கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தரிசனங்கள் நிலவின் நிழலில்

Page 1


Page 2

தரிசனங்கள் நிலவின் நிழலில்
வை. அஹற்மத்
உயிர்ப்பைத் தேடும் வேர்கள்

Page 3
தலைப்பு
விடயம்
ஆசிரியர்
பதிப்பாசிரியர்
முதற்பதிப்பு
வெளியீடு
கணனிப் பொறியமைப்பு
அட்டைப் புகைப்படம்
அச்சு
தரிசனங்கள் நிலவின் நிழலில்
இரு குறு நாவல்கள்
வை. அஹ்மத்
ஏ. பி. எம். இத்ரீஸ்
2000 நவம்பர்
உயிர்ப்பைத் தேடும் வேர்கள் வாழைச்சேனை.
ச. ஜெகன்
அமரதாஸ் ஈழம்-கனக, சபேசன்
புதிய கார்த்திகேயன் அச்சகம் கொழும்பு-.ே

வை. அஹ்மதின் மருமக்களான.
அப்துல்கபூர் பிர்தெளஸ்
மொஹிதீன்பாவா அப்துர் ரஹ்மான்
ஆகிய இருவருக்கும்
இது சமர்ப்பணம்

Page 4
இரு குறுநாவல்களும் ஒரு குறிப்பும்
1
தரிசனங்களில் நண்பனின் மனம் சதாவும் படபடப்புடன் இருக்கின்றது. நண்பனின் மனைவியால் அவனை சகஜமான மனநிலைக்கு கொண்டுவர இயலவில்லை. சுருக்கம் என்னவென்றால் கணவனின் மன உலகத்துக்குள் அவளால் சாவகாசமாக நுழைய இயலவில்லை. நண்பனின் வீட்டுக்கு ஆசிரியர் செல்லும் போது அவனது மனநிலை சகஜமாகி விடுகிறது. அப்போது அவனுடைய மன உலகம் மிகவும் நெகிழ்வாக இருப்பதையே காண்கிறார்.
சாதாரண குடும்பங்களில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நிலவும் பிரச்சினைதான் என்றாலும் இங்கு ஏதோவொரு தடைக்கல்லில் சிக்குப்பட்டு இருமனங்களும் விலகிக் கொண்டு போகிறது. பிரச்சினை பற்றிய கற்பனைதான் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகின்றது. இருவரும் அந்தக் கற்பனையில்தான் இருக்கிறார்கள். யதார்த்தமான ஓர் அணுகுமுறையை கையாளுவதற்கு இருவரும் தயங்குகிறார்கள். இருவரும் ஒவ்வொருவர் பற்றிக் கொள்ளும் வலைப் பின்னல் கற்பனையால் பிரச்சினையில் அழுந்திக் கொண்டே செல்கிறார்கள்.
புறவயமான தொடர்புகளின் போது அவரது நடத்தைகள் செயற்பாடுகள் ஆசுவாசமாகத்தான் இருக்கின்றன. புறச்சூழலில் நண்பர் தொடர்பு, பாடசாலை உடன்கொள்ளும் உறவு என்று வருகின்ற போது மனம் உருவகிக்கும் கனவை அங்கே காணமுடியாதிருக்கிறது. அகவயத்தில்தான் உணர்வு அவரை ஆட்டிப் படைக்கிறது. அவளை அண்டவிடாது தடுக்கும் ஒரு மனத்தடுப்பு அவர் உள்ளத்தில் ஒரு பிரிகோடாய் நின்று கொள்கிறது. அவரது மனம் சங்கடப்படுகின்றது. அவர் மனைவியுடனான தொடர்பாடலில் தன் சுயத்தை, ஆளுமையை இழந்துவிட்டதான உணர்வைப் பெறுகின்றார். தனிமை, விலகல் ஒன்றுதான் பிரச்சினை தராத தீர்வு என்ற முடிவு அவரிடம் இறுதியாக ஏற்பட்டு விடுகிறது. அதாவது, மனைவியோடு மனம் கொள்ளும் உறவைத்துண்டிக்கும் போது - அப்படித் துண்டிக்க முடியாவிட்டாலும் - அவரால் இயல்பாக இருக்க முடிகிறது.
இருவரையும் சங்கடப்படுத்திக் கொண்டிருப்பது பயம் அல்லது மனப்பிராந்தி என்று கூடச்சொல்லலாம். இருவரும் வெவ்வேறு இடங்களில் இருக்கும் போது வெகுசுதந்திரமாக இயங்குகின்றனர். அவள் இஷ்டப்படி இருக்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை. அவர் இஷ்டப்படி இருப்பது எப்படி என்பதும் அவளுக்குத் தெரியவில்லை. 'கணவன்’ என்ற நிழல் தன்மீது படர்வதை மனைவியும்; "படித்தவள்’ என்ற உணர்வு கணவனையும் அலைக்களிக்கின்றது. சதாவும் கணவனைக் கணக்கிலெடுத்துக் கொண்டு செயற்பட வேண்டிய நிலையைப் படித்த, சுதந்திரமான மனைவியால் V

தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. தன் சுய முடிவுகள் அவனை எப்படிப் பாதிக்கும் என்பதெல்லாம் அவளால் தீர்மானிக்க முடியாத விஷயங்களாயிருக்கின்றன. இதனால் பறக்கத்துடிக்கும் அவள் மனஉலகத்தைப் போல் பெளதீக உலகம் சுருங்கிவிடுகிறது. அந்த சிறுத்துப் போன உலகில் அவள் மூச்சுத் திணறுகிறாள். அந்த மூச்சுத்திணறலில் இருந்து அவ்வப்போது வந்து ஆசுவாசப்படுத்தும் நண்பனாக, சகோதரனாக ஆசிரியர் பழகுகிறார். ஆனாலும் தம்பதிகளிருவரின் மனங்களில் எங்கோ ஒரு மூலையில் துக்கமும் பயமும் கசிந்து கொண்டுதான் இருக்கின்றன.
புத்தகங்கள் உருவாக்கும் கருத்துலகங்களில் அவள் சுற்றித்திரிந்ததை வெளியில் பிரத்தியட்ச உலகில் எதிர்பார்ப்பதும், அது கிடைக்காமல் போகின்ற போது அவளடைகின்ற ஏக்கத்தையும் அவள் கையில் இருக்கும் புத்தகமொன்றின் தலைப்பின் மூலம் வெகுலாவகமாக ஆசிரியர் உணர்த்திவிடுகிறார். நுகத்தடியில் அகப்பட்டு அவமானப்படுவது போலவும் அதிலிருந்து அறுத்துக் கொண்டு ஓடவிளைகிறது அவளது மனம். ஆனால் குழந்தைகள் தொய்ந்து போன கயிற்றை அவ்வப்போது வந்து இழுத்து இறுக்கிவிடுவதாகப் படுகிறது அவளுக்கு.
நண் பனின் வாழ்க் கையோடு ஆசிரியர் தன் வாழ்க்கையை இழைபிரித்துப் பின், பொருத்திப் பார்ப்பதாகத் தெரிகிறது. தன் மனைவியை நண்பனின் மனைவியின் அருகே கொண்டுவந்து நிறுத்த முடியாமல் சங்கடப்படுகிறது அவரது மனம், உடைந்து போன கண்ணாடித்துண்டுகளை பொருத்தும் போது ஏற்படும் உருத்திரிவு விம்பத்தை அவரது மனம் சகித்துக் கொள்ளச் சிரமப்படுகிறது. ஒப்பிட ஒப்பிட அது விலகிவிலகிப் போக மனத்தை அரிக்கத் தொடங்குகிறது. அவர் வெளியேறிவிடுகின்றார். புறக்காட்சிகள் அவர் மனதில் ஒவ்வொன்றாகப் படர்ந்து மிகத்துல்லியமாகப் பதிய ஆரம்பிக்கின்றன. அவர் வழமையாகப் பயணம் செய்யும் அவரது ஊருக்கும் தொழில் பார்க்கும் இடத்திற்கும் இடையேயுள்ள வீதிகள், அதிலே குறுக் கறுக்கும் பருவ ஆறுகள், அதனருகே பூத்துக் குலுங்கும் மரங்கள் எல்லாம் பசுமையாகப் பதிகின்றன. மனம் சுமையாக இருக்கும் போது அதை இறக் கிவைத்து ஆசுவாசப்படுத்த இவை உதவுகின்றன அவருக்கு. இது குறுநாவலில் நீண்டுவிட்டது உண்மைதான்.
உலர்ந்துபோன தன் வாழ்க்கையை ஒட்டவைத்துக் கொள்ள கிடைத்த ஈரப்பசையாகத் தெரிகிறாள் நண்பனின் மனைவி, நண்பன், அவனது வீடு, அவனுடனான உரையாடல் எல்லாம் தான். அதில் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் போது நண்பனின் குடும் பத்தில் கவிந்திருக்கும் மெளனம், சலனமில்லாவிட்டாலும் அந்த மெளனத்தில் உறங்கிக் கிடக்கும் ‘கங்குலை' இனங்காண அவர் மனம் விழைகிறது. மெதுவாக ஊதும் போது காற்றுப்பட்டு 'தணல் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதைப் போல நண்பனின் மனைவியின் மனக் கதவு திறந்து கொள்கிறது. இதுதான் தரிசனங்கள்.
у

Page 5
அளவில், வார்த்தைகளில் தான் இதுகுறுநாவல். வார்த்தைகளுக்கிடையிலும் அதற்கப்பாலும் பெரியநாவலுக்கான தளம் விரிவடைந்து கொண்டே செல்கிறது. எங்காவது, ஏதாவது ஒரு நிறுத்துமிடத்தில் ரயில் நிற்கத்தான் வேண்டும் என்றளவில் முடித்திருக்கின்றார் நாவலை. ரயில் நின்றாலும் அவர்களின் வாழ்க்கையைப் போல் தண்டவாளங்கள் இரண்டும் சமாந்தரமாய் தொலைவில் போய்க் கொண்டிருப்பதாய் மங்கலாகத் தெரிகிறது. இரண்டையும் பந்தம்’ என்ற சங்கிலி இறுக்கமாக இழுத்துப் பிணைக்கிறது.
ஒரு சிறந்த சமூகத்தின் அத்திவாரக் கல்லாக குடும்பம் அமைகிறது. ‘கட்டற்ற ஒரு சுதந்திரத்தையே மேற்குலக சிந்தனைகள் நமக்குப் போதிக்கின்றன. ஆனால் செழுமைமிக்க நம் கீழைத்தேய கலாசாரக் கூறுகளில் குடும்பம் முக்கிய ஸ்தானத்தைப் பெறுகிறது. அது ஆரம்பத்தில் ஒரு சுதந்திர, பங்குடமை நிறுவனமாகவே தொழிற்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தின் அங்கத்தவர்களான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தமக்குள்ள பொறுப்புக்களுடன் பரஸ்பரம் மதிக்கப்பட்டு, ஏற்கப்பட்டு வாழ்ந்தனர். ஆனால் அதில் சர்வாதிகாரமும், ஜனநாயகமற்ற போக்கும் நிலவ ஆரம்பித்துள்ளதால் இன்று அந்நிறுவனம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது. அதற்குப் பின்னாலிருக்கும் கருத்தியலைக் கேள்விக்குள்ளாக்காமல் வெறுமனே நிறுவனத்தை வெறுத்தொதுக்கி அதற்கு வெளியில் தீர்வைத் தேடிய போதெல்லாம் அது சமுதாய சிதைவுக்கும் அழிவுக்குமே வழிவகுத்திருப்பதை வரலாறு பதிவுசெய்துள்ளது. நரம்புத் தளர்ச்சியும் கொடிய நோய்களும் புரையோடிப் போன அந்த புண்களைத்தான் இன்றைய தத்துவங்கள் சில கிண்டிக் கிளறிக்கொண்டு தீர்வாக முன்வைத்துவருவதையும் அவதானிக்க முடிகிறது.
ஆக, நாம் நமது நிறுவனத்தில் புகுந்துள்ள, பிழையான கருத்தியல்களால் தோன்றியுள்ள அதிகாரத்தை இருபாலாரும் சேர்ந்து நீக்கி பரஸ்பர அங்கீகாரத்துடனும் புரிதல்களுடனும் வாழ்வை துவக்கவேண்டியதே இன்றைய தேவையாகும். இதில் ஆசிரியர் தனது மற்றெல்லாப் படைப்புக்களிலும் வலியுறுத்துவதைப் போல இங்கும் குடும்பம் என்ற நிறுவனத்தை, அதன் யதார்த்த இருப்பை அங்கீகரித்து மனித ஜீவித சக்தியில் அதன் கட்டாய இருப்பை வலியுறுத்திப் போகிறார்.
இன்றைய திருமணங்களில் உடலார்ந்த, பொருள் சார்ந்த கணிப்பீடுகள்தான் மிகைத்து நிற்கின்றன. மனவொருமைப்பாடு இங்கே கருத்திற் கொள்ளப்படுவதில்லை. குடும்ப வாழ்வின் ஆதாரமாக அமைபவை பலவிருந்தாலும் அவற்றில் எல்லாம் முதன்மை பெறுவது இருமனங்களின் ஒருமைப்பாடுதான். அத்தேர்வு இல்லாத போது சிதைவுகள் தோன்றுவதை தவிர்க்கமுடியாது. அது பிரிவாகவும் பாதியில் முடிந்துவிடலாம். இதுவும் இந்நாவலில் நான் கண்ட கணிப்பாகும்.
ஆசிரியர் ஒரு மகத்தான நாவலாகவே இதைப் படைக்க எண்ணி. யிருந்தார். என்றாலும் அவரது அன்றைய நொந்துபோன வாழ்க்கையின்
w

நோவுகளின் நெருக்கடியில் அவகாசம் இருக்கவில்லைபோலும். அதைவிட காரணம் ஒன்று இருக்குமானால் ஆசிரியர் முதிர்ச்சியடையும் பருவத்தில் கயவர்கள் அவரது உடலைவிட்டும் அவரது உயிரைப் பறித்துவிட்டார்கள்.
2
நினைவின் நிழல்தான் நிலவின் நிழலாகப் படர்கிறது. நிலவைப் போல தெளிவான, வெண்மையான, அழகிய கடலோரக் கிராமிய வாழ்வை சித்தரிப்பதாகவே நிலவின் நிழல் காணப்படுகிறது. இது இற்றைக்கு சுமார் 30 ஆண்களுக்கு முன்னால் ஆசிரியர் இலக்கிய உலகில் அடியெடுத்துவைத்து இரண்டாண்டுகளுக்குப் பின் இளமைப் பருவத்தில் எழுதிய குறுநாவலாகும்.
எழுத்தாளன் தத்துவவிசாரங்களை உள்வாங்கிக் கொள்வதற்கு முன்னால் நாட்டார் - கிராமிய வாழ்வின் எளிமைகளுக்குள்ளே நின்று சிந்திக்கின்ற போது, தான் ஸ்பரிசிக்கின்ற அனுபவங்கள் பட்டவர்த்தனமாக வெளிவருவதையும் - மகா- எழுத்தாளர்களைப் போல் கருத்துலகங்களைப் பெரிதாகத் தொடமுடியாதென்பதும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மைதான். ஆனாலும் அத்தகைய கிராமிய எழுத்தாளர்கள் மகா எழுத்தாளர்களைவிட மகத்தான படைப்புக்களை கொண்டுவந்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
வாழ்க்கைக்கும் படைப்புக்குமிடையிலான இடைவெளி கிராமிய எழுத்தாளர்களின் எழுத்துக்களில் இருக்காது. வாழ்க்கையில் யதார்த்தமான, ஆனால் பார்க்கத்தவறிவிட்ட எளிய விடயங்களை அழகியலோடு இவர்கள் படைப்புக்குள்ளே கொண்டுவந்து விடுகிறார்கள். முக்குளிக்கும் இடங்களின் ஆழங்களில் வேறுபாடு இருந்தாலும் கரையில் நிற்பதாகக் கூறப்படும் இவர்களின் கையிலும் முத்துக்கிடைத்துவிடுகிறது.
சாரம் குறைந்தது, வழமையாக எல்லாரும் கையாளும் உரு, உத்திதான், என்றாலும் பேசிப் பேசி அலுத்துவிட்டாலும் பிரச்சினை யதார்த்தமாக, தீர்க்கப்படாமல் இருக்கும் போது பேசாமல் எப்படி இருக்கமுடியும். முதலாளித்துவம் படைப்புக்களில் வந்துவந்து அலுப்புத்தட்டிய கருதான். ஆனாலும் இன்று முதலாளித்துவம் ஒழிந்துவிட்டதா? இல்லை. அது இராட்சத நிறுவனங்களின் வடிவில் நம்மை விழுங்கி ஏப்பமிடப் பார்க்கிறது. யதார்த்தம் பிரச்சினையை தொடர்ந்து பேசவைப்பதைத் தடுக்க முடியாது.
நிலவின் நிழலிலும் குரோதம், பொறாமை, அதிகாரம், வன்முறை, சுரண்டல், காதல், சமரசம் எல்லாம் கருப்புப் பொட்டுப் போல் திட்டுத். திட்டாய் இன்னும் இந்த மண்ணில் இருக்கத்தான் செய்கின்றன.
கமால் நிதானமாகச் சொல்கிறான். “எங்க இரண்டுபேரையும் அவமானப்படுத்த இந்த மஜீத் செய்த சூழ்ச்சி இது." என்று மரைக்காரிடம் கூறிவிட்டு, அவன் மஜீதின் அருகில் போய் "அயோக்கிய நாயே, பொறா. மைப் பிசாசே நீதான் இந்த வேலையைச் செய்து என்னை அவமானப். படுத்தினாய்’ என்று கூறுகிறான்.

Page 6
சூழலின் அமைப்பும் சமுதாய வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது. வளங்களை ஆக்கிரமிக்கின்ற உடமை மனோபாவத்தை கடற்கரைச் சூழலில் வாழும் சமுதாயங்களில் அவதானிக்க முடியும்.
ஆசிரியர் கூறுவதைப் போல "ஆணும் பெண்ணும் இணைவது வேறு, அன்பு செலுத்துவது வேறு என்பதை அவர்கள் புரிந்து கொள்வது சுலபமானது அல்ல. ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் பற்றுதலை அவர்கள் யதார்த்த ரீதியில் நோக்கிக் கணிப்பார்கள். இதனால் இங்கெல்லாம் ஆணும் பெண்ணும் ஒன்றாகப் பழகுவதே இல்லை என்று அர்த்தமில்லை. ஆனால் இது பரம்பரை பரம்பரையாக ஊறிவிட்ட பண்பு. ஒரு நெறிக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்துவிட்ட பழக்கம். அந்த உயர்ந்த பழக்கத் தோடு பண்பாடு வளரவில்லை என்பது ஒரு பெரிய குறை. எல்லாம் வெட்டவெளிச்சமான மனோநிலைக்கு பழக்கப்பட்டுவிட்டதால் உண்மையை உணரத்தவறி. விடுகிறார்கள்’
குழந்தைகளின் மனவெழுச்சியைப் போல கிராமிய மக்களின் உணர்வோட் டங்களில் அடிக் கடி மாற்றம் ஏற்படும். முதர்நதிலை இன்மையையே இதுகாட்டும் என்பதல்ல. குழந்தையைப் போல் கிராமிய மக்களும் கள்ளங்கபடமற்ற, போலிக்குப் பழக்கப்படாதவர்கள் என்பதையே காட்டும். எனவேதான் மஜீதின் பரிதாபகரமான முடிவு கமாலின் இதயத்தை கடைசியில் உலுக்கிவிட்டதையும் சுலைமாலெவ்வையும் அப்துர் ரஹற்மானும் கடைசியில் ஒற்றுமையாகிவிட்டதையும் நாம் பார்க்கிறோம்.
மொத்தத்தில் கிராமிய வாழ்வின் அழகு சொரூபத்தை ஆசிரியர் வார்த்தைகளில் சிக்கனமாகப் பிடித்துக் கொள்ளும் கவித்துவ நடை வாசிக்க வாசிக்க தெவிட்டாத சுவையைத் தருகிறது.
3
நிலவின் நிழலில் 1968 ஆம் ஆண்டு வீரகேசரி ஜோதியில் தொடராக வெளிவந்த ஆசிரியரின் முதலாவது குறுநாவலாகும். இறுதியாக தரிசனங்கள் வீரகேசரியில் வெளிவந்து 1992 ஆம் ஆண்டு ஆசிரியரின் மரணத்தோடு அதுவும் இடையில் நின்றுவிட்டது. ஆசிரியர் உயிர்வாழும் காலத்தில் ‘புரட்சிக் குழந்தை' என்ற பெயரில் ஒரு குறுநாவல் எழுதியிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அந்நாவலையும் சேர்த்து ஒன்றாக வெளியிட வேண்டும் என்ற பேராவலுடன் தேடியும் இதுவரை எமக்குக் கிடைக்காததால் இவ்விரண்டு குறுநாவலையும் சேர்த்து வெளியிடுவதென முடிவுசெய்தோம்.
தரிசனங்களின் மூலப்பிரதியைப் பாதுகாத்து எம்மிடம் கையளித்த வை. அஹற்மதின் மருமகனான பரிசோதகர் ஏ. பி. எம். பாரூக் அவர்களுக்கும் அதைக் கணணியிலேற்றித் தந்த ரஷித் எம். முஸம்மில் அவர்களுக்கும் இதற்கான அட்டைப்படத்தை லண்டன் தமிழர் நலன்புரிச் சங்கத்தின் வெளியீடான யுகம்மாறும்' என்ற ஆண்டிதழில் வெளிவந்த அமரதாஸ்-ஈழ.
viii

