கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வேலணைத் தீவு புலவர்கள் வரலாறு

Page 1
டு வேலனை பல
வெ
 

நோக்குக் கூட்டுறவுச் சங்கம்

Page 2


Page 3

வேலணைத் தீவு புலவர்கள் வரலாறு
ஆக்கம், *தில்லைச் சிவன்” ** கூடல் ?? வேலணை.
வெளியீடு:
வேலணை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம்

Page 4
VELANAI THEEVU , PULAVARKAL VARALARU
AUTHOR
FIRST EDITION:
PUBLISHERS
PRINTERS
PRICE
வேலணைத் தீவு
T. SIVASAMY (THILLAISIVAN) Velanai North, Velanai.
1995.
VELANAI. M. P. C. S. Ltd, VELANA.
BHAIRATHII PATHIPPAKAM, 430, K. K. S. Road, JAFFNA.
35.00
புலவர்கள் வரலாறு
ஆக்கம்
முதற்பதிப்பு
G6, Gifu (?
அச்சுப் பதிப்பு
விலை
தி. சிவசாமி (தில்லைச்சிவன் )
** கூடல் "" வேலணை வடக்கு, வேலணை.
1995
வேலணை ப. நோ. கூ. சங்கம்
பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
ரூபா 35,00
FLOfir 6tro
காம் மண்ணிற் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து
rri hii i
".
விதையாகியோர் அனைவருக்கும்.

தோற்றுவாய்
வேலணைத்தீவுப் புலவர்கள் வரலாறு ஒன்று வெளிவர வேண் டும் என்று, தீவுப்பகுதி எழுத்தாளர் சங்கம் தொடங்கிய, அறுபது களிலேயே ஏற்பட்ட எமது விருப்பம், இன்று நிறைவேறுகிறது; வரலாறு ஆனதெனினும் வரலாற்றுக் குறிப்புகள் என்பதே பொருத்தம். -
இதன் ஆக்கத்துக்கு உதவியோர் பலர். குறிப்பாக பண்டிதை. த. வேதநாயகி அம்மையார், வேலணைப் பெரியார், சைவநிலைய விதானையார் திரு. ச. மகாலிங்கம், காவல் நகரோன் திரு. ஆ. சபாரத்தினம் பீ. ஏ. , அல்லைப்பிட்டிப் பண்டிதர் d's. G. ஆறுமுகம் , கரம்பன் பண்டிதர் சோ. தியாகராசா, மண்டைதீவு திரு. தி. பஞ்சாட்சரம் என இவர்கள் சிலராவர்.
இந்நூல் அச்சாகி, உங்கள் கைகளிற் பொலியும் இந்நிலை , வேலனைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்து ஒரு நோக்காக, இதன் நெறியாளர்கள், தலைவர் திரு. பொ. மாசிலாமணி, பொது முகாமையாளர் திரு. வே. செல்லத்துரை என்போரின் கரிசனையால் ஏற்பட்டதென்பது வெளிச்சம் .
இந்நூல் வெளிவர ஒல்லும் வகையெல்லாம் உறுதுணையாய் உடனுழைத்து எனக்கோர் உந்து சக்தியாக இருந்தார் திரு. ச. சிவலோகநாதன். : ... is
படிதிருத்தி அச்சுப்பதித்து அழகாக வெளியிட உதவிய, யாழ்ப் பாணம் பாரதி பதிப்பகத்தாரின் உழைப்பு மறக்கக் கூடியதல்ல. முகப்போவியம் வரைந்துதவியவர் ம. கஜேந்திரன் ஆசிரியர்; ஒற்றுரு அமைத்துதவியவர் செ. விக்கினேஸ்வரன் ஆசிரியர் என்போராவர்.
ஆகவே இவர்களனைவரையும் ** வாழ்கென வாழ்த்தி, வேல ணைத்தீவில் வாழ்ந்த வாழ்கின்ற புலவர்களை வண்ங்கி, வரப்போ கும் புலவர்கட்கு ஆசி கூறி, இந்நூல் தமிழ்மக்களின் கைகளுக்கு அணி கலமாகவும் கருத்துக்கு விருந்து ஆகவும் அமையும் என்ற நம்புதலு டனும் அமைகிறேன்.
நன்றி, வ ைக்கம்.
J.L6)'' வேலணை. தில்ஷ்லச்சிவன் 1995.

Page 5
முதற்பக்கம்
யாழ் நகரின் தென்மேற்கில்
யாழ் மீட்கும் வில்" ஒன்று, நீளக் திடக்கிறது நீலக் கடல் அலைமேல், கோலத்தில் குணத்தில் எல்லாம் இது அதுதான் - வேலணைத் தீவென்போம்
வெளிநாட்டார் ஒல்லாந்தின் லெய்டன் போல் நினைத்திதனை லைடன் தீ வென்றும்; எம்முன்னோர்
தனத்தா னியம்விளைந்த தாற் றனத் தீவெனவும்
இன்ன எழிற்பெயர்கள் இட்டழைத்தி எம்தீவு மண்டை தீவுமுதல் ஊர்காவற் றுறை வரையும் அராலி முகத்திலிருந்து புங்குடு தீவுவரை
நீண்டும் அகன்றும் பரந்து பயன் செய்கிறது வெள்ளைக் கடற்பரப்பில் வீசிவரும் பூங்காற்றும்
நல்ல விளைமீனும் நண்டு இறால் வகைகளொடு பன்னச் சுளகுபெட்டி பாய்கடகம் ஆம் இவையும்
தென்னை பனம்பண்டம் தேடிவைத்து யாம் அனுப்ப ஏற்று வந்த யாழ்ப்பாணம்
பண்டிருந்தே எம்திவின் பண்பாடு கல்வி அருள்(த்) தொண்டில் எமக்குத் துணையாக யாம் தளிர்த்து விண்டெழுந்த வாறு விளக்கல் எமதெண்ணம்
நாவலரின் அடிஒற்றி
நாமடைந்த நன்மைகளைப் பாவலர்தம் சரிதையாய் பார்க்கலாம் எனும் நோக்கத் தவாவினால் இந்நூல்,
ஆக்கம் பெறுகிறது:
நாவலரின் அடிஒற்றி நடந்து
தமிழ் சைவக் காவலராய் வாழ்ந்த கந்தப்பர் வழி முதலும் பாவலனாம் பாரதி தன் பாங்கில், மறுமலர்ச்சிப் போதை விழிப்பில் புதுமைநுால் செய்தோர்கள் பின்னருமாய் ஒது புலவோர் ஒரு நாற்பான் மூன்றினொடு, பின் இணைப்புமாகப் பேசு மறுபத்தைவர்தமை,
ஆட்டைப் படிவகுத்து அமைத்திந்துரல் வெளியிட்டோம் ஏதங்கள் நீக்கி இதங்கண்டு போற்றுமினே!

l.
கந்தப்பிள்ளை வி.
வேலணை மேற்கூரை வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்த கந்தப்பிள்ளை பிறந்த இடம் புங்குடுதீவு என்று சொல்லப்படுகி றது. இவரது தந்தையார் பெயர், வினாசித்தம்பி. சைவாசார சீலரும் சிவபூசாதுரந்தரருமாகிய இவர் நாவலர் பெருமானுடன் நெருங்கிய தொடர்புடையவருமாகவிருந்தார். வித்துவ சிரோ மணி பொன்னம்பலபிள்ளையினது மாணவன் என்பர்.
நாவலர்' வழியில் தீவுப்பகுதியில் தமிழையும் சைவத்தையும் வளர்த்த தனிப் பெருமை இவருடையது. வேலணையில் சைவப் பிரகாச வித்தியாசாலையை நிறுவியதன் மூலம் தமிழும் சைவ நெறியும் தீவடங்கலும் ஒளிபெற்று வளரக் காரணமாக இருந் தார். இவரது பாடசாலை 1880 ஆம் ஆண்டிலேயே நிறுவப் பெற்றது. இதே காலத்தில் நெடுந்தீவிலும் ஒரு பாடசாலையை நிறுவும் நோக்கில் கரம்பனூர் ஆ. சோமசுந்தரம்பிள்ளையை அங் கணுப்பி, ஒரு திண்ணைப்பள்ளியை நடப்பித்தார் என்றும் தெரி கிறது .
சைவ தத்துவங்களை விளக்கும் முகமாக ** சைவ குக் மார்த்த போதினி' என்றொரு சித்தாந்த சஞ்சிகையை வேல ணையிலேயே அச்சிடுவித்து வெளியிட்ட பெருமையும் கந்தப் பிள்ளை அவர்களுடையதே. காசிவாசி செந்திநாதய்யர், அம்
பலவாண நாவலர், சுவாமிநாதபண்டிதர் என்போர் இவரது சிறந்த நண்பர்களாவர்.
இவரது மாணாக்கர்களான வேலணை பேரம்பலப் புலவர், சரவணைத் தம்பு உபாத்தியார் என்பவர்களும் சிறந்த புலவர்கள்.
**தத்துவப் பிரகாசம்’ ’ என்ற ஒரு நூலினை 1893 ஆம் ஆண்டே அச்சிற் பதிப்பித்துள்ளார். அந்நூல் 258 பக்கங்களிற் பாட்டும் உரையுமாக உள்ளது. பாடசாலை ஸ்தாபகர், அதிபர், புராண உரைகாரர், சிறந்த சொற்பொழிவாளர், பத்திரிகாசிரி யர், பதிப்பாசிரியர் என்பவற்றோடு சிறந்த புலவராகவும் இவர் இருந்தார். வேலணை மேற்கு மகா கணபதிப்பிள்ளையாருக்கு

Page 6
வேலணைத் தீவு
இவர் பாடியளித்த ஊஞ்சற்பாவே இப்போதும் அங்கு பாடப் பெறுகின்றது. மாதிரிக்காக அதிலிருந்து ஒரு பாடல் பின்வரு LDsrg):
** சங்கமொடு துடிமுரசு சின்னமோங்கத்
தயங்கு கொடி யால வட்டம் பீலிதேங்க மங்கையர்கள் எண்வகைமங் களங்க டாங்க
மணமலர்தூ யரமகளிர் மகிழ்ச்சி துரங்கத் துங்கமுறு வேலணை நன் நகரில் வாழுந் துரிய பர சிவனடியார் எவருமோங்க அங்கெழில்சேர் பெரிய புலத் தருளோ டோங்கு மாதிமகா கணபதியே யாடீ ரூஞ்சல். '
கந்தப் பிள்ளையின் அத்தியந்த நண்பர்களில் ஒருவரான நீர்வேலி சிவசங்கர சிவப்பிரகாச பண்டிதர், கந்தப்பிள்ளையின் மரணச்செய்திகேட்டு அவ்ரது பிரிவிற் கிரங்கிப் L u fT Lq tL u 9Q(g5 வெண்பாவில் பிள்ளையின் தொண்டினைப் புகழ்ந்துள்ளவாறு
ᏯᎦᎥᎢᎧᏈᎼᎢ Ꭶ5 ;
ஐயையோ சங்கரனே ஆருக் கெடுத்துரைப்போம் ஐயையோ வேலணை வாழ்வார்க்கெல்லாம் - ஐயையோ ஆனாவைக் காட்டிவைத்த ஆசாரிய மூர்த்தி போனானே முத்தி புக
கனகசபாபதிப்பிள்ளை. செ.
датат உபாத்தியார் என்று அழைக்கப்படும் இவரின் பெயர் கனகசபாபதிப்பிள்ளை. சிறந்த சைவாசார சீலராக வாழ்ந்த இவர் வேலணை மேற்கில், புளியங்கூடலுக் கருகில் நடராசா வித்தியாசாலையைத் தாபித்தார். விடாமுயற்சியும் பல்துறை அனுபவங்களும் கைவரப் பெற்ற இவர் ஒரு அச்சுக் கூடத்தினையும் நிறுவினார். *நடராச அச்சகம்’ என்ற பெய ருடைய அவ்வச்சகத்திற்றான் கந்தப்பிள்ளை சைவசூக்குமார்த்த போதினியைப் பிரதியாக்கஞ் செய்து வெளியிடுவித்தார்.
இச் சைவ குக்குமார்த்த போதினிக்குச் சிலகாலம் கனகசபா பதிப்பிள்ளை ஆசிரியராகவும் இருந்துள்ளார் எனத் தெரிகிறது.
இவர் 1912 ஆம் ஆண்டு சைவசித்தாந்தம்’ ’ என்ற ஒரு நூலை வெளியிட்ட தோடமையாது 1917 ஆம் ஆண்டு 'சிவ நெறிப்பிரகாசம் ' என்றொரு ஞானத் துணை நூலையும் பதிப்

