கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோவைப்பதியில் சைவமும் தமிழும்

Page 1
క్ష్ :: క్స్టి
 
 
 
 
 


Page 2


Page 3

கோவைப் பதியில்
சைவமும் தமிழும்
திருமதி. மங்கையர்க்கரசி லோகேஸ்வரன் B. A. (Peradeniya) Dip. in. Edu, (Jaffna)
★
ઉી 616fuf (B: யூனி சுப்பிரமுனிய கோட்டம்,
பழந்தெரு, கோப்பாய்.

Page 4
Title
Author
Language
Edition
Copy Right
Publishers
Printer
Коvai Parhiyi Saiv amum Thamilum
Mrs. Mangaiyarkarasy Loges varan
B.A. (Peradeniya). Dipin. Ed. (Jaffna
Tamil
14th April 1990
The Author
Shri Subramuniya Kuttam, Old Road,
Kopay
Saiya Pirakasa Press, Jaffna.

உள்ளுறை
பக்கம் ஆசியுரை xp iii அணிந்துரை Kr ilu முகவுரை سانس vi தோற்றுவாய் .xxx 1
:ஆய்வுப் பிரதேசமான கோவைப்பதி - 3 - 9
பெயர் வரலாறு சரித்திரச் சிறப்பு பெளதிக பண்பாட்டமைவு நிர்வாகப் பிரிவு பொது தாபனங்கள் கொத்தணி அமைப்பு கோவைப்பதிக் கல்வி விருத்தியில் சைவத்தின் பங்கு -50-10 س
கோவைப் பதியில் சைவச் செழிப்பு சைவப்பணி நிகழும் இடங்கள் சைவம் வளர்த்த சான்றேர்கள் சமய விருத்திக்கான ஆலோசனைகள் கோவைப்பதிக் கல்வி விருத்தியில் தமிழின் நிலை -103-51 س
தமிழின் வரலாற்றுச் சிறப்பு தமிழ் வளர்ச்சிக் கூடங்கள் தமிழ் வளர்த்த செம்மல்கள் கல்வி வளர்ச்சிக்கான ஆலோசனைகள் நிறைவுரை - 104-103 உசாத்துணை நூல்கள் 107--106 -س
(i)

Page 5
காவாய் சைவசித்தாந்தத் திருச்சபை ஆதீனகர்த்தா சிவாய சுப் பிரமு னிய சுவாமி அவர்கள் வழங்கிய
ஆசியுரை
sAVA SIDDHANTA CHURCH
InternatioLal Headquarters
07, Kaholalele Road Kapaa, Hawaii 9 6746
* & U.S.A.
Vannakkam Mrs. M. Logesvaram, Blessings on your life. Blessings on your book** கோவைப்பதியில் சைவமும் தமிழும் 罗易 It is so wonderful - the work you have done. Love and Blessings to one and all.
Nov. 9. 1989 Sivaya Subramuniya Swami
(ii)

ܥܘ அணிந்துரை
* பெற்றதாயும் பிறந்த பொன்குடும் நற்றவ வானிலும்
நனி சிறந்தனவே ? என்பது பாரதியார் வாக்கு இவ்வுண்மையை நிலைநாட்டிப் பேணுபவர்கள் பிறந்த மண்ணின்மேல் பற்று உடையவர் களாவர். இந்த நோக்கோடு பார்க்கும் போது திருமதி. ம லோகேஸ்வரன் அவர்களுடைய ஆய்வுக் கட்டுரையின் பெறுமதி மிக உயர்ந்ததாக விளங்குகிறது. " கோவைப் பதியில் சைவமும் தமிழும்’ என்ற தலையங்கத்தைத் தாங்கிக் கொண்டு வெளிவருகிறது இந்த ஆய்வுக் கட்டுரை. ஆய்வு ஆசிரியராகிய இவ்வம்மையார் கோப்பாய் மண்ணைப் பிறப் பிடமாகக் கொண்டவர். சைவத்தையும் தமிழையும் வளர்த்தி பரம்பரையைச் சேர்ந்தவர்.
" எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே'
என்பது புறநானூறு. ஒரு நாட்டின் பெருமைக்கு அந் நாட்டுவாழ் மக்களின் பண்பாடும் அறிவு விருத்தியும் சேவை மனப்பாங்கும் தேசியப்பற்றும் முக்கிய காரணங்களாகின்றன, இத்தகைய பெருமைக்குரியவர்கள் பண்டிதர் அ. வி. மயில் வாகனனர் அவர்களுடைய குடும்பத்தவர்கள். நூலாசிரி யரின் தாய்மரபு, தந்தைமரபு இரண்டிலும் தமிழுணர்ச்சியும் சைவ உணர்ச்சியும் மிக்கோங்கி நிற்பதும் திருமணஞ் செய்து புகுந்த மரபிலும் இந்நிலை உயர்ந்தோங்கி விளங்குவதையும் நாம் அறிவோம். எனவே இத்தகைய புகழ் பூத்த மரபிலே அவதரித்த திருமதி, லோகேஸ்வரன் அவர்கள் இத்தகைய ஆய்வுக் கட்டுரை யொன்றை வெளிக்கொணர முன் வந்தது பொருத்தமானதே. இவ், ஆய்வு நூலுக்கு அணிந்துரை எழுதுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது. ஏனென்ருல் கோப்பாய்ப் பதிக்கும் தெல்லிப்பழை துர்க்கா தேவி ஆலயத்துக்கும் முந்நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொடர்பு உண்டு. இவ்வாலயத்தின் அறங்காவலர்களாக அந்தக் காலத்தில் விளங்கியவர்கள் கோப்பாய்ப் பெரு மக்களே. கோயில் கட்டியும் பாடசாலை நிறுவியும் அறக் கட்டளை வகுத்தும் இவர்கள் ஆற்றிய பணி இந்நாடு நன்கு அறியும். எனவே இவ்வரிசையில் இடம் பெறத்தகுதி யுடையவர் திருமதி. ம. லே கேஸ்வரன் அவர்கள். இவ் வம்மையாரின் உள்ளத்துரண்டுதல் கோப்பாய்ப் பதி மக்க ளுக்கு ஒரு எழுச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
(iii)

Page 6
சரித்திரச் சிறப்புப் பெற்ற இவ்வூரின் கல்வி விருத்தியை நல்லபடி ஆய்ந்து சைவமும் தமிழும் என்ற இரண்டையும் இணைத்து ஒரு பயனுள்ள ஆக்கமாக இந்நூல் வெளிவருகிறது. யாழ்ப்பாண வரலாற்றில் இவ், ஆய்வுநூல் சிறந்த ஒரு இடத்தைப் பெறுகிறது என்பது முற்றிலும் உண்மை. பள்ளிக்கூடக் கல்விக்கும் மரபுவழிக் கல்விக்கும் சிறந்த இடமாக விளங்கியது. கோப்பாய் என்று சொல்லுகின்ற போது இருபாலை சேஞதிர சமுதலியாரையும் கோப்பாய் சபாபதிநாவலரையும் நாம் மறந்துவிட முடியாது. சைவத் தமிழ் மக்கள் உச்சிமீது வைத்து மெச்சக் கூடிய ஆற்றலும் அறிவும் இவர்களிடம் இருந்தது. மேலும் செந்தமிழ்ப் புலவர்களும் சிவநெறிப் புலவர்களும் இங்கு வழ்ந்து “கல்வி யின் பயன் ஒழுக்கம்’ என்பதை நிலைநாட்டியதோடு அறப் பணிகள் பல புரிந்து இவ்வூருக்குப் பெருமை தேடிக் கொடுத் திருக்கிருர்கள். இத்தகையோரை அவர்களின் பின்வருவோர் நினைப்பூட்டி எழுத்திலே வடித்தும் சிலை பல எடுத்தும் போற்ற வேண்டிய கடமைக்குட்பட்டவர்கள். இந்த நோக்கோடு கூடிய நன்றிக் கடனை வெளிகாட்டும் ஆய்வு நூலாக இது அமைந்துள்ளது.
முற்பகுதியிலே வரலாற்ருெடு கூடிய ஓர் அமைப்பும் பொது நிறுவனங்களும் காட்டப்படுகிறது. இங்கே சரித்திரச் சிறப்பும் மக்கள் வாழ்வியல் சிறப்பும் கோப்பாய்ப் பதி வரை படமும் இடம் பெறுகிறது. பிற்பகுதியில் கல்வி விருத்தியில் சைவத்தின் பங்களிப்புக் காட்டப்படுகிறது. ஆலயங்கள் தொடக்கம் சைவ மன்றங்கள் வரை ஆற்றி வருகின்ற சமயப் பணியைக் காட்டி அந்தணர்களும், அறிஞர்களும் ஒன்று பட்டுப் புரிந்த சைவ எழுச்சிச் சாதனை கண் யாவும் இங்கே இடம் பெறுகிறது. பழைய நாட்டுக் கூத்து மரபிலே பாடல் பெற்ற கண்ணகிக்கு கோயிலில் நடைபெற்ற விழா விபரிக்கப் படுகின்றது. இவ்விடத்தில் சிறந்த வரலாற்றுச் சான்றும் காட்டப்படுகின்றது.
அடுத்து கல்வி விருத்தியில் தமிழ் மொழியின் நிலை மிக விரிவாக இடம் பெற்றிருக்கின்றது. இப்பகுதியை ஆசிரியர் மிக விரிவாகக் காட்டியுள்ளார். தமிழுணர்ச்சி இனிது தழைத்து ஓங்க வேண்டும் என்ற விருப்பம் எம்மவர் பலருக்கு இன்று எழுந்துள்ளது. ஒவ்வொரு சிற்றுாரும், பேரூரும், நாடும், நகரமும் இவ்வுணர்விலே ஓங்கி நிற்பதைக் காண் கிருேம். ' தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்ய வேண்டும் ' என்ற பாரதியின் பாடலுக்கு இன்று வரவேற்புக்
(ίν)

கூறி வாழ முன் வந்துள்ளனர் எம்மக்கள். தமிழினத்தின் எழுச்சி தமிழ் மொழியின் எழுச்சியிலேயே தங்கியுள்ளது என்பதையே வரலாறு காட்டுகிறது. மொழிக்கு ஊறு நேர்ந் தால் அரசியல் பொருளாதார அடித்தளபே அசைந்துவிடும். இந்த உண்மைகளை உணர்ந்து தமிழை வளர்த்தவர்கள் கோப்பாய்ப் பதி வாழ் செந்தமிழ்ச் செம்மல்கள் என்று கூறினல் அதில் மிகையொன்றுமில்லை. நூலாசிரியரின் தந்தை யார் பண்டிதர் அ. வி. மயில் வாகனம் அவர்கள் மேற்கொண்ட தமிழ்ப் பணியை எங்கள் காலத்திலே நாம் அறிந்து போற்றக் கூடிய வாய்ப்புப்பெற்ருேம், சேரித் தமிழையு ( செந்தமி ழாக்கிப் பேசும் திறமை இவருக் குண்டு. இதற்குக் காரணம் கோப்பாய்ப் பதியில் அமைந்த தமிழ் வளர்ச்சிக் கூடங்களும் அங்கு வாழ்ந்த செந்தமிழ்ச் செம்மல்களும் என்பது முற்றிலும் பொருந்தும். இதில் நூலாசிரியர் இவற்றையெல்லாம் மிக விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். ஆறுமுகநாவலர் ஐயாவுக்கு இலக்கண இலக்கியங்களக் கற்பித்த பெருமை சேனதிராசமுதலியாருக்குண்டு. இப்பெருமை இவர்கள் கல்வி கற்ற திண்ணைப் பள்ளிக் கூடங்களுக்கும் உண்டு . சைவமும் தமிழும் கோயில்களிலும், பாடசாலைகளிலும், சனசமூகநிலையங்களிலும், மாதர் சங்கங்களிலும், இணைந்து வளர்க்கப்பட்டமையை நூலாசிரியர் எடுத்துக் காட்டும் பொழுது ஏனைய ஊர்வாழ் சைவ மக்களுக்கு ஒரு வழி காட்ட லாக அமைகிறது. மேலும் நன்றிமறவாத உணர்வோடு இந்து போர்ட் இராசரத்தினம் ஐயாவின் கல்விப்பணி சிறந்த முறையில் காட்டப்படுகிறது. எனவே இந்நூலாசிரியர் திருமதி - ம . லோகேஸ்வரன் அவர்கள் மேற்கொண்ட இந்தப் பணி கோப்பாய்ப்பதிக் கல்வி விருத்தியில் ஒரு முக்கிய இடத்தை எதிர் காலத்தில் பெற இருக்கிறது என்ற மகிழ்ச்சி யான செய்தியைக் கூறி அணிந்துரையை நிறைவு செய்கிறேன்.
தங்கம்மா அப்பாக்குட்டி . P
தலைவர் துர்க்காபுரம் மகளிர் இல்லம் தெல்லிப்பழை
(Ꮩ)

Page 7
முகவுர்ை.
கோப்பாய்ப் பிரதேசம் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டமை எனது ஊராகவும் பழகிய இடமாகவும், கல்விகற்ற இடமாகவும் இருந்ததே. கோப்பாய் எனும் போது அது வருமான அலுவலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசம், தேர்தல் தொகுதிக்குட்பட்ட பிரதேசம். கல் வட்டாரத்திக்கு உட்பட்ட பிரதேசம் எனப்பலவகையில் விரிவுபெறும். சாதாரணமாகக் கோப்பாய் எனும்போது எமது மனதில் படுவது கல்வியங்காடு முதல் தொண்ட மானுறு வரையான பகுதியுள் அடங்கிய பிரதேசம் ஆகும். எனது ஆய்வில் இப்பிரதேசத்தைக் கொண்டால் ஆய்வு செய்ய வேண்டிய இடத்தின் முக்கியத்துவம் குறைந்து விடும் என்னும் கருத்தினுல் கொத் தணி எனும் கல்விப் பிரிவில் அமைந்த பிரதேசமே கொள்ளப்படுகின்றது. கோப்பாய் கொத்தனிக் கல்விப் பிரிவும், கோப்பாய் கிராமோதய சபைக்குள் அடங்கும் பிரதேசமும் ஏறக் குறைய ஒரே அளவினதாய் அமைகிறது. அப்பிரதேசத்தை வகுத்து அதன் நாமச்சிறப்பு, பூர்வீக வரலாறு, பெளதிகபண்பாட்டுச் செழிப்புய் பற்றிச் சுருங்கக் கூறப்பட்டுள் ளது.
ஆய்வுப் பிரதேசத்தை வகுத்துக்கொண்டு இப்பிரதே சத்தில் சைவமும் தமிழும் வகிக்கும் இடம் பற்றி ஆராயப் பட்டுள்ளது. முதலில் ஆய்வுப் பிரதேசத்தில் சைவத்துக்கு உள்ள தொடர்பும் இங்கு அதனல் ஏற்பட்ட பண்பாட்டு உயர்வும் கூறப்படுகின்றது. பிரதானமாகச் சைவம் Guerrš காரணமாய் இருந்த இடங்கள் கோயில்கள். விதிப்படி அமைந்த கோயில்களும் இராசகோபுரம் கொண்டிராத கோயில்களும், மூர்த்திகரம் ஆனதாக மக்களால் கருதப்படு வதால் இவ் ஆய்வில் இருபத்துமூன்று கோயில்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. மிகச்சிறிய கோயில்களும் அண்மையில் கட்டப்பட்டுவரும் கோயில்களும் விடப்பட்டுள்ளன. இக் கோயில்களின் அமைவிடங்களும் விளக்கப் படம் மூலம் தரப்பட்டுள்ளன.
சைவம் பற்றி ஆராயப்புகுந்தவேளை, கோவைப்பதியில் சைவம் வளர்த்த சான்றேர்கள் சிலரைப் பற்றிக் குறிப் பிடுவது அவசியமெனப்பட்டு, இவர்களில் நான்கு பெரிய வர்கள் விபரிக்கப்பட்டுள்ளார்கள்.
அடுத்து இவ் ஆய்வுப் பிரதேசத்தில் தமிழ் வகித் பங்கு ஆராயப்பட்டுள்ளது. யாழ்குடாநாட்டில் ēram
Υ νi)

ருக்குத் தமிழ் பயிற்றிய சேனுதிராயமுதலியார் தொட்டு திரு. அ. வி. மயில்வாகனன் வரை அவர்களது பங்களிப். கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது,
தமிழ் வளர்த்த வளர்க்கும் இடங்கள் பற்றிக் கூறு கையில் திண்ணைப்பள்ளிகள், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள், பாலர் பாடசாலைகள், கலாசாலை என் பனபற்றித் தனித் தனியே ஆராயப்பட்டுள்ளது. கோப் பாய்க் கொத்தணி அமைப்பின் கீழ் பத்துப் பாடசாலைகள் அடங்குகின்றன. இவற்றின் ஆரம்பகால, இன்றைய பணி கள் கூறப்பட்டுள்ளன.
இத்துடன் அமையாது கல்வி விருத்திக்கும் சமய முன்னேற்றததுக்கும் பங்களிப்பு செய்கின்ற பொதுத் தாபனங்கள் பற்றியும் விபரமாகக் கூறப்பட்டுள்ளது. சிறப்பாக இரு சனசமூக நிலையங்கள் ஆற்றும் பணிகளைக் கூறவேண்டியுள்ளது. பொதுத்தாபனங்களை ஆராய்கையில் கூட்டுறவுப் பகுதியின் கல்வி வளர்ச்சிப் பணியினையும் குறிப் பிடத் தவறவில்லை. மேலும் இப்பிரதேசத்தில் கிடைக்கும் முதியோருக்கான கல்வி வசதியும குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியாக இவ் ஆய்வுப் பிரதேசத்தில் சைவமும், தமிழும் வளர எனது அறிவுக்கெட்டிய ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன. இத்துறையில் ஈடுபாடு உள்ள பெரி யோர்களின் புத்திமதியும் உதவும். இவ் ஆய்வுக் கட்டுரை ஆக்கத்தின்போது பலரிடம் தகவல்கள் சேகரிக்க நேர்ந் தது. அவர்கட்கும் இம்முயற்சிக்கு அவ்வப்போது ஆலோ சனை வழங்கிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்வியியற் புலத் தலைவர் திரு. வ? ஆறுமுகம், சிரேட்ட விரிவுரை யாளர் திரு . க - சின்னத்தம்பி அவர்கட்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.
இந்நூலுக்கு ஆசியுரை வழங்கிய ஹவாய் சைவ சித்தாந்த சபையைச் சேர்ந்த சிவாய பூரீ சுப்பிரமுனிய சுவாமி அவர்கட்கும், அணிந்துரை வழங்கிய சிவத் தமிழ்ச் செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கட்கும், இந்நூலைச் சிறந்த முறையில் தாமதமின்றித் தரமானதாக அச்சிட்டுத் தந்த சைவப்பிரகாசப் பதிப்பகத்தாருக்கும், இந்நூல் வெளியீட்டிற்குச் சகலவிதத்திலும் ஒத்துழைப்பு நல்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
(35n tuntui ம. லோகேஸ்வரன்
7. 6. 1989.
(vii)

Page 8

-أد தோற்றுவாய்
உரராசர் தொழு கழன் மேக்கெறுT உனென்ருேது முலா ந்தேசு மன்னனுரைத் தமிழாற் கேட்க வரராச கைலாய மாலை தொன்னூல்
வரம்பு கண்ட கவிஞர்பிரான் வையாபாடல் பரராச சேகரன் றன்னுலாவுங்காலப்
படிவழுவாதுற்றன சம்பவங்கடீட்டுந் திரராச முறைகளுந் தேர்ந்தி யாழ்ப்பாணத்தின் செய்தி மயில் வாகனவேள் செப்பினுனே.
இப்பாவில் மயில்வாகனப் புலவர் அவர்கள் யாழ்ப் பாண வரலாறு கூறவந்தபோது கையாண்ட நூல்கள் காணப்படுகின்றன. இவற்றை ஆதாரமாக வைத்து யாழ்ப் பாணச் சரித்திரத்தை ஆராயலாம். யாழில்வல்ல ஒரு பாணன் பாடிப் பரிசாகப் பெற்ற நிலப்பகுதியாதலால் இது யாழ்ப்பாணம் எனப்படுவதாயிற்று. மணற்றி என்பது இதன் பூர்வநாமம். அது பின் நாளில் மணற்றிடர் எனவும் வழங்கியது. மணற்றி என்னும் பெயர் இறையஞரகப் பொருள் உதாரணச் செய்யுட்களில் வருகிறது.
மணற்றி என்னும் நிலப்பகுதியின் வடக்கும், கிழக்கும்
வங்காளக்குடாக்கடலும், தெற்கே பூநகரிக்கடலும், பண்ணைக்கடலும், மேற்கே கோடிக்குடாக் கடலும் எல்லை களாக அமைந்துள்ளன. இலங்கையின் வடபாகத்தில்
அமைந்த ஒரு தீபகற்பம், இதன் அயலில் சிறுதீவுகள் உள. இவைகள் எல்லாம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவை.
பூர்வத்தில் இந்நாடு ஒரு சிறந்த நாடாயிருந்தது. பின்பு கடல் கொண்டதால் திடராகி மணல்கொண்டுகாலவடை யில் மீண்டும் நாடானது. இதன் சிலபாகம் மணற்பால் கானதாகவும், சிலபாகம் களிப்பாங்கானதாகவும், சில பாகம் செம்மண்பாங்கானதாகவும், சொரிக்கற்பாறையா கவும் உள்ளது. சூழவுள்ள கடலிலே சங்கு குளித்தல் முத்துக்குளித்தல் நடக்கும்.

Page 9
ότσ, சோழ, பாண்டிய மண்டலங்களிலிருந்து தமிழ்ச் சாதியினர் இங்கு குடியேறினர். இவர்கள் குடியேறுமுன் இங்கு வாழ்ந்தோர் நாகர் என்னும் இனத்தவர். சங்கப் புலவருள் ஒருவராய் இருந்த முடிநாகராயர் என்பவர் இக்குலத்தவரே. ஈழமண்டலத்தவருக்கும், பாண்டிநாட்ட வருக்கும் இடையே போர்மூளும் காலங்களில் அவர்களது போர்க்களமாயிருந்த இடம் மணற்றியாகும். ஆதலால் மணற்றி நெடுங்காலம் குடியில்லாத நாடாயிருந்தது. அக்காலம் சோழராசன் புத்திரி மாருதப்பூரவீகவல்லி தனது குதிரைமுகநோய் நீங்கக் கீரிமலைக்கு வந்து ஸ்நானம் செய்ய அந்நோய் நீங்கியது. அவளும் அவளது பரிவாரங் களும் வந்து சிலகாலம் இங்கு வசித்தனர். கடல்வாய்ப் பட்டதன் பின் இதுவே முதல் நடந்த தமிழர் குடியேற்ற மாகும். இலங்கையில் சிங்களவர் பரம்பரையினர் குடியேறிய பின், காலத்துக்குக் காலம் தமிழ்நாட்டில் இருந்து இலங்கை மீது படையெடுப்பு நிகழ்த்துவது உண்டு. அசேலன் என்னும் அரசன் காலத்தில் கி. மு. 205 இல் ஏலேலன் என்னும் இளவரசன் தொண்டை நாட்டிலிருந்து பெருஞ்சேனையுடன் வந்து அனுராதபுரத்தை வென்று இலங்கைக்கு அரசனனன். ஏலேலன் கல்வியறிவு சிறிதெனினும் நீதி, பொறை, அருள் முதலிய பொருந்தப்பெற்றவன், தனது நாட்டுக்குடிகளை அருமையாகப் பேணுபவன். இவன் அரசியற்றுநாளில் தொண்டை நாட்டில் இருந்து அந்தகக்கவி வீரராகவன் என் ருெரு யாழ்பாடி ஈழ மண்டலம் வந்தான். அரசனைக் கண்டு பாடி, அவன் விருப்பப்படி நிலம், யானை, பல்லக்கு, பரிசனம் யாவும் பரிசாகப்பெற்றன. ஊர் திரும்பி மனே வி ைபயும் தன்னேடு சிறுசேனையையும் அழைத்து வந்தான். அவ்வாறு அழைத்து வந்த குடிசனங்களை மணற்றியில் புதிதாக ஓர் ஊரை உருவாக்கிக் குடியேற்றினன். அந்த ஊர் நல்லூர் எனப்படலாயிற்று. நல்லநாளில் பட்டாபிசேகஞ் செய்து தனது நாட்டுக்கு யாழ்ப்பாணம் என்னும் பெயரும் இட் டான். அவன் தனக்கு மந்திரியாக வந்த சேதிராயனுக்கு இடத்தைத் திருத்திக் கொடுத்தான். அவ்வூர் புதிதாக அமைக்கப்பட்டதாதலின் புத்தூர் எனப் பெயர்பெற்றது. இவ்வாறு யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் குடியிருப் புக்கள் உருவாகத் தொடங்கின. இவற்றில் ஒன்று இருபாலையை அண்டிய பிரதேசத்தில் அமைந்தது.
2

ஆய்வுப் பிரதேசமான கோவைப்பதி
கோப்பாய் எனும் பெயர் வரலாறு:
பழைய காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் ப்ல் பகுதிகளில் சிங்களவர் வாழ்ந்து வந்தனர் எனவும் அதனல் பல இடப்பெயர்கள் சிங்களத்தில் இடம் பெற்றன எனவும் பழைய சர்த்திர நூல்கள் கூறும் 'பாய” என்னும் சிங்களச் சொல்லுக்கு அரண்மனை, பெரியோன் இருப் பிடம், கோயில் என்னும் பொருள்கள் உண்டு. ( கிளன், அகராதி ) பாய என்று முடியும் இடப்பெயர்களில் பாய என்பது இடத்தை உணர்த்தும் சொல்லாகும். கோப்பாய் என்பதன் சிங்களரூபம் 'கொவிப்பாய’ போலும். கொயிய அல்லது கொவிய என்பது சிங்களத்தில் வேளாள்ர்ைக் குறிக்கும். கொவியபாய என்பது வேளாளர் குடியிருப்பு என்று பொருள்படும். இவ்வாறே பல ஊர்ப்பெயர்களளன சண்டிலிப்பாய், மானிப்பாய் என்பனவுமாம். . . . . . .
இப்பெயர் வந்தவாற்றைப் பின்வருமாறு யூகிக்கலாம்: சிங்சளத்தில் சிறீமதிபாயா, லோகமகாபாயா என்று பெயர்கள் பல உள. இச்சொற்களின் கடைசியில் வரும் ஃபாயா?? என்பது வடமொழிப் பிரசாத ( மாளிகை என்னும் சொல் அம்மொழியின் பாகதமாகிய பாளியில் பாசாத என மாறிச் சிங்களத்தில் பாய என மருவியது. இது பாய என்றேனும் பாயா என்றேனும் வழக்கில் உள்ளது. இச்சொன் முடிபை ஈற்றில் கொண்ட கோப்பாய் கோ - அரசு எனும் அடியாகப் பிறந்து அரசமாளிகை எனும் கருத்துக்கொண்டு வழக்கில் வந்திருக்கலாம். பின்னர் மாவை, உடுவை, ( ணுவை என்ருற்போல் கோவை என மருவியும் வழங்கும். : '',
இன்னுமொரு செவிவழிச் செய்தி, கோப்பாய் என்னும் பெயர் வந்த வரலாற்றைக் கூறுகிறது. சங்கிலிமன்னன் நல்லூரில் இராசதானி அமைத்து ஆண்டவேளை, படை யெடுப்பு நிகழும் போது பாதுகாப்பாக இருக்க, தப்பிச் செல்ல என்று கோப்பாயில் ஒர் கோட்டை அமைத்திருந் தான். யாழ்ப்பாணம் டருத்தித்துறை வீதியில் கைதடிக்கு வீதி பிரியும் சந்தியில் கிழக்குப்புறமாக இக்கோட்டை அமைத் திருந்தது. இவ்விடம் கோட்டைவளவு எனவும் அதன் அயலில் உள்ள டனவளவு கோட்டைப்பனை எனவும்
3
3

Page 10
வழங்கட்டடுகிறது. இதன் அயலில் ஒரு வாய்ச்கால் செல் கிறது. அச்சுற்ருடலில் எங்கு அகழ்ந்தாலும் செங்கற்சள் இடிபாடுகள் மண்ணுள் காணப்படுவது தமிழரசின் கோப் பாய்க் கோட்டையை நினை வடடுத்தும் 8 ன் னங்களாக 8-6i en 607, (Cey Antiq 11 - 194) இவ்வாறு தமிழரசர் களின் கோட்டையாக இருந்த இடத்திற்குக் குதிரைப் படையோ, குதிரையோ பாய்ந்து விந்து டோவதால் கோட்பாய் எனப் பெயர் வந்ததென் பாரும் உளர்.
சரித்திரச் சிறப்பு.
யாழ்ப்பாண நாட்டில் குடியேறிய தமிழர் பலர், இங்கு பின்னர் வந்து குடியேறிய சிங்களவர் மிக நெருங் கியமையால் வலசை வாங்கித் தம் முன்னேர் நாடான வட தேசம் சென்று விட்டனர். சிலரே சங்களவர் கலகத்துக்கு அஞ்சாமல் அவர்களை எதிர்த்துக் குடியேறிக் காலம் கழித்த வர். அவர்களுள் பாண்டிமழவன் என்னும் பிரபு ஒருவன். இவன் யாழ்ப்பாணம் அரசின்றிக் கெட்டுப்போகும் நிலையை உணர்ந்து ஓர் இராசகுமாரனைக் கூட்டி வர மதுரை நாட் டிற்குச் சென்றன். அங்கிருந்து சிங்கை ஆரியன் என்னும் சூரிய குலத்தோன்றலைக் கண்டு யாழ்ப்பாணத்தின் நிலையை அறிவித்து இங்கு வந்து அரசுபுரியுமாறு வேண்டினுன் இராசகுமாரன் இசைந்து, தின் தந்தையின் அனுமதியுடன், வேண்டிய பரிவாரங்களை அழைத்து வந்து நல்லூரைத் தலைநகராக்கி அரசிருக்கையைத் தாபித்தான். இவன் வரு கையில் இருந்து ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி. வட இலங்கையில் ஆரம்பமானது. இவன் தன்னுடன் வந்த வருள் ஒருவனன தொண்டை நாட்டு வேளாண் தலைவனும் கம்பரது ஏரெழுபது கவிக்கு மாரிபோல் பொன் பொழிந் தவனின் குலத்தவனுமாகிய மண்ணுடு கொண்ட முதலியை இருபாலையிலிருக்கும்படி கற்பித்தான். இருபாலையில் குடி யேறிய இவரின் பரம்பரையில் வந்த நெல்லைநாதர் எத் துணைப் பெரிய செய்யுளையும் ஒரே முறையில் கிரகிக்கும் பேராற்றல் உடையவர். சோழநாட்டிலிருந்து செந்திக்கவி என்பவர் வைத்திலிங்கம் செட்டியார் மேல் ஒரு பிரபந்தம் பாடி வந்து அரங்கேற்றினர். நெல்லைநாதர் முதற் செய் யுளேக் கேட்டுவிட்டு: இது பழைய பாடல் அன்றே! நீர் புதி தாகப் பாடிய பாடலை அரங்கேற்றும், என்று சொல்லச் செந்திக்கவி திகைத்து, எப்படி என்றர். நெல்லைநாதர் அச்செய்யுளைச் சபையில் ஒப்புவித்தார். மறுபடியும் ஒரு
4

செய்யுளைக் சவிகூற, இவ்வாறே நட ந்தது. சவி நெல்லை நாதரின் அவதான சக்தி  ை ப் பh ராட் டிஞர். இவர் புதல் வரான சேஞதிராய முதலியார் ஒல்லாந்த, ஆங்கில பாஷை களில் வல்ல தமிழ்ப் டண்டிதர். அவர் ஒல்லாந்த, ஆங்கில் அரசிலும் துவிபா ஷிகராய் இருந்தார். நல்லைக்கந்தன் மீது நல்லை வெண்பா பாடியவர் இவரே. சரித்திர நூல்களில் கோப்பாயைச் சேர்ந்தவர்களைப் பற்றிக் கூறும் நிகழ்ச்சி இதுவாகும்.
கோப்பாயின் பெளதிகப் பண்பாட்டமைவு.
நிலையம் :-
யாழ்ப்பாணம் கிழக்கு நெட்டாங்கு 79-79-'பாகை
uqub mu 4- JAY866)nT /Äi (ğ5 9 - 10 பாகையும் கொண்டது.
கோப்பாய்க் கிராமம் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலி காமம் கிழக்குப் பகுதியில் யாழ் பருத்தித்துறை வீதியின் இருபக்கமும் சுமார் 18 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டு பரந்துள்ளது. இக்கிராமம் வடக்கே நீர்வேலியையும், கிழக்கே செம்மணிக் கடலையும், தெற்கே நல்லூரையும், திருநெல்வேலியையும் மேற்கே கோண்டாவில் உரும் பிரா யையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
இயற்கை அமைவு:
இச் கிராமம் கடல் மட்டத்திலிருந்து 20 அடி உயர மான பரந்த தரையாகக் கரணப்படுகிறது. புத்தளம், மாங்குளம், முல்லைத்தீவு ஆகிய இடங்களை இணைக்கும் ரேகையின் வடபாகம் புராதன காலத்தில் கடலாய் இருந்ததெனவும் அதில் கவசமுள்ள பல்வகைப் பிராணிகள் நீர் வற்றியதால் இறந்ததெனவும் இப்பிராணிகளின் சில பாகங்சள் "பொஸில்ஸ்’ என்னும் பெயருடன் கடற்றளத் தை மூடினதெனவும் கூறப்படுகின்றது. இவை காலககியில் திரண்டு சுண்ணும்புக் கற்களாக மாறியது எனவும் கூறப் படுகின்றது. இவை நீரை உறிஞ்சி வைக்கக் கூடியனவாக உள்ளன எனவும், தரைக்கீழ் நீரைக் கொண்டிருக்கும் எனவும் புவிச்சரிதவியலாளர் கூறுவர். கோப்பாயின் மேற்குப் பிரதேசம் செம்மண்ணுகத் தோட்டச் செய் கைக்கு ஏற்றதாகவும், கிழக்குப் பிரதேசம் உவர் நிலயா

Page 11
கவும், புற்றரையாகவும் உள்ளது. கைதடி, செம்மணி போன்ற இடங்கள் உப்பு விளையும் இடமாகவும் உள்ளன. வடக்குப் பகுதி கற்பார் செறிந்த நிலமாகக் காட்சியளிக் கிறது. தெற்கில் இருபாலையின் ஒரு பகுதி களிமண் பிரதேச மாய் உள்ளது.
இயற்கைத் தாவர பாகச் சில இடங்களில் நாகதாளி, கள்ளி போன்றவையும் பூவரசு, இலுப்பை, வேம்பு, பனை புளி ஆல், அரசு போன்ற மரங்களும் வளர்கின்றன. தரை உவர்த்தன்மை பெrருந்தியுள்ளதh ல், தென்னை நன்முக வளர்கின்றது. ட யிர்ச் செய்கை நடவடிக்கையில் நெல், புகையிலை, வாழை, காய்சறி, வெங்சாயம், கிழங்கு வகை பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் அநேக குளங்கள் சாணப்டடுகின்றன. சில கு எங்கள் தோட்டத்துக்கும், வயலுக்கும் நீர்ப்பாய்ச்ச உதவுகின்றன.
இங்குள்ள குளங்களில் உச்சு வில்குளம். பெரியகுளம், வட்டச் குளம், 6ே ளைக் குளம், செம்மணிக்குளம், ஆகியன முக்கியமானவை. பயிர்ச்செய்கைக் குழுக்கள், கமநல சேவைப்பகுதி என்பன இங்குள்ள குளங்களை ஆழப்படுத்தி உள்ளன. இவற்றில் கலியாணக்குளம், உச்சு வில்குளம், வட்டக்குளம் என்பன அடங்கும் இங்குள்ள மக்களிற் பெரும்பாங்கினரின் தொழில் விவசாயம். இவர்களின் பயிர்ச் செய்கை நட வடிச்சைச்கு நீர் போதாமை காரண மாக, மாரியில் பழைநீரைத் தேக்கிக் கோடையில் பாசனம் செட்ய மாரி பிறக்கு முன் வF யக்சால் வெட்டல் அணை கட்டல் போன்ற வேலைகள் நடைபெறும்.
தொழில்:-
இங்குள்ள மச்சளில் சிலர் வாழ்க்கைக்கு வேண்டிய ஊதியம் பெற நெசவுத்தொழில், தச்சுவேலை, வனைதல் துணிக்கு வர்ணம் அச்சடித்தல் போன்ற தொழில்களைச் செய்கின்றனர். இம்மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யப் பாடசாலைகள் இயங்குகின்றன. பாடசாலைகளைத் தவிரக் கிராமச் சங்கங்களின் மேற்பார்வையில் சனசமூக நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றைச் செயற்பட வைக்க அரசு வருடாவருடம் உதவி நன்கொடை வழங்கி வருகிறது.
நிலப் பயன்பாட்டைப் பொறுத்து இருபாலையில் அதிக வளவு வ ய ல் நிலம்- 160 செக்டேயர் காணப்படுகிறது.

மேட்டுநிலம் 68 கெக்டேயரில் வீடுகள், தோட்டங்கள் போக்குவரத்து வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன, கோப்பாய் தெற்கில் 90 கெக்டேயர் வயல் நிலமும், 72 கெக்டேயர் மேட்டுநிலமும், கோப்பாய் வடக்கில் 41 கெக்டேயர் வயல் நிலமும், 175 கெக்டேயர் மேட்டு நிலமும் உள்ளன. மேற்குப் பகுதி பண்படுத்தப்பட்டுத் தோட்ட் நிலமாக உள்ளது.
மக்கள்.
குடிச் செறிவை நோக்கின், கீழுள்ள அட்டவணைப்படி அமையும்.
இடம் சனத்தொகை வளர்ந்தோர் சிறியோர் கு: எண்
இருபாலை 8719 5813 2906 1877
கோப்பாய் W . ,
தெற்கு 494 3101 1973- 1 193
கோப்பாய்
வடக்கு 7834 576 o' 2074 1620
நிர்வாகப் பிரிவு:
போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபின் பறங்கியர் காலத்தில் சைவக் கோயில்கள் இடிக்கப்பட்டு இடத்துக்கிடம் கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டப்பட்டன் இவ் வாறு பறங்கியர் யாழ்ப்பாண நாட்டில் ஊருக்கொரு கோயில் எழுப்பி ஒவ்வோர் கோயில் இருந்த பிரிவையும் குறிக்கும் கோயிற் பற்றுப் பிரிவுகளாகப் பிரித்தனர்: இவ்வாறு 32 கோவிற் பற்றுகளாக யாழ்ப்பாணம் பிரிக் கப்பட்டது. இதில் வலிகாமம் என்னும் பகுதியில் 14 கோவிற் பற்றுக்கள் அமைந்தன. இதில் ஒன்று Gasnrtuntil கோவிற்பற்று. இப்பிரிவில் கோப்பாய் தெற்கு இறை, கோப்பாய் வடக்கு இறை, இருபாலை இறை, நீர்வேலி இறை எனும் நான்கு பிரிவுகள் அடங்கும் இப்பிரிவு பின்நாளில் தோம்பு முறை உருவான போது ஏற்பட்டது. இன்றும் உறுதிகளில் இப்பிரிவு எழுதக் கானலாம்.
7

Page 12
ஆங்கிலேயர் ஆட்சியில் வலிகாமம் என்னும் பகுதி நிர்வாக வசதிக்காக வலிகாமம் கிழக்கு, வலிகாமம் வடக்கு வலிகாமம் மேற்கு, வலிகாமம் தெற்கு, என்னும் பிரிவு களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு என்னும் பிரிவுள் கோப்பாய் அடங்குகிறது.
இலங்கைத் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்பட்டபோது கோப்பாய் 83 ஆவது தேர்தல் தொகுதியாகக் குறிப்பிடப் பட்டது. இத்தொகுதியுள் கோப்பாய், நீாவேலி, புத்தூர், அச்சுவேலி, இடைக்காடு, ஊரெழு, உரும்பிராய், வசா விளானின் ஒருபகுதி என்பன அடங்கும். இத்தனை ஊர் களைக் கொண்டிருந்தாலும் கோப்பாய் என்னும் ஊரின் பெயரைக் கொண்டு இத் தேர்தல் தொகுதி பெயரிடப் பட்டமை கோப்பாய்க் கிராமத்திற்குச் சிறப்புத் தருவ தாகும். * *
உள்ளுராட்சி விதிகளின் கீழமைக்கப்பட்ட கோப்பாய் கிராமோதயப் பிரிவில் கோப்பாய் வடக்கு, கோப்பாய் தெற்கு, இருபாலை ஆகிய பகுதிகள் அடங்கும்.
பொதுத் தாபனங்கள்:
இப்பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுத்தாபனங்கள் பின்வகுமாறு. வலிகாமம் கிழக்கு வருமான அலுவலர் காரியாலயம், கோப்பாய் அரசினர் வைத்தியசாலை. கிரா மோதயக் காரியாலயம், பொதுச்சந்தை (ாம். ஓ, எச்) மருத்துவ அதிகாரி காரியாலயம், கூட்டுறவுக்கிளைகள், சனசமூகநிலையங்கள், பாலர் விடுதி, கமநலசேவைநிலையம், கிராம முன்னேற்றச் சங்கம் ஆகியன அமைந்துள்ளன.
கொத்தணி அமைப்பு:
வடமாநிலக் கல்வி வட்டாரங்களில் கோப்பாய்க் கல்வி வட்டாரம் ஒன்று. இன்று வட்டாரக்கல்வி அதிகாரி முறை மாறி கொத்தணி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக் கொத்தணி அமைப்பில் கோப்பாய்க் கிறிஸ்தவக் கல்லூ ரியை மையமாகக் கொண்ட கோப்பாய்க் கொத்தணி உருவாகியுள்ளது. இவ்வமைப்பின் கீழ் கோப்பாய் வடக்கு கோப்பாய் தெற்கு, இருபாலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பாடசாலைகள் அடங்கும். கோப்பாய்ப் பிரதே சத்தில் கல்வி வளர்ச்சி பற்றிய ஆய்வில் இக் கொத்தணி அமைப்பிற்குட்பட்ட இடங்களின் கல்வி வளர்ச்சியே ஆய்வுப்
8

படவிளக்கம்
கிராமோதயசபை வட்டாரங்கள்:
1. வராம்பற்றை.
2. இலகடி
- 3. அரசடி.
4. கோவில்வட்டாரம்.
5. 'பிள்ளையார் கோவிலடி. 6. நாவலடி.
7. கொங்கமை,
8. வீரபத்திரர் கோவிலடி 9. இருபாலை கிழக்கு.
10. இருபாலை
1 l . மடத்தடி.
12. கோவில்தெரு.
13. கட்டைப்பிராய்.
14. கல்வியங்காடு."
15. நாயன்மார்கட்டு.
குறியீடுகள்:
*. கிராமசேவகர் பிரிவு
ത്തത്ത வட்டாரப்பிரிவு. - ஒழுங்கைகள்.
பெருந்தெரு

Page 13
۔۔۔ ۔۔" کس سس ۔
മ@c fu
600ഥമ f :
.
弼
ஊக்மபிராமில்குக்க
six as a 8
മrശ്രമ @4' se--
റ്റ്.--\്
മരഭ0, LG
 

འོ་ན་ང་ཡ--།།
2 AMCWM74)

Page 14

பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது. கிராமோதயப் பிரிவில் அடங்கும் நிலப்பரப்பே கொத் தணி அமைப்பிலும் இடம் பெறுகிறது. ༥
இக்கொத்தணியுள் 10 பாடசாலேகள் அமைகின்றன். இதில் கிறிஸ்தவக் கல்லூரியில் க. பொ. த உயர்தர வகுப் புக்கள் வரையும், கோப்பாய் மகாவித்தியாலயம், சரவண பவானந்த வித்தியாசாலை என்பன க. பொ. த சாதாரண் தர வகுப்புக்களையும், நாவலர் இந்து தமிழ்க்கலவன் பாட சாலை 8ம் வகுப்பு வரையும் கொள்ள ஏனையவை ஆரம்ப பாடசாலைகளாகவும் உள்ளன.
கோவைப்பதிக் கல்வி விருத்தியில் சைவத்தின் பங்கு
கோவைப்பதியில் சைவச் செழிப்பு:
சைவசமயத்தில் குரு, இலிங்கம், சங்கமம் ஆகிய மூன்று இடத்தும் இறைவழிபாடு புரிதல் வேண்டுமென விதிக்கப் பட்டுள்ளது. இலிங்கம் ஆகிய மூர்த்திக்குச் செய்யும் வழி பாடே நடைமுறையில் முதன்மை பெற்று இருக்கிறது. மூர்த்தி வழிபாட்டிற்குரிய இடம் கோயில்களே. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், என்பது ஆன்ருேர் வாக்கு. மக்கள் வாழ்வில் மையமாக விளங்கி அவர்களது உயர்ந்த பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் எடுத்தி யம்பி நிற்பன, இவ்வகையில் கோப்பாய் மக்களின் எடுத் துக்காட்டாக இங்குள்ள கோயில்கள் விளங்குகின்றன. இங்கு வாழும் சைவப் பெரியார்களின் முயற்சியால் ஆங் காங்கு கோயில்கள் எழுப்பப்பட்டும் அவற்றில் நித்திய நைமித்திய பூசைகள், விழாக்கள் நடத்தப்பட்டும் இளை
மூலம் இளைய சந்ததி சமய விழிப்புணர்வும் அறப்பண்பும் பெற்றுத் தொடர்ந்து தமது பணிகளைச் செய்து வருவ ரென முதிய தலைமுறை எதிர்பார்க்கிறது. சமய நிகழ்ச் சிகள், பேச்சுப்போட்டிகள், பஜனகள், பொது அறிவுப் போட்டிகள் நடத்தியும் புராணக்கதைகள் படித்தும், பாடியும், நடித்தும் இளையோரை ஊக்குவிக்கின்றனர். இதைவிட, இன்று பிரபலமடைந்து வரும் சாயி மண்டலி சுப்பிரமு னிய கோட்டம் என்பனவும் சமய வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கின்றன. பொது இடம் ஒன்றில் பிரார்த்தனை
9