கனக சபேசன் பிடித்த புகைப்படத்தைக் கொண்டே தயாரித்தோம். இதற்காக படப்பிடிப்பாளருக்கும் அதை வெளியிட்ட யுகம்மாறும் சஞ்சிகைக் குழுவுக்கும் முக்காட்டு வெளியீட்டு விழாவிற்கும் ஒத்தாசை புரிந்த வை. அஹற்மதின் பாலியகால சிநேகிதர்களான அப்துல்லாஹற் ஹாஜியார், முகாமையாளர் எம். ஏ. சலாம், ஆசிரியர் யு. அஹற்மத் ஆகியோருக்கும் ஆசிரியர் ஏ. எல். எம் அன்ஸார், அவர் ஷெய்க் எஸ். ஏ. கலிலுர் ரஹற்மான், ஆசிரியர் எச். எம். இஸ்மாஈல், சகோதரர் நுபைஸ், நிலவின் நிழலை கறையான்களோடு போராடி மீட்டெடுத்த நூருத்தினுக்கும் கூடிய விரைவில் வெளிக் கொணர உதவியவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மஹற்முத் ஆலிம் வீதி அன்புடன் வாழைச்சேனை-5 ஏ.பி.எம். இத்ரீஸ் 1999 டிசம்பர் 26

Page 7
தரிசனங்கள்

வண்டி ஒடிக்கொண்டிருந்தது. இருவரே அமரக்கூடிய இருக்கையில் மூவர் அமர்ந்து இருந்ததுசிரமத்தை உண்டாக்கிற்று. இருபக்கத்திலும் பெண்கள். அவன் நடுவில் அகப்பட்டுக் கொண்டான். அசைய முடியாமல் அவதிப்பட்டான். "ஆயர் குலக் கண்ணனைப்போல’ என்று தனக்குத்தானே தமாவுாகக் கூறிக்கொண்டு சிரித்தான். அவனோடு சேர்ந்து சிரித்தார்கள் அவ்விரு பெண்களும். ஜன்னல் ஒரத்தில் அமர்ந்திருந்த பெண் கேட்டாள்,
“சேர் இப்படி வருகிறீர்களா?நான் நடுவில் உட்காருகிறேன்!” “உங்களுக்குச் சிரமமாக இராதா?’ என்று கேட்டான் அவன். "நீங்கள் அவதிப்படுகிறீர்கள்! நாங்கள் இருவரும் பெண்கள் தாமே, சமாளித்துக் கொள்வோம்” என்றாள்.
அவர்கள் இருவரும் இடம் மாறினார்கள். அவன் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்தான். சுகமாக இருந்தது. வெளியே இருந்து வந்த காற்று முகத்தில் பட்டது. அவ்விரு பெண்களும் அருகருகே வசதியாக அமர்ந்து கொண்டனர்.
அவன் ஊருக்குப் போவதற்காகப் புறப்பட்டபோது, அவளும் கூடவே வருவதற்காகப்புறப்பட்டாள். அவளுடைய மகள் ஒருத்திபடிக்கும் ஊருக்கு அவள் செல்ல வேண்டியிருந்தது. அவனுடைய ஊரைத்தாண்டி அவள் போக இருந்ததால் வழித்துணைக்கு அவனோடு பிரயாணமானாள். அவனும் அழைத்துச் செல்வதில் ஆட்சேபனையில்லையெனக் கூறிவிட்டான்.
அவள் அவனுடைய நண்பனின் மனைவி. நண்பனின் மனைவியென்றாலும், அறிவுபூர்வமான ஒரு நட்பு அவளுடன் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. அவன் அவளுடன் பல விஷயங்கள் தொடர்பாக விவாதிப்பதுண்டு. நண்பனின் முன்னிலையிலேயே விவாதங்கள் நிகழும் அரசியல், மதநம்பிக்கைகள், பொருளாதாரம், சமூகக் கோணல்கள் என்று விவாதப் பொருள் விரிந்துபோகும். நண்பன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பான்சில வேளை குறுக்கீடு செய்து மனைவியைக் கண்டிக்கும் தோரணையில் பேசிவிடுவான். அப்போதும்கூட அவள் விட்டுக்கொடுக்காமல்பேசுவாள் அவள்மார்க்ஸிய கருத்துக்களில்மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தாள் அவனுடைய எழுத்துக்களைப் படித்த காரணத்தால், அவனும் ஒரு மார்க்ஸியவாதி என்று அவள் கருதியிருக்கக்கூடும்.
ஒருநாள் சொன்னாள்: "நீங்கள் உங்கள் நாவலில் எழுதியிருப்பதுபோல இல்லை!" "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்!” என்று அவன் கேட்டான். “உங்களிடம் நேரில் பேசும்போது, உங்களின் எழுத்துக்கும் பேச்சுக்கும் வித்தியாசம் தென்படுகிறது”
“எழுத்து வேறு பேச்சு வேறுதானே?" "ஆனால் கருத்தே மாறி இருக்கின்றது” என்பாள் அவள். "சில வேளைகளில் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் புதிது புதிதாக விஷயங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது.”

Page 8
"இன்னும் நீங்கள் சரியான மார்க்ஸிய தத்துவார்த்தக் கோட்பாட்டுக்குள் வரவில்லை!" என்பாள்.
"நான் எழுத்தாளன் சிந்தனையாளன், என்னை எந்தத் தத்துவமும் கட்டுப்படுத்தமுடியாது. எனது சுயத்தைநான் வெளிப்படுத்த விரும்பும்போதுயாரும் தடை செய்யமுடியாது.நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்!" என்பான்.
"நான் எழுத்தாளன். சிந்தனையாளன், என்னை எந்தத் தத்துவமும் கட்டுப்படுத்தமுடியாது. எனது சுயத்தைநான் வெளிப்படுத்த விரும்பும்போதுயாரும்தடை செய்யமுடியாது.நான்நானாகவே இருக்க விரும்புகிறேன், என்பான்
"மத நம்பிக்கை உங்களைவிட்டும் இன்னும் அகலவில்லை!" "என்னிடத்தில் மதநம்பிக்கை இல்லையென்று யார் சொன்னார்கள்!" "மதவாதிகளுடன் பேசவேமுடியாது!" என்று அவள் அலுத்துக்கொள்வாள்.
இப்படி அவர்களுடைய உரையாடல் போய்க் கொண்டிருக்கும். உரையாடலின் போது, சுவையான தேனீர் தயாரித்து அளிப்பாள். சிலவேளை அறுசுவையுண்டியும் கிடைக்கும். நண்பனையும் மனைவியையும் பற்றி அவன் யோசித்துப்பார்ப்பான்.நண்பன் மிக அமைதியானவன் ஆழமானவன், தெளிவான சிந்தனையுள்ளவன், மிகவும் குறைவாகவே பேசுவான். அதற்குமாறாக அவள் எப்போதும் எதைப்பற்றியாவது பேசுவாள். பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவளுக்குண்டு. அன்றாட அரசியல்,சமூகப்போக்குகளைப்பற்றிய விமர்சனங்கள், புத்தகங்கள் என்றிவ்வாறு எதையாவது ஒரு விஷயத்தை அவள் வைத்திருப்பாள்.
அவள் அவனுடையமுதன்மையானரசிகை. புதிதாக எழுதிய கதையையோ, கட்டுரையையோ அவன் அவளிடம் கொடுத்து வாசித்து அபிப்பிராயம் கேட்பான். அவளும் அலுக்காமல் சளைக்காமல் வாசித்து விமர்சிப்பாள். இது அவனுக்கு உற்சாகத்தை அளித்தது.
இந்த உற்சாகத்துக்கிடையில்நண்பனின் வாழ்க்கையில் ஏதோ ஒரு சோகம் இருப்பதை அவன் உணர்வான். அவளுடைய சுயேச்சையான போக்கு, நண்பனின் அமைதி இரண்டுக்குமிடையிலேஒருமுரண்பாடு அவனுக்குத்தென்படும். ஆனாலும் அதைப்பற்றி அவன் அவர்களிடம் கேட்டதேயில்லை. ஆனால் இன்று இந்தப் பிரயாணம் அவனுக்கு அதைப்பற்றிக்கேட்கவேண்டும்போன்ற ஒரு சூழ்நிலையைத் தோற்றுவித்திருந்தது.
அவன் இந்தச் சந்தர்ப்பத்தை அதற்குப் பயன்படுத்திக்கொண்டான். அவளுக்குப்பக்கத்தில் அமர்ந்திருந்த மற்றப் பெண் அவர்களுடைய பேச்சிற்கு இடையூறு விளைவிக்காமல்எங்கேயோ புலனைச் செலுத்திக்கொண்டிருந்தது அவனுக்கு அந்தப் பேச்சைத்தொடர வாய்ப்பாக இருந்தது.
"ரீச்சர் நீங்கள் இருவரும் ஒரு போலியான இல்வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! என்ன நான் சொல்வது சரியா?" இருப்பிடத்தை மாற்றி ஆறுதல் பெற்றுக்கொண்டிருந்த அவ்வேளையில் அவன் அப்படிக் கேட்டது அவளுக்குச்சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது.
வை. அஹ்மத் 13

“ஏன் சேர் அப்படிச் சொல்றீங்க!” என்று அவள் அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“நான் என் கண்களால் கண்டுகொண்டதைக் கேட்கிறேன்!”
“எதை வைத்துக்கொண்டு?உங்களுடைய கண்கள் எதைக் கண்டுகொண்டன?
“உங்கள் கணவர் உங்கள் போக்கில் தலையிடுவதில்லை!
"அது அவருக்கும் எனக்கும் உள்ள புரிந்துணர்வுதான்.”
'இல்லை. யாரோ ஒருவர் மற்றவர்மீது தனது எண்ணத்தையும் கருத்தையும் திணிக்க முற்பட்டுத் தோல்வியடைந்த பின் ஏற்றுக்கொண்ட ஏற்பாடு என எண்ணுகின்றேன்."
"அப்படியென்றால்.” என்று அவள் பேச முடியாமல் யோசனையில் ஆழ்ந்தாள்.
“உங்கள் சுதந்திரமான போக்கை வைத்துக்கொண்டு சொல்கிறேன்!” என்றான் அவன்.
அவள்தனதுகைக்குட்டையைண்டுத்துநான்காக மடித்தாள்ஒரு மூலையைப் பிடித்து மீண்டும் மடித்துக்கொண்டிருந்தாள். அவள் ஒன்றுமே பேசாது இவ்வாறு கைக்குட்டை விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதனால், அவள் எதையோ யோசிப்பதாக அவன் உணர்ந்தான்.
“அது என்னுடைய கருத்தோ எண்ணமோ இல்லை. அது அவருடையதுதான். அவர் தான் தோற்றுப்போனவர்” என்று குனிந்த தலைநிமிராமல் கூறினாள்.
அவன் அவளுடைய பேச்சைக் கேட்டு அசந்து போனான். அவனுடைய கணிப்பு வேறுவிதமாக இருந்தது. வண்டி ஓடிக் கொண்டிருந்தது. வேறு வண்டி பிடிப்பதற்காக இடையில் இறங்கவேண்டி ஏற்பட்டது. அடுத்த ரயில் வரும்வரை காத்திருந்தார்கள்.
“ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும்” என்றான் அவன். “எனக்குத் தண்ணிரே போதும்” என்றாள் அவள். “கென்ரீனில் சோடா இருக்கிறது, குடிக்கலாம்” என்று அவளை அழைத்துச் சென்று, சோடா வாங்கிக் கொடுத்தான். அவள் குடித்தாள். அவளுடைய முகம் தெளிவில்லாமலே இருந்தது.
வெளியே வந்து பிளட்போமில் ரயிலுக்காக காத்துக்கொண்டு நின்றனர். வெப்பம் அதிகமாக இருந்ததால்வியர்த்துக்கொட்டியது. அவன் கைக்குட்டையை எடுத்துமுகத்தை அழுத்தித்துடைத்துக்கொண்டான். பேச்சைத்தொடர்வதுஎப்படி என்று அறியாமலே,
"பிறகு?"என்று கேட்டான். "என்ன - கதையைத் தொடரச் சொல்கிறீர்களா?" என்று கேட்டாள் அவள். "அப்படிச் சொல்லவில்லையே!" என்று அவன்தடுமாறினான். அவள் கோபத்துடன் இருக்கிறாளா என்று புரிந்துகொள்ள முடியவில்லை அவனால், ஆனால் அவளுடைய முகத்தில் கோபத்தின் சாயல் இல்லை. அவள் எதையோ எண்ணிக் கவலைப்படுவதாகத் தெரிந்தது. அவன் அவ்விடத்தைவிட்டுச் சற்று அகன்று நின்றான்.
4 / தரிசனங்கள்

Page 9
அவர்கள் செல்ல வேண்டியரயில் வண்டி வந்தது. சனநெரிசல், கஷ்டப்பட்டு ஏறி நின்றுகொண்டு போவதற்கு ஓரிடத்தைப்பிடித்துக் கொண்டார்கள். வண்டி புறப்பட்டது. அவளுக்கு உட்காருவதற்கு சிறிய ஓரிடம் கிடைத்தபோதிலும், அவள் அவனுடன் சேர்ந்துநின்றாள்.
"ரீச்சர் உங்கள் மனசை நான் புண்படுத்தி விட்டேன்!” என்று அவன் மன்னிப்புக் கேட்கும் தோரணையில் சொன்னான்.
"அப்படிச் சொல்ல வேண்டாம் சேர். உங்களிடம் நான் எதையும் மறைத்து வைத்திருக்கவில்லையே. போலியாகக் கூடப் பழகவில்லை. எனது உண்மைத் தோற்றத்தை அவ்வப்போதுகாட்டியிருக்கிறேன்!" என்றாள்.
“அதனால் தான் நான் கண்டதையும், புரிந்து கொண்டதையும் வைத்து அப்படிச் சொன்னேன்"
"பத்துவருடங்களாக இந்த நிலையைநான் அனுபவித்துவருகிறேன்’ என்று வருத்தத்துடன் கூறினாள் அவள். உண்மையான வருத்தம் அவள் உள்ளத்திலிருந்து வெளிப்படுவது போன்று வார்த்தைகள் வெளிவந்தன. அவளுடைய கலகலப்பான சுபாவத்தை அப்படியே மாற்றி அமைக்கக் கூடிய ஒரு கவலையை தான் கிளறிவிட்டதாக எண்ணி அவன் வருத்தப்பட்டான்.
“இனி உங்கள் இருவருக்கும் வாழ்வதற்கு என்ன இருக்கிறது? உங்கள் பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களின் சேமத்திற்காக வேண்டியாவது வாழுங்கள்!” என்று உபதேசம் புரிந்தான்.
“பத்து வருடங்களுக்கு முன்பு இப்படி யாராவது சொல்லியிருந்தால் நான் அழுதிருப்பேன் ஆனால் இப்போது எனது மனம் மரத்து விட்டது” என்று விரக்தியுடன் கூறினாள்.
“உங்கள் உள்ளத்தைக் கிளறிவிட்டேன் போல் தெரிகிறது!’ என்றான் அவன்.
“இல்லை என்னைப் புரிந்து கொண்டு சொன்னீர்கள்! இருவரும் பிரிந்து விடுவோம் என்று அவரிடம் அப்போதே சொன்னேன்!”
“என்ன?’ என்று கேட்டு அவன் அதிர்ச்சி அடைந்தான். "அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையா?” என்று மீண்டும் கேட்டான். "அவர்தான்இந்த வாழ்க்கையைநீடிக்கச்செய்தார்’ என்று கூறினாள் அவள். “அது ஒரு குற்றம் என்று எண்ணுகிறீர்களா?"என்று கேட்டான் அவன். “அது குற்றமில்லைதான், ஆனால் அவரே அவதிப்படுகிறார்” என்றாள். “அதற்குக் காரணம் அவர் உங்களை உளமாற நேசிப்பதுதான்!” “நேசிக்கவில்லை என்று நான் கூறமாட்டேன். நான் அவரோடு முரண். படுகிறேன்.”
"அவரோடுநீங்கள்முரண்பட்டாலும், அவர் உங்களை நேசிப்பதன் காரணத் தால் அமைதியாக இருக்கிறார்”
"அதுதான் எனக்குப்பிடிக்கவில்லை.நான் முரண்படும்போது எனதுநிலை பற்றி அவர் என்னிடம் கேட்கவேண்டும். வாயைத் திறந்து இரண்டு வார்த்தைகள் பேசினால் எனக்கு ஆறுதலாக இருக்கும்."
வை. அஹ்மத் 15

அவள் தலையைக் குனிந்து கொண்டாள். கண்ணிர் விடுகிறாளா என்று பார்த்தேன்.
“இப்போது எனக்கு அழுகை கூட வருவதில்லை. எல்லாவற்றையும் தாங்கி மனம் மரத்துப் போய்விட்டது” என்று கூறினாள்.
“அதுகூட உங்களைப் பாதிக்காவிட்டாலும் அவரது உடல்நிலையைப் பாதிப்படையச் செய்யும்’ என்றான் அவன்.
"அதனால் தான் அவருக்கு இருதய நோய் வந்தது’ என்றாள். "அவர் விஷயங்களை அமுக்கி வைத்துக் கொள்கிறார். அதனால் தான் அவர் கஷ்டப்படுகிறார்.” என்றான்.
"அவருக்கு நல்ல பார்ட்னரே இல்லை. நீங்கள் எங்கள் ஊருக்கு இடம் மாறிவந்த பிறகுதான் அவர் கொஞ்சம் பேசுகிறார்”
“சிலவேளை அவரை பேச நானே தூண்டுகிறேன் என்று நினைக்கிறேன்” என்றான் அவன்.
"மனம் விட்டுப் பேசினால் துன்பம் அகலும் என்று சொல்வார்கள். நானோ அவரோ ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசமுடியாமல் இருக்கிறோம்!" என்று சொன்னாள் அவள்.
“பத்துவருடங்களுக்கு முன்பு பிரிந்துபோவதற்கு யோசிப்பதாகச் சொன்னிர்கள் உங்கள் கடைசிப் பிள்ளைக்கு இப்போது பதின்நான்கு வயதிருக்கும். இவ்வளவு காலம் வாழ்ந்த பிறகு அந்த யோசனை ஏன் வந்தது?’ என்று அவன் கேட்டான். அதன் பிறகு அவள் எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை. அவள் மெளனமாக இருந்தாள். அவளுடையமனம் கரைந்துகொண்டிருப்பது தெரிந்தது அவள் உள்ளுக்குள்ளாக அழுதுவடிந்துகொண்டிருப்பதாக உணர்ந்தான்.
'A DANGEROUS FREEDOM
அவள் காலியான ஓர் இடத்தில் உட்கார்ந்து ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினாள்.
"ஒரு அபாயகரமான சுதந்திரம்"
அவள் வாசித்துக்கொண்டிருந்த அந்த நூலின் தலைப்பை அவன்பார்த்தான். அவனுக்குத் தெரியும்படியாக அவள் புத்தகத்தைப்பிடித்துக்கொண்டிருந்தாள். புத்தகம் முகத்தை மறைத்துக் கொண்டிருந்தது. தலைப்பைப் பார்த்தவுடனேயே அவள் என்ன கருத்தோடு இருக்கிறாள்என்று அவன் புரிந்துகொள்ள முயன்றான். அவள் சுதந்திர மனபாவம் கொண்ட பெண், அந்தச் சுதந்திரம் அபாயகரமானதா? அல்லது பெண் ஒரு அபாயகரமான சுதந்திரத்தை நாடிச் செல்கிறாளா?எதுவும் புரியாமல் அவன் தடுமாறினான்.
ஆனால்,
"பெண்கள் அடுப்பூதுவதற்கு மட்டும் உரியவர்களில்லை!" என்பது அவளுடைய கருத்து. --
"பெண்கள் அடுப்பூதுவதற்கு மட்டுமல்ல, பிள்ளைகளைப் பெற்றுப் பேணி வளர்த்து, கணவனையும் போஷித்து இன்பம் காணவேண்டும்” என்பான் அவன்.
6 / தரிசனங்கள்

