கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காற்று வெளியினிலே

Page 1


Page 2

am fibp 666ffsed (860...
சாத்தன்குளம் அப்துல் ஜப்பார்
32/9 ඌffඝII (බ් ඊ Töක6o 6) අගී ගඟ| 24 தமிழ்நாடு இந்தியா

Page 3
Mitbyta ઉર્દૂ Books
ssN aveszss 7
Apart from any fair dealing for the purpose of Private Study, Research, Criticism or Review as Permitted under the Copyright Act, No part may by reproduced, stored in a retrieval system, or transmitted, in any form or any means, electronic, mechanical or photocopying, recording or otherwise without prior written permission from the publishers.
Mithra Publication books are published by Dr Pon Anura
Publication Editor Espo
KAATRU VELIYINILE
Autobiograpical Glimpses
By Sathankulam Abdul Jabbar
Mithra Books First Edition December 2003
Cover Design M. Sridharam
AT S.
Mikra Arts and Creations
f3 MUNROSREET m 375.8.0 ARCOT ROAD EASWOOD 222 AUSTRALA 30 WANNAH STREET CHENNA 600024 NDA
Ph: (O2) 9868 2567 BATTICALOA (EP) Ph: (044),3723182 Ο e-mail: www.anurac matra.com.au SRI LANKA e-mail: www.mithrasamd4.com.in
Fax: (02) 98684205 Fax: 009-44-47336
மித்ர : 83 முதற் பதிப்பு : டிசம்பர் 2003
விலை : ரூ. 60.00 பக்கங்கள் : 184
 

பதிப்புரை
திமிழ் இலக்கியம் 2004-இல் தமிழ்நாட்டு எழுத்தாளர்களுடைய நூல்கள் பன்னிரண்டினையும், புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளுடைய நூல் களுடன் இணைத்து வெளியிடத் தீர்மானித்தோம்.
இந்நூல்களுள் ஒன்று காற்று வெளியினிலே இதன் ஆசிரியரான சாத்தான் குளம் அப்துல் ஜப்பார், வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலே, உலகளவில் தமிழ் ரஸிகர்களைத் தன்பால் ஈர்த்து வைத்திருப்பவர். உலகளாவிய கிரிக்கட் போட்டிகளிலே, அவரே தமிழ்
வர்ணனையாளராய்க் கெளரவிக்கப்படுகின்றார்.
இத்தனை பெருமைகளுக்கும் இலங்கையிலே தாம் பெற்ற நாடக அநுபவங்களே காரணம் என்று கூறும் அவர், இதுவரை வெளியாகாத பல தகவல்களை இந்நூலிலே சுவைப்படக் கூறுகின்றார். தமிழ் இலக்கிய வரலாறு கூறும் ஆவணங்களுள் இது முக்கிய இடம் பெறுகின்றது.
பெA4. 2hგlm

Page 4
என் தாய்க்கும் என் தந்தைக்கும்
என் பால்ய நண்பன் பள்ளித் தோழன் இன்றைய இலங்கை நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்
ஆகியோருக்கு இந்நூல்
என் தாயாய், தந்தையாய் என்னை வழி நடத்திய
அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர்
சமர்ப்பணம்
r4

என்னுரை
Tெழ்க்கையில் அனுபவித்து மகிழ்ந்தவைகளையும் நெஞ்சில் துயரத்துடன் சுமந்தவைகளையும் இன்று அசைபோட்டுப் பார்க்கிறேன்.
என் வாழ்க்கையில் ஏக்கங்கள் ஏமாற்றங்கள் எதிர்பார்ப் புகள் ஏற்றங்கள் என்று என்ன இல்லை எல்லாமே இருந்திருக் கின்றன.
என் தோள் மீதேறி திருவிழா பார்த்த நண்பர்கள் ஏராளம். அதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் ஒட்டகத்தின் உணவை அதன் முன்னால் கட்டித் தொங்க விடுவதைப் போல் என்னை இன்னும் ஒரு பொதி மாடாக எண்ணி நடந்து கொள்வதுதான் வேதனையானது. ஆனாலும் உள்ளூர அவர்களை எண்ணிச் சிரிக்கிறேன் என்பது தான் உண்மை. இந்த நேரத்தில் என்னை கைதுரக்கிவிட்ட கணகற்ற நண்பர்களையும் எண்ணிப் பார்க்கிறேன். பெயர்களை குறிப்பிடுவதென்றால் பட்டியல் நீளும். இதயத்தால் நன்றி சொல்லப்பட வேண்டிய அந்த நண்பர்களுக்கு மத்தியில் என்னை எழுத்துலகின் வெளிச்சத்துக்கு வா" என்றழைத்த ஈழத்தின் தமிழ் இலக்கிய பிதாமகர் எஸ்.பொ அவர்களுக்கு குறிப்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இனிய நண்பர்கள் அத்தின பேருக்கும் இதய நன்றி மீண்டும். மீண்டும்.
05.09.2003 சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் சென்னை - 600 094

Page 5
அணிந்துரை
திரையில் குத்தி விரலில் உடைக்கும் விதை மணிலாக்களைப் போடும் இவரது விளைந்த சிந்தனைகள் வெடிப்புறப் பேசும் இடிப்புரையாளர்.
பேச்சுத்தமிழ் ஒலிப்பு அதிர்வுகளிலும் உயரிய சுரங்கள் ஒராயிரம் கண்டவர்.
அதிபுதிய வானூர்தியின் வேகத்தில் தொன்மத் தமிழைத் தூவி விடுபவர். தமிழ்த் தொடர்களைச் சாட்டைகளாய்ச் சொடுக்கி நிகழ் அரசியலை நிற்க வைத்து வெளுத்துக் கட்டுபவர்.
விளையாட்டு வர்ணனைகளில் விளையாடிப் பார்த்தவர். பார்ப்பவர்.
வியப்பூட்டும் நினைவாற்றல். துடிப்பூட்டும் தமிழாற்றல். இரண்டையும் குழைத்து இவர் புலம்பெயர்ந்த எம் தமிழ் உறவுகளிடம் உரையாடுகிற வெற்றி வரலாற்று வெற்றி
வலியதுரய்மையின் உயரிய சந்திப்பின் உளம்பூத்துச் சிலிர்க்கும் இவரது சந்திப்புகளில் ஏராளமான சுவையறிவுகள் நமக்குள் பனிமூட்டமாய் படரும்.
இந்த நூல் அவரது நாள்காட்டிகளின் கூட்டுத் தொகுப்பு. அனுபவப் பல்கலைக் கழகத்தின் சுவைமிகு வகுப்பு படிப்போம். அன்பூறிய நெஞ்சத்தின் ஒளிவு மறைவற்ற எளியவியப்பை மதிப்போம்.
அன்புக் கவிஞர் அறிவுமதி

முன்னுரை
சிTத்தான்குளம் அப்துல் ஜப்பார் - பன்முகம் கொண்ட பண்பட்ட ஒரு கலைஞர். இவரை எஸ்எம்ஏ. ஜப்பார் என்கிற நாடகக் கலைஞராகத்தான் இலங்கை வானொலி நேயர்கள் அறிவர்.
ஆனால், விளையாட்டு வர்ணனையாளனாகத்தான் இந்திய வானொலி ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். பிரிட்டன், ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா வாழ் தமிழர் களுக்கு அவரை ஓர் அரசியல் விமர்சகராகவே தெரியும். இவை அனைத்திலும் அடி நாதமாகத் திகழ்வது அவரது அழகுத்தமிழே! அதன்மீது அவருக்குள்ள ஆளுமையும் கையாளும் நேர்த்தியும் சுவைக்குரியன. அவரை நான் அறிந்திருப்பது ஒரு நல்ல எழுத்தாளனாகவும்! இயல்பான - எழிலார்ந்த சொற் பிரயோகம்; துள்ளல் நடை எந்தப் பொருளைக் குறித்தும் - நுட்பமாகவும் எளியமையாகவும் எழுதும் திறமை ஆகியன அவர் தனித்துவம். லண்டன் ஐ.பி.சி. வானொலியில் அவரது இந்தியக் கண்ணோட்டத்தை கேட்பவர்களும், லண்டன் தீபம் தொலைக்காட்சியில் அவரது "அரங்கம் அந்தரங்கம்" நிகழ்ச்சி களைத் தொடர்ந்து பார்ப்பவர்களும் என் கூற்றை ஆமோதிப்பர்.
6Tisaffair gaO)600Tugat GirolaoTT65 (worldtamilnews.com) பிறந்தபோதுதான் ஐப்பாரின் எழுத்துத்திறனுக்கு ஏற்றதொரு களம்
7

Page 6
அமைந்தது. சில நிகழ்ச்சிகளுக்கு அறிமுக உரை தேவைப்படும்; சில நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் தேவை. இவை ரத்தினச் சுருக்கமாக, நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல், நச்சென்று இருக்கும். முத்தாய்ப்பு உண்மையில் நம்மை சிலிர்க்க வைக்கும்.
இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் இலங்கை தமிழ் தினசரியான திகரன் வாரமஞ்சரியில் தொடராக வந்து போது மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்நூல் பிரசுரமாதல் வேண்டுமென்று நானும், இலங்கை நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் சகோதரர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களும், அன்பு அறிவிப்பாளர் பிஎச் அப்துல் ஹமீது அவர்களும் பெரிதும் விரும்பினோம். காலம் இப்போதுதான் கனிந்திருக்கிறது. அதற்காக இலங்கையில் இலக்கிய பிதாமகன் எஸ்.பொ அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஜப்பாரின் லாயத்திருந்து இன்னும் பல பஞ்சகல்யாணிகள் புறப்பட்டுவரும் என்று நம்பலாம். வருவதற்கு வாழ்த்துவோம்.
மதுரா டிராவல் சர்வீஸ் (பி) லிட் கலைமாமணி வி.கே.டி. பாலன் எழும்பூர், சென்னை - 600 008.

நுனிப்புல் மேய்ந்ததில். சில எண்ணங்கள்
கிTற்றலையில் கலைபடைத்த சிற்பிகள், அந்தக் காற்று வெளியிடை கலந்துமறையும் ஒலியினைப்போல், காலத்தால் மறக்கப் பட்ட துர்ப்பாக்கியசாலிகள் என (என்னையும் சேர்த்து) நான் ஆதங்கப்படுவதுண்டு. மிகச் சிறந்த படைப்பாளிகளின் பங்களிப்புகள், அச்சுவாகனத்தின் துணைக்கொண்டு ஆவணப்படுத்தப்பட வேண்டு மென்று நான் ஆசைப்பட்டதும் உண்டு.
அந்த ஆசையின் ஒரு துளி இதோ. உங்கள் கைகளில், திரைத்துறை மூலம் எனை ஈர்த்து, எனக்குள் கலையார்வம் ஊற்றெடுக்க ஒரு உந்துசக்தியாய் ஒரு நடிகர்திலகம் விளங்கியதைப் போல், வானொலி நாடகத்துறையில், இவரைப்போல் புகழ் பெறவேண்டும் எனப் பலர் சொல்லி எனக்குள் உந்து சக்தியை விதைத்த மூத்த கலைஞர் சகோதரர் அல்ஹாஜ் எஸ்.எம். அப்துல் ஜப்பார் அவர்களின் ஊடகத்துறைப் பங்களிப்புகளை, வளரும் சந்ததியும் அறிந்துகொள்ளும் வகையில் நூலுருவாக்கிய முயற்சிக்கு எனது நன்றி.
இலங்கையில் வாழ்ந்திருந்த காலத்தில் நான் அவரை நேரில் சந்தித்ததில்லை. காரணம் அப்போது நான் சிறுவர் மலரில் ஆரம்பித்து, இளைஞர் மன்றம்வரை வளர்ந்து கொண்டிருந்த இளம்கலைஞன். மூத்த கலைஞர்கள் எப்போது வருவார்கள் எப்போது ஒலிப்பதிவு நடக்கும் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் எஸ்.எம்.ஏ. ஜப்பார் நடிக்கிறார் என்றால் வானொலி அருகே கூடும் லட்சக்கணக்கான நேயர்களில் நானும் ஒருவனாக இருந்த அந்தக் காலங்கள். தமிழை சரியாக உச்சரிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு கடித்துக் குதறாமால் தெளிவான குரலில் இனிமையுடன் தமிழை ரசித்து அழகுற உச்சரிக்கும் பாங்கை எனக்குள்
9

Page 7
பதியம்போட்ட பசுமையான காலங்கள். அந்த நாளைய தமிழகத்திரைப்படக் கலைஞர்களின் பாதிப்புச் சிறிதும் இல்லாமல், தனித்துவமாக விளங்கிய அவரது குரல் நயமும், நடிப்பாற்றலும், வசனங்களை உச்சரிக்கும் பக்குவமும், வேறொவருக்கும் கிடைக்காத ஒரு மரியாதை கலந்த அபிமானத்தை நேயர்கள் மத்தியில் உருவாக்கியிருந்தன. அதுமட்டுமல்லாமல் பல்துறை அறிவையும் அவர் வளர்த்துக் கொண்டிருந்ததால் அன்றைய புத்திஜீவிகள் பலரது அன்புக்குரிய வானொலிக் கலைஞராகவும் அவர் விளங்கினானர்.
காலத்தின் விதி, பிறந்த மண்ணுக்கு அழைத்தது. ஒரு இடைவெளியின் பின்னர் அகில இந்திய வானொலியின் நாடகங்களில் அவர் குரல் ஒலிக்க ஆரம்பித்தது. அதுமட்டுமல்ல, அவரது படைப்பாற்றல் திறனை வெளிக்கொணரும் வகையில் அவரே எழுதிய நாடகங்களும் வானலைகளில் தவழ்ந்து வந்து எமது செவிகளை எட்டியபோது, அடடே நமது ஜப்பார் அங்கும் கொடிகட்டிப்பறக்கிறாரே. என்று நாம் பெருமைப்பட்டோம்.
பின்னர் புதிய வரலாறொன்று படைக்கப்பட்டது. இன்று கோடிக்கணக்கில் பணம்புரளும் விளையாட்டுத்துறை கிரிக்கெட் அந்த கிரிக்கெட் விளையாட்டுக்கான நேர்முக வர்ணனையை தமிழில் வழங்கமுடியுமா? என்ற கேள்விக்கு காத்திரமான விடையாக விளங்கிய பிதாமகர்களுள் நமது ஜப்பார் அவர்களுக்கே நமது முதல் மரியாதை. காரணம், கண்முன்னே காண்பவற்றை வெறும் வார்த்தை அலங்காரங்களால் சொல்லடுக்குகளால் வர்ணணையாக்காமல் விளையாட்டுத்துறையின் வரலாற்றுக்குறிப்புகளோடு மட்டுமன்றி, இலக்கியச் சுவையோடும் கலந்து வழங்கமுடியும் என நிரூபித்து மற்றமொழிகளுக்கு இல்லாத தனிச்சிறப்பைத் தமிழ் மொழிக்கு உருவாக்கினார்.
நம்மைச்சுற்றி நடப்பவற்றை பரந்த பார்வையுடன், கூர்ந்து அவதானித்து நயமுடன், சொல்வதைச் சுவைபடச்சொல்லும் ஆற்றல் அவருக்குள் இயல்பாகவே அமைந்திருந்தது. அந்தத் திறமையை பட்டை தீட்டிக்கொள்ள, பெருமைக்குரிய பிபிசி வானொலியின் பயிற்சிப்பட்டறை அவருக்கு களமாய் அமைந்தது. சொந்தமாய் நடத்தி
10

வந்த கைத்தொழில் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பும் வேலைப் பளுவும் இவரது கலைஉணர்வையும் படைப்பாற்றல் திறனையும் சிலகாலம் சிறைப்படுத்தி வைத்திருந்தாலும், தம் பிள்ளைகள் சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்துவிட்டார்கள் என்ற நிறைவை அடைந்ததும் ஒரு சுதந்திரப்பறவையாகி மீண்டும் ஒரு மார்க் கண்டேயராக புத்துணர்வுடன் சென்னையை வசிப்பிடமாக்கி ஊடகத்துறையில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். களைக்காமல் சலிக்காமல் சிந்தனையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அசைந்த விரல்களில் விளைந்த எழுத்துகள் இலங்கைப் பத்திரிகை களிலும், தமிழகப்பத்திரிகைகளிலும் தடம்பதிக்க ஆரம்பித்தன. அதன்மூலம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நமது அப்துல்ஜபார் அவர்களின் ஆற்றலையும் பெருமைகளையும் மீட்டி அறிய வாய்ப்புக் கிடைத்தது.
தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்திடத் தமிழக் கவிஞன் கண்ட கனவை இன்று நனவாக்கிவரும் ஈழத்துத் தமிழர்கள் வாழும் மண்ணலெல்லாம் நம் அப்துல்ஜப்பாரின் குரல் ஒலிக்க ஆரம்பித்தது. கனடிய மண்ணில்-கீதவாணி வானொலி, ஐரோப்பிய மண்ணில் ஐபிஸி. வானொலி, அவுஸ்திரேலியாவில் இன்பத்தமிழ் வானொலி என நம்மவர் நடத்தும் வானொலிகள் மூலம் அரசியல் கண்ணோட்டம் மற்றும் கலை இலக்கியத்தகவல்கள் அனைத்தையும் இவர் வழங்கிய பாங்கு இலட்சக்கணக்கில் நேயர்கள் அபிமானத்தைப் பெற்றத்தந்தது மட்டுமல்ல விடுதலைப்போராட்டத் தலைமைத்துவத்தையும் இவரது தமிழ், ஈர்த்து அன்பையும் அபிமானத்தையும் பெருக வைத்ததைப் பத்திரிகைகள் முன்பக்க முக்கிய செய்தியாய் வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளன.
ஒலிஊடகத்தின் மூலம் மட்டுமே மக்கள் அறிந்திருந்த அப்துல்ஜப்பார் அவர்களை காட்சிவடிவமாகக் காணும் வாய்ப்புக்குக் களம் அமைத்தது லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சி இன்று அவரது அரசியல்கண்ணோட்டம், மற்றும் நேர்காணல் நிகழ்ச்சிகளுக்கு ஐரோப்பா மட்டுமல்ல மத்தியகிழக்கு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் என்றால், இணைய
11

Page 8
தளத்தில் வலம் வரும் இணைய வானொலி வேர்ல்ட் தமிழ் நியூஸ் டாட் கொம் லட்சோப லட்ச ரசிகர்களை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. கலைமாமணி விகேடியாலன் அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட அந்த இணைய வானொலியின் அமைப்பாளரும் இவரே.
தமிழ் வளர்க்கும் பணியில் இவரது தலைமுறையும் சாதனைகள் படைக்கப்போகிறது என்பதற்கு ஒர் உதாரணம் இவரது அன்புப் புதல்வர் ஆசிப் மீரான் அவர்கள், துபாய் மண்ணில் வேலைப்பளுவுக்கு மத்தியிலும் அமீரக மண்ணில் வாழும் தமிழ் உள்ளங்களுக்காக நடத்தி வரும் தமிழ் வானொலி நிகழ்ச்சியாகும்.
கலைஇலக்கியமா? சமகால அரசியல் நிகழ்வுகள் மற்றும் கடந்த கால அரசியல் வரலாற்று விமர்சனமா? விளையாட்டுத்துறைத் தகவல்களா? சமூகப்பார்வையுடன் நமது கவனத்தை ஈர்க்கும் முன்னுரைகள் முடிவுரைகளா? அப்துல் ஜப்பார் அவர்களின் எழுத்து நடையும் சொல் நடையும் வேறொவருக்கும் இல்லாத தனிச்சிறப்பு வாய்ந்தது. லண்டன் ஐபிசி வானொலியில் இவர் பயிற்றுவித்த ஒலிபரப்பாளர்களும், இணையவானொலியில் இவர் உருவாக்கிய வாரிசுகளும் நிச்சயம் நல்லதொரு ஒலி, ஒளிபரப்பு பாரம்பரியத்தின் சின்னங்களாய் விளங்குவார்கள் என்பது நிச்சயம்.
இன்றளவும் உள்ளத்தில் இளைஞராய் விளங்கும் அப்துல் ஜப்பார் அவர்களின் ஊடகத்துறைப் பங்களிப்புகளைத் தொட்டுக் காட்டும் இந்நூல், நான் முன்பு குறிப்பிட்டதைப் போல் ஒரு துளியே. அவரோ ஒரு கடல், அந்தக் கடலுக்குள் இருக்கும் இன்னும் ஏராளமான அரியமுத்துக்களை வெளிக்கொணர எல்லோருக்கம் பொதுவான இறைவன் இன்னும் பல களங்களை அமைத்துத்தர வேண்டுகிறேன்.
இன்ஷா அல்லாஹ்.
2/2, எல்விட்டிகல அடுக்ககம் பி.எச். அப்துல் ஹமீத் கனத்த, கொழும்பு - 8.
12

காற்று வெளியினிலே
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
இலங்கை ஒலிபரப்பு மற்றும் நாடக வரலாற்றில் தொகுபடம் அல்ல, என்னுடைய சுயதம்பட்டமும் அல்ல. என் நினைவில் தோன்றிய சம்பவங்களின் கோர்வை அவ் வளவே.
முஸ்லீம் சமய, பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் ஒரு முறை என்னிடம், "ஒவ்வொருவரையும் அவரவர் கலைத் துறையில் அவரவர்க்கு நேர்ந்த அனுபவங்களை குறிப் பெடுத்து எழுதும்படி கேட்கப் போகிறேன். நாளை ஒரு சமயம் அந்தந்த துறைகளின் வளர்ச்சி - வீழ்ச்சிகளையும் அதில் ஒவ்வொருவருக்கும் உள்ள பங்களிப்புகளையும் மதிப் பீடு செய்ய இது பெரிதும் உதவும், பிஸ்மில்லா, நீ முதலில் துவங்கு” என்றார். பிஸ்மில்லா!
கொழும்பில் பிரபல பாடசாலைகளில் பாட நேரம் போக மீதி நேரங்களில் விளையாட்டுக்கும் அதிலும்
13

Page 9
அப்துல் ஜப்பார் குறிப்பாக கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. ஏனைய கல்வி ஸ்தாபனங்களில் வசதியின்மை காரணமாக காலையில் சிலருக்கும், மதியத்துக்கு மேல் சிலருக்கும் வகுப்புகள் நடத்த வேண்டிய கட்டாய நிலை, நடனம், நாடகம், கவிதை, ஓவியம், சங்கீதம் என்பன போன்ற உபரி பாட விஷயங்களுக்கு நேரமில்லை, இதை நினைத்துப் பார்ப்பாரும் யாரும் இல்லை. ஆகவே படிப்பைத் தவிர வேறு துறைகளில் தங்கள் திறமைகளைக் காட்டும் வாய்ப்பு மாணவர்களுக்கு இல்லாத ஒரு தேக்க விலை.
இந்த நிலையில் தான் ‘கிராண்ட் பாசில் ஜபாரின் தலைமையில். (நானல்ல) செந்தாமரை சிறுவர் சங்கமும், கொட்டாஞ்சேனை கிரீன்ரோடில் தனலக்ஷிமி சின்னதுரை தலைமையில் கலாநிதி மாணவர் மன்றமும் வடிகாலாய் உருவெடுத்தன. ரேடியோ மாமா சரவணமுத்து அவர்களின் ஆளுகையில் இருந்த “வானொலி சிறுவர் மலர்” நிகழ்ச்சியும் இத்தகைய முயற்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தன. இதன் பலனாக கொழும்பு நகரின் முக்கு மூலைகளில் எல்லாம் சிறுவர் மன்றங்களும், கழகங்களும், சங்கங்களும் புற்றீசல்கள் போல் கிளம்பியதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால் ஒரு சோகம்.
நண்டு, சிப்பி, வேய்கதலி நாசமுறுங்காலத்தில் கருக் கொள்வதைப் போல் "ஆஹா, ஒஹோ” என்று நடக்கும் இவை ஒரு நாள் ஆண்டுவிழாவோ அல்லது ஏதாவது ஒரு விழா நடத்தத் தீர்மானிக்கும் அது அநேகமாக மேட்டுத் தெரு விவேகானந்தா மண்டபத்தில்தான் நடக்கும். அதுவே சம்பந்தப்பட்ட மன்றத்தின் மூடு விழாவாகவும் அமைந்து விடும். அதனால் பரவாயில்லை. இன்னொன்று உடனே முளைக்கும், ஆக, “வளர்கையில் பிளர்வதும் பிளர்கையில் வளர்வதும்’ என்கிற சொல்லுக்கு இவை இலக்கணமாயின.
14

காற்று வெளியினிலே.
இதனால் மட்டுமல்ல, வேறு காரணத்தினாலும் நான் எந்த மன்றத்திலும் உறுப்பினர் இல்லை. பள்ளிக்கூட நேரங்கள் தவிர வேறு எங்கும் எந்தக் காரணத்துக்காகவும் எனக்கு வெளியில் போக அனுமதியில்லை. "யாவாரி மகன் யாவாரியாக இருக்க வேணும் சோவாரியாக இருக்கக் கூடாது" என்கிற தத்துவத்தின் கைதி நான். படங்கள் பார்க்கக் கூட எனக்கு அனுமதி கிடையாது. ஆனால் பார்க் காத படங்களின் பாடல்களும், வசனங்களும் எனக்குத் தலைகீழ்ப்பாடம்.
இந்த நிலையில் சிறுவர் மலரோடு, நெருங்கிய தொடர் புடைய கு. ராமசந்திரன் - நஸ்ரேன், முத்து ராஜா, நிக்கலஸ் - செபாஸ்டியன், யூஸ்டஸ் லியோன், எமில்டா ஃப்ளோ ரிடா ராயன் சகோதரிகள், நடேஸ்வரி, சுகிர்த தேவி - செல்வநாயகம், செலின் அருந்ததிப்பிள்ளை (உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜுக்கு உறவினர் என்று கேள்வி) ஆகிய இளம் குருத்துக்கள் ‘மானா’வையும் சேர்த்துக் கொண்டு நிறுவிய சிறுவர் மன்றம் - பாரதி கழகம். நான் அறியாமலேயே நானும் அதில் ஒரு உறுப்பினர். இன்னுமொரு வேடிக்கை இவர்கள் நடத்திய "சிறுவர் கலை விழாவில்” தான் முதன் முதலாக நான் மேடையேறினேன். பேசவோ, பாடவோ நடிக்கவோ அல்ல ஆனால் யோகாசன உடற்பயிற்சிகளைச் செய்து காண்பிப்பதற்காக,
இன்னொரு நாள் ஆர்மர் தெரு சலவைத் தொழி லாளர் குடியிருப்புக்குப் பக்கத்திலிருக்கும் பேரடைஸ் பார்க் என்னும் “பிட்டணியில்" வெகு மும்முரமாகக் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். இலங்கை வானொலி வேன் வந்து நிற்கிறது. "நீ எங்கிருப்பாய் என்று எனக் கல்லவா தெரியும்” என்கிற தோரணையில் மக்கீன் வந்து உடன் வரும்படி அழைக்கிறார். நான் இன்னும் குளிக்க வில்லை. ஆனால் வியர்வையில் குளித்திருந்தேன். சொட்டச்
5

Page 10
அப்துல் ஜப்பார்
சொட்ட நனைந்திருந்த "ஜேர்சி” - சர்ட் கூட இல்லை. கால் பந்தாட்ட "சோர்ட்ஸ் ஸ்வைக் வைத்த பூட்ஸ் "இந்த கோலத்திலா?" நான் கேள்வியை முடிக்கும் முன்பு சரசர வென்று கையைப் பிடித்து இழுத்து வேனுக்குள் தள்ளிக் கதவை சாத்துகிறார். வேனில் உள்ள பிள்ளைகள் என்னை அதிசயமாகப் பார்க்கிறார்கள். பட்டும். பீதாம்பரமும் தரித்து பளபளவென்று வரும் அவர்கள் என் வியர்வையிலிருந்து தப்புவதற்காக நாசூக்காக ஒதுங்குகிறார்கள். இலங்கை வானொலியில் சென்று இறங்கும் போது எதிரே வருபவர் இஸ்லாமிய நிகழ்ச்சிகளின் பணிப்பாளராக இருந்து ஒய்வு பெற்ற அல்ஹாஜ் வி.ஏ. கபூர் அவர்கள், அப்போது அவர் தமிழ் நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளர். அதற்கு முன்பு பள்ளி யில் எனக்கு ஆசிரியர் "தம்பி நல்லாக வரவேண்டும்” என்றார் என் கோலத்தைப் பார்த்து அதிர்ந்து அப்படிச் சொன்னாரா அல்லது நான் நன்றாக வர வேண்டும் என்று ஆசீர்வதித்தாரா என்பது அன்று எனக்கு விளங்கவில்லை. ஆனால் இன்று அவர் வழங்கியது ஆசி தான் என்றும் அது பலித்தது என்றும் பெருமிதம் கொள்கிறேன். அந்தப் பெரிய வரும் நானும், முஸ்லீம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல் கள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களின் ஏற்பாட்டில் நடந்து வரும் "வாழ்வோரை வாழ்த்தும்" திட்டத்தின் கீழ், ஒரே நாளில், ஒரே மேடையில் 'பத்ரூர் மில்லத்’ என்கிற ஒரு விருதை அன்றைய பிரதமர் மாண்பு மிகு விஜேதுங்க அவர்களது கரத்தால் பெற்றோம் என்பதும், அதே தினம் அதே மேடையில் அதே விருது சகோதரர் பி.எச். அப்துல் ஹமீதுக்கும் வழங்கப்பட்டது என்பதும் ஒரு அபூர்வ அனுபவம் நிற்க,
அன்று வானொலி நிலையத்தில் என் கோலம் பற்றியோ என் நிலை பற்றியோ கவலைப்படாது மிக இயல்பாக இருந்தேன். யாராவது அபத்தமாகப் பேசினால்,
16

காற்று வெளியினிலே.
அல்லது நிகழ்ச்சியில் அவ்வாறு ஏதும் தென்பட்டால் ஏதாவது ஒரு "கொமண்ட் அல்லது கிண்டல்’ என்னிட மிருந்து வெளிப்படும். சூழ்நிலை கலகலப்பாகும் கைகட்டி வாய் பொத்தி பொம்மைகள் போல் வந்து போகும் சிறுவர் சிறுமியருக்கு மத்தியில் நான் சற்று வித்தியாசமாக இருந்தேன். இதில் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால் 'ரேடியோ மாமா' அவர்கள் என்னை ஒரு 'நியூ சன்ஸ்’ என்று கருதாமல் என்னை என் போக்கிலேயே விட்டது மட்டுமல்லாமல் உற்சாகமும் தந்து ஊக்குவித்ததுதான். மக்கீன் சில சமயங்களில் தன்னை சட்டாம் பிள்ளையாக பாவித்துக் கொண்டு என்னை அடக்க முயலும் போது எல்லாம் எனக்குத் துணை நின்றது இலங்கை ஒலிப்பரப் பின் பிதாமகர் திரு. சோ. சிவபாதசுந்தரம் அவர்களின் துணைவியார்; அன்றைய "ரேடியேர் மாமி” திருமதி ஞானதீபம் சிவபாத சுந்தரம் அவர்கள். "தம்பி, நீர் படுசுட்டி, படு சமர்த்து. ஆனால் அதை சரியான வழிகளில் உபயோகித்து உம்முடைய கெட்டித்தனத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று உபதேசிப்பார். இவரது பேச்சில் யாழ் சொல்வழக்கை விட பிராமண தமிழக உச்சரிப்புகள் சற்று தூக்கலாக இருக்கும். இன்று லண்டன் குரோய்டன் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளிக் கூடம் நடத்தி வருகிறார். ரேடியோ மாமா இலங்கை நாடாளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார்.
முதன் முதலில் எனக்கொரு கடிதம் வாசிக்கத் தந்தார்கள். வெறும் கிளிப்பிள்ளை பாடமாக அல்லாமல், சற்று பாவத்தோடு என் சுபாவரீதியில் சற்று குறும்புத் தனமான இடைச் செறுகல்களோடு வாசிக்கப்பட்ட அந்தக் கடிதம் "சிறுவர் மலரி'ல் வாசிக்கப்பட்ட மிகக் கல கலப்பான கடிதம். "அடுத்த கடிதத்தையும் மருமகன் ஜபாரே வாசிப்பார்" என்று ரேடியோ மாமா அறிவித்தார்.
கர-2 17

Page 11
அப்துல் ஜப்பார்
மாமா அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிக அழகாக, மிக இனிமையாக, மிக நேர்த்தியாக இருக்கும். ஆனால் "ழ"வை மிகச் சிறப்பாக உச்சரிக்கும் எண்ணத்தில் சில சமயங்களில் கொழும்பை “கொயும்பு" என்பார். நான் ரேடியோ மாமாவையும் விட்டிேனில்லை. "அந்தக் கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது மருமகனே?” என்று அவர் கேட்ட போது, நான் குறும்பாகச் சிரித்துக் கொண்டே "கொழும்பு விலிருந்து வந்திருக்கிறது மாமா என்றேன். மாமா என் குறும்பை ரசித்து ஒரு அவுட்டுச் சிரிப்பை வெளிப் படுத்த மாமியும் மற்றவர்களும் அதனுடன் சேர "சிறுவர் மலர்” களை கட்டியது. நான் ஏறக்குறைய நிரந்தரமாக பங்கெ டுப்பவர்களுள் ஒருவனானேன். நான் ஒன்றும் பெரிய "கில்லாடி இல்லை. எனினும் தனித்து நின்றேன் என்று சொன்னால் என் திறமையை விட அன்றைய ஒலி பரப்பில் - ஒலிபரப்பாளர்களின் தரம் உயர்வானதாக இருக்கவில்லை என்பதுதான் உண்மை.
இன்று உலககெங்கும் உள்ள தமிழ் ஒலி பரப்பாளர் களுக்கு ஒரு போட்டி வைத்தால் இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள் - குறிப்பாக சகோதரர் பி.எச். அப்துல் ஹமீது - மற்றவர்களை விட காததுாரம் முன்னால் நிற்பார்கள். அதே சமயம் அவர்களில் முக்கால் வாசிப்பேர் பி.எச்.சின் குரலையும், பாணியையும் உச்சரிப்பையும் பின்பற்றுகிறார்கள் என்பது பி.எச்சுக்குப் பெருமையே தவிர இலங்கை ஒலிபரப்புத் துறைக்கு ஒரு சோகமான பின்னடைவு.
ஆனால் அதற்கு முந்தைய நிலைவுேறு. பொரளை யில் "கொழும்பு ரேடியோ" (பிறகுதான் இலங்கை வானொலி)வில் முதன்முதலில் பிள்ளையார் சுழி போட்ட சோ. சிவபாதசுந்தரம் அவர்களும் அவருக்குத் துணை நின்ற வி.என். பாலசுப்ரமணியன் அவர்களும், குஞ்சித பாதம் அவர்களும் தங்கள் பணிகளை மிகக் கச்சிதமாகத்
18

காற்று வெளியினிலே.
தான் துவங்கினார்கள். ஆனால் தொடர்ந்தவர்கள் சோடை போய்விட்டார்கள். ஏனோ, தானோ என்கிற ஒரு தேக்க நிலை ஒரு கபூரும், ஒரு வி. சுந்தரலிங்கமும், ஒரு புண்ணிய மூர்த்தியும் வரும்வரை நீடித்தது. எஸ். நடராஜா, அருள் தியாகராஜா, செந்தில் மணி மயில்வாகனம் என்கிற பெர்கள் ஞாபகத்தில் வராமலில்லை. இவர்கள் மூவரும் தங்கள் கடமையைச் செய்தார்கள். அவ்வளவே - இவர் களே "ஜஸ்ட் பாஸ்" என்றால் வர்த்தக ஒலிப்பரப்பில் கொடிக்கட்டிப் பறந்த திரு. மயில்வாகனம் அவர்கள் “சைபர்’ மார்குக் கூட அருகதை உள்ளவரா என்பது சந்தேகம் - காரணம் -
உலக அளவில் ஒலிப்பரப்புத் துறை அந்த நேரத்தில் அத்தனை உன்னத்தில் இருந்தது. உலக அளவை விடுங்கள், இலங்கையிலேயே ஆங்கிலத்தில் கிறிஸ்க்ரீட், டிம் ஹோர் ஷிங்டன், லிவி விஜேமான்னே, திருமதி சுவான், பெர்ட்டி விஜய சிங்க, ஹிந்தி வர்த்தக ஒலிப்பரப்பில் பால்ராஜ் இவர்தான் நர்கீஸின் கணவரும் ஹிந்தி சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத்தின் தந்தையும் பிரபல நடிகரும் தயாரிப்பாள ருமான சுனில் தத்) விஜய் கிஷோர் துபே, அமீர் சயானி ஆகியோரும், சிங்களத்தில் கருணா ரத்ன அபய சேகர, புரஸ்பர் பெர்னாண்டோ ஆகியோரும் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தனர்.
அதிலும் புரஸ்பர் பெர்னாந்து சரித்திரமே படைத்தவர். இவரது சிங்கள உச்சரிப்பு ஆங்கிலத்தைப் போல் இருப்பதாக ஆட்சேபித்து அன்றைய ஒலிப்பரப்புத் துறை அமைச்சர் கடுகன்னாவ சி.ஏ.எஸ் மரைக்கார் அவர்கள் அவரை தற்காலிக வேலை நீக்கம் செய்ய, அப்படியானால் விளம்பரங்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாக விளம்பரதாரர்கள் அறிவிக்க அமைச்சர் எதிர்காற்றில் எச்சில் துப்பிய கதிக்கு ஆளானார் ஒரு
19

Page 12
அப்துல் ஜப்பார்
அரசியல்வாதிக்குக் கிடைத்த அடியும் ஒரு ஒலிபரப்புக் கலைஞனுக்கு அவனுடைய ஒப்பற்ற திறமைக்கு கிடைத்த வெற்றியும் இலங்கை வானொலியின் சரித்திரத்தில் ஒரு பொன்னேடு.
இந்த கால கட்டத்தில் இந்திய வானொலி செய்தி வாசிப்பு மிகத் துல்லியமாகப் பளிச்சிட்டது. இப்போது சரோஜ் நாராயணசாமி அடிக்க வருகிறார் போல் செய்தி வாசிக்கிறார், ஆனால் அன்று சாம்பசிவத்தின் குரல் கணிரென்று ஒலிக்கும் என்றால் பூர்ணம் விசுவநாதன் செய்தி வாசிப்பை ஒரு கவிதையாகவே ஆக்கிக் காட்டிய வர். இந்திய வானொலியின் ஆசிய சேவையில் அந்த அதிகாலை வேளையில் திருமதி. தர்மாம்பாளின் குரல் எவ்வளவு இதமாக ஒலிக்கும் தெரியுமா? சென்னையில் சித்ரா கிருஷ்ணசாமி சிறுகதை வாசிப்பை ஒரு அருங்கலை யாகவே மாற்றிக் காட்டியவர்.
இந்தப் பின்னணியில்தான் சானாவின் "நாடக அரங்கம் சிறுவர் மலர்" ஆகிய ஒரு சில ஒளிக்கீற்றுக்களைத் தவிர இலங்கை வானொலி ஒரு இருண்ட வானம் போலவே இருந்தது. இத்தனைக்கும் அதன் சுக்கானைக் கையில் பிடித்திருந்தவர் கே.எஸ். நடராஜா என்கிற பன்முகப் புலமைகொண்ட திறமைசாலி. இவர்தான் தன் சகாக்களுக்கு குறிப்பாக சானாவுக்கும் "ரேடியோ மாமா” வுக்கும் அடிக்கடி சந்தர்ப்பம் கொடுக்கப் படுகிறார்கள் என்ற முறையீடுகளைப் பற்றி கவலையே படாதீர்கள். திறமைசாலிகளை எவ்வளவு புயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்துங்கள். என்கிற ஓப்பன் லைசன் சை" வழங்கியவர். அதன் மூலம் இலங்கை வானொலி சரியான திக்கில் கால் எடுத்து வைக்க வழி வகுத்தவர். அதாவது உருப்படுவதற்கு உருப்படியான வழியைக் கண்டு பிடித்தவர்.
2s)

காற்று வெளியினிலே.
வித்தியாசமாகச் செயல்பட்டால் விரைவில் ஒரு சிறப்பான இடத்தைப் பெறலாம் என்கிற எண்ணம என்னை ஒரு உந்து சக்தியாக இருந்து இயக்கியது. வகுப்பில் பாடங்களைக் கூட ஒரு தனி "ஸ்டைலில்" வாசிக்க ஆரம்பித்தேன். 'தினகரன்’ ஆசிரியர் குழுவில் ஒருவரான ‘சத்திய எழுத்தாளர்’ விருது பெற்ற எம்.எச்.எம். பலீல் அவர்கள் அன்று எனக்கு வகுப்பாசிரியர். இன்றைய அமைச்சர் அஸ்வர் அவர்களை பாடங்களை வாசிக்கச் சொல்லி உணர்ச்சி பூர்வமாக அபிநய பாவங்களோடு விளக்கங்கள் தருவார். அந்த உணர்ச்சிப் பிரவாகத்துக் கேற்ப பாட வாசிப்பை நான் செய்ய இயலும் என்பது என் நம்பிக்கை. ஆனால், பலில் மாஸ்டர் வகுப்பில் அஸ்வர் தான் ஹிரோ. ஆக என் சந்தர்ப்பம் வேறோர் ரூபத்தில் வந்தது.
ஆங்கிலப் பாடம் எடுக்கும் ஜிஃப்ரி முஹ்சின் அவர்கள் பிரமாதமாகச் செயல்படுவார். அதுவும் கவிதை களுக்கு விளக்கம் சொல்வதில் மன்னன். அவர் வகுப்பில் மனப்பாடம் செய்த கவிதைகளை ஒப்புவிக்கும் நாள் வந்தது. என் முறை வந்தபோது ஹைவேமேன் என்னும் கவிதை "நிலவின் ஒளியில், நீண்ட இரவில் கண்மணிப் பாவாய் காத்திரு எனக்காய். காலன் தடுப்பினும் கட்டாயம் வருவேன் கண்மணிப்பாவாய் காத்திரு எனக்காய்" என்னும் பொருள்படும் கவிதை, சற்றுக் குரலை சரி செய்து கொண்டேன் மூச்சை கொஞ்சம் நீளமாக இழுத்து விட்டுக் கொண்டேன். கணிரென்று ஆரம்பித்தேன். கடைசி இரண்டு வரிகளில் அவரும் சேர்ந்து கொண்டார். கை தட்டிப் பாராட்டினார்.
மறுநாள் பலில் மாஸ்டர் வகுப்பில் பாடம் வாசிக்கும் பதவி அஸ்வரிடமிருந்து எனக்கு வந்தது. வகுப்பறை நாடக அரங்காகியது. பாடங்கள் நாடகங்
21

Page 13
அப்துல் ஜப்பார் களாயின. பலீல் மாஸ்டர் மேலும் சோபிக்க ஆரம்பித்தார். சத்திய எழுத்தாளர் என்பதை விட நல்லாசிரியர் என்கிற விருது அவருக்கு மிகப் பொருந்தும்.
ஒருநாள் தமிழாசிரியர் முகம்மது மாஸ்டர் அவர்கள் - அமைச்சர் அஸ்வர் அவர்களின் “வாழ்வோரை வாழ்த்தும்" திட்டம் ஏற்படவே காரணமான மூலபுருஷர், தமிழ் சிங்கள இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் தனக்கென ஒரு தனி முத்திரைப் பதித்தவர், அது வேறு யாராலும் நிரப்பப் பட முடியாத வெற்றிடமாகவே இருக்குமளவு வெற்றிக் கரமாகச் செயல்பட்ட முதுபெரும் கலைஞர். என்னிடம் சொன்னார். "டேய் சப்ப, சிறுவர் மலரில் பெரிய போடு போடுகிறாயாமே, இஸ்லாமிய நிகழ்ச்சிக்கு வா, அங்கே பார்க்கலாம். உன் கெட்டித் தனத்தை” என்றார். அன்று மாலையே, அன்று ஸாகிராக் கல்லூரி ஆசிரியரும், பிறகு கொழும்பு நூலகத்தின் பொறுப்பாளரும், தற்போது இஸ்லாமிய மையத்தின் முக்கியஸ்தருமான எஸ்.எம். கமால்தீன் அவர்கள் முன்கொண்டு போய் நிறுத்தினார். கர்பலா பற்றிய நிகழ்ச்சி பாடல் - உரைநடை - பாடல் என்று இருந்தது. முற்றாகச் செய்து முடித்த பின் "குட் வெரிகுட்” என்றார் அவர். ஆனால், முகம்மது மாஸ்டரிடம், "உரை நடைக்கு ஜபார் இருக்கட்டும் பாடல்களுக்கு முகம்மது அலியை பயன்படுத்துங்கள்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். ‘மவ்சிக் நூரி’ பட்டம் பெற்ற நூர்தீனின் சகோதரர் இவர் நிகழ்ச்சி நன்றாக அமைந்தது. முகம்மதலியும் நன்றாகப் பாடினார். ஆனால் அந்தத் தமிழ் உச்சரிப்பு. "டேய் சப்ப என்னடா செய்யறது 'ஒடிசன்’ பாசானவங்களைத் தான்பாட விடுவாங்களாம். நீயும் எழுதி போடேண்டா" என்று முகம்மது மாஸ்டர் உபதேசித்தார். ஆனால் நான் கடைசி வரை இஸ்லாமிய நிகழ்ச்சியில் பாடுவதற்கு முயலவே இல்லை. காரணம்,
22

காற்று வெளியினிலே.
அன்றைய இஸ்லாமியப்பாடல் நிகழ்ச்சிப்பற்றியும் பெரும் பாலான இஸ்லாமியப் பாடகர்கள் பற்றியும் மிக மோசமான அபிப்பிராயம் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். அந்தக் கூட்டத்தில் ஒருவனாக இல்லாமல் இருப்பது மேல், என்கிற எண்ணம் என்னுள் சற்று அழுத்தமாகவே பதிந்திருந்தது.
இதற்கு நேர் மாறாக, சிறுவர் மலரில் இசைப்பகுதி மிகச் சிறப்பாக இருந்தது. கர்நாடக சங்கீதத்தில் இளம் தளிர்கள் பலர் தங்கள் முதல் அடியை எடுத்து வைத்தது சிறுவர் மலரில் தான், இன்று உலகெங்கும் மேற்கத்திய, கீழைத்தேய சங்கீத வடிவங்களில் புதுமையும், புரட்சியும் செய்து வரும் உலகப்புகழ் பெற்ற எல்.வைத்தியநாதன், எல்.சுப்பிரமணியம் சகோதரர்களின் ஆரம்பம் சிறுவர் மலரில் என்றால் ஆச்சரியப்படாதீர்கள்.
சமீபத்தில் நான் இலங்கை வந்திருந்த போது திருமதி ராஜேஸ்வரி சண்முகத்தின் மக்கள் நடத்திய ஒரு இசை நிகழ்ச்சியில், சினிமாவின் "அசல்களை" விட இந்த "நகல்” களின் திறமை என்னை பிரமிக்க வைத்தது. ஆனால் ஆச்சரியப்படவைக்கவில்லை. ஏனெனில் சினிமாப் பாடல் களை அதே அழகுடனும், மெருகுடனும் பாடும் கலையை ஐம்பதுகளிலேயே சிறுவர் மலரில் சில இளம் கலைஞர்கள் செய்து காட்டி விட்டனர்.
*ரோசஸ் ரிமைண்ட் மி ஒவ் ரியோ’ ஜெமினியின் ‘ராஜி என் கண்மணியில்’ ‘மல்லிகைப்பூ ஜாதி ரோஜா வாகவும் ஷேர்லி மக்ளைனின் “கே சரா சரா’ ‘கன்னிப் பெண்ணான போதிலே’ என்கிற பாடல்களாகவும், தமிழ் வடிவம் எடுத்தன. ராணி பெர்னாண்டோ இவற்றை அற்புதமாகப் பாடுவார். இவரது கணவர் திரு. ராயன் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சினிமா
23

Page 14
அப்துல் ஜப்பார்
ஆரம்பக்கால செயலர். ராணியும் நானும் "மிஸ்ஸியம்மா’ என்கிற படத்தில் வரும் ‘வாராயோ வெண்ணிலாவே' பாடலும், இவரது சகோதரி இந்திராவுடன் நான் பாடிய ’ப்ருந்தாவனமும் நந்தகுமரனும்’ என்னும் பாடலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. மிக பிரசித்திப் பெற்ற இந்தப் பாடல்களை நேயர் விருப்பத்தில் ஒலிபரப்பும் படி எழுதிக் கேட்டவர்களை விட சிறுவர் மலரில் நாங்கள் பாட வேண்டும் என்று எழுதிக் கேட்ட நேயர்களின் எண்ணிக்கை அதிகம்.
என்னுடன் அடிக்கடி சிறுவர் மலரில் பங்குக் கொள்ளும் கெளரி நடராஜா எனும் சகோதரி ஏ.எம்.ராஜா வின் எந்தப் புதிய பாடல் வந்தாலும் என்னைச் சந்திக்கும் வரை காத்திருந்து அது தெரியுமா என்று கேட்டு பாடச் சொல்வார். அவருக்காக வேனும் ஏ.எம் ராஜாவின் பாடலை நான் உடனுக்குடன் பாடமாக்குவது வழக்க மாயிற்று. இதில் இன்னொரு அனுகூலம். அது ஒரு காதல் பாடலாக இல்லாமலிருந்ததால் ரேடியோ மாமா உடன் நிகழ்ச்சியில் இடம் பெறச் செய்துவிடுவார். இந்த நிலையில் நான் ராணி, இந்திரா, முத்துநாயகம் என்னும் ஒரு சகோதரர் ஆகியோரை இசையுடன் பாடச் செய்ய வேண்டும் என்கிற ஒரு (விபரீத ஆசை மாமாவுக்கு ஏற்பட்டது. ஏற்பாடும் செய்தார்.
நிலைய கடம் வித்துவான் குருவாயூர் அச்சுதன் உற்சாகமாக ஒத்துழைக்க முன் வந்தார். ஆனால் வயலின் வித்துவான் குமாரசுவாமி என்பவர் பெரிய வித்வானான (?) தான் இந்தப் பொடிசுகளுக்கு வாசிப்பதா என்கிற தோரணையிலே ஆரம்பம் முதல் நடக்க ஆரம்பித்தார். அச்சுதன் முதுகில் தட்டி உற்சாகம் தந்தார். ஆனால் இவர் முதுகில் குத்தி மூக்கையும் உடைத்து கையில் தந்து விட்டார். அன்று நிகழ்ச்சி முடிந்த பின்பு ராணியும்,
24

காற்று வெளியினிலே.
இந்திராவும் அழுத அழுகை, ஆனால் நான் அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டேன். இருட்டறையில் அடைக்கப்பட்ட இருவருக்கு வெளி உலகைக் காண ஒரு சிறு துவாரம் மட்டும் இருந்தது. ஒருவன் கீழே தெரியும் சாக்கடையைப் பார்த்து "சீச்சி இது என்ன உலகம்?" என்றான், மற்றவன் வானில் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்து "ஆஹா என்ன அற்புத உலகம்" என்றான் ராணி இந்திரா சகோதரிகள் திரு. குமாரசுவாமியை சாக்கடை யாகப் பார்த்தார்கள். ஆனால் நான் அவரை ஒரு நட்சத்திரமாகக் கண்டேன். அதன் பலனாக, என்னுடன் (எந்த நிகழ்ச்சியிலானாலும் சரி) பங்கேற்கும் கலைஞர்களில் ஒருவன் எத்தனை சோப்ளாங்கியானாலும் சரியே அவனை தட்டிக் கொடுத்து அரவணைப்பேனேயல்லாது தட்டிக் கழித்து வேதனைப்படுத்துவதில்லை. அதனை ஒரு வாழ்க்கை நெறியாகவே இன்றும் கடைப்பிடித்து வருகிறேன்.
சாஸ்த்ரீய இசையை முழுமையாக இல்லா விட்டா லும் அதன் அடிப்படைகளையாவது கற்று வைத்திருக்க வேண்டும். என்கிற எண்ணம் என்னுள் மூளைவிட ஆரம்பித்தது. ஆனால் சிறுவர் மலரில் பங்கேற்கவே வீட்டா ரரின் அனுமதி இல்லாமல் வானொலி நிலைய வேனை பழைய சோனைத் தெருவுக்கு வரச் சொல்லாமல் ஹல் ஸ்டார்ப் வீதியிலேயே நிறுத்த சொல்லி ஒளிந்தும் மறைந்தும் ஏறிச் செல்பவன் சங்கீதத்தை எங்கே முறை யாகக் கற்பது?
எனினும் ஒரு ஆறுதல் - பழைய சோனகத் தெருவில் ஒரு வர்த்தகப் பிரமுகர் இருந்தார். பெயர் ஷேக் கப்பா. இது இவரது இயற்பெயரல்ல. எஸ்.ஜி. கிட்டப்பா காலத்து மேடை நாடக நடிகர். கர்நாடக சங்கீதம் அத்துபடி. பிரபல ஹார்மோனியக் கலைஞர் காதர் பாட்ச்சாவையைப் போல் அந்த வாத்தியத்தை அற்புத
i25

Page 15
அப்துல் ஜப்பார்
மாகக் கையாள்வதில் நிபுணர். பழைய சோனகத் தெருவில் முட்டை தூக்கிப் பிழைப்பை நடத்திக் கொண்டிருந்த கலந்தர் மொகைதீன் என்னும் இளைஞர் கர்நாடக சாஸ்த்ரீய சங்கத்தில் முறையான பயிற்சியும், தேர்ச்சியும் உடையவர் என்று கண்டறிந்து, அவருக்காகப் பெருமளவில் விளம்பரம் செய்து நிதி பிரித்து, கொழும்பு நகர சபா, மண்டபத்தில் வெகு ஆடம்பரமாக ஒரு கச்சேரி ஏற்பாடு செய்து பொன்னாடை போர்த்தி பொற்கிளி வழங்கி, அந்த கலைஞன் இனிமேல் மூட்டைத் தூக்கி பிழைப்பு நடத்தக் கூடாது என்று சொல்லி தன் நிறுவனத்திலேயே நல்ல ஊதியத்தில் வேலைக்கு வைத்துக் கொண்ட பெரிய மனிதர். சனிக்கிழமை மாலை வந்துவிட்டால் வியாபார விஷயங்களை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, சம சிந்தனையுடைய நண்பர் குழாத்தையும் கூட்டி வைத்துக் கொண்டு இவர் நிறுவனத்தில் சங்கீத சர்ச்சை களும், கச்சேரிகளும் அமர்க்களப்படும்.
இதில் தவறாது கலந்து கொள்ளும் நபர் ஒருவர் உண்டு. தங்க ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி, பட்டு ஜிப்பா, பட்டு வேட்டி, ஜவ்வாது, குங்குமப் பொட்டு ஆகியவை தரித்து மிகுந்த இளமையுடனும், தனி சினிமாக் களையுடனும், கவர்ச்சியுடனும் பளிச்சென்று இருப்பார். எப்போதும் சிரித்த முகமும் சீதேவியுமாக இருக்கும் அவர் சிங்களப் படங்களின் இசை இயக்குநரும் பிரபல வயலின் மேதையுமாகிய முத்துசாமி அவர்கள், இவர் வருகைக்கு இன்னொரு காரணம் ஷேக்கப்பா அவர்களின் புதல்வரும் தினகரன் ஆசிரியர் குழு மர்ஹ"ம், எம்.கே.எம். அபூபக்கர் போலவே, பாகிஸ்தான் தூதுவரால்யத்தில் நெடுநாள் பணி ஆற்றிய எஸ்.எம். இக்பால் அவர்களுக்கு வயலின் சிட்சை யும் இவர் கைங்கரியமே. ஆக, அவர் நெல்லுக்கு இறைத்த நீர் இந்தப் புல்லுக்கும் கொஞ்சம் கிடைத்தது.
26

