கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உள்ளக் கமலம் (ஜெகசிங்கம் நினைவு மலர்)

Page 1


Page 2

வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ள லடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ? வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது 15
ܒ . 1 1 : =ܨ சுவாமி விபுலாநந்தர் ܠ ܐ ܐ
" -

Page 3

நூல் :-
காலம்:-
வெளியீடு :-
இடம் :-
பக்கம் :-
அச்சுப்பதிப்பு:-
உள்ளக் கமலம்
உள்ளக்கமலம்
I7.06.2009
ஜெகசிங்கம் அன்பர்கள்
வெள்ளவத்தை
20
ரண்யாஸ் கிரபிக்ஸ், வெள்ளவத்தை

Page 4
உள்ளக் கமலம்
உள்ளே ஜெகசிங்கம்
பக்கம்
1. முகவுரை 3
2. நீங்காது நினைவில் நிறைந்து நிற்கும்
கட்டிடப் பொறியியலாளர்
உயர் திரு.இ.ஜெகசிங்கம் . . . 5
3. மறக்கமுடியாதவன் 7
4. தனக்கன்றிப் பிறர்க்கு நல்லோன் 8
5. நான் நம்பியிருந்த உடன் பிறவாச் சகோதரன் 9
6. தன்னலமில்லா அமரர் இராசசிங்கம் ஜெகசிங்கம் 10
7. அன்பு நண்பா II.
8. அன்பின் இலக்கணம் 12
9. நினைவில் நிறைந்த ஜெகசிங்கம் அண்ணா 13
10. சடங்கிற்கென்றே சொன்னாய் 14
11. உள்ளக் கமலம் 15

உள்ளக் கமலம்
(up35660)
மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை யென்னோற்றான் கொல்லென்னுஞ் சொல்
திருக்குறள்
ஆசிரியர் இராசசிங்கம் இன்ஜினியர் ஜெகசிங்கத்தைப் பெற்றெடுக்க என்ன தவஞ் செய்தாரோ?
கோயில் என்றால் சிதம்பரம் நடராசப் பெருமான் கோயில்.
மலர் என்றால் தாமரை மலர்.
ஐயா என்றால் இன்ஜினியர் ஜெகசிங்கம்.
இது ஜெகசிங்கம் மீது பற்றுள்ளவர்களின்அகராதி.
ஐயாவென வோங்கி ஆழ்நதகன்ற நுண்ணியனே.
- திருவாசகம்- மாணிக்கவாசகர்.
ஐயா. சிவபெருமான். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப் படும். - திருக்குறள்.
சிலபொருள்களின் பொதுப்பெயர் அதுவகிக்கும் தலைமைப் பண்பினால் அதுவே பின் காரண இடுகுறிப் பெயராயும் பொதுப் பெயராகவும் விளங்குகிறது.
துன்னாலையிலும் கொழும்பிலும் எங்களோடு ஒன்றிப் பழகியவர் எங்கள் அன்புக்குரிய இராஜசிங்கம் ஜெகசிங்கம் அவர்கள். அவருடைய திடீர் பிரிவு அதுவும் சற்றும் எதிர்பாராத முறையில் அவருக்கு ஏற்பட்ட சம்பவம் அவரின் அன்பர்களை நிலை குலையச் செய்துவிட்டது.அதனால்
3

Page 5
உள்ளக் கமலம்
சிலர் தமது உணர்வுகளை அடக்கமுடியாது அவதிப்பட்டார்கள். அதுவும் திரு ஜெகசிங்கத்தின் சாதனையில் ஒன்று.அதனாற்தான் இப்புத்தகம் வெளியிடப்படுகின்றது. வெறுமனே பழக்கம்: நட்பு: உறவு என்ற சொற்களின் அர்த்தத்துக்கு அப்பாற்பட்டு ஜெகசிங்கத்தின் செய்கைகளும் நடவடிக் கைகளும் அமைந்ததினாற் தானி இந்தப் புத்தகம் வெளிவருகிறது.இது மனித உணர்ச்சியின் வெளிப்பாடு. அவரை நேசித்த அனைவர்களது உணர்ச்சியின் வெளிபாடும் கூட.
மனிதர்கள் எல்லோரும் உணர்வு வசப்பட்டவர்கள். அதற்குக் கட்டுப் பட்டவர்களுமாவர். மனித உணர்ச்சியை மெய்ப்பாட்டியல் என்று எட்டு பெரும்பிரிவாகப் பிரித்து உலகுக்கு முதல் அறிமுகப்படுத்தியது தொல்காப்பியம்.அது நகை, அழுகை,இளிவரல்,மருட்கை,அச்சம, பெருமிதம், வெகுளி, உவகை எனக் கூறுகிறது. இந்த இயற்கையின் அழுகை என்ற மெய்ப்பாடு ஜெகசிங்கமாக நின்று எம்மை ஆட் கொண்டுள்ளது அதனாற்தான் இந்நுால். இதை எம்மை விளம்பரப் படுத்தவோ அல்லது கேளிக்கைக்காகவோ அல்லது கொண்டாட்டத்திற் காகவோ வெளியிடவில்லை. எமது மனத்தின் கனத்தை இந் நுால் மூலமாகவேனும் இறக்கிவைக்கலாம் என்ற ஒரு சிறு முயற்சி.
உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் பொல்லா -மரத்தின் கனக்கோட்டந் தீர்க்குநுா ல.தேபோன் மாந்தர் மனக்கோட்டந் தீர்க்குநுான் மாண்பு. நன்னுால்
கெட்ட மரத்தினது மிகுதியாகிய கோணலைப் போக்குகின்ற சுண்ணாம்பு நுாலின் மாட்சிமைபோல மனிதர்களது மனத்தின் கோணலைப் போக்கவல்லது நுால். திருமேனி இல்லாத திரு ஜெகசிங்கத்துடனான தமது நினைவுகளைத் பகிர்ந்து கொள்ளும் அன்பர்களின் கோரிக்கையை புரிந்துணர்வோடு ஏற்றுக்கொண்டு இந்நூாலை வெளியிட ஒப்புதல் அளித்த திரு ஜெகசிங்கத்தின் குடும்பத்தினர்க்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள திரு ஜெகசிங்கத்தின் நண்பர்களும் அன்பர்களும் எமது இந்த முயற்சிக்கு ஊக்கம் தந்து ஆதரவு நல்கியதற்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொகுப்பு- சி.கந்தசாமி.
4.

