கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2009.06

Page 1
S 0வது ஆண்ை L615 ாக் á.
iš LD6S6
ஆச்
 
 

... : · na 6 o fui; 6Uruólaoilö gă6)}{I
-
ܕܠܐ ܢܧ
is . - - - - ா
|-
TGT GELT ENGIGGñTகஒரு விமரிசகன்
லை - 30/=

Page 2
エ
স্কুলছুমব্রুম্বক্লাম্বািল্লছাত্রছাত্রছাত্রছাত্র Le ee AeMM SMKSLSSMSSSSSSSSSSSSSiSSSSSSiSee S S S OK S S S S S r r rS SS SSLSLSSS K SSS E KOO S SS SS SSLL
ଝୁ
திருஇன சேவை
※
பொறியியாைர2 விரிவுரையாளர7 .
இன்னுதுத் துரிந்து பின் அதிர
விபரங்களுக்குச் சுயதெரிவுமுறை முன்Iே மூத்த புகழ் பூத்த சர்வதேச சகலருக்குமான தங்கள் திருமண ஆற்றுப்பருத்தார், தய ||1||FT T 미TIP
அமுததுடன் திங்கள் புதன் வெள்ளி மாப் வேளைகளில் தொடர்பு கொள்ளுக
TEEELE:
III HIH, FFFFFF
திப்பு திடின் புதன் ஆள் விருவிரடி
முன்னோரு ஒழுங்குமுறையில்
LLLSSSSSSSKKKS TTTYTT K K LT LL LLLTTTTTTT TTTT T TTT TTLTTTTTTT TTTTT L
LTTTT TTY KSTTTT K A S S 000S TY TKTTTT YS KKaT K KTTTTS KLTKTT S KS
| . ாமிநாங்குரிர , ※ LTSCL LL SLLLLLLLL LLLLLLLTL TLLL SSS LLTLTLS TTL TS YY LYTTLS
asஇ
 
 
 
 
 
 
 
 
 

ஆடுதல் பாடுதல் சிந்திரம் கவி ஆதியினைய கல்ைகளில் உள்ளம் ஈடுபட்டேன்றும் நடப்பவர் பிறர் ஈள நிலை கண்டு துள்ளுவர்
EIL fera IT, LI LI IT FT LETT L D E F III பரதாற்றியே, இயங்க நாடாளுமாதந்தில் மாந்திரம் நான் ஓர் இவக்கியர் சந்ாக Eஆந்து பாராட்டப் பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம் பெற்றுள்ளது. நீங்கு பாராட்டப்புட்ட சஞ்சிகை Ligris. இதன் நீள நாடாளுமன்றப் Lug) 0 Eu LITETI ஒருள்ாார்ட் 14, 7 21 பதிவு செய்ததுடன் ாதிர்காவது சந்ததியினருக்காக ஆங்ணப் படுத்தியுமுள்ளது.
50 -வது ஆண்டை நோக்கி. ஜூன்
36
|மல்லிகை அர்ப்பளிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர மல்ல அது ஓர் ஆரோக்கியமான | இ லக் கி ப தி பக்கமுமாகும்.
2{,}1/4, Sri Kathiresan St, CC TH) – 13. ΤΕΙ . 232O721
mallikaijeevagyahoo.com
இரட்டைக்குழல் துப்பாக்கி
இந்தக் கட்டத்தில் வாசகர்களுடன்
மாந்திறந்து பேச வேண்டுமென்றே எண் எளியுள்ளோம்.
ஒரு சிற்றிலக்கிய ஏட்டின் இத்தனை ஆண்டுக்கால கட்ட வரலாறே தினசரி. தினசரி போராட்ட வரலாறுதான். இல் ஸ்ாமை. போதாமையின் வரலாறுதான்.
அதை வார்த்தைகளுக்குள் அடக்கி, விவரித்துச் சொல்வது என்பதே சற்றுச் சிரமமான சங்கதிதான்.
பாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை வெளிவந்த கால கட்டங்கள் அத்தனை பெரிய சிரமங்களை எமக்குத் தந்து தொந்தரவுபடுத்தவில்லை.
ஆனால், கொழும்பு வாழ்க்கை = அதுவும் இலக்கிய வாழ்க்கை, நினைத்துப் பார்க்கவே இயலாத அத்தனை சிரமங்க விளயும் நெருக்கடிகளையும், மனப் பதட்ட ங்களையும் ஒருங்கே சேர்த்து,நம் மீது திணி த்துவிட்டதோ என மனப் புழுக்கமடைய வைத்துவிட்டது. தலைநகரத்திற்கே உரித் தான பரபரப்பு வாழ்க்கை முறை. இலக்கி பச் சிந்தனைக்கு முற்று முழுதான எதிரி.
இவை அத்தனையையும் ஒருங்கு சேர ஏற்றுக் கொண்டு, அவற்றை ஓரளவு சீர விேத்து வாழப் பழகிக் கொண்டிருக்கும் இந்தக் கால அவகாசத்தில்தான் உங்க ளுடன் நேருககு நேராகச் சிறிது மனந்திற ந்து கதைக்க விரும்புகின்றோம்.
மல்லிகை மாத இதழின் விலை ரூபா

Page 3
சரி, யுத்தத்தில் தான் வென்றாகிவிட்டதே! இனி அருத்த கட்டநடவடிக்கை தான் என்ன?
நீண்ட நெடுநாளைய உள்நாட்டு யுத்தத்தில் அரசாங்கம் வெற்றி பெற்று விட்டது. கடந்த கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக, இந்த மண்ணையே சுடுகாடாக்கி வந்த, உள்நாட்டுப் போர் ஒரு முடிவுக்கு வந்துள்ளதைப் பலரும் பாராட்டுகின்றனர்.
அது சரி, உள்நாட்டு யுத்தத்தில் வெற்றி பெற்றதுடன் இந்த மண்ணைக் கடந்த காலங்களில் சீரழித்து வந்த இனப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதா, என்ன?
நீண்ட கால இனச் சிக்கல் இன்னமும் தீர்த்தபாடாகத் தெரியவில்லையே!
பயங்கரமான இந்த நீண்டகால யுத்த அழிவிலிருந்து இந்த நாட்டு மூவின மக்களும் தகுந்த பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும்.
நாம் இந்த மண்ணைப் பாதுகாக்க நினைப்பது, நமது சுய மலர்ச்சிக்காகவல்ல.
எதிர்காலத் தலைமுறையினரின் சுபீட்ச வாழ்வுக்காகவும், ஒரு நவ இலங்கையைச் சிருஷ்டிப்பதற்காகவேயாகும்.
முத்தரப்பு அரசியல்வாதிகளும் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுவரை காலமும் யுத்தத்தைச் சாக்காக வைத்து, இனப் பிரச்சினைக்கான சுமூக மான தீர்வு ஒத்திப் போடப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றது.
இந்த நீண்ட கால உள்நாட்டுப் போரில் தாமே வென்றுள்ளதாக அரசாங்கம் பெருமிதம்
கொள்ளுகின்றது.
யுத்தத்தில் வெற்றி பெற்றதை விட, இந்த மண்ணில் காலாதி காலமாக வாழ்ந்து வரும் சிறுபான்மை இன மக்களின் நியாயமான நீண்ட நாள் கோரிக்கையைச் சுமூகமான முறையில், எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியுமற்று இன்றைய அரசாங்கம் பேசித் தீர்க்கு மானால், வருங்கால வரலாறு இன்றைய ஆட்சியாளரைக் காலாதி காலமாகப் பாராட்டவே செய்யும். போற்றித் துதிபாடும்.
அடுத்த கட்ட நடவடிக்கைதான் என்ன?

முப்பது என்பது உங்களுக்குத் தெரியும். இன்றைய நாட்டு நிலைப் பொருளாதாரப் பின்னணியில் மல்லிகையின் விலையை அதிகரிக்கச் சொல்லிப் பலர் எமக்கு ஆலோசனை சொல்லுகின்றனர்.
எமக்கு அது துளிகூட விருப்பமில்லை.
இப்பொழுதுதான் இந்த மண்ணில் ஒரு சிலர், நமது படைப்புக்களையும், இங்கு வெளி வரும் சஞ்சிகைகளையும் வாங்கி ஆதரிக்க முன் வந்துள்ளனர். அவர்களின் நேச உற வைச் சிரமப்படுத்த நாம் விரும்பவேயில்லை.
அப்படியானால், எத்தனை காலத்திற்கு நஷ்டத்தில் இலக்கியம் செய்து கிழிப்பது? என நீங்கள் கேட்பது எமக்குப் புரிகிறது.
அடுத்த அடுத்த இதழ்களில் சிறிது விலையை அதிகரிக்கலாம் என எண்ணி யுள்ளோம். உண்மையைச் சொல்லுகின் றோம். ஆரோக்கியமான இலக்கிய வளர்ச் சிக்காக இந்த மண்ணில் பலர் மல்லிகை யின் ஆத்ம நண்பர்களாக இந்த நாற்பத்து நான்காண்டு காலமாக நமக்கு "சிமிக்'கிடா மல் பண உதவி புரிந்து வந்து கொண்டிருக் கின்றனர்.
இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் உச்சநீதிமன்ற நீதியரசர் ஒருவரின் அன்பளிப்பு வந்துள்ளது. அடுத்த ஆண்டு மே மாதமளவில் ஒய்வு பெறப் போவ தாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு நேர்ச் சம்பாஷணையில், முன்னர் ஒரு நாள் இவர் குறிப்பிட்டுக் கூறியது, 'எனக்கு வழிகாட்டி நன்னுால்!"
‘பொது வாழ்வில் நானிருவரை என்றுமே மதிக்கின்றேன். அதில் ஒருவர் நீங்கள். அடுத்தவர், கம்பவாரிதி"
பலர் உதவுகின்றனர். மெய்யாகவே தமது பெயர்கள் வெளிவருவதை அவர்க ளில் பலர் விரும்புவதேயில்லை.
எனவே, முன்னரே அவர்களுக்கு வாக் குறுதி அளித்தபடி அவர்களது நாமத்தை இங்கு எழுத்தில் பதிய வைக்கத் தயங்கு கின்றேன்.
மல்லிகையின் ஐம்பதாவது ஆண்டு மலர் வெளிவரும் சந்தர்ப்பத்தில் அன்னா ரது திருநாமங்களையும், புகைப்படங்களை யும் அச்செழுத்தில் பதிய வைக்கலாம் என் பதே எனது திட்டம்,
அவர்களுக்காகவல்ல, அன்னாரது பிற் சந்ததியினர் தமது முன்னோர் மல்லிகை க்குச் செய்த ஆக்கபூர்வமான உதவிகளை பின்னோர் தெளிவாகத் தெரிந்திருக்க வேண் டும் என்பதே எமது பெரு விருப்பமாகும்.
'இரட்டைக்குழல் துப்பாக்கி என இக் கட்டுரைக்கு நாமகரணம் இட்டுள்ளதை இங்கு துலாம்பரப்படுத்த வேண்டும்.
ஒன்று மல்லிகை, அடுத்தது மல்லி கைப் பந்தல்.
மல்லிகையின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாக உதவ வேண்டும் என நெஞ்சார விரும்புபவர்கள் 'மல்லிகைப் பந்தல்' இதுவரை வெளியிட்டுள்ள நூல் களை வாங்கி ஆதரிக்க வேண்டும். அதுவே மிகப் பெரிய உதவியாக அமையும்.
தனி நபர்கள், நூலகங்கள், பல்கலைக் கழகங்களுக்குத் தேவையான நூல்க ளையே இதுவரை மல்லிகைப் பந்தல் வெளியிட்டுள்ளது.
இலக்கிய அக்கறை உள்ளோர் மல்லி கைப் பந்தலை அணுகி ஆதரவு தந்துதவ லாம். அது எதிர்கால இலக்கியச் செழு மையை ஏற்படுத்தும்.
- ஆசிரியர்

Page 4
சம்பிரதாயம் மறவாமல் உரைகள் ஆற்றவென எமது ஆசிரியர்கள் அழைக்கப் படுகிறார்கள். என்ன எப்படி எப்படி நாம் இருக்க வேண்டுமென்ற அறிவுரைகள், தங்கள் அநுபவங்கள், வாழ்த்துக்கள்இவைதாமே தொடரப் போகின்றன என்கிற சலிப்பு மெல்லத் தலைகாட்டுகிறது.
நுஃமான் சேர் மேடை ஏறுகிறார். திடீர் நிசப்தம். ஒருகவிதை- அது சங்கப்பாடல்பேராசிரியரின் குரலில் கீழ் ஸ்தாயியில் தொடங்குகிறது. மெல்ல மெல்ல அக்க விதை தனக்குரிய அர்த்தபூர்வமான உச்ச ரிப்பைப் பெற்று, உச்சஸ்தாயியில் பூரண உருவத்தைக் கொள்கிறது. மேடையில் சேரின் உருவம் மறைய, ஒரு காதலன், தன் ஆசைநாயகியை ஊஞ்சலில் மெல்ல ஆட்டிவிடுகிற காட்சி விரிகிறது. விருந்து மண்டபத்துள் மரம் முளைத்து, அதில் ஊஞ்சல் கட்டி ஆடுவது எப்படி என்ற வியப் புத் தோன்றி நிலை பெறுவதற்குள், நாயகி தலை வன் மார்பில் விழுந்து விடுகிறாள். விழுபவளின் பாரம் என் நெஞ்சையும் அழுத்த, மெல்ல நிமிர்ந்து பார்க்கிறேன். நுஃமான் சேர் சிரித்தபடி கதிரையில் அமர்கிறார். எடுத்தது கேட்டு இருந்தது காண்கிறேன்.
காதலும், காதல் நிமித்தமுமாய் குறிஞ்சி மண்ணாகிய பேராதனையிலே வாழக் கிடைத்த பல்கலை இளந்தாரிக ஞக்கு அந்தக் கவிதை ஆயுளுக்கும் மறக்காது.
ւյ607:55nա ބބބބބބބ" ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை
ஐய, சிறிது என்னையூக்கி எனக்கூற தையாள் நன்று என்று அவன் ஊக்கக் கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன்
மார்பில். f
எத்தனை தரம் கலித்தொகை நூலில் இந்தக் கவிதையைப் படித்தபோதும், ஊறாத உணர்ச்சி அன்று பெருக்கெடுத்த மர்மம் என்ன? அதுதான் நுஃமான் சேரின் ஆளுமை. கவிதையைக் காட்சியாக்க வல்ல அவர் உச்சரிப்பும், தொனியும், கவிதையுள்ளமும் அன்று எங்கள் பசி யைத் தின்றுவிட்டிருந்தன. எழுதிய சங்கப் புலவனின் ஆத்மார்த்தமான திருப்தி அந்த மண்டபத்தில் சுகானுபவமாய் விரிந்தி ருந்தது. い
சலிப்புத் தரத்தக்க வழமைகளுக்கு மாறாக இப்படி அவர் தரும் புதியவைகள் என்றும் மாணவர்களின் தீராத நுகர்ச்சிக்கு உரியனவாய் விளங்கியிருந்தன. எந்தச் சபையில் எதை விருந்து வைக்கவேண்டும் எனத்தெரிந்து வைத்திருக்கின்ற பேராசிரிய ரின் உள்ளுணர்ச்சி அவரின் பலங்களில் பிரதானமான ஒன்று.
அத்தோடு, வகுப்பிலிருக்கிற மாணவ னுக்கு எப்படிப் பரிமாற் வேண்டும் என்கிற கலையும், தமது கவிதையுள்ளத்தைக் கேட்பவர்களுக்கும் தொற்ற வைத்துவிடு கிற வித்தையும் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தன. இவ்வாறுதான் அவர் மாணவர் உலகை வெற்றி கொண்டார்.
ஒரு காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க ஈழத்துக் கவிஞராக விளங்கிய இவர், பின் நாங்கள் கல்வி கற்கிற காலத்தில் கவிதை
மல்லிகை ஜூன் 2009 & 6

எழுதுவதை மிகவும் குறைத்துவிட்டிருந் தார். எனினும், அவரது கவிதையுள்ளம் ஆற்றுப் பெருக்கற்று அடி சுட்டதில்லை. எப்பொழுதும் ஊற்றெடுத்த வண்ணமே இருந்தது. இதனால்தான் அவர், எப்பொழு தும் கவிஞராகவே இருந்தார், தனது பேச்சில். தனது வகுப்பில். தனது நடத்தையில்- என்று.
இது போதாதா? இதற்குப் புறம்பாகவும் தனியே கவிதை எழுத வேண்டுமா, 6T66T60?
இலக்கண வித்தகர் இ. நமசிவாய தேசிகர் ஒரு மகா சமுத்திரம். அந்தச் சமுத்திரம் பொங்கிப் பிரவாகித்து அலை யெறிந்து, ஒயத் தொடங்கிய நிறைவுக் காலகட்டத்தில் தான் நான் அவரைச் சந்தித்தேன். குண்டுவீச்சு, அலைக்கழிப்பு களுக்கிடையிலும் எனக்கும் அவருக்கு மான உறவு சிலகாலம் தொடர்ந்தது. வித்தகப் பாற்கடலில் வீழ்ந்தெழுந்ததால் எனக்குள் சிறிய இறுமாப்பு. மற்ற நண்பர்க ளோடு ஒப்பிடக் கிடைத்த சந்தர்ப்பங்கள் இயல்பாகவே என்னை ஒரு மாயச் சிம்மாசனத்தில் ஏறி வீற்றிருக்கச் செய்தன.
இக்கால கட்டத்தில் முது தத்துவமா னிப் பட்ட மேற்படிப்புக்காக மீண்டும் பேராதனையை நாடுகிறேன்.
மொழியியற் பாடம், முதல் நாள். பேராதனைத் தமிழ்துறையில் அப்போதி ருந்த ஒரேயொரு மொழியியல் கலாநிதி
என்ற ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி நுஃமான் சேர் வகுப்பறைக்குள் நுழைகிறார். விளக்கங்கள், குறிப்புக்கள், வாசிப்புக்கள் எவையுமில்லை. கேள்விக் கணைகள் தாம் சீறிப்பாயத் தொடங்குகின்றன. Gg5 fu LDT ?, புளூம்பீல்ட் என்பவர் யார்? என்று புறப்பட்ட அஸ்திரங்களுக்கு எந்தப் பதிற்கனை களும் என்னிடம் இருக்கவில்லை. ஏன்? வகுப்பில் ஒருவரிடமும் இல்லை.
நொம் சோம்ஸ் கியைத்
அந்த நிமிடமே என் தலையில் முளைத்திருந்த இறுமாப்புக் கொம்புகள் முறிந்து விழுகின்றன. மாயச் சிம்மாசனம் பொடிப் பொடியாகிறது. கற்றது கைமண் அளவு என்று காதுக்குள் வந்து சொன்ன அக்கேள்விகள், என்னைப் பேராசிரியரிடம் சரணடைய வைக்கின்றன.
அதுவரை நாம் அறிந்திராத ஒரு புதிய அறிவு மைதானத்திற்குள் எங்களை நுஃமான் சேர் அழைத்துச் சென்றார். உண்மையில் பல்கலைக்கழக வாழ்க்கை யில் கற்றுக் கொண்ட ஒரு புதிய துறை உண்டென்றால், அது மொழியியல்தான். ஏனையவை ஏதோவொரு வகையில் சிறிதும் பெரிதுமாக முன்னரே அறிமுக மானவைகளே.
இதனால் தான் பேராதனைப் பல் கலைக்கழகத் தமிழ்த்துறையில் நுஃமான் சேரின் இருப்பு- மாற்றீடுக்கு ஒருவரில் லாத- மிகுந்த அவசியமான இருப்பாக இருந்து வருகிறது. நாளை அவரின் ஒய்வுக்குப் பிறகு உடன் நிரப்ப முடியாத பெரும் வெற்றிடத்தைத் தோற்றுவிக்கப் போவதும் இதுதான்.
மல்லிகை ஜூன் 2009 & 7

Page 5
புகழ் பெற்ற அண்ணாமலைப் பல் கலைக்கழக மொழியியியற்துறைப் பேராசிரியர்களின் அன்புக்குப் பாத்திரரான நுஃமான் சேர், இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழியியற் பேராசிரி யர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர் என்பதை இவ்விடத்தில் தனித்துச் சொல்ல வேண்டியதில்லை.
இவரின் அடிப்படைத் தமிழ் இலக் கணம்' தவிர்க்கப்பட முடியா முக்கியத் துவம் கொண்டது. முத்துச் சண்முகன், அகத்தியலிங்கன், செ, வை. சண்முகம், பொன் கோதண்டராமன், கி. கருணா கரன், ஆ. வேலுப்பிள்ளை, அ. சண்முக தாஸ் முதலியோரின் இக்கால மொழியி யல்- இலக்கண நூல்களோடு வைத்து எண்ணப்பட வேண்டியது. இத்தகைய தொரு தெளிவுமிக்க மொழியியல் ஆளுமை இலங்கையின் அடுத்த தலை முறைத் தமிழுலகில் எவரிடமுமில்லை என்கிற வருத்தம் மிகப் பெரியது.
நீலாவணனின் சந்நிதியில் ‘கண் விழிக்காத பருவத்துப் பூனைக் குட்டி யாய் போய் நின்று, அவரால் ஒருவகையில் ஆற்றுப்படுத்தப்பட்டு, பின் மஹாகவியை அடைந்து, மஹாகவியின் உபாசகராய் விளங்கிய நுஃமான் சேரைத்தான், ஈழத் தின் பிரசித்தம் பெற்ற விமரிசனப் பாரம் பரியமும், தனது அடுத்த சந்ததியாய் அடையாளம் காண்கிறது. புகழ்பெற்ற மூத்த பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் ‘எங்களுக்குப் பின் இவரே என, தமது
நேரடி மாணாக்கர்கள் பலர் இருக்கவும், அவர்களை விடுத்து இவர் நோக்கி விரல் நீட்டுவது நுஃமான் சேரின் தகுதிக்காம் சான்று.
மஹாகவியிலிருந்து தொடர்ந்து வரும் அழகியல் செழுமை மிக்கப் படைப்பாளு மையும், கைலாசபதியில் ஊற்றுக்கண்டு சிவத்தம்பி ஊடாகப் பெருக்கெடுத்து வரும் விமரிசனப் பாங்கும், சங்கமிக்கின்ற இரு வேணிச் சங்கமமாய்த் திகழ்பவர் நுஃமான் சேர் மட்டுமே. படைப்பாளுமையும், ஆய்வு நோக்கும் ஒன்றையொன்று ஊறு செய்யா மல் ஒரு வெற்றிகரமான கூட்டணியை இவரில் அமைத்திருக்கின்றன.
தமிழில் இன்று எழுதும் விமர்சகர் களில் ஆக விவேகமான பார்வை இவரு டையதுதான் என்று இவரது விமர்சனப் பாங்கு பற்றித் தீவிர படைப்பாளிகளுள் ஒருவரான சுந்தரராமசாமி தெரிவிக்கிறார். 'கலாபூர்வமான முற்போக்குக் கவிதைகள் எழுதியவர் என்ற விதத்திலும், அரசியற் கவிதைகள் எழுதியவர் என்ற விதத்திலும் ஈழத்து நவீன கவிதை வளர்ச்சிப் போக்கில் மடைமாற்றம் ஏற்படுத்தியவராகிறார் என்று இவரது படைப்பாளுமை பற்றி ஆய்வாளர் யோகராசா கூறுகிறார்.
நுஃமான் சேர் என்றதும் ஒரு கண்ணிய மான கல்விமான் தோற்றமே எல்லார் மனங்களிலும் உருவாகும். இந்தக் கண் னியத்தைக் கைவிட நேர்ந்துவிடுமே என்ற
அவரது உயர்ந்த நோக்கம், வந்திருக்க
வேண்டிய பல பதவி உயர்வுகளை நிராக ரிக்கச் செய்தது. உண்மையை நோக்
மல்லிகை ஜூன் 2009 季 8

காமல், தம்மையே நோக்கும் அரசியலாள ரின் வசப்பட்டிருந்தால், நிச்சயம் நுஃமான் சேர் ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்த ராகத்தான் தமது புலமை வாழ்வை நிறைவு செய்திருப்பார். ஆனால், கொடிய அரசியலின் தலையாட்டிப் பொம்மையாகி, தமது கண்ணியத்தைக் கைவிட அவர் விரும்பியதில்லை. இது தான் அவர் மதிப்பை எப்பொழுதும் பல்கலைக்கழகச் சமூகத்தில் உயர்வாக வைத்திருந்தது.
மறைந்த அமைச்சரும், கவிஞருமான எம். எச். எம். அஸ்ரப் அவர்களின் நான் எனும் நீ கவிதை நூலின் முன்னுரையில் அமைச்சருக்கு வழங்கப்பட்ட கவிஞர் திலகம்’ எனும் பட்டத்தை நாகரிகமாகக் கண்டித்து எழுதுமளவுக்குக்கான ஆளுமை எங்கள் பேராசிரியருடையது. மெலியரென மிக்கூறலும் வலியரென்று வழிமொழிதலும் இல்லாத அறிவு நேர்மையர் இவர்.
அவர் ஒர் இனத்தின், ஒரு தத்துவத் தின், ஒரு கட்சியின் கண்மூடித்தனமான விசுவாசியாய் எப்பொழுதும் இருந்த தில்லை. அவர் உண்மையின் சார்பினர். தாம் சார்ந்து நிற்கும் சமூகம் அடக்கு முறைக்கு ஆட்பட்டபோதும் சரி, அடக்கு முறையை மேற்கொண்ட போதும் சரி, அவர் அடக்குமுறைக்கு எதிரானவராகவே விளங்கியிருந்துள்ள்ார்.
புரட்சிகரமான கருத்துக்களை வெளியி
டுகின்ற ஒரு முஸ்லிம் என்ற வகையில், அழகியல் இரசனையையும் வலியுறுத்து கிற விமரிசகர் என்ற வகையில், காதற் கவிதைகளும் படைக்கின்ற மாக்ஸிச
சித்தாந்தி என்ற வகையில், மொழியியல்பாடநூலை எழுதுகிற புத்தாக்கப் படைப்பாளி என்ற வகையில், இந்தியாவைச் சார்ந்த தீவிர இலக்கிய வாதிகளும் மதிக்கும் ஈழத்தவர் என்ற வகையில் பல முரண்பட்ட எல்லைகளை யும் தொடுத்துச் செல்லும் பேராசிரியரின் பாதை மற்றெவர்க்கும் வாய்க்காத தனித்துவமானது. இந்தப் பாதையில் செல்லுகிற இவர் பயணம், பதவி ஒய்வோடு
இலக்கணப்
நின்றுவிடுமோ என்கின்ற பயம் எழுவது நியாயமற்றது என்று சொல்கிறது அவர் கவிதை.
'கரை கான் வரை நான் கப்பல் விடுவேன் அலையும் புயலும் அடிக்கினும் என்ன பயப்பட வேண்டாம்"
அந்தளவில் தமிழுலகம் மிகுந்த மகிழ்ச்சியடைவதோடு, தொடர்ந்து அவரு டைய ஆரோக்கியமான படைப்புக்களை
எதிர்ப்பார்த்தபடி இருக்கிறது.
đђT hlafaЈђđ hlenföатIT?
புதிய ஆண்டு தொடங்கி விட்டது. தயவு செய்து தமது சந்தாக்களைப் புதுப் பித்துக் கொள்ளவும்.
மனந் திறந்து மல்லிகையுடன் ஒத்து ழையுங்கள். ஏனெனில் மல்லிகை உங் கள் ஒவ்வொருவரினதும் இலக்கியக் குரலாகும்.
அசட்டை செய்வோருக்கு முன்னறி வித்தலின்றி இதழ் நிறுத்தப்படும்.
اصطح
மல்லிகை ஜூன் 2009 * 9

Page 6
*யுகமாயினி’ அறிமுகக் குறிப்புக்கள்
-gr.(3a5.g. pronomids
திமிழகத்திலிருந்து அந்தந்த காலகட்டத்தில் சிறுசஞ்சிகைச் சூழலைத் தக்க
* வைக்கும் வகையில் பல்வேறு அமைப்புக்களுடன் பல சிறுசஞ்சிகைகள் தோன்றிய இ? Y வண்ணம் இருக்கின்றன. அச்சஞ்சிகைகள் சீரியஸ்’ தமிழ் எழுத்தின் வளர்ச்சியில்
2 தீவிரம் காட்டி, நவீன தமிழ்க் கலை, இலக்கிய வளர்ச்சியில்
பங்காற்றி வந்துள்ளன. நவீன தமிழ் கலை இலக்கியம் என நோக்கு ஐ நின்று அவை பணியாற்றினாலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்ற தமிழகத்தைத் ' தவிர்ந்த் பிற தேசத்துத் தமிழ் கலை இலக்கிய வளர்ச்சியினை மாற்றாந்தாய் அல்லது "பிறர் எனும் நோக்கில்தான் பார்க்கப்பட்டு வந்துள்ளன. அத்தகைய சூழலின் மத்தியிலும் தமிழகத்தின் சிறுசஞ்சிகை சூழலின் ஆரம்ப காலகட்டத்திலும் , இடைப்பட்ட காலத்திலும், இன்றைய கால கட்டத்திலும் ஒரு சில சிறுசஞ்சிகைகள் : இலங்கை, சிங்கப்பூர், மலேசியா தமிழ் கலை இலக்கிய படைப்புக்கள் மீதான தமது ஆ கவனத்தைச் செலுத்தி வந்துள்ளன என்பதும் மறுப்பதற்கில்லை.
சரஸ்வதி , தாமரை போன்ற சஞ்சிகைகள் ஆரம்ப காலகட்டத்தில் குறிப்பாக, இலங்கைப் படைப்பாளிகளுடன் நீடித்த, நெருக்கமான உறவினை கொண்டிருந்ததன் காரணமாக இலங்கை தமிழ் படைப்பாளிகளின் படங்களை அட்டைப்படங்களாக வெளியிட்டதோடு, அவர் தம் படைப்புக்களையும் வெளியிட்டன. (தாமரை தொடர்ந்து அப்பணியினைச் செய்து வருகிறது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயம்)
அதே காலகட்டத்தில் 'கலைமகள் போன்ற சஞ்சிகைகள் அபூர்மான நிலையில் இலங்கை
படைப்புக்களை பிரசுரித்துக் கொண்டிருக்க, ‘தீபம்’ மட்டும் இலங்கைக் கடிதம்,என்பதோடு இலங்கை படைப்புக்களையும் வெளியிட்டது. பிற்காலத்தில் இலங்கை படைப்புக்களை வெளியிடுவதில் தமிழகச்
சிறுசஞ்சிகைகள் தீவிரம் காட்டாத நிலையில், அந்த காலகட்டத்தில் மீண்டும் ஈழத்தவர்களின் புலம்
பெயர்வு தமிழக சிறு சஞ்சிகைக்காரர்களின் கவனத்தை இலங்கைப் படைப்பாளி மீது திரும்பியது
எனலாம். அவ்வாறான சூழலில், சிற்சில சிறுசஞ்சிகைகள் புலம் பெயர்ந்த இலங்கையர்களின்
படைப்புக்களையும், இலங்கை வாழ் படைப்பாளிகளினதும், படைப்புக்களை வெளியிட்டன.
(எடுத்துகாட்டாக, இந்தியா டுடே, தீராநதி)
நவீன தமிழ் கலை இலககிய வளர்ச்சி என்றால் தமிழகம்தான் என்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா சார்ந்த படைப்பாளிகள் நவீன தமிழ் கலை இலக்கியத்தின் உப பங்காளர்கள் மட்டுமே எனும் மனோபாவம் இன்னும் தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் சூழலில், நவீன தமிழ்க் கலை இலக்கியம் என்பது வெறுமனே தமிழகம் மட்டுமல்ல இலங்கை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து தமிழில் எழுதும் படைப்பாளிகள் பங்கில்தான் நவீன தமிழ்க் கலை இலக்கிய வளர்ச்சி முழுமை பெறுகிறது எனும் பிரக்ஞையுடன் தமிழகச் சூழலில் ஒரு சிறு சஞ்சிகை இல்லாதிருந்த
மல்லிகை ஜூன் 2009 季 10
 
 