காற்று வெளியினிலே.
தமிழகத்தில் பொற்கொல்லர், தச்சர், கருமார் ஆகியோரை பொதுவாக ஆசாரி என்று அழைப்பார்கள். முஸ்லீம்களும் இவர்களும் ஒருவரை ஒருவர் ‘சித்தப்பா’ என்றோ அல்லது ‘அப்பு’ என்றோ அழைப்பார்கள். முத்து சாமி அவர்கள் என்னை மட்டுமல்ல, எல்லாரையும் ‘அப்பு’ என்றே அழைப்பார்.
ஒருநாள் இவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். “என்ன, அப்பு, ஊருக்கெல்லாம் மேடை போட்டு உபகாரம் செய்றிங்க ஆனால் உங்க பையன் ஒருவன் ரேடியோவில் சக்கை போடு போடுகிறானே தெரியுமா? என்றபோது ‘அடப்பாவி கொடுத்தாரே காரியத்தை’ என்று நான் உள்ளுக்குள் பொரும ஆரம்பித்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததற்கு நேர் விரோதமாக ஷேக்கப்பா அவர்கள் செல்வாக்கால் எங்கள் வட்டாரத்தில் என் வானொலி பங்களிப்புக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க அது வழி செய்தது. எஸ்.எம்.ஏ. ஜபார் என்று என் பெயரை அறிவிக்க வேண்டாம் என்கிற என்னுடைய கோரிக்கையை அது முதல் நான் வாபஸ் பெற்றுக் கொண்டேன். பெயருக்கும் புகழுக்கும் ஆலாய்ப்பறக்கும் காலகட்டத்தில் இப்படிப் பட்ட ஒரு ஜன்மமும் இருந்திருக்கிறேன் என்பது எனக்கே இப்போது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் என் பெயரை அமுக்கிய ஒரு காரணத்துக்காக மக்கீனுடன் முட்டி மோதிக் கொண்ட கதையை பின்னால் சொல்கிறேன். இலங்கையில் மோகனரங்கன் இசைக்குழுவில் முக்கிய மானவர் முத்துசாமி அவர்களின் புதல்வர் என்று சமீபத்தில் அறிய வந்தபோது சந்தோஷமாக இருந்தது.
சுதந்திரக் காற்றை சுவாசிக்கக் கிடைத்த சூழலில் மீண்டும் சங்கீதம் கற்கும் ஆசை என்னுள் துளிர் விட ஆரம்பித்தது. புல்லர்ஸ் ரோடு ‘கலாலயாவில் சங்கீத வகுப்புகள் ஆரம்பமாகவிருந்தன. என் நினைவு சரியென்
27

Page 16
அப்துல் ஜப்பார்
றால், அங்கு சங்கீத ஆசிரியர் பிரபல சங்கீத மேதை மகராஜபுரம் விஸ்வநாத ஐயரின் புதல்வரும், தன் வழியி லேயே தானும், ஒரு மேதையும் சமீபத்தில் வாகன விபத்து ஒன்றில் அமரராகிவிட்டவருமான மகராஜபுரம் சந்தானம் அவர்கள், என் நேரம் என் வகுப்பு நேரமும், சங்கீத வகுப்பு நேரமும் ஒத்துவரவில்லை. ஆகவே ஒரு மேதையின் சிஷ்யன் என்று சொல்லிக் கொள்ளும் பேறு எனக்குக் கிடைக்காமல் போயிற்று. கவனம் நாடகங்களில் திரும்பிற்று. ஆனால் சிறுவர் மலரில் கடித வாசிப்பும், சினிமாப் பாடல்களும் என் 'ஸ்பொலிட்டி’ என்றாகிவிட்ட நிலையில் நாடகத்துக்கு என்னைச் சீண்டுவார் யாரு மில்லை. மக்கீனை சிபாரிசுக்குப் பிடித்திருக்கலாம் ஆனால் ‘உள்ள வேலையை ஒழுங்காகப் பார்.’ என்று மண்டையில் அடிப் பான். மேலும் சிபாரிசு பிடிப்பது என்பது. அன்றும், இன்றும் என் சுபாவமில்லை என் பலமும், பலஹினமும் அது.
இந்த நிலையில் இஸ்லாமிய நிகழ்ச்சியில் முகம்மது மாஸ்டரின் நவநாகரிகம் என்றொரு நாடகம் அறிஞர் அண்ணா “ஓர் இரவு” நாடகத்தை ஒரே இரவில் எழுதி முடித்தது போல் முகம்மது மாஸ்டரும் இதனை ஒரே இரவில் மூன்று மணி நேர நாடகமாக்கினார். ஸ்ாஹிராக் கல்லூரி மாணவர்களைக் கொண்டு அந்த நாடகம் மேடை யேறியது.
மர்ஹ"ம் மன்னார் எச்.எம். ஷரீப் ஹிரோ, நான் வில்லன். அல்வாத்துண்டு ரோல் அது. ஹிரோவை நல் வழிப்படுத்தும் சதா அழுகையும் கண்ணிருமான ஆனால் கனமான ரோல் அமைச்சர் அஸ்வர் அவர்களுக்கு. நாடகம் நடிப்பது ஏதோ பஞ்சமா பாதகங்களுள் ஒன்று என்பது போல், அஸ்வர் ஒதுங்கிக் கொண்டார். வில்லன் ரோல் முத்துராக்கு இளங்கோ என்னும் மாணவருக்குப்
28

காற்று வெளியினிலே.
போயிற்று. அஸ்வரின் ரோல் என் தலையில் வீழ்ந்தது. எனக்கு விருப்பமே இல்லை முனக ஆரம்பித்தேன். "டேய் சப்ப மேடையில் வந்து ஆ. ஊ. என்று கத்திட்டுப் போறதுலே என்னடா இருக்கு. இந்த மாதிரி அழுத்தமான ரோலைச் செய்து பெயர் வாங்கணும் அது தான் கெட்டித் தனம். இந்த ரோலைச் செய்யமுடியாது என்று சொல் அவ்வளவுதான் உன் சரக்கு என்று விட்டு விடுகிறேன். ஆனால் வேண்டாம் என்றால் விடமாட்டேன்” என்று குத்தக் கூடாத இடத்தில் குத்துகிறார். அதாவது என் திறமைக்குச் சவால் விடுகிறார். சவாலை ஏற்கிறேன். அந்தப் பாத்திரத்துக்குப் புதிய பரிமாணங்களைக் கண்டு பிடிப்பதில் மனம் லயிக்கிறது. என்னையறியாமலேயே பாத்திரத்தோடு ஒரு ஒன்றுதல்.
நான் கையாளும் சில உத்திகளுக்கு ஆதார சுருதியே ஒலி வாங்கிதான். என்னுடைய நடிப்பில் அதன் பங்களிப்பு சராசரிக்கும் சற்று மேலே என்று கூடச் சொல்லலாம். ஆனால் மேடை என்று சொன்னால் நடமாட்டம் (மூவ் மெண்ட்ஸ்) இருக்கும். சிலர் இந்த நடமாட்டத்தில் செலுத்தும் கவனத்தை வசனங்களைப் பேசுவதில் செலுத்து வதில்லை. ஆனால் எனக்கு வசனம் மட்டுமல்ல, அதன் எல்லா நுண்ணிய நெளிவு, சுரிவுகளும் கூட கடைசி வரிசையில் இருக்கும் ரசிகரிடமும் சென்று அடைய வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை, ஆகவே எங்கு சுற்றி எங்கு வந்தாலும் வசன வெளிப்பாட்டுக்கு ஒலி வாங்கி அருகே வந்து விடுவேன். இதனை முற்றிலும் இயல்பான தாகத் தோன்றும்படி செய்தது தான் என் மேடை வாழ்நாள் முழுவதும் நான் கடைபிடித்து வந்த ஒரு நல்ல உத்தி. இந்த உத்திநான் மேற்படி பாத்திரத்தை மிகச் சிறப்பாகக் கையாள்வதற்கு உதவி செய்தது என்றால் மிகையாகாது.
29

Page 17
அப்துல் ஜப்பார்
ஒருநாள் மாணவர்களுக்காகவும் ஒருநாள் பொது மக்களுக்காகவும் நடைபெற்ற இந்த நாடகத்துக்கு ரொசரியோ பீரிஸ் வந்திருக்கிறார். திறமைசாலிகளை எங்கு கண்டாலும் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துவதும், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் அந்த நபரை முறையாகப் பயன்படுத்திக் கொள்வதுமான நல்ல குணம் ரொசரி யோவின் 'ஸ்பெஷாலிட்டி". அவர் என்னைப் பற்றி சானா விடம் மிக உயர்வாகச் சொல்லி இருக்கிறார். ஆனால் சிறுவர் மலரில் என் வேண்டுகோளின் படி ஆரம்ப நாட்களில் என் பெயர் சொல்லப்படாததால் என் பெய ரோடு என்னைத் தொடர்புப்படுத்தி என்னை அடை யாளம் காண அவரால் இயலாமல் போயிற்று.
ஒருநாள், வானொலி நிலையத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ‘போர்டு ரூமில்’ நாடக ஒத்திகை ஒன்று நடந்து கொண்டிருந்தது. நாங்கள் 'சிறுவர் மலர்’ குழாம் கலையகம் ஒன்றை நோக்கி 'வெராண்டா” வழியாகச் சென்று கொண்டிருந்தோம். திடீரென்று ரொசிரியோ என்னைக் கை காட்டி "தேட் போய், தேட் போய் என்றார் சானா சன்னல் வழியாக வந்து எட்டிப்பார்த்து விட்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் கலையத்துக்குள் ரொசாரியோ சகிதம் நுழைந்த சானா, ரேடியோ மாமா சரவணமுத்து அவர்களிடம், “சரா, இண்டைக்கு நாடகத்தில் ஆரார் நடிக்கினம்?” என்று கேட்க, “இன்னும் தீர்மானிக்கயில்லே, பிள்ளைகள் இப்பதானே வந்திரிக்கினம்" என்றார். "ஐ வாண்ட் யூ டு ட்ரை ஜபார் இன் எ குட் ரோல்" என்று சொல்லிவிட்டு என்னைத் திரும்பிக் கூட பார்க்காமல் அவர் பாட்டுக்குப் போய் விட்டார். என்னுடைய பிரமிப்பு அடங்கு முன்பு ரொசாரியோ என் காதில் கிசுகிசுத்தார். "தம்பி நவ நாகரீகம்’ நாடகம் பார்த்தேன். உம்மப் பத்தி "சானா'விடம்
30

காற்று வெளியினிலே.
ரொம்பச் சொல்லி இருக்கிறேன். ரொம்ப நல்லாச் செய்யணும் தெரிஞ்சுதா என் பேர் ரிப்பேராகிடாமப் பாத்துக்கும்” வழமையாக என்னைப் பாதிக்காத கலை யகத்தின் ஏ.சி.குளிர் அன்று என்னை நடுங்க வைத்தது.
நாடகம் "பீஷ்ம சபதம்” சானா, ரொசி உட்பட அன்று நாடக அரங்கில் நடிக்க வந்த அத்தனை பேரும் கலையகத்தில் ஆஜர் சாதாரணமாக, எந்தப் பெரிய கொம் பனையும் நிலைகுலைய வைக்கும் டென்ஷன் நிறைந்த சூழல். ஆனாால் அப்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வந்தது. துரோணாச்சாரியார் அர்ஜுனனுக்கு வில்வித்தைக் கற்றுக்கொடுத்த போது ஒர் உயர்ந்த மரத்தின் உச்சாணிக் கிளையில் இருக்கும் பறவையை அம்பெய்தி வீழ்த்த வேண்டும். துரோணர் மற்றவர்களிடம் கேட்டார். மரம் தெரிகிறதா? தெரிகிறது என்றார்கள். கிளை தெரிகிறதா? தெரிகிறது என்றார்கள் உச்சாணி கொப்பு தெரிகிறதா? தெரிகிறது என்றார்கள். அதன் மீது இருக்கும் குருவி தெரிகிறதா? தெரிகிறது என்றார்கள். அப்படியானால் அம்பெய்து வீழ்த்துங்கள் என்றார் துரோணர், எல்லோரும் அம்பெய்தார்கள் பறவை விழவில்லை. அர்ஜுனன் முறை வந்தது துரோணர் கேட்டார். மரம் தெரிகிறதா? அர்ஜுனன் இல்லை என்றான் "கிளை ?” மீண்டும் துரோணர், அர்ஜுனனின் பதில் "இல்லை" உச்சாணிக் கொப்பு தெரிகிறதா, “இல்லை" அதன் மீது இருக்கும் பறவை தெரிகிறதா? அர்ஜுனன் ஆத்ம விசுவாசத்தோடு சொன்ன பதில் "ஆம்" துரோணர் வில்லால் அடி என்றார், அடித்தான், பறவை வீழ்ந்தது. நான் அர்ஜ"னன் நிலைக்கு என்னை ஆளாக்கினேன். கலையகம் தெரியவில்லை. ரேடியோ மாமா தெரியவில்லை. சானாவும் அவர் தம் கலைஞர் குழாமும் கண்ணுக்குத் தெரியவில்லை. தெரிந்தது எல்லாம் கையிலிருந்த பிரதியும், ஒலிவாங்கியும், பீஷ்மர்
31

Page 18
அப்துல் ஜப்பார்
என்னும் அந்த மகா புருஷனும் மாத்திரமே, நாடகம் முடிந்தது. நெடி துயர்ந்த ரேடியோ மாமா அவர் இடுப் பளவே உயரமுள்ள என்னை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டார். சானா உள்ளே வந்தார். என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. ரொசியைப் பார்த்து, “ரொசி யூ ஆர் சென்ட் பெர்சென்ட் ரைட்" என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். பாராட்டுவதில் அவருடைய ஸ்டைல்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சக்கை போடு போட்ட மஹாபாரத்தில் முகேஷ் கன்னா பீஷ்மர் பாத்தி ரத்தில் நடிக்கிறார். ஆயிரத்தெட்டு சவுண்ட் எபக்ட் களுடனும் அற்புதமான ஒலி-ஒளி, பிரமாதமான செட் பின்னணியுடனும் அந்த சபதக் காட்சியை அவர் அற்புத மாகச் செய்வார். உலகத்து பணிவுகளையெல்லாம் ஒன்று திரட்டி என்னுள் தேக்கிக் கொண்டு ஒன்று சொல்வேன். அந்தச் சின்னஞ்சிறு வயதில் எவ்வித நவீன விஞ்ஞான கருவிகளோ - வசதிகளோ இல்லாத அந்தக் காலத்தில் நான் செய்த “பீஷ்மர் சபதம்’ உண்மையில் சிறப்பாக இருந்ததாக இன்று எண்ணிப் பார்த்தாலும் என் நெஞ்சு நிறைகிறது.
"சிறுவர் மலர்” சரவணமுத்து மாமா அவர்களின் கையை விட்டுப் போகப் போகிறது. அது கடைசி நிகழ்ச்சி. அதில் "மஞ்சள் பாவாடை" என்று ஒரு நாடகம். கதை ஞாபகமில்லை. ஆனால் நாடக அரங்கில் இடம் பெறு மளவுக்கு நல்ல நாடகம். "ஃபிட்டிங் ஃபினாலே" என்பார் களே அப்படி அமைந்தது அன்றைய நிகழ்ச்சி. அதன் கிரீடமாக நாடகமும்! சானா சொன்னார் "மற்ற வியளப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனால் ‘சரா’ எப்போதும் போல தொடர்ந்து நாடகத்தில் நடிப்பார். புதிதாக ஜபாரும்" அந்த சமயத்தில் ஏற்பட்ட உணர்ச்சி வேகத்தில்
32

காற்று வெளியினிலே.
அவ்வாறு சொல்லி விட்டாரா? மகிழ்ச்சியை விட குழப்பம் என்னைப் பெரிதாகச் சூழ்ந்தது. காரணம் 'ஒடிசன்’ பாசாகாமல் எப்படி "நாடக அரங்கில் பங்கேற்க முடியும்? விடை சானா அவர்களின் வாயிலிருந்தே பிறந்தது. "இதுவரை நாடக அரங்குக்கு ஒடிசன் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டது இருவரே. இருவர்தான் ரொசா ரியோ பீரிஸ் & சிவந்தம்பி டுடே தேட் ஒனர் கோஸ் டு ஜபார் ஆல்சோ"
வசிஸ்டர் வாயால் ப்ரும்ம ரிஷி பட்டம் பெற்ற மகிழ்ச்சி, நான் பிரமிப்பிலிருந்து மீளு முன்பே சானாவின் அடுத்த பிரயோகம் “தம்பி வியாழக்கிழமை வாரும்." “யாருக்குக் கல்யாணம்?’ நாடகத்தில் நடிக்கிறீர்” கலகலப் பான நகைச்சுவை நாடகம், சுந்தரம் ராமசாமி எழுதியது என்று நினைக்கிறேன். பதினைந்து நிமிடங்கள் போன வேகம் தெரியவில்லை. "சிறுவர் மலரில்’ நான் தனிக்காட்டு ராஜா. ஆனால் இங்கே “பொஸ்’ (ஆசான்) சானா தான். முதல் நிகழ்ச்சியிலேயே அதை மிகத் தெள்ளத் தெளிவாக சந்தேகத்துக்கு இடமில்லாமல் காட்டி விட்டார். அடாவடித் தனங்களால் அல்ல, சில அருமையான உத்திகளை கோடிட்டுக் காட்டி, சில நெறிமுறைகளை எடுத்துச் சொல்லி, புத்திசாலியாக நடந்து கொண்டால் பிழைத்துக் கொள்வாய் என்பது போல் ஒரு "ஹின்ற். இன்றுகூட என்னை அவருடைய மாணாக்கனாக எண்ணும் என்னால் அன்று அவரது மாணாக்கனாக நடந்து கொள்வதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. சானா ஒரு துரோணர்.
அந்த துரோணரின் அடுத்த நாடகத்தில் நான் அர்ஜ"னன், நாடகம், 'வில்லும் சொல்லும்’ அன்று ஒலிப்பதிவு வசதி இருந்தது. ஆனாலும் அதனை பெரும் பாலும் பயன்படுத்துவதில்லை. எல்லாமே 'லைவ்' தான் நாடகம் துவங்கியது. “சிக்னேச்சர் ட்யூன்’ என்னும் அறிமுக
5T-3 33

Page 19
அப்துல் ஜப்பார்
இசை போய்க் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அறிவிப்பு. நான் கடைசி நிமிட ஆயத்தமாக செறுமி தொண்டையைச் சரி செய்தேன். அது ஒலிப்பரப்பில் போய்விட்டது. கட்டுப் பாட்டறைக்குள் இருந்த சானாவின் முகம் பேயறைந்தது போல் மாறுவதைக் கண்டேன். ஒரு கணம். ஒரே ஒரு கணம். பளிரென்று புன்னகைத்தார். அதனால் பரவா யில்லை. ஆக வேண்டியதைப் பார் என்று வெகு அடக்கத் துடன் சமிக்ஞை செய்தார். அப்செட்டான என்னை மீண்டும் உற்சாகம் பற்றிக் கொண்டது.
திரெளபதிக்கு இழைக்கப்பட்ட அவமானத்துக்கும், அநீதிக்கும் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்கிற வெறியும் வேகமும் துடிப்பும் அவனுள் நிறைந்து நிற்கிறது. எனினும் உடன் பிறப்புகளைப் போன்றவர்களைக் கொல்ல வேண்டியிருக்கிறதே என்று பதைக்கிறான்; மலைக்கிறான்; கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார் “அர்ஜுனா, கொலை யும், பகையும், பாசமும் நேசமும் உன்னால் என்பதை மற. அது வெறும் மாயை, கடமையைச் செய்ய வேண்டியது மட்டும் தான் உன் பொறுப்பு பலனைப்பற்றிக் கலைப் படாதே. அது ஆண்டவன் கையில், அதர்மம் செய்தவர் களைத் தண்டிக்க நீ ஒரு கருவி மட்டுமே. எடு வில்லை தொடு அம்பை” கீதோபதேசத்தின் சாராம்சம் இந்த நாடகம். உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் சிக்கித் தவிக்கும் அந்தப் பாத்திரத்தை நான் செய்து முடித்தபோது என்னுள் எழுந்த உணர்வு ஒரு கஷ்டமான பிரசவத்துக்குப் பின் ஏற்படும் ஆசுவாசம் இப்படித்தான் இருக்கும் போலும் என்பதே. முதல் பெரிய பாத்திரம். நன்றாகச் செய்த குதூகலத்தில் இருந்தேன். ஆனால்.
இந்திய வர்த்தக உலகச் சக்கரவர்த்தி ஜே.ஆர்.டி. டாட்டாவிடம் ஒரு விசேஷ குணம் இருந்தது. தவறு செய்த ஊழியரை அவர் கண்டிக்கும் விதம் அலாதியானது.
, 34

காற்று வெளியிகளி'
கூப்பிட்டனுப்பி குடும்ப நலன் விசாரிப்பார். பிறகு செய்த தவறுக்கு கடுமையான டோஸ் கொடுப்பார். கடைசியில் அந்த ஊழியர் சோர்ந்து போகாமல் இருக்க ஒரு அனு கூலமான விஷயத்தை சொல்லி அனுப்புவார், "சேன்ட்விச் டோஸ்’ என்று இதற்குப் பெயர். அந்தக் கலையில் சானாவும் வல்லவர். நாடகம் முடிந்து கலையகத்துக்குள் வந்தவர் என் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார். பிறகு பிடித்தார், ஒரு பிடி! கை நீட்டி அடிக்காமல், ஒரு கெட்ட வார்த்தை கூடப் பேசாமல் ஒருவனைக் குத்திக்கீறி, உப்பு வைத்து, கொல்லாமல் கொல்வது என்பது சானாவுக்கு கை வந்த கலை. இருமல் ஒலிப்பரப்பில் போனதற்காக அன்று அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்.
வெளியே வருகிறோம். எதிரே எழுத்தாளர் தாழையடி சபாரத்னம். சற்று முன் விட்டடோசை யெல்லாம் மறந்து விட்டு எதுவுமே நடக்காதது போல் "சபா திஸ் இஸ் மை நீயூ ஃபைன்ட் ஜபார்” என்று பெருமை யுடன் அறிமுகப்படுத்தி வைக்கிறார். “கேள்விப்பட்டேன்” என்றவர் என்னை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்க்கிறார். ஒரு ஆறடி ஆஜானுபாகுவை அவர் எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். கத்தரிக்காய்க்கு கையும், காலும் முளைத்தது போல் அரைக்களிசானுடன் நின்ற என்னை அவர் நிச்சயம் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். எனினும், "சானா இது என்னுடைய புதிய நாடகம். இதில் இவர் தான் "ஹீரோ” என்றவாறே பிரதியைக் கொடுத்தார். எந்தப் பாத்திரத்துக்கு யாரைப் போடவேண்டும் என்று சானா தான் தீர்மானிப்பார். அதில் யாரும் தலையிட அவர் அனுமதிப்பதில்லை. கொழும்புத் திட்டம் என்னும் ஏற்பாட்டின் கீழ் பி.பி.சி.யில் ஒலிபரப்புக் கலையில் பயிற்சி பெற்றவர் சானா, அது போலவே ஷேக்ஸ்பியர் ஞாபகர்த்த
35

Page 20
அப்துல் ஜப்பார்
நாடக அரங்கிலும் மேடை நாடகத் தயாரிப்பில் பயிற்சி பெற்றவர் சானா, இதன் காரணமாக இவர் இங்கிலாந்து நாட்டில் தங்கிய பாதிப்பு இவரிடம் நிறையவே உண்டு. இவர் சொல், செயல், நடைமுறை ஆகியவற்றில் இந்த வெள்ளைக்காரத்தனம் சற்று தூக்க லாகவே இருக்கும் எதையும் மூடி மறைக்காமல் முகத்தில் அடித்தாற் போல் சொல்வது அவற்றுள் ஒன்று.
தாழையடிக்குரிய பதிலும் இதே ரீதியிலேயே அமைந்திருந்தது. நேற்று வந்த ஒரு பொடியனுக்காகத் தான் மூக்குடைப்பட்டிருக்க வேண்டியதில்லை என்பதுபோல் தாழையடியின் முகத்தில் ஒரு சலிப்பு. உடனே சானா, “என்றாலும் ஒரு எழுத்தாளனுடைய அங்கீகாரம். ஜப்பாருக்கு மட்டும் என்று நான் நினைக்கவில்லை. அவரை தேர்ந் தெடுத்த எனக்கும் தான். எனவே சபா உம்முடைய யோசனையை நான் ஒத்துக்கொள்கிறேன்" என்றார். எனக்கு டாட்டாவின் “சேண்ட்விச் திட்டு’ ஞாபகத்துக்கு வந்தது.
அன்று நாடக அரங்கில் இடம் பெறுவது என்பதே பெரிய விஷயம். பிரதான பாத்திரம் என்பது லேசுப்பட்ட சங்கதி அல்ல. சினிமா சாயல் இருந்ததோ, தொலைந்தோம். சானாவுக்குப் பிடிக்காது. தங்களை பெரிய சினிமா நிஜங்களின் நிழல்கள் என்று எண்ணிக் கொண்டு 'ஒடி சனுக்கு வந்த கொலைக் கொம்பன்கள் கரணம் அடித்து குப்புற விழுந்திருக்கிறார்கள் காரணம் நாடக அரங்கில் நடிப்பின் தரம் அவ்வளவு உயர்வாக இருந்தது அன்று.
இன்று இலங்கையில் பிரபலமாக விளங்கும் இளம் கலைஞர் பூரீதர் பிச்சையப்பாவின் தந்தை P.எஸ். பிச்சை யப்பா நாடக அரங்கில் கொடிக்கட்டிப் பறந்த காலம் அது ஓ. எத்தகைய அற்புதமான கலைஞன் பிச்சையப்பா!
36

காற்று வெளியினிலே.
‘மைக்’கின் முன் மாயாஜாலம் கிருஷ்டிக்கும் அந்தக்குரல்! இவருக்கு வாய்த்த அற்புதமான ஜோடி ஃபிலோமினா சொலமன். இவர்கள் இருவரும் சேர்ந்து படைத்த சாதனைகள். சினிமா ஜோடிகளை விட அதிகமாக இவர்கள் பெற்ற பெயரும் புகழும் சினிமாவைப் பார்த்து விட்டு அழுபவர்களையும் பார்த்திருக்கிறேன். இந்த ஜோடி யின் நடிப்பில் ரேடியோவைக் கேட்டுவிட்டு அழுதவர்கள் உண்டு. இந்த ஜோடியின் அளவை ஜபார் - ராஜேஸ்வரி சண்முகம் ஜோடி, பிறகு ஜபார் - விசாலாட்சி ஹமீது ஜோடி எட்டிப் பிடித்தது என்பது வேறு விஷயம். சில சமயங்களில் சில பாத்திரங்களுக்கு நான் தேர்ந்தெடுக்கப் படும்போது என்னுள் ஒர் உணர்வு தோன்றுவது தவிர்க்க முடியாததாக இருந்தது. இந்த ரோல் பிச்சையப்பாவுக்குப் போயிருக்கக் கூடும், எனக்கு வந்திருக்கிறது. ஆகவே நான் பிச்சையப்பாவை விட பெரிய கொம்பன் என்று எண்ணிய தில்லை. மாறாக அந்த ரோலை நான் சிறப்பாகச் செய்வது பிச்சையாப்பாவிற்குச் செய்யும் மரியாதையாக இருக்கும் என்கிற அடக்கத்துடனும் பணிவுடனும் நான் அதைச் செய்வதுண்டு. "ஆங். பிச்சையப்பா என்ன பிச்சையப்பா உங்க ரேஞ்சும், வெரைட்டியும் அவருக்கு வரவே வராது" என்று என்னைப் பீதி ஏற்றியவர்களுண்டு. ஆனால் நான் நிதானமிழந்தது கிடையாது. பிச்சையப்பா என்கிற அந்தக் கலைஞனுக்கு என் உள்ளத்தில் ஏற்பட்ட மதிப்பு அவர் மாண்டு மறைந்து விட்டாலும் என் உள்ளத்திலிருந்து என்றும் மாளாது - மாறாது - மறையாது”
பிச்சையப்பா போலவே இன்னொரு உன்னதமான கலைஞன் எல்லோரும் பிரியமுடன் ரொசி என்றழைக்கும் ரொசாரியோ பீரிஸ். இலங்கையர்கோன் எழுதி சானா வுக்கு சாகாப்புகழ் தேடிக் கொடுத்த "லண்டன் கந்தை யா’வில் இவர் காசிம் காக்கா, நண்பர் ராம்தாஸ், சவாஹிர்
37

Page 21
அப்துல் ஜப்பார்
ஆகியோருக்கெல்லாம் முன்னோடி. அவர் விதைத்தார். இவர்கள் அறுவடைச் செய்தார்கள். ரொசி ஒரு முழுமை யான கலைஞர். ஒரு கலைஞனுக்குரிய எல்லாச் சிறப்புகள் மட்டுமல்ல எல்லா பலஹினங்களும் இவரிடம் இருந்தன. நடிப்பில் மட்டுமல்ல நிஜவாழ்க்கையிலும், நகைச்சுவை இவரது தனித்துவம், செல்லுமிடத்தில் எல்லாம் சிரிப்பை யும், கலகலப்பையும் ஏற்படுத்திய இந்த மனிதன் உள்ளுக்குள் சதா அழுது கொண்டிருந்தான், என்பது அநேகருக்குத் தெரியாது. காரணம், தொட்டவற்றில் எல்லாம் பட்டவை அடிகளே. தொழில் சம்பாத்தியம், காதல் குடும்பம் என்று எதிலுமே இவர் காலூன்றி நிற்க முடியாமல் போனது இவரது வாழ்வின் மாபெரும் சோகம். இவற்றால் இவர் பலஹினங்களுக்கு ஆளானாரா அல்லது சில பலஹினத்துக்கு ஆளானதால் இவற்றைக் கோட்டை விட்டாரா என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இவரோடு மிக நெருங்கிப் பழகியவர்களில் நானும் ஒருவன். அதனால் சில பழக்கவழக்கங்களுக்கு நானும் உட்பட்டு விடுவேனோ என்று பயந்தவர்கள் உண்டு. ஆனால் எனக்காக நானே போட்டுக் கொண்ட இலக்குமணக்கோடு பற்றி பலருக்குத் தெரியாது.
ஒலிப்பரப்பாகட்டும், மேடை நாடகமாகட்டும், குரல் மிக ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். தொடரத் தொடர சிகரட்டை ஊதித்தள்ளும் முகம்மது மாஸ்டர் தன் குரல் கெட்டுப் போனதற்கு அதுதான் காரணம் என்று "சிகரட் குடிக்காதே’ என்பார். 'சானா' குளிர் பானங்கள், எண்ணையில் செய்யப்பட்ட பதார்த்தங்கள், குறிப்பாக பொறித்தவை, வண்ணக் கலவைகள் சேர்க்கப்பட்ட உணவு களை தவிர்க்கும்படி சொல்வார். இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ரேடியோ மாமா சரவண முத்து அவர்கள் சொல்வார்கள். "தம்பி ஒழுக்கம் - எல்லா
38

காற்று வெளியினிலே.
வற்றுக்கும் அது மிக முக்கியம்” என்பார், உண்டு, சுவைத்து, மகிழ வேண்டிய அந்த இளவயதில் நான் இவைகளை தவிர்த்தேன் என்பதை நம்புவது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை. அது மட்டுமா, பெண்கள் விஷயத்தில் நான் மிக பேணுதலுடன் நடந்து கொண்டேன். இவற்றுக்கெல்லாம் மூல காரணம், பிழைப்புக்காக நாடுவிட்டு நாடு வந்த சமூகம் எங்களு டையது. ஆகவே அதில் தான் முழுக்கவனம் இருக்க வேண்டுமே தவிர வேறு விஷயங்களில் கவனம் செலுத்து வதை மாபெரும் தவறாகக் கருதும் மரபு எங்களுடையது. அந்த மந்தையை விட்டு வெளிவந்த முதல் ஆடு நான். என் ஒழுக்கத்தின் மீது ஒரு சிறு கீறல் விழுந்தாலும் சமூக ரீதியாக என்னைக் குழித்தோண்டிப் புதைத்து விடுவார்கள். ஆக எங்கள் அமைப்பிலும், இடறக்கூடாத இடத்தில் இடறி விடாமல் என் கலையார்வத்தையும் வளர்ச்சியையும் குன்ற விடாமல் கம்பிமேல் நடக்கும் சர்க்கஸ்காரன் நிலையில் நானிருந்தேன்.
இஸ்லாமியக் கோட்பாடுகளும், காந்தியக் கொள்கை களும், வரதராசனாரின் நூல்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கங்களும் இந்த விஷயத்தில் எனக்குப் பெரிதும் உதவின. இன்னுமொன்று, அன்றும்இன்றும் பெண்கள் என்னிடம் எளிதாகப் பழகிவிடுவார்கள். நான் ஆண் அழகனோ அல்லது வேறு எந்தவிதமான கவர்ச்சிகளோ என்னிடம் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய கலகலப்பான சுபாவம் ஒரு காரணமாக இருக்கலாம், அல்லது என்னில் அவர்கள் ஒரு சகோதர னைக் காண்பதாக இருக்கலாம். ஆகையினால் என்னுள் தவறான கற்பனைகளை உருவாக்கிக் கொண்டு அவர்கள் உறவை கொச்சைப்படுத்த முயல்வது பண்பல்ல என்பது என்னுள் ஊறிப்போன ஓர் உணர்வு. இதனால் நான்
39

Page 22
அப்துல் ஜப்பார்
பலரால் மிகவும் மதிக்கப்பட்டேன். முன்பைவிட பன் மடங்கு நேசிக்கப்பட்டேன். ஆனால் எல்லா பெண்களும் என்னுடன் சகோதர வாஞ்சையுடன் தான் பழகினார்கள் என்று சொல்லமுடியாது. வாலிபச் சில்மிஷங்களை வெளிப்படுத்தியவர்களும் உண்டு.
அம்மாதிரி நேரங்களில் ஒன்றுமறியா குழந்தை போலவோ, கோமாளி போலவோ நடந்துநான் கழன்று கொள்வதுண்டு, இந்த ஒன்றின் காரணமாக நண்பர்கள் மத்தியில் எனக்கு ஒரு செல்லப் பெயர் உண்டு ‘கவ் & கேட்’ (அன்று இலங்கையில் பிரபலமாக இருந்த குழந்தை கள் பால் உணவு) பெயர் சூட்டியவர் ரொசி.
அந்த வயதிலேயே காதலைப் பற்றி எனக்கு மிகத் தெளிவான அபிப்பிராயங்கள் இருந்தன. ஆகவே வானொலி காதல் காட்சிகளில் மனோகரமான பிரம்மை களை சிருஷ்டிக்கும் நான் நிஜ வாழ்க்கையில் நண்பர்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக என்னைக் காதலிப்பதாக நினைத்தவர்கள் மத்தியில், காதலைப் பொறுத்தவரை ஒரு ‘டல்லான ஆசாமியாகவே இருந்தேன்.
என்னிடம் தங்கள் காதலை நேரிடையாக வெளிப் படுத்தியவர்கள் உண்டு. நண்ப - நண்பிகள் மூலம் அணுகி யவர்கள் உண்டு. கடித மூலம் நளினமாகக் கோடிட்டுக் காட்டியவர்களும் மென்மையாக எடுத்துச் சொன்னவர் களும், பச்சையாகப் புலம்பித் தீர்த்தவர்களும் உண்டு. என் உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள், என் காதல் விவகாரங்கள் அவர்களுடைய எதிர்காலத்தைப் பாதிக்க கூடாது என்பது தான், யார் காதலையும் ஏற்க முடியாத தற்கு நான் காட்டிய முக்கிய காரணம்.
ஆனால் ஒரு பெண் பண்பு தவறாமல், நாகரீக வரம்புகளை மீறாமல் என்னிடம் காட்டிய அன்பும்,
40

காற்று வெளியினிலே,
பரிவும், அக்கறையும், கரிசனமும் என்னை வெகுவாகக் கவர்ந்தது மட்டுமல்ல. முதன் முறையாக என் உள்ளத்தில் சில சலனங்கள் ஏற்படவும் காரணமாக இருந்தது. கலை, இலக்கியம், வாழ்க்கையின் பொதுவான தன்மைகள் ஆகிய பல விஷயங்களில் எங்கள் பார்வையும் சுவையும் பெருமளவு ஒன்றாக இருந்தன. அவர் வரும் நிகழ்ச்சிக்கு என்னை எதிர்பார்த்து சற்று முன்னதாக வருவது. தன் நிகழ்ச்சி முடிந்து விட்டாலும் என் நிகழ்ச்சி முடியும் வரை எனக்காகக் காத்திருப்பது போன்றவை எனக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினாலும், அந்தச் சந்திப்பில் களங்க மில்லாத ஒரு குதூகலம் இருந்தது. சில நேரங்களில் அவர் வீடு வரை அவருக்குப் பாதுகாப்பாக நான் துணை செல்வதை அவரது குடும்பமே நன்றியுடன் வரவேற்றது. நாங்கள் நல்ல நண்பர்களானோம்.
ஒருநாள் மாலை ஒரு “பேர்த்டே" பார்ட்டிக்கு வருமாறு எனக்கும் மக்கீனுக்கும் சேர்த்துக்கடிதம் வந்தது. இருவரும் சென்றோம் வீட்டில் ஆள் ஆரவமே இல்லை. அந்தப் பெண் குறும்பாகச் சொன்னாள் "பேர்த்டே பார்ட்டி இங்கல்ல, வேறோர் இடத்தில். குடும்பமே போய் இருக்கிறது. நான் மட்டும் தனியே, துணையாக இருக்கத் தான் வரச்சொல்லி எழுதினேன்” என்றபோது இனம் புரியாத ஓர் உணர்வுக்கு ஆட்பட்டேன். ஆனால் எதையோ புரிந்து கொண்டது போல், "சரி இருவரும் பேசிக் கொண்டி ருங்கள். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது கொஞ்ச நேரத்தில் வந்து விடுகிறேன்” என்று மக்கீன் நைசாக நழுவி விட்டான். ஒரு பெண்ணுடன் - அதிலும் என்னை மிகவும் நேசிக்கும் - நானும் விரும்பும் ஒரு பெண்ணுடன் - என் வாழ்நாளில் முதன் முறையாக யாருமில்லாத தனி வீட்டில் தனித்து விடப்பட்டிருக்கிறேன். இளமைத் துடிப்புடன் வாலிபத்தின் தலைவாயிலில் நிற்பவர்கள் நாங்கள், ஆனால்
平。波魏》慧蹟
41

Page 23
அப்துல் ஜப்பார்
தவறான ஒரு பார்வையோ, பேச்சோ கூட இல்லை.
என்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாகச் சொன்னாள்.
என்னை மணந்து வாழ விரும்புவதாக விருப்பம் தெரிவித்
தாள். எனக்கும் அந்த விருப்பம் இல்லாமல் இல்லை. என்
நிலைமைகளை எடுத்துச் சொன்னேன். என்னைப் போலவே அவருக்கும் பல சகோதரிகள் என்பதை எடுத்துக் காட்டினேன். வெவ்வேறு மதம் - இனம், பொருளா
தாரத்திலும் என்னை விட உயர்வானது அவர்களுடைய நிலை அதனால் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் ஆகிய வற்றை எடுத்துச் சொன்ன போது அழுத அழுகை என்னை குலுக்கியது. கண்ணிரைத் துடைத்துவிட்டேன் - கைக்குட்டையால். அப்போது கூட அந்த பெண்ணைத் தொடவில்லை என்பதை இப்போது நினைத்துப் பார்த் தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. சப்தமில்லாமல் குமுறிக் குமுறி அழும் அந்தப் பெண் என் தோளில் அபயம் தேடினால். இக்கட்டான நிலை, ஆபத்பாந்தவனாக மக்கீன் வந்து சேர்ந்தான் உள்ளே சென்று அந்தப் பெண் முகம் கழுவி பவுடர் போட்டு சிரித்த முகமாக வெளியே வந்தாள். நாங்கள் விடை பெற்றோம்.
வரும் வழியில் மக்கீன் துருவ ஆரம்பித்தான். நூறு நீண்ட நிமிடங்கள் என்னென்னவெல்லாம் நடந்தனவோ என்று அறிய வாலிபக் குறுகுறுப்புடன் மிகுந்த எதிர்ப் பார்ப்புகளுடனும் அவன் இருக்கிறான் என்பது எனக்குப் புரிகிறது. என் மெளனமும் முகத்தில் படர்ந்துள்ள சோக மும் அவனை பொறுமை இழக்க வைக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு நடந்தவற்றை ஒன்று விடாமல் சொன் னேன். சைக்கிளை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தினான். என் முன்னால் வந்து நின்று இரு கைகளையும் உயர்த்தி நீட்டி விரல்களால் என் தோள்களைப் பற்றிய வண்ணம் என் முகத்தைக்கூர்ந்து பார்த்து விட்டுச் சொன்னான். "மச்சான்
42

காற்று வெளியினிலே.
நீ ஒரு உலக மஹா ஜென்டில் மேன்" அந்தப் பாராட்டை கிரகித்து அதைப் புன்னகையாக முகத்தில் வெளிப் படுத்தும் முன்பு, முகத்தில் அடித்தாற்போல் அடுத்த வார்த்தைகள் உதிர்ந்தன. "உலக மஹா பொண்ணையனும் நீதான்." என் தோள்களை மாத்திரமல்ல, என்னையும் விட்டு விட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்து விட்டான்.
(கவ் அன் கேட் என்று நண்பர்கள் கேலி செய்த போது கூனிக்குறுகியதுண்டு. மக்கீன் “பொண்ணையன்” என்றபோது கோபத்தில் குமுறியதுண்டு. ஆனால் ரேடியோ மாமா சரவணமுத்து அவர்களே, உங்கள் மருமகன் இந்த இரண்டு பதங்களையும் தன் ஒழுக்கத்துக்குக் கிடைத்த உன்னத விருதுகளாக எண்ணிப் பெருமைப்படுகிறான் LontonT)
தொடர்ந்து ஒரு நாடகம், நான் காதலன் ஃபிலோமினா சொலமன் காதலி, பிச்சையப்பா, அவளைக் கைப்பிடிக்கும் கணவன் ஃபிலோமினா சீரியஸ்ஸாக இல்லாமல் சிரிப்பும் விளையாட்டுமாக இருந்தார். “உம்மை எப்படியப்பா காதலனாக நினைத்துக்கொண்டு நடிப்பது?” என்றவர் "சானா கிட்ட சொல்லி மாற்றச் சொல்லப் போகிறேன்” என்று அவர் கிளம்பும் முன்பு சானாவே உள்ளே வந்துவிட்டார். விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் "பிச்சையப்பாவை மட்டும் உம்மால் காதலனாக ஏற்றுக் கொள்ள முடியுமோ” என்று சற்று காட்டமாகவே தாட்சண்யம் இல்லாமல் கேட்டார். எனக்கே சங்கடமாகப் போய்விட்டது. ஃபிலோமினா முகம் கறுத்து, கண்கலங்கும் நிலைக்கு வந்துவிட்டார். பெண் என்றும் பார்க்காமல் சற்று ஒவராக "சானா" பேசிவிட்டதாக நான் பிச்சையப்பாவிடம் சொன்னபோது, "அவுக அப்பாவும் மகளும் போல உட்டுடுங்கோ, ஆரம்ப காலத்திலே உரிமையோட செல்ல
43

Page 24
அப்துல் ஜப்பார்
மாக மண்டையில் கூடக் குட்டுவார். வெளையாட்டு சிரிப்பெல்லாம் நிண்ணு போச்சா, இப்பப் பாருங்க அந்த பொண்ணு பிச்சி உதறும்” என்றார் - மிக அனுபவ ‘பாவ'த்துடன். அதுதான் நடந்தது. உலக தரத்தில் வைத்து எண்ணப்பட வேண்டிய அந்த ஒப்பற்ற நடிகை அன்று சில அற்புத உச்சங்களை - உன்னதங்களை எட்டிப்பிடித்தார் - நடிப்பில்! நாடகம் முடிந்து பாராட்டும் பாவனையில் பேச்சை ஆரம்பித்தார். 'சானா’ ஒண்டும் சொல்ல வேண்டாம்" என்று சீறிவிட்டு செக்கை கூட வாங்க நிற்காமல் போய்விட்டார், சகோதரி ஃபிலோ!
மறுநாள் அதிகாலை தொழுகைக்கு பின் என்னைக் கண்ட மக்கின் “டேய் கிறுக்குப் பயலே. ராத்திரி மூணு பேரும் பிச்சி உதறிட்டீங்கடா. அந்தப் பெண்ணுகிட்டே என்னமா மன்றாடினே. இழந்த பின் என்னமா துடிச்சே. பொம்பளைங்க அழுதுப்-டாங்கடா. பின்னே எப்படிடா அன்னைக்கும் மட்டும் அப்படி நடந்துகிட்டே?” அந்தக் கேள்வியை எதிர்பார்த்து இருந்தவன் போல் உடனே பதில் சொன்னேன். "நாடகத்தில் காதலியிடம் மன்றாடினேன். அவளை இழந்ததால் துடித்தேன். நிஜவாழ்க்கையில் மன்றாடவும் இல்லை. இழப்பும் இல்லை. துடிப்பும் இல்லை" என்றேன். ஆனால் அது உண்மைதானா? நான் செய்தது சரிதானா? காதலை மதிக்கத் தெரியாமல் போய் விட்டதா? அல்லது ஏற்கத் துணிவில்லாது போய் விட்டதா? அல்லது ஒரு நடுத்தரக் குடும்பத்தின் பொறுப் புள்ள தலைமகனாக நடந்து கொண்டேனா? இன்று வரை விடை தெரியவில்லை. ஆனால் உள்ளத்தில் அடித்தளத்தில் மாறாத ஓர் ஊமை வேதனை இருந்து கொண்டே இருந்தது. இறைவனின் அருட் கொடைபோல் ஒரு நல்ல துணை வாய்க்கும் வரை-வாய்த்தாள்!
இன்று நினைத்துப் பார்க்கும் போது என்னை
44

காற்று வெளியினிலே.
வியக்கவைக்கும் விஷயம் என்னவென்றால், சகோதரி ராஜேஸ்வரி, எழுத்தாளர் சி.சண்முகம், "மாடசாமி” என். சோமசுந்தரம், மக்கீன். சகோதரி விசாலாட்சி, சகோதரர் பி.எச். என்று காதல் திருமணம் செய்து கொண்ட என் நண்பர்கள் பட்டியல் மிக நீண்டது.
ஆனால் காலத்தின் கோலத்தைப் பாருங்கள். என் தலைமகன் என்னைப் பற்றி, தன் தாயைப்பற்றி, குடும்பம், ஊர், உலகம், ஜாதி சமயம், ஏன் தேடி வந்த பூரீதன லட்சங்கள் எதையும் பற்றியும் கவலைப்படாமல் காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். காதல் என்பது இளமைக்கு கூத்துக்களும் களியாட்டங்களும் என்றில் லாமல், "முப்பது நாள் மோகத்துக்கும் அறுபதுநாள் ஆசைக்குப் பிறகும் வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறது என்பதைப் புரிந்தே இதைச் செய்ய நினைக்கிறேன் என்று அனுமதியுடன், ஆசியும் வேண்டி நின்ற போது, அதிர்ந்த நான், காரண காரியங்களை எண்ணிப் பார்த்தபோது சம்மதித்தேன். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கைச் சக்கரம் ஒரு முழுச்சுற்று சுற்றி வந்துவிட்டது, இன்னும் சுழன்று கொண்டிருக்கிறது.
அன்று நாடக அரங்கில் றி.எஸ்.பி. ரொசி மட்டு மல்ல, மாடசாமி என். சோமசுந்தரம், கணபதி, தாசன் பர்ணாண்டோ, பேராசிரியர் கா. சிவத்தம்பி, வி. சுந்தர லிங்கம், வானொலி கிராம சஞ்சிகையின் பொறுப்பாளராக இருந்த தினகரனின் முன்னைநாள் மேலாளர் எம்.எஸ். ரத்தினம், ஆறுமுகம் மாஸ்டர், நவரத்தினம் மாஸ்டர் சோதி நாதன் மாஸ்டர், லண்டன் கந்தையாவின் ‘மைலு’ சிவலிங்கம், எஸ்.கே. தர்மலிங்கம் ‘வீக்கே’ ஆறுமுகம், ராஜேஸ்வரி (பிச்சாண்டி) சண்முகம், விசாலாட்சி (குகதாசன் - ஹமீது) புஷ்பம் சின்னையா, ஜோசபின் கோஸ்தா, ஜோசபின், சரசாம்பிகை சுப்பிரமணியம் (பி.பி.சி.
45

Page 25
அப்துல் ஜப்பார் ஆனந்தி (சுப்ரமணியம்) சூர்ய பிரகாஷ், தீரா (ஆறுமுகம்) பெர்னாண்டோ, பரிமளா தேவி விவேகானந்தா என்று மகோன்னதமான ஒரு கலைஞர் கூட்டம். இது அவர்கள் திறமையின் வரிசை அல்ல. ஏனெனில் இவர்கள் ஒவ்வொருவரும் ஒரோர் வகையில் ஜீனியஸ்கள்
இதில் பெரும்பாலோர் நான் உட்பட இந்திய வம்சா வழியினர். நாடகங்களும் பெரும்பாலும் இந்தியச் சொல் வழக்கிலேயே அல்லது இன்னொரு விதமாகச் சொல்வ தானால் தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படும் ஒரு வித பொதுவான சொல்வழக்கிலேயே அமைந்தன. யாழ்ப் பாணத்தில் பிறந்து வளர்ந்த சகோதரி ராஜேஸ்வரியின் கணவர் சி.சண்முகம் கூட இதையே பின்பற்றினார் என்பதை விட இதில் தனித்திறமை காட்டி தனக்கென ஒரு முத்திரை பதித்தார் என்பதே உண்மை.
வர்த்தக ஒலிபரப்பில் பாட்டுக்கள் மாத்திரம் என்கிற நிலையை மாற்றிய பெருமையில் சி. சண்முகத்துக்கு முக்கிய பங்குண்டு. இவர் எழுதி, சானா தயாரித்து, சோமசுந்தரம் 'மாடசாமி'யாக நடித்து ஒரு தனியார் நிறுவனத்துக்காக 52 வாரங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற அந்தத் துணி விடு தூது’ என்கிற நாடகமும், யார் எந்தச் சந்தர்ப்பத்தில் மாடசாமி என்று சொன்னாலும் "யாரது?" என்று கேட்டுக் கொண்டு வரும் சோமசுந்தரத்தின் அற்புதமான நகைச் சுவை நடிப்பும் அன்று இலங்கை முழுவதும் வெகு பிரசித்தம்.
எனக்கு இந்த நாடகத்தில் பங்கெதுவும் இல்லை. ஆனால் ஏதாவது ஒரு நாடகத்துக்குப் பிறகு பம்பலப் பிட்டியவில் உள்ள சீன ஓட்டலில் இரவு உணவுக்குப்பின் நிலையம் திரும்பி எல்லா ஒலிபரப்புகளும் முடிந்த பிறகு, நள்ளிரவு வரை நான்குவாரத்துக்கான பாகங்களை
46

காற்று வெளியினிலே.
ஒலிப்பதிவு செய்வோம். பிறகு புல்லர்ஸ் ரோடு வழியாக நடையாக நடந்து பொரளை போய் அங்குள்ள ஒரு PAS GPRASAயில் முட்டை ஆப்பமும், “கிரி - பெணி’யும் சாப்பிட்டு விட்டு சி.ஒ.சி. பஸ்ஸில் கிராண்ட் பாஸ் போய் பிறகு நஸ்ருத்தீனின் கிட்டங்கிக்குப் போய் இரவு தங்கி (தங்குவதென்ன இரவு முழுவதும் அரட்டை அடித்துவிட்டு) இல்லம் செல்வது வழக்கம். கடைசி பஸ் இரவு பதினோரு மணிக்கு என்றெண்ணி பேஸ்லைன் ரோடு வழியாக கிராண்ட்பாஸ் வரை நடந்த நாட்கள் உண்டு. பிறகு தான் தெரிய வந்தது. முதல் பஸ் இரவு 12.30க்கு என்று ஒரு நாள் உறக்கக் கிறக்கத்தில் கண்டக்டர் எங்களிடம் டிக்கட் வாங்காதது மட்டுமல்ல, கொடுக்க முயன்றபோது கோபப் பட்டு விட்டு மீண்டும் தூங்கிப் போய்விட்டார். அதற்கு சண்முகம் அடித்த ஜோக் "சி இட்ஸ்) ஒ.சி”
நாடகத்தின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஆரம்பத்திலும், முடிவிலும் விளம்பரம் இடம் பெறும். இதை அநேகமாக மயில் வாகனம் தான் செய்வார். விளம்பரம் என்றால் காட்டுக்கத்து கத்துவது அவருடைய தனிப்பாணி, கேட்டால் அப்படியில்லாவிட்டால் “யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கு கேட்காது’ என்பார். சினிமா டைரக்டர் ஏ.பி. நாகராஜனின் படங்களிலும் நடிகர்கள் காட்டுக்கத்துக் கத்தித்தான் பேசுவார்கள். அதற்கு அவர் சொன்னக் காரணம் "கிராமப்புற கொட்டகைகளில் வசனம் நன்றாகக் கேட்க வேண்டுமென்றால் இது அவசியம்” என்பதே இருவருக்குமே ஒலியின் சாத்தியக்கூறுகள் பற்றியும் ஒலிப் பொறியியலின் மகிமை பற்றியும் ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது என்பது என்னுடைய துணிச்சலான அபிப்பிராயம். புகழுக்கும், திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதும் அதில் அடக்கம்.
ஒரு முறை மயில்வாகனம் ஊரில் இல்லை. விளம்பர
47

Page 26
அப்துல் ஜப்பார்
வாசகங்களை என்னை வாசிக்கும்படி சானா சொன்னார். எலிகண்ட் ஃபினிஷ் ஜோர்ஜட் என்னும் அந்தத் துணியை அணிந்து மகிழும் ஒரு பெண் அதன் சுகபானுபவத்தை விரகதாபத்துடன் வெளிப்படுத்துவதுபோல் அந்த விளம் பரத்தை நான் கையாண்டேன். சகாக்கள் பாராட்டியது பெரிதல்ல, பல நிறுவனங்கள் என் குரலை தங்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்த முன் வந்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. சொல்லப்பட்ட காரணம், வர்த்தக ஒலிப்பரப்புக்குத் தனியாக 'ஒடிசன்’ பாசாக வேண்டும் என்பதே. மிக எளிதான காரியம். ஆனால் கொள்கை அளவில் அதனை நான் மறுத்தேன். வர்த்தக - தேசீய - கல்வி ஒலி பரப்புகள் இலங்கை வானொலியின் அங்கங்களே. ஒன்றில் தொடர்ந்து பங்கு பற்றி வரும் நான் இன்னொன்றுக்குத் தனியாக ஒடிசன் பாசாக வேண்டும் என்று சொல்வது வடித்தெடுத்த கிறுக்குத்தனம் ' என்கிற இயல்பான கோபம் என்னுள் இருந்தது. என் நேரம் வந்தது. 'மாடசாமி’ என். சோமசுந்தரம் என்கிற அந்த மாபெரும் கலைஞன் இந்தியா திரும்ப நேரிட்டது. சி. சண்முகத்தின் அடுத்த தொடர் துணி சம்ரஷ்ணம்’ ஏறக்குறைய மாடசாமி ரோல், பழனி என்கிற பெயரில்! சானா நடிக்கச் சொல்லும் போது மறுக்க முடியுமா என்ன? வளைந்து, நெளிந்து குழைந்து என்னை விட்டு விடும்படி சொன்னேன். காரணத்தைக் கேட்ட போது சானாவும் வெகுண்டார். சண்முகத்துக்கும் கோபம் வந்துது "சானாவே ஒடிசன் இல்லாம எடுத்திருக்கைக்குள்ளே." அப்புறம் வாயிலிருந்து உதிர்ந்தவை தனி அகராதியில் சேர்க்கப்பட வேண்டியவை.
எதிரிகளைக் கூட ஆயுதங்களைக் கீழே போட வைக்கும் ஒரு அற்புதமான சிரிப்பு மயில் வாகனத்துக்கு உண்டு. ஒரு நாள் அதை உதிர்த்தவராக என் தோளில் கை
48

காற்று வெளியினிலே.
போட்டுக் கொண்டு "என்னடாப்பா நீ பெரிய டிமாண்ட் காட்டுறியாம். சானாகிட்ட நீ ஓம்’ எண்டு சொன்னதாகச் சொல்லிடப்போறேன்" என்று என்னிடம் அபிப்பிராயம் கேட்காமல் அவரே தீர்மானத்தையும் வெளியிட்ட அந்த ராஜதந்திரத்துக்கு என்னால் மறு பேச்சுப் பேசமுடியாமல் போய்விட்டது. நாடகத்தைப் பொறுத்தவரை பெயர் தான் மாற்றமே தவிர மற்றவையெல்லாம் “டிட்டோ - டிட்டோ’ புதிதாக எதையும் செய்ய முடியவில்லை. மாடசாமியின் நிழலிலிருந்து பழனியால் தனித்து வெளியே வரமுடிய வில்லை. நன்றாகச் செய்தேன். பாராட்டுக் கிடைத்தது. ஆனால் இந்தப் பாத்திரத்தைக் கையாண்டதில் என். சோமசுந்தரம் என்னைவிட நிச்சயமாக ஒரு மகத்தான கலைஞன் என்பதை நான் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
வர்த்தக ஒலிபரப்பில் நாடகத்துக்கு ஒரு தனி மவுசு வந்த போதிலும் தேசீய ஒலிப்பரப்பின் "நாடக அரங்கு" தன் பிடியை விடவே இல்லை. காரணம் நல்ல தயாரிப் பாளர் நல்ல நடிகர்கள் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர்கள். அருமையான ஸ்கிரிப்ட்டுகள். என்.எஸ்.எம். ராமையா, வேதவனம் சக்கரியாஸ்மியோன், தாழையடி சபாரத்னம், எம்.நஸ்ருத்தீன் என்று நல்லதொரு வட்டம். ராமையாவைத் தவிர மற்றவர்கள் இலக்கியத்தின் வேறு எந்தத் துறை களிலாவது சோபித்தார்களா என்பது தெரியாது. ஆனால் இந்தத் துறையில் நிச்சயமாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.
ராமையா தன் பலத்தையும் தன் பேனாவின் சக்தி யையும் கடைசி வரை புரிந்து கொள்ளாமல் போன இலக்கியவாதி. இவரது "57 ராத்தல் தேயிலை"ச் சிறுகதை, இலக்கியம் படைப்புகளுக்காக என்னென்ன விருதுகள் உண்டோ அத்தனைக்கும் தகுதி உடையது. கொழும்பில் அன்று எழுத்தாளர்களுக்காக "எழுத்தாளர்" என்கிற
T-4 49