Page 10
"ஆண் வழிச் சமூக அமைப்பின் தத்துவமே இதுதான்' என்பாள் அவள்.
"அப்படியானால் ஆண்கள் பிள்ளை பெற முடியாதே' என்பான் அவன்.
"நீங்கள் எல்லோரும் ஒரே கருத்தைத்தான்திரும்பத்திரும்பச்சொல்வீர்கள்" என்று அவள் அலுத்துக் கொள்வாள்.
அவளுக்குச் சினிமா பார்ப்பதில் அலாதிப்பிரியம், புதிய படங்களைப் பற்றி, அதில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் பற்றி, அவர்களின் நடிப்புப்பற்றிச்சொல்வாள். சினிமாப் பாடல்கள் பற்றிக் கூறுவாள். இவனுக்கு இதிலெல்லாம் அக்கறையே இல்லை. படம் பார்க்கும் பழக்கமே இல்லை. எப்போதாவது யாரோ ஒருவரின் வற்புறுத்தலுக்காக வேண்டி, விருப்பத்தை நிறைவேற்றுவான் வேண்டி அவன் படம் பார்ப்பதுண்டு. மூன்று மணித்தியாலங்கள் ஒரே இடத்தில் குந்தியிருந்து படம் பார்ப்பதென்பது அவனுக்கு அலுப்பையூட்டும். தவிரவும், படக்கதைகளோ,நடிப்போ அவனுக்கு ஏற்றதாக அமையாதபோது வெறுப்படைவான். அவர்கள் வீட்டிலுள்ள டெலிவிஷனில் “டெக்’ எடுத்துப் புதுப்படம் போடுவார்கள். அவளுக்கும் அவளுடைய கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் விருப்பமாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் அவனையும் அழைப்பார்கள். அவர்களுடைய அன்பான அழைப்புக்காக அவன் அவர்களுடன் அமர்வான். அவன் மனமின்றி உட்காருவதைக் கண்டு,
“சேருக்கு கலாரசனையே இல்ல்ை” என்பாள்.
“கலையை இரசிக்கும் தன்மை இல்லாதிருந்தால் நான் ஒரு கலைஞனாக, எழுத்தாளனாக இருக்க முடியாது. தற்காலப் படங்களில் வரும் மட்டரகமான காட்சிகளைக் காணச் சகிக்காத காரணத்தினால்தான்நான் படம் பார்ப்பதையே வெறுக்கின்றேன்.” என்பான்.
“எல்லாப்படங்களிலும் அப்படி இல்லை. சில படங்களில்நல்லகதை, பாடல்கள் உண்டு. இதற்காக வேண்டிப்படம் பார்க்கலாம் தானே?பொழுதும் போகும்!” என்பாள்.
“நல்ல படங்கள் எவையென்று தெரியவேண்டுமே”
"அப்படியானால் நாங்கள் கலாரசனையே இல்லாமல் படம் பார்க்கின்றோம். என்கிறீர்களா?’ என்று கேட்பாள்.
“எப்படிச் சொல்லமுடியும்?உங்கள் கலாரசனை வேறு எனதுரசனை வேறு என்று மட்டும் தான் சொல்லமுடியும்" என்பான்.
அவன் வாழ்க்கையிலுள்ள அழகையும் அவலத்தையும் கண்டு ரசிக்கப் பழகிக் கொண்டவன். அவலட்சணத்திலும் அருவருப்பிலும் வாழ்க்கைத் தத்துவத்தைக் காணமுயல்பவன்.
"அடிப்படை வாழ்க்கைத் தேவையை நிறைவேற்ற முடியாதபோது எதற்காம் கலை’ என்பது அவனது கேள்வி.
அவன் கூறும் கருத்துக்கள் அவளுக்கு ஒத்துவரக் கூடியதாக இராது. சிலவேளைகளில் அவன் அவளுடன் ஒத்துக் கொள்வான். சிலவேளைகளில் மாறுபடுவான்.
வை. அஹ்மத் 17

"நீங்கள் அடிக்கடி உங்கள் கருத்துக்களிலேயே முரண்படுகிறீர்கள்!” என்று அவள் குற்றஞ்சாட்டுவாள்.
"தத்துவங்கள் எப்போதும் மாறாதிருப்பதில்லை என்பதனால், கருத்துக்கள் மாறித்தான் போகும்!”என்று அவன் சொல்வான்.
அவன் மூதூருக்கு உத்தியோக உயர்வுடன் வந்தான். இங்கு வந்து ஐந்து வருடங்கள் சென்றுவிட்டன. இந்த ஐந்து வருடங்களில் அவன் பெற்ற அனுபவங்கள் பல. சொந்த ஊரிலிருந்து வெகுதொலைவில் இல்லாவிட்டாலும், போக்குவரத்து, குடியிருப்பு வசதிகளற்ற குக்கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசத்தின் கல்வி மேம்பாட்டிற்குச் சேவைசெய்ய வேண்டியவனாக அவன் இருந்தான். ஒவ்வொரு கிராமத்துப்பாடசாலைக்கும், கால்நடையாகவும், சைக்கிள் வண்டியிலும், பஸ்வண்டியிலும் சென்று தன் பணியைச் செய்து வந்தான். சிற்றாறுகளைத் தோணியில்கடந்தான். கடல்பாதையைக் கடந்துநகரத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.
இவ்வளவுநிலமைகளிலும்,நாட்டுநிலவரம், இனச்சண்டை என்பன அவனது தொழிலுக்கு இடையூறாக அமைந்தபோதும் கூட அவன் சளைக்காமல் உழைத்தான்.
கடந்த ஐந்து வருடகால துன்ப, துயரங்களோடு கூடிய அனுபவத்துடன் ஊருக்கு இடமாற்றம் பெறுவதற்காக முயன்று கொண்டிருக்கும்போதுதான், அவனுக்கும் அந்தக் குடும்பத்திற்கும் நெருக்கம் ஏற்படலாயிற்று.
அவளுடைய கணவன் அவனது பழைய நண்பன் அவன் முதுரில் கல்லூரி ஒன்றின் அதிபனாக இருந்தான். அமைதியான சுபாவமும், ஆழமான அறிவும், அவனுடைய ஆளுமைக்கு அலாதியான பண்பைச் சேர்த்தன. கல்லூரியில் அந்த ஆளுமைக்கு எல்லாருமே கட்டுப்பட்டனர்.
இவன் பிரதேசக் கல்வி அலுவலகப் பொறுப்பதிகாரியாக இருந்தபோதிலும், இருவருடைய நட்பை எதுவும் பாதித்ததில்லை. அவன் கல்லூரியைத் திறம்பட நடத்தினான். இவன் காரியாலயத்தையும், மற்றும் பாடசாலைகளையும் நன்கு இயங்கச் செய்தான்.
ஆசிரியர்களின் அன்றாடப்பிரச்சினைகளைத் தாங்கிக் கொண்டு அவலக்குரல்எழுப்பியவண்ணம், அவனுடைய தனிப்பட்ட விலாசத்திற்கு கடிதங்கள் வரும். அவற்றை உடனுக்குடன் கவனித்து,நிவாரணமளிப்பான். எழுதுவினைஞர்களின் கோவைக்கட்டுப்பாடுகளை மீறி, மனிதப் பிரச்சினைகள் என்ற காரணத்தால், - அவனுடைய கட்டுப்பாடற்ற போக்கினால்- அவை துரிதமாக விடைபெறும்.
இவனுக்கு எல்லா வேலைகளும் அவசரமாக நடைபெறவேண்டும். இன்னும் எவ்வளவோ வேலைகள் இருக்கும் போது, மந்தகதியில் சென்றால்,
8 / தரிசனங்கள்

Page 11
எல்லாம் தாமதமாகிப் போகும் என்பது இவனுடைய கருத்து. இது எல்லோருக்கும் பொருந்துவதில்லை. சில ஆசிரியர்கள், அதிபர்கள், ஊழியர்கள் சில வேளைகளில் அவனுடன் கருத்துமுரண்பட்டுப் போவார்கள். எனினும் அவனுடைய வேகத்திற்கு ஈடுகொடுப்பதற்காக உழைப்பார்கள். சிலபேருடைய போக்கு அவனுக்குப் பிடிக்காது. நேரிலே, முகத்திலடித்தாற்போல, அவர்களுடைய குறைகளை அவன் சொல்லிவிடுவான். அதுதான் அவனிடத்திலேயுள்ள பெருங்குறை. அது அவனுக்குத் தெரியும். அதைப்பற்றி அவன் அவளிடத்திலே விவாதிப்பான்.
“நான் ஆளைப்பார்க்காமலே எனது மனதிற்பட்டதைச் சொல்லிவிடுகிறேன், அது பெரிய குறைதானே!” என்பான். سم
“அதனால்தான் கொஞ்சமாவது வேலை நடக்கிறது. ஒரு அதிகாரிக்கு இருக்கவேண்டிய பண்புதான் அது’ என்பாள்.
“எல்லா நேரத்திலும் இது சரிவராது. எல்லாரையும் அனுசரித்துநடக்க வேண்டும் ஆனால் அப்படி அனுசரித்து நடக்கிற தன்மை எனக்கு வராது’ என்பான்.
"அப்படி எல்லாரையும் திருப்திப்படுத்த,நீங்கள் ஒர் அரசியல்வாதியல்லவே' என்று கேட்பாள்.
“இந்தக் காலத்தில் அதிகாரத்துக்கு யாரும் அடங்கி நடக்க விரும்புவதில்லை. நானும் கூட அப்படித்தான்’ என்று அவன் அவளுடைய கருத்தை வெட்டிப்பேசுவான்.
"நீங்கள் அதிகாரம் காட்டுவதற்காக அப்படி நடக்கின்றீர்கள் என்று நான் எண்ணவில்லை. பிழையைக் காணும் போது சுட்டிக்காட்டுகிறீர்கள்’ என்று சொல்வாள்.
“அதிலும் ஒரு நளினம் தேவை” என்று அவன் சுட்டிக்காட்டுவான். தனக்கு அந்த நளினம் இல்லை என்பதை அவன் அவளிடத்திலே ஒப்புக்கொள்வான்.
“இவரைப் பாருங்கள் என்னதான் நடந்தாலும், சும்மா பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பார். அப்படி மனுஷன் இருக்கக்கூடாது.” என்று அவள் கூறுவாள்.
"அப்படி இருப்பதும் ஒர் அழகுதான், அமைதியாக இருந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். அதனால் நல்ல பலன் விளையும்.”
"ஆனால் தாமதமாகும். இவருடைய எல்லா வேலைகளும் இப்படித்தான் தாமதம் அடைந்தன” என்று அவள் சொல்லுவாள். அவளுடைய கணவனைப்பற்றிப் பேச்சு இவ்வாறு இடறிச் செல்லும்,
'குடும்பத்தைப்பற்றி இவருக்கு அக்கறையேயில்லை” என்று அவள் தன் கணவன் மீது குற்றப்பத்திரிகை படிப்பாள். இந்த உரையாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் அவளுடைய கணவன் இப்படிச் சொல்வான்.
"நாம் அக்கறைப்பட்டுத்தான் என்ன நடக்கும்?”
அவன் வேதாந்தம் பேசுவதாக அவள் நினைப்பாள். "எல்லாம் நடக்கிறபடி நடக்கும்! பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், பழக்கிறார்களா அல்லது விளையாடுகிறார்களா என்று தகப்பன் பார்க்கக் சு rதா"கான்று கனன்டிப்பாள் அவள்.
"கன் என்னைக் குiாம் சுமத்துகிறாய். அவர்கள் நன்றாகப்படிக்கட்டும் என்று
வை, அஹற்மத் / 9

தானே நல்ல பாடசாலையில் அவர்களை விட்டுள்ளோம். உழைக்கும் பணத்தில் அரைவாசிக்குமேல் அவர்களுக்குச் செலவிடுகின்றோம்" என்பான்.
“என்ன இருந்தாலும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கக்கூடாதா?’ என்று கேட்பாள் அவள்.
“அதற்குநீஇருக்கிறாயே!” என்பான் கணவன். "ஆம், ஆம் அது எனக்கு மட்டும்தான் பொறுப்பான விஷயம்” என்று அவள் கோபத்துடன் சொல்வாள்.
“எல்லாரும் வயதுவந்த பிள்ளைகள். உணர்ந்து படிப்பார்கள், நாம் படித்த" காலத்தில் நமக்கு இப்படி ஆலோசனை கூறியவர்கள் யார்? விட்டுவிடுங்கள் விவாதத்தை’ என்று கூறி, அவர்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பான், இவன்.
அன்று காலையில் அவள் கற்பிக்கும் பாடசாலைக்கு அவன் சென்றான். அதிபர் காரியாலயத்தில் மும்முரமாக ஏதொவொரு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
காலை எட்டு மணியாகிவிட்டிருந்தது. “எல்லா ஆசிரியர்களும் வந்துவிட்டார்களா?’ என்று அவன் கேட்டான். “இன்னும் சிலர் வரவேண்டியுள்ளது' என்று கூறியபடி அதிபர் ஆசிரியர்களின் வரவு பதியும் ஏட்டை அவனிடத்தில் சமர்ப்பித்தார். அன்று அந்தவேளைவரை சமுகந்தராத ஆசிரியர்கள்யார் யாரெனக் கேட்டு அவர்களின் பெயர்களை அவன் எழுதிக்கொண்டான். இரு ஆசிரியர்கள் அதன் பின்னர் வந்து கையொப்பமிட்டுச் சென்றனர். எட்டரை மணிக்கு அவள் வந்தாள். அந்த நேரத்தில் அங்கு அவனைக்கண்டதும் அவள் அதிர்ச்சியுற்றவளாகக் காணப்பட்டாள். அவன் அவளிடம் பிந்திவந்ததற்கான காரணம் எதுவும் கேட்கவில்லை. அதிபரும் பேசாமல் இருந்தார். அவள் தான் வந்த நேரத்தைப் பதிந்து விட்டு வகுப்பறைக்குச் சென்றுவிட்டாள்.
அதிபருடன் அவன் வேறுவிடயங்கள் பற்றிப் பேசினான். சற்று நேரத்திற்கெல்லாம் அவள் காரியாலய அறைக்கு வந்தாள்.
“சேர்’ என்று அழைத்துத் தயங்கினாள். அவன் அவளை ஏறெடுத்துப்பார்த்தான். "நான் இன்று காலையில்தான் லோஞ்சில் வந்தேன். நேரம் சென்றுவிட்டது. நான் பிந்தி வந்தது எனக்கு ஒருமாதிரியாக இருக்கு” என்று மன்னிப்புக் கேட்கும் தோரணையில் அவள் பேசினாள்.
"பரவாயில்லை” என்றுமுகத்தில் எவ்வித சலனமுமின்றிக் கூறினான். “இன்றைக்கு நான் லிவு போடலாம் என்று எண்ணுகிறேன்” என்றாள். "அவசியமில்லை, உங்கள் வேலையைக் கவனியுங்கள்.” என்று கூறினான். அவனுடைய அபிப்பிராயத்தை அதிபரும் ஏற்றுக்கொண்டு, அவளை வகுப்புக்குச் சென்று படிப்பிக்குமாறுபணித்தார்.
அவள் வகுப்புக்குச் சென்றுவிட்டாள். அவள் வகுப்புக்குச் சென்ற சிறிதுநேரத்தில் அதிபரிடம் கூறிவிட்டு, அவனும் அவளுடைய வகுப்பிற்குச் சென்றான்.
10 / தரிசனங்கள்

Page 12
"ரீச்சர்நீங்கள் நடந்து கொள்ளும் விதம் எனக்குப்பிடிக்கவில்லை. அதனால் உங்களோடு பேசுவதில்லையென்று எண்ணியிருந்தேன்’ என்று வகுப்பறையினுள் நுளைந்ததும் அவளிடம் கூறினான்.
“ஏன் சேர் எதைப் பற்றிச் சொல்றீங்க” என்று அவள் கேட்டாள். அவள் கரும்பலகையில், படிப்பித்ததற்கடையாளமாக கணக்குகள் எழுதியிருந்தாள். அவற்றைப்பார்த்தவாறே அவன் சொன்னான்.
"நான் உங்களது சொந்த வாழ்க்கையில் அவ்வளவாக குறுக்கிட விரும்பவில்லை. என்றாலும் சிலவிஷயங்களை உங்களுக்குச் சொல்லாமலும் இருக்க முடியாது. நீங்கள் நேற்றுரவுனுக்குப் போனீர்கள், ஏன் உடனே திரும்பவில்லை?” என்று கேட்டான்.
“நேரம் போய் விட்டது. எனது தோழி ஒருத்தியைப் பார்க்கப்போனேன். அவர்கள் என்னை இரவு நிற்பாட்டிப்போட்டார்கள்’ என்று சிறு குழந்தையைப் போல, பயத்தோடு கூறினாள்.
“உங்களுக்கு எவ்விதப் பொறுப்புணர்ச்சியுமில்லை. என்று எண்ணுகின்றேன். வீட்டில் வயதுவந்த பிள்ளைகளும் உங்கள் கணவரும், நேற்று நீங்கள் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் தெரியுமா?’ என்று கேட்டான்.
“ஏன் சேர் அவர்கள் உங்களிடம் ஏதாவது சொன்னார்களா?’ என்று தயக்கத்துடன் கேட்டார்.
“இல்லை. அவர்கள் என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனாலும் எனக்கு மனம் கேட்கவில்லை. அவர் என்னிடம் எதுவும் சொல்லாவிட்டாலும், அவர் மனதில் நிறைய விஷயங்களை வைத்திருக்கிறார் என்று எண்ணுகிறேன்.”
“எதையாவது சொன்னால்தான் போதுமே. அவர் ஒன்றுமே பேசாமல் இருப்பதுதான் எனக்குப்பயம்’ என்று கூறிவிட்டுத்தலையைக் குனிந்து கொண்டாள். "ஆனால் பயந்த ஒரு பெண்ணின் செயலைப் போல இது எனக்குப்படவில்லை” என்று சொன்னான். அவனுடைய குரலில் சிறிது கண்டிப்புத்துலங்கியது.
'தவறுதான்’ என்று ஒத்துக்கொண்டாள். "நான் வருகிறேன்” என்று அவன் கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றான்.
அன்று பின்னேரம் அவர்களுடைய வீட்டுக்குச் சென்றான். நேற்று இருந்த சூழ்நிலை மாறியிருந்தது. அவள் வீட்டு வேலைகளைத் துரிதமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் அவரவர் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர். அவன் அவளுடைய கணவனுடன் பேசிக்கொண்டிருந்தான். அவள் அவ்விருவருக்கும் தேனீர் கொண்டுவந்து கொடுத்தாள். "இவர்கள் இவ்வளவு சந்தோஷமாக இருக்கும் போது, இடையில் நாம் ஏன் குறுக்கிடவேண்டும். ஏதோ ஒருவரையொருவர் புரிந்து கொண்ட காரணத்தினால்தான், இவர்கள், ஒருவர் மற்றவரைத் தவறாக எடைபோடாமல் இருக்கின்றனர். காலையில் அவளைக் கண்டித்தது தனது தவறுதான்!” என்று அவன் எண்ணிக்கொண்டான். அவளுடைய கணவன், அவனுக்குச் “செஸ்’ விளையாடுவதற்குக் கற்றுக்கொடுத்தான். இருவரும் விளையாடிக்கொண்டிருந்தனர். இடையில், அடுப்படி வேலையை விட்டுவிட்டு, இருவரது விளையாட்டையும் கவனிக்க வந்த அவள்,
வை. அஹ்மத் / 11

