கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2009.07

Page 1
50வது ஆண்டை நோக்கி.
iš LD656
ஆகிரியர்: டொமி
அரங்கியல் ெ ஆளுமை மிக்கத்
goEdEl- 2
 

நறியாளர்தயாரிப்பாளர்
sillsdal) - 30/=

Page 2
OUR PROUCT
DATABASE PRINTING BROCHURES, CATALOGUESSOUVENIRS, BOOKMARKS, GREETING CARDS, NAMETAGS, CD/DVD COWERSCOLOURBIODATA, STICKERS INWITATION CARDS, PROJECTREPORTSBOOK COWER, MENUCARDS, GARMENTTAGS, THANKING CARDSCERTIFICATES, BOOKSPOSTERS, CD STOMMER, TRANSPARENCY SHEET, PLASTICCARDS, SCRATCHCARDS, WISITING CARDS,
(OHAPPY DIGITAL CENTRE(Pvt)Ltd.
Digital Colour Labs Digital offset Press
No.751/1Sri Sumanata Mazaka, Colombo-72. Te:+94174937336, +94 714879566
Web: happy digitalpltd.com E-mail: happy2002g live.com
 

* மல்லிகை
ஆடுதல் பாடுதல் சிந்திரம் களி ஆதியினைய கலைகளில் உள்ாம் ஈடுபட்டேன்றும் நடப்பவர் பிறர்
ஈன நிலை கண்டு துள்ளுவர்
உகப் பாராளுமன்ற கரா பரிேேயே இலங்கை நாடாளுமன்ாருந்தி பாத்திரம் தாள் ஓர்
இலக்கியர் சஞ்சிகை விதந்து பாராட்டப் பெற்ற
பெறுமதி மிக்க சம்பவம் இடம் பெற்றுக்i"து. அங்கு பாராட்டப்பட்ட கருவினா மங்கே
இத ைE நாடாளுமன்ற ப பதிவேடான
இருபா 14, 'ப்' பதிவு செய்ததுடன் i , நந்தியாருக்காக "யூ எனப் படுத்தியமுiாது.
50 - வது ஆண்டை
நோக்கி. బ్రౌజDE)
362
o/a/Ace" ീgrafie റ്റർ) //μ . /ഗ്ഗ008
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர மஷ் - அது ஒர் ஆரோக்கியமான இE க்கிய இயக்க மு மாதம் ,
201/4, Sri Kathiresan St, Colombo -13,
T. 232O7
mallikaijeeva gyahoo.com
நம்மை விட்டு மறைந்த
கலைஞர்களை அடிக்கடி
நினைவு கூருங்கள்!
கடந்த காலங்களில் நமது மண்ணில்
நடந்த அல்லோஸ் கல்லோலங்களுக்குள் ஆட்பட்டு, நாம் தற்காலிகமாக வென்றா லும், நமது கலாசாரத்தின் அடி ஆதார வேர்களாகத் திகழ்ந்த பல படைப்பாளிகளி னேதும் கலைஞர்களினதும் நாமங்களை உச்சரிக்க மறந்து போய் விட்டிருந்தோம்.
இந்தத் தற்காலிக மறதி, நிரந்த மறதி யாகப் போய் விடுமோ என நாம் நியாய மாகவே அச்சப்படுகின்றோம்.
ஓர் இனம் தன்மானத்துடனும் தனிச் சிறப்புடனும் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறதென்றால், அதற்கு நிரந் தரமான அடிப் பசளையிட்டு உழைத்தவர் கள் நம் முன்னோர்களான கல்விமான் களும், கலைஞர்களுமே.
இவர்களது நாமத்தைத் தற்காலிகமா கக் கூட, நாம் உச்சரிக்க, மனனம் பண்ண மறந்து போய் விடக் கூடாது. அது பிற் சந் ததியின் ஞாபகங்களிலிருந்தே மறைந்து போகக் கூடிய ஆபத்தையும் கொண்டு வந்து விடலாம்.
எனவே, இளந்தலைமுறையினர் விழிப் புடனும், விரியத்துடனும் செயல்பட நமது பரம்பரை முன்னோர்களான கலைஞர் களின் பெயரை அடிக்கடி உச்சாடனம் பண்ணி வர வேண்டியது நமது தேசியக் கடமைகளில் ஒன்றாகி விடுகின்றது.

Page 3
நமது முன்னோர்களின் நேரிய உணர் வுகளை இன்றைய தலைமுறை புரிந்து கொள்ளத் தவறினால், சினிமாக்காரிகளான குஷ்பு, த்ரிஷா போன்றோர்களுக்குக் கோயில் கட்டிக் கும்பிட நினைக்கும் தமி ழக இளந்தலை முறையினரின் நிலைக் குத்தான் நாம் நமது இளந்தலைமுறையி னரைக் கொண்டு சென்று விடுவோமோ என நியாயமாகவே அச்சப்படுகின்றோம், நாம் எனவே, இந்த மண்னை நேசித்து வாழ்ந்த கலைஞர்களின் நாமங்களைப் பொது மேடைகளில் நாம் நினைவு கூரப் பழக வேண்டும். இப்படி உச்சரிக்கப் பழகி னால், வளர்ந்து வரும் புதிய தலைமுறை யினரும் தமது நினைவுகளில் அந்த அந்த நாமங்களின் சாதனைகளுக்குப் பங்கமேற் படாமல் நினைவு கூர்ந்து கொள்வர்.
ரஜனி என்று சொன்னதும் புழகாங்கித மடைந்து நெஞ்சை நிமிர்த்திப் புன்னகை பூக்கும் நம்மவன் ஒருவன், நமது நாடகக் கலைஞன் லடீஸ் வீரமணியென்று சொன் னால் 'யாரவர்?’ எனக் கேள்வி எழும்பு கின்றான், கொழும்பைச் சேர்ந்த படித்த இளைஞன்!
நாட்டுக் கூத்துச் சக்கரவர்த்தி பூந்தான் ஜோசப் என்றால், "அவர் எந்தப் படத்தில் நடித்தவர்?" என மறு கேள்வி கேட்கிறான் யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழக மான வன் ஒருவன்.
நமது எழுத்தாளர் 'இலங்கையர்கோன்' என உச்சரித்தால், "இலங்கையர் கோனா? 'கல்கி கல்கி இதழில் தொடராக எழுதி வந்த இலங்கைச் சரித்திர நாவலா?’ என மறு கேள்வி கேட்கின்றான், உயர்கல்வி பயின்ற பல்கலைக்கழகப் பட்டதாரியாக வெளி யேறிய மாணவன் ஒருவன்.
கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அபிப்பிராய பேதங்களால் வேறுபடலாம். இலக்கிய நோக்கில் நாம் பலரும் மாறு படலாம். ஆனால், மறைந்து போன கலை ஞர்களைப் படைப்பாளிகளைக் கனம் பண்ணிக் கெளரவிப்பதில் நாம் என்றுமே பின் நிற்கக் கூடாது.
டானியலைப் பாராட்டும் நாம், அ. ந. கந்தசாமியையும், தளையசிங்கத்தையும் மெச்சிப் புகழ்வதில் பின் நிற்கக் கூடாது. அதே சமயம் கைலாசபதியின் சாதனைக ளைப் போற்றும் நாம், சி. வி. வேலுப் பிள்ளை, வரதர், ரஸிகமணி போன்றோரின் இலக்கியப் பங்களிப்பை விதந்து போற்ற வேண்டும். இளங்கீரனின் இலக்கியப் பங்களிப்பை விதந்து போற்றுவோர் வ. அ. இராஜரத்தினம், நீலாவணன் போன்றோ ரின் இலக்கியப் பங்களிப்பை இடையி டையே நினைவுகூர வேண்டும். சில்லையூ ரைப் பற்றி விமர்சன ரீதியாக ஏற்றுக் கொள்ளும் நாம், என். எஸ். ராமையாவின் பங்களிப்பையும் கவனத்தில் கொள்வது வர வேற்கத்தக்கது. ராஜநாயகன், நந்தி போன் றோரின் ஞாபகத்தையும் புதுப்பித்துக் கொள் வது நல்லது. ஏ. ஜே. சிவநாயகம் போன் றோரின் நினைவு கூரப்பட வேண்டும்.
தொடர்ந்து பத்து ஆண்டுகள் மக்கள் மத்தியில் இப்படியான ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து விட்டுத் திரும்பிப் பார்த்தால், ஒரு புதிய இலக்கியப் பரம்பரையே நமது மண்ணில் பிரகாசம் பெற்றுத் திகழ்வதை நிச்சயமாகக் காணலாம்.
உலக இலக்கியமும் நம்மைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கும்
மல்லிகையின் அட்டைப் படப் பதிவு அநுபவமும் எனக்கு இதைத்தான் கூறித் தந்துள்ளது.
- ஆசிரியர்

if gig BUTuibiT LOGETEDEDTub
Loibbligi LOEOTEOguyub bleFUQEDLOÜUGğgöUTüb!
இனிமேல் தொடர்ந்து அழுது புலம்பிக் கொண்டிருப்பதில் வேலை
யில்லை! அது இன்றைய கால கட்டத் தேவையுமில்லை! பிரச்சினையின் ஆழ அகலமான சோகங்களையும், துன்பதுயரங்களையும் பூரணமாக இன்று சர்வதேசங்களும் பூரணமாகப் புரிந்து கொண்டுள்ளன. அனுதாபப்படுகின்றன.
அணுகுண்டு விழுந்த ஜப்பானிய தேசத்தின் ஹிரோஷிமா, நாகஷாகி போல, இன்று வடபுலம் காட்சி தருகின்றது. செய்வதறியாது மக்கள் கூட்டாகக் கூடாரங்களுக்குள் திகைத்துப் போய், அடைக்கப்பட்டுள்ளனர். தினசரித் தேவைகளுக்கே திண்டாடுகின்றனர். இப்படியான பாரிய சோகத்திற்குள் திடீரென மூழ்கடிக்கப்பட்ட மக்களுக்கு, எதிர்கால வாழ்க்கைக்கான நம்பிக்கையை முழு நாடுமே ஒருங்கு சேர்ந்து ஊட்ட வேண்டும்.
அதற்கான முதல் முயற்சியாகச் சிறுபான்மை இனம் ஏற்றுக் கொள்ளத் தக்க ஆரோக் கியமான அரசியல் தீர்வொன்றை நாடு ஏற்றுக் கொண்டு, அத் தீர்வை நடைமுறைப் படுத்த வேண்டும். அரசியல் ஆரோக்கியம் வேண்டும்.
முழுநாட்டினதும் நலன்களின் மீதும் உண்மையான அபிமானமும் அக்கறையும் கொண்டுள்ளதாக அடிக்கடி வற்புறுத்திச் சொல்லும் அரசாங்கம், தகுந்த முறையில் இந்தப் பிரச்சினை யைச் சுமுகமாகத் தீர்க்க ஆவன செய்வதே மிக மிக முக்கியமாகும்.
அதே சமயம் புண்பட்டுப் போய், வாழ்க்கையின் நம்பகரமான எதிர்காலத்தைத் தொலைத்து விட்ட மக்களை நமது ஆரோக்கியமான சிந்தனைகளாலும், செயல்பாடுகளி னாலும் சொஸ்தப்படுத்த முயலுவோம்.
கடந்த மூன்று தஸாப்தங்களுக்கு மேலாக நம்மவன் பட்ட கஷ்டங்களும் துயரங்களும் பாரிய காவியங்களாகப் பதியப்பட்டவை.
அன்று வெறும் குடாநாட்டுத் தமிழனாக மதிக்கப்பட்டவன், இன்று சர்வதேசமெங்கும் குடி புகுந்துவிட்டான். அங்கங்கு அந்தந்த நாட்டு மொழிகளைக் கற்றுத் தேறி, படைப் பிலக்கியங்களும் சிருஷ்டித்து வருகின்றான்.
அன்று பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த நம்மவன், இன்று சர்வதேச அகதி அந்தஸ் தில் வாழுகின்றான்.
இரத்த வியர்வை சிந்தி உழைத்து, மண்ணைப் பொன்னாக்கிக் காட்டியவன், வடபுலத்தினன்- அவன் நம்மவன். உழைப்பையே தெய்வமாக நம்பியவன்!
இந்தச் சக்தியும், ஆற்றலும், திறமையும் வாய்க்கப் பெற்ற நம்மவனின் பரம்பரை நாளை தலை நிமிர்ந்து வாழ, ஓர் அடிப்படை அரசியல் தீர்வு வேண்டும்.
எதிர்கால நம்பிக்கைகளைத் தன்னகத்தே கொண்டு வாழ்ந்து வரும் நம்மவனின் கனவுகளுக்கு ஒர் ஆரோக்கியமான தீர்வு நாளை கிட்டும் என்றே நம்புகின்றோம்.

Page 4
9CamLf LILsò
அறங்கியல் துறையில் அயராக் கலைஞன் திரு. கே. செல்வராஜன்
- ஏ. எஸ். எம் . ருவாஸ்
1987 ஆம் ஆண்டு என எண்ணுகிறேன். நான் இலக்கியத்துறைக்குப் புதிதாக
நுழைந்த காலமது.
சிந்தாமணிக்கும், தினகரனுக்குமாகச் சிறு சிறு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த சமயம். உண்மையில் எனக்கு நாடகமென்றோ, நாடக ஒத்திகை என்றோ எதுவுமே தெரியாது. நாடகத்துக்கும் எனக்கும் வெகு வெகு தூரம்,
ஒருநாள் கலையுலக நண்பரான முீதர் பிச்சையப்பா என்னை அழைத்துச் செல்கிறார், ஒரு ஒத்திகை மண்டபத்திற்கு.
ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது.
ஒருவர் நடிப்புச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரிடமிருந்த வேகத்தை யும், ஆர்வத்தையும் கண்டு ஆச்சரியப்படுகிறேன். 'யார் இவர்? எனது வினாவுக்கு வந்த விடை, 'இவர் தான் மேடை நாடக இயக்குநர் கே. செல்வராஜன். முரீதரே அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அன்று நான் பார்த்த முதல் நாடக ஒத்திகையும் அதுவே நாடகத்தின் பெயர் 'மனிதன் என்னும் தீவு. இந்நாடகத்தை மேடையிலும் முதன் முதலாகக் கண்டு களித்தேன். என் தந்தை மேமன் சத்தார் எழுதிய ஒரு நகைச்சுவை நாடகத்தை இயக்குநர் செல்வராஜனுடன் இணைந்து மேடையேற்ற எண்ணினேன். பிரதியில் சில மாற்றங்கள் செய்து மேடைக்கேற்றவாறு அமைத்தோம். என்ன துரதிர்ஷ் டமோ தெரியாது, அந்நாடகம் விளம்பரம் செய்யப்பட்டதோடு சரி. மேடையேறவில்லை. எனினும், செல்வராஜன் அவர்களுடன் இருந்த பற்றும், அன்பும் குறையவில்லை.
1973 ஆம் ஆண்டிலே கேளுங்கள் தரப்படும்’ எனும் நாடகத்தை எழுதியதன் மூலம் நாடகத்துறையில் முதல் சுழி போட்டார், கே. செல்வராஜன். 1973 இன் நடுப் பகுதியில் 'சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்டேஜ்" என்ற நாடக மன்றத்தை ஆரம்பம் செய்தார். 1974 இல் "உறவுகள்’ எனும் நாடகம் இம்மன்றத்தின் மூலமாக முதன் முதலாகப் பொரளை வை. எம். பி. ஏ மண்டபத்தில் மேடை கண்டது. இந்நாடகத்தின் இயக்குநராக வும், கதாசிரியராகவும் பரிணமித்தார். தொடர்ந்து, புதுப் பணக்காரன்', "அவள் ஒரு மெழுகு வர்த்தி, மோகம் முப்பது நாள்', "இங்கேயும் மனிதர்கள்', 'இரை தேடும் பறவைகள்,
மல்லிகை ஜூலை 2009 தீ 4

"பிரளயம்’, ‘சத்திய சோதனை' ஆகிய நாடகங்களை எழுதி இயக்கித் தனது 'சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்டேஜ்" மூலம் பார்வையாளர்களுக்குப் படைத் தார். இலங்கை நாடகப் பரப்பில் இந்த ஸ்டேஜ0க்குத் தனிப் பங்களிப்பும், அடை யாளமும் உண்டு. இம்மன்றத்தின் ஊடா கத் தனது நாடகங்களை மாத்திரம் மேடை யேற்றாது இலங்கை, தமிழகப் படைப்பாளி களின் நாடகப் பிரதிகளையும் மேடைக் கெனக் கையாண்டது கே. செல்வராஜனின் தனித் தன்மையாகும்.
இவ்வாறு வரிசைப்படுத்திச் சில நாட கங்களை மட்டும் இங்கே எழுதுவதானால், ஆர். எஸ். ராஜாவின் ‘உதிர்ந்த ரோஜா, எழுத்தாளர் சுஜாதாவின் முதல் நாடகம்", 'கடவுள் வந்திருந்தார்', கோமல் சுவாமி நாதனின் தண்ணிர் தண்ணிர்’, ‘மனிதன் என்னும் தீவு, வியாட்நாம் வீடு சுந்தரம் எழுதிய "ஞான ஒளி, எம். உதயகுமாரின் சலங்கையின் நாதம்', ஏ. ஏ. ஜ0னை தீனின் சலனம்', 'வேலி, கவிஞர் கண்ண தாசனின் "அனார்கலி', தமிழ்வாணனின் எழுத் துப் பிரதியான 'கவியும் கண்ணிரும்", ழுநீதர் பிச்சையப்பாவின் படைப்பான இதற்குத் தானே ஆசைப்பட்டாய், எஸ். ஐ. நாகூர் கனியின் இப்போ இதெல்லாம் சகஜங்க', 'ஆழ்கடலில் ஒரு சப்தம்' என ஒரு சிலதைக் குறிப்பிடலாம். 35 வருடங்க ளில் 35 நாடகங்களை மேடைக்கென வழங்கி, இலங்கை நாடகத்துறையில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் கே. செல்வராஜன்.
இவரது நாடக மன்றத்தின் மூலம்
ஆரம்ப காலத்தில் நடித்த பலர், இன்று முன்னணியில் திகழ்கின்றனர் என்றால்,
அது மிகையன்று. அவர்களில் அறிவிப்பா ளர் ஏ. ஆர். எம். ஜிப்ரி, பீ. சீதாராமன், ஜவஹர் பெர்ணான்டோ போன்றோர் இன் றும் இலங்கை வானொலியின் இணை யற்ற அறிவிப்பாளர்களாக விளங்குவதும் 2-600T60LD.
அவ்வாறே செல்வராஜனின் நாடகங்கள் மூலம் புகழ் பெற்ற கே. மோகன்குமார், முரீதர் பிச்சையப்பா, ஆர். சிதம்பரம், ஏ. வீர புஷ்பநாதன், ஆர். எஸ். ராஜா, எம். உதய குமார், எஸ். கந்தையா, ஆர். ராஜசேகரன். நடிகைகளில் மணிமேகலை, கமலழுநீ, நெய்ரஹிம் சஹிட் எனக் குறிப்பிட்டுக் கூறலாம்.
கே. செல்வராஜன் 2000மாம் ஆண்ட ளவில், நீர்கொழும்பூர் முத்துலிங்கம் எழுதிய மெளனத் திரை" என்ற நாடகத்தை தயா ரித்து இயக்கியதன் மூலம், அவ்வருடத்திற் கான சிறந்த நாடகத் தயாரிப்பாளருக்கான அரச விருதையும் பெற்றவர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2005 இல்) எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர்கனியின் எழுத்துப் படைப் பான "இப்போ இதெல்லாம் சகஜங்க நாட கத்தை செல்வராஜன் அவர்கள் இயக்கிச் சிறந்த இயக்குநருக்கான அரச விருதை யும் அந்த ஆண்டில் பெற்றார். இதே ஆண் டில் அ. ந. கந்தசாமியின் "மதமாற்றம்" என்ற புகழ் பெற்ற நாடகத்தையும் மேடைக் கெனப் படைத்தார்.
"தானுண்டு- தன்பாடுண்டு- தன் பணி யுண்டு என்று மட்டும், இவர் என்றும் இருந்ததேயில்லை. நாடகம் எழுதும் நாடகாசிரியர்கள், நடிக்கும் நடிகர்கள், ! பாடும் பாடகர்கள், இசையமைப்பு, ஒலிஒளி, மேடையமைப்பு, மேக்கப் என்று
மல்லிகை ஜூலை 2009 தீ 5

Page 5
நாடகத்தின் பல்வேறு கூறுகளிலும் பளிச் சிடும் துறைசார் கலைஞர்கள் என்று பல கலை விற்பன்னர்களை உருவாக்கிய ஒரு கலாகேந்திரராகச் செல்வராஜன் திகழ்கின் றார்" என்கிறார் "அரங்கம்’ சிறப்பிதழில் எழுத்தாளர் நாகூர்கனி.
நாடகம் என்பதோடு மட்டுமன்றி, அதைத் தாண்டி இசை' என்ற அம்சத்தி லும் தன்னை நுழைத்துக் கொண்டவரா கக் கே. செல்வராஜன் விளங்குகிறார். 1985- 86களில் ரூபவாஹினியில் ஒளி வர்ணம் காட்டிய 'உதயகீதம்’ நிகழ்ச்சி யில் இவர் இயற்றிய பாடல்களும் இடம் பெற்றது. கணேஷ்ராஜ், கல்முனை சிவா, ஏ. மகேந்திரன், போன்றவர்களது இசைக் கோலங்களில் செல்வராஜனது கவி வரி கள் உள்ளூர் ரசிகர்களைத் தாளம் போட வைத்துள்ளது. மெட்டுக்கேற்றவாறு இட்டுக்கட்டும் வார்த்தைகள் இவருக்கே உரிய லாவகம். "கலையரங்கம்’ நிகழ்ச்சி யும் இவரது பாடல்களை ஏந்தியதுண்டு.
இலங்கை வானொலி ம்ெல்லிசைப் பாடல் நிகழ்ச்சிகளிலும் கூட செல்வராஜன் புனைந்த பாடல் பூக்கள் ஒலிக் காற்றை அர்ச்சனை செய்துள்ளது. "அரங்கேற்றம்" என்ற நிகழ்ச்சி கூட இவரது பாடல் வரிக ளுக்கு வழி தந்துள்ளது. 'சந்தன மேடை" இவர் சந்தங்களை சுமந்ததால், அது நேயர் காதுகளில் நுழைந்து ரசனை தந்துள்ளது. இவ்வாறு இவர் இயற்றிய பாடல்கள் இலங்கை வானொலிக்கும், ரூபவாஹினி ஒளிபரப்புக்கும் பயன்பட்டுள்ளது. இவரது அதிகமான பாடல்களுக்கு ஏ. மகேந்திரன் என்பவரே அதிகமாக இசையமைத்திருக்கி றார் என்பதும் எழுதப்பட வேண்டிய வரிகள்.
'சித்தாலேய நிறுவன அனுசரணை யுடன் அதன் அதிபதியான கலாநிதி விக்டர் ஹெட்டிகொட எழுதிய 'புஞ்சி கெக்குலு" சமூகத் தொடரை மொழி பெயர்த்துத் தமிழுக்கு 'இளந்தளிர் ஆக்கி, சுமார் 75 வாரங்களைச் சக்தி ஒளிபரப்பில் கலக்கச் செய்தவர் கலைஞர் செல்வராஜன். அதே போல் அந்த நிறுவனத்தின் ஆதரவில் ரூபவாஹினி ஐ அலைவரிசையில் ஒளி பரப்பான தருண கெக்குலு" சமூகத் தொட ரிலும் ஒரு காட்சியில் தனது பிள்ளைக ளான பிரவீண்குமார், சுதர்வழினி ஆகியோரு டன் தந்தை வேஷத்திலும் இவர் நடித் திருப்பது குறிப்பிடக் கூடிய ஒரு சங்கதி. இவருக்கு மனைவியாக அதில் மணி மேகலை நடித்திருந்தார். இத்தொடர் பின்னர் "வசந்த வாசல்" என்ற தமிழ் வடிவத்திலும் ஐம்பது வாரங்கள் தமிழர்கள் வாழும் வாசல்களைத் தட்டியது. சிங்கள மொழி அசைவுக்கேற்றவாறு தமிழ் வடிவம் தந்து, நமது தமிழ்க் கலைஞர்களின் குரல் களைப் பேச வைத்தவர் க்ே. செல்வராஜன் என்றால் அது மிகையன்று. சிங்கள மொழி மீதான அவருக்கிருந்த கற்றலையும், அறி வையும் இந்நிகழ்ச்சிகள் புலப்படுத்தின.
'கலை எனக்குத் தொழிலுமல்ல, பிழைப்புமல்ல, பொழுதுபோக்குமல்ல, கலை எனது ஆத்ம திருப்தி இது அவரது தாரக மந்திரம்.
1999 இல் 'சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்டேஜின் வெள்ளி விழாவை முன்னிட்டு 125 கலை, இலக்கிய, ஆன்மீகம் மற்றும் பத்திரிகை ஊடகப் பிரமுகர்களை 'கலைத் திருவிழா' மகுடத்தில் கெளரவித்தமை கற்றவரையும், மற்றவரையும், பெருமைப்
மல்லிகை ஜூலை 2009 6

படுத்துவதில் இவர் பேருவகை கொள்பவர் என்பதற்குத் தக்கச் சான்றானது. இவர் 50க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் எழுதியுள்ளார். குறிப்பாகச் சிதம்பரம் தியாகராஜன் பாடிய பாடல்கள் இவர் படைத்தவையே. அண்மைக் காலமாக நேத்ரா டி.வியிலும் இவரால் இயற்றப்பட்ட பாடல்கள் ஒளிப்பரப்பாகியுள்ளன. மேடைக் கென இசை நிகழ்ச்சிகளையும் இவர் தயா ரித்து வழங்கியுள்ளார். அவ்வாறு ஏற்பாடு செய்த 'கலைத் திருவிழா நிகழ்ச்சியொன் றில் அடியேன் எழுதிய குறுநாடகம் 'பாட்டுக்கு வேட்டு ஒன்றுக்கும் அவர் வழிவிட்டமை அவரது பெருந்தன்மைக ளில் ஒரு பகுதி.
அண்மையில் இவர் இயக்கி மேடையே றிய நாடகம் 'ஆழ்கடலில் ஒரு சப்தம்'. தனது கலையுலக அநுபவங்களைச் சேமித்து, நாடகத்துறை சம்பந்தமாக அவர் எழுதி வெளியிட்ட நூல் "என் நினைவுக ளும் நிஜங்களும்”. 2004 இல் இந்நூல் வெளியிடப்பட்டது.
'கலைத் திருவிழா 1999 செப்டம்பர் மாதச் சிறப்பிதழில் கே. செல்வராஜனின் நாடகக்குழுவைப் பற்றி மல்லிகை ஆசிரி
யர் டொமினிக் ஜீவா இப்படிக் கூறுகிறார். 'சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்டேஜ் குழுவினர் ஒவ்வொருவரினதும் செயற்பாடு களைக் கூர்ந்து அவதானித்து வந்துள் ளேன். அவர்களிடையே நிலவும் கலை உறவுத் தோழமை என் நெஞ்சில் பதிந்த ஒன்று. இவர்களது தோழமைத் துடிப்பை எங்கு கண்டேன் என்றால், நமது கலைஞர் ழுநீதர் பிச்சையப்பா அவர்களுக்கு மருத்து வச் செலவுக்காக இவர்கள் நிதி திரட்டி அளித்த அந்த நிகழ்ச்சிகளில்தான். இவர்க ளது கலைத் தோழமையை நேரில் தரிசித் தேன். இலங்கையில் நடந்த அதி உன்னத நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்று. கலை வர லாற்றில் ஒரு முன்னோடி நிகழ்ச்சி அது. இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு நாடகக் கலைஞனும் நெஞ்சு நிமிர்த்தி நிற்க வைத்த செயல் அது
மல்லிகை ஆசிரியர் சொன்னது உண்மைதான் கலையுலகில் எதையா வது செய்ய வேண்டும் என்ற ஆவலில் கலைஞர்களை ஒன்று சேர்த்து, நலிந்து போயுள்ள தமிழ் நாடகத்துறையை வளர்ப் பதில் ஆவலுடன் செயல்படுத்தும் கே. செல்வராஜன் போன்றவர்கள் எதிர்காலத் தில் தோன்ற வேண்டும்.
A. R. R. HAIRDRESS
89, Church Road, Mattakuliya,
Colombo -15. Tel: 0112527219
முற்றிலும் குளிரூட்டப் பெற்ற சலூன்
ERS
மல்லிகை ஜூலை 2009 7

Page 6
அச்சுக் கோப்பாளர் சகோதரன் சந்திரசேகரம் s: - 6) ηώδοσιά, φαξωη
சந்திரசேகரம்
"ஓர் இலக்கிய இதழை ஆரம்பித்து நடத்துவது என ஒரு இரவுதான் முற்றாக முடிவெடுத்தேன்.
அந்தரங்கமான சில இலக்கிய நண்பர்களுடன் அடுத்தடுத்து ஆலோசனை கேட்டுக் கொண்டேன். பலர் உற்சாகமாக எனது யோசனைக்கு ஆதரவு நல்கினர். வேறு சிலரோ பயமுறுத்தி என்னை மனக் குழப்பமடையச் செய்துவிட்டனர்.
'நந்தி உட்பட, இந்த இலக்கிய இதழுக்கு என்ன பெயர் சூட்டலாம்? என ஆலோசனை கலந்தேன். பலப் பல பெயர்கள் சொல்லப்பட்டன. முடிவில் மல்லிகை என்ற பெயரே என் மனசுக்குப் பட்டது. எனவே, சஞ்சிகையின் பெயரை மல்லிகை என்றே மனதளவில் பதிய வைத்துக் கொண்டு, வேலைகளை ஆரம்பிக்கத் தொடங்கினேன்.
அப்பொழுது எனக்கு நெருக்கமான நண்பரான ஓர் ஒவியர் என்னிடம் அடிக்கடி வந்து போவார். அவரைக் கொண்டே மூன்று இதழ்களுக்கான அட்டைப்படங்களையும் வரைந்து எடுத்துக் கொண்டேன்.
அடுத்த கட்டம் நல்லதொரு அச்சகத்தைத் தேர்ந்தெடுப்பது தான். அப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சி யாழ் கிளைச் செயலாளராகத் தோழர் ஐ. ஆர். அரியரத்தினம் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவர் வட மாகாண ஆசிரிய சங்கத்திலும் முக்கிய பொறுப்பு வகித்துக் கொண்டிருந்தார். தமது சங்க வேலைகளை அச்சடித்துத் தரும் நாமகள் அச்சகத்தில் வேலைகளைக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அந்தக் கால கட்டத்தில் எந்த அச்சகமுமே இப்படியான மாதாந்தச் சஞ்சிகைகளைப் பொறுப்பேற்றுச் செய்து தரச் சம்மதிப்பதேயில்லை காரணம், இரண்டொரு இதழ்களைப் பரப்பரப்பாகச் செய்து முடிப்பார்கள். அதன் பிறகு அந்தப் பக்கமே வர மாட்டார்கள். இவர்க ளிடம் மிகுதிப் பணத்திற்கு இரந்து திரிய வேண்டும். இதன் பின்னணியில் தான் நாமகள் அச்சகமும் எனது மல்லிகை வேலையில் அதிக அக்கறை காட்டி ஒத்துழைக்க மறுத்தது. அரியரட்ணம் மாஸ்டர் பொறுப்பான வேலைகளைத் தமக்கு அடிக்கடி தந்துதவிய காரணத்தால், ஏனோ தானோ என்ற மனப் பான்மையுடன் தான் மல்லிகை வேலையைப்
பொறுப்பேற்றுக் கொண்டது நமகள் அச்சகம்.
இல: 60ம், கஸ்தூரியார் வீதியிலுள்ள ஜோசப் சலூன் உள் அறையை மல்லிகைக்
மல்லிகை ஜூலை 2009 季 8
 
 
 
 

காரியாலயமாக முதலில் பாவிக்கத் தொடங்கினேன்.
சலூன் முன் கதவில் மல்லிகை என்ற பெயரைப் பென்னாம் பெரிய எழுத்தில் பொறித்துக் கொண்டேன். கீழே ஆசிரியர்: டொமினிக் ஜீவா எனவும் பதிவு செய்தேன். இன்றும் பெருமையுடன் நான் தலை நிமிர்ந்து, இலக்கிய உலகில் பெருமைப் பட்டு வரும் ஒரு சாதனை, ஒரு சலூனுக் குள் ஒர் இலக்கியச் சஞ்சிகையின் காரி 'யாலயத்தை ஸ்தாபிதமாக்கியது தான்.
இதைச் சரிவரப் புரிந்து கொள்வதற்கு அந்தக் காலச் சமூகச் சூழ்நிலையை நாம் கணக்கிலெடுத்துப் பார்க்க வேண்டும்.
மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட சனங்களின் உள் நுழைவை எதிர்த்து, கல்விமான் சுந்தரலிங்கம் தலை மையில் சாதிமான்களின் எதிர்ப்புக்கு நாம் முகம் கொடுக்க வேண்டிய கால கட்டமது. அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களின் தேநீர்க் கடைப் பிரவேசச் சூழ்நிலை அது.
இந்தச் சாதி வெறியர்களின் பிரசாரக் கூக்குரல்களுக்கு மத்தியில், சவரத் தொழி லாளியாகிய நான், சலூன் ஒன்றுக்குள் மல்லிகை என்ற இலக்கிய இதழை ஆரம்பித்து வைத்தேன் துணிச்சலுடன்.
பலர் இயல்பாகவே எனது இந்த இலக்கிய முயற்சியை ஆரம்பச் சூரத்தனம் என்றே அசட்டையாகக் கருதினார்கள். இது எத்தனை நாளைக்கு? என முக Lust 6 Lib & TL960T ITFraseT.
நாமகள் அச்சக முதலாளியிடம் மல்லிகையின் கையெழுத்துப் பிரதிகளை நேரில் கொண்டு சேர்த்த பொழுது, அவர் பின்னால் திரும்பி "இந்தா சந்திரசேகரம், இது
களை நீதான் இனிமேல் பாத்து முடிக்க வேணும்!” என ஒர் இளைஞரை அழைத்து, அவரிடம் அச்சாக்கப் பிரதிகளை ஒப்படைக் கச் சொன்னார்.
அன்றுதான் நான் முதன் முதலில் சகோ தரர் சந்திசேகரத்தின் முகத்தைப் பார்த்து, மனதில் பதிய வைத்துக் கொண்டேன். ஒரு சில மாதங்கள் சென்றிருக்கும். நாமகள் அச்சகத்துடன் எனக்கு ஒத்துப் போக முடியவில்லை. வேறொரு அச்சகத்தை நோக்கி நான் அகலக்கால் வைத்தேன்.
மல்லிகை வளர வளர, எனக்கொரு பெரிய பிரச்சினை தோன்றியது.
இலக்கிய அர்ப்பணிப்பா?- அல்லது தொழில் வருவாயா? எதுதான் தேவை?
நான் ஒரு தரமான தொழிற் கலைஞன். அத்துடன் சாஹறித்திய மண்டலப் பரிசை முதன் முதலில் பெற்றுக் கொண்டவன் என்ற பத்திரிகைப் பிரபலம் வேறு.
எனவே என்னை நோக்கிக் கனமான கல்விமான்களும், கெளரவமானவர்களும் பொதுவாக, இளைஞர்களும் வரத் தொடங் கினார்கள். எனது நட்பையும், தொழிலின் சிறப்பையும் ஒருங்கே பெறக் காத்திருந் தார்கள். நாளொன்றுக்கு இருநூறு முன்னுாறு ரூபாய்கள் சம்பாதிப்பேன்.
அப்பொழுது எனது ஒரே மகன் திலீபன் பிறக்கவில்லை. இரண்டு குழந்தைகள், குடும்ப வறுமை வேறு.
எனது இளம் வயதிலிருந்து நான் கற் றுத் தெளிந்த கைத் தொழிலை விட்டு விட வேண்டும். அல்லது மல்லிகை என்ற சிற் றேட்டை இடைநடுவில் நிறுத்திவிட வேண் டும். இந்த இக்கட்டான நிலை, எனக்கு.
மல்லிகை ஜூலை 2009 辜 9