Page 27
அப்துல் ஜப்பார்
வார்த்தைக்கு முன்னால் எத்தனை அடைமொழிகள் போடமுடியுமோ இலங்கை - முற்போக்கு - தமிழ் - நவீன இப்படி) அத்தனை சங்கங்கள் இருந்தன. அவை அத்தனையிலும் அக்குவேறு ஆணி வேறாக அலசப்பட்ட சிறுகதை இது. எளிமை - எளிமை - எளிமை - இதுதான் ராமையா. தோற்றத்தில் - பேச்சில் - நடை உடை பாவனைகளில் - எழுத்தில் எல்லாவற்றிலும் எளிமை - இனிமை. வயிற்றுப் பிழைப்புக்காக கணக்க ராகவும், மனநிறைவுக்காக எழுத்தாளராகவும் இருந்த இவருக்கு ஒரு கால கட்டத்தில் எழுதவே முடியாதவாறு கைவிரல்கள் வாதத்தால் முடங்கிப் போய்விட்டன என்பது விதியின் குரூரமான விளையாட்டு. " நாடகங்களில் இவரது “அந்திவானம்", "தாயில்லாப் பிள்ளை” ஆகியவை மைல்கற்கள். இரண்டாவது என்னால் என்றென்றைக்கும் மறக்க முடியாத நாடகம். நானே ஒரு தாயில்லாப்பிள்ளை. அதில் என் குழந்தையாக "வீரகேசரி" முன்னாள் ஆசிரியர் ஹரன் அவர்களுடைய மகன் சந்திர சேகரன் - பச்சிளம் பாலகன் - நடித்த நடிப்பு இன்றும் என்னை மெய்சிலிர்க்க வைக்கும். அந்த நாடகத்தில் அந்த மழலையில் உள்ளக்கிடக்கையையும், தந்தையின் பாசப் பிணைப்பையும் மிக அற்புதமாக ராமையா படம்பிடித்துக் காட்டி இருந்தார். - . "
இது நடந்து வெகுகாலத்துக்குப் பிறகு என்னுடைய ஒரு வர்த்தகச் சுற்றுப் பயணத்தின்போது வேலூர் போயிருந்தேன். அங்கே சி.எம்.சி. மருத்துவக்கல்லூரியில் ஒரு கண்காட்சி. ரசித்துப்பார்த்துக் கொண்டே வருகிறேன். திடீரென்று "டேடி" என்று ஒரு குரல், திரும்பிப் பார்க்கி றேன், இளமைப் பொலிவுடன் அழகான ஒரு இளைஞன். அடையாளம் காணும் முயற்சியாக நான் புருவங்களைச் சுருக்கி ஆலோசிக்கும் முன்பு அந்தப் பளிரென்ற புன்
50

காற்று வெளியினிலே.
சிரிப்பும் குழந்தை முகமும் காட்டிக் கொடுத்து விடுகின்றன. "ஒ. மை டியர் போய். சந்திரசேகரன்! டொக்டர் சந்திரசேகரன்!! பெற்றப்பிள்ளைகளை கண்டது போன்ற பெருமகிழ்ச்சி எனக்கு.
சக்கரியாஸ்மியோன் பெரும்பாலும் சரித்திர சம்பவங் களைப் பின்புலனாக வைத்தே நாடகங்கள் எழுதுபவர். சரித்திரக்கதைகள் என்றால் அவை அநேகமாக எல்லோ ருக்கும் தெரிந்து இருக்கும் அவற்றை நான்கு பாத்திரங்கள் வாயிலாக மீண்டும் சொல்வதில் என்ன புதுமை - என்ன பெருமை இருக்க முடியும்? புதிய கோணங்களில் படைக்க முயன்றால் அவை வாதப்பிரதி வாதங்களுக்கும் சச்சரவு களுக்கும் வழி வகுக்கலாம். எனவே இவர் கையாண்ட உத்தி அந்தந்தப் பாத்திரங்கள் ஜீவனுள்ளவைகளாக வலுவானவையாகப்படைத்து உலவ விட்டதே. இவர் நாடகங்களில் பெரிய - சிறிய பாத்திரங்கள் என்றிருக்காது. ஆகவே அநேகமாக எல்லா நல்ல நடிகர்களும் பங்கேற்க வேண்டியதிருக்கும் அப்படிப் பலரையும் ஒரே நாடகத்தில் ஒன்று சேர்க்கும் பெருமையும் அவருக்கு உண்டு. நடிகர்கள் கணபதி, தாசன் பெர் னாண்டோ ஆகியோர் இவருடைய நெருங்கிய தோழர்கள். இவருடைய படைப்பில் இவர்களது தாக்கங்களும் இருந்திருக்கும் என்று சொன்னால் அது ஸ்மியோனை சிறுமைப்படுத்துவதாகாது மாறாக, நல்ல ஆலோசனைகளை ஏற்று தன்னை மேம்படுத்திக் கொள்ளும் மனப்பக்குவம் அவருக்கு இருந்தது என்று தான் அதற்குப் பொருள். சமீபத்தில் சகோதரி ராஜேஸ்வரி சண்முகத்துக்கு நான் அளித்த வானொலிப் பேட்டியில் இவரைப் பற்றிக் குறிப்பிட்ட சில வரிகளைக் கேட்டுவிட்டு இலங்கையின் எங்கோ ஒரு மூலையிலிருந்த வண்ணம் என் இந்திய முகவரியைக் கண்டுபிடித்து எனக்குக் கடிதம் எழுதியது என்னை மிகவும் நெகிழ வைத்தது.
51

Page 28
அப்துல் ஜப்பார்
கொழும்பு வீரகேசரி நாளிதழின் வாரப்பதிப்பில் நண்பர் காவலூர் ராஜதுரை எழுதிய கவிதை ஒன்று வந்திருந்தது.
"அல்லாவும் -சித்தாந்த புத்த தேவும், ஆவியில் உருவான ஏசு, காந்தி எல்லோரையும் உற்பவித்த ஆசியா மண்." என்கிற வரிகளைப் படித்து விட்டு ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினேன். “அல்லா என்று நீங்கள் இங்கே குறிப்பிட்டிருப்பது முகம்மது நபி (சல்) அவர்களை என்று நினைக்கிறேன். அது தவறு. அல்லா என்பது இறைவனின் பெயர். முகம்மது நபி (சல்) அவர்கள் ஒரு மனிதர்தான். அவரை இறைவனின் திருத்தூதர் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள். எனவே "முகம்மதுவும்." என்று கவிதை வரிகள் இருந்திருக்க வேண்டும்." என்று குறிப்பிட்டி ருந்தேன்.
சில நாட்களுக்குப் பின் என்னைத் தேடி ஒரு சினிமா நட்சத்திரத்தின் தோற்றப் பொலிவுடன் ஒரு கவர்ச்சிகரமான இளைஞர் வந்தார். கடிதத்தின் ஆரம்பம், முடிவு, உள்ளடக்கம் எல்லாவற்றிலுமே ஒரு தனி ஸ்டைல் தென்படுவதாகச் சொன்னார். வணக்கம். என்று துவங்கா மல், முகமலர்ந்த முகமன்கள் என்று துவங்கிய விதம் அன்புடன் என்று முடிக்காமல் வாஞ்சையுடன் என்கிற வித்தியாசம் ஆகியவை பானைச்சோறின் பதத்துக்கு சான்று என்றார். ‘அது சரி. நீங்கள் யார்?’ என்கிற கேள்விக்கு வந்து விழுந்த பதில் என்னை ஆச்சரியத்தால் திக்குமுக்காட வைத்தது. ‘வீரகேசரி உதவி ஆசிரியர் சில்லையூர் செல்வராசன். ஒ. எண்பது வயது படுகிழமாக, பழுத்த பழமாக இருக்கும் என்று நான் கற்பனை செய்திருந்த அந்த "தான் தோன்றிக் கவிராயர்" இந்த அழகு இளைஞன்? சில்லையூர் மூலம் எனக்கு ஒரு பெரிய இலக்கிய வட்டத்தின் வாசலே திறந்தது. இதில் மூவர்
52

காற்று வெளியினிலே.
ஈண்டு குறிப்பிடத்தக்கவர்கள்.
ஒன்று குறுவைத்தெரு இக்பால். தன்னை ஒரு பெரிய இலக்கிய ஜாம்பவான்’ என்கிற தோரணையில் இலக்கிய கூட்டங்களில் பலரையும் தூக்கி எறிந்து பேசுவார். இதற்குப் பயந்து தான் இவருக்கு மேடையில் இடம் கொடுக்கிறார்களோ என்று நான் பலமுறை எண்ணிய துண்டு. ஏனெனில் இவரது பேச்சில் மேதாவித்தனத்தை விட பாமரத்தனமே தூக்கலாக இருக்கும். இலங்கை வானொலி இஸ்லாமிய நிகழ்ச்சியில் இவர் ஒரு பாடகரும் கூட பாடும் போது சுருதி இவரைவிட்டு விலகிப் போகும்; இவர் தமிழை விட்டு விலகிப் போவார். இதனை பத்திரிகையில் விமர்சித்த மக்கினை கை நீட்டி அடித்தார். தன்னைப் பற்றிய ஒரு சிறு விமர்சனத்தை தாங்க முடியாத இவருக்கு மேடையில் ஏறி பிறர் படைப்புகளை குறை சொல்ல என்னயோக்கியதை இருக்கிறது என்று சில்லையூர் முன்னிலையில் வைத்தே கேட்டேன். அதற்காக இந்த ‘பாபர் ஸ்ட்ரீட் சண்டியர்’ என்னையும் அடிக்க வருவார் என்று நினைத்தேன். மாறாக அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் அதன் பிறகு சற்று அடக்கி வாசிக்க ஆரம்பித்தார்.
இரண்டு, சாதாரண வேட்டி - சட்டை அழுந்த வாரி விடப்படாத தலைமுடி. ஒழுங்கு செய்யப்படாத மீசை கையில் ள்ப்போதும் புகையும் பீடி இவற்றுடன் கடைசி வரிசையில் ஒரு கறுத்த மனிதர் அப்பாவி போன்ற தோற்றத்துடன் அமர்ந்திருந்தால் அது அடிக்கப் போகும் புயலுக்கு முன்னுள்ள அமைதி என்று யாராலும் எளிதில் கண்டுபிடித்து விடமுடியாது 'எஸ்.பொ’ என்பது இவரது செல்லப் பெயர். ஆனால் இலக்கியப் போலிகளை ஈவு இரக்கமில்லாமல், முகதாட்சண்யம் பாராமல் தோலுரித்துக் காட்டுவதால் இவரை "எக்ஸ்போஸ்’ என்று நான் குறிப்பிடு
53

Page 29
அப்துல் ஜப்பார்
வதுண்டு.
இலக்கியத்தில் பம்மாத்து என்பது இவரிடம் எடுபடாது கரகரத்த குரலில் இந்த மட்டக்களப்பு சிங்கம் கர்ஜனை செய்யும்போது எந்தக் கொம்பனானாலும் சரி உள்ளூர உதறல் எடுப்பது உறுதி.
மேடையை விட்டு இறங்கினால் இளம்பிறை ரகுமான் “ரெயின்போ’ கனகரத்தினம், சாத்தான் குளம் (ஞானியார்) முகம்மதலி பல வேளைகளில் நான் என்கிற இலக்கிய உள்வட்டத்துக்கு இவர் தலைவர் செவிக்கு மட்டுமல்ல வயிற்றுக்கும் உணவு ஈந்து கொண்டே நடைபெறும். அந்த இனிய உரையாடல்கள் இன்றும் நெஞ்சில் பசுமையாக நிலைத்திருப்பவை.
மூன்று, கலாநிதி கைலாசபதி, மேட்டுக்குடியில் பிறந்த ஒரு பொதுவுடமைவாதி. இந்த முரண்பாடு அவரை ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் பலர் அதை ஜீரணிக்கக் கஷ்டப்பட்டார்கள். அவருடைய படிப்புக்கும் செல்வாக்குக்கும் பணவருவாயும் அந்தஸ்தும் உள்ள பதவிகளை - தேடிப் பிடித்திருக்கலாம். ஆனால் 'தினகரன்’ நாளிதழின் ஆசிரியர் பதவியே அவரைக் கவர்ந்தது. செய்திப் பத்திரிகையான அதற்கு ஓர் ‘இலக்கிய முகம்’ தோற்றுவித்த பெருமை அவரைச்சாரும்.
பி.பி.சி.யில் "விஜில்’ என்கிற ஒரு நாடகம் ஒலி பரப்பானது. அதை கைலாசபதி 'திறந்த கல்லறை என்கிற பெயரில் மொழி பெயர்த்திருந்தார். டாக்டர் கா.சிவத்தம்பி, எம்.எஸ். ரத்தினம், ரேடியோ மாமா சரவணமுத்து நிலைய அதிகாரி கே.எஸ். நடராஜா என்கிற ஜாம்பவான்களுடன் 'பொன்ஷியஸ் பைலேட்' என்கிற கதாபாத்திரத்தில் நான் புள்ளி இயல் துறை அதிபரும் கைலாசபதியின் உறவின ருமான மாணிக்க இடைச்காடர் முதல் அவரது குடும்பத்
54

காற்று வெளியினிலே.
தினர் பலரும் கலையகத்தில் ஆஜர், ஒத்திகை மும்முரத்தி னிடையே சானா புயலாய் கலைகயத்தினுள் நுழைந்தார். நான் இத்தனை பாடு பாட்டு பயிற்று வித்தது ஜபாரைத் தான். ஆனால் ஜபார் சிவாஜியாக இருக்க நினைத்தால் "லெட் ஹிம் கெட் அவுட் ஆவ் த ஸ்டூடியோ” என்றார் சூடாக ட்ரமட்டிக்காக! அவமானத்தால் குன்றிப் போனேன். கண்கலங்கியவனாக கேன்டீனுக்குச் சென்றேன். சானா வந்தார். "தம்பி ஏன் சிங்கத்துக்கு வாலாக இருக்க நினைக்கிறீர். நரி என்றாலும் பரவாயில்லை அதற்குத் தலையாய் இரும் ஐந்து ரூபாய் நல்ல நோட்டுக்குத்தான் ஐம்பது ரூபாய் போலியை விட மதிப்பு அதிகம்" என்றார்.
"சானா, இன்று இலங்கையிலிருக்கும் எண்பது லட்சம்பேரும் எண்பது லட்சம் கதாபத்திரங்கள். அப்படி இருக்க, ஒரு குறிப்பிட்ட நடிகரை நான் கொப்பி அடிப்ப தாக நீங்கள் சொல்வது அபாண்டம் இல்லையா." நான் முடிக்கவில்லை. சானா என் முதுகில் தட்டி, "தேட் இஸ் இட் போய், தேட் இஸ் த ஸ்பிரிட்” என்றார். கலையகம் திரும்பியதும் "மற்றவியள் எல்லாம் அவரவர் திறமையில் வந்தவை. ஆனால் ஜபார் என்னுடைய 'ஒன்ப்ரடக்ட்” அதனால்தான் அவர் தவறு செய்தால் என்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. என்றாலும் ஒண்டு சொல்றன். நீங்கள் கோவிச்சுக் கொண்டாலும் சரி. ஹி இஸ் நம்பர் ஒன்” என்றார்.
அந்த மாமேதையை சானாவை இன்னும் நெஞ்சிலி ருத்திப் போற்றும் நான், எந்தக் கலைஞனின் சாயலுடன் என் நடிப்பில் பிடியாதிருக்க இன்றளவும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன். என்றாலும் ஒன்று சொல்வேன். சிவாஜி எனும் அந்த மாபெரும் கலைஞன் என்றும் என் அபிமானத்துக்கு உரிய கலைமேதை.
55

Page 30
அப்துல் ஜப்பார்
நஸ்ருத்தீனின் எழுத்து, ரொசாரியோ பீரிசுடன் சேர்ந்த கூட்டு முயற்சி, என்று சொன்னால் தப்பில்லை, ரொசி சில அருமையான கதைக் கருவைச் சொல்வார். அதிலுள்ள முடிச்சை அவிழ்க்க சில சம்பவங்களைச் சொல்வார். நாம் நினைத்துக்கூடப் பார்க்காத நிஜ வாழ்க்கைப் பாத்திரங்களைக் கோடிட்டுக் காட்டுவார். ஆனால் இவை எதையும் கோர்வையாக எழுத்தில் சொல்ல அவருக்குத் தெரியாது.
ஆனால் இவற்றுக்கு அழகும், வடிவமும், முழுமையும் கொடுக்கும் அற்புதமான காரியத்தை நஸ்ரூத்தீன் செய்வார். நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல, நல்ல நடிகரும் கூட. ஆனால் இவரை மேடை ஏற மட்டும் விட்டு விடக் கூடாது. ரசிகர்கள் "போர்’ அடித்துச் செத்துப் போவார்கள். ஒரு கையைத் தூக்க மட்டும் கால். மணி நேரம் எடுப்பார். கேட்டால், "க்ளாஸிக்’ நடிப்பு என்பார். என் மீது ரொம்பப் பாசம். பேசும்போது நீங்கள், நாங்க எல்லாம் கிடையாது. உரிமையுடன் டேய் போட்டுத்தான் பேசுவார். சற்றுக் கருவலான நிறம். ஆனால் கவர்ச்சி கரமாக இருப்பார். மிக, மிக நேர்த்தியாக உடை அணிவார். எங்கள் வட்டத்தில் இவர்தான் "காதல் மன்னன்". இந்த விஷயத்தில் இவர் எனக்கு நேர் எதிர். ஆனால் இவர் எந்தப் பெண்ணின் பின்னாலும் போனார் என்று சொல்ல முடியாது. ஆனால் நிறைய பெண்கள் இவர் பின்னால் வந்தார்கள் என்பதே உண்மை. இது இவருடைய அந்தரங்க விஷயம். இதை நான் இவ்வளவு வெளிப்படையாக பத்திரிகையில் எழுதுவது நாகரீகமல்ல. எனினும், ஏன் சொல்ல வந்தேன் என்றால் என்னை வியப்பில் மூழ்க வைத்த அவரது இன்றைய நிலை, ஆன்மீக விஷயங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் - தப்லீக் இயக்கத்தில் - தீவிரமாக தன்னை இணைத்துக் கொண்டு ஒரு ஞானியைப் போல் இந்தியாவில் வாழ்ந்து கொண்டி
56

காற்று வெளியினிலே.
ருக்கிறார் என்பதை சொல்லத்தான்.
தாழையடி சபாரத்னம் சற்று வித்தியாசமானவர். சானாவைத் தவிர வேறு யாரும் தன்னுடைய எழுத்துக் களில் கை வைப்பதை அனுமதிக்க மாட்டார். வசனங் களைக் கூட உச்சரிக்கும் செளகரியத்துக்காக, அதன் அர்த்தம் மாறாமல் அப்படி இப்படி சிறிது மாற்றினாலும் "ஏன் அப்படி? அதில் உள்ளது. போலவே பேசிப் பாருமன்” என்பார். அவர் இதை எதும் தெரிந்து சொன் னாரோ அல்லது ஒரு கெளரவப் பிடிவாதத்துக்காகச் சொன்னாரோ தெரியாது. ஆனால் வசனங்களை நம் செளகரியத்துக்கு மாற்றுவதை விட உள்ளது உள்ளபடியே கையாள்வது சில புதிய பரிமாணங்களைத் தொட உதவும் என்பது என்னுடைய அனுபவ பூர்வமான உண்மை. இவரது "மகிழ மரத்தின் கீழ்” அருமையான நாடகம். இது எத்தனை தடவைகள் மறு ஒலிப்பரப்பாயிற்று என்று சொல்வது கடினம். அதை எத்தனையாவது தடவை கேட்டாலும் ஒரு புதிய நாடகத்தைக் கேட்ட உணர்வைத் தான் தோற்றுவிக்கும்.
நான் இந்தியா திரும்பிய போது பொருளாதார ரீதியாக என் குடும்ப நிலை அவ்வளவு சீராக இல்லை. எனவே என்னுடைய எல்லா ஆசாபாசங்களையும் மூட்டைக் கட்டி வைத்து விட்டு பொருள் தேடலில் மூழ்கிப் போனேன். எனக்கு முன்பு வந்த சோமசுந்தரம், கணபதி - பஞ்சவர்ணம் - லட்சுமணன், என்று யாரும் வானொலிப்பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. கடைசியாக அந்த லிஸ்டில் நானும் - இதற்கிடையில் இலங்கையில் சில நண்பர்கள், "இதுகளுக்கெல்லாம் இங்கே தான் வெண்சாமரம் இந்தியாவுக்குப் போனால் துடைப்பக் கட்டை கூடக் கிடைக்காது" என்று பேசிய குத்தல் பேச்சுக்கள் என் காதில் விழாமல் இல்லை. ஆனால் சில
57

Page 31
அப்துல் ஜப்பார்
ஆண்டு காலம் நான் அசையவில்லை.
ஒருநாள், இலங்கை வானொலியில் வெள்ளி விழாவை ஒட்டியா அல்லது வேறு காரணத்துக்கா ஞாபக மில்லை பல பழைய நாடகங்களை ஒலிப்பரப்பினார்கள். அந்த வரிசையில் “மகிழ மரத்தின் கீழ்" நாடகமும் ஒலிப் பரப்பாயிற்று. அதற்கு சகோதரி ராஜேஸ்வரி சண்முகம் வழங்கிய முன்னுரை என்னை வெகுமாக முடுக்கி விட்டு என்னுள் உறங்கிக் கிடந்த கலை உணர்வை மீண்டும் தட்டி எழுப்பிவிட்டது. அந்த உணர்வின் வேகத்தில் திருச்சி வானொலிக்கு எழுதிப் போட்டேன். நேர்முகத் தேர்வுக்கு வருமாறு அழைப்பு வந்தது சென்றேன்.
ஒரு பத்து பக்கப் பிரதி ஒன்று தந்தார்கள். ஒன்றில் லகரம், ரகரம், னகரம், ஆகியவற்றைப் பயன்படுத்தி விதவிதமான நூறு சொற்கள். மற்றவற்றில் சமூகம், சரித்திரம், புராணம், என்று பல்வேறு நாடகங்களிலிருந்து பல காட்சிகள். கலையகத்துக்குள் சென்றேன். அங்கு பிரபல வானொலிக்கலைஞர் திருமதி சந்திரகாந்தாவின் கணவரும் தன்னளவிலும் ஒரு பிரமாதமான கலைஞரு மாகிய கிருஷ்ணமூர்த்தி நின்றார். "எந்தப் பகுதியைச் செய்ய போகிறீர்கள்” என்று கேட்டார். ஒரு நீண்ட தூக்கத் துக்குப் பின் துயிலுணர்ந்த கும்பகர்ணன் இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்களை அறிந்து மனம் தவிக்கும் காட்சியை செய்யப்போவதாகச் சொன்ன போது அவர் தலையில் அடித்துக் கொண்டார். ஏன் எதற்கு என்று கவலைப்பட்டுக் கொண்டிராமல் ஒலிவாங்கிக்கும், எனக்கும் உள்ள இடைவெளியை என் கரத்தை நீட்டி அளந்தேன். பிறகு அதை அனுசரித்து நின்றேன். கிருஷ்ண மூர்த்தி ஒரு புதிய பிரமிப்புடன் என்னைப் பார்த்தார்.
அடுத்த £ഖ நிமிடங்களில் சத்தியத்துக்கும்
58

காற்று வெளியினிலே.
பாசத்துக்கு மிடையிலான போராட்டத்தில் கும்பகர்ணன் புழுவாகத் துடிக்கிறான். புலம்புகிறான். அந்த முழுப் பக்கமும் முடியும் வரை எங்கும் நிசப்தம். பிறகு ஒவ்வொரு பகுதியையும் செய்யுமாறு எங்கெங்கெல்லாமோ இருந்து குரல்கள் கேட்கின்றன. செய்கிறேன். கடைசியாக அலகு, அழகு, அளவு என்கிற பக்கத்தை ஆரம்பிக்கிறேன். திடீரென்று ஒரு குரல் கேட்கிறது. "இத்தனை நாள் எங்கு ஒழிந்து கிடந்தீர்கள்?” தொடர்ந்து கண்ணுக்குத் தெரியாத பல மனிதரின் சிரிப்பொலிகள் கிருஷ்ணமூர்த்தி உணர்ச்சி வசப்பட்டவராக அப்படியே வந்து என்னை கட்டித் தழுவுகிறார்.
அன்றைய திருச்சி நிலைய பிரதம அதிகாரி அன்று நாடகத்திற்கு பொறுப்பான அமரர் சுத்தமல்லி ரகுநாத் அவர்கள். போகும் முன்பு தன் அறைக்கு வந்துபோகுமாறு பணிக்கிறார். செல்கிறேன். அவரைப் போல் நானும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதில் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. "அடுத்த ஒரு மணி நேர நாடகம் - “புது வெள்ளம்’ அதில் முக்கிய பாத்திரம் உங்களுக்கு என்கிறார். ஒரு விநோதமான விஷயம் என்ன வென்றால் இலங்கை வானொலியில் நான் கடைசியாக நடித்த நாடகம், யாழ் மன்னன் சங்கிலி பற்றிய சரித்திர நாடகம் "அடி சாய்ந்த மூடி மன்னன்” ஆனால் அனைந் திந்திய வானொலியில் ஆரம்பம் "புது வெள்ளம்."
பிறகு திருநெல்வேலியில் வானொலி நிலையம் துவங்கியதும் எங்கள் மாவட்டத்துக்காரர்களை அங்கே அனுப்பிவிட்டார்கள். இந்தியாவில் அது ஒரு விசேஷம். எந்தப் பகுதியில் இருக்கிறோமோ அந்தப் பகுதி வானொலி நிலையத்தில் தான் நம் பங்களிப்பைச் செய்ய முடியும். மற்றப்பிரதேசத்து நபர்களும் அவர்களது படைப்பும் எவ்வளவு உயர் வானதாயினும் ஏற்றுக் கொள்ளப்பட
59

Page 32
அப்துல் ஜப்பார்
மாடடாது. இது தெரியாமல் இலங்கையிலிருந்து சிலர் சென்னை - திருச்சி வானொலி நிலையங்களுக்கு அவர்களது படைப்புகளை அனுப்ப அவை திரும்பி வர, அந்த கோபம் வேறொரு ரூபத்தில் வெளியானது. "எங்களை அங்கே சீண்டுவார் இல்லை. இங்கே மட்டும் இந்திய வம்சாவழி கலைஞர்களுக்கும். "இந்தியத் தமிழ் நாடகங்களுக்கும் முதலிடமா” என்று குரல்கள் ஒலிக்கத் துவங்கின. இந்த இந்திய வம்சாவழியினர் பலருக்கும் இந்தியாவே தெரியாது, என்பதும் மாவட்டத்துக்கு ஒரு சொல் வழக்குள்ள இந்தியத் தமிழ் அல்ல, இங்கு நாடகங்களில் கையாளப்படுவது மாறாக, எல்லோருக்கும் பொதுவான "சினிமாத் தமிழ்” என்பதும் இவர்கள் புரிந்து கொள்ளாதது பரிதாபம். ஆனால் யாழ்ப்பாணச் சொல் வழக்கு நாடகங்களுக்கு தகுந்த பங்கு தரப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டு அபிப்பிராயங்கள் இல்லை. அதிலும் சானாவுக்கு மிகுந்த ஆர்வம்.
நிறைய - தரம் வாய்ந்த - எழுத்தாளர்கள் இருந்தார்கள். ஆனால் நல்ல ஸ்கிரிப்ட்டுகள் உருவாக வில்லை "மண்வாசனை’ ‘சமூகப் பிரக்ஞை' என்று
விவாகாரத்துக்குரிய பிரச்னைகளைக் கிண்டி அது ஒலி பரப்புக்கு ஏற்கப்படாமல் நிராகரிக்கப்படும் போது, வானொலி ஒரு அரசு நிறுவனம், அதன் அதிகாரிகள் சில சட்ட திட்டங்களுக்கும் ஒழுங்கு முறைகளுக்கும் கட்டுப் பட்டவர்கள் என்பதையெல்லாம் மறந்துவிட்டு அவர் களுக்கு 'இனத் துரோகிகள்’ என்று முத்திரைக் குத்தி விட்டு ஒதுங்கிக் கொண்டவர்கள் ஏராளம். ஆக, யாழ் சொல் வழக்கில் சுமாரான ஸ்கிரிப்ட் வந்தாலும் ஏற்கும் நிலைக்கு நிலையத்தினர் தள்ளப்பட்டனர். அப்படிப்பட்ட நாட கங்கள் எப்படி இருக்கும்? யாழ்ப்பாணத்தவர்களே கேட்டு விட்டு முகம் சுளிக்கும் அளவுக்கு அவை அமைந்து
60

காற்று வெளியினிலே. போனதில் யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை.
இந்த நிலையில் தான், வாராது வந்த மாமணிபோல் வந்தாரையா "இலங்கையர்கோன்" சிவஞான சுந்தரம் அவர்கள். ஜனரஞ்சகமும், இலக்கியத்தரமும் இவரது ராஜ முத்திரைகள். “லண்டன் கந்தையா” “விதானையார் வீட்டில்" என்று இரண்டு தொடர் நாடகங்களை மட்டுமா இவர் எழுதினார்? "சானா" சண்முகநாதன், பேராசிரியர் கா. சிவத்தம்பி என்கிற இரண்டு உலகத்தரம் வாய்ந்த கலைஞர்கள் இலங்கையில் உற்பத்தியாவும் அல்லவா இவர் காரணமாக அமைந்து விட்டார். "லண்டன் கந்தையர்" நையாண்டி கலந்த நகைச்சுவை நாடகம் என்றால் “விதானையார் வீட்டில்" நாட்டு நடப்புகளை வீட்டுப் பின்னணியில் அசைபோடும் ஒரு அருமையான சொற் சித்திரம். ஒ. அது என்னவொரு அழகான "கொன்செப்ட்" விதானையார் கா. சிவத்தம்பியும், அவரது பாரியாள் திருமதி. பரிமளாதேவி விவேகானந்தாவும், வெண்கலக் குரல் வேந்தன். வி. சுந்தரலிங்கமும் ஒவ்வொரு இலங்கை யனுக்கும் அவர்கள் ஏதோ அந்நியோன்னியமான உறவினர்களைப்போல் தங்கள் முற்றத்திலிருந்தே உரை யாடுவது போன்ற பிரமையை ஏற்படுத்தியது எத்தகைய மகத்தான திறமை. ஆண்டுதோறும் பல்கலைக்கழக பேரா தெனிய, கொழும்பு வளாகங்கள் தமிழ் மேடை நாடகங் களை வழங்கும். பேராதனை நாடகங்களின் உயிர் நாடியே கா. சிவத்தம்பி, கலாநிதி கைலாசபதி பேராசிரியர் நித்தியானந்தன் ஆகியோர் தான். கொழும்பு தயாரிப்பில் சானாவுக்கு கணிசமான பங்கு உண்டு. அன்றைய நாட்களில் கொழும்பு வாழ் தமிழ் மேட்டுக் குடியினருக்கு இது ஒரு உற்சவம் போல. இந்த நாடகங்களில் பேசப்படும் யாழ் சொல்வழக்கை விடுத்தால் மற்றவற்றில் ஒரு மேல் நாட்டுத் தனம் தென்படுவதை தவிர்க்க முடியவில்லை.
61

Page 33
அப்துல் ஜப்பார்
ஆனால் தயாரிப்பு உத்திகளும் அலம்பல் சிலம்பல் இல்லாமல் மேல்நாட்டு உத்திகளுக்கு இணையாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும். நடிக - நடிகையரும் செழிப்பான குடும்பங்களிலிருந்து வரும் காரணத்தால் நல்ல மேடை ஆகிரிதியுடன் இருப்பார்கள். பிச்சைக்காரன் என்பதைக் கூட உடை சொல்லுமே தவிர உடம்பு சொல்லாது. இந்த நிலையில் நண்டும் சுண்டும் போல் காட்சியளித்த வானொலி நடிகர்களாகிய நாங்கள் மேடைக்கே லாயக்கில்லை என்று சானா கருதியதில் தவறில்லை.
ஏறக்குறைய இந்தக் காலக்கட்டத்தில் றிகே.எஸ். சகோதரர்கள் ஒளவையார், ராஜராஜசோழன் உட்பட பல நாடகங்களைத் தொடராக வெள்ளவத்தை சரஸ்வதி மண்டபத்தில் மேடை ஏற்றிவிட்டுச் சென்றார்கள் இந்தக் குழுவுக்கு இலங்கையில் கிடைத்த வரவேற்பும் ஆதரவும் இந்தியாவில் கூடக்கிடைத்திருக்குமா என்று சந்தேகப்படும் அளவுக்கு இருந்தது. காட்சிகள் மின்னல் வேகத்தில் மாறுவதும், சினிமாவைப் பார்ப்பது போல் ஒரு பிரமையை இவர்கள் ஏற்படுத்தியதும், இவர்கள் வெற்றிக்கு ஒரு காரணம். ரேடியோ மாமா தன் செலவில் குறிப்பிடத் தக்க மருமக்களையும் சானா தன் செலவில் நடிக - நடிகை யரையும் அழைத்துச் சென்று ஒன்றல்ல, பல நாடகங் களைப் பார்க்க வைத்தது குறிப்பிடத்தக்க அம்சம்.
இந்த நாடகங்களைக் குறித்து எங்களுக்குள் ஒரு பொதுவான சர்ச்சை நடந்தது. பொதுவாக ஆஹா ஒஹோ என்று புகழ்ந்தவர்களே அதிகம், ஒருவர் சொன்னார், "அவர்களைப் போல் இவ்வளவு சுறுசுறுப்பான காட்சி மாற்றத்துடன் நாடகம் நாம் நடத்த வேண்டுமென்றால் நமக்கு இன்னும் பத்து ஆண்டுகள் பிடிக்கும் என்றார். பொத்துக்கொண்டு வந்து விட்டது எனக்கு. நல்ல
62

காற்று வெளியினிலே.
நாடகங்கள், திறமைசாலிகள் என்பதுபோக புகழ் வாய்ந்த வர்கள் கூட - ஒப்புக்கொண்டேன். ஆனால் நாடகத்தை இப்படித்தான் அணுக வேண்டும் என்பதில் பெரிதளவு வேறுபட்டேன்.
"அரங்க அமைப்புகளுடன் ஒரு காட்சியை முடிக்க வேண்டியது. பிறகு படுதாவைப் போட்டு விட்டு, கதைக்குப் பொருத்தமோ, இல்லையோ நகைச்சுவை நடிகர்களைக் கொண்டு பின்புலத்தில் மறுகாட்சி தயாராகும் வரை அரட்டை அடிக்க சொல்ல வேண்டியது, பிறகு ஏன் காட்சிகள் மின்னல் வேகத்தில் நகராது, இந்த வித்தையைச் செய்ய நமக்கு ஏன் பத்து ஆண்டுகள் வேண்டும்? ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை?” என்று ஒரு பிடி பிடித்தேன்.
ஓர் உதாரணம் பாருங்கள். ஒளவையார் நாடகம், ஒரு காட்சி முடிகிறது. உடனே படுத்ா போடப்படுகிறது. ஒரு புலவர் வேடத்தில் ஃப்ரண்ட் ராமசாமி, “ஊரும் சதமல்ல. உற்றார் சதமல்ல." என்கிற பாடலைச் சொல்லிக் கொண்டு வருவார். சிவதாணுவும் குண்டு கருப்பையாவும் இடைமறித்து, "பிறகு எதுதான் சதம்?” என்று கேட்க, ஃப்ரண்ட் ராமசாமி "இலங்கையிலிருக்கும் காசு பணம் எல்லாமே சதமே" என்பார் அரங்கே சிரிப்பால் அதிரும். என் கேள்வி என்னவென்றால் ஒளவை யார் நாடகத்தில் இதென்ன அபத்தம்? இதெப்படி கெட்டித்தனமாகும்? அணுகுமுறையே தப்பு என்றேன். சினிமாவே நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வரும் போது நாடகத்தை சினிமா போல் நடத்த முயல்வது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை ஆகாதா? சானாவும் சிவத் தம்பியும், சில்லையூராரும் தவிர வேறு யாரும் என் கூற்றை ஆதரிக்கவில்லை. அதைப்பற்றி எனக்கு கவலை யுமில்லை.
63

Page 34
அப்துல் ஜப்பார்
றிகேஎஸ். சகோதரர்கள் வரவின் தாக்கமோ அல்லது ஏற்கனவே உள்ளில் இருந்த உணர்வுகளின் வெளிப்பாடோ தெரியவில்லை. கொழும்பு நகரில் புற்றீசல்கள் போல் நாடக மன்றங்கள் தோன்றின. ஞாயிறு தோறும் நாடகம் பார்க்க இயலும் என்னுமளவுக்கு நாடகங்கள் மேடை ஏற்றப்பட்டன. எல்லாமே ஏறக்குறைய இருபது நடிகர்கள் நாற்பது சீன்கள், பாட்டு, நடனம் என்று அவியல் கதம்பங்கள் - அள்ளித் தெளித்த அவசர கோலங்கள். மேடை நாடகம் என்றாலே பொதுமக்கள் மிரண்டு ஒடுமளவுக்கு இவை சீரழிந்தன.
ஜிந்துபட்டியில் ராஜேந்திரன் மாஸ்டர் என்று ஒரு பெரியவர் இருந்தார். நாடகம் என்றால் அதனை பய பக்தியோடு அணுகவேண்டும் என்று நினைப்பவர். இவருக்கு சீடகோடிகள் ஏராளம். தன்னை "இலங்கை சிவாஜி” என்று அழைத்துக் கொண்ட நண்பர் அமரர் என்தாலிப்தான் இவரது நாடகங்களில் அநேகமாக "ஹீரோ" ஒருநாள் அவர் என்னிடம் வந்தார், "அடுத்த நாடகத்தில் மாஸ்டர் உங்களைப் போட நினைக்கிறார். ஆனா ஒண்டு அவர் முன்னே யாரும் உட்காருவதை அவர் விரும்ப மாட்டார். அதனை நீங்கள் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்” என்றார். “பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதில் எனக்கு சிரமம் ஏதும் இல்லை. ஆனால் உங்கள் வகை நாடகங்கள் எனக்கு உடன் பாடில் லாதவை. என்னை விட்றுங்கோ." என்றபோது தாலிப் நம்பவே இல்லை. நான் தமாஷ் செய்வதாக நினைத்தார். என்னை அணுகிய எல்லோர் நிலையும் அதுதான். ஆனால் நான் சீரியஸ்ஸாகத்தான் அப்படிச் சொல்கிறேன் என்றதும் பலர் என்னை தலைக்கணம் பிடித்தவன் என்று கூட நினைத்திருக்ககூடும். நான் என் கொள்கைகளில் உறுதியாக இருந்தேன். பிரிட்டிஷ் - அமெரிக்க வாசக சாலைகளில்
64

காற்று வெளியினிலே.
நாடகம் பற்றி அதிக புத்தகங்கள் படித்தேன். படிக்கப் படிக்க காமா சோமா என்று நாடகம் நடத்துகிறவர்கள் மீது கோபம் கூட வந்தது.
வானொலி நாடக நடிகர்களும் சேர்ந்து ஒரு சபா துவங்கினர் - பூரீதேவி நாடக சபா. இதன் இலச்சினையை வரைந்தவர் சானா. ஆனால் அதன் இலட்சியங்களில் அவருக்கு உடன்பாடில்லை. வானொலி நடிகர்களாக இதனை துவக்கினார்கள் என்பதைவிட அவர்களை ஒன்று திரட்டி இப்படி ஒன்றை துவங்கி வைத்தவர் நடிகை வனிதா ஜோக்கிமின் கணவரும் நடிகரும் எழுத்தாளரு மான ஜோக்கிம் பர்னாண்டோவாகும். பொதுவுடைமைச் சார்புடைய சிந்தனையாளர். எல்லாத் துறைகளிலும் அவர்களை உருவாக்குவது என்கிற அவர்களது அடிப்படை லட்சியங்களில் ஒன்று என்று கூட இந்த அமைப்பை சொல்லலாம். ஜோக்கிம் தொழிலாளர் அமைப்புகளுடனும் தொடர்புடையவர். எனவே இது ஒரு நடிகர் தொழிற் சங்கமாக உருவெடுத்துவிட கூடாது என்ற அச்சம் சானாவுக்கு இருந்தது. அவர் அதை விட்டு தூர விலகி நின்றதற்கு அதுவும் ஒரு காரணம்.
புறக்கோட்டை இலங்கை - இந்திய காங்கிரஸ் காரியாலயத்தில் இதன் துவக்கம்! வானொலி நடிக - நடிகையர் எல்லோரும் அல்லது அநேகர் கலந்து கொண் டார்கள் என்று சொல்லாம். சட்ட திட்டங்கள் வாசிக்கப் பட்டபோதே இதன் கம்யூனிச அணுகுமுறை வெளிப்பட்டு விட்டது. சந்தா கிடையாது. ஆனால் நடிகர்கள் - நடிகையர் தாங்கள் பெறும் சன்மானத் தொகையின் ஒரு பகுதியைக் கொடுக்க வேண்டுமென்பதே அது. ரொசி சொன்னார். "அய்யோ நான் அதுக்காக புதுசா சம்பாதிக் கணும் நாடகத்துக்குக் கிடைக்கிற காசு வீட்டுக்குப் போகும் போது பொக்கட்டில் இருக்காது. கொட்டாஞ்சேனையில்
5T-5 65

Page 35
அப்துல் ஜப்பார் பஸ்ஸை விட்டு இறங்கினால் சிகரட் கூடக் கடனுக்குத் தான் வாங்க வேண்டும். பிறகு எப்படி?” ஆனால் சோம சுந்தரம் சற்றுக் காட்டமாகக் கேட்டார். “நாலு மாசத்துக்கு ஒரு நாடகம் செய்வறவனுக்குப் பரவாயில்ல. மாசத்தில் நாலு நாடகம் நடிக்கிற என் பாடு?" முடிவு எதுவும் செய்யாமலே கூட்டம் முடிந்தது.
பிறகு நாடகம் போடும் திட்டம் உருவானது. ஜோக்கிமே ஒரு ரஷ்ய நாவலை சிபாரிசு செய்தார். அது ஏற்கனவே “ஒடையில் நின்னு” என்னும் மலையாளப் படமாக வந்திருந்தது. பிறகு சிவாஜி நடிக்க ‘பாபு'வாக வெளி வந்தது. "மனித தெய்வம்” என்கிற பெயரில் இது நாடகமாக நடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. திணிக்கப் பட்டது. நாடக வடிவத்தை வாசிக்க ஆரம்பித்த ஜோக்கிம் காட்சியை விளக்கும் நோக்கத்தில் "அது ஒரு சிறிய அறை. அவன் முற்போக்கு இளைஞன் பல தலைவர்களின் படங்கள் இருக்கின்றன” என்றார். நான் கம்யூனிச எதிர்ப் பாளனோ ஆதரவாளனோ அல்ல, ஆனால் ஒரு வாதத்துக் காக "நீங்கள் குறிப்பிடும் தலைவர்கள் படங்கள் இருந்தால் தான் அவர் முற்போக்கு இளைஞன் என்று அர்த்தமா?” என்று கேட்டேன். ஜோக்கிம் சற்று கோபத்துடன், "உங்க ளுக்கு இந்த நாடகத்தில் பிரதானபாத்திரம் கிடைக்காது என்று எண்ணி குழப்பம் செய்யப் பார்கிறீர்களா?” என்று கேட்டார். நான் "அது நோக்கமல்ல எனினும் நீங்கள் சொன்னதால் சொல்கிறேன். நாடகத்தை அணுகும் முறை களில் நான் உங்களுடன் அடிப்படையிலேயே வேறு படுகிறேன். எனவே நீங்கள் இதில் பிரதான பாத்திரம் தந்தாலும் நான் ஒப்புக் கொள்வதாக இல்லை” என்றேன். நான் அவுட்!
பிரதான பாத்திரம் தாசன் பெர்னான்டோவுக்குப் போயிற்று. திறமைசாலிதான் ஆனால் அவரை விடவும்
66

காற்று வெளியினிலே.
அனுபவமும் திறமையும் வாய்ந்த பிச்சையப்பாவையோ ரொசியையோ தோர்வு செய்திருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். ரொசிக்கு இயக்கும் பொறுப்பும், பிச்சையப் பாவுக்கு இசை அமைக்கும் பொறுப்பும், கணபதிக்குப் பாடல் இயற்றும் பொறுப்பும் தரப்பட்டன. இத்தனை பேர் ஒன்று சேர்ந்த நாடகம் சூப்பர் ஹிட் ஆகி இருக்க வேண்டும். ஆனால் ஹிட் (அடி) வாங்கியது.
சானாவுக்கு ஆரம்ப முதலே இந்த ஏற்பாடுக்ள பிடிக்கவில்லை. தன் கைப்பிடிக்குள் நிற்கும் நடிகர்கள் ஜோக்கிம் கைக்குள் போகாவிட்டாலும் எங்கே தன் பிடி தளர்ந்து விடுமோ என்று பயந்திருக்க வேண்டும். "தாசனுக்கு இறைச்சியும் பிச்சைக்கும் ரொசிக்கும் எலும்புத் துண்டு களா?” என்று சீண்டிவிட்டுப் பார்த்தார். பிறகு என்னென்ன எங்கெங்கு தகராறு என்று நினைத்தாரோ அவைகளைப் பற்றிக் கேள்விகள் கேட்குமாறு தனக்கு விசுவாசமானவர் களைத் தூண்டிவிட்டார். ஆனால் நவரத்தினம் மாஸ்டர் சொல்லி இருக்கிறார். “தொண்டும் வேண்டாம் நீங்கள் சொல்லாமலே ஜபார் அதைச் செய்து கொண்டிருக்கிறார்" என்று. ஆனால் பொதுவாக நிலவிய அபிப்பிராயம் சானாவின் தூண்டுதல் பேரில் தான் நான் இவ்வாறு நடக்கிறேன் என்பது பிச்சையப்பாவுக்கு ரொசிக்கும் கூட இந்த ஏற்பாடுகள் ஆரம்பத்தில் பிடிக்கவில்லை, ஆனால் பொறுப்புகள் கிடைத்ததும் குளிர்ந்து போயினர். இவர்கள் தங்கள் பணிகளை செவ்வனே செய்தனர். தாசன் பெர்னான்டோ அருமையாக நடித்திருந்தார். எனினும் தோல்வி என்பது இவர்களை வெகுவாகப் பாதித்தது. எனினும் இது தொடர வேண்டும் என்று அவர்கள் (ரொசி. பிச்சையப்பா) விரும்பியது என்னை ஆச்சரியப்பட வைத்தது என்றால் அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்னை அதிர வைத்து. “சானாவுக்கு, சில நாட்களாக
67

Page 36
அப்துல் ஜப்பார் யாழ்ப்பாண பைத்தியம் பிடித்திருக்கிறது. அதற்கு இதுதான் சரியான வேப்பிலை வைத்தியம்” உள்விவகார அரசியல் என்றால் என்ன, ஆதிக்கப் போட்டி என்றால் என்ன என்பது எனக்குச் சிறிது சிறிதாகப் புரிய ஆரம்பித்தது. வெளியில் தெரியும் அத்தனை குதிப்பும், கொண்டாட்டமும், குதுரகுலமும் வெறும் போலியானவை என்பது தெரிய வந்தபோது வேதனையாக இருந்தது. எதிலும் பட்டுக் கொள்ளாமல் ஒதுங்கினேன்.
ஆனால் இஸ்லாமிய நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அது சாத்தியமாக இருக்கவில்லை. ஒதுங்கி இருப்பது என்பது இயலாமல் போயிற்று, எனவே இஸ்லாமிய நிகழ்ச்சியை விட்டே ஒதுங்க வேண்டியது வந்தது.
இஸ்லாமிய நிகழ்ச்சிக்குத் தனிப் பொறுப்பாளர் நியமனம் என்று வந்தபோது அனுபவமும் திறமையும் வாய்ந்த வி.ஏ.கபூர் அவர்கள் அந்தப் பதவிக்கு இயல்பாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பியவர்களுள் நானும் ஒருவன். ஆனால் அன்று நிலவிய இரு கோஷ்டிகளின் ஆதிக்கப் போட்டிச் சூழலில் அந்தப் பதவி காமில் மரிக்கார் அவர்களுக்குப் போயிற்று. மும்மொழிப் புலமை யும் சமய ஞானமும் அவருக்குச் சாதகமாக அமைந்த விஷயங்கள் என்று காரணம் சொல்லப்பட்ட போதிலும், கபூர் அவர்களை ஒதுக்கிவிட்டுச் செய்யப்பட்ட அந்த நியமனத்தில் அரசியல்நெடி அதிகம் இருப்பதாகவே நான் எண்ணினேன். எனினும் அவரைப்பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில் (அவரைப் பற்றி) முன் கட்டியே தீர்மானம் எடுப்பது சரியல்ல என்றும் எனக்குப்பட்டது. ஆனால் நிலைமைகளை கணிக்க அதிக நாட்கள் வேண்டி ருக்கவில்லை. தன்னுடைய அரசியல் பின்பலம் காரண மாக அவர் ஒரு நிகழ்ச்சிக்குப் பொறுப்பாளர் போல் அல்லாமல் ஒலிபரப்பு மா-அதிகாரி போல் நடந்து
68

காற்று வெளியினிலே.
கொள்வதாக ஒரு முணுமுணுப்பு தமிழ்நிகழ்ச்சி அதிகாரி களை சிப்பந்திகள் மத்தியில் கேட்க ஆரம்பித்தது. எங்கோ ஒரு அபஸ்வரம் தொனிக்கிறது என்பதை என்னாலும் உணர முடிந்தது. நஸ்ருத்தீனும் அவ்வாறு உணர்வதாகச் சொன்னார். "சங்கதிகள் எப்போதையும் போல் இருக்காது” என்றார் அவர் என்னை தங்கள் நிகழ்ச்சிகளில் உபயோகப் படுத்திக் கொள்பவர்கள் நிலைய அதிகாரிகளாயின் தாங்களே ஒரு வார்த்தை சானாவிடம் சொல்லி விடுவார்கள். வெளியார் யாரும் அழைத்தால் நானே சொல்லிவிடுவேன். இஸ்லாமிய நிகழ்ச்சிக்கென்று ஒரு அதிகாரி இல்லாதபோது நானே கேட்டுக் கொண்டேன். ஒருவர் வந்த பின் அவர் கேட்பது தான் மரபு மரியாதை என்று சானா அபிப்பிராயப்பட்டார். என்னை ஒரு நிகழ்ச்சிக்கு காமில் மரிக்கார் அவர்கள் அழைத்தபோது விஷயத்தை சாதாரணமாகச் சொல்வது போல் சென்னேன். ஆனால் அவரோ சற்றுக் காட்டமாக "மிஸ்டர் ஜப்பார் நான் உங்களை நிகழ்ச்சிக்கு அழைக்கிறேன். வருவதும் வராததும் உங்கள் இஷ்டம், ஆனால் உங்களுக்காக நான் யார் காலைப் பிடிக்கவும் தயாரில்லை” என்றார். நிகழ்ச்சி முடியும் வரை படப்படப்புடன் காணப் பட்டார். நிகழ்ச்சி முடிந்தபின்பு கேட்டார். "நான் கூப்பிட்டால் ஆயிரம் கலைஞர்கள் ஓடி வரக்காத்திருக்கும் போது உங்களுக்காக மட்டும் நான் ஏன் சானாவைக் கேட்க வேண்டும். நீங்கள் என்ன அவருடைய அடிமையா?” எனக்கேட்டதும் எனக்குச் “சுறுக்கென்றது. எனினும் பொறுமையாக "அப்படியல்ல. உங்கள் அலுவல கத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒரு மரபை நீங்களும் கடைப்பிடிப்பதில் என்ன தவறு? என்று கேட்டேன். உடனே அவர், "அப்படியானால் ஒண்டை நீங்கள் தெளி வாகப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் முஸ்லீம் நிகழ்ச்சி
'69

Page 37
அப்துல் ஜப்பார்
யைக் சேர்ந்தவரா அல்லது தமிழ்நிகழ்ச்சியைச் சேர்ந்தவரா என்பது எனக்குத் தெரிந்தாக வேண்டும். முஸ்லீம் நிகழ்ச்சியைச் சேர்ந்தவராயின், நாடகத்தில் உங்களைப் பயன்படுத்த சானா என்னிடம் அனுமதி பெற வேண்டும். நீங்கள் தமிழ் நிகழ்ச்சியைச் சேர்ந்தவராயின் இனிமேல் உங்களை முஸ்லீம் நிகழ்ச்சிகளில் எடுப்பது பற்றி நான் யோசித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்” என்றார். என் மூக்கைப் பிடித்துத் தரையில் உரசி அவமானப்படுத்தி விட்டது போன்ற ஒரு குரூர திருப்தி அவர் முகத்தில் பிரதி பலிப்பதைக் கண்டேன். சற்று உணர்ச்சி வசப்பட்டேன். எங்கள் இனத்தவருக்கே “கொப்பிரைட்" ஆன அந்தக் கெட்ட வார்த்தை நாக்கு நுனிவரை வந்துவிட்டது. எனினும் சுதாகரித்துக் கொண்டு நாகரீக வரம்பை மீறாமல் அமைதியாக, “அந்தச் சிரமம் உங்களுக்கு வேண்டாம். நான் இனி உங்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லை" என்றேன். அதை அவர் எதிர்பாராதது போல் அவர் முகத்தில் சிறிய ஓர் அதிர்வு. பிறகு சற்று உணர்ச்சி வசப்பட்டவனாக “உங்கள் அரசியல் பின்பலம் காரணமாக இலங்கை வானொலியை விட்டே வெளியே போக நேர்ந்தாலும் சரியே" என்று விடைபெற்றேன்.
காமில் மரிக்கார் நினைத்திருந்தால் அவரால் அதைச் செய்திருக்க முடியும். ஆனால் அவர் செய்யவில்லை. ஆனால் அத்தகைய ஒரு நிலை வேறோர் ரூபத்தில் வந்தது. அதிகாரிகளுடைய சுமூக உறவு சிதைந்து பனிப்போர் மிகுந்து, முஸ்லீம்கள், முஸ்லீம்கள் சம்பந்தப் பட்டயாவும் முஸ்லீம் நிகழ்ச்சியில் மட்டுமே என்கிற கருத்து, துரதிஷ்ட வசமாக உருவாகிவந்தது. பலீல் மாஸ்டர் பொதுவான ஒரு விஷயத்தைக் குறித்து எழுத, அதுமுஸ்லீம் நிகழ்ச்சிக்குத் தள்ளி விடப்பட அதை ஆட்சேபித்து அவர் மேலிடத்தில் முறையீடு செய்ய, கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை. இந்த
70

காற்று வெளியினிலே.
நிலையில் நானும் நஸ்ருதீனும் முஸ்லீம் நிகழ்ச்சிக்குப் போய் விடுவதுதான் நல்லது என்று தமிழ் நிகழ்ச்சி அதிகாரி கே.எஸ். நடராஜா அவர்களிடம் சிலர் கேட்டிருக் கின்றனர். அந்த மாதிரியெல்லாம் சிந்தித்து, நிகழ்ச்சியின் தரம் பாதிக்கப்படுவதை அனுமதிப்பதும், ஒரு நல்ல கலைஞனை இழப்பதும் தன்னால் இயலாத காரியம் என்று உறுதியாகச் சொல்லி விட்டார். அவர் நினைத்திருந்தால் என்னை பலிகடாவாக்கி தான் நல்ல பிள்ளையாகி இருக்கக்கூடும். சுயநலத்தை விட சில அடிப்படையான கொள்கைகளை உயிரினும் மேலாக கருத வேண்டும் என்கிற உண்மையை எனக்கு உணர்த்திய பெரியவர் திரு. கே.எஸ். நடராஜா.
அதனால்தான் சி.பி.எம். காசீமையும் இஸ்லாமிய நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு காமில் மரிக்காருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்கிற நஸ்ருத்தீனின் யோசனையை நான் ஏற்க வில்லை. அதற்கு இரண்டு காரணங்கள், ஒருவரின் தனிப் பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது முறையல்ல என்று எண்ணினேன். மேலும் காசிம் இஸ்லாமிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையென்றால் தமிழ் நாடகங்களில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்க வழிசெய்ய வேண்டும். அது அன்றைய சூழ்நிலையில் சாத்தியமல்ல. அப்படி வரும் போது நானும் நஸ்ரூத்தீனும் தமிழ் நாடகங்களில் பங்கெடுத்துக் கொண்டிருப்போம். எங்களுக்காக இஸ்லா மிய நிகழ்ச்சியைத் தியாகம் செய்யும் காசிம், எதுவும் இல்லாமல் சும்மா இருக்க வேண்டும். இது எந்த வகையில் நியாயமாகும்? என்பது என்வாதம். ஆனால் பிறகு நடந்த சம்பவங்கள் வேறு. எனக்கும் நஸ்ருத்தீனுக்கும் பாடம் படிப்பிப்பதைப் போல் காசிம் முழு வீச்சில் பயன் படுத்தப்பட்டார். “காமில் மரிக்காரிடமிருந்து நீங்கள்
71

