய நீங்கள் இதில் தலையிட்டுத் தீர்வு காணுவிட்டால், எங்கள் பிரச்சினையும் பாலஸ்தீன விடுதலை இயக்கம்போல், சைப்ரஸ் போராட்டம்போல் உருவெடுக்கும்.*
மேடையை அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் வைகுந்த வாசனை அங்கிருந்து தள்ளிச் சென்றனர். பொதுச்சபை அதி காரிகள் இலங்கையின் உண்மையான வெளிவிவகார அமைச் சர் திரு. சாகுல் அமீது அமர்ந்திருக்கும் இடத்தை வெட்கத் துடன் பார்த்தார்கள். உலக நாடுகள் பொதுச் சபைக்கு மீண்டும் வரக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் வைகுந்த வாசன் பிறகு விடுவிக்கப்பட்டார். இலங்கை அமைச்சரைப் போல நடித்து தான் எப்படிப் பொதுச்சபையில் பேசத்திட்ட மிட்டார் என்று வைகுந்த வாசன் வெளியே விவரித்தார்.

19
அமெரிக்க வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்ள 1978 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நியூயார்க் நகரத்தை வந்தடைந்தார். முன்பு உலக நாடுகள் அமைப்பின் உதவிப் பொதுச் செயலாளராகவும் இப்பொழுது வேறு ஒரு பதவியிலும் உள்ள தன்னுடைய இந்தியத் தமிழ் சகோதரரான (Fellow Tamil) திரு. சி.வி. நரசிம்மனை முதலில் சந்தித்தார். இலங்கைத் தமிழர் ஐக்யவிடுதலை முன்னணிக் கட்சியின் தலை வரும் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் ஆன திரு. அ. அமிர்தலிங்கம் அப்போது அரசாங்க விருந்தினராக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வந்தார். வைகுந்த வாசன் திரு. நரசிம்மனிடம் அமிர்தலிங்கம் இலங்கைத் தமிழர் கள் சார்பில் உலக நாடுகள் பொதுச் சபையில் பேச ஏற்பாடு செய்துதர முடியுமா எனக் கேட்டார். உற்சாகமான பதில் ஏதும் நரசிம்மனிடமிருந்து கிடைக்கவில்லை. பாலஸ்தீன விடு தலை இயக்கத்தின் தலைவரான யாசீர் அராபத் எந்தவிதமான அதிகாரபூர்வமான அங்கீகாரத்தையும் பெற்றிருக்கவில்லை என்ருலும், அவர் பொதுச்சபையில் பாலஸ்தீன மக்களின் சார்பில் பேசியபிறகு ஏன் அமிர் பேச அனுமதிக்கக்கூடாது? அரபாத்துக்கு அரபு நாடுகளின் அனைத்து ஆதரவும் உள்ளது. அதேபோல் அமிர்தலிங்கமும் உலகெங்கும் சிதறியுள்ள அனைத்துத் தமிழர்களின் ஆதரவையும் பெற்ருல் பொதுச் சபை யில் பேசலாம்.
வைகுந்தவாசன் மனந்தளரவில்லை. “ஏன் நானே ஏதாவது முயற்சி செய்யக்கூடாது’-உறுதியுடன் தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். வங்கி ஒன்றினைக் கொள்ளை அடிக்க நினைக்கும் திருடன் அக்கறையுடன் திட்டமிடுவது போல், பல வாரங்கள் யோசனையுடன், செயல்பட்டு திட்டத்தைத் தயாரித்தார்.
உண்மையான பிரதிநிதிகளைவிடத் தவருமல் பொதுச் சபைச் செயலகத்திற்கு (Secretariat) செப்டம்பர் மாதம் முழுவதும் சென்று நடவடிக்கைகளைக் கவனித்தார். பொதுச்

Page 12
20
சபைச் செயலகத்தின் முக்கிய நுழைவாயிலைச் சென்று கடப்பது என்பது கடினமான செயல். கெடுபிடிகள் அதிகம். ஆணுல் பொதுச்சபை கூட்டத் தொடர் நடைபெறும் பொழுது பல மொழி பேசும் வண்ணவண்ண உடையணிந்த நூற்றுக் கணக்கான பிரதிநிதிகள் அவசரமாக உள்ளே நுழைவதும் வெளியே வருவதும் வழக்கமாகி விட்டதால், அவர்கள் ஒவ் வொருவரின் அடையாள அங்கீகாரங்களையும் முறையாகவும் கடுமையாகவும் சரிபார்ப்பதில் பாதுகாப்பு அதிகாரிகள் மிகவும் அக்கறைப்படுவதில்லை. அதற்கேற்ருற் போல் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது.
கசங்கிய பைஜாமாவும், குர்தாவும் அணிந்த இந்தியப் பிரதிநிதியொருவர் எந்த சான்றுச்சிட்டும் கையில் இல்லாமல் கூட்டம் நடந்து கொண்டிருந்த அறையொன்றினில் நுழைய முயற்சித்தார். பாதுகாப்பு அதிகாரி தடுத்து நிறுத்தினுர். பிரதிநிதியுடன் வந்த இந்தியப் பத்திரிகையாளர் ஒருவர் பிரதி நிதியை அடையாளம் காட்டினர். அப்பிரதிநிதியைத் தடுப் பதால், அந்த அதிகாரியின் வேலைக்கே ஆபத்து வரும் என்று பத்திரிகையாளர் மிரட்டியதாலேயே அவருக்கு அங்கே நுழைய அனுமதி கிடைத்தது.
நீதிபதியாக இருந்து பல குற்றவாளிகளின் மனநிலை களையும் போக்கையும் ஆராய்ந்தறியும் திறமை பெற்றிருந்த வைகுந்தவாசன், பாதுகாப்பு அதிகாரிகளை இப்போது புரிந்து கொண்டு பொதுச் சபையினுள் நுழைய ஒரு அற்புதமான திட்டத்தைத் தயார் செய்தார். கையில் ஒரு சிறு பெட்டி, பிரச் சிஜனகள் நிறைந்த முகம், வேகமான நடை, பிரதிநிதி ஒருவர் ஒரு முக்கியமான குழுவின் விவாதத்திற்குச் சிறிதுதாமதமாகச் சென்று கொண்டுள்ளார்! தினமும் இவ்வாறு நுழைவாயிலை யும், அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளையும் வைகுந்தவாசன் கடந்து செல்வார்.
ஆக, நுழைவாசல் பாதுகாப்புஅதிகாரிகளுக்குமட்டுமின்றி அவர் சென்றுவந்த இதர பகுதிகளில் இருந்த பாதுகாப்பு