Page 7
எனது இலக்கிய வாழ்க்கையிலேயே மிகப் பெரிய சவால். இந்த அவலமான கால கட்டத்தில் தான் ஒருநாள் சகோதரன் சந்திரசேகரம் என்னைத் தேடிச் சலூனுக்கு வந்திருந்தார். “நாமகளை விட்டு விலகிப் போட்டன். எனக்கு நீங்கதான் ஒழுங்கா வேலை தர வேணும்!”
எனக்கு உள் மூளையே கிறுகிறுத்தது. எனக்கே வழி தெரியவில்லை. இதற் கிடையே இந்தச் சகோதரன் என்னைத் தேடி வேலை கேட்டு வந்திருக்கிறார்!
நண்பர் ரஸிகமணி கனக செந்தி அந்தக் கால கட்டத்தில் என்னைத் தேடி அடிக்கடி வந்து போவார். அவர் தான் எனக்கு அந்தக் கட்டத்தில் காத்திரமான இலக்கிய ஆலோசகர். .
"பயப்பிடாமல் அச்செழுத்துக்களை வாங்கி, இங்கேயே ஒரு அச்சுக் கூடத்தை ஆரம்பி. பக்கங்கள் செய்த பின்னர் ஒரு அச்சுக் கூடத்தைப் பாத்து, அங்கேயே அச் சடித்துப் போடு. சிலவும் சுருக்கம். வேலை யும் ஒழுங்கா நடக்கும். அடிக்கடி அங்கை இங்கை அலைஞ்சு திரியிற நேரம் மிச்சப் படும்!" என அவர் சொன்னார்.
அதற்கென்றாலும் ஒரு சில ஆயிரம் ரூபாய்கள் வேணுமே இதுக்கு நானெங்கே போறது?
நான் இச் சிற்றிலக்கிய ஏட்டை ஆரம் பித்திருந்த கால கட்டத்தில் எனது சுய வளர்ச்சியை விரும்பி ஏற்காத ஒரு கும்பல் 'அவனுக்கென்ன? ரஷ்யாக்காரன் கொடுக்கிறான். இவன் நடத்திறான்!' என்றொரு கடும் பிரசாரத்தை எனக்கெதி ராக நடத்திக் கொண்டிருந்தது ஏற்கனவே எனக்கு நன்கு தெரியும்.
நான் இந்தப் பிரசாரப் பயமுறுத்தலுக்கு
எந்தக் கட்டத்திலுமே காது கொடுத்த தில்லை.
ஆரம்பக் கால கட்டங்களில் ரஷ்யக் கட்டுரைகள் அளவுக்கதிகமாக மல்லிகை யில் இடம் பெற்றது என்னவோ உண்மை தான். அது பக்கம் நிரப்ப வேண்டிய அவ லச் சூழ்நிலையில் நடந்தது. அத்துடன் பீப் பிள்ஸ் பப்ளிசிங் ஹவுஸ்" என்ற கொழும் புப் புத்தக விற்பனவுக் கடை, ஒரு பக்க விளம்பரத்திற்கு 250/ ரூபா தந்ததின் பின்னணிச் செயற்பாடுகளும் அதற்கொரு காரணம். அத்துடன் ஞானா, முரீகாந்தன் போன்றோர் ரஷ்யத் தகவல் நிலையத்தில் கடமையாற்றினர். அத்துடன் ஏ. ஏ. லத்தீப் என்ற முஸ்லிம் சகோதரர் கட்டுரைகளை அனுப்பி வைப்பார்.
இன்றும் தலை நிமிர்ந்து உரத்துச் சொல்லுகிறேன். 'மல்லிகை ஆசிரியர் வசதி வாய்ப்புக்களுக்காக விலை போய் விட மாட்டார்! இது சர்வ நிச்சயம்!
இந்தக் கட்டத்தில் தான் ரஸிகமணி ஒர் ஆலோசனை சொன்னார்: "திருநாவுக் கரசுவை ஒருக்காப் போய்ப் பாரன்! எங்க ளைப் போன்றவையை நல்லா விளங்கிக் கொண்ட நல்ல மனுஷன் கொழும்புக்குத் தானே அடிக்கடி போய்வாறனி. அந்தாளுக் குக் கொழும்பிலை தான் அலுமீனியக் கடை. போய் ஒருக்காப் பார். உதவக் கூடிய நெஞ்சு” என என்னை ஊக்கப்படுத்தினார்.
நான் மாதாந்தம் கொழும்பு செல்வது வழக்கம். அந்தந்த மாதம் முடிந்த இதழ் களை மூட்டை கட்டிக் கொண்டு கொழும்பு புறப் பட்டு விடுவேன். அங்கு ஒரு வாரம் தங்கி, விற்பனவு, விளம்பரக் காசு வசூலித் துக் கொண்டு திரும்புவது எனது மாதாந்தத் திட்டங்களில் ஒன்று.
மல்லிகை ஜூலை 2009 $ 10

ஒரு நாள் சனிக்கிழமை பாங்ஸால் வீதியிலுள்ள திருநாவுக்கரசு அவர்களின் பாத்திரக் கடைக்குச் சென்றேன். இவர் தான் பிற்காலத்தில் காங்கேசன்துறைப் பாராளு மன்றப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
நான் என்னை அறிமுகப்படுத்தியதும், பெரிதும் சந்தோஷப்பட்டார். என்னைத் தனக்கு முன்னரே தெரியும் என முக மலர்ச்சியுடன் சொல்லிக் கொண்டார். மிக மிகச் சுமுகமாக என்னுடன் உரையாடிக் களித்தார்.
முடிவில் "என்ன உதவி வேணும்?" என இயல்பாக வினவினார்.
நான் வந்த காரியத்தை அவருக்கு விளங்கப்படுத்துகிறேன்.
மெத்தச் சந்தோசப்பட்ட அவர், 'மல் லிகைக்குத் தேவையான எல்லாச் சாத னங்களையும் ஒருங்கு சேர எடுத்து, அதன் பில்லைத் தந்தால், நான் முழுப் பணத்தை யும் நேரடியாகவே கொடுத்து விடுகிறேன்!” என்றார், அவர், அத்துடன் "தனது லொறி அடிக்கடி வருகிறபடியால் தனது லொறியி லேயே அச்சகச் சாமான்களைப் பத்திரமாக இறக்கி விடச் சொல்லுகிறேன்!" என உற் சாகமாக வழியனுப்பி வைத்தார், திரு நாவுக்கரசு.
அப்புற மென்ன? சகோதரர் சந்திர சேகரம் மல்லிகையின் முழுநேர ஊழியரா கக் கடமையாற்றினார்.
'மாதச் சம்பளம் என்னாலே தரக் கட் டாது தினசரி காசை வாங்கிக் கொண்டு போக வேணும். அப்படித் தந்து விடுவது தான் எனக்குச் சுகம். உமக்கும் அதுதான் வசதி” என முதன் முதலிலேயே சம்பளச் சங்கடங் களைப் பேசித் தீர்த்துக் கொண்டேன்.
பலர் இன்றும் கூட, மல்லிகையை நேரடியாகப் போற்றிப் புகழும் போது, நான் சகோதரன் சந்திரசேகரத்தை நெஞ்சுக்குள் நினைத்துப் பார்ப்பதுண்டு.
மல்லிகைக்காகத் தன்னைத் தானே அர்ப்பணித்துக் கொண்ட பெரும் பிறவி, அவர்.
மல்லிகைப் பக்கங்களை அச்சுக் கோர்த்து, பக்கங்களாக்கி, பிழை திருத்தம் செய்து தருவார். நான் ஒரு தடவை க்கு நான்கு நான்கு பக்கங்களாகக் ஹெலியில் அடுக்கிக் கொண்டு, மெல்ல மெல்லச் சைக்கிளை உருட்டிக் கொண்டு, அச்சாக் கும் அச்சுக் கூடத்தைச் சென்றடைவேன்.
இரண்டு தடவைகள் கொண்டு சென் றால் எட்டுப் பக்கங்கள். எட்டுப் பக்கங்கள் என்பது ஒரு பாரம். ஆறு பாரம்களைக் கொண்டது ஒரு மல்லிகை உள்ளடக்கம். 48ப் பக்கங்களைக் கொண்டது ஒரு முழு மல்லிகை இதழ். அதற்கு அட்டைப் படம் வேறு. அதனது மொத்த விலை: 20 சதம்.
சில காலங்களுக்குப் பின்னர் மல்லிகை இடம் மாறியது. சொந்தக் கட்டடத்தில் மாசிகை குடி புகுந்தது. சொந்தமான அச் சாக்க இயந்திரத்தையும் தனதாக்கிக் கொண்டது.
தமிழகத்திலும் சரி, நமது நாட்டிலும் சரி, தனக்கான சொந்த மண்டபத்தில், சொந்தமான அச்சுக்கூடத்தில் அச்சியற்றப் பெற்று வெளிவந்த ஒரேயொரு சஞ்சிகை மல்லிகைதான் எனத் துணிந்து சொல்ல (Լpւջպլb.
"வழியிலை வருகிற போது கைலாச
பதி காரை நிப்பாட்டிப் போட்டு, என்னிடம்
கதைச்சு விட்டுப் போனார்!’ என ஒருநாள் என்னிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார்.
மல்லிகை ஜூலை 2009 $ 11

Page 8
"என்ன இருந்தாலும், சிவத்தம்பி பெரிய மனுஷன் தான். என்னை ஞாபகம் வைச் சிருக்கிறாரே! என்னைவிட, என்னுடைய பேரைச் சொல்லிக் கூப்பிட்டு, நிண்டு விசா ரிச்சிட்டுப் போனார்' என்பார் வேறொரு நாள். இப்படியே முருகையன், டானியல், வரதர், ரஸிகமணி போன்றோர் தன்னை ஞாபகத்தில் வைத்திருந்து, வழி தெருக்க ளில் நேரில் கண்டால் விசாரிப்பதாகச் சொல் வார். அதில் அவருக்குப் பெரும் புளுகம்.
மல்லிகையின் காரியாலயத்திற்குச் சமீ பமாகத் தான் இருந்தது, யாழ் கோட்டை. அங்கிருந்து புறப்பட்டுச் சீறும் ஏவு குண்டுக ளின் கர்ண கடுரமான சீறலொலி காதுக ளைத் துளைக்கும். அவை அத்தனை யையும் வெகு பொறுமையாகத் தினசரி சகித்துக் கொண்டு தனது கடமையைச் செய்து முடிப்பதில் இவர் விண்ணன்!
எனது குணம் தான் இலக்கிய உல கிற்கு நன்கு தெரியுமே! சும்மா சும்மா கத் தித் தொலைப்பேன்.
இத்தனை கத்தல்களையும், ஏச்சுக் களையும் தனது கவனத்தில் கொள்ளாது, என்னுடன் தொடர்ந்து இயங்கி வந்த இந்த அற்புத நெஞ்சம் இலக்கிய உலகில் தொடர்ந்து பேசப்பட்டு வரவே செய்யும்.
இத்தனைக்கும் ஈடாக மல்லிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த கால கட்டத்தில் நண்பர் சிவத்தம்பி தலைமை யில் இவரது மல்லிகைச் சேவையைப் பாராட்டி 20.11.93 அன்று விழாவொன்றை ஒழுங்கு செய்திருந்தேன். சம்பந்தன் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.
ஓர் அச்சகத் தொழிலாளியைப் பாராட்டி விழா எடுத்த சம்பவம் இவருக்கு மாத்தி ரமே நடைபெற்றது என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.
இதற்கு முழுப் பக்க பலமாக நின்றவர், சந்திசேகரம். வீடு உரும்பிராயில், சைக் கிள் தான் வாகனம். ஐந்து மைல் தூரம். காலை வருவார். மாலை போவார். அடிக் கடி வெற்றிலை போடுவதுதான் பிரதான (36.606).
எழுத்தாளர்களினது படைப்புக்களை முதல் பாராவைப் பார்த்தவுடனேயே சொல்லி விடுவார், "இதிலை அவ்வளவு வேலை இல்லை. இது பேர் சொல்லும்..” எனக் கூர்ந்த மதிநுட்பத்துடன் தனது விமரிசனப் பார்வையை வார்த்தைகளாக்கி விடுவார். அநுபவப் பயிற்சி தந்த அபிப்பிராயம் அது. சில சமயங்களில் அவரது விமரிசனப் பார்வையை நான் ஒப்புக் கொள்வதுமுண்டு. நிராகரிப்பதுமுண்டு.
மல்லிகைக் காரியாலயத்திற்குத் தின சரி பல வகையான எழுத்தாளர்கள், இலக் கிய அபிமானிகள் வந்து போவதுண்டு. இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தனக்குள் தெளிவான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தவர், இவர்.
இப்படியானவர்கள் வந்து போனதன் பின்னர், அவர்களைப் பற்றித் தனது அபிப் பிராயத்தை வெகு தெளிவாக எனக்குச் சொல்லிச் சிரிப்பார்.
பொதுவாக அவரது இந்த அநுபவக் கணிப்புப் பொய்த்துப் போனதாக எனக்குப் பிற்காலத்தில் படவில்லை.
மல்லிகையில் தொடர்ந்து எழுதி வரும் பலர் மீது, என்னை விட, அதீத அன்பு காட்டிப் பழகி வந்தார்.
அவர்களும் படியேடிறியதும் 'சந்திர சேகரம்’ என அழைத்தபடியே மல்லிகைக் காரியாலயத்திற்குள் உள் நுழைவார்கள்.
மல்லிகை ஜூலை 2009 奉 12

கங்காரு நாட்டுக் காகிதம் 2
-முருகபூபதி
நாம் வசிக்கும் விக்ரோரியா மாநிலத்தில் வீட்டுக்கு வீடு ரோஜாச் செடிகள் நிச்சயமாக இருக்கும். இலங்கையரைப் பொறுத்தவரையில் பல வண்ணங்களில் மலரும் ரோஜாவை விட அதிகம் மவுசான செடி கறிவேப்பிலைதான்.
இங்கு கறிவேப்பிலைச் செடியை நட்டு ஆரோக்கியமாக வளர்த்து, வீட்டில் கறிக்கும் பறித்து- வீட்டுக்கு வரும் தமிழ் விருந்தினருக்கும் கொடுத்துவிட முடிந்தால் அது ஒலிம்பிக் சாதனைக்கு நிகரானதுதான்.
கறிவேப்பிலையில் பல மருத்துவக் குணங்கள் இருப்பதாக எமது முன்னோர்கள எப் பொழுதோ கண்டுபிடித்து விட்டார்கள். அதற்காக அவர்கள் தாவரவியல் விஞ்ஞானம் படிக்கவுமில்லை, ஆய்வுகூட சோதனைகளிலும் ஈடுபடவில்லை.
கறிவேப்பிலை கலந்த உணவுக்கு விசேடமாகத் தனிச்சுவை இருக்கும். ஆனால், பெரும் பாலானவர்கள் உண்ணும்போது அதனை கறியிலிருந்து நீக்கி எடுத்துப் போட்டு விடுவார் கள். கறிவேப்பிலையில் பல உயிர்ச்சத்துக்கள் இருப்பதாகப் பெரியவர்கள் எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும் இளம் தலைமுறையினர் காதில் போட்டுக் கொள்வதில்லை.
ஒரு சமயம் இலங்கைக்குத் தமிழகத்திலிருந்து வந்திருந்த முத்தமிழ் காவலர கி.ஆ.பெ. விசுவநாதம் “குமரன்’ கணேசலிங்கன் வீட்டு விருந்தில் கறிவேப்பிலையைச் சுவைத்துச் சாப்பிட்டதைப் பார்த்த பின்னர் தான் மல்லிகை ஜீவாவுக்கும் அதன் மருத்துவ குணங்கள் தெரிய வந்ததாம். முத்தமிழ் காவலர் கறிவேப்பிலைக் காம்புகளை ரசித்து சுவைத்ததை ஜீவா எங்கேயோ எழுத்தில் பதிந்து நான் படித்ததாக ஞாபகம்,
கங்காரு நாட்டில் கறிவேப்பிலைக்கு நல்ல மரியாதை இருப்பதற்கு இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட ஆசிய நாட்டவர்கள் இங்கு புலம் பெயர்ந்திருப்பது தான் முக்கிய காரணம். நாம் வசிக்கும் விக்ரோரியா மாநிலத்தில் மட்டுமல்ல, கறிவேப்பிலையின் பயன்பாடுள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள பலசரக்குக் கடைகளில் பிளாஸ்ரிக் பக்கட்டுகளில் விற்பனைக்கு நிச்சயம் இருக்கும்.
நண்பர் கவிஞர் அம்பி முன்பொரு சமயம் பாப்புவாநியுகினியில் பணியாற்றிய பொழுது அங்கே தமது உணவில் அடிக்கடி கறிவேப்பிலை சலாட் சேர்த்துக் கொண்டார். அதன் பலனையும் விரைவில் உணர்ந்தார். அவருக்கு இரத்தத்தில் கொலஸ்ரோல் வீதம் திடீ ரென குறைந்திருந்தது. இந்தத் தகவலை அமெரிக்காவிலிருந்து பாப்புவாநியுகினிக்கு ஒரு மகாநாட்டுக்காக வந்திருந்த ஆங்கிலேய டொக்டரிடம் தெரிவித்தார். ஆச்சரியமுற்ற அந்த டொக்டர் மாநாடு முடிந்து அவசரமாக நாடு திரும்ப நேரிட்டது. அமெரிக்கா சென்றதன் பின்னர், அம்பிக்கு கடிதம் எழுதிய குறிப்பிட்ட டொக்டர், தமக்குக் குறிப்பிட்ட கறிவேபபிலைத் தாவரத்தில் இரண்டு கிலோ வாங்கி அனுப்புமாறு கேட்டிருந்தார். பாப்புவாநியுகினியில் கறிவேப்பிலைக்குக் குறைவில்லை. வெப்ப வலயப் பிரதேசம் கறிவேப்பிலையின வளர்ச்சிக்கு
மல்லிகை ஜூலை 2009 率 13

Page 9
மிகவும் உகந்தது. அம்பி அந்த அமெ ரிக்கா டொக்டரின் வேண்டுகோளை ஏற்றுத் தபால் பொதியில் கறிவேப்பிலை அனுப்பி னார். அதற்கான சன்மானத்தை டொக்ட ரும் அம்பிக்கு அனுப்பியிருந்ததோடு, தாம் கறிவேப்பிலையில் ஆராய்ச்சி மேற்கொள்வ தாகவும் வெற்றி கிட்டினால் அதற்கான ரோயல் டியும் அனுப்புவதாக தெரிவித்திருந்தார். அம்பி யும் அவுஸ்திரேலியாவுக்கு பின்னர் புலம் பெயர்ந்துவிட்டார். அந்த அமெரிக்க டொக்ட ரின் ஆராய்ச்சிக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
இச்சந்தர்ப்பத்தில் தமது அனுபவம் ஒன்றை எங்கள் கரிசல்காட்டு இலக்கியவாதி கி.ராஜநாராயணன் தமது கட்டுரையொன் றில் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது அவர் குறிப்பிட்டது தலைக்கும் உடம் புக்கும் தேய்த்துக் குளிப்பதற்கு உதவும் ஒருவகை அரப்பு இலை. ஒரு நண்பர்தான் கி.ரா.வுக்கு இந்த அரப்பு இலையை அறி முகப்படுத்தியிருக்கிறார். அந்த இலையை காயவைத்து அரைத்தெடுத்து குளியலின் போது பாவித்திருக்கிறார். அவரது குடும்பத் தினரிடமும் அது பாவனைக்கு வந்துவிட் டது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியாக இருந் ததாம் அந்த அரப்பு இலை.
கட்டுரையின் இறுதியில் கி.ரா. இப்படி எழுதுகிறார்: “எனக்குக் கவலை எல்லாம் இப்போது இந்த அரப்பு இலையை எவனும் வெளிநாட்டுக்காரன் வந்து பார்த்து அருவமில்லாமல் உரிமைப் பதிவு செய்து கொண்டு விடுவானோ என்கிற பயம்தான்.” சரி இனி மீண்டும் கறிவேப்பிலைக்கே வருகிறேன்.
எங்கள் வீட்டிலும் ஒரு கறிவேப்பிலைச் செடியை வளர்த்து விடவேண்டும் என்று நீண்ட நாட்களாக மனைவி நச்சரித்துக் கொண்டே இருந்தா, எனக்கோ அதில ஆர்வம் இல்லை.
கறிவேப்பிலைச் செடியை மிகவும் பக்கு வமாக வளர்க்க வேண்டும். இந்த மாநிலத்
தின் குளிர் அதற்கு ஜென்ம விரோதி. குளி ருக்குக் காண்பிக்காமல் குளியல் அறையிலோ அல்லது சமையலறையிலோ முடிந்தால் படுக்கை அறையிலே பக்குவமாகச சாடியில் வைத்து வளர்க்க வேண்டும். கோடை காலம் வரும்போது வீட்டின் வளவில் பொருத்த மான இடத்தில் சாடியிலிருந்து கவனமாக வேர் அறுந்துவிடாமல் எடுத்து நடவேண்டும். தினமும் அதன் வளர்ச்சியைக் கணவனும் மனைவியும் காலையில் பரஸ்பரம் முகத் தில் விழிப்பது போன்று இந்தச் செடியின் வளர்ச்சியைப் பார்ப்பதற்காக அதன் முகத் தில் விழிக்கவேண்டும்.
அது வாடிவிட்டால் முகமும் வாடிவிடும். இந்தக் கவலையை ஜீரணிக்கக் கஸ்ட மாக இருக்குமே என்று நானும் மனைவியின் விருப்பத்தை ஒத்திப் போட்டுக் கொண்டே வந் தேன். நண்பர்களின் வீடுகளுக்குப போனா லும் அங்கே அவர்கள் வளவில் கறிவேப் பிலைச் செடி நிற்கிறதா? என்பதைப் பார்ப்பதற் காகவே மனைவியின் கண்கள் சுழலும் இருப் பது தெரிந்தால் எங்கே எடுத்தீர்கள்? எப்படி வளர்க்கிறீர்கள்? என்ன பசளை? முதலான கேள்விகளை அடுத்தடுத்து அடுககுவா, வீடு திரும்பும் போது மீண்டும் நச்சரிபு தொடங்கும். சமீபத்தில் நண்பர் தெளிவத்தை ஜோசப் பும், தமிழகத்திலிருந்து ஜெயமோகன் தம்ப தியரும் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருந்த சமயம் எங்கள் வீட்டில் சில நாட்கள் தங்கி யிருந்தனர். அவர்களிடமும் மனைவி தனது கறிவேப்பிலைக் கனவை சொல்லிவிட்டாள். “எங்கே கிடைக்கும் சொல்லுங்க. நாங்க நிற்கும்போதே வாங்கி மரம் நாட்டு விழாவும் நடத்திவிடுவோம்.’ என்று சொன்ன தெளி வத்தை ஜோசப்பின் குரல் மனைவிக்கு பக்க பலமாகிவிட்டது.
ஒரு நாள் இலங்கை-இந்திய மளிகைச் சாமான்கள் விற்கும் கடையொன்றுக்கு சென் றிருந்தோம் கடையைச் சுற்றி வேடிக்கை பார்த் துக் கொண்டிருந்த தெளிவத்தை, அங்கு விற் பனைக்கிருந்த கறிவேப்பிலைக் கன்றுகளை
மல்லிகை ஜூலை 2009 $ 14

பார்த்துவிட்டார். அவர் ஊடாக மீண்டும எனக்கு விண்ணப்பம் மனைவியிடமிருந்து வந்தது.
பிறகென்ன, கறிவேப்பிலைக் கன்று ஒன்றும் எனது காரின் பின் ஆசனத்தில மனை விக்கு அருகே ஆரோகணித்து அமர்ந்து கொண்டது. அன்று தான் ஒரு சாதனையை நிலை நாட்டிவிட்ட புளகாங்கிதத்துடனேயே மனைவி வீட்டுக்குள் வலம் வந்தாள்.
“தெளிவத்தை இனி எப்போது மரம் நாட்டு விழா?” என்று கேட்டேன்.
அவரை முந்திக் கொண்டு மனைவி இப்படிச் சொன்னா:- “இப்ப குளிர் தொடங் கிட்டுது. வெய்யில் காலம் வரும் வரையும் அது வீட்டுக்குள்ளேயே சாடியில் வளரட்டும். அது என்ர பிள்ளை. இனி நான் பார்த்துக் கொள்ளுவேன்.”
தெளிவத்தை, நாடு திரும்பிய பின்னரும் தொலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பங் களில் கறிவேப்பிலைக் கன்று எப்படி இருக் கிறது? என்று மறக்காமல் கேட்பார். அவர் இங்கு வந்த நேரம் எங்கள் குடும்பத்தில கறி வேப்பிலைக் கன்றும் ஒரு அங்கத்தவராகி விட்டது.
வன்னியிலிருந்து வவுனியாவுக்கு இடம் பெயர்ந்த மக்கள் எப்போது தங்கள ஊருக்கு போய்ச் சேருவோம் என்று ஏக்கத்துடன காத் திருப்பது போன்று- எங்கள் கறிவேப்பிலைக் கன்றும் சூரிய வெளிச்சத்திற்காக மண்ணு க்கு (எங்கள் வீட்டு பின் வளவுக்கு) இடம் பெயர ஏக்கத்துடன் காத்திருக்கிறது.
வெளிச்சம் அனைவருக்கும் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நானும் காத்திருக்கிறேன்.
/一エ
—്
மல்லிகை ஆண்டுச் சந்தாதாரராகச் சேருபவர்கள்
கவனத்திற்கு.
ஓராண்டுச் சந்தாவுக்குக் குறைந்தது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வங்கித் தொடர்புகளுக்கு: Dominic Jeeva 072010004231 - Hatton National Bank. Sea Street, Colombo - 11. 44வது ஆண்டு மலர் தரமான தயாரிப்பு. விரும்பியோர் தொடர்பு கொள்ளவும்.காசோலை அனுப்புபவர்கள் Dominie Jeeva எனக் குறிப் பிடவும். காசுக்கட்டளை அனுப்புபவர்கள் Dominic Jeeva Kotahena,
P.O. எனக் குறிப்பிட்டு அனுப்பவும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி : 2320721
மல்லிகை ஜூலை 2009 奉 15

Page 10
42/727 ബ്ലീഗ്ലൂ )ീ%ിമീ/e ഭ്യമല്ക്കു ശ്ലിഗ്ദീബ്ര ഗ്ലൂ
മeCദമുദ്രഗ്ദ്
;്ത്ര ഗ്രഞ്ചുല്ല്ലീ ഗ്രe_/ഗ്ഗe മദീമം ശ്ലേഷ്യൂീഗ്ഗമില്ല് துடின்ேறன ഗ്ഗം زمرہتی ہتھیلی ترتے
---- Sl. நிசார்
ജ്രിഗ്ദീബ്രു ഗ്ലൂe ല്ലീ ജീദ്ര. മൃീ മില്ലീമഉമ്ലബ്ര ഗ്ലൂീ,
ബ്ലു ഭീഷ്യൂ/മ
ആഗ്ദ6)/ീ 6ഗ്ഗ6)0് ബ്ലു് ശ്ലിഗ്ര
9ശ്ര ജൂബ്ബദ്ര ശ്രജ്ഞ ഗ്ര, പ്ലേ
' * 4
மல்லிகை ஜூலை 2009 率 16
 
 
 
 

கிழவருக்குக் கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. வயிறு நெருப்பாய்க் கொதித்துக் கொண்டிருந்தது. பழக்கப்பட்ட பசிக் களை தான் எனினும், இன்று தாங்க முடியாமலிருந் தது. மரம் ஒன்றில் சாய்ந்தபடி தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றார்.
கடந்த ஆறேழு மாதங்களாகத் தொடங்கிய வாரோட்டம் இடம் மாறி இடம் பெயர்ந்து, இன்று இங்கு வந்து முடிவடைந்திருக்கிறது. முடிவடைந்து விட்டதாக முற்று முழுதாகக் கூறி விடவும் முடியாது. இந்த இடப் பெயர்வும், அவலமும் முன்னர் பத்து வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்த போதே ஆரம்பித்து விட்டாலும், வன்னிக்கு வந்த பின் கடந்த சில வருடங்களாக ஒரு நீண்ட இடைவேளை தான் கிடைத்தது. ஆனால், வட்டியும் குட்டியுமாகச் சேர்ந்து நாலாம் கட்டப் போரில் நரகத்தையே தரிசிக்க வைத்து விட்டது. வெடில் விரட்ட விரட்ட எல்லோரும் வீடிழந்து, பொருளிழந்து, உறவுகளை இழந்து, காயம் பட்டு அங்கவீனர்களாகி உயிரைக் கையில் பிடித்தபடி எத்தனையோ இடப் பெயர்வுகள்,
இத்தனைக்கு இடையிலும், கிழவர் தாக்குப் பிடித்து உயிரோடு வவுனியா முகாம் வரை வந்து சேர்ந்தது அதியசம் தான்! இளமையிலே ராஜபோக வாழ்வில் உண்ட உண வும், அதிர்ஷ்டமும் தான் கிழவரைக் காப்பாற்றியிருக்கிறது. இந்த இடைக்காலத்தில் எத்தனையோ வயோதிபர்கள் பசி பட்டினியாலும், சிகிச்சை பெற வாய்ப்பின்றி நோய் நொடியினாலும், சன்னங்கள் துளைத்தும் இறந்து விட்டார்கள். இன்றைய பயணத்தின் போது கூட, ஒரு வயோதிபரும், ஒரு குழந்தையும் பசியில் இறந்து விட்டனர்.
இறுதிக் கட்டத்தில் உக்கிரப் போர் மத்தியில் அவர்கள் இடம் பெயர்ந்த கதையை வார்த்தைகளில் வடிக்க முடியாது. வழி வழியே சன்னம் பட்டும், உடல் கருகியும் எத்தனை எத்தனை பேர் இறந்து விட்டார்கள் காயம் பட்டு, இரத்த வெள்ளத்தில் மிதந்த உறவுகள் துடிதுடிக்க, எத்தனையோ பேர் எதுவும் செய்ய முடியாது அப்படி அப்படியே விட்டு விட்டு ஒடி வந்தார்கள்.
கிழவருக்குப் பசியும், தாகமுமாக இருந்தது. பஸ்ஸில் ஏறிய போது குடித்த ஒரு குளிர் பானம் மட்டும் தான் இன்றைய ஆகாரம். அதுவும் எத்தனை நாட்களுக்குப் பின்னர். p எரிக்கும் வெயிலின் வெக்கையில் நா வரண்டது. ஒரு பிடி சோற்றுக்கும், ஒரு மிடறு தண்ணிருக்குமாய் தவித்தார்.
'தம்பியவை. கொஞ்சம் தண்ணி தாங்கோ மேனை." கிழவரின் குரல் ஈனஸ் வரத்தில் ஒலித்தது. யாருக்கும் கேட்கவில்லையோ? அல்லது கேட்டும் கொடுக்க முடிய வில்லையோ? தண்ணிர் கிடைக்கவில்லை. தொலைவிலே வாகனத்தில் சாப்பாட்டுப்
மல்லிகை ஜூலை 2009 季 17

Page 11
பார்சலும், தண்ணிரும் கொடுத்துக் கொண் டிருந்தார்கள். எனினும், அங்கு நெருக்கடி யாக மக்கள் தவம் கிடந்து இடிபட்டு நசி பட்டு முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். எழும்பி நிற்கவே முடியாத களைப்பும், பசி யுமாக இருந்த கிழவரால், அங்கு போய் நெரிபட்டு உணவு நீர் பெற முடியுமா என்ன?
யாராவது உதவுவார்களா? என அங்க லாய்ப்புடன் சுற்று முற்றும் பார்க்கிறார். இரக்க முள்ள ஒரு பிறவியாவது அருகே வரமாட் டார் என அவரது மனம் ஏங்கியது. எனினும், எவரின் உதவியும் கிடைக்கவில்லை.
மயக்கமும், ஆழ் நினைவுமாகக் கண் களை மூடியபடி அமர்ந்திருந்த கிழவரின் மனதில் பழைய வாழ்வின் நினைவு ஊர் வலம் தரிசனமாகிறது.
கடந்த ஒரு தசாப்த வன்னி வாழ்வுக்கு முன்னரான யாழ்ப்பாணக் குடாநாட்டு வாழ்வில் கிழவர் எவ்வளவு சீரும் சிறப்பு மாக வாழ்ந்தவர்.
வீடென்ன, வளவென்ன, தோட்டம் துர வென்ன, வயலென்ன, மாட்டுப் பட்டி என்ன. பனங்காணி என்ன. ஒ. என்ன குறை இருந்தது? வீடு நிறைந்த மா, பலா, தென்னை, கறி முருங்கை.ம். அது ஒரு பொற்காலம்
அவரது வீடே ஒரு அன்னதான சத்திரம் போல் தான்! ஊரில் அவரை எல்லோரும் பெரியவர் என்று தான் மதிப்போடு அழைப் பார்கள். அதிலும், போர் சூழல் ஆரம்ப மான காலத்திற்கு முந்தைய நாட்கள்.
என்றுமே உணவுக்கோ, நீராகாரத் திற்கோ குறைவில்லை. வந்து போகும் அனைவருக்கும், தாக சாந்தியாவது கிடைக் கும். உள்ளே, வெளியே என்ற பேதங்கள்
இருந்தாலும், கொடுப்பதில் குறைவே இல்லை மோர் அல்லது எலுமிச்சம் பழத் தண்ணியாவது குடித்து விட்டுத் தான் போவார்கள். சாப்பாட்டு நேரத்தில் வந்து விட்டால், கை நனைக்காமல் யாரும் போக மாட்டார்கள். சோறு கறிக்குப் பஞ்சமே யில்லை. பெரியவரின் மனைவியிடம் அட் சய பாத்திரம் இருக்கிறதோ, என்னவோ? எனப் பேசிக் கொள்வார்கள்.
சொந்தக்காரர்கள், அயலவர்கள், வெளி யூர்க்காரர்கள் யாராக இருந்தாலும், பசி யாறித்தான் போவார்கள். குறைந்த பட்சம் குலை தள்ளியிருக்கும், செவ்விளணியில் ஒன்றாவது கிடைக்கும்.
காணியில் வேலை செய்யவும், வீட்டு வேலை செய்யவும், வெளி வேலை செய்ய வும் எடுபிடிகளாக எத்தனையோ பேர்! பாரபட்சங்கள், பாகுபாடுகள், பாரம்பரியமாக வந்த வேறுபாடுகள் இருந்தாலும், யாரும் அதைப் பொருட்படுத்தாமல் இருந்த காலம்,
கொடுத்து வாழ்ந்த அந்தக் கால வாழ் வில் பெரியவரின் வீட்டுக்கு, வெளியிலிருந்து அரிசி வாங்கியதாக இல்லை. எல்லாம் அவ ரது வயல் நெல்லுத் தான். தோட்ட மரக்கறி தான்! பயிரட்ட வெங்காயம், மிளகாய்தான்!
அவரது வீட்டில் அடிக்கடி அன்னதானம் நடக்கும். பெற்றோர், பாட்டன்மார்களின் திவசம் வருடா வருடம் தப்பாமல் கொடுப் பார். வருடா வருடம் கதிர்காமம் போய் வந் தால், கதிர்காமப் பூஜை என்று அன்னதானம் கொடுபடும். பொருளாதார நிலையில் பின் தங்கிய உறவினர் எல்லாம் ஒன்று கூடி முதல் நாள் இரவிலிருந்தே சமையல் அடுக் குகள் தொடங்கிவிடும். அதிகாலையில் சமையல் வேலைகள் தொடங்கினால், மதியம் வரை தொடரும். பெரிய கிடாரங்க
மல்லிகை ஜூலை 2009 率 18