Page 38
அப்துல் ஜப்பார்
முடியாது என்று சொன்ன அன்றிரவே காசிமுக்கு லெட்டர் கொண்டு போய் அவரை சம்மதிக்க வைத்ததே நான் தான்” என்று சகோதரர் கே.எம்.கே. மொஹிதீன் குதுரகலத்துடன் மார்த்தட்டிக் கொண்டார்.
அத்தகைய ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தவர் போல் காசிம் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். காரணம் "இவன் என்ன, என்னை விடப் பெரிய கொம்பனா?” என்று என்னைப் பற்றிய காழ்ப்புணர்ச்சி அவர் அடிமனத்தில் இருந்தே வந்திருக்கிறது.
சிறிது காலத்துக்குப் பிறகு மக்கீன், “டேய் காமில் மரிக்காருக்கு உன் மேல் ஒரு வருத்தமும் கிடையாது. அவர் பதவி ஏற்ற புதிதில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து அவரை முடிக்கிக் போட முயன்றார்களாம், அதனால் வெகுண்ட அவர் கொஞ்சமும் முரட்டுத்தனமாக நடந்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால் அந்த ஆதிக்கப் போட்டியில் அப்பாவியான நீ இடையில் அகப்பட்டுப் போனாய். அவ்வளவுதான். இப்போதும் அவர் உன்னை வரவேற்கத் தயார். சம்மதமானால் சொல் நான் (அந்த நானில் கொஞ்சம் அழுத்தம்) உன்னை அவரிடம் அழைத்துப் போகிறேன். என்ற போது, மக்கீன் எதை என்னிடம் சொன்னாலும் நான் முதலில் சொல்கிற பதிலை அப்போதும் சொன்னேன் "லெட் மி திங்க்”
ஆனால் நஸ்ருத்தீன், "நீ அப்படிச் சொல்லியே இருக்கப்படாது! போடா, உன் சோலியைப் பார்த்துக் கிட்டு என்று சொல்லி இருக்க வேண்டும்” என்று சிறிய போது ரொசி இடைமறித்தார். "ஜபார், மிஸ்டர் காமில் மரிக்கார் எதிர்ப்பார்த்தைவிட காசிம் வளர்ந்து வருகிறார் அல்லது வளர்ந்துவிட்டார் என்று நினைக்கிறேன். எனவே உங்களை ஒரு 'செக்மேட்டாக’ ஆகப் பயன்படுத்த எண்ண
72

காற்று வெளியினிலே.
லாம். அல்லது காசிமுக்கு அல்வாத்துண்டு ரோல்களாகக் கொடுத்து உங்களுக்கு நக்கா பிச்சா ரோல்களைத் தந்து உங்களை மட்டம் தட்ட எண்ணலாம். அல்லது அதன் மூலம் உங்களை நாடக அரங்கை விட்டுக் கழற்றிவிடும் உத்தேசம் இருக்கலாம். அதையெல்லாம் விடுங்க நீங்க அங்கே போனால் சானா நிச்சயம் காசிமை இங்கே இழுப்பார்” என்று பூச்சையைப் பிடித்துப் பயங் காட்டும் பாவனையில் அதே சமயம் யதார்த்தமாகப் பேசுவது போல் தொனிக்கும் வண்ணம் அடுக்கிக் கொண்டே போனார். இதில் இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா என்று நான் ஒரு கணம் திகைத்துண்டு.
ஆனால், "கலை எமக்களிப்பது ஊதியமல்ல, உயிர்” என்கிற சொற்றொடரை எங்கள் மொடர்ன்ஸ்டேஜ"க்காகக் கண்டுபிடித்த நான் உயிர் வாழ ஒரு தொழிலும் தேவை என்று உணர்ந்து ஒரு நிறுவனத்தில் சேர்ந்துவிட்டதையும் நேரமின்மை காரணமாக சனிக்கிழமை ஒத்திகை, ஞாயிறு ஒலிப்பதிவு என்கிற நாடக அரங்கே போதும் என்பதையும் வேறு நிகழ்ச்சிகள் வேண்டாமென்று தீர்மானித்ததையும் தெரிவித்த போது, எல்லோர் முகத்திலும் ஓர் ஏமாற்றம்.
வீண் விவகாரங்களிலும், வம்புகளிலும் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதில் ஒரு அனுகூலம். காலப்போக்கில் நம்மை வெறுப்பவர்களே நம்மை விரும்பக்கூடும். மிக நல்ல உதாரணங்கள் ‘பதுருல் மில்லத்' காமில் மரிக்கார் அவர்கள். லியாவுல் பன்னான் சி.பி.எம். காசிம் அவர்கள், 79ல் நான் இலங்கை வந்தபோது தமிழ் நிகழ்ச்சியில் என்னைச் சீண்டுவார் இல்லை. சகோதரி சற்சொரூபவதி நாதன் ‘நவீன நாடகங்கள்’ பற்றி ஒரு பேச்சு ஒலிப்பதிவு செய்தார். எனக்கு ஒரு காலத்தில் ஆசிரியராகவுமிருந்த சிவஞானம் மாஸ்டர் சொல்லி, ஜோர்ஜ் சந்திரசேகரன் ஒரு பேட்டி எடுத்தார். மலையாளத்தில் ஒரு பேட்டி வேறு! ஆனால்
73

Page 39
அப்துல் ஜப்பார்
இவை ஒலிப்பரப்பப்பட்டனவா என்பது எனக்குத் தெரியாது. சகோதரி விசாலாட்சி ஹமீது பலமுறை அழைத்துச் சொன்னபிறகு தமிழ்த்துறைத் தலைவி திருமதி. பொன்மணி குலசிங்கத்துக்கு என்னுடன் சில வார்த்தைகள் பேச மட்டுமே நேரம் இருந்தது. மற்றபடி இந்திய இசைக் கலைஞர் மணி கிருஷ்ணசுவாமியுடன் "ஷொப்பிங்" போவ தற்கே அவருக்கு நேரம் போதவில்லை. சகோதரர் பி.எச். அப்துல் ஹமீதும் சகோதரர் கே.எஸ் ராஜாவும் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த வர்த்தக ஒலி பரப்புப் போட்டி நிகழ்ச்சிகளில் என் மக்கள் பங்குகொண்டு வெற்றியும் பெற்றனர். இது 1979ம் ஆண்டு.
அதே சமயம் இஸ்லாமிய நிகழ்ச்சி என்னை இரு கரம் நீட்டி வரவேற்றது, எனக்காக சகோதரர் அஷ்ரப்கான் விசேஷமாக ஒரு நாடகத்தை எழுத சகோதரர் "பி.எச்’ அதில் நடித்ததோடு அற்புதமாக தயாரிக்கவும் செய்தார். நடிப்பதிலிருந்தே ஒதுங்கிவிட்ட சகோதரி ஆமினாபேகம் அதில் நடித்து என்னை பெருமைப்படுத்தினார். அந்த நாடகம் தான் "ஆக்ராவின் கண்ணிர்” வாழ்வாரை வாழ்த்தும் விழாவில் சரித்திர கால உடைகளோ ஒப்பனையோ இல்லாமல் மேடையேறவும் செய்த நாடகம்!
அடுத்து 1993ல் வந்தபோதும் அதிக வித்தியாச மொன்றுமில்லை. முஸ்லீம் நிகழ்ச்சியில் சகோதரர் பி.எச்.அப்துல் ஹமீது நெறிப்படுத்த நான், இளங்கீரன் சுபைர் அவர்கள், மானா மக்கீன், கே.எம்.ஏ, மொஹிதீன் ஆகியோர் கலந்து கொண்ட "இஸ்லாமிய நாடகங்கள்" பற்றிய கலந்துரையாடல் ‘வாழ்வோரை வாழ்த்தும் விழா மலரில் வெளியாகியிருந்த என்னுடைய ‘எண்ணத்தின் வண்ணங்கள்’ கட்டுரையையே ஆதாரமாக வைத்து பி.எச். உரையாடலைத் துவங்கியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.
74

காற்று வெளியினிலே.
பாபர் சக்கரவர்த்தியை ஒரு கொடுங்கோலனாக சித்தரிக்கும் பிரச்சாரம் இந்தியாவில் முடுக்கிவிடப்பட்டு அது உச்சக்கட்டத்தல் தீப்பொறி பறந்து கொண்டிருக்கும் வேளையில் அவரை ஒரு மனிதாபிமானமிக்க ஒரு வீரனாகச் சித்தரித்து சகோதரர் அஷரப்கான் எழுதிய நாடகம் பாபர். அதில் நான் பாபர் சக்கரவர்த்தி. நடிக்கவும் இயக்கவும் செய்தார் பி.எச். அப்துல் ஹமீது, சகோதரி ஆமினா பாருக், எனக்காக இன்னும் ஒரு முறை வானொலிக் கலையகத்தில் கால் வைத்தார். இதில் அமைச்சராகவே நடித்த இன்னொரு முக்கிய நபர் அன்றைய முஸ்லீம் சமய, பண்பாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள்.
இதில் விசேஷம் என்னவென்றால் இளமையில் படிக்கும் காலம் தொட்டே எனக்கும் அஸ்வருக்கும் எல்லா வற்றிலும், - படிப்பாகட்டும், விளையாட்டாகட்டும், கலைத்துறையிலாகட்டும் - போட்டா போட்டி காட்டா குஸ்திதான். அது ஒரு பனிப்போர் அல்ல. வெல்வெட் ரைவல்ரி இதற்கு என்ன தமிழ்? "ஸ்நேகமய மோதல்” என்று வைத்துக் கொள்வோமா?) எல்லாத்துறையிலும் சமகாலத்தவர்கள். ஆனால் நாங்கள் இருவரும் ஒரு சேர ஒரு வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுதான் முதல் தடவை என்பதை என்னாலேயே நம்ப முடியில்லை!
நடிப்பதையே விட்டுவிட்ட சகோதரிகள் விசாலாட்சி ஹமீதும், ராஜேஸ்வரி சண்முகமும் என்னோடு ஒரு நாடகம் செய்ய ஆசைப்பட்டனர். சகோதரி கமலினி செல்வராசன் அது தன்னுடைய ஒரு நீண்ட நாளைய ஆசை என்றார். எல்லோரும் சேர்ந்து சில்லையூராரின் கவிதை நாடகமான “ரோமியோவும் ஜூலியட்டும்’ எல்லோ ருக்கும் நல்ல வாய்ப்பைத் தரும் நாடகம் என்று ஆண்டி களாகச் சேர்ந்து மடம் கட்டினோம். ஆனால் வரம்
75

Page 40
அப்துல் ஜப்பார் கொடுக்க வேண்டிய சுவாமிகள் கல்லாக இருந்து விட்டனர். நாடகப் பொறுப்பாளர் ஜோர்ஜ் சந்திரசேகரன் "வாட்டு டூ மிஸ்டர் ஜபார்." என்று ஏதோ விளக்கம் சொன்னார். அவர் சொன்ன விளக்கம் அவர் காதிலேயே விழுந்திருக்குமா என்பது சந்தேகம். சில விஷயங்கள் - பிறருக்குச் சாதாரணமாகத் தோன்றுபவை, நமக்குப் பெரும் இழப்பாகத் தோன்றும். என்னைப் பொறுத்தவரை இது அத்தகைய ஒன்று.
அதே சமயம் “ரூபவாஹினி”யில் என்னை உதாசீனம் செய்ததைப்பற்றி எனக்குக் கலையே இல்லை. எனக்கு ஒரு பேட்டி ஏற்பாடு செய்வது பற்றி கமலினி செல்வராசன் முன் வைத்த யோசனை நிராகரிக்கப்பட்டதாக எனக்குத் தகவல் கிடைத்திருந்தது. இது தெரிந்தோ, தெரியாமலோ, மக்கீன், "டேய், காமராஜர் போல் அரைக்கைச் சட்டையும், நெற்றியில் சந்தனக்குறியும், குங்குமப்பொட்டுமாக சிறுவர் மலர் காலத்திலிருந்தே உன் மீது பிரியமாக இருப்பாரே மிருதங்கம் சண்முகப்பிள்ளை. அவர் மகன் விஸ்வநாத னிடம் நீ ஒரு வார்த்தை சொன்னால் போதும் உன்னை நானே பேட்டி காண்கிறேன்” என்ற போது நான் சொன்னேன். "மச்சான், நான் காட்சிக்கு எளியவன். என் நடை, உடை பேச்சு, பாவனை எல்லாவற்றிலும் எளிமை யானவன், அது தனி மனிதன் ஜபார். ஆனால் கலைஞன் ஜபாருக்கு கொஞ்சம் 'வித்வத்' கர்வம் உண்டு. அவன் வித்தையை மதிக்காத எவனையும் அவனும் மதிப்பதில்லை. அது நீயாகவே இருந்தாலும் சரியே. அவன் விளம்பரம் தேடி அலைந்ததில்லை. எவன் காலையும் பிடித்தில்லை. எவன் முன்பும் கை கட்டி நின்றதில்லை. உனக்கு ஞாபகம் இருக்கா, "கவிக்குயில்” படத்தில் கடைசியாக ஒரு பாட்டு சேர்க்க வேண்டிய கட்டம், இளையராஜாவும் - கங்கை அமரனும் கலைவாணர் அரங்கில் ஒரு நிகழ்ச்சிக்குப் போகு
76

காற்று வெளியினிலே.
முன்பு சவுரி அண்ணன் வீட்டுக்கு வருகிறார்கள். அங்கே நீ, நான், மர்சூக், "மானோடும் பாதையிலே" என்கிற பாட்டின் இசையை மீட்டிக் காட்டுகிறார்கள். ஆனால் இருவருக்கும் தொண்டை கட்டி இருந்ததால் பாட முடியவில்லை. ஒரே ஒரு முறை அந்த இசையைக் கேட்ட நான் அந்தப் பாட்டைப்பாட, இளையராஜாவும், கங்கையும் மகிழ்ந்து போய் ஒரே குரலில் "இவரையே போட்டுடலாங்கோ" என்று சொல்ல, பிறகு போனில் பஞ்சு அருணாசலத்திடம் பாடிக்காட்ட அவரும் ஒக்கே சொல்ல, புதன்கிழமை ரெக்கார்டிங் என்கிற நிலையில் நான் ஊர் பயணத்தையும் தள்ளிப்போட்டுக் காத்திருக்க அது ஒரு பெண்ணைக் கொண்டு பாட வைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. மர்சூக்கிடம் இன்னும் நாலுதடவை மச்சான் மச்சான் என்று குழைந்திருந்தால், அது நடந்திருக்கும். ஆனால் அது தேவை இல்லடா என்று சொன்னவனே நீ தானே. பிறகென்ன இப்போ காதலிக்க நேரமில்லை ஸ்டைலில் விஸ்வநாதன் சந்தர்ப்பம் வேண்டும் என்று பாட சொல்லுகிறாய் என்றதும் மெளனமானான்.
முன்னாள் தமிழ் நிகழ்ச்சிப் பணிப்பாளர் கே.எஸ். நடராஜா அவர்களும் கனடாவிலிருந்து இலங்கை வந்திருந் தார். நமது அதிதி நிகழ்ச்சிக்காக ராஜேஸ்வரி முதலில் என்னைப் பேட்டி கண்டார். பிறகு அதே நிகழ்ச்சிக்காக பி.எச். அப்துல் ஹமீது அவரைப் பேட்டி கண்டார். முதலில் அவருடைய பேட்டியும் பிறகே என்னுடைய பேட்டியும் போகும் என்றார்கள். என்னுடைய பேட்டி போகாவிட்டாலும், பரவாயில்லை. அவரது பேட்டி ஒலி பரப்பாகட்டும் என்றேன். பிறகு தேடிப்பிடித்து அவரையும் அவரது துணைவியாரையும் அவர்களது உறவினர் ஒருவர் இல்லத்தில் சந்தித்தேன்.
அவர்களுக்குத்தான் பெற்றப்பிள்ளையைக் கண்டது
77

Page 41
அப்துல் ஜப்பார்
போன்று என்ன ஒரு அன்பு என்ன ஒரு குதூகலம் - உற்சாகம் - சந்தோஷம், கவிஞரான அவரிடம் என்னுடைய சில படைப்புகளைப் பாடிக்காட்டினேன். என்னுடைய அந்த முகம் அவருக்கு இப்போது தான் பரிச்சயம். ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்க "தம்பி உம்மோட பயணத்தைத் தள்ளிப் போட்டு கலாச்சார அமைச்சு 25 தேதி நடத்தும் கவியரங்கில் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும்” என்றார். அவர் துணைவி யாரோ ஒருபடி மேலே போய், “தம்பி இவர் அதிகாரியாகவும் நீர் சிறுவனாகவும் ஒரே நேரத்தில் தான் இலங்கை வானொலி யில் காலடி எடுத்து வைத்தீர்கள். அந்தத் துறையில் இவர் நாற்பது ஆண்டுகள் பூர்த்தி செய்ததற்காக கனடாவில் ஒரு விழா எடுத்தனம். அப்ப உமக்கும் அப்படி ஒரு விழா எடுக்க வேணுமே, கனடாவுக்கு வாரும் அல்லது பொருத்த மாக ஒரு நேரத்தில் கூப்பிடுவோம் நீர் கட்டாயம் வர வேண்டும்” என்றபோது தாயில்லாத நான் அந்த தாயிடம் என் தாயைக் கண்டேன். இப்படிப்பட்ட பெருமைக்குரிய மனிதர்களை வாழ்க்கையின் வழி நெடுக சந்தித்துக் கொண்டே இருப்பதால் சிறுமைகளைப்பற்றிச் சிந்திக்கக் கூட எனக்கு நேரமில்லை.
தன்னுடைய - முழுக்க முழுக்கப் பாடல்களே இடம் பெறும் - தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பாடலுக்குரிய நேரத்திற்குள்ளாவது என் பேட்டி இடம் பெற வேண்டும் என்று என்னைப் பேட்டிக்காண சகோதரர் பி.எச். அப்துல் ஹமீதை ஏற்பாடு செய்து, அதனை ‘பெய்ரா தடாகத்தின்’ இயற்கைச் சூழலில் ஒளிப்பதிவு - ஒலிப்பதிவு செய்யவேண்டுமென்று அந்த வேகும் வெயிலில் அத்தனை உபகரணங்களையும் சுமந்து கொண்டு வந்து ஏற்பாடு செய்த சகோதரர் ஹ"சைன் பாருக்கும் அவரது சகா மொழிவாணனும்.
78

- تخت است.
காற்று வெளியினிலே.
கொள்ளுப்பிட்டி 影 "ரண்முத்து”ஓட்டலின் அறை ஒன்றில் என்னுடைய "இலங்கைத் திருநாடே" பாடலுக்கு தன்னுடைய கணிப்பொறி இசைக்கருவியில் காலைப்பத்து மணிக்கு இசை அமைக்க ஆரம்பித்து விதவிதமான அற்புத மான இசை வடிவங்களை அவிழ்த்து விட்டும், வசிஷ்டர், பி.எச். அப்துல் ஹிமிதின் திருப்தியைப் பெற படாத பாடு பட்டு, இசையில் கேள்வி ஞானம் மட்டுமே உள்ள என் பலவீனங்களையும் சமாளித்து, ஒரு கலையகத்தின் எந்த வித வசதிகளும் இல்லாத அந்த அறையில் இரவு பத்து மணிக்கு ஒரு முழுப்பாடலையும் ஒலிப்பதிவு செய்த இலங்கை இன்னிசை இளவரசன் ஃபயாஸ் ஸவாஹிரும் அவரது சகா தபேலா ரத்னமும் (புலிகளுக்குப் பிறந்த சிங்கக்குட்டிகள்) நெறிப்படுத்தி, தன்னுடைய குரலை மட்டுமல்ல, அந்த அரபு வசன உச்சாடனுத்துக்கு அமைச்சர் அஸ்வர் அவர்கள் தான் பொருத்தமானவர் என்று தீர்மானித்து அவரது மிகுந்த வேலைப்பளுக்களுக்கு மத்தி யிலும் அவரையும் ஒலிப்பதிவில் இணையவைத்து அந்தச் சம்பவத்தை என் வாழ்நாளிலேயே மறக்க முடியாது ஒன்றாக மாற்றிய சகோதரர் பி.எச். அப்துல் ஹமீது அவர்களும் -
என்னிடம் பிரதிபலன் எதிர்ப்பார்த்தா இதைச் செய்தார்கள்? - இல்லை. நிச்சயமாக இல்லை. என் மீது அவர்களுக்குள்ள அன்பின் ஆழத்தின் பிரதிபலிப்பாகவே இதைச் செய்தார்கள். இவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்? ஒன்றைச் செய்யலாம். என்னை தகுதி உடையவன் என்றெண்ணி, தங்கள், தங்கள் தனிப்பட்ட திறமைகளை இவர்கள் முன்னிறுத்தி எனக்கு உதவியது போல் நான் பிறருக்கு உதவலாம். திறமைசாலிகளை இனம் கண்டு அவர்கள் வளர உதவலாம். அதைச் செய்திருக்கிறேன் - செய்கிறேன் - இன்ஷா அல்லா இனியும் செய்வேன்.
79

Page 42
அப்துல் ஜப்பார்
இத்தகையவர்களுக்கு மத்தியில் என்னைக் கைதுக்கி விட்டது மட்டுமல்ல அதே நேரத்தில் தங்கள் கைப்பிடிக் குள்ளும் நான் அடங்கியிருக்க வேண்டும் என்று செயல் பட்டவர்கள் உண்டு. அதில் தலையாய இரண்டு பேர்களைச் சொன்னால் ஆச்சரியமடையாதீர்கள் ஒன்று: என் மரியாதைக்குரிய ஆசான் சானா சண்முகநாதன் அவர்கள். மற்றது ஊத்தை வார்த்தைகளால் இன்றும் என்னை உரிமையோடு திட்டும் என் பால்ய நண்பன் மானா மக்கீன்!
ஒருநாள் மாலை ஜோராக உடுத்திக் கொண்டு அவசரமாக வந்தான். "மச்சான், நான் ஒரு இடம் வரை போகிறேன். அது நான் எதிர்ப்பார்த்தப்படி அமைந்தால். சரி பிறகு சொல்கிறேன்.” என்றான். போய்விட்டான். அவன் சென்றது லயலன் வெண்ட் மண்டபத்துக்கு. ஒரு நாடகம் பார்க்க என்னையும் அழைத்துச் சென்றிருக்க வேண்டும், அதைச் செய்யவில்லை. அது தான் மக்கீன். மறுநாள் வந்தான். “டேய் டயல் எம்.போர் ம(ர்)டர்” சினிமா பார்த்திருக்கியா?” என்றான் "இல்லை”யென்றதும் அதை நாடகமாக நடத்த முடியும் என்று நினைக்கிறாயா? என்ற அடுத்த கேள்விக்கு “தெரியாது” என்று பதில் சொன்னேன்.
"நேற்று அந்த நாடகம் தான் பார்க்கப்போனேன். அது முழுக்க முழுக்க நாடகமே தான். அதை சினிமாவாக வெற்றி பெற வைத்தது. அல்ஃப்ரட் ஹிட்ச்கொக்கின் திறமையே தவிர மற்றபடி அது நாடகமே தான்.
"அதுக்கு என்ன இப்போ” என்னைக் கூப்பிடாமல் போன எரிச்சலும் சேர்ந்து வெளிப்பட்டது.
"அத நாம் நாடகமாச் செய்யப்போறோம். இரு ஒரு நிமிஷம், லெட்மிதிங்குன்று சொன்னே, ஒதப்பேன்."
80

காற்று வெளியினிலே.
“orf av8rf -” arăG35?”
"அப்படிக் கேளு, அந்த சி.ஏ.டி.சி. வெள்ளைக்கார நாடகக் குழுவின் தலைவி - ஆமா தலைவி - பெயர் மட்டும் தெரியும். அவரை டெலிபோனில் பிடிச்சி அப்பொயிண்ட்மெண்ட் வாங்கி, நேரில் சந்திச்சி ஸ்கிரிப்ட் கேட்கணும்”
கொஞ்சம் கிண்டலாக, "அதச் செய்யறது" நான் வார்த்தையை முடிக்கவில்லை. உடனே ஒரு கெட்ட வார்த்தை தொடர்ந்து அந்த அளவு இங்கிலிஷ் தெரிஞ்சா நான் இந்நேரம் ஸ்கிரிப்டோடயே உன்னை வந்து சந்திச்சி ருப்பேன்டா"
அந்த அம்மையார் வேலைபார்க்கும் நிறுவனம் எனக்குத் தெரியும். டெலிபோனில் பிடித்தேன். ஆங்கில ஞானமும் வானொலி உச்சரிப்பு முறையும் கைகொடுக்க, "திருமதி வைன் ஓ - ரியோடனுடன் பேச முடியுமா?" என்றேன் - கம்பீரமாக,
"அவருடன் தான் பேசுகிறீர்கள்?"
"மேடம் உங்களுடன் பத்து நிமிடம் - பத்தே பத்து நிமிடம் பேச விரும்புகிறேன். நேரம் ஒதுக்க முடியுமா?
"எதைப் பற்றி.”
"டயல் எம்ஃபோர் ம(ர்)டர் பற்றி"
"அந்த நாடகம் முடிந்து விட்டதே"
"அதனால்தான் பேச விரும்புகிறேன்."
"நீங்கள் பத்திரிகையாளரா?”
"இல்லை”
"பிறகு.?”
"நேரில் சொல்கிறேன்."
5T-6 81

Page 43
அப்துல் ஜப்பார்
"நாடகத்தில் உள்ளே சஸ்பென்சை விட இது பெரிய சஸ்பென்ஸாக இருக்கிறதே. சரி மாலை ஆறுமணிக்கு என் அடுக்குமாடி வீட்டுக்கு வாருங்கள்” என்று வழி சொல்ல ஆரம்பித்தார். மாலை ஐந்தே முக்காலுக்கே, நான், மக்கீன் சி.பி.எம்.காசிம் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் முன் ஆஜர். ஆனால் உள்ளே போக மக்கீன் விட மாட்டான். 5.55க்கு லிப்ட் ஏறினோம். லிப்டை விட்டு இறங்கி சற்று உலாத்தியபடியே அன்ன நடை, சரியாக 5.59 க்கு மின் - மணியை மக்கீன் அழுத்தினான். பட்லர் கதவை திறந்தார். பாதுகாப்பான தூரத்தில் அந்த அம்மையார். அறிமுகப் படலம். அந்த அம்மையாரின் "ஹவ்டு யூ டு" வுக்கு பதில் கூடச் சொல்லவில்லை நேராக ஒரு நாய்க்குட்டியிடம் போய் விட்டான், "ஓ லவ்லி. லவ்லி” என்றான். அந்த அம்மையார் எங்களை விட்டு விட்டார். அப்படியே குளிர்ந்துபோய். "ஒ. உனக்கு நாய்க்குட்டிகள் இஷ்டமா? அதுகளைப் பற்றித் தெரியுமா?” என்றார். "நாய்களைப்பற்றி அதிகம் தெரியாது பட் ஐ லவ் தெம்" என்றான். நான் பல்லைக் கடித்துக் கொண்டு கிசுகிசுக்கும் தொனியில் தமிழில் ஒரு கெட்டவார்த்தை சொன்னேன். அந்த அம்மையார் திடீரென்று என் பக்கம் திரும்பி என்ன அது என்று கேட்டார். சற்று அதிர்ந்த நான் "அது அவனுடைய செல்லப் பெயர் என்று சமாளித்தேன். ஒதுக்கப்பட்ட பத்து நிமிடம் ஒரு மணி நேரமாக நீடித்தது. தேநீர், கேக், பிஸ்கட் என்று ராஜ உபசாரம் வேறு. வந்த விஷயத்துக்கு வந்ததும் “லண்டனில் உள்ள சாமுவேல் ஃப்ரஞ்ச் ஸ்தாபனத்துக்கு முதல் நாடகத்துக்கு நாற்பது பவுண்டும், இரண்டாவது நாள் மேடை ஏற்ற முப்பது பவுண்டும் அனுப்பிக் கொடுத்தீர்களானால் ஸ்பிரிஃப்ட் சகிதம் முழுவிபரங்களும் அனுப்பி வைப்பார்கள் என்றார். தன்னாலான முழு ஒத்துழைப்பையும் தருவதாகச் சொன்ன அவர் விடை
82

காற்று வெளியினிலே.
பெறும் கட்டம் வந்தபோது "குட் நைட் மிஸ்டர் ஜபார். குட் நைட மிஸ்டர் காசிம்” என்றவர் மக்கீனை மிகச் செல்லமாகக் குறிப்பிட எண்ணி, நான் சொன்ன கெட்ட வார்த்தையை அவர் செல்லப் பெயராக எண்ணிக் கொண்டு "குட்நைட்தா.” என்றார் சிரிப்பை நான் அடக்கப்பட்ட பாடு. அவர் கதவைச் சாத்த காத்திருந்தது போல் அதே கெட்ட வார்த்தையால் என்னை திட்டினான். மக்கீனின் சமயோசிதத்தையும், புத்திசாலித்தனத்தையும் வழிநெடுக சலிக்காமல் பாராட்டிக் கொண்டே வந்தார் காசிம்.
எழுபது பவுண்ட் என்பது இன்றைய இலங்கை நாணய மதிப்புப்படி சுமார் பத்தாயிரம் ரூபாய். அதை ஏற்பாடு செய்துவிட்டு போனவனைக் காணவே காணோம். கண்டபோது அவள் கையில் நேர்த்தியாகத் தயாரிக்கப் பட்ட நாடகப்பிரதி.
மக்கீன் நாடகத்தை தமிழில் மொழி பெயர்க்க வில்லை. தமிழுக்கே தத்து எடுத்திருந்தான். டயல் எம்ஃபோர் ம(ர்)டரை பற்றித் தெரியாதவர்கள். அது முழுக்க முழுக்க இலங்கையைச் சேர்ந்த தமிழ் நாடகம் என்கிற முடிவுக்கே வருவார்கள். நான் வாசித்து முடித்த பின்பு கணவனாக மன்னார் எச்.எம். சரீபும், காதலனாக நஸ்ரூத்தினும் பொருத்தமாக இருப்பார்கள் என்று எண்ணி னேன். ஆனால் நஸ்ருத்தீனுக்கும், மக்கீனுக்கும் என்றுமே ஒத்துவராது. ஆக அன்று இஸ்லாமிய நிகழ்ச்சியின் பிச்சையப்பா என்று நாங்கள் அழைத்து வந்த முகம்மதைப் போடலாம் என்று எண்ணினேன்.ஆனால் மக்கீன் சொன்னதை கேட்டதும் உண்மையில் நான் அசந்து போனேன். في YW) و
“டேய் (மீண்டும் அந்த ஊத்த வார்த்தை) நீயும்
'83

Page 44
அப்துல் ஜப்பார் காசிமும் மேடைக்கே லாயக்கில்லை என்று நெனச்சிக் கிட்டிருக்கிறவங்க நினைப்பை உடைச்சி எறியப் போறேன். நீதான் கணவன், காசிம் தான் காதலன் இன்ஸ்பெக்டராக பி.எம்.முஸ்தபா. கதாநாயகியாகக் கலாராணி” முடிக்க வில்லை. நான் இடைமறித்தேன்.
“டேய் அந்தப் பொண்ணு அவியல் கதம்ப நாடகங் களில் எல்லாம் நடிக்கிறது. இந்த மாதிரி நாடகத்துக்குச் சரி வருமா?” என்றபோது, "அதப்பார்த்தா நடக்காது. தொலைக் காட்சிக்கு முன்பு கட்டிப்பிடித்து போராட வேண்டும். எந்தப் பெண்ணும் சம்மதிக்க மாட்டா. கலாராணியே சம்மதிக்கவில்லை. அப்பதான் ஐயாவோட "மாஸ்டர் ஸ்ட்ரோக்! அந்தப் பொண்ணை கட்டிக்கிடப் போற துரைசிங்கத்தையே வாடகைக் கொலையாளி வேடத்துக்குப் போட்டிருக்கிறேன். கலாராணிக்குத் துணை யாகிப் போய் ஒன்றிரண்டு நாடகங்கள் பார்த்ததைத் தவிர அந்த ஆளுக்கும் நாடகத்துக்கும் ஸ்நானப்பிராப்தி கூடக் கிடையாது. என்ன செய்வியோ, ஏது செய்வியோ மகனே உன் சமர்த்து. ஆமாடா. நீதான் டைரக்ட் செய்யப்போற" கடைசியா சொன்னது காதில் பாய்ந்த - தேன்.
இத்தனை நாட்களும் புதுமையான ஒரு நாடகத்தைத் தயாரிக்க வேண்டும் என்கிற என் ஆசைகள் - கனவுகள் - அதற்காக நான் வாசித்துக்குவித்த புத்தகங்கள். எல்லா வற்றுக்கும் ஒரு வடிவமும், அர்த்தமும் கிடைக்கப் போகின்றது. ஒவ்வொரு அம்சத்திலும் புதுமை மிளிரச் செய்யவேண்டும் என்கிற எங்கள் லட்சிய வெறியின் வடிவமாக "புதுமை அரங்கு" பிறந்தது.
அவை பொன்னான நாட்கள். ஒரு கைதேர்ந்த சிற்பியின் லாவகத்துடன் ஒரோர் அம்சத்தையும் எவ்வளவு நேர்த்தியாக துல்லியமாக - நுணுக்கமாகத் திட்ட

காற்று வெளியினிலே.
மிட்டோம், உளியில் விழும் அடியில் அழுத்தம் இல்லை என்றால் சிலை வடிவம் பொறாது. அழுத்தம் கூடினாவோ சிலையே மூளியாகிவிடும். ஆக இது ஒரு கம்பி மேல் நடக்கும் கண்கட்டு வித்தை. அதற்கிடையில் எங்களுக்குள் தான் எவ்வளவு சண்டைகள் - வாக்குவாதங்கள், உதாரணத்துக்கு ஒன்று: பழைய காதலன் அவனுடைய காதலியை அவள் கணவன் வீட்டில் சந்திக்கிறான். சி.பி.எம். "நம் காதல் பிரகாசமாக ஒளிவிடும் என்று நினைத்தேன்” என்று சொல்லும் போதே சிகரட் லைட்டரை பற்ற வைப்பார். பிறகு "ஆனால்." என்று ஒரு பெருமூச்சு விடும் போது அதை அணைக்க வேண்டும். இது வெறும் ஒரு சிம்போலிக் அசைவு மிக, மிக இயல்பாக இருக்க வேண்டும். அப்படியானால் பிரமாதமாக எடுபடும் ஒரு அனுப்பிரமாணம் பிசகினாலும் பிசிறடித்துவிடும். கரணம் தப்பினால் மரணம் கேஸ்! ஆனால் சி.பி.எம். அதைச் சற்று ‘விறைப்பாகச்' செய்வது போல் உணர்ந்தேன். திரும்பத் திரும்பச் செய்ய சொன்னேன். நான் நேரத்தை வீணடிப்ப தாக மக்கீனுக்கு ஒர் உறுத்தல், நான் பொறுமை இழந்த வனாக "வாட் இஸ் திஸ். சி.பி.எம்?” என்று கத்தினேன். சி.பி.ஏம்முக்கு அது பிடிக்கவில்லை, எனினும் மெளனமாக இருந்தார். மக்கீன் என் மேல் பாய்ந்தான். "என்னடா திரும்பத் திரும்ப ஒண்டையே புடிச்சிக் கிட்டு மனுஷன் உயிரை எடுக்குறே" என்றபோது சி.பி.எம். திடீரென்று எழுந்தார். "என்ன இது நாடகத்துக்குள் நாடகமா? நீ அடிக்கிற மாதிரி அடிநான் அழுவுற மாதிரி அழுவுறேங் குறதைப் போலவா ஆளை மடையனாக்கிறீங்களா?” என்று ஸ்கிரிப்பைத் தூக்கிக் கடாசிவிட்டுப் போய்விட்டார். (அந்தக் காட்சி நாடகத்தின் போது பிரமாதமாக வந்தது என்பது வேறு விஷயம்)
அந்த நாடகத்தின் சிறப்பு அம்சமே. ஒரு பங்களா
85

Page 45
அப்துல் ஜப்பார் வின் பிரம்மாண்டமான முன் அறை, நடுவில் தலைவாசல் அதன் வழியாகத் தெரியும் ஒரு மாடிப்படி, வலது பக்கம் ஒரு பெரிய ஃபிரஞ்ச் ஜன்னல். இடதுபக்கம் படுக்கை அறைக்குச் செல்லும் வாசல். சுவற்றில் ஷோ கேஸ் அவற்றில் விருதுகள் - கலைப்பொருட்கள், ஜன்னலை அடுத்து ஒரு மேசை நாற்காலி டெலிபோன். இடது பக்கம் சோபாசெட். அத்தகைய ஒரு செட் போட இன்றைய நாணய மதிப்புப்படி பத்துப் பதினைந்தாயிரம் ரூபாய் தேவை. எங்களிடம் வக்கில்லை. மீண்டும் திருமதி ஒரியோர்டனே சரணம். அவர்கள் உபயோகித்த செட்டை தர முடியுமா என்று கேட்டோம். மனுவி உடனே சம்மதித்து தன்னுடைய அழகான லெட்டர் ஹெட்டில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதமும் தந்தார்.
ரேஸ் கோர்சின் ஒருமுனையில் அமைந்திருந்தது. அந்தப் பிரம்மாண்டமான "க்ளப்' வேலைக்காரர்கள் மாத்திரமே நம்மவர்கள். மற்றபடி வெள்ளைக்காரர்களைத் தவிர வேறு யாருக்கும் உட்பிரவேசிக்க அனுமதி இல்லாத இடம். உள் நுழைந்த எங்களை புழுவைப் பார்ப்பதுபோல் பார்த்து, ஆயிரம் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்த பின்பு அந்தப் பெரிய கோடவுனுக்குச் செல்ல அனுமதித் தார்கள். உள்ளே சென்ற எங்களுக்கு ஏமாற்றமும், திணறலும், அவர்கள் நடத்திய அத்தனை நாடகங்களின் செட்களும் அங்கு கிடந்தன. ஆனால் ஓர் ஆறுதல் அவை சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன என்றாலும் எதை விடுவது எதை எடுப்பது என்று ஒரே குழப்பம். இருக்கும் ஒரு கண்ணவிஞ்சான் விளக்கையும் தூக்கியடிக்கும் இருட்டு வேறு. பகலில் வருவதாகச் சொன்னோம். பகலில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று தெரிந்தது. சரி மாலை வருகிறோம் என்று திரும்பிவிட்டோம். மக்கீன் வீட்டுக்கு ஓடினான். நாடகத்தின் போது வழங்கப்பட்ட கைப்
86

காற்று வெளியினிலே.
பிரதியை தேடி எடுத்தான். அதில் மேடை நிர்வாகம் வில்லியம் ரோஸ் என்று இருந்தது. அவர் ஒரு தராசுக் கம்பெனியில் பராமரிப்புப் பொறியாளர் என்பதைக் கண்டுபிடித்து அலுவலகம் சென்றால், அவர் மருதானை ரயில்வே கூட்செட்டில் உள்ளே செப்பனிடும் கிட்டங்கியில் இருப்பார் என்றார்கள் சென்றோம். செக்கச் சிவந்த ரோஸ் ஒரு சாதாரண தொழிலாளி உடையில் 22 வயது என்று நம்பமுடியாத ஆஜானுபாகுவான தோற்றம் (டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கரைக்காணும் போதெல்லாம் எனக்கு இவர் ஞாபகம் வரும்)வெள்ளைக்காரர்களுக்குரிய எவ்வித ஜபர்தஸ்த்தும் இல்லாமல் எளிமையாக - இனிமையாகப் பழகினார். திருமதி ஒ-ரியோடனின் கடிதத்தைப் பார்த்ததும் ஏதோ மந்திர சக்திக்குக் கட்டுப்ப்டவர் போல் உடைகளைக் கூட மாற்றாமல் தன்னுடைய சின்னஞ்சிறு ஃபோர்டு ஆங்கிலியா காரில் எங்களையும் ஏற்றிக் கொண்டு நேராகக் க்ளப்புக்குச் சென்றார். தன்னிடம் இருந்த சாவி ஒன்றைப் போட்டுத் திறந்தார். ஒரு மந்திர வாதி போல் அங்கும் இங்கும் நடந்து ஒரோர் பகுதியி லிருந்து ஒரோர் பொருளை எடுத்து ஒரு மூலையில் அடுக்கி "இதுதான் செட்” என்றார். கொண்டு போவதற்கு ஒரு நாள் முன் கூட்டியே தகவல் கொடுக்கச் சொன்னார். அதுமட்டுமல்ல தானும் வந்து உதவுவதாகச் சொன்னார் பழம் நழுவிப் பாலில் விழுந்து அது வாயிலும் விழுந்தது என்னும் பழமொழிக்கு முழு அர்த்தமும் அன்று தான் தெரிந்தது.
சொன்னதுபோல் வந்தார். அவர் வராவிட்டால் நாங்கள் என்ன கதிக்கு ஆளாகி இருப்போம் என்பது பிறகு தான் தெரிந்தது. லயனல் வெண்ட் தியேட்டரில் எந்த இடத்திலும் ஒரு ஆணி கூட அடிக்காமல் அந்த பிரமாண்டமான செட்டை பிடித்து நிறுத்த வேண்டும்.
87

Page 46
அப்துல் ஜப்பார்
எப்படி? நாடகத் தயாரிப்பு பற்றி நான் எத்தனையோ புத்தகங்கள் படித்திருந்தாலும் ஏட்டுப்படிப்புக்கும் நடை முறை சங்கடங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது. எனினும் என் படிப்பும் ரோசின் அனுபவத்திறனும், ஒவ்வொரு சிறு விஷயத்தையும் விட்டுவிடாமல் கவனித்துச் செய்யும் மக்கீனின் பழக்கமும் கைகொடுக்க செட் அமைக்கப்பட்டு விட்டது. அத்துடன் மட்டும் அல்ல, எந்தெந்த நிறங்களில் என்னென்ன வண்ணங்கள் வாங்கி, அவற்றை என்னென்ன அளவுகளில் கலந்து பெயிண்ட் அடிக்க வேண்டும் என்பதையும் ரோஸ் சொல்லித் தந்து விட்டுபோனார். அதுவும் முடிந்ததும் அவை வெறும் பலகைகளால் ஆன செட் அல்ல. ஆனால் உண்மை யிலேயே கட்டப்பட்ட வீடு என்கிற பிரமையை ஏற்படுத்தியது.
சரி அடுத்தக் கட்டம் ஒளியமைப்பு லயனல்வெண்ட் தியேட்டரில் அற்புதமான ஏற்பாடுகள் உண்டு. விளக்கு களை வெறுமனே ஒன்-ஒவ் செய்வது போலன்றி வேகத் தைக் கூட்டவும் குறைக்கவும் பயன்படும் ரெகுலேட்டர் களைப்போல் இங்கு பல்புகளுக்கும் உண்டு. எனவே நாம் விரும்பும் கோணங்களில் விரும்பும் விதத்தில் பிரகாசத்தை கூட்டவோ, குறைக்கவோ இங்கு வசதி உண்டு. ஆனால் இதனை எத்தனை பேருக்கு சரியாக உபயோகிக்கத் தெரியும்? நாங்கள் உபயோகித்தோம்.
உதாரணமாக, அரங்கம் மையிருட்டில் இருக்கும். கொலையாளி ஃப்ரஞ் ஜன்னலின் திரைச்சீலைக்குப் பின்னால் ஒளிந்து கொள்வான். டெலிபோன் மணிய டிக்கும். படுக்கை அறைக்கதவு திறக்கும். அந்த அறையி லிருந்து வெளிப்படும் வெளிச்சம் முக்கோண வடிவில் நீண்டு டெலிபோன் மேசைவரை அடிக்கும். இந்த டெலிபோன் மேசை அருகேதான் போராட்டமும் -
88

காற்று வெளியினிலே.
கொலையும். இதனை மிகுந்த நுட்பத்துடன் செய்ய வேண்டும். செய்யும் தகமைப் படைத்தவர் லவெ. அரங்கின் பிரதம ஒளி அமைப்பாளர் மகிந்தா டயஸ். ஆனால் அவர் தொழில் நுட்பம் தெரியாதவர்களோடு இணைந்து பணியாற்றுவதில்லை. தன் உதவியாளர்களை விட்டு சமாளித்து விடுவார். அதுவும் தமிழ் என்றால் எட்டிக்கூடப் பார்க்கமாட்டார். ஆனால் எங்களுக்கு அவர் வேண்டும். தெஹிவளையிலுள்ள அவர் இல்லம் சென்று கண்டோம். தட்டிக்கழிக்க வழமையான சால்ஜாப்புகள். அத்தோடு எனக்கு தமிழ் தெரியாது என்றார். தேவை இல்லை என்றோம் நாடகம் துவங்கி எத்தனையாவது நிமிடத்தில் - எந்தக் கோணத்தில் எந்த அளவில் வெளிச்சம் தேவை என்று ஒரு லைட்டிங் ஸ்கீம் அல்லது லைட்டிங் ஸ்கிரிப்ட் நானும் மக்கீனுன் சேர்ந்து தயார் செய்தததை அவர் கையில் கொடுத்ததும் நம்ப முடியாமல் அசந்து போனார். பிறகென்ன? கடைசி வரை எங்களுடன் நின்றார்.
நாடகம் எல்லா அம்சங்களிலும் முழுமையானதொரு இமாலய வெற்றி. இலங்கை தமிழ் நாடகச் சரித்திரத்தில் ஒரு மைல்கல். அதில் சந்தேகமே வேண்டாம். இதைச் சொல்வதற்கு பணிவு, தன்னடக்கம் மன்னிக்கத்தக்க பெருமையுடன் என்கிற அடைமொழிகளே வேண்டாம். இது எல்லலோரும் ஒப்புக்கொண்ட உண்மை - சத்தியம். கண்டுகளித்தவர்களின் பாராட்டு சான்று. இதன் ஒரோர் அம்சத்தையும் பிட்டுப்பிட்டு வைத்து அற்புதமாக - ஆக்கப்பூர்வமாக விமர்சித்த சில்லையூர் செல்வராசனின் எழுத்து சான்று. அதையும் விட இதை பீட் அடிக்கிற மாதிரி நான் ஒரு நாடகம் செய்யவேண்டும், என்ற சானாவின் ஆதங்கம் சான்று. நாடகத்தில் இன்ஸ்பெக்டர் முஸ்தபா பயன்படுத்தும் குட்கோயிங் எங்கிற வார்த்தை களையே தங்கள் பாராட்டவும் பாவித்த திருமதி
89

Page 47
அப்துல் ஜப்பார்
ஒரியோடனும். திரு. வில்லியம் ரோசும் சாட்சி.
ஆனால் பொருளாதார ரீதியாக பலத்த அடி, பல இரவுகள் போஸ்டர்கள் ஒட்டுவதில் நாங்கள் செலவழித்த காலத்தையும், சக்தியையும், வரவு செலவுகளை முன் கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்ப பிரவேசனக் கட்டணங் களை நிர்ணயித்து, வாங்கும் தகுதி படைத்தவர்களை தேடிப்பிடித்து அவைகளை விற்றிருக்க வேண்டும். அதற்குத் தோதுவாக தமிழ் - முஸ்லீம் நிகழ்ச்சிகளில் பிரபலமாகி பிருந்த என்னையும், சி.பி.எம்மையும், முன்நிறுத்தி விளம்பரங்களைக் கையாண்டிருக்க வேண்டும். ஆனால் மக்கினுக்கு தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் இருந்த ஆர்வம் இதில் இல்லை. அதைக்கூட மன்னித்துவிடலாம். ஆனால் எங்களை இருட்டடிப்புச் செய்ததை என்ன வென்று சொல்வது? அதுவும் மக்கீன்.
Brand Name, Marketing a Tait Sp வார்த்தைகளின் பொருளும், மகத்துவமும் அன்று மக்கீனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் இவற்றின் முழு அர்த்தங்களையும் புரிந்து கொண்டு அதன் பலன்களையும் பெற்றுவிட முன் வந்தவர் ஒருவர் உண்டு - அவர் கொழும்பு கலைச் சங்கத்தின் பாலச்சந்திரன்.
உலகத்தில் புதுமையான பொழுதுபோக்குகளை யெல்லாம் இலங்கைக்குக் கொண்டு வந்து அதைக் காசாக மாற்றும் வல்லமை படைத்த டொனவன் அண்ட்றியின் தமிழ்ப் பதிப்பாகத் தான் விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் பாலச்சந்திரன். அவர் போக்கே தனி. அணுகுமுறைகள் விசேஷமானவை. கொழும்பில் ஒரு தமிழ் நாடக விழா நடத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் அவர் கூட்டிய ஆரம்பக் கட்டமே ஓர் ஆடம்பர விருந்துடன் ஓர் ஒட்டலில் தான் நடந்தது.
90

காற்று வெளியினிலே.
ஒஸ்கார் வைல்டின் "டச்சஸ் ஒவ் பதுவா" (பதியூர் ராணி) சரித்திர நாடகத்தையும் "லண்டன் கந்தையா" வையும் மேடை ஏற்றுவதாகத் தீர்மானம். "வரவு செலவுகள் என்னோடு” உங்களுக்கு என்ன வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள் என்றார். தகராறுகளுக்கே இடமில்லாத சரியான அணுகுமுறையாக அது எல்லோருக்கும் சரி எனறு படடது.
இலங்கை வானொலி கல்வி ஒலிப்பரப்பு பிறகு ரூபாவாஹினி ஆகியவற்றில் பொறுப்பான பதவிகளில் கடமையாற்றி ஒய்வு பெற்ற திருமதி. ரத்தினம் அவர்களின் கணவர் வளவன் அவர்களின் தமிழாக்கம் ‘பதியூர் ராணி’. தெல்லிபளை மகாஜனக் கல்லூரி பேராசிரியர் ஏ.டி. பொன்னுதுரை (ஒ. எத்தனை அற்புதமான கலைஞர் எத்தனை மகத்தான மனிதர்) பதியூர் அரசனாகவும், சகோதரி விசாலாட்சி (ஹமீது) குகதாசன் பதியூர் ராணி யாகவும், ரேடியோமாமா சரவண முத்து அவர்கள் நீதிபதி யாகவும், சோதி நாதன் மாஸ்டர் ராஜகுருவாகவும் நடிக்கப் போவதாகக் கேள்வி. மலையமான் பிரபுவாக போரா சிரியர். கா. சிவத்தம்பி அவர்கள். கதாநாயகன் கீர்த்தி வளவனாக கொழும்பு அல்லது பேராதனை பல்கலைக் கழக வளாகத்தைச் சேர்ந்த ஓர் ஆஜானுபாகு நடிக்கக் கூடும் என்பது எங்கள் ஊகம்.
ரேடியோ மாமா, சானா, திருமதி. கோகிலாவர்த்தினி சிவராஜா (சிறுமியாக இருந்த போது) என்று இலங்கை வானொலியோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு பட்டா ளமே பக்கத்திலிருந்த நாரஹென்பிட்ட அடுக்குமாடி வீடுகளில் தான் குடி இருந்தனர். சானா சில சமயங்களில் காலார வீடு வரை நடந்தே கூட்டிக் கொண்டு போய் தேநீர் கொடுத்து அவர் வீட்டு வாசலிலிருந்து புறப்படும் பஸ்ஸில் வழி அனுப்பி வைப்பார். அன்றும் அதுபோல் என்னிடம்
91

Page 48
அப்துல் ஜப்பார்
"வீடு வரை வாருமன்” என்று அழைத்துச் சென்றார். சென்றால் மேற்சொன்ன பலர் அவருக்காக அவர் வீட்டில் காத்திருந்தனர் - கூடவே பாலச்சந்திரனும் சரி தான் ஒத்திகை ஆரம்பமாகப் போகிறது போலிருக்கிறது. பார்ப்போமே என்று ஆவலுடன் நான் காத்திருந்தேன்.
"ஒ. அப்ப எல்லோரும் வந்தாச்சி. காசிம் மட்டும் வரவேணும். வருவார். அவர் தான் மலையமான் பிரபு. கீர்த்தியைப் பற்றி நான் சொல்ல வேண்டாமே. அவர் கீர்த்தி தான். உங்க எல்லோருக்கும் தெரியுமே என்ற பீடிகையுடன் சற்று நிறுத்தினார். பிறகு வெகு ட்ரமட்டிக் காக "ஜபார்" என்றார், எல்லோரும் மகிழ்ச்சியுடன் கைதட்டினார்கள். ரேடியோ மாமா செல்லமாக என் முதுகைத் தட்டிக் கொடுத்தார். எனக்கு அந்தக்கணம் ஏற்பட்டது அதிர்ச்சியா அல்லது ஆனந்தமா தெரிய வில்லை. அப்போது என் நினைவில் தோன்றியவன் மக்கீன். “டேய். நானும் சி.பி.எம்.மும் மேடைக்கே லாயக்கு இல்லை என்கிற மாயையை - கூற்றை தகர்த்து எறிந்து விடவே செய்து விட்டாய். இதோ பார் 'சானா’வே எங்களை அங்கீகரித்து தன் நாடகத்தில் முக்கியு பாத்தி ரங்கள் தருகிறார்" என்று உரக்கக் கத்த வேண்டும் போல் இருந்தது.
ஒத்திகை முடிந்ததும் நேராகச் சென்றது மக்கீன் வீட்டுக்குத் தான். அங்கு எனக்கு ஒர் ஆச்சரியம் - இல்லை அதிர்ச்சி காத்திருந்தது நான் சானாவின் நாடகத்தில் நடிக்கவே கூடாது என்று மக்கீன் ஒரே பிடியாக ஒற்றைக்காலில் நின்றான். "அப்படிப் போனா நாம இப்பவே. இந்த நிமிஷமே பிரிகிறோம். வேறு பேச்சில்லை" என்றான் கண்டிப்புடன்!
"டேய் நேற்றுவரை நீங்கள் மேடைக்கு லாயக்கில்லை.
92

காற்று வெளியினிலே.
இன்று நான் பாடுபட்டுப் பணம் செலவாக்கி உங்களை அடையாளம் காட்டியதும் உங்கள் மேல் திடீர்க் காதலா? எல்லாத் திருட்டையும் திருட்டு என்போம். இது அதை விடக் கேவலம். காசிம் போகட்டும் எனக்குக் கவலை யில்லை. அவர் தனி மனிதர் மட்டுமே. ஆனால் நீ ஒரு ஸ்தாபனம் போல, கிறுக்குப் பய நீ, உனக்குத் தெரிந்த வித்தையையெல்லாம் காட்டி மாங்கு மாங்கு என்று கிடந்து உழைப்பே. எவன் எவனெல்லாமோ ‘கிரடிட்' அடிச்சுக் கொண்டு போய் விடுவான்" - சூடு பறந்தது.
பூச்சைக் குட்டி சாக்குப் பைக்குள்ளிருந்து வெளி வந்தாயிற்று; ஒரு விஷயம் தெளிவாகிவிட்டது. அவன் சி.பி.எம்.மைத் தடுக்கப் போவதில்லை. அந்தப் பருப்பு அவரிடம் வேகாது. ஆக, அகப்பட்ட இளிச்சவாயன் நான் தான். எனக்கு ஸ்தாபனம் என்கிற 'ஐஸ்” வேறு. எங்கள் இருவரையுமே தடுத்து நிறுத்தி சானாவின் முதுகில் குத்த வேண்டாம். என்னை மட்டுமாவது பங்கு பெறாமல் செய்து அவர் முகத்தில் சிராய்ப்பு ஏற்படுத்தினாலும் மக்கீனுக்குப் போதும்.
மற்றது பாடுபட்டுப் பணம் செலவழித்தது “என் உழைப்புக்குக் கிரடிட்!” எல்லாவற்றிலும் தன்னை முன் நிறுத்திக் காரியங்கள் செய்த மக்கீன், சில விவகாரமான விஷயங்களுக்கு உபயோகித்தது என் பெயர். உதாரணமாக ல.வெ.அரங்கு ‘புக்’ செய்தது என் பெயரில், முனிசிப்பல் லைசன்ஸ் என் பெயரில் இரண்டுக்கும் செலுத்தப்பட வேண்டிய பணம் போகவில்லை. அரங்கின் செயலர் மஹாலிங்கம் அவர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய பணம் அசலும் வட்டியும் சேர்த்து ஈடாக்கப்படும் வரை என்னுடைய வருமானங்கள் முடக்கப்பட்டு பின்னரே விடுவிக்கப்படும் என்று அச்சுறுத்தி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதெல்லாம் என் தலையில், பரவா
'93

