கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: லண்டன் முதல் கனடா வரை

Page 1
|No () -
 


Page 2


Page 3

லண்டன் முதல் கனடா வரை.
மாத்தளை சோமு
36013
தமிழ்க்குரல் பதிப்பகம் P-15, ஐந்தாவது மெயின் ரோடு, இராமலிங்க நகர், உறையூர், திருச்சி - 620 003

Page 4
லண்டன் முதல் தனடா வரை. மாத்தளை சோமு
பயணக் கட்டுரை
C) ஆசிரியர்
முதற் பதிப்பு: நவம்பர், 2000
பக்கம் : 176 பிரதிகள் 1200
பதிப்பு தமிழ்க்குரல் பதிப்பகம் P-15, ஐந்தாவது மெயின் ரோடு, இராமலிங்க நகர், உறையூர், திருச்சி - 620 003
விலை 75. 00
வடிவமைப்பு வே. கருணாநிதி
அச்சிட்டோர்.
தி பார்ககர் 293, அகமது வணிக வளாகம், இரண்டாவது தளம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 600 014. Ph. 8215684

என்னுரை
மனித வாழ்க்கையே ஒரு பயணம் என்றாலும் இடையே அவன் மேற்கொள்கிற பயணம் சம்பந்தமான எழுத்துக்கள் நாவல், சிறுகதை, கவிதை போன்றே இலக்கிய வரிசைகளில் சேருகின்றன.
மனிதனின் அறிவுத் தாகத்திற்கும் புதியவற்றை அறிந்து கொள் ளவும், உலகின் ஏனைய பகுதிகளில் வாழ்கிற மனிதன் தன்னைப் போல் வாழ்கிறானா என்று அறியவும் ஒரு பாலமாக இருப்பதுதான் பயண இலக்கியம். மொழி உருவம் பெறாத காலத்தில் கூட மனிதன் கனவு கண்டிருக்கிறான். அந்தக் கனவைத் தன்னோடு இருப்பவனுக்கு ஏதோ ஒரு வகையில் சொல்லியிருப்பான். மேலும் போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் கூட மனிதன் புதிய புதிய ஆச்சரியங்களை புதிய புதிய நிலங்களைக் கண்டு மகிழ்ந்திருக்கின்றான். இதற்காக அவன் பயணம் மேற்கொண்டிருக்கின்றான்.
பிற்பாடு மொழி, பண்பாடு, நாகரீகம் கற்றுக் கொண்ட மனிதன் மெல்லமெல்ல நகர்ந்து போய், வெளி உலகைப் பார்க்கத் தொடங் கினான். இவ்வாறு நகர்ந்தவன், தான் பார்த்ததை அடுத்தவனுக்குச் சொல்லி மகிழ்ந்திருக்கின்றான். அப்போதே இந்தப் பயண இலக்கியம் தொடங்கி விட்டது.
நிலத்தைக் கடந்தவன், நதிகளைத் தாண்டி, பிற்பாடு காற்றை நம்பிக் கடலில் பயணம் போனபோதுதான் புதிய உலகத்தையே பார்த்து, பயணக் குறிப்பு எழுதத் தொடங்கினான். அவ்வாறு எழுதப் பட்டதுதான் உலகப் புகழ்பெற்ற கடற்பயணி மார்க்கபோலோ எழுதிய அனுபவச் சிதறலாக வந்த பயணக் குறிப்புகள். நாகரீகம் மிளிர்ந்து மக்களாட்சி மலர்ந்து நின்றதில் பயணம் போவது பொதுவாகிப் போனதில் பலரும் கப்பல், விமானம் மூலம் பயணம் போக முடிந்தது.
கப்பல் பயணம் மட்டும் இருந்தபோது அது சிலருக்கு மட்டுமே வாய்த்தது. இரும்புப் பறவையான விமானம் பறக்கத் தொடங்கிய போதுதான் பயணங்களே பொதுவாகின. அதன் பிறகுதான் பயண
5 D

Page 5
மாத்தளை சோமு
அனுபவங்கள் நூல்களாகின. அந்த நூல்கள் புதிய இடத்தைப் புதிய தேசத்தை, புதிய மக்களை, புதிய மொழியை எடுத்துக் சொல்லின.
தமிழில் ஏ.கே. செட்டியார், சோமலே, கல்கி. மீ.ப. சோமு, இத யம் பேசுகிறது. மணியன், கல்கண்டு லேனா தமிழ்வாணன், குரும் பூர் குப்புசாமி, சுஜாதா, வாஸந்தி, சிவசங்கரி, சி. சுப்ரமணியம் போன் றோர் தமது பயண அனுபவங்களைத் தந்திருக்கிறார்கள். விஞ்ஞானம் விரிவாகாத காலத்தில் ஏ.கே. செட்டியார் உலகையே சுற்றி வந்தார். அதற்கு அவர் எடுத்த காலம் நீண்டது. ஆனால் இன்று உலகைச் சுற்றிவர குறுகிய காலமே போதும். இதனால் உலகம் சுருங்கி விட்டது என்று அர்த்தமல்ல. உலகம் மனிதருக்குள் அடங்கிவிட்டது என்பது தான் அர்த்தமாகும்.
இன்று மனிதன் நினைத்ததும் பயணம் போகலாம். சிங்கப்பூருக் குப் போவது திருச்சியிலிருந்து சென்னைக்குப் போவது போலாகி விட்டது. இன்று உலகின் பல நாடுகளில் தமிழன் வாழ்ந்து கொண்டி ருக்கிறான். பனிக்கட்டி படர்ந்த பிரதேசங்களில் கூடத் தமிழன் வாழ வேண்டியதாகிவிட்டது. பகல் ஆறு மாதம் இரவு ஆறு மாதம் என்று சொல்லக் கூடிய நாட்டில் கூட தமிழ் பேசப்படுகிறது. மகாகவி பாரதி கண்ட 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்ற கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது. இதனைச் சாதித்தவர்கள், இனக் கலவரத்தினால் தாயகம் துறந்து புதிய தாயகம் தேடி அலைந்த ஈழத் தமிழர்கள். இதனைச் சொல்வது புகழுரையின் உச்சிக்காக அல்ல. நேரில் பார்த்த நிஜத்திற்காக. தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களும் பல நாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களின் புலம் பெயர்வுக்கும் ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வுக்கும் வித்தி யாசம் உண்டு. அந்த வித்தியாசம் தான் அவர்களை வெவ்வேறு திசையில் அடையாளப் படுத்துகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் தாயகம் துறந்தோ, தாயகத்தில் 'வாழவே முடியாத நிலையிலோ குடி பெயரவில்லை. மாறாக வசதி, வாய்ப்புகளை மாத்திரம் எண்ணி மேற்கொண்ட குடிபெயர்வு. ஈழத் தமிழரோ அதற்கு நேர்மாறு. தாய கத்தில் - பிறந்த ஊரில், வாழ முடியாத கோர நிலையில் அவர்களின் குடிபெயர்வு நடக்கின்றது. ஆக, அவர்களோடு தமிழும் பண்பாடும் புதிய தேசத்தில் குடி பெயர்கிறது. தாயகம் போக முடியாத சூழ் நிலையில் புலம் பெயர்ந்த தேசமே புதிய தாயகமாய் மாறிய நிலை யில் அவர்கள் வாழ்க்கை அமைகிறது. அதனால் புதிய தேசத்தில் தமிழின் பெயரால் முன்னிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள்."
6

லண்டன் முதல் கனடா வரை.
இது ஏனையோரும் ஒப்புக்கொண்ட உண்மை. இந்த உண்மையை நேரில் கண்டறிய நான் "லண்டன் முதல் கனடா வரை ஒரு பயணத்தை மேற்கொண்டேன்.
ஆஸ்திரேலியாவில் நானே புலம்பெயர்ந்து வாழ்வதால் எனது பயணம் வழக்கமான பயணமாய் அமையாமல் ஒரு புலம் பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளியின் பார்வையில் புதிய அனுபவங்களை வெளிக் கொணர உதவியது. புதிய தேசத்தில் புதிய முகவரிக்காகப் போராடு கிற தமிழர்களின் முயற்சிகள், போராட்டங்கள், அவர்களின் ஏக்கங் கள் என்பனவற்றை நேரில் கண்டேன். கனடாவில், பாரிஸில், லண்ட னில் தமிழில் சாதனை செய்த சிலரைச் சந்தித்தேன். அடுத்த தலை முறையில் தமிழ் இருக்குமா என்ற கேள்விக் குறிகளோடு இருந்த வர்களையும் பார்த்தேன். பிரான்சில் பிரெஞ்சும், ஜெர்மனியில் டச்சும், பிரிட்டனில், கனடாவில் ஆங்கிலம் மட்டுமே படிக்கிற தமிழ்க் குழந்தைகளைக் கண்டேன். இவர்களுக்கெல்லாம் தமிழ் ஒரு உறவு மொழியாக இருக்குமே - அதனை அறியாமல் இருக்கிறார்களே! என்று வருந்தினேன்.
வசதிகள் விரிந்து இன்ப உரசல் கொட்டுகிற சுகம் மட்டுமே வாழ்க்கை அல்ல. மொழி அடையாளம் தொலைகிறபோது கலைந்து போவது முகவரி மட்டுமல்ல - முகமும் கூடத்தான். இம்முகத்தை இழக்கக் கூடாது என்ற ஒரு பாரிய முயற்சியாக தமிழ் சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. இதில் வெற்றியடையாவிட்டால் புலம்பெயர்ந்த தமிழர்களின் முகவரியே மாறிப் போய் விடும்.
நானே புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் ஏனைய நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களைப் பார்க்கிறபோதுதான் எனக்கே பல உண்மைகள் தெரிய வந்தன. குறுகிய காலமே லண்டன், பாரிஸ், ஜெர்மனியில் ஒரு நகரம், கனடா ரொறன்ரோ ஆகிய நகரங்களுக்குச் சென்று புலம் பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்தேன். மேலும் இந்தப் பயணமே எனக்குச் சில அனுபவங்களைக் கொடுத்தது. அவற்றைத் தொகுத்து லண்டன் முதல் கனடா வரை என்ற தலைப்பில் இலங்கை வீரகேசரி ஞாயிறு இதழிலும் மலேசியா மக்கள் ஓசை' இதழிலும் தொடராக எழுதினேன்.
இஃது வழக்கமான பயணக் கட்டுரை அல்ல - புலம் பெயர்ந்த தமிழர்களின் முயற்சிகள், போராட்டங்கள், ஏக்கங்கள் யாவற்றையும் உள்ளடக்கிய ஒரு பயணத்தின் கதை.

Page 6
D மாத்தளை சோமு
இன்று எல்லா நாடுகளுக்கும் - எல்லோருக்கும் பயணம் போகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. வசதி இருக்குமாயின் அது சுலபமாகிறது. ஆனால் எல்லா நாடுகளிலும் வாழ்கிற மனிதர்களைச் சந்திக்கிற - அது பற்றிச் சற்றுச் சிந்திக்கிற வாய்ப்புப் பயணம் போகிற எல்லோ ருக்கும் ஏற்பட முகாந்திரமே இல்லை. ஆனால் ஒரு படைப்பாளி - இலக்கியவாதி என்ற முறையில் அஃது என்னால் முடிந்தது. அவ் வாறு முடிந்த பயணத்தின் கதையே இது.
வழக்கமாக நாவல், குறுநாவல் அல்லது சிறுகதைத் தொகுப்பில் வாசகர்களைச் சந்திக்கிற நான், ஒரு பயண அனுபவக் கதையோடு இம்முறை சந்திக்கின்றேன். இந்தப் பயணக் கதையைத் தொடராக எழுதியபோதே நாவல், சிறுகதை முயற்சிக்கு மேலாக வாசகர் உணர்வு மேலோங்கியதை உணர்ந்தேன். இதன்மூலம் புதிய அடையாளம் எனக்குக் கிடைத்ததைப் பெருமையாக நினைக்கிறேன். இதற்குமேல் எதுவும் பேச நான் விரும்பவில்லை. நான் எதைப் பேச விரும்பி னேனோ அவையெல்லாம் இந்தப் பயணக் கதைத் தொடரில் அற் புதமாய் வந்திருக்கின்றது.
இத்தொடரை எழுத உதவிய பயணத்திற்கு லண்டனில் ஈழகேசரி ராஜகோபால், பாரிஸில் ஈழநாடு எஸ்.எஸ். குகநாதன், கனடாவில் சாவகச்சேரிதுரைராஜா, கனக அரசரத்தினம் மற்றும் பிரான்ஸ் கோவை. நந்தன் ஆகியோர் உதவியாக இருந்தார்கள். அவர்கள் யாவருக்கும்,
இத்தொடரை அழகாய், இலங்கை வீரகேசரி ஞாயிறு இதழில் தொடராய்ப் பிரசுரித்த வீரகேசரி இணைஆசிரியர், வி. தேவராஜ் அவர்களுக்கும், மலேசியாவில் ‘மக்கள் ஓசை’யில் தொடராய் வெளி யிட முன்வந்த மலேசிய நண்பன் ஆசிரியர் ஆதி. குமணன் அவர் களுக்கும், ‘மக்கள் ஓசை’ அக்கினி சுகுமார் அவர்களுக்கும் இதனை அழகான நூலாக்கிய சென்னை 'தி பார்க்கர்’ வே. கருணாநிதி அவர் களுக்கும் இந்நூலை வெளியிடுகிற 'தமிழ்க்குரல்’ பதிப்பகத்திற்கும் அன்பான நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
அன்புடன்
மாத்தளை சோமு
26-02-2000
MATH ALA SOMU, 2/1 CIVIC AVE, PENDLE HILL, NSW-2145, AUSTRALIA
D 8

d0ெTLT வரை.

Page 7

லண்டனில் - 1
ஆசியாவிலேயே மிகப் பெரியதும் உலகிலேயே இரண்டாவது என்று சொல்லக் கூடியதுமான நவீன விமான நிலையம் கோலாலம் பூர் நகரை விட்டுத் தள்ளிக் கட்டப்பட்டு விட்டது.
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ஏறி இறங்க வசதியானது அந்த விமான நிலையம். புதிய விமான நிலையத்தில் இறங்குகிற சர்வதேசப் பயணிகள் மலேசியாவில் இவ்வளவு பெரிய விமான நிலையமா? என்ற கேள்வியுடன் அதனைப் பார்க்கிறார்கள்.
நாட்டில் பல்வேறு பொருளாதார அரசியல் பிரச்சினைகள் இருந்த போதும் கட்டித் திறக்கப்பட்ட அந்த விமான நிலையத்தைப் பார்க்க தினமும் உள்நாட்டு மக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தார்கள்.
திருவிழாக் கூட்டம் போல் ஒரே மக்கள் கூட்டம். அதில் நானும் ஒருவனாகி லண்டன் போவதற்காக விமான நிலையத்தினுள் நுழைந்து மலேசிய மாஸ் விமானத்தில் உட்கார்ந்து யோசித்தபோது, ஏனோ வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனங்கள் எனக்கு நினைவுக்கு வந்தன.
“எரிக்கும் சூரியன் இருக்கிறதே அதுகூட எங்களைக் கேட்டுத் தான் எழும் - விழும்”
வெள்ளைக்காரத் துரையாக நடித்தவர் பேசிய வசனம்.
“ஆங். அந்தக் கதையை இங்கு விடாதே அப்பனே’ இது வீர பாண்டிய கட்டபொம்மனின் வசனம். வீரபாண்டிய கட்ட பொம்ம னாக நடித்த சிவாஜியின் நடிப்பும் கிண்டல் உச்சரிப்பும் வெள்ளைக் காரனோடு மோதியது போன்ற உணர்வைக் கொடுக்கும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் அதை எதிர்த்த வீரபாண்டியக் கட்டபொம்ம னையும் பாமர மக்களுக்கு இதைவிட அற்புதமாக சுலபமாக அறி

Page 8
மாத்தளை சோமு
முகமே செய்ய முடியாது. இதில் கற்பனைகளே அதிகம் இருந்த போதி லும் அதை ரசிக்கிறபோது ஒருவகை திருப்தி ரசிகனுக்கு இருப்பது என்னவோ நிஜம்.
வீரபாண்டியக் கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பிறகும் பல சிற்றரசர்களைப் பிடித்துத் தூக்கிலிட்டு முழுத் தமிழகத்தையும் தமது ஆட்சிக்கு கொண்டு வந்தனர் வெள்ளைக்காரர்கள். அதன் பிறகு எத் தனை எத்தனையோ மாற்றங்கள்.
கடல் வசதி இருந்ததாலும் கல்வி இல்லாததாலும் தமிழ் நாட்டி லிருந்து தமிழர்களை இலங்கை, மலேசியா, பர்மா, பீஜித்தீவு, தென் னாப்பிரிக்கா என்று பல நாடுகளில் குடியேற்றியது வெள்ளையர் அரசு, இலங்கையில் தோட்டப் பகுதிகள் உருவானது அப்படியே.
வடபகுதியில் 'கல்வி என்ற மந்திரத்தில் அங்கிருந்தவர்களை தம் வசப்படுத்தி தமது நிர்வாக இயந்திரம் இயங்க வைத்தனர். மொத்தத்தில் தங்கள் சாம்ராச்சியம் அசையாது இருக்க மலையகத்தில் தமிழர்களின் உழைப்பைச் சுரண்டிய ஆங்கிலேய அரசு தமது நிர்வாக இயந்திரம் இயங்க இன்னொரு பகுதி வடகிழக்குத் தமிழர்களின் மூளையைச் சுரண்டியது.
இருபகுதியினரையும் வெவ்வேறு கோட்டுககுள் நிறுத்திப் பிரித் தாண்டது ஆங்கிலேய அரசு.
1841 இற்கும் 1849 இற்கும் இடையில் குடியேற்றப்பட்ட தமிழர் களில் 70,000 பேர் சுகாதார வசதி இன்மையால் மலேரியா, நெருப்புக் காய்ச்சல், காலரா போன்ற நோயினால் பாதிக்கப்பட்டு மரணமானார் கள். இது இலங்கையில். இதேபோலத் தென்னாபிரிக்கா, பீஜித்தீவில், மலேசியாவில் இன்னும் எத்தனை பேரோ? இந்த வரலாற்றைப் பலர் மறந்திருக்கலாம். அதனால் தானோ என்னவோ மகாகவி பாரதி கவிதையிலே சொல்கிறான்.
ஆப்பிரிக்கத்துக் காப்பிரிநாட்டிலும் தென்முனை யடுத்த தீவுகள் பலதினும் பூமிப் பந்தின் கீழ்ப்புறத்துள்ள பற்பல தீவினும் பரவியில் வெளிய தமிழ்ச் சாதி தடியுதை யுண்டும் காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும் வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்

லண்டன் முதல் கனடா வரை.
வெள்ளையர்களால் குடியேற்றப்பட்ட தமிழர்களின் துயரம் செய்தி யாகத்தான் பாரதிக்குத் தெரிந்தபோது அந்த விடுதலைக் கவிஞன் நெஞ்சைத் தொடுமாப்போல் பாட்டெழுதினான்.
இன்று உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள், மற்றும் இந்தி யர்கள் அரசியல் ரீதியாக நசுக்கப்படுவதற்கு, லண்டன் அரசும் ஒரு காலத்தில் பிள்ளையார் சுழி போட்டதே முக்கிய காரணமாகும்.
பல நாடுகளுக்குச் சுதந்திரம் கொடுத்தபோது தங்களால் குடி யேற்றப்பட்ட மக்களைப் பற்றி எதுவும் பேசாதது லண்டனின் ஜன நாயகத்தையிட்டு சந்தேகம் எழுப்ப நியாயமான காரணம் தானே?
என் மனதில் ஏற்பட்ட இந்த உணர்வுகளையெல்லாம் எங்கா வது கொட்டி விடவேண்டும் என்ற உணர்வுடன் இருந்த எனக்கு லண் டனில் இருக்கிய ஹைட்பார்க் ஞாபகம் வந்தது.
அங்கே ஸ்பீக்கர் கோனர் இருக்கிறது. அதில் எவரும் போய்த் தங்கள் கருத்தைப் பேசலாம். லண்டன் போனதும் அந்த ஸ்பீக்கர் கோனருக்குப் போய் என் குமுறல்களைக் கொட்டிவிடலாம் என்று இருந்தேன்.
எனக்குப் பிரிட்டன் மீது வெறுப்போ கசப்புணர்வோ இல்லை. ஆனால் பிரிட்டனைப் பற்றியோ லண்டனை பற்றியோ நினைக்கும் போது லண்டன் ஆட்சிக் காலத்தில் இலங்கையில், இந்தியாவில் மலே சியாவில் நடந்ததெல்லாம் எனது நினைவுக்கு வருகிறது.
இன்று லண்டனில், பிரிட்டிஷ் ஆட்சி எங்கெங்கு இருந்ததோ, அந்த நாட்டு மக்களெல்லாம் அகதிகளாகவும் வேறு வகையாலும் குடியேறியிருக்கிறார்கள். அவர்களின் தொகை பெருகப்பெருக அதைத் தடுக்க வேறு வழியின்றி அநாகரீகச் செயல்களில் கூட லண்டன் குடி யேற்ற அதிகாரிகள் இறங்கினார்கள்.
இந்தியாவில் இருந்து அதிகமான பெண்கள் வருகிறார்கள் என்று அவர்களின் 'கன்னித்தன்மை கூடப் பரிசோதனை செய்யப்பட்டன. இன்று அவ்வாறு இல்லாவிட்டாலும் பல்வேறு குடியேற்றத் தடைச் சட்டங்கள் வெவ்வேறு வடிவில் இருக்கின்றன. என்றபோதும் இன்றும் பல்வேறு இன, மத மக்களின் குடியேற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் மக்கள் கணக்கெடுப்பின்படி சுமார் 100க்கும் மேற்பட்ட இன மக்கள் லண்டன் நகரில் வாழ்கின்றார்கள்.
13 D

Page 9
மாத்தளை சோமு
உலகில் உள்ள வெவ்வேறு நகரங்கள் வேகமாக முன்னேறி வரு கின்ற போதும் யானை படுத்தால் குதிரை மட்டம்' என்பது போல் லண்டன் என்ற பெயர் மீதுள்ள கவர்ச்சி குறையவே இல்லை.
லண்டன் சீமை, இன்னமும் லண்டன் சீமையாகத்தான் இருக்கி றது. சீமை என்றால் அயல் தேசம் என்று தமிழ் அகராதி சொல்கிறது. ஆனால் இன்றும் லண்டனைத்தான் சீமை என்று சொல்கிறார்கள்.
லண்டன் பி.பி.ஸி.யின் தமிழோசை வானொலி ஒலி பரப்பைக் கேட்கிற போதும், தேம்ஸ் நதியைப் பற்றிப் படித்தபோதும். ஷேக்ஸ் பியரைப் பற்றி நினைத்தபோதும் தொலைக்காட்சி இல்லாத காலத்தில் இலங்கை வானொலியில் ஒலித்த லண்டன் கந்தையா நாடகத்தைக் கேட்ட போதும் லண்டனுக்கு என்றாவது ஒருநாள் போவேன் என்று நான் நினைக்கவே இல்லை. சொல்லப்போனால் எனக்கு வாய்த்த லண் டன் பயணம் விசித்திரமானது. எல்லோரும் தாங்கள் வாழும் ஊரில் இருந்து லண்டன் போவார்கள். நானோ சிட்னியில் இருந்து மலேசியா வந்து தமிழகம் போய்ப் பிறகு மலேசியா வந்து லண்டன் போனேன்.
லண்டன் புறப்படுவதற்கு முன் கோலாலம்பூரில் மலேசிய ரெவி ஸ்டார் பட்டிமன்றக் குழுவினர் ஒரு சிறிய வழியனுப்பு வைபவத்தை எனக்காக நடத்தினார்கள். இதனை ஒருங்கு செய்தவர் மலேசிய எழுத்தாளர் நண்பர் சை. பீர்முகம்மது. அன்றைய அந்த நிகழ்வுக்கு கவிஞர் காரைக்கிழார் சோ. பரஞ்சோதி, கவிஞர் காசிநாதன் எஸ்.பி. மணிவாசகம், அந்தனி சிவாஜிராஜா, மக்கள் ஓசை குரு. இந்தியக் குத்தகையாளர் சங்கத் தலைவர் எனப் பலரும் வந்திருந்தார்கள்.
விமானம் பறக்கத் தொடங்கியது. அது லண்டனுக்கு போவ தற்கு முன்னரே எனது எண்ணங்கள் லண்டனுக்குப் போய் விட்டன. லண்டன் ஒரு மாநகரம். அது ஐரோப்பிய நகரங்கள் எல்லாவற்றுக் கும் தலைவனாய் இருக்கிற நகரம்.
அந்த லண்டனுக்கும் மதுரைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதாக வரலாறு சொல்கிறது. அது என்ன தொடர்பு? மதுரையில் வைகை நதி லண்டனில் தேம்ஸ் நதி அதுவா? இல்லை. பின் எது? அது நெருப்பு சம்பந்தப்பட்டது.
மதுரை மாநகரை கண்ணகி எரித்ததாக சிலப்பதிகாரம் சொல்கிறது. நெருப்பிலே எரியுண்டு மீண்ட நகர் மதுரை. லண்டனும் அப்படியே நெருப்புலே எரியுண்டு மீண்ட நகரம் தான்.
4

லண்டனில் - 2
166696) 6Jibu L L Sld, Gusflug (The Great Fire) a)66 TL னில் முக்கால்வாசிப் பகுதிகளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டது. இது அந்த நூற்றாண்டில் பரபரப்பாகப் பேசப்பட்ட சம்பவம்.
இன்று இருக்கிற லண்டன், நெருப்பிலிருந்து மீண்டு வந்த நகரா கும். அந்த நெருப்புத்தான் இந்த லண்டனையும் மதுரையையும் ஒரு நேர்கோட்டில் இணைக்கிறது. ஆனால், அந்த நெருப்பால் இரு நகரங் களையும் உலக வரைபடத்திலிருந்து அழித்து விட முடியவில்லை. மாறாக நெருப்புக்குப் பிறகு இரு நகரங்களுமே “தலை’ உயர்ந்து தான் இருக்கின்றன.
லண்டனின் சரித்திரம் சுமார் 2000 ஆண்டுகள் என்பது பதிவு செய்யப்பட்டதாகும். கிறிஸ்துவுக்கு முன் 43இல் ரோமானியர்கள் இந்த லண்டனைக் கண்டு தம்வசப்படுத்தினார்கள். லண்டனின் அழகும் அதன் அமைப்பும் பாதுகாப்பான கடலோரத் துறைமுகமும் நாடு தாண்டிப் போகிற ரோமானியர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை.
மரத்தினால் பாலங்களை அவர்கள் பாதுகாப்புக்காகக் கட்டினார் கள். ஆனால் 5ஆம் நூற்றாண்டில் அவர்கள் ஏனோ நாட்டைவிட்டுப் போய்விட்டார்கள். அதற்குப் பிறகு வர்த்தகக் கேந்திரத்தை லண்டன் இழந்து போனது. மறுபடியும் 8ஆம் நூற்றாண்டில் கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த மாநகரமாக மாறியது அது.
11ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் தலைநகராக மாறியது லண்டன். 18ஆம் நூற்றாண்டில் உலகில் பல நாடுகளுக்குத் தலைநக ராக அது விளங்கியது.
அந்த லண்டன் மாநகரில் இன்னும் கொஞ்ச நேரத்தில் கால் வைக்கப் போகிறோம் என்ற உணர்வு ஒருபக்கம் மகிழ்ச்சியைக் கொடுத் தாலும் இன்னொரு பக்கம் யார், யாரைச் சந்திக்கப் போகிறோம்? எங்கெங்கு போகப் போகிறோம் என்ற நிகழ்ச்சி நிரலே என்வசம் இல்லையே என்ற கவலையும் மேலோங்கியிருந்தது.
மேற்றிசை நாடுகளுக்குச் செல்லும் முதற்பயணம் இது என்னை விமானநிலையத்தில் சந்திப்பதாக தொலைபேசியில் சொன்ன பத்திரிகை
5 D

Page 10
0 மாத்தளை சோமு
யாளர் லண்டன் ஈழகேசரி ராஜகோபால் அவர்களை இதற்கு முன்னர் சந்தித்ததில்லை. எங்களின் தொடர்பு கடிதம் மூலமே இருந்தது.
அவர் ஆசிரியராக இருக்கிற ஈழகேசரி மாத இதழில் “எல்லை தாண்டா அகதிகள்” என்ற தொடர் கதையை எழுதினேன். அதன் மூலமே நட்பான நான், இப்போதுதான் அவரை நேரில் சந்திக்கப் போகின்றேன்.
விமானம் இறங்க நேரம் இருந்தது. எனவே, எழுந்து நடந்தேன். விமானத்தின் பின் பகுதியில் பல இருக்கைகள் காலியாக இருந்தன. சிலர் கால்நீட்டிப் படுத்திருந்தார்கள். அது புகை பிடிக்கிறவர்கள் பகுதி. பலர் சிகரெட்டும் கையுமாய் இருந்தார்கள். சிறிது வேடிக்கை பார்ப் பதற்காக டொய்லெட் அருகே இருந்த காலியான இருக்கையில் உட் கார்ந்தேன்.
பல வெள்ளைக்காரப் பெண்கள் சிகரெட் பிடித்துக் கொண்டிருந் தார்கள். அதில் ஒருத்தி ஒரு சிகரெட் முடிய இன்னொரு சிகரெட் என்று புகைத்துக் கொண்டே இருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் ஒருவன், கணவனாக இருக்க வேண்டும். மது அருந்திக் கொண்டிருந்தான்.
இதனிடையே எங்கோ உட்கார்ந்திருந்த வெள்ளைக்காரன் ஒரு விஸ்கி போத்தலோடு நான் உட்கார்ந்திருந்தப் பகுதிக்கு வந்தான். அவ னோடு வேறு ஒருத்தனும் வந்தான். இருவரும் அந்த விஸ்கி போத் தலைப் பங்கு போட்டு குடிக்கத் தொடங்கினார்கள். அவர்களோடு ஒரு வெள்ளைக்காரியும் சேர்ந்தாள். மூவரும் அப்போது சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.
இதனைக் கவனித்த பணிப்பெண் நின்று கொண்டு மதுஅருந்தக் கூடாது என்றாள். அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் தங்கள் பான விருந்தைத் தொடர்ந்தார்கள். கூடவே சிகரெட்டும் புகைத்துப் புகை விட்டுக் கொண்டார்கள்.
பதின்மூன்றரை மணி நேரத்தில் கூட ஒரு சிகரெட்டை, மதுவைத் “தியாகம்” செய்ய முயற்சிக்காத மனிதர்களாக இவர்கள் இருக்கிறார் களே? அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம் என்பதைக்கூட மறந்து விட்டார்களே.
விமானப் பயணங்களில் மூன்றாம் உலக நாட்டு மக்களில் பலர் நாகரிகம் இல்லாமல் நடப்பதாகப் பிரசாரம் செய்கிறார்களே. அவர்
ロ |6