புலவர்கள் வரலாறு 3
பித்து வெளியிட்டுள்ளார். இவர் தனது உறவினரான கந்தப் பிள்ளையின் பிரிவிற் கிரங்கிப்பாடிய விருத்தப்பா ஒன்று;
சித்தியார் முதலாவுள்ள திவ்விய நூல்கள் கற்று பக்தியார் பண்புமிக்குப் பரசிவ னடியே யுன்னி மெய்த்தவ மாரைக்காக்கு வியத்தகு உரைக்குநீதி முத்தியார் புலவவுன்றன் முழுப்புகழ் யாவர் சொல்வார்.
இவரது மாமனாரான கா. நமசிவாயம் ( நாகலிங்க உபாத்தி யாயர்) சிறந்த தமிழாசான். சைவ ஒழுக்கம் நிரப்பப் பெற்றவர். தேவாரங்களை பண்ணோடு பாடுவதோடமையாது பலரை பாடப் பயிற்றுவித்தவர். இவர் தனது மருகனுடன் சேர்ந்து நடராச வித்தியாசாலையைச் சிறந்தசைவநிலையமாக வளர்க்க உதவி
6ổTT Trị”.
3. இராமலிங்கபிள்ளை க. வே.
(டினையைச் சேர்ந்த இவர் தந்தையார் பெயர் கந்தப் பிள்ளை ( வி. கந்தப்பிள்ளை அல்லர் ) இவர் காலத் தி ல் வேலணை மேற்குப்பகுதிக்கு இந்தியாவில் வேதாரணியம் சிதம் பரம் ஆகிய இடங்களில் சொந்தத் தொடர்புகள் ஏற்பட்டிருந் தன. இப்பொழுதும் அத் தொடர்புள்ள குடும்பங்கள் இங்குபல வுள. இத்தொடர்புகள் காரணமாகவே இராமலிங்கபிள்ளை அவர்களும் இளமையில் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார்.
இந்தியாவிற் படித்து அங்கேயே வாழ்ந்து வந்தவராதலால் இவரது சேவைகளைத் தீவகம் அதிகம் பெற்றுக்கொள்ளவில்லை. பிரமச்சாரியாகவே வாழ்ந்த இவர் பல தனிப்பாடல்களையும் "சிதம்பரப்பதிகம் ஒன்றினையும் பாடினாரெனத் தெரிகிறது. முருகப் பெருமானுக்கும் ஒரு பதிகம் பாடநினைத்தார் போலும். அதற்கியற்றிய காப்புச் செய்யுள் இதோ:
வள்ளி படர்ந்தபுய மாமயிலோர்க் கன்புமிகத் தெள்ளியதோர் நற்பதிகஞ் செப்பவே - விள்ளென் திருக்கோட்டி யாளுஞ் செறிநால்வாய் முக்கண் ஒருகோட் டிருதாள் உவா .
இவரது சிதம்பரப் பதிகத்தின் பதினோராவது பாடலில் இவர் வேலணையைச் சேர்ந்தவரென்பதும் இவர் கந்தப்பிள்ளை யின் மகன் என்பதும் அறியக் கிடக்கின்றது.

Page 7
4.
வேலணைத் தீவு
பழமறை போற்றுந் தில்லைப் பகவனைப் போற்றி செய்தே அழகமர் சோலைச்சூழல் அரகர சிவமாஞ்சத்தம்
பழகுவே லணையின் கந்தப் பிள்ளையிற் றோன்றுபாலன் மழவிடை யாற்குச் சாத்துமாலையென் றறிஞர் ஏற்பார் .
தம்பு உபாத்தியார்.
சரவணை ஊரைச் சேர்ந்த மருதையனார் என்பவரின் மக னான இவர் வேலணை மேற்கூரில் வாழ்ந்தார். வேலணைக் கந்தப்பிள்ளையின் நல்மாணாக்கர்களில் இவரும் ஒருவர். பெரும் புலவரான இவர், நாவலர், கந்தப்பிள்ளை இ வர் க  ைள ப் போற்றிப்பாடிய பாடலொன்று;
ஆறுமுக நாவலனை யம்புவியில் வைத் திருக்கம் பேறிலரா நா பேங்கள் பின்னையிந்தக் கந்தபிள்ை தேனுமுக மாகநம்மைச் சீர்திருத்தஞ் செய்தசில கூறியிங்கு நாவமையுங் குஞ்சிதத்தாள் கூடுதுமே .
அக் காலத்தில் தீவுப்பகுதியில் சிறப்பாக வேலணையிலுள்ள பல கோவில்களிலும் கந்தபுராணப் படிப்பு நடைபெறுவது வழக் கம். எமது தம்பு உபாத்தியாயர் புராணங்களைப் படிப்பதிலும் பயன் சொல்வதிலும் , திறமைமிக்கவர்.
இவர் நயினாதீவிலும், நாரந்தனையிலும் ஆசிரியராகப் பணி புரிந்தார். அங்குள்ள தமிழ்ப் புலமைமிக்க பலர் இவரது மாண வர்களே. பல கோவில்களின் பேரிலும் பாடசாலை மு த லிய தாபனங்கள் பேரிலும் இவர் பாடியுள்ள பாடல்கள் இன்றும் போற்றப் பெறுகின்றன.
நயினை நாகபூஷலிை அம்மன் பேரில் இவர் பாடியுள்ள இரட்டை மணிமாலை இன்றும் பக்தியோடு பாடப்படுவதாகும். அதிலிருந்து ஒருவெண்பாவை மட்டும் இதிற் காணலாம்.
விதிவலியை வெல்லுதற்கு வேறுமருந் துண்டோ நிதமும் சிவத்தையுட்கொ னிங்கு - மதுவெனவெம் மூதாளர் கூறுகிறார் மூகனுக்கு நாகம்மே ஏதமறுத் தப்பெருவாழ் வீ!
இவரது மகள் பண்டிதை வேதநாயகி பல நூல்களைத் தெளிந்து பொருள் கூறும் ஆற்றலுடையவர். கற்றோர் பலரின் ஐயப் பாடுகளைத் தெளிவித்த திறனாளர். பலகட்டுரைகளையும் எழு தியுள்ளார்.

புலவர்கள் வரலாறு 5
5.
பேரம்பலப் புலவர். கோ.
வேலணையூர் தந்தையார் பெயர் கோணாமலை. ஆரம்பக் கல்வியை வேலணை அ. மி. பாடசாலையில் பெற்றார். அப் பாடசாலையின் அதிபராக இருந்த கனகசபைப்பிள்ளை இப் புலவரின் இலக்கிய இலக்கண அறிவிற்கு வித்திட்டவராவர். வேலணைக் கந்தப்பிள்ளையிடம் சித்தாந்த சாத்திரங்களைக் கற்றுத் தேறினார். அந்நாளில் அகராதி ஒன்றினைத் தம்நண் பர் சாந்தலிங்கப்பிள்ளையிடம் பெற விரும்பி,
சாந்தலிங்கம் என்றிச் சகம்பழிச்ச வாழ்வுகூர் சாந்தலிங்க சோதிடநற் சாகரமே - ஒர்ந்தும் அகராதிதன்னை அனுப்புஞ் சிவசொற் றகவாக நானுணரத் தான். '" என்று எழுதி அனுப்பிப் பெற்றார்' வேலணையில் இருந்த குமார் என்பவரிடம் சோதி டமும் கற்றார்.
வண்ணைச்சிலேடை வெண்பா, வேலணை இலந்தைக்காட் டுச் சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை, கடம்பரந்தாதி என் பன இவர் இயற்றிய நூல்களாகும்.
இவரால் பாடப் பெற்ற சித்திவிநாயகர் இரட்டை மணி மாலையை அந்நாளில் வேலணை மணியமாய் இருந்தவரும், த. கைலாசபிள்ளையின் ம ரு க ரு மா ன சோமசுந்தரம்பிள்ளை முதலிற் பதிப்பித்துப் பாராட்டினார் என்பர். அவரது இச் செய லைப் பாராட்டிப் புலவர் தமது நூலில் பின்வரும் பாடலை எழுதியுள்ளார்.
நலஞ்சேரும் வேலணையூர் முத்துமண்ய நரேந்திரன்சேய் புலஞ்சேருங் கல்வி தனஞ்சீலம் யாவும் பொருந்து மண்ணல் குலஞ்சேர் மணியதுரை சோமசுந்தரம் கூறமுன்னோன்
பொலஞ்சேர் இரட்டைமணிமாலை அச்சிற் பொலித்ததுவே
இவரிடம் பாடங் கேட்டவர்கள், இவரது மருகரான வேலா யுதபிள்ளை, மகன் கனகரத்தினம், மகள் வழிப்பேரன், பண்டி தர் கா . பொ. இரத்தினம் , என்போராவர். இவர் பா டி ய வண்ைை) ச் சிலேடை வெண்பாவிலொன்று;
செந்திருவாழ் வீதியினுஞ் செய்தவத்தோர் நாவினுஞ்சீர் மந்திரங்கள் ஆருமெழில் வண்ணையே - சந்தமிகுஞ் சாரவிருக்கார் தயையிலர்பா லெப்போதுஞ் சார விருக்கார் தலம்.

Page 8
6.
வேலணைத் தீவு
வேலணைச்சித்திவிநாயகர் இரட்டை மணிமாலையிலிருந்து ஒன்று;
தேசம்பரவும் புகழாரிலந்தைத் திருவனத்தில் லாசஞ் செயுமொரு வன்கோட் டிருபத வாரணமே நேசஞ்செய் அன்பர்க்கியை பாசமோடெமன் நேர்ந்தெறியும் பாசந்தனையு மறுத்தே யுயர்கதி பாலிக்குமே.
தில்லைநாதப் புலவர். ஆ
சரவணையூர் தில்லைநாதப்புலவரின் தந்தையார், ஆறுமுகம். இவர் நமசிவாயம் என்ற நாகலிங்க உபாத்தியாயரிடமும், தம்பு உபாத்தியாரிடமும் பாடங்கேட்டவர்.
இவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைவின் கற். பனை வளம் நிறைந்த பாடல்களில் திளைத்து, அவற்றினை அடியொற்றிப் பல செய்யுட்களை ஆக்குந் திறமை பெற்றிருந் தார்.
யமகம், திரிபு, அந்தாதி, சித்திரக் கவிகளை அநாயாச ” மாக இயற்றிக் கொண்டிருப்பார்.
தில்லை, நல்லூர், கதிர்காமம், நயினை முதலிய தலங்கட் கும் தீவுப் பகுதியில் உள்ள கோவில்கள் பலவற்றிற்கும் இவர் பதிகங்கள் பாடியுள்ளார். ஆங்காங்கு சில தனிப்பாடல்களையும் நிந்தாஸ்துதியாகப் பாடியுள்ளமை சிறப்பாகும்.
இவர் இயற்றிய பிரபந்தங்களைத் தொகுத்து யாழ். இலக் கிய வட்டம் ** பிரபந்தத் திரட்டு ' என்ற காத்திரமான நூலொன்றினை வெளியிட்டுள்ளது.
இவரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்துப் பொற்கிழி வழங்கிய விழா வொன்றினை வேலணைப் பாரதிஇளைஞர் கழகம் 1968 இல் எடுத்தது. அப்போது இவருக்கு வழங்கிய வாழ்த்து மடலில் இருந்து ஒரு பாட்டு வருமாறு; w
குறையெனிற் கடிந்துநொந்து, குணமெனிற் புகழ்ந்து போற்றும் நிறைகுணம், எவர்க்குமஞ்சி நின்றிடா தெதிர்க்கு மாண்மை, மறைபொரு ளறிந்து துய்ப்போர் மகிழ்ந்திட இனிய சொல்லால் முறையறிந் துரைக்கு மாற்றல் முனிவனே புலவ வாழி!