ளில் சோறு, கறி என வெளியில் தற்காலி கத் தட்டி கட்டிச் சமையல் நடைபெறும்,
மதியம் உறவுகளுக்கு மட்டுமன்றி, அயலட்டையில் உள்ள குடிமைகளுக்கும், ஏழைகளுக்கும் கூட பெரு விருந்து தான். குறைந்தது ஒரு மூட்டை அரிசிச் சோறு பிராமணர் பாடும் கொண்டாட்டம் தான். அரிசி, மரக்கறி, தானப் பொருட்கள் தட் சனை எதற்குமே குறைவில்லை.
அந்த நாட்களில் குறைந்தது மூன்று நாலு பந்தியாவது சபை இருந்தெழும்பும், குடிமைக் குடும்பங்களுக்குப் பின்னர் மூடல் சட்டிகளில் சோறு வழங்கப்படும். அவர்கள் அவற்றை வாங்கிக் கொண்டு போய் தத்தமது வீடுகளில் சாப்பிடுவார்கள். கொடுத்து உண்ட கை, இன்று ஒரு பிடி சோறுக்காக ஏங்கித் தவிக்கிறது. கிழவர் நெடு மூச்செறிகிறார்.
கிழவர் கண் விழித்துப் பார்க்கிறார். இடிபட்டுச் சென்று ஒரு சோற்றுப் பார்சலை வாங்கி வந்த தாய் ஒருத்தி, தனது பிள்ளை களுக்குச் சோற்றைப் பிசைந்து ஊட்டுவ தைப் பார்க்கக் கிழவருக்கு நா ஊறியது. இரண்டு மூன்று நாட்கள் பட்டினி இருந்தி ருக்க வேண்டும். குழந்தைகள் வத வத என்று உண்டன. இடையே தாயும் ஒரு பிடி 2-600TLITsiT.
கிழவரின் அதிர்ஷ்டமோ என்னவோ? கிழவரை நோக்கி ஒரு இளம் மனிதன் நடந்து வந்தான்.
"ஐயா, ஏதாவது சாப்பிட்டீங்களா?” அன்பான அவனது கேள்வியில் அவரது உள்ளம் குளிர்ந்தது.
'இல்லை ராசா. பழைய மிடுக்கு இல்லாத பதில்.
"இருங்கோ ஐயா. பார்சல் ஒண்டு வாங்கி வாறன்."
"தண்ணியும் வேணும் ராசா." தெரியாத இளைஞனாயினும் அன் போடு வந்தவனிடம், உரிமையோடு கிழவ ரால் கேட்க முடிந்தது.
இளைஞன் கெட்டித்தனமாகச் சிறிது நேரத்தில் சோற்றுப் பார்சலுடன் வந்தான். கிழவரின் முகம் மலர்ந்தது. பார்சலை நன்றி யோடு பெற்றுப் பிரித்தார். சிறிதளவு சோறு, மட்டமான கறிகள். இருந்தாலும், அந்த நேரப் பசிக்குக் கடவுளைக் கண்டது போலிருந்தது. ஒரு பிடி உண்டதும் விக்கல் எடுத்தது. 'தண்ணிப் போத்தல் கிடைக்க யில்லை. ஆரிடமாவது இருந்தால் வாங்கி வாறன். என்னைத் தெரியுதோ ஐயா..?” சிரித்தபடி கேட்டு விட்டு, தண்ணிர் தேடிச் சென்றான்.
அவனை நினைவுக்குக் கொண்டு வரப் பார்த்தார். முடியவில்லை.
கிழவர்
ஊரிலோ அல்லது வன்னியிலோ சந்தித் திருக்கக் கூடும். எங்கேயோ பார்த்த முகச் சாடையாக இருந்தது.
அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, இளைஞன் தண்ணிருடன் வந் தான். தண்ணிரை வாங்கி மட மட என்று குடித்தார். உடலெங்கும் தேனாறு பாய்வது போலிருந்தது.
' 'g ITéᎦn .......... உன்னை நினைவுக்குக் கொண்டு வரமுடியேல்லை. நீஆர் எண்டு ஞாபகம் வருகுதில்லை.”
'உங்கட ஊர்தான் ஐயா.” "எங்கட ஊர் எண்டா யாழ்ப்பாணமோ?"
"ஒம். கரவெட்டி தான் ஐயா..."
மல்லிகை ஜூலை 2009 + 19

Page 12
'உன்ர பேர் என்ன ராசா?. ஆற்றை மேன்.?"
'சின்னவியின்ர மகன். உங்கட மூத்தவரோட படிச்சனான்.”
“ஒ. சுகந்தனோட படிச்சனி. தியாகன் தானே?" ஏதோ மனதில் நெருடலாய் ஒரு முள் தைக்கிறது.
கிழவரின் மனதில் மீண்டும் நினைவு களின் ஊர்வலம். நெஞ்சின் அலைகளில் கண்களின் நீர்.
காணியில் மாமரங்கள் நிறைய உண்டு. வகைக்கு ஒன்றாக, அம்பலவி, விலாட்டு, பாண்டி, கிளிமூக்கன் என இருந் தாலும், நாலைந்து கறுத்தக் கொழும்பான் மாமரங்களும் இருந்தன. மாம்பழக் காலம் தொடங்கி விட்டால் கிளிக்கும், அணிலுக் கும் மட்டுமன்றி, அயலவர்களுக்கும் கொண் டாட்டம் தான். வரும் எல்லோருக்கும் மாம் பழம் கொடுத்து அனுப்புவார்.
மாங்காய் முற்றியவுடன் மரத்திலேறிப் பழம் பறிப்பதில் தியாகன் வலு விண்ணன். உச்சக் கிளை வரை குரங்கு போல் தாவி ஏறிப் பழம் பறிப்பான்.
தியாகனும் பெரியவரின் மகன் சுகந்த னும் ஒரே வகுப்பில் படித்தார்கள். பேதங் களை மீறி அவர்களிடையே நல்ல நட்பு இருந்தது. இது பெரியவரின் உறவினர்க ளுக்குப் பிடிப்பதில்லை.
ஒரு தடவை பெரியவரின் வீட்டில் திவ சம் நடந்தது. சுகந்தன் சாப்பிடும் போது, தனது நண்பன் தியாகனையும் அருகே அமர வைத் தான். பந்தியில் சலசலப்பு.
'எழும்படா நாயே?. முளை விடக்கு முந்தி அவ்வளவாய்ப் போச்சோ?.
சமபந்திக்கு வெளிகிட்டிட்டினம். இனிச் சம்மந்தம் பேசியும் வருவினம்..” ஒருவர் தியாகனைக் கொற கொற என்று இழுத்து அடிக்க, மற்றவர்களும் திட்டித் தீர்த்தனர். சுகந்தனால் எதுவும் செய்ய முடியவில்லை. கைகளைப் பிசைந்தபடி நின்றான்.
இதற்கிடையில் சத்தம் கேட்டு வந்த பெரியவர், “சின்னப் பொடியனுக்கு விளங் குமோ?. அடியாதையுங்கோ. சுகந்தன் கூப்பிட்டதால வந்திருக்கிறான்." என்று அவனை விடுவித்தார்.
"ஒடு வீட்டுக்கு. s
தியாகனை விரட்டிய பின்னும் சின்ன விக்கும், உறவினர்களுக்கும் திட்டு விழுந் தது. கோபமும், அவமானமுமாகச் சின்ன வியும், உறவினர்களும் சோறு கறி வாங்கா மல் வெறும் மூடல் பெட்டிகளுடன் திரும்பி னார்கள்.
அதற்குப் பின்னர் அவர்கள் ஒருபோதும் பெரியவர் வீட்டிற்கோ, அவ்ரது உறவினர் களான இதர வேளாளர்கள் வீட்டிற்கோ திவசச் சோற்றுக்குப் போவதில்லை.
போரும், இடப்பெயர்வுமாய் மூன்று தசாப் தங்கள் கடந்த பின், இதோ அகதி முகா மில் தியாகனைப் பெரியவர் காண்கிறார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் பெரிய வரின் நாற்சார் வீடு விமானக் குண்டில் சிதைந்து, சின்ன மகனையும் மனைவி யையும் பறி கொடுத்து, இடம் பெயர்ந்து வ்ன்னிக்கு வந்து, அங்கு சுகந்தன் போரா ளியாகி அவனும் வீர மரணமடைந்து போக, மகளும் புலம் பெயர்ந்து போய்விட, பெரிய வரும் தனித்துப் போய் இப்போது, கிழவ ராகி விட்டார்.
மல்லிகை ஜூலை 2009 奉 20

எத்தனையோ பேருக்கு அன்னமிட்ட பெரியவருக்கு இன்று தியாகன் அன்னமி டுகிறான்.
கிழவரின் கண்கள் கலங்கின.
“guUT. பின்னேரம் கூடாரம் தருவாங் கள். உங்களுக்கும் ஒரு படங்கு வாங்கிப் பக்கத்திலேயே அடிக்கிறன்."
கிழவர் நெகிழ்ந்து போனார்.
'தம்பி. நான் தனியன். எனக்கேன் தனிக் கூடாரம்? உன்னோடயே தங்கிறன் U тзT............ ظا...... அது சரி உன்ர குடும்பம் பிள்ளை குட்டியள் எங்கே ராசா..?”
தியாகன் கண் கலங்கினான்.
'ஐயா. எங்கட இனத்துக்கு ஏன்தான்
இந்தச் சாபக்கேடோ தெரியவில்லை. கடைசி வரை காப்பாற்றிக் கொண்டு வந்த
னான். கடைசி நாள் கண்மண் தெரியாமல் அடிச்சாங்கள். மனிசியும் பிள்ளையஞம் கருகி மூச்சுத் திணறிச் செத்துப் போச்சு துகள். அடக்கம் செய்யவும் முடியாமல் விட்டுட்டு வந்திட்டன்."
தியாகன் குலுங்கக் குலுங்க அழுதான். கிழவரும் கண்கள் பெருக்கெடுக்க அழு கிறார். பின்னர் தியாகனின் கைகளைப் பற்றிய படி கூறுகிறார்.
"நாங்கள் எல்லாத்திலையும் பிரிஞ்சு பிரிஞ்சு நிண்டு தான் கெட்டழிஞ்சு போனம், சேர, சோழ, பாண்டிய, பல்லவர் எண்டு தொடங்கின கதை போல, இண்டைக்கும் பிரிஞ்சு நிண்டதாலை எல்லாத்தையும் இழந்து, இப்ப ஒரு நேரச் சோற்றுக்கு வக் கில்லாமல் கையேந்திறம்."
・? .இனியாவது ...... ظا"
தெரிவித்துக் கொள்ளுகின்றது.
மல்லிகையின் ஆழ்ந்த அநுதாபங்கள்
மல்லிகையின் நீண்ட நாளைய அனுதாபியும், ஆரம்ப கால மல்லிகை இதழ்களில் தனது எழுத்துக்கள் மூலம் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தவரும், யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியும், முன்னாள் மெய்யியல்துறைத் தலைவருமான பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா சமீபத்தில் நம்மை விட்டு மறைந்து விட்டார்.
அன்னாரின் மறைவையொட்டி மல்லிகை தனது ஆழ்ந்த துயரத்தைத்
-ஆசிரியர்
மல்லிகை ஜூலை 2009 奉 21

Page 13
memonkavi (a yahoo.com
இணையத்தள வளர்ச்சியானது பல விடயங்களை பேசுகின்ற தளமாக அத்தளத்தை மாறும் சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கிறது. அந்த வகையில் பெண்களின் பிரச்சினைகளைய் பற்றிய் பல இணையத்தளங்கள் பேசுகின்றன.
அந்த வரிசையில் ஜேர்மனியில் வாழும் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த சந்திர வதனாவின் பெண்கள் சம்பந்தமான இணையத்தளம் மற்றும் வலைய்பதிவு முயற்சிகள் நம் கவனத்தைக் கவர்கின்றன.
மன ஓசை', 'பெண்கள' என்னும் பெயரிலான அவரது இணையத்தள வலைய் பதிவு முயற்சிகளில் வெளியிடபட்டுள்ள பெண்கள் சம்பந்தமான கட்டுரைகளின் தலைப்புகளுடன் அக்கட்டுரைகளிலிருந்து சிறு குறிப்புக்கள், அத்தோரு அய்பகுதியில் வெளிவந்துள்ள திசம்பருத்த7விகzம் தளத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பின் வழியாகய் பழக்கக் கிடைத்த பெண்கள் மீதான வன்முறையை எதிர்கொள்வதும் எதிர்ப்பதவும் எனும் கட்டுரைக் குறிய்யையும் நன்றியுடன் இங்கே தருகிறேன்.
p
இன்றைய கால கட்டத்தில் சாமத்தியச் சடங்கு அவசியந்தானா..?
- சந்திரவதனா புலம்யெர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் இந்தச் சாமத்தியச் சடங்கும் ஒன்றாக இருக்கிறது. ஒரு பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படும் பருவம் அவள் பூப்பெய்தும் பருவம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில் பல பெற்றோர்களிடம் இல்லை. இந்த நிலையில் நாம் இது பற்றிப் பேச வேண்டியதொரு கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த 21ம் மல்லிகை ஜூலை 2009 & 22
 

நூற்றாண்டில், இத்தனை தூரம் நாம் பல்வேறு துறை களிலும் வளர்ந்து விட்ட நிலையில் சாமத்தியச் சடங் குகள் அவசியந்தானா? சாமத்தியச் சடங்கு எமது கலா சாரத்தில் ஏன் இடம் பிடித்துக் கொண்டது?
http://www.selvakumaran.de/index2/ kadduraikal/samaththiya.html
பெண் ஏன் அடக்கப் Ullmor...? grgor ஒடுக்கப் பட்டாள்..?
- சந்திரவதனா எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந் தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப்படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப்படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப்படுகின்றன. பெண்களை நாங்கள் வெளியில் போக விடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். வேலை செய்ய விடுகிறோம். ஏன். கணினியில் கூட எழுத அனுமதிக்கிறோம். இன்னும் என்ன வேண்டுமென்று இவர்கள் ஆர்ப்பாட்டக் கொடி பிடிக்கிறார்கள். என்ற ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடம் இருந்து சினத் தோடு எழுகின்றன.
http://pennkal.blogspot.com/2004/03/ blog-post.html
இந்த 21ம் நூற்றாண்டிலும், புலத்தில் தமிழ்ப் பெண்கள்
- சந்திரவதனா
இந்த 21ம் நூற்றாண்டிலும், தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத்
தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக் கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றும், பெண் சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் என்றும், பெண்ணியம் பேசுவது தற்போதைய நாகரீகம் என்றும் பிதற்றும் ஆண் சமூகத்துக்கு, அந்த ஆண் சமூகம் தம்மைத்தான் மிதிக்கிறது என்று தெரியாமல், புரியாமல் குடை பிடித்துப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார் கள் இன்னும் சில பெண்கள். இவர்களின் இந்த அறி யாமை நிறைந்த செயற்பாடுகளினால் பெண் விடுதலை என்பது இன்னும் எட்டாத உயரத்திலேயேதான் இருக்கிறது.
http:/www.selvakumaran.de/index2/ kadduraikal/intha21.html
GuigoorGoofsor as6omanrib - தாமரைச்செல்வரி
ஒரு சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட வாழும் முறை, அரசியல், கலை கள், ஆடை ஆபரணங்கள் போன்றவற்றிலுள்ள தனித் தன்மை அந்த சமூகத்தின் கலாச்சாரமாகக் கொள்ளப் படுகிறது. வாழும் காலங்களில் ஒரு இனம் அடை யாளம் காட்டப்படுகிற தன்மையை இந்த கலாச்சாரம் பிரதிபலிக்கிறது. சமூகத்தில் உள்ள பெண்களின் நடைமுறை பாவனையே இதில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் பெண்களது எண்ணங்கள், உணர் வுகள் செயற்பாடுகள் மனித வாழ்வை அவள் எவவாறு வடிவமைக்க விரும்புகிறாள் என்பவற்றை அவளால் முழுமையாக சரியான விதத்தில் வெளிப்படுத்த முடி கிறதா என்பது பெரிய கேள்விக்குறியாகவே எம் கண் முன் நிற்கிறது. எந்த அளவுகோலுடன் இவள் இதைத் தீர்மானித்துக் கொள்கிறாள் என்பது இங்கே
-முக்கியமாகிறது.
http://pennkal.blogspot.com/2003/08/ blog-post 106077892.572305.675.htm
மல்லிகை ஜூலை 2009 率 23

Page 14
விரு(ம்பி)ப் பூட்டும் விலங்குகள
அர்த்தநாரி
பெண்ணிய சிந்தனைகள் முனைப்புப் பெற்று, ஆண் பலமிக்கவன், தனித்தியங்குபவன், துணிவுள்ள வன், புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுபவன், பாலியல் சுதந்திரம் உள்ளவன், அதேசமயம் பெண்ணோ விட் டில் இருப்பவள், வெட்கம் உள்ளவள், பலவீனம் நிறைந்தவள், உணர்ச்சிவசப்படுபவள். தங்கி வாழ்பவள் என்ற ஆணாதிக்க சமூக அமைப்பின் வழி புனையப் பட்ட ஆண் பெண் அடையாளங்கள் தமது தனித்து வத்தை மெல்ல மெல்ல இழந்து பெண்ணின் பல்பரி மாண ஆற்றல்கள் பல திசைகளிலும் வேகமாக வெளித் தெரியும் ஒரு காலகட்டத்தில் நாம் நிற்கின் றோம். உயிர்களின் உருவாக்கத்திற்கும் உறவுகளின் பிணைப்புக்கும் ஆதாரமாய் விளங்கும் பெண்கள் சமூகத்தின் இன்றைய பெரும் பிரயத்தனங்களில் ஒன்று ஆணாதிக்க சமூக அமைப்பு தன் மீது வலிந்து பிணைத்திருக்கும் அனைத்து விலங்குகளிலிருந்தும் விடுவித்துக் கொள்ளப் போராடுதல், மற்றையது அபிவிருத்தி நோக்கிய பாதையில் தனது பங்கைச் செலுத்துதல்.
http://pennkal.blogspot.com/2003/08/ blog-post 106076.0965.8608769.html
பெண்கள் மீதான வண்டுறையை
எதிர்கொள்வதும் எதிர்ப்பதுவும்
பெண்கள் மீதான வன்முறையை எதிர் கொள்வதும் எதிர்ப்பதுமே பெண்கள் இயக் கங்களின் முக்கிய கவனத்திற்குரியதாக இருக்கிறது. பெண்கள் அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், சட்ட உதவி மையங் கள் என எண்ணற்ற அமைப்புகள் பெண் கள் மீது ஏவப்படும் வன்முறைகள் குறித்து ஆராய்ந்து அவற்றுக்கு எதிராகப் பிரச்சாரங் கள் செய்து வருகின்றன. ஆனால், பெண்க
ளுக்கெதிரான வன்முறை நாளொரு புது வடிவம் பெற்று, மறக்கப்பட்ட பழைய கொடுமை கள் மீண்டும் புழக்கத்திற்கு வருவதைப் பார்க்கும்போது, பெண்கள் மனதில் பற்பல கேள்விகள் எழுப்பியுள்ளன. இக்கேள்வி களைத் தீவிரமாக ஆராய்ந்து பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து நாம் ஒருங் கிணைந்து போராட தொடர்ச்சியாக முயற்சி களை மேற்கொண்டாக வேண்டும்.
ஆணாதிக்கடும் வண்டுறையும்.
பெண்கள் மீதான வன்முறை என்பது ஆணாதிக்கத்தின் உள்ளுறைந்த தன்மை என்பதை நாம் முதலில் வலியுறுத்தியாக வேண்டும். எனவே பெண்கள் மீதான வன் முறையை ஒழித்தாக வேண்டுமெனில், ஆணா திக்கத்தை ஒழித்தாக வேண்டும். ஆனா திக்கம் உடல் ரீதியாகவோ, வாய்மொழி யாகவோ, உளவியல் ரீதியாகவோ வன்முறை யைப் பயன்படுத்திப் பெண்களைப் பணியச்
செய்து, தாழ்ந்தவர்களாக எண்ணச் செய்து,
தன்னம்பிக்கை இழந்த மனோநிலையை அவர் களிடையே உருவாக்குகிறது. குடும்பம், வீட்டு வேலைகள், மதம், அரசு இவையா வும் ஆணாதிக்கத்தின் கருவிகளாகச செயல் பட்டு பெண்கள் மீது வன்முறையை காலங் காலமாக ஏவி வந்துள்ளன. ஆணாதிக்கப் பண்பாடும் மொழியும் இந்தத் தாக்குதலைத் தொடரச் செய்துள்ளன. அதே சமயம் சுரண் டல் தன்மையுடைய உற்பத்தி முறையைக் கொண்ட வர்க்க சமுதாயத்தின் உள்ளு றையாக இருந்து ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாக்கும் அத்தியாவசிய மான அங்கமாக ஆணாதிக்க அமைப்பு செயல்படுகிறது. பெண்களுக்கான கண்டிப் பான பாலியல் மற்றும் ஒழுக்க விதிமுறை களை வலியுறுத்துவதும், வீட்டு வேலைகள் செய்யவும், குழந்தைகளைப் பெற்று வளர்க் கவும் பணிவான நடத்தையை வலியுறுத் துவதும், அடிமைகளாக ஒடுக்கி வைக்க அவர்
மல்லிகை ஜூலை 2009 & 24

கள் மீது வன்முறையை ஏவுவதும் இத்த கைய சமூக அமைப்பின் தேவைகளாகி விடுகின்றன. பெண்களுக்கான சொததுரிமை மறுத்தல், உற்பத்தியில் அவர்களின உழைப் பின் பயன்களின் மீதான கட்டுப்பாட்டை மறுத் தல், பெண்கள் வீட்டு வேலைகளையும் குழந்தை வளர்ப்பையும் தனிப்பட்ட குடும்ப வேலைகளாகச் சுருக்கி, அவற்றை அங்கி கரிக்கப்படாத உழைப்பாக ஆக்கியவன் மூலம் குறைந்தபட்சக் கூலிபெறும் உழைப் புச் சக்திகளாகப் பெண்களைத் தக்க வைத் துக் கொள்கிறது முதலாளித்துவ சமூக அமைப்பு ஆனாதிக்கச் சமுகத்தினை எதிர்த் துச் செயல்படும் அதே வேளையில், குடும்ப -சமூக வன்முறையானாலும், அதைத திணிப் பவர் முதலாளியோ - அரசோ எவரானாலும், அந்தந்த நபர்களால் அந்தந்த இடத்தி லேயே எதிர்க்கப்பட வேண்டும
சமீபகாலப் போக்குகள்
கடந்த அரை நுாற்றாண்டுக் காலத்தில் ஒடுக்கப்பட்ட நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் அதிகரித்ததன் விளைவாக உழைக்கும் மக்களின் அல்லல்கள் பெரு மளவு அதிகரித்துள்ளன. புதிய பொருளா தாரக் கொள்கை, உலகமயமாக்கல், தாராள மயமாக்கல் மற்றும் அமைப்பு ரீதியான தகவ லமைப்புப் போன்றவை பெருமளவில தொழிற் சாலைகள் மூடப்படுவதற்கும் ஆட்குறைப்பு செய்யப்படுவதற்கும், வேலையில்லாத் திண் டாட்டம் அதிகரிப்பதற்கும் காரணமாக உள் ளன. கிராமப்புறப் பொருளாதாரத் தேக்கம், மானியங்கள் குறைப்பு, விளைச்சலின்மை, விவசாய உற்பத்திக்கான குறைந்த கொள் முதல் விலை போன்றவற்றால் விவசாயத் தொழிலில் பன்னாட்டு நிறுவனங்களின பெரும் வேலைத் திட்டங்கள் காரணமாக எணணற்ற மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு இடம் பெயர்ந்து மறுவாழ்வுக்கான ஆதாரங்கள் ஏதுமின்றிப் பஞ்சப்பராரிகளாக அலைகின்
றனர். குடும்பத்தினுள் மிகத் தாழ்ந்த நிலை யில் நிறுத்தப்படும் பெண்களே வறுமை, சத்துக்குறைவு மற்றும் ஆரோக்கியமின்மை ஆகியவற்றிற்குப் பெரும்பாலும பலியாகின்ற னர். ஏகாதிபத்திய நலன்காக்கும் புதிய பொருளாதாரப் போக்குகளே திரைப்படம் மற்றும் கேளிக்கை, அலங்காரம், சுற்றுலா போன்ற துறைகளினால் மேன்மேலும் பெண்கள் பண்டங்களாகச் சித்திரிக்கப்பட வழி வகுக்கின்றன. இவையே பெண்கள் விபச்சாரத் தொழிலுக்குத் தள்ளப்படுவதற் கும். விற்பனை செய்யப்படுவதற்கும், ஆபாச மாகச் சித்தரிக்கப்படுவதற்கும் காரணமா கின்றன. மத அடிப்படைவாதம், ஒழிக்கப் பட்டு விட்டதாக அறியப்படும் சாதிச்சடங்கு கொண்டாடப்படுதல், பாதுகாப்பற்ற உணர் வில் தற்காப்புக்கென வெளிப்படும் சிறு பான்மை அடிப்படைவாதம் ஆகியவையும் பெண்களின் பிரச்சினைகளைப் பெருமளவு பெருக்கிவிட்டன்.
வண்டுறைகளின் வடிவங்கள்.
பெண்கள் மீதான வன்முறை இன்றைய சமூகத்தில் பற்பல வடிவங்களில் வெளிப் படுகின்றன.தொழிற்சாலைகளில், அலுவல கங்களில், மருத்துவமனைகளில், உற்பத்தி யிடங்களில் இங்கெல்லாம் உள்ள முதலா ளிகள். நிர்வாகிகள், கண்காணிப்பாளர்கள், ஒப்பந்தக்காரர்கள். அரசியல்வாதிகள், தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசி யல் அதிகாரமுள்ள நபர்கள், மதத் தலை வர்கள், நிறுவனத் தலைவர்கள் போன்றவர் களால் பல இடங்களில் ஏற்படுகின்றது. அரசு இயந்திரங்கள், சட்ட ஒழுங்கு பாதுகாவலர் கள் எனக் குறிப்பிடப்படும் காவல்துறை மற்றும் நீதித்துறை மற்றும் செய்தி ஊடகங்கள்.
சமுக வண்டுறை. கருக்குழந்தை கொலையில் தொடங்கி, பெண் குழந்தைகள், சமூக நிர்பந்தங்கள்
மல்லிகை ஜூலை 2009 & 25

Page 15
காரணமாகக் குழந்தைத் திருமணம், சித்திர வதை, பேயோட்டுதல், நிர்வாணமாகப பெண் களை சடங்குகள் செய்ய வைத்தல், விதவை களை சதி போன்ற மரண தண்டனைகள் மூலம் அழித்தொழித்தல் எனப் பிறப்பு முதல் இறப்பு வரை சமூகம் பெண்களுக்கு இழைக் கும் கொடுமைகள் எண்ணற்றவை. காதலை அங்கீகரிக்காததால் அமிலம் வீசுதல், கத்திக் குத்து, தீவைப்பு எனப் பல்வேறு வடிவங்க ளில் வன்முறை பெண்கள் மீது ஏவப்படு கின்றன. பல லட்சம் பெண்கள் குடும்பத் திலுள்ள ஆண்களின் குடிப் பழக்கத்தல அவதி யுறுகின்றனர். கற்பு பெண்களுக்கு மட்டுமே வலியுறுத்தப்படும். திருமணம் ஆகாதிருப் பதைக் குறித்து அடையும் அவமானம ஆகிய வற்றால் உயிரிழக்கும் பெண்கள் ஏராளமி.
குடும்ப வன்டுறை
பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் கட் டாயத் திருமணங்கள், திருமணச் சந்தை யில் பெண்கள் கையாளப்படும் முறைகள், இவையே பெண்கள் பலவகையில் வன் முறைக்கு ஆளாகக் காரணமாக இருக்கின் றன. கணவன் தன் மனைவியை அடிப்ப தும், விருப்பமில்லாத மனைவியை வன் புணர்ச்சி செய்வதும் சமூகத்தால் அங்கீ கரிக்கப்படுகின்றன. வரதட்சணைக்காகவோ, பணியாமைக்காகவோ மனைவியைக் கொலை செய்யும் கணவன் கூட உண்டு.
பாலியல் வன்டுறை
அதிகாரத்தின் கருவியாக எப்போதும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் வன் புணர்ச்சி இன்றளவும் பெண்கள் மீது பெரும ளவில் பயன்படுத்தப்படும் வன்முறையாகத் தொடர்கிறது. குடும்பத்தினுள்ளும், வெளி
யிலும், கல்விக்கூடங்களிலும் மத நிறுவ
னங்களிலும், பிற நிறுவனங்களிலும் குழந் தைகளையும், பெண்களையும் பாலியல வன் முறைக்கு ஆட்படுத்துவது பணியிடங்களில்
கல்லுாரிகளில் தெருக்களில் பெண்களை மிரட்டுதல், பாலியல் ரீதியாகத் துன்புறுத்து தல் என நாளுக்கு நாள் பாலியல் வன் முறைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
வண்டுறையை எதிர்கொள்ளல்.
1970களில் பெண்கள் இயக்கங்களின் செயல்பாடுகள் காரணமாகப் பெண்களின் உரிமைகள் மற்றும் ஒடுக்குமுறையின் தன் மைகள் பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் பரவலாக ஏற்பட்டது. இதனால் சட்டங்களில் சிற்சில மாற்றங்களையும் ஒருசில நலப் பணிகளையும் மேற்கொள்ளும் நிர்ப்பந்தத் திற்கு அரசுகள் ஆளாகியது. பெண்களுக்கு சம உரிமை வழங்குவது என்பது அரசுக்கோ அதனைத் தாங்கும் ஆளும் வர்க்கங்க ளுக்கோ இல்லையென்பதால் இவற்றால் மிகச்சில மேற்பூச்சான மாற்றங்களும் நிகழ்ந் துள்ளன. இலட்சக்கணக்கான பெண்கள நீதி வேண்டித் தினந்தோறும் வழக்கு மன்றங் களை வலம்வருகின்றனர்.
பெண்கள் அதிகாரப்படுத்துதல்.
பெண்கள் பாராளுமன்ற சக்தியின் ஈடு பாடும் உதட்டளவில் மட்டுமே உள்ளது. கட்சி யின் பெண்கள் பிரிவை இவை தேர்தலில் பெண்களின் வாக்குகளைப் பெறுவதற்கா கவே பயன்படுத்தப்படுகின்றன. பிற்போக்கு வாத அரசியல் கட்சிகள் சிறுபான்மை சாதி மதத்தினர் மீது வன்முறையைப் பிரயோகிப் பதற்காகவும்கூடப் பெண்களை அணிதிரட்டி யுள்ளனர்.
வெளிநாட்டு அரசாங்க நிதியில் செயல் படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் என்ற பெயரில் நாடு முழுவதும் காளான்களாகக் கிளம் பியுள்ளன. நிறுவனங்கள் குடும்பத்தினுள் பெண்கள் மீது ஏவப்படும் வன்முறை சம்பந் தப்பட்ட வழக்குகளை ஆராய்ச்சிக்கு
மல்லிகை ஜூலை 2009 & 26

எடுத்துக் கொள்கின்றன. ஆனால் இந்தப் பிரச்சினைகளை சமூகத்தின் பிரச்சினைக ளாகப் பார்க்காமல், பெண்கள் இயக்கங்க ளுடனோ, சமூக மாற்றத்துக்கான தேவையு டனோ இணைக்காமல் குறுகிய கண்ணோட் டத்தில் அணுகி, தற்காலிக மாற்றங்களை மட்டுமே இவை ஏற்படுத்துகின்றன. கடந்த இருபது ஆண்டுகளில் ஆணாதிக்கத்தைத் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் எதிர்த்து இயங்கும் பெண்கள் இயக்கங்கள் பல தோன்றி வளர்ந்துள்ளன. இத்தகைய இயக் கங்கள் ஒருங்கிணைந்து தங்கள் கருததுக் களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள் வதன் மூலம், பெண்கள் மீதான வன் முறையை எதிர்க்கும் ஒன்றுபட்ட உறுதி யான செயல்திட்டங்களை உருவாக்குவது சாத்தியமாகும். இதுபோன்ற இயக்கங்கள் இணைந்து, பிற மக்கள் திரள் இயக்கங் களின் செயல் வீரர்கள், அறிவுஜீவிகள், தொழில் நிபுணர்கள் என பலதரப்பட்ட பெண் களைத் தம்முடன் இணைத்துக் கொண்டு பெண்கள் மீதான வன்முறையை எதிர்க்கும் ஜனநாயக அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய கட்டாயமான தேவை இன்று எழுந்துள்ளது.
இவ்வமைப்பு, பெண்களுக்கு எதிரான கொடுமையான வன்முறைகள் நிகழும் போது உண்மை நிலையறிந்து அதனை வெளிக்கொணரவும், சம்பந்தப்பட்ட குற்ற வாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அதிகரித்துவரும் வன்முறைப் போக்கை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவும், குறிப்பான பிரச்சினைகளைப் பரவலாக்கச் செய்திப பிர சுரங்களை வெளியிட்டும் பெண்களுக்கு எதி ரான கொடுமை குறித்த கட்டங்களில் மாற் றங்களை ஏற்படுத்தவும், சாதி மத அடிப் படையில் உருவாக்கப்படும் வன்முறையை எதிர்த்து மக்கள் திரளாக ஜனநாயக ரீதியில் உறுதியான போராட்டங்களை மேற்கொள்ளவும் முன்வர வேண்டும்.
நன்றி - செம்பருத்தி.கொம்
மல்லிகை ஜூலை 2009 ல் 27

Page 16
வாஇம்தினைவுகள்: /9
ت.-.E؟
ഭ് :് : & ??? £? 1 Aቶኖ። (eള リ)徴の秀 முற்போக்கு
リ C)
MY . . 奚 ختير و نتيمتر نی نبی تہہ ޝޫރި &4مތަކީ ފަަ&ގެ:&ޓަވީ 67リ了チリ)売@
?
f
-്ദ്രബങ്ങനെ കഠr്
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மாநாடுகளை நடாத்துவதில் என்றுமே பின் நின்றதில்லை. கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணமென்று தன்பெயரை நிலை நாட்டியுள்ளது.
எனது அநுபவத்தின் படி, இச்சங்கத்தோடு தொடர்பு ஏற்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் மாநாடு, சிங்கள- தமிழ் எழுத்தாளர் தேசிய ஒருமைப்பாட்டு மாநாடாகும்.
எழுபதுகள் இடதுசாரி அரசியல் கட்சிகள் முீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கூட்டரசாங்கம் நடாத்திய காலமாகும். ஒரளவுக்கு முற்போக்குச் சிந்தனைகள் விதைக் கப்பட்ட காலம். இக்கால கட்டத்தில் பல புதிய எழுத்தாளர்கள் தோற்றம் பெற்றனர். இவர்களும் முற்போக்குக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தனர். ,
கொழும்பு ஸாகிறாக் கல்லூரி மாநாடு பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். யாழில் ஏற்பட்ட மரபுப் போராட்டம் பற்றி அறிந்திருந்தேன்.
இந்தக் கொழும்பு மாநாடு தேசிய ஐக்கியத்தை நிலை நாட்டுவதை இலக்காகக் கொண்டது. தேசிய ஐக்கியத்துக்கு இலக்கியத்தை எவ்வாறு பயன்படுத்தலாமென்பதைத் தேவையாகக் கொண்டது.
பன்னிரண்டு சிங்கள எழுத்தாளர் அமைப்புக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முன் வந்திருந்தன.
மாநாட்டின் முன்னோடியாக நாட்டின் பல்வேறு பிராந்தியங்களிலும் சிறு சிறு கூட்டங் களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் என்னையும் இணைப்பாளராக நியமித்திருந் தார்கள்.
எழுத்துத் துறையில் பிரவேசித்த சிறிது காலத்திலேயே இப்படியொரு நியமனம் கிடைத்தது எனக்குப் பெரு மகிழ்ச்சியைத் தந்தது. பிராந்திய இலக்கிய ஆர்வலர்களை ஒன்றிணைத்து முன்னோடிக் கூட்டத்தை வெலிகமையில் நடாத்துவதென்ற தீர் மானத்தின்படி நண்பர் ஜமாலியின் வீட்டில் கூட்டம் நடைபெற்றது.
பிரேம்ஜி, என். சோமகாந்தன், எச். எம். பி முஹிதீன் போன்றவர்கள் மாநாட்டு ஏற் பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். நாள்தோறும் இது தொடர்பான செய்திகள்
மல்லிகை ஜூலை 2009 $ 28
 
 