நிலையில் யுகமாயினியின் வருகை அக் * "ಜ್ಜ ! குறையை நிவர்த்தி செய்யும்
கொண்டிருக்கிறது.
அத்தகைய பிரக்ஞையை இது வரை வெளிவந்துள்ள 20 இதழ்களிலும் அது தக்க வைத துளளது எனபது பாராட்ட வேண்டிய ஓர் அம்சம் எனலாம். அதுவே யுகமாயினியின் தனித்துவமாகவும் திகழ்கிறது.
கடமைக்கு மாராடிக்கும் அல்லது காட் டித் திரியும் நிலையில் நின்று, பல்வேறு நாடு களில் வாழும் தமிழ் பேசும் படைப்பாளிகளின், படை ப்புக்களை பிரசுரிக்காது, நாம் ஏலவே குறிப்பிட்டது போல் நவீன தமிழ் கலை இலக் கியத்தின் வளர்ச்சி பற்றிய பார்வை என்பது இலங்கை, சிங்கப்பூர், மலேசியா வாழ் தமிழ் மக்களின் படை ப்புக்களை உள்ளடக்கிப் பார்க்கப்பட வேண்டும், அவ்வாறு பார்க்கப்படுவதற் கான தகைமைகளை கொண்ட படைப் புக்களையே தேடி, எடுத்து இது வரையிலான யுகமாயினி இதழ்களில் பிரசுரிக கப்பட்டுள்ளன என்பதை இங்கு விசேடமாக குறிப்பிட வேண்டிய ஒரு விடயமாகும்.
இவ்வாறான ஒரு கட்டமைப்புடன் யுகமாயினி வெளிவருவதற்கு காரண கர்த்தாவாக திகழ்வது அதன் ஆசிரியர் சித்தன் பிரசாத் அவர்கள்தான். அவரது வேகமான, பரந்த தொடர்பாடல் பணியின் மூலம் நாம் குறிப்பிட்ட நாடுகளைச் சார்ந்தவர்க ளுடான அவரது தொடர்பு அத்தகைய கனதி யான படைப்புக்களை அவருக்கு யுகமாயாணிக்கு
பெற்று தந்துள்ளது. தந்துக் கொண்டிருக்கிறது.
uļLDTuglug AYOUTŠ60GT, GIF)š5 வரை இன்று தமிழகத்தில் வெளிவரும
வகையில் வெளிவந்து
சிறுசஞ்சிகைகளிருந்து வேறுபட்டு நிற்பதும் அதன் தனித்துவமாக இருக்கிறது.
தமிழகத்திலும் சரி இலங்கை, சிங்கப் பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் சரி தமிழில் ஒரு சிறுசஞ்சிகை நடத்துவதில் "கன பிரச்சினைகள் இருக்கின்றன என்பது நாம் எல்லோரும் அறிந்த
ങ്ങ].
அத்தகைய ஒரு சூழலில், இதுவரை வெளி வந்திருக்கும் யுகமாயினி 20 இதழ்களை நோக்கும் பொழுது, யுகமாயினி எந்த விதமான சோர்வோ, தேக்கமோ இன்றி, தனது உள்ளொளியை தக்க வைத்தே வந்துள்ளது. இதற்கு அதன் ஆசிரியர் சித்தன் பிரசாத் அவர்களை பாராட்டத் தான் வேண்டும்.
இக்குறிப்புக்கள் யுகமாயினியை பரவலாக அறிமுகப்படுத்தும் நோக் கத்துடன் எழுதப்பட்டவை. அதற்கு மேலாக, இதுவரை வெளிவந்துள்ள 20 இதழ்களை ஆய்வு நோகசூடன் நோக்கும் பொழுதுதான், அதன் காத்திரத்தையும், கனதியையும் இன்னும் நாம் 教
ஆசரியர் - சித்தன் பிரசாத்
சித்தன் கலைக்கூடம் 39. வடக்குத் தெரு, சி.ஐ.டி.நகர் மேற்கு, சென்னை-600035 தொலைபேசி-09382708030
tốlạiø(65ở6ù chỉthankalai(Qyahoo.co. in
மல்லிகை ஜூன் 2009 * 11

Page 7
வாயைத் திறந்ததும் கொடிடிவிடுகிறது வாழ்க்கை முழுவதுமாக என் தேசத்து மண்ணில், நாவகளுக்கு மட்டும்
சங்கிலி போட்டுப் Այ-փ நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம், விழயலுக்கான சிஸ்தமனம் நோக்கி திரண்டெழுந்த கைகளில் எல்லாம் நிறைந்திருக்கிறது பனமும், முடையும்.
தூரத்து ஒளிப்பொட்டுகளை நம்பி цIJULI. || || || Ј60бTih
கடலுக்குள் முழகிறது. நிறைதலும் பின்னல் தளம்பலும் வழக்கமாகி அலுத்துப்போய்விட்டது. சிறுவர்கள் அருந்திய மதுபானப்போத்தல்களில் தெளிவாகத் தெரிகிறது என் சமுதாயத்தின் முகம்.
நன்கு பழப்பதாலும் நாங்கள் உணர்வுகளை இழந்துவிடலாம் என்று எச்சரிக்கிறது ஒனது எருமைத்தேசம்.
வை. சாரங்கன்
கால்களை மடக்கி
கைகளால் முகத்தைப்பொத்தி மனசுக்குள் அமர்ந்துகொள்கிறோம், அவர்கள் பேசிமுழயும்வரை, எப்போதும் அவிழ்த்துவிடப்படலாம் என்று 2ளளையிடுகின்றன மனநோய்கள்.
பந்துகள் சுவர்களில்
எறியப்படடு மீண்டும் சிறுவர்களாலேயே பிழக்கப்படுகின்றன. நாவுகளின் சங்கிலி மாத்திரம் சரசரத்துக் கொள்கிறது- மண் பருக்கைகளில் மழைத்துளி விழுதல் போல,
சாய்வநாற்காலியில் ஒய்வெடுத்தபழகனவு காண்கிறேன். நாவுகளின் சங்கிலி அகற்றப்பட்டு
bjਤੇg விலங்கு LDFL. Lubbug E. JH5). பேச வேண்டும் உன்னைப்பற்றி ஆசையாய் இருக்கிறது எனது எருமைத்தேசமே.
மல்லிகை ஜூன் 2009 ဒို့မှ 12
 
 
 
 
 
 
 

((.ജ് லின் ‘தூரப் போகும் நாலரகள்
-9தனி/ான்
ஒரு படைப்பாளியின் படைப்புகள் பத்திரிகைகள், சஞ்சிகை களில் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கையில், அந்தப் படைப்புகளைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்கள் மனங்களில் அந்தப் படைப்பாளி பற்றிய பொதுவான ஒரு மனப்பதிவு உருவாகி விடுகின்றது. அந்தப் படைப்புகள் தொகுக்கப் பெற்று நூலுருப் பெறும் சமயத்தில், குறிப்பிட்ட அந்த நூலானது முன்னர் இருந்து வந்த மனப்பதிவினைத் தக்க வைத்துக் கொள்ளக் கூடும். அல்லது மாற்றிக் கொள்ள நேரிடும். தரத்தில் உயர்ந்ததாக அல்லது குறைந்ததாகக் கருத இடமளிக்கும். குறிப்பிட்ட அம்சங்களில் நேர்த்தியானதாக இருக்க, வேறு சில அம்சங்களில் போதாமையுள்ளதாகத் தோன்றக்கூடும். எது எவ்வாறாயினும் ஒரு படைப்பாளி பற்றிய சரியான கணிப்பீடு அந்தப் படைப்பாளியின் நூலின் அடியாகவே உருவாகும் என்பதே உண்மை.
தாட்சாயணி 1997 முதல் சிறுகதை இலக்கியம் படைத்து வருகின்ற ஒரு படைப்பாளி. குறுகிய பத்தாண்டு காலத்துக்குள் மூன்று சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருப்பது, ஈழத்து இலக்கிய உலகில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒரு சாதனைதான். முதலில் வெளிவந்திருக்கும் இரண்டு தொகுதிகளின் மூலம் வாசகர் மனங்களில் தனித்துவமான ஒரு மனப் பதிவினைத் தோற்றுவித்திருக்கின்றார். யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட பெண்ணியப் படைப்பாளியாக, போர்க்கால வாழ்வின் அவலங்களைச் சித்திரிப் பவராக, தாட்சாயணி இனங்காணப்பட்ட ஒருவராக விளங்குகின்றார். இவரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கின்றது, தூரப் போகும் நாரைகள்",
இத்தொகுப்பு நூலில் மொத்தம் பதின்நான்கு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. முன்னர் வெளிவந்திருக்கும், ஒருமரணமும் சில மனிதர்களும்’(2005), இளவேனில் மீண்டும் வரும்(2007) ஆகிய இருதொகுதிகளுக்கும் பிற்பட்ட காலத்தில் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்புத்தான், ‘தூரப் போகும் நாரைகள் (2008) என்னும் இந்நூலில் இடம்பெற்றுள்ளனவெனக் கொள்ள இயலாது. 1997 முதல் 2008 வரையுள்ள தாட்சாயணி
மல்லிகை ஜூன் 2009 & 13

Page 8
எழுதுவதற்கு ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை- காலகட்டத்துக்குரிய சிறு கதைகள் நூலில் தொகுக்கப் பெற்று 6T6 TT60T.
இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளை நான்கு வகையினவாகப் பகுத்து நோக்கலாம். அரசியல் சார்ந்த சமூகம், குடும்பம் பற்றிய சிறுகதைகளாக, ஓ. என் அழகிய கிராமமே'(1997), பொறி(2005), தூரப் போகும் நாரைகள்' (2000), “piņ6 numr? Qg5 TLėšas omr?”(2001), ‘கெடுபிடி’(2008), ஏன்?"(1999), "கானா மல் போனவனுக்கு ஒரு கடிதம் (2003) ஆகிய ஏழு சிறுகதைகள் காணப்படுகின் றன. பெண்ணை முதன்மைப் பாத்திரங்க ளாகக் கொண்டு படைக்கப் பெற்றுள்ள சிறுகதைகள் இவற்றுள் ஐந்து. பெண்க ளையும், பெண்களின் உணர்வுகளையும் சிறுகதை என்னும் படைப்பிலக்கியத்துக் கூடாகச் சித்திரிப்பதில் தேர்ந்த ஓர் எழுத் தாளர் என்பதனை தாட்சாயணி இப்படைப் புகள் மூலம் மீண்டும் நிறுவியுள்ளார். '
'9. . . . . என் அழகிய கிராமமே. என்பது தாட்சாயணி எழுதிய முதல் சிறுகதை. இச்சிறுகதை இத்தொகுதியின் முதல் சிறுகதையாக இடம்பெற்றுள்ளது. தான் பிறந்த மண்ணின் மீதுள்ள பற்றுக் காரணமாகத் தூரப் போக மறுக்கும் ஒரு நாரையின் கதையாக இது அமைந்துள் ளது. இந்த முதற் படைப்பின் மூலம் தமது படைப்பாற்றலைத் தாட்சாயணி வெளிப்படு த்தி இருக்கின்றார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். போர்க்காலச் சூழ்நிலை காரணமாகத் தமது சொந்த மண்ணை விட்டுப் புலம் பெயர்ந்து
வெளிநாடுகளுக்கு ஓடிச் செல்லும் மக்க ளைத் தூரப் போகும் நாரைகள்" என்னும் குறிப்பீட்டின் மூலம் உணர்த்துகின்றார். பொறி" என்னும் சிறுகதை கண்களுக்குப் புலப்படாத பொறி (நீலப்படம்) வைத்து, எமது இளைய தலைமுறையினரை அந்தப் பொறியில் வீழ்த்தி, கலாசாரச் சீர ழிவை உருவாக்கி, சமுதாயம் எவ்வாறு அடிமை கொள்ளப்படுகின்றது என்பதைச் சிறப்பாகச் சித்திரிக்கின்றது.
பிரயாண அநுபவங்களை நேர்த்தியா கச் சொல்வதில் கைதேர்ந்த ஒரு படைப் பாளி தாட்சாயணி. பிரயாணத்தின் போது கிடைக்கின்ற அநுபவங்களைக் கூர்மை யாக அவதானித்து, நுட்பமாகப் பதிவு செய்யவல்லவர். முன்னர் வெளிவந்திருக் கும் இரு தொகுதிகளிலும் இக்கருத்துக்குச் சான்று பகரும் படைப்புகள் இடம் பெற்றுள் ளன. இத்தொகுதியிலும் அத்தகைய ஒரு படைப்பாக இடம் பெறுகிறது 'கெடுபிடி'.
'Opigsuit? தொடக்கமா? என்பது இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள, முற்றிலும் வித்தியாசமான ஒரு சிறுகதை. ஒரு சிறு கதையானது பல்வேறு தளங்களில் இரு ந்து உருவாகலாம். ஒரு கருத்து, சம்பவம், செய்தி, உணர்வுநிலை, அதிர்வு எனப் பல நிலைகள் படைப்பாக்கம் செய்வதற்கான உந்தலாக அமையலாம். குறிப்பிட்ட இச் சிறுகதை கருத்து நிலையில் இருந்து உரு வாக்கம் பெற்றதாகத் தோன்றுகின்றது. யதார்த்தப் பண்புகள் பெரும்பாலும் மேலோங்கி இருக்கும் தாட்சாயணியின் படைப்புலகத்தில் இச்சிறுகதை, அப்பண்பு களை மீறிய கற்பனையான ஒரு சிருஷ்டி, ஆனால், இந்தத் தேசத்துக்கு மிகவும்
மல்லிகை ஜூன் 2009 * 14

வேண்டப்படும் ஒரு சிந்தனையின் வெளிப் பாடே இச்சிறுகதை எனலாம்.
இந்தத் தொகுப்பு நூலில் இடம் பெற் றுள்ள சிறுகதைகளுள் குடும்ப உறவுகள் பற்றிய படைப்புகளாக, "ஒரு வருஷத் துக்கம்’(2203), "வேர் துளைத்த மண்' (2008), "கடைசிக் காலம்’(2008) ஆகிய ஐந்தினையும் கொள்ளலாம்.
பொதுவாகப் பெண்கள் மீது அநுதாப மும், பெண்களின் உணர்வுகளை வெளிப் படுத்துவதில் வல்லவருமான தாட்சாயணி, ஆண்கள் மேல் காட்டும் பரிவினை சுழல்', 'சிறகிழந்தவன்’ என்னும் இருசிறுகதைக ளினூடாகக் கண்டு கொள்ள முடிகின்றது. மனைவியால் கொடுமையாக வஞ்சிக்கப் பட்டு, பிள்ளைகளால் கவனிக்கப்படாத ஒரு தந்தையின் குடும்பத்தில், அந்தத் தந்தையின் மறைவின் பின்னர், அவனு க்கு இழைக்கப்பட்ட நிஷ்டுரங்கள் எவ்வாறு பாதிப்பினை உண்டாக்குகின்றன என்ப தனை இச்சிறுகதை சிறப்பாகச் சித்திரிக் கின்றது. தந்தையைப் புறக்கணித்து வாழ் ந்த மகன், தந்தையின் மறைவின் பின்னர் தனது எதிர்காலத்தை எண்ணி அச்சத்து டன் ஏங்குவதையும், 'விடிகாலையில் வீனா (அவன் மனைவி) அவன் தலை யைக் கோதிக் கொண்டிருப்பதாக லேசாய் உணர முடிகிறது. சுழல் நீங்கிய அமைதி மனதில் என நிறைவு செய்வதன் மூலம் அவனது மனப் பயத்தினைப் போக்கி, படைப்பினை நிறைவு செய்கின்றார்.
காலம் காலமாக 'சிறகிழந்தவள்’ பற்றிய ஆக்கங்களையே படித்து வந்திரு க்கும் வாசகர்களுக்கு 'சிறகிழந்தவன்"
மல்லிகை ஜூன் 2009
என்னும் வித்தியாசமான ஒரு படைப்பி னைத் தந்துள்ளார் தாட்சாயணி. சகோதரி களுக்காக வாழ்ந்து, முதிர்காளைகளாகித் தமது வாழ்வை இழந்து போன யாழ்ப்பான த்து ஆண்களையே கடந்தகால இலக்கி யப் படைப்புகள் பலவற்றில் கண்டுள் ளோம். தமக்கை பெற்ற பெண்பிள்ளை களுக்காக வாழ்ந்து தனது வாழ்வினை இழந்த ஒருவனைத் தாட்சாயணி இப்படை ப்புக் கூடாகக் காட்டுகின்றார். அம்மா, அக்கா, அக்காவின் கணவர் என்போர் இவன் சிறகடித்துப் பறந்து போய்விடா வண்ணம் எவ்வாறு சிறகினை வெட்டிவிடு கின்றார்கள் என்பது வெகு நாசூக்காக உணர்த்தப்படுகின்றது.
காதல் உறவில் ஏற்படும் தோல்வி, ஒருபக்கச் சார்புடன் நோக்கப்படாது நடு நிலை நின்று நோக்கப்படுவது "வேர் துளைக்காத மண் சிறுகதையில் கண்டு கொள்ள முடிகின்றது. இச்சிறுகதைச் சிருஷ்டியில் பாரதி காலனைத் தனது காலருகே வா என்று அழைப்பது போன்ற ஒர் ஆக்ரோசம் தாட்சாயணியின் எழுத்தில் பின்வருமாறு வெளிப்படுவதைக் கண்டு கொள்ளலாம். இந்தத் துன்பத்தை விடவா நீ பெரும் துன்பம் தருவாய்? சரி தான், வா பார்ப்போம். என்று மரணத்தை நோக்கி
எக்காளமிட்டாள்.
மீளுருவாக்கம் செய்யப் பெற்ற இதிகா சக் கதையாக, "கட்டை விரல்’ சிறுகதை இடம் பெற்றுள்ளது. இதிகாசங்கள், புராண ங்கள், காவியங்கள் என்பவற்றுள் காணப் பெறும் கிளைக் கதைகள் சில, படைப்பாளி களின் மனங்களைப் பாதிக்கின்றன. இத்த கைய பாதிப்புக்கு ஆளானவர்கள் தங்க
རྗེ་15

Page 9
ளைப் பாதித்த கதைகளை மீளுருவாக்கம் செய்துள்ளனர். புதுமைப்பித்தன் முதல் பல படைப்பாளிகள் மீளுருவாக்கம் செய்யப் பெற்ற படைப்புகளைத் தமிழில் தந்திரு க்கிறார்கள். மகாபாரதத்தில் இடம் பெற்று ள்ள ஏகலைவன் கதை, சிறுகதையா கவும், நாடகமாகவும் முன்னரே மீளுரு வாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. அக் கதையினையே தாட்சாயணி "கட்டை விரல்’ ஆக மீளுருவாக்கம் செய்துள்ளார். துரோணாச்சாரியாரின் துரோகச் செயல் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இது முதற் தடவை அல்ல. களம், சித்திரிப்பு என்பன சிறப்பாக இருந்தபோதும், துரோ கமான வஞ்சிப்புக்கு எதிரான ஆக்குரோசம் படைப்புக்கூடாக வெளிவரவில்லை. பொதுவாக மென்போக்குடையவராகத் தமது படைப்புகளுக்கூடாகத் தம்மை வெளிப்படுத்தும் தாட்சாயணி, இங்கு கொதித்தெழத் தவறிவிடுகின்றார். தாட்சாய னிக்குக் கொதித்தெழல் இயலும். உதார ணமாக, என்னுரையில் இருந்து அவர் உள்ளக் கொதிப்பினை நோக்கலாம். அதி கமானவர்கள் சொல்வது போல எனது இந் தக் கதைகளின் முடிவில் கூட, மகிழ்ச்சி இல்லைத்தான். கிளிசரீன் போட்ட கண்ணி ரைக் கூட ரசிப்பவர்கள், இயற்கையாய் வருகின்ற இரண்டு சொட்டுக் கண்ணிரை ஏன் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறீர்கள்.?
தொடரும் இலக்குகள் என்பது இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள விஞ்ஞானக் கற்பனை, விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் அளவிடற்கரிய நிலையில் வளர் ச்சி பெற்று மனித சமுதாயத்துக்கு நன்மை யான பயன்களைத் தந்துள்ளன. அதே சமயம் இதனால் விளையும் தீமைகளை
இச்சிறுகதை மூலம் சுட்டிக் காட்டியுள்ளார். 'குளோனிங் மூலம் ஒரு மனிதனைப் பிரதி பண்ணுதல், றோபோக்களின் செயற்பாடு கள் என்பன இதில் இடம் பெறுகின்றன. விஞ்ஞானப் பட்டதாரியான தாட்சாயணி யினால் விஞ்ஞானச் சிறுகதைகள் கற்ப னையில் ஆக்க இயலுமென்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
சித்திரிப்புத் திறனும், வாசகன் மனதில் உணர்வுகளைத் தொற்ற வைக்கும் ஆற்றலுமுள்ள படைப்பாளி தாட்சாயணி. இயல்பான மொழி நடை, சிருஷ்டியோடு இசைந்து வருகின்றபோது, கவித்துவமான பண்பினைப் பெற்று விடுகின்றது. இதற்கு உதாரணமாக விரிவஞ்சி ஒன்றே ஒன்றை மாத்திரம் பார்க்கலாம். இதமான கண்ணிர் ஒரு துளி மகிழ்வின் அர்த்தமாய் கண்க ளில் வழிகிறது. புன்னகை இதழுறி நெகிழ் கிறது. என்ன ஆனந்தமான பயணம். என்ன ஆனந்தமான வாழ்வு
இந்தத் தொகுப்பில் இடம்பெறும் எல்லாச் சிறுகதைகளும் ஒத்த தரமுள் ளவையல்ல. தரவேறுபாடு படைப்புகளுக் கிடையே காணப்படுவது இயல்பு. ஆனால், பெரும்பாலான படைப்புகள் கவனத்தில் கொள்ளத்தக்கன. இந்த நூலுக்குரிய அணிந்துரை கோகிலா மகேந்திரன் சுருக்கமாகவும், சிறப்பாகவும் வழங்கியுள் ஒரு சிறுகதையை ஆரம்பிப்பது போல, என்னுரையைக் கச்சிதமாகத் தாட்சாயணி எழுதியுள்ளார். மீரா பதிப்பக
6TT frff.
வெளியீடாக நல்லதொரு அட்டையுடன் வெளி வந்திருக்கும் தூரப் போகும் நாரைகள் வாசகர்களுக்கு நல்விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.
மல்லிகை ஜூன் 2009 * 16

S-. ്ര 778
§ಳಿ - (2ez94- é7Ce6avCe.
'சாப்பிடுங்கோ. தண்ணி எடுத்துக் கொண்டு வாறன்’ மனைவி கண்மணி கணவனுக்குச் சோறு போட்டு மூடி வைத்து விட்டு, இடுப்பிலே குடத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு அசைந்து அசைந்து நடைபயின்றாள். கணவன் கந்தசாமி அவளது அங்க அசைவுகளை மெய்மறந்து இரசித்தான். பார்வையிலிருந்து மறையுமட்டும். சுன்னாகம் வந்த பிறகு இவளுக்குக் கொஞ்சம் உடம்பு தான். இப்பவும், குமரி மாதிரித்தான் இருக்கிறாள். தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டான். அவர்கள் இருக்கும் திடல் பகுதியைச் சுற்றித் தோட்டம் தான். உடன் மரக்கறிகள் வாங்கலாம், மலிவாக, இவள் உடல் பொலிவுக்கும் இதுவும் காரணமாக இருக்கும் என்றும் சிந்தித்துப் பார்ப்பதுண்டு.
ஆனால், தண்ணீர்தான் குடிக்க ஆகாது, உப்புச் சவர். தோட்டங்களில் மருந்து உரப் பாவனை அதிகம். அதன் தாக்கமோ என்னமோ, தாகத்தைத் தீராத் தண்ணிரால் தரித்திரம் அறியாப் பெண்டீரால் யாது பயன்! ஆகையால் தான் நல்ல தண்ணிருக்காக வெள்ளாம் பகுதிக்குப் போய்வர வேண்டியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களை இறைவனும் தண்டிக்கின்றானோ?
தண்ணிர் குடத்தைத் தூக்க முடியாமல் தூக்கிச் சுமந்து, தள்ளாடித் தள்ளாடி வரும் அவள் அழகை இப்போது அவன் இரசிக்கவில்லை. எரிச்சலோடு பார்த்துக் கொண்டு நின்றான். “இவ்வளவு நேரமும் என்னப்பா செய்தனி? சாப்பிட்டு வாயும் தொண்டையும் காய்ஞ்சு போச்சு சாப்பிட்ட வாய்க்குத் தண்ணி இல்லையெண்டா என்ன சீவியமப்பா, இது?”
'உங்களுக்குத் தெரியுமே, நான் எங்கெல்லாம் திரிஞ்சி தண்ணி கொண்டு வாறனென்டு? இடுப்பும் ஒடிஞ்சு போச்சு, நீங்க இருந்த இரையில நல்லாக் கதைப்பியள்."
“வேளைக்கே எடுத்து வைக்கிறது தானே? சாப்பாட்டத் தந்துட்டுத் தான் தண்ணிக்குப் போறாய், எவள் செய்வாள் இப்படி?”
“வேளைக்கே எடுத்து வைக்கிற நான்தான், இன்டைக்கு மறந்துட்டன்."
'நீ உன்ர வாழ்க்கையில கூடுதலா பாவிச்ச சொல்லு என்ன தெரியுமா? "
“என்னது?"
"மறந்துட்டன் என்ற சொல்லத்தான் கூடுதலாப் பாவிச்சு இருக்கிறாய். நீறில்லா நெற்றி பாழ், நினைவில்லாப் பெண்டீர் பாழ். புருஷன்ர நினைவில்லாத பெண்டீர் பாழ். புருஷன்ர
மல்லிகை ஜூன் 2009 & 17

Page 10
நினைவில்லாத பெண்ணோட வாழ்ற வாழ்க்கையும் பாழ்'
"அப்ப இந்த ஞாபகமறதிக்கு என்ன
ப்பா செய்யுறது?
"ஆரும் கெடுதி செய்தால் மறக்கமாட் டிங்க? என்ன, அதையெண்டால் நெடுக ஞாபகத்தில இருக்கும் உங்களுக்கு. எப்பவோ ஒருக்கா அவளொருத்தி குளிச்சுக் கொண்டு இருக்கக்குள்ள பாத்திற்றனாக் கும். அதை இப்பவும் குத்திக் குத்திக் காட்டிப் பேசயெல்லாம் ஞாபகம் இருக்கு. நீங்களெல்லாம் நல்லத விட்டுப் போட்டு தூசுகள் துருத்திகள எடுத்து வைச்சுக் கொண்டிருக்கிற பன்னாட மாதிரி.”
*சும்மா கத்தாதீங்க. நான் எங்க எல்லாம் திரிஞ்சி, என்ன பாடுபட்டு இந்தத் தண்ணிய எடுத்துக் கொண்டு வாறன் எண்டு உங்களுக்குத் தெரியுமே? அங்க வளவுக்காரன் வீட்ட போனா, அவர் குளிச் சுக் கொண்டு இருக்கிறார். அந்தாள்ற குணம் உங்களுக்குத் தெரியும் தானே? பொம்பிளைகளைக் கண்டா என்ன செய் வாரெண்டு? அவுட்டுக் காட்டும், சே என்ன மனுசர் அப்பா இவங்கள். பேர் தான் பெரிய மனுசர், பவரா ஊருக்கு வேஷம் போடு வினம். எழிய குணங்கள் எல்லாம் இவை யளிட்டத்தான் இருக்கு. சரி அங்கால முருகேசர் வீட்ட போனா, அவையள் கிணறு கலக்கி இறைச்சுக் கொண்டு இரு க்கினம். பூமணி வீட்ட போனா அவ அம்மி யில அரைச்சுக் கொண்டு இருக்கிறா. அரைச்சு முடியமட்டும் காவல் இருந்து அ வட வேலை முடியத் தான் வந்து தண்ணியள்ளி ஊத்திவிட்டவ."
வெட்டுவது, கட்டுவது, கப்பியிலேயும்
வாளியிலேயும் கட்டுவது கூடத் தொழி லாளி. ஆனா, பாவனைக்கு வந்தவுடன் அவன் கிணற்றிலே தண்ணியள்ளக் கூடாதாம் அந்த வெள்ளாம் பகுதியில் பசுப தியர் வெள்ளைக்காரன் போல, நல்ல நிறம். அதனால், அவரைமட்டும் வெள்ளை யர் என்று எல்லோரும் அழைப்பார்கள். கொஞ்சம் கண்ணுக்கு மினுக்கான பெண் களைக் கண்டால் தலைகால் தெரியாத புளுகம் முகமெல்லாம் பல்லாகச் சிரித்துக் கொண்டு, இழிச்ச முகத்தோடு கனிவான மொழியோடு திருத் தொண்டராகி விடுவார்.
"பிள்ள தண்ணிக்கே வந்த நீ? குடத்த அப்படி வை." என்று சொல்லிப் பணிவாகப் பணிவிடை செய்வது போல நீர் வார்த்து விடுவார். கண்மணிக்குக் கொஞ்சம் நெஞ்சு வருத்தம். பலத்த வேலைகள் செய்யப் பயப்படுவாள். அப்படிப் பார்க்கப் போனால், இந்தப் பகுதியே இவள் போன்ற பெண்க ளுக்குப் பெரிய சேவை தான் செய்கிறது. தங்கள் சாதிப் பெருமையைக் கட்டிக்கா க்க, பூமணிக்குக் கூட எத்தனையோ வருத் தங்கள், விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்து வார்த்து விடுவாள்.
ஒருநாள் கண்மணி தண்ணிர் கொண்டு வர பசுவரின் கிணற்றடிக்குப் போனாள். அங்கே ஒருவரையும் காணவில்லை. அடி வளவுக்குள் இருந்து பசுவர்தான் விழுந்தடி த்துக் கொண்டு ஓடி வந்தார். "என்ன பிள்ள வேணும்? தண்ணியே.?"
'ஒமோம். எங்க ஒருவரையும் காண யில்ல."
‘அவையள் எல்லாம் கோவிலுக்குப் போயிற்றினம். அவட தகப்பன்ர திவசமெ ல்லே? அதுதான்." சொல்லிக் கொண்டே
மல்லிகை ஜூன் 2009 $18

தன் ஆண்மையைக் காட்ட விறு விறு வென்று வேகமாக அள்ளிக் குடத்தை நிறை த்துவிட்டார். அவள் குடத்தைத் தூக்கக் குனியும் போது, மார்பகச் சட்டைக்குள் ளால் பிதுங்கிக் கொண்டு முட்டி நிற்கும் மார்பகத்தை எட்டிப் பார்த்தார், விழிபிது ங்க. இதுபோன்ற சந்தர்ப்பங்களுக்காகவே பதுங்கியிருப்பவர் அவர், விடுவாரா? இன் னும் எத்தனை எத்தனையோ ஆசைகள் அவர் மனதில்
'கண்மணி குரக்கன் இருக்கு வேணுமே?”
"என்னட்ட இப்ப காசு இல்ல!"
'நானுன்னட்டக் காசு கேட்டனானே?" அவள் குரக்கனுக்காகத் தேடித் திரிபவள் என்பது அவருக்குத் தெரியும்.
'காசெல்லாம் பிறகு பாக்கலாம். இப்ப கொஞ்சம் தாறன் கொண்டு போவன். காசென்ன காசு, மணிசர்தானே பெரிசு."
'தண்ணி அள்ளவிடலாந்தானே என்று அவள் தன் மனதுக்குள் சொல்லிக்
கொண்டாள்.
"குடத்தை வைச்சிற்று என்னோட வா, தாறன்' என்று சொல்லிக் கொண்டே வீட் டுக்குப் பின்பக்கம் மாலுக்குக் கூட்டிக் கொண்டு போனார். அவளும் பின் தொடர்ந் தாள். அங்கே அவள் கண்ட காட்சி நவரெத் தின மாளிகையைப் பார்த்தது போல் இருந் தது! வெங்காயம் குலை குலையாகக் கட் டித் தூக்கியிருந்தது. செத்தல் மிளகாய் சிவந்த மேனியுடன் குவிந்து கிடந்தது. சாக் குச் சாக்காக அடுக்கியுமிருந்தது. குரக்கன் கதிரோடு அடுக்கியுமிருந்தது. கதிரடித்தது ஒரு மூலையிலே மலைபோல குவித்திரு
ந்தது செக்கச் செவேல் என்று சிவந்த அந்தச் சிறுதானியம் மணிமணியாகக் குவி க்கப்பட்டிருப்பது கண்ணுக்கு விருந்துதான்.
ஒரு தோட்டக்காரனை முடித்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று தனக்குள்ளே எண்ணிக் கொண்டாள்.
ஒரு உரப்பையை எடுத்துக் கொடுத்து “விரிச்சுப் புடி" என்றார். அவள் பிடிக்க, அவர் கொத்தால் அளந்து, அளந்து போட்டார்.
"ஆத்துல போட்டாலும், அளந்து போடவேணும். பத்துக் கொத்துப் போட்டிரு க்கிறன். இன்னும் போடலாம் நீ தூக்க
Drill-Tuiu.”
‘ஐயோ போதும் போதும் உங்கட உதவி பெரிய உதவி”
அவர் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு வந்து வாயைக் கட்டினார். தூக்கி அவள் தலைமேல் வைத்தார். அவள் இருகையை யும் மேல் உயர்த்தித் தாங்கிப் பிடித்தாள். எடுப்பான தோற்றம், மிடுக்கான அழகு. அவர் கொடுப்புக்குள் சிரித்தபடி பார்த்துக் கொண்டே நின்றார்.
அவள் சற்றும் எதிர்பாராத விதமாக, அவர் அவளைக் கட்டியனைத்தார். மெய் மறந்து சொர்க்கலோகம் போக எண்ணி னார். அவளுக்கோ எதிர்பாராத அதிர்ச்சி அவள் குரக்கன் மூடையாலையே தாக் கித் தள்ளி, அவனை விழுத்தினாள். மூடை மேலே, பாடையிலே கிடப்பது போல் அவர் கீழே, அவள் ஓடிவிட்டாள், குடத்தையும் எடுக்காமல்,
போகும் போது சொல்லிக் கொண்டே
(3urt 60.T T si ..... 'இந்த விளையாட்டுக் கெல்லாம் சாதி பாராயினமாம், இவையள்.”
மல்லிகை ஜூன் 2009 * 19