லண்டன் முதல் கனடா வரை. ப
களின் கண்களில் இதுபோன்ற காட்சிகள் தெரியவில்லையா? என்று நினைத்துக் கொண்டே அங்கே இருக்கப் பிடிக்காமல் என் இருக்கைக்கு வந்து உட்கார்ந்தேன்.
அப்போதுகூட என் மூக்கில் சிகரெட் புகையின் வாசனை ஒட்டி யது போலிருந்தது. இன்று பல விமானங்களில் புகைப் பிடிப்பதைத் தடை செய்திருக்கிறார்கள். ஆனால், சில விமானக் கம்பனிகள் வர்த் தகத்திற்காகப் புகைப் பிடிப்பதை அனுமதிக்கின்றன.
அது நவீன விமானம். ஒவ்வொரு இருக்கைக்குப் பின்னாலும் சிறிய தொலைப்பெட்டி பூட்டப்பட்டிருந்தது. பல திரைப் படங்கள் ஓடிக் கொண்டிருக்கும். பொத்தான்களை அழுத்தி விரும்பியதைப் பார்க்க வேண்டியதுதான். பொத்தான்களை அழுத்தி அழுத்திப் பார்த் தேன். பல ஆங்கிலத் திரைபடங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
அங்கிருந்து தொலைபேசி அழைப்பு எடுக்கவும் முடியும். அதற் கான வசதியும் இருந்தது. எந்தத் திரைப்படமும் பார்க்கப்பிடிக்காமல் எல்லாவற்றையும் செயலிழக்க வைத்துவிட்டு மெளனமாக யோசித் தேன்.
விமானம் இன்னும் கொஞ்ச நேரத்தில் லண்டன் ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்தில் இறங்கப் போவதாக அறிவித்தார்கள். விமானம் இறங்கி ஓடி நின்றது. கதவு திறக்கவில்லை. அதற்குள் இருக் கையில் இருந்தவர்கள் யாவரும் எழுந்து தங்கள் தலைக்கு மேல் வைத்த “பேக்”குகளை எடுக்கத் தயாரானார்கள்.
பதின்மூன்றரை மணிநேரம் இருந்தவர்களுக்கு மேலும் பத்தோ பதினைந்தோ நிமிடம் காத்திருக்க முடியவில்லை. நான் கூட்டம் குறை யட்டும் என்று காத்திருந்தேன். கூட்டம் குறைந்ததும் எனது சிறிய சூட் கேஸைத் தூக்கிக் கொண்டு விமானத்தை விட்டு வெளியே நடந்தேன்.
விமானத்தை விட்டு வெளியேறியதும் விமான நிலையத்திற்குள் போகிற பாதை. எனவே லண்டன் வானம் தெரிவதற்கு வாய்ப்பில்லை.
உள்ளேயே வெகுதூரம் நடந்து குடிவரவு - குடியகல்வு அதிகாரி களைப் பார்ப்பதற்காக வரிசையில் நின்றேன்.
ஒரு அதிகாரி ஒவ்வொருவரையும் பார்த்து இலக்கம் சொன்னார். எனக்கு ஒரு இலக்கம் சொன்னார். நான் போய் நின்றேன். கண்ணாடி அணிந்த வெள்ளைக்கார அதிகாரி என் கடவுச்சீட்டையும் என்னை
17 D

Page 11
D மாத்தளை சோமு
யும் பார்த்துவிட்டு கேட்டாரே ஒரு கேள்வி: “நீங்கள் ஏன் லண்டன் வருகிறீர்கள்?”
எனக்குப் பெரிய அதிர்ச்சி. சட்டபூர்வமான கடவுச்சீட்டு என்னி டம் இருக்கிறது. சிட்னியில் இருந்து வருகின்றேன். ஏன் இப்படிக் கேட்க வேண்டும்? ஒரு விநாடியில் அந்த அதிகாரியின் கேள்வியின் பின்னணி எனக்குப் புரிந்தது.
நான் எங்கிருந்து வந்தாலும் எனது அடையாளம் கறுப்பு அல் லவா? எனவே சந்தேகம். நான் திருப்பிக் கேட்டேன். “நீங்கள் என் னைப் போன்ற பயணிகளை விரும்பமாட்டீர்களா?”
“நோ. நோ.” என்ற அதிகாரி அடுத்த கேள்விக் கேட்டார். “எத்தனை நாள் தங்கப் போகிறீர்கள்?”
“பத்து அல்லது பன்னிரெண்டு நாட்கள்.” “எவ்வளவு டாலர் இருக்கிறது.?”
“அறுநூறு டாலர்.”
அதற்கு மேல் கேள்விகள் வரவில்லை. கடவுச் சீட்டின் இதழ் களைப் புரட்டிப் பார்த்துவிட்டு விஸா முத்திரையிட்டபிறகு கடவுச் சீட்டை என்னிடம் கொடுத்துவிட்டு வாழ்த்தினார்.
“உங்கள் பயணம் எங்கள் நாட்டில் இனிதாக இருக்கட்டும்.”
“வெள்ளை அதிகாரியின் முகம் கடமைக்காகச் சிரித்தது. என்னுள் எழுந்தக் கோபமெல்லாம் அவரின் வாழ்த்தில் கரைந்தது. மனவியல் படித்தவர்கள் வெள்ளைக்காரர்கள். கோபம் வருமாப் போல் கேட்டு விட்டுக் கடைசியில் வாழ்த்துவார்கள். கோபமெல்லாம் ஓடிவிடும்.
மேலும் அந்த வெள்ளைக்கார அதிகாரி மீது கோபப்பட்டுப் பலன் இல்லை. பல முட்டுக்கட்டைகளைப் போட்டாலும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான். பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து எப்படியோ குடியேறுபவர்கள் லண்டனில் குடியேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனை அந்த விமான நிலையத்திலேயே பார்த்தேன். ஆசிய நாட்டு முகங்கள்தான் எங்கு பார்த்தாலும் அங்கு தெரிந்தன.
சுங்க அதிகாரியிடம் போய் நின்றபோது என்னையும் எனது சூட் கேஸையும் பார்த்த பார்வை மோசமாக இருந்தது. ஒரு தனி நபருக்கு இவ்வளவுப் பொருட்களா என்பதே அந்தப் பார்வையின் அர்த்தம்.
8

லண்டன் முதல் கனடா வரை.
“நான் கனடா வரைப் போகிறேன். அதுதான் இவ்வளவு பொருட்கள்.”
“பொருட்கள் என்றது புத்தகங்களைத்தான்.” எனது கடவுச் சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டுப் போகச் சொல்லிவிட்டார்.
தள்ளுவண்டியில் இந்தப் பொதிகளோடு விமான நிலையத்தின் உள்ளரங்கை விட்டு வெளியே வந்தேன். எவரும் என்னை எதிர்நோக் குவதாகத் தெரியவில்லை. பயணிகள் சந்திப்பு இடத்தில் நின்றேன்.
“ஈழகேசரி’ராஜகோபாலை நேரில் நான் பார்த்ததில்லை. எனவே, நான் தாடியோடு இருப்பேன் என்று அடையாளம் சொன்னார். நான் தாடியுடன் கூடிய ஒருவரைக் கண்களால் தேடினேன்.
வெள்ளைக்காரத் தாடிகள் இருந்தார்களே தவிர ராஜகோபாலைக் காணவில்லை. நேரம் ஓடியது. ஒரு பெஞ்சில் உட்கார்ந்தேன். மணி ஏழுக்கு மேலாகியது. எந்தத் தாடிக்காரையும் காணவில்லை.
வெகுநேரம் யோசித்துக் கொண்டே வருபவர்கள் போவோர் களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏழரை மணியைப் போல் தாடி யுடன் புன்னகையோடு ஒருவர் வந்தார். அவரோடு இன்னொருவர்.
“நான் ராஜகோபால், வாங்க போவோம்” என்று அந்தத் தாடிக் காரர் சொன்னபோதுதான் எனக்கு நிம்மதியே வந்தது.
“என்னுடைய கார் விபத்துக்குள்ளாகிப் பத்து நாளாகி விட்டது. மச்சானுக்காகக் காத்திருந்தேன். மச்சானுக்கு ஆறு மணிக்குத்தான் வேலை முடிந்தது. அதற்குப்பிறகு இருவரும் புறப்பட்டுவரத் தாமத மாகி விட்டது.”
தாமதமாக வந்ததைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார் ஈழ கேசரி ராஜகோபால். நானோ அவர்கள் இப்போதாவது வந்தார்களே என்ற எண்ணத்தில் இருந்தேன்.
லண்டனில் - 3
லண்டனில் உபநகரங்களை இணைத்துக் கொண்டு ஓடுகிற சுரங்க ரயில் போக்குவரத்தைச் சுருக்கமாக டியூப் (Tube) என்கிறார்கள். ஒரு பெரிய குழாய்க்குள்ளே தண்டவாளம் போட்டு அதில் ரயில் ஓடி
9

Page 12
0 மாத்தளை சோமு
னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அங்கே டியூப் ரயில் ஒடுகிறது.
அதில் நகரின் முக்கிய பகுதிகளுக்கு மிக விரைவாகவே போகலாம். பெரும்பாலான லண்டன் வாசிகள் தினந்தோறும் அதில் தான்
வேலைக்குப் போய் வருகிறார்கள்.
பஸ்களுக்கும் குறைவில்லை. இரட்டைத் தட்டு பஸ்கள் கூட இருக்கின்றன. ஆனால் லண்டன் வீதிகள் போக்குவரத்து நெரிசலைக் கொண்டவை.
குறுகலான வீதிகளும் எக்கச்சக்கமான முச்சந்திகளும் நாற் சந்தி களும் வேகமான போக்குவரத்துக்குத் தடையாகவே இருக்கின்றன.
லண்டனில் இறங்கிய அன்றே விமான நிலையத்தில் இருந்து எனது நண்பன் ராஜகோபால் வீட்டுக்குக் காரில் போனபோது லண்டன் வீதியையும் அதன் தலைவிதியையும் உணர்ந்தேன். மறுநாள் ராஜ கோபால் வீடு இருக்கிற டூட்டிங் (Tooting) என்ற உபநகர் வீதியைப் பார்த்தபோது லண்டனில் பஸ் பயணம் உதவாது என்ற முடிவுக்கு வந்தேன்.
டூட்டிங் ஒரு உபநகரம். ஆனால் தமிழர்கள், இந்தியர்கள் அதிக மாக இருக்கிற பகுதி. லண்டனின் முதலாவது தமிழர் நகை மாளிகை யும் அங்குதான் இருக்கிறது.
வீதியோரங்களில் நடந்தால் எதிரே வருவது நிச்சயமாய் ஒரு இலங்கைத் தமிழரோ, இந்தியரோ, கறுப்பராகத்தான் இருக்கும்.
வாய்க்கும் வயிற்றுக்குமே வசதியான பகுதி. பல இலங்கை இந் திய உணவுக் கடைகள் அங்கு இருப்பதைத்தான் சொல்கின்றேன்.
வட இந்தியர்கள் குறிப்பாக காந்தியின் மாநிலத்தவர்களான குஜ ராத்திகள் மினி மார்க்கட்டுகளையும், துணிக்கடைகளையும் வைத்தி ருந்தார்கள்.
வீதிகளில் கறுப்பர்களின் நடமாட்டமே அதிகமாக இருந்தது. வெள்ளையர்களை விரல்விட்டு எண்ணலாம் போல் தோன்றியது. ராஜகோபாலின் வீட்டில் இருந்து ஐந்து நிமிட வேக நடையில் ஒரு டியூப் ஸ்டேசன் இருந்தது. எனக்கு வசதியாகப் போயிற்று.
லண்டன் போன மூன்றாவது நாள் நான் தனியாக நகரைப் பார்க்கக் கிளம்பினேன்.
D 20

லண்டன் முதல் கனடா வரை.
டியூப் ஸ்டேஷனில் என்னை ரயில் ஏற்றிய ராஜகோபால் நகரில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றியக் குறிப்பையும் தந்தார். நான் தனியாகப் போகவே விரும்பினேன். அப்போதுதானே அனுபவங் கள் வந்து சேரும்?
லண்டனைப் பொறுத்தவரை மொழிப் பிரச்சனை இல்லை. ஆங்கிலம் தெரிந்தால் போதும். அது தெரியாவிட்டால் கூட தமிழோ, இந்தியோ, சிங்களமோ கைகொடுக்கும்.
டியூப் ரயில் நகரத் தொடங்கியது.
மிகப் பழையது. பயணிகள் இருந்து போவதை விட நின்றுக் கொண்டே போவதற்கு வசதி செய்யப்பட்டது போல் இருந்தது. தானாக மூடித் திறக்கிற கதவு
எனக்கு என்னவோ அந்த ரயிலைப் பார்க்கிறபோது சென்னை யில் ஓடுகிற மின்சார ரயிலின் ஞாபகமே வந்தது.
லண்டன் ஐரோப்பிய நாடுகளின் தலைநகராய் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் இந்த ரயிலையும் பார்க்கிறபோது பின்தங்கிப் போனார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது. சிட்னியில் இரட்டைத் தட்டு வசதிக் கொண்ட ரயில் வசதியாய் ஓடுகிறது. நின்று கொண்டு போக வசதிக் குறைவு.
தங்காரா என்ற ஆதிவாசிப் பெயர் கொண்ட புதிய ரயில்கள் பயணிகளைக் கவர்கின்றன.
சிட்னியில் இருந்து லண்டன் வந்ததால் சிட்னியையும் லண்ட னையும் ஒப்பிட்டுப் பார்ப்பது எனக்கே தவிர்க்க முடியாது போனா லும் லண்டனின் மக்கள் தொகை சிட்னியைவிட பல மடங்கு அதிகம் என்பது எனக்குத் தெரியும்.
இப்போதைய கடைசித் தகவலின் படி லண்டன் மக்கள் தொகை ஏழு மில்லியனுக்கும் அதிகம்.
தினமும் 125 மில்லியன் மக்கள் வேலையின் நிமித்தம் லண்ட னுக்கு அப்பால் இருந்து வந்து போகிறார்கள்.
இதுபோக ஆண்டு தோறும் உலகம் முழுவதுமாய் வருகிற தொகை 23 மில்லியன் மக்களாவர். சென்னை, கொழும்பு, கராச்சி, கோலாலம் பூர் போன்ற நகரங்களைப் போல் லண்டனில் மக்கள் தொகை அதிகம்.
2

Page 13
D மாத்தளை சோமு
பெருகிவரும் கார்கள், போக்குவரத்து, வெளி நாட்டுப் பயணி கள் தொகை என்பனவற்றால் திணறிக் கொண்டிருப்பதே நிஜம்.
குறிப்பாக லண்டனின் கார் நெரிசல் உலகப் புகழ்பெற்றது.
ஒரு காலத்தில் உலகத்தையே கட்டியாண்ட லண்டன் இன்று தன் வீதிகளைக் கட்டி ஆள முடியாமல் இருப்பது வியப்பானது தான்.
ஸ்டொக்வெல் (Stokwel) என்ற இடத்தில் ரயிலை விட்டு இறங்கி வேறு மார்க்கமாகப் போகிய ரயிலைப் பிடிப்பதற்காக சுரங்கப் பாதை யில் நடந்தேன்.
பல்வேறு விளம்பரங்கள் கண்களைக் கவர்ந்தன. போகிற வாக் கில் பார்த்துக் கொண்டு போன போது விளம்பரங்களுக்கிடையில் இருந்த கவிதை என்னை நிற்க வைத்தது. வெள்ளி அன்னம் (Silver Swan) என்றத் தலைப்பில் ஆங்கிலத்தில் இருந்த கவிதையின் தமி ழாக்கம் இதுதான்
வாழ்ந்தபோது பாடாத வெள்ளி அன்னம் மரணம் வந்தபோது நெஞ்சைச் சாய்த்து முதலாகவும் கடைசியாகவும் பாடியது.
அனைத்து இன்பங்களே விடை பெறுகின்றேன் !
ஒ. மரணமே வந்து என் கண்களை முடு!
அன்னங்களை விட வாத்துகள் அதிகமாகவும் அறிவுஜீவிகளை விட முடங்களும் வாழ்கின்றன ! மிக அற்புதமான கவிதை அது. அதுபோன்ற பல கவிதைகள் சுரங்கப் பாதைகளில் இருக்கின்றன.
லண்டன் வாழ் கவிஞர் கூட்டம் ஒன்று சுரங்கப் பாதையில் உள்ள வெற்றுச் சுவர்களில் கவிதைகள் எழுதும் ஆவலில் லண்டன் சுரங்கப்
பாதை அமைப்பிடம் கேட்டது. அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
22

லண்டன் முதல் கனடா வரை.
1986இல் சுரங்கப் பாதையில் கவிதை எழுதும் முயற்சி தொடங்கியது. பல கவிஞர்களின் கவிதைகள் இன்று சுரங்கப் பாதையின் சுவர்களில் இருக்கின்றன.
தமிழ் நாட்டில் பேருந்துகளில் திருக்குறளை எழுதி வைத்திருப் பதை இதனோடு மனதுக்குள் ஒப்பிட்டுக் கொண்டேன். அது நல்ல முயற்சி. ஆனால் எத்தனைப் பேர் படித்திருப்பார்கள். ஏனென்றால் எழுத வாசிக்கத் தெரியாதவர்கள் இன்னமும் தமிழ்நாட்டில் இருக் கிறார்களே!
கையில் உள்ள குறிப்புப்படி வேறு மார்க்கத்தில் சுரங்கப் பாதை ரயில் ஏறிப் பயணம் செய்து வெளியே வந்தேன்.
இப்போதுதான் வானத்தையே பார்த்தேன். வெளிச்சம் மங்க லாக இருந்தது. குளிர்ந்தக் காற்று வீசியது. சிலர் கையில் குடை யோடு நடந்தார்கள்.
மழை பெய்யும் என்று வானிலை அறிக்கைச் சொல்லியிருக்க லாம். என் கையில் கெமரா மட்டுமே இருந்தது. மழை வருவதற்குள் படம் பிடிக்க வேண்டுமென்று வேகமாக நடந்தேன்.
லண்டன் நகரை அழகுபடுத்தியவாறு வளைந்து ஓடிக் கொண்டி ருக்கும் தேம்ஸ் (Thames River) நதியின் கரையில் அமைந்திருக் கிறது. பிரிட்டனின் இன்றைய நாடாளுமன்றம். ஒரு காலத்தில் பாராளு மன்றமாய் இருந்தது. மிக அற்புதமான கட்டிடம் அது.
1547ஆம் ஆண்டில் புனித ஸ்டீபன் சேர்ச் நாடாளுமன்றமாக முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.
1834ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனை, நாடாளுமன்றக் கட்டிடம் தீக்கிரையாகியது. பிறகு புனித ஸ்டீபன் ஆலயத்தின் கீழ்ப் பகுதியில் நாடாளுமன்றம் நடந் தது. 1941இல் இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர் வீசிய குண் டால் அந்த மன்றமும் அழிக்கப்பட்டது.
1950இல் சேர் கைல்ஸ் கில்பர்ட் ஸ்காட் என்பவரின் கட்டிட நுணுக்கத் திறத்தால் இன்றைய நாடாளுமன்றக் கட்டிடம் உருவானது.
நாடாளுமன்றத்தின் பின்புறத்தில் உலகம் வியக்கும் பிக்பென் (Big Ben) என்ற மணிக்கோபுரம் லண்டனுக்கு வருகிற பயணிகளை வரவேற்பது போல் நிற்கிறது.
23 D

Page 14
மாத்தளை சோமு
நேரத்தைக் காட்டுகின்றபோது அதனுடைய அழகும் இனிமை கலந்த மணி ஓசையும் பார்க்கவும் கேட்கவும் உற்சாகமாக இருக்கும்.
அந்த மணி ஓசையை லண்டன் மக்கள் மட்டும் கேட்டால் போதாது, என்று கருதி பிரிட்டனின் வானொலி மூலமாக உலக மக் கள் யாவரும் கேட்கும் வாய்ப்பையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
மணி என்னவென்று பார்த்தேன். பகல் பதினொன்றரை மணி, பன்னிரண்டுக்கு முப்பது நிமிடம்.
முப்பது நிமிடம் அந்த ஒசைக்காக நிற்பதா? நின்றேன். நேரம் போகப் போக ஒரு பெருங் கூட்டமே கூடி விட்டது பகல் பன்னிரண்டு மணி ஓசையைக் கேட்பதற்காக,
ஆம்!
பன்னிரண்டு தடவை மணி அப்போது அடிக்குமே!
லண்டனில் - 4
வெஸ்ட் மினிஸ்டர் என்ற பகுதி இன்றைய லண்டனின் அரசி யல் சதுக்கமாகும். அங்குதான் புகழ்பெற்ற வெஸ்ட் மினிஸ்டர் ஆபி இருக்கிறது. அதன் சரித்திரம் 11ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங் கியபோதும் இன்றும் அது கிறிஸ்தவத் திருமடமாய் இருக்கிறது.
நான் அங்குப் போன போது மதக் கல்வியில் இணைந்த சிறுவர் கூட்டத்தைப் பார்த்தேன். கறுப்பு உடையில் போய்க் கொண்டிருந்தார் கள். லண்டன் கிறிஸ்தவ மக்களுக்குப் புகழ்பெற்ற இடமான இங்கு பிரிட்டனின் அரசர்கள் முடிசூடிக் கொள்கிற தேவாலயமும் புகழ் பெற் றவர்களின் கல்லறைகளும் இருக்கின்றன.
பார்ப்பதற்கு அழகாகவும் ஆங்கிலேய “கோத்திக்” கட்டிடக் கலையின் சிறப்பை எடுத்துக் காட்டுவதாகவும் இந்த வெஸ்ட் மினிஸ் டர் ஆபி இருக்கிறது. இங்குதான் 1066இல் முதலாவது பிரிட்டனின் அரசக் குடும்பத்தவர்களின் முடிச்சூட்டு வைபவம் நடந்தது.
அன்றிலிருந்து இன்றுவரை பிரிட்டனின் எல்லா அரசர்களும், அரசிகளும் இங்கு வந்துதான் முடிசூடிக் கொண்டிருக்கிறார்கள்.
о 24

லண்டன் முதல் கனடா வரை. ப
நான் தனியே வந்ததால் எனது வசதிக்கு ஏற்ப மெதுவாக நடந்து சுற்றிப் பார்த்தேன். ஆனால், அங்கு பயணிகள் குழுக் குழுவாய் வந்து கொண்டே இருந்தார்கள்.
அந்தக் குழுக்களுக்கெல்லாம் ஒரு 'கைட் வழி காட்டிக் கொண் டும் கதை சொல்லிக் கொண்டும் இருந்தார். அரசு நியமித்த கைட்களான அவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள்.
நான் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தபோது ஒரு பயணிகள் குழுவும் கைட் ஒருவரும் வந்தார்கள். அந்த கைட் சொன்ன வார்த் தைகள் எனக்கும் கேட்டன.
இப்போது நீங்கள் நின்று கொண்டிருக்கிற இடத்திற்குக் கீழே ஒரு பிரபலமான விஞ்ஞானியோ, எழுத்தாளரோ, கவிஞரோ உறங் கிக் கொண்டிருப்பார்”
அந்த வழிகாட்டி சொன்னது உண்மை. அந்த இடத்தில் பிரபல மான ஆங்கிலக் கவிஞரின் கல்லறை இருந்ததை எழுத்துக்கள் சொல் லின. அது வெஸ்ட்மினிஸ்டர் ஆபியில் இருக்கிற புகழ்பெற்றவர்களின் கல்லறை. பிரிட்டனை ஆண்டவர்களின் கல்லறையும் அங்குதான் இருக்கிறது.
கல்லறை என்றதும் திறந்தவெளி, மலர்த்தோட்டம் என்று எண்ணி விடாதீர்கள். அது கட்டிடத்தின் உள்ளே இருக்கிற கல்லறைகள். இங்கு பலருடைய கல்லறையின் மீது தான் நடந்தே போகவேண்டும்.
அது எனக்கு முதலில் என்னவோ போல் இருந்தாலும், அங்கு வருகிறவர்கள் எல்லோருமே அதன் மீது சர்வ சாதாரணமாக நடந்து போவதைப் பார்த்ததும் மனம் தெளிந்தது. அங்கு பிரிட்டனின் மன்னர் கள், மறைந்த போர் வீரர்கள், மாபெரும் இசைவாணர்கள், எழுத்தா ளர்கள், கவிஞர்கள், மதகுருமார்கள் ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
“பிரபலமானவர்களின் கல்லறையில் தான் நின்று கொண்டிருக் கிறீர்கள்” என்று சொன்னதுமே நான் வேகமாக நடந்து வெளியே வந்தேன். திரும்பவும் அந்தக் கட்டிடத்தை ஒரு தடவை பார்த்தேன்.
அற்புதமான கட்டிடம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன் றிருந்தது. ஆனால், இன்னும் பார்க்க வேண்டிய நிறைய இருந்ததால் நடந்தேன். குளிர்காற்றுத் தேகத்தைத் தழுவியது.
25 D.

Page 15
p மாத்தளை சோமு
தேம்ஸ் நதியின் ஒரு ஓரமாக நடந்துபோனால், “டவர் ஆப் லண்டனுக்கும்”, “டவர் பிரிட்ஜு’க்கும் போகலாம். “டவர் ஆப் லண்டன்’ (Tower of London) பிரிட்டனிலுள்ள கோட்டைகளில் முக்கியமானது. இது இங்கிலாந்தின் சரித்திரத்தோடு தொடர்புடையது.
ஒரு நகரத்தைக் காக்கும் அரணாகவும் இருந்தது. இங்கு அரண் மனைக் கைதிகளின் சிறைச்சாலை, நாணயம் அச்சிடும் சாலை, மிருகக் காட்சிச் சாலை என்பன இருந்தன. 1078இல் வெள்ளைக் கோபுரம் கட்டப்பட்டது. அதன் பிறகு பல ஆண்டுகள் பல பகுதிகள் கட்டப் பட்டன.
14ஆம் நூற்றாண்டில் வெளி மதில்கள் கட்டி முடிக்கப்பட்டன. இங்கு பல பிரபல்யமானவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கின்றார்கள். பலரின் தலைகள் இங்கு வெட்டப்பட்டிருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், இந்தக் கோட்டையின் சரித்திரம் இரத்தத்தில் தோய்ந்தது. இங்குதான் ஆறாவது ஹென்றியும் மன்னருக்குத் துரோகம் செய்த ஆன்பொலின் என்ற அரசியும் மற்றும் சிலரும் தலை துண்டிக்கப்
Ll|Ll-6JI[T.
இந்தக் கோட்டையோடு உள்ள “வாக் பீல்ட் டவர்” (Wake Field Tower) என்ற இடத்தில் அரசக் குடும்பத்தவரின் மகுடம் சூட்டும் போது தேவையான மகுடம் (Crown Jewels) மற்றும் நகை நட்டுக் களை வைத்திருக்கிறார்கள்.
உலகப் புகழ்பெற்ற இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட “கோஹினூர்” வைரம் இங்கு வைக்கப்பட்டுள்ள அரசியின் மகுடத் தில் இருக்கிறது. இந்தக் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத் தைப் பற்றி ஒரு ரகசியச் செய்தி இருக்கிறது. அது நிஜமா பொய்யா தெரியவில்லை. செய்தி இதுதான்.
இந்தக் “கோஹினூர்” வைரம் பதித்த கிரீடத்தை அணிந்திருந்த மன்னர்கள் தொடர்ந்து எல்லோரும் அகால மரணம் அடைந்ததால் பிரிட்டிஷ் இளவரசியார் அதை இப்போதெல்லாம் அணிவதே இல்லை.
“கோஹினூர்” வைரத்தை மீட்க வேண்டுமென்று இந்தியாவில் அரசியல் ரீதியாகச் சில குரல்கள் எழுந்து ஓய்ந்தன. ஆனால், இன்று அந்நியப்பட்டதுபோல் இந்த டவரில் வைக்கப்பட்டிருக்கிறது அது.
D 26

லண்டன் முதல் கனடா வரை.
எனக்கு அந்த வைரத்தைப் பார்த்த போது சில எண்ணங்கள் நெஞ்சில் தோன்றி மறைந்தன. “பல நாடுகளைக் கைப்பற்றித் திருப்பிக் கொடுத்த ஆங்கிலேயர்கள், ஏனோ தெரியவில்லை இந்த வைரத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. எப்படிப் பார்த்தாலும் அந்த வைரம் இந்தி யாவுக்குச் சொந்தமானது. அதைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டி யதுதானே.”
ஜனநாயகவாதிகளாகவும், நாகரிகமானவர்களாகவும் இருக்கிற ஆங்கிலேயர்கள் இதுபோன்ற வைர விஷயங்களில் இன்னமும் ஏகாதிபத்தியவாதிகள் தான்.
லண்டனில் ஒடும் தேம்ஸ் நதிக்கு மேலே பல இடங்களில் பாலம் கட்டப்பட்டுள்ளது. முன்னர் சொன்ன கோட்டையின் அருகேயுள்ள பாலம்தான் டவர் பிரிட்ஜ் எனப்படுவது. அது உலகப் புகழ்பெற்றது. ஆங்கிலேயரின் 'கோதிக் (Gothic) பாணியில் கட்டப்பட்டு 1894 இல் திறக்கப்பட்டது. கீழே போகிற கப்பலுக்காக மேலே திறந்து வழி விடுமாப் போல் பாலம் திறந்து மூடுகிற முறையில் கட்டப்பட்டது. பாலத்தில் கார்கள், பஸ்கள் போவதற்கான பாதை உண்டு.
நகருக்கு அழகு சேர்க்கும் பாலம். லண்டன் வருபவர்கள் இத னைப் பார்க்காமல் (Tower Bridge) போகவே மாட்டார்கள். இதன் மீது நடந்து போவதே தனி சுகம். இந்தப் பாலத்தில் கீழே தேம்ஸ் நதி யோரமாக நடந்து போகப் பாதைகள் இருக்கின்றன. வெய்யில் காலங் களில் மக்கள் நடந்து போவது பொழுது போக்கு காதலர்கள் நடப் பது அவர்களுக்கு தனி இன்பம். ஆங்காங்கே உட்கார்ந்துக் கொள்ள இருக்கைகள் இருந்தன.
பகலிலேயே பார்க்க அழகாக இருக்கும். அந்த “டவர் பிரிட்ஜ்’ இரவில் எப்படியிருக்கும்? ஒரு நாட்டிய நாடகத்திற்குப் போய்விட்டு இரவு பதினொரு மணி போல் அந்தப் பாலத்தில் வழியாக ஈழகேசரி ராஜகோபால் குடும்பத்தினரோடு காரில் வந்தபோது பாலத்தைப் பார்த்தேன். எனக்காக ஒரு இடத்தில் காரை நிறுத்த நான் காரை விட்டு இறங்கி வெளியே வந்து பார்த்தேன். வெளியே குளிர் எனக்கு அந்தக் குளிரே தெரியவில்லை. என் கண்களில் பாலம்தான் இருந்தது.
பாலத்தைப் பார்த்து படமும் எடுத்துக் கொண்டு டவ்னிங் வீதிக்கு (DowningS) நடந்தேன். அந்த வீதி புகழ்பெற்றது. அதிலும் 10ஆவது
27

