கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யான் கண்ட இலங்கை

Page 1


Page 2


Page 3

யான் கண்ட இலங்கை
டாக்டர் - மு. வரதராசன், எம்.ஏ., எம்.ஓ.எல்., பிஎச்.டி. தமிழ்த்துறைத் தலைவர், பச்சையப்பன் கல்லூரி
விற்பனை உரிமை
பாரி நிலை யம்
59, பிராட்வே, சென்னை - 1

Page 4
இரண்டாம் பதிப்பு : அக்டோபர் 1955.
உரிமை ஆசிரியர்க்கு
காக்ஸ்டன் அச்சகம், சென்னை 1.

குறிப் பு தமிழ்ப் பெரியார் திரு. வி. க. எழுதிய இலங்கைச் செலவு 1 என்பதை இளமை
யில் படித்தபோது என் உள்ளத்தே இலங் கையைப் பற்றிய அழகிய கற்பனே எழுங் தது. கோவைகிழார் திரு. சி. எம். ராமச் சந்திரன் செட்டியார் எழுதிய கடலின் கண் முத்து’ என்ற நூலைப் படித்த பிறகு விரிவாக அறிந்து ஆர்வம் கொண்டேன். இடையிடையே இலங்கை நண்பர்களின் அளவளாவல் என் உள்ளத்தை அந்த முத்துடன் பிணைத்துவந்தது. கேரில் கண்டறிந்தபின், தமிழ்நாட்டிலிருந்து இலங்கை யைப் பிரித்துவைத்துள்ள கடலை நினைந்து நினைந்து கொங்தேன்.
தமிழர்களுக்குத் தாயகம் தமிழ்நாடு ; இலங்கையோ அவர்களுக்குக் கெழுதகை நட்புக்குரிய நல்ல நாடு. வரலாறு, அர சியல், சமயம், மொழி முதலான பலவகை யாலும் இந்தத் தொடர்பு நீடித்துவரு கிறது, பாழும் பொருள் பற்றிய போராட் டம் இன்று ஓரளவு பிணக்கையும் பகை மையையும் வளர்த்துவரினும், அதைக் கடந்து காண வல்லவர்க்கு உண்  ைம தெளிவாக விளங்கும்.
என் அனுபவமும் உணர்வும் இளைஞர் களுக்குப் பயன்படக் கூடும் என்று பயணக் குறிப்புக்களைக் கடிதங்களாக அமைத்து நூல்வடிவாக்கியுள்ளேன்.
(p. 6).

Page 5

I 1 J
விவேகாநந்த சபை,
34, மேட்டுத் தெரு, கொழும்பு.
1 - 1-5O.
அன்புள்ள அரசு,
நான் இப்போது எங்கே இருந்து இந்தக் கடிதம் எழுதுகிறேன் தெரியுமா? வறுமையில் வாடிய இந்திய நாட்டின் புகழைச் செல்வம் செழித்த அமெரிக்காவில் முழங்கிப் பரப்பி வந்த வீரர் விவேகாநந்தர் திரும்பிவந்து கால் வைத்த நகரம் எது? கொழும்பு நகரம் அல்லவா ? அந்தக் கொழும்பு நகரத்தில் அவர் பெயரால் நிறுவப்பட் டுள்ள சபையிலிருந்து இந்தக் கடிதம் எழுதுகிறேன். இந்த விவேகாநந்த சபை மேட்டுத்தெரு என்னும் தெரு வில் கொழும்பு நகரத்தின் நடுவில் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தவுடன் என் உள்ளம் சிறிது நேரம் அவருடைய வீர வாழ்வைப் பற்றியே எண்ணிப் பெருமிதம் உற்றது. வாளோ துப்பாக்கியோ கையில் எடுத்து ஆயிரக் கணக்கான மக்களைக் கொன்று குவிக்கும் காட்டுமிராண்டியை நான் எப்போதுமே வீரன். என்று மதிப்பதில்லை. ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வு மேம் படும் வகையில் தொண்டு செய்து உயர்ந்த கருத்துக்களைப் பரப்புகின்றவரையே வீரர் என்று நான் மதித்துவரு கிறேன். நீ பள்ளிக்கூடத்தில் சேர்ந்த தொடக்கத்தில்

Page 6
யான் கண்ட இலங்கை
யாரைப் பெரிய ஆசிரியர் என்று மதித்தாய்? உரத்த குர லில் பேசி மருட்டி அடித்து அச்சுறுத்தும் ஆசிரியரே மிக வல்லவர் என்று அப்போது எண்ணியிருப்பாய். உயர் கிலைப் பள்ளியில் படிக்கும் இப்போது நீ யாரை வல்லவர் என்று மதிக்கிருய் ? பாடங்களைத் தெளிவாக அழகாகச் சொல்லி உன்னைத் திருத்தும் அன்பு கொண்ட ஆசிரியரைத் தானே இப்போது மதிக்கிருய்? அதுபோல் போலி வீர மும் உண்மை வீரமும் தெளிவாகிவிடும். புத்தரும் ஏசுவும் திருவள்ளுவரும் திருநாவுக்கரசரும் விவேகாநந்தரும் காந்தி யும் உண்மை வீரம் உடைய பெருமக்கள். இந்தத் தூய கினைப்போடு மகிழ்ச்சியோடு இதை எழுதுகிறேன்.
விஞ்ஞானத்தில் எவ்வளவு குறை இருந்தாலும் இருக் கட்டும். வியக்கத்தக்க முன்னேற்றத்தை வாழ்வில் கண் டிருக்கிருேம். அதற்காக நன்றியோடு எண்ணவேண்டாமா? பகலுணவு சென்னையில் உண்டேன். சிற்றுண்டிக்குக் கொழும்பு வந்து சேர்ந்தேன். மூன்று மணி நேரத்திற்குள் மணிக்கு நூற்றெழுபது மைல் வேகத்தில் பறந்து வந்து சேர்ந்தேன். இன்று காலை அங்கே உங்களோடு வீட்டில் இருந்தேன். மாலையில் வாலாஜாபாத் அப்பா அவர்க ளோடும் மற்றவர்களோடும் இங்கே இருக்கிறேன். உங்க ளுக்கும் எங்களுக்கும் இடையே கடல் இருக்கிறது. எத் தனையோ தீவுகள் இருக்கின்றன; எத்தனையோ மலைகளும் காடுகளும் ஆறுகளும் இருக்கின்றன. எவ்வளவு தொலைவு எவ்வளவு குறைந்த நேரம் ! என்ன வியப்பான பயணம் ! இப்படிப்பட்ட நன்மையைச் செய்யும்போது இதற்காக விஞ்ஞானத்தை வாழ்த்த வேண்டும் அல்லவா?
விஞ்ஞானம் நன்மையைச் செய்தது. ஆனல் அதன் செயலில் அன்பு இல்லை : ஒருவகை உணர்ச்சியும் இல்லை. அதன் அமைப்பிற்கும் ஆக்கத்திற்கும் அடிப்படையில்

யான் கண்ட இலங்கை - 7
V--
மனிதனுடைய அறிவு மட்டுமே விளங்குகிறது. ஆனல், இந்த விவேகாநந்த சபையாரின் உதவியை என்ன என்பது? இவர்களின் உதவியில் எவ்வளவு அன்பு 1 எவ்வளவு ஆர்வம் ! இவர்களின் முகமலர்ச்சி ஒன்று போதுமே, எங்கள் கண்களிலும் உள்ளங்களிலும் இன்பத் தேன் ւմnսյժ ց: / இவர்களின் அன்பான பேச்சைக் கேட்டு இனிய உதவிகளைப் பெற்றவுடன், நாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிருேம் என்பதையும் மறந்துவிட்டோம் ; சொந்த ஊரில் பழகுவதுபோல் ஆயிற்று. விமான நிலையத்திலேயே இவர்களுடைய அன்பான வரவேற்பு எங்களுக்குக் கிடைத்தது.
விமானத்திலிருந்து இறங்கி இலங்கை மண்ணில் கால் வைத்துச் சில அடி நடந்தவுடன, ஒரு பத்திரிகையின் ஆசிரியர் எங்களைக் கண்டு, நெடுங்காலம் பழகியவர்போல் அளவளாவி அன்பு காட்டினர். சில விநாடிகள் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கொழும்புச் சூரிய ணுடைய கதிர்களைக் கண்கூசப் பார்த்தபடியே மேற்கு நோக்கி நின்ருேம். நிழற்படம் எடுக்கப்பட்டோம். தம் செய்தித்தாளில் வெளியிடுவதற்காக இலங்கைக்கு ஏதே ணும் செய்தி விடுக்கவேண்டும் என்ருர், நானும் நண்பர் திரு. பரமசிவானந்தமும் செய்தி கொடுத்தோம். அந்தப் பத்திரிகை ஆசிரியரையும் எங்களையும் இவ்வாறு தொடர்பு படுத்திய அருமைத் தமிழ் மொழியை வாழ்த்தினுேம்,
விமானப் பயணத்தைப் பற்றி முதலில் எழுத மறந்து விட்டேன். அதைப் பற்றி விரிவாகத் தெரிவிக்கும்படி நீ சொல்லியனுப்பினுய் அல்லவா?
வாலாஜாபாத் அப்பாவும் நானும் மற்றவர்களும் அவ ருடைய மோட்டாரில் புறப்பட்டு வந்தோம் அல்லவா ?

Page 7
8 யான் கண்ட இலங்கை
காங்கள் நேராக மவுண்ட் ரோட்டில் உள்ள விமானக் கம் பெனியின் அலுவலகத்திற்குச் சென்ருேம். அங்கே பாஸ் போர்ட் 2 முதலான எல்லாவற்றையும் காட்டினுேம். எங்கள் சாமான்களையும் எடை போட்டார்கள். எங்களையும் நிறுத்துப் பார்த்துக் குறித்துக்கொண்டார்கள். விமானத்தில் செல்ல வேண்டிய சாமான்கள் குறித்த அளவு எடைக்குக் குறை வாக இருந்தன. உடைகளும் படுக்கையும் கண்ணுடி முதலானவைகளும் தவிர வேறு சாமான்கள் எங்களிடம் இல்லாததால், எடை மிகுதியாவதற்குக் காரணமே இல்லை. திருக்குறளும் தாயுமானவரும் தவிர வேறு நூல்களும் நான் எடுத்துக்கொள்ளவில்லை அல்லவா ? டிக்கட் பெற்ற வுடனே அந்தக் கம்பெனியின் மோட்டாரிலேயே நாங்கள் புறப்பட்டோம்.
மீனம்பாக்கத்திற்குச் சென்று சேர்ந்தவுடன் பல கடமைகள் இருந்தன. நாங்கள் எ டு த் துச் சென் ற பணத்தை இலங்கை நாணயமாக மாற்றிக்கொண்டோம். இங்கே மாற்றுவதற்குக் கழிவு வேண்டியதில்லை என்றும் இலங்கையில் மாற்றுவதானல் கழிவுப் பணம் தரவேண்டும் என்றும் கூறினர்கள். மாற்றிய பணத்தைப் பற்றியும், அணிந்துகொண்டு செல்லும் மோதிரம் முதலியவைகளைப் பற்றியும் விரிவாக எழுதித் தரும் பாரத்தை நிரப்பிக் கையெழுத்து இட்டுச் சேர்த்தோம். பெட்டிகளையும் படுக்கைகளையும் திறந்து காட்டும் சடங்கு நடைபெற்றது. அவற்றை எடை போட்டபின் தனித்தனியே சீட்டு ஒட்டி விமானத்தின் பின்புறத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார் கள். கையில் பைகளை மட்டும் வைத்திருக்கலாம் என்று அனுமதி தந்தார்கள். பாஸ்போர்ட்டு முதலியவைகளைப் பார்வையிட்டார்கள். இலங்கையும் இந் தி யாவும் ஒரு நாடாகக் கருதப்பட்டு ஒன்ருக இருந்த காலத்தில் இவ்

யான் கண்ட இலங்கை 9.
வளவு த00ணிக்கை முதலியன இல்லை. பூகோள அமைப் பின்படி, இந்தியக் காயிடமிருந்து சிறிது பிரிந்து நிற்கும் மகள் போல் இலங்கை இருந்த போதிலும், இரண்டும் வேறு வேறு அரசாங்கம் என ஏற்பட்டவுடனே, எவ்வளவு சோத&ன எவ்வளவு தணிக்கை ! எவ்வளவு ஏற்பாடு ! அரசாங்கம் வேறுபட்டவுடன், பார்க்கும் பார்வை Opatóid எல்லாம் வேருகிவிடும்போல் தோன்றுகிறது. மனிதன் இயற்கையமைப்பைவிடச் சட்டத்தைப் பெரிதாக மதிக் கிருன் என்பது தெளிவாகிறது. அரசாங்கச் சட்டம் மட்டும் என்ன? சமூகத்தின் சாதிப் பிரிவும் அப்படித்தானே? ஒரே ஊரில் ஒரே தெருவில் ஒரே கிணற்று நீரையும் ஒரே வகையான உணவையும் உண்டு ஒரே நிறமாக உள்ள வர்கள் வேறு வேறு சாதியாம், வேறு வேறு பிறப்பாம்! ஒருவரோடு ஒருவர் கலந்து உண்ணவும், பெண் கொள்ள வும் கொடுக்கவும் சமுகத்தின் தடைகள் எவ்வளவு கடுமை யாக இருக்கின்றன ! இயற்கையமைப்பைவிடத் தானே ஏற்படுத்திக்கொள்ளும் கட்டுப்பாடுகளேயே மனிதன் சிறப் பாக மதித்து நடக்கிருன்.
இலங்கையும் தமிழ்நாடும் பூகோள அமைப்பால் தொடர்புபட்டு இருப்பதோடு, வேறு தொடர்பும் பெற் றிருக்கின்றன. தமிழ் மொழி இலங்கையிலும் பலர் பேசும் மொழியாக இருக்கிறது. தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர் களில் பலர் இலங்கை மண்ணைச் சார்ந்தவர்கள். இலங்கை யில் தமிழரசர் சில நூற்றண்டுகள் ஆட்சி செலுத்தி யிருக்கின்றனர். இலங்கையில் பெரிய சாலைகளை அமைத் தவர்கள் தமிழர்; பெரிய கட்டிடங்களைக் கட்டியவர்கள் தமிழர் ; தேயிலைத் தோட்டங்களாலும், ரப்பர்த் தோட்டங் களாலும் இலங்கையைச் செல்வம் கொழிக்கும் தீவாகச் செய்தவர்கள் தமிழர்; மேனுட்டுப் படிப்பு முதலிய பயன்

Page 8
O யான் கண்ட இலங்கை
களப் பெற்றுப் பரப்பி இலங்கையை நாகரிகமான நாடாகச் செய்தவர்கள் தமிழர். இவ்வாறு, இலக்கியத் தொடர் போடு, மொழி, ஆட்சி, உழைப்பு, நாகரிகம் முதலிய பல காரணங்களாலும் தொடர்புகொண்டு விளங்கும் நாடுகளாக இருந்தும், எவ்வளவு வேறுபாடு ! தமிழ்நாட்டிலிருந்து இங்கிலாந்துக்குச் செல்வதற்கு எவ்வளவு முன்னேற்பாடு தேவையோ, அவ்வளவு முன்னேற்பாடு இலங்கைக்கு வருவ தற்கும் தேவையாக இருக்கிறது. காரணம் என்ன என்ருல், வேறு வேறு அரசாங்கம்! இதைத் தவறு என்று காட்டுவ தற்காக எழுதவில்லை; இன்றைய உலகம் எப்படி அமைந் அதுள்ளது என்பதை விளக்குவதற்காகவே எழுதுகிறேன். எதிர்காலத்தில் தமிழ்நாடும் மைசூரும் வேறு வேறு அரசாங்கத்தின்கீழ் வருமானல், இதே நிலைமைதான் ஏற் பட்டுவிடும் ! ஏன் ? அரசாங்கம் என்ருல் வெறுங் கொடியும் முத்திரையும் மட்டும் அல்ல ; பொருளாதாரச் சிக்கல் அடிப் படையில் இருப்பதால்தான் இவ்வளவு வேறுபாடு. பொரு ளின் ஏற்றத்தாழ்வு ஒரே குடும்பத்தின் அண்ணன் தம்பியை ஐயம் வளர்த்துப் பகை மூட்டிப் பிரிப்பதுபோல் தான், ஒரே உலகத்தில் ஒரு மண்ணின் பகுதிகளையே வேறு வேறு நாடாகப் பிரித்து வேறுபடுத்துகிறது. பணத்தின் ஆற்றலே ஆற்றல் ! அதனுல்தான் கொண்டு போகும் பணத்திற்குக் கணக்கு எழுதிக் கையெழுத்து இடுமாறு: கேட்கிருரர்கள். அங்கிருந்து இங்கு வந்தபோது இவ்வளவு தொகை என்ற வரையறை இல்லாமல் வந்தோம். ஆனல் இலங்கையிலிருந்து மீண்டும் நாங்கள் சென்னைக்கு வரும் போது, குறிப்பிட்ட தொகைக்குமேல் எடுத்துச் செல்ல விட மாட்டார்களாம். இதுதான் உண்மையான காரணத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது ! எல்லாம் பணம் ! எங்கும் பணப் போராட்டம் ! அதன் தொல்லையை மடியில் கட்டிக்

யான் கண்ட இலங்கை 1
கொண்டு உலகம் அமைதியாயிருக்க முடியுமா? மிகமிக பெருங்கிய அன்பையும் உறவையும் கெடுக்க அதனல் முடியும்போது, தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் உள்ள உறவு மட்டும் எவ்வளவு ?
விமானத்தில் செல்வோர் போய் உட்காருவதற்கு உரிய மணி அடித்தது. எங்கள் மூட்டைகளைப் பற்றிக் கவலை இல்லாமல் நாங்கள் கைவிசிக்கொண்டே வெட்ட வெளியில் நின்றிருந்த விமானத்தினுள் நுழைந்து உட் கார்ந்தோம். உள்தோற்றம் சென்னையில் ஒடும் அரசாங்க பஸ் போல், ஆனல் அதைவிட மிகச்சிறந்ததாக இருந்தது. இரு புற மும் மக்கள் உட்கார நல்ல இருக்கைகள்; இடையே போய்வர வழி; முன் பக்கத்தில் யந்திரமும் செலுத்துவோனும் உள்ள அறை; எங்கள் இருக்கைகளுக் குப் பின்னே விமானத்தில் கண்டக்டர்போல் உள்ள விமான மங்கையின் இருப்பிடமும் அவளுக்கு வேண்டிய பொருள்களும் இருந்தன. அவளுக்கு வேண் டி ய பொருள்கள் என்ருல், பயணம் செய்வோர்க்குச் சிற் நுண்டி முதலியனவாகப் பயன்படும் பொருள்கள்தான்; காப்பி, ஒவல்டின், பால், பிஸ்கோத்து, பெப்பர்மிண்ட் முதல் பஞ்சு வரையில் உள்ள பொருள்கள். அந்த இடத்தை அடுத்தாற்போல் விமானத்தின் வலப்புறத்தில் சிறுர்ே அறை; அவற்றிற்கும் அப்பால் பெட்டி படுக்கை முதலிய வற்றை வைக்கும் இடம்; அதற்கு வழியும் தனியே உண்டு. ஆகவே நல்ல பஸ்ஸைவிடப் பெரியது; அதை விட இடம் உள்ளது. அரசாங்க பஸ் என்று உவமைக்குச் சொன்னேனே தவிர, அந்தக் கற்பனையும் உனக்கு இல்லா மலிருப்பது நல்லது. அதில் உள்ள நெருக்கடியும், தலை இடிக்கும் தொல்லையும், கிற்கும் வேதனையும், முக்திக் கொள்வதற்காக நெருக்கும் போட்டி மனப்பான்மையும்,

Page 9
12 யான் கண்ட இலங்கை
அசைய்வும் முடியாதபடி அடைபட்டுக் கிடக்கும் அல்ல லும் ஆகியவற்றில் ஒன்றும் இங்கு இல்லை. பெரும்பாலும் பெருஞ் செல்வர்களே பயணம் செய்வது விமானம் ; ஏழைகள் எட்டிப் பார்க்க முடியாதது; ஆகையால் அப் படிப் பட்ட குறைகளுக்கு இடம் தருவார்களா? நாங்கள் சென்ற விமானத்திலும் பெருஞ் செல்வர்களே பலர் இருந் தனர் என்பது அவர்கள் உடுத்த உடையாலேயே தெரிங் தது. பட்டோ உயர்ந்த வேறுவகை ஆடையோ இல்லா மல் பருத்தியாடையே உடுத்து வந்தவர்கள் நாங்கள். எளிய ஆடை உடுத்தவர்களாக வேறு யாரும் அதில் காணப்படவில்லை. ஆங்கிலேயர் சிலர், குஜராத்திகள் சிலர், இலங்கையர் சிலர், தமிழரும் சிலராக இருந்தனர்.
விமானத்தினுள் நுழைந்தபோதே டிக்க ட்டைப பார்த்து உள்ளே விட்டார்கள். ஆகையால், விமானம் பறக்கும்போது டிக்கட் கேட்கும் வழக்கம் இல்லை. பயணம் செய்வோரின் நிழற்படம் இருப்பதால் ஆள் மாருட்டத்துக்கும் வழி இல்லை. ஆளுக்கு ஒவ்வோர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அருகருகே உட்கார்ந்தோம். கண்ணுடி வழியாக வெளிக் காட்சியைப் பார்ப்பதற்காக காங்கள சன்னல் ஒரமாக உள்ள இருக்கைகளில் உட் கார்ந்தோம். சன்னல் என்ருல், அது வீட்டில் உள்ளது போல் முழுவதும் திறக்கக்கூடியதோ, பஸ்ஸில் உள்ள கண்ணுடிச் சன்னல் போல் அரைப் பகுதி திறக்கக் கூடி யதோ அல்ல. முமுவதுமே திறக்க முடியாத சன்னல் தான். உள்ளே இருந்து நாங்கள் வெளியே இருப்ப வரைப் பார்க்க முடியும். ஆனல் வெளியார் எங்களைப் பார்க்க முடியாது. காற்றுப் போக வர வேறு வகையான ஏற்பாடுகள் உண்டு. காற்றை மிக வேகமாக்கிக்கொள்

யான் கண்ட இலங்கை 13.
ளவோ, வேகத்தைக் குறைத்துக்கொள்ளவோ, தக்க கருவி கள் அமைக்கப்பட்டுள்ளன. Y
விமானம் புறப்படும் நேரம் ஆயிற்று. அதற்கு உரிய மணியும் அடித்தது. ஆரவாரமான ஓசை எழுந்தது. மோட்டார் தரையில் ஒடுவதுபோல் விமானம் தண்ட வாளங்களின் மேல் ஒடத்தொடங்கியது. சிறிது நேரம் ஒடி ஒரிடத்தில் சில விநாடிகள் தங்கிப் பெரிய இரைச்ச லுடன் தரையை விட்டுக் கிளம்பியது. அதுவரையில் மண்ணுலக மக்களாய் வாழ்ந்த எங்கள் மனமும் கொஞ் சம் மேலே நோக்கியது. மண்ணுலகில் கிற்பவர்களிடம் விடைபெறலாம் என்று பார்த்தால் அதற்கு வழி இல்லை. நின்றவர்கள் எங்கள் விமானம் பறப்பதைப் பார்க்க முடிக் ததே தவிர, எங்களைப் பார்க்க முடியவில்லை. நாங்கள் அவர்களைப் பார்த்தோம். ஆனல் ரயிலில் செல்பவர்களைப் போல், கப்பலில் செல்பவர்களைப் போல், கையசைத்துக் காட்டவோ, கைக்குட்டை ஆட்டவோ முடியவில்லை. மண்ணை விட்டுப் பிரிந்தாலேயே இப்படித்தான் போலும் ! அந்த நிலைமை இரக்கமாகத்தான் இருந்தது. எங்களை வழி விட வந்தவர்களிடம் பிரியும் நேரத்தில் ஒரு சொல்லும் பேசி விடைபெற முடியவில்லை. ஒரு சைகையும் காட்ட முடியவில்லை.
மெல்ல மெல்ல விமானம் மேலே எழுந்தது. ஒவ் வோர் அடியாக மிக உயரக் கிளம்பிவிட்டது. இரைச்சல் மட்டும் காதைத் துளைத்தது. எச். ஜி. வெல்ஸ் முதல் முதலில் பறந்து சென்று விமானப் பயணத்தைப் பற்றி மிக இனிமையானது இன்பமானது என்று எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. காதைத் துளேக்கும் இந்த இரைச்சலைப் பற்றி ஏன் எழுதவில்லை என்று எண்ணினேன். சிறிது நேரம் கழித்து என் தவறு தெரிந்தது.

Page 10
4 யான் கண்ட இலங்கை
தரையைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். எப் படியோ சிறிது நேரத்தில் மிக உயர வந்துவிட்டோம். கை அசைக்கவில்லை, கால் அசைக்கவில்லை, இருந்தபடியே இருந்தோம் ; ஆனல் எத்தனையோ அடி உயரத்தில் பறங் தோம். பல ஆண்டுகளாக என் உள்ளத்தில் இருந்துவந்த ஒரு பொருமை தீர்ந்தது. 15ம் வீட்டுத் தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் சார்ந்தபடியே வானத்தை அண் ணுந்து கோக்கி, உயரத்தில் அமைதியாகப் பறக்கும் கழுகு களைப் பார்த்துப் பார்த்துப் பலநாள் பொருமைப் பட்டது உண்டு. எவ்வளவோ அறிவும் திறமையும் இருந்தும் கழுகுபோல் அந்த வானத்தின் அமைதியைப் பெற முடிய வில்லேயே என்று ஏங்கியது உண்டு. அந்தக் கழுகுக்கு வெள்ளைத் தாளில் உள்ள கருப்புக் கோடுகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது. நாம் அதை ஒரு கலையாக வளர்த்து எழுத்து என்றும் சொல் என்றும் பொருள் என்றும் இலக்கியம் என்றும் கலை என்றும் சொல்லி எவ்வளவோ பெருமைப்படுகிருேம். ஆனல் ஒன்றும் தெரியாத அந்தக் கழுகு எவ்வளவோ உயரத்தில் அமைதியாகப் பறந்து மற்ற உயிரினங்களுக்கு எட்டாத வாழ்க்கை வாழ்கி கிறது. எல்லாம் தெரிந்த மனிதன் தன் எண்சாண் உடம் பைச் சில அடிகள் உயர்த்த முடியவில்லை. விலங்கு பூட் டிய கைதிபோல் உடம்புக்குள் அகப்பட்டு மண்ணின் இழுப்பாற் றலால் (Gravitation) இழுக்கப்பட்டு மண் ணுேடு மண்ணுய் ஒட்டிக்கொண்டிருக்கிருன். மக்க ளில் யாரோ சிலர் எத்தனையோ நாள் அதே வேலையாய்ப் பயின்ற பிறகு, அந்த உடல்சுமையைத் தூக்கிக்கொண்டு சில அடி உயரம் கிளம்பி உடனே பொத்தென்று விழு கிருரர்கள். இதை நாம் எல்லாரும் சேர்ந்து பெரிய திறமை என்று கொண்டாடி, உயரத் தாவுதல் (Highjump) என்று பெயரும் வைத்துப் பெருமையும் அடைந்து

யான் கண்ட இலங்கை 15
பரிசும் வழங்குகிருேம். கினத்தாலும் வெட்கக்கேடாக இருக்கிறது, அந்தக் கழுகோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது. இவ்வாறு 15ான் கழுகைப் பார்த்தும் மற்றப் பறவைகளைப் பார்த்தும் பொருமைப்பட்ட நாட்கள் பல. உனக்கும் அந்தப் பொருமை இருக்கும் என்று எண்ணு கிறேன். அங் த ப் பொருமை எல்லாம் இன்றுதான் தீர்ந்தது. கழுகு காணுத எல்லையில் பத்தாயிர அடி உயரத் தில் மேக மண்டலங்களையும் கடந்த உயரத்தில் பறந்து மகிழ்ந்த பிறகு, என் பொருமை அடியோடு தீர்ந்தது. இறக்கை இல்லாமல் வாழும் மனிதன் அறிவின் திறமை யால் கழுகை மிக எளிதில் வென்றுவிட்டான். கழுகு கழுகுதான் ! அதற்கு ஒரு சிறப்பு ஏது? மனிதன் மனிதன் தான்.
சென்னைக் கடற்கரை தெரிந்தது. கட்டிடங்கள் நெருங்கிய சென்னை நகரம் தெரிந்தது. தாம்பரமும் ரயில் கிலையமும் தண்டவாளப் பாதையும் உற்றுப் பார்த்த பார் வைக்குத் தெரிந்தன. பக்கிங்காம் கால்வாய் கடற்கரை ஒரமாகக் கோடு கிழித்தாற்போல் காணப்பட்டது. விமா னத்தில் இப்பக்கமும் அப்பக்கமும் பார்ப்பதற்கு ஏற்ற வகையில், மறுபக்கத்துச் சன்னலே அடுத்த இடமும் காலி யாக இருந்தது. ஆகவே சிறுபையன்போல் நான் அடிக் கடி இப்பக்கமும் அப்பக்கமுமாக மாறி மாறி உட்கார்ந்தேன். வலக்கைப் பக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிறு சிறு ஊர்கள் தெரிந்தன. இடப் பக்கத்தில் கடலும் நில மும் கொஞ்சும் காட்சி மிக அழகாக இருந்தது. அந்தக் காட் சின்யக் கடிதத்தில் சில சொற்களால் எழுதிவிட முடியுமா? நம் தாய்மொழி எவ்வளவோ ஆற்றல் உடைய அருமை மொழிதான். ஆனலும் அதன் சொற்களும் இப்படிப் பட்ட அனுபவத்தை விளக்க முடியாது.

Page 11
16 யான் கண்ட இலங்கை
சென்னைக் கடற்கரையில் கின்றுகொண்டு எழுங் தெழுந்து வரும் அலைகளைப் பார்க்கும் காட்சி வேறு. அங்கே அலைகளின் ஆற்றலையும் ஆரவாரத்தையும் கண்டு ஒதுங்கி நிற்கத் தோன்றுகிறது. நிலத்தின் ஆற்றலை அங்கே காண முடியவில்லை. நிலம் ஒன்று இருப்பதும் அங்கே கினைவுக்கு வருவதில்லை. மணல் வெளியில் அலைநீர் வந்து வந்து மீளும் தன்மையைப் பார்த்துப் பார்த்து மறந்துவிடுகிருேம். அலைகள் ஆரவாரத்தோடு மலைபோல் எழுந்து உடைவதை யும் கரைவதையும் மட்டும் பார்த்து நிற்கிருேம். ஆரவாரத் தின் பெருமை மட்டும் தெரிகிறதே தவிர, அமைதியின் சிறப்பு ஒன்றும் கடற்கரையில் கிற்கும்போது தெரிவதில்லை.
ஆனல், பல்லாயிரம் அடிகளுக்குமேல் வானத்தில் நின்று கடற்கரையைப் பார்க்கும் அழகு வேறுதான். நிலம் என்ன பொறுமையோடு என்ன அமைதியாக இருக்கிறது என்பது அங்கிருந்து பார்த்தால்தான் தெரிகிறது. கடல் தான் வாய்திறந்து பேசுகிறது. வானத்திலிருந்து பார்த்தால் கடலும் ஆரவாரமாகவோ பரபரப்பாகவோ இருப்பதாகத் தெரியவில்லை. அமைதியாகத்தான் தோன்றுகிறது. கரை யோரத்தில் மட்டுமே எங்கும் வெண்மை காணப்படுகிறது. அசைவற்றுக் கிடக்கும் கில ம க ளே மெல்ல நெருங்கிக் கடலன்னே அறிவுரை கூறுவதுபோல் தோன்றுகிறது. அன்னை எல்லா அணிகலன் க ளே யும் நிலமகளுக்கே கொடுத்துவிட்டு, தூய நீல நிற ஆடைமட்டும் உடுத்துப் பேசுகிருள். முன்தானேயில் மட்டும் வெண்ணிறக் கரையும் கரையை அடுத்து வெண்ணிறப் பூ வேலைப்பாடும் இருக் கின்றன. நிலமகள் பலவகை அணிகலன்களை உடுத்துப் பல நிறங்களால் பொலிந்து விளங்குகிருள். ஆனல் இவ்வளவு அன்பான தாயின் பேச்சுக்குச் செவிகொடாத வள் போல் அசைவற்றுக் கிடக்கிருள். பெற்ற மனம் பித்து,

யான் கண்ட இலங்கை 17
பிள்ள மனம் கல்லு என்னும் பழமொழி பொய் அல்ல, பாவம் !
நிலமும் கடலும் இவ்வாறு பேசும் பேச்சு யாருக்கு விளங்குமோ? இந்தக் காலம் கடந்த பெரும் பேச்சை உற்றுக் கேட்க மலைகளும் குன்றுகளும் தலைநீட்டிப் பார்க் கின்றன. இவைகளும் பேசச் சலிப்படையவில்லை ; அவை களும் கேட்கச் சலிப்படையவில்லை.
நிலத்தைக் கடல் விழுங்கிவிடுகிறதாம் ! என்ன வீண் பழி சுமத்துகிருர்கள், பாவம் ! உயர்ந்த நிலையில் நின்று உயர்ந்த மனப்பான்மையோடு பார்த்தால்தானே உண்மை தெரியும். நிலத்துக்கும் கடலுக்கும் உள்ள அன்பான உற வைப் போல் வேறு அன்பான உறவே இல்லை என்று சொல்லலாம். ஒரு பக்கம் நிலத்தின் பொறுமை ; ஒரு பக்கம் கடலின் தியாகம். ஆற்றல் எல்லாம் அடங்கி அமைதி பெற் நுக் கடல் தாய் கிலமகளுக்கு அன்பு காட்டுகிருள். இந்தத் தாய்மனத்தை உணராமல் என்னென்னவோ பழி சுமத்து கிருர்கள்.
பச்சைக் காடுகளைவிட, பல கிற வீடுகள் கொண்ட ஊர்களையும் விட, மலைகளிலிருந்து புறப்பட்டு வளைந்து வளைந்து செல்லும் ஆறுகளே நிலமகளுக்கு அணி செய் கின்றன. பூகோளப் படத் தில் எழுதப்படுவது போல, தொலைவிலிருந்து காணும்போது ஆறுகள் தோன்றுகின் றன. ர்ே இருந்தாலும் வற்றியிருந்தாலும், இந்த ஆறுகள் நிலமகளுக்கு அழகாகவே அமைந்துள்ளன.
ஆயினும் இந்த அணிகலன்களின் அழகைவிட என்
உள்ளத்தைக் கவர்ந்தது ஒன்று. அது, கடலன்னையின்
லேப் புடவையின் வெண்ணிறப் பூவேலைப்பாடே ஆகும்.
2. இ.

Page 12
18 யான் கண்ட இலங்கை
கடலில் உள்ளே செல்லச் செல்ல அலைகள் இல்லை என்று சொல்வார்கள். அது உண்மை அல்ல. உட்பகுதியில் அலை கள் குறைவு என்று மட்டும் சொல்லலாம். காற்று உள்ள வரையில் கடலில் அலைகள் இல்லாமல் இருக்க முடியுமா ? நீரோ நெகிழ்ச்சி யுடையது ; காற்றின் அசைவால் அசை வது. அசைந்து எழும் அலைகள் கடல் நடுவிலும் உண்டு. ஆனல் கரையோரத்தில் காணப்படுவது போல் அங்கே அலைகள் தொடர்ச்சியாகவும் மிகுதியாகவும் இல்லை. அங் கங்கே சிறுசிறு கூட்டமாக அலைகள் சேர்ந்து வெண்ணிற மாய் உடைந்து கரைகின்றன. ஒர் இடத்தில் கரைந்து மறையும் அலைகள் சிறிது நேரத்திற்குள் அடுத்த மற்ருேர் இடத்தில் தோன்றி மோதி வெண்ணிறமாய்க் கரைகின்றன. இவ்வாறு அங்கங்கே காணப்படும் வெண்மைக் காட்சியே நீலப் புடைவையில் தூய முத்துக்களேக் கோத்தாற்போன்ற பூ வேலைப்பாடாக விளங்குகின்றன. அந்த அலைக் கூட்டங் களே மட்டும் நோக்கும்போது, அன்னப் பறவைகள் வெண் ணிறச் சிறகுகளை விரித்துப் பொய்கை எங்கும் பரவி ஓர் இடத்தில் மூழ்கி மற்ருேர் இடத்தில் எழுந்து தோன்றித் தோன்றி மறைவதுபோல் விளங்குகின்றன.
சென்னையிலிருந்து பெங்களூருக்கோ, பம்பாய்க்கோ, டில்லிக்கோ விமானத்தில் சென்ருல் இந்தக் காட்சி க்கு இடம் இல்லை. இலங்கைக்குச் செல்லும் பயணத்தில்தான் கடல் நிலத்தோடு கொஞ்சும் அருமைக் காட்சியைக் காண முடிகிறது. விமானத்தின் பாதை (அப்படி ஒரு பாதை யாரும் பாடுபட்டு அ  ைம க் கவி 6υ βου. 9/9كي/ சென்னையி லிருந்து கொழும்புக்கு இழுக்கப்பட்ட ஒரு நேர்கோடுதான்) இந்தப் பகுதியில்தான் கடலும் நிலமும் சேர்ந்துள்ள வழி யாகவே பெரும்பாலும் அமைகிறது. சிறிது அாரம் கிலத் தின் மேலே ; சிறிது தொலைவு கடற்கரைக்கு நேர் உயரத்

யான் கண்ட இலங்கை 19
திலே ; இன்னும் சிறிது தொலைவு கடற்கரையை விட்டுக் கடல் மேலே ; ஆயினும் பெரும்பாலும் நிலத்தைப் பார்த் துக்கொண்டே செல்லலாம். வேதாரணியத்தை நெருங்கும் போது சிறிது நேரம் நிலம் மறைந்தும் போகிறது. ஆயின் கடல் கண்ணுக்கு எட்டாமல் மறைவதே இல்லை. ஆகை யால் இந்த வகையில் இலங்கைக்குச் செல்லும் விமானப் பயணம் ஒரு தனிச் சிறப்பு உடையதுதான்.
இவ்வளவு காட்சியையும் கடல் நடுவில் அல்லது கரை களில் அலைநடுவில் கின்று அமைதியாகக் காண முடியுமா? ஆனல், விமானத்தில் பறந்துகொண்டே அமைதியாகப் பார்த்துச் சென்ருேம். பெரியவர்களாகிய நாங்கள் மட்டும் அல்ல, நம் மங்கையர்க்கரசியும் அஞ்சாமல் கலங்காமல் கடல் காட்சியையும் மலை ஆறு முதலிய காட்சிகளையும் பார்த்து வந்தாள். மங்கையர்க்கரசி உன்னேவிட நான்கு வயது சின்னவள். ஒன்பது வயதுள்ள பெண் அஞ்சுவாள் என்று நீயும் அம்மாவும் எண்ணியிருப்பீர்கள். மோட்டாரில் காஞ்சி புரத்திற்குச் செல்வதைவிட மகிழ்ச்சியாகவே மங்கையர்க் கரசி விமானத்தில் எங்களோடு பறந்துவந்தாள்.
விமானம் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசையும் அசைவே இல்லை. ஆனல் மேலே உயர்ந்து கிளம்பும் போது சிறு அசைவு தெரியும். கீழே தாழ்ந்து இறங்கும் போதுதான் உண்மையாகவே நல்ல மாறுதல் தெரியும். எங்கோ நம்மை அறியாமல் நம் உடம்பு கீழே இறங்கி விழப்போவது போன்ற உணர்ச்சி ஏற்படும். அப்போது தான் மங்கையர்க்கரசி அஞ்சினள். வளர்ந்த பெரியவர் களும் அப்போது கொஞ்சம் அஞ்சினர்கள். அப்போது அவர்களுடைய முகத்தைப் பார்த்தாலேயே இந்த அச்சம் தெரிந்தது.