7
புலவர்கள் வரலாறு
இப்புலவர் வழியில் இவர் மகனான சிவநேசபிள்ளை B. A. ( தில்லை - சிவா ) சிறந்த ஒரு கவிஞராவர். இவருஞ் சில பதி கங்கள் பாடியுள்ளார்.
7. மருதையனார். இ
ஊர் சரவணை, தந்தையார் பெயர், இராமநாதர். சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர், கவிஞர், பேச்சாளர் என்பதை விடச் சிறந்த சமூக அரசியல் வாதியாகவே அடையாளங்காணப் பட்டுள்ள இவர், 1958 ஆம் ஆண்டிலேயே ஆசிரிய மணிப்பட்ட மும் பெற்றுள்ளார்.
புதிய பொருள் பொதிந்த சொற்றொடர்களை உபயோகித்து எழுதிய நவீன சிந்தனைகளின் வெளிப்பாட்டினை இவரது கட் டுரைகளிற் காணலாம். எமது தீவுக்கு வேலணைத் தீவென்னும் பெயரே சாலவும் பொருத்தமானதென்னுந் துணிவில், அதனை நிறுவி, நாற்பதுகளின் முன் அவர் இந்துசாதனத்தில் எழுதிய கட்டுரைகள் பல, தம்மை வெளிக்காட்டாமல் வேலணைத்தீவு'
* கிழவன் பழந்தொழும்பன் ' என்னும் பெயர்களுள் மறிைந்து கொள்வது இவர் வழக்கம். அந்நாட்களில் அயல் மதத்தாக்கத் தினால் வலுவிழந்து, சைவமும் தமிழும் போற்றுவார் அற்றுப் போயிருந்த நிலையை மாற்றக் கருதிய இவர், ' வேலணைத் தீவுச் சைவ இளைஞர்சபை ' யைத் தோற்றுவித்து, அதன் மூலம் மாநாடுகளையும், விழாக்களையும் ஒழுங்கு செய்து, இந்தியப் பேரறிஞர்களான சி. கே. சுப்பிரமணியமுதலியார் ராமச்சந்திரன் செட்டியார் போன்ற சைவத்தமிழறிஞர்களையும் பண்டிதர் மகாலிங்கசிவம் , சிவபாதசுந்தரம் போன்ற ஈழப் பெரும்புலவர்களையும் வருவித்து எழுச்சிகாணச் செய்தார், மக் கள் தாம் சைவர் என்ற பெருமித உணர்வில் நீறும் நெற்றியிற் பொட்டும் இட்டுச் செல்லக்கண்டு மகிழ்ந்தார்.
தீவகத்தில் வெளிவரும் பாடசாலை மலர்கள், திருக்கோவில் மலர்கள், விழாமலர்கள் எனப் பலவற்றில் இவரது கருத்தும் ஆக்கங்களும் முதற் பக்கங்களைப் பிடிக்கத் தவறுவதில்லை. வேலணைச் சைவப்பிரகாசம் நூற்றாண்டுவிழா மலரில் கண்ட
இவரது பாடலொன்று வருமாறு:

Page 9
வேலணைத் தீவு
*" தண்டமிழ்க்கும் சிவநெறிக்குந் தனியுறையுள் யாழ்ப்பாணத் தகைசால் நாடென்று
எண்டிசையும் ஏத்தஉழைத்துய்வித்த நாவலனார் ‘’ எண்ணம்
ஒர்ந்து மண்டுபுகழ்க் கந்தப்பன், பேராசான் மடுத்தவாய்ப் பகடன்னா
øð fTL G5 கண்டவே லணைச் சைவப் பிரகாசக் கலைமகள்தாட் கமலம்
போற்றி .
சபாநாதன் குல முதலியார்
கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தந்தையார் குலசேகரம்பிள்ளை, வேலணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். குலசபாநாதன் அராலியிற்றிரு மணஞ் செய்து தொழில் காரணமாகக் கொழும்பில் வாழ்ந்து வந்தார்.
சென்னை "மக்மில்லன் வெளியீடான "சிறுவர் கலா மஞ்சரி? இவரது படைப்பு இப்போது, எமக்குக் கிடைக்கக்கூடிய, யாழ்ப் பாண வரலாற்று ஆதார நூல்களில் ஒன்றாகிய, மாதகல் மயில் வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை இதனைப் பல அடிக்குறிப்புகளுடன் அச்சிற் பதிப்பித்து வெளியிட்டவர் முதலியார் குலசபாநாதன் அவர்களே.
அஞ்ஞான்று இவரது நல்ல நண்பனுக்குச் சரவணையூர் நொத்தாரிஸ் சின்னத்தம்பி அருளம்பலம் இருந்தார் என்று கூறு
வர்.
சிறிலங்கா " சஞ்சிகையின் ஆசிரியராகவும் அதன் எழுத் தாளராகவும் கடமையாற்றிய இவர், கதிர்காமம் ’ ‘நயினை' * நல்லூர் தலவரலாறுகளையும் அரிதின்முயன்று ஆய்ந்து எழுதி யுள்ளார்.
தனது குலதெய்வமான மேலைக்கரம்பன் முருகமூர்த்திப் பெருமான் மீது பல பாடல்களும் பதிகங்களும் வெளிவர இவர்
காரணமாக இருந்தார்.

புலவர்கள் வரலாறு 9
9,
10.
ஜெகந்நாதன், பொன்
வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் gj ஆசி
ரியர் தந்தையார் பெயர்:"பொன்னம்பலம்.
மிக இளமைக்காலத்திலிருந்தே உன்னதமானதோர் ஆராய்ச்சி யாளனாக விளங்கினார் . பல இடங்களுக்குஞ் சென்று, பல அறிஞர்களைக் கண்டு உசாவித் தான் அறிந்த தகவல்களைக் கொண்டு 'அடியார்க்கு நல்லார் வரலாற்று ஆராய்ச்சி' என்ற ஒரு நூலை 1944 ஆம் ஆண்டிலேயே வெளியிட்டுள்ளார். சென் னையில் வெளியிடப் பெற்ற இந்நூல் தமிழகப் பேரறிஞர் சோமசுந்தர பாரதியின் அணிந்துரையைப் பெற்றுள்ளது. இந் நூலில் 'அடியார்க்கு நல்லார்' என்னும் உரையாசிரியர் ஈழத் தவர் ( யாழ்ப்பாணத்தவர் ) என்று நிறுத்தப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்குப்பின், தனது எண்பதாவது வயதில் ‘* யாழ்ப்பாணத் தரசர் வரலாறும் காலமும்' என்ற நூலொன்றினையும் எழுதி யுள்ளார், இந்நூலை 1987 ஆம் ஆண்டில் யாழ். இலக்கியவட் டம் வெளியிட்டுள்ளது.
அகிலேசசர்மா, சி.
மண்டைதீவு திருவெண்காட்டு விநாயகர் கோவில் அண்மை யில் வாழ்ந்து வந்த இவர், ஒரு சிறந்த சோதிடருமாவார். இவரது சோதிடநூல் ஒன்று வெளிவந்துள்ளது.
எமது தீவுகளையும் யாழ் நகரையும் இணைத்துப் பண் ணைக் கடலுக்குப் போடப்பட்டிருக்கும் தாம்போதியின் - பாலத் தின் தேவைகருதி அதன் முக்கியத்தை உணர்த்தும் பொருட்டு, இவர் பாடி அச்சிட்டு வெளியிட்டுள்ள 'பண்ணைப் பாலக் கும்மிகள்' பிரசித்தமான ஒரு நூல், அக்காலவாக்கில் எல் லோராலும் விரும்பிப் பாடப்பெற்றவை. வேறு சில கும்மி களையும் இவர் இயற்றியுள்ளார்.
குமாரவேற்பிள்ளை, பொன்.
வேலணைத் தீவின் தலைபோல அமைந்துள்ள மண்டை தீவு இவருடைய ஊர். தந்தையார் பெயர், பொன்னம்பல பிள்ளை .

Page 10
IO
வேலணைத் தீவு
இந்தியாசென்று, தமிழ் வல்ல பெரும் புலவர்களிடம் பாடங் கேட்டு புலமை பும் வித்துவப்பட்டமும் பெற்றுத் திரும்பிய இவர் 1937 ஆம் ஆண்டு மண்டைதீவிலிருந்து 'அமுதசுரபி' என்ற திங்களிதழ் ஒன்றினைத் தொடங்கி நடத்தி வந்தார். இவ்வித ழினை நடத்துவதற்கென்றே, தமிழ் நாட்டின் பெரும் மழைப் புலவர், பொ. வே. சோமசுந்தரனார் என்பவரையும் தன்னுடன் அழைத்து வந்தார் என்பர். பின்னாளில் சங்க இலக்கியங்களுக்கு அகன்ற உரை எழுதியவர் இந்தப் பெருமழைப் புலவரே.
குமாரவேற்பிள்ளை 'ஈழகேசரி’ வார இதழில் " " மந்திர வாதியின்மகள்' என்னுந் தொடர் நாவலினை எழுதிப் புகழ் பெற்றார்.
இவர் வித்துவான் கணேசய்யரிடம் பாடங்கேட்டு ஐயம் திரிபு அறத்துணிந்தவர். இரசிகமணி கனக செந்திநாதன், ஆங் கிலச் சிறுகதை மன்னன் அழகு சுப் பிரமணியம் இவரது நண் பர்கள்.
மண்டைதீவு தெற்குக் கந்தசாமிகோவில் எசமானனும் வள் ளலுமான இவரிடம் மாணவரான பலர் உடனுறைவார்கள், இப்படியாக இவரிடம் பழிகிப் பாடங் கேட்டவர்களில் அல்லை. க. வ. ஆறுமுகம், மண்டைதீவு தி. பஞ்சாட்சரம் என்போர் குறிப்பிடக் கூடியவர்களாகும்.
இவரது புகழினைப் புனைந்த கவிதை யொன்று 1971 ஆம் ஆண்டு "தாய்கவிதைத் தொகுதியில் வெளிவந்துள்ளது அது வருமாறு:-
** அகப் பொருட்டுறையும் வீரம் ஆண்மை யென் றிவை மலிந்த புறப்பொருள் பலவுங் கற்றுத் தமிழர் தம் பொற்காலத்தை மறப்புறா வகையில் ஆய்ந்து மாந்தியும் மற்றோர்க் களித்தும் சிறப்புடன் வாழ்ந்த எம்பொன் குமாரவேற் பிள்ளை மன்னே’’
இரத்தினம், கா. பொ. பண்டிதர்
பிறந்த ஊர் வேலணை. தந்தையார் பெயர் கார்த்தி கேயர் பொன்னம்பலம். கல்வியிற் பல பட்டங்களையும் அரசி யலிற் பா. உ. பதவியினையும் பெற்றுள்ள இவர், தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கெல்லாம் முன்னோடி ஆவார்.