பத்திரிகைகளில் வெளி வந்தன. வானொ லிக் கலந்துரையாடல்கள் நடந்தன. இரண்டு மூன்று தடவை பிற்போட வேண்டி யும் நேர்ந்தது. பிற்போடப் பிற்போட ஆர்வம் அதிகரித்துக் கொண்டு வந்தது.
1975ல் மூன்று நாள் மாநாடு பண்டார நாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பித்தது.
பல்வேறு அமர்வுகள். ஒரே கலகலப் பாகவிருந்தது. மண்டபம் நிரம்பி வழிந்தது. நாட்டின் நாலா பக்கங்களிலுமிருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் வந்த வண்ண மிருந்தனர்.
முதற் தடவையாகப் பல்வேறு எழுத் தாளர்களையும் ஒரே இடத்தில் சந்திக்கக் கிடைத்த அரிதான வாய்ப்பு. உண்மையில் இப்படியொரு சந்தர்ப்பம் அதற்குப் பின் கிடைக்கவேயில்லை.
கவிஞர் இ. முருகையன் தலைமை யில் நடைபெற்ற கவியரங்கு புதுமையான அநுபவத்தைத் தந்தது. எமது கவியரங்குக ளில் பிரதியைப் பார்த்து வாசிப்பதே வழக்கம். அதன் படி நடந்து கொண்டிருந் தது. அப்பொழுது திடீரென எழுந்த சிங்க ளக் கவிஞர் ஒருவர் பத்திரம் பார்த்துப் படிக் கும் பழக்கம் எங்களிடமில்லை என்று சொல்லித் தன்பாட்டில் பாடி அமர்ந்தார். எதிர்பாராத இந்நிகழ்வால் என்ன செய்வ தென்று தவிக்கையில், பஸில் காரியப்பர் எழுந்து கவிதை சொல்லத் தொடங்கினார். தலைமைக் கவிஞர் இத்துடன் இக் கவியரங்கு நிறைவு பெற்றதென முடித்து விட்டார்.
இதன் இறுதி நாள் நிகழ்வில் பிரதமர் முீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார்
கலந்து கொண்டார். வ. பொன்னம்பலமும் சம்பந்தப்பட்டிருந்தார்.
இம் மாநாட்டில் தேசிய ஐக்கியத்துக் கான பன்னிரண்டம்சத் திட்டமொன்று நிறைவேற்றப்பட்டது. பின்னர் அது பிரத மரிடம் கையளிக்கப்பட்டது. அதில் இடம் பெற்றிருந்த அம்சங்கள் உரிய முறைப்படி அமுலுக்கு வந்திருந்தால்., புரிந்துணர் வோடு இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி இட்டுச் செல்லப்பட்டிருப்போம்.
எவ்வாறாயினும், எழுத்தாளர்கள் ஒன்றி ணைந்து மொழி, இனப் பிரச்சினையைச் சிந்தித்து, தீர்வுக்கு வழி காட்டியிருக்கி றார்களே! இது பெரிய விஷயமல்லவா?
வாழும் இனைவுகள்: 20
G
* ೫gioಿಗೆ
行
முதுரர் போய்ச் சேர்ந்த பொழுது, இன்னொரு நாட்டுக்குச் சென்ற உணர்வே ஏற்பட்டது. திருகோணமலையிலிருந்து கடல் மார்க்கப் பயணம் எனக்குப் புதிது. கூடவே வந்த மனைவி தலை சுற்றி வாந்தி போடத் தொடங்கிவிட்டார். போதாக் குறைக்கு இடைநடுவில் லோன்ஞ் நின்று விட, திருத்த வேலை ஆரம்பித்துவிட்டது. தரைப் பாதையில் வாகனங்களை நிறுத்தித் தன்பாட்டில் திருத்துவது போல், நடுக் கடலில் இக்காரியம் நடைபெற்றது. எப்படியோ அக்கரைக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டார்கள். அங்கு எங் களை எதிர்பார்த்து நண்பர் முகைதீன் காத்திருந்தார்.
முத்து', 'பிட்டும் தேங்காய்ப் பூவும்",
மல்லிகை ஜூலை 2009 率 29

Page 17
'இழந்து விட்ட இன்பங்கள் முதலிய கவிதை நூல்களை வெளியிட்டவர் இவர். ஏராளமான பரிசுகளை வென்றவர். போட் டிகளில் முனைப்போடு பங்கு கொள்பவர். இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்தவர். பயிற்சிக் கலாசாலை எங்களிடையே ஏற்படுத்திய உறவு இப்படித் தொடர்ந்தது. குடும்ப உறவாகப் பரிணமித்தது. மூன்று நாள் முழுமையான அநுபவிப்பு.
மூதூர் என்றவுடன், தோணி சிறு கதைத் தொகுதியும், வ. அ. இராசரத்தி னத்தின் நினைவுமே இலக்கியவாதிகளின் இதயத்தில் ஏற்படும். இப் பயணத்தின் போது, எனது நீண்ட நாள் கனவு நனவா கும் மகிழ்ச்சியும் எனக்குள்ளிருந்தது.
வ. அ. வின் வீட்டுக்கு முகைதீன் எங் களை அழைத்துச் சென்றார். இலக்கிய வாதியென்ற உயர் மதிப்பு அவர் மீது எனக் கிருந்தது. அவரை எஸ். பொ, எம். ஏ. ரவற்மான் போன்றவர்களோடு இணைந்து செயற்படுபவராகவே அடையாளம் கண்டி ருந்தேன். எனது பாதை வித்தியாசமானது. அது இலக்கிய நேசிப்புக்கு எவ்வகை யிலும் தடையாக அமையக் கூடாதென் பதே எனது கொள்கை. அதை அநுசரித்தே எங்களது உரையாடல் தொடர்ந்தது.
அப்போது அவரது மனைவி நிறைவு பெற்ற காவியமாகியிருந்தார். மகளே எங் களை வரவேற்று உபசரித்தார்.
மூதூரில் ஏ. எஸ். இபுராகீம், எம். எஸ். அமானுல்லா, ஏ. எஸ். உபைதுல்லா போன்ற இலக்கிய நண்பர்களிருந்தனர். ஒன்றாகக் கற்பித்தல் பயிற்சி பெற்ற அனிதா, கே. எம். முகம்மத், கோகிலா, வஜித், ஜானகி, குணராஜரட்ணம் என்று
நினைவிலே முகம் காட்டினர். வாசகர் என்ற வகையில் நிறையப் பேரால் அறியப்பட்டவனாகவுமிருந்தேன்.
முதல் நாள் மாலையில் நிறைய இளை ஞர்கள் வந்து சேர்ந்தார்கள். இலக்கிய உரை யாடல் ஆரம்பமாகியது. அவர்களில் அநே கர் பல்கலைக்கழக மட்டத்தைச் சேர்ந்த வர்கள்.
சமூகப் பிரச்சினைகளை யதார்த்தமா கச் சொல்லும் எனது படைப்புக்களை அவர்கள் வெகுவாக வரவேற்றனர். எனது எழுத்துக்கள் இன்னொரு தளத்திலும் செயற்பட வேண்டுமென்ற கருத்தை ஒரு மித்து முன்வைத்தனர். பெரும்பான்மை மேலாதிக்கம், திட்டமிட்ட குடியேற்றம், மொழியுரிமை, சிறுபான்மையினரின் பாது காப்புப் பற்றியெல்லாம் சொன்னார்கள். தமிழ் பேசும் மக்கள் என்ற சிந்தனையுடன் தான் அவர்கள் கதிைத்தார்கள்.
இது 1983 இன் ஆரம்ப கட்டத்தில் நடந்த கதை.
அடுத்த நாள் காலை அதே இளைஞர் கள் சைக்கிள்களில் வந்தார்கள். மூதூரின் இயற்கை வளத்தைக் காட்டினார்கள். சிங்களக் குடியேற்றங்களைக் காட்டினார் கள். மக்களின் இயல்பான நடவடிக்கை களைப் பார்க்க முடிந்தது.
பின்நேரம் முகைதீன் குடும்பத்தோடு தோப்பூர், சேருவில போன்ற பகுதிகளுக் குச் சென்றோம். எந்தப் பயமுமின்றி எந்தப் பக்கமும் போய் வரக் கூடிய கால கட்டமாக
அது இருந்தது.
அதே ஆண்டின் நடுப் பகுதியில் கல வரம் ஆரம்பித்தது. தமிழ்த் தேசியப் போராட்டம் தொடர்ந்தது. தமிழ் பேசும் மக்க
மல்லிகை ஜூலை 2009 & 30

ளிடையேயும் இடைவெளியும், இழப்பும் தொடர்ந்தது. போகப் போக மூதூர் கடுந் துன்பியலைச் சுமந்த பிரதேசமாகியது.
மீண்டும் 2002ல் மூதூர் செல்லும் சந் தர்ப்பம் கிட்டியது. சமாதானக் குரல் எங் கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. யுத் தம் ஓய்ந்திருந்தது. நண்பர்களோடும் மனைவி பிள்ளைகளோடும் புறப்பட்டேன். கந்தளாயிலிருந்து தரை மார்க்கமாக அங்கு சென்றோம். அவ்வழிப் பயணம் எல் லோருக்குமே முதற் தடவை. இயற்கை வளம் ஒரு பக்கம், யுத்த அடையாளங்கள் இன்னொரு பக்கம். அதே வேளை, மக்க ளின் மனோ நிலையில் ஏற்பட்டிருந்த மகிழ்ச்சியையும் காண முடிந்தது.
மாலையில் போய் இரவு தங்கி, அடுத்த நாள் புறப்படுவதே எமது சுற்றுப் பயணத் தின் ஒழுங்காக இருந்தது. அந்தக் குறுகிய நேரம் மகிழ்ச்சி நிரம்பியதாக அமைந்தது.
வாகனத்தை வந்த வழியே திருகோண மலைக்கு அனுப்பிவிட்டு, கடல்மார்க்க மாகப் போவதாக முடிவு செய்தோம். சிறிய தொரு கப்பல் மூதூர்- திருகோணமலை சேவையை மேற் கொள்வதாகச் சொன் னார்கள். கப்பலில் பயணிக்கும் அநுபவத் தைப் பிள்ளைகளுக்குக் கொடுக்க வாய்க்கும் இச் சந்தர்ப்பத்தைத் தவிர்க்க லாமா? ஜல சமாதியினுாடாக ஒரு மணி நேரப் பயணம் குதூகலமாக அமைந்தது.
எல்லாம் கொஞ்ச நாட்கள் தான். மீண்டும் யுத்தம். இடப் பெயர்வு போதாக் குறைக்கு இடையில் சுனாமி. இனி மூதூரை நினைத்துப் பார்க்க முடியுமா? என்ற அளவுக்கு
மீண்டும் முடியுமென்ற நம்பிக்கை இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
பாலைப்பழம் சாப்பிட
மல்லிகை மட்டுமல்ல,
வழங்க வேண்டும் என மல்லிகை விரும்புகிறது.
O s5/TG).d5 LD http://noolaham.net 40 ஆண்டுக்கு மேலாக வெளிவரும் மல்லிகை எதிர்காலச் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும் எனும் எமது அவாவை உறுதிப்படுத்தும் வகையில், இன்று ஈழத்து தமிழ் நூற்களைப் பாதுகாப்பது எனும் நல்லெண்ணத்துடன் செயற்பட்டு வரும் நூலகம எனும் இணையத்தளத்தில் இதுவரை காலம் வெளிவந்த மல்லிகை இதழ்களில் கணிசமான இதழ்கள் மின் நூற்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை அறிகின்ற பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. அத்தகைய ஒரு பணி செய்திருக்கும் நூலகம் தன்னார்வக் குழுவினர்களுக்கு மல்லிகை தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஈழத்து படைப்பாளிகள், அறிஞர்கள் சகலரினதும் ஆயிரக் கணக்கான நூற்களையும் இந்த நூலகம் இணையத்தளத்தினர் பாதுகாத்து வருகிறார்கள் என்ற வகையிலும், இந்த குழுவினர்களுக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் இத்தகைய பாரிய பணி செய்யும் இக்குழுவினருக்கு நாம் எல்லோரும் ஒத்துழைப்பு
மல்லிகை ஜூலை 2009 & 31

Page 18
நவீன இலக்கியப் புனைவுகளில் உருவ; உள்ளடக்க சொல்லாடல்கள்
சில அவதானிப்புக்கள்
~சின்னராஜா விமலன்
இலக்கியம் என்பது சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான விளைபொருள். அதன் ஊடுபாவாகச் சமூகத்தில் நிலவுகின்ற பிரச்சினைகளை இனங்காட்டி அவற்றிற்கான தீர்வையும் மக்களை இலகுவில் சென்று அடையக் கூடியவகையில் முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் அவ்விலக்கியமானது தான் எட்ட நினைத்த இலக்கினை அடைந்த திருப்தியை அதைப் படைத்தளித்த இலக்கியகர்த்தாவுக்கு ஏற்படுத்துகின்றது. குறிப்பாகப் புனைவு இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ‘கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டின் வழியான புரிதலை நிராகரித்துகலை மக்களுக்காகவே என்ற கொள்கை ரீதியிலான அணுகுமுறையைக் கையாளும்போதே அது பரந்த வாசகள் மட்டத்தை எட்டுவதற்கான திறவுகோலாக அமையும். அவ்வாறானதொரு நிலையை நோக்கிப் புனைகதை இலக்கியத்தை நகர்த்திச் செல்வதற்கான மூலோபாயங்களில் மக்களை இலகுவில் கவர்ந்திழுக்கும் படியான வடிவ உத்திகளை கையாளுதல் 560)G)LITU 6LLULb.
அந்நியக் கலை இலக்கியத் தாக்கத்தின் விளைவுகளாக எமக்குக் கிடைத்தவையே நாவல், சிறுகதை போன்ற புனைகதை இலக்கிய வடிவங்கள்.உண்மையில் புனைகதை இலக்கியத்தில் வடிவம் குறித்த சில அடிப்படைச் சந்தேகங்களே இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. அதாவது நவீன புனைவு இலக்கி பத்தில் வடிவம் என்பது கவிதை, சிறுகதை,நாவல் போன்றவற்றைக் குறித்து நிற்கின்றதா? அல்லது ஒரு சிறுகதையையோ, நாவலையோ எழுதி முடிப்பதற்காக ஒரு எழுத்தாளரால் கையாளப்படும் உத்தி முறைத் தெரிவான எடுப்பு,தொடுப்பு:முடிப்பு என்பவற்றின் முழுமையையும் உள்ளடக்கிய வெளிப்படுத்து கையினை குறித்து நிற்கிறதா? இது ஒரு விரிசிந்தனைக்கான தளத்தில் தனியே ஆராயப்பட வேண்டிய விடயம். இக்கட்டுரையானது வடிவம் என்பது கவிதை, சிறுகதை,நாவல் போன்றவற்றைக் குறிப்பதான பார்வையில் எழுதப்படுகிறது.
ஒரு கலைப்படைப்பின் வடிவ நிர்ணயிப்பில் பங்காற்றும் அம்சங்களாகக் கீழ்வரும் ஆறினைக் குறிப்பிடுகின்றார் 'தமிழ் சிறுகதைகளில் உருவம்’ என்ற நூலின் ஆசிரியரான கோ.கேசவன்.
1. கலைப்படைப்பின் உள்ளீடு திறன்கள், அதாவது அதன் உள்ளடக்கம். 2. வர்க்க மனநிலை, அதாவது கலைஞனின் வர்க்க மனநிலை, கலைஞன் காட்டும் பாத்திரங்களின் மனநிலை.
3. அந்நியக் கலை இலக்கியத்தின் தாக்கம். 4. பண்டைய மரபுகளின் செல்வாக்கும் அவற்றிலிருந்து விடுபடத்துடிக்கும் முயற்சியும்.
மல்லிகை ஜூலை 2009 率 32

5. கலைஞனின் பயிற்சி - பழக்கம், அவனது ஆழ்ந்த மனக்கிளர்ச்சி. 6. நுகர்வோர் தளத்தின் தரவேறுபாடு.
இதில் கேசவன் கூறும் பண்டைய மரபுகளின் செல்வாக்கும் அவற்றிலிருந்து விடுபடத் துடிக் கும் முயற்சியும் என்பதனை வகைமாதிரிக்கு எடுத்து நோக்குவோமாயின் பண்டிதர்களிடம் சிறைப்பட்டிருந்த தமிழ்க் கவிதைய பாரம்பரி யத்தை சிந்து, தெம்மாங்கு, காவடி முதலான இலகு நிலை வடிவமாற்றங்களின் மூலம் மக்களின் இருப்பிடம் நோக்கிய ஒரு அசைவியக்கமாக நிகழ்த்திக் காட்டினான் பாரதி. இவ்விடத்தில் எந்த வடிவமும் அதற்கு முந்தைய எந்த வடிவத் திற்கும் மாற்று என்று எண்ணாமல் அம்மொழி வடிவங்களுள் இன்னொன்றான புதிய வரவு எனக் கொண்டால் மரபுவாதிகளும், நவீனத்துவவாதிக்க ளும் தேவையற்ற முரண்பாட்டு உருவாக்கங் களைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.
இவ்வாறே கவிதை தவிர்ந்த நவீன இலக்கியப் புனைவுகளில் 'கல்கி" போன்றவர்கள் பரந்துபட்ட மக்களுக்கும் புரியும் படியான வடிவமொன்றைக் கைவரப் பெற்றாலும் அவரின் உள்ளடக்கம் சார்ந்த அம்சங்களில் விமர்சகர்களின் பார்வை ஒருவித நிராகரிப்பின் அடியான, சாடல் மிகுந்த தாகவே இருந்து வந்துள்ளது. இதன் நீட்சி இன்றுவரை பல்வேறு பரிமாணமாய்ப் படைப்பாளி களுக்கும் விமர்சகர்களுக்கும் இடையே இருவேறுபட்ட கருத்து முரண்வெளிகளை அதிகரித்துக் கொண்டிருக்கின்றமை கண்கூடு. அதாவது சொல்ல வந்த விடயத்தை எவ்வடிவத் தின் ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என்பதிலும் இஸங்களின் வழியான உள்ளடக்கத்தை வெளிக் கொணர்வதில் ஏற்பட்ட புரிதல் இன்மைகள் மற்றும் முரண்பாடுகள் என்பவை சர்ச்சைகளை தோற்றுவித்து உருவ உள்ளடக்க விவாதங்களை இன்றும் அரங்கேற்றிய வண்ணமே உள்ளன.
படைப்பாளிகளை மட்டுமல்லாமல் உருவ
உள்ளடக்கத்தின் வகி பங்குகள் சிற்றிதழ்களிலும்
தாக்கத்தை உண்டு பண்ணத் தவறவில்லை.
இவ்வகைப்பட்ட சிற்றிதழ் போக்கிற்கு,
உதாரணமாய்ச் சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் உருவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த தால் உருவ வாத இதழாக முத்திரை குத்தப் பட்டதாகக் கூறுவர்.
ஒருவகையில் நவீன இலக்கியப் புனைவு
சம்பந்தமான உருவ, உள்ளடக்கச் சர்ச்சைகள் இலக்கிய உலகில் புதுப்பொலிவைப் பெற உதவி யது என்பது வாஸ்தவமே இதனை உள்வாங்கிப் படைப்பாளிகள் நவீன இலக்கியப் புனைவுகளில் புதியதோர் திருப்புமுனையை ஏற்படுத்தியதை வரமாகக் கொண்டாலும், நேர்கோட்டில் ஒற்றைப் பரிமாணமாய்க் கதை சொல்வதை விரும்பாத எழுத்தாளர்கள் படிமத்தைக் குவியலாகப் பயன்படுத்தி வாசக நுகர்வுத் தளத்தை அல்லாட வைப்பதைச் சாபம் என்பதைத் தவிர வேறு எப்படிக் கூற முடியும்?
இலக்கிய உலகில் இன்றும் புரியாத புதிராக விளங்கும் மெளனியின் சிறுகதைகளை க.நா.சு, வெங்கட் சாமிநாதன், பிரமிள் போன்றவர்கள் உச்சமெனக் கொண்டாடி இருந்தாலும், பெரும்பான்மையான வாசகர்களின் மனங்களில் இருண்மைத்தன்மையின் இருப்பிடமாகவே அவரின் படைப்புக்கள் குடிகொண்டிருந்தன. அமார்க்ஸ் “மெளனியிடம் எப்போதுமே என்னால் ஒன்ற முடிந்ததில்லை” எனக் கூறுவதற்கும் மெளனியின் சிறுகதைகளில் கையாளப்பட்ட உள்ளடக்கமே காரணமாகிறது. எழுத்தாளர் நகுலன் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று
அழைக்கப்படுவதற்கும் அவருடைய படைப்பின்
உள்ளடக்கம் சீரிய எழுத்தில் ஆர்வம் கொண்டோரால் மாத்திரம் அணுகப்படுவதன் பிரதிபலிப்பினால் ஆகும்.
மல்லிகை ஜூலை 2009 & 33

Page 19
அதேசமயம் கோணங்கி போன்றவர்கள் வாக்கிய வடிவங்கள் நேரடியானதாக இல்லாமல் அது சிதையும் போதுதான் ஒரு கவிதைக்கான சாத்தியப்பாடு ஏற்படுகிறது என்று கருதினார்கள். இதனால் புரியாமலே போய்விடக்கூடிய எழுத்து உருவாகிற ஆபத்து அதில் இருந்தாலும்கூட, அந்த ஆபத்தை எதிர்கொண்டு பயணிக்கலாம், அதுதான் உண்மையான இலக்கியம் என்றும் G& ITGGOTIrird Gir. (S66, g55ci) “Voicing folk lore', 'Folklore as discourse' (25flu (Ts) களின் ஆசிரியரான எம்டி முத்துக்குமாரசாமி வடி வம் என்பதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதனை கீழ் வருமாறு குறிப்பிடுவது கவனிப்புக் குரியது.
“ஒரு ஒட்டுமொத்த வடிவங்களாக மட்டு மல்ல, அதை ஒரு வாக்கியத்தினுடைய வடிவ மாகக்கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஒரு வாக்கியத்தினுடைய வடிவமாக இருந்தாலும்சரி, ஒரு சொற்கோர்வையினுடைய வடிவமாக இருந் தாலும்சரி, ஒரு முழுப்படைப்பினுடைய வடிவ மாக இருந்தாலும் சரி அந்த வடிவம் என்பது ரொம்ப முக்கியமானது வாக்கிய அளவில் செய்யக்கூடிய சிதைவு இருக்கிறதே அது ஓர் அளவுக்குத்தான் உண்மையாக இருக்க முடியும். அது கவிதையி னுடைய வடிவத்திற்கு மட்டுமே சரியானது. சிறு கதைக்கோ, நாவலுக்கோ அது சரியானதல்ல." - தீராநதி, ஜூலை 2007 -
ஆனாலும் இன்றைய காலப்பகுதியில் பின் நவீனத்துவத்தின் கட்டுடைப்பால் வடிவம் சார்ந்த பிரக்ஞையில் பின் நவீனத்துவவாதிகள் அதிகம் கவலை கொள்வதில்லை என்கிற யதார்த்தரீதி யான பிரசன்னத்தை அட்டவணைகள், புள்ளி விபரங்கள் மூலமான புனைகதை வெளிப்படுகை முறைகள் எடுத்துக்காட்டுகின்றன.
வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தருவதான எண்ணப் பாங்கில் வரன் முறையான
தளத்திலிருந்து விலகி இன்றைய நவீன புனைவு இலக்கியம் தறிகெட்டுப் போவதான உணர்வை இது வாசகள்கள் மத்தியில் வலுப் பெற வைத்துள்ளது. ஒரு படைப்பாளி ஒரேயொரு நவீன இலக் கியப் புனைவுத்துறையில் மட்டும் அது கவிதை யாகட்டும், சிறுகதையாகட்டும், நாவலாகட்டும் ஒன்றில் துறை போர்ந்தவராக மிளிரும் சந்தர்ப் பத்தில் வடிவ நிலைத் தெரிவு குறித்த சமுசயத் திற்கு இடமில்லாது போய்விடுகின்றது. ஆனால் ஒரு பல்துறை சார்ந்த இலக்கியகர்த்தா படைப் பூக்க உந்தலினாலான மனோநிலைக்கு இயை படைந்து வருகின்ற பொழுது அந்த விடயத்தை எந்தவொரு வடிவத்தினூடாக வெளிக் கொணர்ந் தால் படைப்பின் முழுமையும் பாதிப்புறா வண்ணம் சிருஷ்டிக்க முடியும் என்பதனை ஆளுமை மிக்க படைப்பாளியினால் அதனை இலகுவாக உய்த் துணர முடியும். இதற்கு அவருடைய எழுத்துலக அனுபவம் கைகொடுக்கின்றது.
இருப்பினும் சிறுகதை படைப்பொன்றை சிருஷ்டித்த ஓர் எழுத்தாளன் பிற்பட அதனை ஒரு குறுநாவலாகவோ அல்லது நாவலாகவோ வடிவ மாற்றத்திற்கு உட்படுத்தும் பொழுது வடி வத்தை தீர்மானிப்பதில் அந்தப் படைப்பாளி தவறு செய்து விட்டாரா? என்றதொரு முடிவுக்கு வர முடியுமா? ஏற்கனவே படைத்தளித்த சிறுகதை யின் கருவைக் கொண்டு அதனை திறம்பட வளர்த்துச் செல்லும் லாவகமும், புதிய உருவார்ப்பும் அதன் ஊடாட்டமாக வாசகள் மத்தியில் ஒரு அனு பவத்தொற்றலை ஏற்படுத்த முடியுமாக அந்தப் படைப்பாளி கருதுமிடத்து சிறுகதையொன்று குறுநாவலாகவோ, நாவலாகவோ பரிமாணம் பெறு வதைத் தடுக்க முடியாது என்றே தோன்றுகின்றது. அவ்வாறே ஒரு கவிஞரால் எழுதப்படும் சில கவிதைகள் ஒரே தலைப்பில் 1, 11, III என வெவ்வேறுபட்ட காலப்பகுதியில் வெளிவருகின்ற பொழுதும் வடிவம் பற்றிய சர்ச்சை எழுகின்றது. தமிழகக் கவிஞரான சுகுமாரன் தான் “ஒரு பாடு பொருளில் ஒரு கவிதை எழுதினால் திரும்பவும் அப்பாடு பொருளில் கவிதை படைக்க மாட்
மல்லிகை ஜூலை 2009 率 34

டேன்” என்று கூறியிருக்கின்றமை குறிப்பிடத் தக்கது. இது விவாதத்திற்குரியதொன்றாகவே படுகின்றது. ஒரு வகையில் இது அவரின் பாடு பொருள் பற்றாக்குறையின்மைத் தன்மையை வெளிப்படுத்துவதாகக் கருதினாலும் இன்னொரு புறம் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நியதிக் கிணங்க காலப்போக்கில் பாடுபொருளின் இயல்புக ளும் மாறக்கூடும். அத்துடன் கவிஞனும் தன் னைச் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தும் சமயத் தில் அப் பாடுபொருள் மீதான பார்வையும் பன் முகப் படுத்தப்படலாம்.
பா. அகிலனின் தேனீரின் இறுதித்துளியை பகிர்ந்தாய்' எனத் தொடங்கும் யாத்திரை 1, 'அச் சத்தால் தறையப்பட்டிருந்தேன்’ எனத் தொடங் கும் யாத்திரை 11, ‘சொப்பனத்துள்ளும் அச்சம்' எனத்தொடங்கும் யாத்திரை 11 ஆகிய கவிதைப் பிரதிகளைப் படிக்கும் பொழுது லா.ச.ரா சொன் னாரே "ஒரே கதையைத்தான் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன்” என்பது போல பா. அகில னும் “பல வேளைகளில் ஒன்றையே திரும்பத் திரும்ப நான் எழுதுவதாகப்படுகிறது என அவரின் "பதுங்குகுழி நாட்கள்’ கவிதைத் தொகுப்பில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது இக் கட்டுரையின் மையத்தை நோக்கிய பயணிப்புக்கு துணை புரிகிறது.
மறுதலையாய் நோக்கும் போது ஒரு பாடு
பொருள்பற்றி ஒரு கவிதை எழுதிய பின்ன அந்தப் படைப்பை இன்னும் செழுமைப்படுத்தியிருக் கலாமோ என்றதொரு ஆதங்கம் படைப்பாளியிடம் மேலிடும் பொழுது இவ்வாறான கவிதைகள் தோற்றம் பெறக்கூடும். திருப்தியின்மைக்கும் கலைக்குமான தொடர்பு என்றும் போராட்டம் மிகுந்ததாகவே காணப்படுவது இதற்கு அடிப படையாய் விளங்கலாம். ஆனாலும் ஒரு படைப்பு என்பது காலம் காலமாக ஒவ்வொரு காலகட்டத் திற்கும் வெவ்வேறு விதமான அர்த்தங்களைத் தரக்கூடியதாக இருப்பதனால் இவ்வாறான கவிதைகளின் தொடர்வருகை விவாதத்தின் ஊற்றுக் கண்ணாக இருந்து கொண்டே இருக்
கும். எது எவ்வாறிருப்பினும் இன்றைய கால கட்டத்தில் ஒரு கவிஞரைப் பின்பற்றி ஏனைய கவிஞர்களும் அவரை ஆதர்ஸமாகக் கொண்டு அவரின் பாணியில் இவ்வாறான கவிதைகளைப் படைப்பதும் வழக்கமாகி விட்டது.
சமூகத்தில் தன்னைப் பாதித்த விடயங்களை, பதிவு செய்ய விரும்புபவற்றை ஒரு எழுத்தாளன் தனக்கு வாய்த்த மொழியில் எழுத முற்படுகினறான். இதன்போது ஒரே அனுபவத்தை இருவேறு வடிவங்களில் வெளிக்கொணரும் போது அது படைப்பாளியின் பலவீனத்தை வெளிச்சம் போட் டுக் காட்டுவதாகவே கருத வேண்டியுள்ளது. அண்மையில் ஞானம் இதழில் வெளியான வி. ஜீவகுமாரன் என்பவர் எழுதிய ‘கிராமத்து பெரிய வீட்டுக்காரி சிறுகதை தந்த வாசிப்பு அனுபவ மும், ஏற்கனவே அவரால் வெளியிடப்பட்ட யாவும் கற்பனை அல்ல தொகுப்பில் வெளிவந்த “கிராமத்து விடும் என் முதல் காதலியும் கவிதை தந்த வாசிப்பு அனுபவமும் ஒன்றாக இருப்பதை தேர்ந்த வாசகனால் உணரமுடியும்.
இவற்றைத் தொகுத்து பார்க்கின்ற பொழுது ஒரு சமயம் "ஈழத்திலக்கியம்’ பற்றி ஜெயமோகன் கூறிய தவறான கருவியால் (யதார்த்த வாதத் தால்) இலங்கை வாழ்வையள்ள படைப்பாளிகள் முயலும் போது திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான பெளதீகவாழ்வே அகப்படுகின்றது. விளைவாகப் பல படைப்புகள் முதல் சில பக்கங்களிலேயே அலுப்புத் தருகின்றன’ என்ற கலாநிதி ந. ரவீந்திரன் உட்படப் பலரின் விமர்சனத்திற்கும் ஆளான கூற்று நினைவுக்கு வருகின்றது. வெவ்வேறு ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புக் களைப் படிக்கும்போதே ஒரேவிதமான அனுபவத் தொற்றலுக்கு உள்ளாகி அலுப்பு ஏற்படுகையில், ஒரு படைப்பாளியின் இரண்டு வெவ்வேறு வடிவ நிலைப் புதினங்களில் ஒரே அனுபவம் கருப பொரு ளாகும் பொழுது ஜெயமோகனின் கூற்றை ஆமோ திக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகவே எனக்குப் படுகின்றது
மல்லிகை ஜூலை 2009 & 35

Page 20
pius oroonlid, 3rld, Chorls மூலம் கற்பது ஆரோக்கியமானதா?
-எஸ்/b ஜம் நாகூர்கன்
பல்லினங்கள் கைகோர்த்து வாழும் இலங்கையில் முஸ்லிம்கள் இரண்டாவது சிறுபான்மை இனத்தவர்களாவர். அரச கரும மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சிங்களம்- தமிழ் இரண்டில், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்களில் கணிசமான தொகையினர், தம் பிள்ளைகளுக்குச் சிங்கள மொழி மூலம் கல்வி போதிப்பதில், பேரார்வம் காட்டி வருவதைக் காண்கிறோம்.
வருடா வருடம் பெருகி வரும் இந்தச் ‘சிங்கள ஆர்வம் ஏன் வந்தது? இந்தப் பேரார்வம் எதிர்காலத்தில் பெரும் பயன் தருமா? பேராபத்தை விளைவிக்குமா? என்பது சிந்தனைக் குரிய சீரியஸ்ஸான விடயம் என்பதை மறுக்க முடியாது. கல்வித்துறை சார் நிபுணத்துவ அறிஞர் குழாம், முஸ்லிம்கள் தாய்மொழி தமிழைக் கைவிட்டு, சிங்கள மொழி மூலம் கற்பது ஆரோக்கியமானதல்ல என்பதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகின்றது. அறிஞர் குழாத்தின் அபிப்பிராயங்களை ஒட்டி, எவ்வெவ் வழிகளில் ஆரோக்கியமல்ல என்பதை இனி நோக்குவோம்.
சிறப்புக்களின் சிங்காசனத்தில் செம்மொழியாக அமர்ந்திருக்கும் தமிழுக்கு, வேறு மொழிகளுக்கு இல்லாத ஒரு சிறப்புண்டு. உலகின் பிரதான சமயங்களான கிறிஸ்தவம்இஸ்லாம்- இந்து- பெளத்தம் போன்ற சமயத்தவர்கள், தத்தம் சமயக் கருத்துக்களைத் தமிழுக்குத் தந்து, தமிழுக்கு அணியும், பணியும் செய்திருப்பது பிறமொழிகளுக்குக் கிட்டாத பேறு எனலாம்.
இதன் அடிப்படிடையில், முஸ்லிம்கள் தமிழுக்குக் கணிசமான பங்களிப்புக்களைச் செய்து, 'தமிழுக்குப் பணிபுரிவதில் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல’ என்பதை மார்தட்டிப் பெருமையுறுகின்றனர். மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் இஸ்லாமியத் தமிழிலக்கியத்திற்கென ஓர் இருக்கையை ஏற்படுத்தி, நம் நாட்டுத் தமிழறிஞரான மர்வுறம்ை ம. மு. உவைஸ் அவர்களைப் பீடாதிபதியாக அமரச் செய்ததை அடுத்து, பேரறிஞர் (அல்லாமா) உவைஸ் அவர்களை மேற்கொண்ட ஆய்வின் பயனாக ஈராயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்களை முஸ்லிம்கள் படைத்ததன் மூலம் பெரும் பணி புரிந்துள்ளனர் என்பதை நிறுவியதோடு நின்றுவிடாமல், பெரும் பதிப்பாகவும் வெளியிட்டுள்ளார்.
மல்லிகை ஜூலை 2009 $ 36