21
அதிகாரிகளுக்கும் எப்போதுமே சுறுசுறுப்பான ஒரு முக்கிய பிரதிநிதியின் முகமாக வைகுந்தவாசன் பழக்கமாகி விட்டார். பொதுச்சபைச் செயலகத்தின் சிற்றுண்டி விடுதிக்குச் சென்று அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளுடனும் தோளோடுதோள் உராய்ந்து பழகினர். பிறகு விருந்துக்கும் தைரியமாகச் சென்று எல்லாருடனும் நெருக்கமாகப் பழகினர். ஒரு முறை அவ்விருந்தொன்றில்தான் ஐ. நா. பொதுச்செயலாளர் குர்ட் வால்ட் ஹைமுக்கு அறிமுகமானுர்,
"நான் இலங்கைப் பிரதிநிதி” வைகுந்த வாசன் அறிமுகப் படுத்திக் கொள்வார். யாரேனும் அவரை எந்தக் குழுவில் சேர்ந்து அவர் பணியாற்றுகிருர் என்று கேட்டால், "ம்.,.ம்..அழைத்துள்ளார்கள். ஆணுலும் இரண்டாவது குழு விலா? அல்லது மூன்ருவது குழுவிலா? என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை” என பதிலளித்துச் சமாளிப்பார். உலக நாடுகளின் அமைப்பில் ஒவ்வொரு நாட்டுப் பிரதிநிதி யும் ஏதாவது ஒரு குழுவுடன் இணைக்கப்பட்டு செயலாற்றுவர்.
பொதுச் சபையின் தினசரிக் கூட்டங்களுக்குத் தவருமல் சென்று பிரதிநிதிகள் பகுதியில் ஒரு இடத்தில் அமர்ந்துகொள் வார். “நானும் ஒரு பிரதிநிதி, தமிழ் நாட்டின் பிரதிநிதி என்று என் மனதில் நானே சொல்லிக் கொள்வேன்"-வைகுத் தவாசன் கூறினர். இலங்கையில் பூர்வீகமாகத் தமிழர்கள். வசிக்கும் பகுதிகளான கிழக்கு, வடக்கு மாகாணங்களைப் பிரித்து 'தமிழ் ஈழம்" என்னும் தனி நாடொன்றை அமைக்க வைகுந்தவாசன் விரும்புகிருர். 110 இலட்சம் புத்தமத சிங்கள இன மக்களைப் போலவே, இலங்கையின் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கும் 2500 ஆண்டுக்காலத் தனிச் சரித்திரம் உண்டு. 1948-ம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் வெளியேறியபோது இந்த இருஇன மக்களும் "இலங்கை’ என்ற ஒரு நாட்டின் அமைப்பின் கீழ் ஒன்று
சேர்க்கப்பட்டனர்.

Page 13
22
அன்றிருந்து இன்றுவரை இவ்விரு இன மக்களும் அமை தியாக எப்போதும் வாழ முடியவில்லை. 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தீவு முழுதும் நடந்த இனக் கலகத்தில் 200 பேர்-பெரும்பாலும் தமிழர்கள் இறந்தனர். இக்கலவரம் தீவிரவாதத் தமிழ் இளைஞர்களுக்கு இறுதியழைப்பாக அமைந்தது. அமிர்தலிங்கம் போன்ற தமிழினத்தலைவர் கள் தமிழர்களுக்குத் தனி மாநிலமொன்று அமைத்துச் சிங்களப் பகுதிகளுடன் சில தொடர்பு மட்டும் கொண்டு ஒரு கூட்டாட்சியை அமைக்க வாழ்நாட்கள் முழுதும் பாடுபட்டு வருபவர்கள். சமீபத்தில் நடந்த இன கலவரத்துக்குப் பின் அவர் போன்ற தலைவர்களால்கூட தமிழ் இளைஞர்களைத் தனிச் சுதந்திரநாடு கேட்பதிலிருந்து தடை செய்ய இயல வில்லை. கலவரங்கள் பரவிவருகின்றன. அமிர்தலிங்கம் அவற் றைத் தடுக்க முடியவில்லை. அவர் தமிழ் மக்களுக்கு சமா தானமாகவும், பேச்சுவார்த்தை மூலமும் சுதந்திரம் பெறு வதையே விரும்புகிருர், ஆணுல் காலம் கடந்து கொண் டுள்ளது.
தான் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளார் என்பதைத் தன் மனதில் எவ்விதத் தயக்கமோ பயமோ இல்லாது முற்றிலும் வைகுந்தவாசன் உணர்ந்திருந்தார். தன் இன மக்களின் பிரதி நிதி அவர். உலக நாடுகள் அவரைத் தன் மக்களின் சார்பாக இப்போதைய நிலையில் பேச அனுமதிக்காது. எப்படியும் அவர் பேசியே தீருவார். அப்படியே பேசிஞர்.
1978-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் தேதி இலங்கை யின் வெளி விவகார அமைச்சர் பொதுச் சபையில் பேசவிருந்த நாள். பொது சபையினுள் வைகுந்த வாசனும் இருந்தார். ஒவ்வொரு பிரதிநிதிக் குழுவாகச் சென்று சிரித்துக் கொண்டே ஒரிரு நிமிடம் பேசுவார். ஆனல் கவனமெல்லாம் எப்போது பொதுச் சபைத் தலைவர் இலங்கையிள் வெளிவிவகார அமைச் கிரைப் பேச அழைப்பார் என்பதிலேயே இருந்தது.

23
கடைசியாக அந்த அழைப்பு வந்தபோது சுறுசுறுப்பாக, ஆணுல் பரபரப்பு ஏதுமின்றி மேடையை நோக்கி நடந்து மரி யாதையாகக் குனிந்து சபைத் தலைவரை வணங்கி, தான் பேச நினைத்ததைப் பேசி முடித்தார். எல்லாவற்றையும் இலங்கை யின் வெளிவிவகார அமைச்சர் தன் இருக்கையை விட்டு எழு வதற்குள் செய்து முடித்துவிட்டார்.
வாழ்க வைகுந்த வாசன்!
வெல்க தமிழீழம்!
-தமிழாக்கம் : ப. பத்மநாபன்

Page 14
I బ్తో
SAN AREÄšši:AG
శొ
பரபூரப் பை ஏற்படுத்தி
நாடுகளில்
பிரசார யுத்த
25C රි
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

± √æ√≠ousui sørsums sj so nos sp.(aposms |- asɔ sɔ goɖɛɛ assos ().こと
/w/
·· *)
| |*次D 」
| 深}X | |- |-No.春 |-|-!|×пылининам-a, sessage불활t볼트를』
量=)–|-----■ |-|- -데지에전에嘎!1!==
义???—%85W
补以以“心区仁ro=3
-----
பது.
" செய்டு வெ
தென நார்வே மக்கள் நடத்திய
ി