புலவர்கள் வரலாgது |
1 3.
முதன் முதலாக நாவலர் பெருமானை நினைவு கூர்ந்து நாவலர் நினைவு மலரினை 1938 ஆம் ஆண்டில் வெளியிட்ட முதல்வர் இவர். இதனைத் தொடர்ந்து தனது தாய்வழிப் பாட்டனான " " பேரம்பலப் புலவர்' நினைவு மலரினையும் வெளியிட்டுள்ளார்.
1952 இல் தமிழ் மறைக் கழகத்தினையும், 1963 இல் உல கத் தமிழ் மன்றத்தையும் நிறுவியதுடன் அவற்றின் தலைவரா கவும் இருந்து செயற்பட்டுள்ளார். 1955 இல் " " எ ல் லா ந் தமிழில்’ இயக்கத்தைத் தொடக்கி வைத்தார்.
கபிலன்" என்ற புனை பெயரில் காலத்துக்குக் காலம் பல கவிதைகளையும் சொந்தப்பேரில் பல கட்டுரைகளையும் ஆய்வு களையும் ஈழகேசரி’ முதற் பல சஞ்சிகைகளிலும் எழுதி வந்த இவர், இன்றுவரை அச்சிட்டு வெளியிட்ட புத்தகங்கள் பதி னைந்துக்கு மேல்.
தமிழ் மறைவிருந்து, தாவாரம் இல்லை, இலங்கையில் இன் பத்தமிழ் நூற்றாண்டுகளிற்றமிழ் இலக்கியம் கற்பித்தல், கற்பகம் , தமிழுணர்ச்சி என்பனவற்றோடு இமயத்தின் உச்சியில்" என்ற கவிதைத் தொகுப்பினையும் பல அரசியல் சார்ந்த நூல் களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
இவுப்பகுதியில் புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, மண் டைதீவு, வேலணைத்தீவு என்று ஒவ்வோரிடமாகத் தமிழ் மறை விழாவினை நடத்தி, ஒவ்வொரு இடத்தின் சிறப்பியல்பும் பொருந் தியனவாக ஒவ்வோர் விழாமலரினை வெளியிட்டு வைத்தவரும் இவரே.
சந்திரசேகரம், பேர.
வேலணை மேற்கூரில் பிறந்த இவர் சரவணையை வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்தார். இவர் தந்தையார் பெயர் பேரம்பலம் (அப்பாத்துரை). இலங்கையில் முதன்முதலாகச் சங்கீத பூஷணப் பட்டம் பெற்ற இவர் தொடர்ந்து 1946 இல் இசை மணிப்பட் டமும் பெற்றார்.
இசை இலக்கணம்’ என்று இவரால் எழுதி வெளியிடப் பெற்றநூல் இசை மாணவர்களுக்கும் , இசையாசிரியர்கட்கும் ஒரு வரப்பிரசாதம் போன்றது. இந்நூலை இவர் 1966 இல் வெளிப்படுத்தினர்.

Page 11
12
14.
வேலணைத் தீவு
இவர் இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகப் பணி புரிந்தார். அக் காலங்களில் வானொலியில் எழிற்கலைக் கோலங் கள் பல இசைக்க உதவினார் என்பர். வானொலியில் 'புராண படன நிகழ்ச்சி' யை அறிமுகம் செய்து வைத்தவருமிவரே. பல கல்லூரிகளின் இசையாசிரியர். வரலாறு, சமயம், இசை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை இதழ்களில் இவர் எழுதியுள்ளார்.
சிவபாதசுந்தரம், சோ
வேலணைத் தீவினைச் சேர்ந்த கரம்பன் ஊரைப்பிறப்பிட மாகக் கொண்டவர். தந்தையார் பெயர் சோமசுந்தரம்பிள்ளை.
இவர் யாழ். மத்திய கல்லூரியிற் படிக்கும் போது வியாகரண மகோபாத்தியாயர் பிரம்மபூரீ ராமசாமி சர்மாவிடம் தமிழ் படித்துச் சிறந்த புலமை எய்தினார்.
"ஈழகேசரி’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்து அப்பத்திரி கையின் தரத்தினை நவீனப்படுத்தி உயர்த்தியதுடன் பல இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து வளர்த்துள்ளார்.
இலங்கை வானொலித் தமிழ் நிகழ்ச்சியதிகாரியாகப் பத் தாண்டுகள் பணி செய்ததின் பின் ல ன் ட ன் பி. பி. ஸியில் இரண்டரை ஆண்டுகள் சேவையாற்றினார். இக்கால கட்டத்தில் பி. பி. ஸி தமிழ் ஒசை நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்த பெருமை இவருக்குண்டு.
இவரது தொழில் சார் அடிப்படையில் பெற்ற அனுபவம் அறி வுத்திறன்கொண்டு இவர் எழுதி வெளியிட்ட "ஒலிபரப்புக்கலை”* என்ற நூல் பேரறிஞர் ராசாசியாலும் பாராட்டப் பெற்றதும், தமிழ் நாட்டுத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தினாலும் சாகித்திய மண் டலங்களினதும் பரிசில்களைப் பெற்றதுமாயுள்ளது.
இவர் எழுதியுள்ள பிற நூல்கள், மாணிக்கவாசகர் அடிச் சுவட்டில், கெளதமபுத்தர் அடிச்சுவட்டில், சேக்கிழார் அடிச்சுவட் டில் என்பனவும் தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர் சிட்டியுடன் இணைந்தெழுதிய நூற்றாண்டு நாவல் வளர்ச்சி வரலாறு, நூற்றாண்டுச் சிறுகதை வளர்ச்சி வரலாறு என்பனவுமாகும்.
தமிழ் நாட்டின் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், அதன் செயலாளராகவும் இருந்த இவரின் புகழைத் ‘தமிழோசை" கேட்கும் உலகெலாம் அறியும் எனலாம்.

புலவர்கள் வரலாறு 3
15.
16.
இராச ரத்தினம். சி
ز غير لموه 7 . . . . ܨܐ ܕ݁ܟ݂ܶܬ݂ ܪܵܝܢ ܪܳܝܹܐ ܠܐܵܪܵܝܵܫ
வேலனை ழக்குவைத்தியர் சிதம்வரப்பிள்ளையின் மக
னான இவரும் ஒரு வைத்தியூர், பாடச்ாவி08அதிபர், சமாதான
நீதிபதியும் கூட.
இவர் ‘இறைமணி’ என்ற புனைபெயரில் பல கவிதைகளை எழுதி ஈழகேசரி, இந்துசாதனம் ஆகிய பத்திரிகைகளில் வெளி யிட்டுள்ளார் ,
வேலணை அம்மன் கோவிற்றேர்த்திருப்பணி விழாமலர் முதல் பல உள்ளூர் வெளியீடுகளில் இவரது கட்டுரைகள் சிறப் பிடம் பெற்றுள்ளன.
இவ்வாண்டு ( 1992 ) நல்லூர்க்கந்தன் பேரில் இவர்பாடி வெளியிட்டுள்ள 'மலர்ந்த பூக்கள்’’ என்னும் நூல், முற்றிலும் வெண்பாப் பாவகையாலான சிறந்த நூலாக மதிக்கப் பெறு கிறது.
மலர்ந்த பூக்களில் உள்ள ஒரு மலர் இதோ: நல்லூரின் கந்தா உனைநாடி வந்தவர்க்குப் பொல்லாதன வெல்லாம் போகுமே - நில்லாது துன்பங்கள் நீங்குஞ் சுகவாழ்வு கைகூடும் இன்பங்கள் பொங்கும் இனிது.
வேந்தனார், க.
வேலணையிற் பிறந்தார், தந்தையார் கனகசபைப்பிள்ளை. இவரது முதற்பெயர், நாகேந்திரம்பிள்ளை தனித்தமிழார் வத்தினால் தன் பெயரை வேந்தனாரென மாற்றிக்கொண் டார்.
சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் கவிஞர் என்ற முறையிலேயே மிகப்பெரிய பாராட்டுக்களைப் பெற்றுள் QTTTrỉ.
இவரது குழந்தைப் பாடல்கள் என்றும் நின்று நிலைப்பன வாகும். ¥፡
பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்

Page 12
4
17.
வேலணைத் தீவு
கட்டிக் கொஞ்சும் அம்மா. என்ற அம்மாப் பாடல்களைப் பஈடாத ஈழச் சிறார்கள் இருக்க மாட்டார்கள்.
இன்னும் இவர் பாடியுள்ள சிறுவர் பாடல்களும் பெரி யோர்களுக்கான வீர ஆவேசப்பாடல்களும் பக்திப்பாடல்களும் பல இவற்றின் தொகுதி ஒன்று ‘கவிதைப் பூம் பொழில்’ என்ற பெயரில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்ததுடன் இதற்குச் சாகித் திய மண்டலப் பரிசும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இவரது கட்டுரைகள் , காவியங்கள், பிரபந்தங்கள், பாட நூல்கள் எ ன் ப வ ற்  ைற வகைப்படுத்தி ஆராய்ந்து, அவற்றுள் பொதிந்துள்ள புலமை நயங்களையும் கொள்கைத் தெளிவையும் * தமிழ்ப் பேரன்பர் வித்வான் க. வேந்தனார் என்னும் ஆய்வு நூலொன்றினை வெளியிட்டதன் மூலம் வெளிப் படுத்தியுள்ளார் வித்வான் க. சொக்கலிங்கம் ( சொக்கன் ) எம். ஏ. அவர்கள்.
இந்நூலை யாழ். இலக்கிய வட்டம் 1984 இல் வெளியீடு செய்தது.
பண்டிதர், சைவப்புலவர் பட்டங்களை பெறற்கு, படிப்ப தற்கு ஏற்ற இடமென வித்துவான் தேர்ந்தெடுத்த இடம் எது? அதனை அவர் ஒரு பாடல் மூலம் சுட்டிக் காட்டுதலைப் பார்ப் போம் .
உள்ளம் உவகையுற ஊக்கமுடன் வீற்றிருந்து
அள்ளு சுவைத்தேனை ஆர்ந்திடல் போல் - விள்ளுஞ்சீர்
தெய்வமார் செந்தமிழை தேர்ந்து நான் கற்ற இடம்
ஐயனார் கோவிலடி ஆல்,
தியாகராசபிள் ഞണ, சோ. (சோதி)
கரம்பனுரர் வாசியும் சோ$மசுந்தரத்தாரின் மகனும், சிவபாத சுந்தரத்தின் தம்பியுமான இவர் இளமையிலேயே பல நவயுகப் பாடல்களை யாத்தார்.
ஈழகேசரி, கலைமகள், சிவாஜி ஆகிய சஞ்சிகைகள் இவரது பல பாடல்களைத் தாங்கி வெளிவந்துள்ளன.
ஆசிரியராகவும், கிராமாதிகாரியாகவும் தொழில் பார்த்த இவர் தமிழ், வடமொழி அறிவு நிரம்பப்பெற்ற ஒரு பண்டிதர் .