உள்ளக் கமலம்
நீங்காத நினைவில் நிறைந்து நிற்கும் கட்டிடப் பொறியியலாளர்
உயர் திரு இ.ஜெகசிங்கம்.
இலங்கையில் புகழ் பூத்த வளம் மிக்க வடமராட்சி துன்னாலையில் பிறந்து யாழ் இந்துக் கல்லுாரியில் கற்று மொறட்டுவ பல்கலைக் கழகத்தில் கட்டிடப் பொறியியற் துறையில் பட்டப் படிப்பை முடித்து சிறந்த கட்டிடவடிவமைப்புப் பொறியியலாளாராக வலம் வந்து கொண்டிருந்தவர். நானும் ஜெகசிங்கம் அவர்களும் 2001ம் ஆண்டு தொடக்கம் நல்ல நண்பர்களாக சகோதரர்களாக அன்பாகப் பழகி வந்தோம்.பலமணி நேரம் அறிவுசார் விடயங்கள் பற்றிக் கதைப்போம். அன்று தொட்டு கட்டிடத் துறையில் எனது வலது கரமாக இருந்து என்னுடன் செயற்பட்ட ஒரு உத்தமர். இவருடைய எளிமையான தோற்றமும் கலகலப்பான பேச்சும் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்து வைக்கும் தன்மையும் எல்லோரையும் அவர்பால் ஈர்க்க வைத்தது. தனது இரு ஆண்பிள்ளைகளுடன் கூட நண்பன் போற் பழகும் இவர் அவர்கள் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர். இவர் பிள்ளைகளின் கல்வியில் மட்டுமன்றி காற்பந்து, கிறிக்கெற், செஸ் போன்ற விளையாட்டுக்களிலும் ஈடுபட வைத்து ஒரு வழிகாட்டியாகச் செயற்பட்டார்.
இவ்வாறு எல்லோர் மனதிலும் இடம்பிடித்த ஜெகசிங்கம் அண்ணாவின் மரணம் ஒரு விசித்திரமானது. மே மாதம் 5ம் திகதி செவ்வாய்க்கிழமை ஒரு மறக்க முடியாத நாள்.அன்று மாலை 6.30மணியளவில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ரணசிங்க என்ற பொலிஸ் வெள்ளவத்தை புகையிரத நிலையத்திலிருந்து மாஸ்ரர் என்பவருக்கு ஜெகசிங்கம் அண்ணரை காவு கொண்ட புகையிரத விபத்துப் பற்றித் தகவல் கொடுத்தார். அவர் இரத்மலானையில் நின்றபடியால் உடனடியாகத் தொலைபேசியில் எனக்குத் தகவல் கொடுத்தார்.இத்தகவல் பொய்யாக இருக்கவேண்டும் என கடவுளை வேண்டிய வண்ணம் விபத்து நடந்த இடத்திற்கு கணப்பொழுதில் சென்றுவிட்டேன். அங்கு புகையிரத நிலையத்தில் ஒருவரை பேப்பரால் மூடியிருந்தார்கள். பொலிசார் அதைத் திறந்து அவரை அடையாளம் காட்டும்படி சொன்னார்கள். பேப்பரைத் திறந்து பார்த்தேன். ஐயகோ! எனது இரத்த நாளங்கள் யாவும் உறைந்து விட்டதுபோலவும் மூளை இயங்க மறுத்து விட்டது போலவும் ஒரு பிரமை. நகமும் சதையுமாக என்னுடன் வாழ்ந்த அண்ணரை இரத்தமும் சதையுமாக உருத்தெரியாது கண்டது எனக்குள் மலைப்பை உண்டுபண்ணியது. என்னால் சில நிமிடங்கள் சுயநினைவிற்கு வரவே முடியவில்லை. 5