Page 15
சொற்பொழிவுகள் ஏற்படுத்தி நடத்துவதைவிட, தத்தமதி இல்லங்களிலும் ஒரு குறித்த நாளில் பூசை ஏற்பாடுகள் செய்து, சுற்றம், அயலாரை அழைத்து வந்த%னகள் செய்து வருகிறர்கள். இவை யாவும் நடைபெறும் வேளை இந்து இளைஞர் மன்றங்களும் தமது பணியாகப் பேச்சுப் போட்டிகள், உத்சவ காலப் பஜனைகள் ஏற்பாடுபண்ணி நடத்துகின்றன. s'
சமய நம்பிக்கைகள் நலிவுற்று வரும் இவ்வேளை கோப்பாய் மக்கள் கோயில்களைப் பேணுவது பெரும்ை தரு வதாகும். கோவைப்பதியில் இவ்வாருண பணிகளை, ஆற்றும் கோயில்களினதும் இந்து மன்றங்களினதும் செயற் பாடுகள் பற்றி இங்கு ஆராயப்பட்டுள்ளது.
சைவப்பணி நிகழும் இடங்கள். தலங்கள்:- வெள்ளெருவை விநாயகர் கோயில்
மதியாய் சடைமுடித்து மாசு 0ணப் பைம்பூட்டு சதியாய்க் குறுந்தாட்டு தாள நதிபாய் இருகவுட்டு முக்கட்டு நால்வாய்த்து என்னுள் உருகவிட்டு நின்ற ஒளி. நந்திக்கலம்பகம் • வேண்டித்துதிக்கும் மெய்யடியார்களின் வல்வினை தீர்க்கவல்ல வெள்ளெருவை விநாயகர் எழுந்தருளியிருக்கும் தலக் இலந்தை வனம். இத்தலம் போர்த்துக்கேயர் காலத் துக்கு முந்தியது. நல்லூர் அரசர் காலத்தில் சிறுகோவி லாக எழுந்தது. விஜயராசசோழன் நயந்துதவ, நல்லூர் அரசன் இப்பிரதிஷ்டா மூர்த்திகளைக் கப்பல் மூலமாகப் பருத்தித்துறை மார்க்கமாகப் பெற்ருன் என ஒரு கர்ண பரம்பரைக்கதை உண்டு. பருத்தித்துறையிலிருந்து நல்லு ருக்குச் செல்ல வேண்டிய விக்கிரகம் கோப்பாயில் இலந்தை வனத்தில் வெள்ளெருக்க மரங்கள் நடுவே தங்கிவிட்டது. அவ் இடத்தில் சிறுகோயில் கட்டிப் பூசைகள் ஆரம்பித் தனர் ஊரவர். பின்பு இது வெள்ளெருவை விநாயகர் -Չե6ծաւDn 6մ3:]. .יו
காலகதியில் சுற்று மதில்களும் மண்டபங்களும் அமைய, சேணுேங்கு கோபுரமும், சித்திர வேலைப்பாடுடைய தூபியும் உருவானது. 1967-ம் ஆண்டு சித்திர வண்ணத்தேரும் அமைத்து அதற்கோர் தேர்முட்டியும் அடியார்கள் அமைத் தனர். இப்போது திருப்பணி வேலைகள் நிறைவுற்று விட்டன.
10

ஆண்டு தோறும் சித்திரைத் திருவாதிரையில் வாலஸ் தாபன முகூர்த்தோற்சவமும் திருவிழாவும் நடக்கும். ஆணிப் பெளர்ணமியில் தீர்த்தம் நடைபெறும். வாரந்) தோறும் வெள்ளிக்கிழமைகளில் பஜனையும் கூட்டுப்பிரார்த்ெ தனையும் நடக்கும். இவற்றில் கோயிற்குருக்கள் குடும்பத் தவர் மிக ஈடுபாட்டுடன் செயற்படுவர். பன்னிரு மாதச் சதுர்த்தி விழாக்களும், சிவராத்திரி, நவராத்திரி, திருவெம் பாவை, கஜமுகாசுர வதம், பெருங்கதை ஆகிய விழாக் களும் நடைபெறும். ஆண்டு தோறும் குறைநிரப்பு முகமாக, ஆனி மகோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கிப் பத்து நாட்கள் நடைபெறும். பெருங்கதை நடைபெறும் நாட்களில் அடியார்கள் விரதம் அனுட்டிப்பர். விநாயக சஷ்டியிலும் வளர்பிறைச் சதுர்த்தியிலும் சிறப்பாக ஆவணிச் சதுர்த்தியிலும், பலர் தருப்பை பூண்டு விரதம் அனுஷ்டிப்பர். இவ்வைபவங்களில் பக்தர்கள் கலந்து கொண்டு விமரிசையாக நடத்துவர். "வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்துவரும்' கோப்பாய் வெள்ளெருவை விஜயராச விநாயகர் திருவூஞ்சல் என இத்தல மூர்த்தி மீது சுன்னகம் குமாரசாமிப்புலவர் பதிகம் பாடியுள்ளார்.
அதிலிருந்து ஒரு பாடல் வருமாறு:-
பூமேவு யாழ்ப்பாண தேசம் தன்னிற்
பொன்னுலகம்போலழகு வாய்ந்த கோவை மாமேவு திருநகரில் வாசஞ் செய்யும் வரவிசயராச விநாயகர் தம்மேலே - பாமேவு மூஞ்சலெனும் பதிகம் பாட
பத்தியுடன் எத்தொழிற்கு முன்னேயென்னும் தேமேவு மானை முகமுடைய வன்னேன்
திருவடித்தாமரையிணையடிகள் சென்னி வைப்பாம்,
கோப்பாய் வீரபத்திரேஸ்வரர் 'அருளுடைத்தனி ஆதியை நீத்தொரு வேள்வி முற்ற விரும்பிய தக்களுர் நீள் சிரத்தை நிலத்திடை வீட்டிய வாள் படைத்த மதலையைப் போற்றுவாம்"
கந்தபுராணம். யாழ்ப்பாணத்தில் போர்த்துச்சேயர் வரலாறு முடிந்து ஒல்லாந்தர் காலம் தொடங்குகிறது. விஞசி உடையார்

Page 16
என்றெருவர் சேர். கந்தையா வைத்தியநாதன் பரம் பரையினருள் மணம் முடித்தவர். இவர் ஒருநாள் மது போதையில் கும்பப்பிள்ளை என்னும் இடத்திலிருந்து வந்து கொண்டிருக்சையில் தனிப்பனை வளவில் உள்ள வைரவ கோவிலில் பூசை செய்பவர் கந்தபுராணத்தில் வீரபத்திர படலத்தை ஏட்டில், வாசித்துக் கொண்டிருந்தார். உடை யார் சுய அறிவின்றிக் கோபத்துடன் அந்த ஏட்டைப் பறித்துக் கிழித்து அங்கு நின்ற தனிப்பனை அடியில் போட்டுக் காலால் மிதித்துவிட்டார்.
அன்றிரவு இவருக்குச் சித்தப்பிரமை ஏற்பட்டுவிட்டது. காலையில் வந்து ப ையடியில் இலை, குழை முதலியவற்றைக் கிழித்து வில்வம் சார்த்துவது போலச் சார்த்தினர். இப் படிப் பலநாட்கள் செய்துவந்தார். வீட்டாருக்கும் காரணம் புலப்படவில்லை. ஒருநாள் பூசகர் மற்றவர்கட்கு நடந்த தைக் கூறினர். அப்போது உடையாரின் மைத்துனர் சண் முகம் ஒரு வீரபத்திரசுவாமி உருவம் அமைப்பித்துக் கொட்டிலும் கட்டி ஐயர் ஒருவரை நியமித்து அவ்விடம் பூசை ஆராதனைகள் செய்யத்தொடங்கினர். 68). It ருக்குச் சுகம் பேசியது! அதன் பின் வீரபத்திரர் ஆலயம் உருவாயிற்று. -
பூசகரும் ஆராமையால் தனக்குரிய வயற் காணி ஒன்றை கோயிற் சொத்தாக உறுதி முடித்துக் கொடுத்துவிட்டார். அவரது பரம்பரையினர் பூசகர்களாக இருந்து இதனையும் அனுபவித்து வந்துள்ளனர். இன்றும் இவர்களே இருக்கின் றனர். ! ፕ t
இக்கோயிலின் தலவிருட்சம் புளியமரம், இம்மரத்திற்கு வயது ஏறத்தாழ 800 ஆண்டுகள் மதிக்கலாம். எனவே இக்கோயிலின் முன்னுள்ள வைர வசுவாமி முதலில் இப் புளிய மரத்தடியில் சூலமாக அமைந்திருக்கலாம். பின்னர் இதற்குப் புறம்பான கோயில் கட்டியிருக்கலாம். இப்போது வீரபத்திரன் கோயில் சேர்.கந்தையா வைத்தியநாதன் குடும்பத்தினரால் பரிபாலிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தலத்திலிருந்து கண்காணிப்பவர் திரு.கனகலிங்கம் அவர்கள் இக்கோயிலுக்குத் தேவஸ்தான செயற்குழுவும் உண்டு.
பின்நாளில் அம்பாள், கணேசர், முருகன், சனீஸ்வரன், வைரவர் நவக்கிரகம் ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆண்டு தோறும் அலங்கரரத் திருவிழா நடக்கும், நாள்தோறும் நித்தியபூசை நடைபெறுகிறது.
12

புண்ணிய தினங்சளில் விசேட பூசைசளும் வெள்ளிக்கிழடிை
களில் பஜனைகளும் நடக்கின்றன. இப்போது சில ஆண்டா
கக் கொடியேறித் திருவிழா நடக்கிறது
வீரபத்திரர் தோற்றம் அந்திவான் பெருமேனியன் கறைமிடற்றணிந்த எந்தை தன்வடிவாய் அவன் நுதல் விழியிடையே வந்து தோன்றியே முன்னுற நின்றனன் மாதோ முந்து வீரபத்திரன் திறலுடை முதல் வன் அங்க வேலையில் உ ைம ய வ ள் விெ குளியால் அடர்செ ய் நங்கையாகிய பத்திரகாளியை நல்க செங்கை ஒரிரண்டாயிரம் பாதி செம்முகமாய் துங்க வீரபத்திரன் தனை அடைந்தனன் துணையாய்
கந்தபுராணம் - தட்சகாண்டம்.
இக்கோயிற் பூசகராய் இருந்த முத்துக்குமாரசுவாமி ஐயர் என்பவர் திருவூஞ்சல் பாடியுள்ளார். இதேபோல திருஞான சம்பந்தக் குருக்கள் என்பவரும் திருவூஞ்சல் பதிகம் பாடி யுள்ளார். மாதிரிக் கொரு பாடல் பின் வருமாறு:-
பூமேவு திசைமுகன் மாலவனே விண்ணுேர் போற்ற
எழில்ரசித ஒளி பொலிவதாகும் மா மேவு கைலை உறைபவர் தங்கண்ணில் வருமொரு
மாணிக்கமெனும் வடிவமாகி தேமேவு கோவை நகர்த் தென்பரன் மேவும் தேவீரபத்
திரர் Guo 6)TG556 Lrt – நா மேவு நலந்தர நல்லருள் கூரங்கைநாதன் இணையடி
மலர்கள் நயத்தல் செய்வாம்.
முத்துக்குமாரசுவாமிஐயர்.
தென்கோவை சாந்திலிங்கேஸ்வரர் கோயில்
இது சிதம்பரம் செவ்வாய்க்கிழமை மடத் தர்மசாத னக்காணியில் 7 . 1 , 82இல் காந்திமதி . மயில் வாகனம் அத்திவாரக்கல் இட்டுப் பொதுமக்கள் உதவியுடன் கட்டி யெழுப்பிய கொகுடிக் கோயிலாகும். வயதில் இளையது. அருளில் மிகப்பழையது. யோகர் சுவாமிகளின் அமெரிக்கச் சீடரான சுப்பிரமுனிய சுவாமிகள் கங்காநதியின் உற்பத் திப்பகுதியில் தேடிக் கண்டெடுத்த தான் தோன்றிவிங்கம் இங்குள்ளது. அமெரிக்காவில் ஹாவாயில் பிரதிட்டை
13

Page 17
சேய்து வணங்கி வந்தது. கோப்பாய்ச் சைவச்சிழுரின் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்கசுவாமி குருதேவர் கொண்டு வந்து பிரதிட்டை செய்து கோப்பாய்ச் சிருருக்கு உபயமாக்கியது.
இச்சாந்திலிங்கப் பெருமான் உருவில் சிலகாலம் மூன் றுகுறிகள் தோன்றின. பின்பு மூன்றும் கலந்து ஒன்ருகி ஒரே சிவப்புப் பட்டையாய் உள்ளது. உற்றுப்பார்ப்போ ருக்கு இலிங்கம் சிறிது சிறிதாக வளர்வது போலத் தோன் றுகிறது. பொலிவும், மினுமினுப்பும் கொண்டது. V
இதன் அயலில் குருதேவரின் பாதுகைகளை வைத்துத் திருவடிக் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. ஜயந்தி, குருபூர் ணிமா, நவராத்திரி வைபவங்களை ஊர்மக்கள் கொண்டா டுவர். சாந்திலிங்கேஸ்வரருக்கும், திருவடிக்கோயிலுக்கும் நாள்தோறும் சிறுவரே பூசை செய்யும் பொறுப்பு உடை யவர். இப்போது சில காலமாக இலிங்கபூசை ஆகம விதிப் படி அபிஷேகம் ஆகியவற்றுடன் பூசகர் ஒருவர் செய்கிருர், அயலிலுள்ள பெரிய கோயிலின் உற்சவ காலத்தில் இக் கோயிற் சிறுவர் தண்ணீர்ப்பந்தல் அமைத்து அடியாருக்குத் தாக சாந்தி செய்கின்றனர். லிங்கேஸ்வரர் பேரில் திருப் பள்ளி எழுச்சி திரு . அ . வி . மயில்வாகனன் அவர்களால் பாடப்பட்டுள்ளது. அதே போலத் திருவடிக்கோயிலுக்கும் ஊஞ்சல்பதிகம் பாடப்பட்டுள்ளது.
சாந்திலிங்கேஸ்வரர் திருப்பள்ளியெழுச்சி
கோவைக்கோட்டக் கோயில் கொண்டாய் காவாய்க்குருதேவரருளிய கோவே பூவையரும் புங்கவரும் குழுமிக்
காலையிலும் மாலையிலும் கனியத் தேவே! என்றே லமிட்டோம் எம்மை
ஏனென் விழித்தொருகால் உத்தரங்கேளாய் பாவால் பூவால் பரவி நின்ருேம்
காவா தே பள்ளி எழுந்தருளாயே!
அ , வி . மயில்வாகனன்.
திருவடிக்கோயில் ஊஞ்சற் பதிகம் அளவை நகர் ஆதின கர்த்தரே ஆடீர்
காவாய்ப் பழம்பதியின் கனகக் குன்றே! உளதாய காசாய உடையுட8ாட ஆட
கடைச்சாமி கைலையில் தோன்று நந்தி
1.

நாதச் சம்பிரதாய விளக்கும் ஆட
மழவிடையார் மால்வரையில் மகிழ்ந்து ஆட இளஞ்சிருர் தம் இன்பமணம் இசைந்தே ஆட
பழவினைகள் பாறவென ஆடீரூஞ்சல்,
அ . வி . மயில்வாணன்,
கோப்பாய் தெற்கு மாரி அம்மன் கோயில். இருபாலைச் சந்திக்கு வடமேற்கே மாந்தோப்பு என அழைக்கப்படும் காணிகள் உண்டு. இதில் ஒரு காணியில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் கோயில் அநாதியில் அயற்காணியான ‘ கொம்பன் வளவு ' என்னும் நிலத்தில் வாழ்ந்த சின்னக்குட்டி சின்னத்தம் பி என்பவர் தனது வீட்டில் வைத்திருந்த பெட்டகத்தில் வைத்து வணங்கி வந்த பேய்ச்சி அம்மன் சில யை வைத்துக் கட்டப்பட்டதாகும். இவர் காலை - மாலை நேரங்களில் இவ்வம்மனுக்கு விளக்கு வைத்து வணங்கி வந்தார். இவர் இறக்க இவரது சகோ தரர் வேலுப்பிள்ளை என்பவர் அம்மன் சொரூபத்தை, பழைய தெருவிலுள்ள வீரபத்திரர் கோயிலில் வைத்து விட்டு இங்கு கட்டடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இவரும் இவரது அண்ணன் மகன் நடேசுவும் தற்சமயம் மடப்பள்ளிக் கட்டடம் அமைந்துள்ள இடத்தில் கோயில் கட்ட அத்திவாரம் இட்டனர். சிலநாளில், இப்போது ஆதி மூலம் அமைந்துள்ள இடத்தில் ஒரு ஆளுயரத்துக்கு மண் புற்று வளர்ந்து, அதன்மேல் காலையிலும் மாலையிலும் நாகபாம்பு ஒன்று தென்படுவது அவதானிக்கப்பட்டது.
வேலுப்பிள்ளை அவர்கட்கு அம்மன் கனவில் தரிசனம் கொடுக்க அத்தி வாரம் இட்ட இடத்தை மாற்றி, இப் போது ஆதிமூலம் உள்ள இடத்தில் புற்றுக்கு முற்புறமாக ஒரு கட்டிடம் எழுப்பினர்கள். வீரபத்திரர் கோயிலில் இருந்த அம்மன் சொரூபம் கொண்டு வரப்பட்டு இக்கோ யிலில் பிரதிட்டை செய்யப்பட்டது. 1962 பங்குனி மாதம் ரோகிணியன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1983இல் இக்கோயிலுக்கு ஒரு பரிபாலன சபை அமைக்கப்பட்டது. இச்சபை கோயிலே நிர்வகித்து வருகிறது. நித்தியபூசைகள் நடத்தப்படுகிறது.
இக்கோயிலின் மூலத்தானத்தின் பின் எழுந்த புற் தற்சமயம் காணப்படவில்லை. அவ்விட மக்கள் சரியான இடத்தில் அம்மன் அமர்ந்து கொண்டதால் அறிகுறியை
15

Page 18
அழித்துக்கொண்டாள் என்கின்றனர். இப்போது இவ்வா லயத்தில் சந்தானகோபாலர் விக்கிரகமும், பிள்ளையாரும் வைக்கப்பட்டுள்ளது. மணிக்கோபுரமும், வைரவருக்குக் கோயிலும் அமைக்கப்படுகிறது. ஊர் மக்களிடம் நிதி சேக ரித்து அயற்காணிகளை வாங்கி வீதிகளை அமைத்து அம்மன் தேவஸ்தானம் எனப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ்வால யத்தில் கொடியேற்றம் நடப்பதில்லை. அலங்காரத் திரு விழா 10 நாட்கள் நடக்கும். கும்பாஷேகம் நடந்த நாளை யடுத்துவரும் 10 நாட்கள் இவை, செவ்வாய், வெள்ளி நாட்களில் விசேடபூசை, வைகாசி விசாகப்பொங்கல், கூட் டுப்பிரார்த்தனை வகுப்புக்கள் நடைபெறுகின்றன.
கோப்பாய் தெற்கு
அருள்மிகு “பூனிமுடி மன்னர்” ஆலயம்
கோப்பாய்க் கிராமத்தின் வாழையடி வாழையாக வாழ்ந்துவரும் வள்ளுவ சமூக மக்களின் வாழ்வுக்கு வள மளித்து வரமருளும் தெய்வங்களாக கோயில் கொண் டெழுந்தருளியிருக்கின்ற இரண்டு ஆலயங்களில், அருள்மிகு பூரீமுடிமன்னர் ஆலயமும் ஒன்ருகும். இவ்வாலயம் யாழ் நகரிலிருந்து பருத்தித்துறை செல்லும் வீதியில், நாலேகால் மைல்கல் தொலைவில், வீதிக்குக் கிழக்குப் புறமாக உள்ள நஞ்சன்வளவு என்னும் பெயருடைய தனியாரின் காணியில் அமைந்திருக்கின்றது. இவ்வருள்மிகு ஆலயத்தின் விசேட தலவிருட்சமாக விளங்கும் பாரிய பூவரசுமரம், வானளாவ வளர்ந்து படர்ந்து யாவருக்கும் வரம் அருளும் வகையில் நிற்பதன் காரணமாக இவ்வாலயம் எக்காலத்தில் ஆரம்ப மானது என்பதை அளவிட்டுக் குறிப்பிட முடியாது இருக் கின்றது. குடி இருக்கும் காணியில் இவ்வாலயம் கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பதால் ஆலயமண்டபம் எதுவு மின்றி அடித்தளம் அமைந்த கட்டிடத்தில் சிவலிங்கரூபத்தில் மூலஸ்தானம் அமையப் பெற்றுள்ளது. அருள் பாலித்து வரும் இவ்வாலயம் வரலாற்றுப் பெருமைக்குரிய ஆலய மாகும். தனியாரின் காணியில் ஆலயம் அமைந்திருப்பதால் காலத்திற்குக் காலம் இக்காணிக்கு உரிமைக்குரியவரே இவ்வாலய நிர்வாகியாகவும் பொறுப்பேற்றுப் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் காரணமாக இக்காணியின் இப்போதைய உரித் தாளரான, சமாதான நீதவான் திரு.எம்.கே.இளையப்பு அவர்களின் நிர்வாகத்தில் ஏனைய காலப் பொங்கல் விழாக்
16

களும், சிவராத்திரி, நேவராத்திரி போன்ற பல விசேடி பூசைகளும் இடையிடையே கூட்டுப் பிரார்த்தனைகளும், வேறுபல நிகழ்ச்சிக்ளும் நடைபெற்று வருவதும் குறிப்பிடத் தக் கிதாகும் ஆலயத்தின் பூசகர்களாக, முன்னவர்களின் வ்ழித்தோன்றலின் முறையே வந்தவரான, திருக.வ. சிதில் பரநாதன் என்பவரே தற்போதைவ" பிரத்ம பூசகராகப் பணியேற்றுப் பூசைகளை நடிடர்த்தி வருகின்ருர், இவ்வாலயத் தின் சிறப்பை * எடுத்துக்காட்டும் வகையில், ஈழத்துப் பல பேரறிஞர்களின் ஆசியுரைகளுடன் 'கவியரசு வெண்பாமணி திரு முருகசூரியன் (முன்னுள் கல்லூரி அதிபர் அவர்கள் *முடிமன்னர் பதிகம்' என்னும் பக்திப்பாமால்ைமையுல் யாத்து வெக்ளியிட்டு" இருப்பதும் வரலாற்றுப் பெரும்ைக் குரிய இவ்வாலயத்தின் சிறப்புகளும், வேண்டுவார்"ள்ேண்டு வதை ஈய்ந்தருளும் எம்பெருeானின் அருள், ஆட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்,
கோப்பாய் தெற்கு முடிமன்ன்ர் துதி வெண்பா மன்னும் வளங்கள் மலிந்தவுயர் யாழ்தகரத்* துன்னுத் திருக்கோவைத் தென்பதியில். பன்னும் அருள் செய் முடிமன்ன அப்பனே! என்றுந்: தருளுவாய் நல்லருளைத்தான்.
முருகசூரியன்? &*ஐ
இருபாலேக் கற்பகவிநாயகர் கோயில்
மன்னிய வளங்கள் மலிந்த யாழ்நகர் , துன்னிய கோவையில் தென்பதி மேவியூ மின்னிய்"கற்ப்க, விநாயகன் , அடிதொழ *உன்னியீ"யர்வையும் ஒன்றுற் வருமே ? 1690 ஆம் ஆண்டிற்கு முன்பின்னத யாழ்ப்பூாணக்குடா நர்டு போர்த்துக்கேயர், வசமிருந்து ஒல்லாந்தர் கைக்கு மாறியது. இவ்விநாயகர் வரலாறும் சமகாலத்தே தெர டங்குகிறது. அக்காலம் கொச்சி, கள்ளிக்கோடு, கோடித் கரை போன்ற துறைமுகங்களில் இருந்து வள்ளங்களில் அரிசி, ந்ெல் இறக்குமதியானது. இவற்றிற்கு ஆயக்காசும், வரியும் போர்த்துக்கேயரால் அறவிடப்பட்டது, ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்ட்ேச்ரீபெரும்பாலு h சோனகரும், செட்டியாருமே ஆயின், வேதாரணிய சைவ குலத்தவரான
群性

Page 19
சின்னத்தம்பிஐயரும் இப்பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் விநாயக உபாசகர். ஒரு விநாயகர் சிலையை இந்தியா வில் இருந்து செதுக்கி எடுத்துவர விரும்பினர். போர்த்துக் கேயர் கல்லென்று இதை அனுமதிக்கமாட்டார்கள். எனவே சின்னத்தம்பி ஐயர் ஒரு மூடை நெல்லினுள் விக்கிரகத் தைப் புதைத்துத் தைத்துவிட்டார். மூடைகள் வள்ளத்தில் ஏறின. யாழ்ப்பாணம் வந்துவிட்டன. சின்னத்தம்பிப் பெரியாருக்குப் பொய் பேசவராது. சுங்கச் சோதனையின் போது நெல்லும், சில கல்லும் மட்டுமே உண்டு என்ருர், வழமையாக நெல்லுடன் சிறு கற்களும் இருப்பதையே நீறணிந்த இப்பெரியார் கூறுகிருர் என்றெண்ணி ஆயப் பணத்தைப் பெற்றுக்கொண்டு மூடைகளைக் கொண்டு போக அனுமதித்தார்கள்.
அதிக காலம் போக்காது சிறிய கோயில் எழுப்பி வாலஸ்தாபனம் செய்து உருநாட்டையும் பிரதிட்டை செய்து கற்பகவிநாயகர் என்ற நாமம் இட்டார். இவர் கோயில் அமைத்துப் பிரதிட்டை சேய்ய ஆரம்பிக்கவே, போர்த்துக்கேயர் பின்னும் தலையிட்டு யாவையும் நிர்முல மாக்கினர். அப்போது, இரவிரவாக இச்சிலை தற்போது தெருவுக்குக் கிழக்கே இருக்கும் உருக்கட்டுக்குளம் என்னும் தாமரைக்குளத்துள் பாதுகாப்பாக இட்டு மறைத்து வைக் கப்பட்டது; a
பின்னர் சிலகாலம் செல்ல அவர்களின் ஆதிக்கம் குன்றி, ஒல்லாந்தர் காலத்தல் அனுமதிகோரி, சிலை மறு படியும் வாலஸ்தாபனம் செய்யப்பட்டு படிப்படியாகக் கோயிலும், கோபுரமும், மண்டபமும், மதிலும் தீர்த்தக் கிணறும், கேணியும் எல்லாம் உருவாயின. இப்போது கற்பக விநாயகர் வேண்டிய வேண்டியாங்கு glug. Untifics அருள் புரிந்து கற்பகதருவே போன்று அடியவர் உள்ளத் துக்கு நிழல்பஈலித்து வருகிருர். இதன் தலவிருட்சம் இலுப்பை.
இப்போது தர்மகர்த்தாக்கள் குழு ஒன்று கோயில் விவகாரங்களைக் கண்காணிக்கின்றது. 1982 இல் கும்பாபி ஷேகம் செய்விக்கப்பட்டது. இப்படியான கிரியைகளைச் செய்விப்பதனல் ஊர் மக்களுக்குத் தனதானிய, சிம்பத்து, சுபீட்சம், தன்னிறைவு, மங்களம் உண்டாகும் என நம்பப் படுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் கொடியேற்றவிழா, விநாயகர் சதுர்த்தி, விநாயகர் சஷ்டி, வெள்ளிக்கிழமை
t8

களில் கூட்டுப்பிரார்த்தனிை, நவராத்திரிவிழா என்பன கொண்டாடப்படுகிறது. இவ்விநாயகர் மீது பிரம்மபூரீ ந. வீரமணி ஐயர் அவர்கள் சில கீர்த்தனைகள் பாடியுள் 6rtrff,
* கற்பக விநாயகன் கழலினை நாடு
பொற்புறு தமிழிசை போற்றியே பாடு தற்பரன் சிவன் சுதன் நந்திமுகன் பரன் அற்புதமாய் அருளை அள்ளிநிதம் தருபவன் *
ந . வீரமணிஜயர்,
இருபாலை நெடுங்கேணியூரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வர சுவாமி கோயில்.
இக்கோயில் 19 ஆம் நூற்றண்டில் முற்கூற்றில் தொடங்கியது. இது தோன்றிய காலத்தில் ஒரு கொட் டிலில் ஒரு சூலம் மட்டும் இருந்தது. மிகவும் பக்தியும் ஆர்வமும் உடைய இவ்வூரவர்கள் இதனைக் கற்கோயிலா கக்கட்டி எழும்பினர்கள். இக்காலத்தில் சேனதிராசமுத லியார் வழித்தோன்றல் ஆகிய மாணிக்கம் அம்மையார் காசியாத்திரை சென்றிருந்தார்கள். இவர்கள் திரும்பி வரும் போது தனது வீட்டிற்கு அண்மையில் உள்ள பிள் ளையார் கோயிலில் பிரதிட்டை செய்யவென, பிள்ளையார் சிவலிங்கம், அம்பாள், நந்தி ஆகிய நான்கு சிலைகளையும் கொண்டு வந்திருந்தார்கள். அந்தப் பிள்ளையார் கோயிலின் வடக்கு வீதியில் மதிலோ டுசேர வன்னிமர நிழலில் இதற் கெனக் கட்டிடமும் எழுப்பப்பட்டது.
ஆயினும், திருவருள் வேருக நியமித்தது. ஒரு சந்நியாசி அம்மையாருக்குக் கனவில்தோன்றி, இச்சிலைகளை வைரவர் கோயில் கொட்டிலில் சேர்க்கும்படி கட்டளையிட்டார். பிர திட்டை செய்யப்பட்டு இருந்த வைரவ சுவாமிக்கு அவ்வள விலேயே பிறிதோர் ஆலயம் கட்டும்வரை இந்த உருநாடு கள் கேணிக்குளத்தடியில் தற்காலிகமாக வைத்து வணங்கப் பட்டன. 1886 இல் கொண்டுவந்த இலிங்கம் 1943 ம் ஆண்டு மட்டிலே இப்பதியில் பிரதிட்டை செய்யப்பட்ட தாகத் தெரிகிறது முன்னிருந்த சூலமும் இதன் அருகில் வைக்கப்பட்டிருந்தது.
இப்போது முகாமையாளருள் ஒருவராக இருக்கும் அன் பர் திரு.வேலுப்பிள்ளை அவர்கள் இந்தச்சூலத்தை அதற்
19

Page 20
கெனப் பின்னர் தkடிய வைரவர் கோயிலில் வைத்திருந் தார். ஒருநாள் ஒரு சந்நியாசி முன் ஒரு போதும் பழக்க மில்லாதவர்ல் வந்து ‘இது என்ன கோயில்? என்று கேட்ட போது, இவர் "சிவன் கே யில்' என்றர். சந்நியாசி சிறிது ஆலோசனையில் மூழ்கியிருந்துவிட்டு அப்படித் தோன்றவில் லையே என்ருர். அப்போது இவர்.தோயிலின் வரலாற்றைச் சொன்னர். பின்பு சூலம் இருக்குமிடத்தையும் அவருக்குச் சொல்ல அதனையும் இலிங்கத்தின் ஆக்கத்தில்லுைக்கும்படி செல்லிச்சந்தியாசி போய்ஜிட்டிரர்,
இதுgதிகழ்ந்ததும், யாவும் இப்போது சுமூகமாக நடந்து கொண்டு இருக்கின்றன. வாலாம்பிகா சமேத வைத்தீஸ் வஜித்குமிகாமண்டிபம்,நிருத்தமண்பும், ஸ்தம்புமண்டபும் கேர்புரமண்டபம், பிரகாரக் கொட்ட்கைகள், பிரிவீர்ர மூர்த்தி ஆலய்ம், மீட்ப்பள்ளி, கருவூல அறை, விசந்தமண் ப்ேபம் ஆகிய திருப்பணி வேலைகள் நடிக்கின்றன:கோயிலில் -நித்திய பூசைகள், விழாக்கால, விசேடி நிகழ்ச்சிகள் நடை * பெறுகின்றனில்
செங்கஞ்ஜிம் 'பீர்மீனும் தம்முளிேக எங்குந் தேடித்திரிந்தவூர் காண்கிலார்' இங்குற்றேன் என்று லிங்கத்தே தோன்றினன் பொங்கு: செஞ்சடிைப் புண்ணிய மூர்த்தியே?
இருபாலைக் கந்தசாமி கோயில்ல் வ்கன்கேவி - SAAS A Ae aSS S SSSYSSSiq yttA i LSLDi gLii T TTki iq AAA (முனியப்பர் கோயில்) ஐடி: Q( (p uil JLPT 8. খঙ্গ ভঙ্গ খ it. Rus Ras معادسة يجة
இந்தக்கோயிலின் வரலாறு இருப்ாலைச் சேக்டிங்ார் இன்ன்னும் சரித்திரப் பெருமை வாய்ந்த வைத்தியப் பெருந் *தகையிலிருந்து தொடங்குகின்றது. இவர் தன் வீட்டில் \வைத்து உபாசனை செய்த வேல் இங்கு பிரதிட்டைசெய்யப் ஸ்ட்டிருக்கின்றது. 1798 இல் இ கண்ணுச்சாமியானவன், கேண்டிநாட்டுத் தலைமைப்பீடத்திற்கு, அங்குள்ள முதல்வர் களால் விக்கிரமராசசிங்கன் என்று பெயரிட்டு அரசனுக் கேப்பிட்டதும், இராசாதிராசசிங்கனின் நல்லமைச்சனுன -முத்துச்சாமி, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அனுப்புப்பட் ட்சீன். இவன் 'இங்கு சீவிக்கும் காலத்திலே விசம், தீண் டிற்று. இதனை மாற்ற யாழ்ப்பாண வைத்தியர் எவராலும் *முடிவில்லை. ஈற்றில் இருபாலேச்செட்டியாருக்கு ஆட்போக்
20

படி அனுப்பினன் சிற்றரசன். செட்டியார்போகவில்லை. ஆஞல், ஒருசிறிய ஏட்டை மந்திரித்து " இருபாலைச் செட் டியார் ' என்று எழுதி அதனை விசக்கடிவுரயில் வைத்து அமர்த்தும்படி கொடுத்து அனுப்பிவிட்டார். அப்படியே செய்யப்பட்டதும் விசம் இறங்கிவிட்டது; இதற்குக் கிரய மாகத் தான் வழமைபோலப் பெறும் நாழி அரிசியும், நான்கு முழமுமே பெற்ருர்! இதற்கு மேல் யாதும் பெற்ருல் இவ ருடைய"மந்திர சக்தியும், வைத்தியச்சித்தியும்.தற்செய்யாது என்பது இவர் கொள்கையாகும்** ܀
இப்படிப்பட்ட செட்டியாரின் உபாசனத் தெய்வமே இங்கு எழுந்தருளியிருக்கின்றது. இதனைப் பரிபாலித்து ஆத் தவர். இத்தப் பரம்பரையில் வந்த ஒரு நுண்கலை நிபுணர் கந்தையா.வேலாயுதம் என்பவர். இவர் படிப்படியாகக் கோயிலைப் புதுப்பித்து வந்தார். இவருடைய கைவண்ணம் இக்கோயில் மண்டபத்தூண்களில் அமைந்துள்ள போதிகை களைப் பார்த்தால் தெரியும். இந்தியக் கோயில்களின் சிற்ப வேலைப்பாடுகள் இங்கே அமைந்து உள்ளதைக் காணலாம். இதன் தலவிருட்சம் கூழா.
இம்மரத்தைப் பற்றியும் ஓர் ஐதிக்க் கதை உண்டு. இது சிறு கன்முக இருக்கும்போது புல்பூண்டுகளுடன் அழித்தும் இது மேன்மேலும் வளரத்தொடங்கிற்று. இக் காலத்திலே ஞானியாரின் தகப்பனரும் இருபாலைச் செட் டியாரின் பேரனுமான வேலுப்பிள்ளைக்கு, ஒரு வெண்ணிற ஆடிை உடுத்த கிழவி கனவில் தே”ன்றி ' உனது கோயில் வளவில் உண்டாகும் கூழா மரத்தடியில் எனக்கு ஒரு வீடமைத்துத்தா " என்று கேட்டுக் கொண்டார். அப்ப டியே தலைமைக்கோயிலின் வீதியில் வடமேற்கு மூலயில் அம்மன் கோயிலும் ஒன்று அமைக்கப்பட்டது. at னவே, இப் போது முருகன், முனியப்பு:ர். வைரவர், அம்பாள் ஆகிய தெய்வங்கள் இங்கு உள, .
இங்கு நித்தியபூசையும்'வெள்ளிக்கிழமைக் கூட்டுபி ரார்த்தனையும் பங்குனிப் பொங்கலும், திருவெம்பாவ்ைப் பூசையும், நவராத்திரிப்பூசையும், தைப்பூசம், திருக்கார்த் திகை விழாக்களும் நடைபெறுகின்றன். இது இருபாலைச் செட்டியார் என்னும் பெயர்பெற்ற மாந்திரிகளும், வைத் தியருமான செட்டியாரின் பரம்பரையினர் சொத்தாகவே
இன்றும் 5இருந்துவருகின் றது. tତ ୱି. - a tinଞ ଓଁ, କିନ୍ତୁ &&#t୪ଢ\ତ

Page 21
இருபாலைக் கோட்டபுரம் பெரிய தம்பிரான் கோயில்.
இக்கோவில் இருபாலை கிழக்குப் பகுதியில் உள்ள வயல்வெளிகளில் வடகிழக்குக் கரையோரத்தில் ' கோட்ட புரம் குளத்தின் " " கிழக்குக்கரையில் அமைந்துள்ளது. சல வைத் தொழிலாளர் பரம்பரையினர் பூசாரியாக இருந்து வரும் ஆலயம். கிழக்கே பார்த்த சன்னிதானம், வேப்ப மரம் சன்னிதானத்துக்குப் பின்னும் ஆலமரம் முன்னு மாக உள்ளன. ஆதியில் இப்பொழுது வேப்பமரம் இருக்கும் இடத்திற்குக் கிழக்குப் பக்கமாக எல்லேயில் நிற்கும் பூவரச மரத்தின் கீழ் பெரியதம்பிரான் இடம் பெற்றிருந்தார் என்றும் சொல்லப்படுகின்றது. மூலஸ்தானத்தில் வேலும் முன்மண்டபத்தில் சூலமும் இடம் பெற்றுள்ளது.
இக்கோவிலின் பூர்வ சரித்திரத்தையும் அங்கு நடை பெற வேண்டிய பூசை ஒழுங்கு விதிகளையும் கொண்ட * பத்ததி " என்று அழைக்கப்படும் ஒரு சாசனம் உள்ளது. இச்சாசனம் முன்பு ஏட்டுச் சுவடியில் இருந்ததென்றும் இப் பொழுது கடதாசியில் எழுதப்பெற்று ஒரு மரப்பேழையில் வைத்து, கோயில் திருப்பொருட்களுடன் பூசாரியின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது என்றும் அறியப்படுகிறது.
இக்கோவிலில் பங்குனி மாதத்தில் வரும் அமாவா சைக் கு ஆரும் நாள் நிகழும் பொங்கல் அன்று பூசாரியார் வீட்டிலிருந்து இச்சாசனம் எடுத்துவரப்பெற்று, பெரியதம் பிரான் பாதத்தில் வைத்துப் பூசை நடைபெறும். இக் கோவிலின் வரலாற்றுச்சிறப்பு குறித்த * பத்ததி ' யில் சேர, சோழ, காலத்தில் தொடங்கியதாக எழுதப்பட் டுள்ளது. பூசாரியார் ஒரு துணியால் வாய்கட்டி மந்திரம் உச்சரிக்காது பூசைசெய்வார். இது தொண்டமானுறு * சந்நிதி " கோவிலில் நடைபெறும் பூசை ஆராதனை போன்று நடைபெறும். இக்கோவில் ஒரு மடாலயம் ஆக மூலஸ்தானமும் ஒரு மண்டபமும் கெ1 5ண்டிருக்கின்றது.
இப்பொழுது இதன் பூசாரியாக இருப்பவர் கந்தையா சின்னராசா என்பவர். இருநூறு வருடங்களுக்கு மேல் இவர்களின் சந்ததியினர் குறித்த கோயிலின் பூசாரியாகக் கடமை புரிந்திருக்கிருர்கள்.
குறிப்பிட்ட இந்தச் சமூகத்திற்கும் ' பெரியதம்பிரான்? வணக்கத்திற்கும் உள்ள தொடர்பைக் கூறும்போது கீழே
22

விபரிக்கப்படும் கதையைக்குறித்த கோவில் பூசாரி எடுத் துக்கூறினர். சிவபெருமானிடம் சனிபகவான் ஒருமுறை ' வரம் ' பெறச் சென்றிருந்தார். அவர் வரம் கேட்கும் பொழுது தன்னே எவர் தொட்டாலும் எரிந்துமடிய வரம் தருமாறு டோரினர். அதற்குச் சிவபெருமான் விருப்ப3 படாது இவருக்குக் குறித்த வரம் கொடுப்பதைத் தட்டிக்கி ழித்து வந்தார். ஒருமுறை சிவபெருமானைச் சனிபகவான் தொடர்ந்து சென்று தனது கோரிக்கையை நிறைவேற் றுமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். சிவபெருமான் சனிபகவானையும் அழைத்துக்கொண்டு ஒரு குளக்கரைப் பக்கம் சென்றார். அவ்விடத்தில் கிருஷ்ணபகவான் ஒரு சலவைத் தொழிலாளியாகத் தென்பட்டு சிவபெருமானைப் பெரிய சட்டி ஒன்றினல்மூடி, அவரைப் பின்தொடர்ந்து வந்த சனிபகவாஃன ஏமாற்றம் அடையச்செய்தார், இச் சம்பவத்தின் பின் சலவைத் தொழிலாளர் சிவபெருமானைப் பெரியதம்பிரான் அவதாரத்தில் வணங்கிவரும் முறையேற் பட்டதாகக் கூறிக்5ொண்டார். திங்கள், வெள்ளி இருநாட் களில் மட்டும் அதுவும் மாலை நேரத்தில் மாத்திரம் பூசை நடைபெறும்
இங்கு கொடியேற்று வைபவம் என்றும் நடந்ததில்லை. கோயில் அமைந்திருக்கும் நிலம் உத்தேசம் பத்துப்பரப்பும் பூசாரியின் முற்சந்ததியாருக்குச் சொந்தமாக இருந்தது. வெள்ளிக்கிழமை மாலைக்காலத்தில் கூட்டுப்பி rார்த்தனை' வழிபாடு நடைபெறுகிறது.
இக்கோவில் பூசாரிக்குக் கலை வருவது வழக்கம். அப் பொழுது தீர்க்க முடியா த பிணிகளையும் தீர்த்துள்ளார். இருபாலைக் கிராமத்து மக்கள் மட்டும் இக்கோவிலை ஆத ரிக்கவில்லை. தூர இடங்களில் இருந்தும் வெள்ளிக்கிழமை களில் பக்தர்கள் வருகிருர்கள். பங்குனிமாதப் பொங்கல் நாளன்று அநேகம் மக்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒவ் வொரு பானை வைத்துப் பொங்குவார்கள். " மடைப் பண்டம் " எடுக்கும் வைபவம் வெகுவிமரிசையாகவும் பய பக்தியுட்னும் அன்று நிகழ்த்தப்படும்.
இருபாலை கிழக்கு நாச்சிமார் கோவில்.
இது மண்டாக்குள வயற்கரையில் கிழக்குப் பக்கத்தில் உப்பாற்றை நோக்கி இருக்கின்றது. கதிரை, வன்னிச்சி ய?ரை இங்கு அடக்கஞ் செய்து சமாதி எழுப்பியதாக ஐதிகம் உண்டு. அக்காலந்தொட்டு, மண்டாக்குளமுதலி
23