Page 13
2O * யான் கண்ட இலங்கை
மேங்கையர்க்கரசி ! இப்போது திடீரென்று இந்தக் கடலில் விழுந்தால் -? என்றேன்.
போங்க, சார் ! அதைச் சொல்லாதீர்கள். பார்த்தால் பயமாக இருக்கிறது? என்ருள்.
“ஒன்றும் பயம் வேண்டாம். இதோ பார். இந்தப் பெல்டு எடுத்துக் கட்டிக்கொண்டால் ஆபத்தே இல்லை? என்று எங்கள் தலைக்குமேலே வரிசை வரிசையாக வைக்கப் பட்டிருக்கும் கருவிகளைக் காட்டினேன்.
*கடலில் விழுந்தால் நீந்தத் தெரியாதே? என்ருள்.
*ந்ேத வேண்டாம். இந்த ரப்பர்பெல்டுகள் ஐசி, ஆழாமல் மிதக்கச் செய்யும்? என்றேன்.
'அய்யோ! ஏதாவது திமிங்கிலம் வந்து விழுங்கிவிட் டால் -’ என்று இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டு என்னேப் பார்த்தாள்.
நீ வந்திருந்தாலும் இப்படித்தான் ஏதாவது கற்பஐ செய்துகொண்டு அஞ்சியிருப்பாய், ஆனல் உண்மையான அஞ்சுதலுக்கு அவ்வளவாக இடம் இல்லை. இடரும் இடையூறும் உண்டு என்பது உண்மைதான். ஆனல் அவை விமானப் பயணத்தில் மட்டும் அல்ல ; ரயில் பய ணத்திலும் உண்டு, மோட்டாரிலும் உண்டு, மாட்டு வண்டியிலும் உண்டு. ஒரு வேறுபாடு இதுதான். மற்ற வற்றில் பெரிய இடர் நேர்ந்தால் 'உயிரிழந்த உடம்பாவது கிடைக்கும். விமானப் பயணத்தில் உடம்பும் கிடைக்காது. நம் தலைவர் சுபாஷ் போஸை அப்படித்தானே இழந்தோம். ஆல்ை அதற்காகப் பார்த்து, இவ்வளவு சிறந்த இன்ப மான பயணத்தை மக்கள் கைவிடப் போவதில்ஜல. தண் ணிரில் ஆபத்து உண்டு என்று நீ நீந்த அஞ்சுகிருயா ?

யான் கண்ட இலங்கை 21
~
இல்லையே ! அதுபோல்தான் விமானப் பயணத்தால் வரும் இடர்களே எண்ணிப் பார்த்தாலும் அதை மக்கள் கை விடப் போவதில்லை.
ஒன்று சொல்கிறேன். களைப்பே இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும், களைப்புக் குறைந்த பயணம் உலகத்தில் இது ஒன்றுதான். பூந்தமல்லி சாலையில் உயர்ந்த மோட்டாரில் சென்ருலும் களேப்பு உண்டு. எம். எஸ். எம். ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தாலும் களேப்பு உண்டு. ஆனல் மூன்று மணி நேரம் விமானத்தில் பயணம் செய்தால் களைப்பே இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. விமானத்தை விட்டு இறங்கியவுடன் கொழும்பு நிலையத்தில் என் முகத்தைக் கண்ணுடியில் பார்த்தேன். முகத்திலும் களைப்புக்குறி சிறிதும் இல்லை. இப்படிப்பட்ட அருமையான பயணத்தை யாராவது கை விடுவார்களா ?
இன்னென்று சொன்னுல் உனக்குப் பெரிய வேடிக் கையாக இரு க் கும். விமானத்தில் கண்டக்டர்போல் இருந்தவள் ஒரு தட்டு நிறையச் சாக்லெட், பெப்பர்மிண்ட் முதலானவற்றை வைத்து ஒவ்வொருவரிடமாக வந்து நீட்டினுள். நான் சாக்லெட் ஒன்றை எடுத்துக்கொண்டு காகிதப் பையாக இருந்த இன்னென்றில் என்ன இருக்கும் என்று தெரியாமல் எடுக்காமல் விட்டுவிட்டேன். இப் படியே மற்றவர்களும் ஒவ்வொன்று எடுத்தார்கள். சாக் லெட்டை வாயில் போட்டுக்கொண்ட பிறகு வாலாஜாபாத் பள்ளிக்கூடத்து அப்பாவைப் பார்த்தேன். அவர் இரண்டு காதிலும் பஞ்சு செருகிக்கொண்டு கண்ணை மூடித் தூங்கத் தொடங்கினர். ஏதாவது காதுவலியோ, சீழ் வடியுமோ என்னவோ என்று எண்ணிப் பின்புறத்தில் இருந்தவர்

Page 14
22 யான் கண்ட இலங்கை
களைத் திரும்பிப் பார்த்தேன். அவர்களிலும் பலர் காதில் பஞ்சு வைத்துக்கொண் டிருந்ததைக் கண்டதும், என் மனம் ஆராய்ச்சியில் தலைப்பட்டது. விமானத்தின் ஒலி காதைத் துளேக்காதபடி தடுப்பதற்காக இருக்கும் என்று எண்ணினேன். அதற்குள் வாலாஜாபாத் அப்பா உறங்கி விழித்துக்கொண்டார். என் காதுக்கும் பஞ்சு வேண்டும் என்றேன். அந்தத் தட்டில் இருந்ததாகக் கூறி, முன் கொண்டுவந்த விமான மங்கையை நோக்கிச் சைகை செய்து கேட்டார். மறுபடியும் தட்டு வந்தது. என்ன இருக்குமோ என்று ஐயப்பட்ட அந்தச் சிறு காகிதப் பையை எடுத்து என் கையில் கொடுத்தார். அதைப் பிரித்துப் பஞ்சு இருக்கக் கண்டேன். காதில் பஞ்சு வைத்து அடைத்த பிறகு, ஏதோ ஒருவகைச் சுமை குறைக் ததுபோல் உணர்ந்தேன். ஆனல் மங்கையர்க்கரசியோடும் மற்றவர்களோடும் பேசுவதற்குத் தடையாக இருந்தது. மங்கையர்க்கரசியின் காதிலும் பஞ்சு வைத்துக்கொள்ளு மாறு சொன்னேன். இவ்வாறு ஒலியைத் தடுத்திருந்தும், கொழும்பு நகரில் இறங்கிய பிறகு சிறிது நேரம் விமான ஒலியின் துளேப்பு இருந்துவந்தது. பஞ்சு வைத்துத் தடுக்காமல் இருந்திருந்தால், அது மணிக்கணக்காகவும் இருக்கும் என்று பிறகு அறிந்துகொண்டேன்.
சிறிது நேரத்தில் பிஸ்கோத்தும் வெண்ணெய் தடவிய ரொட்டியும் வந்தன. சிறு பங்கு, எடுத்துக்கொண்டேன். எங்களே அடுத்து இருந்த சிலர்க்கு வேறு வகையான தின் பண்டங்கள் வந்தன. அப்போதுதான் எங்களுக்கு வந்தவை மரக்கறி உணவுவகை என்றும், அவர்களுக்கு வந்தவை மற்ற வகை என்றும், இதற்காகவே விமானம் ஏறு முன்பு மீனம்பாக்கம் நிலையத்தில் மரக்கறி உணவா, மற்ற உணவா என்று எழுதிக் கொடுக்குமாறு கேட்டார்கள் என்றும்

யான் கண்ட இலங்கை 23
அறிந்துகொண்டேன். அடுத்தாற்போல், அந்த விமான மங்கை காப்பி நிறைந்த குவளைகள் கொண்டுவந்தாள். நன்றி தெரிவித்து, பழக்கமில்லை? என்றேன். வேறு, பழச்சாறு, தேநீர் ஏதேனும் வேண்டுமா ? என்ருள். பால் கேட்டுப் பெற்றுக்கொண்டோம். சிேல வேளைகளில் பால் கிடைப்பது அருமை. நல்ல வேளையாக இன்றைக்கு உங்கள் விருப்பம் போல் கொடுக்க முடிந்தது? என்று முகத்தில் புன்முறுவல் பூத்து இன்சொற்களோடு பேசி ஞள். பயணம் செய்வோரை இவ்வாறு முகமலர்ச்சியாலும் இன்சொல்லாலும் உயர்ந்த பண்பாட்டோடு மகிழ்விப்பது ஒரு கலைதான் என்று எனக்குள் எண்ணிப் பாராட்டினேன். இன்னும் சிறிது நேரத்திற்குள் ஆங்கிலத்திலும் தமி ழிலுமாகச் சில செய்தித்தாள்களும் பல வார வெளியீடு களுமாகக் கொண்டுவந்து நீட்டினள். ஆளுக்கு ஒன்ரு கப் பொறுக்கி எடுத்துக்கொண்டோம். நானும் மங்கை யர்க்கரசியும் எடுத்ததைத் திறந்து பார்த்துப் படிக்கவே இல்லை. சன்னல்களுக்கு அப்பால் விமானத்தின் பக்கங் களிலும் கீழும் காண்பதற்குச் சுவை குன்ருத புதுமைக் காட்சிகள் இருக்கும்போது, பார்த்துப் பழகிச் சலித்துப் போன அந்தப் பத்திரிகைகள் எங்களுக்கு விமானத்திலும் வேண்டுமா? வெறுப்போடு கீழே வைத்துவிட்டு, மறுபடி யும் கடலையும் கிலத்தையும் கண்டு கண்டு வியந்துகொண் டிருந்தேன்.
செங்கல்பட்டு நிலையத்தை அடுத்த செம்பரம்பாக் கக்கு ஏரி கண்ணில் படும் என்று எதிர்பார்த்தேன். அது எப்படியோ மறைந்தது. திருக்கழுக்குன்றத்து மலைக்காட்சி யாவது வரும் என்று எதிர்பார்த்தேன். எத்தனையோ குன்றுகள் தெரிந்தன. அது எந்தக் குன்று என்று கண் டறிய முடியாமல் போயிற்று. அருமைப் பாலாறு மட்டும்

Page 15
24 யான் கண்ட இலங்கை
வெள்ளை வெளேல் என்று பால்போல் நீரற்றுக் காட்சி அளித்தது. அதன் வளைவும் நெளிவும் அழகும் அமைப்பும் சிறிது நேரம் என் கண்ணுக்கு விருந்தாக இருந்தன. அது கடலில் கலக்கும் இடத்தை ஆர்வத்தோடு தேடினேன்; கண்டேன். சேக்கிழார் தாய்க்கு உவமை கூறிப் புகழ்ந்த அதன் ஊற்றுவளத்தை நினைத்துக்கொண்டேன்; வாலாஜா பாத்தில் அதன் கரையில் அமைந்துள்ள இந்துமத பாட சாலையும் வள்ளலார் மாணவர் இல்லமும் நினைத்தேன்; அங்குக் காணும் அருமையான கல்வித் தொண்டை நினைத் துப் போற்றினேன்; வாழ்த்தினேன். நீயும் தம்பியும் அங்கே பாலாற்றின் பால் போல் பரந்த மணலில் விளையாடி, பளிங்கு போல் தெளிந்த ஊற்று நீரில் நெடுநேரம் குளித்து மகிழ்ந்த நாட்களே நினைத்தேன். உலகத்தில் எத்தனையோ ஆறுகள் எவ்வளவோ நீர்வளத்தோடு ஓடிக் கடலில் விழு கின்றன. ஆயினும் நமக்குத் தாயாக இருந்து வளர்த்து மகிழ்விப்பது பாலாறுதானே! கைல் நதிக்கும் நமக்கும் உறவு என்ன? மிசிசிபி ஆறு நமக்கு உதவும் ஆறு அல்லவே? கங்கையும் அப்படித்தானே ? வடநாட்டை அழிக்கும் கங் கைப் பெருக்கு ஒரு பெரிய திட்டத்தால் தமிழ் நாடு வரை யில் எட்டிப் பாயுமானல், அன்று போற்றலாம் ; புகழலாம். அதுவரையில் 15ம் தாய் போன்றது பாலாறுதானே?
இத்தகைய காட்சிகளைக் கண்டு எங்கள் உள்ளம் குளிர் வது மட்டும் அல்லாமல், அாய குளிர்காற்றுப் பட்டு எங்கள் உடலும் குளிர்ந்தது. மேக மண்டலங்களின் இடையிலும் அவற்றைக் கடந்தும் பறந்த எங்களுக்கு இன்பக் குளிர் காற்றுக்குப் பஞ்சமா ?
ஆமாம், அந்த முகில்கூட்டங்களைப் பற்றியும் உனக்குத் தெரிவிக்க வேண்டும். நீ ஒரு முறை என்னைக் கேட்டது நினைவிருக்கிறது. 8 விமானம் மேகங்களுக்கு அப்பால்

யான் கண்ட இலங்கை 25
சென்று மறைகிறதே, அது எப்படி முடியும் ? என் ஆறு கேட்டிருக்கிருய். நான் அப்போது உனக்கு என்ன விளக்கம் சொன்னேன் என்பது இப்போது எனக்கே நினைவில்லை. மெய்யாகவே முகில்கூட்டங்களில் நுழைந்தும் அவற்றைக் கடந்தும் பறந்து சென்ற அனுபவத்தால் இப்போது தெளிவுபடுத்துகிறேன். முகில்கூட்டங்களைக் கடந்து அப் பால் பறப்பதுதான் எளிது. வானம் என்னும் நெடுந்தெரு வில் முகில்கூட்டங்களைக் கடந்த பிறகுதான் பயணம் விரை வாகவும் இருக்கும் ; இன்பமாகவும் இருக்கும். உயர்ந்த மோட்டாரில் பயணம் செய்யும்போது கடைத்தெரு வழியாக பூநுழைந்து செல்வதைவிட, அமைதியான சாலைகளில் செல் வது எவ்வளவு எளிது! அது போன்றதே இதுவும். முகில் கூட்டங்கள் இருந்த இடத்தில் இருப்பதும் இல்லை; புகை போல் விரைந்து இயங்கிக்கொண் டிருக்கின்றன. உண்மை யாகவே அவை புகை போன்றவைதான். ஒருவர் புகை யில் பூதுழைந்து அப்பால் செல்வது போன்றதுதான், விமா னம் முகில்களேக் கடந்து செல்வதும், அவற்றில் நுழைந்து போகும்போது, சன்னலிலிருந்து பார்த்தால் மண்ணும் விண்ணும் கடலும் ஒன்றும் தெரிவதில்லை. புகைபோல், மூடுபனிபோல் சுற்றிலும் தெரிகிறது. உடனே விமானம் மேல்நோக்கி எழுகிறது. அல்லது, கீழ் நோக்கிச் சென்று கடந்துவிடுகிறது. அப்போதுதான் பழையபடி எல்லாம் தெரிகின்றன.
பனிக் காலங்களில் 15ம் கிராமத்தில் புதர்களேச் சுற்றிப் பனிப்படலம் ஆவிபோல் மூடிக்கொண்டிருப்பதைப் பார்த் திருப்பாய் அல்லவா? அதுபோல் பூமியைச் சுற்றி மூடிக் கொண்டிருக்கும் ஆவிப்படலம்தான் மேக மண்டலம். பத்தாயிரம் அடி உயரத்தில் பறந்து சென்றபோது நான் தலையை வளேத்து வானத்தை அண்ணுந்து பார்க்க முயன்

Page 16
26 யான் கண்ட இலங்கை
றேன். வானத்தில் மேகங்கள் மிகுதியாக இல்லை. அங் கொன்றும் இங்கொன்றும் சிறுசிறு முகில்களே காணப் பட்டன. ஆனல் கீழ்நோக்கிப் பூமியைப் பார்த்தால், எங் கும் முகில்கூட்டங்களே வெள்ளே வெளேல் என்று பரங் திருந்தன. அவற்றின் இடையே ஊடுருவிப் பார்த்தபேர்து தான் கடலும் கரையும் மலையும் ஆறும் தெரிந்தன. அவை மறைந்துள்ள இடங்களில் ஒன்றும் தெரியவில்லை. செங்கல் பட்டு ஏரியும் திருக்கழுக்குன்றத்து மலையும் இப்படித்தான் என் கண்ணுக்குத் தெரியாமல் தப்பின. கடலின்மேல் முகில்கள் அவ்வளவு மிகுதியாக இல்லை. வலப்புறத்துச் சன்னல் வழியாகப் பூமியை நெடுந்தொலைவில் நோக்கிய போது, முகில்கள் ஆவிபோல் மூடியிருப்பது நன்ருகத் தெரிந்தது. மண்ணும் விண்ணும் சேரும் பகுதி தெரியாத படி இந்த முகில்கள் வெண்மையான ஆவியாய்க் கூடி மூடிவிட்டன. நேர்கீழே பார்த்தபோது, வெண்ணிறத் திரளாக எங்களுக்கும் கிலத்திற்கும் இடையில் கூட்டம் கூட்டமாக இருந்தன. நாங்கள் அந்த முகில்களேவிட எவ் வளவோ உயரத்தில் பறந்தோம். கீழே முகில்கள் கனத்துக் கருத்து மழை பெய்வதானுலும், எங்களேச் சுற் றி மழை இருக்காது. மழை கீழே பெய்து கொண்டிருக்கும். நாங் கள் மேலே பறந்துகொண்டிருப்போம். ஆனல், எங்கள் விமானத்தின் எ தி ரி லோ, பக்கத்திலோ, மழைமுகில் இரண்டு மூன்று வந்து மின்னி இடித்து மோதினுல் எங் கள் வாழ்வு முடிங் த து போல் தான். அப்போதுதான், மனிதன் இயற்கையை வென்றன் என்ற பெருமைப் பேச்சு வெறும் பொய் என்பது விளங்கிவிடும். மனிதன் இயன்ற வரையில் இயற்கையைப் பயன்படுத்தக் கற்றுக்கொண் டான் என்பதே உண்மை.

யான் கண்ட இலங்கை 27
வானத்தில் வேறு ஒரு தடையும் இல்லை; ஆவியுரு வான இந்த முகில்களே சிறு தடை. அதனல்தான் விமா னங்கள் நாலாயிரம் ஐயாயிரம் அடி உயரத்தில் பறப்பதை
விடப் பத்தாயிரம் அடி உயரத்தில் பறப்பது தடை இல் லாததாக எளியதாக உள்ளது. பெரும்பாலும் அந்தச் சிறு :50). தooடயாகவே படுவதில்லை. கண்பார்வைக்கு
வெண்ணிறப் படலம் குறுக்கிடுகிறதே தவிர, ஊடுருவிச் செல்வதற்கு ஒரு தடையும் இல்லை. விமானம் செலுத்து வோன் தொலைவில் உள்ளதைக் காண முடியாதபடி சில விநாடிகள் மறைக்கும் ; அவ்வளவே; அதற்குள் விமானம் ழே இறங்கியோ மேலே உயர்ந்தோ எளிதில் அந்த வெண்ணிறப் படலத்தைக் கடந்து போய்விடுகிறது ; பிறகு, விமானியின் கண் மறுபடியும் நெடுந்தொலைவு வரையில் காணமுடிகிறது.
நீரின்மேல் கப்பல் மிதந்து செல்லும்போது, நீரின் அசைவெல்லாம் கப்பலைத் தாக்குகிறது. கா ற் றி லும் அசைவும் மாறுதலும் மிகுதி. ஆகையால் அவைகளும் கப்பலேத் தாக்குகின்றன. கரையோரத்தில் கடல் அலே கள் மிகுதியாக இருப்பது போல், மண்ணே அடுத்தும் கடலே அடுத்துமே காற்றின் அலைகள் மிகுதியாக இருக் கும். வானத்தில் உயரத்தில் காற்று அலைகள் குறைந்து அமைதியாக இருக்கிறது. ஆகையால் விமானத்தைத் தாக்கி அசைக்கக் கூடியது ஒன்றுமே இல்லை ; விமானம் நேர்கோடு கிழித்தாற்போல் நேரே செல்கிறது. அதனுல் தான் விமானப் பாதைகளைக் காட்டும் படங்களில் பார்த் தால் பாதைகள் எல்லாம் நேர்கோடுகளாக இருக்கும். செல்லும் திசையின் கோணத்தைத் தவருமல் பார்த்துச் செலுத்துவதே விமானியின் கடமை. ஆகையால், குறுக்கே முகில் வந்தபோதும், அவன் விமானத்தை இப்பக்கமோ

Page 17
28 யான் கண்ட இலங்கை
அப்பக்கமோ திருப்பாமல், சில அடி உயர்த்தியோ தாழ்த் தியோ பறக்கிருன். விமானப் பாதையில் இடம் வலம் என்ற பாதைவிதி இல்லை; கீழ்மேல் என்று தாழ்த்தியும் உயர்த்தியும் செல்வதே விமான ப் பாதையின் விதி. அவ்வாறு திடீரென்று உயர்த்தும்போது நாங்கள் பெரிய மாறுதலையோ திடுக்கீட்டையோ உணர்வதில்லை. ஆனல் எதிர்பாராமல் கீழ்ே இறங்கிப் பறக்கும்போதுதான் உடல் அப்படியே கீழே விழுவதுபோல் ஒருவகை உணர்ச்சி ஏற் படுகிறது ; பழக்கம் இல்லாதவர்களுக்கு அச்சமும் தோன்றுகிறது. அது தவிர, வேறு ஆட்டமோ அசைவோ
நிலத்தின்மேல் தண்டவாளத்தில் ஒடும் ரயிலும் அசை யாமல் செல்வதில்லை. முன்பின் பெட்டிகளுடன் தாக் குண்டும் சக்கரங்களின் அசைவுகளால் ஆடியும் செல் கிறது. அதனல்தான் முதல் வகுப்பில் இரவெல்லாம் படுத்து உறங்கியபடியே பயணம் செய்வோரும் மறுநாள் பயணக் களேப்பை உணர்கிருரர்கள் ; உறக்கம் போதாது என்றும், உடல் சூடு உற்றது என்றும் கூறுகிருரர்கள். விமானப் பயணத்தில் இந்தக் குறை இல்லை. மேடு இல்லை, பள்ளம் இல்லை, கல் இல்லை, குழி இல்லை; அடிக்கடி இந்த வண்டியைப் பார்த்தும் அந்தச் சைக்கிலை நோக்கியும் கிறுத்தியும் திருப்பியும் செலுத்த வேண்டிய தொல்லை இல்லை.
வழியில் கண்ட நகரங்களில் புதுச்சேரியைத்தான் கன் ருகக் கண்டறிய முடிந்தது ; அது அழகான காட்சியாகவும் இருந்தது. தொலைவில் ஏதோ அழகான நகரம் தெரிந்தது, அது எந்த நகரமோ என்று இருந்தேன். அதற்குள் சில முகில்கள் மறைத்தன. திடீரென்று முகில்கள் சிறிது விலகின. கடலுள் நீண்டு செல்லும் பாலம் தெரிந்தது.

யான் கண்ட இலங்கை 29
அதைக் கண்டவுடனே, அந்தக் கடற்கரை நகரம் புதுச் சேரியே என்று துணிந்தேன். புதுச்சேரிக்கே தனி அழ காக விளங்கும் பாலம் அது. உடனே அந்தத் தனி அழகு உடைய நகரத்தை விமானத்திலிருந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. முகில்கள் விலகுமா என்று ஆவ லோடு பொறுத்துப் பார்த்தேன். நகரத்திற்கு நேராக மேலே விமானம் பறந்த போதும் முகில்கள் விலகவில்லை. சிறிது கடந்த பிறகுதான் விலகின. இருப்பினும் நகரத் தின் அழகிய காட்சியைப் போதிய நேரம் பார்க்க முடிந்தது. பெரிய சதுரத்தில் குறுக்கும் நெடுக்கும் நேர் கோடுகள் கிழித்தாற்போல, தாயம் ஆடும் சதுரக கோடுகள் போல், அந்த நகரத்தின் அழகான தெருக்கள் நேர் நேராக விளங்கின. அதன் அழகைக் கண்டு வியப்போடு பார்த் துக்கொண்டே சென்றேன்.
“இனிமேல் பாருங்கள். காவிரி புரக்கும் நாடு வரப் போகிறது? என்ருர் வாலாஜாபாத் அப்பா.
பார்த்துக்கொண்டே வந்தேன். காவிரி கண்ணில் தோன்றுவதற்கு முன்னமே, காவிரியின் அருள் பெற்ற நிலத்தின் மாறுதலைக் கண்டுகொண்டேன். கடல் ஒரே வகையாகத்தான் இருந்தது. அதில் பாலாறு கலந்தாலும், பெண்ணையாறு கலந்தாலும், காவிரியே பாய்ந்தாலும் வேறுபாடு ஒன்றும் இல்லை. ஆனல் இதுவரையில் கண்ட கிலம் வேறு ; இதுமுதல் கண்டு மகிழ்ந்த நிலமும் வேறு தான். இதுவரையில் கண்ட கிலம் பெரும்பாலும் கட்டாக் தரையாக, செங்கிறமாக, பழுப்பு நிறமாக இடையிடையே சிறுசிறு பகுதிகள் பசுமையாகக் காணப்பட்டன. இது மார்கழி மாதம் ஆகையால் புன்செய் அறுவடை எல்லாம் முடிந்து, நன்செய்ப் பயிர் மட்டும் சில சில இடங்களில்

Page 18
3O யான் கண்ட இலங்கை
பசுமைக் காட்சி அளித்தது. இரண்டு ஆண்டுகளாக மழை பெய்யாமையால், ஏரி குளம் கிரம்பாமையால் வறண்ட காட்சியே மிகுதியாக இருந்தது. ஆனல் புதுச்சேரியைக் கடந்த பிறகு, கட்டாந்தரைக் காட்சியோ செங்கிறப் பழுப்பு நிற மண்ணின் காட்சியோ காணப்படவில்லை. நிலவுலகமே பச்சை நிறம் உடையதுதான் என்று சொல்லுமாறு பச்சைப் போர்வை போர்த்து விளங்கியது. கடலுக்கும் நிலத்திற் கும் அவ்வளவு பெரிய வேறுபாடு தெரியவில்லை. கடல் வெண்பூக்கள் விரவிய ஒரே நீலகிறம் ; கிலம் சிறுசிறு ஊர் களின் கலப்புத் தவிர மற்றப் பகுதி எல்லாம் ஒரே பச்சை நிறம். நீலமும் பச்சையும் கலக்கும் இடத்தில் வெண்ணிறப் பட்டை தீட்டினுற்போல் கடற்கரை விளங்கியது.
காவிரியாற்றை வானுலகிலிருந்து காணப்போகிருேம் என்று மங்கையர்க்கரசியிடம் சொன்னேன். 8 நாம் இருப் பதுதான் வானுலகமா ?? என்ருள். 8 ஆமாம். நாம் எல்லா ரும் தேவர்கள். அதனுல்தான் நம் கால்கள் மண்ணில் பட வில்லை. நாமும் கண் இமைக்காமல் பார்க்கும் ஆற்றலைப் பெற்றுக் காவிரியின் அழகைக் காணக் காத்திருக்கிருேம் ? என்றேன்.
காவிரியாறு வரப்போகிறது என்ற எண்ணத்தால் என் மனம் எத்தனையோ கற்பனைகளைக் காணத் தொடங்கியது. அந்தப் பழங்காலத்தில் கல் கத்தா போல் விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தை - புகார்நகரத்தை - நினைத்து க் கொண்டேன். “பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்று தும்? என்று சந்திரனேடும் சூரியைேடும் மழையோடும் ஒரு சேர வைத்து இளங்கோவடிகள் போற் றிப் பாடிய நகரத்தை கினைத்துக்கொண்டேன். புதுச்சேரியைக் கண்டு மகிழ்ந்த கண்கள், அ ைத விடப் பல மடங்கு அழகும் அரச செல்வமும் புகழும் பெருமையும் பெற்று விளங்கிய

யான் கண்ட இலங்கை 31
புகார் நகரத்தைக் காண முடியவில்லையே என்று வருந்தி னேன். அப்போதுதான் முதல் முதலாகக் கடல் மே ல் எனக்கு வெறுப்பும் தோன்றியது. ? எங்கள் முன்னேர் களின் கலைகளும் கணக்கற்ற கைத்தொழில்களும் வளமும் வாழ்க்கைச் சிறப்புகளும் விளங்கிய பெரிய நகரத்தின்மேல் படையெடுத்து அழித்த கொடிய கடலே ! நீ மட்டும் என் அறும் வாழ்வாயோ? என்று வை தேன். கடல் என்ன செய்யும், பர்வம் ! அதற்கு அறிவோ உணர்வோ ஒன்றும் இல்லை ; பகையோ, காழ்ப்போ, அன்போ, அருளோ இல்லா மல் அலையும் அந்தக் கடலைப் பழித்துப் பயன் என்ன ?
தொலைவில் வளைந்து நெளிந்த ஒன்று தெரிந்தது. காவிரியாருகத் தான் இருக்கலாம் என்று எண்ணினேன். கரையில் ஆறு கலக்கும் இடமாக ஒன்றும் தெரியவில்லை. சிறுசிறு நகரங்கள் தெரிந்தன. கோவலனும் மாத வி யும் கடல்விளையாட்டுக் காணும் விருப்பத்தோடு வந்திருந்து அருமையான யாழ் எடுத்துக் கானல்வரிப் பாட்டுப் பாடியது இந்தக் கடற்கரையில்தானே என்று எண்ணினேன். வட நாட்டு மன்னர்களின் செருக்கை அடக்கிய செங்குட்டுவன் வீரத்திற்கும் இந்தக் கடற்கரையில் பாடிய பாட்டு க்கும் இருந்த தொடர்பை நினைத்துக்கொண்டேன். தமிழ் நாட்டின் பத்தி னிக் கடவுளாகிய கண்ணகி பிறந்து வளர்ந்த இடம் என்பதை எண்ணினேன். என்னை அறி யாமல் உடம்பிலே ஒருவகை அடக்கமும் ஒடுக்கமும் தோன் றின. புத்தர் பெருமானின் வாழ்க்கைக்குப் பிறகு அவரு டைய பேரொளியே போல் தோன்றி அன்பு நெறியை விளக் கிய மணிமேகலை பிறந்து வளர்ந்து துறவறம் பூண்ட இடம் என்ற எண்ணம் தோன்றியது. என் உள்ளம் ஒடுங்கி உரு கியது. தமிழ்நாட்டின் பெருமைக்கு உரிய அந்த அறச் செல்வி மணிமேகலையும் அந்தக் காலத்தில் மணிபல்லவம்

Page 19
32 யான் கண்ட இலங்கை
என்று வழங்கிய இலங்கையின் ஒரு பகுதிக்குப் போய்வந்த வரலாற்றை நினைத்துக்கொண்டேன். அதற்குள் காவிரி யாறுதான் என்று நம்பத்தக்க முறையில் நல்ல காட்சி தெரிந்தது. இரு கரையிலும் பசுமையே போர்த்து விளங்கு வதாலும் பாலாறு போல் வெண்மணல் பரப்பு இல்லாமை யாலும் எளிதில் கண்டுகொள்ள முடியவில்லை. ஆயினும் காவிரியாறுதான் என்று தெளிந்தேன். அதன் கரையில் கண்ணகி தன் கணவைேடு நடந்து மதுரையை நோக்கிச் சென்றதை நினைத்துக்கொண்டேன்.
சிறிது நேரத்தில் மறுபடியும் முகில்கூட்டங்கள் வந்து நிலத்தை மறைத்தன. கடலின் காட்சி தவிர வேறு காட்சி எங்கள் கண்ணுக்கு எட்டவில்லை. அப்போது விமான மங் கை எங்கள் பக்கம் வந்து அழகாக அச்சடித்த ஒரு தாளில் இடையிடையே பென்சிலால் எழுதி நிரப்பியதை என் கை யில் நீட்டினுள். வாங்கிப் படித்தேன். விமானத் தலைவன் (கேப்டன்) பெயர், அன்றைய தேதி, அப்போதைய மணி நேரம், புறப்பட்டுச் செல்லும் இடம், விமானம் பறந்து செல்லும் உயரம், அருகே உள்ள நகரம், இன்னும் எத்தனை கிமிடத்தில் அதைக் காண முடியும் என்பது, விமானம் செல்லும் வேகம், வெளியே உள்ள தட்ப வெப்பநிலை எவ் வளவு என்பது, கொழும்பு விமான நிலையத்திற்குப் போய்ச் சேரக் கூடிய நேரம் முதலிய எல்லாக் குறிப்புக்களும் குறிக்கப்பட்டிருந்தன. அந்தத் தாளின் அழகும் அதில் இருந்த பல்கிற அச்சுப் படங்களும் கண்ணைக் கவரத்தக்கன வாக இருந்தன. அதன் கீழே ? இதைப் பார்த்தபின், பக்கத்தில் இருப்பவரிடம் கொடுத்து உதவுக? என்று குறித்திருக்கக் கண்டேன். அவ்வாறே செய்தேன்.
முகில்கூட்டங்களுக்கு இடையே மறுபடியும் கிலத்தைக் காண முடிந்த அது. கடற்கரையைக் காண முடிந்தது.

யான் கண்ட இலங்கை 33
செங்கல்பட்டு தென்னுர்க்காடு போல் செங்கிறக் கட்டாங் தரையும் இல்லை : தஞ்சை போல் பசுமைப் போர்வையும் இல்லை. சாம்பல்கிறமான நிலமும் இடையிடையே நீர்நிலை களும் தெரிந்தன. வளம் குறைந்த கடற்கரைப் பகுதிக்கு மேல் பறக்கிருேம் எனப் பேசிக்கொண்டோம். சோழ நாட் டின் கரையை விட்டுப் பாண்டிய நாட்டின் கரைக்கு வந்து விட்டோம் என்று வாலாஜாபாத் அப்பாவிடம் சொன் னேன். ? எங்கள் பூகோளப் பாடத்தில் இந்தப் பெயர்கள் இல்லையே? என்ருள் மங்கையர்க்கரசி. சோழர்கரை பாண் டியர்கரை என்ற பெயர்களைக் குறிக்கவேண்டும் என்ற அவ் வளவு பழமைப் பற்று தமிழ்நாட்டார்க்கு ஏற்படவில்லை என்றேன்.
வேதாரணியப் பகுதியை நெருங்கி வந்துவிட்டோம். உப்பளங்கள் கிறைந்த பகுதி என்பது அப்போதுதான் தெரிந்தது. தமிழ்நாட்டின் உப்புச் சத்தியாக்கிரகம் நடந்த கடற்கரை என்பதும் கினேவுக்கு வந்தது. திருஞான சம் பந்தரும் திருநாவுக்கிரசரும் போட்டியிட்டுக் கொண் டு பாடிய ஊர் என்பதும், அவர்கள் போற்றிப் புகழ்ந்தது மறைக்காடு என்னும் தமிழ்ப்பெயர் என்பதும் நினைவுக்கு வந்தன. அப்பால் பார்வையைச் செலுத்தினேன். சிறு சிறு வளைகுடாக்கள் கரையில் தெரிந்தன.
இன்னும் சிறிது நேரத்தில் கிழக்கே இருந்த கடலே தெற்கிலும் தென்மேற்கிலும் காணப்படுவதாயிற்று. நேர் மேற்கே மட்டுமே நிலப்பகுதி தெரிந்தது. அங்கும் பசுமைக் காட்சியோ வேறு அழகான காட்சியோ காணப்படவில்லை. கடற்கரையும் ஒழுங்காகத் தெரியவில்லை.
கால்மணி நேரத்தில் விமானப் பாதைக்கு நேரே சிறு சிறு தீவுகள் கண்ணுக்குத் தெரிந்தன. யாழ்ப்பாணக்
8. இ.