Page 15
is is
/z aroa"ک ہی وجہ سے چھA ”ملت‘"*"
- A TRAVERS LE MONDE
du m politique répres dre du régime Brési Mu En EF n1 FIn Fan
LLLLLL L LSLH LHHLLLLLLLS LLLLLL LLLLLLL LLLLLLL PA ESAFEGIR器 LLLLLL LLLLLLL LLLLLLG LLLLLL LLLLLLLLSS bHILIC) P tiléirilliall LLLLLL LLLL SLLL LLLLLLLLS S LLL LLLLTSLLL "gweithig 战 Brasiliini les Tulit fou etter quilibre d'entre eu. Informations selon lesquelles Les Brésiliens prépareralent un Sri-Enkc e55al nucléaire fle Afonde du
5 novembre). - ALFP) SO LA COIMI MILJUNTA UT É: TA器、懿 Espagne 器 器 ST
1 "L LLLLLLS SLLLLLLLHHLHLLLL LLLLK S S LLLHHH |lat deltı keçir, 4 dekrlrı ırdı, ii PERSONNE-SODIt tabless 13 IIOTEITibre, à Paris, au cours mercredi 14 n'OTembre à Pam- d'une conférence de presse pelume ARAL COLIITB du Tha Timurl = M" |

Page 16
: { ՀԿ 12 Willingdon Croeso clearnt NET Delh=110011, da
August 27, 1979 . Da Mi Vallurth Evagam
I have just received your letter of the 22nd August in an horrified to see the enclosures.
The Janata Party Government is going out of ilt:Es way to be friendly with tha praesent Government of Sri Lanka. I doubt if they will wish to take up HLLC LLLCLLLK HLaL CLYLCLLLMTL LLLLLL HLLC CSMHYLLLLLLL LH 0LLSLY LLMLL LLLCLS LaS aLCL TLLK L SSS LLLL SS LLLLLLLLYLLLLLYLLLLLLLLH L S LLLLLLLHH LLLLLL LLLLLLL TTTL L MLaLLLL0 00L0 0L 00 S LL LLLLL LLL LLLL LLLLL LLL0LLL to the notice of the publile iln some othar way.
Youras sincerely
イレーィしみこfaし、一{-
Indra Gandhi
كې
K WILGuntharv|Fasan
COf Tamil Co-ordinating Committee 55 Watten Road.
LFOLLILOB NOOG
LONDORT SIG HY

இந்தியப் பிரதமருடன் திரு. வைகுந்தவாசன்
2-1-R()

Page 17
சந்திரனுட
击
ல்வர் திரு. டி. ராம 17-10-80
ஃவ
፴ፆዶ5
莎|- |-西|-|-
| || 위|- 出瀏§
邢 密疆
湿
 
 
 

இலங்கையில் தமிழர்களே அடிமை போல்
நடத்துகிருர்கள்! தமிழ்ப் பிரமுகர் தகவல்!
பாரிஸ், நவ, 16இலங்கையில் தமிழர்கள் அடிமைபோல நடத்தப்படுகிருர் கள் என்று தமிழ்ப் பிரமுகர் கூறி இருக்கிருர்,
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் ஒருங்கிண்ணப்பு சமிட்டி உறுப்பினர் கிருஷ்ணு வைகுந்தவாசன், பாரீஸ் நகரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி கூறியதாவது:-
உரிமைகள் இல்லே
இலங்கையில் வாழும் 5 லட்சம் தமிழர்களுக்கும், இலங்கை பிரஜையாக உரிமை அளிக்கப்படாததால், அவர் கள் எந்த உரிமையும் இல்லாமல் இருக்கின்றனர்.
அவர்களுக்கு ஒட்டுரிமை இல்லே. சொந்தமாக நிலம் வைத்துக்கொள்ள உரிமை கிடையாது. கல்லூரிகளில் படிக்க உரிமை வழங்கப்படவில்லே. மருத்துவ வசதி கிடையாது.
அடிமைகள்
மொத்தத்தில் தென் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பர் களே (நீக்ரோக்கள்) விட கேவலமான நிலையில் அடிமைகள் CAI TGJ E GITGITT.
பெரும்பாலானவர்கள் இன்னும் தேயிலே தோட்டங்களில் தான் வேலை செய்கிருர்கள்.
அவர்களுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கான ஏற்பாடுகளே கமிட்டி மேற்கொள்ளும்,
இவ்வாறு கிருஷ்ணு வைகுந்தவாசன் கூறிஞர்.
நன்றி : தினத்தந்தி 16-11-79

Page 18
உேலகச் சாதனையே இது"
இலங்கை வாழ் தமிழர்கள் மிக நீண்ட நெடுங் கால மாகவே தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக் கிருர்கள். அவர்களது கோரிக்கைகள் நியாயமானவையா இல்லையா என்பதைப் பற்றி இப்போது சர்ச்சை வேண்டாம். குங்குமம் 24-2-80 இதழில் "உலகச் சாதனையே இது என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளி வந்துள்ளது.
கிருஷ்ணு வைகுந்த வாசன் என்ற ஒரு இலங்கை பிரஜை ஐ. நா. பொதுச் சபையில், அதன் சட்டதிட்டங்கள், கட்டுக் காவல்களையெல்லாம் மீறி, இலங்கை தமிழர் பிரச்னை பற்றிப் பேசியுள்ளார். இந்தத் தீர நிகழ்ச்சியைப் படித்தும், சமீபத்தில் நமது இரண்டாவது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற் றில் நிகழ்ந்த பல்வேறு வீரஞ்செறிந்த வரலாற்றுச் சம்பவங் கள் என் கண் முன்னே படர்ந்தன.
இந்திராவின் எமெர்ஜென்ஜிக் கொடுமையின் போது நமது இந்திய விமானதளங்களின் கண்காணிப்புகள், பார்லி மெண்ட் கெடுபிடிகளை எல்லாம் பொய்யாக்கிவிட்டு பாராளு மன்றத்தில் பேசிவிட்டுச் சென்ற, விலைமதிக்க முடியாத தீரச் செயலைப் புரிந்த சுப்பிரமணிய சாமியின் நினைவுதான் வரு கிறது.
ஐ. நா. சபைக் கட்டிடம் பல மாடிகளைக் கொண்டது. இங்கு ஒருவர் ஏதாவது சிறு காரியமாகச் செல்ல வேண்டு மென்ருலே கூட பலமான கட்டுப்பாடுகள், விதிகளை மீறிச் சென்று விட முடியாது. சர்வதேச ஸ்தாபனமான ஐ. நா. சபையின் பொது சபைக் கூட்டத்துக்குன் பிரதிநிதியில்லாத ஒருவர் துழைந்து பேசுவது கனவில் கூட நடக்க முடியாதது.