Page 22
பரம்பரையினர்ே இக்கோயிலுக்கு விளக்கேற்றிப் பெர்ங்கல் பூசைகள் செய்து வந்தனர். இப்போது இது வேறு அடி பார்களுக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. ஒரு கற்கட்டிடமும், பக்கத்தில் வைரவகோயிலும் கட்டப்பட்டுள்ளது. கோயில் நல்ல அமைதியான சூழலில் இயற்கை வனப்புடன் திகழ் கின்றது. இக்கோயிலினுள்ளே ஒரு வேலாயுதம் தாபிக் கப்பட்டுள்ளது. வருடம் ஒரு முறை பங்குனி மாதத்தில் அறுவடை முடிந்ததும் ஒரு விஷேச உற்சவமும் பொங்கல் பூசைகளும் நடைபெறும் .
குறைத்தபட்சம் 250 ஆண்டுகளுக்கு மேற்பட்டதும், ஒரு கர்ல் முறிந்து பின் வரிந்து கட்டப்பட்டதுமான ஒரு மரக்கதிரை இக்கோயில் வாசல் அருகே வைக்கப்ப்ட்டிருக் கின்றது. இதுவே கதிரை வன்னிச்சியார் கிழவியான காலத்திலே பயன்படுத்திய கதிரையாகும். எல்லாப்பூசை களும் விக்கிரகங்களுக்கு முடிந்ததும் இக்க திரைக்கும் ஒரு பூவைத்துத் தூபம் காட்டப்படுகிறது. பங் தனித் திங்கள், வருட்ப்பிறப்பு நாட்களில் பொங்கு பவர்கள் இக்க திரைக்கும் சிறுபடையல் படைப்பர். . . . . . . '
இருபாலை வீரகத்திப் பிள்ளையார் கோயில். 1983இல் புதிதாகக் கல் சீமெந்து" முதலியவற்றல் அலங்காரமாகக் கட்டப்பட்ட இக்கோயில் 'பழம் பிள்ளை யார் கோயிலுக்குக் கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது: பழம் பிள்ளையார் கோயில் 1800 வரையில் தோன்றியி ருக்கலாம் எனின் இந்தக்கோயிலும் 1825 வரையிலாவது முதன் முதல் கட்டியெழுப்பப் பட்டிருக்கலாம். இதற்குச் சேனதிராசமுதலியார் பாடிய ஊஞ்சற்பாட்டுக்கள் மூன்று. உண்டு. V
. இக்கோயில்கள் இரண்டிலும் நித்திய பூசைகள் நடக். கின்றன. புதிய வீரகத்திப் பிள்ளையார் கோயிலுக்குச், சொத்துக்கள் பல தர்மசாதனமாக எழுதப்பட்டுள்ளன. இவற்றைப் பரிபாலித்துப் பூசைகள் செய்விப்பவர்கள் (ԼՔ 5 . லியாரின் பரம்பரையினரே ஆவர். பழைய பிள்ளையார், கோயிலானது முன் கூறப்பட்ட சிவன்கோவிற் பரிபால கரின் மரபினரல் கண்காணித்தப்படுகிறது.
முத்துமாரி அம்மன் கோவில் சீராரும் பவளம் கால் திகழும் முத்தே
சேர்வடம் செம்பொன் பலகை சொரியும் ஊஞ்சல்
24

ஏராரும் ஓங்காரத் தவிசில் ஏறி ܖ
இந்திரை சொல் வாணி வடம் ஈர்த்தே ஆட்ட நீராரும் உலகின்பம் நிறைந்தீடேற
நீள்விழிகள் நிறை கருணை மாரி பெய்யப் பாரஈரும் கோவையூர்ப் பதியா மேவும் பரை முத்துமாரியினிதா டீர் ஊஞ்சல்,
பண்டிதர். ச. சுப்பிரமணியம்.
கோப்பாய் மத்தியில் உச்சுவில் வயலின் வடகரையில் * கழுவடி " என்றெரு குக்கிராமம். போர்த்துக்கேயர் காலத்தில் இவ்விடம் இடு காடாயிருந்தது. இப்போது இங் குள்ள கோயிலைப் பரிபாலிப்பவர்களுடைய மூதாதையருள் ஒரு வன்னிச்சி இருந்தார். இவருக்குப் பெயர் கோணர் சிவகாமன். இவர் ஒரு சிற்றரசரின் சிறப்பு வரிசைகளும் குடை, கொடி, ஆலவட்டம், பல்லக்கு ஆகி 1 னவும் உடை யவர். போர்த்துக்கேயருடைய அநியாயங்களை ச சகிக்க முடியாது அவர்களை எதிர்த்துப் போராடிக் கொலையுண்டு வீரசுவர்க்கம் எய்தியவர். இவர் இங்கு அடக்கம் செய் யப் பட்டார் என்பது ஐதிகம். இவ்விடத்தில் பழைய தமிழ் வழக்கப்படி வீரக்கில் ஒன்று நாட்டப்பட்டது. இவ ரது உற்ருர், உறவினர் இவ்விடத்தில் விளக்கு வைப்பது வழக்கமாகி வந்தது. இந்த நூற்றண்டின் தொடக்கப் பகுதியில் சிவகாமன் மரபினரான முதலித்தம்பி என்பவர் ஒரு கொட்டில் அமைத்து, விளக்கும் ஏற்றி விட்டார். பக்கத்தில் ஆலங் கன்று ஒன்று வளர்ந்து வந்தது. அது இப்போது தலவிருட்சமாகிப் பரந்தெழுந்து நிற்கிறது:
நாச்சிமார் கோயில் என்னும் பெயருடன் இக்கொகு டிக் கோயில் ஈச்சம்பற்றை நடுவே உருவெடுத்தது. இப் போது முத்துமாரியம்மன் சிலை கருவறையில் மக்களால் பிரதிட்டையாகி அம்பாள். கோயிலாயிற்று. ஆதி மூலம், அர்த்த மண்டபம், மடப்பள்ளி, மதில் கட்டி, முருகன், கணேசன், வைரவர் முதலியோருக்குச் சிறு மடங்களும் அமைத்துள்ளனர். கோயிலின் மேற்கு வீதியில் வன்னிமை பாரின் புதையல் இருப்பதாக ஐதிகம் உண்டு.
இக் கோயிலில் வெள்ளிக் கிழமை தோறும் பஜனைகளும் நவராத்திரி திருவெம்பாவைக் காலங்களில் கொலு, திரு வூஞ்சல் பாடலும், தைப்பூசம், கேதாரகெளரி, ஆடிப்பூரம் போன்ற தினங்களில் அபிடேகமும் பெளர்ணமியில் விழா வும், சித்திரைக்கஞ்சியும் சுவாமி ஊர்வலமும், காத்தவ ராயன் கதைப்படிப்பும் அவ்வத் தினங்களில் சிறப்பாக
25

Page 23
நடைபெறுகின்றன. அம்பாளுக்கு அர்ச்சகராகப் பண்டிதர் பஞ்சாட்சரசர்ப8ஈ அமைந்தது கிராமத்தவர் செய்த புண் ணியமாகும். இவர் கிரியைகள் முறைப்படி நடாத்தக் கைதேர்ந்தவர். அம்பாளுக்கு இரண்டு திருவூஞ்சற்பதிகங் கள் உள்ளன. ஒன்று பண்டிதர் ச. சுப்பிரமணியமும் மற் றது கோப்பாய் சிவமும் பாடியது. முதலில் தரப்பட்டது பண்டிதர் அவர்களால் பாடப்பட்ட ஒரு பாடல். கீழே தரப்படுவது கோப்பாய் சிவம் அவர்களால் பாடப்பட்ட ஒரு பாடல். மேற்படி பாடல்களைத் தகவல் தந்த திரு சர்மா அவர்களே தந்தார்.
குடதிசையில் கண்ணகியார் கோயில் கொண்டே
குளிர்மாரி உனது குண நலம் பாராட்ட உடனருகில் நிருதிதிசை உன்றன் மைந்தன்
உவாமுகத்து விநாயகன் உன் காவல் ஒம்ப வடதிசை சித்திரவேல் வரதன் வாழ்த்த வரு தெற்கில் வீரபத்திரனும் வைக இடையடுத்த கோவை நகர்க்கிறையாம் தேவி
இனியவையே எமக்கூட்ட ஆடீரூஞ்சல்.
கோப்பாய் சிவம்.
இருபாலை வேளாதோப்பு மதுரை முத்துமாரி அம்மன் கோயில்
இது அரசிறை முறையில் இருபாலையைச் சேர்ந்த கட்டப்பிராயில் அமைந்துள்ளது. ஆயினும் நாம் எடுத்துக் கொண்ட எல்லைக்கு அப்பாற்பட்டுள்ளது. பஞ்சாங்கங் களில் இருபாலைக் கோயிலாகவே கணிக்கப்பட்டு வரினும் இது கோவில் தெருக் குறிச்சிக்கும் அப்பால் இருக்கின்றது. எனினும் அப்பகுதியில் மிகவும் பெரிய, புழக்கமான, கட்ட மைப்பான கோயிலாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
மாசி அமாவாசையில் தேரும், அடுத்தநாள் தீர்த்தோற் சவமும் வருடந்தோறும் நிகழும். இக்கிராமத்திலுள்ள பாலசுப்பிரமணியர் கோயிலில் வைகாசிப் பூரணையில் தீர்த் தோற்சவமும், அதற்கு முதல்நாள் தேரும் வருடந்தோறும் நடைபெறும்.
இருபாலைக் கதிர்காம தேவாலயம்
இது இருபாலையில் சிவன்கோயிலுக்குத் தெற்கேயும் பழம் பிள்ளையார் கோயிலுக்கு வடக்கேயும் ஆக இவற்றின்
26

தடுவே அமைந்துள்ளது. இவ்விரண்டிற்கும் இது காலத் தாற் பிந்தியது, எனினும் அழகுற அமைத்துள்ளது. இதனைப் பரிபாலித்து வருபவர்கள் குழந்தைவேல் வைத்தியரின் பரம் பரையினரே. இங்கு திருவிழாக்கள் நடக்காவிட்டாலும் நித்திய பூசைகள் நடைபெற்று வருகின்றன.
கோப்பாய் பலானைக் கண்ணகையம்மன் கோயில்
பூமேவு திசைமுகன் மாலரி விண்ணுேர்கள்
போற்ற எழில் வழுதியெனப் புவியை ஆளும் மாமேவு மதுரை மீனட்சி கண்ணில்
வளர்சோதி மாங்கனியாய் வடிவமாகித் தேமேவு கோவை நகர்க் கோவில் கொண்ட தேவி மகிழ் ஊஞ்சலிசைச் செய்யுள்பாட நாமாது நலந் தர நல்லருள் கூரங்கை
நாதனடியிணை மலர்கள் நயத்தல் செய்வாம்.
சேனதிராயமுதலியார் "அது கேட்டுக் கடல் சூழ் இலங்கைக் கயவாகு என் பான், நாட்பவிபீடிகை கோட்டமுந்துறுத்தாங்கு, அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென, ஆடித் திங்கள் அகவையினங் கோர் பாடிவிழாக்கோள் பன்முறை எடுப்ப, மழை வீற்றி ருந்து வளம் பல பெருகி, பிழையா விளையுள் நாடாயிற்று" என்னும் சிலப்பதிகார உரைபெறு கட்டுரை கண்ணகி வழி பாடு இலங்கைக்கு வந்தவாற்றினை விளக்குகிறது. கால மழை பெய்யாது நிலம் வறட்சியுற்று நோயும் நொடியும் உற்றகாலை, "கொங்கச் செல்வி, குடமலையாட்டி, தென்ற மிழ்ப்பாவாய் செய்தவக் கொழுந்தே ஒரு மாமண்ணியாய் உலகிற்கோங்கிய திருமாமணியே" என்று மட்டக்களப்புப் பகுதியிலுள்ள பல கண்ணகையம்மன் கோயில்களில் இன்றும் குரவையாட்டயருவர் சுவாமி விபுலானந்தருடைய குலதெய்வம் காரைதீவுக் கண்ணகையம்மன் என்பது குறிப் பிடத்தக்கது.
கண்ணகையம்மன் கோயில்கள் பிள்ளையார், முருகன், சிவன் ஆகிய கோயில்களுக்கு அடுத்து எண்ணளவில் அமையும். இவற்றுள் மிகுந்த அருள் பாலிப்பனவாக உள்ளவை சுட்டிபுரம் கண்ணகை அம்மன், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன், நாவற்குழி,வேலம்பிராய் அம்மன், நவாலி களையோடை அம்மன், புலோலி மாதனை அம்மன் கோயில்கள் ஆகும். இவற்ருேடு இனேயாக வைத்து
27

Page 24
எண்ணக் கூடியது நமது பலானைக் கண்ணகையம்மன்கோயில் இதன் தொன்மையையும் அருட்பெருமையையும் மட்டிட இதன் தலவிருட்சமாகிய கூழாமரத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தால் போதும். இதுவே கோயிலின் தோற்றத்தைக் குறிப்பாகக் காட்டி நிற்கும். ஆயிரத்து ஐந்நூறு ஆண்டு கட்கு மேல் இத்தலம் கொகுடிக் கோயிலாகவும், கொடி படர் கூரையாகவும் இருந்துள்ளது. இப்போது இத்தலத்தின் கோபுரக் கண்டாமணி நடுநாவசையக் காற்காததுரம் கணிரெனக் கேட்கும். w
இருபஈலைச் சேனதிராய முதலியார் வழிவந்த இரு குடும்பங்கள் இடம் வழங்க, தெய்வேந்திர முதலியார் தமிழ் நாட்டிலிருந்து உருநாட்டுத் தருவிக்கக் கோயில் உருவெடுத்தது. இப்போது தருமகர்த்தாக்கள் உயர் கோபுரமும், தூபியும் அழகுற அமைத்துப் பரிபாலித்து வருகின்றனர். கொங்குமலை நாட்டில் கொன்றை மர நிழலில் தெய்வமான மங்களாதேவிக்கு ஆதிமூலத்தில் இடம் அளித்து அருள்பாலிக்கச் செய்துள்ளனர். கோயி லின் அணித்தே உள்ள குளக்கரையில் ஆலமரங்களும் மருதமரங்களும் சூழ்ந்து நிழல் செய்கின்றன. இச்சோலை பற்றிய கதையொன்றுண்டு.
கி.மு. 205 காலங்களில் அநுராதபுரத்தை வங்கநாகன் ஆண்ட காலம் தென்னிந்தியப் படையெடுப்பு நிகழ்ந்தது. அப்போது பன்னீராயிரம் சிங்களவர் சிறைப்பிடிக்கப்பட்டு சோழநாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதன் பின் அரசனன 1 ம் கஜபாகு படையுடன் சென்று சிறைப் பட்டோரை மீட்டு பன்னீராயிரம் சோழரையும் சிறைப் படுத்தி வந்தான் அக்காலம், கண்ணகிதேவி விண்ணகம் அடைந்த செய்தி சேரவேந்தன் செங்குட்டுவனுக்கும், சேர அரசிக்கும் மலைநாட்டு மக்களால் அறிவிக்கப் பட் டது. சேரன்மாதேவி பத்தினித் தெய்வத்திற்குக் கோயில் கட்டிவழிபட விரும்பினர். செங்குட்டுவன் இதற்கிணங்கி இமயத்திலிருந்து கல்கொணர்ந்து கண்ணகிப் படிவம் செய்து முப்பத்திரண்டு திங்களின் பின் கண்ணகிக்கு விழா நடத்தினன். செங்குட்டுவனல் எழுப்பப்பட்ட கோயில் மங்களாதேவி பள்ளி கொண்டிருக்கும் கோயிலாக கேரள. தமிழ்நாடு எல்லையில் உள்ளது.
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில்கட்டிக் கும்பாபிஷேகம் செய்வித்த போது கஜபாகுவை அவ்வை சிவத்திற்கு அழைத்ததாகவும் கஜபாகு சென்று கண்ணகி
28

அருள் பெற்றதாகவும் சிலப்பதிகாரம் வரந்தரு காதையில் கூறப்படுகிறது. கஜபாகு இலங்கை திரும்பும் போது கண்ணகி விக்கிரகங்கள் பல எடுத்து வந்ததாகவும் தனது நாட்டில் வழிபாட்டைப் பரப்புவதே நோக்கமாகவும் கொண்டான். கடல்வழிவந்து மாதகலின் அயலில் திருவடி நிலையிலிறங்கி, அநுராதபுரம் செல்லும் வழியில் படையுடன் பல இடங் களில் தரித்துச் செல்ல நேர்ந்தது. மரமடர் சோலையுள்ள இடங்சளில் படை தங்கியது. அவ்விடங்களில் எல்லாம் தான் கொண்டுவந்த விக்கிரகங்களில் ஒன்றைத் தாபித்து நிவந்தங்களுமிட்டுச் சென்றதாக வரலாறு கூறும். இவ்வாறு அடர்சோலையைக் கண்ட இடமாகக் கோப்பாய் அமைய, அங்கும் ஒருசிலை பிரதிட்டை ஆனதாகக் கூறப்படுகிறது. அங்ங்ணம் முதலமைந்த கோயில் பருளாய் என்னும் இடத்தில் உள்ளது. மருத நிலமாய் கோப்பா யில் அமைந்த கோயிலைச்சூழ மருது, கூழா, ஆல், வேம்பு, அரசமரச்சோலை உள்ளது. கூழாமரப் பொந்தில் வெள்ளைப் பாம்புகள் உள்ளன. அவை எவரையும் துன்புறுத்துவதில்லை. கண்ணகி பாடலொன்று வன்னிநாட்டு ஏட்டிலிருந்து பெறப்பட்டது பின்வரும்.
': உடுவிலில் வந்திருந்து
உத்தமியாள் வழிநடந்து அச்செழுவில் வந்திருந்து
ஆயிழையாள் வழிநடந்து இணுவிலில் வந்திருந்து
ஏந்திழையாள் வழிநடந்து ஏழா லைதனில் வந்து
ஈஸ்பரியாள் வழிநடந்து ஊரெழுவில் வந்திருந்து
உரும்பிராய் தனில் வந்து கற்புலமதனில் வந்து w
களையாறி வீற்றிருந்து கோப்பாயில் வந்திருந்து
கோவலனுர் தேவியவள் வாய்க்கால் தரவை வந்து
மாது நல்லாள் அவளிருந்து. . கோப்பாய்ப் பலான கண்ணகையம்மன் கோயில் 1986 ஆம் ஆண்டு தைமாதம் கும்பாபிஷேகம் செய்யப் பட்டது. மண்டலாபிஷேக முடிவு பங்குனியில் ஒர் மலர் வெளியிடப்பட்டது. பரிபாலன சபையின் முயற்சியால் மூலாலயத்தின் மேல் இருதள விமானம் கட்டப்பட்டு
29

Page 25
அதில் கண்ணகி வரலாற்றுச் சம்பவங்கள் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மணிக்கோபுரம், பிராகார மண்ட பம் என்பன கட்டப்பட்டுப் பிராகார மண்டபங்களில் சித்திரங்கள் தீட்டப்பட்டன.
ஊரில் வெப்புநோய் ஏற்படும், மழைவளம் குறையும் காலங்களில் அம்மனுக்கு குளிர்ச்சி செய்வார். இன்றும் கமக்காரர் தமது உழைப்பின் முதல் வருமானத்தை அம்ம னுக்குக் கொடுப்பது வழக்கம்.
கோப்பாய் பலானைக் கண் ணகையம்மன் உற்சவம் வருடாவருடம் நடக்கிறது. ஆடிப்பூர நாளன்று தீர்த்தோற் சவத்துடன் முடியும். பங்குனித்திங்கள் நாட்களில் இம்மர நிழலில் வள்ளுவ பக்தர்கூடி ஏட்டு வடிவில் இருந்த கோவலன் கதையைத் தெம்மாங்கு மெட்டில் பாடுவர். பாடியபடி கோயிலின் கோபுரவாசலை அணுகுவதும், திரும் பாமலே பின்வாங்குவதும் பலமுறை நடக்கும். அன்று பொங்கல், படையல் வகைகள் யாவும் இடம் பெறும், வைகாசி விசாகம் பொங்கல் நடக்கும். பிள்ளைகளும் தொண்டர்களும் உற்சாகமாகப் பாடி மகிழ்வர். இருபாலைச் சேனதிராசா முதலியார் அம்மன் மீது பாடிய ஊஞ்சற் பதிகம் ஒன்று உண்டு. அப்பாடல்களைப் பக்தர் சேர்ந்து மார்கழித் திருவெம்பாவைக் கடைசிநாள் பிள்ளைகட்குச் சொல்லித்தருவர். இதனை விட கரன வாய் காசிநாதையர் என்பவர் 1959 ஆம் ஆண்டளவில் பாடிய ஊஞ்சற்பதிகம் ஒன்றுண்டு. அதன் பின் வந்தோர் அம்மன் மீது கண்ணகை அம்பாள் துதிபாடியுள்ளனர்.
பலானைக் கண்ணகி திருவூஞ்சல்.
சுந்தரியே செளந்தரியே ஆடீரூஞ்சல் துய்ய பரிபூரணியே ஆடீ ரூஞ்சல் தந்தரியே புரந்தரியே ஆடீரூஞ்சல் சங்கரியே நிரந்தரியே யாடீரூஞ்சல் அந்தரியே ஆங்காரி யாடீரூஞ்சல் ஆரணியே நாரணியே யாடீரூஞ்சல் சிந்துர மார் கோவைநகர்ப்பலான வாழும் ፩ዬ ይ የi சிவகாம சுந்தரியே யாடீரூஞ்சல்
காசிநாதையர்.

w வேலாயுதம்
உடுப்பிட்டி குமாரசுவாமி முதலியார் (1791 - 1874)
சென்ற நூற்ருண்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பாவாணர் களுள் ஒருவர் ஆவார். இவரது பந்துக்கள் கோப்பாயில் இருந்தனர். இவர்களுள் இரகுநாதர் என்பவர் வீட்டில் ஓர் அறையில் வேலாயுதம் ஒன்றை வைத்து ஒட்டிசுட் டான் சுவாமியார் ஒருவர் உபாசனை செய்து வந்தார்: இரகுநாதரும் அவர் குடும்பத்தினரும் இச்சுவாமியாருக்குத்
தொண்டாற்றி வந்தனர். சிறிது காலத்தின் பின் இந்தச்
சாமியார் இந்தியா சென்று மீளவில்லை. வேலாயுதத்தை
முறைப்படி உபாசன செய்ய முடியாத இரகுநாதர் குடும்
பத்தினர், கண்ணகையம்மன் கோயில் வெளிவீதியில் ஒரு கொட்டகையமைத்துக் கல்லால் சுவரும், பீடமும் எழுப்பி
இதனை அங்கு எழுந்தருளச் செய்தனர். கோயிற் பூசகரான
சுப்பையா அவர்கள் இதற்கும் நித்திய, நைவேத்திய பூசை கள் செய்து வந்தார். 1870 ஆம் ஆண்டு அளவில் மேற் சொன்ன குமாரசாமி முதலியார் இந்த வேலாயுதத்திற்கு,
ஊஞ்சல்பதிகம் பாடினுர், அதில் ஒரு பாடல்:- ܫ ܵ
சீரியசெய்யா மெழி நாற்கம்பமாகத் திருத்திருபத் தெட்டு விட்டமாக நேரிய வெட்டெட்டு நூற்கயிறதாக நிகழ்த்து
செய்யா மொழி தலைநீள்ப் பலகையாக பாரிய கோப்பாய்ப் பலானையின் மெய்ஞ்ஞான
பருவதபத்தினி பயந்தபாலனன ஏரிய செவ்வேற் குமரரே ஆடிருஞ்சல் இலகுமயில்
வாகனரே ஆடீரூஞ்சல்.
வடகோவைச் செல்வ விநாயகர் கோவில்
இது 1839-ம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. கோபுரவாசல் வரை உள்ள மண்ட பத்தை 1938-ம் ஆண்டில் அருஞசலக்குருக்கள் மகன் சபாபதிக்குருக்கள் அமைத்து நித்திய, நைமித்தியங்களை முறைப்படி நடாத்தி வந்தார். பூசைச் செலவிற்காகவென ஓர் ஏக்கர் வயல் நிலமும், ஓர் ஏக்கர் தோட்டநிலமும் தர்மசாதனஞ் செய்திருந்தார்.
இவரு.ைய வழித்தோன்றல்களுள் ஒரு வ ரா இ ய சோ. சுப்பிரமணியக் குருக்களே இப்போது பரிபாலித்து வருகின்றர். திருவாவடுதுறை ஆதீன வித்துவான் சபாபதி
31
w

Page 26
நர்வலர் பாடிய "வடகோவைச் செல்வ விநாயகர் திரு விரட்டை மணிமாலை’ என்னும் நூல் இத்தெய்வத்தின் பேரில் பாடப்பட்டதாகும். இது கிடைத்தல் அரிது.
இக்கோயிலின் வாலஸ்தாபனம் 1988 ஆவணி மாதம் நடைபெற்றது. ஆயினும், கட்டிட வேலைகள் இன்றும் சம்பூரணமாக முடியவில்லை. வடகோவைக் கந்தசாமித் கோயில் பூசகர் சுப்பிரமணியக் குருக்கலே இக் கோயில் பூசை, ஆராதனைகள் நடாத்தி வருகின்றர். 1983-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இக்கோயில்களுக்கும் சபாபதி நாவலர். அவர்கள் சந்ததியருக்கும் மிகுந்த தொடர்பு இருந்தது. இதன் வீதியிலுள்ள கொட்டகை ஒன்றிலேயே நாவலர் இருந்து வகுப்புக்கள் நடாத்துவதும், கற்றேர், மற்ருேரைப் பேட்டி காணுவதும் உண்டு. இங்கேயே இவரது நூலான சிவகர்ணு மிர்தம் இயற்றப்பட்டது. இவரது நூல்களில் இது பிரசித்தி வாய்ந்தது. இக் கோயிலில் கொடியேற்றத் திருவிழா, தடப்பதில்லை. விநாயகர் சதுர்த்தி, விநாயகர் சஷ்டியில் விசேட வழிபாடுகள், பூசைகள் நடைபெறும்
வட கோவை சித்திர வேலாயுதர்
திருத்தகு கோவை தன்னில் திகழுமுந்து வத்தை மேவி அருத்தியின் உயிர் கட்கென்றும் அருள் முதல் ஐந்தவான கிருத்தியம் இயற்றிஞான கிரியை யாம் சத்தியோடும் கருத்தனய் அமரும் சித்திர வேலவன் கழல்கள் போற்றி.
1870 ஆம் ஆண்டு வரையில் முருகபத்தராகிய திரு அ. வேலுப்பிள்ளை என்னும் வடகோவை வேளான் குல திலகர் திருச்செந்துாரானிடஞ் சென்று இருந்தார். அங்கு இவருக்கு எழுந்த ஆர்வமே ஆறுமுகப்பெருமானுக்குத் தன்னுTரில் ஒர் ஆலயம் அமைக்க ஆர்வம் 2ண்ட்டிற்று. இதற்கு இவர் மனைவியார் மங்கலநாணும், குலகுரு வேதக் குட்டிக் குருக்களும் உடனுதவியாக இருக்கவே, ஊசி. டியில் எழவேண்டிய கோயில் உந்துவத்தையில் உருவெடுத் தது. ஆட்பாலவர்க்கு அருட்கடலாகிய ஆறுமுகவன் அரு ளும் வண்ணமும் ஆதிமாண்பும் ஆர்தான் அறிய வல்ல.
கந்தரோடையை விட்டுக் கோப்பாயிற் குடியேறிய குருக்களே, சேர்ந்து சேனேங்கு கோபுரத் திருப்பணி வேலை களே மிகுந்த ஆராமையுடன் கண்காணித்தார். 1897ல் தொடங்கிக் கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம், சபாமண்
32.

டபம், நிலந்தோங்கு நிர்த்தமண்டபம் முதலியவற்றுடன் இக்கோயில் இடம் கொண்டு இன்று இலங்குகின்றது. சில ஆண்டுகளில் மடைப்பள்ளி, களஞ்சியம், சுற்றுமதில் என் பன கட்டப்பட்டன. 1916 இல் ஆரம்பமான கோபுர வேலையும் சில வருடங்களில் நிறைவெய்தியது. வள்ளி தேவ சேணு சமேதராக முருகன் திருவுருவம் பிரதிட்டை பண் ணப்பட்டது. பின் யாகசாலை, வசந்த மண்டபம் கட்டப் பட்டு வைரவர், விநாயகர் சுப்பிரமணியர் திருவுருவங்கள் அடியவரின் உபயமாக அளிக்கப்பட்டன. 1960 ல் மூன்றுவது கும்பாபிஷேகம் நடந்தது.
வெகுகாலம் முன் தொடங்கி இடையில் கைவிட்ட சித்திரத்தேர்,வேலை, திருப்பணிச் சபையினர் முயற்சியால் 1967ல் முடிந்தது. இப்போது சண்முகப்பெருமான் தேரில் எழுந்தருளி உலாவருவார். இக்கோயில் கோப்பாய் - உரும் பிராய் வீதிச்சந்தியில் அமைந்துள்ளது. , -
இவ்வாலயத்தில் வருடப்பிறப்பு வைகாசி ஆண்டு த் திருவிழா, ஐப்பசி - விசு, ஐப்பசி வெள்ளி, கந்தசஷ்டி திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரையில் ஊஞ்சல்விழா சிவராத்திரி, பங்குனி உத்தரம், கந்தசஷ்டி இறுதிநாள் சூரன்போர் மணவாளக்கோலம் என்பன பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றன. வெள்ளிக் கிழமைகளில் ஆறுமுக அர்ச்சனை நடைபெறும், பண்ணிசைவகுப்பு, பஜனை வகுப்பு கள், நடைபெறுகின்றன கந்தரோடை வி. சிவசுப்பிரமணி யக்குருக்கள், முருகன்மீது ஊஞ்சற் பதிகமும், மங்கள வாழ்த்தும் பாடியுள்ளார்.
ஒரு கோயிலுக்கு அதன் குரு நன்கு அமைவது, அக் கிராமத்தவர் செய்த பூர்வ புண்ணியத்தாலேயாம். இக் கோயிலில் முருகபிரானுக்குச் சேவை புரியும் கிரியாதுரந் தரர். சித்தாந்தபானு, சோ சுப்பிரமணியக்குருக்கள் ஈழத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அறிவாளிகளுள் ஒரு வராவார். இவருடைய உருக்கமான தீபாராதனைகளைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற வடகோவை மக்கள் செய்த புண்ணியம் என்னே!
சித்திர்வேலாயுதருக்குச் சித்திரத்தேரும் ஒன்று விசித் திரமாக அமைந்துள்ளது. சூரன்போர், தேர்த்திருவிழா இரண்டும் இங்கு மிகு சிறப்பாக அமையும் விழாக்களாகும். குருக்களின் பேரனர், கந்தரோடைச் சிவசுப்பிரமணியர் பாடிய ஊஞ்சற்பாட்டில் ஒன்றை மாதிரிக்குத் தருகின்ருேம்.
33

Page 27
தற்பரனே! சதுர்வேதம் தலைக்ாணுத்
சடட்சரனே! அருள்வடிவே! சாமிநாதா! சிற்சபைசேர் தருநாதன் அருள்வேலோனே! செந்தமிழ்சேர் சங்ககவி வாணர்நாதா! சற்குருவே! பிரணவ உட்பொருளை வேதன்
தணைவினவிச் சிறையிடும் தலைமை மேவும் அற்புதனே! அகிலமுயர் வடகோவைக்கண்
அமர்தரு சித்திரவேல் ஆடீரூஞ்சல்.
சித்திரவேலாயுதர் ஊஞ்சல் அருமறையின் முடிவாகி அநாதியாகி
அப்பாலுக் கப்பாலாய் அறியொணுத பொருவரிய பொருளாகிப் பூதமாகிப்
பூதலத்தோர் வினைதீர்க்கும் புனிதமாகிப் பெருமையுறு பிரண வமாய் நிறைவீசன்
பிரசமலர் போல் நயனம் பிறங்கித் தோன்றித் தரைபுகழும் சரவண வாவியில் வளர்ந்த
சண்முக சித்திரவேல் ஆடீரூஞ்சல்.
மங்களம்
நீலமயில் வாகனற்கு மங்களம் - நல்ல நித்யவரோதயற்கு மங்களம் பாலவடிவானவற்கு மங்களம் - எம்மைப் பாலனஞ்செய் வேலவற்கு மங்களம் சில அனுமாமுகற்கு மங்களம் - என்னில் சித்திதரு சண்முகற்கு மங்களம் கோலசித்ர வேலவற்கு மங்களம் - இந்தக் கோவை நகர் மேவிணற்கு மங்களம் ,
வடகோவை - யூனிசக்கர ஆழ்வார் கோயில்
பொய்த்தூது தோற்ற பொறையுடை அத்தூதன் அப்பூச்சி காட்டுகிருன் அம்மனே அப்பூச்சி காட்டுகிருன்.
பெரியாழ்வார்.
தூத்துக்குடியில் விருத்தகலை என்னும் சிற்றுாரில் பர தவர் சிலர் தம் மதம் மாறியிருந்தனர். அப்படியான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் நாராயணகுரு. இவர் இளமை யில் பள்ளிப்படிப்பை விட்டுக் குடும்பத்தைத் தாபரிக்கக் கடற்ருெழிலில் ஈடுபட்டார். பின், சில கப்பல் ஒட்டிகளு
34

டன் கொழும்பு வந்து, துறைமுகத் தொழிலாளியாக வேலை செய்தார். காலப்போக்கில் தொழிலில் முன்னேற்ற மடைந்து பொருள் சம்பாதித்தார். உரியகாலத்தில் நாடு திரும்பித் தாயாரின் விருப்பப்படி மணமுடித்து ஒரு பிள் ளைக்குத் தந்தையானர். இவரது பற்றற்ற வாழ்க்கை துலக்கமாகும் காலம் வரவே, மனைவி, மகன், தாய் மூவ ரும் மறைந்தனர். பின்னர் இவர் கொழும்பு திரும்பி வந்து முகத்துவாரப்பகுதியில் வாழ்ந்தார். அக்காலம் நிதிமாலைக் காட்டு நாராயணன் கோயிலுக்குப்போக, அங்கு ஞானுேப தேசம் பெற்று நீண்டபோது நிட்டையில் இருந்தார். பின்பு அது நீங்கப்பெற்று, ஆடிப்பாடத் தொடங்கினர். இதன்பின் நாராயணகுரு என்னும் நாமம் சூட்டப்பட்டது வடகோவையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின்-(இராசலிங்கம்) அழைப்பை ஏற்றுக் கோப்பாய்க்கு வந்தார். இது 1942 காலப்பகுதியாய் இருக்கலாம். இங்கிருந்து சுவாமிகள் வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்குப் போய்ச் சுவாமி தரிசனம் செய்து வருவார்.
வல்லிபுர ஆழ்வார் கோவிலில் விருப்புடைய சாமியார் நாராயணகுரு அவர்கள், கோப்பாயில் முருகேசு துரை யப்பா, கதிரவேலு இளையதம்பி, வீரவாகு வேலுப்பிள்ளை ஆகியவர்களின் உதவியோடும், கோப்பாய் அப்பாத்துரை அவர்களின் ஊக்கமுயற்சிகளோடும் 12 பரப்பு விஸ்தீரண்ம் கொண்ட நிலத்தை நன்கொடையாகப் பெற்று. 1950 ஆம் ஆண்டளவில் மூலஸ்தானத்தில் சக்கரம் ஸ்தாபித்தார்கள். இக்கோவில் கேப்பாய் உரும்பிராய் வீதியும் இராச வீதி யும் சந்திக்கும் நாற்சந்திக்கு வடமேற்கு மூலையில் உள்ளது.
நாராயணகுரு அவர்களுக்கு அனேக சித்துக்கள் செய் யும் வல்லபம் இருந்தது. விசகடிபார்வை, நினைத்தகாரியம் சொல்லல், பிறவி ஊனம் அகற்றல் போன்ற அரும்பெரும் செயல்கள் ஆற்றினர்.
இவ்விதம் இவரின் சித்துக்கள் நிமித்தம் திருப்தி பெற்ற வர்கள் கோயில் திருப்பணி வேலைகளையும் கோயிலுக்குத் தேவையான திருப்பாத்திரங்கள், திருவுருவங்கள், திருவாசி கள், திருவிளக்குகள் யாவற்றையும் முன்வந்து உவந்த ளித்தனர்.
இட்டசித்தி பெற்றவர்களில் ஒருவரான ' அன்னங் கையைச் " சேர்ந்த அன்பர் கோவிலின் முன் கொட்ட கையைக் கட்டிமுடித்துள்ளார்.
35

Page 28
நாராயணகுருக்களுடன் குரும்பசிட்டியைச் சேர்ந்த ஒரு சாமியாரும் இன்னுமொரு சாமியம்மாவும் சேர்ந்து மூவருமாக இக்கோவில் ஒழுங்குகளைப் பார்த்து வந்தனர். 16 7 , 69ல் நாராயணகுரு சமாதி அடைந்தார். இவரின் சமாதி மாடம் கோவில் மேற்குப்புறப் பின்பக்கத்தில் அரச மரத்தின் கீழ் உள்ளது. w
இவர் இறந்தபின், இவருடன் கூடக் கருமங்களை ஆற்றி வந்த இருவரும் தொடர்ந்து கோவில் வேலைகளைப் பார்த்து வந்தார்கள். குரும்பசிட்டி சாமியார் 1985ம் ஆண்டளவில் இறந்தார். முழுப்பொறுப்பையும் சாமி அம்மையார் பார்த்து வருகிருர். இந்தச்சாமி அம்மையாருக்குச் செல் லத்துரை என்னும் ஒரு சீடர் உள்ளார். இவரே அம்மை யார் வயே "திபம் அடைந்துள்ளதால் கோவிலில் நிர்வாக
வேலைகளைப் பார்த்து வருகிருர்,
இங்கே கொடியேற்றத் திருவிழா பத்துநாட்களுக்கு நடைபெறும். பத்தாம் நாள் ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண ஜயந்தி அன்று முடிவடையும். கிருஷ்ண ஜயந்தி அன்று ' தயிர் முட்டி அடிக்கும் " வைபவம் வெகு விமரி சையாகக் கொண்டாடப்படுகிறது, சீனடி சிலம்படி 63r யாட்டுக்களும் இடம் பெறும் பக்தர் கூட்டம் அன்று அள விட முடியாமல் இருக்கும்.
இக்கோவிலின் தெற்கு, வடக்குப் பக்கங்களில் நல்ல வாழைத்தோட்டங்கள் உள்ளன. இந்த வாழைத் தோட் டக்காரர் ஒவ்வொருவரும், தங்கள் வாழைத் தோட் படத்தில் * ஒவ்வொரு அடிவாழை சக்கர ஆழ்வாருக்கு நேர்ந்து விடுவார்கள். அந்த வாழைகளின் வருமானம் கோவிலுக்குக் கொடுக்கப்படும்.
இவ்வாலயத்தில் விசேடம் என்னவென்முல் * தனித்த மிழில் " பூசை நடைபெறும். தTராயணகுரு அவர்களின் காலந்தொட்டு இன்றுவரை தனித்தமிழில் பூசைகள் நடை பெறுகின்றன. நல்ல மாதங்களில் நாலைந்து கலியாணங்கள் முன் மண்டபத்தில் நடைபெறும் அனேகமாக கிழமையில் இரண்டு நாள் அன்னதானம் நடைபெறும்.
Girr unruly வலயத்தில் உள்ள கோவில்களில் கூடுதலான பக்தர் கூட்டத்தைத் திரட்டும் சந்நிதானமாக இது விளங்குகின்றது.
36

 ைகோவை இலுப்பையடி வீரகத்தி mî b.Tu6ff. V
வேழ முகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுத்து வரும்.
போர்த்துக்கே பர் ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பா 5ை க்குடா நாட்டுக் சமக்காரர் தங்கள் கமவேலைகட்கு வன் மணிநாடு சென்று எருத்து மாடுகள் வாங்கி வருவது வழக்கம். இப்படி ஒருமுறை வராம் பற்றையார் ஒருவர் சென்று மீளு கையில் தம் வழியில் ஒரு மரத்தடியில் வீற்றிருந்த பிள்ளை யார் சிலையைக் கண்டார். அதன்மேல் ஆசை கொண்ட கமக்காரர் அதனைத்தூக்கிக் கொண்டு வந்தனர். தங்கள் கிராமத்துக்கு வந்ததும் ஒரு இலுப்பை மரத்தடியில் வைத்து விட்டுப் போய்ப் பின்பு ஒரு பொருத்தமான பிரதேசத்தைத் தெரிந்தெடுத்துக் கோயில் கட்டி வழிபட ஆலோசித்தனர். இடத்தை நியமித்துக்கொண்டு பிள்ளையாரைத் தூக்கிச் செல்ல வந்து, தூக்கியபோது அந்த உருவம் உயர மாட்டாது அசையவும் மறுத்து அப்படியே இருந்துவிட்டது பின்னர், யாவரும் கூடி ஆலோசித்துக்கோயிலே அந்த இடத்தில் தானே எழுப்புவதெனத் தீர்மானித்தனர்"
இப்போது இலுப்பை மரம் இல்லை, தென்னந்தோப்பின் நடுவே மதிலும், கோபுரமும், கேணியும், மண்டபமும், விசாலவீதியும் விதானமும் ஆகக் கோயிலில் கிழக்கே வயல் வெளியை நோக்கிய வண்ணம் பிள்ளையார் எழுந்தருளி அணுக்கிரகஞ் செய்கிறர். பழைய காலத்தில் இக்கோயிலைச் சார்ந்த பண்டிதர் வேலுப்பிள்ளை என்பார் மூர்த்தி, தலம், தீர்த்தம் பற்றிப் பாடியுள்ளார். கடந்த முப்பது ஆண்டு களாக இளைப்பாறிய ஆசிரியார் க. ஆறுமுகம் அவர்கள் தலைமையில் இயங்கிவரும் பஞ்சாயத்தார் கோயிலின் நித்திய, நைமித்திய பூசைகள், பொங்கல், விழாக்கள் யாவற்றையும் கண் காணித்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆனிமா தம் 15ம்நாள் அலங்காரத் திருவிழாக்கள் நடக்கின்றன. சென்ற நூற்றண்டில் மிகக் கீர்த்தி பெற்றிருந்த வைரவநாதக் குருக்கள் வழித்தோன்றல்களே பூசையும் விழாவும் செய் கின்றனர். நீர்வேலியிலுள்ள கந்தசாமியார், வேட்டைத் திருவிழாவுக்கு இந்தப்பிள்ளையார் கோயிலுக்கும், அண்மை யிலுள்ள நாச்சிமார் கோயிலுக்கும் வருகை தருவது வழக் கமாக இருந்து வருகிறது. அண்ணனைத் தம்பி சந்திக்கும் காட்சி கண்கொள்ளாத காட்சியாகவிருக்கும். இந்தாளில் பஜனைப்பாடல்கள் விமரிசையாக நடைபெறும். திருவிழா
37

Page 29
வின் சடைசிநாளில் மகேசுரப்பூசை கதாப்பிரசங்கம், உப னியாசம் முதலியன இடம் பெறும். இக்கோயிலில் நா தம்பிரான், பஞ்சமுகவிநாயகர், வேலாயுதம் என்பன பி திட்டை செய்யப்பட்டுள்ளன. இக்கோயிலுக்கு ஊஞ்ச, பதிகமும் ஒன்றுண்டு. ·
வடகோப்பாய் பத்திரகாளி கோயில்
பலானைக் கண்ணகையம்மன் கோயிலுக்குத் தென் மேற்காகச் செல்லும் ஒழுங்கையில் 250 யார் தூரத்தில் பத்திரகாளி கோயில் இருக்கிறது. இது உருப்பெற்று வள ரத் தொடங்கி ஒரு பத்து வருடங்கள் இருக்கும். ஆயினும் அருள் வாய்ந்தது.
மேற்கூறிய கண்ணகியம்மன் ஆலயத் தர்மகர்த்தாக் குழுவில் இருந்த செ. முருகேசு மேஸ்திரியார் ஒரு பக்தர் புனிதமான வாழ்க்கையுடையவர். இவருடைய வீட்டின் முன்னுல் நிற்கும் இலுப்பை மரத்தடியில் பழைய காலந் தொட்டுப் பொங்கல் பொங்கி, காளிக்குப் படையலிட்டு நவாக்கரி மந்திரம் ஓதுவது வழக்கம். இதனை பூசகர் பத வியிலிருந்த முருகேசரே ஒதுவார். தைப்பொங்கல், வரு டப்பிறப்பு, ஆவணி ஞாயிறு, பங்குனித் திங்கள் ஆகிய சுப தினங்களில் பொங்கல் பொங்குவர்.
ஒரு நாள் முருகேசருக்குக் கனவில் காளி தோன்றி இலுப்பை மரத்தைச் சுற்றிக் கோயிலும், மதிலும் கட்டு மாறும் ஆணையிட்டாள். முருகேசர் தன் சமூகத்தினரிடம் பனம் சேர்த்து, மரம், சலாகை, வளை எல்லாம் வாங்கிக் கோயில் வேலை ஆரம்பித்தார். சுற்றுமதிலும், கண்டா மணியும், சங்கடப்படலையும், குத்துவிளக்கும் முன் மண்ட பமும இப்போது பத்திரகாளியை அலங்கரிக்கின்றன. முருகேசர் சிவபதமடைந்து விட்டார். அவர் குடும்பத்தி னர் திருப்பணி செய்து வருகின்றனர். இக்கோயிலில் நித் திய பூசைகள் நடக்கின்றன கிராம மக்களுக்குச் சாக்த வணக்கத்தில் அதிக ஈடுபாடு தோன்றியுள்ளது.
ஆருயிராயும் அருந்தவப் பெண்பிள்ளை காரியல் கோதையள் காரணி நாரணி ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும் கோரி யென்னுள்ளம் குலாவி நின்ருளே.
திருமந்திரம் 1110
38