Page 20
34 யான் கண்ட இலங்கை
கரை தெரிந்தது. தீவு என்பதைப் பள்ளிக்கூடத்தில் படித்தபோது, நான்கு புறமும் கடல் சூழ்ந்த கிலப் பகுதி என்று படித்தேனே தவிர, கற்பனைசெய்து பார்க்க முடிய வில்லை. பூகோளப் படத்தில் பார்த்திருந்தும், ஊர்களும் நாடுகளும் தீவுகளாக விளங்கும் என்பதை நன்ருக உணர முடியவில்லை. யுேம் அப்படித்தான் எண்ணுவாய் என்று எனக்குப் படுகிறது. ஆஸ்திரேலியா பெரிய தீவுதான். ஆனலும் விமானத்தில் பறக்கும்போது இப்படி முழுத் தீவைக் காண்பதுபோல், அதன் நான்கு கரைகளையும் ஒரே சமயத்தில் பார்க்கமுடியாது. இலங்கையையும் அப் படிப் பார்க்க முடியாது. கொழும்பின் மேலே. பறந்து பார்க்கும்போது மற்றக் கரை தெரியவே இல்லை. ஆனல் யாழ்ப்பாணத்தை நெருங்கும்போது அதைச் சூழ்ந்த பொடித் தீவுகளைக் காணும்போது அந்தத் தடையே இல்லை. விமானத்திலிருந்து அந்தத் தீவுகளின் முழுப் பகுதியையும் ஒரே சமயத்தில் காண முடிந்தது. இது ஒரு நல்ல வாய்ப் புத்தான். இந்தக் காட்சியைக் காணும்போது, நிலவுலகமே சில தீவுகளால் ஆனதுதான் என்று எண்ணினேன். அமெரிக்கா ஒரு தீவுதானே? ஆப்பிரிக்கா ஒரு தீவுதானே? ஆசியாவும் ஐரோப்பாவும் சேர்ந்த பெருகிலப் பகுதி யும் தீவு தானே ? உலகமே நாற்புறமும் கடல் சூழ்ந்த நிலம் தானே? கடலை ஆடையாக உடுத்தவள் என்று புலவர்கள் நிலத்தைக் கற்பனை செய்தது நயமாக இருப்பதை எண்ணினேன். t
தமிழ்நாட்டின்மேல் பறந்தபோது மேற்கே நிலமும் கிழக்கே கடலுமாக இருந்தன. இப்போது கிழக்கே நில மும் மேற்கே கடலுமாக மாறிவிட்டன. மேற்கே சிறிது தொலைவில் சங்கிலிபோல் கோவையான தீவுகளும் நீண்ட நிலப்பகுதியும் தெரிந்தன. கடலும் அவ்வளவு ஆழமாகத்

யான் கண்ட இலங்கை 35
தோன்றவில்லை. தமிழ்நாடும் இலங்கையும் கடலால் அவ் வளவாகப் பிரிக்கப்படவில்லை என்பதை அது காட்டியது. இராமேசுவரமும், சேதுவும் உள்ள பகுதி தொலைவில் கண்ட நிலப்பகுதியே என்று உணர்ந்தேன்.
இலங்கையின் மேற்குக் கரை ஓரமாக விமானம் பறந்தபோது, காவிரியாற்றங்கரை போன்ற பசுமைப் போர்வை நாடெங்கும் காணப்பட்டது. ஆனல் காவிரிக் கரையில் கண்ட பசுமை நெல்வயலின் பசும் பயிர்த் தோற்றமும் இடையிடையே தென்னை முதலிய தோட்டங் களின் தோற்றமும் ஆகும். மெல்லிய மெத்தென்ற பச் சைப் போர்வைபோல் அங்கே தோன்றியது. இடை யிடையே முத்தும் பவழமும் பதித்தாற்போல் ஊர்களும் சிறு சிறு அளவில் காட்சி அளித்தன. ஆனல் இலங்கை யில் கண்ட பச்சைப் போர்வை வேறு. இது பச்சை நிற மான முரட்டுக் கம்பளிபோல் தோன்றியது. எல்லாம் மலைக்காடுகளும் தரைக்காடுகளும் அவற்றின் வான ளாவிய நெடுமரங்களின் அடர்த்தியும் அளித்த முரட்டுக் காட்சிதான். இடையிடையே குன்றுகளும் மலைகளும் காணப்பட்டாலும் அவற்றையும் பசுமையே மூடியிருந் தது. திருவண்ணுமலை போன்ற வறண்ட கல்மலைகளின் காட்சி காணுேம், கரையோரத்திலோ உள்நாட்டிலோ பெரிய ஊர்களும் நெருக்கமாக அமைந்திருக்கவில்லை. ஆகையால், அழகுபடுத்தும் காட்சி எதுவும் இடை யிடையே இல்லை. ஒரே முரட்டுப் பசுமையே ஆயினும் அதன் வளத்தை நினைந்து பாராட்ட வேண்டாமா ?
இலங்கையின் கடற்கரையோ மிக அழகாகத் தோன் றியது. கரையோரம் எல்லாம் வளைகுடாக்களும் சிறு சிறு தீவுகளும் பெருங் கழிகளும் பற்பல தோன்றின. கடல்

Page 21
36 யான் கண்ட இலங்கை
கிலத்திற்குள் நெடுந்தூரம் புகுந்த பகுதிகள் ஏரிகளைப் போலத் தோன்றின. مح۔
கரையோரத்தே ஓங்கி வளர்ந்து செழித்திருந்த தென் னங் தோப்புகளும் உள்நாட்டில் இருந்த ரப்பர்த் தோட்டங் களும் மேலே இருந்து பார்ப்பவர்க்குக் காடுகள் போலவே தோன்றின. அடர்ந்த பசுங்காடுகளாகவே தோன்றிய காட்சியைக் கண்டு கண்டு, இலங்கை இன்னும் மக்கள் குடியேருத நாடாகவே தோன்றுகிறதே என்று எண்ணி வியந்தேன். இலங்கையுள் சென்று சுற்றிப் பார்க்கும் போதும் இந்த எண்ணமே அடிக்கடி தோன்றும் என்ருர் அப்பா. 8 ஊர் ஒன்றுகூட இல்லையா ? என்று வியப்போடு கேட்டாள் மங்கையர்க்கரசி.
கடற்கரை இடையிடையே வெண்பட்டை தீட்டினுற் போல் தோன்றியது. மேற்குச் சன்னலை அடுத்து உட் கார்ந்தேன். ஏரிகளில் வாத்துகள் முழுகி எழுவதுபோல், கடற்கரைக்குத் தொலைவில் சிறுசிறு அலைகள் மோதி வெண்ணிறமாய்க் கரையும் காட்சிகளைப் பார்த்து க் கொண்டே சென்றேன்.
?ே அதோ ஒர் ஊர்? என்று அமெரிக்காவைக் கண்ட கொலம்பஸ் போல் மகிழ்ச்சி ததும்பிய குரலில் கூறினுள் மங்கையர்க்கரசி. எழுந்து போய்க் கிழக்குச் சன்னல் வழி யாகப் பார்த்தேன். மிகச் சிறியதாக ஒன்று தெரிந்தது. ஏதோ பெரிய சாலை போலவும் ஒன்று நீளமாகத் தோன்றி யது. மணி என்ன என்று பார்த்தேன். மூன்றே முக்கால் ஆகியிருந்தது. ? விரைவில் கொழும்பில் இறங்கப் போகி ருேம்? என்றேன். -
கடற்கரை ஓரத்தில் முன்போல் முரட்டுப் பசுமை காணப்படவில்லை. அந்தப் பசும் போர்வை மாறவில்லை.

யான் கண்ட இலங்கை 37
ஒரே பசுமையாகத்தான் தோன்றியது. ஆனல் அதில் ஒரு மென்மையும் அழகும் கலந்திருந்தன. இந்தப் பகுதிகளில் இயற்கையின் வளத்தோடு மக்களின் ஒழுங்கான உழைப் பும் கலந்திருக்கிறது என்று உணர்ந்தேன். தெற்கு நோக் கிச் செல்லச் செல்ல அது உண்மை என்பது தெளிவாகிக் கொண்டுவந்தது. கொழும்பை அணுக அணுக, காவிரிக் கரை போலவே தோன்றியது.
கொழும்புத் துறைமுகம் சிறிது தொலைவிலே காணப் பட்டது. அந்தத் துறைமுகத்தில் கிற்கும் கணக்கற்ற கப்பல் கண்ணுக்குத் தெரிந்ததும் கொழும்பின் துறைமுகப் பெருமை நினைவுக்கு வந்தது. ஆசியாவில் மட்டும் அல்லா மல் உலகத்திலேயே சிறந்த துறைமுகங்களில் ஒன்ருக மதிக்கப்படுவது அது. சென்னையில் உயர்ந்து விளங்கும் கலங்கரைவிளக்கம் போல் கொழும்பிலும் ஒன்று இருக்க வேண்டுமே என்று என் கண் தேடியது. கடல் வழியாக வருவோர்க்கு நெடுந்தொலைவிலிருந்தே தெரிவதற்காக வைக்கப்பட்டது அது. வான்வழியாக வருவோர்க்கு அது எப்படித் தெரியும் ? எவ்வளவு உயரமாக அமைந்திருக் தாலும் மேலே இருந்து பார்ப்பவர்க்கு உயரத்தில் தோன்ற முடியுமா ? இதுவும் ஒரு விந்தைதான். பக்கத்தி லிருந்து பார்த்தால்தான் உயரத்தின் பெருமை தெரிகி றது. மேலே இருந்து பார்த்தால் பரப்பின் சிறப்புத்தான் தெரிகிறது.
நகரத்தின் பல கட்டிடங்களும் செங்கிறக் கர்ட்சியே அளித்தது. செங்கிற ஒடு வேய்ந்த கட்டிடங்கள் பெரும் பான்மையாக இருப்பதே அதற்குக் காரணம் என்பதை ககரத்தின் வழியாக விவேகாநந்த சபைக்கு வந்தபோது கண்டறிந்தேன்.

Page 22
38 யான் கண்ட இலங்கை
விமானம் கொழும்புக்கு நேராக வந்ததும் விமானி யின் அறைக்குமேல், எங்கள் கண்ணெதிரே சிவப்பு ஒளி விசியது. அந்தச் செங்கிற ஒளியால் விளங்குமாறு ஒரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. உடனே பெல்டு அணிந்து கொள்ளுமாறு குறிக்கப்பட்டிருந்தது. விமான மங்கையும் ஒவ்வொருவரிடமாக வந்து இருக்கையின் இருபுறமும் இருந்த பட்டைகளே எடுத்துக் கொடுக்கத் தொடங்கினுள். என்னே அவள் நெருங்குவதற்கு முன்பே நான் எடுத்துக் கட்டிக்கொண்டேன். கட்டத் தெரியாதவர்களுக்கு அவள் உதவி செய்தாள். இறங்கும்போது அசைவுக்கும் அச்சத் திற்கும் இடம் இருப்பதால் அவ்வாறு கட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
எதிர்பார்த்தபடி விமானம் உடனே இறங்கவில்லை ; கொழும்பு நகரைச் சுற்றி வந்தது. விமான நிலையத்தில் இறங்குவதற்கு வேண்டிய அனுமதி தரவில்லை என்றும், அதற்கு உரிய அறிகுறி காட்டப்படவில்லை என்றும் அறிக் தோம். சிறிது நேரத்தில் இறங்கத் தொடங்கியது. சுற்றிச் சுற்றித் தரையை நோக்கி வந்தது. தரையில் குறித்த இடத்தில் இறங்கியதும் அங்கிருந்து ஊர்ந்து சென்று நிலையத்தின் எதிரே நின்றது. காதிலிருந்த் பஞ்சை எடுத்து எறிந்துவிட்டு இறங்கினுேம்.
எதிரே ஒரு பத்திரிகை ஆசிரியரின் ஆர்வம் நிறைந்த முகத்தையும் விவேகாநந்த சபையாரின் அன்பு கனிந்த முகங்களையும் கண்டோம்.
உடனே வெளியே செல்வோம் என்று எதிர்பார்த் தோம். அதுதான் நிகழவில்லை. இலங்கை அரசாங்கத்தின் தணிக்கை ஒன்றன்பின் ஒன்ருக நடைபெற்றது. பொறுத் அறுப் பொறுத்து ஒவ்வொருவராகத் தணிக்கைக்கு ஆளா

யான் கண்ட இலங்கை 39
னுேம், பாஸ்போர்ட்டைப் பார்த்து எங்கள் முகங்களையும் பார்த்து, அம்மை குத்தப்பட்டது, காலரா ஊசி குத்தப் பட்டது முதலானவற்றின் நற்சான்றுகளையும் பார்த்தார் கள். என் முறை வந்தபோது, நானும் அவற்றைக் காட்டி விட்டு, “ஒரு சிறு ஐயம் தீர்த்துக்கொள்ளலாமா? என்று அந்த ஆபீசரை நோக்கிப் புன்முறுவலோடு கேட்டேன். அவரும் புன்முறுவல் செய்து, கேளுங்கள், என்ன ஐயம் ? எனருா.
*5ான் காந்தி வழியில் நடப்பவன். அவர் அம்மை குத்திக்கொள்ளக் கூடாது என்று பக்கம் பக்கமாக எழுதி யிருக்கிருரர். கான் அவருடைய கொள்கையை நம்புகிறவன். என்னைப் போன்றவர்களுக்கு விதிவிலக்கு இல்லையா ? என்றேன்.
உடனே அவர் அம்மை பற்றிய நற்சான்றை மறுபடியும் புரட்டிப் பார்த்து, என் கையையும் நீட்டச் சொல்லிப் பார்த் தார். “இதோ குத்திக்கொண்டிருக்கிறீர்களே !? என்ருர்,
*இது இரண்டாவது முறையாகக் குத்தியது. காந்தி யடிகள் உயிரோடு இருந்தவரையில் நான் அம்மை குத்திக் கொண்டதே இல்லை. அவர் மறைந்த பிறகு, இனி அவ ருடைய கொள்கைக்கு அரசாங்க ஆதரவு சிறிதும் இருக் காது என்று சென்ற ஆண்டில் குத்திக்கொண்டேன். இந்த ஆண்டில் அதன் நற்சான்று பெற முடியாமையால், இலங் கைக்கு வருவதற்க்ாக மறுபடியும் குத்திக்கொண்டேன். மனச்சான்றுக்கு மாருகச் செய்துகொண்ட தவறுதான்? என்றேன்.
*இங்கிலாந்து முதலான நாடுகளில் கேட்டால் உங் களேப் போல் அறிஞராக இருப்பவர்க்கு விதிவிலக்கு அளிக்கிருர்கள். எங்கள் காட்டில் அந்த வழக்கம் இல்லை.

Page 23
40 யான் கண்ட இலங்கை
காந்தி நாடாகிய உங்கள் காட்டிலும் இல்லையே. தவறு வோர்க்குச் சிறைத் தண்டனையும் உண்டு என்று சட்டம் இருக்கிறது. உங்கள் நாட்டில்தான் மிகக் கடுமையான சட்டம்” என்ருர் அவர்.
*ஆமாம். உண்மைதான்’ என்றேன்.
'அம்மை வந்தால் என்ன செய்வீர்கள் ? என்று கேட்டார்.
*எவருக்கும் அம்மை குத்தக்கூடாது என்று நான் சொல்லவில்லையே. யார் தம்மைத் தாம் காத்துக்கொள்ள முடியுமோ அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க லாம். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு எந்தக் கார ணத்தாலும் அம்மை வராது என்று உறுதி கூறுவேன். என் உடம்பு என் வசமாக இருக்கிறது. இப்படி என்னேப் போல் உறுதி கூற வல்லவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுமதி தரலாமே. தவறி அம்மை வந்தால் என்னைத் தண்டிக்கலாமே? என்றேன்.
அவர் கலகல என்று சிரித்தார். 'இலங்கையில் எங் தப் பகுதியிலும் அம்மை முதலான தொத்து நோய் காண முடியாது. குட்ட நோயும் இங்கே கிடையாது ; இவ் வளவு தணிக்கை செய்வதன் B ன் மை அதுதான்? என்ருர்,
அவ்வாறு நாட்டைக் காப்பது நல்லதுதான் என்று பாராட்டிவிட்டு நன்றி கூறி நகர்ந்தேன். அடுத்தபடி பெட்டி படுக்கைகளைத் திறந்து சோதனையிடும் சடங்கு நடந்தது. பணம் பொன் நகை முதலியவை பற்றிய ஆராய்ச்சியும் நடந்தது. எழுதிக்கொடுக்கும் முறையும் இருந்தது. நகை அணிந்த பெண்கள் மூக்குத்தி முதல்

யான் கண்ட இலங்கை 41
மோதிரம் வரையில் எல்லா நகைகளையும் விளக்கமாக எழுதி விலைமதிப்பும் குறித்துக் கொடுத்துத் தொல்லைப் பட வேண்டி யிருந்தது. பெண் களை இப்படி வாரங் தோறும் அரசாங்கத்தார் வரச் சொல்லிச் சோதனை செய்தால், நாட்டுக்கு எவ்வளவோ நன்மை விளையும். நகை இல்லையே என்று ஏழைக் குடும்பத்துப் பெண்கள் கணவன் மாருக்குக் கொடுக்கும் தொல்லையும் குறையும் ; குடும்பச் சண்டைகளும் எவ்வளவோ குறையும்,
எப்படியோ அந்த மண்ணை விட்டு இந்த மண்ணுக்கு வந்து சேர்ந்து விவேகாநந்த சபையில் தங்கியிருக்கிருேம். காளையே நகரத்தைச் சுற்றிப் பார்க்கத் தொடங்குவோம். மற்றவை பிறகு எழுதுவேன். தாரா அப்பாவுக்கும் எல் லாம் சொல்லுக. குடும்பத்தோடு வந்திருந்தால் நலமாக
இருக்குமே என்று இப்போது தோன்றுகிறது. அவ்வளவு இன்பமான பயணம் இது ! சரி, பிறகு பார்க்கலாம்.
அன்புள்ள,
6il
பிற்குறிப்பு :-இங்கு விவேகாநந்த சபையார் உணவுக்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கிருரர்கள். தட்டுகள் போகும் போது எட்டிப் பார்த்தேன். அரிசிச் சோறு சிவப்பாக இருந்தது. சிவப்பரிசி எனக்குப் பிடிக்கும் அல்லவா ? ஆனல், இந்த அரிசி நம் நாட்டு நெல்லைவிடப் பெரியதாக இருக்கும்போல் தோன்றுகிறது. சோற்றுப் பருக்கை ஒவ் வொன்றும் சிற்றிச்சங் கொட்டை போல் உள்ளது. இருந் தாலும் சுவையும் சத்தும் மிகுதியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்,

Page 24
I 2 J
விவேகாநந்த சபை, 34, மேட்டுத் தெரு, கொழும்பு-13. .1-5Oم-3 *
அன்புள்ள அரசு,
நலம். என் முந்திய கடிதம் சேர்ந்திருக்கும். செய்திகள் அறிந்திருப்பீர்கள்.
விமானப் பயணம் எவ்வளவு இன்பமாக இருந்ததோ இலங்கைக் காட்சியும் அவ்வளவு இன்பமாகவே இருந்து வருகிறது. இலங்கைத் தமிழரின் அன்பான உறவோ எல்லாவற்றினும் சிறந்ததாக இருந்துவருகிறது.
சைவ சித்தாந்த சமாசக் கூட்டத்திற்கு உரிய ஏற் பாடுகள் நன்ருக நடைபெற்றுவருகின்றன. விழாவுக்கு வருவோர்க்கு வெவ்வேறு இடங்களில் தங்குவதற்கு ஏற் பாடுகள் செய்திருக்கிருர்கள். கூட்டம் 15  ைட பெறும் விவேகாநந்த சபை, மண்டபத்தை அடுத்திருப்பதால், நாங் கள் இருக்கும் இடம் எல்லாவற்றையும்விட நல்லது என்று இங்கேயே இருக்கிருேம். இரண்டாம் நாள் காலை யில் மட்டும் வெள்ளவத்தை என்ற இடத்தில் கூட்டம் நடை பெறும். அன்று காலையில் மாதர் மாநாடு ஆகையால், தமிழர் பெரும்பாலோர் வாழும் அந்தப் பகுதி ஏற்றதாக இருக்கும் என்று ஏற்பாடு செய்தார்களாம்.

யான் கண்ட இலங்கை 43.
வெள்ளவத்தை என்ற அந்த இடத்திற்குப் போயிருக் தோம். தமிழர் வாழும் இடம் என்பது தெருக் களைப் பார்க்கும்போதே தெரிந்துவிட்டது. தமிழர் தவிர வேறு எந்த இனத்தார், வீடுகளை உள்ளும் புறமுமாகத் தூய்மை யாக வைத்துக்கொள்ளக் கற்றிருக்கிருரர்கள் ? தமிழர்க்கு இது தொன்றுதொட்டு வரும் கலை அல்லவா? வீட்டின் மூலையில் மெழுகிக் குத்துவிளக்கு வைப்பது முதல் தெரு வாசலில் நீர் தெளித்துக் கோலம் இடுவதுவரையில் எல்லா வற்றையும் கலையாகக் கொண்டு வாழும் பண்பாடு தமிழர்க் குத் தொன்றுதொட்டு வருவது. தமிழர் வாழும் பகுதி என்ருல் அங்கெல்லாம் ஒரு தனித் தூய்மையும் அழகும் பொலியும் என்பது வெள்ளவத்தையைப் பார்த்த தும் தெரிந்துவிட்டது. கடற்கரை ஓரத்தில் புது வீடுகளாகவே எல்லாம் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ளதுபோல் பெரிய கோயிலும் ஒன்று புதிதாகக் கட்டியுள்ளனர். அதன் மண்டபத்தில்தான் மாதர்மாநாடு நடக்க ஏற்பாடு செய்திருக் கின்ருர்கள்.
சென்னைக் கடைத்தெருவில் தமிழர் கடையைப் பார்ப் பது எவ்வளவு அருமையோ, அவ்வளவு அருமை கொழும்பு நகரின் கடைத் தெருவில் சிங்களர் கடையைக் காண்பது. சென்னையில் தமிழர் உள் ளத் தி ல் எழுச்சி இருப்பது போலவே, இலங்கையில் சிங்களர் உள்ளத்திலும் எழுச்சி இருக்கின்றது. சொந்த நாட்டில் மாறுதல் இல்லாமல் நெடுங்காலம் வாழ்கின்றவர்கள் சோம்பேறிகளாக மாறுவ தாகத் தெரிகின்றது. முயற்சி போதிய அளவுக்குச் செய் வதும் இல்லை; செய்தாலும் வெற்றி பெறுவதும் இல்லை. சொந்த நாட்டில் வாழ்வதால் உள்ளதே போதும்? என்ற மனப்பான்மை வந்து சோம்பலிலும் சோர்விலும் வாழ்க்கை முடிவதாகத் தெரிகின்றது. தமிழ்நாட்டில் பிறர் செல்வாக்

Page 25
44 யான் கண்ட இலங்கை
குப் பெற விட்டுவிட்டு வாழும் தமிழர், இங்கே வந்து சிறப்புப் பெற்றிருக்கின்ருர்கள். வியாபாரத்தில் இங்கும் வடநாட்டாரே ஆட்டிவைக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றர் கள் என்ருலும் தமிழ்நாட்டாரும் ஒரளவு செல்வாக்குப் பெற்றிருக்கின்றர்கள். செல்வமும் செல்வாக்கும் பெற்று வாழும் தமிழரை நகரங்களில் காணலாம். ஆனல் சிற்றுார் களிலும் தோட்டங்களிலும் வாழும் தமிழர் வழக்கம்போல் கஞ்சிக்கும் கங்தைக்கும் போராடும் ஏழைமக்களாகவே வாழ் கின்றர்கள். சுருங்கச் சொன்னல், இலங்கையின் செழிப்புக் கும் சிறப்புக்கும் காரணம் தமிழருடைய மூளையுழைப்பும் கைகால் உழைப்புமே ஆகும். ஆனல் மூளையால் உழைக்
கிறவர்கள் நன்ருக வாழ்கின்ருர்கள் ; கைகால் கொண்டு உழைக்கின்றவர்கள் வறுமையால் வாடுகின்ருர்கள். சிங்க ளரோ பொருமைப்படுகின்றர்கள் ; தாமும் உயர்ந்த
தொழில்களையும் வியாபாரத்தையும் கைப்பற்ற முயல்கின்
ருரர்கள். தமிழரும் சிங்களரும் ஒத்துப் போகலாம் ; இரு வர்க்கும் அந்த மண் சொந்தம், சிங்களர்க்குப் பிறப்பால் உரிமை உண்டு என்ருல், தமிழர்க்கு உழைப்பால் உரிமை
உண்டு. பல தலைமுறைகளாகவே தமிழர்கள் அங்குக் குடி யேறி வாழ்ந்தவர்கள். அந்தத் தமிழர் உயர்ந்த மொழி பேசுவதாலும் சிறந்த அறிவு பெற்றி ருப்பதாலும் திடீரென்று இன்று இலங்கைக்கு அங்கியர் ஆகிவிட , (1Քգ-պւDTP
இளமையில் பள்ளிக்கூடத்தில் படித்தபோது நான் ஆசிரியரிடம் கேட்ட ஒரு கேள்வி நினைவுக்கு வருகின்றது. * சென்னையில் சைனபசார் இருக்கின்றதே, அது போல் சைணுவில் மதராஸ் பசார் உண்டா ? என்று கேட்டேன். * நீங்கள் எல்லாம் பெரிவர்களாகிச் சைனவுக்குப் போய் வியாபாரம் செய்தால் அப்படி ஏற்படும்? என்ருர் ஆசிரி

யான் கண்ட இலங்கை 45.
யர், கொழும்பு நகரில் கடைத்தெருவில் சுற்றிப் பார்த்த போது எனக்கு அந்தப் பழைய கேள்வி நினைவுக்கு வக் தது. சில பெரிய கடைகள் தமிழர் கடைகளாக இருப் பதைக் கண்டேன். அவற்றுள் ஒன்று ; மதராஸ் பாளேய காட் கம்பெனி என்பது. கொழும்பு நகரில் மிக ஒழுங் காகவும் நாணயமாகவும் சிறப்பாகவும் கடைபெறும் அதுணிக் கடை அது. அது பெரிய கடையாகவும் விளங்கு கின்றது. அந்தக் கம்பெனியில் தொழில் செய்யும் எல் லாரும் வாலாஜாபாத் அப்பாவுக்கு நன்ருகத் தெரிந்தவர் கள். ஆகையால் அவரோடு நாங்கள் அங்கே போய்ச் சேர்ந்ததும், தமிழ்நாட்டு இட்டளி முதல் விருந்தோம்பும் அன்பு வரையில் எல்லாம் எங்கள் கண்முன் வந்து மகிழ் வித்தன. அங்கே இருந்த நேரம் எல்லாம் காங்கள் வெளி நாட்டில் கடல் கடந்து போயிருப்பதை மறந்துவிட்டிருக் தோம். தமிழ்நாட்டில் சென்னையில் இருப்பது போலவே இருந்தோம். அங்கு இருந்தவர்களின் நடை உடை பேச்சு அன்பு எல்லாம் தமிழ்நாட்டின் சூழலை நினைவில் நிறுத்தி எங்களை அப்படி மறக்கச் செய்துவிட்டன.
சென்னை, தமிழ்நாட்டின் தலை 15 க ரம். கொழும்பு, இலங்கையின் தலைநகரம், ஆயினும் துறைமுகத்தைப் பொறுத்தவரையில் சென்னையைவிடக் கொழும்பு பெரி யது, சிறந்தது. சென்னையில் பல இனத்தாரும் கலந்து வாழும் கலப்பு மிகுதி என்று நீ எண்ணிக்கொண்டிருக் கிருய் அல்லவா? கொழும்பு நகரைப் பார் த் த ர ல், சென்னையில் உள்ள மக்கள்கலப்பு மிகக் குறைவு என்று தோன்றும். கொழும்பு நகரக் கடைத் தெருவில் நான் சுற்றியதே அதை அறிவதற்காகத்தான். வெளியூர்களுக் குச் சென்ருல் நான் பெரும்பாலும் கடைத் தெருவைசி சுற்றிப் பார்க்க விரும்புவதில்லை. அருவி உண்டா, ஆறு

Page 26
46 யான் கண்ட இலங்கை
உண்டா, அழகிய கடற்கரை உண்டா, புத்தம் புதிய கட் டிடங்கள் உண்டா, வியப்பான இயற்கைக் காட்சிகள் உண்டா என்றுதான் தேடுவது என் பழக்கம். ஆனல் கொழும்பு நகரம் தமிழர் வாழ்க்கைக்குப் போராடும் ஒர் இடமாக மாறிவிட்டதால், உண்மைக் காரணத்தைக் காண்பதற்காகச் சுற்றிப் பார்க்க விரும்பினேன். சுற்றிப் பார்த்தபிறகு, அத்தனை கலப்பு உடைய அந்த நகரத்தில் அறிவுக்கும் திறமைக்கும் புகழ் பெற்றவர்கள் தமிழர் களாக இருக்கக் கண்டேன். இந்தியாவின் தலைநகர மாகிய டெல்லியிலும் அப்படித்தானே விளங்குகிறர்கள் ? இலங்கையின் தலைநகரத்தில் அவ்வாறு விளங்குவதைப் பற்றிக் கேட்கவேண்டுமா ? இடம் கொடுத்தால் அமெரிக் காவின் தலைநகரிலும் அறிவையும் திறமையையும் காட்டிச் ஒறப்படைய வல்லவர்கள் தமிழர்கள். ஆனல் இந்த அறி வும் திறமையுமே மற்றவர்களின் பொருமையைத் தூண் டிப் பகையுணர்ச்சியையும் வளர்க்கின்றன.
கொழும்பு நகரைப் பற்றி இன்னும் என்ன எழுத வேண்டும் ? சென்னையில் உள்ளவை போல் பலவகைக் கட்டிடங்களும் தொழிற்சாலைகளும் போக்குவரவுக் கருவி களும் மற்றவைகளும் உள்ளன. பலவகைப் பத்திரிகை நிஜலயங்கள், பலவகை அலுவலகங்கள், பொருட் காட்சிச் சாலை, பூங்கா முதலான எல்லாம் உள்ளன. டிராம் வண்டி கள் அகன்ற தெருக்களில் இயங்குகின்றன. ஆனல் அவை சென்னையில் உள்ளவைபோல் அழகாக இல்லை. இரண்டு அடுக்கு உள்ள பஸ்கள் உள்ளன. ஒரு நெடுந்தெருவில் ஓர் இடத்தில் ஊர்திகளின் போக்குவரவைத் தானே ஒழுங்கு படுத்தும் கருவி அமைக்கப்பட்டிருக்கின்றது. அது சில நிமிஷங்களுக்கு ஒரு முறை மாறி மாறித் திசை அறிவித்து ஊர்திகளைச் செல்ல விடுகின்றது. எவ்வளவு அவசரமாகச்

யான் கண்ட இலங்கை 47
செல்வோரும், சிறிது நேரம் அங்கே மோட்டாரை நிறுத்திக் கவனித்து, போகும் குறிப்பு வந்தபிறகே அப்பால் செல் கின்றர்கள். முன் கடிதத்தில் கலங்கரை விளக்கம் உயர்ந்த தாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதைக் கண்டதும் ஏமாற்றம் அடைந்தேன். சென்னையில் உள்ள கலங்கரை விளக்கம் இணையற்ற சிறப்பு உடையது என்பதை இப்போதுதான் அறிந்தே ன். கொழும்பு நகரில் கடற்கரைக்கு அண்மையில் நாற்சந்தி யின் நடுவில் தூபி போல் கலங்கரைவிளக்கம் கிற்கின்றது. அதைப் பார்த்ததும், என்னவோ என்று எண்ணினேன். என்ன என்று உள்ளூரார் ஒருவரைக் கேட்டேன். லைட் அவுஸ் ? என்ருர் அவர். வியப்போடு உற்றுப் பார்த்தேன். சிவப்பு நிறத் தூபியில் மேல்பகுதியில் மேற்குப் பாதியில் வெள்ளேயடித்திருந்தது. அதை எப்படிக் கலங்கரை விளக் கம் என்று எண்ணுவது ? பிறகு உற்றுப் பார்த்தபின் உண்மைதான் என்று உணர்ந்தேன்; சென்னை நீதிமன்றத் தின் மணிமுடியாய் விளங்கும் விளக்கத்தின் பெருமையும் உணர்ந்தேன். இப்படித்தான் 15ம் அருமைத் தமிழ்மொழி யின் சிறப்பும் புறநானூறு அகநானூறு திருக்கு றள் போன்றவற்றின் பெருமையும் தெரியாமல் நம்மில் பலர் கண்மூடி வாழ்கிருரர்கள். நான் கொழும்புநகர்க் கலங்கரை விளக்கத்தைக் கண்டதுபோல், மற்ருெரு காட்டாருடன் பழகி அவர்களின் மொழிப் பற்றையும் இலக்கியப் பண்பை யும் உணர்ந்த பிறகுதான், நம் மொழிச் சிறப்பும் 15ம் இலக் கியப் பெருமையும் உண்மையாக உணர முடியும்.
கலங்கரைவிளக்கம் மட்டும் அல்ல, கடற்கரையும் அப்படித்தான். சென்னையில் பிறந்து வளர்ந்த மக்களுக் குச் சென்னைக் கடற்கரையின் பெருமை சிறிதாவது தெரி யுமா? ஒன்றும் தெரியாது. பல்லாயிரக் கணக்கான மக்

Page 27
48 யான் கண்ட இலங்கை
கள் கூடி மகிழவும், நூருயிரக் கணக்கான மக்களைத் திரட் டிப் பொதுக்கூட்டம் நடத்தவும் சென்னேக் கடற்கரை பயன்படுகின்றதே! அந்தப் பெருமை நமக்கே நன்ருகத் தெரியாது. கொழும்புக் கடற்கரையில் புல் முளைத்திருக் கிறது; மழைத்தூறல் பட்டதும் சேறு ஆகின்றது. பரப் பான மணல் வெளி இல்லை. நூறுபேர் சேர்ந்து உட்கார ஒர் இடம் இல்லை. ஒரு பெரிய ஏரிக்கரை என்று சொல்லக் கூடிய நிலைமைதான் அங்கு உள்ளது. செவிடர்களாய்க் குருடர்களாய் ஊமையராய் வாழ்கின்ருேம்? என்று பாரதியார் பாடியது தமிழ் மொழிப் பெருமைக்கு மட்டும் அல்லாமல் இன்னும் எத்தனையோ துறைக்கும் பொருங் துவதாக உள்ளது. வெளி நாட்டைச் சுற்றிப்பார்க்காதவர்களுக்குச் சென்னைக் கடற்கரை உலகக் கடற்கரைகளில் உயர்ந்த ஒன்று என்பது எளிதில் விளங்காது. மற்றக் கடற்கரை களேப் பார்த்தபிறகே நம் கடற்கரையின் பெருமை தெரியும்.
மற்றென்று குறிக்க மறந்துவிட்டேன். கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியவுடனே தமிழன்பு மிகுந்த பத்திரிகை ஆசிரியர் ஒருவர் நிழற்படம் எடுக்க ச் செய் தார் என்றும், செய்தி கேட்டு வாங்கிச் சென்ருர் என்றும் முன் எழுதியிருந்தேன் அல்லவா? அந்த நிகழ்ச்சி மாலை நாலரை மணிக்கு நிகழ்ந்தது. அன்று இரவு கழித்து மறு நாள் காலையில் ஆறுமணிக்கே எங்கள் இருப்பிடத்தைத் தேடிக்கொண்டு செய்தித்தாள் வந்து சேர்ந்தது. அதைப் பிரித்ததும் எங்கள் படங்களையும் செய்திகளையும் முதல் பக்கத்தில் கண்டு வியந்தோம். இலங்கைத் தமிழர் சென் னைத் தமிழரிடம் கொண்டுள்ள அன்புக்கும் காட்டும் ஆர் வத்திற்கும் இது ஓர் அறிகுறி என்று நன்றியுள்ளத்தோடு நினைந்தோம். சிலமணி நேரத்தில் படம் எடுத்துப் பிளாக் செய்து அச்சிட்டு வெளிவரக் கூடிய அளவுக்கு இக்

யான் கண்ட இலங்கை 49
காலத்து முற்போக்குக் கருவிகள் எல்லாம் பத்திரிகை நிலையங்களில் அமைந்திருப்பதையும் உணர்ந்தோம். இவ் வாறே மற்ற எல்லாத் துறைகளிலும் கொழும்பு எந்த நகரத்திற்கும் பின்வாங்கவில்லை என்று சொல்லலாம்.
முன் கடிதத்தில் இந்த காட்டுச் சோற்றைக் கண்ட அளவில் ஏதோ குறிப்பிட்டிருந்தேன். அதை உண்ட பிறகு என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். நம் நாட்டுச் சோறு போல் இது சுவையாக இல்லை. குழம்புக் கும் மோருக்கும் சோறு சுவையாக அமையவில்லை. கிறம் சிவந்திருப்பதையும் உருவம் பெருத்திருப்பதையும் கண்டு மகிழ்ந்தேன். ஆனல் உண்டு மகிழமுடியவில்லை. அதே அரிசி சிற்றுண்டியாகும்போது நன்ருக இருக்கின்றது ; அதைக்கொண்டு இடியாப்பம் செய்கின்றர்கள். நமக்கு இட்டளி எப்படியோ அப்படி இலங்கைத் தமிழர்க்கு இடி யாப்பம் சிறந்த சிற்றுண்டி, சலிக்காத சிற்றுண்டி, அது நன்ருக இருக்கிறது. அதற்குச் சுவையூட்ட வருவது துவையலோ குழம்போ அல்ல. தேங்காய்ப் பால் முதலியவை கொண்டு ஒரு தனி முறையில் சாறு ஒன்று செய்கின்ருர் கள். அதைச் சொதி என்று சொல்கிருர்கள். இடியாப்ப மும் சொதியும்தான் இலங்கையின் இன்பச் சிற்றுண்டி.
சமையலறை அனுபவம் ஒன்றையும் இங்கே குறிக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்று பார்த்தேன். ஒரு பலகைமேல் பெரிய ஆமைபோல் ஒன்று இருந்தது. அது என்ன என்று சமையல்காரரைக் கேட்டேன். கேருஜனக் கிழங்கு? என்று மறுமொழி வந்தது. 15ம் விட்டு நாற் காலி பிடிக்காது, அவ்வளவு பெரிய கருனேக்கிழங்கு அது ! 'அம்மாவுக்குச் சொல். கினைத்துப் பார்க்கவும் வியப்பாக இருக்கும். வெங்காயம் பெரிய அளவில் விளைகிறது. தேங்
4 இ.