“சேர் விளையாடத்தெரியாது என்று கூறினீர்கள், இப்போது நன்றாகப்படையைநகர்த்துகிறீர்கள்” என்று பாராட்டினாள். சிலவேளையில் அவனுக்கு ஆலோசனையும் கூறினாள். கணவன்பக்கமும்நின்று சில படைப்பிரிவு களை நகர்த்துவதற்கு உதவியும் செய்தாள். நேரம் போனது தெரியவில்லை. மாலையாகி, இரவுமாகிவிடவே, அவன் எழுந்தான்.
“சாப்பாடாகிவிட்டது, சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள் சேர்” என்றாள். மறுக்கமுடியாமல் அவன் அன்று இரவுச் சாப்பாட்டை அங்கே சாப்பிட வேண்டிய ஏற்பட்டது. சாப்பிடும்போது நன்றாக உபசரித்தாள். இறைச்சி பொரித்து வைத்திருந்தாள். மீன் குழம்பு, கீரைக்கறி என்று ஏகப்பட்ட உணவுப்பண்டங்கள் இருந்தன. அவனுக்கு விருப்பமானது கீரைக்கறியும், பொரியலும் என்பது அவளுக்குத் தெரியும்.
“பொரியல் உங்களுக்கு இல்லை. அதுசேருக்குத்தான்’ என்றாள். “ஏன் நான் சாப்பிடக்கூடாதா?’ என்று அவள் கணவன் கேட்டான். “இல்லை. அது உங்களுக்குச் சரிவராது, இறைச்சியில் கொழுப்பு, தவிரவும் தேங்காயெண்ணெய்யில் பொரித்திருக்கிறேன்’ என்றாள்.
“இப்படித்தான் எனக்கு எல்லாச் சாப்பாட்டிலும் கட்டுப்பாடு” என்று அவன் கூறிவிட்டுச் சிரித்தான். -
"இரத்தத்தில் கொழுப்புச் சேர்ந்தால் பிரஷர் கூடிவிடும். அதனால் தான் கட்டுப்பாடு” என்றாள்.
“அவரை நீங்கள் நன்றாகக் கவனித்துவருகிறீர்கள்” என்று இவன் இரட்டை அர்த்தத்துடன் கூறினான். அவள் முகம் சிறிது சுண்டிவிட்டது. தன்னை குற்றம் சுமத்துவதாக எண்ணியிருக்கக்கூடும்.
“இல்லை சேர், இவருக்குச் சாப்பாட்டில் கட்டுப்பாடில்லை. எல்லாவற்றையும் சொல்லவேண்டியுள்ளது” என்றாள்.
“சரிதான்’ என்றான் அவள் கணவன். இப்படியான ஒரு குடும்பத்திற்குதான் ஆலோசனை சொல்ல வேண்டியதில்லையென்று இவன் எண்ணிக்கொண்டான்.
புகையிரதம் படுவேகமாக ஒடிக்கொண்டிருந்தது. அவன் பழைய விஷயங்களை அசைபோட்டுக்கொண்டிருந்தான்.
"சேர் அன்று ஒரு இரவு எனது தோழியின் வீட்டில் நான் தங்கிவிட்டு வந்ததைப்பற்றிக் குறைப்பட்டீர்கள். இப்போது பாருங்கள், அவர் பார்க்கவேண்டிய வேலைக்காக நான் உங்களுடன் வருகிறேன். என்னுடையபிள்ளைகளின்படிப்பை நான் கவனிக்காவிட்டால், அவர் கவனிப்பார் என்று எண்ணுகிறீர்களா?" என்று அவள் இப்போது இவனிடம் கேட்டாள். அவளுடைய கண்கள் கலங்கி இருந்தன. “அதற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை' என்று அவன் சொன்னான். “இப்படித் தட்டிக்கழிப்பதால்தான், எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போகிறது. சிலவேளைகளில் என்னிஷ்டப்படி நடக்க முற்படுகிறேன். எனது போக்குச் சிலருக்கு விபரீதமாகப்படுகிறது” என்றாள்.
"குடும்பப்பாரத்தை இருவருந்தான் சுமக்கவேண்டும்' என்றான் அவன். "ஆனால் எல்லாப்பாரமும் என் தலையில் விழுவதை நான் விரும்பவில்லை, சுதந்திரமாக வாழவேவிரும்புகிறேன்” என்றாள்.
12 / தரிசனங்கள்

Page 13
“உங்களிடமுள்ள பொருளாதாரப்பாதுகாப்பு இப்படி உங்களைத் துண்டுகிறது” என்றான் இவன்.
“நான்பார்க்கும் உத்தியோகத்தைத்தானே கூறுகிறீர்கள், அதுகூட எனக்கு விருப்பமில்லை. தொழில் இல்லாவிட்டாலும், பணம் இல்லாவிட்டாலும் எப்படியாவது வாழத்தானே வேணும்” என்றாள் உறுதியாக அவள்.
ஒடிக்கொண்டிருந்த புகையிரதத்தின் ஜன்னலூடே அவன் வெளியே பார்த்தான். அழகிய காட்சிகள் விரைவாகத் தோன்றி மறைந்துகொண்டிருந்தன.
மிக அண்மைக்காலமாக நண்பனின் வீட்டாரோடு அவன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பு அவனுக்கு ஆறுதலளித்தது. அரசியல்பழிவாங்கல் காரணமாக ஊரைவிட்டுவந்த அவனுடைய கடந்த பத்தாண்டுகால வாழ்க்கை பல வழிகளிலும் இருள்படிந்ததாகவே போய்விட்டது.
வீட்டைவிட்டுத் தூரஇடத்தில் கடமை பார்க்க வேண்டியேற்பட்டதால், சொந்தக் குடும்பத்தோடுள்ள நெருக்கம் குறைந்து விட்டது. இதனால் அவனை மீறிய சில கஷ்டங்கள் அவனது தொண்டைக்குழியை இறுக்கத் தொடங்கின. அந்த அவலங்களினால் மனம் நொந்து வேதனையோடு முறுகிக்கொண்டிருந்த அவன், அந்த வீட்டிற்கு அடிக்கடி செல்லவேண்டி ஏற்பட்டது. தன்னை மறந்து, ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றி விவாதிக்க, தனக்குக் கிடைத்த ஓர் அரும் வாய்ப்பாக அவனது நண்பனின் மனைவி கிடைத்தாள். மனம் ஒரு மூலையில் புகைந்து, புகைந்து எரிந்துகொண்டிருந்தாலும், அந்தத்தீஉடம்புமுழுவதும் பற்றிப் பிடித்துவிடாமல், அவளது பேச்சு அவனுக்கு இதமளித்தது.
அவன் தனது குடும்ப வாழ்க்கையைப் பற்றி யாரிடமும் எதுவும் கூறாமலே குமைந்துகொண்டிருந்தான். அவனுக்குநான்கு பிள்ளைகள் இருந்தார்கள். இரண்டு பெண்களும், இரண்டு ஆண்களும். கடந்த பத்தாண்டுகளில் அவர்களுடைய கல்வி வளர்ச்சி பற்றியோ, அவர்களது உளவளர்ச்சிபற்றியோ அவ்வளவாக அவனால் கவனம் செலுத்த முடியவில்லை. மூத்த மகள் பாடசாலையில் சேர்ந்த ஆண்டே அவனை ஊரைவிட்டு மாற்றினார்கள். இந்தக்கால அவல வாழ்க்கையைப்பற்றி அவன் தனது குறிப்பேட்டில் இவ்வாறு எழுதியிருந்தான்.
இன்றைக்கு ஒரு பத்துவருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு குறிப்பு இது:-
"இவ்வாண்டு இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், முற்போக்குச் சிந்தனையாளர்கட்கும்புத்திஜீவிகளுக்கும் பேரிடியாக அமைந்துவிட்டது. நாட்டில் சிறிது காலம் அராஜகம் தலைவிரித்தாடியது. அரசியல் பழிவாங்கல் உச்சகட்டத்தை அடைந்து விட்டது.
சமூகத்தின் படித்தவர்க்கமான ஆசிரியர்களாகிய எமது நிலையோ படுமோசமாக அமைந்துவிட்டது. எமது சகாக்களாலேயே நாம் பழிவாங்கப்படுகிறோம். செய்யாத குற்றத்திற்காக, நாம் உள்ளுர் அரசியல் பிரமுகர்களால்
வை. அஹற்மத் / 13

துரஇடங்களுக்கு மாற்றப்படுகிறோம். சகநண்பர்களே பெயர்ப்பட்டியல்களைத் தயாரித்து, கழுதைச்சவாரிசெய்யவும், குடிநீரில்லாத இடத்தில் குடியிருக்கவும் செய்துவிட்டார்கள். ஏதோ எமது நல்லகாலம், நாம் இன்னும் மனிதர்களாகவே வாழ்கிறோம்.
அன்று தொட்ட துன்பம் இன்னும் எம்மை விட்டகலவில்லை. பொருளாதாரம், மனநிம்மதி, எல்லாவற்றிலுமே பெரும் விழுக்காடு ஏற்பட்டுவிட்டது. இந்த நிலைமையில் தொழிலை விட்டுவிடமுடியாமல் அதனோடு ஒட்டிக்கொண்டு, சொந்த ஊருக்கும், வேலை செய்யும் இடத்துக்குமாக அலையவேண்டியுள்ளது. இப்படிக் காலம் கழிவதால், எம்முள் இருக்கும் இலக்கியப்படைப்பாளி உறங்கித்தான் போவான்!
"வாழ்க்கையே போராட்டமாக மாறி இருக்கும்போது எழுத்து என்ன வேண்டி இருக்கிறது?’
இவ்வாறு ஆரம்பித்த இக்கால வாழ்க்கையில், கஷ்டங்களும் துயரங்களும் எண்ணிலடங்காத வகையில் தொடர்ந்த போதிலும், அவனுடைய இல்வாழ்க்கை இடரற்றுத்தான் இருந்தது.
அந்த ஒரு பதினாறு வருடகால இல்வாழ்க்கையைப்பற்றி எண்ணும்போது அவன் உண்மையிலேயே சந்தோஷப் பட்டவனாகவே இருக்கிறான். ஊரோடு இருந்தபோதும், ஊரைவிட்டுத் தூர இடத்தில் கடமையாற்றியபோதும் குடும்ப வாழ்க்கையொன்றே அவனைத்திருப்திப்படுத்தியது. அவனுடைய மனைவி அந்த நாட்களில் அவனுக்கு எழுதிய கடிதங்கள் சில இன்னும் அவனது டயரிகளுக்குள் இருக்கின்றன. அவள் எழுதும் கடிதங்களின் முடிவில் “உங்கள் ஆருயிர்’ என்று எழுதியிருப்பாள்.
உண்மையில் அவனுடைய மனைவி அவனுடைய அரிய உயிராகத் தான் எப்போதும் இருந்தாள். அவளுடைய அழகு, அரிய குணங்கள், இவையெல்லாம் அவனுக்குப் பெருமை அளித்தவை. ஆசிரியத் தொழிலில் முன்னேற்றம், பதவி. யுயர்வு எல்லாம் அவனை அடைந்தன. இதுவெல்லாம் தன்னுடைய மனைவியின் நல்ல பண்பினாலும், உதவியினாலும் கிடைக்கின்றன என்று அவன் அடிக்கடி எண்ணிப் பெருமைப்படுவான்.
அரசியல் பழிவாங்கல் காலத்தில் நான்கு வருடகாலம் உதவி ஆசிரியனாகக் கடமையாற்றினான்.பின்னர் உயர் கல்விக்காகப்பல்கலைக்கழகம் சென்றான். உயர்தராதரம் பெற்ற கையோடு பதவியுயர்வும் கிடைத்தது. மன மகிழ்ச்சியோடு அதனை ஏற்றுச் சென்றான். அரசியல் பழிவாங்கியவர்களே ஆச்சரியப்படும்படியாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது. இதுவும், தனது மனைவியின் பிரார்த்தனையினாலேயே ஏற்பட்டது என்று எண்ணினான். இந்தக் காலத்தில், அவன் கடமையாற்றிய இடத்தைப்பற்றி பட்ட கஷ்டங்களைப் பற்றி தனது குறிப்பேட்டில் எழுதியிருக்கிறான்.
இந்த வருடம் எனக்குள் பதவியுயர்வு கிடைத்துள்ளது. சுற்றுவட்டாரக் கல்வியதிகாரியாகக் கடமையேற்றுள்ளேன்.
நிறைய எழுதலாம் என்றும், இந்தத் தொழிலில் அதற்கேற்ற நேரம்கிடைக்கும் என்றும் எண்ணுகிறேன்’
14 / தரிசனங்கள்

Page 14
ஆனால் அது செயல்மூலம் பெறவேயில்லை. பள்ளிக்கூடங்கள், அலுவலகம், வீடு என்ற முக்கோணப்பாய்ச்சலில் காலம் கடந்து சென்றது. அதனால் ஒருவிதமான அலுப்பு ஏற்பட்டது.
நான் அலுவல் பார்க்குமிடத்திற்கும், எனது சொந்த ஊருக்கும் இடைத்துரம் நாற்பத்தைந்து மைல்களே. இந்தத் தொலைவு போக்குவரத்துக்கு மிகவும் மனோரம்மியமான சூழலைக்கொண்டது. வீதியின் இருமருங்கும் பசுஞ்சோலைகளையும், அழகியநதியையும் கொண்டது. இந்தக் காட்சிகள்பிரயாண அலுப்பையே ஏற்படாது செய்யும் இயற்கையின்எழிலை அனுபவித்தவாறு பிரயாணம் செய்யலாம்.
பனிச்சங்கேணி ஆற்றின் மேலாகப் போடப்பட்டுள்ள பாலம், அழகான அமைப்புடையது. அப்பாலத்தைக் கடந்து சென்றால், வெருகல் கங்கையில் நீரில் மிதந்து செல்லும் பாதையில், பஸ்வண்டியும் பிரயாணிகளும் ஏற்றப்படுவார்கள். குளுகுளுவென்று வீசும் காற்றின்சுகத்தை அனுபவித்தவாறு அக்கரை செல்லலாம். மீண்டும் பிரயாணம் தொடரும். சிறிதுதுரம் சென்றபின், கிளிவெட்டித்துறை வரும். இங்கும் மிதக்கும் பாதையில் பிரயாணம் அலுப்பே இருக்காது.
வெருகல்துறை, கிளிவெட்டித்துறை, என்று சென்று, மூதூரை அடைந்தான் அவன். அங்கு சென்று கடமையாற்றியது போதாதென்று, இறால்குழி என்னுமிடத்தில் மகாவலியைக்கடந்து, கங்கைத்துறை, முறிஞ்சாறு, உப்பாறு என்னும் துறைகளைத் தோணிமூலம் கடந்துசென்று, கிண்ணியாவின் மூலைமுடுக்குகளிலெல்லாம், கால்நடையாகவும், சைக்கிளிலும் சென்று பணியாற்றினான். முறையான போக்குவரத்துவசதியில்லாத போதிலும், கஷ்டங்களை அனுபவித்த போதிலும், வேலைப்பழுவாகத் தெரிவதில்லை.
மாவட்டக்கல்வி அலுவலகம், கடல் கடந்து சென்றபோது பார்க்கவேண்டிய இடத்திலிருந்து, படகுப்பிரயாணத்தில் குமுறிவரும் கடல் அலைகளினால் பட்டு கவிழ்ந்துவிடுமோ என்று அஞ்சுமளவிற்கு இருக்கும். கடற்பிரயாணத்தை விட்டால் அறுபது மைல் காடடர்ந்த பிரதேசத்திற்கு ஊடாக திருகோணமலையை அடையவேண்டியிருந்தது.
இந்த நிலமை வெகுவிரைவிலேயே முற்றுப்பெற்றது.
வெருகல், கிளிவெட்டிப்பாதைகள் மூடப்பட்டன. கிளிவெட்டிப்படுகொலைகள் காரணமாக தமிழ், சிங்கள மக்கள் இடம் பெயர்ந்தனர். மக்கள் குடியிருப்புக்கள் காடடர்ந்துதுர்ந்துபோயின. முதுரர் வெருகல் வீதி, போக்குவரத்துக்கு பயங்கரமானநிலையை அடைந்தது. அல்லைக் கந்தளாய்பாதையில் போவதென்பது நினைத்துப் பார்க்க முடியாதது. மக்களின் துயரம் எவ்வளவு என்று அளவிட்டுக் கூறமுடியாது. ஊரிலிருந்துமுதுருக்கு வருவதற்கு நூறுமைல்களுக்கு மேல் சுற்ற வேண்டி ஏற்பட்டது. புகைவண்டிமூலம் திருகோணமலையை அடைந்து கடல்வழிமூலம் முதுரருக்குச் சென்றான். அதுவும் தடைப்பட்டது. பிரதான வீதியினுடாக வரும் பஸ்வண்டிப்பிரயாணம் தொடர்ந்தபோது வழியிலிருந்த இராணுவத்தடை முகாம்களில் வரிசைக்கு நின்று பரிசோதனைக்குள்ளாகவேண்டி ஏற்பட்டது. இராணுவத்தின் கெடுபிடிகளும், கேலிப்பேச்சும், பொறுமையைச் சோதித்தன.
வை. அஹ்மத் / 15

இந்தக் காலத்தில் அவன் அனுபவித்த துயரங்களும் துன்பங்களும் ஒரு மகத்தான நாவலுக்குரிய விஷயங்களாகும் என்று அவன் எண்ணுவதுண்டு. இராப்பகலாக வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கின. மக்களின் அவலக்குரல் ஈரற்குலையைநடுங்கச்செய்தது. இத்தகைய பெருந்துயரங்களுக்கு மத்தியிலும் வாழ்க்கை ஒடிக்கொண்டிருந்தது. உள்ளத்தை உலுக்கிய படுகொலைகள் வேதனையை அளித்தன. மல்லிகைத்திவு-பெருவெளி அகதிகள் முகாமுக்குள் இந்தப்படுகொலைகள் இடம்பெற்றன. அதேநேரத்தில், சேருவாவிலை சென்ற இராணுவத்தினர் பொறிக்கண்ணிவெடிக்குள் அகப்பட்டுசின்னாபின்னப்பட்டனர். இப்படிப்பல துன்பநிகழ்ச்சிகள்
இந்த நிகழ்ச்சிகளோடுதான் அவனுடைய வாழ்க்கையிலும், விதியின் கரங்கள் விளையாடத் தொடங்கின.
மனைவி பிள்ளைகள் என்று பறந்து திரிந்தவன் மனதிலே இனம் புரியாத பழுவொன்று ஏறிக்கொண்டது. அழகு குடியிருந்த இடத்தில் அவலட்சணம் அரியாசனம் ஏறிற்று. அன்பு காட்டிய முகத்தில் எரிதழல் எரிந்தது. அவனுடைய அன்பு மனைவி, அவனுக்கு எல்லாவற்றிலும் மேலானதுயரத்தை அளிக்கத் தொடங்கினாள்.
ஐந்து வருடங்களுக்கு முன்புநிகழ்ந்த அந்தச் சம்பவம் இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது.
அவனது வீட்டில் கடந்த சில மாதங்களாகவே ஏற்பட்டுவந்த மாற்றங்கள், அவனைத்துயரத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தன. மனைவியிடம் வாய்திறந்து அந்த மாற்றங்களுக்கான காரணத்தைக் கேட்கமுடியாமல் தவித்தான் அவன். வேலைக்குப் போனாலும் வீட்டுநினைவே அவனைச் சூழ்ந்துகொண்டது. பதினாறு வருட இல்வாழ்க்கைக் காலத்தில் அரைவாசிக்காலம் அவன் வீட்டை விட்டு வெளியேதான் கழித்திருந்தான். திருமணம் முடித்த பின்னரே உயர்கல்விக்காக பல்கலைக்கழகம் சென்றான். அந்தக்காலத்தில் அவன் கண்டியில் படிப்பித்துக்கொண்டிருந்தான். வார இறுதியில் விட்டுக்கு ஓடிவந்துவிடுவான். அவன் ஒரு வாரம் வரவில்லையென்றால், ஏன் வரவில்லையென்று கேட்டுக் கடிதம் எழுதுவாள்!
அவளை விட்டுப்பிரிந்து வாழ முடியாமல் அவனும், அவனை விட்டுப்பிரிந்து இருக்கமுடியாமல் அவளும் தவித்துப் போனது உண்டு. ஊரில் கடமையாற்றிய காலங்களில் அவனைவிட்டு, அவள் சாப்பிடுவதுமில்லை, துரங்கப்போவதுமில்லை. அரசியல் பழிவாங்கல் காலத்தில் ஆரம்பத்திலும் இவ்வாறுதான் அவள் நடந்துகொண்டாள்.
பதவிஉயர்வுகிடைத்துமுதுருக்குச்சென்ற காலத்திலும் எவ்விதமாற்றமும் நிகழவில்லை.
அவள் காட்டிய அன்புக்கு நிகராக இன்றும் எவராலும் அவன் அன்பு செலுத்தப்படவில்லையென்பதை நினைத்துப்பார்க்கின்றான்.
முதுரரில் கடமையாற்றிய நாட்களில் வார இறுதியில் ஊருக்கு வந்து மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பான்.அவர்களுடைய தேவைகளைக் குறைவின்றிநிறைவேற்றிவந்தான். வீட்டில் சந்தோஷத்துக்கு குறைவின்றி இருந்தது. ஆனால் திடீரென வீட்டில் ஒரு மாற்றம்
16 / தரிசனங்கள்