வடகோவை மகிழடி வைரவர் கோவில்
ஆதியில் புராண இதிகாசங்கள், தமிழ், சமஸ்கிருதம் நன்கு கற்ற சைவக் குருக்களும் படித்த மக்களும் வாழ்ந்த சூழலில் ஒவ்வொரு குருமாரும் தத்தமக்கென ஒவ்வொரு வைரவ கோவில் அமைத்தனர். அச்சூழலில் வாழ்ந்த தமிழ் நொத்தாரிஸ் கெங்காதர ஐயரும், சிவகடாட்சக் குருக்களும் சேர்ந்து இக்கோயி%ல அமைத்தனர். விக்கிரகப் பிரதிட்டை செய்து சிவகடாட்சக் குருக்களால் நித்திய, நைமித்திய பூசைகள் நடத்தப்பட்டு வந்தன.
ஆணி மாதத்தில் வருடாந்தப் பொங்கல் நடைபெறும். படையல் நடத்தும் குருக்கள் ஒவ்வொரு மடைக்கும் பூசை நடத்துவார். பூசை நேரத்தில் அருள் கொண்டு பக்தர் ஆவேசித்து ஆடுவதும் உண்டு. இப்பூசை வேளையில் பொங் கில் பானை வைத்த இடத்தில் தீ வளர்த்துச் சிலர் தீ மிதிப் பர். மறுநாள் சிறு பலியிடுதலும் உண்டு. இப் பூசைக்காகக் கொண்டு வரும் இயந்திரத் தகடு, அதன் அயலிலுள்ள கோயிலில் எடுத்துச் சென்று வைக்கப்படும்.
இக் கோயிலைத் தாபித்தவர்கள் காலஞ்சென்ற பின்
புராமரிப்பார் இல்லாமல் இருந்தது. எனவே, அயலவரிடம் கோயில் பராமரிப்பு ஒப்படைக்கப்பட்டது. குருக்கள் ஒரு வரை நியமித்துப் பலகாலம் கோயிலைப் பராமரித்து வந்தனர். தற்போது நிர்வாகத்துக்குப் பரிபாலன சபை ஒன்று ஏற்படுத்தப்பட்டு மேற்பார்வை நடந்து வருகிறது. அயலிலுள்ள கோயிற் குருக்களே இங்கும் பூசை செய்து வருகிருர்,
வடகோவை மிரியத்தனை வைரவர் கோவில்
கோப்பாய் வடக்குச் சந்திக்கு அருகாமையில் பருத் தித்துறை வீதிக்கும் கைதடி வீதிக்கும் இடையில் அமைந்த ஒரு குறிஞ்சி மிரியத் தனை என்று அழைக்கப்படும். கோப்பாய் வடக்குச் சந்தியிலிருந்து வடகிழக்குத் திசையில் 100 மீற்றர் தொலைவில் மிரியத்தனைக் குறிச்சியில் 10 அல்லது 12 வீடுகளைத் தவிர மிகுதி பரப்புத் தோட்டமும் வயலுமாகும். 1880 ஆம் ஆண்டளவில் ஒரு அரச மரத் தடியில் வைர வசூலம் ஒன்றையும் அரசமரத்து வேரில் ஒரு நாகத்தையும் வைத்து வழிபாடு ஆரம்பித்தது, அக் குறிச்சியில் வீடு, தோட்டம், வ பல் உள்ளவர்கள் அதனை ஒரு காவல் தெய்வமாக வழிபட்டு வந்தனர். 1890 ஆம்
39

Page 30
ஆண்டளவில் சிறுகோவில் ஒன்றைப் பக்கத்தில் அமைத்துக் கோயிலுள் வைரவசூலத்தையும், அரசமரத் தடியில் நாக தம்பிரானையும் வைத்து வழிபாடு பொங்கல் பூசை தவறுமல் செய்து வந்தனர். கர்த்திகேசஐயர், மார்க்கண்டேயர். ஐயாத்துரைக் குருக்கள், சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் முறையே பரம்பரை பரம்பரையாகப் பூசைசெய்து வந்தனர் அக்காலத்தில் அக்குறிச்சியில் உள்ள தோட்டங்களில் (கூடு தலாக வாழை) களவுகள் நடந்ததில்லை என்றும் அப்படி யாரும் களவு எடுத்தால் அவர்களை விடியும் வரை கண் தெரியாமல் அல்லது மதிமயங்க வைத்துவிடுவார் வைரவர் என்னும் கதை கர்ணபரம்பரையாக உள்ளது.
1930 ஆம் ஆண்டு அளவில் ஐயாத்துரைக்குருக்கள் காலத்தில் கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்து நித்திய, நைமித்திய பூசைகள் ஒழுங்காக நடை பெற்ற வந்தன. பின்பு சுப்பிரமணியஐவர் மகன் சண்முக ரத்தினசர்மா ஊரவர்களின் உதவியுடன் திரும்பவும் புனர் நிர்மாணம் செய்து பரிவார மூர்த்திகள் நாகதம்பிரான் சனீஸ்வரன், கண்டாமணி ஆகியனவும் கொட்டகை ஒன்றும் அமைத்து 1981 ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தை நடத்தினர்; விசேட தினங்களில் விசேட பூசையும் ஒவ்வொரு வருடமும் அலங்கார உற்சவமும் திருவெம்பாவைப் பூசை, வைரவர் மடை, நாகதம்பிரான் பொங்கல் யாவும் அவ்வூர் ( கோப் பாய் வடக்கு ) மக்கள் மனமுவந்து செய்வித்து வந்தவர். 1987 அக்டோபரில் நடந்த அசம்பாவிதத்தால் கோயில் சேதமடைந்து இது வரை நித்தியபூசை எதுவும் இல்லாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. : ।
இக்கோயில்களைவிட எண்ணற்ற சிறுகோயில்கள் ஆங் காங்கு ஒவ்வொருவர் வீட்டு வளவுகளிலும் தனியார் மேற் பார்வையிலும் இருந்து வருகின்றன. சில கோயில்களில் பூசைமுறைகளின்றி அவரவர் மன விருப்பப்படி பொங்கல் தீபவழிபாடுகள் நடக்கின்றன.
கோப்பாய் யூனி சுப்பிரமுனிய கோட்டம்
1980 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 1ந் திகதி இனிய மாலைப் பொழுதில் கோப்பாய் பழைய தெருவில் திரு. க. ரமேஸ்குமார் அவர்களின் இல்லத்தில் சிறுவர் முன் னேற்றக் கழகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. முழுக்க முழுக்க சிறுவர்களை அங்கத்தவர்களாக கொண்ட இக் கழகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
40

வளர்ந்து வந்தது. 1982 ஆம் ஆண்டு தைமாத்ம் 17ந் திகதி குருதேவர் சிவாய பூரீ சுப்பிரமுனிய சுவாமிகள் இக்கழகத்தின் வேண்டு கோளுக்கமைய கோப்பாய்க்கு வரு கைதந்த அன்று சிறுவர் முன்னேற்றக்கழகமாக இருந்த இந்த அமைப்பு திரு. ரமேஸ்குமார் அவர்களினல் 'சைவச் சிறுவர் முன்னேற்றக்கழகம்’ எனப் பெயரிடப்பட்டு சிறுவர்களை வழிநடத்துவதற்குப் பெரியோர்களைக் கொண்ட "பூரீசுப்பிரமுனிய கோட்டமும்" உருவாக்கப்பட்டது இதன் பின் சிறுவட்டத்திற்குள் செய்துவந்த சமயப்ப
களும் பரவலடையத் தொடங்கியது.
"பூரீ சுப்பிரமுனிய கோட்டம்’ கோப்பாயில் பழந் தெருவில் உள்ள திரு . க. ரமேஸ்குமார் அவர்கள் உபயம் செய்த ஒரு கட்டிடத்தில் அமைந்துள்ளது. இங்கே குரு தேவர் பூரீசுப்பிரமுனிய சுவாமி அவர்களின் திருவடிக் கோயிலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இக் கோட்டத்தில் இப்பகுதிச் சிருர்களுக்குப் பாலர் பாடசாலை ஒன்றும், முதியோருக்குச் சமய வகுப்புக்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்றும் ஆங்கிலம் படிக்கவிரும்பும் மாணவர்களுக்கு இலவச வகுப்புக்களும் நடந்து 6ருகின்றன. மேலும் வருடம ஒருமுறை கல்விச் சுற்றுலாக்களும் தல யாத்திரைகளும் ஒழுங்கு செய்யப் பட்டு இப்பகுதி மக்களுக்குரிய முன்னேற்றக் கழகமாக இருந்து வருகிறது. மக்களின் இன்னல் தீர யாகம் நடத் தப்படுகிறது.
கோட்டத்தின் இன்னுமொரு முக்கிய பணியாக பண் ணிசை வகுப்புக்கள், பரதநாட்டியப் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகிறது. "சைவச் சிறுவன்’ என்னும் காலாண்டுச் சஞ்சிகை ஒன்றையும் தவழுது வெளியிட்டு வருவதோடு காலத்துக்குக் காலம் சைவம் சம்பந்தப்பட்ட அறிவுரைகள் கொண்ட சிறுநூல்களையும் அச்சிட்டு விநி யோகித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் நவராத்திரி விழாவும் ஆடிமாதத்தில் தவருது குருபூர்ணிமா விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்குருபூர்ணிமா விழாவு டன் சமய அறிவுப்போட்டிகள் நடாத்தப்பட்டு, புத்தகப் பரிசில்களும் வழங்கி வருகிறது. குருபூர்ணிமா விழாவுக்குச் சைவப் பெரியார்களை அழைத்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படுகின்றன. கோட்டத்தின் ஆண்டுவிழாவும், குருதேவரின் ஜயந்திதின் மும் தை மாதம் 5ம் திகதி கொண் டாடப்படுகிறது. ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ، . , : . . . . ,
A. A
41

Page 31
சாயி மண்டலி ,
கோப்பாய் தெற்கு 235 பழைய தெருவில் யாழ்ப் பாணம் பூரீசத்திய சாயிசேவா சமித்தியுடன் இணைந்த "பூரீ சத்தியசாயி இல்ல பஜனை மண்டலி' 1884ம் ஆண்டு சித்திரை மாதம் தொடங்கப்பட்டது.
குறித்த மண்டலியைத் தொடக்க திருவாளர்கள் கே. கனகசிங்கம் அவர்களும், பி. நடராஜா அவர்களும் முன்னேடிகளாக இருந்தார்கள். இவர்கள் இதன் செயற்
குழுவில் முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர்.
ஒவ்வொரு பெளர்ணமித்தினத்திலும் இல்ல பஜனைகள் "நடத்தி வருகிறர்கள். கோப்பாய் மண்டலியில் பதினெட்டு இல்லங்கள் சேர்ந்து உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் மாதம் இரு 'இல்ல பஜனைகள்' நடைபெறும். மண்ட லியின் பிரதான அலுவலகம் அமைந்துள்ள இடத்திலும் "மண்டலி பஜனைகள் மாதம் இருமுறை நடைபெறுகின்றன,
மண்டலியின் இன்னுமொரு சமயப்பணி இவர்களின் "நகரசங்கீர்த்தனம்" ஆகும், காலை 5 மணிக்கு ஆரம்பித்து ஒரு மணித்தியாலம் வரை கோப்பாய் நகரைச்சுற்றி "நகர சங்கீர்த்தனம்’ செய்து வருவார்கள்.
இதன் கல்விப்பணி மிகவும் குறிப்பிடத்தக்க முறையில் மற்றைய மண்டலிகளைவிட மேலோங்கி நிற்கின்றது.
**பகவான் பொன்மொழிகள்" என்னும் ஆங்கிலத்தில் உள்ள புத்தகத்தைத் தமிழ் மொழிபெயர்ப்புச் செய்து மண்டலிப்பிராந்தியத்தில் விநியோகித்து உள்ளார்கள். பகவான் சத்தியசாயி பாபாவின் சுப்பிரபாதம், அஷ்டோத் திரம், சாந்தி சுலோகங்கள் (உரையுடன்) ஒன்முகச் சேர்த்து ஒரு புத்தகம் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்து வெளி யிட்டுள்ளார்கள். **பூரீசத்திய சாயி நாதர் கவசம்' என்னும் நூலை இவர்கள் மறுபதிப்புச் செய்து விநியோகித் துள்ளார்கள். இது எஸ். எஸ். சிதம்பரம் அவர்களால் இயற்றப்பட்டு அகில இந்திய சாயி சமாஜத்தால் வெளி யிடப்பட்டது.
'பகவான் சாதனம்’ இது தமிழில் மொழி பெயர்க் கப்பட்டு அச்சிடுவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. குறித்த மூன்று புத்தகங்களின் மொழி பெயர்ப்பை திரு . அ. வி. மயில்வாகனன் அவர்கள் செய்துள்ளார்கள். இம்மண்டலி வெளியிட்டது போன்று வேறு குழுக்களும் வெளியீடு செய்துள. இம்மண்டலியின் கல்விப்பணி பற்றிக்
42

கூறும்போது அண்மைக்காலத்தில் இதன் செயல் திட்டத்தில் ஒன்றன ' கல்வி வட்டம் " ஆரம்பமாக இருக்கிறது. இந்தக் * கல்வி வட்டத்தில் ' கீதவாகினி, உபநிடதவாகினி போன்ற நூல்களில் அங்கத்தவர்களுக்கு எழும் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளும் வழிகள் காணப்படும். சமய சம்பந் தமான ஐயப்பாடுகள் இங்கே ஆராயப்படும்.
வடகோவை ஞானபண்டித சைவவிருத்திச் சங்கம்.
எப்பணியையும் தனியே செய்வதிலும் பலருடன் கூடிச் செய்தால் சாதனைகளை நிலநாட்டலாம் என்பதை ஞானி பண்டித சைவவிருத்திச்சங்கம் எடுத்துக் காட்டுகிறது. 1956இல் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம் சித்திர வேலாயுத சுவாமி கோயிலில் பஜன வகுப்புக்களை நடத்தியது. முருகப் பெருமான் சந்நிதியில் முதன்முதல் தொடக்கப்பட்ட மையால் ஞானபண்டிதன் எனும் அவன் பெயரைக்கொண் டமைந்தது. இச்சங்கத்தின் நோக்கமாகச் சமயபோதனை டி. சமயப்போட்டிகள், மூலம் சமயப்பற்றை வளர்த்தல் சமயப் பரீட்சைக்குப் பிள்ளைகளை ஆயத்தம் செய்தல், தேவார வகுப்பு, சமயபாடவகுப்பு நடத்தல், கூட்டுப்பிரார்த்தனை,, சரியைத் தொண்டுகள், செய்தல் சமய குரவரின் குருபூசை களை நடத்துதல், சமயநூலகம் ஒன்றை உருவாக்கல், வேறு சங்கங்களுடன் இணைந்து சமயத் தொண்டு செய்தல் என்னும் விடயங்கள் அமைந்துள.
ஆரம்ப காலத்தில் சமயவகுப்புக்களை வைத்தும் அறிவுப் போட்டிகளை நடத்தியும் வந்தது. பின்னர் விசேட தினங் களில் வெளியாரை அழைத்துச் சமயச் சொற்பொழிவுகளே நடத்தியது. 1958ல் சமய தீட்சை, வழங்கும் வைபவத்தைத் தொடங்கியது. அதே வருடம் திருவெம்பாவைக் காலத்* தில் வீதிப்பஜனையும் மறுவருடம் நல்லூர்க்கந்தன்", தேர்விழாவுக்குக் கோப்பாயிலிருந்து செல்லும் பஜனையும் தொடங்கியது. திருவண்ஞமலை ஆதீனமகாசந்நிதானம் குன் றக்குடி அடிகளை அழைத்துச் சொற்பொழிவாற்றச் செய்தது. 1960 இல் சபாபதி நாவலர் நினைவு விழா நடத்தியது." திருவாவடுதுறை ஆதீனவித்துவான் தண்டபாணிதேசிகரை அழைத்துச் சிறப்புச் சொற்பொழிவாற்றச் செய்து சமய அறிவுப் போட்டியில் பரிசு பெற்ருேருக்குப் பரிசில் வழங்கச் செய்தது. 1961இல் சோ , சுப்பிரமணியக்குருக்க%ள ஆயுட் காலப் போசகராகக் கொண்டு சுவாமி அத்வயானந்த
43

Page 32
சரஸ்வதி அவர்களை அழைத்துப் பெரியபுராணச் சொற் பொழிவு நடத்தியது. 1932 இல் குருக்களுக்கு ' சிவாகம விசாரதர் " பட்டம் அளித்துக் கெளரவித்தது. இதன் பணி மனையில் ' கலாச்சாரமண்டபம் ’ ஒன்று அமைக்கப்பட் டுள்ளது. இந்தக் கலாச்சார மண்டபத்தில் அத்திவார மட்டம் வரை பொதுப்ப்னத்தில் கட்டப்பட்டது. பின்பு கோப்பாய்த் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ் சென்ற திரு . சி . கதிரவேலுப்பிள்ளை அவர்கள் முயற்சியால் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொண்ட ரூபா 35,000 | - ஐக்கொண்டு கலாச்சார மண்டபம் அமைக் கப்பட்டு 1981 ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சைவவிருத்திச் சங்கத்தின் கீழ் இயங்கி வந்த ' கலாச்சார நிலையக் கட்டிடச்சபை '' இந்தக் கலாச்சார மண்டபம் அமைக்கும் வேலைகளைப் பார்த்தது. அம்மண்டபத்திலேயே சமயவகுப்பு, சங்கீதவகுப்புக்கள் நடத்தப்படுகிறது.
வருடந்தோறும் மகாசிவராத்திரிவிழா, நவராத்திரி விழா, கொண்டாடப்படுகிறது. 1966 முதல் கந்தசஷ்டி விழா நடக்கிறது. இராமநாதன் இந்துப்பல்கலைக்கழகம் நிறுவி சைவசமயவளர்ச்சிக்குப் பாடுபட வேண்டுமென அரசினரை வேண்டிப் பிரச்சாரக்கூட்டம் நடத்தியது. இது வரை பலனளிக்கவில்லை. 1970ல் சந்நிதிக்குத் திருவிழாக் காலத்தில் பஜனைக் கோஷ்டிகள் செல்லத் தொடங்கியது. 1971ல் தொண்டை மண்டல ஆதீனம் " சித்தாந்தபானு ' என்னும் பட்டம் அளித்துக் கொர வித்த சுப்பிரமணியக்கு ருக்களைத் தாமும் போற வேண்டும் என்ற நோக்குடன் பாராட்டு விழா எடுத்துப் பொற்கிழி அளித்துப் பொன் ஞடை போர்த்தி மலர் வெளியிட்டு மகிழ்ந்தது. சைவப் பிள்ளை கட்குப் பண்ணிசை வகுப்புக்களை இலவசமாக நடத் துகிறது. சமய அறிவுப்போட்டி நடத்தி, சித்தியடைந்தோ ருக்குச் சான்றிதழ் வழங்குகிறது. இச்சங்கத்தின் தற் போதைய தலைவராக திரு . சீ . க . சுப்பிரமணியம் அவர் கள் பணிபுரிகிருர்கள்.
சைவம் வளர்த்த சான்றேர்கள் “சித்தாந்தபானு' சோ. சுப்பிரமணியக்குருக்கள்
குரு என்று இருப்பவனும் அவனே தானேயாய் நிற்கும் நிலையும் சித்தகத்தியும் கிரியா பாகங்கள் எவற்றையும்
44

செய்யும் ஆற்றலும் மந்திரம், கிரியை, பாவனை இவை களில் சிறந்து விளங்கும் ஆற்றலும் தம்மை அடைந் தோருக்குப் பக்குவம் அறிந்து உபதேசம் செய்து யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எல்லோ ரையும் நன்னெறிப்படுத்துபவர் எனப் போற்றப்படுபவ ராவர். வடகோவை சித்தாந்தபானு சோ. சுப்பிரமணியக் குருக்கள் மேற்கூறிய அறி,ம் சித்தம் சிவமாகும் பண்பும் பொருந்தப் பெற்றவர். தெளிவு குருவின் திருமேனி காண்டல் எனும் திருமந்திர வாசக இலட்சிய குருவின் திருஷ்டாந்தமாகத் திகழ்பவர் சமய விடயங்கள், பூசை முறைகள், சித்தாந்த விளக்கங்கள் சொல்வதில் அறிவு ஆற்றல், பொறுமை நிரம்பியவர்.
செந் தமிழ், வடமொழி, தெலுங்கு பாசைகளில் பாண் டித்தியம் பெற்று மந்திரங்களைக் கிரியாபாவனையில் செய் பவர். ஆகம சந்தேகங்களைப் பிறகோயில் அர்ச்சகர்கட்கு விளக்கி நிவர்த்தி செய்பவர், கோயில்களில் நித்திய, நைமித்திய பூசை செய்தல், விக்கிரக பிரதிஷ்டை, கும்பா பிஷேகம், செய்து வைப்பதுடன் சுலோகங்கள் பாடி உரை நிகழ்த்துவதில் வல்லவர். இவரது ஞான நெறியையும் வேத சவாகம விற்பத்தியையும் சைவசித்தாந்த நூல்களில் இவருக்குள்ள பயிற்சியையும் புராண, இதிகாச விற்பத்தி யையும் கவனித்த காஞ்சிபுரம் மெய்கண்டர் ஆதீனத்' தலைவர் நூலg ஞானப்பிரகாச ஞானதேசிகசுவாமி அவர் கள் குருக்களுக்கு “சித்தாந்தபானு எனும் கெளரவப் பட்டம் வழங்கினர்.
பாடசாலைக் கல்வியைச் சொந்த ஊரில் முடித்துக் கொண்டு இந்தியா சென்று ஆதீனத்தில் சேர்ந்து சித் தாந்தம் ஆகமங்களை முறைப்படி பயின்று திரும்பியவர் பழமை க்கும், புதுமைக்கும் பாலம் அமைத்து ஒரு நட மாடும் கலைக்களஞ்சியமாக விளங்குபவர். சமயப்பண்பு தமிழர் நாகரிகம் பற்றிப் பேசும் வல்லமையுடையவர்: வேதியருள் வேதியராய் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் திறனய்வு கண்டவராய், காண்பவன் காட்சி, காச்சிப் பொருள் மூன்றும் தானேயாய் அரை நூற்ருண்டுக்கு மேல் குருப்பணி செய்பவராய் விளங்கும் இவர் குடத் தில் விளக்குபோல் வெளியுலகு அறியாமல் வாழ்ந்து வரு கிரு.ர்.
இவர் வில்லூான்றிக் கந்தசாமி, மே?லக்கரம்பன் முருக மூர்த்தி மட்டுநகர் மாமாங்கப் பிள்ளையார். போன்ற
45

Page 33
vn கோயில்களில் கும்பாபிஷேகத்தை இனிது நடாத்தி வைத் தவர்.
பூசலார் நாயனரது வாழ்க்கையை உலகறியச் செய் தவன் சோழமன்னன். அதே வாழ்க்கை முறையில் வாழும் குருக்களை உலகறியச் செய்தவர் காஞ்சி டெய்கண்டரா தீனத்தார் எனலாம்.
சிவமணி சேர் . கந்தையா வைத்தியநாதனின் சமயப்பணி.
சுதந்திர இலங்கையின் பாதுகாப்பு வெளிநாட்டு அமைச்சின் நிரந்தரச் செயலாளராக இருந்து 1950ல் கெளரவ சேர் பட்டம் பெற்றவர் இருந்தும் ' அறுவகை விளங்குஞ் சைவத்தனிலா விரதஞ்சாரும் நெறிவழி நின்று குறிநிலை பெற்ற தொண்டர் குழாத்துடன் குலாவி "' வாழத் தலைப்பட்டார். இவர் சமூக, சமய, கல்வி, கலாச் சார வளர்ச்சிகளைத் தேசிய ஒருமைப்பாட்டு முறையில் பேணிக் பக்க விழைந்தாரி. தனது இனமொழி, சமயத்தின் பூரணத்துவ உரிமைகளைக் காப்பதில் கண்ணுேட்டம் செலுத் தினர். கொழும்பு விவேகானந்த சபையின் துணைத்தலைவ ராகவும், காப்பாளராகவும் பல ஆண்டுகள் இருந்தார். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நிறுவன உறுப்பி னராக இருந்தார். பின் தலைவராகப் பதவி வகித்தார். தாவலர் கழகத்தன் அதிபராகவும் கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தின் காப்பாளராகவும் இருந்தார். தன் சொந்த ஊரான கோப்பாயில் தங்கள் குலதெய்வமாக விளங்கிவந்த வீரபத்திர ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்தார். −
1954ல் விருது நகரில் நடந்த சைவசித்தாந்த மாநாட் டிற்குத் தலைமை தாங்கி நடத்தினுர். 1960ல் சைவசித் தாந்த மாநாடு திருக்கேதிச்சரத்தில் நடக்க வைத்தார். இவர் செய்த பலவற்றிலும் ஒரேயொரு பணியே இவரை உலகம் உள்ள வரை நம்மவர் நெஞ்சில் நிலைக்க வைத்தது" அப்பணி திருக்கேதிச்சரப் பெருங்கோயிற் புனருத்தாரணத் திருப்பணியாகும். ஈழத்தமிழரின் மறுமலர்ச்சியைக் காட்டக் கொண்ட பெரும்பணியுமாம். இந்நாட்டில் அவ்வினம் தாழ்ந்துவிட்டதென்றும் மீண்டும் அவ்வினம் புத்துயிர் பெறவேண்டின் கேதீஸ்வரம், கோணேஸ்வரம் என்னும் கோயில்களும் பண்டையநிலை எய்தவேண்டும் என்றும் கூறிவந்தார். 1955ல் நாட்டில் உள்ள இந்து அமைப் புக்கள் பலவற்றை ஒன்று சேர்த்து இந்துமிாமன்றத்தை
46A

அமைத்தார். திருக்கேதீஸ்வரத்தில் சிவானந்தகுருகுலிம் அமைத்து, பிராமணருக்கு வேதாகமக் கல்வியும் அர்ச்சனை முறையையும் மூன்றுவருட காலம் பயிற்சியளித்து கோயில் களுக்குப் பூசகராக அனுப்புவித்தார். அனுராதபுரத்தி லுள்ள கதிரேசன் கோயிலைக் கட்டுவித்துக் குடமுழுக்கு ஆட்டுவித்தார். பொதுத் தராதரப் பத்திர உயர்வகுப்பு மாணவருக்கு இந்துசமயப் பாடத்திட்டத்தை இந்துமா மன்ற சார்பில் அமைப்பித்தார். பெரும்பான்மை இந்து மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைக்கு இந்து அதிபரை நியமிக்கவேண்டும் என்று வித்தியா பகுதியினருடன் வாதாடி நியமிக்கச் செய்தார். 1952 இல் கேதீச்சரபபணியைத் தொடங்கிய இவர் அதே நினைவாக இருந்தார் என்பதை இவர் இறக்கும் போது குடும்பத்தவரிடம் " கோபுரத்தை நன்ருகக் கட்டுங்கள் " என்று கூறியதிலிருந்து புலனகும். 1976ல் கேதீஸ்வரப் பெருமானுக்குத் திருக்குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்தும் வைத்தியநாதன் அவர்களால் தொடங்கப்பெற்ற திருப்பணிவேலைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. s
சைவப் பெரியார் ச. சிவசுப்பிரமணியம் 'ஐயா’ அவர்கள்.
எல்லாரும் "ஐயா" என அன்பாக அழைத்த திரு. சு. சிவசுப்பிரமணியம் அவர்கள் பிரபல சட்டத்தரணி யாவார். இவர் அதிக காலம் கொழும்பில் வாழ்ந்தாலும் தமிழ்மக்கள் வாழ்ந்த இடமெல்லாம் இவரின் சைவப்பணி தேடிச்சென்றது. இவர் கோப்பாய் தெற்கில் பிறந்து தாய் வழி இடமான இருபாலையில் இருந்து கோப்பாய் கிறிஸ் தவக்கல்லூரியில் ஆரம்பக்கல் : பயின்ருர் உயர்கல்விக்கு வேறிடம் சென்ற இவர் சட்டத்தரணியாக வெளியேறினர்.
இவர் சங்கைக்குரிய பிதா வண, தனிநாயகம் அடி களார் தலைவராக இருந்து வெளியிட்ட தமிழ்க் கலாச் சாரம் என்ற ஆங்கில இதழின் வெளியீட்டுக்குழுவில் இருந்து தமிழ்ப்பணி புரிந்து பிரபலம் அடைந்தார். இவருக்கு அடிகளார் கொடுத்து வந்த மதிப்பு அவர் குறித்த பத்திரிகையில் எழுதும் தலையங்களிலிருந்து அவ தானிக்க முடிகிறது. கொழும்பு விவேகானந்தசபை கொழும்பு தமிழ்ச்சங்கம், கொழும்பு இந்துமாமன்றம் வண்ணை சைவபரிபாலனசபை போன்ற அமைப்புக்களில்
47

Page 34
இருந்து சைவப்டனியும், தமிழ்ப் பணியும் புரிந்தார். "இந்துசாதன ஆசிரியர் திரு. நம. சிவப்பிரகாசம் அவர்கள் இவரது பணிட நீறிக் குறிட்பிடும் டோ து சைவப்பணியிலும், மொழிப்பணியிலும் உருக்குலைந்த உருவம்' என வர்ணிப்பது நோக்கற்பாலது.
சிந்துப்பிட்டி சிவசுப்பிரமயை கோவிலில் சிலகாலம் நடந்த எந்தச் சமய வைபவமும் இவரின்றி நடந்ததில்லை. மதுரை ஆதீனத்துடன் ஐயா அவர்கள் வைத்திருந்த தொடர்பு இங்கு அவர் சைவப் பணிகள் நிறைவேற்ற உதவியது. யாழ்ப்பாணத்துச்கு ஒரு சைவப் பல்கலைக்கழகம் வேண்டுமென்று குரலெழுப்ப மூலகர்த்தாவாக இருந்தவர் இவர் எனவும் அதற்கு ஆதீனத்தொடர்பே கார ம்ை எனக்கூறுவர். இப்பொழுது யாழ் பல்கலைக்கழகம் உள்ள இடத்தில் இப்பல்கலைச் சழகம் அமைய வேண் டுமென விரும் பினர்.
1948ல் திருக்கேதீஸ்வரம் புனர் நிர்மான வேலைகள் ஆரம்பமானபோது இவரும் வேறுசில சைவப் பெரியார் களான வி. கே. செல்லப்பா, சி. சரவணமுத்துச்சாமி ஆகி யோரும் ஆற்றிய ஆரம்பப் பணிகளைச் சைவ மக்கள் மறவார். அங்கே நிலம் வாங்கி, வீடமைத்துத் தங்கி யிருந்து அப்பணி சம்பந்தமான வேலைகளைக் கவனித்து வந்தார். இன்னும் இவர் அமைத்த 'அப்பர்குடில்’ இவரது பெயர் சுறிக் கொண்டிருக்கிறது. உற்சவ சா லிங் களில் வெளியிடத்தில் இருந்து வரும் அடியார்கள் இக் குடிசையில் தங்கி கேதீஸ்வரன் அருள் பெற்றுச் ெ ல்வர்.
1918 - 21 காலப்பகுதியில் கோப்பாயில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தொடங்கமுன் தமிழ்ப்பயிற்சி மாண வருக்குத் தனது "நாவலடி" என்னும் வளவிலமைந்த கட்டடத்தைப் பாவிக்கும்படி இனமாக அளி தவர். சிறிது காலம் இங்கு ஆசிரிய மாணவருக்குப் பயிற்சி நடந்தது. பின் கலாசாலை கட்டப்பட அங்கு மாறியது இவரின் பணி கோப்பாய்பதிக்கு மட்டுமன்றி நாடுமுழுவதற்கும் அமைந் தது. குறிப்பாக ஐயா அவர்கள் தேசிய ஒற்றுமைப் பாது காப்புச் சபையில் செயலாளராக இருந்து ஆற்றிய பணி யினைக் கூறலாம். இவர் வழியைப் பின்பற்றி இவரின் மைந்தர்கள் சி. கதிரவேலுப்பிள்ளை , அல. ர்களும், சட்ட மேதை சி. அம்பல :ர்ணர் அவர்களும் தமிழுக்கும், சைவத் துக்கும் பணியாற்றியுள்ளனர்.
48

பண்டிதா ச . பஞ்சாடசரசாமா
வடகோவைய்ைப் பிறப்பிடமாகக் கொண்டி சர்மர் அவர்கள் ஆரம்பக் கல்வியை உள்ளூர்ப் பாடசாலையிலே தொடங்கினர். தமது பதினேழாவது வயதில் பாலபண்டி தர் பரீட்சையில் சத்தியடைந்தார். இருபத்தைந்தாவது வயதில் வடமொழிப் பண்டிதர் பரீட்சையிலும் சித்திய டைத்தார். இளம் சைவப்புலவர் பரீட்சையும் சித்திய டைந்து சிவானந்த குருகுலத்தில் நீண்டகாலம் ஆசிரியரா கப் பணியாற்றினர், பலமொழிகளில் இவர் கொண்ட ஈடுபாடு காரணமாக்த் தாமாகவே பாளி, மலையாளம் ஆங்கிலம், இந்தி மொழிகளில் ஓரளவு தேர்ச்சி பெற்ருர்" சிலாசா னங்களை வாசித்தறியும் புலமையும் இவருக்குள்ளது.
1943 ம் ஆண்டு. அளவில் மறுமலர்ச்சிச் சங்கத்தின் தொடர்பு ஏற்பட்டது. இதஞ்ல் மறுமலர்ச்சிக்கழக ன்முத் தாளரின் துண்டுதலினல் எழுத்துல்க வாழ்க்கை ஆரம்ப மானது. மறுமலர்ச்சி இணையாசிரியருள் ஒருவராகி, பல புனைபெயர்களில் கதை, கவிதை, நாடகம், கட்டுரை வகைகளை எழுதினர். 'பன்மொழியறி விருந்த்தீர்ல் மொழி பெயர்த்தும் வெளியிட்டார். பல நூல்களைப் பதிப்பித்தும் தொகுத்தும், உரைஎழுதியும் வெளியிட்டிார். இவற்றி டையே தமது ஆசிரிய்ப்பணியையும் மேற்கொண்டு வந்தார் 1945 ல் ஆசிரிய நியமனம் பெற்று கொக்குவில் இராம கிருஸ்ண சைவ வித்தியாசாக்கியில் 2 வருடமுழ், பின் ஒய்வு பெறும்வரை புத்தூர் பூரீ சோமாஸ்கந்தக் கல்லூரியிலும் ஆசிரியராகக் கடமையாற்றினர். ல், டி. - .
சைவசமய நிறுவனங்களிலும் அங்கத்தவராக இருந்து கல்விப்பணி செய்தார். யாழ், ஆரிய திராவிட பாசா விருத் திச்சங்கத்தின் ப்ரீட்சைக் காரியதர்சியாக இருந்து பரீட் சைகளை நடத்தினர்' இதுபோலவே சில சமய நிறுவனங் களின் பரீட்சைகளையும் உள்நாட்டிலும், ல் இந்தியாவிலும் நடத்தினர். 1974ல். சாகித்திய மண்டலப் பரிசுநூல் தெரிவுக்குழுவில் இடம்பெற்றர்.
தமிழ்மொழி, வடமொழி, சமயம் எனும் முத்துறை களிலும் புலமை பெற்றுள்ள இவரின் சமய ஆக்கங்கள் ஆழமான, அறிவைக்காட்டுவன். இல்ங்கையின்" தமிழர் வரலாற்றிலும், யாழ்ப்பான்ப்பார்ம்பரியத்திலும் இவருக்கு மிக்க ஈடுபாடுண்டு. "சிறுவ்ர்க்கர்னல் சிறுகதைகள், சிலவும் எழுதியுள்ளார். தமிழில் சிறுவர். இலக்கியம் வளர்க்கப் Lit - T5 காலகட்டத்தில் இவரின் ஆக்கங்கள் தோன்றியமை
49

Page 35
முக்கியமானதாகும், இலக்கியம், இலக்கணம், சமயம் என் பவற்றில் கட்டுரைகள் எழுதியதோடு நாடக இலக்கியத் திலும் முயற்சி எடுத்துள்ள ர். பலதுறைகளிலுமுள்ள கற்றவர்கள் இவருடன் கடிதத்தொடர்பு கொண்டு சில பணிகளைச் செய்வித்தனர். இவரது ஆக்கங்களின் தொகுப் பாக 87 ல் "பஞ்சாட்சரம்' என்ற நூல் வெளியிடப்பட்டுள் டது. தொடந்தும் தமிழ்ப்பணி செய்யும் இவரது ஆக்கங் கள் மன்ருெரு நூலாக வெளிவரலாம்.
இவரது வாரிசான மகன் “கோப்பாய்சிவம்" இவரின் வழியில் தமிழ்பணி, சமயப்பணியாற்றி வருகிருர், கவிதை கட்டுரை, சிறுகதைகளைப் பிரபல பத்திரிகைகட்கும் வானெலிக்கும் எழுதியுள்ளார். சிலவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். வளந்து வரும இவரின் பணி காலஓட்டத்தில் சிறப்புப் பெறும்.
சமய விருத்திக்கான ஆலோசனைகள் இங்குள்ள கோயில்களில் முக்காலப் பூசைகளை ஒழுங் காக நடத்தச் செய்யலாம். சைவச் சிருர்க்குக் குருகுலம் அமைத்து சைவாசாரியார் பயிற்சி அளிக்கலாம். கோவில் களில் வெள்ளிதோறும் சமய, வகுப்புக்கள், பஜனைகள் நடத்திச் சமயப் பற்றினை வளர்க்கலாம். தனியார் நிர் வகிக்கும் கோயில்களைப் பரிபாலன சபையொன்றை ஏற் படுத்தி அதனிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தால் பூசை கள், ஒழுங்குகள் கவனிக்கப்பட வாய்ப்புக்கள் உண்டு. உதாரணமாகக் கோப்பாய் வடக்கு பலானைக் கண்ணகை பம்மன் கோயில் நீதி மன்றத்தால் ஒரு சபையிடம் ஒப் படைக்கப்பட்ட பின், திருப்பணி வேலைகளும், கோயிற் கைங்கரியங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சைவ ஆசாரியர்களாக வருபவர்கட்கு ஒரு 'ஒழுக்கக் கோவை' தயாரித்து நடைமுறைப் படுத்தலாம். கோயில் பூசகர்களின் வேதனம் சபையால் நிர்ணயிக்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும். கோயிலின் சுகாதாரம் கிராமோ தய சபைகளால் பேணப்பட வேண்டும். சைவ மன்றங்கள் நிறுவிச் சமயப் பிரச்சாரப் பணியில் ஈடுபட வேண்டும். ஏனெனில் அண்மைக்காலமாகச் சமயமாற்றம் நடை பெற்று வருவதைத் தடுப்பதற்காகும்.
50

கோவைப்பதிக் கல்விவிருத்தியில் தமிழின் நிலை. கோவைப்பதியில் தமிழின் வரலாற்றுச் சிறப்பு.
ஏறத்தாழ 1800ம் ஆண்டு தொடக்கம் ஒரு நூற் றைம்பது ஆண்டுகளாகக் கோப்பாய், இருபாலைக் கிராமங் களில் தமிழ் முன்னேற்றப்பாதையில் பவனிவந்த வரலாற்றை அறியலாம். முதலில், ஆறுமுகநாவலருக்கு இலக்கிய இலக் கணம் கற்பித்த சேனதிராய முதலியாரில் தொடங்கி அவரது திண்ணைப்பள்ளிக்கூடத்தில் கற்றுத்தேறி வெளிவந்த பலரைக் காணலாம். சரவணமுத்து, ஆறுமுகநாவலர், சபா பதிநாவலர், கந்தையா என்போர் இருபாலையில் தமிழ் கற்ற சிலராவார். м
தமிழ் வளர்ச்சியினூடு சமயவளர்ச்சியும் பின்னிப்பி அணந்தவை, பிரபல்யமான கோயில்களில் புராணபடனம் நடத்துவது வழக்கம், கோப்பாயில் பிள்ளையார், அம்மன், முருகன் கோயில்களில் திருவாதவூரடிகள் புராணம், திரு வெம்பாவைக்கும் கந்தபுராணம் சூரன்போருக்கும் முடியத் தக்கதாகப் பாட்டும்பயனும் நிகழ்த்துவர். ஒருவர் பாடலைச் சொல்ல இன்னெருவர் பயன் சொல்வார். இவ்வாறு சதா சிவஐயர், மகேசசர்மா என்னுமிருவர் பயன் சொல்வதில் சிறப்பிடம் பெற்றிருந்தனர். இவர்களின் பின் வித்துவான் முருகேசபிள்ளையும், அல்வாய் கணபதிப்பிள்ளை ஆசிரியரும் தொடர்ந்து நடத்திவந்தனர். வீர சைவர்களுள் வேதா ரணியர், நமசிவாயர் இருவரும் பயன் சொல்லும் ஆற்றல், பெற்றவர்கள்.
903ல் தேகவியோகமான சபாபதிநாவலர் பலநூல் களையும் உரைநூல்களையும் எழுதிபதுடன் பிரசங்கங்களும் செய்து வந்துள்ளார். இவரின் பணி கோப்பாயில் நடந்ததை விடச்சிறப்பாக சிதம்பரம், இராமநாதபுரம் போன்ற இடங் களில் நடத்துவத்தது.
இலக்கணக் கோவிந்தர் எனப் பெயர்சூட்டப்பட்ட புலோலிக் குமாரசாமிப்புலவர் கோப்பாயில் 1915 வரையில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கற்பித்துவந்தார்" இவர் நாவலடியில் சிவசுப்பிரமணியம் ஐயா அவர்கள் வீட்டில் வாழ்ந்து வந்தகாலை, இவரிடம் சென்று வீட்டில் ஊரவர் கற்றும், புராண விளக்கம் கேட்டும் வருவதுண்டு. இவ்வில் லமும்திண்ணைப் பாடசாலைப்பாணியில் நடந்துவந்தது. மட்டு
51

Page 36
விலிலிருந்தும் மாணவர் இங்கு வந்து விடுதியில் தங்கிக் கற்றனர்" ஏனைய கிராமங்கட்கில்லாத தமிழ்வாடை அன்று தொட்டே கோவையில் வீசிற்று. அல் வாய் கணபதிப்பிள்ளை காரைநகர் அருணசலம் சிவசம்பு என்போர் இங்கு கற்றுேரே. அருணுசல உபாத்தியார் தாரைநகரிலிருந்து நடையில் வந்து புலோலிக்குமாரசாமிப் புலவருடன் లి. U uit in j செல்வார்.
'முறையான பாடசாலை அமைப்புத் தொடங்கிய பின் r கென்ஸ்மன், ஹிச்கொக் என்பவர்களின் முயற்சியால் Gsmi'ufrvi கிறிஸ்தவுக்கல்லூரி,டிருவானது. இந்த இடத்தில் ஆரம்ப காலத்தில் முப்பிரிவாகப் பாடசாலை நடைபெற்று பின்னர் ஒன்ருக்கப்பட்டது இக்கல்லூரியில் 1855 வரையில் சி - வை தாமோதரம்பிள்ளை சிறுப்பிட்டியில் இருந்து வந்து தமிழ் கற்பித்தார். இவர் கிறிஸ்தவ மதகுருட்ாரின் வேண்டு கோளுக்கிணங்க மதபோதனை நூல்களைத்தமிழில் இயற்றி அச்சேற்றி உதவினர். அச்சுப்பிழையும் இல்க்கண வழுவு மின்றி அந்நூல்கள் ಟ್ವಿಲೆ θι Φ. மாணவருக்கு வழங்கப்பட்டன. தமிழ்மூலம் சைவப்பணியாக நாவலர் பெருமான் இங்கு ஒரு சைவப்பாடசலயை 1872 . ஸ் தாபித்தார் . இப்பணிகள் இங்கு நடக்க ஊரவர் ஆதரவும் அவர்கள் கற்பதில் காட்டிய ஊக்கமும் காரணமாகும். இவற்ருல் கோவையில் இளஞ்சந்ததி "கற்று, முன்னேறிற்று எனலாம்.
தமிழ் வளர்ச்சிக் கூடங்கள் திண்ணைப் பாடசாலைகள்,
ஈழத்துத் தமிழியல் வரலாற்றில் குரு குலக் கல்வியில் ஒரு மரபு வழித்தன்மை உண்டு. இவ்வரிசையில் தென் கோவையில் இருபாலையில் வாழ்ந்த நெல்லைநாத முதலி tu nrri பரம்பரையைக் கூறலாம். முதலியார் ஈடிணையற்ற ஞாபகசக்தி உடையவர். இநத அளவிறந்த நினைவாற்றல் காரணமாக ஒருமுறை வாசித்ததையோ கேட்டதையோ, அப்படியே திருப்பிக் கூறவல்லவர் : "இவர் இல்லத்தில் திண் ணைப்பாடசாலைய்ொன்றும் இருந்தது. கல்வி பயில்வோர் இவரில்லத் திசைநோசுகி வணங்கிப் பயிலத் தொடங்குவர். ஒரளவு கற்ருேர் சந்தேக விபரீதம், ஐயம் திரிபு ஏற்படின், இவரையணுகித் தெளிவு பெறுவர். புலவர்கள் தாம் யாத்த செய்யுட்களை முதலியாரின் முன்னிலையில் பாடிப் பேறு "பெற விரும்பி க்ருவர்: நெல்லைநாதரின் மகனே பின்னுளில் சிறப்புப் பெற்ற சேனதிராசமுதலியார். இத்திண்ணைப்
52

