கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரலாறு முதற் பகுதி

Page 1


Page 2

தேசிய உயர் கல்விச் சான்றிதழுக்குரியது
வரலாறு
முதற் பகுதி
கலாநிதி அமரதாச லியனகமகே,
B. A. (av aoTL Gö), Ph.D. (Gad GOTL637)
கலாநிதி சிறிமல் ரனவல, B. A. (36-i60s), Ph.D. (23657L607)
கலாநிதி பீ. வீ. ஜே. ஜயசேகர, B. A. (இலங்கை), Ph.D. (இலண்டன்)
༄།
^ಿಶ್ಲೆ: ஜயசிங்க,
A (இலங்கை)
கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

Page 3
முதற் பதிப்பு, 1976 எல்லா உரிமையும் அரசினர்க்கே
எழுதியோர் குழு
கலாநிதி அமரதாச லியனகமகே வரலாற்றுப் பேராசிரியர் வித்தியாலங்கார {3}}{6}}{Tét, l{: இலங்கைப் பல்கலைக் கழகம்
கலாநிதி சிறிமல் ரணவெல
சிரேட்ட வரலாற்று விரிவுரையாளர் வித்தியாலங்கார வளாகம் இலங்கைப் பல்கலைக்கழகம்
கலாநிதி பீ.வீ. ஜே. ஜயசேகர
வரலாற்று விரிவுரையாள ή பேராதனை வளாகம் இலங்கைப்பல்கலேக் கழகம்
திரு. நந்தா ஜயசிங்க
வரலாற்று விரிவுரையாளர் வித்தியாலங்கார வளாகம் இலங்கைப் பல்கலைக் கழக.
மொழி பெயர்த்தோர் குழு
. இ. முருகையன் வ. வல்லிபுரம் . தம்பிமுத்து . ர. இராசலிங்கம்
g
"rs
الرقعي
3.
ஐ
தி
த
பதிப்பாசிரியா
திரு. வே. பெரம்பலம்
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் எயிற்கின் ஸ்பென்ஸ் கம்பனி லிமிற்றெட் அச்சகத்திற் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
76/a/15 (3,000)

மு க வ  ைர
சிரேட்ட துணைக் கல்வி நிலையில் 10, 11 ஆம் தரங்களிலே கற்பிக் கப்படும் ஈராண்டுப் பாடநெறி, இன்றைய அரசாங்கம் புகுத்தி யுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களில் மூன்ரு வது படியாக அமை கிறது. இந்நெறியைப் பயின்று முடித்த மாணவர் தேசிய உயர் கல்விச் சான்றிதழ்ப் பரீட்சைக்குத் தோற்றத் தகுதியுடைய gift 6 ft.
இப்பாடநெறி மூன்று பிரிவுகளைக் கொண்டது, அவையாவன:
அ. கட்டாய பாடங்கள் ஆ. விருப்புநெறிப் பாடங்கள் இ. திட்டவேலை சிரேட்ட துணைக் கல்வி நிலைக்குரிய புதிய பாடவிதானம் 59 இற் கும் கூடுதலான பாடங்களைக் கொண்டது. இப்பாடங்களைப் பயி லும் போதும் பயிற்றுவிக்கும் போதும், மாணவரும், ஆசிரியரும் எதிர்நோக்கத்தக்க இடர்ப்பாடுகள் சிலவற்றைத் தவிர்க்கும் முக மாகப் பல்வகைப் பாடத் துறைகளிலும் சிறந்து விளங்கும் அறி ஞர்களின் உதவியுடன், பாடநூல்கள் தொகுக்கப்படுகின்றன. இந்நூல்களைத் தவணைக்குத் தவணை நியாயமான விலைகளில் மாண வருக்குக் கிடைக்கச் செய்யும் வகையில், முறைமையான திட்ட மொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றை விசேட பாட நூல்களாகத் தொகுத்து வெளியிடவும் கருதப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் மொழிக்கும் இலக்கியத்துக்குமே பாடநூல் கள் விதிக்கப்பட்டுவந்தன. புதிய பாடவிதானம் பழையதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாயிருப்பதால், மாணவருக்கும் ஆசிரியருக் கும் ஒருங்கே வழிகாட்டிகளாக அமையத்தக்க நூல்களைத் தயாரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுளது என்பதை யாவரும் ஒப்புக் கொள்வர்.
சிரேட்ட துணைக்கல்வி நிலைக்கெனக் குறித்த நூல்களை வெளி யிடத் தேவையில்லை என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட் டுள்ளது. உலகின் மொத்த அறிவானது ஐந்தாறு ஆண்டுகளுக் குள்ளேயே இருமடங்கா கிவிடுமென நம்பப்படுகிறது. எனவே எந் தப் பாடநூலும், அஃது எத் துணை முழுமையாகத் தொகுக்கப்பட் டாலும், சில வருடங்களுள் வழக்கிறந்து விடலாம். உயர் கல்விக்கு ஆயத்தப்படுத்தும் மாணவர் தங்கள் அறிவு வளர்ச்சிக் குத் தனியே ஒரு நூலில் மட்டும் தங்கியிருப்பதைத் தவிர்த்து, நூல் நிலையங்களைப் பயன்படுத்திப் பிற நூல்கள், புதினத்தாள்கள், சஞ்சிகைகள் ஆகியவற்றையும் வாசித்துத் தமது அறிவை விரிவாக் கிக் கொள்ள வேண்டுமெனப் பெரும்பாலான நாடுகளிலுள்ள கல்வி மான்கள் எதிர்பார்க்கின்றனர். ஆகவே, மாணவர் தாமாகவே மேற் கொள்ள வேண்டிய விசேட பணியொன்று யாதெனில், நூல்கள், சஞ்சிகைகள் வாயிலாகத் தம் அறிவை விருத்தி செய்து கொள்ளலா கும். எனினும், அவ்வாரு ன நூல்களையும் சஞ்சிகைகளையும் பெறுவதில் எமது மாணவருக்குள்ள இடர்ப்பாடுகளைக் கருத்திற் கொண்டே இந்நூல்களைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை ஈண்டு விசேடமாகக் குறிப்பிட வேண்டும்.
iii

Page 4
குறித்த பாடங்கள் சிலவற்றைப் பொறுத்த மட்டில், விரிவான பாடத்திட்டங்களும் நூற்பட்டியல்களும் பாடசாலைகளுக்கு ஏலவே அனுப்பப்பட்டுள்ளன. பாடசாலை நூல்நிலையங்களை விருத்தி செய்வதற்காக, இந்நிலைக்குரிய கல்விக்குத் தேவையான நூல்கள் இவ்வாண்டிலும் கடந்த ஆண்டிலும் மேற்படி நூல்நிலையங்கட்கு அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஆசிரியருக்குச் சேவையிடைப் பயிற்சி யொன்றும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நூல்கள் பற்றித் தங்கள் ஆலோசனைகளும் விமரிசனங்களும் உவந்து ஏற்றுக் கொள்ளப்படும். இறுதி நூலை வெளியிடுதற்குத் தயாரிக்கும்போது தங்கள் ஆலோசனைகட்கு விசேட கவனம் செலுத்தப்படும். தங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கல்வி வெளியீட்டு ஆணையாளருக்கு அனுப்புவீர்களாயின், நாம் நன்றியுடையராவோம்.
iv -

உள்ளுறை
அத்தியாயம் பக்கம்
1. பதினெராம் நூற்றண்டின் இறுதிவரை
இலங்கை வரலாற்றுச் சுருக்கம் OM O O I
2. நீர்வள நாகரிகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் ~. 16
3. பின்மத்திய காலத்து ஆட்சிமுறை a 24
4. சமய-பண்பாட்டு மாற்றங்கள் ... 29
5. இலங்கைக்கு வெளியுலகுடன் இருந்த வியாபாரத்
தொடர்புகளும் பண்பாட்டுத் தொடர்புகளும் 44
6. குடியேற்றப் பருவம் .. 55
7. மத்திய வகுப்பின் எழுச்சி ... 81

Page 5

முதலாம் அத்தியாயம்
பதினுெராம் நூற்றண்டின் இறுதிவரை இலங்கை வரலாற்றுச் சுருக்கம்
கிறித் துவுக்கு முன் ஆரும் நூற்ருண்டளவில், வட இந்தியாவி லிருந்து வந்த ஆரியர் இங்குத் தமது குடியேற்றங்களை அமைத் துக் கொண்டமையே இலங்கை நாட்டு வரலாற்றின் ஆரம்பம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. இக்குடியேற்றங்களைப் பற்றித் திட்டவட்டமாக எதனையும் கூற முடியாது. கி. மு. ஆரும் நூற்ருண்டுக்குச் சற்று முற்பட்ட காலத்திலிருந்தே ஆரியர் இங்கு வந்திருக்கவேண்டுமென்று கொள்ளுவதற்கு இடமுண்டு. எனவே, அக்காலத்திலிருந்து பல நூற்ரு ண்டுகளாக அவர்கள் இங்கு வந்தமை காரணமாகவே, மேற்கூறப்பட்ட அவர்களுடைய குடியேற்றங்கள் தோன்றலாயின. காலப் போக்கிலே, நம் நாட் டின் பற்பல பகுதிகளிலும் சிதறிக் கிடந்த இக் குடியேற்றங்களை அவர்கள் ஒன்று சேர்த்து ஒழுங்கான ஆட்சி முறையொன்றினை வகுத்துக் கொண்டனர். அத்துடன், அவர்கள் தமது தாய் நாட்டிலிருந்து கொண்டுவந்த கலாச்சாரச் செல்வத்தை அடிப் படையாகக் கொண்டு, சிறந்த ஒரு நாகரிகம் இந்த நாட்டிலே செழித்தோங்கலாயிற்று. உயர்ந்த ஒரு நாகரிகத்தை உடைய தாக இருந்த இந்திய உப கண்டத்துக்கு மிக அண்மையிலே இலங்கை அமைந்துள்ளமையால், அந்நாட்டின் செல்வாக்கு நம் நாட்டிற் பரவியது இயல்பேயாம். நம் நாட்டின் சிந்தனை வளர்ச்சி, ஆட்சிமுறை, சமூக அமைப்பு, கவின் கலைகள் ஆகிய வற்றிலே பாரத நாட்டின் செல்வாக்குப் பெரிதும் பரவிற்று. நம் நாட்டின் அரசியல் வரலாற்றிலும், குறிப்பாக தென்னிந்தி யாவின் செல்வாக்கினைக் காணக்கூடிய சந்தர்ப்பங்கள் பலவுள. பொதுவாக நோக்குமிடத்து, பாரத நாட்டின் செல்வாக்கு இந் நாட்டு மக்களின் கலாச்சார அபிவிருத்திக்குப் பெரிதும் கை கொடுத்து உதவியுள்ளது என்பது தெளிவு. எனினும், மேற் கூறப்பட்டவாறு, ஆரியர் இங்கு வந்தமையினலே உருவான இராச்சியமானது, அரசியல மிசத்திலேனும் கலாசார அமிசத்தி லேனும், பாரத நாட்டிற்குக் கீழ்ப்பட்ட ஒரு பிரதேசமாக இருந் ததென்று கருதிவிடலாகாது. உண்மையில், பாரத நாட்டுக் கலாசாரத்தினுல் ஊட்டம் பெற்று வந்த நமது தேசிய கலாசாரம் அறப்பழைய காலந்தொட்டே தனிப் பண்பு வாய்ந்த தொன்ருக வளர்ந்து வந்தது என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. இவ்வாறு தான், உயர்ந்த ஒரு நாகரிகம் நமது நாட்டிலே தோன்றலா யிற்று. இந்த அத்தியாயத்திலே, பதினைந்தாம் நூற்ருண்டுவரை யுள்ள நம் நாட்டு வரலாற்றைச் சுருக்கம்ாக எடுத்துக் கூறுவோம். அக்காலப் பகுதிக்குரிய முக்கியமான சில விடயங்களை மாத்திரமே இங்கு எடுத்துக்கொள்வோம்.

Page 6
2 வரலாறு
இக் காலப் பகுதிக்குரிய வரலாற்றினைக் கற்றுக் கொள்வதற் குப் பெரிதும் பயன்படவல்ல பல ஆதாரங்கள் எமக்குக் கிடைத் துள்ளன. வெவ்வேறு காலப் பகுதிகளிலே பாளி மொழியில் எழுதப்பட்ட தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் போன்ற முக்கியமான வம்ச காதைகளும், பிற்காலத்தில் எழுதப்பட்ட பூஜாவளிய (அத். 33-34), ராஜரத்நாகரய, ராஜாவளிய போன்ற சிங்கள வம்ச காதைகளும் இவற்றுள் அடங்கும். இவற்றைவிட, பாளிப் பேருரை இலக்கியங்களும், வணக்கச் சின்னங்களை மைய மாகக் கொண்டு வரையப்பட்ட தாதாவம்சம், ஹத்தவனகல்ல விகாரவம்சம், தூபவம்சம், தாதுவம்சம் போன்ற வம்ச காதை களும் பெரிதும் உபயோகமானவை. இவற்றுட் பெரும்பாலா னவை எக்காலத்திலே யாரால் எழுதப்பட்டன என்று திட்ட வட்டமாகக் கூற இயலாது. இவற்றுள், மேற்கூறப்பட்ட காலப் பகுதிக்குரிய வரலாற்றைக் கற்பதற்குப் பயன்படும் ஆதார நூல் களுள், மகாவம்சமும் அதற்கொரு பிற்கூருக எழுதப்பட்டதெனக் கருதப்படும் சூளவம்சமும் முக்கியமானவை. மகாவம்சம் ஆரும் நூற்ருண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. அதில், மகா சேன மன்னனுடைய ஆட்சிக் காலத்தின் இறுதிவரையான காலப்பகுதிக்குரிய வரலாற்று விவரங்கள் அடங்கியுள்ளன. மகா சேனனின் ஆட்சிக்குப் பிற்பட்ட காலத்து விடயங்கள், காலத் துக்குக் காலம் பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்ட சூளவம் சத்திலே இடம் பெற்றுள்ளன. ஏனைய நூல்கள் எவற்றையும் விட, மகாவம்சத்திலும் சூளவம்சத்திலுமே விவரமான விட யங்கள் அடங்கியிருக்கக் காணலாம். இந்நூல்களிலே அரிய பல விடயங்கள் அடங்கியுள்ளன; என்ருலும், இவற்றிலிருந்து வர லாற்று உண்மைகளைக் கடைந்தெடுத்தல் இலகுவான காரிய மன்று. மிகைக்கூற்று, குறைக்கூற்று, ஒரக்கூற்று ஆகியன இந்நூல்களிலே காணப்படும் குறைகளுட் சில வாம். மேற்கூறிய இலக்கிய ஆதா ரங்களைவிட, தொல்பொருள் ஆராய்ச்சி ஆதாரங்களும் போது மளவு கிடைத்துள்ளன. இவற்றுள், கி. பி. 3 ஆம் நூற்றண்டி லிருந்து காணப்படும் கல்வெட்டுகளைத் துணைக்கொண்டு மேற் கூறிய குறைபாடுகள் சிலவற்றை ஒரளவுக்குத் தீர்த்துக் கொள்ள லாம். இடிந்த கட்டிடங்கள், சிலைகள், செதுக்கல்கள், நாண யங்கள் ஆகியனவற்றிலிருந்தும் பயனுடைய தகவல்கள் எமக்குக் கிடைக்கின்றன. இவை தவிர, இத்துறையில் எமக்குப் பயன் படக்கூடிய பிறநாட்டு ஆதாரங்களையும் நாம் மறந்துவிடலாகாது.
1. ஆரியக் குடியேற்றங்களின் தெர்டக்கமும் நாடு ஒருமைப்பட்டமையும்
மேலே கூறியவாறு கி. மு. ஆரும் நூற்றண்டளவில் வட இந் தியாவிலிருந்து ஆரியர் வந்து குடியேறுவதற்கு முன்னர், இங்கே எப்படிப்பட்ட நாகரிகம் இருந்துவந்த தென்று அறியும் பொருட்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட சில ஆராய்ச்சிகள் போதுமளவு பயனைத் தரவில்லை. ஆரியர் வருகைக்கு மிக முந்திய காலத் திலே, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மனித இனமொன்று இங்கே வாழ்ந்தது என, கலாநிதி பி. ஈ. பி. தரனியகல அவர்கள் இரத்தினபுரி மாவட்டத்திலே, பலாங்கொடைப் பகுதியில் நடத்

ஆரியக் குடியேற்றங்கள் 3
திய ஆராய்ச்சிகள் மூலம் அறிகிருேம். அன்றியும், இன்றுவரை சீர்திருந்தா நிலையிலிருக்கும் வேடர் எனப்படுவோர், வரலாற் றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த ஓர் இனத்தின் வழித் தோன்றல்களே என்று சிலர் கருதுகின்றனர். இவற்றை விட, ஆரியர் இலங்கைக்கு வந்த காலத்திலே இங்கே இயக்கர், நாகர் எனப்படும் இரு வகை மக்களினங்கள் வாழ்ந்தன என்ற கருத்தும் நிலவுகின்றது. மகாவம்சத்திலுள்ள சில குறிப்புகளே இக்கருத்துக்கு ஆதாரமாயுள்ளன. ஆயின் இவர்கள் பற்றி மகா வம்சத்திற் காணப்படும் விபரங்களையும் பாரத நாட்டின் இதி காச புராணங்களிலே இயக்கர், நாகர் பற்றிக் காணப்படும் விவ ரங்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்த பேராசிரியர் செனரத் பரண விதான அவர்கள், இவர்கள் உண்மையான மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கொள்வதற்குத் தயங்குகின்ருர். இவர்கள் இலக்கிய நூல்களிலே மாத்திரம் இடம் பெறுகின்ற ஆதிமனிதப் பிறவிகள் என்பது இவருடைய கருத்து. ஆரியர் வருவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்தவர்கள் யாராயிருந்திருப்பினும், அவர் களைக் காட்டிலும் ஆரியர் மேம்பட்ட நாகரிகமுடையவர்களாக இருந்தார்கள் என்று கொள்வது பொருத்தமே. ஆரியர் சுதேசி களைச் சுலபமாக வென்று புதிய குடியேற்றங்களை நிறுவிக் கொண் டார்கள் என்பது தெளிவு. அதன் பின்னர் ஓங்கி வளர்ந்த நாக ரிகத்திலே ஆரிய அம்சங்கள் பெரிதும் காணப்படுகின்றன. ஆணுல், ஆரிய மரபைச் சாராத அம்சங்கள் - அதாவது, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக்குரிய அம்சங்கள் - எவையேனும் அந்த நாகரிகத்துடன் சேர்ந்திருப்பின், அவை யாவை என இனங்கான முடியாத அளவுக்கு அவை நன்கு கலந்துவிட்டன என்று கருத வேண்டியுள்ளது. எனினும், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து இலங்கை பற்றித் தொல் பொருளாராய்ச்சியாளர் போதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முடிக்கும் வரையும், அக்காலப் பகுதி பற்றித் திடமாக எதனையும் கூற இயலாது.
இலங்கையில் ஆரியர் தமது குடியேற்றங்களை அமைத்துக் கொண்டமுறையினை விளங்கிக் கொள்வதற்கு, மகா வம்சத்திற் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் பெரிதும் பயன்படும். கர்ன பரம்பரையாக வந்த இவ்விவரங்கள், ஆரியருடைய குடியேற் றங்கள் தோன்றி ஆயிரமாண்டுகளுக்குமேற் சென்றதன் பின்னரே எழுத்து வடிவம் பெற்றன. காலப் போக்கிலே இவ்விவரங்கள் பெரிதும் திரிபடைந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு. நாடோடிக் கதைகளும், சமயக் கதைகளும் இவற்றுடன் கலந்து பயின்ற மையாலும் இவை தம் சுயவடிவத்தை இழந்துள்ளமை தெளிவு. இவற்றிடையே காணப்படும் சில முரண்பாடுகள் இவ் வுண்மையை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய குறை பாடுகள் இருப்பினும், இந்நாட்டிலே ஆரியரின் குடியேற்றங்கள் தோன்றிய முறையினையும், அவற்றின் இயல்பினையும் விளங்கிக் கொள்வதற்கு, மேற்கூறிய விவரங்களையே நாம் ஆதாரங்களாகக் கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம்.
தொல் பொருள் ஆதாரங்களாகிய பிராமிக் கல்வெட்டுகளும் இத்துறையில் எமக்குப் பெரிதும் பயன்படுகின்றன. கி. மு மூன் ரும் நூற்ருண்டிலிருந்து தோன்றியுள்ள இக் கல்வெட்டுகள் நாட்

Page 7
4 வரலாறு
டின் பல பகுதிகளிலும் காணப்பட்டுள்ளன. பிக்குமார் வசிப் பதற்கெனக் குகைகள் வழங்கப்பட்ட வைபவங்களை எழுதிவைப்ப தன் பொருட்டே இக்கல்வெட்டுகள் பெரும்பாலும் பொறிக்கப் பட்டன. இவற்றிலே அடங்கியுள்ள சில விவரங்களையும், இவை நாட்டிற் பரவியுள்ள முறையினை யுங் கொண்டு, ஆரம்பத்திலே தோன்றிய ஆரியக் குடியேற்றங்களின் சில இயல்புகள் பற்றி நாம் ஒரு வாறு அறிந்து கொள்ளலாம். மகா வம்சத்தைக் காட் டிலும் இக்கல்வெட்டுகள் ஆரியக் குடியேற்றங்கள் தோன்றிய காலப்பகுதிக்குக் கிட்டிய காலத்தவை. ஆகையால் இவற்றின் வரலாற்று முக்கியத்துவம் இன்னும் அதிகமாகிறது. அத்துடன், மிகைப்பாடில்லாத உண்மையான பதிவுகள் என்ற முறையிலும் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.
மகா வம்சத்திற் காணப்படும் குறிப்புகளின் படி, இலங்கையில் ஆரியர் குடியேற்றங்கள் தோன்றுவதற்கு முன்னேடியாக இருந் தவன் பாரத நாட்டு லாலா நாட்டைச் சேர்ந்த விஜயன் என் பானே. அவன் லா லா நாட்டைச் சேர்ந்த சிங்கபுரியிலிருந்து 700 தோழருடன் இங்கு வந்தான் எனவும் மகா வம்சம் கூறுகிறது. ஐயன் பற்றிய குறிப்புகளிலே நம்பமுடியாத சில விடயங்கள் காணப்படுகின்றன. எனினும், அவை பற்றி இங்கு விரிவாக ஆராய வேண்டிய அவசியமில்லை. சிங்கபுரியைச் சேர்ந்த சிங்க பாகு மன்னனுக்கும் சிங்கசீவலி மகாராணிக்கும் மூத்த மகனுக விஜயன் பிறந்தான். விஜயகுமாரன் நாட்டிலே கிளர்ச்சிகள் செய்து நாட்டு மக்களைத் துன்புறுத்தியதனல், நாட்டு மக்களின் நல்வாழ்வை விரும்பிய சிங்கபாகு மன்னன் விஜயனையும் அவனு டைய தோழர்களையும் கப்பலேற்றி நாடு கடத்தினன் என்று கூறப்படுகிறது. இங்குக் கூறப்படும் சிங்க பாகு, சிங்க சீவலி என் போர் யார்? அவர்களுடைய இராச்சியம் ஏது? இராசதானியாக இருந்த சிங்கபுரி எது? இவற்றையெல்லாம் சரியாக அடையாளங் காணுதல், இன்று கடினமாகும். லாலா நாடானது இன்றைய இந்தியாவில் வங்காளம் என்று குறிப்பிடப்படும் பகுதியில் இருந் ததென ஊகிக்கப்படுகின்றது. இனி, இந்த இராச்சியம் கிழக் கிந்தியாவிலன்றி, மேற்கிந்தியாவில், இப்போது குஜராத்து எனப் படும் பகுதியிலேயே இருந்திருக்கவேண்டுமென்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். சிங்கபுரியிலிருந்து கப்பல்களிற் புறப்பட்ட விஜ யனும் தோழர்களும் முதலில், மேற்கு இந்தியாவிலிருந்த சுப் பாரக எனப்பட்ட துறைமுகத்தை அடைந்து அங்கிருந்து புறப் பட்டு, இலங்கையிலே தம்பபன்னி என்னும் இடத்தில் இறங் கினர்கள் என்று மகாவம்சம் கூறுகின்றது. தம்ப பன்னி என்பது பின்னெரு காலத்தில் இலங்கை முழுவதற்கும் வழங்கப்பட்ட ஒரு பெயராயினும், விஜயனும் தோழர்களும் கரையை அடைந்த இடம், இப்போது இலங்கையின் வடமேற்குப் புறமாகவுள்ள தம் மன்ன என்னும் இடமே யென்று ஊகிக்கப்படுகின்றது.
பாரத நாட்டவர் இலங்கையிலே குடியேற்றங்களை அமைப் பதற்கு அனுகூலமாக இருந்த காரணங்கள் எல்லாம், விஜயன் பற்றிய குறிப்புகளிலே அடங்கியுள்ளனவென்று கூற முடியாது. சொந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்ட ஒரு கூட்டத்தினர், புதிய இருப்பிடம் தேடியே இலங்கை வந்து குடியேறினர் என்று, மேலே

ஆரியக் குடியேற்றங்கள் 5
கூறப்பட்ட குறிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. இவற்றைவிட, மேற்கூறப்பட்ட காலத்திலே வியாபாரத்தின் பொருட்டும், பொருளிட்டும் குறிக்கோளுடனும் பாரத தேசத்தவர் கடல் கடந்து சென்ருர்கள் என்று சுவர்ணபூமி ஜாதக ய, வலாஹஸ் ஸ் ஜாதக ய, பவேறு ஜாதக ய போன்ற ஜாதகக் கதைகளிலிருந்து நாம் அறிகிருேம். ஐந்தாம் நூற்ருண்டில் இலங்கை வந்த பிர சித்தி பெற்ற சீனப் பயணியாகிய பாகியனுடைய பயணக் குறிப் புகளிலே, இலங்கையிற் குடியேற்றங்கள் தோன்றுவதற்கு வியா பாரிகள் முன்னே டிகளாக இருந்தார்கள் என்று குறிப்பிடப்பட் டுள்ளது. விஜயன் பற்றிய விடயங்கள் இந்தக் குறிப்புகளிலே இடம்பெறவில்லை. மலேசியா, இந்தோனேசியா போன்ற கிழக் காசிய நாடுகளிலே பாரத தேசத்தவருடைய குடியேற்றங்கள் தோன்றுவதற்கு, வியாபாரத் தொடர்புகளே பெரும்பாலும் கார ணமாக இருந்தனவென்று காட்டும் வரலாற்றுச் சான்றுகள் பலவுள. இவ்வாறே இலங்கை நாட்டிலும், பாரதக் குடியேற் றங்கள் தோன்றுதவற்கு வியாபாரமும் போதிய ஒரு காரணமாக இருந்திருக்கலாமென்பதை நாம் மறந்துவிடலாகாது.
விஜயனும் அவன் தோழர்களும் இலங்கைக்கு வந்த காலத்தில், எப்படிப்பட்ட நிலைமை நிலவிற்று என்பது பற்றி மகாவம்சத் திலே கூறப்பட்டுள்ளவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள முடி யாது. அவற்றிலே, நம்ப முடியாத அபூர்வமான சில விடயங் களும் அடங்கியுள்ளன. அவற்றை இங்கு விரிவாக எடுத்துக் கூறு வது எமது நோக்க மன்று. அவற்றுக்கு எடுத்துக்காட்டுகளாக, விஜயனுக்கு ஆதரவு காட்டிய குவேனி என்ற சுதேசப் பெண் மணியைப் பற்றிய கதைகள் விளங்குகின்றன. குவேனியின் உதவி யுடன், விஜயனும் அவனுடைய தோழர்களும் அப்போது இங்கு வாழ்ந்தவராகச் சொல்லப்படுகின்ற இயக்கரை வென்றடக்கினர் கள். விஜயன், தனக்கு உதவி செய்த குவேனியை முதலில்ே தன் துணைவியாகக் கொண்டானுயினும், பின்னர் அரச வழமைக் கேற்பத் தென் மதுரைக்குத் தூதனுப்பி அரசிளங்குமாரி ஒரு த் தியை வரவழைத்துத் திருமணஞ் செய்தான் என்று மகாவம்சம் கூறுகின்றது. இங்கு கூறப்படும் மதுராபுரி தென் மதுராபுரி என்று குறிப்பிடப்பட்டுள்ளமையினல், அது தென்னிந்தியாவில், பாண்டிய நாட்டின் தலைநகராக விளங்கிய தென் மதுரையே என ஊகிக்கலாம். ஆயினும் அதனை நிச்சயமாகக் கூறுவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. மதுரையிலிருந்து வந்த அர சிளங்குமாரியை மணந்த பின்னர் முடிசூட்டு விழா நடைபெற்ற தாகக் கூறப்பட்டுள்ளது. மகாவம்சத்திலே கூறப்பட்டுள்ளபடி இலங்கை இராச்சியம் தோன்றிய கதை இதுவேயாம்.
மகாவம்சத்திற் காணப்படும் குறிப்புகளையும் பழைய பிராமிக் கல்வெட்டுகளையும் ஒன்ருக எடுத்து ஆராய்ந்தோமாயின், ஆரம் பத்திலே தோன்றிய குடியேற்றங்கள் எவ்வாறு விரிவடைந்தன என்பதனை விளங்கிக் கொள்ளலாம். அதன் படி, ஆற்றுப்பள்ளத் தாக்குகளுக்கு அண்மையாகவே குடியேற்றங்கள் அமைக்கப்பட் டன என்பது தெளிவாகத் தோன்றுகின்றது. இவ்வாறுகளுள், கதம்பிநதி என்று மகாவம்சத்திலே குறிப்பிடப்படும் மல் வத்து ஒயா விசேடமாகக் குறிப்பிடத்தக்கது. மல்வத்து ஒயாவின்

Page 8
6 வரலாறு
முகத்துவாரத்திலிருந்த மகாதித்த அல்லது மாந்தை எனப்பட்ட பழைய துறைமுகத்தில் இறங்கிய குடியேறிகள், அப்பள்ளத் தாக்கு வழியே வடதிசையிற் சென்று, முற்காலத்திலே ராஜ ரட்டை என்று கூறப்பட்ட வறண்ட வலயச் சமவெளியை அடைந் தனர். பிற்காலத்திலே அநுராதபுரம் என்று கூறப்பட்ட அநுரத கமமும், அதற்கு ஓரளவு வடக்கில் அமைந்திருந்த உப தீசகமமும், மல்வத்து ஒய்ாவுக்கு அண்மையிலே தோன்றிய முக்கியமான இரண்டு குடியேற்றங்களாகும். கலா ஓயா முகத்துவாரத்திலே ஊருவலை எனும் குடியேற்றம் தோன்றியது. இவ்வாறு, மகாவலி கங்கைக்கு அண்மையிலும் சில குடியேற்றங்கள் தோன்றின.
மகாவலி கங்கையின் முகத்துவாரத்தில் இருந்த கோகர்ணம் எனப்பட்ட துறைமுகத்தில் இறங்கிய கூட்டத்தினரைப் போலவே தென்மேற்குத் திசையிலிருந்து வடதிசையிலுள்ள சமவெளியைக் கடந்து சென்ற கூட்டத்தினரும் அங்கே குடியேற்றங்களை அமைத் துக் கொண்டனர் எனலாம். முதன்முதலிலே தோன்றிய குடி யேற்றங்களுள், மல்வத்து ஓயாவுக்கு அண்மையிலே தோன்றிய குடியேற்றங்கள் மிக முக்கியமானவை எனலாம். மகாவம்சத்திற் குறிப்பிடப்பட்டுள்ள சில குடியேற்றங்கள் எங்கு இருந்தன என்று நிச்சயமாகக் கூறமுடியாது.
தென்கிழக்குப் பகுதிகளிலும், கும்புக்கன் ஓயா, மாணிக்க கங்கை, கிரிந்தி ஒயா ஆகியவற்றை அடுத்துக் குடியேற்றங்கள் தோன்றின. யால, சிதுல்பட்டுவ, போவத்த கல முதலிய இடங் களிற் காணப்படும் கல்வெட்டுகள் இதனை வலியுறுத்துகின்றன. மகாவம்சத்தின்படி, தேவானம்பியதீச மன்னன் ஆட்சிக் காலத் தில் அநுராதபுரியில் நடந்த போதி உற்சவத்திற் கலந்து கொண்ட கஜறகாம (கதிர்காமம்) சந்தன காம (சந்துன்க ம) என் னும் அரசர்கள் பற்றிய குறிப்புகளிலிருந்தும், இது பற்றி நாம் ஒரளவுக்கு அறிந்து கொள்ளலாம். இக் குடியேற்றங்கள், பிற் காலத்திலே ரோகண என்றழைக்கப்பட்ட மத்திய மலைப் பிர தேசத்தை எல்லையாகக் கொண்டு மகாவலி கங்கைக்குத் தெற்கே காணப்பட்ட, பகுதியிலேயே தோன்றின. ரோகண (உருகுணை) என்னும் பெயர் பரந்த ஒரு பகுதிக்குப் பிற்காலத்தில் வழங்கப் பட்டதெனினும், அது விஜயனுக்குப் பின்னர் அரசனன பண்டு வாசுதேவனுடைய அமைச்சன் ஒருவனது பெயரிலே நிறுவப்பட்ட குடியேற்றமாகும். தீக்காயு குடியேற்றம், பின்னர் தீகவாபி என்றழைக்கப்பட்டது. இது இன்று நாம் கல் ஓயாப்பகுதி என்று வழங்கும் பகுதியிலே இருந்திருத்தல் கூடும். இலங்கை வரலாற் றிலே, பிற்பட்ட ஒரு காலப்பகுதியிலே தக்கிணதேசம் எனக் குறிப்பிடப்பட்ட தென்பகுதியிலும், தென்மேற்குப் பகுதியிலும் ஆரியருடைய குடியேற்றங்கள் பரவியதாகத் தோன்றவில்லை. ஆயினும், களனி கங்கைக்கு அருகில் ஒரு சிறு கூட்டத்தினர் வாழ்ந்து வந்தனரென்று, கேகாலை மாவட்டத்திற் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் கூறுகின்றன. களனி நீச மன்னன் பற்றி மகாவம்சத்திற் கரணப்படும் குறிப்புகளும் இதனை வலியுறுத்து கின்றன.
மலையதேசம் எனப்பட்ட மத்திய மலைப் பிரதேசத்துக்கு இக் குடியேறிகள் சென்றமைக்குச் சான்றுகள் இல்லை. அப்பகுதியிலே

1 சம்புகோள பட்டணம் 2 மாதோட்டம் (மாந்தை) 3 ஊருவலை
4 கல்யாணி
5 கல்யாணி நதி 6 சைத்தியகிரி 7 உபதீச காமம் 8 கோகர்ணம்
9 தீகவாபி
10 மகியங்கஃன
ஆதி கால ஆரியக் குடியேற்றங்கள்
3
14
5
6
T
8
9
20
2
மகாவலி கங்கை
வள ைகங்கை
கிரிந்தி நதி மாணிக்க கங்கை
கதிர்காமம் மாகமம்
சித்தலபப்பத
அது ராதபுரம் கதம்ப நதி
கலா ஒயா
மலைய நாடு

Page 9
8. - வரலாறு
அடர்ந்த காடுகள் காணப்பட்டமையும், மழைவீழ்ச்சி அதிகமாக இருந்தமையும், மலைகளும் குன்றுகளும் நெருக்கமாக இருந்த மையுமே, அங்குக் குடியேற்றங்கள் தோன்ரு மைக்குக் காரணங்கள் எனலாம். இப்பகுதியிற் பிராமிக் கல்வெட்டுகள் வெகு சிலவே காணப்படுகின்றன. ஆரியரின் ஆதிக் குடியேற்றங்கள் இப்பகு தியிலே தோன்றியமைக்கு மகாவம்சத்திலும் சான்றுகள் இல்லை. இக்குடியேற்றங்கள் வறண்ட பிரதேசத்திலேயே பெரும்பாலும் பரவின என்பது, மேற்கூறப்பட்டுள்ளவற்றிலிருந்து தெளிவாகும். விவசாய வாழ்க்கை முறையில் ஊறியவர்களாக இருந்த ஆரிய ருக்கு ஏற்ற சூழல், வறண்ட பிரதேசத்திலேயே காணப்பட்டது. அதாவது, நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்ற நீர் வளமுடைய சம பூமியும் மாரியை அடுத்துக் கோடை வரும் காலநிலையும் அங்குக் காணப்பட்டன. இவற்றைவிட, அப்பகுதியிலே காணப்பட்ட ஆறுகள் போக்குவரத்துக்கும் உதவியாக இருந்தனவாகலாம். இலங்கையின் தென்கிழக்குப் பிரதேசங்களும் மத்திய மலைப் பிர தேசங்களும் அதிக மழைவீழ்ச்சியைப் பெறுவதனுலும், மலைகள் குன்றுகளும், அடர்ந்த காடுகளும் அங்கே காணப்படுவதனுலும், நெற் பயிர்ச்செய்கைக்கு அப்பிரதேசங்கள் அவ்வளவு உகந்தன அல்ல. உருகுணைக் குடியேற்றத்திலே, ராஜரட்டை அளவு பரந்த சமபூமிகள் காணப்படவில்லையெனினும், மேற்கூறிய ஆறு களை அடுத்திருந்த பகுதிகள் நெற்பயிர்ச் செய்கைக்கு உகந்தவை யாக இருந்தன. இதன்படி உருகுணைப் பகுதியில் ஆரியருடைய குடியேற்றங்கள் தோன்றினவெனினும் அவை பரவிய முறையை நோக்குமிடத்து, அவை ராஜரட்டையிற் காணப்பட்ட அளவுக்குச் சிறப்பாக இங்கு அமையவில்லையெனலாம். இப்படியாக, மேற் கூறப்பட்ட ராஜரட்டைக் குடியேற்றம் விரிவடைந்து பரவிய துடன், அது சிங்கள இராச்சியத்தின் மத்திய நிலையம் என்ற சிறப்பையும் பெற்றது.
விஜயனும் அவனுடைய தோழர்களும் தமது தாய் நாடாகிய இந்தியாவுடன் தொடர்பு வைத் திருந்தனர் என்று தோன்று கின்றது. இலங்கையின் ஆட்சிப் பொறுப்பைத் தனக்குப் பின்னர் ஏற்றுக் கொள்ளுவதற்கு விஜயனுக்குப் புத்திரர் இல்லாமையால், அப்பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு சிங்கபுரியிலிருந்த தன் சகோதரன் மித்த குமாரனுக்கு (மித்திரன்) விஜயன் செய்தி அனுப்பினுன் என்று மகா வம்சம் கூறுகிறது. அப்போது மித்தன் சிங்கபுரிக்கு அரசனுக இருந்தமையினல், அவன் தன்னுடைய கடைசிப் புத்திரன் பண்டுவாச தேவகுமாரனை இங்கு அனுப்பி முடிசூட்டுவித்தான் என்றும் மகாவம்சத்திலே கூறப்படுகின்றது. இவன் பாரத தேசத்திலிருந்து வந்த - சாக்கிய குலத்தைச் சேர்ந்த - பத்தகச்சான என்ற அரசிளங்குமாரியை மணந்தான். இவளுடன் வந்த பரிவாரங்களும் பின்னர் வந்த இவளுடைய சகோதரர்களும் தத்தம் பெயர்களிலே குடியேற்றங்களை அமைத் தார்கள் என்று மகாவம்சம் கூறுகின்றது. பின்னெரு காலத் திலே - அதாவது, தேவானம்பிய தீச மன்னனின் ஆட்சிக் காலத் தில் - பாரத நாட்டிலிருந்து வெள்ளரச மரக்கிளை இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டபோது, 18 வகையான குலத்தவர் இங்கு வந்து குடியேறினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஒரு காலம் வரை புதிய குடியேற்றங்களை இங்கு அமைத்துக்கொண்ட

ஆரியக் குடியேற்றங்கள் 9
ஆரியர் தமது தாய் நாட்டுடன் தொடர்ந்தும் தொடர்புகளை வைத்திருந்தனரென்பதும், அதேவேளையில், பாரத நாட்டவர் மேன்மேலும் இங்கு வந்து குடியேற்றங்களை அமைத்துக்கொண் டனரென்பதும் மேற்கூறியவற்றிலிருந்து புலணுகும்.
இவ்வாறு உருவான குடியேற்றங்கள், படிப்படியாகவே அர சியல்ரீதியில் ஒன்றுசேர்ந்தனவென்று நாம் கொள்ளுதல் வேண் டும். விஜயன் தொடங்கி தேவானம்பியதீசன் வரையும் ஆண்ட மன்னர்களுட் பண்டுகா பயன் சிறப்பான ஒர் இடத்தை வகிக் கின்றன். மகா வம்சத்திலே இவனைப்பற்றி விரிவான செய்திகள் காணப்படுகின்றன. ஆனல் அச்செய்திகள் பெரும்பாலும் நாடோடிக் கதைகளுடனும் சமயக் கதைகளுடனும் கலந்திருப் பதஞல், வரலாற்று உண்மைகளைக் கண்டு பிடித்தல் மிகச் சிக்க லான காரியமொன்ற கும். ஆதிக்கப் போராட்டமொன்றில் இவன் சிறந்த வெற்றி பெற்றன் என்பதே இவற்றின் சுருக்கம் என்று கொள்வதே பொருந்தும். இப் போர் நடந்த இடங்கள் பற்றிய குறிப்புகளின்படி, இவற்றிற் பெரும்பாலானவை (உதார ணமாக: அரித்த பப்பத-ரிட்டிகல; கச்சகதித்த- கசா தொட்டை) கிழக்குப் பிரதேசத்திலே, மகாவலி கங்கைக்கு அண்மையில் இருந்தனவாகக் கொள்வதற்கு இடமுண்டு. வேருெருவகையாகக் கூறுவதாயின், பண்டுகா பயனுடைய ஆதிக்கம் அநுராதபுரியி லிருந்து ராஜரட்டையைச் சேர்ந்த கிழக்குப் பகுதிவரை பரவியிருந் தது எனலாம். இக்குறிப்புகளின்படி, அவனுடைய ஆதிக்கம் கிழக் குப் பகுதியிலிருந்து அநுராதபுரி வரையும் பரந்திருந்தது தெளிவு.
பண்டுகாபயன் அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்தான். ஆரம்பத்திலே அநுராதகமம் என்றழைக்கப்பட்ட இடம், பண்டுகா பயன் பற்றி மகாவம்சத்திற் காணப்படும் குறிப்புகளிலே அநுராதபுரம் என்று குறிப்பிடப்பட் டுள்ளது. ஆரம்பத்திலே ஒரு கிராமியக் குடியேற்றமாக இருந்த அநுராகமம் பின்னர் ஒரு நகரமாக மாறியதென்பது இதிலிருந்து புலனுகின்றது. அநுராதபுர நகரத்தின் நிருவாகத்தின் பொருட் டுப் பண்டுகா பயன் சட்டதிட்டங்களை வகுத்தான் என்றும் இந்தக் குறிப்புக்களிலிருந்து தெரியவருகின்றது. நகர குத் திகன் என்ற பதவி இவனுக்கு முன்னர் ஆட்சி செய்த இவனுடைய மாமன் அபயனுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஒரு நக ருக்குரிய அம்சங்களாகிய இடுகாடு, கொலைக்களம் போன்றவை யும் இங்கே இருந்தனவென்று கூறப்படுகின்றது.
பண்டுகா பயன், இலங்கை முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண் டானென்றும், இலங்கையில் எல்லாக் கிராமங்களுக்கும் எல் லைகளை நிர்ணயித்தான் என்றும் மகாவம்சம் கூறுகின்றது.
சிங்கள ஆட்சியின் ஆரம்ப காலம் எனத் தக்க இக்காலத்திலே, பண்டுகாபயன் இலங்கை முழுவதிலும் ஆதிக்கஞ் செலுத்தினன் என்று கருத முடியாது. அவனுடைய ஆட்சிக்காலத்திலிருந்து பல நூற்ருண்டுகள் செல்லும் வரை நாட்டின் பற்பல பகுதி களிலே முழுச் சுதந்திரமுள்ள அரசர்களும், அரைகுறைச் சுதந் திரமுள்ள அரசர்களும் ஆட்சி செய்து வந்தார்கள் என அறியப் படுவதனல், மேற்கூறிய மகாவம்சக் குறிப்புகள் ஏற்கத்தக்கன

Page 10
1 O வரலாறு
அல்ல. என்ருலும், ஆரம்பத்திலே உருவான ஆரியக் குடியேற் றங்களுக்கிடையே போதிய ஒற்றுமையை வளர்த்தும் பண்டுகாப யன் பிரபலமடைந்தான் என்பது, அவனுடைய பெயர் இவ்வாருக மக்களுடைய மனத்திலே நன்கு நிலைபெற்றதிலிருந்து தெரிய வருகின்றது. முதன்முதலில் வந்தவர்கள் மத்தியிலே இவன் ஒரு வீரணுகத் திகழ்ந்தான் என்பது இவனைப் பற்றி எழுந்துள்ள நாடோடிக் கதைகளிலிருந்து புலணுகும். தேவாணும்பிய மன்ன னுக்கு முன்னர் ஆட்சி செய்த மன்னர்களுள் முதன்மை பெறு பவன் பண்டுகாபயனே என்று கொள்வது தவரு காது. இவன் எழுபது ஆண்டு ஆட்சி செய்தான், என்று மகாவம்சம் கூறுகின் றது. ஆனல், அக்காலப்பகுதி பற்றி வம்ச காதைகளிலே காணப் 'படும் காலக் கணக்குகளை நம்ப முடியாது.
பண்டுகாபயனது ஆட்சிக் காலத்தின் பின்னர் இலங்கை வர லாற்றிலே மிக முக்கியமானதோர் இடத்தைப் பெறுவது தேவா ஞம்பிய தீசனின் ஆட்சிக் காலமாகும். முக்கியமான நிகழ்ச்சிகள் பல அக்காலத்தில் நடந்தன. அன்றியும் அந்நிகழ்ச்சிகள் பற்றி உறுதியான ஆதாரங்களும் எமக்குக் கிட்டியுள்ளன. எனவே தான் அக்காலம் பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. மகாவம் சம் போன்ற வம்சக்ாதைகளிலே காணப்படும் விரிவான குறிப்பு களைவிட, கல்வெட்டுகள் அடங்கிய தொல் பொருட் சிதைவுகளும் அக்காலத்திற்குரிய வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன. ஈழத்து வரலாற்றின் காலங்களைத் துணிந்து கொள்வதற்கு தேவானம்பிய தீசனுடைய ஆட்சி பற்றிய ஆதாரங்கள் முக்கியமானவை. இவன் இந்தியப் பேரரசனன அசோகனின் காலத்தவன் என்பதில் ஐயமில்லை. அசோகச் சக்கர வர்த்தியின் காலத்தை ஆதாரமாகக் கொண்டே தேவானம்பிய தீசனின் காலம் துணியப்பட்டுள்ளது. இவ்வாரு க, சிங்கள அரச பரம்பரையின் வரலாற்றிலே நம்பத் தக்க செய்திகளை நாம் முதன்முதலாக அறிந்து கொள்வது தேவா ஞம்பிய தீசன் காலத்திலேயே ஆகும். 總
இவனுடைய ஆட்சிக் காலத்திலே பேரரசன் அசோகனுடைய ஆதரவில், மகிந்த தேரர் தலைமையில் இங்கு வந்த சமய தூதுக்குழு இலங்கையிலே பெளத்த மதத்தைப் பரப்பியது. தேவானும்பிய தீசன் உட்பட, அரச குடும்பத்தினரும் மந்திரி பிர தானிகளும் பெளத்த மதத்தைத் தழுவிக் கொண்டனர். இவர் களைப் பின்பற்றி ஏனைய சாதாரண மக்களும் இப்புதிய மதத்தைத் தழுவியதனல், அது அக்காலந்தொட்டு நாடு முழுவதும் பரவிய தற்குச் சான்றுகள் பல உண்டு. சமயப் பற்றுடையவர்கள், பிக் குகள் வசிப்பதற்குக் குகைகளை வழங்கியமை பற்றி, பிராமி எழுத்துகளிற் பொறிக்கப்பட்டு நாடெங்கணும் காணப்படும் கல்வெட்டுகள் பல கூறுகின்றன. அக்காலத்து மதப்பரம்பலை இக்கல்வெட்டுச் செய்திகள் அரண்செய்கின்றன. அக்காலத்து இலங்கையிலே இந்துக்கள், சமணர், ஆசீவகர் முதலான இந்திய மதப்பிரிவினர் இருந்தனர் என்று கருதுவதற்கு இடமுண்டு. எனினும், பெளத்த மதம் பரவுவதற்குத் தடையாக இவர்கள் இருக்கவில்லை எனலாம். தாராளமான அரச ஆதரவிலே பெளத்த மதம் நாடு முழுவதும் பரவியது.