33
பிரதிநிதியில்லாத கிருஷ்ணு வைகுந்த வாசன் ஐ. நா. சபையில் பேசியது ஐ. நா. சபையின் வரலாற்றிலேயே அது தான் முதல் முறை. அவர் எடுத்துக் கொண்ட பிரச்னை நியாய மானதா, அல்லவா என்ற கேள்விக்கு அப்பால் நின்று, அப் பிரச்னையில் அவர் காட்டிய பற்றைப் பார்க்கும் போது சற்று பிரமிப்பு ஏற்படுகிறது. கிருஷ்ணு வைகுந்த வாசன்கள் எப் போதாவது தான் ஒரு நாட்டின் சரித்திரத்தில் தென்படுகிருர் கள். ஆணுல், நீண்ட நெடுங்காலத்துக்கு யாராலும் மறக்க முடியாத இடத்தைப் பெற்று விடுகிருர்கள். இது போன்ற அஞ்சா நெஞ்சர்கள் தேவைப்படுகிற காலம் இங்கும் சமீபித் துக் கொண்டிருக்கிறது. W
நன்றி: குங்குமம் 24-2-80 துக்ளக் 15-3-80
மதுரையில் எழுச்சி விழா
நாடாளுமன்ற துணைச்சபாநாயகர் ஜி. லட்சுமணன் பேச்சு
ஐ. நா. சபையில் பேசி பரபரப்பு ஏற்படுத்திய இலங்கை தமிழருக்கு மதுரையில் பாராட்டு விழா நடந்தது. அவருக்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் ஜி. லட்சுமணன் பொன் ஞடை போர்த்தினுர்,
ஜ. கா சபையில் பேசிய தமிழர்
இலங்கையை சேர்ந்த தமிழர் வைகுந்தவாசன். இவர் லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக இருந்து வருகிருர்,

Page 19
34
இவர் ஐக்கிய நாடுகள் சபையில் திடீரென்று தோன்றி இலங்கை தமிழ் ஈழ தனிநாடு பற்றி பேசி பரபரப்பை ஏற் படுத்தினர். மதுரையில் பாராட்டு விழா
இவரது சாதனையை பாராட்டி மதுரையில் உலக தமிழ் பண்பாட்டு கழகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. லட்சுமி சுந்தரம் ஆலில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கவிஞர் மதுரை கூத்தன் தலைமை வகித்தார் அ. கு. மதிவாணன் வர வேற்ருர். V
8. GOēs un awrdir
வைகுந்த வாசனுக்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் ஜி. லட்சுமணன் பொன்னுடை போர்த்தி பாராட்டிப் பேசிஞர். அப்போது அவர் கூறியதாவது:-
ஐ நா சபையில் தலைவரின் அனுமதி பெருமலேயே பேசிய வைகுந்த வாசனுக்கு இங்கே பொன்னுடை போர்த்தி இருக் கிறேன். இது அவரது நெஞ்சத் துணிவு-கொள்கை-லட்சிய பிடிப்புக்காக போர்த்தப்பட்ட பொன்னுடையாகும். ஜ. கா.வில் விவாதிக்க வேண்டும்
எந்த நாட்டிலும் ஒரு இனமக்கள் சுய உரிமை கேட்பார் களேயானுல் அந்த மக்கள் ஐக்கியநாடு சபையில் செல்ல உரிமை வேண்டும். அப்படி இருந்தால் ரத்தம் சிந்த தேவை யில்லை.
ஈழ நாட்டு பிரச்சினை என்ன என்று ஐ. நா. சபையில் மற்ற நாட்டினர் விவாதிக்க வேண்டும்.
ஈழநாட்டு மக்கள் சமாதான முறையில் அமைதியாக அண்ணு காந்தி வழி நின்று ஈழ தமிழ் நாடு காண வாழ்த்து கிறேன்.
இவ்வாறு அவர் கூறினர்.

35
ஐ. கா. வில் பேசியது எப்படி?
விழாவில் வைகுந்தவாசன் பேசும்போது கூறியதாவது:-
ஈழந்தமிழர் பிரச்சினையை ஐ.நா. சபையில் பேச வேண் டும் என்று எண்ணினேன். அதற்காக அங்கு அடிக்கடி சென்று அங்குள்ள நடைமுறைகளை அறிந்து கொண்டேன்.
பிறகு இலங்கை வெளிவிவகார மந்திரி என்றைக்கு பேச இருக்கிருரோ அந்த நாளையும் அறிந்து கொண்டேன்.
அதே நாளில் ஐ.நா சபைக்குள் பிரதிநிதிகளோடு நானும் உள்ளே நுழைந்தேன். பாதுகாப்பு அதிகாரிகள் என்னை ஏற்கனவே அடிக்கடி பார்த்து இருந்ததால் நானும் ஒரு பிரதிநிதிதான் என்று உள்ளே அனுமதித்து விட்டார்கள்.
3 SSLa Guardir
ஐ. நா சபை தலைவர் ஒவ்வொரு நாட்டு பிரதிநிதிகளையும் அழைத்து பேசச் சொல்லி கொண்டே இருந்தார். ஒருவர் பேசி முடித்த உடனே தலைவர் அடுத்து பேசுபவரை அழைப்பார் ஆனல் ஏற்கெனவே பேசியவர் மேடையில் இருந்து சென்று அவரது இருக்கையில் அமர்ந்த பிறகுதான் அடுத்து பேசுபவர் தன் இருக்கையில் இருந்து எழுந்து வருவார். பேசி முடிந்தவர் கள் தன் இருக்கைக்கு செல்ல இரண்டு மூன்று நிமிடம் பிடிக்கும்.
இந்த இடைவெளி நேரத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன். ஒருவர் பேசி முடித்ததும் சபை தலைவர் இலங்கை வெளி விவகார மந்திரியை பேச அழைத்தார்.
உடனே அவர் எழுந்திருப்பதற்கு முன்பே நான் மேடைக்கு சென்றேன். நான் தான் இலங்கை வெளிவிவகார

Page 20
36'
மந்திரி என்று நினைத்து கொண்டனர். நான் 3 நிமிடம் ஈழ தமிழர் பிரச்சினையை பேசினேன். சபையில் இருந்த இலங்கை வெளிவிவகார மந்திரி அப்படியே என்ன செய்வது என்று தெரி யாமல் இருந்து விட்டார்.
கடைசியில் தான் நான் யார் என்று தெரிந்தது.
பிறகு என்னிடம் தலைமை பாதுகாப்பு அதிகாரி விசாரித் தார். எப்படி உள்ளே வந்தீர்கள் என்று கேட்டார். ஒரு இடத் திலும் தடையில்லை வந்தேன் என்றேன். ஏன் பேசினீர்கள் என்று கேட்டார். தலைவர் அழைத்தார் பேசினேன் என்றேன்.
தமிழர் குரல் ஐ.நா சபையில் ஒலிக்க வேண்டும் என்ருர் அறிஞர் அண்ணு. நான் அதை சாதித்து முடித்தேன்.
இவ்வாறு அவர் கூறினுர்,
stůl
பண்பாட்டு கழக இந்திய கிளை புரவலர் க. சுப்பு (முன்னுள் எம். எல். ஏ), மதுரை மாவட்ட தி. மு. க. செயலாளர் பொன் முத்துராமலிங்கம், மதுரை அர்பன் மாவட்ட இ. காங்கிரஸ் தலைவர் ஆ. ரத்னம், உலக தமிழ் பண்பாட்டு இயக்க பொதுச் செயலாளர் தமிழ் மன்னன், துணைதலைவர் கே. பி. பெரியசாமி, இந்திய கிளை தலைவர் அ. மு. சம்பந்தம், கு. ம. சுப்ரமணியம், அனல் மு. விவேகாநந்தன் ஆகியோர் பேசினர்கள்.
புலவர் அரசுமணி நன்றியுரையாற்றினர்.
-நன்றி: தினகரன் 13.10.80