பாடசாலையில் பயின்றவர், பின்னர் வேறிடங்கட்குச் சென்று உயர்கல்வி பெற்றவர். இருந்தும் பத்தொன்பதாம் நூற்ருண்டில் வாழ்ந்தவர்களில் தமிழ், சமயம் இரண்டிற் கும் செய்த தொண்டு யாவருமறிந்ததே. இவரின் மாணவ பரம்பரையினர் நாடெங்கும் தமிழையும் சைவத்தையும் ஊக்கத்துடன் வளர்த்தனர். இவர் வீட்டுத் திண்ணைப் பாடசாலையில் காலே, மாலை தமிழ் ஆர்வம் உள்ளோர் சென்று பாட்ம் கேட்டு வந்தனர். இவரது மாணவராக நல்லூர் சரவணமுத்துப்புலவரும் ஆறுமுகநாவலரும் பாடம் பயின்றவர்க்ளே.
சேதிைராச முதலிவழி வந்த கந்தையாப் பண்டிதர் அவர்கட்கும் சிறுவயதில் சின்னப்பாபிள்ளை என்பவர் கல்வி கற்பித்தார் இவரது வீட்டில் தான் சிலகாலம் சென்று கல்வி பயின்று, பின் நல்லூரிலிருந்த புலவர் சு சரவண முத்து என்பவரிடமும் வாலிபப் பிராயத்தில் சுன்னகம் அ . குமாரசாமிப்புலவர் வீட்டிலும் சென்று கற்றர். இவ் வாறு தமிழ் ஆர்வம் மிக்கவர்கள் தமிழ் கற்றேரிடம் அவர் களது வீடுகளிலேயே போய்ப்படித்து வந்தனர்.
உடுப்பிட்டியைச்சேர்ந்த சின்ன அம்பலவாணர் என்பவர் தமிழார்வம் மிக்கவர். இவர், இந்தியா சென்று திண்ணைப் பள்ளிக்கூட அமைப்பைப்பழகி வந்தவர். ஆறுமுகநாவ' லருடன் சேர்ந்து 1845 ம் ஆண்டளவில் கோப்பாயில் நாவல டியிலும், உடுப்பிட்டியில் இமையாணனிலும் திண்ணைப் பாடசாலைகளை அமைத்து மாணவருக்குக் கல்வி புகட்டினர் இதில் கந்தையா உடையார் என்பவரும் ( சேர். கந்தையா, வைத்தியநாதனின் தந்தை இங்கு கல்வி கற்றவர். பின்னர் இது நடைபெருமல் நின்றுவிட்டது.
ஆங்கிலேயர் காலம் சைவப்பாடசாலைகள் ஐந்தாழ் வகுப்புடன் நின்றுவிடும். 6 ம் வகுப்புப் படிக்கவேண்டுமானல் கிறிஸ்தவனுகி, வேதப்பாடசாலையில் சேர்ந்து பயிலலாம். காரைநகரில் சைவப்பாடசாலையில் 5 ம் வகுப்பு முடித்த நான்குபேர் 6 ம் வகுப்பில் சேரவிரும்பினர். நான்கு பேரும் 6 ம் வகுப்பில் சேர்ந்து பயின்றனர். மூன்றுபேர் வேதத்துக்கு மாற சங்கரப்பிள்ளை அருணுசலம் என்பவர் மாத்திரம் மாற வில்லை. மாறுவதாகக் கூறிக்கொண்டு பரீட்சை எழுதி விட்டார். இனி மாரு விட்டல் ஆபத்தெனக்கண்டு, கொழும்பில் செல்வாக்குப் பெற்றிருந்த சேர் . அம்பல வாணர் கனகசபையிடம் சென்று செய்வதென்ன எனக் கேட்டு, அவர்மூலம் கத்தோலிக்க சபைப் போதகரிடம் இருந்து சான்றிதழ் பெற்ருர், காரைநகர் திரும்பி ஊரில்
53

Page 37
திண்ண்ைப்பாடசாலை ஆரம்பித்தார். வகுப்புக்கள் நடத்த இடம் போதாததால் கீரிமலை சிறுப்பர் மடத்தில் வகுப்புக் களைத் தொடங்கினர். கீரிமலைக்கு " இந்துபோட் " இராச ரத்தினம் போய் வருவதால் அங்கு அருளுசலத்துக்குப் பழக்கம் ஏற்பட்டது. கீரிமலையிலும் இடநெருக்கடி தோன்ற * இந்துபோட் " இராசரத்தினம் அப்பாடசாலையைக் கோப் பாய் நாவலடியில் தொடக்கினர். இதற்கு முருகேசு சுவாமி நாதன் என்பவர் கட்டடம் வழங்க, முன்னுள் பாராளு மன்ற உறுப்பினர் சி . கதிரவேற்பிள்ளையின் பேரனுர் சுப்பி ரமணியம் மாணவருக்குப் பகலுணவு அளித்தார். சைவப் பிள்ளைகளுக்குக் கற்பிக்கச் சைவ ஆசிரியர்கள் இல்லாத குறையைப் போக்கவென இவர்களுடன் சேர் . பொன் இராமநாதன் அவர்களும் சேர்ந்து முயன்ருர், திண்ணைப் பாடசாலைகளை ஆரம்பித்த இந்த இடம் அரசாங்கத்திடம் பாடசாலையாக அங்கீகரிக்கக் கோரியபோது இடவசதி, விளை யாட்டிடம் முதலியன இல்ல த காரணத்தால் மறுக்கப் பட்டது. சேர் . இராமநாதன் பரமேஸ்வராக் கல்லூரி அமைக்கத் தீர்மானித்த நிலம் இருபாலையில் இருந்தது. அவ்விடத்தைக் கொடுத்துதவ, இதில் ஐக்கிய போதன பயிற்சிச்சாலை உருவானது. அத்துடன் ந வலடியிலிருந் 5 திண்ணைப் பாடசாலை இங்கு இடம் மாறியது.
வடகோவையில் ஜகந்நாதக்குருக்கள் வீட்டில் திண்ணேப் பாடசாலை நடைபெற்று வந்தது. இவரிடம் கற்ற மான வரே சபாபதிநாவலர் அவர்கள். பின்னர் சபாபதி நாவலர் மகிழடி வைரவர் கோவிலின் வெளிவீதியிலுள்ள மடத்தில் இவ்வாருண பாடச லையை நடத்தி வந்தார். அவர் இந்தியா சென்று விட்டால் இது நடப்பதில்லை. வரும்வேளே மாணவர் சென்று கற்றுவருவர் தமக்கு விருப்பமான மாணவரானல் ம ன்தோல் ஆசனமளித்துப் பாடம் சொல்லித்தருவார். மற்றையோர் நின்றும், நிலத்திலிருந்தும் கற்பர்.
இதே பாணியில் இன்று பாடம் சொல்லிக் கொடுத்து வருபவர் அ வி . மயில்வாகனன் அவர்கள். தமது வீட்டி லும், கோட்டத்திலும் வரும் மாணவர்க்கும் வயோதி பர்க்கும் போதிக்கிருர், பாட சம்பந்தமாக மாணவர்க்கும் *ւՔաւք, ஆங்கிலம் என்பவற்றை வயோதிபர்க்கும் கற்பிக்கிா?ர்.
கோவைப்பதியில் பாலர் பாடசாலைகள்.
இப்பிரதேசத்திலுள்ள அநேகம் பாலர் பாடசாலைகள் சனசமூகநிலையங்களில் நடக்கின்றன. காலதொடக்கம் நன்

பகல் வரையில் பாலர் பாடசாலையாகவும், LDrt 2a), இரவு வேளைகளில் வாசிகசாலை ஆகவும் இயங்குகின்றன.
கோப்பாய் பரி கன்னி மரியாள் பாலர் பாடசாலை .
இது கோப்பாய் தெற்கு கிறிஸ்தவக்கல்லூரியைச் சேர்ந்த தேவாலயத்தாரால் நடத்தப்படுகிறது. நவீன கல்விச் சாதனங்கள் கொண்டமைந்த இப்பாடசாலையில் சுமார் 40 பாலர் பயில்கின்றனர்.
கோப்பாய் தெற்கு வெள்ளெருவை சனசமூக நிலையப் u nr 6) fr UI TLF fr?s)
இது 1980 ம் ஆண்டு விஜயதசமி தினத்தில் ஆரம்பிக் கப்பட்டு நடத்தப்படுகிறது. இலங்கைக் கிராமிய மீளமைப்பு நிறுவனத்தின் உதவியுடன் ஆரம்பமானது. இரு பயிற்சி பெற்ற ஆசிரியர்களுடன் ஆரம்பமான இப்பாடசாலை. பின் நிறுவனப் பராமரிப்புச் செலவுகளைக் குறைக்க தேர்ந் ததால் சனசமூக நிலையத்தால் பொறுப்பேற்கப்பட்டது. இங்கு கற்பிக்கும் ஆசிரியருக்குச் சம்பளம் சனசமூக நிலை யத்தால் வழங்கப்படுகிறது. 25 பிள்ளைகள் வரை கற்கிருச் கள். விஜயதசமி விழா, போட்டிப் பரீட்சைகள் என்ப வற்றை நடத்துகிறது.
கோப்பாய் வடக்கு சனசமூக நிலையப் பாலர் பாடசாலை
சனசமூக நிலையமும் கிராம முன்னேற்றச் சங்கமும் இணைந்து ஒரே கட்டடத்தில் செயற்படுகின்றன, இக்கட் டிடத்தில் ஒரு பாலர் பாடசாலை நடைபெற்று வருகிறது. இதைச் சனசமூக நிலையம் பராமரிக்கின்றது. சிறுவர்கட்காக வாணிவிழா கொண்டாடப்படுகிறது. R செலின் பாலர் பாடசாலை
இருபாலைச் சந்திக்கருகில் உள்ள தனியார் கல்வி நிறு வனமான செலின் இன்ஸ்ரிரியூட் ஒரு பாலர் பாடசாலையை நடத்தி வருகிறது. இது மிக அண்மைக்காலத்தில் ஆரம் பிக்கப்பட்டது. :
; : :
கோப்பாய் தெற்கு றேமன் கத்தோலிக்கப் பாலர் பாடசாலை ۔۔۔۔۔
இப்பாடசாலை அருகில் உள்ள தேவாலயத்தால் நடத் தப்பட்டு வருகிறது. இருபது பிள்ளைகள் அளவில் கற்கி ருர்கள். ஒரு ஆசிரியர் கற்பிக்கிருர்,
55

Page 38
சுப்பிரமுனிய கோட்டப் பால்ர் பாடசாலை
இப்பாடசாலை 1980 ம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வருகிறது. 15 பிள்ளைகள் கல்வி கற்கிருர்கள். நவீன கற்கைச் சாதனங்களை அவ்விடத்துப் பெரியார்கள் அன்ப ளிப்புச் செய்துள்ளார்கள். ஒரு ஆசிரியை கவனித்து வரு கிருர். இந்த ஆசரியை குருதேவருக்குத் தான் செய்யும் பணியாகக் கருதி இதைச் செய்து வருகிருர். வள்ளியம்மன் சனசமூக நிலையப் பாலர் பாடசாலை
இது 1986 ம் ஆண்டு தொடக்கம் நடத்தப்பட்டு வந்தது. இப்பொழுது இராணுவ நடவடிக்கைகளின் பின்பு நிறுத்தப்பட்டுள்ளது. v • , - கோப்பாய் வடக்கு மாதர் சங் கப் பாலர் பாடசாலை
இச்சங்கமும் அதன் கட்டிடத்தில் நீண்டகாலமாக ஒரு பாலர் பாடசாலை நடத்தி வருகிறது. இந்தச் சங்கத்தின் தலைவியாக மகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் இருக்கி முர்கள். உத்தேசம் 30 பிள்ளைகள் கற்கிருர்கள். ஞான பாஸ்கரோதய பாலர் பாடசாலை
ஞான பாஸ்கரோதய சங்கப் பணிகளில் ஒன்றுகப் பாலர் பாடசாலை ஆரம்பித்து நடத்துவதும அமைகிறது. மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் கீழ் இப்பால்ர் பாடசாலை படித்த யுவதிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. அயலி லுள்ள சிறுகளைப் பாடசாலைக்குச் செல்லுமுன் தயார்ப டுத்தும் பணியாகவும் நற்பழக்கம் சமய நம்பிக்கையுடன் வளரச்சிரு ரைப் பயிற்றுவிக்கிருரர்கள். இப்பாடசாலை நவராத் திரிவிழா, பாலர் விளையாட்டுப்போட்டி என்பவற்றை நடத்திவருகிறது. வாணி பாலர் பாடசாலை ,• 7 ܖ "&
பழையதெரு வீரபத்திரர் கோயில் அருகாமையில் அமைந்து உள்ளது. 15 மாணவர்கள் படிக்கிறர்கள். பாரதி கலாமன்றப் பாலர் UiTL3 Tau).
இருபாலையில் இச்சனசமூகநிலை - ம் ஒரு பாலர் பாடசா ஐலயை நடத்தி வருகிறது. இங்கு நவராத்திரிவிழாக் கொண்டாடப்படுகிறது.
இவற்றைவிட வீடுகளில் பெண்பிள்ளைகள் ஒரு தொழி லாகச் செய்து வருகிறர்கள். ஜி . சி. இ . யுடன் படிப்பை நிற்பாட்டியவர்கள் இவ்விதம் வீடுகளில் நடத்திவருகிறர்கள்:
56

இவற்றின் தொகை இக்கொத்தணி அமைப்புக்குக் கீழ்க் கிட்டத்தட்ட ஆறு இடங்களில் நடைபெற்று வருகின்றன . ஆறு இடங்களிலும் மொத்தமாக 70 பிள்ளைகள் அளவில்
கல்வி கற்று வருகிருரர்கள் கோவைப்பதிப் பாடசாலைகள் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி
இப்பாடசாலை 1823ம் ஆண்டளவில் ஓர் ஒலைக்கொட் டிலில் தற்சமயம் தேவாலயம் அமைந்துள்ள வளவில்" தொடங்கப்பட்டது. வட்டுக்கோட்டை செமினரியும் சம காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாக அறியக் கிடக்கிறது: இவ்விடத்தில் இப்பாடசாலை தேவாலயமாகவும், கிழமை யில் சில நாட்கள் பாவிக்கப்பட்டு வந்தது. இவ்விதம் இருந்து வந்ததை விரும்பாத கோப்பாய் வாசிகள் சிலர் முற்றுமுழுதாகக் குறித்த ஒலைக் கொட்டில் பாடசாலைக்கே பாவிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்ததோடு நில், லாது, சில விசமிகள் ஒர் இரவு குறித்த ஒலைக்கொட்டி" லுக்குத் தீமூட்டி எரித்து விட்டார்கள் இது சம்பந்தமாக இருவர் அரசாங்கத்தினுல் தண்டிக்கப்பட்டிருந்தாலும், இவ். விட்ட மக்களின் மனதில் ஒர் மாற்றம் ஏற்படும் வரை பாடப சஜலயை அக்கறை எடுத்து நடாத்தி வந்த பாதிரிமார்கள் பாடசாலையை நடத்துவதில் சோர்வடையவிட்டு விட்டார்
வருடங்கள் சில சென்றபின் திரும்பவும் ஒரு தற்காலிக அமைப்பு ஏற்படுத்தப்பட்டு பாடசாலையும், தேவாலயமும் இயங்கி வந்தன. இக் காலப்பகுதியில், அதாவது 1850 . 1855 ஆண்டளவில் சிறுப்பிட்டியூர் தமிழ் வளர்த்த சி. வை தாமோதரம்பிள்ளை அவர்களும் இக்கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியதாக அவரின் சரித்திரப் புத் தகங்களில் கூறப்பட்டுள்ளது நோக்கற்பாலது.
பின்பு, இலங்கையின் வடபகுதிக்கு வரிசேர்க்கும் அதி காரியாகப் பத்தொன்பது வயதில் நியமனம் பெற்று காலக் கிரமத்தில் "யாழ்ப்பாண அரசனகப்" பெயர் எடுத்துக் கொண்ட டைக் துரை அவர்களினதும் சங்கைக்குரிய அம் பலவாணர் அவர்களினதும் பெரும் முயற்சியால் இவரி களில் பின்னவர் நன்கொடையாக ஈந்த எழுபது பரப்பு விஸ்தீரணம் கொண்ட நிலத்தில் ஒரு தேவாலயம் கட்டப் பெற்றது. இத்தேவாலயத்தின் பின் புறத்தில் கிறிஸ்தவப் பிள்ளைகளுக்காக, தேவாலய மிசனரி சபையின் ஆதரவின்
5t

Page 39
கீழ் 1890ம் ஆண்டளவில், சங்கைக்குரிய ஹிச்க்கொக், சங்கைக்குரிய் கென்ஸ்மன் ஆகியோரின் முயற்சியால் இப் பாடசாலை நடைபெற்று வந்தது. அப்பொழுது அதன் அதிப ராக ஏ. எம். நத்தானியல் அவர்கள் நியமிக்கப்பட்ட்டார்
o
இதைத் தொடர்ந்து றெவரென் ஐ. எஸ். இரத்தின திக்கம் திரு. பீற்றர் செல்லையா , திரு. ஏ. எம். இராச சேகரம், திரு. ஈ சி. ஏ. நவரத்தினராசா, திரு. ஜி. எஸ். செல்லையா, திரு, ஈ, கே. சண்முகநாதன், திரு. எம். கார்த்திகேசன், எஸ். கந்தசாமி, எஸ். சிவசுப்பிரமணி யம், திரு. எஸ். சிவனேசன், திரு. எஸ். செல்வரத்தினம் , திரு. பூ க. இராசரத்தினம் ஆகியோர் அதிபர்களாக இருந்தனர். இறுதியிற் சொன்னவர் இன்னும் இருக்கிருர்,
1911 - 14 காலப்பகுதியில் தற்சமயம் அதிபர் காரி யாலயமாய் உள்ள அறையும் அதைத் தொடர்ந்த பொது, அலுவலகமும் கிறிஸ்தவ ஆசிரியர்கட்குப் பயிற்சி வகுப்பு நடக்கும் கலாசாலையாக இருந்து வந்தது. பின்னர் இதே இடத்தில் இந்து ஆசிரிய மாணவர்களுக்கும் பயிற்சி வகுப் புக்கள் நடத்த அனுமதிக்கப்பட்டு திரு. இளையதம்பி என் பவர் இப்பயிற்சிக் கலாசாலை பின் அதிபராக இருந்தார். 1923ம் ஆண்டளவில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலா சாலை தொடங்கியதும் இது கைவிடப்பட்டது.
1920ல் தமிழ் ஆரம்பப் பாடசாலை புறம்பான தலைமை ஆசிரியரின் கீழ் நடந்தது. இதே வளவில் ஆங்கிலப் பாட சாலை தனியாக நடந்தது. ஆரம்பப் பாடசான்லக் கல்வியை முடித்தோர் ஆங்கிலப் பாடசாலையில் சேருவர். சி. எம்* எஸ். என ஆங்கிலப் பாடசாலை அழைக்கப்பட்டது. இங்கு பெண்களுக்கெனப் பெண்கள் பாடசாலையும், விடுதி வசதி யும் இருந்தது. செல்வி, விற்னேயும், செல்வி, கட்சின்ஸ் சும் விடுதியை நடத்தினர். பெண்கள் பாடசாலையில் போதனமொழி தமிழ். இங்கு முதலாம் வகுப்புத் தொடக் கம் மூன்ரும் வகுப்பு வரை ஆரம்பப் பாடசாலையும், இன ஞெரு கட்டடத்தில் பெண்கள் தமிழ் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையும் நடந்தது. ஆரம்பப்பாடசாலையின் தொடர்ச் சியாக 4ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை இன்ஒெரு கட்டடத்தில் நடந்தது. இவை யாவற்றையும் மேற்பார்வை செய்யும் பொறுப்பு செல்வி. கட்சின்ஸ்சிடம் இருந்தது.
ஆங்கிலப் பாடசாலையில் எல்லாப் பாடமும் ஆங்கிலத் திலேயே போதிக்கப்பட்டது. பாடசாலையில் தராதரப்
58;

பத்திர வகுப்பு ஈ. எஸ். எல். சி வரை இருந்தது இங்கு கற்று முடிய, இதே சபையைச் சேர்ந்த பரி. யோவான் கல்லூரிக்கு உயர் கல்வி கற்க மாணவர் அனுப்பப்படுவர் இந்த நூற்றண்டின் தொடக்கத்தில் பேராசிரியர் சி: சுந்தரலிங்கம், (பின்னல் பாராளுமன்ற உறுப்பின ராகவும், மந்திரியாகவும் இருந்தவர்) ஆரம்பக் கல்வியை இங்கு பெற்ருர்,
மிகப் பழைய கட்டிடங்களாக இருந்த இவைகளில் சில வற்றை திரு. நவரத்தினராசா அதிபராக இருந்த போது திருத்தியும், புதிதாக விஞ்ஞானகூடங்கள் அமைத்தும், அதிபர். திரு. சிவனேசன் காலத்தில் பிரதான மண்டபம் அமைத்தும் உள்ளனர். பின்வந்த அதிபர்கள் காலத்தில் வகுப்பறைகள் கட்டப்பட்டன. இன்றைய அதிபர் காலத் தில் இங்கு கற்கும் இந்து மாணவருக்கு ஒருபிரார்த்தனை மண்டபம் கட்டப்பட்டு மஞ்சம் அமைக்கப்பட்டுள்ளது.
1880 - 890 இடைப்பட்ட காலத்தில் இருந்த மாணவர் தொகை 1918 அளவில் நூறுகளாகப் பெருகி 'இப்போது 1100 மாணவர் வரையிலும்' நாற்பதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களும் உள்ளனர். இப்பாடசாலையின் ஆரம்பப்பிரிவை நீக்கி 6 முதல் 12 வரை வகுப்புக்கள் கொண்டதாக அமைக்கப்பட்டு நாவலர் பாடசாலையை இதன் ஆதாரப்பாடசாலையாகக் கல்வி அமைச்சு ஆக்கி யுள்ளது.
இங்கிருந்து பல்கலைக்கழகத்திற்கும் தொழில் நுட்பக்
கல்லூரிக்கும் மாணவர் சென்றுள்ளனர். கிறிஸ்தவக் கல்லூரி எனப் பெயர் பெற்றிருந்தாலும் அதிகமான மாணவர் இந்துக்களாக உள்ளனர். இவர்கட்கு இந்து
மாமன்றம் என ஒன்றமைத்து தமிழ் மக்களின் பண்பாட்டில் சமயம் சார்ந்த உணர்வுகளும் நம்பிக்கைகளும் கெடாமல் பாதுகாக்கிறது. வருடாவருடம் நவராத்திரிவிழா கொண் டாடி வருவதுடன் , 1987ல் நவராத்திரி வெளியீடாகத் தோத்திரபாமாலை வெளியிடப்பட்டுள்ளது. சைவச்சிருருக் கெனப் பிரார்த்தனை மண்டபம் ஒன்று கட்டப்பட்டு தினம் குத்துவிளக்கேற்றியே கல்லூரி ஆரம்பமாகிறது.
கோப்பாய்க் கொத்தணியின் மூலாதாரப் பாடசாலை யாக உள்ள இப்பாடசாலை அதிபரின் கீழ் 10 பாடசாலைகள் இயங்குகின்றன. ஏறத்தாழ 4000 மாணவர்களையும் 140
59

Page 40
ஆசிரியர்களையும் கொண்டு இவ்வணி கல்விப்பணிபுரிகிறது. கொத்தணியின் அதிபராக திரு. பூ. க" இராசரத்தினம் கடமையாற்றுகிருர்,
கோப்பாய் தெற்கு றேமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலை:
இது கோப்பாய் தெற்கில் அமலோற்பவமாதா ஆலய வளவில் அமைந்துள்ளது. மிசனரிமார் காலத்தில் சைவ மக்களைக் கத்தோலிக்க சமயத்திற்கு மாற்றி கல்வி போதிப் பது வழக்கம் ஆதலால் ஆலயத்துடன் கட்டப்பட்டது. இப்பாடசாலையில் ஆரம்பவகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை அமைந்துள்ளது. ஏறக்குறைய 200 பிள்ளைகள் கல்வி கற்கி ருர்கள். அரசாங்கம் பொறுப்பேற்க முன்னம் இதே நிலை யில்தான் இப்பாடசாலை இருந்து வந்தது. இன்றுகொத்தணி அமைப்பில் கோப்பாய்க் கொத்தணியில் இடம்பெறும் இப்பாடசாலை கிறிஸ்தவக் கல்லூரியின் ஆதாரப்பாடசாலை யாய் உள்ளது.
கோப்பாய் வடக்கு றேமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை:
மேற்கூறியபடியே இப்பாடசாலையும் மிசனரி காலத்தில் அமைக்கப்பட்டுக் கல்விப்பணியாற்றுகிறது. இதுவும் ஆரம்பப் பாடசாலையாக ஏறக்குறைய 120 மாணவர்களைக் கொண்டு இயங்குகிறது. கோப்பாய் வடக்கு ருேமன் கத் தோலிக்கத் தேவாலயம் அமைந்துள்ள ஒழுங்கையில் கோப்பாய் உரும்பிராய்த்தெரு சந்திக்கும் இடத்திலிருந்து 50 யாருக்குள் உள்ளது.
1936ம் ஆண்டு அதிபர் அருமைநாயகம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இவரின் மனைவியாரும் இதே பாட சாலையில் சேர்ந்து இருவரும் தொடக்கத்தில் கல்வி கற்பித் தார்கள். கத்தோலிக்க மிசன் 1 3/4 பரப்பு நிலத்தை இவ்விடத்தில் கொள்வனவு செய்து இப்பாடசாலையை ஆரம்பிக்க உதவியது.
தொடக்கத்தில் 4 ம் வகுப்பு வரை இருந்து. பின்பு மாணவர்களின் வரவு கூடிவந்து 1948 ம் - 1950ம் ஆண்ட ளவில் 8ம் வகுப்பு வரை விசாலிக்கப்பட்டிருந்தது. பின்பு கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியின் வளர்ச்சியுடன் மாண வர்களின் தொகை இப்பாடசாலையில் குறையத்தொடங்கி 1952 lb ஆண்டு தொடக்கம் 4ம் வகுப்பு வரையே 5التي قا
60

வருகிறது. தற்சமயம் திரு . அ . நாகரத்தினம் அவர்கள் அதிபராகக் கடமையாற்றுகிருர்கள். 120 பிள்ளைகளும் 7 ஆசிரியர்களும் இங்குளர். இந்த 120 பிள்ளைகளில் 45 பிள்ளைகள் அளவில் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர் கள். மற்றையோர் இந்துசமயிகள். கல்வி கற்பவர்களில் கூடியபகுதி இந்து மாணவர்களாக இருந்தாலும் மதபா குபாடு காட்டப்படாமல் சமய ஸ்தாபனங்கள் நடத்தும் சமயப் பரீட்சைகளில் பிள்ளைகள் தோற்ற அனுமதிக்கப்ப டுவார்கள். மேலும் இருமதத்தவர்களுக்கும் அன்ருடம் நடக்கும் பிரார்த்தனைகள் அவர்கள் கைக்கொள்ளும் மதத்திற்கு இசைவாகவே தனித்தனி நடத்தப்படுகிறது. இவ்விடம் உள்ள ஏழு ஆசிரியர்களில் ஒருவர் ஆங்கிலம் கற்பிக்கின் ருர், இந்த ஏழு ஆசிரியர்களையும் விட கத்தோ லிக்க மதத்தைக் கைக்கொள்ளும் மாணவர்களுக்குக் கத் தோலிக்க மதபோதனை செய்யவென இவ்விடத்தில் உள்ள கத்தோலிக்கத் தேவாலயம் ஒரு ஆசிரியரையும் கொடுத்து தவியுள்ளது.
இப்பாடசாலைக்கென முன்பு ஸ்தாபிக்கப்பட்ட 1800 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட ஒரு கட்டிடமே உள்ளது: இது மாணவர்கள் இருந்து கல்வி கற்பதற்குப் போதாமல் உள்ளது. கட்டிடங்கள் வேறும் போடப்பட வேண்டும். குடிதண்ணிர், சுகாதார வசதிகள் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். தற்சமயம் இந்த வசதிகள் இல்லை. கோப்பாய் வடக்கு சி . சி . பாடசாலை:
கோப்பாய் வடக்ரு ருேமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையும், இப்பாடசாலையும் கோப்பாய் வடக் குப்பிரிவின் மத்தியில் 100 யார் தூர வித்தியாசத்தில் அமைந்துள்ளன. s
இந்த இரு பாடசாலைகளும் ஒரிடத்தில் அமைந்திருந் தாலும் இரண்டு பாடசாலைகளும் இரு வேறுமதி ஸ்தாப னங்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தன.
கோப்பாய் வடக்கு சி . சி , பாடசாலை 1931ம் ஆண்டு சாமுவேல் வைரமுத்து சின்னப்பா அவர்களால் ஆரம்பிக் கப்பட்டது. இச்சூழலில் உள்ள ருேமன் கத்தோலிக்கத் தமிழ்க்கலவன் பாடசாலை ஐந்து ஆண்டுகள். தாமதத்திலேயே தொடங்கிற்று. சி . சி . பாடசாலை அமைந்துள்ள நிலம் கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரி வளவில் அமைத்துள்ள தேவாலய நிர்வாகத்திற்குச் சொந்தமாக இருந்தது.இதன் விஸ்தீரணம். 2த் பரப்பாகும்.
61

Page 41
இப்பாடசாலையை ஆரம்பித்து வைத்த அதிபர் சின்னப்பா அவர்கள் இரண்டாம் உலகயுத்த காலத்தில் அவ்விடத்தில் அந்நேரத்தில் படித்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் பெற்றர்களுக்கும் இலவச உணவை மத்தியானத்தில் அளித்து வத்தார் என்று அறியக் கிடக்கின்றது. இவ்விதம் சின்னப்பா அவர்கள் எடுத்துக் கொண்ட அன்பு நடவடிக்கைகளால் மாணவர் வரவு கூடிவந்து பின்பு அவர் இளைப்பாறும் போது மாணவர் தொகை மிகவும் குறையத் தொடங்கியது. இப்பொழுது இப்பாடசாலையில் 40 பிள்ளைகள் மட்டும் கல்வி கற்கிறர் கள். இரு ஆசிரியர்கள் உள்ளனர். இப்பொழுது திரு . க்ே இராசையா அதிபராவர். இக்கட்டிடத்தில் முன்பு ஞாயிறு பாடசாலை மிசனுல் நடத்தப்பட்டு வந்தது. இப் பொழுதுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமையில் நடக்கும் மதபோதனை நடப்பதில்லை.
முதல் வருடம் தொடக்கம் ஐந்து வருடங்கள் வரை யான வகுப்புக்கள் மாத்திரம் இப்பொழுது நடைபெறு கின்றன. குடிதண்ணீர் வசதியில்லாது மாணவர்கள் கஷ் டப் படுகிருரர்கள். பாடசாலைக் கட்டிடத்தின் சீமெந்து நிலம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
கோப்பாய் மகாவித்தியாலயம்:
இப் பாடசாலை 1925 ம் ஆண்டு அரசாங்கத்தினுல் முடிக்குரிய நிலத்தில் தொடங்கப்பட்டது. கோப்பாய்க் கிறிஸ்தவக் கல்லூரி ஆங்கிலக் கல்வி நிலையமாக அந்நேரம் இருந்த படியால் அனேகம் பிள்ளைகள் காசு கொடுத்துப் படிக்க முடியாத காரணத்தால், இப் பாடசாலையை விரும்பி நாடினர். இது ஒரு சாதன பாடசாலையாகத் தொடங் கிற்று. உரும்பிராயைச் சேர்ந்த திரு. எஸ். ஆர். ஞான ரத்தினம் முதல் முதல் தலைமை ஆசிரியராக நியமனம் ஏற்று வந்தார். திருவாளர் பா. பீதாம்பரம் இவரின் உதவி ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார். 1928ம் ஆண்டளவில் எஸ். எஸ். சி. வகுப்பு வரை தொடங்கப்பட்டது. இக் காலத்தில் விடுதி வசதிகளும் உண்டாக்கப்பட்டுத் தீவுப் பகுதிகளிலிருந்து பிள்ளைகள் வந்து விடுதியில் தங்கியிருந்து படித்தார்கள். ஆரும் தரத்தில் கற்பிக்கப் பால பண்டிதர் கந்தையா அவர்களும் திருவாளர் க. விசுவலிங்கமும் சேர்க்கப்பட்டார்கள். இந்த இருவரும் பாடசாலைக்கு உழைத்தவர்களில் முன்னேடிகளாக இருக்கிறர்கள். இவர் களின் காலத்தில் தான் இப்பாடசாலைக்கு முன்புறத்தில்
62

நிற்கும் ஆலமரம் நடப்பெற்றதும் பாடசாலைக்கு ன்ன ஒரு வீதியும் அமைக்கப்பட்டனவாம். திரு. எஸ். ஆர். ஞான ரத்தினம் அவர்களின் பின் திரு. துரையப்பா அவர்கள்
அதிபரானர். இவரின் காலத்தில் 1000 பிள்ளைகள் அள வில் வந்து சேந்தார்கள். பின்பு பாடசாலைக் கென விஞ் ஞான கூட வசதிகள் செய்யப்பட்டன. பெரிய விளையாட்டு நிலம் முறைசாராக்கல்வி கற்கும் வசதிகள் யாவும் செய் யப்பட்டன.
இப் பாடசாலையின் தொடக்க காலத்தில் இருந்த
ஆசிரியர்களுள் திருமதி நாகம்மா கனகரத்தினம், பண்
டித மணி. கிருஸ்ணபிள்ளை, மட்டக்களப்புக் கல்லாற்றைச் சேர்ந்த சாமித்தம்பி போன்றவர்கள் மி வும் முக்கிய மாணவர்கள். பண்டிதமணி. கிருஸ்ணபிள்ளை அவர்கள் பாலபண்டிதர் சோதனைக்கு மாணவரை ஆயத்தம் செய்து அனுப்புவதில் வல்லவர். சாமித்தம்பி அவர்கள் சிறந்த
சைவ நெறி ஆசிரியர். இவர்களின் காலம் குறித்த பாட சாலையின் 'பொற்காலம்’ எனக் கருதப்படுகிறது. பண்
டிதமணி கிருஸ்ணபிள்ளை அவர்கள் இப் பாடசாலையில்
இருந்தே பலாலி பயிற்சிக் கலாசாலைக்குப் பதவி உயர்வு
பெற்றுச் சென்றர். இவர்கள் காலத்திலேயே முதல் முதல்
வடமாகாணத்தில் பதின்மூன்று பேர் ஒரு பாடசாலையில்
ஈ. எஸ். எல். சி சித்தி பெற்ருர்கள். இவ்விதம் சித்தி பெற்ற பதின்மூவரில் இருபாலேயைச் சேர்ந்த கந்தையா
உபாத்தியாயரும் ஒருவர். இவரே இருபாலையிலுள்ள கந்த வேள் பாடசாலை ஆரம்பிக்க மூலகர்த்தாவாக இருந்தவர் களில் ஒருவர். இக் கிராமத்தில் இப்பொழுது மகா வித்தி
யாலயத்தின் 60 வருட சரித்திரத்தைச் சொல்ல உயிருடன்
இருக்கும் பழைய மாணவர்களில் ஒருவரும் 31 வருட ஆசிரிய சேவை செய்து பல சமூகத் தொண்டுகள் ஆற்றி
85 வயதடைந்திருக்கும் பெரியாரும் இவரே ஆவர்.
இப்பொழுது கோப்பாய் மகாவித்தியாலயத்தில் 500 மாணவர் வரை கல்வி கற்கிறர்கள். கோப்பாய்க் கொத் தணிப் பாடசாலை அமைப்பில் இது ஒன்ருகும். இப் பாட சாலைக்கு அருமையான கட்டிடங்களும் சகல வசதிகளும் உண்டு. ஆகவே, தான் இடம் பெயர்ந்துள்ள பலாலி ஆசிரி யர் கலாசாலை மாணவர்களும் இங்கு விரிவுரை வசதிகள் பெறக்கூடியதாக உள்ளது. வடமாகாணத்தில் பெரிய விளை யாட்டு மைதானம் உள்ள பாடசாலைகளில் இதுவும் ஒன் ருகும். ஆரம்ப வகுப்பு முதல் க. பொ. த. சாதாரண தரம் வரையிலான வகுப்புகள் நடைபெறுகின்றன.
63

Page 42
பூதர்மடம் அரசாங்கத் தமிழ்க்கலவன் பாடசாலை:
கோப்பாய்க் கிராமம் 10 கிராமோதய சபை வட்டா ரங்களைக் கொண்டது. ஆஞல், முதலாம் வட்டாரத்தில் ஒரு பாடசாலையும் இல்லை. அப்போது கிராமசபைத் தலை வராக இருந்த திரு. பூ. க. இராசரத்தினம் அவர்கள் இவ் வட்டார மக்களுக்குப் பாடசாலையின் தேவை பற்றிப் பல மூறை கூறிவந்துள்ளார். காலஞ் சென்ற திரு. க. செல் லத்துரை (அதிபர்) பாடசாலை அமைக்க முன் வந்தார்." மக்களிடம் அதற்காக நிதி சேகரிக்கப்பட்டது. கோப்பாய் வடக்கிலுள்ள பூதர்மடத்தில் கட்டடம் அமைக்கப்பட்டது. 1960 ல் கட்டட வேலை பூர்த்தியாகி, கிராமசபைத் தலை வர் கல்வி இலாக்காவுடன் தொடர்பு கொண்டு பாட சாலையை அரச உதவிப் பாடசாலையாக அங்கீகாரம் பெறக். செய்தார். சிறிது காலத்தில் அரசாங்கத்தால் பாடசாலை, கள் கையேற்கப்பட்டபோது இதுவும் அரசாங்கப் பாட சாலை ஆனது.
இங்கு முதலாம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை இயங்கி வ்ருகிறது இன்று ஆரம்பப் பாடசாலையாகச் செயற் படும் இப் பாடசாலை பின்னர் வளர்ந்து வரலாம். இங்கு ஏறக்குறைய 40 மாணவர் கற்கின்றனர். கோப்பாய் சரவணபவானந்த வித்தியாசாலை:
1926ம் ஆண்டுக் காலப்பகுதி பிரதி ஞாயிற்றுக்கிழமை களில் கோப்பாய் சி. எம். எஸ் பெண்கள் பாடசாலை அதிபரான வெள்ளைக்கார அம்மாவும், ஆசிரியர்களும்' அயலிலுள்ள சென். மேரிஸ் தேவாலயக் குருவும் வட கோவைக் கிர்ாமத்தில் வந்து தேவ ஆராதனைக் கூட்டங்கள்" வைப்பதும் அயலிலுள்ள சிறியோர் - பெரியோர் கூடிநின்று கேட்பதும் வழக்கம். ஒரு நாள் பிரசங்கம் முடிந்து பாதிரி மார் சென்றதும் கூடியிருந்த முதியவர்கள் கோப்பாய் வடக்கில் சைவச்சூழலில் கல்வி கற்றலுக்கு ஒர் பாடசாலை வேண்டும் என அபிப்பிராயப்பட்டனர். அவ்வேளை உரும் பிராயில் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றும் திரு . மு. நாகலிங்க உபாத்தியாயர் அவ்விடம் வந்தார். அவருடனும் இதுபற்றி ஆலோசித்து அவர்கள் ஒரு கூட்டம் கூட்டினர். அதற்கு ஊர்ச்சைவப் பெரியார் சிலர் சமூகமளித்திருந் , தனர். அவர்களுள் சைவ வித்தியாவிருத்திச் சங்கச் செய லாளரான சு. இராசரத்தினம் என்பவரும் வட்டுக் கோட்டை நியாயவாதி எஸ். இராசரத்தினம் என்பவரும் இருந்தனர். இவர்களை ஊர்ப்பெரியார் பாடசாலை சம்பந்த,
64

மான°வேல தொடங்க வேண்டுமென நிர்ப்பந்திக்க அவர், கள் நிலமும், கட்டிடமும் தந்தால் சைவ வித்தியாவிருத் திச் சங்கம் ஆசிரியர்களை நியமித்து மேற்கொண்டு கவனிக் கும் என்றனர். கட்டடம் பூர்த்தியாகும் வரை காத்திரா மல் தற்காலிகக் கொட்டில் அமைத்து 1926 - புரட்டாதி விஜயதசமியன்று சைவச் சிறுவர்களை அழைத்துச் சரஸ்வதி பூசையுடன், ஏடு தொடக்கி வைத்துப் பாடசாலை ஆரம்ப மானது. பாடசாலைக்கு வேண்டிய தளபாட வசதிகளை ஊர்மக்கள் தாமாகவே முன்வந்து உதவினர்.
ஊர்ப்பெரியாரி ஒருவரால் அளிக்கப்பட்ட நிலத்தில் நிரந்தரக் கட்டடவேல்ை ஆரம்பமானது. பொதுமக்களின் உதவியுடனும் சிரமதானப் பணிகளாலும் பூர்த்தியாகி 1928 விஜயதசமியில் கட்டடப் பிரவேசம் சைவாசார, முறைப்படி நடந்தது. சைவ வித்தியா விருத்திச் சங்கத் தார் வந்து பார்த்தும் உதவியும் வந்தனர். ஆசிரியர்களையும் தளபாடங்களையும் அளித்தனர்.
1928 ல் திரு. வே. சிதம்பரப்பிள்ளை அவர்கள் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றர். பயிற்சி பெற்ற ஆசிரியர் கள் நியமிக்கப்பட்டு ஆண் பெண் இருபாலாருக்கும் கல்வி: கற்பிக்கப்பட்டது. உதவி நன்கொடை பெறும் பாடசாலை . யாக க. பொ. த. (சாதாரண) வகுப்பு, வைப்பதற்கான) உத்தரவும் கிடைத்தது. முன்பு ஆர்ம்பப் பாடசாலையாக இருந்ததால் அத்துடன் படிப்பை இப் பாடசாலையில் தொடர முடியாமல் வேறு பாடசாலைகட்குப் போன பிள்ளை களும் திரும்பி வந்து தொடர்ந்து படிப்பை மேற்கொண் L-6off
சைவச்சூழலில் தமது பிள்ளைகள் கற்கும் வாய்ப்புக் கிடைத்ததை எண்ணிப் பெற்றேர் அயலிலிருந்த மிசன், பாடசாலையிலிருந்து விடுகைப்பத்திரம் பெற்று. இங்கு பிள் ளைகளைச் சேர்த்தனர். இதனுல் அப்பாடசாலை நிர்வாகத் தினருடன் பல மோதல்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்து நிலைத்திருந்தது. 1938 ல் திரு . சிதம்பரப்பிள்ளை ஓய்வு பெற்ருர்,
மாணவர் தொகைகூட போதிய கட்டட வசதியின் மையால் ஊர்ப்பெரியோரிடம் உதவி கேட்ட போது வைத்திய சேவையாற்றிய டாக்டர். சி . பொன்னையா அவர்கள் தமது பொறுப்பில் ஓர் மண்டபம் கட்டி வழங் கினர். ஊரார் சிலர் அயல் நிலங்களில் சிறிது சிறிது நிலப் பரப்பை வாங்கிச் சைவவித்தியா விருத்திச் சங்கத்திடம்
''x.
65