ஆரியக் குடியேற்றங்கள் 11
இனி, பெளத்த மதம் பரவியதனுல் அரசியலில் ஏற்பட்ட தாக்கம் பற்றி ஆராய்வோம். இலங்கையிற் பல்வேறு பகுதி களிலே பெருகிக்கொண்டிருந்த ஆரியக் குடியேற்றங்களுக் கிடையே கலாசார ஒற்றுமை ஏற்படுவதற்குப் பெளத்த மதம் பெரிதும் காரணமாக இருந்தது. பாரத தேசத்திலிருந்து வந்த ஆரியர், பொதுவான பாரத கலாசாரத்தின் வாரிசுகளாக இருந் தார்களாயினும், சிதறிக் சிடந்த குடியேற்றங்களுக்கிடையே தகுந்த பிணிப்பை ஏற்படுத்துவதற்கு அது போதுமானதாக இருக் கவில்லை. நாட்டு மக்களிடையே நல் விளக்கத்தையும் ஐக்கியத் தையும் வளர்ப்பதற்குப் பெளத்த மதம் பெரிதும் உதவியாக இருந்தது. அவ்வாறே பொது மொழியாகிய சிங்கள மொழி, நாட்டு மக்களை ஒன்றுசேர்க்கின்ற ஒரு காரணியாக விருத்தி அடைந்ததை நாம் காணலாம். கி.மு. மூன்ரும் நூற்றண்டிலி ருந்து அண்மையிற் கடந்த நூற்ருண்டுகள் வரையான காலப் பகுதிக் குரிய கல்வெட்டுகள், ஒன்றுக்கொன்று வெகு தூரத்தில் அமைந்திருந்த மிகிந்தலை, வெசகிரி, தீகவாபி, சிதுல்பட்டுவ முத லிய இடங்களிலிருந்து கிடைக்கப்பெற்றன வெனினும், அவை ஒரே அரிச்சுவடியைப் பயன்படுத்தி ஒரே மொழியில் எழுதப் பட்டுள்ளன என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும். அக் கல்வெட்டுகளிலே காணப்படும் பிராகிருத மொழியை அடிப் படையாகக் கொண்டே பின்னர் சிங்கள மொழி விருத்தியடைந் தது. அவ்வாறே அவற்றிற் காணப்படும் பிராமி நெடுங் கணக்கு முறையை அடிப்படையாகக் கொண்டே சிங்கள நெடுங்கணக்குத் தோன்றியது. இப்படியாக ஒரு நாட்டு மக்களிடையே ஒற்றுமை ஏற்படு வதற்கு அனுகூலமான பொதுக் காரணிகளாகக் கருதப் படும் தேசம், மொழி, மதம் ஆகியன உருவானதை இங்கே நாம் காணலாம். ஆரம்பத்திலே தோன்றிய ஆரியக் குடியேற்றங்களுக் கிடையே ஒருமைப்பாடும் ஐக்கியமும் ஏற்படுவதற்கும் அவை அழியாது உறுதியாக நிலைப்பதற்கும் நிரந்தரமானதோர் அடித் தளம் தேவானம்பியதீச மன்னனின் ஆட்சிக்காலத்திலேயே அமை க்கப்பட்டது. இந்நிகழ்ச்சி அக்கால வரலாற்றின் மிக முக்கிய மானதோர் அம்சம் எனலாம்.
தேவானும்பிய தீசனுடைய ஆட்சிக் காலத்து அரசியல் நிலைமை பற்றியும் ஆராய்தல் வேண்டும். மகாவம்சத்திலுள்ள ஒரு பகுதி யின்படி, தேவானும்பியதீசனும் அசோகப் பேரரசனும் ஒருவரை யொருவர் காணுத நண்பர்களாக இருந்தனர். தனிப்பட்ட நட்புப் பற்றிய இச்செய்தியின் உண்மைபொய்ம்மை எவ்வாறிருப் பினும், அக்காலத்தில் இந்த இரு நாடுகளுக்குமிடையே நெருங் கிய உறவு நிலவியது. தேவானும்பியதீசன் ஒரு தூதுக் குழுவை அசோகப் பேரரசனிடம் அனுப்பிவைத்தான் என்றும், அப் பேரரசன் இலங்கை மன்னனுடைய பட்டாபிஷ்ேகத்துக்குத் தேவையான பொருள்கள் எல்லாவற்றையும் அனுப்பிவைத்தான் என்றும் மகாவம்சம் கூறுகிறது. எனவே தேவானம்பிய தீசன் இந்தியப் பேரரசனுடைய ஆதரவைக் கொண்டே முடி சூடினன் என்று கருதுவதற்கு இடமுண்டு. இது தேவானம்பியதீசனுடைய இரண்டாவது பட்டாபிஷேகம் என்று மகாவம்சம் கூறுகின்றது. இந்திய உபகண்டம் முழுவதையும் ஒன்றுசேர்த்து ஆட்சி செய்த

Page 11
12 வரலாறு
அசோகன் போன்ற வல்லமைமிக்க பேரரசன் ஒருவனுடைய ஆதரவைப் பெற்றுக் கொண்டமை, தேவானம்பியதீசனுடைய ஆதிக்கம் இந்நாட்டிலே நிலைபெறுவதற்குப் பெரிதும் அனுகூல மாக இருந்தது என்று கருதுவதிலே தவறில்லை. இவனுடைய ஆட்சிக் காலத்திலே மாத்திர மன்றி அதற்குப் பின்னரும் நெடுங் காலம் வரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலே சுயாதீனப் பிர தேச மன்னர்கள் இருந்தார்கள் என்பதை, கல்வெட்டுகளிலிருந்து வெளியாகியுள்ள குறிப்புகள் மூலம் அறிகிருேம். அது எவ்வா ருயினும், தேவானம்பியதீசனே இலங்கையின் முக்கியமான மன்ன ஞகத் திகழ்ந்தான் என்பதில் ஐயமில்லை. உருகுணையைச் சேர்ந்த கதிர்காம (கஜற கம) மன்னனும் சந்தன காம (சந்துன்க ம) மன்னனும் அனுராதபுரத்தில் வெள்ளரசை நாட்டும் வைபவத் திலே கலந்துகொண்டார்கள் என்பது, அவர்கள் ஒரளவுக்காயி னும் தேவானம்பியதீசனுடைய ஆதிக்கத்தை ஏற்றிருந்தனர் என் பதைக் காட்டுகின்றது. ஆனல் அந்த ஆதிக்கம் செயற்படுவ தற்கு, திறமைமிக்க கட்டுக் கோப்பான ஒரு பாலன முறை தேவைப்பட்டிருக்கும். அப்படியான ஒரு முறை ஏற்ற வகையில் உருவாதற்கு இன்னும் சில நூற்றண்டுகள் கழிந்திருக்கவேண்டும் என்று கருதுவதே பொருத்தமாகும். அது எவ்வாரு யினும், தேவானும்பியதீசன் இலங்கையின் முதல் அரசனுக மதிக்கப்படு கின்ருன் எனலாம். மேற்கண்ட விடயங்களை ஒருங்கு எடுத்துக் கொண்டால், ஆரம்பத்தில் அங்குமிங்குமாக இருந்த ஆரியக் குடி யேற்றங்கள் இக்காலப் பகுதியிலே கலாசார அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் ஒன்றுபடுவதற்குரிய திசையில் அடி யெடுத்து வைத்தன எனலாம்.
பண்டைய இலங்கையின் மிக முக்கியமான மன்னனுகக் கருதப் படுந் துட்டுகைமுனு (கி.மு. 161 - 137) ஆட்சி செய்த காலமே, அடுத்த முக்கியமான காலமாகும். அக்காலப்பகுதி பற்றி ஆராயு முன்னர், தேவானும்பியதீசனுடைய மரணத்தின் பின்னர் உரு வான நிலைமை பற்றிச் சற்று ஆராய்தல் நன்று. தேவானம்பிய தீசனுக்குப் பின்னர் அவனுடைய தம்பிமாரான உத்திகன், மகா சிவன், சூரதீசன் என்போர் முறையே ஆட்சி செய்தனர் என்றும், தென்னிந்தியாவிலிருந்து வந்த சேனன், குத்திகன் என்னும் திரா விடர் இருவர் சூரதீசனை வென்று இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டனர் என்றும் மகாவம்சம் கூறுகின்றது. தேவானம்பிய தீசனுடைய மற்றுமொரு சகோதரன் என்று கருதப்படுகின்ற அசேலன் இத்திராவிட மன்னர்களை நாட்டிலிருந்து விரட்டினன். எனினும், சோழ நாட்டிலிருந்து வந்த எல்லாளன் எனப்பட்ட சோழ மன்னன் மீண்டும் சிங்கா சனத்தைக் கைப்பற்றிக் கொண் If T GðIT
இலங்கை இராச்சியத்துக்குத் திராவிடப் படையெடுப்பாளரால் ஆபத்து ஏற்பட்ட முதற் சந்தர்ப்பம் பற்றி மேலே கண்டுள் ளோம். அக்காலம் வரையும் அது போன்ற ஆபத்துக்களைச் சமா ளிப்பதற்கு வேண்டிய ஆற்றல் வாய்ந்த படையும் திறமையான நிருவாக ஒழுங்கும் இலங்கையரிடம் இல்லாமையினலேயே திரா டர் அவ்வளவு சுலபமாக இலங்கை இராச்சியத்தைக் கைப்பற் றிக்கொண்டனர். முன்பு கூறப்பட்டுள்ள குடியேற்றங்களுள்ளே

ஆரியக் குடியேற்றங்கள்
திராவிடக் குடியேற்றங்கள் அக்காலத்தில் இருந்தன என்பதற்குச் சான்றுகள் இல்லை. இதற்குப் பல நூற்றண்டுகளுக்குப் பின்னர், பல்வேறு காரணம் பற்றித் திராவிடர் இலங்கை வந்த மை பற்றிய குறிப்புக்கள் எமக்குக் கிடைத்துள்ளன. படையெடுத்து வந்த திராவிடர் என்று மேலே குறிப்பிடப்பட்டவர்கள், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் எனலாம். சேன னும் குத்திகனும் குதிரை வியாபாரிகள் என்றும், எல்லாளன் சோழ நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபு என்றும் மகாவம்சத்திலே குறிப்பிட்டுள்ளதைக் கொண்டு, இவர்களின் இயல்புகளை விளங் கிக் கொள்ளுதல் கூடும். இவர்கள் நீதி த வருது ஆட்சிசெய் தார்கள் என்று மகா வம்சத்திலே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இவர்களுள் எல்லாள மன்னன் பற்றியே அதிக விபரங்கள் கொடுக் கப்பட்டுள்ளன. இவனுடைய பக்தியையும் நீதி திறம்பாத பண் பையும் எடுத்துக் காட்டுகின்ற நாடோடிக் கதைகள் பல, மகா வம்சத்திலே காணப்படுகின்றன. இவனுடைய போர் வீரர் பெளத்த மதத்துக்குக் கேடுகள் விளைத்ததாகவும் மகா வம்சத் திலே கூறப்பட்டுள்ளது. ஆனல், எல்லாளனுடைய அனுமதி யுடனேயே அவை செய்யப்பட்டன என்று கருதுவது, அவனு டைய நீதி நேர்மையை எடுத்துக் காட்டுவனவாக மகாவம்சத்திற் காணப்படும் நாடோடிக் கதைகளுக்கு முரண்பாடாகும்.
மேற்கண்டவாறு, ஆட்சியைக் கைப்பற்றிய எல்லாளனைத் துட்டு கைமுனுவே தோற்கடித்தான். தேவானம்பிய தீசனுடைய புத்திரனன மாகநாமன் உருகுணையில் மாகமம் எனும் இராச் சியத்தை அமைத்தான் என்பதிலிருந்து, துட்டுகைமுனு அந்த அரசபரம்பரைக்கு உரியவன் என்பது தெளிவு. எல்லாள மன் னன் ராஜரட்டையை ஆட்சி செய்த காலத்திலே , உருகுணையைத் துட்டுகைமுனுவினுடைய தந்தை காவந்தீசன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவனுடைய தலைநகர் மகாகமம் அல்லது மாகமம் என்ற இடத்தில் இருந்தது. மகாவம்சம் கா வந்தீசனை ஒரு கோழை என்று கூறுகின்றது. ஆனல் இவன் ராஜரட்டையை ஆட்சி செய்த எல்லாளனைத் தோற்கடிக்க வேண்டுமென்ற நெடு நோக்கான கொள்கையுடன் கருமம் ஆற்றியவன் எனக் கருத இடமுண்டு. துட்டு கைமுனுவைச் சிறப்பிக்கும் நோக்குடன் மகாவம்சத்தின் ஆசிரியர் கையாண்டதோர் உத்தி காரணமாகவே கா வந்தீசன் ஒரு கோழையாகச் சித்திரிக்கப்பட்டான் எனலாம். நெடுநோக்குடனும் தந்திர புத்தியுடனும் கரும மாற்றிய இவன், குறுநில மன்னரிடையே துண்டுபட்டுத் தனித்தனியாகக் கிடந்த உருகுணேக் குடியேற்றங்களை ஒன்று சேர்த்தான் என்று, தாது வம்சத்திலே இவனைப்பற்றிக் காணப்படும் குறிப்புகள் கூறுகின் றன. அத்தனை ஆற்றல் மிக்க ஒரு படையைத் திரட்டுவதற்கு அவன் நடவடிக்கை எடுத்தான் என்று மகா வம்சத்திற் காணப் படும் குறிப்புகள் வாயிலாகவே நாம் அறிகிருேம். போருக்கு வேண்டிய ஆயுத உற்பத்தி செய்வதற்காக இவன் ஓர் உலைக் களத்தைக் கட்டுவித்தான் என்று இரசவாகினியிற் கூறப்படுகின் நிறது. எல்லாள மன்னனுடன் போர் தொடுக்கும் சந்தர்ப்பம் உருவாகியிருக்கவில்லையெனினும், வருங்காலத்திலே அந்தப் போரினை வெற்றிகரமாக நடத்துவதற்கு வேண்டிய ஆயத்தங்களை

Page 12
14 வரலாறு
கா வந்தீசன் செய்திருந்தான். அப்போரின் வெற்றிக்குத் துட்டு கைமுனுவின் அன்னையாய விகார மகாதேவியினுடைய அறிவுரை களும் பெரிதும் உதவின என்று தோன்றுகிறது.
துட்டுகைமுனு, தன் தந்தையின் மரணத்துக்குப் பின்னர், எல் லாள மன்னனுடைய ஆட்சியிலிருந்து ராஜரட்டையை மீட்ப தற்குத் துரிதமான நடவடிக்கை எடுத்தான். போர்ப்படையை மேன்மேலும் பலப்படுத்திக் கொண்டதுடன், தனது சகோ தரன் சதாத்தீசனைத் தீகவாவிப் பகுதியிலே தானிய உற்பத்தியில் ஈடுபடும்படியும் செய்தான். துட்டுகைமுனுவினுடைய ஆணைப் படி மகாக மத்திலிருந்து புறப்பட்ட படை, புத்தலை (குப்த கலை) வழியாக மகியங்கனையை அடைந்து, மகாவலிகங்கைக்கரை வழியே சென்று, கசா தொட்டையில் (கச்சகதித்த) மகாவலி யைக் கடந்து, ராஜரட்டையை அடைந்து, திராவிடருடைய பிரதான கோட்டையான விஜித்த புரத்திலே நடந்த இறுதிப் போரில் வெற்றியீட்டியது.
துட்டுகைமுனுவின் வெற்றி, வரலாற்றுச் சிறப்பு மிக்கது. எல் லாளன் நாட்டாசை பிடித்தவன் அல்லன். எனினும், மகாவம் சக் குறிப்புகளை ஏற்றுக்கொண்டால், அவனுடைய ஆட்சி ராஜ ரட்டையைக் கடந்து உருகுணைப் பகுதியிலும் நிலவியதாகத் தோன்றுகிறது. மகியங்கனைக்கு அண்மையிலேயே, துட்டுகை முனு வினுடைய படைகள் திராவிடருடைய கோட்டைகள் பலவற்றைத் தகர்த்தெறிந்தன என்று மகாவம்சத்திற் கூறப்படுகின்றது. அது ஒருபுறமிருக்க, எல்லாள மன்னன் ஆட்சி செய்த ஆண்டுகள் பற்றி மகாவம்ச கூறுங் கணக்குகள் சரியானவை என்று கொள்வதில் இடருண்டெனினும், அவன் 44 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று அந்நூல் கூறுகிறது. இதன்படி, இலங்கை வரலாற்றிலே தொடுக்கப்பட்ட மிகப்பெரிய ஒரு போரிலே வெற்றியீட்டி, உரு குணைக் குடியேற்றமும் ராஜரட்டையும் உட்பட இலங்கை முழு வதையும் முதன்முதலில் ஒன்று சேர்த்தமை துட்டுகைமுனுவினு டைய மிக முக்கியமான ஒரு சாதனையாகும். இவனுடைய ஆட்சி இலங்கை முழுவதும் பரவியிருந்தது என்று திடமாகக் கூறமுடி யாது. எனினும், பொதுவாக இவனுடைய ஆதிக்கம் ராஜரட் டையிலும் உருகுணைக் குடியேற்றத்திலும் நிலவினது என்பதில் ஐயமில்லை. அரச ஆதிக்கத்தின் விரிவு பற்றி நோக்குகையில், தேவானும்பிய தீசனுடைய காலப் பகுதியிலே இருந்த நிலைமையை அடியாகக் கொண்டு திட்டவட்டமான முன்னேற்றம் ஏற்பட்டது என்று கருதுவதற்கு இடமுண்டு.
எஞ்சிய காலப் பகுதியிலே ஆட்சிமுறை மிகவும் திட்டவட்ட மான ஓர் ஒழுங்குக்குக் கொண்டுவரப்பட்டது. பின்னர் அனு ராதபுரியில் ஆட்சி செய்த மன்னனுடைய ஆதிக்கம், நாடு முழு வதும் பரவியது என்று கொள்வதற்கு இடமுண்டு. இப்படியான ஒரு நிலைமை கி.பி. முதலாம் நூற்றண்டளவிலே ஏற்பட்டிருந்த தாகத் தோன்றுகின்றது. முதலாம் நூற்றண்டின் இரண்டாம் கூற்றிலே ஆட்சி செய்த வசப (கி.பி. 65 - 109) மன்னனுடைய பதில் அரசனன இசகிரியன் யாழ்ப்பாணக் குடாநாட்டை (நாக தீபம்) ஆட்சி செய்து கொண்டிருந்தான் என்பதை, அம்மன்ன னுடைய ஆட்சிக் காலத்துக்குரிய வல்லிபுரப் பொன்னேடு எடுத்

ஆரியக் குடியேற்றங்கள் 5
துக் காட்டுகின்றது. மறுபுறம், இலங்கையின் தெற்கு எல்லையிலே இருந்ததாகக் கருதப்படக்கூடிய யாதல தாகப கற்பொறிப்புகள், உருகுணைக் குடியேற்றத்திலே இவனுடைய ஆதிக்கம் நிலவிய தாகக் கூறுகின்றன. இவனுற் கட்டப்பட்டன என்று மகாவம் சத்திலே குறிப்பிடப்பட்டுள்ள விகாரைகளுள், எல்லிகொத்த விகாரை, அநுராராமய, சித்தல குல விகாரை ஆகிய மூன்றும் உருகுணையில் அமைந்திருந்தன. குருஞகலை மாவட்டத்திலுள்ள கல உட விகாரையிற் காணப்படும் கல்வெட்டு, தென்மேற்குப் பகுதியிலே இவனுடைய ஆதிக்கம் நிலவியதை எடுத்துக்காட்டு கின்றது. அநுராதபுர மாவட்டத்திலே, இவன் காலத்துக் கல் வெட்டுகள் பல கிடைத்துள்ளன. எனவே, கிறித்துவுக்குப் பின் முதலாம் நூற்ருண்டின் இறுதியளவில், அநுராதபுரியில் ஆட்சி செய்த மன்னருடைய ஆதிக்கம் இலங்கை முழுவதும் பரவியிருந் தது என்று கொள்ளவேண்டி இருக்கின்றது.
அது எவ்வாரு யினும், நாட்டை ஒன்று சேர்க்கும் பணி, அக் காலப் பகுதியிலே பூரணமடைந்து விட்டதென்று கருதிவிடலா காது. இவ்வாறு உருவான ஒன்றுபட்ட இலங்கையை அப்படியே பாதுகாப்பதற்குப் பெரும் முயற்சி வேண்டியிருந்தது. நாட்டின் பிரதேச நிருவாகம் சம்பந்தமான ஒழுங்குமுறையை மேலும் திட்டவட்டமாக்குவதற்கு இடமிருந்தது. ராஜரட்டைக்கு அப் பால் வெகு தூரத்திலிருந்த உருகுணைக் குடியேற்றம் போன்ற பகுதிகளை அனுராதபுரியிலிருந்து ஆட்சி செய்வதும், அவற்றைத் துண்டுபடவிடாது பாதுகாப்பதும் அவ்வளவு இலகுவான காரியங் களல்ல என்பதை நாம் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இப்படி யான பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்குடனேதான், பிற் காலத்திலே பிரதேச நிருவாகத்தின் பொருட்டுப் புறம்பான விதி முறைகள் வகுக்கப்பட்டன போலும். வசபனுடைய அமைச் சருள் ஒருவன் யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பாலனஞ் செய் வதற்குப் பொறுப்பாக இருந்தான் என்று மேலே கண்டுள்ளோம். காலப்போக்கிலே, அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசிளங்குமா ரர்களே தென்பகுதியையும் உருகுணைக் குடியேற்றத்தையும் பால னஞ் செய்வதற்கு நியமிக்கப்பட்டனர் என்று தோன்றுகின்றது. உருகுணைக் குடியேற்றத்தின் நிர்வாகி அதிபத (ஆபா) என்றும், தென்பகுதியின் நிர்வாகி மஹா அதிபத (மாபா) என்றும் அழைக் கப்பட்டார்கள். அடுத்து அரசனுவதற்கிருந்த அரசகுமாரன் (யுவராசன்) தென்பகுதியின் பாலனத்துக்குப் பொறுப்பாக இருந் தான். இப்படியாக உருவாக்கப்பட்ட ஐக்கியத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கு, தக்க முறையிலே நிருவாக ஒழுங்கை வகுக்க வேண்டிய பொறுப்பு அனுராதபுரியில் ஆட்சி செய்த மன்னரைச் சார்ந்தது என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும். மேற் கண்ட வரலாற்று வளர்ச்சியின் உச்சக் கட்டத்தினை முதலாம் பராக்கிரமபாகு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலேயே (கி.பி. 1153 - 1186) நாம் காணலாம். நாடு ஐக்கியமாக்கப்பட்டதன் பின்னர் சிறந்த நிருவாக முறையொன்று உருவாகியது. முன் னெருபோதும் இல்லாத வகையில் மத்தியமயமான ஒரு நிருவாக முறையின் அடிப்படையிலேயே நாட்டின் ஆட்சி அமைந்தது.

Page 13
இரண்டாம் அத்தியாயம்
ர்வள நாகரிகக்கின் எ(மச்சியம் வீம்ச்சியும்
ந த rg೫೫u! ழசசயு
ஆரம்பத்திலே இலங்கை வந்த ஆரியர் மல் வத்து ஒயா, கலா ஒயா, தெ துறு ஒயா, மகா ஓயா, களனி கங்கை, மகாவலி கங்கை, வளவ கங்கை, மாணிக்க கங்கை போன்ற ஆறுகளுக்கு அண்மை யான பகுதிகளிலேயே குடியேறினர்கள் என்று தோன்றுகிறது. அவர்கள் இவ்வாறு குடியேறிய பின்னரே, நீர் வளத்தை அடிப் படையாகக் கொண்டெழுந்த எமது நாகரிகத்துக்கு வித்திடப் பட்டதெனலாம். ஆற்று நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய் வதன் பொருட்டே ஆரியர் ஆறுகளுக்கு அண்மையான பகுதி களிலே குடியேறினர்கள் என்பதில் ஐயமில்லை. ஆரம்பத்திலே இந்த ஆற்றுநீர் நெற்பயிர்ச் செய்கைக்குப் போதுமானதாகக் காணப்பட்டது. ஆயின், சனத்தொகை பெருகப் பெருக, உண வுப் பொருள் உற்பத்தியைப் பெருக்குவதும் அவசியமாயிற்று; நீர் வழங்க வேண்டிய நிலங்களின் பரப்பும் அதிகமாயிற்று. மேலும், ஒரு பருவ காலத்திலே கிடைத்த மழைநீர், வருடம் முழுவதற்கும் போதியதாகக் காணப்படாமையினல், கோடை காலத்திலே பயன்படுத்தும் பொருட்டு அதனைச் சேமித்து வைக்க வேண்டிய அவசியமும் உண்டாயிற்று. ஆகவே, மனித முயற் சியால் நீரைப் பெறும் முறைகள் மேற்கொள்ளப்பட்டன. முத லில், கிராமப் பகுதிகளிலே சிறு குளங்கள் கட்டப்பட்டன என்று தோன்றுகின்றது. நீர்ப்பாசன முறைகள் பற்றிய குறிப்புகள் இருக்குவேதத்திலே காணப்படுகின்றன. எனவே, இங்கு வரும் பொழுதே நீர்ப்பாசன முறைகள் பற்றி ஒரளவுக்கு ஆரியர் அறிந் திருந்தனரென்று நாம் ஊகிப்பதற்கு இடமுண்டு. அந்த அறிவைக் கொண்டே, ஆரம்பத்திலே சிறிய குளங்களைக் கிராமப் பகுதி களிலே அவர்கள் கட்டியிருத்தல் வேண்டும். மகாவம்சத்தின் படி, கி.மு. ஆரு வது நூற்றண்டளவிலேயே, இப்படியான ஒரு சிறு குளம் முதன்முதலிலே கட்டப்பட்டதாகத் தோன்றுகின்றது. அக்குளம், வட இந்தியாவிலிருந்து விஜயன் தலைமையில் இலங்கை வந்த ஆரியர் கூட்டத்தைச் சேர்ந்த அநுராதன் என்ற அமைச்ச னல் அநுராதபுரத்துக்கு அண்மையிலே கட்டப்பட்டதென மகா வம்சம் கூறுகின்றது. அதற்குச் சற்றுப் பிற்பட்ட காலத்தில், அநுராதபுரியில் ஆட்சிசெய்த பண்டுகாபயன் எனும் மன்னன், ஜய வாவி, அபய வாவி, காமினி வாவி எனும் மூன்று சிறு குளங் களைக் கட்டுவித்தான். இவனுடைய பேரனன தேவானும்பிய தீச மன்னன் காலத்திலே, அம்மன்னனுடைய சகோதரனன இள வரசன் மகாநாகன், வலஸ் வாவி எனப்படும் கிராமியக் குளத் தைக் கட்டும் வேலைகளுக்குப் பொறுப்பாக இருந்தானென்று வம்ச காதைகள் கூறுகின்றன. எனவே, அறப் பழைய காலத்திருந்தே, இலங்கையை ஆட்சி செய்த அரசர்கள் நீர்ப்பாசன வேலைகளில் விசேட கவனஞ் செலுத்தி வந்தார்கள் என்பது வெளிப்படை.

நீர்வள நாகரிகம் I 7
இதற்கு இரண்டு முக்கியமான காரணங்களை நாம் குறிப்பிடலாம். குளங்களிலிருந்து தகபதி எனும் நீர்வரி அரசனுக்குக் கிடைத் தமை, ஒரு காரணம். மற்றது இதினும் முக்கியமானது: அதா வது, நாட்டு மக்களைப் பஞ்சப் பிணியிலிருந்து காப்பாற்றுவது ஒரு நாட்டு மன்னனுடைய கடமை என்னும் உணர்வு. பஞ் சத்தை ஒழித்துக்கட்ட வேண்டுமானல் விவசாயத்துக்குப் போதிய நீர் வழங்க வேண்டும் என்பது வெளிப்படை.
கிராமப் பகுதிகளிலே குளங்களை அமைக்கும் வேலைகள் கி.மு. ஆரும் நூற்றண்டளவில் ஆரம்பிக்கப்பட்டுக் கி.மு. முதலாவது நூற்ருண்டுவரை படிப்படியாக அபிவிருத்தியடைந்தனவென்றும், கி.மு. முதலாவது நூற்றண்டளவில், மகாவலி கங்கை போன்ற பேராறுகளிலிருந்து கால்வாய்கள் மூலம் நீரை எடுத்துச் செல்லும் முறைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தனவென்றும், வம்சகாதைகளும் கல்வெட்டுகளும் தரும் ஆதாரங்கள் காட்டுகின்றன. இப்படி யான நீர்ப்பாசன வேலைகள், பெரும்பாலும் வடகீழ்ப் பருவக் காற்று மூலமே மழை நீரைப் பெற்றன. இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் ஏறக்குறைய 40 சதவீதத்தை உள்ளடக்கும் வகை யில் இராசரட்டை உருகுனு ரட்டை எனப் பண்டைக் காலத்திற் பிரசித்தி பெற்றிருந்த வறட்சிப் பிரதேசத்திக்குரிய பகுதிகளி லேயே இந்நீர்ப்பாசன வேல்ைகள் பெரும்பாலும் ஆரம்பிக்கப் பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டன. -
கி.பி. முதலாவது நூற்றண்டளவில், நீர்ப்பாசன வேலைகளில் இருவகை முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. ஒரு முறையின்படி, சிற்றறுகளுக்கும் கிளை ஆறுகளுக்கும் குறுக்கே கற்கள் கொண்டு நிரந்தரமான சிறிய அணைக்கட்டுகளையேனும், மரங்களையும் களி மண்ணையுங்கொண்டு தற்காலிகமான அணைகளையேனும் அமைத்து ஆற்று நீரானது வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்குப் பாய்ச்சப் பட்டது. இரண்டாவது முறையின் படி, கிராமப்புறக் குளங்கள் அமைந்திருந்த பகுதிகளுக்குத் தாழ்வான பகுதிகளிலேயுள்ள வயல்களுக்கு நேராக நீர் பாய்ந்து செல்வதற்கு ஒழுங்குகள் செய் யப்பட்டன. அக்காலத்தில் காணப்பட்ட கிராமப்புறக் குளங்க ளுட் சில அரசனுக்கும், சில தனிப்பட்டவர்களுக்கும் சொந்தமாக இருந்தன என்று அக்காலத்துக்குரிய கல்வெட்டுகள் கூறுகின்றன. கிராமப்புறக் குளங்களைவிடப் பல மடங்கு பெரிய குளங்கள் கி.பி. முதலாவது நூற்றண்டளவிலேயே முதன்முதலிற் கட்டப் பட்டன எனலாம். கி.பி. 67 தொடக்கம் 111 வரை ஆட்சி செய்த வசப மன்னனே இப்படியான பெரிய குளங்களைக் கட்டும் முறையை தொடக்கி வைத்தவன் என வரலாறு கூறுகிறது. இம்மன் னன், மயெந்தி, மண கட்டி, அக்வதுற முதலிய பதினுெரு குளங்களை யும், எ லகர அல முதலிய பன்னிரண்டு கால்வாய்களையும் கட்டு வித்தானென்று வம்ச காதைகள் கூறுகின்றன. பின்னெரு காலத் திலே தாதுசேன மன்னனுற் பெருப்பிக்கப்பட்ட கலாவாவியை முதலிற் கட்டுவித்தவனும் இம்மன்னனே யாவான். கி.பி. நாலா வது நூற்ரு ண்டுககுப் பின்னர் கட்டப்பட்ட குளங்களுடன் ஒப் பிட்டுப் பார்க்கும்போது, வசப மன்னன் கட்டுவித்த குளங்களைப் பெருங்குளங்கள் என்று கூறுதல் முடியாது. ஆயினும், அவை கிராமப்புறக் குளங்களைவிடப் பன்மடங்கு பெரியன. இவற்றுள்,

Page 14
8 வரலாறு
சில குளங்கள் இரண்டு மூன்று மைல் சுற்றளவுடையனவாக இருந்தன. வசப மன்னனுற் கட்டப்பட்ட எலகர எல எனப்படு வது, அம்பன் கங்கையை மறித்துக் கட்டப்பட்ட அணையிலிருந்து ஆரம்பித்து ஏறக்குறைய 30 மைல் தூரத்திலிருந்த கிரி ஒயா வரை சென்றதாகத் தோன்றுகின்றது. கி.பி. முதலாவது நூற் ருண்டு முடிவதற்கு முன்னமே சிங்கள மக்கள், இப்படியான பெருங் கால்வாய்களைக் கட்டும் வல்லமையுடையோராக இருந் தனரென்பதால், அம்பன் கங்கை போன்ற பேராறுகளைக் குறுக்கே மறித்துப் பெருங்கல்லணைகளைக் கட்டுதல் பற்றியும், சமவுயரக் கோடு பற்றியும், நிலத்தைச் சமப்படுத்தல் பற்றியும் அக்காலத் திலேயே அவர்கள் போதிய அறிவும் ஆற்றலும் பெற்றிருந் தார்கள் என்பது விளங்கும்.
பதினறு பெரும் குளங்களையும் ஒரு பெரும் கால் வாயையும் கட்டுவித்த மகாசேன மன்னனுக்கு (கி.பி. 276-303) இக்காலப் பகுதிக்குரிய நீர்ப்பாசன வரலாற்றிலே சிறப்பான ஒர் இடமுண்டு. இம்மன்னன் கட்டுவித்த குளங்களுள் மிகப் பெரியது மின்னேரிக் குளமாகும். மின்னேரிக் குளத்தை நிர்மாணித்தவன் என்ப தனலே தான், பின்னுெரு காலத்தில் இம்மன்னனை மக்கள் 'மின் னேரித் தெய்வம்' என்று அழைத்தனர். மின்னேரிக் குளம் இப் போது ஏறக்குறைய 4670 ஏக்கர் நிலத்திலே பரந்துள்ளது. இதன் நீரைக் கொண்டு ஏறக்குறைய 4,000 ஏக்கர் நிலத்திற் பயிர் செய்யக்கூடியதாக இருக்கின்றது. அக்காலத்திலே ரண்திச வாவி என்று கூறப்பட்டு இப்போது கவுதுலு வாவி எனப்படு கின்ற பெரும் நீர்த்தேக்கமும் இம்மன்னனுடைய ஆக்கமே யாகும். இதுவும் மின்னேரிக்குளம் போன்று பெரியதே. மகாசேன மன்ன ஞற் கட்டப்பட்ட ஏனைய குளங்களுள், உருளு வாவி, மகாகணதர வாவி, மாகளு வாவி ஆகியனவும் அடங்குமென்று இப்போது கூறப்படுகின்றது.
நான்காவது நூற்ருண்டிலே ஆட்சி செய்த அரசருள், நீர்ப் பாசன வேலைகளைப் பொறுத்த மட்டிலே முக்கிய இடத்தைப் பெறு பவன் முதலாம் உபதீச (கி.பி. 364-406) மன்னணுவான். இம் மன்னனுற் கட்டப்பட்ட குளங்களுள் முக்கியமானது தப்போவக் குளமாகும். முதலாம் உபதீச மன்னனுக்குப் பின்னர் நீர்ப் பாசனத் துறையிலே பெருந்தொண்டாற்றிய மன்னன், ஐந்தாம் நூற்றண்டிலே ஆட்சி புரிந்த தாதுசேன மன்னனேயாவான். கலா-பல லு வாவியையும், ஜய கங்கை என்ற பெருங் கால் வாயை யும் கட்டுவித்தவன் என்ற முறையிலே தாதுசேன மன்னனுடைய பெயர் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. வசப மன்னன் கட்டிய கலாவாவியைப் பெருப்பித்து, அதனுடன் பல லு வாவியை இணைத்து அமைக்கப்பட்ட நீர்த்தேக்கம் கலா-பல லு வாவி எனப் பூஜாவளியிற் குறிப்பிடப்படுகின்றது. ஏறக்குறைய 54 மைல் நீளமுடையதாக இம்மன்னஞற் கட்டப்பட்ட கால் வாயானது, கலாவாவியிலிருந்து ஆரம்பித்து அநுராதபுரத்திலுள்ள திச வாவி யில் விழுகின்றது. கலா-பல லு வாவியைவிட, இன்னும் 71 குளங்கள் தாதுசேன மன்னனுற் கட்டப்பட்டனவென்று வசம் காதைகள் கூறுகின்றன.

ܒ ܒ -ܒܒܝ -- ܐ - --------۔۔ --عجمیعیبیبیم-جیبچ-ح۔ص
-----.
இராசரட்டையின் புராதன
நீர்ப்பாசனத் திட்டம்
ீ) குளம்
- - - æsi svar sti
இரஃண படுக் குளம் கட்டுக்கரைக் குளம் அகத்தி முறிப்புக் குளம் மல்வத்து ஒயா மகா விளச் சிக் குளம்
ட காகல்கட வலைக் குள்ம் us6ut
வா கல்கட குளம் ,
கந்தளாய்க் குளம் மகா கந்தராவக் குளம் திச வாவி துவர வாவி
கன தரா ஒயா நாச் சதுரவக் கும் ம் பணிக்கன் குளம்
கலா ஒயா 17 தப்போவக் குளம்
18 மீ ஒயா
25
26
27
宠8
29 30
3.
32
33
34
35
36
கலா வாவி உருளு வாவி கவுதுலு வாவி யான் ஒயா மின்னேரிக் குளம் பராக்கிரம சமுத்திரம் , எலகர கால் வாய் அத்தோட்டைக் கால்வாய் எலகர அணை அத்தோட்டை அணை மினிப்பே கால்வாய் மினிப்பே அ%ன மகா வலி கங்கை
காலிங்க நுவர அஃத8
Jy i 16år IK i 6a) A
களு கங்கை அங்க மதில்லை அக்ன
37 seydf56?g 6Qu ö 6 asmrdiyavmT ad»

Page 15
20 வரலாறு
தாதுசேன மன்னனின் பின், நீர்ப்பாசன வரலாற்றிலே முக்கிய மான இடத்தைப் பெறுபவன் இரண்டாவது மொகலான (531 - 557) மன்னனே யாவான். இம்மன்னன் மூன்று குளங்களைக் கட்டுவித்தான் என்பர். ஆயினும், இவற்றுள் இப்போது அடையா ளங் காணப்பட்டுள்ள பத் பகன் வாவி (நாச்சதுரவ), தன வாபி (பதவிய) என்ற இரண்டும் இன்றைய இலங்கையின் மிகப் பெரிய வாவிகளுள் அடங்கும். அவ்வாறே இம் மன்னன் கட்டுவித்த பெரிய கால்வாயானது நாச்சதுரவ வாவியிலிருந்து அநுராதபுரத்திலுள்ள நுவர வாவிவரை செலலுகின்றது. ஆரும் நூற்றண்டில் ஆட்சி செய்த முதலாம் அக்போ (கி.பி. 571 - 604) மன்னனும் நீர்ப் பாசன வேலைகள் காரணமாகப் பிரசித்தி பெற்ற ஒருவனவான். குருந்து வாவியும், மினிப்பே கால் வாயின் முதற் கூறும் இம் மன்ன ஞலேயே கட்டப்பட்டன. இவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் அக்போ மன்னன் (கி.பி. 604- 605) கிரித்தலை, கந்த ளாய் ஆகிய குளங்களையும், அத்தோட்டை அணையையும் கட்டு வித்து நீர்ப்பாசன வரலாற்றிலே தன் பெயரைப் பொறிப்பித்துக் கொண்டான். கி.பி. மூன்ரும் நூற்ருண்டிலிருந்து ஏழாம் நூற் ருண்டின் முதல் இருபது ஆண்டுகள் வரை மேலே விவரிக்கப்பட் டுள்ள காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசன வேலை களின் எண்ணிக்கையை நோக்கும்போது, இக்காலப்பகுதி, இலங் கையின் நீர்ப்பாசன வரலாற்றிலே முக்கியமானதொன்ரு கக் கொள்ளத்தக்கது என்பது தெளிவு. அநுராதபுர, பொலநறுவைக் காலப் பகுதிகளிலே ' பன்னிரு மகா வத்தன்' என்று குறிப்பிடப் பட்ட குளங்களுட் பெரும்பாலானவை இக்காலப் பகுதியிலேயே கட்டப்பட்டன. அவை கலா - பல லு, கிரித்தலை, கந்தளாய், பத் பகன், உருளு முதலியவையாம். எலகர கால் வாய், மினிப்பே கால்வாய் முதலிய பெருங் கால்வாய்களும் அத்தோட்டை அணை யும் இக்காலப் பகுதிக்கே உரியனவாகும். இக்காலப் பகுதியிலே கட்டப்பட்ட கால் வாய்களின் நீளம் 250 மைலுக்கு அதிகமாகு மெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இக் கால் வாய்களின் இறக்கம், பொதுவாக மைலுக்கு ஒர் அடியளவில் இருந்ததாகவும், சிற்சில இடங்களிலே அது ஆறு அங்குலம் வரை குறைந்திருந்ததெனவும் தோன்றுகிறது. எனவே, இக்காலப் பகுதியிலே நடந்தேறிய நீர்ப்பாசன வேலைகளை நோக்கும்போது, ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுக்கால அனுபவம் காரணமாக, நீர்ப்பாசன வேலைகள் பற்றி இலங்கை மக்கள் பெற்றிருந்த மிக்க திறமையும் பூரண அறிவும் நன்கு புலணுகும். −
இப்போது சிதைவுற்ற நிலையிற் காணப்படும் சில குளங்கள் யாரால் அல்லது எக்காலத்திற் கட்டப்பட்டன என்று அறிந்து கொள்ளுதல் கடினமாக உள்ளது. புத்தளம் மாவட்டத்திலுள்ள தப்போவ வாவி, யான் ஓயாவுக்கு அண்மையிலுள்ள வாகல்கட வாவி ஆகியனவும், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பாவற் குளம், வவுனிக் குளம் ஆகியனவும், திருக்கோணமலை மாவட்டத் திலுள்ள அல்லை வாவி, அபறணைக்கு அண்மையிலுள்ள ஒறிவில 3ாவி ஆகியனவும் இப்படியான குளங்களிற் சில வாம்.
இரண்டாம் அக்போ மன்னனின் மரணத்தின் பின்னர், ஏறக் குறைய 60 ஆண்டுகள் வரை நிலவிய அரசியற் குழப்பங்கள் கார

நீர்வள நாகரிகம் - 21
ணமாக, அக்காலப் பகுதியிலே இலங்கையிற் புதியனவாக எவ்வித நீர்ப்பாசன வேலைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அன்றியும், ஏற்கெனவே இருந்த நீர்ப்பாசன ஒழுங்குகள் கூட, கவனிப்பாரின் மையினுற் பெரிதும் சிதைவுற்றன. மானவம்மன் (684 - 718) அரசனன பின்னர், நாட்டிலே அமைதி மீண்டும் நிலவியதெனி னும், சிதைவுற்றுக் கிடந்த நீர்ப்பாசன ஒழுங்குகளைப் புனர மைப்புச் செய்வதிலேயே அவன் தன் காலம் முழுவதையும் செலவு செய்தான். மான வம்ம மன்னன் காலத்தின் பின்னர், பத்தாம் நூற்ரு ண்டின் இறுதிவரை, நாட்டிலே பெரும்பாலும் அமைதி நிலவியதெனினும், அக்காலத்திலே மேற்கொளப்பட்ட
நீர்ப்பாசன வேலைகள் மிகச் சிலவேயாகும்.
அநுராதபுரியில் இறுதியாக ஆட்சி செய்த ஐந்தாம் மிகிந்து மன்னன் (கி.பி. 982 - 1029) சோழராற் சிறைப்பிடிக்கப்பட்டுச் சோழ நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆண்டு கி.பி. 1017. அவ்வாண்டிலோ அதற்கு இருபது ஆண்டுகள் வரை முன்னரோ ராஜரட்டை சோழர் வசமாயிற்று. பின்னர், 1070இல், மகா விஜயபாகு மன்னன் சோழரை இலங்கையிலிருந்து துரத்தும் வரை, ராஜரட்டை சோழராலேயே ஆட்சி செய்யப்பட்டு வந் தது. அக்காலத்தில் ராஜரட்டையிலேனும், மாயரட்டையிலே னும், உருகுணேரட்டையிலேனும் புதியனவாக எவ்வித நீர்ப் பாசன வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை. வம்ச காதைகளி லேனும் அக்காலத்துக் கல்வெட்டுகளிலேனும் இவை பற்றி யாதும் குறிப்பிடாமை இத்னை வலியுறுத்துகின்றது. சோழர் ஆட்சிக் காலத்திலே நீர்ப்பாசன வேலைகள் எவையேனும் புதியனவாக ஆரம்பிக்கப்படவில்லை. அத்துடன், அக்காலத்திலிருந்த நீர்ப் பாசன முறைகள் சிதைவுற்றனவென்றும் சிலர் கருதுகின்றனர். ஆயினும், வேண்டுமென்று எமது நீர்ப்பாசன முறைகளைச் சோழர் அழித்தனர் என்று கூறமுடியாது. காரணம், நீர்ப்பாசன முறை கள் மூலம் வரியாக அரசனுக்குப் பெரும் வருவாய் கிடைத்தது மன்றி, நாட்டைத் தன்னிறைவுடையதாக வைத்திருப்பதற்கும் அவை பெரிதும் உதவியாக இருந்தன என்பதே. எவ்வாரு யினும், மகா விஜயபாகு கி. பி. (1055 - 1110) மன்னன் மீண்டும் எமது நாட்டைச் சோழர் ஆட்சியிலிருந்து விடுதலை செய்த பின்னர், மகா எலி, சறகேறு, மகாதத்த, கட்டுன்னறு, பண்டா, எறண்ட கல்ல, மண்ட்வாடக, கித்த காபோதி பப்பத, வலாகச, மதாறகல்ல, கும்புல்கெப, பத் பகன், தாண முதலிய பல குளங்கள் புனரை மைப்புச் செய்யப்பட்டன என்று சூளவம்சம் குறிப்பிடுகின்றது. எனவே, இலங்கையரால் தோற்கடிக்கப்பட்ட சோழர் தமது நாட்டுக்கு மீண்டபோது பழிவாங்கும் நோக்கத்துடன் எமது நீர்ப்பாசன வேலைகளைச் சின்னபின்னமாக்கிவிட்டுச் சென்றன ரென்று ஊகிக்க இடமுண்டு.
பாழடைந்திருந்த பழைய நீர்ப்பாசன வேலைகளைப் புனரமைப் புச் செய்ததைவிட, புதிதாக ஒரு வாவியையேனும் கட்டுவிப்ப தற்கு மகா விஜயபாகு மன்னனுக்கு அவகாசம் கிடைக்கவில்லை. அவனுடைய மரணத்தின் பின்னர், மீண்டும் நாடு பல கூறுகளா கப் பிரிந்தமையினல், நாற்பது ஆண்டுகளுக்குமேல் நாட்டிலே குழப்பம் நிலவியது. இக்காலப்பகுதியிலே ஏற்பட்ட உள்நாட்டுப்

Page 16
22 வரலாறு
போர்களினலே நாடு நகரைத் தீக்கிரையாக்கி, நீர் தேங்கி நிற் கும் குளம் குட்டைகளை நாசமாக்கி, கால் வாய்கள் கட்டுகள் அனைத்தையும் சுக்குநூருக்கி பழைய கிராமங்கள் இருந்த சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டனவென்று சூளவம்சம் கூறு கின்றது. பராக்கிரமபாகு (கி.பி. 1153-1186) தென்னிலங்கை யின் அரசனுன பின்னரே இந்நிலைமை ஒரளவுக்கு மாறியது. இவன் தெதுறு ஒயாவில் மூன்று இடங்களிலே அணைகள் கட்டி, வாய்க்கால்கள் அமைத்து, ஏராளமான நிலத்திலே விவசாயம் செய்வதற்கு நீர் வழங்கினன். இந்த மூன்று நீர்ப்பாசன வேலை களும், சூளவம்சத்திலே கொட்டபத்த அணைக்கட்டு, சூகரநிஜ்கர அணைக்கட்டு, தொராதத்த அணைக்கட்டு என்று குறிப்பிடப்பட் டுள்ளன. அடுத்ததாக, இம்மன்னன், பண்டுவாச நகரத்துக்கு அண்மையில் இருந்த பண்டவாவியைப் பெருப்பித்து, அதற்கு பராக்கிரம சமுத்திரம் என்று பெரிட்டான். பூஜாவளியில் இது ‘பண சமுத்திரம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை விட, இவன், மாயரட்டைக்குரிய பகுதியில் இருந்த 53 பழைய குளங்களைப் புனரமைப்புச் செய்தான் என்றும் கூறப்படுகின்றது. இப்படியாக இவனுற் புனரமைப்புச் செய்யப்பட்ட குளங்களென மாகலு, கிரிபா, புத்கமு, உறுகமு, கிரியா, கட்டுன்னறு, சியம் பலாகமு, திம்புல்கமு, முகுன்னறு முதலிய 37 குளங்களின் பெயர்கள் சூளவம்சத்திலே கொடுக்கப்பட்டுள்ளன. இலங்கை முழுவதற்கும் ஏகாதிபதியாக மகுடம் பூண்டதன் பின்னர், இலங் கையின் பல்வேறு பகுதிகளிலும் இவன் பல வாவிகளையும் கால் வாய்களையும் புதியனவாகக் கட்டுவித்தான்; பலவற்றைப் பெருப் பித்தான்; பலவற்றைப் புனரமைப்புச் செய்தான். இவற்றின் பெயர்கள் சூளவம்சத்திற் கொடுக்கப்பட்டுள்ளன. 165 அணைக் கட்டுகளையும், 3,910 கால் வாய்களையும், 2,376 சிறு வாவிகளையும், 163 பெரு வாவிகளையும் இம்மன்னன் புதியனவாகக் கட்டுவித் தோ திருத்துவித்தோ நீர் வழங்கினன் என்று சூளவம்சம் கூறு கின்றது. இவன் ராஜரட்டைக்கு மன்னனு ன பின்னர் மேற் கொண்ட நீர்ப்பாசன வேலைகளுள், " பொலநறுவையிலுள்ள பராக் கிரம ச முத் தி ர ம் மு க் கி ய மா ன தா கு ம். இ த ன் அணைக்கட்டு ஏறக்குறைய 84 மைல் நீளமுடையது. உயரம் 40 அடி. நீர் தேங்கி நிற்கும் நிலத்தின் பரப்பு ஏறக்குறைய 5,350 ஏக்கர். இதன் நீரைப் பயன்படுத்தி 10,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பிலே விவசாயம் செய்யக்கூடியதாகவுள்ளது. இம்மன்னனுற் புனரமைப்புச் செய்யப்பட்ட நீர்ப்பாசன வேலை களுள், பின்வருவனவும் அடங்கும். அவையாவன: மின்னேரி, மகா கல் கடவலை, கவுதுல்ல, கலா, பதி, பத் பகன், மானுவது முதலிய பெருவாவிகளும், ஜய கங்கை எனப்படும் கால்வாயு மாகும். பராக்கிரமபாகு மன்னன் மேற்கொண்ட நீர்ப்பாசன வேலைகள் பற்றிச் சூளவம்சத்திலே கொடுக்கப்பட்டுள்ள விவ ரங்கள் அத்தனையும் சரியாயின், அவனுடைய ஆட்சிக்காலம், இலங்கையின் நீர்ப்பாசன வரலாற்றின் உச்சக் கட்டமென்பது பொருந்தும்.
பராக்கிரமபாகு மன்னன் காலத்திலே உச்ச நிலையையடைந்த நீர்ப்பாசன வேலை, அவன் இறந்த பின்னர் படிப்படியாகச் சிதை

நீர்வள நாகரிகம் 23
வடையலாயிற்று. இவனுக்குப் பின் சிங்கா சனமேறிய இரண் டாம் விஜயபாகு (கி.பி. 1186-1187), நிசங்கமல்லன் (கி.பி. 1187-1196) ஆகிய இரு மன்னர்கள் காலத்தில் மாத்திரமன்றி அவர்களுக்குப் பின்னரும், பொலநறுவையிலேனும் அல்லது தம்ப தெனிய, குருஞகலை, கம்பளை ஆகிய பிற்பட்ட காலத்து இராச தானிகளிலேனும் ஆட்சி செய்த எந்த ஒரு மன்னனும் புதிதாக ஒரு நீர்ப்பாசன வேலையை மேற்கொண்டான் என்பதற்குரிய ஆதாரங்களைச் சூளவம்சத்திற் காண முடியாது. நிசங்க சமுத் திரம், பாண்டிவிஜய குளம் எனப்பட்ட குளங்களை நிசங்கமல்ல மன்னன் கட்டினன் என்று அவனுடைய கல்வெட்டுகள் இரண்டு கூறுகின்றனவெனினும், உண்மையில், இந்த இரண்டு குளங்களும் அவளுற்ை புனரமைப்புச் செய்யப்பட்டிருக்க வேண்டுமே தவிர அவனற் கட்டப்பட்டிருக்க முடியாது. நிசங்க மன்னனுக்குப் பின்னர் பொலநறுவை இராச்சியம் வீழ்ச்சியடைந்து, கி.பி. 1014 அளவில், இங்கு படையெடுத்து வந்த கலிங்கராற் கைப்பற்றப் பட்டது. இதன் பின்னரே சிங்கள இராச்சியம் தென்மேற்கில் அமைக்கப்பட்டது. இது காரணமாகவே, வறண்ட பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த நீர்ப்பாசன வேலைகள் பேணிப் பாதுகாக் கப்படாமற் போயின என்பது தெளிவு. எனவே, இதன் பின்னர், குளக்கட்டுகள் அணைக்கட்டுகள் ஆகியன சிதைவுற்றமையினுலும், கால் வாய்கள் கரைபுரண்டு ஓடியதனுலும், காலத்துக்குக் காலம் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக 13ஆம் நூற்ருண்டின் இறுதியள வில் வறண்ட பிரதேசத்திற் பெரும்பகுதி குடிகளற்ற பூமியாக மாறிவிட்டது. குளிர்ப் பிரதேசத்திலே நெற்பயிர் செய்வதற்குத் தேவையான நீர்ப்பாசன முறைகள், வறண்ட பிரதேசத்துக்கு வேண்டிய பாரிய நீர்ப்பாசன முறைகளைவிட வேறுபட்டனவாகும். ஆகையினலே, குளிர்ப் பிரதேசத்துக்குச் சிங்கள இரசாதானி மாறிச் சென்றதுடன், பண்டைக்கால இலங்கையின் நீர்ப்பாசன வரலாறு முடிவுற்றதெனலாம்.