Page 28
5O யான் கண்ட இலங்கை
காய், தெரியுமா? ஒவ்வொன்றும் பெரிய பெரிய தேங்காய். அதன் இளநீரை ஒருவர் குடிக்க முடியாது. மட்டை மிகு தியாக இல்லை. எல்லாம் நீர்மயமே. அந்தக் கருனைக் கிழங் கைத்தான் மறக்க முடியவில்லை. வெங்காயம் தேங்காய் போல் வேறு சில காய்களும் பெரிய அளவில் உள்ளன. எல்லாம் பெரிய அளவுதான். மக்களின் மனமும் பெரி யதுதான். அதனுல்தான் இவ் வளவு அன்பு காட்டு கிருர்கள்.
எதை எதையோ எழுதினேன். மக்களின் வாழ்க்கை யைப் பற்றியும் நடை உடை அணிகலன்களைப் பற்றியும் ஒன்றுமே குறிப்பிடவில்லை. வேறுபாடாக, சிறப்பியல்பாக உள்ள இரண்டொன்றை மட்டும் எழுதுகின்றேன்.
இலங்கைத் தமிழர்கள் நம்மைப் போலவே இருக்கின் ரூர்கள். தமிழ்ச் சொற்களிலும் ஒலியிலும் மட்டுமே சிறிது வேறுபாடு இருக்கின்றது. கொஞ்சம் பழகிய பிறகு அவர்களுடைய பேச்சு எளிதில் விளங்கிவிடுகின் றது. நகரில் வாழும் செல்வக் குடும்பங்களில் ஏறக்குறைய எல்லாரும் நன்ருகப் படித்தவர்கள். பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவர்கள் பலர், ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கின்ருரர்கள். தமிழன் காக்கிற்கு ஒரு தனி ஆற்றல் உண்டு அல்லவா ? அது எந்த மொழியையும் எளிதில் கற்றுக்கொள்ளும். இங்குள்ள தமிழர்கள் சிங்கள மொழியை நன்ருகப் பேசுகின்ருர்கள். ஆனல் சிங்களர்க்கு அவ்வளவு தமிழ் பேச வருவதில்லை.
இலங்கை முகம்மதியர்களும் தமிழே தாய்மொழி யாகக் கொண்டவர்கள். சீருப் புராணமும் மஸ்தான் சாயபின் பாடல்களுமே இவர்களுக்கு வேதம். இவர்களில் பலருக்கு உருதுமொழி தெரியாது. நெடுங்காலத்திற்கு

யான் கண்ட இலங்கை 5.
முன்பே தமிழ்நாட்டை விட்டுக் குடியேறியவர்கள் ஆகை யால், இங்கேயே நிலைத்துவிட்டுத் தமிழை வீட்டுமொழி யாகக் கொண்டு வியாபாரம் முதலியவை செய்து வாழ் கின்றர்கள். இவர்களே உணவுக் கடைகள் நிறைய வைத் திருக்கின்ருர்கள். சிங்களர் விரும்பி உண்ணும் இடங்கள் இந்த உணவுக் கடைகளே. இவர்களின் தொழுகைக்காகப் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன.
கிறிஸ்தவர்களும் பலர் இருக்கின்றர்கள். ஐரோப்பியர் களும் பலர் தங்கி வாழ்கின் ருர்கள். தேயிலைத் தோட்டங் களும் ரப்பர்த் தோட்டங்களும் வைத்து, முதலில் தமிழரின் வியர்வையையும் பிறகு சிங்களரின் வியர்வையையும் பொன் னக மாற்றிக்கொண்டு வாழ்வை வளமாக்கிக்கொண்டவர் கள் இந்த ஐரோப்பியர்களே. இவர்கள் இன்னும் செல்வாக் குடன் தங்கிச் சீரும் சிறப்புமாக வாழ்கின்றர்கள். ஆனல் ஓயாமல் உழைத்து நாட்டைச் சீர்ப்படுத்திய தமிழர்க்குத் தான் இடர்ப்பாடு பெருகுகின்றது.
இந்த வேற்றுமையும் தொல்லையும் இனிமேல் மாறி விடும் என்று எதிர்பார்க்கலாம். இப்போதும் கிறிஸ்தவத் தமிழர்களுக்கும் சைவத் தமிழர்களுக்கும் இலங்கையில் வேறுபாடு இல்லை. தமிழ்மொழி இவர்களை ஒன்றுபடுத்திக் காத்துவருகின்றது. பழக்க வழக்கங்களும் ஒரே வகையாக இருந்துவருகின்றன. பண்பாட்டிலும் ஒற்றுமை இருக் கின்றது. ஒரே குடும்பத்தில் ஒரு பக்கம் ஏசுநாதரின் பொன் மொழி கேட்கும் ; மற்ருெரு பக்கத்தில் மாணிக்கவாசகரின் மணிமொழி ஒலிக்கும். கணவனும் மனைவியுமே இவ்வாறு சமயத்தால் வேறுபட்டிருப்பது உண்டு. சமயம் உள்ளத் தின் கோட்பாடு என்பது இந்தக் குடும்பங்களைக் கண்டால் விளங்குகின்றது; சமயம் வாழ்க்கையைப் பிரிக்கவும் பிளவு படுத்தவும் கருவியாகப் பயன்பட்டுவருவது எங்கும் உண்டுச்

Page 29
52 யான் கண்ட இலங்கை
என்ருலும் r இத்தகைய குடும்பங்களில் இந்தக் குறை இல்லை. கிறிஸ்தவர்களின் தொழுகைக்காக மிகப் பழைய கோயில்கள் கொழும்பு நகரில் உண்டு.
சிங்களரிலும் கிறிஸ்தவர்கள் உண்டு. ஆனல் பெரும் பாலோர் பெளத்தர்களே. மொட்டை அடித்து மஞ்சள் ஆடை சுற்றிக்கொண்டுள்ள பெளத்த துறவிகளை அங்கும் இங்கும் காண முடிகின்றது. அவர்கள் மக்களால் மதிக்கப் பட்டவர்களாகவே வாழ்கின்ருர்கள். சிங்களரில் பெளத்தர் கள் பேரன்பேர்டு கோயிலுக்குச் சென்று புத்தர்பெருமானை வழிபடுகின்ருர்கள். வழிபாட்டுக்காக அவர்கள் எடுத்துச் செல்வது செந்தாமரைப் பூக்களே ஆகும். கொழும்புக்கு வடக்கே ஒடும் கழனி கங்கை என்னும் ஆறு சிங்களர்க்கும் புனிதமான ஆருக விளங்கிவருகின்றது. அதன் கரையில் பழைய புத்தர் கோயில் ஒன்று இருக்கின்றது. அது பெளத்தர்களுக்குப் புண்ணியத் தலமாக இருந்துவரு கின்றது. புத்தரே வந்து சென்ற இடம் என்று அதை நம்புகிருரர்கள்.
சிங்களரில் ஆண்களின் உடைக்கும் பெண்களின் உடைக்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை. இரு சாரா ரும் கோடுகள் இழைத்த வெவ்வேறு நிறமுள்ள லுங்கிகளே உடுக்கின்ருர்கள். மேலுக்குச் சொக்காய் அணிகிருர்கள். உடையில் உள்ள எளிமையே அணிகலன்களிலும் உள்ளது. காதில் அணியும் தோடு தவிர, ப்ெரும்பாலும் வேறு அணி கலன்கள் பெண்கள் அணிவதில்லே. மூக்குத்தி முதலிய பழங்கால நகை ஒன்றையும் அவர்களிடம் காண முடியாது. அங்கு வாழும் தமிழ்ப் பெண்கள் அணிகலன்களைப் பொறுத்தவரையில் இந்த நாகரிகத்தை மேற்கொண்டிருப் பது போற்றத்தக்கதே.

யான் கண்ட இலங்கை 53
ஆனல் நம் நாட்டில் படித்த குடும்பங்கள் தவிர, மற்றக் குடும்பங்களில் இவ்வாறு அணிகலன்களேக் குறைப் பது காணுேம். எவ்வளவு ஏழையாக இருந்தாலும் மட்டப் பொன்னுலாவது வெள்ளியாலாவது பல நகைகள் தேடி அணிந்துகொள்ளுகிருர்கள். அளவுக்கு மீறி அச்சம் காணம் ஆகிய பண்புகளை வளர்த்துக்கொள்ள இந்த 15கைகள் பயன்படும். முகத்தில் நுட்ப உணர்வு உடைய உறுப்புக்களில் இவ்வாறு பல சிறு அணிகலன்களை அணி யாமல் விட்டுவிட்டால், பார்சி பெண்களைப் போலவும் ஐரோப்பியப் பெண்களைப் போலவும் தமிழ்ப் பெண்களுக் கும் அஞ்சாமை முதலிய முற்போக்குப் பண்புகள் வள ரும், பெண்கள் முன்னேருத நாடு என்றும் பிற்போக்கு கிலேயில்தான் இருக்கும். தமிழ்நாட்டுப் பெண்கள் வீட்டில் பறக்கும் பூச்சிகளாக மட்டும் இருந்தால் எதிர்காலத்தில் தமிழ்க்கும் தமிழர்க்கும் நல்வாழ்வு இருக்காது ; அவர்கள் 15ாட்டில் விளங்கும் மணிகளாகவும் திகழவேண்டும். அதற்கு ஒரு வழியாக இந்த நகைக் கோலம் குறைய வேண்டும்.
இன்னெரு வியக்கத் தக்க வேறுபாடு உண்டு. இங் குள்ள தமிழ்ப் பெண்களும் தலையில் மலர் அணிவதை அன்ருட வழக்கமாகக் கொள்ளவில்லை. மலர் அணிந்த கூந்தலைக் காண்பது மிக மிக அருமை. தமிழ்நாட்டி லிருந்து குடியேறிய குடும்பங்களிலும் இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்பது தெரியவில்லை. வேண்டுமா, வேண்டாமா என்பது வேறு ஆராய்ச்சி. தமிழ்நாட் டிற்கே சிறப்பியல்பாக உள்ள இந்தப் பழக்கத்தை இப் போது வட நாட்டாரும் மற்றவர்களும் கற்றுவருகிருரர்கள். ஆனல் தமிழர்களில் ஒரு பகுதியான இலங்கைத் தமிழ ரிடையே இது காலண்பதற்கு அரிதாக உள்ளது. இதற்கு ஒரு காரணம் கூறலாம். இலங்கையில் பலவகைப் பூஞ்

Page 30
64 யான் கண்ட இலங்கை
செடிகளும் கொடிகளும் வைத்துப் போற்றுவது குறைவு. சென்னையில் பாய்க்கடை பழக்கடை போல் பூக்கடை என்று பல கடை அடங்கிய ஒரு பகுதியே நகரத்தின் நடுவே தேவையாக இருக்கின்றது. பெரிய தலைநகரமாகிய கொழும்பில் அந்தத் தேவையே காணுேம். இன்று திரு வாதிரை நாள் அல்லவா ? சிவன் கோயிலில் பூசைக்கு என்று மதுரையிலிருந்து விமானத்தில் நானுTறு ரூபாய்க்குப் பூ தருவித்தார்களாம். அதற்கு அறுநூறு ரூபாய் இறக்கு மதி வரி விதிக்கப்பட்டதாம். ஆக இன்றைய கோயில் பூசைக்காகப் பூவுக்கு ஆயிர ரூபாய் செலவு செய்திருக் கிருர்கள். இந்தத் துறையில் மட்டும் தமிழ்நாட்டை அப்படியே பின்பற்றுகின்ருர்கள். கே ர யி ல் கட்டிய முறையே அப்படித்தானே ! தமிழ்நாட்டிலிருந்து பல வகைத் தொழிலாளரையும் அழைத்துச் சென்றுதான் கோயில் கட்டினர்களாம்.
சமயத்துறையில் இலங்கைச் சைவர்கள் நம்பிக்கை யும் ஒழுக்கமும் கிரம்பியவர்கள். நம் நாட்டில் நிகழா தவை அங்கே நிகழ்கின்றன. சமயக் கூட்டங்களுக்கு ஆண்களும் பெண்களும் நிறைய வருவார்களாம். இன் னும் சில நாட்களில் நாங்களும் பேசப் போகின்ருேம் அல்லவா ? அப்போது கூட்டத்தைக் காணப் போகின் ருேம். இது மார்கழித் திங்கள் ஆகையால், காலையில் தேவார திருவாசக இன்னிசை கேட்கின்றதாம். வானெலி யில் திருவெம்பாவை நாள்தோறும் பாடப்படுகின்றதாம். ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகளும் அந்த வானெலிப் பாட்டைக் கேட்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம் இது கேட்கவும் வியப்பாக இல்லையா ?
ஏசுநாதரிடத்திலும் புத்தரிடத்திலும் நிறைந்த அன் புடையவன் நான். ஆகையால் பெளத்தர்களைக் காரணம்

யான் கண்ட இலங்கை w 55
இல்லாமல் குறைசொல்ல முன்வரமாட்டேன். எல்லாச் சமயங்களிலும் உள்ளது போல், சமயக் கொள்கையைப் புறக்கணித்துவிட்டு, சமயச் சடங்குக&ளப் போற்றும் கண்மூடி வழக்கம் பெளத்தரிடமும் காண்கின்றேன். புத்த ருடைய அன்பியக்கம் எங்கும் காணப்படவில்லை. இலங் கைப் பெளத்த மன்னர்களின் வரலாறு கொலைமயமாக உள்ளது. இன்றைய வாழ்விலும் சிங்களரிடத்தில் அன்பை மதித்து வளர்க்கும் நல்ல போக்குக் காணுேம். ஒவ்வொரு காய்கறிக் கடையையும் பலசரக்கு மளிகையையும் கண் டேன். கருவாடு விற்காத கடை. இங்கு இல்லை. உப்பு மிளகாய் போல் கருவாடும் எல்லாக் கடைகளிலும் விற்கப் படுவது கண்டேன். சில சிற்றுார்களில் புத்தர் கோயிலில் சோற்றுடன் கருவாடும் வைத்துப் படைக்கிருர்களாம். சைவ உணவின் பெருமையை இங்கு ஆராயும் நோக்கம் இல்லை. ஆனல் புத்தருடைய பல்லுக்கும் எலும்புக்கும் பெரிய பெரிய கோயில்கள் எழுப்பிப் பேரன்போடு வழிபாடு நடத்துகிறவர்கள், அவருடைய கொள்கைகளே இப்படிக் கைவிட வேண்டுமா என்றுதான் எண்ணுகின்றேன். மக்கள் கொள்கைகளே மறந்து சடங்குகளைப் போற்றும் கண்மூடிகளாக இருப்பதால்தான், எத்தனை பெரியோர்கள் உலகத்தில் பிறந்தும் இன்னும் உலகம் உருப்படியாகாமல் கிடக்கின்றது.
இன்று காலை பத்து மணிக்கு ஒரு பெரிய கட்டிடத் தின் நிழலில் கின் நூறு கொண் டு மக்கள் கூட்டத்தின் போக்குவரவைக் கவனித்தேன். சிறிது நேரம் நின்ற படியே என்னென்னவோ எண்ணினேன். அந்த வழியாகச் செல்லும் மக்களுக்குள் உடையில் எவ்வளவு வேறுபாடு ! கணக்கே காணுேம். உள்ளத்தின் பலவகை வேறுபாட் டைத் தீர்க்க முடியாது நல்ல கால மாக அதைப்

Page 31
56 யான் கண்ட இலங்கை
பிறர்க்குப் புலனகாமல் மற்ைக்க முடியும். உடம்பின் நிறத்தாலும், மூக்கு நெற்றி மோவாய் முதலியவற்றின் அமைப்பாலும் இயற்கையாக உள்ள வேறுபாட்டைப் போக்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது. உடையில் காணப்படும் வேறுபாட்டை எளிதில் போக்கிக்கொள்ள லாம். எத்தனையோ வீண் சட்டங்களால் மக்களைக் கட் டாயப் படுத்தி ஆளும் அரசாங்கம், பயனுள்ள கட்டாயச் சட்டம் ஒன்று இயற்றி, இந்த வேற்றுமையை ஒழிக்கக் கூடாதா? வீட்டினுள் எந்தக் கோலத்தில் எந்த உடையி லாவது இருக்க உரிமை தரலாம். வீட்டைவிட்டு வெளியே வரும்போது, தெருவில் இயங்கும்போது, பொது வாழ்வின் நன்மையை முன்னிட்டு, ஒரு குறிப்பிட்ட உடையில்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் செய்வதனுல் தீமை என்ன ? எவ்வளவோ நன்மை விளையுமே ! உலக மக்களுக் குள் ஒற்றுமை வளர்வதற்கு இது ஒரு நல்லவழி அல்லவா? கொழும்பு போன்ற மக்கள் கலப்பு மிகுந்த தலைநகரங் களில் முதலில் இதைக் கையாளலாமே. தெருவில் நடக் கும்போதே நான் ஐரோப்பியன், நான் இந்தியன், நான் சிங்களன், நான் தமிழன் என்று தன்னை வேறுபடுத்திக் காட்டி வேற்றுமை உணர்ச்சியைப் பரப்புவதற்கு அர சாங்கம் உரிமை தருவது திேயா ? வடநாட்டில் இப்படிச் செய்திருந்தால், முன்பின் அறியாதவர்களைக் கொன்ற மதக் கொலைகள் எத்தனையோ நிகழ முடியாமல் செய் திருக்கலாமே !- இவ்வாறு சிறிது நேரம் எண்ணிக் கொண்டே பெருமூச்சு விட்டேன். அந்த எண்ணம் இன்னும் என்னை விட்டுப் போகவில்லை.
அன்புள்ள,
el.

M 3 Ι மதராஸ் பாளையகாட் கம்பெனி
கண்டி, இலங்கை,
5-1-50.
அன்புள்ள அரசு,
ஒய்வு இல்லாத சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு பல இடங்களில் அலைந்து களைத்துப்போய் இங்கே வந்து சேர்ந்திருக்கிருேம். மனத்திற்கு எவ்வளவோ கிளர்ச்சியும் இன்பமும் நிறைந்த காட்சிகள் இருந்தும், உடல் ஓர் அளவிற்குமேல் தாங்கமுடியாமல் களைத்துப் போகின்றது. ஒரு வாரத்திற்குள் இலங்கையைச் சுற் றிப் பார்த் து முடிக்கவேண்டும் என்ருல், வேறு என்ன செய்வது? உறங் கும் நேரம் தவிர, பெரும்பாலும் எங்கள் காலம் எல்லாம் மோட்டாரிலேயே கழிகின்றது. மோட்டார் ஒட்டி சரியான ஆள். சலிப்பு இல்லாமல் களைப்பு இல்லாமல் ஒட்டுகிருன்; என்ன சொன்னுலும் என்ன கேட்டாலும் புன்முறுவலோடு பேசுகிருன். அவனுக்கு வேளைக்குச் சிற்றுண்டியும் உண வும் வாங்கித் தருவது தவிர, வேறு உதவி ஒன்றும் நாங்கள் செய்வதில்லை. மொத்தமாகக் கம்பெனியில் வாடகை பேசிக்கொண்டு வந்தோம். பழுது பார்த்தல், பெட்ரோல் முதலிய எல்லாம் கம்பெனியின் செலவே, மோட்டார் ஒட்டி அந்தக் கம்பெனியில் சம்பளக்காரன். ஆனலும், சம்பளக்காரன் எங்கள் நன்மையில் கண்ணும் கருத்துமாக இருந்து உதவி செய்வது எவ்வளவு அருமை ! எல்லாம் விவேகாநந்த சபையாரின் ஏற்பாடு !

Page 32
58 யான் கண்ட இலங்கை
விவேகாநந்த சபையைச் சார்ந்த ஒருவர் அரசாங்கத் தில் பெரிய பதவியில் இருக்கிருரர். அவருடைய அன்பான ஏற்பாட்டை நாங்கள் என்றும் மறக்கமுடியாது. சென்ற இடங்களில் அவருடைய பெயரைச் சொல்லி, சமாசக் கூட்டத்திற்கு வந்திருக்கின்ருேம் என்பதையும் சொன்னல், எங்கும் அன்பான வரவேற்பும் உதவியும் கிடைக்கின்றன"
விமான நிலையத்தில் இறங்கிய போது ஒரு தாள் கொடுத்து அதில் எங்கள் உடல் நலத்தைப் பற்றி மூன்று நாட்களுக்குள் ஒரு டாக்டரிடம் நற்சான்று பெற வேண்டும் என்று சொன்னர்கள். மூன்று நாட்களில் எங்களுக்கு ஏதாவது காய்ச்சல் வந்தால், எங்கள் பயணமே கின்று விடும்படியாகச் செய்திடுவார்கள். அரசாங்கத்தின் ஏற்பாடு அப்படி, ஏதாவது தொத்துநோய் எங்கள் உடம்பில் ஊறி யிருந்து இலங்கைக்கு வந்தபிறகு வெளிப்படக்கூடும் என் பது அரசாங்கத்தின் எண்ணம். அப்படி தொத்துநோய் வெளிப்பட்டால் அது பரவாதபடி தடுக்க வேண்டும் என்பதற்காக, எங்களைத் தனியே பிரித்து ஒதுக்கி இலங்கை மக்களோடு பழகாதபடி தடுத்துவிடுவார்கள். அதற்காக ஒரு டாக்டரிடம் போயிருந்தோம். அவர் யாழ்ப்பாணத்துத் தமிழ் இளேஞர். அவருடைய கடமையைத் திறம்பட முடித்த பிறகு, நட்புரிமை கொண்டு பழகித் தமிழ்நாட்டைப் பற்றி யும் மற்ற நற்செய்திகளைப் பற்றியும் அன்போடு பேசத் தொடங்கினர். இவை எல்லாம் நாங்கள் எதிர்பாராதவை.
ரயில் வழியாக வந்து சேர்ந்த சமாச உதவிச் செய லாளர் எங்கள் பயணத்துக்குத் துணையாக வந்தார். கொழும்பில் விடியற்காலையிலே குளித்துவிட்டுப் படுக்கை முதலியவைகளை எடுத்துக்கொண்டு மோட் டாரில் உட் கார்ந்தோம். இப்படிப்பட்ட பயணங்களுக்கு என்றே பெரிய

யான் கண்ட இலங்கை 59
அளவில் அமைத்து வாடகைக்கு விடப்படும் மோட்டார் அது. இலங்கை இயற்கையழகு மிகுந்த தீவு. ஆகையால் அதைச் சுற்றிப் பார்க்க அடிக்கடி வெளிநாட்டார் வருகின் ருர்கள். அவர்களுக்கு வாடகைக்குக் கொடுப்பதற்காகவே கம்பெனியார் இப்படிப்பட்ட மோட்டார்களே வைத்திருக்கி றர்கள். எங்களுக்கு வந்த மோட்டார் பழுதுபார்க்கத் தேவை யில்லாத சிறந்த பொறி உடையது என்றும், மோட்டார் ஒட்டி மிகத் திறமையானவன் என்றும் அறிக் தோம். கொழும்பு ரயில் நிலையத்திற்கு எதிரே உள் ள உணவு விடுதியில் சிற்றுண்டி உண்டபிறகு, பொழுது விடிவதற் குள்ளாகவே நகரின் எல்லையைக் கடந்து பல மைல் சென்று விட்டோம். அழகான புதுமையான காட்சிகளைக் கண்டபோ தெல்லாம் மோட்டாரை மெல்ல ஒட்டச் செய்தோம் ; அல் லது கிறுத்தச் சொன்னுேம், மற்ற இடங்களில் அழகு இல்லை என்று சொல்லவில்லை. ஒரே வகையான அழகும் அமைப்பும் இருந்தால் அதை ஏன் திரும்பத் திரும்பப் பார்க்கவேண்டும்? மனிதனுடைய மனம் புதுமையை அல் லது மாறுதலைத்தானே நாடுகின்றது! ஆறுகள், பள்ளத் தாக்குகள், தென்னங் தோப்புகள், காடுகள், ரப்பர்த் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், ஓடைகள் இவற்றை அழகு இல்லாதவை என்று கூறமுடியுமா? ஆனல் ஒரு முறை ஓர் இடத்தில் ஒன்றைப் பார்த்தபிறகு, மறுமுறை மற்றென்று அதுபோலவே காணப்பட்டால், அங்கே கிற் பதும் இல்லை ; மெல்லச் செல்வதும் இல்லை. இப்படித் தான் முதலிலேயே பயணத் திட்ட த்தை வகுத்துக் கொண்டோம். அதன்படியே இறுதிவரையில் நடக்கப் போகி ருேம். இல்லையானுல் விரைவில் சுற்றிப் பார்த்துத் திரும்ப முடியுமா? ஆனல் ஒரே ஒருவகை இயற்கைக் காட்சிக்கு மட்டும் இந்த விதியை மீறிவிட்டோம். அதுதான் நீர்வீழ்ச்சி

Page 33
6O யான் கண்ட இலங்கை
என்று கூறப்படும் அருவியின் காட்சி. ஒரு மலைச்சரிவில் ஓர் அருவியைக் கண்டு நெடுநேரம் இருந்து மகிழ்ந்த பிறகும், மற்ருேர் இடத்தில் மற்ருேர் அருவியைக் காணும்போது, விரைந்து அப்பால் செல்ல முடியவில்லை. நான் மட்டும் அல்ல, எல்லாரும் இந்த மனப்பான்மை உடையவர்களாக இருந்தோம். வாலாஜாபாத் அப்பாவும் அருவியைக் காணச் சலிக்கவில்லை. அருவிகளும் ஒன்றுபோல் மற்றென்று இல்லை. ஒன்றுக்கொன்று அழகும் அமைப்பும் வேறுபட்டுப் புதுமை விருந்து அளித்துக்கொண்டிருந்தது. உண்மை யாகவே அருவியைக் காணும்போதுதான், இயற்கை அன்னே யின் மடியில் தவழும் குழந்தைகளாக நாங்கள் மாறிவிடுகின் ருேம். எவ்வளவு உயரம் ! என்ன அழகு! என்ன வியப்பு ! எங்கோ மலையுச்சியிலிருந்து தூய மெல்லிய வெண்ணிற ஆடையை நெடுகத் தொங்கவிட்டாற்போல், அது காற்றில் மெல்ல அசைந்து மலைச் சரிவைத் தழுவிக் குழைவதுபோல், ஒவ்வோர் அருவியும் எங்கள் உள் ளத்  ைத க் கொள் கொண்டது.
இலங்கை மலைகளின் அருவி களை க் கண்ட பிறகு வட அமெரிக்காவுக்குச் சென்று நயாகராவைக் காண வேண்டும் என்ற ஆசை போயிற்று. நயாகராவை இவ் வளவு நெருங்கிக் காண முடியுமா ? மைல் கணக்காக அதன் பேரிரைச்சல் கேட்கும் என்ருல், நினைத்தாலே மகிழ்ச்சி பிறக்கவில்லை. அதனிடத்தில் மென்மையும் இனி மையும் காட்சி அளவிலும் தோன்ற இடம் ஏது? இங்கே காணும் நீர்வீழ்ச்சிகள் எல்லாம் பொருத்தமும் அழகும் உடையவை. அடிப்பகுதியிலிருந்து அண்ணுந்து பார்க்க லாம். பக்கத்திலுள்ள வர்களோடு பேசி மகிழலாம். பொருத்தமான இடத்தில் முழங்கால் அளவு நீரில் கின்று களிக்கலாம். பனிடோல் குளிர்ச்சியாக உள்ள நீ  ைர க்

யான் கண்ட இலங்கை 6t
கையால் அள்ளிப் பருகலாம். குளிக்கவும் குளிக்கலாம். சிறிது நெருங்கிச் சென்று நுண்ணிய திவலைகளும் குளிர்ந்த காற்றும் உடலில் படுமாறு இன்புறலாம். மனத்தின் வியப் புக்கும் இடம் உண்டு ; உடலின் நுகர்ச்சிக்கும் இடம் உண்டு. சகாரா பாலைவனத்தின் வெப்பம் போல், வட துருவ நாட்டின் குளிர்ச்சி போல், கினேப்புக்கும் நன்மை தராதது நயாகரா நீர்வீழ்ச்சி. ஆனல் மக்களின் வாழ்வுக்கு ஏற்ற அளவில் அமைந்த தமிழ்நாட்டின் தட்பவெப்பம் போல், மக்கள் கண்டும் நுகர்ந்தும் வியந்து இன்புறுவதற்கு ஏற்றவை இலங்கை நீர்வீழ்ச்சிகள். தொலைவிலே சிறு வடிவில் காட்சி அளிக்கும்போதே கண்ணையும் கருத்தையும் கவரும், நெருங்கிச் செல்லச் செல்ல எங்கே எங்கே என்று அண்ணுந்து காணச் செய்யும். நீர் விழும் ஓசை செவியில் பட்டதும், ஆர்வத்தோடு எட்டிப் பார்க்கச் செய்யும். நெருங்கியவுடன், எவ்வளவு களேப்பையும் போக்கி மோட்டா ரை விட்டு இறங்கிவிடச் செய்யும், நேரமாவதைப் பற்றிக் கவலைப்படாமல் நெடு நேரம் கண்ட காட்சியையே கண்டு கண்டு வியக்கச் செய்யும். எங்கள் பயணத்தில் எவ்வள வோ நேரத்தைக் கொள்ளே கொண்டன இந்த அழகிய அருவிகள்! மனிதன் மனத்தால் குழந்தையாகும்போது தானே தூய இன்பத்தைக் காண்கின்ருன். ரு நொடியில் மனிதனுடைய மனத்தைக் குழந்தையாக்கும் இந்த அருவிகளுக்கு அமைந்திருக்கின்றது ! メ
முறையாக ஒன்றன்பின் ஒன்ருகக் கண்ட காட்சிகளே எழுத எண்ணினேன். ஆனல் மனம் என்னவோ செய்து விட்டது. அருவிகள் அளித்த இன்பத்தை கினைத்ததால், ஒழுங்கை மறந்து எழுதிவிட்டேன்.
கொழும்பு நகரை விட்டுப் புறப்பட்டோம் அல்லவா ? தெற்குக் கடற்கரை ஒரமாகச் சென்ருேம். வழி எல்லாம்

Page 34
4あ2 யான் கண்ட இலங்கை
இரு பக்கங்களிலும் தென்னமரங்கள் ஓங்கி வளர்ந்த காட்சி கள் அழகாக இருந்தன. இடையிடையே சிற்றுார்கள் பல இருந்தன. பிறகு தென் கிழக்கு நோக்கிச் செல்லும் பாதை யில் திரும்பி விரைவாகச் சென்ருேம். இலங்கையின் பல இடங்களையும் அவற்றிற்கு உரிய பாதைகளேயும் காட்டும் பெரிய படம் ஒன்றை வாங்கி வைத்திருந்த படியால், வழி யைப் பற்றிக் கவலை இல்லாமல் சென்ருேம், வழி காட்டும் குறிப்புக்களும் வழி யெல்லாம் கற்களில் பொறிக்கப்பட் டிருந்தன. பல ஊர்கள் குறுக்கிட்டன. தென்னங் தோப்பு கள் குறைந்து ரப்பர்த் தோட்டங்கள் காணப்பட்டன. தேயிலைத் தோட்டங்களும் ஆங்காங்குக் காணப்பட்டன. எல்லாவற்றையும் களேத்த நேரத்தில் ஒய்வாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று மோட்டாரை விரைவாக ஒட்டச் சொன்னுேம். அடுத்த பெரிய ஊர் எது என்று படத் தைப் பார்த்து இரத்தினபுரம் என்று அறிந்துகொண் டோம். ஒடும் ஓட்டத்திலேயே நெடு மரங்கள் இரு மருங்கும் அணி செய்து நிற்கும் காட்சிகளைக் கண்டு சென்ருேம்.
ஒன்பது மணிக்கு இரத்தினபுரம் போய்ச் சேர்ந்தோம். கடைத் தெருவில் மெல்லச் சென்ருேம். மோட்டாரை ஒரு கடை எதிரே நிறுத்திவிட்டுக் கடைகளைப் பார்த்தோம். இரத்தின வியாபாரிகள் பலர் உண்டு என்றும், இரத்தினக் கற்களை எடுத்துச் சாணை பிடித்து உலகத்தின் பல பகுதி களுக்கும் அனுப்பும் ஊர் அது என்றும் அறிந்தோம். அங்கே இரத்தினம் மட்டும் அல்லாமல், நவமணிகளில் முத்தும் பவளமும் தவிர மற்ற எல்லாம் கிடைக்கும் எனக கேட்டறிந்தோம். இஸ்லாம் மதத்தினர் பலர் அங்கே வியா பாரம் செய்து வாழ்கின்றனர். அவர்கள் எல்லாருக்கும் தமிழும் சிங்கள மொழியும் தெரியும். மலைநாட்டைச் சார்ந்த ஊர் அது. அருகே உள்ள மலைகளில்தான் பலவகை

யான் கண்ட இலங்கை 63
மணிகளைத் தேடி எடுத்துச் சாணை பிடித்து அழகுபடுத்து கின்ருர்கள். எத்தனையோ கற்களோடு கற்களாய் மண்ணில் புதைந்து கிடக்கும் இவற்றை எடுத்து விலைமதிப்புள்ள பொருள்களாய்ச் செய்து செல்வர் நாடும்படியாகச் செய் கின்ருர்கள். அரேபியா முதலான நாடுகளோடும் ஐரோப்பா வோடும் இலங்கையைத் தொடர்பு படுத்திப் பல வியாபாரி களுக்கு ஆசை ஊட்டி அழைத்தவை இந்த இரத்தினபுரத் துக் கற்களேயாகும்.
அடுத்தபடியாக நாங்கள் நிற்க நேர்ந்தது தொலைவில் தெரிந்த ஒரு மலையுச்சியைக் காண்பதற்காகவே, அந்த மலையுச்சிக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கமே எங் களுக்கு இல்லை. பலராலும் போற்றப்படும் அதைச் செல் லும் வழியிலிருந்தே பார்த்துவிட விரும்பினுேம், மலைகள் அடுக்கடுக்காகத் தொடர்தொடராக இருந்தன. மிக உயர மாகவும் இருந்தன. அவற்றில் ஒன்றன் உச்சிக்கே சிவ ைெளிபாதம் அல்லது ஆதாம் மலை என்று பெயர். அங்கே புத்தர் வந்து கண்டு சென்றதாகவும் அவருடைய அடிச் க வடு இருப்பதாகவும் பெளத்தர்கள் சொல்கின்ருர்கள். சைவர்கள் சிவபெருமான் திருவடி என்கிருர்கள் : யாத்தி ரைக்கு உரிய இடமாகக் கருதுகிருர்கள். இஸ்லாமியர் ஆதாம் என்னும் முதல் மனிதன் இருந்த இடம் என்று போற்றுகின்ருர்கள். மலையுச்சி 7300 அடி உயரமானது. அதைவிட உயரமான இடங்களும் அருகில் உண்டு. ஆயினும் என்ன காரணத்தாலோ அதற்கு ஒரு தனிச் சிறப்பு ஏற்பட்டுவிட்டது. ஏறுவதற்கும் மிக அரியது என்று சொல்லப்படுகின்றது. யாத்திரைக்கு உரிய சமயச் சார்பும் பெருமையும் ஏற்பட்ட படியால், ஏஅறுவதற்கு இரும்பு ஏணிகளும் சங்கிலிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றனவாம்.

Page 35
64 யான் கண்ட இலங்கை
பகல் பன்னிரண்டு மணிக்கு மேல் ஆனபிறகு, எங் கேனும் ஒர் இயற்கைச் சூழலான இடத்தில் தங்கி உணவு கொள்ள வேண்டும் என்று எண்ணினுேம், நகரங்களே, நாடிச் செல்ல எங்களுக்கு மனம் இல்லை. ஆற்றங் கரையோ ஏரிக்கரையோ கிடைக்குமா என்று படத்தைப் பார்த்தோம். இன்னும் ஏழெட்டு மைல்களுக்கு அப்பால் கலு கங்கை என்ற ஆறு குறுக்கிடப்போவது அறிந்தோம். உடனே தொடர்ந்து சென்ருேம்.
இலங்கையைச் சுற்றிப் பார்க்க எல்லா இடங்களுக்கும் செல்ல வழி உண்டு. கதிர்காமம், சிவனுெளிபாதம் முதலிய இடங்கள் தவிர, மற்ற எல்லாவற்றையும் ரயில் வழியாகவே சென்று காணமுடியும். ஆனல் நாங்கள் விரும்பும் நேரத் தில் புறப்படவும், கவர்ச்சி இல்லாத இடத்தில் விரைந்து செல்லவும், கவர்ச்சியான இடத்தில் மெல்லச் செல்லவும், தங்க விரும்பும் இடத்தில் தங்கவும், கிற்க விரும்பும் நேரத் தில் கிற்கவும் ரயிலில் சென்ருல் முடியாது. ரயில்பாதை தவிர, குறுக்கே மற்ருெரு வழியிலும் செல்ல முடியும். தங்கின இடத்தில் களேப்புத் தீர இன்னும் சிறிது நேரம் இருக்க ரயில் இடம் தருமா ? பொழுது போவதைக் கண்டு சிறிது விரைவில் புறப்பட வேண்டும் என்று விரும்பினுல் முன்னதாக ரயில் புறப்படுமா? மோட்டாரில் வந்த காரணத் தால் எல்லா நன்மையும் வாய்த்தன என்று பேசிக்கொண் டே சென்ருேம். மங்கையர்க்கரசியின் கண்கள் உறக்கத் தில் ஆழ்ந்து கிடந்தன. ஓயாமல் 'பல காட்சிகளேக் கண்ட படியே விரைந்து ஓடிய மோட்டாரில் பயணம் செய்தால் இளங்கண்கள் களைப்பு அடையும் அல்லவா? பசி வேளையும் வந்துவிட்டது. எங்கள் பேச்சும் அடங்கியது. ஆற்றங் கரையை ஆவலுடன் எதிர்பார்த்தோம். அதுவும் வந்து விட்டது.