புதுச்சேரி சட்ட சபை *தீர்மானம்' நிறைவேற்றும்
உலக ஐக்கிய நாடுகள் சபையில் திடீரென தோன்றி இலங்கை தமிழர்களுக்காக பேசிய லண்டன் தமிழர் ஒருங் கிணைப்புக் குழு அமைப்பாளர் பாரிஸ்டர் கிருஷ்ணா வைகுந்தவாசன் பாண்டிச்சேரிக்கு வந்திருந்தார்.
பாண்டிச்சேரியில் மாநில முதல்வர் டி. ராமச்சந்திரன், பொதுப் பணித்துறை அமைச்சர் பெருமாள் ராஜா, கல்வி அமைச்சர் திருமதி ரேணுகா அப்பாதுரை, விவசாய அமைச்சர் வி. எம். சி. சிவக்குமார் மற்றும் பல தலைவர்களையும் சந்தித் தாா.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்த மாநிலஅரசின், மக்களின் ஆதரவை அளிக்க வேண்டும் என்றும் தமிழ் ஈழநாடு கோரிவரும் அந்த தமிழ் மக்களின் தரப்பில் உள்ள நியாயங் களையும் அனைவரிடமும் அவர் விளக்கினார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த கிருஷ்ணா வைகுந்தவாசன்:-
25 ஆயிரம் சதுரமைல் அமைப்பில் உள்ள இலங்கையில் 8 ஆயிரம் சதுர மைல் அளவுள்ள தமிழ் ஈழப்பகுதியில்தான் தமிழர்கள் முழுக்க முழுக்க அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குரிய உரிமைகள் அங்கே உள்ள அரசால் மறுக்கப் பட்டு வருகிறது.
ஆதலால் தான் அங்கே வாழும் 40 லட்சம் தமிழர்களும் தமிழ் ஈழநாடு விடுதலை கோரி போராடி வருகின்றனர்.
அவர்களது குரலை உலக மக்கள் அறியவேண்டும் என்
பதற்காகத்தான் நான் ஐ. நா. சபையில் திடீர் பிரவேசம் செய்து பேசினேன்.

Page 21
38.
இப்போது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து பிரதமர் இந்திராகாந்தி மற்றும் அனைவரையும் சந்தித்து வருகிறேன்.
ஈழ தமிழர் பிரச்சனையை பற்றி மிகுந்த அக்கறையுடன் பிரதமர் இந்திராகாந்தி கேட்டுக் கொண்டார்.
தமிழக முதல்வர் எம். ஜி. ஆரையும் விரைவில் சந்திக்க இருக்கிறேன்.
புதுவை முதல்வர் டி. ராமச்சந்திரனை சந்தித்த போது அவரிடம் ஈழத்து தமிழ் மக்களின் பிரச்சனைகளைப் பற்றி ஒரு தீர்மானத்தை மாநில சட்டமன்றத்நில் நிறைவேற்ற வேண் டும் என கேட்டுக் கொண்டேன். முதல்வர் நிச்சயமாக வருகிற மார்ச் மாதம் கடக்க இருக்கும் அடுத்த சட்டமன்ற கூட்டத்தில் ஈழத்து தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் கோரும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதாக ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள மஸாசூஸஸ் மாநில சட்டமன்றத் தில் இப்படி ஒரு தீர்மானத்தை ஈழத்து தமிழர்களின் விடு தலைக்காக அங்குள்ளவர்கள் நிறைவேற்றியுள்ளனர்.
விரைவில் தமிழக முதல்வர் எம். ஜி. ஆரிடமும் இப்படி கேட்டுக் கொள்ள இருக்கிறேன்.
1982-ம் ஆண்டில் தமிழர் திருநாளான பொங்கலன்று தமிழ் ஈழ அரசை நிறுவுவது எங்களது லட்சியமும் தீர்மான முமாகும். அது நடக்கும் என்று கிருஷ்ணா வைகுந்தவாசன் கூறினார். r
நன்றி. தினமலர் (22-10-80)

சென்னை நகர முன்னுள் மேயர் பொன்னுடை அணிவித்தார்!
இலண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் வைகுந்த வாசன் அவர்கள் அண்மையில் தமது தமிழகச் சுற்றுப் பயணத்தை முடித்துச் செல்கையில், தமிழீழத் தோழ மைக் கழகத்தின் சார்பில், சென்னை நடுவண் நூலக அரங்கில், 1980 மார்ச் 1 ம் நாள் மாலையில் அன்னு ருக்கு பாராட்டு-வழியனுப்பு விழாவொன்று நடைபெற்றது.
இலங்கைக் குடிபெயர்ந்தோர் நலவுரிமைச் சங்கத் தலைவர் ஏ. எஸ். மணவைத் தம்பி அனைவரையும் வரவேற்றுப் பேசினர். தமிழீழத் தோழமைக் கழகச் செயலாளர் அரு கோபாலன் பாராட்டுக்குரியவரை அறிமுகப்படுத்திப் பேசினுர், முன்னுள் சென்னை மாநகரத் தந்தை சா. கணேசன் பொன் ஞடை அணிவித்து வாழ்த்துரைத்தார். உவமைக் கவிஞர் சுரதா, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க இந்தியக்கிளைத் தலைவர் கு. தமிழ் மன்னன் முதலியோர் பாராட்டுரை வழங் கினர்.
டாக்டர் பெருங்கவிக்கோ வ.மு. சே. தலைமையில் நடை பெற்ற பாட்டரங்கில் கவிஞர் முரசொலி மணிமொழி, கவிஞர் அருகோ, கவிஞர் பொன் ஐயனுரப்பன், கவிஞர் முத்தரசன் ஆகியோர் பாப்புனைந்தளித்தனர். கவிஞர் முகில் வண்ணன் நன்றிக் கவிதை பாட விழா இனிது முடிவுற்றது.