Page 17
மூன்றம் அத்தியாயம்
பின் மத்திய காலத்து ஆட்சிமுறை
1. மத்திய ஆட்சி
தம்பதெனிக் காலத்திலிருந்து கோட்டை இராசதானியின் இறுதிவரை உள்ள காலமே, பின் மத்திய காலம் என இங்குக் குறப்பிடப்படுகின்றது. ஆதி காலத்திற்போன்று, பின் மத்திய காலத்திலும் முடியாட்சியே இலங்கையில் நிலவியது. அரசுரிமை பற்றிப பொலநறுவைக் காலத்தில் நிலவிய கொள்கைகளே தம்ப தெனிக் காலத்திலும் பெரும்பாலும் நிலவின. ஆயினும், கம்ப ளைக் காலத்திலும், கோட்டைக் காலத்திலும், அக்கொள்கைகளிற் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டன எனலாம். அநுராதபுரக் காலத் திற் போலவே, பொலநறுவைக் காலத்திலும் தம்பதெனிக் காலத்திலும் சிம்மாசன உரிமை மூப்புமுறை ஒழுங்குப்படி வழங் கப்பட்டது. அஃதாவது, அண்ணனிடமிருந்து தம்பிமாருக்கும், அதன் பின்னர் மூத்த தமையனின் மூத்த மகனுக்கும், பின்னர் ஏனைய புத்திரர்களுக்கும் என்றவாறு அமைந்தது. ஆயின், கம்ப ளைக் காலத்திலும் அதற்குப் பின்னரும், மன்னனுெருவனின் சகோ தரியின் மைந்தனுக்கும் அரசுரிமை பெறும் வாய்ப்பு இருந்ததா கத் தெரிகிறது. பொலநறுவைக் காலத்தின் பின்னர், கோட் டையை ஆண்ட ஆரும் பராக்கிரமபாகு மன்னனைத் தவிர்ந்த ஏனைய இலங்கை மன்னர்களின் ஆட்சிப் பரப்புப் படிப்படியாகச் சுருங்கலாயிற்று. எனினும், முற்காலத்து மன்னர்கள் பூண்டி ருந்த மகப்புருமுகா (மகாப்பிரமுகர்) , மகாராஜா போன்ற பட் டங்களுக்குப் பதிலாக, திரிசிங்களாதீஸ்வரன், நவரத்தினதிபதி, சக்கரவர்த்தி முதலாய ஆடம்பரமான பட்ட்ங்களை இவர்கள் சூடி யிருந்தனர். அநுராதபுரக் காலத்தின் இறுதிப்பாதியிலும் பொல நறுவைக் காலத்திலும் 'சிறிசங்கபோ’’, ‘அபாசல மெவன்’ என் னும் பட்டங்களை மன்னர்கள் மாறி மாறிப் பூண்டுகொண்டன ராயினும், பின் மத்திய காலத்து மன்னர்கள் யாவருமே சிறி சங்கபோ என்னும் பட்டத்தை மாத்திரம் பூண்டுகொண்டனர். கோட்டையை ஆண்ட ஆரும் பாரக்கிரமபாகு மன்னன் மாத்தி ரமே மேற்சொன்ன இரு பட்டங்களையும் பூண்டிருந்தான் என அறிகிருேம். y
ஆதி காலத்திற் போலவே இக்காலத்திலும், அகப்புறப் பகை களிடமிருந்து மக்களைக் காப்பாற்றி, உலகம் சாசனம் ஆகிய இரண்டையும் (அதாவது, சமுதாயத்தையும் சமயத்தையும்) அபி விருத்தி செய்வதே மன்னர்களின் பிரதான கடமை ஆயிற்று. உலக சாசனங்கள் எனக் கருதப்பட்டவை மக்களைப் புரத்தலும், புத்த மதத்தைப் புரத்தலும் ஆகிய இரண்டுமாம். மக்களின் நன்மை நோக்கிப் பணிபுரிதலும், மதத்தினை நிலைநாட்டி வளர்த் தலும் "ஈருலக சாசன விருத்தி என அக்காலத்திற் கருதப்பட்

பின் மத்திய காலத்து ஆட்சி s 25
டன. இக்காரியங்களை நிறைவேற்றுவதற்குத் துணையாக அரச அலுவலர்கள் அமர்த்தப்பட்டனர். அத்துடன், அரசாட்சி பற்றி ஆலோசனை கூறும் பொருட்டும் அமைச்சர் அவையொன்றும் இருந்தது. கோட்டைக் காலத்தில், இவ்வமைச்சர் அவையிலிருந் தோரின் பதவிப்பெயர் வரிசையொன்று ‘ஹம்ச சந்தேசம், (அன் னம் விடு தூது) என்னும் நூலிலே காணப்படுகிறது. அவர்களுள், 'ஆபா' என்னும் அரசகுமாரர், முதலமைச்சர் (அக்கிர அமாத் தியர்), பஞ்சாங்க கணிதர், பண்டார நாயகர், அதிகாரம், சேனை நாயகர், வாயில் முதலியார், இலேகம் அல்லது நிதிச் செயலாளர், முதலியார், வாசல் எழுத்தர் (முக வெட்டி) முதலியோர் அடங் குவர். முக்கிய பதவி தாங்கும் அரச அலுவலர் யாவரும் அமைச் சர் அவையில் இடம்பெற்றனர். இவ்வாரு ன பத்விகளை வகித்த சிற்சிலரின் பட்டப்பெயர்கள், ‘நிகாய சங்கிரகம்’, ‘கந்தவுரு சிரித' என்னும் நூல்களிலே கூறப்பட்டுள்ளன. மகரத்திநா, அனு நாயக, மகலே நா, சபாபதிநா, சித்துநா, சிரித்லேநா, துலேநா, வியத்நா, மகவெதநா, மகலனகதிநா, தகம்பசக்நா, தகம் கெயிநா, சி(ங்)காநா, அரக்மேநா, ஏகநாயக, திசாநாயக, அதிகரண நாயக, அர்த்த நாயக, கஜநாயக, முதல்நாயக, மகவெல(ந்) தநா, மக தொரநா, கஜ"நா முதலிய பதவிப் பெயர்கள் மேற்கூறிய இரு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அரச அலுவலர்களுள், மகபா அல்லது மகாதிபா தன் எனப்பட்ட இளவரசனே மிகவும்
உயர்ந்த பதவி படைத்தவனவான். மன்னன் மறைந்ததும், ஆட்சிப் பொறுப்பினை ஏற்கும் உரிமை பூண்ட பட்டத்து இள வரசன் அவன். அநுராதபுரக் காலத்திலும் பொலநறுவைக்
காலத்திலும், தக்கிணதேசம் அல்லது மாயா ரட்டை என்னும் பிர தேசத்தின் ஆட்சிப்பொறுப்பு மகாதிபாதனின் வசமே ஒப்படைக் கப்பட்டிருந்தது. ஆயினும், இராசதானி தம்பதெனிக்கு மாற் றப்பட்ட பின்னர், அக்காலத்திலும் பிற்பட்ட காலங்களிலும் மகாதிபாதர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த இடங்கள் எவையென் பதை நிச்சயிக்க முடியவில்லை. சேனை நாயகன் என்போன் போர்ப் படைகளின் தலைவனுவான். இவனே மகாதிபாதனுக்கு அடுத்தபடியான முக்கிய அதிகாரி. கந்தவுரு சிரித, நிகாய சங் கிரகம் என்னும் நூல்களிற் கூறப்பட்டோருள் சிங்கநா, அரக் மேநா, பண்டார நாயக, அதிகரண நாயக, மகதொரநா முதலா னேரின் பதவிப் பெயர்களைக் கொண்டு அவர்களின் கடமைகள் எவை என அனுமானிக்கலாம். எனினும், அனுநாயக, துலேநா, சபாபதிநா முதலிய பதவிப் பெயர்களைப் பூண்ட அலுவலர்கள் எத்தகைய கடமைகளை ஆற்றினர் எனக் கூறுவது கடினமாகும். மகபாவையும் ஆபாவையும் தவிர்ந்த பிற உத்தியோகத்தர் யாவ ருமே பொதுவாக அமைச்சர்கள் (அமாத்தியர்) எனப்பட்டனர். முதலமைச்சர் மாத்திரமே (மகா) அதிகாரம் அல்லது அகமதி (பிரதம மந்திரி) எனப்பட்டார். கம்பளைக் காலத்திலும் அதற் குப் பின்னரும் இவ்வதிகாரிகள் பொதுவாக முதலிகள் எனப்பட் டனர். அதிகாரம், செனவிரத், மகபா, மகலே நா என்னும் ஐந்து அதிகாரிகளும் பஞ்சப்பிரதான மகா மண்டலத்தார் (ஐம் பெருங்குழுவினர்) என 'தகம் சரண" என்னும் நூலிலே குறிக்கப் பட்டுள்ளனர். சேனை நாயகனுக்குச் சமமான மதிப்பினை உடைய புரோகிதர்பற்றி, ஹம்ச சந்தேசத்தில் வரும் அரசவை வருணனை

Page 18
26 வரலாறு
யில் எதுவும் கூறப்படவில்லை. எனினும், அக்காலத்து மன்னர் களுக்கு மதவிவகாரங்களிலே ஆலோசனை வழங்கும் பொருட்டு புரோகிதர் ஒருவர் இருந்தார் என்பதற்குக் கல்வெட்டுச் சான்று உண்டு.
இவ்வதிகாரிகளைத் தவிர, அரசனின் தனிப்பட்ட பணிகளை ஆற் றும் சிற்றேவலர் பலரின் பதவிப் பெயர்கள், தம்பதெனிச் செய் திகள் மூலமும் கோட்டைக் காலத்துக்குரிய ஆவணங்களிலிருந் தும் அறியப்படுகின்றன. ஐம்பதுக்கும் அதிகமான அப்பெயர் களுள், மிகவும் முக்கியமானவை என்று கருதத் தக்க சில் வற்றை மாத்திரமே கீழே தருகிருேம். அவர்களுள் மினிவன் பாலர், சுவ லக்காரப் பாலர், கோநகப் பாலர், வேளைக் காரப் பாலர், மூகல அகம்படி, நெத்தி அகம்படி, அபாமு தர்கள் என்னும் அதிகாரிகள் போர்ப்படையுடன் தொடர்புடையோர் எனலாம். ஆடை ஏந்து வோர், அடிசில் ஏந்துவோர், தைலம் ஏந்துவோர், வாசனைப் பொருள் ஏந்துவோர், தாம்பூலம் ஏந்துவோர், கர்ப்பூரம் ஏந்து வோர், சந்தனம் ஏந்துவோர், சாமரம் ஏந்துவோர் முதலானேர் தனிப்பட்ட இராச உபசாரப் பணிகளைச் செய்தனர் என்பது தெளிவு.
2. பிரதேச ஆட்சி
இராசதானிக்கு வெகு தொலைவிலுள்ள தூரப் பிரதேசங்களைகுறிப்பாகக் காட்டுப் பகுதிகளை-வன்னியர் என்னும் அதிகாரிகள் பாலித்து வந்தனர் என அறியப்படுகிறது. அவர்களுட் சிலர் பெரு வன்னியர் என்றும், மற்றும் சிலர் சிறு வன்னியர் என்றும் பெயர் பெற்றனர். அவர்களுள்ளே தமிழர்களும் இருந்தனர் என்று தெரிகிறது. சில சமயங்களில் மன்னனின் அதிகாரத்தை ஒப்புக் கொண்டு, அவர்களின் கீழ் இவ் வன்னியர் பரிபாலனஞ் செய்தனர். ஆயினும், சுயாதீன அதிகாரம் படைத்த மன்னர் களாகவும் அவர்களிற் பலர் திகழ்ந்தனர். இவ்வாறு வன்னியர் ஆண்ட பகுதிகள் தவிர்ந்த பிற பகுதிகளை, உபரிபாலன வசதியின் பொருட்டு 18 பிரதேசங்களாகப் பிரித்திருந்தனர் என்பது, சூளவம்சத்திலிருந்தும், பூஜாவளியிலிருந்தும், தம்பதெனிச் செய் தியிலிருந்தும் புலனுகிறது. பொலநறுவைக் காலத்தில் ‘மண்ட லங்கள்’ எனப்பட்ட பகுதிகளே இக்காலத்தில் பிரதேசங்களெனக் குறிக்கப்பட்டன என ஊகிக்கலாம். தம்பதெனிக் காலத்தில் இருந்தனவாகக் கூறப்பட்ட பதினெட்டுப் பிரதேசங்களும் எவை யெவையென்பது தெளிவாகத் தெரியவில்லை. ‘கந்ததவுரு சிரித என்னும் நூலிற் கூறப்படும் ‘சாமந்த நாயகர்களே” பிரதேசங் கள் எனப் பெயர் பெற்ற பகுதிகளைப் பரிபாலனஞ் செய்தனர் என்று ஊகிக்க இடமுண்டு. அவ்வப் பிரதேசங்களிலே தங்கி நின்ற படைப்பிரிவுகளுக்குப் பொறுப்பாகவும் அவர்கள் இருந் தனர் என அறிகிருேம். முழு நாட்டினைவிடச் சிறிய ஆட்சிப் பிரி வுகள் ரட்டைகள்’ எனப்பட்டன. "கந்ததவரு சிரித வில் 'ரட்ட நாயக” என்று குறிக்கப்பட்டவர்கள் மேற்சொன்ன ‘ரட்டை களுக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரிகளே என்பது உறுதி. "திசாநாயகா’ என்னும் அதிகாரி பற்றியும், 'கந்த தவுரு சிரித கூறுகிறது. "திசாவ' என்னும் ஆட்சிப் பிராந்தியத்துக்குப் பொறுப்

பின் மத்திய காலத்து ஆட்சி 27
பாக இருந்த அதிகாரியே திசாநாயக எனப்பட்டார். சதர (நாலு) கோறளையிலிருந்த ரட்ட நாயகர்கள் பற்றியும் திசாநாய கர்கள் பற்றியும் கோட்டைக் காலத்துக்குரிய அளுத்து நுவரைக் கல்வெட்டிலே தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காலத்துக் கல்வெட் டுகளிற் கூறப்பட்டுள்ள அதிகாரிகளுள் கோறளைக் கரணர் என் போர், கோறளையெனக் குறிக்கப்பட்ட ஆட்சிப் பகுதிகளுக்குப் பொறுப்பாக இருந்தனர் என்பதில் ஐயமில்லை. அக்கல்வெட்டு களிற் குறிக்கப்பட்டுள்ள அத்துக்கோறளை என்போர், கோறளைக் கரணர் களின் உதவியாளராய் இருந்திருக்கலாம். நிகாய சங்கிர கத்திலே கூறப்படும் 'பத்து' என்னும் பாலனப் பிரிவு, அநுரா தபுரக் கல்வெட்டுகளிலே தெரிவிக்கப்படும் தசகமம்" என்பதை ஒத்ததாய் இருந்திருக்கலாம். பிரதேச ஆட்சியின் மிகச் சிறிய பிரிவு, கிராமம். கிராமத்துக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரியை அந்தக் காலத்திலே ‘கம் முதலி' (கமமுதலி) என்று குறிப்பிட்டனர். "கமிக’ அல்லது ‘காம போஜக’ என்னும் பதத்தை, சத்தர்ம ரத்னவளி என்னும் நூல் ‘கம் முதலி' என்று சிங்களத்திலே பெயர்த்துள்ளது. அரச அலுவலர்களின் சேவையின் பொருட்டு, திவெல் அல்லது பரவேணி நிலங்களை உபகரிப்பது அக்காலத்து வழக்கமாம். திவெல் நிலங்கள் என்பன, அதிகாரிகளின் சீவிய காலத்தில் மட்டும் அவர்க ளால் அநுபவிக்கப்படுவன; அவர் இறந்த பின்னர் அவை மன்ன னுக்குச் சொந்தமாகும். பரவேணி நிலங்கள் என்பன குறித்த அதிகாரிகளால் மட்டுமன்றி, அவர்களின் சந்ததியாராலும் பரம் பரை பரம்பரையாக அநுபவிக்கப்படத்தக்க நிலங்களாம். படைத் தலைவர்க்கு மட்டுமன்றி, படைவீரர்களுக்கும் ஊதியமாகக் காணி களே அளிக்கப்பட்டன. கூலிப்படைஞருக்கு மட்டுமே வேத னங்கள் பணமாக வழங்கப்பட்டன. 3. நீதி பரிபாலனம் ۔۔۔۔۔ -
நீதி பரிபாலனம் அல்லது வழக்குகளை விசாரித்து நீதி வழங்குங் கடமை, உத்தியோகபூர்வமாக மன்னனுக்கே உரியது. ஆயினும், அவன் தனித்து இக்காரியத்தை நிறைவேற்றுதல் இயலாதாகை யால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தருமாதிகரணம்’ எனப் படும் நீதி மன்றங்களை நிறுவி, நீதிபதிகளை நியமித்து, அவர்களைக் கொண்டு வழக்குகளை விசாரிப்பிக்கும் முறை இருந்தமைக்குச் சான்றுகள் உண்டு. வழக்குகளில் இறுதித் தீர்ப்பினை அல்லது மேன்முறையீட்டுத் தீர்ப்பினை வழங்கும் அதிகாரம் அரசன் வசமே இருந்தது. வழிப்பறி, கன்னம் வைத்தல், மாடு எருமை முதலிய விலங்குகளைத் திருடுதல், கொலை போன்ற குற்றங்களுக்கு, கை கால்களைத் துண்டித்தல், கழுவேற்றியோ தூக்கிலிட்டோ கொல் லுதல் போன்ற தண்டனைகள் விதிக்கப்பட்டன. கலகம் விளைத் த ல், காயம் விளைத்தல் போன்ற சிறு குற்றங்களுக்கு, கடுமையான எச்சரிக்கை, குற்றப்பணம் வாங்குதல், விலங்கிட்டு வைத்தல் போன்ற தண்டனைகள் கொடுக்கப்பட்டன. இராசத்துரோகம் என்பது அக்காலத்திலே கடுங்குற்றமாகக் கருதப்பட்டமையால், அக்குற்றத்தை இழைத்தவரின் கைகால்களைத் துண்டித்தல், நாடு கடத்தல் போன்ற கடுந்தண்டனைகள் வழங்கப்பட்டன. சில சமயங்களில், அத்தகையவர்களின் இன சனத்தவர்களும் ஆதர வாளருங்கூட அவ்வாரு ன கடுந் தண்டனையைப் பெற்றனர். அத்

Page 19
28 வரலாறு
துடன், இராசத் துரோகிகள், இனசனத்தார் ஆகியோரின் சொத் துக்கள் கூட, அரசனற் பறிமுதல் செய்யப்பட்டன. 4. மன்னனின் வருமானம் அல்லது இறைவரி
அநுராதபுரக் காலத்திலும் பொலநறுவைக் காலத்திலும், மன் னனின் பிரதான வருவாய், தானிய வரிமூலமே கிடைத்தது. பயிரிடப்பட்ட காணியிலிருந்து பெற்ற விளைச்சலின் ஆறிலொரு பங்கு (4) அக்காலத்திலே வரியாக மன்னனுக்குக் கிடைத்தது. பின் மத்திய காலத்திலும் இத்தகையவரி மன்னனுக்குக் கிடைத் த்து. ஆயினும், வரியை அறவிடும் முறை வேறு விதமாக இருந் தது. ஓர் ஊர் முழுவதிலுமுள்ள வயல்களின் விளைச்சலில் வழக் கப்பிரகாரம் மன்னனுக்குப் போகவேண்டிய பங்குக்கு ஈடாக, ஒரு தனி வயலின் விளைச்சலை, அல்லது சில வயல்களின் விளைச்சலை மன்னனுக்கென ஒதுக்கி வைத்தனர். இவ்வாறு ஒதுக்கிய பாகம் ‘முத்தெட்டு அல்லது ‘ரட்நிந்தம்' எனப்பட்டது.
ஆதி காலங்களிற் போலவே இக்காலத்திலும் மணிக்கற்கள், முத்துக்கள் மூலமும் மன்னன் பெரும் வரும்படி பெற்றன். இரத் தினக்கல் அகழ்ந்தெடுத்தல் அக்காலத்திலே மன்னனின் ஏகபோக உரிமையாய் இருந்தது எனலாம். அவற்றை விற்றலும் அவ் வாறே யாம். பின் மத்திய காலத்திலே சுங்கம் அல்லது "சுங் வத் எனப்படும் விசேட வரியும் மன்னனுக்குக் கிடைத்ததென, அக் காலத்து நூல்களும் ஆவணங்களும் தெரிவிக்கின்றன. ஜாதக அட்டுவா கெற்ற பதய’ என்னும் நூலின்படி, சுங்கம் என்பது எல்லைக் கடவை போன்ற இடங்களில் அறவிடப்படும் வரி, ‘சுங் வத்’ என்பது துறைமுகம் போன்ற இடங்களில் அறவிடப்படும் வரி.
தலைவரி எனப்படும் ஒரு வகை வரி பற்றியும், மாதந்தோறும் அறவிடப்படும் மாசவரி பற்றியும், நாள்தோறும் அறவிடப்படும் தின வரி பற்றியும் அக்காலத்து வரலாற்று ஆதாரங்களிலே குறிப் புகள் உள்ளன. ஆணுல் இவ்வரிகளைக் கொடுக்கவேண்டியவர்கள் எத்தகைய உழைப்பாளிகள் என்பது பற்றி யாதும் தெளிவாகத் தெரியவில்லை. மராளம்” அல்லது ‘மளா ரம்’ எனப்படும் மரண வரிமூலமும் அக்காலத்து மன்னன் பெரு வரும்படி பெற்ருன். இறந் தவரின் சங்கமச் சொத்தின் மூன்றிலொரு பங்கு, பொதுவாக மரண வரியென்னும் பெயரில் அறவிடப்பட்டது.
இங்குக் கூறப்பட்ட பிரதான வரிகளைத் தவிர, புலத, பத, மே வர முதலான சிறு வரிகள் சிலவற்றைப் பற்றியும் நாம் கேள் விப்படுகிருேம். பத என்றும் புலத என்றும் குறிக்கப்படுவன, காணிச் சொந்தக்காரர் அல்லது உரிமைக்காரர் காலத்துக்குக் காலம் அரச அலுவலர்களுக்கு இலவசமாகக் கொடுக்க ன்ேடிய உணவுப்பண்டங்களும் வெற்றிலையும் ஆகும். “பத’ என்பது அரி சியா கீரையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ‘மே வர" என் பது ஆண்டுதோறும் சில நாட்களுக்கு ஆற்ற வேண்டிய கட்டாய இராசசேவை ஆகும், இவ்வரிகளைத் தவிர, புத்தாண்டு, கார்த் திகை விழா போன்ற தருணங்களில், அரச அதிபதிகள் அரசனுக் குக் காணிக்கையாக அளிக்கும் நன்கொடைகளும் திறைகளும் அரசனது வருவாயுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

நாலாம் அத்தியாயம்
சமய - பண்பாட்டு மாற்றங்கள்
கி.மு. ஆரும் நூற்ருண்டு வரையிலேதான் இலங்கையில் மக்கள் வதியத் தொடங்கினர். அதன் பின்னர் இந்தியாவிலிருந்து இங்கு வந்த ஆரியர்களும் ஊர்மனைகளை நிறுவினர். அவர்கள் இங்கு வந்த காலத்திலேயே இந்தியாவில் நிலவிய சமய நம்பிக்கை களையும் வழிபாட்டு முறைகளையும் உடன் கொண்டுவந்தனர் என் பதில் ஐயமில்லை. அக்காலத்தில் இந்தியாவிலே நிலவிய பிரதான மதம் பிரம்ம மதம் என்பதாம். அக்காலத்துப் பிரம்ம மதத்தில், பிரமா முதலாக இந்திரன், வருணன், இயமன், குபேரன், இரா மன், வாயுதேவன், சிவன் ஆதிய தேவர் பலர் இடம்பெற்றனர். பிரம்ம மதத்தைத் தவிர, பூத பைசாச வழிபாடும், விருட்ச வழி பாடும், நாக வழிபாடும் போன்ற சமய நம்பிக்கைகள் பிறவும் வழக்கில் இருந்தன. ஆதிகாலத்தில் ஈழத்தில் வாழ்ந்த ஆரி யரும் மேற்கூறிய தேவர்களை வழிபட்டதுடன், பூத பைசாச, விருட்ச, நாக வழிபாடுகளையும் மேற்கொண்டனர் என்பதை, குகையெழுத்துகளும் குலமுறை வரலாறுகளும் தெளிவாக்கு கின்றன.
ஈழத்து வரலாற்றிலே முதலாவது மன்னன் என்று கருதப்படத் தக்கவனும், அநுராதபுரத்தின் ஆரம்ப ஆட்சியாளனுமாகிய பண்டுகாபய மன்னன், அக்காலத்தில் நிலவிய பல்வேறு சமயங் களைச் சார்ந்தோரும் பயன்கொள்ளும் வகையிலே கட்டிடங்கள் பலவற்றை அமைப்பித்தான் என்று மகாவம்சம் கூறும். இம்மன் னன் அமைப்பித்த கட்டிடங்களுள், கால வேலன், சித்த ராஜன் என்னும் இயக்கர்கள் இருவருக்கும்; வல வாமுகி என்னும் இயக் கிக்கும்; வெசுமு னிதேவி, வியாத தேவன் என்போருக்கும் தனித் தனியாக எழுப்பப்பட்ட ஆலயங்களும், தாபதர்களுக்குரிய ஆச் சிரமம் ஒன்றும், மடாலயங்கள் மூன்றும், பரிவிராசக ஆலயம் ஒன்றும், ஆபிவிகார ஆலயம் ஒன்றும், அந்தணர் பொருட்டு நிறு வப்பட்ட சிவிகைச் சாலையொன்றும், சொஸ்த சாலையொன்றும் அடங்கும். மகா வம்சத்தில் வரும் இச்செய்திகள் பண்டைச் சிங் களவர் பின்பற்றிய பல்வேறு சமயங்கள் பற்றி எமக்கு உணர்த்து கின்றன. w
நமது வம்ச காதைகளிலே கூறப்பட்டுள்ள செய்திகளின் படி, பண்டுகா பயன் ஆட்சிக்குப்பின் ஏறத்தாழ அறுபதாண்டு கடந்த பின்னரே, தேவானும்பியதீசன் (கி.மு. 250-210) அநுராத புரத்தை ஆண்ட சமயத்திலேயே, இலங்கை மக்கள் பெளத்த மதத்தைத் தழுவினர். அஃதாவது இந்தியாவிலே பெளத்தமதம் பரவி ஏறத்தாழ முந்நூறு ஆண்டு கழிந்த பின்னரே அது இலங் கையிற் பரவியது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆல்ை, தேவா ணும்பியதீசனுக்கு முற்பட்ட காலத்திலும் இலங்கையிலே பெளத்

Page 20
30 வரலாறு
தர்கள் வாழ்ந்தனர் என்று ஊகிக்க இடமுண்டு. தேவானம்பிய தீசன் காலத்திலே பெளத்த மதம் அரச மதம் ஆக்கப்பட்ட பின் னர் இலங்கையிலே பிக்கு-பிக்குணிக்குரிய ஆசார நிறுவனங்கள் ஆரம்பமாயின. அத்துடன் ஸ்தூப (தூபி) வணக்கமும் போதி வழிபாடும் மக்களிடையே பரவின. சிறிது காலஞ்செல்ல, புத்த விக்கிரக வழிபாடும் தாது வழிபாடும் மக்களிடையே பரவின. ஆயினும், இங்கு முன்னர் இருந்த சமயாசார வழிபாட்டு முறை கள் பெளத்த மதத்தின் வருகையினுல் முற்ருக மறைந்து ஒழிந்து போய்விடவில்லை என்று கருதலாம்.
தேவானம்பிய தீச மன்னன் காலத்தில் மிகுந்து சுவாமிகளால் இங்கு கொண்டுவரப்பட்ட மதம் தேரவாத பெளத்தம் ஆகும். அதன் தலைமை நிலையமாக விளங்கியது அநுராதபுரத்து மக மெவுனு (மகாமே கவனம்) உத்தியானத்தில் அமைக்கப்பட்ட மகா விகாரை ஆகும். வலகம்பா மன்னனது ஆட்சியின் பதி னைந்தாம் ஆண்டு வரையும் ஈழத்துப் பிக்கு-பிக்குணிகள் யாவரும், சமயாசார ஒழுக்க விதிகளைப் பொறுத்தவரையில், மகாவிகாரை யின் கொள்கைகளையே பின்பற்றினர். ஆனல் மேற்படி மன்ன னது ஆட்சியின் பதினைந்தாம் ஆண்டிலே அவன் அபயகிரி அல்லது அபயுத்த ர என்னும் விகாரை ஒன்றை நிறுவினன். Of விகாரையிலிருந்து வெளியேறிய பெளத்த குரு மார் சிலர் அப்புது விகாரைக்குச் சென்று தங்கினர். அதன் பின்னரே பெளத்த மதத்திலே பிரிவும் பேதமும் தோன்றின. அன்று தோன்றிய புதிய மதப்பிரிவு ‘அபயகிரி நிகாய' என்னும் பெயரைப் பெற் றது. வோகார தீச மன்னன் காலத்தில் (209 - 231) அபயகிரி வாசிகள் மகாயான தருமத்தின் பாற்பட்ட வை துல் யவாதம் என்னும் மதத்துறையைப் பின்பற்றினர் எனவும், அம்மன்னன் அப்புது மதத்துறையைத் தழுவிய பிக்குகளைக் கண்டித்தான் எனவும் வம்ச காதைகள் கூறுகின்றன. வோகார தீசன் காலத் திலே மகாயான மதப்பிரசாரம் அடக்கப்பட்டதாயினும், கோத் தாபய மன்னன் காலத்தில் (249-262) அபயகிரியைச் சேர்ந்த பிக்குகள் சிலர் வை துல்ய வாதப் பிரசாரத்தை மீண்டும் தொடங் கினர் என்றும், அதனுல் அங்கிருந்த பிக்குகளிற் சிலர் அபயகிரியி லிருந்து பிரிந்து சென்று தக்கிண கிரி விகாரையில் வதிந்தார்கள் என்றும், அவர்கள் அங்குப் புதிதாகத் தொடங்கிய மதப்பிரிவு ‘சாகலிக நிகாய' என்னும் பெயரைப் பெற்றது என்றும் நிகாய சங்கிரகம் கூறும். தக்கிணகிரி விகாரையில் வதிந்த சாகலிக மதப்பிரிவினர், மகா சேன மன்னன் (274-301) பிற்காலத்திலே கட்டுவித்த ஜேதவன விகாரைக்குச் சென்றனர். அதன்பின்னர் அவர்கள் ஜேதவன பீடத்தினர் எனப்பட்டனர். இவ்வாறு தோன்றிய மூன்று மத பீடங்களுக்குமிடையே காலத்துக்குக் காலம் நிகழ்ந்த சில பூசல்கள் பற்றி வம்ச காதைகள் கூறுகின்றன. இந்த மூன்று பீடங்களும், பொலநறுவையை ஆண்ட மகாபராக்கிரம பாகு மன்னன் காலம் வரையும் தனித்தனியாக இயங்கி வந்தன. பின்னர் அம்மன்னனின் முயற்சியினல் மீண்டும் ஒற்றுமைப்பட்டு ஒரே மதப்பீடமாகச் சேர்ந்து கொண்டன. -
அபயகிரி விகாரையும் ஜேதவன விகாரையும், இந்தியாவி லிருந்து அவ்வப்போது இங்குக்கொணரப்பட்ட மகாயான பெளத்

சமய பண்பாட்டு மாற்றங்கள் 3.
தத்தின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் நாட்டமுடையனவாய் இருந்தன என்று தோன்றுகிறது. கோத்தா ப்யன், மகாசேனன் என்னும் மன்னவர் காலத்தில் வை துல்ய வாதம் இலங்கையிலே பரவிற்று. முதலாம் சேனன் என்னும் மன்னனின் ஆட்சிக் காலத்தில், இந்தியாவிலிருந்து வந்த வாஜிரிய வாதம் என்னும் மகா யானக் கொள்கையும், இரண்டாம் சேனன் என்பானின் ஆட்சிக் காலத்தில் நீலபட தரிசனம் என்னும் பிறிதொரு மகாயானக் கொள்கையும், அபயகிரி விகாரை மூலமும் ஜேதவன விகாரை மூலமும் ஈழத்திலே பரப்பப்பட்டன. அநுராதபுரக் காலத்தின் பிற்பாதியிலே மகாயான தத்துவத்திற் சிரத்தை உடையவர்கள் மிகப்பலர் இலங்கையில் வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உண்டு. ஆயினும் பதினெராம் நூற்ருண்டின் முற்பகுதியில் நடந்த சோழர் படையெடுப்பினுல் மகாயானக் கொள்கையும் தேரவாதக் கொள்கையும் ஒருங்கே நலிவுற்றன. இதனுலேதான், மகா விஜயபாகு (கி.பி. 1055-1110) பொலநறுவை மன்ன ஞகிய பின்னர், ஞானதீட்சை பெற்ற பிக்குமாரையும் திரிபிட கத்தையும் பர்மாவிலிருந்து தருவித்து, இலங்கையிலுள்ள நற் குலத்தார்க்கு ஞானதீட்சை நல்குவித்து, பெளத்த மதத்தைப் புனருத்தாரணம் செய்வது அவசியமாயிற்று. -
முதலாம் பராக்கிரமபாகு (1153-1186) பொலநறுவை மன்னன் ஆகிய பின்னர், பெளத்தமதம் பெரிதும் வளர்ச்சி யுற்றது. வலகம்பா மன்னன் காலந்தொட்டே பிளவுற்றுக் கிடந்த குரு பீடங்கள், பராக்கிரமபாகு மன்னனின் முயற்சியினுல் மீண்டும் ஐக்கியப்பட்டன. அன்றுதொட்டு, அபயகிரி விகாரை என்றும் ஜேதவன விகாரை என்றும் பிரித்துப் பேசும்பேதங்கள் ஒழிந்துபோயின. அத்துடன், அபயகிரி பீடத்துக்கு உரியன வாகிய உத்துரமுல, கலத்துரமுல முதலான சில நிறுவனங்கள் பன்னெடுங்காலம் நின்று நிலவின.
முதலாம் விஜயபாகு, முதலாம் பராக்கிரமபாகு, நிசங்கமல் லன் போன்ற மன்னர்களின் ஆதரவினுற் பொலநறுவைக் காலத் திலே மறுமலர்ச்சி பெற்ற பெளத்த மதம், கி.பி. 1214இல் நிகழ்ந்த மாகனின் படையெடுப்பினலே பெரிதும் நலிவுற்றது. 40 ஆண்டுகள் வரை நீடித்த மாகனின் ஆட்சிக் காலம், பண் டைய ஈழத்துப் பெளத்த வரலாற்றிலே பயங்கரமானதொரு காலமாகும். மாகனும் அவன் படைகளும் இராசரட்டையில் இருந்த கோயில்களை இடித்து, சைத்தியங்கள் பலவற்றை அழித்து ருவன்வெலி முதலான பெருந்தாதுகோபங்களை நிர்மூலமாக்கி, அவற்றிலே பிரதிட்டை செய்திருந்த புனித தாதுக்களை அழித்து, மக்களைக் கொன்று, விகாரைகளையும் பிரிவேனுக்களையும் படை வீடுகளாக்கி, மும் மணிகளுக்குரிய செல்வங்களை அபகரித்து, மத, நூல்களை எரித்து, பெளத்த மதத்துக்குப் பேரிடர் செய்தனர் என்று சூளவம்சம் தெரிவிக்கிறது. மாகனின் ஆட்சி இராச ரட்டையில் மாத்திரமே நிலவியது. அக்காலத்தில் மாயரட்டை யிலும் உருகுணை ரட்டையிலும் பல்வேறு இடங்களிலே பிரதேச அதிபதிகள் ஆட்சி புரிந்தமையால், பெளத்த தருமம் ஈழநாட்டி லிருந்து முழுமையாக ஒழிக்கப்படாது தப்பிக் கொண்டது. ஆயி
u:
னும், பொலநறுவைக்காலத்தின் பிற்பகுதியில் நிகழ்ந்த அரசியற்

Page 21
32 வரலாறு
பூசல்கள் காரணமாக ஆதரவை இழந்த அரச குருமார் கூட் டத்தின் அறவொழுக்க ஆசாரங்கள் பெருஞ் சீரழிவுக்குள்ளாயின என்று தோன்றுகிறது. மூன்ரும் விஜயபாகு மன்னன் (1232 - 1236) தம்பதெனியிலே தனது ஆட்சியை நிறுவிய பின்னர், பெளத்த குருமார் சிலர் அவனை அடைந்து, அவன் புதிதாக நிறுவிய விஜயசுந்தரராம ஆராமத்திலே பெளத்த சங்க மகா சபையொன்றைக் கூட்டுவித்தனர். அச்சபயில் அக்காலத்து மதபேதப் பிரச்சினைகளை ஆராய்ந்து, அவற்றுக்கு அறநெறிப்படி தீர்வுகண்டு ஆசார நியதிகளை நிறுவி, பெளத்த குருநியமங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப் பட்டன. குரு நியமங்களை மேலும் அபிவிருத்தி செய்யும் பொருட்டு ஞானதீட்சைச் சடங்குகளை ஏற்பாடு செய்த விஜய பாகு மன்னன், தகுதிவாய்ந்த பிக்குகளை உயர் பதவிகளில் நிய மித்ததோடு, பிக்குமாருக்கு நாள்தோறும் தான தருமங்களைச் செய்து சேவித்தான் என அறிகிருேம்.
மூன்ரும் விஜயபாகு மன்னனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அவனது மகனுகிய இரண்டாம் பராக்கிரமபாகு மன்னனும் (1236 - 1270) தன் தந்தை தொடக்கி வைத்த குரு பீடப்பணி களைத் தொடர்ந்து மேற்கொண்டான். அக்காலத்திலே ஈழத் திலே கிடைத்தற்கு அரியனவாயிருந்த சமய நூல்களைப் பிற பெளத்த நாடுகளிலிருந்து தருவித்தும், அவற்றைப் பெயர்த்து எழுதுவித்தும், கற்றறிந்த பிக்குமாருக்கு அவற்றை வழங்கியும், பிற நாடுகளிற் கல்வி கற்ற பிக்குமார்களைக் கொண்டு இத்திருப் பணியைச் செய்வித்தும் அம்மன்னன் பெளத்த சாசன வளர்ச் சிக்குப் பெருந்தொண்டாற்றினன். இவ்வரசன் காலத்தும் சங்க மகாசபை கூட்டப்பட்டு, ஒழுக்கந்த வறிய ஆயிரக்கணக்கான பிக்குமார் குருத்துவ நிலையினின்றும் நீக்கப்பட்டனர் என்று நிகாய சங்கிரகத்திலே சொல்லப்பட்டுள்ளது. குருமார் பின் பற்ற வேண்டிய நெறிகளை வகுத்துக் கூறும் தம்பதெனி ஆசாரக் கோவை இக்காலத்திலேயே நடைமுறைக்கு வந்தது.
இக்காலத்திலே, அபயகிரி விகாரை, ஜேதவன விகாரை, மகா விகாரை என்ற பெளத்த மதப்பிரிவுகள் மறைந்துபோயின. எனினும், வனவாசி, கிராமவாசி என்னும் இரு மதப்பிரிவுகள் தோன்றலாயின. அத்துடன், அட்டதிக்குகளின் பெயர்களைப் பூண்ட எட்டு நிறுவனங்களும் தோன்றின. அவை உத்துருமூலை, தக் குண மூலை, கபாரா மூலை, மக நேத்பா மூலை, வாதும் மூலை, சென விரத் மூலை, வில் கம்மூலை, கலத்துர மூலை என்னும் பெயர்களைப் பூண்டிருந்தன. குருமார்களின் திருக்கூட்டத்திலே முக்கிய இடத் தைப் பெற்றவர்கள் மேற்சொன்ன எட்டு நிறுவனங்களின் தலை வர்களும் ஆவர். குருமார் திருக்கூட்டத்திலே அடுத்த இடத் தைப் பெற்றவர்கள் பிரிவேனுக்களின் அதிபதிகளாகிய பிக்கு மார் ஆவர்.
தம்பதெனிப் பரம்பரை மறைந்த பின்னர் நிகழ்ந்த அரசியற் பூசல் காரணமாக, குருமார் திருக்கூட்டம் மீண்டும் சீர்கேடு உற்றது. இதனல், கம்பளை மன்னணுகிய நான்காம் புவனேக பாகு காலத்தில், சேணுலங்காதிகார செனவிரத் மன்னனின் ஆதர வுடன், கி.பி. 1341 அளவிலே, கிராமவாசிப் பிரிவினரும் வன

சமய பண்பாட்டு மாற்றங்கள் 33
வாசிப் பிரிவினரும் சங்க மகாசபைகளைக் கூட்டி, மதாசார ஆய் வுகளை நடத்தி, ஒழுக்கங்குன்றியோரை வெளியேற்றி, குருமார் திருக்கூட்டத்தைப் புனிதமாக்கினர் என்று நிகாய சங்கிரகம் கூறும். ஆயினும் ஈழத்தில் மீண்டும் இடம்பெற்ற அரசியற் பூசல்கள் காரணமாக, பிக்குமாரின் மதாசார ஒழுக்கங்கள் மீண் டும் சீர்கேடு அடையத் தொடங்கின. அதனல், மூன்றும் விக் கிரமபாகு மன்னன் காலத்தில் அழகக்கோனர் என்னும் அமைச் சர், சிறீதர் மகீர்த்தி என்னும் குருவானவரின் தலைமையிலே சங்க மகா சபையைக் கூட்டிச் சாசனச் சீர்திருத்தம் செய்வித்தார் என்பர். அக்காலத்திலே குருமார் திருக்கூட்டத்தில் உருவாகிய ஒற்றுமை, ஐந்தாம் புவனேகபாகு மன்னனது ஆட்சியின் 15ஆம் ஆண்டுவரையும் காலத்தோடொட்டிய வகையில் நிலவிய தென்றும், மேற்படி மன்னன் மறைந்த பின் அரசபதவி எய்திய வீரபாகு ஆபாணனின் ஆதரவுடன், இரண்டாம் தர்மகீர்த்தி சுவாமிகளின் தலைமையில், புத்த சகாப்தம் 1939இல் ( GG). G. 1 396 இல்) கிராமவாசிப் பிரிவு, வனவாசிப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த சகல குருமாரையும் கூட்டி, அநாசாரங்களை அகற்றிச் சா சனச் சீர்திருத்தம் * செய்தனர் என்றும் நிகாய சங்கிரகம் கூறும். பெளத்த சங்கத்தின் மாண்புக்கும் முன்னேற்றத்துக்கும் உதவிய மேற்படி காலப் பிரிவின் இறுதி ஆட்சியாளன் என, ஆரும் பராக்கிரமபாகு மன்னனை நாம் குறிப்பிடலாம். பெள்த்த சாசனம் என்றென்றும் நின்று நிலவவேண்டும் என்று விரும்பிய இம்மன்னன் தனது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியிலே, குருமார் திருக்கூட்டத்தின் பொருட்டுப் புதிய ஆசாரக் கோவை யொன்றைத் தொகுப்பித்தான். எனினும், இம்மன்னன் மறைந் ததும் பெளத்த சாசனம் மீண்டும் நலிவடைந்தது.
ஈழத்தவர்கள் பெளத்த மதத்தைத் தழுவிய பின்னரும், அவர் களிடையே முன்பு வழங்கிய வழிபாட்டு முறைகளும் அநுட்டா னங்களும் சிறிய அளவிலேனும் தொடர்ந்து நிலவின என்று கருதலாம். பண்டுகாபய மன்னன் காலத்திற் கட்டப்பட்ட கால வேல இயக்கனின் கோயில் இருந்த இடத்தில், மகா சேன மன்னன் சைத்தியமொன்றைக் கட்டுவித்தான் என மகா வம்சம் கூறும். அவ்வாறே, இம் மன்னன் கட்டுவித்த கோ கன்ன விகாரை, ஏக காவில்ல விகாரை, கலந்தக விகாரை என்பன மூன்றும் அமைந் துள்ள இடங்களில், முற்காலத்திலே சிவாலயமொன்றும் வேறிரு கோயில்களும் இருந்தன என்பர். கீர்த்தி சிறீமேவன் காலத்தில் (கி.பி 301 - 328) புத்த பிரானின் தந்ததாதுவை இலங்கைக்குக் கொண்டு வந்த அந்தகு மரு, ஹேமமாலா என்போர், இங்கு வந் திறங்கிய முதலாவது தினத்திலே தங்கியிருந்த இடம், மகா தித்த எனப்படும் மாந்தைத் துறைமுகத்துக்குக் கிட்டவுள்ள ஒரு கோயிலே யாம். மகாநாமன் காலத்தில் (406 - 428) இலங் கைக்கு வந்த பாகியன் என்னும் பிக்கு, மேற்படி மன்னன் இந்துப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டு ஒழுகினன் என்று தாம் வரைந்த சுற்றுப் பயணக் குறிப்பேட்டிலே கூறியுள்ளார். மூன்ரும் காசியப்ப மன்னன் பிக்குமாரையும் அந்தணரையும் பூசித்தான் என்றும், இரண்டாம் சேன மன்னன் (கி.பி. 853 - 887) ஆயிரம் அந்தணர்களுக்குப் பொன்னும் மணியும் வழங்கிப்

Page 22
34 வரலாறு
போற்றினன் என்றும் வம்ச காதைகள் கூறும். தெவிநுவரையி லுள்ள உற்பல வண்ணத் தெய்வத்தின் கோயிலைக் கட்டுவித்தவன் முதலாம் தப்புல மன்னன் என்பர்.
ஈழநாடு சோழரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்திலே சைவரும் வைணவரும் கணிசமான அளவில் இங்கு வாழ்ந்தனர் என்பதற்கு இந்நாட்டிற் காணப்படும் சைவ வைணவ ஆலய இடிபாடுகளும், சிவன், பார்வதி, முருகன், கணபதி, காளி, இலக்குமி முதலான இந்துத் தெய்வங்களின் உலோகச் சிலைகள் பல இங்குக் கண்டெடுக்கப்பட்டமையும் சான்றுகளாக மிளிர் கின்றன. சோழர்காலத்திலே அந்தணர்கள் பலர் ஈழத்துக்கு வந்தனர் எனவும், முதலாம் விஜயபாகு மன்னன் ஈழநாட்டினைச் சோழர் ஆட்சியினின்றும் விடுவித்த பின்னரும் அந்த அந்தணரை அம்மன்னன் ஆதரித்து வந்தான் எனவும் நாம் அறிகிருேம். அக்காலத்திலே கந்த ளாயில் அமைக்கப்பட்ட ஒரு கோயில் அம் மன்னன் பெயரினுலே விஜயராஜேஸ்வரம் என வழங்கப்பட்ட மையும், அதன் அயலில் உள்ள கிராமம் விஜயராஜ சதுர்வேத மங்கலம் என வழங்கப்பட்டமையும் மேற்படி உண்மைக்குச் சான்றுகளாம். நிசங்கமல்ல மன்னனும் அந்தணர்க்கு ஆகார பானு திகள் வழங்கும் நோக்குடன் அறச்சாலையொன்றை நிறு விஞன்.
பொலநறுவைக் காலத்தின் பின்னர் யாழ்ப்பாணக் குடாநாட் டிலும், மன்னர், திருக்கோணமலைப் பிரதேசங்களிலும் பெரும் பாலும் தமிழ் மக்களே வாழ்ந்தனர். அதனல், சைவ சம்யிகளா கிய அவர்கள் வழிபடும் பொருட்டு மேற்கூறிய பிரதேசங்களில் இந்துக் கோயில்கள் நிறுவப்பட்டன எனலாம். யாழ்ப்பாணத்து நல்லூர்க் கந்தசுவாமி கோயிலும், திருக்கோணமலையிலும் மாந் தையிலும் முன்னேஸ்வரத்திலுமுள்ள சிவாலயங்களும் 13ஆம் நூற்றண்டுக்கும் 15ஆம் நூற்றண்டுக்கும் இடைப்பட்ட காலத் தில் நிறுவப்பட்டன எனலாம். தமிழர் * பெருந்தொகையாக வாழ்ந்த இடங்களில் மட்டுமன்றி, ஏனைய இடங்களிலும் இந்துக் கோயில்கள் நிறுவப்பட்டன என்பதற்கு அவ்வக் காலத்து இலக் கியங்களும், கல்வெட்டுகளும் சான்று பகர்கின்றன. கோட்டை இராச்சியத்திலே நிறுவப்பட்ட சிவன்கோயில் பற்றியும், களுத் துறையிலமைந்த கணபதி கோயில் பற்றியும், பெந்தோட்டைக் குக் கிட்ட அமைந்த காளிகோயில் பற்றியும், மாத்தறைக்கு அண்மையில் அமைந்த நாகதம் பிரான் கோயில் பற்றியும் அவ்வக் காலத்துத் தூதுப் பிரபந்தங்கள் கூறுகின்றன.
அநுராதபுரக்காலத்தின் முற்பகுதி தொட்டே இலங்கையில் அராபிய வணிகர்கள் வதிந்தனர் எனவும், தமது சமயத்தைக் கடைப்பிடிக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருந்தது எனவும் நாம் அறிகிருேம். அவர்கள் இலங்கையில் வாணிபஞ் செய்து கொண்டு வசித்தனர் எனினும், முஸ்லிம் பள்ளிவாசலின் இடிபாடு எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. கி.பி. 1154 வரை யில் அல் இத்ரிஸி என்பார் எழுதிய “புவியியல்" என்னும் நூலில், இஸ்லாம் சமயப் பிரதிநிதிகள் மூவர் ஈழத்து அரசவையில் இருந்தனர் என்ற செய்தி காணப்படுகின்றது. எனினும் நவீன வரலாற்றறிஞர் அச்செய்தியை ஏற்றுக்கொள்ளத் தயங்குவர்.