Page 49
அப்துல் ஜப்பார்
யில்லை, விடுதலைக்கு இதொன்றும் பெரிய விலை அல்ல. நாங்கள் பிரிந்தோம், அத்தோடு குளோஸ் என்கிற முடிவுக்கு வந்துவிடாதீர்கள், ஜன்ம சத்ருக்களைப் போல் வெட்டிக் கொண்டு பிரிவதும் சயாமிய இரட்டையர் களைப் போல் ஒட்டிக் கொண்டு அலைவதும் எங்கள் கிறுக்குத்தனமான உறவின் பிரதான அம்சம். இந்தக் கிறுக்குத்தனம் என்ற வார்த்தை உங்களை அப்செட் ஆக்கும். ஆனால் ஒரு ரகசியம். பல நேரங்களிலும் இதன் முழு அர்த்தத்தை உணர்ந்து இதை நான் உபயோகிப் பதில்லை. அது என்னுடைய கிறுக்குத்தனங்களில் ஒன்று)
சானா நல்ல நடிகர் தயாரிப்பாளர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அவருக்கு நல்ல சங்கீத ஞானமுண்டு. அருமையான ஒவியர். பதியூர் ராணியின் விளம்பரங்களில் அது பளிச்சிட்டது. அவர் ஒரு நல்ல ஒப்பனைக் கலைஞர். நாடகத்துக்காக அவர் தேர்ந்தெடுத்த உடைகளும், செய்த ஒப்பனைகளும் அதை பறைசாற்றின. ஆனால் என்னைப் பொறுத்தவரை மேடை உத்திகளில் அவர் எவ்வளவு பெரிய கில்லாடி என்பதை இந்த நாடகத்தின்போது அறிய நேர்ந்தது தான் வியத்தகு அம்சம். 'சைக்ளோராமை வைத்துக்கொண்டு என்னென்ன மாயா ஜாலங்கள் சிருஷ்டிக்கலாம் என்பதை அவரிட மிருந்து கற்க முடிந்தது. டயல் 'எம்' ஒரு செட் நாடகம். ஆனால் ‘பதியூர் ராணி'யில் அரச சபா மண்டபம், அந்தப் புறம், பாதாளச்சிறை, நீதி மன்றம், வனாந்தரம் என்று ஏகப்பட்ட காட்சிகள், மிகச் சொற்பமான பொருட்களை வைத்துக் கொண்டு கதை நிகழும் களங்களை நேரில் பார்க்கும் பிரமையை ஏற்படுத்தியது மட்டுமல்ல, காட்சி நடக்கும் நேரம், காலையா, மாலையா, இரவா என்பதைக் கூட ஒளியமைப்பில் அவர் துல்லியமாகக் காட்டியது. அவர் எத்தனை, பெரிய திறமைசாலி என்று காட்டியது.
94

காற்று வெளியினிலே.
மரதானை சென்றல் சலூன் ராஜா என்கிற ஆர்வமிகு கலாரசிகரின் ஒலிப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி சூழலை மேலும் தத்ரூபமாக்கியது "பதியூர் ராணியை" ஒரு மறக்க முடியாத அனுபவமாகச் செய்தது. எனக்கு மட்டுமல்ல, பங்குகொண்ட எல்லோருக்கும்தான்.
கண்ணுக்கு இனியது “பதியூர் ராணி" என்றாலும் காசை வாரிக் குவித்தது “லண்டன் கந்தையா" தான். ஒரு காலத்தில் வானொலியில் சக்கைபோடு போட்ட நாடகம் காசிம் காக்கா என்கிற பாத்திரம். முஸ்லீம்களை நையாண்டி செய்து அவர்கள் மனதைப் புண்படுத்துவதாக புகார்!
வேடிக்கை என்னவென்றால் இந்தப் புகார் வந்தது முஸ்லீம் - அல்லாத பெரியவர்களிடமிருந்து முஸ்லீம் அல்லாத நண்பர்கள் முஸ்லீம்கள் மீது இத்தனை பரிவு கொண்டு ஒரு புகாரைத் தரும்போது ஒரு முஸ்லீம் அமைச்சர் என்ன செய்வார். "உடனே நிறுத்து" என்று உத்தரவு போட்டு விட்டார். பிறகு ஒன்றிரண்டு தடவைகள் மேடை ஏற்றப்பட்டது. அரசு அதிகாரியான தான் மேடை ஏற்றுவது முறையா என்று சானாவுக்கு உள்ளூர ஓர் உறுத்தல். எனவே இவை இலை மறைவு காய் மறைவு என்கிற ரீதியிலேயே மேடை ஏற்றப்பட்டன. ஆனால் லண்டன் கந்தையாவைப் பொறுத்தவரை அதை அப்படி எளிதில் மறைத்து விடமுடியாது. அது அவ்வளவு பொப்யூலர். பாலசந்திரன் விடுவாரா?
கொழும்பில், யாழ் வளைகுடாவில் ஒவ்வொரு ஊரிலும் என்று மேடை ஏற்றுவதில் முழுவீச்சுடன் - முழு மூச்சுடன் பாலு ஈடுபட்டார்.
அமரர் அல்ஃப்ரட் துரையப்பா யாழ் நகர மேயராக இருந்த காலத்தில் விளையாட்டரங்க நிதிக்காக அந்நகர மண்டபத்தில் “லண்டன் கந்தையா’ மேட்னி காட்சி கூட
95

Page 50
அப்துல் ஜப்பார்
நடத்தப்பட்ட விஷயம் அன்று வரை மட்டுமல்ல. இன்று வரை, நான் காணாத கேள்விப்படாத ஒரு புதுமையான அனுபவம். இங்குதான் லண்டன் தந்தையாவில் என் பங்களிப்பு துவங்கியது. முதன்முதலாக சோமு என்கிற வேலைக்கார வேடம் ஏற்று நடித்தேன்.
பாலு ஒரு பத்திரிகாலயத்தில் வேலைப்பார்த்தார். அதனுடைய யாழ் காரியாலயம் தாம் வளைகுடா விஜயத்தின்போது எங்கள் குழுவின் தங்குமிடம், அது மிகச் செளகரியமாகப் பயன்பட்டது. காலையில் கள்ளு குடிக்கப் போவது முதல் மேடைக்கு போவது வரை எல்லாமே இங்கிருந்து தான் கார்ப்பயணம். ரொம்ப சின்ன பையனான எனக்கு கள்ளுக்குடியெல்லாம் ஒத்துவராத சமாச்சாரம் எனினும் ஒற்றையில் கிடந்து போரடிக்கப் பயந்து இவர்களோடு தொற்றிக் கொள்வதுண்டு.
கொழும்பில் உன்னத பதவி வகிக்கும் அரசு அதிகாரியும் உதவாக்கரையாகிப் போய் ஊரிலேயே குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கும் அவரது பழைய நண்பனும் பனைமரத்தடியில் சரி சமமாக இருந்து “சோச லிஷத்தை' நடப்பாக்கிக் கொண்டிருக்கும் கண் கொள்ளாக் காட்சியை நாம் சர்வ சாதாரணாகக் காணலாம். கொழும்பில் கோட்டும் சூட்டுமாகக் கொடிக் கட்டிப் பறப்பவர்கள். இங்கு கையில் கடிகாரம் கூடக் கட்டாமல் காட்சிக்கு எளியவர்களாக காட்சியளிப்பது @@ விஷேசமாகக் குறிப்பிடப்பட வேண்டிய அம்சம். ஆச்சார சீலர்களான இவர்களுக்கு மத்தியில் மேல் சாதி - கீழ் சாதி என்று மேலோங்கி நின்ற ஓர் உணர்வு மட்டுமே என்னை உறுத்திய விஷயம். மற்றப்படி 'விருந்தோம்பல்” என்றால் என்னவென்பதை இவர்களைப் பார்த்துத்தான் பலர் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். யாழ்ப்பாணத்துக்கு வெளியே இயந்திர மனிதர்கள் போல்
96

காற்று வெளியினிலே.
செயல்படும் இவர்கள், இவர்களது கோட்டையில் பாசமும் நேசமும் மிக்க பரவசமிகு மனிதர்கள். சங்கர் கபேயில் தான் எங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு. ஆனால் ஒருநேர மாவது அங்கு சாப்பிட்டிருப்போமா என்பது சந்தேகமே - அத்தனை விருந்துகள்! சைவஉணவை, கிராமிய மணம் கமழ, இத்தனை விதம் விதமாகச் சமைக்க முடியுமா? பாகற்காய் பொறியலைக்கூட பாயாசத்தின் சுவையுடன் நான் விரும்பிச் சாப்பிட்டது யாழ்ப்பாணத்தில் தான். அது சரி, இதற்கு முந்திய வீட்டில் இன்ன கறிதான் வைத்திருப் பார்கள். ஆகவே நாம் மாற்றி வைக்க வேண்டும் என்று இவர்களுக்கு எப்படி தெரிகிறது?
மற்றவர்களுக்கு 'தண்ணி’ தண்ணிர் பட்ட பாடாக இருந்ததால் தண்ணிர் பிரச்னையல்ல. ஆனால் எனக்கு யாழ் நகரில் தண்ணிர் தான் பெரிய பிரச்னை, பொது வாகவே கொழும்புத் தண்ணிரை குடித்துப் பழக்கப்பட்ட வர்களுக்கு வேறு எந்த ஊர்த் தண்ணிரும் ருசிக்குமா என்பது சந்தேகமே "ஒரேஞ் பார்லியை தாராளமாக இரண்டு பேர் சாப்பிடலாம். ஒருவருக்கு மட்டும் என்றால் அது அதிகம். மிகுதி வீணாகும். அப்போதுதான் அந்த இளைஞர் ரயில் நிலையத்துக்கருகில் இருந்த குளிர்பானக் கடையில், நான் ஒரு கிளாஸ் சாப்பிட்டதும் மீதத்தை குளிர்பெட்டியில் பத்திரமாக வைத்திருந்து கேட்கும் போது தருவதற்கு ஏற்பாடு செய்தார். இப்படி எல்லோருக்கும் அவர்கள் தேவைகளை அனுசரித்து உதவினார். அதிகம் பேசமாட்டார். நாங்கள் உதிர்க்கும் நகைச்சுவை வெடி களைக் கேட்டு மண்டபமே அதிரும்போது இவர் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை மட்டுமே தோன்றும். விருந் தோம்பல் இருக்கட்டும் அதற்கு இணையாகச் செய்ய வேண்டிய உபசரணைகள் இருக்கின்றனவே இதில் இவர் தனி டைப். யார் இந்த இளைஞன்? இன்று பத்திரிகை
கா-7 97

Page 51
அப்துல் ஜப்பார்
களில் ஒரு போராளிக் குழுவின் தலைவன் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் இந்த இளைஞன் ஞாபகம் வருகிறதே. அவர்தானா இவர்? யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது?
லண்டன் கந்தையா ஒரு கதையல்ல. பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு. ஆனால் இவற்றின் பாத்திரங்கள் - லண்டன் கந்தையா - அவரது ஆச்சி - அவரது வலது கரம் மயிலு (சிவலிங்கம்) புலவர் (நவரத்தினம் மாஸ்டர்) - அவரது காதலி ரேணுகா - எதிரி (அட்வகேட் ராஜ சுந்தரம்) - காசிம் காக்கா (ரொசாரியோ பிரீஸ்) வேலைக் காரன் சோமு (நான்) நிரந்தரமானவை! இவர்களைச் சுற்றி, இவர்களைப் பற்றி சம்பவங்களை கோர்த்து, இணைத் தெடுத்து, நாடகம் உருவாகிவிடும், நாளடைவில் இலங்கையர் கோனின் ஒரிஜினலை விட்டு எவ்வளவோ விலகி போய் விட்டது. பிறகு சி.சண்முகம் எழுதிய லண்டன் கந்தை யாவானது. அதன்பிறகு அதுவும் இல்லாமல் போய் ஒரு சின்ன ப்ளொட்” என்னென்ன காட்சிகள் யார் யார் எந்த வரிசையில் தோன்றுவது, என்னென்ன பேசுவது என்பதை தீர்மானித்துக் கொண்டால் அப்புறம் மேடையில் மகனே உன் சமர்த்து, தேவைப்பட்டதெல்லாம் ஒரு மேடையும் ஒரு நீலப் படுதாவும்தான். மேடை உத்தியாவது மண்ணாங் கட்டியாவது! விஷயம் இவ்வளவு "சிம்பி’ளாகிப் போன பின்பு செலவே இல்லாத நாடகத்தின் வரவு ஏறிப் போனதில் ஆச்சரியமென்ன?
பாலுவிடம் ஒரு பலஹினமுண்டு. அவர் விசேஷ மான சிலரை மிக விசேஷமாகக் கவனிப்பாார். அதுவே அவருக்கு வினையாக வந்ததும் உண்டு. அவற்றுள் ஒன்று, நாளை ல.வெ. அரங்கில் நாடகம், மேட்டுத் தெரு விவேகானந்தா மண்டபத்தில் ஒத்திகை நடந்து கொண்டி ருக்கிறது. ரொசி தனக்கு நெஞ்சு வலி என்றும் டாக்டர்
i: 98

காற்று வெளியினிலே.
பேசக்கூடாது என்று கட்டளை இட்டிருப்பதாகவும் ஒரு குண்டை தூக்கிக் கொண்டு வந்து சேர்த்தார். சானாவும் பாலும் இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டனர்.
ரொசி வேறு ஏதோ காரணத்துக்காகக் சாக்குப் போக்குச் சொல்கிறார். என்று எனக்குத் தோன்றியது. அவரது செய்கை நியாயமாக எனக்குப்படவில்லை. சனி ஞாயிறு இரண்டு நாட்களுக்கும் டிக்கட் “சோல்டவுட் என்று என்றும் கேள்விப்படாத ஒரு சங்கதியை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கையில் இது நிச்சயமாக ஒரு பேரிடி. சானா மூச்சிறைக்க ஆனால் மெதுவாக உலவிக் கொண்டிருந்தால் அவர் மிகுந்த டென்ஷனில் இருக்கிறார் என்று பொருள். சற்று முன்புவரை கலகலப்பாக இருந்த இடம் சவ வீடு போல் களை இழந்து எங்கும் மெளனம். ரொசியிடம் "ஆர் யு சுவர் யூ காண்ட் டு இட்?" மிக மெதுவாகக் கேட்டேன். "என்ன ஜபாார் இதெல்லாம் வெளையாடுற விஷயமா?” என்று கேட்டார். "நான் செய்வதில் உங்களுக்கு ஆட்சேபனை உண்டா" என்கிற கேள்வியை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் "பெஸ்ட் ஒவ் லக்" சொன்ன கையோடு "சானா, ஜபார் செய்கிறேன் என்கிறார்” என்றார் சானா “விளையாட வேறு நேரம் காலமே கிடையாதா உங்களுக்கு?” என்று கேட்பது போல் சலிப்புடன் எங்களைப் பார்த்தார். "பொடியமார் ஹ"ல்மான் வெளையாடுறானுவ எண்டு செல்லி நீங்க ஏன் ஐ-சே பேதிக்குக் குடிச்ச புள்ள மாதிரி பே முளி முளிச்சுக்கொண்டு ஈக்கீங்க. நான் ஈக்கேண்டு செல்லியன்லயா?" என்று நான் பேசி முடிக்க வில்லை. சானா வாயைக்கூட திறக்கவில்லை. பாலு பாய்ந்து எழுந்தார். சானாவிடம் "இது போதும் சானா, இது போதும்” என்றார். என்னிடம் "இட் இஸ் ரியலி கிரேட் ஜபார், யூ ஆர் டுயிங் இட், ரொசி உடம்பை பாத்துக்
99

Page 52
அப்துல் ஜப்பார்
கோங்கோ" என்று சொல்லி விட்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யச் சிட்டாய்ப் பறந்து விட்டார். ஆனால் காசிம் காக்கா ரோலுக்குத் தேவைப் பட்ட அந்தக்கோட்டு, அந்தக்குடை, அந்த பெல்ட், அந்தச் சாரம் அந்தத் துருக்கித் தொப்பி ஆகியவற்றைச் சேகரிக்கும் பொறுப்பு என் தலையில் விழுந்தது. சிரமப்பட்டுச் சேகரித்தேன்.
லண்டன் கந்தையாவில் FIT6öfT வெளுத்துச் கட்டுவார். காட்சிக்குக் காட்சி அவர் ராச்சியம்தான். அவர் கையசைவுகள் கூட சிரிப்பலைகளை உண்டாக்கும். எப்போதாவது ஒரு சிறிய தொய்வு ஏற்பட்டாலும் "என்ன சிரிக்க மாட்றியள்?" என்று ரசிகர்களையே நேரில் கேட்டுச் சிரிக்க வைப்பார். ஆனால் அன்று? பெருமைக்காகச் சொல்லவில்லை. சானா, கஜகர்ணம் வைத்துப் பார்த்தார். பட் இட் வாஸ் காசிம் காக்கா ஆல் தவே! அன்று முழுக்க முழுக்க அது காசிம் காக்கா ஷோ.
மக்கீன் பகையை மறந்து ஓடிவந்து "கொன்னுட்டே கொன்னுட்டே” என்று துள்ளிக் குதித்தான். ரேடியோ மாமா தலையைத் தொட்டு ஆசீர்வதித்து புன்னகை தவழ புளதித்தார். ஆனால் சில்லையூரார்தான் "ஜபார் இன்று வரை லண்டன் கந்தையாவில் லண்டன் கந்தையாதான் ஹீரோ. ஆனால் இண்டு நீர் தான் - காசிம் காக்கா தான் ஹிரோ” என்றார், சானா “எஸ்யூ ஆர் ரைட் இண்டைக்கு அவர் தான் எங்கள் மானத்தைக் காப்பாற்றினார்" என்றார் நான் காற்றில் மிதந்தேன்.
மறுநாள் தொபுகடிரென்று தரையில் விழுவேன் என்ற தெரியாமல் போய்விட்டது. சானாவும் மனிதர் தான் அவரிடமும் பலவீனங்கள் இருக்குமென்று தெரியவந்த போது நான் ஆடிப்போனேன்.
100

காற்று வெளியினிலே.
லயனல் வெஸ்ட் தியேட்டரில் அரங்கின் பின்புறம் ஒப்பனை அறைகள், ஒன்று பெண்களுக்கு, மற்றது ஆண்களுக்கு இரண்டுக்கும் நடுவில் பாத்ரூம். எந்தப்பக்கத் திலிருந்தும் உள்ளே போகலாம். போகிறவர்கள் இரண்டு தாழ்பாள்களையும் போட்டுக்கொள்ளவேண்டும். வரும் போது இரண்டையும் திறந்து விட வேண்டும். கடைசி நிமிடம் வரை வியர்க்க விருவிருக்க நாடக காரியங்களை ஒடி, ஒடிச் செய்யும் நான், மேடை ஏறுவதற்கு முன்பு கட்டாயம் குளித்துவிட்டு ரொம்ப ஃபிரஷ்ஷாக மேடை ஏறுவது வழக்கம். அன்றும் அப்படியே, ஆண்கள் பகுதியி லிருந்து யாரோ திறக்க முயன்றார்கள். முடியவில்லை. மறுபுறத்திலிருந்து பெண்கள் யாரும் சென்றிருக்கக் கூடும் என்று எண்ணியோ என்னவோ முயற்சிப்பதை விட்டு விட்டார்கள். ஆனால் தொடர்ந்து கேட்ட டயலோக் என்னைத் தூக்கி வாரிப்போட்டது.
"மாஸ்டர், ஆள் இல்லை, எப்படியாவது ஒப்பேத்து வோம் எண்டுதான் முதல்ல நெனைச்சனான். ஆனா இப்ப மொதலுக்கே மோசம் வரும் போல இருக்குது."
“என்ன செய்யணும் கிறியள்?” "நீங்கள் நேத்துக் கேட்ட அந்தக் கேள்விகள் கேக்காம விட்டுடுங்கோ.
"அதுவும் சரிதான். அந்தக் கேள்வியளுக்கு பதில் சொல்லக் கேக்கத்தான் பொடியேன் மேலே போயிடரான்” சிறிது நேரம் எனக்கு என் காதுகளையே நம்ப முடியவில்லை. மூச்சுத் திணறுவது போல் ஓர் உணர்வு. பேசாமல் இறங்கி ஓடி விடலாமா (கெட்ட வார்த்தை) சாவட்டும்” என்று ஒரு வெறி. அப்புறம்படு நிதானம். அப்புறம் ஒரு தீர்மானம்.
". (மீண்டும் கெட்டவார்த்தை மேடைக்கு வரட்டும்
101

Page 53
அப்துல் ஜப்பார் சாவடிக்கலாம்” அதன் பிறகு என் ஒவ்வொரு அசைவிலும் ஏதுவுமே நடக்காதது போல், இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் அமைதியாக இருந்தேன். என் முறை வந்தது. மாஸ்டர் எஜமான் விஸ்வாசத்துடன் தன் கடமையைச் செய்ய ரெடி, அதை எதிர்கொள்ள நானும் ரெடி மாஸ்டரை எங்கே பேசவிட்டேன். நேற்று நாடகம் காண வராதவர்களுக்கு இன்று கதை சொல்வது போல், கேள்வியும் நானே பதிலும் நானே. திடீரென்று ஒரு யோசனை திரையைப் போட்டு காட்சியை அரைகுறை யாக முடித்துவிட்டால் என்ன செய்வது? அவரை தொளில் கையைப் போட்டு திரைக்கு முன்னால் இருக்கும் அரை வட்ட வடிவ அப்ரன் மேடைக்கு அழைத்து வந்து விட்டேன். யார் என்ன செய்ய இயலும்?
வாயைத் திறக்கத்திறக்க கரகோஷம் விடுவேனா? மாஸ்டர் முதல்நாள் கேட்காத கேள்விகளைக் கூடக் கேட்டு, போதும் போதும் என்கிற நிலைவரை கொண்டு போய் கடைசியாக ஒரு குட்டிக் கதை "மாஸ்டர் எண்ட மொவன் ஒங்களுக்கு தெரியும் இல்லையா. பீப் பொடியன். எண்டாலும் அடுத்த ஊட்டுலே ஒரு குட்டி ஈக்கில்லியா அதப்பாத்து அடிச்சான் பாருங்க கண்ணுர வொளை. அதனால் ஒங்களுக்கு ஒண்ணா சொல்லியன். யாரா ஈந்தாலும் அவங்களை லேசா நெனய்க்கக் கூடாது." செய்ய வேண்டியதை செய்துவிட்டேன். சொல்ல வேண்டியதையும் சொல்லிவிட்டேன். ஆனாலும் என்னை நன்றாகப் பழி தீர்த்து விட்டார்கள். அந்த நாடகத்துக்கு "தினகரன் சார்பாக நண்பர் மகேசன் விமர்சனம் எழுதினார். காசிம் காக்காவாக நடித்த ஜப்பார் என்று எழுதி என்னை பற்றி ஒரு நீண்ட அரைக் கொலம் புகழ்ந்து எழுதி இருந்தார். ஆனால் அது மறுநாள் காசிம் காக்காவாக நடித்த நடிகர் என்று பிரசுரமாகி இருந்தது.
102

காற்று வெளியினிலே.
கவனியுங்கள் ஜ - ப - ர - ர் நான்கு எழுத்துக்கள். ந - டி- க- ர் நான்கு எழுத்துக்கள். பத்திரிகை வடிவம்பெறுவதில் என்னென்ன செயல்பாடுகள் எல்லாம் உள்ளன என்பதை நன்கறிந்த ஒருவரின் சித்து விளையாட்டு இது. ". .
நாடகம் பார்த்தவர்களுக்கு காசிம் காக்கா இந்த ஜபார் என்று தெரியும். ஆனால் பத்திரிகை வாசிக்கும் வாசகனுக்கு நடிகர் என்று மொட்டையாகச் சொன்னால் அது யார் என்று அவன் கண்டான்.
நான் செய்த முதல் வேலை. இனிமேல் எனக்குக் காசிம் காக்கா ரோல் வேண்டாம் என்றதுதான். பாலு எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். நான் மசியவில்லை. என்னை விரும்பினார் என்பதைவிட ரொசியைச் சமாளிப் பதில் உள்ள சிரமம் தான் அதற்குக் காரணம். நான் சொன்ன பதில் “ரொசிக்கு” சுகமில்லை. நான் நடித்தேன். அவருக்குச் சுகமாகி விட்டது. இனி அவர் செய்வது தான் சரி” என்றேன்.
லண்டன் கந்தையா, மயிலு புலவர் ஆகிய ரோல் களை கடைசி வரை அவர்களே செய்தனர் மற்றவைகளை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செய்திருக்கிறார்கள். நானோ லண்டன் கந்தையாவில் ஒன்றுக்கு மேற்பட்ட ரோல்களை செய்திருக்கிறேன்.
லண்டன் கந்தையா ஒலிபரப்பின்போது ஆச்சியாக திருமதி பரிமளாதேவி விவேகாந்தா நடித்தார் - இல்லை, இல்லை - அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்தார். பிறகு திருமதி தீரா (ஆறுமுகம்) பெர்னாந்து - அழகும், இளமை யும், திறமையும் மிக்க ஒரு அபூர்வமான கலைஞர் - ஆச்சி பாத்திரத்தை ஒரு சவாலாக ஏற்றுச் செய்தார். கடைசியாக திருமதி வசந்தா அப்பாதுரை அந்தப் பாத்திரம் ஏற்றார்.
103

Page 54
அப்துல் ஜப்பார் ஆனந்தி (சுப்பிரமணியம்) சூர்யபிரகாஷ் - ஆமாம் பி.பி.சி. தமிழோசை புகழ் ஆனந்தியே தான் - திருமதி விசாலாட்சி ஹமீது, திருமதி ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோர் லண்டன் கந்தையாவின் சுவிட்ஹார்ட்" ரேணுகாவாக நடித்துள்ளனர். நான் வேலைக்காரன் சோமு, காசிம் காக்கா அட்வகேட் ராஜ சுந்தரம் ஆகிய ரோல்களில் நடித்துள்ளேன். ராஜ சுந்தரமாக நடித்த போதுதான் அடி பட்டேன்.
ஒரு முறை பாலுவின் ஏற்பாட்டில் சானாவின் தலைமையில் யாழ் சென்றோம். ஊர் பருத்தித்துறை என்று நினைக்கிறேன் - சரியாக ஞாபகம் இல்லை. பேராசிரியர் டொக்டர் சிவத்தம்பி அவர்களின் நெருங்கிய உறவினர் சிங்கர் அவர்கள் வீட்டில் தங்கினோம் (ஒ. அந்தக் கீரைப் புட்டு காலை உணவை வாழ்நாளில் மறக்க முடியாது) ராஜேஸ்வரியும் சண்முகமும் திருமணம் செய்யப்போகும் அளவு நெருங்கி வந்து விட்ட விஷயம் எனக்குத் தெரியாது.
லண்டன் கந்தையாவைக் கெடுக்க அட்வகேட் ராஜசுந்தரம் முயற்சி செய்வான். அவனது கருவி ரேணுகா. ஆனால் ரேணுகா காதல் வசப்பட்டுவிட சிக்கல் ஆரம்ப மாகிறது. லண்டன் கந்தையாவைக் கவிழ்ப்பதில் ராஜ சுந்தரத்தோடு அவள் ஒத்துழைக்க மறுக்கும் போது, ராஜ சுந்தரம் கோபத்தில் "நீ என்ன பெரிய பத்தினியோ? என்று கேட்பான்.
அன்று சானா "டொப் ஃபோமில்’ இருந்தார். சிரிப்பும் கர ஒலியும் கூரையையே பிய்த்துக் கொண்டு சென்றன. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட சானாவும் ரொசியும் நாடக ஏற்பாட்டாளர்களுடன் சென்று விட, நாங்கள் மீதிப்பேர் இல்லம் திரும்பினோம். வழி நெடுக பயணத்தின் போது ஒரு இறுக்கமான மெளனம்.
804

காற்று வெளியினிலே.
ராஜேஸ்வரி சிடுசிடுவென்று இருந்தார். வசந்தா அப்பா துரை மிக உற்சாகமாகப் பேசிக் கொண்டு வந்தார். நடக்கப் போவது தெரியாமல் நானும் அவருடன் உரையாடிக் கொண்டே வந்தேன். சண்முகம் நிதானமில்லாமல் மூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.
வீடு வந்ததும் தான் தாமதம். சண்முகம் மிகுந்த சீற்றத்துடன் "நீ எதற்கு அப்படிக் கேட்டாய்?" என்றான். நான் ஒன்றும் புரியாமல் “எப்படி எதைக் கேட்டேன்?" என்றேன். என் பதிலுக்குக் கூடக்காத்திராதது போல் “பளிரென்று கன்னத்தில் விழுந்தது ஒர் அறை. பொறி கலங்கிப் போனேன். காதில் ரிங் ரிங் என்று ஒரு சப்தம்.
ஒரு விரல் கண்ணில்பட்டு கண்ணே வெளியே வந்துவிடும் போல் வேதனை. யாரோ இடையில் விழுந்து தடுத்தார்கள். சண்முகத்தின் வெறியும் ஆவேசமும் அடங்க வில்லை. என்னை அடித்துத் துவம்சம் செய்துவிடுவது போல் பாய்ந்து பாய்ந்து வருகிறான். வசந்தா அப்பா துரைக்குக் கோபம் வந்துவிட்டது. "சண்முகத்தை விடுங்கோ, என்ன நடக்குதெண்டு நானும் பார்க்கிறேன். ஆனா ஒண்டு ஜபார் மேலே இன்னொரு முறை கைப்பட்டுது நான் பொம்பளையா இருக்க மாட்டேன்" என்று ஒரு போடு போட்டார். சண்முகம் உணர்ச்சி வசப்பட்டு அழுது விட்டான்” அவன் மட்டும் மேடையிலே வச்சு அந்தக் கேள்வி கேட்கலாமா? என்றபோது எனக்கே சங்கடமாக இருந்தது. என்னை அடித்ததைவிட என்னை இவ்வளவு கீழ்த்தரமாக எடை போட்டு விட்டானே என்கிற வேதனை தான் மேலோங்கி நின்றது.
&FIT60TFT வந்து விஷயத்தைக் கேள்விப்பட்டு மூச்சிறைக்க அங்குமிங்கும் உலாவினார். பிறகு “வர்த்தக ஒலிப்பரப்பு நாடகத்தில் ஜபார் நடிக்க முடியாதெண்டால்
105

Page 55
அப்துல் ஜப்பார்
என்ன செய்வீர் எனக் கொண்டும் தெரியாது” என்று படுக்கப் போய்விட்டார். ரொசி தாம் தீம் என்று குதித்தார். "கொழும்பில் வச்சு நடந்திருந்தா நடக்கற கதையே வேற” என்றார். என்ன உத்தேசத்தில் சொன்னாரோ தெரியாது. ஆனால் என்னைப் பொருத்தவரை அது உண்மை. ஆட்டுப் பட்டித் தெருவில் “கொலைக்கொம்பனான சண்டியர் கூட “ஊசுபு நானா’ என்று வெகு மரியாதையுடன் அழைக்கும் என் தந்தைக்கு தன் ஒரே மகனை ஒரு காரணமும் இல்லாமல் ஒருவன் அடித்தான் என்கிற தகவல் தெரிந்தால் அடித்தவனுடைய கையின் தோள் செப்பு இறங்கிவிடும். அப்புறம் வர்ம வைத்தியரைக் கொண்டு இறங்கிய செப்பைத் தூக்கி வைத்துக் கட்டுப்போட வேண்டிய திருக்கும். ஆகவே என் தந்தையின் காதுகளுக்கு இது எட்டாமல் கவனமாக பார்த்துக்கொண்டேன். அப்போது அவர் மாவநெல்லையில் இருந்தது செளகரியமாக போய்விட்டது.
இதன்பிறகு பலர் நான் "துணி சம்ரஷ்ணம்” தொடர் நாடகத்தில் நடிக்கக்கூடாது என்று வற்புறுத்தினர். ஆனால் நான் அதற்கு உடன்படவில்லை. அப்படிச் செய்வது. சண்முகத்தை பழி வாங்குவதாக இருக்கலாம். ஆனால் அதனால் பலர் பாதிக்கப்படக்கூடும். சானா, மயில் வாகனம் இப்படி - ஆகவே அது அழகல்ல என்று நினைத்தேன். இந்த சம்பவத்துக்குப்பின் ராஜேஸ்வரி சண்முகம் தம்பதி என்னிடம் மிக, மிக, நெருங்கி வந்து விட்டனர். அவர்கள் மகள் வசந்தி இந்தியாவில் படிக்க வந்தபோது என்னை லோக்கல் கார்டியனாகக் குறிப்பிடும் அளவுக்கு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அவர்கள் குடும்ப சகிதம் இந்தியா வந்தபோது நெல்லை ரெயில் நிலையத்தில் வரவேற்றது முதல் சாத்தான் குளம் - கன்னியாகுமரி - நாகர்கோவில் - திருவனந்தபுரம் என்று
106

காற்று வெளியினிலே.
அவர்கள் மீண்டும் ரயில் ஏறும் வரை ஒரு வார காலம் என் அதிதிகளாக இருந்தனர்.
நாகர்கோவிலில் என் உறவினர் ஒருவர் வீட்டில் அவர்களுக்கு விருந்து, உணவுக்குப்பின் பேசிக் கொண்டி ருந்தோம். என்னைப் பாடச் சொன்னார்கள். சிதம்பரம் ஜெயராமன் போல் குரலை மாற்றிப் பாடுவதைத் தெரிந்தி ருந்த ராஜேஸ்வரி "ஈடற்ற பத்தியின்” பாடலைப் பாடச் சொல்ல, நான் பாட, திடீரென்று "அத்தான்" என்ற அலறலுடன் பத்மினியின் டயலாக்கை பேச ஆரம்பித்தார். இந்த அலறலைச் சற்றும் எதிர்பாராத என் மைத்துணி பயந்து பதறி - அலறி - மயக்கம் போடும் அளவுக்குப் போய்விட்டது மறக்க முடியாத ஒரு சம்பவம்.
சமீபத்தில் நான் இலங்கை வந்திருந்த போது ராஜேஸ்வரியின் புதல்வர்கள் நடத்திய ஒரு இசை நிகழ்ச்சியை நான் குத்து விளக்கேற்றித் துவக்கி வைக்க வேண்டும் என்று ஒர் அன்பு வேண்டுகோள் விடுத்தார். அன்றைய தினம் "ஒரு சர்ப்பிரைஸ்" நிகழ்ச்சியாக இதைச் செய்யலாம் என்று கூட எண்ணியிருந்தேன். ஆனால் வெளியூர் சென்றிருந்த நான் கனத்த மழை காரணமாக உரிய சமயத்தில் நிகழ்ச்சிக்கு வந்து சேர இயலாமல் போய்விட்டது. கடைசி பகுதியிலேயே கலந்து கொள்ள முடிந்தது. நிகழ்ச்சியின் தரமும், வந்திருந்த ஜனத்திரளும் எனக்கு மகிழ்ச்சி தந்த அம்சங்கள், பிரபல நடிகர் பாண்டியராஜன் ஜோக் அடிப்பதாக எண்ணிகொண்டு உளறிக் கொட்டியது திருஷ்டிப் பரிகாரம். எனக்கு ஒரே ஒரு குறை மிகப் பெரிதாகப்பட்டது - அது அமரனாகி விட்ட அந்த சண்முகம் அந்த அவையில் இல்லாதது. இருந்திருப்பின் வழமை போல என்னைக் கட்டிப்பிடித்து, அடிப்பட்ட கன்னத்தை வழமைபோல் தடவி அதில் ஒரு முத்தம் பதிப்பான். என் கன்னத்தை நானே தடவி
107

Page 56
அப்துல் ஜப்பார்
விட்டுக்கொண்டேன்.
சண்முகம் சம்பவம் எனக்கு இன்னொரு நல்ல நண்பரை பெற்றுத் தந்தது - லட்டீஸ் வீரமணி. நடிகவேள் எம்.ஆர் ராதாவின் "எதிரொலி’ என்று தன்னைச் சொல்லிக் கொள்பவர் அதற்கு அவசியமே இல்லை. உண்மையில் அவர் நல்ல நடிகர். சினிமா வில்லனுக்குரிய தோற்றம். பேச்சு - பார்வை - நடை - உடை எல்லா வற்றிலும் ஒருமுரட்டுத்தனம் தெரியும் யாரையும் தூக்கி யெறிந்து பேசுவார். இவரைக் கண்டாலே எனக்கு உள்ளுர ஓர் உதறல். ஒதுங்கி போய் விடுவேன்.
ஒருநாள் ஒதுங்குகிறேன் - ஒதுங்குகிறேன் எனினும் அந்தக் கார் என்னை மெதுவாக, மெதுவாக இடித்துத்தள்ள வருவதுபோல் நெருங்கி நெருங்கி வருகிறது. சட்டென்று திரும்பிப் பார்க்கிறேன். லட்டீஸ்! “கொஞ்சம் நில்லுங்க” என்று காலை நிறுத்தினார். ஏதடா வம்பு என்பது போல் நின்றேன். "சண்முகத்துக்கும், உங்களுக்கும் என்னத் தகராறு?” “ஒன்றுமில்லை" என்றேன். “என்ன கை நீட்டி அடித்திருக்கிறான். ஒன்றுமில்லையா?” என்று கேட்டார். என் பதில் ஒரு அசட்டுச் சிரிப்பு "சேச்சே. என்ன அசிங்கம் ஒரு கலைஞனை இன்னொரு கலைஞன் கை நீட்டி அடிக்கலாமா?” “சரி போகட்டும் இனிமே ஏதாவ துன்னா எங்கிட்ட சொல்லுங்க" என்றார். எனக்கு வினோதமாக இருந்தது. சானாவுக்கும் இவருக்கும் இருந்த உறவு லவ் - ஹேட் (வெறுப்பு ஆகவே விருப்பம், விருப்பம் ஆகவே வெறுப்பு)என்கிற வகையைச் சேர்ந்தது. வானொலி நடிகர்களை சகட்டு மேனிக்குத் திட்டி நக்கலாக விமர்சனம் செய்வார்.
ஒருநாள் "உங்களோடு நான் ஒரு நாடகம் நடிக்க வேண்டும்" என்றார். பயத்தினாலேயே மறுத்துவிட்டேன்.
108

காற்று வெளியினிலே.
"என்ன ஐசே நாங்கன்னா கேவலமா?” என்று கண்களை உருட்டிக் கொண்டு சண்டைக்கே வந்து விட்டார். ஆனால் அவரோடு நடிக்க வேண்டிய சந்தர்ப்பம் சற்றும் எதிர் பாராத ஒரு சூழ்நிலையில் ஏற்பட்டது. அந்த இரண்டு நாட்களும் முரட்டுசுபாவம் அவர் வெளித்தோற்றமே யல்லாது அவர் எவ்வளவு அருமையான மனிதர் என்று காட்டியது.
எங்கள் வானொலி சக நடிகர் ஜோசப் ஆறுமுகம் எங்களையெல்லாம் தன் ஊர் திருக்கோணமலைக்கு அழைத்துச் சொன்று சிறப்பு செய்ய ஆசைப்பட்டார். ஒருநாள் "எங்கள் ஊரில் கலை லிழா நடக்கிறது நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம். மேடையில் தோன்றினால் போதும்" என்றார். "அதென்ன நாங்கள் என்ன சினிமா நட்சத்திரங்களா? ஒரு நிகழ்ச்சியே செய்கிறோம் என்றார், ரொசி லட்டீஸ் வீரமணியின் "வோல்கஸ் வேகன்’ டெக்ஸியை போவர ஏற்பாடு செய்யலாம் என்றால், தனக்கும் மேடையில் பங்கு தருவதானால் வருகிறேன் என்று அடம் பிடித்தது மட்டுமல்ல. அப்படியில்லாமல் நீங்கள் திருக்கோணமலை போகப் போவதில்லை என்று பயமும் காட்டினார். விதியே! என்று சம்மதம் தெரிவித் தோம். நான், ரொஸி, பிச்சையப்பா, சோமசுந்தரம், லட்டீஸ், காரில் போகும்போது தான் ரொசி ஒரு சின்னக்கதையே சொன்னார். அதன் பிறகு யார் யாருக்கு எது என்று பாத்திரங்கள் தீர்மானித்து ஏற்ற வேண்டிய மெருகை ஏற்றி, "சுடுநீர்ச்சுனையில் குளிக்கும் போது" தான் ஒத்திகையே! அப்புறம் சாப்பிட்டு விட்டு தூக்கம். எழுந்து குளித்துவிட்டு மேடை ஏறினால் அப்புறம் அது ‘எங்கள் விழா’.
மறுநாள் மலையைக் கோடரியால் வெட்டிப்பிளந்தது போன்ற ராவணன் வெட்டும் அதற்கும் சற்று மேலே
109

Page 57
அப்துல் ஜப்பார்
இயற்கை எழில் ததும்பும் அந்த அழகான துறைமுகத்தை மலைக்கு மேலே கண்ணாடி மேடை அமைத்து பார்க்க வசதி செய்திருந்த ஏற்பாடும் என்னை பிரமிக்க வைத்தன. இன்றும் சென்னை சேப்பாக்க சிதம்பரம் விளையாட்டு அரங்கிலிருந்து உச்சாணிக்கூரையில் கட்டித் தொங்க விட்டது போல் தோன்றும். அந்தக் கண்ணாடி மண்டபத்தில் இருந்து கொண்டு ஆட்டத்தை வர்ணனை செய்யும் போது திரிகோணமலையின் அந்தமலையுச்சி கண்ணாடி மண்டபம் ஞாபகத்துக்கு வரும். அந்த அழகிய ஊர் இன்று இனப்போராட்டம் காரணமாக சிதில மடைந்து சிதைந்து சின்னா பின்னப்படுவதாகப் பத்திரிகையில் படிக்கும் போது நெஞ்சில் இரத்தம் கசியும். சானாவுடன் பொறுத்தப்பட்டுப் போகாத - அல்லது போக முடியாத இன்னொரு கலைஞர் சந்திரன். சந்திரன் பாபு என்று என்னைத் தன்னை சொல்லிக் கொள்வார். அதாவது இலங்கை சந்திரபாபு.
இலங்கையில் நடிப்பில் ஃப்ரிலான்ஸ் என்பதற்கு இவர் ஒரு முன்னோடி. இவர் எந்தக் குறிப்பிட்ட அமைப்பையும் சேர்ந்தவரா என்பது தெரியாது. ஆனால் அநேகமாக எல்லா மன்ற நாடகங்களிலும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிப்பார். திடீரென்று ஆளைக் காணோம். சினிமாவில் நடிக்கும் ஆர்வம் அவரை சென்னைக்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டது.
ஒரு நாள் இலங்கை வானொலிக் கலைஞர்களான பிரின்ஸ் வாஸ், ஜோவலன் வாஸ் சகோதரர்களை கோயம் புத்தூரில் சந்தித்தேன். இங்கே வந்தபிறகு இந்திய வானொலிப் பக்கம் போகாத, இன்றும் இரண்டு கலைஞர்கள் பேச்சின் நடுவே சந்திரன் இந்தியாவி லிருப்பதை அறிந்தேன். சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தன்
110

காற்று வெளியினிலே.
சினிமா முயற்சிகள் பற்றிச் சொன்னார். "சந்திரபாபு இடத்தைப் பிடித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் நாகேஷ் வருகைக்குப் பின் எல்லாம் தலைகீழ். எல்லாம் நாகேஷ் எதிலும் நாகேஷ் என்றாகிவிட்டது” என்றார். சோர்வாக, அந்த சோர்வுக்கு மத்தியிலும் "உயிர் வாழ்வ தற்காக ஏதாவது ஒரு தொழில் தற்காலிகமாகச் செய்து கொண்டிருப்பேன். ஆனால் உயிர் போவதற்கு முன்பு நிச்சயம் சினிமாக் கலைஞனாகிவிடுவேன்” என்ற அவர் தன்னம்பிக்கை என்னை வியக்க வைத்ததுண்டு. அது நடக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நடக்குமா? என்கிற சந்தேகம் என்னுள் இல்லாமல் இல்லை. மகிழ்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் அது நடந்துவிட்டது. எஸ்.எஸ். சந்திரன் தமிழ்த்திரை உலகில் இன்று ஒரு முக்கியப்புள்ளி. நடிகர் - தயாரிப்பாளர் அரசியல்வாதி நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினர் சந்திரன் போலவே சூளுரைத்த இன்னொரு இலங்கை நடிகர் ஜீவா (கிதுர்), சந்திரன் அளவுக்கு அதிர்ஷ்டசாலியல்ல என்பது ஒரு சோகம். சந்திரன் புகழில் உச்சிக்குச் சென்ற பிறகு நான் இவரை சந்தித்ததே இல்லை. சாத்தான் குளத்தில் இவர் நாடகம் நடிக்க வந்தபோது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் அன்று நான் ஊரில் இல்லை. ஆனால் இன்னொரு அற்புதக் கலைஞனும் தமிழகத்தில் தொழில் அதிபரும் படவிநியோகஸ்தரும் புரட்சிக் கலைஞர் விஜயகாந்தை திரைஉலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ஒருவருமான M.S.M. மர்குக்கின் மகள் திருமணத்தின்போது மதுரையில் வைத்து மலரும் நினைவுகளை பறிமாறிக்
கொள்ள முடிந்தது.
இலங்கையில் ஒரு பிரச்னை என்றால் அது சம்பந்த மாக இங்கே கேட்கும் குரல்களில் ஒன்று நிச்சயம் இவருடையதாக இருக்கும். அப்படிப்பட்ட இன்னொரு
111

Page 58
அப்துல் ஜப்பார் குரலுக்குச் சொந்தக்காரர் உண்டு. இன்றும் இலங்கை மண்ணில் கிடந்து மடிய வேண்டுமென்று எண்ணுபவர். அவர்தான் மணவைத்தம்பி.
சிங்கள மொழியை சிங்களவர்களைவிட அழகாகவும் அட்சர சுத்தத்துடனும், இலக்கணப் பொலிவுடனும் இலக்கியநயத்துடன் பேசும் வல்லமை படைத்தவர். மாண்புமிகு கலாச்சார ராஜாங்க அமைச்சர் அஸ்வர் என்பது என் கணிப்பு. சிங்களத்தை அத்தனை தெளிவு டனும், அழகுடனும் - குறிப்பாக மேடைகளில் - பேசும் திறன் உடைய இன்னொருவர் யார் என்று கேட்டால் என்னுடைய பதில் நிச்சயம் மணவைத் தம்பி என்றே இருக்கும். இவர் பேசும் சிங்களத்தைக் கேட்டால் சிங்கள வர்களே அசந்து விடுவார்கள்.
என்ன செய்வது, இத்தனை இருந்தும், இலங்கை பெண்மணியை மணந்தும் இலங்கை பிரஜா உரிமைக் கிடைக்காமற் போனது மட்டுமல்ல "வேண்டாதவர்” என்று தன்மீது முத்திரைக் குத்தப்பட்டதாக வேதனை யோடு சொல்வார்.
ஆனால் இன்று இலங்கை தூதுவராலயத்தில் ஒரு விழா என்றால் முதல் அழைப்பு இவருக்கு வருகிறது. அமரர் பிரேமதாசாவுடன் இவர் எடுத்துக்கொண்ட ஒரு பெரிய படம் இவர் அறையை அலங்கரிக்கிறது. வெகு காலத்திற்குப் பின் சமீபத்தில் இவரைச் சந்தித்த போது "ஐ சே நாளை இலங்கை சுதந்திர தினம்" தூதுவராலயத்தில் காலையில் கொடியேற்று தேநீர் விருந்து எல்லாம் உண்டு வாருங்கள்” என்றார் என்னுடன் வந்திருந்த இலங்கைப் மக்கீன் தனக்கு வேறு வேலை இருப்பதாகச் சொன்ன போது இவர் விட்ட டோஸ் எனக்கு வியப்பை உண்டாக் கியது. என்னுடைய ஒரு வினாவுக்கு "இலங்கை அரசுகளை
112

காற்று வெளியினிலே.
- எந்த அரசாக இருந்தாலும் நான் எதிர்த்திருக்கிறேன். அது வேறு விஷயம். ஆனால் நான் இலங்கையை நேசிக்கிறேன்" என்ற அவரது தார்மீக ஆவேசம் என்னை நெகிழ வைத்தது.
சரசவிய கலையரங்காகிவிட்ட பழைய எல்பின்ஸ் டன் தியேட்டரில் வேலைப்பார்த்துக்கொண்டே பக்கத்தில் ஸாஹிரா மாலைக் கல்லூரியில் படித்து தன் அறிவுத் தாகத்துக்கும் நீர் வார்த்த இந்த எழுபது வயது இளைஞ ருக்கு இன்று கிடைத்துள்ள மிகப் பெரிய ஆறுதல் தன்னு டைய மகனை "தினகரன்” ஒரு செய்தியாளராக அங்கீக ரித்திருப்பது. அந்த செய்தியாளர் "மணவை அசோகன்”
எல்பின்ஸ்டன் என்றதும் எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. இந்தியா வந்த பிறகும் இலங்கை வானொலி நாடகங்களைக் கேட்பதுண்டு. சானா வுக்குப் பின் வாசகர் (அவர் பெயரே அதுதான்) வந்தார். பிறகு ராஜசுந்தரம் அதன்பிறகு ஜோர்ஜ் சந்திரசேகரன். இவர்களது திறமைகளை குறை சொல்வது என் நோக்க மல்ல. எனினும் சானாவுக்குப் பிறகு ஒரு 'வெற்று இடை வெளி’ தோன்றியதைப் போன்று எனக்கு ஒர் உணர்வு. அப்புறம் நேரமின்மையும் சேர்ந்து கொள்ள நாடகம் கேட்பது வெகுவாகக் குறைந்து அப்புறம் நின்றும் போயிற்று. மேடைகளைப் பொறுத்தவரை கூட அமைச்சர் அஸ்வர் அவர்களும் மக்கீனும் அவ்வப்போது அனுப்பித் தரும் பத்திரிக்கைக் குறிப்புகளைத் தவிர மற்றபடி அதிக மாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.
இந்த நிலையில் நான் சென்ற முறை வந்திருந்த போது சில்லையூர் செல்வராசன் அவர்கள், “தம்பி இண்டைக்கு நீர் ஒரு நாடகத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்” என்றும் எல்பின்ஸ்டன் தியேட்டரில் -
கT-8 113

Page 59
அப்துல் ஜப்பார்
சரசவிய மண்டபம் - "அசோகன்" மெளன நாடகம் “ஏழெண்டால் ஏழு பித்திவிடாதேயும்” என்று எச்சரிக்கை வேறு. ஆனால் மாலை நேர போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு ஏழு ஐந்துக்குச் சென்றேன். பொறுமை இழந்தவராக வாசலில் எனக்காகக் காத்துக் கொண்டு சில்லையூர். என்ன ஆச்சரியம் சரியாக ஏழு மணிக்கு நாடகம் துவங்கி விட்டிருந்தது.
மெளன நாடகம் என்றதும் வசனங்களே இல்லாமல் மிக புத்திச்சாலித்தனமாகக் காட்சிகள் அமைக்கப்பட்டு ஒரு புதுமை நாடகமாக இருக்குமென்று நினைத்தேன். அப்படி இல்லை. ஏறக்குறைய ஒரு நடன நாடகம். பாலே என்று சொல்ல முடியாது. ஆனால் இந்திய கேரளமாநிலக் கதகளிக்கு மிக நெருங்கி வருகிறது.
"கதகளி” என்பது கோவில் திருவிழாக்களில் ஒரு சிறு மேடையில் ஒரு பெரிய குத்து விளக்கை ஏற்றி வைத்து செண்டை எனும் வாத்திய முழுங்க “கதகளிப்பதம்” என்னும் பாடல்கள் பின்னணியில் ஒலிக்க பூதாகரமான ஒப்பனைகளுடன் நடிகர்கள் - ஆம் நடிகர்கள் மட்டுமே பெண் வேடங்களையும் அவர்களே ஏற்பார்கள் - அபிநயம் - முத்திரைகள் சகிதம்.
பழம்பெரும் புராண - இதிகாசக்கதைகளை ஒரு நடன நாடகமாக நடத்திக் காட்டுவார்கள். வசனம் இருக்காது.
"அசோகனிலும்” வசனங்கள் இல்லை. ஆனால் பின்னணி இசை இருந்தது. பாடகர் இல்லை. கதகளியை மிக அருகிலிருந்து கண்டுள்ள எனக்கு இது புதுமையாக இருக்கவில்லை. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை இது பாராட்டப்பட்ட வேண்டிய புது முயற்சியே.
இந்த நாடகத்தின் செய்தி "போர் ஒழிப்பும் சமாதான
114

காற்று வெளியினிலே.
சக வாழ்வும்” இந்தக் காலக்கட்டத்தில் உலகுக்கு - குறிப்பாக இலங்கைக்கு மிகத் தேவையான ஒன்று. இதில் ஒரு பெரிய செளகரியம் வசனம் இல்லாததால் எந்த மொழியினர் வேண்டுமானாலும் பார்க்கலாம். பாஷை ஒரு தடையாக இருக்காது. இந்த நாடகத்தின் தயாரிப்பாளர் களது நோக்கமும் அதுவாகத்தானிருக்க வேண்டும். இலங்கை யெங்கணும் மட்டுமல்ல. உலகின் பலபாகங் களுக்கும் அவர்கள் கொண்டு செல்ல முயன்றால் அது தப்பில்லை; அவர்கள் அப்படிக் கொண்டு செல்ல முயல வேண்டும் என்பதும் என் விருப்பம்.
முனிவராக நடித்த பெண்ணின் நடன அசைவுகள் எனக்குப் பிரமிப்பூட்டின. இளமைத் துடிப்புடன் ஒடியாடித் திரிந்து நாடகத்தின் ஒருங்கிணைப்பு வேலைகளைக் கவனித்த அதன் இயக்குநரான அந்தப் பாதிரியார் என்னை மிகவும் கவர்ந்தார். பொதுவாக இசை பிரமாத மாக ஒத்துழைக்க நடித்தவர்கள் யாவரும் சிறப்பாகச் செய்தனர். ஆனால் ஆஜானுபாகுவான தோற்றமுடைய அந்த அசோகன் புன்னகை வதனனாகத் திகழ முயன்ற போதெல்லாம் அசடு வழிவதையும், நடிகர்கள், நடப்பதை பாரதிராஜா படங்களில் வருவது போன்ற ஸ்லோ மோஷினில் நடை போடுவதையும் தவிர்ப்பது நல்லது என்று எனக்குப்பட்டது.
இன்னொரு விஷயம் இது தியேட்டராக இருந்த பொழுது முன்வரிசை இடங்கள் சாமான்யர்களுக்கு உரியது, கட்டணம் ஐம்பது சதம். பின் வரிசைகள் பிரமுகர் களுக்கு கட்டணம் ரூ 360 ஆனால் நாடகக் கொட்டகை யானபோது முன் வரிசை பிரமுகர்களுக்குக் கட்டணம் ரூபாய்கள் நூற்றுக்கணக்கில் பின் வரிசை சாமான்யர் களுக்கு கட்டணம் வெகு குறைவு. "ஒரே இடம் வெவ்வேறு உபயோகங்கள். அந்தஸ்த்து நிர்ணயம் தலைகீழ். இதுதான்
115

Page 60
அப்துல் ஜப்பார்
வாழ்க்கை. இப்படித்தான் மனிதர்களும் சொன்னது:
O666.
அன்றிரவு சில்லையூராரின் வீட்டில் தங்கல். இலக்கியம் - கவிதை - நாடகம் என்று பல விஷயங் களை அலசித் தீர்த்த ஓர் அற்புத இரவு அது. இந்த விஷயங்களில் சில்லையூர். ஒரு நடமாடும் பல்கலைக்கழகம். மக்கீனிடம் உள்ள தனிக்குணங்களில் ஒன்று, நாங்கள் இணக்கமானாலும், பிணக்கமானாலும் அது மூன்றாம் பேருக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வது! முறிந்த கிளையில் யாராவது கனி பறிக்க முயன்றால் நாவின் கூர்மையால் அவர்களைக் காயப்படுத்தி விடுவது கைவந்த கலை. எனவே எங்கள் உறவு பற்றிய சரியான தகவல் டொக்டர் கா. சிவத்தம்பி அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஒருநாள் என்னைக் கூப்பிட்டனுப்பிய அவர் "தம்பி கலாச்சார அமைச்சு தமிழ் நாடக விழா ஒன்றை நடத்தவிருக்கிறது. இரண்டு சமூக நாடகங்கள் வேண்டும். ஒன்று உங்கள் டயல் எம்.க்ருப். மற்றது யாரைப் போடலாம்?” என்று கேட்டார். நாங்கள் பிரிந்து விட்ட செய்தியைக் கேட்டதும் ‘போச்சுடா முதலுக்கே மோசமா’ என்பது போல் என்னை ஒரு கணம் பார்த்தார். பிறகு பிரச்னைகளை எளிதாகக் கையாளும் அவருக்கே உரிய இயல்புடன் "அப்போ பிரச்னை தீர்ந்து போச்சு தம்பி, நீர் ஒண்டைச் செய்யும் மக்கீன் ஒண்டு செய்யட்டும்” என்றார். "கதையில் இல்லை" என்கிற இன்னொரு மேல் நாட்டுத் தழுவலுடன் மேடை ஏறத்தயாராக இருந்த மக்கீனுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆனால் நானோ அடி முதல் நுனி வரை எல்லாம் செய்தாக வேண்டும். முடியுமா என்கிற ஒரு மலைப்பு அவகாசம் பெற்றுக் கொண்டு திரும்பிய என்னிடம் "தம்பி, நாடக விழாவுக்கு பேனர்
116