Page 11
அவர்கள் நினைத்தார்கள் தாங்கள் பெரிய சாதி, அதை இதைக் கொடுத்து எங்களை விலைக்கு வாங்கிவிடாலா மென்று. ஆனால், கண்மணி குடும்பத்துக் குச் சாதி சனம் பெருத்த அவர்களைத் தொழில் ரீதியாகவும், வேறு தேவைகளைப் பொறுத்தும் அண்டித்தான் சீவிக்க வேண் டியிருக்கிறது. எதையுமே வெளிக் காட்டிக் கொள்வதில்லை. ஆனால், இவர்கள் மீது ஆத்திரம் நீறுபூத்த நெருப்பாகப் புகைந்து கொண்டே தான் இருக்கிறது.
கந்தசாமியும் கண்மணியும் தங்களுக் குள் பேசிக் கொள்வார்கள், "எல்லா எளிய குணமும் இவர்களுக்குள்ள இருக்க, ஏன் இவர்கள் பெரிய சாதி எண்டு சொல்லுறா ங்கள்?’ பிறப்பாலே பழங்காலத்தில் மன்ன னாக முடி சூட்டினார்கள். அது மூடக் கொள்கை என்று புரட்சி செய்தவர்கள் குடி யாட்சியைக் கொண்டு வந்தார்கள். ஆனால், பிறப்பாலே உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று இருப்பதை ஏன் இன்னும் கட்டி யாண்டு கொண்டிருக்கிறார்கள். படித்தவர் கள், பட்டம் வாங்கியவர்கள், பருத்த உத்தி யோகம் பார்ப்பவர்களுக்குக் கூட, இதை விட்டெறிய மனம் பிடிக்கவில்லையே. பூமணி வீட்டில் நல்ல படித்த பட்டம் வாங் கிய, வெளிநாடு போய் வந்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள். தாயில்லாத நேரம் பார்த்துத் தண்ணிர் அள்ளப் போகும் போது, கண்மணி நினைப்பாள், நல்லாகப் படித்ததுகள் தானே, சீர்திருத்தமான குணம் இருக்குமென்று. ஆனா, அவர்க ளும் நீர் வார்த்துத் திருத்தொண்டு செய்து சாதித் தடிப்பைக் காட்டி நிற்பதில் முனைப் புக் காட்டுகிறார்களே!
தங்கள் வீட்டில் நடந்த வைபவ
மொன்றின் போது தான், கந்தசாமிக்கும் கண்மணிக்கும் இவர்கள் மீது வெறுப்பேற் பட்டது. போன வருடம் தான் மூத்தமகளின் சாமத்தியச் சடங்கு நடந்தது. அயலுக்கெல் லாம் சொல்லியிருந்தார்கள். தூரத்தில் இருந்து இனசனமெல்லாம் வந்து, நல்ல விமரிசையாகக் கொண்டாட்டம் நடந்தே றிக் கொண்டிருந்தது.
அந்தப் பகுதியில் இருந்தும் கொஞ்ச நேரம் கடந்து தான் ஆக்கள் வந்தார்கள். அவர்களைக் கண்டதும் கண்மணிக்கும் கணவனுக்கும் தலை கால் தெரியாத புளுகம், பெரிய இடத்தாக்கள் எங்கட வீடு தேடி வந்திட்டார்கள்’ என்று மனது அப்போதுதான் கொண்டாடிக் கொண்டது. நல்ல இருக்கையிலே அவர்களை அமரச் செய்து விழுந்தடித்துக் கொண்டு உபசரித் தார்கள். நல்ல இனிய பண்டங்களைச் சிற் றுாண்டி வகைகளை எல்லாம் வெள்ளித் தட்டில் அழகாக அடுக்கி வைத்துப் பரிமாறி னார்கள்.
ஆனால், அவர்கள் ஒன்றைக் கூடத் தொட்டும் பார்க்கவில்லை. கடைசியாகத் தேநீர் கொண்டு வந்து வைத்தார்கள். பரி மாறியது இளம் பெண்கள்தான். சும்மா சொல்லக்கூடாது, இந்தச் சமூகப் பெண்கள் என்றால் என்ன, ஆண்கள் என்றால் என்ன, அழகுதான்! கண்களால் விழுங்கி விடுவது போல இரசித்தார்கள். கந்தசாமி உருக்கமாக வந்து மிக்கப் பவ்வியமாகக் கேட்டார். 'என்ன ஐயா! எல்லாம் அப்ப டியே இருக்கு. ஒண்டையுமே தொட்டுக்
கூடப் பார்க்கல்ல! ஏன் என்ன வேணும்?"
"சோடா இருந்தால் கொண்டு வா!
குடிப்பம்."
மல்லிகை ஜூன் 2009 & 20

கந்தசாமிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சோடா கேட்டவரைப் போடா என்று கலைக்க வேண்டும் போலி ருந்தது. என்றாலும், அவர்கள் அயலில் இருப்பதால், கோபத்தை வெளிக்காட் டாமல் பொறுமையைக் கடைப்பிடித்தான்.
இதைவிட, ஆத்திரமூட்டல் சம்பவமொ ன்று அண்மையிலே நடந்தது. கந்தசாமி
வழமைபோல வாயிற்படியில் இருந்து கல்
லிலே எண்ணெய் பூசிச் சவரக் கத்தியை தீட்டிக் கொண்டிருந்தான். இரண்டு பக்கமும் பிரட்டிப்பிரட்டி வேகமாக லாவகமாக அவன் கத்தி தீட்டுவதே, ஒரு அழகு. நன்கு பழக் கப்பட்ட கைதேர்ந்த தொழிலாளி என்பதைக் காட்டிக் கொடுக்கும். மனைவி இஞ்சி போட்ட தேநீரை ஆவிபறக்க அவர் அரு கில் வைத்து விட்டு, "மெல்லத் தீட்டப்பா. தவறினால் கைதுலைஞ்சுது." அவளுக்கு தன் தகப்பனாருக்குத் தான் குமரியாக இருக்கும் போது நடந்தது, இன்னும் நெஞ் சில் உறைந்து போயிருந்தது. இப்படித் தான் தீட்டிக் கொண்டிருக்கும் போது, தீட்டுக்கல்லை ஏந்தியிருந்த கையைப் பதம் பார்த்துவிட்டது. அப்போது ஒடிய இரத் தம் இப்போதும் அவள் மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது. அவர் அதைப் பெருமையாகவே பேசுவார். “ஒப்பரேஷன் செய்யுற கத்தியும் மயிர் வழிக்காது. எங்கட கத்தி அதைவிடக் கூர்."
வெளிப் படலையைத் திறந்து கொண்டு கந்தசாமியை ஒருவன் கூப்பிட்டான். மனைவிதான் என்னவென்று வினவி, அவன் சொன்ன செய்தியை வந்து சொன்னாள். 'முருகேசர் வரட்டாம், தலைமயிர் வெட்ட வேணுமாம். அவசரமா எங்கோயோ போக வேணுமாம். உடன
டியா வரட்டாம்!” கந்தசாமிக்கு உழைப்புக் குப் பஞ்சமில்லை. அவன் வீட்டில் இல் லாத சமயங்களில் வீட்டில் அழைப்பாணை விடுத்து, ஒரு பட்டியலே நீட்டி வைத்திருப் பாள், மனைவி.
கந்தசாமி முருகேசர் வீட்டுக்குப் போனான், ஆயுதப்பையோடு."வாடாப்பா! உன்னைத்தானே பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனான்’ என்றவர் பின்னால் போனார். நீர் இறைக்கும் இயந்திரம் நீரை வாரிக் கொட்டிக் கொண்டிருந்து. அவர் நீரோட்டத்தைப் பார்த்துக் கொண்டு, வேலை செய்பவர்களுக்கு உத்தரவு வழங் கிக் கொண்டிருந்தார். இடைக்கிடை தானும் பாத்தி பிரித்து நீரோடவிட்டுக் கொண் டிருந்தார். கந்தசாமி அவரைப் பார்த்துக் கொண்டு நின்று காலும் கடுத்து விட்டது. பக்கத்து மாமர வேரில் குந்திக் கொண் டான். எத்தனை இடம் போகவேனும்? இண்டைக்குக் கொஞ்சம் கூட உழைக்க லாம் எண்டால், ஏலாம இருக்கு. தங்கட அலுவல் பார்த்துக் கொண்டிருக்கினம், அடுத்தவன் உழைச்சு நல்லா வரவிடமாட் டினம். என்ன மனுசரப்பா இவங்க! கந்தசாமி அலுத்துக் கொண்டான்.
'உடையவன் இல்லா வேலை ஒரு முழம் கட்டை கண்டியோ, நாங்களும் கூட மாட நிக்காவிட்டால் எங்கள உச்சுப் போடு வினம்." அவர் சமாதானம் சொல்லிக் கொண்டே வந்தார். பின்புறம் கொல்லைப் பக்கமாகப் போனார். கந்தசாமி பின் தொடர்ந்தான். அங்கேதான் மலசலகூடம் இருந்தது. அதற்குப் பக்கதில் பழைய சாய் மனைக் கதிரை இருந்தது. அதிலே போய்க் காலும் கையும் நிலத்திலே முட்ட நன்றா கச் சாய்ந்து கொண்டே கிடந்தார்.
மல்லிகை ஜூன் 2009 & 21

Page 12
கந்தசாமிக்கு நன்கு குனிந்து வில் போல் வளைந்து தொழில் செய்ய வேண்டி தாயிற்று. அவன் கொஞ்சம் உயரமான வன். மிச்சம் கஷ்ரப்பட்டுத்தான் தொழில் புரிய வேண்டியதாயிற்று. துர்நாற்றம் வேற. எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு விரைவாக வேலையை முடித்துவிட்டான். கண்ணாடி பார்ப்பதுமில்லை, கேட்பதுமி ல்லை, நூதனம் பார்ப்பதுமில்லை. கந்த சாமி வெட்டினால் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை. முடிதிருத்தும் வேலை முடிவடைந்துவிட்டது, இனிச் சவரம் செய்வதுதான், பாக்கி.
இப்படி நரகலுக்குள் நின்று வேலை செய்யும் போது, பழைய ஞாபகம் வரும், கந்தசாமிக்கு. தகப்பன் தன் தொழில் அநுபவங்களைச் சொல்லக் கேட்டிருக்கி றான். கந்தசாமி பிறந்து வளர்ந்த இடம் திருகோணமலை. கலியாணம் காரணமாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தவன். அப்போது வெள்ளைக்காரரின் கடற்படைத்தளம் (நேவி) இருந்த காலம். அப்பா வேலைக்குப் போவதே ஒரு தனி அழகாக இருக்கும். வெளுத்த வெள்ளை வேட்டி கட்டி, கோட் போட்டு, டை கட்டித் தொப்பி போட்டு பொலி ஸ் பண்ணி மினுங்கும் தோல் பையை பீ. எஸ். ஏ. சைக்கிளில் வைத்துப் போவது எவ்வளவு கம்பீரமாக இருக்கும் செய்யும் தொழிலுக்கே பெருமையாக இருக்கும்.
கடற்படைத்தளம் போய் அவர்கள் இல் லத்து வாயிலில் பெல்’ அடித்ததும் "குட் மோர்னிங்' சொல்லி வரவேற்பதும், 'சிற்ர வுண் பிளிஸ்' சொல்லிக் கூடத்தில் சோபா வில் இருக்கச் செய்வதும், தேநீர் தந்து, சிகரட்டும் தந்து, புகைத்து முடிந்த பின், தொழிலை ஆரம்பிக்க உள்ளறைக்குக்
கூட்டிக் கொண்டு போனால், அந்த அறை பளிங்குக் கற்களால் அலங்கரிக்கப்பட்டிரு க்கும். முன் கண்ணாடி, பின் கண்ணாடி, காற்றாடி, மேசை, சுழல்கதிரை, தண்ணீர் பம்ப், என்று ஒரு சலுான் போலவே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். தொழில் முடிந்த தும், காசையும் கூடத்தந்து, 'தாங்ஸ்’ சொல்லி"டாட்டா” காட்டி வழியனுப்பி வைப் பதும் மனதை விட்டு நீங்காத காட்சிகள்.
இது ஆண்டவர் சிலுவை சுமந்தது போல, தலைமயிர் வெட்டப் படாத பாடுபட வேண்டும். கூலி கொடுக்கும் போது, ‘என்னப்பா, இந்த மயிரை வெட்டுறதுக்கு இவ்வளவு காசு கேட்கிறாய்? கொஞ்சம் குறைச்சுச் சொல்லுமன்.' கறிக்கடை யில் மீன் விலை பேசுவது போல் நடந்து கொள்வார்கள். அவனுக்குச் சினம் சின மாக வரும். ஏண்டா மனுசியின்ர ஊருக்கு வந்தன் என்று இருக்கும். அவருக்குச் சவரம் செய்வதற்காகச் சவற்காரம் பூசும் சடங்கு நடந்து கொண்டிருந்தது. பாட்டறிய விழுந்து கிடப்பது போல, கிடக்கும் அவரு க்கு, நன்றாகக் குனிந்து வளைந்து வேத னைப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போது தான் சத்தம் கேட்டது, வான மண்டலம் அதிர்வது போல. இருவரும் நிமிர்ந்து பார் த்தனர். அதிர்ந்த சத்தத்தால் அதிர்ந்து தான் போயினர். வானத்தில் பொம்மர் விமானங்கள் வெண்புகையைக் கக்கியபடி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. குண்டு போடாமல் இருந்தால் அது பார்க்கக் கூடிய கண்கொள்ளாக்காட்சி தான். வானத்தில் வட்டமிடும் பருந்து போல, இந்த இரும்பு பறப்பதும் கண்ணுக்கு நல்ல விருந்துதான். ஆனால், முருகே சருக்கு இருப்புக் கொள்ளவில்லை.
மல்லிகை ஜூன் 2009 3 22

"நெற்றிமுட்ட நேர நின்று குத்துக்கர ணம் போறானடா, இண்டைக்கு ஆர்குடிய அழிக்கப் போறானோ? தெரியல்ல." சொல்லிக் கொண்டே பதறியடித்துக் கொண்டே பாதி மீசையோடு ஓடினார். அடிவளவுக்குள் புளிய மரத்தடியில் அருமையாக அமைத்த பதுங்கு குழிக்குள் பதுங்கிக் கொண்டார். வருத்தக்காரனாகக் கிடந்த மனுசன், எப்படி இப்படித் துள்ளிக் குதித்து மாயமாக மறைந்தானோ? கந்த சாமிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எல் லாம் போர்க்காலச் சூழலுக்கேற்ப, எல்லோ ரும் தங்களைப் பயிற்சிப்படுத்திக் கொண் டார்கள். அவர் பின்னால், வீட்டில் இருந்த பெண்டுகள் பிள்ளைகள் எல்லாம் குடி புகுந்து கொண்டார்கள், பங்கருக்குள். கந்த சாமி பங்கர் வாசலையே பார்த்துக் கொண்டு நின்றான். யாராவது கையைக் காட்டியாவது வாவென்று அழைப்பார்களா என்று ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே நின்றான். ஆனால், ஒரு சைகையும் இல்லை. முன் வாசலைக்கூட ஒரு மரக் குற்றியால் மூடிவிட்டார்கள். மேலே நிமிர் ந்து பார்த்தான். ஒரு விமானம் நேரே தலை கீழாகக் குத்திக் கொண்டு வந்தது. போடத்
தான் போறான். கந்தசாமி ஓடிப்போய்
மலகூடத்துக்குப் பக்கத்தில் முகம் குப்புற நீட்டி நிமிர்ந்து, இரண்டு விரல்களால் காதை அடைத்துக் கொண்டு படுத்துவிட்டான்.
டுமீல். டுமீல் என்று காதைப் பறிக்கும் சத்தங்கள். இதயமே வெடித்து விடும் போலிருந்தது. எத்தனையோ பேருக்கு அது இயங்காமலே போயிருக் கும். எங்கும் பேரொலி. இந்தச் சத்தங்கள் தான் பெரும் சக்தி வாய்ந்தது. சப்த நாடி நரம்புகளையெல்லாம் செயலிழக்கச்
செய்துவிடும். எங்கும் புகைமண்டலம். ஒன்றுமே தெரியவில்லை. அழுகுரல்களும், அவலச் சத்தங்களும் அடங்கவில்லை. ஆனால், அட்டகாசம் புரிந்த பிணம் தின் னும் கழுகுகள் தங்கள் அலுவலை முடித் துக் கொண்டு அடங்கிப் போய்விட்டன.
முருகேசரின் பதுங்குகுழிக்குள் இருந் துதான் அவலக்குரல்கள் கேட்டன. கந்த சாமி விமானங்கள் போய்விட்டன என்பதை உறுதிப்படுத்திக் கெண்டு தலையைத் தூக்கிப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தான். புகைத்திரள் கலைந்து கொண்டிருந்தது. ஊடுருவிப் பார்த்தான். பங்கர் இடிந்து போயிருந்தது. ஒடிப் போனான். அழுகுரல் கள் நிலைகுலைய வைத்தன. பதுங்கு குழிக்குள் இருப்போர் வெளியே வரமுடியா மல் அவதிப்படுவது தெரிந்தது. கந்தசாமி பனைக்குற்றியைத் தூக்க முயற்சி செய் தான். முடியவில்லை. தனியே தூக்கவும் முடியாது. ஒரு பக்கம் நின்று தூக்கினால், மறுபக்கம் பொறிந்து விழுந்து, உள்ளிருப்ப வரைக் காயப்படுத்திவிடும். உதவிக்கு யாரா வது வரமாட்டார்களா? என்று பார்த்த போது, அயலவர்கள் படை எடுத்துக் கொண்டு ஓடிவந்தார்கள். கட்டைகளைப் புரட்டிப் பிரித்து எல்லோரையும் மீட்டெடுத்தார்கள்.
நல்லவேளை உயிராபத்தில்லை. சிறு காயங்களோடு எல்லோரும் தப்பிக்
கொண்டார்கள். “நல்லவேளை. எல்லோ
ரையும் அந்த ஆண்டவன் தான் காப்பாற் றினான். கந்தசாமி உனக் கொண்டும் ஆகல்லையே?’ என்றார் முருகேசர்,
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கந்த சாமிக்கு முன்பு கெக்கராவையில் சிகை அலங்கரிப்பு நிலையம் நடத்திக் கொண்டி
மல்லிகை ஜூன் 2009 * 23

Page 13
ருந்தபோது, நடந்த நிகழ்வு ஒன்று மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். மறக்கக் கூடிய சம்பவமா அது நீங்காத நினைவு. கெக்கராவையில் பெரும்பாலும் பெரும் பான்மை இனத்தவர்தான், மிகச்சிறுபான் மையினர்தான் தமிழ் பேசுவோர்.
தொழில் ரீதியாகக் கந்தசாமிக்குப் பல சிங்கள நண்பர்கள். நட்புப் பாராட்டுவதில், அன்பு காட்டுவதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்! அழகுபடுத்திவிட்டால், தொழில் மனதுக்குப் பிடித்துவிட்டால் காணும், சோடா, சிகரட், கேக் என்று அவ னுக்குப் பகல் சாப்பாடே தேவையில்லை. வயிற்றை நிரப்பிவிடுவார்கள். அவர்களுள் ளும் குணபாலுவோடுதான் அவன் கடும் சிநேகிதம். குணபாலு விடுமுறை நாட்க ளில், விசேட நாட்களில் அவனை வீட்டு க்கே கூட்டிக் கொண்டு போய்விடுவான். அங்கே அந்த அன்புத் தம்பதிகளின் அன் பான உபசரிப்பில், விருந்தோம்பலில் திக்கு முக்காடிப் போய்விடுவான். இதற்கு ஈடாக என்ன செய்வேன், என்று தடுமாறுவான்.
எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் எல்லாச் சமூகமும் சுமூகமாகத் தங்கள் வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந் தது. வழமை போல் கடையைத் திறந்து தொழில் புரிந்து கொண்டிருந்தான், கந்தசாமி. வெயில் சூடேறிக் கொண்டி ருந்த நேரம், சூடான செய்தியோடு சில்வா பரபரப்போடு வந்தான். அவன் இவனின் இன்னுமொரு நண்பன். அவன் சொன்னான்: * தமிழங் கடையெல்லாம் கொளுத்தப் போறது. நீங்க இங்க நிக்க வானா, கடL பூட்டுறது எங்கசரி ஒடுறது. நாம ஓங்கட கடையைப் பாக்கிறது. பயப்படவாணா.”
சொல்லிக் கொண்டே அவன் விரைந்தே செயல்பட்டான். கடையைப் பூட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்கினான். கடையைப் பூட்டித் திறப்பையும் சில்வாவிடம் கொடுத் துவிட்டு, குணபாலுவைத் தேடி ஓடினான், ! அவன் வீட்டுக்கு. ஒட்டமும் நடையுமாக அவன் போய்க் கொண்டிருந்தான். அரை மைல் தூரமாவது போக வேண்டும். கடை கண்ணிகள் தாண்டி, வீடுகள் கடந்து, இங் கொன்றும் அங்கொன்றுமாகச் சிறு சிறு குடிசைகள் போகச் செத்தைகள் வந்து பெரு மரங்கள் பெருகி, காடு ஆரம்பிக்கும் பகுதியிலேதான் குணபாலு குடியிருந்தான்.
குணபாலு வீட்டோடு கம்மாலை நடத் திக் கொண்டிருப்பவன். இரும்பை அடித்து நல்ல முறுக்கேறிய உடல், அவனுக்கு. கந்தசாமி மேல் மூச்சுக் கீழ்மூச்சு வாங்கப் பரபரப்போடு வந்து சொன்ன செய்தியைக் கேட்டு ஒரு கணம் திகைத்துத்தான் போனான். துருத்தியில் இருந்து வரும் காற்றைப் போல, மூச்சிழுக்கும் கந்தசாமி யைக் கனிவோடு பார்த்தான். பழுக்கக் காய்ச்சிய இரும்பை எடுத்து நீருக்குள் அமிழ்த்திவிட்டு, அவனை அழைத்துக் கொண்டு உள்ளே போனான்.
பட்டறையோடு சேர்த்துத்தான் வீடு அமைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குப் பின் னால், சமையல் கட்டுப் புறம்பாகக் கட்டி யிருக்கிறது. அவன் மனைவி மெனிக்கா சமையலில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டி ருந்தாள். அப்போது குணபாலு குசினிக் குள் கூட்டிக் கொண்டு போய், அவன்ன அவளிடம் ஒப்படைத்தான். விஷயத்தை விளங்கப்படுத்தியபின் போய்விட்டான். தன் இரும்படிக்கும் வேலையைத் ஆரம்பித்து விட்டான், எதுவுமே நடக்காதது போல.
மல்லிகை ஜூன் 2009 * 24

மெனிக்கா உரப்பைகளை எடுத்து புகை போவதற்காக வரிச்சியால் போட்ட யன்னல் போன்ற பகுதிகளை எல்லாம் மூடிக்கட்டினாள். குசினியையும் மூடிவிட் டாள். பலகைக்குற்றியொன்றை எடுத்துப் போட்டாள். 'மாத்தயா வாடிவெண்ட' இருக்கச் சொன்னாள். அவளுக்குக் கொஞ் சம்தான் தமிழ் தெரியும். இவனுக்குக் கொஞ் சம் சிங்களம் தெரியும். அவளது அன்பான உபசரிப்புப் புன்னகை தவழும் முகம் எல்லாம் சேர்ந்து பயம் பதகளிப்பு எல்லாம் நீங்கி, வழமை நிலைக்கு வந்துவிட்டான். அவள் சமையலில் ஈடுபட்டாள், காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். "இண்டைக்கு என்ன கறி? அவன் சிங்களத்தில் கேட் டான். ஈரப் பிலாக்காய் என்று பதில் வந்தது. அப்போதுதான் கவனமாகப் பார்த்தான். அவள் ஈரப்பலாக்காயைத்தான் கவனமாக நறுக்கிக் கொண்டிருந்தாள். அதிகமாக அதைத்தான் சமைப்பார்கள். அதிலே மிளகு தூள் போட்டு ஒரு சம்பல் செய்வார்கள், அலாதியாக இருக்கும். இன்னும் தரமாட் டார்களா? என்றிருக்கும். அவர்கள் கையால் எத்தனையோ முறை சாப்பிட்டிருக்கிறான். சிங்களப் பெண்களின் அழகுக்கு இந்த ஈரப்பலாக்காய்தான் காரணம் என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறான்.
இந்த அநுபவத்தில் மனைவியோடு வாழும் நாளில் ஆசையோடு ஈரப்பலா வாங்கி வந்தால், “ஏனப்பா இதை வேண் டிக் கொண்டு வந்தனிங்கள்? அண்ட வாய்வெல்லே?" என்பாள்.
"உனக்குத்தான் அண்ட வாய்வு ஆகாச வாய்வெல்லாம் வரும். சிங்களச் சனங்கள்
ஒவ்வொரு நாளும் சாப்பிடுதுகள். எப்பவா
வது ஒருக்கா இருந்து போட்டு வாங்கிக் கொண்டு வந்தால், இந்தப்பாடுபடுகிறாயே?” எத்தனையோ வார்த்தைப் பிரயோகங்க ளுக்குப் பிறகு வேண்டா வெறுப்பாக ஏதோ பண்ணி வைப்பாள். தின்னவா? கொட் டவா? என்று இருக்கும். கொளுக்கட்டைப் பொன்னனின் அநுபவம்தான் கிடைக்கும்.
கைப்பிடி உள்ள அலுமினியப் பாத்திர த்தில் எருமைப்பாலைக் காய்ச்சிக் கொண் டிருந்தாள். கொதித்துக் கொண்டிருக்கும் போது, கோப்பித் தூளை அதனுள் கொட் டினாள். சீனியையும் போட்டுக் கரண்டி யால் கலக்கினாள். ஆவி பறக்கப் பறக்கப் பெரிய கோப்பை முட்ட ஊற்றி, இரண்டு கையாலையும் அவன் முன் நீட்டினாள், புன்னகையோடு. ருசி இல்லாத சாப்பாடும் சுவையாக மாறிவிடும், புன்முறுவலோடு பரிமாறினால் சூடு தணிந்தபின் பருகி னான், கந்தசாமி, பசிக் களை உடல்களை மனக்களை எல்லாம் நீங்கப் புதுத்தென்பு பிறந்தது. சின்ன வயதில் படித்த கதை பொன்றுதான் ஞாபகம் வந்தது. ஒரு இராசா வேட்டையாடிக் களைத்துச் சோர் ந்து அலைந்து திரிகையில் ஒரு குடியான வனைக் கண்டார். அவன் அரசனை அம ரச் செய்து, ஆட்டுப்பாலைக் கறந்து செம்பு நிறையக் கொடுத்தான். வயிறு நிறையக் குடித்த வேந்தன், களை தீர்ந்த மனநிறை வில் உளமார வாழ்த்தி இரண்டு கிராமங் களையே எழுதிக் கொடுத்தான். கந்தசாமி க்கும் வல்லமை இருந்தால் அப்படிச் செய்ய வேண்டும் போல் இருந்தது.
குணபாலு எட்டிப் பார்த்துவிட்டு "மோலாளி பயங் வானா. பொட்டக் இன்ன.
நாம ஒரு சாமான் கொண்டு வாறது." என்று
மல்லிகை ஜூன் 2009 & 25

Page 14
சொல்லிக் கொண்டே போய்க் கொண்டிருந் தான். அவன் கையில் ஒரு கட்டுத்துவக்கு இருந்தது. காட்டுக்குள் போய் மறைந்தான். கந்தசாமி அவன் போகும் திக்கையே பார்த் துக் கொண்டு நின்றான். சிறிது நேரத்தில் டுமீல்' என்று சத்தம் கேட்டது. கந்தசாமி திடுக்கிட்டான். அடுத்த நிமிடம் குணபாலு ஒரு கையில் துவக்கு, மறுகையில் முய லோடு வந்தான். தானே தோலுரித்து, துண்டு துண்டாக்கி மெனிக்காவிடம் கொடு த்து விட்டுப் போனான். பழையபடி இரும்ப டிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
மாலையானதும் நண்பர்கள் இருவரும் பொரித்துத் தூள் தடவிய முயல் இறைச்சி யோடு ஒரு போத்தலையும் எடுத்து வைத்து, ஆனந்தமாகப் பொழுதைப் போக் கினார்கள். சிரிப்பும், கதையும், பகிடியும் கந்த சாமிக்குப் புதுத் தைரியம் வந்துவிட்டது. இப்போது எத்தனை பேர் வந்தாலும் சமாளிப்பான்.
முன்மண்டபத்தில் படுக்கை போட்டார் கள். கம்மாலை மண்டபம், அறை, சமை யலறை எல்லாமே வரிச்சு பிடித்துக் களி மண்ணால் பூசி மெழுகித் தகரத்தால் வேய் ந்து மண்வீடு என்றாலும், அழகாக அமைத் திருந்தார்கள்.
குணபாலு படுப்பதற்காக அறையைத் திறந்து கொண்டு அடியெடுத்து வைத்தான். அப்போது வெளிப் படலைப் பக்கம் ஆர வாரமாக இருந்தது. "குணபாலு குணபாலு கந்தசாமி இன்னவத...? வீட்டில் இருந்த எல்லோருக்கும் விஷயம் விளங்கிவிட்டது. ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது.
குணபாலு கந்தசாமியின் முதுகிலே
பிடித்துத் தள்ளினான். அறைக்குள் போகு மாறு கூறினான். கந்தசாமி தயங்கித் தய ங்கி நின்றான். அந்நேரம் அறைக்குள் இருந்து ஒரு தளிர்க்கரம் நீண்டு வந்து அவ னைப் பற்றி உள்ளிழுத்து தாளிட்டுக் கொண்டது.
குணபாலு வெளியே போவதற்குள் அவர்கள் அடித்துத் திறந்து கொண்டு வந்துவிட்டார்கள். குணபாலுவுக்கும் அவர் களுக்கும் வாக்குவாதமாக இருந்தது. ‘கந்த சாமி மெத்தென நே, அப்பிவித்தறாய் இன்ன’ என்று அவன் எத்தனையோ முறை சொல் லியும் அவர்கள் கேட்கவில்லை. தீப்பந் தங்கள், கத்திகள், வாளுகள், பொல்லுகள் சகிதம் உள்ளே வந்துவிட்டார்கள். மூலை முடுக்குப்பத்தைகள் செத்தைகள் சமையல் கட்டு என்று எல்லாவிடமும் தேடினார்கள். அறைக்கதவுக்கு ஒரு உதை. அது இறுக் கமாக இருந்தது. "மெனிக்கே நிதாகன் னவ...' என்று சொல்லிக் கொண்டே போய்விட்டார்கள். கந்தசாமிக்கு வியர்த்துக் கொட்டியது. இரத்த வியர்வைதான், அது. மரணப் பயம் பொல்லாதது. குணபாலுவுக் கும் அன்று நித்திரையே வரவில்லை. கம்மாலைக் கட்டிலே படுப்பதும் படலை யால் எட்டிப் பார்ப்பதுமாக இருந்தான். கந்தசாமிக்கு உலை கொதிப்பது போல் உள்ளம் கொந்தளித்துக் கொண்டேயிருந்
தது. அப்போது இதமாக ஒருகரம் வருடிக்
கொடுத்தது. 'மாத்தபா பயப்பட வானா நாம எங்கட உசிரக் குடுத்து ஒங்களக் காப்பாத்துறது."
இனவெறியர்கள் செய்த எல்லா அக்கிர மச் செயல்களையும் மன்னித்து மறந்து விடலாம் போல் இருந்தது, இந்த ஆறுதல் வார்த்தைகள்,
மல்லிகை ஜூன் 2009 3, 26