சமய பண்பாட்டு மாற்றங்கள் 35
கி.பி. 1154இல் இலங்கையை ஆண்டவன் முதலாம் பராக்கிரம பாகு மன்னன் ஆவான். அன்னனின் அரசாட்சி பற்றிய செய் திகள் பல கிடைத்துள்ளனவாயினும் அல் இத்ரிஸி கூறுவது போன்று இஸ்லாமியர்கள் இவனது அவையில் அமர்ந்திருந்தனர் என்பதற்கு எவ்வித சாட்சியும் கிடைக்கவில்லை.
பொலநறுவைக் காலத்து முஸ்லிம்கள் பற்றி எதுவும் அறிய முடியவில்லையாயினும், தம்பதெனிக் காலத்தின் முற்பகுதியில் அவர்களைப்பற்றி நாம் கேள்விப்படுகிருேம். யாப்பகுவாவில் ஆட்சி செலுத்திய முதலாம் புவனேகபாகு மன்னனுக்கும் எகிப்து நாட்டின் சுல்தானுக்குமிடையே நிலவிய தூதுவத் தொடர்பு பற்றி இந்நூலில் வேருேர் இடத்திலே குறிப்பிட்டுள்ளோம். குருநாகலை மன்னன் ஒருவனுக்கு முஸ்லிம் இராணி ஒருத்தி இருந் தாள் என்றும், மன்னனுக்கும் அவ்விராணிக்கும் வத்ஹிமி பண் டாரன் என்னும் மகனுெருவன் பிறந்தான் என்றும் நாடோடிக் கதையொன்று உண்டு. இபின் பதுதா என்பார் அக்காலத்து இலங்கையிலே கோநகர் என்னும் இடத்திற்குக் கிட்டவிருந்த முஸ்லிம் பள்ளிவாசலொன்று பற்றிக் கூறுகிருர். யுங் லோ என்னும் சீனச் சக்கரவர்த்தி அக்காலத்து ஈழத்திலிருந்த முஸ்லிம் பள்ளியொன்றுக்கு வழங்கிய நன்கொடைகள் பற்றி அக்காலத்துக் கல்வெட்டொன்று கூறுகிறது. பண்டைக் காலத்துக்கோ மத் திய காலத்துக்கோ உரிய முஸ்லிம் கட்டட இடிபா டெதனையும் இன்று காண இயலவில்லை எனினும், அக்காலத்து முஸ்லிம்கள் தங்கள் மதத்தைக் கடைப்பிடிப்பதற்கு முழுச் சுதந்திரம் உடை யோராய் இருந்தனர் என்று கருதலாம்.
ஆதியிலே இந்தியாவிலிருந்து இங்கு வந்த ஆரியர்கள் அக் காலத்திலே தம் தாய்நாட்டில் நிலவிய பழக்கவழக்கங்கள், நிறுவன முறைகள் முதலியவற்றையும் இங்கு கொணர்ந்தனர் என்பதில் ஐயமில்லை. அக்காலத்து இந்தியாவிலே இந்து சமு தாய முறைமைகளே நிலவின. ஆகையால், ஆதிகாலச் சிங்களவரும் அதே முறைமைகளையும் பழக்க வழக்கங்களையுமே பின்பற்றினர். கி.மு. மூன்ரும் நூற்றண்டின் நடுப்பகுதியளவிற் புத்த சமயம் இலங்கைக்கு வந்ததும், ஆதியிலிருந்த சமூகப்பழக்க வழக்கங்கள் பெருமாற்றத்துக்கு உள்ளாயின. ஆயினும், முன்னர் நிலவிய இந்து நிறுவன முறைகள் பழக்கவழக்கங்கள் என்பவற்றின் அடிப் படைப்பண்புகள், புத்த சமயத்தின் வருகைக்குப் பின்னரும் பெரும் பாலும் மாரு மலே இருந்தன எனலாம்.
பரத கண்டத்து இந்து வருணுச்சிரம முறைக்கு இயைய, பிரா மணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என வகுக்கும் நால்வருண பேதமும், செய்தொழிலின் அடிப்படையில் அமைந்த பல்திறப் பட்ட சாதிபேதங்களும் அக்காலத்து இந்து சமுதாயத்தில் நில வின. இலங்கையிலும் இத்தகைய சாதி பேதங்கள் இருந்தன. எனினும், புத்தசமயத்தின் செல்வாக்கினுல், இந்தியாவில் இருந்த வாரு ன கடும் பேதங்கள் இங்கு இருக்கவில்லை எனலாம்.
கமத்தொழிலை ஈழநாட்டுக்கு அறிமுகஞ் செய்து வைத்தவர்கள் அறப்பழைய காலத்தில் இந்தியாவிலிருந்து இங்கு வந்த நம் முன்னேரே ஆவர். அதனுல் அன்றுதொட்டுச் சோறே சிங்கள

Page 23
36 வரலாறு
மக்களின் பிரதான உணவாக இருந்து வந்துள்ளது. நெற்பயிர்ச் செய்கையின் பொருட்டு எமது பண்டைச் சிங்கள மன்னர் பரந்த குளங்களைத் தோண்டியும் வாய்க்கால்களை வெட்டியும் செய்த பெரும்பணிகள் பற்றி, இந்நூலின் வேருெரு பகுதியிலே கூறி யுள்ளோம். இன்று போலவே அன்றும் ஈழத்து மக்கள் நெல் லரிசிச் சோற்றுடன், உழுந்து, பயறு, சாமை, தினை முதலான பிற தானிய வகைகளையும் உணவாகக் கொண்டனர். இதனல், இன்று போலவே அன்றும் அவர்களின் முக்கிய தொழிலாக உழவுத் தொழிலே திகழ்ந்தது.
நமது முன்னேர் முதன்முதலாக இங்குக் குடியேறிய காலத்தி லேயே அவர்கள் எழுத்துக் கலைபற்றி அறிந்திருந்தனர் எனவோ, ஏடேறிய இலக்கியம் அவர் வசம் இருந்தது எனவோ, உறுதி யாகக் கூறுவதற்குத் தக்க சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனல் அக்காலத்து இந்திய நாட்டின் பேச்சு மொழியை அவர் கொணர்ந் திருப்பார் என்பதில் ஐயமில்லை. வளர்ச்சிபெற்றதோர் எழுத் துக்கலையும் இலக்கியச் செல்வமும், புத்த மதத்தின் வருகையுடன் எமக்குக் கிட்டின என்பதற்கும் உறுதியான சான்றுகள் உண்டு. கி.மு. மூன்ரும் நூற்றண்டின் பின்னர் குகைகளிலும் பாறைகளி லும் பொறிக்கப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் ஆயிரக் கணக்கிலே இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் கண்டறி யப்பட்டுள்ளன; இவையும், மிகிந்து சுவாமிகளால் இங்குக் கொண்டுவரப்பட்டு, வாய்மொழியாக மனனஞ்செய்து ஒதப்பட்டு வந்த திரிபிடகமும் அவற்றின் உரைகளும் வலகம்பா மன்னன் காலத்தில், மாத்தளையிலிருந்த அலுவிகாரையில் ஏட்டிலே எழு தப்பட்டன என வம்ச காதைகள் கூறுவதும் மேற்படி உண் மையை நிலைநாட்டும் ஆதாரங்களாம்.
கி.மு. மூன்ரும் நூற்றண்டில் இலங்கையில் வழங்கிய பிராமி எழுத்துக்கள் இந்தியாவில் அசோக மன்னனது சிலா சாசனங்களிற் காணப்படும் எழுத்துக்களைப் பெரிதும் ஒத்தன. ஆனல், கி.மு. முதலாம் நூற்ருண்டு தொட்டு, இந்நாட்டுக்கேயுரிய சிறப்பியல் புகள் சில இவ்வெழுத்துகளில் ஏறலாயின. பிராமி எழுத்துகளில் உண்டான இம்மாற்றம் ஏழாம் நூற்றண்டின் இறுதிக் கட்டம் வரை நிகழ்ந்தது. சிங்கள அரிச்சுவடி தோற்றம் பெற்றது, எட்டாம் நூற்றண்டின் தொடக்கத்தில் ஆகும். இச் சிங்கள அரிச்சுவடியின் வரிவடிவம் படிப்படியாக மாற்றம் பெற்று, 15 ஆம் நூற்றண்டின் இறுதியிலேயே இன்றைய நிலையை அடைந்தது. இலங்கையில் ஆரியர் குடியேறுமுன் இந்நாட்டில் வாழ்ந்த சுதேசிகளிடையே வழங்கிய மொழியினைப்பற்றி மிகச் சொற்ப மான செய்திகளே நமக்குக் கிடைத்துள்ளன. ஆரியர் வருமுன் இங்கு வாழ்ந்தோர் என்று கருதப்படக்கூடிய வேடர்கள், தமக்கேயுரியதொரு பாரம்பரிய மொழியினையே ஆதியிற் பேசி னர் என்று கொள்ள இடமுண்டு. ஆனல் இன்று இலங்கையில் வாழும் வேடர் பேசும் மொழியிலே கிராமியச் சிங்களச் சொற் களே அதிகம் காணப்படுகின்றன. சிங்களவர் இங்கு வாழத் தொடங்கிய பின்னர், வேடர்களுக்கும் சிங்களவருக்குமிடையே நிலவிய தொடர்புகள் காரணமாக, கிராமியச் சிங்களச் சொற்கள் வேட்டுவ மொழியிற் சென்று பயின்றன எனலாம். வேட்டுவ

சமய பண்பாட்டு மாற்றங்கள் 37
மொழியிலே சிங்களச் சொற்கள் ஏறியமைபோலவே, வேட்டுவ மொழிச் சொற்கள் சிலவும் சிங்கள மொழியில் ஏறிக்கொண் டன. இன்றுகூடச் சிங்கள மொழியிலே உடலுறுப்புகளைக் குறிப் பதற்கு வழங்கும் ஒலுவ, க(ட்)ட, தொல, பட, கலவ, க(க்) குல், விலு(ம்)ப என்னும் சொற்களும், வீட்டு வாழ்க்கையில் இடம் பெறும் குல்ல, பெது ற, லிப, லி(ந்)த முதலிய சொற்களும் சுதேசிகளின் மொழியிலிருந்து வந்து சிங்கள மொழியிலே ஏறிக் கொண்டனவேயாம். அத்துடன், பொல், தெலும், லபு முதலிய மர வகைப் பெயர்களும் கா(க்)க, கஜ முதலான விலங்குப் பெயர் களும் ஆரிய மொழிகளல்லாத பிறமொழிகளிலிருந்து வந்து புகுந்துள்ளன. ஆனல் இச்சொற்களெல்லாம் ஆரியர் இலங் கைக்கு வந்த பின் இங்கிருந்த சுதேசிகளிடமிருந்து பெறப்பட்ட சொற்களா, இல்லையேல் அவர்கள் இந்தியாவிலிருந்த சமயத்தில் அங்கிருந்த ஆதி வாசிகளிடமிருந்து பெறப்பட்ட சொற்களா என்பதைப்பற்றி உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.
புத்த மதம் இலங்கைக்கு வருமுன் சிங்கள மக்களிடையே வழங் கிய மொழியின் இயல்புகள் எவை என்பதை அறிவதற்கு தக்க ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதற்குப் பிற்பட்ட அநுராத புரக்காலத்திலிருந்து கூட நம் கைக்கு எட்டியுள்ளவை இலக் கியச் சார்பற்ற சிலாசாசனங்களே. சிலா சாசனங்களைத் தவிர, சீகிரிச் சுவர்க்கவிகளும் மூன்று சிங்கள நூல்களும் மாத்திரமே, அநுராதபுரக் காலத்திலிருந்து நமக்குக் கிடைத்துள்ளன.
சிங்கள மொழியானது இந்திய-ஆரிய மொழி ஒன்றிலிருந்து பிறந்தது என்பதை இக்காலத்திலே பொதுவாகப் பலரும் ஒப்புக் கொள்கின்றனர். சிங்கள மொழி தோன்றிய பின்னர் இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்தும் இடையிடையே இங்குவந்த புதுப் புது இனத்து மக்களின் செல்வாக்கினல், அவ்வப் பிரதேசங்களின் இந்திய மொழிக் கூறுகளும் சொற்களும் சிங்கள மொழியிலும் ஏறிக்கொண்டன எனலாம். காலத்துக்குக் காலம் இலங்கை மீது படையெடுத்த தென்னிந்தியர்களின் வருகை முதலான காரணங் களிஞலும் தமிழ்ச்சொற்கள் சிங்கள மொழியுடன் வந்து கலந்தன என்று கருத இடமுண்டு.
கி.மு. 3 ஆம் நூற்றண்டு தொடங்கி கி.பி. 15 ஆம் நூற்ருண்டு வரையுமுள்ள காலப்பகுதியிலே சிங்கள மொழி வளர்ச்சியுற்ற பான்மையை ஆராய்ந்த அறிஞராகிய கைகர் என்பார், சிங்கள மொழியின் வளர்ச்சியை முப்பெருங் கட்டங்களாக வகுத்துக் காட்டியுள்ளார். சிங்களப் பிராகிருத காலம் (கி.மு. மூன்ரும் நூற்றண்டு முதல் கி.பி. நான்காம் நூற்ருண்டு வரை), ஆதிச் சிங்கள காலம் (கி.பி. நான்காம் நூற்ரு ண்டு முதல் எட்டாம் நூற்றண்டு வரை), சிங்கள காலம் என்னும் மூன்றுமே அவ்வறி ஞர் வகுத்த கட்டங்களாகும். சிலாசாசனங்களிலும் இலக்கியங் களிலும் காணப்பட்ட மொழிப்பண்புகளின் அடியாகவே அவர் இப்பாகுபாட்டினைச் செய்தார்.
புத்த மதம் இலங்கைக்கு வருவதற்கு முன் இருந்த எந்த இலக் கியப் படைப்பினைப்பற்றியும் அறிவதற்கு எம்மால் இயலவில்லை. புத்த மதத்தின் வருகைக்குப் பின்னர் தேவாணும்பியதீசன் காலந்

Page 24
38 வரலாறு
தொட்டு இலக்கிய முயற்சிகள் ஆரம்பமாயின என்று கருதலாம். ஆயினும் அநுராதபுரக் காலத்தின் முற்பகுதிக்குரிய இலக்கிய நூல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அநுராதபுரக் காலத்தின் பிற்பகுதிக்குரிய நூல்களுள்ளும், மூன்று மாத்திரமே கிடைத் துள்ளன. அவை ‘சியபஸ் லகர தம்மியா அட்டுவா கெற்ற பதய, முல்சி(க்)க, சி(க்)கவலந்த என்னும் மூன்றுமாம். இவற்றுள் முதலாவது, இலக்கிய விமரிசன நூல்; இரண்டாவது சொற் பொருள் விளக்க நூல்; மூன்ரு வது பெளத்த பிக்குமாருக்குரிய நீதிநெறிச் சுருக்க நூல். இப்பொழுது எஞ்சியிருப்பவை இம் மூன்று சிங்கள நூல்கள் மட்டுமே ஆயினும், அநுராதபுரக் காலம் இலக்கிய வளர்ச்சிச் சிறப்புடைய காலம் என்பதற்கு வேறு சான்றுகள் உண்டு. இத்தொடர்பிலே, முதலாம் அக்போ மன் னன் காலத்தில் (571-604) பன்னிரு சிங்களக் கவிஞர்கள் வாழ்ந்தனர் என்ற செய்தி நிகாய சங்கிரகத்திலே காணப்படுவது முக்கியமான தோர் ஆதாரமாகும். சீகிரிச் சுவர்க் கவிகளிலும் அக்காலத்து இலக்கியச் செழுமையின் பிரதிபலிப்பை நாம்
காணலாம். சிங்களத்தில் மட்டுமன்றி, பாளியிலும் சமஸ்கி ருதத்திலும் எழுதப்பட்ட நூல்கள் அக்காலத்தில் இருந்தமைக் குச் சான்றுகள் உண்டு. சிகலவத்துப்பகரணய, தீபவம்சம்,
மகாவம்சம் என்பனவும், புத்த கோசரால் எழுதப்பட்ட பாளி அட்டுவாவும் இக்காலத்திலே தோன்றிய பாளி நூல்களுட் சில வாம். சமஸ்கிருதப் பெருங்காப்பியமான *ஜான கீஹரணம்’ என்பது அநுராதபுரக் காலத்தில் ஆட்சிசெய்த குமாரதாச மன்ன ஞல் (508-516) எழுதப்பட்டதென்று கருதப்படுகிறது.
ஈழநாடு சோழமன்னரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத் திலே இலக்கிய முயற்சிகள் சோர்வுற்றனவாயினும், ஈழநாடு மீண்டும் விடுதலை எய்தியபோது இலக்கிய முயற்சிகள் மறு மலர்ச்சி அடைந்தன. பொலநறுவைக் காலத்தின் முதலாவது சிங்கள அரசனன விஜயபாகு (கி.பி. 1055-1110) என்பான் ஒரு சிங்களப் பெருங்கவிஞன் எனவும், சிங்களக் கவிஞர்களின் தலைவ ஞக அவன் திகழ்ந்தான் எனவும், அவனது நல்லாதரவினலும் பெருங்கொடையினலும் பிற கவிஞர்கள் ஊக்கம்பெற்று நூலாக் கப் பணியில் ஈடுபட்டனர் எனவும் சூளவம்சத்திலே சொல்லப் பட்டுள்ளது. ஆனலும் இவ்வரசனுலோ இவன் காலத்துக் கவிஞர்களாலோ இயற்றப்பட்ட நூல் எதுவும் இதுவரை கிடைக்க வில்லை. விஜயபாகு மன்னனின் பின், இலக்கிய முயற்சிகள் பெரு மளவில் நடந்த காலம் முதலாம் பராக்கிரமபாகு மன்னனின் காலமாகும். பராக்கிரமபாகு மன்னன் பெளத்த மதத்தையும், கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம் போன்ற நீதி நூல்களையும், சொற்கலை, நிகண்டு முதலாம் கருவிநூல்களையும், காவியங்களை யும் இளமைக் காலத்திலேயே கற்றுத் தேர்ந்தான் என்று சூளவம் சம் சொல்லுகிறது. கவிசிலுமின என்னும் செய்யுள் நூலை ஆக்கியவன் முதலாம் பராக்கிரமபாகு மன்னனே என்பது சிலர் கருத்து. இம் மன்னனின் ஆட்சியில் நிகழ்ந்த சமயாசார விழிப்பி ஞல் இலக்கிய முயற்சிகளும் எழுச்சி பெற்றன எனலாம். 12ஆம் 13 ஆம் நூற்றண்டில் எழுந்த பலப்பல நூல்களையும் நோக்கினல், இவ்வுண்மை தெளிவாகும். இக்காலத்து நூல்களிற் பல, பாளி

சமய பண்பாட்டு மாற்றங்கள் 39
மொழியில் எழுதப்பட்டன. புத்த வம்சம், அந்ாகத வம்சம், மொகல்லான வியாகரணம், விநயார்த்த சமுச்சயம், அபிதாமப் பதீபிகை, விநய சங்கிரகம், சாராத்ததீபனி, சார்த்த மஞ்சுசா, சமந் தபா சாதிகதிகா, அத்தி குத்தரதீகா முதலானவை அவற்றுட் சில வாம். இவை கல்வியறிவு படைத்த சிங்களவர்க்கு மாத்தரமன்றி, பிறநாட்டுப் பெளத்த அறிஞர்களுக்கும் பயன்படவேண்டும் என் னும் நோக்குடன் எழுதப்பட்டன. போதி வம்ச கற்ற பதய, ஜாதக அ(ட்)டுவ கற்ற பதய, வெசத்துருதா சன்னய, அ(ட்)டதா சன்னய, அபிதர் மார்த்த சங்கிரக சனனய போன்ற வியாக்கி யான நூல்கள் பல சிங்கள மொழியில் எழுதப்பட்டன. இவ் வியாக்கியான நூல்களைவிட, அமாவத்துர, புத் சரண போனற உரைநடை நூல்களும், ச சதாவத, முவதெவ்தாவத போன்ற இசைப்பா நூல்களும் சிங்கள வாசகர் பொருட்டு எழுதப்பட்டன. இக்காலப் பிரிவிலும் சிங்கள, பாளி நூல்களோடு சமஸ்கிருத நூல்களும் பிரபந்தங்களும் ஆக்கப்பட்டன. அநுருத்த சதகம், நாமாஷ்ட சதகம் முதலிய சதக நூல்களும், பாலாவபோதனம் போன்ற இலக்கண நூல்களும் பிறவும் வடமொழியில் எழுந்தன. இக்காலத்துக் கல்வெட்டுகளிலும், சிறப்பாக நிசங்கமல லனின் கல்வெட்டுகளிலும் கூட, வடமொழிச் சுலோகங்கள் காணப்படுவ திலிருந்து, வடமொழி இலக்கியம் அன்று பெற்றிருந்த முதன்மை புலனுகும்.
இலக்கியம் பற்றிய நல்லார்வம் பொலநறுவைக் காலத்தில் ஓங்கியிருந்ததாயினும், மாகனின் படையெடுப்பு விளைவித்த அழிவு காரணமாக அவ்வார் வம் தளர்ச்சி அடைந்தது எனலாம். ஆயினும் மூன்ரும் விஜயபாகு தம்பதெனியாவிலே ஓர் இராச்சி யத்தை நிறுவியபின்னர் இலக்கிய வளர்ச்சி மீண்டும் தலையெடுக் கலாயிற்று. விஜயபாகு மன்ன்ன் தொடக்கிய இலக்கியப் பணி கள், அவனது மகனுகிய இரண்டாம் பராக்கிரமபாகு (1236-70) மன்னனல் முழுநிறைவை எய்தின. முப்பத்தைந்து ஆண்டுகள் வரை நீடித்த இவனது ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்ட நூல் களின் தொகையை நோக்கினலே, இவ்வுண்மை தெளிவாகப் புலப்படும். பதின்மூன்ரும் நூற்றண்டில் இரண்டாம் பராக்கிரம பாகு ஆரம்பித்து வைத்த இவ்விலக்கிய இயக்கம் அவனுக்குப் பிற்பட்ட காலத்தில் எழுந்த சிற்சில அரசியற் பூசல்களிடையும் வளர்ச்சி பெற்று, கோட்டை இராச்சிய காலத்தில் உன்னத நிலையை எய்திற்று எனலாம். தம்பதெனியாக் காலத்திலே பெருவளர்ச்சி உற்றிருந்த உரைநடை இலக்கியம் நலிவடைய, அதற்குப் பதிலாகக் கம்பளைக் காலந்தொட்டுச் செய்யுள் இலக் கிய சகாப்தம் ஆரம்பமாகி, நாலடிச் செய்யுளும் தூதுப் பிரபந் தங்களும் சிறு காப்பியங்களும் பெருங்காப்பியங்களும் விருது கவிகளுமாகிய படைப்பிலக்கிய வகைகள் கோட்டை இராச்சிய காலத்தளவிலே பல்கிப் பெருகின. இதுவே 13 ஆம் நூற்றண்டுக் கும் 15 ஆம் நூற்ருண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்த இலக்கிய வளர்ச்சிப் பாதையின் சிறப்பியல்பு ஆகும்.
புத்த மதத்தின் வருகைக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகள் எவையும் இதுவரை கண்டறியப்படவில்லை. பதிய கம்பளை என்னும் இடத்திற் காணப்பட்ட 'கல்மனை" யுங்க . .

Page 25
40 வரலாறு
தேவானும்பிய தீசன் காலத்துக்கு முற்பட்டதோ என்பது ஐயத் துக்கு உரியதாகும். பண்டுகாபய மன்னன் காலத்திலே கட்டப் பட்ட கட்டடம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அக்கட்டடங்கள் தடிதண்டு முதலியவற்ருலே கட்டப்பட்டமை யால், அவை கால கதியில் அழிந்து போயின என்று கருதலாம். கருங்கல்லும் செங்கல்லும் கொண்டு கட்டடம் எழுப்பும் முறை புத்த சமய வருகையின் பின்னரே தொடங்கிற்று.
ஆதிகாலத்திலே பெளத்த பிக்குகள் கற்குகைகளிலே வதிந்து வந்தனர். அத்தகைய ஆயிரக்கணக்கான குகைகளை அநுராத புரத்திலும், மிகந்தலையிலும், தம்புல்லவிலும், சீகிரியிலும், சிதுல் பவ்வ முதலிய இடங்களிலும் காணலாம். பிற்காலத்திலே பெளத்த பிக்குமார் வதிந்த மடாலயங்கள் ஆராமங்கள் எனப் பட்டன. பிக்குமார் சமயக் கிரியைகளின் பொருட்டுப் பயன் படுத்திய கட்டடங்கள் மாளகம் அல்லது மளு எனப் பெயர் பெற்றன. அநுராதபுரக் காலத்துக்குரிய சில மடாலயங்கள், மாளகங்கள் என்பவற்றின் இடிபாடுகளை அநுராதபுரத்திலும் சுற்றுப்புறங்களிலும் நாம் காணலாம். இக்கட்டடங்கள் தவிர, பிக்குமாரின் பொருட்டு அமைக்கப்பட்ட மலசல கூடங்கள், குளி யல் நீர்நிலைகள் முதலானவற்றின் இடிபாடுகளையும் அநுராதபுரத் திலே காணலாம். அவ்வாறே பிக்குமாருக்கென நிறுவப்பட்ட வைத்தியசாலை யொன்றின் இடிபாடுகளை மிகிந்தலைக்கு அருகிலே 95 f” GöT 66) fİT 4.0 I,
பிக்குமாரின் பொருட்டுக் கட்டப்பட்ட இக்கட்டடங்களுடன், பொதுமக்களுக்கும் பயன்படக்கூடிய வழிபாட்டு நிலையங்களின் இடிபாடுகளும் பெருந்தொகையிலே கண்டறியப்பட்டுள்ளன. அவையாவன ஸ்தூபங்கள், தாதுகோபங்கள், ஆச நகரங்கள், பதா நகரங்கள் எனப்படும் பியங்கல்கள், படிமக்கிருகங்கள், போதிக் கிருகங்கள் முதலானவையாம். அநுராதபுரக் காலத்துக்குரிய மேற் படி கட்டட வகைகளின் இடிபாடுகள் அநுராதபுரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் காணப்பட்டுள்ளன. '
கி.பி. 1017 வரையிலே ஈழநாடு சோழரின் ஆட்சிக்கு உட் பட்டமையால், அவர்கள் இங்கிருந்த அறுபதாண்டு வரையிலான காலப்பகுதியிலே, பெளத்த கட்டடங்கள் பலவும் அழிபாடு அடைந்தன எனலாம். அநுராதபுரத்திலும் பிற இடங்களிலும் இருந்த விகர் ரைகள் ஆராமங்கள் முதலியன அவர்களால் அழிக் கப்பட்டன என்று சூளவம்சம் சொல்லுகிறது. சோழர்கள் சைவ சமயிகள். ஆதலால், அவர்களுக்குப் பயன்படும் வகையிலே சிவா லயங்கள் சில இக்காலத்திலே இலங்கையிற் கட்டப்பட்டன. அவை தென்னிந்திய சிற்பவியல் முறைப்படி அமைந்தன. அவற் றின் இடிபாடுகள் சிலவற்றைப் பொலநறுவையிலே காணலாம். அநுராதபுரத்து விகாரைகள், ஆராமங்கள் முதலியவற்றைச் சோழர்கள் அழித்தனர் எனினும், திருக்கோணமலைக்கு அருகில் உள்ள வெல்கம் விகாரையைத் திருத்தி, அதற்கு இராஜராஜப் பெரும் பள்ளி என்னும் பெயரினைச் சோழர்கள் சூட்டினர் என்ப கல்வெட்டுச் சான்றுகளால் நிறுவப்பட்டுள்ளது. -
முதலாம் விஜயபாகு மன்னன் சோழரிடமிருந்து இலங்கையை மீட்ட பின்னர், ஈழத்துக் கட்டடக் கலை மலர்ச்சி அடைந்தது.

சமய பண்பாட்டு மாற்றங்கள் 41
எனினும் அம்மன்னன் தன் சுயதேவையின் பொருட்டு மாளிகை |யொன்றையும், தந்ததாதுவைப் பிரதிட்டை செய்யும் பொருட் டுத் தலதா மாளிகையொன்றையும் மாத்திரமே கட்டுவித்தான். பொலநறுவையிலே இப்போது எஞ்சியுள்ள பழைய கட்டடங்களுட் பெரும்பாலானவற்றை முதலாம் பராக்கிரமபாகுவும் நிசங்க மல்லனுமே கட்டுவித்தனர். பொலநறுவையிலுள்ள இலங்கா திலக படிமக்கிருகம், கல்விகாரை, தாமரைத் தடாகம், குமார தடாகம், ஆலாகன பிரிவேணு, தெ மல மகா செய முதலான கட்ட டங்களைக் கட்டுவித்தவன் பராக்கிரமபாகு மன்னனே. பொலநறு வையிலுள்ள ஹெற்ற தாகே, வட்டதாகே, லதா மண்டபம், இரண் கொத் விகாரை முதலானவற்றைக் கட்டுவித்தவன் நிசங்க மல்ல மன்னன் ஆவான். இக்காலத்துக் கட்டடவகைகள் அநு ராதபுரத்துக் கட்டட வகைகளை ஒத்தனவாயினும், வித்தியாச மான பண்புகள் சிலவற்றையும். இக்கட்டடங்களிலே காணலாம். அநுராதபுர காலத்துக் கட்டடங்கள் பெரும்பாலும் கருங்கற் களாலே கட்டப்பட்டுள்ளன. ஆனல், பொலநறுவைக் காலத் துக் கட்டடங்களோ பெரும்பாலும் செங்கற்களாற் கட்டப்பட் டுள்ளன. அநுராதபுரக்காலத்துக் கட்டடங்களின் அடித்தளத் தின் பொருட்டுக் கருங்கற்களும், மேற் பகுதியின் பொருட்டு மரங்கள் அல்லது சுண்ணமும் உபயோக்கிப்பட்டுள்ளன. அன்றி யும், தெமல மகா செய என்பதைத் தவிர்த்துவிட்டால், பொல நறுவைக் காலத்திற் கட்டப்பட்ட ஸ்தூபங்கள் அநுராதபுரக் காலத்து ஸ்தூபங்களைவிட அளவிற் சிறியனவாகும்.
மாகனின் படையெடுப்பினுல், பொலநறுவைக் கட்டடக் கலை வளர்ச்சி தேக்கமடைந்தது மட்டுமன்றி, அழிபாட்டையும் அடைந் தது. அவன் ஆட்சி செய்த நாற்பதாண்டு வரையான காலப் பகுதியில் எவ்வகைப் புதிய பெளத்த மதக் கட்டடமும் அங்கு அமைக்கப்படவில்லை. மாகனின் படையெடுப்புக்குப் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் சீர் குலைந்து அரசியற் பூசல்கள் தலை யெடுத்தமையால், கட்டடக் கலையும் சிற்பக் கலையும் சீரழிந்து போயின. 13 ஆம் நூற்றண்டுக்கும் 15 ஆம் நூற்ரு ண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலே சிங்கள இராசதானி நாலைந்து இடங் களுக்கு மாற்றப்பட்டது. அவற்றுள் மூன்று இராசதானிகள் மிகக் குறுகிய காலங்களுக்கே நிலைத்தன. ஆதலால், இராசதானி களிலே புதியனவாக அமைக்கப்பட்ட கட்டடங்கள் மிகச் சிலவே யாம். இக்காலப்பகுதிக்குரிய மிக முக்கியமான கட்டடங்கள் என்று குறிப்பிடத்தக்கவை, கம்பளைக்குக் கிட்டவுள்ள இலங்கா திலக விகாரையும் கடலாதெனி விகாரையுமாம். கோட்டைக் காலத்திலிருந்து எஞ்சியுள்ள கட்டடங்களுள் முக்கியமானவை எவையும் இல்லை. −
புத்த மதத்தின் வருகையினல் ஈழத்திலே கட்டடக் கலை மலர்ச்சி பெற்றது போலவே, சிற்பக்கலை ஒவியக் கலை என்பனவும் மலர்ச்சி பெற்றன. இலங்கையிலே இப்பொழுது கிடைத்துள்ள மிகப்பழைய சிற்பங்கள் என்று கருதப்படுவன, பழைய ஸ்தூபங் களின் நாலு பக்கங்களிலும் காணப்படும் பூரண கலசம், மிதுன ரூபம், யானை, குதிரை, இடபம், சிங்கம், மகரம் என்பனவற்றின் வடிவில் அமைந்த வேலைப்பாடுகளே ஆகும். இலங்கைக்குப்

Page 26
42 வரலாறு
புத்த பிரானின் படிமம் கொண்டுவரப்பட்டது, புத்த மத வரு கைக்குப் பின்னரும் நூற்ருண்டுகள் சில கழிந்த பின்பே என்று தோன்றுகிறது. கி.பி. மூன்ரும் நூற்றண்டின் பின்னர் அமைக்கப் பட்ட புத்த படிமங்கள் சில, அநுராதபுரத்திலும் வேறு சில இடங் களிலும் கிடைத்துள்ளன. சிங்களச் சிற்பிகள் கருங்கல்லிலே தட்டைச் சிற்பங்களைச் செதுக்குவதற்கும், சமாதிப்புத்தர் படிமம், அவுக்கன படிமம் போன்ற திரட்சியான உருவங்களைச் செதுக்கு வதற்கும் தொடங்கியது மகா சேன மன்னன் காலத்திலேயே என்று நம்பப்படுகிறது. அநுராதபுரக் காலத்தின் இறுதிப்பகுதி யிலே சிற்பக் கலையின் சிறப்பம்சமாக மிளிர்வன, துவாரபாலக வடிவங்களும், விகாரைகளினது படிக்கட்டு வரிசைகளின் முன் புறத்துள்ள சந்திர வட்டக் கற்களும் ஆகும். அநுராதபுரக் காலத்திலே கருங்கல்லால் மாத்திர மன்றி, உலோகத்தினுலும் புத் தர் படிமங்களும் போதிசத்துவர் படிமங்களும் செய்யப்பட்டன. பொன்முலாம் பூசிய இத்தகைய இரு படிமங்கள் ருவன்வெலி சாயாவிலும் மிகிந்தலையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புத்தர் படிமங்களையும் போதிசத்துவர் படிமங்களையும் மாத்திர மன்றி, மனித வடிவங்களையும் அநுராதபுரக்காலத்துச் சிற்பிகள் செதுக்கி னர் என்பதற்குச் சான்றுகள் உண்டு. அநுராதபுரத்தில் இசுரு முனி என்னுமிடத்திலே காணப்படும் "காதற்சோடி' என்னும் சிற்பமும், அதேயிடத்திற் காணப்படும் "குதிரையும் மனிதனும் என்னும் சிற்பமும் மேற்படி உண்மைக்கு உதாரணங்களாம்.
பொலநறுவைக் காலத்துச் சிற்பிகளின் கலைநோக்கிற்கும், அநு ராதபுரச் சிற்பிகளின் கலைநோக்கிற்குமிடையே அதிக வேறுபாடு இல்லை. பதுமாசனப் புத்தர் படிமம், போதிசத்துவர் படிமம், தேவதை வடிவங்கள், விலங்குகளின் வடிவங்கள் என்பனவே அங்கும் காணப்படுகின்றன. கட்டடங்களை அலங்கரிக்கும் பொருட்டு விலங்குருக்களையும் பூவேலைகளையும் செடிகொடி வேலை களையும் சிற்பிகள் செதுக்கினர். இன்றுவரை எஞ்சியுள்ள புத்தர் படிமங்களுள், விஜயபாகு மன்னன் கட்டுவித்த் தலதா மாளிகையி லுள்ள பெரிய புத்தர் படிமமும், பராக்கிரமபாகு மன்னனின் கல் விகாரையின் அயலிலுள்ள புத்தர் படிமங்கள் சிலவும் முக்கிய மானவை. பொலநறுவைக் காலத்திலும் சந்திர வட்டக் கற்கள் அமைக்கப்பட்டுள்ளனவாயினும், அவை அநுராதபுரக் காலத்துச் சந்திர வட்டக்கற்கள் போன்று கலையம்சம் வாய்ந்தவை அல்ல. இக் காலப்பகுதிக்குரிய உலோகப் படிமங்கள் சிலவும் கிடைத் துள்ளன. இவற்றுட் சில, நடராசப் பெருமானையும் சிவகாமி அம்மையையும் காட்டும் படிமங்களாம்.
பொலநறுவை இராச்சியத்தின் வீழ்ச்சியுடன், படிமக் கலையும் படிப்படியாக வீழ்ச்சியுற்றது. பொலநறுவைக் காலத்தின் பின் னர் கோட்டை இராச்சிய காலம் வரையுமுள்ள காலப்பகுதியிலே ஆக்கப்பட்ட படிமங்கள் கணிசமான தொகையிலே கிடைத்துள் GNT 6 - எனினும், அவற்றுட் பெரும்பாலானவை கலைப்பண்பு குறைந்தவை. இலங்காதிலக விகா ரையிலும் கடலாதெனி விகா ரையிலுமுள்ள புத்தர் படிமங்கள் இவ்வுண்மையை விளக்கும். சிற்பக் கலையின் பிறிதோர் அம்சமாகிய சந்திர வட்டக் கற்களும் இக்காலத்திலே கலைச்சிறப்பு வாய்ந்தனவாக அமையவில்லை.

சமய பண்பாட்டு மாற்றங்கள் 43
புத்த மதம் இலங்கைக்கு வந்த போதே ஒவியக் கலையும் இங்கு அறிமுகமாயிற்று எனலாம். நமது வம்ச காதைகளிலும் பாளி அர்த்த காதைகளிலும் ஓவியம் பற்றிக் கூறப்பட்டுள்ளவற்றி லிருந்து இது தெளிவாகும். ஆயினும் கி.பி. நான்காம் நூற்றண் டுக்கு முற்பட்ட ஓவியம் ஒன்றேனும் இதுவரை கிடைக்கவில்லை. இதுவரை கிடைத்தவற்றுள் மிகவும் பழமை வாய்ந்தவை சீகிரி ஒவியங்களே. அங்கும் பெண் வடிவங்கள் சிலவே வரையப் பட்டுள்ளன. ஆதியில் அத்தகைய 500 வடிவங்கள் வரை அங்கிருந்தன என்று சீகிரிக் கீதங்களிலிருந்து நாம் அறிகிருேம், சீகிரி ஒவியக் காலத்துக்குக் கிட்டியதொரு காலத்திலே வரையப் பட்டன என்று கருதக்கூடிய சித்திரப் பகுதியொன்று பேராத னைக்கு அருகிலுள்ள ஹிந்த கல என்னும் இடத்திற் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அச் சித்திரப்பகுதியில், இந்திர சாலக் குகையிலே அமர்ந்துள்ள புத்தர் பெருமானைச் சந்திக்கும் பொருட்டுச் சக்கர தேவன் அங்கு வருவதான சந்தர்ப்பமே ஒவியமாக்கப்பட்டுள்ளது. ருவன் வெலி தாகபையின் மேற்கு வாயிலிற் காணப்படும் வாமன வடிவமும், பிறிதொரு சித்திரப் பகுதியும் அநுராதபுரக் காலத் துக்கு உரியவை எனக் கருப்படுகின்றன.
பொலநறுவைக் காலத்திலும் ஓவியக்கலை வளர்வதற்கு உகந்த வாய்ப்புகள் இருந்தன. பராக்கிரமபாகு மன்னனின் மாளிகை யுள் அமைந்த சரசுவதி மண்டபத்தினை ஒவியங்கள் அழகுசெய் தன என்று சூளவம்சம் சொல்லுகிறது. இவை தவிர, மகியங் கனத் தாகபையின் தாது கர்ப்பச் சுவர்களில் வரையப்பட் டுள்ள ஒவியங்களும் பொலநறுவைக் காலத்துக்கே உரியன என்று கருத இடமுண்டு. அவை மார சங்காரத்தைச் சித்திரிப் பன. திம்புலா கலையில் மார வீதியிலுள்ள கற்கு கையினுள் வரையப் பட்டுள்ள ஒவியமும், திம் புலா கலையிலே புல்லிகொடை என்னும் இடத்திலுள்ள மலைக்கு கையொன்றில் வரையப்பட்டுள்ள ஓவிய மும் பொலநறுவைக் காலத்துக்கு உரியனவே. இக்காலத்திலி ருந்து இன்றுவரை எஞ்சியிருக்கும் ஒவியங்களிற் பல, பொலநறு வையிலுள்ள திவங்க பிலிம கையில் உள்ளவையே ஆகும். இங்கு ஜாதகக் கதைகளிற் சிலவும், புத்த சரிதத்தின் கட்டங்கள் சிலவும் ஒவியமாக்கப்பட்டுள்ளன. தம்பதெனிக் காலத்திலிருந்து கோட் டைக் காலத்தின் இறுதிவரையுள்ள காலப்பகுதியில் வரையப் பட்டதென்று திடமாகக் கருதக்கூடிய ஓவியம் ஒன்றேனும் இது வரை கிடைக்கவில்லையாயினும், அக்காலத்திலும் ஓவியக்கலை முன் னேற்றம் பெற்ற தென்பதை, வம்ச காதைகளும் அக்கால இலக் கியங்களும் ஒரு வாறு தெரிவிக்கின்றன. நாலாம் பராக்கிரமபாகு மன்னனல் (கி.பி. 1302-1326) குருநாகலையிற் கட்டுவிக்கப்பட்ட த லதா மாளிகையின் சுவர்களை ஒவியங்கள் அழகூட்டின எனச் சூளவம்சத்திலே சொல்லப்பட்டுள்ளது. கடலாதெனி விகாரையி லும் இலங்கா திலக விகாரையிலும் அக்காலத்திலே ஒவியங்கள் வரையப்பட்டிருந்தமை பற்றி அவ்விடங்களிலுள்ள கல்வெட்டு களிற் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Page 27
ஐந்தாம் அத்தியாயம் இலங்கைக்கு வெளி உலகுடன் இருந்த வியாபாரத் தொடர்புகளும் பண்பாட்டுத் தொடர்புகளும்
இலங்கையானது இந்திய உபகண்டத்துக்கு அண்மையில் இருப் பதுடன், கீழைத் தேசத்தை மேலைத்தேசத்துடன் இணைக்கும் பிரதான கடல் வழியின் சந்தியாகவும் அமைந்துள்ளது. இவ்வா றுள்ளமை இத்தீவின் வெளிநாட்டு வியாபாரத்தையும் பண்பாட் டுத் தொடர்புகளையும் பெரிதும் ஊக்கியுள்ளது. அயலில் உள்ள இந்தியா, பர்மா ஆகிய நாடுகளுடன் மட்டுமன்றி, உரோம், அராபியா, சீனம் ஆகிய தூர நாடுகளுடனும் ஈழநாடு தொடர்பு கொண்டிருந்ததெனலாம். அக்காலத்திற் பிரசித்தி பெற்றிருந்த மாதோட்டம் (மாந்தை), ஜம்புகோளபட்டணம் (சம்பிலத் துறை), ஊரா தொட்ட (ஊர்காவற்றுறை), தேவநகர (தெய்வந்துறை), கொலொம் தொட்ட (கொழும்பு), காலி முதலிய துறைகள் இந் தத் தொடர்புகளுக்குப் பெரிதும் உதவியாக இருந்தன.
இந்தியா இலங்கைக்கு மிக அண்மையில் இருப்பதனல், நாம் அந்நாட்டுடன் மிக நெருங்கிய வணிகத் தொடர்புகளையும் பண் பாட்டுத் தொடர்புகளையும் வைத்திருந்துள்ளோம். பாஹியன் என்ற சீனப் பிக்குவின் பயண விவரங்களிற் குறிப்பிட்டுள்ளவாறு, இலங்கையிலே ஆதியிற் குடியேறியவர்கள் இந்தியாவிலிருந்து வியாபாரத்துக்காக இங்கு வந்தவர்களாவர். கி.மு. ஆரும் அல் லது ஏழாம் நூற்றண்டில் இவ்வாறு வியாபாரத்துக்காக இலங் கைக்கு வந்தவர்கள் பற்றி வலாகச ஜாதகக் கதையிற் குறிப் பிடப்பட்டுள்ளது. கி.மு. நான்காம் நூற்றண்டில் இருந்தவரான மெகஸ்தீனிஸ் எழுதிய 'இந்திக்கா’ என்னும் நூலில் வருகின்ற குறிப்பிலிருந்து, அக்காலத்தில் இலங்கை யானைகள் வியாபாரத் திற்காக இந்தியாவுக்கு அனுப்பட்டன என அறிகிருேம். கி.மு. இரண்டாம் நூற்ருண்டில் அனுராதபுரத்தில் அரசு செய்த சூரதீச அரசனிடம் இராச்சியத்தை அபகரித்தவர்கள், இந்தியக் குதிரை வணிகன் ஒருவனின் புத்திரர்களான சேனன், குத்திகன் என்ற இருவர் என்று மகாவம்சத்திற் குறிப்பிடப்பட்டுள்ளது. வியா பாரத்திற்காக யானைத் தந்தமும் ஆமை ஒடும் இந்தியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டன என்ற விவரம் (கி.மு. முதலாம் நூற் ருண்டில் இருந்த) ஸ்திராபோ என்னும் கிரேக்கரின் குறிப்பு களிலிருந்து புலப்படுகின்றது. காஷ்மீரத்து மிகிரகுல அரசனின் காலத்தில் (கி.மு. 515) இலங்கையிலிருந்து பருத்தியாடை அந் நாட்டுக்கு அனுப்பப்பட்டதெனவும், அங்கு வாழ்ந்த பிரபு மக ளிர் இலங்கையிலிருந்து வந்த பட்டா டைகளை மிகவும் விரும்பி னர் என்றும், ராஜதரங்கனி எனும் நூல் கூறுகின்றது. அக்காலத் தில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் துணி அனுப்பப்பட்டது

வியாபார பண்பாட்டுத் தொடர்புகள் 45 என்பதை, புடைவை வியாபாரத்துக்காகப் பாருகச்சத் துறைக்கு வந்த சிங்கள வியாபாரி பற்றித் தீர்த்த கல்ப என்ற நூலிற்கூறப் பட்டுள்ளதிலிருந்து அறிகிருேம். இலங்கையிற் சிலா கால என்னும் அரசனின் காலத்தில் (518-531) இந்தியாவிற் காசி நாட்டிற்குச் சென்ற பூர்ண என்ற சிங்கள வியாபாரி பற்றி நிகாய சங்கிரகத் திற் கூறப்பட்டுள்ளது. இலங்கை சோழ இராச்சியத்துக்குக் கீழ்ப்பட்டிருந்த காலத்தில், நம் நாட்டுக்கும் இந்தியாவுக்குமிடை யில் வியாபாரத் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் தென் இந்தியர் களாவர். இக் காலப் பகுதியிலிருந்து பல நூறு ஆண்டுகளாக இலங்கையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வலஞ்சியர் அல்லது நானுதேசி என்று வழங்கப்படுகின்ற வியாபார நிறுவனத்தின் பல கிளைகள் பற்றிய விவரங்கள் பொலநறுவை, மாத்தளை, ஆன வுலுந்தா ஆகிய இடங்களில் அக்காலத்தில் அமைக்கப்பட்ட பல் வேறு கல்வெட்டுக்களிலிருந்து வெளியாகியுள்ளன.
பொலநறுவைக் காலந் தொடங்கிக் கோட்டைக் காலம் வரை யும், அராபியருடனேயே பெரும்பாலும் வர்த்தகத் தொடர்பு கள் இருந்தனவெனப் புலப்படுகின்றது. அனுராதபுரக் காலத் தின் பின், இந்தியாவுடன் இலங்கைக்கு இருந்த வர்த்தகத் தொடர்புகள் பற்றி அதிக விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. இக்காலத்தளவில் இந்து சமுத்திரத்தில் வியாபார ஆதிக்கம் அராபியரின் கையில் இருந்தமையும், இந்தியா முஸ்லிம் ஆட்சிக் குக் கீழ்ப்பட்டிருந்தமையுமே அதற்குக் காரணம் எனலாம். எனி னும், கோட்டைக் காலத்திலிருந்து மீண்டும் இந்தியாவுடன் நடைபெற்ற வியாபாரம் பற்றிச் சிறிதளவு விவரம் நமக்குக் கிடைத்துள்ளது; தென்னிந்தியன் எனக் கருதப்படுகின்ற இராமச் சந்திரன் என்னும் வணிகனுற் கட்டப்பட்ட பிள்ளையார் கோவில் பற்றிப் புரு விடுதூது (பறவி சந்தேச) என்பதிற் குறிப்பிடப் பட்டுள்ளது. கோட்டையில் ஆரும் பராக்கிரமபாகு காலத்தில் (1415-1467) தென்னிந்தியாவுக்கு வியாபாரத்துக்காகச் சென்ற சிங்களக் கப்பற்கூட்டம் ஒன்றிற்கு மழவராயர் என்ற பிரதேச அதிபதியாற் கொடுக்கப்பட்ட தொல்லைகள் பற்றிக் கிளிவிடுதூது (கிரா சந்தே ச) என்பதிற் காணப்படுகின்ற விவர மொன்றிலிருந்து புலப்படுகின்றது. இவ்வாரு க, மிகப் பழைய காலத்திலிருந்து ஐரோப்பியர் ஆட்சிக்கு உட்படும் காலம் வரை, இலங்கைக்கு இந்தியாவுடன் மிக நெருங்கிய வணிகத் தொடர்புகள் இருந்தன வென்பது மேற்கூறியவற்ருற் போதரும்.
இந்த இரண்டு நாடுகளுக்குமிடையில் இருந்த பண்பாட்டுத் தொடர்புகள், வியாபாரத் தொடர்புகளைக் காட்டிலும் முக்கிய Ꭵ Ꭰ[Ꭲ ᎧᏈᎢ ᎧᏈᎠ Ꭷ] . இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் இருந்த முதலாவது வரலாற்றுத் தொடர்பாக விளங்குவது இந்தோஆரியரால் இலங்கையில் நிறுவப்பட்ட குடியிருப்பாகும். இந்தி யப் பண்பாட்டை முதல் முறையாக இலங்கையிற் புகுத்தியவர் கள் அவர்களே. இலங்கை இந்தியத் தொடர்பில் அடுத்த் முக்கிய நிகழ்ச்சி, இந்தியாவில் மெளரியப் பேரரசு நிலவிய காலத்தில் இடம்பெற்றது. அக்காலத்தில் இலங்கையிற் புத்த சமயம் புகுத்தப்பட்டமையால், நம் பண்பாட்டு வரலாற்றிற் புதிய யுகம் ஒன்று உருவாயிற்று. தேவானும்பியதீசன் என்னும்