காற்று வெளியினிலே.
விளம்பரம் செய்ய வேண்டும். கெடச்சிருக்குற கொட்டே ஷன்களைப் பார்த்தால் பயம்மா இருக்கு தெரிஞ்சவங்க யாரும் இருந்தா சொல்லி விடுமன்” என்றார் என் அண்ணன் சாலிஹ் அதைச் செய்கிறார்” என்றதும் அழைத்துவரச் சொன்னார்.
நேராக அவரது நிறுவனமான பழைய சோனகத் தெரு ரஹ்மத் கம்பெனிக்குச் சென்றால் அங்கே ரெயின்போ பிரஸ் கனகரத்தினம், என்.எஸ்.எம். ராமையா ஆகியோர் பேசிக்கொண்டு இருந்தார்கள். விஷயத்தைச் சொன்னேன். சொன்னவன் வழமையான கலகலப்பை விட்டு சீரியஸ்ஸாக உட்கார்ந்திருந்தேன். உடனே ராமையா "இதென்ன இது ஒரு நாடகத்தை தேர்ந்தெடுக்க வேண்டியது. மேடை ஏற்ற வேண்டியது. அவ்வளவுதானே, இதற்குப் போய் மண்டையை உடச்சிக்கிட்டு" என்றார் எளிதாக, “இல்லை ராமையா, இது மானப் பிரச்னை. மக்கீன் ஒரு அருமையான நாடகத்தை கையில் வைத்தி ருக்கிறான். சரி அது எப்படியோ போகட்டும். நம்முடைய நாடகம் நிச்சயம் வித்தியாசமானதாக இருக்க வேண்டும்" என்றேன். ராமையாவும் என்னைப்போல் முகத்தை சீரியஸ் ஸாக வைத்துக்கொண்டார். ஒப்புக்கு அப்படி இருக்கிறாரே தவிர அது குறித்து அவர் சிந்திக்கவில்லை என்று உணர்ந்தேன். உடனே தடாலடியாக, ராமையா நாடகத்தை நீங்க தான் எழுதப்போநீங்க” என்றேன்.
ஒரு கணம் மிரண்டார். பிறகு தப்பித்துக் கொள்வதற் காகவோ என்னவோ, "வாங்க ரொசிகிட்டே போவோம்” என்றவர் எங்கிட்ட ஒரு சின்னக்கதை இருக்கு. ஆனா அது ரண்டரை மணி நேர நாடகத்துக்குத் தாக்குப் பிடிக்கு மாங்கிறது சந்தேகம்” என்றார் வழிநெடுக யோசித்துக் கொண்டே வந்தார். ரொசியிடம் கதையைச் சொன்னார். கேட்ட ரொசி, "ஜபார் டண்” என்றார். அத்துடன், "ஒரு
117

Page 61
அப்துல் ஜப்பார் பவர்ஃபுல் நடிகையை மட்டும் பிடியுங்கள் போதும்" என்று உற்சாகத்தில் மிதந்தார்.
சீனாவில் "ஒரு பிடி மண்” என்கிற மூன்றே கதாப்பாத்திரங்களைக் கொண்ட நாடகம் சக்கை போடு போடுவதாக கேள்விப்பட்டேன். எங்கள் நாடகத்திலும் மூன்றே பாத்திரங்கள். காதலன் - காதலி இன்ஸ்பெக்ட ரான அவள் அண்ணன். ஆனால் எங்கள் நாடகம் சக்கை போடு போடுமா என்கிற உதைப்பு எனக்கு இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அந்த ‘ஒரு மின்னல்’ நாடகப்பிரதி தயாரானதும், அதைப் படித்த சகோதரி விசாலாட்சி ஹமீது மறுபேச்சுப் பேசாமல் நடிக்கச் சம்மதித்ததும் வெற்றி என்பது எட்டும் தூரத்தில் என்பது தெளிவாயிற்று. இதில் ஒரு பெரிய செளகரியம் ஒத்திகை என்கிற பெயரில் ஊரைக் கூட்ட வேண்டியதில்லை. இடம் தேடி அலைய வேண்டியதில்லை. எங்கெல்லாம் மூவருக்கும் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் ஒத்திகை தான். ஒருநாள் இலங்கை வானொலி நிலையத்திலிருந்து திரும்புகையில் கிரேண்ட் பாஸ் வரை அந்தப் பஸ்ஸின் மேல் மாடியில் கூட வசன ஒத்திகை பார்த்தோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிக அமைதியாக எங்கள் பணியை நாங்கள் செய்து கொண்டி ருக்க, வெளியில் என்ன பேச்சு என்றால், நாங்கள் ஒன்றும் செய்யாமல், செய்வது என்னவென்று அறியாமல் அகப் பட்டுக்கொண்டு முழிக்கிறோம் என்பதுதான். டொக்டர் கே. சிவத்தம்பி அவர்கள் கூட சந்தேகம் வந்தவராக “தம்பி என்ன நடக்குது" ஒண்டும் வெளங்கயில்லே" என்றார். ஸ்கிரிப்ட்டைப் பார்த்ததும் நம்பியது மடடுமல்ல, "யுனிக்" என்றார்.
118

காற்று வெளியினிலே.
முதல் காட்சி-மழைக்காக அந்த வீட்டில் ஒதுங்கும் அந்த இளைஞனுக்கு அந்த யுவதி இடம் தந்து உபசரிக் கிறாள். இந்தக் காட்சியை சாதாரணமாகச் செய்ய நான் விரும்பவில்லை. இந்த நாடகத்துக்கும் ஒரு செட் தான் - வரவேற்பறை, தலைவாசல் அதை அடுத்து ஒரு ஜன்னல், அந்த ஜன்னலுக்கு வெளியே மெல்லிய வெள்ளி நிற ஜரிகை இழைகளைத் தொங்கிவிட்டேன். மின்னல் பளிச், பளிச் சென்று வெட்டுமாறு ஒளியமைப்புக்கு ஏற்பாடு செய்தேன். மரதாணை சென்றல் சலூன் ராஜா அவர் களின் ஒலிப்பதிவுக் கருவியில் சானா அவர்களின் ஒத்துழைப்புடன் இடி மின்னலுடன் மழை பொழியும் ‘எபக்டையும் ஏற்பாடு செய்தேன். பார்த்துக் கொண்டிருப் பவர்களுக்கு அரங்கின் மேலிருந்த கூரை பொத்துக் கொண்டு மழை பெய்வது போன்ற பிரமை. நான் கதவைத் தட்ட விசாலாட்சி கதவைத்திறக்க நான் தோன்ற வேண்டும். எல்லாம் தயார் நான் கதவைத் தட்டினால் காட்சி துவ்ங்க வேண்டும். திடீரென்று ஒரு 'ப்ரெயின் வேவ்’ குடுகுடுவென்று பாத்ரூமுக்கு ஒடினேன் என்ன தண்ணிர் என்று கூட பார்க்கவில்லை. அப்படியே தலையில் தூக்கிக் கொட்டினேன். ஓடிவந்து கதவைத் தட்டினேன்.
விசாலாட்சி கதவைத் திறந்தும் மழையில் சொட்டச் சொட்ட நனைந்தவனாக நான் நின்றிருப்பேன். ஒரு வசனம் கூடப் பேசாமலே கை தட்டல்! முதல் காட்சியே அமர்க்களம்! குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சம்பிரதாயத்துக்காக ஒரு பத்து நிமிஷம் இருந்துவிட்டுப் போகலாம் என்றிருந்த கலாச்சார அமைச்சர் மைத்ரிபால சேன நாயக்க அவர்கள் எப்படி எழும்பிப் போவார்? கடைசிவரை இருந்தார். மேடையில் வந்து பாராட்டினார். நான் முஸ்லீம் சரி. ரொசாரியோ பீரிசை சிங்களவர்
119

Page 62
அப்துல் ஜப்பார் என்றும் விசாலாட்சியை தமிழ்ப்பெண் என்றும் நினைத்துப் பாராட்டியது தான் வேடிக்கை. ரொசாரியோ சிங்கள வரல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சகோதரி விசாலாட்சியின் தாய்மொழி மலையாளம் என்பது பலருக்குத் தெரியாது.
இதே கலாச்சார அமைச்சராக என் நண்பர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர். ஒரு காலத்தில் வருவார். அவர் முன்னிலையிலும் நான் மேடை ஏறுவேன் என்று யாராவது நினைத்துக் கூடப்பார்த்திருப்பார்களா? வந்தார். வாழ்க்கையின் திருப்புமுனைகளில் இதுவும் ஒன்று.
எங்கள் நாடகத்துக்கு மரப்பட்டியல் வாங்கி ஃப்ரேம் செய்து, படங்குச்சாக்கு - ஹெசியன் க்ளோத் - கொண்டு மறைத்து, இடைவெளி தெரியாமல் செய்து பெயிண்ட் அடித்தவுடன் பிரமாதமாக வந்துவிட்டது. அமைச்சு அனுமதித்தத் தொகைக்கு அது தான் செய்ய முடியும். இதே சாக்குக் கதவுகளைக் கூட வேலைப்பாடுகள் மிக்க மரக்கதவுகள் போலத் தோன்றச் செய்ய ஒவியக் கலைஞரான சானா பெரிதும் உதவினார்.
ஆனால் மக்கினோ கைக்காசையும் செலவும் செய்து அசல் வென்ஸ்டா பலகையில் செட் செய்தது பிரமாதமாக இருந்தது. அதைப் பொறுத்திக் கொண்டிருந்தார்கள். எந்த வகையிலாவது முடிந்தால் உதவலாம் என்ற நல்லெண்ணத் துடன் அதனைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். எங்கிருந்தோ வந்து சேர்ந்த மக்கீன் மிகவும் நிர்தாட்சண் யமாக, "மச்சான் நேற்று வரை நாம நண்பர்கள் இன்று அப்படியல்ல. போட்டி நாடகம் வேறு செய்கிறோம். ஆகவே தயவுசெய்து வெளியே போ” என்ற போது வெட்கித் தலைகுனிந்து வெளியே போவேன் என்று அவன் எதிர்ப்பாத்திருக்கக்கூடும். நானும் ஒரு கணம் அப்படி
120

காற்று வெளியினிலே.
நினைத்தவன் தான். அப்புறம் என்ன தோன்றியதோ அப்படியே சிலிர்த்துக்கொண்டு, விட்டேன். டோஸ்! மக்கீன் செய்வதைப் பார்த்து நான் மேடை டெக்னிக் படிக்கவேண்டுமா? பகல் போக இரவு வரலாம். ஆனால் இருட்டு துரத்த வெளிச்சம் ஓடி விட்டதாக எண்ணும் பேதமையைப் போன்றதல்லவா இது."
"கதையில் இல்லை” நன்றாகத்தான் இருந்தது. சி.பி.எம். இருந்தார். பி.எம். முஸ்தபா இருந்தார். மக்கீனின் உழைப்பு இருந்ததது. ஆனால் மிக முக்கியமாக இந்த ஜபாரின் டச்சஸ் இல்லை ஆகவே ‘ஒரு மின்னலின்’ முன்னால் “கதையில் இல்லை’ ஒன்றுமில்லை என்று ஆகிப் போனதில் மிக மிக வருத்தப்பட்டது நான் தான்.
அமைச்சர் அஸ்வர் அவர்கள் முக்கிய பாத்திரமேற்க, டயல் எம்மை சிங்களத்தில் மேடை ஏற்றியதாகச் சொன்னது உண்மையில் மக்கீனின் அருஞ்சாதனை தான். பிறகு சில இளம் கலைஞர்களை இணைத்துக்கொண்டு டயல் எம்மை மீண்டும் தமிழில் மேடை ஏற்றியதும் லேசுப் பட்ட விஷயம் ஒன்றுமல்ல. ஆனால் மக்கீனே மனமுருகி ஒருமுறை என்னிடம் சொன்னது "என்னத்தைச் சொல்லு, நீ இல்லாத குறை குறை தான்” மக்கீனின் வாயில் அவ்வளவு எளிதாக வார்த்தைகள் உதிர்ந்துவிடாது. என்ன ஒரு வினோதம் பாருங்கள் எத்தனையோ விஷயங்களில் இணைபிரியாத நாங்கள் இந்த மேடை விஷயத்தில் இன்றும் இணையவே இல்லை. இனி இணையவும் வாய்ப்புகள் இல்லை.
இதைத்தொடர்ந்து சீனாவின் "ஒரு பிடி மண்” நாடகத்தைக் கண்டுபிடித்து மேடையேற்ற வேண்டு மென்கிற ஆசை என்னுள் துளிர்விட்டது. பொது உடமைச் சார்பு சிந்தனையுடைய நண்பர்களையெல்லாம் அணுகிப்
121

Page 63
அப்துல் ஜப்பார்
பார்த்தேன். ஒரு பெரிய ஏமாற்றம். 'மண்வாசனை’ ‘சமூகப் பிரக்ஞை’ என்கிற சில வடித்தெடுத்த வார்த்தைகளை வாயில் போட்டுக்குதப்பி எச்சில் விழுங்கி கொண்டிருந்த இவர்களில் பலர் பிரச்சார நெடி தூக்கலாக இருக்கும் அவர்கள் சார்பு நாடகங்களை மேடையேற்ற என் உதவியை நாடினார்கள். சீனச் சுற்றுப் பயணம், சீனத் தமிழ் வானொலியில் வேலை என்கிற தூண்டில்கள் வேறு. ஆனால் நான் இவர்களை விட்டு ஒதுங்கிவிட்டேன். நான் பொது உடமைத் தத்துவங்களின் விரோதியா ஆதர வாளனா என்பது இங்கு முக்கியமில்லை. மார்க்ஸ், ஏங்கல்ஸ், "டாஸ் கெப்பிட்டல்’ படித்துள்ள எனக்கு (ஏன் நான் படித்த முதல் முழு ஆங்கில நொவலே கோர்க்கியின் "தாய்” தான்) இந்த நண்பர்களில் பெரும்பாலோர் அரை வேக்காடுகளாகத் தோன்றினர். டொக்டர் (அமரர்) கைலாசபதி போன்ற அறிவு ஜீவிகள் அடக்கி வாசித்துக் கொண்டிருக்க இந்த அரை வேக்காடுகளின் ஆர்ப்பாட்ட அரசியல் எனக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. மேலும் இரும்புக்கர அடக்குமுறைகளால் அமல் நடத்தப்படும் இந்தக் கொள்கைகள் இரும்புதிரை நாடுகளிலேயே தோற்கு மென்று அன்றே நான் நம்பினேன். ஏனெனில் "லாப நோக்கு” என்பது மனிதனின் அடிப்படைக் குணம். முற்றும் துறந்த முனிவருக்குக் கூட “முக்தி” என்கிற லாபநோக்கு உண்டு. எனவே அதைக் கிள்ளி எறிய நினைக்கும் எந்த சக்தியும் நிலைக்காது. மேலும் மனிதன் சுதந்திரப்பறவை. அவன் சிறகுகளை சிறிது காலத்துக்குத்தான் ஒடித்துபோட இயலும். ஒருநாள் அவன் சீற்றம் கொள்ளும் போது சிறைக்கதவுகள் தூளாகும். காலத்தின் கணக்குகளில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் இது கண்டிப்பாக நடந்தே தீரும். நடந்தும் விட்டது.
அரசர்களையும் நில பிரபுக்களையும் ஒழித்துக்கட்டி
122

காற்று வெளியினிலே.
விட்டு அரசு அதிகாரிகளையும் அரசியல் தலைவர் களையும் முதலாளிகளாக்கும் முறையில் அதிகாரமும் அமைப்புகளும் கைகள் மாறுகின்றனவே தவிர அடிப் படையில் அதிக வித்தியாசமில்லை என்று அந்த சிறு வயதிலும் நான் நம்பினேன். இந்த நிலையில் “உழைப் பவனின் வியர்வை உலருமுன்பே அவனது கூலியைக் கொடுத்து விடுங்கள்" என்கிற எல்லோருக்கும் ஏற்புடைய இஸ்லாத்தின் கொள்கை மாத்திரமல்ல அதை அமுல் படுத்துவதில் ஆன்மீகம் கலந்த ஜனநாயக முறைகள் மீதுள்ள என் பிடிமானம் மேலும் இறுகியது. வட்டியை ஹராமாகவும் (வெறுக்கத் தக்கது) வியாபாரத்தை ஹலாலா கவும் (விரும்பத்தக்கது) ஆக்கி அதன் மூலம் பொருளிட்டும் முதலாளிகளை சமூகத்தின் தர்மகர்த்தாக்களாக - அறங்காவலர்களாக - நடந்து கொள்ளச்சொல்லும் முறை சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டால் அமுல் நடத்தப் பட்டால் ஏழ்மையே இருக்காது என்பது என் திடமான 666).
பொதுவுடமைத் தத்துவங்களின் s9H L9-LOL-L -ğ5 தொண்டர்கள் மத்தியில் நிலவிய அரை வேக்காட்டுத்தனம் என்னை அதிர்ச்சி கொள்ளச் செய்ததென்றால் முஸ்லீம் மக்கள் பெரும்பாலோர் மத்தியில் நிலவிய பாமரத்தனம் என்னை கவலைக் கொள்ளச் செய்தது. இந்த நிலையில் தான் அமரர் மன்னார் எச்.எம்.ஷரீஃப் அவரே எழுதிய ஒரு நாடகப் பிரதியை என்னிடம் தந்தார். பெயர் "ஹிஜ்ரி 1500" பெயரே சுண்டி இழுக்க நாடகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்த சிலவற்றுள் அந்த நாடகமும் ஒன்று.
அன்றைய சமூகத்தின் அவலங்களை சற்று மிகைப்பட எடுத்துக்காட்டி இதே ரீதியில் போனால் 'ஹிஜ்ரி 1500’ ஆகும்போது சமூகம் எக்கதிக்கு ஆளாகும்
123

Page 64
அப்துல் ஜப்பார்
என்கிற ஒரு "உரத்த சிந்தனை. இந்த நாடகம் இன்னொரு விதத்தில் சொன்னால் முகம்மது மாஸ்டர் அவர்களுடைய “நவநாகரிகம்" நாடகத்தின் குறைகள் களையப்பட்டு (சில புதிய குறைகளுடன்) சற்றுப்புதுமையாக ஒரு வித அறிவு ஜீவித்தனமான முலாம் பூசப்பட்டது போல் இந்த நாடகம் தென்பட்டது. பெண் கதாபாத்திரங்கள் இந்த நாடகத்தில் இல்லாதது பெரும் வசதி. காட்சி ஜோடனைகள் அது இது என்று இல்லாததும் மிகச் செளகரியம். முனிசிப்பல் கெளன்சிலர் சகோதரர் முகம்மதலி அப்துல் காதரின் காரில் ஹாயாக கையை வீசிக்கொண்டு போய் தென் இலங்கை மாத்தரையில் நடைபெற்ற வை.எம்.எம்.ஏ மாநாட்டில் இந்த நாடகத்தை சிரமமில்லாமல் மேடை ஏற்றிவிட்டு வந்தோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
இந்த நாடகம் கொழும்பு ஸாஹிராவில் மேடை ஏற்றப்பட்டபோது அக்கிரமியான மகளை (ஷரிஃப்) தகப்பனான நான்) சுட்டுக் கொல்ல முயல்வேன். மகனின் தலை முடியைப் பிடித்து அப்படியே இழுத்துக் குனிய வைத்து துப்பாக்கியால் முதுகில் அடிக்க வேண்டும் (அடித்தேன்) பிறகு சோபாவுக்குப் பின்னால் கட்டிப் புரள்வதும் - போராடுவதும் - சப்தங்கள் மூலமே ரசிகர்கள் உணரும்படி இருக்கும். பிறகு இரண்டு வெடிச் சப்தங்கள். பிறகு நிசப்தம். ஷரீஃப் மெதுவாக எழுந்து தள்ளாடித் தள்ளாடி வருவார். நான் க்ளோஸ் என்று ரசிகர்கள் எண்ணத் துவங்கும் போது, ஷரீப் சுருண்டு விழுந்து இறந்துபோவார். பிறகு நான் மெதுவாக கையில் துப்பாக்கியைப் பிடித்தவனாக எழுந்து வந்து கண்ணிர் மல்க, திக்பிரமை பிடித்தவன், இறந்த மகனைப் பார்த்த வண்ணம் சிலைபோல் நிற்பேன். அடுத்து என்ன என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்க்கும்போது திரை விழும். கரகோஷம்.
124

காற்று வெளியினிலே.
நாடகம் பார்க்க கல்லூரி அதிபர் செனட்டர் அமரர் அளிஸ் அவர்கள் வந்திருந்தார். நாடகம் என்றால் சில மாணவர்கள் சேர்ந்து அடிக்கும் கூத்து பார்த்துத் தொலைய வேண்டியது நம் தலைஎழுத்து என்று வந்தவர்க்கு அன்றைய நாடகம் பெரும் ஆச்சரியம் “சக்தி வாய்ந்த சமூகச் செய்திகளை சுமந்து செல்லும் வாகனமாக நாடகம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.
உடனே இது பல இடங்களில் மேடை ஏற்றப்பட வேண்டுமென்று கட்டளை இடவும் செய்தார். மாத்தறை வை.எம்.எம்.ஏ. அவற்றுள் ஒன்று.
ஸாஹிராக் கல்லூரியின் தலை மாணாக்கனாக இருந்த ஷரிஃபை அளிஸ் அவர்கள் தன் சொந்த மகனைப் போல் அன்பாக நடத்துவார். ஆனால் அவர் அன்று புகழ்ந்து தள்ளியதற்கு அந்த உணர்வல்ல காரணம். அதனை அவர் தெளிவு படச் சொல்லவும் செய்தார். போகிற போக்கில் ஷரீஃபின் முதுகில் “வெல்டன் மை டியர் போய்” என்று செல்லமாக ஒரு தட்டு தட்டினார். ஏதோ சகிக்க முடியாத ஒன்றை கஷ்டப்பட்டுச் சகித்துக் கொள்வது போல் இருந்த ஷரீஃப் "ஆ"வென்று வாய்விட்டு அலறினார். துப்பாக்கியால் அவர் முதுகில் அடித்தபோது உணர்ச்சி வசப்பட்டு மிருகத்தனமாக அடித்திருக்கிறேன். அப்படியே சதை பிய்ந்து ஷர்ட் அதில் அப்படியே ஒட்டிக் கொள்ள அவர் முதுகில் ரத்தம் கசிய என் நெஞ்சில் வேதனையால் ரத்தம் கசிந்தது.
நெஞ்சில் இரத்தம் கசிந்த இன்னொரு சம்பவம். எந்த வகையிலும் அருகதை இல்லாத அறமழகன் என்பவனுக்கு ஒரு நாடகம் நடத்திக் கொடுக்கச் சம்மதித்ததுதான். சானாவின் கைவண்ணத்தில் பிரமாதமாக விளம்பரங்கள் செய்து. நாடகம் மேடை ஏற வேண்டிய நேரத்தில் தருவ
125

Page 65
அப்துல் ஜப்பார்
தாகச் சொன்ன பணத்தை தராமல் ஏமாற்றி, அவ்வளவு தூரம் சென்ற பின்பு நாடகத்தைக் கைவிடுவது கேவலம் என்று எண்ணி கடன் வாங்கி செலவு செய்து. ஒன்றும் சொல்ல வேண்டாம். செய்த மடத்தனங்கள் ஒன்றா, இரண்டா? விஷயம் இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் எவனோ ஒருவன் பெயரில் என்பதை விட என் பெயரிலேயே செய்து இருக்கலாம் ரொசி தானாகவும், பிறகு சானாவுடனும் அவனைத் தேடித் சென்றார். ஆள் ஒளிந்து கொண்டான். நான் "சவம் ஒழிந்து போகட்டும் விட்டு விடுங்கள்" என்றேன் ரொசி தயாரில்லை நாடகத்துக்கு இரண்டு தினங்கள் இருக்கும் போது வந்தான் “மேடையில் என்னை பாராட்டி இரண்டொருவர் மாலை போடுவார்கள். அதை ஆரம்பத்திலேயே வைத்துக் கொள் வோமா, அல்லது இண்டர்வெல்லில் வைத்துக் கொள் வோமா?" என்று எதுவுமே நடக்காதது போல் அவன் கேட்ட தோரணை மறக்க முடியாது. ஓ. எத்தனை கட்டி யான தோல் அவனுக்கு? "செருப்படி படுவே ராஸ்கல் ஒடிப் போயிடு” என்று பாய்ந்த ரொசியை கட்டுப்படுத்த நான் படாதபாடு படவேண்டியதிருந்தது. ஆனால் இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் நாங்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவனை ஏற மாற்றி விட்ட தாக ஊர் முழுக்கச் சொல்லித் திரிந்ததுதான். ஆனால் ஆண்டவன் எப்பேர்ப்பட்டவன். ஒரு மூன்றாம் தரக் கோஷ்டியுடன் சேர்ந்து அவன் இன்னொரு நாடகம் நடத்த முயல அவர்கள் உள்ள பணத்தை உறிஞ்சி ஏகப்பட்ட நஷ்டத்தை அவனுக்கு ஏற்படுத்தி வைத்தார்கள். ஆனால் எங்கள் நாடகம் அருமையான நாடகம் "நீதியெல்லாம் நீயே" எழுத்து நஸ்ரூத்தின்; இயக்கம் ரொசி; ஆலோசனை மற்றும் மேற்பார்வை சானா; தாயாக சகோதரி விசாலாட்சி, கதாநாயகன் நான்; காதலி சுகிர்த
126

காற்று வெளியினிலே.
தேவி, "வீக்கே" என்னும் பாத்திரத்தில் வெளுத்துக்கட்டிய ஆறுமுகம். யாழ்ப்பாணத்தவராயினும் தமிழகம் கோவை யில் பட்டப்படிப்பு படித்ததால் "இந்திய” தமிழ் படு சரளம். நான்தான் ஹீரோ என்றாலும் பாத்திரத்தின் தன்மை காரணமாக வீக்கே ஒரு படி மேலே நின்றார் என்றாலும், புரோக்கராக ஒரு சின்ன ரோலில் தோன்றி பிய்த்து உதறியவர் எம்.ஏ. ஹமீது அவர்கள்; பிரபல வர்த்தகப்பிரமுகர். சகோதரி விசாலாட்சியின் கணவர் யாரையும் எளிதில் நம்பிவிடும் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் - என்னை ஒரு தந்தையின் கரிசனத்துடன் வழி நடத்தத் துவங்கியது இந்த நாடகம் முதல்தான் என்று கொள்ளலாம். அந்த அறிவுரையும் அரவணைப்பும் பிறகும் தொடர்ந்தன. எனவே அவருக்கு நான் வைத்த "பிதாஜி” என்கிற செல்லப்பெயர் மிகப் பொருந்தும். எங்கள் நாடகக்குழுவுக்கு இவர் வைத்த பெயர் தான் “கலாஞ்சலி" பொன் மொழிகளாக உதிர்ப்பார். அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று - "அன்பின் தூய கண்களுக்கு குறைகளே தெரிவதில்லை" - உண்மை.
என் விசா காலம் முடிந்து விட்டது. புதுப்பிப்பது கடினம் என்பதும் தெளிவாயிற்று. ஆனால் இருண்ட மேகத்திலும் ஒரு வெள்ளிக்கீற்று. சங்கீத - நாட்டிய சங்கத்தின் முக்கிய உறுப்பினரும் கலை ஆர்வமிக்க வருமான திரு. தம்பிராஜா அவர்கள் ஒரு விசா அதிகாரி. லயனல் வெண்ட் அரங்கச் செயலர் மகாலிங்கம் அவர்கள் மூலம் அணுகினால் விசாவை நீடிக்க ஏற்பாடு செய்வார் என்று சானா சொன்னார். ஆனால் அரங்க வாடகை செலுத்துவதில் மக்கீன் செய்த குளறுபடி காரணமாக நான் மகாலிங்கம் அவர்களையே சந்திக்க வெட்கப்படும் நிலை, பிறகு எங்கே விசா அதிகாரியைப் பார்ப்பது? கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டேன். பிடித்து ஜெயிலில்
127

Page 66
அப்துல் ஜப்பார்
போட்டு விட்டார்கள். முதலில் நான் சட்ட விரோதமாக இருக்கவில்லை என்று மறுத்தேன். ஆனால் 'லோக்கப்பில் ஒரு சீழ் வடியும் சொறி சிரங்கனோடு கொண்டு அடைத்த தும், "நான் இந்தியா போகச் சம்மதம் என்னை வெளியே விடுங்கள்" என்றேன். உடனே ஸ்டேஷனுக்குப் பின்புறம் முள் வேலி வைத்து மறைக்கப்பட்ட ஒரு வெராண்டாவில் கொண்டு போய் விட்டார்கள். பிடிபட்டு, இந்தியா போகத்தயாராக, ஆனால் உரிய ஆவணங்கள் வரும் வரை காத்திருக்கும் நூற்றுக் கணக்கானோர் அங்கே! என் ஆவணங்கள் வரும் வரை நான் காத்திருந்த அந்த ஒரு வார காலம் என் வாழ்வில் மறக்க முடியாத காலக் கட்டம். தன்னை உறுத்தும் சோகங்களை மறந்துவிட்டு, எல்லாவற்றையும் இழந்துவிட்டு இந்தியா போக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி கனத்து இதயத்துடன் நெஞ்சம் வெந்து கொண்டிருந்த பலருக்கு என் வருகை பெரிய ஆறுதல்.
பகலெல்லாம் படிப்பு - தூக்கம் அல்லது சீட்டு விளையாட்டு என்று பலருக்குப் பொழுது போகும் இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு தான் என்னுடைய பாடல், ஆடல் நடிப்பு எல்லாம், போலீஸ் ஸ்டேசனுக்குப் பின்னால் ஒரு பெரிய மைதானம். அதைச் சுற்றிலும் போலீஸ்காரர்களின் குடியிருப்புகள். என் கச்சேரி துவங்கியதும் பெண்களும், குழந்தைகளுமாக அந்தப் 'பிட்டணியில் வந்திருந்து கேட்பார்கள். துவான் என்கிற ஒரு ட்ரைவர் டான்ஸ் ஆடுவார். ஒரு நாள் அந்த வழியாகச் சென்ற உயர் சிங்கள போலீஸ் அதிகாரி ஸ்டேஷனில் இரவு வேளையில் என்ன சப்தம் என்பதை அறிவதற்காகப் படுகோபமாக உள் நுழைந்தார். எல்லாம் கப்-சிப்! பிறகு விஷயத்தைக் கேள்விப்பட்டு என்னைப்பாடச் சொன்னார். "போனால் போகட்டும் போடாவை"வை ரசித்துக் கேட்டார். அதன்
128

காற்று வெளியினிலே.
பொருளைப் புரிந்து கொண்டதும் பரவசப்பட்டு மீண்டும் மீண்டும் கேட்டார். பிறகு ஒரு நாள் இரவு இதற்கென்றே வந்தார். மறுநாள் நான் புறப்படப் போவதாகச் சொன்னேன். "முக்குத் கொறாண்ட பெரித? (ஏதும் செய்ய முடியாதா) என்று உருக்கமாகக் கேட்டார். பிறகு சற்று சோகத்துடன் என் தோளைத் தட்டிக் கொடுத்தார். சற்றும் எதிர்பாராத விதமாக "சரி போனால் போகட்டும் போங்கோ" என்றார். எல்லோரும் சிரித்தார்கள். நானும் சிரித்தேன். ஆனால் உள்ளுக்குள் அழுதேன்.
மறுநாள் மறக்காமல், ஞாபகம் வைத்திருந்து ஓர் ஏற்பாட்டைச் செய்தார் - என்னை விலங்கிடாமல் அழைத்துச் செல்லப் பணித்தது தான் அது (ஒ. எத்தனை உயர்வான மனிதர்) தலைமன்னார் வரை இரண்டு போலீஸ்காரர்கள் உடன் வந்தனர். பிதாஜியும் வந்தார். ஸ்டேஷனில் நல்ல கூட்டம், வழி அனுப்ப வந்த ஒரே பெண்மணி சகோதரி ஃபிலோமினா சொலமன். நாடகத்தில் கூட என்னைக் காதலனாக நினைத்துப் பார்க்க முடியாமல் சானாவிடம் டோஸ் வாங்கியவர். ஆனால் எங்கள் சீமையான்கள் அவரை என் காதலி என்று தீர்மானித்துக் கதை கட்டி விட்டார்கள்.
(அமைச்சர் அஸ்வர் அவர்களே, சமவயதினராயினும் என்னை பல நேரங்களில் கைப்பிடித்து வழி நடத்திய பெருமை உங்களுக்கு உண்டு. சில சமயங்களில் - குறிப்பாக பெண்கள் விஷயங்களில் - நீ போற போக்கு சரியில்லை. எண்டைக்காவது ஒரு நாள் ஒரு களபளயிலே மாட்டிக்கொண்டு முழிக்கப்போற என்று சொன்னதுண்டு. பல விஷயங்களில் என்னைப்பற்றிய உங்கள் கணிப்புகள் சரியாக இருந்திருக்கின்றன. ஆனால் இந்த விஷயத்தில் உங்கள் கணிப்பு தவறாகப் போனதில் என்னை விட உங்களுக்கே மகிழ்ச்சி அதிகமிருக்கும். ஆனால் எங்கள்
T-9 129

Page 67
அப்துல் ஜப்பார் சீமையான்களின் கற்பனைச் செறிவைப் பார்த்தீர்களா? நான் இப்படி என் ஒழுக்க விஷயத்தில் கொஞ்சமாவது எசகு பிசகாக நடந்திருந்தால் என்னவாகி இருக்கும்? என்னை விடுங்கள் சகோதரி ஃபிலோமினாவுக்காகத்தான் நான் வேதனைப்பட்டேன். அவர் ஆத்மா சாந்தி அடைவ தாக ரொசியைப் போலவே வாழ்க்கையில் பல ஏமாற்றங் களைச் சந்தித்த அவர் இறந்தே போனார்.
எங்கள் ஊர் சாத்தான் குளத்துக்கு இன்னொரு பெயர் தண்ணி இல்லாக்காடு ஒரு அரசு ஊழியரைப் பழிவாங்க வேண்டும் என்றால் இந்த ஊருக்குத்தான் தூக்கிப் போடுவாரக்ள். எங்கள் ஊர் அத்தனை பிரசித்தம். ஊருக்கு வெளியே எல்லாக்கிணறுகளிலும் நல்ல தண்ணிர். ஆனால் ஊருக்குள் உள்ள கிணறுகளில் தண்ணிர் உப்புக்கரிக்கும். குளித்தால் பிசுபிசு வென்றிருக்கும் கந்தக பூமி. கோடை வந்து விட்டால் குடியிருக்க ஒரு தனிப் பயிற்சி வேண்டும். ஆனால் கோடையில் ஊர் வேறோர் விதத்தில் குளுகுளுவென்று இருக்கும் பள்ளி - கல்லூரிகள் விடுமுறை. வேலையில் இருப்பவர்கள் கூட பிள்ளைகள் விடுமுறையை அனுசரித்து ஊர் வர இந்த நேரத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். கால்பந்து, பேட்மின்டன், கைப்பந்து, கபடி என்று ஏகப்பட்டப் போட்டி ஆட்டங்கள், பள்ளி களில் பழைய மாணவர்கள் விழா - கலை நிகழ்ச்சிகள் என்று ஊரே கலகலப்பாக இருக்கும். நான் சென்று நேரமும் அப்படிப்பட்டது.
எங்கள் கமாலியா பள்ளி பழைய மாணவர் ஆண்டு விழாவுக்காக என்னை ஒரு நாடகம் செய்யுமாறு கேட்டார்கள். செய்யலாம், ஆனால் நாடகத்தை பொறுமை யாக யார் இருந்து எழுதுவது? - மலைப்பாக இருந்தது ஒரு இளைஞர் உதவ முன்வந்தார். நான் நடந்து கொண்டே சொல்லச் சொல்ல அவர் எழுதியது மட்டுமல்ல
130

காற்று வெளியினிலே.
எழுதியதை பாத்திர வாரியாகப் பிரித்து, தனிப் பிரதிகள் வேறு எடுத்து நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் உதவி செய்து, என் நிழலாக செயல்பட்டார். ‘வாழத் தெரிந்தவன்’ சிக் என்று அமைந்தது. அந்த இளைஞர் இன்று அமரராகி விட்ட ஜவஹர் அலி.
பாட்டு - டான்ஸ் என்று ஏகப்பட்ட சீன்களுடன் ஏகப்பட்ட நடிகர்கள் பங்கெடுக்க காமா சோமா என்று நாடகம் பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் மிகக் குறுகிய காலத்தில் மிக அவசர அவசரமாக நான் எழுதிய ஒரு சாதாரண நாடகத்துக்கு கிடைத்த வரவேற்பு எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் என்னை மேலும் ஆச்சரி யத்தில் ஆழ்த்திய ஒரு விஷயம் எம்.ஜி.ஆர். பிக்சர்சுடன் நெருங்கிய தொடர்புடைய எங்களுர்க்காரர் மேற்படி கம்பெனியின் கதை இலாக்காவில் சேர விருப்பமா என்று கேட்டது தான். “ரொம்ப புத்திசாலித்தனமான வசனங்கள் ரொம்ப ஷார்ப் எனக்கு ரொம்பப் பிடிச்சுது. உங்களுக்கு ஒரு சீன் எழுத சான்ஸ் வந்து அது எம்.ஜி.ஆருக்குப் பிடித்து விட்டது என்று வையுங்க, அப்புறம் உங்களை யாரும் புடிச்சிக்க முடியாது" என்ற போது நான் நெகிழ்ந்து போனேன். அதை அத்தோடு மறந்தும் போனேன். காரணம் என்னைப் போன்ற அப்பாவிகள் சினிமா உலக நெளிவு சுளிவுகளைத் தாக்குப் பிடிக்க முடியாது, என்று நான் நம்பியது தான். சினிமா உலகில் நின்று பிடிக்க கலைத் திறமையோடு வேறு சில திறமைகளும் வேண்டும் அவை என்னிடம் உண்டு என்று நான் நினைக்கவில்லை.
அதே கோடை விடுமுறையில் எங்கள் ஊர் திருவள் ளூவர் கலா மன்றத்தின் சமூக நாடகத்தில் பிரதான் பாகமேற்றேன். இருபதுக்கு மேற்பட்ட நடிக - நடிகையர். எண்பது சீன்கள். பிறகு எட்டு அட்டமம் (சனி) என்று ஒரு
131

Page 68
அப்துல் ஜப்பார்
சீனை இரண்டாக்கி எண்பத்தியொரு சீன்கள் ஆக்கிக் கொண்டார்கள். பாட்டு - டான்ஸ் - ஒரு சீன் முடிந்து அடுத்த சின் தயாராவதற்குள் படுதாவைப்போட்டு விட்டு அதன் முன் நின்று நகைச்சுவை நடிகர்கள். றிகே.எஸ். நாடகப் பாணியில் நடத்தும் அரட்டைக் கச்சேரி என்று அந்த ஊருக்குப் பழகிப்போன ஒரு கசமுசா நாடகம், அவர்களை முற்றாகத் திருத்தி என் வழிக்குக்கொண்டு வர முடியாது என்றாலும் பங்கெடுத்த பாவத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.
நம்பியார் பாணியில் புருவங்களை உயர்த்துவது - நெறிப்பது. சோக காட்சியில் முகவாய்க்கட்டையை அழுந்தப் பிடித்துக் கொண்டு போஸ் கொடுப்பதுபோன்ற சினிமா மேனரிசம்களையும் ஒரு வசனத்தை (என்னால் மறக்கவே முடியாது. மறக்கவே முடியாது) இரண்டு தடவை பேசும் பழைய பாணி நாடக வழக்கத்தையும் தவிர்க்கும் படி செய்தேன். பாடல்களுக்கு தாளகதிக்கேற்ப சில அசைவுகள் சொல்லிக் கொடுத்தேன். மாற்றங்கள் பளிச்சென்று தெரிந்தன. பலனும் நன்றாக இருந்தது. ஆனால் அடுத்த நாடகத்தில் மீண்டும் பழைய குருடி கதவைத்திறடி என்கிற நிலை. சொல்லிக் கொடுக்க ஆளில்லாததாலா அல்லது உடம்போடு ஊறிப்போய்விட்ட ஒரு பழக்கத்தை மாற்ற முடியாததாலா என்பது தெரிய வில்லை இன்றும் அதேபாணி தொடர்வது தான் வேடிக்கை.
பிறகு தமிழறிவு கலா மன்றத்தில் சரித்திர நாடகங் களில் பங்கேற்றேன். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகங்கள் போன்று பிரம்மாண்டமான சீன் - செட்டிங்குகள் ஏ.பி. நாகராஜன் படங்கள் போன்று எல்லோரும் கத்திப் பேசுவது. எல்லா கதாபாத்திரங்களும் உதாரணங்களுடன் (வைரம் என்று நம்பினேன் உப்புக்
132

காற்று வெளியினிலே.
கல்லாகப் போய்விட்டதே நீண்ட நீண்ட வசனங்கள் பேசுவது, விஸ்வாசமான சேனாதிபதி, சதி செய்யும் ராஜகுரு என்கிற பாத்திரங்களை கட்டாயம் உள்ளடக்கிய கால, தேச, வர்த்தமானங்களை கடந்த ராஜா ராணிக் கதைகள் ஆகியவை பிரதான அம்சங்கள். இவைகளைக் குறித்து சிந்திப்பாரோ கேள்வி கேட்பாரோ யாருமில்லை. சாதாரண பாளையக்காரனான கட்டபொம்மனை இந்திய நாட்டின் சக்ரவர்த்திபோல் சித்தரித்ததை ஏற்றுக் கொண் டார்கள். இவைகளைப் பற்றியெல்லாம் எங்கே கவலைப் படப் போகிறார்கள்? ராஜகுரு தன் தைத்தடியை ஒரு கையிலிருந்து இன்னொரு கையில் தூக்கிப் போட்டுப் பிடித்து வசனம் பேசும் போது தன் வாளை அப்படித் தூக்கிப்போட்டு தன்னால் வசனம் பேச முடியவில்லையே என்கிற கவலை தான் சேனாதிபதிக்கு.
"நந்திக்கலம்பகம்" "மாலிக்கபூர்” ஆகியவை சற்று வித்தியாசமான நாடகங்கள். மாலிக்கபூர் ஆர்.எஸ். மனோகர் மேடை ஏற்றிய அதே ஸ்கிரிப்ட் வழன்மயான பாட்டையை மாற்றுவதில் வெற்றி பெற்றேன் என்று சொல்ல வேண்டும். ஆனால் பாராட்டியவர்கள் எல்லோ ருமே மனோகர், மனோகர் என்று அவருடன் என்னை ஒப்பிட்டது எனக்குப் பிடிக்கவில்லை. அவரை நாடகக் காவலர் அல்ல வேறு எந்தப் பெயர் சொல்லி வேண்டு மானாலும் அழைக்கட்டும் - புகழட்டும் எனக்கு ஆட்சேபனை இல்லை. என் நடிப்புத்திறனை அளவிடும் ‘பென்ச்மார்க்காக - அளவுகோலாக அவரை எண்ணு வது எனக்கு விருப்பமில்லை. "காடக முத்தரைய” னாகட்டும், இலங்கேஸ் வரனாகட்டும், மாலிக்கபூராகட்டும் எந்த பாத்திரமேற்றாலும் அதே நிலை, அதே அசைவுகள், அதே ரீதி வசன உச்சரிப்புகள் என்று செய்யும் அவரால் என் அளவுக்கு மாலிக்கபூரை கையாள முடியுமா என்பது
$133

Page 69
அப்துல் ஜப்பார்
வேறு விஷயம். ஆனால், தமிழ் நாட்டில் அது தவிர்க்க முடியாத தலைவிதி.
அது மட்டுமல்ல, s தமிழகத்தில் நாடகமென்றால் சென்னையை பொறுத்தவரை நகைச்சுவை என்கிற பெயரில் தூணுக்குத் தோரணங்கள் அல்லது மனோகர் நம்மை நாடகம் என்று நம்பச் சொல்லும் மேஜிக் ஷோக்கள்; கிராமப்புறங்களில் மேற்சொன்ன விதத்தில் நடத்தப்படுபவை. இவை போக தங்களை தொழில் முறை கலைஞர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் பலருக்கு ஏணியாக அமைந்த சக்தி நாடக சபாவின் அங்கங்கள் என்று சொல்லிக் கொண்டு, சினிமாப் படமாகி பழைய தாகிப் போய்விட்ட சில நாடகங்களை பசுமாட்டைக் கூடப் பரிசுப்பொருளாக வைத்து டிக்கட் விற்று கிராமங் களில் நடத்தும் நாடகங்கள். இத்தோடு தங்களை "அறிவு ஜீவிகள்” என்று சொல்லிக் கொண்டு சிலர் தெரு ஒர நாடகங்கள் என்ற பெயரில் நடத்தும் திருக்கூத்துக்கள் வேறு.
இந்தச் சுழலில் - இந்தச் சூழலில் அகப்பட்டால் நான் காணாமல் போய்விடக்கூடும். அப்புறம் என்னையே நான் தேட வேண்டியதிருக்கும். இத்துடன் என் ஆன்மீகத் தேடல்களும் ஒன்று சேர, வேஷம் போடுவது, மேடை ஏறுவது ஆகியவற்றை விட்டு விட்டேன். என் அணுகு முறைகள் கிராமத்தில் சாத்தியமில்லை. தமிழகப் பெருநகரங்களில் வசித்து வாய்ப்புகளை உருவாக்கும் வசதி இல்லாமல் போய்விட்டது. காரணம் நான் பிழைப்புத் தேடி மலையாள நாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது ஒரு வகையில் செய்யாமலிருக்கிறோமே என்கிற உறுத்தலே இல்லை. ஏனெனில் வசதியே இல்லை. வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.
134

காற்று வெளியினிலே.
வாரத்துக்கு குறைந்தது மூன்று நிகழ்ச்சிகள் என்று இலங்கை வானொலியிலிருந்த நிலை போய் மூன்று மாதத்துக்கு ஒரு நிகழ்ச்சி, என்கிற இந்திய வானொலி அனுபவம் ஆரம்பத்தில் ஜீரணிக்கக் கஷ்டமாக இருந்தது. அதுவும் நமது முறைவரும் போது நல்ல ஸ்கிரிப்ட் அமைவது என்பது அதிரிஷ்டத்தைப் பொறுத்தது.
இந்திய வானொலியில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் பல்வேறு மொழிகளில் ஒலிப்பரப்பாகும். சில நாடகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஹிந்தி உட்பட பதினான்கு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்து ஒலிபரப்புவார்கள். இதில் உள்ளே ஒரே ஒரு கோளாறு என்னவென்றால் இவை முதலில் ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பிறகு பல்வேறு மொழிகளில் மாற்றம் செய்யப்படுகின்றன. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குப் போகும் போதே பாதி ஜீவன் போய்விடும். மூன்றாவது மொழிக்குச் செல்லும் போது மீதியும் போய்விடும். மேலும் மொழி பெயர்ப்பாளர் களுக்கு குறிப்பிட்ட பிராந்தியத்தின் கலை - கலாச்சாரம் பழக்க வழக்கங்களைக்குறித்து - போதிய அறிவில்லா விட்டாலும் - ஒரளவாவது பரிச்சயம் இல்லையென்றால், நிலைமை மேலும் மோசமாகும். உதாரணமாக வங்கா ளத்தில் கச்சவுட்டி என்பது ஒரு பலகாரம். மொழி பெயர்ப் பவர் ஒரு குறிப்பிட்ட வசனத்தை தேநீரும் பலகாரமும் கொண்டு வா என்று மொழி பெயர்த்தால் பரவாயில்லை. மாறாக கச்சவுட்டி என்றால் என்னவென்று தெரியாமல் அதை சரியாகக் கையாள மாய்ச்சல் பட்டுக் கொண்டு தேநீரும் கச்சவுட்டியும் கொண்டு வா என்று எழுதினார் என்று வைத்துக் கொள்ளுங்கள். வங்காளிகளையும் அவர்க ளோடு தொடர்பு உடையவர்களையும் தவிர ஏனையோர் முழி முழி என்று முழிக்க வேண்டியதுதான்.
135

Page 70
அப்துல் ஜப்பார்
இந்த பலஹினங்களையும் மீறி தேசிய நாடகங்கள் ஒரு தனி இடத்தைப் பெற்றிருக்கின்றன. என்னுடைய அனுபவத்தில் பூரீதர் பொற்றப்க்காட்டின் "ஒரு கிராமத்தில் கதை", பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் “சரித்திரஹின்" ஆகியவை மிக அபூர்வமான நாடகங்கள். வியாபார சினிமாவோடு ஆர்ட் ஃபிலிம் என்று ஒரு வகை உண்டல்லவா இவை அந்த ராகங்கள்.
இம்மாதிரி நாடகங்களில் நடிக்கும் போது நான் ஒன்றை நினைப்பேன். இலங்கையில் தமிழ் நாடகங்கள் தமிழ் நாடகங்களாகவும், சிங்கள நாடகங்கள் சிங்கள நாடகங்களாகவும் இருக்கின்றன. அமைச்சர் அஸ்வர் அவர்களைப் போன்ற இரு மொழிகளிலும் ஆழ்ந்த புலமையுடைய பெருமக்கள் இரு மொழிகளிலும் உள்ள சிறந்த நாடகங்களை மொழி மாற்றம் செய்து ஒலி - ஒளி பரப்ப ஏற்பாடு செய்தால் அது தேசீய ஒருமைப்பாட்டுக்கு மிகவும் உதவுமே!
இந்திய வானொலி அதிகாரிகளிடம் நான் தொடர்ந்து விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுதான். "சார் என் முறை வரும் போது எனக்குச் சந்தரப்பம் தந்து தான் தீர வேண்டும் என்று கட்டாயமில்லை. கொஞ்ச முன்னே பின்னே ஆனாலும் நல்ல ஸ்கிரிப்ட் வந்தால் கூப்பிடுங்கள்." இது கொஞ்சம் வித்தியாசமான வேண்டுகோள். ஏனெனில் என் முறை வரும் போது என்னைக் கூப்பிட மறந்து விடாதீர்கள் என்று சொல்பவர்கள் தான் அதிகம்.
அந்த வகையில் நான் பணியாற்றிய எல்லாத் தயாரிப்பாளர்களுமே எனக்கு மிகுந்த ஒத்துழைப்புத் தந்தவர்கள். சுத்தமல்லி ரகுநாதன், பி.வி கிருஷ்ணமூர்த்தி, துகிலி சுப்பிரமணியம், லோக சிகாமணி, முத்து சுப்ர மண்யம், பொன்துரை சுவாமி, குக. நமசிவாயம் மேலப்
136

காற்று வெளியினிலே.
பாவூர் ராமகிருஷ்ணன் - ரகுபதி ஜோடி இதில் தேர்ந்து தெளித்த அனுபவசாலிகளும் கலையார்வமிக்க இளைஞர் களும் அடக்கம்.
முன்னை நாள் வானொலி அதிகாரி ரஷித் அவர்கள் எழுதிய நாடகத்தில் என் திப்பு சுல்தான் பாத்திரத்தை ரகுநாத் - கிருஷ்ணமூர்த்தி ஜோடி மறக்காது. ரஷித் அவர்களுக்கு தமிழ் எழுதத் தெரியாது. தமிழ் நாடகத்தை உருது லிபியில் எழுதிய பிறகு தமிழில் எழுத செய்வார். ஆனாால் தமிழ் வசனங்களில் ஆழமும் செறிவும் நம்மை வியக்க வைக்கும்.
திருநெல்வேலி வானொலி நிலையம் துவங்கிய போது ஒலிபரப்பப்பட்ட முதல் நாடகம் "ஒஃபிசர் மனைவி” நான் நடித்தேன். தயாரிப்பு துகிலி சுப்ரமணியம். பண்ணை ஒலிபரப்பில் தனக்கென கிராம மக்களிடையே தனி ஒரு இடம் தேடிக் கொண்டவர். கிரிக்கெட்டின் பரம விரோதி. எங்கள் சுவையான உறவின் பெரும்பகுதி கிரிக்கெட்டைக் குறித்து சண்டை போட்டது தான்.
கு.க. நமசிவாயம், "பருவப்பனை” என்னும் நாடகத்தில் பனையிலிருந்து நான் விழுந்த காட்சியை இன்றும் நினைவு கூர்வார். பலஹினமாக ஆரம்பித்து, பயங் கரமாக விரிந்து முனகலுடன் மடிந்து போகும் அந்த "எபக்ட்" என்னாலும் மறக்க முடியாத ஒன்று.
கள்ளைக்குடித்து விட்டு ஊறுகாயை ரசித்து சப்புக் கொட்டிச் சுவைக்கும் காட்சியை "கேள்வி மீடியத்தை பார்வை மீடியமாக மாற்றும் வித்தை "உங்களுக்குக் கைவந்த கலை” என்பது முத்து சுப்ரமணியத்தின் கணிப்பு.
"ராஜமயில்" நாடகத்தில் ஒளரங்கசீப் கலிமாவைச் சொன்ன வண்ணம் இறக்கும் காட்சியை தன்னுடைய குறுகிய கால அனுபவத்தின் மிகப்பெரிய பாதிப்பை
137

Page 71
அப்துல் ஜப்பார்
தன்னுள் ஏற்படுத்தி காட்சி என்பார் மேலப்பாவூர் ராமகிருஷ்ணன்.
லோகசிகாமணி (ஞாலமுதல்வன்) எழுதிய நாடகத்தில் கணவன் உருகி உருகி "ஐ லவ் யூ” என்று சொல்லியும் உருகாத மனைவியைப் பார்த்து "ஐ லவ் யூ டேமிட்" என்று நான் அலறிச் சீறுவது தான் எதிர்ப் பார்க்காத பரிமாணம் என்று நினைத்து நினைத்து மகிழ்வார். பிறகு அவர் தொலைக்காட்சி அதிகாரியாகி இப்போது ஒய்வும் பெற்றுவிட்டார்.
நல்ல ஸ்கிரிப்ட் வரும் போது என்னைக் கூப்பிடுவது என்பதை விட என் முறை வரும்போதுநல்ல ஸ்கிரிப்ட் செட்யூல் ஆகும்படி பார்த்துக் கொள்பவர். பொன். துரைசாமி "சில சட்ட திட்டங்களுக்கும் வரம்பு முறை களுக்கும் கட்டுப்பட்டவர்கள் சார் நாங்கள், ஆனால் அவற்றின் எல்லைக்கோடுகளுக்குள் நின்று கொண்டே திறமைசாலிகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள லாம் சார், அதற்கு எவ்வித தடையுமில்லை” என்பது இவரிடமுள்ள போற்றத்தகும் குணம் - கொள்கை,
இப்போதெல்லாம் வருடத்துக்கொருமுறை வானொலி நாடக விழாக்கள் நடைபெறுகின்றன. சென்னை இரண்டும், திருச்சி இரண்டும், மதுரை, கோவை, பாண்டிச்சேரி, திருநெல்வேலி ஆகியவை தலா ஒவ்வொன்றும் நடத்து கின்றன. விஞ்ஞானம் - சரித்திரம் - கிராமியம் - பாரம் பரியம் என்று ஒவ்வொரு துறைகளைப் பிரதிப்பலிக்கும் நாடகங்களை ஒரோர் நிலையங்களும் நடத்துகின்றன. யார் யார் எந்தெந்த வகை நாடகங்களை நடத்துவது என்ப தற்கும் வழிமுறைகள் இருக்கின்றன. இந்த விழாக்களில் சிறந்த நாடகம் - சிறந்த நடிகர் - நடிகை தேர்ந்து எடுக்கப்படுவதுண்டு. ஆனால் ஆவணங்களில் மட்டுமே
138