Page 43
அளித்தனர். இந்நிலத்தால் இது வரை பாடசாலைக்கு ஒரு நிரந்தர விளையாட்டிடம் இல்லாக்குறை நீங்கியது.
1962 ல் அரசாங்கம் பாடசாலையைச் சுவீகரித்தது. ஆயின் தொடர்ந்தும் ஆசிரியர்களது முயற்சியால் மாலை நேர வகுப்புக்கள் வைத்துப் பரீட்சைக்கு மாணவரை அனுப் பியதால் இப்பாடசாலையின் பெறுபேறுகள் தொடர்ந்து வந்த வருடங்களில் உயர்வான சித்தியையே கொண்டு இருந்தன. பின் வந்த காலப்பகுதியில் பாலர் பாடசாலை விஞ்ஞான ஆய்வுகூடம் என்பன நிறுவப்பட்டன. 1972 புதிய கல்வித்திட்டத்தின் கீழ் விவசாயம் கட்டாய பாடமாகக் கற்பிக்கப்பட்டது. பாடசாலேயின் பல தேவைகள் பூர்த்தி யாக்கப்பட்டு, தரத்திலும் சிறப்படைந்து மகா வித்தியாலயம் ஆக்கும் முயற்சிகள் நடக்கிறது. பாடசாலை அபிவிருத்திக் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் முயற்சி யால் வைரவிழாக் கொண்டாடத்திட்டமிட்டுச் செயல் படுகிறது. இங்கு ஆரம்பவகுப்பு முதல் க - பொ . த . ( சாதாரண தரம் ) வரையான வகுப்புக்கள் நடைபெறு கின்றன. சுமார் 700 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். ஆரம்பப் பிரிவிலிருந்து புலமைப் பரிசில் பெற்று மாணவர்
SLDž உயர்கல்வியைத் தொடர்கின்றனர்:
கோப்பாய் நாவலர் இந்துத் தமிழ்க்கலவன் பாடசாலை: நல்லூர் ஆறுமுகநாவலர் அவர்கள் சைவத்தமிழ் வளர்ச்சிக்காக ஆங்காங்கு அரசாங்கத்தின் உதவியின்றி இந்துக்களின் உதவியுடன் பாடசாலைகள் நிறுவிவந்தார்கள். இவ்விதம் நிறுவப்பட்ட பாடசாலைகளில் கோப்பாய் சைவப் பிரகாச வித்தியாசாலையும் அமையும். இது 1872 க்கும் 1873 ம் ஆண்டுகளுக்கிடையில் சேஞதிராசமுதலியார் வழித் தோன்றலான கந்தப்பர் என்பவர் நன்கொடை செய்த நிலத்தில் நாவலர் அவர்களால் நிறுவப்பட்டதற்கு சான் றுகள் உண்டு. இப்பாடசாலையில் நாவலர் அவர்களின் சீடர் கல்வி புகட்டி வந்தார். நிகண்டு, இலக்கியம் ஆகிய வைகள் அங்கு கற்பிக்கப்பட்டு வந்தது. இவ்வகுப்பில் வயது வித்தியாசமின்றி கற்போர் வந்து கல்வி பெற்றுச் சென்றனர். இதில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து கல்வி கற்றனர்.
1879 ம் ஆண்டு ஆறுமுகநாவலர் இறந்த பின் அவரின் சீடரும் பெருமகனுமான த. கைலாசபிள்ளை அவர்கள் இப் பாடசாலையின் அலுவல்களைப் பார்த்து வந்தார். இப் பாடசாலை பூரீலழறீ நாவலர் அவர்கட்கு நூற்ருண்டு விழா,
6

எடுத்தபோது தாழ்ம் அவருக்கு ஒரு விழாக் கொண்டா டிப் படிவம் அமைத்தது. அதற்கு திரு. எம். பூரீகாந்தா (முன்னுள் அரசாங்க அதிபர்) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த வைபவம் 5-1279 ல் நடை பெற்றது.
இங்கு ஆரம்ப வகுப்பு முதல் க. பொ. த சாதாரண தர வகுப்பு வரை நடைபெற்று வந்தது. பெண்களுக்கென விசேடமாகப் பன்னவேலை பயிற்றப்பட்டது. பல காலம் இவ்வாறு இயங்கி வந்த பாடசாலை 1960 ல் அரசாங்கத் தால் பொறுப்பேற்கப்பட்டது. 1969 ல் பெற்றேர் ஆசிரி யர் சங்க வேண்டுகோளால், "நாவலர் இந்து தமிழ்க் கல வன் பாடசாலை" எனப் பெயர் மாற்றப்பட்டது. பாட சாலைகளைத் தரப்படுத்திய போது அரசாங்கம் இப் பாட சாலையை ஆரம்பப் பாடசாலை நிலையில் வைத்து முதலாம் வகுப்புத் தொடக்கம் 5ம் வகுப்பு வரையுள்ள பாடசாலை யாக ஆக்கியது. பின்னர் சில வகுப்புக்களைச் சேர்க்க அனுமதித்தது. இன்று 7ம் ஆண்டு வரையான வகுப்புக் கள் நடைபெறுகின்றன. ஏறக்குறைய 600 மாணவர் இங்கு கல்வி கற்கிருர்கள். வருடா வருடம் புலமைப்பரிசில் பெற்று மாணவர் உயர் கல்வியை இலவசமாகப் பெற்று வரும் வகையில் மாணவரது திறமை ஊக்குவிக்கப்படுகிறது.
கோப்பாய் தெற்கு சீ. சி. த. க. பாடசாலை
1946-ம் ஆண்டுவரை இப்பாடசாலை, தற்போது இதன் கட்டிடங்கள் அமைந்துள்ள இடத்திற்கு வடக்கேயுள்ள ஒரு சிறிய காணியில் இயங்கிவந்தது. அந்த இடத்தை இருபாலை கிழக்குக் கிராமத்தில் உள்ள இருபத்தொரு பங்காளர் ஒப்பமிட்டு தேவாலயத் திருச்சபைக்குக் கொடுத் தனர். அவர்கள் அவ்விடத்தில் இப்பாடசாலையை நடத்தி வரும் நாட்களில் பாடசாலையின் வளர்ச்சிக்கு இடம் போ தாது இருந்தபையால், அயலில் உள்ளவர்களை இடம் கேட்டு அணுகியபோது, சண்முகலிங்கம் என்பவரின் புத்தி ரர்கள் மூவர் முறையே விசுவலிங்கம், குமாரலிங்கம் தில்லைலிங்கம் ஆகியோர் தங்களுக்கு உரிய * கனககூ.ை யார் வளவு ’ என்னும் நிலப்பரப்பு ஆறு விஸ்தீரணம் கொண்ட ஆதனத்தை அன்பளிப்புச் செய்தனர். இந்நிலத் தில் இப்பாடசாலைக்கான கட்டிடம் அமைக்கப்பட்டு 1946 ம் ஆண்டு வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது. இதன்முதல் அதிபராகப் பருத்தித்துறையைச் சேர்ந்த இராசரத்திளம் என்பவர் நியமிக்கப்பட்டார்.
67

Page 44
பாடசாலைகள் தரப்படுத்தல் செய்யப்படும்வரை இப் பாடசாலையில் ஒன்று தொடக்சம் எஸ். எஸ். சி. வகுப் புக்கள் வரை இருந்தன. அதன் பின்பு எட்டாம் வகுப்பு வரை குறைச்சப்டட்டு, பின்பு 1971-ம் ஆண்டளவில் ஐந் தாம் வகுப்புவரை குறைந்து வந்துவிட்டது. “,
திரு. இராசரத்தினம் அவர்கள் இளைப்பாறிய பின் நாகலிங்கம் என்பவரும் அவருக்குப்பின் திருமதி. ஞானப் பூங்கோ தையும் அதிபர்களாக இருந்தனர். திருமதி ஞானப் பூங்கோதை அவர்களின் பின் திரு. செல்லப்பா அவர்கள் அதிபராக இருக்கிறர். இப்பொழுது இப்பாடசாலையில் 200 மாணவர்கள் கல்வி கற்கிருர்கள். ஆனல் விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள், கட்டடங்கள் அமைப் பதற்கு மேற்கொண்டு இடவசதிகள் இல்லாமை தற்சமயம் பெரும் குறையாக உள்ளது. y
கந்தவேள் தமிழ்க் கலவன் பாடசாலை:
இப்பாடசாலை 1954 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு முன்பு இப்பாடசாலைக் கட்டிடத்தில் பாலபண்டி தர் க. கந்தையா அவர்களும திருவாளர் நா. அருளம் பலம் (சேமன்) அவர்களும் சேர்ந்து ஒரு தும்புத்தொழிற் சாலை நடத்தி வந்தார்கள்.
இத் தும்புத் தொழிற்சாலைக்கான நிலத்தைப் பரப்பு ஒன்றுக்கு ரூபா 70/- வீதம் கொடுத்து நிலப்பரப்பு நான்கு கந்தையா உபாத்தியாயர் அவர்களால் கொள்வனவு செய் யப்பட்டது. கட்டிடத்திற்கான பனைமரங்களை திரு. நா.அரு *ளம்பலம் கொடுத்து உதவினர்கள். ஆரம்பத்தில் இத் தொழிற்சாலையில் 18 பேர் வேலை செய்தார்கள். இவ்விடம் செம்மணிக் கடலை அண்டிய பகுதியாக இருந்தபடியால் தான் தும்புத் தொழிற்சாலை தொடச்கப்பட்டது. நாளடை வில் 18 பேரும் குறைந்து ஆறுபேராக வந்ததும் இத் தொழிற்சாலையை ஸ்தாபித்தவர்கள் இலாபம் காட்டாத படியால் இதன் எதிர்காலம் பற்றிச் சிந்தித்துக் கொண் டிருந்த சமயம் கந்தையா உபாத்தியாயர் மனதில் இவ் விடத்தில் வதியும் வறுமை நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு ஒரு தமிழ்க் கலவன் பாடசாலை தொடக்கும் எண்ணம் உதயமாயிற்று. குறித்த தும்புத் தொழிற்சாலை 1953 ம் ஆண்டு நிகழ்ந்த வெள்ள அழிவின் போது கட்டிடங் களும் சிதைந்து பழுதாகியிருந்ததும் திருத்தப்பட்டு 1954ம் ஆண்டு வைகாசி மாதம் ஒரு நல்ல நாளில் இக்கட்டிடத்
68

தில் ஒரு பாடசாலை ஆரம்பிக்க உத்தேசிக்கட்டட்டு அந்தத் இனத்தில் பாடசாலையில் சுவாமிப் படத்திற்கு விளக்கு ஏற்றி வைக்கும் போது நல்லூர் கந்தசாமி கோயில் மணி ஒலிகேட்க, கந்தையா உபாத்தியாயரே முன்வந்து ‘கந்த வேள் தமிழ்க்கலவன்' பாடசாலை என்று பெயர் சூட்டு வோம் என்று கூற இந்நாமம் இடம் பெற்றது. இப்பாட சாலையை ஆரம்பிக்கும் வைபவம் கந்தையா உபாத்தியா யர் தலைமையில் நீச்சல் வீரன் நவரத்தினசாமி அவர்களால் நிகழ்த்தப்பட்டது. முதல் கிழமை 50 பிள்ளைகளுடன் தொடங்கி ஒரு மாதத்தில் 160 பிள்ளைகள் சேர்ந்தார்கள். நான்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இந்து வித்தியா விருத் திச் சங்கத்தால் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நான்கு ஆசிரியர்களில் ஒருவர் ஆங்கில உபாத்தியாயர். மற்றவர்கள் தமிழ் ஆசிரியர்கள்.
இப் பாடசாலை 1955 ல் அரசினர் பாடசாலையாகப் பதியப் பெற்று அக்காலம் தொடக்கம் 'உதவிப்பணம்” வழங்கப்பட்டு வந்தது. 1955 ம் ஆண்டில் எட்டாம் தரம் வரை வகுப்புக்கள் இருந்தன. 1962 ம் ஆண்டு இப் பாட சாலை தரப்படுத்தல் திட்டத்தின் கீழ் 6ம் 7ம், 8ம் வகுப் புக்கள் நீக்கப்பட்டு 5ம் வகுப்பு வரை மட்டுமே நடத்த அனுமதிக்கப்பட்டது. இப்பொழுது 200 பிள்ளைகள் உள் ளனர். விளையாட்டு மைதானமோ, சுகாதார வசதிகளோ இல்லாதது பெரும் குறையாகும்.
கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கழகம்:
ஆசிரியர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரி பரிகழகங்கள் தத்தம் சமயச் சுவர்கட்குள்ளிருந்தே ஆசிரி யர்களை உருவாக்கிக் கொண்டு இருந்தன. இந்நிலையில் ஆங்கிலேயர் காலத்தில் சைவப்பெரியார்கள் ஞானஸ்நானம் பெரும்டல் தமிழாசிரியர்களாக அனுமதிக்கமாட்டார்கள். 1916ம் ஆண்டளவில் காரைநகர் சங்கரப்பிள்ளை அருணுசலம் என்பவர் வேதத்திற்கு மாருமல் கற்றுத்தேறி ஆசிரியராக வரவிரும்பினர். இவர் மூலம் சைவத்தமிழ் ஆசிரியர்கள்ை உருவாக்கி மாணவருக்குக் கல்வி புகட்ட அக்காலக் கல்வி மான்கள் சிலர் முயன்றனர். சேர் . பொன் . இராமநாதன், திரு. சு. இராசரத்தினம் (இந்துபோட் ) , திரு . மு. சுவாமி நாதன், டாக்டர் - கி , சுப்பிரமணியம் என்போர் இதில டங்குவர். இவர்கள் முயற்சியால் கோப்பாய் நாவலடியில்
69
is

Page 45
திரு . à . சிவசுப்பிரமணியத்தின் உதவியுடன் ஒரு கட்டி டத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு அவர் மாணவருக்கும் உணவு அளிப்பதாக ஏற்பாடனது. சுவாமிநாதன் மேற் பார்வை வேலைகளைக் கவனித்தார். இதற்குக் கோப்பாய் சைவ ஆசிரிய பயிற்சிச்சாலை எனப் பெயரிடப்பட்டது.
இது நடந்துவரும் காலத்தில் இதற்கு அங்கீகாரம் பெற அரசுக்கு விண்ணப்பித்தார். அதைப் பயிற்சிச்சாலையாக அங்கீகரிக்க முன் பார்வையிட வந்த கல்வித் திணைக்களப் பிரமுகர் மாணவருக்குக் கட்டட வசதி போதாமை விளை யாட்டுத்திடல் இன்மை போன்ற காரணங்களால் அங்கீகா ரமளிக்க மறுத்தார். அவ்வேளை சேர் . பொன் . இராம நாதன் அவர்கள் தமக்குச் சொந்தமான நிலத்தை (இப்போது பயிற்சிக்கலாசாலை உள்ள இடம்) அளித்து ஐக்கிய போதனபயிற்சிச்சாலை என்ற பெயரில் தொடக்கு வித்தார். இதன்பின், அரசின் அங்கீகாரம் கிடைத்தது. ஆண்கள், பயிற்சிச்சாலையாக இது செயல்படத் தொடங்கியது.
1946 ல் பெண்களுக்கென ஒரு கழகம் திருநெல்வேலி யில் 30 மாணவர்களுடன் ஆரம்பமானது. ஆண், பெண் இருபாலாரும் சேர்ந்து கல்வி பயிலும் ஆசிரியர் கழகம் ஏற்கெனவே திருநெல்வேலியில் இயங்கி வந்தது. அது சைவு வித்தியாவிருத்திச் சங்கத்தின் ஆதரவில் தனிப்பட இயங்கி வந்தது. இப்புதிய கழகம் அரசாங்கத்தால் தொடக்கப் பட்டது. இதன் அதிபராக செல்வி ஞானம் முருகேசு என்பவரை அரசாங்கம் நியமித்தது. ஒரு ஆண்டின் பின் கோப்பாயில் இயங்கும் ஆண்கள் ஆசிரியர் கழகத்தைப் பலாலிக்கு இடம் மாற்றி கோப்பாயிலுள்ள இதைப் பெண் கள் கழகமாக மாற்றியது. இதன் அதிபராக திரு . சண்முக ரத்தினம் அவர்கள் நியமிக்கப்பட்டார். ஈழதாட்டின் நானுதிக்குகளில் இருந்தும் மகளிர் வந்து சேர்ந்தனர். இனத் தால் வேறுபட்டாலும் மொழியால் ஒன்றுபட்ட முஸ்லீம் பெண்மணிகளும் முதன் முதல் தமிழாசிரியர்களாகப் பயிற் றப்படுவது இங்கு தான் தொடங்கியது. '' வாழக்கல்மின் "" என்பதே இக்கழகத்தின் குறிக்கோள் ஆகும். கழகப்பாரம் பரியத்தைக் காத்து, சமய இன, இட வேறுபாடின்றிக் கல்விப்பணிக்குத் தம்மை அர்ப்பணிப்பதாக வாக்குறுதி செய்து மாணவர் சேர்ந்தனர். இங்கு அளிக்கும் கல்வி, ஏட்டுக்கல்வியாகவன்றி நாட்டுத் தேவைக்கு ஏற்றதாய் மொழி, பண்பாடு என்பவற்றிற்கு ஒத்ததாய் விஞ்ஞான உலகிற்கு ஏற்ற செயல் முறையுடையதான பாடங்களும்
70

படவிளக்கம்
கோவில்கள்:
8. இருபாலைக் கந்தசாமி கோவில். 9. இருபாலை கோட்டபுரம் பெரியதம்பிரான் கோவில். 10. இருபாலை தெற்கு நாச்சிமார் கோவில். 11. இருபர்லை வீரகத்திப்பிள்ளையார் கோவில். 12. கோப்பாய் முத்துமாரியம்மன் கோவில் 13. இருபாலை வேளாதோப்பு முத்துமாரியம்மன் கோவில்" 14. இருபாலைக் கதிர்காம தேவாலயம். 15. கேர்ப்பாய் பலானைக் கண் ணகையம்மன் கோவில். 16. வடகோவை செல்வ விநாயகர் கோவில். 17. வடகோவை சித்திரவேலாயுதர் கோவில். 18. பூரீசக்கர ஆழ்வார் கோவில். 19. இலுப்பையடி வீரகத்தி விநாயகர் கோவில். 20. பத்திரகாளி கோவில். 21. வடகோவை மகிழடி வைரவர் கோவில். 22. வடகோவை மிரியத்தனை வைரவர் கோவில். 23. பூரீ சுப்பிரமுனிய கோட்டம். பாடசாலைகள்:
அ. கிறிஸ்தவக் கல்லூரி. ஆ. கோப்பாய் தெற்கு ருேமன் கத்தோலிக்க
தமிழ்க் கலவன் பாடசாலை. இ. கோப்பாய் வடக்கு முேமன் கத்தோலிக்க
தமிழ்க் கலவன் பாடசாலை. ஈ, கோப்பாய் வடக்கு சி. சி. பாடசாலை. உ. சோப்பாய் மகாவித்தியாலயம். ஊ. பூதர்மடம் அரசாங்க தமிழ்க் கலவன் பாடசாலை.
எ. கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம். ஏ. கோப்பாய் நாவலர் இந்து தமிழ்க்கலவன் பாடசாலை ஐ. கோப்பாய் தெற்கு சி. சி. த. க. பாடசாலை. ஒ. கந்தவேள் தமிழ்க் கலவன் பாடசாலை, ஒ. அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கழகம். குறியீடுகள்: - -
வெள்ளெருவை விநாயகர். வீரபத்திரேஸ்வரன்.
சாந்திலிங்கேஸ்வரர். கோப்பாய் தெற்கு மாரியம்மன் கோவில். கோப்பாய் தெற்ரு பூரீ முடிமன்னர் ஆலயம். இருபாலை கற்பகவிநாயகர் கோவில். நெடுங்கேணி வைத்தீஸ்வரர் கோவில்.
. ஆரம்ப பாடசாலை O சிரேஸ்டபர்ட்சாலை
0 உயர்தரப் பாடசாலை 0 பயிற்சிக் கலாசாலை

Page 46
|eരൂക്ഷ്മm് " நே4கது
'M
ugzzന്നതുd
മന്ന50LLB48
k
"نھ;4
 

கைதடிக் கெரு
محصے ۔ ص.صے
/ 2.44 ഒ7Z
മെമ്മത്തിഭദ്രത4 ! (7 മെdi്

Page 47

ப்யிற்சிகளும் அடங்கும். மாணவரது உடல், உளம், செயல் என்பன ஒருங்கே வளர்வதற்கான கல்வியை நாட்டுக்க ளிப்பதே தலையாய கடமை எனக்கழகம் அறியும். கற்றல், கற்பிக் தல் வகுப்பறைப்பாடம், கட்புல, செவிப்புல சாத னங்களையும் தாமாக ஆக்கியும் ஆய்வு நடாத்தியும் - tறிவால் உண்டான அனுபவங்களைப் பிறரோடு கலந்தும் பரிமாறியும் தம்மை முழு ஆசிரியர்களாக ஆக்கிக் கொண் டனர். கலைவிழாக்கள், கருத்துமேடைகள், பொருட்காட் சிகள் விளையாட்டுப்போட்டிகள், என்பன புறவேலையாக நடைபெற்றன. இவ்விடத்தில் இயங்கத் தொடங்கிப் பதின ருண்டுகளின் பின் இக்கழகத்தை வேறிடம் மாற்றவோ மூடிவிடவோ 1962ல் முயற்சி நடந்தது. பழைய மாணவர் கல்விமான்கள், ஆதரவாளர் என்போர் துணையுடன் பேச்சு நடத்தித் தொடர்ந்து இயங்கச் செய்யப்பட்டது.
1962 தொடக்கம் திருமதி. இ ஆனந்தகுமாரசாமியை அதிபராகக் கொண்டு இக்கழகம் தொடர்ந்து இயங்கி இதுவரை தனியார்துறைப் பயிற்சிக் கூடங்களாக விளங்கிய திருநெல்வேலி சைவாசிரியகழகம் நல்லூர் ஐக்கிய ஆசிரிய கழகம், கொழும்புத்துறை கத்தோலிக்க ஆசிரிய கழகம் என்பவற்றின் மாணவியரையும் பேராசிரியர்களையும் தன் னுடன் இணைத்துக்கொண்டது. சிறிது காலத்தில் மாண வரின் தேவைக்காகப் புதிதாகக் “கிருஷ்ணபடிப்பகம்" ஒன்று கட்டப்பட்டது. பழைய கட்டடங்களைப் புதுப்பித்து எதிர்காலத்துக்கு ஏற்றதாக அமைந்துவரும் இக்கழகம் 1971-ல் "வெள்ளிவிழா' கொண்டாடியது. இதன் வர லாறு தமிழின் வளர்ச்சி, தமிழ் ஆசிரியர்களின் வளர்ச்சி, தமிழ் மாணவர்களின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி என்ப தை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சனசமூக நிலையங்கள்:
கல்வி வளர்ச்சியில் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆற்றும் பங்கிற்கு நிகராகச் சனசமூக நிலையங்களும் பணி புரிய வேண்டும். இங்குள்ள நூல் நிலையங்களை நிர்வகிக் கிறவர்கள் திறமையாகச் செயற்படின் மக்கள் நூல்களின் முழுப்பயனைப் பெறமுடியும்.
இன்று நூல் நிலையங்களாகத் தனியே செயற்படாது சமூகத்தில் பொருளாதார, சமுதாய விருத்திக்கும் செயற் படுவதால் இவை சனசமூகநிலையங்கள் என்ற பெயரினைக் கொண்டு இயங்குகின்றன. எல்லோரும் சேர்ந்து வாழவும் சமூக உணர்வை ஏற்படுத்தவும், சமூக அமைப்பை இறுக்க
71.

Page 48
மர்க் வளர்க்கவும் மக்களிடையே ஒருமைப்பாட்டை ஏற் படுத்தவும் அறிவை வளர்க்கவும் பண்பாடான சமுதா யத்தை உருவாக்கவும் சனசமூக நிலையங்கள் உழைக்க வேண்டும். இவ்வடிப்படையில் கோவைப் பதியிலுள்ள சன சமூக நிலையங்களின் பணியைப் பார்க்கலாம்.
இங்கு பதினேழு பதியப்பட்ட சனசமூக நிலையங்களும் ஒன்றிரண்டு பதியப்படாத சனசமுக நிலையங்களும் உள. ஆய்வுப் பிரதேசத்திற்கு உட்பட்ட சனசமூக நிலையங்கள்
1. சரஸ்வதி சனசமூக நிலையம் 2. கலைமணி சனசமூக நிலையம் 3. வெள்ளெருவைப் பிள்ளையார் கோவிலடி
சனசமூக நிலையம் 4. இருபாலை கிழக்கு சனசமூக நிலையம் 5: வன்னியசிங்கம் சனசமூக நிலையம்
சபாபதி நாவலர் சனசமூக நிலையம் 7. அம்மன் கோவிலடி சனசமூக நிலையம் 8. நாவலடி சனசமூக நிலையம் , 9. ஞானபாஸ்கரோதய சனசமூக நிலையம் 10. கோப்பாய் வடக்கு சனசமூக நிலையம் 11. சூரியோதய சனசமூக நிலையம்
12. முழுமதி சனசமூக நிலையம் 13. விக்னேஸ்வரா சனசமூக நிலையம் 14. கலைவாணி சனசமூக நிலையம் 15. உதய தாரகை சனசமூக நிலையம் 16. பாரதி கலாமன்ற சனசமூக நிலையம் 17. வள்ளியம்மன் சனசமூக நிலையம் 18. இந்திராகாந்தி சனசமூக நிலையம் இவற்றில் அநேகமானவை காலை தொடக்கம் தண் பகல் வரை பாலர் பாடசாலைகளாக இயங்குகின்றன. இதன் பின்னர் வாசிகசாலைகளாக அன்ருட புதினத்தாள் கள், சஞ்சிகைகள் வைக்கப்பட்டு முதியோர் இளைஞரின் படிப்பறிவை வளர்க்கின்றன. வலிகாமம் கிழக்குப் பகுதிப் பிரதேசசபை இச் சனசமுக நிலையங்கட்கு வருடா வருடம் ஒரு தொகை பணம் ‘கிரான்ட்" கொடுத்து உதவுகிறது. பெரும் பாலானவை நவராத்திரிவிழாக் கொண்டாடுகின்' றன. சிறப்பாகப் பணிபுரியும் சில சனசமூக நிலையங்கள் பற்றிய விபரம் இங்கே தரப்பட்டுள்ளது.
72.

பாரதி கலாமன்ற சனசமூக நிலையம்:
அரை நூற்ருண்டுக்கு முன் திருவாளர் விசுவலிங்கம் அவர்களுக்குச் சொந்தமான தற்காலிகக் கட்டிடம் ஒன் றில் “ பாரதி கலை கலாச்சார மன்றம் ' என்ற பெயரில் இம் மன்றம் உருவானது.
பின்பு இருபாலை வீரகத்திப் பிள்ளையார் கோவிலுக் குச் சொந்தமான காணியில் அதாவது, இப்பொழுது எழுந் துள்ள அழகிய கட்டிடத்துக்கு வடக்கே நூறு யார் தள்ளி ஒரு சனசமூக நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு அத்துடன் குறித்த பாரதி கலை கலாச்சார மன்றமும் இணைந்து கொண்டது. 1986 ம் ஆண்டு இத்தச் சனசமூக நிலையம் “பாரதி சன சமூக நிலையம்" என்ற பெயரில் கோப்பாய் கிராம சபைப் பிரிவில் பதியப்பெற்றது.
1987 ம் ஆண்டில் கனேடிய தனவந்தர்களின் நிதியுதவி யுடன் தெற்கு ஆசிய கூட்டுச் சம்மேளனத்தின் அனுசரணை யுடன் அழகிய மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டது. இக் கட்டிடத்தில் இதன் பணிகள் தொடர்ந்து நடைபெறு கின்றன. ஆனல்; இன்னும் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்படவில்லை. பெரும்பாலும் அடுத்தமாத முற்பகு தியில் உத்தியோக பூர்வமாகத் திறக்கப்படவுள்ளது. இதன் தற்போதய தலைவராகத் திரு. சபாரத்தினம் அவர்கள் இருந்து வருகிறர்கள். இம் மன்றத்தின் கீழ்
1. பாரதி கலாமன்ற மகளிர்குழு. 2. விளையாட்டுக்குழு, 3. பொதுவேலைத்திட்டக்குழு : என்று மூன்று குழுக்கள் இயங்கி வருகின்றன.
மகளிர்குழு பண்ணிசை வகுப்புக்கள், தையல்வ்குப்புக் கள், மனையியல் வகுப்புக்கள் நடத்தி வருகிறது. பண்ணிசை வகுப்புக்கு ஒவ்வொரு மாணவ, மாணவியிடம் இருந்து ரூபா 10 1 - அறவிடப்படுகிறது. சைவபரிபாலன சபை நடத்தும் சமயப் பரீட்சைகளுச்கு இவர்கள் பிள்ளைகளைத் தயார் செய்து அனுப்புகிருர்கள். மனையியல் வகுப்புக்கள்ை இருபாலை சி . சி. எஸ் . பாடசாலையில் நடத்தி வருகிருர் கள். கோப்பாய் அரிமாச்சங்கத்துடன் இணைந்து பன்ன வேலை வகுப்புக்களும் நடத்தி வருகிருர்கள்.
விளையாட்டுக்குழு கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டப் போட்டிகள் நடத்தி வருகிறது. இதற்கெனச் சொந்தமான விளையாட்டுத்திடல் உள்ளது. இந்த விளையாட்டுத்திடலும் கனேடியதனவந்தரின் உதவியால் அமைக்கப் பெற்றதாகும்?
73

Page 49
பொதுவேலேத்திட்டக்குழு ஒரு பாரிய நன்னீர் விநியோ கத்திட்டம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வெற்றிகாணும் நிலையில் உள்ளது. இருபாலைச் சந்திக்கு மேற்குப் பக்கமா கவுள்ள செம்பாட்டு நிலத்தில் ஒரு கிணறு தோண்டி அந்தக் கிணற்றிலிருந்து நல்ல குடிநீர்க்குழாய் மூலம் இருபாலை கிழக்குப் பிரதேசத்திற்கு வழங்குவதே அதன் உத்தேசத் திட்டமாகும். இத்திட்டத்தைத் தெற்கு ஆசிய கூட்டுச்சம் மேளனம ஏற்றுக் கொண்டு விட்டது. இதன் ஆரம்பவேலை கள் விரைவில் தொடங்கவுள்ளன. இதற்கான உத்தேசச் செலவு ரூபா எட்டு இலட்சம் ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இன்னும் இம்மன்றத்தின் முயற்சியால் முதியோர் கல்வித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. முதியோருக்குக் கிழமையில் இரண்டு நாட்களுக்கு ஆங்கில வகுப்புக்கள் நடைபெறுகின்றன. இதில் இருபது வயது வந்தோர் கல்விகற்கிருர்கள். இதன் ஆசிரியராக திரு . போல். சண்முகம் அவர்கள் கடமையாற்றுகிறர்கள். இளை ஞர்ை விவசாயத்தில் ஈடுபடச் செய்ய ஊக்குகிருர்கள்.
இம்மன்றம் ஆண்டுதோறும் தவருது பாரதிவிழா எடுத் துவருகிறது. நவ்ராத்திரிவிழா நடைபெறுகிறது. தைப் பொங்க்லும் பொங்கலுக்கு அடுத்தநாள் "உழவர்விழாவும்" சிறப்பாகக் கொண்டாடப்படும்.
இம்மன்றின் இன்னேர் அம்சமாக ஒருநூல் நிலையம் உருவாகிக் கொண்டிருக்கிறது, ரூபா 35,000 / - உக்குப் புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டும் ஸ்தானிகர் காரியாலயங்களில் இருந்து புத்தகங்கள் நன்கொடையாகப் பெறப்பட்டும் உள்ளன. இதற்கான ஒரு நூலகரை நிய மிக்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது"
இச்சங்கத்தில் 178 சாதாரண அங்கத்தவர்களும் 50 ஆயுள்கால அங்கத்தவர்களும் உள்ளனர். ஆயுள்கால அங் கத்த்வ்ர்களிடம் இருந்து ரூபா 250 / - சந்தாப்பணமாகப் பெறப்பட்டு வங்கியில் நிலையான வைப்பில் இடப்பட்டு அதில் இருந்து வரும் வட்டியில் பத்திரிகைகள் பெற்று மக்களுக் குத்தின்மும் பத்திரிகைகள் வாசிக்சவும் கட்டிடத்தில் ஒரு பகுதியில் ஒழுங்கு செய்துள்ளார்கள். ஞானபாஸ்கரோதய சனசமூக நிலையம்
இச் சங்கத்தின் கொள்கை விளக்கத்தில் "* நல்லம் யாமென்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு" என்னும் நாலடியார் வாக்கு எழுமின் விழிமின் எண்ணிய்
74

கருமம் கைகூடும் வரை உழைமின் " என்னும் சுவாமி விவேகானந்தரின் வீரமொழி', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் தமிழ் முதுமொழிக் கூற்றிலும் ஊறிய , தெனக் கூறப்பட்டுள்ளது. இச் சங்கம் ஆரம்பிக்கப் பின் னணி எதுவென்றல் சேர். பொன். இராமநாதனின் தமி ழுணர்வு, பூரீல பூரீ ஆறுமுகநாவலரின் சைவ உணர்வு சுவாமி விவேகானந்தரின் சமரச சன்மார்க்கநெறி என் பனவாம். இதன் வெளிக்காட்டாக ' ஞானபாஸ்கரன் உதய" சங்கம் எனப் பெயர் அமைக்கப் பெற்றது. 1919ல் இச் சங்கம் ஆரம்பமானபோது ஈழத்தின் வேறிெப்பகுதியி லும் இது போன்ற சங்கம் அக்காலம் அமைக்கப்படவில்லை. இச் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழா கிழக்கு மாகாணத் தவர்ான சுவாமி விபுலானந்த அடிகளார் தலைமையில் நடந்தது. இச் சங்கத்தின் பல கிளைகள் வெவ்வேறு பணி யாற்றி வருகின்றன. ஞானபாஸ்கரோதய சனசமூக நிலை யம் 1948 ல் கோப்பாய்ப் பிரிவில் பதிவு செய்யப்பட்டு வாசிகசாலைப் பகுதியைப் பொறுப்பேற்று அரசாங்கப் பண் உதவியுடன் சீராகவும், சிறப்பாகவும் நடத்துகிறது.
ஆரம்பகாலம் முதல் தினசரிப்பத்திரிகைகள் பொதுமக் களுக்கு அளித்ததுடன் கலை, கலாச்சார, சமய, விளையாட்டு நிகழ்ச்சிகளையும் செய்து வந்தது. விளையாட்டு மைதானத் தைத் திருத்தியமைத்து உடனலக்கல்வி வளர்ச்சிக்கு ஊக்க மளித்தது. ஞானபாஸ் கரோதய மங்கையர் சங்கம் 1951ல் ஆரம்பமானது. இச்சங்கம் பெண் கல்வி, கலாச்சாரம், சமூக முன்னேற்றம் போன்ற விடயங்களில் அக்கறை காட்டியது. கட்டுரைப்போட்டி, நாடகம், இசை, நடன நிகழ்ச்சி, வரு டாந்த இல்லவிளையாட்டுப்போட்டி மெய்வல்லுநர் போட் டிகளை நடத்தினர். வலிகாமம் கிழக்குப்பகுதிப் போட்டி களில் பங்குபற்றிப் பரிசுகளும் பெற்றனர். மொழிப்பற்று, சமயப்பற்று, தேசத்தொண்டு செய்யும் மங்கையரை உருவரிக்
குவதே இக்கழக நோக்கமாகும். . . .
ஞானபாஸ்கரோதய சங்கம் தனது பணிகளின் தேவைக் காகப் புதிய மண்டபம் ஒன்று கட்டியெழுப்பி 1987ல் திறப்பு விழா நடத்தியது. மேலும், கோப்பாய் மகாவித்தியால யத்தில் தமிழ் மறைக்கழகத்தின் 22 வது திருக்குறள் மாநாட்டைச் சிறப்பாக நடத்தி முடிக்க இச்சங்கம் ஆதரவு கொடுத்தது. அண்மைக்காலத்தில் ஒரு கலாச்சார எழுச்சிக் கான திட்டம் இட்டுள்ளது. கிழக்கே உப்பாறு, அரியாலே, கண்டிவீதியும், தெற்கே நாவலர் வீதியும், மேற்கே காங்கே சன்துறைவிதியும், வடக்கே தாவடி - கோண்டாவில்
7版

Page 50
இருபாலைவி யும் சொண்ட இதனுட்பட்ட பிரதேசத்தைக் ** கலாச்சாரச் சதுக்சம் ' Cultural Square எனப் பிரகட னப்படுத்த வேண்டுமென்று 1982 ல் யாழ்மாவட்ட அபிவி ருத்திச் சபைக்கு விண்ண ட்பித்தது. இது பற்றிய நடவடிக்கை மீண்டும் சந்தர்ப்பம் வரும் போது எடுப்பதாக உள்ளது.
ரீசபாபதி நாவலர் சனசமூக நிலையம்
மேற்படி நிலையம் கோப்பாய் வடக்கு முதலாம் வட் டாரத்தில் உள்ள பிரமுகர்கள் சேர்ந்து 1918-ம் ஆண்டில் தாபித்தனர். அப்போது வராம்பற்றை என்னும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டதால் வராம்பற்றைச் சனசமூகநிலைய மெனப் பெயரிட்டு இயங்கத் தொடங்கியது. ஆரம்ப காலத்தில் அயலவர் வந்து உலகச் செய்திகளை அறிந்து செல்லப் புதினப் பத்திரிகைகளைக் கொண்டு விளங்கியது. கிராம மக்களிடையே பத்திரிகை வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. படிப்படியாக வாசிக்கும் ஆட்கள் எண்ணிக்கை கூட, அறிவியல் ஊக்கு விப்புப் பணியும் தொடங்கியது. சஞ்சிகைகள், சிறுகதை கள், நாவல்கள் வாங்கி வாசிக்க வைக்கப்பட்டது.
அடுத்த பணியாகக் கிராமச் சீர் திருத்தப்பணிகளும் தொடங்கியது. கிராமத்திலுள்ள சிறுவீதிகள், ஆலயங்கள், நீர் நிலைகள் திருத்திப் புதுப்பிக்கப்பட்ட ன. 1958 ம் ஆண்டு வரையில் இப்பணிகள் தொடர்ந்தன. பின் அங்கத்தவர் இடமாற்றம் மறைவுகள் காரணமாகப் பின்தங்கியது. இதைக்கண்ட சிலர் நிலையத்தைப் புனரமைப்புச் செய்து ஊக்கமளித்தனர். தற்போது நிலையம் அமைந்த இடத்தைக் காணிச் சொந்தக்காரரான சித்தாந்தபானு சிவ. பூgசுப்பிர மணியக்குருக்கள் அளித்தார். 1959 ல் தற்போதுள்ள கட் டடம் கிராமத்தவரின் நிதியுடன் அமைக்கப்பட்டது. மக் களின் ஆர்வம் காரணமாகப் பத்திரிகைகள் பெறப்பட்ட துடன் நிலைய மண்டபத்தில் நூல் நிலையமொன்று அமைக் கப்பட்டது.
கிராம முன்னேற்றம் கருதி நிர்வாக சபையினர் ஊக் கமாகச் செயற்பட்டு விநாயகர் ஆலய வாசற் கோபுரத் தைத் திருத்தியும் மணிக்கூட்டுக் கோபுரத்தைத் திருத்தி யும், வீதிகளைச் சீரமைத்தும், கோயிற் கேணியைத் துப்பர வாக்கியும் தொண்டுகள் புரிந்தனர். மகிழடி வைரவர் ஆலய வளவைச் சீராக்கி, ஒரு காலப் பூசை நடந்த கோயி
76

லில் இரு சாலப் பூஜை நடக்கும்படி செய்தனர். சிரமதான,
மூலம் சடையினர் கோயில் விதி யைச் செப்பனிட்டனர்.
பூசகருக்கான வேதனத்தைச் சபை லுெத்தும் பொறுப்பை, ஏற்றது.
சனசமூக நிலைய வளவில் உள்ள விநாயகர் ஆலயம் சபாபதி நாவலர் அவர்களால் வழிபடப்பட்டது. அவரது. பிறந்த இடமாக முதலாம் வட்டாரம் இருந்த காரணத் தால் அவரின் ஞாபகார்த்தமாக நிலையத்தின் பெயரை மாற்றியமைக்க, நிர்வாக சபையினர் ஆலோசித்தனர். காணியை உபகரித்த குருக்கள் அவர்களுக்கும் இந்த ஆலோசனை சிறந்த தெனப்பட்டது. அதன்படி 1960ம் ஆண்டில் பூரீசபாபதி நாவலர் சனகமூக நிலையமெனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று வரை இயங்கி வரு கிறது.
கோப்பாய் வடக்கு சனசமூக நிலையம் :
1936 ல் வாசிகசாலையாக ஆரம்பித்து அரசாங்கச் சட்ட விதிகட்கு அமைய 1948 ல் சனசமூக நிலையமாகப் பதியப்பட்டது. இதன் கட்டடம் சித்திர வேலாயுதர் கோயில் கிழக்கு வீதியில் அமைந்துள்ளது. இதிலேயே கோப்பாய் வடக்கு கிராம முன்னேற்றச் சங்கமும் நடை. பெறுகிறது. - .
வாசிக சாலையில் உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகை கள், சஞ்சிகைகள் வாங்கிச் சிறப்பாக நடத்துகிருர்கள். ஊர்மக்களால் வாங்கப்பட்ட வானெலி மூலம் கலை, சமூக நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் கேட்க வசதி செய்தார் கள். பின் தொலைக்காட்சிப் பெட்டியும் வாங்கி முதியோர், சென்று கேட்டும், பார்த்தும் வந்தனர். அனர்த்தங்களின்" போது இவை தொலைந்து விட்டன. w சமயப் பணியாகக் குருபூசைகள் பொங்கல் வருடப் பிறப்பு, நவராத்திரி விழாக்கள் நடத்தியும், பிறர் நடத்தி துவதில் பங்கு பற்றியும் வருகிறது. கந்தசுவாமி கோயில்கி சமய விழாக்களில் பங்குபற்றிப் பஜனை செய்து வருகிறது.சி சமூக சேவையாகச் சுற்ருடலைத் துப்பரவு செய்தல் நீர்நிலை* சுத்தமாக்கல் என்பவற்றை அரசாங்க உதவி பெற்றும் மக்களின் சரீர உதவி மூலமும் செய்கிறது. முதியோருக்கு இலவசமாக எழுத்துப் பயிற்றல், சிறுவருக்கு எழுத்து, பேச்சு, நடனம் போன்றவற்றைப் பழக்குகிறது. கால் பந் தாட்டம், வலைப் பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களை ஊக்கியும் போட்டிகளை நடத்தி வருகிறது. வளர்ந்த பிள்ளை
77

Page 51
களுக்கு சங்கீதம், வயலின், நடன வகுப்புகள் நடத்துகிறது. நவராத்திரி காலங்களில் விழாக் கொண்டாடுகிறது. உற் சவ தினங்களில் தண்ணீர்ப் பந்தல் அமைத்தல், சந்நிதி, நல்லூர் விழாக்காலங்களில் பஜனைக்கோஷ்டி பாடிச்செல் லல் நடந்து வருகிறது.
அம்மன் கோவிலடி சனசமூக நிலையம்: (கோப்பாய் வடக்கு) "
ஆரம்பகாலத்தில் வாசிகசாலையாக மட்டும் இயங்கி பது, பின்னர் சனசமூக நிலையமாக இயங்கத் தொடங்கிய பின் பொதுத் தொண்டுகளில் ஈடுபடத் தொடங்கியது. அங்கத்தவராயுள்ளவர்கள் இதன் அயலில் உள்ள அம்மன் கோயிலின் திருப்பணி வேலைகளுக்குச் சிரமதான உதவி செய்தனர்.
சைவசமய விழாக்களான பொங்கல், வருடப் பிறப்பு. நவராத்திரி என்பன கொண்டாடப்படுகிறது. விஜயதச்மி நாள் அம்மன் வேட்டைத் திருவிழாவுக்கு வரும் போதும் கந்தசஷ்டியில் சூரன் திக்விஜயம் செய்யும் போதும் தண் ணிர்ப்பந்தல் அமைத்து அடியார்க்குத் தாகசாந்தி செய் கிறது. இளம் சிறர்களைச் சேர்த்து அம்மன் கோயில் விசேட நாட்களில் பஜனை நடத்துகிறது.
வள்ளியம்மன் சனசமூக நிலையம்:
இது 1959 ம் ஆண்டு திரு. அ. வி. மயில்வாகனன் அவர்களால் கட்டப்பட்டு அவ்வூர் மக்களின் கல்வி வளர்ச் ஒக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆரம்பகாலங்களில் நாளாந் தப் பத்திகைகளை, சஞ்சிகைகளை அவரே வாங்கி அச்சனல் சமூக நிலையத்திற்கு அனுப்பி வந்தார். பின்னர் ஊர்வாசி கள் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் காலை வேளைகளில் பாலர்கட்குக் கல்வி போதிக் கும் இடமாகவும் மாலை, இரவு நேரங்களில் வாசிகசாலை யாகவும் அக் கட்டடம் பாவிக்கப்பட்டு வருகிறது. பால ரைக் கற்பிக்கும் ஆசிரியைகள் இருவர் உளர். இவர்கள் கலைமகள் விழா வருடா வருடம் நடத்தி வருகின்றனர்.
அன்னை இந்திராகாந்தி சனசமூக நிலையம்:
30-40 - 86 ல் தொடங்கப்பட்டது. இது இன்னும் பதி
யப்படவில்லை. இருபாலை கிழக்கில் அமைந்துள்ளது. نجيلا "
திரிகைகள் மட்டும் வாசிக்க வாங்கிப்போடுகிறது.
78