Page 28
46 வரலாறு
அரசனின் காலத்தில் இடம்பெற்ற இந்த நெருங்கிய உறவு பிற் காலத்திலுந் தொடர்ந்து நிலவி வந்தது. துட்டு கைமுனு அரசன் ருவன் வலி சாய என்னும் புத்த கோவிலைக் கட்டத் தொடங்கிய பொழுது நிகழ்த்திய உற்சவத்திற் பங்குபற்றுதற்காக, இந்தியா வின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஆயிரக் கணக்கான புத்த பிக்குகள் இலங்கைக்கு வந்தார்களென மகாவம்சத்திற் குறிப்பி டப்பட்டுள்ளது. சேர இராச்சியத்தில் அரசாண்ட செங்குட்டுவன் என்னும் அரசன் விடுத்த அழைப்பினுல், அங்கு பத்தினி கோவில் ஒன்றில் நடைபெற்ற உற்சவத்திற் பங்குபற்றுவதற்காக, இலங்கை அரசனன முதலாம் கஜபாகு அங்கு சென்றன் எனச் சிலப்பதிகாரம் என்ற தமிழ்க் காப்பியம் கூறுகிறது. ஆந்திர சாதவாகன காலத்திலும், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடை யிலே மிக நெருங்கிய பண்பாட்டுத் தொடர்பு இருந்ததென. அறியப்படுகின்றது. இலங்கைக்குக் காலத்துக்குக் காலம் மகா யான புத்த சமயம் ஆந்திர தேசத்திலிருந்தே கொண்டுவரப் பட்டதென்று தோன்றுகிறது.
ஆந்திர சாதவாகன காலத்துக்குப் பின்னர், மீண்டும் இலங்கை யுடன் இந்தியாவுக்கு மிக நெருங்கிய பண்பாட்டுத் தொடர்பு இருந்தது, இந்தியாவைக் குப்த மன்னர் ஆண்ட காலத்திலே யா கும். சிங்களவர் தன்னைக் கெளரவமாக மதித்தனர் என்று சமுத்திரகுப்த அரசனின் அலகபாத் கம்பத்திற் குறிப்பிடப்பட் டுள்ளது. சிறிமேவன் என்னும் இலங்கை அரசனின் வேண்டு கோட்படி, சமுத்திரகுப்த அரசன் இலங்கைப் பிக்குகளின் தேவைக்காகப் புத்த காயா விகாரை என்ற பெயருடைய வதி விடம் ஒன்றை அமைப்பதற்கு அனுமதி வழங்கினன் எனச் சீன் அறிக்கை ஒன்றிலிருந்து அறிகிருேம். சீன நாட்டு யுவாங் சுவாங் என்ற பிக்கு ஏழாம் நூற்ருண்டிற் புத்த காயாவுக்கு வந்த பொழுது, இந்தச் சிங்கள விகாரையிற் சிங்களப் பிக்குக்கள் ஆயிரக்கணக்கில் இருந்தனர் எனக் கூறப்படுகின்றது. கி. பி. ஐந்தாம் நூற்றண்டளவிலே தங்கியிருந்த மகாநாம என்ற சிங் களப் பிக்குவின் சமஸ்கிருதக் கல்வெட்டு அங்கு கண்டுபிடிக்கப் பட்டு இருப்பதால், ஏறத்தாழக் குப்த யுகம் முடிவடையுங் காலம் வரையும், மகத நாட்டுக்கும் இலங்கைக்கும் பண்பாட்டுத் தொடர்புகள் இருந்தன என்பது புலப்படுகின்றது.
இலங்கையொடு பல்லவ இராச்சியமும் பண்பாட்டுத் தொடர்பு கள் பூண்டிருந்தது என்பதற்கு ஆதாரங் கிடைத்துள்ளது. ருவன் வலி சாய உற்சவத்துக்குத் துட்டுகை முனு அரசனின் காலத் திற் பல்லவ நாட்டிலிருந்து பிக்குக்கள் வந்தனர் என்று கூறுகின்ற மகாவம்சக் குறிப்பு உண்மை யாயின், பல்லவ நாட்டுடன், இதற்கு முந்திய காலத்திலிருந்தே பண்பாட்டுத் தொடர்புகள் இருந்தனவென்று கொள்ளலாம். மகாநாமன் எனும் அரசனின் காலத்தில் (416-428) இலங்கைக்கு வந்த புத்தகோசர் என்ற உரையாசிரியரும் சிறிது காலம் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவராவர். மாணவம் மன் என்னும் இலங்கை அரசன் (684-718) தன் சிறு பிராயத்தைப் பல்லவ இராச்சியத்திற் கழித்ததோடு, பின்னர் அவன் சிங்கள இராச்சியத்தைப் பெற்றதும் பல்லவ அரசனின் துணையுடனகும். இவ்விரு நாடுகளுக்கு மிடையில் இருந்த

வியாபார பண்பாட்டுத் த்ொடர்புகள் 47
இந்தத் தொடர்பு காரணமாக, அக்காலத்தில் நம் நாட்டுக் கட்டடக்கலைத் துறையிலும், கலைச் சிற்பங்களிலும், நெடுங்கணக்கி லும் பல்லவச் செல்வாக்குக் காணப்படுகின்றது. நாலந்தாக் கெடிகேயும், இசுருமு னியாவில் இருக்கின்ற மனித வடிவமும் குதிரைத் தலையும் கொண்ட சிற்பமும், அங்குக் கிணறு ஒன்றின் சுவரில் உள்ள யானை உருவங்களும், திரியாய் வட்டதா கேயின் காவற் கல்லில் உள்ள துவாரபாலக வடிவமும் பல்லவச் செல் வாக்கைக் காட்டுகின்றன என்பது புதை பொருளாய்வாளரின் கருத்தாகும். பல்லவச் செல்வாக்குக் காரணமாக, அக்காலத்துச் சிங்கள மொழிவழக்கில் இல்லாத புதிய எழுத்துகள் பலவும் சிங்கள நெடுங்கணக்கிற் சேர்ந்து கொண்டன; அத்துடன் சில சிங்கள எழுத்துகள் காலத்திற்கேற்ப மாற்றம் அடைந்தன. பல்லவ வரிவடிவில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் பல, திரியாயிலும் மிகிந் தலையிலுங் கிடைத்துள்ளன.
இந்தியாவிலே இன்று ஒரிசா எனப்படும் பிரதேசத்தில் அமைந் திருந்த கலிங்கம் என்னும் பழைய நாட்டுடனும் அக்காலத்து இலங்கையானது பண்பாட்டுத் தொடர்பு பூண்டிருந்தது. கி.பி. நான்காம் நூற்றண்டுத் தொடக்கமளவிற் கலிங்க நாட்டில் அர சோ ச்சிய சுபசிவன் என்ற அரசனும் மகா சேனன் (302 - 328) என்னும் இலங்கை அரசனும் நண்பர்களாக இருந்தனர் எனத் த லதா சிரித' என்பதிற் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தரின் பற் சின்னம் சுபசிவன் என்ற இந்த அரசனலேயே இலங்கைக்கு அனுப்பப்பட்டதெனக் கூறப்படுகின்றது. இரண்டாம் அக்போ அரசன் காலத்தில் (604-614) கலிங்க தேச இளவரசன் ஒரு வனும் அவனுடைய மனைவியும் இலங்கைக்கு வந்து ஜோதிபால என்ற தேரர் ஒருவரிடம் பிக்குப் பட்டம் பெற்றனர் என்று சூளவம்சத்திற் கூறப்பட்டுள்ளது.
அநுராதபுரக் காலத்தின் இறுதி அரைப் பாகத்தில் இலங் கையுடன் இந்தியாவிற்கு இருந்த பண்பாட்டுத் தொடர்புபற்றி அதிக விபரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. இக்காலப்பகுதியிலே தென்னிந்தியாவிற் பலம் பெற்றிருந்தவர்கள் சோழராவர். பதி னெராம் நூற்றண்டின் தொடக்கமளவில் அவர்கள் மாலைதீவு, இலங்கை ஆகியவற்றை மட்டுமன்றி, மலாயா, யாவா ஆகிய நாடுகளையும் வென்று அடிப்படுத்துவதில் வெற்றி கண்டனர். இதனுல், வட இந்தியாவுடன் கலாசாரத் தொடர்புகளை வைத் திருப்பதற்கு இலங்கை அரசர்களுக்கு இடர்ப்பாடுகள் இருந்த னவோ என்பதனை நிச்சயமாகக் கூற முடியவில்லை. பொலநறு வைக்கால அரசர் பாண்டிய நாட்டுடனும் கலிங்க நாட்டுடனும் அரசியல் உறவுகள் வைத்திருந்தனர். எனினும், அக்காலத்தில் நம் நாட்டுடன் அவர்கள் வைத்திருந்த பண்பாட்டுத் தொடர் புகள் பற்றி அதிக விபரங்கள் கிடைக்கவில்லை. பொலநறுவைக் கால முடிவிலிருந்து கோட்டைக்கால முடிவு வரையும் கழிந்த காலப்பகுதியில், இந்த இரண்டு நாடுகளுக்குமிடையில் இருந்த பண்பாட்டுத் தொடர்புகள் பற்றி மிகச் சில பதிவுச் சான்றுகளே கிடைத்துள்ளன.
கி.மு. முதலாம் நூற்ருண்டுக்கு முன்னர், உரோமானியர் இலங்கை பற்றிப் பெயரளவில் மட்டுமே அறிந்திருந்தனரென்று

Page 29
4& வரலாறு
தோன்றுகிறது. அக்காலத்தில் உரோமானிய வணிகர் இந்தி யாவுக்குத் தானும் அரிதாகவே வந்தனர். எனினும், கி.மு. முத லாம் நூற்றண்டளவில் ஹிப்பலுஸ் என்பவரால் மொன்சூன் காற்றுப்பற்றிய தகவல்கள் அறியப்பட்ட பின்னர், அவர்கள் தொடர்ந்து தென்னிந்தியாவுக்கு வியாபாரத்துக்காக வந்தனர் என்பதற்கு ஆதாரம் உள்ளது. எனினும், அக்காலத்திலேயே உரோமானிய வியாபாரிகள் இலங்கைக்கும் வந்ததாகத் தெரிய வில்லை. பிளினியின் அறிக்கையின்படி, முதன்முதலாக உரோ முடன் இலங்கைக்கு வியாபாரத் தொடர்பு ஏற்பட்டது, குளோ டியஸ் சீசர் (கி.பி. 41 - 54) என்ற அரசன் காலத்திலாகும். இதனை அடுத்த காலத்தில், பாதியன் என்னும் இலங்கை அர சனின் தூதர் உரோமுக்கு அனுப்பப்பட்டனர் என்றும், அந்நாட் டிலிருந்து கொணரப்பட்ட செம்பவளத்தாற் செய்த வலை யொன்று ருவான்வலி சாய மீது கவிக்கப்பட்டதென்றும் மகாவம்ச உரையிற் கூறப்பட்டுள்ளது. இதனுல் அறியப்படுவது யாதெனில், கி.பி. முதலாம் நூற்ருண்டுத் தொடக்கத்திலிருந்து இலங்கைக்கு உரோமுடன் வணிகத் தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் இருந்தன என்பதாகும். இலங்கையிற் பல இடங்களிலே உரோம நாணயங்கள் ஏராளமாகக் கண்டெடுக்கப்பட் டன என்பது இந்த முடிபை உறுதி செய்கின்றது. இலங்கை அரசன் ஒருவனுல் கி. பி. 361 அளவில் யூலியன் என்ற பேரரச னிடம் அனுப்பப்பட்ட தூதர் பற்றி நாம் அறியக்கூடியதாக உள்ளது. இவ்வாரு கப் பல் நூற்றண்டுகளாக இந்த இரண்டு நாடுகளுக்குமிடையில் நிலவிய தொடர்பு உரோமப் பேரரசின் வீழ்ச்சியுடன் முடிவுற்றது.
இலங்கைக்குச் சீனத்துடனும் மிகப் பழைய காலத்திலிருந்தே தொடர்பு இருந்தது என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது. கி.பி. முதலாம் நூற்ருண்டில், குளோடியஸ் சீசர் (41 - 54) என்ற உரோமானிய அரசனிடஞ் சென்ற இலங்கைத் தூதர் - குழு, அக்காலத்தில் இலங்கைக்கும் சீனத்துக்குமிடையில் வியா பாரத் தொடர்பு இருந்ததெனக் கூறியதாகப் பிளினியின் அறிக் கையிற் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கி.மு. முதலாம் நூற்ருண்டுக்கும் முந்திய காலத்திலிருந்தே இரண்டு நாடுகளுக்கு மிடையே தொடர்பு இருந்ததெனக் கொள்ளலாம். கி.பி. முத லாம் நூற்ருண்டிலிருந்து நான்காம் நூற்ரு ண்டு வரை, பல பரிசு களுடன் இலங்கையிலிருந்து சீனுவுக்கு அனுப்பப்பட்ட தூதுக் குழுக்கள் பலவற்றைப் பற்றிச் சீன அறிக்கைகளிற் குறிப்புகள் உள்ளன. ஐந்தாம் நூற்றண்டிலிருந்து பல நூற்ருண்டுகள் கழி யும் வரை, இவ்வாறு தூதுக் குழுக்களை அனுப்புதல் படிப்படியாக அதிகரித்தது. கி.பி. 97 இற் சென்ற தூதுக்குழுவானது யானைத் தந்தம், எருமை, மாடு ஆகியவற்றையும், 405 இற் சென்ற தூதுக்குழு கல்லாற் செய்த புத்தர் சிலையையும், 428இற் சென்ற தூதுக்குழு தலதா மாளிகையின் மாதிரி உருவையும், 702 இற் சென்ற தூதுக்குழு முத்து, இரத்தினம், யானைத் தந்தம், ஆப ர்ணம் ஆகியவற்றையும் கொண்டு சென்றன என்பது சீன அறிக் கைகளிற் காணப்படுகின்றது. சீன நாட்டுப் பிக்குவான பாகி யன் கி.பி. 411 அளவில் இலங்கைக்கு வந்ததற்கு, இந்த இரண்டு

வியாபார பண்பாட்டுத் தொடர்புகள் 49
நாடுகளுக்குமிடையில் இருந்த தொடர்பே காரணமாக இருந் திருக்கலாம். தாம் அநுராதபுரத்துக்குச் சென்றபொழுது அங்கு புத்தர் சிலை ஒன்றிற்கு வியாபாரி ஒருவராற் சமர்ப்பணஞ் செய் யப்பட்டிருந்த சீன விசிறி ஒன்றைக் கண்டதாகப் பாகியன் குறிப்பிடுகின்ருர், கி.பி. 434 அளவிற் சீனத்திற் புத்த சாசனம் நிறுவப்பட்டது, இலங்கையிலிருந்து சென்ற பிக்குக்கள் பத்துப் பேராலாகும். சீனத்துக்கும் இலங்கைக்கும் இருந்த பண்பாட்டுத் தொடர்பு பற்றியே நமக்கு ஆதாரங் கிடைத்துள்ளதெனினும் இரண்டு நாடுகளுக்குமிடையிற் சிறிய அளவிலாயினும் வியாபார மும் நடைபெற்ற தென ஊகிக்க இடமுண்டு. கிறித்துவுக்கு முற்பட்ட காலத்திலே தொடங்கிய இந்தத் தொடர்பு, கோட் டைக் காலம் முடியும் வரை நீடித்ததென்று தோன்றுகிறது. கி.பி. 13ஆம் 14ஆம் நூற்றண்டுகளில், இலங்கையிலிருந்து புத்தரின் திருவோட்டைப் பெறுவதற்காகச் சீனத்திலிருந்து வந்த தூதுப் பயணங்கள் மூன்று பற்றியும், புத்தரின் புனித தந்தத்தைப் பெறுவதற்காகச் செங் கோ என்னுஞ் சேனதிபதியின் தலைமை யில் 1405 அளவில் அனுப்பப்பட்ட தூதுக்குழு பற்றியும், சீன வரலாற்றுக் கதைகளிற் குறிப்புகள் உள்ளன. ஆரும் பராக் கிரமபாகு மன்னன் கோட்டை அரசைப் பெறுதற்குச் சீன உத வியைப் பெற்ருன் என்று பரணவிதான அவர்கள் கூறுகிருர் . ஆரும் பராக்கிரமபாகு மன்னன் காலத்திற் சீனத்துக்கு அனுப்பப் பட்ட தூதுப்பயணங்கள் ஆறு பற்றியும் எழுத்துச் சான்றுகள் உண்டு.
அநுராதபுரக் காலத் தொடக்கத்திலிருந்தே பர்மாவுக்கும் இலங்கைக்குமிடையில் வணிகத் தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் இருந்தன என்று கருதலாம். எனினும், அவைபற்றி அதிக விவரம் நமக்குக் கிடைக்கவில்லை. முதலாம் விஜயபாகு மன்னன் (1055-1110) காலத்திலேயே பர்மாவுக்கு இலங்கையுடன் முதன்முதலாக வரலாற்றுத்தொடர்பு இருந்ததென நாம் அறிகின்ருேம். எனினும், அதற்கு மிக முந்திய காலத்திலி ருந்தே இரண்டு நாடுகளுக்குமிடையில் வணிகத் தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் இருந்தனவென்பது, மகா பராக்கிரம பாகுவின் பர்மாப்படையெடுப்புக்கான காரணங்களைக் காட்டு கின்ற சூளவம்ச விவரங்களிலிருந்து தெளிவாகின்றது. அந்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 'இரண்டு நாட்டு அரசர்களும் பெளத்தர்கள். அதனல் இரண்டு நாடுகளிலும் முன்பு இருந்த அரசர்கள் ஒருவரில் ஒருவர் மிகுந்த நம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். பல்வேறு பரிசுகளை அவர்கள் தமக்குள்ளே பரிமாறிக்கொண்டு நீண்ட காலமாகத் தொடர்ந்து நண்பராக இருந்தனர். '
மகா விஜயபாகு மன்னன் காலத்தில் வணிகத் தொடர்பு மட்டு மன்றிப் பண்பாட்டுத் தொடர்பும் இரு நாடுகளுக்குமிடையில் இருந்ததெனப் புலப்படுகின்றது. இந்த மன்னன் உருகுணைப் பிரதேச அரசனன பின்பு, ராமஞ்ஞ (பர்மா) நாட்டு மன்னனுக்கு மக்கள் பலரையும் மதிப்பு மிக்க பெருந்தொகையான திரவியங்
களையும் அனுப்பினன் என்றும், அதற்குப் பதிலாகப் பர்மா
நாட்டு அரசனல் அனுப்பப்பட்ட அழகான ஆடைகள், கற்பூரம்,

Page 30
50 வரலாறு
சந்தனம் முதலிய பல்வேறு பொருள்கள் நிறைந்த கப்பல்கள் இலங்கையின் பல்வேறு துறைகளுக்கு வந்தனவென்றும் சூள வம்சத்திற் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இரண்டு நாடுகளுக்கு மிடையில் நிலவிய வியாபாரத் தொடர்பை உறுதிசெய்யுஞ் செய்தியாகும். விஜயபாகு மன்னன் பொலநறுவை அரசனன பின்பு, 'அக்காலத்தில் உபசம்பதாக் கருமம் (ஞானதீட்சை) செய்வதற்கு வேண்டிய தொகையிலே இங்கு பிக்குகள் இல்லை என்பதனல், புத்த சாசனத்தைப் பரப்ப விரும்பி, ராமஞ்ஞ (பர்மா) நாட்டின் மன்னனன அனுருத்தனிடம் பரிசுகளுடன் தூது ஒன்று அனுப்பி, திரிபிடகத்தைக் கசடறக் கற்ற சீலதேரர் பலரை அந்நாட்டிலிருந்து வரவழைத்து, பல்வேறு வகையில் உப சம்பதாக் கருமம் செய்வித்து, உரையுடன் கூடிய திரிபிட கமும் கற்கச் செய்தான்' என்று சூளவம்சத்திற் குறிப்பிடப் பட்டுள்ளது. அதிலிருந்து சிறிது காலத்துக்குப் பின்னர், உத்தர ஜீவர் என்ற பெயருடைய சங்கநாயகர் ஒருவர் பர்மா நாட்டுத் தேரர் பலருடனும் சப்படர் என்ற இளைய சாமனேரப் பிக்கு வுடனும் இலங்கைக்கு வந்தார் என்றும், அவர்கள் இந்நாட்டிற் கோலாகலமாக வரவேற்கப்பட்டனர் என்றும், இரண்டு நாட்டுப் பிக்குகளும் ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் இருந்து சப்பட சாமனேரருக்கு ஞானதீட்சை (உபசம்பதா) கொடுத்த பின்னர், உத்தரஜீவர் என்பவர் பர்மாவுக்கு மீண்டு சென்ருர் என்றும், சப்பட பிக்கு பத்து ஆண்டுகள் வரை இங்கு தங்கியிருந்து திரி பிடகம் கற்று, மீண்டும் பர்மாவுக்குச் செனறு, சிங்கள சங்கம் என்ற பெயருடைய வேருெரு நிகாயத்தை உண்டாக்கினர் என் றும் பர்மா நாட்டு வரலாற்றிலிருந்து தெரியவந்துள்ளது.
முதலாம் பராக்கிரமபாகு அரசன கிச் சிறிது காலங் கழியும் வரையும், இரண்டு நாட்டுக் குமிடையில் இருந்த நெடுங்கால நட் புறவு தொடர்ந்து நிலவிற்று. எனினும் பர்மா நாட்டுக்குச் சென்ற இலங்கைத் தூதுக்குழு ஒன்றினை மறித்து அக்குழுவினர் விலைக்கு வாங்கிய யானைகள், அவர்களுடைய கப்பல்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ததோடு அமையாது, வியாபாரத்துக்காக இலங் கையர் பர்மாவுக்குச் செல்லாதவாறு தடை உத்தரவும் பிறப் பிக்கப்பட்டமை காரணமாக, பராக்கிரமபாகு பர்மா நாட்டின் மீது படையெடுத்தான் எனச் சூளவம்சத்தற் குறிப்பிடப்பட் டுள்ளது. பராக்கிரமபாகு அரசனுக்கு வெற்றி கிட்டி, போர் முடிவடைந்த பின்னர், இரண்டு நாட்டுப் பிக்குமாரும் செய்த சமரச முயற்சியினல், இரண்டு நாடுகளுக்குமிடையில் பழமை போல மீண்டும் நட்புறவு நிலைநாட்டப்பட்டது.
பராக்கிரமபாகு மறைந்த பின்னர், பொலநறுவை இராச் சியத்தைப் பெற்ற இரண்டாம் விஜயபாகு மன்னன் (11861187) காலத்தில், இலங்கையிலிருந்து பர்மாவுக்கு அனுப்பப் பட்ட தூதுக்குழு பற்றியும் நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது. இந்த அரசன் மாகத மொழியில் எழுதப்பட்ட செய்தி ஒன்றை அரிமத்தனபுர (பர்மா) அரசனுக்கு அனுப்பி, பர்மா நாட்டுடன் நட்புறவை நிலைநாட்டி, இரண்டு நாட்டுப் பிக்குகளுக்கும் மகிழ்ச்சி உண்டாகும் வகையிலே புத்த சாசனத்தைப் பரப்பினன் என்பது வம்ச காதைகளிலிருந்து புலப்படுகின்றது. இக்காலத்திலே உருகுணை

வியாபார பண்பாட்டுத் தொடர்புகள் 5.
யில் மகாநாக குலரம்பா விகாரையில் மகாநா கசேனர் என்ற மகாதேரர் ஒருவரால் அரிமத்தனபுர சங்கத்துக்குப் Lнт оћј. செய்தி ஒன்று அனுப்பப்பட்டது. இப்பொழுது மாநாவுலு சந் தேச ய என்று கூறப்படுகின்ற பாளி நூலொன்று இந்தச் செய் தியின் , பிரதியாகும். பொலநறுவைக் காலத்தில் இலங்கை, பர்மா என்னும் இரு நாட்டு மன்னர்க்கிடையிலும் பிக்குகளுக் கிடையிலும் நிலவிய நல்லுறவு இந்த விவர்ங்களிலிருந்து புலப்படும். v ۔
கி.பி. 13 ஆம் 14 ஆம் நூற்றண்டுகளுக்குரிய விபரங்கள் அற்ப மெனினும், 15 ஆம் நூற்றண்டில் இரு நாடுகளுக்குமிடை யில் நிலவிய உறவு பற்றிப் பல விபரங்கள் நமக்குக் கிடைத் துள்ளன. பர்மாவிலுள்ள பே கு இராசதானியில் அரசாண்ட வின்யா யூ மன்னன் (1835-1885) பர்மா தேசத்துத் தூதுக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி, தான் கட்டுவித்த ஸ்தூபம் ஒன் றில் வைக்கும் பொருட்டு இந்த நாட்டுப் புனித தாதுக்களைப் பெற்றன் என்றும் இதற்கு ஏறத்தாழ ஒரு நூற்ருண்டுக்குப் பின்னர் ஆவா நகரில் ஆட்சி செய்த திகட்டு அரசனின் காலத்தில் இலங்கைக்கு வந்த பர்மா நாட்டுப் பிக்குகள் இருவர் இந்நாட்டி லிருந்து புனித தாதுக்கள் இரண்டைப் பெற்றுக் கொண்டு மீண் டுந் தம் நாட்டுக்குச் சென்று, அவற்றை யதன்சேதி (பயபியா) ஸ்தூ பத்தில் வைத்தனர் என்றும் பர்மா நாட்டு வரலாற்றுக் கதைகள் தெரிவிக்கின்றன. ஆவா நகரில் ஆட்சி செய்த நரபதி மன்னன் கி.பி. 1456 இலே புனித தந்த பூசனை செய்வதற்காக இரத்தினமும் பொன்னும் இங்கு அனுப்பி, புனித தந்த வழி பாட்டிற்காக இலங்கைக்கு வருகின்ற பர்மா நாட்டுப் பிக்குகள் பயன்படுத்துவதற்காகக் கோட்டை இராசதானியிற் காணி ஒன் றும் வாங்கினன் என்றும், நரபதி மன்னன் மறைந்த பின்பு ஆவா நாட்டு அரசனுன சீக சுர மன்னனும் அவனுடைய மனைவியும் தம் சிகையாற் செய்த துடைப்பம் ஒன்றிற்கு மாணிக்கம் பதித்த பிடி இட்டு, புனித தந்த மாளிகையைச் சுத்தஞ் செய்வதற்காக கி. பி. 1474 அளவிலே பர்மிய தூதுக்குழு ஒன்றிடம் கொடுத்து இங்கு அனுப்பினர் எனவும் கூறுவர். இந்தத் தூதுக்குழு கோட்டை அரசனுக்குக் கொடுப்பதற்காகச் சீனப்பட்டினுற் செய்யப்பட்ட பல உடைகளையும் கொண்டு வந்தது என்பர். கோட்டையை ஆண்ட ஆரும் புவனேகவாகு மன்னன் (147078) காலத்தில், பர்மாவிலுள்ள பே குவில் அரசாண்ட தம்ம சேதிய மன்னன் (1472 - 92) இலங்கையின் மகா விகாரை மர பான உபசம்பதாக் கரும முறையைத் தன் நாட்டிலும் ஏற்படுத் துவதற்காகப் பிக்குக் குழு ஒன்றினை இங்கு அனுப்பினன் என்று பர்மா நாட்டுக் கல்யாணிக் கல்வெட்டிற் குறிப்பிடப்பட்டுள்ளது. தம்மசேதிய அரசனின் தலைநகர எல்லை, அந்த நாட்டுப் பிக்குகள் இங்கு ஞானதீட்சை பெற்ற இடமாகிய களனியின் பெயரிலிருந்து * கல்யாணி எல்லை" என்று பெயர் பெறலாயிற்று. −A
சீயம் நாட்டுடனும் (அதாவது தாய்லாந்துடனும்) இலங்கை பழைய காலந் தொட்டுத் தொடர்பு கொண்டிருந்ததெனினும், தம்பதெனியாக் காலத்துக்கு முன்னர் இரண்டு நாட்டுக்குமிடை யில் இருந்த தொடர்புபற்றிய செய்திகள் நமக்குக் கிடைக்க
V سمبر

Page 31
52 வரலாறு
வில்லை. தம்பதெனியாக் காலத்தில், சுகோதய என்ற பெயரு டைய தாய்லாந்து இராச்சியத்தைச் சேர்ந்த ரோச ராஜா என்ற அரசன் ஒருவன் தூதர்களை அனுப்பி இலங்கையிலிருந்து 'சீகலப் படிமம்' என்று புகழ் பெற்ற புத்தர் சிலை ஒன்றைப் பெற்றன் என்று ஜினகால மாலினி என்ற நூலிற் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காலத்திலே தாய்லாந்து அரசர் இலங்கையின் புத்த தாதுக் களுக்கும் சிலைகளுக்கும் மிகுந்த மதிப்புக் கொடுத்தனர். பதி ஞன்காம் நூற்ரு ண்டிலே தாய்லாந்துப் பிக்குகளின் ஒழுக்கக் கோட்பாடு இலங்கை முறையைத் தழுவி அமைக்கப்பட்டது. அவ்வாறு அமைத்தவர் அக்காலத்தில் இலங்கையிலிருந்து பர்மா வுக்குச் சென்றிருந்த உதும் பர மகா சாமி என்ற தேரர் ஒருவரின் மாணுக்கர் ஆவர். சீயம் நாட்டுச் சாசன நிறுவகம் புனரமைப் புச் செய்யப்படுதற்காக 1339 அளவில் அங்கு சென்றிருந்த மகா சாமி சங்கராஜ என்ற இலங்கைத் தேரர் ஒருவர் பற்றி மகா தர்மராஜ என்ற சீயம் நாட்டு அரசன் ஒருவனுல் எழுதுவிக்கப் பட்ட சுகோத யக் கல்வெட்டிற் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சங்கராஜ என்ற பிக்குவாற் செய்விக்கப்பட்ட கல்வெட்டுக்களும் சுகோதய நகரிற் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு, இக் காலத்தில் அநுராதபுரத்தில் உள்ள வெள்ளரச மரக் கிளையொன்று சீயம் நாட்டுச் சுகோதய விகாரையில் நடப்பட்டுள்ளது. தாய் லாந்திலிருந்து இங்கு வந்து, கடலாதெனியே தம் மகித்தி மகா சாமி என்ற பிக் குவிடம் சமயங் கற்று, மீண்டு சீயத்துக்குச் சென்ற பிக்கு ஒருவர் தாம் பின்னர் தங்கியிருந்த விகாரைக்கு லங்கா ராம ய என்று பெயர் சூட்டினர். ஆரும் பராக்கிரம வாகு காலத்தில் (1425), பர்மா, காம்போஜம், சீயம் ஆகிய நாடுகளின் பிக்குகள் இலங்கைக்கு வந்து, தேரவாதப் புத்த சமயத்தைக் கற்று, ஞானதீட்சை பெற்று, மீண்டுந் தம் நாடுகளுக்குச் சென்று, இலங்கை முறைக்கு ஏற்ப அந்நாடுகளிற் சமயப் பிரிவுகளை நிறுவினர் என்பர். சீயம் நாட்டில் இவ்வாறு நிறுவிய சமயப் பிரிவு சிங்களச் சங்கம் என்று பெயர் பெற்றது. முன்னர் மகா யான புத்த சமயத்தின் நடுநிலையமாக விளங்கிய காம்போஜத் திலே, தேரவாதப் புத்த சமயம் பரவியதற்குக் காரணம், இலங் கையிலிருந்து சீயம் வரை சென்று பரவிய செல்வாக்கே யாம்.
பண்டுகாபய மன்னன் காலத்தில் (கி.மு. ஆரும் நூற்ருண்டு) யோனர் என்னுமோர் இனத்தார் அநுராதபுரத்தில் வாழ்ந்தனர் என்பது மகாவம்சத்திலிருந்து புலப்படுகின்றது. எனினும், அவர்கள், அராபியரோ கிரேக்கரோ என்பது துணியப்படவில்லை. எவ்வாரு யினும், கி.மு. முதலாம் நூற்ருண்டுக்கு முன்பு இருந்தே அராபியர் இலங்கையிலே தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட் டனர் என்பது பிளினியின் (கி.பி. 23-79) விவரங்களிலிருந்து தெரிகின்றது. தொலமி (கி.பி. இரண்டாம் நூற்ரு ன்டு) இலங்கை பற்றிய விபரங்களை இங்கு வந்த அராபியரிடமிருந்தே பெற்ருர் என்பது ஒரு சாரார் கருத்து. கி.பி. ஐந்தாம் நூற்றண்டின் ஆரம்பமளவில் அராபிய வர்த்தகர் அநுராதபுரத்திலே தங்கி யிருந்தனர் என்பது பாகியனின் அறிக்கையிலுங் குறிப்பிடப்பட் டுள்ளது. இவ்வாறு இலங்கையில் வாழ்ந்து இறந்த அராபியரின் புத்திரிகளும் பெண்டிரும் அநுராதபுரத்துத் தாதோபதீசன்

வியாபார பண்பாட்டுத் தொடர்புகள் 53
(639-650) என்ற மன்னனல், அவர்களுடைய தாய்நாடான இரானுக்கு, அனுப்பப்பட்டனரென்று மிலே தரி என்ற முஸ்லிம் எழுத்தாளர் கூறியுள்ளார். ܕ
கி.பி. ஏழாம் நூற்ருண்டின் நடுப்பாகத்தில் இஸ்லாம் சமயம் தழைத்தோங்கியபொழுது, அராபியர் ஆதிக்கம் ஐபீரியக் குடா நாட்டிலிருந்து சீனத்தின் கிழக்கு எல்லைவரையுள்ள நாடுகளிற் பரவியது. அராபியர் அதிக தொகையினராக இலங்கைக்கு வரத் தொடங்கியது, இதற்குப் பின்பே ஆகும். கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த பெரிஷ்டா என்பவர் கூறுகின்றபடி, இலங் கைக்கும் அராபியருக்கும் இடையிலுள்ள தொடர்பு, மதீன வைச் சேர்ந்த கலிபாக்களின் காலத்திலிருந்து (632 - 660) தொடர்ந்து வருவதொன்ற கும். இபன் சாகிரியார் என்புவரால் கி.பி. 953 அளவில் எழுதப்பட்ட ‘இந்தியாவின் விந்தைகள்' என்ற நூலில், இலங்கையொடு அராபியாவுக்குள்ள பண்பாட்டுத் தொடர்பு பற்றிப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: இஸ்லாம் சமயம்பற்றி இலங்கை மக்கள் அறிந்த பின்னர், அவர்கள் முகமது நபியிடமே அது பற்றிக் கேட்டு அறிந்து கொள்வதற்காகத் தூதர் ஒருவரை அராபியாவுக்கு அனுப்பினர். அத்து தர் மதீனுவுக்குச் சென்ற பொழுது, முகமதுநபி மறைந்து, அபூபக்கரின் கலிபா பதவியும் முடிந்து, உமர் அப்பொழுது கலிபா பதவியை ஏற்றிருக்கின்ருர் என்று அறிந்தார். அந்தத் துர்தர் கலிபா உமரைச் சந்தித்து, முகமது நபியைப் பற்றி அறியவேண்டியவை எல்லாவற்றையும் அறிந்துகொண்டு, மீண்டும் தாய்நாடு திரும்பும்பொழுது மக்கரான் கரையோரத்தில் மாண்டார். எனினும், அவருடன் சென்ற சேவகன் இலங்கைக்கு வந்து, இலங்கை மக்களுக்கு முகமது நபியின் குண சீலங்களையும் இஸ்லாம் சமயத்தையும் பற்றி விளக்கினன். இலங்கை மக்கள் முஸ்லிம்களை வரவேற்கத் தொடங்கியது இந் தத் தூதுப் பயணத்தால் உண்டான நல்லுறவின் விளைவாகும்.
கி.பி. 9 ஆம் நூற்ருண்டளவிலிருந்து, கி.பி. 15 ஆம் நூற் ருண்டு முடியும் வரை, அராபியர் இலங்கையுடன் வியாபாரத் தொடர்பும் பண்பாட்டுத் தொடர்பும் வைத்திருந்தனரென்பது, மிலே தரி, சுலைமான், அபு. அப்துல்லா, மசூதி, அபுசயித் ஹசன், அல்பீரூணி, அல் இத்ரிசி, அல் மக்திசி, இபன் பதுதா போன்ற அராபியர் பலர் தத்தம் நூல்களில் இலங்கை பற்றிய விவரங் களைச் சேர்த்திருப்பதிலிருந்து தெளிவாகின்றது. சுலைமான், மசூதி, இபன் பதுதா என்ற எழுத்தாளர் இக்காலத்திலே தேச சஞ்சாரத்துக்காக இலங்கைக்கு வந்த அரபு நாட்டினராவர்.
யாப்பகுவவில் அரசாண்ட முதலாம் புவனேகபாகு அரசன் (1372-1884) எகிப்துடன் தூதரகத் தொடர்பு உண்டுபண்ண முயற்சி செய்ததாக, அல் மக்திசி என்பாரின் 'ஓமலுக் சுல்தான் களின் வரலாறு' என்ற நூலிற் குறிப்பிடப்பட்டுள்ளது. புவ னேகபாகு அரசன் எகிப்துக்கு அனுப்பிய செய்தியிலிருந்து தெரிவு செய்த சில பகுதிகள் கீழே காணப்படுகின்றன. 'இலங்கையே எகிப்து, எகிப்தே இலங்கை. என்னுடைய தூதர் திரும்பி வரும் பொழுது எகிப்தியத் தூதர் ஒருவர் அவருடன் வருவார் என்றும் வேருெரு தூதர் ஏடின் நகரிலே தங்குவதற்கு வருவார் என்றும்

Page 32
54 vn வரலாறு
நான் நம்புகின்றேன். எல்லா வகையான இரத்தினங்களும் முத் தும் பெருந்தொகையான அளவில் எனக்கு உரித்தாகும். கப் பல்கள், யானைகள், மஸ் லின் துணி, அகில், கறுவா முதலிய எல்லா வியாபாரப் பொருட்களும் இந்த வியாபாரிகளால் உங்களிடம் கொண்டுவரப்படும். ஆண்டுதோறும் இருபது கப்பல்கள் அனுப்புமாறு சுல்தான் என்னைக் கேட்டால் அவற்றை அனுப் புவதற்கு என்னல் இயலும். மேலும், அவருடைய இராச்சி யத்து வியாபாரிகளுக்கு என்னுடைய இராச்சியத்தில் வியாபாரஞ் செய்வதற்குச் சகல உரிமைகளும் உண்டு. யேமன் இளவரசனின் தூதனெருவன் என்னைப் பார்ப்பதற்கு வந்தான். அவன் வந்தது, தன் தலைவருடன் என் நாடு நல்லுறவை வைத்துக்கொள்ளச் செய்வதற்காகும். எனினும், சுல்தானிடம் நான் வைத்துள்ள அன்பினுல் நான் அவனைத் திருப்பியனுப்பிவிட்டேன். ' அராபிய வியாபாரிகள் இலங்கைக்கு வந்தது வாசனைத் திரவியங்களையும், முத்து, இரத்தினம் ஆகியவற்றையும் கொண்டு செல்வதற்காக என்பது இந்த விவரங்களிலிருந்து புலணுகும். அவ்வாறே, 13ஆம் நூற்ருண்டளவிலிருந்து, அல்லது அதற்கும் முன்பிருந்து, அவர்கள் கறுவாவிலுங் கவனஞ் செலுத்தினர் என்பதை இதனல் அறிய லாம். எனினும், முதலில் அவர்கள் அதிக கவனஞ் செலுத்தியது இலங்கையின் மணிக் கற்களிலாகும். அவர்கள் இரத்தினத்தீவு (ஜய்றத் அல் யகுத்) என்று இலங்கையைக் குறிப்பதிலிருந்தும் இது நிரூபிக்கப்படும். இலங்கையின் இரத்தினக் கற்களுக்கு உயர்ந்த மதிப்புக் கொடுத்த பாக்தாத்திலிருந்து ஹருன் அல் ரஷித் (786-809) தன்னுடைய இரத்தின வியாபாரியான அல் சப்பாஹ் என்பவனை இரத்தினங் கொள்ளும் பொருட்டு இலங்கை அரச னிடம் அனுப்பினன் என்றுங் கூறப்படுகின்றது.
வியாபாரத்துக்காக மட்டுமன்றி, சிவனெளிபாதமலை எனப் படும் ஆதாம் மலை யாத்திரைக்காகவும் அராபியர்கள் இங்கு வந்தார்களென்று தோன்றுகிறது. சிவனுெளிபாதமலை உச்சியில் இருப்பது ஆதாம் நபியின் பாதச் சுவடு என்ற நம்பிக்கை, இவ் வாறு அவர்கள் இங்கு வருவதற்குக் காரணமாக இருந்தது. அம் மலைக்குச் செல்லும் வழியை முதலிற் காட்டியவர் முஸ்லிம் மார்க்கப் பெரியாரான அபு அப்துல்லா இபின் கலிபா அவர்களே என்று இபின் பதுதா கூறுகின்ருர், -
இலங்கையில் வாழ்கின்ற இஸ்லாம் மதத்தினரிடையே அரா பிய வியாபாரிகளின் வழித்தோன்றல்களும், இஸ்லாம் மதத்தைத் தழுவிய இந்திய வியாபாரிகளின் வழித்தோன்றல்களும் உளர். இலங்கையின் உள்நாட்டு வெளிநாட்டு வியாபாரத்தில் முக்கிய இடம் அவர்களுக்கு உரியதாகும்.

ஆறம் அத்தியாயம்
குடியேற்றப் பருவம்
1. போர்த்துக்கீசர் காலம்
ஜயவர்த்தனபுரம் என்னும் கோட்டைநகரிலிருந்து அரசாண்ட ஆரும் பராக்கிரமபாகுவின் கீழ் (1415-1467), இலங்கை முழு வதும் ஒருமைப்பட்டிருந்தது. எனினும், 1467 இல் அம்மன்னன் மறைந்து இருபது ஆண்டுகள் செல்வதற்கிடையில், அவ்வொரு மைப்பாடு சிதைந்து போயிற்று. அம்மன்னனின் பின்னர் கோட்டை இராச்சிய அரசுரிமை பற்றி எழுந்த சச்சரவுகளும், அவனுக்குப் பின்னர் அரசாண்ட மன்னர் வலிமை குன்றியோராய் இருந்தமையும் இச்சிதைவுக்குக் காரணங்களாம். இவற்றின் விளைவாக, பதினரும் நூற்ருண்டின் தொடக்கத்திலே இலங்கை யானது கோட்டை இராச்சியம், மலையக இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம் என முக்கூறுபட்டுக் கிடந்தது. அன்றியும், வட மத்திய பகுதியிலும் மேற்குப் பகுதியிலுமிருந்த பரந்த பிர தேசங்கள், வன்னியர் எனப்படும் குறுநில மன்னரால் ஆளப் பட்டன. இவர்களிற் சிலர் சுயாதீன ராயும் சிலர் பெருமன்ன ரைச் சார்ந்தும் இருந்தனர்.
இவ்விராச்சியங்களுள் முதன்மை பெற்றுத் திகழ்ந்த கோட்டை இராச்சியம், வடக்கிலே கலா ஓயாவையும், தெற்கிலே வளவ கங்கையையும், கிழக்கிலே மத்திய மலைகளின் மேற்குச் சரிவு களையும், மேற்கிலே சமுத்திரத்தையும் எல்லைகளாகக் கொண்டி ருந்தது. இக்காலத்திலே கோட்டை இராச்சியத்து மன்னர் இலங்கை முழுவதையும் ஆளவில்லை. எனினும், பண்டை மன் னர் பூண்டிருந்த திரிசிங்களாதீசுவரன், சக்கர வர்த்தி போன்ற விருதுகளைத் தாமுந் தொடர்ந்து பூண்டுகொண்டனர். கோட்டை இராச்சியத்தில் மக்களின் வாழ்க்கைத் தொழிலாகிய உழவுத் தொழில் பரந்த அளவில் நடைபெற்றமையாலும், வணிகப் பண் டங்களாகிய கறுவா, கமுகு, யானைத் தந்தம், முத்து, இரத்தி னங்கள் என்பன நிறைந்து வளங்கொழித்தமையாலும், அவ் விராச்சியம் ஏனைய இராச்சியங்களை விஞ்சி மேம்பட்டு விளங் கிற்று. முந்திய நூற்றண்டிலே காணப்பட்ட பண்பாட்டு விழிப்பு விரைவாகக் குன்றியதெனினும், கோட்டை இராச்சியத்து மன் னர்கள் புத்த மதத்துக்குத் தொடர்ந்தும் ஆதரவளித்து வந்தனர்.
செங்கடகலையை இராசதானியாகக் கொண்ட மலைநாட்டு இராச்சியம் படிப்படியாக வலிமை பெற்று உறுதியடைந்தமை, பதினரும் நூற்ருண்டில் நிகழ்ந்ததொரு முக்கிய நிகழ்ச்சியாகும். சேஞசம்மத விக்கிரமபாகு என்னும் மன்னனின் கீழ், பதினைந் தாம் நூற்ருண்டின் இறுதியிலே ஆதிக்க முதன்மை எய்திய இந்த இராச்சியம் உடுநுவரை, யட்டிநுவரை, தும்பரை, ஹரிஸ் பத்து, ஹே வாஹெற்ற, பலவிற்ற, மாத்தளை ஆகிய இடங்களில் மட்டு

Page 33
56 வரலாறு
மன்றி மலையகத்தின் எல்லையிலுள்ள சத்தர கோறளை (நாலு கோறளை) வரைக்கும் விரிவு பெற்றுப் பரந்திருந்தது. அக் காலத்து வரலாற்றுச் சாசனங்கள் ‘மலையக சாமந்த யா' என்றே மலைநாட்டு மன்னனைக் குறிப்பிடுவதால், பெயரளவிலேனும் அவன் கோட்டை அரசனின் ஆதிக்கத்தை ஒப்புக் கொண்டிருந்தான் என வும், ஆண்டுதோறும் திறை செலுத்தி வந்தான் எனவும் கொள் ளலாம். மலைகள் நிறைந்த அப்பிரதேசத்திலே பயிர்ச்செய்கை மூலம் கிடைத்த வருவாயுடன், மிளகு, பாக்கு, ஏலம் போன்ற வணிகப்பொருள் உற்பத்தியினலும், அவ்விராச்சியத்துக்குப் பெருமளவு வருவாய் கிடைத்தது. பதினரும் நூற்ருண்டிலே கோட்டை இராச்சியத்தில் நிலவிய அரசியற் பிணக்குகளைப் பயன் படுத்திக்கொண்டு தமது வலிமையை உறுதி செய்து பரப்ப முயன் றமையே, அக்காலத்து மலையக மன்னர்களது அரசியற் கொள் கையின் பிரதான இயல்பாயிற்று.
யாழ்ப்பாணக் குடாநாடும் அதை அடுத்துள்ள தீவுகளும் மன் ஞர், முல்லைத்தீவு வரை பரந்திருந்த கடற்கரையோரப் பிரதே சங்களும் யாழ்ப்பாண இராச்சியத்துக்கு உரியனவாய் இருந்தன. பதினுலாம் நூற்றண்டிலிருந்து இவ்விராச்சியத்தை "ஆரியச் சக்கரவர்த்திகள்’ என்னும் பட்டம் பூண்ட தமிழ் மன்னர் ஆண்டனர். ஆரும் பராக்கிரமபாகுவின் மகா சேனதிபதியாகிய சபுமல் குமரு (சண்பகப் பெருமாள்) என் பானுல் அது கோட்டை இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. இம்மன்னன் மறைந்து சில காலம் சென்றதும், யாழ்ப்பாண இராச்சியம் மீண்டும் சுயா தீன நிலையை எய்திற்று. வறண்ட பிரதேசத்தையே பெரும் பாலும் கொண்ட யாழ்ப்பாண இராச்சியத்தின் வருவாய், அங் குச் சிறிய அளவில் நடைபெற்ற பயிர்ச்செய்கையிலிருந்தும், அங்கிருந்த துறைமுகங்களில் நடைபெற்ற வணிகத்திலிருந்துமே பெரும்பாலும் பெறப்பட்டது. மேலே சுருக்கமாகக் கூறப்பட்ட அரசியல் நிலைமையே, போர்த்துக்கீசர் இலங்கைக்கு வரும் வரைக் கும் அங்கு நிலவிற்று. W
கி.பி. 1505 ஆம் ஆண்டிலே போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்தனர். லொறென்சோ டி அல்மேடா என்பான் தலைமையில் இங்கு வந்த போர்த்துக்கீச மாலுமிகளைக் கண்டதும், இங்குள்ள சிங்கள மக்கள் என்ன கருதினர் என்பது பற்றி இராஜாவளியிலே நன்கு வருணிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில், கோட்டை இராச்சியத்து இறுதி மன்னணுகிய எட்டாம் வீர பராக்கிரமபாகு முதுமை எய்திவிட்டபடியால், அவனுக்குப் பதிலாக அரசகரு மங்களைப் பார்த்துக்கொண்டிருந்த மகன் தர்மபராக்கிரமபாகு என்பான் போர்த்துக்கீசருடன் பேச்சுவார்த்தை நடத்தினன். நடத்தியதன் பேருக, கோட்டை இராச்சியத்துடன் வியாபாரம் செய்வதற்கும் கொழும்பிலே வணிகக் களஞ்சியமொன்றையும் தேவாலயமொன்றையும் அமைப்பதற்கும் போர்த்துக்கீசர் அனு மதி பெற்றனர். இதற்கு முன்பும் பிறநாட்டு வணிகர் இலங் கைக்கு வந்துள்ளனரா கையால், போர்த்துக்கீசரின் வருகை முக் கியமானதொரு நிகழ்ச்சி எனக் கருதப்படவில்லை. ஆனல், அவர்கள் ஆயுதம் தாங்கியவர்களாகவும் வணிக ஏகபோகத்தில் நாட்டமுடையோராயும் இருந்தமையே அவர்களுக்கும் ஏனை

போர்த்துக்கீசர் காலம் 57
யோருக்குமுள்ள வேறுபாடாம். அவர்தம் முக்கிய குறிக்கோள் வியாபாரம் மட்டுமேயன்றி, கத்தோலிக்க மதத்தைப் பரப்புதலு
DIT LÈ そ
இந்து சமுத்திரத்திலே நாவாயோட்டி வணிக ஆதிக்கம் பெறு தலிலே முஸ்லிம்களுக்கும் போர்த்துக்கீசருக்குமிடையே அக் காலத்திற் பெரும் போட்டி நிலவிற்று. வெகுகாலமாகவே சிங்கள இராச்சியத்தில் வியாபாரம் நடத்திவந்த முஸ்லிம்கள், போர்த்துக்கீசரின் வருகையினலே முன்னென்றும் இல்லாத கேடு தமக்கு நேர்ந்து விட்டதென எண்ணினர். இந்துசமுத்திர ஆதிக் கத்தின் பொருட்டுப் போட்டியிட்ட முஸ்லிம் மக்கள் போர்த்துக் கீசருக்கு எதிரான இயக்கத்திலே சிங்கள மன்னருக்கும் மக்களுக் கும் ஆதரவு தரத் தயங்கவில்லை. முஸ்லிம்களின் ஆதரவோடு சிங்கள மக்கள் நிகழ்த்திய தாக்குதல்களின் விளைவாக, கொழும்பி லிருந்த வணிக நிலையத்தை இழக்கவேண்டிய நிலைமை போர்த்துக் கீசருக்கு ஏற்பட்டது.
போர்த்துக்கீசர் இங்கு வந்து சிறிது காலம் சென்றதும், கோட்டை இராச்சியத்திலே அரசியற் சிக்கல்கள் ஏற்பட்டமை யால், அவர்கள் இந்த நாட்டின் அரசியல் அலுவல்களிலும் தலை யிடக்கூடிய நிலைமை உருவாயிற்று. ஏழாம் விஜயபாகு வேருே?ர் அரசகுமாரனுக்கு ஆட்சிப்பொறுப்பை வழங்கப்போ கிருன் என அறிந்து அம்மன்னனின் குமாரர்கள் மூவரும், அவனுக்கு எதிரா கக் கிளர்ந்து எழுந்தனர். 1521 இல் நிகழ்ந்த இக் கிளர்ச்சியினல் விஜயபாகு மன்னன் இறக்க, அவனது மைந்தர் மூவரும் கோட்டை இராச்சியத்தை மூன்ரு கப் பிரித்துக் கொண்டனர்.
மூத்தவனன புவனேகபாகு கோட்டையின் மாமன்னணுக முடி சூடினன். அவ்வாறே நடுவிலானுகிய மத்தும பண்டாரன் என் பானுக்கு இறை கமப் பகுதியும், இளையவனன மாயாதுன்னைக்குச் சீதாவக்கையும் உரிமை ஆயின. இவ்வாறு கோட்டை இராச்சி யம் முக்கூறுபடவே, இலங்கை ஐந்து கூறுகளை உடையதாயிற்று.
மேற்கூறியவாறு கோட்டை இராச்சியம் பிரிவுபட்டுச் சற்றுக் காலஞ் சென்ற பின், புவனேகபாகுவின் தலைமையில் மூன்று சகோதரர்களும் ஐக்கியப்பட்டனர். புவனேகபாகுவின் இராச்சி யத்தில் எழுந்த குழப்பங்களை அடக்குதற்கு மாயாதுன்னை துணை நின்று காப்பளித்தான். எனினும், சிறிது காலஞ் சென்றதும், புவனேகபாகுவுக்கும் மாயாதுன்னைக்குமிடையே ஏற்பட்ட ஐக் கியம் குலைவுற்றது. அவ்வாறு குலைவுற்றமைக்குக் காரணம், போர்த்துக்கீசரின் தூண்டுதலினலே புவனேகபாகுவானவன் 1524 இலே தன் இராச்சியத்து முஸ்லிம்களை விரட்டியடித்த் மையே ஆகும். அத்துடன், கோட்டை இராச்சியத்தின் வணிகக் கருமங்கள் போர்த்துக்கீசரின் ஏகபோகம் ஆயின. இந்தப் போக் குகளை விரும்பாத மாயாதுன்னை தன் இராச்சியத்தில் முஸ்லிம் களுக்குப் புகலிடமளித்து, புவனேகபாகுவின் சீற்றத்தைத் தூண்டி னன். இதிலிருந்து, இவ்விரு சகோதரரின் பகைமைக்குக் காரண மாயுள்ளது மாயாதுன்னையின் அதிகார ஆசை அன்று என்பது புலப்படும். புவனேகபாகு போர்த்துக்கீசர்க்குக் காட்டிய பெரும் பரிவையும், அமைதி விரும்பும் முஸ்லிம்களுக்கு இழைத்த அரீ