காற்று வெளியினிலே.
காணப்படும், வெளின் சொல்ல்ம்ர்ட்ட்ார்கள் ஏன் என்பது எனக்கு இன்றும் புரியவில்லை.
முன்பு, மதுரை, கோவை, நெல்லை நிலையங் களெல்லாம் வருவதற்கு முன்பு சென்னை - திருச்சி நிலையங்களே மாறி, மாறி முழுநாடக விழாக்களையும் தாங்களே நடத்தும், அப்படிப்பட்ட ஒரு நாடக விழாவில் என் மனைவி எழுதிய முதல் நாடகம் "சதுரங்கம்” நாடக விழாவுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் அந்த நாடகத்தில் நடிக்க எனக்கு அனுமதியில்லை. மேஜர் சுந்தர்ராஜன் திப்புவாகவும் துணையாக டி.வி. குமுதினி, “புத்த பிக்ஷ" பூரீனிவாசன் ஆகியோர் நடித்தனர். விமலா ரமணியின் "பறவைகள்” நாடகத்தில் நான் ஏவி.எம். ராஜன், "தங்கப்பதக்கம்” பானுமதி ஆகியோர். கவிஞர் துறைவன்" கந்தசாமியின் "மல்லிக்கை பூ" நாடகத்தில் ஜெமினிகணேசன், சந்திரகாந்தா. அப்புறம் எம்.எம். மாரியப்பாவின் தெருக்கூத்து என்று ஒரு நீண்ட பட்டியல். திப்புவாக மேஜர் அருமையாக நடித்தார் சில அரபுச்சொற்களை அவர் உச்சரித்த நேர்த்தி வெகு அற்புதம் "அரு. ராமநாதனின்” கட்டபொம்மனுக்குப் பிறகு மிகவும் செறிவான - செழிப்பான தமிழ் வசனத்தைக் கொண்டது இந்த நாடகம்" என்று அவர் இந்த நாடகத்தை மிகவும் புகழ்ந்து சொன்னதாக ‘பறவைகளுக்காக நான் சென்ற போது சுத்தமல்லி ரகுநாத்தும் றி.வி. கிருஷ்ண மூர்த்தியும் தெரிவித்தார்கள்.
அத்தனை சினிமா நட்சத்திரங்கள் நடித்த நாடக விழாவில் நான் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதாக ஆவணங்களில் குறிப்புள்ளதாக அதிகார பூர்வமில்லாமல் தெரிவித்தார்கள்.
"பறவைகள்" ஒத்திகைக்கு ஏ.வி.எம். ராஜன் மிகவும்
139

Page 72
அப்துல் ஜப்பார்
லேட்டாக வந்தார்” சினிமா நட்சத்திரங்களே இப்படி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். சமயபுரம் மாரியம்மன் என் இஷ்ட தெய்வம். திருச்சி வந்த மட்டும் அங்கு போகாமல் இருக்கலாமா? அதனால்தான் சென்று அங்க பிரதட்சணம் செய்து விட்டு வந்தேன்” என்றார் விநயமாக, அந்த மனிதர் இன்று ஒரு கிறிஸ்தவ மத போதகர்.
கிறிஸ்தவம் என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது என் மனைவி கிறிஸ்தவ மக்களின் வாழ்க்கையை அடிப்படை யாகக் கொண்டு எழுதிய நாடகம் "பாவத்தின் சம்பளம்” இது ஒலிப்பரப்பப்பட வேண்டிய தருணத்தில் முத்துராம் - பிரமீளா நடித்த ஒரு தமிழ்ப்படம் பற்றிய விளம்பரம் வந்தது - பெயர் "பாவத்தின் சம்பளம்” உடனே பெயரை மாற்றச் சொன்னார்கள், மண்டையைப் போட்டு உடை, உடை என்று உடைத்து கொண்டு கண்டு பிடித்த பெயர் "பாவங்கள் சாவதில்லை" ஒலி பரப்பான மறுநாள் ஒரு மலையாளப் பத்திரிகையைப் பார்க்கிறேன் என்ன அதிசயம் பாருங்கள் ஒரு மலையாளப்படத்தின் விளம்பரம் - பெயர், "பாவத்தினு மரணமில்லா.” இதில் நான் ஒரு மலையாளி யாக நடித்தேன். ஹீரோவாக ஒரு தமிழ் பேராசிரியர் நல்ல நடிகர் என்று சொன்னார்கள். தமிழை மிக, அழுத்தம் திருத்தமாக ஏற்ற இறக்கங்களுடன் உச்சரித்து, கிளிப் பிள்ளைப் பாடமாக அந்தக் கதா பாத்திரத்தை கொன்று போட்ட இந்த சண்டாளப் பாவியை என் வாழ்நாள் உள்ளவரை மன்னிக்கமாட்டேன்.
என் மகன் ஆசிப் மீரான் கட்டிடக் கலைப் பொறிஇயலில் பட்டதாரி கல்லூரியில் படிக்கும் போது 'ஆனந்தவிகடன் மாணவர் திட்டத்தின் போது அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். ஒருநாள் ஜும்மாவுக்குப் போன வனைக் காணவில்லை. சிறிது நேரத்தில், பறக்க பறக்க ஓடிவந்து கெமராவையும் அடையாள அட்டையையும்
140

காற்று வெளியினிலே.
எடுத்துக் கொண்டு ஓடினான். கொல்லத்துக்கு அருகே இந்திய ரயில்வே சரித்திரத்திலேயே மிகப் பெரிய ரயில் விபத்து. ஒரு பாலத்தைக் கடக்கும் போது ரயில் கவிழ்ந்து ஏகப்பட்ட பேர் உயிரும் - உறுப்புகளும் இழந்தனர். பிணங்களை ஏற்றி வந்த வண்டியிலேயே குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று பொலீஸ் கட்டுக்காவலையும் மீறி தகவல் சேகரித்து புகைப்படங்கள் எடுத்து, இரவு ஸ்டுடி யோக்காரரின் வீட்டைக் கண்டுபிடித்து கதவை தட்டி எழுப்பி வந்து ஃபில்மைக் கழுவி எடுத்துக் கட்டுரை சகிதம் கூரியரில் அனுப்பியாகிவிட்டது.
தினசரிகளுக்குச் சமசமாக "ஜ"னியர் விகடன்" அதனைப் படங்களுடன் "கவர்” ஸ்டோரியாக வெளி யிட்டது. புதுக்கவிதையில் மிகுந்த நாட்டம் வசிஸ்டர் (சில்லையூர் செல்வராசன்) வாயாலேயே ப்ரும்மரிஷி பட்டம் வாங்கியிருக்கிறான். பல கவிஞர்கள், கதைஞர்கள் பற்றி இவன் சொல்லித்தான் எனக்குத் தெரியும். அவர் களின் ஒருவர் இப்போதைய என்னுடைய ஃபேவரிட் நாஞ்சில் நாடன். ஆங்கிலத்தில் நான் எந்தெந்த புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்று என் இளைய மகன் ஹமீது சாதிக், அத்தகைய நூல்களை நூலகத்திலிருந்து எடுத்து வர, என் மூத்த மகன் ஆசிப், தமிழ்ப் புத்தங்களை விலை கொடுத்தே வாங்கிவிடுவான்.
ஆசிப் மீரான் ஒரு நாடகம் எழுதினான். முற்றிலும் புதுமையான அணுகுமுறை. ஒருமணி நேர நாடகம். ஆனால் நெல்லையில் அரை மணிநேர நாடகங்கள் மட்டுமே ஒலிபரப்பாகும் எனினும் அந்த நாடகம் ரொம்பப் பிடித்துப்போய் அன்று நாடகத்துக்குப் பொறுப் பாக இருந்த அமரர் நாசரேத் சாம்ராஜ் அதை அரைமணி நேரத்துக்குச் சுருக்கி ஒலிபரப்பினார். இதிலும் எனக்கு நடிக்க அனுமதியில்லை. நடிக்க வாய்ப்புள்ள பகுதிகள்
141

Page 73
அப்துல் ஜப்பார்
எல்லாம் வெட்டப்பட்டு கதை மட்டும் வெளிவரும் ரீதியில் நாடகம் இருந்ததால் அதில் எனக்கு அவ்வளவு வருத்தம் இல்லை.
ஆனால், மக்களை உற்று நோக்காமல் வாழ்க்கையை கூர்ந்து அவதானிக்காமல், சினிமாவையும் டி.வி.யையும் பார்த்து விட்டு "நன்றாகத் தமிழ் பேசுவேன்” என்று நடிக்க வரும் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பேர்வழி இதில் கதா நாயகன். நாடகத்தை ஒரு வழி பண்ணிய புண்ணியத்தை (?) இவர் கட்டிக் கொண்டார். ஆசிப் வெறுத்துப் போய் நாடகமே எழுதப் போவதில்லை என்றான்.
பிறகு எழுதினான். நல்ல நாடகம். அதில் எனக்கு ஒரு அருமையான பாத்திரம். நாடகத்தின் பெயர் "இந்தக் கல்யாணம் நடக்கும்" அப்புறம் தான் நான் அவனுக்கு ஒரு வாழ்க்கைத் துணையைத் தேட ஆரம்பித்தேன். (அதற்கு அவசியமே இல்லாமல் அவன் செய்துவிட்டது வேறு விஷயம்)
சமீபத்தில் இந்திய - ஆஸ்த்ரேலிய இளைஞர் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆட்டத்தின் போது வர்ணனைகளுக்குப் பொறுப்பாக இருந்த பொன். துரைசாமி ஆசிபைக் கண்டதும், "என்ன ஆசிப் நாடகம் ஒண்ணும் எழுதக்காணோம்” என்றார். உடனே “எங்கே சார் சோக நாடகமா ஒலிப்பரப்பிக்கிட்டு இருக்கீங்க. அதான் எழுதலை. பரவாயில்லை. இப்ப எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சி, உங்க ட்ராக்கிலேயே எழுதறேன்” என்று “ஜோக்” அடித்தான். தாயராக அவன் எழுதி, வானொலிக்கா டிவிக்கா என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் நாடகம் "தானம்" என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்த நல்லப் படைப்பு.
ஆனால் என்னை ஆச்சரியத்தில் திக்கு மூக்காடச்
142

காற்று வெளியினிலே.
செய்த நாடகம் வேறொன்று உண்டு. நெல்லை வானொலி யில் ஒரு நாடகம் பெயர் "அந்தஸ்த்து" ஸ்கிரிப்ட்டை வாசிக்கும்போது வசனங்கள் நானே எப்போதோ பேசியது போலவும், சம்பவங்கள் எங்கள் குடும்பத்தில் நடந்தது போலவும் ஒரு பிரமை, தயாரிப்பாளர் மேலப்பாவூரைக் கேட்டேன் "எழுதியது யார்?" அதற்கு அவர் "வசீலா அப்துல் அலி என்கிற அம்மா சார், நல்லாருக்கில்லே?" என்று என்னிடமே திரும்பக் கேட்டார்.
வசீலா அப்துல் அலி என்னுடைய மகள். எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தை அப்படியே யதார்த்தமாகப் படைத்து விட்டாள், தன் பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத இந்த இளம் குடும்பத் தலைவி.
ஒரு நடுத்தர முஸ்லீம் குடும்பத்தின் - ஆசைகள், அவலங்கள் - சுகங்கள் - சோகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி சமூகப் பொருளாதார கோணத்தில் நான் படைத்துள்ள என் கன்னி முயற்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அறிமுகக் கடிதமே ஒரு பெரிய-impressionஐ ஏற்படுத்தி நாடகத்தை ஒலிப்பரப்புக்கு ஏற்கச் செய்திருக்கிறது.
நேயர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நாடகம் ஒலிபரப்பு - மறு ஒலிபரப்பு - தமிழகம் முழுவதும் ஒலிபரப்பு என்கிற அளவுக்கு உயர்ந்து நின்றது. தொடர்ந்து வந்த “ஊதுபத்தி” மேலும் பெருத்த வரவேற்புக் குள்ளாக அவளை தொடர்ந்து எழுதுமாறு நிலையத்தாரே உற்சாகம் தருகிறார்கள். ஆனால் கைக்குழந்தை அஸ்வர் முகம்மது யூசுபை வைத்துக்கொண்டு வேறு எந்த ஒரு வேலையையும் செய்ய இயலாமல் போய்விட்டது.
ஆக, மனைவி, மகன், மகள் ஆகியோர் எழுதிய நாடகங்களில் நடித்த ஒரே நாடகக் கலைஞன் நானாகத்
143

Page 74
அப்துல் ஜப்பார்
தான் இருக்கவேண்டும். என் மருமகள் எழுத வாய்ப் பில்லை. அவருக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும்.
நடிப்பது போக எனக்கும் வானொலிக்குமிடை யிலான தொடர்புக்கு இன்னொரு காரணம்: கிரிக்கட் விளையாட்டு வர்ணனை, இது போக இன்னொன்றும் உண்டு.
நெல்லை நிலையத்தில பத்மகிரீசன் என்கிற ஒரு முதிய பொறியாளர் இருந்தார். தன்னுடைய முப்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகள் சேவையில் நெல்லை உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நிலையங்களை நிர்மாணித்தவர். ஒய்வு பெறுவதற்கு முன்பு ரசிர்களுக்கு முன்னிலையில் ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமென்று இவருக்கு ஆசை, இலங்கை வானொலியில் அது சர்வ சாதாரணம். ஆனால் இந்திய வானொலிக்கு அது ஏறக்குறைய புதியது போலத்தான்.
குற்றால அருவி கொட்டோ கொட்டென்று கொட்டும் சீசன் காலத்தில் அந்த விழா ஏற்பாடு செய்யப் பட்டது. பண்ணை இல்ல ஒலிபரப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவும் நான்காம் ஆண்டு துவக்க விழாவும் அது. விழா நடந்த கலைவாணர் கலை அரங்குக்குப் பக்கத்திலேயே விவசாய - கால்நடைகள் காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்தனை உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிப்பாளர்களும் முன் நின்றனர். விழா அரங்கின் ஒரு பகுதியை பக்கத்திலுள்ள பராசக்தி மகளிர் கல்லூரி மாணவியரே நிறைத்துவிட்டி ருந்தனர். போதாக்குறைக்கு விவசாயிகள், சீசனுக்கு வந்த வர்கள் என்று ஏகக்கூட்டம்.
திருக்குர்ஆனை தமிழில் கவிதை வடிவமாகத் தரப் போவதாக ஆரம்பித்து அதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புக்
144

காற்று வெளியினிலே.
கிளம்ப அந்த முயற்சியை பைபிள் பக்கம் திருப்பி அந்த முயற்சியில் - அந்த நேரத்தில் குற்றாலத்தில் தான் கவியரசு கண்ணதாசன் ஈடுபட்டிருந்தார். அவரும் விழா வுக்கு வரக்கூடும் என்று தகவல். அந்தப் பரபரப்பு வேறு ஒரு அருமையான சூழ்நிலை, விழாவைத் தொகுத்தளிக்க திரு. பத்மகிரீசனே என்னை நேரடியாகத் தெரிவு செய்தி ருந்தார்.
அதற்கு சின்னாட்களுக்கு முன்புதான் இந்தியக் குடியரசுத் தலைவர் குற்றாலத்துக்கு விஜயம் செய்து தங்கி விட்டுப் போனார். தொலைபேசி துறையினர் அவருக்காக ஒரு "ஹொட் லைன்” ஏற்பாடு செய்திருந்தனர். அது அப்படியே இருந்தது. அந்த வசதியைப் பயன்படுத்தி அந்த வெளி ஒலிப்பரப்பை கலையக ஒலிப்பரப்புப் போலவே செய்துவிட வேண்டும் என்று திரு. பத்ம கிரீசனும் அவரது துடிப்பு மிக்க இளம் உதவியார் அப்பா குட்டியும் முனைப்பாக இருந்தனர்.
மாலை 3.30 முதல் 6.00 மணி வரை விழா, நேரடி அஞ்சல்! அதன் பிறகும் ரசிகர்கள் முன்னிலையில் தொடரும் அந்த பகுதிகள் வேறொர் சமயம் ஒலி பரப்பாகும் என்று ஏற்பாடு. எல்லா ஏற்பாடுகளும் சரி. சரியாக 3.25க்கு ஒரு "ட்ரையல்’ கூடப்பார்க்கவில்லையே என்று அப்பாக்குட்டி கவலைப்பட்டார்.
நான் மேடை ஏறி என்ன நடக்கப்போகிறது என்பதைச் சுருக்கமாகச் சொன்னேன். அத்துடன் “சிரிப்பு வந்தால் புன்னகை செய்யாதீர்கள். இது டி.வி. அல்ல எனவே வாய்விட்டு சிரியுங்கள். கரகோஷம் என்று வரும் போது ஆரவாரத்துடன் அதனைச் செய்யுங்கள்” என்றேன். தொடர்ந்து "ஒரு ஒத்திகை பார்ப்போமா? எங்கே எல்லோரும் ஒருமுறை ஜோராகக் கைத்தட்டுங்கள் பார்க்க
T-10 145

Page 75
அப்துல் ஜப்பார்
லாம் என்றேன். சிலர் தட்டினார்கள். மீண்டும் ஒரு முறை, உஹ7ம் போதாது, மாணவியரைப் பார்த்தேன் அவர்கள் அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்தனர். அவர்கள் பக்கம் திரும்பி, "இந்த வம்பு தானே வேண்டாங்கிறது” நீங்கள் இப்படி இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்றிருந்தால் நம்பி விடுவேனா, இங்கே இப்படி இருக்கும் நீங்கள் ஹோஸ்டலில் எவ்வளவு படா வால்கள் என்று எனக்குத் தெரியாதா?. ஒ. பிரின்ஸிபல் அம்மா இருக்காங்களா. அவங்க முன் வரிசையில் தானே. பேராசிரியை முன்னால் வரும் போது வணக்கம் கூறி விட்டு அவர் அந்தப் பக்கம் திரும்பியதும் சைகையால் "வெவ்வே” காட்டுவது எனக்குத் தெரியாதா? என்ற போது முன் வரிசை ஆசிரியக்கூட்டம் ஆமோதிக்கும் விதத்தில் சிரித்தது. உடனே "எங்கே பார்க்கலாம்” என்றேன். கர ஒலி மாத்திரமல்ல கீழ்க்கை ஒலியும் என்னை ஆச்சரியப்படவைத்தது. ஆண்கள் பக்கம் திரும்பி "உங்கள் வீரம் இவ்வளவுதானா? என்றேன். எழுந்த ஒலி அரங்கத்தையே அதிர வைத்தது. "தேட்ஸ் ஃபைன்" என்றேன். பொறியியல் பெரியவரும் பெருவிரலை உயர்த்திக் காட்டினார். நேரம் 3.28 சிறிது நேரத்தில் "சிக்னேச்சர் ட்யூன்” என்னும் அடையாள இசை தொடர்ந்து அறிவிப்புகள்.
"நேயர்களை குற்றாலம் அழைத்துச் செல்கிறோம்" என்றதும் நான் யார் சைகைக்கும் காத்திருக்கவில்லை. எத்தனை அவகாசம் கொடுக்க வேண்டுமென்பதும் அத்துப்படி துவங்கிவிட்டேன்.
"வணக்கம் நேயர்களே, எல்லாம் கிடையாது எடுத்த எடுப்பிலேயே "குற்றாலம் கலைவாணர் கலை அரங்கி லிருந்து நேரில் காண வந்திருக்கும் நேயர்களுக்கும், வானொலி வாயிலாகக் கேட்டுக்கொண்டிருக்கும் ரசிகப் பெருமக்களுக்கும் வாத்சல்ய வாழ்த்துக்கள் கூறி
146

காற்று வெளியினிலே.
வரவேற்பது அப்துல் ஜப்பார் கரகோஷம் - (வாத்சல்ய வாழ்த்துகள் சில்லையூர் மன்னிப்பாராக)
"பண்ணை - இல்ல ஒலிப்பரப்பின் மூன்றாம்
ஆண்டு நிறைவு விழாவும் நான்காம் ஆண்டு துவக்க விழாவும் இங்கு இப்போது நடை பெறவிருக்கின்றன. தமிழகத்தில் மூன்று என்கிற சொல்லுக்கு ஒரு மகத்துவம் உண்டு. முத்தமிழ், முக்கனி, முப்பால், மூவேந்தர் இப்படி இந்த மூன்று விழாவுக்கும் ஒரு மகிமை உண்டு. இதனை தலைமையேற்று நடத்தித் தரப்போகிறவர் காந்தீயவாதியும், சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தி கிராமிய பல்கலைக் கழகத்தின் முன்னால் துணை வேந்தருமான ஜி. ராமச் சந்திரன் அவர்கள். வானுக்கு அறிமுகம் தேவையா? வான் நிலவுக்கு வர்ணனை அவசியமா? நான் வான் நிலவென்று சந்திரனைச் சொன்னேன். ராமச்சந்திரனை, சொன்னேன். நமது நம்முடைய என்பதைச் சுருக்கி "நம்” என்போம். அதுபோல் எமது எம்முடைய என்பதைச் சுருக்கி “எம்” என்று சொல்லலாம் இல்லையா? எனவே எமது ஜீ. ராமச்சந்திரன் அவர்களை “எம்" - சிறு இடைவெளி - ஜி. ராமச்சந்திரன் என்று சொன்னால் என்ன? அவ்வளவு தான் சந்தோஷம் கூரையைப் பிய்த்து விட்டது.
பெரியவர் வயோதிபம் காரணமாக மெல்ல எழுந்து வந்து ஒலி வாங்கியை அடையும் வரை அல்ல அதன் பிறகும் கரகோஷம் நீடித்தது. பெரியவரும் விட்டாரில்லை. அமைதியாக இருக்க சைகை காண்பித்து விட்டு"நானும் ஒரு பைட்டர் தான்” என்றார் - சிரிப்பு, கரகோஷம் "ஆமாம் ஃப்ரீடம் பைட்டர் (சுதந்திரப் போராளி) கூட்டம், ரசித்துச் சிரித்து, கர கோஷித்தது, விழாகளை கட்டி விட்டது.
கலை நிகழ்ச்சிகள் துவங்கும் கட்டம் வந்தது "புதிதாக ஆரம்பிக்கும் ஒன்றுக்கு தமிழ்நாட்டில் பிள்ளை
147

Page 76
அப்துல் ஜப்பார் யார் சுழி போடுவது என்பார்கள், இங்கு கலை நிகழ்ச்சி களுக்குப் பிள்ளையார் சுழி போடப் போவது ஒரு பிள்ளை தான். அந்தப் பிள்ளை - யார்? என்ற கேட்கிறீர்களா? அவர் தான் நெல்லை "கணபதிப் பிள்ளை" என்றபோது எழுந்த உச்சாக ஆரவாரத்தை கணபதிப் பிள்ளையே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்.
எத்தனையோ மயிலிறகைக் கட்டிக் கொண்டு மயில் டான்ஸ் ஆடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கு ஆடிய ஒரு பெண் போல் எங்கும் பார்த்ததில்லை. சிறகை விரிக்கும் போது ஏற்படுத்தும் சிலிர்ப்பும் "உஸ். உஸ். என்கிற மெல்லிய இறைச்சலும் பிரமாதம் போங்கள் உருகிப்போனேன். அதே உருக்கமுடன். "எத்தனை குடத்தி லிட்ட தீபங்கள் ஐயா இந்த நாட்டிலே. எத்தனை குடத்தி லிட்ட தீபங்கள். அவைகளை குன்றின் மேலிட்ட தீபங்களாக்க முயற்சிக்கும் அனைந்திந்திய வானொலிக்கு நாம் நன்றி சொல்ல வேண்டாமா?” என்றபோது “வேண்டும். வேண்டும்" என்கிற ஒலிகள் நன்றி சொல்ல வேண்டும் என்று மட்டும் சொல்லவில்லை. அந்த நிகழ்ச்சி மீண்டும் வேண்டும் என்றார்கள்.
5-55 ஒரு நிகழ்ச்சியைத் துவங்கவிருந்த குழுவிடம் நான் எப்போது சைகை காண்பிக்கிறேனோ அப்போது என்ன செய்து கொண்டிருந்தாலும் அப்படியே உரைந்து நின்று விட வேண்டும். மீண்டும் சைகை காண்பிக்கும் போது மீண்டும் உயிர் பெற்றது போல் விட்ட இடத்தி லிருந்து துவங்க வேண்டும் என்று சொல்லி வைத்தேன்.
5-59 நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்க மேடையில் தோன்றினேன். கலைஞர்கள் உரைந்து நின்றார்கள். வானொலி நேயர்களிடம் விடை பெற்றேன். நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. அவைகளை நீங்கள் வேறு ஒரு நேரத்தில் கேட்கலாம் என்று சொல்லி விட்டு கீழிறங்கினேன்.
148

காற்று வெளியினிலே.
உரைந்து நின்ற கலைஞர்கள் உயிர் பெற்றார்கள். நிகழ்ச்சி தொடர்வதற்குள் இத்தகைய ஒரு "டெக்னிக்கை சற்றும் எதிர்பாராத ரசிகர்களுடைய எழுந்த கரஒலி என்றும் என்னால் மறக்க முடியாது ஒன்று.
குரலை பண்படுத்துவதிலும் பயன்படுத்துவதிலும் என்னிடமிருந்து நிறைய நுணுக்கங்களை கற்றுக் கொண்ட தாக பி.எச். அப்துல் ஹமீது சொல்வார். ஆனால் நிகழ்ச்சியை இப்படி தொகுத்தளிக்கும் கலையை நான் அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எவ்வித கூச்சமில்லை. மாறாக மகிழ்ச்சியே.
நான் முதன் முறை - அதாவது அவர் இலங்கை வானொலியில் சேர்ந்து ஒரு உன்னத அறிவிப்பாளராகப் பிரசித்த பெற்ற பிறகு சந்தித்தபோது தன்னுடைய இடுப்பளவு கையை வைத்துக் கொண்டு "நான் இப்படி இருக்கும் போதே உங்கள் ரசிகன்” என்றார் நான் என் தலையளவு கையை வைத்துக் கொண்டு நான் இப்படி இருக்கும் போதும் உங்கள் ரசிகன்” என்றேன். உண்மையில் பி.எச். ஒரு அற்புதமான கலைஞர். நான் சிறந்த ஒலிப் பரப்பாளர்களாகக் கருதுவது ஜோன் ஆர்லட், நெவில் கார்டஸ், அமரர் மெல்வில் - டி மெலோ, ஹென்றி ப்ளோபெல்டு, சோ. சிவபாதசுந்தரம், பூர்ணம் விஸ்வ நாதன், வி.ஏ. கபூர், வி. சுந்தரலிங்கம் ஆகிய பெரியவர் களைத்தான். பி.எச். அப்துல் ஹமீதுக்கும் இந்தப் பட்டியலில் ஒரு உன்னத இடமுண்டு.
இவர்கள் ஒவ்வொருவரும் ஒரோர் வகையில் எனக்கு உணர்வும் உற்சாகமும் தந்து உயர வைத்தவர்கள். பி.எச். இன்றும் அந்த நற்பணியைத் தொடர்கிறார். வி.சுந்தர லிங்கம் அவர் ஆஸ்தரேலியாவில் காலமாகும் வரை அதைச் செய்தார்.
149

Page 77
அப்துல் ஜப்பார்
சென்னையில் வைத்து நான் எழுதிய 'தவ்பா" (பாவமன்னிப்பு) என்னும் பாடலை பிஎச்.சிடம் பாடிக் காட்டினேன். இலங்கை திரும்பியதும் நல்லதொரு பாடக ரைத் தேடிக் கண்டுபிடித்து பொருத்தமான இசை அமைத்து நோன்பு நேரத்தில் ஒலிபரப்பியது என்னை மிகவும் நெகிழ வைத்தது. பொதுவாகவே இஸ்லாமிய நிகழ்ச்சிக்கு தென்னகத்தில் நல்ல வரவேற்பு உண்டு. நோன்பு நேரத்தில் அது இன்னும் பன்மடங்கு கூடும். நான் இன்னும் கேட்கவில்லை. ஆனால் நிறையப் பேர் கேட்டிருக்கிறார்கள். கேட்டவர்கள் எல்லாம் அதன் ஒரு பிரதி வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.
சென்னையில் வாழ்ந்த அண்ணன் சுந்தரலிங்கம், எனக்கும் பி.பி.சிக்கும் பாலமாக இருந்தவர். அல்லது இன்னொரு விதமாகச் சொன்னால் பி.பி.சியோடு எனக் குள்ள தொடர்புக்கே காரணமாக இருந்தவர். இலங்கை கல்வி இலாக்காவில் வேலை பார்த்து, செகண்டட் ஃபோர்) ச(ர்)விஸ் என்கிற ஏற்பாட்டின் கீழ் இலங்கை வானொலிக்கு அறிவிப்பாளராக வந்து தனக்கென ஒருமுத்திரை பதித்து, வானொலி நாடக நடிப்பிலும் தனக்கென ஒரு இடம் தேடிக் கொண்ட வெண்கலக்குரல் வேந்தன் வி. சுந்தரலிங்கம் அவர்கள். வி ஸ்டேண்ட்ஸ் ஃபோ(ர்) வெண்கலக்குரல் என்று சொல்வதுண்டு (நான்) - என்னைக் காணும் போதெல்லாம் என்ன கல்ச்சர்டு ஒய்ஸ்டாப்பா உனக்கு” என்று சொல்வது தான் மகிழ்ச்சி யான ஒரு ஆச்சரியம்.
ஆனால் பி.பி.சி.யிலிருந்து ஒரு அம்மையார் வந்திருந் தார் திருமதி. ஹெதர் போண்ட் - அவர் தலைமையில் நான், லேனா தமிழ்வாணன் உட்பட ஆறுபேருக்கு சென்னை கன்னிமாரா ஒட்டலில் ஒரு நான்கு நாட்கள் விசேஷப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடு உபயம் அண்ணன் வி. சுந்தரலிங்கம் அவர்கள்.
150

காற்று வெளியினிலே.
இந்த அம்மையார் நான்கு நாட்களும் எங்களை உண்டு இல்லை என்று பண்ணி, தொலை உரித்து உப்புப் போட்டுக் காய வைத்துவிட்டார். அப்போது வானொலியில் நாற்பத்தி நான்கு ஆண்டு கால அனுபவம் எனக்கு. அந்தக் காலக் கட்டத்தில் என்னென்ன செய்தோம் என்பதை அறிந்த போது ஆச்சரியத்தால் ஒரு மூச்சுத் திணறல்,
லட்சம், கோடி என்கிற வார்த்தைகளை உபயோகித் தால் "அதற்கு என்ன பொருள்? இந்தியாவிலிருக்கிற உனக்கு விளங்கும் பி.பி.சி. நிகழ்ச்சி கேட்கிற மற்ற தேசத்தவர் களுக்கு எப்படி விளங்கும்?” என்பார் ஒவ்வொரு விஷயத் திலும் படு நுட்பம் - படு கவனம் - படு கரிசனம்!
பயிற்சியின் போது நான் ஒருவரைப் பேட்டி காண வேண்டும் கண்டேன். திருமதி. போண்ட் கைக்கரண்டி யால் தே நீர்க்கோப்பையில் தட்டிய வண்ணமிருந்தார். நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. திடீரென்று ஒரு சீற்றம் “ஸ்டாப்இட்" நீ என்ன செய்கிறாய்?"
"பேட்டி எடுக்கிறேன்” உடனே, "நான் என்ன செய்கிறேன்?" சொன்னேன். "நீ அதை எப்படி அனுமதிக் கலாம்? மரியாதை! நான் உனக்கு சிலவற்றை கற்றுத் தருகிறேன். அதனால் எழுந்த மரியாதை நோ. உன் தொழிலுக்கு இடைஞ்சலாக யார் இருந்தாலும் தடுத்து நிறுத்து. நான் தேநீர்க் கோப்பையில் தான் தட்டுகிறேன். ஆனால் ஒலிபரப்பில் இது எப்படி கேட்கும் தெரியுமா? யுத்த களத்தில் துப்பாக்கி வேட்டுச்சத்தம் போலிருக்கும்!"
“மன்னியுங்கள் மீண்டும் ஒருமுறை செய்கிறேன்" என்றேன் அனுமதித்தார். துவங்குவதற்கு முன்பு ஒட்டல் ஊழியர் ஒருவரைக் கூப்பிட்டேன். "குளிர் வசதி" யை நிறுத்தச் சொன்னேன். "அது எதற்கு"? என்றார். "அதில் ஒரு பஸ்ஸிங்" சப்தம் வருகிறது மேடம்" என்றேன். "ஏ.சி.
151

Page 78
அப்துல் ஜப்பார் (குளிர்வசதி) இல்லாமல் இந்த அறையில் இருக்க முடியா தேப்பா" என்று அதிர்ந்தார். "அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை” என்றேன். என் வார்த்தைகளை நம்ப முடியாமல் என்னை உற்றுப் பார்த்தார். பிறகு கண்களை சிமிட்டி விட்டு கடகடவென்று வாய்விட்டுச் சிரித்தார். தப்புகளுக்கு வார்த்தைகளால் தாட்சண்யம் இல்லாமல் சாட்டை அடி கொடுப்பதும், கெட்டிக்காரத்தனத்தை முதுகில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துவதுமான ஒரு மாபெரும் நல்லாசிரியை அவர். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரிச்சுவடி கற்றுக் கொண்டது போல் எனக்கு ஒரு நினைவு - நிறைவு. . இது மட்டுமா கல்வி, இன்னும் எவ்வளவோ கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய மிகப்பெரிய “கிரிட்டிக் - விமர்சகன் - என் இளைய மகன் ஹமீது சாதிக் (பிதாஜி, பி.எச், என் மாமனார் எல்லோரையும் வைத்து இவனுக்கு அந்தப் பெயர்) கணிப்பொறியியல் பட்டப் படிப்பில் தேர்ந்தவன், கணிப்பொறி வல்லுநன். தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற அர்த்தத்தில் அல்ல. உண்மையிலேயே அவன் ரொம்ப வடிார்ப் - கூர்மை அட்வான்ஸ் லெவலில் 98% புள்ளிகள். மற்றவைகளை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். இளைய தலைமுறையின் ஒரு பிரதிநிதி.
நான் சில காலத்துக்கு முன்பு நடந்த இந்திய - இலங்கை கிரிக்கெட் போட்டி தமிழ் வர்ணனைக்கு இலங்கை வருவதாக இருந்து பல்வேறு காரணங்களால் அது முடியாமல் போய் விட்டது. கண்டியில் கனத்த மழை "வாப்பாவின் சோகமான முகத்தை அப்படியே ஒரு "டைட் க்ளோசப்" கெமராவை அப்படியே கண்டிக்கு தூக்கு. சோன்னு மழை. வருண பகவானே வாப்பாவுக்காக கண்ணிர் வடிக்கிறான்" என்று ஜோக்கடிக்கக் கூடியவன். ஒருநாள் அவனைப் பார்க்க அவன் சக மாணவன் ஒருவன்
152

காற்று வெளியினிலே.
வீட்டுக்கு வந்தான். டி.வி.யில் இன்றைய புகழ்பெற்ற ஒரு இளம் நட்சத்திரத்தின் தந்தை - ஓர் ஒப்பற்ற கலைஞர் - நடித்த படம் அந்தப் பையன் திடீரென்று இது இன்னாரு டைய தந்தைதானே என்று ஒரு கேள்வியை உதிர்த்தான். ஆம் என்ற போது சர்வசாதரணமாகப் "பரவாயில்லையே சுமாராக நடிக்கிறாரே" என்றான். நான் ஆடிப்போய் விட்டேன். அது பரவாயில்லை. அவன் போன பிறகு என் இளவல் கேட்டான். "அவர் சொன்ன செய்தியின் பொருள் உங்களுக்குப் புரிகிறதா?" நான் அப்படியே உறைந்து போய்விட்டேன்.
இளைய தலைமுறை என்பது ஒரு மாபெரும் சக்தி, உண்மையில் அது அதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு சிம்ம சொப்பனம். இந்த நிலையில் ஐம்பத்தி நான்கு வருட அனுபவம் என்பது தலையில் சூட்டப்பட்ட கிரீடமா அல்லது கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட கல்லா என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்று புரிகிறது. முன்பை விட இப்போது அதிக உழைப்பு தேவை. உத்வேகம் தேவை. மாற்றங்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்கவமும் ஆற்றின் ஒழுக்கை அனுசரித்து நீந்தும் வல்லமையும் தேவை அல்லது காலச்சூழலில் அகப்பட்டு மூச்சுத் திணறி மூழ்கிப் போக நேரிடலாம். ஒரு பெண்ணின் வயது அவள் தோற்றத்தைப் பொறுத்தது. ஒரு ஆணின் வயது அவன் சிந்தனையைப் பொறுத்தது என்பதைப் புரிந்து கொண்டி ருக்கிறேன்.
இளமையோ, முதுமையோ, புதுமைக் கவர்ச்சியோ, அனுபவத் தேர்ச்சியோ எதுவாக இருந்தாலும் அணுகு முறை சரியாக இருக்கவேண்டும் உழைப்பு அதிகமாக இருக்க வேண்டுமென்று நம்புபவன் நான். ஒரு விஷயம், ஒலி பரப்பப்படும் நிகழ்ச்சி கேட்பதற்கே, அதைக் கேட்கும் படிப்படியாகச் செய்வதில் நம் பங்கு நிச்சயமாக அதிகம்.
辑53

Page 79
அப்துல் ஜப்பார்
அது மட்டுமல்ல, என்னுடைய ஒருநாள் ஒலிப்பதிவுக்கு தரப்படும் சன்மானம் இந்திய ஜனத்தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு மாத உழைப்பின் ஊதியம் - சம்பளம், கலைக்கு விலையில்லை என்பவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த உணர்வு என் உள்ளத்தின் அடித்தளத்தில் இருக்கும் வரை நான் நிச்சயமாக சோடை போக மாட்டேன் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மேடையை அநேகமாக விட்ட மாதிரித்தான். ஆனால் வானொலியை விடுவேனா என்பது சந்தேகமே. அன்றாட வாழ்வின் அயர்வு - சோர்வு - அலைச்சல் - உழைப்பு டென்ஷன் இவற்றுக்கு மத்தியில் ஏதோ சில மாத இடை வெளிக்குப் பிறகாவது வானொலி நிலையத்தில் சென்று செலவாக்கும் அந்த ஒரு நாள் எனக்குப் புத்துயிரும் புது உணர்வும் நல்குகிறது என்பதுதான் காரணம்.
இந்த நிலையில் எழுபதுகளின் பிற்பகுதியில் அனைந்திந்திய வானொலியில் கிரிக்கெட் தமிழ் நேர்முக வர்ணனை ஆரம்பமாயிற்று. இராமமூர்த்தி (I.A.S.) தவிர, ஏனையோர் சென்னையின் சொல் வழக்கில் சொல்வ தானால் சொதப்பினார்கள். எனவே பலரது கிண்டலுக்கும் கேலிக்கும் அது இலக்காயிற்று. இதில் தமிழ் கிடந்து கேவலப்படுவதை என்னால் சகித்துக் கொள்ளமுடிய வில்லை. காட்டமாக ஒரு கடிதம் எழுதினேன். நேயர் கடித நிகழ்ச்சியான தபால் பெட்டியில் அதை வாசித்தவர் ஏன் நீங்கள் வரலாமே என்றார் தொனியில் ஒரு சவால். நெல்லை வானொலியில் கற்பனையான ஒரு வர்ணனை ஒலிப்பதிவாயிற்று. பிறகு பேச்சும் இல்லை. மூச்சும் இல்லை. பிறகு ஒர் ஆட்டம். நடக்குமிடத்திலிருந்து வர்ணிக்க கூப்பிட்டார்கள்.
ஒரு கிறிஸ்மஸ் தினம். சென்னை சேப்பாக்க சிதம்பரம் விளையாட்டரங்கம். தமிழகத்துக்கும் கேரளத்
154

காற்று வெளியினிலே.
துக்கும் போட்டி, சந்திரகாந்த என்பவர் ஒரு விளாசு விளாசினார். அது என் பெயரையுடைய ஜபாரின் தோளில் பட்டுத் தெறிக்க பாரத் ரெட்டி ‘கேச்’ பிடிக்க ஆள் "அவுட்’. அதை இப்படி வர்ணித்தேன். “ஒருவருக்கு துணை போவதை தோள் கொடுப்பதாகச் சொல்வார்கள். இங்கே ஒருவரை தொலைத்துக் கட்ட ஜபார் தோள் கொடுத்திருக்கிறார் என்றேன். அடுத்தவர் வந்தார். அவரும் ஓங்கி அடித்தார். உயரே சென்றது பந்து. நான் சொன்னேன். பனைமர உயரத்துக்குச் செல்கிறது பந்து, பக்கத்திலுள்ள கேன்டினில் சென்று ஒரு காபி குடித்து விட்டு வந்து கூட கேச் பிடிக்கலாம். அந்த அளவுக்கு அவகாசம். பிடித்தார். அடுத்த விக்கட்களையும் கேரளம் இழக்கிறது என்றேன். அப்போது திருச்சியில் நிகழ்ச்சி அதிகாரியாக இருந்து சமீபத்தில் சென்னை வானொலி நிலைய இயக்குநராக ஒய்வு பெற்ற விஜய திருவேங்கடம் ஒடி வந்து வாழ்த்துச் சொன்னார்.
1980-ஜனவரி தைப்பொங்கல் தினம். சென்னையில் இந்தியா பாகிஸ்தான் முதல் டெஸ்ட்டில் என் வர்ணணை அரங்கேற்றம். முப்பது வருடங்களாக வானொலி நாடகம் தந்ததிலும் பன்மடங்கு புகழையும் அங்கீகாரத்தையும் அந்த ஐந்து நாள் ஒலிபரப்பு தந்தது.
1982-ல் இந்தியா - இங்கிலாந்து போட்டியைக் காண எம்.ஜி.ஆர் வந்திருந்தார். அன்று கிரிக்கட் சங்கத் தலைவரின் மதிய போசன விருந்து. சுயம் பறிமாறிக் கொண்டு நின்ற வண்ணம் சாப்பிடும் ஏற்பாடு நடுவில் எம்.ஜி.ஆர். அவரது துணைவியார் வி.என். ஜானகி, அமரர்கள் பாரத ரத்னா சுப்பிரமணியம், சிலம்புச் செல்வர் மா.பொ.சி. ஆகியோருக்கு ஆசனங்கள் போடப் பட்டு இருந்தன. கூட்டத்தில் ராமமூர்த்தியை அடையாளம் கண்டுகொண்ட எம்.ஜி.ஆர். அவரை சைகை காட்டி
155

Page 80
அப்துல் ஜப்பார்
அழைத்தார். அவர் என்னையும் இழுத்துக் கொண்டு போனார். "நல்லாருக்கு, ரொம்ப நல்லாருக்கு, புரிஞ்சிக் கிட்டு நல்லா ரசிக்க முடிகிறது” என்று வாயாரப் பாராட்டி னார். ராமமூர்த்தி என்னை அறிமுகம் செய்ததும் "ஒ. அப்படியா. என்றவர் என் தாய்மொழி உருது என்று நினைத்தாரோ என்னவோ.” தாய்மொழி தமிழாக இல்லாமலிருந்தும் என்றவரை என்தாய் மொழிதமிழ் தான் ஐயா” என்று இடைமறித்தேன். அவர் முகத்தில் ஒரு பெருமிதம். ஒரு மந்தகாசப்புன்னகை, புகைப்படக்காரர்கள் யாரும் இல்லை. உடனே அணிந்திருந்த "பேட்ஜை’ எடுத்து நீட்டினேன். இடைவெளியே இல்லால் நிரப்பி கையெழுத் திட்டுத் தந்தார். பேனாவை திரும்பத் தந்தபோது அது கீழே விழுந்தது. குனிந்து எடுக்கப் போனேன். நான் காலில் விழப் போவதாக நினைத்தாரோ என்னவோ அப்படியே என்னை தூக்கி எடுத்து தன் மார்போடு தழுவிக் கொண்டார். அதில் பொய்மை இல்லை. போலித்தனம் இல்லை. ஒரு மூத்த சகோதரனின் ஆதுரம் அதில் தெரிந்தது. அதுவரை நாம் எம்.ஜி.ஆரின் அபிமானி அல்ல. ஆனால் அன்று முதல் ஒருவன். *
1986-ல் உலகக் கோப்பை வர்ணனை விசேஷ பயிற்சிக்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டேன். பி.பி.சியிலும் தொகுத்தளித்தது ஒரு மைல் கல்.
1997 இந்திய சுதந்திர பொன் விழா ஆண்டில் அனைத்திந்திய வானொலி, பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த ஒலிபரப்பாளர்கள் என்று பத்துப் பேரைத் தேர்ந்தெடுத்து சங்கீத மேதை செம்மங்குடி பூரீனிவாசன் ஐயர் தலைமையில் நடந்த விழாவில் கெளரவித்தது. நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், பி.பி. யூரீனிவாஸ் என்கிற அந்தப் பட்டியலில் நானும் ஒருவன்.
156

காற்று வெளியினிலே.
1999 ஆண்டு, சென்னை சேப்பாக்க மைதானம். இந்தியா - பாகிஸ்தான் போட்டி மாலை வேலை முடிந்து திரும்புகையில் என் அபிமானத்துக்குரிய ஆட்டக்காரர். இப்போது வர்ணனையாளர் நின்று கொண்டிருந்தார், சுயம் அறிமுகம். "நீ இங்கே என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். "நீங்கள் எதை ஆங்கிலத்தில் செய்கிறீர்களோ அதை நான் தமிழில் செய்கிறேன்” என்றேன். அகம்பாவத் தினாலா அல்லது அறியாமையினாலா தெரிய வில்லை. "அப்படி ஒரு மொழி இருக்கிறதா? என்று கேட்டார். எங்கே? தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நின்று கொண்டு நொந்து போனேன்!
கலைமாமணி வி.கே.டி.பாலன் “வேலைகள் அத்தனையையும் முடித்துவிட்டு வாருங்கள். இடையில் போவதானால் வரவே வராதீர்கள்" என்பார் அன்று போனேன். சுரத்தில்லாமல் இருந்தேன். காரணம் கேட்டார் சொன்னேன். சிறிது மெளனம், பிறகு தொலைபேசியை கையில் எடுத்தார். சுழற்றினார். "தார்சிஸ் அண்ணா, நான் பாலன் பேசுறேன். உலகப் கோப்பை வருகிறது. தமிழில் வர்ணனை தேவை. ஆளை நான் அனுப்புகிறேன். செலவை நான் ஏற்கிறேன். நிகழ்ச்சியை நீங்கள், ஏற்பாடு செய்யுங்கள்" என்றார். அப்படித்தான் உலக அளவில் 24 மணிநேர தமிழ் ஒலிபரப்பு நிலையமான ஐ.பி.சி. தமிழில் கிரிக்கட் தமிழ் வர்ணனை அரங்கேறிற்று. நான் சென்ற சில நாட்களி லேயே தார்சிசியஸ் அவர்கள் ஐ.பி.சி.யை விட்டு விலகும் சோகம் நிகழ்ந்தது. அவருக்குப் பிறகு பொறுப்பேற்ற சிவரஞ்சித் அவர்களும் அவரது உறவினர்கள் சத்யன் - ஜமுனா தம்பதியினரும் விருந்தோம்பலுக்கு விளக்கமும் - விரிவுரையும் என்று சொன்னால் மிகையல்ல.
வர்ணனையில் தமிழுக்குப் பெருமையும் புகழும் சேர்க்க வேண்டுமென்று என்னுள் ஒரு வெறியே இருந்தது.
157

Page 81
அப்துல் ஜப்பார்
அதற்காக நான் பட்டபாடு. உழைத்த உழைப்பு வீண் போகவில்லை என்பதுதான் எனக்குள்ள மகிழ்ச்சி.
விளையாட்டோடு தொடர்பில்லாத எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் வர்ணனையில் சொல்லக் கூடாது என்பது மரபு மட்டுமல்ல விதியுமாகும். ஆனால் என் பெயரையும் என் நிறுவனத்தின் பெயரையும் சொல்லி விட்டால் ஒரு பரிசு என்று பாலன் ஒரு சவால் விட்டார்.
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஹொக்கி இறுதி போட்டி, பாகிஸ்தான் அணியில் இரண்டு சஹபாஸ் அகமதுகள். ஒருவர் உலக புகழ் வாயந்த சீனியர் மற்றவர் புதிதாக அணியில் சேர்ந்துள்ள "பேபி” ஆனால், மூத்தவரைப் போலவே அற்புதமாக ஆடினார். நான் சொன்னேன். “இளைய சஹபாஸ் பாகிஸ்தான் அணியின் பாலன் அவரது பட்டையும் மதுர மொழிகள் பேசும் மந்திர ஜாலங்கள் செய்யும்” என்றேன்.
மாலை பாலன் அவர்களைச் சந்தித்த போது, மதுரா ட்ராவல்ஸ் அதிபர் கலைமாமணி வி.கே.டி. பாலன் எனக்குரிய பரிசைத் தந்து தன் வாக்கை காப்பாற்றினார்.
என் மூத்த மகன் ஆசிஃப் மீரான் ஒரு கட்டிடக் கலை நிபுணன். இலக்கியத்தில் நல்ல ஈடுபாடு. ரசிக்கும் கட்டத்தையே இன்றும் முழுமையாகத் தாண்டாத போது படைப்பைப் பற்றி இப்போது எப்படி எண்ணிப் பார்க்க முடியும் என்று எண்ணுபவன். எஸ்.பொ, சில்லையூர் என்றால் மிகவும் மதிப்பு மரியாதை அன்பு ஈடுபாடு. அவர்களும் அதை தயங்காமல் திருப்பிச் செலுத்தினார்கள் என்பது அவனுக்குக் கிடைத்த பேறு.
துபாயில் வசிக்கிறார். அங்கே வானொலியில் காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை ஒரு பதினோரு
158

காற்று வெளியினிலே.
மணி நேர மலையாள ஒலிபரப்பு இருக்கிறது. அதில் தினசரி அரைமணி நேர தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
தமிழில் அப்படி ஒரு ஒலிபரப்பை சமீபத்தில் தொடங்கி விட வேண்டுமென்கிற என் அத்தனை முயற்சி களும் விழலுக்கு இறைத்த நீர். ஆனால் என் மகனுக்கு அதில் ஒரளவாவது வெற்றி கிடைத்திருப்பது, "பெற்ற பொழுதிலும் பெரிதும் உவக்க வைக்கிறது.
சென்னை வீட்டுக்கு திடீரென்று ஒரு தொலைபேசி அழைப்பு வரும். ஒரு பிரபலம் பேசுவார், துபாயில் உங்கள் மகனைக் கண்டேன். பேட்டி எடுத்தார். நல்ல நண்பர். அருமையான பேட்டி, குறைந்த நேரத்தில் நிறைய விஷயங் களைக் கறந்து விடுகிறார் என்பார். அது மகிழ்ச்சிதான் அதை விட இன்னொரு மகிழ்ச்சியும் உண்டு.
கனடா 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பு நிலையமான கீதவாணிக்கு தினசரி செய்தி விமர்சனம் செய்து கொண்டிருந்தேன். இடையில் லண்டன் சென்ற 45 நாட்கள் அதை மிகச் சிறப்பாகத் தொடர்ந்த என் மகள் வசீலா அலி! உலகப் கோப்பை வர்ணனைக்காக லண்டன் சென்ற போது முதல் இரண்டு நாட்கள் கிரிக்கட் தெரியாத நண்பர்களுக்காக கிரிக்கட் ஓர் அரிச்சுவடி என்று ஒரு நிகழ்ச்சி செய்தேன். பிறகு அடுத்த 45 நாட்களும் தொடர்ந்து கிரிக்கட் தொடர்பான நிகழ்ச்சிகள், தினசரி இரவில் 9 முதல் 10 மணி வரை ஒரு நிகழ்ச்சி. ஜூன் 25 திகதி புறப்பட்டேன். அன்று நள்ளிரவு என் அறுபதாவது பிறந்த நாள்; மணி விழா அதை ஆகாயத்தில் கொண்டாடினேன் என்பது சிறப்பு.
இத்துடன் இந்த உறவு விட்டுப் போய் விடக் கூடாதே என்று ஐ.பி.சி.யின் நிர்வாக மேலாளர் சிவரஞ்சித்
159

Page 82
அப்துல் ஜப்பார்
அவர்கள் கவலைப்பட்டார். சதாரணமாக நான் அரசியல் பேசும் போது எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று பேசுவ தில்லை. காய்தல் - உவத்தலின்றி காரண காரியங்களோடு ஒரு நிகழ்வின் அடிப்படை அதன் பின்னணி என்று எடுத்துச் சொல்லும் பாங்கு சிவரஞ்சித் அவர்களுக்கும், ஐ.பி.சி.யின் கெளரவ ஆலோசகர் சேயன் அவர்களுக்கும், தலைவர் செந்தில் அவர்களுக்கும் பிடித்துப் போக அதையே ஒரு நிகழ்ச்சியாகச் செய்யலாமென்று அபிப் பிராயப்பட்டனர். பிறந்தது. "இந்தியக் கண்ணோட்டம்" நான் ஹஜ் போன்ற கடமைகளை நிறைவேற்றச் சென்ற இடைவெளியை விடுத்தால் மற்றபடி இன்றுவரை வாரம் தோறும் நடைபெற்று வருகிறது. மிகுந்த மக்கள் ஆதரவுடன்!
இது ஒலி வடிவம் என்றால் ஒளிவடிவத்தில் வேறோர் நிகழ்ச்சி "அரங்கம் - அந்தரங்கம்” லண்டன் தீபம் தொலைக்காட்சியில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வாரம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்தியத் தொலைக்காட்சிகளில் என்னைப் பார்த்து விட்டு நேரில் வந்து பேசுகிறார்கள் என்றால் அது இயல்பு. வெளிநாட்டில் வசிப்பவர்கள் "தீபம்” நிகழ்ச்சி பார்த்துவிட்டு என்னை அடையாளம் கண்டு கொண்டு பேசும் போது ஏற்படும் ஆனந்தமே தனி.
சமீபத்தில் சகோதரி ராஜேஸ்வரி சண்முகம் ஒலி பரப்புத் துறையில் அரை நூற்றாண்டை பூர்த்தி செய்ததை கொழும்பில் ஒரு விழாவாகக் கொண்டாடினார். எனக்கும் அப்படி ஒரு விழா எடுத்தால் என்ன என்று சில நண்பர் களுக்கு ஆசை - ஆவல். அறுபது ஆண்டுகள் நிறையட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாளித்தேன்.
ஆனால் லண்டனின் ஐ.பி.சி. தமிழ் வானொலி
160

காற்று வெளியினிலே.
நிலையமும் பாரிஸ் ரி.ரி.என் தொலைக்காட்சி நிலையமும் இணைந்து, வால்த்தர்மஸ்டாவ் நகர மண்டபத்தில் நடத்திய Millenium Show அதற்குத்தமிழில் "மெல்லினிய மாலை’ என்று அழகுப் பொய் சூட்டி இருந்தார்கள். அதற்கு என்னை தலைமை விருந்தினனாக வரவழைத்து கெளரவித்தார்கள். அன்றைய 556)) நிகழ்ச்சிகள் ஒவ்வொரு துறையிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் - குறிப்பாக ஈழத்தமிழர்கள். எவ்வளவு உயரத்தை - உன்னதத்தைத் தொட்டிருக்கிறார்கள் என்பதற்கு ஒர் அருமையான சான்று.
இடம் கிடைக்காமல் பலர் திரும்ப, சிலர் அடிபிடி கலாட்டா. கத்திக்குத்து. கார்களின் கண்ணாடி உடைப்பு என்னும் அளவுக்குப் போனதுதான் இதில் ஒரு நெருடலான விஷயம்.
இது குதூகலமும் கொண்டாட்டமும் துள்ளலும் துடிப்பும் நிறைந்த ஒரு விழா என்றால் பக்தியும், பவித்ரமும் சொல்லொணா சோகமும். அந்த சோகத்தில் ஒரு பரவசமும் நிறைந்த ஒரு விழாவையும் காணும் பேறு கிடைத்தது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நவம்பர் இறுதி வாரத்தில் வருகிறது. அதைக் கொண்டாடாமல் அதற்கு அடுத்த நாள் மதுரையில் அவரது மடியில் கிடந்து மரித்த முதல் போராளியின் நினைவு தினத்தை மாவீரர் தினமாகக் கொண்டாடு கிறார்கள். எல்லா இடங்களிலும் அப்படி. ஆனால் லண்டனில் மட்டும் அது “தேசிய எழுச்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
“லண்டன் எரினா’ என்பது ஒரு பிரம்மாண்டமான மாபெரும் உள் விளையாட்டரங்கு. மைக்கல் ஜாக்சன்
கr-11