Page 22
புவிக்கிதைப் புகல்வோம்!
... . கவிஞர் முரசொலி மணிமொழி
குகைக்குள்ளே புகுந்துசென்று பகைவர் தம்மைக்
கொன்ருெழித்துக் குவிப்பதுவே தமிழன் வீரம் பகையரசர் பழித்தாரா? படையெடுத்துப்
பாய்ந்தவரைப் பழிதீர்த்த வரலா றுண்டு! நகைமுகத்தைக் காட்டிவிட்டு ஐ. நா. மன்றில்
நம்மினத்தின் உரிமைக்கே குரல்கொடுத்த தகையுடைய சான்ருேனே வழிந டத்து
ஐ. நா. வில் தமிழீழக் கொடியேறட்டும்;
ஸ்கைலாப்பைப் போல்உலகைக் கலக்க வைத்த
கைகாரப் பேர்வழிநீ உலக ரங்கில் கைதேர்ந்த நடிகர்களும் உனக்குப் பின்னே கைகட்டி வாய்பொத்தி நின்றி ருப்பார் மைசேர்ந்த விழிக்கணையால் ஆணினத்தை
மயக்குகின்ற மங்கையைப்போல் பலபேர் கண்ணில் வைகுந்த வாசாநீ மண்ணைத் தூவி
வையகத்துப் பேரவையில் முழக்கஞ் செய்தாய்!
வீற்றிருக்கும் மேதைஇவர் தமிழ்ஈ ழத்தின்
வெளியுறவுத் துறையமைச்சர்! நாமெல் லாமே நோற்றிருந்த தவப்பயணுய்ப் பிறந்து வந்த
நிகரில்லாப் பேரறிஞர் அண்ணு ஒர்நாள் ஆற்றுகின்ற சொற்பொழிவில் “இனமு ழக்கம்
ஐ.நா.வில் செய்திடுவோம்” எனவு ரைத்தார் போற்றற்கு உரியசெயல் செய்த தாலே
பெருந்தகையின் கனவுக்கோர் வடிவ மானுர்!

41
வைகுண்ட வாசனுக்கும் தமிழ ரின்மேல்
வந்ததடா புதுப்பாசம் என்றி ருந்தேன்! வைகொண்டா தட்சணைகள் என்ப தன்றி
வந்ததில்லை அனுதாபம்; எங்கள் கிருஷ்ணு வைகுந்த வாசனுக்கே மான ரோசம்
வெடித்ததுபன் ஞட்டவையில் துணிந்து சென்றே! கைக்குண்டை வீசவில்லை; ஈழ மண்ணின்
காரிருளை மாய்க்கஒளி வீசி நின்ருர்!
கவிக்குலத்தின் துணையிருந்த கார ணத்தால் கார்மேக ராமனவன் ஈழம் வென்ற கவின்கதையைக் கம்பநாடன் பாடி வைத்தான்
கதைச்சரடு; உண்மையினைச் சொல்லு கின்றேன் கவிக்குலமே ஈழத்துத் தமிழ ருக்காய்
கலமாகிக் கடல்கடக்கும் கைகொ டுக்கும் புவிக்கிதனைச் சொல்கின்ருேம்? இதுந டக்கும்
பொன்னுளைப் பாருங்கள்! வணக்கம் நன்றி!
நாமே நமையாளும் ஆட்சி
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்
ஈழத் தமிழ் மறவர் எக்களிப்பில் நின்று வாழத் தமிழீழம் வந்துறவே-வேழம்போல் நன்னடை தானடக்கும் நாட்டார்கள் வெற்றிபெற உன்கண் அருள்தா உவந்து
பன்னுட்டு மன்றத்தில் பார்புகழ ஈழமெனும்
தன்னுட்டுக் கானதமிழ்க்குரலை-தன்னேரில்
ஆற்றல் துணிவோடே அஞ்சா(து) எடுத்துரைத்த
பாற்று வை குந்தனைப் போற்று

Page 23
42
போராடிப் போராடிப் புத்தம் புதுவாழ்வு நேராகப் பெற்றதிரு நெஞ்சகமே!-நீராடச் செங்குருதித் தேர்களம் சேர்ந்த ஈழத்தார் சிங்களரை வெல்லவே செல்!
கொட்டிக் கிடக்கும் கோட்டையின் செங்கலென எட்டும் அறிவுக்(கு) இலக்கணம்செய் நம்அண்ணு நம்மவர் தமைப்பார்த்து நாவுதிர்த்தார்! அச்சொற்கள் அம்ம! ஒ இந்நாளும் அதிசயிக்கும் உண்மையன்ருே? தோற்றத்தால் இப்பொழுது சுடர்மணி மாளிகையாம் ஏற்றத்தைத் தமிழர்வாழ் இந்நாட்டில் கண்டாலும்! கனவாகிப் போனதன்றி நனவாகும் நிலையுண்டோ இனவுணர்வைத் தமிழன் இதயத் தெழுச்சிகளை மானத்தைக் காக்கும் மதிஆக்கும் வீரத்தை ஈனத் தனத்தை இடித்தழிக்கும் ஆண்மையினை நம்மவரை நாமே நனிஆறும் ஆட்சியினை இம்மா நிலத்தில் இன்றுவரை பெற்ருேமா? கொத்தடிமைக் கூலிகளாய் குற்றேவல் செய்பவராய் வெத்துவேட் டரசியலில் வீரமுழக் கமிட்டு பத்து நூருய்ப் பீத்திப்பவனி வருவதன்றி என்ன கிழித்துவிட்டோம் இங்கேநாம்? இதைநாம் சொன்னலே குற்றமென்பார்! சூழ்ச்சித் திறமறியார் காலாதி காலம்எம் கன்னித்தமிழ்த் தாய்நீ வாழஓர் குடிசையின்றி வாடித் தவிப்பாயோ? கன்னியென்றுன்னைக் கழறியதும் காலமெல்லாம் அன்னை நீ சொந்த அமைவிடம் ஏதுமின்றி அலைக்கழிந்து போகவோ? அடித்தளம் உனக்கிலையோ? நிலைகுலைந்து தமிழினம் தலைகவிழ்ந்து வாழவோ தாயே உனக்கொரு இல் தாரணியில் வேண்டாமோ வாயால் பசப்பிவாழும் வாழ்வும் ஓர் வாழ்வாமோ? கொத்தடிமைக் கூட்டம்போல் நித்த நித்தம் காவடிகள் சித்தமுடன் தோள்களிலே தூக்கிச் சுமப்பதுவே