Page 6
உள்ளக் கமலம்
ஒருவாறு என்னை சுதாகரித்துக்கொண்டு இனிமேல் நடக்க வேண்டிவற்றுக்காக என்னை திடப்படுத்திக்கொண்டேன். அப்போது அவரது உறவுகள் யாருமே அவ்விடத்திலில்லை. ஏனெனில் இவ் விபத்துப் பற்றி அவர்கள் ஒருவருக்கும் தெரியாது மாஸ்ரர் என்பவர் மூலமாகவே அவரின் மனைவிக்கு தகவல் கொடுத்துவிட்டு பொலிசாருடன் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று பார்த்தபோது அவ்விடமே இரத்தக் காடாகக் காட்சியளித்தது. அவரின் மோட்டார் சைக்கிளை அடையாளம் கண்டு அதையும் எடுத்து புகையிரத நிலையத்திற்கு வரும்போது அவரின் மனைவி சகோதரர்கள் யாவரும் வந்து சேர்ந்து விட்டனர். அவர்களது குடும்பத்தின் இமயமாய் விளங்கும் ஜெகசிங்கம் அண்ணரை இக்கோலத்தில் கண்டதும் அவரின் குடும்பமே திகைத்துப் போய்விட்டது. ஏனெனில் இது அவர்கள் கனவிலும் நினைக்காத ஒரு சம்பவம். அதன் பின் ஒருவாறு அவரது உடலை களுபோவிலை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றோம்.
ஜெகசிங்கம் அண்ணர் சிறந்த கட்டிடப் பொறியியலாளர். வீடுகளை சிறப்பாக வடிவமைப்பதில் திறமைசாலி. அவர் இன்று கொழும்பில் பல உயர்ந்த தொடர் மாடிக் கட்டிடங்களை வடி வமைத்துள்ளார்.அவருடன் வேலை செய்ததால் நானும் மிக நல்ல புதிய அனுபவங்களையும் நுணுக்கங்களையும் நன்றாக அறிந்து கொண்டேன்.
இவரின் பிரிவால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப இன்னொருவரால் என்றுமே நிச்சயமாக முடியாது.’பிறப்பவர்கள் எல்லோரும் இறப்பது நியதி” ஆனால் தான் இறக்கப் போகிறேன் என்று கடைசி நிமிடத்திலும் தெரியாமல் இறந்துபோனார் என்பதை நினைக்கும் போது மனம் வேதனை அடைகின்றது. அவர்களது வாழ்க்கையில் விதி புகையிரத ரூபத்தில் வந்து விளையாடிவிட்டது.
அண்ணரின் பிரிவால் மனமுடைந்து நிற்கும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் நண்பரகள் உற்றார் உறவினர்களுக்கும் மனச் சாந்தி வேண்டிப் பிரார்த்திக்கிறேன். அவர் எம்மத்தியில் இல்லாவிடினும் ஒரு உத்தமமான அற்புத மனிதராக அவர் பழகிய நண்பர்கள் உறவினர்கள் யாவர் மனங்களிலும் வாழ்ந்துகொண்டே இருப்பார்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
இ.சாந்தசொரூபன்
கட்டிடப் பொறியியலாளர் (மீனம் கோர்ட்) 6

உள்ளக் கமலம் மறக்க முடியாதவன்
வி.பாலசுந்தரம் (சந்திரன்) துன்னாலை
அன்பு ஜெகனுக்கு அடங்காத துயரத்துடன்
ஜெகன்!அன்பின் உருவமே! அமைதியின் சொரூபமே! ஏதிர்பாராமல் திடீரென மறைந்த மாயமெதுவோ? எம் யாவரையும் கவலைக் கடலுள் ஆழ்த்திவிட்டாய்! நாம் செய்வதறியாது திகைத்து நிற்கின்றோம்.
உனது பாசத்தைப் பணிவை ஆற்றலை இனி எங்கு பார்ப்பேன்? ஜெகன் யாவும் கனவாய்க் கருகிப் போய் விட்டதடா யார் செய்த பாவமடா? யாரிடம் சொல்லியழ? ஏங்குகின்றேன் ஏதிலியாய். இறைவா ஏனிந்த மரண வேதனை?
ஜெகன் உன்னோடு பழகிய காலத்தை மறக்க முடியவில்லையடா சிறியவர் முதல் பெரியவர் வரை அன்பு காட்டினாயே! உன்னுடைய சிரிப்பு மற்றவர்களை இரட்சிக்கும் சிரிப்பு எல்லோரையும் மயக்கிவிட்டு நீ எங்கேயடா சென்றுவிட்டாய்?
எல்லோருக்கும் சேவை செய்வதில் இன்பம் கண்டாயே! மற்றவர்கள் துயர் துடைப்பதில் நாட்டம் கொண்டாயே! பெற்ற மகனிருவரினதும் வாழ்வு வளம் பெற உழைத்தாயே! எல்லோரிடமும் விடைபெறாமல் மாயமாய் மறைந்து விட்டாயே
உன்னுடன் உறவாடிய நாட்கள் நீரலைபோல் மோதுகின்றதே! உனது உயர் சிந்தனைகளை என்னுடன் பகிர்ந்த நாட்கள் எத்தனை? ஒன்றாகக் கூடி உணவருந்தி மகிழ்ந்த நாட்கள் எத்தனை? அத்தனையும் இனிவருமா? மொட்டாய்.பூவாய். சருகாய். கருகிவிட்டதடா
மனதாற் கூட மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காத ஆத்மாவே ஜெகனே வாழ்க்கைத் துணையுட்பட எல்லோரும் துடிக்கின்றார்கள் இவர்களுக்கெல்லாம் யார் ஐயா பதில் சொல்வது ஆண்டவன் சந்நிதியில் சாந்தி பெற இறைவனை வேண்டுகின்றேன்
நீங்காது உன் நினைவு ஜெகனே! ஓம் சாந்தி! சாந்தி!! छमाpbg5]!!!