புலவர்கள் வரலாறு I5
** சுந்தரர் பிள்ளைத்தமிழ் ‘’ என்ற ஒரு துரலினை வெளி யிட்டுள்ளார்.
வடமொழிக் காவியமான குமார சம்பவத்தைச் செய்யுள் வடிவில் மொழிமாற்றஞ் செய்துள்ளார். இவரது படைப்பான ** சோலைக்குயில் ’’ என்ற கவிதை நூல் பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளது.
தென்றல் அசையத் தேமாவின்
சிவந்த தளிர்கள் வளங்காட்ட மன்றல் என்ன மலர் விளிப்ப
வண்டர் யாவும் பரந்து விழ நின்று பகலோன் ஒளி சுரப்ப
நீண்ட சோலை மேனங் களிப்ப சென்று காணும் மணமகன் போல்
திருவே ஓடி வருவாயோ.
18. மாணிக்கம், மா.
வேலணை கிழக்கில் மாரிமுத்தர் என்பவரின் மகனான இவர் ஒரு பண்டிதர், ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அ ள வெட் டி. வடக்கை வாழ்விடமாகக் கொண்ட இவர் எதை எழுதினாலும் ** வேலணையூர்ப் பண்டிதர் மா. மாணிக்கம்’ என்றே எழுது வார். திருவாசகத்தில் உருகிப் பிரசங்கம் செய்வார்.
நல்ல இனிய பாடல்களை ஆக்க வல்ல இவர், வேலணைப் பெருங்குளம் அம்மன் மீது ஒரு திருவூஞ்சிற் பதிகம் பாடித் தம் பக்தியைக் காணிக்கை ஆக்கியுள்ளார்.
இவர் கச்சியப்ப சிவாசாரியாரின் கந்தபுராணச் சாரத்தைக் கருவாகக் கொண்டு **கந்தபுராணச் சுருக்கம்' என்னும் வசன நூலொன்றினை வெளியிட்டுள்ளார்.
19. ஆறுமுகம், க. வ.
அல்லைப்பிட்டியில் வல்லிபுரத்தின் மகனாகப் பிறந்த இவர், மண்டைதீவு குமாரவேற்பிள்ளை அவர்களின் அன்பிற்கும் மதிப் புக்குமுரிய சீடனாக இருந்தார்.

Page 13
16
வேலணைத் தீவு
பண்டிதர் பட்டம் பெற்ற போதினும் படிப்பினைக் கொண்டு உழைக்க நினைக்காமல் பல மாணவர்கட்கு இலவசமாகவே பாடஞ் சொல்லித் தருகிறார். இவர் ஒரு பிரமச்சாரி, தனிக்
கட்டை.
இவருக்கு பல சீடர்களுண்டு. பல நாடகங்களை எ முதி மேடையேற்றியுள்ளார்.
காலத்துக்குக் காலம் இவரது கவிதைகள் பல, பல பத்திரி கைகளிலும் வெளிவந்து கொண்டே இருக்கும்.
சுதந்திரனில் இவரது சிறுகதைகள் சில வெளிவந்தபோது சிலர் அவற்றை மிகுந்த ஆச்சரியத்துடன் படித்து மகிழ்ந்தனர்.
1987 இல் ‘* அடைப்புக்குறிகள் என்னும் இவரது கவி தைத் தொகுதி ஒன்று வெளிவந்தது. இவரது விடுதலைக் கவிதை உணர்வினைப் பாராட்டு முகத்தால் வி. பு. கலைபண்பாட்டுக் கழகம் 1991 இல் இவருக்கு ரூபா பத்தாயிரம் சன்மானித்துக் கெளரவித்தது. 1993 இல் பக்கவாத்தியம் இல்லாத பாட்டுக்கச் சேரி என்றொரு தொகுதியும் வெளிவந்தது. தமக்குச் சரியெனப் பட்டதனை மிக நுட்பமான சொற்சேர்க்கையால் முன் எடுத்து வைக்கும் இவரது கவிதை ஆற்றலினை விளக்கும் ஒரு பாடல் இதோ
புலமையின் பள்ளி: பெண்
மாலை அந்தி வான் காட்சி மது போதை ஊட்டாது வந்து தென்றல் தொட்டுடலில் சந்தணத்தைப்பூசாது சோலை மலர் எதுவும் சிரித்தெதையும் சொல்லாது தூரநிலா ஒளியைப பாலாய்ப் பொழியாது பால்வாய்க் குழந்தை மொழி தேனை வென்று இனிக்காது பண்ணார் இசை மனதைக் கொள்ளை கொள்ள மாட்டாது மால், ஈ தனத்தள் ஒரு சின்ன எழில் மென் இடைச்சி மங்கை எழிலில், மனந் தோயாக் கவிஞனுக்கே.
20. செல்வராசா, ஞா. மா.
காவலூர்க் கவிஞர் எனப் பேர் பெற்ற இவரது சொந்த இடம் ஊர்காவற்றுறை, தந்தையார் ஞானப்பிரகாசம் .
தினகரன் பத்திரிகையில் சில காலம் பணிபுரிந்தவர். கத் தோலிக்கரான இவர் ஞானசெளந்தரி கதையினை நாட்டுக்

புலவர்கள் வரலாறு 7
கூத்து மெட்டில் அமைத்துப் பாடிய நாடக நூல் மிகப் பிரபல்ய மானது .
மறவர் வழி மான்மியம், தாலபுராணம் என்னும் வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.
கத்தோலிக்க சமயத்தினரான போதும் சைவக் கோவில்கள் மீது இவர்பாடியுள்ள பிரபந்தங்கள், துதுகள், கண்ணிகள் ஏராளம் .
நயினை நாகபூசணிக்கும், நாரத்தனை தான் தோன்றியம் மைக்கும், மேலைக்கரம்பன் முருகமூர்த்திக்கும் பாடல்களைப் பாடியுள்ளார்.
*,い
தூதுப் பிரபந்தங்களுள் இவர் பாடிய நயினை நாக விடு
مصى
தூது எளிய சொற்களும் இனிய சந்த தடையுமுள்ளது .
மேலைக்கரம்பன் முருகமூர்த்திக்கு கிளியைத் து; த (ா க விடுத்து அவர் பாடிய பாடல் ஒன்று இதோ:
பெத்தம் மாவென்றனைவோரும் பேரிட்டழைக்கும் பைங்கிளியே நத்தும் மேலைக்கரம்பனிலே நம்மா யுறையும் கந்தனிடம் பக்தர் மடியில் குழந்தை வடிவத்தில் பாளைச் சிரிப்போடு முத்தங் கொடுக்க வரச்சொல்லி முன்னே தூது சொல்லாயோ!
21. சபாரத்தினம், ஆ. பீ. ஏ.
நாரந்தனையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரின் தந் தையாரின் பெயர் ஆறுமுகம். தமிழ், ஆங்கிலம் இரு மொழிக ளிலும் வல்லவரான இவர் ஒரு பாடசாலை அதிபர். இவரது திறனாய்வுக் கட்டுரைகள் பல ஈழத்து ஏடுகள் பலவற்றிலும் வந்துள்ளன. பல ஆங்கில அறிஞர்கள் தத்துவக் கட்டுரைகளை மொழியாக்கஞ் செய்து வெளியிட்டுள்ளார்.
வீரகேசரி வாரமஞ்சரியில் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள் பல தொடர்ச்சியாக வெளிவந்தன . இலங்கை வானொலி ஒலி பரப்பில் நவீன மேல்நாட்டு இலக்கிய மரபு பற்றிய இவரது கட்டுரைகள் பல வாசிக்கப் பெற்றன. மாணவர்களுகான “ ‘புது முறைச் சரித்திரம்' என்ற ஒரு நூற்றொகுதியை வெளியிட்டுள்
677 fTIT .

Page 14
8
வேலணைத் தீவு
காவலூர் இலக்கிய வட்டத் தலைவராகவிருத்து சில நூல் களை வெளியிட உதவியும், பலநூல்களை விமர்சித்தும், நாட கக் களங்களை ஏற்படுத்தியும் வருமிவர், இப்போது சைவசித் தாந்த சிந்தனைகளில் மூழ்கியுள்ளார்.
இவரது மகளான மைத்திரேயி சபாரத்தினமும் ஒரு கவிஞ ராவர். பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே கட்டுரை களும், கவிதைகளும் எழுதியுள்ளார். இவரது கவிதைகள் ‘புதுசு’ * அலை என்னும் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. இப்போது நோர்வேயில் படித்துக் கொண்டிருக்கும் இவரது ஆக்கங்கள் ஸ்காந்திநேவிய மொழிகளிலும் வந்துள்ளன. அங்கிருந்து தமி ழில் வெளிவரும் சில ஏடுகளிலும் இவரது கவிதைகளைக் காண
G2)fTub.
தியாகராசன், வை.
ஊர் சரவணை. தந்தையார் வைத்தியலிங்கம். தொழில், பாடசாலை அதிபர் . இருபது வயதளவிலேயே " சுதந்திரன்‘ ஏடு நடத்திய பூர்த்திக் கதைப்போட்டியில் பங்கு பற்றி ' சதங்கை ஒலி' என்ற கதை மூலம் பிரபலமானார்.
1950 ஆம் ஆண்டுகளின் ‘தமிழன்’ என்ற மாசிகை ஒன்றி னைத் தொடக்கி அதன் இணையாசிரியராகவும் வெளியிடுபவ ராகவும் பணியாற்றினார். இவரது தமிழனில் இவர் எழுதும் ஆசிரியத் தலையங்கங்கள் " " செல்வா ' போன்ற பெருந் தலை வர்களால் பாராட்டப் பெற்றன. இவரைத் தெரிந்த பலரும் இவரைத் ‘தமிழன் தியாகு' என்று அழைத்துப் பெருமை செய்தனர். முதன் முதலாகத் தமிழர் உரிமைப்போரில், பிரதமர் டி. எஸ். செனநாயகாவின் யாழ் . வருகையை எதிர்த்து, யாழ். புகையிரத நிலையத்தில் வைத்துக் கறுப்புக் கொடி காட்டிக் கைது செய்யப்பட்ட இருவரில் இவர் ஒருவர்.
1948 ஆம் ஆண்டு ஆவணித் திங்களில் சரவணையில் சைவ இளைஞர் சங்கம் நடத்திய முத்தமிழ் விழாவில் வித்துவான் க. வேந்தனார் " " இன்றைய உலகில் தமிழன்’ என்ற நீண்ட ஒரு உரையை நிகழ்த்தினார். இப் பொழிவினை நூலாக்கிப் பதிப்பித்து வெளியிட்டு வைத்தவரும் இவரே.