Page 16
மாத்தளை சோமு
இலக்க இடம் உலகப்புகழ் பெற்றது. No:10, Downing Street இல் தான் பிரிட்டன் பிரதமரின் வீடு. பிரிட்டனின் முதலாவது ஹவார்ட் பட்டதாரி (1642) சேர் ஜோர்ஜ் டவ்னிங் என்பவர் பெயரால் உள்ள வீதி
இது.
18ஆம் நூற்றாண்டில் இருந்துதான் பிரிட்டிஷ் பிரதமர்களின் இல்லமாக இது மாற்றப்பட்டது.
அங்கிருந்து மாவீரன் நெல்சன் நினைவுச் சதுக்கத்திற்குப் போனேன். அது டிராபால்கர் (Trafalgar Square) என்னும் சதுக்கத் தில் இருக்கிறது.
1805ஆம் ஆண்டில் மிகப் பெரிய கடல் யுத்தம் பிரான்ஸoக் கும் ஆங்கிலேய நாட்டுக்கும் ஏற்பட்டது. இதில் ஆங்கிலக் கடற்படைக் குத் தலைமை தாங்கிய நெல்சன், பிரான்ஸ் படைகளைத் தோற்கடித்து மிகப் பெரிய வெற்றியை ஈட்டினார்.
அதன் நினைவாக 170 அடி உயரத்தில் ஒரு பெரிய தூண் எழுப் பப்பட்டுள்ளது. இத்தூணின் அடியில் நான்கு திசைகளில் பெரிய சிங் கங்களின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நெல்சனின் உருவச்சிலையும் இருக்கிறது. மேலும் இச்சதுக்கத் திற்கு அழகூட்டும் வகையில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டு இருக்கின் றன. எப்போது பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அங்கு அதிகமாக இருக்கும். அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.
ஒரு மாநாடு கூட்டியபோது மாடப்புறாக்கள் சுதந்திரமாய் பறந்து நடந்து திரிந்து கொண்டிருப்பது பயணிகளைக் காந்தமாய்க் கவர்ந் திழுக்கும். வருகிறப் பயணிகளை இந்த மாடப்புறாக்கள் சூழ்ந்து கொள் ளும். சில அவர்களின் தோள்களில் உட்காரும். பயணிகள் அப் புறாக்களுக்குத் தீன் கொடுப்பார்கள்.
சுதந்திரத்திற்கு அடையாளமாகப் புறாக்களைப் பறக்க விடுவது ஒரு வழக்கம். இங்கு புறாக்கள் சுதந்திரமாக மனிதர்களோடு திரிகின் றன. அதற்கு ஒரு “சுதந்திர”சூழல்நிலை பிரிட்டனில் இருப்பது ஒரு கார
ணமாய் இருக்கலாம்.
ஆனால் இந்தச் சமாதானத்தைப் பல யுத்தங்களின் பின்னர் தான் பிரிட்டன் தேடிக் கொண்டதாக வரலாறு சொல்கிறது.
28

லண்டனில் - 5
இங்கிலாந்து நாட்டின் காலநிலை வியப்பானது. காலையில் நல்ல வெய்யில் அடிக்கும். மாலையில் மழை பெய்யும். குளிர் காற்றுத் திடீ ரென்று வீசும். வேலைக்குப் போகிறவர்கள் குடையையும் எடுத்துப் போவார்கள். நல்ல வெய்யிலைப் பார்த்தால், இன்று மிக அழகான நாள் என்று வர்ணித்துக் கொள்வார்கள். குளிர்காலத்தில் துணிக்கு மேல் துணி அணிந்துக் கொள்கிறவர்கள். வெய்யில் காலத்தில் மெல்லிய உடை அணியத் தொடங்குவார்கள் வருடத்தில் ஏப்ரல் மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரை நல்ல வெய்யில் இருக்கும். இந்தக் காலங்களில் சிட்னி, குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும். சிட்னி, வெய்யிலில் சிரிக் கும் போது லண்டன் குளிரில் நடுங்கும்.
குளிர் காலத்தைத் தவிர்ப்பதற்காக சிட்னியில் இருப்பவர்கள் லண்டனில் இருக்கும் தம் உறவினரைத் தேடிப் போவார்கள். அதே போல் அவர்களும் லண்டன் குளிரைத் தவிர்க்கச் சிட்னி வருவார்கள். எனக்குத் தெரிந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆண்டுதோறும் குளி ரைத் தவிர்க்கச் சிட்னியில் இருந்து லண்டன் போய் விடுவார். லண்ட னில் மகள் இருப்பதால் அது அவருக்கு வசதியாய்ப் போய்விட்டது. அவர் ஒரு தமிழர். இலங்கையில் இருந்து போனவர்.
அவரின் இந்தப் பயணத்தைப் பற்றி வேறு ஒருவர் பெருமை யாகப் பேசினாராம். “உங்கெளுக்கென்ன லண்டனில் டோட்டர் நிக் கிறா. சிட்னி, லண்டன் எண்டு போறியள்.”
அவர் அதைக் கேட்டுவிட்டுக் கவலையோடு சொன்னார்.
“இப்படிக் குளிருக்குப் பயந்து லண்டனுக்கும் பிறகு சிட்னிக்கும் போறது ஒரு வாழ்க்கையோ? இது நாடோடி வாழ்க்கை. பிரச்சனை தீர்ந்தால் என்ர ஊருக்குப் போகவேணும்!
கிழக்கோ, மேற்கோ, தாயகமே சிறந்தது (East or West-Home is Best) என்ற பழமொழியின் அர்த்தத்தை அவர் பிரதிபலிக்கவில்லை. அவரின் ஆத்ம குரலே அதுதான். இது அவரின் குரல் மட்டுமல்ல, பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கின்றவர்களின் தேசியக்குரலே அதுதான்.
29 L.

Page 17
D மாத்தளை சோமு
லண்டனில் குளிர் காலத்தில் தமிழர்களின் பொது நிகழ்ச்சிகள் கூடக் குறைவு என்றார்கள். நான் பெப்ரவரியின் இறுதிப் பகுதியில் தான் லண்டன் போனேன். அப்போதுக் கூடக் குளிர் இருந்தது.
இன்னொரு நாள் கையில் குடையோடு மறுபடியும் சுரங்க ரயில் ஏறி லண்டன் மாநகர் மத்திய பகுதிக்குப் போனேன். வெளியே குளிர் வீசியது. லேசான வெய்யில், மழை வரும் என்று சொல்வது போல் வானம். ஆனாலும் பயணிகளுக்குக் குறைவில்லை. நானும் ஒரு பயணி யாக இங்கிலாந்து மகாராணியின் அரண்மனையான பக்கிங்ஹாம் பெலஸ் (Buckingam Place) பகுதிக்குப் போனேன். பக்கிங்ஹாம் மாளிகை பிரிட்டனின் மகாராணியின் அரசு சார்பான உறைவிடம். அது 1702இல் பக்கிங்ஹாம் பிரபுவின் வீடாக அவரால் கட்டப்பட்டது. இது 1761இல் மூன்றாவது ஜோர்ஜுக்கு விற்கப்பட்டது. பிறகு நாலா வது ஜோர்ஜ் அதனை மறுசீரமைத்துத் திருத்தினார். 1915இல் மேலும் அதன் முகப்பு என்பன மாற்றிக் கட்டப்பட்டன.
நூற்றுக்கணக்கான பயணிகள் அந்த மாளிகைளைப் பார்த்து ரசிப்பதுமாய் அதன் உருவம் விழுவது போல் நின்று, படம் பிடிப்பது மாய் இருந்தார்கள்.
எனக்கு அந்த மாளிகையைப் பார்க்கிற போது மாளிகையா கவே தெரியவில்லை. மாறாக அலங்கரிக்கப்பட்ட சென்னை மத்திய சிறைச் சாலையாகவோ கண்டி போகம்பரச் சிறைச் சாலையாகவோ தான் தெரிந்தது.
கதவுகள், ஜன்னல்கள் மூடப்பட்டே இருந்தன. இரண்டே இரண்டு அரசக் காவலர் மாத்திரம் வெவ்வேறு திசையில் கடந்து கொண்டே இருந்தார்கள். அவர்கள் முகம் இறுக்கமாக இருந்தது.
பயணிகள் யாவரும் கேட்டுக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். பதினொரு மணிக்குத் தினமும் காவலர்கள் மாறு கிறநேரம் இருப்பதாக அங்கே பேசிக் கொண்டார்கள்.
அதனைப் பார்ப்பதா இல்லைப் போவதா என்று யோசித்தபோது மழை தூறத் தொடங்கியது. கையில் குடை இருந்ததால் விரித்துக் கொண்டேன். பல பயணிகள் குடை இல்லாததால் ஒதுங்க ஒரு இடம் இல்லாமல் மழையில் நனைந்தார்கள்.
ஒரு ஆலமரம் நின்றிருந்தால் கூட அதன்கீழ் ஒதுங்கி நிற்க முடியும். ஆனால் இங்கே ஒரு அரண்மனையின் முன்னே மழைக்கு
o 30

லண்டன் முதல் கனடா வரை.
ஒதுங்கக்கூட ஒரு கூரை இல்லையே! இன்னமும் அந்தப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியின் நிழல் இருக்கிறது என்பதைச் சொல்வது போல் அந்த அரண்மனை நிற்கிறதே!
குடையோடு அந்த மாளிகையை விட்டு நடந்தேன். அங்கி ருந்து ஹைட் பார்க் போகமுடியும். ஹைட்பார்க் வந்த போது மழை விட்டிருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தப் பூங்காவிற்குப் பளிங் குக் கல் நுழைவாயில் (Marble Arch) அமைக்கப்பட்டுள்ளது.
உலக அரசியலில் பல தலைவர்கள் பேச்சுக் கலையில் பயிற்சிப் பெற்ற இடமே இந்தப் பூங்காதான். இரண்டாம் உலகப் போரில் இங்கி லந்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்த வின்ஸ்டன் சேர்ச்சில் அரசி யல் பால பாடம் பயின்ற இடமே இந்தப் பூங்காதான். அங்குதான் ஒரு இடத்தில் பேச்சாளர் பகுதி (Speakers Corner) இருக்கிறது.
நான் அங்கு போனபோது ஒரு மனிதரைக் கூடக் காணவில்லை. எனக்குப் பெரும் கவலை. இங்கிருந்து நான் பேச வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இங்கே நான் பேசினால் கேட்பதற்கு யாருமே இல்லையே!
யாராவது வந்தால் விசாரிக்கலாம் என்று காத்திருந்தேன். பத்து நிமிடத்திற்குப் பிறகு ஒரு வெள்ளைக்காரர் வந்தார். அவரிடம் கேட் டேன்.
“இதுதானே ஸ்பீக்கர் கோணர்?” “ஆமாம்” “யாரும் இல்லையே?” “ஒ. நீங்கள் எதிர்பார்ப்பது ஞாயிற்றுக்கிழமை மாத்திரமே நடக்கும்.
அன்றுதான் இங்கு எவரும் பேசலாம். ஏன் நீங்களும் பேசலாம். யாரையும் விமர்சிக்கலாம் மகாராணியைத் தவிர”
வெள்ளைக்காரர் பதில் சொல்லிவிட்டுப் போனார். நான் வெறுமனே அந்த இடத்தை ஏக்கத்துடன் பார்த்துவிட்டு நடந்தேன். சிறிது தூரம் சென்றதும் நடைபாதையோரமாக இருந்த பெஞ்சில் உட்கார்ந்து சில குறிப்புகளை எனது டயறியில் எழுதத் தொடங்கினேன். -
31 ロ

Page 18
D மாத்தளை சோமு
அப்பொழுது ஒரு வெள்ளைக்காரப் பெண் அந்த பெஞ்சில் வந்து உட்கார்ந்தாள். நான் எழுதிக் கொண்டே இருந்தேன். அவள் என்னைப் பார்ப்பதும் பூங்காவைப் பார்ப்பதுமாய் இருந்தாள்.
“டயறியை எழுதிவிட்டு அவளைக் கவனித்தேன்.” “ஹாய்” என்று புன்னகைத்தாள். பதிலுக்குச் சிரித்தேன். அப்போது அவள் கேட்டாள்.
“டயறியை இப்பொழுதே எழுதுகிறாயே, இன்றைய பொழுது முடியவில்லையே!”
எனக்குச் சிரிப்பு வந்தது. அதை வெளிக்காட்டாமல் சொன் னேன். “இது டயறிதான். ஆனால் நான் எனது பயண அனுபவத்தை எழுதுகிறேன்.”
“ஓ! அப்படியானால் நீ ஒரு எழுத்தாளரா?” “ஆம். ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறேன். என் அனுபவத்தை எழுதப்போகிறேன்”
“அப்படியானால் உனக்குப் பணம் கிடைக்குமே?” மறுபடியும் புன்னகை.
“நீ சொல்வது உண்மை. ஆங்கிலத்தில் எழுதினால் காசு கிடைக் கும். நான் எழுதப் போவது தமிழில். தமிழ் என் தாய் மொழி”
“தமிழர்கள் லண்டனிலும் இருக்கிறார்களே?” “லண்டனில் மட்டுமல்ல கனடா, பிரான்ஸ், ஜேர்மன், ஆஸ்தி ரேலியா, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் எனப் பல நாடு களில் இருக்கிறார்கள்.
தொகை ஏழு கோடி இருக்கும். ஆனால் ஒரு நல்ல தமிழ் நாவலோ சிறுகதைத் தொகுதியோ 5000க்கு மேல் விற்காது.”
“அப்படியா? அப்படியானால் உங்கள் சமூகம் பின் தங்கிய சமூ கமே. நாங்கள் ராணியை விட வில்லியம் ஷேக்ஸ்பியரை மதிக்கி றோம். இந்திய எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகங்கள் கூட ஆயிரக் கணக்கில் விற்கிறதே.”
அவளிடம் மகாகவி பாரதியையே புரிந்து கொள்ளவில்லை எங் களில் பலர் - என்று சொல்ல வாயெடுத்துவிட்டு மெளனமாகி விட்டேன்.
DI 32

லண்டன் முதல் கனடா வரை.
நான் வீட்டிற்குத் திரும்பியபோது மணி ஐந்திருக்கும். வீட்டில் ராஜகோபால் அவர் மனைவி ராகிணி, மகள், மகன் என மொத்தக் குடும்பத்தினரும் இருந்தார்கள். அவர்கள் எல்லோரையும் ஒன்றா கப் பார்ப்பது இந்த மூன்று நாளிலேயே அபூர்வமாக இருந்தது.
திருமதி ராகினி ராஜகோபால் அரசுப் பள்ளியில் ஒரு நாட்டிய ஆசிரியை, வெள்ளைக்காரப் பிள்ளைகளுக்கும் பரத நாட்டியம் சொல் லிக் கொடுக்கிறார்.
சொந்தமாக நாட்டியாலயா என்ற பெயரில் ஒரு நாட்டியப் பள்ளி வைத்திருக்கிறார். சனி, ஞாயிறும் பரத நாட்டிய வகுப்பு நடக் கும். மகள் பல்கலைக்கழகத்தில் மகன் உயர்கல்விப் பரீட்சை எடுக்க இருப்பதால் இடைவிடாத படிப்பு. ராஜகோபாலுக்கு அந்த மாத ‘ஈழ கேசரி இதழை வெளியிட வேண்டிய வேலை. அதனோடு புதினம் என்ற பெயரில் இலவச இதழையும் வெளியிடுகிறார்.
கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் பத்திரிகையாளராக இருந்த அவர் இன்று லண்டனில் ஒரு பிரபல்யமான தமிழ்ப் பத்திரிகையாளர். ஐரோப்பாவில் வெளிவந்த முதல் தமிழ்ப் பத்திரிகையான தமிழன் இதழிலும் அவர் பங்கு இருக்கிறது. அதற்கு அவர்தான் ஆசிரியர்
லண்டனில் - 6
லண்டனுக்கு நான் வந்து விட்டதையும் எனது இலக்கியக் கலந் துரையாடல் நிகழ்ச்சி இருப்பதையும் அங்குள்ள தமிழ் வானொலி நிகழ்ச்சிகளில் விளம்பரம் செய்யத் தொலைபேசி அழைப்புகள் வந்தன.
அவ்வாறு வந்தவைகளில் ஒன்று முல்லை அமிழ்தனின் அழைப்பு, அவர் எழுத்தாளர், கவிஞர். பல சிறுகதைகளை எழுதி யிருக்கிறார்.
இரவு வேலை செய்தாலும் ஒருநாள் ஒதுக்கி என்னோடு நகருக்கு வந்து உலகப் புகழ்பெற்ற மேடம் டுசட்டின் (MadameTussard) மெழுகு பொம்மை கண்காட்சி சாலைக்கு என்னைக் கூட்டிப் போனார். லண்ட னுக்கு வருகிறவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு இடம் இது.
33 ロ

Page 19
மாத்தளை சோமு
இந்தக் கண்காட்சிச் சாலையின் நுழைவு வாயிலில் மிக நீண்ட வரிசை காத்திருந்தது. அதில் நானும் முல்லை அமிழ்தனும் சங்கமித் தோம். பலநாட்டுப் பயணிகள் உள்ளே போகக் காத்திருந்தார்கள்.
வரிசையில் நின்று கொண்டே முல்லை அமிழ்தனிடம் பேச்சுக் கொடுத்தேன். டிக்கெட் வாங்கி உள்ளே போகவே நீண்ட நேரம் ஆகும் போல் இருக்கிறதே உள்ளே மெழுகு பொம்மைகளைப் பார்ப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ!
முல்லை அமிழ்தன் சொன்ன பதில் எனக்கு வியப்பாக இருந் தது. “நானே இன்று தான் இங்கே வருகின்றேன்.”
மதுரையில் இருந்து கொண்டு தேர்த் திருவிழாவுக்குப் போகாத வர்கள் பலர் இருக்கிறார்கள். அதுபோலத்தான் இதுவும் என்று நினைத் துக் கொண்டு அமிழ்தனிடம் கேட்டேன். “ஏன் நீங்கள் இதனைப் பார்க்கவில்லை?”
“நான் பிரிட்டனுக்கு வந்தே சில ஆண்டுகள் தான் ஆகின்றன. இரவு வேலை செய்கிறேன். பகலில் தூங்கவே நேரம் சரி. எனவே இதனைப் பார்க்க நேரமில்லை. உங்களால் தான் எனக்கு இன்று இந்த அதிஷ்டம்” வரிசை மெதுமெதுவாய் நகர்ந்தது. அமிழ்தனோடு பேசத் தொடங்கினேன்.” எப்படி இருக்கிறது உங்களின் பிரிட்டன் வாழ்க்கை? “எல்லாப் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை போல்தான் எனக்கும் இயந்திர மயமான வாழ்க்கை. முகவரியைத் தொலைத்து விட்டு முகவரி தேடுபவர்களாய் இருக்கிறோம். இதில் எப்போதாவது எழுதுவது மனதுக்கு இதமாக இருக்கிறது.”
“எந்தெந்தப் பத்திரிகைகளில் எழுதுகிறீர்கள்?”
“லண்டனில் இருந்து வரும் ஈழகேசரி, இலவச இதழ் புதினம், வீரகேசரி’
“லண்டனில் எத்தனை பத்திரிகைகள் வருகின்றன?”
“இங்கே ஈழகேசரி புலம் பெயர்ந்தவர்களுக்காக, இலவசமாய் புதினம் அஞ்சல், பாரிஸிலிருந்து வருகிறது. ஈழநாடு, சமய சஞ்சிகை கலசம் என்பனதான் இப்போது வருகின்றன. இதுபோக பத்மநாப ஐயர் ஆண்டுதோறும் ஒரு அமைப்பின் கீழ் இலக்கிய மலர் வெளியிடு கிறார். நாளிதழ் நின்று போய்விட்டது. புலம் பெயர்ந்த போது தமிழில்
DI 34

லண்டன் முதல் கனடா வரை.
வெளிவந்த தரமான சஞ்சிகைகள் இன்று வருவதேயில்லை. லண்டன் முரசு வருவதில்லை.”
“என்ன காரணம்?”
“தமிழில் படிப்பவர்கள் தொகையே புதிய சூழ்நிலையில் குறைந்து போய் விட்டது.”
நுழைவாயிலை நாங்கள் நெருங்கியதால் பேட்டி போல் ஆன எங்கள் உரையாடல் நின்றது.
அமிழ்தன் எனக்குச் சேர்த்து அனுமதிச் சீட்டை வாங்கினார். அதன் தொகை மிக மிக அதிகம். பொம்மைகளைப் பார்க்கவா இவ் வளவு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். உள்ளே போய்ப் பார்த்தப் போது அந்த நினைவு எவ்வளவு தவறு என்பதை உணர்ந்து கொண்டேன்.
உள்ளே போனதுமே ஒரு ஹாலிவூட் நடிகரின் பொம்மை. உற்றுப் பார்த்தேன். உயிராக நிற்பது போல் இருந்தது. அவரோடு போகிறவர் களையெல்லாம் நிற்கச் சொல்லிப் போட்டோ எடுத்தார்கள். இருவர் கெமராவோடு மாறிமாறி அந்த வேலையைச் செய்தார்கள்.
ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் அங்கே வருகிறார்கள். அத்தனைப் பேரோடும் அவர்கள் படம் பிடிக்கிறார்கள். எத்தனை எத்தனை பிலிம்ரோல்? ஏன் பிடிக்கிறார்கள்? பிறகு தான் தெரிந்தது. அதுவும் ஒரு வர்த்தகத் தந்திரம் என்று அங்கே போட்டோ எடுப்பவர் அந்தக் கண்காட்சி அரங்கை விட்டுப் போகப் பலமணி நேரம் எடுக்கும்.
அதற்குள் பிலிம்மைக் கழுவிப் படத்தை அச்சிட்டு அரங்கத்தை விட்டு வெளியே போகிற இடத்தில் வைக்கிறார்கள். அங்கே எங்களின் போட்டோ தயாராக இருக்குமாம்! அந்தப் போட்டோவை அன்பளிப் பாகவா கொடுக்கிறார்கள்? எனக்கே அதற்குப் பதில் தெரியாது. அரங்கை விட்டு வெளியே போகும் போது பார்ப்போமே!
பதவியில் இருந்த, இருக்கிற உலகப் புகழ் பெற்றவர்களின் உரு வங்கள் அந்தக் கண்காட்சிச் சாலையில் தத்ரூபமான மெழுகு பொம் மைகளாக நிற்கின்றன. அமரரானவர்களின் மெழுகு பொம்மைகளும் அதில் அடக்கம். ஹிட்லரின் மெழுகு பொம்மைகூட இருக்கிறது. பெரும்பான்மையான மெழுகு பொம்மைகள் தத்ரூபமாய் இருக்கின்
35

Page 20
மாத்தளை சோமு
றன. மனிதர்களைப் படைக்கிற சக்திக்கே சவால் விடுகிற மெழுகு பொம்மைகள். அவைகளைப் பார்க்கிற கண்கள் பிரமித்து நிற்கும்.
சில மெழுகு பொம்மைகளைப் பார்த்த போது மிக நுணுக்கமாக அதனை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. உதட்டோ ரத்தில் மிதக்கிற புன்னகை, கண்களில் தெரிகிற பரவசம், முகத்தில் ஓடுகிற கவர்ச்சி என்பனவற்றைக் கூட மிக நுணுக்கமாக உணர்ந்து ஞாபகமாய்ச் செதுக்கியிருக்கிறார்கள்.
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் புன்னகைக்காதது கூட அந்த மெழுகு பொம்மையை உருவாக்கிய சிற்பிக்குத் தெரிந்திருக்க வேண் டும். இல்லாவிட்டால் இறுக்கமான முகத்தோடு இருக்கிற நிஜமான நரசிம்மராவ்வை எப்படி அங்கு கொண்டுவர முடியும்?
புகழ் பெற்றவர்கள் என்ன ஆடையில் இருந்தார்களோ, அதே விதமாக மெழுகு பொம்மைகளுக்கும் உடை அணிந்திருந்தார்கள்.
சில பொம்மைகளைப் பார்த்ததுமே அமிழ்தனிடம் சொன்னேன். “டிக்கெட்டின் தொகையைப் பார்த்து உள்ளே வரும்போது யோசித் தேன். பொம்மைகளைப் பார்த்ததுமே டிக்கெட் தொகையை விட பெறுமதி இங்கே இருக்கிறது என்று உணர்ந்தேன்.”
அமிழ்தன் சொன்னார். “இந்த அற்புதத்தை லண்டனில் இருந்தே பார்க்காமல் இருந்திருக்கின்றேனே விடுமுறையில் மனைவி பிள்ளை களைக் கூட்டி வர வேண்டும்.” இன்று லண்டனில் பயணிகளின் முக் கிய இடமாக மாறியிருக்கும் இந்த மெழுகுக் கண்காட்சி சாலைக்குப் பின்னே ஒரு பெருங்கதை இருக்கிறது.
பிற்காலத்தில் மேடம் டுசட்டாக மாறிய குழந்தையின் உண்மைப் பெயர் மரியா குரோஸ்ட்ஸ் (Maria Grosholtz) அக் குழந்தைக்கு 1761இல் மதச் சடங்கு செய்து வைக்கப்பட்டது. சரியாக இரு மாதம் கழித்துக் குழந்தையின் தந்தை இராணுவத்தில் கடமையாற்றியபோது, ஒரு யுத்தத்தில் கொல்லப்பட்டார்.
அதற்குப் பிறகு மரியாவின் தாய் ஒரு வீட்டு வேலைக்காரியாகப் போனாள். அவர் ஒரு டாக்டர் மருத்துவ வேலைக்காக மெழுகு பொம் மைகளைச் செய்பவர். காலப்போக்கில் அந்த மெழுகு பொம்மைகள் செய்வதில் அதிகமான வருமானம் அவருக்குக் கிடைத்தது.
36

லண்டன் முதல் கனடா வரை.
அது அவரின் வைத்தியத் தொழில் வருமானத்தை விட அதிக மாகியது. எனவே அவர் பாரிஸ் நகரத்திற்குக் குடிபெயர்ந்தார். அவ ரோடு மரியாவும் அவரின் தாயாரும் குடி பெயர்ந்தார்கள்.
பிரான்சில் ஒரு கண்காட்சியை அந்த டாக்டர் திறந்துவைத்தார். மரியாவிற்கு குழந்தைப் பருவத்திலேயே மெழுகு பொம்மை செய்யும் விதத்தைச் சொல்லிக் கொடுத்தார் அவர்.
காலம் செல்லச் செல்ல மரியா மெழுகு பொம்மை செய்வதில் பேரெடுத்தாள். பல முன்னணி மனிதர்களின் உருவங்களை அவள் செய்தாள். பிரபல எழுத்தாளர் பிரான்கோயிஸ் வலடாரி மற்றும் அமெரிக்க பெஞ்சமின் பிராங்ளின் ஆகியோரின் மெழுகு பொம்மை களையும் அவள் செய்தாள். அவைகள் இன்றும் காட்சிக்கு இருக் கின்றன.
1794 இல் டாக்டர் இறந்து போகவே சிறிது காலம் கழித்து பிரெஞ்சு பொறியியலாளர் பிரான் கொயிஸ் டுசட் என்பவரை மணந்தாள். அதன் பிறகுதான் அவள் பெயர் மேடம் டுசட் ஆனாள். Madam என்பது ஆங் கிலம், அதுவே பிரெஞ்சில் Madame ஆனது.
1902 இல் லண்டனுக்கு வந்த மேடம் டுசட் மெழுகு பொம்மை கலைக்குச் சிறப்புச் சேர்த்துக் கண்காட்சி நடத்தினாள்,1850ஆம் ஆண்டு (89 வயது வரை உயிருடன் இருந்த அவள் அந்தக் கண்காட்சி சாலைக் காகவே உழைத்திருக்கிறாள்.
மேடம் டுசட்டின் மறைவுக்குப் பிறகு, அந்த மெழுகு பொம்மை கண்காட்சிச்சாலை வாரிசுகளின் பராமரிப்பில் இருந்தப் போதிலும், பல சோதனைகளைச் சந்தித்தது என்பது வேதனையானது. ஆனால் அதுதான் வரலாறு.
லண்டனில் - 7
1925இல் மின்சாரக் கசிவினால் உண்டான தீ விபத்தில் மெழுகு பொம்மை கண்காட்சி சாலையில் பல பொம்மைகள் எரிந்து போயின.
1940இல் இரண்டாம் உலக யுத்தத்தின் போது விமானத் தாக்கு தலில் இன்னொரு பலத்த சேதம் அந்தக் கண்காட்சிச் சாலைக்கு ஏற்
37 ロ

Page 21
D மாத்தளை சோமு
பட்டது. 352 பொம்மை வடிவம் எடுக்கின்ற தலையச்சுகள் சேதமாகின. ஆனால் அங்கிருந்த ஹிட்லரின் உருவத்திற்கு மாத்திரம் சிறு கீறல் கூட விழவில்லையாம். அதற்குப் பிறகு அக்கண்காட்சிச் சாலை புனர மைக்கப்பட்டுப் பலரை இன்னும் கவர்ந்திருக்கின்றது.
உலகின் முக்கிய தலைவர்கள் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஜனாதிபதிகள், பிரிட்டிஷ் பிரதம மந்திரிகள், லண்டன் அரச குடும் பத்தினர். புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஹாலி வூட் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், மதத் தலைவர்கள் எனப் பல ரின் உருவங்கள் மெழுகு பொம்மைகளால் இருந்தன.
எல்லாவற்றையும் நானும் அமிழ்தனும் பார்த்துக் கொண்டே போனோம். மெழுகு பொம்மை உருவங்களோடு நின்று படம் பிடிக்கத் தடையோ கட்டணமோ இல்லாதது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. எனவே முக்கியமான மனிதர்களோடு மட்டும் நின்று கொண்டு பட மெடுத்துக் கொண்டேன். பிறகு வேறு பகுதிக்குப் போனோம். வெளிச் சம் குறைவு. அங்கே வரலாற்றில் இருண்ட பகுதிகளைக் காட்டுகின்ற சரித்திரச் சம்பவ உருவங்கள் பொம்மைகளாய் இருந்தன.
மனிதன் ஜனநாயகத்திற்கு வந்த வரலாறு சுலபமானதல்ல. பலரின் கொள்கைகளுக்கும் கொடுமைகளுக்கும் பிறகே ஜனநாயகம் மனித னுக்கு அறிமுகமாகியிருந்தது. இது ஐரோப்பிய நாடுகளுக்கு விதி விலக்கானது அல்ல. பல யுத்தத்திலும் காட்டு மிராண்டித் தனமான தண்டனைகளிலும் ரத்தம் சிந்திய பிறகுதான் ஞானமே பிறந்திருக் கிறது அங்கே.
பல ஆண்டுகளுக்கு முன்னே நடந்த கொடூரமான தண்டனை களை சித்திரிக்கும் சம்பவங்கள் பொம்மைகளின் மூலம் அங்கு சித் திரிக்கப்பட்டுள்ளன. ஒரு மனிதனின் கழுத்து வெட்டப்படுவதை மிக தத்ரூபமாக மின்சாரத்தில் இயங்குவதாக வைத்திருந்தார்கள். வெளிச் சம் பாயும் போது மனிதன் கிடத்தப்பட்டுள்ளது தெரிகிறது. வெளிச்சம் மறையும் போது தலை வெட்டப்படும் சத்தம் கேட்கிறது. திரும்ப வெளிச்சம் வரும்போது வெட்டப்பட்ட தலை உருள்கிறது.
அங்கே ஒரு காலத்தில் கொடூரமான தண்டனைகள் கொடுக்கப் பட்டதைப் பற்றிய விபரங்கள் இருந்தன. கிழக்கு ஐரோப்பாவில் 1431 முதல் 76 வரை ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி VIad the Impaler
38