Page 7
உள்ளக் கமலம்
தனக்கன்றிப் பிறர்க்கு நல்லோன்
எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஜெகசிங்கம் ஐயா அவர்கள் எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை எங்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நாங்கள் எல்லோரும் ஐயா என்று அன்போடு அழைப்பது ஜெகசிங்கம் ஐயா அவர்களையே. துன்னாலையிலும் கொழும்பிலும் எங்கள் மத்தியில் அன்புடனும் பண்புடனும் பழகியவர் ஜெகசிங்கம் ஐயா அவர்கள். ஊர் அபிமானம் நிறைந்தவர் எங்கள் ஜெகசிங்கம் ஐயா. துன்னாலையைச் சேர்ந்த எவருக்கும் என்ன பிரச்சினை எந்த நேரத்தில் எங்கே ஏற்பட்டாலும் அந்த நேரத்தில் அங்கே சமுகம் கொடுத்து அதனைத் தீர்த்துவைக்கும் வல்லமை படைத்தவர் எங்கள் ஜெகசிங்கம் ஐயா அவர்கள்.
வயதில் இளையவரோ முதியவரோ எ வருடனும் அவர்களுக்கேற்றவாறு பழகி எல்லோர் அன்பையும் பெற்றுக்கொண்டவர் ஜெகசிங்கம் ஐயா அவர்கள். சமூகத்தில் நிலவும் ஏழை பணக்காரன் என்ற வேற்றுமையின்றி எல்லோருடனும் மிகச் சரளமாகப் பழகும் பண்பாளன் எங்கள் ஜெகசிங்கம் ஐயா அவர்கள். பிறர் நலனுக்காகத் தன்நலனை விட்டுத் தருபவர் ஜெகசிங்கம் ஐயா அவர்கள். சுறுசுறுப்பும் துடிப்பும் மிக்க இளைஞனாகக் காட்சி அளிக்கும் ஐயா பிறருக்கு ஏற்பட்ட ஆபத்துக்களை பல முறை தடுத்திருக்கிறார். அதே போல் பிறருக்கு ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாய் இருப்பவர் எங்கள் ஐயா.
ஐயா அவர்கள் எங்கள் தொழில் முயற்சியில் எங்களோடு தோழோடு தோழ் கொடுத்து உதவிய பெருந்தகையாவர். அவரின் அறிவும்: ஆற்றலும்: புத்தி சாதுரியமும் பண்பும் எங்களை மேலும் ஊக்கப் படுத்துவதாக அமைந்தது. தொழிலில் நேர்மை சுத்தம் கண்ணியம் என்பவற்றைக் கடைபிடிப்பவர் எங்கள் ஐயா. வேலைத் தலத்தில் தொழிலாளி முதலாளி என்ற வேற்றுமையின்றி எல்லோருடனும் அன்பாகப் பழகும் அவரின் பக்குவத்தால் சகலரும் தங்கள் தங்கள் பொறுப்பையுணர்ந்து கடமையை நிறைவேற்றியது ஐயா அவர்களின் பண்பினாலும் அவருடைய ஆளுமையினாலுமே. அதுமட்டுமல்ல தொழிலாளர்களின் சேம நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களை அரவணைக்கும் பண்பாளன். அதனாலோ என்னவோ இவரை
8

உள்ளக் கமலம்
அறிந்த எவரும் ஐயா அவர்களைத் தங்கள் இதயத்தில் வைத்துப் பூசிக்கிறார்கள்.
வெள்ளவத்தையிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பல குடியிருப்பு மாடிகளை மிக நேர்த்தியாக தனது தொழில் நுட்ப அறிவால் அமைத்துக் கொடுத்தவர் ஐயா. ஐயா அமைத்துக் கொடுத்த குடியிருப்பு மாடியெதிலும் எந்தப் பிரச்சினையுமின்றி மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்பது கண்கூடு.
“எல்லோர்க்கும் சாத்திரம் சொல்லும் பல்லி தனக்குச் சொல்ல மாட்டாமை போல்” ஐயா தன்னைப் பற்றி அக்கறையின்றி செயற்பட்டதால் எங்களிடமிருந்து திடீரென மறைந்து விட்டார். அவரின் இழப்பு அவரின் குடும்பத்தினர்க்கு மடடுமல்ல அவரையறிந்த எல்லோர்க்கும் ஈடு செய்ய முடியாத பேரிடியாகும்.
இ.மனோகரன் இ.மதிவண்ணன்
நான் நம்பியிருந்த எண் உடன் பிறவாச் சகோதரன்
என்னுடைய கடைசிக் காலத்தில் என்னுடைய பாடுபறப்பைப் பார்க்க எனக்கு ஒருவன் இருக்கிறான் என்று நம்பியிருந்தேன். என்னை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டாயே! எனக்கு இனி யார் இருக்கினம், நான் என்ன செய்ய? என்னுடைய செல்லம், செல்லம் என்று தானே கூப்பிடுவன் இப்பிடியாய் போய்விட்டானே! எண் சீவியத்தில் இப்பிடி ஒருவனைக் காணவில்லை எண் உடன் பிறவாத சகோதரன் ஜெகசிங்கம்.
த.விஜயரத்தினம் (விஜய அண்ணன்) துன்னாலை