புலவர்கள் வரலாறு I9
23. சத்தியசீலன். பா.
அல்லைப்பிட்டி ஊரைச் சேர்ந்தவர். தந்தையார் பெயர் பாவிலுப்பிள்ளை, பண்டிதர் பாவலர், கலைமாணி, ஆசிரியரான இவர் சிறுவர்கட்கான இலக்கியங்கள் ஆக்குவதில் சிறந்து விளங் குகின்றார்.
மேலைநாட்டுப் பாணியில் இவர மைத்துள்ள விடுகதைப் பாக் கள் மிகுந்த ஓசை நயமும் நடிப்புணர்ச்சியும் கூ டி ய ன வ |ா க அமைந்துள்ளன. சிறுவர்களுக்கான இவரது பாடற்றொகுதிகள் அடுத்தடுத்துப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளன. சாகித்திய மண்டலப் பரிசுகள் ‘முதல், பல பரிசில்கள் இவரது நூல்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கவியரங்கில் சொற்சிலம்பமாடுவதில் மகா சமத்தர். சடையின் கைதட்டுதலை அடிக்கடி பெறும் வண்ணப் பாக் கவிஞர் இவர் .
வானொலியிலும், ஏடுகளிலும் இவரது காவியமான ? அல் லைப்பிட்டி அருளப்பர் அம்மானை' கத்தோலிக்க சமூகத்தினர தும், நற்புலமை வாய்ந்தோரதும் பாராட்டையும் புகழினையும் பெற்றுள்ளது.
2 அருண்மொழித்தேவன், சோ.
சரவணை ஊரைச் சேர்ந்தவர். சித்தாந்த பண்டி தர் வே. சோமசுந்தரம் இவரது தந்தையார் .
கவிதைகள் பல எழுதியுள்ள இவர் கொழும்பிலிருந்து 1962 ஆம் ஆண்டுமுதல் ' தேனருவி ' என்றொரு சிறந்த சஞ்சி கையை வெள்ளியிட்டு வந்தார். அக்காலப் பார்வையில் அவ்வித ழின் அழகுந் தரமும் மிகமிகச் சிறந்ததாகப் பல வாசகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப் பெற்றது. மலரில் வெளியாகும் கவிதைகளுக்கு இயைவான வர்ணச் சித்திரங்கள் அட்டைகளை அழகுசெய்ய இந்திய இலக்கிய இதழ்களுக்கு இணையாகத் தேனருவி வெளிவந்தது.
பல புதிய உறுப்புகளுடன் சில ஆண்டுகள் மட்டும் வெளிவந்த தேனருவியின் நினைவு என்றும் பசுமையானதே. இந்த அருண் மொழியின் தங்கை சிவஞானப்பூங்கோதையும் ஒரு சிறந்த சிறு கதை எழுத்தாளர்.

Page 15
20
வேலணைத் தீவு
இவர் சமகால நோக்கில் எழுதியுள்ள பல கதைகள் நூலு ருவில், தமிழ் நாட்டில் வெளியிடப் பெற்றுள்ளன. தமிழ் நாட்டு ஏடுகளான " " குங்குமம் " " " தினகன் ' என்னும் ஏடுகளில்
இவரின் பணி தொடர்ந்ததாக அறிகிறோம்.
25.
2 6.
வீரசிங்கம், நா. வேலணை
வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தந்தை யார் பெயர் , நாகலிங்கம். ஈரோட்டுப் பாதையில் பகுத்தறிவுக் கொள்கையின் விளக்காக விளங்கும் வேலணை வீரசிங்கம் பகுத் தறிவு " என்ற ஒர் சமூக சீர்திருத்த அறிவியற் சஞ்சிகையை அகில இலங்கைப் பகுத்தறிவு இயக்கத்தினுாடாக 1962 ஆம் ஆண்டு தொடங்கி வெளியிட்டு வந்தார்.
இவரது பகுத்தறிவு ஆர்வம் கலை இலக்கிய வடிவங்களாகப் பரிணாமம் பெற்று, பல ஆக்கமுயற்சிகட்கு உந்து சத்தியாக உள்ளது.
* புழுகர் பொன்னையா ‘’ புகழ் நாடகத் தயாரிப்பு அரங் கேற்று நிகழ்ச்சிகளில் இவரது பங்களிப்புப் பெரிதும் புகழப் பெற்ற ஒன்றாகும்.
கொழும்பில் பிரபலமான தாபனமொன்றின் உரிமையாளரான இவரின் ஊர்ப்பற்றும், கலை இலக்கிய முயற்சிகளுக்கு ஊக்கம ளிக்கும் வள்ளண்மையும் எல்லாவற்றிற்கும் மேலாகப் பகுத்தறிவு வாத முற்போக்குச் சிந்தனையும், பல இலக்கிய கர்த்தாக்களின் படைப்பாக்கங்களை நூலுருவிற் கொணர உதவியது எனலாம்.
வேலணையூர் இளங்கவிஞர் " "முகிலன்' மிக இள வயதில் காலமானபோது, அவர் தம் கவிதைகளை ஆராமையுடன் தேடித் தொகுப்பித்து ‘முகிலன் கவிதைகள்’’ என்ற பெயரில் வெளி யீடு செய்து வைத்தவர் இவர்
பாலசிங்கம், மா.
ஊர்காவற்றுறை, தந்தையார் மாரிமுத்து. எழுதுவினைஞ ரான இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளருமாவர். 1982 இல் மித்திரனில் " " தழும்பு ' என்னும் குறுநாவலும் 1981 இல் தின கரனில் ‘* புதிய அலைகள் ' என்ற நாவலும் வெளிவந்தது.

புலவர்கள் வரலாறு 21
28.
ரசிகமணி கனகசெந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் இவரது "" நமக்கும் விடியும் " " குறுநாவல் பரிசினைப் பெற்றது. சிறுகதைகளையும் வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.
திருஞானசம்பந்தபிள்ளை, மு.
முன்னவர் கந்தப்பிள்ளை அவர்களின் பீட்டனாரான இவர், வேலணை மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பண்டிதை தம்பு வேதநாயகி வித்துவான் பி. சிவப்பிரகாசம் ஆகியவர்களி டம் கல்விபெற்று சித்தாந்த பண்டிதர், சைவப்புலவ்ர் பரீட்சை களில் தேறித்தங்கப் பதக்கங்ளையும் பெற்றுள்ளார். இலங்கை வானொலியில் சைவநற் சிந்தனைகளை வழங்கி வருமிவர்
அவ்வப்போது பல கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.
அண்மையில் (1993) இவரால் எழுதப்பெற்ற சைவசித் தாந்த விளக்கம் ‘’ என்ற நூல் யாழ். சைவசித்தாந்த வெளியீட்டகத்தினால் வெளியிடப்பெற்றது. சிதம்பரத்தில் நடை பெற்ற சைவசித்தாந்த மாநாட்டிலும் சைவ இளைஞர் மா நாட்டிற்கும் சொற்பொழிவுக்காக அழைக்கப்பெற்றவர். இப் போது இணுவில் மத்தியகல்லூரியின் அதிபராகப் பணிபுரிகிறார்.
யாழ். சைவபரிபாலன சபையின் சமயப்பிரசார அமைச்சர்
திரு மு. மயில்வாகனம் இவரது மாமனாராவர்.
மாணிக்கவாசகர், வ. (முகிலன்)
வேலணை வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரின் புனைபெயர் முகிலன். தந்தையாரின் பெயர், வல்லிபுரம். படிக் குங்காலத்திலேயே பல கவிதைகளை எழுதியுள்ளார்.
கலைச்செல்வி, ஈழநாடு ஏடுகளில் இ வ ர து கவிதைகள் வெளிவந்தன. ஐம்பது அறுபதுகளில் யாழ். இளம் எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட ஒரு தொகுப்பில் இவரது கவிதை ஒன்றும் பிரசுரமாகியது. "முகிலன் கவிதைகள்' என்று இவரது கவி தைத் தொகுதி ஒன்றும் வெளிவந்துள்ளது.

Page 16
22
29,
30.
3I.
வேலணைத் தீவு
கிரிவாசன், ச.
வேலணை மேற்கைச் சேர்ந்த இவரின் புனைப்பெயர்; மலை யமான், தந்தையார் பெயர், சதாசிவம். மிக இளம் வயதி லேயே மறைந்து போன இவரின் கதைகள் பல ஏடுகளிலும் வெளிவந்துள்ளன. **தாலிசிரித்தது" என்ற பெயரில் ஒரு சிறு கதைத் தொகுதியினை வெளியிட்டுள்ளார்.
நாவுக்கரசன்' ஜீவா
வேலணைத் தீவைச் சேர்ந்த சுருவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்று தெரிகிறது. இவர் பல கவிதைகளை எழுதி யுள்ளார். நாடகங்களிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். அண்மை யில் காலமான இவரின் கவிதைத் தொகுதி ஒன்றும் வெளியிடப் பெற்றுள்ளது.
சட்டநாதன், க.
வேலணையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியரான இவரின் தந்தையாரின் பெயர், கனகரத்தினம்,
கனகரத்தினம் வேலணைப் பெரும் புலவர் பேரம்பலம் அவர் களின் மகன். இவரும் ஒரு புலவர், மண்கும்பான் விநாயகருக்கு ஒரு பதிகம் பாடியுள்ளார்.
சட்டநாதன் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளன் . பல சஞ் சிகைகளிலும் இவரது கதைகள் வெளிவந்துள்ளன .
இவர் மிகவும் அடக்கமாகவும் மனிதத் தன்மையோடும் தனது கதா பாத்திரங்களை நோக்கி, அவர்களின் உநவுகளினூடாகச் சமுதாயத்தைப் பற்றிக் குறிப்பாக யாழ்ப்பாணச் சமுதாயத்தைப் பற்றி, நாசுக்காகத் தமது கதைகள் மூலம் சிந்திக்கத் தூண்டி னார், என்பர்.
இவரது " " மாற்றம் " என்கிற முதற்சிறுகதைத் தொகுதி 1980 இல் வெளிவந்தது. அடுத்து 1992 இல் ‘* உலா " என்னும் சிறுகதைத் தொகுதியும் வெளிவந்துள்ளது. யூலை 92 மல்லிகை இதழில் வெளிவந்துள்ளன "" நீளும் பாலை ' என்னும் குறு நாவல் ‘* ஒருசாதனை "" என்று, வரதரால் புகழப் பெற்றுள் ளது .

புலவர்கள் வரலாறு 23
32.
இவர் ** பூரணி ** இதழின் இணையாசிரியராகவுமிருந்
துள்ளார்.
* உலா சிறுகதைத் தொகுதி இலங்கைச் சாகித்திய மண் டலப் பரீசினைப் பெற்றுள்ளது.
சீவகாருண்யம், இ.
வேலணைத்தீவைச் சேர்ந்த கரம்பன் வடக்கு இவரின் சொந்த ஊர். தந்தையார் பெயர், இராமையா.
சிறுகதைகளும் சில கவிதைகளும் எழுதியுள்ளார். மெய்யுள் முதல்வாதக் குழுவில் ஈடுபாடு கொண்டவர். " " பூரணி ’’ இத ழின் இதழாசிரியர்களில் இவருமொருவர். பள்ளிமாணவனாக இருக்கும போதே பத்திரிகை ஏடொன்றில் வெளிவந்த இவரது ** அக்கா " என்ற முதற்கதையே சிறந்த பாராட்டைப் பெற் றது. பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது " " ஆறுகதைகள் "" என்ற அறுவர் கதைத் தொகுப்பொன்றினை வெளியிட்டார்.
அலை, திசை ஏடுகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன. வெங்கட்சாமிநாதனின் '' வாழையும் தாளையும் "" நூல் விமர்ச னம் போன்ற துணிகரமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
சோமசேகரம், சு.
ஊர் சரவணை, புனைபெயர் மணிசேகரன், தந்தையார் பெயர், சுப்பிரமணியம்.
வரி மதிப்பீட்டுத் திணைக்கள அலுவலராக இருந்த இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளருமாவர். பல ஏடுகளில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பொன்று அச்சில் உள்ளது. இவர் கொழும்பில் தொழில் பார்த்தபோது ' 'தமிழமுது" என்ற திங்கட் கலைக் களஞ்சிய மொன்றினை நடாத்தினார். அவ்விதழ் பல பிரபல எழுத்தா ளர்களுக்கும் புதிய எழுத்தாளர்கட்கும் களமாக அ  ைமந்து பெருஞ் சிறப்புப் பெற்றிருந்தது. இளம் வயதிலேயே - ஒய்வு பெற்றுக் கொண்டு ஊர் திரும்பிய மணிசேகரன் உதாரணி • அச்சகம் என்ற ஒன்றினை நிறுவி 'தாரணி” மாசிகை ஒன் றினையும் ‘செய்திச்சுடர்' என்ற புதினத்தாள் ஒன்றினையும் நடாத்தினார்.