Page 15
நிகழ்ந்துகொண்டிருந்தது. அந்த மாற்றத்தை அறியமுடியாமல் போகவே, அவன், அவளிடம் எதுவும் கேட்கத் தோன்றாமல் வேதனைப்பட்டான். இந்த வேதனை அவளுக்குப்புரிந்திருக்க வேண்டும்!அதற்கு மறுமொழி ஒருநாள் கிடைத்தது.
முதுரில்நண்பனின் வீட்டில் மதியபோசனத்திற்காக அவன் அழைக்கப்பட். டிருந்தான். அந்த வீட்டுக்கு அன்று வேறு ஒரு நண்பரும் அழைக்கப்பட்டிருந்தார். அந்த நண்பரோடு இவன் பேசிக்கொண்டிருந்தபோது, நண்பகல் சரியாக ஒரு மணியை அவனுடைய கைக்கடிகாரம் காட்டிக்கொண்டிருந்தது. அது ஒர் உயர்தர மான கடிகாரம், ஆனால் அது அதற்குப் பிறகு அசையவே இல்லை. எவ்வளவோ அவன்முயற்சிசெய்து பார்த்தான். அதற்கு என்னநடந்துவிட்டது என்று அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்தக் கைக்கடிகாரத்தின் முட்கள் ஒருபோதும் இடம்பெயரவேஇல்லை. அந்தச்சம்பவம் ஒரு முன்னறிவிப்புப்போலநடந்துவிட்டது. அவனுக்கு அன்றைய விருந்து விருந்தாகப்படவில்லை. அவசரமாக ஊருக்குப் புறப்பட வேண்டும் என்று அவன் எண்ணினான்.
அடுத்தநாள், அவன் ஊருக்கு அவசரமாக வந்து சேர்ந்தான். வீட்டில் அவனுக்குப்பேரதிர்ச்சிகாத்திருந்தது. அவனுடைய மனைவி, பிள்ளைகளையும், வீட்டையும விட்டு, அவளுடைய சகோதரனின் கொழும்பு வீட்டுக்குச் சென்று விட்டாள் என்பது தெரியவந்தது. அவள் ஏன் சென்றாள் என்று ஒருவருக்கும் தெரியவில்லை. பிள்ளைகள் பாடசாலைக்குப் போய்விட்டு வந்திருந்தார்கள். முத்தமகளிடம் அவன் கேட்டான்.
“உம்மா ஏன் போனா? உனக்குத் தெரியுமா?"
பிள்ளைகளுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அவன் தன் அலுவலக அறைக்குச் சென்று, மேசைக்கு முன்னால் நின்றபோது, மேசை மீதிருந்த ஒரு கடிதம் அவன் கவனத்தைக் கவர்ந்தது. அவள் அவனுக்கு எழுதிய கடிதம் அது.
“இன்று நீங்கள் எப்படியும் ஊருக்கு வருவீர்கள் என்று எனக்குத் தெரியும், இனியும் உங்களோடு என்னால் வாழமுடியாதிருக்கின்றேன். என்னைத்தேடிவர வேண்டாம். பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழுங்கள்” என்று அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவளால் இனி ஏன் என்னோடு வாழமுடியாது?இந்தக் கேள்விக்கு அவனால் இன்று கூட மறுமொழிபெறமுடியவில்லை. ஆயினும் அவள்தான் அந்த மறுமொழி
சொல்லாமல் கொள்ளாமல் கொழும்புக்குச் சென்றுவிட்டவளை அழைத்து வரவேண்டியதில்லையென்றுதான் எண்ணினான். நான்கு குழந்தைகளின் மனம் பாதிக்கப்பட்டுவிடுமே என்று அவனுக்குப்பட்டது. குடும்பத்தார்களும் அவனை
வற்புறுத்தினார்கள்.
அவள் வீட்டை விட்டுச் சென்ற காரணத்தை அறிய முயற்சிக்காமலே, கொழும்புக்குப் போய் அவளை அழைத்துவந்தான். அதன்பிறகு வாழ்க்கை நரக வாசலுக்கு வந்து விட்ட்து. பலவிதமான கேள்விகள் அவன் மனதை அரிக்கத் தொடங்கிவிட்டன.அதற்கு ஓர் உச்சகட்டம் ஏற்படும் என்று அவன் எண்ணியது வை, அஹ்மத் / 17

போலவே, ஒரு நாள் அது நிகழ்ந்துவிட்டது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகும் அவளோடு அவன் மூன்று வருடங்கள் காலம் கழித்தான். பதினாறு வருடகாலம் அனுபவித்த இன்பம், மகிழ்ச்சி, காதல், அன்பு எல்லாம் அந்த மூன்று வருட காலத்தில் பொய்யாய், பெருங்கனவாக மாறிவிட்டது. அப்படியொரு வாழ்க்கையை தான் அனுபவித்ததாக அவனால் எண்ணமுடியவில்லை. அவன் மனைவி தன்னுடைய அருங்குணங்களை,தன் அழகுக்கு விலைபேசிவிட்டாள். அன்பையும் பாசத்தையும கொட்டி வளர்க்க வேண்டியபிள்ளைகளைதான்பத்துமாதம் சுமந்து, வேதனைப்பட்டு, நித்திரை விழித்து, வளர்த்ததை மறந்து எங்கேயோ போய்க்கொண்டிருந்தாள். அவனுடைய கட்டுப்பாட்டையும் மீறி, செயல்கள் துரிதமாக இடம்பெற்றன. அவனுடைய பொறுமை, நேர்மை, மன்னிப்பு எல்லாம் மதிப்பிழந்து விட்டன. அவள் மீண்டும், பிள்ளைகளை - கணவனை - வீட்டை எல்லாவற்றையும் உதறிவிட்டு ரொம்பவும் சுதந்திப்பறவையானாள். இவ்வளவு காலமும் பெண்கள் தான் ஆண்களால் வஞ்சிக்கப்படுவதாக அவன் எண்ணியிருந்தான். கதைகளில் அப்படி எழுதித்தான் அவனுக்குப் பழக்கம். புத்தகங்களிலும் படித்திருந்தான். எல்லாரும் பெண்களைத்தான் உயர்த்தியிருந்தார்கள். அவனும் கூட, பெண்ணைத் தாழ்த்த விரும்பவில்லை. ஏனெனில் அவனுடைய வயதுபோன அந்தத் தாய் உயிரோடுஇருந்த காரணத்தினாலேதான், அவனையும், அவனுடைய நான்கு பிள்ளைகளையும் அரவணைத்துக்கொண்டாள். அந்தத் தாய் மட்டும் இல்லையென்றால், அவனும் அவனுடையபிள்ளைகளும் இன்றும் அனாதைகள்தாம்.
எந்த ஆணும், மற்றைய பெண்களைப்போல் தன் மனைவி இருக்கிறாளா, இல்லையா என்று எண்ணிப்பார்க்காமல் விடுவதில்லை. மற்றப் பெண்களின் மீது ஆசை வைப்பதுமுண்டு அந்த ஆசை அவனுக்கு விபரீதமான விளைவை ஏற்படுத் தக்கூடும் பெண் என்பவளுக்கு இந்த எண்ணங்கள் வரக்கூடாதென்பதல்ல. ஆனால் பெண்மைக்கு எப்போதும் உலகத்தில் உயரிய அந்தஸ்துண்டு, உடல் தேவையை விட, உண்மையான அன்புக்கும், பாசத்துக்கும் தாய்மை பெருமையாகப் பேசப்படுகிறது. அவனைப்பொறுத்தவரையில், தாய்மையின் உயர்வைதன்னுடையதாயின் மூலம் கண்டுகொண்டிருக்கிறான். ஆனால் உயர்வு அவனுடைய நான்கு பிள்ளைகளுக்கும் கிடைக்கவில்லையென்பது அவனுக்குப் பாரிய இதய வேதனையை அளித்துக்கொண்டிருக்கிறது என்னதான்முரண்பாடுகள் இருந்தபோதிலும், கடந்த பதினாறு வருடகாலம் அனுபவித்த உடல் தேவையை விடப் புதிதாக எதையும் அவனோ அவளோ பெற்றுக்கொள்ளப் போவதில்லை. அவள், பிள்ளைகளோடு வாழ்ந்திருக்கலாம். தன்னைவிட்டுப்பிரிந்துவிடுவதில் அவளுக்கு உரிமை இருப்பதை அவன் மறுக்கவில்லை. அவள் தன்னை விட்டுப் பிரிந்து பிள்ளைகளோடு வாழ்வதனால், அவளுக்கும் பிள்ளைகளுக்கும் தேவையான அத்தனை உதவி. களையும் செய்வதாக அவன் மனம் திறந்து கூறியிருந்தான். அவளோ இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்ததாகத் தெரியவில்லை. அந்தக்கதை அத்துடன் முற்றுப்பெற்று விட்டது. அவன் தன்னுடைய பிள்ளைகளுடன் வாழ்கிறான். ஒரு தந்தையாய், ஒரு தாயாய்.
எல்லாப்பிள்ளைகளும் வளர்ந்துவிட்டார்கள். எல்லாருக்கும் எல்லா விடயங்
18 / தரிசனங்கள்

Page 16
களும் தெளிவானது. அவர்களோ, அவனோ அந்தத் தாயைப்பற்றிப்பேசுவதில்ல்ை பேசவேண்டிய அவசியமில்லாமலே காலம் கடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலைமையில், பெண்களைப்பற்றி-நண்பனின் மனைவியைப் பற்றிபலவாறாக அவன் எண்ணிப்பார்ப்பதுண்டு. நண்பனும் அவனது மனைவியும் எத்தனை முரண்பாடுகளுடன் வாழ்கின்றார்கள். அவன் அவளுக்கு விட்டுக்கொடுக்கின்றான். அவள் அவனுக்காக வாழ்கின்றாள். அவனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தையிட்டு அவர்கள் கவலைப்படாத நாட்களில்லை.
நண்பனின் மனைவி, அவனிடம் மனவேதனையுடன் பலவாறாகப் பேசுவாள் கவலைப்படுவாள்.
இப்படி இன்னொருவனுடைய வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுகிறாளே என்று அவன் யோசிப்பதுண்டு.
“சேர் பெண்களைத்தான் ஆண்கள் கைவிட்டு, இன்னொரு பெண்ணோடு ஓடியதை நான்கண்டிருக்கிறேன். அதனால்தான் ஆண்கள்மீது எனக்கு எப்போதும் கோபம்’
இந்த ஆண்கள் மோசமானவர்கள் என்று கூறுவேன் ஆனால் உங்களது வாழ்க்கை எண்ணிப்பார்க்க முடியவில்லை” என்று கூறிக் கண்ணிர் விட்டாள்.
“அதைப்பற்றித்தான் நானும் யோசிக்கிறேன் ரீச்சர். எனக்குக் கூட அது விளங்கவில்லை. பெண்களை நான் குறைவாக எண்ணுவதுமில்லை. எனது எழுத்துக்களில் காட்டுவதுமில்லை. அப்படியொரு வாழ்க்கையை அவள் தந்தாள்’ என்று அவன் கூறினான்.
“உங்களைப்பற்றி எனக்குத் தெரியும் நீங்கள் மிகவும் தூய்மையாகவே நடந்து கொள்கிறீர்கள்!” என்றாள் அவள்.
“என்னுடைய வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாகவே நான் அவளிடம் வைத்திருந்தேன். என்னையார்யார் எப்படியெல்லாம் வளைத்துப்பிடிக்கப்பார்க்கிறார்கள் என்பதையும் அவளிடம் கூறியிருக்கிறேன். ஓர் உண்மையான கணவனாக நான் வாழ முயன்றிருக்கிறேன். ஆனால் அவள் என்னுடைய மனைவியாக வாழ்வதற்கு விரும்பவில்லை போலும்” என்று அவன் கூறினான்.
அவன் ஊருக்கு மாற்றம் பெற்று வந்துவிட்டான் அதன் பிறகுதான் இந்தச்சம்பவம் அவனுடைய வாழ்க்கையில் ஏற்பட்டது. இதைக் கேள்விப்பட்ட அவள் அவனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாள்.
“எத்தனையோ பெரிய மனிதர்களுடைய வாழ்க்கையில் இவ்வாறான சம்பவங்கள் நடந்திருப்பதாக அறிகிறோம். ஒரு மென்மையான இதயம் கொண்ட ஓர் ஆத்மாவை அவள் உயிரோடுபுதைத்துவிட்டாள் என்றுநான் கவலைப்படுகிறேன்” என்று எழுதியது.அவனுக்கு அவளுடன்உரையாடும்போதுஞாபகத்துக்கு வந்தது.
அவன் பெருமூச்சுடன் கேட்டான்: ' “இப்போது உங்கள் வாழ்க்கை எப்படி ரீச்சர்?" “சேர் அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். இப்படியான ஒரு விபரீதமான முடிவுக்கு நான் வரமாட்டேன்!” என்றார்.
"உங்களுக்கு அறிவிருக்கிறது. வாழ்க்கையைப் புரிந்துவைத்திருக்கிறீர். கள்!” என்றான் அவன்.
வை, அஹ்மத் / 19

“உங்கள் மனைவி வாழ்க்கை என்பது வேறுஏதோ ஒன்று என்று எண்ணிவிட்டாள்" என்று அவள் கவலையுடன் கூறினாள்.
"அவளைப்போலநானும்நடந்துகொண்டால் எப்படி இருக்கும்ரிச்சர்” என்று அவன் கேட்டான்.
“உங்கள் நாலு பிள்ளைகளும் நடு றோட்டில் நிற்பார்கள்! உங்களை யார் மதிக்கப் போகிறார்கள்!” என்று அவள் சொன்னாள்.
"நீங்கள் சொல்வது சரி ரிச்சர். ஆனால் அவளுடைய செய்கையை இந்தச் சமூகம் ஏற்றுக்கொண்டுவிட்டதே' என்று பதிலாகக் கேட்டான்.
"அப்படி நீங்கள் நினைக்கக்கூடாது சேர். சமூகத்தில் ஒன்றிரண்டு பேர் அவளுடைய செய்கையை சரி காணலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை சமூகம் உங்களைப்பற்றித்தான் உயர்வாகமதிக்கிறது, கவலைப்படுகிறது! நீங்கள் ரொம்பவும் சமாளித்துக் கொண்டீர்கள்” என்றாள்.
“என்னால் இதைப்பற்றி அலட்டிக்கொள்ள முடியவில்லை. எனக்கு என்னுடையபிள்ளைகளும், அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையும் முக்கியம் ரீச்சர். நான்கு ஆத்மாக்களை கொலைசெய்துவிட்டு இன்பத்தைத் தேடி அலையமுடியாது என்னால்” என்றான்.
"அதுதான் பெரிய தியாகம் சேர். பெண்கள் செய்யவேண்டியதியாகம் அதுதான். அதை ஒரு ஆண்,நீங்கள் செய்கிறீர்கள்’ என்று அவள் அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.
திடீரென ஒருநாள் அவனுக்கு ஒரு தகவல் கிடைத்தது. அவனுடைய நண்பன் கடுமையான இருதய நோயினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றான் என்று அந்தத் தகவல் கூறிற்று. அவன் நண்பனைப்பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குப் போனான். விசேட கவனப்பிரிவில் வைத்திருந்தார்கள். முதலில் அவனை அனுமதிக்கவில்லை. அவள் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டுக்கொண். டதற்கிணங்க, நோயாளியுடன் எவ்விதப் பேச்சுவார்த்தையும் கூடாது என்று எச்சரிக்கை செய்து அவனை அனுமதித்தார்கள். குளிரூட்டிய அறையில், கட்டிலில் நீட்டியபடி படுத்திருந்தான் நண்பன். பலவித வயர்கள் அவனுடைய உடலெங்கும் பூட்டப்பட்டிருந்தன. அடிக்கடி அவனுடைய உடல்நிலையைக் கவனிக்கத்தாதி ஆயத்தமாக இருந்தாள். அவனுடைய நண்பனின் மனைவி பக்கத்தில் அவனில் நிலைத்த பார்வையுடன் குந்தியிருந்தாள். இவனைக் கண்டவுடன் எழுந்துகொண்டாள். முகம் வீங்கி இருந்தது. அழுதிருப்பாள். சிறிதுநேரம்பார்த்து விட்டு அவன் வெளிவந்தான். அவளும் கூடவே வந்தாள்.
“இதற்காகத்தான்நான்பயந்தேன். அவருக்கு இரண்டாவதுதடவையும் இந்த 'அட்டெக் வரக்கூடாது என்பதற்காகத்தான் அவருண்டய வேலைகளையெல்லாம் நான் சுமந்து கொண்டேன்’ என்றாள்.
“இப்போது பரவாயில்லை போல் தெரிகிறது” என்று அவன் ஆறதல் போல் கூறினான். --
"அவர் என்னை விட்டுப் பேர்னால்என்னால் வாழமுடியாது சேர்!’ என்று கூறி. யவள் அழுத்தொடங்கினாள்.
20 / தரிசனங்கள்

Page 17
எப்படியெல்லாம் வாதிப்பாள், இப்போது கணவன் தன்னை விட்டுப்பிரிந்து விடுவானோ என்று வருத்தப்படுகிறாளே என்று அவன் எண்ணினான்.
"அப்படியொன்றும் நடவாதுரிச்சர்” என்று அவன் கூறினான்.
"அப்படி எதுவும் நடந்தால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அவருக்காகவேதான் நான் வாழ்கின்றேன் சேர்’ என்று அவள் அழுதழுது கூறியபோது அவளுடைய உண்மையான அன்பை அவன்கண்டான்.
நண்பன் ஒரு பெரிய “கண்டத்’திலிருந்து தப்பினான். அவளுடைய பிரார்த்தனைகள்விண்போகவில்லை!
26.12.1992
வை. அஹ்மத் / 21

நிலவின்நிழலில்

Page 18
விடிநிலா வானில் பகலாய்க் காய்ந்து கொண்டிருந்தது. வைகறையின் சுகந்தமான இளங்காற்று‘ஊ’ என்ற ஒரே இரைச்சலுடன் கடல் அலைகளின் மேல் அலையுடன் தவழ்ந்து அடிக்கடல் வரை சென்று; நடுங்க வைத்தது. முள்ளந்தண்டின் ஊடாக நரம்புகளிலெல்லாம் பாய்ந்து விட்ட குளிரைப் போக்க முடியவில்லை. இழுத்து இழுத்துப் போர்த்திப் பார்த்தாகிவிட்டது. இரண்டடி அகலமான அந்த வள்ளத்தின் வாரிப்பலகையில் படுத்துப் பழகிய பழக்கம் இன்று ஞாபகத்திலிருந்து நழுவி விட்டதை உணர்ந்தான்.
அவனால் தூங்க முடியவில்லை. அவன் நண்பர்கள் நன்றாகத் துரங்கத்தான் செய்தார்கள்.
மோனமாகத் தவழ்ந்து கொண்டிருந்த வெள்ளிநிலாவைப் பாதி விழிப்புடன் உற்று நோக்கிக் கொண்டிருந்தவனை அந்தக் கனவு இன்ப உலகுக்குகல்லவா அழைத்துச் சென்று விட்டது. அப்புறம் தூக்கமேது?
கமால் கனவின் இன்பக் கிளுகிளுப்பில் குளிரையும் தூர வீசியடிப்பவன் போல் துள்ளி எழுந்தான். கனவின் பசுமை நினைவை விட்டு மாறவில்லை.
கறுப்புக் கம்பளத்தில் சிதறிக் கிடந்த வெள்ளி மணிகளுக்கிடையே முத்தாக ஒளிர்ந்தவான் நிலவின் ஒளிமயமான பெண் வடிவு அவள். நிலவின் முழுவட்டம் போன்ற முகம். வானமாக விரிந்து கிடந்த கருங்கூந்தலிடையே ஒளிர்ந்த வெண்முத்து. ஆகா, ஸல்மா!
அது கனவுஎன்பதை அவன் உண்ர்ந்தான். விடிநிலாவின் நிழலில் அவளுடன் பேசிப் பேசி அலுக்காத உறவின் விளிம்பிலே கண்ட ஆனந்த சுகத்தின் பிரதிபலிப்பு அது என்பது அவனுக்குத் தெரியும். அந்த சுகத்தின் நினைவிட்டு அவனால் எப்படித்தான் துரங்க முடியும்?
கடலின் மத்தியில் தொட்டிலாகக் கிடந்து: கூதல் காற்றின் தாலாட்டிலே அசைந்து: அந்த வள்ளத்தில் தம்மையே மறந்த லயிப்பில் தூங்கிக் கிடந்த தன் நண்பர்களை எழுப்பினான் கமால்.
இனிக் கடலில் கிடப்பது, அவனுக்கு நிம்மதியாக இராது. காற்றின் அழுத்தத்திலே ஸல்மாவின் கரிய கூந்தலின் நறுமணத்தை அவன் நுகர்ந்துவிட்டான். எப்படியும் கரைதட்டிவிட வேண்டும். அவளை விடிநிலா மறையும் முன்னம் பார்த்தாக வேண்டும். கிழக்கு வானில் உதயமாகிவிட்ட விடிவெள்ளி அவளுக்கு அவன் வரவை அறிவித்திருக்கும். அவன் போயாக வேண்டும்.
“காக்கா,எழும்புங்க வலையப்பிடிப்பம். தம்பி அன்வர் டேய்” என்று அவன் குரல் கொடுத்தான்.
கமால் காக்கா என்று உறவுமுணகிக் கொண்டு எழுந்தான். “என்ன தம்பி, இப்பதானே விடிவெள்ளி கிளம்பியிருக்கு ஏன் அவசரப்படுகிறாய்?" என்று முஸ்தபா கேட்டான்.
நேரம் இருந்தாலென்ன. அந்த அவசரம் அவனுக்கல்லவா தெரியும். அன்வர் இன்னும் எழும்பவில்லை. அவன் எழுப்பினான்.
"அன்வர். அன்வர். டேய் எழும்பு" கமாலின் கத்தல் அன்வரின் காதுக்கு வெடிவைத்துவிட்டது. அவன் எரிச்சலுடன் எழும்பினான். கீழ்வானில் சுடர்விட்டுப் பிரகாசித்த விடிவெள்ளி. யைக் கண்ட போது அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