Page 83
அப்துல் ஜப்பார்
போன்ற பெரும்புள்ளிகளின் நிகழ்ச்சிகள் மட்டுமேதான் இங்கு நடக்குமாம். இந்த அரங்கின் பாதியை மறைத்து விழா ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். அதுவே ரொம்பப் பெரிசு. பிரம்மாண்டமான மேடைக்குக் கீழே ஒர் அழகிய பூங்கா மாவீரர் நினைவு மேடை ஆகியவற்றை கலை நயத்துடன் அமைத்திருந்தார்கள். லண்டனின் மூலை முடுக்குகளில் எல்லாமிருந்து விசேஷமாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த சிறப்புப் பேருந்துகளில் அந்தக் குளிரிலும் சாதாரண வேட்டி, சட்டை, சேலை, பாவாடை தாவணி என்று தமிழ் மணம் கமழ உடை உடுத்தி வந்தார்கள். யாராவது ஒரு குடும்ப அங்கத்தையாவது போரில் பலி கொடுக்காத குடும்பங்களே இல்லை என்று சொல்லலாம். ஒரு பெரியவர், 'ஈகைச்சுடர்’ ஏற்றினார். தொடர்ந்து அத்தனை பேரும் வரிசையாக நின்று மலர் அஞ்சலி செலுத்தினார்கள். அதை தொடர்ந்து போரில் உயிர் நீத்தவர்களின் புகைப்படம் கண்காட்சி. அதில் தங்களைச் சேர்ந்த ஒருவரின் புகைப்படத்தைக் காண நேர்கையில் பலரும் குமுறி அழுதனர்.
ஐ.பி.சி.யின் நிர்வாக மேலாளர் சிவரஞ்சித் அவர்களின் மைத்துணிக்கு ஒரு பெண் குழந்தை பெயர் ‘சரித்திரா’. போரில் உயிர்நீத்த தியாகிகளில் அவள் தந்தையும் ஒருவர். படுசுட்டியும் புத்திசாலியுமான அந்தச் சின்னஞ்சிறுமிக்கு அது தெரியாது. இவ்வளவு காலமும் கெட்டிக்காரத்தனமாக மறைத்துவிட்டார்கள். ஆனால் மாவீரர்கள் வரிசையிலே இப்போது அவள் தந்தையின் படம். அந்தப் படங்கள் எதற்காக வைக்கப்பட்டு இருக்கின்றன என்று அவளுக்குத் தெரியும். ஆனால் தன் தந்தையின் படம் ஏன் அங்கிருக்கிறது என்கிற காரணம் அவளுக்கு தெரியாது. இனி மறைக்கவும் முடியாது. அவள் மலரஞ்சலி செலுத்துகிறாள். புகைப்படம் பகுதிக்கு
162

காற்று வெளியினிலே.
வருகிறாள். நான் துரத்தில் நின்று என்ன நடக்கிறதென்று அவளையே பார்த்துக் கொண்டு நிற்கிறேன். எதிர்பார்த்தது போலவே விரல் நீட்டி அந்தக் கேள்வியை கேட்கிறாள். உடனிருப்பவர்கள் தங்கள் உணர்ச்சிகளை மறைக்க முடியா மலும் அவளை சமாளிக்க முடியாமலும் திணறுகிறார்கள் பார்த்துக் கொண்டிருந்த நான் கண்ணிர் விட்டு அழுது விட்டேன்.
உலகின் பல்வேறு திக்குகளில் - திசைகளில் பரந்து - விரிந்து கிடக்கும் கோடிக்கணக்கான தமிழர்களை ஒன்றிணைக்க என்ன வழி? ஊடகம் ஒன்றுதான். பத்திரிகை என்பது கால விரயம். வானொலி, தொலைக் காட்சி காசு விரயம். ஒரே ஒரு வழி இருந்தது. இணைய தள வானொலி. இந்த எண்ணத்தை நெஞ்சில் சுமந்து நடந்தவர் சகோதரர் பி.எச். அப்துல் ஹமீது. அந்தக் கனவை நனவாக்கத் துணிந்தார் கலைமாமணி வி.கே.டி. பாலன் அவர்கள். செயல் வடிவாக்கும் பொறுப்பு எனக்கு. ஆரம்ப காலத்தில் தினிசரி பதினாறு மணி நேர இடைவிடாத வேலை. என்றாலும் தொழில் நுட்ப ரீதியாக உருக்கொடுக்க உதவியவர், தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட நண்பர், சேசஷாயி. முதன்முதலில் அவரது அலுவலகத்திலிருந்து நான் செய்த "லைவ்” ஒலிபரப்பு சென்னை நகரில் மூன்று பல்வேறு பகுதிகளிலிருந்து பலர் கேட்க முடிந்தது ஒரு மறக்கமுடியாத குதூகல உணர்வு.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மாநாட்டிற்குப் பிறகு அவர் எனக்குத் தந்த பிரத்யேக நேர்காணல் தொடர்பான விஷயங்கள் “ஜுனியர் விகடன்’ இதழில் அட்டைப்படக் கதையாக வர, அது தொடர்பான நிகழ்ச்சி இணையதள வானொலியில் இடம் பெற ஒரே நேரத்தில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட நேயர்கள்
163

Page 84
அப்துல் ஜப்பார்
அதை ஒரே நேரத்தில் அணுக முயல, சர்வர் தகராறுக் குள்ளாகி ஒலிபரப்பு பதினெட்டு மணிநேரம் நின்று போனது ஒர் அதிர்ச்சி தந்த அனுபவம்.
கலைமாமணி வீகே.டி. பாலன் முயற்சியில் உருவான இணையதள வானொலி நிகழ்வுகளை நேரடியாகவும் ஒலிப்பதிவு செய்தும் ஒலிப்பரப்புவது இதன் சிறப்பு அம்சம். தினசரி லட்சத்துக்கும் மேற்பட்டோர் கேட்கிறார்கள் என்பது, கிடைத்த தொழில்நுட்ப புள்ளி விபரங்களில் உள்ள கணக்கு.
விடுதலைப்புலிகளின் பத்திரிகையாளர் சந்திப்பு பற்றி பரபரப்பாக பேசிக்கொண்டிருந்த நேரம், 7ம் திகதி ஞாயிறு பின்நேரம் பாலன் திடீரென்று கேட்டார். இத்தகைய ஒரு சரித்திர நிகழ்வை நாம் தவற விடலாமா?
விடக்கூடாதுதான் ஆனால் இடைப்பட்ட அவகாசம் மிகக் குறைவு எனவே தயங்கினேன். அதைப் புரிந்து கொண்டு நீங்கள் தயாரென்றால் உங்களை அனுப்பி வைக்கும் பொறுப்பு என்னுடையது என்றார் பாலன்.
சொல்லி வைத்தாற்போல் லண்டன் அனைத்துலக ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் எங்கள் சார்பாக கலந்து கொள்ள வசதிப்படுமா என்று கேட்டது. நள்ளிரவுக்குள் எல்லாம் தயார். தடையில்லாச்சான்று மட்டுமே வேண்டும். காலையில் விண்ணப்பித்தால் மாலையில் தான் கிடைக்கும். விமானம் நண்பகலில், முயன்று பார்க்கலாம் என்று பயணம் புறப்பட்டே சென்றேன். கூட்டம் இல்லை. விசயத்தைச் சொன்னதும் உடனே அனுமதி தந்தார்கள். விமான நிலையத்துக்கு ஏறக்குறைய பறந்து சென்றபோது கவுன்டரை மூட இன்னும் சில கணங்களே இருந்தன. ஏறி அமர்ந்த 1 மணி நேரத்தில் இலங்கை,
இலங்கை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்
164

காற்று வெளியினிலே.
அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் என் பள்ளித்தோழர். அவர் பட்ஜெட் மும்முரத்தில் மூழ்கி இருந்தும் தன் உதவியாளர் முபாரக் அலியை, என்னை வரவேற்க விமானதளத்திற்கு அனுப்பியிருந்தார்.
சரி, கொழும்பாயிற்று. வன்னிக்குச் செல்வது எப்படி? வவுனியா வரை பேருந்து வசதியுண்டு. பிறகு ஓமந்தைக்குச் சென்று, இலங்கை ராணுவ சோதனைச் சாவடியைக் கடந்து, அதன்பிறகு செஞ்சிலுவைச் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ‘நாதியில்லா பூமி’யையும் கடந்து, வன்னியின் வாசலை அடைந்து விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உட்புக வேண்டும். லேசுப்பட்ட காரியம் அல்ல. இங்குதான் முபாரக் அலி முழு அளவில் உதவி செய்தார். தெரிந்த ஊடக வியலாளர் கள் அத்தனை பேரையும் தொடர்பு கொண்டார். தங்கள் வாகனங்களில் இடம் இல்லை என்பது தான் பதிலாக வந்தது. கடைசியில் இலங்கைத் தினகரனின், நிர்வாக ஆசிரியர் அமீனும், லக்பிம சிங்கள பத்திரிகை ஆசிரியர் ஐயூபும் எப்படியாவது சமாளித்து கொண்டு போவதாக ஏற்றுக் கொண்டார்கள்.
அதிகாலை 5மணிக்கு ஆரம்பித்தது பயணம். சிலாபம், புத்தளம், அனுராதபுரம் அடுத்து நண்பகல் வவுனியா, அனுராதபுரம் வரையில் ராஜபாட்டை தான். அதன்பிறகு தான் ஒரு இனம் பழிவாங்கப்பட்டதன் அடையாளங்கள் துவங்குகின்றன. பாதை தூக்கிப்போட்டு குலுக்கும் குலுக்களில், 7 மாத கர்ப்பிணியானாலும் எட்டே நிமிடத்தில் பிள்ளை பெற்றுவிடுவாள்.
வவுனியாவில் இலங்கை ராணுவத்திடமே விடுதலைப் புலிகள் அலுவலகத்திற்கு வழி கேட்டது வினோத அனுபவம். சில நாட்களுக்கு முன் இது சாத்தியமா என்பது நினைத்துகூட பார்க்கமுடியாத ஒன்று. விடுதலைப்புலிகள்
165

Page 85
அப்துல் ஜப்பார் அலுவலகத்தில், நம் ஜாதகம் சரித்திரம் அத்தனையும் அறிந்து கொண்டு, நாம் மேலே போக அனுமததி தருகிறார்கள்.
ஓமந்தையில் தனியாக வந்தவர்கள், பந்தல்களின் பரிசோதனைக்காக காத்திருக்க, வாகனமும், வாகனத்தில் வந்திருந்தவர்களும் அணு அணுவாக சோதனை செய்யப் படுகிறார்கள். பேட்டரிகள், எந்த ரூபத்தில் இருந்தாலும் பறிமுதல் செய்கிறார்கள். அவை இல்லாவிட்டால், டேப் ரிக்கார்டர் இயங்காது, கேமரா இயங்காது என்று நாள் முழுக்க மன்றாடினாலும் வெறித்த ஒரு பார்வை தவிர வேறு பதில் கிடைக்காது.
அதன்பிறகுள்ள பாதை மிகவும் கரடுமுரடானது. செப்பனிடுவதற்காக ஒரத்தில் குவித்து வைத்திருக்கும் செம்மணல் காரணமாக குறுகலாக வேறு இருக்கிறது. விடுதலைப்புலிகள் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும், மண்ணெண்ணையில் இயங்கும் ஆஸ்டின் கேம்பிரிட்ஜ் டாக்சிகளும் நம் கவனத்தை ஈர்க்கும் அதிசயங்கள்.
வழி நெடுங்க ஒரு மின்கம்பம் கூட இல்லை. ஒரு முழ தொலைபேசி கம்பிகள் கூட இல்லை. நவீனமயம் இன்னும் எட்டிப்பார்க்காத ஒரு நாட்டில் நுழைவதுபோல ஒரு பிரமை. வெறித்தனத்தின் கோர - குரூர தாண்டவத்தில் மீண்டும் நிர்மாணிக்க முடியாதவாறு நிர்மூலமாக்கப்படட சோகச் சின்னங்கள் ஆயிரம் ஆயிரம்! அழிக்கப்பட்ட தோட்டங்கள், இடிக்கப்பட்ட வீடுகள், தகர்க்கப்பட்ட கோயில்கள் - தேவாலயங்கள் - மசூதிகள் இத்தியாதி இத்தியாதி.
அந்தப் பெரிய அசோகச் சக்கரவர்த்தி யுத்த பூமியைக் கண்டதும் எப்படி எளிதில் மனம் மாறினான் என்பதை நம்ப மறுப்பவர்கள் இங்கு ஒரு முறை வருகை தரவேண்டும். இங்கே யார் யாரெல்லாம் இருந்தார்களோ?
166

காற்று வெளியினிலே.
எப்படியெப்படியெல்லாம் வாழ்ந்தார்களோ? இன்று என்ன ஆனார்களோ? என்ற நினைப்பு சுதந்திரக்காற்றை சுவாசிப்பவர்களை மூச்சுத்திணற வைக்கும். குண்டு துளைக்காத கட்டிடங்களும், கூரையை தலையில் சுமக்காத கட்டிடங்களும் கிளிநொச்சியில் இல்லை எனலாம். அத்தனையும் மொட்டையாய் மூளியாய் நிற்கின்றன. உடல் சிதைக்கப்பட்ட ஒரு மனிதனின் தலை மட்டும் தரையை தொட்டிருப்பது போல், தாங்கும் பீடங்கள் தகர்ந்து, அப்படியே முழுமையாக தரையை தொட்டிருக்கும் அந்த ராட்சஷ தண்ணிர் தொட்டி வீழ்ந்த பின் எழுவதற்காக மூச்சுமுட்ட பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் உருவகம்.
பொருளாதார தடைநீக்கப்பட்டதால் சரக்கு போக்குவரத்தும், பாதைகள் திறக்கப்பட்டதால், மக்கள் பயணம் செய்வதும் அதிகரித்துள்ளன. “பொத்தக சாலை’ களில் இந்திய சஞ்சிகைகள் கூட கிடைக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அரிசி இன்னபிற விவசாய பண்டங்கள் வன்னியில் விலை மிகமிக குறைவு. ஏனைய பொருட்கள் தீப்பிடித்த விலை மட்டுமல்ல கிடைப்பதும் அரிது. அந்த நிலை இப்போது மாறிவருகிறது.
பாதைகள் திறந்ததால் சமாதான யாத்திரைகள் என்ன, சைக்கிள் பேரணிகள் என்ன என்று வேறோர் கோணத்தில் உற்சாக உணர்வு வெளிப்பாடுகள். இப்போது ஒலைக்குடிசை போல் காட்சி தரும் பிரசித்தி பெற்ற முறிகண்டி பிள்ளையார் கோயிலைச் சுற்றி ஏகப்பட்ட மாவிலைத் தோரண அலங்காரங்கள். ஏதோ உற்சவமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு புத்தபிக்கு தலைமையிலான ஒரு சமாதான பேரணிக்கு வரவேற்பு கொடுப்பதற்காக என்று கேட்டபோது ஆச்சரியமாக
இருந்தது.
167

Page 86
அப்துல் ஜப்பார்
இந்த கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக மக்கள்
நேரடியாகவே கொழும்பு செல்வார்கள். ஆகவே தங்கள் வியாபாரம் நிச்சயமாக பாதிக்கப்படும் என்று வவுனியாக் காரர்கள் மூக்கால் அழ வன்னியைச் சார்ந்தவர்கள் இது தங்களுக்கு எவ்வளவு பெரிய ஆஸ்வாசத்தை தரும் என்று ஆறுதல் கொள்கிறார்கள்.
O)6) தமிழ் fyp புலிகளின் தலைமைச் செயலகத்தை அடைந்தபோது இன்னும் ஒன்றிரண்டு வாகனங்கள் வந்த பிறகே ஒரு சேர தங்கும் இடத்துக்கு அழைத்துச் செல்வார்கள் என்று தெரிந்தது. வந்தார்கள் விஜய் டி.வி. மதிவாணன், ஸ்டார் டிவி யூரீனிவாசன் ஜெயந்த், சன் டி.வி.யின் பன்னீர் செல்வம் மற்றும் ராஜா சென்று அடைந்த இடம் ஒரு மாஞ்சோலை, சுற்றிலும் ஒடு வேயப்பட்ட கட்டிடங்கள். வெயிலே தரையில் படாதவாறு நெருக்கமான மரங்கள் என்று ஒரு ரம்மியமான சூழல். எல்லோருக்கும் தரையில் படுக்க பாய், தலையணை, போர்வை, குளிக்கவும் இன்ன பிற காரியங்களுக்கும் கிணறு, தொட்டி, பம்ப்செட்டு என்று ஏகப்பட்ட தண்ணிர் வசதி, எளிய உணவு, ஆனால் - சூடாக - சுவையாக,
உலகின் ஒட்டு மொத்த ஊடக நிறுவனங்களும் அங்கிருந்தன என்றால் மிகையல்ல. uuri uLuITrir வந்திருந்தார்கள் என்று பட்டியல் இடுவதைவிட, யார் யார் வரவில்லை என்று சொல்வது சுலபம். அதற்கு ஒரு கை விரல்களே அதிகம்.
அதிகாலையிலேயே எழுப்பி விட்டு விட்டார்கள். பத்திரிகையாளர்கள் சந்திப்பையும், அது குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் விளக்க இன்னொரு பத்திரிகையாளர் சந்திப்பு, மூக்கைக்கூட விரலால் உயர்த்திப் பார்க்கும் அவர்களுடைய பாதுகாப்பு பரிசோதனை நம்மை மூக்கின் மீது விரல் வைக்கத் தூண்டும். எல்லோரும், எல்லா
168

காற்று வெளியினிலே.
உபகரணங்களும், அக்கு வேறு, ஆணி வேறாக பரிசோதிக்கப்பட்டு ஒரு 15 நிமிட ஒட்டத் தொலைவில் உள்ள மாநாட்டு மண்டபத்தை சென்று அடைவதற்குள் மாலையாகிவிட்டது.
மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை யாளர்கள் சந்திப்பு எவ்வித அசம்பாவிதமுமின்றி 745க்கு முடிவடைந்தது. நேரடி ஒலி ஒளிபரப்பு அனுமதிக்கப் படவில்லை. எனவே அவரவர், அவரவர்களுக்குரிய வசதிகளை பயன்படுத்தி உலகுக்கு எத்திவைக்கும் முயற்சிகள் தீவிரமாயின. எங்கள் பணி 8 மணிக்குத் தொடங்கி தொகுப்புரை முதலியவற்றுடன் சேர்ந்து 3 மணி நேரம் நீடித்தது. நள்ளிரவில் தங்கும் வளாகம் திரும்பிய போது, நிறையப்பேர் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். இன்னும் சிலர், நல்ல உறக்கம். காலையில் எப்படி திரும்புவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஐ.பி.சி.யின் உள்ளூர் நிருபர் பவநந்தன், விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வன் என்னை சந்திக்க விரும்புவதாக ஒரு படு ஆச்சரியகுண்டு ஒன்றை தூக்கிப்போட்டார். வாகனம் வந்தது. சென்றேன்.
உள்ளத்திலும் எண்ணத்திலும் ஊனம் இல்லாத ஆனால் ஒரு கைத்தடியின் உதவியுடன் நடக்கும் ஒரு பளிர் சிரிப்பு, கவர்ச்சி, இளைஞா தமிழ்ச் செல்வன். நான் உங்கள் பரம ரசிகன் ஐயா அவர் பங்குக்கு போட்ட குண்டு அது. நாடகம், கிரிக்கட் நேர்முக வர்ணனை, கவிதை கேளுங்கள் இந்திய கண்ணோட்டம் அரசியல் விமர்சனம் ஆகிய நிகழ்ச்சிகள் எனக்கு தெரிந்து லண்டன் ஐ.பி.சி.யிலும் தெரியாமல், உலகின் பல்வேறு வானொலிகளிலும் ஒலி பரப்பாகிறது. வன்னியலும் அவை பிரசித்தமென்றும் கேட்காதவர்கள் அநேகமாக இருக்கமாட்டார்கள் என்றும் அவர் அன்புடன் குறிப்பிட்ட போது பெற்ற பொழுதினும்
169 கா-12

Page 87
அப்துல் ஜப்பார்
என்கிற பேருவகை என்னுள் பூத்தது. அவரது எளிமையும் இனிமையும் நிறைந்த உபசரிப்பில் திளைத்து நான் விடைபெற கைகூப்பிய போது, எங்கள் நலப்பணிகளை பார்வையிட்டு வாருங்கள், மாலையில் இன்னொரு பரம ரசிகர் உங்களை சந்திப்பார் என்று சஸ்பென்ஸ் வைத்தார். குழந்தை இல்லம், சிறுவர் இல்லம், குருகுலம் ஆகியவை நடைபெற்று வரும் வளாகத்தைப் பார்த்தேன். புதிதாக உள்ளே வந்துள்ள ஒரு 7 மாத கால குழந்தை உள்பட 17 வயது குமரி வரை, படிப்பவர்கள், படிப்பிப்ப வர்கள், பராமரிப்பவர்கள் அத்தனை பேரும் தாய் தந்தையை இழந்தவர்கள். இப்படி 8 இல்லங்கள். விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கு, இப்போது குழந்தையிலிருந்தே ஆள்சேர்க்கிறீர்கள் போலும், கொஞ்சம் திமிர் போல் தோன்றும் கேள்வி, என்றாலும் கேட்டு வைத்தேன். இல்லை இங்குள்ளவர்கள் மேற்படிப்பு, சுயதொழில் என்று ஈடுபடுத்தப்படுகிறார்களே தவிர, இங்குள்ள யாரும் வயது வந்த பிறகும் இயக்கத்தில் சேர அனுமதிக்கப்படுவதில்லை என்று பதில் வந்தது.
அடுத்து தமிழர் புனர்வாழ்வு மையம். 5 ஆண்டுகள் இவர்கள் பொறுப்பில் வன்னியை விட்டால், அது சொர்க்க பூமியாகும் என்பதற்கு கட்டியங்கூறும் பல திட்டங்கள். சமாதானம் வந்தால் மட்டுமே அது சாத்தியம். இந்த மையத்தின் இப்போதைய பிரதான பணி வன்னி எங்கும் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றுவது. உலகத்திலேயே மிக அதிக அளவில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட இடம் வன்னிதான் என்கிறார்கள். 14 லட்சத்துக்கும் அதிகம். கண்ணி வெடிகள் அகற்றும் இயக்கம் உலகெங்கும் பிரசித்தி பெற்றது. இளவரசி டயானா அதில் நேரடி அக்கறை செலுத்திய போது தான்! கண்ணி வெடிகளை அகற்றுவதில் ஈடுபடு வதற்கு விசேஷ
170

காற்று வெளியினிலே.
அங்கிகள், கவசங்கள் ஆகியவற்றை சர்வதேச அமைப்பு ஒன்று வழங்குகிறது. ஆனால் வன்னியில் உள்ளது, ஒரு அங்கீகரிக்கப்படாத நிர்வாகம் என்ற காரணத்தால் அது தங்களுக்கு மறுக்கப்படுவதாக தொண்டர் ஒருவர் தெரிவித்தார். எவ்வித பாதுகாப்பு உடைகளும் உபகரணங் களும் இல்லாமல் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். எடுக்க வேண்டிய பகுதிகளில் தண்ணிரை பீய்ச்சி அடித்து நன்றாக சேறாகும் அளவுக்கு நனைத்து விட்டு இரும்பு முட்கரண்டிகளால் மண்ணை பிராண்டி கண்ணிவெடி களை வெளியில் எடுத்து செயல் இழக்கச் செய்கிறார்கள். கொஞ்சம் கவனப் பிசகு ஏற்பட்டாலும் கண்ணோ, காலோ, கையோ ஏன் உயிரே கூட போகும் வாய்ப்புக்ள உள்ளன.
இது விடுதலைப்புலிகள் புதைத்ததாகக்கூட இருக்கலாமே என்ற கேள்விக்கு, அப்படியானால் ரொம்ப எளிதாயிற்றே அவர்களிடமிருந்து புதைக்கப்பட்ட வரை படத்தை வாங்கி மளமளவென்று அகற்றிவிடுவோமே. அது மட்டுமல்ல விடுதலைப்புலிகளின் மரத்தாலான கன்னி வெடிகளின் ஆயுட்காலம் 6 மாதங்கள் மட்டுமே. இலங்கை படைக்கு சீனாக்காரர்கள் தயாரித்து வழங்கியிருக்கும் கண்ணி வெடிகளின் ஆயுட்காலம் 150 வருடங்கள். பாகிஸ்தானியரின் தயாரிப்பு 100 வருடங்கள். அதைவிட கொடுமை என்னவென்றால் கண்ணி வெடிகள் என்றால் அதன் மீது மிதித்தவருக்கும் மட்டும்தான் ஆபத்து. ஆனால் அதனுடன் இணைக்கப்பட்ட சிறிய ராக்கெட்டும் சேர்ந்து வெடித்தால் 120 மீட்டர் சுற்றளவு உள்ள அத்தனை பேருக்கும் ஆபத்து.
வெயிலால் அல்ல அலைந்ததால் அல்ல. கண்டவர் நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் உள்ளத்தையும் உடலை யும் சோர்வடையச் செய்தன. திரும்புகையில் சந்திக்கப்
171

Page 88
அப்துல் ஜப்பார்
போகிறவர்கள் யார் என்று யோசித்துக் கொண்டே வந்தேன். ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் விடுதலைப்புலிகளின் தலைவரையும் பேட்டி காண எனக்கு ஆசை. ஆனால் என்னுடைய நிறை அளவு, மட்டு ஆகியவை எனக்கு தெரியும். ஆகவே வீணாக முயன்று தோற்பதில் எனக்கு விருப்பமில்லை. என்றாலும் உள்ளத்தில் மூலையில் ஒரு நப்பாவை. சந்திக்கப்போவது அவராக இருந்தால். கனவு எதற்கு என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
விடுதலைப்புலிகளின் தலைமையகத்துக்கு பலர் வருவதும் போவதுமாக இருந்தார்கள். மாலை 6 மணிக்கு தன்னுடைய அதே டிரேட் மார்க் சிரிப்புடன் தமிழ்ச் செல்வன் வந்தார். எங்கள் தலைவர் யாரை எங்கே எப்போது சந்திப்பார் என்பதை நாங்கள் கடைசிவரை ரகசியமாக வைத்திருப்போம் என்றார். இதை ஏன் என்னிடம் சொல்கிறர் என்று நான் யோசிப்பதற்குள், இன்னும் சிறிது நேரத்தில் எங்கள் தலைவர் சந்திக்கப் போவது உங்களைத்தான் என்று சொல்லி என்னை உறைய வைத்தார்.
படிரென பிரதான கபாடம் திறக்கிறது. ஒரு வாகனம் வேகமாக உள்ளே வந்து நிற்கிறது. சில ஆயுதம் தறித்த இளைஞர்கள் தாவிக்குதித்தது வெளியே வருகிறார்கள். கதவு திறக்கிறது. ஒரு கம்பீர உருவம் வெளிப்படுகிறது. நின்று நிமிர்ந்து நிதானமாக சுற்றுப்புறத்தின் மீது ஒரு விழிவீச்சு. ராணுவ மிடுக்குடன் அந்த உருவம் என்னை நோக்கி நகர்கிறது. எனக்கு கனவில் சஞ்சரிப்பது போல ஒரு பிரமை. அந்த உருவம் என் அருகே வந்து அன்புடன் கரங்களை பற்றி ஆதரவுடன் தோள்களை பற்றி மலர்ந்த முகத்துடன் "நான் உங்கள் பரம ரசிகன் ஐயா’ என்கிறது. spigil.
172

காற்று வெளியினிலே.
வேலுப்பிள்ளை பிரபாகரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அச்சாணி. ஆணிவேர். யாராலும் நெருங்க முடியாது என்று கருதப்படும் சூப்பர்மேன்.
நரம்பு ஊசி போட்டுக்கொண்டதுபோல் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை சுரீர் என்று ஒரு சூடு பரவ என்னையே நம்பமுடியாமல் விக்கித்து நிற்கிறேன் நான்.
வாருங்கள் சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம். என்று ஓர் இளைய சகோதரனின் வாஞ்சையுடன் அழைக்கிறார். எத்தனையோ பிரச்சினைகள், அழுத்தங்கள், அலுவல்கள், அவருக்காக காத்திருக்கும் முக்கியஸ்தர்கள். இத்தனைக்கும் மத்தியில் எனக்காக சில மணிநேரங்கள். இன்றுவரை கூட இது நிஜமாக நடந்ததா என்று நம்பு வதற்கு கடினமாகத்தான் இருக்கிறது.
கட்டுமஸ்தான உடல். ஆட்களை ஆழமாக ஊடுருவும் தீட்ஷசன்யமான சுரிய விழிகள். யார் பார்த்தாலும் எழுந்து நிற்க எண்ணும் ஓர் ஆளுமை கலந்த தோற்றம். இருக்கும் உடை எதுவானாலும் அதை நேர்த்தி யாக அணிய வேண்டும் என்று எண்ணும் சுபாவம். தான் மட்டும் அல்ல தன் சகாக்களும் தோற்றப் பொலிவில் அக்கறை காட்ட ன்ேடும் என்று விரும்பும் குணம். அவரை சுற்றி உள்ள எல்லாவற்றிலும், எங்கும், எதிலும், ஓர் அலாதியான அழகும், எளிமையும், சுத்தமும், இருக்கின்றன. இந்த 63 வயதுக்குள் 52 வருட ஒலிபரப்பு அனுபவம் என்பது ஒர் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அவர் நிலையில் இருக்கும் ஒருவர் அதுபற்றி நிறையவே தெரிந்து வைத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். 'உங்கள் தமிழ் உங்கள் குரல், நீங்கள் விஷயங்களை சொல்லும் விதம் ஆகியவை எனக்கு நிரம்பவே பிடிக்கும்’ என்று அவர் சொன்னபோது, நான் குளிர்ந்து போனேன். இப்படி நேருக்கு நேராக இத்தனை விரிவாக யாருமே என்னை
173

Page 89
அப்துல் ஜப்பார் பாராட்டியது கிடையாது என்று சொல்லலாம். எனவே குதுகலத்தால் மட்டுமல்ல கூச்சத்தாலும் நான் தெளிந்தேன் - நெகிழ்ந்தேன் என்பது உண்மை.
என்னை பிரமிப்பில் ஆழ்த்திய இன்னொரு விஷயம் அவரது அபாரமான ஞாபகசக்தி. நீங்கள் கொழும்புக்கும் போகவேண்டும், இந்தியாவுக்கும் திருப்ப வேண்டும் இல்லையா என்று கேட்டுவிட்டு, கல கல என சிரிக்கிறார். இது என்றோ எப்போதோ என் ஒலிபரப்பு ஒன்றில் நான் குறிப்பிட்ட வாசகங்கள் "ஆம். அப்படித்தான் என்கிறார்’ மேலும் "அது அப்படியே இருக்கட்டும் உங்கள் தமிழின் அழகை ஒலிபரப்பு நயத்தை வயதின் அனுபவங்களை நான் கவுரப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இதோ செய்து விட்டேன் என்றார் அடக்கமாக, ஆனால் மிகுந்த பெருந்தன்மையோடு.
1993ல் இலங்கை அரசு என்னை கவுரவித்திருக்கிறது. சுதந்திர பொன்விழாவின் போது அனைந்திந்திய வானொலி சிறந்த ஒலிபரப்புக் கவிஞன் என்று மகாவித்வான் செம்மங்குடி பூரீனிவாச ஐயர் தலைமையின் விழா ஒன்றில் என்னை பாராட்டியது. 2001 நவம்பர் 4ம் திகதி லண்டனில் IBC-ttn இணைந்து நடத்திய மெல்லினிய மாலை விழாவில் அரை நூற்றாண்டு ஒலிபரப்பு சேவைக்காக கவுரவிக்கப் பட்டேன். ஆனால் எதிர்பாராத ஓர் இடத்தில் இருந்த கிடைத்த இந்த புகழுரைகள் என்னை பூரிப்படைய செய்தது மட்டுமல்ல உடலில் புல்லரிப்பையும் ஏற்படுத்தின. திடீரென்று உங்களுக்கு எத்தனை மக்கள் என்று கேட்டார். ஓர் ஆண் - பெண் - ஆண் என்றேன். எனக்கும் அப்படித்தான் என்றார், ஒரு குழந்தையின் குதூகலத்தோடு. தொடர்ந்து ‘என் இளைய மகனிடம் உமக்கு சமாதானம் விருப்பமா’ என்று கேட்டேன். 'ஓம்’ என்றார். ஏன் அப்படி என்று கேட்டபோது ‘அப்பத்தான்
174

காற்று வெளியினிலே.
அப்பா ! என்கூட அதிக நேரம் இருப்பியள்’ என்று சொல்லிவிட்டு, எதிலோ லயித்தவாறு மெளனத்தில் ஆழ்ந்தார்.
தமிழ்பற்றிதான் நிறைய பேசினார். இலங்கைத் தமிழ், மலேசியத் தமிழ், புலம்பெயர்ந்த மக்கள் தமிழ், என்றாகி நாளடைவில் தனித்தனி மொழிகளாகிப் போய்விடுமோ என்று கவலை தெரிவித்தார். மேலைநாடுகளில் வாழும் தமிழ் மக்கள், வாழ்வதற்காக அந்தந்த நாட்டு மொழிகளை கற்கவேண்டிய கட்டாயம் இருந்தும், தமிழ் மீது ஆர்வமாக இருக்க, தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தமிழ் குரூரமாக சிதைக்கப்படுவதை பற்றி வேதனைப்பட்டார். தமிழுக்கு வரும் கலைச்சொற்களும், இனிமையானவையாக இருக்க வேண்டும் என்றார். அப்படி வருகின்றன என்று சொல்லி ரெஃபிரிஜிரேட்டருக்கு தன்மி என்று ஏர் கண்டி ஷனருக்கு குளிர்மி என்றும் ஒர் ஆசிரியர் குறிப்பிட்ட தையும், ஒரு மாணவர் டெக்ஸ்டைல் டெக்னலாஜியை துகிலியல் என்று சொன்னதையும் குறிப்பிட்ட போது ஆச்சரியத்தால் விழிகள் 9656) 6últfiu மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
உங்களுக்கு எசகு பிசகு என்றால் பொருள் தெரியுமா என்று கேட்டேன். பிசகு என்றால் பிழை என்று தெரியும். ஆனால் எசகு என்றால் என்ன என்று தெரியாது என்றார். Acquired Immuno Deficiency Syndrome 6T6irSp நான்கு சொற்களின் சுருக்கம் தான் AIDS. அதற்குத் தமிழ் தான் எசகு என்றேன். அது எப்படி என்று அவர் கேட்டபோது, எதிர்ப்புசக்தி குறைவு - எசகு என்றேன் உங்கள் கண்டுபிடிப்பா'என்று கேட்டார். இல்லை தொலைக்காட்சி பேட்டியில் ஒர் ஆசிரியர் சொன்னது என்றேன். என்னை அர்த்த புஷ்டியுடன் ஒரு பார்வை. பிறகு கனிவான ஒரு மெளன புன்னகை,
175

Page 90
அப்துல் ஜப்பார்
பக்கத்தில் இருந்தவர்கள், கவனித்துக் கொண்டி ருந்தார்களே தவிர, முழுக்க முழுக்க நாங்கள் தான் பேசினோம். 165 நிமிடங்கள் போனதே தெரியவில்லை. விடைபெற்றபோது உணவால் வயிறு மட்டுமல்ல உணர் வால் மனதும் நிறைந்திருந்தது.
அவரும் அவரைச் சுற்றியிருந்தவர்களும்தான் அரசியல் பேசுவதை தவிர்த்தார்களே தவிர அங்குள்ள மக்கள், சந்திப்புக்கு முன்னும் பின்னும் அதுபற்றி நிறையவே பேசினார்கள்.
ஜெயலலிதா அம்மையாரின் அணுகுமுறையில் அவர்களுக்கு கோபம் என்பதைவிட ஏமாற்றமே மேலோங்கி நின்றதை உணர முடிந்தது. இந்தியாவும், அவரும் ஈழத்து மக்களுக்கு பெரும் அளவில் உதவுவார்கள் என்று நம்பிக்கை வைத்திருந்தார்களாம். ஒரு பெரியவர் சொன்னார், ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமலாவது இருந்திருந்தால், எங்கள் உள்ளத்தில் எவ்வளவு உயர்ந்தி ருப்பார் என்று சொன்னவரை இடைமறித்து, இன்னொருவர் சொன்னார், எங்களுக்கு ஆதரவு தந்து சமாதானப் பேச்சுவார்த்தைகளும் வெற்றி பெற்றிருந்தால் அவர் நோபல் பரிசுக்குக்கூட பரிந்துரை செய்யப் பட்டிருப்பார் என்று சொன்னபோது, அந்த கூற்றுக்களில் அவர்களுடைய முழுமையான ஆதங்கம் தெரிந்தது.
ஆனால் கலைஞரின் நடுநிலைமை வகிப்பை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை, ‘கலைஞர் என்று நெஞ்சில் கொண்டு திரிஞ்சம் நாங்கள் அதுக்கு இது வேணுமடாப்பா!' என்றார் ஒருவர் மிகுந்த ஆற்றாமையுடன்.
இத்தகைய கருத்துகள் தான் கொழும்பு வட்டாரங்களிலும் நிலவுவது இன்னொரு ஆச்சரியம். ஏனெனில், இரு தரப்புகளிலும் எப்போதுமே கருத்துக்கள் ஏட்டிக்குப் போட்டியாகவே இருக்கும்.
176

காற்று வெளியினிலே.
கொழும்பு நவமணி பத்திரிகையின் ஆசிரியர், அல்ஹாஜ் அஸ்ஹர் ‘நாங்கள், ஒரு ஜனாதிபதி, இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள், ஒரு பாதுகாப்பு அமைச்சர், ஒரு பொருளாதார மையம், இராணுவ தலைமையகம், கட்டுநாயக்கா விமான தளம் ஆகியவை அழிக்கப்பட்டதை மறக்கத் தயாராகிவிட்டோம். அவ்வாறே விடுதலைப்புலி களும் தமிழ் மக்களும் தங்களுக்கு இழைக்கப்பட்ட சொல்லொணா கொடுமைகளை மறக்கத் துணிந்து விட்டார்கள். ஆனால் இந்தியாவில் ஒரு சாரார் சில விஷயங்களை மறக்க மறுப்பது துரதிஷ்டமே என்றார்.
அப்போது துபாய் சென்று விட்ட இலங்கை நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் "மறதியும் சிரிப்பும் தான் இறைவன் மனிதகுலத்துக்குக் தந்த மிகப்பெரிய வரம். அவை இல்லை என்றால் பழிவாங்குதல் ஒன்றையே இலக்காகக் கொண்டு, மனித குலம் ஒருவர் கழுத்தை ஒருவர் நெறித்துக் கொண்டு என்றோ அழிந்து போயிருக்கும்’ என்று தொலைபேசி யினுாடாக தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் தலைவரை ஒரு தாதா’ என்று வர்ணிப்பவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனால் வன்னியில் அவரை ‘அன்னதாதா’ என்று நினைக்கி றார்கள். ஒரு நாணயத்துக்கு 2 பக்கம். ஒரு ஊருக்கு 2 வக்கீல் என்பது போன்றதுதான் இது. அவரை தீவிரமாக எதிர்ப்பவர்களை போலவே, தீவிரமாக ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். இங்கே ஒரு சாரார் குற்றவாளி - கொலையாளி என்று சொல்ல புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் அவரை ஒரு யுக புருஷன் என்று சொல்லுகிறார்கள். வன்னியில் வாழும் மக்களோ அவரை குல தெய்வமாக எண்ணி கொண்டாடி மகிழுகிறார்கள்.
இதில் எது சரி, எது தவறு என்கிற முடிவு
177

Page 91
அப்துல் ஜப்பார்
இப்போதைக்கு என் உள்ளத்துக்குள்ளேயே இருந்து விடுவதுதான் உத்தமம்.
வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு எனக்கு வயதாகி விடவில்லை. எனினும் என்னுள் ஒரு “தேடல்’ ஆரம்பமாகி உள்ளது. "நினைவு கூர்தல்” என்கிற இந்தக் கட்டுரை தொடர் கூட, அதன் வெளிப்பாடாக இருக்கலாம். கொஞ்சம் மென்மையாகிறேன். என்பதை என்னால் உணர முடிகிறது. என் கெட்ட குணங்களில் ஒன்றான முன் கோபத்தை முற்றாக ஒழித்துவிட்டேன் என்று கூடச் சொல்லலாம். எனவே அந்த வயதில் இயல்பாக வரக்கூடிய இரத்த அழுத்தம் கட்டுக்குள் அடங்கி இருக்கிறது. "இளமையில் ஒழுக்கம், முதுமையில் ஆரோக்கியம்” என்ற பழஞ்சொல். என் வரை, இது வரை உண்மை ஆகி இருக்கிறது. இன்றும் அதிகாலையில் நான்கைந்து கேம்கள் ‘ஷட்டில்’ ஆடுகிறேன் - நடக்கிறேன்.
ஒரு கட்டத்தில் சிறிதாக ஒரு தாடி வைத்தேன். அந்த நேரத்தில் நெல்லை வானொலியில் புகழ்பெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றிருந்தது. வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் உள்ளவர்களை சற்றும் எதிர்பாராத விஷயத்தை வைத்து ஒரு ஐந்து நிமிடப் பேட்டி ஒலிபரப்புவார்கள். என்னை ஒருமுறை பிடித்தார்கள். பேட்டி விஷயம் "தாடி’, பேட்டி கண்டவர், தாடி வளர்த்துள்ள ஒரு வானொலி அதிகாரி சவரிராயன் அவர்கள். தாடியைப் பற்றி பல சுவையான விஷயங்கள் சொன்னவர். திடீரென்று "நீங்கள் ஏன் சார் தாடி வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
நிகழ்ச்சியின் சுவைகருதி "அந்த வயிற்றெறிச்சலை ஏன் கேட்கறிங்க பேரன் பேத்தி கண்டாச்சு. கல்யாண வயதில் ஒரு இன்சினியர் பையன் இருக்கிறான் என்றாலும் யாரும் என்னைப் பெரிய மனுஷன் மாதிரியே நெனக்க
178

காற்று வெளியினிலே.
மாட்டேங்கராங்க. தாடி வச்சாலாவது பெரிய மனுஷத் தோற்றம் வராதா என்று பார்க்கிறேன்” என்று கொள்ளேன். உடனே அவர் "ஐயையோ அது நடக்காது போலிருக்கே சார். தாடி வச்ச பிறகு நீங்க இன்னும் இளமையா, பையனைப் போல் இருக்கிறீங்கன்னு" போட்டாரே ஒரு போடு. மிக கலகலப்பான பேட்டி,
பாராட்டி நிறைக் கடிதங்கள் வந்ததாகச் சொன்னார்கள் அவற்றுள் "ஒன்று" "இதென்ன பேட்டியா இல்லை கல்யாண விளம்பரமா? என்றாலும் பரவாயில்லை. ஜபா ரின் முகவரி தாருங்கள். அந்த இன்ஜினியர் பையனைப் பார்க்கலாம் என்று நினைக்கிறோம்" என்றிருந்தது. ரசிகர்கள் எவ்வளவு உன்னிப்பாக விஷயங்களை கவனிக் கிறார்கள் பாருங்கள்!!!
சிறிது காலம் அரசியலில் தீவிரமாக இருந்தேன். எனவே மேடைப் பேச்சு இயல்பாக வரும். மாநிலப் பேச்சாளர், சிறப்புப் பேச்சாளர் என்ற அடை மொழி களுடன் பொதுக்கூட்டத்தின் இறுதியில் ஒன்று ஒன்றரை மணி நேரம் பேசும் திறமையை வளர்த்துக் கொண்ட துண்டு. ஒரே நாளில் இரண்டு மூன்று கூட்டங்களும் தேர்தல், சமயம் விடிய விடிய ஏழு எட்டுக் கூட்டங்களில் பேசிய அனுபவமும் உண்டு.
தமிழகத்தைப் பொறுத்தவரை இத்தகைய திறமை ஒருவனுக்கு இருக்குமானால், அவர் சார்ந்துள்ள கட்சியும் சற்று உயிர்த்துடிப்புள்ளது என்றால் ஊர் ஊராகச் சென்று கூட்டங்களில் பேசி கூட்டம் ஒன்றுக்கு ஆயிரம் இரண்டா யிரம் பெற்றுக் கொண்டு அதையே ஒரு ஜீவனமார்க்க மாகக் கொள்ளலாம். திராவிட இயக்கங்களில் நிறைய பேருக்குத் தொழிலே அதுதான். ஆனால் எனக்கு இது சரிப்பட்டு வராத விஷயம். 67-ல் தமிழ் நாட்டில் காங்கிரஸ் தோற்காதிருந்தால் என் வாழ்க்கையிலே
'79

Page 92
அப்துல் ஜப்பார்
திசையே மாறிப் போய் இருக்கலாம். ஆனால் 71-லும் கூட காங்கிரஸ் தோற்றுப் போகவே, நானே பாதையை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம். தீவிர அரசியலிருந்து ஒதுங்கிக் கொண்டேன்.
இந்த நிலையில் இலங்கையோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட வர்த்தகப் பிரமுகர் மர்குக் தன்னுடைய பூர்வீகக் கிராமத்தில் ஒரு மாபெரும் 'மீலாது விழா நடத்தினார். என்னையும் பேசுமாறு அழைத்தார். தலைப்பு: "இஸ்லாம் ஒரு மதமல்ல, ஆனால்?" பேசும்போது சொன்னேன். “ஏதோ புதுமையான தலைப்பு என்று மர்குக் எண்ணக் கூடும். ஆனால் உண்மையில் அவர் இருந்த விஷயத்தில் கலிமா வைத்தான். “கொப்பி’ அடித்தி ருக்கிறார். கலிமா என்ன சொல்கிறது வணக்கத்துக் குரியவன் யாருமில்லை - அல்லாஹ"வைத் தவிர! அது போலச் சொன்னால் இஸ்லாம் ஒரு மதமல்ல ஆனால் ஒரு அற்புதமான வாழ்க்கை முறை” என்று சுமார் ஒரு மணி நேரம் பேசினேன். தொண்டியிலும் நம்புதாளையிலும் கொழும்பு தொடர்புள்ளவர்கள் அதிகம். எனவே கொல்லின் ஆர்.டி.சில்வா தமிழில் பேசுகிறாரோ என்று நினைத்ததாகச் சொன்னார்கள். மர்குக் மேடையிலேயே கட்டிப் பிடித்து வாழ்த்தினார்.
ஆனால் அன்று சிறப்புப் பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றிய "மறுமலர்ச்சி” இதழின் ஆசிரியர் திருச்சி முகம்மது யூசுப் அவர்கள் என்னை கடந்து செல்ல ரொம்பப் பாடுபட்டார் என்பது வேறு விஷயம். ஆனால் மிக அருமையாக அமைந்த அந்தப் பேச்சில் ஆரம்பத்தில் "இந்த உபதேசம் உங்களுக்கும் எனக்கும் சேர்த்துத் தான் இது நன்மையாக இருக்க வேண்டும் என்றும் அதன் நன்மைகள் உங்களையும் என்னையும் சேர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்றும்
18O

காற்று வெளியினிலே.
குறிப்பிட்டார்.
"ஒ. அப்படியானால் மேடைப் பேச்சு என்பது யாருக்கு வந்த விதியோ என்று அலங்காரமாக ஆர்ப்பாட்ட மாக நம் திறமையை மாத்திரம் வெளிக்காட்டும் ஒரு விஷயம் அல்ல. அது வெறும் "ஊருக்கு உபதேசமல்ல அதில் நமக்கு ஒரு சமூகப் பொறுப்பு உண்டு. நாம் சொல்வது நம் செயலிலும் பிரதிபலிக்க வேண்டும். இந்த நினைவில் ஆழமான பாதிப்பு என் ஆன்மீகத்தேடலுக்கு ஆரம்பம் குறித்தது. i
ஒன்று புலனாகிறது. நான் ஒரு நல்ல மகனாக இருந்தேன். ஒரு நல்ல தந்தையாக - கணவனாக இருந்து வருகிறேன். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தும் மேல்படிப்புக்கு வசதி இருக்கவில்லை. கலை உலகிலும் கால் ஊன்றி இருக்கிறேன். தொழில் துறையிலும் நின்று பிடித்திருக்கிறேன். ஒன்றில் நுழைந்தால் மற்றதைக் கோட்டை விட்டதாகச் சொல்லமுடியாது. எல்லாவற்றிலும் உரிய அக்கறையுடன் ஈடுபட்டிருக்கிறேன். அதே சமயம் 'ஜேக் ஒவ் ஒல் ட்ரேட் மாஸ்டர் ஒவ் நன்’ என்கிற சொல் எனக்குப் பொருந்தாது. என் உழைப்புக்கும், ஈடுபாட்டுக்கும் எங்கோ போயிருக்க வேண்டியவன். எனினும் எளியவ னாகவே இருக்கிறேன். கார்-பங்களா என்றில்லா விட்டாலும் கடன் இல்லாத வாழ்வு - பசி இல்லா வாழ்வு என்பது இன்று வரை எனக்குக் கை கூடி வந்திருக்கிறது. அரசர்களோடு உலவும் - குலவும் வாய்ப்பிருந்தும் சாமான்யர்களோடு சரிசமமாகப் பழகும் பண்பு இன்றும் அன்றும் எனக்குத் தனி மரியாதையைப் பெற்றுத் தருகிறது. முதலாளி தும்மினால், அதனால் என் கவனம் கெட்டுவிட்டது என்று போராட்டக்கொடி பிடிக்கும் கம்யூனிசக் கோட்டையான கேரளத்தில் கடந்த நாற்பத்தி ரண்டு ஆண்டு காலமாக நான்கு பெரிய நிறுவனங்களில்
181

Page 93
அப்துல் ஜப்பார்
நிர்வாகப் பொறுப்பிலிருந்தும், எந்த ஒரு காரணத்துக் காகவும் தொழிலாளர் போராட்டக்கொடி உயர்த்தாமல் பார்த்துக்கொண்டது என் மனிதாபிமான அணுகுமுறைக்குக் கிடைத்த பரிசு என்று நினைக்கிறேன்.
காய்தல் - உவத்தல் இன்றி வாழ நினைக்கிறேன். கடினமாக இருக்கிறது எனினும் முயல்கிறேன். இந்தக் கட்டுரைத் தொடரையும் அவ்வாறே எழுத நினைத்தேன். கொஞ்சம் மசாலா தடவி இருக்கலாம். கொஞ்சம் “மஸ்க்கா’ (பட்டர்-வெண்ணெய்) பூசி இருக்கலாம். ஆனால் காந்திஜியின் ‘சத்திய சோதனை’ படித்துள்ள நான், அப்படிச் செய்யவில்லை. மக்கீன் என் நல்ல நண்பன். காசிம், காமில் மரிக்கார் ஆகியோர் மீது எனக்கு எவ்வித வருத்தமோ, மனத்தாங்கலோ கிடையாது. ஆனால் அந்தந்த சந்தர்ப்பங்களில் நான் எப்படி உணர்ந்தேன் என்பவைகளை ஒளிவு-மறைவின்றிச் சொல்லி இருக்கிறேன். யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. எந்த விதத்திலும் யாருக்காவது அப்படி ஒர் உணர்வு தோன்றி இருக்குமாயின் பொறுத்தருள வேண்டுகிறேன்.
தனிப்பட்ட ஒரு கதாப்பாத்திரத்தின் மூலம் தங்களுக்கென ஒரு நிரந்தர இடம் தேடிக்கொண்ட லண்டன் கந்தையா, சானா சண்முகநாதன், விதானையார் டொக்டர் கா. சிவத்தம்பி, ஆச்சி திருமதி பரிமளாதேவி - விவேகானந்தா, “காசிம் காக்கா’, ரொஸாரியோ பீரிஸ்; 'மாடசாமி என்.சோமசுந்தரம்; “மயிலு சிவலிங்கன்; மாஸ்டர் நவரத்தினம்; பிற்காலத்தில் ஐயர்’ பி.எச். அப்துல் ஹமீது மற்றும் ‘மரிக்கார்’ ராம்தாஸ்; பிறகு 'அபூநானா' சவாஹிர், இவர்களோடு 'கிச்சில் மவேன்’ ஷஃபா மஹமூர், ஒ. நாகூர் பல்வேறு பாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் உள்ளத்தில் பவனி வந்த பிச்சையப்பா, ஃபிலோமினா சொலமன்; ராஜேஸ்வரி சண்முகம்;
182

காற்று வெளியினிலே.
விசாலாட்சி ஹமீது என்று எனக்குத் தெரிந்த திறமைசாலி களின் பட்டியல் மடடுமல்ல எனக்குத் தெரியாத திறமை சாலிகள் பலரும் கூட இருக்கக் கூடும் அவர்கள் அனை வருக்கும் என் மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். "எந்தரோ மகானுபாவலு அந்தரீக்கி வந்தன.
பெண்களிடம் அப்பாவித்தனத்தால் அல்ல, தெரிந்தே நாகரீகமாக வெகுளித்தனமாக ஒதுங்கியதால் ரொசியிடம் "கவ் & கேட்" பட்டம், ஒரு பெண்ணிடம் மிக நேர்மையாக நடந்து கொண்டதற்காக மக்கீனிடம் "ஜெண்டில்மேன் - பொன்னையன்” என்று இரட்டை பட்டங்கள். என் நடிப்பை நிஜம் என்று நம்பியதால் சண்முகம் அடித்த அடி கூட ஒரு வகையில் ஒரு பாராட்டுத்தான்.
ஆனால் ஒரு பால்ய நண்பன் - பள்ளித் தோழன் முஸ்லீம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சராக இருந்து இப்போதைய நாடாளுமன்ற விவகார அமைச்சர் மாண்புமிகு அல்ஹாஜ் அப்துல் ஹமீதுமுகம்மது அஸ்வரின் ஏற்பாட்டின் கீழ் நடந்து வந்த வாழ்வோரை வாழ்த்தும் திட்டத்தின் கீழ் எனக்குக் கிடைத்த பதுருல் மில்லத் என்கிற விருதைத் தான் என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெறுபேறுகளில் மிகப் பெரியதாகக் கருதுகிறேன்.
ஒருமுறை நானும் மக்கீனும் நடிகர் சந்திரபாபுவை அவரது பீமண்ணத்தெரு இல்லத்தில் பேட்டி காணச் சென்றோம். ஒரு விழாவுக்குச் சென்ற அவர் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக வந்து விட்டார். ஏன் என்று கேட்ட தற்கு "பொன்னாடை போர்த்த வந்தார்கள் ஒடி வந்து விட்டேன்” என்றவர் "பொன்னாடை எதுக்குப் போத்த றான்”? டேய்ப்பா நீ நடிச்சதுபோதும் அடங்கி ஒடுங்கி ஒரு கரையில் இருன்னு சொல்லத்தான்" என்று எங்களை ஆச்சரியப்பட வைத்தார்.
183

Page 94
அப்துல் ஜப்பார்
இப்போது என் மக்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? வாப்பா அஸ்வர் மாமா சொல்றது புரியுதா. டேய் இந்தா பரிசைப் புடி ஒரு கரையில் இருன்னு சொல்றார்” என்று ஜோக் அடிக்கிறார்கள்.
ஆனால் ஒரு கலைஞனுக்கு காசு பணத்தை விட கர ஒலியும் பாராட்டும் பரிசும் தான் மிகச் சிறந்த டொனிக் அதைப் பெற அவன் முன்னை விட மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும் என்று தான் நான் கருதுகிறேன். அனுபவத்தின் பக்குவத்துடனும், மனதிலுள்ள இளமையின் உத்வேகத்துடனும், என் கலைப்பணி இனியும் தொடரும். அதற்கு இறைவன் கிருபை செய்ய வேண்டும் என்கிற என் பிரார்த்தனையில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டு மென்பது என் எளிய - இனிய வேண்டுகோள்.
இலங்கை வானொலி ஸ்டைலில் உங்களை மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்வது உங்கள் அன்புக்குரிய எஸ்.எம்.அப்துல் ஜப்பார். அதாவது சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
அன்பு நன்றி.
184


Page 95
சாத்தன்குள் சிறுவனாக கால்பதிப்பு மலே நாட இந்தியா
வானொலி தொடர்ச்சி ஒரு புதிய
Surrettest
19.
...ull).: 1959 EUSTL-T ஐ.பி.சி - அரசு கி)ே மில்லத் L 1997 g. சுதந்திர "மிகச் சிற என்கிற வி
SEGÜENTLIG தொடர்ச்சி பம் இது smo ALSl நிகழ்ச்சி. பாட்டு - இவரது சு நான்கு
 
 
 
 
 

ாம் அப்துல் ஜப்பார் 1950 ல் இலங்கை வானொலியில் 1951ல் "ஆடிசன்" இல்லா க அரங்குக்கு தேர்வு: 1962ல் திரும்பி, அகில இந்திய யில் விட்ட இடத்திலிருந்து 1980 முதல் ஒலி பரப்பில் முகம், கிரிக்கெட் நேர்முக தமிழில்.
க் கோப்பையின்போது பி.பி. g உலகக்கோப்பை வர்ண்னை 24 மணிநேர ஒலிபரப்பான தமிழில், 1993ல் இலங்கை ாச்சார அமைச்சின் பதுருல் பட்டம் - விருது - பொற்கிழி நில இந்திய வானொலியில் தின பொன்விழவை ஒட்டி நந்த ஒலிபரப்புக் கலைஞன் விருது.
* ஐ.பி.சியில் வாரந்தோறும் சியாக "இந்தியக் கண்ணோட் போல லண்டன் தீபம் தொன்க்' அரங்கம் - அந்தரங்கம் நாடகம் - இலக்கியம் ချီါးကြီññး|| அரசியல் என்று தொடரு லைப்பணிக்கு வயது ஐம்பு