Page 8
உள்ளக் கமலம்
தன்னலமில்லா அமரர் இராசசிங்கம் ஜெகசிங்கம்
(36). வரதராஜா உடன் பிறவாத சகோதரன். துன்னாலை தெற்கு கரவெட்டி
“தோன்றிற் புகழொடு தோன்றுக வ.திலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று.”
இது தமிழ் மறை காட்டும் வாழ்வியல் தத்துவம். பிறப்பும் இறப்பும் இறைவனின் நியதி. மனிதப் பிறவியைத் தந்தது இறைவனுக்கு மாறில்லாத வாழ்க்கை வாழ்வதற்கே. இது மனித குலத்தின் சீரிய பணியென நம் முன்னோர்கள் எமக்கு வழிகாட்டி வந்துள்ளனர். இந்த உணர்வோடு வாழ்ந்தவர்களில் பலர் நம் மத்தியில் வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டனர்.
இந்த வரிசையில் வானளாவ உயர்ந்து துன்னாலை மக்களின் பெரும் மதிப்பையும் அன்பையும் சம்பாதித்தவர் அமரர் இராசசிங்கம் ஜெகசிங்கம் அவர்கள். செய்யும் தொழிலை மதிக்கும் பக்குவம் கொண்ட அமரர் ஜெகசிங்கம் அவர்கள் குடும்பத் தலைவர்கள் அயலவர்கள் நண்பர்கள் எல்லோரினதும் மதிப்பையும் பெற்று வாழ்ந்து காட்டியவர்.
எந்தத் துயர் வந்தபோதிலும் எவரையும் மனம் நோகாமல் மென்மையான அணுகுமுறையால் திருப்திப்படுத்தும் பண்பாளராக வாழ்ந்து காட்டிய சிறப்பு இவருக்குரியது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய வல்லிபுர மாயவனைப் பிரார்த்திக்கின்றோம்.
10

உள்ளக் கமலம்
அன்பு நண்பா
வ.சந்திரசேகரம் (சாத்திரி)
துன்னாலை-அவுஸ்திரேலியா
அன்பு நண்பா ஜெகா உன் நினைவுச் சின்னங்களை என்உள்ளத்தில் பதித்தாய் தாழ்விலாச் சேவையை தரணிக்கு ஆற்றி மேலுலகு செல்ல நண்பா மனமும் வந்ததோ நீள்புவியில் தமக்கியன்ற நற்பணிகள் பல செய்து புகழ்ந்திட வாழ்ந்த நண்பா! ஊருக்காக வாழ்ந்தவர்கள் இறப்பதில்லை வரலாற்றில் பேருக்காக வாழ்ந்தவர்கள் பெற்றபயன் ஏதுமில்லை.
கொழும்பில் உன்னுடன் ஆனந்தமாக கதைத்து விடைபெற்று வந்தேன்.எங்கள் உறவை இறுக்கமாகவே பற்றி வந்தேன்.திரும்பவும் வந்து ச்ந்திப்பேன் என நினைத்தேன். அது பலனளிக்கவில்லை. எங்கள் நெருக்கமான அன்பு யாழ் இந்துக் கல்லுாரியில் ஆரம்பித்து பல்கலைக்கழகம் வரை சென்று இன்றும் தொடர்ந்து வந்தது. காலம் செய்த கோலத்தால் நாம் பிரிந்து வாழ்ந்தாலும் உன்னை நான் என்றும் மறந்ததே இல்லை. உனது உயர்ந்த பண்பும் அன்பான மனமும் தனி தன்மையானவை. உனது குரல் என் மனத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. உன் வெற்றிடத்தை எவராலும் நிரப்ப முடியாது. நீ ஒரு பெரிய இடை வெளியை விட்டுச் சென்றுவிட்டாய் நண்பனே!
மனித நேயம் மிக்கவனாக மக்களுடன் வாழந்து தனது குடும்பக் கடமைகளையும் செவ்வனே ஆற்றி இன்று மீளாத் துயில் கொள்ளும் அமரர் இராசசிங்கம் ஜெகசிங்கம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
11

Page 9
உள்ளக் கமலம்
சிவமயம்.
அணியினி இலக்கணம்
அமரர் திரு இ.ஜெகசிங்கம் அவரினது மறைவையொட்டி துன்னாலையைச் சேர்ந்த திரு சோ.ஞானப்பிரகாசம் குடும்பத்தினரின் கவிதாஞ்சலி. அன்பின் இலக்கணமாகவும் உறைவிடமாகவும் பண்புக் கடலின் பவளமாகவும் பரிவுக் களத்தின் வீரனாகவும் விளங்கிய நல்லோன்.
செவ்வாய் மலர்ந்த சேயோன் நட்புறப் பழகும் நல்லோன் கல்விக் கரை காண் கல்லோன் - நற் நல்ல காருண்ய கவிச் சொல்லோன்.
கருணையின் முதல் வடிவம் காருண்யத்தின் மறுவடிவம் கொடையின் ஓர் வடிவம் பொறுமையின் பொன் வடிவம்.
கேட்பவர்க்கு இல்லையெனாது வழங்கும் ஈகைப் பெருந்தகை மனித மனங்களிலே மாண்புற வாழ்ந்த மானிடன்.
உதவி செய்வதற்கு உரக்கரம் நீட்டும் உதயவன் உறவுகட்கு உதிரத்தையும் ஊட்டும் அன்பன்!
அத்தனையும் நிரம்பியதோர் பண்பாளனை உதாரணத்திற்கோர் உத்தமனை
மானிட உருவத்திலோர் தெய்வத்தினை இனி எப்பிறப்பிற் காண்போம் நாம்
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
12