Page 34
58 வரலாறு
தியையும் மாயாதுன்னை விரும்பாமையே பகைமைக்குக் காரணம் எனலாம். இங்ங்னமாக, மாயாதுன்னை கோட்டை இராச்சியத் தின் மீது படையெடுத்தான். இதனல், புவனேகபாகு தனது பாதுகாப்பின் பொருட்டுப் போர்த்துக்கீசரின் உதவியை நாட வேண்டியவன் ஆனன்.
அப்பொழுது மாயாதுன்னை இந்தியாவின் மேலைக்கரையிலே கோழிக்கோட்டையை (கள்ளிக்கோட்டையை) ஆண்ட வலிமை மிக்க முஸ்லிம் தலைவனும் போர்த்துக்கீசரின் விரோதியுமாகிய சாமொரின் (சேரமான்) என்பானின் உதவியைப் பெற்ருன். இவ் வாரு க, இரு சகோதரரிடையே தோன்றிய உண்ணுட்டுப்பூசல், மலையாளப் பகுதியிலே போர்த்துக்கீசருக்கும் சாமோரினுக்கு மிடையே நிகழ்ந்த ஆதிக்கப் போட்டியுடன் தொடர்புற்றது எனலாம். மறு புறத்தில், இக்காலந்தொட்டுக் கோட்டையரச னுக்குப் பணிபுரிந்து வந்த போர்த்துக்கீசர்க்கு, கூலிப்படையிற் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்புக் கிட்டிற்று. இதற்கிடையில் 1536 இலே இறைகம் பண்டாரன் இறந்ததும், அவனது இராச்சி யத்திலே பவனேகபாகுவுக்கு இருந்த உரிமையைப் புறக்கணித்து மாயாதுன் னையே அதனைத் தனது இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டான். இதனல், சீதாவக்கை அரசு விரிவடைந்தது; மாயாதுன்னையின் வலிமையும் அதிகமாயிற்று. இலங்கையின் கரையோரப்பகுதிகள் போர்த்துக்கீசர் வசமாவதற்கு வழி வகுத் தவை மேற்கூறப்பட்ட நிலைமைகளேயாம். ஃ மேற்கண்டவாறு, சிறுகச் சிறுக, கோட்டை இராசதானியை ஒம்பும் பொறுப்பினைப் புவனேகபாகு போர்த்துக்கீசரிடம் கைய ளிக்க வேண்டியவன் ஆஞன். இதற்குக் கைம்மாருக அவன் போர்த்துக்கீசருக்கு ஆண்டுதோறும் 300 பகார் கறுவா இறுப்ப தென ஒப்புக்கொண்டான். கோட்டை இராச்சியத்தினுள்ளே போர்த்துக்கீசரின் ஆதிக்கம் மேலோங்க, மன்னனின் வலி குன் றிற்றேயாயினும், அவர்களின் கைப்பொம்மை ஆகாது தற்காத் துக் கொள்ளுவதற்கு மன்னன் முயன்ரு ன். கத்தோலிக்க மார்க் கத்தைத் தழுவிக்கொள்ளாது மறுத்து ஒதுக்கிவிட்டமையும், மாயாதுன்னையை அடியோடு ஒழிப்பதற்குப் போர்த்துக்கீசர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இடங்கொடா மையும் மேற்படி செய்தியை மெய்ப்பிக்கும். போர்த்துக்கீசரும் கத்தோலிக்க மதத் தைத் தழுவிக்கொண்ட சிங்களவரும் சேர்ந்து அரச கட்டளைக்கு எதிராகச் செயலாற்றத் தொடங்கிய தருணங்களில் எல்லாம், புவனேகபாகு தன் தம்பியுடன் சேர்ந்து கொள்வதாகப் பயமுறுத் தியே தனது நிலையைப் பேணிக்கொண்டான். 1551 இல் எதிரி யின் வெடிச் சூடுபட்டு இறக்கும் வரையும் போர்த்துக்கீசரின் ஆட் சிக்குக் கீழ்ப்படாதிருக்கப் புவனேகபாகு முயன்றனயினும், கோட்டை இராச்சியமானது வெகுவிரைவிலே போர்த்துக்கீசரின் விருப்பு வெறுப்புகளுக்கேற்பச் செயலாற்றி, போர்த்துக்கலின் ஆட்சிப் பிராந்தியம் போன்று சீரழியும் நிலைமைக்கு வித் திடப்பட்டது, அம்மன்னனின் காலத்தே யாம்.
புவனேகபாகு இறந்ததும் அவனது பேரனன மகா பண்டாரன் என்னும் தர்மபாலன் மன்னணுயினன். புவனேகபாகு உயிருடன்

போர்த்துக்கீசர் காலம் 59
இருக்கும் பொழுதே போர்த்துக்கீசரின் முயற்சியினல் மூன்றம் ஜோன் என்னும் போர்த்துக்கீச மன்னன் தர்மபாலனன் சிலைக்குப் போர்த்துக்கலில் வைத்து முடிசூட்டி, கோட்டை இராச்சியத்தின் வருங்கால உரிமைக்காரணுக அவனை ஏற்றுக் கொண்டான். அவன் போர்த்துக்கீசரின் கீழ் ஒரு பொம்மை மன்னன் ஆவதற் கான முன்னறிகுறி போன்று இந்நிகழ்ச்சி. அமைந்தது எனலாம். தர்மபாலன் 1557 இலே கத்தோலிக்க மதத்தைத் தழுவினுன் 1565 இலே பரம்பரைத் தலைநகரான கோட்டை நகரைக் கைவிட்டு, கொழும்புக் கோட்டையிலே போர்த்துக்கீசரின் பாது காப்பில் வாழத் தொடங்கினன்; இச்செய்கைகளால் அவனுக்கும் குடிமக்களுக்குமிருந்த தொடர்பு தளர்வுற்றது. உண்மையில் அவன் போர்த்துக்கீசரின் கைப்பொம்மை ஆயினன்; அவர்களே. கோட்டை இராச்சியத்தின் முடிசூடா மன்னர்களாக விளங்கினர்.
சீதாவக்கை இராச்சியத்தின் வலிமையை மிகுவிப்பதற்கு இந் நிகழ்ச்சிகள் மிகவும் உதவின. புறச் சமயத்தவரான அன்னிய நாட்டவர்க்கு எதிராக எழுந்த சிங்கள பெளத்த இயக்கத்தின் தலைமையை ஏற்றுக்கொண்ட மாயாதுன்னைக்கு, சீதாவக்கையின் அரசுரிமைச் சின்னமாகிய தந்ததாது கிடைத்தமை பெரியதொரு வாய்ப்பாயிற்று. போர்த்துக்கீசரை எதிர்த்து அவன் நிகழ்த்திய போரிலே படைத்தலைவனுகப் பணியாற்றியவன் மாயாதுன்னையின் மகஞகிய டிக்கிரி பண்டாரன் எனப்படும் டிக்கிரி இராஜசிங்கனே ஆவான். தந்தையும் மைந்தனும் சேர்ந்து 1565 இலே சீரிய அணிவகுப்புடன் கோட்டை இராச்சியத்தைக் கடுமையாகத் தாக்கினர். இதனுல் தர்மபாலனும் அவனைச் சார்ந்தோரும் கொழும்புக் கோட்டையிற் சென்று ஒதுங்க வேண்டியோர் ஆயினர்.
மாயாதுன்னையின் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி முன் னேறுவதில் சீதாவக்கை இராஜசிங்கன் வெற்றிகண்டான். அக் காலத்து மலையகக் காவலனுகிய கரல்லியத்தை என்பானை விரட்டி, அவ்விராச்சியத்தையும் 1582 இலே சீதாவக்கையுடன் இணைத் துக்கொண்டான். இவ்வாறு எல்லாவிதத்திலும் பல வானன இராஜசிங்கன் 1587-88 காலப்பகுதியிலே சகல மூலபலங்களையுந் திரட்டிக் கடுமையான தாக்குதலை நிகழ்த்தி, மூன்று மாதம் வரை கொழும்புக் கோட்டையை முற்றுகையிட்டிருந்தான். இதனல் அக்கோட்டையுள் அகப்பட்டிருந்த போர்த்துக்கீசர் பசிபட்டினி யால் வாடிப் பெரிதும் துன்புற்றனர். ஆயினும், போர்த்துக் கீசரின் கேந்திர நிலையமாக விளங்கிய கோவாவிலிருந்து அவர்க்குக் கிடைத்த உதவிகாரணமாக இராஜசிங்கனின் தாக்குதல்கள் இறு தியிலே பயனற்றுப்போயின. பலமான கடற்படையொன்று இன்றி, போர்த்துக்கீசரை இலங்கையினின்றும் விரட்டியடிப்ப தென்ற தனது பெருவிருப்பம் நிறைவேறுதல் முடியாதென்பது இராஜசிங்கனுக்குத் தெளிவாயிற்று.
இக்காலந்தொட்டு இராஜசிங்கனின் ஆதிக்கமும் சீதாவக்கை அரசின் வலிமையும் குன்றத் தொடங்கின. இராஜசிங்கன் மலையக இராச்சியத்திலே கடைப்பிடித்த கொள்கைகளின் விளை வாக, பிற்காலத்திலே மலையகத்து மக்கள் அவனது எதிரிகளாயி

Page 35
60 வரலாறு
னர் . இந்த நிலையில், போர்த்துக்கீசரின் துணையுடன் யமசிங்க பண்டாரன் என்னும் அரசகுமாரன் மலையகத்தில் அரசு கட்டி லேறினன். இதனுல் இராஜசிங்கனின் நிலைமை மேலும் சீரழி யலாயிற்று. இதன் பின்னர் கோணப்பு பண்டாரன் என்பான் யமசிங்கனை விரட்டிவிட்டு விமலதர்மசூரியன் என்னும் பெயரு டன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான். சிற்சில காரணங் களால் இச்சம்பவம் முக்கியமாகிறது. இராஜசிங்கனுக்குப் போலவே போர்த்துக்கீசருக்கும் இச்சம்பவம் சாதகமாயிற்று. மறுபுறத்தில், இச்சம்பவமானது மலையக இராச்சிய வரலாற்றில் மாத்திர மன்றி, முழு ஈழத்தின் வரலாற்றிலுமே புதியதொரு கட்டத்தின் தொடக்கமா யமைந்தது எனலாம். இக்கால ந் தொட்டு, பிறநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான தேசீய இயக்கத் தின் நடு நிலையம் சீதாவக்கையிலிருந்து செங்கடகலைக்கு மாற லாயிற்று.
மலையகத்து மன்னணுகிய விமலதர்ம சூரியனுடன் தொடுத்த போரிலே தோற்றுப் பின்வாங்கிய இராஜசிங்கன் இறந்தான். 1593 இல் இராஜசிங்கன் இறந்த சிறிது காலத்துள் போர்த்துக் கீசர் தர்மபாலனின் பெயரைப் பயன்படுத்திச் சீதாவக் கைக் குரிய பிரதேசம் முழுவதையும் கோட்டை இராச்சியத்துடன் இணைத்துக்கொண்டனர். ஐம்பதாண்டுகளாக தந்தை மாயா துன்னையும் மைந்தன் இராஜசிங்கனும் முயன்று ஈட்டிக்கொண்ட பிரதேசங்களனைத்துடனும் சீதாவக்கை இராச்சியமானது மீண் டும் கோட்டை இராச்சியத்துடன் இவ்வாறு இணைக்கப்பட்டது. தர்மபால மன்னன் 1580 இலே தன் இராச்சியத்தை ஒரு நன் கொடை ஒப்பந்தமூலம் போர்த்துக்கீச மன்னனுக்குக் கையளித் தமையால், சீதாவக்கையுடன் கோட்டை இராச்சியம் முழுமை யும் போர்த்துக்கலின் குடியேற்றப்பிரதேசமாவதற்கு வழிவகுத் தான,
இலங்கையிலே போர்த்துக்கீசரின் ஆதிக்கம் பரவுதற்கு மற் ருேர் ஏதுவாக இருந்தது, யாழ்ப்பாண இராச்சியத்தையும் அவர் கள் வென்றெடுத்துக்கொண்டமை யாம். இந்த யாழ்ப்பாண இராச்சியம்பற்றி முதலிலே அதிக ஆர்வங்காட்டாத அவர்கள் சமயத்தின் பேரினல் அவ்விராச்சியத்து அலுவல்களிலே கைவைக் கத் தொடங்கினர். யாழ்ப்பாண ஆட்சியாளர் தம்மைத் துன் புறுத்தினர் என மன்னரிலிருந்த கிறித்தவர்கள் செய்த முறைப் பாடுகளின் இறுதிவிளைவாக 1591 இல், அந்தரே பேற்ருடா டி மென்டொன்சா என்பானைத் தலைவனுகக் கொண்ட போர்த்துக் கீசப் படை யாழ்ப்பாண மன்னனை வீழ்த்திவிட்டு, தனக்குப் பணிந்து போகும் இயல் பினனு ன அரசகுமாரன் ஒருவனை முடி சூட்டி வைத்தது. அப்புதிய மன்னனின் பெயர் பரராஜ சேகரன் என்பதாம். இவ்வாறு கோட்டை இராச்சியம் மட்டு மன்றி யாழ்ப்பாண இராச்சியமும் போர்த்துக்கீசர் வசமாயிற்று. முழு நாடும் போர்த்துக்கீசர் ஆட்சிக்கு உட்படுவதற்கிருந்த ஒரே யொரு தடையாக மலையகத்து மன்னன் விமலசூரியனின் ஆட்சி மாத்திரமே இருந்தது.
இக்காலந்தொட்டுப் போர்த்துக்கீசர் முழுநாட்டையும் கைப் பற்றுதற்கு முற்பட்டு முயன்றனர். கரலியத்தையின் மகளான

போர்த்துக்கீசர் 3, T61) to 6.
குசுமாசன தேவியை (டோன கதரினவை) அரசு கட்டிலேற் றும் நோக்குடன் பெரோ லோபெஸ் டி சூசா தலைமையில் ஒரு பெரும் படையெடுப்பு 1594 இல் நிகழ்த்தப்பட்டது. விமலதர்ம சூரியன் தலைநகரைக் கைவிட்டு ஒளித்தோடிவிட்டமையால், குசுமாசனதேவியே மலையகத்தின் அரசியெனப் பிரகடனஞ் செய்யப்பட்டாள். எனினும் விமலதர்மசூரியனின் உடனடி எதிர்த்தாக்குதல்களைச் சமாளிக்க முடியாது பின்வாங்க வேண்டிய நிலைமை போர்த்துக்கீசருக்கு ஏற்பட்டது. இரு சாராருக்கு மிடையே 1594 அக்டோபர் 6ஆம் நாள் நடைபெற்ற கடும் போரில், போர்த்துக்கீசரின் படை முழுவதும் இறந்துபட்டது. போர்த்துக்கீசர் வசப்பட்டிருந்த டோன கதரினுவை விமலதர்ம சூரியன் தன் கோப்பெருந்தேவி ஆக்கினன். இவ்வாறு மலையக
ட்சியுரிமையை அவன் உறுதிசெய்துகொண்டான். 1597 மே 27 இல், கோட்டை இராச்சியத்தின் இறுதி மன்ன ஞன தர்மபாலன் இறந்தான். உடனே, போர்த்துக்கீசத் தளபதிநாயகமாக இருந்த டொன் ஜெரனிமோ டி அசவேடு என்பான் போர்த்துக்கல் மாமன்னனின் சார்பிலே கோட்டை இராச்சியத்தின் ஆள்பதியாக்கப்பட்டான். இவ்வாருக, போர்த் துக்கல் மாமன்னனே போர்த்துக்கீசர் வசமிருந்த இலங்கைப் பிரதேசங்களுக்கும் மாமன்னன் ஆயினன்.
இலங்கையையும் வென்றடிப்படுத்தும் நோக்குடன் போர்த்துக்கீசர் நிகழ்த்திய போராட்டங்களில், ஒர் அங்கத்தின் இறுதிக் கட்டமாக அமைந்தது, யாழ்ப்பாண இராச்சியம் முழுவ தும் போர்த்துக்கீசராற் கைப்பற்றப்பட்ட சம்பவமாகும். 1617 ஆம் ஆண்டுவரை போர்த்துக்கீசர் வேறிடங்களிலே போர்களில் ஈடுபட்டிருந்தமையால், யாழ்ப்பாணத்தைத் தாக்குதற்கு அவர் களுக்குத் தருணம் கிடைக்கவில்லை. இவ்வாண்டிலே பரராஜ சேகரன் இறந்தவுடன், அரசுரிமை பற்றிய பூசல் எழுந்தது. இறுதியில், சங்கிலியன் என்பான் யாழ்ப்பாணத்தில் அரியணை ஏறினன். அவன் இந்திய உதவியுடன் தமது ஆதிபத்தியத்தை வீழ்த்த எண்ணினன் என ஐயுற்ற போர்த்துக்கீசர், அவனை அடக்கும் பொருட்டு, தரைப்படையையும், கடற்படையையும் அனுப்பினர். பிலிப் டி ஒலிவெயிரா என்பான் தலைமையிற் சென்ற தரைப்படை, 16 19 மே மாதத்திலே யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிற்று. மலையகத்துள்ளவை போன்ற இயற்கை அரண் களைக் கொண்டிராத யாழ்ப்பாண இராச்சியத்தில் அரசியற் பூசல் களும் நிலவியமையால், சிறந்த அணிவகுப்புடன் போர்த்துக்கீசர் நிகழ்த்திய முதலாவது தாக்குதலையே தாங்கமுடியாது அவ்வி ராச்சியம் வீழ்ச்சியுற்றது. இக்காலந்தொட்டு 1629 வரையும் விடுதலைபெறும் நோக்குடன் சிற்சில போராட்டங்கள் யாழ்ப் பாணத்தில் நடந்தன. எனினும் அவை சிறந்த அணிவகுப்புடன் மேற்கொள்ளப்பட்டவை அல்ல. அவற்றையெல்லாம் முறிய டித்து அடக்குவதிலே போர்த்துக்கீசர் வெற்றிகண்டனர். 1658 இல் இலங்கையை விட்டு வெளியேறும் வரைக்கும் யாழ்ப்பா ணத்தை அமைதியுடன் அடக்கியாளும் வலிமை போர்த்துக்கீச ருக்கு இருந்தது.
போர்த்துக்கீசர் மலையகத்தைக் கைப்பற்ற நிகழ்த்திய போராட் டம் மேற்கண்டதைவிட நீண்டதாகும். போர்த்துக்கீசச் சூழலில்

Page 36
62 s வரலாறு
வளர்ந்து இறுதியிலே அவர்களைத் துறந்து மலையக இராச்சியத் திலே தன் அதிகாரத்தை நிறுவிக்கொண்டவனன டொன் ஜ" வான் கோணப்பு பண்டாரன் என்னும் விமலதர்ம சூரியனை அடிப்படுத்தி அவனது இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்குடன் போர்த்துக்கீசர் செயலாற்றினர்.
1594 இல் மலையக இராச்சியத்தின் மீது போர்த்துக்கீசர் நிகழ்த்திய தாக்குதலை விமலதர்மசூரியன் முறியடித்தான். பின் னர் 1620 இலே அசவேடு தலைமை தாங்கி நடத்திய ஆக்கிரமிப் பும் தோல்வியில் முடிந்தது. அசவேடுவுக்குப் பின்னர் தளபதி யாக வந்தவர்களும் 1617 வரை மலையகத்தைக் கைப்பற்றுவதற் குச் செய்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. அத்தருணத்தில் இரு சாராருக்கும் அமைதி வேண்டியிருந்தமையால் 1617 இலே பத்தாண்டுச் சமாதான உடன்படிக் கையொன்று செய்யப் பட்டது. இவ்வுடன் படிக்கை காரணமாக, 1627 வரையும் கடுஞ் சிக்கலெதுவும் தோன்றவில்லை. உடன்படிக்கை முடிவுற்ற பின் 1629 இல் மலையகத்துள் நுழைந்த போர்த்துக்கீசர் செங்கடகலை நகரைத் தீக்கிரை ஆக்கினர். எனினும் இறுதியில் அவர்கள் பின்வாங்க வேண்டியோர் ஆயினர். இப்படையெடுப்பின்போது மலையக மன்னன் தந்திரமொன்றைக் கையாண்டு போர்த்துக் கீசர் படைகளை ஊ வாப்பிரதேசத்துக்கு அனுப்பிவிட்டான். இவ் வாருக 1630 இலே இரந்தெனிவலையில் நடந்த போரில், டீ சா உட்படப் போர்த்துக்கீசப் படைகளைச் சிங்கள வீரர் பூண்டோடு ஒழித்தனர். போர்த்துக்கீசர் இங்குப் பெற்ற இறு தித் தோல்வியினல் அவர்களின் ஆதிக்கம் இலங்கையிலே எத் துணை நலிவுற்றிருந்தது என்பதை, சிங்கள வீரர் கொழும்புக் கோட்டையை மூன்று மாத காலத்துக்கு முற்றுகையிட்டிருந் ததைக் கொண்டு தெளியலாம்.
1633-34 காலப்பகுதியில் மலையக மன்னனுக்கும் போர்த்துக் கீசருக்குமிடையே சமாதான உடன்படிக் கையொன்று ஒப்பே றிற்று. இவ்வாண்டின் பின்னர் செனரத் என்பான் இறக்க, அவனது மூத்த மைந்தன் இரண்டாம் இராஜசிங்கன் என்னும் பெயருடன் முடி சூடினன். இவனுடைய ஆட்சியோடு, இரு சாரா ருக்குமிடை நிலவிய உறவிலே புதியதோர் அத்தியாயம் தொடங் கிற்று. சீதாவக்கை இராஜசிங்கன் போலவே இரண்டாம் இராஜ சிங்கனும் போர்த்துக்கீசரை இலங்கையினின்றும் விரட்டிவிடு வதையே தன் குறிக்கோளாகக் கொண்டான். சீதா வக்கை இராஜசிங்கன் இக்குறிக்கோளை நிறைவேற்றுதற்குத் தடையாக இருந்தது, வெளிநாட்டுக் கப்பற்படைப் பலம் இன்மையே ஆகும். ஆகவே, இரண்டாம் இராஜசிங்கன் தொடக்க காலத்திலேயே இக் குறைபாட்டை நிவிர்த்தி செய்வதிற் கவனஞ் செலுத்தினன். பதின் மூன்ரும் நூற்ருண்டின் தொடக்கத்திலிருந்து கீழைநாட்டு வணிகத்தில் ஈடுபாடு கொண்ட ஒல்லாந்தரின் கப்பற்படை அக் காலத்திலே இந்து சமுத்திரத்தில் நுழைந்திருந்தது. அது மட்டு மன்றி, ஒல்லாந்தத் தூதுவர் மலையக அரசுடன் தொடர்பு கொள்ளவும் முயன்றனர். இவ்வாறு, இராஜசிங்கன் எதிர்பார்த்தி ருந்த வாய்ப்புகள் கிட்டின. மலையக மன்னனுக்கு ஒல்லாந்தரின் உதவி கிடைக்குமுன் அவனைத் தாக்கக் கருதிய அக்காலத்துப்

ஒல்லாந்தர் காலம் - 68
போர்த்துக்கீசத் தளபதியாகிய டியோகோ டி ம்ெலோ என்பான் பெரும்படை யொன்றைத் திரட்டிச்சென்று மலையக இராச்சியத் துடன் மோதினுன். மலையகத்தின் நுழைவாயில் போன்ற கன் னுெருவ என்னுமிடத்தில் நடந்த போரின் இறுதியில், போர்த்துக்கீசப் படை நிர்மூலமாக்கப்பட்டது. இவ்வாரு க ஒரு பத்தர்ன்டுகளுள் இரு தடவைகள் போர்த்துக்கீசர் மலையகத்து வீரராலே தோற்கடிக்கப்பட்டமையால், போர்த்துக்கீசரை இலங் கையினின்றும் துரத்தித் தீர்ப்பது என இராஜசிங்கன் கொண்ட உறுதி மேலும் திடம் பெற்லாயிற்று.
1638 இல் ஒல்லாந்தருக்கும் இராஜசிங்கனுக்குமிடையே உடன் படிக் கையொன்று உருவாயிற்று. அதன் பிரதான நோக்கம் போர்த்துக்கீசரை இலங்கையினின்றும் விரட்டியடிப்பதே. இக் காலந்தொட்டு 1658 வரைக்குமுள்ள சிக்கலான காலப்பகுதியில் நாம் பிரதானமாகக் காண்பது யாதெனில், ஒல்லாந்தரின் உதவி யுடன் இராஜசிங்கன் போர்த்துக்கீசரைத் தாக்க, அவர் வசமி ருந்த அரண்களும் பிரதேசங்களும் ஒவ்வொன்ருக இழக்கப் பட்டன என்பதையேயாம். 1656 இலே கொழும்பையும் அவர் கள் இழந்தனர். 1657இல் யாழ்ப்பாணக் குடா நாட்டைவிட்டும் துரத்தப்பட்டனர். இராஜசிங்கனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையே நிலவிய உறவும் கால கதியிலே பழுதுபட்டதாயினும் போர்த்துக் கீச ஆதிக்கத்தை ஈழத்தினின்றும் முற்ருக களைந்தெறிவதென்ற இராஜசிங்கனின் பிரதான குறிக்கோள் நிறைவேறியமை முக்கிய மானதொரு காரியமாகும். S.
1597 இலே போர்த்துக்கீசர் கோட்டை இராச்சியத்தைக் கைப்பற்றிய போது அங்கு சிறப்புற நிறுவப்பட்டிருந்த பரிபாலன முறையைப் பயன்படுத்தியே தம் நோக்கங்களை நிறைவேற்ற முயன் றனர். உயர் பதவிகளுக்குப் போர்த்துக்கீச இனத்தாரை நியமித் தனர் எனினும், ஏனைய துறைகளில் அவர்கள் சிறுச்சிறு மாற்றங் களையே செய்தனர். பரிபாலன அமைப்பின் அடிப்படையை அவர்கள் மாற்றவில்லை. 2. ஒல்லாந்தர் காலம்
கீழ்த் திசை நாடுகளுடன் வணிகஞ் செய்யும் நோக்குடன், 16 02 இலே ஒல்லாந்த கிழக்கிந்தியக் கம்பனி நிறுவப்பட்டது. அவ் வணிகக் கம்பனி இலங்கையுடன் முதன்முதலாகத் தொடர்பு பூண்டதும் 1602 ஆம் ஆண்டிலேயாம். மலையக மன்னன் முத லாம் விமலதர்ம சூரியன் (1591-1604), தாழ்நிலப் பிரதேசங்களை அடிம்ைப்படுத்திவிட்ட போர்த்துக்கீசரைத் தன் பரம ைவரிகளாக மதித்துப் போரில் ஈடுபட்டிருந்த காலம் அது. தன் எதிரிகளாகிய போர்த்துக்கீசரை விரட்டியடிப்பதற்குப் புறநாட்டு உதவியை விமலதர்மசூரியன் நம்பியிருந்தானபினும், 1602 இலே முதன் முதலாக ஏற்பட்ட ஒல்லாந்தர் தொடர்பினலோ 1615 இல் உருவாகிய உறவுகளினலோ முக்கியமான பயன் யாதும் கிட்ட வில்லை.
ஈழத்துக்கும் ஒல்லாந்துக்குமிடையே நிலையான உறவு தோன்று வதற்கு வித்திடப்பட்டது, மலையக மன்னன் இரண்டாம் இராஜ சிங்கன் (1629-1687) காலத்திலே யாம். 1638 மே மாதத்தில்

Page 37
64 வரலாறு
ஒல்லாந்தர்க்கும் இரண்டாம் இராஜசிங்கனுக்குமிடையே உடன் படிக்கையொன்று உருவாயிற்று. ஈழநாட்டிலே ஒல்லாந்தரின் ஆதிக்கம் புகுதற்கும், பிற்காலத்திலே ஒல்லாந்தருக்கும் மலையக மன்னர் க்குமிடையே கருத்து வேறுபாடுகளும் பூசல்களும் தோன் றுவதற்கும் இவ்வுடன் படிக்கையே காலாயிற்று. இது இரு சாரார்க்கும் பொதுப்பகைவராகிய போர்த்துக்கீசரை எதிர்க்கும் பிரதான நோக்குடன் எழுந்த ஒரு நட்புடன் படிக்கையாகும்.
இக்காலந்தொட்டு ஈழத்தில் ஒல்லாந்தர் ஆதிக்கம் பரவலா யிற்று. அவர்கள் மேற்கூறிய உடன்படிக்கையிற் கைச்சாத்திடு முன்பே மட்டக்களப்பிலிருந்த போர்த்துக்கீசக் கோட்டையைக் கைப்பற்றினர்; சிங்களப்படையினரின் உதவியுடன், 1639 இலே திருக்கோணமலையையும், 1640 இலே காலியையும் கைப்பற்றி னர். ஆயினும், சிறிது காலஞ் செல்வதற்கிடையில், மேற்கூறிய உடன்படிக்கையில் இடம்பெற்ற சில வாசகங்களை வியாக்கி யானஞ் செய்வதிலே இராஜசிங்க மன்னனுக்கும் ஒல்லாந்தருக்கு மிடையே கருத்து வேறுபாடு உண்டாயிற்று. போர்த்துக்கீசரிட மிருந்து கைப்பற்றிய கிராமங்களையும் கோட்டைகளையும், மன் னன் விரும்பினுல் மட்டுமே, ஒல்லாந்தர் தம் பொறுப்பில் வைத்தி ருக்கலாமென இராஜசிங்கன் வசம் இருந்த உடன்படிக்கைப் பிரதி கூறிற்று; ஒல்லாந்தர் வசமிருந்த பிரதியிலோ மன்னன் விரும்பினல் மட்டுமே என்ற பகுதி விடுபட்டிருந்தது. இது பற்றி மலையகத்தார் ஒல்லாந்தரை வினவியபோது, போர்த்துக் கீசர் வசமிருந்த கோட்டைகளைக் கைப்பற்றுவதற்கு ஆன செலவு களை மலையகத்தார் இறுக்கும் வரைக்கும் அவ்விடங்கள் தம் ஆதிக் கத்திலேயே இருக்குமென ஒல்லாந்தர் கூறினர். 1641 இல் ஐரோப்பாவிலே போர்த்துக்கீசருக்கும் ஒல்லாந்தருக்குமிடையே தோன்றிய சமாதானத்தின் பயணுக, இலங்கையிலும் அவர்களி டையே சமாதானம் நிலவலாயிற்று. ஐரோப்பாவிலே தோன்றிய சமாதானம் 1652 இல் முடிவெய்தி, 1856 இலே மீண்டும் போராட்டுத் தொடங்கிற்று. 1656 மே மாதத்திலே கொழும்புக் கோட்டையையும், 1658 இலே மன்னர், யாழ்ப்பாணமாகிய இடங்களையும் போர்த்துக்கீசரிடமிருந்து ஒல்லாந்தர் கைப்பற்றி னர். இப்போர்களில் மலையகத்துப் படைகள் தரைத் தாக்குதல் களை மேற்கொண்டு ஒல்லாந்தர்க்கு உதவிபுரிந்தன.
போர்த்துக்கீசரிடமிருந்து கைப்பற்றிய பிரதேசங்கள் பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளின் விளைவாக, இரண்டாம் இராஜசிங்க மன்னனும் அவனுக்குப் பின்னர் அரியணையேறிய மலையக மன்னர் களும் ஒல்லாந்தருடன் பூண்டிருந்த உறவு சீர்கேடுற்றது. ஈழ நாட்டு வியாபாரத்தைத் தமக்கிசைவாகக் கட்டுப்படுத்துதற்கு ஒல்லாந்தர் முயன்றமையால், அவ்வுறவு மேலும் மோசமாயிற்று. ஆணுல், இரண்டாம் இராஜசிங்கனுக்கும் ஒல்லாந்தருக்கு மிடையே நிகழ்ந்த போர்களின் பின், வேண்டாவெறுப்புடனேனும் ஒருவாறு சமாதானங் காண்பது இரு சாராருக்கும் அவசியமா யிற்று. இதற்குச் சில காரணங்கள் உள. தமது ஆட்சிக்குட் பட்ட பிரதேசங்களிலிருந்து அதிக பட்சப் பொருளாதாரப் பயனை ஈட்டுதற்கு, மலையகத்தாரின் உதவி ஒல்லாந்தருக்கு வேண்டிய தாயிற்று. தமிழ் நாட்டிலே ஒல்லாந்தருக்கு மாருகக் கலகங்

ஒல்லாந்தர் காலம் 65
களைத் தூண்டிவிடுதற்கும் மலையக அரசுக்கு வாய்ப்பு இருந்தது. ஒல்லாந்தர் தம் பிரதேசத்திற் சேகரித்த யானைத் தந்தங்களை மலைநாட்டு மன்னனுக்குச் சொந்தமான இடங்களினுாடாகவே யாழ்ப்பாணத்து வணிக நிலையங்களுக்கு அனுப்பவேண்டியிருந்தது. அதற்கு மலையக மன்னனின் அனுமதி அவசியமாயிற்று. மன்ன னது நல்லெண்ணம் இல்லையாயின், ஒல்லாந்தர்க்கு அவ்வனுமதி கிடைக்கமாட்டாது. அன்றியும் மலையக இராச்சியத்துக்குச் சொந்தமான பிரதேசங்களிலே கறுவாப்பட்டை சேகரிப்பதும் ஒல்லாந்தருடைய வழக்கமாக இருந்தது. அதன் பொருட்டு ஆண்டுதோறும் மலையக மன்னனின் அனுமதியைப் பெறவேண்டி யும் இருந்தது. மேலும், இலங்கையிலே தம் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களைப் பொறுத்த வரையில், சட்டப்படியான உரித்து யாதும் ஒல்லாந்தருக்கு இருக்கவில்லை. 1638 ஆம் ஆண்டு உடன்படிக்கை ஒருவர்க்கு ஒருவர் உதவும் நோக்குடன் ஒப்பேற் றப்பட்ட நட்புறவு உடன்படிக்கை மட்டுமே யாம். அவ்வுடன் படிக்கை ஒப்பேறிய போது, முழு நாட்டுக்கும் மலையக மன்னனே மேலாட்சியாளன் என்பதை ஒல்லாந்தர் ஏற்றுக்கொண்டனர். இதன்படி மலையக இராச்சியத்தின் பால் ஒல்லாந்தர் அதிக பகைமை பாராட்டாது நடந்துகொள்ள வேண்டியோர் ஆயினர். மறுபுறத்தில், தென்னிந்தியாவுடன் தொடர்பு வைத்தற்கும் பெளத்த மத அலுவல்களின் பொருட்டுப் பர்மாவுடனும் சீயத் துடனும் (தற்காலத் தாய்லாந்து) தொடர்பு வைத்தற்கும் இடையிடையே ஒல்லாந்தரிடம் நாவா யுதவி பெறுதல் மலையக அரசுக்கு-அவசியமாயிற்று.
இரண்டாம் இராஜசிங்க மன்னனுடன் ஒல்லாந்தர் நிகழ்த்திய போர்களின் பின்னர், தமக்கு வாய்ப்பான உடன்படிக்கை யொன்றை மலையக மன்னனுடன் செய்து கொள்வதற்கு அவர் கள் சில தடவை முயன்றனர். இராஜசிங்க மன்னன் காலத்தே நடந்த போர்களின் பின்னர், ஒல்லாந்தரின் தனியுரிமையாயி ருந்த துறைமுகங்களுக்கு விடுதலையளிக்குமாறு மலையகத்தார் G35 T if gotri.
ஈழநாட்டுத் துறைமுகங்களை மலையகத்தார்க்குத் திறந்து விடு மாறு 1696 இலும் 1703 இலும் ஆலோசனைகள் விடுக்கப்பட்டன வேனும், அவற்றினல் எவ்வித பயனும் கிட்டவில்லை. வான் இம் ஹொஃப் என்ற ஆள்பதியின் ஆட்சிக்காலத்தில் (1736-1746) இந்தியாவுடன் வணிகஞ் செய்தற்கு மட்டுப்பாடுள்ளதோர் உரி மையை மலையகத்தார்க்கு வழங்கும் பொருட்டுப் பிறிதொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. ஆயினும், ஒல்லாந்த உயர் அதிகாரிகளின் எதிர்ப்புக் காரணமாக, அம்முயற்சியும் பலன் தரவில்லை. அன்றியும் 1760-66 வரையான போர்க்காலத்திலே, இந்த நிலைமையே தொடர்ந்து நிலவியது.
ஈழநாட்டின் துறைமுகங்களைத் தம் வணிக அலுவல்களின் பொருட்டுத் திறப்பிப்பதற்கு 1752 அளவில் மலையகத்தார் மீண் டும் முயன்றனர். 1752 இல் ஞானதீட்சை (உபசம்பதா ச்) சடங் கின் பொருட்டுச் சீயத்திலிருந்து பிக்குமாரை வருவித்தற்கு ஒல்லாந்தரின் நாவாயுதவி கிடைத்தமையால், துறைமுகங்களைத்

Page 38
66 வரலாறு
திறந்துவிடவேண்டும் என்ற கோரிக்கை அப்போதைக் குச் சற்றே அடங்கலாயிற்று.
இவ்வாரு ன தருணத்தில், ஒல்லாந்தருடைய பிரதேசங்களிலே கலகங்கள் பல தோன்ற, அங்கெல்லாம் அமைதி குலைந்தது. மோசமான நிலைமைகளுக்குக் கட்டுப்பட்டு ஊழியஞ் செய்ய வேண்டியிருந்த கறுவாப்பட்டை உரிப்போரே இக்கலகங்களுள் முதலாவதற்குக் காரணராக இருந்தனர். ஆண்டொன்றில் எட்டு மாதம் வரையான காலத்துக்கு, மலைப்பிரதேசம் உட்பட்ட தொலை தூரமான இடங்களுக்குச் சென்று முழுநேர வேலையில் ஈடுபடும் கட்டாயம் கறுவாப்பட்டை உரிப்போர்க்கு இருந்தது. ஐரோப் பாவிலே கறுவாவின் விலை உயர்ந்தமையால், அதன் மதிப்பு அதிகமாயிற்று. ஆனல், ஆண்டுதோறும் வேண்டப்படும் கறு வாவை வழங்குதல் கடினம் என்பதை இலங்கையிலிருந்த ஒல் லாந்த அதிகாரிகள் உணர்ந்தனர். பிரதானமாக, ஒல்லாந்த ருடைய பிரதேசங்களிலே, உரிக்கத்தக்க கறுவாவின் தொகை குன்றிப்போனமை காரணமாகவே இந்நிலைமை உருவாயிற்று. சேனைப் பயிர்ச் செய்கையின் பொருட்டும் வீட்டுத் தோட்டத்தின் பொருட்டும் கறுவாக் காடுகளை அழிக்க நேர்ந்தமையால், கறு வாப்பட்டை உரிப்போர் வழங்கக்கூடிய கறுவாவின் தொகை குறைவுற்றது; இக்குறைபாட்டுக்காக அத்தொழிலில் ஈடுபட்டிருந் தோர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். 1757 இல் நிகழ்ந்த கறுவாப்பட்டை உரிப்பாளர் கலகத்துக்கு இதுவே முதன்மையான ஏதுவாகும்.
இவ்வாறு கறுவாப்பட்டை உரிப்பாளரின் கலகம் மூண்ட காலத் தில், ஒல்லாந்தர் ஆட்சிக்குட்பட்ட தாழ்நாட்டுப் பிரதேசங்களில் மேலும் பல கலகங்கள் தோன்றின. இவை, 1600 இலே மலைய கத்துப் படைகள் தாழ்நாட்டு ஒல்லாந்தப் பிரதேசங்களை ஆக்கிர மிக்கும் காலம் வரை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. கறுவா சேகரித்தலில் நேர்ந்த தொல்லைகள் காரணமாக, கறு வாக் காடுகளை அழித்துவிட்டுக் கமத் தொழிலையும் சிறுதோட்டத் தொழிலையும் விரிவாக்கும் போக்கைத் தவிர்க்கும் நோக்குடன் லோட்டன் (1752-1757), ஸ்ரோயிடர் (1757-1762) என்னும் ஆள்பதிகள் கடுஞ் சட்டங்களை இயற்றினர். கறுவா வளமுள்ள பிரதேசங்களில் வதிந்த மக்களை வேறு இடங்களிலே குடியிருத்து தற்குக் கூட 1758 இலே ஸ்ரோயிடர் திட்டமிட்டான். சேனைச் செய்கைப்பொருட்டு காடு வெட்டுதலை முற்ருகத் தடுக்கும் சட்ட மொன்றை இயற்றுதற்கு 1756 இல் லோட்டன் முயன்ரு ஞயினும் அம்முயற்சியில் வெற்றியீட்டினன் இல்லை. அவ்வாறே 1756 இல் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின்படி, ஐந்தாண்டுக் காலத்துள் அரசின் அனுமதியின்றிச் செய்யப்படும் சிறு தோட்டங்களை நாச மாக்குமாறு அவன் பணித்தான், ஸ்ரோயிடரும் இதே கொள் கையைக் கடைப்பிடித்தான். அத்துடன், கறுவா வளமுள்ள பிரதேசங்களில் அரசின் அனுமதியுடனே அது இன்றியோ செய் யப்பட்ட சகல சிறு தோட்டங்களையும் நாசஞ்செய்யுமாறு அவன் 1757 இலே கட்டளையிட்டான். அவ்வகைப் பிரதேசங்களில், இராசகாரியத்துக்குக் கைம்மாரு கப் பிரயோசனமெடுக்கும் பொருட்டு நிலங்களைப் பெற்றிருந்தோர்தாமும் அந்நில மீது தமக்

ஒல் லாந்தர் GTM id 67 ܗܝ
குள்ள உரித்தை நிறுவ இயலாதிருப்பின், அவற்றை அரசுக்கு மீட்டளித்தல் வேண்டுமென 1758 இற் கட்டளை விதிக்கப்பட்டது. இத்தகைய கட்டளைகள் காரணமாக, பொதுமக்கள் பெரிதும் அமைதி இழந்தனர்.
மேலும், நிலுவையாய் நின்ற நெல் வரியை அறவிட முயன்ற மையும், தத்தம் காணி உரித்தை நிறுவுமாறு குடிமக்களை வற் புறுத்தித் தோம்புகளைத் தயாரித்தமையும், அதிகாரிகளுக்கெதி ராக எழுந்த முறைப்பாடுகளுமாகிய இவை யாவும் 1757 முதல் 1760 வரையான காலப்பகுதியில் எழுந்த கலகங்களுக்குப் பெரி தும் காலாயின. மலையகத்து மன்னனின் ஆதரவு தமக்குக் கிடைக்குமென்ற துணிவு இக்கலகக்காரர்களுக்கு ஊக்கமளித்தது. மாத்தறை தொடக்கம் நீர் கொழும்பு வரையுள்ள கரையோரப் பிரதேசங்களில் இக்கலகங்கள் பரவலாயின. இவற்றுக்கிடையே, துறைமுகங்களைத் திறந்துவிடுதல் பற்றிய பிரச்சினைகள் காரண மாக, ஒல்லாந்தப் பிரதேசங்கள் மீது படையெடுத்தற்கு மலையக மன்னன் தயாராகிக்கொண்டிருந்தான். இவ்வாரு க அவன் 1760 இல் ஒல்லாந்தப் பிரதேசங்கள் மீது படையெடுத்தான்.
பற்றேவியாவிலுள்ள ஒல்லாந்த அதிகாரிகள் இத்தருணத்திலே மலையக மன்னனுடன் நட்புறவு உடன்படிக்கை செய்துகொள்ள விரும்பினர். எனினும், ஆள்பதியாகிய ஸ்ரோயிடர், போர் புரிவதையே விரும்பினன். இத்தருணத்திலேதான் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பனியின் சார்பில் ஜோன் பயிபஸ் என்பான் 1762 இலே மலையக மன்னனின் மாளிகைக்குத் துரது சென் முன். மலையக மன்னன் ஒல்லாந்தருக்கு எதிராகத் தான் தொடுத்த போருக்குச் சென்னையிலிருந்த ஆங்கிலேயரிடமிருந்து தீவிரமான ஆதரவு கிடைக்குமென எதிர்பார்த்தான். பயிபஸோ அதுபற்றி எவ்வித வாக்குறுதியையும் நல்காமல், வணிக நிலையங்களையும் சலு கைகளையும் பெற்றுக்கொள்ள எண்ணினன். ஆகையால், அத்துரதி னற்பயனெதுவும் விளையவில்லை. எனினும், இத்தூது பற்றிய செய்தி பற்றேவியாவிலிருந்த ஒல்லாந்த அதிகாரிகளுக்கு எட்டியமையால், அன்னர் மலையக மன்னன்பாற் கொண்டிருந்த மனப்பான்மை மாறலாயிற்று. மலையக இராச்சியத்தை அடிப்படுத்தித் தம் ஆட்சிப்புலம்பற்றி நிலைபேருன உரிமையை நிலைநாட்டுதற்கும், மலையக மன்னன் பிற நாட்டாருடன் தொடர்பு தொடங்குவ தைத் தடுப்பதற்கும், போர் புரிதலே தக்கதெனப் பற்றேவிய அதிகாரிகள் உணர்ந்துகொண்டனர்.
1762 இலே ஆள்பதி ஸ்ரோயிடர் மீட்டழைக்கப்பட, அவ னுக்குப் பதிலாக யான் ஃபன் எக் என்பான் (1762-1764) நியமனம் பெற்ருன். அவன் மலையகப் படைகளை ஒல்லாந்தப் பிரதேசங்களிலிருந்து துரத்தி, மலையக இராச்சியத்துத் தலைநக ரான செங்கடகலை வரைக்கும் வெற்றிகரமாக படையெடுத்துச் சென்றன். எனினும், மன்னனை (கீர்த்தி சிறீ மேவனை)ச் சிறைப் பிடித்தற்கும், ஒல்லாந்தர் விருப்பின்படி உடன்படிக்கை யொன்றை உருவாக்குதற்கும் அவனல் இயலாது போயிற்று. அவனுக்குப் பின்னர் பதவியேற்ற விலம் ஃபோக் என்பான் மலையக இராச்சியத்துக்கு எதிராக மீண்டும் ஒருமுறை படை யெடுத்துச் சென் முன். அதற்கிடையே, சமாதானப் பேச்சு

Page 39
68 வரலாறு
வார்த்தைகளையும் தொடங்கினன். பற்பல கருத்து வேற்றுமை களுக்கிடையே 1766 பெப்ரவரி 15 ஆம் நாள் இரு சாராருக்கு மிடையே சமாதான உட்ன்படிக் கையொன்று கைச்சாத்தாயிற்று. இலங்கைத் தீவைச் சுற்றி ஒரு (சிங்கள) மைல் அகலமுள்ள பிர தேசத்தை ஒல்லாந்தருக்கு அளிப்பதென்றும், போர் தொடங்கிய சமயத்தில் ஒல்லாந்தருக்கு உரியனவாயிருந்த பிரதேசங்களைச் சட்டப்படியாக ஒல்லாந்தர்க்கு அளிப்பதெனவும் மலையக மன் னன் ஒப்புக்கொள்ளவேண்டியவன் ஆயினன். இவ்வாரு க மலையக இராச்சியமானது ஒல்லாந்தப் பிரதேசங்களால் முழு வதும் சூழப்பட்டதோர் இராச்சியமாகப் புறவுலகினின்றும் பிரித்து ஒதுக்கப்பட்டது.
பயிபஸ் என்பானின் தூது பலனற்றுப் போனதன் விளைவாக, ஆங்கிலர் மீது மலையகத்தார் வைத்திருந்த நம்பிக்கை சிதைந்து போயிற்று. அதனல், இந்தியாவிலிருந்த ஆங்கிலரால் மலையக மன்னனிடம் அனுப்பப்பட்ட ஹியு போயிட் என்பானின் தூதுப் பயணமும் பயனற்றுப் போயிற்று. இதற்கிடையில், பிரஞ்சுப் புரட்சி காரணமாக ஒல்லாந்திற் குழப்பம் ஏற்படவே, ஒல்லாந்து நாட்டின் ஆட்சியாளன் இங்கிலாந்துக்கு ஓடிப்போயினன். கிழக்குலகில் ஒல்லாந்தர் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்கள் பிரஞ் சுக்காரர் வசமாவதைத் தடுக்கும் பொருட்டு, அவற்றை ஆங்கி லர்க்குக் கையளிக்குமாறு பணித்து அவன் கடிதம் அனுப்பினன். இக்கடிதம் இலங்கையிலிருந்த ஒல்லாந்த அதிகாரிகளுக்கும் கிடைத்தது. முதலில் அதற்கு எதிர்ப்பு இருந்தபோதிலும் இறு தியில் அதன்பிரகாரம் இலங்கையில் ஒல்லாந்தர்க்கிருந்த பிர தேசங்கள் 1796 இலே பிரித்தானியர்க்குக் கையளிக்கப்பட்டன.
ஒல்லாந்தரின் பொருளாதாரக் கொள்கை
ஒல்லாந்த கிழக்கிந்தியக் கம்பனியானது. ஏகபோக நிறுவன மாக (அதாவது தனியுரிமைபெற்ற நிறுவனமாக) இயங்கிற்று. இலங்கையிலும், கறுவா வியாபாரத்தைப் பிரதானமாகக் கொண்ட வணிக முயற்சிகளிலே தனியுரிமையை நிலைநாட்டுவதே அதன் நோக்கமாயிற்று. கறுவா வணிகம் ஒருபுறமாக, இந்தி யாவிலிருந்து அரிசியையும் ஆடையையும் இறக்குமதி செய்வதும், இலங்கையிலிருந்து யானைத் தந்தங்களையும் பாக்கையும் சங்குகளை யும் கைப்பணிப் பொருள்களையும் ஏற்றுமதி செய்வதுமாகிய இறக்குமதி-ஏற்றுமதி வியாபாரமும் அக்காலத்தில் நடை பெற்றது. தொடக்கத்தில், இவ்வியாபாரம் பெரும்பாலும் முஸ் லிம்களின் கையிலும் செட்டிமார் கையிலுமே இருந்தது. அமைதி யான போட்டி மூலம், இவ்வியாபாரத்திலே போதிய பங்குபெறல் சாலா தென . உணர்ந்த ஒல்லாந்தர், 1673 அளவில் இவ்வியா பாரத்தைத் தமது தனியுரிமையாக நிறுவிக்கொண்டனர்.
ஒல்லாந்தர் நிறுவிக்கொண்ட இத்தனியுரிமை இலங்கை மக்க ளின் பொதுநலனுக்குப் பெரிதும் பாதகமாயிற்று. இந்த வர்த் தகத் தனியுரிமை காரணமாக, மலையக மன்னன் தன் துறை முகங்களிலிருந்து பெற்றுவந்த தீர்வைகளையும் ஏனைய வருவாய் களையும் இழந்தான். பல்வேறு வர்த்தகப் பண்டங்களை-குறிப்

இலங்கையிலே ஒல்லாந்தர் பிரதேசங்கள்
1766 ஆம் ஆண்டிற்கு முன் ஒல்லாந்தரிடமிருந்த பிரதேசங்கள்
1760 ஆம் ஆண்டு உடன்படிக் -- கைக்குப் பின் ஒல்லாந்தர் வசமான பிரதேசம்
யாழ்ப்பாணம் 8 களுத்துறை யாழ்ப்பாணக் கொமாண்டரி 9 g5 fir 66 திருக்கோணமலை 10 காலி கொமாண்டரி கொட்டி யாரம் 11 மாத்தறை கற்பிட்டி 12 மட்டக்களப்பு
நீர் கொழும்பு 13 (, gio 9
கொழும்பு
14 கொழும்பு கொமாண்டரி

Page 40
70 வரலாறு
பாக, 'கபடாகமம்’ எனப்படும் தன் காணிகளிலிருந்து மன்னன் பெற்றுவந்த பாக்கை-பிறரெவர்க்கும் விற்காது ஒல்லாந் தர்க்கே விற்கவேண்டியதாயிற்று. இவையெல்லாம் ஒல்லாந் தர்க்கு மிகக் குறைந்த விலைக்கே விற்கப்பட்டன. இவ்வாறே, உயர் குடிப் பிறந்த பிரதானிகளின் வருவாயும் குறைந்தது. கிராம வாசிகளும் தம் பண்டங்களைக் குறைந்த விலைக்கே விற்கவேண் டியவராக இருந்தபடியால், அன்னர் சிறுச்சிறு வருவாய் பெறு தற்கிருந்த ஒரே வழியும் அற்றுப்போய்விட்டது. துணி இறக்கு மதி முற்ருக ஒல்லாந்தர் வசமே இருந்தபடியால், அவர்கள் தீர்மானித்த உயர் விலைக்கே மக்கள் தமக்குத் தேவையான துணியை வாங்கவேண்டியவராயினர். இனி, ஒல்லாந்தரின் வர்த்தகத் தனியுரிமை காரணமாக, இந்திய இலங்கை வர்த் தகத்திலே இடைவியாபாரிகளாக இதுகாறும் வர்த்தகஞ் செய்து வந்த முஸ்லிம்களும் செட்டிமாரும் பெரிதும் அல்லற்பட்டனர். கறுவாவும் மிளகும் பாக்கும் போன்ற பண்டங்கள் மலைநாட்டி லேயே கணிசமாக இருந்தபடியால், ஒல்லாந்தரின் வர்த்தகத் தனியுரிமை காரணமாக, மலைநாடே குறிப்பாகப் பெரு நட்ட மடைந்தது. - சமூகக் கொள்கை
ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்திலே தாழ்நாட்டில் வாழ்ந்த மக்கட் சமூகத்தில், ஆழ்ந்த கன்ற மாற்றம் யாதும் நிகழ்ந்ததில்லை எனலாம். ஒல்லாந்தரின் பிரதான குறிக்கோள் வர்த்தகமே. எனவே, அதற்கு இடையூறு விளைவிக்காத வரைக்கும் உண்ணுட் டுச் சமூக அமைப்பிலே அவர்கள் தலைப்போட விரும்பவில்லை. இலங்கையிலே நெடுங்காலமாக நிலைபெற்றுவந்த சாதி முறையும் பரம்பரையான ஆட்சி வர்க்கத்தின் அமைப்பும், ஒல்லாந்த ருடைய ஆட்சியால் மாற்றம் யாதும் அடைந்ததாகத் தெரிய வில்லை. சாதிமுறைக்கிணங்க, இலங்கையர் செய்துவந்த இராச காரியச் சேவைகளையெல்லாம் ஒல்லாந்தர் தமது நிருவாக நலன் கருதி மாற்றமின்றியே பயன்படுத்தி வந்தார்கள். இலங்கை வாசிகள் குறித்த இராசகாரியச் சேவைகளைப் புரிந்து, அவற்றுக்கு ஈடாகத் தமது வாழ்க்கைப் பொருட்டுக் காணிகளைப் பெற்றனர்.
ஆனலும், ஒல்லாந்தரின் நிருவாகத்திலே, தாழ்நாட்டுப் பிர தேசங்களிற் சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்ததும் உண்மையே. ஒல்லாந்தரின் நிருவாகத்தோடு சம்பந்தப்பட்ட சிங்களத் தலை மைக்காரரும் (விதானை மார் ஆகியோர்) அவர்தம் குடும்பங்களும் விசேட நலன்களை அனுபவித்ததோடு, சமூகத்தின் உயர் பதவி களிலே திகழ்வதற்கும் வாய்ப்புப் பெற்றனர். ஒல்லாந்தரின் பொருளாதார முயற்சிகளுக்கு உதவியாகப் பணிபுரிந்த பல்வேறு சாதிகளின் தலைமைக்காரரும் இத்தகைய நன்மைகளைப் பெற் றனர். இவ்வாறு பரம்பரை பரம்பரையாகத் தாழ்நாட்டிலே ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த சாதிமுறைமையின் அடிப்படை யானது மெல்ல மாற்றமடையத் தொடங்கிற்று. கம்பனியின் சேவையிலே பணிபுரிந்து வந்த உள்ளூர் அதிகாரிகள்-முதலி யார் மாரும் முகாந்திரங்களும் போன்ருேர்-சமூகத்திலே தலை யிடம் பெற்று உயர்ந்த மை இங்குக் குறிப்பிடவேண்டிய ஒரு மாற்றம் எனலாம்.