Page 17
4.
வேலணைத் தீவு சிவசந்திரன், இ.
வேலணையூரைச் சேர் ந் த சிவசந்திரனின் தந்தையார் வைத்தியர் இராசரத்தினம் என்ற கவிஞராவர். இப்பொழுது யாழ். பல்கலைக்கழகப் புவியியற்றுறை விரிவுரையாளராகவிருக் கும் சிவசந்திரன் இளமையிற் சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆவர். இவரது இருபதுக்கு மேற்பட்ட கதைகள் அச்சுருவிற்றாள் களிற் காணப்பட்டபோதும் இவர் இவ ற் றி  ைன நூலாக்கும். ஆவல் அற்றவராக இருக்கிறார். இவர் “அகிலம்’ என்ற பெயரில் அறிவியல் விஞ்ஞானம் சார்ந்த ஏடொன்றினை வெளியிட்டுள்
GTIFT.
சிறுகதை விமர்சனக் கட்டுரைகளும் புவியியற் கட்டுரைகளுஞ். சில இதழ்களில் வெளிவந்துள்ளன. சிறந்த சினிமா விமர்சகரான
இவர் மு. தளையசிங்கம் அவர்களின் மெய்யுள் வட்டச் சஞ்சிகை
35.
யான "பூரணி’ இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். பேராத,
னைப் பல்கலைக்கழக ஆறு கதைகளில்" இவரது கதையும் ஒன்று.
கைலாயநாதன், அ.
மண்டைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரின் புனை பெயர் 'அங்கையன்’’. தந்தையார் அம்பலவாணர், கலைப்பட் டதாரியான அங்  ைக ய ன் ‘ஈழநாட்டில் ‘கேட்டிருப்பாய்
காற்றே" என்ற தொடர் நாவலை எழுதி வெளியிட்டார்.
* நெஞ்சிலோர் முள்' என்ற நாவலின் எழுத்துப் பிரதி ஒன்றும் உள்ளது. மண்டைதீவுக் கடற்கரை, ஆலடி வைரவ கோவில் கிணறு அண்மிய சூழலை வைத்துப் புனைந்துள்ள இக்கதை அவ்வூரின் நடந்த இரு தற்கொலை மரணங்களைக் கருவாகக் கொண்டு அமைந்துள்ளது போற்றோன்றுகின்றது.
இவரது ‘கடற்காற்று' என்னுங் குறுநாவல் ஒன்று வெளி வந்துள்ளது. வேறு சில கதைகளையும் எழுதியுள்ள இவர் வீரகே. சரிநாளேட்டின் ஆசிரியர் குழுவிலும் பணிபுரிந்துள்ளார். இவர் இளம் வயதிலேயே இயற்கை எய்தியமையால் இவரிடமிருந்த எமது எதிர்பார்ப்பு அற்றுவிட்டது.

புலவர்கள் வரலாறு 25
36.
37.
இராசதுரை, காவலூர்
கரம்பன் மேற்கைச் சேர்ந்த இராசதுரை, இளமையிலேயே பெற்றாரைத்துறந்து பாட்டியாரால் வளர்க்கப்பெற்றவர். இவர் கரம்பன் மேற்குச் செபஸ்தியார் கோவிற் சூழலில் வாழ்ந்தவர். இதன் பேறாக இவரது கதைகளில் இச் செபஸ்தியார் கோவிற் சூழலும் அதன் எழிற்றோற்றமும் அடிக்கடி தலைகாட்டிச் செல் வதை காணலாம் .
இவரது கதைகள் பல ஏடுகளிலும் வெளிவந்துள்ளன. சிறந்த இலக்கிய விமர்சகராக இனங்காணப்பட்டுள்ள இவர் வானொலி
நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது கதைகள் சில நூலு ருவம் பெற்றுள்ளன.
Granu #5 LITj 3F i b, u Tr.
சரவனை ஊரைச் சேர்ந்தவர். இவரின் தந்தை யார் வைத் தியரும் கிராமத் தலைமைக்காரருமான பாலசுப்பிரமணியம் என்பவராவர். உயிரியல் விஞ்ஞானத்தில் கலாநிதிப்பட்டதாரியான இவர், பல கவிதைகளையும் நகைச்சுவை நாடகங்களையும் ஆக்கியுள்ளார்.
இவர் தான் மேற்கொண்ட தாவர ஆராய்ச்சிகளின் பய னாக அரிதின் முயன்று “ ‘பண்டை மருத்துவமும் பயன்தரும் மூலிகைகளும்’ என்ற மிகப்பயன் பாடுடைய நூல் ஒன்றினை எழுதியுள்ளார். யாழ். பல்கலைக்கழக விவசிாய பீடத்தில் பணி புரியும் இவரிடமிருந்து பல படைப்புக்களை எதிர்பார்க்கலாம் .
வேலணைக் கல்விக் கோட்டத்தில் பணிபுரியும் பா. சிவபா
லன் இவரது தம்பியாவர். இரு வம் ஒரு சிறந்த கவிஞர். பல
38.
பாடல்களை எழுதியுள்ளதுடன் பல வானொலி நாடகங்களை யும் ஆக்கியுள்ளார்.
தவமணிதாசன், க.
நாரந்தனையூர் வை. கந்தசாமி என்னும் ஒரு ஆசுகவிஞரின் மகன் தவமணிதாசன். வேர்வழி ஒடி முளைத்த விஞ்ஞா
'னக் கவி. ஈழ்த்துச் சஞ்சிகைகளில் அவ்வப்போது பல கவிதை

Page 18
26
39.
40。
41
வேலணைத் தீவு
களை எழுதிவரும் இவர், அண்மையில் ‘* வைகை" என்னும் ஒரு கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். விஞ்ஞான ஆசிரியரான இவரின் கவிதைகளில் விஞ்ஞானம் , சமூக சீர்திருத் தம் இயற்கை எழில் என்பன ஆங்காங்கே ஒளிவிடுவதைப் பரவ க்
5Fr 686; GDIT).
திருநாவுக்கரசு, செ.
பண்டிதர், முதுகலை மாணிப் பட்டதாரியான இவர் அல் லைப்பிட்டி ஊரைச்சேர்ந்தவர். சிறந்த திறனாய்வாளரும் கவிஞ ருமான இவர் ** தமிழன் இன உணர்வுக் கவிதைகள்’’ பற்றிய ஆய்வு நூலொன்றினை எழுதியுள்ளார். ** சிறுகதை இலக்கிய வளர்ச்சி' என்ற ஆய்வுக் கட்டுரையையும் பல கவிதைகளையும் எழுதியுள்ள இவர் பண்டிதர் க. வ. ஆறுமுகம் அவர்களின் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார்.
இராசலிங்கம், வே:
சரவணை பள்ளம் புலத்தைச் சேர்ந்த இவரின் தந்தையார் பெயர், இ. வேலாயுதபிள்ளை. பாடசாலை மாணவனாக இருக் கும் போதே பல கவிதை ஆக்கி மற்றையோருக்குப் பாடிக் காட்டுவார். நல்ல கவிதை அநுபவமும் புலமையும் உள்ளவர். இவரது பல கவிதைகள் ஈழநாடு ' சுதந்திரன், வீரகேசரி ஆகிய ஏடுகளில் வெளிவந்துள்ளன , கவியரங்க மேடைகளிற் றோன்றிக் கைதட்டுகளைவாங்கிக் குவித்த இவர் கனடா மொன் றியலில் இருந்து தமிழில் ஒரு பருவ வெளியீட்டினை வெளியிட் டுள்ளார் .
ஜெகந்நாதன், காவலூர்.
கரம்பன் தெற்கைச் சேர்ந்த இவரின் தந்தையார், அனலை தீவுச் சுப்பையா என்பவர்.
இவர் பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் சில கல்கி " முதலாகிய இந்தியப்பத்திரி கைகளிலும் வெளிவந்துள்ளன. இவரது கதைகள் பல நூல்க ளாக வெளிவந்துள்ளன. கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கை நிலை யைத் தத்தரூபமாக்ப்படம் பிடித்துச் சித்திரிப்பதில் சமர்த்தர்

புலவர்கள் வரலாறு 27
42.
43
இவரது " நாளை " என்ற நாவல் ஜனரஞ்சனமானதொன்று * காவலூர் இலக்கியவட்டம் " இதைத் தொடக்கி வைத்தவரு மிவரே .
இவரது இளவல் காவலூர் குகநாதன் யாழ் . “ ஈழநாடு ' ஏட்டின் நிருபராகவும் சில காலம் உதவி ஆசிரியராகவும் இருந்த இவர், இப்போது பிரான்சு நாட்டில் உள்ள பாரிசில் வாழ்கி ஹார். அங்கிருந்து இப்போது ( 1992 ) வெளிவரும் பாரிஸ் ஈழநாடு ' என்ற பத்திரிகைக்கு இவர் ஆசிரியராக இருக்கிறார்.
சிவபாலன், மு. காவலூர்,
கரம்பன் ஊர் முத்துக்குமாரு தந்தையார் . இளமையிலேயே இவரது சிறுகதைகள் சில ஏடுகளில் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றன. இவ்வகையாக வெளி வந்த பதினேழுக்கு மேற்பட்ட இவரின் கதைகள் அச்சுவாகனத்தை எதிர்பார்த்துக் கொண்டி ருக்கின்றன.
திராவிட இயக்கப் பற்றாளர். கலை இலக்கிய விமர்சகர், கல்வித்திணைக்கள உத்தியோகத்தர், இப்பொழுது டென்மார்க் கில் தமிழ் செய்கிறார்.
உதயன், காவலூர்.
யாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் போதே தன் நண்பர் ரமேஷ"டன் சேர்ந்து ' இருவர் கவிதைத் தொகுதி ' என்ற ஒரு நூலினை காவலூர் இலக்கிய வட்டத்தின் ஆதரவில் வெளி யிட்டார்.
1992 இல் டென்மார்க்கில் கல்விபயிலும் இவர் டென்மார்க்
மக்களின் கலாசாரத்தை விமர்சித்து தேனிய மொழியில் எழுதிய
கவிதைகளும் மைத்திரேயி சபாரத்தினத்தின் கவிதைகளும் சேர்ந்து இருபதிப்புகள் வெளிவந்துள்ளன. இவைபற்றி அந்நாட்டு வானொலியிலும் விமர்சிக்கப் பெற்றன.