தமிழில் முஸ்லிம்கள் படைத்த இஸ் லாமிய இலக்கியங்கள் ஏராளமிருக்க, சிங்கள மொழியில் இஸ்லாமிய இலக்கி யங்கள் எனக் கூறிப் பெருமையுற, RC5 சதவீதமேனும் இல்லாமை சோகம் தழு விய தகவலாகும். சிங்கள மொழி மூலம் கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு, சிங்கள மொழியில் போதியளவு (ஒரு சத வீதமேனும்) இஸ்லாமிய சிந்தனைக் கருவுபூலங்கள் இல்லாத நிலை, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆழ்ந்து யோசிப்போர் புரிந்து கொள்வர்.
'பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்’ என்பது தமிழ் மரபின் அநுபவம். பசி எனச் சொல்லும் போது, அதில் அறிவுப் பசியும் ஒன்றுதான். தான் விரும்பிய இடத்தில் தனக்குத் தேவையானது கிடைக்காத போது, கிடைக்கின்ற இடத்தில் இருப் பதை விரும்பி ஏற்றுப் பசியைப் போக்கிக் கொள்ள விழைவதுதானே, மனித இயல்பு. எல்லா மொழிகளுக்கும் ஒரு சமயத்தின் கலாசாரப் பின்னணி இருக்கவே செய்கி றது. கிடைப்பதைப் பெற்று பசியாறும் நிலை காலத்தின் கட்டாயமாகும் போது, சிங்கள மொழி மூலம் கற்கும் முஸ்லிம் மாணவர்கள் படிப்படியாகத் தடம் மாறும் சூழ்நிலை, சூழ்ந்து வராது என உறுதிப் படக் கூறமுடியுமா?
நடைமுறை வாழ்வில் சிங்கள மொழி மூலம் கற்கும் முஸ்லிம் மாணவர்களுக் கும்- தமிழ் மொழி மூலம் கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்குமிடையே காணப்படும் கலாசார முரண்பாட்டை இங்கு சிந்திப்பது நலம் பயக்கும். தமிழில் இஸ்லாமிய இலக் கியங்கள் கணிசமானளவு இருப்பதால், தமிழ் மொழி மூலம் கற்கும் முஸ்லிம்
1ριτ600π6)iήέξ6ίτ பசியாற வழியும்- வாய்ப்பும் இருக்கிறது. தடம் புரளச் சந்தர்ப்பம் சாதக மாக அமைய இடமில்லை. சிங்களத்தில் அது இல்லாததால், தடம் புரளவும், நிலை மாறவும் வாய்ப்புக்கள் அதிகமுண்டு.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த போது, உருது மொழி பேசும் முஸ்லிம்கள் மேற்குப் பாகிஸ்தானிலும், வங்க மொழி பேசும் முஸ்லிம்கள் கிழக்குப் பாகிஸ்தானி லும் பிரிந்தே வாழ்ந்தனர். ‘சமயம் ஒன்றே யாயினும், மொழிகள் இரண்டு என்பதால் தாக்குப் பிடிக்காது என முன்னாள் இந்திய ஜனாதிபதி ராஜேந்திரப் பிரசாத் அப்போதே கூறினார். இன்றைய நிலையென்ன? மொழி அடிப்படையில் பாகிஸ்தான் என் றும், வங்காள தேசமென்றும் பிரிந்து விட் டதைக் காண்கிறோம்.
அதனால், சகோதரத்துவத்தை வலி புறுத்தும் சாந்தி மார்க்கத்தைச் சார்ந்த வர்கள் சிங்கள முஸ்லிம் என்றும், தமிழ் முஸ்லிம்" என்றும் பிரிந்து விடாதிருக்க, முஸ்லிம் கல்விமான்கள் போதனா மொழி விடயத்தில் உரிய கவனம் செலுத்தி, தீர்க்கமாக ஆலோசித்து, தூரநோக்கோடு திட்டமிட்டுச் செயல்ப்பட வேண்டியது
காலத்தின் கட்டளையாகும்.
சிங்கள் மொழி மூலம் தம் பிள்ளைகள் கற்பதை விரும்பும் முஸ்லிம்கள், சிங்களத் தில் படித்தால் தான் அரசு உத்தியோகம் கிடைக்கும்’ என்ற நப்பாசையில், தங்க ளைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்ற
னர் என்பதுதான் கசப்பான உண்மை.
சிங்களப் பெரும்பான்மை இனத்தவரி
டையே, வேலையில்லாத் திண்டாட்டத்தில் தினறுவோர் பல நூறு பேர் 6ரிசையில்
**。
39
மல்லிகை ஜூலை 2009 3 37

Page 21
இன்னுமே நிற்கும் போது, சிங்கள மொழி மூலம் பயின்ற முஸ்லிம்களுக்கு அரசு உத்தியோகம் கிடைத்துவிடும் என நம்ப முடியுமா?
விரல் விட்டு எண்ணிடுமளவில் ஒரு சில முஸ்லிம் பாடசாலைகளில் சிங்கள மொழி மூலப் போதனையும் நடைபெறவே செய்கின்றது. அத்தகைய பாடசாலைகளு க்கு உரிய ஆசிரியர்களைக் கல்வித் திணைக்களம் தருவதில்லை. கேட்டால், ‘சிங்களப் பாடசாலைகளுக்கே ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் போது, உங்களுக்கு எப்படித் தர முடியும்?' எனப் பதில் வருவ தாக, அத்தகைய பாடசாலை அதிபர்க ளிடம் கேட்டால், புரிந்து கொள்ள முடியும். அரசியலுக்கு அப்பால் நடைமுறை யைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது, தமிழ்த் தலைமைத்துவங்கள் தமிழ் பேசும்
இன்னொரு இனத்தவரான முஸ்லிம்களை ஆரம்பத்திலிருந்தே அணைத்துப் பிடிக்கா ததும், சிங்களக் கரை நோக்கி முஸ்லிம்க ளில் ஒரு சாரார் செல்வதற்குக் காரணமா கும் என நேர்ப் பார்வையில் சிந்திப்போரின் எண்ணங்களும் குறிப்பிடத்தக்கன.
இந்தப் போதனா மொழி விடயத்தில், இனிமேலும் முஸ்லிம்கள் அசமந்தப் போக் கில், சுயநல வட்டத்தில் ஏனோ தானோ என்ற மனப்பாங்கில் இருப்பது, வருங் காலத்தில் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பது உறுதி. அதனால், முஸ்லிம் கல்வி மான்கள், ஊர்ப் பள்ளிவாசல் தர்மகர்த் தாக்கள், ஊடகவியலாளர்கள் ஒன்றிணை ந்து இது விடயத்தில் உடனடிப் பரிகாரம் காண வேண்டும். சமுதாய ஐக்கியம் வருங் காலத்தில் பேணப்பட, முஸ்லிம்கள் தமிழ் மொழி மூலம் கற்பதே சாலச் சிறந்தது. சிந் திப்போம்; தெளிவோம்; செயல்படுவோம்.
ਨੁrsਗ. தொகுத்தவர் திரு. அந்தனி ஜீவா.)
வாழ்த்துகின்றோம்
நாவலப்பிட்டிப் பொன்னுத்துரையினதும் பாரியாரினதும் மகளான செல்வப்பிரியா அவர்களுக்கும் திரு. கருப்பையாவினதும் துணைவியாரினதும் மகன் வசீகரன் அவர்களுக்கும் சமீபத்தில் தெஹிவளை யில் மிகச் சிறப்பான முறையில் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. ஏராளமானோர் இவ் விழாவிற்குச் சமூகம் கொடுத்தனர்.
மல்லிகையும் இந்தப் புதுமணத் தம்பதியை வாழ்த்துகின்றது.
இத் திருமணத்தின சிறப்பு நிகழ்வு என்னவென்றால், கவிஞர் குறிஞ்சி தென்னவனின் குறும் பூக்கள்" என்ற குறும்பா கவிதை நூலைத் திருமண ஞாபகார்த்தமாக வெளியிட்டுச் சிறப்பித்தது
இலக்கிய உழைப்பாளி திரு.
- ஆசிரியர்
மல்லிகை ஜூலை 2009 奉 38
 
 

وهو على سه
தீபாவுக்குக் கல்யாணமாகி, இன்னும் ஒருவருடம் கூட ஆகவில்லை. கழுத் தில் தாலி ஏறிய களையோடு கட்டிய கணவனே எல்லாம் என்று, பிறந்த மண்ணை யும், பெற்றெடுத்த தாய் தகப்பனையும் மறந்து சிவராமனோடு போனவள் தான். இப்போது என்ன காரணத்தினாலோ, அவனைப் பிரிந்து, ஒன்றுமேயில்லாமல் போன வெறும் தனி மரமாய், திரும்பி வந்திருக்கிறாள். அப்பாவின் காலடிச் சுவடு தேடித் தீக்குளித்து, அவள் இப்படி வந்து நிற்பது இதுதான் முதல் தடவை.
இதற்கு முன், அவருக்கொரு இனிய மகளாய், அவரோடு ஒன்றுபட்டு வாழ்ந்த நாட்களில் முரண்பாடுகள் கொண்ட, தவறான மனிதர்களின் குணாம்சங்கள் பற்றி, அவள் எதுவுமே அறிந்திருக்கவில்லை. அப்பா வழியில் அவள் அறிந்து கொண்ட தெல்லாம் நன்மையை மட்டுமே தருகின்ற, சாந்தி யோகமான வாழ்வின், உன்ன தப் பெறுபேறுகளை மட்டும்தான். இப்போது அவற்றையெல்லாம் தூக்கியெறிந்து, துவம்சம் செய்துவிட்டுப் போன மாதிரி எதிர் முரணான விபரீத விளைவுகளையே சந்தித்து, ஏமாந்து போன, மன உளைச்சலோடு தான், அவளது இந்தத் திடீர் வருகை. அப்பா வீட்டு முன் வாசல் நீண்ட நேரமாய் நிலை கொண்டு வெறிச் சோடிக் கிடந்தது. உள்ளே போக மனம் வராமல், அவள் எவ்வளவு நேரத்துக்குத்தான் அப்படியே உயிர் உறைந்து போய், நிலையழிந்து கொண்டிருப்பாள். அவளது இந்த நிலைய ழிதல் கூட, அப்பாவைப் பொறுத்தவரை சிறிதும் எதிர்பாராத, மிகவும் துக்கமளிக் கிற, ஒரு கசப்பான அநுபவம் தான்.
எளிதிலே உணர்ச்சிவசப்பட்டு, தான் தோன்றித் தனமான, அவசர முடிவை எடுக்குமளவுக்கு, அவள் அப்படியொன்றும் சலனப் புத்தி கொண்டவளல்ல. அவள் எதைச் செய்தாலும், தீர்க்கமாக நன்கு யோசித்த பிறகே ஒரு முடிவுக்கு வருவாள். இன்று அவளில் இயல்பான குணத்திற்கு மாறாக அவள் இப்படிச் சிவராமனைப் பிரிந்து, தனியாக வர நேர்ந்ததற்கு, புதிதாக அவள் எடுத்திருக்கிற அவசர முடிவு தான் காரணமாக இருக்குமோ என்று அப்பாவுக்கு முதன் முறையாக, அவள் மீது சந்தேகம் வந்தது. அதை வெளிக் காட்டாமல், அவள் அப்படி வந்து நிற்பதைக் கண்டு, பெரும் அதிர்ச்சிக்குள்ளானவராய், எதுவும் பேசத் தோன்றாமல், அவர்
மல்லிகை ஜூலை 2009 率 39

Page 22
அப்படியே கல்லாய்ச் சமைந்து,
உறைந்து போய்க் கிடந்தார்.
அவரையே வெறிக்கப் பார்த்தபடி, சோகமுற்றுக் கனன்று எரியும் மன தோடு, அவள் வெகு நேரமாக உணர் விழந்த வெறும் சிலை போலத், தன்வச மிழந்து நின்று கொண்டிருந் தாள். அவளுக்கு என்ன நடந்ததென்று அறி யாமல் அவளது இந்த வெறுமை கொண்ட துன்பநிலைக்குப் பரிகாரம்ாக அவளைப் புரியாமல் அவர் மனம் கலங் கினார். பிறகு தன்னைச் சுதாகரித்துக் கொண்டே தடுமாற்றமாய் அவளை நிமிர்ந்து பார்த்து அவர் கேட்டார்.
"என்ன தீபா? கல்யாணமாகி, இவ் வளவு நாள் கழிச்சு வந்திருக்கிறியே? இடையிலே நீ ஏன் வந்து போகேலை? சிவராமன் எங்கே? அவரை விட்டிட்டு, இப்படித் தனி யாக வந்து நிற்கிறியோ, ஏன்?
அவர் அவ்வாறு கேட்டதும், அவள் தன்னையே மறந்து உணர்ச்சிவசப் பட்டு, ஆவேசமாக ஓடி வந்து அவர் காலில் விழுந்து, ஓவென்று பெருங்குர லெடுத்துக் கதறியழுதுவிட்டாள்.
அவளின் அலறலைக் கேட்டு, உள் ளிருந்து பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தாள் அம்மா. கல்யாணமாகிச் சிவ ராமனோடு போன தீபா, ஒரு குறையுமில் லாமல், நல்ல படி வாழ்ந்து கொண்டி ருப்பதாகவே அவள் இதுவரை காலமும் நினைத்துக் கொண்டிருந்தாள். அந்த
நினைப்பையே பொய்யாக்கிவிட்டுத் திருமணமென்ற பொய்யின் கறைபட்டு, எரிந்து கருகிப் போன, வெறும் நிழ லாய்த் தீபா இப்படி வந்து நிற்கிறாளே! என்ன கொடுமை இது, என்று அவள் தனக்குள் புலம்பியழுகிற வேளை, தன் காலடியில் விழுந்து புழுப் போலத் துடிதுடித்துக் கதறியழும் மகளைத்
தேற்றும் வழி அறியாது அப்பா சடா
ரென்று குனிந்து அவளைத் தூக்கி நிறுத்திப் பரிவோடு அவளின் கண்ணி ரைத் துடைத்து விட்டவாறே, மீண்டும் வரண்ட தொனியில் அவரே, கேட்டார்.
"சொல்லு தீபா உனக்கு அங்கை என்னதான் நடந்தது?"
அதைக் கேட்டுத் தீபா அழுகையை நிறுத்திவிட்டுச் சோகம் கனக்கக் கூறி னாள்.
'அப்பா! நாங்கள் எதிர்பார்க்கிற மாதிரி எதுவும் நடக்கிறேலை. அவர் மீது, நீங்கள் எவ்வளவு நம்பிக்கை வைச் சிருந்தியள். எவ்வளவோ இடங்களில் அவரைப் பற்றி நன்றாக விசாரித்து அறிந்து கொண்ட பிறகு தானே, என்னை அவருக்குத் தாரை வார்த்துக் கொடுத் தியள். இப்ப அந்தப் புனிதமே காற் றிலை பறக்குது. நான் நானாக இருக்க முடியாமல், எங்கேயோ தோற்றுப் போய் எப்படியெல்லாமோ அடிபட்டு, இப்ப நான் உடைஞ்சு போய் வந்து ஒன்றுமேயில்லாத மூளி மாதிரி நிற் கிறன். இந்தப் பாவக் கணக்கு என்னை
மல்லிகை ஜூலை 2009 $ 40

மட்டும் தான் பலி கொண்டிருக்கு. முழு சாய் என் உணர்வுகளையே பறிச்சுக் குழி தோண்டிப் புதைத்திருக்கு. இப்படி யான பிறகு, எனக்கொரு வாழ்க்கை ஏன்? சொல்லுங்கோவப்பா! சராசரிப் பெண்களைப் போல, நானும் வாழ்கிறே னென்று, காட்டுவதற்கா? எதுக்கு இந்த முகமூடி வேஷமெல்லாம்?"
அவள் என்ன சொல்ல வருகிறா ளென்பதை, அறிவுபூர்வமாகவே, புரிந்து கொண்டு, தளும்பலற்ற, நிதானப் போக் கில், அவளைத் திசை திருப்ப விரும் பும், உத்வேகத்துடன், அவர் பேச்சை மாற்றுவது போலக் கேட்டார்.
‘தீபா எனக்கு இதைக் கேட்க மன வருத்தமாக இருக்கு. முன்பெல்லாம், கடும் சந்தர்ப்பங்களில் கூடக் குழைந்து போகிற, இனிய சுபாவமே உனக்கு. எவ ரையுமே காயப்படுத்தியறியாத, மகா உத்தமி நீ. அப்படியிருக்கச் சிவராம னோடு முரண்பட்டுப் பரஸ்பரம் அன்பில் லாமல் போன ஒரு பிளவு நிலையிலே, நீ மோதிச் சரிய வேண்டிய அவசியம் எதுக்கு வரவேணும்? என்னால், இதை நினைச்சுக் கூடப் பார்க்க முடியேலை. ஏன் இந்த விபரீத மனமாற்றம் உனக்கு? சொல்லு தீபா!'
அதற்கு அவள் கொஞ்சம் ஆவேச மாகவே குரலை உயர்த்திக் கேட்டாள்.
"அப்பா! நீங்களுமா இதை நம்புகி றியள்?
'எதை...?"
“எதிர் முரணாக, நான் மாறியிருப்
பதாக, நீங்கள் சொல்ல வாறியளே, அதைக் கேட்கிறன்."
"இப்படிச் சண்டை பிடிச்சுக் கொண்டு வந்து நின்றால், வேறு எப்படி நான் நினைப்பது?
'இது வலிய, நான் ஏற்படுத்திக் கொண்ட வீண் சண்டையல்ல. எனக் குச் சண்டை போடவே தெரியாது. உங் கள் வழியால், நான் அப்படிப் பழக்கப் படுத்தப்பட்டவளுமல்ல. எய்தவன் இருக்க, அம்பை நோகிற கணக்கில் தான் என் நிலைமையும். இப்படியொரு நிலைமையிலை, ஏன் உணர்ச்சிக ளும், மனமும் எவ்வளவு தான் மனம் போன போக்கில் ஓர் ஆனால், அவர் உரிமை கொண்டாடுகிற உறவு மனி தர்களால், சூறையாடப்பட்டாலும், அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, அனுசரித்துப் போறதே, ஒரு பெண் னாக இருக்கிற எனக்கு அழகு என்று தானே, நீங்கள் சொல்ல நினைப்பியள். நான் இதை மறுக்கேலை. மனதிலே சந்தோஷமில்லாமல், இந்த இல்லறத் தர்மத்தை, வேர் அறுந்து போகாமல், காப்பாற்றுவதற்காக, ஒருவேளை இது சரியாகப்படலாம். ஆனால், இப்படி ஒரு சோகம் கவிந்த மனோ நிலையிலே, வெறும் உடம்பாலை மட்டும் வாழ்ந்து அநுபவதித்துக் கொண்டு, என் வயிற் றிலை ஒரு குழந்தை ஜனித்தால், அது சரியாய் வருமென்று எனக்குப் படேலை, ஓர் அஸ்தம்னச் சூரியன் உதிச்ச மாதிரித் தான், அது இருக்கும். சிவராம னோடு பரஸ்பரம் மனம் ஒன்றுபடாமல் துருவங்களாக விலகி இருந்து கொண்டு,
மல்லிகை ஜூலை 2009 & 41

Page 23
ஒருவரை ஒருவர் வஞ்சம் தீர்த்துப் பழி வாங்குகிற, வெறியோடு நாங்கள் குழ ந்தை பெற்றால், அது ஒரு நற்பிரஜை யாக வருமென்று, எனக்குத் தோன் றேலை. அதனால தானப்பா, நான் பிரிந்து வந்திட்டன். நான் இப்படியே ஒரு வாழா வெட்டியாகவே இருந்திட்டுப் போறன் என்னை மன்னிச்சிடுங்கோ."
அவள் உணர்ச்சி மேலீட்டினால், மனம் புல்லரித்து, மூச்சு வாங்கப் பேசிவிட்டு நிறுத்திய போது, மெளனம் நிலவியது. அதற்கு மேல், அப்பாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவ ளின் வாழ்க்கை, அவர் எதிர்பார்த்த தற்கு மாறாக முதற் கோண லாகவே, இருந்துவிட்டுப் போகட்டும். இந்தக் கோணலின், வடுப்பட்ட காயங்களுக் கெல்லாம், சூத்திரதாரியான சிவரா மனே, இதற்கெல்லாம் பொறுப்பாவான்.
இவளை உணர்ச்சியுள்ள பெண் ணாகவே கருதாமல், குற்றமற்ற நிலை யிலும் இவளைப் பழி வாங்கி, வஞ்சம் தீர்த்துவிட்டுப் போகிற குரூரப் புத்தி, அவனுக்கு எதனால் வந்தது? இதற்கு அவனிடத்தில், எத்தனையோ கார ணங்கள் இருக்கலாம். இது பற்றி, தீபா எதுவுமே சொல்லவில்லை. அவனது கறைபட்டுப் போன, அவளை மனப் பூர்வமாக நேசிக்கத் தவறிய, அவனது முரண்பாடுகள் கொண்ட இந்த முரட் டுப் போக்கினால், வாழ்வையே இழந்து வந்து நிற்கும் தீபாவுக்குக் கிடைத்த பரிசு, வாழாவெட்டியென்ற அவப் பெயர் தான். இதற்குப் பயந்து, வேண்டாத மனைவியென்று, அவன் தன்னை
ஒதுக்கித் தள்ளிவிட்ட பிறகு, அவனோடு தான் வாழ வேண்டுமென்று, வரட்டுப் பிடிவாதம் கொண்டு, அவள் வாழத் தலைப்பட்டால், தான் அழிந்துதான் போவதோடு மட்டுமல்லாமல், வீணாகத் தன் வயிற்றில் பிறக்கப் போகும் குழந் தைகளையும், பலியிட நேருமே யென்ற நியாயமான பயம். இப்படிப்பட்ட பெண் ணுக்கு வரக் கூடியதே. இதற்குத் தீபா மட்டும் விதிவிலக்கல்ல. வாழாவெட்டி யென்ற, தீராத பழிச் சொல்லையும், பொருட்படுத்தாது, அவள் இப்போது எடுத்திருக்கிற இந்த முடிவு கூடச் சரியானதே என்று நினைக்கையில் முதற் கோணலாகிப் போன, துருப் பிடித்த வாழ்க்கையின் கறைகளுக்குள் சிக்காத, ஒரு துருவநட்சத்திரம் போலவே அவள் இந்த மண்ணுக்கெட்டாத, உய ரத்தில் நின்று பிரகாசிப்பதாய், அவ ருக்கு உணர்வு தட்டிற்று. இந்த மண் னின் எதிர்மறையாகத் தோன்றுகிற கறைகளைக் குடிக்க, அதுவே போது மென்றுபட்டது.
öföT blöfalJğ5 b)SiteleföETT?
புதிய ஆண்டு தொடங்கி விட்டது. தயவு செய்து தமது சந்தாக்களைப் புதுப் பித்துக் கொள்ளவும்.
மனந் திறந்து மல்லிகையுடன் ஒத்து ழையுங்கள். ஏனெனில் மல்லிகை உங் கள் ஒவ்வொருவரினதும் இலக்கியக் குரலாகும்.
அகட்டை செய்வோருக்கு முன்னறி வித்தலின்றி இதழ் நிறுத்தப்படும்.
மல்லிகை ஜூலை 2009 & 42

υπουασίλαό θεόθ.
- நம்பி நழுவி
எழுத்தாளரின் எழுத்தாளனாகாதிருப்பினும் நிச்சயமாகப் பாலன் ஏராளமான வாசகரின் அபிமானத்தைப் பெற்ற எழுத்தாளன் தான். அவனை “ரூ இன் வண்' என்ற வகைக்குள்ளும் அடக்க முடியும். எழுத்தாளன் + எழுதுவினைஞன். ஈழத்தமிழருக்கு எழுத்தூழியம் சைட் பிஸ்னஸ் போன்றது. இக் கணிப்பைப் பாலனும் நியாயப்படுத்து கிறான். சமூகப் பணிக்கு எழுத்தாளன். குடும்பம் நடத்த எழுதுவினைஞன். இதனால் அவனது இலக்கியப் பணியைப் பொழுது போக்கெனக் கொச்சைப்படுத்த முடியாது. அப்படி எவரும் கூறிவிட்டால் அவனுக்கு ஆத்திரம் வரும் வாசகன் அவனை எப்பவோ எழுத்தாளன் என இனங்கண்டு விட்டான். பென்னம் பெரிய விலாசமான எழுத்தாளர் களோடு அவன் சோடி கட்டித் திரிவதாலா? அல்லது புத்தகமும் கையுமாக எங்கும் நிறைந்திருப்பதாலா? இல்லவே. இல்லை. அண்டியோரின் பிரச்சினைகளை நிஜமானதாக அப்பட்டமாக எழுதி அவன் மாட்டிக் கொண்டான். இந்த என்ர பிரச்சினை அவருக்குத் தானே தெரியும். எனத் தங்களையும் தங்களது பிரச்சினைகளையும் பால னின் படைப்புக்களில் அடையாளம் கண்ட அவன் அயலட்டத்தார் "அவரிட்ட ஏதும் பறஞ்சா அது புத்தகங்களிலும் பேப்பரிலும் வந்து விடும்’ எனப் புறு புறத்து அவனோடு கதை கொடுக்காது முகத்தைத் திருப்புவதும் வழக்கம். இது அநுமார் வால் நெருப்பு மாதிரி ஊர் முழுவதும் பற்றி அவனையொரு எழுத்தாளனென மற்றவர் பார்ப்பதற்கு வித்தாகவும் அமைந்துவிட்டது. அவன் தன்னை எழுத்தாளனாக்கப் பல போஸ்களில் போட்டோ எடுத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்குக் கொடுத்துப் பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டியதில்லை. இருந்தும், இப்போ அவன் நாடறிந்த எழுத்தாளன்.
இப்படிப்பட்டவன் தனது அன்புக்குரிய ஆச்சியைப் பற்றி இன்னமும் ஓர் உள்ளங் கைக் கணியமான பந்தியைக் கூட எழுதவில்லை. இது அவனது நீண்ட நாள் ஆதங்கம் ஆச்சியும் கண்ணை மூடி இப்போ அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. கடவுள் சத்தியமாக இன்னமும் அவனது படைப்பொன்றில் கூட ஆச்சியொரு கதா பாத்திரமாகவும் சித்தரிக்கப்படவில்லை.
"ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்த வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா?", "அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை', 'தாயில் சிறந்த கோயிலுமில்லை’ தெரு வோரத்தில் நடந்து கொண்டிருந்தாலும் தனக்குப் பிடித்த தத்துவார்த்தப் பாடல்கள் வானொ லியில் ஒலித்தால் நடையை நிறுத்திப் பாடலைக் கேட்டுவிட்டுச் செல்லும் அவன் காதில்தாயைச் சிகரத்துக்கு ஏற்றும் இப்பாடல்கள் விழுவதில்லையா! 'தாய் நாடு நல்லா இருக்
மல்லிகை ஜூலை 2009 & 43

Page 24
கத் தாய் நல்லா இருக்க வேண்டும்” என்ற தையும் அவன் கேள்விப்பட்டிருக்கிறான். அப்போ ஏன் தன்னைச் செட்டைக்குள் கொண்டு திரிந்த ஆச்சியை மறந்தான்? இந்தப் பின்னூட்டுகளாவது அவனை வழி நடத்தவில்லையா? சர்வதேச அன்னையர் தினத்துக்காவது ஆச்சியை நினைவு படுத்தி ஒரு சிறு கதையை எழுதிப் பிரசுரித் திருக்கலாமே? தாங்கள் குடியிருந்த கோயில்களைப் பற்றிச் சில எழுத்தாளர் கள் ஒப்பாரி பாடிய எழுத்துக்களை அவன் கண்ணிர் கசியப் படித்திருக்கிறான். இப் பெற்றோர்களில் சிலர் நெடுங்கால முதி யோர் இல்ல வாசிகளாக இருந்தவர்க அறிந்திருக்கிறான். 'பச்சைப் புளுகுகள்’ என எழுந்த விமர்
ளென்பதையும்
சனங்களையும் இரண்டு காதுகளாலும் கேட்டுமிருக்கிறான். தன்னைச் சுமந்த வளையும் எழுதினால் இப்படித்தான் “நாக்கு வளைப்பார்கள்’ என்ற சபலத் தாலா தன் தாயை மறந்தான் ஆச்சியைச் சொல்லப் போனால் தங்க ளோடு அவவும் சேர்ந்து அநுபவித்த நெருப் பாகத் தகித்த வறுமையை வெளிப்படுத்த வேண்டி இருக்கும். அவன் இப்போதிருக் கும் சற்று மேலோங்கிய நிலையில் அது வெளியாருக் குப் பழையதை அம்பலப் படுத்துவதாக அமையும். அவன் இப்படியும் எண்ணித் தயங்கினானா? நிச்சயமாக அப்படி இருக் காது. அவன் அன்றாடங் காய்ச்சிகளின் துன்பியல் வாழ்வைச் செயற்கைப்படுத் தாமல் யதார்த்தமாக வாசகருக்குக் கொடுப் பவன். பஞ்சப்பட்டது களின் எழுத்தாளன் என்று முத்திரை குத்தப்பட்டவன். அவ ஒதுக்கு ஒரே ஒரு ஆறுதல் தன் முதலாவது சிறுகதைத் தொகுப்பை அப்புவோடு சேர்த்து ஆச்சிக்கும் சமர்ப்பணம் செய்தி
ருக்கிறான். அது போதுமா? இதற்கு யார் தான் 'ஓம்' என்பீனம்? அவன் சிரித்திரன் என்ற சஞ்சிகையில் படித்த மகுடியின் பதில் ஒன்று அடிக்கடி அவன் மனதை உறுத்து வதுண்டு. மொழி எங்கே தோற்கும்? என்று ஒருவர் கேட்ட கேள்விக்குதாயின் அன்பை விபரிக்கும் போது மொழி தோற்கும்' என மகுடி பதில் அளித்திருக்கிறார். அந்த அன் பின் ஊற்றை இதுவரை பாலன் மறந்துஅவன் அறிவையே சோதனைக்குள்ளாக் குமென இப்பொழுது அவன் சிந்திக்கிறான். பாலன் ஒவியனாகவும் இருந்தால், தன் மனதில் இப்பவும் நித்திய பதிவாக இருக் கும் ஆச்சியின் தோற்றத்தை ஒவியமாக்கி விடுவான். இந்தத் தேசிய அடையாள அட்டை ஏன் ஆச்சி காலத்தில் இல்லாமல் போச்சு? சில நேரங்களில் தனக்கு வசதி யாக அவன் இப்படியும் யோசிப்பதுண்டு. இருந்திருந்தால், ஆச்சியும் போட்டோ எடுத் திருப்பா. போட்டோ ஒட்டிய அடையாள அட் டையை அவன் இன்றுவரை பக்குவமாக வைத்திருந்திருப்பான். போட்டோ எடுக்க வாய்ப்பு இருந்தும் கூட ஆச்சி அதைப் பாவிக்கவில்லை. ஆச்சியின் பெருத்த ஊக்கத்தால் பாலனின் மணி அக்காவின் திருமணம்- ஊர்ச் சனம் ஆச்சரியப்படும் வகையில் பெருவெடுப்பில நடந்தது. போட் டோக்களும் எடுக்கப்பட்டன. பாலன் முதன் முதல் போட்டோ எடுத்ததும் இத்திரு மணத்தில் தான். குடும்பத்தவர்கள் போட் டோவில் அகப்பட்டும், துரதிர்ஷ்டமாக ஆச் சியை எதிலுமே காணவில்லை. தூர நோக் கற்றவர்களென அப்போ இந்நிகழ்வை நடப் பித்தவர்களைப் பாலனின் திட்டுவதுண்டு. அதனால் தான் ஆச்சியைப் போட்டோ எடுக்காமல் மறந்தனர்.
மல்லிகை ஜூலை 2009 奉 44

அந்தக் காலத்தில் ஸ்ரூடியோக்கள் கட்டணத்தைக் குறைத்து அரைச்சவா ருக்குப் போட்டோ எடுத்தார்கள். இந்த விளம்பர நோட்டீஸனகளைப் பாலன் சுவர்களில் கண்டிருக்கிறான். இதைக் கூட ஆச்சி பாவிக்காது விட்டது பாலனுக்கு இன்றும் கவலை.
ஆச்சி பூவோடும் பொட்டோடும் தான் கண்ணை மூடினவ. இருந்தும் வெள்ளைக் காரிக்கன் சட்டையைத் தான் அணிவ துண்டு. குடும்ப வறுமையே இதற்கு அத்தி வாரம். மாற்றிக் கட்டச் சேலை இல்லை. ஒரு கண்ட சீருக்கு ஆச்சி ஒரே சேலை யைத் தான் உடுத்துவா. அந்தச் சேலை இன்னமும் பாலனின் மனசின் பிடிக்குள் கிடக்கிறது. மஞ்சள் கரை போட்ட உடல் முழுதும் நீலமான சேலை, குளிச்சுப் போட்டு அரைவாசிச் சேலையை உடம்பில் சுற்றிக் கொண்டு மிச்சச் சீலையை வெய் யிலில் காய வைப்பா, அல்லது உள் பாவா டையை உயர்த்தி குறுக்குக் கட்டிக் கொண்டு சீலையைக் காயச் செய்வா. பாவாடையும் சில நாடுகளின் தேசியக் கொடி மாதிரி இருக்கும். பல நிறத் துணித் துண்டுகளால் கிழிந்த இடங்களுக்குப் பத்துப் போட்டிருக்கும். மேலுந் தைக்க இடமிருக்காது ஆச்சிக்கு அடர்த்தியான கொடியால் கூந்தல்' இல்லை. கோழிவால் மாதிரிக் கையுக்க பொத்தக் கூடிய மயிர் தான்! அள்ளி முடிந்தால் நூறுகிறாம் புளி உருண்டையின் தோற்றம் கூட இருக் காது. சனம் வருகிற நன்மை, தீமை"க்குப் போறதெண்டால் முடிமயிர் வைத்துத்தான் ஆச்சி கொண்டை கட்டுவா.
பாலனின் அப்பு குடும்பாசுக் காரர். சில
இளசுகள் அவரை "சோமபாலா’ எனக்
கூப்பிட்டுக் கிழி வாங்குவதுமுண்டு. அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சிங்கள வர்த்தகர்கள் வசித்ததை இன்றைய முதியோர்கள் மறந்திருக்க மாட்டார்கள். வெளி மாவட்ட மரக்கறி வகைகளை யாழ்ப் பாணத்துக்குத் தருவித்து வியாபாரம் செய் தனர். அத்தோடு பேக்கரிகளை நடத்துவ தில் அவர்கள் முன்னோடிகளாகவும் இருந்தனர். இவர்களில் பெரும்பாலான முதியோர்கள் கொண்டை கட்டி இருந்த னர். இதன் நிமித்தமே பாலனின் அப்புவை ‘சோமபாலா’ என்ற சிங்களப் பெயர் சொல் லிக் கூப்பிட்டுக் கேலி செய்தனர். நிச்சய மாக இது இனவாதமல்ல! அப்போதெல் லாம் பாரிச வாதம், முடக்கு வாதம், குதி வாதம், சுவாதம் போன்ற உடல் நோய்கள் தான் வட புலத்தில் இருந்தன.
இடப் பெயர்வென்றால் இப்பொழுதுஅதைப் பற்றி ஈழத் தமிழ் மண்ணின் சின் னஞ் சிறுசுகளுக்கும் விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. "எள்ளேன் காயுது? எண் ணெய்க்காக. எலிப்புளுக்கை ஏன் காயுது? கூடக் கிடந்த குற்றத்துக்காக" என்பார்கள். அதே போல் சின்னஞ்சிறுசுகளும் தமிழ் மண்ணில் பிறந்ததுக்காக இடப் பெயர்வை மிகத் தாராளமாக அநுபவிக்கின்றன.
பாலனின் குடும்பத்துக்கு அவன் விரல் சூப்பித் திரிந்த காலத்திலேயே இடப் பெயர்வு தொடங்கி விட்டது. குட்டி ஈன்ற பூனை குட்டிகளைக் கெளவிக் கொண்டு இடத்துக்கிடம் மாறுவது போல், அவன் ஆச்சியும் அப்புவும் பெத்ததுகளை இழுத் துக் கொண்டு அங்குமிங்கும் திரிஞ்சவை தான் இதன் பின்புலத்தில் பென்னம் பெரிய சாதியப் பழிவாங்கல் இருந்தது. அந்தக் காலத்தில் பெரும்பாலான தாழ்த்
மல்லிகை ஜூலை 2009 $ 45