ஆங்கிலேயர் z.T. ü. 71
ஆரம்பத்திலே, பெளத்தம், இந்து, இஸ்லாம் எனும் மதங் களுக்கு மாருக ஒல்லாந்தர் இடையூறு செய்ததுமல்லாமல், முன் னம் போர்த்துக்கீசர் பரப்பிய கத்தோலிக்க மதத்துக்கு மாரு கவும் செயற்பட்டனர். இத்தகைய இடையூறுகள் இருந்தபோதி லும், மலைநாட்டிலே தோன்றிய பெளத்த விழிப்புணர்ச்சியானது தாழ்நாட்டிலும் பரவிற்று. புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப் புதற்குக் கம்பனி செய்த முயற்சிகள் குறிப்பிடத்தக்க பயனளித்த தாகத் தெரியவில்லை.
பொதுவாக நோக்குமிடத்து, உண்ணுட்டு மக்களிடையே தமது பண்பாட்டைப் பரப்புதற்கு ஒல்லாந்தர் ஆர்வம் கொண்டிலர் எனும் உண்மை எளிதிற் புலப்படுகிறது. ஆகவே, புரட்டஸ் தாந்து மதமும் இடச்சு மொழியும் இந்நாட்டிற் சிறிய அளவுக் குப் பரவியது உண்மையேயாயினும், இந்நாட்டின் சமுதாயத் திலே அவற்றின் செல்வாக்கு ஆழமாகப் படிந்ததில்லை. பறங் கியர் என்ற மக்களினம் உருவானதை, ஒல்லாந்தரின் ஆட்சியால் இங்கு உண்டான ஒரு சமூக விளைவாகக் கருதலாம்.
மேலும், இலங்கை நாட்டின் சட்டக் கோவையிலே ஒல்லாந் தரின் செல்வாக்கைத் தெளிவாகக் காணலாம். நீதி பரிபால, னத்தின் முக்கியமான ஓர் அம்சமாக இன்றுவரை விளங்கி வரு கின்ற உரோமன் இடச்சுச் சட்டத்தை, ஒல்லாந்தரே இங்கும் கொணர்ந்தனர் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. யாழ்ப் பாணத் தமிழ் மக்களிடையே பரம்பரையாக வழங்கிவந்த வழ மைச் சட்டங்கள் யாவும் தேசவழமை எனும் பெயரில் ஒரு கோவையாகத் தொடுக்கப்பட்டதும் ஒல்லாந்தர் காலத்தி லேயாம்.
3. ஆங்கிலேயர் காலம்-பின்னணி
ஐரோப்பிய ஏகாதிபத்திய வாதிகளிடையே மூண்ட பிணக் குகள் காரணமாக இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் ஆங்கிலேயர் வசமாயின. ஐரோப்பாவிலே பிரான்சிய இராச்சி யத்தையும், ஐரோப்பாவுக்கு அப்பாலே பிரான்சிய சாம்ராச்சி யத்தையும் விஸ்தரிப்பதற்கு நெப்போ லியன் போனபாட் முயற்சி செய்தான். இதன் விளைவாக, ஆசியாவில் ஒல்லாந்தருக்கு உரித் தாயிருந்த பிரதேசங்கள் பிரான்சியர் வசமாகக்கூடிய நிலைமை உருவாகியிருந்தது. இப்பிரதேசங்கள் பிரான்சியர் வசமாவ தைத் தடுப்பதற்காகவும், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கத் தைப் பாதுகாத்தற்காகவும், இலங்கையின் கரையோரப் பிர தேசங்கள் பிரித்தானியரால் 1796 ஆம் ஆண்டில் ஒல்லாந்தரிட மிருந்து கைப்பற்றப்பட்டன. பிரான்சினல் ஏற்படக்கூடிய அபா யம் நீங்கிய பின்னர், இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை மீண்டும் ஒல்லாந்தரிடம் ஒப்படைக்கும் எண்ணம் ஆங்கிலேயருக் கிருந்தது; எனினும், ஆசியாவிலே தமது சாம்ராச்சியத்தைப் பாதுகாத்தல் சம்பந்தமாக இலங்கையின் முக்கியத்துவத்தை நீண்ட காலமாக அறிந்திருந்த ஆங்கிலேயர் அவ்வெண்ணத்தைக் கை விடலாயினர். இதன் விளைவாக, 1796 ஆம் ஆண்டி லிருந்து இலங்கையில் நிலவிய பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்ப

Page 41
72 வரலாறு
னியின் நிருவாகத்தில், பிரித்தானிய அரசு 1798 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலிருந்து ஈடுபடலாயிற்று. இதனுல் இலங் கையில் இரட்டையாட்சிமுறை நிலவியது. 1802 ஆம் ஆண்டிலே பிரித்தானிய அரசு முழு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுக் கொண் டதால், இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் யாவும் பிரித் தானிய முடிக்குரிய ஒரு குடியேற்றமாக மாறின.
மலைநாட்டுச் சுதந்திர சிங்கள இராச்சியத்தை, இயன்றவரை தமது ஆதிக்கத்திற்குக் கீழ்ப்பட்ட ஒர் இராச்சியமாக மாற்றும் எண்ணம் ஆரம்பத்திலிருந்தே பிரித்தானியர்க்கு இருந்துவந்தது. 1802 ஆம் ஆண்டிற்குப் பின்னர், இந்த எண்ணம் மாறி இலங்கை முழுவதையும் தமது ஆட்சியின்கீழ்க் கொண்டுவர வேண்டுமென்ற எண்ணம் பிரித்தானியரிடையே தலைதூக்கிற்று. இந்த எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு கண்டி இராச்சி யத்தில் நாயக்கர் வம்சத்தினருக்கும் சிங்களப் பிரதானிகளுக்கு மிடையே நிலவிய பேதங்களைத் தமக்குச் சாதகமாகக் கொண்டு, 1803 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் கண்டி மீது படையெடுத்தனர். ஆங்கிலேயரின் இப் படையெடுப்புப் படுதோல்வியுற்றது. 1815 ஆம் ஆண்டில், விக்கிரம ராஜசிங்கனுக்கும் சிங்களப் பிரதானி களுக்குமிடையே ஏற்பட்ட பிணக்குகள் தீவிரமடைந்ததால், ஆங்கிலேயரின் எண்ணம் நிறைவேறியது. இவ்வாறு, 1815 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 2ஆந் திகதி இலங்கை முழுவதும் முதன் முறையாக அந்நியர் ஆட்சிக்குட்பட்டது.
கண்டி இராச்சியத்தில் ஆங்கிலேயர் தமது ஆட்சியைத் தாபித்த தினத்திலிருந்து, ஆங்கில ஆட்சியாளருக்கும் மலையகச் சிங்களப் பிரதானிகளுக்குமிடையே கண்டி இராச்சியத்தின் அர சியல் நிலை குறித்துக் கருத்து வேறுபாடுகள் நிலவின. நாயக்க மன்னனை அரசு கட்டிலினின்றும் நீக்கிய பின்னர், பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழே தமது அதிகாரத்தைப் புராதுகாத்துக்கொள்ள லாம் என்று மலையகச் சிங்களப் பிரதானிகள் கருதினர். எனினும் மலையகத்தை அரைகுறைச் சுதந்திரமுள்ள ஓர் இராச்சியமாக நிருவகித்தல் பிரித்தானியருடைய நோக்கமாக இருக்கவில்லை. 1815 ஆம் ஆண்டு உடன்படிக்கையிலுள்ள உறுதிமொழிகளின் மூலம் மலையகப் பிரதானிகளையும் பொதுமக்களையும் தற்காலிக மாகத் திருப்திப் படுத்தலாம் என்றே ஆங்கிலேயர் நம்பியிருந் தனர். இந்நிலைமையே, 1818 ஆம் ஆண்டிற் கண்டியில் மூண்ட கலகத்திற்குக் காரணமாக இருந்தது. பிரித்தானிய ஆட்சியில் மலையகப் பிரபுகளின் அந்தஸ்தும் அதிகாரமும் நலிவுற்ற அதே வேளையில், பொதுமக்கள் தாம் முன்னர் ஒரு போதும் அனுபவிக் காத இன்னல்களை எதிர்நோக்க வேண்டியவராயினர். மேலும், உடன்படிக்கையில் இடம்பெற்ற உறுதிமொழிகளின்படி தாம் எதிர்பார்த்தவாறு பெளத்த சமயத்திற்குப் பாதுகாப்பு அளிக்கப் படாததால், பிக்குமாரும் அதிருப்தி அடைந்தனர். இவ்வாறு சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு மாருக உருவான எதிர்ப்பு, 1818 ஆம் ஆண்டில் கண்டி இராச்சியத்தின் சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாத்தற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு தேசியப் போராட்டமாகப் பரிணமித்தது. எனினும், பிர புக்களிடையே தேசத்துரோகிகள் இருந்ததால், இப்போராட்டம்

ஆங்கிலேயர் காலம் 73
வலியிழந்தது. இதன்விளைவாக பிரித்தானியப் படைப்பலத்தை எதிர்க்கக்கூடிய ஆற்றலைக் கலகக்காரர் இழந்ததால், 1818 ஆம் ஆண்டுக் கலகம் தோல்வியுற்றது. இதுவே சிங்கள இராச்சி யத்தின் சுதந்திரத்தைப் பாதுகாத்தற்கு நடாத்தப்பட்ட இறுதிப் போராட்டமாகும். பத்தொன்பதாம் நூற்றண்டின் முற்பாதி *யில் இரண்டு பிரதான நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஆங்கில ஆட்சியாளர்கள் முயற்சி செய்தார்கள். பிரித்தானிய ஆதிக் கத்தை நிலைநாட்டுவதற்கேற்ற ஒரு நிருவாக அமைப்பை உரு வாக்குதல் முதலாவது நோக்கம். பாதுகாப்புக்கு அவசியமான வீதிகள் ஆதியனவற்றை அமைத்தல் இரண்டாவது நோக்கம், இவ்விரு நோக்கங்களையும் நிறைவேற்றுவதற்கு அவர்கள் நட வடிக்கைகளை மேற்கொண்டார்கள். நிருவாக வசதி கருதி ஆங் கில அதிகாரிகளின் தலைமையிலே பல்வேறு திணைக்களங்களும், மாகாணங்களின் பரிபாலனத்திற்காக கச்சேரி முறையும் நிறுவப் பட்டன. ' கம்சபா' போன்ற தேசிய சுய நிருவாகத் தாப னங்கள் படிப்படியாகக் கீழ்நிலை யடையலாயின. இந்நாட்டின் பாரம்பரிய பிரதானிகள் வகுப்பைச் சேர்ந்தவர்கள், கச்சேரிதிணைக்கள நிருவாக முறையின் கீழ், ஐரோப்பிய அதிகாரிகளுக்குப் பணிவான கீழ்மட்டப் பிரதானிகள் வகுப்பினராக மாறினர். அவர்களுடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியபோதும், அவர் களது சேவை தமக்கு அத்தியாவசியம் என்பதை ஆங்கிலேயர் உணர்ந்து கொண்டனர். எனினும், ஐரோப்பிய சிவில் சேவை யாளரே நாட்டின் நிருவாகத்தை உரிய முறையிற் கொண்டு நடாத்தினர். பழைய மரபு முறையிலேயே மலையகம் ஒரு தனிப் பட்ட பிரதேசமாக நிருவகிக்கப்படும் என்று 1815 ஆம் ஆண்டிற் கொடுத்த வாக்குறுதியை ஆங்கிலேயர் மீறி, 1832 ஆம் ஆண்டில், கோல் புரூக் சீர்திருத்தங்களுக்கு ஏற்ப மலையகப் பிரதேசங்களை கரையோரப் பிரதேசங்களுடன் இணைத்து, ஒரு பொது நிருவாக முறையினை இலங்கை முழுவதற்கும் உருவாக்கினர். அதே சம யம், குறிப்பாக 1818 ஆம் ஆண்டுக் கலகத்தினற் பெற்ற அனு பவங்களுக்குப் பின்னர், பாதுகாப்புக்காகவும் தூரப் பிரதேசங் களைத் தலைநகருடன் இணைக்கும் முயற்சிகள் துரிதமாக மேற்கொள் ளப்பட்டன. 1798 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ஆள்பதியின் நிருவாக அதிகாரங்கள், அரசமைப்பு மூலம் படிப்படியாகத் தெளிவாக்கப்பட்டன. ஆள்பதிக்கு உதவிய ஆலோசனைச் சபைக் குப் பதிலாக, 1832 ஆம் ஆண்டில் கோல் புரூக் சீர்திருத்தங்களின் விளைவாக, சட்டக்கழகம் என்றும் நிருவாகக் கழகம் என்றும் இரு கழகங்கள் அமைக்கப்பட்டன. சட்டக் கழகத்தில், உத்தி யோகச் சார்புள்ள அங்கத்தவர் இருந்தது போலவே, பல்வேறு இனங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதற்காக உத்தியோகச் சார்பற்ற அங்கத்தவர்களும் இடம்பெறலாயினர். எனினும், 1833 ஆம் ஆண்டிலே தாபிக்கப்பட்ட இந்த நிருவாக முறை, உண்மையான பிரதிநிதித்துவ ஆட்சிமுறையாக அமையவில்லை. ஆள்பதியின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. ஆள்பதி யினலும் அவருடைய நிர்வாகக் கழகத்தினுலுமே நாடு நிருவகிக் கப்பட்டது. இச்சீர்திருத்தங்கள் பொதுமக்கள் கோரிய சலு கைகளை வழங்காது, அரசாங்கத்திற்குச் சார்பான சுதேசத் தலை வர்களை நிருவாகத்துடன் தொடர்புபடுத்த உதவின. இவ்வாருக

Page 42
74 வரலாறு
19 ஆம் நூற்றண்டின் முதற்பாதியில் ஆங்கிலேயர் ஆதிக்கம் இலங்கையில் நிலைநாட்டப்பட்டது.
எனினும், இலங்கையிலிருந்து இயன்றவரை பொருளாதார நயங்களைப் பெறுவதே பிரித்தானியரின் மிக முக்கியமான நோக்க மாயிருந்தது. 1796 ஆம் ஆண்டில் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றிய காலத்திலிருந்து, ஒல்லாந்தர் காலத் தில் நிலவிய பொருளாதார முறையைத் தொடர்ந்து பின்பற்று வதன் மூலம் தாம் எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானத்தைப் பெறமுடியாது என்பதை ஆங்கிலேயர் உணரலாயினர். அது வரையும், சிங்களவரின் நிலவுடைமைப் பொருளாதார சமூக அமைப்பு குறிப்பிடத்தக்க மாற்றமெதுவும் இன்றி நிலவிவந்தது. மேலே குறிப்பிடப்பட்ட பொருளாதார முறையில் அடிப்படை மாற்றங்களைச் செய்து, 1797 ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந் திய வர்த்தக கம்பனியின் மூலம் பெருமளவு வருமானத்தைத் திரட்ட எண்ணிய ஆங்கிலேயர் நில வாட்சி முறையையும் இராச காரிய முறையையும், வரி அறவிடும் முறையையும் ஒழித்தனர். இவற்றிற்குப் பதிலாக, புதியதாயினும் பொது மக்களுக்குப் பெருஞ் சுமையாக அமைந்த வரியறவிடும் முறை புகுத்தப் பட்டது. இதனுல் ஏற்பட்ட இன்னல்கள் காரணமாக, 17971798 இலே பொதுமக்கள் கலகஞ் செய்தனர். தமது சுதந்திர மான அந்தஸ்து, நிந்த கம், வருமானம் ஆதியனவற்றை இழந்த பிரதானிகள் இத்தறுவாயில் கலகக்காரருக்குத் தமது ஆதரவை அளித்தார்கள். இக்கலகத்தின் பயனுக, பொதுமக்கள் ஆத்திர மடையாத வகையில், நாட்டை நிருவாகஞ் செய்யவேண்டு மென்ற படிப்பினையை ஆங்கிலேயர் கற்றுக்கொண்டார்கள். எனவே, 1797 ஆம் ஆண்டில் தாம் புகுத்திய மாற்றங்களை நீக்கி பழைய முறையை மீண்டும் ஆங்கிலேயர் நிலைநாட்டினர்கள். எனினும், நோத், மெயிற்லண்ட் ஆகிய ஆள்பதிகள் பழைய சமுதாயப் பொருளாதாரப் பாங்கிற் சிறு ம்ாற்றங்களைச் செய் தற்கு முயன்ருர்கள்.
1815 ஆம் ஆண்டிற்குப் பின்னர், மலையகப் பிரதேசங்களில் பாரம்பரிய பொருளாதார அமைப்பு முறைகளை மாற்றியமைத் தற்கு முயற்சி செய்யாது, நிலவரி மூலமும், வர்த்தக நடவடிக் கைகள் மூலமும் வருமானத்தைப் பெருக்குவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டன. எனினும், பிரித்தானியர் எதிர்பார்த்த அள வுக்குப் பலன் கிடைக்கவில்லை. கறுவா போன்ற வர்த்தகப் பொருள்களிலிருந்து பிரித்தானிய வர்த்தகர் கணிசமான அளவு வருமானத்தைப் பெற்றபோதும், தீர்வை வரி, நில வரி முதலிய வற்றிலிருந்து அரசாங்கம் திரட்டிய வருமானம் பணிக் குழுவை யும், படையணிகளையும் பேணுதற்குப் போதுமானதாக இருக்க வில்லை. ஆகவே, 1828 ஆம் ஆண்டில், கோல் புரூக்- கமரன் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இலங்கையில் அதுவரையும் நிலவிய பொருளாதார முறையின் அடிப்படையை மாற்றி யமைப்பதே இக்குழுவின் பிரதான நோக்கமாக இருந்தது. புரா தன நில வாட்சிமுறை, குல அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சேவைகள், தீர்வை வரிகள், அரசின் வர்த்தகத் தனியுரிமை ஆகிய யாவற்றையும் நீக்கி, முற்ருக முதலாளித் துவக் கோட்

ஆங்கிலேயர் காலம் 75
பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதார அமைப்பை உருவாக்குவதற்கான விதப்புரைகளை இக்குழு வழங் கியது. இவ் விதப்புரைகளிற் பெரும்பாலானவை செயற்படுத்தப் பட்டபோதிலும், அவை சுதேச மக்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்குக் குறிப்பிடக்கூடிய அளவில் உதவவில்லை. நில வாட்சி முறையுடன் தொடர்புடைய இராசகாரிய சேவை யிலிருந்து விடுபட்ட சுதேச மக்கள், அதற்குப் பதிலாக நிறுவப் பட்ட முதலாளித்துவ முறையிலிருந்து அவ்வளவு பயன்பெற்ற தில்லை. பெரும்பாலும் தற்போக்குக் கொள்கையைக் கடைப் பிடித்த அரசாங்கம், பொருளாதார முயற்சிகளிலே நேரடியாக ஈடுபடுவதைத் தவிர்த்தது. ஆனல், இயன்றவரை மிகக் குறைந்த செலவில் ஆகக் கூடிய வருமானத்தைப் பெறுவதற்கு முயற் சிகளை மேற்கொண்டது. மக்களின் பொதுநலம் அரசின் பொறுப் பாகக் கருதப்படாததால், நிலமானிய பொருளாதார முறைகளி லிருந்து பெற்ற பயன்களையும் பாதுகாப்பையுங்கூடப் பலர் இழந் தனர். தானிய வரியை விலக்குவதற்கும், நீர்ப்பாசன வசதி களைத் திருத்துவதற்கும் கோல்புரூக் செய்த விதப்புரைகள் செயற் படுத்தப்படவில்லை. கறுவா வர்த்தகத் தனியுரிமை நீக்கப்பட்ட தனலும், தீர்வை வரி அதிகமாக அறவிடப்பட்டதனலும் கறுவா வர்த்தகம் விரைவாக வீழ்ச்சியடைந்தது.
பிறநாட்டுத் தனவந்தர் இலங்கையிற் பணத்தை முதலீடு செய் வதனல், தோட்டப் பயிர்ச் செய்கையும் கைத் தொழிலும் விருத் தியடையுமெனப் பிரித்தானிய அரசு எதிர்பார்த்தது. மேற்கித் தியத் தீவுகளிலே கோப்பிப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியுற்ற அதே காலத்தில், ஐரோப்பாவிற் கோப்பியின் விலை உயர்ந்தமையால், 1830 இலும் அதையடுத்த ஆண்டுகளிலும் இலங்கையிலே தோட் டப் பயர்ச்செய்கை விருத்தியடைந்தது. எனவே, பிரித்தானியத் தனவந்தர் இலங்கையிலே கோப்பிப் பயிர்ச் செய்கையில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இவ்வாறு, ஏறக்குறைய 1835 ஆம் ஆண்டி லிருந்து இலங்கையிலே தோட்டப் பயிர்ச்செய்கை விரைவாக விருத்தியடைந்தது. 1880 ஆம் ஆண்டளவில், கோப்பிப் பயிர்ச் செய்கை வீழ்ச்சியுற, தேயிலைப் பயிர்ச் செய்கை விருத்தியடைய லாயிற்று. தேயிலை பெரும்பாலும் மலையகத்தின் உயர் நிலங்க ளிலேயே பயிர் செய்யப்பட்டது. மேலும், 19 ஆம் நூற்றண்டின் ஆரம்பத்திலிருந்து இலங்கையின் மேற்கு, வடமேற்குப் பகுதி களிலே தெங்குப் பயிர்ச் செய்கை படிப்படியாக விருத்தியடைந் தது; அந்நூற்றண்டின் பிற்பாதியில் தெங்கு பெருமளவில் பயிர் செய்யப்பட்டது.
இவ்வாறு, 19 ஆம் நூற்றண்டில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களின் பிரதான இயல்பு, தோட்டப் பயிர்ச்செய்கை விருத்தியடைந்தமையேயாம்.
தோட்டப் பயிர்ச் செய்கை விருத்தியடைந்ததோடு, இலங்கை யில் முதலாளித்துவப் பொருளாதாரத் தொடர்புகள் நிலைபெற லாயின. பாரம்பரிய பொருளாதார அமைப்பிலே சீவனுேபாயக் திற்காகப் பயன்படுத்தப்பட்ட நிலமும் உழைப்பும், வர்த்தகச் சந்தையிலே தேவை, வழங்கீடு ஆகியவற்றிற்குக் கட்டுப்பட்ட

Page 43
76 வரலாறு
காரணிகளாயின. அதே சமயம், முதலாளித்துவ பொருளாதாரத் தொடர்புகளிற் கட்டாயமாக இடம்பெற வேண்டிய அம்சங் களான வர்த்தகத் தாபனங்கள், வங்கிகள் ஆதியனவும் தனியார் சொத்துச் சம்பந்தமான சட்டங்களும், பிரமாணங்களும் துரித மாக உருவாக்கப்பட்டன. இக்காலத்திலிருந்தே, இந்நாட்டின் உற்பத்திப் பொருள்களை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு அனுப் பவும், வெளிநாட்டுப் பொருள்களை நுகரவும் சுதேச மக்கள் பழ கினர்கள். இவ்வாறு, நேரடியாக இலங்கையர் உலக வர்த்தகச் சந்தையின் செல்வாக்கிற்கு உட்படலாயினர்.
முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சி, பொதுவில், சமுதா யத்திற்கு நன்மை பயந்ததென்று கூறுவது பொருந்தாது. 19ஆம் நூற்றண்டின் இறுதிக் கட்டத்திலே கோப்பி தேயிலைத் தோட்டங் களில் 90 சதவீதம் ஐரோப்பியருக்குச் சொந்தமாக இருந்தது. எஞ்சிய 10 சதவீதமானது வர்த்தகத்தில் ஈடுபட்ட இலங்கை யருக்கும் இந்தியருக்கும் சொந்தமாக இருந்தது. ஆரம்பத்தில், வீட்டுத் தோட்டங்களிலே கிராம மக்கள் கோப்பியைப் பயிர் செய்தார்கள்; ஆனல் அவர்களது உற்பத்திப் பொருள்களின் விலைகள் மிகக் குறைவாக இருந்ததால், அவர்களுடைய வருமா னம் அவர்தம் வாழ்க்கை முறையைக் கணிசமான அளவுக்கு மாற்றுவதற்குப் போதுமானதாக இருக்கவில்லை. தோட்டப் பயிர்ச்செய்கைக்கு அவசியமான தமது உழைப்பை வழங்குவதன் மூலம் போதிய அளவு வருமானத்தைப் பெறும் வாய்ப்பும் சுதேச மக்களுக்குக் கிட்டவில்லை. தோட்டச் சொந்தக்காரர் தொழி லாளருக்குக் கொடுத்த கூலி மிகக் குறைவாக இருந்தமை, தோட் டங்களிற் குடியேறி தொழும்பருக்குச் சமமான வாழ்க்கையை நடத்த விரும்பாமை, கமத்தொழிலை முற்ருகக் கைவிடக்கூடிய அளவிற்குப் போதுமான அளவு பொருளாதாரப் பயன்கள் கிடைக்காமை ஆதிய காரணங்களால், பெரும்பாலான சுதேச மக்கள் தோட்டங்களிலே தொழில் செய்வதற்கு முன்வரவில்லை. 1900 ஆம் ஆண்டில் தோட்டங்களில் நிரந்தரத் தொழிலாளரா கப் பணியாற்றிய சிங்களவரின் எண்ணிக்கை 2,300 இற்கு அதிக மாக இருக்கவில்லை. எனினும், இதே ஆண்டில், மிகக் குறைந்த ஊதியத்தைப் பெற்ற தோட்டத் தொழிலாளராக வேலை செய்த இந்தியரின் எண்ணிக்கை ஏறக்குறைய 45,000 ஆக இருந்தது.
மேலும், பெருந்தொகையான தோட்டத் தொழிலாளரின் நுகர்வுக்கு அவசியமான உணவுப் பொருள்களை வழங்குவதன் மூலம் பொருளாதாரப் பயன்களைப் பெறும் வாய்ப்பும் சுதேச மக்களுக்குக் கிடைக்கவில்லை. மிகக் குறைந்த விலையில் உணவுப் பொருள்களைக் கொடுக்க முடிந்தமையினலேயே இந்தியரின் உழைப்பைக் குறைந்த வேதனத்திற்குப் பெறமுடிந்தது. குறைந்த சுங்கத் தீர்வை அறவிடப்பட்டதால், இந்தியாவிலிருந்து பெரு மளவில் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழி வகுக்கப்பட்டது. இதனல், உண்ணுட்டு அரிசி உற்பத்திக்கு அவசியமான பாதுகாப்பு அற்றுப்போய்விட்டது. இவ்வாறு நெற் பயிர்ச் செய்கையின் மூலம் போதுமான அளவு வருமானத்தைப் பெறுவது கடினமாக இருந்ததால், இலங்கையின் விவசாயத் துறையில் எவ்வித முன் னேற்றமும் ஏற்படவில்லை.

ஆங்கிலேயர் காலம் 77
மேலும், தோட்டப் பயிர்ச்செய்கை காரணமாக, கிராம மக்கள். கடுமையான இடர்ப்பாடுகளை எதிர்நோக்க வேண்டியவ ராயினர். தோட்டப் பயிர்ச்செய்கைக்கு அவசியமான காணி யைப் பெறுவதற்காக, ஆங்கில அரசாங்கம் புதிய சட்டங்களை பிறப்பித்தது. 1840 ஆம் வருடத்து 12 ஆவது இலக்கக் கட்ட ளைச் சட்டத்தின் படி, காணிச் சொந்தக்காரரால் உரிமையை நிரூபிக்க முடியாத காணிகள் யாவும் அரசாங்கச் சொத்தாகும் என்று பிரசித்தஞ் செய்யப்பட்டது. இதன்விளைவாக, ஒரு சிறு ” வரியைச் செலுத்துவதன் மூலம் கமச் செய்கைக்கு உகந்த நிலத் தில் விவசாயஞ் செய்யும் உரிமையைத் தனிப்பட்டவர்கள் இழந் தார்கள். இவ்வுரிமை, மரபு முறையாக வந்த தொன்ரு கும்.
இவ்வாறு கமஞ்செய்யப்பட்ட காணிகளுக்கிருந்த தமது உரி மையை இழந்தவர்கள் பலர். தமக்கு அவசியமான உணவைப் பெறுவதற்காகப் புதிய நிலங்களிற் பயிர் செய்யும் வசதியை விவசாயிகள் இழந்ததால், கிராமத்தின் பொருளாதாரச் சமநிலை) குலைவுற்றது; அத்தோடு, காணியில்லாமை போன்ற கடுமையான பிரச்சினைகள் தோன்றலாயின. 1840 ஆம் ஆண்டிற்குப் பின்னர், காலத்திற்குக் காலம் பிறப்பிக்கப்பட்ட பிரமாணங்கள் காரண ம்ாகக் காட்டு நிலம், புன்னிலம் ஆகியனவற்றிலிருந்து தாம் பரம்பரை பரம்பரை யாகப் பெற்றுவந்த பயன்களை விவசாயிகள் படிப்படியாக இழந்தனர். கிராமங்களைச் சேதப்படுத்தி வளர்ந்த பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையினல், கிராம விவசாயிகளின் வாழ்க்கை பலவித இன்னல்களை எதிர்நோக்கவேண்டியிருந்தது. இந்நிலைமை காரணமாக கிராமவாசிகள் எந்த அளவிற்கு இன் னல்களை அனுபவித்தார்கள் என்பதை, 1848 ஆம் ஆண்டில் மூண்ட கலகம் எடுத்துக் காட்டுகின்றது. கலகக்காரர் கோப்பித் தோட்டங்களை நாசமாக்கியும், தோட்டச் சொந்தக்காரருக்கும் அவர்களுக்கு உதவியாளராகவிருந்த ஆங்கில அதிகாரிகளுக்கும் உடலூறு விளைவித்தும், தோட்டப் பயிர்ச் செய்கையின் விளை வாகத் தாம் பட்ட இன்னல்களின் கொடூரத் தன்மையை யாவ ரும் அறியச் செய்தனர். தோட்டப் பயிர்ச் செய்கை முறை பெருமளவிற்குக் கிராமத்தின் பொருளாதாரத்துடன் தொடர் புற்று இருந்தபோதும், கிராமவாசிகள் அம்முறையை வெறுத் தனர். அத்தோடு, தோட்டப்பயிர்ச் செய்கை காரணமாக உரு வான பொருளாதார முறையினல் ஏற்பட்ட இன்னல்கள், மானிய முறையின் உள்ளார்ந்த இன்னல்களைக் காட்டிலும் கடுமையாக இருந்தன. மேலும், தோட்டச் சொந்தக்காரரின் கண்டிப்பான நிருவாகத்திற்குக் கட்டுப்பட்டு, தொழும்பருக்குச் சமானமான நிலைக்குத் தொழிலாளர் வகுப்பினர் இழிந்துவிட்டனர். அன்றி யும், அன்னரின் உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் பெறப்பட்ட செல்வத்தில் 90 சதவீதம், பிறநாடுகளைச் சென்றடைந்தது. எவ்வாரு யினும், தோட்டப் பயிர்ச் செய்கையின் விளைவாக இலங் கைச் சமுதாயம் பொருளாதாரப் பயன்களைப் பெறவில்லை என் றும் கூறமுடியாது. மானிய முறையைத் தகர்த்தெறிந்து இலங் கைச் சமுதாயம் நவீன உலகில் அடியெடுத்து வைத்தற்குத் தோட்டப் பயிர்ச்செய்கை முறை பெரிதும் உதவியாயிருந்தது. பல்வேறு மறைமுகமான வழிகளாலே, பொதுமக்களும் இம்முறை

Page 44
78 வரலாறு
யினுற் பயனடைந்தனர். வீதிகள், வர்த்தக முயற்சிகள், போக்கு வரத்துச் சேவைகள் ஆதியனவற்றின் விருத்தி, பொதுவாகச் சமு தாயத்திற்கு நன்மை பயப்பதாயிற்று. அன்றியும், உண்ணுட் டிலே பணக்கார வகுப்பு ஒன்று உருவாவதற்கும் தோட்டப் பயிர்ச்செய்கை முறை வழிவகுத்தது. ஆரம்பத்தில், தோட்டப் பயிர்ச் செய்கைக்கு அவசியமான சேவைகளை வழங்க முன்வந்த தொழினுட்பவியலாளரும், ஒப்பந்தக்காரரும், காலப்போக்கில் வர்த்தகராகவும், காரீயச் சுரங்கங்களுக்கும் தோட்டங்களுக்கும் சொந்தக்காரராகவும், குத்த கையாளராகவும் மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தோட்டப் பயிர்ச் செய்கை முறை யானது தோட்டச் சொந்தக்காரரும் வர்த்தகரும் அடங்கிய ஒரு புதிய வகுப்புத் தோன்றுவதற்குப் பெரிதும் உதவியது.
பொதுவாக, இலங்கையின் பொருளாதாரத்தைப் பொறுத்த வரை, ஆங்கில அரசாங்கம் தற்போக்குக் கொள்கையையே கடைப்பிடித்தது. இதனுல், சுதேச மக்களில் ஏறக்குறைய 80 சதவீதத்தினர் தமது சீவனுேபாயத்திற்காகச் செய்துவந்த விவ சாயத் தொழிலில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. மேலும், சிங்கள மன்னரின் ஆட்சிக் காலத்திற் போலன்றி, ஆங்கில ஆட் சியில், மக்களின் பொதுநலத்திற்கு அவசியமான நீர்ப்பாசன வசதிகளை வழங்குதல் அரசாங்கத்தினுடைய பொறுப்பு என்பதை ஆங்கிலேயர் ஏற்றுக்கொள்ளவில்லை. அன்றியும், 1893 ஆம் ஆண்டுவரை, தானியம் பயிர் செய்யப்பட்ட காணிகளிலிருந்து தானிய வரி, (பொதுவாக, அறுவடையின் 10/1 பங்கு) அறவிடப் பட்டமையை விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட ஒர் அநீ யென்றே கருதல் வேண்டும். இத்தகையதோர் வரி தோட்டச் சொந்தக்காரரிடமிருந்து அறவிடப்படவில்லை. 1880 இனைத் தொடர்ந்த ஆண்டுகளிலே தானிய வரியைச் செலுத்தாத விவ சாயிகள் தமது காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுப் பட்டினி யால் மடிந்த சந்தர்ப்பங்களும் இருந்தன. விவசாயத்தை அர சாங்கம் புறக்கணித்தமையால், இலங்கையின் உலர் வலயமானது காடு மண்டிய-நோய் மலிந்த-பிரதேசமாகச் சீரழிந்தது. எனி னும் பெரு வாரியாக அரிசியை இறக்குமதி செய்வதால் உண்டா குஞ் செலவைக் குறைத் தற்கு, உண்ணுட்டிலேயே விவசாயத்தை விருத்திசெய்யவேண்டுமென்பதை, 1850 ஆம் ஆண்டளவில் ஆங் கில ஆட்சியாளர் உணர்ந்தனர். அதைத் தொடர்ந்து, சேத மடைந்த நீர்ப்பாசன வசதிகளைத் திருத்தும் வேலைகள் ஆரம் பிக்கப்பட்டன. எனினும் இது சம்பந்தமாக அரசாங்கம் பெருந் தொகையான பணத்தைச் செலவு செய்ய விரும்பாததால், 1856 ஆம் ஆண்டில், நீர்ப்பாசனமும் நெற்காணியும் சம்பந்தப்பட்ட கட்டளைச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் துணை யுடன், மீண்டும் கிராம சபையையும் (கம்சபாவையும்) ஏனைய சுய நிருவாகத் தாபனங்களையும் நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த ஆங்கிலேயர் முயற்சி செய்தனர். 1855 முதல் 1904 ஆம் ஆண்டு வரை நீர்ப்பாசனத்திற்கு அண்ணளவாக 1 கோடியே 35 இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டது. இதன் விளைவாக ஏறக்குறைய 86,000 ஏக்கர் வயல் நிலம், நீர் வசதியைப் பெறக்கூடியதாக

ஆங்கிலேயர் காலம் 79
இருந்தது. உண்மையில், இலங்கையின் மொத்த வயல் நிலத்தில் 20 சத வீதத்திற்கு மட்டுமே நீர் வசதி கிட்டியது. தோட்டப் பயிர்ச் செய்கைக்குத் தேவையான வீதிகள், புகையிரதப் பாதை கள் ஆகியனவற்றை அமைத் தற்கும், கொழும்புத் துறை முகத்தை அபிவிருத்தி செய்தற்கும் செலவிடப்பட்ட நிதியைக் கருத்திற் கொள்ளும்போது, உண்ணுட்டு விவசாயத்தை விருத்தி செய்வதில் ஆங்கிலேயர் காட்டிய ஆர்வம் அற்பம் என்றே கொள் ளல் வேண்டும். மேலும், தோட்டச் சொந்தக்காரர் எதிர்ப்புத் தெரிவித்ததால், நெற் பயிர்ச்செய்கையை ஊக்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியின் அளவை மட்டுப்படுத்த அரசாங்கம் முன் வரவில்லை. அரிசி இறக்குமதி செய்வதற்காக அறவிடப்பட்ட சிறு சுங்கத் தீர்வை யையும் நீக்குவதற்கே தோட்டச் சொந்தக்காரர் முயற்சி செய் தார்கள். 19ஆம் நூற்றண்டில் இலங்கையின் சனத்தொகை ஏறக்குறைய 9 இலட்சத்திலிருந்து ஏறக்குறைய 35 இலட்சமாக அதிகரித்தது. ஆயினும், உண்ணுட்டு விவசாயத்தைச் சனத் தொகை அதிகரிப்புக்கேற்ப விருத்தி செய்வதற்கு அரசாங்கம் முயன்றதில்லை. அதனுல், 20 ஆம் நூற்முண்டில், உணவுப் பிரச் சினை, பிரதான பொருளாதாரப் பிரச்சினையாக உருவெடுத்தது.
19ஆம் நூற்றண்டில், சமுதாயமும் தெளிவாக மாறுதலடைந் தது. புராதன மானிய முறையிற் காணப்பட்ட-பரம்பரையாக வழங்கி வந்த-பல்வேறு சமுதாயப் பிரிவுகளின் அடித்தள மானது பொருளாதார மாற்றங்களின் விளைவாகத் தகரத் தொடங்கியது. பரம்பரை பரம்பரை யாகச் சாதி அடிப்படையில் செய்யப்பட்டு வந்த தொழில்களும் படிப்படியாக மாற்றமடைய ஆரம்பித்தன. புதிய பொருளாதார அமைப்பிலே, செல்வம் படைத்த தோட்டச் சொந்தக்காரரின் வகுப்பொன்று உருவாகித் தோன்றிற்று. இவ் வகுப்பில் வர்த்தகர்களைக் கொண்ட ஒரு பிரிவும் இடம்பெற்றது. நகரங்கள் அபிவிருத்தியடைந்தமையா லும், கல்வித்துறையிற் புது மாற்றங்கள் புகுந்தமையாலும், பல் வேறு தொழில்களில் ஈடுபட்டோரைக் கொண்ட ஒரு மத்திய வகுப்பும் உருவாயிற்று. பொதுமக்களிடையே, விவசாயிகளைத் தவிர, தோட்டத் தொழிலாளரையும் நகரத் தொழிலாளரையும் கொண்ட ஒரு பாட்டாளி வகுப்புத் தோன்றிற்று. இவ்வாறு, பொருளாதார மாற்றங்களின் விளைவாகப் புதிய ஒரு வகுப்பு முறை தோன்றிய போதும், புராதன சமுதாயப் பிரிவுகள்--குறிப் பாகச் சாதி பேதங்கள்-அடியோடு அற்றுப் போகவில்லை. புராதன சாதி முறையை ஆதாரமாகக் கொண்ட புதிய வகுப்பு முறை யொன்று 19 ஆம் நூற்றண்டில் விருத்தியடைந்த தென்று கூறலாம். W
மேலைத்தேயப் பண்பாட்டின் செல்வாக்குக் காரணமாகப் புதிய சமூகப் பிரிவுகள் தோன்றியமை, புதிய சமுதாய அமைப்பின் மற்றுமொரு முக்கியமான இயல்பாகும். கிறித்தவ மதத்தைத் தழுவி, பெரும்பாலும் ஆங்கில மொழி மூலம் கல்வி பயின்ற மக் கள், பொதுமக்களிடையே தனிப்பட்டு விளங்கினர். நிருவாகத் திற்கு அவசியமான அலுவலரையும் எழுதுவினைஞரையும் பயிற்று \

Page 45
80 வரலாறு
விக்கும் பொருட்டு, ஆங்கில ஆட்சியாளர் ஆங்கில மொழி மூலம் கல்வி புகட்டும் முறையை ஆரம்பித்தனர். மிஷனரிமா ரின் ஆர்வங்காரணமாக நகரப்பகுதிகளில் ஆங்கிலப் பாடசாலைகள் நன்கு அபிவிருத்தியடைந்தன. அங்கு, ஆங்கிலக் கல்வி பயின்ற நுண்ணறிவாளரைக்கொண்ட வகுப்பொன்று, செல்வம் படைத்த மக்களிடையே தோன்றிற்று. ஆங்கிலப்பாடசாலைகளிற் கல்வி பயிலுதற்கு ஆகுஞ் செலவு அதிகம். ஆதலின், பணக்கார வகுப்பாரே பொதுவாக ஆங்கிலக் கல்வி மூலம் பயனடையும் வாய்ப்பைப் பெற்றனர். இவ்வாறு, பணம் படைத்த இலங்கை யரே பெரும்பாலும் ஆங்கிலக் கல்வி பயின்ற விசேட வகுப்பாக விளங்கினர். அரசாங்கமும் மிஷனரிமாரும், பின்னர் பெளத்த தாபனங்களும், ஆயிரக்கணக்கான கிராமப் பாடசாலைகளை ஆரம் பித்தபோதும், அவற்றில் உயர் கல்விபோதிக்கப்படவில்லை. ஆகவே, கல்வியின் உதவியுடன் சமுதாயத்தின் உயர் மட்டங்களைப் பொது மக்கள் எய்து தற்கு வேண்டிய வாய்ப்பு பெரிதும் அருகியே காணப் பட்டது. ஆங்கில மொழி, மேனட்டு உடை, பழக்கவழக்கங்கள் ஆகியன ஆங்கிலக் கல்வியுடன் இணைந்திருந்ததனல், அவை சிறந் தவை என்று கருதப்பட்டு இந்நாட்டிற் கடைப்பிடிக்கப்பட்டன. இவ்வாரு க, கல்வி கற்ற பணக்கார வகுப்பார்க்கும் மற்றுஞ் சாதாரண மக்களுக்குமிடையே பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பெரும் பிளவு மேலும் பெரிதாயிற்று.