லண்டன் முதல் கனடா வரை.
என்பவனால் சுமார் 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அந்த சர்வாதி காரியின் மெழுகு பொம்மையும் இருக்கிறது.
வேறு இடத்தில் பல கொலைகளைக் கொடூரமான முறையில் செய்த, பிரிட்டனில் புகழ் பெற்ற கொலைகாரர்களின் மெழுகு பொம் மைகளும் வைக்கப்பட்டிருந்தன.
வேறு ஒரு கட்டித்திற்குள் நுழைந்தோம். அது 40 வருடமாக லண்டனில் புகழ் பெற்ற பிளன்டோரியம் கோளரங்கம் என்று சொல் லப்படும். மிக நவீனமான டிஜிஸ்டார் என்ற கருவி மூலம் தலைக்கு மேல் ஒரு ஆகாயத்தைப் பிரபஞ்சத்தை வட்டவடிவமான திரையில் படைத்து, அதிலே கோள்கள் சுழல்வதைக் காட்டுகின்றார்கள். மிக அற்புதம். நிழல் நிஜமாவதில்லை என்பார்கள். ஆனால் இங்கே முதல் முறையாக நிஜமான நிழல்களைப் பார்த்தேன்.
அந்த அரங்கத்தை விட்டு வெளியே வந்த பிறகும் கண்களுக் குள் கிரகங்கள் சுழல்வதைப் போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. பிறகு அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே வர முயன்ற போது வாசலில் ஒரு மேஜையில் போட்டோக்கள் குவிந்திருந்தன.
எங்களைக் கண்டதும் நுழையும்போது ஒரு ஹாலிவூட் நடிகர் களின் மெழுகு பொம்மையோடு பிடித்த போட்டோவை எடுத்துக் காட்டினார்கள். அது அந்த ஹாலிவுட் மெழுகு பொம்மையோடு நான் இருந்த போட்டோ.
விலையைக் கேட்டேன். சொன்ன விலை எனக்கு அதிகமாக இருந்ததோடு அந்தப் போட்டோ எனக்குப் பெறுமதியாய் இருக்க வில்லை. ஆனால் முல்லை அமிழ்தன் தனது போட்டோவை வாங்கிக் கொண்டார். அனேகமாகப் பலரும் போட்டோவை வாங்கிப் போகிறார் கள். பலர் போட்டோ பிடித்ததற்காக வாங்கிப் போகிறார்கள். மொத்தத் தில் தந்திரம் நிறைந்த வர்த்தகம்.
வீட்டிற்குத் திரும்பியபோது ராஜகோபால் லண்டனில் ஒலிபரப் பாகிற சகல வானொலி நிகழ்ச்சிகளில் ஏற்பாடான பேட்டி விபரத்தை கையில் கொடுத்தார்.
லண்டனில் இப்போது பல தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் ஒலி
பரப்பாகின்றன.
ם 39

Page 22
D மாத்தளை சோமு
இலங்கையில் புகழ்பெற்ற திருமதி. யோகா தில்லை நாதனின் ஒருங்கிணைப்பில் கானக்குயில் தமிழ் சேவை, டாக்டர் நித்தியானந் தனின் முயற்சியில் ஒலிக்கும் சன்ரைஸ் தமிழ் ஒலிபரப்பு திரு. நடா மோகன் ஒருங்கிணைப்பில் தென்றல் - கோல்ட் எனப் பல நிகழ்ச்சி கள் ஒலிக்கின்றன.
இவையெல்லாம் சில மணி நேர ஒலிபரப்புகள். தற்போது 24 மணி நேர தமிழ் வானொலியைIBC நிறுவனம் நடத்துகின்றது. அதில் நாடக கலைஞர் தாஸிஸியஸ், அ. இரவி, யமுனா ராஜேந்திரன் எனப் பலர் பணி புரிகிறார்கள். பெரும்பாலும் தனியார் தமிழ் வானொலி நிகழ்ச்சி கள் வர்த்தக விளம்பரத்தை நம்பியே நடத்த வேண்டியிருக்கின்றன.
சினிமாப் பாடல்களைத் தவிர்க்க முடியவில்லை. தமிழ்த் திரு மணத்திற்குப் பருப்பு முக்கியம். பருப்பில்லாமல் கல்யாணமா? அது போல தமிழ் வானொலிக்கு சினிமாப் பாடல்கள் முக்கிய இடமாகி விட்டது.
ஒலிபரப்புச் செலவுகளை மீளப்பெறவும் விளம்பரங்களை அனு சரிக்கவும் அதற்குமேல் நேயர்களைத் தாலாட்டவும் இந்தச் சினிமா பாடல்கள் அவசியமாகின்றன.
புலம் பெயர்ந்து வந்துவிட்டால் தமிழர்களின் ரசனையில் பெரிய மாற்றம் இருப்பதாக எண்ணுவது தவறு.
சினிமா ஒரு தமிழனை எப்படியாக்கியிருக்கின்றதோ அதே ஆக்கிரமிப்புப் புலம் பெயர்ந்த தமிழனிடமும் இருக்கிறது.
ஊரில் இருந்தபோது மாதம் சிலப் படங்களைப் பார்த்த தமிழர் கள், புலம் பெயர்ந்த நாடுகளில் வெளியாகின்ற எல்லாத் திரைப்படங் களையும் மொழி மாற்றி (டப்பிங்) படங்களையும், தொலைக்காட்சி நாடகங்களையும் பார்க்கிறார்கள்.
வீட்டில் இருந்து கொண்டே முழுக் குடும்பமே செலவு இல்லா மல் பொழுது போக்க அது உதவுகிறது.
லண்டனில் சினிமாவினால் அடிப்படையான ஒரு ரசிகரின் ஒரு பிரகடனத்தை வானொலியில் கேட்டேன். அதிர்ச்சியடைந்தேன். தமிழகத்துக்கு சினிமாக் கலாசாரம் புலம் பெயர்ந்த தமிழனிடிமும்
D 40

லண்டன் முதல் கனடா வரை. D
பரவி இருப்பதோடு அதுத் தமிழகத்துக் கலாச்சாரமல்ல தமிழர்களின் கலாசாரமும் என்றாகி விட்டது.
தென்றல் - கோல்ட் என்ற தமிழ் வானொலி நிகழ்ச்சியில் ஒரு லண்டன் தமிழ்நேயர் தொலைபேசி மூலமாக ஒரு திரைப்படப் பாட் டைக் கேட்டார். அதற்கு அவர் கொடுத்த விளக்கம். விளக்கமா அது? பிரகடனம்,
“நெற்றிக்கண்” படத்தில் “என் தலைவனின்.” பாடலை ஒலி பரப்புங்கள். லண்டனில் இருக்கிற அந்தத் தமிழ் நேயருக்கு, அந்தத் திரைப்பட நாயகன் எவ்வாறு தலைவனாக இருக்கமுடியும்? ஒரு தலைவன் என்பவன் இனத்திற்காக, மொழிக்காக, உரிமைக்காகப் பாடுபட்டவனாக இருக்கவேண்டும்.
அந்த நேயர் சொன்ன தலைவன்' அவரின் பிரச்சனையை யாவது (ஒரு வேளை அந்த நேயர் அகதியாக இருந்தால்) தீர்த்து வைப்பானா?
சினிமாவைத் தமிழ் நிலங்களில் வேரூன்ற வைத்ததில் பெரும் பங்கு இலங்கை வானொலிக்கே உரியது.
தமிழ்நாடு சென்னை, திருச்சி வானொலி நிலையங்கள் கர்நாடக சங்கீதத்தையும், நாதஸ்வரத்தையும் மோகித்தபோது, கொழும்பு வானொலி தமிழ் சினிமாப் பாடல்களைத் தமிழரின் தேசிய சங்கீத மாக அறிமுகம் செய்தது. அந்தத் தேசிய சங்கீதத்தை உள்வாங்கிய நேயருக்குத்தான் சினிமா நாயகன் தலைவனாகத் தெரிந்திருக்கிறான்.
கானக்குயில் வானொலி பேட்டியைத் தொலைபேசி மூலம் முடித் துக் கொண்டபோது 'தென்றல் கோல்ட்' நிகழ்ச்சி மூலம் சில வானொலி நேயர்களோடு உரையாற்றக் கூடிய சந்தர்ப்பம் கிடைத் தது. எனவே நிலையத்தில் இருந்த ஏனைய அறிவிப்பாளர்கள் இளைய அப்துல்லா, கே.பி. சங்கர் ஆகியோர் நேர்காணல் போல் என்னிடம் கேள்விகளைக் கேட்டார்கள்.
நள்ளிரவில் சினிமாப் பாடல்களை எதிர்பார்த்த நேயர்கள் எழுத் தாளருடன் நேரடி உரையாடல் என்றதும் இவரிடம் என்ன கேள்வி கேட்பது என்று யோசித்திருக்கலாம்.
நான் சினிமா உலகத்தில் இருந்து வந்திருந்தால் கேள்வி மேல் கேள்வி குவிந்திருக்கும். எனவே நேயர்கள் மீது தவறில்லை.
4

Page 23
மாத்தளை சோமு
லண்டனில் - 8
இன்று உலகமெலாம் ஒலிக்கும் தமிழோசை லண்டன் பி.பி.ஸி. உலகசேவை, ஒலிபரப்புக் குடும்பத்தின் 42 மொழிகளுள் ஒன்று. 1941இல் தொடங்கப்பட்ட தமிழோசை முதலில் 15 நிமிடச் செய்தி மட லாக மட்டும் ஒலி பரப்பப்பட்டது. பின்னர் 30 நிமிட நிகழ்ச்சியாக மலர்ந்து ஞாயிறும் வியாழனும் ஒலி பரப்பாகியது. 1991இல் இருந்து தான் தினசரி ஒலிபரப்பாகிறது. தமிழோசை செய்திகளுக்கும் ஆய் வரங்கத்திற்கும் உலகம் முழுவதும் நேயர்கள் இருக்கிறார்கள்.
இலங்கையில் இருந்தபோது தினமும் தமிழோசை கேட்பதுண்டு. தமிழர்கள் இடம்பெயரக்காரணமாய் இருந்த இனக் கலவரங்களின் போது அகதிகளான மக்கள் தமிழோசைக் கேட்பதில் ஆர்வமாய் இருந்தார்கள்.
1977 இனக் கலவரத்தின் போது மாத்தளை பூரீ முத்துமாரியம் மன் தேவஸ்தானத்தில் அகதிகள் தங்கியிருந்தபோது, அங்கு ஒரு தொண் டனாக இருந்து முகாம்களிலேயே தமிழோசையைக் கேட்டேன்.
பிறகு 1983இன் போது கொழும்பில் தாக்கப்பட்டுக் காயங்க ளுடன் வெள்ளவத்தை கோயிலில் தங்கியிருந்தபோது அகதியாகத் தமிழோசையைக் கேட்டேன்.
முன்பெல்லாம் தமிழோசை என்றால் சங்கர் என்ற சங்கர மூர்த் தியின் நினைவு வரும். சங்கரின் ஒய்வுக்குப் பிறகு மகாதேவன் பொறுப் பில் ஆனந்தி, விமல், சொக்கநாதன், சம்பத்குமார் எனப் பலர் பணி யாற்றுகிறார்கள்.
லண்டனுக்குப் போய்த் தமிழோசைக்குப் போகாமல் வருவது மதுரைக்குப் போய் மீனாட்சியம்மன் கோயிலைப் பார்க்காமல் வரு வது போல்.
நல்ல வேளை. ராஜகோபால் விமல் சொக்கநாதன் அவர்களி டம் பேசி ஒரு பேட்டிக்கு ஏற்பாடு செய்ததால் தமிழோசைக்குப் போகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
பேட்டியை ஏற்பாடு செய்த விமல் சொக்கநாதனே என்னை பி.பி.ஸி. வானொலி நிலையமான Bush Houseக்கு அழைத்துப்
42

லண்டன் முதல் கனடா வரை.
போனார். போக்குவரத்து நெருக்கடி காரணமாக பஸ்ஸிலும், ரயிலிலும் போனோம். அதற்கான டிக்கெட்டுகளை நியூஸ் ஏஜண்டில் வாங்கி யது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஆமாம். லண்டனில் பஸ்களுக்கான டிக்கெட்டுகளை நியூஸ் ஏஜண்டிலும் வாங்கலாம்.
நகரின் முக்கிய இடத்தில் ஒரு பக்கம் இந்தியத் தூதரகமும் மறு பக்கம் ஆஸ்திரேலிய தூதரகமும் இருக்க நடுவே பி.பிஸியின் கட்டி டம் இருக்கிறது. சுரங்க ரயில் நிலையத்திலிருந்து இறங்கிப் போனோம்.
பஸ்ஸிலும் ரயிலிலும் பயணம் செய்தபோது, விமல் சொக்க நாதனும் நானும் நிறையப் பேசினோம். விமல் சொக்கநாதன் இன்று லண்டனில் ஒரு சட்டத்தரணி. ஆனால் இலங்கையில் வானொலி மூலம் லட்சக் கணக்கான நேயர்கள் அறிந்த அறிவிப்பாளர்.
இலங்கை வானொலியில் பணியாற்றிய பலர் புலம் பெயர்ந்தி ருக்கின்றனர். அவர்களில் இன்றும் தனதுக் குரலால் புகழொடு இருப் பவர் விமல் சொக்கநாதன். நான் இலங்கையில் இருந்தபோது அவரின் (குரலுக்கு ரசிகன். இன்று அவரே பி.பி.ஸி தமிழோசையில் என்னை பேட்டிகாண இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
பி.பி.ஸிக்குப் போகிற வழியில் அவரோடு பேசியது ஒரு பேட்டி போலவே இருந்தது. நான்தான் பேட்டி போலவே இருந்தது. நான் தான் பேட்டி கண்டேன்.
ஒரு முதிர்ந்த அறிவிப்பாளர் என்ற அடிப்படையில் ஒரு கேள் வியைக் கேட்டேன்.
“இன்று பல நாடுகளில் தமிழ் வானொலிகள் நடக்கின்றனவே இதுபற்றி உங்கள் கருத்து.”
விமல் கொஞ்சம் யோசித்தார். பிறகு பதில் சொன்னார். “இன்றும் நான் பி.பி.ஸி. தமிழோசைக்கு மாதாமாதம் பிரான்சிலிருந்து ஒலி பரப்பாகும் தமிழ் ஒலி - ஒளியில் செய்தி வாசிக்கும் போது ஒரு பய பக்தியுடன் தான் வாசிக்கிறேன்.”
எனக்குக் குரு, இலங்கை வானொலியில் கடமை புரிந்த அப் துல் கபூர். அவர் சொன்ன வழிகளைத்தான் பின்பற்றுகிறேன்.
43

Page 24
மாத்தளை சோமு
அறிவிப்பு என்பது ஒரு கலை. அது பொறுப்புணர்வோடும் அறிவுப்பூர்வமாகவும் கையாள வேண்டியது. ஆனால் இன்று நவீன விஞ்ஞான வசதியில் சினிமாப் பாடல்கள் இருந்தால் ஒரு வானொலி நடத்தலாம் என்று நினைக்கிறார்கள். அப்படித்தான் பல குறுகியக் கால வானொலி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.”
“அதற்குக் காரணம் அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது. பயிற்சி இல்லாமையே. நீங்கள் உங்கள் அனுபவத்தை ஒரு புத்தகமாக எழு தலாமே! தமிழில் வானொலிக் கலை சம்பந்தமான புத்தகங்கள் குறைவு அதனை நிவர்த்தி செய்யுங்களேன்” என்று அவரைத் தூண்டினேன்.
அப்படித் தூண்டியதற்குக் காரணம் இருக்கிறது. விமல் சொக்க நாதன் நல்ல கட்டுரையாளர். ஈழகேசரியில் பல கட்டுரைகளை எழுதி னார். இப்போது வாராவாரம் 'விமல் பக்கம்' என்றத் தலைப்பில் உலக நடப்புகளைப் புதிய பாணியில் எழுதி வருகிறார். எனவே அவரால் ஒரு சிறப்பானப் புத்தகம் எழுத முடியும்.
“சட்டத் தரணியாக இருந்து கொண்டு புத்தகம் எழுத முடியுமா என்பது தெரியவில்லை. நேரம் பெரிய பிரச்சனை என்றாலும் நான் முயற்சிக்கின்றேன்.”
நாங்கள் உள்ளே போனபோது அன்றைய தமிழோசை" ஒலிப் பரப்பாகிக் கொண்டிருந்தது. கொசோவோ - செம்மணிப் புதைக் குழி கள் பற்றியச் செய்திகள் போயின. நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் வெளியே வந்தார்கள்.
விமல் என்னை மகாதேவனுக்கு அறிமுகம் செய்தார். இருவரும் அறிமுகமாகிக் கொண்டோம்.
“உங்கள் நூல்களைப் பார்த்தேன். (மூலஸ்தானம் + நான்காவது உலகம்) நல்லா எழுதியிருக்கீங்க எத்தனை நாள் லண்டன்ல இருப் பீங்க?”
“மொத்தம் 14 நாள். அதில் ஆறு நாள்கள் முடிந்து விட்டன.”
“லண்டனுக்கு இதுதான் பெஸ்ட் டைமா?”
“லண்டனுக்கு மட்டுமல்ல ஐரோப்பாவுக்கே இதுதான் முதல் முறை.” 编辑
44

லண்டன் முதல் கனடா வரை.
“உங்கள் பயணம் வெற்றியடையட்டும். பேட்டியை விமல் எடுப் பார். நான் அவசரமா ஏர்போர்ட் போகணும், வரட்டுமா?’ என்று விடை பெற்றார். தமிழோசை மகாதேவன்.
சுமார் பத்து நிமிடங்கள் வரை நீடித்த பேட்டியை முடித்துக் கொண்டு விமல் சொக்கநாதனோடு திரும்பி வந்தேன். வீட்டிற்கு வந்தப் போது ராஜகோபால் சனிக்கிழமை நடக்கவிருக்கும் இலக்கியச் சந்திப்புப் பற்றி ஒரு விளக்கம் கொடுத்தார்.
அந்தச் சந்திப்பிற்கு, கவிஞர் எழுத்தாளர் இளவாலை அமுது தலைமை தாங்குவார். அவர் பாப்பரசரின் பாராட்டுப் பத்திரம் பெற் றவர். மற்றும் விமர்சகர் மு. நித்தியானந்தன், லண்டனில் இருக்கும் சட்டத்தரணி எழுத்தாளர் க. செல்வராஜா ஆகியோர் உரை நிகழ்த்து வார்கள். மேலும் முல்லை அமிழ்தன், பாடகர் சத்தியமூர்த்தி, ஒலிபரப் பாளர் விக்கினராஜா, சன்றைஸ் பூரீரங்கன் ஆகியோர் கருத்துரைகள் வழங்குவர் எனத் தெரிவித்தார்.
அவர் மேலோட்டமாகத்தான் அந்த விபரங்களைத் தந்தார். ஆனால் இலக்கியச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். கலந்து கொள்பவர்களுக்கு இரவு உணவும் வழங்கப் -لات ساسكالا
அவரோடு அவரின் மனைவி ராகினி மட்டுமல்ல, மகள் ஷர் மினி மகன் யாவரும் ஒரு படைபோல் இணைந்ததே எனக்கு வியப்பா னது. கணவனின் முன்னெடுப்புகளுக்கு மனைவியும், அவர்களுக்குத் துணையாகப் பிள்ளைகளும் நிற்பதே ஒரு நல்ல குடும்பத்தின் இலக் கணம். அந்த இலக்கணத்தை ராஜகோபால் குடும்பத்தில் கண்டேன்.
குளிரையும் பொருட்படுத்தாது, ஈழகேசரி இலக்கியப்பந்தல் ஏற் பாட்டில் நடந்த அந்த இலக்கியச் சந்திப்பிற்குத் தலைமை வகித்தார் இளவாலை அமுது.
தனது பேச்சின் ஊடே ஒரு கருத்தைச் சொன்னது எனக்கு ஆச்ச ரியமாக இருந்தது. ஆனால் அது அவர் உள்ளத்தில் இருந்து வந்தது. “பல்வேறு சாதிக் கொடுமைகள் இருந்த யாழ்ப்பாணச் சமூகம், ஒரு காலத்தில் மலையக மக்களை மதிக்காதது மிகப் பெரிய குற்றம். நாங்கள் குற்றம் செய்தவர்களே. அதனால் தானோ, என்னவோ இன்று பல்வேறுத் துன்பங்களை அனுபவிக்கின்றோம்.”
45

Page 25
மாத்தளை சோமு
இது சாதாரண வார்த்தைகள் அல்ல. ஒரு சமூகத்தின் ஏற்புரை. அதைப்பற்றி நான் பேசாது, புலம் பெயர்ந்த தமிழர்களின் சந்ததி யினர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிப் பேசினேன்.
அதன்பிறகு நான் வேண்டாமென்று சொல்லி வைத்த ஒரு நிகழ்ச்சி நடந்தது. வேறு யாரும் என்றால் தடுத்திருப்பேன். ஆனால், அதனைச் செய்ய முன் வந்தவர் இளவாலை அமுது என்ற வித்துவான் அடைக்கலமுத்து. அறிவிலும், வயதிலும் மூத்தவர்.
அவர் எனக்குப் பொன்னாடை போர்த்தி, “சிறுகதை மன்னன்' என்ற கெளரவத்தைத் தருகின்றேன்” என்றார். நான் பதறிப்போய் அந் தக் கெளரவத்திற்குத் தகுதியானவனா? என்று சிந்திப்பதே தவறு என்று உணர்ந்து,
“மூத்தவர் இளவாலை அமுதுவின் பொன்னாடையை ஏற்கின் றேன். அனால் நான் “சிறுகதை மன்னர்” என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று சொன்னேன்.
பொன்னடை ஒரு கெளரவத்தின் வெளிப்பாடு, மன்னர் காலத்தில் புலவர்களுக்கு அரசரால் பொன்னாடை போர்த்துவது வழக்கம்.
ஆனால் இன்று எல்லா மேடைகளிலும் ஏறிப் பொன்னாடையே கொச்சைப்படுத்தப்பட்டு விட்டது. எனவே பொன்னாடை போர்த்து பவரை வைத்தே அதன் பெறுமதியைப் பார்க்க வேண்டியுள்ளது இன்று.
அண்ணாவியார் இளைய பத்மநாதனைச் சிட்னியில் சந்தித்த போது, இந்தப் பொன்னாடையைப் பற்றிச் சொன்னது இந்த இடத் தில் பொருந்தும்.
‘தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் கூத்துப்பட்டறையில் கலந்து கொண்டபோது அந்த ஊர் மனிதர் ஒரு கதராடையை, 'பொன்னாடை யாக எனக்குப் போர்த்தினார். அதனை நான் ஏற்றேன், நான் அரசியல் வாதியல்ல, அதிகாரியுமல்ல, ஒரு அண்ணாவியார்’ எனக்குப் போர்த்து வதால் எந்த நன்மையும் கிடைக்காது. எனவே இதனை உள்ளத்தின் அன்பு வெளிப்பாடாக ஏற்றேன்.
அந்தக் கூட்டம் முடிந்தபோது என்னைச் சந்தித்தார் சன்றைஸ் பூநீரங்கன். சன்றைஸ் வானொலி லண்டனில் புகழ் பெற்ற பல மொழி இன வானொலி நிலையமாகும்.
D 46

லண்டனில் -9
“முகவரி இழந்து வாழ்ந்து கொண்டிருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தாய் மொழியை மறந்தால் அவர்களின் முகமும் மாறிப் போகும்” என்றார் ஆவேமாக தொலைபேசியில் லண்டனில் இருக் கும் புலவர் சிவநாதன்.
பல ஆண்டுகள் லண்டனில் வாழ்ந்த போதும் தமிழை மறக்காது. தமிழுக்காக சிந்திப்பவர். மரபு வழிக்கவிஞர். முற்று முழுதாக தமிழக தமிழில் அவரால் எழுதப்பட்ட சாகுந்தலம் நாட்டிய நாடகத்தின் அரங் கேற்ற விழாவுக்கு என்னைக் கட்டாயம் வருமாறு கேட்டார் அவர்.
புலம் பெயர்ந்த தமிழர்களோடு பிரிக்க முடியாத ஒன்று பரத நாட் டியம். பரதநாட்டியம் கற்றுக் கொடுக்க லண்டனிலேயே சுமார் 40 பரதநாட்டிய ஆசிரியைகள் இருக்கிறார்கள். எனவே லண்டனில் பரத நாட்டிய முயற்சிகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பார்க்கும் ஒரு சந்தர்ப்பமாக எனக்கு அது அமைந்தது.
ஒரு ஞாயிறு மாலை லண்டனிலேயே சிறப்பான நவீன மண்ட பத்தில் நூப்ர கேந்திர நாட்டியப் பள்ளியில் சாகுந்தலம் நாட்டிய நாட கம் அரங்கேறியது. மண்டபம் நிறைந்த கூட்டம். நூப்ர கேந்திர நாட் டியப் பள்ளி ஆண்டுக்கு ஒரு நிகழ்ச்சிதான் நடத்தும். தரம், சங்கீதம், கட்டுப்பாடு, அபிநயம், பாவனை எல்லாவற்றிலும் நூற்றுக்கு நூறு திருப்தியானால் தான் மேடையேற மாணவிகளுக்கு பச்சைக் கொடியே அப்பள்ளி இயக்குநர் திருமதி சுபத்திரா சிவதாசனால் கொடுக்கப் படுமாம்.
எல்லா இருக்கைகளும் முன்கூட்டியே ஒதுக்கியிருந்தபோதும் முன்வரிசையில் தனக்குப் பக்கத்தில் ஒரு இருக்கையை எனக்காக ஒதுக்கியிருந்தார் புலவர் சிவநாதன். அந்த நாட்டிய நாடகத்தின் படைப் பாளி அருகிலேயே உட்கார்ந்து பார்த்த அனுபவம் இனிமையானது. 1200க்கும் மேற்பட்டோர் வந்திருந்தார்கள். மண்டபத்தில் பார்வையா ளர்கள் இருந்ததே தெரியவில்லை. அவ்வளவு அமைதி நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தவர் விமல் சொக்கநாதன்.
47

Page 26
மாத்தளை சோமு
சாகுந்தலம் நாட்டிய நாடகத்தை இளம் மாணவிகள் மிக அற்புத மாய் மேடையேற்றினார்கள். 60க்கும் மேற்பட்ட மாணவிகள் அதில் கலந்துச் சிறப்பித்தார்கள். நாலு வயதுக் குழந்தைகள் கூட மான், முயல், பறவைகளாக வந்து போனார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நாட்டிய நாடகத்தை முழுமையாக எந்தவிதச் சிந்தனையும் இன்றிப் பார்த்தேன்.
பரதநாட்டியம் கண்களால் மட்டும் ரசிக்கப்படுவதில்லை. காதால் சிந்தனையால் கூட ரசிக்கப்படுவது. அதில் ஒன்றுவது தியானம் செய் வதற்குச் சமானம். ஒன்றிவிட்டால் சிறப்புத்தான்.
நாட்டிய நாடகம் முடிந்ததும் குருதட்சணை வைபவம் நடந்தது. அச்சமயத்தில் விமல் சொக்கநாதன் என்னை மேடைக்கு வருமாறு அழைத்தார். நான் தடுமாறிப் போனேன். 'ஏன் என்னை அழைக்கி றார்கள்? இது புலவர் சிவநாதனின் வேலையோ? அவர் கூட எதுவும் சொல்லவில்லையே பல யோசனைகளுடன் மேடைக்குப் போனேன் நான். அடுத்த அறிவிப்பு எனது கேள்விகளுக்குப் பதிலைத் தந்தது.
“ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு லண்டன் வந்தி ருக்கும் எழுத்தாளர் மாத்தளை சோமு இப்பொழுது இந்த நாட்டிய நாடகத்தைத் தமிழில் எழுதிய புலவர் சிவநாதன் அவர்களுக்குப் பொன்னாடை அணிவிப்பார்.”
நான் மகிழ்ந்து போனேன். எனக்கு அங்கு பொன்னாடை போர்த்தியிருந்தால் கூட அதனைப் பெரிய கெளரவமாகக் கருதமாட் டேன். ஆனால் புலவர் சிவநாதனை என்னை வைத்துக் கெளரவிக் கச் செய்தது என்பது எழுத்திற்குக் கிடைத்த மாபெரும் கெளரவம்.
மேடையில் பொன்னாடைப் போர்த்தச் சபையோரைப் பார்த்து கைகுவித்து வணங்கிவிட்டு அதிலேயே எனது நன்றியை சொல்லி விட்டு மேடையை விட்டு இறங்கினேன்.
பிறிதொரு நாள் தொலைபேசியில் பேசும் போது புலவர் சிவ நாதன் சொன்னார்.
“பல்வேறு தடைகளைப் பல நம்பிக்கையின் மூலம் இந்தத் தமி ழனே சுமந்து கொண்டு திரிகின்றான். அதை அவனே களைந்தால் தான் அவனுக்கு விடுதலை”
48