இம்மை முடிந்து மிக அவசரமாகவே மறுவுலகில் ஒரு மாநாடு. மழலைகள் கடி ஆராய்ந்தன.
விடை தெரியா வினாக்கள்
வித விதமாய் எழுந்தன. కెష్మి هگدھچ؟ Ç?â
நாம் ஏன் இறந்தோம்? " இ
நாம் ஏன் இறந்தோம்?
வாழ்வதற்கென்றே பூமிக்குச் சென்றோம் வன்னியென்பது வாழ்விடமில்லையா?
6LD TIL (Buu (BLITTITf6T 69HÍLIGIJL6luu6õrspnróð, மொழியே பேசாத எம்மையேன், கொன்றார்கள்?
கால்கள் பதித்து தத்தி நடக்கமுன், கால்களை இழந்து நாமேன் இறந்தோம்?
தவழ்ந்து எழுந்துநடைகள் பயின்றபின் மீண்டும் தவழ்ந்தோம், குண்டுக்கு அஞ்சி. ஆயினுமென்ன,
அப்படியே இறந்தோம்.
st
‘ஓடி விளையாரு பாப்பா’ என்றனர்
ஊர் ஊராய்ஓடிக் கொண்டேதான் நாங்கள் இறந்தோம்.
குழந்தையும் தெய்வமும் ஒன்றென்பதாலோ குழந்தைப் பருவத்திலேயே தெய்வமாக்கினர்.
இன்றே எல்லாரும் ஒன்றாய்ச் சேர்ந்து ஈசனிடம் ஒரு விண்ணப்பம் செய்கின்றோம்.
65.f6luid D6f 6f LD5(g) (86.6iTLIti). இருந்தாலும், அது ஈழத்தில் வேண்டாம்.
மல்லிகை ஜூன் 2009 & 27

Page 15
இரசனைக் குறிப்பு:
ßüsDEV 6IUnsörsD60us ägYSEDSH 6ISTGÜ)
်ငfzာ့’’ حس
- மா.பாலசிங்கம்
"நான் அரசியல் களத்திலிருந்து எழுத்து உலகத்துக்குள் பிரவேசித்தேன்’ எனக் கூறும் தீவிர முற்போக்கு எழுத்தாளர் நீர்வை பொன்னையன்- ஒய்ந்துவிடாது இன்றும் சிறுகதை படைத்து வரும் ஈழத்து முற்போக்குச் சிறுகதை முன்னோடிக ளில் ஒருவர். இவரைச் சமதர்ம அரசியலில் ஈடுபத்தி மக்கள் பணிக்கு இவர் வர, தயார்படுத்திய சிற்பி- இலங்கையில் பொதுவுடைமைத் தத்துவங்கள் வேர் கொள்ளக் கால் கோளிட்டவர்களில் ஒருவரான மனிதநேயத் தோழர் மு. கார்த்திகேசன். புரட்சியின் தொட்டில்’ என வர்ணிக்கப்படும் கல்கத்தா வில் (கொல்கத்தா) பொன்னையன் சிறிது காலம் வாழ்ந்ததும், அவர் பொதுவுடைமைக் கருத்தாளராக நிமிர்வதற்கு உதவியிருக்கிறது.
நிமிர்வு சிறுகதைத் தொகுப்பு இவரது ஏழாவது சிறுகதைத் தொகுப்பாகும். தனிநபர் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டில் இதுவரை செங்கை ஆழியான் நிலை நாட்டிய எண் னிக்கைச் சாதனையை இத்தொக்குப்பின் வருகை முறியடித்திருக்குமென நம்பக் கூடிய தாக இருக்கின்றது! தொகுப்புக்குள் நுழைய எத்தனித்த பொழுது 'நந்தி ஒன்றையும் சந்தித்து விட்டே செல்ல வேண்டியிருக்கின்றது. அந்த நந்தி எம். கே. முருகானந்தமே. புனைவுகளைக் கொழித்துப் பார்த்து நீண்டதொரு திறனாய்வுக் கட்டுரையை "வழங்கி இருக்கிறார். கதைகள் பற்றிய நுண்ணாய்வை மட்டுமன்றி, சிறுகதைக்கான இலக்கணக் கீற்றுகளையும் தந்துள்ளார். பயனுள்ள வாசிப்பாக இருக்கின்றது. நிச்சயமாக ஆராதிக்க வேண்டிய நந்திதான்.
இன்றும் அன்றும் நீர்வை பொன்னையனின் சிறுகதைகளில் முற்போக்குத் தடத் தையே காண முடிகின்றது. "மேடும் பள்ளமும்" என்ற அவரது முதல் சிறுகதைத் தொகு ப்பை வாசித்தவர்கள் இதை ஆமோதிப்பர். அடிமட்ட மக்கள் பக்கம் நின்று எழுதி, மார்க் சியத் தத்துவங்களை யதார்த்தபூர்வமாக நியாயப்படுத்துபவர். அதே பொன்னையனைத் தான் இத்தொகுப்பிலும் காண்கிறோம். முற்போக்கு இலக்கியம் ஈழத்தில் உச்சம் கண்டி ருந்த அறுபதுகளில் "அசல் முற்போக்குக் கதைகள்' என ஆய்வறிஞர்களால் சிலாகிக்கப்
மல்லிகை ஜூன் 2009 தீ 28
 
 
 
 
 
 
 

பட்ட சிறுகதைகளுக்கு இவை எந்த வகையிலும் பின் நிற்காது. பல்வேறுபட்ட இலக்கிய அம்சங்களிலும் நேர்த்தியான வைகளாகக் காணப்படுகின்றன. படைப் பாளியின் புனைவு மொழி சாதாரண மக் களின் இலகு மொழியாக இருப்பதால் இத் தொகுப்பிலுள்ள கதைகள் சகல தரத்தின ரையும் சென்றடைய உதவுகிறது. பொன் னையன் வயதில் மூத்தவராக இருந்தா லும், அவரது சிந்தனை இன்னமும் 'பழ சாக'வில்லை. சில கதைகளின் வடிவமை ப்பில் நவீனத்தன்மையைக் காண முடி
கின்றது. வசன கவிதையின் உருவில் இக் கதைகளை வார்த்திருக்கிறார். இது அவ ரது புதுமை படைக்கும் இச்சையையே காட்
டுகின்றது. வாசிக்கும் பொழுது ஒரு வசனத் திலிருந்து மறுவசனத்துக்குத் தாவ வேண்டு மென்ற மன உந்தல் சுரக்கிறது. பக்கங்க ளைச் சிக்கனப்படுத்த வேண்டுமென்ற "உலோபித்தனம் பாராது கதைக்கு ஏற்ற வகையில் இத்தகைய பரிசோதனை முறை யைச் செய்திருப்பது பாராட்டுக்குரியது.
இத்தொகுப்பில் வாசகனின் முக்கிய கவனிப்பைப் பெறக் கூடிய சிறுகதையாக உடைப்பு” என்ற கதையைச் சிபார்சு செய் யலாம். தேசிய ஒருமைப்பாடு, முதலாளி தொழிலாளி முரண்பாடு, பெண்ணியம் போன்ற சமகாலப் பிரச்சினைகளைத் தரும் "கொழுத்த கதாம்சத்தையுடைய தாக இருக்கின்றது.
இன்றைய இனப்பாகுபாடு வளர்ப்பி லும், தமிழ் சிங்கள உறவு ஒரு சிலரிடம் ஊற்றெடுக்கத்தான் செய்கின்றதென் பதைச் சிங்கள மாலினி தோட்டக்காட்டுப்
பாப்பாத்தி குடும்பத்துக்கு கீரை விளைவித்
தலுக்கு வெற்றுக் காணியைக் கொடுப்பது துலாம்பரமாகக் காட்டுகிறது. தங்கள் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகை யில் காணியைத் திருப்பி எடுத்த மாலினி க்கு முதல் கீரைக்கட்டை வழங்குவது தொழிலாளி பாப்பாத்தியின் உயர்ந்த உள்ளத்தைக் காட்டுகின்றது. இக்கதை யின் இன்னொரு முகமாகப் பாப்பாத்தி தன் கற்பைக் காப்பாற்றத் தம்ம சேனாவுக் குக் கொடுத்திருக்கும் 'சாப்பாடு பெண்ணியத் தின் உச்சத்தை அம்பலப்படுத்துகின்றது. அடுத்ததாக, இக்கதை இன்று நீறுபூத்த நெருப்பாக இருக்கும் வர்த்தகப் போட்டி யையும் உணர்த்துகின்றது. தன்னோடு உடன்பாட்டுக்கு வராத பாப்பாத்தியை தம்ம சேனா பழிவாங்குவதற்கு. "தோட் டக்காட்டான் எங்கட நிலத்தில தோட்டம் போட்டிருக்கிறான். எங்கடை நிலத்திலை உண்டாகின்ற கீரையை எங்களுக்கே வித்து, எங்கடை காசைச் சூறையாடிக் கொண்டிருக்கிறான் தோட்டக்காட்டான் வேலு." என்ற விஷ வித்துகளை அயலவ ரின் மனங்களில் விதைத்தே கீரைத் தோட்டக் காணியைப் பறித்தெடுக்கின் றான். ஒடுக்கப்பட்ட இனத்தின் பொருள தாரத்தை முடக்க- பேரினவாதம் சிறிய" தோர் வியாபாரத்துக்குள் வைத்துப் பார்க் கப்பட்டாலும்- இதன் பரம்பல் பெருவர்த்தக த்திலும் 'கை போடுவது இன்று இரகசிய மானதல்ல
தொகுப்பின் தொடக்கக் கதையான "ரிமிர்வு" அரசியல் போலிகளை அம்பலத் துக்குக் கொண்டு வருகின்றது. தாய்மொழி க்காக அரச உத்தியோகத்தைத் துறந்துமேடை ஏறிப் பாராளுமன்றக் கதிரை கிடை க்க ஆதரவாகப் பேசிய தமிழ்த்தியாகி
மல்லிகை ஜூன் 2009 * 29

Page 16
யைக் காதலித்ததற்காக "மண் கிண்டிய பயலே உனக்கென்னடா தகுதி" என ஏள னப்படுத்தி ஊரையே விட்டு, அனாதை யாக விரட்டுகிறார் கறுப்புக் கோட்டுக்கார எம். பி. அத் தமிழ்த் தியாகிக்கு அடிமட்ட மக்கள் குடியிருப்பான சுந்தரபுரம் புகலிடம் வழங்குகின்றது. அனாதையாகத் துரத்தப் பட்ட தியாகிக்கு மக்கள் பலம் கிடைக்கின் றது. அந்த நிமிர்வைக் கண்ட கறுப்புக் கோட்டுக்கார எம். பி. அந்தக் கிராமத்தை மிதிக்கவே அஞ்சுகிறார். இங்கேயும் கதைஞர் அடிமட்ட மக்களை மேன்மைப் படுத்துகிறார்.
தமிழரைப் பிளவுபடுத்திக் கொண்டிருக் கும் சாதியத்தைச் சாடும் கதை "மிறன்" தனியார்துறையின் தான் தோன்றித்தனத் தைப் புட்டுக் காட்டுகின்றது. தேவையான போது, அனைத்தும், சந்தர்ப்பம் வந்த போது, தூக்கி எறியும் "சணம் வாதம், சணம் பித் தம்" என்ற தனியார்துறையின் போக்கை உணர்த்துகின்றது. தமிழ் இனத்துக்குள் தாழ்த்தப்பட்ட தமிழர் சிறுபான்மையினர். கலப்புத் திருமணத்தை ஊக்குவிப்பது பெரும்பான்மைத் தமிழரது ஆதரவை இழ க்க வைக்கும், வர்த்தகத்தை முடக்கும் என்ற அச்சம் தனியார்துறை க்கு உண்டு. இதனால், கள் இறக்கும் தொழி லாளியின்
மகள் மற்றொரு உயர் சாதி ஊழி யரைக்
கணவானக்கத் தனியார் துறை சம்ம திக்கவில்லை. இருவரையும் தொழில் இழக் கச் செய்கிறது. ஆனால், காதல் வெல்கி றது. கதை யாதார்த்தமானது. தாழ்த்தப் பட்ட தமிழருக்கு தனியார்துறை வேலை வாய்ப்பு முயல் கொம்புதான்!
தடம் மாறிய தோழர் ஒருவரின் நிலை
யைத் தனியார் துறைக்குள் வைத்துப் பார்க்கும் கதை வீழ்ச்சி"மதுச்சாலைக்குள் திட்டங்கள் எடுப்பதை அழகாகக் காட்டு கிறது. அதுதான் போலும் இந்நாட்டுக்கு இக்கதி
"மீட்பு" என்ற கதையும் அடிமட்ட மக்க ளின் உன்னதங்களைப் பேசுகின்றது. பட்டம், பணம், பதவி வழங்கித் தம்பக்கம் இழுக்க முயலும் மேல் தட்டு வர்க்கத்தைத் தூக்கி எறியும் 'பாட்டறியேன் படிப்பறி யேன்” என்றவோர் இசைக் கலைஞனின் கதை. வங்க மண்ணை அலங்கரித்த பெரி யார்கள், இயற்கைச் செழுமை என்பவை களைக் கதைஞர் ஊடுபாவாகக் காட்டி இருக்கிறார். மற்றொரு நோக்கும் பொறி தட்டுகிறது. இக் கதையைப் புலம்பெயர்ந் தோர் இலக்கியத்துக்குள் வைத்துப்
UTfriss6)mLDIT?
பெண்ணிய இலக்கியம் ஈழத்தில் பெரிதாக வளர்ச்சி காணவில்லை எனத் தான் கூற வேண்டும். ஆனால், தமிழகத் தில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள் ளது. பெண்ணிய இலக்கியத்துக்கு எதிரா கத் தற்பொழுது கடும் விமர்சனங்கள் குவி ந்து கொண்டிருக்கிறன. சில பெண்கள் கூட "அவர்கள் ஆண்களைக் கிஞ்சித்தும் பொருட்படுத்துவதில்லை" என ஆண்களு க்காகக் கசிகின்றனர். இவர்கள் இத்தொகு ப்பில் காணப்படும் 'வெறி” என்ற கதையை வாசித்தால் ஆணாதிக்கம் எத்தகைய கொடூரமானதென்பதை அறிய முடியும். ஆண்மையற்ற ஒருத்தன் தன் குறைபாடு களைக் கண்டு கொள்ளாமல், தன்னோடு வாழ வந்த பெண்ணை நிஷ்டுரப்படுத்துகி றான். தாம்பத்தியத்தை ஆசீர்வதிப்பது
மல்லிகை ஜூன் 2009 * 30

திருமணம் என்பதை மறந்து இக் கதை பெண்ணியவாதிகளுக்கு அசல் அவல்
இல்லத்தரசிகளின் வெளிநாட்டு மோகத்தை நேர்த்தியாகச் சித்திரிக்கின் றது. "பலிஆகு" என்ன விலை கொடுத்தாகி லும், வெளிநாட்டில் தம் மக்களை வேர் கொள்ளச் செய்ய வேண்டும் என்ற பெண் மனத்தின் "பிலாதியை அச்சொட்டாகச் சித்திரிக்கின்றது. எம் வாழ்வில் பாரம்பரிய மாகத் தொடர்ந்த பழக்க வழக் கங்களுக் கும் இதனால் மெல்லச் செத்துக் கொண்டி ருப்பதைக் கதைஞர் கவனத்துக்குக் கொண்டு வருகிறார்.
அகம்பாவம் பிடித்த ஒருவனுக்குச்
செல்லப் பிராணியாகி உயிர் துறக்கும் நாயின் கதை “கர்வம்"
ஏனைய கதைகளும் கதைஞரின் முதிர்ச்சியான புனைவாற்றலால் கவன த்தை ஈர்க்கின்றன.
ஆக, கட்டுரைக்கும், சிறுகதைக்கும், நடைச்சித்திரத்துக்கும் வித்தியாசந் தெரி யாது படைப்பாளிகள் பலர் இருட்டினுள் குருட்டாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் இக் கால கட்டத்தில்- சம காலப் பிரச்சினை களை முற்போக்கு நோக்கோடுபுனைவாக்கி இருக்கும் சிறுகதைகளை அடக்கிய நிமிர்வு சிறுகதைத் தொகுப்பு நிச்சயமாக இலக்கியவாதிகளின் மனதில் வித்தியாச மான சிந்தனைகளைப் பெய்யுமெனக்
speoTub.
மல்லிகை ஆண்டுச் சந்தாதாததாகச் சேருபவர்கள் கவனத்திற்கு.
ཛོད༽
ஆண்டுச் சந்தா 450 தனிப்பிரதி 30
SSqSqqLSSSqSqqqSqSqqqqqSSSSqqqSqqSqqqSASqqSSqSASASqSqSqSqSqSqSSqqSqSqSqSqSqSqqqSqSqqSSqqqqSS ب.................. تا
ஒராண்டுச் சந்தாவுக்குக் குறைந்தது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
வங்கித் தொடர்புகளுக்கு: Dominic Jeeva 072010004231,- Hatton National Bank. Sea Street, i
Colombo - 1 1. 44வது ஆண்டு மலர் தரமான தயாரிப்பு. விரும்பியோர் தொடர்பு கொள்ளவும்.காசோலை அனுப்புபவர்கள் 100minie Jeeva எனக் குறிப் பிடவும். காசுக்கட்டளை அனுப்புபவர்கள் Dominie Jeeva. K0tahena, ,
P.O. எனக் குறிப்பிட்டு அனுப்பவும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 201/4, முறி கதிரேசன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி : 2320721 ノ
மல்லிகை ஜூன் 2009 * 31

Page 17
memonkavi (a yahoo
நமது படைப்பாளிகளின் இணையத்தளத்தில்.
இலங்கை வாழ் தமிழ் எழுத்தாளர்களின் வலைப்பதிவுப் பங்களிப்பு என்பது தமிழகத்துடனும் புலம்பெயர்ந்தவர்களுடனும் ஒப்பிடும் பொழுது குறைவாகவே இருந்து வந்துள்ளது. அப்படியும் பங்களிப்பு எனப் பார்த்தால் இலங்கை வாழ் இள்ைய படைப்பா ளிகள் அத்துறையில் காட்டிய அளவான ஆர்வத்தை மூத்த படைப்பாளிகள் காட்டவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் உடுவை தில்லை நடராஜா, டாக்டர் எம். கே. முருகானந் தன், கே.எஸ்.சிவகுமாரன் போன்ற மூத்த படைப்பாளிகள் இணையம் வலைப்பதிவு : எனத் தங்கள் ஆர்வத்தையும் ஈடுபாட்டை, அந்த இளையத்தலைமுறை படைப்பாளிகளுடன காட்டி வந்துள்ளார்கள். அந்த வரிசையில் திக்குவல்லை கமால், டாக்டர் ஜின்னா சரிப்புதீன், அஸ்ரப் சிஹாப்தீன், அஸிஸ் நிஸாருத்தின் போன்றவர்களும் இணையத்தளம் மற்றும் வலைப்பதிவுப் பக்கமும் தங்கள் கவனத்தை திருப்பி இருக்கிறார்கள். இவர்களில் நண்பர் அஸ்ரப் சிஹாப்தீனின் வலைப்பதிவு வேலைகள் பூர்த்தி ஆகிக்கொண்டிருப்பதனால மற்றவர் களின் வலைத்தள முகவரிகளை தந்திருக்கிறேன்.
http://nizardeen.blogspot.com
www.Dickwellekamal.blogspot.com
www.innahsherifudeen.com
மல்லிகை ஜூன் 2009 & 32
 
 

அத்துடன் விரைவில் வெளிவர இருக் கும் தனது ஹைக்கூத் தொகுதியில் இடம் பெறவுள்ள சில ஹைக்கூக்களை தனது தனது வலைப்பதிவில் தந்திருக் கிறார் உங்கள் பார்வைக்கு.
காகிதமும் மின் கடத்தியா?
சுர் என்று சுட்டதே
மின்சார கட்டணம்
<><><>
குஞ்சுக்கு இரை தேடிய
காகத்திடம் சிக்கியது
கோழிக்குஞ்சு!
<><><>
கல்வியால் பெற்றதை
கடற்கரையில் விட்டார்கள்
தள்ளாடி பறந்தது பட்டம் !
-> <> <>
கரை ஏற விடுங்கள் என
கால்களைப்பிடித்து கேட்கிறது
கடல் அலைகள்
மலேசியாவிலிருந்து ஒரு சஞ்சிகையும் ஒரு கவிஞரும
D (8 6) du T அஆங்கம் தமிழ் இல்கியம் பற்றி is... நமக்கு தெரியாது என்று சொல்லி விட முடியாது. ஆனால், தமி ழகத்தின் சில ஆய்வா 6ÎIff 5560) 6II தவிர * இலங்கை தமிழ் இலக் கியத்தை பற்றி தெரி யாத நிலையும் வளர்ச்சி அடையாத இலக்கியம் என நிலையில் மலேசியா தமிழ் இலக்கியத்தை பற்றி பார்வையை கொண்டிருக்கிறார்கள் ஆனால், அக்கருத்தை மாற்றும் வகையில் நவீன தமிழ் இலககியத் திற்கான பங்களிப்பு கணிசமான முறையில் அதிகரித்து வருக்கிறது என்பதை மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தை படிப்பவர்கள்
அறிவார்கள்.
அந்த வகையில் மலேசிய தவிர, இலக் கிய இதழ் எனும் அறிவிப்புடன் 'அநங்கம எனும் சிறுசஞ்சிகை வெளி வந்து கொண்டி ருக்கிறது. இதுவரை நான்கு இதழ்கள வெளி வந்திருக்கும் இவ்விதழுக்கு. மலேசியாவைச் சார்ந்த கே. பாலமுருகன் ஆசிரியராக பணி புரிகிறார். இவர் கவிரும் கூட சமீபத்தில் இவரது கவிதைத் தொகுதி ஒன்றும் வெளி வந்துள்ளது. 'கடவுள் அலையும் நகரம்" 61)} tf அத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள இரு கவிதைகளை தனது வலைப் பதிவில் பாலமுருகன் தந்திருக் கிறார். அக்கவிதை களை உங்கள் ரசனைக்கு.
மல்லிகை ஜூன் 2009 * 33

Page 18
கே.பாலமுருகனின் சில கவிதைகள்
பள்ளத்தில் நெளியும் மரணம் இறந்தவர்களெல்லாம்
பள்ளத்தில் விழுந்து
மீண்டுமொருமுறை
மரணிக்க முயற்சிக்கிறார்கள்
அவர்களின் தற்கொலைகள்
தோல்வியில் முடிகின்றன!
இந்தப் பள்ளங்கள்
ஒருவரை ஒருமுறைதான்
இரட்சிக்கும்!
நிலத்தின்
சதைப் பிடிப்பில்
விழுந்த காயங்களைச்
சுமந்து கொண்டு
மரணம் நெளியும்
பள்ளங்கள்!
வீட்டுக்கொரு
பள்ளம் உருவாகி
உயிரோடிருப்பவர்களுக்காகக்
காத்திருக்கின்றன
அவர்கள்
பள்ளத்தில் விழும்
கணங்களை
அங்குலம் அங்குலமாக
அளவெடுத்து
நீண்டுருக்கிறது அவர்களுக்கான
மரணங்கள்!
நிலம்தோறும்
வளர்ந்திருக்கும் பள்ளங்கள்
மரணத்தைக் கண்டு ஓடுபவர்களை
மிக அலட்சியமாகக்
கொன்று குவிக்க
கடவுள் ஏற்படுத்தியிருக்கும்
பலவீனம்
மல்லிகை ஜூன் 2009 3, 34

கடைசி பேருந்து
கடைசி பேருந்திற்காக
நின்றிருந்த போது
இரவு அடர்ந்து
வளர்ந்திருந்தது!
மனித இடைவெளி
விழுந்து
நகரம் இறந்திருந்தது!
சாலையின் பிரதான
குப்பை தொட்டி
கிளர்ச்சியாளர்கள்
அப்பொழுதுதான் தொடங்குகிறார்கள்
பேருந்தின் காத்திருப்பு
இருக்கையிலிருந்து
விழித்தெழுகிறான் ஒருவன்
நகர மனிதர்களின்
ജേങ്ങ
காணமல் போயிருந்தது!
விரைவு உணவுகளின்
மிச்சம் மீதியில்
கைகள் படர்ந்து மேய்ந்து கொண்டிருக்கின்றன!
ஊடுருவி ஊடுருவி
யார் யாரோ திடீரென
நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்!
கறுப்பு மனிதர்களின்
நடமாட்டம்
பேருந்து நிற்குமிடம் மட்டும்
குறைந்த வெளிச்சத்தில்.
ஒரு சிறுமி
சாலையைக் கடந்து
வெருங்கால்களில் இருண்டுவிட்ட
கடைவரிசைகளை நோக்கி
ஓடும்போதுதான்
கடைசி பேருந்து
வந்து சேர்ந்திருந்தது
இரு நகர பயணிகள் மட்டும்
முன் இருக்கையின் இரும்பு கம்பியில்
மல்லிகை ஜூன் 2009 * 35

Page 19
தலைக்கவிழ்த்து உறங்கியிருக்க
அபார வெளிச்சம்!
கடைசி பேருந்து
கொஞ்சம் தாமதமாகவே
வந்திருக்கலாம்!
நாங்கள் பூக்களாக இருக்கிறோம்
கட்டுப்பாடுகளற்ற ஓர் உலகத்தில்
வாழ்ந்தே பழகிவிட்டோம்!
எங்கள் விதிகளின்
மரங்களெல்லாம் பேசுகின்றன!
நாங்கள் நடந்து வருகையில்
கிளைகளால் உரசி
எங்களை தேற்றுகின்றன!
எங்கள் பறவைகள்
உறக்கத்திலும் சிறகுகளை
முடக்குவதில்லை
சேற்றுக் குளங்கள்
எங்களின் தாய் பூமியாக
இருந்து வருகின்றன!
நாங்கள் பறவையாகவும் இருந்திருக்கிறோம்!
எங்கள் சாக்கடையிலும்
தங்க மீன்கள்தான்!
சிரிக்கின்றன பேசுகின்றன!
நாங்கள் கடவுள்களை
வணங்குவதில்லை.
நாங்கள் பூக்களாகவே இருக்கிறோம்
படையலுக்குச் சென்றதில்லை!
எங்கள் மரங்கள்
எங்களை உதிர்த்ததில்லை!
என்ன ஆச்சர்யம்?
நாங்கள் பூக்களாகவே இருக்கின்றோம்!
மல்லிகை ஜூன் 2009 & 35

UC Desmly
- தெணியான்
எல்லாம் நடந்து முடிந்து பூரணமாக நிறைவேறக் கூடிய ஒரு காரியமாக ஆரம்பத்திலேயே அவர் மனதுக்குத் தோன்றவில்லை. அந்தச் சமயம் அப்படியொரு நல்ல எண்ணம் மனதில் வராமல் போனதற்கான காரணம் பற்றிக் கிஞ்சித்தும் அவர் நினைத்துப் பார்க்கவுமில்லை. அதற்கான நியாயம் இப்படி இருக்கலாம் கிணற்றில் இருந்து மெசின் நீரை இழுத்துக் குபுகுபு என்று வெளியே கொட்டிக் கொண்டிருக்கிறது. மண்வெட்டியினால் வரம்புகளை மறித்துக் கட்டி, பெருகும் நீரைப் புகையிலைக் கன்றுகள் சிரித்து மகிழ, அவர் ஊட்டிக் கொண்டு நிற்கின்றார். பாதங்களைத் தழுவிப் பாயும் சில்லெனக் குளிர்ந்த நீரின் பரவசத்தில் சிலிர்த்து, தோகை விரித்தாடும் வண்ண மயில்கள் போல, மதர்த்துச் செழித்த புகையிலைக் கன்றுகளுடன் முகம் மலர்ந்து ஆனந்தமாகப் பேசிக் கொண்டு நிற்கின்ற சமயம் தரகன் அங்கு வந்து சேருகின்றான்.
கிணற்றின் அருகே குடை விரித்த ஆடுகால் பூவரச நிழலில் ஒதுங்கி நின்று அவரைப் பார்த்து, "அண்ணே!" எனக் குரல் கொடுக்கிறான்.
நீர் இறைத்துக் கொண்டிருக்கும் மெசின் சத்தம், அவர் மனதினுள் சுருதி மீட்டும் பசுந்தளைகளின் இனிய சத்தம் எல்லாம் ஒன்று சேர, அவன் குரல் அமுங்கிப் போகிறது.
"அண்ணே!" மீண்டும் உரத்துக் குரல் வைக்கிறான். அவருக்கு லேசாகச் செவியில் வந்துபடுகிறது.
மண்வெட்டியைக் கையில் பிடித்தவாறு நிமிர்ந்து பார்க்கின்றார்.
தரகன்!
'அட, இவன் எங்கே இஞ்சை வந்து நிற்கிறான், சாண்டிக்காயிக்கெ சனியன் புகுந்த மாதிரி, பச்சைக் குத்தகையாக இப்பவே விலையைத் தீத்தால். அமத்தலாமெண்ட எண்ணம். அது சரிவராது. மனதில் புகையும் எரிச்சலுடன் “வாறன்’ எனக் குரல் கொடுத்து விட்டு, தொடர்ந்து நீர் பாய்ச்சிக் கொண்டு நிற்கின்றார்.
இறைத்துக் கொண்டிருக்கும் மெசினை இடைநடுவில் நிறுத்த இயலாது. பாய்ந்து கொண்டிருக்கும் நீரைப் பாத்தி மாற்றிப் பாய்ச்சாது, வரம்புகளை உடைத்து ஓடவிட இயலாது.
தரகன் கொக்காகக் காத்திருக்கின்றான்.
மல்லிகை ஜூன் 2009 * 37