"ஓஹோ துரைக்கு ஆத்தங்கரை நினைப்பாக்கும்” என்று அவன் குத்தலாகப் பேசினான்.
"வாயை முடுடா அன்வர் ஆளை அறிந்து பேசு” என்று கோபித்தான் கமால்.
கமாலின் கோபம் நியாயமானது என்பது முஸ்தபாவுக்குத் தெரியும். அதிகாலையிலேயே குழப்பம் எதுவும் நடந்து விடக் கூடாதே என்று அங்கலாய்த்தவனாக,
“சரிதம்பி, அவன் சின்னப்பிள்ளை சொல்லிப் போட்டான். விட்டுத்தள்ளு - காலையில அவனோட கோபிக்காதே, அன்வர் வலையப் பிடிக்கிறதுக்கு முந்தி கிட்டத்தப் போட்டு முதல்ல அளந்து பாரு” என்றான்.
முஸ்தபா தான் அந்த மூவரில் முத்தவன். திருமணம் செய்தவன். அனுபவ சாலி. அன்வர் கமாலின் சின்னம்மாவின் மகன். இளையவன். முஸ்தபாவின் பேச்சுக்கு மதிப்பு இருந்தது. அன்வர் தங்கூசுக் கயிற்றில் கட்டப்பட்டிருந்த ஈயக் குண்டை கடலில் இறக்கிவிட்டான். கடலின் அடிமட்டத்துக்கு குண்டு போய்விட்டதை உணர்ந்து தங்கூசை இழுத்துதன் கையால் பாகம் போட்டான். குண்டு கைக்கு வந்ததும் கணக்குச் சொன்னான்.
“இருபத்திரண்டு பாகம் காக்கா" “இருபத்திரண்டு பாகம் பதினாறு பாகத்திலதான வலையை இறக்கினம். நீரோட்டமிருக்கா தம்பி’
“கச்சான் காத்தில்ல வீசுது. அதுதான் போயிருக்கு” “சரி, வலையைப் பிடிங்க” என்று பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான் கமால். நீண்டு கிடந்த வலையின் கம்பான் கயிறு அவன் இரும்புப் பிடியில் சரசரவென இழுபட்டு வந்தது. அன்வர் மிதப்புக் கட்டைகளை எடுத்து அடுக்கினான். முஸ்தபா மீன் களற்றுவதில் ஈடுபட்டான். சூரை, சுறா, பாறை, பன்னல், அறுக்குளா இத்தியாதி இனங்கள் வள்ளம் நிறைந்துவிட்டது.
வலையின் திணறலோடு கமாலின் மனமும் திணறிக் கொண்டு எங்கோ இழுபட்டது. விடிநிலாக்காலம் வந்தால் அவனுள் இப்படியொரு வேகம் குடிகொள்வது வழக்கம். ஸல்மாவின் நினைவிலே அவன் கைகள் முறுக்கேறி விளையாடும்.
வானத்தில் வெள்ளிநிலா பளிரென ஒளிவீசும். அவனுக்கு அந்த இரவுகள் ஊசியின் கூர் முனைகளாக மாறும். வெகு தூரத்துக்கப்பால் அவன் கடலின் மத்தியில் கடல் குழந்தையாக தாலாட்டப்படும் போது அவனுக்கு நிம்மதியிராது. இரவில் வீசும் சுதல் காற்று அவள் நறுமணத்தைச் சுமந்து வரும். அவன் அதை எத்தனையோ முறை அனுபவித்துச் சுகமடைந்திருக்கிறான். அவளும் அப்படி என்றுதான் சொல்வாள்.
பாதி விடிகின்ற வேளையில் அவளைச் சந்தித்தால்தான், அந்த விடிநிலாக்காலம் அவர்களின் மகோன்னதமான சந்திப்புக்கு அழைப்பு விடுக்கும் காலம். அதை அவர்கள் தவறவிடுவதில்லை.
ஸல்மாவைச் சந்திப்பதற்குத்தான் எத்தனை தடைகள்! ஆற்றங்கரையில் கருநிழல் கொடுத்து இருண்டு கிடக்கும் அந்தத் தென்னை மரங்கள்
24 / நிலவின் நிழலில்

Page 19
மட்டும் இல்லையென்றால் அவர்களுக்கு வேறு உதவியேது?அவள் அந்த மர நிழலில் நிழலாக ஒன்றி நிற்பாள். அவளுக்குப் பயமே இல்லை.
போன மாசத்தின் விடிநிலாக்காலத்தில் ஒரு நாள் அவளிடம் அவன் கேட்டான். “உனக்கு இந்த நேரத்தில் இங்க தனியாக வந்து நிற்கப் பயமே இல்லை. இல்லையா ஸல்மா?”
அவள் அவன் பேச்சைக் கேட்டு சிரித்த சிரிப்பு அவனுக்குப் பயத்தை மூட்டியது. விடிவெள்ளி சுடர்வதுபோல வெளித்த பற்களைக் காட்டி, மணிகள் குலுங்குவது போல கலகலத்த அவளின் சிரிப்பு அந்தக் காலையின் சுகமான விடிவுக்கு வரவேற்பு இசைத்தது. அது அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடுமோ என்று அவன் பயந்தான். ஆனால் அந்தச் சிரிப்பு ஒன்று மட்டும் அவனுக்குப் போதும் எந்த எதிர்ப்பையும் அவன் சமாளிப்பான். அவள் சொன்னாள்
“எனக்கென்ன பயம், இந்தத் தென்னை மரங்களின் நிழலும் உங்கள் நினைவும் இருக்கும் போது”
“சரிதான் போ, எந்த நிழலில் என்ன இருக்குமென்று எப்படிச் சொல்ல முடியும்.? அது சரி உங்க வாப்பாட நினைப்பு வாறல்லியா உனக்கு.?’ என்று நகைத்தான் அவன்.
“ஏன் வராம. அவருதான் உங்களோட கடலுக்குப் போனா காலையில்தான் வருவாறு வாப்பா வாறதுக்கு முன்னநாம சந்திச்சிடுவமே”
“உங்க வீட்டிலிருக்கிறவங்க” “வாப்பாட உம்மாவத்தானை சொல்றீங்க. அவங்களுக்கு இதெல்லாம் விளங்காது.”
அவளின் பேச்சு அவனுக்கு ஆறுதலளித்தது.
வெள்ளிப் பாளங்களாகக் குவிந்து கிடந்த மீன்களால் வள்ளம் நிறைந்துவிட்டது. நடுங்க வைத்த குளிரும் மறைய வியர்வை குப்பென்று கொட்டியது. எல்லா வலையும் இழுத்து முடிய கமால் வள்ளத்தின் அணியப்பக்கம் வந்தமர்ந்தான். வள்ளம் கரையை நோக்கிப்புறப்பட்டது.
அன்வர் வள்ளத்தில் கிடந்த உப்புநீரை இறைத்துவிட்டான். விடிய நேரம் இருக்கும். இன்று ஒரு மணித்தியாலமாவது அவளோடு கதைக்கலாம். இந்த நினைவில் அவன் உள்ளம் சிலிர்த்துக் கிடந்தான்.
வள்ளம் துறையை அடைந்தது. அவர்களுக்குப் பின்னாலும் சில வள்ளங்கள் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. ஏற்கனவே கரைதட்டிவிட்ட வள்ளங்களிலிருந்து மீன் நிறுத்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். கமாலுக்குப் பொறுமை இல்லை. பொலு பொலுவென விடிந்து விடுமோவென அவன் பயந்தான். இந்த யோசனையில் அவன் ஆழ்ந்திருக்கும் போதே அவனுக்குப் பின்பு வந்த மஜித் தன் வள்ளத்திலிருந்து மீனை எடுத்து வெளியில் போட்டு நிறுத்துவிட ஆயத்தமானான். கமால் கீழே இறங்கிவந்து முதலாளியிடம் கேட்டான்.
“இந்தாங்க எங்க வள்ளத்திலிருந்து மீன் எடுக்கிறதில்லையா?”
வை. அஹற்மத் / 25

"ஏன் தம்பி இப்படிக் கேட்கிறீங்க? நீங்க சும்மா இருக்கவும் தான் இவங்கடத்த நிறுத்தம். இது முடியட்டுமே” என்று சொன்னார் முதலாளி.
“முந்தின ஆக்களத்தான் நீங்க கவனிக்கணும். அவங்க பிந்தி வந்தவங்க. பிந்திநிறுக்கணும். அதை வைச்சிட்டு எண்ட மீனைநிறுங்க” என்று கண்டிப்பாகச் சொன்னான் கமால்.
மஜீத் அதை மறுத்தான். “எங்கட மீனைநிறுத்துப் போட்டுத்தான் நிறுக்கணும்” "உன்னிடம் பேசல்ல" என்று எரிந்து விழுந்தான் கமால். “அவங்க வந்திட்டாங்க எண்டா அவசரந்தான்” மஜீத் முணுமுணுத்தான். “எனக்கவசரந்தான் முந்திவந்தவன் அவசரப்படுறேன். உன்கென்னடா” “முதல்ல வந்தா நிறுத்துட்டுப் போவன். அவசரமாகப் போனாத்தான் அவங்களச் சந்திக்கலாம். அங்க துரைச்சாணி காத்துக்கிட்டிருப்பாங்க”
ஏறக்குறைய அடிவிழ இருந்த தருணத்தில் முஸ்தபா கமாலைப்பிடித்துக் கொண்டான். 'துரைச்சாணி என்று ஸல்மாவை கட்டிப் பேசியதை கமாலால் பொறுக்கமுடியவில்லை
“பொத்துடா வாயை’ என்று கமால் பாய்ந்த போது முஸ்தபா மட்டும் இல்லையென்றால் ஒரு கலகமே முண்ைடிருக்கும்.
“தம்பி வேணாம் தம்பி” என்று கெஞ்சினான் முஸ்தபா. அடிபட்ட பாம்பாகச் சிறிக் கொண்டிருந்தான் மஜீத். அவனால் கமாலை அடிக்க முடியவில்லை. என்றாலும் அவன் வாய் அனலைக் கக்கிற்று. அவதூறுகள், அபவாதங்கள் பொறாமையின் கொடிய பிரதிபலிப்புக்கள் எல்லாம் அந்தப் பெருநெருப்பில் கமால் பொசுங்கித் துடித்தான்.
மீன் நிறுத்து முடிய காலைச் சூரியன் எழுந்துவிட்டான். விடிநிலா மேற்கிலும் உதய சூரியன் கிழக்கிலும் ஒன்றாக இணைந்த அந்த அற்புதக் காட்சி அவளுக்கும் அவனுக்கும் பெருத்த ஏமாற்றத்துடன் மறைந்தது.
கமாலும் மஜீதும் பள்ளித் தோழர்கள்தாம். படிக்கும் காலத்தில் மஜீத் கமாலின் வீட்டில்தான் நிற்பான். அவனுடைய பெரும்பகுதிப் பொழுது அங்குதான் கழிந்துகொண்டிருந்தது. விடிந்தால் பாடசாலைக்கு அவர்கள் இணைந்தே செல்வார்கள். போகும் வழியில்தான் ஸல்மாவின் வீடு. தென்னந்தோப்புக்கு மத்தியிலிருந்த அந்த வீட்டிலிருந்து ஸல்மாவை அழைத்துச் செல்வதில் கமாலுக்கு மிக விருப்பம். அவளும் அங்கு அவர்களுக்காக காத்துநிற்பாள்.
மஜீதுக்கு தந்தை இல்லை. அவன் பிறந்த ஆறு மாதங்களுக்குள் அவர் இறந்து விட்டார். அவன் தாய் சில்லறை வேலைகள் செய்து அவனைப் படிக்க வைத்தாள். தாயாரின் அன்புப் பராமரிப்பில் அவனும் வளர்ந்தான்.
ஒரே வகுப்பில் ஒன்றாக அமர்ந்து கற்றுக்குட்டி வாத்தியாரின் ஆனா ஆவன்னா வரியை மனப்பாடம் செய்தவர்கள் அவர்கள். மஜீத் ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டான். தொழிலுக்குப் போய் சம்பாதிக்க வேணுமென்று அவன் தாய் சொன்னாள். ஸல்மா ஏழாம் வகுப்புவரை படித்தாள். அவள் ‘பக்குவம்' அடைந்த பிறகு பாடசாலைக்குப் போகவில்லை. கமால் மட்டும் சிரேஷ்ட வகுப்புவரைப்படித்துச் சித்தியடைந்தான்.
26 / நிலவின் நிழலில்

Page 20
கமால் பள்ளிப்படிப்போடு இளமையின் கனவுகளிலும் மூழ்கிக் கிடந்தான். ஸல்மாவைப் பார்க்காமல் அவன் இருந்ததில்லை. தென்னை மரநிழலில் அவள் அவன் வரவை எதிர்பார்த்துநிற்பாள். சிறுபராயக் கூட்டுறவு அவர்களின் வாலிப உணர்ச்சியின் உத்வேகமான தாக்குதலோடு இணைந்தது.
மஜீத் கமாலின் தந்தையோடுதான் கடலுக்குச் சென்றுவந்தான். கமால் ஸல்மாவோடு நெருக்கமாக இணைந்து போவது அவனுக்குப் பிடிக்கவில்லை. கமால் ஸல்மாவின் வீட்டுக் போகும் போது அவனும் கூடவே வருவான். சில நாட்களில் மஜிதுக்குத் தெரியாமல் கமால் போக எத்தனித்தான். கமாலுக்கு முந்தியோ பிந்தியோ மஜீத் வந்ததாக ஸல்மா சொல்வாள். நண்பர்களுக்கிடையில் கருத்து வேற்றுமை வளர்ந்தது. இறுதியில் மஜீத் கமாலின் தந்தையோடு தொழிலுக்குப் போவதும் நின்றது. அவன் வேறு ஒரு வள்ளத்தில் பங்காளியாகச் சேர்ந்தான்.
கமால் - ஸல்மா இணைப்பு மஜீதின் உள்ளத்தில் பொறாமைத் தீயை கொழுந்து விட்டெரியச் செய்தது. அது கமாலின் வாழ்க்கையில் பழிவாங்கவும் அவனைத் துண்டியது.
அன்று நடந்தது அந்தப் பெருநெருப்பில் ஒரு பங்கு என்பதை கமால் உணர்வான். இதற்கு முன் நடந்தவை? அவன் எண்ணிக் கணக்கிட்டான்.
“தம்பி இனிமேல் காலையில ஸல்மாவை நீ சந்திக்கப் போகப்படாது. என்ட சொல்லக் கொஞ்சம் கேளு.” என்று கமாலின் எண்ணச் சங்கிலித் தொட. ரை அறுத்துவிட்டான் முஸ்தபா. விடியற் காலையில் நடைபெறும் அந்தச் சந்திப்புப் பற்றி அவனுக்குத் தெரியும்.
‘ஸல்மா பெரிய பிள்ளையாகிவிட்ட காலம் தொடக்கம் இது நிகழ்ந்து வருகின்றது. காவலுக்குக் காத்துக் கிடக்கும் கிழவியை ஏமாற்றி வருகிறாள் அவள். எப்போதாவது ஒரு நாள் இது அகப்படத்தான் போகிறது' வலையில் நூலைக் கோர்த்துவிட்டு நிமிர்ந்தான் முஸ்தபா. “என்ன தம்பி நான் சொல்றது கேட்குதா?” “நல்லாக் கேட்குது. ஏன் அப்படிச் சொல்றீங்க” வலையை வள்ளத்தி. லிருந்து கரையில் இழுத்துப் போட்டுக் கொண்டே கேட்டான் அவன்.
“ஒண்டுமில்ல. உனக்கும் ஸல்மாவுக்கும் லாயக்குப்படாது. உங்கட குடும்பம் ரண்டும் உறவில்ல. இது ஊரறிஞ்ச விஷயம். இது எப்படி நடக்கப்போவுது”
“ஏன் லாயக்குப்படாது காக்கா. குடும்பச் சண்டைதானே. அதெல்லாம் கால வரையில் தீர்ந்து போயிடும்”
"அப்படிச் சொல்லாதே கமால். அந்தச் சண்டை சும்மாவா நடந்தது.நீயும் நானும் நினைக்கிறாப் போல இல்ல மனுஷன்.”
“அதுவும் உண்மைதான் என்னால இதுக்கு ஒண்டும் செய்ய ஏலாது காக்கா. அவளப் பார்க்காம இருக்க முடியலிய.”
“இந்த இரண்டு குடும்பமும் எப்ப ஒண்டாகப் போவுது. நீங்க ரெண்டுபேரும் எப்பகல்யாணம் செய்யப் போறிங்களோ, எல்லாம் அந்த மூதேவி மஜீத் படுத்திற பாடு” என்று கூறிவிட்டுப் பெருமூச்சு விட்டான் முஸ்தபா.
வை. அஹற்மத் / 27

“மெய்தானா ஸல்மாவமஜிதுக்கு கல்யாணம் பேசுறாங்களாம்” “ஒமெண்டுதான் நானும் கேள்வி. அண்டைக்கி உன்னோட சண்டைக்கு வந்ததுக்கும் அதுதான் காரணம் எண்டு நினைக்கிறன்.”
"நான் ஸல்மாவை விரும்பிறதையும் சந்திக்கிறதையும் அவன் விரும்பல்ல எண்டு சொல்றீங்க”
“எப்படி விரும்புவான். வருங்கால மாப்புள்ள இல்லையா?’ கேலியாக நகைத்தான் முஸ்தபா.
‘அப்படியென்றா அவளையும் இழுத்துப் பேசவேண்டியதில்லையே.” “தம்பி உனக்குத் தெரியுமா?இவரு, மஜீதரு, ஸல்மாக்கிட்டப் போய் இப்ப கொஞ்ச நாளைக்கு முன்ன பேசியிருக்கிறாரு. சினிமாப்பாட்டு பாடினாராம். அவள் காறித்துப்பியிருக்கிறாள்.” s:
“அது எனக்கும் தெரியும் காக்கா. அவன் பாட்டுப்பாடினதோட நிக்கல்ல. என்னோட பேசவானாம் எண்டும் சொன்னானாம்”
கமால் ஏதோ சத்தம் கேட்டு வழியைப் பார்த்தான். ஆற்றங்கரைத் தென்னந்தோட்டத்தையும் தாண்டி அவனுடைய வீட்டுப்பக்கமிருந்து வந்த அந்தச் சத்தம் வர வர வலுத்தது.
“என்ன தம்பி சுலைமாலெவ்வட சத்தம் போல உங்க வீட்டுப்பக்கம் இருந்து கேட்குது’ என்று முஸ்தபா கேட்டான்.
‘அப்படித்தான் நானும் மதிச்சன். வாறன் காக்கா’ என்று சொல்லிக் கொண்டே ஓடிய கமாலை மறித்தான் முஸ்தபா.
"நீ இருந்து வலையைப் பொத்து. நான் பாத்திட்டு வாறன்.” முஸ்தபா கமாலின் வீட்டுக்கு ஓடினான். இடையில் அன்வர் ஓடிவந்தான்.
“என்னடா தம்பி அங்க சத்தம்.” முஸ்தபா கேட்டான். “கமால் காக்காட ஊட்ட ஸல்மாட வாப்பா சுலைமாலெவ்வ வந்து ஏசுறாரு”
“என்ன எண்டு?” “அவங்க மகள கமால் கெடுத்துப் போட்டானாம். ரோட்டில, திண்ணையில போக ஏலாதாம், கமால கவனமாக வச்சிருக்காட்டி மண்டைய உடைப்பாராம்"
மூச்சு முட்ட முட்ட அவன் சொல்லிமுடித்தான். “உடைப்பாரு, உடைப்பாரு' என்று கறுவிக் கொண்டு ஓடினான் முஸ்தபா. "அன்வர் இதெல்லாம் அவனிட்டச் சொல்லாத" என்று ஒடும் போதே கத்தினான்.
கமால் தூரத்தில் கேட்ட சத்தத்திலிருந்து ஒருவாறு விஷயத்தைக் கிரகித்துக் கொண்டான். அன்வர் வேறு, எல்லாவற்றையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துக் காட்டினான். கமாலின் உள்ளம் வெதும்பியது. மஜீதின் பொறாமைத் தீஊரெல்லாம் பரவிவிட்டதை உணர்ந்தான்.
“டேய் கமால் அங்கப் பாரண்டா ஆரெண்டு” என்று கத்தினான் அன்வர். கமால் திரும்பிப் பார்த்த வேகத்தில் இரு கருவிழிகள் சுழன்றது அவனுக்குத் தெரிந்தது. தென்னை மரத்தின் பூதாகரமாகப் படர்ந்திருந்த நிழலில் கையில் எதையோ வைத்துக் கொண்டு நின்றாள் ஸல்மா. வெள்ளரிசிப் பற்கள் பளிச்சிட அவள் நின்றிருந்த அந்த அழகுக் காட்சியில் ஒரு கணம் 28 / நிலவின் நிழலில்