லண்டன் முதல் கனடா வரை.
அது உண்மைதான். தமிழன் தடைகளைத் தானே சுமந்து திரி பவன் தான். சாதி, சினிமா, மூடநம்பிக்கை, அரசியல் என்ற பேரில் உருவான பல தடைகளை இந்தத் தமிழன் சுமந்துகொண்டு திரி கின்றான். அவைகளை அவனே உடைக்க வேண்டும் உடைக்கத்தானே எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் முயற்சி செய்கிறார்கள்.
அவர் சொன்னதை நான் ஏற்றுக் கொண்டேன். அப்போது அவர் சொன்னார். “உங்களுக்காக ஒரு நாள் விடுமுறை எடுக்கிறேன் ஷேக்ஸ்பியரின் பிறந்த இடத்திற்குப் போகலாம்.”
ஆங்கில இலக்கிய மாமேதை ஷேக்ஸ்பியரின் பிறந்த ஊரைப் பார்க்காமல் இருப்பதா என்று எண்ணினேன். ஆனால் வேறுவேறு நிகழ்ச்சிகள் இருந்ததால் புலவர் சிவநாதன் அவர்களோடு போகவே முடியவில்லை.
பிரான்ஸ் போக வேண்டி வந்துவிட்டது. பிரான்ஸ் போக இரு நாள்களே இருந்தன. அந்த இரு நாளும் விருந்து. முதல் நாள் லண்ட னில் இருக்கும் சட்டத்தரணி க. செல்வராஜ் வீட்டில் விருந்து. அவர் மாத்தளையைச் சேர்ந்தவர் என்னை பத்திரிகைகள் மூலம் அறிந்தவர். ஆனால் அவர் தந்தையாரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் மாத் தளையில் தமிழ்ச் சஞ்சிகைகள், இதழ்கள், விற்பனை முகவர். இந்தி யாவிலிருந்து புத்தகங்களை நேரடியாக இறக்குமதி செய்தவர். அப் போது நான் படித்துக் கொண்டே அவரிடம் இருந்து புத்தகங்கள் வாங்கி விற்றவன். அந்த புத்தகங்கள் மூலம் அமரர் கல்கி. ஜெகசிற்பி யன், ஜெயகாந்தன், மணிவண்ணன், அகிலன் எனப் பல எழுத்தாளர் களின் எழுத்துக்கள் எனக்கு அறிமுகமாயின.
சட்டத்தரணி க. செல்வராஜா தனது மனைவியை அறிமுகம் செய் தார். அவரும் சட்டத்தரணி. இருவருக்கும் சட்டக் கல்லூரியில் காதல் ஏற்பட்டிருக்கிறது. அவரின் மொழி தமிழ். மனைவியின் மொழி சிங் களம். ஆனால் காதல் ஆங்கிலத்தில் தான் வளர்ந்திருக்கிறது. ஏனென் றால் செல்வராஜாவுக்கு சிங்களம் தெரியாது. அவருக்கோ தமிழ் தெரி
யாது.
செல்வராஜா இன்று லண்டனில் பெரிய மாநகர சபையான Brent இன் உறுப்பினர். மொத்த உறுப்பினர் தொகை 65. அதில் அவர் மட் டுமே இலங்கைத் தமிழர்.
49

Page 27
மாத்தளை சோமு
விருந்து முடிந்து என்னைக் காரில் ராஜகோபால் வீட்டிற்குக் கூட்டி வந்தபோது செல்வராஜா சொன்னார்.
“நான் சிறுகதைகள் எழுதி இருக்கின்றேன். எனது சிறுகதைத் தொகுதி வெளிவரவிருக்கிறது.”
எனக்கு அந்தத் தகவல் சரியாகத் தெரியவில்லை. செல்வராஜா என்பவர் மலையகப் பாணியில் சிறுகதை எழுதியதைப் படித்திருக் கின்றேன். ஆனால் அந்த செல்வராஜா இவர்தானா?
“தொடர்ந்து எழுதுங்கள் எழுதாமல் இருக்க வேண்டாம். உங்கள் எழுத்துத்தான் உங்களை அடையாளப்படுத்தும்”
அவரை உற்சாகப்படுத்தினேன். அதற்குக் காரணம் இருந்தது. பல எழுத்தாளர்கள் புலம் பெயர்ந்த பிறகு ஏனோ எழுதுவதில்லை. அதனால் தான் அவரை எழுதச் சொன்னேன். தமிழில் எழுதுவதால் பொருளாதாரம் பெரிதாகக் கிடைக்காவிட்டாலும் ஆத்ம திருப்தியும் இந்தத் தமிழ் மக்களோடு உறவு கொள்ளக்கூடிய வாய்ப்பும் கிடைக் கிறது.
இலங்கையில் பல இதழ்களில், இந்தியாவில் எப்போதாவது எழுதிவந்த என்னை புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியா சென்ற போதும் வீரகேசரியில் தொடர்ந்து எழுதி வருவதால், லண்டனில் பல தமிழ் அன்பர்கள் “நீங்க தானே வீரகேசரியில் எழுதி வந்த” என்று என்னை விசாரித்தார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வீரகேசரி புலம் பெயர்ந்த நாடுகளிலும் எனது படைப்புக்களைக் கொண்டு போய் இருக்கிறது. கொழும்பில் ஞாயிறு வெளியாகிற வீரகேசரி வார இதழ், லண்டனில் அன்று மாலையே கிடைக்கிறது.
இரவு பத்துமணிக்கு மேலும் லண்டன் வீதிகளில் எதிரும் புதிரு மாய்க் கார்கள் ஒடிக் கொண்டேயிருந்தன. லண்டன் இரவிலும் தூங் காது போலும். மதுரையைப் போல. மதுரை தூங்குவதே இல்லை.
நான் சட்டத்தரணி செல்வராஜாவுடன், “சுரங்க ரயிலில் போகின் றேன். எனவே எங்காவது ஒரு ஸ்டேசனில் இறக்கி விடுங்கள்” என் றேன். அவர் மறுத்துவிட்டார். “இரவு நேரம் உங்களை ராஜகோபால் வீட்டிலேயே இறக்கி விடுகின்றேன்” என்று சொல்லி விட்டார். வீட் டிற்குப் போய்ச் சேர்ந்தபோது இரவு பதினொன்றரை மணியாகி யிருந்தது. ጎ
D 50

லண்டன் முதல் கனடா வரை. D
மறுநாள் காலை பத்து மணியிருக்கும். தொலைபேசியில் என்னை அழைத்தார் பிரபல எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். இலங்கையில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்து பல ஆண்டுகளாகி விட்டன. தொடர்ந்து எழுதி வருபவர். பல சர்ச்சைக்குரிய எழுத்துக் களை எழுதியிருக்கிறார். கிழக்கும் மேற்கும் இணைந்த வாழ்க்கை அனுபவங்கள் அவர் எழுத்தில் வருகின்றன. தமிழர் புலம் பெயர்ந்தா லும் சாதி, பிரதேச, மத உணர்வுகளை வெவ்வேறு வகையில் ஆராதிப் பதாக அவரின் குற்றச்சாட்டு, அவரின் சில சிறுகதைகள் ஆணாதிக் கத்திற்கு எதிராக நீட்டப்பட்ட துப்பாக்கியாய் இருக்கின்றன.
அவர் நேரில் சந்திக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால் எனக்கோ நேரம் போதாமையாக இருந்தது. மேலும் அவர் இருக்கிற இடம் லண்டனுக்குப் புறநகர் விடிந்தால் பிரான்ஸ் பயணம். எனவே எனது நிலையை விளக்கி அவருக்குச் சொல்லிவிட்டுத் தொலைபேசி யிலேயே பேசினேன். அவர் தமிழ்ச் சமூகம் பற்றிப் பல்வேறு கருத்துக் களைத் தெரிவித்தார்.
“புலம் பெயர்ந்த நாடுகளில் குடியேறிய பல தமிழர்களின் சாதி, பிரதேசம், மதம் போன்ற உணர்வுகள் அப்படியேதான் இருக்கின்றன. அவர்களிடம் மாற்றம் என்று பார்த்தால் அவர்கள் பேசும் பாஷை
தான் மாறியிருக்கிறது.
பெண்களுக்கு எதிரான ஆதிக்கம் இங்கும் இருக்கிறது. நான் பெண்ணியத்தைப் பற்றி எழுதுவது தவிர்க்க முடியாதது. எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நாங்கள் சொல்லாவிட்டால் வேறு யார் தான் சொல்வார்கள்?”
நான் பதிலேதும் பேசாமல் அவர் தொலைபேசியில் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் தொடர்பைத் துண்டித்த பிறகும் எனது சிந்தனை அவரைச் சுற்றிச் சுற்றியே வந்தது.
லண்டனில் - 10
மேற்குலகில் பெண்களுக்குச் சட்டத்தின் மூலமாவது ஒரு பாது காப்பு நிச்சயப்படுத்தப்பட்டிருக்கிறது. கிழக்கிலோ சட்டமும், ஏன் சம்பிரதாயங்கள் கூட பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடைகளாகவே இருக்கின்றன.
5

Page 28
D மாத்தளை சோமு
இந்தத் தடைகளை நீக்கப் பெண்களுக்கு உரத்த குரல்கள் எழுந் துக் கொண்டிருக்கின்றன. முன் எப்போதும் இல்லாத வகையில் பெண் ணிய அமைப்புகள், அது சார்ந்த இதழ்கள், தமிழ்ச் சமூகத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்ற போதும் பெண்களுக்கு எதிரான தீங்கு ஆங்காங்கே நடக்கவே செய்கின்றன. உயர் பதவிகளைப் பெண்கள் அலங்கரித்த நாடுகளில் கூட பெண்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வில்லை. சட்டம், பிரச்சனையைத் தற்காலிகமாகவே மட்டும் தீர்க் கும். சமூக மாற்றமே நிரந்தரமாய் பிரச்சனைகளைத் தீர்க்கும். சமூக மாற்றத்திற்கு ஆணுக்கும், பெண்ணுக்குமான கல்வியறிவு சமப்படுத் தப்படவேண்டும்.
இன்று மேலை நாடுகளில் கல்வி சமமாக இல்லாததால் பிரச்ச னைகள் வெவ்வேறு ரூபங்களில் நாகரீகத்தின் உச்சத்தில் இருப்ப தாகச் சொல்லும் மேலைநாடுகளிலும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆண், பெண் சமம், ஜனநாயகம் பேசுகிற அமெரிக்காவில் இன்னமும் ஒரு பெண் ஜனாதிபதியாக வரமுடியவில்லை. அதற்கான புரிந்துணர்வு அங்கே இல்லை. எனவே பெண்ணியம் என்பது ஆண் வர்க்கத்திற்கு எதிராக முழங்குவது அறிவுடையதாகாது. ஆணை ஆட்டிப் படைக்கிற பெண்களும் பெண்களை ஆட்டிப் படைக்கிற ஆண்களும் நமது சமூகத்தில் கணவன் மனைவியாக இருக்கிறார்கள். அது அவர்கள் விரும்பிக் கொண்டதாக இருக்கிறது.
வாழ்க்கை என்பது ஆணும் பெண்ணும் சம நிறைவாய் இணை வதில் தான் சிறக்கிறது. ஆனால் இன்று நம்பிக்கை குறைந்து போய் லோயர்கள் முன் ஒப்பந்தம் எழுதிக் கொண்டு வாழ்க்கையைத் தொடங்க முயல்கின்றனர்.
மேலை நாடுகளில் ஒருத்தரை ஒருத்தர் நம்பாத போது இந்த ஒப்பந்தம் காப்பாற்றுமா என்ன?
மேலை நாடுகளில் தனித்தே வாழும் ஆண், பெண் தொகை கூடிக் கொண்டே போகிறது. லண்டனில் இன்று தனித்து வாழும் பெண் களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. 1996 கணக் கெடுப்பின்படி தனித்து வாழ்பவர்களின் தொகை அங்கு 80 லட்சத் திற்கும் அதிகம். என்ன காரணம்?
பணம் சுயமாக சம்பாதிப்பதால் தனித்து வாழ்வது சுலபமாகிறது. சுதந்திரம் அதற்கு உதவி செய்கிறது. மேலும் திருமணம் செய்யாமல்
D 52

லண்டன் முதல் கனடா வரை.
தனித்து வாழும் ஆண் - பெண்களை எவரும் சந்தேகத்துடன் பார்ப்ப தில்லை. அவர்கள் உல்லாசமாய் வாழ்கின்றனர். அவர்களைப் பார்த் துத் திருமணம் செய்து பிரச்சனை மற்றும் குழந்தைகள் குடும்ப பொறுப் பில் அவதியுறுபவர்கள் பொறாமைப்படுகின்றனர்.
திருமணம் என்ற உறவில் வெகுவாகக் குறைந்துவிட்ட நம்பிக்கை மனிதர்களைத் தனிமையைத் தேடி ஓடச் செய்கின்றன. திருமண உற வில் காணப்படும் ஏமாற்றங்கள், சச்சரவுகள் திருமணம் செய்து கொள் ளாத இளைஞர்களைத் திருமணத்தைக் கண்டு ஓடச் செய்கின்றன.
திருமணம் செய்த நிறையப் பேர் முறித்துக் கொண்டு இன்னொரு திருமணத்தைத் தேடாமல் தனியே வாழ்வதை விரும்பிச் செல்கின்ற னர். இதுபற்றி லண்டனில் பேராசிரியராகப் பணிபுரியும் ஒரு சமூக உளவியல் நிபுணர் சொல்வது:
இவற்றைப் பார்க்கும்போது வருத்தமே ஏற்படுகிறது. நம் இஷ் டத்துக்குச் செயற்படுவது, தனிமனித சுயவிருப்பம் மட்டும் அக்கறைப் படுத்தப்படுவது அதிகமாகி வருகிறது. ஒருவருக்கொருவர் தொடர்பு அற்றுப் போய்த் தனித்து விடப்படும் நிலைமையை நோக்கி நாம் வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறோம். நாம் வசிக்கும் ஃபிளாட்டின் அடுத்த கதவில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி நமக்குத் தெரிவ தில்லை. நம் வீட்டிற்குள்ளேயே கூட 3 டி.வி. அப்பா பிடித்த நிகழ்ச் சியை பார்க்க ஒன்று. பிள்ளைகளுக்குத் தனித்தனி டிவி. சிலவேளை தொடர்புகள் கூட, தொலைபேசிஇணைப்புகளில் மனம் விட்டுப் பழகி சிரிப்பது எல்லாம் தொலைந்து போனது போலாகிவிட்டது. எல்லா வற்றுக்கும் மேலாக தனி மனித சுகமும் விருப்பமும் மேலோங்கி நிற்கிற நிலைமைதான். இன்று மேலை நாடுகளில் குடும்ப உறவை மேம் படுத்தப் பல்வேறு முயற்சிகள் நடக்கின்றன. கீழைத்தேச குடும்ப வாழ் வியலைப் பார்த்துத் தங்கள் வாழ்க்கையைப் புதுப்பிக்க விரும்புகின் றனர் அவர்கள். ஆனால் நாகரிகம் என்ற பெயரில் மேல் நாட்டு நாகரிகத்தை நுனிப்புல் மேய்ந்தமையால், இன்று இங்கு கிடைத் திருப்பது முதியோர் இல்லம், தனி வாழ்க்கை என்பன.
வாழ்க்கை என்பது ஒருவரை ஒருத்தர் புரிந்து கொண்டு வாழ் வதிலேயே இருக்கிறது. ஒரு பறவையின் இரு சிறகுகள் போலவே, கணவனும் மனைவியும் இதைத் தெளிவாக புரிந்துகொண்டால் பிரச் சனைகளே வெடிக்காது.
53 п

Page 29
மாத்தளை சோமு
ஆனால் புரிந்துக்கொள்வதில் ஆரோக்கியம் இன்மையால் புலம் பெயர்ந்தவர்களிடம் விவாகரத்துகள் பெருகி வருவதாக லண்டனில் எனக்குத் தகவல் சொல்லப்பட்டது.
பெண்ணியம் - ஆணாதிக்கம் பற்றி ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் ராஜகோபாலிடம் கருத்துக் கேட்டேன்.
“மனைவி பரத நாட்டியமாடுவதை நான் தடுக்கவில்லை. நான் பத்திரிகையாளனாக இருப்பதை அவள் தடுக்கவில்லை. அவரிடம் பல விஷயங்களில் நான் கருத்துக் கேட்பேன். அவளும் என்னிடம் கேட்பாள். சிலவற்றை நான் கேட்காமலே செய்வேன். எனக்கு என் மனைவி, மகள், மகன் அடங்கிய குடும்பத்தின் மீது அக்கறை உண்டு. அதே அக்கறை என் மனைவிக்கும் உண்டு.
சமையல் அறையில் நான் உதவி செய்யவே வரக்கூடாது என் பதே என் மனைவியின் ஆசை. எனவே, இங்கு நான் பெரிதா நீ பெரி யதா என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு வாழ்கின்றோம். எங்களுக்குள் யார் அதிகமான பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை.
பெண்ணியம், ஆணாதிக்கம் என்பதெல்லாம் என் காதுக்கே வரக் கூடாத வார்த்தைகள். வாழ்க்கை என்கின்ற போது தனித்துவமான
ஆணும் இல்லை. பெண்ணும் இல்லை. வாழ்கின்ற மனிதர்கள் தான் உளர். நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.”
இதைச் சொன்ன போது புன்னகையோடு கேட்டு கொண்டிருந் தார் திருமதி ராகினி ராஜகோபால். கடைசியாக அவர் சொன்னார்.
“வாழத் தீர்மானித்துவிட்டால் அனுசரித்துப் போவதே வாழ்க்கை. இதைவிட பெரியதாக எதையும் நான் நினைக்கவில்லை.”
அவர்கள் இருவரும் சொன்னதில் உள்ள உண்மையை அங்கு தங்கியிருந்த சில நாட்களிலேயே கவனித்தேன்.
இரவு எட்டு மணிக்கு லண்டனில் முதலாவது தமிழரின் நகைக் கடையைத் திறந்த வெஸ்டன் ஜூவல்லர்ஸ் சிவாவின் விருந்திற்குப் போனேன். எனக்கு விருந்துகளிலேயே மையலில்லை. ஆனால், உள்ளன்போடு அழைக்கும்போது, மறுதலிக்க முடியவில்லை. இரவு எட்டு மணியிலிருந்து, அதிகாலை இரண்டு மணிவரைப் பேசினோம்.
54
3 O 13

லண்டன் முதல் கனடா வரை.
அவர் தங்கத்தைப் பற்றிப் பேசவில்லை. நான் இலக்கியத்தைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் விடியும் வரை பேசினோம்.
தங்கமென்றால் என்ன? இலக்கியம் என்றால் என்ன? எல்லாவற்
றையும் கடந்த மனித நேயம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா? அது தான் எங்கள் இருவரையும் உறவாட வைத்தது.
படுக்கையில் விழுந்தபோது அதிகாலை மூன்று மணி விடிந் தால் பிரான்ஸoக்கு அதிவேக ஈரோ ஸ்டார் (Euro Star) ரயிலில் பயணம். முன்பதிவு செய்திருந்தேன்.
ஈரோ ஸ்டார் ரயில் லண்டனிலிருந்து பிரான்ஸ் நாட்டுத் தலை நகரான பாரிஸ் நகருக்கு அதிவேகமாக ஓடுகிறது. மொத்தம் 3 மணி நேரம் ஓடும். இந்த ரயில் 20 நிமிடம் ஆங்கிலக் கால்வாய்க் கடியில் சுரங்கப் பாதை வழியாக ஓடுகிறது. இந்த ஆங்கிலக் கால்வாய் வழி யாக ஒரு நாளைக்கு சுமார் 350 கப்பல்கள் போவதும் வருவதுமாய் இருக்கின்றன. லண்டனிலிருந்து பிரான்ஸ0 க்கு இந்தக் கால்வாயில் பயணிகள் போகிற கார்கள், பஸ்கள், பெரிய லொறிகள் என்பவற்றை ஏற்றிச் செல்லும் படகுப் பாதைச் சேவை (Ferry)யும் நடக்கிறது. ஈரோ ரயில் பாதை போடுவதற்கு முன்னர் இந்தப் படகுப் பாதைச் சேவை யில் கூட்டம் அதிகமாக இருந்ததாம். இன்று ரயிலுக்குத்தான் கூட்டம் அதிகம். இந்த இரண்டினால் வான்வழிப் பயணிகள் குறைந்தனர். அத னால் வான் பயணச்சீட்டின் கட்டணமும் குறைந்து விட்டது.
படுக்கையில் விழுந்து கிடந்த எனக்குத் தூக்கம் கண்களை மூடிக் கொண்டே இருந்தது. ஆனால், கடிகாரம் "தூங்கியது போதும் எழுந் திரு, பயணத்திற்கு நேரமாகிறது.” என்று சொல்லியது. அவசரமாக எழுந்து குளித்து விட்டு, ஈரோ ஸ்டாரைப் பிடிக்க ஆர்வமாய் காரில் போனேன்.
காரை ஒட்டியது ராஜகோபால். பிரான்ஸில் சந்திக்க வேண்டிய வர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தார் அவர்.
“குகநாதன் பிரான்ஸில் உங்களுக்குப் பெரிய உதவியாக இருப்
Luri.
குகநாதன் ஈழநாடு - பாரிஸ் வார இதழின் ஆசிரியர். தமிழ் ஒலி-ஒளி ஊடகத்தின் இயக்குநர். அவரை முதன் முதலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ராஜகோபால் வீட்டில் சந்தித்தேன்.
S5 D

Page 30
p மாத்தளை சோமு
அதுதான் எங்களுக்கு முதல் சந்திப்பு. கலை அழகு மிக்க பாரிஸ் நகரத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வு மேலோங் கியிருந்தது எனக்கு, அதனால் ஈரோ பயணத்திற்காக வாங்கிய பய ணச் சீட்டினால் பயணத் தடையே வரப் போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. அதற்கு வாய்ப்பு இருக்கவில்லை.
பாரிஸில் - 11
ஈரோ ஸ்டார் புறப்பட இன்னும் பதினைந்து நிமிடங்களே இருந் தன. ராஜகோபாலிடம் விடைபெற்றுக் கொண்டு தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு இடுப்புயரமே இருக்கும் கேட்டின் முன்பக்கம் மெக்னடிக் பார் கோடு உள்ள டிக்கட்டைப் போட்டேன்.
டிக்கெட் உள்ளே போய் மேலே திரும்பவும் வந்தால் தான் போக லாம். ஆனால் அந்த டிக்கெட் உள்ளே போகவே இல்லை. பல தடவை முயன்றேன் டிக்கெட் போகவில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல் திரும்பினேன். ராஜகோபால் இன்னும் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நடந்தது புரிந்துவிட்டது.
உடனே அவர் என்னோடு திரும்பவும் வந்து வேறு கேட்டில் முயன்று பார்த்தார். இம்முறை கீச்கீச் என்று ஒரு கத்தல் எழுந்தது.
ஈரோ ஸ்டார் பணியாளர் ஒருவர் ஓடி வந்து என் டிக்கட்டை வாங் கிப் பார்த்து விட்டு கவுண்டரில் போய் விசாரிக்கும்படிச் சொன்னார். அந்தக் கவுண்டரில் நீண்ட வரிசை நின்றது. நேரமோ ஓடியது.
ஒருவாறு கவுண்டர் அருகே போய் விசாரித்த போது அங்கே கிடைத்தப் பதில் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. O “ஈரோ பாஸ் இருந்தால்தான் நீங்கள் பாரிஸ் போக முடியும்
ஈரோ பாஸைத் தாருங்கள்.”
ஈரோ பாஸைப் பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. அது ஒரு டிராவல் ஏஜண்டில் எடுத்த டிக்கெட், அதனைச் சொன்னேன்.
“அப்படியானால் டிராவல் ஏஜண்டிடம் போய் ஈரோ பாஸை வாங்கி வாருங்கள்.”
с 56

லண்டன் முதல் கனடா வரை.
“என்ன சொல்கிறார்கள் இவர்கள்? இன்னும் சில நிமிடங்களில் ரயில் புறப்படும். இனி எங்கே போய் ஈரோ பாஸ் வாங்கி வருவது.”
ராஜகோபாலிடம் நடந்ததைச் சொன்னேன். அப்போதுதான் அவர் சொன்னார்.
“அந்த டிக்கெட் எனக்குத் தெரிந்த ஏஜண்டிடம் வாங்கியது. அவர் ஈரோ பாஸ் மூலம் அதனை முன்பதிவு செய்திருக்கிறார். டிக்கெட் தரும் போது ஈரோ பாஸைப் பற்றிச் சொல்ல மறந்து விட்டார்.”
சில வினாடிகள் யோசித்தார் ராஜகோபால். பிறகு என் தள்ளு வண்டியை அந்தக் கேட்டின் அருகே நிறுத்திவைத்தார். பலரும் அந்த கேட் வழியே போய்க் கொண்டிருந்தார்கள்.
ஒருத்தர் அந்த கேட் வழியே போகத் தயங்கிக் கொண்டிருந்தார். அதைக் கவனித்த ராஜகோபால் என் தள்ளுவண்டியை அவர் பின்னே நிறுத்தி என்னைப் பிடித்துக்கொள்ளச் சொன்னார். அப்போது முன்னே நின்ற அந்த ஆள் டிக்கட்டைப் போட்டு கேட் வழியே போய்க் கொண் டிருந்தார்.
அதை கவனித்த ராஜகோபால் என் முதுகைப் பிடித்துத் தள்ளி போங்க போங்க என்றார். கதவு மூடும் முன்னே வண்டி போய்விடவே அததோடு நானும் போய்விட்டேன். அவர் செய்தது எனக்குச் சங்கட மாக இருந்தாலும் வேறு வழியில்லை. இல்லாவிடில் அன்றைய பய ணமே ரத்து.
ஏஜண்ட் செய்த தவறினால் இப்படி நடந்து விட்டது என்ற போது நானும் பயந்து பயந்து ரயிலின் உள்ளே போய் என்னுடைய இருக் கையைத் தேடி அமர்ந்து கொண்டேன். பெருமூச்சு வந்தது.
ஆனால் பயம் என்னை அச்சுறுத்திக் கொண்டேயிருந்தது. அது பாரிஸ் போகும் வரை இருந்தது. அதனால் தூங்கக்கூட முடியவில்லை. ரயில் குறித்த நேரத்திற்குக் கிளம்பியது. ஆங்கிலம், பிரெஞ்சு மொழி களில் அறிவிப்புச் செய்தார்கள். ரயில் கன்டீனில் ஆங்கில நாட்டுப் பவுண் நாணயமும் பிரெஞ்சு பிராங் நாணயமும் சொல்லுபடியாகும்.
ஆங்கிலக் கால்வாயின் கீழே போகிற சுரங்கப் பாதைக்குள் போவதற்கு முன் அறிவிப்புச் செய்தார்கள். ரயில் ஆங்கில கால்வா யின் கீழ்ச் சுரங்கத்தில் ஓடியது.
57

Page 31
p மாத்தளை சோமு
அப்போது எனக்கு ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவு வந் தது. ஆங்கிலக் கால்வாயை நீச்சலில் கடந்த வீரன் அவன்.
பாரிஸில் போய் இறங்கிய போது எனக்குப் பெரிய ஆச்சரியம். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு போகிறேன். எவரும் என் கடவுச்சீட்டைப் பார்க்கவே இல்லை. ஒரு நகரில் இருந்து இன்னொரு நகர் போகிற உணர்வுதான் எனக்கு.
ஸ்டேஷனில் எனக்காகக் காத்திருந்தார், பாரிஸ் ஈழ நாடு ஆசிரி யர் எஸ். எஸ். குகநாதன். அவரை லண்டனில் பார்த்ததால் அறிமுகப் பிரச்சனை இல்லை. யாழ்ப்பாணம் ‘ஈழநாட்டில்” பணிபுரிந்தவர்.
இவருடைய அண்ணன் தான் அரசியல் இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்ட பிரபல சிறுகதை எழுத்தாளர் காவலூர் ஜெகநாதன்.
ஸ்டேஷனுக்கு வெளியே தமிழ் ஒலி, ஒளி விளம்பரம் போர்த் திக் கொண்ட ஒரு சிறிய வேன் நின்றது. தமிழ் ஒலி 24 மணிநேர வானொலி, தமிழ் ஒளி 24 மணிநேரத் தமிழ்த் தொலைக்காட்சி.
இந்த இரண்டுமே ஐரோப்பாவெங்கும் ஒலிக்கின்றன. லண்டனில் இருந்தபோதே நான் Tamil Radio and Television தமிழ் ஒலியைக் கேட்டேன். தமிழ் ஒளியைப் பார்த்தேன். உரத்து முழங்க வேண்டிய சாதனை.
இன்று ஐரோப்பிய வான் அலைகளில் மிதந்து வரும் Tamil Radio and Television தமிழ் ஒலி ஒளி நேற்றுவரை கனவாய், கற் பனையாய்த் தான் இருந்தது.
இன்று அது ஐரோப்பாவில் பல (பிரிட்டன ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ், நோர்வே, இத்தாலி, ஹாலண்ட், டென்மார்க், பெல்ஜியம்) நாடு களில் தமிழ் இல்லங்களில் நுழைந்து தமிழரைத் தமிழால் தாலாட்டு கின்றது.
இஃது ஒரு சாதரான செயல் அல்ல. விஸ்வரூபமாய் எண்ணிப் பார்க்கிற ஒருச் செயல். அது கூட ஒரு தமிழராலும் முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனை சாதித்தது பிரான்ஸ் பாரிஸ் TRT தமிழ் ஒலி, ஒளி ஊடக நிறுவனமே. இந்த சாதனையின் பின்னால் தமிழை நேசித்த தமிழ் ஆர்வலர்கள் இருக்கின்றார்கள்.
D 58

லண்டன் முதல் கனடா வரை.
இதனை அவர்கள் மந்திரக்கோலால் சாதிக்கவில்லை. முயற்சி என்ற கோலால் தான் அதைச் சாதித்திருக்கிறார்கள். இதனை முன் னெடுத்து வெற்றிக் கண்டவர் எஸ்.எஸ். குகநாதன்.
மண்ணிலே வெவ்வேறு எல்லைகளில் பிரிந்து வாழ்கிற உலகத் தமிழர்களைப் பிரபஞ்சத்திலே கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிற செயற்கைக் கோள்களின் துணையோடு வான் அலைகளின் மூலம் தமிழர்களையே இணைக்கிற முயற்சியே பாரிஸ் TRTயின் தமிழ் ஒலி - ஒளி.
தமிழ் ஒலி, ஒளி கலையகத்திற்குப் போய் இறங்கியபோது மணி மூன்றாகி விட்டது. குகநாதன் அந்தக் கலையகத்தில் உள்ள பணியா ளர்களை அறிமுகப்படுத்தினார்.
லண்டனில் இருந்தபோது தமிழ் ஒலி வானொலியில் கேட்ட குரலுக்குச் சொந்தமான கோவை நந்தன். ஏ.எஸ்.ராஜா, லோகு என்ற லோகேஸ்வரன், திருமதி நவாஜோதி, தர்ஷன் ஆகியோரையும் தமிழ் ஒளி தொலைக்காட்சியில் பார்த்த பிலிப்தேவா, ஏ.டி. ஜெகன், திருமதி விக்டோரியா, திருமதி சீலி ஆகியோரையும் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான கோமாளிகள் கும்மாளம் நாடகத்தில் முக்கியமான கதாபாத்திரமான அப்புக்குட்டி ராஜகோபாலையும் அங்கு சந்தித்தேன்.
அப்புகுட்டி ராஜகோபால் தமிழ் ஒலி வானொலியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். அது 24 மணிநேர வானொலி. தமிழ் ஒளி தொலைக் காட்சி சந்தாதரராக சேருபவர்களுக்கு இலவசமாய் கிடைக் கிற வானொலி விளம்பரங்கள் மூலம் செலவுகளை ஈடுகட்டுகின்றார்கள்.
அப்புக்குட்டி ராஜகோபாலோடு பேசினேன். இலங்கையில் இருந்த போது வானொலியில் கேட்ட குரல் அவரோடு பேசியபோது புலம் பெயர்வு தவிர்க்கமுடியாதது என்பது தெரிந்தது.
“இனக்கலவரம் எம்மைப் போன்ற கலைஞர்களின் குடிபெயர் வைத் தூண்டிவிட்டது. இன்று பாரிஸில் முகத்தார் ஜேசுரட்ணம், நிர்மலா திரைப்பட ரகுநாதன், பாடகர் எம். ஏ. குலசீலநாதன், காத்திருப்பேன் உனக்காக கதாநாயகன் சிவராம் எனப் பலர் இங்கு இருக்கிறார்கள்.
நான் வேறு தொழிலுக்குப் போகலாம். இந்த வானொலியில் இணைந்ததே ஒரு ஆத்ம திருப்திக்காகத்தான். சில காலம் வானொலி
59