43
இத்தமிழர் வேலையோ? எடுபிடிகளா இவர்கள்! வித்தகத் தமிழர் விவேகம் வெல்லாதோ? என்றெல்லாம் ஏங்கி இதயம் விம்மிநிதம் கன்ருவின் பாலுக்குக் கதறி மருகுதல்போல் நின்றேங்கும் நேரத்தில் நெடியகீழ்க் கடற்பரப்பில் சென்றநம் கண்கள் திசைமாண்பைக் கண்டதடா!
எழுஞாயிற்றின் எழுச்சி
நீலக் கடற்பரப்பின் நித்தில அலைநடுவில் கோலக் குருதி கொட்டிக் கலந்ததுபோல் சிவந்தகதிர் ஆ! நம் செந்தமிழ்த் திருமறவர் உவந்து மகிழ்ந்து உரிமைத் தமிழீழம் காணத் துடித்துக் களம்பாய்ச்சும் செந்நீர் ஆம்! ஊனத் தசையுடலம் ஓய்ந்தொழிந்து போகட்டும் வானத் தமிழீழம் வாகைசூடி வெல்லட்டும் ஈனத்தார் திமிரை எகிறிய செங்கழுநீர் ஏனத்தில் பிடித்தால் இம்வயம் அறியாதென்று வானத்தில் கலந்து வருபரிதிக் கரங்கட்குத் தானமாய்த் தந்த தமிழ்க்குருதிச் சிவப்புநீர்! கண்டோம்யாம் ஐயா கண்மணிபோல் ஈங்குஉள எண்டிசை புகழுமெம் வைகுந்த வாசரே. தந்தை செல்வா இருந்தாலும் தனித்தமிழ் ஈழநாட்டு முந்து புகழ்க்கொள்கை முழங்கி இவண்வந்த அஞ்சா நெஞ்சர் அடலேறு அமிர்தலிங்கச் செஞ்சொல் நாவலர்க்குச் சிறப்பான வரவேற்பைத் தந்தோம்! கடல்போலத் தமிழ்முழக்கம் செய்தோம் காண்! சொந்த நாடு சுடர்ஈழம் காண்கவெனத் தமிழன் படும்துயரம் தான்சொல்ல தமிழ்மக்கள் இமிழ்கடல் சூழ்உலகின் அமிழ்தத் திருநாடு ஒருநாடே னும்உலகில் உண்டாக வேண்டும்நல் திருநாடு அந்நாடு தேசம் புகழ்நாடு ஈழத் தமிழ்நாடே! என்னும் குரலைத்தான் தோழமை கூட்டத் தொடர்ஒற்று மைவளர்க்கும்

Page 24
44
பன்னுட்டு மன்றத்தில் பாய்ச்சிய வரிப்புலியே தன்னுயிர் போனுலும் தமிழ்ஈழம் நாடமைக்கப் போகட்டும் உயிர் என்று புறப்பட்ட அரிமாவே! சாகட்டும் காலமட்டும் தமிழர்க்கே உழைப்பவனே! ஆங்கிலம் படித்த ஆற்றல் தமிழர் பலர் மூங்கையர் போல்ஆகி முழுஅடிமை யாகித்தம் ஆங்கில வால்பிடித்து அவ்வறிவே மேலென்று இன்றும் வாழ்கின்ற இழிநிலையில் நீங்கள்தாம் ஆங்கில நாட்டில் அணியிணைக்கும் தலைவராகப் பாங்கான வளர்ச்சிப் பாதையில் நனிவளர்ந்து உலக நாடுகளில் உயர்ந்த பதவிகளில் நலம்பல பெற்றும் நம்தமிழ் இனப்பற்றே ஓங்கிச் சிறக்க உலகுவலம் வருகின்றீர் வீங்கு புகழ் மறவா வைகுந்த வாசா உன் எண்ணப் பாங்கை எழுச்சிச் செயல்திறத்தை விண்முட்டப் பாடி வெற்றிப்பாச் சூடி! நிகரிலா வீரத்தை நெஞ்சில் வைப்போம்! தனிநாடு ஈழம் தானமைக்கச் சிங்களவர் மனிதாபிமானமிலா வன்கொடுமை ஏற்றவரை கண்ணிழந்து காலிழந்து கையிழந்து மெய்யிழந்து புண்பட்ட படைமறவர் புகழ்ப்படை வரலாற்றை “எதுவரினும் அஞ்சோம் எதிரிக்குத் தலைகுனியோம் புதுவர லாற்றின் பொன்னேட்டை முடித்து வைப்போம்” எனப் போராடித்தான் இன்னல் பல அடைந்த தனக்குவமை இல்லாத தன்னேரில் புலிப்படையை செங்குருதி ஆருக ஓடினும் அஞ்சோம்யாம் இங்கொன்றும் பின்வாங்கோம் எனவே சங்கொலிக்கும் இளைஞர் திருக்கூட்ட ஏந்தல்களை, மங்கையராம் விலைமதிக்க முடியாத வீராங்கனை களைத்தன் பாட்டுத் திறத்தாலே பாய்ந்தெழு உணர்ச்சி மடை காட்டித் திறந்த காசி ஆனந்தன்போல் நற்றமிழ் கவிஞர்களை நாள்தோறும் நெஞ்சில் வைப்போம்!

தமிழன நோக்கித் தரணியைத் திருப்பிய கன்னித் தமிழினத்தின் கரிபால்டி! கவிஞர் அருகோ
ஒருமொ ழிக்கொரு நாடு அல்லது
ஒருநாட் டுக்கொரு மொழி யென்ற பிரிவினை கொண்ட உலகப்பே ரரசு
பிறக்கு மானுல்தான் இனவெறிப் பேதங்கள் கருகிடும்! ஏனெனில் தேசியம் என்பதே
கருதிப் பார்த்திடின் மொழிவழிப் பட்ட நெறியொன்றை ஆக்கும் பழக்க வழக்கங்கள் நியதிகள் பண்புகள் சேர்க்கையே ஆகும்
எனவே தேசியம் மொழிவழி யன்றி
ஏனைய வழிகளில் அமைவது செயற்கை புனல்நீர் எல்லாப் பகுதிக்கும் ஒழுங்குறப்
பாய்வதற்காக வயலில் பாத்திகள் வணைவதை யாரும் பிரிவினை என்னுர்
வையக மனுக்குலம் ஒன்றே யெனினும் பனைக்கும் உரிமைகள் அனைவர்க்குங் கிட்டப்
பகுத்தறிவோடு மொழிவழித் தேயங்கள்
அமைவதும்; சர்வ தேசிய அரசு
அமைவதும் உலக அமைதிக்கு அவசியம் சுமையே ஏனைய தேசியம் பேசல்
சுரண்டலுக் கேஅவை வாசல் திறக்கும் அமைவுற இவ்வழி தமிழ்மொழி பேசும்
ஆண்ட இனத்திற்கு மீண்டுமோர் நாடு சமைப்பதும் அதன் சார்பாளர் உலக
சபைதனில் இருப்பதும் அவசியம் அவசியம்