Page 20
நிறைவாக நீர் பாய்ச்சி முடிகிறது.
அவர் விரைந்து வந்து இறைத்துக் கொண்டிருக்கும் மெசினை நிறுத்துகின் றார். தலையில் கட்டிய சால்வையை அவி ழ்த்து, முகத்தை அழுந்தித் துடைத்த வண் ணம் தரகன் முன் வந்து தரிசிக்கின்றார்.
"அண்ணே, ஒரு முக்கியமான விஷயம்."
"சொல்லுங்கோ’ கேட்கிறார் ஆர்வமில்
6) Tg5).
தரகன் அதை அவதானித்துவிட்டு, 'நான் பொயிலை விஷயமாக வரயில்லை" என்கிறான் அக்கறையுடன்.
'அப்படியே' சட்டென்று முகம்மாறிக் குழப்பத்துடன் அவன் முகத்தைப் பார்க் கின்றார்.
“மகளின்ரை காரியமாக வந்திருக்கிறன்.”
'மகளுக்கென்ன?” கேட்டுக் கொண்டு, தீவிரமாக அவன் முகத்தைக் கூர்ந்து நோக்குகின்றார்.
தரகன் வாய் திறந்து ‘ஹா. 6) DTT.....' என்று சிரிக்கின்றான்.
"என்னப்பா, சிரிக்கிறாய்?"
அவர் குரலில் மெல்லிய சூடேறி இருப் பதை அவன் அவதானித்துக் கொண்டு, ஒன்றும் உணராதவன் போல, “சிரிக்காமல் என்ன செய்கிறது! பொம்பிளைப்பிள்ளை யளை வைச்சுக் கொண்டு இப்பிடிக் கதைச்
சால்..?’ என்கிறான்.
'ஒ....! இப்ப கலியானத் தரகும்
பாக்கிறியள்?"
'அதுதான் நல்ல வருமானம்."
"அப்பிடியா..?”
"சீதனத்தில பத்துச் சதவீதம்."
"கொள்ளைக் காசுதான்."
'இரண்டு பக்கமும் தருவினம்."
"அப்ப, இருபது வீதம் வாங்குறியள். கொழுத்த காசு. உடம்பு நோகாமல் உழை ச்சுப் போடுவியள், லட்சக்கணக்கிலே வந்து புரளும், வெங்காயம், பொயிலை, ஆடுமாடு தரகு பாத்து என்ன கிடைக்கப் போகுது? அது போகட்டும். வந்த சங்கதியைச்
சொல்லுங்கோ'
'உங்கடை மகளுக்கு நல்ல இடத் திலை இருந்து ஒரு சம்பந்தம் வந்திருக்கு."
‘என்ரை மகளுக்கு மாப்பிளை பாக்கச் சொல்லி எப்பவாவது உம்மட்டைச் சொல்லி இருக்கிறனே? நாக்கு நுனிவரை வந்து விட்ட வார்த்தைகளை உள்ளே அடக்கி வைத்துக் கொண்டு, படித்துக் கொண்டி ருக்கும் பிள்ளைக்கு இவன் என்ன கலியா ணம் பேசிக் கொண்டு வந்திருக்கின்றான்' என்ற மன அதிருப்தியையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், இவனோடை பகை த்தால், சரியான நேரம் பார்த்துக் கல்லுக் குத்திப் போடுவாங்கள்’ என்னும் எச்சரிக் கையோடு ஆர்வமாகக் கேட்கின்றவர் போல, 'ஆ. சொல்லுங்கோ' என்கின்றார்.
“பொடியனை உங்களுக்குத் தெரிஞ்சி ருக்கக் கூடும். பட்டதாரிப் பொடியன். பிர தேசசபையில உத்தியோகம், உங்கடை மகனைத் தெரியுமாம். நல்ல குடும்பம். குடிவெறி இல்லாத ஆக்கள்.”
‘எப்பிடித் தெரியுமெண்டு கேக்கிறியள்.
மல்லிகை ஜூன் 2009 & 38

பிள்ளையை எங்கேயோ கண்டிருக்கிறார். பொடியனுக்குப் பிடிச்சுப் போச்சு. அதுதான் மாப்பிளை பக்கம் எண்ட கெளரவம் பாக்கா மல் என்னைப் பிடிச்சு அனுப்பி இருக்கினம்."
'எதுக்கும் நான் யோசிச்சுத்தான் சொல்லவேணும்."
"அது சரி, கலியாணம் எண்டது ஆயி ரங்காலத்துப் பயிர். திடுகூறாக எடுத்தடி மட க்கில செய்கிற காரியமல்ல. சீதனம், வீடு வாசல் எண்டு பெரிசாக அவை எதிர்பார்க்க வில்லை. உங்களுக்குப் பின்னாலெயும் பொம்பிளைப்பிள்ளையள் இருக்கு. அதை யும் யோசியுங்கோ இப்பிடி ஒரு இடம் உங்களுக்கு வந்து வாய்க்காது. வீட்டிலை யோசியுங்கோ! கனடாவிலெ இருக்கிற மூத்த மகனோடையும் யோசிக்கத்தானே வேணும்? சரி, பிறகு நான் எப்ப வர?"
‘எப்ப வரப்போறியள்?"
"ஒரு கிழமை. 9 y
‘சரி.’
அவரிடத்தில் மெல்ல விடை பெற்றுக் கொண்டு, தரகன் கிளம்பிப் போய்விட்டான்.
வீடு வந்து சேர்ந்த பிறகும், தரகன் வந்து போன செய்தியை மனைவிக்குச் சொல் லும் எண்ணம் அவர் மனதுக்கு வரவில்லை. மனைவி அறிந்தால், நிச்சயம் குழம்ப ஆரம் பித்துவிடுவாள் என்பது அவருக்குத் தெரியும்.
மூத்தவன் படிப்பில் மிகக் கெட்டிக்கா ரன். குடும்பக் கஷ்டத்தை உணர்ந்து அவன் வெளிநாடு செல்லத் தீர்மானித்த போது, அவர் எவ்வளவோ எடுத்துச் சொல் லித் தடுக்கப் பார்த்தார். இறுதியில் அவன் சொன்ன நியாயங்களை அவரால் தட்டிக்
கழிக்க முடியவில்லை. பிறகு கடனைத் தனியைப்பட்டு அவனை ஒருவாறு கனடா வுக்கு அனுப்பி வைத்தார்.
அவன் கனடா போய்ச் சேர்ந்த பிறகும் குடும்பப் பொறுப்புணர்ந்து நடக்கின்ற பிள்ளையாக இருக்கின்றான். அவனை அனுப்பி வைப்பதற்கு அவர் பட்ட கடன்கள் எல்லாம் அவன் தீர்த்து வைத்துவிட்டான்.
இப்பொழுதுதான் சுமைகள் நீங்கி அவர் நிமிர்ந்து நிற்கின்றார்.
அவன் கனடா புறப்படுவதற்கு முன்பு ஒரு தினம் அவருக்குச் சொன்னான்.
"அப்பா, தங்கச்சியவையையும், தம்பி யையும் நல்லாப் படிப்பிக்க வேணும்."
தான் படித்து நல்ல நிலைக்கு வர இய லாது போன மனக்குறையைக் கருத்தில் வைத்துக் கொண்டு, அவனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென அவர் ஆவ
லுற்றார். அது சாத்தியப்படாது போயிற்று.
அவன் தான் பெறமுடியாது போன கல்வி, தன் உடன் பிறந்தவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென விரும்புகின்றான்.
அவன் விருப்பத்தை நிறைவு செய்து வைப்பது, அவர் மனதிலுள்ள எண்ணம்.
அவன் எண்ணம் போல, எல்லோரும் படிப்பில் திறமையும் ஆர்வமும் உள்ளவர்கள்.
மூத்தமகள் இன்னும் மூன்று மாதங்க ளில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சை எழுத இருக்கின்றாள். அவள் கல்லூரியின் நம்பிக்கை நட்சத்திரம். எதிர் கால டொக்ரர் என ஆசிரியர்களே அவளைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளுகின் றார்கள்.
மல்லிகை ஜூன் 2009 $ 39

Page 21
இந்தப் பிள்ளைக்கொரு கலியாணம் பேசிக் கொண்டு வருகிறான் தர கன். இவனை என்ன சொல்லுகிறது?
அவன் வந்து பேசியது பற்றி அவர் எந்த ஒரு அக்கறையும் இல்லாது இருந்து விடுகிறார்.
ஒருவார காலம் கழிந்த பின்னர் திரும் பவும் அவரைத் தேடிக் கொண்டு வந்து நிற்கின்றான்.
அவர் தோட்டத்துக்குள் இறங்கிப் புகையிலைக் கெட்டெடுத்துக் கொண்டு நிற்கின்றார்.
'வீட்டுக்குப் போனன். தோட்டத்துக் கெண்டு சொல்லிச்சினம்.” அவன் வரம்பு க்கு வந்துவிட்டான்.
ஓர். இவன் போய் வீட்டிலும் பத்த வைச் சிட்டான் போல கிடக்கு என்று நினை த்துக் கொண்டு, 'வீட்டிலெ என்ன சொன் ன்வை? எனக் கேட்டவாறு, செய்து கொண் டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு அவனிடம் வருகின்றார்.
பிள்ளையின் ரை படிப்பு முடியட்டும். பிறகு பாப்பம் எனச் சொல்லுவோமா? என்று ஒரு கணம் நினைத்துக் கொள்ளுகின்றார்.
திட்டமிட்டுப் படிப்பைக் குழப்பக் கூடிய காலமிது, அப்படிச் சொல்லக்கூடாது." என இன்னொரு மனம் இடிக்கிறது.
'பொடியன் சொல்லுது. சீதனம் நீங்கள் விரும்பினதைக் குடுக்கட்டாம். வீடுவாசல் பிறகு கட்டித் தரட்டுமாம். காணி பூமி பிள்ளைக்குரிய பங்கு குடுப்பியள் தானே. நகைநட்டு உங்கடை பிள்ளைக்கு உங்கடை விருப்டம் போல குடுங்கோ!'
மனப்பாடம் பண்ணி வைத்திருப்பதுபோல, தரகன் ஒப்புவிக்க ஆரம்பித்துவிட்டான்.
''6T6ö6um Lb of...... ஏன் இவ்வளவு அவசரமெண்டுதான் விளங்கயில்லை."
"பொடியனுக்குச் சம்மந்தங்கள் பேசி வருகுது. பேத்திக் கிழவி கண்மூட முந்திப் பேரன்ரை கலியானத்தைக் கண்டு போட வேணுமெண்டு ஆசைப்படுகுது. பொடிய ன்ரை மனதுக்கு உங்கடை பிள்ளையைப் பிடிச்சுப் போச்சு. அதுதான்."
தரகன் எல்லாம் சொல்லுவான். இப் பிடி எத்தினை கலியாணம் பேசின அநுப வம் அவனுக்கு, அலனோடை பேசிக் கொண்டு நிக்கிறதிலெ வேலை இல்லை. சுருக்கமாக ஏதும் சொல்லி அனுப்புவம். என நினைத்துக் கொண்டு, "மகனுக்கு எழுதி இருக்கிறன். மறுமொழி வரட்டும்" என்கிறார்.
‘இதென்ன கதை அண்ணே" தரகன் சலித்துக் கொள்கிறான்.
'ஏன்? என்ன சங்கதி?
"இந்தக் காலத்திலெயும் கடிதமெழுதிற கதை பறையிறியள்? வீட்டிலெ ரெலிபோன் கிடக்கெல்லே!"
தான் விட்ட தவறு அவருக்குச் சட் டென்று புரிகிறது. அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஒருவாறு தன்னைச் சுதாக ரித்துக் கொண்டு, 'எதுக்கும் கதைச்சுப் போட்டுச் சொல்லுறனே" என்கிறார்.
‘சரி, நானும் அவசரமாக இரண்டு
மூண்டு இடத்துக்குப் போக வேண்டிக் கிடக்கு. பிறகு எப்ப.?"
மல்லிகை ஜூன் 2009 $ 40

'வசதி போல வாருங்கோவன்' பிடிகொடாமல் தரகனுக்குச் சொல்லி அனுப்புகின்றார்.
தரகன் போய்விட்டான். அவனை மாத்திரம் அங்கிருந்து அனுப்பி வைக்க அவருக்கு முடிந்தது. அவன் காவிக் கொண்டு வந்து இறக்கி விட்டுப் போயிருக் கும் விவகாரத்தை, முன்னர் போல அவ ரால் ஒதுக்கி வைத்துவிட இயலவில்லை. நல்லா வந்து கொண்டிருக்கிற குடும்பம். எவனுடைய கொள்ளிக்கண் பட்டுதோ, மந்திரம் மாயம் போட்டது போல, தரகன் வாறான், படுதளம் போட்டு விழுத்திறது போல, ஒருவேளை இதுதான் விதியோ? என்னவோ? ஒன்று நடந்தால் அது விதி. அது நடக்காது விட்டால் அதுவும் விதி. இதிலே எது உண்மை? தரகன் தேடிக் கொண்டு வீடுபோய் வந்திருக்கிறான். இனி மறைக்கேலாது. போய்ச் சேந்த உடனே விசாரிக்கப் போறாள். அவளின்ரை குணம் அப்பிடி. பொறுமையில்லை, அவசரக் குடுக்கை. அவர் மனக்குழப்பத்துடன் வீடு வந்து சேருகின்றார்,
அவர் எதிர்பார்த்தது போல, வந்து காலாற முன்னம் மனைவி அவரைத் தேடிக் கொண்டு வந்துவிட்டாள்.
“என்னப்பா, தரகர் வந்திட்டுப் போறார்?"
'CSLDITb....."
“உங்களை வந்து கண்டவரே?
'ஒமோம்.
‘எல்லாத்துக்கும் ஒமோம் போடுறியள்.
என்ன சங்கதி?"
"தரகர் என்னத்துக்கு வருவார்?"
"நீங்கள் மறைக்கிறியள் போல கிடக் குது. பிள்ளையின்ரை விஷயந்தானே!"
அவர் நிமிர்ந்து அதிசயமாக அவள் முகத்தைப் பார்த்து, "படிக்கிற பிள்ளைக்கு இப்ப தேவையில்லாத கதை." என முகம் சுழிக்கிறார்.
“பொம்பிள்ளைப்பிள்ளை பெரிசாகிவிட் டால், வசதியாக வாற நேரம் கட்டி வைச்சு விட வேணும்."
"படிப்பைக் குழப்புறது தமையனுக்கு விருப்பம் வராது.'
'அவன்ரை விருப்பமில்லாமல் இனி ஒருகாரியமும் செய்யேலாது. அவன்தானே
சகோதரங்களைப் பாக்கப் போறவன்.'
குடும்பத்தில் இனிமேல் தனக்குரிய ஸ்தானம் எது என்பது அவருக்கு லேசா கப் புரிய ஆரம்பிக்கிறது.
*மூத்தவள் படித்து முடிக்க ஏழெட்டு வரியம் செல்லும், அடுத்தவையின்ரை படிப்பும் முடிய அவன் கிழவனாகிப் போயி டுவான். அவனுக்கொரு கலியாணம் காட்சி இல்லையே!”
‘'எதுக்கும் பிள்ளையின் ரை சம்மத த்தை ஒருக்கால் கேள்."
"அவளிட்டை என்ன சம்மதம் கேக்கி றது? பொம்பிளைப்பிள்ளையட்டை அதுவும் எங்கடை பிள்ளையை நாங்கள் கொண்டு போய் பாண்கினத்துக்கேயே தள்ளப்
GBTDub?”
மகனோடு தொலைபேசியில் பேசி, அவன் சம்மதத்தையும் அவள் பெற்றுக்
மல்லிகை ஜூன் 2009 $ 41

Page 22
கொண்டு விட்டாள். திருமணப் பொருத்தம் பார்த்து, அதுவும் பொருந்தி வந்துவிட்டது.
கல்லூரி செல்லாமல் மகளை வீட்
டோடு தடுத்து வைத்து இரண்டு வாரம் கழி
ந்து போனது.
வாஞ்சையுடன் "அப்பா. அப்பா" என எதற்கெடுத்தாலும் அவரிடம் ஓடிவரும் மகள், அவருடன் முகம் கொடுத்துப் பேசுவதை நிறுத்தி இரண்டு வாரம் கடந்து போயிற்று.
ஊர் வழக்கப்படி முதலில் ‘சம்பந்தக் கலப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஒரு நன்னாளில் பெண் வீட்டார் மண மகன் இல்லத்துக்கு உறவினர்களையும் அழைத்துக் கொண்டு வேள்வு கொண்டு, விருந்தாடிப் போவார்கள். பின்பு மணமகன் குடும்பத்தவர்களும் ஒருதினம் மணமகள் இல்லத்துக்கு அப்படி வருவார்கள்.
இவர்கள் முதல்நாள் மாப்பிள்ளை வீட்டுக்குப் போக, மறுநாள் மாப்பிள்ளை பகுதி வீடு வருவதாக நாள் எடுத்து முடிவு செய்து கொண்டார்கள்.
இதெல்லாம் முடிந்த பிறகு, ஒருதினம் அவரைத் தேடிக் கொண்டு தரகன் வீட்டு க்கு வந்து சேர்ந்தான்.
"அண்ணே, அதெல்லாம் சரி. சம்மந்தக் கலப்போடை கலியான எழுத்தையும் முடி ச்சுவிடுவம் எண்டு மாப்பிளை சொல்லுறார்."
சரி, எதுக்கும் அவவோடையும் ஒருக் கால் யோசிப்பம்" என மனைவியுடன் கலந் தாலோசித்து விட்டு, அதற்கும் சம்மதம் தெரிவித்துவிட்டார்.
சம்மந்தக் கலப்புக்கு இடையில் இன் னும் மூன்று நாட்கள்.
மறுதினம் அவர் வீட்டில் சம்பந்தக் கலப்பும், திருமணப்பதிவும்.
ஏற்பாடுகள் யாவும் தீவரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அவர் ஒய்வில்லாது அங்குமிங்கும் ஒடித் திரிகின்றார்.
காலையில் தரகன் அவரைத் தேடிக் கொண்டு திரும்பவும் வந்து நிற்கின்றான்.
"அண்ணே, ஒரு சின்ன விஷயம்."
*சொல்லுங்கோவன்!"
'தம்பி சொல்லுறார்."
"அதுதான் சொல்லுங்கோவன்.”
* கனடாவில இருக்கிற உங்கடை மகன், மாப்பிளையைக் கனடாவுக்கு
எடுக்க வேணுமாம்."
அவருக்குப் பட்டென்று பற்றிக் கொண்டு வருகிறது. சீறிக் கொண்டு வந்த சினத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, 'கலியான த்தைச் செய்து போட்டு, அவர் கனடாவுக் குப் போகப் போறார். என்ரை மகன் அங்கெ எடுக்கிறதும், அவருக்கொரு சீதனம். அப்பிடித்தானே?" அவர் கொதிக்கிறார்.
'இதெல்லாம் நடக்கிறதுதானே?" தர கன் தந்திரமாகச் சமாளிக்கப் பார்க்கிறான்.
"9üL ...... பிள்ளை. ?・
*தான் போய்ப் பிறகு கூப்பிடுவாராம்."
‘அவரை என்ர மகன் கனடாவுக்குக்
கூப்பிடாது விட்டால்..?"
மல்லிகை ஜூன் 2009 தீ 42

"கூப்பிட வேணுமெண்டு சொல்லுகிறார்."
"இதுக்கு நாங்கள் சம்மதிக்க வேணுமே?
"ஒமோம்.”
"சம்மதிக்காது விட்டால் இந்தக் கலி யாணம் நடக்காது. அப்பிடித்தானே?"
"இப்பிடி இசகு பிசகாகப் பேசாதையு ங்கோ. கலியாணமெண்டால் இப்பிடித் தான் ஆயிரம் வரும் போகும்."
"அவர் கனடாவுக்குப் போறதுக்காகத் தான் என்ரை பிள்ளையைக் கட்ட விரும் பிறார். நல்ல சுலபமான வழி. இதை முத லில் சொல்லியிருக்க வேணும்."
'இவளவுக்கு வந்த பிறகு கலியானம் குழம்பிறது, பொம்பிளைப்பிள்கைகு நல்ல தில்லை. பொம்பிளை பக்கம் எப்பவும் கொஞ்சம் இளகி நடக்க வேணும். நீங்கள் இண்டைக்குக் கொஞ்சம் சூடாக இருக்கி றியள். வீட்டுக்காரியோடையும் யோசியு ங்கோ! நான் எதுக்கும் காலையிலை வாறன். முடிவாகச் சொல்லுங்கோ!' தரகன் ஆலோசனை சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டான்.
அவர் முற்றாக மன அமைதி இழந்து குழம்பிப் போனார்.
இப்படி ஒரு நிலைமை உருவாவதற்கு அவர் மனைவிதான் காரணமென்று அவள் மீது பழியைப் போட்டு வாய் அடைக்கச் செய்துவிட்டார்.
இதைப் போய் மகனுக்கு எடுத்துச் சொல்லத் தயங்கி, அவளும் மெளனமாக இருந்துவிட்டாள்.
அந்த இரவு அவர்கள் வீட்டில் யாருமே உறங்கவில்லை.
விடிந்தால் தரகன் வரப் போகின்றான்.
அவனுக்கு என்ன முடிவு சொல்வது? வேண்டாமென்று சொல்வதா?
அவன் புறப்பட்டுச் செல்லும்போது, எடுத்துச் சொன்னவற்றில் நியாயம் இல்லாமல் இல்லை. அதற்காக...?
காலை இளஞ்சூரியன் இருள் துடைத்து வானத்தில் முகம் காட்டிய பின்னரும், அவ ரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
கதிரை ஒன்றைத் தூக்கி வந்து வீட்டு வாசலில் போட்டு, அதில் அமர்ந்த வண் ணம் குழம்பிக் கொண்டிருக்கின்றார்.
நேரம் ஏற ஏற தரகன் வரப் போகின்
றானே...? என்ற பதற்றம் அவருக்கு அதிகரித்துக் கொண்டு வருகிறது.
அப்பொழுது அவர் மகள் நீண்டு வளர்ந்த அழகான தன் கூந்தலை இரண்டு சடைகளாகப் பின்னித் தொங்கவிட்டு, மடிப் புக் கலையாத பால் வெள்ளைக் கவுண் அணிந்து, அதில் கல்லூரி ரையைக் குத்தி, கால்களில் மேகம் வெள்ளைச் சப்பாத்து மாக, சயிக்கிளை உருட்டி வந்து, அவர் முன் நின்று, "அப்பா போயிட்டு வாறன்!” எனச் சொல்லிக் கொண்டு கல்லூரி நோக் கிச் செல்லுகின்றாள்.
"சரி, போயிட்டு வாம்மா'
மகளைப் பார்த்துக் கலங்கும் கண்களை மெல்லத் துடைத்துவிட்டுக் கொண்டு அவர் நிமிருகின்றார்.
மல்லிகை ஜூன் 2009 $ 43

Page 23
அன்பின் விருஷ நிலமெங்கும் நெருப்புத் தணல் 2ளறும் கரூரங்களைக் காண்கிறேன்.
ஆடை தூறல் தூறலாய் கிழிந்து குருதி வழியும் சாலையை ரணத் தழும்புகளுடன் பாதங்கள் இடம் தாவின.
ஒழுக்குத் துவாரம் நிரம்பிய கூரையில் 6III6)ld sbå86Ö(bls).
காற்று நூல் இழைக்கம் துயரம் மெளனம் முரசும்
காடு படர்ந்த
யாருமில்லாததார் வீதியில் கொலையாளிமுத்தமிடுவதும் நயங்களை செருகித் துப்பாக்கிகளைத் துடைப்பதும் நிகழ்கிறது.
முறுக்குக் கம்பிகளால் காவலிடப்ப: 6f66തബേ, [[pib billi) மரணத்தின் சுவர்களால் நிர்மானிக்கப்படுகிறது.
தழந்தைகள் விளையாரும் புழுதி பூத்த தரைகளில் இறந்தவனின் சிதில ரேகைகளை அள்ளியெடுத்துக் கொறித்துப் பார்க்கிறது மனசு,
மல்லிகை ஜூன் 2009 : 44

ஓர் அழகான புன்னகையின் ஒலியை
சேமித்த தைரியத்தில் உன் நிழல் வரைபடங்களை
象 ge கிறேன்.
விரல் தூரிகையால் கீறுகிறேன் ஒரு கவிதைப் புத்தகம்
ஒரு விஷப் பானம் hறின் நீடீசியில் காற்றின் நீடீ ده இரண்டின் விளிம்புகளிலும் உனது மெளனத்தினதும் 8
உனது முகம் தொங்குகிறது. கவிதை முனகல்களினதும் பயணம் எனது :* திறந்து சிநேகத்தின் சுவர்களில் வநது சோக்ன்றது. நான் குழந்தையொன்றின்
ஓவியத்தை முத்தமிடுகிறேன்.
நீ ஒரு நடிசத்திரத்தின் ஒளியில் மின்மினிப் பூச்சியாய்
என்னில் வடீடமிடீடு ஒரு இறைக் கட்டத்தையே கட்டிவிடாய்
மல்லிகை ஜூன் 2009 * 45

Page 24
வாழும் நினைவுகள்: 17
புத்தனம் விற67வன்னிகன்
- திக்குவல்லை கமால்
நுரைச்சோலை என்ற பெயரிலேயே ஒரு தமிழினிமை காணப்படுகின்றது. இந்தச் சிற்றுார் புத்தளம் பிரதேசத்தில் அமைந்துள்ளது. அங்கே "சோலைக் குமரன்' என்ற கவிஞன் பிறந்து வளர்ந்தானென்றால் அது பலருக்கும் தெரியாத விஷயம்.
ஜவாத் மரைக்கார்தான் அந்தக் கவிஞன். சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு, அந்தக் கிராமத்தில் சிலநாட்கள் உலாவித் திரிந்த நினைவுகள் இனிமை பயப்பவை. தினகரனில் முன்பு கடமையாற்றிய எஸ். எம். ரி. எம். நிஸாரும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவரே.
அங்கே கடலேரியின் மத்தியில் குறிப்பிடத்தக்கதொரு தீவு காணப்படுகிறது. வள்ளத் தில் சென்று சமையல் செய்து சாப்பிட்டு, இன்புறுவது அங்குள்ளவர்களுக்கு அதிஉயர் உல்லாசம். அன்று என்னையும் அங்கு அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்திருந் தார்கள்.
மாலையாகும் போது, புறப்பட்டுவிட்டோம். இரண்டு வள்ளங்கள். சமையல் சாமான்க ளெல்லாம் தயார். உள்ளூர் நகைச்சுவை மன்னர் ஒருவரும் எங்களோடிருந்தார். அவரை இன்னுந்தான் மறக்கமுடியவில்லை.
ஒருமுறை இப்படியொரு சந்தர்ப்பத்தில், சமையலுக்காக பெருமர மிதப்பு வேரை ஆதாரமாகக் கொண்டு அடுப்பு மூட்டினாராம். நெருப்பைக் கொளுத்தியதும் முட்டி அசையத் தொடங்கியதாம். இது என்ன பேய்த் தீவா? அந்த மரவேரும் கூட அசைய ஆரம்பித்ததாம்.' அந்தக் கதையைக் கேட்க எங்களுக்கு ஆச்சரியமாகவிருந்தது. அது மர வேர் அல்ல, மலைப் பாம்பு என்பதைப் பின்னர்தான் அறிந்து கொண்டார்களாம்.
நல்ல காலம் நாங்கள் போனபோது, அப்படியெதுவும் நடைபெறவில்லை. சமையல் செய்து சாப்பிட்டோம். நல்ல மீன் சாப்பாடு. வரும்போது, பிடித்த மீன்தான். எல்லாம் முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட இரவு பத்துமணிக்கு மேலாகிவிட்டது. நீர் மேற்பரப்பின் தளம்பல் வரவர அதிகரித்தது. காற்றுச் சற்றே சுழன்று வீசியது. வள்ளம் வித்தியாசமாக ஆடியசையத் தொடங்கியது. உள்ளே நீரும் எப்படியோ புகுந்துவிட்டது. அதனை அள்ளியிறைக்க வேண்டிய நிலை. மாறி மாறி அதைச் செய்து கொண்டு, காற்றுக்கு ஈடுகொடுத்துக் கொண்டு, கரையை நோக்கி நகர்வதாக நினைப்பு.
மல்லிகை ஜூன் 2009 * 46

எனக்கு இது புது அநுபவம். மாத்தறை
நில்வனா கங்கையில் அக்கரை தெரியும் தூரத்தை வள்ளம் மூலம் கடப்பதைத் தவிர, நீர்மேல் பயணித்த எந்த அநுபவமுமில்லை. என்ன ஆச்சரியமென்றால், சம நேரத்தில் புறப்பட்ட எமது அடுத்த வள்ளம், வர வர இடைவெளியை அதிகரித்துத் திசைமாறிச் செல்வதைக் காணமுடிந்தது. சிறிய வெளிச் சம் தவிர, வேறெதுவும் விளங்கவில்லை. என்ன செய்வதென்று எவருக்கும் புரிய வில்லை.
எங்கள் பிரார்த்தனையும் ஏற்றுக் கொள் ளப்பட்டதென்றால், அந்த அதிசயம் அன்று தான் நிகழ்ந்தது. மீண்டும் மெல்ல மெல்ல வள்ளம் எங்களை நெருங்கி வர ஆரம்பித்தது.
காற்று இப்படியொரு விளையாட்டைச் செய்து, எங்களைக் குழப்பி மீண்டும் சந்தோஷப்படுத்தியது.
இந்தப் பெரிய அநுபவத்தை எனக்கு வழங்க வாய்ப்பாக அமைந்தது, புத்தளம் விடிவெள்ளிகள் என்ற அமைப்பின் ‘விடி வெள்ளி சஞ்சிகை வெளியீட்டு விழாதான். முதல் நாள் புத்தளம் நகரத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. டொமினிக் ஜீவா, மு. பசீர், ஈழத்து நூன் இப்படிப் பலரும் வருகை தந் திருந்தனர். நான் தங்கிச் செல்லும் திட்டத் துடன் வந்திருந்தேன். புத்தளம் செல்வ ராஜா இதற்கான ஏற்பாடுகளில் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டார்.
அப்போது ஜவாத் மரைக்காருக்குத் திருமணமாகியிருக்கவில்லை. நிச்சயார்த் தம் செய்யப்பட்டிருந்தது. என்னையும் நண் பர்களையும் ஒரு வீதியால் அழைத்துச் சென்றார். ரகசியமாக ஜஹான் விலா'வை எனக்குக் காட்டியது இன்றுபோல் ஞாபகம்.
அவ்வப்போது ஏறியிறங்கிச் சாப்பிட்டுச் செல்லும் சொந்த வீடுபோல் அது மாறி விட்டது.
இலக்கிய உறவு குடும்ப உறவைவிட, எவ்வளவு பலமானது. மகத்தானது
வாழும் நினைவுகள்: 18
fjørc VæGørö
அப்பொழுது எஸ். எம். ஜே. பைஸ்தீன் எங்களூர் பாடசாலையில் கடமையாற்றி னார். அவரைச் சந்திப்பதற்கு நானும் நண் பர் செந்திரன் ஸத்தாரும் அடிக்கடி செல்வ துண்டு. அவர் பல இலக்கியச் சஞ்சிகை களை வைத்திருப்பதைக் கண்ணுற்றோம். எங்களுக்குத் தபாலில் வரும் ஒரிரு சஞ்சி கைகளைத் தவிர, வேறெதுவும் தெரிந்தி ருக்கவில்லை.
'சரி உங்களுக்குத் தேவையான சஞ்சிகைகளை எடுப்பதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்" என்று சொன்னபோது, எங்க ளுக்கு உற்சாகம் மேலிட்டது.
அடுத்த சில நாட்களில் தபாலில் எனக் கொரு புத் தகப் பொதி கிடைத்தது. *தாமரை', 'தீபம்', 'குமரன்', 'தமிழமுது', 'ஆராய்ச்சி போன்ற சஞ்சிகைகள் அதிலே காணப்பட்டன. ஆனால், அனுப்ப வேண் டிய காசு பற்றி எந்த விபரமும் இருக்க வில்லை. சில பொதிகள் கிடைத்த பின்பே பில் வந்தது. தாமதிக்காது மணிஓடர் அனுப்பி இந்த ஏற்பாட்டை உறுதிப்படுத் திக் கொண்டேன்.
அதற்கு இரண்டு வருடங்களுக்குப்
பின்பு குறித்த முகவரியைத் தேடிக் கொண்டு சென்று என்னை நான் அறிமுகப்
மல்லிகை ஜூன் 2009 * 47