Page 21
மறந்து சிரித்தான். ஆற்றங்கரையில் அப்படியொரு அற்புதம் நிகழுமென்று அவன் நினைக்கவில்லை. கொதித்துக் கொண்டிருக்கும் உள்ளத்துக்கு அவள் திடீரெனத் தோன்றி இப்படியொரு குளிர்ச்சியை எப்படி ஊட்டினாளோ?
அவன் மனக்கடலில் மகிழ்ச்சித் துக் கொண்டிருந்த உள்ளத்தில் தோன்றி இப்படியொரு குளிர்ச்சியின் அலைகள் ஆர்ப்பரித்து அலையெறிந்தன. அவள் கருவிழிகளும் அவன் கண்களும் ஒன்றையொன்றை விழுங்கும் பார்வையில் இறங்கின. அந்தப் பார்வையில்தான் எத்தனை ஆனந்த்ம், எத்தனை ஆர்வம்.
அவள் மெல்லக் கையசைத்துவிடைபெற்றாள். அவள் போனபின்பு கமால் சுயஉணர்வு பெற்றுத் திரும்பிப் பார்த்தான். முஸ்தபா சிரித்தபடிநின்றான்.
“என்ன காக்கா நடந்தது” என்று தடுமாறினான் கமிரல். ' “எவ்வளவு நேரமா இந்த நாடகம். அங்க வாப்பா வந்து ஏசுறாரு. இங்கு மகள் கையாட்டுறா’ என்றான் முஸ்தபா.
“என்னெண்டு ஏசுறாரு?’ “அன்வர் உன்னிட்ட சொல்லலியா?” கமால் தலையசைத்தான். முஸ்தபா விபரமாகச் சொன்னான்.
"நான் எல்லாத்துக்கும் சரியான கதைசொல்லிப் போட்டு வந்திருக்கன்.” “எப்படி..?” ... -- “உங்க மகள கவனமா பாத்துக்குங்க. கமால் நீங்க கட்டுப்படுத்தத் தேவையில்ல. அவன் ஆம்புள்ள. மிதிக்கிற சேத்தில மிதிச்சுப் போட்டு, கழுவுற தண்ணியில கழுவிக்குவான் எண்டு”
“ம்ஹற்.” என்று அமைதியானான் கமால். திடீரென அவன் உள்ளத்தில் என்னவோ நிகழ்ந்து. கமாலின் குடும்பம் ஒரு பரம்பரை மீன்பிடிக்குடும்பம். அவன் தந்தை அப்துல் ரஹ்மான் அந்தத் தொழிலில் நல்ல தேர்ச்சி பெற்றவர். நீண்டு வளைந்து ஓடிவந்த மாதுறு ஒயாவின் வடக்குக் கரையெல்லாம் அந்தக் காலத்தில் அவருடைய ஆதிக்கத்தின் கீழ்த்தான் இருந்தது. துறையெல்லாம் அவருடைய தோணிகள்தான் கிடந்தன. ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த ஏழைக்குடும்பங்கள் அவரின் துணையில்தான் அண்டிப் பிழைத்தன. அப்துர் ரஹற்மானின் பேச்சுக்கு மறுத்துப் பேச அந்த நாளில் ஆளில்லை. கூறைப்பாய்கட்டி தண்டு போட்டு வலித்து தோணியோட்டிய காலம் போய் கச்சாங்காற்றையும் எதிர்த்துப் போராட பெண்டா மெஷின்களும் நாலைந்து இளவட்டங்களும் முளைத்துவிட்ட போது அவருடைய செல்வாக்கும் தோணிகளும் செல்லாக் காசாகி விட்டன.
மீனவர்களுக்கு அரசாங்கம் கடன் கொடுத்து உதவி செய்தது. அரசாங்கக் கடனில் பலர் திடீர் பணக்காரர்கள் ஆனார்கள். கொள்ளை கொள்ளையாக நைலோன் வலைஅள்ளிக் கொண்டு வந்து கொட்டிற்று. வேலை செய்யும் தொழிலாளிக்கு ஒரு பங்கு போக மீதி முழுவதும் வள்ளச் சொந்தக் காரணுக்கு வந்து சேர்ந்தது. ஏழைகள் ஏழைகளாகவே இருந்தார்கள். அவர்களின் குடிசைகள் குடிசைகளாகவே இருந்தன. போதாததற்கு கெட்ட
t வை. அஹ்மத் / 29

பழக்கங்களும் அவர்களைப் பிடித்துக் குட்டிச் சுவராக்கின. கையில் கொஞ்சம் முதல் வைத்திருந்தவர்கள் தமது பணத்தைக் கொண்டு முதலாளி ஆகிவிட அவர்களையே நம்பியே அரசாங்கம் கடன் கொடுத்தது. ‘என்ஜின் போட்'களும் வந்து சேர்ந்தன. தோணிகளாலும் கூறைப் பாய்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பங்களாத்துறை இப்போது என்ஜின் போட்டுக்களால் நிறைந்து விட்டது.
ஆற்றங்கரையில் ஏற்பட்ட நிறைவு மக்களின் மனத்தில் நிறைவைச் சேர்க்கவில்லை. பொறாமையும் பூசலும் தாண்டவமாடின. ஒவ்வொருவரும் பெரிய கல்வீடுகளைப் பார்த்து சந்தேகப் பட்டுக் கொண்டிருந்தார்கள். நியாயமாகப் பார்க்கப் போனால் அரசாங்கக் கடன் இறுபட வில்லை. வீடுக. ளெழும்பின. சில பெட்டிகள் நிரம்பின.
கூடவே மக்களை மக்கள் ‘பச்சையாகவேதின்ன ஆரம்பித்தார்கள். சில காலத்தில் கடலில் போடும் வலைகள் அறுத்துவிடப்பட்டன. ஆற்றங்கரையில் கட்டப்பட்டுக்கிடந்த வள்ளங்கள் ஆற்றில் தள்ளிவிடப்பட்டன. என்ஜின் பாகங்கள் கழற்றப்பட்டன.
இப்படியொரு அசம்பாவிதமான சம்பவம் சுலைமாலெவ்வையின் வள்ளத்திலும் நடந்துவிட்டது.
சுலைமாலெவ்வை கடலுக்குச் சென்றிருந்தார். நிலவில்லாக் காலத்தில் வலையைத் தள்ளிவிட்டுத் துரங்கினால் விடிந்துதான் வலையைப் பிடிப்பார்கள். அந்த இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு சில அயோக்கியர்கள் வலையை அறுத்துக் கடலில் விட்டுவிடவும் அல்லது களவெடுத்துச் செல்லவும் துணிவார்கள். ஒருநாள் இப்படி நடந்துவிட்டது.
சுலைமாலெவ்வை விடிந்து எழுந்து வலையைப் பிடித்தார். ‘எட்டு மடங்கு வலையில் ஏறக்குறைய நான்கு மடங்கு வலையைக் காணவில்லை. வலை அறுத்தெடுக்கப்பட்ட அடையாளம் மட்டுமே இருந்தது. இதைக் கண்ட போது சுலைமாலெவ்வையின் உள்ளம் வேதனைப்பட்டது. பற்றியெரிந்தது. ஆயிரம் ரூபாய்க்கு மேல் நட்டம்-புதிய வலைவாங்க அவர் பணத்துக்கு எங்கே போவார்? கையில் இருப்பது ஸல்மாவும் ஆற்றங்கரையில் இருந்த ஒரு ஏக்கர் தென்னந்தோப்புந்தான். அன்று அவர் வாய்விட்டு அழுதார்.
கடலில் இருந்து வந்தவுடன் அவர் கவலையால் உள்ளம் நைந்து ஒரே படுக்கையாகக் கிடந்தார். அவருடைய வலை காணாமல் போனதையிட்டு அக்கம் பக்கத்தவர்கள் கவலையோடு அனுதாபப்பட்டார்கள். கமால், அப்துல் ரஹற்மான், முஸ்தபா எல்லாரும் ஆறுதல் கூறிவிட்டு வந்தார்கள்.
அன்று பொழுது சாய்ந்து கொண்டிருந்த போது மஜீத் சுலைமாலெவ்வையின் வீட்டுக்கு அவசரமாக ஓடினான். இதைக் கமால் கவனித்தான். சற்று நேரத்துக் கெல்லாம் சுலைமாலெவ்வை அவனோடு வந்தார். கமாலுடைய ஆற்றங்கரை வளவை நோக்கி அவர்கள் பரபரப்பாகச் சென்றார்கள். அங்கு கூட்டம் கூடிவிட்டது. கமாலும் அவர்களுக்குப் பின்னால் ஓடினான்.
“இது அவங்க வாப்பாவும் மகன்ரையும் வேலதான்” என்ற மஜிதின் குரலை அவன் தெளிவாகக் கேட்டான்.
30 / நிலவின் நிழலில்

Page 22
“கிணற்றுக்குள் வலையைப் போட்டது யாராக இருக்கலாம்” என்று சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்கு மஜீதின் பேச்சு அனலைக் கொட்டிற்று. அவன் வாழ்நாளியேநம்பமுடியாத அபாண்டமான பழி என்பதைத் தெரிந்து பதறினான். தன்தந்தையிடம் நடந்ததைக் கூறுவதற்காக அவன் தள்ளாடித் தள்ளாடி நடந்தான்.
அவன் வீட்டுக்கு வருவதற்கு முன்பே அங்கு பொலிஸ் விசாரணை நடை. பெற்றுக் கொண்டிருந்தது. பொலிஸ் காரன் ஒருவன் தன் தெய்வீகக் கடமை. யைச் செய்து உண்மையை வெளியிடுமாறு அப்துர் ரஹற்மானிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
“உண்மையைச் சொல்லு. உன்னை விட்டுவிடுறம்" என்று அவன் நய. மாகக் கேட்டான்.
“எனக்கொன்றும் தெரியாது ஐயா!” அப்துர் ரஹற்மான் சொன்னார். "அப்படியெண்டா உன் கிணற்றுக்க எப்படி வலைவந்தது' “எனக்குத் தெரியா" “உனக்குத் தெரியாமத்தான் இருக்கும். உண்ட மகன் எங்க, நடங்க ஸ்டேஷனுக்கு”
தந்தையும் மகனும் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றார்கள். ஒரு கூட்டமும் அவர்களுடன் சேர்ந்து வந்தது.
பொலிஸ் ஸ்டேஷனில் எந்த உண்மையும் புதிதாக வெளிவரவில்லை. தந்தையும் மகனும் பிணையில் வந்தார்கள்.
வழக்கு நீதிமன்றம் சென்று தக்க சாட்சிகளின்றி தள்ளுபடியாயிற்று. வழக்குத் தள்ளுபடியாகிவிட்ட போதுதான் ஊரவர் நியாயத்தைச் சிந்தித்துப் பார்த்தார்கள். இறைவன் அப்துர் ரஹற்மானைச் சோதித்துவிட்டான் என்று பேசிக் கொண்டார்கள். வீண்பழியென வருத்தப்பட்டார்கள்.
காலம் எல்லா உண்மைகளையும் காட்டிக் கொடுக்கத் தவறாது. சுலைமாலெவ்வை மஜிதின் கைங்கரியத்தை உணர ஆரம்பித்தார். ஆனால் ஆறாப்புண்ணாகி இரு குடும்பமும் பிரிந்துவிட்டது. தழும்பு என்றும் இருந்தது.
கமால் ஸல்மாவை மறக்க முடியாமல் திண்டாடினான். நாட்செல்லச். செல்ல அவன் அவளை ஒளித்து ஒளித்துப் பார்த்துவந்தான். அப்துர் ரஹ்மான் எந்தக் கவலையுமின்றி தன் தொழிலைக் கவனிக்கலானார்.
இருள்பிரிந்தும் பிரியாத மங்கலான வேளை. பலபலவென பூமி வெளித்துச் சிரிக்க ஆரம்பித்தது. பறவைகள் கலகலப்பாகப் பேசி இனிய கலவையான ஒலிக்குழம்பில் உலகை விடிய வைத்துக் கொண்டிருந்தன. மெல்லிய இளங்காற்று தென்னை மரச் சோலையிடையே அசைந்து கொண்டிருந்தது.
விடிநிலா பகலாய் எறித்தது. அது அவர்களின் சுவர்க்க அழைப்பு நேரம் - ஒற்றைக் காலைப் பின்னால் மடக்கி மரத்தின் அடியில் குத்திட்டு நின்றிருந்த ஸல்மாவின் அந்த அழகு மயக்கத்தில் கிறங்கிநின்றான் கமால். வார்த்தைகளுக்குள் அகப்பட முடியாத அழகுப்பதுமையாக அவள் நின்றிருந்த காட்சி அந்த இனிய காலைப் பொழுதின் மகிழ்ச்சி கரமான முகூர்த்தம் போன்றிருந்தது. இன்பத்திலும் துன்பத்தினி நிழல் படராமல் விடுவதில்லையே. அங்கு நிலவிய பயங்கர அமைதி இருவர் உள்ளத்திலும் கப்பிக் கிடந்த
வை. அஹ்மத் / 31

சோகத்தை எடுத்துக் காட்டியது. வெளியிட்டுச் சொல்ல முடியாத வேதனைப் புயல் அங்கு வீசத்தான் செய்தது.
“நம்ம குடும்பங்களுக்கிடையே இருந்துவாற பிணக்கு நம்வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை ஸல்மா. இதுக்கு எப்படியாவது ஒரு முடிவுகாணணும்.” என்று அந்தப் புயலை அசைத்துவிட்டான் கமால். பழைய சம்பவங்கள் அவர்கள் நினைவில் திரையிட்டன. கவலையால் ஸல்மாவின் முகம் வாடிற்று.
“உங்களைவிட எனக்குத்தான் கவலையாயிருக்கு. வாப்பா சில நாளா நல்லாத் தூங்கிறதில்ல. என்னோடயும் நல்லாப் பேசிறதுமில்ல. உங்கள மறந்திடனும் எண்டு சொல்றாரு. மஜீது வேற, ஊரெல்லாம் தூத்தித் திரியிறான். ஸல்மா திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். எங்கு என்ன இருக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்?”
“எல்லாம் அவன் படுத்திறபாடுதான் ஸல்மா. அவனச் சும்மாவிடமாட்டன். அவன்தான் என் வாழ்க்கையில் முதல் எதிரியா முளைச்சிட்டிருக்கான்.” என்று ஆவேசமாகக் கூறினான் கமால். கமாலின் முகம் கோபத்தால் சிவந்திருந்தது. “தயவு செய்து அவனோட ஏதும் குழப்பத்துக்குப் போகாதீங்க. எங்க வாய்பா உங்க குடும்பத்துக்கு ஏற்படுத்தின அவமானத்த நினைச்சி இப்பவும் எனக்கு மனவருத்தம். எனக்காக நீங்க அவனோட சண்டைக்குப் போய் பொலிசுக்குப் போறத்த நான் விரும்பல்ல." என்று ஸல்மா சொல்லும் போது அவள் குரல் தழுதழுத்தது. தாவணித்தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
“அவனாலதான் என் வாழ்க்கை விதி நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அப்படியேயாகட்டும். அதுக்காக என்னால் ஒரு கோழையைப் போல ஊமையாக இருக்க ஏலாது.” என்று கறுவினான் கமால்.
உலகத்தின் விடிவு சரசரவென வந்து கொண்டிருந்தது. பாதி பிரியா இருளினுள்ளும் அந்தப் பகை நாகம் புற்றிலிருந்து தலை நீட்டிவிட்டதை அவர்கள் உணராமல் தங்களுக்குள்ளே பிரச்சினைகளை விவாதித்துக் கொண்டிருந்தார்கள். தங்கள் காதல் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை அகற்ற வழி தேடினார்கள். யுகயகாந்திரமாக காதலர்கள் ஒன்றுசேரும் போது தமக்குள் பேசிக் கொண்டவாறு தாமும் பேசிக் கொண்டார்கள். அவற்றிலே வேண்டுகோள்கள், பிரச்சினைக்கு முடிவுகாண விளையும் ஆவல்கள், அன்புப் பரிமாறல்கள், புகழுரைகள் எல்லாம் கலந்திருந்தன.
இதற்கிடையில் தென்னை மரநிழலிலே ஆற்றங்கரை ஓரமாகக் கூடாரம் அடித்து வளர்ந்து கிடந்த புன்னை மரப்புடாருக்குள்ளிருந்து அந்த சரசரப்புக் கேட்டது. திரும்பிப் பார்த்த இருவரும் திகைத்துப் போனார்கள். மரநிழலிலிருந்து மஜீதுதான் வந்தான்.
“என்னை அப்படியொன்றும் உன்னாலே செய்ய முடியாது. உங்க கொட்டத்த அடக்கிறதுக்கு காலம் வந்திட்டுதுதுள்ளாதிங்க.." என்று அவன் சொல்லிவிட்டு அட்டகாசமாகச் சிரித்தான். தங்களிருவரின் தனிமையில் இப்படியொரு குறுக்கீடு மஜீதால் ஏற்பட்டுவிட்டதே என்று எண்ணும் போது கமாலின் குருதிநாளங்கள் புடைத்தெழுந்தன. அவன் கண்களில் அனல் பொறி தெறித்தது. அவன் உறுமினான்.
32 / நிலவின் நிழலில்

Page 23
“பொத்துடா வாயை' என்று அவன் பாய்ந்த போது “கமால்' என்று வீறிட்டாள் ஸல்மா. அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
“வாங்க வாங்க சரியாத்தான் அகப்படப் போறிங்க” என்று முகத்தை விகாரமாக்கிக் கொண்டு சொன்னவன் புன்னை மரப்பக்கம் பார்த்துக் கத்தினான்.
“வாங்கடா ஒரு கை பாப்பம்” திடுதிடுவென ஓடிவந்து அவர்களின் முன் நாலைந்து பேர் வந்துநின்றார்கள். அவர்களின் கண்களில் விளையாடிய கேலியை அந்த இருளிலும் கமாலால் காண முடிந்தது. அவன் தன் கண்களையே நம்ப முடியாமல் திணறி. னான்.
அவன் போட்ட திட்டம். கணநேரத்தில் பிழைத்துவிட்டதை அவன் உணர்ந்தான்.
"கள்ளத்தனமா காட்டுக்குள்ள வந்திட்டாங்கடா” என்று மஜீத் கூக்குரல் போட்டான்.
ஸல்மாதிகைத்துவாயடைத்துநின்றாள். அவள் இதயம் பதைபதைத்தது. என்ன நடந்து விட்டது என்றே அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் முகம் வெளிறிப் போய் நின்றாள்.
“எங்களுக்கிட்ட நெருங்காதீங்க சொல்லிப் போட்டன்’ என்று உறுமினான் கமால்,
“நெருங்கினா என்ன செய்வியாம், பெரிய சண்டித்தனம். பிடிச்சுக் கட்டுங்கடா மரத்தில, ஊரவங்க பாத்துக்கட்டும்.”
தன்மீது பாய்ந்து விட்ட தடியர்களை சமாளிக்க முடியாமல் தள்ளாடி விழுந்தான் கமால். கணப்பொழுதில் நடந்துவிட்ட அந்தத் தாக்குதலை அவன் எதிர்பார்க்க வில்லை. வாழ்வா?சாவா? என்ற ரீதியில் அவனுடைய போராட்டம் இருந்தது. அவனை வளைத்துச் சூழ்ந்து கொண்டு தாக்கி அவனைச் செயலிழக்கச் செய்துவிட்டார்கள். அவன் கை பின்னால் வரிந்து கட்டப்பட்டது. கால்களும் வரியப்பட்டன.
ஸல்மா இந்த அட்டுழியத்தைக் காணச் சகியாமல் கண்ணிர் வடித்து விம்மினாள். அவளுக்கும் காவலாக நின்று கொண்டார்கள். இந்தச் சலசலப்பில் ஆற்றங்கரையே திரண்டுவிட்டது.
கடலுக்குச் சென்று திரும்பியவர்கள் எல்லாரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். ஊர் முழுக்கச் செய்தி பரவிவிட்டது போல் இருந்தது. அவமானம் தாங்க முடியாமல் கமால் தலைகவிழ்ந்து நின்றான். அவன் நெஞ்சு, தன் சமூகத்தின் இழிவான, கபடமான, ஈனத்தனமான போக்கை எண்ணிக்குமுறிக் கொண்டிருந்தது. நான்கு பேருடைய கூச்சமில்லாத வார்த்தைப் பிரயோகங்கள் அவன் செவியில் வீழ்ந்து தெறித்தன. எல்லாம் பழமையான முடத்தனமான வார்த்தைகள். அவை அவனை வாட்டி வதைத்தன. அவன் புழுவாகத் துடித்தான்.
கூட்டத்தை விலக்கிக் கொண்டு சுலைமாலெவ்வை வந்து சேர்ந்தார். அவருடைய இதயக் கொழுந்தான ஸல்மாவின் பரிதாபக் கோலத்தைக் கண்டபோது அவருடைய இரத்தம் கொதித்தது. அங்கமெல்லாம் பதறிற்று. ஒரு
வை. அஹற்மத் / 33