65
யான் கண்ட இலங்கை
மோட்டாரை நிறுத்தி இறங்கினுேம், ஆழமான ஆஅறு; நீர் மாரளவுதான் ஒடிக்கொண்டிருந்தது. வெள்ளம் வருங் காலத்தில் மனிதனுடைய ஆற்றல் ஒன்றும் செல் லாது. உ நு தி யா ன பால ம் கட்டியிருந்தார்கள். தண்ணிரில் கால் வைத்தோம். நீர் மிகக் குளிர்ச்சியாக, இன்பமாக இருந்தது. பாளேயகாட் கம்பெனியார் கொடுத் தனுப்பியிருந்த உணவை நீரின் அருகே இருந்து வாழை யிலைகளில் வைத்து உண்டோம். மெல்ல இளைப்பாறி னுேம், ஆற்றங்கரையின் இருமருங்கும் அடர்ந்த காடு களைக் கண்டோம். பக்கத்தில் ஒரு சிற்றுாரும் காணுேம். மக்களின் குரலே காணுேம். மரங்கள் வானளாவி உயர்ந் திருந்தன. வழியில் கண்டு வந்தவை போன்ற ரப்பர்த் தோட்டங்களும் அவற்றை அடுத்த குடிசைகளும் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடக்கும் என எண்ணினுேம், சிறிது . நேரத்தில் மாட்டு வண்டிகள் வருவதைக் கண்டோம். மண் தெரியாதபடி ஏதாவது ஒரு செடியோ கொடியோ கிலம் எங்கும் மூடியிருந்தது. மண்வளமும் நீர்வளமும் அவ் வளவு மிகுந்திருந்தன.
காட்டின் ஒரமாகச் சில அடி தூரம் நடந்து போக விரும்பினேன். நண்பரும் உடன் வந்தார். ஒரு மரத்தைச் சேர்ந்தாற்போல் புற்று வளர்ந்திருந்தது. அடிமரம் செல் லரித்திருந்தது. இருந்த மாநிலம் செல்லரித்திடவும் ஆண்டு எழாதாள்? என்ற கம்பரின் அடியை என்னே அறி யாமல் என் வாய் பாடியது. "ஆமாம், உண்மைதான். இந்த மரத்தடிதான். இதோ செல்லரிக்கின்றது. இலங் கையும் இதுதான்? என்ருர் நண்பர். கேட்டுக் கொண் டிருந்த மோட்டார் ஒட்டி, “சிதாவாகை அங்கே இருக் கிறது? என்றன். விளங்கவில்லை. விளக்கம் கேட்டோம். அங்கேதான் சிதை சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும்
6. இ

Page 36
66 யான் கண்ட இலங்கை
அதனல் ஓர் ஆற்றுக்குச் சீதையின் பெயர் வைக்கப்பட் டிருந்ததாகவும் அவன் தெரிவித்தான். இராவணனுடைய நகரத்தையும் நாட்டையும் அழுகுரல் அறியாதவை என் அறும் அழகு மிகுந்தவை என்றும் கம்பர் அனுமனுடைய வாயால் தெரிவிக்கின்ருர், அப்படிப்பட்ட காட்டில் இருக் கின்ருேம் என்று எண்ணிக்கொண்டு நடந்து சென்று திரும்பினுேம்,
சிறிது இளைப்பாறி முடிந்தவுடன், மோட்டாரில் ஏறி னுேம், விரைந்து சென்றது அதுவும். கதிரவன் சாய் வதற்கு முன் கதிர்காமம் போய்ச் சேர வேண்டும் என்று திட்டம் இட்டோம். இரவு உணவு உண்டு தங்குவதற்கும் கதிர்காமத்தையே தேர்ந்தெடுத்தோம். மோட்டார் மிக விரைந்து சென்றது. இலங்கையின் தென் கரைக்கு வந்து விட்டோம். கடல் கண்ணுக்குத் தெரிந்தது. இலங்கைக்கு அப்பால் நேரே தென் துருவம் வரையில் கடலே இருப்பதை உணர்ந்தோம். அந்த இந்தியக் கடலின் பரப்பைக் கண் ணுல் கண்டறிய முடியாது என எண்ணினுேம். ஹம்பக் தோட்டா என்ற ஊர் நெருங்கியதும், கரையோரச் சாலையில் மோட்டாரை நிறுத்திவிட்டுக் கடலை நோக்கி நடந்தோம். மோட்டார் ஒட்டி எங்களே நோக்கிக் கடுமையான எச் சரிக்கை ஒன்று சொன்னன். “இந்த இடம் ஆபத்தானது. கடலின் அருகே போகாதீர்கள். மிக வு ம் ஆபத்து? எனறன.
8 சென்னையில் கடற்கரையிலேயே வாழும் நமக்குக் கடலைப் பற்றி ஒன்றும் தெரியாதா ? உள்நாட்டிலிருந்து வருகின்றவர்களுக்குச் சொல்வதுபோல் நமக்குச் சொல் கிருனே? என்று எண்ணிக்கொண்டு ஆர்வத்தோடு கடலே நோக்கி நடந்தோம். கடற்கரையில் மணல் இல்லை. மண் தான் இருந்தது. அதுவும் சாம்பல் கிறமான பொடிமண்

யான் கண்ட இலங்கை 67
சூனக, மிக மென்மையாகக் குழைந்த மண்ணுக, உழமண் போன்றதாக இருந்தது. வலப்புறம் பெரிய பாறைகள் இருந்தன. அவற்றை நோக்கி நடந்தேன். அவற்றின்மேல் கின்று அந்த மாபெருங் கடலை நோக்கவேண்டும் என்று சொன்னேன். சாலையில் இருந்த மோட்டார்ஒட்டி உரத்த குரலில் கூப்பிட்டு, வேண்டாம் வேண்டாம் என்று சைகை செய்தான். ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்று வாலாஜாபாத் அப்பாவும் தடுத்தார். மங் ைக்யர்க்க ரசி அஞ்சிப் பின்வாங்கினுள். நான் மட்டும் மெல்லச் சில அடி வைத்தேன். ஓர் இடத்தில் கால் சட்டென்று உள்ளே புதைந்தது. அலை ஒன்று பெரியதாக வந்தது; நல்ல காலமாக என்னை எட்டாமல் திரும்பியது. புதைந்த காலை எடுப்பதற்காக மற்ருெரு காலை ஊன்றி நின்றபோது, அது வும் உள்ளுக்குச் செல்வதுபோல் உணர்ந்தேன். மற்றேர் அலை வருவதற்குள் தப்பிச் சென் ரு ல் போதும் என்று ஆகிவிட்டது. மெல்லக் காலை எடுத்துக்கொண்டு மெத் தென நடந்து உறுதியான மண் உள்ள இடத்திற்குத் திரும்பி வந்துவிட்டேன். அலையால் நனையாதபோதே இப் படிக் காலை இழுக்கும் மண், அலை வந்தபோது என்ன செய்யுமோ என எண்ணினேன். நம் கடற்கரையில் உறுதி யான மணல் அழகுபடுத்துவதுமட்டும் அல்லாமல், நிற்ப தற்குத் துணையாகவும் உட்காருவதற்குத் தூய்மையாகவும் இருக்கின்றது அல்லவா? இங்கே அந்தச் சிறப்பு இல்லை. கடல்நீரில் கால் வைத்து கிற் கலாம் என்று இங்கே ஆசைப்பட்டுப் பயன் இல்லை. தென் திசை நோக்கி நின் றேன். நாங்கள்தான் இப் போது நிலவுலகத்தில் தென் முனையில் வாழும் மக்கள் என்று உணர்ந்தேன். இனித் தென் துருவம் வரையில் மக்கள் வாழும் நாடே இல்லை ; நெடுங்கடலே நீண்டு பரவிக் கிடக்கின்றது. மக்களின்

Page 37
68 யான் கண்ட இலங்கை
வாழ்க்கை முடிந்து நிற்கும் எல்லை இதுதான் என்ற எண் ணம் வந்தது. நண்பரிடம் சொன்னேன். "ஆமாம்! இனி மேல் உள்ள தென்பகுதி யமனுக்கே உரியது? என்றர். சிரித்தபடியே திரும்பினுேம்,
ஹம்பக்தோட்டா வழியாக மோட்டார் சென்றது. அதற்குக் கிழக்கே சிறு சிறு தீவுகள் உள்ளன என்றும், அவற்றுள் ஒன்றுக்கு இராவணன்கோட்டை என்று பெயர் என்றும் மோட்டார்ஒட்டியின் வாயிலாக அறிந்தோம்.
கால்மணி நேரத்தில் திசமாராம என்ற ஊருக்கு வந் தோம். அங்கே வெண்ணிறமான தூபி ஒன்று இருக்கின் றது. தமிழரசர்களுக்கு அஞ்சிய சிங்கள அரசர்கள் சிலர் தென் கோடியில் உள்ள இந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு சிலகாலம் ஆண்டுவந்தார்கள் என்று இலங்கை யின் வரலாறு கூறுகின்றதாம். இந்த ஊரைக் கடந்து பத்து மைல் தூரம் மோட்டார் வந்தது. அப்பால் ஒரு குளக்கரை வந்தது. மோட்டார்ஒட்டி எவ்வளவோ பாடுபட்டு மோட்டா ரைச் செலுத்த முயன்றன். அவன் முயற்சி வீணுயிற்று. மோட்டாரின்மேல் குற்றம் இல்லை. வழியின் குற்றமே அது, வழி மேடு பள்ளம் நிறைந்து, குளக்கரை ஆகையால் ஒழுங்கற்றதாய், மோட்டார் செல்ல முடியாததாய் இருந்தது.
கதிர்காமம் அங்கிருந்து ஒன்றரை மைலில் இருந்தது. மோட்டாரை விட்டுவிட்டு நடக்கத் தொடங்கி குே ம். அன்று இரவு கதிர்காமத்தில் தங்கவேண்டுமே என்று படுக்கை முதலியவற்றை எடுத்துக்கொண்டோம். எதிரே இரட்டை மாட்டு வண்டி ஒன்று வந்துகொண்டிருந்தது. அதில் படுக்கை முதலியவற்றை வைத்து வாடகை பேசி ஒட்டிவரச் செய்தோம். 'முருகன் வண்டி ஒட்டி வந்து அழைத்துச் செல்வானம்” என்ருர் நண்பர். "ஆமாம் !

யான் கண்ட இலங்கை 69
வண்டிக்காரன் முருகன்தான். வேறு யார்? என்றேன் கான். மங்கையர்க்கரசி கலகல என்று சிரித்தாள். இவன் மட்டும் முருகன் என்ருல் ஒரு பங்கு உண்மை யே; காமும் முருகன், நாம் காண்பன காணுதன எல்லாம் முருகன் என்று உணர்ந்தால்தான் முழு உண்மை? என்றேன்.
* நீங்கள் சொல்வது, கடவுளே எல்லாம் என்ற கொள் கை. ஆனல் முருகன் வருவதாகவும் துணை செய்வதாகவும் உள்ள இப்படிப்பட்ட நம்பிக்கை எல்லாம் இந்தக் கோயிலைப் பொறுத்த வரையில் அன்பர்களுக்கு உண்டு? என்ருர் கண்பர்.
* நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். தேங்காய் வைத் தால் தானே போய் உடைத்துக்கொண்டு வருகிறதாம் இன்னும் என்னென்னவோ நடக்கிறதாம் ? என்றேன்.
* அற்புதங்களைச் செய்வது கடவுளின் வேலை அல்ல அனேத்துயிரையும் காப்பாற்றுவதே கடவுளின் அருள் ? என்ருர் நண்பர்.
பேசிக்கொண்டே போகும்போது மாணிக்ககங்கை என்ற ஆறு குறுக்கே வந்தது. ஆற்றில் ருேம் அவ்வள வாக இல்லை. முழங்கால் அளவு நீர்தான் இருந்தது, இருந்தாலும் மாலை நேரத்தில் சில்லென்ற நீரில் ஏன் இறங்க வேண்டும் என்று எண்ணி, ஆற்றிற்கு அமைத்த பாலத்தில் ஏறினுேம். அதுவோ ஒரு வேடிக்கையான பாலம். இந்தக் கரையில் நின்ற ஒரு மரத்தோடு அந்தக் கரையில் ஒரு மரத்தைக் கம்பிகளால் இணைத்துக் கட்டை களேப் பரப்பியிருந்தார்கள். நடக்கக் கால் வைத்தவுடனே அந்தப் பாலம் அசைந்து ஆடத்தொடங்கியது. வேடிக்கைக் காக ஆட்டினேன். மங்கையர்க்கரசி அஞ் சி நிற்பதைக் கண்டேன். பிறகு ஆட்டுவதை விட்டு மெல்ல நடந்தேன்.

Page 38
7O யான் கண்ட இலங்கை
அந்தப் பாலத்தைக் கடந்ததும் ஆற்றின் அந்தக் கரையில் இருப்பதுதான் கதிர்காமம். அது சிறிய கிராமம். இரண்டு தெருக்கள் இருக்கின்றன. ஆற்றங்கரையில் ஊர் அமைந்திருக்கிறது. சத்திரங்களும் மடங்களும் உள்ளன. ஊரைச் சேர்ந்தாற்போல் ஒரு முனையில் கோயில் உள்ளது: தெருக்கள் அகலமாக இருக்கின்றன. மக்கள் கூட்டம் இல்லாமையால், தூய்மை கெடுவதற்குக் காரணம் இல்லே. சிறு கடைகள் இருக்கின்றன. சத்திரத்தில் தங்கியிருக்க ஏற்பாடு செய்துவிட்டு, கோயிலுக்குச் சென்ருேம். கோயில் திறக்கப்படவில்லை. விளக்கு வைத்தபிறகே திறக்கப்படும் என்று அங்கிருந்தவர்கள் சொன்னர்கள். கோயிலை ச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினுேம், ஒருவகையான வேலைப் பாடும் இல்லை. நம்மூர்ப் பக்கங்களிலுள்ள மாரியம்மன் கோயில்களைப் போல் உள்ளது. சில மாரியம்மன் கோயில் களில் உள்ள கலைச்சிறப்பும் இங்கு இல்லை. தமிழர் கட்டிய முருகன்கோயிலாக இருந்தால் இப்படி இருக்குமா என்று எண்ணினேன். மலையடிவாரத்தில் காட்டின் நடு வில் அமைந்த சிற்றுார் ஆகையால் சிறப்பாகக் கட்டுவதற்கு வேண்டிய ஆட்களும் பொருள்களும் கிடைக்காத குறை காரணமாக இருக்கலாம் என்று உணர்ந்தேன். ஆனல் இதன் தலபுராணம்மட்டும் ம ற் ற த் தலபுராணங்களைப் போல் கோபுரச் சிறப்புகளும் மண்டபச் சிறப்புகளும் மற்றச் சிறப்புகளும் கூறி வருணிக்கிறதாம். ஊரைக் காணுமலே எழுதப்பட்ட தலபுராணமா, கண்டிருந்தும் வழக்கமான வருணனைகளை விடக்கூடாது என்ற கொள்கையால் எழுதப் பட்டதா என்று கேட்டேன். யாரும் தக்க விடை கூறவில்லை.
கோயில் சுற்றிப் பார்ப்பதற்கும் பெரியதாக இல்லை. பின்புறத்தில் அரசமரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு மரம் மிகப் பழைய மரமாகக் காணப்படுகிறது. அதற்கு

யான் கண்ட இலங்கை 7
மேடை கட்டப்பட்டுப் போற்றப்படுகிறது. அசோக மன்ன னுடைய மகள் சங்கமித்திரை புத்தமதத்தைப் பரப்புவதற் காக இலங்கைக்கு வந்தார் அல்லவா ? அப்போது அந்த அம்மையார் கொண்டுவந்த போதிமரக் கிளைகளில் ஒன்று தா ன் இவ்வாறு மரமாக்கிப் போற்றப்பட்டு வருகிறது என்று சொல்கிறர்கள். பெளத்தர்கள் இந்த அரசமர மேடைக்கு வந்து வழிபாடு செய்துவிட்டுப் போகிருர்கள். மதில் ஒரமாக உள்ள சிறு கோயில்களில் ஒன்று பத்தினிக் கடவுளுக்கு உரியது. செங்குட்டுவன் வழிபட்ட கண்ணகி பத்தினிக் கடவுளாகப் புல நாடுகளிலும் போற்றப்பட்டாள் அல்லவா? அப்போது கயவாகு என்னும் இலங்கைமன்னி னும் பத்தினிக் கடவுளுக்குத் தன் நாட்டில் கோயில் ஏற் படுத்தினன். அன்று பரவிய அந்த இங்க்கம் சில இடங் களில் இவ்வாறு ஒரு மூலையில் இடம்பெற்று நிற்கிறது.
தெற்கு மதில் ஒரமாக ஆற்றுக்குச் செல்ல வழி இருக் கிறது. கோயில் திறக்க இன்னும் நேரம் இருந்தபடியால் ஆற்றங்கரைக்குச் சென்ருேம். சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டுக் கோயிலுக்கு வந்தோம்-கோயில் திறக் திருந்தது. பிள்ளையார்கோயிலும் அதை அடுத்து முருகன் கோயிலும் இருந்தன. இரண்டிலும் சிலைகள் காணப்பட வில்லை. திரைகள் இருந்தன. பிள்ளையார்உருவம் தீட் டிய திரைக்கும் முருகன் உருவம் வரைந்த திரைக்குமே பூசைகள் நடைபெற்றன. திரையில் எழுதப்பட்ட ஓவி யங்களிலும் தனியழகு ஒன்றும் இல்லை. திரைக்கு உள்ளே ஏதோ பெட்டி உண்டு என்றும், பெட்டியினுள் இருப்பது என்ன என்பது யார்க்கும் தெரியாது என்றும் கூறப்படு கிறது. ஆனல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கைக்கு அளவு இல்லை. செய்துகொள்ளப்படும் கடுமையான வேண்டு தல் (பிரார்த்தனே) களுக்குக் கணக்கு இல்லை. பூசைமுறை

Page 39
72 யான் கண்ட இலங்கை
யையும் பூசாரிகளையும் பார்த்தாலும முருகனுடைய தமிழ் மணமே இல்லை. பூசாரிகள் இருவர் ; வெவ்வேறு கொள் கையைச் சார்ந்தவர்கள் ; அவர்களுக்குள் பொருமையும் பகைமையும் உண்டு. ஆனல் இருவரும் தமிழர் அல்ல. ஒரு பூசாரி சிங்களன். ஆள்தோற்றத்திலே தூய்மையோ அன்போ புலப்படவில்லை. மற்ருெருவன் வடகாட்டுப் பாபா பூசாரியாம். துணியால் வாயைக் கட்டிக்கொண்டு பூசை செய்கிருன். மணி ஒலி உண்டு, கர்ப்பூ ர ஒளி உண்டு. திருநீறு முதலானவை வழங்குவதும் உண்டு.
கோயிலிலிருந்து வெளிவந்தபோது அந்த ஊர் அமை தியாய் அடங்கிவிட்டிருந்தது. தங்கியிருந்த சத்திரத்துக் குச் சென்று உணவு உண்டு உறங்கினுேம்.
விடியற்காலையிலே எழுந்து படுக் கை முதலியவை களைச் சுருட்டி இரண்டு சிறுவர்களின் தலைமேல் கூலி பேசி வைத்து நடந்தோம். பாலத்தைக் கடக்காமல் தண்ணிரி லேயே இறங்கிச் செல்வது எளிது என்று அந்தச் சிறுவர் கள் வழிகாட்டிச் சென்றர்கள். குளக்கரை வழியாக நடந்து மோட்டாரை அடைந்தோம். இனிமேல் வடமேற்கே திரும்பிச் சென்று நுவரெலியா வழியாகக் கண்டிக்குச் செல்லவேண்டும் என்று மோட்டார்ஒட்டியிடம் சொன் னுேம். அவன் வழக்கம்போல் புன்முறுவல் பூத்த முகத் தோடு, *ஆகட்டும் ஐயா? என்று சொல் லிப் புறப் பட்டான்.
சில மைல் தொலைவுதான் மோட்டார் சமவெளியில் சென்றது. பிறகு மலைவழிகளில் ஏறத் தொடங்கியது. * இனிமேல் கண்டி போகிறவரையில் வழியெல்லாம் மலை கள்தான்? என்ருன் மோட்டார்ஒட்டி, பட த்  ைத ப்
பார்த்து அது உண்மைதான் என்று தெரிந்துகொண்

யான் கண்ட இலங்கை 73
டோம். முதலில் அவ்வளவு பெரிய வேறுபாடு தெரிய வில்லை. போகப் போகத் திருப்பங்கள் மிகுந்துகொண்டே சென்றன. முன்னே மலை தெரிந்தால் பக்கத்தே பெரிய பள்ளத்தாக்கு இருக்கும். எதிரில் பெரிய பள்ளத்தாக்குத் தெரிந்தால், பக்கத்தே பெரிய மலை நிற்கும். மலை ஏற ஏறக் காட்சிகள் மிக அழகாகத் தோன்றின. சரிவுகளும் பள்ளத் தாக்குகளும் கணக்கற்றுத் தோன்றின. மோட்டார்ஒட்டி யின் கண்களுக்கும் கைகளுக்கும் பொறுப்பு மிகுதியா யிற்று. அவனுடன் யாரும் பேசக்கூடாது என்று தடை யுத்தரவு போட்டார் வாலாஜாபாத் அப்பா. சமாசத்தின் உதவிச் செயலாளரும் அந்தத் தடையுத்தரவின்படியே கடந்தார். உண்மையாகவே ஒரு நொடிப்பொழுதும் வேறு கினேவு இல்லாமல் அவன் மோட்டாரை ஓட்டவேண்டி நேர்ந்தது. ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு பெரும் பள் ளத்தாக்கோ பெரிய சரிவோ எதிர்ப்பட்டு அஞ்சச்செய்தது. விமானத்தில் வந்தபோது எல்லாரும் கவலையில்லாமல் அச்சமில்லாமல் வந்தோம். ஆனல் இந்த மலைவழியில் மோட்டார்ஒட்டியின் கையிலும் கண்ணிலும் எங்கள் உயிர் கள் ஊசலாடிக்கொண்டிருந்தன. மங்கையர்க்கரசியின் முகத் தில் மகிழ்ச்சியே காணப்படவில்லை, வாயின்மேல் கை வைத்தபடியே அச்சமும் வியப்பும் கலந்த உணர்ச்சியோடு இருந்தாள். பூனையும் பூச்சியும் காட்டி, புலியும் பூதமும் சொல்லிப் பயமுறுத்திப் பாலூட்டும் பழங்காலத்துத் தாய் போலவே, இயற்கையன்னையும் எங்களை வழி யெ ல் லாம் அஞ்சச்செய்து அழகுவிருந்து அளிக்கத் தொடங்கினள். குழந்தைக்கு இனியன சொல்லிப் புகழ்ந்து மகிழ்வித்து ஊட்டும் தாய்போலவும் இலங்கையின் இயற்கை அன்னை பல இடங்களில் இருந்தாள். ஆனல் அப்போதெல்லாம், வழியின் சிறப்பை மறந்துவிட்டு, அழகுவிருந்தை மட்டும்

Page 40
74 யான் கண்ட இலங்கை
அள்ளிப் பருகிக்கொண்டிருந்தோம். அஞ்சத்தக்க வழிகளில் சென்றபோது மட்டும், அன்னையின் கடுமையை மறக் க முடியவில்லை.
வழியில் கண்டுவந்த அழகிய காட்சிகளுக்குக் கணக்கு இல்லை. எத்தனை மலைகளில் ஏறி ஏறி இறங்கினுேம் ! எத்தனை அழகிய காட்சிகளைக் கண்டு கண்டு மகிழ்ந்தோம் ! முன் பார்த்த நீர்வீழ்ச்சிகள் திரும்பத் திரும்ப எங்களுக்கு முன் வந்து தோன்றின. . இந்தத் திருப்பத்தில் மறைந்த நீர்வீழ்ச்சி அடுத்த திருப்பத்தில் இன்னும் அழகாகப் பெரியதாக வந்து எதிர்ப்படும். இங்கே கண்ட மரஞ்செறிந்த மலைச்சாரல் மறுபடியும் வேறு வகையாகத் திரும்பும்போது புதுவகையான அழகோடு பொலிந்து தோன்றும். எதிரே, பார்த்தால் அடுக்கடுக்கான மலைகள் ; பின்புறம் திரும்பிக் கண்டாலும் அவ்வாறே ; காண்பன எல்லாம் மரம் அடர்ந்த மலைகளும் வளம் நிறைந்த பள்ளத் தாக்குகளும், நீர்நிலை கள் ஆங்காங்கே தொலைவில் தெரிந்தன. வழியில் ரப்பர்த் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் வேலை செய்யும் தொழிலாளர் சிலருடைய குடிசைகளும் பெரிய பெரிய தொழிற்சாலைகளும் காணப்பட்டன. வழியெல்லாம் அங்கங்கே ஒருவர் இருவராவது ஆட்கள் தென்பட்டுக் கொண்டே இருந்தனர். விலங்குகள் மிகுதியாக எங்கள் கண்களில் படவில்லை. பறவைகள் சிற்சில பறந்தன. மரச் செறிவுகளிலும் தோட்டங்களிலும் பறவைகளின் இன்னெலி மட்டும் கேட்டது. ஐரோப்பிய முதலாளிகளின் துப்பாக்கி கள் துருப்பிடிக்காமல் இருக்கும்போது, இவைகளுக்கு
உரிமை வாழ்வு ஏது?
எவ்வளவோ கண்டோம். கண்ட அத்தனையும் மூளே யில் இருக்குமானல் ஒரே நாளில் நூறு புத்தகங்களைப்

யான் கண்ட இலங்கை 75
படித்தாற் போன்ற அவ்வளவு பெரிய அனுபவச் செல்வம் பெற்றிருப்போம். ஆனல் மனித மூ&ள மிகமிகச் சிறியது. (அதைவிடச் சிறந்தது ஒன்று இல்லை என்பதும் உண்மை தான் !) பாளையக்ாட் கம்பெனியாரின் அன்பு கனிந்த இந்த மாளிகையில் உட்கார்ந்தபடியே எண்ணிப் பார்க்கிறேன். அவைகள் ஒழுங்காகவும் விடாமலும் கினைவுக்கு வரவில்லை. பொம்மைக் கடையில் பத்துப் பதினைந்து பொம்மைகளைப் பொறுக்கிக்கொண்டு மற்றவைகளை விட மனம் இல்லாமல் விட்டுத் திரும்பும் குழந்தையின் சின்னஞ் சிறு கைகளைப் போல் உள்ளது என் மூளை. இந்தத் தலையில் உள் ள சின்னஞ் சிறு கருவி வேறு என்ன செய்யும், பாவம் ! கண்களின்மேல் குற்றம் இல்லை. கண்ட காட்சிகளே எல் லாம் ஒன்று விடாமல் மூளைக்கு வாரி வாரி வழங்கியது (உணர்த்தியது). ஆனல் மூளையில் போதிய இடம் இருந் தால்தானே கண்ணில் பதிந்தவை எல்லாம் அங்கே நிலை நிற்கும் 1 பெற்றேர் / இருவரும் பொம்மைக் கடையில் உள்ள எல்லாவற்றையும் காட்டுகிறர்கள். ஆனல் குழந்தை யின் பூங்கைகள் எத்தனை பொம்மைகளை எடுத்துச் சுமக்க முடியும்? மனிதனின் மூளை எவ்வளவோ சிறந்த கருவியே ஆனலும், சிறிய கருவிதான். அதனல்தான் பள்ளிக்கூடங் களில் பல புத்தகங்களை ஒரு வாரத்தில் பரீட்சை செய்யும் முறை கூடாது என்று கல்வித்துறையில் வல்ல அறிஞர் பலரும் வற்புறுத்துகிருர்கள் 1 இயற்கைக் காட்சிகள் பல வற்றையும் கண்டு நினைவில் வைத்துப் போற்ற முடியாத காரணமும் அதுதான்.
இயற்கையின் பெருமை எப்படிப்பட்டது என்பதை மட்டும் அல்ல, மனிதனுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்பதையும் வழி எல்லாம் பார்த்துக்கொண்டு வந்தோம் , மலைச்சரிவுகளில் நெல் பயிராவதை நீ எப்போதாவது கற்

Page 41
76 யான் கண்ட இலங்கை
புனே செய்து பார்த்திருக்கிருயா ? இங்கெல்லாம் கண்ணு ரக் காணலாம். மேலே உள்ள பள்ளத்தாக்குகளில் நீரைத் தேங்கவைக்கிருர்கள். ழே வாய்க்கால்கள் வழியாகப் பாய்ச்சுகிருர்கள். நீர் வயல்களில் தேங்கி நின்ருல் நெல் பயிராகும். ஆனல் சரிவுகளில் அவ்வாறு வயல் அமைப்ப தற்கு முடியாது அல்லவா ? வளைவு வளைவாக இரண்டு அடி அகலத்தில் பாத்திபோல கட்டுகிருர்கள். ஒரு பாத் தியைவிட ஓர் அடி கீழே அடுத்த பாத்தி இருக்கும். இப்படியே ஒவ்வொரு பாத்தியும் ஒன்றன்பின் ஒன் ருக அமைந்திருக்கும். நீர் மேலே இருந்து சிறு வாய்க்கால் வழியாக வந்து பாத்திகளே ஒவ்வொன்ருக நிரப்பும். நீர் எப்போதும் கசிந்து கீழே ஒடிக்கொண்டே இருக்கும். இப் படிப்பட்ட வயலை ஏர் கட்டி உழ முடியாது அல்லவா ? ஆகையால் மாட்டின் உழைப்புக்கே இடம் இல்லை. எல்லாம் மனிதனுடைய கை உழைப்புத்தான். களைக்கட்டுப் போல் கூர்மையான கருவிகளைக் கொண்டு ஆண்களும் பெண் களும் அங்குலம் அங்குலமாக மண்ணைக் கொத்திக் கிள றிப் பண்படுத்துகிருரர்கள். சேறு ஆக்கி நாற்று நடுகிருர் கள். இதுதான் நாங்கள் கண்ட உழவு. ஏர் பூட்டி உழுவ தற்குக் கற்றுக்கொள்ளுமுன்பு பழங்காலத்தில் இப்படித் தான் நெல் பயிரிட்டிருப்பார்கள் அல்லவா ? மனிதன் தான் கண்டுபிடித்த புதுக்கருவி ஒத்து வராதபோது பழைய கைகால் உழைப்புக்கே திரும்பிச் சென்றுவிடு கிருரன். அறுவடை முறையையும் சில இடங்களில் பார்த் தோம். அரிவாள் எடுத்துக் கதிர்களை மட்டும் அறுத்துக் கொண்டு போகிருர்கள். நம் நாட்டில் செய்வது போல் தாளோடு அரிவதும், தாளடிப்பதும், ஒன்றும் இல்லை. தாள்கள் பாத்திகளில் அப்படியே நின்று உலர்கின்றன. உலர்ந்த தாளை-வைக்கோலை-ஈவு இரக்கம் இல்லாமல்

யான் கண்ட இலங்கை 77
கொளுத்திவிடுகிருர்கள். நாம் மாடுகளுக்கு வேண்டும் என்று காப்பாற்றிப் போர் போடுகிருேம். இவர்களுக்கு அந்த முயற்சியும் இல்லை; முயற்சிக்கு வேண்டிய கவலையும் இல்லை. கண்ட இடமெல்லாம் பாதை ஒரமெல்லாம் செழித்து வள ரும் பசும்புல்லைத் தின் ருல் போதுமே ! பசும்புல்லுக்குப் பஞ்சம் இருந்தால்தானே உலர்ந்த வைக் கோலை மாடு தின்னும் !
மலைவழிகளில் கணக்கற்ற திருப்பங்களில் மோட்டார். திரும்பித் திரும்பிச் செல்ல வேண்டி நேர்ந்ததாலும் அடிக்கடி மலைகளின் மேலும் கீழுமாக ஏறி ஏறி இறங்க. வேண்டி நேர்ந்ததாலும் எங்களில் சிலருக்குத் தலை சுற்றத் தொடங்கியது , வயிறு கலங்கத் தொடங்கியது. காலைச் சிற்றுண்டி பொருத்தமானதாகக் கிடைக்காததும் 62ღნ காரணம். வழியில் பெரிய ஊர்கள் இல்லை. சிற்றுண்டிக் கடை எதிர்ப்பட்ட நேரத்தில் வயிறு பசிக்கவில்லை. பசி எடுத்த நேரத்தில் சிற்றுண்டிக்கடை நல்லதாகக் கிடைக்க வில்லை. ஊரில் நாற்சந்தியில் ஒருவன் இடியாப்பமும் சொதியும் வைத்து விற்றுக்கொண்டிருந்தான். அவை: களின் தோற்றம் எங்கள் தமிழ்க்கண்களுக்குத் தூய்மை யாக இல்லை. ஆகையால் வாங்கத் தயங்கினுேம், இருவர் துணிந்து வாங்க எண்ணினுேம். மூவர் தடுத்துவிட்டார்கள். ஜனநாயக முறைப்படி வாங்காமல் விட்டுவிட்டோம். ஆனல், நாகரிக முறைப்படி, அாய்மையாக இல்லை என்று. சொல்லாமல், 'இட்டளியும் வடையும் இல்லையா? என்று விண்கேள்வி கேட்டோம். அவன் எங்கள் தமிழ் விளங் காமல் திகைத்தான். கை அசைத்தோம். ஏதோ சொல் லியபடி திரும்பிப் போய்விட்டான். நாகரிகமான மொழி விளங்காதபோது குகைமனிதனுடைய சைகையே பயன்படு கிறது. மனிதன் எந்தத் துறையிலுமே அந்தத் தொடக்கக்

Page 42
78 யான் கண்ட இலங்கை
காலத்துப் பழக்கவழக்கங்களே மறக்காமல் வைத்திருந்து, வேண்டியபோது பயன்படுத்திக்கொள்கிருன்.
இப்படித் தமிழ்நாட்டு இட்டளியும் இல்லாமல், இலங்கைகாட்டு இடியாப்பமும் வாங்காமல் கடை ரொட் டியை வாங்கி வயிற்றை நிரப்பிய தீவினை எங்களை விட வில்லை. தலை சுற்றுவதும் வயிறு கலக்குவதும் வரவர மிகுதியாயின. ஒரு நீர்வீழ்ச்சியை அடுத்துச் சிறிது நேரம் மோட்டாரை நிறுத்தச் சொன்னுேம், மோட்டாரும் கின் றது. அருவியின் அழகும் அதன் மெல்லிய திவலைத் தூவலும் எங்கள் உள்ளத்தையும் உடம்பையும் குளிரச் செய்து பித்தத்தை ஒருவாறு தணித்தது. செய்த தீவி னேக்கு இவ்வாறு கழுவாய் தேடிக்கொண்டபிறகு, மெல்ல மோட்டாரில் ஏறிச்சென்ருேம். மற்றவர்கள் எவ்வாருே அந்த அளவோடு தப்பித்துக்கொண்டார்கள். மங்கை யர்க்கரசியும் மெல்லக் கண் அயர்ந்து தப்பித்துக்கொண் டாள். உறங்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் 5ான் பட்ட பாடு சொல்ல முடியாது. நான் எப்போதுமே பஸ் பயணத்தை வெறுப்பவன் என்பது உனக்குத் தெரி யும். மூன்று மணி நேரத்தில் பஸ் ஏறிப் போகும் பய ணத்தை, ரயில் நிலையத்துக்கு நடந்து சென்று காத்திருந்து ரயில் ஏறி ஒரு நிலையத்தில் இறங்கி மறுபடியும் அங் கிருந்து நடந்து ஐந்தாறு மணி நேரப் பயணமாக்கிக் கொள்வது என் வழக்கம் அல்லவா ? இப்போது வேறு வழி இல்லை. இலங்கையின் எழிலைக் காண்பதற்கு ரயில் இவ்வளவு வாய்ப்பாக இருக்குமா ? இருந்தாலும் இவ் வளவு விரைவில் ஒரு சிறு கூட்டத்துடன் அளவளாவி மகிழ்ந்தபடியே சுற்றிவர முடியுமா ? ஆனல் அருவியை விட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கி, முன்போலவே திருப்பங்களையும் ஏற்றங்களையும் இழிவுகளையும் அனுபவித்

பான் கண்ட இலங்கை 79
ததும், தலைசுற்றலும் வயிறுகலக்குவதும் மறுபடியும் என்னை நாடி வந்தன. அந்த அளவோடு நிற்கவில்லை. வாந்தியே வரத் தொடங்கியது. மோட்டாரை நிறுத்து வது நல்லது என்றேன். வினையிலிருந்து விடுதலை பெற்ற மற்றவர்களுக்கு என் நிலைமை விளங்கவில்லை. அடிக்கடி கிறுத்தினுல் பயணம் தடைப்படுமே என்று அவர்கள் கருதினர்கள். இன்னும் ஒரு மைல் கடந்துபோய் கிறுத் தலாம் என்ருர் துணைச் செயலாளர். என் வயிற்றுக்கு அந்த அறிவுரையைச் சொல்லிப் பார்த்தேன். அது கேட்கவில்லை. சன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்தது நன் மையாக இருந்தது. வாந்தி எடுக்கும் உரிமைக்குத் தடை இல்லாத நிலையில் இருந்தேன். என் உரிமையைப் பயன் படுத்திக்கொண்டேன். என் கிலை மற்றவர்களுக்கு இரக் கத்தை உண்டாக்கியது.
நான் வாந்தி எடுத்துப் பல ஆண்டுகள் ஆகியிருக்கும். வாந்தி எடுத்துச் சோர்ந்து தலை சாய்ந்திருந்த நிலையில் என் இளமையை நினைத்துக்கொண்டேன். என் உடம்பு பித்த உடம்பு என்று பாட்டியார் அடிக்கடி சொல்வார். அடிக்கடி பித்தம் மிகுந்து வாந்தி எடுத்த நாட்கள் நினைவுக்கு வந்தன. அருமைப் பாட்டியாரின் அன்புக் கைகள் இரண்டும் அப் போதெல்லாம் என் தலையை இறுக்கிப் பிடித்துக் காப் பாற்றின. தலையை ஏன் இறுக்கிப் பிடிக்கிருர்கள் என்று காரணம் அறியாமல் இருந்தேன். இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அந்தக் காலத்தில் என் மென்மையும் சோர் வும் அறிந்து என்னைக் காப்பாற்றிய கைகள் வேலத்தில் மண்ணுய் மறைந்துபோன காஃளயும் நினைத்து வாடினேன். என் முகம் வாடிய காரணங்களில் ஒன்று மட்டுமே மற்றவர் களுக்குத் தெரியும். இந்த மற்ருெரு காரணத்தை நான் யாருக்கும் சொல்லவில்லை.

Page 43
8O யான் கண்ட இலங்கை
மற்றவர்கள் நன்ருக வரும்போது நான்மட்டும் இவ் வாறு வாந்தி எடுத்து வருந்தியது பிறகு எனக்கே வெட்க மாக இருந்தது. என் உடம்பு சொத்தை உடம்பு என்று மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்தியது போல் உணர்ந்து உணர்ந்து வெட்கமுற்றேன். இருந்தாலும் என்ன செய் வது ? இளமையிலிருந்து தொல்லைப்பட்டு வளர்ந்த உடம்பை உரமான இரும்பு என்று வாயால் சொல்லிக் கொண்டால் பயன் உண்டா ? அதன் உண்மை நிலைக்காக வருத்தப்பட்டால்தான் பயன் உண்டா ?
ஏதாவது பேசி மற்றவர்களின் இரக்க உணர்ச்சியை மாற்றவேண்டும் என்று முயன்றேன். "இரவு உணவில் மிளகுர்ே (ரசம்) இருந்திருந்தால் இப்படி வருந்தியிருக்க மாட்டேன்; தமிழ்நாடாக இருந்தால் மிளகுநீர் இல்லாமல் சாப்பாடு இருந்திருக்குமா ? என்றேன். 6 காலையிலும் கடைரொட்டியும் சர்க்கரையும்தான்; பயன் இல்லை? என்ருர் அப்பா. “நீங்கள் மேற்கு நாட்டிற்குப் போனுல் ஒரு பிப்பாய் மிளகுநீர் கப்பலில் ஏற்றிக்கொண்டு போய்விடுங்கள்? என்ருர் நண்பர். 'தமிழர்கள் இருந்தால் எந்த இடத்தி லும் இட்டளியும் மிளகுநீரும் கிடைக்கும்? என்றேன் நான். பேச்சும் மாறியது. என் பித்தமும் மாறியது.
மோட்டார்ப் பயணத்தைச் சிறிது நேரம் மாற்றினுற் போல் இருப்பதற்காக வழியில் ஒரு ரப்பர்த் தொழிற் சாலைக்குள் புகுந்தோம். அது ஓர் ஆங்கிலேயருடையது. பொறுப்பாளரும் ஓர் ஆங்கிலேயர். அவருடைய அனுமதி இல்லாமல் பார்க்க முடியாது என்ருர் ஒருவர். அவரை விடப் பெரிய தொழிலில் உள்ள மற்ருெருவரிடம் சென்று கேட்டோம். “பொறுப்பாளரைக் கேட்காமல் விடக்கூடாது. இருந்தாலும் விரைவில் பார்த்து உடனே வெளியில் வந்து விடுங்கள்’ என்று சொல்லி உள்ளே விட்டார். விடமுடி

யான் கண்ட இலங்கை 8.
----ܚܝܚܛ�
யாது என்று மறுத்தவரே எங்களோடு வந்து எல்லாவற் றையும் விளக்கிச் சொன்னர். ரப்பர் எப்படி உண்டாக்கப் படுகிறது என்பதை நீ புத்தகங்களில் படித்திருப்பாய், படக்காட்சிகளிலும் பார்த்திருப்பாய். ஆகையால் அதைப் பற்றி நான் விரிவாக எழுதப் போவதில்லை. ரப்பர்த் தோட் டங்களில் மரம் மரமாகக் கொட்டாங்கச்சியில் இறக்கிய பாலைச் சேர்த்துத் தொழிற்சாலைக்குக் கொண்டுவந்து பெரிய தொட்டிகளில் ஊற்றுகிருரர்கள். பால் வெள்ளை வெளேர் என்று இருக்கிறது. மருந்து கலந்து இருபத்து நான்கு மணி நேரம் தொட்டிகளில் விட்டுவிட்டால் நீர்மய மாக இருந்த பால் கட்டிவிடுகிறது. அதன் நிறமும் மஞ்ச ளாக மாறுகிறது. அதைத் தூய்மைப்படுத்திப் பெரிய யந்திரங்களில் வைத்து அழுத்தி மெல்லிய தோல்களாகச் செய்கிறர்கள். அந்தத் தோல்களே மாடியில் உள்ள வெப்ப மான அறைக்குக் கொண்டுபோய்த் தொங்கவிடுகிருர்கள் அங்கே செயற்கைச் சூட்டில் அவை உலர்கின்றன. அந்த அறையில் கால் வைத்ததும் அவற்றின் கெட்ட காற் றத்தை எங்களால் பொறுக்க முடியவில்லை. தேயிலைத் தொழிற்சாலை நறுமணம் உள்ளதாக இருக்கிறது. ஆனல் ரப்பர்த் தொழிற்சாலை அதற்கு மாறனதாக உ ள்ளது. அந்த மெல்லிய தோல் போன்ற ரப்பர்த்தாள்களை ஒன்றன் மேல் ஒன்ருக அடுக்கி அழுத்தி ஒன்றுபடச் செய்து கனம் உள்ளவைகளாகவும் ஒத்த அளவு உள்ளவைகளாகவும் செய்து அடுக்கிவைக்கிருர்கள். அந்தப் பகுதியைப் பார்த் துக்கொண்டிருந்தபோது பொறுப்பாளராகிய ஆங்கிலேயர் அங்கே வந்துவிட்டார். எங்களுக்குத் துணையாக இருந்தவர் அவரைக் கண்டதும் குற்றம் செய்தவரைப் போல் கலங்கி ஞர். நல்ல காலமாகப் பொறுப்பாளர் உடனே திரும்பிப் போய்விட்டார். எங்களுக்கு உதவியவர் உள்ளத்தில் வருந்
6 இ.