Page 32
D மாத்தளை சோமு
யில் இல்லாதபோது எனக்கு என்னவோ போல் இருந்தது. இன்று தமிழ் ஒலி என்னை வாழ வைக்கிறது. பலரோடு சேர்ந்து “சர்வதேசக் கோமாளிகள்”நாடகத்தை வானொலியில் ஒலிபரப்பினோம். மேடை நிகழ்ச்சிகளையும் செய்தோம் என்றாலும் வானொலி நண்பர்களைப் பிரித்து இருப்பது வேதனையாக இருக்கிறது.
அது முற்றிலும் உண்மையானது என்பதை நான் புரிந்துக்கொள் கிற ஒரு சம்பவம் நடந்தது.
மரைக்கார் ராமதாஸoக்குக் கொழும்பில் விருது கொடுத்த செய்தி வந்துபோது அவரை வாழ்த்த வேண்டும், என்று அவர் துடித்த துடிப்பு சக கலைஞன்மேல் அவருக்கிருந்த அன்பைத் தெளிவாகக் காட்டியது.
அந்தக் கலையகத்தில் குரலையும் கொடுக்காமல் முகத்தையும் டி.வி.யில் காட்டாமல் பணி புரியும் பலரை அப்புக்குட்டி அறிமுகப் படுத்தினார்.
“இவர் தோழர் இலங்கையில் முற்போக்கு இயக்கத்தில் முன்ன ணியில் இருந்தவர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் சுரேஷ், முரளி, தம்பி, சதீஸ் எனப் பலர். இவர்கள் எல்லோரும் பல்வேறுப் பணிகளைச் செய்கிறார்கள்.
இதுதவிர உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய வேறு இரு வர் சுகவீனமாக இருக்கிறார்கள்.
ஒருவர் அறிவிப்பாளர் ஏ.எஸ். ராஜா மறைந்த அறிவிப்பாளர் கே.எஸ். இராஜாவைக் குருவாகக் கொண்டு அவரைப் போலவே அறி விப்புச் செய்பவர். மற்றவர் முகத்தார் என்ற நாடக்கலைஞர்.
அவர் 1966இல் இருந்து 268 வாரம் ஒலிபரப்பான கிராமிய நிகழ்ச்சியின் இலங்கை வானொலியில்) சொந்தக்காரர். முகத்தார் என்றாலே, சக்கடத்தார் என்றாலே ஜேசுரட்ணம் என்பதும் பலருக் குத் தெரியும்.
“ஜேசுரட்ணம் எப்போது வருவார்?”
“தெரியவில்லை”என்ற அப்புக்குட்டி அவரோடுப் பேசத் தொலை பேசி இணைப்பைக் கொடுத்தார். அவரோடு பேசினேன். நலமாக
வாழ்த்துச் சொன்னேன். அப்போதுதான் அவர் சொன்னார் “உங்கள்
எழுத்துக்களை வீரகேசரி மூலம் படித்திருக்கிறேன். நல்ல கலைஞர்
60

லண்டன் முதல் கனடா வரை. பு
களை வளர்த்தெடுத்ததில் பெரும் பங்கு இலங்கை வானொலிக்கும். வீரகேசரிக்கும் உண்டு இலங்கை வானொலி தேடித்தந்த பெயர் இன்று எனக்கு ஆத்ம திருப்தியைத் தருகிறது. அந்தத் திருப்தியில் தான் வாழ்கிறேன்.”
இது நிஜமானது. வளர்ந்து கொண்டிருக்கிற தமிழ் ஒலி வானொலி யிலும் தமிழ் ஒளி தொலைக்காட்சியிலும் அறிவிப்பாளர்கள் பிலிப் தேவா, கோவை நந்தன், லோகு, தர்ஷன், ஏ.எஸ்.ராஜா, விக்டோரியா, சீவி.என்.டி.ஜெகன், திருமதி நவாஜோதி எனப் பலரும் பணிபுரிவது அந்த ஆத்ம திருப்திக்காகத்தான்.இது தமிழர் புலம் பெயர்ந்த நாடு களிலெல்லாம் இருக்கிறது. ஒரு அரசோ பெரிய நிறுவனமோ செய்ய வேண்டியதை, செய்ய முன்வராத இந்த வானொலிகளை தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் நடத்துவது ஆத்ம திருப்திக்குத்தான். தமிழர் அதிகமாக உள்ள கனடாவில் இதில் வெற்றி கண்டிருக்கிறார்கள். ஏனைய நாடுகளில் வெற்றியாக்கப் போராடுகிறார்கள்.
ஒரு அறிவித்தலை தமிழ் ஒலி குகநாதன் எனக்குக் காட்டினார் பிலிப்பைன்ஸ், வெளித்தாஸ், பிரான்ஸ் TRT வானொலிகள் இணைந்து முன்னெடுக்கும் வன்னித் தமிழ்க் குழந்தைகளின் உயிர்ப் பாதுகாப்பு முயற்சி ஏப்ரல் 2துக்க வெள்ளி நாள் துயர் துடைப்பு.
பாதர் கஸ்பார் ராஜ் ஜெகத் அவர்கள் இதை ஒருங்கிணைக்க வருகிறார்.
நான் குகநாதனைப் பார்த்தேன். “TRTயின் தமிழ் ஒலி ஒளி தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கும் சமூகப்பணி இது” என்றார் குக நாதன். அதனை நான் நேரிலேயே பார்த்தேன்.
பாரிஸில் - 12
வெரித்தாஸ் வானொலியும் ரிஆர்.ரி. வானொலியும் தொலைக் காட்சியும் இணைந்து வன்னிக் குழந்தைகள் துயர்துடைப்பு நிதி சேக ரிப்புக்காகப் பெரிய வெள்ளிக்கிழமையைத் தெரிவு செய்து ஐரோப் பியத் தமிழர்களிடம் வானொலி தொலைக்காட்சி மூலம் நிதி உதவி யைக் கோரின.
6

Page 33
D மாத்தளை சோமு
வானொலி தொலைக்காட்சியின் வழக்கமான நிகழ்ச்சிகள் நிறுத் தப்பட்டு நிதி உதவி கோரும் நிகழ்ச்சிகளே தொடர்ந்தன. இதனை முன் னெடுத்து நடத்துவதற்காக வெரித்தாஸ் வானொலி தமிழ்ப்பகுதி இயக் குனர் அருட்தந்தை வணக்கத்திற்குரிய கஸ்பார் ராஜ்ஜெகத் பிலிப் பைன்ஸ் நாட்டிலிருந்து பிரான்ஸ் வந்தார். அவர் ரிஆர்.ரி. கலையகத் தில் இருந்து வானொலி தொலைக்காட்சி மூலம் உருக்கமான ஒரு வேண்டுக்கோளை விடுத்தார்.
“மனிதன் தன்னை மேம்படுத்தவும் தெய்வ நிலைக்கு உயரவும் செய்ய வேண்டியது. துன்பப்பட்டவர்களுக்கு உதவி செய்வதே. துய ருற்றவர்களின் துயரத்தைத் துடைக்க நீங்கள் முயன்றால் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்.”
இதனைத்தான் அறிஞர் அண்ணா 'ஏழையின் சிரிப்பில் இறை வனைக் காண்போம்' என்று கூறினார்.
பாதர் கஸ்பார் அவர்களின் உருக்கமான வேண்டுகோளுக்குப் பிறகு தொலைபேசி வழியாக நிதி உதவி ஒப்புதல்கள் வரத் தொடங் கின. பல தொலைபேசி இணைப்புகளில் இடைவிடாத அழைப்புகள்.
முதல் நாள் இரவு இரண்டு மணிவரை மக்கள் அழைத்து தங்கள் பங்களிப்பைச் செய்தனர். அன்றைய உதவிகோரும் நிகழ்ச்சியைப் பாதர் கஸ்பார் முடித்து வைத்து உரையாற்றியபோது அவர் கண்களில் நீர் மலர்கள் பூத்தன. அன்று இரவுவரை ஓயாது அந்தப் பணியிலே ஈடுபட்டதால் அவரால் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.
பல நேயர்கள் அவரோடு தொலைபேசியிலே பேசி, தொலைக் காட்சியில் அவரைக் கண்டார்கள். லண்டன், ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், டென்மார்க், சுவீடன், நோர்வே, இத்தாலி, ஹொலண்ட் என பல நாடு களில் வாழ்கின்ற தமிழ் நெஞ்சங்கள் அவரின் பணியைப் பாராட்டின.
. அடுத்த நாளும் தமிழ் ஒலி-ஒளி ஊடகங்கள் மூலம் அந்தப் பணி தொடர்ந்தது. தொலைபேசி அழைத்துக் கொண்டே இருந்தது. தொலை நகல் மூலமும் நிதி உதவி சம்மதங்கள் வந்தன.
அன்று இரவு அந்த நிகழ்வில் பாதர் கஸ்பார் அவர்கள் உரை யாற்றிபோது சொன்ன வார்த்தைகள் வன்னிக்கானகத்திலே வாழ்ந்து
62

லண்டன் முதல் கனடா வரை.
கொண்டிருக்கிற அகதிகளுக்கு இறைவனின் ஆசியைக் கொடுத்த தைப் போல் இருந்தன.
“இந்த உலகில் எவரும் அநாதைகள் இலர் வன்னிக் கானகத் திலே வாழ்கிற தமிழ் அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்ட ஐரோப்பாத் தமிழர்கள் முன்வந்து விட்டார்கள். இது கடவுளின் சாதனை. மனிதர் கள் மூலமாக உதவுவதும் அவரே. இதற்கு உதவிய எல்லா நெஞ்ச களுக்கும் இறைவன் எல்லா நலனும் தந்திடப் பிரார்த்தனை செய் கின்றேன்.'
நிகழ்ச்சியை முடித்து உரையாற்றிய தமிழ் ஒலி ஒளி இயக்கு னர் எஸ்.எஸ். குகநாதன், “வன்னியிலே வாடுகின்ற குழந்தைகள் தங்க ளுக்கு உதவ எவரும் இல்லையென்று எண்ணக்கூடாது. எல்லைகள் கடந்து வாழ்கிற தமிழ்ப் பெருமக்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்கள். நேற்றும் இன்றும் மக்கள் அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தின்படி சேர்ந்த தொகை 2 கோடியே 50 லட்சம் ரூபாய்” என்று கூறினார்.
அது மிகப்பெரிய சாதனை. தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் வேறு எந்த ஒரு தமிழ் வானொலியும் தொலைக்காட்சியும் இவ்வளவு பெரிய தொகையைச் சேர்க்கவே இல்லை. இதனைச் சாதித்த ரிஆர்.ரி. தமிழ் ஒலி, ஒளியைக் கட்டாயம் பாராட்ட வேண்டும். ஆனால் பாரி ஸில் வெளியாகிற ஒரு தமிழ் வார இதழ் இந்த துயர் துடைப்புப் பணி யைப்பற்றி தலையங்கத்திலே எழுதியபோது வண. பாதர் கஸ்பார் அடிகளாரைப் பற்றி மட்டுமே எழுதியிருந்தது.
இந்தத் துயர் துடைப்பை முன்னெடுத்த வானொலி தொலைக் காட்சி ஊடகங்களுக்கு நன்றி என்று மட்டுமே எழுதியது. ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி ஒளி என்று எழுதவே இல்லை. இந்த போட்டி மனப்பான்மை புலம்பெயர்ந்த நாடுகளிலும் துளிர்விடுவது நல்லதில்லை.
சில நாடுகளில் சங்கங்கள், அமைப்புகள், பத்திரிகைகள் என்பன போட்டி மனப்பான்மையில் இயங்குகின்றன. ஒருத்தரைப் போய்ச் சந் தித்தால் மற்றவரைப் போய்ப் பார்க்கமுடியாது. அவரைப் பார்க்கும் முன்னர் என்னைப் பார்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழன் மாறவில்லை' என்பதை உறுதிப்
63。ロ

Page 34
D மாத்தளை சோமு
படுத்துகிறது. இது ஒரு குறைதான். இந்தக் குறையே வேறு தேசத்தவர் களுக்குப் பிரச்சினையாகிறது.
வன்னிக் குழந்தைகள் துயர்துடைப்பு நிகழ்ச்சியை முன்னெடுத்த ரி.ஆர்.ரி. பாரிசில் நிறுவப்பட்டதே சாதனையானது. 24 மணி நேரத் தொலைக்காட்சி தமிழில் அதுவும் புலம் பெயர்ந்த நாடுகளில் சாத் தியப்படுமா என்று எண்ணியவர்களின் எண்ணங்களைத் தோல்வி காணச் செய்தது. ரி.ஆர்.ரி. பாரிசிலிருந்து சாதனை செய்து வருகிறது.
இதன் இயக்குநர் சபையில் பாரிஸ் தொழிலதிபர் த. சந்திர குமார், திருமதி பத்மா சொக்கநாதன், எஸ். பாலச்சந்திரன், எஸ். அர விந்த், எஸ். பூரீதரன், நா. உருத்திரமூர்த்தி, ஆர்.கந்தசாமி, இ.கே. ராஜ கோபால், திருமதி உருத்திரகுமார் கயல்விழி, ஆர். பூரீரெங்கன். ஆர். மலோனி, சி. பேரின்பநாதன் ஆகியோரும் இருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வான் அலைகள் மூல மாக தமிழ்த் தொலைக்காட்சியின் ஊடாக நாட்டு எல்லைகளால் பிரிந்து போயிருக்கிற தமிழர்களை ஒன்றுபடுத்த முடியும் என்பதை ரி.ஆர்.ரி. பிரான்ஸ் நாட்டிலிருந்து நிரூபித்திருக்கிறது.
பிரான்ஸ் நாடு ஐரோப்பாவில் ஒரு தனித்துவமானது. பிரெஞ்சு மொழியைப் பெரிதும் போற்றி எங்கள் மொழியாலும் முடியும் என் பதை நிரூபித்து வல்லரசாக இருக்கிற அந்நாட்டின் இன்றைய மக்கள் தொகை ஏறக்குறைய ஆறு கோடியாகும்.
பெரும்பாலான மேற்றிசை நாட்டு மக்களைப் போன்றே பிரெஞ்சு மக்களும் புதிய இன அடையாளத் தேடலில் ஆர்வம் காட்டி வந்துள் ளனர். தனிமனித சுதந்திரத்திற்கு மேன்மை கொடுக்கும் அவர்கள், தங்களின் தாய்மொழியான பிரெஞ்சை மேவிப் போற்றுகின்றனர்.
அந்தப் பிரெஞ்சு மொழி உலகில் 30நாடுகளில் பேசப்படுகின் றது. இன்றைய பிரான்சின் மூதாதையர்களாக Gaulois, liberes,Ligures, Belges, Germains, GrecS ஆகிய இனத்தவர்களே. இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் Gaulois என்ற இனத்து மக்களே அதிகமாக பிரான்சில் வாழ்ந்தார்கள். அப்போது அந்தப் பிரதேசத்திற்கு Gaule எனப் பெயரிட்டனர்.
கி.மு. முதலாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் ஜூலியஸ் சீசர் இந்த நாட்டின் மீது படையெடுத்து ரோமானிய வாழ்க்கை முறையைப் பரப்பினார். நான்கு நூற்றாண்டு காலம் ரோமானிய ஆட்சி நீடித்தது."
O 64

லண்டன் முதல் கனடா வரை.
5ஆம் நூற்றாண்டுப் பகுதியில் பல ஜெர்மானிய இன சமூகப் பிரி வினர் இந்நாட்டுக்குப் படையெடுத்து ஆங்காங்கே அத்துமீறி குடியேறி குறுநில ஆட்சி அமைத்தனர். இந்த சமூகப்பிரிவினர் Wisgoths Bur gondes, FrancS GTGOTLIUGGuri, 9.GJi56f6) Franc &eup.5556Ti GJanGOTuj சமூகப் பிரிவினரைத் தோற்கடித்து Clovis என்பவரை அரசன் ஆக் கினர்.
பிரான்ஸ் என்ற தேசம் உருவாக முக்கிய பங்கு வகித்த மன்னர் Covis. இவன் 15வயதில் அரசன் ஆனவன். கம்பீரமான தோற்றத்தை இளைய பருவத்தில் கொண்டான் அவன். ஆரிய மதமான பயெனை (பகானிசம்) பின்பற்றி வந்த இவன், Bourgonde இளவரசி Clotidle இரண்டாவது மணம் புரிந்தான்.
முதல் மனைவி மூலம் ஒரு மகன் இருந்தான். இரண்டாவது மனைவிக்கு நான்கு புதல்வர்கள். அவர்களுக்கு ஞானஸ்நானம்' கொடுக்கப்பட்டது. கணவனைத் தனது மதத்திற்கு இழுக்க மனைவி முயன்றாள். அவன் மறுத்தான்.
இதனிடையே பிரான்ஸ் (France) சமூகத்தவர்களைச் சேர்ந்த Ripuaires என்ற பிரிவினர் மீது அலமன்ஸ் Alamans என்ற மன்னர் போர் தொடுத்தார். எனவே ரிப்புயர் மன்னர் குளோவிசின் உதவியைக் கோரினர். குளோவிசும் போரில் குதித்து உதவிக்குப் போனார். ஆனால் அலமானியர் பலமாகப் போரிட்டனர். இக்கடும் போரில் குளோவிஸ் துணிவு குறைந்து மனத் தைரியம் இழந்து போகும் நிலை வந்தது.
அப்போது, “துன்பப்படுகிறவர்களுக்கு உதவி செய்யும் இயேசு கிறிஸ்துவே என் எதிரிகளைத் தோற்கடிக்கத் துணைபுரிந்தார் உமது பெயரில் என்னை உறுதிப்படுத்திக் கொள்வேன். நான் நம்பி வந்த கடவுள்கள் என்னைக் காப்பாற்றவில்லை. எனவே எனக்கு உதவுவீ ராக” என வேண்டி நின்றார்.
யுத்தத்தில் திருப்புமுனை தோன்றியது. இறுதியில் குளோவிஸ் வெற்றி வாகை சூடினார். இந்த தொல்பியாக் (Tolbiac) போரின் வெற்றி மன்னனின் வாழ்க்கையில் திருப்பத்தைப் கொடுத்தது. இவர் கிறிஸ்துவத்துக்கு மாறினார். ஞானஸ்நானம் பெற்றார்.
அதன் பிறகு மக்களும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஐரோப்பாவில் கிறிஸ்தவம் நிலைப்பதற்கு குளோவிசின் ஞானஸ்நானம்
65 ロ

Page 35
மாத்தளை சோமு
பெரிதாக வித்திட்டது. இவர் முதலாவது முழுக் கிறிஸ்துவ மன்னராக வும் பிரான்சின் தந்தையாகவும் விளங்குகிறார். பிறகு கோல் என அழைக்கப்பட்டு வந்த நாட்டுக்கு பிரான்சி - பிரான்ஸ் எனப்பெயர் மாற்றம் செய்தார்.
காலப்போக்கில் பிரான்ஸ், ஜேர்மனி என்ற சக்தி வாய்ந்த நாடு கள் கட்டியெழுப்பப்பட்டன. இவ்வாறு கட்டியெழுப்பட்ட பிரான்சில் தான் ஒரு மாபெரும் புரட்சி மக்களால் நடத்தப்பட்டது. இப்புரட்சி ப' இனபோது மன்னரின் தலையே உருண்டது.
பாரிஸில் - 13
கீழைத் தேச நாடுகளில் அரிசிமா போன்ற உணவுப் பொருட்கள் தேர்தலில் ஆட்சியைக் கவிழ்த்திருக்கின்றன. பிரான்சில் 1792 இல் ஒரு மாபெரும் புரட்சி Pain என்கிற ரொட்டியின் மூலம் நடந்திருக்கிறது.
பதினான்காம் லூயி பிரான்சை ஆண்ட போது ரொட்டி கேட்டு லட்சக் கணக்கில் மக்கள் மாளிகையை முற்றுகையிட்டனர்.
“சாப்பிட ரொட்டி வேணுமா? ரொட்டி இல்லை. கேக் சாப்பிடுங்
கள்."அது அரண்மனையிலிருந்து வெளிவந்தது. பட்டத்துராணியின் ஆணவக்குரல்.
ஏழை மக்கள் அந்தப் பதிலைக் கேட்டுப் பொங்கி எழுந்தனர். மன்னரின் படை வீரர்களோடு போர் புரிந்தனர். சிறை உடைக்கப்பட் டது. மக்கள் மாளிகையைக் கைப்பற்றினார்கள். மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது.
முடியாட்சி நீங்கியது. மக்களாட்சி மலர்ந்தது. பிறகு மன்னர் சிரச்சேதம் செய்யப்பட்டார். இந்தப் புரட்சியின் பின்னால் பல எழுத் தாளர்கள் இருந்திருக்கிறார்கள். புரட்சி எழுத்தாளர் ரூசோ இதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்.
இந்தப் புரட்சியின் போது பாரிசில் இரத்தம் ஆறாக ஓடியதாக சரித்திரச் செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. மாவீரன் நெப்போலியன் பிரான்சின் பெயரை உலக வரலாற்றில் பொறித்தவன். பீரங்கிப் படைக்
口 66

லண்டன் முதல் கனடா வரை. D
குழுவின் அலுவலராகி 1793இல் அப்படைக்கே தலைவனான நெப் போலியன் 30 வயதிலேயே பிரான்சின் அதிபரானான். 1800இல் ஜேர்மனியுடனும் 1801இல் ஆஸ்திரியாவுடனும் 1802இல் இங்கிலாந் துடனும் போரில் வெற்றி கண்ட நெப்போலியன் 1804இல் சக்கரவர்த்தி யாகி நெப்போலியன் எனும் பெயர் கொண்டான்.
நெப்போலியனின் தொடக்க கால ஆட்சி பல நாடுகளை வெற்றி கொண்ட காலமாகவும் பிற்பகுதி செல்வாக்குச் சரிந்த காலமாகவும் இருந்தது. 1815இல் நெப்போலியனை Waterlooஇல் தோற்கடித்த பிரிட்டிஷார் அவரை Saint Helene தீவில் சிறை வைத்தனர். 1821 இல் இறந்த நெப்போலியனின் சாம்பல் 1844இல் தான் பிரான்சுக்குக் கொண்டு வரப்பட்டது.
சரித்திரத்தில் மிகவும் புகழ்பெற்ற நெப்போலியன் ஒரு மாவீரன் என்பது மட்டுமே பலரும் அறிந்த ஒன்று. ஆனால் இவர் தன் காதலி Josephineக்கு எழுதிய காதல் கடிதங்கள் மொழி இலக்கியம் பகுதி யில் புகழ் பெற்று அவரை ஒரு இலக்கியவாதியாக உயர்த்தியது பல ருக்குத் தெரியாது.
நெப்போலியனுக்குப் பிறகு பல்வேறு சம்பவங்கள் நடை பெற்றன.
1871இலிருந்து பொருளாதார மேம்பாடு அடைந்து வந்த பிரான்ஸ் 1914ல் வெடித்த முதாலவது உலகப்போரில் கொடுமையான அழிவு களுக்கு உள்ளானது. பிரான்சை வெற்றி கொண்ட ஜேர்மனி ஐரோப் பாவில் முக்கிய வல்லரசாக மாறியது.
இரண்டாம் உலகப் போரிலும் பிரான்ஸ் பாதிக்கப்பட்டது. 1948 இல் இடைக்கால சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்தப் போரில் பிரான்ஸ் ஒரு கோடி 40லட்சம் மைந்தர்களை இழந்தது. 30 லட்சம்பேர் காயப்பட்டனர்.
1944இலிருந்து பிரான்ஸில் வாழ்க்கை சீர்பட ஆரம்பித்தது.' 1946இல் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் அமுல் செய்யப்பட்டது. நான்காவது குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. 1958இல் ஐந்தாவது குடியரசு நிறுவப்பட்டு சார்ள்ஸ் டிகால் மறுபடியும் ஜனாதிபதியானார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் பிரான்ஸின் காலனித்துவ ஆட்சி பல்வேறு தீவுகளில் இருக்கின்றன. அவைகளில் Guyane, Reunion,
67

Page 36
0 மாத்தளை சோமு
Polynesia,Caledonia என்பன மிக முக்கியமானவை. அதில் Renion தீவில் இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
பிரான்ஸில் அகதியாகத் தஞ்சமடைந்த பல தமிழர்கள் பிரெஞ்சு குடியுரிமையோடு ரியூனியன் தீவில் குடியேறியிருக்கிறார்கள்.
பிரான்சில் இன்றைய வெளிநாட்டவர் தொகை 4 மில்லியனாக இருக்கலாம்.
1994 கணக்கெடுப்பின்படி 3.6 மில்லியனாக வெளிநாட்டவர் குடியேற்றம் இருந்தது. இவ்வெளிநாட்டவர்களில் போர்த்துக்கேயர், இத்தாலியர், ஸ்பானியர், போலந்துக்காரர், யூகோஸ்லாவியர், அல் ஜிரியர், மொரோக்கர், டூனிசியர், துருக்கியர், இந்தோ-சீனர், கறுப்பு ஆபிரிக்கர் ஆகியோரே அதிகமானவர்கள்.
அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட, அகதிகளாக விண்ணப் பித்த இலங்கை தமிழர்களின் தொகை கிட்டத்தட்ட 40,000 பேர் எனத் தெரியவந்துள்ளது. பிரான்சில் அகதியாக விண்ணப்பித்து குடியுரிமை பெற்ற பல தமிழர்கள் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடு களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இன்றைய பிரான்சையும் அதன் தலைநகரான பாரிசையும் பார்க் கின்றபோது “இரு உலக யுத்த அழிவிலிருந்தும் பல்வேறு சோதனை களிலிருந்தும் மீண்டு விட்ட நாடா இது? என்று எண்ணத் தோன்று கின்றது.
ஜப்பானில் அணுகுண்டை அமெரிக்கா போட்டது. ஆனால் ஜப்பான் அழிந்து போனதா என்ன? அழிவிலிருந்து மீண்டு இன்று உலகின் பொருளரசாக மாறவில்லையா? ஜப்பானும் பிரான்சும் பல் வேறு அழிவில் இருந்து மீண்டு வல்லரசாக தலை நிமிர்ந்துநிற்கின்றன.
அந்த பிரான்சின் தலைநகர் பாரிஸ். உலக நகரங்களின் தங்கை என்று புகழப்பட்ட இந்நகர் ஜரோப்பாவிலேயே அழகான நகர்தான். பல்வேறு நகர்களைப் பார்த்தபோதும் பகலிலும் இரவிலும் என்னை மயக்கிய நகரம் பாரிஸ்தான்.
பாரிசுக்குப் போகிற ஒரு பயணி, பகலிலும் இரவிலும் அதன் அழகைக் கட்டாயம் பார்க்க வேண்டும். பகலில் பாரிசைப் பார்க்க என்னை அழைத்துப் போனவர் ஞானம் பீரிஸ். ஜி.பி.பிலிம்ஸ் என்ற
68 ם

லண்டன் முதல் கனடா வரை.
N பெயரில் பல திரைப்படங்களை வீடியோ வழியே தயாரித்து பாரிசில் திரையிட்டவர். அவர் பேசும் போதே நகைச்சுவை சேர்ந்து விடுகிறது.
கவிஞராகக் கூடிய அளவிற்கு உதாரணங்களும் எதுகை மோனை யும் சேர்ந்த வரிகளை அவ்வப்போது அள்ளி வீசினார். ஒரு தசாப் தத்திற்கு மேலே பிரான்சில் வாழ்ந்து வரும் அவருக்குப் பாரிஸ் தெருக் கள், சந்துகள் பழக்கமானவை. எனவேதான் தமிழ் ஒளி குகநாதன் அவரை அறிமுகப்படுத்தி பாரிசைச் சுற்றிக் காட்டச் சொன்னார்.
பொதுவாக நான் பெரிய நகரங்களை காரில் சுற்றிப் பார்க்க விரும் புவதில்லை. போக்குவரத்துப் பிரச்சினை, காரை நிறுத்துவது எங்கே என்பது போன்ற சிக்கல்கள் நன்மைச் சங்கடப்படுத்தும். எனவே ரயி லில் போவதே இலகுவானது. நான் விரும்புவது. ஆனால் பாரிசில் ஞானம் பீரிஸ் தன் காரில் என்னை ஏற்றிக் கொண்டு சுற்றிக்காட்ட கிளம்பினார்.
பாரிஸ் என்றதும் ஈபில் டவர் (Eiffel Tower) எவருக்கும் நினை வுக்கு வரும். ஏழு உலக அதிசயங்களில் அந்த பாரிஸ் கோபுரமும் ஒன்று.
அந்த கோபுரத்தைப் பார்க்கப் போகிறோம் என்றதும் மனதுக் குள் உற்சாகம் பொங்கியது. ஆனால் அதனை அடங்க வைப்பது போன்று ஒரு தகவலை ஞானம் பீரிஸ் சொன்னார். டவருக்குப் போகிற பாதையைத் திடீரென்று மூடிவிட்டார்கள். கொஸொவோ பிரச்சினை சம்பந்தமான ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அப்போதுதான் வெளியே பார்த்தேன். பிரான்ஸ் பொலிஸார் அவ்வழியே செல்லும் கார்களை திருப்பி விட்டுக்கொண்டிருந்தார்கள்.
பாரிஸில் - 14
பாரிஸ் டவரை எனக்கு, அன்றே காட்ட வேண்டும் என்று பல குறுக்குத் தெருக்கள் வழியாகக் காரை ஓட்டிப்போயும். அது முடியா மல் போகவே, s
“டவரை இன்று பார்க்க முடியாது. ஆர்ப்பாட்டம் காரணமாக எல்லா வழிகளையும் மூடிவிட்டார்கள். எனவே டவரை நாளைக்குப் பார்ப்போம். இன்று வேறு இடத்திற்குப் போவோம் என்று சொன்ன
69 о