Page 25
46
சொந்த நிலமும் சொந்தத்தில் வீடும்"
சொந்தக் காரரும் இருந்தாலும் அவைதாம் எந்த மாற்ருர்க்கும் அடிமை யில்லாது
இருந்தால்தான் சமயத்திற் குதவிட இயலும் இந்தவாறேஒர்மொழி பேசும் மக்கள்
எந்தத் தேசத்தில் வாழ்ந்தாலும் அவர்க்குச் சொந்தத் தேசமும் மேலாணை யில்லாச்
சுதந்திர அரசும் இருந்தால்தான் உலகில்
எந்தஇனம் எந்தநாட்டில் வாழ்ந்த போதும்
இன்னல் இளக்காரம் இல்லாமல் தங்கள் சொந்தக் கால்களில் நின்றிட முடியும்
சுயகெளரவத்துடன் வாழ்ந்திட இயலும் எந்தமிழர் இவ்வினிய பூமிப் பந்தின்
எல்லாப் புறத்தினிலும் இடியுதை பட்டு நொந்து வருந்தியும் கேட்பாரில்லாத
நிலைவரக் காரணம் அரசி லாமையே
வந்தவர்க் கெலாம் வாழ்வீந்து தமிழன்
வையக மெல்லாம் கையேந்திப் போன முந்தைச் சரித்திரக் கறையைத் துடைத்திட முந்தி நிற்கின்ருர் இலங்கைத் தமிழர்! எந்தமிழ் நாட்டு என்உடன் பிறப்புக்காள்!
இலங்கை என்பது நாம்வாழப் போன அந்நிய நாடல்ல; இரண்டாம் தமிழ்ச்சங்க
அவைகூடி யிருந்தது; எல்லாளன் ஆண்டது
முந்தையர் பூமி; விசயன் என்ருெரு
முன்னவன் தலைமையில் கள்ளத் தோணியில்
வந்தவர் சிங்களர்; இனப்பெ ருக்கத்தால்
வளைத்தார்; நம்மவர் நிலத்தைக் காப்பதில்
-சிந்தை வைக்காததால் சிறுபான்மை ஆஞர்
சிறுத்தை இளைத்ததால் நரிக்கும்பல் செழித்தது.

47
எல்லாள னேடு நின்றில்லை; பரராசன்
ஏறுநிகர் செகராசன், வன்னி,சங் கிலியென்று ஒல்லாந்தர் போர்த்துக்கீயர், ஆங்கிலேயர் வரும்வரை
ஒண்டமிழர் ஆட்சியங்கு பரம்பரையாய் இருந்தது பொல்லாத ஆங்கிலேயர் தமிழ்மன்னன் விக்ரம்னைப்
போர்கண்ட பின்னரே பூரா இலங்கையையும் மல்லாடி அவனிடம் பறித்தனர் சிங்களர்
மறவேந்தன் அவனையும் காட்டிக் கொடுத்தனர் போகின்ற வெள்ளையர்களாட்சியினைச் சிங்களவர்
பொல்லாத கைகளிலே போட்டுவிட்டுச் சென்ருர் ஆகிற தெல்லாம் தமதாணை என்பதால்
ஆண்ட தமிழரை அழித்தொழிக்கச் சிங்களவர் ஏகுகிருர்; தமிழர்களும் நேற்றுவரை அவரோடு
இணைந்து வாழவே முனைந்து நின்றனர் சாகிறதைத் தவிர வேருென்றும் உங்களுக்குத்
தந்திடோம் என்றுஆளும் சிங்களர் சொல்கின்ருர்
*ஐந்து நாடுதா’ அன்புடன் கேட்டார்;
‘ஐந்து ஊர்தா’ கேட்டார்; பின்னர் “ஐந்து வீடேனும்’ கேட்டார், கெளரவர்கள்
அதையும் மறுத்ததால், பாண்டவர்கள் வேறு எந்த வழியுமின்றிப் போர்தொடுத்த கதைபோல்
இணையாட்சி கேட்டுக் கூட்டாட்சி கேட்டுப்பின் நந்து பிரதேசசபை மாவட்ட சபைகேட்டு '
நன்றியின்றிச் சிங்களவர் மறுத்தபின்பே, தமிழர்
எந்த வழியுமின்றிப் போனதுடன் தங்கள்
எல்லைகளும் சிங்களரால் பறிபோவதால்தான் வெந்து தனிநாட்டு வேள்வியிலே குதித்தார்
விடுதலைக்கு விலைகொடுக்க வீதியிலே வந்தார் அந்தமணிப் போர்ப்படையின் அயல்நாட்டு முரசாய் ஆர்ப்பவரே வைகுந்த வாசன் எனும் நேசர் சிந்தைபொது வுடைமையிலே திளைத்தவர்தான் தமிழன்
சிங்களனின் சோதரனே என்றவர்தான் இருபேரும்

Page 26
48
ஜாம்பியாவில் நடுவராகத் தொழில்புரிந்த மேதை
சர்வதேச மன்றினிலும் வழக்காடும் அறிஞர் ஒம்புஜன நாயகத்தின் தொட்டிலெனப் போற்றி
உலகத்தார் புகழுகின்ற இலண்டனிலே வாழ்வோர் சோம்பாது பூமிசுற்றும் சோசலிச வாதி
தொழிற்சங்க இயக்கத்திலும் பங்குகொண்ட் தோழர் வீம்புக்கா அவர்வந்தார்? இல்லையில்லை வேறு
விதியில்லை தமிழனுக்கு என்றுணர்ந்தே வந்தார்!
நாடிழந்த பாண்டவர்க்கு நாடுபெற்றுக் கொடுக்க அந்
நாளிலொரு வைகுந்த வாசன் வந்தார்; இன்றும் நாடிழந்த தமிழருக்கு நாடுபெற இந்த
நாடறிந்த வைகுந்த வாசன்வந்தார்; நம்மைப் பீடுபெற வைத்தஇவர் பிஸ்மார்க்கே என்பேன்
பிறப்பெடுத்து வந்ததமிழ் மாஜினியே என்பேன் ஈடுஇணை யில்லாத யாசீர்அரா பத்தும்
ஈமன்டி வேலராவும் இவர்தானே என்பேன்
கரிபால்டி இத்தாலி கண்டதுபோல் இவரும்
காசினியில் தமிழீழம் காண்பதற்கு நாமும் பரிவோடு ஒத்துழைப்போம்! பார்முழுதும் வாழும்
பைந்தமிழர் உணர்ச்சியால் ஒரேமாந்தன் என்று அறிவிப்போம்! அமைகின்ற தமிழீழ நாட்டின்
அயல்நாட்டு முதலமைச்சே ஐயாவே நீவிர் பரிதியைப்போல் பாரினைப்போல் பலநலனும் பெற்றுப்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!
மக்கள் அச்சகம், 24, உணிசு அலி சாகிப் தெரு, எல்லிசு சாலை, சென்னை-600 002 இல் டாக்டர் மே. து. ராசுகுமார் அவர் களால் அச்சிடப்பட்டது.


Page 27

自虐)—nugg-정않TED 확:T59m니Trang정u병3學6대m그의원활rihar후sponsosos, ****玖耐曬 |g|현그니어 TT&RuggDig &학정원us trg&ME***T니T년ng %w활g &g』的 內D& DTr미하라rma-5 km シ」シ*T_Th』匾T占可_66L*Tng@郎 シg シ 6z占点)| 日晒占日 quo唱片 冠uānanggeque) 『『』g 『コgg』ng" Qシg