ஏழாம் அத்தியாயம் மத்திய வகுப்பின் எழுச்சி
இலங்கைச் சமுதாயத்தின் வளர்ச்சியை நாம் வரலாற்று அடிப் படையில் ஆராயும் போது, இலங்கையின் மத்திய வகுப்பானது வரலாற்றுத் தொடர்புடைய நிகழ்ச்சிகளின் விளைவாக ஏற்பட் டது என்ற முடிவுக்கே வருவோம். இவ் வகுப்புக்கேயுரிய சில தனிப்பட்ட இயல்புகள் எமக்குப் புலப்படுகின்றன. இவ்வியல் புகளைக் கொண்டு, இந்த மத்திய வகுப்பை ஏனைய சமுதாய வகுப்புகளிலிருந்து வேறுபடுத்த முடிகின்றது. மத்திய வகுப் பாரைப் பொது சனங்களினின்றும், மற்றும் பழைய மானிய முறையின் வாரிசுகளான சீரிய வர்க்கத்தாரினின்றும் வேறு படுத்திக் காட்டுகின்ற விசேட இயல்புகள் யாவை என இனிப் பார்ப்போம். செல்வமும் ஆங்கிலக் கல்வியும் மத்திய வகுப்பா ரின் இரு பிரதான இயல்புகள். இனி, ஆங்கிலக் கல்வியின் விளைவான வேறுசில தனியியல்புகளும் மத்திய வகுப்பாரை வேறு படுத்திக் காட்டுகின்றன. உயர் தொழில்களில் ஈடுபடுவதால் வரும் விசேட அந்தஸ்து; மேனட்டுச் சார்புடைய விழைவு விருப்புகள்; மேனுட்டுப் பழக்க வழக்கங்கள்; விசேடமான வாழ்க்கை முறை ஆகியனவும் அத்தனி இயல்புகளுள் அடங்கும். இவ்வாறு வேறுபடுத்திக் காட்டுவதற்கு உதவும் இயல்புகள் தோன்றுவதற்குப் பெரிதும் காரணமாயிருந்தவை, ஆங்கில ஆட் சியாளர் இலங்கையிற் கடைபிடித்த அரசியற் கொள்கையும் பொருளாதார சமுதாயக் கொள்கைகளுமேயாம். இவ்வாருக, தனித்துவம் வாய்ந்த வரலாற்றுப் போக்கின் விளைவாகவே இலங்கையில் மத்திய வகுப்புத் தோன்றியது என்ற முடிவுக்கு வர முடிகின்றது. ܚ
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களில் உருவான சமுதாய மாற்றங்களின் விளைவாக, இலங்கை நாட்டுப் பாரம்பரிய சமு தாய அமைப்புச் சிதைவுற்றது. மேலும், சீரிய வர்க்கத்தார் எனப் பொதுவாகக் கருதப்படுகின்ற வகுப்பாரை விட எமது சமுதாயத்திலே சக்தி வாய்ந்த புதிய பிரிவுகள் தோன்றலாயின. எனவே, கோல்புரூக் கமரன் சீர்திருத்தங்கள் செயற்படுத்தப் பட்டபோது, இலங்கையிலே பாரம்பரிய சீரியவர்க்கமும் புதி தாகத் தோன்றிய சீரிய வர்க்கமும் சேர்ந்து, மத்திய வகுப்பு உருவாயிற்று என்று கொள்ளல் பொருத்தமாகும். ஆங்கில முயற்சியாளருக்கு வாய்ப்பான சூழலை உருவாக்கிக் கொடுப்பதே கோல் புரூக்-கமரன் ஆணைக்குழுவினரின் அடிப்படை நோக்கமாக இருந்தது. இராசகாரிய முறையை ஒழிப்பதன் மூலம், தொழிலா ளர் தம் வசதிக்கேற்ப வேறு வேறு தொழில்களைத் தேடிக் கொள்வதற்குச் சுதந்திரம் அளித்தமை; முன்பு இருந்த தடைகளை நீக்கி, இலங்கை நாட்டவர் அரசாங்கச் சேவையிற் பணியாற்று வதற்கு வழிவகுத்த மை; அக்காலத்திலே ஐரோப்பியர் இலங்கை

Page 46
82 வரலாறு
யில் காணிகளைத் தமதுடைமையாக்கிக் கொள்வதற்கிருந்த தடை களையும் கட்டுப்பாடுகளையும் நீக்கியமை; ஆங்கிலக் கல்விக்கு முத லிடத்தை அளித்து, அதற்குச் சகல விதங்களிலும் ஆதரவு அளித் தமை ஆகியன கோல்புரூக்கின் மிக முக்கிய விதப்புரைகளிற் குறிப்பிடத்தக்கன. மேலும், கமரனின் நீதி நிருவாகச் சீர்திருத் தங்கள், ஐரோப்பிய முயற்சியாளருக்கு உகந்த சூழலை உருவாக் கியதோடு, நம்நாட்டிலே தடைகளற்ற திறந்த சமுதாயமொன்று உருவாதற்கு வேண்டிய சட்டரீதியான அடித்தளத்தையும் வழங் கின. இவ்விதப்புரைகளின் விளைவாக, பிரித்தானியர் தடையின் றித் தமது மூலதனத்தை தோட்டத் துறை முயற்சிகளில் முதலீடு செய்தனர். அதனல், ஐரோப்பியச் சந்தைக்குப் பண்டங்களை வழங்கும் ஏற்றுமதிப் பொருளாதாரம் நம் நாட்டில் உருவாவ தற்கு வழிவகுக்கப்பட்டது. தோட்டத்துறைக்கு அவசியமான வீதிகள், கட்டடங்கள் ஆதியனவற்றை அமைத்தல்; போக்கு வரத்துச் சேவைகளையும், பண்டங்களையும் வழங்குதல்; சிறு வியாபார முயற்சிகளில் ஈடுபடுதல் ஆகிய முயற்சிகள் இலங்கை யிலே மத்திய வகுப்பின் வளர்ச்சிக்கு உதவின. இவ்வாறு பிரித் தானிய முயற்சியாளர்களும், அவர்களுடைய ஆதரவுடன் முன் னேறிய சுதேச மக்களும் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையி லேயே பேரூக்கங் காட்டியதால், இலங்கையின் பாரம்பரிய விவ சாயப் பொருளாதாரம் நலிவுற்றது.
ஆங்கிலக் கல்வியினுல் ஏற்படக்கூடிய நன்மைகளை அழுத்தந் திருத்தமாகப் பிரித்தானிய ஆட்சியாளருக்கு எடுத்தியம்பியவர், கோல்புரூக்கே யாவர். காலப்போக்கில் ஆங்கிலக் கல்வியே மத் திய வகுப்பாரின் விசேட இலட்சணமாக விளங்கிற்று. நாட்டின் நிருவாகம் திறமையாக இயங்குதற்கு, நாட்டு மக்களிடையே தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள், அரசாங்க சேவை யின் கீழ்மட்டங்களிலே தேவை என்ற கருத்து நிலவிய காலம் அது. அத்தகைய உத்தியோகத் தரைப் பெறுதற்கு, ஆங்கில ஆட்சியாளரின் ஆசைபா சங்களில் ஈடுபாடு கொண்டதும், அந்த ஆசை பாசங்களுக்கமைய வாழ்க்கையின் பயன்களை வகுத்துக் கொண்டதுமான ஒரு வகுப்பை உருவாக்கவேண்டும் என்று கோல் புரூக் கருதினர். இந்த நோக்கத்தை அடைவதற்கு, பாரம் பரிய பிரிவேணைக் கல்வி முறையும் ஏனைய சுயமொழிக் கல்வி முறைகளும் உதவா என்று கருதிய கோல் புரூக், மிஷனரிமாரின் ஆங்கிலக்கல்வி முறையின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கவேண்டு மென்று விதந்துரைத்தார். ஆங்கிலக் கல்வியின் மூலம் சுதேச . மக்களை மேனுட்டுப் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் நாட்ட முடையவர்களாக மாற்றலாம் என்று கிறித்தவ மிஷனரிமார் கொண்ட கருத்தை ஏற்றுக் கொண்ட கோல் புரூக், அரசாங்க சுயமொழிப் பாடசாலைகள் மூடப்பட வேண்டுமென்றும், ஆங் கிலப் பாடசாலைகளை மட்டுமே அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டு மென்றும் சிபாரிசு செய்தார். மேலும், ஆங்கில மொழி மூலம் கல்விபயின்ற இலங்கையருக்கு, எவ்வித பேதமுமின்றி அரசாங்க சேவையிற் பதவி வகித் தற்கு வாய்ப்பு அளிக்கப்படவேண்டு மென்றும் அவர் சிபாரிசு செய்தார். ஆகவே, 1832 ஆம் ஆண்டு தொடங்கி ஆங்கிலக் கல்வி வளர்ச்சியடைந்தது. அவ்வளர்ச்சி

மத்திய வகுப்பு
யால் உண்ணுட்டுச் சமுதாய அமைப்பிலே குறிப்பிடத்தக்க மாறு தல்களை உண்டாக்க வல்ல சக்திகள் உருவாகிச் செயற்பட்டன. இம்மாற்றங்கள் மத்திய வகுப்பாரின் கல்விச் சிறப்பையும், உயர் தொழில்களை வகிப்பதாற்பெற்ற அந்தஸ்தையும், தனிப்பட்ட வாழ்க்கை முறையையும் துலக்கமாக வேறுபடுத்திக் காட்டின.
20ஆம் நூற்ருண்டின் தொடக்கத்தளவிலே, இவ்வாறு வளர்ச் சியடைந்து கொண்டிருந்த மத்திய வகுப்பினர், அரசியற் சீர் திருத்தங்களைக் கோரிக் கிளர்ச்சி செய்ததன் மூலம் படிப்படியாக ஆட்சிப் பொறுப்பைத் தம் வசமாக்கிக்கொள்ள முயற்சி செய்த 60T rif. 1833 ஆம் ஆண்டிலிருந்து 1910 ஆம் ஆண்டு வரை செயற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு கோல் புரூக்-கமரனின் விதப்புரைகளுக்கிணங்க உருவாக்கப் பட்டதேயாகும். இந்த அரசியலமைப்பு ஆள்பதியையும், அவருக்கு உதவுவதற்காக ஏற் படுத்தப்பட்ட சட்டக் கழகத்தையும், நிருவாகக் கழகத்தையும் கொண்டிருந்தது. ஆரம்பத்திலே மத்திய வகுப்பினர் அரசியற் சீர்திருத்தங்களிலே குறிப்பிடத்தக்க அளவு ஆர்வங்காட்டவில்லை எனினும், மத்திய வகுப்பின் வளர்ச்சியுடன் அரசியற் சீர்திருத் தங்களுக்கான அவசியமும் அதிகரித்தது. தம்முடைய பொருளா தாரப் பலமும், உயர் தொழில்களில் ஈடுபடுவதாற் பெற்ற அந் தஸ்தும், சமூகத்திலே அவர்தம் அந்தஸ்தும் மேம்பட்டபோதிலும், தம்மிடம் அரசியல் அதிகாரமும் நிருவாக அதிகாரமும் இருக்த வில்லை என்பதை மத்திய வகுப்பார் உணர்ந்தனர். எனவே 20 ஆம் நூற்றண்டின் முதற்பத்தாண்டுகளில், அரசியற் சீர்திருத்தங் களுக்கான கிளர்ச்சிகளில் மத்திய வகுப்பாரே தலைமை வகித்த னர். இவ்வாருக 20 ஆம் நூற்றண்டின் முதற்பாதியில் மேற் கூறிய அதிகாரங்களைப் பெறுவதில் மத்திய வகுப்பார் வெற்றி பெற்றனர். • عیہ '
ஐரோப்பிய முதலாளிகளையும் இலங்கை முதலாளிகளையும் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையிலே முதலீடு செய்வதற்குத் தூண்டிய அடிப்படைக்காரணி, அரசாங்கத்தின் தயவில் மிக மலி வான விலையிற் காணிகள் வழங்கப்பட்டமையேயாகும். இது சம்பந்தமாக, 1840 ஆம் ஆண்டுத் தரிசு நிலக் கட்டளைச் சட்டம் அதி முக்கியத்துவம் பெறுகின்றது. இச்சட்டத்தின் வாசகங் களுக்கேற்ப, தாம் சொந்தங்கொண்டாடிய காணிகளுக்கு இருந்த உரிமையை நிரூபிக்க, பொதுமக்கள் நன்கொடைப் பத்திரங் களும், உறுதிகளும் போன்ற ஆவணங்களைச் சான்றுகளாகக் காட்ட வேண்டும் என்று பணிக்கப்பட்டனர். அநேகர் இத்த கைய ஆவணங்களை ஆதாரங்களாகக் காட்ட முடியாத நிலையிலி ருந்தனர்; ஆதலின் தமது நிலங்களுக்குள்ள உரித்தை அவர் களால் நிரூபிக்க முடியவில்லை. இவ்வாறு, தனியாருக்கும் விகாரை களுக்குஞ் சொந்தமாயிருந்த அநேக காணிகளை அரசாங்கம் தனதுடைமையாக்கிக் கொண்டது. இவ்வாறு அரசினுற் சுவீ கரிக்கப்பட்ட காணிகளைப் பிரித்தானியத் தோட்ட முதலாளிமார் பெரு வாரியாக வாங்கினர். எனினும், முன்னேற்றமடைந்து கொண்டிருந்த மத்திய வகுப்பைச் சேர்ந்த வர்த்த கரும் இச்சந் தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தாமும் காணிகளை வாங்கினர். இவ்வாறு, 1832 ஆம் ஆண்டிற்குப் பின்னர், சுதேச மக்களிட

Page 47
84 வரலாறு
மிருந்து அரசாங்கம் சுவீகரித்த காணிகளை வாங்கிய மத்திய வகுப்பின் சில பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் நிலவுடைமைத் தோட்டச் சொந்தக்காரராயினர்.
தோட்டப் பயிர்ச்செய்கையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்திய சில காரணிகளை இங்குக் குறிப்பிடுதல் தகும். கைத்தொழிற் புரட்சியின் விளைவாக ஐரோப்பாவிலே கைத் தொழில்கள் விருத் தியடையவே, அவற்றில் ஈடுபட்ட தொழிலாளரின் எண்ணிக்கை யும் அதிகரித்தது. இத் தொழிலாளர்களின் நுகர்வுக்காகத் தேயிலையும், கோப்பியும் பெருமளவில் விற்பனையாயின. ஆகவே, பிரித்தானியா, இப்பண்டங்களின் வர்த்தக மூலம் மிகுந்த இலா பம் ஈட்டக்கூடிய ஒரு வர்த்தக நிலையமாக மாறியது. தோட் டப்பயிர்ச் செய்கைக்குத் தேவையான தொழிலாளரை மிகக் குறைந்த வேதனத்திற்குத் தென்னிந்தியாவிலிருந்து பெறமுடிந் தமை இரண்டாவது காரணியாகும். சுதேசத் தொழிலாளரைப் பெறுவதில் ஏற்பட்ட இடர்ப்பாடு நீங்குவதற்கு இஃது உதவியது. போக்குவரத்துக்குத் தேவையான சகல வசதிகளையும் ஆங்கில அரசாங்கம் வழங்கியமை மூன்ற வது காரணியாகும். முன்னம் கூறியது போல, அரசாங்கக் காணிகளைத் தோட்ட முதலாளி மார்க்கு விற்பதாற் பெற்ற வருமானம், வீதிகளையும் புகையிரதப் பாதைகளையும் அமைத் தற்குப் பயன்படுத்தப்பட்டது. 1843ஆம் ஆண்டிற்கும் 1847 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், மொத்தம் 1247 மைல் வரையான நீளமுள்ள வீதிகள் அமைக்கப் பட்டன; அல்லது திருத்தப்பட்டன. 1867 ஆம் ஆண்டிலே கொழும்பு-கண்டிப் புகையிரதப் பாதை அமைக்கும் வேலை பூர்த்தி யாயிற்று. 1871 ஆம் ஆண்டில் நாவலப்பிட்டிக்கும், 1878 ஆம் ஆண்டில் மாத்தறைக்கும், 1880 ஆம் ஆண்டில் நானுஒயாவிற் கும் புகையிரதப் பாதைகள் திறக்கப்பட்டன. நிதி பெறுதற்கு வேண்டிய வசதிகளைச் சீராக்கியமை, தோட்டச் சொந்தக்காரரை ஊக்குவித்த நான்காவது காரணியாகும். பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை சம்பந்தமாகப் பிரித்தானியீரால் நிறுவப்பட்ட முகவராண்மை நிலையங்கள் இந்த வசதிகளையும் கடன்களையும் வழங்கின. 1931 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அரச ஈட்டுவங்கி யும் 1938 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கை வங்கியும் இத்தகைய வசதிகளை அளித்தன. தென்னிந்தியாவிலிருந்து வந்து இங்குக் குடியேறிய செட்டிமார்களிடமிருந்தும், 19 ஆம் நூற் முண்டின் பிற்பாதியிலே பணக்காரராகிவிட்ட சுதேசிகளிடமிருந் தும், இந்நாட்டு வர்த்தகர் கடன் வசதிகளைப் பெறலாயினர்.
மேலும், காலத்திற்குக் காலம் பிரித்தானிய அரசாங்கத்தினல் இயற்றப்பட்ட சட்டங்களும், கட்டளைச் சட்டங்களும் உண் ஞட்டு வர்த்தகரின் நிலையைப் பலப்படுத்த உதவின. 1863 ஆம் வருடத்து 8 ஆம் இலக்க உரித்து உறுதிப் பத்திரங்களும் அவற் றில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களைப்பதிவு செய்தல் பற்றிய கட்டளைச் சட்டமும், 1863 ஆம் வருடத்து 13 ஆம் இலக்கத் திரு மணப் பதிவுக் கட்டளைச் சட்டமும், 1882 ஆம் வருடத்து 13 ஆம் இலக்கப் பிறப்பு இறப்புப் பதிவுக் கட்டளைச் சட்டமும் இது தொடர்பாகக் குறிப்பிட வேண்டிய கட்டளைச் சட்டங்களாம். பிரித்தானியர் காலத்தில் இயற்றப்பட்ட இக்கட்டளைச் சட்டங்

காங்கேசன்துறை பருத் துறை Luft p 13 i w h ஆனையிறவு மூல்லைத்தீவு மாங்குளம் தலைமன்ஞர் மன்னுர் வவனியா
மதவாச்சி
ஹொரவுபதாமசு திருக்கோணமல் அநுராதபுரம் கற்பிட்டி
கல்லோயா
புத்தளம் மாகோ தம்புல்க்ல மட்டக்களப்பு சிலாபம்
LD nr 5 tiib GoI) u குருநாகலை மாத்தள வத்துகாமம் கட்டுகஸ்தோட்டை கண்டி W
பேராதனை
ஹங்குரங்கெற்றை
G) av rdivan9) x,
போக்குவரத்து, 1940
விதிகள்
அ புகையிரதப் பாதைகள்
29 Gg sirra 30 ஹெற்றிமூலை 31 அம்பேபுச 32 பொல் காவல் 33 தெல்தோட்டை
34 கலகா 35 நுவரேலியா 36 நானுஒயா 37 வியாங்கொடை 38 நீர் கொழும்பு
39 கொழும்பு
40 அவிசாவலை 41 ஹன்வல்லை 42 ருவன் வல்ல
43 ஹற்றன்
44 பாணந்துறை 45 நாபொடை களுத்துறை எல்பிட்டி அம்பலாங்கொடை காலி
மாத்தறை தங்காலை
52 அம்பாந்தோட்டை 53 கதிர்காமம் 34 பொத்துவில்
53 கல்முனை
36 இரத்தினபுரி

Page 48
86 வரலாறு
களின் விளைவாகவும் இத்தகைய பிற கட்டளைச் சட்டங்களின் விளைவாகவும், காணிகளினதும் ஏனைய வர்த்தக முயற்சிகளினதும் உடைமை சம்பந்தப்பட்டவரை மத்திய வகுப்பினர் கூடிய பாது காப்பைப் பெற்றனர். திருமண உறவுகள் மூலம், மத்திய வகுப் புக் குடும்பங்கள் தம்மிடையே குடும்பக் கூட்டுடைமைகளை அமைத்தலும் சாத்தியமாயிற்று. இவ்வாருக வர்த்தக முயற்சி களில் ஈடுபட்ட சில மத்திய வகுப்புக் குடும் பங்களிலே செல்வம் திரள்வதை அவதானிக்க முடிகின்றது.
1840 ஆம் ஆண்டளவிலிருந்து, கோப்பி உற்பத்தியே மூலதனம் முதலீடு செய்யப்பட்ட பரும்படியான விவசாய முயற்சியாக விருத்தியடைந்தது. 1849 ஆம் ஆண்டிற்கும் 1869 ஆம் ஆண் டிற்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட கோப்பியில், 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை, சுதேச மக்களாலேயே உற்பத்தி செய்யப்பட்டது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இத்துறையிலே இலங்கையரின் பங்கு சிறிதன்று என்பதை இவ்வுண்மை எடுத்துக் காட்டுகின்றது. 1880 ஆம் ஆண்டிற் கூட, கோப்பி பயிர் செய்யப்பட்ட நிலத்தில் 13,500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் இலங்கையரின் உடைமையாயிருந் தது. ஆகவே இத்துறையில் இலங்கையரின் ஈடுபாடு குறிப்பிடத் தக்கதாக இருந்த தென்பதைக் காணலாம்.
1886 ஆம் ஆண்டளவிலே, கோப்பித் தோட்டங்களிலே பரவிய நோய் காரணமாகவும், பிறே சிலின் கோப்பி உற்பத்தியினல் ஏற் பட்ட கடும் போட்டி காரணமாகவும், இலங்கையிலே கோப்பிப் பயிர்ச் செய்கை விரைவாக வீழ்ச்சியுற்றது. ஆயினும், தேயிலைப் பயிர்ச்செய்கையும், இறப்பர் பயிர்ச் செய்கையும் துரிதமாக வளர்ச்சியுற்றன. 1880 ஆம் ஆண்டில் 2,20,000 ஏக்கரிலே தேயிலை பயிர் செய்யப்பட்டது; இத்தொகை 1890 ஆம் ஆண்டில் 3,30,000 ஏக்கராக அதிகரித்தது. இவ்வுாறே, இறப்பர் பயிர் செய்யப்பட்ட நிலம் 1901 ஆம் ஆண்டில் 2,500 ஏக்கராக இருந்து, 1910 ஆம் ஆண்டில் 2,00,000 ஏக்கராக விரைவில் அதிகரித்தது. கோப்பிப் பயிர்ச் செய்கையில் மூலதனத்தை முத லீடு செய்தது போலவே, தேயிலை, இறப்பர் பயிர்ச் செய்கையிலும் இலங்கையின் மத்திய வகுப்பினர் மூலதனத்தை முதலீடு செய்த னர். 1917ஆம் ஆண்டில் 29 இலங்கையர், 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவுள்ள தேயிலைத் தோட்டங்களைத் தமது உடைமையாகக் கொண்டிருந்தனர் என்றும்; அவர்களிற் சிலர் 600 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவுள்ள தோட்டங்களைத் தமது உடைமையாகக் கொண்டிருந்தனர் என்றும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதே ஆண்டில், 65 இலங்கையர் 100 ஏக்க ருக்கு மேற்பட்ட பரப்பளவான இறப்பர் தோட்டங்களைத் தமது உடைமையாகக் கொண்டிருந்தனர்; அவர்களில் 23 பேர் 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவுள்ள இறப்பர்த் தோட்டங்களின் உடைமையாளராக இருந்தனர்.
கோப்பி, தேயிலை, இறப்பர் ஆகியனவற்றை உற்பத்தி செய் தமை போலன்றி, தெங்குப் பயிர்ச்செய்கை பெரும்பாலும் இலங்கை மக்களின் முயற்சியாகவே இருந்தது. கொழும்பிலி ருந்து சிலாபம் வரை கரைநாட்டிலும், கொழும்பிலிருந்து குருஞ

மத்திய வகுப்பு 87
கல் வரை உண்ணுட்டிலும், தென்னந்தோட்டங்கள் யாவும் இலங்கையருக்குச் சொந்தமாக இருந்தமை இதனை வலியுறுத்து கன்றது. 1917 ஆம் ஆண்டில் 80 சுதேச வர்த்தகர்கள் 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்புடைய தென்னந் தோட்டங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தனர். இவர்களுட் சிலர் 1000 ஏக் கருக்கு மேற்பட்ட பரப்பளவான தோட்டங்களைத் தமதுடைமை யாகக் கொண்டிருந்தனர். 1951 ஆம் ஆண்டில், தெங்குப் பயிர்ச் செய்கைக்குள்ளான பரப்பளவில் 84.9 சத வீதம் இலங்கையருக்கும், 7.7 சதவீதம் அந்நியருக்கும் உரித்தாயிருந்தன என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தெங்குப் பயிர்ச் செய்கையின் வளர்ச்சியும், தெங்குப் பொருள்களின் ஏற்றுமதியும் சம்பந்தப்பட்டவரையில், 18ல் 0 ஆம் ஆண்டிற்கும் 1930 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதி, மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. மற்ற வர்த்தகப் பயிர்களை ஏற்றுமதி செய் தது போலவே தெங்குப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கும் சுதேச வர்த்தகர்கள் சந்தைகளைக் கண்டுபிடித்தனர். 1870 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட பண்டங்களின் மொத்தப் பெறுமானத் தில் 4 சத வீதம் தெங்குப் பொருள்களுக்கு உரியதாயிற்று. பின்னர் இச் சதவீதம் 1880 ஆம் ஆண்டில் 9 ஆகவும், 1890 ஆம் ஆண்டில் 15 ஆகவும் 1900 ஆம் ஆண்டில் 17 ஆகவும், 1920 ஆம் ஆண்டில் 27 ஆகவும் அதிகரித்தது. இவ்வாறு தெங்குப் பயிர்ச் செய்கையின் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்திலே பங்குபற்றிய மத்திய வகுப்பாரிற் சில பிரிவினர், 20 ஆம் நூற் ரு ண்டின் முற்பாதியில், அரசியற் சீர்திருத்தங்களுக்காகக் கிளர்சசி செய்வதற்குத் தமது பொருளாதாரப் பலத்தைப் பயன் படுத்தினர்கள்.
மத்திய வகுப்பிற் சில பிரிவினரின் பொருளாதாரப் பலம் அதிகரித்தற்கு அவசியமான வருமானத்தை ஈட்டிக்கொடுத்த முக்கியமான மார்க்கங்களில் ஒன்ரு க, காரீயக் கைத் தொழிலும் காரீய ஏற்றுமதி வர்த்தகமும் விளங்கின. பிரித்தானியா, பிரான்சு, ஜெர்மனி, யப்பான் ஆகிய நாடுகளில் உருக்குக் கைத் தொழில் வளர்ச்சி யடைந்ததைத் தொடர்ந்து, காரீயத் திற்கு மிகுந்த மதிப்பு இருந்தது. சமாதான காலங்களிலே பல் வேறு பொருள்களை உற்பத்தி செய்தற்குக் காரீயம் தேவைப் பட்டது போலவே, முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலத் தில், போர்க் கருவிகளை உற்பத்தி செய்வதற்கும் காரீயம் தேவைப் பட்டது. ஆகவே, 1830 ஆம் ஆண்டிற்கும் 1918 ஆம் ஆண் டிற்கும் இடைப்பட்ட காலத்தில், காரீயக் கைத் தொழிலும், காரீய ஏற்றுமதி வர்த்தகமும் விருத்தியடைந்தன. இக் கைத் தொழிலுக்கு அவசியமான மூலதனம் முழுவதையும் இலங்கை யரே முதலீடு செய்தனர்; எனவே இத்துறை இலங்கையருக்கே தனியுரிமையாயிற்று. 1911 ஆம் ஆண்டில் காரீயச் சுரங்கச் சொந்தக்காரர் 384 பேர் இருந்தனர் என்றும்; அவர்களில் 381 பேர் சிங்களவர் என்றும்; 2 பேர் மட்டுமே ஐரோப்பியராக இருந்தனரென்றும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
காரீயக் கைத் தொழிலுடன் தொடர்புடைய முயற்சிகளின் வாயிலாக, மத்திய வகுப்பின் பல்வேறு பிரிவினர் மேலும் முன்

Page 49
&& s வரலாறு
னேற்றமடைந்தனர். இவற்றுள், காரீயத்தைக் கப்பல்களில் அனுப்புவதும் கப்பற் காப்புறுதியும் முக்கியமானவையாகும். 20 ஆம் நூற்றண்டில், காரீயக் கைத் தொழிலுடன் தொடர்புடைய சில குடும்பங்கள் இலங்கையின் அரசியல் அரங்கில் முக்கியமான இடத்தை வகித்தன.
மத்திய வகுப்பின் எழுச்சிக்கு வழிவகுத்த ஒரு காரணி என்ற முறையிலேயே, இது வரையும் நாம் தோட்டப் பயிர்ச்செய்கை யிற் கவனஞ் செலுத்தினேம். இனி, மத்திய வகுப்பின் வளர்ச்சி யில் ஒரு பிரதான இடத்தை வகித்த உயர் தொழிற் குழுக்களின் வளர்ச்சியிற் கவனஞ் செலுத்துவோம். இதுசம்பந்தமாக, ஆங்கி லக் கல்வியின் செல்வாக்கு விசேட கவனத்திற்குரியதாகும். முன் னர்க் கூறியது போல, கோல்புரூக் சீர்திருத்தங்கள் செயற்படுத் தப்பட்டபோது, அரசாங்கம் ஆங்கிலக் கல்விக்கு விசேட கவனஞ் செலுத்த, சுயமொழிக் கல்வி கீழ்நிலை எய்தியது. 1832 ஆம் ஆண்டில் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி. சிலாபம் ஆகிய இடங்களில் ஐந்து ஆங்கிலப் பாடசாலைகள் தாபிக்கப் பட்டன. 1848 ஆம் ஆண்டளவில், ஆங்கிலப் பாடசாலைகளின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துவிட்டது. ஏனைய அரசாங்கப் பாடசாலைகளிலும், ஆங்கிலம் மூலம் கல்வி பயிற்றப்பட்டது. 1912 ஆம் ஆண்டளவிலே அரசாங்க ஆங்கிலப் பாடசாலைகளின் எண்ணிக்கை குறைந்த தாயினும், கிறித்தவ மிஷனரிமார் கல்வித் துறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அரசாங்க உதவியுடன் நடாத்தப்பட்ட தனியார் பாடசாலைகளின் தொகை 187 ஆக அதிகரித்தது. -
இதே காலத்தில், ஆங்கிலப் பாடசாலைகளை உயர் கல்வி நிலை யங்களோடு இணைப்பதன் மூலம், பல்கலைக்கழகக் கல்வியை அளித் தற்கும் குடியேற்ற ஆட்சியாளர் ஒரு திட்டம் தீட்டினர். 1849 ஆம் ஆண்டிலே தாபிக்கப்பட்ட பரி தோமஸ் கல்லூரி 1863 ஆம் ஆண்டில் கல்கத்தாப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பின் னர், உயர்நிலைப் பரீட்சைகளுக்கு மாணுக்கரைத் தயார் செய் தது. யாழ்ப்பாணத்திலே தாபிக்கப்பட்ட பரி ஜோன்ஸ் கல்லூரி யும் இதே பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. 1872 ஆம் ஆண்டிற் கண்டியிலே தாபிக்கப்பட்ட திரித் துவக் கல்லூரியும், 1874 ஆம் ஆண்டில் கொழும்பிலே தாபிக்கப்பட்ட வெஸ்லி கல்லூரியும், 1876 ஆம் ஆண்டிற் கல்கத்தாப் பல்கலைக் கழகத் துடன் இணைக்கப்பட்டன. 1870 ஆம் ஆண்டிற்கிடையில், * கொழும்பு அகடமி' எனப்பட்ட கொழும்புக் கல்விக் கோட்டம் கல்கத்தாப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப் பட்டதன் விளை வாக, இலண்டன் பல்கலைக் கழகத்தின் வெளிவாரிப் பட்டங் களைப் பெறுவதற்கான வசதிகள் அளிக்கப்பட்டன. 1870 ஆம் ஆண்டில் இலங்கை மருத்துவக் கல்லூரியும், 1874 ஆம் ஆண்டிற் சட்டக் கல்விக் கழகமும் (பின்னர், சட்டக் கல்லூரி ஆயிற்று) தாபிக்கப்பட்டன; இவற்றை ஆங்கிலக் கல்வியின் வளர்ச்சியில் இரு முக்கியமான நிகழ்ச்சிகளாகக் கொள்ளலாம். மேலும், மத்திய வகுப்பாரின் பிள்ளைகள் பிரித்தானியக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் உயர்நிலைக் கல்லி பயில்வதற்கும் வாய்ப்பு இருந்தது. 1921 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்

மத்திய வகுப்பு , 89
கழகக் கல்லூரி தாபிக்கப்பட்டது. இலண்டன் பல்கலைக் கழகம் நடாத்திய வெளிவாரிப் பட்டப் பரீட்சைகளை எடுப்பதற்கு இங்கு மாணுக்கர் பயிற்றப்பட்டனர். 1921 இல், இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரியும் இலங்கை மருத்துவக் கல்லூரியும் ஒன்றிணைக் கப்பட்டு, இலங்கைப் பல்கலைக் கழகம் உருவாகியது. இதுவே ஆங்கிலக் கல்வியின் வளர்ச்சியின் உச்சக் கட்டமாகக் கொள்ளத் தக்கது.
ஆங்கிலக் கல்வி இவ்வாறு வளர்ச்சியடைந்தபோதும், சிறப் புரிமை படைத்த சிறுபான்மையினரே அதனல் நன்மை பெற்ற னர். முன்னர்க் கூறியவாறு, இப்பாடசாலைகள் நகர்ப் பிரதேசங் களிலேயே அமைந்திருந்தன. அன்றியும், இவற்றில் கல்வி பயில் வதற்குக் கட்டணமும் செலுத்த வேண்டியிருந்தது. ஆதலின், அவற்றிற் கல்வி பயிலும் வாய்ப்புப் பொது மக்களுக்குக் கிட்ட வில்லை. மேலும், ஆங்கில ஆட்சியாளருடன் நெருங்கிய தொடர்பு பூண்டிருந்த முதலியார் மாரும், முகாந்திரங்களும், கிரா மத் தலைவர்களும் அடங்கிய சீரியோர் குழாமே ஆங்கிலக் கல்வியி ஞல் உடனடியாகப் பெறக்கூடிய நன்மைகளைப் பற்றி அறிந்தி ருந்தது. ஆனல், பெருந் தோட்டப் பயிர்ச் செய்கையின் விளை வாக முன்னேறிக்கொண்டிருந்த, புதுப் பணக்காரரும் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தை விரைவிற் புரிந்து கொண்டனர். 1881 ஆம் ஆண்டிலே, இலங்கையில் ஆயிரத்தில் ஒருவர் மட் டுமே ஆங்கிலக் கல்வி பயின்று அரசாங்கத்துறையில் உத்தியோ கம் பெறமுடிந்தது எனப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 1911 ஆம் ஆண்டில், மேனுட்டுச் செல்வாக்கிற்கு உட்பட்ட இரு பெரும் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக கரைநாட்டுச் சிங்களவரும் இலங்கைத் தமிழரும் விளங்கினர்; கரைநாட்டுச் சிங்களவரில் 3.5 சத வீதத்தினரும், இலங்கைத் தமிழரில் 3.1 சத வீதத் தினருமே ஆங்கில அறிவுடையவர்களாக இருந்தார்கள். w
மத்திய வகுப்பின் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கை வகித்த ஆங்கிலக் கல்வியானது குடியேற்ற ஆட்சியாளரின் ஆதரவினலும், கிறித்தவ மிஷனரிமார் முன்னேடிகளாக முனைந்து நின்று செய்த முயற்சியினுலும் பெருவிருத்தியடைந்தது. இதற்கு எதிர் நட வடிக்கையாக, பெளத்தர்களும், இந்துக்களும் தமக்கே உரிய தனித்தனிக் கல்வி இயக்கங்களை ஆரம்பித்தனர். இவ்வியக்கங் கள் பிரதானமாகப் பெளத்த பிர மஞான சங்கத்தினுலும், பூரீலபூரீ ஆறுமுக நாவலரும் பிற சைவத் தலைவர்களும் ஆரம் பித்த இந்துக் கலாசார மறுமலர்ச்சி இயக்கத்தினலும் ஊக்கமும் ஆக்கமும் பெற்றன. இதன் விளைவாக, கொழும்பு, கண்டி, காலி ஆகிய இடங்களிலே பெளத்தப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட் டன; யாழ்ப்பாணத்தில் ஓர் இந்துக் கல்லூரி தாபிக்கப்பட்டது. இக் கல்வி நிலையங்களிலே போதிக்கப்பட்ட கல்வியானது அடிப்படையில் அரசாங்கப் பாடசாலைகளிலும் மிஷன் பாட சாலைகளிலும் போதிக்கப்பட்ட கல்வியைப் போலவேயிருந்தது. மேலும், இவை மத்திய வகுப்பைச் சேர்ந்த பெளத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் அரசாங்க சேவையில் உத்தியோகம் பெறுவ தற்கு வழிவகுக்கும் கல்வியைப் போதிப்பதையே நோக்காகக் கொண்டிருந்தன. ஆயினும், சமயத்துக்கும். இந்நாட்டுப் பண்

Page 50
90 வரலாறு
பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, இந்நிறுவனங் களின் ஒரு விசேட இலட்சணமாகும்.
இந்நாட்டு மத்திய வகுப்பின் பொருளாதார வளம், சமுதாய அந்தஸ்து, தனிப்பட்ட வாழ்க்கை முறை ஆகியவற்றை உரு வாக்குவதற்கு உறுதுணையாக இருந்த காரணிகளில் ஒன்று, இவ் வகுப்பார் உயர் கல்வி கற்றதாற் பெற்ற தகைமையாகும். நாம் முன்னர் க் கண்டவாறு, ஆங்கிலக் கல்வி பயின்றே ரே அரசாங்க சேவையிற் பணியாற்றும் தகைமையைப் பெற்றனர். அக்கல்வி, பெரும்பாலும், சலுகை பெற்றிருந்த மத்திய வகுப்பாரின் சிறப் புரிமையாகவே இருந்தது. ஆயினும், ஆங்கிலேயர் மட்டுமே நிருவாகத்தில் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர். எனவே, சிவில் சேவையிலும் உயர்ந்த நிருவாகப் பதவிகளுக்கும் இலங்கை யர் நியமிக்கப்படவேண்டும் என்று கோரும் முகமாகக் கிளர்ச்சி தொடங்கிற்று. இதன் விளைவாக, 1920 ஆம் ஆண்டு முதலாக, அரசாங்க சேவையிலே உயர்ந்த நிருவாகப் பதவிகளுக்கு இலங் கையர் நியமிக்கப்படலாயினர். அன்னரின் எண்ணிக்கை காலப் போக்கிலே அதிகரித்து வந்தது.
சிவில் சேவையில் இலங்கையர் சேருவதற்கு வழிவகுக்கும் வகையில் ஒரு போட்டிப் பரீட்சை வைக்க வேண்டியதன் அவசி யத்தை சட்டக் கழக அங்கத்தவர்கள் சுட்டிக் காட்டினர்கள். இதற்கேற்ப, 1870 ஆம் ஆண்டிலே கொழும்பிலும் இலண்டனி லும் ஒரு போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது. 1880 ஆம் ஆண்டில், இலண்டனில் மட்டுமே இப்பரீட்சையை நடத்த வேண் டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இப்பரீட்சைக்குத் தோற்று வதற்குப் பல்கலைக்கழகப் படிப்பு ஒரு தகைமையாகக் கொள்ளப் பட்டதால், கல்வியறிவு பெற்றிருந்த மத்திய வகுப்பாரிலிருந்து ஒரு சிறு தொகையினரே சிவில் சேவையில் இடம்பெற்றனர். 19 ஆம் நூற்றண்டின் இறுதியிலிருந்து புதிய அரசாங்கத் திணைக்களங்கள் நிறுவப்பட்டதால், இலங்கையர் சிவில் சேவையிற் சேருவதற் கிருந்த வாய்ப்புக்கள் பெருகின. இது சம்பந்தமாக, 1903 ஆம் ஆண்டிலே காணி நிருணயத் திணைக்களமும், 1912 ஆம் ஆண் டிலே விவசாயத் திணைக்களமும் நிறுவப்பட்டதைக் குறிப்பி G) fit.
இலங்கையரைக் கூடிய தொகையிலே சிவில் சேவைக்கு நியம னஞ்செய்தல் குறித்து ஆராய்வதற்காக, 1918 ஆம் ஆண்டில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. சிவில் சேவையில் மூன்றில் ஒரு பங்கு, இலங்கை யருக்கு வழங்கப்பட வேண்டுமென்று இக்குழு சிபாரிசு செய்தது. அத்துடன், சிவில் சேவையிற் சேருவதற்கு அவசியமான உயர் கல்வித் தகைமைகளை இலங்கையர் பெறுவ தற்கு, புலமைப் பரிசில்களை வழங்கும் ஒரு திட்டமும் வகுக்கப் படவேண்டு மென்று இக்குழு சிபாரிசு செய்தது. இவ்வாருக, 1918 ஆம் ஆண்டிற்குப் பின்னர், மத்திய வகுப்பைச் சேர்ந்த பலர் இவ்வசதிகளைப் பயன்படுத்தி, அக்காலத்திலே தாபிக்கப் பட்ட பல்வேறு திணைக்களங்களில் உயர் பதவிகளை வகிக்கும் வாய்ப்பைப் பெற்ருர்கள். எனவே, பொது வேலைத் திணைக்களம், தபாற் தந்தித் தொடர்புத் திணைக்களம் போன்ற பல்வேறு திணைக்களங்களிலே மத்திய வகுப்பினர் நியமனம் பெற்றனர்.

மத்திய வகுப்பு 9.
இத்திணைக்களங்களிலே பணியாற்றுவதற்குத் தொழினுட்பத் திறனும் தேவைப்பட்டது. ஆகவே, திறமை வாய்ந்த மாணுக்கர் பிறநாடுகளிலே எந்திரவியலிற் பயிற்சி பெறும் பொருட்டு, புல மைப் பரிசில்களை வழங்கும் ஒரு திட்டம் அரசாங்கத்தினுல் ஆரம் பிக்கப்பட்டது. இதன் விளைவாக, தொழினுட்பத் திறன் தேவைப்பட்ட தொழில்களில் பணியாற்றுவதற்கு நியமனம் பெற்ற இலங்கையரின் எண்ணிக்கை அதிகரித்தது. நில அளவை யாளராகப் பணியாற்றிய இலங்கையரின் எண்ணிக்கை 1901 ஆம் ஆண்டில் 16 1 ஆகவும், 1921 ஆம் ஆண்டில் 465 ஆகவும் இருந் தது; இதே சமயம், சிவில் எந்திரவியலாளராகச் சேவையாற்றிய இலங்கையரின் எண்ணிக்கை 1901 ஆம் ஆண்டில் 11 ஆக இருந்து, 1921 ஆம் ஆண்டில் 56 ஆக அதிகரித்தது. இவ்வாறு, தொழினுட்பத் துறையிலேயும் மத்திய வகுப்பாரின் தொழிற் செல்வாக்கும் பொருளாதாரப் பலமும் வளர்ச்சியடையலாயின.
இந்நாட்டின் மத்திய வகுப்பின் தொழிற் பலத்தை ஆராயு மிடத்து, மத்திய வகுப்பை உருவாக்குவதிலே செல்வாக்குச் செலுத்திய பிரதான தொழில்களில் மருத்துவத் தொழிலும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. மருத்துவ, சுகாதார சேவைகள் முதலில் மலையகத் தோட்டப் பகுதிகளிலேயே அவசியந் தேவைப் பட்டன என்பது புலனுயிற்று. தென்னிந்தியத் தோட்டத் தொழி லாளருக்குச் சுகாதார வசதிகளை அளித்தல் தோட்டச் சொந்தக் காரரின் பொறுப்பாயிருந்தது; இங்கிலாந்திலிருந்து மருத்துவ சேவையாளர் இங்கு வரவழைக்கப்பட்டனர். 1866 ஆம் ஆண் டளவிலிருந்து, குடியேற்றநாட்டு அலுவலகத்தின் ஆணைக்கிணங்க வரையறுக்கப்பட்ட திட்டத்தின்படி, இந்நாட்டின் சுகாதார சேவைகளைக் கொண்டு நடத்துதற்கு வேண்டிய பயிற்சியை அளிக் கும் வகையில், இலங்கையர் பிற நாடுகள் லே கல்வி கற்பதற்கு வசதியளிக்கப்பட்டது. இக்கொள்கைக்கு ஏற்ப, அரசாங்கம் தேர்ந்தெடுத்த இலங்கை மாணுக்கர், அடிப்படை மருத்துவப் பயிற்சி பெறும் பொருட்டுக் கல்கத்தாப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பப் பட்டனர். பின்னர் உயர்நிலைப் பயிற்சி நெறிகளைக் கற்பதற்காக, அன்னர் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர். இவ் வசதிகளைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மத் திய வகுப்பார் மருத்துவத் துறையில் உத்தியோகங்களைப் பெற்ற னர் 1882 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின் படி, இங்கிருந்த 15 மாவட்ட மருத்துவ அதிகாரிகளுள் (ஒருவரைத் தவிர) 14 பேர் இலங்கையராக இருந்தனர். அந்நிய மருத்துவர்களைக் காட்டிலும் இந்நாட்டு மருத்துவர்களே தோட்டத் தொழிலாளர் களின் மதிப்பைப் பெற்றனர்; தோட்டத் தொழிலாளரின் பண் பாட்டுப் பின்னணியை இவர்கள் அறிந்திருந்தமையே இதற்குக் காரணமாகும். மேலும், தனியார் துறை மருத்துவ சேவையும் பரவியது. இதன் விளைவாக, மருத்துவத் தொழிலில் ஈடுபடுவ தற்கு இலங்கையருக்கிருந்த வாய்ப்புகள் பெருகிக்கொண்டே இருந்தன. 1901 ஆம் ஆண்டில் 323 ஆக இருந்த மருத்துவர் களின் எண்ணிக்கை, 1921 ஆம் ஆண்டில் 789 ஆக அதிகரித்தது. 1907 ஆம் ஆண்டுப் புள்ளி விவரங்களின்படி சுகாதாரத் திணைக் களத்திலிருந்த அறுவைச் சிகிச்சை நிபுணர், உதவி அறுவைச்

Page 51
92 வரலாறு
ஒதிச்சை நிபுணர் ஆகியோரில் 67 சத வீதத்தினர் இலங்கை யராக இருந்தனர்.
1870 ஆம் ஆண்டளவிலே நீதி பரிபாலன உத்தியோகத்தரா கப் பணியாற்றும் வாய்ப்பு, சிவில் சேவையாளருக்குக் கிட்டியது. ஆகவே, நீதிச் சேவையிலே மஜிஸ்ரேட் பதவி போன்ற கீழ்மட் ட்ப் பதவிகளை வகிக்கும் வாய்ப்பு, சிவில் சேவையிலிருந்த சிறு தொகை இலங்கையருக்குக் கிடைத்தது. 1870 ஆம் ஆண்டிலே தாபிக்கப்பட்ட இலங்கைச் சட்டக் கல்விக் கழகமானது இலங்கை யர் சட்டக் கல்வி பயில்வதற்கு வேண்டிய வசதிகளை அளித்தது. இதனல், மத்திய வகுப்பார் நீதிச் சேவையிலே உத்தியோகங் களைப் பெறுதல் சாத்தியமாயிற்று. புள்ளிவிவரங்களின்படி, பரிஸ்டர், அப்புக்காத்து, பிரக்கராசிமார் ஆகியோரின் எண் ணிக்கை 1881 ஆம் ஆண்டில் 268 ஆக இருந்து, 1911 ஆம் ஆண்டில் 553 ஆகவும், 1921 ஆம் ஆண்டில் 800 ஆகவும் அதி கரித்தது.
முன்னர் க் கூறியது போல, மத்திய வகுப்பின் பொருளாதார வளமும் தொழிற் சிறப்பும் சமுதாய அந்தஸ்தும் பெருகியதனல், மத்திய வகுப்பார் தாம் எய்திய ஆதிக்க நிலைக்கு இணையான அரசியல் அதிகாரங்களைப் பெறுதற்கு முயற்சி செய்தனர். குடி யேற்ற ஆட்சியாளர் அக்காலத்தில் அனுபவித்த அதிகாரங்களைத் தமது கைப்படுத்தும் நம்பிக்கையோடு அவர்கள் அரசியற் சீர்தி ருத்த இயக்கங்களிலே பங்குபற்றினர்கள்.
தேயிலை, இறப்பர், தென்னந் தோட்டங்களின் சொந்தக்கார ரும், காரீயச் சுரங்கங்களின் உடைமையாளரும், வேறு வர்த்தகர் களும், செல்வ மிக்க மத்திய வகுப்பிலிருந்து உருவாகிக்கொண்டி ருந்த உயர் தொழில் வர்க்கத் தாரும் இவ்வியக்கத்திற்குத் தலைமை வகித்தார்கள். 20 ஆம் நூற்றண்டின் முதற் பத்தாண் டிலே, உயர் தொழில் வர்க்கத்தாரும் வர்த்தகர்களுமே இவ்வியக் கத்திற்குத் தலைமை வகித்தார்கள் என்பதில் ஐயமில்லை. 1908 ஆம் ஆண்டில், அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகளை இலங்கைத் தேசிய நிறுவனமும் சிலாபச் சங்க மும், யாழ்ப்பாணச் சங்கமும் ஆள்பதி மக்கலத்திற்கும் குடி யேற்ற நாட்டு அலுவலகத்திற்கும் சமர்ப்பித்தன. இந்நிறுவனங் களில் முக்கியமாக அங்கம் வகித்தவர்கள், பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையுடனும் வேறு முயற்சிகளுடனும் சம்பந்தப் பட்டவர்களும், உயர் தொழில் வர்க்கத்தாரைச் சேர்ந்தவர் களுமே யாவர். 1919 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இலங் கைத் தேசியப் பேரவையானது வர்த்த கரையும், உயர் தொழில் களிற் பணியாற்றியவர்களையும் கொண்ட மத்திய வகுப்புத் தாபனமாகவே அமைந்தது. ஆகவே, குடியேற்ற ஆட்சியாளரி டமிருந்து நிருவாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் முலம் தமது வர்த்தக நிலையையும், உயர் தொழில் அந்தஸ்தையும் மேம் படுத்தும் நோக்குடன், மத்திய வகுப்பைச் சேர்ந்த ஒரு சிறு தொகையினரே அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கான கிளர்ச்சி களை நடாத்தினர் என்பது போதரும். இந்நாட்டின் பொது மக்கள் யாவரும் பங்குபற்றிய ஒரு தேசிய இயக்க மென்று இக் கிளர்ச்சியைக் குறிப்பிட முடியாது. இன்னும், அரசியல் அதி

மத்திய வகுப்பு 93
காரம் பொதுமக்கள் கைக்குச் சென்றடைவதைத் தடுக்கும் மனப்போக்கு, அரசியலமைப்புச் சீர்திருத்த இயக்கங்களில் ஈடு பட்ட பெரும்பாலான மத்திய வகுப்பாரிடையே நிலவியது என்று கூறுவதற்கும் இடமுண்டு. வாக்குரிமையையும், அதனேடு ஒன்
ணைந்த அரசியல் அதிகாரத்தையும், கல்வியறிவும் செல்வமும் படைத்த மத்திய வகுப்பாருக்கு மட்டுமே உரித்தாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனலாம். அக்காலத்தில், இந்நாட்டு மத்திய வகுப்பாரின் அவசிய கோரிக்கைகளில் ஒன்ற கச் சர்வசன வாக்குரிமை இடம்பெறவில்லை. ஏ. ஈ. குணசிங்கா போன்ற சில தொழிற்சங்கத் தலைவர்களைத் தவிர, பழைமை வாதிகளாகிய மத்திய வகுப்புத் தலைவர்கள் பலர், வாக்குரிமை பரவலா வதை எதிர்த்தனர். இம் மனப்போக்கைத் தமக்குச் சாதகமாகக் கொண்ட குடியேற்ற ஆட்சியாளர், இக் கிளர்ச்சி பொதுமக்களின் ஆதரவின்றி, சிறப்புரிமை பெற்றிருந்த ஒரு சிலரால் மட்டுமே நடாத்தப்பட்டதென நியாயங்காட்டி, அரசிய லமைப்புச் சீர்திருத்தங்கள் வழங்குவதைத் தாமதப்படுத்தினர்.

Page 52


Page 53


Page 54

( )