Page 19
அனுபந்தம்
I.
III.
III.
மகாலிங்கம், ச .
சைவத் தமிழ் அறிஞர் வேலணை மேற்கு . துறை: செய்யுள்
விதானையாரான இவர் பல நூறு சரமகவிகளையும் சில தனிப் பாடல்களையும் ஆக்கி உள்ளார்.
பொன்னுத்துரை, 3{ ه
பண்டிதரான இவர் வேலணை கிழக்கு ஊரவர்.
துறை கவிதை, கட்டுரை.
பாடசாலை அதிபரான இவர், சில சரமகவிகளையும் கட்டு ரைகளையும் எழுதி உள்ளார்.
பொன்னையா, சு. இ. வித்வான்
வித்வான், சரவணை ஊரைச் சேர்ந்தவர்.
துறை: கட்டுரை, கவிதை
சிறந்த இலக்கணப் புலவரும் பாடசாலை அதிபருமான இவர் பல பாடல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
IV GLDGT60) gunt, F.
பண்டிதரான இவர் சரவணையைப் பிறப்பிடமாகக் கொண் டவர். கரம்பன் இவரின் வாழ்விடம் .
துறை: கவிதை, கட்டுரை
நாகேசுவரிப் பொன்விழா மலரின் பொலிவு இவரின் கைவண் ணம். சில தனிக் கவிதைகளையும், பலசரம கவிகளையும்

புலவர்கள் வரலாறு 29
செய்துள்ாளர். சிவ ஆலயங்களுக்குத் திருவூஞ்சலும் பாடியுள் ளார். பாடசாலை அதிபர்.
V வைத்தியலிங்கம், சி. வித்வான்
V
துறை: கவிதை, கட்டுரை.
சுருவில் ஊரைச் சேர்ந்தவர். அவ்வூர் அருள்மிகுஜயனார் கோ விற் கும்பாபிசேக மலர் இவர் கை வண்ணம். அம்மலரில் ஐயனார் பற்றிய ஆராய்ச்சி வரலாறு ஒன்றினை மிக ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளார். சுருவில் ஊர்பற்றி இவர் எழுதிய பாடல்கள்பல, பலராலும் பாராட்டப் பெற்றவை.
இராசையா, க. பண்டிதர்,
ஊர்: சரவணை
துறை: கவிதை, கட்டுரை
VII
VIII
வேலணைப் பேருங்குளம் அம்மன் தேர்ப்பணி விழா மலரிலும் பாடசாலை மலர்களிலும் பாடல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
அமுதலிங்கம், க.
மண்டைதீவைச் சேர்ந்தவர்.
துறை: கவிதை
* ஈழமோகன் " என்ற புனைபெயருடன் சில தனிப்பாடல்க ளையும் சரமகவிகளையும் ஆக்கியுள்ளார்,
சுப்பிரமணியம், செ.
சரவணை ஊரைச் சேர்ந்த இவர், மாணவப் பருவத்தில் ** சைவ மாணவன் ** என்ற கையெழுத்துப் பத்திரிகை ஒன் றினை நடத்தினார். அக்காலத்திலேயே வீரசேகரி யில் சிறு வர்களுக்கான பல கதைகளையும், வியாசங்களையும் எழுதி னார். இந்துசாதனத்தில் பல, சமயக் கட்டுரைகளை எழுதிய இவர், நீண்ட காலம் : “ ஈழநாடு , வின் நிருபராகப் பணி புரிந்தார்.

Page 20
30
வேலணைத் தீவு
IX சச்சிதானந்தசிவம், செ
தபால் அதிபரும் பின்னர் சட்டத்தரணியுமான இவர், சர வணை ஊரவர், வரலாறு, சமயம் சம்பந்தமான பல கட்டு ரைகளைத் தினகரன் வீரகேசரி ஆகிய இதழ்களில் எழுதி யுள்ளார். சரவணைச் சேவாமன்ற வெள்ளிவிழா மலர் இவ ரின் ஆற்றல்களின் வெளிப்பாட்டுத் தோற்றமாகும்.
X திருஞானசம்பந்தன், செ.
ஊர்காவற்றுறை அந்தோனியார் கல்லூரியில் படிக்கும்போதே * இந்து சாதனம் " " இதழில் ஆசிரிய கடிதங்கள் எழுதிப் புரட்சி செய்தவர், சரவணை ஊரவர். தினகரன் ஏரிக்கரை நிறுவனத்தில் பணிபுரிந்தவர். சரவணை ஊர் என்றொரு இதழினை வெளியிட்டுள்ளார்.
X தளையசிங்கம், இ, வி.
X
XIII
பட்டயக் கணக்காளர், கலை, விஞ்ஞானப்பட்டதாரி, சர வணை ஊரவர், “வரவு செலவு வைப்பு முறை பற்றியும் தொன்மை இலக்கியச் சிறப்புக்கள் பற்றியும் இவரது கட்டுரை கள் பல, பல இதழ் க ளிலும் வெளிவந்துள்ளன. சிறந்த திறனாய்வாளர்.
குணரத்தினம், செ.
பட்டதாரியும் இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்தவரு மான இவர் சரவணை ஊரவர். பல கட்டுரைகளை மலர் களுக்கு எழுதியுள்ளார். இந்து சமய கலாசார அ  ைம ச் சின் செயலாளர் ஆக இருந்தபோது ' சமயம் சம்பந்தமான பல கட்டுரைகளை எழுதி உள்ளார். கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவருமாவார்.
பாலசுந்தரம், ச.
கலைப்பட்டதாரி. மக்கள் வங்கி ஊழியன். வேலணை ஊரைச் சேர்ந்த இவர் ஒர் இலக்கிய விமர்சகர். பல விஞ்ஞானக் கட் டுரைகளையும் விமர்சனங்களையும் எழுதிய இவரின் தமிழ்த் தொண்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் பெரிதும் செலவழிகிறது. அண்மையில் வரதர் எழுதி வெளி யி ட் ட "பாரதக்கதை’ நூலில் இந்நூலை எழுதவும் வெளியிடவும் ஊக்கமளித்த யாழ். மக்க ள் வங்கி அதிகாரி தி. ச. பால

புலவர்கள் வரலாறு 3.
XIV
XV
XVI
XVII
சுந்தரம் பீ. ஏ (சிறப்பு) எனக் கூறப்பெற்றுள்ளமை கவனிப் புக்குரியது.
சண்முகலிங்கம், ஆ.
வேலணையைச் சேர்ந்தவர்
துறை, கவிதை, கட்டுரை
**ஆறுமாறன்’’ என்ற புனைபெயர், உலகத் தமிழர் பண் பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவர். (1992) உலகத் தமிழர் பண்பாட்டுக் குரல் ஆசிரியர்.
பரமநாதன், செ.
மண்டைதீவைச் சேர்ந்தவர்
துறை: கவிதை
பல கவிதைகள் இதழ்களில் வெளிவந்துள்ளன.
சிவகுலசிங்கம், கு.
தீவக இலக்கிய ஆர்வலர் மன்றம் என்ற பெயரில் இயங்கும் குழுவின் தலைவரான இவர் ஒரு சிறந்த விமர்சக எழுத்தாள ருங் கூட. இம் மன்றத்தினர் ** மகரந்தம்" என்ற ஒரு தட் டச்சு முத்திங்கள் இதழ் ஒன்றினை நடத்தி வருகின்றனர். இவ்விதழ்களில் கவிஞர் வேலணையூர் பாக்கியன் என்னும் க. பாக்கியநாதன், சுருவிலூர் சிவபாத சுந்தரம், பள்ளம் புலம் தி. அருள், செ. தேவன் வேலணை, பொ. ஜெகதீசன் சி. கிருபாகரன் ஆகிய ஆக்க இலக்கிய ஆர்வலர்கள் தமது படைப்புக்களை வெளியிட்டுள்ளனர்.
பாலகோபால், நவ.
மண்டைதீவு நவரத்தினராசா விதானையாரின் மகனான கவி ஞர் நவபாலகோபால் " " கவிதைச் சுர ங் கம்" என்ற ஒரு நூலைத் தந்துள்ளார். கிளிநொச்சியில் அரச வேலை பார்க் கும் இவர் அங்குள்ள பல தலங்களையும் பாடி வருகின்றமை யைக் குறிப்பிடலாம். .

Page 21
32
வேலணைத் தீவு
XVI கலைச்செல்வி, பிரபலசிங்கம்
XIX
ΧΧΙ
மண்டைதீவைச் சேர்ந்தவர்
துறை: சிறுகதை இவரது சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவந்துள்ளது. தமயந்தி,
கரம்பன் தெற்கு
துறை, கவிதை, புகைப்படக்கலை ** சாம்பல் பூத்தமேடு" " என்றோர் நூல் வெளிவந்துள்ளது. சோதிநாதன், க. வேலணை தெற்கு துறையூரைச் சேர்ந்தவர் துறை: கவிதை
பல கவிதைகளை ஆக்கியுள்ளார். இன்னொருவருடன் சேர்ந்து ஒரு நூலையும் வெளியிட்டுள்ளார்.
பிரணதார்த்திகரன், இ.
நாரந்தனையைச் சேர்ந்த இவர், சிறந்த ஒரு சிறுகதை எழுத் தாளர். இவரது பல சிறுகதைகள் வீரகேசரியில் வெளிவந்துள் ளன. இப்பொழுது "வீரகேசரி’ ஆசிரியர் குழுவில் ஒருவராக
உள்ளார்.
XXH சுரேஸ், இ. வேலணையூர்
வேலணை கிழக்கைச் சேர்ந்த இராமச்சந்திரனின் மகன். யாழ். பல்கலைக்கழகப் பொருளியல் மாணவன்
துறை: கவிதை சமகால நிகழ்வுகளை புதிய கவிதைகளாக்கி உணர்ச்சியுடன் அரங்குகளிற் பாடும் இவரின் கவிதைகள் பல இதழ்களிலும்
வெளிவருகின்றன. இவர் " " களத்தீ’ கவிதைத் தொகுதியி னையும் வெளியிட்டுள்ளார்.


Page 22


Page 23
சிவச t தி.
பிறந்த நதார் a tଲା ୩ ଜନୀ , எதயார் மண்டைதீவைச் சேர்ந் தில்லையம்பலம். பு ைன பெயர் சதில்லைச்சிவன்" தொழில் ஆகி யம், பாடசாலை அதிபர்.
படிக்கும்போதே பட்டினத் மச்சினி' என்ற ஒரு பாடல் "ம மலர்ச்சி" இதழில் வெளி வந் மிகுந்த பரபரப்பையும் பாராட் தலையும் பெற்றது. 1946 இலங்கையில் ஈழகேசரி, சுதந் போன்ற ஏடுகளிலும் இந்தியான் திராவிடநாடு, வசந்தம் இதழ் சில நாடகங்களையும், சிறுகதை
இவர் தனது இலக்கிய ஆ இருந்து உதவியவர் பேரனாரான என்கிற "அமாவாசை' என்று 1951 ஆண்டுகளில் "தமிழன்' 'க களை வெளியிட்டுள்ளார்.
1961 இல் இவரது முதல "கனவுக்கன்னி" வெளிவந்தது. இளைஞர் கழகம் வெளியிட்டது வெளியீடாக, "தாய்" கவிதை ஆண்டு இடைவெளியின் பின் ஐ ஆஞ்சலும் என இருபதிகங்களும் பாடல்களும் இவரால் வெளியி ரது நான் என்னும் சுயகாவியம்
டுள்ளது.

t
ஆம் ஆண் டி ல் இரு ந் து திரன், வீரகேசரி, தினகரன் வில் அணிகலம், பாப்பாமலர், களிலும் பல கவிதைகளையும், களையும் எழுதியுள்ளார்.
ஆர்வத்துக்குத் தூண்டுகோலாய் குருநாதர் சுப்பர் சின்னத்தம்பி ஆவலோடு கூறுவார். 95. லைச்செல்வி' என்ற இரு இதழ்
Τξι εμ' கவிதைத் தொகுதியான இதனை வேலனைப் பாரதி | அடுத்து 1969 இல் அன்பு த் தொகுதி வெளிவந்தது. சில யனார் அருள்வேட்டலும் திரு 1985 டிசம்பரில் "குழந்தைப் டப் பெற்றன். 1993 இல் இவ மல்லிகைப் பந்தல் வெளியிட்
- மா இலிங்கப்பிள்ளை