Page 25
படுத்திக் கொண்டேன். அந்த விஜய லசுடிமி புத்தகசாலையில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த மனிதர், தான் மொகமட் அலி என்று தெரிவித்தார். எனது சுவையை விளங்கிக் கொண்டு சஞ்சிகை களை அனுப்பிக் கொண்டிருந்தவர், அவர்தான்.
நான் விடைபெறும் போது, "உங்களை அறிமுகப்படுத்தியிருக்கலாம். கணேசலிங் கன் ஐயா இன்னும் வரவில்லையே' 6т6üтfрпії.
அதன் பின்புதான் அந்தப் புத்தகக் கடையின் உரிமையாளர் அவர்தான் என் பது எனக்குத் தெரியவந்தது.
1975இல் என்று ஞாபகம், இலங்கைச் சமூக சேவைகள் கல்லூரி ஒரு செயலமர் வுக்கு என்னை அழைத்திருந்தது. ‘இலக்கி யத்தினூடாகச் சமூக சேவை" என்பதே விடயப் பொருள். விரும்பிய படைப்பொன் றைத் தெரிவு செய்து, கதை நிகழ்வினுர டாக எவ்வாறு சமூகசேவை இடம் பெறுகிற தென்பதை விளக்கும் வகையில் தயாராக வருமாறு கேட்கப்பட்டிருந்தது.
நான் வாசித்த வகையில் 'நீண்ட பயணம்' நாவலே அதற்குப் பொருத்தமான தாக இருந்ததால், அதனை மையமாகக் கொண்டே பிரதியைத் தயாரித்தேன்.
நிகழ்வுக்குச் சென்றபோது, தமிழ் எழுத்தாளர் இருவரே அழைக்கப்பட்டுள் ளார்களென்பதையும், அடுத்தவர் கணேச லிங்கன் என்பதையும் அறிந்தேன். அதுவே எமது முதல் சந்திப்பாகவும் அமைந்தது.
அவரைச் சந்தித்த சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு. பொதுவாக அவரை இலக்கியக் கூட்டங்களில் காணமுடிவதில்லை. இந்தி யத் தொடர்பு அதிகம். வெளியீட்டு விழாக் கள் நடக்காமலேயே அவரது நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கும்.
மாக்ஸியத் தத்துவார்த்தங்களை மிக இலகுவாக விளங்கிக் கொள்ள அவரது 'குமரன்" சஞ்சிகை மிகவும் உதவியது. பொதுவுடைமை, முதலாளித்துவம், கருத்து முதல்வாதம், பொருள் முதல் வாதம், பெண்ணடிமை, தமிழ்ச் சினிமா. இப்படி விளக்கமும், விமர்சனமுமாகக் குமரன் வெளிவந்து கொண்டிருந்தது. இப்பொழுது படித்தாலும் நல்ல விளக்கம் கிடைக்கவே செய்யும்.
பல்வேறு புனைப்பெயர்களில் அவரே எழுதுவார். வரதபாக்கியான், சாருமதி, யோ. பெனடிக்ற் பாலன் போன்றவர்களும் தொடர்ச்சியாக எழுதி வந்தனர். கருத்தொ ருமைப்பாடு இருப்பதுபோல் தெரிந்ததால், நானும் சில கவிதைகள் எழுதிப் பார்த் தேன். அவை எதுவும் பிரசுரமாகவில்லை.
முற்போக்கு இலக்கியத்துக்கு, குறிப் பாக நாவல்துறைக்கு அளப்பெரிய சேவை யாற்றியவர் இவர். ‘தமிழ் நாவல் இலக்கி யம் ஆய்வு நூலில் க. கைலாசபதி இனம் கண்ட இரண்டு ஈழத்து நாவலாசிரியர்க ளில் இவரும் ஒருவர்.
விஜயலசுடிமி புத்தகசாலை, குமரன் அச்சகம், குமரன் வெளியீடு இவ்வாறு, அவ ரது எழுத்துப் பங்களிப்புக்கு அப்பால், இலங்கையின் இலக்கிய மேம்பாட்டில் அவரது பணி மதிக்கத்தக்கது.
இவ்வாண்டு முதல் க. பொ. த. (உயர் தரம்) பாடத்திட்டம் மாற்றத்திற்குள் ளாகிறது. அதன்படி தமிழ்மொழியை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு நீண்ட பயணம் ஒரு பாடநூலாக வைக் கப்பட்டுள்ளது. இது முற்போக்கு எழுத்து க்குக் கிடைத்த வெற்றி. t
e.mail: Dicwella Kamal (G) gmail.com
மல்லிகை ஜூன் 2009 & 48

நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் திரேசா வீட்டை விட்டு வெளியே வருகிறாள். கடந்த சில மாதங்களாக வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அவள் வாழ்வு இருண்டு போயிருந்தது. எந்தப் பெண்ணின் வாழ்விலும் இப்படியான கொடுமை ஏற்படக்கூடாது தான். ஆனால், இன்று எமது யுத்த பூமியில் எத்தனை பெண்கள் இல்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்று பெரிய வெள்ளி. தேவமைந்தன் கிறிஸ்துவையே சிலுவையில் அறைந்த உலகம், அவளைத் தண்டித்ததில் என்ன வியப்பு இருக்கிறது?
திரேசா செய்த தவறுதான் என்ன? இந்த மண்ணில் அவள் பெண்ணாகப் பிறந்ததுதான்
செய்த பாவம்.
அந்தக் கொடிய நாளை நினைக்கும் போது, இப்பொழுதும் கூட, திரேசாவின் நெஞ்ன்ச அடைக்கிறது. அவளது கிராமம் சுற்றி வளைக்கப்பட்ட ஒரு இரவில் நடந்த அனர்த்தத்தில் அவள், ஒரு பெண் எதை இழக்கக் கூடாதோ, அதை இழந்துவிட்டாள். பருந்தின் காலில் சிக்கிய கோழிக் குஞ்சு போல், இருவர் அவளைக் குதறி விட்டார்கள்.
கணக்கெடுக்கருவச்
- சத்திகரித்தர் முருக்ரினித்தன்
எல்லாம் முடிந்த பின்னர், திரும்பி வந்த அம்மாவிடம் விசித்து விசித்து அழுதபடி அவள் அனைத்தையும் கூற, அட்டகாசமாகப் பெருங்குரலெடுத்து அம்மா குழறி அழ, நடந்த அவலம் ஊருக்கெல்லாம் தெரிந்துவிட்டது.
அநுதாப அலைகள், பத்திரிகைச் செய்திகள், பெண்ணிய அமைப்புக்களின் கண்டனங்கள் இவை எல்லாமே அவளுக்கு நடந்துவிட்ட அவலங்களைப் பகிரங்கப்படுத்த உதவியதே தவிர, அவளுக்கு எதுவித நன்மையும் கிடைக்கவில்லை. அவளது சுபீட்சமான எதிர்காலக் கனவுகள் எல்லாம் சிதைந்து போக, அவள் தற்கொலை முயற்சியில் இறங்கி னாள். அதிலிருந்தும் அவள் காப்பாற்றப்பட்டாள்.
மல்லிகை ஜூன் 2009 : 49

Page 26
மாதங்கள் ஒடிக் கலைந்தாலும், திரேசா வின் மனது அமைதியடையவில்லை. உடலில் ஏற்பட்ட களங்கம் ஒரு பெண்ணின் மைைத எவ்வளவு தூரம் பாதி த்துவிடுகி றது. சில நாட்கள் சித்தப் பிரமை பிடித்த வள் போலிருந்த திரேசா, இப்போது தான் மெல்ல மெல்லத் தேறிக் கொண்டு வருகி றாள். இன்று அம்மாவின் வற்புறுத்தலின் பேரிலும், இந்த நாளில் தேவாலயம் சென் றால் மனதுக்கு அமைதி கிடைக்கும் என்ப தாலும், தோழி பிரியாவுடன் ஆலயத்திற்கு வந்திருக்கிறாள்.
ஆலய வாசலில் அவளைக் கண்ட கல்லூரித் தோழி யூலியா. அவளது பல் கலைக்கழக நினைவுகளைக் கிளறி விட்டாள். தேவாலய வாசல் கேற்றடியில் திரும்பி நடந்த போதுதான் பழக்கமான ஒரு பெண்குரல் “திரேசா!" என்று அழைக்கவே நிமிர்ந்து பார்த்தாள். "ஏய் திரேசா! எப்படியடி இருக்கிறே?" அன்போடு அழைத்தபடியே யூலியா அருகே ஒடி வந்து அவளது கைக ளைப் பற்றிக் கொண்டாள். திரேசாவின் மனது நெகிழ்ந்து கண்கள் பனித்தன.
'ஏய். நீ இன்னமும் அதையே நினைத்துக் கொண்டா இருக்கிறாய்?. அதைக் கெட்ட கனவாக மறந்திடடி.."
யூலியாவுடனான சிநேகிதம் பாலர் வகுப்பில் தொடங்கியது. இது பல்கலைக் கழகம் வரை தொடர்ந்து வந்தது. இப்போது அவள் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து அறுவடையான விஞ்ஞானப் பட்டதாரி. மெத டிஸ்ற் கல்லூரி உருவாக்கிய ஒரே ஆண் டில் பல்கலைக்கழகம் புகுந்த இரு விஞ் ஞானத்துறை மாணவிகளில் ஒருத்தி. திரேசாவின் மனதிலும் மகிழ்ச்சிப் பிரவா
கம் எட்டிப் பார்த்தது.
உடனேயே தனது நிலை பற்றிய துயர மும், பாதியில் நின்றுவிட்ட பல்கலைக்கழ கப் படிப்பின் ஏக்கமும் முனைப்புப் பெற்று முகத்தை இருள்சூழ வைத்தன. சிறிது நேரம் இருவரிடையேயும் ஒரு மெளனமான இறுக்கம்
இருவரும் நீண்ட நாட்களுக்குப் பின் னர் சந்தித்ததால், பேச எவ்வளவோ இருந் தது. எனினும் அதையும் மீறிய ஒரு திரை இடையே தடுத்து நின்றது.
பல்கலைக்கழகம் புகுந்த நாள்தொட்டே அவர்கள் இருவரும் ஒன்றாகவே எப்போ தும் திரிவார்கள், பால்ய சிநேகிதிகள். பருவ வயதின் கற்பனைப் பரிமாற்றங்களி லும், மனதைப் பகிர்ந்து கொள்ளும் இனிய சிநேகிதிகளாக இருந்தார்கள். இரட்டைக் குழல் துப்பாக்கி போல் திரியும் அவர்களைத் தனியே காண்பது என்பது அபூர்வம், அன்ரன், கிறிஸ்தோபர், ஜெயந்தன் முத லான சக மாணவர்கள் அவர்களோடு தனியே கதைத்துத் தமது மனதைத் திறந்து காட்ட நினைத்தும், அதற்கு வாய்ப் பில்லாமல் தவித்தனர். எத்தனையோ பேருடைய காதல் சொல்ல முடியாமல், மனதில் மடிந்து போவது காலம் காலமாக வரும் தொடர் கதைதானே?
தமது எதிர்கால அபிலாசைகள், இலட் சியங்கள், கனவுகள் அனைத்துமே தோழி யர் அடிக்கடி பரிமாறிக் கொள்வார்கள்.
"படிச்சு முடிந்ததும் பின்தங்கிய ஒரு கிராமத்து பாடசாலையில் தான் பணி
புரிவன்." திரேசா கூறவே. “போடி. போ . . . . . இப்ப அப்படித்தான் சொல் லுவே. அப்புறம் எல்லாம் மறந்தி
டுவே. நகர வாழ்வின் சொசுகுசைத்தான்
மல்லிகை ஜூன் 2009 * 50

தேடுவே...' என்று யூலியா பதிலடி கொடுப்பாள்.
"நான் காதலித்துத்தான் கலியாணம் செய்வன். ቌ?”
"இந்த ஒரு விசயத்தில் நானும் உன் னைப் போலதான். கல்யாணம் என்பது வெறும் வியாபாரம் ஆகிப் போச்சு. ஆண் பெண் இருவருக்குமே தேவையான ஒன்று. ஆனால், ஆணுக்குப் பெண் விலை கொடு த்து வாங்க வேண்டி இருக்கடி.
'நான் கடைசி வரை சீதனம் கொடுக்க
LDITL L-6T'
'வயது ஏற ஏற உன் எண்னம் மாறலாம்."
'இல்லை யூலியா. அப்படி எனக் காக ஒரு மன்மதன் இல்லாவிட்டாலும், ஒரு சாமான்யனாவது பிறந்திருப்பான் தானே? திரேசா சிரித்தாள்.
"அப்படியானால் நீ ஒரு சாதாரணமான, உன்னிலும் தகுதி குறைந்த ஒருத்தனைக் L"Ulë GFL bLog5 DIT?”
"ஒரு பெண் தனது அறிவுக்கும், படிப்பு க்கும், பதவிக்கும் ஏற்றபடி விரும்புகிற தைத் தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால், போலியான கெளரவங்களை விட, சுயநல எதிர்பார்ப்புகளை விட, புரிந்து ணர்வுள்ள ஒருத்தன் மேலல்லவா? வாழ் வின் வெற்றி என்பது புற விடயங்களி ல்லை. எமது மனதில் தான் தங்கியி ருக்கும்.”
யூலியா அவளைப் பெருமிதத்தோடு பார்த்தாள். "அப்படியானால் கம்பஸில் நீ யாரையும் பார்க்கப் போவதில்லையாடி?"
'ஆர் அப்படிச் சொன்னது?. இங் கேயும் என் இலட்சியத்திற்குப் பொருந்தி வாற ஒருத்தன் கிடைத்தால் யார் வேண் டாம் என்றது? ஆனால் இந்த மூஞ்சியை அப்பிடி ஒருவருக்கும் பிடிக்க வேண் டுமே?" திரேசா சிரித்தாள்.
'அன்ரனைப் பற்றி என்ன நினைக் கிறே? யூலியா கேட்டதும் திரேசா திகைப் போடு அவளை நிமிர்ந்து பார்த்தாள். மன தில் உள்ளதை எவ்வளவு துல்லியமாகக் கண்டுபிடித்திருக்கிறாள், என்று வியந்தாள்.
"நல்ல மாதிரித் தெரியுது அது. ஏன் உனக்குப் பிடிச்சிருக்காடி?.."
“சீ.. போடி?’ பூலியாவும் நாணத் தோடு கன்னத்தில் குழிவிழச் சிரித்தாள்.
இனிதே தொடர்ந்த பல்கலைக்கழக வாழ்வில் திரேசாவுக்கும் அன்ரனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. தினமும் ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டும் என்ற தவிப்பு முதலில் காதலை உணர்த்தியது. எப்போது பேசுவோம், எப்போது சந்திப் போம் என்று மனது ஏங்கிடும். இப்படியே இருவருக்குமிடையில் காதல் வேரூன்றி யதை, இருவரும் புரிந்து கொண்டு கண்க ளால் காதலைப் பரிமாறினர்.
எனினும், நேரில் சொல்ல முடியாது, இருவரும் தவித்தபோது, யூலியா அன்னப் பறவையானாள். இதனால், இவர்களது காதல் பரிமாற்றப்பட்டது. இதன் பின் இருவருக்கும் பல்கலைக்கழக வளாகத் தில் ஒரு நாள் நீர் வார்ப்பு (பக்கெற்றில்) நிறைவேறி, இவர்களது காதல் பகிரங்க
LOT 586 LLU-L-Sl.
மல்லிகை ஜூன் 2009 率 5

Page 27
அன்ரனுடன் காதல் வாழ்வில் மிதந்த நாட்கள் திரேசாவின் வாழ்வின் இனிமை யான காலங்கள் எனலாம். அவளது அன் புக்காக, காதலுக்காக அவன் ஏங்கித் தவிக்கும் போதும், அன்பு மழை பொழியும் போதும் திரேசா உருகிப் போவாள்.
'திரேசா நீ இல்லாத வாழ்வை இனி மேல் என்னால் நினைத்துக் கூடப் பாக்க முடியாது. பெற்றவர்கள் மறுத்தால் என்னை நிராகரித்து விடுவாயா..?"
'இதே கேள்வியை நானும் கேட்கலா மில்லையா?" திரேசா சிரித்தாள்.
அன்ரன் ஆவலோடு அவளை நோக்கி SOTT6it.
"திரேசா, உன்னை முதன் முதலாய் சந்தித்த போதே நீ என் இதயத்தினுள் நுழைந்து விட்டாய். நீயே என் மனைவி என்று முடிவு செய்துவிட்டேன். எந்த எதிர்ப்பு வந்தாலும், என் தேவதையான உன்னை மறந்து வாழ என்னால் முடியாது.”
இப்படித் தினந்தோறும் அன்பான காதல் வார்த்தைகளால் குளிப்பாட்டியவன் தான் அன்ரன். ஆனால். அவளது வாழ்
வில் ஏற்பட்ட எதிர்பாராத பாலியல் வன்
முறையினைக் கேள்விப்பட்ட பின்னர், அன்ரன் அவள் பக்கம் திரும்பிப் பார்க்கக் கூடவில்லை. இதுதான் உலகம் என்பது அவளுக்குப் புரியவாரம்பித்தது.
பிரியாவும், யூலியாவும் அவளது மன திற்கு எவ்வளவோ ஒத்தடம் கொடுத் தார்கள். திரேசா ஒரளவு தேறி வந்தாலும், அன்ரனின் நினைவுகளை மனதிலிருந்து எடுத் தெறிய முடியவில்லை. அவன் ஒரு
தடவையாவது வந்து அவளைப் பார்க்கா தது அவளுக்குப் பெரிய ஏமாற்றம் அளித்தது.
அவளுக்காக யூலியா எவ்வளவோ அன்ரனோடு வாதாடினாள். ஆனால், அன்ரனோ நிராகரித்துவிட்டான். இதைத் திரேசாவினால் மட்டுமல்ல, யூலியாவாலும் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை: நீண்ட நாட்களாக அவள் திரேசாவிடம் வரவில்லை. இன்று எதிர்பாராத சந்திப்பால் தோழியர் பலதையும் பரிமாறிக் கொண் டார்கள்,
இவர்கள் உரையாடிக் கொண்டிருந்த போதே பெரிய வெள்ளி ஆராதனைகள் ஆரம்பமாகவே அவர்கள் ஆலயத்துள் சென்றனர். அருட் தந்தையார் தனது பிர சங்கத்தின் போது அனைவரும் அவரோடு ஆராதனையில் கலந்து கொண்டு இறையருள் வேண்டிச் செபம் செய்தனர்.
அடுத்து பைபிளில் இருந்து ஒரு பகுதியை வாசித்துக் காட்டினார் அருட் தந்தை.
விபச்சாரியைச் சூழ நின்று சிலர் கல்லால் அடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வழியே வந்த யேசு 'உங்களில் யார் பரிசுத்தமானவரோ, அவர் மட்டும் கல்லை எறியுங்கள்' என்றார். சிறிது அமைதியின் பின்னர் ஒவ்வொருவராகக் கல்லைப் போட்டுவிட்டு அவ்விடத்தை விட்டகன்ற னர். அருட்தந்தை பிரசங்கம் செய்யச் செய்யத் திரேசா உருகி அழுதாள். 'ஒரு விபச்சாரியை ஏற்றுக் கொள்கின்றார். என்னை ஏன் இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றது?
மல்லிகை ஜூன் 2009 * 52

'நான் ஒழுக்கம் கெட்டுப் போக வில்லை. பாலியல் வல்லுறவினால் பாதிக் கப்பட்டவள். எனக்கு ஏன் இந்தத் தண் கர்த்தரே? திரேசா மனதுருகிப் பிரார்த்தித்தாள்.
L6)6.
பிரார்த்தனை முடிந்து அவர்கள் தேவாலயத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த போது, 'திரேசா!' என்று யாரோ மெதுவாக, இதமாக அழைப்பது கேட்டது.
நிமிர்ந்து பார்த்தாள், திரேசா.
எதிரே கிறிஸ்தோபர். பல்கலைக்கழ கத்தில் அவளோடு படித்தவன். அவள் அதிகம் கணக்கெடுக்காத, கண்டு கொள்
ளாத ஒரு சக மாணவன். திரேசா திகைத்
துப் போனாள்.
"உங்களுக்கு நடந்த அவலத்தை பற்றி அறிந்தேன். நீங்கள் வாழ வேண்டியவர். உங்கள் சம்மதத்திற்காகக் காத்திருக்கி றேன். நடந்தது எல்லாவற்றையும் மறந்து விடுங்கள்! என்ன நான் சொல்வது புரியுதா?"
இந்த உலகத்திலையும் மனித மக்க ளும் இருந்து கொண்டிருக்கினம்.
திரேசாவின் மனதில் தென்றல் வீசி யது. புரிந்துணர்வு மிக்க, மனிதநேயம் மிக்க ஒருவனைக் கண்ட மகிழ்வு, அவளுக்கு அவள் நாணத்தோடு தலைகுனிந்தாள். இனி ஈஸ்டர் அவளுக்கும் இனிக்கும்.
A. R. R. HAIR DRESSERS
89, Church Road, Mattakuliya,
Colombo - 15. Te: 01 12527219
முற்றிலும் குளிர்நட்டப் பெற்ற சலுன்
மல்லிகை ஜூன் 2009 : 53

Page 28
ாது ஆதனூ//%
நீ எப்uேnது வருவாய்?
உயிருக்குள் வாழும் - நாச்சியாதீவு பர்வின் உன்னைத் தூக்கிக் கொஞ்சும் వికీ • వల్ల இவnவில் உன் தாய் உன் வறவுக்காய் உறக்கம் தொலைத்து ைெது தெருக்கள் விழித்துக் கிடக்கிறது. அவஸ்தைப்படும் நிஜம் உன் தாயின் வயிற்றுக்குள் நீ- அதில் மneடnய்! நீ8Unரும் விளையாடிருக்களை வெறும் தொடுகை 6v6umტJგ6ჩü உர்ைவினால் நானும் உன் தmடிமnய் உன்னை ஸ்Uரித்து ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். சந்தோசம் அடையும் ഗുക)? കണ്? எனக்கும் ஆசையாகத்தான் துெ uற்றிய கவலையும் இருக்கிறது; உன்னைப் Unர்க்க
மெக்கில்லை உக்ைகாக ன்ென பிள்ளையென்றாலும் நாங்கள் காத்திருக்கின்றோம். நீ எம் பிள்ளை. 涵
கரு ஒட்லக உறவுகளிடம் உனக்காக த்ெதனையோ விடை uெற்று உறவுகள் காத்துக் கிடக்கின்றன துரிதமnய் வரப்Unர். இங்கே, உன்னைத்
ஆக்கிக் கொஞ்ச ஆசையாக இருக்கிறது.
மே மாத இதழில் பெயர் மாறிப் பிரசுரிக்கப்பட்ட கவிதை இது. இந்தத் தடவை படைப்பாளியின் சுய நாமத்துடனேயே மறு பிரசுரம் செய்யப்படுகின்றது. காரணம்- இக் கவிதை தனக்கு முதன் முதலில் கிடைக்க இருக்கும் குழந்தை பற்றியதாகும். பிரசுரமாகும் போது, அக் குழந்தை இப் பூமியில் ஜனனமாகவில்லை. இப்பொழுது குழந்தை இப் பூப்பந்தில் பிறந்துவிட்டது. அந்தச் சிசுவின் ஞாபகமாக இக் கவிதை மறுபிரசுரம் பெறுகின்றது.
முன் பிரசுரத் தவறுக்கு மல்லிகை பொறுப்பல்ல. கவிதையாளர் கையெழுத்துப் பிரதியில் எந்த இடத்திலுமே தனது பெயரைப் பதிய வைக்கத் தவறிவிட்டார்.
- ஆசிரியர்,
மல்லிகை ஜூன் 2009 3, 54

— Lకిeుగా65ut ജൂ இரத்தினவேலோன்
நடுவிலம்மான் எங்கள் வளவில் இருந்த காலகட்டங்களில் தான் பெத்தாத்தை மூத்த தம்பி வாத்தியார் வீட்டு முடக்கடியில் குடியிருந்தா என ஏறத்தாழ நாற்பது வருடங்களின் பின்பும் இவ்வளவு ஞாபகத்துடன் நான் அடித்துச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. "பெத்தாத்தை வளவுக்குப் போய் பத்து வடை வாங்கிக் கொண்டு வாடா, சப்பித்தின்பம்' என நல்ல மூட்டில் இருக்கும் சமயங்களில் பத்துச் சத நாணயத்தை என் கைகளில் நடுவிலம் மான் திணித்து அனுப்பிய அந்த நாட்களை இலகுவில் மறந்துவிட முடியுமா, என்ன?
பெத்தாத்தை சுடும் தட்டை வடைக்கு அப்படி ஒரு கிராக்கி இருந்தது. ரவுணில் தேநீர்க் கடை வைத்திருப்பவர்கள் கூட, அரக்கப் பரக்க இரண்டரை மைல் தூரம் சைக்கிள் ஓடி வந்து முடக்கடி இலந்தை மரத்தின் கீழ் ஸ்ராண்ட் போட்டுச் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு வடைக்கு ஒடர் கொடுத்து விட்டுச் செல்வார்கள். குருநாகல், மகோ போன்ற இடங்க ளில் சுருட்டுக் கடை வைத்திருந்த எங்களூர்க்காரர்களும் சுருட்டுக் கொட்டிலிலிருந்து கோடாச் சுருட்டினை எடுத்துச் செல்லும் லொறிகளில் கூடவே, பெட்டி பெட்டியாகத் தட்டை வடையையும் பெத்தாத்தை வளவிலிருந்து ஏற்றிச் செல்வார்கள்.
வடைக்கு அடைமொழியாக ஊரின் பெயரினைக் கூறுமளவிற்குத் தட்டை வடைக்கு எங்களூர் மிகவும் பிரசித்தமானது. அதைப் பதமாகச் சுடுவதற்கான சூட்சுமத்தை எங்க ளூர்க்காரர்கள் தான் கொண்டிருந்தார்கள். அதிலும், பெத்தாத்தை சுடும் ஒவ்வொரு வடை யும் வட்டாரி வைத்து வெட்டியது போல், வட்ட வடிவாய் வரும். உப்பு, உறைப்பு எல்லாம் சொல்லி வைத்தது போல் இருக்கும். இத்தனைக்கும் வடை சுடும் போது, ஒரு துண்டை முறித்து வாயில் வைத்து ஒரு நாளும் மனுசி பதம் பார்ப்பது கிடையாது. “ஒரு வடையைத் தன்னும் கருகவிடாது பொன்னிறத்தில மொருமொருப்பாக எப்படித்தான் சுட்டுத் தள்ளுதோ?’ என என் ஆத்தை கூட, ஒருநாள் அம்மாவுக்குச் சொல்லி அங்கலாய்த்தது என் நினைவிற்கு வருகிறது.
பெத்தாத்தை ஆத்தையின் ஒன்று விட்ட அக்காவாகவோ அல்லது நெருங்கிய உறவி னராகவோ தான் இருப்பா என நான் நீண்ட காலமாக நினைத்துக் கொண்டிருந்தேன். பத்தாங் கட்டையில் இருந்து பிழைப்பிற்காக அவர்கள் எங்களுருக்கு வந்தவர்கள் என அம்மா சொல்லித்தான், ஒருநாள் எனக்குத் தெரிய வந்தது. பெத்தாத்தை உண்மைப் பெயர் நாச்சிப்பிள்ளையாம், சிறுமியாக இருந்தபோது, பெற்றோர் பெத்தாத்தை எனச் செல்லமாக அழைக்க, அதுவே நிரந்தரப் பெயராகிவிட்டதாம். மூத்ததம்பி வாத்தியார் வீட்டு முடக்கில் சாவித்திரி வீட்டுக்குக் கிழக்குப் புறமாக இலந்தை மரத்தோடு செல்லும் நீண்ட குச்சொழுங்கையின் முடிவில் வரும் காணியில், பெத்தாத்தையின் குடிசை இருந்தது. இரண்டு அறைகள், முன்னுக்கு ஒரு மால் கொண்ட பனையோலையால் வேயப்பட்ட
மல்லிகை ஜூன் 2009 $ 55

Page 29
மண் குடிசை அது. பிற்புறமாக ஒத்தாப்பு இறக்கி, அதை அடுப்படி ஆக்கி இருந்தார் கள். பெத்தாத்தை தன் கைவித்தையைக் காட்டும் கூடம் அதுதான்.
பெத்தாத்தை வளவுக்கு வடக்கே ஒரு பற்றைக் காணி. ஆமணக்கும், பாவட்டை யும், கத்தாளையுமாகப் புதர் மண்டிக் கிடந் தது. அந்தப் பற்றைக்குள் உடும்பு நிறைய இருந்தது. உடும்பு அடிப்பதில் ஊரை வென்ற வடலித்திடல் வீரனை அந்தக் காணியில் தான் அடிக்கடி காண்பதாக ரவிச்சந்திரன் சொல்வான். அதற்குள் சென்று வருவதற் காகப் பெத்தாத்தை வளவு வேலியில் ஒரு கண்டாயமும் இருந்தது.
முடக்கிற்குத் தெற்குப் புறமாகச் சல வைத் தொழிலாளர்கள் சிலர் குடியிருந் தார்கள். அவர்கள் குடிசைகளுக்கு வண்டி வைத்தால் போல் செல்லும் ஒழுங்கைப் பள்
ளிக்கூடத்தை ஊடறுத்தபடியே பிள்ளை
யார் கோவிலடியில் சென்று முடிவடைகி றது. பத்து லோட்டுக்கு ஏற்றக் கூடிய குரு மணல் அத்தெருவில் குவிந்து கிடக்கும். ரவுனிலிருந்து கோயிலடிப் பக்கமாகச் சைக் கிளில் வருபவர்கள் வாசிகசாலையோடு ஒட்டியிருக்கும் சுருட்டுக் கொட்டிலைத் தாண்டியதும், சைக்கிளை விட்டு இறங்கி அதை உருட்டிக் கொண்டுதான் பெத் தாத்தை வளவிற்கு வரவேண்டி இருந்தது.
பெத்தாத்தையின் புருஷன் இளவயதி லேயே காணாமல் போய்விட்டதாகவே ஊரில் ஒருகதை இருந்தது. அவர் மேசன் பார்ட்டி ஒன்றில் முட்டாளாக வேலை செய் தவராம். 'அந்தாளுக்கு ஏதோ ஒரு நல்ல பெயர். இப்ப எனக்கு நினைவுக்கு வரு தில்லை" என அம்மா சொல்வா. வேலை முடிய தினமும் குடித்துவிட்டு, உலாஞ்சி உலாஞ்சி வீட்டுக்கு வந்து, உள்ள சட்டி பானைகள் எல்லாவற்றையும் ஓடாக்கி விடுவாராம். அவர் இரவில் போடும் சத்தம்
எங்கள் வீட்டையும் தாண்டி நறுவிலி வைர வர் கோவிலடி மட்டும் கேட்குமாம்.
இப்படித்தான் வேலைக்கென்று சொல்லி விட்டு ஒருநாள் கருக்கலோடு போனவர் தான், நடுச்சாமம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. மறுநாள் காலை கைக்குழந்தை யோடு பெத்தாத்தை மேசன் வளவில் சென்று விசாரித்த போது தான், சில நாட்களாக அவர் வேலைக்கே செல்வதில்லை என்ற விடயம் தெரியவந்தது. "மை போட்டுப் பார் பெத்தாத்தை. ஆள் எங்கை எண்டு தெரிய வரும்' என்று அயலவர்கள் அங்கலாய்க் கவே, பெத்தாத்தையும் மூண்டாங் கட்டை முனியப்பச் சாத்திரியாரிடம் சென்று மை போட்டுப் பார்த்தா, 'கிழக்குப் பக்கத்தாலை சில தடயங்கள் வரும். அவை உண்மையை உணர்த்தும்" என, எண்ணி இருவரிகள் மட்டுமே சாத்திரியார் சொன்னார்.
சாத்திரியார் சொல்லி எட்டாவது நாள், அவர் கடைசியாகக் காணப்பட்ட போது, உடுத்திருந்த நாலுமுழ வேட்டியும் தோளில் போட்டிருந்த துவாய்த் துண்டும் கடற் கரையை அண்மித்த சவுக்கங் காட்டில் கிடந்ததாகச் செம்மறி ஆடு மேய்க்கச் சென்ற சிலர் விதானையாரிடம் வந்து சொன் னதாகவும், வேட்டியில் இருந்த சலவைக் குறியைக் கொண்டே, அது பெத்தாத்தை யின் புருஷனது வேட்டிதான் என உறுதிப் படுத்தியதாகவும், செய்தி அறிந்து பெத் தாத்தை நெஞ்சு நெஞ்சாக இடித்துக் குளறி அழுததாகவும், அயலவர்கள் ஆறுதல் சொல்லி மனமாற வைத்ததாகவும், அதன் பின்னரே அவ வடை சுட்டு விற்கும் வியா பாரத்தில் ஈடுபட ஆரம்பித்ததாகவும் ஊரில் கதைத்துக் கொள்வார்கள். ஆனால், இவற் றையெல்லாம் விரிவாகவும், விஸ்தாரமாக வும் எனக்குச் சொன்னது ஆதவன் அண்ணா தான். இப்பேர்ப்பட்ட கதைகளை சுவைப் படச் சொல்வதில் அவர் மகா விண்ணன். சின்னமணி கூடத் தோற்றுப் போய் விடுவார்.
மல்லிகை ஜூன் 2009 * 56