தனியார் கல்வி நிறுவனங்கள்
யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை கல்வி என்ற அடிக் கட்டு மானத்தின் மீதே எழுப்பப்பட்டுள்ளது. இதனுல் பாடசாலையை மட்டும் நம்பியிராமல் பெற்ருேர் பிள்ளை களைத் தனியார் கல்வி நிறுவனங்கட்கும் அனுப்பி, அடிப் படைக்கல்வியை வலுவுள்ளதாக்க முயலுகின்றனர். தனி யார் கல்வி நிறுவனங்கள் திடீரெனத் தோன்றிய அமைப் புக்கள் அல்ல. எமது பிரதேசத்தின் பாடசாலைகள் குறித்த கால எல்லைக்குள் பாடத்திட்டத்தைப் பூர்த்தியாக்க முடியா துள்ளது. இதனுல் தனியார் நிறுவனங்களை மாணவர் பெருமளவில் நாடினர்.
இதை விட ஆசிரியர் பற்ருக்குறை காரணமாகச் சில. பாடசாலைகளில் சில பாடங்கட்குத் தகுதி வாய்ந்த ஆசிரி யர்கள் இல்லை. வருட நடுவில் ஒய்வு பெற்றுச் செல்பவர் களின் இடம் சிலவேளை வருடம் முடியும் வரை காலியாய் இருக்கிறது. சில பாடசாலைகளில் போதிய அளவு ஆசிரி யர்கள் நியமிக்கப்படவில்லை. பல்கலைக்கழகப் புகுமுக வகுப் பில் போட்டி மூலமே மாணவர் தெரிவு செய்யப்படுகின் நறனர். மிகக் கூடிய புள்ளிகளைப் பெற வேண்டிய நிலையில் மாணவர் மேலதிக அறிவைப் பெறத் தனியார் நிறுவனங் களை நாடிச் செல்கின்றனர். a எக்ஸ்பிறஸ் இன்ஸ்ரிரியூட்: ,་
இது இருபாலைச் சந்திக்கு அருகாமையில் அமைந் துள்ள தனியார் கல்வி நிறுவனம். 1973 ம் ஆண்டு திரு. ரி. வரதராசன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இக் கல்வி நிறுவனத்தில் 6ம் வகுப்புத் தொடக்கம் க.பொ.த ' உயர்தரம் வரை வகுப்புக்கள உண்டு. 400 மாணவர் களுக்கு மேல் கல்வி கற்கிருர்கள். *4.
குடாநாட்டில் பெயர் பெற்ற எல்லா ஆசிரியர்களும் இங்கு கல்வி கற்பிக்கிறர்கள். பிள்ளைகளின் போக்குவரவு வசதிக்காக மினிபஸ் சேவையும் கட்டணம் பெற்று நடத்து கிருர்கள். 1986ம் ஆண்டு வரை வாடகைக் கட்டிடததில் இந்நிறுவனம் நடந்து வந்தது. இப்பொழுது மாடிக்கட்டிடம் அமைத்துச் சொந்தமாக நடைபெறுகின்றது. சமய அறிவுப் போட்டிகள் நவராத்திரி விழாக்கள் நடத்துகிருர்கள். செலின் இன்ஸ்ரிரியூட்:
இது இருபாலைச் சந்தியின் வடபால் உள்ளது. க.பொ.த.
சாதாரணதரம், க. பொ. த. உயர்தரம் வகுப்புக்கள்
; "
79

Page 52
நடைபெறுகின்றன. திரு. இராசநாதன் atsiruat 1987. ஆண்டு இந்நிறுவனத்தை அமைத்தார். இங்கு ஒரு பாலர் பாடசாலையும் உள்ளது.
சுவிவ்ற் அக்கடமி:
இது கோப்பாய் பிரதேச சபைக் காரியாலயத்துக்கு முன் உள்ளது. 1987ம் ஆண்டு தீபன் என்பவரால் தொடக் கப்பட்டது. க. பொ. த. சாதாரணதரம், க. பொ. த. உயர்தர வகுப்புக்கள் மாத்திரம் நடைபெறுகின்றன.
ஸ்ரார் பியூப்பிள் அக்கடமி:
இது 1986ம் ஆண்டு ஜீவமோகன் என்பவரால் ஆரம் பிக்கப்பட்டது. இவர் க. பொ. த சாதாரணதர வகுப்புக் கள் மட்டும் நடத்துகிருர் . இதுவும் கட்டப்பிராய்ப்பகுதியில் அல்பா ரியூசன் சென்ரருக்கு அண்மையிலுள்ளது.
இவற்றைவிட கோப்பாய்ப் பகுதியில் பலவீடுகளில் கல்விப் போதனைகள் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.
கிராம முன்னேற்றச் சங்கங்களின் பங்கு: கோப்பாய் வடக்கு கிராம முன்னேற்றச் சங்கம்:
இச்சங்கமும் கோப்பாய் வடக்குச் சனசமூக நிலையமும் ஒன்ருக அமைந்துள்ளது. 16. 12. 1948ல் அமைக்கப்பட்ட கட்டிடத்திலேயே இரண்டு சங்கங்களினதும் பணிமனைகள் அமைந்துள்ளன. இதன் தற்போதய தலைவராக திரு.சி.வே சுப்பிரம்ணியம் அவர்கள் இருந்து வருகிருர்கள், கிராம முன்னேற்றச் சங்கத்தின் பணிகளில் ஒன்றன முதியோர் கல்வித்திட்டத்தின் கீழ்க்குறித்த சனசமூக நிலையத்தில் பத்தி ரிகைகள் வைக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சிப்பெட்டி ஒன்றும் உள்ளது.
இச்சங்கம் இளைஞர்களை விவசாயத்துறையில் ஊக்கு விக்க 1953ல் ஒரு விவசாயக்கழகம் தொடங்கியது. ஆரம் பத்தில் ஆண்களை மட்டும் கொண்டதாயும் பின் பெண் களையும் சேர்த்து விவசாயத்துக்கு வேண்டிய உதவியளிக் கிறது. வருடாவருடம் விவசாயப் போட்டியும், சிலகாலம் பொருட்காட்சியும் நடத்துகிறது. இக்கழகத்திலிருந்து, திரு. த. சிவஞானம் என்பவர் அரசினரால் ஐப்பானுக்கு அனுப்பப்பட்டு விசேடவிவசாயப்பயிற்சி பெற்றுவந்து இங்கு பணியாற்றுகிருர் .
80

ஞானபாஸ்கரோதய இளைஞர் விவசாயக்கழகம்:
இது விவசாயப் பணிப்பாளரின் அனுசரணையுடன் 1954ல் ஆரம்பமானது. இளைஞரை விவசாயத்தில் ஊக்கு விப்பதே நோக்கமாகும். அவர்கட்குக் குறுகிய காலப்பயிற் சியும் விவசாயத்தில் ஈடுபட்டோருக்குச் செயல்முறை அறிவுறுத்தல், வழிகாட்டல், விதை, நாற்று, மருந்து வகை கொடுத்துதவல் ஆகியன இதில் அடங்கும். விஞ்ஞான முறையில் விவசாயம்' செய்ய அறிவதோடு தேகப்பயிற் சியும், வருவாயும் பெற இச்சங்கம் உதவுகிறது. பாட சாலை விட்டு விலகும் இளைஞர் இதில் சேர்ந்து விரிவான விவசாயப்பயிற்சி பெற வாய்ப்பு உண்டு.
ஞான பாஸ் கரோதய விளையாட்டுச் சங்கம்:
1919 இல் இருந்து, உதைபந்தாட்டம், கரப்பந்தாட் டம் , சுதேச விளையாட்டுக்களான தாச்சி மறித்தல் போன்ற வற்றில் பயிற்சியும், போட்டியும் நடத்தி வந்தது. 1939ல் இருந்து கல்லூரிகளில் நடாத்தும் விளையாட்டுப் போட்டி மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றியது. இதை விட, தேகப்பயிற்சிகளும் ஜிம்னஸ்ரிக்ஸ் - சொல்லிக்கொடுத்தது. வலிக்ாமம் கிழக்குப் பிரிவுப்போட்டிகளில் பங்கு பற்றவும் இச் சான்றிதழை உத்தியோகம் பெறும் போது ஆசிரியர் தொழில், பொலிஸ் பிரிவுகளில் காட்டித் தெரிவு பெற வும் முடிந்தது.
கோப்பாய் வடக்கு சமூகசேவா சங்கம்:
இச் சங்கத்தின் பிரதான பணியாகக் கோப்பாய் வடக் குப் பகுதியில் உள்ள சரவணபவானந்தா பாடசாலைக்கு வடக்குப் பக்கமாக 80 x 40 அடி நீள அகலத்தில் பெரிய மண்டபம் ஒன்று அமைத்து 1968 ஆம் ஆண்டு தொடக் கம் "பாலர் பகல் விடுதி” நடத்தி வருகிறது இதன் தற் போதைய தலைவராக முன்னுள் அதிபர் திரு. க இ. குமார சாமி அவர்கள் செயல்பட்டு வருகிறர்கள்.
இவ்விடுதி ஒரு குழந்தைகள் பராமரிப்பு இடமாக, இருந்தாலும் இங்கே செயற்படுத்தப்படும் கல்வி ஒழுங்கு கள் போற்றப்படத்தக்கன பாகும். இங்கு நான்கு ஆசிரி யர்கள் கல்வி பயிற்றி வருகிருர்கள். அவர்களில் ஒருவர் குருநகரில் உள்ள பாலர் பகல் விடுதியில் பயிற்சி பெற்று இங்கே வந்துள்ளார்.
81

Page 53
இவ்விடத்தில் 55 பிள்ளைகள் தற்சமயம் உள்ளனர். இப்பிள்ளைகள் 3 வயது தொடக்கம் 5 வயது வரை' உள்ள வர்கள் இவர்களுக்கு நவீன சாதனங்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. முன் ஆரம்பக்கல்வி இவ்விடக் குழந் தைகளுக்கு இங்கேயே கிடைக்கிறது, என்று கூறுவதில் ஐயமில்லை. -
காலை 8 - 30 மணிக்குப் பாடங்கள் தொடங்கும், இடை நேரத்தில் விளையாட்டுக்கள் பழகுவர். பிற்பகல் நான்கு மணிவரை இவ்விடுதிக்கருமங்கள் நடைபெறுகின்றன. காலை யில் பாலும், மத்தியானம் சோறும் , பிற்பகல் தேநீரும் கொடுக்கப்படுகிறது.
நவராத்திரி காலங்களில் சிறப்பாக தவராத்திரிக் கொலுவைத்து விழாக்களும் ஏடு தொடக்கும் வைபவமும் விமரிசையாக நடைபெறுகிறது. கூட்டுறவுச்சங்கம் வலிகிழக்குத் தென்பகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் :
இது புனரமைக்கமுன், வலிகிழக்குப் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கமென்று இருந்தது. புனரமைப்பின் விளை வாக வடபகுதி, தென்பகுதி எனப் பிரிந்தது. வடபகுதி அச்சுவேலிச் சங்கமாக அமைய, தென்பகுதி நீர்வேலிச் சங்கமாக அமைந்தது. இச் சங்கத்தின் தொழிற்பரப்பு வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்குச் செய்கைக்குப் பொருத்தமான வளத்தைக் கொண்ட நிலமாகவும், இப் பகுதிவாழ் மக்கட்டொகையில் பெரும் பான்மையானேர் விவசாயிகளாகவும் காணப்படுகின்றனர். கிராமப்புற விவசாயிகளிடையே இயற்கையாக அமையப்பெற்ற கூட் டுறவு வாழ்க்கை முறையும், இதனல் உருவான கூட்டு றவுப் பண்புகளும், பழக்கவழக்கமும் கூட்டுறவுக் கல்வி அனுபவமும், பயிற்சியின் விளைவாகப் பெற்றிருந்த நிலை யைக் காணமுடிகிறது. இச்சங்கத் தொழிற்பரப்பில் விவ சாயிகள்.எதிர்நோக்கிய உற்பத்தி, கடன், சந்தைப்படுத்தல் சுரண்டல் போன்ற அடிப்படைப் பிரச்சனைகட்கு ஒன்று சேர்ந்து தீர்வுகாண வேண்டிய தேவையும், பொருத்தமான ரொமியத் தலைமைத்துவ வழிகாட்டல் கூட்டுறவுக்கல்வியைத் தெரிந்து கொள்ள வாய்ப்பளித்தது.
கல்வி போதனையாக மட்டும் வழங்கப்பட வேண்டு மென்பதில்லை. நடைமுறை அனுபவங்களூடே புகட்டப்
82

படலாம். அங்கத்தவர்களது பொதுவான விவசாயப் பிரச் சனைகளான தரமான விதை, கிருமிநாசினி பாவனை , உரப் பாவனை, மாற்றுப்பயிர்ச்செய்கை, மண்ணின் உற்பத்திச் செறிவு ஆகிய விடயங்களில் காலத்துக்குக்காலம் விவசா யத் திணைக்கள உதவியுடன், பலகருத்தரங்குகளையும், செயல் முறைப் பயிற்சிகளையும் ஒழுங்கு செய்து நடத்தியுள்ளது. 1982 இல் தேசிய கூட்டுறவு சபையின் திரைப்படப்பிரிவு, திரைப்படக்காட்சி ஒன்றையும் நடத்தியது.
கூட்டுறவு தினவிழாக்களை நடத்தும் போது இச்சங்கத் தொழிற் பரப்பில் உள்ள பாடசாலைப் பிள்ளைகளிடையே கூட்டுறவு அறிவை ஏற்படுத்தக் கூடிய தலையங்கங்களின் கீழ் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி, என்பவற்றை நடத்தியுள்ளது. அண்மைக்கால மாக மகளிர்குழு அமைப்பைப் பரவலாக ஏற்படுத்தி அவர் களையும் சங்க அங்கத்தவராக்கி, பொருளாதார சமூக முன் னேற்றக்கல்வி வழங்கி வருகிறது.
மாதர் சங்கங்கள
கோப்பாய் வடக்கு மாதர் முன்னேற்றச் சங்கம் திரு மதி. மகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் அவர்களின் நிலையத்தில் ஒரு பாலர் பாடசாலை நடத்தி” வருகிறது. இப் பாடசாலையில் 30 பிள்ளைகள் கல்வி கற் கிருரர்கள். மாதரின் கல்வி அறிவை வளர்க்கவும் பொரு ளாதார வளத்தைக் கூட்டவும் குறிப்பிடட சில பணிகளை இவர்கள் நிகழ்த்தி வருகிரு?ர்கள். பன்னவேலை நிலையம் ஒன்று இவர்களின் மேற்பார்வையில் உள்ளது.
இதன் கல்வித் திட்டத்தின் ஆரம்பப்பணியாக ஒரு தையல் வகுப்பு, யுவதிகளுக்கு நடத்தி வந்தது. அண்மைக் கால அனர்த்தங்களினல் அது இடை நிறுத்தப்பட்டுள்ளது.
ஞானபாஸ்கரோதய மங்கையர் சங்கம்:
1951 இல் ஆரம்பமான இச் சங்கம் பெண் கல்வி, கலாச் சாரம், சமூகமுன்னேற்றம் போன்ற விடயங்களில் அக் கறை காட்டியது. கட்டுரைப் போட்டி, நாடகம், இசை, நடன நிகழ்ச்சி, வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி, மெய்வல்லுனர் போட்டிகளை நடத்தினர். வலிகாமம் கிழக்கு பகுதிப் போட்டிகளில் பங்குபற்றிப் பரிசுகளும் பெற்றனர். மொழிப்பற்று, சமயப்பற்று, தேசத்தொண்டு செய்யும் மங்கையரை உருவாக்குவதே இக்கழக நோக்கமாகும்.
83

Page 54
ஞான பாஸ்கரோதய மங்கையர் கிராம. அபிவிருத்திச் சங்கம்:
இது 1956 இல் கிராம அபிவிருத்தியை முக்கிய நோக்க மாகக் கொண்டு ஆரம்பமானது. கிராம யுவதிகட்குத் தொழிற் பயிற்சியளித்தல் மூலம் வருவாயைப் பெறலாம் என்பதால் அரச உதவியுடன் ஒரு நெசவு நிலையம் ஆரம் பித்தது. 1978 இல் அரசகொள்கை காரணமாக, உள்ளூர்த் துணி நெசவு வீழ்ச்சியடைந்தது. எனவே 1982 முதல் கலை, கலாச்சார, சமூக சேவைப்பணிகளில் ஈடுபடுகிறது. வீட்டுத்தோட்டம் அமைத்தல், கோழி, பசு வளர்ப்பு, மன யியல் பயிற்சி போன்ற விடயங்களைப் போதிக்கிறது.
இவ் விதமாக இயங்கிக் கொண்டிருக்கும் மாதர் சங் கங்களை விட, கூட்டுறவுத் துறையில் பெண்களை ஈடுபடுத் தவும் கூட்டுறவுக் கல்வியைப் புகட்டவும் கூட்டுறவு மக ளிர் சங்கங்களும் ஆங்காங்கு ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இவற்றின் பணி. ஒரு குறுகிய வட்டத்துக் குள் நிகழ்ந்து வருவது நோக்கற்பாலது. எவ்வாருயினும், இவைகளின் சேவையின் பின்னணியில் பெண்களின் கல் வித் தரத்தையும் பொருளாதார விருத்தியையும் உயர்த் தும் நோக்கம் பதிந்திருப்பதை நாம் அவதானிக்கக் Jan Liguu தாக உள்ளது
கூட்டுறவு மகளிர் குழு:
இவ் வாய்வுப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஷ குழுக் கள் பின்வருமாறு.
அ) கோப்பாய் வடக்குக் கூட்டுறவு மகளிர்குழு. ஆ) கோப்பாய் மத்தி கூட்டுறவு மகளிர்குழு. இ) கோப்பாய் தெற்கு கூட்டுறவு மகளிர் குழு.
ஈ) இருபாலைக் கூட்டுறவு மகளிர்குழு.
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், விவசாயம், கைத் தொழில், மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கங்கள் என்பவற்றி&ன உள்ளடக்கிய வகையில் நாடு முழுவதிலும் கூட்டுறவு மகளிர் குழுக்கள் தேசிய கூட்டுறவுச் சபையால் ஸ்தாபிக் கப்பட்டன. அவ்விதம் ஸ்தாபிக்கப்பட்ட பொழுது, வலி காமம் கிழக்குத் தென்பகுதிப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க நிர்வாக அமைப்பின் கீழ் இக் கொத்தணிப் பிரதே சத்தில் மேற் குறிப்பிட்ட நான்கு குழுக்களும் 1981 ம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருகின்றன.
84

இக்குழுக்கள் "கூட்டுறவு மகளிர் பாவனையாளர் கல்வித் திட்டம்’ ஒன்று தயாரித்துச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கான பொருள் உதவியை அத்தந்தத் தாய்ச் சங்கங்களும் 'சுவீடன் நாட்டுச் சீடா" நிறுவனமும் அளித்து வருகின்றன.
இக்கல்வித் திட்டத்தின்கீழ், சிக்கன சேமிப்புப் பழக் கங்கள், சமையல் முறைகள், குடும்பசுகாதாரம் பேணல், திட்டமிட்ட குடும்பவாழ்க்கை, வீட்டுத் தோட்டம், சிறு கைத்தொழில் முயற்சிகள், சுயதொழில் ஆர்வம் ஏற்படுத் தும் முயற்சிகள், கோழிவளர்ப்பு, மிருக வைத்தியம், குழந் தைவளர்ப்பு, முதலுதவிச் சிகிச்சை ஆகியவற்றில் விரிவு ரைகள், பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இருபாலை மகளிர்குழு ஒரு பாலர் பாடசாலையை இரு பாலைச் சந்தியிலுள்ள கூட்டுறவுச் சங்கக் கட்டிடத்தின் மேல் மாடியில் நடத்தி வந்தது. இக் குழுவுடன் கோப்பாய் மத்தி மகளிர் குழுவும் இணந்து, சென்ற ஆண்டு இருபத்தைந்து யுவதி$ட்குச் சமையற் கல்வி புகட்டும் வகுப்பு ஒன்று நடத்தித் தகுதிப்பத்திரம் வழங்கியுள்ளது. இக்குழு கோப் பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் சிற்றுண்டிச்சாலை நடத்துகிறது.
கோப்பாய் வடக்கில் உள்ள மகளிர் குழுவிலிருந்தும், மேற்படி மூன்று குழுக்களில் இருந்தும் ஐந்து யுவதிகளைத் தேர்ந்தெடுத்து இலவச தையல் வகுப்பு நடத்தி இவர் களுக்குத் தகுதிப்பத்திரமும் வழங்கியுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் 2 பேர் வீதம் எடுத்து கால்நடை வளர்ப்பு முறைபற்றியும் கல்வியூட்டித் தகுதிப் பத்திரங்கள் வழங்கி யுள்ளன. தட்டச்சுப் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப் படுகிறது. ஒவ்வொரு வருடமும் கூட்டுறவு மகளிர் குழுக் களின் வேலைகட்காகப் பாதீட்டில் பணம் ஒதுக்கப்பட்டு வருகிறது. 1983 ஆண்டுக்கான வேலைத்திட்டத்தில் தையல் பயிற்சி, பின்னல்வே%ல, தேனீவளர்ப்பு, மிருகவளர்ப்பு, சோயா உணவு தயாரிப்பு ஆகியன அமைந்துள்ளன். தற் பொழுது மகளிர்குழுச் செயற்பாடு தொய்வடைந்துள்ளது. தமிழ் வளர்த்த செம்மல்கள்: சேஞதிராய முதலியார்.
தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தில் இருந்து வடமுகமாக ஒரு நூறு யார் தூரம் சென்ருல் ஒரு மதகு தோன்றும். இதன் இடப்புறத்திலே யாவருமே உரிமை பாராட்டாது விடப்பட்ட நிலம்போல் ஒரு முக்காற்பரப்
$5

Page 55
புக்கானி, சுத்தம் செய்து ண்படுத்திப் பயன்படுத்தாது, கம்பிவேலியால் சுற்றியடைக்கப்பட்டுக் கிடக்கின்றது. இது 1700 ஆம் ஆண்டுவரையில் சீரும் சிறப்பும் பொருந்த வாழ்ந்த அருளம்பல முதலியாரின் வழிவந்தோருக்கு உரிய காணி எனவும் அவ்வழி வந்தோருள் ஒருவரான தண்டி கைக் கனகநாயகன் காலத்தில் ( 1790 ) கொம்பன்யானை கட்டி அவிழ்த்த இடம் எனவும் அறியலாம்.
ஒழுங்கை வழியாக உள்ளே சென்று இக்காணியின் மேற்கு எல்லையை ஆராய்ந்தால் முதலியார் வாழ்ந்த கல் வீட்டின் அத்திவாரம் இன்னும் அழியாது கிடப்பதைக் கண்டு வியப்புறலாம். ና •
ஒல்லாந்தர் காலத்திலே யாழ்ப்பாணக் காணிகளுக்குத் தோம்புகள் எழுதப்பட்டன. அப்படித் தோம்புகளை வாய்ப்புப் பார்த்துச் செப்பனிட்டுக் கையொப்பமிட பல் வேறு பகுதிகளுக்கும் முதலிமார் நியமிக்கப்பட்டிருந்தார். அப்படியாக நியமிக்கப்பட்டிருந்த பன்னிரண்டு முதலிமா ருள் அருளம்பல முதலியும் ஒருவராவர். 1707 ஆம் ஆண்டில் இவர் கைச்சாத்திட்ட தோம்புகள் இப்பொழுதும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றன.
இவருடைய மக்கள் பொன்னம்பலம், எதிர்வன்னிய சிங்கம் என்பவர்கள் பெற்றுப் பெருக வாழ்ந்தனர். இந்த எதிர்வன்னியசிங்கனுக்கு மகன் நெல்லைநாதமுதலி என்பவர். இவரே 1730 வரையில் இருபாலே மண்டாக்குள முதலி பரம்பரையில் விவாகம் செய்தவர். இருபாலேயில் தானே வாழ்ந்து வந்தவர். ஈடிணையற்ற ஞாபகசக்தி உடையவர். நெல்லைநாதமுதலியார் அட்டாவதானி என்றும் புகழ் வாங் கியவர். வைத்திலிங்கச்செட்டியார் வீட்டிற்கு இந்தியாவி லிருந்து புதுப்பாடல் யாத்துப் பரிசு பெறவந்த " செந்திக் கவியில் " பாட்டுப் பழம்பாட்டு என்று கூறி, அதனைத் தானே மீளப் பாடிக் காட்டியவர். இவர் சேனதிராயருக்குத் தகப்பன் மட்டுமல்ல, ஆசிரியராகவும் இருந்து வழிப்படுத் தியவர். t
நல்ல நிலபுலம் படைத்த மண்ணுடு கொண்ட முதலி பரம்பரையில் வந்து விவாகம் செய்து இருபாலேயில் தான்ே வாழ்ந்து வந்த நெல்லைநாதருக்குக் கந்தப்பிள்ளை, சேணுதி ராயர் என்ற இருபுத்திரர்கள் தோன்றினர்.
கந்தப்பிள்ளையை மாதமுதலி என்றும் கூறுவர். இவரும் தாமாகக் கற்ருராயினும் தம்பியாரைப்போல் பிரயாசை யுடன் ஆழக்கற்றவர் அல்லர். ஆயினும், தம்பியாருடைய
86

ஊஞ்சற்பாக்களை இனிக்க இனிக்கப் பாடவல்லவர். சேனதில் ராயர் தமது வளவில் அழகுற அமைத்த ஒலைக்கொட்டில் ஒன்றில் தமது சாய்மனைக் கதிரையில் வீற்றிருந்து ஒய் வெடுப்பார். ஐயம் நீக்கவரும் மாணவர் யாவரும் இங்கே தான் வந்திருந்து தெளிவுபடுத்திச் செல்லவேண்டும்.
சேனதிராயமுதலியார் அவர்கள் கல்வியால் ஊதியம் பெற்று வாழலாம் என்று கருதிக் கற்றவர் அல்லர். எல்லா வசதிகளும் படைத்தவர். தமிழ் சமஸ்கிருதம், ஆங்கிலம் இடச்சு ஆகிய மொழிகளும், இவற்றுடன் சட்டக்கலையும்,' மருத்துவமும் கற்றவர். இவருடன் சகபாடியாக இருந்து' இருபாலைச் செட்டியாரின் வாகட ஏடுகளைப் பாதுகாத்துக் கொடுத்தவராவர்.
மொழி பெயர்ப்பாளராகவும், சிறிது காலம் சட்டத் தரணியாகக் கடமை பார்க்கவும் கோடு, கச்சேரிகளுக்குச் செல்வது, இருபாலையில் இருந்து செய்வது சுலபமெனக் கருதி, இங்கேயே கூடிய காலத்தைக் கழித்தனர். 1830 வரையில் வட்டுக்கோட்டை செமினரிமார் செய்து முடித்த தமிழ் அகராதிப் பணியை ஆராய்ந்து திருத்தங்கள் செய்ய நியமித்த கல்வி வல்லவர்களின் குழுவிற்கு இவர் தலைமை. தாங்கினர்.
1836ம் ஆண்டு தொட்டு ஆறு ஆண்டுகள் வரை இலக்கண் இலக்கிய ஆசிரியராக இருந்து முதலியார் அவர்கள் தம் மாணுக்கரான கந்தப்பு ஆறுமுகம்பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். பிற்காலத்தில் "நாவலர் பெருமகளுகப்' பரிணமித்த ஒரு புண்ணிய புருசருக்கு முதலி யார் இளமையில் ஒர் ஆசிரியராகப் கற்பித்தார் என்ருல் இவர் எவ்வளவு பெருமதிப்புக்குரியவராகிருர், இவர் எண்பது வயது அடைந்திருந்தபோது நாவலர் பதின் நான்கு வயதில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் கோப் பாய்ப் பலானைக் கண்ணகி அம்மன் கோவில் ஊஞ்சற் பாட்டு யாத்துள்ளார். இருபாலையிலிருந்து நல்லூர்க் கந்தன் ஆலயம் சென்று பற்றுடன் தரிசித்து வருபவர் ஆதலால் நல்லூர்க் கந்தன்மீது நல்லை வெண்பா, நல்லை அந்தாதி. நல்லைக் குறவஞ்சி என்பன பாடியுள்ளார். பதினெட்டாம் நூற்(mண்டின் பிற்பகுதியில் கல்வி, செல்வம், அதிகாரம், ஒழுக்கம், சைவசீலம் முதலியவற்றில் சிறப்புற வாழ்ந் தவர். இவர் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், இருபாலை தமிழுக்கும், சைவத்திற்கும் 'தாயகம்' என விளங்கியது.

Page 56
இவருடைய ஊஞ்சற் பாட்டில் உதாரணத்திற்கு ஒன்று:-
பல புவன நாயகியே ஆடீடுஞ்சல்
பழமறையின் உட்பொருளே ஆடீடுஞ்சல் மலைமடந்தை கண்மணியே ஆடீடூஞ்சல்
வணங்கினர் வரந்தருவோய் ஆடீடூஞ்சல் சலசமலர் வதனியே ஆடீடூஞ்சல்
தமிழ்வாணர்க் கருள்பவளே ஆடீடுஞ்சல் குலவு மரகதமயிலே ஆடீடூஞ்சல்
கோவை நகர்க் கண்ணகையே ஆடீடூஞ்சல்”
சபாபதி நாவலர் (1845 - 1903)
உடுப்பிட்டிக் குமார மடப்பள்ளியைச் சேர்ந்த சயம்பு நாத முதலியார் பரம்பரையில் தோன்றி வர் &Futu 57 நாவலர் அவர்கள். இவருடைய தாயார் தெய்வாஃசப் பிள்ளை சுளிபுரத்தவர் ஆதலாலும், மனைவியார் அவ்வூ ரைச் சேர்ந்த மாமன் மகளாதலாலும் இவரையும் சுளி புரத்தவர் என்று பலர் கூறக்கேட்டதுண்டு. ஆயினும் இவர் வடகோவையில் வாழ்ந்ததற்குக் காரணம் இவரு டைய இனபந்துக்கள் இங்கும் அடுத்துள்ள கிராமமான நீர் வேலியிலும் வாழ்ந்ததே.
இவர் வடகோவை ஜகன்நாதக்குருக்களிடமும், பின்னர் நீர்வேலியின் சங்கரபண்டிதரிடமும் கல்வி கற்க வாய்ப்பு இருந்தது. ஆணுல் கற்றுத்தேறிய பின்னர் தம் வாழ்நாளில் பெரும் பகுதியை இந்தியாவிலேயே கழித்தார்; இடைக் கிட்ை வடகோவைக்கும் வந்து பே வார்.
இந்தியாவில் இருக்கும் போது திருவாவடுதுறை ஆதீன வித்துவானுகவும் சிறிது காலம் நாவலர் பெருமானின் சிதம்பர வித்தியாலயம் தலைமை ஆசிரியராகவும் கடமை யாற்றினர், இவருடைய நூல்கள் சில வருமாறு. " சிதம் பரநாத புராணம், சிவகர்ணுமிர்தம், சதுர்வேததாற்பரிய சங்கிர்கம், ஞானசூடாமணி, மாவை அந்தாதி, வடகோவை செல்வ விநாயகர் இரட்டை மணிமாலை, நல்லூர் சுப்பிர மணியக் கடவுள் பதிகம்" ஆகியவைகளாகும்.
இவருடைய நூல்களுக்கு மகுடம் சூட்டுவது போன்று 'திராவிட பிரகாசிகை" என்னும் வசனநூல் இருக்கின் றது. மிகவும் மிடுக்கான நடை உடையது. தமிழ் இலக் கியப் பரப்பையும், திராவிட நாகரிகத்தையும் ஒரு கண்

ணுேட்டம் கொண்டு ஆராய்ந்துள்ளது. இந்நூல் பின் வந்த இலக்கிய வரலாற்று நூல்களுக்குச் சிறு முன்னேடி எனலாம் .
நாவலர் திருவாவடுதுறையில் விசேட தீட்சை பெற்று 12 ஆண்டுகள் சமய சாஸ்திரங்களில் பயிற்சி பெற்றுப் புலவரானர். மதுரை மடாதிபதியாலும் இராமநாத புரம் மகாராஜாவாலும் பாராட்டப்பட்டார். 1882-1899 காலங்களில் சென்னையில் வித்தியானுபாலன் அச்சியந்திர சாலை அமைத்து சமய இலக்கிய நூல்களும், கண்டன நூல் களும் வெளியிட்டதோடு ஞானமிர்தம் என்னும் பத்திரி கையும் வெளியிட சேதுபதி மன்னரிடம் பத்திரிகைக்குப் பொருளுதவி பெற்றர். 1901 இல் சுதேசவர்த்தமானி எனும் மாதப் பத்திரிகை தொடங்கினர். தென்னுட்டுத் தலங்கட்கு யாத்திரை செய்து சமயப் பிரசங்கங்கள் செய்து வந்தார்.
திருக்கைலாய பரம்பரைச் சுப்பிரமணிய தேசிகர் அவர் கள் இவர்களுடைய ஞானவாதச் சொற்போர் வல்லமை பைக் கண்டு இவருக்கு நாவலர்பட்டம் வழங்கினர். இக் காலத்திலே சென்னை மாநகரிலும், மதுரையிலும் சமயப் பிரசங்கங்கள் பல நிகழ்த்தினர். சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் சமயப் பிரசங்கம் செய்து 1901 - 1903 வரை சேதுபதி மன்னரின் சன்மானம் பெற்றுச் சைவத் தொண் டுகள் பல செய்தார். சிதம்பரத்தில் 1903இல் காலமானர் .
சபாபதி நாவலர் அவர்கள் யாத்தமாவை அந்தாதிப் பாக்கள் சில:
காப்பு
பூவைத்திருத்தியுடனே புனைந்து பணிந்து புகழ் நாவைத் திருத்துவனெஞ்சத்து நாகத்திருமுகனை மாவைத்திருத்தல வேளுக்கந்தாதி வகுத்திடவின் பாவைத்திருத்த முறைவெனக் கீந்தருள் பாலிக்கவே.
பொன்னங் கடுக்கைப் புரிசடை யோன்றன்புதல்வன் முனர் முன்னங்கடுக்க முயலான் முளரி மலர்களினந் தன்னங் கடுக்கும் வயலிழ மாவைப்பதியகத்து மன்னங்கடுக்க மொழித்தருள் பாலிக்க வைகினனே,
12 89

Page 57
வைத்தானை யால சுரக்குழு மாய்த்தவன் மாவைமனல் கைத்தானை யாலொரு கானக் குறத்தி களப்பமுலை துய்த்தானை ஆறமர் மெம்மான் மகன் தன் . . . .
தொழும்பிலென உய்த்தானை யாது பொய்த் தேவர் தொழும்பினை
உற்று நின்றே.
உற்றவன் அன்பர்க்குருதவன் அன்பிலுளத் தினர்கனி முற்றவன் நன்குணர்ந்துய்ய மெய்ஞ்ஞான
V மொழிந்தவன்மால் கற்றவன் ருெழ மேயதென் மாவைக்கடவுள் தொழப் பெற்றவனன்று வரும்வினை வேரறப் பெற்றவனே.
தென்கோவை பண்டிதர் ச. கந்தையா அவர்கள்
இருபாலை மண்ணுடு கொண்ட முதலிவழித்தோன்ற லான சேனதிராசா முதலியாரின் பீட்டன் பண்டிதர் கந்தையா அவர்கள் சிறுவயதில் திண்ணப் பாடசாலையில் தமிழ் கற்பித்தவர்கள். திரு. சின்னப்பாபிள் ளை யும் *உதயபானு ' பத்திராதிபர் சரவணமுத்துப்புலவருமா வார். புலவரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றதுடன் கோப்பாய் சி. எம். எஸ் ஆங்கிலப் பாடசாலையில் ஆங்கில மும் கற்று வந்தார்: மேலே கற்க, சுண்டுக்குளி பரி. யோவான் கல்லூரியில் பயின்று மற்றிக்குலேசன் சித்தி யெய்தினர். அத்துடன் ஆங்கிலக்கல்வியை நிறுத்தித் தமிழ் பயின்று வந்தார். சிலகாலத்தில் புலவரது வழித்தோன்ற லான திரு. சி. கைலாயபிள்ளையவர்கள் மட்டக்களப்பில் துவிபாசியாகக் கடமையாற்றியவர். இவரை இங்கு அழைத் தார். அவரிடம் பயின்று கொண்டு, சைவவித்தியா விருத் திச் சங்கத்தின் முயற்சியால் மட்டக்களப்பில் அமையப் பெற்ற ஒரு வித்தியாசாலையில் தலைமை வகித்து நடத்தும் பொறுப்பை இவர் ஏற்ருர், கற்பித்தலுடன் சைவசமய, இலக்கியச் சொற்பொழிவுகளையும் மட்டக்களப்பில் நிகழ்த் தினர். அத்துடன் பாக்கள் இயற்றவும் தொடங்கினர். இவரது திறமையைக் கண்ட முதலியார் இவரை மேலே படிக்குமாறு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினர். சுன்னகம் அ. குமாரசாமிப்புலவரிடம் தொல்காப்பியம் இறையனரகப் பொருள், தண்டியலங்காரம், கந்தபுராணம், ரகுவம்சம், தணிகைபுராணம், இராமாயணம், தருக்கசாஸ்திரம் போன்றவற்றைக் கற்ருர். இக்காலம் கொழும்பு மாநகரில்
90

ஆங்கில ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் தமிழ் பயிற்றும் ஆசானுக நியமனம் பெற்ருர். இவரது மாணவர்களாகப், பின்னுளில் விபுலானந்த அடிகளான ச. மயில் வாகனனர், முதுதமிழ்ப்புலவர் மு. நல்லதம்பி என்போர் இருந்தனர். 10 வருட காலத்தின் பின் அவரைக் கல்விப் பணிமனையில், மொழிபெயர்ப்பாளராகவும் தமிழ்ப்பாட விதானங்கள் வகுப்பவராகவும், தமிழ்ப் பரீட்சகராகவும் கல்விப்பகுதி, யினர் வைத்திருந்தனர். இக்காலம் மாணவர்கட்கு ஏற்ற, நூல் எழுத வேண்டுமெனச் சுன்னகம் குமாரசாமிப்புலவரை, வேண்டி சில நூல்கள் எழுதுவித்தார். மேலும் கொழும்பு விவேகானந்த சபையில் அமையப்பெற்ற தமிழ் வகுப்புக் களை இவர் நடத்தி வந்தார்.
1922-ல் உத்தியோகத்திலிருந்து இளைப்பாறி இந்தியா" சென்று மேலும் ஆராய்ச்சி செய்ய அவாக்கொண்டார். இக்காலம் இவர் ஆசான் சுன்னகம் குமாரசாமிப்புலவர் காலமானர். இந்தியாவிலிருந்த காலத்தில் பல தமிழ்ப் பெரியார்களின் நட்பைப் பெற்ரு?ர். தமிழ்நூல் கற்பதி லீடுபட்டிருந்தவரிடம் இருந்தாற்போல் ஒரு மனமாற்றம்" ஏற்பட்டது. மெய்யுணர்தல் வேண்டி, சென்னையை விட்டுத் திருக்கழுக்குன்றம் சென்ருர், சுவாமி தரிசனம் செய்வதும்: மலையைச் சுற்றி வருவதுமாகக் கழித்தார். இவரிடம் தமிழ், பயின்ற சிறுவன் தன் கனவில் அம்பாள் தோன்றிப் புதுச் சேரிக்கு வரப்பணித்ததாகக் கூறினன். எனவே குருதரி சனம் "அங்கு பெறலாமென எண்ணிப் புறப்பட்டார். அங்கு வீதியில் இவரைக் கண்ட ஒருவர் ‘தங்களுக்காகவே வெகுநாள் காத்துக் கொண்டிருக்கிறேன் " என எதிர் கொண்டார். ஆறு மாதம் வரை புதுச்சேரியிலிருந்து தமதுல் நண்பராக வந்த குருவிடம் பல உண்மைகளைக் கற்றறிந்து இவரின் சம்மதத்துடன் ஊர் திரும்பினர். புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் “வித்தகம்’ என்னும் பெயர் கொண்ட வார வெளியீடு ஒன்றை நடத்தி, அதில் உண்மைச் சைவக முத்தியைப்பற்றி விளக்கமாகத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார். சுந்தசாதகம், உண்மைமுத்திநிலை, திருமூலர் மந்திரம் எனும் நூல்களை அச்சிட்டு இந்தியாவிலும், இலங் கையிலும் பரப்பினர். உண்மை முத்தித் தத்துவத்தையும்h இவர் விளக்கி எழுதியபோது சர்ச்சை உண்டானது. இவற்றிற்கு விளக்கமும், மறுப்பும் தமது பத்திரிகை வாயிலாகக் காலத்துக்குக் காலம் எழுதி வந்தார். இந்தி யாவின் தத்துவ சாஸ்திர விற்பன்னரான வேதாரணியம் டாக்டர் வி. வி . இரமணசாஸ்திரியார் சிலசமயம் இவரிடம்
91

Page 58
முத்திநிலை பற்றியும், சித்தர்கள் பற்றியும் விளக்கம் பெற் றதுண்டு. எழுதுவோருக்கு உதவிகள் செய்து வந்த இவரை ' எழுதா நூலாசிரியர் ' எனலாம்.
செய்யுள் இயற்றுவதில் வல்லவராக இருந்தது போல உரைநடையிலும் வல்லவராக இருந்தாரி. செந்தமிழ் எனும் பத்திரிகையில் எழுதியுள்ளார். மகாவித்துவான் சி. கணே சையர் எழுதிய தொல்காப்பிய உரைக்கு விளக்கக் குறிப் புக்கள் கொடுத்துதவினர். பண்டிதர் அவர்கள் தம் ஆசா னின் பெயரை ஒரு காலத்திலும் வெளியிடவில்லை. வித்த கத்தில் மறையினுள் மறையாய் ஆசான் பெயர் காணப் படும் எனக் கூறி வந்துள்ளார். நோய் வாய்ப்பட்ட நிலை யிலும் மொழி, சமய விடயங்களில் சந்தேகம் கேட்டுத் தெளிந்தனர் பலர். எக்காலமும் தமது பூசை, தியானம், ஓமங்கள் செய்யத் தவறியதில்லை. 1958ல் இறைவனடி எய் திய இவர் இறக்குமுன் அறுபத்துமூவர் என்னை வந்து அழைக்கின்றனர். நான் அவர்களுடன் செல்லப் போகிறேன் என உறவினரிடம் கூறினர். தாமாகக் கண்மூடித் தியா னித்த வேளை உயிர் பிரிந்தது. ۔۔۔۔
இவரின் தமிழ்ப்பணியாகத் தணிகைப்புராணத்துக்கு உரை எழுதியமை மேலைக்கரம்பன் முருகப்பெருபான் பதிகம், மூளாய் மூத்தவிநாயகர் ஊஞ்சல் புதுவை மணக்குள விநாயகர் ஒருபாஒருபது, புதுவை மணக்குள விநாயகர் பதிகம், புதுவை மாரிமுத்தம்மையார் பதிகம், ஜோஜ் மன்னர் இயன்மொழி வாழ்த்து இரகுவம்சப்புத்துரை தொல்காப்பியம் சொல்லதிகார உரை விளக்கம் குறிப் புக்கள், குமாரசாமிப் புலவர் இரங்கற்பா என்பவற்றைக் கூறலாம். இவற்றுள் மேலைக்கரம்பன் முருகப் பெருமான் மீதும், மூளாய் மூத்தவிநாயகர் மீதும் பாடியவை கடவு ளருள் வழிநின்று பக்தியால் மனம் நெக்குருகப் பாடிய பக்திச்சுவைப்பாக்களாகும் கைமாறு கருதாது தமிழ்க்கல்வி கற்பித்த புலவர் அவர்கள் மறைவின் போது பாடிய இரங் கற்பாக்கள் அவர் தமது ஆசானிடம் என்றும் பெருநன்றி யுடையவராக இருந்ததை உணர்த்தும். இவரது பெரிய படமொன்று இராமநாதபுரம் சேதுபதிமகாராஜா அரண் மனையில் திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
வைத்தியக் கலாநிதி சி . சுப்பிரமணியம்:
தெய்வப்புலவர் வள்ளுவர் பெருமான் உலகுய்ய எடுத்
துக்காட்டிய நீதிகள், அறங்கள், நன்னெறிகட்கு இலக்கி யமாகக் கூடிய ஒருவரை நேரே கண்டுகளிக்கும்பேறு
92