Page 25
தப்பட்ட மக்களுக்குச் சொந்தக் குடிநிலம் இருக்கவில்லை. அதே நிலை பாலன் குடும்பத்துக்கும் இருந்தது. சாதி வெள்ளா ளர் ஒருவரின் திறந்த வெளிக் காணியி லேயே குடி இருந்தனர். பாலனின் அப்புவின் சீவல் தொழிலும் வெள்ளாளரின் காணி களில் தான்! அன்று வடபுலத்தை ஆட வைத்த வில்லூன்றி மயானக் கொலைக் குப் பின் வாழிடத்திலிருந்து பாலன் குடும் பத்தை நிலவுடைமையாளர் வெளியேற்றி அகதி ஆக்கினர். பாலனின் அப்பு வில் லூன்றி மயானக் கொலை வழக்கில் தாழ்த்தப்பட்டோர் பக்கம் நின்று உயர் சாதி யைச் சேர்ந்த கொலைஞனுக்கு நீதிமன் றத் தண்டனை வாங்கிக் கொடுத்ததே பாலனின் குடும்பம் அன்று அகதியாக்கப் பட்டதுக்குக் காரணமாகியது. தளிர்த்து ஓங்கி வளர்ந்து பயன் தரத்தக்க மர மொன்று மண்ணில் சரிந்தால் அதை நிமிர் த்தி அதைத் தொடர்ந்து வளர வைக்க இன்னொரு பட்ட மரந்தான் உதவும். இந்த நியதிக்கு அமைவாகப் பாலனின் குடும்பத் துக்கு மறுவாழ்வளிக்க இன்னொரு தாழ்த் தப்பட்டவரே முன் வந்து உதவினார். அவ ரது காணிக்குள் கொட்டில் அமைத்துப் பாலன் குடும்பம் புது வாழ்வைத் தொடங் கியது. இவர்கள் குடியேறிய காணிக்குப் பக்கத்துக் காணியில் அதர் போன்ற நாற் சதுர, ஆழமான கிடங்கொன்று இருந்தது. இரண்டாவது உலக மகா யுத்தத்தில் விமா னக் குண்டு வீச்சை யுத்த வெறியர்கள் நடத்தியதை அரசியல் வரலாறு நோக்கர் கள் அறிவர். அந்தக் குண்டுகளுக்கு அகப் படாது தப்பிக் கொள்ளவே இக் கிடங்குபதுங்கு குழியாகப் பாவிக்கப்பட்டதென அப்பொழுது கூறினர். இன்றைய ஈழத்து
இளைய சந்ததியும் யுத்தத்தைக் கண்டது தானே! அது ஒரு தேசத்துக்கு எதிராக இன் னொரு தேசம் நடத்திய யுத்தம். இது இரு இனங்களுக்கிடையே நடைபெற்ற உள் நாட்டு யுத்தம். சகடை, சுப்பர் சோனிக், ஜெற் ஆகிய விமானங்களின் குண்டு வீச்சுக் குத் தப்புவதற்காக இந்த உள்நாட்டு யுத்தத்தில் வீட்டுக்கு, வீடு பங்கர்கள் அமைத்தார் களே, இந்தப் பங்கர்களுக்குப் பதுங்குகுழி களுக்கு முன்னுதாரணமாக அன்று இருந்தவையே இப்பாரிய கிடங்குகள்.
குந்தி இருந்தெழும்பப் பாலன் குடும் பத்துக்கு ஒரு துண்டு நிலம் கிடைத்து விட் டது. இனி நாளாந்தச் சீவியத்துக்கு என்ன செய்வது? பாலனின் அப்பு கள்ளிறக்கும் தொழிலாளி. அதற்குரிய தென்னை மரங்க ளுக்கு எங்கு போவது? அப்பு ஒரு வணங்கா முடி! அன்று ஆதிக்கச் சாதியாக விருந்த வெள்ளாளருக்கு மரியாதை கொடுக்கமாட் டார். தோளில் போட்ட சால்வையை எடுக்க மாட்டார். சண்டிக் கட்டை அவிழ்த்து விட மாட்டார். அவர்களைக் கண்டுவிட்டால், செருமிக் காறித் துப்பவும் தயங்கமாட்டார்.
அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்ட மக் களுக்கு விசாலித்த தென்னந்தோட்டக் காணிகள் இருக்கவில்லை. ஒன்று, இரண்டு மிஞ்சிப் போனால் மூன்று பரப்பளவான காணித் துண்டுகளே இருந்தன. அவைக ளில் மரஞ் செடிகளும் இருக்க வில்லை. இத்துண்டு நிலங்களைக் கலட்டி' எனவும் அன்று அழைத்தனர். இந்நிலையில் பாலனின் அப்பு தீவுப் பகுதிக்குச் சென்று தனது தொழிலைச் செய்தார். அதன் மூலம் குடும்பம் ஓடியது. அதுவும் பிரச்சினையைக் கொடுத்ததால் தொழிலை மாற்றினார். கொட்டடிக் கிராமத்துக்கு அயலில் முஸ்
மல்லிகை ஜூலை 2009 $ 46

லிம்கள் வாழும் கிராமம் இருந்தது. அப் பகுதிக்குச் சென்று விறகு கொத்திக் குடும் பத்தைப் பராமரித்தார். அவரது சம் பாத் தியம் குடும்பத் தேவைகளுக்குப் போதா திருந்தது. தின்னக் கூடிய வளர்ந்த பிள் ளைகளாகப் பிள்ளைகள் ஆகிவிட்டார்கள். அவர்களது வாயைக் கட்ட முடியுமா? அக ப்பை பிடிப்பது ஆச்சியாச்சே! எனவே தான் ஆச்சி புல்லுக் கடகத்தைத் தூக்கினார்.
அந்தக் காலத்தில் - கொட்டடிப் பகுதியின் மேற்குப் புறத்தில்- வில்லுான்றி மயானத்தை ஒட்டிய பிரதேசத்தில் வாழ்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வின் வெக் கையில் கருகிக் கொண்டிருந்த தாழ்த்தப் பட்ட குடும்பங்களின் குடும்பத் தலைவி கள்- அவர்களது கணவர்களின் உழைப் பின் ஊதியம் போதாமையால், தாமும் ஏதாவது தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கைச் செலவைச் சரிக்கட்டுவதுண்டு. பக்கத்தில் தரவைக் கடல். அதில் இறால், நண்டு பிடித்துக் காசுக்கு விற்பர். இதைத் தவிர, இவர்களுக்குப் போதியளவு பண வரவைக் கொடுத்தது புல்லு விற்றல். விசாலமான கோயில் காணிகள் இருந்தன. மக்கள் குடி யேறியிருந்த நிலத்தைத் தவிர, எஞ்சிய விசா லமான பகுதியல் கன்னாப் பற்றைகள் இருந்தன. தென்னந்தோப்புகளும் காணப் பட்டன. இவைகளின் வளர்ச்சிக்கு அகப்ப டாத நிலங்களில் புல் செழிப்பாக வளர்ந்தி ருந்தது. கல்லறகு, கோரை, மொறுங்கன், பாலறுகு- இப்படிப் பல வகையான புற்கள் அங்கு காணப்பட்டன. இவைகளை அறுத்து, யாழ்ப்பாணம் பெரிய கடைக்குக் கொண்டு சென்று இப்பெண்கள் வியா பாரம் செய்தனர். வெயில், மழை ஆகிய இயற்கைத் தாக்கங்களுக்கு முகம் கொடுக்
கத்தான் வ்ேண்டும் குடும்ப நேசத்தின் நிமித்தம் அவர்கள் இவைகளைப் பொருட் படுத்த மாட்டார்கள். இவைகளிலிருந்து தம்மை காப்பாற்றத் தலைக்குக் கவகசமா கப் பனை ஓலைப் பெட்டியைத் தொப்பி போல் கவிழ்த்துக் கொள்வர். பெரு மழைக் குத் தென்னை மரத்தின் கீழோ, வீட்டுத் தாழ்வாரங்களுக்குள்ளோ ஒதுங்குவர்.
குடும்பத்தின் கொடிய வறுமையைத் தணிக்கும் பொருட்டுப் பாலனின் ஆச்சியும் இத் தொழில்களைச் செய்தவர் தான். ஆச்சிக்கு ஒத்தாசையாகப் பாலனும் சிறுவ னாக இருக்கும் போது இத் தொழில்களைச் செய்திருக்கிறான்.
புல்லு வளவுகளில் பெரும்பான்மையா னவை நிலவுடைமைச் சமுதாயமான வேளாளருக்கே சொந்தமாக இருந்தன. அதே போல சைவக் கோயில்களுக்குச் சொந்தமான விசாலமான பெரும் காணி களும் அவர்களது மேற்பார்வையிலேயே இருந்தன. எனவே, பாலனின் அப்புவுக்கு ஏற்பட்ட பிரச்சினை ஆச்சிக்கும் தலை காட்டியது. அப்புவுக்குக் கள் இறக்கத் தென்னை மரங்களைக் கொடுக்க மறுத்த சைவ வேளாளர் ஆச்சிக்குப் புற்காணிக ளைக் கொடுக்காமல் பழி வாங்க முனைந் தனர். தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களுக்கு நீதிமன்றத்தில் ஏற்படுத்திய காயம் வலிப் பைக் கொடுத்து நினைக்க வைத்துக் கொண்டே இருந்தது ஒரே ஒரு தாழ்த்தப் பட்டவருக்குத் தான் அப்பொழுது ஒரே யொரு கோயில் காணிப் பராமரிப்புக்கு இருந் தது. அதை அவர் ஆச்சிக்குக் கொடுத் தார். இது விசாலமான பெரிய புற்காணி அல்ல. இதில் வளரும புல்லை இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே
மல்லிகை ஜூலை 2009 窑 47

Page 26
அறுத்து வியாபாரம் செய்ய முடியும். மிகுதிக் காலத்துக்கு என்ன செய்வது? பாலன் குடும்பம் காற்றையா குடிப்பது?
ஆச்சியன் சக தொழிலாளிப் பெண்கள் காணிக்காரருக்குத் தெரியாமல் இடைக் கிடை ஆச்சியைப் புல்லறுக்க உதவி ஆச்சியின் வியாபாரத்துக்கு உயிர் கொடுத் தனர். வேறொரு வகையிலும் ஆச்சிக்கு உதவி கசிந்தது.
பாலனின் பெத்தாச்சி- ஆச்சியின் தாயார் வெள்ளாளக் குடும்பங்களோடு கொஞ்சம் நெருக்கமாக இருந்தார். யாழ் நகர் பெரிய கடைக்குச் சென்று தினசரி மரக்கறி, இறைச்சி, கொள்வனவு செய்து இக் குடும்பங்களுக்கு வழங்குவார். இந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி, குடும்பத் தலைவிமாரோடு பாலனின் ஆச்சிக்காகப் பரிந்துரைத்து பெத்தாச்சி சில புல் வளவு களை எடுத்துக் கொடுப்பார். பெரும்பாலும் இவைகள் ஏனயை புல் வியாபாரிகளால்
விலை அதிகரிப்பை முன் வைத்தோ,
வேறு காரணங்களுக்காகவே கழித்து விடப்பட்டவையாக இருக்கும். விலையும் ஒட்டிக்கு இரட்டியாக இருக்கும். இவை களை ஆச்சியிடம் தள்ளிவிட மற்றுமொரு காரணமும் இருந்தது. பெரும்பாலும் இந்தப் புற்கானிகள் மாரியை அண்டிய காலத்திலேயே ஆச்சியை வந்து சேரும். மழை பொழியத் தொடங்கினால் வெள்ளத் துக்குப் புல் பழுத்து, அழுகி விடும். கிராக்கி இருக்காது. எனவே தான் ஆச்சியின் அந்தரத்தைக் கண்டு காணிக்காரர் பணத் தைப் பெற்றுக் கொண்டு ஆச்சியிடம் தள்ளி விடுவர். அதைவிடுத்துப் பாலனின் பெத்தாச்சியின் கதையை விழுங்கி
ஆச்சிக்குக் கருனை காட்டினார்கள் என
ஒட்டுமொத்தமாகச் சொல்ல முடியாது. திடுகூறாகக் காணிக்காரர் ஆள் விடுவீனம். ஆச்சி ஆத்துப்ப பறந்து ஓடுவா. "காசைக் கட்டிப் போட்டுத் திறப்பைக் கொண்டு போ.” எனக் காணிக்கார அம்மா றாங்கியா கச் சொல்வா. இந் நேரங்களில் பாலனும் பிரசன்னமாக இருப்பதுண்டு. "காசுக்கு எங்க போகப் போற? ஆச்சியோடு திரும்பி வருகையில் பாலன் விசாரிப்பான். "ஆச்சி முத்துவிட்டச் சொன்னா ஆரிட்டயும் பிரட் டித் தருவாள். நகை நட்டையாவது தரு வாள்." ஆச்சி உறுதியாகச் சொல்வது பால னுக்கு ஆச்சரியமாக இருக்கும். "உனக் குக் கிடைச்ச மாதிரி இப்புடிச் சகோதரிமார் வேற ஆருக்குக் கிடைச்சிருக்கு?’ எனப் பாலன் தனது சிறிய தாய்மாரை உசத்திக் கதைக்க, “எங்களுக்கு ஆசைக்கொரு ஆண் சகோதரமில்ல. நாங்கள் தான் ஆணுக்கு ஆணாகவும் பெண்ணுக்குப் பெண்ணாக
வும் இருக்கிறமெடா" என வீராங்கனை
யாகக் கர்ச்சிப்பா ஆச்சி.
嫌 புல்லு வளவின் குத்தகைக் காசைக்
கொடுப்பதுக்கு ஆச்சி சீட்டு வழியையும் துணை கொள்வதுண்டு. 'சீட்டு’ எனும்
போது சிலர் சூது விளையாட்டென நினை
த்து ஆச்சிக்கு அதுவும் தெரியுமா? எனக் கேட்கக் கூடும். அதுதான் இல்லை! இது அன்றைய (இப்போதும் கூடத் தான்) கிராமங்களில் பழக்கத்திலிருந்த சேமிப்பு
முறை. அப்போ சேமிப்பு வங்கிகள் இருந்த
தில்லை. பணக் கையாளலில் கட்டுப்பாட் டைக் கையாள முடியாதவர்கள் மற்றும் பாதுகாப்பற்ற இல்லங்களில் வசிக்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாடும் ஏழைகள் நம்பிக்கைக்குரியவர்களிடம் நாளாந்தம்
தங்களது செலவுக்கு மேலதிகமாகவிருக்
மல்லிகை ஜூலை 2009 : 48

கும் சிறுதொகைப் பணத்தைக் கொடுப்பர். கால ஓட்டத்தில் இது பெரும் முதலாகத் தேறி விடும். சடுதியான தேவைகளுக்குத் திருப்பி வாங்கிக் கொள்வர். இதைவிட, இன்னொரு கிராமியச் சேமிப்புமுறை தான் சீட்டுப் பிடித்தல். பத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து கொள்வர். இவர்கள் மாதந்தம் பணம் கட்ட வேண்டும் இத் தொகை ஒரே அளவாக இருக்கும். பஸ்சில் பயணி களுக்குக் கொடுக்கும் ரிக்கற் கணியத்தில் கடதாசித் துண்டுகளை நறுக்கி- ஒவ் வொன்றிலும் சீட்டு உறுப்பினரின் பெயரை எழுதித் தகரப் பேணியொன்றுக்குள் வைத்துக் கொள்வர். அதே எண்ணிக்கை யான கடதாசித் துண்டுகளை நறுக்கி அதில் ஒரு துண்டில் ‘வெற்றி என எழுதி அனைத்தையும் உருட்டி இன்னொரு தகரப் பேணிக்குள் போட்டுக் கொள்வர். ஒவ்வொரு பேணியும் ஒவ்வொருவரிடம் கொடுக்கப்படும். இருவரும் ஒரே நேரத்தில் உருட்டிப் போட்ட துண்டொன்றை பேணி களுக்குள்ளிருக்கும் கடதாசித் துண்டை எடுப்பார். ‘வெற்றி என எழுதப்பட்ட துண் டுள்ள பேணியை வைத்திருப்பவர் தான் எடுத்த துண்டை விரித்து விளாங்கி (Blank (வெற்று) என்ற ஆங்கிலச் சொல்லே தமிழி லில் திரிபுபடுத்தபட்டு விளாங்கி என்றாக் கப்பட்டிருக்கும்) என்றால் இருவரும் எடுத்த துண்டுகளை ஒதுக்கமாக வைத்து விடுவர். வெற்றி என்றால் மற்றவர் தான் எடுத்த துண்டை விரித்து அதிலுள்ள பெயரை வாசிப்பார். அப்பெயருக்குரியவருக்கே அவ் வார அல்லது மாதச் சீட்டுக் காசு கொடுக் கப்படும். இதை "உருட்டுச் சீட்டு' என்பர்.
சீட்டுப் பிடிப்பில் இன்னொரு முறைமை "யும் இருந்தது. வாராந்தம் அல்லது மாதா
ந்தம் சீட்டு உறுப்பினர்கள் கூடிக் கட்டுக் காசுக்கு மேலான ஒரு தொகையை ஒருவர் சொல்ல, காசு தேவைப்படுபவர்கள் அத் தொகைக்குச் சற்றுக் கூடுதலான தொகை யைச் சொல்வார். பனந் தேவைப்படுவபர் கள் இப்படித் தொகையைக் கூட்டிக் கூட் டிக் கொண்டே போவார்கள். கேள்விகள் நின்ற பின் கடைசியாகக் கேட்டவருக்கு மொத்தத் தொகையிலிருந்து கேட்ட தொகை கழிக்கப்பட்டு எஞ்சியது கிடைக் கும். மொத்த உறுப்பினர்களின் தொகை யால் தொகை பிரிக்கப்பட்டு வரும் தொகையே கட்டுப் பணமாகும். இதை ஏலச் சீட்டு என்பர்.
இத்தகைய சீட்டுகளை ஆச்சியும் முன் னின்று நடத்தியுள்ளார். இதை ஒழுங்கு செய்து நடத்துவதன் மூலமாக ஆச்சிக்கு முதல் சீட்டுப் பணம் மொத்தமாகத் தேறும். இது வட்டி இல்லாது கிடைக் குந் தொகை. இத் தொகையைப் புல்லுத் தோட்டச் சொந்தக்காரருக்குக் கொடுத்து அவர்க ளோடானா பிசகை வெட்டிக் கொள்வார். புல் விற்பனையில் கிடைக்கும் பணத்தில் சீட்டுக் காசைக் கட்டி வருவார்.
கிராமத்தின் இன்னொரு வீட்டுச் சேமிப்பு முறையும் இந்த இடத்தில் கூறி விடுவது நன்றெனப்படுகிறது. இது அரிசிச் சீட்டு. காசுக்குப் பதிலாக அரிசியே இந்தச் சீட்டில் இடம் பெறும். ஏனைய நடைமுறை கள் ஏற்கனவே சொன்னது போலி ருக்கும். சர்வோதய இயக்கம் சிபாரிசு செய்த பிடி அரிசித் திட்டத்தைச் சிலருக்குத் தெரிந்தி ருக்கும். இதே வகையான அரிசிச் சேமிப்பு அன்றைய யாழ்ப்பாணக் கிராமங்களில் இருந்திருக்கிறது. இல்லத்தரசிகள் கொதிக் கும் உலைக்குள் அரசி போடும் பொழுது
மல்லிகை ஜூலை 2009 奉 49

Page 27
ஒரு பிடி அரிசியைக் கையால் அள்ளி ஒரு சிறு பானைக்குள்ளேயோ அல்லது பெரிய தகரப் பேணிக்குள்ளேயோ போட்டு வருவர். காலக் கிரமத் தில் இது ஒரு கொத்துக்கு மேலாகப் பெருகிவிடும். பணக் கஷ்டம் ஏற்படும் பொழுது இது சோறாக்க உதவும். குடும்பத்தில் நினையாப் பிரகாரமாக ஏற் படக் கூடிய பெண்கள் பூப்படைதல் போன்ற நிகழ்வுகளுக்கும் இச் சேமிப்புக் கை கொடுக்கும். அத்தோடு சீதனக் கொடுமை யால் வீட்டுக்குள் குந்திவிடும் யுவதிகள் இப்படியாகச் சேமிக்கும் அரிசியை வீட் டுக்குள்ளேயே வியாபாரம் செய்து உடை கள் அல்லது நகைகள் வாங்குவதுமுண்டு.
வருடத்தின் இறுதிக் கந்தாயத்தில் புல்லுத் தோட்டங்களில் புல் இருக்காது. கையால் பொத்திப் பிடித்து அறுக்கக் கூடிய புல் கூடக் காணப்படாது. இக்காலங் களில் யாழ்ப்பாணம் முற்ற வெளியில் தரையோடு ஒட்டிக் கிடக்கும் புல்லை உளவாரம் கொண்டு செதுக்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். யாழ்ப்பாணத் தில் பாரிய கால் நடைப் பண்ணைகள் இன்று போல் அன்றும் இல்லை. சில வீடுகளில் ஒன்றிரண்டு பசுக்கள், அல்லது ஆடுகளை வளர்ப்பார்கள். இவைகளில் கறக்கும் பாலை வீட்டுத் தேவைக்கும் எடுத்துக் கொண்டு மிகுதியைத் தேநீர் கடைகளுக்கோ அல்லது பணம் கொடுத்து வாங்கக் கூடியவர்களுக்கோ விற்பர். இதனால் குடும்ப வருமானம் அதிகரிக்கும். சீதனப் பிசாசின் அச்சுறுத்தலால் தமிழ்ச் சமூகம் பெண் குழந்தைன் பிறப்பதை விரும்புவதில்லை. ஆனால், தம் வளர்ப்பி லிருக்கும் பசு, நாகு கன்றை ஈன்றால் கொண்டாடுவர். அதே போல் ஆடு கிடாய்க் குட்டி ஈன்றால் கொண்டாடுவர். இந்த நாகு வளர்ந்து கன்றின்றால் பால் விற்கலா
மென்ற எதிர்பார்ப்பு. கிடாயை இறைச்சிக்கு விற்கலாம். அதற்கு நல்ல மானம் இருக் கும். இதன் காரணமாகத் தமது சொந்த லாபத்துக்காக நாகுவையும், கிடாயையும் ஊட்டி, ஊட்டி வளர்ப்பர். அவைகள் மொழு, மொழுவென்று வளரும்.
யாழ் நகரில் புல் தேவைப்படுவது இக் கால் நடைகளுக்குத் தான். பிண்ணாக்கு, வைக்கோல் என்பனவும் இவைகளது உணவாகப் பாவிக்கப்படும். முற்றவெளி யில் நீண்ட கயிற்றில் இவைகளைக் கட்டி வைத்தும் முற்றவெளிப் புல்லை மேய வைப்பர். இறைச்சிக்கெனக் கொள்வனவு செய்யும் செம்மறி ஆடுகளை இறைச்சி வியா பாரிகள் பட்டியாகக் கொண்டும் இங்கு மேய விடுவர். மாரி காலத்தில் முள்முருக்கு, கிளுவை, ஆல், அரசு, பலா போன்றவற் றின் இலைகளும் இக்கால் நடைகளுக்கு உணவாகும். பெரும்பாலும் வீட்டிலி கட்டி வளர்க்கப்படும் கால் நடைக்களுக்கே பாலனின் ஆச்சி போன்ற புல் வியாபாரிக ளின் புல் பணம் கொடுத்து வாங்கி உண்ணக் கொடுக்கப்படும். இந்தப் புல் விற்பனை நிலையத்தைத் தற்பொழுது அடையாளப்படுத்துவது சிரமம்! இந்த வெற்று நிலங்களைக் கட்டிடங்கள் காவு கொண்டு விட்டன. முன்னர் மதுரமித்திரன் கூல் பாருக்குப் பின்னால் காணப்பட்ட சிறு இடத்தில் இந்த வியாபாரம் நடைபெற்றது. அதன் பின்னர் தற்பொழுது சத்திரத்துக்கு அருகே அமைந்திருக்கும் வைரவக் கோயில் சூழலில் காணப்பட்ட வெற்று நிலத்தில் இது நடைபெற்றது. தற்பொழுது கொட்டடிச் சந்தியில் இவ்வியாபாரம் செய்யப்படுகிறது. அப்பொழுது பத்துக்கும் குறைவான புல் வியாபாரப் பெண்களே இதைச் செய்தனர். இந்த வியாபாரம் நான்கு மணிக்குப் பின்னர் ஆரம்பித்து இரவு ஏழரை மணியோடு முடிந்துவிடும். இந்த வியாபாரி கள் தாம் குந்தி இருந்து வியாபாரம் நடத்
மல்லிகை ஜூலை 2009 率 50

தும் துண்டு நிலத்துக்கு அன்று வாடகைக் காசாக பதினைந்து சதம் கொடுத்ததாக ஞாபகம்.
மண்ட்ைதீவுக்கு அருகேயுள்ள சிறுத் தீவுக்குச் சென்றும் இப்பெண் தொழிலா ளிகள் புல் அரிவதுண்டு. இன்று இத்தீவில் என்ன நடக்கிறதென்று எத்தனை யாழ்ப் பாணத்தாருக்குத் தெரியும்? பக்கத்தே யுள்ள மண்டை தீவில் இராணுவம் குவிக் கப்பட்டிருப்பதால், மக்கள் நத்துவது கிடை யாது. யாழ் மண்ணில் யுத்தம் முனைப்புப் கொள்ளாமலிருந்த காலத்தில் மீனவர்க ளின் வாடிகள் இத்தீவில் இருந்துள்ளன. சன நடமாட்டமும் இருந்தது. ஆனால் இப் பொழுது அந்த நிலை இல்லை. இங்கு புல் வளர்ந்து சரிந்து கிடக்கும். வெய்யிலுக்குக் காய்ந்தும் கருகிவிடும். மழைக்குச் சிலிர்த்து வளரும் புல்லை அரிந்து கொண்டு வருவதற்காகப் புல் வியாபாரிகள் வள்ளங் களை ஏற்பாடு செய்து அங்கு செல்வ துண்டு. இத்தீவில் புல்லைப் போல பாம்பும் மலிந்திருந்தது. மனிதருக்குத் தீங்கை ஏற்படுத்தாத சுருட்டைப் பாம்பினமோ இத்தீவில் காணப்பட்டது. சில சமயங் களில் இச்சுருட்டைப் பாம்பையும் சில வியாபாரிகள் புல்லோடு யாழ்ப்பாணத் துக்குக் கொண்டு வருவதுண்டு. இந்த வியாபாரிகளோடு ஆச்சியும் சேர்ந்து, தன் குடும்ப நகர்வுக்காக இத் தீவுக்குச் சென்ற துண்டு. "சுறுட்டைப் பாம்பு பெருந் தொல்லை" என ஆச்சி பாலனுக்குச் சொல் லியதுமுண்டு. பாலன் தானும் வரப் போற தெண்டால் மறித்து விடுவா.
தற்போதைய பொம்மை வெளியை அண்டிய சூழலை அந்தக் காலத்தில் பறைச் சேரி வெளியென அடையாளப்படுத்தினர். இந்தச் சாதிய முத்திரை எதற்காக? அந்த நிலப்பரப்புக்குக் குத்தப்பட்டதென்பது புரியாத புதிர்தான். ஏனெனில் இது வயல்
சார்ந்த இடமாகவே அன்று இருந்தது. இன்று போல் குடியிருப்பல்ல! மாரி காலத் தில் அங்குள்ள வெட்ட வெளிகளிலும் தெரு வோரங்களிலும் பசுமையான பச்சை நிற மான விதவிதமான புல் இனங்கள் தளிர் த்து நிற்கும். ஆச்சி இங்கும் கடகத்தோடும் சத்தகத்தோடும் சென்று புல் அரிந்திருக்கி றார். இங்கு காணப்படும் புல் இனங்களில் கோழிச்சூடனும் ஒன்று. காக்கைதீவுச் சந்தியில் கொச்சியான் ஒருத்தர் தேநீர்க் கடை வைத்திருந்தார். அக்கடையில் குடித்த தேநீரும் மோதகமும் இன்னமும் பாலனின் நாக்கில் ருசிக்கும்.
நெல் வயல்களில் களை பிடுங்குவதுக் கும் ஆச்சி சென்றதுண்டு. இது நாட் கூலி வேலை. நெற்கதிரோடு சேர்ந்து வளரும் புல் பூண்டுகளை வேலை முடிந்த பின்னர் கொண்டு வந்து ஆச்சி விற்பதுண்டு. களை பிடுங்குவதுக்குப் பாலனும் ஆச்சியோடு சென்றிருக்கிறான். "நீநெல்லைப் புடுங்கிற. வயல்காறன் கண்டாப் பேசப் போறன் எனக்கும் வேலை தரமாட்டான்.' புல் எனப் பாலன் பிடுங்கிய நெற்கதிர்களைப் பறித்து ஆச்சி மீண்டும் நடுவா. அவனைப் புடுங்க 6S-LDITILIT.
ஆச்சி புல் அரிந்து விற்ற புல்லுத் தோட் டக் காணிகள் இப்பொழுது குடியேற்றங் களாகிவிட்டன. சிலவற்றை அரசின் வீட்டுத் திட்டங்களும் கபளிகரம் செய்து விட்டன. பாலன் இப்பொழுது எப்போவா வது அக்காணிகள் இருக்கும் சூழலுக்குப் போனால், அவன் மனம் சஞ்சலப்படும். பச்சை நிறக் கம்பளம் விரித்தது போன்ற அந்தப் பசுந் தரைகளைக் காண முடியாது. அத்தோடு அவன் மனமடிப்புகளுக்குள் குடி
கொண்டிருக்கும் ஆச்சியோடான பசுமை
யான உணர்வுகள் உயிர் பெற்று அவன் மனதில் ஊரும்,
தொடரும்
மல்லிகை ஜூலை 2009 季 51

Page 28
அந்திமாலை எவ்வளவு அற்புதமான படைப்பு. வண்ண மயமான ஒளிக் குழம்பில் வானமும் கடலும் தம் அழகை இரட்டிப்பாக்கிக் கொண்டிருந்தன. கொடுமை செய்யும் வெம்மை இல்லை. பார்ப்பவரின் கண்களைக் கூசச் செய்யும் கடுமையான ஒளியும் இல்லை. மிதமான ஒளிவெள்ளத்தில் அந்தக் கடலும் வானமும் போட்டி போட்டுக் கொண்டு தம் அழகின் அதிசயங்களை வெளிப்படுத்திக் காண்போரைத் தம் வசமாக்கிக்
கொண்டிருந்தன.
கடலின் முடிவிலே வானம் தொடங்குவது போலக் கிடந்தாலும், கடலின் எல்லையைக் காண்பதற்காய் அதன் முதுகில் படகு விடுவோனுக்குத் தான் தெரியும் கடல் வேறு வான் வேறென்று. கரையில் இருந்து பார்ப்பவனுக்கு எப்படித் தெரியும் இந்த ரகசியம்.
கடலும் வானும் வேறு வேறெனினும் கூட, அவை பல வேளைகளில் ஆத்மார்த்தமான தொடர்புகளை வைத்துக் கொண்டுதாணிருந்தன. இத் தொடர்புகளால் தான் அவை இரண்டும் நீண்ட காலம் அழகாக இருக்க முடிந்தது.
கடல், வானம் என்ற இரண்டின் அழகையும் மேலும் மெருகூட்டுவதற்காகத்தான் போலும், இறைவன் அவை இரண்டிலும் மீன்களைப் படைத்தான். கடலின் அலைகளில் மோதித் துள்ளி விளையாடும் மீன் கூட்டம் எவ்வளவு சந்தோசத்துடன் அதில் வாழ்ந்து வருகின்றன. தாம் வாழும் அந்தக் கடல் மீது கொண்ட அன்பின் மிகையாலோ அன்றி இதனை விடச் சிறந்த இடம் வேறேதும் இருக்க முடியாதென்று கருதித் தானோ அந்த மீன் கூட்டம் தம் தாய் வீட்டில் இடமின்றேல் எம் உயிர் எமக்கு வேண்டாம் என்ற வரத்தினை அவை இங்கு பெற்று வந்தன.
எல்லையில்லாத வானத்தில் பரவ விடப்பட்ட மீன்குஞ்சுகளாய் விண்மீன்கள் கண்ணைச் சிமிட்டிக் காண்போர் நெஞ்சைக் கொள்ளையடிக்கின்றன. கடல் மீன்களோ எனில் அலைகளில் பாய்ந்து கொண்டே வித்தை காட்ட, அம்மாடி இந்த விண்மீன்களோ மேகப் பஞ்சணையில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டல்லவா கண்ணடிக்கின்றன. “LuTir!...... பார்!’ என்று எம் தீப்பந்தக் கண்களுக்கு எண்ணெய் இடுகின்றன. என்ன மாயம்
என்ன வித்தை
மல்லிகை ஜூலை 2009 3 52
 

米米米米
அந்தோ பரிதாபம் யார் கண் பட் டதோ. ? இந்தச் சந்திரக் காட்சியை முழுதுமாய் விழுங்கி விட்டதே அமாவாசை ஏகாதிபத்தியம். அந்த அமாவாசை அரக்கனுக்குக் கடலும் வானமும் பரந்த வெளிகளாகவே தெரிந்தன. அவற்றுக் கிடையிலான வித்தியாசத்தினைப் புல்ல றிவு படைத்த அந்த அமாவாசை அரக்க னால் இனங் கண்டு கொள்ள முடியவில் லையோ? அவை இரண்டையும் வெளி களாகவே அதன் பேதமைக் கண்கள் கண்டதால் இரண்டையும் ஒன்றென எண்ணிற்றோ..? அதன் கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் இரண்டு தானோ..? ஒன்று வெளி, மற்றையது மீன்கள். கடலும் வானமும் வெளிகள் தாமென்றாலும், இரண்டும் ஒன்றாகுமா..? பெயரில் மீன்கள்
என்றாலும் கடல் மீனும், விண்மீனும்
வேறல்லவா.
அமாவாசை அரக்கனின் கரிய போர் வையால் மூடப்பட்ட மீன்களுக்குக் காற் றோட்டமின்மையால் மூச்சுத் திணறியது. இருட்டுப் பூதத்தைப் பார்த்துப் பார்த்து அதன் கண்களும் ஒளியிழந்தன. எத் தனை காலம் தான் இப்படி இருப்பது? இந்த இருட்டுப் பூதம் எப்போது எம்மை விட்டுப் போகும் என அந்த மீன்களால் எண்ணவே முடியவில்லை. தம் விதியை நினைத்து நினைத்துப் பெருமூச்சு விட்டு இளைத்துப் போயின. பல மீன்கள் ஒளி கிடைக்கும் எனக் காத்திருந்தே, தம் வாழ்வை இருளோடு முடித்துக் கொண் டன. யாரைக் கேட்பது, என்று தான் நமக்கு விடிவு வரும்?
米米米米
கிழக்கில் விடிவெள்ளி உதித்தது. ஒளி யின்றிக் கண் சோர்ந்திருந்த மீன்களுக் கோர் நம்பிக்கைக் கீற்றாய் மலர்ந்தது விடி வெள்ளி. ஆம், மீன்களுக்கெல்லாம் விடிவு காலம் வந்தது. ஓர் நீண்ட இரவு ஏகாதிபத் தியத்தைச் செலுத்தி வந்த அந்த அமா வாசை அரக்கன் இன்று தன் ஊருக்குச் செல்லப் போகின்றான். ஏகாதிபத்திய இருட் சிறைக்குள் அழுந்திக் கிடந்த மீன் களையெல்லாம் உலகத்தின்பங்களைத் துய்ப்பதற்கு வழி செய்து விட்டுப் போகப் போகிறான்.
அவன் இப்பவும் மறந்து விட்டான். தான் வந்த வேளை கடலையும், வானத் தையும் ஒரே வெளியாக்கி அதை ஒரே இருட் கம்பளத்தால் மூடி வைத்திருந்த அந்த அரக்கனுக்கு இன்று என்ன அவ சரம். இரண்டும் வெளிகள் தானே? இரண் டும் மீன்கள் தானே. பிறகேன் இவற்றைப் பிரிப்பான் என்று அவன் எண்ணினானோ? இல்லை ஊருக்குப் போக வேண்டிய அவச ரத்திலோ, இரண்டையும் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த அமாவாசை அரக் கனுக்கு இறுதி வரை எழவேயில்லை.
அரக்கனுக்கு இந்த மீன்களிடம் அனுதாபம் பிறந்தது. தனது செய்கைக ளுக்காக வருந்தியது. தன் காலத்தில் தான் இதுகள் சரியாக அல்லல் பட்டுட்து கள். நான் போகும் போதாவது இதுகளுக்கு நல்லதைச் செய்ய வேண்டும் என அந்த அரக்கன் எண்ணியது. அதன் நீண்ட சிந்த னையின் பயனாய் எதிர்காலம் முழுவதும்
அந்த மீன்களுக்கு நல்ல கெளரவமான
மல்லிகை ஜூலை 2009 & 53