சுட்ட வடைகளை விற்றுத் தருமாறு முதன் முதலில் பள்ளிக்கூடத்துக்கு முன் னால், கூப்பன் கடை வைத்திருக்கும் ஆறு முகப்பாவைத் தான் பெத்தாத்தை கேட்டா வாம். "இது விக்குமோ எணை? எதுக்கும் வைச்சிட்டுப் போ. வித்தால். பிறகு காசு தாறன்’ என்று சொல்லியபடி, ஐமிச்சத்தில் தான் ஆறுமுகப்பா வடையை வாங்கிக் கடை யில் வைத்தாராம். எல்லோருமே அதிசயிக் கும்படி விற்கக் கொடுத்த வடை மறுநாளே விற்றுத் தீரவே, ஆறுமுகப்பா பெத்தாத்தை யின் வளவுக்கே ஆளனுப்பி. வடைகளைப் பெற்றுக் கொள்ள ஆரம்பித்தாராம்.
கூப்பன் எடுக்க வருபவர்களுக்கும், சுருட்டுத் தொழிலாளர்களுக்கும் பெத்தாத் தையின் வடை பற்றி ஆறுமுகப்பா வியந்து சொல்லியிருக்கிறார். அதன் விளைவால் பெத்தாத்தையின் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.
"என்ரை பிள்ளையின்ரை கிரக பலன் தான் வேலை செய்யத் தொடங்கி இருக்கு. அந்தப் பிள்ளையை வறுமை தெரியாமல் வளர்க்கோணும்" எனக் கூறிப் பெத்தாத்தை மகள் சாரதாவை ரவுண் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பித்தான் படிப்பித்தாவாம். சாரதா எஸ். எஸ். ஸி இரண்டு தரம் எடுத்துப் பார்த்தாள். அவ்வளவு வாய்க்கவில்லை. பின்னர் தாய்க்கு உதவியாக வீட்டிலேயே இருந்துவிட்டாள்.
சாரதா அக்கா கறுத்தக் கொழும்பான் மாம்பழ நிறத்தில், ஆலடிக் கூப்பன் கடை மனேஜரைப் போல, வலு இலட்சணமாக இருப்பா. எங்களது பள்ளிக்கூடத்தில் பத் தாம் வகுப்புப் படிக்கிற அக்காமாரைப் போல, எப்போதும் நீட்டுப் பாவாடை சட்டையே அணிந்திருப்பா. அவவுக்கு ரவிச்சந்திரனை விட என்னைத்தான் கூடப் பிடிக்கும். ஆறு முகப்பா கடையில் ஏதாவது வாங்க வேண் டும் என்றால், என்னிடம் தான் கேட்பா. சாமான்கள் வாங்கிக் கொடுத்தால், முடி
வில் ஐந்து சதத்துக்கு தோடம்பழ மிட்டாய் அல்லது ஐந்து வடை நிச்சயம் என்பதால், சாரதா அக்கா கடைக்குப் போக வரச் சொல் லிக் கேட்டால் என்ன வேலை இருந்தாலும் நான் ஒடி ஒடிச் செய்து தந்துவிடுவேன்.
பெத்தாத்தையை எங்கள் ஆத்தையின் சகோதரி என நான் நினைத்திருந்ததற்கு அவர்களிடையே இருந்த உருவ ஒற்று மைக்கு மேலாக, அந்நியோன்னியமும் ஒரு காரணமாக இருந்தது. ஒருவருக்கொரு வர் என்னடி ஆத்தை எனச் சொல்லித்தான் கதைப்பார்கள். எங்கள் வீட்டிலிருந்து பெத் தாத்தை வளவு நாலைந்து வீடு தள்ளியி ருந்தாலும், அத்தனை வீடுகளையும் தாண்டி எல்லாத் தேவைகளுக்கும் எங்க ளிடமே வருவா. தான் எங்காவது செல்ல நேர்ந்தால், சாரதா அக்காவுக்குத் துணை யாக வந்து நிற்கும்படி என் னையோ அல்லது அக்காவையோதான் கேட்பா,
பெத்தாத்தை தினமும் பின்னேரம் நாலு மணிக்கு வடை சுடும் தனது வேலையை ஆரம்பித்துவிடுவா. எங்கள் வீட்டில் குளித்து விட்டு வந்து ‘சிவ சிவ' என்றவாறே நெற்றி நிறைய விபூதிபூசி வலு ஆசாரத்துடன் தான் அடுப்படிக்குள் நுழைவா. என்னையும், ரவிச்சந்திரனையும் அக்காவையும் தவிர, வேறெந்தக் கொம்பனையும் பெத்தாத்தை அடுப்படிக்குள் அனுமதிப்பதில்லை. சாரதா அக்காவைக் கூட, மாதத்திற்கு நாலைந்து நாட்கள் அடுப்படிக்குள் வர விடமாட்டா. அதற்கான காரணம் அப்போது எனக்குப் புரியாதேயிருந்தது.
வேலிப் பூவரசில் இலைகளை ஆய்ந்து வந்து குஞ்சட்டிக்குள் போட்டு நீரில் நன்றா கக் கழுவி, வடையைத் தப்பி மூன்று நான்கு சுளகுகளில் முதலில் அடுக்கி வைப்பா. என்ன மந்திரம் சொல்லி வடையை வட்ட மாகத் தப்புகிறா? என ஒட்டில் குந்தியிருந்து கொண்டே இமை வெட்டாது நான் பார்த் துக் கொண்டிருப்பேன். அந்த இரகசியத்தை
மல்லிகை ஜூன் 2009 * 57

Page 30
இறுதிவரை என்னால் மட்டுமல்ல, எங்களு ரில் எவராலுமே அறிய முடியாதிருந்தது.
சுளகில் அடுக்கி வைத்த, தப்பிய வடை களைக் கொதிக்கும் எண்ணெய்த் தாச்சிக் குள் ஒவ்வொன்றாக எடுத்துப் போடுவா. மடங்காமல், சுருளாமல் ஒவ்வொன்றும் 'உஸ்' ஒலியெழுப்பியவாறே சட்டிக்குள் வீழ்ந்து வேகும். வடை சுடும் நேரங்களில் வளவுக்கு எவர் வந்தாலும் பெத்தாத்தை அவர்களைக் கணக்கிலும் எடுக்கமாட்டா. தனது வேலையிலேயே கண்ணும் கருத்து மாக இருப்பா.
பெத்தாத்தை வீட்டிலிருக்கும் அந்த இரும்புத் தாச்சியைப் போல, நான் வேறெங் குமே பார்த்ததில்லை. அவ்வளவு பெரிய தாச்சி. தட்டை வடை சுட ஆரம்பித்த நாட்க ளில் மாயவன் கோயில் திருவிழாவில் தேடி அலைந்து வாங்கிய சட்டியாம் அது “இருபது வருவடிமா என்னோடை மாயுது. மாயவன் எனக்குத் தந்த சொத்து இது" என அடிக்கடி கூறிக் கொள்வா. எக்காரணம் கொண்டும் எவருக்கும் அதை இரவல் கொடுக்கமாட்டா. ஒருமுறை எனது ஆத்தை கூட, ஏதோ ஒரு தேவைக்கு அதைக் கேட்டபோது, 'எடி ஆத்தை, அதை மட்டும் கேட்காதை, வெறென்னெண்டாலும் கேள் தாறன்!" என்று முகத்துக்கு நேரேயே மறுத்துவிட்டா,
கொதிக்கும் தாச்சியில் வெந்த வடை களை அகப்பையால் கோலி அள்ளிப் புட்டுக்குழல் பானைக்கு மேல் தவமியற் றும் நீத்துப்பெட்டிக்குள் போட்டுச் சிறிது நேரம் எண்ணெய் வடிய விடுவா. உலர்ந்த வடைகளை மூடுபெட்டி மூடல் ஒன்றிற்கு மாற்றுவா, வேலை முடிந்ததும் மூடலின் முக்கால் பங்கிற்கு நிரம்பியிருக்கும் வடை களைப் பெரிய மெலிபன் ரின் ஒன்றிற்குள் போட்டு, அறையின் பெரும்பகுதியை ஆக்கிரமித் திருக்கும் பெட்டகத்துள் கொண்டு போய் வைத்துவிடுவா.
சனிக்கிழமைகளில் தாச்சிக்கு விடு முறை. ஆனால், பெத்தாத்தை அன்றும் சில்லைக் கால்களில் பூட்டியதைப் போன்றே காணப்படுவா. சுட்ட வடைகளைப் பன்னம் போட்ட பெரிய கைப்பெட்டி ஒன்றி னுள் நிரப்பி, மேல் சுளகு வைத்து மூடிக் கட்டி ரவுண் சந்தைக்கு எடுத்துச் செல்வா. காலை எட்டுமணிக்கெல்லாம் புறப்பட்டு விடுவா. பிரதான வீதி வழியே பயணிக்காது குச்சொழுங்கைக்குள்ளால் சென்று, பஸ்டிப் போவடியில் மிதந்து, இரண்டரைக் கட்டை தூரத்தையும் கால் நடையாகவே சென்று வருவா. "உந்த இழவு விழுவாங்களின்ரை தட்டி வானிலை போனால் பெட்டியைத் தூக்கிப் பின்னுக்குப் போட்டுடுவான்கள். வ ைடயெல்லாம் சில்லவல்லமாக உடைஞ்சு போகும். அதைவிட, அறுபது பாகைக் கிணத்தடித் தெருவாலை நாலு கவடு வைச்சன் எண்டால் டக்கெண்டு போயிடுவன்’ எனச் சொல்லிக் கொள்வா. கொடுக்கல் வாங்கல்கள் முடிந்து உளுந்து, மாவு என வடைச் சரக்குகள் எல்லா வற்றையும் வாங்கிக் கொண்டு அவ வளவு வந்து சேர பொழுது மத்திய்ானமாகி விடும்.
அன்றும் ஒரு சனிக்கிழமை,
"பெத்தாத்தை சந்தைக்குப் போட்டா.
தோசை சுட்டுத் தாறன். எழும்பிச் சாப்பிட்
டுட்டு ஓடிப் போய்ச் சாரதா அக்காவோடை துணைக்கு நில்" என, அம்மா என்னைத் துயிலெழும்பிச் சொன்னா.
முதல் நாள் இரவிரவாகப் பிள்ளையார் கோவில் வடக்கு வீதியில் சின்னமணி (5(Լք வினரின் சத்தியவான் சாவித்திரி கூத்துப் பார்த்துவிட்டு வந்து படுத்ததில், உடம்பு ஒரே அசதியாக இருந்தது. எழும்பப் பத்து மணிக்கு மேலாயிற்று.
நித்திரைப் பாயால் எழும்பி, அவசர அவ சரமாகக் காலைக் கடன்களை முடித்து அம்மா கட்டுத்தந்த ஆவி பறக்கும் தோசை
மல்லிகை ஜூன் 2009 * 58

யைச் சம்பலுடன் உறைக்க உறைக்கத் தின்றுவிட்டுப் பெத்தாத்தை வீட்டுக்குச் GasöT(3D6ö. 5u66 Lul50)6) 2ušasor கத் தெண்டிக் கொழுவப்பட்டிருந்தது. காவோலை வேலிக்குள்ளால் கையை விட் டுக் கொழுக்கியை உயர்த்திப் படலையைத் திறந்தவாறே உள் நுழைந்தேன். வளவு வெறிச்சோடிக் கிடந்தது. “சாரதா அக்கா சாரதா அக்கா” எனச் சத்தமாக நாலைந்து தடவைகள் கூப்பிட்டுப் பார்த்தேன். வீட்டு அறைகள் பூட்டிக் கிடந்தன. கதவுகளிலும் திறப்பைக் காணோம். பூவரசம் சருகுகள் முற்றம் முழுவதுமாய்ப் பரவிக் கிடந்தன. 'சாரதா அக்கா எங்கு சென்றிருப்பா?
வளவின் பின்புறமாகச் சென்று பார்த் தேன். அடுப்படிப் படலையும் தெண்டிக் கிடந் தது. வளவுக்கு வடக்கே கண்டாயத்து க்கு அப்பால் பாவட்டம் பற்றைக்குள் ஏதோ சரசரத்துக் கேட்டது. அங்கு தனிமையில் நிற்க எனக்குப் பயம் பிடித்தது. விறுவிறு வென நேராக நடந்து படலையைத் திறந்து கொண்டு குச்சொழுங்கைக்குள்ளால் மிதந்து ஒட்டம் பிடிக்க ஆரம்பித்தேன். மூத்த தம்பி வாத்தியார் வீட்டு வண்டில் படலை யடியில் சென்று கொண்டிருந்த போது, என் பெயரைச் சொல்லியாரோ சத்தமாக அழை ப்பது கேட்டது. திரும்பிப் பார்த்தேன். இல ந்தை மரத்தடியில் சாரதா அக்கா, தலை மயிர் காற்றில் பறக்க நின்று கொண்டிருந்தா,
திரும்பிச் சாரதா அக்காவை அண்மித் தேன்.
அவவின் முகம் முத்துமுத்தாய் வியர்த் திருந்தது. கேசம் கலைந்திருந்தது. மேற் சட்டை கசங்கி உட்சட்டை நாடா அரையும் குறையுமாக வெளியில் தெரிந்தது. சட் டென்று பக்கவாட்டில் திரும்பிய போது தான் கவனித்தேன். பிற்பாவாடை முழுவ தும் பிசங்கிக் கிடந்தது.
"எத்தினை தரம் கூப்பிட்டனான், அக்கா. எங்கை நிண்டனிங்கள்?
"அறையைப் பூட்டிப் போட்டு உள்ளை சட்டை மாத்திக் கொண்டு நிண்டனானடா. அதுக்கிடையிலை நீ அவசரப்பட்டு வந்திட் டாய். நல்ல பிள்ளை எல்லே? தேத்தண்ணி போடச் சீனிவாங்கிக் கொண்டுவா. சந்தை யாலை ஆத்தை வந்த உடனை காசு தாறா வாம் எண்டு சொல்லு' தனது மேற்சட்டை யைக் கைகளால் இழுத்துச் சரி செய்த வாறே சாரதா அக்கா சொன்னா.
தலைய ஆட்டியவாறே ஆறுமுகப்பா கடையை நோக்கி ஓடினேன்.
‘ஓடாமல் ஆறுதலாய்ப் போய்வா அப்பு. கவனம் சயிக்கிளுகள் வீச்சா வரும். பாத் துப்போ!" என்றவாறே சாரதா அக்கா குச்சொழு ங்கை வழியாகத் திரும்பிக் கொண்டிருந்தா. வாசிகசாலை, சுருட்டுக் கொட்டிலைத் தாண்டி ஆறுமுகப்பா கடையை வந்தடைந் தேன்.
கடையடியில் ஆறுமுகப்பாவைக் காணவில்லை. கதவுகள் யாவும் இழுத்து மூடப்பட்டிருந்தன.
பெரிய சங்கக்கடைக்கு அவர் கூப்பன் சாமான் எடுக்கக் கொண்டு செல்லும் ஒற்றை மாட்டு வண்டில் சுருட்டுக் கொட்டி லுக்கும் வாசிகசாலைக்கும் இடையில் நின்று கொண்டிருந்தது. அப்போ அவர் இங்கு தான் எங்காவது நிற்க வேண்டும்' என்று நினைத்துக் கொண்டு கடைக்குத் தெற்கே, கேணிப் பக்க வாயில் வழியாகப் பின்புறம் சென்றேன். அரங்கே வெற்றிலையை மென்று கொண்டு நாம்பன் மாட்டுக்கு வைக்கோல் பரவிக் கொண்டிருந்தார்.
‘என்னடா ஆறுமுகம்?" என்றார். என் ஐயாவின் பெயரைச் சொல்லித்தான் அவர் என்னை அழைப்பது வழக்கம். விடயத் தைச் சொன்னேன். 'கொஞ்சம் பொறு'
மல்லிகை ஜூன் 2009 * 59

Page 31
என்றார். அவர் வரும் வரை காத்திருந்து சீனியை வாங்கிக் கொண்டு முடக்கடியில் நான் வந்து கொண்டிருந்த போது, குச் சொழுங்கைக்குள்ளால் வேர்க்க விறுவிறு க்க வடலித்திடல் வீரன் நெஞ்சை நிமிர்த்தி யவாறே வந்து கொண்டிருந்தான். ஆன ழகன்' என ரவிச்சந்திரன் அவனுக்கு அர்த் தத்துடன் தான் பட்டம் வைத்திருக்கின் றான் என நான் மனதிற்குள் நினைத்த வாறே, 'ஏன் இண்டைக்கு உடும்பு பிடி படல்லையோ?" என்று கேட்டேன்.
பதிலேதும் சொல்லாது உதட்டைப் பிதுக்கியவாறே இலந்தை மரத்தை உரசிக் கொண்டு வந்து தெருவில் இறங்கி அவன் நடந்து கொண்டிருந்தான். அவன் உதட் டைப் பிதுக்கியதன் அர்த்தம் புரியாது, விறு விறுவென நடந்து சாரதா அக்காவின் வளவை அடைந்தேன்.
அடுப்படிக்குள் மண்டிச் சுழன்ற புகை வரிச்சு மட்டைக்குள்ளால் குபுகுபு என வெளியேறிக் கொண்டிருந்தது. சாரதா அக்கா திருகுபலகையில் குந்தியிருந்த வாறே முழங்காலில் நாடியை வைத்துக் கொண்டு சுவாலையை வெறித்துப் பார்த் துக் கொண்டிருந்தா. முகம் வாடியிருந்தது. 'அக்கா. அக்கா" எனக் கூப்பிட்டேன்.
“எட நீ வந்திட்டியே.?” என்றவாறே தேநீர் தயாரிக்க ஆயத்தமானா.
"அக்கா இண்டைக்கு வீரனுக்கு உடும்பு பிடிபடவில்லையோ?" வழமையாக நான மரும் ஒட்டில் குந்தியபடியே கேட்டேன்.
எதுவுமே பேசாது சொண்டைப் பிதுக் கியபடியே மூடலைத் திறந்து நாலைந்து வடையை என்னிடம் நீட்டினா.
வடையை வாங்கி முறித்து வாயில் {3|_uTu °C3u6öT.
"என்னடி பிள்ளை நீ இண்டைக்கு
முத்தங்கித்தம் கூட்டேல்லையே? ஒரே சருகும் கஞ்சலுமாகக் கிடக்குது." என்ற வாறே படலையைத் திறந்தபடியே சந்தை யிலிருந்து களைத்துப் போய் வந்து கொண் டிருந்தா, பெத்தாத்தை.
சாரதா அக்கா தந்த தேநீரைக் குடித்து விட்டு, மிகுதிவடையைக் காற்சட்டைப் பொக் கெற்றுக்குள் போட்டுக் கொண்டு வீடு நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருந்தேன்.
அன்று முழுவதும் மனது மிகவும் சங்க டப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், அது எதற்கு என்பது தெளிவாகவில்லை.
மூன்றோ அல்லது நான்கோ கிழமைக 5ளின் பின்னர்- அன்றும் ஒரு சனிக்கிழமைஅது சரியாக நினைவிருக்கிறது.
வறட்சியான காற்று வீசிக் கொண்டிரு ந்த அதிகாலை நேரம். காலைக் கடன் களை முடித்த பின்னர், எங்கள் வீட்டு முன் விறாந்தைப் படிகளில் இருந்தவாறே தேவாரம் ஒன்றினை நான் மனனம் பண்ணிக் கொண்டிருந்தேன்.
வீட்டுக் கேற்றடியில் நின்றவாறே "பாறு பதி. பாறுபதி' என அவசர அவசரமாக அம்மாவை யாரோ அழைத்தது கேட்டது. விறாந்தை விளிம்படிக்கு வந்து எட்டிப் பார்த்தேன். ஆதவன் அண்ணாவின் தாயார் தங்கம்மா மாமியின் தலை கேற்றிற்கு வெளியே தெரிந்தது. அழைத்த குரல் கேட்டு அடுப்படிக்குள் அரிசிப் புட்டு அவிப்பதில் மும் முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த அம்மா, புட்டவிப்பதை இடைநடுவில் நிறுத்திவிட்டு கேற் பக்கமாக ஓடிச் சென்றா.
“எடியே பாறுபதி உனக்குச் சங்கதி தெரியுமோ?’ என்று தங்கம்மா மாமி கேட் டது மட்டும் என் காதுகளில் தெளிவாக விழுந்தது. அதைத் தொடர்ந்து தணிந்த குரலில் இருவரும் ஏதோ குசுகுசுத்துக் கொண்டு நின்றார்கள். றேடியோ சிலோன்
மல்லிகை ஜூன் 2009 ཀྱི་ 60

செய்திகளில் டட்லி சேனநாயக்காவின் பெயர் அடிக்கடி வருவது போல, அவர்களது பேச்சில் பெத்தாத்தை, சாரதா அக்கா ஆகி (Surrett ப்ெயர்கள் பரவலாக அடிபட்டுக் கொண்டிருந்தது.
‘அப்பவே நான் பெத்தாத்தைக்கு ஆயிரந் தரஞ் சொல்லியிருப்பன், அந்தக் கண்டறியாத கண்டாயத்தை அடைக்கச் சொல்லி!” என அம்மா சத்தமாகச் சொல் லிக் கொண்டு அடுப்படிக்குள் சென்று கொண்டிருந்தா, அடுப்பில் அவிந்த புட் டைப் பானையுடன் இறக்கித் திருகணை யில் வைத்து கரப்பால் மூடிவிட்டு, மீண்டும் வெளியில் வந்தா.
‘உதிலை பெத்தாத்தை வளவடிக்குப் போட்டோடி வாறன். படிச்சுக் கொண்டிரு." என்று எனக்குக் கூறிவிட்டுப் பாதுகாப்பு உத்தியோகத்தர் போல கேற்றடியில் காவல் நின்ற தங்கம்மா மாமியுடன் தெரு வில் இறங்கி, இருவருமாகப் பெத்தாத்தை வீட்டுப் பக்கம் சென்றார்கள்.
அவர்கள் சென்று பத்து நிமிடங்களும் ஆகியிருக்காது, நறுவிலிக்கு அப்பால் புதுவிட்டில் இருக்கும் ஆத்தையும் தலை தெறிக்க ஓடிவந்து, அம்மா எங்கே என்று கேட்டா. 'பெத்தாத்தை வளவுக்கு." என நான் கூறி முடிக்க முன்னரே, 'அதுக்கிடை யிலை போட்டாளோ..?’ என்று வெடுக்கெ னக் கூறியவாறே வந்த வேகத்தை இரு மடங்காக்கிப் பெத்தாத்தை வீட்டுப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தா,
"பெத்தாத்தை வளவிலை என்ன பிரச் சினையாக இருக்கும்? இந்த நேரமெண்டு பாத்து அண்ணனும் அக்காவும் பாடஞ் சொல்லிவிக்கப் போட்டினம். இவன் ரவிச் சந்திரனும் விளையாட வாறதுக்கு நேரங் கிடக்கு. ஆரைக் கேட்கலாம்? எனச் சிந் தித்தவாறே எதற்கும் பெத் தாத்தை வளவுப் பக்கம் சென்று பாத்தால் என்ன?
必
என்றெண்ணியவனாகக் கேற்றைக் கயிற்றால் கட்டிவிட்டுத் தெருவில் இறங்கி, நடக்க ஆரம்பித்தேன்.
மூத்ததம்பி வாத்தியார், சாவித்திரி ஆகி யோர் வளவுகளைக் கடந்து முடக்கடியில் சென்றபோது, பெத்தாத்தை வளவுப் பக்க மாகத் தலைக் கறுப்புகள் தெரிந்தன. இலந்தை மரத்துக்குக் கீழ் நின்றவாறே எங்கள் வீட்டுக்குச் சலவை செய்யும் செல் லனும், எங்கள் வீட்டுக்கு முன்னாலிருக் கும் பசுபதியும் ஏதோ கதைத்துக் கொண்டு நின்றார்கள்.
தங்கம்மா மாமி தவித்து விழுந்து குச் சொழுங்கைக்குள்ளால் வந்து கொண்டிரு ந்தா. லையிருந்து ஒரு தண்ணிவென்னியில்லா மல் கிடக்குது. அதுதான் உதிலை ஆறுமுகப்பாவட்டை ஒரு பழச் சோடா வாங்கிக் கொணந்து குடுக்கலாமெண்டு போறன்’ என பசுபதிக்குக் கூறியவாறே,
'பாவம் பெத்தாத்தை காலம்பறயி
என்னருகே வந்தா.
"ஏன் மோனை இதிலை நீ நிக்கிறாய்? பெத்தாத்தை வீட்டை நீ போகக் கூடாது. Slsomrög šis Qa:EST 6oT GS É6O6Iom psio, D (bij கடை வளாவுக்கை போய் இரு. கொஞ்சத் தையாலை கொம்மா வந்திடுவள்." என்று கூறியவாறே, குருமணலுள் கால்கள் புதைய ஆறுமுகப்பா கடையடிப் பக்கமா கச் சென்று கொண்டிருந்தா.
அரைமனத்துடன் ஒவ்வொரு, ஒவ் வொரு அடியாக எடுத்து வைத்து வீடு நோக்கி நடந்தேன்.
எங்கள் வளவுக் கேற்றடிக்கு வந்த போது, கேற் நான் கட்டியபடியே இன்னும் இருந்தது.
‘அண்ணனும் அக்காவும் இன்னும் படிப்பாலை வரேலைப் போலை கிடக்கு.
மல்லிகை ஜூன் 2009 $ 61

Page 32
இண்டைக்கெண்டு அறுந்த வாத்தியார் இன்னும் படிப்பிச்சுப் படிப்பிச்சுக் கொண்டு நிற்கிறார்.
வாசல் வெளிக் குந்தில் இருந்தேன்.
முன்னால் பசுபதி வீட்டு நாய் வள் வள் என்று ஆதவன் அண்ணா வீட்டுப் பக்கமா கப் பார்த்துக் குரைத்துக் கொண்டு நின் றது. 'உந்த நாய்க்கென்ன விசர் பிடிச்சுப் போச்சுதோ?
மூத்ததம்பி வாத்தியார் வீட்டுப் பக்கமா கப் பச்சைச் சேலை அசைவது தெரிந்தது. அம்மாதான் வந்து கொண்டிருந்தா. அம் மாவை நோக்கி ஓடிச் சென்றேன்.
‘என்னம்மா பிரச்சினை, எல்லாரும் ஒடித் திரியிறியள்?"
'அம்மா கேக்கிறன் பேசாமல் வாறாய். பெத்தாத்தைக்கு என்னம்மா?"
"பெத்தாத்தைக்கு ஒண்டுமில்லை.
சாரதா. १ *
‘சாரதா அக்காவுக்கு என்னம்மா?"
‘நேற்று ராத்திரியிலையிருந்து அவ
ளைக் கானேலையாம்.'
"ஏன். எங்கை போட்டா?”
'அம்மா சாரதா அக்கா எங்கை
(3LTsotsients?'
"அது. அதுதான். தெரியேல்லை. நீ வா சாப்பிடு. கொண்னனும் கொக் காவும் இன்னும் பாடஞ் சொல்லிவிச்சுக் கொண்டு வரேலையே?’ என்று கேட்ட வாறே, கேற்றில் நான் போட்ட கட்டை அவிழ்த்து உள் நுழைந்தா அம்மா.
பசுபதி வீட்டு நாய் இன்னமும் குரைத் துக் கொண்டு நின்றது.
"ஏன் இந்த அம்மா "உம்மாண்டி மாதிரி ஒண்டுஞ் சொல்லாமல் போறா..? சாரதா அக்கா ஏன் காணாமல் போய்விட்ட.? அவ வும் தேப்பனைப் போல சவுக்கங் காட்டுப் பக்கமாக. கடவுளே அப்பிடி எதுவும் அவவு க்கு நடக்கக் கூடாது. நறுவிலி வைரவர் இருக்கும் திசையை நோக்கி மனதிற்குள் பிரார்த்தித்துக் கொண்டேன்.
இது நடந்து அடுத்தடுத்த நாள். அன்று திங்கட்கிழமை, நான் பள்ளிக்கூடம் சென்ற போது எனது வகுப்பில் பரமேசையும், சாவித் திரியையும் தவிர, வேறெவரையும் காண வில்லை. மேசை மீது எல்லோரினது புத்த கப் பைகளும் அனாதைகளாய்க் கிடந்தன. பொடியங்கள் எல்லாரும் பின்னுக்கு வகுப் பறைகள் கூட்டப் போயிருப்பாங்கள் போலை என்று எண்ணியவாறே புத்தகப் பையினை வைப்பதற்காக என் மேசையருகே சென்றேன்.
அப்போது, என் மேசைக்கு நேர் முன், னாலிருக்கும் பரமேசுக்குப் பக்கத்திலிருந்த வாறே சாவித்திரி சொல்லிக் கொண்டிருந் தாள். 'எடியே ராமுழுக்கப் படிக்கேலாமல் போச்சுதடி எங்கடை வீட்டுக்குப் பின்னாலை இருக்கிற வீட்டில ஒரே சத்தமும் சச்சரவு மடி. அந்த வீட்டு அக்காவை இரண்டு நாளாக் காணேலை எண்டு வடை சுட்டு விக்கிற அந்தப் பெத்தாத்தைக் கிழவி ஒரே ஒப்பாரியடி. அது போதாதெண்டு, உன்ரை அருமந்தப் பெட்டை செய்த வேலைக்கு இனி நீ வடை சுட்டு வித்தாலும் ஊருக்குள்ளை ஒரு சனமும் வேண்டமாட்டினம். மரியாதையா ரண்டொரு நாளிலை என்ரை காணியை விட்டு வெளிக்கிடு, இல்லாட்டி வீட்டோடை கொழுத்திப் போடுவன் எண்டு அந்தக் காணி க்குச் சொந்தக் காறன் வந்து கத்து கத்தெண்டு கத்தி. ஒரே பிரச்சினையடி’
அதற்குள் காஞ்சனாவும், வடலித்திடல் விமலாவும் வகுப்பிற்குள் நுழையவே சாவித்திரி அந்தக் கதையை அத்துடன் விட்டுவிட்டாள்.
மல்லிகை ஜூன் 2009 * 62

அச்சமயம் வாசலில் கூடி நின்ற பெண்பிள்ளைகளை விலக்கிக் கொண்டு அவசர அவசரமாக உள் நுழைந்த ரவிச்சந் திரன் புத்தகப் பையை மேசையில் வைத் ததும் வைக்காததுமாக என் காதுக்குள் குசு குசுத்தான். “டேய் ஆணழகனை ரண்டு மூண்டு நாளாகக் காணேலையாம். ஊருக் குள்ளை ஏதேதோ எல்லாம் கதைக்கினம்." சொல்லிவிட்டு ரவிச்சந்திரன் சிறிது நேரம் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந் தான். பின்னர் சொன்னான். ‘இனி உடும் புகளுக்கு வலு கொண்டாட்டம் தான்."
எனக்கு அப்போதுதான் மனதில் ஏதோ ஒரு பொறி தட்டிற்று. அவன் சொல்லி வாய் மூடத்தலைமை வாத்தியாரின் அறையிலி ருந்து முதலாம் மணி அடித்துக் கொண்டி ருந்தது.
அப்போது ஐயர் வீட்டு விமலா எழும்பி தலைமை வாத்தியாரின் அறைப் பக்கமா கச் சென்று கொண்டிருந்தாள். தேவாரம் சொல்வதற்காக,
அன்று பள்ளிக்கூடம் முடிந்து நான் வீட்டிற்குச் சென்றபோது, முன் விறாந்தை யில் நாங்கள் படிக்கும் மேசைக்கருகில் பெரிய தாச்சி ஒன்று கவிழ்த்து வைக்கப்பட் டிருந்தது. இது பெத்தாத்தையின்ர தாச்சி யெல்லோ? என நான் நினைத்துக் கொண் டிருந்த போது, அடுப்படிக்குள் இருந்து வந்த அம்மா சொன்னா.
"பெத்தாத்தை இண்டைக்கு காலமை ஒன்பது மணி வசுவிலை தங்கடை ஊருக் குப் போட்டா. இனி இஞ்சை வரமாட்டா. இந்தத் தாச்சியை ஆத்தையிட்டைக் குடுக் கச் சொல்லித் தந்திட்டுப் போறா. அதோடை உனக்கும் கொஞ்சம் வடை தந்திட்டுப் போறா."
பொங்கி வந்த அழுகை என் தொண் டைக் குழியில் வந்து தடுக்கிக் கொண்டு நின்றது.
d
: :
For - Wedding Portraits 83 & 3. 雅 & s
Child sittings *
Photo Copies of ldentity Cards (NIC), R
/* Paөөport &
Driving Licences Within 15 Minutes
3DO, Modera Street, Colombo -15. Tel: 2526345
மல்லிகை ஜூன் 2009 * 63