பெறுவது அற்புதமேயாகும். உலகம் தம்மை முன்மாதிரி யாகக் கொள்ளத்தமது நினைப்பருத் தொண்டுகளால் சீலத்தால் அழியாப் புகழ் படைத்த பெருமகனகக் கணிக் கப்படுபவர் டாக்டர் . சி . சுப்பிரமணியம் அவர்கள்.
" நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் ' ** ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு . " " தாமின்புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்தார். '
குறள்.
எவ்விதபயனும் கருதாது தமது சேவையே வாழ்க்கை நோக்காகக் கொண்டு கடமையாற்றிச் செல்வோரைக் கர்ம யோகிகள் என்பர். அயல்நாட்டில் மகாத்மா, திலகர், அர விந்தர் முதலியோரைக் கர்மயோகிகள் என்பர். அவ்வாறு இலங்கையிலும் பொதுமக்களின் வாழ்க்கை நலனை இலக் காகக் கொண்டு பயன் கருதாது அறுபது வருடங்கட்கு மேல் தமது சேவையைக் கடமையாகக் கருதிச் செய்தவர் இவர்.
இருபாலைத் தோப்பு முதலி வளவைப் பிறப்பிடமாகக்" கொண்டவர் இவர். வளரும் பயிரை முளையில் தெரியும் என்பதற்கிணங்க, கோப்பாயில் உள்ள தமிழ் வித்தியாசா, லையிலும், பின் அங்குள்ள ஆங்கிலவித்தியாசாலையிலும் ( சி . எம் . எஸ் ) கல்வி பயின்று உயர்கல்விக்காக மத்திய கல்லூரியிலும் பயின்று எவ் ஏ சித்தியடைந்தார். பின் திருச்சி, சென்னை நகர்களில் கற்று, கல்கத்தா சென்று வைத்தியக் கலாநிதியாக விசேட சித்தியுடன் தேறினர், வங்காள அரசினர் இவரது சேவையைத் தாம்பெறக்கருதி, அங்கு உத்தியோகம் வழங்க முன்வந்தும் ஏற்காது தாய் நாடு திரும்பினர். இலங்கை அரசின் கீழ் பல இடங்களில் வைத்தியராகக் கடமைபுரிந்த இவரின் திறமைகண்டு விசேட பயிற்சி பெற அரசு உபகாரச் சம்பளம் கொடுத்து இங்கி லாந்துக்கு அனுப்பியது. இலண்டனிலும், எடின்பரோவிலும் பயின்று எல் . ஆர் . சீ . பி , எஸ் என்ற உயர் பட்டம் பெற்று இலங்கை திரும்பி மறுபடியும் இலங்கை அரசின் கீழ் பல இடங்களிலும் வைத்தியராகப் பணிபுரிந்து, மாகாண வைத்திய நிர்வாக அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்ருர், ஓ காலை, மாலை நேரங்களில் தமது இல்லத்தில் இலவசமாக வைத்தியம் செய்யத்தொடங்கினர். 1930 இல் யாழ்ப்பா
93

Page 59
ணத்தில் சேவையாற்ற வந்தபின் இலவச வைத்தியப் பணியுடன் கல்வி, சமூக முன்னேற்றத்திலும் அக்கறை காட்டத் தொடங்கினர். தமது சேவை நோயாளருக்கு மாத்திரமன்றி மற்றையோருக்கும் பயன்பட வேண்டு மெனக் கருதினர். ஒரு நாட்டின் உண்மை விருத்தி கல்வி மூலம் தான் ஆகவேண்டும் எனவுணர்ந்து அத்துறையில் இயன்ற உதவிபுரிய ஆயத்தமானர்.
1934-இல் வைத்திய சேவையிலிருந்து இளைப்பாறிச் சொந்த இல்லத்தில் நோயாளருக்குச் சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார். பொருள் ஈட்டலைப் பிரதம நோக்காகக் கொள்ளாது வைத்தியத் தொழிலைத் தமது கடமையாகச் செய்த இவரிடம் பொருளும் சேர்ந்து கொண்டிருந்தது. இவர் ஈட்டிய செல்வத்தில் பெரும்பகுதியைத் தர்ம கைங் கரியத்திற்கும், வித்தியாசாலைகளுக்கும் இடைவிடாது வழங்கிவந்தார். எல்லாத் தர்மங்களிலும் வித்தியா தர்மமே சிறந்ததென்று.
" அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினயிரம்
நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி யொளிர
நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் சோடி ஆங்கோர் ஏழைக்
செழுத்தறிவித்தல்" "
பாரதி வாக்கிற்கொப்ப அத்துறையில் விசேட அக்கறை கொண்டார். மதச்சார்பின்றிக் கல்வி விருத்திக்கு வழங்கி, வந்தார். வாசிகசாலை, வித்தியாசாலை, புத்தகசாலைகளுக்கும் உதவினர். கிராமங்களில் அமைக்கப் பெற்ற சனசமூக நிலையங்கள், கிராமமுன்னேற்றச சங்கங்கள் என்பனவும் இவர் உதவி பெற்றுள்ளன.
கந்தரேர்டை ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் முகாம்ை " யாளராக இவர் 1936 தொடக்கம் பதவியேற்று நிர்வகித் தார். இவர் கையேற்ற காலத்தில் 15 வகுப்பும், 400 மாணவரும் கொண்ட வித்தியாசாலை, பின்னர் 60 க்கு மேற்பட்ட ஆசிரியர்களையும் 10 கட்டடங்கஃ யும், 1600 உக்கு மேற்பட்ட மாணவர்களையும் கொண்டு விளங்கியது. விஞ்ஞானகூடம், விடுதிச்சாலை, போசனசாலை, விளையாட்டு மைதானம் என்பனவும் இவர் காலத்தில் எழுந்தன.
94

கந்தரோடையிலுள்ள தமிழ் வித்தியாசாலை முகாம்ை யாளராகவும் இவர் கடமையாற்றினர். அதன் வளர்ச் சிக்குப் பொருட் செலவு செய்தார். 1930 தொடக்கம் சைவவித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவராக இருந்து அதன் வளர்ச்சிக்குச் சன்மானித்து வந்தார். சைவாசிரிய கலாசாலை மாணவ விடுதிச்சாலை இவரளித்த உதவியுடன் கட்டப்பட்டது. யாழ்ப்பாண நகர மண்டபத்து முன்னுள்ள பூங்கா இவர் பொருள் கெ ண்டு அமைக்கப்பட்டது. கந்த ரோடை சுப்பிரமணிய வாசிகசாலை இவரது பணத்தால் அமைக்கப்பட்டது. யாழ், இந்துக் கல்லூரி, யாழ். இந்து மகளிர் கல்லூரி, சைவ பரிபலன சபை, வைத்தீஸ்வர வித்தியாலயம், வடமராட்சி இந்துக் கல்லூரி, யாழ். பொது சன புத்தகசாலை, மூளாய், மானிப்பாய், இணுவில் வைத் தியசாலைகள் என்பவற்றிற்கும் கல்வியில் ஊக்கமும் விவே கமுமுடைய உறவினருக்கும், உறவினர் அல்லாத மாண வருக்கும் உயர் படிப்பிற்கு உதவி செய்தார். இவ்வாறு கல்வி வளரத் தொண்டுகள் புரிந்த இவர் 1964 இல் சிவ பதமடைந்தார். திரு. மு. சுவாமிநாதன் அவர்கள்
கோப்பாயைச் சேர்ந்த முருகேசு சுவாமிநாதன் 1905 இல் மலேயா சென்று அங்மு பகாங் என்னும் இடத்தில் ஒர் ஆங்கிலப் பாடசாலையை ஆரம்பித்து, நடத்தி வந்தார். இதனை 1909 இல் அந்நாட்டு அரசிடம் ஒப்படைத்து விட் டுத் திரும்பி வந்தார். இன்று இப் பாடசாலை பெரிய கல் லூரியாகத் திகழ்கிறது. சொந்த ஊர் திரும்பிய இவர், 1910 இல் பெண்களுக்கென ஒரு சைவ வித்தியாசாலையை ஆரம்பித்தார். இது சேர். பொன் இராமநாதன் அவர் களின் தலைமையில் கோப்பாய் சரஸ்வதி வித்தியாசாலை என்று பெயர் சூட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. 1913 இல் அரச உதவி நன்கொடை பெறும் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டது.
முன்னரே நல்லூர் பூஜீ ஆறுமுகநாவலர் அவர்களால் 1872 இல் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையும் நடைபெற்று வந்தது. இது 1898 இல் கோப்பாய் நாவலர் ஆண்பாட சாலையெனப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இரு பாடசாலை களையும் தனித்தன நடத்துவதன் சிரமத்தால் 1915-ல் இரண்டையும் ஒன்று சேர்த்து கோப்பாய் இந்துத் தமிழ்க் கலவன் பாடசாலை என்ருக்கினர். உரும்பிராயில் ஆங்கிலப் பாடசாலை ஒன்றை அமைக்க 1911-ல் அத்திவாரம் இட்ட
95

Page 60
வர்களில் சுவாமிநாதனும் ஒருவர். அக்கல்வி நிலையம் இன்று உரும்பிராய் இந்துக்கல்லூரி எனும் பெயர் தாங்கி நிற்கிறது.
காரைநகரில் ஆங்கிலப்பாடசாலையை ஆரம்பித்தபோது அதற்கு உதவியாய் இருந்ததுடன் சிலகாலம் ஆசிரியராக வும் பணிபுரிந்தார். 1916-ஆம் ஆண்டளவில் தமிழ் ஆசிரியர்களே உருவாக்கவென சிலரின் முயற்சியால் கோப் பாய் ஐக்கிய போதன ஆசிரியர் கலாசாலை உருவானது. இதுவே பின்னர் அரசாங்கம் பொறுப்பேற்று நடத்தும் கோப்பாய் ஆசிரியர்கலாசாலை ஆகும். இவ்வாறு முயன் ருரில் திரு. மு. சுவாமிநாதனும் அடங்குவார். யாழ்ப்பாணப் பிரதேசத்தின் முதன்மை பெற்ற பயிரான பனம்பொருள் உற்பத்தியை ஊக்குவிக்கக் கருதிய இவர் 1927-ஆம் ஆண்டு தொடக்கம் தமது பாடசாலையில் பன்னவேலை பயிற்றுவிக்க ஆசிரியரை நியமித்தார். இதைப் பெண் களுக்கு முழுநேரப்பாடமாகப் போதித்துப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைப் பல பாடசாலை கட்குப் பன்னவேலை ஆசிரி யைகளாக நியமனம் பெற அரசாங்கத்துக்கு வழிவகுத்துக் காட்டினர். நீர்கொழுபில் அரசாங்கத்தைக் கொண்டு பன்ன வேலைப்பயிற்சிக் கலாசாலையை நடத்தினர்.
உருப்பிராய் இந்துக்கல்லூரியிலும் சிலகாலம் ஆசிரிய ராகக் கடமையாற்றி, அதன் வளர்ச்சிக்கும் பாடுபட்டார். அரசாங்கத்தால் ' சமாதான நீதவானுக ’ நியமிக்கப் பட்டார். தாம் கட்டிய பாடசாலைகட்கு முகாமையாள ராகவும் இருந்து வந்தார். பொதுத்தொண்டில் சர்ரம் மறைந்தபின்பும் புகழ் நிலைக்குமென்பது இவர் வாழ்விலும்
26T6Ion LDLufT607 ghl.
திரு சு. இராசரத்தினம் அவர்கள் (இந்துபோட் ) .
வடமாகாணத்திற் சைவக்கல்வியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய தாபனம் சைவவித்தியா விருத்திச்சங்கம் 1923இல் சேர் . பொன் . இராமநாதன், சேர் . வை துரைச்சாமி போன்றேரால் இச்சபை உருவக்கப்பட்டது, இது சைவக்கல்வி வளர்ச்சிக்காகப் பல சைவப் பாடசாலைகளை ஆரம்பித்ததுடன் பிறரால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை களைத் திறம்பட நடத்தி வந்தது. இக்கிராமங்கள் கூடத் தமக்கெனக் கல்வி நிலையங்களைப் பெறும் வாய்ப்பை இச் சங்கம் அளித்தது. இச்சங்கத்தின் வளர்ச்சியிலும், சேவை
་ 96

யிலும் திரு . சு: இராசரத்தினம் அவர்கள் வகித்தபங்கு மறக்க முடியாதது. இதனலேயே இவருக்கு “ இந்துபோட்" இராசரத்தினம் " எனப் பெயர் வழங்கியது. ; : ،مج
கோப்பாயில் பிறந்த இவர் யாழ் . மத்தியகல்லூரியில் உயர் கல்வி கற்று கல்கத்தா பல்கலைக்கழக கலைமாணிப் பட்டம் பெற்றர். பின் கொழும்பு சட்டக் கல்லூரியில் பயின்று சட்டத்தரணியானர். தற்காலிக மாவட்டநீதிபதி யாகவும் இருந்துள்ளார். சைவவித்தியா விருத்திச்சங்கத்தின் ஆரம்ப காலக் காரியதரிசியாகவும், பின் தலைவராகவும் பதவி வகித் தார். சைவப் பாடசாலைகள் நிறுவுதற்கு இருந்த சட்டத்தடைகளை நீக்க உதவினர். இந்துக்களின் சரித்திரம் முழுவதையும் நோக்கும் பொழுது அவர்களின் சிறந்தபண்பு அறிவைத் தேடுவதிலிருந்த ஆர்வமாகும் என்பது தெளிவு. இப்பண்பில் சைவவித் தியாவிருத்திச் சங்கத்தவரான இவர் சைவச் சிறுவர்கட்கு அறிவைப் பரப் புவதில் ஆர்வம் காட்டியமை புலனகும். பிறமதப் பாட சாலைகட்குப் பிள்ளைகள் இழுபடுவதைத் தடுத்து நிறுத்தி யவர்களுள் தலையாயவர். கிராம முன்னேற்றச்சபை, அபி விருத்திச்சங்கம், கல்விப்பாதுகாப்புச்சங்கம் என்று ஏதும் ஒருசங்கம் தொடங்குவித்து அதன் சார்பாகத் தற்காலிக கட்டட வசதிகளும், தளபாடங்களும் சேர்த்துச் சைவப் பாடசாலை தொடங்குவார். இப்படியாக மட்டுவில், நல்லூரி வேரவில் குமுழமுனை, பொன்னுவெளி ஆகிய கிராமப் பகுதிகளிலும் முந்தல், புத்தளம், பதுளை போன்ற வெளி யிடங்களிலும் பாடசாலைகள் தொடங்கினர், நூற்றுக்கு நூறு வீதம் சைவப்பிள்ளைகளின் பெயர்கள் வரவு இடாப்புப் பட்டியலில் காணப் பட்டன. சில காலம் சட்டநிரூபண சபை அங்கத்தவராகவும் இருந்தும் தன் சொந்தத் தொழிலையும் பாராமுகம் செய்தும், சைவப் பாடசாலைகளைத் தொடக்கி அரசின் அங்கீகாரம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டார். இந்நூற்ருண்டின் முற்கூற்றில் சுமார் 30 - 40 வருடங்களாக யாழ்ப்பாணம் முழுவதும் நூற்றுக் கணக்கான
பாடசாலைகளைத் தொடக்கியவர். .3
சைவவித்தியாவிருத்திச் சங்கத்தின் பிறிதொரு சேவ்ை இவற்றைவிடச் சிறப்புப் பெறுகிறது. சைவசமய மரபுக் கோட்பாட்டிற்கமைய சிறுவர்கட்குக் கல்வியூட்டக்கூடிய ஆசிரியர்கள் இல்லாமை பெருங்குறையாய் இருந்தது . அரசாங்கப் பயிற்சிக்கல்லூரி அத்தேவையை முற்ருக நிறை வேற்ற முடியாத நிலையில் கல்வி அதிகாரியின் ஆலோசனையின் பேரில் இச்சங்கம் 1928இல் திருநெல்வேலியில் சைவ ஆசிரியர்
97

Page 61
பயிற்சிக்கென ஒரு கல்லூரியை நிறுவியது. சுமார் 1600 ஆசிரி யர் பயிற்சி பெற்றனர். பின்பு அரசு பொறுப்பு ஏற்றது? சைவச் சிறுவர்கட்கு இல்லம், சைவம் வளரக் காவிய பாடசாலை கைத்தொழில் வளர நெசவுசாலை, அனதைகட்கு அனதை இல்லம் போன்றவற்றையும் இச்சங்கம் நடத்தி வந்தது. 1962இல் அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப் பேற்றபோது, இவ்வமைப்பின் கீழ் இருந்த 182 பாடசாலை கள் எடுக்கப்பட்டன.
இவர் " இராசரத்தினம் வழக்குச் சுருக்கம் " என்னும் தீர்க்கப்பட்ட வழக்குக்களின் தொகுப்பை அநேக ஆண்டு களாக வெளியிட்டு வந்தமை, இன்று சட்டமேதைகளின் ஆய்வுக்கும், சட்ட மாணவருக்கும் உதவுகிறது. நியாயதுரந் தரனய், பதில் நீதவானுய், பாராளுமன்ற அரசாங்கப் பிரதிநிதியாய், ஆசிரியருக்கு உத்தியோகம் அளிக்கும் எச மானுய், சைவவித்தியாவிருத்திச்சங்க முகாமையாளராய் இருந்தாலும் ஈழமெங்கும் சைவப்பாடசாலைகளை எழுப்பி இளம்பிள்ளைகள் மனதில் பிறம்தத்தாக்கங்கள் சிதைக்காமல் தடுத்த பெரு முயற்சியாளன் என்ற வகையில் கோப்பாய் வாசிகளும் பொதுவாக யாழ்ப்பாண இந்துக்களும் இவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டியவர்கள்.
குருமணி. வே. சிதம்பரப்பிள்ளை;
சரவணபவானந்த வித்தியாசாலை தாபகர்களில் ஒருவ ரான திரு. வே. சிதம்பரப்பிள்ளை அவர்கள் அப்பாடசாலை யிலேயே ஆசிரியராக இருந்து, பின் அதன் தலைமை ஆசிரிய ராகி ஓய்வு பெற்றவர். இவர் கற்பித்த காலை நன்மாணக்கர் பலரையும், நல்லாசிரியரையும் உருவாக்கினர். முத்தமிழ் வித்தகரான இவரை ஒரு வரகவி எனலாம். அதிலும் வசைக்கவி பாடுவதில் வல்லவர். வாழ்த்தியோ, நகைச் சுவையாகவோ பாடல்களும் புனைவர்.
1930இல் ஈழகேசரி சுன்னுகத்திலிருந்து வெளியான போது, அதன் ஆசிரியரான திரு. பொன்னையா அவர் களை வாழ்த்திக் கவி பாடினர். நாமந்தரிதை அணியில மைந்தது இது.
சுன்னுகஞ்சேர் சங்கானையின் மாதகலாம் நன்னயகங்கட்டுவன் கந்தரோடை தலமருள இன்னவ கற்றிரு ஈழகேசரிப் பொன்னைய வித்தக
நின்தமிழை
98

துன்னுலை விாசன் சிதம்பரத்தோன் துதித்தனனே. யாழ்ப்பாணத்திலுள்ள பல ஊர்ப் பெயர்கள் வரத்தக்கதாக அமைக்கப்பட்ட பாடலிது. இதைவிட, கோலாட்டம் நாட்டுக்கூத்துப் பாடல்களும் பாடுவார். அக்காலத்துப் பிரசித்தி பெற்ற நாடகங்கள் பற்றிப் பேசவும், நடித்துக் காட்டவும் வல்லவர்.
இவர் வடகோவை வாசியாக இருந்தும் கல்வியங் காடு சி. எம். எஸ். பாடசாலையில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்தார். தவிர, கிறிஸ்தவராகவும் இருந்தார், கோப்பாயில் சி. எம். எஸ். பாடசாலை கிறிஸ்தவ சமயத் தைப் போதிப்பதாக இருந்தது. கோப்பாய் வாசிகள் ஒரு சைவப்பாடசாலை இல்லாத குறையைப் போக்க 1928இல் வடகோப்பாயில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்து, அதற்குச் சரவணபவானந்த வித்தியாசாலை எனப் பெய ரிட்டனர். அதனை க் கொண்டு இயக்க வல்லமையுள்ள ஒரு நல்லாசிரியரைத் தேடிய பொழுது இவரைப் பொருத்த மானவராகக் கண்டு பாடசாலைப் பொறுப்பேற்க வேண் டினர். முதலில் இவரை சைவ சமயியாக்கி, பாடசாலை யின் தலைமைப் பதவியையும் இவரிடம் ஒப்படைத்தனர். அக்காலம் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் பொறுப்பில் இப் பாடசாலை இருந்தது. இவரின் அயரா உழைப்பால் 1931இல் சிரேட்ட பாடசாலையாக உயர்த் தப்பட்டது. இவ்வாண்டுப் பரீட்சைக்கு அனுப்பப்பட்ட தான்கு மாணவரும் சித்தியடைந்தனர். மேலும் வருடா வருடம் பாடசாலையில் சேரும் மாணவர் தொகை அதி கரித்தது. ஆசிரியம5 , குருமணி என்ற பட்டங்களும் இவ ரைத் தேடி வந்தன.
இவர் பாடசாலையில் கல்வி கற்பிப்பதுடன் நின்று விடாது நாடகங்களை மாணவருக்குப் பயிற்றினர், சிலம் பம், காவடி, கோலாட்டம் என்பவற்றையும் மாணவருக் குப் பயிற்றி விழாக்களில் மேடையேற்றினர். கோயில் களில் பாட, சில பஜனைப் பாடல்கள் இயற்றினர். நல்லேக் கந்தன், கோவைக் கந்தன், விநாயகர், கண்ணகி ஆகிய தெய்வங்கள் மீது பாடல்கள் பாடியுள்ளார். இவற்றில் நல்லைக்கந்தன் கீர்த்தனமாலை என்ற பாடல்கள் அச்சேறின. ஏனையவை தனிப்பாடல்களாகவும் கையெழுத்துப் பிரதி களாகவும் உள்ளன. பல அரச அதிபர்கள், ஆங்கிலத் தேசாதிபதிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு விஜயம் செய்கையில் வரவேற்பு வைபவங்களில் இவரது மாணவர் களின் காவடி, கோலாட்டம், சிலம்ப நிகழ்ச்சிகள் இடம்
பெறும்.
O)

Page 62
கவிபாடுவதில் வல்லவராய் இருந்த காரணத்தால் பல மாணவருக்குப் பயிற்சியளித்தார். இலக்கண அமைதி யுடன் பாடப்பயிற்சியளிக்க இலக்கணம் கற்பித்தார். குரு மணியவர்கள் தமது வாழ்நாளில் முத்தமிழ் வித்தகராக வரகவியாக, விளையாட்டு வீரராக, நல்லாசிரியராக வாழ்ந்து மறைந்தார். இவர் சில தனிப்பாடல்களும் பாடி யுள்ளார். இவர் பாடிய,
வடகோவைக் கந்தன் மீது தனிப்பாடல்:
சித்தர் துதி செய் கோவைச் சித்திர வேலாயுதர் சுத்த மலர்ப் பதங்கள் தா - சேயர்க்குன்ற்ன் சித்தமிரங்கி யருள்தா. விகசித நடமிடு மயிஞறை வாசன் இகபர மிரண்டிலும் சுகந்தரு மீசன் ஈசன் முருகேசன் பேசும் பிரகாசன் எங்கும் புகழ் கோவையின் குடியான்.
திரு . அ. வி. மயில்வாகனன்:
கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாக கொண்ட திரு அ. வி. மயில்வாகனன் இளம்பராயக் கல்வியை நாவலர் பாடசாலையிலும், கோப்பாய் சி. எம். எஸ். எனும் பெய ரோடிருந்த - இன்றைய கிறிஸ்தவக் கல்லூரி - பாடசாலை யிலும் பெற்றர். இங்கு E. S. L. C. பரீட்சையை முடித்து, இத்திருச்சபையைச் சேர்ந்த பாடசாலையான சுண்டிக்குளி பரியோவான் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி பெற்ருர்? பின் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பின், பல்கலைக் கழகக் கல்லூரியிலும் சேர்ந்து 1936 - 38 கலை மாணிப் பட்டம் பெற்றர். இதற்கு முன்னரே 1934 - 36 ல் கோப்பாய் நாவலர் பாடசாலையில் ஆங்கிலம் கற்பிக்கும் உதவி ஆசிரியராகச் சிலகாலம் கடமையாற்றினுர், s
கலைமாணிப் பட்டம் பெற்ற சில நாட்களில் 1939 ல் அருணுசலம் புலமைப்பரிசில் பெற்று சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வு செய்யும் மாணவனக அனுமதிக் கப்பட்டார். அங்கு இவரின் ஆசிரியர்களாக ஆர்.பி. சேதுப் பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை போன்றேர் இருந்தனர்; சென்னை வை, எம். சி. ஏ. கூட்டத்தில் சேதுப்பிள்ளை அவர்கள் உரை நிகழ்த்துகையில் * ஆர். பி. யின் இடத்தை அவர் இல்லாத வேளைகளில் இவர் நிரப்வ வேண்டும்."
10

எனக் கூறிய்மை குறிப்பிடத்தக்கது, அப்போது பல்கலைக் கழக அதிபராக இருந்த திரு. ஆர். மார்ஸ் என்பவர் இவர் மேல் அதிக பிரியம் காட்டினர். இவரது தமிழ் egy ü6. j, al-G63)Jun & The Development of Tamil Prose என்னும் கட்டுரையைச் சமர்ப்பித்தார். இது பின்னர் புத் தக வடிவில் வெளியிடப்பட்டு நூல் நிலையங்களில் உயர் வகுப்புப் பாடநூலாக வைக்கப்பட்டிருக்கிறது. திரு.வையா புரிப்பிள்ளை அவர்கள். தான் கண்ட ஆராய்ச்சி மாணவர் சளில் தலை சிறந்தவரென இவரைப் பாராட்டியுள்ளார்கள்
இந்தியாவில் தமிழ் ஆய்வு செய்து கொண்டிருந்த போது அடையாறில் மொன் ரிசூரி அம்மையார் பாலரைப் பயிற்றுவது பற்றிய வகுப்புக்கள் நடத்தி வந்தார். அதில் இவரும் சேர்ந்து பயின் ருர், அம்மையார் இத்தாலி நாட் டவராய் இருந்தார். உலக யுத்தம் காரணமாக இந்தி யாவை விட்டுச் செல்ல முடியாது அங்கேயே தங்கியிருந்த படியால் இந்த வகுப்புக்களை நடத்தினர். இரவு நேரத்தில் இந்த வகுப்புக்கள் நடத்தப்பட்டதால் வேறு துறைகளில் இருப்போரும் இதில் சேர்ந்து படிக்கக் கூடியதாக இருந் தது. அம்மையார் இத்தாலிய மொழியில் விடயங்களைச் சொல்ல அம்மையாரின் பெருமகன் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார். இலங்கையர் 6 பேர். இதில் சேர்ந்து படித் தார்கள். அவர்களில் முன்னுள் பா. உ. திரு. க. பொ. இரத் தினமும் ஒருவர். இவ் வகுப்பு முடிவில் மொன்ரிசூரிப் பயிற்சிச் சான்றிதழ் பெற்று வெளியேறியவர்களில் மயில் வாகனனும் அடங்குவர். 、莎
இலங்கை திரும்பிய இவர் 1941 இல் முேயல் கல்லூரி யில் ஆசிரியராக நியமனம் பெற்ருர். இக்காலம் இலண் LGosdi guigio Fellow of the Royal Geographical Society புவியியற் சபையாரின் எவ். ஆர். ஜி. எஸ். சான் றிதழ் பெற்றர். 3. 1. 44 இல் கல்வித் திணைக்களத்தால் கல்வியதிகாரியாக நியமிக்கப்பட்டார். புத்தளம் மாவட் டக்கல்வியதிகாரியாக இருந்தபோது ஊரில் வழங்கி வந்த நாட்டார் பாடல்களைச் சேகரித்து எழுதிவைத்தார்.
இக்காலம் தொடங்கப்பட்டுப் பிரபலமாயிருந்த மறு மலர்ச்சி என்னும் பத்திரிகைக்கும் பிறநாளிதழ்களுக்கும் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வந்தார். கோவை வாணன், அ. வி. ம. என்னும் பெயர்களிலும் சொந்தப் பெயரிலும் கட்டுரைகள் வந்தன. மொன் ரிசூரி பயிற்சி சம்பந்தமாகப் பாலரைப் பயிற்றல் என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இன்னும் பாலர் கல்வி பற்றிக் கிடைக்கக்
10

Page 63
கூடிய நூல்களில் இதுவும் ஒன்று. பிறரது கட்டுரைகள், நூல்களுக்கு விமர்சனம் எழுதி வந்த இவரை சுவாமி எஸ். ஞானப்பிரகாசம் அவர்கள் சிறந்த இலக்கிய விமர்சக என்று பாராட்டியுள்ளார்.
புத்தளப்பகுதியில் இருந்தபோது அங்கு பெயர் பெற்றபுலவரான நா. செய்குஅலாவுதீன் என்னும் புலவரின் வரலாற்றை அறிந்து அவர்டால் ஆற்றுப்படுத்தும் வகையில் " புலவர் ஆற்றுப்படை ' என்னும் நூலை 1964 இல் வெளியிட்டார்.
பேராதனை சர்வகலாசாலை ஆரம்பிக்கப்பட முன், 1938இல் "தமிழ் டிப்ளோமா" பரீட்சை எழுதினர் சுவாமி விபுலானந்தர் இவரது ஆசிரியராகவும் மூன்று பாடங் கட்குப் பரிசோதகராகவும் இருந்தார். இக்காலம் அடி களாருடன் ஏற்பட்ட தொடர்பினுல் அவர் நடாத்தி வந்த சஞ்சிகையான ' பிரபுத்த பாரத ' வுக்குக் கட்டுரைகள் எழுதிஞர்:
சிறிது காலத்தால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு பாடசாலைப் பரிசோதகராகச் சென்று வந்த போது நாட்டார். பாடல்களைச் சேகரித்தார். Rambles in the Jungles of N. W. P GT6576)|th JiTa) 6Top go வெளியிட்டார். 1955ல் இரத்தினபுரிக்கு மாற்றப்பட்டு அதேவருடம் திரு. எஸ் டபிள்யூ. ஆர். டீ. பண்டார் நாமக்கா சுயகரும மொழித் திணைக்களம் ஆரம்பித்த போது அதன் தமிழ்ப்பகுதித் தலைவராக நியமிக்கப்பட்டார். அது முதல் ஓய்வு பெறும் வரை அப்பதவியிலேயே இருந்து வந்தார்.
இவர் தன் ஊர்மக்களின் உலக அறிவு, எழுத்து அறிவு, வாசிப்புத்திறன் பெருகுவதற்காக " வள்ளியம்மன் வாசிக சாலை " ஒன்றைக்கட்டிச் சில காலம் பத்திரிகைகள், சஞ்சி கைகள் ஆகியவற்றைத்தானே வாங்கி அளித்து வந்தார். நாளடைவில் ஊரவர் அப்பொறுப்பை ஏற்றனர்.
தம்முன்னேர்கள் பாடி வைத்த தேவி பொன்னம்மாள் திருவூஞ்சல் என்னும் பதிகத்தை அச்சிட்டு வெளியிட்டார். கல்வித் திணைக்களத்தின் வெளியீட்டுப் பிரிவில் பணியாற் றிய போது வெளி வந்த தமிழ்ப் புத்தகங்கட்கு மேற்பார் வையாளராக இருந்தார். கல்வி நூற்றண்டு மலரின் 3 பகுதி கட்கும் மொழி பெயர்ப்பு மேற்பார்வையாளராக இருந்த துடன் சில கட்டுரைகளை மொழி பெயர்த்துமுள்ளார். சிங்கள - தமிழ் அகராதி வெளியிட்டபோதும் அதில் சில பகுதிகளை ஆக்கி உதவினர்.
102

கய பாசா திணைக்களத்தில் வேலை பார்க்கத் தொடங்: கியதில் இருந்து அதிகமாகத் சுதேசு உடை அணியத் தொடங்கிப்பின் அதுவே நிலத்து விட்டது. ஒய்வு பெற்றுச் சொந்த இடம் திரும்பியபின் அதிமாகக் கோயிற்பணிகளில், ஈடுபடலானர். உற்சவ காலங்களில் ஊர்க்கோயில்களில் சொற்பொழிவு நிகழ்த்துவார். சுப்பிரமுனியசுவாமிகளால் தாபிக்கப்பட்ட சாந்திலிங்கேஸ்வரர் மீதும், திருவடிக் கோயில் மீதும் திருப்பள்ளியெழுச்சி ஊஞ்சற்பதிகம் பாடி, யுள்ளார். கோட்பாயில் தாபிக்கப்பட்டுள்ள சுப்பிரமுனிய கோட்டத்தின் அறங்காவலராக இருந்து, அங்கு வரும் சிறுவர், முதியோர் இருசாராருக்கும் சமயவகுப்புக்கள் நடத்தி வருகிருரர். தனது இல்லம் தேடி வரும் பிள்ளை களுக்குப் பாடங்களில் எழும் சந்தேகங்களைப் போக்கி அனுப்புவார். பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை கற்கும் பல்வேறு மாணவர்கள் இவரிடம் அவ்வப்போது தெளிவு பெற்றுச் செல்வார்கள். இவர் பழைய காலத் திண்ணைப் பள்ளிக்கூட முறைக்குப் புத்துயிர் அளித்துள்ளார் எனலாம். தமது வீட்டில் எப்போதும் ursbé5m 6g Luru-d சொல்லிக் கொண்டிருப்பார் .
கல்வி வளர்ச்சிக்கான ஆலோசனைகள்:
கல்வி வளர்ச்சிக்குப் பணியாற்றும் நிறுவனங்களில் பாடசாலைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இங்குள்ள பாட சாலைக் கட்டிடங்கள் சில மாணவர் இருந்து கற்க இயலா தனவாயுள்ளன. சில ஆரம்பபாடசாலைகளின் தளம் உடைந்து ஒப்பரவற்றதாயுள்ளது. பாடசாலைகளுக்குப் போதிய தளபாடம் இன்மையால் சிலபிள்ளைகள் தரை யிலிருந்தே கற்கிருரர்கள. வகுப்பறைகளும் இடவசதி குறைந்தனவாக உள்ளன. பழைய காலக்கட்டிடங்கள் சில அக் காலப் பிள்ளைகளின் அலி வுக்கேற்பக் கட்டப்பட்டதால் இன்று அதிகரித்துள்ள வகுப்பு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ற இட விஸ்தீரணம் அற்றவையாயுள்ளன. இவற்றை மாற்றியமைக்கச் சம்பந்தப்பட்டோர் முயற்சிக்கலாம்,
கொத்தணி அமைப்பு ஏற்படுத்தப்பட்டபின் ஒரு நல்ல நூல்நிலையம் தேவை என்பது உணரப்பட்டது. தவிர சமீபகால அனர்த்தத்தால் மூலாதாரப் பாடசாலையான கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரியின் நூல்நிலையம் )5ھ بھوت மடைந்துவிட்டது. எல்லாப் பாடசாலைகளும் பயன்படுத் தக்கூடிய நூல்நிலையம் ஒன்று ஏற்படுத்தல் அவசியம் இதேபோலவே ஒரு பொது கலா மன்றம் அமைத்து எல்லாக்
103

Page 64
தரத்திலுமுள்ள ப்ாடசாலை மணி ரிடையே கலைகளே வளர்க்கலாம். சில பாடசா?லகளில் விளையாட்டு மைதானம் இல்லாதது பெருங்குறையாய் உள்ளது. அபிவிருத்திச்சபை அல்லது நிருவாகம் பக்கத்தில் நிலம் வாங்கி விளையாட் டிடம் அமைத்துக் கொடுத்தல் நலம். t
பாடசாலைகளின் பணியுடன் பொதுத் தாபனங்களும் *ல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டி வருகின்றது. இவை மேலும் கவனமெடுக்கப் போட்டிகள் கருத் தரங்குகளை நடத்திப் பிள்ளைகளைப் பங்குபற்றச் செய்ய வேண்டும். இதைக் கூட்டுறவுச்சங்கங்கள், இளைஞர் மன்றங்கள் செய்யலாம்.
நிறைவுரை
கல்வியைக் குற்றமில்லாது கற்கவேண்டும். கற்றபின் அதற்குத் தக ஒழுக வேண்டும். இதையே வள்ளுவப் பெருமான், ..
* கற்க கசடறக் கற்பவை - கற்றபின்
நிற்க அதற்குத் தக’. என்கிருர், கல்வி கற்பதன் பயன் கற்றபடி ஒழுக வென்பது பொதுப்படக் கருதப்படுவது. ஆயின் சமயக் கல்வி கற்றேர் அதன்வழி நடத்தலே பண்பும் பயனும் தருவது. சமயக்கல்வியை நேரடி அனுபவமூலம் பெறக் கோயில்கள் முக்கிய களமாக அமையும். ஆயின் இன்று கடவுளை வழிபட நேரமில்லை எனமக்கள் கூறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே பாடசாலைகள் சமயக்கல்வியை வலியுறுத்துவதுடன் மாண வரைக் கோயில்களுக்குச் செல்ல ஊக்குவித்து அவர்களிடையே பணிவும், பக்தியும் உண்டா கச் செய்ய வேண்டும். கடவுள் நம்பிக்கையை ஏற்படச் செய்வதன் மூலம் நற்பண்புகளை வளர்க்கலாம். , - தேவாலயமும், வித்தியாலயமும் மனித வாழ்வின் இருகண்கள். எமது சமூகத்தில் சிறப்பாகக் கிராமங்களில் பிள்ளைகள் இவ்விரு இடங்களுக்கே செல்கின்றனர். இவ் விடங்கள் அவர்களது அறிவையும், ஒழுக்கத்தையும் ஒன்று
சேர வளர்ப்பனவாகத் திகழ வேண்டும். பாரதி காண விழைத்த பாரத தேசத்தில் 'பள்ளித்தலம் அனைத்தும் கோயில்கள்' அமைக்கப்பட வேண்டும் என்று ர். இதே
சூழல் எமது நாட்டில் 19 ஆம் நூற்றண்டின் காலப்பகுதி யில் இருந்தது. அந்நியர் ஆட்சியின் கீழ் பல வருட காலம் இருந்ததால் தத்தம் சமயம் பற்றிய அறிவற்ற சமுதாயம்
104

உருவாவதைக் கண்ட சிலர் மறுமலர்ச்சிக்காக உழைக்கத் தலைப்பட்டனர். அவர்களில் பூரீலழறீ ஆறுமுகநாவலர் அவர் கள், சேர் . பொன் . இராமநாதன், சேர் . பொன் . அருணு சலம் அவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள் தமது சமய மான சைவத்தைப் பரப்பத் தனியே கோயில்களை மட் டும் நாடவில்லை. வித்தியாசாலைகளையும் அமைத்து அங்கும் சமயப்பணி, கல்விப்பணி இரண்டும் செய்தமை பாடசாலை களிலேயே சிருருக்குச் சமய அறிவு ஊட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவேயாம். இதே வகையில் பெளத்த மத வளர்ச்சிக்கு நாலாந்தா, ஆனந்தாக் கல்லூரிகள், இஸ் லாம் மதவளர்ச்சிக்கு சகீராக்கல்லூரி என்பவையும் கட் டப்பட்டன.
இன்றைய அரசின் கொள்கை பாடசாலை மாணவ னெவனும் அவனது சமயம் கற்க வேண்டும் என்பது, பாடக்கலைத் திட்டத்தில் சமயம் ஒரு பாடமாகக் கற்பிக்கப் படச் சேர்க்கப்பட்டுள்ளது. இக்காரணத்தால் பாடசாலை கள் கல்விப்பணி மட்டும் செய்வதாகக் கொள்ள முடியாது : சமய சம்பந்தமான நிகழ்ச்சிகள், விழாக்கள், சொற் பொழி வுகள், போட்டிகளைப் பாடசாலைகள் வருடாவருடம் நடத்தி வருவதால் சமயப்பணியும் ஆற்றிவருகின்றன. அனுபவ் மூலம் மாணவன் பெறவேண்டியவற்றைப் பாடசாலைகளே அளிக்க வேண்டியுள்ளதால் சமயப் பணியும், கல்விப்பணியும் இரண்டறக் கலக்கும் இயல்பு பாடசாலைகளில் உள்ளது.
முன்பைவிட ஆலயதரிசனத்தில் மக்கள் ஈடுபாட்டுடன் செயல்படக் காணலாம். விசேட தினங்களில் கணிசமான அளவு பக்தர் ஒவ்வொரு கோயில்களிலும் வழிபடவோ, பிரார்த்தனையை நிறைவேற்றவோ குழுமி விடுகின்றனர் திக்கற்றவனுக்குத் தெய்வம் துணை என்பதை நிரூபிப்பதற் காக அமைகிறது. கோவைப்பதியில் அன்றி ஏனைய பகுதி களிலும் இவை வளர்ச்சியுற வேண்டும்.

Page 65
உசாத்துணை நூல்கள்
1. அம்பலவாணபிள்ளை கு. 4. தென்கோவைப் பண்டிதர் ச.கந்தையா ஞாபக வெளியீடு திருமகள் அழுத்தகம் சுன்னுகம் 1959
2。 அம்பலவாணபிள்ளை @· வைத்தியக் கலாநிதி சி. சுப்பிரமணியம் நினைவுமலர் திருமகள் அழுத்தகம்
சுன்னகம் 1964
3 ல் திருமதி ஆனந்தக்குமாரசாமி இ.
கோப்பாய் அரசினர் மகளிர் ஆசிரிய கலாசாலை
. . வெளியீடு சென்சூசை மாமுனிவர் அச்சகம்
யாழ்ப்பாணம் H 9 7 Ι
4 இலங்கை கல்வி கலாச்சார அலுவல் அமைச்சின்
வெளியீடு இலங்கையிற் கல்வி நூற்றண்டு விழாமலர் அரசாங்க அச்சகம் கொழும்பு 1969
5. குமாரசுவாமி க. இ. அறிவொளி கோப்பாய்
கிறிஸ்தவக் கல்லூரி மாணவர் சஞ்சிகை கலைவாணி அச்சகம் யாழ்ப்பாணம் 1979
x . .
6.3
'கோப்பாய் பரீசுப்பிரமுனியக் கோட்ட வெளியீடு
சைவச்சிறுவன் வாணி அச்சகம் கல்வியங்காடு 1984
7.சிவானந்தசர்மா ப. பஞ்சாட்சரம் திருக்கணித
rஅச்சகம் மட்டுவில் 1987
8. செல்வி. சீதாதேவி நா. கலமலர் கோப்பாய்
அரசினர் மகளிர் ஆசிரியர் கலாசாலை வெளியீடு ' சென்சூசைமாமுனிவர் அச்சகம் யாழ்ப்பாணம் 1972
9. சுவாமி ஞானப்பிரகாசர் - யாழ்ப்பாண 6.
விமர்சனம ஞானப்பிரகாச அச்சு இயந்திரசாலை அச்சுவேலி 1928
10. சுப்பிரமணியம் . த. கோப்பாய் பலாண் கண்ணகை யம்மன் கோயில் திருப்பணி வரவு செலவு அறிக்கை கலை வாணி அச்சகம் யாழ்ப்பாணம்.
11. சுப்பிரமணியக்குருக்கள் . சோ. தொகுத்தது -
வடகோவைச் சித்திர வேலவர் ஊஞ்சற் பதிகம் பூரீலங்கா அச்சகம் யாழ்ப்பாணம் 1971
106

2
3
14.
15.
6.
7.
18.
19.
20.
2 l .
22
24。
சேனதிராய முதலியார். நெ. கோவைப்பதி கண்ணக்ை பேரில் ஊஞ்சல், பிரசுரிப்பவர் சிவகுமாரன் . க. திரு மகள் அழுத்தகம் சுன்னகம் 1962 ஞானபாஸ்கரோதய புதுக் கலாச்சார மண்டபத் திறப்பு விழாமலர். 1987
தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரி தமிழ்மன்றம் - வித்தகம் ச. கந்தையாபிள்ளை திருமகள் அழுத்தகம் சுன்னகம் 1977. * : يفي - مميم " : : நமசிவாயகம். இ. திருக்கேதீச்சரம் திருக்குட திருமஞ் சன மலர். அல்பியன் அச்சகம் கொழும்பு 1976. பஞ்சாட்சரசர்மா . ச. சித்தாந்தபானு சோ. சுப்பிர மணியக்குருக்கள். பாராட்டுவிழா மலர். பூரீலங்கா அச்சகம் யாழ்ப்பாணம் 1971; பரிபாலன சபையினர் கோப்பாய் பலானை கண்ணகை யம்மன் கோயில் புனராவர்த்தன மகாகும் பாபிஷேகமலர் திருமகள் அமுத்தகம். சுன்னகம் 1986 மலர்க்குழுவினர் - அகிலஇலங்கை இந்துமாமன்றம் நியுலீலா அச்சகம் கொழும்பு 1986. மணி - கோப்பாய் தெற்கு இருபாலை அருள்மிகு கற்பகவிநாயகர் ஆலய மகாகும்பாபிஷேகமலர் வெளி யீடு திருப்பணிச்சபை கலா அச்சகத்தார் கொழும்பு 1982
மயில் வாகனன் , அ , வி பூரீசுப்பிரமுனிய கோட்டம் வெளியீடு. நாவலர் பதிப்பகம். நல்லூர் 1984. முத்துத் தம்பிப்பிள்ளை , ஆ , யாழ்ப்பாணச் சரித்திரம் இரண்டாம் பதிப்பு. நாவலர் அச்சகம் யாழ்ப்பாணம் 1915.
முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை . கு தென்கோவை கந்தையா பண்டிதர். கவித்திரட்டு பூரீசண்முகநாத அச்சகம் யாழ்ப்பானம் 1972. வேலுப்பிள்ளை - க யாழ்ப்பாண வைபவ கெளமுதி ஜெய ரீ சாரதா பீடேந்திரசாஃல யாழ்ப்பாணம் 1918. ரீலபூரீ ஆறுமுகநாவலர் சபை. கொழும்பு - நாவலர் மாநாடுவிழாமலர். மெய்கண்டான் அச்சகம்
கொழும்பு 1969,
107

Page 66


Page 67


Page 68
* சைவப்பிரகாச :
 

புச்சகம், யாழ்ப்பாண்ம்
青