உள்ளக் கமலம்
“நினைவில் நிறைந்த ஜெகசிங்கண்ணா”
மங்களன்
துன்னாலை-வெள்ளவத்தை
உள்ளத்தால் உயர்ந்தனையே உருவத்தால் மறைந்தனையே கள்ளமில்லா உள்ளத்தால் எம்மையேன் கவர்ந்தனையோ செல்லமாக யாவரையும் சினந்திடாமல் அழைத்தனையே
நல்ல அண்ணாவே நம் ஜெகசிங்க அண்ணாவே.
நட்புக்கு பிறப்பிடம் நீ
வீட்டிற்கு சிறப்பிடம் நீ
ஊருக்குப் புகலிடம் நீ
மொத்தத்தில் நீ ஓர் பெட்டகம் உன் காலம் முடிவதை யாரும் உணரவில்லை ஊர் அடங்கும் நேரத்திலே அனைத்தையும் அடக்கிவிட்டாய் இது காலத்தின் கோலமா? இல்லை காலனின் வேலையா? வண்டி ஒன்று வந்தது வேகமாக வந்தது விடுக்கென இழந்தோம் விம்மிவிம்மி அழுதோம் அஞ்சலி செய்கிறோம் அமைதியுற அண்ணணுக்கு அஞ்சலி அஞ்சலி அவர் ஆத்ம சாந்திக்கு அஞ்சலி
என் உயிர் அண்ணா என் அரிய தோழா உன் பொன்னான கல்விப் பராயத்திலிருந்து வாழ்ந்த வாழ்க்கை அத்தனையும் கோடி பொன் பெறும். உன் பொறுமைக்கும் சுறுசுறுபடக்கும் ஈடு இணையில்லை அண்ணா. எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் ஓடி வந்து உதவுவதில் நீ முதலிடம் அண்ணா
உன்புகழ் மறையாது என்றும் உன் புகழ் வாழும். உன் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
13

Page 10
உள்ளக் கமலம் சடங்கிற்கென்றே சொன்னாய்...! தி.செல்வரத்தினம்
அண்ணா! என் இதய மன்னா! உன் எடுப்பான தோற்றம் இதற்கும் மேலாக உன்னிடம் பொதிந்திருக்கும் நிகரற்ற கல்வி. உன்னை அன்பினால் செல் லண்ணா என்று கூறிவிட்டால் போதும். தன்னலமற்ற சிரிப்பு, சிரிப்பிடையே மின்னல் போல் தோன்றிமறையும் எண்ணக் கிடக்கைகள் இவற்றையெல்லாம் மறக்க முடியுமா?
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பவற்றிற்கு புது வடிவம் கொடுத்து செவ்வனே நிறைவேற்றிய மாமனிதன் அல்லவா நீ உன் அன்புகனிந்த வார்த்தைகள் எண்ணங்கள் எல்லாமே இனிய மா, பலா, வாழை கனிகள் எம்மாத்திரம். சமதர்மவாதிகள் எனப்பிதற்றும் மனிதர்களுக்கு சமதர்மவாழ்வென்றால் என்ன என உணர்த்தும் பாங்குடைத் தன்மை. இவற்றையெல்லாம் மறக்கமுடியுமா?
கல்வியை தெய்வமாகக் மதிக்கும் மரபில் தோன்றி நிகர் அற்ற கல்வியை பெற்ற நீ அதை மற்றவர்களும் பெற வேண்டும் என்ற எண்ணக் கோட்பாட்டையும் உடையவனாய் அதை ஈடேற்றும்வகையில் மற்றவர்களுக்கும் போதித்த சாதனையை மறக்க முடியுமா?
பிறருக்காக வாழ்வதுவே இன்பம் என்று வாழ்ந்து காட்டியதை மறக்க முடியுமா?
ஆண்டுகள் பல உருண்டோடி விட்டாலும் யாழ் இந்துவின் மைந்தனை கொ/ இந்துக் கல்லூரியிலே சந்திக்கும் பேறுபெற்றவன் நான். அந்த நாட்களை உன்னுடன் அளவளவாத நாட்களே இல்லை எனலாம். அன்று 05.05.2009ல் நான் மாலை 3.30 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த வேளை என்னைத்தேடி புன்முறுவல் பூத்த முகத்துடன் வந்தீர்களே வளப்பத்தில் வந்தால் கதிரையிலே தூங்கும் வழக்கம், அன்று ஏனோ தூங்கவில்லை. நெடு நேர உரையாடல் நண்பனின் மரணச் சடங்குக்கு போக வேண்டும் என்று கூறி இறுதியாக என்னுடன் உரையாடிவிட்டு ;
நீ எங்கே சென்றாய் அண்ணா! நீ எங்கே சென்று விட்டாய்! இதயம் கனக்கிறது !!! உன் இடம் வெற்றிடமாகவே உள்ளது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டிநிற்கிறேன்.
14