Page 37
o மாத்தளை சோமு
ஞானம் பீரிஸ் காரை வேறு பாதையில் ஒட்டினார். எந்த இடம் என்று நான் கேட்கவில்லை. ஏனென்றால் கார் போகின்ற பாதையே கண் ணுக்கு அழகாய்த் தெரிந்தது.
பாரிஸ் நகரமே ஒரு திறந்தவெளி நூதன சாலையோ (மியூஸியம்)
என எண்ணுமளவுக்கு ஒவ்வொரு வீதியிலும் ஒரு புராதன சிலையோ அற்புதமான கட்டிடமோ இருந்தது. புராதன காலத்தில் கட்டிடங்களின் கைத்திறனால் பார்ப்பவரை மயக்கிய “மயன்” பாரிஸ் நகரத்துக்கு வந்து தங்கிப் போயிருக்க வேண்டும்.
அத்தனை அற்புதமான கட்டிடங்கள் நின்று நிதானமாய் பார்க்க வேண்டியதை ஒடுகிற காரில் எப்படிப் பார்க்கமுடியும்.?
இப்போது கார் ஒரு நதி ஓரமாக ஓடியது. ஞானம் பீரிஸ் சொன் னார். “இதுதான் ஸெய்ன் நதி. இது பாரிஸைத் தடவிக் கொடுத்துக் கொண்டு ஓடுகிறது. லண்டனில் தேம்ஸ் போல பாரிஸில் இந்த ஸெய்ன் நதி பிரசித்தமானது.”
காரை ஒட்டிக் கொண்டே ஞானம் பீரிஸ் கவி சொல்லத் தொடங் கினார்.
செயின் (Sain) நதி ஒடுதப்பா-ஒரு செந்தாமரையும் இல்லையப்பா. வாய் முகம் கழுவாமல் வழி வழியே கொஞ்சுதப்பா நல்லதொரு நாடப்பா !
நாகரிகத்துக்கு நிகரப்பா. கண்போன திக்கெல்லாம் அம்மணமான சிலைகளப்பா !
பிறகு அந்தக் “கவி வரிகளை” விளக்கத் தொடங்கினார் ஞானம் பீரிஸ். “செயின் நதியில் செந்தாமரை இல்லை. சுத்தமான நீர் ஓடுகிறது காதல் ஜோடிகள் அதிகாலையிலே பாரிஸில் முத்தமிட்டு மகிழும். எங்கு பார்த்தாலும் அம்மணமான சிலைகள் எல்லாவற்றையும் நீங் களே பாருங்கள்.”
அவர் சொன்னது போல் செந்தாமரை இல்லாத செயின் நதியைப் பார்த்தேன். ஆங்காங்கே முத்தமிடுகிற ஜோடிகளையும் பார்த்தேன். அம்மணமான சிலைகளை இறங்கித்தான் பார்க்க வேண்டும். பாரிஸ்
O 70

லண்டன் முதல் கனடா வரை.
நகரம் சிலைகளின் காப்பகமோ என்று சொல்லக்கூடிய அளவிற்கு சரித்திர நாயகர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், தலைவர்கள் என சமூகத்தின் முன்னோடிகளின் உருவச் சிலைகளைக் கட்டிடங்களில் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.
தெருக்களில் எழுத்தாளர்கள், ஓவியர்கள் பெயர்கள் இருந்தன. ஐரோப்பா நாடுகளிலேயே எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஒவியர்கள் கெளரவமாய் உயர்த்தப்பட்டிருப்பது பாரிஸில்'மாத்திரமே. பாரிஸ் கனவுகளுக்கு உருவம் கொடுத்த ஒரு மாநகரம் எத்தனை தடவை போனாலும் ஒவ்வொரு முறையும் புதுசாய்த் தெரியும் ஒரு பூலோக சொர்க்கம். பிரான்ஸைத் தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு வசதியாய் வாய்த்த உல்லாசபுரி,
“பிரான்ஸில் பார்க்க வேண்டியது நிறைய இருக்கிறது. பிரான்ஸ் அலுத்து விட்டதென்று எவராவது சொன்னால் சொன்னவருக்கு வாழ்க்கையே அலுத்துவிட்டது என்றுதான் அர்த்தம்” என்று சொன்ன ஞானம் பீரிஸ் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு,
“இப்போது நாங்கள் வெள்ளைக் கோயிலை (White Church) பார்க்கப் போகிறோம்” என்று சொன்னார். இருவரும் ஒரு மலைக் குன்றிலிருந்த படிகளில் ஏறிப் போனோம். மலைக்குன்றில் மவுண்ட் 5FTöJ85 † (Mount Scre – Cceur) GT6ôp LSlJu6buJLDTGOT (356u TQujLb இருந்தது.
1876இல் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைய 1919 ஆகியது. மணிக்கோபுரப் பாணியிலான இந்த தேவாலயக் கோபு ரத்தின் உயரம் 275 அடியாகும். பழுப்பு வெள்ளை நிறப் பூச்சினை இந்தத் தேவாலயத்திற்குப் பூசியிருப்பதால் (White Church) வெள் ளைக் கோயில் என்பது தமிழர்களிடையே பிரசித்தம்.
அந்தத் தேவாலயத்தின் உள்ளே நானும் ஞானம் பீரிஸoம் போனோம். உள்ளே நூற்றுக் கணக்கான மக்கள் சேர்ச் பெஞ்சுகளில் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு ஓரத்தில் மெழுகுவர்த்திகள் கூட்டாக எரிந்து கொண்டிருந்தன. மேலே இயேசு நாதரின் அழகான ஒவியம். பெயிண்டிங். அந்த ஒவியத்தை பார்க் கின்றபோது இயேசுநாதர் எம்மை அணைத்துக் கொள்வதுபோல் தோன் றும். அங்கிருந்த அமைதியும் அழகும் இதயத்தை நிறைக்க ஒரு பரி பூரண நிம்மதி பெற்றது போன்ற உணர்வுடன் வெளியே வந்தேன்.
7 DI

Page 38
மாத்தளை சோமு
வெளியே மனிதர்கள். பல நாட்டுப் பயணிகள் வேறு. உள் நாட்டு ஜோடிகள் வேறு. எவரைப்பற்றியும் கவலைப்படாமல் அந்தக் கூட்டத்திலும் காதலித்துக் கொண்டிருந்தன சில ஜோடிகள். அவர்களைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிக் கவிதை சொன்னார் ஞானம் பீரிஸ்.
“கொஞ்சுதப்பா கொஞ்சுதப்பா கோட்டைக் கதவு மூடியும் கொஞ் சுதப்பா”
நான் அவரிடம் கேட்டேன். “அதென்ன கோட்டைக் கதவு மூடியும் கொஞ்சுதப்பா?”
ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு அந்தக் கதையைச் சொன்னார்.
“பாரிஸிலுள்ள ஒரு பழைய அரண்மனையில் புகுந்த பிரெஞ்சு ஜோடி கொஞ்சிக் குதூகலித்ததாம். கொஞ்சியதில் நேரம் போனதே தெரியவில்லை. அந்த அரண்மனையின் கோட்டைக் கதவை மூடி விட்டார்கள். வெளியே வரமுடியாத ஜோடி இரவு அங்கேயே தங்கி கொஞ்சினார்களாம். s
நான் அடக்க முடியாமல் சிரித்தேன். பிறகு சொன்னேன், “அந்த ஜோடிகள் அதிஷ்டசாலிகள் செலவில்லாமல் முதல் இரவை முடித் திருப்பார்கள்.”
அந்தத் தேவாலயத்தை சுற்றி வந்தோம். பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றார்கள். எல்லாக் கூட்டத்திலும் எட்டிப் பார்த் தேன். அங்கே பலர் பெயிண்டை உடல் முழுவதும் பூசிக் கொண்டு பல் வேறு வடிவங்களாகி தோற்றமெடுத்து இருந்தார்கள். அவர்களைப் பார்த்தபோது எனக்கு வி.ஜி.பி. கோல்டன் கடற்கரையில் சிலையாக நிற்கிறவரின் ஞாபகம் வந்தது.
அவரைச் சிரிக்க வைத்தால் பரிசு உண்டு. இங்கே அப்படியான போட்டி இல்லை. ஆனால், நீங்கள் என்ன பேசினாலும் சிலையாக இருக் கிறது அந்த உருவம். சிலர் பிரெஞ்சு மொழியில் கிண்டலடித்தார்கள். ஆனால் அதற்குக்கூட எந்த அசைவும் தெரியவில்லை. அப்படியே நாள் முழுக்க இருக்கிறார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் ஒரு பாத்திரம் இருக்கிறது. வேடிக்கை பார்க்கிறவர்களிடமிருந்து எதிர்பார்க்கிற சில்லறை அதில் விழுகிறது. அதுதான் அவர்கள் எதிர்பார்க்கிற வரு மானம் இன்னொரு பக்கத்தில் பல ஒவியர்கள் பிரெஞ்சு, சீனர், இந் தியர் எனப் பலர் பத்து, பதினைந்து நிமிடத்தில் அவர்கள் விரும்பிய
D. 72

லண்டன் முதல் கனடா வரை.
வர்களின் தோற்றத்தை வரைந்து தருகிறார்கள். கிட்டத்தட்ட போட் டோபோல் இருக்கும். ஒரு படம் வரைய 350 பிராங்க் எனப் பலகை சொல்லியது. விலையைப் பார்த்து ஒதுங்கிய என்னை ஒரு சீன ஓவி யர் நெருங்கிப் பேரம் பேசத் தொடங்கினார்.
கடைசியாக 50 பிராங் கேட்டார் ஒரு படம் வரைய. ஏனோ எனக்கு அதில் பிடிப்பு இல்லாமையினால் ஒப்பாமல் ஒதுங்கிப் போனேன். வேறு இடத்தில் கத்திரிக்கோலும் கலர் காகிதமுமாக பலர் இருந்தார்கள். மனிதர்களின் ஒரு பக்கத் தோற்றத்தை அந்தக் கலர்க் காகிதத்தில் வெட்டித் தருகிறார்கள். அது வேறு வகையான ஒரு கலை. அதற்கும் காசு. அதிலிருந்து விடுவித்துக் கொண்டு சிறிது தூரம் நடந்து போனேன்.
“அதோ டவர்” என்றார் ஞானம் பீரிஸ்
அவர் சொன்ன “திக்’கை நோக்கினேன். பாரிஸ் நகரமே அழ காய் விரிந்து தெரிந்தது.
ஈபிள் டவரும் அதில் இருந்தது. அந்த இடம் உயரமானதால் பாரிஸ் நகரத்தையே அங்கிருந்து பார்க்க முடிந்தது.
ரம்யமான காட்சியைப் பார்த்துவிட்டு ஈபிள் டவரை காலை யில் தான் பார்க்கமுடியும் என்ற ஏக்கத்தோடு காரில் ஏறினேன்.
பாரிஸில்-15
அடுத்த நாள் கேதீஸ்வரன் என்கிற 'கேதுவோடு புகழ் பெற்ற பாரிஸ் கோபுரத்தைப் பார்க்கப் பாதாள ரயிலில் கிளம்பினேன்.
பாதாள ரயிலை மெட்ரோ என்று அழைத்தார்கள். சரியான வரைபடம் இல்லையென்றால் புதியவர்கள் வழி மாறிப்போக வேண்டி வரும். ஒரு 'மெட்ரோ ரயில் நிலையத்தில் கீழும் மேலும் அல்லது வடபுறம் தென்புறம் வெவ்வேறு ரயில் பாதைகள் இருக்கின்றன.
எனக்கு வழிகாட்டியாக கேது வந்ததால் தைரியமாய் நடந்து போனேன். பிரான்சின் பாதாள மெட்ரோ ரயில் லண்டன் ரயிலை விட எனக்குப் பிடித்திருந்தது. லண்டன் டியூப் ரயில்கள் வெகுவாகச்
73 D.

Page 39
மாத்தளை சோமு
சத்தம் போடும். ஆனால் பிரான்சில் ரயில்கள் அமைதியாக ஓடுகின் றனவாம். அதற்குக் காரணம் அவைகள் தண்டவாளங்களின் மேல் ஓடாமல் இறப்பர் பெல்ட் மேல் ஓடுகின்றனவாம். நம்ப முடியவில் லைத்தான். ஆனால் அதுதான் உண்மை.
மேலும் ரயில்கள் இங்கே ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை வரு கின்றன. எனவே ரயிலைப் பிடிக்க ஓடவேண்டிய அவசியம் இல்லை ஒன்று போனால் இன்னொன்று. இதனை பிரான்சில் வேடிக்கையாக இப்படிச் சொல்கிறார்கள்.
“ஓடுகின்ற ரயிலையும் உன்னை விட்டுப் போகின்ற பெண்ணை யும் துரத்தாதே. இன்னொரு ரயிலும் இன்னொரு பெண்ணும் வந்து கொண்டே இருப்பாள். அது உண்மை. அங்கே மெட்ரோவில் ரயில் கள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கின்றன.”
ஸ்டேசஷனில் ரயிலில் எல்லாம் பிரெஞ்சு மொழியில் அறி வித்தல் இருந்ததால் எனக்கு எல்லாமே அந்நியமாய்த் தெரிந்தது. பிரான்சில் பிரெஞ்சு தவிர வேறு மொழியில் பேசினாலே பதில் கிடைக்காது என்ற செவிவழிச் செய்தி வேறு பயணத்திற்கு முன் எனக்குக் கிடைத்திருந்தது. ஆனால் அது மாறிவிட்டது இப்போது என்றுதான் நினைக்கிறேன்.
இன்று பல நாட்டைச் சேர்ந்தவர்களும் பிரான்சில் குடியிருப்ப தால் பல மொழிகள் அங்கு பேசப்படுகின்றன. ஆங்கிலத்தில் பேசி னால் ஆங்கிலத்தில் பதில் கிடைக்கும். அதற்காகப் பிரெஞ்சு மொழியை எவரும் கைவிடவில்லை.
தங்கள் மொழி மீது உயிருக்கு நேரான பற்றுதலை பிரெஞ்சுக் காரர்கள் வைத்திருக்கிறார்கள். பிரெஞ்சு மொழியில்தான் உயர்கல்வி மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமாக இருந்த பிரிட்டனுக்குப் பக்கத்தில் பிரான்ஸ் இருந்தும் ஆங்கில மோகம் அங்கில்லை.
பிரெஞ்சு படித்ததால் அவன் தாழ்ந்து போகவும் இல்லை. குடி யேற்றவாசிகள், அகதிகள் பிரெஞ்சு படிக்க உதவித்தொகையும் வழங் குகிறார்கள். அடிப்படைப் பிரெஞ்சு தெரிந்தால்தான் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவே முடியும்.
மெட்ரோவை விட்டு வெளியே வர டிக்கெட்டை இயந்திரத்தில், போட வேண்டும். அது டிக்கெட்டில் இருக்கிற கறுப்புநிற தடவலை
74

லண்டன் முதல் கனடா வரை.
ஊடுருவிப் பார்க்கும். சரியாக இருந்தால்தான் கதவு திறக்கும். அதெல் லாம் கம்ப்யூட்டரின் துணையோடு நடக்கிறது. நானும் கேதுவும் வெளியே வந்தோம். கதிரவன் எங்களை வரவேற்பது போல் புன்ன கைத்தான்.
“நாம் இப்போது சாம்ஸ் எலிஸே (Champs ElySees) என்ற வீதிக்குப் போகிறோம் என்றார் முன்னே நடந்த கேது.
3-Tubçio GTGSGSGI) (The Champs- Elysess) GT66Tugj Sh'JTaitorSgët புகழ்பெற்ற சாலை. இதனோடு சேர்ந்து பல சாலைகள் ஆர்ச் டிட்ரி யோம்ப் (Arch of Triumph) என்னும் பகுதியிலிருந்து பிரிந்து போகின்றன. ஆர்க் டி ட்ரியோம்ப் என்பது ஒரு அழகான நுழை வாயில் மாவீரன் நெப்போலியன் தனது வெற்றியின் சின்னமாக அதனை நிர்மாணித்தான்.
164அடி உயரமும் 148அடி அகலமும் கொண்ட இந்த வளை வில் அற்புதச் சிற்பங்களைச் செதுக்கி வைத்துள்ளார்கள்.
“சாம்ஸ் எலிஸே என்ற பகுதியில் பல சாலைகள் பல திக்குகளி லிருந்து சங்கமிக்கின்றன. அவற்றை மேலிருந்து பார்த்தால் நட்சத் திரம் போல் இருப்பதாகச் சொல்வார்கள்.
அதனால்தான் அந்த ரயில் நிலையத்திற்கு “சார்ல்டிகால் எத்வா” என்று வைத்துள்ளார்கள். 'எத்வா என்றால் நட்சத்திரம் என்று அர்த்தம்.
‘சாம்ஸ் எலிஸே மிக அகலமான வீதி. “ஒரு நாட்டின் விதி அந் நாட்டின் வீதியில் இருக்கிறது” என்பது நவீன பழமொழி. உலகி லேயே மிகச் சிறந்த நவநாகரிகமான வீதிகளில் அதுவும் ஒன்று. ஒரு நாட்டின் தலைநகரில் வேறு எங்கும் அவ்வளவு அகலமான அழ கான வீதியைப் பார்க்கவே முடியாது. அவ்வீதியின் இருபக்கங்களி லும் அடர்த்தியான மரங்கள் நேராகவும் பசுமையாகவும் நின்று வர வேற்கின்றன.
மிகப்பெரிய நடைபாதை. வேறு எந்த வீதிக்கும் அழகூட்டுவது நடைபாதை. சேலையின் கரைபோல் நடைபாதை இல்லா வீதிகளை (பிரதான வீதிகள் தவிர்ந்த ஆஸ்திரேலியாவில் பார்க்க முடியாது.
நடப்பவர்களை விட நடக்க முடியாதவர்களுக்குத்தான் நடை பாதைகள் போட்டிருப்பதாக நான் நினைக்கிறேன்.
75 D

Page 40
மாத்தளை சோமு
ஆம் நடக்க முடியாமல் சக்கர வண்டியில் போகின்றவர்க ளுக்கு அந்த நடைபாதை மிகவும் உசிதமானது தானே?
நடைபாதையில் சிற்றுண்டி விடுதிகளும் உணவு விடுதிகளும் பயணிகளின் பசிக்கு உதவுகின்றன. அழகான பெருங் குடைகளே கூரைகளாய் இருந்தபோதும் மக்கள் அமர்ந்திருக்கின்றனர். ஒரு தூசு தும்பைப் பார்க்க முடியவில்லை.
எப்போது பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இர விலும் கூட்டமாகவே இருக்கிறது. குளிர்காலத்தில் கூடப் பயணிகள் இருப்பார்களாம்.
அந்தச் சாலையின் ஒரு கோடியில் பாரிசின் அழகான இரண்டு அரண்மனைகள் இருக்கின்றன.
அதைக் கொஞ்சம் தாண்டினால் பாரிசு மாநகருக்கு அழகூட் டும் செயின் நதி, அந்நதிக் கரையோரத்தில் நடைபாதையும் ஆங் காங்கே பெஞ்சுகளும் இருக்கின்றன.
அந்தப் பெஞ்சுகளில் ஏதாவது ஒன்றில் உட்கார்ந்தால் மனநிம் மதியும் கற்பனை வளமும் பெருக்கெடுக்கும் என்று நினைத்தால் அது உண்மைக்கு மாறானது. ஏனென்றால் திருவிழாக் கூட்டம் போல் அதி லும் அழகழகான பெண்கள் விதவிதமான உடைகளில் நடமாடுகிற போது எந்த முனிவரின் நிஷ்டையும் கலையாதா என்ன?
அந்த இடத்தை இரவிலும் பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு கேதுவோடு நடந்தபோது “ஏதாவது குடிப்போமா?” என் றார். கரும்பு தின்னக் கூலியா? என்றபடி அவரைப் பார்த்து புன்னகை செய்தேன். கேது ஒரு நடைபாதைக் கடைக்குப் போய் “இரு கோப்பி தேவை” என்றார்.
நான் உடனே எனக்கு பால் போட்ட கோப்பி வேண்டும் என் றேன். கேது பிரெஞ்சில் அதனைச் சொல்லக் கடைக்காரன் உடனே என்னைப் பார்த்தான். அவன் அப்படிப் பார்த்ததற்குக் காரணம் இருந்தது.
பிரான்சில் பெரும்பாலும் கறுப்புக் கோப்பி அதுவும் தடித்த சாயத்தோடுதான் குடிக்கிறார்கள். போன புதிதில் குடித்துப் பார்த் தேன். சரியான கசப்பு
16

லண்டன் முதல் கனடா வரை.
எனவே பாலுக்குத் தாவிவிட்டேன். வெள்ளைக் கோப்பி கேட் டால் அதிசயமாகத்தான் கடைக்காரர்கள் பார்ப்பார்கள்.
கோப்பி குடித்த உத்வேகத்தோடு ஈபில் டவரை (Eiffel Tower) பார்க்கப் போனோம். உலக அதிசயங்களில் ஒன்றான அந்தக் கோபு ரம் நாகரிக மனிதனின் செயல்திறனை இந்த உலகத்திற்கே எடுத்துக் காட்டுமாப்போல் நின்றது.
பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதத்தில் 1887இல் அடிக்கல் நாட்டப்பட்டு 1889இல் கட்டி முடிக்கப்பட்டது. இன்று அதன் வயது 10 ஆகும்.
1889இல் நடந்த உலக வர்த்தகக் கண்காட்சியின்போது திறக்கப் . பட்டது. கெஸ்டேவ் எபில் (Gustave Eiffel) என்பவரால் கற்பனை செய்யப்பட்டுக் கட்டப்பட்ட இந்த டவரின் மொத்த உயரம் 1057 அடியாகும்.
15000 இரும்புத் துண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆணிகள் இல்லாமல் ரிவேட் (Revets) எனப்படும் அச்சினால் அது சாத்திய மாகியுள்ளது.
கோபுரத்தில் உள்ள இரும்புகளின் மொத்த எடை 7000 தொன் எனச் சொல்லப்படுகிறது.
பாரிஸ் என்றால் எல்லோருக்கும் இந்த டவர் ஞாபகமாய் வரு வது பிரெஞ்சின் பழைமைவாதிகளுக்கு இன்றும் பிடிக்கவில்லை. அவர்களின் வம்சத்திற்கு அதனை கட்டியபோது பிடித்திருக்குமா? டவரை கட்ட முனைந்தபோது பெரிய எதிர்ப்புக் கிளம்பியதாம். அதில் மாப்பசான் ட்யூமா போன்ற எழுத்தாளர்களும் அடக்கம் என் பதுதான் நம்ப முடியாததாக இருக்கிறது.
பாரிஸில் - 16
அந்தக் கோபுரம் கட்டியதுபோது மாப்பசன் போன்ற எழுத் தாளர்கள் எதிர்த்தது அந்தக் காலத்திற்குச் சரியானதாக இருந் திருக்கலாம். ஆனால், இன்று பாரிஸின் ஏன் பிரான்ஸின் பெயரைத்
77

Page 41
மாத்தளை சோமு
தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது அந்தக் கோபுரம் தான். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வந்து போகிறார்கள். கோபுரத்தில் மேலே போவதற்கு லிப்ட் இருக்கிறது. அது 1983ஆம் ஆண்டு தான் நவீனப்படுத்தப்படுள்ளது.
ஆண்டிற்கு 30லட்சம் பேர் இந்தக் கோபுரத்தில் ஏறி இறங்கு கிறார்கள். இதனால் பெருந்தொகையான நிதி பிரான்ஸoக்குக் கிடைக் கிறது.
டிக்கெட் விலையைக் கேட்டுவிட்டு ஒரு விநாடி யோசித்தேன். பிறகு இவ்வளவு தூரம் வந்து இதனைப் பார்க்காமல் போவது எதையோ இழந்தது போலிருக்கும் என்று எண்ணியவாறு வரிசையில் போய் நின்றேன். நீண்டவரிசை கேதுவும் நின்றார்.
“நீங்கள் மேலே போனதில்லையா.?”
கேது சொன்னார்.
“நான் பல தடவை போயிருக்கிறேன். எத்தனை தடவை போனா லும் பார்க்கலாம். என்னிடம் பயன்படுத்தாத டிக்கெட் இருக்கிறது. போய்ப் பார்ப்போம்.”
நான் டிக்கெட் வாங்கினேன். கேதுவின் பழைய டிக்கட்டை ஏற்க முடியாது என்று சொல்லவே புதிதாக ஒரு டிக்கெட்டை வாங்கினார். கேது. இருவரும் வரிசையில் நின்று லிப்டில் மேலே போனோம்.
மேற்தளத்தில் சிறந்த சிற்றுண்டி நிலையம் இருக்கிறது. விலை கோபுர உயரத்தைப் போல் பல மடங்கு என்ற போதும் கூட்டத்திற் குக் குறைவில்லை. காதலர்கள், கணவன் மனைவிமார்கள் சாப்பிட உட்கார்ந்து அப்படியே முத்தமிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
அந்தக் கோபுரத்தின் மேலே கம்பியில்லாத் தந்திச் செய்திப் போக்குவரத்து, பருவநிலை ஆய்வு நிலையம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பரிவர்த்தனை நிலையம் என்பன இருந்தன. அது போக, உள்ளே உலகின் பல்வேறு நாடுகளுக்கான தூரத்தை அந்தக் கோபு ரத்திருந்து கணக்கிட்டு எழுதி வைத்துள்ளார்கள்.
பயணிகள் அவரவர் நாட்டுத் தலைநகர் தூரத்தை ஞாபகமாய் பார்த்து வைத்துக் கொள்வார்கள். நான் புலம் பெயர்ந்தவன். எனவே பல நாட்டுத்தலைநகர் துரத்தை எழுதிக்கொண்டு வந்தேன்.
78

லண்டன் முதல் கனடா வரை.
கொழும்பு 8520 கிலோ மீட்டர், சென்னை 8047 கிலோ மீட்டர், கோலாலம்பூர் 10433 கிலோ மீட்டர், சிட்னி 16,962 கிலோ மீட்டர், டொரன்டோ 6014.
மேலேயிருந்து பாரிஸ் மாநகரின் எழில் கொஞ்சும் காட்சியைக் கண்டு களித்தேன். செயின் நதி பாரிஸைச் சுற்றிக் கொண்டு ஓடுகிற அழகையும் கண்டேன்.
பாரிஸ0க்குப் போகிறவர்கள் இந்தக் கோபுரத்தைப் பார்ப்ப தோடு கட்டாயம் அதன் மேலேயும் போய் வர வேண்டும்.
கோபுரத்திற்குக் கீழே மாதிரிக் கோபுரம் சிறிய அளவில் விற் பனை செய்யப்படுகின்றது. ஒரு நினைவுக்காக ஒரு சிறிய மாதிரிக் கோபுரம் வாங்க முற்பட்டபோது கேது தலையிட்டு பேரம் பேசத் தொடங்கினார். பேரம் பேசியதால் விலையில் சரிவு ஏற்பட்டது.
சீன, இந்திய இளைஞர்கள் இத்தகைய பொருட்களைத் தூக்கிக் கொண்டு விற்கிறார்கள். கேதுவின் சாமத்தியத்தில் சில மாதிரிக் கோபுரத்தை வாங்கிக் கொண்டேன்.
அந்தக் கோபுரத்திற்குப் பக்கத்தில் மிகப் பெரிய பொருட் காட் சிச் சாலை (மியூஸியம்) இருக்கிறது. அங்கே 250 வருட பழைய சிலை யைப் பார்த்தோம். நேரம் குறைவாக இருந்ததால் வேகமாக உள்ளே ஒரு சுற்றுச் சுற்றினோம்.
பிரான்ஸைப் பொறுத்தவரை மியூஸியங்களுக்குக் குறைவில்லை. பல மியூஸியங்கள் இருக்கின்றன. பொதுவாக பாரிஸை திறந்தவெளி மியூஸியம் என்பார்கள்.
நகர வீதிகளில் மூலையில் புராதன சிலை வைக்கப்பட்டிருக் கிறது. எந்தச் சிலையும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இல்லை. ஆங்காங்கே நிர்வாணச் சிலைகள்.
உலகில் அதிகமான நிர்வாண சிலைகள் உள்ள ஒரே நகரம் பிரான்ஸாகத்தான் இருக்கும். அதே நேரத்தில் எந்த நிர்வாண சிலை யும் ஆபாசமாய் இல்லை.
பிரெஞ்சு சரித்திரத்தைப் பாதுகாக்கிற புராதன கட்டிடங்கள், புகழ் பெற்ற ஒவியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்க்ள் பெயர் கொண்ட
79 D.