Page 44
82 யான் கண்ட இலங்கை
திக்கொண்டே இருந்தார். அவரைத் தேற்றுவதற்கு வழி தெரியவில்லை. முறைப்படி பொறுப்பாளரைக் கேட்டு வங் திருந்தால் இந்தத் தொல்லை இல்லை. ஆனல் சில நாட்களில் சில வேளைகளில் மட்டும் அவர் அனுமதி கொடுப்பாராம். எங்கள் பயணத் திட்டத்தில் காத்திருந்து கேட்டு வந்து பார்க்க வாய்ப்பு இல்லை. இப்படி எங்கள் தன்னலத்தால், எப்படியாவது நன்மை பெற வேண்டும் என்ற எண்ணத் தால், முறை தவறித் தவறு செய்ததை கினைந்து வருந்தி னுேம், பொதுநன்மையான ஒழுங்குமுறை தவறி அதிகாரி களுக்கு லஞ்சம் கொடுத்து வேண்டிய நன்மை பெறும் மக்களும் இப்படித்தான் எங்களைப் போல் தன்னலத்தால் தீமையை வளர்க்கிருரர்கள்.
முதலில் ஒழுங்குமுறை பேசி மறுத்துப் பிறகு எங்க ளுக்கு உதவியவர் இளைஞர்; சிங்களர்; ஆங்கிலம் கற்றவர். எங்களிடத்தில் ஆங்கிலத்தில் பேசினர். தொழிற்சாலையின் வாயிலில் வந்தபோது அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன் ; 1 சிங்களர்க்கும் தமிழர்க்கும் ஒன்றும் வேற் றுமை பாராட்டுவதில்லையே? என்றேன்.
:ே இங்கெல்லாம் ஒன்றும் இல்லை. எங்களேப் போன்றவர் களிடத்தில் இந்த வேற்றுமை எல்லாம் இல்லை. எங்களே விடப் பெரியவர்களிடத்தில் இது இருக்கிறது. அரசியல் காரணம் வரும்போது வளர்கிறது? என்ருர்,
* எதிர்காலத்தில் தமிழர்களின் வாழ்வு இங்கு எப்படி இருக்கும் ? н
6 நன்ருகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன். நன் ருகத்தான் இருக்கவேண்டும். இங்கிருந்து பணத்தை எடுத் துக்கொண்டு இந்தியாவுக்குப் போகக்கூடாது என்ற 6pQ[ნ தடை மட்டும் இருக்கும். கூலிகளாக வேலை செய்யும்

யான் கண்ட இலங்கை 83
தமிழர்க்கோ இதனல் ஒரு மாறுதலும் இல்லை. ஒரு தீமை யும் இல்லை. இங்கே பெறும் கூலி வயிற்றை வளர்ப்பதற்கே சரியாக இருக்கும்போது, பணம் சேர்த்துக்கொண்டு போவ தற்கு இடம் எது?
* தமிழரும் சிங்களரும் பகை இல்லாமல் வாழ்வார் களா P22
* அப்படித்தான் வாழவேண்டும். அது தான் நல்ல வழி. இருவகையார்க்கும் அதுதான் நன்மை. தவிர, சிங்களர் பெரும்பாலோராக இருந்தாலும், தமிழர்க்குக் கடமைப்பட்டவர்கள்தான். ஏன் என்ருல், இலங்கையை வளமாக்கிய கைகள் தமிழரின் கைகள்தான். இங்கே இந்தப் பாதைகளில் உள்ள ஒவ்வொரு கல்லும், தொழிற்சாலைக் கட்டிடத்திலுள ள ஒவ்வொரு கல்லும் தமிழருடைய வியர் வையைப் பற்றிப் பேசும். இங்கே உள்ள ஒவ்வொரு தேயிலைச் செடியும் ஒவ்வொரு ரப்பர் மரமும் தமிழருடைய உழைப்பைப் பற்றி எடுத்துச் சொல்லும்’ என்ருர்,
உள்ளம் கனிந்த அன்போடு அவருக்கு நன்றி கூறி விட்டு அப்பால் நகர்ங்தோம். சில மைல் தொலைவு சென் றதும் ஒரு தேயிலைத் தொழிற்சாலையைக் கண்டோம். இங்கே முறைப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எண்ணி, பொறுப்பாளர் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்று அவரிடம் கேட்டோம். அவர் அன்போடு இசைங் தார். மகிழ்ச்சியோடு தொழிற்சாலையுள் புகுந்தோம்.
தேயிலைத் தோட்டங்களைப் பார்த்தபோது நினைவுக்கு வராத ஒரு பாட்டு, இப்போது தொழிற்சாலையுள் புகுந்து அங்கிருந்த ஏழைத் தமிழ்த் தொழிலாளரைக் கண்டதும் நினைவுக்கு வந்தது. காரணம் அந்தப் பாரதியாரின் பாட்டு - தேயிலைத் தோட்டத்திலே ” என்ற பாட்டு - தோட்டத்

Page 45
84 யான் கண்ட இலங்கை
தின் அழகைப் பற்றிப் பாடிய பாட்டு அல்ல : கவி யின்பம் சொட்டும் பாட்டு அல்ல ; அங்கே ஏழைத் தொழிலாளராக இருந்து வீட்டையும் காட்டையும் கினேந்து கினைந்து விம்மி விம்மி அழுதபடியே வருந்தி உழைச் திட்ட தமிழரைப் பற்றி உருகிக் கண்ணிர் வடித்துப் பாடிய வாழ்க்கைப் பாட்டு அது. அதை நி3னத்தவாறே அங்கே ஒவ்வொரு பகுதியிலும் சென்று உழைக்கும் பெண்களையும் ஆண்களையும் கண்டோம். பெண்களே பெரும்பாலோராக இருந்தார்கள். சிங்களப் பெண்களும் தமிழ்ப் பெண்களும் இருந்தார்கள். உடையைப் பார்த்தே இந்த வேறுபாட் டைக் கண்டு அறிய முடிந்தது. அவர்களில் சிலரோடு தமிழில் பேசினேம். அவர்களும் மகிழ்ச்சியோடு பேசினர் கள. தமிழ்நாட்டில் சேலம் முதலிய பல ஜில்லாக்களி லிருந்தும் சென்றவர்கள் என்பதைப் பேசித் தெரிந்து கொண்டோம். வயிறு வளர்த்துப் பணமும் சேர்த்துக் கொண்டு சில ஆண்டுகளில் தாய்நாட்டுக்குத் திரும்பி விடலாம் என்று வந்தார்களாம். வந்த பிறகு பார்த்தால் வயிறு வளர்ப்பதற்கே சிலருக்குப் போதவில்லையாம். பணம் சேர்த்து வைக்க முடியவில்லையாம். ஏழை வாழ்வு தான் வாழ்கிருரர்கள். வாழ்க்கையில் ஒருவகை உயர்வும் இல்லை ; நன்மையும் இல்லை. படிப்பு இல்லை ; களிப்பு இல்லை ; நாகரிகமும் இல்லை ; நல்ல உணவும் உடையும் இல்லை; குடியிருக்க நல்ல வீடும் இல்லை ; நோய் வந்தால் தக்க உதவியும் இல்லை. ஆடுமாடுகள் உழைக்க முடியாத வேலையில் ஆட்கள் உழைக்க வேண்டுமே என்று இவர் களைத் தேடி ஆசை ஊட்டி அழைத்துக்கொண்டு போனர் கள், வலைபோட்டுப் பிடித்தார்கள். விடுதலை இல்லாமல் வைத்துக்கொண்டிருக்கிருர்கள். ஆடுமாடுகளுக்குக் கொட் டிகை போடுவது போல் இவர்களுக்கும் உதவாத இடங்

"யான் கண்ட இலங்கை 85
களில் சிறுசிறு குடிசைகள் போட்டுக் கொடுத்திருக்கின் ருர்கள். இவர்களின் மனம் எல்லாம் வளமான தேயிலைத் தோட்டத்தில் நிலைக்கவில்லை; வறண்ட தமிழ்நாட்டுப் புன் செய் நிலங்களை நினைத்துத்தான் ஏங்குகிறது. ஆனல் எப்படி வருவது ? விடுதலை ஏது? தப்பித் தவறி வந்தா லும், தமிழ்நாட்டில் வரவேற்பு ஏது? வந்தவர்களுக்குத் தொழில் தேடித் தருவதற்கு வழி ஏது ? வகை ஏது ? குரங்குக்கூட்டத்தில் தவறிப்போய்ச் சிலநாள் வெளியே தங்கி யிருந்து திரும்பிவரும் குரங்கை மற்றக் குரங்குகள் சேர்ப் பதில்லையாம். உண்மையோ, பொய்யோ, தெரி யா து. டார்வின் கொள்கைப்படி குரங்கின் வழி வந்த மக்களிட மும் இந்தத் தன்மை இருக்க வேண்டுமா? இருக்க வேண் டியதில்லை; இருக்கவும் இல்லை. ஆனல் பொருளாதாரப் போராட்டம் ஒவ்வொருவரையும் பிடித்து அலைக்கும் போது, யார் யாரை க் காப்பாற்றுவது? தவறிவந்த குரங்கு செத்துப் போனல், அந்தப் பிணத்தை மாலைகுட்டி வழிபட்டுத் தடபுடலாக எடுப்பதற்காவது நூற் அறு க் கணக்காகச் செலவு செய்யும் கண்மூடித் தன்மை நாட் டில் இருக்கிறது. ஆல்ை, இப்படித் தவறி வந்த மனிதப் பிணத்தைப் பற்றி மனிதர்களே கவலைப்படுவதில்லை. தமிழ் காட்டுத் தலைநகரமான சென்னையே இதற்குப் போதுமான சான்று. எத்தனையோ ஏழைகள் இப்படித் திக்கற்றுச் செத்து மடிவதற்குச் சென்னை நெடுங்தெருக்களில் 15டப்ப தற்காக அமைந்த முரட்டு மேடைகள் உதவுகின்றன. தார் போட்டும் சிமெண்டு இட்டும் இழைத்து மழமழ என்று ஒளி வீசும் பாதைகளில் பளபளப்பான மோட்டார்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்தும் பார்க்காதவை போல் வேக மாக ஓடுகின்றன. அங்கு மட்டும் அல்ல ; இங்கும் அப் படித்தான் ; எங்கும் அப்படித்தான்.

Page 46
86 யான் கண்ட இலங்கை
அடுத்தபடி நாங்கள் நின்ற ஊருக்கு ஹப்புத்தள என்று பெயர். அது ஒரு மலைமேல் அமைந்த ஊர். அங்கு விசிய காற்றின் குளிர்ச்சியை எங்களால் தாங்க முடிய வில்லை. அதன் நிலையத் தலைவர் யாழ்ப்பாணத் தமிழர். அவருடைய அன்புக்கு உரிய விருந்தினராகச் சிறிது நேரம் அவருடைய இருப்பிடத்தில் தங்கியிருந்தோம். அவர் விருந்து உண்டு செல்லவேண்டும் என்று சொல்லி வற்புறுத்தினர். இடியாப்பமோ, சோருே என்று எதிர் பார்த்தோம். ரொட்டி வெண்ணெய் சர்க்கரை எல்லாம் மேசைமேல் வந்து சேர்ந்தன. உடன்வந்தவர்கள் என் முகத்தைப் பார்த்தார்கள். நான் பேசாமல் தலை குனிந்து கொண்டேன். நல்ல காலமாக வேறு சில பெரிய தட்டு கள் வந்தன. அவற்றுள் ஒன்றில் வாழைப் பழங்களும், மற்றென்றில் பேரீச்சம் பழங்களும் இருந்தன. குனிந்த தலை கிமிர்ந்து மற்றவர்களைப் பார்த்தேன்.
அவரிடம் விடைபெற்ற பிறகு, ரயில் பாதை ஒரமாகச் சிறிது தொலைவு சென்று பிறகு நுவரெலியாவை நோக்கி விரைந்து சென்ருேம். மோட்டாரையே புரட்டித் தள்ளு வதுபோல் இருந்தது வீசிய காற்றின் வேகம். ஆயினும் அருமையான சாலை ஆகையால் மோட்டார் வேகமாக மலைச் சரிவுகளைக் கடந்து போக முடிந்தது, ஐயாயிரம் ஆருயிரம் அடி மேலே வந்த பிறகும், சமவெளிப் பகுதி யில் பயணம் செய்வது போலவே மோட்டாரிலும் ரயிலி லும் செல்ல முடிவதை நினைந்து வியந்தோம். அதுவும் பத்துப் பதினேந்து மைல்கள் அல்ல ; நூற்றுக்கணக்கான மைல்கள். இப்படிப்பட்ட பாதைகளை மலைச் சரிவுகளில் அமைத்திருக்கிருரர்கள் என்ருல், கினைந்து கினேந்து வியக்க வேண்டியுள்ளது. மோட்டார் செல்லும் தார் போட்ட பாதைகள் மட்டும் அல்லாமல், தண்டவாளப் பாதையும்

யான் கண்ட இலங்கை 87
அமைத்து ரயில் போக்குவரத்து நடைபெறுவது எவ்வளவு பெரிய ஏற்பாடு ! மலைகளின் மேல் ஏறி ரயில் வ&ளந்து வளேந்து பல ஊர்களுக்கும் மலைப் பகுதிகளுக்கும் செல் கிறது. ஏழாயிரம் அடி உயரத்திற்குமேல் பல மலே களுக்கு இடையில் உள்ள நுவரெலியாவுக்கும் ரயில் போக்குவரத்து அமைத்திருக்கிருர்கள். இவ்வளவுக்கும் காரணமாக இருந்து உழைத்த மக்கள் ஒருபுறம் இருக்க, இவ்வாறு திட்டம் இட்ட ஐரோப்பிய வியாபாரிகளே வாழ்த்தவும் எண்ணம் தோன்றுகிறது. அவர்கள் தன் னலத்தால் - பணம் சேர்க்கும் ஆசையால்- மலேயில் காடு களை அழித்துத் தோட்டங்களை ஆக்கி வளமுறச் செய்தார் கள் என்று சொல்லலாம். ஆனலும், அந்தத் தன்னல முயற்சியே, இவ்வளவு எளிதில் இலங்கையின் எழிலை எல் லாரும் காணுமாறு பாதைகளும் போக்குவரவு ஏற்பாடு களும் அமைத்திருக்கக் காரணமாகும். இலங்கையின் மலை கள் காட்டின் நடுவே அமைந்திருக்கின்றன. அதனுல் மலை களில் பெய்யும் மழை எல்லாம் வீணுகாமல் பயன்படு கிறது. பள்ளத்தாக்குகளில் தேங்கியும் ஆறுகளில் பாய்க் தும் அந்த மழைர்ே முழுதும் மலைகளையும் மலையைச் சார்ந்த பகுதிகளேயும் வள மு ற ச் செய்கிறது. இப்படிப்பட்ட மலைவளத்தைக் காண வேண்டுமானுல், நூற்றுக்கணக் கான மைல்கள் கடந்துபோக முடியுமா? கதிர்காமத்தை அடுத்து மலையேறிய நாங்கள் எவ்வளவோ விரைவாக மோட்டாரில் பயணம் செய்து இன்று இரவுதான் மலை களின் நடுவே அமைந்துள்ள கண்டிநகர்க்கு வந்துள் ளோம் என்ருல், எவ்வளவு பரப்பான மலைப்பகுதிகளில் தார்ப்பாதைகள் அமைத்திருக்கிருர்கள் என்று எண்ணிப் பார். மோட்டாரில் நுவரெலியாவுக்கு ஏறிச் சென்ற போது கீழே சுற்றிலும் பார்த்தேன். கண்ட இடமெல்

Page 47
88 யான் கண்ட இலங்கை
லாம் மலைக்குவடுகளே தெரிந்தன. சமவெளிப்பகுதியே கண்ணுக்கு எட்டவில்லை. எங்கள் காலடியில் உயர்ந்த சிகரங்கள் எத்தனையோ தெரிந்தன. இத்தகைய பகுதி களில் நகர்ப்புறம் போல் பாதைகள் அமைந்திருப்பது எங் களுக்கு வியப்பாக இருந்தது.
ஐரோப்பியர்கள் வந்தபிறகு மிகவும் சீர்ப்படுத்தினர் கள். ஆனல் அவர்கள் வருவதற்கு முன்னும் மலை களுக்கு இ ைடயே வழிகள் இருந்திருக்க வேண்டும். இல்லையானல் இந்த மலைகளில் சிலவற்றிற்குப் பெருமை ஏற்பட்டிருக்க முடியுமா? யாத்திரைக்கு உரியதாக விளங் கும் சிவனுெளிபாதம் என்ற மலை உச்சியைப் பற்றி முன் னமே குறிப்பிட்டேன். அது சமயச்சார்பு உடையது. அரசியல்சார்பு உடைய சிகரம் சீயகிரி என்பது. மிகச் செங்குத்தானது அது. அத்தகைய மலைக்குவட்டை ஒரு சிங்கத்தின் தலைபோல் செதுக்கியிருக்கிருர்கள். அந்தச் சிற்ப வேலைத் திறன் சிந்தனைக்கு எட்டாததாக உள்ளது. சிங்கள மன்னர்களின் அரசியல் இலச்சினை சிங்கம். ஏற முடியாத ஒரு சிகரத்தைப் பாடுபட்டுச் செதுக்கிச் சிங்கத் தின் தலைபோல் சிறந்த சிற்பமாக்கியுள்ளார்கள். அதைச் செய்து முடித்த சிங்கள ம ன் ன னை மிக வியந்து பாராட்ட வேண்டியுள்ளது.
நுவரெலியா என்பது இலங்கையின் கோடைக் காலத் தலைநகரம். தமிழ்நாட்டு உதகை போலவும் கோடைக் கானல் போலவும் அதை அழகுபடுத்தி வைத்திருக்கிருரர் கள். 7500 அடி உயரத்தில் அமைந்த அழகான நகரம் அது. பள்ளத்தாக்கில் ஏரி ஒன்று இயற்கையாக அமைக் திருக்கிறது. அதைச் சுற்றி உலாவிவருவதற்கு நல்ல யாதை போட்டுச் சுற்றிலும் அழகுபடுத்தியிருக்கிருர்கள்.

யான் கண்ட இலங்கை 89
ஐரோப்பியர்கள் வாழும் உயர்ந்த வீடுகள் பல உள்ளன. உணவுவிடுதிகளும் உள்ளன. செவ் விள நீர் வாங்கிப் பருகினுேம், ஒரு செவ் விள நீர் 85 சென்ட், ஒரு வடை 25 சென்ட், ஒரு வாழைப்பழம் 20 சென்ட் என்று எல்லாம் விலை மிகுதியாகவே இருக்கக் கண்டோம் (நாஅ சென்ட் ஒரு ரூபாய்). பல இயற்கை அழகுகளைக் கண்டுவந்த காங்கள் அந்த நகரத்தின் செயற்கை அழகுகளே ஆர அமரக் கண்டு மகிழ முடியவில்லை. நகரங்கள் பலவற்றைக் கண்டு பழகியுள்ள நாம், இந்த நகரத்தில் ஏன் காலத்தைச் செலவிட வேண்டும் என்று எண்ணினுேம், இலங்கைக்கு வந்தது நகரங்களின் அழகைக் காண்பதற்காக அல்ல என்று உடனே புறப்படத் துணிக் தோம். அவ்வாறு எண்ணித் துணிவதற்கு எ ங் க ள் களைப்பும் ஒரு காரணமே ஆகும்.
நேராகக் கண்டியை நோக்கித் தங்குதடை இல்லாமல் வேகமாக மோட்டாரை ஒட்டச் சொன்னுேம். பார்க்க வேண்டிய புதிய காட்சிகள் இருந்தால் தவிர, கிறுத்த வேண்டாம் என்ருேம். ஒரு மைல் தொலைவில் ஒரு சிறந்த பூந்தோட்டம் இருப்பதாகச் சொன்னன் மோட்டார்ஒட்டி, உடனே படத்தை எடுத்துப் பார்த்து உண்மைதான் என்று அறிக்தோம். கண்டிக்குப் பக்கத்திலும் அத்தகைய பூங் தோட்டம் ஒன்று இருப்பதாகப் படத்தில் குறித்திருப் பதைக் கண்டு, அதைப் பார்த்தால் போதாதா என்று கேட்டேன். "ஆமாம் அது போதும். அது இதைவிடப் பெரியது. அப்படியானுல் நேராகப் போகலாம். இனிமேல் கண்டி வரையில் பார்க்க வேண்டியது புதிதாக ஒன்றும் இல்லை. எல்லாம் முன்பார்த்தது போல்தான். இனிமேல் வேகமாகவும் போகலாம். உயரத்திலிருந்து இறங்கும்

Page 48
90 யான் கண்ட இலங்கை
இறக்கம்தான்? என்று சொல் லி ச் சுறுசுறுப்பாக ஒட்டினன்.
ஆனல் எங்களுக்குக் கவலையும் அச்சமும் வளர்ந்தன. கவலை இல்லாமல் கண் மண் தெரியாத வேகத்தில் ஒட்டு வதைக் கண்டு அஞ்சினுேம், 8 கண்டிக்கு நாளைக்குப் போனலும் போகலாம். அவசரம் வேண்டாம். நாங்கள் அங்கே போய்ச் சேரும்படியாகப் பார்த்துக்கொள் ? என்ருர் அப்பா, ஏதாவது ஒரு பள்ளத்தில் இடறினுல் என்ன ஆகும் என்று எண்ணுவதற்கும் நடுக்கமாக இருந்தது. * அப்படி அடிக்கடி மோட்டார் கவிழ்ந்து ஆள் அகப்படா மல் ஊர்பேர் தெரியாமல் போவது உண்டு. எத்தனையோ நடந்திருக்கின்றன. ஆனல் எனக்குத் தெரியும் எல்லாம். எங்கே மெல்லப் போக வேண்டும், எங்கே ஒடவேண்டும் என்பவை எல்லாம் எனக்கு நன்ருகத் தெரியும் ? என்ருன் மோட்டார்ஒட்டி, அவன் சொன்னதைக் கேட்டு மேலும் அஞ்சினேமே தவிர, ஆறுதல் அடையவில்லை. வர வர அவனுடைய வேகமும் மிகுதியாயிற்று ; எங்கள் அச்சமும் மிகுதியாயிற்று. கண்டியை நெருங்க நெருங்க எங்க ள் கவலே குறைந்தது. அவனுடைய திறமையைப் பற்றிப் புகழ்ந்து பேசத் தொடங்கினுேம்,
கண்டிக்குப் போகும் வழியில் அங்கிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ள ஊர் பே ரா த ஃன என்பது. அங்குத்தான் முன் சொன்ன சிறந்த பூந்தோட்டம் இருப் பது. இயற்கையின் எழிலும் செயற்கையின் சிறப்பும் இரண்டும் கூடி விளங்கிய பூந்தோட்டம் அது. நான்கு மைல் அகலமும் நான்கு மைல் நீளமும் உடைய பெரிய அமைப்பு அது. முன் பார்க்காமல் வந்த பூந்தோட்டத்தில் குளிர் நாடுகளில் உள்ள பூஞ்செடிகொடிகள் பலவும் இருக்

யான் கண்ட இலங்கை V 9.
கும் என்றும், இங்கே மற்ற நாடுகளின் பூஞ்செடிகொடிகள் பலவும் இருக்கும் என்றும் அங்கிருந்தவர் ஒருவர் தெரிவித் தார். அப்போதுதான் அந்தப் பூந்தோட்டத்தைப் பார்க் காமல் வந்தது குறித்து வருந்தினுேம். ஆயினும் குளிர் நாடுகளின் பூக்களுக்கு மணம் இல்லை ஆகையால், அதைப் பார்க்காமல் வந்ததில் பெரிய குறை இல்லை என்று ஆறு தல் அடைந்தோம்.
பெயரளவில் கேள்விப்பட்டுள்ள மரஞ்செடிகொடிகளே எல்லாம் இங்குக் காணமுடியும், மேலே கிமிர்ந்து பார்த்து உயர்ந்தோங்கிய மரங்களின் அழகைப் போற்றுவதை விட, கீழே குனிந்து நோக்கிச் சுற்றிலும் உள்ள பலவகைச் சிறு செடிகொடிகளின் தோற்றத்திலும் அவற்றின் பூக்களின் பலவகை அழகிலும் மணத்திலும் காலம் கழிக்க விரும்பி னுேம், கிலம் முழுவதும் பசும்புல் மெத்தென்று வளர்ந் திருக்க, அவற்றிற்கு அழகுபடுத்த இளஞ்செடிகளே க் கத் தரித்து ஒழுங்குபடுத்தியதிலும் கலைத்திறம் விளங்கியது. எல்லாவற்றையும் விட எங்கள் உள்ளத்தைக் கவர்ந்த பகுதி ஒன்று. பசும்புல்லால் அமைத்த பச்சை வழி அது. அதன் இருமருங்கிலும் வெள்ளே சிவப்பு மஞ்சள் கிறந்தால் பட்டைகள் மும்மூன்று நெடுகத் தீட்டினுற்போல் தொலை வில் தெரிந்தது. நெருங்கிச் சென்றபோது அவை வண்ணப் பட்டைகள் அல்ல, வண்ண மலர்கள் என்னும் உண்மை யைக் கண்டோம். ஒவ்வொரு நிறம் உள்ள மலர்கள் பூக்கும் பூஞ்செடிகள் ஒவ்வொரு வரிசையாக மூன்று வரிசையில் மூன்று வகை மலர்கள் இருமருங்கிலும் வைத்து இவ்வாறு அழகுபடுத்தியிருக்கிருர்கள். எங்கள் நினைவை விட்டு நீங் காமல் என்றும் நிலைத்திருக்கக் கூடிய அழகானகாட்சி அது

Page 49
92 யான் கண்ட இலங்கை
அந்தப் பூங்தோட்டத்தில் உள்ள வரையில் மிக மிக மகிழ்ச்சியாக இருந்தோம். நாள் கணக்காக அங்கே தங்கி யிருக்கலாம் போல் தோன்றியது. அதை விட்டு வெளியே வந்து மோட்டாரில் ஏறியபோதுதான் எங்கள் களைப்பை மீண்டும் நாங்கள் உணரத் தொடங்கினுேம். நேராக இங்கு வந்து இந்தக் கட்டிடத்தில் இறங்கி அன்பு கனிந்த தமிழர் முகங்களைக் கண்ட தும் மறுபடியும் தமிழ்நாட்டிற்குத் திரும்பிவிட்டாற்போல் உணர்ந்து மகிழ்ந்தோம். கொழும்பு நகரில் உள்ள கம்பெனியார் இவர்களுக்கு முன்னமே எங்கள் வருகையைத் தெரிவித்திருந்த காரணத்தால், இவர்கள் எங்களை எதிர்பார்த்துக்கொண் டிருந்தார்களாம். ? என்ன செய்யச் சொல்லலாம் ?? என்று மெல்லக் கேட்டார் வள்ள லார் மாணவர் இல்லத்து அப்பா. * சொல்லட்டுமா, அண்ணு 1 இன்று இரவு வற்றல் குழம்பும் மிளகு நீரும். நாளேக் காலையில் இட்டளியும் பருப்புக் குழம்பும் ? என் றேன். 'நல்லது. அப்படியே. இங்கே உள்ளதுதானே சொன்னீர்கள்? என்று புன்முறுவல் பூத்தது இங்குப் பொறுப்பேற்றுநடத்தும் அன்பு முகம், முகம் மலர்ந்து இனிய உணவு அளித்து விரு ங் தோம் புதல் முதல் அறநெறி போற்றி உலகை ஆளும் அரசியல் வரையில் எல்லாத் துறையிலும் உயர்ந்து விளங்கும் தமிழ்ப் பண் பாட்டை வாழ்த்திக்கொண்டே இந்தக் கடிதத்தை எழுதத் தொடங்கினேன். முடிக்கும்போதும் அ  ைத கினை ங் தே வாழ்த்துகிறேன்.
அன்புள்ள,
6.

I 4 1
விவேகாநந்தர் பள்ளிக்கூடம்,
திருக்கோணமலை W
7-1-50
அன்புள்ள அரசு,
வழியெல்லாம் புத்தரின் அமைதி பொலியும் முகங்
களேப் பார்த்துக்கொண்டு வந்து, இங்கே விவேகாநந்தரின்
படத்தின் எதிரே உட்கார்ந்துகொண்டிருக்கிருேம்.
மிகப் பெரிய புத்தர்கோயிலைக் கண்டியில் கண்டோம், புத்தருடைய பல் ஒரு தங்கக் கலத்தில் வைத்துப் போற்றி வணங்கப்படுகிறது. க்ண்டி நகரத்தின் சிறப்புக்கே இரண்டு காரணம், ஒன்று, அதன் இயற்கைச் சூழல். மற்றென்று, இந்தப் பல் கோயில், உலகத்தில் உள்ள பெளத்தர்கள் எல்லாரும் போற்றும் புனிதமான புத்தர்கோயில்களில் இது ஒன்று. கண்டி கக்ரத்தை உலகம் அறிந்திருப்பது. அதன் இயற்கையமைப்பால் அல்ல ; இந்தப் பெரிய புத்தர் கோயிலால்தான். பெளத்த சமயத்தைப் பற்றிய பழைய ஒலைச் சுவடிகளும் பல மொழிகளில் உள்ள பழைய புதிய ஆால்களும் ஆகிய எல்லாம் இந்தக் கோயிலின் ஒரு மூலையில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. கோயில் என்பது சமய நூல்களுக்குக் காப்பான இடமாகவும் விளங்குவதை இங். குத்தான் கண்டேன்.

Page 50
94 யான் கண்ட இலங்கை
கோயிலின் தோற்றம் அமைப்பு எல்லாம் தமிழ்க் கோயில்களுக்கு வேறுபட்டனவாக உள்ளன. தெருவை விடப் பல அடி உயர்ந்த மேடை ஏறிக் கோயிலுக்குச் செல்லவேண்டும். வழியில் நீர் நிறைந்த பெரிய தொட்டி உள்ளது. அதில் ஆமைகள் பல இருக்கின்றன. அவை 'ஐந்தடக்கல்’ என்று திருவள்ளுவர் கூறிய ஒழுக்கத்தை நினைவூட்டுகின்றன. அந்த கினைவோடு பல படிகளை ஏறிச் செல்ல வேண்டும். மேற்கு நாட்டு உடை அணிந்தவர்கள் பலர் கோயிலுக்கு வந்து வழிபடுகிருர்கள். அவர்கள் கால்பூட்சு முதலியவைகளைக் கழற்றியே உள்ளே நுழைய வேண்டும் என்பதற்காக நுழையும் இடத்திலேயே சுவரில் அந்த விதி எழுதப்பட்டிருக்கிறது. வழிபாட்டுக்கு வரு வோர் வாங்குவதற்காகத் தாமரைப் பூக்கள் எங்கும் விற்கப் படுகின்றன. ஒவ்வொருவரும் அவற்றை வாங்கிக்கொண்டு கோயிலுக்குள் நுழைகிருரர்கள். உள்ளே பல ஒவிய வேலைப் பாடுகள் அமைந்த பெரிய மண்டபம் இருக்கிறது. மஞ்சள் ஆடை சுற்றித் தலை மொட்டை அடித்த பெளத்த துறவி கள் பலர் இங்கும் அங்கும் இருக்கிருரர்கள். சயாம், பர்மா முதலான மற்ற நாட்டுத் துறவிகளும் அங்கே வந்து சமயக் கல்வி கற்றுக் குருமார் ஆவதற்குப் பயிற்சி பெறுகிறர்கள், மண்டபத்தைச் சுற்றிப் பல பகுதிகள் இருக்கின்றன. அங் கங்கே புத்தர் சிற்பங்களும் ஒவியங்களும் விளங்குகின்றன. சங்கிதி பூட்டப்பட்டிருந்தது. சுற்றி வரலாம் என்று கோயி லுக்குப் பின்புறமாகச் சென்றபோது, அங்கே புதிய மண்ட பங்கள் இக்கால முறையில் கட்டப்பட்டுவருவதைக் கண் டோம். சிமெண்டுத் தூண்கள் கல்தூண்போல் விளங்கு மாறு செய்து கட்டிவருகிருர்கள். மூன்று அடுக்கும் மூன்று பெரிய மண்டபங்களாக அமைக்கிருரர்கள். மூன்ருவது அடுக்கில் ஏறிநின்று நாற்புறமும் பார்த்தோம். கண்டி

யான் கண்ட இலங்கை 95
15கரம் நன்ருக முழுவதுமாக்த் தெரிந்தது. காற்புறமும் மரங்கள் அடர்ந்த மலைகள் ; இடையே சமவெளியில் நகரம் ; ஒரு பக்கம் ஆறு : ஒரு பக்கம் ஒரு மலையின் அடிவாரத்தில் அமைந்த பெரிய குளம் ; அதைச் சுற்றி காற்புறமும் அழகான பாதைகள் ; அதன் தெளிந்த நீரில் மலையின் நிழல் தோன்றும் காட்சி ; ஆழமான குளத்திடையே சிறு மண்டபம் ; அதை அடுத்துப் பெரிய தெருக்க்ள் ; உயர்ந்த மாளிகைகளும் கடைத்தெருக்களும் ; வழியெல்லாம் உயர்ந் தோங்கும் மரங்கள் ; இவ்வாறு காடுகளும் மலைக்ளும் சூழ்ந்த பகுதியின் இடையில் கண்டி எழில்பெற அமைந் துள்ளது. பெரிய தார் போட்ட சாலைக்ளும் ரயில் போக்கு வரத்தும் உள்ள நகரம் இது.
மண்டபத்தின்மேலிருந்து இந்தக் காட்சியைக் கண்ட பிறகு இறங்கித் தெருவுக்கு வங்தோம். பல்கோயிலின் எதிரில் மற்ருெரு புத்தர் கோயில் உள்ளது. கடைத் தெருவை நாடிச் சென்ருேம். வழியில் நாற்சந்திகளில் கின்று நாற்புறமும் பார்த்தோம். நான்கு திசையிலும் பாதைகள் மலையடிவாரத்திலேயே போய் முடிவதைக் க்ண்டோம். வடக்கே திரும்பினுல் அந்தப் பாதை ஒரு மலையிலிருந்து வருவதுபோல் தோன்றியது. தெற்கே திரும்பினுல் அங்கே தெருமுனையில் ஒரு மலை; கிழக்கும் அப்படியே ; மேற்கும் அப்படியே ; இவ்வாறு காற்சந்தி களில் நின்ருல் பார்க்கும் திக்கெல்லாம் மலையடியே தெரிந்த காட்சி எங்கும் காணமுடியாத அருமைக் காட்சியாகவே இருந்தது. அது மட்டும் அல்ல ; ஒவ்வொரு நெடுங் தெருவும் ஒரு மலையில் தொடங்கி நேராகச் சென்று எதிரே உள்ள மற்றெரு மலையோடு தொடர்புபட்டு விளங் கிய காட்சி கண்ணைக் கவர்ந்தது. கடைத் தெருவையும் ககரமன்றம் நீதிமன்றம் முதலிய கட்டிடங்களையும் பார்த்து

Page 51
96 யான் கண்ட இலங்கை
விட்டு மீண்டும் வந்தபோது, சங்கிதி திறக்கப்படும் நேரம் என்று அறிந்தோம்.
சிறிது நேரம் காத்திருந்தோம். மண்டபத்தை அடுத்த குழாயில் கைகால்களைக் கழுவிக்கொண்டு மஞ்சள் ஆடைத் துறவிகள் கூட்டமாக வந்தார்கள். சங்கிதி திறக்கப் பட்டது. துறவிகள் முன்னே சென்ருர்கள். அங்கங்கே மண்டியிட்டு விழுந்து வணங்கியபடியே ஆண்களும் பெண் களும் உள்ளே நுழைந்தார்கள். சிலர் உள்ளே சென்ற பிறகு மற்றவர்கள் கின்ற இடத்திலேயே நின்ருர்கள். என்ன காரணம் என்று தெரியாமல் எட்டிப் பார்த்தோம். சினிமாக் கொட்டகைபோல் வெளியே மக்கள்வரிசை காத்து நிற்பது கண்டேன். உள்ளே ஒன்றும் காணப்படவில்லை. வெறுஞ் சுவர்தான் நின்றது. இன்னும் சிறிது வளைந்து சென்று எட்டிப் பார்த்தேன். படிகளின் வழியாக ஒவ் வொருவராக ஏறி நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். நெருக்கமான வழியில் மாடிக்கு ஏறிச் செல்கிருரர்கள் என்றும், மாடியில் வழிபடும் இடம் உள்ளது என்றும் அறிந்துகொண்டேன். மக்கள்வரிசையில் மெல்ல நகர்ந்து நின்று கின்று மாடிப்படியின் அருகே கின்ருேம். மேலே சென்றவர்கள் ஒவ்வொருவராக வேறு வழியாக கீழே இறங்கிவருவதையும் கண்டோம். சிறிது நேரத்தில் மாடி யில் ஏறிநின்ருேம். இன்னும் சிறிது நேரத்தில் சங்கிதியை அணுகினுேம், அங்கே இருந்த வெளிநாட்டுத் துறவி ஒருவரைக் கண்டு விளக்கங்கள் கேட்டோம். அவர் ഗ്ര மூலையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த தங்கக் கிண் ணங்களேயும் கலங்களேயும் காட்டி, அவற்றில் முழுக் காட்டும் பொருள்களாக இருந்த நெய், தேன், பால், இளநீர் முதலியவைகளேக் காட்டினர். தங்கக் கலங்களின் மதிப்பு இவ்வளவு என்று ஒவ்வொன்றுக்கும் சொல்லிக்கொண்டு
A

யான் கண்ட இலங்கை 97
வந்தார். இது இத்தனை பவுன், இது இத்தனை பவுன் என்று ஒவ்வொரு கலங்களையும் காட்டி வந்தபோது என் மனம் புத்தர்பெருமானின் பொருட்பற்று அற்ற தூய வாழ்க்கையை நினைத்தது. 'ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவோர்? கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அந்த பெருந்தகையின் கோயில், தங்கக் கலங்களின் மதிப்பால் பக் தியை வளர்க்கும் அறியாமையை எண்ணி எண்ணி வருந்தி னேன். உலகப் பெரியோர்களின் உயர்ந்த கொள்கைகளை மறந்து அவற்றிற்கு மாறன முறையில் கண்மூடித்தன்மை யான அன்பை வளர்ப்பதால்தான், அந்தப் பெரியோர்களின் முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த ரோகின்றன என்று வருந்திப் பெருமூச்சு விட்டேன். பிறகு சந்நிதியில் சிறிது நேரம் அமைதியாக நின்று, அந்தப் பெருமானின் பல்லிலிருந்து பிறந்த அருள் மொழிகளே கினைந்து வழி பட்டேன். அதற்குள் பக்கத்தில் இருந்த ஏவலாளர் சிங்கள மொழியில் ஏதோ கூறிச் சைகை செய்து வெளியே போக வேண்டும் என்றும், பின்னே வருகிறவர்களுக்கு இடம் விடவேண்டும் என்றும் உணர்த்தினர். அமைதியாக எதிர்வழியில் சென்று இறங்கி வெளியே வந்தேன். புத்த ருக்குப்பின் செய்த முறைப்படியே காந்தியடிகளின் எலும்பு முதலியவற்றையும் பல இடங்களிலும் கொண்டு சென்று போற்றிவருவதை நினைந்தேன். அந்தப் பெருமானின் பெய ராலும் சடங்குகள் பெருகிவிட்டுக் கொள்கைகள் ம்றக்கப் படுமோ என்று கவலையுற்றேன். இருபதாம் நூற்ருண்டில் வந்தவர் ஆகையால், அவருடைய தூய வாழ்வு, மூட கம்பிக்கை அற்ற வாழ்வு, சடங்குகளைப் போற்ருமல் கொள் கைகளைப் போற்றிய அந்தப் பெருவாழ்வு மட்டும் திரித்துக் கூறப்படாமல் பொய்யும் புனேவும் கலக்காமல் உள்ளபடியே விளங்கிநிற்கும் என்று நம்பினேன். அதனல் புத்தர்
7 இ.