Page 29
வாழ்க்கையை- என் போன்ற அரக்கர்க ளின் கொடியாந்தரம் இல்லாத வாழ்க் கையை வழங்க வேண்டும் என விருப்பம் கொண்டது. எல்லையற்ற எதிர்காலம் முழுவதற்கும் ஒளி நிறைந்த நல்ல வாழ்க்கையை வழங்கும், திறன் வாய்ந்த அமுதம் நிறைந்த சூரியக் கலசத்தை அம்மீன்களிடம் வழங்கி விட்டுத் தன் கடன் முடிந்தது என எண்ணி அந்த அமாவாசை அரக்கன் கப்பலேறிவிட்டான்.
.米米米米
இப்பொழுது வைகறைக் காலம். அமாவாசை அரக்கன் தம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து போன மகிழ்ச்சியில் எங்கும் விழாக் கோலம். கடல், வானம் மட்டுமன்றி, பறவைகள் கூடத் தமது மகிழ்வைத் தெரிவித்துக் கொண்டிருந்தன. நல்ல ஒளி நிறைந்த வாழ்வை தரவல்ல அமுத சூரிய கலசத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையில் மரங்கள் தம் மலர்க் கண்களை அகலத் திறந்து வைத்திருந்தன. பறவை கள் தமது குரலில் யாழ் மீட்டின. கடலுக் கும், வானத்துக்கும் பொதுவான இடத்தில்கடலின் விளிம்பில், வானத்தின் அடியில் தங்கத் தாம்பாளமாய் அமுத சூரியக் கலசம் உதயமாகியது.
ஆகா. என்ன இளஞ்சூடு. என்னே இளம் ஒளி. அமுத சூரியக் கலசத்திலி ருந்து பொங்கியெழுந்த செங்குழம்பு. கடலையும் வானத்தையும் கூட செம்மை யாக்கின. ஆகா. எவ்வளவு செம்மை. எவ்வளவு வண்மை அற்புதம் அற்புதம் திவ்ய ஒளிவெள்ளம் நம் வீட்டுக்கே வந்து விட்டதே, பிறகே ன் நாம் வீதியில்
வெளியே நிற்பான் என்று இரண்டிடத்து மீன்களும் எண்ணிற்றுப் போலும். அவை தத்தம் இடங்களுள் சென்று மகிழ்ச்சியில் திளைக்க ஆரம்பித்தன.
உதய சூரியனும் தனது முழு வடிவ த்தையும் வெளிக்காட்ட ஆரம்பித்தன.
米米米米
சாதாரணமாகப் பார்த்தால் இது நண்பகல், உச்சி வெயில் என்றுதான் நாம் நினைப்போம். வேறு ஒன்றுமே எமக்குத் தெரிவதில்லையே.
கடலா வானமா பெரியது? கடல் பெரிது தான். ஆனாலும், வானம் அதைவிடப் பெரிதல்லவா? இதில் தான் பிரச்சினையே. இரண்டு வெளிகளையும் ஒன்றாக எடைபோட்டு அவை இரண்டுக்கும் பொது வாக அமுதச் சூரியக் கலசத்தை அமா வாசை அரக்கன் கொடுத்திருந்தான் அல் லவா? ஆரம்பத்தில் கடலும் வானமும் அதைச் சமமாகப் பகிர்ந்து கொண்டது உண்மை தான். ஆனால், வானம் தன்னு டைய நீண்ட வியாபக அளவைப் பயன் படுத்திச் சூரிய அமுதத்தை மெல்ல மெல் லத் தம் பக்கம் நகர்த்தி இப்போது அதை வானத்தின் உச்சிக்கே அபகரித்துக் கொண்டு வந்துவிட்டது. சூரியக் கலசம் தம் கண் முன்னே தம்மை விட்டுப் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த கடலுக்கும் அதில் வாழும் மீன்களுக்கும் இதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. தாங்கள் வானத்தி லும் சிறியவர்கள் என்பதால் தான் அந்தக் சூரியக் கலசம் வானத்தவருக்கு அதிக பங்குடைமையானது என நினைக்கும்
மல்லிகை ஜூலை 2009 & 54

போதெல்லாம் இவர்களுக்குத் துன்பம் தாங்க முடியாமல் போய்விடும்.
அமுத சூரியக் கலசத்தை வானத்தவர் தம்மகத்தே கொண்டு சென்றதனால், அங்கெல்லாம் ஒரே பிரகாசம். அந்த மகிழ்ச்சியால் வானுலகம் திக்குமுக்காடி யது. அந்த அமுதத்தைக் கடலிற்குச் சம பாதி பங்குடைய அமுதத்தைத் தாமே ஏக போகமாக அநுபவித்ததால், வந்த மயக் கத்தினால் வானத்தவர் தடுமாறினர்- தடம் மாறினர். கடலை அற்பப் புழுவாய் எண்ணி எள்ளி நகையாடினர்.
வானம் முழுவதும் ஒளிமயம். ஆனால், கடலுக்கு நிறைவாகக் கிடைக்க வேண் டிய சூரிய அமுதத்தை வானத்தார் கிள் ளித் தெளித்தனர். இதனால் கடலின் முழுப் பரப்புக்கும் ஒளி கிடைப்பதில்லை. மேற்பரப்பு மட்டும் ஒளியை பெற்று வந்தது. அதன் பெரும்பான்மையான ஆழ்கடல் பரப்புக்கு ஒளியே இல்லை. பெலாயிக் பகுதிகளுக்குச் சென்று வரும் மீன் கூட்டங் கள் அங்கெல்லாம் ஒளி கிடைப்பதே இல்லை என்றும் அங்கு வாழ்கின்ற உயிரி னங்களுக்கு அமுதச் சூரியக் கலசம் கிடைத்த செய்தி தெரியதென்றும் அவை இப்பொழுதும் அமாவாசை அரக்கனின் ஆட்சி நடைபெறுகிறது என்றே தாம் நினைத்துக் கொண்டிருப்பதாகவும் தமக் குக் கூறியதாக அவை மேற்பரப்பில் உள்ள மீனினங்களுக்குப் புதினம் சொல்லும். இந்த மீன்களும் அவற்றின் பரிதாப நிலை கண்டு மனமிரங்கும். வேறு என்ன தான் செய்ய முடியும்?
米米米米
கடலின் இதமான குளிர்மை வானத் தவரைக் கவர்ந்தது. தம்மிடத்தில் எவ்வ ளவு தான் ஒளிச் செல்வம் கொட்டிக் கிடந் தாலும், நல்ல குளிர்மை எமக்கில்லையே, இதில் நாம் ஏழ்மைப் பட்டுள்ளோமே என்ற கவலை வானத்தவரை ஆட்கொண்டது. அந்தக் கவலை பிறகு கொதியாக மாறியது. எப்படியாவது அந்தக் கடலிடமி ருந்து குளிர்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென வானத்தவர் தீர்மானித்த னர். நீண்ட மந்திராலோசனையின் பின் அமுத சூரியக் கலசத்தைப் பயன்படுத்தி இலகுவாகக் குளிர்மை தரும் நீரைக் கடலிலிருந்து அபகரித்துக் கொள்வது என்ற தீர்மானம் நிறைவேற்பட்டது. சூரியனைக் கொண்டு கடலை உறிஞ்சி உறிஞ்சி வானத்தவர் குடிக்க ஆரம்பித்த னர். குடித்தவர்கள் 'கம்மாயிருந்தார் களா..? நாம் எமது வானத்தின் நிறமான நீலவர்ணத்தை எமது சகோதரர்களான கடலிற்கு வழங்கி அதற்கும் அழகூட்டுகின் றோம். இந்தச் சகோதர மனப்பான்மை எம்மையன்றி வேறு யாருக்கு வரும் எனத் தம்பட்டமடித்துக் கொண்டல்லவா இருக் கிறார்கள்.
வானத்தவரின் செய்கைக் கடல் மீன்களுக்கு வயிற்றில் புளியைக் கலந்தது போலக் கிடந்தது. எங்கே தம் வாழ்விட மாம், கடல் நீர் முழுவதையும் வானத்தார் உறிஞ்சி விடுவாரோ என்ற பயம் இளமீன் களுக்குத் தலைக்கேறியது. ஒருவேளை நீரை உறிஞ்சி உறிஞ்சிக் கடலின்
- உப்பைச் செறிவாக்கி எம் இனத்தை
நீடித்து வாழவிடாமல் வானகத்தார் செய்து விடுவாரோ எனக் கிழமீன்கள் தமக்குள் புறுபுறுத்துக் கொண்டன. இளமீன்கள் சில
மல்லிகை ஜூலை 2009 & 55

Page 30
ஒன்று சேர்ந்து கடலின் அலைக் கரங்க ளினால் ஓங்கி அடித்து அடித்து வானத் தவருக்குத் தமது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கிவிட்டன.
米冰米米
எவ்வளவு காலத்துக்குத் தான் சூரியன் நடுவானில் நிற்கும்? அமுத சூரியக் கலசத்தைத் தன் முழுமையான சொத்தா கக் கொண்டிருந்தாலும், வானத்தவரால் தொடர்ந்து களிப்புடன் இருக்க இயல வில்லை. இச்சூரிய கலசம் நல்ல ஒளி முதல் தான். ஆனாலும், இப்போது ஒளியை விட வெப்பமே கூட வருகிறது. இந்த வெம்மை வானத்தவரைக் கடுமையாகப்
பாதித்தது.
அமுத சூரியக் கலசம் வானத்தவரின் செயலால் தன் நிலை இழந்தது. மேற்குப் பாதாளத்தை நோக்கி அது சரிய ஆரம் பித்தது. இப் பரிதாபத்தைச் சற்றும் எதிர் பார்க்காத வானத்தவர் செய்வதறியாது திகி லுற்றனர். சூரியக் கலசத்தை மீளத் திருப்பி நிமிர்த்தும் ஆற்றல் தமக்கில்லை என்பது வானத்தவருக்கு நன்கு தெரியும். தமது வானுலகம் ஒளியிழந்து பொலிவிழந்து வருவதைக் கண்ட வானத்தவர், அப்பலோ என்ற ஒளிக் கடவுளிடத்தில் நேரடியாகச் முற்றும் அறிந்தவரான அந்த அப்பலோத் தெய்வம் யோசித்தது. வானத்தவர் பிழை செய்திருந் தாலும், சூரிய இறப்பால் பாதிக்கப்படப் போவது வானம் மட்டுமல்ல, கடலும்
சென்று தஞ்சமடைந்தனர்.
கூடத்தான். ஆகையால், வானத்திற்காக இல்லாவிட்டாலும், கடலிற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதன்
மனதில் எழுந்தது. நீண்ட மெளனத்தின் பின் அப்பலோக் கடவுள் கூறியது, ‘வானத் தவரே உமது தீச் செயலால் ஒப்பற்ற அமுத சூரியக் கலசத்தின் முடிவு தவிர்க்க முடியாததாகி விட்டது. எனினும், உம்மீது அருள் சுரந்து வெண்ணிலா ஒன்றினைத் தருகின்றோம். அதனையாவது நீங்கள் சரியாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதில் விலகி நடந்தீர்களெனில் கடலவர் தம் எதிர்காலத்துக்குத் தேவையான ஒளியைச் சுயமாகவே பெற்றுக் கொள்ளும் உரிமையை நான் அவர்களுக்கு வழங்கி விடுவேன். பின்னர் நீங்கள் எவ்வகையி லும் அதில் தலையீடு செய்யவே முடி யாது.” என்று அழுத்தமாகக் கூறி வரத்தி னையும் ஈய்ந்து விட்டு அப்பலோத் தெய்வம் காற்றில் கரைந்து காணாமல் போனது.
米米米米
595 T. . . . . . . என்னே அற்புதம்! அந்தி மாலை எவ்வளவு அதிசயமானது. வெள் ளிச் சந்திரக் குடத்தில் பால் பொங்கி வழி கின்றது. இளம் கடல் மீன்களும் விண் மீன்களும் இன்று அந்த நிலா வெளிச் சத்தில் கண்ணடித்துக் காதல் செய்கின் றன. கடவுளே மீண்டும அமாவாசை வந்து விடக் கூடாதெனக் கிழமீன்கள் வேண்டிக் கொள்கின்றன. எவர் கண்ணும் பட்டுவிடக் கூடாதென வேண்டி வெண்ணிலா தன் முகத்தில் கரி அள்ளி அப்பிக் கொள்கிறது.
அப்பலோ(Apollo) - ஒளிக்கடவுள். பெலாயிக் - ஆழ்கடலில் ஒளியற்ற பகுதி.
மல்லிகை ஜூலை 2009 奉 56

பDல்லிகை’ எனும் பொழுது அது இந்நாட்டின் இலக்கியக் குரல் மாத்திரமல்லாமல், இலக்கிய வளர்ச்சிக்கான இலட்சியக் குரலும் கூட. மல்லிகை இன்று பல்கலைக் கழகங்களில் கூட இலக்கிய வளர்ச்சியின் போக்கை அறியவும், ஆய்வுக் கட்டுரைகளை வரையவும் ஆழ்ந்து படிக்கப்படுகிறது என்பதை நினைக்கும் போது புளகாங்கிதம் அடையாமல் இருக்க முடியாது. இதற்கு முன்னுதாரணமாகச் செல்வி. மல்லிகாதேவி நாராயணன் அவர்களின் 90களில் மல்லிகைச் சிறுகதைகள்' என்ற ஆய்வு நூலைக் கூறலாம். இது மல்லிகைப் பந்தலில் மலர்ந்து மணம் வீசும் ஒரு நூல் என்று கூடக்
Singp6)st Lib.
90களில் மல்லிகைச் சிறுகதைகள்' என்ற செல்வி மல்லிகாதேவி நாராயணன் அவர்களின் ஆய்வு நூலுக்கு முன்னரும் தேவகெளரி என்பவர் எண்பதுகளில் மல்லிகை விமரிசனங்கள்’ என்ற ஆய்வு நூலையும் எழுதியிருப்பதாக அறிய முடிகிறது. 90களில் மல்லிகைச் சிறுகதைகள்’ என்ற நூல் ஒரு தசாப்தத்துக்குப் பின்னர் வெளிவந்த, ஆய்வு நடத்தப்பட்ட நூலாகும்.
இரட்டைக் குழல் துப்பாக்கியல்ல!- நவீனரக இலக்கியப் பீரங்கி
L LSSLSS SLSS SLSS SLSS SLS LS SLL S LS SSSLS S SLSSLL SLL SLL SL S LS SLS LSS LLS SLSL L SZ LSSLLSSZLSLLLS SLSLS S SLLSSLLSSLL SSSLLLSSLS ZLSSS LS SL
80களில், 90களில் என்றெல்லாம் தசாப்தங்களில் வெளிவந்த மல்லிகைப் படைப்புக்கள் ஆய்வு செய்யப்படுவது, இலக்கிய ஆரோக்கியத்துக்கு வலுவூட்டுபவையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 90களில் மல்லிகைச் சிறுகதைகளுக்குப் பின்னர், 2000, 2010, 2020 என்று நீண்டு கொண்டே செல்லும் என்பதில், இனிவரும் காலங்களில் ஆய்வுகள் நடத்தப்படும் என்பதில் ஐயம் இல்லை. யாராவது ஒருவர் ஆய்வு நடத்துவார் என்பது உறுதி. அதே வேளை, சிறுகதைகள் மாத்திரமல்லாமல் கவிதைகள், கட்டுரைகள் என்பனவற்றையும் தசாப்த ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம்.
ஐம்பதாவது ஆண்டை நோக்கிய ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் இலக்கிய இலட்சியப் பயணத்தில் மேற் கூறிய ஆய்வுகள் இடம் பெறும் என நம்பலாம்.
மல்லிகை ஜூலை 2009 தீ 57

Page 31
1966ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிதான் முதன் முதலாக மல்லிகை யின் இதழ் மொட்டவிழ்த்தது. அன்று முதல் இன்றுவரை (யுத்த சூழ்நிலையில் ஏற்பட்ட சிறு தடங்கலைத் தவிர) தொடர்ந்து வெளி வந்த வண்ணம் இலங்கை முழுவதும் வியாபித்துள்ளது.
50வது ஆண்டை நோக்கிய பயணத் தில் 45வது ஆண்டை நோக்கிக் கொண்டி ருக்கக் கூடிய இந்தக் கட்டத்தில் ஆசிரியர் ஓர் உண்மையைத் தயக்கத்துடன் வெளி யிட்டிருக்கிறார். திடீர் என அந்த முயற் சியை மேற் கொள்ளாமல், மல்லிகை வாச கர்களாகிய எம்மிடம் ஓர் அபிப்பிராயம் கேட் பதைப் போல, அனுமதியை அங்கீகரிப்ப தற்கு ஆலோசனை கேட்பது போல பெளவியமாக வெளியிட்டிருக்கிறார்.
ஆம், மல்லிகை ஆரம்ப காலத்தில் அதை வெளியிடுவதற்கு அப்போதைய பிரதி ஒன்றின் விலை இருபது சதங்களே! அப்பொழுது பணத்தின் பெறுமதி நல்ல நிலையில் இருந்தது. ஆனால், இன்றோ பணத்தின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு பணத் தாளின் அளவுதான் அதிக ரித்து இருக்கிறதே தவிர, அதன் பெறுமதி கூடவில்லை.
இந்நிலையில், இன்று மல்லிகைப் பிரதி ஒன்றின் விலை முப்பது ரூபா ஆகிறது. இன்றைய பொருளாதாரத்தைப் பொறுத்த மட்டில் சகல பொருட்களினதும் விலை அதிகரித்துக் காணப்படுகிறது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இதற்குப் பொருட் தட்டுப்பாடு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, இறக்குமதித் தீர்வை ஏற்றம் மாத்திரமல்ல, நாட்டில் இது கால
வரையும் நிலவி வந்து யுத்தக் கெடுபிடிக ளும், சூழ் நிலைகளும் தான் காரணம். தற்போதுதான் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு யுத்தம் ஒய்ந்து அமைதி பிறந்திருக்கி றது. இதன் பின்னர், எமது நாடு நல்ல தொரு நிலையை நோக்கி மறுமலர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், ஏற்றப்பட்ட பொருட்களின் விலைகள் இறக்கப்படுவ தற்கு எந்தவித ஆதாரமும், அணுகுமுறை களும் கிடையாது.
அவ்வப்போது மல்லிகையின் மீது அபி மானம் கொண்ட வாசகர்கள், பற்றுள்ளவர் கள் மல்லிகையின் விலையை அதிகரிக் கும் படியும், தற்போதைய நிலையில் முப்ப து ரூபாவுக்கு மல்லிகையை வழங்குவது கட்டுப்படியாகிறதா? அதன் இலாப நஷ் டங்கள் என்ன? என்றெல்லாம் ஆசிரியரைக் கேள்வி கேட்டு வருகின்றனர். என்றாலும், ஆசிரியர் தனது கஷ்டங்களை வெளிக் காட்டாமல் வார்த்தைகளால் மழுப்பி வாச கர்களுக்குத் திருப்தியான பதிலையே அளித்து வருகிறார். அவரது திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
என்றாலும், உண்மையைச் சொல்லுகி றேன். ஆசிரியர் சொன்னாலும் சொல்லா விட்டாலும் 30 ரூபாவுக்கு மல்லிகை வழங் குவது என்பது கஷ்டமான காரியம் தான். ஏதோ மல்லிகையின் வளர்ச்சி தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதுதான் அவரது அவா. அதனால் தான் உழைப்பாய் உழைக் கிறார். ரகசியமாக அவருக்கு உதவிகள் புரிந்து வருபவர்களின் பெயர்களைக் கூட வெளியிடாமல் பல கஷ்டத்தின் மத்தியில் மல்லிகை வெளியீட்டைச் செய்து வருகிறார்.
மல்லிகை ஜூலை 2009 & 58

எனவே, இந்நிலையில் எம்மைப் போன்ற வாசகர்கள், இலக்கியத் தாகம் கொண்டவர்கள், இலக்கியவாதிகள் எவரும் மல்லிகையின் விலையை உயர்த் துவதைப் பற்றி ஆட்சேபம் தெரிவிக்க மாட்டார்கள். ஏனென்றால், மல்லிகையின் மீது அவ்வளவு அன்பு, காதல், பற்றுதல், அபிமானம் கொண்டிருக்கிறோம்.
"மல்லிகையின் விலையை அடுத்த அடுத்த மாதங்களில் அதிகரிக்க வேண் டும். என்ற ஒரு அபிப்பிராயத்தை ஆசிரியர் வெளியிட்டு இருக்கிறார்.
நிச்சயமாக அதனை மல்லிகை வாசகர்கள் மறுக்க மாட்டார்கள். தாங்கள் தாராளமாக ஒரு விலையை நிர்ணயித்து மல்லிகையின் விலையை அதிகரியுங்கள். அப்படி விலை அதிகரிக்கும் போது, எதிர்கால விலை ஏற்றத்தையும் மனதில் கொண்டு ஒரே முறையில் ஒரு விலையை நிர்ணயம் செய்யுங்கள். ஏனெனில் காலத் துக்கு காலம் ஏற்படும் விலை அதிகரிப் புக்கு ஏற்ப மல்லிகையின் விலையை அதி கரிப்பதை விட, தற்போதே ஒரு விலையை நிர்ணயித்து விலையை அதிகரித்தால் எதிர்காலத்தில் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்படாது.
தற்போது இருக்கும் விலையில் இருந்து 20 ரூபா அதிகரிப்புச் செய்தால், அதாவது பிரதி ஒன்றின் விலை 50 ரூபா என்று விலை நிர்ணயம் செய்தால், பொதுவாக எல்லோரும் ஏற்றுக் கொள்வார் கள் என்பது எனது தாழ்மையான அபிப் பிராயமாகும். இது எனது தனிப்பட்ட அபிப் பிராயமே தவிர, இது தான் விலை என்ப
தல்ல. ஒரு வேளை இதைவிடக் கூடலாம் குறையலாம்.
மல்லிகை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த அவ்வளவு சிரமங்கள், பொருளாதாரச் சிக்கல்கள்
காலத்தில்
காணப்படவில்லை. அக்காலப் பெறுமதிக் கேற்ப அதன் விலை 20 சதமாகக் காணப்பட்டாலும், காலப் போக்கில் பண வீக்கம் காரணமாக அதன் விலையிலும் மாற்றம் ஏற்பட்டது.
மல்லிகை கொழும்பில் மலரத் தொடங் கிய பன்னிரண்டு வருடங்களையும் தாண் டிய நிலையில் உள்ளது. சந்தடிகள் நிறைந்துள்ள கொழும்பு வாழ்க்கையைப் பொறுத்த வரையில், இலக்கியச் சேவை செய்வது கடினமாக இருந்தாலும் கூட, உத்தேச விலை அதிகரிப்பைச் செய்தால் ஒரளவு தாக்குப் பிடிக்கும் என நினைக் கிறேன். ܢ
அத்தோடு, எமது சந்தாக்களையும் புதுப்பித்துக் கொள்வது, தவறாது பிரதிக ளைத் தொடர்ந்து வாங்குவது, ஆசிரியர் குறிப்பிடுவது போல மல்லிகைப் பந்தல் வெளியீடுகளை விலை கொடுத்து வாங்கி அதற்கு உரமூட்டுவது போன்ற வேலைக ளைச் செய்தாலே போதும். நாமும் மல்லிகையின் வளர்ச்சியில் எமது பங்களிப்பையும் செய்திருக்கிறோம் என்ற மனத் திருப்தியைப் பெற முடியும்.
எனவே, இரு குழல் துப்பாக்கி மாத்திர மல்ல, (மல்டி பெரல்) பல் குழல் துப்பாக்கி யாக மல்லிகை பல கிளைகள் விட்டு அதன் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.
மல்லிகை ஜூலை 2009 3, 59

Page 32
‘கவிதா பப்ளிகேஷன் அதிபர் சேது சொக்கலிங்கம் தம்பதியின் மணி விழா சென்னையில் சமீபத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தன் தலைமையில் வெகு கோலாகலமாகக் கொண்டா டப்பட்டது. அதன் ஞாபகார்த்தமாக மணிவிழா மலரொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்த மலரில் ஜெயகாந்தன் எழுதிய கட்டுரைதான் இது. நமது நாட்டுப் பிரதிநிதியாகப் பூபால சிங்கம் புத்தகசாலை அதிபர் முரீதரசிங் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது இங்கு குறிப் பிடத்தக்கது.
மல்லிகையும் மனதார வாழ்த்துகிறது.
-ஆசிரியர் 'கவிதா ஒரு குடுபேடு
-ஜெ2யகாந்தன்
கவிதா பப்ளிகேஷன் அதிபர் திரு. சேது சொக்கலிங்கம் அவர்கள் அறுபதாண்டு நிறைவு மணி . விழாக் காண்கிறார். அவரை அறிந்த அனைவருக்கும்
மகிழ்ச்சி தரும் செய்தி இது.
படிக்க, பரிசளிக்க, பயன்பெற என்கிற தாரக மந்திரத்துடன் கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளா கப் பதிப்புப் பணியில் எழுத்தாளர்களுக்கும் வாசகர் களுக்கும் பாலமாக அமைந்துள்ள இவர், தமிழ் இலக் கியத்தின் மீதும் படைப்பாளிகளின் மீதும் மிகுந்த ஈடுபாடும், அபிமானமும் கொண்டவர். புத்தகம் வெளி யிடுவதையும், வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதை
யும் ஒரு கலையாகவே பயின்றவர். சக பதிப்பாளர் களைச் சகோதரப் பாசத்தோடு அணுகும் பண்பாளர். பொதுவாகத் தமிழ்ப் புத்தக வெளியீட்டுத் துறையில் பிரபலமானவர்கள் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் தாம். செட்டி நாட்டுத் தலைநகரான தேவக்கோட்டையைச் சேர்ந்தவர் திரு. சேது சொக்கலிங்கம் அவர்கள். எனவே, இவரையும் நகரத்தாருள் ஒருவர் என்றே நான் நினைத்திருந்தேன். பிள்ளைமார் குலத்தைச் சேர்ந்தவர் இவர் என்று பிறகு தெரிய வந்தது. இதிலெல்லாம் எனக்கு ஒரு affinity உண்டு.
எனக்கும் செட்டி மக்கள் சிலரோடு பழக்கம் உண்டு. பதிப்புத் துறையைச் சேர்ந்த பலரை நான் சிறப்பாக அறிவேன். அவர்களில் என்னை உருவாக்கியவர்களுள் திரு. கண, முத்தையா அவர்களைச் சொல்ல வேண்டும். அவரை அடுத்து, மீனாட்சி புத்தக நிலைய அதிபர் திரு. செல்லப்பன் செட்டியார் அவர்கள் தான் எனது புத்தகங்களை வெளியிடுபவராகத் திகழ்ந்தார்.
மீனாட்சி புத்தக நிலையத்தையே எனது நூல்களை வெளியிடும் பதிப்பகமாக நான் வரித் துக் கொண்டேன்.
மல்லிகை ஜூலை 2009 季 60
 

இந்தப் புத்தக வெளியீட்டுத் துறையில் பலகாலம் ஈடுபட்டு, சிறப்பாகப் பணியாற்றி வரும் பலரோடு எனக்குப் பரிச்சயம் இருந்தும் எனது நூல்களை வெளியிடும் மீனாட்சி புத்தக நிலையத்தைத் தவிர, நான் வேறு யாருக்கும் எனது நூல்களை வெளியிட அனுமதி அளித்ததில்லை.
பல பதிப்பாளர்களுக்கு இந்த விஷயம் தெரிந்திருந்ததால், அவர்களும் என்னை அணு கியதில்லை.
இந்நிலையில் திரு. சேது. சொக்கலிங்கம் அவர்கள் என்னை ஒருமுறை சந்தித்து, எனது நூல்களில் ஏதாவதொன்றைத் தாம் வெளி யிட அனுமதி தரவேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அவருடைய ஆர்வமும், என்னிடம் அவர் காட்டிய அன்பும் அவரது வேண்டு
கோளை நிறைவேற்ற வேண்டும் என்கிற
எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியது.
எனது சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து இரண்டு வால்யூம்களாக வெளியி டத் தீர்மானித்தோம், கவிதா பப்ளிகேஷன் வெளியீடாக இந்த இரண்டு புத்தகங்களை யும் வெளியிடத் தீர்மானித்ததன் விளை வாக, தொடர்ந்து மீனாட்சி புத்தக நிலையம் மூன்று வால்யூம்களாக எனது குறுநாவல் களையும், வர்த்தமானன் பதிப்பகம் எனது நாவல்களை ஐந்து தொகுதிகளாகவும், செண்பகா பதிப்பகம் எனது கட்டுரைகளை இரண்டு தொகுதிகளாகவும் வெளியிட்டன. இதற்கெல்லாம் திரு. சேது சொக்கலிங்கம் அவர்களின் முதல் முயற்சியே, இவற்றுக்கு முன்னோடி ஆயிற்று எனலாம்.
மேலும், திரு. சொக்கலிங்கம் அவர்கள் அவை வெளியாவதற்கு அந்தந்தப் பதிப்ப கத்தாரோடும் ஒத்துழைத்து, உதவிகள் பல புரிந்ததை நான் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
திரு. சொக்கலிங்கம் அவர்கள் புத்தக
வெளியீட்டில் விசேஷ கவனம் செலுத்து வார். கவிதா பப்ளிகேஷன் வேறு தனது குடும்பம் வேறு என்று அவர் நினைத்த தில்லை. அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர் களைத் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களா கவும், தன் குடும்பத்தினரை அந்த நிறுவனத் தில் பணிபுரிபவர்களாகவும் பாவிக்கும் அவரது பண்பினைக் கண்டு நான் வியப் படைந்திருக்கிறேன்.
இவர் சக பதிப்பாளர்களைப் போற்றும் பண்பாளர்; மூத்த பதிப்பாளர்களின் சீடர்; சம வயது பதிப்பாளர்களுக்குத் தோழர்; இளைய பதிப்பாளர்களுக்கு இனிய வழி காட்டி.
இவரது முயற்சிகள் வெற்றியடைய இவ ற்றை விட வேறென்ன பண்புகள் வேண்டும். இவரது படைப்பாளர்களின் பட்டியல் மிகச் சிறப்பானது. தவத்திரு. குன்றக்குடி அடிகளார் முதல் ஜெகதா வரை பல சிறந்த எழுத்தாளர்கள் அந்தப் பட்டியலில் இருக்கி றார்கள்,
இலக்கியத்தின் மீது எவ்வளவு ஈடுபாடு உண்டோ, அவ்வளவு ஈடுபாடும் அபிமானமும் எழுத்தாளர்கள் மீதும் இவருக்கு உண்டு. அந்த அபிமானம் என்பால் குறிப்பாகவும் சிறப் பாகவும் உண்டு. இது குறித்து கவிதா படைப் பாளர்களில் ஒருவரான கவிஞர் மு. மேத்தா என்னிடம் கூறிப் பெருமிதப்பட்டதுண்டு.
ஆம்! அதை நானும் உணர்ந்திருக்கி றேன். “ஞானபீட விருது வாங்குகிற போதும், பத்மபூஷன் விருது பெறுகிற போதும் எனது விருந்தினராக இவர் டில்லிக்கு வந்து என் னைத் தம்முடைய விருந்தினராக்கி உபச ரித்த பண்பினை என்னால் மறக்க முடியாது.
தனது குடும்பத்தில் ஒருவனாக என்னை மதித்து அன்பு காட்டும் திரு சேது சொக்க லிங்கம்-ஜானகி தம்பதியினர் எல்லா வளமும் பெற்று, மேலும் சிறந்து விளங்க எனது மனமு வந்த ஆசிகளைக் கூறி வாழ்த்துகிறேன்.
வாழ்க! வளர்க கவிதா குடும்பத்தினர்.
மல்லிகை ஜூலை 2009 牵 6

Page 33
இரசனைக் குறிப்பு
toடீடு நகரின் மருத்துவச் சமூகம் (பேசப்படாத வரலாறு)
-ග(r. ඊ(rōහි(ෆිනීශ
'LDருத்துவச் சமூகம்' எனில் கணிசமான இன்றைய வாசகர் மனதில்- நாவிதர், பரியாரி, அம்பட்டர், பண்டுவர், பண்டிதர் எனச் சுட்டப்படுபவரே இவர்கள் என்ற புரிதல் ஏற்படுவதுக்கு மிகச் சிரமமாகத்தான் இருக்கும்! ஏனெனில், தொடர்ச்சியாகச் சில ܠܶܡܡܬܩܪܩܫܬܘܬܚܙܘܩܕܢܐܬܘܪ
நூற்றாண்டுகளாக இவர்கள் செய்து வரும் சிகை அலங்காரத் தொழிலே இவர்களது குலத் தொழில் என்ற இறுக்கமான கணிப்பு- இவர்களும் சித்த வைத்தியத் தொழிலில் முன்னைய நூற்றாண்டுகளில் மேன்மை கொண்டிருந்தனரென் பதை வெறும் கட்டுக் கதை ஆக்கி விட்டது. பிந்தி வந்த கொம்பான சிகை அலங்கரிப்புத் தொழில் முந்திய மருத்துவத் தொழிலைக் காவு எடுத்து விட்டது. இச் சமூகத்தவரின் மூத்த சந்ததி சித்த வைத்தியத்தில் ஆற்றல் மிக்கதாக இருந்ததென்பதைப் பரம்பல் செய்யும் இலக்கோடேயே மட்டு நகரின் மருத்துச் சமூகம் (பேசப்படாத வரலாறு) என்ற நூல் வெளி வந்திருக்கிறது.
இந் நூலாசிரியர் அரச எழுது வினைஞர், கணக்காளர், சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் ஆகிய பதவி நிலைகளில் இயங்கி ஓய்வு பெற்ற-78 வயதான- மூத்த சமூக உழைப்பாளி செபஸ்தியான் கவுரியல் என்பவரே.
ஒடுக்கப்பட்ட பஞ்சமர் சமூகங்களிலொன்றான மருத்துவச் சமூகம் 'சமூகப் பொருளாதார நிலைமை, பட்ட அவமானங்கள், எதிர் கொண்ட உரிமை மறுப்புகள், அவலங்கள் எதுவும் இப்பொழுது இல்லை. என முன்மொழியும் நூலாசிரியர், மருத்துவச் சமூகத்தின் மீது இம் மனித நேயமற்ற கொடுமைகள் மீண்டும் எழக் கூடும் என்ற தூர நோக்கில்- இச் சமூகத்தை எச்சரித்து- விழிப்புற வைக்கும் முயற்சியாகவே இந் நூலை வெளியிட்டிருக்க வேண்டும். இச் சமூகத்தவர்கள் இன்று கண்டிருக்கும் வியப்புறு முன்னேற்றம் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தரப்படவில்லையென்பதையும் இந்நூல் மூலம் சிந்திக்க வைக்கிறார்.
மல்லிகை ஜூலை 2009 & 62
 
 