15
உள்ளக் கமலம்
உள்ளக்கமலம்
சி.கந்தசாமி
ஐம்பத்தே ழாண்டுமுன்னே ஆசிரியர் இராசசிங்கம் தம்பதியின் ஈடில்லாத் தாம்பத்தியம்-அம்பத்து ஆங்கோர் ஜெகசிங்கம் அத்தனைக்கும் ஆண்சிங்கம் தங்கம் தரணியிலோர் முத்து.
ஆனந்தத் தம்பதிக்கு ஆண்சிங்கம் எத்தனையோ ஆனாலும் ஜெகசிங்கம் அன்புக்கோர் சிங்கம் ஆனதால் லெல்லோரும் செல்வம் என்றார்கள்
தானாகச் செல்வனெனத் தனியாகச் சென்றார்.
துணிந்த மண்துன் னாலைதன் துணையெனப் பணிந்து வரவேற்கப் பாலன் ஜெகசிங்கம் அணிந்த நற்குணம் அறிவுடன் ஆற்றலும் நனிந்து வளர்ந்தார் இந்நாநிலம் சிறக்கவே.
இளையோன் சிங்கம் இறைவனை வணங்கும் சளையா மனத்தன் சாந்த குணத்தன் முளையில் தினமும் முறையே தொழுது தழைத்து வளர்ந்தான் தரணி சிறக்க.
திருஇரு தயக்கல் ’லுாரியிந்துக் கல்லுாரி கருதிய கல்விக் கால்கோ விட்டான் பெருமை சேர்புலமை பெற்றிடும் நோக்கில் மொறட்டுவைப் பல்கலைக் கழகம் புக்கான்
கல்விக் கடலை கடிதினில் நீந்தி செல்விக் கடனை செலுத்திய செல்வன் வல்ல கட்டிடக் கலைஞர் பட்டம் மெல்ல வாங்கிச் சுமந்து வந்தார்

Page 11
உள்ளக் கமலம்
கட்டிடத் துறையில் காரியம் செய்த கட்டிளம் காளை ஜெகசிங்கம் கையில் மட்டிலா மாண்புறும் அராலி சென்று கட்டினர் கன்னி சிவனருள் தேவியை.
சிவனருள் தேவியைச் சிந்தையில் வைத்தே சிவனரு ளாலே ஜெயந்தன் அஜந்தன் தவமுறு செல்வம் தந்த தந்தை சிவனிடம் சென்ற சீக்கிரம் என்னே?
புத்திரச் செல்வம் புனிதமென் றெண்ணி பத்திரம் பேணிப் பள்ளிக் கனுப்பும் அத்திறம் கொண்ட அப்பா தினமும் சூத்திரம் ஏற்றிச் சுற்றியே வருவார்
காளத்தி அப்பர்க்கு கண்ணப்ப னுாட்டிய கோலத்தைப் பிள்ளைக்குக் காட்டிய அப்பா வேளைக்கு வேண்டிய விதவித வுணவை ஞாலத்தில் ஊட்டிய நல்ல அப்பா
என்றும் புத்தி எவர்க்கும் சொல்வார் நன்றே செய்வார் நன்மைபல செய்தார் குன்றாத குணத்தன் குன்றுபோல் மனத்தர் என்றும் இனியன் ஏகன் இறைவன்
பார்வைக்கு எளியனுமாய் பழகுதற் கினியனுமாய் பேருக்குப் பொருந்தும் பெருமையு டையனுமாய் யாருக்கு மஞ்சாத ஜெகசிங்கம் என்றும் ஊர்மக்க ளென்றால் உடனே முன்னிற்பார்
16

17
உள்ளக் கமலம்
உதவி புரிவதில் ஒருவர் நிகரிலர் பதவி வேண்டார் பட்டம் வேண்டார் எதனை எப்படி எங்கே எனினும் அதனை அப்படி ஆக்கும் வீரன்
இங்குநாம் இருப்பதா லுன்னைப் பிரிந்தோம் அங்கு நாம்வந் தாலது நடவாது தங்கமே உன்பேர் தங்கம் கொண்டது சிங்கமே ஜெகனே செல்வமே எங்கே!
இழப்பை அறியா திருந்த வெமக்கு இழப்பு இதுவென எடுத்துச் சொல்லவோ களப்பில் நின்றாய் கடுகதி ரெயில்முன் அழைத்துச் சென்றதே ஆருயிர் நண்பனே!
உன்புன் முறுவல் பொறுக்காத புகைவண்டி உன்னுடலைக் குதறிய கொடுமைதான் என்ன மன்னுயிரைக் காக்கும் மாமனிதா ஜெகசிங்கம் உன்னுயி ரைக்காக்க மறந்த மாயமென்ன
மறக்க முடியாவுன் மனிதப் பண்பினை துறக்க முடியாவுன் துாய அன்பினை பிறக்க முடியா பிறிதெவர் மண்மேல் இறக்கவா எங்களை இப்படிக் கவர்ந்தாய்.
வெல்லிக்கந் தோட்டத்துப் விநாயகனைத் தொழுதுபின் வல்லிபுர ஆழ்வாரை வரிசையாய் வலம்வந்து வல்லியானந்தப் பிள்ளையாரை வாழ்த்தி வணங்கிடும் நல்லிதய நாதனே செல்வனே ஜெகசிங்கம்