Page 52
98 யான் கண்ட இலங்கை
போன்ற பெருமக்களின் அறவுரைகளும் உள்ள்வாறு விளங்க வழி ஏற்படும் என்றும் நம்பினேன்.
விடியற்காலையிலே கண்டியை விட்டுப் புறப்பட்டோம். பாளையகாட் நண்பரின் பேரன்பை நினைந்து உருகினேன். நாங்கள் உண்ணும்வரையில் எதிரே நின்றவாறே மலர்ந்த முகத்தோடு எங்கள் தேவையை அறிந்து அறிந்து மேன் மேலும் உண்ணச் செய்ததையும், புறப்பட்டபோது பல அடி தொடர்ந்து வந்து மோட்டாரில் ஏறச்செய்து வழிவிட்டதை யும் நினைந்து உருகினேன். விடைபெற்றுப் பிரிந்தபிறகு என் உள்ளத்தில் ஒரு பழைய காட்சி வந்து நின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ நாட்டின் தலைநகரத்தில் அரண்மனையில் புலவர் கண்ட காட்சி அது. அதை அப்பாவுக்கு கினைவூட்டினேன். காவிரிப்பூம்பட்டி னத்தில் கரிகால்வளவன் என்னும் சோழவேந்தன் தன்னை நாடிவந்த புலவர்களே இவ்வாறு அன்புடன் போற்றி உதவி பல செய்து வழிவிட்டதாக அறிகிருேம். பொருநராற்றுப் படை என்னும் பழைய பாட்டு இதை அறிவிக்கிறது. உலக வேந்தர்களில் உயர்ந்தோர்களுள் ஒருவனுக விளங்கிய கரிகால்வேந்தன் தன் பெருமையைப் பொருட்படுத்தாமல், வந்த புலவரைப் போற்றிய அருமைப்பாட்டை மறக்கவும் முடியுமோ ? உண்ணுக உண்ணுக என்று எதிரே நின்ற வாறே வேண்டுதலும், விடை பெற்றுப் பிரியும்போது ஏழடி நடந்து சென்று வழிவிடுதலும் கரிகாலன்காலம் முதல் இன்று வரையில் தமிழர்பண்பாக விளங்கிவருதலை நினைந்து வியந்தேன்.
மிக விரைந்து சென்ருேம். காடும் மலையுமாகக் கடந்து செல்லும் பாதை மிகச் சீராக அமைந்திருந்தது. குளிர்ந்த காற்றும் இன்பமாக இருந்தது. இலங்கைப் படத்தை

யான் கண்ட இலங்கை 99)
எடுத்துப் பிரித்துப் பார்த்தோம். நேர் கிழக்கே கடற் கரையில் மட்டக்களப்பு என்ற ஊர் இருந்தது. இலங்கை யில் மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் பல ஆண்டுகள் தங்கித் தமிழ்த் தொண்டும் சமயத் தொண்டும் ஆற்றிய விபுலாநந்தர் பிறந்த ஊர் என்று அறிந்து திக்கு நோக்கி வணங்கினேம். இந்தக் கடிதம் எழுதும் இப்போதும் அவ ருடைய அருமைத் தொண்டுகளை நினைத்துப் பாராட்ட வேண்டியுள்ளது. அவருடைய பரந்த நெற்றியும் அமைதிப் பார்வையும் துறவுக் கோலமும் விளங்கும் படம் இப்போது என் எதிரே விளங்குகிறது. அவர் ஏற்படுத்தி நடத்திய பள்ளிக்கூடம் இது. அவருடைய மேற்பார்வை இருந்த காரணத்தால் இந்தப் பள்ளிக்கூடக் கல்விமுறை gait &m களுக்குப் பயன்தரும் வகையில் மிக நன்றக நடைபெற்று வருகிறது என அறிக்தோம்.
இலங்கையின் தமிழ்ப் பெரியோரை கினைத்ததும் வழிப் பயணத்தைத் தொடர்ந்து எழுத மறந்துவிட்டேன். மாத் தளையிலிருந்து வந்துகொண்டிருந்தோம் அல்லவா ? அடுத் தாற்போல் வந்த ஊர் பொலன அறுவை. அது ஒரு காலத்தில் மிகப் பெரிய நகரமாக, சிறந்த தலைநகரமாக விளங்கியது. இப்போது இருநூறுபேர் வாழும் மிகச் சிறிய சிற்றுாராக உள்ளது. வரலாற்றில் அது பெற்றிருக்கும் அளப்பரிய பெருமையின் காரணமாக இன்று அது மறக்க முடியாத புறக்கணிக்க முடியாத சிறப்புப் பெற்றுள்ளது. ரயில் நிலையமும் உள்ள சிற்றுார் அது. அதன் பெயரைக் கேட் டதும் தமிழ்வேந்தர்களின் வீரம் கினேவுக்கு வருகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு நெடுங்காலம் முன்பே அடிக்கடி படையெடுத்து இலங்கையைக் கைப்பற்றி ஆண்டவர்கள் தமிழ் வேந்தர்கள். அவர்களுக்கு அஞ்சிய இலங்கைச் சிங்கள மன்னர்கள் இருந்த தலைநகரத்தை விட்டு அஞ்சி

Page 53
1 OO யான் கண்ட இலங்கை
o
இந்த இடத்தில் ஒதுங்கிவிட்டார்கள். ஆனல் ய்ாஃன்க்கு ஒரு காலம், பூனேக்கு ஒரு காலம் என்பதுதானே அரசியலில் அன்று முதல் இன்று வரையிலும் காணும் உண்மை. சிங்கள அரசர்களிலேயே ஒருவன் ஒப்பற்ற வீரனுகத் தோன்றி இலங்கை முழுவதையும் கட்டியாண்டு, பாண்டி யர்களேயும் அடக்கும் அவ்வளவு ஆற்றல் பெற்றுவிட் டானும், அந்தச் சிங்கள மன்னன் கட்டிய பல கட்டிடங்கள் இன்று இடிந்து இடிந்து பாழாய் கின்ற இடமே பொல னறுவை, பெரிய அரண்மனை, பல பெரிய மண்டபங்கள், பெரிய குளங்கள, அழகிய நீராடு மண்டபங்கள், உயர்ந்த, மாளிகைகள், கோயில்கள் முதலான பல கட்டிடங்கள் இருந்த அடையாளங்களே இன்றும் காணலாம். சிதைந்தும் சிறப் புக் குன்ருமல் ஒளிரும் சிற்பங்கள் பலவற்றை இங்கே காணலாம். பாண்டியனே அடக்கி வென்ற சிங்கள மன்னன், தமிழ் மக்களைச் சிறைப்படுத்திக் கொண்டுவந்து அவர்க ளுடைய சிற்பக் கலைத்திறனைப் பயன்படுத்திக்கொண்டா னம், அந்தத் தமிழ்ச்சிற்பக் கலையின் சிறப்புக்களை இன் னும் அங்கே காணலாம். தமிழ்க் கல்வெட்டுகள் பல உள்ளன. புத்தர் கோயிலும் சிவன் கோயிலும் உள்ளன. பழங்கால வரலாற்று ஆராய்ச்சிக்கு உதவியான சான்றுகள் பற்பல உள்ள ஊர் இது.
அழிந்து சிதைந்த அந்தப் பழைய தலைநகரத்தைக் கண்டபோது,
எழநிலை மாடம் கால்சாய்த் துக்குக் கழதை மேய்பாழ் ஆயினும் ஆகும்
என்ற வெற்றிவேற்கை நினைவுக்கு வந்தது. ஆனல் தமிழ் நாட்டுக் காவிரிப்பூம்பட்டினம் அழிந்த இடமும் தெரியாமல் கடல் கொண்டுவிட்டதே என்று வருக்தினேன். இருந்த

யான் கண்ட இலங்கை 1 O1
பெரிய நகரங்கள் இவ்வாறு அழியும் உலகத்தில், பாழிடங் களில் பெரிய நகரங்கள் தோன்றி வளர்ந்து வருவதையும் காண்கிருேம். கொழும்பு நகரமும் சென்னை நகரமும் அப் படிப்பட்டவைகளே அல்லவா? மறுபடியும் வெற்றிவேற் கையே நினைவுக்கு வருகிறது :
பெற்றழம் கழதையும் மேய்ந்த அப்பாழ் பொற்றெடி மகளிரும் மைந்தரும் செறிந்து நெற்போலி நெடுநகர் ஆயினும் ஆகும்.
இப்படிப்பட்ட எண்ணங்களை எல்லாம் சிதைந்து போன பொலனறுவை என் உள்ளத்தில் தோன்றச் செய்தது.
வழியெல்லாம் அரசியலின் கிலேயாமையையும் கலை களின் காலம் கடந்த வாழ்வையும் சீர்தூக்கிப் பேசிக் கொண்டே, நேராக இங்கு வந்து சேர்ந்தோம். இந்தப் பள்ளிக்கூடத்தின் எதிரே பரந்த புல்வெளி இருக்கிறது. அப்பால் அமைதியான கடல் இருக்கிறது. அதற்கு அப்பால் ஒரு தீவில் நிற்பதுபோல் கலங்கரை விளக்கம் தோன்றுகிறது. பல கப்பல்களின் போக்குவரவும் தெரி கிறது. துறைமுகம் மிகப் பெரியது ; இயற்கையாக அமைந்தது. கடல் அதற்கு ஏற்றவாறு வளைந்து ஏரிபோல் வளைகுடா அமைந்துள்ளது. அதனுல்தான் ஆரவாரம் செய்யாத அமைதியான கடலைக் காண முடிகிறது. அகல மான கடற்கரையையும் கண்டு மகிழ முடிகிறது.
ஆனல் திருக்கோணமலை என்ற பெயரைக் கேட்டு இங்கே ஏதாவது மலை இருக்கும் என்று எண்ண வேண் டாம். கடலுள் வளைந்து செல்லும் நிலப்பகுதியில் ஒரு முனையில் உயரமான பெரும்பாறைகள் கிற்கின்றன. அந்தப் பாறைகள் மலைபோல் நிற்பதையும் கோணலாக நிற்ப

Page 54
1 O2 யான் கண்ட இலங்கை
தையும் கண்டவர்கள் கோணமலை என்ருர்கள். அதனுல் ஊருக்குத் திருக்கோணமலை என்று பெயராயிற்று.
அந்தப் பாறைகளை அடுத்துக் கடற்கரையில் சிவன் கோயில் இருந்ததாம். அதையே திருஞானசம்பந்தர் கோண மாமலை என்று பாடியிருக்கிருர், போர்த்துகீசியர் இலங் கைக்கு வந்து வாணிபம் செய்யத் தொடங்கியபோது பொன் னசை கொண்டு கோயிலைக் கைப்பற்றி இடித்துத் தள்ளி அந்தக் கற்களேக் கொண்டே கோட்டை கட்டிக்கொண்டு இருந்தார்கள். அந்தக் கோட்டை இன்னும் காவல் உடைய தாகவே இருக்கிறது. இலங்கைச் சட்ட சபை உறுப் பினரின் உதவிகொண்டு நாங்கள் சென்றதால், எளிதில் உள்ளே புக முடிந்தது. மோட்டாரையே உள்ளே ஒட்டிச் சென்ருேம். இல்லையானல், வழிபாட்டுக்காகச் செல்வோர் வெள்ளிக்கிழமையன்று மட்டும் விடப்படுவார்களாம். சிறிது தூரம் சென்றபிறகு, குன்றுபோல் உயர்ந்து செல்லும் மேட்டில் ஏறவேண்டியிருந்தது. மோட்டாரை கிறுத்தி விட்டு கடந்து சென்ருேம். வழிப்பக்கத்தே இருந்த செடி கொடிகளே அடுத்து மான்கள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றின் கண்கள் மங்கையர்க்கரசியின் கண்களையும் எங்கள் உள்ளங்களையும் கவர்ந்தன. இன்னும் சிறிது தூரம் ஏறிச்சென்றதும் இதுதான் தேங்காய் உடைத்துக் கர்ப்பூரம் கொளுத்திப் பூசை செய்யும் இடம் என்று ஒரு பாறையைக் காட்டினர்கள். இது என்ன புதுமை, இதுவா கோயில் என்று திகைத்து கின்ருேம். பக்கத்தில் கன்னங் கரேல் என்று பெரிய பாறைகள் சாய்ந்து கிற்கின்றன கீழே கடல் மோதித் தாக்கிக்கொண்டிருக்கிறது. மேலே கிற்கும் பாறைகளைப் போன்றவை கடலிலும் கிடக்கின்றன. அவை முக்கால்பங்கு நீரிலும் கால்பங்கு நீருக்கு மேலுமாக இருக்கின்றன. அலைகள் எழுந்து வந்து தாக்கும்போது

\
யான் கண்ட இலங்கை O3
அவை முழுமையுமே நீரில் முழுகிவிடுகின்றன. நாங்கள் கின்ற பெரிய பாறையை அடுத்தாற்போல் கீழே இரண்டு பாறைகளுக்கு இடையே குகைபோன்ற இடம் காணப் படுகிறது. அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி அங்கேதான் திருக்கோணமலை ஈசன் இருப்பதாகவும் இந்தப் பாறையில் செய்யும் பூசையை அவரே ஏற்பதாகவும் கூறினர்கள். அடுத்த பெரும்பாறைக்குமேல் கோயில் இருந்தது என் அறும், கோயில் கடலிலே முழுகிவிட்ட காலத்தில் சிவ லிங்கம் அங்கே கற்களுக்கு இடையில் மறைந்துவிட்டது என்றும், அதனல் அதை நோக்கியே பூசை நடைபெறு கிறது என்றும் மேலும் விளக்கினர்கள். “கனகடலைக் குலவரையைக் கலந்து கின்ற பெரியான? வியப்புடன் வாழ்த்தி வணங்கிவிட்டு அப்பால் சென்று அடுத்த பாறை யின் முனையில் நின்று அந்தக் கனைகடலைப் பார்த்தேன். பாறைகளோடு போட்டியிட்டுக்கொண்டு அலைகளும் உயரக் கிளம்புவதற்கு ஓயாமல் முயன்றுகொண்டிருந்தன. ஆன லும், அமைதி மிக்க கற்பாறைகளோடு ஆரவாரம் மிகுந்த அலைகள் போட்டியிட்டு வெல்ல முடியுமா? அவற்றின் உயரத்தை ஒவ்வொருமுறை எட்டினுற்போல் தோன்றி ஞலும், கிலையான உயர்வைப் பெற முடியுமா ? அலைகள் எழுந்து புரண்டு வந்து முழக்கத்தோடு பாறைகளின்மேல் மோதிப் பால்போன்ற வெண்ணிறத் துளிகளாய், அழகிய திவலைகளாய் உடையும் காட்சி தெவிட்டாத இன்பக் காட்சி யாய் இருந்தது. இந்தப் பாறையில் சிறிது நேரமும் அந்தப் பாறையில் சிறிது நேரமுமாக்ச் சென்று சென்று நின்று பார்த்தோம். இந்த வகையில் சென்னைக் கடல் திருக் கோணமலைக் கடலுக்குத் தோற்றது என்றும் சொல்லலாம். நீலநிறக் கடல் பாறைகளின் அருள் பெற்றவுடன் திருப் பாற்கடலாய் மாறுவதுபோல் தோன்றியது. பாறைகளைச்

Page 55
104 யான் கண்ட இலங்கை
சுற்றிலும் வெண்மையான நுரையும் துளியும் திவலையு மாகவே காட்சி அளித்தன. பாறைகளின் ஓரத்தில் அஞ் சாமல் நிற்பதற்கு உதவியாக ஓர் இடத்தில் இரும்புக் கம்பிகளும் அமைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து சேய் மைக் காட்சிகளையும் அண்மைக் காட்சிகளையும் சுற்றிச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தேன்.
அந்தப் பாறைகளின் தோற்றத்தையும் உயரத்தையும் கண்டபிறகு அந்த இடத்தை மலை என்று சொன்னது பொருத்தமே என்று எனக்குத் தோன்றியது. கடல் அவ் வளவு கீழே தாழ்ந்து கிடக்கிறது. பாறைகள் அவ்வளவு உயரத்தில் தலை நிமிர்ந்து நின்றன. இந்தப் பொருமை தான் கடலைத் தூண்டிப் பான்றகளில் சிலவற்றை அழிக்கு மாறு செய்தது. ஆயினும் கடல் வெற்றி பெற முடிய வில்லை. என்ன ஆரவாரம் செய்து தலையை மோதிக் கொண்டாலும் ஒரு பயனும் இல்லை. பொறுமை வடிவாய் நிலையில் திரியாது அடங்கி? நிற்கும் பாறைகள் மேன் மேலும் பெருமை பெற்றே விளங்குகின்றன.
சிறிது பின்வாங்கி வந்து ஒரு பாறையைக் கண்டோம். ஒரு பெரும்பாறை இரண்டாய்ப் பிளந்து இடம் விட்டு நிற்பதைக் கண்டோம். அதுவும் மிக உயரமான பெரிய பாறைதான். எங்களுக்குத் துணையாக வந்தவர், 'இது தான் இராவணன் வெட்டு? என்றர். வழியில் சீதையின் பெயரைப் பலமுறை கேள்விப்பட்ட எங்களுக்கு இலங் கையில் இராவணன் பெயர் இல்லாமல் இருப்பதா என்று ஒரு குறை இருந்தது. இந்தப் பெயரைக் கேட்டதும் அந்தக் குறை தீர்ந்தது. பெயரின் காரணம் கேட்டோம் இராவணன் தன் தாயின் மரணத்தை அறிந்து வருந்திய பின், சினம்கொண்டு வாள் எறிந்தபோது வெட்டுண்ட

யான் கண்ட இலங்கை O5
பாறை இது என்றர். அதன் பிறகு தாய்க்கு இறுதிக் கடன் செய்வதற்காக வாளால் கிலத்தைக் குத்தி ஏழு தீர்த்தங்கள் உண்டாக்கினன் என்றும், அவைகளே ஐந்து மைல் தொலைவில் கன்னியா என்ற இடத்தில் உள்ள வெந்நீர் ஊற்றுக்கள் என்றும் கூறினர். கதைக்குக் கால் இல்லை என்ற பழமொழியை உணர்ந்த நாங்கள், அடுத்தபடி அந்த இடத்திற்குப் புறப்பட்டுச் சென்ருேம்.
திருக்கோண மலையிலிருந்து ஐந்துமைல் தொலைவில் இருக்கும் கன்னியா ஒரு கிராமமும் அல்ல. அங்கே சில குடிசைகள் உள்ளன. கோயில் ஒன்று உள்ளது. அங்கே ஏழு கன்னிகைகள் இல்லை. மாரியம்மன் கோயில் என்று சொல்கிருரர்கள். ஆனல் அது போலவும் இல்லை. தமிழ் நாட்டில் சேரன் செங்குட்டுவன் பத்தினிக் கடவுள் கண்ண கிக்குக் கோயில் கட்டி வழிபட்டதை இலங்கையிலிருந்து கயவாகுமன்னன் போய்க் கண்டு போற்றினன் அல் லவா ? இதைச் சிலப்பதிகாரக் கதையில் கண்ணகியைப் பற்றிப் படித்தபோது நீ தெரிந்துகொண்டிருக்கலாம். இளங் கோவடிகள் அதைக் கூறும்போது, இலங்கை மன்னன் கயவாகுவும் தன் காட்டிற்குத் திரும்பிச் சென்று கண்ண கிக்குக் கோயில் கட்டினன் என்று கூறுகிருர், அப்படி இலங்கையில் பத்தினி வழிபாடு ஒர் இயக்கமாகப் பரவி யிருக்கும். அப்போது திருக்கோணமலைக்குப் பக்கத்தில் இந்த வெங்கீர் ஊற்று உள்ள இடத்தில் கண்ணகியின் சினத்தை கினைந்து ஒரு கோயில் கட்டி வழிபட்டிருக்கலாம். ஹாம்டன் வாராவதி அம்பட்டன் வாராவதி என்று மாறு வது இருபதாம் நூற்றண்டிலும் உள்ளபோது, கண்ணகி கன்னியா என்று திரிந்திருக்க முடியாதா ?
இந்த வெந்நீர் ஊற்றுக்களில் குளிக்கப் பெற்றது என் வாழ்க்கையில் பெற்ற சிறந்த பேறுகளில் ஒன்று என்றே

Page 56
1 O6 யான் கண்ட இலங்கை
கருதுகிறேன். நினைக்குந்தோறும் பேசுந்தோறும் இன்பம் பயக்கும் இயற்கையன்னையின் அருள் இது என்று சொல் வேன். குமரித்துறையில் அயிரைமீனை மேய்ந்துவிட்டு இமயமலைச் சாரலை நோக்கிப் பறப்பதாக அன்னப் பறவை யைக் குறித்துப் புலவர் ஒருவர் பாடியுள்ளார். நான் அன்ன மாக இருந்தால் - அல்ல, அல்ல, அன்னமாக இருந்தால் வெங்கீரில் குளிக்கும் இன்பத்தை உணர முடியாதோ, என்னவோ - அன்னப் பறவை போல் பறக்கும் ஆற்றல் பெற்றிருந்தால், ஒவ்வொரு சனி ஞாயிறு விடுமுறையிலும் சென்னைக் கடற்கரையிலிருந்து உயரப் பறந்து போய்த் திருக்கோணமலைக் கடற்கரையை அடைந்து அந்தப் பொறு மைப் பாறைகளின்மேல் சிறிது நேரம் தங்கியிருந்து கன்னி யாவுக்குப் பறந்து போய் மூன்று முறை நான்கு முறை வெங்ர்ே ஊற்றுக்களில் குளித்து இன்புற்றுத் திரும்பி வருவேன். தமிழ்நாட்டில் கந்தகக் கிணறு பார்த்திருக் கிறேன். மற்றத் தண்ணிருக்கும் அதன் நீருக்கும் ஒரு வேறுபாடும் இல்லை. தண்ணிராய்க் குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது. சேலம் ஜில்லாவில் அனுமன் தீர்த்தமும் பலமுறை குளித்துக் கண்டதுதான். கன்னியாவின் வெங்கீர் ஊற்றுக்களின் இன்பத்தில் சிறிதும் அவற்றில் இல்லை என்று சொல்லவேண்டும். வெளியூர்ப் பயணம் என்ருல் பொதுவாக வெறுப்படையும் என் மனம், கன்னியா என்ற பெயரைக் கேட்டால் தாவிக் குதிக்கும்; எத்தனை முறையும் இங்கு வரலாம், இயன்றபோதெல்லாம் வரவேண்டும் என்று மனம் ஆாண்டுகிறது. இளமையில் பாலாற்றுத் தெளிந்த ஊ ற் றில் மணிக்கணக்காய்ப் படுத்திருக்கும் வழக்கம் எனக்கு இருந்தது. அதைக் கண்ட நண்பர் ஒருவர், “ே முன்பிறவியில் மீனுக இருந்திருக்க வேண்டும்? என்ருர். நீரைக் கண்டால் எனக்குத் தனி விருப்பம்தான். ஒடை,

யான் கண்ட இலங்கை 1 Ο7
ஆறு, குளம், ஏரி, கடல், அருவி எல்லாம் எனக்குச் சலிப்பு இல்லாதவைகள்தான். ஆனல் கன்னியாவின் வெந்நீர் ஊற்றுக்களுக்கு என் உள்ளத்தில் என்றும் தனியிடம் உண்டு. இந்த ஊற்றுக்கள் கண்ணுக்கு இன்பம் அளிக்க வில்லை. புலன்களுக்கெல்லாம் அடிப்படையான ஊற்றின் பத்தை மெலிந்து சோர்ந்த என் உடலுக்கு அளித்து உள்ளக் கிளர்ச்சி தந்தவை இவை,
ஊற்றுக்கள் ஊற்றுக்கள் என்று திரும்பத் திரும்பப் பன்மையில் குறிப்பிடுகிறேன். ஒரே இடம்தான் ; ஆனல் ஏழு ஊற்றுக்கள். ஏழு ஊற்றுக்களிலும் ஒரே நீர்தான்; ஆனல் ஏழு பதமான வெந்நீர். ஒன்றில் வெதவெதப்பான நீர் ; மற்றென்றில் சிறிது பதமான வெந்நீர் ; இன்னென் றில் பதமான வெந்நீர் ; இன்னென்றில் சிறிது சூடான வெந்நீர்; இன்னென்றில் சூடான வெந்நீர் ; மற்றென்றில் மிகச் சூடான வெங்ர்ே ; வேறென்றில் ஆறிய வெந்நீர் - இவ்வாறு சொல்லக் கூடிய வகையில் வெவ்வேறு பதமாக ஏழு வகையான வெங்கீர் ஊற்றுக்கள் உள்ளன. இதிலும் அதிலும் அதிலுமாக மாறி மாறி நீர் மொண்டு வார்த்துக் கொள்ளக் கூடியவாறு, ஏழும் ஏழு கிணறுகளில் அடுத் தடுத்து உள்ளன. கில மட்டத்தில் நீர் உள்ளது. ஆகை யால் கிணற்றின் சுவரை அடுத்து நின்று குனிந்து குனிந்து கையில் பிடித்த வாளியால் நீரை மொண்டு மொண்டு வார்த்துக்கொள்ளலாம். இரண்டரை அடி ஆழமுள்ள தொட்டிகள் போல் கிணறுகள் அமைந்துள்ளன. ஒவ் வொன்றிலும் ஊற்றுச் சுரந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொன்றும், “தொட்டனத்து ஊறும் மணற்கேணி” யாய் உள்ளது. ஆகையால் எவ்வளவு நீர் மொண்டு வார்த் துக்கொண்டாலும், நீர் குறைவதும் இல்லை ; வெப்பம் மாஅறுவதும் இல்லை. உடம்பில் வார்க்கும் நீரெல்லாம் ஓடி

Page 57
108 யான் கண்ட இலங்கை
வெளியே பாய்வதற்கும் தக்க ஏற்பாடு செய்திருக்கிருரர்கள். சுற்றிலும் மதில் சுவரும் உண்டு. ஆகையால் இடம் தூய் மையாகக் காக்கப்பட்டுவருகிறது. காங்கள் குளிக்கத் தொடங்கியபோது வாடிக் களைத்துச் சோர்ந்திருந்தோம். குளித்துவிட்டு வெளியே வந்தபோது கன்ருக உறங்கி எழுந்தவர்களைப் போல் புது வாழ்வு பெற்று வந்தோம். வெங்கீரில் குளிப்பதால் களைப்பும் சோர்வும்ே வரும் என்று கண்டிருக்கிருேம். நான் வெந்நீரில் ஆகுளிக்கத் தயங்கு வதற்கு அதுவே காரணம். படிப்பும் அறிவும் இல்லாத தாய்மார்களின் கையில் அகப்பட்டுப் பொறுக்க முடியாத வெந்நீரில் வெந்து மெலிந்து கண் அயரும் குழந்தைகளையும் நீ பார்த்திருப்பாய். அதனுல் இந்த வெந்நீர் ஊற்றுக்களும் அப்படித்தான் இருக்கும் என்று எண்ணிவிடாதே. இந்த வெந்நீர் இயற்கையன்னே அருளுவது. களேப்புக்கும் சோர் வுக்கும் மெலிவுக்கும் மருந்து இந்த வெந்நீர்.
நெடுநேரம் குளித்தோம். ஒரு மணி நேரத்திற்குமேலும் இருக்கலாம். ஆயினும் சலிக்கவில்லை. குளித்தபோது நாங்கள் எல்லாரும் குழந்தைகள் ஆகிவிட்டோம் ; விளை பாட்டு உணர்ச்சி எங்கள் உள்ளத்தில் இருந்தது. ஒருவ ருடைய தலைமேல் இன்னுெருவர் மொண்ட வெக்ர்ே விழும். இவருடைய தலைமேல் அவர் வெங்கீர் வார்ப்பார். ஒருவர் தலைமேல் மற்றவர்கள் எல்லாரும் சேர்ந்து வெந்நீர் வார்ப் போம். இப்படி மாறி மாறிக் குளித்தபோது ஒருவருடைய வாய் எப்படியோ, செழுக்கமலத் திரளணநின் சேவடி? என்று திருவாசகத்தைப் பாடத் தொடங்கியது. எல்லா ருடைய வாயும் சேர்ந்து பாடத் தொடங்கிவிட்டன. புன் முறுவலோடு அப்பா எங்கள் விளையாட்டை அனுபவித்தார்.
பேரின்பத்தோடு குளித்து முடித்து வெளியே வந்த ' பிறகுதான் நினைத்துக்கொண்டேன். மனிதனுடைய மனமே

யான் கண்ட இலங்கை O9
ஒரு தனி உலகமாக இருக்கிறது! அதில் நிகழ்காலத் அதுன்பம்தான் துன்பமாக, அதுயரமாக இருக்கிறது. கழிந்த துயரம் கலையாகிவிடுகிறது; வரக்கூடிய துன்பமும் விளை யாட்டாக எதிர்ப்படுகிறது. எத்தனையோ மக்களின் அதுன் பத்தை எல்லாம் இலக்கியமாக்கிப் படிக்கச் செய்கிறது மனம். இந்த வெந்நீர் ஊற்றுக்களில் துயரம் மிகுந்த ஒரு நாளின் நிகழ்ச்சியை வேடிக்கை விளையாட்டாக்கிக் காட் டியது மனம், மனத்தின் இயல்பே இயல்பு! அது குழந்தை யானுல் போதும், போதும் 1 ஆமாம் ! குழந்தைகள்தான் அழுது புலம்புவதையும் ஒரு விளையாட்டாகக் கொள்ள முடியும் !
அன் புள்ள,
6.

Page 58
I 5 J
மேட்டுத் தெரு, கொழும்பு. 8-1-5O.
அன்புள்ள அரிசி,
நான் திரும்பி வருவதற்கு முன்பே உன் கடிதம் இங்கு வந்து காத்திருந்தது. அம்மா தம்பியர் நலம் எல்லாம் அறிந்து மகிழ்ந்தேன்.
இலங்கைச் சுற்றுப் பயணத்தை ஒருவாறு விரைவில் முடித்துவிட்டுக் கொழும்பு நகர்க்கே வந்து சேர்ந்துவிட் டோம், சிைவ சித்தாந்த சமாச ஆண்டு விழா நடை பெற்றுக்கொண் டிருக்கிறது. தலைவர் திரு. தெ. பொ. மீனுட்சிசுந்தரம் பிள்ளை எங்கோ உயர்ந்த எல்லையில் கின்று கொண்டு உலகத்தைப் பார்த்து முழங்கிக்கொண் டிருக் கிருர், ஒலிபெருக்கி இருப்பதால் இந்த அறையிலிருந்தே அவர் பேச்சைக் கேட்க முடிகிறது. நண்பர் பேச்சும் என் பேச்சும் முடிந்தன. காலையில் மாதர் மாநாடும் வெள்ளவத் தையில் சிறப்பாக நடைபெற்றது. அதற்கும் பெண்கள் பெருந்திரளாக வந்திருந்தார்கள். இங்கு நடக்கும் மற்றச் சொற்பொழிவுகளுக்கும் பெண் மக்கள் மூன்றிலொருபங் குக்குக் குறையாமல் வந்துள்ளனர். பெண்கள் பலராக வந்து இவ்வாறு அமர்ந்திருக்கும் கூட்டங்களேத் தமிழ் நாட்டில் காண்பதற்கில்லையே என்று வருந்துகிறேன்.

யான் கண்ட இலங்கை 1
அறிவுக்கு இடம் இல்லாத நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் பெண்கள் பெரும்பாலோராகத் திரண்டு வருவதைப் பார்த் திருக்கிறேன். ஆல்ை அறிவான முன்னேற்றத்திற்கு உரிய கூட்டங்களுக்கு இப்படி வருவதில்லையே !
பயணத்தின் மற்றப் பகுதியைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புவாய் அல்லவா? இன்னும் சில நாட்களில் நேரில் காணும்போது எல்லாம் விரிவாய்க் கூறுவேன். இப்போது சுருக்கமாகச் சில குறிப்புக்களை எழுதுகிறேன்.
திருக்கோணமலையிலிருந்து புறப்பட்டபின் எங்கள் பயணம் முன்னிலும் வேகம் கொண்டது. எப்படியாவது கொழும்பில் விழாத் தொடங்குவதற்கு முன் திரும்பிச் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணம் எங்களே விரைந்து செலுத்தியது. தவிர, இலங்கையின் நடுப் பகுதியைப் போலவும் தென் பகுதியைப் போலவும் அவ்வளவு வளமும் இயற்கை எழிலும் வடபகுதியில் இல்லை எனலாம்.
யாழ்ப்பாணத்தில் மக்களின் - தமிழ் மக்களின் - அறிவு வளத்தைக் காணலாம் : அன்புப் பெருக்கைக் காணலாம் ; முயற்சிச் சிறப்பைக் காணலாம் ; ஒழுக்கச் செல்வத்தைக் காணலாம். மலைவளமோ, அருவியழகோ நாடிச் சுற்று வதற்கு அது இடம் அல்ல. வேண்டுமானல் காற்புறமும் கடலையும் கடற்கரையையும் உப்பங்கழிகளையும் காணலாம் ; மணல்கேணிகளையும் தென்னந்தோப்புகளையும் பனந்தோப்பு களையும் காணலாம் ; ஆறு குளங்களையும் காண்பது அரிது.
மழைவளமும் குறைவு : மண்வளமும் குறைவு மக்க ளின் மனவளம் மட்டுமே மிகுதி. இதை எண்ணும்போது தமிழ்நாட்டின் ஒரு பகுதிக்கே வந்துவிட்டோமோ என்று தோன்றும். இயற்கை நிலைமையால் மட்டும் அல்ல, மக்க

Page 59
1, 2 யான் கண்ட இலங்கை
ளின் வாழ்க்கை முறையாலும் அவ்வாறு எண்ணுவது பொருத்தம் என்றே தோன்றும். இடையில் சிறிது? தொலைவு கடல் இல்லையானுல், இது தமிழ் நாட்டின் பகுதி யாகத்தானே இருக்கவேண்டும் ?
யாழ்ப்பாணம் ஒரு பெரிய நகரம். எல்லா நகரங்களி லும் இருப்பது போலவே நகரப் பகுதிகள் பல இருக் கின்றன. பெரிய கட்டிடங்களும் கோயில்களும் பள்ளிக் கூடங்களும் கல்லூரிகளும் மக்கள் கூட்டமும் காணப்படும். நகரப்பகுதிகளின் பெயர்களைக் கேட்டாலேயே, தமிழ்நாட்டு நினைவு வந்துவிடும். வண்ணுர்பண்ணை, பரங்கித் தெரு, நல்லூர், திருநெல்வேலி, கோட்டை, குறிச்சி முதலிய பெயர்கள் தமிழ்நாட்டுப் பகுதிகளின் பெயர்களாக இல்லையா? சிறப்பாக, திருநெல்வேலி என்ற பெயரைப் பார்த்ததும் நீ வியப்பு அடைவாய். தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய மக்கள் அல்லவா ? நெல்வேலியை அவர்களால் மறக்க முடிய வில்லை. அங்கேதான் பொன்னம்பல இராமநாதன் என்னும் பெரியார் பெரிய கல்லூரி ஒன்றைக் கட்டி எல்லா கலங் களும் ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ்மணமும் சைவமணமும் யாழ்ப்பாணம் முழுதுமே கமழ்கின்றன. சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் சுன்னுகம், மேலைப்புலோலி என்ற ஊர்கள் தமிழ்ப் பெரும்புலவர்களை நினைவூட்டுகின்றன. யாழ்ப்பாண நகரில் ஒரு தெரு, தமிழ் வளர்த்த அறவோர் ஆறுமுக நாவலர் பெயரால் . ஒளிச் கிறது. பைபிலை முதலில் மொழிபெயர்த்தவர் அவரே என்று சொல்லப்படுகிறது. ஆனல் பைபில் தமிழ்நடை தமிழுக்கு நன்மை செய்யவில்லை. தமிழ்ச் சொற்களும் தக்கமுறையில் எடுத்தாளப்படவில்லை. வாக்கிய அமைப்பும் பல இடங்களில் பிழைபட அமைந்துள்ளது. தமிழ் நடையே

யான் கண்ட இலங்கை 113
அதில் காணுேம். இனிமேல்தான் திருத்தமான பதிப்புக் கள் தமிழ்நடையில் வெளிவரப் போகின்றன. முன்னேய மொழிபெயர்ப்புத் தமிழின் குறைகளை தமிழ்ச்சான்றேர் ஆறுமுக காவலரின்மேல் சார்த்துவதற்கு மனம் வரவில்லை. அவருடைய பாலபாடங்களும் பெரிய புராண வசனம் முதலியவைகளும் எவ்வளவு சிறந்த தமிழ் கடையில் அமைந்து, இன்றைய தமிழ்வளர்ச்சிக்கு வழிகாட்டி விளங்குகின்றன ! அவர் பதிப்பித்த நூல்கள் எவ்வளவு திருத்தமாக அமைந்து இன்றைக்கும் வழிகாட்டிகளாக உள்ளன பொருள்வளம் இல்லாத நிலையில், போதிய கருவி களும் உதவிகளும் இல்லாத காலத்தில் மிக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து தாய்மொழிப் பணியும் சமயத்தொண்டும் ஆற்றிய அவருடைய வாழ்க்கையை கினைந்து கினைந்து உள்ளம் வணங்கி வழிபடுகிறது.
யாழ்ப்பாணத்தை அடுத்து உள்ள சிறு சிறு தீவுகள் அதற்கு அணிசெய்து கிற்கின்றன. அவற்றுள் நாகத்தீவு என்பதில் ஒரு கோயில் உள்ளது. மக்கள் பலர் சென்று வழிபாடு செய்யும் இடமாகவும் பெரிய திருவிழா நடக்கும் இடமாகவும் அது விளங்குகிறது. இதுதான் சேரன் செங் குட்டுவன் காலத்தில் பதினெட்டு நூற்ருண்டுகளுக்கு முன்பு இலங்கைக் கயவாகு மன்னனுல் எழுப்பப்பட்ட கண்ணகிகோயில் என்று சொல்கிருர்கள். அந்தப் பத்தினிக் கடவுளுக்கு இப்போது வேறு வேறு பெயர்கள் வைத்து வழிபுட்ட போதிலும் உண்மையை மறைத்துவிட முடிய வில்லை.
செங்குட்டுவன் காலத்தில் கடவுட் கண்ணகி வந்தது போல் யாழ்ப்பாணத்திற்கு வந்து குடியேறிய மக்கள் பலர். அவர்களுடைய வழிவந்தவர்களே இன்று யாழ்ப்பாணத்
8 இ.