இரண்டு ஊக்கிகள் இந்நூலின் பின் புலத்திலிருந்து நூலாசிரியரை இயக்கி இருக்கின்றன. ஒன்று மருத்தவச் சமூகத் தின் முன்னேற்றத்துக்காகப் பணி செய்து வரும் மக்கள் மறுமலர்ச்சி அபிவிருத்திச் சங்கம், மற்றது அமைப்பு ரீதியில் மருத்து வச் சமூகத்தவரை ஒன்று திரட்டி, வழி நடத்தித் தேர்தல் மூலமாக (2008) மட்டு நகர் மாநகர சபையில் உறுப்புரிமை பெற்ற சமூகப் போராளி வெலிங்டன் இராசேந்திரம் என்பவரது மாநகர சபைப் பிரவேசம்.
வாசகருக்கு மன ஈர்ப்பைத் தரும் வகையில் செம்மையான மொழி நடையில் எடுகோள் சொல்லப்பட்டுள்ளது. சமகாலச் சொற் பிரயோகங்கள் ஆங்காங்கு தூவப் பட்டிருப்பது. வசனங்களுக்கு உயிரூட்ட மாக இருந்து, எழுத்தாளரின் எழுத்து முதிர்ச்சியைப் புலப்படுத்துகின்றது. இச்சிறப்புகளே இழிசனர் பற்றியது என்ற கணிப்புக்குள் விழுத்தாது இந்நூலைக் காப்பாற்றுகின்றது. நூலாசிரியர் எழுத் தாளராக இல்லாவிடினும் அவரது எழுத் தில் முதிர்ச்சி கோலமிடுவதற்கு அவர் தொடர்ச்சியான தமிழ் இலக்கிய வாசகராக இருப்பாரெனவே ஊகிக்க வேண்டி இருக்கின்றது.
மீன் பாடும் தேன் நாடு என்ற இயற்கை நல்கிய வளத்தைச் சுகிக்கும் மட்டக்களப் பின் (மட்டுநகர்) மருத்துவச் சமூகம் குறித் தான இதுவரை சொல்லப்படாத பல விட யங்களை ஆசிரியர் அம்பலப்படுத்துகிறார். ஏனைய பிற மாவட்டங்களைச் சார்ந்த தமிழருக்கு மட்டுமன்றி, இதில் கிடைக்கும் தகவல்கள் கிழக்கு மாகாணத் தமிழருக்
கும் புதிய அறிதலைக் கொடுக்குமென்ப தில் சந்தேகமில்லை. இதற்கு ஆசிரியரின் 'பழுத்த வயதும் துணை நின்றிருக்கும். அத்தோடு நெடுங்காலத் தேடலில் கண்ட டைந்தவைகளை ஆய்ந்தறிந்தே வாசகருக் குத் தந்துள்ளார். மருத்துவச் சமூகத்துள் மட்டுமே நின்று கொள்ளாமல் மட்டுநகரின் பூகோள வடிவமைப்பு, அரசியல் நகர்வு, மக்கள் பரம்பல், கத்தோலிக்க மதம் வேர் கொண்டமை ஆகிய விடயங்களையும்
தொட்டிருக்கிறார்.
மட்டக்களப்பு மாநிலம் வடக்கே வெருகல் ஆறு முதல் தெற்கே மொனரா கலைக்கு அப்பாலுள்ள குமுக்கன் ஆற்றுடன் முடிவடைந்தது. விந்தானைப் பகுதியும் மன்னம்பிட்டி, வெலிக்கந்தை உள்ளிட்ட தம்பன் கடுவைப் பிரதேசமும் அக்காலத்தில் மட்டக்களப்பு மாநிலத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன (பக்.72) இதை இன்று நம்பத் தான் முடியுமா? நிலப்பசி கொண்டோர் அசல் மட்டக்களப்பின் தமிழ் நிலத்தைக் கபளிகரம் செய்து விட்டனர்!
சேர, சோழ, கலிங்க அரசுகள் மட்டக் களப்பின் குடிப் பரம்பலை உண்டாக்கினர். இக் குடும்பங்களோடு இங்கு வந்து சேர்ந்ததே மருத்துவச் சமூகம். இப் பிரதேசத்தின் வாழ் முறைக் கோலங்கள் கேரள நாட்டை அடையாளப் படுத்துவதாக ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர்.
மருத்துவச் சமூகத்தவர்கள் சித்த
வைத்தியத்தில் ஆற்றலுள்ளவர்களாக
இருந்தனர். காயங்களுக்குச் சிகிச்சை செய்யும் போது, காயப்பட்ட பகுதியில் மயிர்
மல்லிகை ஜூலை 2009 & 63

Page 34
வளர்ந்திருந்தால் அவைகளைச் சவரம் செய்து நீக்கி விட்டே உரிய மருந்தைப் பூசுவர்/ கட்டுவர். மருத்துவத் தொழிலை இவர்களிடமிருந்து ஒடுக்கி, சிகைய லங்கரிக்கும் தொழிலை இவர்களுக்கு நிரந்தரப்டுத்துவதுக்கு இதுவே ஆதிக்க சாதிக்கு வசதியை ஏற்படுத்தியது. பிரா மணர்களே தமது தலையின் முன் பக்கம் வளரும் மயிரைச் சவரம் செய்து நாவிதத் தொழிலுக்குப் பிள்ளையார் சுழியிட்டனர். தமது மேற்கத்திய வைத்தியத்துக்குச் சித்த வைத்தியம் தடையாகி விடும் என்றதால், மேல் சாதியார்களோடு சேர்ந்து ஆங்கிலேயரும் மருத்துவச் சமூகத்தின் பாரம்பரியத் தொழிலை முடக்கினர். 17 ஆம் நூற்றாண்டிலேயே சலூன்கள் அமைக்கப்பட்டதாக நூலில் கூறப்பட்டி ருக்கிறது.
இச் சமூகப் பெண்கள் மருத்துவச்சி என அழைக்கப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை
இவர்கள்
களை மேற் கொண்டிருக்கின்றனர்.
மட்டக்களப்புச் சாதீயம் சோழர் ஆதிக்கக் காலத்திலிருந்து தொடங்கியது. இந் நூலில், மருத்துவச் சமூகத்துக்கு மட்டக்களப்பில் அன்று மறுக்கபட்டிருந்த அடிப்படை உரிமைகளை நோக்கும் போது, மட்டக்களப்புச் சாதீயம் யாழ்ப்பா ணச் சாதீயத்துக்கு எந்த வகையிலும் சோடை போகவில்லையென்பது புரிகின் றது. இச் சமூகத்தவர் குடை பிடித்தல், ஈருருளி ஓட்டல், சட்டை- பாதணி அணிதல் என்பன உயர் சாதிகளால் அனுமதிக் கப்படவில்லை. பணமிருந்தாலும் வீட்டில்
உலை வைத்துச் சமைத்து உண்ணவும் தடை போடப்பட்டது. இரந்து ஊர்ச் சோறு வாங்கியே இத் தாழ்த்தப்பட்ட மக்கள் உண்ண வேண்டிய தலைவிதி
இலவசக் கல்வி, அந்நிய மதங்களின் வருகை, மாக்சீயம், காந்தீயம் என்பவற் றால் மருத்துவச் சமூகத்தவர்கள் சிந் தனைத் தெளிவு பெற்று, தங்கள் இழந்த உரிமைகளுக்காகத் தாமே குரல் எழுப்பும் நிலைக்கு மேல் எழுந்தனர். அமைப்புகள் தோன்றின. தங்களது உரிமைகளை மறுக்கும் முக்குகர், கரையார் ஆகியோரை நேரடியாக எதிர்த்தனர். இந்த எழுச்சியின் முன்னோடியாக லேனாட் லூவிஸ் பிள்ளை இச் சமூகத்தை வழி நடத்தினார். கணிசமான பலனும் கிடைத்தது.
மட்டுநகரில் கத்தோலிக்கப் பரம்பலுக் குப் புனித. ஜோசப் வாஸ் அடிகளார் அர்ப்பணிப்போடு பணியாற்றியுள்ளார். ஒல் லாந்தர் காலத்தில் மாறு வேடத்தில் வந்து சமபப் பரம்பலைச் செய்திருக்கிறார். இத னால், பல துன்பங்களையும் அநுபவித்தார்.
சைவ சமயத்தவர்களைப் போல் கிறிஸ்தவர்கள் தீண்டாமையில் அக்கறை காட்டாதவர்கள் என்ற மனப்பான்மை முன்பு பெரும்பாலான தமிழர்களிடம் இருந்தது. இதுவே கூடுதலான தாழ்த்தப் பட்ட மக்களையும் கிறிஸ்தவத்துக்குள் இழுப்பதுக்கு உதவுகரமாகியது. இக் கருத்தியல் தவறானதென்பதைப் பிற் காலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகங்களும் அநுபவத்தில் கண்டடைந்தன! இன்ன சாதிக்கு இன்ன கோவிலெனக் கத்
மல்லிகை ஜூலை 2009 $ 64

தோலிக்கக் கோவில்கள் பகுக்கப்பட்டி ருக்கின்றன. எல்லாச் சாதிகளுக்கும் பொதுவாக்கப்படவில்லை. திருமணங்கள், திருமுழுக்கு, உறுதி பூசுதல், முதல் நன்மை ஆகிய கிறிஸ்தவச் சடங்குகள் அந்ததந்தச் சாதிக்குரிய கோவிலிலேயே நடத்தப்பட வேண்டும். இதே நிலையில் தான் மட்டக்களப்புக் கிறிஸ்தவமும்! இன்று மாற்றங்கள் காணப்பட்டாலும், அவைகளின் எச்ச சொச்சங்கள் இன்ன மும் இருக்கத்தான் செய்கின்றன. அதையே இந்நூலும் தெரிவிக்கின்றது.
திருமுழுக்கு, முதல் நன்மை, உறுதி பூசுதல், திருமணம், பிறப்பு, இறப்பு என்பவற்றைப் பதிவதற்கு மட்டுநகர் கத் தோலிக்கக் கோவில்களுக்குச் சென்றால், சாதியைக் கேட்டு அச்சாதிக்கெனப் பேணப்படும் பதிவேட்டில் தான் பதிகின் றார்களென நூல் கூறுகின்றது. கிறிஸ் தவம் பேதமற்றதென்பதுக்கு இது ஆப் பிடுகின்றதல்லவா! பதிவேடுகள் பேணலில் இதே நிலை யாழ் மறை மாவட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
யாழ்ப்பாணத்தவரால் மறக்கப்பட்டு விட்ட ஒரு விடயத்தை இந் நூல் வாசிப்பு வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றது. தீண்டாமை ஒழிப்புக்காகத் தமது முழு வாழ்வையும் அர்ப்பணித்துப் பல போராட் டங்களை முன்னெடுத்து அமரராகியவர் கள் எம். சி. சுப்ரமணியம், கே. டானியல் ஆகிய இருவரும். இவர்கள் காலமாகி ஏறத்தாழக் கால் நூற்றாண்டாகியும் இந்தச் சமூக முன்னேற்றப் போராளிகளுக்கு இன்னமும் யாழ் மண்ணில் ஒரு நினைவுச்
-
சின்னம் இல்லை! இந்த விடயத்தில் மட்டுநகர், யாழ்ப்பாணத்துக்கு முன்னுதார ணமாக விளங்குகின்றது. மருத்துவச் சமூக மக்களை ஒடுக்குமுறைக்குள்ளி ருந்து மீட்டெடுத்து ஏனைய சமூகத்தவ ரோடு சம நிலைப்படுத்தப் போராடிய அமரர் லேனாட் மத்தியாஸ் என்ற போராளியின் பெயரால் 'மத்தியாஸ் வீதி என்ற வீதியை நகரத்துக்குள் உருவாக்கியிருக்கின்றனர். இதற்காக மட்டு நகர்த் தமிழரைப் பாராட்ட வேண்டும். இனியாவது யாழ்ப்பாணத்தவர் மானுடத்தை மேல் நிலைப்படுத்த உழைத்த உத்தமர்களுக்கு உரிய கெளரவத்தைக் கொடுப்பார்களாக
ஆக மருத்துவச் சமூகத்துக்கு மட்டு மன்றி, அனைத்துத் தமிழருக்கும் இந்நூல் விழிப்பு நிலையைக் கொடுக்கின்றது. இதுவரை பேசப்படாத இந்த விடயங்கள் பழங் கதைகளாக இருக்க முடியாது அக் கதைகள், மனித இம்சைகள், சகோதரத் துவ அழிப்புகள் இனியும் தொடரக் கூடாது. அதே நேரம் இன்றைய மருத்துவச் சமூக இளைஞர்கள் முடிந்தளவு மருத்துவக் கல்வியைப் பெற்றுத் தமது சமூகத்தை மேன்மைப் படுத்துவதோடு, நூலாசிரியர் செபஸ்ரியன் கவுரியலின் இலக்கையும் பயனுடையதாக்க வேண்டும். நூலைப் படித்து நூலாசிரியருக்கு ஊக்கங் கொடுங்கள்.
தொடர்புகளுக்கு மக்கள் மறுமலர்ச்சி அபிவிருத்திச் சங்கம்,
205, திருகோணமலை வீதி,
மட்டக்களப்பு.
மல்லிகை ஜூலை 2009 $ 65

Page 35
எனது உயிரழிக்கும் ஒரு சொல்லின் முதலெழுத்து, முக்கு நுனிக்குச் சற்றுக்கிழே உட்கார்ந்து கொண்டிருக்கிறது.
என்னையுமறியாமல் எழுந்து போய் 65 LITLD)
கடவாய்ப் பற்களில் இறுக்க வேண்டியிருக்கிறது. атаđбLђ GLđal_TLD) சுயத0ை0ரிக்கையில் தொடர்ந்து č5ů6CDU GöTUlp9OTTEJih பத்திரிகைகள் எரிக்கப்படுகின்றன.
பல்லிருக்கும், உதமம் சேருமிடைவெளியில் செய்திகளை ஒளித்துவைத்துப் CELJőfİTLDGÚNLIED 65Tb|Db LD5060CBUJÓ 65L"LÖ).
செய்திகளேதும் தெரியாமல்
விடிகின்ற பொழு தொன்றின் ரம்மியம் 655, Siab (BLlióth aluadT600).5 முத்தமிடச் சொல்கிறது.
qa0c0ଅଁolla0]ଏଁ திப்பிடித்துள்ளது.
முண்டதியை அனைக்காமல் அநகிலிருக்தம் ஆறு அமைதியாய் நகர்கிறது.
குடிசை இடையைக் காதலித்ததாம்!
யார் தமத்தும் நிற்காமல் அழகான நுரைகளுடன்
bófji LDTb25NaOTT.
மல்லிகை ஜூலை 2009 率 66
 

రిట్టర్తిరిdr
LDல்லிகை இதழ்களைத் தொடராக இல்லாவிட்டாலும், அவ்வப்போது படித்து வருகிறேன்.
மல்லிகையின் தொடர் வரவும், அதன் இலக்கியக் கனதியும் புருவம் உயர்த்தத் தொனிக்கிறது. மல்லிகை அதன் பணியைச் செவ்வனே செய்ய வாழ்த்துக்கள்.
பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்களின் அட்டைப் படத்துடன் வெளிவந்த ஜூன் மாத இதழ் வழமை போல, பல்வேறு கனதியான அம்சங்களுடன் வெளி வந்துள்ளது. பேராசிரியர் பற்றிப் பிரசாந்தன் அவர்களது குறிப்புகள் முக்கியமான ஒரு வரலாற்று ஆவணமாகும். நுஃமான் அவர்களை மல்லிகை காலம் கடந்து பதிவு செய்வது சற்றுக் கவலை தருகிறது. எம். ஏ. நுஃமான் அவர்கள் பல்வேறு துறைசார்ந்த புலமையாளன். கருத்து வேற்றுமை இருப்பினும் மல்லிகையை இதில் குறைபடாமல் இருக்க முடியாது.
தாட்சாயணியின் நூல் பற்றிய தெணியான் அவர்களது கருத்துக்கள் தாட்சாயணிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே நாம் கருத வேண்டியுள்ளது. இம் முறை மல்லிகை இதழ் களில் உள்ள கதைகள் வழமை போல சோடை போகாமல் சிறப்பாகவும், நல்ல கதைக் கருக்களாவும் உள்ளன. இதில் சூசை எட்வேர்ட் அவர்களது கதை முக்கியமானது.
கவிதைகளுக்கும், கதைகளுக்கும் ஆகக் குறைந்தது ஒரு ஓவியமாவது சேர்த்து இதழை அழகுபடுத்தத் துணியலாம் அல்லவா. இதழ் வெறுமையுடன் வெளிவருவதாக மனதுக்குப் படுகிறது.
கடந்த இதழில் வெளிவந்த வை. சாரங்கனின் கவிதை ஏலவே மல்லிகையில் வெளி வந்ததாக ஞாபகம். பிரசுரமான கவிதைகளை மீளப் பிரசுரிப்பது தொடர்பாகச் சற்றுக் கவனம் செலுத்த வேண்டும்.
வளிம் அக்ரமின் கவிதைகள் இரண்டும் சிறப்பாக இருக்கின்றன. இரண்டு கவிதைகளி னதும் மொழி/ சொற்கள் ஒன்றில் ஒன்று தொடர்பு படுகிறது.
இளம் படைப்பாளிகளுக்கான இலக்கியக் களம் ஒன்றை மல்லிகை ஏற்படுத்தத் துணிவது பாராட்டத்தக்க முயற்சி. இதுவே இன்றைய காலத்தின் தேவை. மூத்த இலக்கியப் படைப்பாளிகளினது இடத்தைப் பூர்த்தி செய்ய மல்லிகை களம் ஏற்படுத்த வேண்டும்.
அவ்வாறே மல்லிகைத் தூண்டில் பகுதியில் ஏலவே கேட்ட கேள்விகளே திரும்பவும் பிரசுரிக்கப்படுகின்றன. அதனைத் தவிர்த்துப் புதியவர்களுக்குத் தூண்டிலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஆவன செய்க.
அக்கரைப்பற்று. திருமதி எம். எஸ். கரீமா,
மல்லிகை ஜூலை 2009 率 67

Page 36
உங்களது எளிமை போலவே இருக் கின்றது, மல்லிகையின் எளிமையும். அதன் காரணமாகவே உங்களையும் மல்லிகை யையும் நான் பல காலமாக நெஞ்சார நேசிக்கின்றேன்.
இன்றைய கால கட்டத்தில் மல்லிகை யின் விலையைச் சிறிது அதிகரிப்பது நல் லது. எனது சிநேகிதர்களில் பலர் இலக் கியம் பற்றி விவாதிக்கும் வேளைகளில் மல்லிகையைப் பற்றியும் அடிக்கடி பேசிக் கொள்வார்கள்.
அத்தனை பெரிய இலக்கிய அபிமானி களல்ல, அவர்களில் பலர். இருந்தும் இன் றைய ஈழத்து இலக்கிய உலகப் போக்கு கள் பற்றி ஆழமாகவே விவாதிப்பார்கள். அந்த உரையாடல்களில் மல்லிகையைப் பற்றிய பேச்சும் இடையிடையே வந்து போகும்.
இளம் எழுத்தாளருக்குக் கருத்தரங் கொன்றை நடாத்த உத்தேசித்திருப்பதா கக் கடந்த ஜூன் மாத இதழில் குறிப் பொன்றைப் பார்த்தேன். அவசியம் செய்து முடிக்கத்தக்க வேலை தான் அது. இன்று பரந்து பட்ட முறையில் இளந் தலைமுறை யினர்- இளைஞர்களும் யுவதிகளும்- ஈடு பாடு காட்ட முனைந்து முன் வருகின்றனர். அவர்களது ஆரோக்கியமான இந்த மன உணர்ச்சிக்கு வடிகால் தான் இது வரை யும் யாருமே செய்ய முன் வந்ததில்லை.
இப்படி இவர்களைப் பற்றிச் சிந்தித்தீர் களே அதுவே போதும்.
44 ஆண்டுகளாக இந்த யுத்த நெருக் கடிக் கால கட்டத்திலும் தொடர்ந்து ஒர் இலக்கிய இதழைத் தனியொருவராக நடத்தி வருவது என்பது அசுர சாதனை தான்.
அதற்காகவே வருங்காலச் சமுதாயம் உங்களை நிரந்தரமாகவே நினைவில் பதிந்து வைத்திருக்கும்.
கவலைப் படாதீர்கள். உங்களை எங் களைப் போன்ற இளந் தலைமுறையினர் நிரந்தரமாகவே நினைவில் வைத்திருப்பர் என்பது திண்ணம். உரும்பிராய். வை. சரவணபவன்.
ஒரு பத்தாண்டு கால மல்லிகை வாசகன் நான்.
மல்லிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த அந்தக் காலகட்டத்தில் நான் மல்லிகைக் கந்தோருக்குப் பல தடவை கள் நேரில் வந்து இதழ்கள் பலதை வாங்கி யிருக்கிறேன்.
இப்பொழுது வட பிரதேசத்துப் புத்தகக் கடைகளில் விற்பனைக்கு மல்லிகை இதழ்கள் கிடைப்பதில்லை. எனவே, நேரடி யாக மல்லிகையை விலைக்கு வாங்கி விட முடிவதில்லை. எனவே, கொக்குவி லில் எனது இலக்கிய நண்பர் ஒருவருக் குத் தபாலில் வரும் இதழ்களைத் தான் சிரமமெடுத்துச் சைக்கிளில் சென்று, பெற் றுப் படித்து வருகின்றேன்.
இத்தனை நேரடிக் கஷ்டங்களுக்கு மத்தியிலும், மனசில் ஒரு திருப்தி ஏற்பட்டு விடுகின்றது. அடுத்த இதழ் எப்போ வரும், வரும் எனக் காவலிருப்பதுதான் எனது இன்றைய நிலை. கொழும்பு வந்து உங் களை ஒரு தடவை நேரில் பார்த்துப் பேசி விட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. ஆனால், சூழ்நிலையும் எனது பண வசதியும் அதற்கு இடம் கொடுப்பதில்லை. பெரிய சோகமது. எப்படியும் சந்தா கட்டி மல்லிகை இதழைப் பெற வேண்டுமென் பதே எனது நீண்ட கால ஆசை. பார்ப்போம்.
இணுவில். ஆ. செந்தில்நாதன்.
மல்லிகை ஜூலை 2009 & 68

മീരഗുt
- டைMசினிக் ஜீவ4
23 கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் இவற்றுள் எதனை நீங்கள் விரும்பிப் படிக்கிறீர்கள்? அநுராதபுரம். கே. பி. ஷர்மிலா
* நான் படைப்பாளியாக இருந்த ஆரம்ப காலங்களில் பெரிதும் படைப்பு இலக்கியங் களைத் தான் தேடித் தேடிப் படித்து வந்தேன். சஞ்சிகை ஆசிரியராகப் பரிமாணம் பெற்ற தன் பின்னர், சகல துறை நூற்களையும் எழுத்தெண்ணிப் படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே, இன்று கையில் கிடைக்கும் நூல்கள், தேடிக் கிடைக்கும் புத்தகங்கள் அனைத்தையும் படித்து வருகின்றேன். ஒரு தொடர் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தால் தான் தொடர் வாசிப்பின் அருமை தெரியும்.
2 தெரியாமல்தான் கேட்கிறேன். வயதாகி விட்டதை இன்றைய தினசரி வாழ்வில் உணருகிறீர்களா? நெல்லியடி. எஸ். அருள்ராஜன்
Co எனக்கு வயது போய் விட்டது என உமக்கு யார் கதை கட்டிச் சொன்னது? எனது சிந்தனைகளும், உணர்வுகளும் இன்னமும் இளமை முறுக்குடன் திகழுவதை மல்லிகை யைப் படித்தாவது தெரிந்து கொள்ளுங்கள். 23 இந்த மண்ணில் எழுத்தாளனாக உருவாகத் துடிக்கும் இளம் தலை முறையினருக்கு என்னென்ன தகைமைகள் இருக்க வேண்டும்? கொழும்பு- 13. எஸ்.தின்யா. şPP வேறு எல்லாவற்றையும் விட, இலக்கியத் தாகம் நெஞ்சில் நிறைந்திருக்க வேண்டும். அடுத்து, அர்ப்பணிப்பு உணர்வு, சோர்வு தட்டா மனப்பான்மை, தொடர் வாசிப்பு, இடையறாத எழுத்து உழைப்பு, அத்துடன் கண்டிப்பாக இலக்கியக் கூட்டங்களில் கலந்து
மல்லிகை ஜூலை 2009 $ 69

Page 37
கொண்டு, அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை மனப் பதிவு செய்து கொள்ளல், அத்துடன் பணிவு. இத்தனையும் ஒருங்கிணைந்து காணப்பட்டால், நிச்சயம் ஒரு நாள் சிறந்த எழுத்தாளனாக உருவாகியே தீரலாம்.
* வாழ்க்கை என்பதுதான் என்ன?
வவுனியா. எம். ராமேஷ்
ÇşP வாழ்க்கை என்பதை எழுத்தில் எழுதி விளங்கி வைக்கக் கூடியதல்ல. அது உணர்ந்து, வாழ்ந்து, அநுபவிக்கத் தக்கது. அப்பொழுது தான் அதனது உட் சூட்சு மங்களை நன்கு தெரிந்து கொள்ளலாம்.
2 இந்தத் தேசியத் துயரத்தைவேதனையை - எப்படி எதிர் கொண்டீர்கள்?
தெஹிவளை. ஆர். கணேசன்.
* சாதாரண மனிதர்கள் ஒரு பாரிய துய ரத்தின் கதையைக் கிரகித்துப் புரிந்து கொள் வது வேறு. ஓர் அறிவுஜீவி இத்தகைய ஆழ்ந்த துயரத்தின் சுமையை மனதாரப் புரிந்து கொள்வது வேறு. இதன் ஆழ்ந்தகன்ற அடிப்படை நுண் துயர வலியைப் போக்க, நீண்ட நெடுங் காலங் கூடச் செல்லலாம்!- இதன் பின் விழைவுகளைப் பற்றித் தான் இன்று ஆழமாக யோசித்து வருகின்றேன். 23 மல்லிகைப் பந்தல் சொந்த மாக வெளியிட்ட முதல் புத்தகத் தின் பெயர் என்ன?
சங்கானை. வீ. குமணன்
* அந்தக் காலத்தில் மல்லிகை இதழ்
ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், இலக்
கிய ஆர்வம் மேலோங்கியிருந்த காலம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த இந்தி ராணி என்பவர் எழுதிய சிறுவர் சிறுகதை நூலான தங்கத் தாமரை என்ற புத்தகத் தையே 1962ல் வெளியிட்டுள்ளேன்.
2 மல்லிகை எதிர்கால இளம் எழுத்தாளர் பரம்பரை ஒன்றை உருவாக்கித் தர முயலுமா?
காலி. எஸ். ஏ. முகம்மது
* மல்லிகையின் அடுத்த கட்ட நோக் கமே புதிய இலக்கியப் பரம்பரை ஒன்றை உருவாக்கி, நாட்டுக்கு அளிப்பதுதான். அது சம்பந்தமாக ஒர் அறிவித்தலை இந்த இதழில் வெளியிட்டுள்ளோம். இளம் தலைமுறைப் படைப்பாளிகள் அதை ஊன்றிக் கவனத்தில் எடுப்பது நல்லது.
இல் யாழ். பல்கலைக் கழகத்தின் ஸ்தாபிதம் பற்றி, அதனை வர வேற்று மல்லிகை ஒரு சிறப்பு இதழை வெளியிட்டிருந்ததே, அது எந்த ஆண்டு? எந்த மாதம்?
உரும்பிராய். எல். கடாமணி
* 1975- ஆண்டு, ஒக்டோபர் மாதம் அச்சிறப்பிதழ் வெளிவந்தது.
இ ஐக்கிய நாடுகள் சபை எப் போது ஆரம்பிக்கப்பட்டது? அத னது பாவனை மொழிகள் என் னென்ன?
சாவகச்சேரி.
ஜீ. கனகேந்திரன்
* ஐக்கிய நாடுகள் சபை U. N. O. 1945 ஒக்டோபர் 24ந் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
மல்லிகை ஜூலை 2009 奉 70

அதனது பாவனை மொழிகளாவன ஆங்கிலம், சீனம், பிரெஞ்ச், அரேபிய, ஸ்பானிஸ், ரஷ்ய ஆகிய ஆறு பாஷைகள் அதனது உத்தியோக மொழிகளாகும்.
உ உண்மையைச் சொல்லுங்கள். மல்லிகைப் பந்தல் வெளியிடும் நூல்களின் பரவலான விற்பனை எந்த நிலையில் உள்ளது?
шопrafiüшпrufї. என். கண்ணன்
* மல்லிகைச் சஞ்சிகையில் மல்லிகைப்
பந்தலின் புதிய நூல்களின் வரவு பற்றித் தெரியப்படுத்துவதால், பல பல புதிய பிர தேசங்களுக்குத் தகவல்கள் பரந்து செல்லு கின்றன. இலக்கிய ஆர்வமும், ரசனையு முள்ள இளந் தலைமுறையினர் மல்லி கைக் காரியாலயத்திற்கே தேடி வந்து பெற் றுக் கொள்ளுகின்றனர். தூர இருப்போர் தபாலில் தருவித்துக் கொள்ளுகின்றனர். இந்த விநியோகத்தில் மன நிறைவு கொள் ளத் தக்க தகவல் என்னவென்றால், பல பல ஐரோப்பிய, கனடா, அவுஸ்திரேலியா பிரதேசங்களிலுள்ள புலம் பெயர்ந்த நம்ம வர்கள் இடையிடையே நூல்களை மொத்த மாகக் கொள்வனவு செய்வது, மனசுக்கு நிறைவையும், ஆறுதலையும் தருகின்றது.
23 ஏன் இந்தச் சஞ்சிகை வெளி யீட்டுத் துறைக்கு வந்தோம்? என எப்போதாவது மனச் சலிப்படைந் ததுண்டா?
III gi606. ஆர் . கதிரவன்
* நான் எழுத்துத் துறைக்கு வந்த காலத்திலிருந்தே கட்டம் கட்டமாக எனது
எதிர்காலத் திட்டத்தை அமுல் நடத்தி வந்
துள்ளேன். எனவே, இறுதியில் நான் பதிப் புத் துறைக்குத் தான் வந்திருக்க வேண் டும். எனவே, மனசு நிறைந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறேனே தவிர, எந்தக் கட் டத்திலும் சலிப்படைந்ததே கிடையாது. இந்தத் துறைக்கு வந்ததின் பின்னர் மன நிறைவு அடைகிறேன் என்பதே உண்மை யாகும்.
2 உங்களை நேரில் சந்தித்து முகம் முகம் பார்த்து ஒரு ஐந்து நிமிஷங்கள் பேச வேண்டுமென் பது எனது நெடு நாளைய ஆசை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு விட்டு, நேரில் வந்து சந்திக்கலாமா? பேசலாமா?
தெஹிவளை. எஸ். எம். லத்தீப்
Qaş” உங்களது மன உணர்வுகளை நான் கனம் பண்ணுகின்றேன். மதிக்கின்றேன். அதே சமயம் இளைஞர்களிடமுள்ள இத்த கைய வழிபாட்டு மனோபாவத்தை முற்று முழுதாக மறுதலிக்கிறேன். சினிமாக் கலா சாரம் கற்றுத் தந்த வழிபாட்டு முறை இது. இந்த முறை இந்த மண்ணில் வேர் விட்டுத் தளைக்கவே கூடாது. நீங்கள் இதற்கென்றே மினைக்கெட்டு வரவேண்டாம். கொழும்பு வரும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால், அப்ப டியே மல்லிகைப் பக்கமும் ஒரு தடவை எட்டிப் பார்த்து விட்டுப் போகலாம்.
இ என்ன யாழ்ப்பாணத்தை அடியோடு மறந்து போய் விட் டீர்களா, என்ன? எப்பொழுது இங்கு வரப் போகிறீர்கள்?
ceистоla. It g. எஸ். புலேந்திரன்
şFP உங்களது மன ஆர்வத்தை என்னால்
மல்லிகை ஜூலை 2009 & 71

Page 38
மல்லிகை ஜூலை 2009 & 72
முற்று முழுதாகப் பூரணமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. மல்லிகையை உரு வாக்கிய மண்ணல்லவா, அந்த மண். வந்து ஒரு மாதமளவில் அங்கு நிலை கொண்டு இருக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்
களை அவரவர்களினது வீடு தேடிப் போய்ப
பார்த்துக் கதைத்து மகிழ வேண்டும். பூட் டிக் கிடக்கும் பழைய மல்லிகைக் காரியா லயத்தைப் புனரமைத்து, இலக்கிய நண் பர்களை ஒருங்கழைத்து அங்கே கூடியி ருந்து எல்லாரும் ஒரு மாலை நேரம் தேநீர்
அருந்திக் களிக்க வேண்டும் என்ற பொல்
லாத ஆசைகளெல்லாம் என் மனசில் நிறைய நிறைய உண்டு.
பொறுத்திருந்தவர்கள் தானே, நீங்கள்?
இன்னமும் சிறிது காலம் பொறுத்திருங்
களேன். எல்லோரும் ஒன்று சேருவோம்!
2 உங்களது இலக்கிய நண்பர் ஜெயகாந்தனுடன் தொடர்புகள் உண்டா?
சிலாபம். . (I
* இருவரும் தொடர்புகளைப் பேணி வருகின்றோம். அவர் தனது பழைய இல் லத்தைப் புதுப்பித்து மாடி வீடொன்றைக் கட்டி வருகிறார். அதன் காரணமாகப் புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்து வாழுகின்றார். இது தான் சமீப காலத்தில் கிடைத்த செய்தியாகும்.
28 முன்னர் ஆனைக்கோட்டை யிலும் அதன் பின்னர் புத்தளத்தி லும் எழுத்தாளர் சுதாராஜ் இல் லத்தில் நடைபெற்றது போன்ற இலக்கியவாதிகளின் இலக்கியம் பேசாத ஒரு முழுநாள் சந்திப்
பொன்றை ஏற்பாடு செய்தால் சுவாரஸ்யமாகவும், சுவையாகவும் இருக்குமல்லவா? அதை ஏற்பாடு செய்தால் என்ன?
கொட்டாஞ்சேனை. இலக்கியப் பிரியன்
* நல்லதொரு யோசனை. அந்தக் காலச் சுமுகமான யாழ்ப்பாணத்திலுள்ள 'பிரிமியர் கபே'யில் நாங்கள் குறிப்பிடக் கூடியவர்கள் அடிக்கடி சந்தித்து அளாவ ளாவுவோம். எங்களது இலக்கிய உறவு சுமு கமாகப் போய்க் கொண்டிருந்தது. இடை யிடையே இப்படியான சுமுகமான உறவு களைப் பேணிப் பாதுகாத்துப் படைப்பாளி கள் ஒன்று கூடிக் கதைப்பது நல்லதே. வெள்ளவத்தையில் ஓர் இலக்கிய நண்பர் ரது இல்லத்தில் இப்படியான ஒரு இலக் கிய நிகழ்வைக் கூடிய சீக்கிரம் நடத்தலா மென முடிவு செய்திருக்கின்றோம். சுமுக மான உணர்வைப் பேணிப் பாதுகாக்க வேண் டும் என்ற நல்லெண்ணம் இருந்தால் தான் இவையெல்லாம் சாத்தியமாகலாம். 2 இலங்கையில் பரந்த பிரதேசங் களில் புத்தகக் கடைகளில் மல்
லிகை கிடைப்பதில்லையே, என்ன காரணம்?
கண்டி.
* கடந்த காலங்களில் நமது பிரதேசத்
எம். சிவமூர்த்தி
தில் பரந்த முறையில் மல்லிகை விநியோ கிக்க முடியாத நிலை இருந்தது. இன்று நிலைமை ஓரளவு சீர்திருந்தியுள்ளது. தொடர்ந்து பல பல புத்தக விற்பனவுநிலை யங்களுடன் நேரடி உறவுகளைச் செம் மைப்படுத்துவோம். மல்லிகையின் அடிப் படை ஆதார பலமே சந்தாதாரர்கள் தான். மாதா மாதம் சந்தாதாரர்களின் தொகையை அதிகரிக்க உழைப்பதே நமது தலையாய நோக்கமாகும்.
201/4, முரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103A, இலக்கத்திலுள்ள Lakshmi Printers அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

இருoணிசேலை
‘சிறந்த சேவை குறைந்த கூலி இதுவே, வேல் அமுதனின் தாரக மந்திரம்
மேலதிக விபரங்களைச் சுய தெரிவு முறை முன்னோடி | மூத்த புகழ்பூத்தசர்வதேச சகலருக்குமான | தங்கள் திருமண ஆற்றுப்படுத்துநர் தனிநபர்நிறுவருர்,
குரும்பசிடியூர் மாயேழு வேல் அமுதனிடம் திங்கள், புதன், வெள்ளிமாலை வேளைகளில் የ Q∂60488, 2∂60694, 487∂929
இலக்கத் தொலைபேசியின் விசாரித்துறிகுக
சந்திப்பு:தீங்கள், புகுன், வெள்ளி, சளி, ஞாயிறுநாள்களில் முன்னேற்பாட்டு ஒழுங்குமுறையில்
yasalufi: 8-3-3- lurpringT LOTIguDanaIT வெள்ளவத்தை காவல்நிலையத்திந்த முன்பாக, fതീdമീ, 33 ആീ ഗ്ലൂർയ ബ്ര] 55ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு-03_
சுலபமான தெரிவுக்குச் சுயதெரிவுமுறையே மகோன்னத மணவாழ்வுக்குக் குரும்பசிட்டியூர், மாயெழுவேல் அமுதனே!

Page 39
2
רד"ר ר
 

ി