கணம் தன்கண்களே குருடாகக் கூடாதா?காதுகள் வெடித்துக் கேட்காமல் விடக்கூடாதா என்று எண்ணினார். அவர் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிந்தார்கள். அவர் மூச்சுவிட முடியாமல் திணறினார்.
“தாயில்லாப் பிள்ளையாக உன்ன்ை இதுக்காகவா இவ்வளவு பாடுபட்டு வளர்த்தேன். ஐயோ ஆண்டவனே!” என்று அவர் மார்பிலே தட்டித்தட்டி கதறி அழுத போது கூட்டமே அசந்து நின்றது. அந்தக் கதறல் உலகின் துன்பமெல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு வந்து கொட்டிற்று. கேட்டவர் இதயமெல்லாம் எதிரொலித்தது.
"நான் இனி உயிரோட மனுஷனாய் இந்த ஊரில வழமாட்டன்.” என்று சொல்லிக் கொண்டு ஆற்றுப் பக்கமாய் ஒட எத்தனித்தார். அவரைக் கவனமாகப் பிடித்துக் கொண்டார்கள்.
கமாலின் தந்தையின் குரலும் கூட்டத்தில் ஒலித்தது. "உன்னப் பெற்றுவளர்த்த தாய். தகப்பனுக்கு சரியான பாடத்தை படிப்பிச்சுப் போட்டியடா. உன்ன வளத்தத்த ஒருநாயை வளத்திருக்கலாம். சி. து.” அவர் காறி உமிழ்ந்து விட்டு மகனிடம் சென்று அவனுடைய கட்டுக்களை அவிழ்த்துவிட்டார். ஒரு தந்தைக்குரிய நியாயமான கோபம் அவரைப் பற்றிக் கொண்டுவிட்டது. அவர் தன் கை ஓயுமட்டும் கமாலின் கன்னத்தில் மாறிமாறி அடித்தார்.
“டேய் எனக்கு நீமகனில்லடர், என் மானத்தப் போக்கிட்டாயடா. உன்ன இதுக்குத்தானாடா படிக்க வைச்சு பெருமைப்பட்டன்.”
அவர் கை ஓய்ந்தது. பேதலித்த மனத்தோடு அவர் கூட்டத்தை திரும்பிப் பாராமலே நடந்தார்.
கிராமப்புறங்களில் இப்படியான சம்பவங்கள் பற்றி செய்தி தன் உருவையே இழந்துதலை கால் வைக்கப்பட்டு ஊரில் பரத்தப்படுவதில் அதிசயமில்லை. இந்த அதிசயம் கிராம மக்களுக்கே உரித்தான கலாசாரமாகும். மற்றவர்களைப் பற்றிப் பாடம் பார்ப்பதில் கிராமத்தவர் சளைக்கவே மாட்டார். கள். இப்படியொரு நிகழ்ச்சி நடந்துவிட்டால் கேட்க வேண்டியதில்லை.
ஆணும் பெண்ணும் இணைவது வேறு. அன்பு செலுத்துவது வேறு என்பதை அவர்கள் புரிந்து கொள்வது சுலபமானதல்ல. ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் பற்றுதலை அவர்கள் யதார்த்த ரீதியில் நோக்கிக் கணிப்பார்கள். இதனால் இங்கெல்லாம் ஆணும் பெண்ணும் ஒன்றாகப் பழகுவதேயில்லை என்று அர்த்தமில்லை. ஆனால் இது பரம்பரை பரம்பரையாக ஊறிவிட்ட பண்பு. ஒரு நெறிக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்துவிட்ட பழக்கம். அந்த உயர்ந்த பழக்கத்தோடு பண்பாடு வளரவில்லை என்பது ஒரு பெரிய குறை. எல்லாம் வெளிச்சமான மனோநிலைக் குப் பழக்கப்பட்டுவிட்டதால் உண்மையை உணரத் தவறிவிடுகிறார்கள்.
இத்தகைய விஷயங்களை ஊர்ப்பிரமுகர்கள் ஒன்றுகூடி ஆராய வேண்டிய சம்பிரதாயம் உண்டு. பள்ளிவாசல் அதன் முக்கிய ஸ்தலமாகக் கருதப்பட்டது. இறைவனைத் தொழுது பணிய வேண்டிய இடமாயினும் அது நீதியை நிலைநாட்டவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
34 / நிலவின் நிழலில்

Page 24
கமால்-ஸல்மா பற்றிய பேச்சுத்தான் ஊர் முழுவதும் அடிபட்டது. நடந்து விட்ட விஷயத்தில் எவ்வளவு உண்மை என்பது தெளிவாக வேண்டும். எனவே ஊர்ப் பொதுமன்றம் இரவோடிரவாக கூடுவதற்கு ஏற்பாடாயிற்று. அன்று இவடிாத் தொழுகைக்குப் பின் விசாரணை நடக்கப் போவதாக இருதரப்பாருக்கும் பள்ளிவாசல் முஅத்தின் செய்தி சொல்லிவிட்டுப் போனார்.
நீதியை நிலைநாட்ட, அநீதியை ஒழிக்க, நெறியைச் சமநிலைப்படுத்த, அந்த நோக்கோடுதான் அவர்கள் கூடியிருந்தார்கள். அது ஒரு நீதிச்சபையல்ல. அச்சபையில் அங்கத்துவம் வகித்தவர்களும் நீதியான சிந்தனை உடையவர்களுமல்ல, ஆனால் அவர்கள் விசாரணைக்காக் கூடியிருந்தார்கள்.
கமாலும் ஸல்மாவும் கூட்டத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருந்தார்கள். 'புதினம் பார்க்க வந்தசுட்டமும் அவர்களைச் ஆழ்ந்து நின்றது. கண்ணால் கண்ட சாட்சிகள் பிடித்துக் காட்டியவர்கள் தாம் கண்டதை தாம் செய்த வீரச்செய்கையைச் சொல்லி பாராட்டுப் பெற வந்திருந்தார்கள். "சாட்சிகளின்" விளக்கம்ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பு தலைமை மரைக்காயர் கமாலைப் பார்த்தார் இருவர் கண்களும் ஒரு கணம் சந்தித்து மீண்டன. "நீ செய்துள்ள குற்றத்துக்குரிய தண்டனை மார்க்கத்தின் படி என்னவென்று உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். நீ படித்த பிள்ளை." கடைசி வார்த்தை அவன் இதயத்தை கீறிக்காட்டிற்று. அவர் சொல்லிவிட்டு ஆலிமைப் பார்த்தார். பள்ளிவாசல் கதீப் அவர். அவர் சொன்னார்.
"நூறு கசையடி மார்க்கம் சொல்கிறது." "கமால் ஏதாவது சொல்வதாய் இருந்தால் சொல்லட்டும்" தலைமை மரைக்காயரின் பேச்சைக் கேட்டு கூட்டம் அமைதியாக இருந்தது.
"உங்களிடம் எதைச் சொல்ல, நீங்கள் தான் தீர்ப்பை வழங்கீட்டீங்களே காட்சி சொல்ல வந்தவர்கள் உண்மையைச் செல்லிட்டாங்கள்." அவன் கிண்டலாகச் சொன்னான் "உண்மை" என்று சொல்லும் போது அழுத்திச் சொன்னான்.
"அப்படியில்லை. நீ சொல்ல விரும்புவதையும் நாங்கள் கேட்க விரும்புகின்றோம். இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்க."
"நான் என் மீது நீங்க சாட்டியிருக்கிற குற்றத்தை மறுக்கிறேன். அவன் அமைதியாக ஆழ்ந்து யோசித்துச் சொன்னான்.
"ஏன் காரணம்.? "காரணத்தோடுதான்" "அதைச்சொல்லு, கண்ணால் கண்டவர்கள் சொல்கிறார்கள்" "எதைக்கண்டவங்க" "அதையும் இங்கு சொல்லணுமா!" கூட்டத்தில் ஒரு குரல் கேலியாக ஒலித்தது. கமாலின் தலை குனியும் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தாாகள
வுை. அஹ்மத் /35

அவன் நிமிர்ந்து நின்று புதிய ஆண்மையோடு சொன்னான். "ஏன் கேலியாகக் கேட்கிறீங்க. எதை எங்கு சொல்லலாமோ அதைத் தலைநிமிர்ந்து சொல்லுங்க. கோழைகளாக மாறிக் கொண்டு கூனிக்கிட்டு நிற்காதீங்க. உண்மையைக் கண்டு சொன்னா அதை ஏற்க நான் தயங்கப் போவதில்லை. நீதிக்குப் புறம்பான வீண் அபாண்டமான பழியை எங்கள் மீது சுமத்துவது அநீதி. உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் கேலி செய்வதில் பயனில்லை."
"அப்படியானால் என்ன சொல்லப் போகிறாய்? ஊர்க் கடமையை மீறினால் ஊரில் ஒத்துவாழ முடியாது. அத்தோட மார்க்கத் தீர்ப்பையும் மீறின குற்றம்." என்றார் கத்திப்
"கமால் கதிபைப் பார்த்துக் கேட்டான், தயவு செய்து என் கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க. ஒராணும் பொண்ணும் பேசிக்கொண்டிருந்தாலும் தண்டனை கொடுக்க வேணுமென்று சட்டம் இருக்கா கதீப்"
"அப்படியில்ல." "அப்படியானா இந்த மாதிரிக் குற்றச் சாட் டை சுமத்திறதுக்கு சாட்சிகள் எப்படிப்பட்டவர்களாக இருக்கணும்."
"கண்ணால் கண்டவர்கள் குறைந்தது இரண்டு பேர். நல்லொழுக்கம், நல்ல பார்வையுள்ளவர்களாயும் இருக்க வேண்டும்!" அவர் ஒப்புவித்தார்,
"எங்களக் கண்டவனுகள் குருட்டுநாய்கள்" என்று கோபமாகப் பதில் சொன்னான் கமால். கூட்டம் அசந்துநின்றது. கமால் நிதானமாகச் சொன்னான்.
எங்கள் இரண்டு பேரையும் அவமானப்படுத்த இந்த மஜீத் செய்த ஆழ்ச்சி இது மரைக் கார். நான் ஸல்மாவோட பேசிக் கொண்டிருந்தன். அவளை நான் விரும் புறன். இது அவனுக்குப் பிடிக்கல்ல. அதனால் நாங்க சந்தித்து பேசிக்கொண்டிருக்கும் போது எங்கள கட்டிப்போட்டு இப்படி அபாண்டமான பழியைச் சுமத்திப் போட்டான். அல்லாஹற் மீது சத்தியமாக நாங்ங் ஒரு குத்தமும் செய்யல்ல. நீங்க இதை நம்புங்க.." அவன் உணர்ச்சி வசப்பட்டுக் கூறினான் அவன் கண்களிலிருந்து கண்ணிர் கொட்டிற்று; "இதை நம்புங்க" என்ற அவனுடைய வார்த்தைகள் கூட்டத்தவர் மனத்தில் எதிரொலித்தன.
"அந்தப் புள்ளயக் கூப்பிடுங்க விசாரிப்பம்." ஸல்மா சுவர் ஒரமா வந்துநின்றாள். "நீ என்ன பிள்ளை சொல்கிறாய்? கேள்வியின் ஆடு அவளின் இதயத்தை தாக்கியது.
"நான் என்னத்தைச் செல்ல. சத்தியமா நாங்க ஒண்டும் செய்யல, எங்கள வீணாகப் பழிசுமத்திறாங்க."
"அப்படியானால் நீங்க ஒண்டும் செய்யவில்லை என்று சத்தியம் செய்ய முடியுமா?" திடீரென்று கதிப் கேட்டார். -
"ஒம். ஓம்." இருவர் குரலும் ஒன்றாக ஒலித்தது. "அப்படியே செய்ங்க."
36 / நிலவின் நிழலில்

Page 25
"தீர்ப்பு நிறைவேறிற்று. கூட்டம் திகைத்து நின்றது. சாட்சிகள் ஏமாந்து நின்றார்கள். அவர்கள் முகத்தில் அசடு வழிந்தது.
கமால் கூட்டத்தை விலக்கி மஜீதிடம் அன்பாகச் சென்றான். என்ன நடக்குமோ என அவர்கள் பயந்து நின்றார்கள்.
"அயோக்கியநாயே. பொறாமைப் பிசாசே நீதானே இந்த வேலையைச் செய்து என்ன அவமானப்படுத்தினாய்?" கோபாவேசமாகப் பாய்ந்தான் கமால். கூட்டம் அல்லோ கல்லோலப்பட்டது. அவர்கள் கட்டிப் புரண்டார்கள். மாறி மாறி அடித்துக் கொண்டார்கள். மஜீதின் வாயில் இரத்தம் கொட்டிற்று. கூடியிருந்தவர்கள் செயலிழந்து ஒரு கணம் திகைத்தனர்.
ஆத்திரம் தீருமட்டும் அவனை அடித்து விட்டு வெளியே வந்தான் கமால், ஸல்மா சுவர் ஒரமாக நின்றிருந்தாள்.
"என்னோட வா ஸல்மா.உன்ன முறையாகக் கல்யாணம் செய்து கொள்கிறேன். இந்தக் கேடுகெட்ட கூட்டம் எப்படிப் போனாலும் நமக்கு கவலையில்லை" அவன் காறி உமிழ்ந்து விட்டு நடந்தான். சுலைமாலெவ்வையும் ஏதோ உணர்ச்சி வசப்பட்டவராக அவர்களுக்குப் பின்னால் நடந்தார். அவரின் உள்ளம் சாந்தியடைந்திருந்தது. எல்லோருக்கும் முன்னால் கமாலின் தந்தை அப்துர் ரஹற்மான் சென்று கொண்டிருந்தார்.
கொட்டு மேளமும் குரவையொலியும் கேட்காத திருமணமாக அது நடந்தேறியது. இதயங்கள் ஒன்று கலந்து, உறவு கொண்ட திருமணமாக அது மலர்ந்தது.
இளம் உள்ளங்களிடையே அது குளிர்ச்சியை ஊட்டி குடும்பங்களின் ஒற்றுமையை வளர்ந்தோங்கச் செய்தது. சுலைமாலெவ்வையும் அப்துர் ரஹற்மானும் இணைபிரியா நண்பர்களானார்கள், தூற்றிப்பேசிய ஊர்தன் வாயை முடி மெளனமாக இருந்தது.
என்றும் போலே வெள்ளி நிலா வானில் வரவு தந்தது. விடி நிலாக்காலத்தில் அவர்கள் பேசிப்பேசிக் களைத்துப் போனார்கள். நிலாவின் அற்புதக் காட்சியைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து கிடந்தார்கள் பூதாகரமாகப்படர்ந்து கிடந்த மரநிழலில் அவர்களின் இனிய கனவுகள் மலர்ந்து கொண்டிருந்தன.
சில மாதங்களில் ஸல்மா பூரித்துப் போனாள். மாதங்களை ஒவ். வொன்றாக எண்ணுவது தான் அவளுக்கு வேலையாக இருந்தது. எத்தனையோ திங்கள்கள் வந்து போயின. விடிநிலாக் காலத்தில் அவன் வரவுக்காக அவள் கால்கடுக்கக் காத்திருந்தாள். அவனும் வந்தான்.
இத்தகைய ஒரு விடிநிலாப் பொழுதுதான் அது. ஒரு கொந்தளிப்பான காலம். விடியற்காலையில் கச்சான் காற்றுச் சுழன்றடித்தது. கடல் தாய் குமிறிக் கொண்டிருந்தாள். ஸல்மா கொஞ்சம் கலங்கிப் போய்நின்றாள். அன்றிரவு அவள் தூங்கவேயில்லை.
விடிந்ததும் விடியாத அந்த வேளையில் தன் குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு அவள் ஆற்றங்கரையில் போய் நின்றாள். தந்தையின் வரவை மகனுக்குக் காட்டவேண்டும் என்ற ஆர்வமும் பாசமும் அவள் உள்ளத்தில் குடிகொண்டிருந்தது.
வை. அஹ்மத் / 37

அவள் ஆசையே போல தூரத்தில் சில வள்ளங்கள் வந்தன. "அதோ பார் மகனே உன் வாப்பா" என்று ஒரு வள்ளத்தைச் சுட்டிக்காட்டி அவள் மகிழ்ச்சிக் கூத்தாடினாள். வள்ளம் கரை தட்டிற்று. கமால் சோகமாக இறங்கினான்.
"ஸல்மா மீண்டும் புயல் வந்து விட்டுது" என்று அவன் சொன்ன போது அவளிடமிருந்த மகிழ்ச்சி எல்லாம் எங்கோ மறைந்தது.
"என்ன உங்களுக்கு ஒண்டுமில்லியா." அவள் பதறிக் கேட்டாள். "அப்படி ஒன்றுமில்ல, ஆனால்." அவன் முடிக்காமல் யோசித்தான். அவன் குழந்தையை வாங்கிகொண்டே சென்றான்.
"நம்மட வலையெல்லாத்தையும் ராத்திரி யாரோ அறுத்துக்கிட்டு போயிட்டானுகள் ஸல்மா. நாங்கள் நன்றாக தூங்கிட்டம். விடிஞ்செழும்பிப் பார்த்தா ஒண்டுமில்ல"
அவன் குழந்தையை தோளில் கிடத்திக் கொண்டு அப்பால் நகர்ந்தான். அவள் விறைத்துப் போய் நின்றாள்.
"என்ன செய்வம். இது அல்லாட சோதனை" என்று முஸ்தபா சொன்னான். அவர்கள் வீட்டை நோக்கி நடந்தார்கள்.
அன்று அவர்கள் நேரத்தோடு வந்து விட்டார்கள். இல்லையென்றால் விடிந்து ஆரியோதயமாகிவிட்ட பொழுதில் கடலில் சுழன்றடித்த கச்சான் காற்றில் அவர்களும் அகப்பட்டிருப்பார்கள். சில வள்ளங்கள் கரையேற முடியாமல் கடலில் தத்தளித்தன. சிலவற்றின் என்ஜின்களும் வெலை செய்ய மறுத்தன. கடல் கொந்தளித்தது. தென்னைமர உயரத்திற்கு அலையெறிந்து வீசிற்று. அந்தக் குழப்பத்தில் மீனவர்கள் திண்டாடினார்கள்.
முகத்துவாரத்தைத் தாண்டி வர முடியாமல் பயந்து நடுக்கடலில் தத்தளித்தார்கள். முகத்துவாரத்தில் ஜலம் கொதித்துக் கொண்டிருந்தது. மஜீத் இதை அசட்டை செய்துவிட்டு முன்னேறினான். அவனுடைய போதாத காலம். காற்றும் பலமாக வீசிச்சுழன்றது.
மலைபோல அலை எழுந்த போது, அவனுடைய வள்ளம் அந்தப் போராட்டத்தில் தோல்வி கண்டு கவிழ்ந்தது. வள்ளம் கவிழ அதில் இருந்தவர்கள் கடலினுள் தூக்கி வீசப்பட்டார்கள். வலையும் , சாமான்களும் மிதந்தன.
எல்லா விபரங்களையும் அன்வர் கமாலுக்குச் சொன்னான். கடலுக்குப் போனவர்களில் சிலரைக் காணவில்லை என்று தேடிப் போனவர்களுடன் அவன் போய் வந்திருந்தான்.
ஆற்றங்கரையெல்லாம் சோகமே உருவாகி மக்கள் கூட்டமாக நின்றிருந்த போது, நடந்து விட்ட நிகழ்ச்சிகளை அன்வர் விபரித்த போது கமால் கலங்கிப் போனான், ஆனால் அன்வர் அடுத்துக் கூறிய செய்தி.
38 / நிலவின் நிழலில்

Page 26
"கமால் நம் மட வலையையும் அவன் தான் அறுத் திருக்கான். வலைப்பாரத்தில் வள்ளம் தாண்டிருக்கு. அந்த வள்ள வலையும் நம்மட வலையும் சேர்ந்தா பாரமா இராதா?. காத்துக் கொஞ்சம் இளகினதுக்குப் பிறகு எல்லா வலையும் எடுத்துப் பார்த்தம். நம்மட வலையும் கிடந்தது. எல்லாம் துறையில கொண்டு வந்து போட்டிருக்காங்க. வா, பாப்பம்." என்று கூறினான் அன்வர்.
"மஜிதக் காணல்லயா" என்று கேட்டான் கமால்.
"அவனையும் அவன்ட கூட்டாளிகளையும் கடல்தான் விழுங்கியிருக்கணும். யாரையுமே காணல்ல நாங்க. இப்பவும் தேடிக்கிட்டிருக்காங்க." அவன் பேசிக் கொண்டே போனான். கமாலின் இதயம் மட்டும் குமுறிக் குமுறி அழுதது. மஜீதின் இந்தப் பரிதாபகரமான முடிவு அவன் இதயத்தை உலுக்கி விட்டது.
என்றாலும் மஜீத் அவன் பள்ளித் தோழனல்லவா?!
02.09. 1968
வை. அஹ்மத் / 39


Page 27
அளவில்,வார்த்தை வார்த்தைகளுக் பெரியநாவலு கொண்டே செ6 ஒரு நிறுத்துமிடத்தில் ர என்றளவில் மு ரயில் நின்றாலும் அவர்க: தண்டவாளங்கள் இரண்டும் போய்க் கொண்டிருப்பத இரண்ை OpšEELDT
isBNg55.835
 
 

களில் தான் இதுகுறுநாவல். கிடையிலும் அதற்கப்பாலும் பக்கான தளம் விரிவடைந்து ல்கிறது. எங்காவது ஏதாவது யில் நிற்கத்தான் வேண்டும் டித்திருக்கின்றார் நாவலை. ளின் வாழ்க்கையைப் போல்
சமாந்தரமாய் தொலைவில் ாய் மங்கலாகத் தெரிகிறது. டயும் 'பந்தம்' என்ற சங்கிலி க இழுத்துப் பிணைக்கிறது.
LLLLLL LL LLLLLLLLLLLKLL000L