Page 33
ف)
சொலன்ெ G-Ji فٹ) ہے چاہو دے நினைவுக
భ్యభ నిశ
பDல்லிகையின் நெருங்கிய நேசத்துக்குரியவரான சொல்லின் செல்வர் செ. நடராஜா அவர்களினது ஞாபகார்த்தப் பாரிய நூலொன்று அவரது குடும்பத்தினரால் மலையகத் தலைநகரிலிருந்து சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பாரிய ஞாபகார்த்த முயற்சி இது. அந்நூலில் பலர் சொல்லின் செல்வரைப் பற்றிக் கட்டுரைகள்
வரைந்துள்ளனர்.
அந்நூலின் கடைசிப் பக்கத்தில் பதியப்பட்டுள்ள ஆக்கபூர்வமான எட்டுக் குறிப்புகளை இங்கு பதிய வைக்கின்றோம்.
நேரத்தின் மதிப்பு என்னவென்று குெரிய எடீடு வழிகள்
来 ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று தேர்வில் தோல்வி அடைந்த மாணவனைக் கேளுங்கள்.
兼 ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று குறைப் பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.
兼 ஒரு வாரத்தின் மதிப்பை அறிய, ஒரு வாரப் பத்திரிகையின் ஆசிரியரைக் கேளுங்கள்.
兼 ஒரு நாளின் மதிப்பு என்னவென்று அன்று வேலை கிடைக்காமல் போன ஒரு தினக்கூலி வாங்குபவரிடம் கேளுங்கள்.
兼 ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று சந்திக்கக் காத்திருக்கும் காதலரைக் கேளுங்கள்.
兼 ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று ரயிலைத் தவறவிட்ட பயணியிடம் கேளுங்கள்.
兼 ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று ஒரு விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.
兼 ஒரு மில்லி செக்கண்டின் மதிப்பு என்னவென்று ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்
பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.
மல்லிகை ஜூன் 2009 $ 64
 

1Dல்லிகை இலக்கியக் கடிதங்களை வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றது. சும்மா போலிப் புகழாரத்தைச் சூட்டி, மல்லிகையின் உழைப்பைக் கொச்சைப்படுத்த வேண் டாம். தரமான விமரிசன ரீதியான ஆழமான கடிதங்களையே எதிர்பார்க்கின்றோம்.
மற்றும் சிறுகதை, கவிதை படைப்பது போன்றதுதான் விமரிசனமும், எனவே, கூர்ந்த மதிநுட்பத்துடன் உங்களது விமரிசன எழுத்து அமைந்திருப்பது வரவேற்கத் தக்கது. விவாதபூர்வமாக அவை அமைவது நல்லது.
மல்லிகை எதிர்கால வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்குமான கருத்துக்களைக் கடிதங்கள் கொண்டிருப்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. படைப்பாளிகளுக்கும் அது பயன் தரத்தக்கதாக அமைந்திருக்க வேண்டும். வாசகர்களும் அதன் பின்னணி யில் சிந்திக்கக் கூடியதாகக் கடிதக் கருத்துக்கள் ஆழம் கொண்டிருப்பது நல்லது. குறிப்பாக இலக்கிய உலகில் பிரவேசிக்க ஆர்வமும், அக்கறையும் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் இந்தக் கடிதப் பகுதியை நன்கு பயன்படுத்துவது அவர்களது எழுத்து முயற்சிக்கு எதிர்காலப் பயிற்சியாகக் கூட அமையலாம்.
-ஆசிரியர்
(که <2لكو^a وا<2
பDல்லிகை இதழ்கள் ஒவ்வொன்றையும் எழுத்தெண்ணிப் படித்து வருபவன். நான்.
பல ஆண்டுகளாகப் படிக்கின்றேன்.
நீங்கள் இடைக்கிடையே பெருமிதத்துடன் குறிப்பிட்டெழுதும் வசனங்கள் எனது ஞாபகத்தில் என்றுமே, பதிந்து போயிருக்கின்றன.
நாளை என்றொரு நாள் வரவே செய்யும், அந்நாளில் இன்று சாதாரணமான இதழாக
நோக்கப்படும் மல்லிகை இதழ்கள் ஒவ்வொன்றுமே ஒர் ஆவணமாக மதித்துப் போற்றப்
படும் என்ற உங்களது மெய்யான கருத்தில் நான் ஒன்று படுகின்றேன்.
இன்னுமொன்றையும் உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். இந்த
நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் பரந்து வாழும் படைப்பாளிகள் ஆக்கங்களுக்கு இடம் கொடுத்து வாருங்கள். சிலர் மல்லிகைப் பக்கங்களை மாதா மாதம் குத்தகைக்கு எடுத்திருப்பது போல, என் மனசிற்குப் படுகின்றது. அவர்கள் உங்களுடையதோ, மல்லிகையினுடையதோ நீண்ட கால நண்பர்களாக இருக்கலாம். ஒரு புது முயற்சியாகப்
புதிய புதியவர்களை அணுகி, அவர்களையும் எழுத வைத்துப் பாருங்கள்,
மல்லிகை ஜூன் 2009 $ 65

Page 34
மல்லிகை ஆசிரியர் என்ற ஹோதா வில் சும்மா கம்மா மல்லிகைக் காரியால யத்திற்குள் அடைந்துபோய்க் கிடக்காமல், சிரமங்களைப் பாராமல் நாலூர் சுற்றி வாருங்கள். அப்பொழுதுதான் பல பல புது முகங்கள் தட்டுப்படுவார்கள். புதிய புதிய சந்தாதாரர்களைக் கண்டடையலாம்.
நீங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்த யுத்த காலச் சூழ்நிலை இன்று மாற்றமடைந்து விட்டது. இன்று குறிப்பிட்ட
பிரதேசங்களில்தான் மல்லிகை விற்பனை
க்குக் கிடைக்கின்றது. புதிய சூழலில் இனி வருங்காலங்களில் பல பல புதிய ஊர்களில் மல்லிகைச் சஞ்சிகை விற்பனையைப் பெருப்பிக்கப் பாருங்கள்.
என்மனதில் பட்டவைகளை எழுத்தில் பதிந்துவிட்டேன். எனக்கு மல்லிகை இன்னும் இன்னும் வளர வேண்டுமென் பதே ஆசை. இத்தனைக்கும் உங்களது பாரிய சிரமங்கள் எனக்கு விளங்காமலு மில்லை. என்னைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களது இலக்கிய உழைப்பிற்குப் பின்னால் என்னைப் போன்றவர்கள் அணிதிரண்டு நிற்கின்றனர் என்பதையும் மறந்து போகாதீர்கள்.
அடிக்கடி உங்களை நேரில் ஒரு தடவை பார்த்துவிட வேண்டும் என ஆசைப் பட்டிருக்கிறேன். இரண்டொரு வார்த்தை களாவது உங்களுடன் நேருக்கு நேர் பேசி விட வேண்டும் எனக் கனநாளாக யோசித் திருக்கின்றேன். ஆனால், மனப்பயம் என் னைப் பின்னுக்கு இழுக்கின்றது. எனவே, துணிந்து எனது மனக் கருத்துக்களை எழுத்தில் கொட்டியிருக்கின்றேன்.
கொழும்பு- 06 ஆர். ராஜா
LDல்லிகைக்கு ஒரு கடிதம் எழுத
வேண்டும் எனப் பல காலமாக முயன்று வருகின்றேன். தனி ஒரு தனிமனிதராக இந்தப் பொல்லாத யுத்த காலத்திலும் போராட்டம் நடத்தி வருவதை நான் பல நண்பர்களுடன் பேசும் போது, நேர்ப் பேச்சில் உங்களது இலக்கிய உழைப்பை
மெச்சிப் பாராட்டியிருக்கின்றேன்.
நானொரு இளம் எழுத்தாளனாகப் பரிணமித்து வருபவன். என்னைப் போன்ற பல இளம் படைப்பாளிகள், எதிர்காலத்தில் என்ன செய்வது- என்னத்தை எழுதுவது எனத் தெரியாமல் திகைத்துப் போய்த் துவண்டு இருக்கின்றனர். இதை அவர்க ளுடன் நேர்ப் பேச்சில் அறிய முடிகின்றது. இந்த மன அவலத்தை யாரிடம் போய்ச் சொல்வது என விளங்காமல் பலர் திகை த்துப் போய் இருக்கின்றனர்.
உங்களது சுய சரிதத்தைச் சமீபத்தில் நான் கருத்துான்றிப் படித்துப் பார்த்தேன். அட!- நீங்களும் எங்களில் ஒருவர்தான் என்ற நெருக்கம் மனசுக்குள் வந்தது. அதன் பெறுபேறுதான் இந்தக் கடிதம்.
இதுவரையும் யுத்தம். யுத்தம்' எனச் சொல்லப்பட்டு வந்தது. இனிமேல்தான் நமக்கெல்லாம் பொறுப்பான வேலையு ண்டு. மன விரக்தி ஏற்பட்டுவிடக் கூடாது. எமது சனத்திற்கு, எதிர்காலத் தலைமுறை க்கு இப்போதிருந்தே நாம் புதிய புதிய நம்பிக்கைகளை ஊட்டி வரவேண்டும். அது மல்லிகை போன்ற இலக்கிய இதழ்க
எளின் பாரிய கடமையாகும்.
வட்டுக்கோட்டை. எம். புவனேஸ்வரன்.
மல்லிகை ஜூன் 2009 : 66

உங்களுடைய கடந்த மல்லிகை இதழ்த் தலையங்கம் படித்தேன். மன நிறை வாக இருந்தது. இப்படிச் சிந்திக்க, செய லாற்ற ஒரு இலங்கையனால்- நம்மவ னால் மாத்திரமே முடியும். இது வெறும் புகழ்ச்சியல்ல, உண்மை!
அவுஸ்திரேலியாவில், கனடாவில், லண்டனில், பாரிஸில், நோர்வேயில், ஜெர் மனியில், டென்மார்க்கில் எல்லாம் நம்ம வன் இன்று தமிழ் இலக்கிய விழாக்க ளைச் சும்மா ஜாம் ஜாமென்று முன் நின்று நடத்தி வருகின்றான், பிரமாதமாக,
இவை அத்தனையையும் ஒருங்கி ணைத்து நாளை யுத்த சூழ்நிலை தீர்ந்து சுமுகமாகிக் கொண்டு வரும் நாளைய கால கட்டத்தில் பரவலாகவும், காத்திரமாகவும் ஒர் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நமது மண்ணில் நடத்திக் காட்டத்தான் வேண்டும் என்ற உங்களது தலையங்க எழுத்து, உலகத் தமிழுக்குப் புதுப்பலத்தை யும் உற்சாகத்தையும் ஊட்டும் என்றே நான் நம்புகின்றேன்.
இப்படிச் சிந்தித்ததற்கே நாம் மல்லி கையை முதலில் பாராட்டி மகிழ வேண்டும்.
இன்றிலிருந்தே புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களுடன் தொடர்புகளை வளர்த்தெடுங்கள்.
இது சும்மா இலேசுப்பட்ட சங்கதியல்ல!
இது பாரிய உழைப்பை உள்ளடக்கிய சங்கதி. பலரது கூட்டு ஒத்துழைப்புத் தேவை. உலகில் பரந்து பட்டு இன்று வாழ்ந்து வரும் ஆர்வமும் ஒத்தாசையும் நிரம்பப் பெற்ற எழுத்தாளர்களுடன் இடைவிடாத் தொடர்பு தொடர்ந்து பேணப்பட்டு வரவேண்டும்.
நீங்கள் தலையங்கத்தில் குறிப்பிட்டது போல, பணம் திரட்டுவது பெரிய சங்கதி
எழுத்தாளரும், நூலாசிரியருமான
எஸ். எம். ஹனிபா
அவர்கள் சமீபத்தில் காலமானார். அன்னாரின் மறை
வையொட்டி மல்லிகையின்
ஆழ்ந்த அநுதாபங்கள்.
- ஆசிரியர்
யல்ல. ஆனால், திட்டமிட்டுக் காரியமாற்று பவர்களை ஒருங்கு திரட்டி எடுப்பதுதான் மிகப் பெரிய வேலை. பாரிய உழைப்பு.
இப்படியான ஒரு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தி முடிக்க வேண்டுமென விரும்பும் ஆர்வலர்களுடன் ஆரோக்கியமான தொடர்புகளை முதலில் வளர்த்தெடுக்க வேண்டும். அப்புறம் அவர் களை ஒருங்கு திரட்டிச் செயல்படுத்த ஊக்குவிக்க வேண்டும். பின்னர், பலர் கூடத் தேவையில்லை. ஒவ்வொரு நாட்டிலிருந் தும் ஐந்தாறு பிரதிநிதிகள் கலந்து கொண் டாலே போதும். நல்லதொரு பிரதிநிதித்து வம் வாய்க்கப் பெற்ற ஓர் உலகத் தமிழ் விழாவையே நடத்தி முடித்துவிடலாம்.
எழுத்தில் எம்போன்றவர்கள் சொல்வது ரொம்ப ரொம்பச் சுலபமானது. ஆனால், செயலில் பொறுப்பேற்றுச் செய்து முடிப் பதே ஒரு உலகச் சாதனையாகும்.
முடிவில் ஒன்றை உறுதியாகக் கூறுகிறேன். இது உங்களால்- மல்லிகை ஆசிரியரால் சாதிக்க முடியும் என்றே திடமாக நம்புகின்றேன்.
சுவிஸ். எஸ். சந்திரமோகன்
மல்லிகை ஜூன் 2009 * 67

Page 35
இளம் படைப்பாளிகளின் பயிற்சிக்கான ஒரு முழுநாள் ஒன்றுகூடல்
நிம் முன்னால் இதுவரை காலமுமில்லாத புதிய பொறுப்பொன்று தோன்றித் தோன்றி வெருட்டுகின்றது.
வாரா வாரம் ஏராளமான இளம் படைப்பாளிகள், தமது படைப்புக்களைப் பலவேறு தலைப்புக் களில் எழுதி எழுதி எமக்கு அனுப்பிக் கொண்டே இருக்கின்றனர்.
முன்னர் ஒரு காலத்திலென்றால், வட பகுதியில் இருந்துதான் புதுப் புது எழுத்தாளர்கள் தோன்றுவது இயல்பு. அதன் பின்னர், கிழக்கு மாகாணத்திலிருந்து பல்வகைப்பட்ட சிருஷ்டியாளர்கள் எழுதி எழுதித் தமது நாமத்தை இலக்கிய உலகில் பதிந்து வைத்தனர். அதன் பின்னர், மலையகத்துப் படைப்பாளிகள் தமது எழுத்து வன்மையில் இம் மண்ணில் பெயர் பொறித்து வைத்துள்ளனர்.
இன்றோ, நிலைமை வேறு. ஏராளமான இளைஞர்களும் யுவதிகளும் இலக்கியத்துறைக் குள் புதிதாகக் காலடி பதிக்க வந்துள்ளனர்.
பல காலம் தொடர்ந்து வரும் சஞ்சிகை என்கின்ற காரணத்தினாலும், பலராலும் இலக்கிய உலகில் பேசப்படுகின்ற மாசிகை என்ற காரணத்தினாலுமோ தெரியாது, வாரா வாரம் ஏராள் மான் படைப்புக்கள் மல்லிகையை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன.
வந்து சேரும் படைப்புக்களும் பிரசுரிக்கத்தக்கவையாக அமைந்து விடுவதில்லை. * ஆனால், நாமோ அந்த உழைப்பை, ஊக்கத்தை. இலக்கிய நேசிப்பை மெய்யாகவே புரிந்து கொண்டுள்ளோம். கூடியவரை புதிய புதிய இலக்கிய ஆர்வலர்களின் படைப்பு ஊக்கத்தைக் கொச்சைப்படுத்தாமல், கொஞ்சம் கொஞ்சம் செப்பனிட்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக அவர்களது எழுத்து முகம் சிதைந்து போகாமல் அடிக்கடி பிரசுரித்து வந்துள்ளோம்.
இன்றோ நிலைமை கட்டு மீறிப் போய்விட்டது. இந்த இளந் தலைமுறைப் படைப்பாளிக் ளின் இலக்கிய சிருஷ்டிகளை பத்தடி, பன்னிரண்டடி அறைக்குள் இருந்து கொண்டு தீர்மானிக் காமல், அவர்களுடன் முகம் பார்த்து நேரடியாகவே பரஸ்பரம் விவாதிக்கவே விரும்புகின்றோம். மல்லிகைக்கு இந்தப் பொறுப்பு நிறைய நிறைய உண்டு. காரணம் நாளை ஒரு புதிய தலைமுறையை உருவாக்க வேண்டிய தேசிய இலக்கியக் கடமைப்பாடுகளும் நம் முன்னால் முகம் காட்டி நிற்கின்றன.
நாடு பூராவும் நாம் இந்தச் சோதனை முயற்சியைக் கொண்டு செல்ல முடியாது. அதற்கான சூழ்நிலையும் இன்று இல்லை. அகலக் கால் பதிக்கவும் நாம் விரும்பவில்லை.
எனவே, கொழும்பு மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதியில் இந்த ஒரு நாள் விழாவை ஒழுங்கு செய்ய விரும்புகின்றோம். காலை9.30இல் இருந்து 5.30 மணிவரை நடைபெறும்,
நமது படைப்பாற்றலின் குறை நிறைகளை நாமே நேரில் விமரிசன பூர்வமாகக் கண்டடை வதற்கு விரும்பும் உண்மையான இளம் படைப்பாளிகள், மல்லிகையுடன் தொடர்பு கொள்ளலாம். பெயர் விலாசம் ஆகியவற்றைத் தெளிவாக எழுதி அனுப்புங்கள், உங்களது ஆரோக்கியமான இலக்கியப் பங்களிப்பின் வேகத்தைப் புரிந்து கொண்டு, அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்போம்! -ஆசிரியர் மல்லிகை ஜூன் 2009 * 68

= இடGலில் ஜீவரி
தி ஈழத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக் கும் சஞ்சிகைகள் பற்றியோ அல்லது இடைநடுவில் நின்று போன சஞ்சிகைகள் பற்றியோ தகவல்கள் ஏதுமுண்டா, உங்களிடம்?
as gibitig. (335. rî. 6ngffurfiadur
* இன்று வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளை விடக் கடந்த காலத்தில் வெளிவந்து இடைநடுவில் நின்று போன சிற்றேடுகளே அதிகம். இவைகள் பற்றிய பல பல தகவல்களைச் சேமித்துப் பாதுகாத்து வைத்துள்ளேன். தக்க தருணம் வரும்போது அவைகளை ஒர் ஆவணமாக வெளியிடுகிறேன்.
2 மறைந்த பிரபல எழுத்தாளர் தரும சிவராமுவைப் பற்றி அவரது பிறந்த ஊரான திருகோணமலையில் சமீபத்தில் ஒரு ஞாபகக் கூட்டம் நடைபெற்றதாகப் பத்திரிகைகளில் படித்தேன். அவரை நீங்கள் நேரில் சந்தித்துக் கதைத்திருக்கிறீர்களா?
மாத்தளை. எஸ். ராஜகுமாரன்
* மிக மிக அற்புதமான இலக்கியச் சிந்தனையாளன், அவர். அவரது ஞாபகார்த்த தினத்தைத் திருகோணமலை மக்கள் கொண்டாடிய காலம் பொருத்தமானதே. அவரை இரண்டு தடவைகள் சந்தித்திருக்கின்றேன். ஒருதடவை யாழ்ப்பாணத்தில் மல்லிகைக் காரியாலயத்திற்கு நேரில் வருகை தந்திருந்தார். இருவரும் சிரித்திரன் ஆசிரியரைப் போய்ச் சந்திதோம். அடுத்த தடவை சென்னையில் அடையாறில் அவரைப் போய்ச் சந்தித்து உரையாடினேன். என்றுமே ஞாபகத்தில் வைத்திருக்கத்தக்க இலக்கியப் பெருமகன் தரும அரூப் சிவராம் அவர்கள்.
மல்லிகை ஜூன் 2009 : 69

Page 36
இ இந்தக் கால கட்டத்தில் மல் லிகை வெளியிடுவதுடன் ஒர் இல க்கியக் கடமையும் ஒன்றுண்டு என உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன். இன்று ஏராள மான யுவதிகளும் இளைஞர்களும் உங்களது இளமைக் காலத்தை விட, அதிகளவில் இலக்கியத்து றையில் வெகு ஆர்வமாக ஈடுபட்டு உழைத்து வருவதை அவதானிக் கக் கூடியதாகவுள்ளது. இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து இலக்கியக் கலந்துரையாடலொ ன்றை வார இறுதியில் மல்லிகைப் பந்தல் மூலம் நிகழ்த்தினால் என்ன என்ற யோசனையை உங்கள் முன் வைக்கின்றேன். இந்த யோசனை க்கு என்ன சொல்கிறீர்கள்?
வெள்ளவத்தை. எம். சரவணலிங்கன்
நல்லதொரு
ஆக்கபூர்வமான யோசனை. இருபது முப்பது பேர்- ஆண்க ளும் பெண்களும் இந்த இலக்கியக் கலந்துரையாடலில் கலந்து கொள்வது உத் தமம். இதில் ஒரு சங்கடமுண்டு. இத்தனை பேர்களை ஒழுங்கு சேர்ப்பது சற்றுச் சிர மம். உண்மையான இலக்கிய நேசிப்பு உள்ளவர்கள், கண்டிப்பாக வந்து கலந்து கொள்வோம் என நிச்சயப்படுத்திக் கொண் டவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு சம்மதம் தெரிவிக்கலாம். மல்லிகைப் பந்தலின் கீழ் நாம் இந்த ஏற்பாட்டை முன் நின்று செய்ய ஒப்புக் கொள்ளுகின்றோம்.
2 சஞ்சிகைக்கு 1மல்லிகை என்ற பெயர் வைக்கக் காரணம் என்ன?
புத்தக வெளியீட்டு நிறுவனத்தி
ற்கு மல்லிகைப் பந்தல் என்ற நாமகரணம் சூட்டக் காரணம் என்ன?
விகாக்குவில் ஆர். தவயோகன்
* எனது சுயவரலாறு நூலான எழுதப்
படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' என்ற புத்தகத்தை ஆற அமர ஒரு தடவை படித்துப் பாருங்கள். என் னைப் பற்றிய உங்களது வேறு சந்தேகங் களுக்கும் அந்த ஆத்மார்த்திகமான எழுத் துப் பதிவு சரியான விடை பகரும்.
2 உங்களுடைய மல்லிகை நேரம், எந்தெந்த நேரம்?
தெஹிவளை. எம். தவசீலன்
* காலை 7.30க்கு ஆரம்பிக்கும் எனது மல்லிகைப் பணி, சாயங்காலம் 5.30 உடன் முடிவடையும். ஞாயிறு, விடுமுறை நாட்களிலும் இதே நேர அடிடவணைதான்!
* இன்று முழு நாட்டிலுமே ஆட்கடத்தல், வன்முறை, இனச் சங்காரம், கற்றி வளைப்பு எனப் பல்வேறு நெருக்கடிகள் நடக்கும் போது, தமிழர்கள் இலக்கியவிழா, புத்தக வெளியீடு, எழுத்தாளர் சந் திப்புக் கூட்டங்கள் எனப் பல் வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது நமது இனத்திற்கு இன்று தேவை யானதொன்றா? இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
கொழும்பு- 12. கோவை அன்ஸார்
ஒ= ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்
ளுங்கள். வெறி பிடித்த பேரினவாதக் கூட்ட
மல்லிகை ஜூன் 2009 * 70

த்தினர் எங்களை முதலில் மனசளவில் முடமாக்கவே தெண்டிப்பார்கள். அதற் கான முன் ஆயத்தங்களே நீங்கள் மேலே சொன்ன சம்பவத் தொகுப்புக்கள்.
பாரம்பரியமும், ஆளுமையும், பின்புல மும் மிக்க ஒரு வீரிய இனத்தை இத்த கைய பேடித்தனமான செயல்களால் முட மாக்கி விட முடியாது என அவர்களுக்குத் துலாம்பரமாகவே விளங்கப்படுத்த எடுக் கும் பகிரங்கப்படுத்துதலே இவ்விழாக்க ளும் நிகழ்ச்சிகளுமாகும். எனவே சிறிய தேசிய இனம் தனது மன வலிமையையும், இருப்பையும், பாரம்பரியத்தையும் நிலை நிறுத்த இக்கொண்டாட்டங்கள் இன்று அத் தியாவசியம் தேவை. நீங்கள் நினைப்பது போல, எதிரி அப்படியொன்றும் வல்லமை படைத்தவனல்ல! இந்த நிகழ்ச்சிப் பரம்பல்
கள் எம்மினத்தின் மானஸிகப் பெருமை
யின் பெருவடிவமே தவிர, வேறல்ல.
இலி நீங்கள் இணையத்தின் ஊடாக இலக்கியத் தேடல் முயற்சி செய் கிறீர்களா? புத்தளம்.
Go
ஷர்மிலா ஸாரூஸ்
மல்லிகைக்காக உழைப்பதே எனது பெரும்பாலான தினசரி வேலை, நண்பர்கள் மூலம் கேட்டறிந்து கொள்வேன். எனக்கு இந்த விஞ்ஞான அதியற்புதங்களில் மினை க்கெடுவது அவ்வளவுதூரம் ஒத்துவராத ஒன்று. புத்தகங்களைத் தேடித் தேடிப் படிப்
பதுதான் எனது நீண்ட நாளைத் தேடல்
முயற்சி. சி நீங்கள் தியேட்டர்களில் புதுப் புதுச் சினிமாப் படங்கள் பார்த்து ரளிலிப்பதுண்டா?
பசறை. எல். தெய்வீகன்
ÇşP எனது இளமைக் காலத்தில் புதுப் படம் வெளிவந்த முதல் நாளே பார்த்து விடு வேன். பாகவதர், சின்னப்பா கொடி கட்டிப் பறந்த காலமது. நான் பாகவதர் பக்கத் தைச் சேர்ந்தவன். அதே சமயம் சின்னப்பா வுக்கு எதிரியுமல்ல. சின்னப்பாவின் ஆரிய மாலா இன்றும் என் நெஞ்சில் நிலைத்திரு க்கும் பேசும் படம். இன்று நவீன சாதன ங்கள் சினிமாவை ஆட்கொண்டு விடுகின் றதே தவிர, மனித உழைப்பு, முகபாவம், நடிப்பு, பின்தள்ளப்பட்டு வருகின்றது என்றே கருதுகின்றேன்.
2 உங்களது மல்லிகை அநுபவ ங்களை எங்களுக்குச் சொல்லக் கூடாதா?
ஹட்டன். எஸ், தனமானிக்கம்
* மல்லிகை அநுபவங்கள் வெறும் கேள்வி- பதில் பகுதியாக அடுக்கிச் சொல்லிவிடக் கூடிய வெறும் தகவல் சங் கதியல்ல என்பதை நீங்கள் முதலில் புரி ந்து கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலத்து அநுபவக் களஞ்சி யம், அது. கட்டம் கட்டமாக எனக்கு ஏற் பட்ட படுபாரிய சோதனைகள், மல்லிகை க்கு இடையிடையே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்குக் கை கொடுத்து உத விய பெருந்தகைகள், விளம்பரம் தந்துத விய வியாபாரப் பெருமக்கள், எழுதி உதவி யவர்கள், மல்லிகைக்கு உதவுவதாகப் பர வலாகக் காட்டிக் கொண்டு, கட்டம் கட்ட மாகத் தம்மைத் தாமே உயர்த்திக் கொண் டவர்கள், எங்கிருந்த போதிலும், மல்லி கையை நேசித்தவர்கள், மல்லிகைப் பந் தல் ஊடாகத் தமது படைப்புக்களை வெ5ரி
மல்லிகை ஜூன் 2009 ல் 71

Page 37
மல்லிகை ஜூன் 2009 கீழ் 72
பிட உந்து சக்தியாகத் திகழ்ந்த பெரும் மனசு படைத்தவர்கள், அட்டைப்படத்தில் உருவம் பதிக்கப்படவில்லை என்ற கார னத்தால் கோபித்து, அகன்று போனவர் நள், மல்லிகையூடாகத் தம்மைத் தாமே வளர்த்துக் கொண்ட போதிலும் கூட, அதை வெளியே காட்டிக் கொள்1ே வெட்கப்படுகி ன்றவர்கள்- இப்படியானவர்களைப் பற்றிய எனது மனப் பதிவுகள் தான் அந்த எழுத் துக்களில் உள்ளீடாக அமையும், கொஞ் சக் காலம் அதற்காகப் பொறுத்திருந்து தான் பாருங்களேன்
23 நண்பர்களை நீங்கள் எப்ப டித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
கொக்குவில், ஸ், சிவபாலன்
* நாள் இதுவரையும் யாரையுமே நண்பர்களாகத் தேடிப் பிடித்துப் பழக்கப் படுத்திக் கொண்டவனல்ல நண்பர்கள் தான் என்னை நண்பனாகத் தேர்ந்தெடுத் துப் பழகியும் வருகின்றனர்.
தமிழகத்தில் இன்றைய சிற تیر ந்த எழுத்தாளர்களில் என்ன சிற ப்பம்சங்களை அவதானித்துள் ஸ்ரீர்கள்?
அக்கர்வேஜி. asr. (Hariripir arr
F= நிறைய நிறைய உலக இலக்கிபங்
களைப் படிக்கின்றனர். அதுபோலவே, சோம்பல் பட்டு முடங்கிப் போகாமல் நிறைய நிறைய எழுதுவதுடன், ஈடச் சுட அவற்றையெல்லாம் நூலுருளில் வெளி
பிட்டு விடுகின்றனர்.
* உங்களது காலத்திற்குப் பின்
னர் மல்லிகையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
ர்கொழம்பு. F
pID I p p
* நல்லதொரு அத்திவாரத்துடன் ஆழ்
ந்தகன்ற முயற்சியுடனும் தீர்க்க தரிசனப் பார்வையுடனும் ஆரம்பிக்கப்பட்ட எந்த நன் முயற்சியுமே தனக்கான எதிர்காலப் பாதை பைத் தானே தான் சுயமாக அமைத்துக் கொள்ளும். இது சர்வ நிச்சயம் பயப்படா தீர்கள். மல்லிகை தொடர் இதழகளைத் உங்களது பேரப்பிள்ளையின் பேரன் தொடர்ந்து படிப்பான்.
தி நான் பல்கலைக்கழகப் படிப் பைப் பூர்த்தி செய்து விட்டு வரு ங்காலத்திற்காகக் காத்திருப்பவன். இரவில் படுத்தால் தூக்கம் வருவ தேயில்லை, என்ன செய்யலாம்?
шопraаћйшпшї. ஆர் சுதனன்
* உங்களைப் போன்ற் இன்று ஆயிரக்
கனக்கான இளைஞர்கள் மன உழைச்ச லால் உழன்று கொண்டிருக்கின்றனர். இந் தப் பருவத்தில் இதெல்லாம் இயல்பானதே. இதையிட்டு மனச் சஞ்சலமடையாதிர்கள். பயப்பட வேண்டாம். தெளிவாக இருங்கள். திடமாகச் சிந்தியுங்கள். உங்களது பன் நிலையில் தான் இன்று பலர் இந்த மண்ணில் நடமாடித் திரிகின்றனர். இப் படியே கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், கடைசி யில் மனநோய்க்கு ஆட்பட்டு விட வேண்டிய துரதிர்ஷ்ட நிலை தோன்றினா லும் ஆச்சரியப்பட வேண்டியதில்ல்ை. எனவே, மனசைத் தெளிவாக வைத்திருங் கள். தன்னம்பிக்கை தரும் புத்தகங்க ளைத் தேடித் தேடிப் படித்து வாருங்கள்.
2011 g கதிரேசன் வீதி, கொழும்பு 13 சூரியில் வசிப்பவரும், மi: ஆசிரியரும், eTTTTTTS S T S Tklkk LLL TTSTeekLkLOMLL BB HH T TTOTTLL eS TTLaT LkLkTMk kTTC LS0LES A. இலக்கத்திலுள்ள 11,411 '1' அர்சிதித்தில் அச்சிட்டு வெளியிடப் பெறாது.

: : రిసెస్రాలను ్పు ype yes///AGG。○cm GT CALA
.)ويلكا للجمجمة (رض ി:E
Երիտլե եղել երեքա վերցրելիայի:
-LLIL
Դեյ-եվիլլեր երեք
10:11.15| =
"ninje | 20 Sikhiesains,
Combo
-*

Page 38
r
I
ETT
T FIT
 

2009
| .