Page 12
உள்ளக் கமலம்
எல்லோர்க்கும் பாட்டெழுதப் பாடுபடும் எஞ்சினியர் இல்லாத காலத்தில் இரங்கற்பா பாடுகிறோம் பொல்லாத பாவிநாம் பூமியில் வாழ்கிறோம் நல்லாரை இழந்தோம் நாயாய் அலைகின்றோம்
வணங்காத முடியும் வளையாத நெஞ்சும் சுணங்காத நேர்மையும் சுத்தமான மனமும் பணங்கா சைப்னியாத குணமும் அன்புக்கே இணங்கும் ஆனந்த மூர்த்தி ஜெகசிங்கம்
உன்னைப்போல் வேறொருவர் உலகினில் இனியில்லை உன்னைப்போல் வேறெவரும் உவமானம் சொல்லவில்லை தனக்குவமை இல்லாத தயாபரனே ஜெகசிங்கம் மனக்கவலை மாறுமோ மறக்கவும் முடியுமோ
உன்னிரு செல்வம் அஜந்தனும் ஜெயந்தனும் எண்ணிய கல்வியை ஏற்றமுறச் செய்து முன்னிலைப் படுத்தி முதலிடம் கொடுத்து கண்ணினுள் மணிபோல காத்த கருணைநீ
பிள்ளைச் செல்வங்கள் பிதாவின் பரிசரிப்பால்: இல்லைக் குறையென்று இனிதே வாழ்ந்தனர் புலமை மிக்குயர்ந்து புலமைப் பரிசுபெற்று தலைமை மாணவராய் தந்த தந்தைநீ
கல்விக் கூடமதில் கலைபல கல்லென்று நல்ல ஆசிரியர் நாடிக் கூட்டிவிடும் நல்ல தந்தைநீ நாமறிந்த நாயகன்நீ பிள்ளைகள் போற்றும் பெருமை கொண்டவன்நீ
18

19
உள்ளக் கமலம்
வாய்க்கு இதமான வகைவகை உணவுகளை சேய்க்கு ஊட்டிவிடும் செல்வத் தந்தைநீ நோய்க்கு இடங்கொடா நித்திய பூரணனாய் ஒய்ந்து துாங்காது ஓடி யுழைப்பவன்நீ.
வானுயர் மாடிகளை வெள்ளவத் தையிலே தானுயர் கலையினால் தயாரித்துத் தந்த வானுயர் மேதாவி ஜெகசிங்கம் ஐயாவென நானிலம் போற்றும் நட்புக்கோர் நாயகன்.
சைவத்தமி ழோங்கும் சரஸ்வதி வீற்றிருக்கும் வையம்வட விலங்கை வடமராட்சி மண்ணே தொய்யா வீரமுள்ள துன்னாலை வடக்கு தெய்வம் வெல்லிகந் தோட்டப் பிள்ளையார்.
வல்லியா னந்தம் வாசிக சாலையை தொல்லை காலத்தில் தோற்றிய செம்மல் இல்லைக் குறையென இளையோர் முதியோர் நல்ல பயனடை நமதுார் நிலையம்
வெள்ளவத்தை வீதியிலோர் விண்ணுயர்ந்த கோபுரமேன் உள்ளத்தி லென்றும் உறைகின்றது - கள்ளமில்லா என்றும் வணங்கும் அடியவர்க்கு காட்சிதரும் மாணிக்கப் பிள்ளையார்தான் காண்
குறுமுனி கொண்டு வந்த மாம்பழம் சிறுவனென் றந்தச் சிவனார் தரவில்லை மறுகண் பிறந்த மாமயில் முருகன் அறஞ்சிறக் கச்சென்றா னப்பழனி யிலே

Page 13
உள்ளக் கமலம்
சித்தஞ் சிவனாகும் சீக்கிரம் குணமாகும் அத்தன் ஆனந்தன் அம்பலவாணன் ஆட்டுகிறான் மெத்தப் பொறுப்பாய் மேதினியில் இட்டவுனை சுத்தஞ் செய்து சுறுக்காய் கூப்பிடுவான்.
புத்தகமாய் போனவரே பூவுலகில் நின்வாழ்வு இத்தனைநா ளென்று இறையெழுதி வைத்துவிட்டான் சத்தியமே வேறில்லைச் சாற்றுவதி லேதுபயன் உத்தமாநாம் சாற்றும் மலர்
20
 


Page 14
இக்காய நீங்கி இனிெ புக்குப் பிறவாமல் பே எக்காலத் திவ்வுடல் வ அக்கால முன்ன அருள்
இருந்தேனிக் காயத்தே இருந்தே னிராப்க லன் இருந்தே னிமைய ரேத் இருந்தே னென்னந்தி
கிழக்ழுெந் தோடிய ஞ விழக்கண்டுந் தேறார் குழக்கன்று மூத்தெரு : விழக்கண்டுந் தேறார்
 
 
 
 
 
 
 

யாரு காயத்தின்
ாம்வழி நாடுமின் ந்தெமக் கானதென்(று)
ர்பெற லாமே.
யெண்ணிலி கோடி
ன விடத்தே தும் பதத்தே
பிணையடிக் கீழே
ாயிறு மேற்கே
விழியிலா மாந்தர் தாய்ச்சில நாளில் வியனுலகோரே
திருமந்திரம்