Page 60
114 யான் கண்ட இலங்கை
தில் வாழும் பெரும்பான்மையான தமிழ்க் குடும்பங்கள். அவர்கள் சேரநாட்டிலிருந்து குடியேறியவர்களாக இருக்க வேண்டும் என்பதற்குச் சான்றுகள் சில இருக்கின்றன. முதலாவதாக, அவர்கள் குடியிருக்கும் வீடுகள் மலையாள நாட்டு வீடுகளைப் போலவே தோட்டம் சூழத் தனித்தனியே விளங்குகின்றன. மகளிர் நகைச் சுமை சுமந்து வருந்தாமல், காந்தியடிகள் போற்றிய சீதையைப் போல், எளிமையும் தூய் மையும் அஞ்சாமையுமே அணிகளாய்க் கொண்டு விளங்கு கிருர்கள். பெண்களுக்கு உரிமையும் மிகுதி. மணமகள் வீட்டை மணமகன் தேடிச் சென்று வாழும் வழக்கம் உண்டு. உடையிலும் நடையிலும் சில பழக்க வழக்கங்களிலும் சேர நாட்டு முறை ஒாளவு காணப்படும். எல்லாவற்றையும்விட முக்கியமான ஒற்றுமை ஒலி முறையில் காணலாம். மலை யாளத்தாரைப் போல் 'ஆ' ஒலியை ஓ’ ஆக்குவது சில சொற்களில் உண்டு. காப்பி கோப்பி ஆகும். ஒலி நீட்டம், ஒலி அழுத்தம் முதலியவைகளும் மலையாள ஒலியையே நினைவூட்டும். இந்த வேறுபாட்டைக் கண்ட நம் காட்டுத் தமிழ்மக்கள் யாழ்ப்பாணத் தமிழை இலக்கணத் தமிழ் என் அறும் தூய தமிழ் என்றும் புகழத் தொடங்கிவிட்டார்கள். விளங்காத மொழியை உயர்ந்த மொழி என்பதும், எளிதில் விளங்காத பேச்சை அருமையான பேச்சு என்பதும், எளிதில் விளங்காத உரைநடையை சிறந்த தமிழ்நடை என்பதும், எளிதில் விளங்காத கருத்தை உயர்ந்த ஆராய்ச்சி என்பதும் 15மக்கு வழக்கம்தானே ! அது போன் றதே இந்தப் புகழுரையும். யாழ்ப்பாணத் தமிழிலும் நம் பேச்சுத் தமிழில் உள்ளவைபோல் கொச்சைச் சொற்களும் திரிபுகளும் தவறுகளும் உள்ளன. ஆயினும் ஒன்றுமட்டும் உறுதியாகக் கூறலாம். அவர்கள் தமிழ்ப்பற்றிலும் தமிழ்த் தொண்டிலும் முன்நிற்கிருர்கள் என்பது கண்கூடு.

யான் கண்ட இலங்கை 115
முயற்சித் திறனும் அறிவு வளமும் அவர்களுக்குத் தொன்றுதொட்டு வந்த செல்வங்கள். இயற்கை வளம் குறைந்த புன்செய் கிலங்களும் மணல் திடல்களும் சூழ்ந்த நிலப் பகுதியில் வாழ்க்கையை நடத்தவேண்டி யிருப்பதால் முயற்சியும் முற்போக்கும் அவர்களுக்கு இயல்பாக அமைக் திருக்கின்றன. இலங்கையின் மூ ஃள யே யாழ்ப்பாணத் தமிழர் என்று கூறத்தக்க நிலைமையை எங்கும் கண்டு மகிழலாம். -
அந்தச் செழிப்புக் குறைந்த கிலப் பகுதி அவர்களே விழிப்புடனும் திறமையுடனும் வாழச் செய்கிறது. இங்கி லாந்தில் ஆங்கிலேயர் வாழும் வாழ்க்கையும் அந்தக் கரர ணத்தால்தானே உயர்ந்து விளங்குகிறது ? கெல் பயிரிடு வதற்கு அவர்கள் பெருமுயற்சி செய்ய வேண்டும். தென் னைக்கும் மிக்க உழைப்புத் தேவை. ஆனல் அவர்களுடைய உழைப்பை எதிர்பாராமல் செழித்து வளர்ந்து கைம்மாறு கருதாமல் பெரும் பயன் கல்குவது பனே. பனைமரம் அவர் களுக்குக் கற்பக தரு. வாழ்வுக்கு வேண்டிய பல பொருள் களே அது கொடுத்துக் காப்பாற்றுகிறது. பனங்கிழங்கை யாழ்ப்பாணத்தாரைப் போல் பயன்படுத்துகிறவர்கள் வேறு எங்கும் காணுேம். சில தீவுகளில் பனங்கிழங்கை ஆண்டு முழுதும் பயன்படும் உணவாகப் போற்றிக் காப்பாற்று கிருரர்களாம். பெரிய நிலையில் செல்வாக்காக வாழும் யாழ்ப் பாணத்தார் ஒருவர் வீட்டிற்கு நாங்கள் எதிர்பாராத வகை யில் சென்ருேம், நாங்கள் சென்றபோது அவர் மேசை மேல் கோப்பி (காப்பி) வைத்து அருந்திக்கொண்டிருந்தார். அதை அடுத்தாற்போல் விலை உயர்ந்த தட்டில் இருந்த தின்பண்டம் பனங்கிழங்குதான். வேகவைத்து உரித்துத் துண்டு துண்டாக அரிந்து வைத்திருந்தார்கள். பழுப்பு கிற அல்வாத் துண்டுகள்போல் அழகாக்த் தோன்றின.

Page 61
6 யான் கண்ட இலங்கை
ஆனல் உற்றுப் பார்த்தபோது பனங்கிழங்கு என்று அறிந் தோம். நாங்கள் அப்போது உணவு உண்டுவிட்டுச் சென் றிருந்தபடியால், அந்தச் சிற்றுண்டி விருந்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனல் அந்த நாட்டுப் பனங்கிழங்கைத் தின்று பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வாய்ப்புக் கிடைத்தபோது அதை விடவில்லை. இலங்கைப் பனங்கிழங்கின் சுவையைக் கண்டோம். 15ம் நாட்டுக் கிழங் இற்கும் அதற்கும் சுவையில் வேறுபாடு இல்லை ; சுவை விரும்பும் மனத்தில் வேறுபாடு இருந்தது ; அவ்வளவே.
அடுத்தபடியாக அநுராதபுரம் என்ற பழைய ஊர்க்குப் பயணம் வைத்தோம். காடும் மலேயும் குஅறுக்கிட்டன. அந்தக் காடுகளில் யானைகள் இருக்கும் என்ருர்கள் ; வேறு பல விலங்குகளும் உண்டு என்றர்கள். ஆனல் எங்கள் கண் ணுக்கு ஒரு யானையும் அகப்படவில்லை. பட்டுப் போய் விழுந்த மரங்கள் அங்கங்கே சாலை ஓரமாக ஒதுக்கப்பட்டுக் கிடந்தன. வழியின் இருபக்கங்களிலும் அடர்ந்த காடுகள் இருப்பதால், இவ்வாறு பட்டுப் போகும் மரங்களும் பெருங் காற்றடித்து விழும் மரங்களும் கணக்கற்றவை கிடந்தன. சென்னையில் பல ஆண்டுகளாக விறகுப் பஞ்சத்தைக் கண்டுவரும் எங்களுக்கு இந்த மரங்களைப் பார்த்ததும் கேட் பார் இல்லாமல் கிடக்கும் புதையல் போல் தோன்றின. 8 சென்னைக்கு அருகே இப்படி ஒரு காடு இருக்குமானல் எவ்வளவு நன்மையாக இருக்கும்? என்று நண்பரிடம் சொன்னேன். * சில மாதங்களில் காடே அழிந்துபோகும் * என்ருர் அவர். எண்ணிப்பார்த்தேன். ? உண்மைதான்* என்றேன். இலங்கைபோல் மக்கள் நெருக்கம் இல்லாத காட்டில் காடு அழியாமல் இருக்க வழி உண்டு. ஆனல் மக்கள்தொகை மிகுந்துள்ள தமிழ்நாட்டில் காடு அழியா மல் காப்பது எப்படி ? தமிழ்காட்டிலும் இப்படிப்பட்ட காடு

யான் கண்ட இலங்கை 17
ای
கள் கணக்கற்றவை இருந்தன என்பதைப் பழங்கால இலக் கியம் தெரிவிக்கிறது. இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன் ஜவ்வாது மலைச்சாரலில் அடர்ந்த பெருங்காடுகளாக இருந்தவை இப்போது தரைக்காடுகளாகி, படிப்படியாகக் கட்டாந்தரையாகி வருவதைக் காண்கிருேம் அல்லவா?
தமிழ்நாட்டில் காடு அழித்து நாடு ஆக்கிய காலம் வர லாஅ அறியாத பழங்காலம். ஆனல் இலங்கையில் கிறிஸ்து வுக்குமுன் சில நூற்ருண்டுக்கு முன்பு அந்த அழிவு வேலை கள் சிறிய அளவிலேயே நடந்தன. நாடாக மாறிய இடம் மிகக் குறைவு ; காடாக உள்ள பகுதியே மிகுதி. தமிழ்நாட் டோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இலங்கை இன்னும் மக்கள் குடியேருத தீவு போலவே தோன்றுகிறது. தமிழ்நாட்டின் பல ஜில்லாக்களின் மக்களுக்கு இலங்கை இன்னும் இடக் தர முடியும். ஆனல், தப்பித் தவறிப் போய்க் குடியேறித் தலைமுறை தலைமுறையாய் கிலைத்துவிட்டவர்களும் வர வர உரிமை இழந்து வருந்துகிருர்கள். நெருக்கம் மிகுந்த தமிழ் காடு மட்டும் இன்னும் பூட்டும் திறப்பும் இல்லாத சத்திர மாகப் பலர்க்கும் வரவேற்பு அளித்துக்கொண்டிருக்கிறது. இவை எல்லாம் இருபதாம் நூற்றண்டின் உலக ஒற்று மைக்கு ஆன வழிகள் ! o
இருளடர்ந்த காடுகளே இருபக்கத்திலும் கண்டு வந்த மங்கையர்க்கரசியின் கண்கள் புலி சிறுத்தை ஏதேனும் இருக்குமோ என்று இங்கும் அங்கும் துருவிப் பார்த்து வந்தன. முயல் அல்லது மானுவது வழியோரம் கிற்காதா ஓடாதா என்று என் க்ண்களும் பார்த்துவந்தன. ஆனல் மோட்டார் விரைந்து ஒடும் செயற்கை ஒலியைத் தொலைவி லேயே கேட்டறியும் உணர்வு உள்ள விலங்குகள் எங்கள் எதிரே கின்றுகொண்டிருக்கலாமா? அதனுல் வழியில் யானையும் காணுேம், பூனையும் காணுேம். வானளாவிய மரங்

Page 62
18 யான் கண்ட இலங்கை
களும் அவற்றை ஒட்டிய புதர்களுமே கிறைந்து காணப்பட் டன. இடையிடையே நீரோடைகள் சலசல என்று ஓடிக் கொண்டிருந்தன.
இப்படிப்பட்ட காடுகளுக்கு இடையில்தான் அநுராத புரம் என்ற பழைய ஊர் இருக்கிறது. புத்தர் காலத்தை அடுத்த நூற்றண்டில் இது பெரிய தலைநகரமாக அமைக் தது; பெளத்த சமயத் துறவிகள் வாழ்ந்து தொண்டாற்ற இடம் கொடுத்துப் புகழ் பெற்றது. அரசியல் துறையி லும் சமயத் துறையிலும் இணையிலாச் சிறப்போடு விளங் கிய இந்த நகரம் சீரழியும் காலமும் வந்தது. தமிழ் வேங் தர்களும் இதற்கு ஒரு வகையில் காரணமானவர்களே. இதை இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகா வமிசம் என்னும் நூல் விளக்குகிறது. தமிழ் வேந்தர்க்கு ஒரு பெரிய ஆசை - உலகை ஒரு குடைக்கீழ் ஆள வேண்டும் என்ற ஏகாதிபத்திய ஆசை - மண்ணுலகம் மற்றவர்க்கும் உரிமையானது என்ற பொதுச்சொல் கேட்டுப் பொறுக் காத மனப்பான்மை இருந்துவந்தது அல்லவா? அதனல் எத்தனையோ ஆட்சிகளும் அமைப்புகளும் அழிந்தன. அப் படி அழிந்த பெரு நகரங்களில் அநுராதபுரம் ஒன்று.
தமிழ் வேந்தரின் ஆசை ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆசை போன்றது அல்ல; முகலாயர் முதலானேரின் கொடிய மண்ணுசை போன்றதும் அல்ல. சேரன் செங் குட்டுவன் போல், தம் புகழுக்குக் குறுக்கே கிற்போரின் செருக்கை அடக்கும் ஆசையே அவர்களின் ஆசை. ஆங் கிலேயரைப் போல் பொருள் ஈட்டும் ஆசையால் அவர்கள் நாடு பிடிக்கவில்லை. புகழ் ஈட்டும் ஆசையே அவர்களின் படையெடுப்புக்கெல்லாம் காரணமாக இருந்துவந்தது. "புகழ் எனின் உயிரும் கொடுக்கும் ஆர்வமே அவர்களைப் பிறநாட் டின் மேல் அாண்டிவிட்டது. (புகழாசையே இன்னும் தமி

யான் கண்ட இலங்கை 119.
ழர் முற்போக்குக்கு ஒரு வகையில் மறைமுகமான தடை யாக இருக்கிறது; அதுவே கட்சிகளே வளர்த்து காட்டை மறக்கச் செய்கிறது என்பதை இன்றும் காண்கிருேம் அல் லவா?) அதனுல்தான் படையெடுத்து வென்ற கடாரத்தை யும் கங்கையையும் மற்ற காடுகளையும் அவ்வவ்வாறே விட்டு விட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்தார்கள் ; கட்டியாளக் கருதவில்லை; அரசாங்கத்தின் பெயரால் அந்த நாட்டு மக் களின் பொருளைச் சுரண்டவும் முயலவில்லை. இலங்கையின் மகா வமிசம் என்ற நூலும் தமிழ் வேந்தர்களைப் பற்றிக் குறைகூற முடியவில்லை. அதற்கு மாருக, அவர்களின் வீரத்தையும் திேமுறையையும் புகழ்ந்து கூறுகிறது. தமிழ் அரசர்கள் அங்கியர் என்ற காரணத்தால் பொருமை கொண்டானம் சிங்கள இளவரசன் ஒருவன். ஆனல் தமிழ் அரசர்மேல் படை யெடுக்கக் கூடாது என்று அவனுடைய தந்தையாகிய அரசன் அவனேத் தடுத்துவந்தானும், இதையும் அந்த நாட்டு வரலாறே எடுத்துரைக்கிறது. சிங்கள அரசர்களின் புகழையும் பெருமையையும் விளக்க வந்த அந்த நூலாலும் மறுக்கவும் மறைக்கவும் முடியாத படி நேர்மையாக அறநெறியில் கின்று ஆண்டவர்கள் தமி ழர்கள். ஆகையால் அவர்களின் ஏகாதிபத்தியப் போக்கில் வெறி இல்லை ; கொடுமை இல்லை ; பொன்னுசை இல்லை சுரண்டல் இல்லை ; புகழாசை "ஒன்றே இருந்தது என்ருல், வாள் ஏந்திக் கொல்லச் சென்றவர்களேயும் தமிழ்ப்பண்பாடு எவ்வளவு காத்துவந்தது என்பதை உணரலாம்.
அதே மகாவமிசத்தில் சிங்கள அரசர் சிலருடைய வர லாறுகளைக் கூறும் பகுதிகள் அவர்களுடைய அநாகரிகப் போக்கைக் காட்டக்கூடியவைகளாக உள்ளன. அவைகளை விதிவிலக்கு என்று கூற முடியாது. முகலாய அரசமரபின ரில் இருந்தது போல் தந்தையை மகன் கொல்லும் கொடு

Page 63
12O யான் கண்ட இலங்கை
மைகள் இலங்கையில் திரும்பத் திரும்ப நிகழ்ந்திருக்கின் றன. அரச குடும்பத்துக் கொலைகளுக்குக் கணக்கும் இல்லை; அவற்றின் கொடுமைகளுக்கு வரம்பும் இல்லை. அவர்களின் நாட்டு வரலாறே அவற்றை எழுதி வைத்திருக் கிறது; பக்கத்திலேயே தமிழர்களின் நெறிமுறையைப் புகழ்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அவ்வாறு அரச குடும் பத்துக் கொலைகளும் கொடுமைகளும் நிகழ்ந்ததாகக் கூறு வதற்கே இடம் இல்லை. கோப்பெருஞ் சோழனை அவ அடைய மக்கள் எதிர்த்தார்கள். சோழன் வாள் எடுத்துச் சென்றன் ; புலவர் ஒருவர் குறுக்கிட்டு அறிவுரை கூறித் தடுத்துவிட்டார்; மக்களிடம் அரசை ஒப்படைத்துவிட் டுச் சோழன் உண்ணுநோன்பு கிடந்து உயிர்விட்டான். மற்ற அரச குடும்பங்கள் எங்கே ! பண்பட்ட தமிழ்வேந்தர் குடும் பம் எங்கே ! மற்ருெரு சோழன் தன் பங்காளியோடு போர் தொடுத்து முற்றுகை யிட்டான் ; புலவர் ஒருவர் குறுக் கிட்டு அறிவுரை கூறி நெறிப்படுத்தினர். இன்னெரு வேக் தன் தனக்குப் பகையான சிற்றரசனுடைய மக்களைக் கொல்ல யானையை ஏவத் துணிந்தான். புலவர் ஒருவர் அறத்தை எடுத்துரைத்துத் தடுத்து அவர்களைக் காப்பாற்றினர். இப்படி எத்தனையோ நற்பண்புகளைத் தமிழ்நாட்டு அரசர் களின் வாழ்வில் காண்கிருேம். பாரியைக் கொன்றதாக மூவேந்தர்ம்ேல் குறை கூறப்ப்டுகிறது. ஆனல் அதற்குப் பாரி மகளிரின் வாயோ, கபிலரின் வாயோ சான்று கூற வில்லை. படை எடுத்து வென்றதாக அறிகிருேம், பிற் காலத்தார் கொன்றதாகத் திரித்துவிட்டார்கள். இத் தகைய இரண்டொரு குறைக்கும் இடம் இல்லாமல் தூய வாழ்வு வாழ்ந்த மன்னர்களைப் படைத்த தமிழ்நாடு இது ! தமிழரசர்களைச் சிங்களர் வெறுத்த காரணமும் வெளிநாட் டார் என்ற ஒரு காரணமே தவிர, வேறு குற்றமோ,

யான் கண்ட இலங்கை 121
குறையோ இல்லை. சிங்கள அரசர்களில் மாற்ருரை இரக்கம் இன்றி நேர்மை இன்றி வீரமும் இன்றிக் கொன்ற கொலைகள் பல. பெற்ற தந்தையைச் சிறையிலிடும் மனம், சித்திர வதை செய்து கொல்லும் மனம், மலைக் கோட்டையில் பதுங்கி அஞ்சிக் கிடந்த உடன்பிறந்தான முற்றுகையிட் டுப் பிடிக்கும் மனம், உடன்பிறந்தானைக் கண்டு அஞ்சித் தற்கொலை செய்துகொள்ளும் மனம், தந்தையிடம் உள்ள செல்வத்தைக் கண்டு பொருமைப்படும் மனம், ஓர் ஏரியில் தந்தையை உயிரோடு புதைத்து விட்டுத் திரும்பும் மனம் - இவற்றைத் தமிழ் அரச குடும்பங்களில் காண (1ptԳպւDTP இப்படிப்பட்ட கொடுங்கோலர்கள் தமிழ் நாட்டில் இருங் திருந்தால், அவர்களுக்கு அஞ்சும் புலமையுள்ளமும் இங்கு இருந்திருக்காது; அடிபணியும் பொதுமக்களின் தலையும் இங்கு இருந்திருக்காது. தமிழ்ப் பண்பாடு நீதியின் எல் லையையே எட்டி வளர்ந்திருந்தது. வெளியூர் மங்கை ஒருத்தி விரிந்த கூந்தலோடும் -9 p. கண்களோடும் வந்து, எதிரே நின்று "தேரா மன்ன ? என்று வழக்காடியது கேட்டு * யானே அரசன் யானே கள்வன் ? என்று அரசன் உயிர் துறக்கும் அளவிற்கு அரசதிே வளர்ந்திருந்தது.
இவ்வளவு பெருமையும் பண்பாடும் இருந்தும் தமிழ் அரச குடம்பங்களைப் பற்றி உலகம் அறிந்து போற்ற வழி இல்லை. அதற்குள், அரசன் என்ருல் யார், அரசகுடும்பம் என்று ஒன்று உண்டா என்று வியந்து கேட்கத்தக்க வகையில் அரசியல்முறை உலக முழுவதும் மாறிக் கொண்டு வந்துவிட்டது. இருந்தாலும் பகைவர் புகழ்ந்து எழுதிய அளவிற்குப் பண்பட்டிருந்த குடும்பங்களைப் பற்றி அறிந்துகொள்ள முடியவில்லையே என்று உள்ளம் வருந்து கிறது. வரலாறு எழுதிவைக்காத குறை, தாம் வென்ற காட்டில் வரலாறு எழுதப்படுவதைப் பார்த்தும் அவ்வாறு

Page 64
122 யான் கண்ட இலங்கை
தாம் எழுதிவைக்காத குறை இன்று நம் புகழுரைக்குத் தடையர்க கிற்கிறது. கவலைக்கு இடம் தராதவாறு வளர்ந்துவிட்ட தமிழரின் கலையுணர்வு தம்மை மறந்து வாழச் செய்துவிட்ட்து.
ஆனல் அநுராதபுரத்தின் அழிவுகளைக் கண்ணுல் கண்டபோதுமட்டும் பழந்தமிழரின்மேல் எனக்குச் சிறிது வெறுப்பு ஏற்பட்டது. எத்தனையோ கட்டிட வேலைப் பாடும் சிற்ப அழகும் எல்லாம் இன்று சிதைந்து மண் ணுய்க் கிடக்கின்றன. அவற்றைக் கட்டிய கைகளும் தமிழர் கைகளே அழித்த கைகளும் தமிழர் கைகளே ; இன்அறு காட்சிக்கு உரியவைகளாகக் காட்டும் பொருட் டுக் கட்டித் தரும் கை களும் தமிழர் கைகளே. முதலில் வென்ற நாட்டைச் சீர்படுத்துவதற்காக ஆக் கித் தந்தார்கள். பிறகு சிங்கள அரசருடன் செய்த போர்களால் அழித்துச் சிதைத்தார்கள். வீரச் சிறப்பால் ஆக்கல் அழித்தல் இரண்டும் கடத்தினர்கள். இன் அறு வயிற்றுப் பிழைப்புக்காகக் கூலி வேலை செய்யும் தமிழ ராய்ச் சென்று சிதைந்தவற்றைச் சீர்ப்படுத்தித் தருகிறர் கள். காலம் ஒரு சக்கரம்தான் !
அநுராதபுரத்தைச் சுற்றிப் பார்த்தபோது மஞ்ச ளர்டைத் துறவியோ அல்லது புத்தரின் வெள்ளரச மரமோ அல்லது உயர்ந்து நிற்கும் தூபியோ வழியெல் லாம் கண்டு வந்தோம், அசோகன் தன் மகன் மகிந்தனே யும் மகள் சங்கமித்திரையையும் புத்தரின் அறவுரையைப் பரப்புவதற்காக அனுப்பியபோது, அவர்கள் கொண்டு வந்த வெள்ளரச மரக் கிளையை இங்கேதான் நட்டார் களாம். அந்த மரமே இப்போதும் பெரிய மரமாகச் செழித்து வளர்ந்திருக்கிறது. இலங்கை மட்டுமே அல்’ லாமல் மற்றப் பெளத்த நாடுகளும் இங்கு வந்து இந்த

யான் கண்ட இலங்கை 123
மரத்தை வழிபடுகின்றன. இந்த அரச மரத்துக் கோயி லுக்கு எதிரே அழிந்த அரண்மனையின் சிதைவுகள் காணப்படுகின்றன. நூற்றுக்கணக்கான கல்தூண்கள் இப்போது அங்கே கிற்கின்றன. அவற்றைக் கொண்டு அழிந்துபோன அரண்மனையின் பெருமையைக் கற்பனை செய்து பார்த்து வியக்க வேண்டியுள்ளது.
மகாதூபி என்று மற்றென்று மலைபோல் பரந்து உயர்ந்த துரபியாக கிற்கிறது. அழிந்துபோன பகுதிகளை ஒருவாறு கட்டி முடித்துவிட்டார்கள். இன்னும் வேலை கடந்தபடியே இருக்கிறது. வேலை செய்யும் சிற்பிகளைப் பார்த்த அளவிலேயே தமிழர்கள் என்பது தெரிந்துவிட் டது. தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிருேம் என்பதைத் தெரிந்துகொண்ட அவர்களுடைய கண் கள் எங்களையே ஆர்வத்தோடு பார்த்தன. அதை அறிந்த நாங்களும் அவர் களே அணுகிப்பேசி மகிழ்ந்தோம். அந்தத்தூபியின் உய ரம் எழுநூறு அடி என்று அங்கிருந்தவரைக் கேட்டு அறிக்தோம்.
அங்கங்கே அழிந்த கட்டிடங்களை ஒட்டி அழகான தாமரைப் பொய்கைகள் விளங்குகின்றன. பெளத்தப் பள்ளிகள், கோயில்கள், பெரிய மாளிகைகள் முதலிய வற்றின் அழிந்த பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றைக் கண்ட போதுதான் அழிந்த நகரம் எவ்வளவு பெரிய தாக இருந் திருக் க வேண்டும் என்ற வியப்புத் தோன்றியது. கட்டிடம் இழந்துகிற்கும் கல்தூண் களிலும் சிலைகளிலும் காணப்படும் சிற்ப வேலைப் பாடுகள் இன்றும் சிறந்த கலைத் திறனை க் காட்டி கிற்கின்றன. ஒவ்வொன்றைக் காணும்போதும், பண் டைத் தமிழர்களின் கையை நினைந்து வாழ்த்தாமல் வரமுடியவில்லை. கி. மு. நான்காம் ஆாற்றண்டில் இந்தப்

Page 65
124 . யான் கண்ட இலங்கை
பழைய நகரம் அமைக்கப்பட்டதாம். அப்போது நகரத் தின் தூய்மைக்காக மட்டும் தோட்டிகள் ஆயிரம் பேர்கள் இருந்தார்களாம். அப்படியானல் நகரம் இருந்த பெரு மையை என்ன என்று புகழ்வது ? இப்போது நகரம் சம யத் தொண்டர்களின் ஆர்வத்தால் புத்துயிர் பெற்று வரு கிறது. ஆயினும், அரசியல் தலைமையைக் கொழும்பு பெற்றுவிட்டதால், இது அவ்வளவாக வளர்ச்சியடைய (էքէջեւ 1/7:51,
ஒரு குளத்தின் கரையில் பெரிய பாறையை வெட்டி அமைத்த புத்தர் கோயில் ஒன்று உள்ளது. குளம் தாம ரைப் பூக்களுடன் பொலிந்து விளங்குகிறது; கண்டியில் இருப்பதுபோல், இதில் ஆமைகள் பல ந்ேதுகின்றன. கோயிலைச் சுற்றிச் சிற்பக்கலை விளங்குகிறது. இந்தக் கோயிலை ஈசுவரமுனி என்று கூறுகிருரர்கள். தாமரைப் பூக்களைக் கையில் ஏந்திச் சென்று ஆண்களும் பெண்களு மாகச் சிங்களர் அமைதியாக வழிபாடு செய்துவிட்டு வருகிருரர்கள்.
அங்கிருந்து ஐந்துமைல் தொலைவில் மகிந்தலை என்று ஓர் இடம் உள்ளது. அங்கே உள்ள ஒரு குன்றில்தான் அசோக மன்னனுடைய மகன் மகிந்தன் முதல் முதலாகப் புத்த தருமத்தை உபதேசம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதனுல் அந்த இடத்திற்கு மகிந்தலை என்று பெய ராயிற்று. மகிந்தன் உபதேசம் செய்து கின்ற அந்த இடத்தைப் பெளத்தர்கள் புனிதமானது என்று போற்றி வழிபடுகிருர்கள்.
இறுதியாக நாங்கள் கண்டது ஒரு பெரிய குகைக் கோயில். அது தம்பளே என்ற சிற்றுாரில் குன்ருக உயர்ந்த மிகப் பெரிய பாறையின்மேல் அமைந்துள்ளது. வியக்கத்

யான் கண்ட இலங்கை 125
-r
தக்க காட்சிகளுள் அது ஒன்று ஆகும். கருங்கல்லால் அம்ைந்த அந்தக் குன்று ஏறப் படிகள் சீராகச் செதுக்கப் பட்டுள்ளன. குன்று ஏறி நின்றபின், கண் எதிரே 6pCU5. பெரிய கருங்கல் நீளமாய்ப் படுத்து நிற்பதைக் கண்டோம். அதன்கீழ் அவ்வளவு நீளத்திற்குக் குகைக்கோயில் அமைந்திருக்கிறது. உள்ளே செல்லும் வழி ஏதோ மண்ட பத்திற்குள் செல்வதுபோல் இருக்கிறது. வாயிலில் ஒரு கோட்டுப் புத்தகம் இருக்கிறது. அதில் வந்து காண்போர் கையெழுத்து இடுகிருர்கள். அப்பால் சென்று கண்ட காட்சிகளை அற்புதக் க்ாட்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். குகை பெரும்பாலும் இருண்டு கிடக்கிறது. அங்கங்கே சிறு விளக்கு உள்ளது. சில இடங்களில் அவற்றின் ஒளியும் இல்லை. மெழுகுவத்தியும் நெருப்புப் பெட்டியும் உதவி செய்தன. குகையின் மேற்புறம் சில இடங்களில் கையால் எட்டித் தொடக்கூடிய உயரத்தில் தான் இருக்கிறது. எங்கள் கண்ணைக் கவர்ந்தது வலம் இடம் முன்பின் ஆகிய பக்கங்கள் மட்டும் அல்ல ; மேற் புறமும் எங்களைக் கவர்ந்தது. திரும்பித் திரும்பிப் பார்த்து வியந்தோம். கண்ட இடமெல்லாம் கலை மயம் ; அந்தக் கலை எல்லாம் அமைதியின் விளக்கமே. அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தால், பக்கத்தே அது போன்ற மற்ருெரு வாயில் இருக்கிறது; அதனுள் நுழைக் தால் மறுபடியும் பக்கங்களிலும் தலைமேலும் கலையும் கலை யின் அமைதியுமே ; அவ்வாறே மற்ருெரு குகைப் பகுதி இன்னென்று; மற்றென்று. குகையின் ஒவ்வொரு பகுதி யும் இரு நூறு முந்நூஅறு அடி நீளமும் அறுபது எழுபது அடி அகலமும் உள்ளவை. ஒரே குகை இவ்வாறு பகுதிக ளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியும் பெரிய மண்டபம் போல் காட்சியளிக்கிறது.

Page 66
126 யான் கண்ட இலங்கை
விளக்கொளியில் கண்டவை எல்லாம் சிற்பங்களும் ஓவியங்களுமே, தலைநிமிர்ந்து கண்ட ஒவியங்கள், பல நிறத்தால் தீட்டப்பட்டவை. புத்தர் பெருமானின் வாழ்க் கையின் பல நிகழ்ச்சிகளும் வேறு பல கதைகளும் மிக அழகிய ஓவியங்களாக விளங்கி வாழ்கின்றன. வெளியே சென்று கின்றபோது அந்தப் பெருங்கல்லின் அடிப் பகுதி யில்தான் இவ்வாறு ஓவியக் கலையின் பொலிவெல்லாம் இருத்தல் விளங்கியது. கல்லின் அடிப்பகுதி ஓவியம் எழுது வதற்கு ஏற்றவாறு அமைவதற்காக உறுதியான மண் னும் சுண்ணும்பும் மற்றவையும் கலந்து பூசப்பட்டு, அதன் மேல் எழுதியிருக்கிருர்கள். அழகான திரையில் எழுதிய ஒவியங்களைப் போலவே விளங்குகின்றன. பல நூற்றண்டு களுக்கு முன்பு தீட்டப்பட்ட ஓவியங்கள், வெயிலும் மழையும் எட்டாத இடத்தில் எழுதப்பட்ட கலைச்செல்வங்கள், வருந்தி வந்தவர்க்கு விருந்து நல்குவனவாக உள்ளன.
இனிச் சிற்பக் கலையழகைப் பற்றித் தெரிவிக்கவேண் டுமா? ஒரு சில சிலைகள் தவிர, மற்றவை எல்லாம் புத்தர் பெருமானின் திருவுருவங்களே. கல்லால் ஆனவையும் உள் ளன; மண் முதலியவற்ருல் ஆனவையும் உள்ளன. கிறம் தீட்டப்பெற்ற வடிவங்களே பல. மெழுகுவத்தியின் உதவி யால் நன்கு கண்டோம். தொட்டும் உணர்ந்தோம். புத்தர் பெருமானின் பல கோலங்களையும் திரும்பத் திரும்பச் சிற்பங்க ளாக வடித்துள்ளார்கள். அமைதி பொலியும் அந்தப் பெரு மானின் முகமும் காணக் காணச் சலிக்கவில்லை. ஒவ்வொரு குகைமண்டபத்திலும் மிகப் பெரிய புத்தர்சிலை ஒவ்வொன்று படுத்த கோலமாக இருந்தது. மிகப் பெரிய வடிவம் என்று சொன்னுல் போதாது ; ஐம்பது அடி நீளம் என்று சொன் ஞலும் போதாது. அந்த வடிவத்தின் திருவடி உன்னைவிடப்

யான் கண்ட இலங்கை 127
பெரியதாக இருக்கும். கற்பனை செய்துகொண்டு பார். எவ்வளவு பெரிய வேலைப்பாடு என்று விளங்கும்.
இங்கே அமைதிப் பெருமானின் வடிவங்களே அமைக்க வேண்டும் என்று எண்ணியவன் யாராக இருந்தாலும் இருக்கட்டும். அவனுடைய மனம் பெரிய மனம் என்பது மட்டும் உறுதி. அவன் இந்தக் குக்ையில் அமைதியைக் கண்டவன். இந்தக் கல் அவனுக்குப் புகலிடமாக விளங் கியது. அந்த அரசனுடைய வரலாறும் அப்படித்தான் சொல்கிறது. புத்தர்பெருமானின் வாழ்வும் அறவுரையும் அவனுக்கு இந்தப் பெருங்கல்லின் நிழலில் அமைதி நல் கின; உலகத்தின் தொல்லை நலியாதவாறு காத்தன; இவ் வாறு அமைதி பெறுவதற்குத் துணை செய்து அந்தக் குகைக்குக் கூரையாக விளங்கும் பெரும்பாறையை அவனுல் மறக்க முடியவில்லை. அதைப் பலமுறை பார்த்துப் பார்த்து உருகினன். அதன் படுத்த நிலையில் அமைந்த தோற்றம் புத்தர் பெருமானின் படுத்த திருக்கோலத்தை அவனுக்கு கினைவூட்டியது. அந்தப் பெருங்கல்லைப் பெருமானின் வடிவ மாக வடிக்கமுடியாதா என்று பல நாளும் எண்ணிப் பார்த் தான். ஒரு மலையுச்சியைச் சிங்க முகமாக வடித்துச் சீயகிரி எனப் பெயர் வழங்கி இலங்கையைப் பெருமைப் படுத்து வதால் பயன் இல்லை என்று உணர்ந்தான். அது உடல் வலிமையையும் அதனுல் விளையும் போர்த் தொல்லை களையுமே காட்டி நிற்பதை உணர்ந்தான். தனக்கு அமைதி நல்கிய பெருமானின் திருவுருவமே உள்ளத்தின் வலிமையையும், அதனுல் விளையும் அமைதி யின்பத்தையும் விளக்கும் திருவுருவம் என்பதைத் தெளிந்தான். ஒரு மலை மேல் நிற்கும் பெருங்கல்லை - நூற்றுக் கணக்கான அடி நீளம் உள்ள பெருங்கல்லை - அந்தப் பெருமானின் வடிவ மாக அமைத்துவிட்டால், இலங்கைக்குப் புதிய தொண்டாக

Page 67
128 யான் கண்ட இலங்கை
விளங்குமே என எண்ணினன். அந்தப் பெருங்கல்லின் அடியில் நின்று நின்று தொலைவில் தெரியும் சீயகிரியைப் பல நாளும் பார்த்தான். அதன் சிங்கமுகத்தில் விளங்கும் போர்வன்மையை வெல்லக்கூடியதும், வென்று நாட்டிற்கு நன்மை செய்யக் கூடியதும் அன்பின் அமைதியே என்பதை உலகத்திற்கு விளக்க எண்ணினன். சீயகிரிக்கு எதிரே அன்பின் அமைதியை வடிக்கத் துணிந்தான். அதற்கு உரிய முன்முயற்சியாகக் குகையினுள் பெரிய பெரிய புத்தர் வடிவங்களைச் சிற்பிகளைக் கொண்டு வடிக்கச்செய்தான். அந்த முயற்சியே இந்தக் குகைக் கோயில், அவனுடைய மனம் மிகப் பெரியது; செய்த தொண்டும் மிகப் பெரியது ; வடித்த வடிவங்களும் மிகப் பெரியவை; அவற்றில் விளங் கும் அமைதியும் அன்பும் மிக மிகப் பெரியவை.
புத்தர்பெருமான் வாழ்வு, உலகம் கண்ட பெருவாழ்வு. அந்த வாழ்வின் முடிவை - மகாகிருவாண நிலையை - இந்தப் படுத்த திருக்கோலம் காட்டுகிறது. அன்பிற்கு உரிய சீடர் ஆனந்தர் 6ெக்குருகி நிற்கிருர் ; வலக்கையைத் தலை யின்கீழ் வைத்து இடக்கையை உடல்மேல் நீட்டியவாறே அன்புருவான அந்தப் பெருவாழ்வு அமைதியடைகிறது. பெருமானின் மலர்ந்த கண்கள் குவிந்தன; ஆயினும் அவர் திருவாய்மலர்ந்த அறவுரை என்றும் நின்று அன்புமணம் கமழ்ந்து விளங்கும்.
பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம் ; அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
அன்புள்ள
g


Page 68


Page 69