Page 42
மாத்தளை சோமு
வீதிகள் இவைகளைப் பார்க்கின்றபோது, தாம் பிரெஞ்சுக்காரர்கள் என்பதற்காக இவைகளைச் செய்திருக்கிறார்களோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
ஆனால், அதுதான் நிஜம். ஆங்கிலப் பேரரசை நிறுவிய பிரிட் டனுக்குப் பக்கத்தில் இருக்கிற பிரான்ஸ் தனது மொழி, இன தனித் துவத்தைப் பறிகொடுத்துவிடக்கூடாது என்பதில் எப்போதும் கவன மாகவே இருக்கிறது. அந்த விழிப்புத்தான் உலக அரங்கில் பிரான்ஸை தலை தூக்க வைத்திருக்கிறது.
செயின் நதிக் கரையோரமாக உலகிலேயே மிகப் பெரிய மியூ ஸியமாக வீனஸ் மியூஸியம் இருக்கிறது. நாற்பது ஏக்கர் நிலப்பரப் பில் அற்புதக் கட்டிட வேலைகளுடன் கட்டப்பட்ட அரண்மனையே இன்று அற்புதமான மியூஸியம். அந்த அரண்மனை கட்டவே இரு நூறு ஆண்டுகளாகியதாம்.
உலக புகழ்ப் பெற்ற வீனஸ் சிலை இங்குதான் உள்ளது. மேலும் எல்லோரையும் கவர்ந்த “மோனாலிஸா’ ஓவியம் அங்குதான் இருக் கிறது. ஒவியம் பெரியதில்லை. ஆனால் அதன் புகழ் உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. அந்தப் படத்தில் இருக்கிற பெண் கற்பனைப் பாத்திரமல்ல.
1495இல் திருமணம் செய்து வாழ்ந்தவள். அவளைத்தான் “லியனார்ட்டோ டாவின்ஸி’ (Leonardo Davinci) என்ற ஓவியர் 1503இற்கும் 1505இற்கும் இடையில் வரைந்திருக்கிறார். பிறகு அவரே அந்த ஓவியத்தில் பித்தாகி எப்போதும் தன்வசமே அதனை வைத் திருக்கிறார். பிறகு அது கை மாறியிருக்கிறது.
1911இல் ஓவியம் திருடப்பட்டபோது அது உலகப்புகழ் பெற் றது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அது திரும்பக் கைப்பற்றப் பட்டு மியூஸியத்தில் வைக்கப்பட்டது. ஆனால், அது இன்றும் களவு போய்விடுமென்ற பயத்தில் ஓவியம் இருக்கும் இடத்திற்கும் முன் இரும்புத் தடுப்புப் போட்டிருக்கிறார்கள்.
மேலோட்டமாகப் பார்த்தால் மோனாலிஸா ஒவியம் சாதாரண மானது. ஆனால் அந்த ஓவியத்தின் தோற்றத்தையும் ஓவியத்தில் இருக்கும் மோனாலிஸாவின் அமைதியான முகத்தையும் உதட்டிதழ்
D 80

லண்டன் முதல் கனடா வரை.
கள் பிரியாமல் சிந்துகிற புன்னகையும் கண்களின் காந்தப் பார்வை யும் அதனை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது.
அந்த மியூஸியத்தைப் பார்த்தபோது தமிழனுக்குப் பேர் சொல் லும் ஒரு வைரத்தை அங்கு காணக்கூடியதாக இருந்தது.
லண்டனில் “கோஹினூர்” வைரம் இருப்பதுபோல் இங்கு “மெட் ராஸ் டயமண்ட்” இருக்கிறது. கோஹினூர் வைரம்போல் அது புகழ் பெறவில்லையென்றாலும் தமிழ்நாட்டுக்குப் பெருமை தருவதல்லவா அது?
மியூஸியத்தை விட்டு வெளியே வந்தால் வரிசையாகப் பல கடைகள். நினைவுப் பொருட்கள் விற்கின்ற கடைகள். அது தவிர எல்லாப் பொருட்களும் விற்கிற கடைகள் வேறு. எக்கச்சக்கமான மக்கள் கூட்டம். அங்கு சிலர் சத்தம் போட்டு வியாபாரம் செய்தார் கள். அது இலங்கை - இந்திய சந்தைகளை ஞாபகப்படுத்தியது.
அப்போதுதான் கேது சொன்னார். “அல்ஜீரியர்கள் தான் இப் படிச் சத்தம் போட்டு வியாபாரம் செய்வார்கள்’
அல்ஜீரியாவிற்கும் பிரான்ஸoக்கும் நெருங்கிய தொடர்பு இருக் கிறது. பிரான்ஸின் காலனித்துவ் நாடாக அல்ஜீரியா இருந்திருக் கிறது. புகழ் பெற்ற சகாரா பாலைவனம் இந்த அல்ஜீரியாவில் இருப் பது குறிப்பிடத்தக்கது.
1962இல் சுதந்திரம் பெற்றும் அல்ஜீரியாவில் அரசியல் பிரச் சினை காரணமாக அல்ஜீரியர்கள் அகதிகளாக பிரான்ஸில் தஞ்ச மடைந்துள்ளார்கள்
பெரும்பாலான அல்ஜீரியர்கள் பிரான்ஸ் தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள். வேலை கிடைக்காதவர்கள் நடைபாதைக் கடை நடத்துகிறார்கள். எங்காவது மெட்ரோ வாசலில் பிச்சையெடுக் கிற பெண்கள் கூட அல்ஜீரியர்களாகத்தான் இருப்பார்கள்.
அல்ஜீரியர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை. பிறகு எப்படி அவர்களைக் கண்டுபிடிப்பது? வெகு சுலபம் மெட்ரோ ரயிலில் எவராவது சத்தம் போட்டுப் பேசினால் அவர்கள்தான் அல்ஜீரியர்கள்.
8

Page 43
1 Tiflam66ü - 17
பாரிஸின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் ஒடுகிறது. மெட்ரோ போகாத இடங்களில் ரயில் போகிறது. இது தவிர பஸ்கள், டிராம்கள் வேறு போகின்றன என்ற போதும் மெட்ரோ ரயிலே வசதியானது விரைவானது என்பது பிரான்ஸ் பயணிகளின் கருத்து.
எனவே பிரான்சுக்குப் புலம் பெயர்ந்த வேற்று தேச நாட்டவர் கள் இந்த மெட்ரோ வசதியைக் கருத்திற்கொண்டே தங்கள் குடி யிருப்புகளை மட்டுமல்ல வர்த்தக நிலையங்களை, ஹோட்டல்களை அமைக்கின்றார்கள். பிரான்சில் குடியேறியிருக்கிற தமிழர்களின் தலை நகராக இருக்கும் லா ஸப்பல் (La Chapelle) மெட்ரோவுக்கு மிக அருகில் இருக்கிற உபநகர்.
அந்த லா ஸப்பலின் சில வீதிகளில் ஈழத் தமிழ் மக்களின் வர்த் தக நிலையங்கள், அங்காடிகள், மூடிதிருத்தகம், சிற்றுண்டிச்சாலை கள், தமிழ் அச்சகங்கள், உணவு விடுதிகள், நகைக்கடை, துணிக் கடைகள் என்பன தமிழில் விளம்பரப் பலகைகளுடன் ஒரு குட்டி யாழ்ப்பாணத்தை நினைவுபடுத்துமாப்போல் இருக்கின்றன.
அங்கு நடைபாதையில் நின்றால் நம்மைக் கடந்து போகிறவர் களும் எதிரே வருகிறவர்களும் பேசுகின்ற தமிழ் நன்றாகக் கேட் கும். தமிழ் வீசுகிற லா ஸப்பலின் அந்த வீதிகளில் நடந்து போனால் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஸ்ரான்லி வீதி, ஆஸ்பத்திரி வீதி, பெரியகடை வீதிகளில் நடந்த ஞாபகம் வரலாம். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மற்றும் பாண்டிச்சேரித் தமிழர்களும் கடைகளை, வர்த்தக நிலையங்களை அங்கு வைத்திருக்கிறார்கள்.
ஈழத் தமிழர்களுக்கு முன்பே பாண்டிச்சேரித் தமிழர்கள் பிரான் சில் குடியேறியிருக்கிறார்கள். பாண்டிச்சேரி எனப்படும் புதுவை மாநிலம் பல ஆண்டுகள் பிரான்ஸ் காலனி பகுதியாக இருந்திருக் கிறது.
1956இல் இந்தியாவுக்குப் பிரெஞ்சுக்காரர்களால் இந்தக் காலனி திருப்பிக் கொடுக்கப்பட்டது. ஆயினும் பாண்டிச்சேரியில் வசித்த
82

லண்டன் முதல் கனடா வரை.
தமிழ் மக்களுக்குப் பிரான்சில் குடியேற அனுமதியும் சலுகையும் வழங்கப்பட்டன. இன்று கணிசமான பாண்டிச்சேரித் தமிழர்கள் பிரான்சில் இருக்கிறார்கள்.
லா ஸப்பலில் தான் (பாரிஸ்) ஈழநாடு, ஈழ முரசு, தமிழாலயம் (புத்தகக்கடை) என்பன இருக்கின்றன. ஈழநாடு பாரிசில் மூத்த தமிழ் வார ஏடு, அது வாராவாரம், லண்டன் ஜேர்மனி, சுவிஸ், கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அச்சாகிறது.
பாரிசைப் பொறுத்தவரைத் தரமான ஒரு செய்தி ஏடு ஈழநாடு. அதன் ஆசிரியர் எஸ்.எஸ். குகநாதன். அவர் தமிழ் ஒலி ஒளி ஊட கத்தின் இயக்குநரும் கூட ஈழநாட்டிற்குப் பிறகுதான் ஈழமுரசு வெளி வந்தது. அதனை வெளிக் கொணர்வதில் முக்கியப் பங்கு வகித்தவர் அமரர் த. கஜேந்திரன். இதுபோக எத்ஸில், உயிர்நிழல், பாலம், அம்மா போன்ற இலக்கியம் சார்ந்த இதழ்கள் வருகின்றன.
நான் போயிருந்தபோது தான் சர்வதேசக் கலைஞர்களுக்கான ஏடு என்ற குரலோடு தாகம் வெளிவந்தது. மற்றும் ஐரோப்பாவின் முதல் தமிழ் நாளிதழ் என்ற மகுடத்தோடு வழக்கமான நாளிதழ் அளவில் அல்லாமல் சிறிய அளவில் எட்டு பக்கங்களில் சுட்டு விரல் வருகிறது.
ஏனைய நாடுகளைவிட பிரான்ஸ் தமிழ் சார்ந்த, தமிழ் இலக் கியம் சார்ந்த பலவற்றை முன்னெடுத்தே வந்திருக்கிறது. அதற்கு பிரான்ஸ் நாடும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால் பிரான்ஸ் நாட்டு இலக்கியம் நவீன எழுத்துக்களின் முன்னோடியாக இருந்திருக்கிறது.
எமிலிஜோலா, மாப்பசான் போன்றவர்களின் எழுத்துக்களால் பிரெஞ்சுக்கு எழுத்துலகில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கி றது. திரைப்பட உலகின் முதல்படமே பிரெஞ்சுப் படமென்று சொல் லப்படுகிறது. மேலும் பெண்ணிய சிந்தனைகளில் பல ஐரோப்பிய நாடுகளுக்கு பிரான்ஸ் முன்மாதிரி. பெண்களை அடக்கி ஒடுக்கி அநியாயம் இழைத்த நிகழ்ச்சிகள் பிரெஞ்சு பெண்கள் வரலாற்றிலும் உண்டு.
இதனை எதிர்த்து 150 ஆண்டுகள் போராடியிருக்கிறார்கள். 1792 பெண்கள் உரிமைகளைப் பிரகடனம் செய்யும்படிக் குரல் எழுப்பப்
83

Page 44
p மாத்தளை சோமு
பட்டது. 1884இல் விவாகரத்து உரிமை வந்தது. 1944இல் பெண்க ளுக்கு வாக்குரிமை. 1964இல் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வழங்கல் - இவ்வாறு பல முற்போக்குச் சிந்தனைகள் பிரான்சில் முன்னெடுக்கப்பட்டன.
புலம்பெயர்ந்த (பிரான்சுக்கு இலக்கியவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரையும் தொட்டு அசைத்திருக்கலாம்.
மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டைப் பிரான்ஸ் முன்னெடுத் திருக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குப் புகழ் பெற்ற செவாலியர் (Chevalier) விருதை அந்நாட்டுக் கலாச்சார அமைச்சே கொடுத்திருக்கிறது. இதுபோக பிரெஞ்சு அறிஞர்களின் தமிழ்ப்பணி போற்றுதலுக்குரியது.
பல ஆண்டுகள் பாண்டிச்சேரியைப் பிரெஞ்சு ஆண்டதால் தமி ழுக்குப் பல நன்மைகள் நடந்தன எனலாம். பாண்டிச்சேரியில் மதப் பிரசாரத்திற்கு வந்த Constaintin Joseph Beschi என்னும் இத்தா லியப் பாதிரியார் திருக்குறளை பிரெஞ்சிலும் இலத்தீனிலும் மொழி பெயர்த்தார்.
பிரெஞ்சுக்காரர்கள் தமிழைக் கற்கவும் தமிழர்கள் பிரெஞ் சைக் கற்கவும் பிரெஞ்சு - தமிழ் இலக்கணம் என இரு மொழி நூல் எழுதினார். சதுரகராதியை வெளியிட்டார்.
தமிழில் மெய்யெழுத்துக்களுக்கு மேல் புள்ளி குற்றுப் போடும் முறையை இவரே அறிமுகப்படுத்தினார் என நூல்கள் சொல் கின்றன.
இவைகளைச் செய்தவர் வீரமாமுனிவர் எனும் தமிழ்ப் பெயர் g,6ôTLGruff. - g|6).jGU C.H. Beschi sg), Gruffff. Julien Vinson GTGôTLJ Gruff சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் ஆகிய காவியங் களின் சில பகுதிகளை பிரெஞ்சு மொழியில் பெயர்த்துள்ளார்.
டாக்டர் Jean Filozat திருவிளையாடற் புராணம், காஞ்சி புரா ணம், திருப்பாவை, கந்தபுராணம் ஆகியவற்றை பிரெஞ்சுமொழி யில் பெயர்த்துள்ளார். இதுபோக பலரும் தமிழிலிருந்து பிரெஞ் சுக்கு பல தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போயிருக்கிறார்கள்.
தற்போது பல்கலைக் கழகத்தில் தகவல் உசாத்துணை நூல் பற்றி ‘பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்’ என்ற தலைப்பில் தமிழில்
84

லண்டன் முதல் கனடா வரை. D
பட்டப்படிப்புக் கற்பிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் பிரதான காரணமே பாண்டிச்சேரி 1956ஆம் வரைப் பிரெஞ்சின் ஆட்சியில் இருந்தது தான் என ஆணித்தரமாகச் சொல்லமுடியும். நிலத்தைக் கைப்பற்றிய பிரெஞ்சுக்காரர்கள் மதத்தைப் பரப்ப முயன்றபோது தமிழ்ப் படிக்க வேண்டியதாகியது. தமிழ்ப் படித்தார்கள். அது மதம் பரப்ப. ஆனால் தமிழ் படித்து முடிந்தபோதுதான் தமிழையே தாம் மோகித்தது அவர் களுக்குத் தெரிந்தது.
ஆனால் பாண்டிச்சேரி இந்தியாவோடு சேர்ந்தபிறகு பிரெஞ்சு வந்த பல பாண்டிச்சேரி தமிழர்கள் பிரெஞ்சு மோகத்தில் தமிழை மறந்து போனது செவியில் எட்டிய செய்தி. இன்று அவர்கள் ஈழத் தமிழகளின் வருகைக்குப் பிறகு தாய்மொழியில் அக்கறையும் ஆசை யும் கொண்டிருக்கிறார்கள்.
லா ஸப்பலுக்குப் போனால் பாண்டிச்சேரி தமிழர்களை மட்டு மல்ல, புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர் கள் என எவரையாவது பார்க்கலாம். முக்கியமாக ஷாலினி ரெஸ்ட் டோரான்டில் அவர்களில் எவரையாவது சந்திக்காலம். அந்த ஷாலி னிக்கு முதலில் ஞானம் பீரிசுடன் போய் டீ குடித்தபோது தொப்பி யோடு ஒருத்தர் வந்து உட்கார்ந்தார். உடனே ஞானம் பீரிஸ் என் னைப் பார்த்துக் கேட்டார். “இவரைத் தெரியுமா?”
மெளனமாக இருந்தேன். தெரியாது என்பது பொருத்தமாக இருக்காது.
ஞானம் பீரிஸ் சொன்னார் “இவர் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் எம்.ஏ. குலசீலநாதன்”
“ஓ அவரா? அவரின் ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே இருகரம் கூப்பி வணங்குகின்றேன் அம்மா’ என்ற பாடலை மறக்க முடியாதே!
அவருக்கு வணக்கம் சொல்லி என் பெயரைச் சொன்னேன் உடனே அவர் உற்சாகம் கொண்டவராக, “இப்போது எங்கே இருக் கிறீர்கள்?’ என்று கேட்டார். “நானும் உங்களைப் போல் புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் இருக்கின்றேன். உங்களைப் போன்ற கலைஞர் களைச் சந்திக்கத்தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கின் றேன்” என்றேன்.
85 п

Page 45
D மாத்தளை சோமு
பாரிசில் பல ஆண்டுகளாக குலசீலநாதன் வாழ்ந்து வருகிறார். தமிழ்நாடு அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் இசை கற்று சங்கீத பூஷணம் ஆனவர். இலங்கை வ்ானொலி மூலம் ஈழத்து மெல்லிசை என்னும் ஒரு இசை வடிவம் உருவாக உரமிட்டு அதனை வளர்த் தெடுத்ததில் இவருக்குப் பங்குண்டு. பேராசிரியர் கைலாசபதி, பேரா சிரியர் கா. சிவத்தம்பி போன்றோருடன் இணைந்து இசைச்சித்திரம் நிகழ்ச்சிகளை ஆய்வுக்குரிய வகையில் தயாரித்தவர். குத்து விளக்கு, மஞ்சள் குங்குமம், கலியுக காலம் போன்ற ஈழத்துப் படங்களுக்கும் ஐரோப்பாவில் இன்னும் ஒரு பெண், முகத்தார் வீடு போன்ற வீடியோ படங்களுக்கும் பின்னணி பாடியிருக்கிறார். பிரிட்டன் தவிர்ந்த ஐரோப்பாவில் மிகப் பெரிய தமிழ்ப் புத்தகக்கடையான தமிழாலயம் போக வேண்டி இருந்ததனால் கலைஞர் குலசீலநாதனிடம் புலம் பெயர்வு வாழ்வு பற்றிச் சிறிது நேரம் பேசிவிட்டு ஞானம் பீரிசோடு தமிழாலயம் புறப்பட்டேன். ஏதாவது கவிதை சொல்வாரா என்று ஞானம் பீரிசைப் பார்த்தேன். சொன்னார் ஒரு கவிதை.
“மனிதன் மண்ணில் வாழ்வது அறுபது ஆண்டுகள் மனதில் வாழ்வது பலநூறு ஆண்டுகள்”
“வரிகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ஒரு வரியைக் காணா ததுபோல் இருக்கிறதே” என்றேன் “ஆம் அந்த வரியை நீங்களே சொல்லுங்கள்’ சொன்னேன். “நல்ல மனிதன் வாழ்வது பலநூறு ஆண்டுகள்.”
“இந்த வார்த்தையைத்தான் தேடினேன்” என்றார் அவர்.
பாரிஸில் - 18
தமிழாலயம் பாரிசில் மாத்திரமல்ல லண்டனைத் தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய புத்தக நிலையம், பாரிஸ் ஈழ நாடு காரியாலாயத்திற்கு அடுத்தாக இருக்கிறது.
இலங்கையில் இருந்து வெளிவரும் வார, மாத இதழ்கள், தமிழ கத்திலிருந்து வெளிவரும் வார, மாத, மாதமிருமுறை இதழ்கள், காலாண்டு இதழ்கள் என்பன கிடைக்கின்றன. அனேகமாக தமிழகத் தில் இருந்து வெளிவரும் இதழ்கள் எல்லாம் இங்கு கிடைக்கின்றன. "
D 86

லண்டன் முதல் கனடாவரை.
தமிழாலயம் நிர்வாகி பாலச்சந்திரனோடு முறைப்படியான அறி முகத்திற்குப் பிறகு பேசினேன். அவர் “புத்தகக்கடையை முதலில் சுற்றிப்பார்த்துவிட்டு வாருங்கள்” என்றார்.
எந்த நாட்டிற்குப் போனாலும் புத்தகக் கடைக்குப் போகாமல் நான் வந்ததில்லை. எனவே தமிழாலயத்தைச் சுற்றிப் பார்த்தேன். தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் எழுதிய நாவல்கள், சிறுகதை, கவிதை, கட்டுரைப் புத்தகங்கள்தான் எங்கு பார்த்தாலும் இருந்தன. இலங்கை எழுத்தாளர்களின் புத்தகங்களைக் காணவில்லை. ரமணிச்சந்திரன் நாவல்கள் குவிந்திருந்தன. சோதிட, எண் கணித நூல்களுக்குக் குறைவில்லை.
நிர்வாகி பாலச்சந்திரன் என்னைச் சுற்றிப் பார்க்கச் சொன்னதன் அர்த்ததைக் கண்டு பிடித்தேன். கேள்விகள் இப்போது கேட்கலாமே. ஆம் கேட்டேன்.
“இலங்கை எழுத்தாளர்களின் நூல்களையே காணவில்லையே?”
அவரின் முகத்தில் புன்னகை. இது புத்தகக் கடை புத்தகங் களை விற்பனை செய்வதே முக்கியமானது. தமிழக எழுத்தாளர் களின் புத்தங்களைத்தான் கேட்டு வருகின்றார்கள் மக்கள். எப்போ தாவது தான் இலங்கை எழுத்தாளர்களின் புத்தகங்கள் கேட்கப்படு கின்றன. நாவல் என்றால் ரமணிச்சந்திரனின் புத்தகம் தான் விற் கிறது. மேலும் இலங்கையில் வெளியிடப்படும் புத்தகங்கள் எமக்கு விற்பனைக்கே வருவதில்லை. நாங்கள் இந்தியாவில் இருந்து தான் புத்தகங்கள் எடுக்கிறோம்' என்ற பாலச்சந்திரன்,
“அதோ அகஸ்தியரின் சிறுகதைத் தொகுதி. இதோ மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சிறுகதைத் தொகுதி” என்று அந்த புத்தகங்கள் இருக்கின்ற இடத்தைச் சுட்டிக் காட்டினார்.
பிறகு ஒரு மேசையருகே சஞ்சிகைகள் குவிந்திருந்த இடத்தில் இலக்கிய இதழான கணையாழி, காலச்சுவடு என்பனவற்றை எடுத்துக் காட்டி இவைகளைப் பாரிசிலுள்ள எழுத்தாளர்களுக்காக வரவழைக் கின்றோம். வருவது கூடமிகக் குறைந்த பிரதிகள். பொதுமக்கள் என்ன சஞ்சிகைகளை வாங்குகிறார்கள் என்பதை நீங்களே நின்று பாருங் கள்' என்றார்.
நான் நின்று பார்க்கவில்லை.
з7 о

Page 46
D மாத்தளை சோமு
நின்ற பாராமலே விடை தெரியும் போது திரும்பவும் நிற்க வேண் டுமா என்ன? பாலச்சந்திரன் சொன்னதில் நிஜம் நிறையவே இருக்கிறது.
சமீபத்தில் மாத்தளைத் தேர்த் திருவிழாவிற்குப் போயிருந்தேன். அங்கு கோயில் வளவில் புத்தகம் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். ரமணி சந்திரனின் நாவல்தான் அதிகம் விற்பனையாகியிருக்கிறது. இளைய வயது ஆண் பெண் ஆகியோர் ரமணி சந்திரனின் நாவல் களைத் தேடி வந்ததை நேரில் கண்டேன். தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இதே நிலைதான்.
சிட்னியில் இருக்கிற தமிழ் நூலகத்தில் ரமணி சந்திரனின் நூல் கள்தான் வாசகர் கையில் எப்போதும் இருக்கின்றன. எல்லை தாண்டி வாழ்ந்தாலும் ஜனரஞ்சக இதழ்கள் எழுத்துக்கள் தான் தமிழரை இன் னமும் ஆகர்ஷிக்கின்றது. இந்நிலையில் தான் ஆங்காங்கே நவீனத் துவம், பின் நவீனத்துவம் என்ற முழக்கங்களுடன் சில இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழாலயம் பாலச்சந்திரனிடம் அது பற்றியும் கேட்டேன். நவீ னத்துவ தமிழ் சஞ்சிகைகளின் விற்பனை?
மீண்டும் ஒரு புன்னகை. மறுபடியும் ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே ஒரு மேசை, அதில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் சஞ்சிகைகள். ஒரு சஞ்சிகையின் பெயரைச் சொல்லி பிரதிகளை எண்ணுங்கள்' என்றார்.
எண்ணிப் பார்த்தேன். ஒன்பது பிரதிகள். அப்போது அவர் சொன்னார் அந்த சஞ்சிகையில் பத்து பிரதிகள் வரும். அது வந்து ஒரு மாதமாகி விட்டது. ஒரே ஒரு பிரதிதான் விற்றுள்ளது. இதுதான் உண்மை?
இந்நிலை மாறுமா?
மாறும் என்று நான் நினைக்கவில்லை. இப்போதைய தமிழர் களே (பிரான்ஸ்) இந்த முயற்சிகளுக்கு பெரிய ஆதரவு தரவில்லை யென்றால் அடுத்த தலைமுறை தமிழே பேசுமா என்றுதான் பார்க்க வேண்டும். தமிழ் பேசினால்தானே தமிழில் ஆர்வம் வரும்' என்ற அவர் ஒரு நிமிட மெளனத்திற்குப் பிறகு,
“நான் இந்த புத்தகக் கடையை நடத்தினாலும் எல்லா முயற்சி களுக்கும் ஆதரவு கொடுக்கவே விரும்புகின்றேன். ஆனால் இங்கு
88

ல்ண்டன் முதல் கனடா வரை.
வருபவர்களின் ரசனை வேறுவிதமாக இருக்கிறது. நான் என்ன செய்ய முடியும்? என்றாலும் இங்குள்ள முயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்துத்தான் வருகிறோம்.”
நண்பர் குகநாதனின் ரஜினி பதிப்பகம் பல நல்ல எழுத்துக் களை வெளியிட்டிருக்கிறது. அதனை வாசகர் மத்தியில் முன்னெடுப் பதில் தமிழாலயம் பெரும் பங்கு வகித்திருக்கிறது.
தமிழக எழுத்தாளர்களின் எழுத்து முயற்சிகள் உரத்துப் பேசப் படுகின்றன. நம்மவர் முயற்சிகள் ஒரு வட்டத்தை விட்டு வெளியே வருவதில்லை. நம்மவர்கள் புத்தகங்கள் பரவலாக வெளியே போவ தில்லை. எழுதுவது வேறு சந்தைப்படுத்துதல் வேறு. இதனைப் புரிந் தால் சரி என்றார்.
அவரிடம் விடைபெற்றுக் கொண்டு பாரிசில் இருந்து வெளி வரும் இன்னொரு நாளிதழான ஈழமுரசு பத்திரிகை அலுவலகம் போனேன். அங்கு அதன் ஆசிரியர் சிவகுரு, எழுத்தாளர் கி.பி. அர விந்தன் ஆகியோரைச் சந்தித்தேன். ܫ ۔۔۔۔۔۔
ஈழமுரசு இப்போது பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ் ஆகிய நாடுகளில் பாரிசைத் தலைமையகமாகக் கொண்டு வருகிறது. தற்போது அவுஸ்திரேலியாவிலும் ஒருபதிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
ஈழநாட்டிற்கும் ஈழமுரசு இதழ்களுக்குமிடையில் மறைமுகமான போட்டி இருந்தபோதும் அது வெளியே தெரியவில்லை. மேலும் இரண்டும் வெவ்வேறு வியூகத்திலிருந்து வருகின்ற இதழ்கள் என் றாலும் ஈழநாடு அலுவலகம் பாரிசில் இனந்தெரியாதவர்களால் தாக் கப்பட்டுள்ளது.
பாரிசிலிருந்து வெளிவரும் 'உயிர்நிழல்' சஞ்சிகையின் தொகுப் பாசிரியர்களான லக்ஷமி, கலைச்செல்வன் ஆகியோரின் அழைப்பின் பேரில் லா ஸப்பலுக்குத் திரும்பவும் போனேன்.
எங்களின் சந்திப்பு ஷாலினி உணவு விடுதியில் நடந்தது. கலைச் செல்வன், லக்ஷமி ஆகிய இருவரும் எக்ஸில் (EXIL) சஞ்சிகை ஆசிரியர் குழுவில் இருந்தவர்கள். அதில் வேறு பலரும் இருந்தார் கள். கருத்துக்களில் முரண்பாடு ஏற்படவே வெளியேறிய இவர்கள் வெளிக் கொணர்ந்த இதழே உயிர்நிழல்.
89 DI

Page 47
D மாத்தளை சோமு
எக்ஸில் என்ற பெயரைவிட உயிர்நிழல் எனக்குப் பிடித்திருக் கிறது. எக்ஸில் என்ற பெயர் பிடிக்காமைக்கு அது வேற்றுமொழி வார்த்தையாக இருந்ததுதான் காரணம்.
பிறமொழிச் சொற்களை மேல் தூக்கி ஆராதிக்கும் தமிழக வியாதி இப்போது மெல்ல மெல்ல இலங்கை, மலேசிய புலம் பெயர்ந்த தமிழர்களிடம் வருகிறதோ என எண்ணத்தோன்றுமாப் போலப் பத்திரிகை உலகில் ஆங்கிலம் கலந்த தலைப்புகள். ஆங்கி லத்தில் பத்திரிகையின் பெயர்கள். அறிவு சார்ந்த எவனும் தன் தாய் மொழிக்கு இதைவிடப் பெரிய தீங்கு செய்ய முடியாது.
உயிர் நிழலுக்கு ஒரு பேட்டியை உணவு விடுதியிலே எடுத்தார்கள் அவர்கள். பகல் உணவோடு பல்வேறு விஷயங்களைப் பேசினோம். உயிர்நிழல் பிறப்பு அவசியம் எனக் கலைச்செல்வன் பேசினார்.
சமூக மேம்பாட்டிற்கான பல்வேறுபட்ட கருத்துக்களுக்கும் உயிர்நிழல் தனது எல்லைக்குட்பட்டுக் களமாகச் செயற்படும். வாக் குறுதிகளை அள்ளி வீச விரும்பவில்லை. வாசகர்களோடும் படைப் பாளிகளோடும் கொள்ளும் உறவில் உயிர்நிழல் தன்னை வெளிப் படுத்திக் கொள்ளும். சில இதழ்களே வந்தபோதும் உயிர்நிழல் சஞ் சிகை தரமாய் இருப்பதை உணர்ந்தேன்.
அந்த ஹோட்டல் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர் கள் சங்கமமாகிற ஒரு இடமாக இருக்கிறது பாரிஸில். அப்படியான இடத்தில் தான் சிகரெட் புகைத்துக் கொண்டும் பியர் சுவைத்துக் கொண் டும் இருந்த தமிழ்ப் பெண்கள் சிலரையும் கண்டேன்.
பல விஷயங்கள் பேசினோம். சிலவற்றில் மாறுபட்ட கருத்து இருந்தபோதும் உரையாடல் ஆரோக்கியமானதாகவே இருந்தது.
அந்த உரையாடலில் மெளனமாகவே இருந்தார் லக்ஷமி. ஆனால் இதே லகூஷ்மி வேறு ஒரு வைபவத்தில் ஒருத்தர் பேசிய ஒரு வார்த் தைக்காக முகத்தில் கனல் கொப்பளிக்க அந்த வார்த்தையை மறு தலித்தது. பெண்களுக்கான உரிமையில் அவர் கொண்ட நிஜமான அக்கறையை வெளிக்காட்டியது.

பாரிஸில் - 19
ஒரு நட்சத்திர ஹோட்டலில் அமரர் எழுத்தாளர் காவலூர் ஜெக நாதனின் அறக்கட்டளைத் தொடக்க விழா. இலங்கை எழுத்துத் துறையில் காவலூர் ஜெகநாதனுக்கு தனி இடமுண்டு.
வேகமான எழுத்தாளர். தமிழகத்தின் எல்லா இதழ்களிலும் சிறு கதை எழுதியவர். தரமான சிறுகதைகள் மூலம் தமிழகத்துப் பத்திரி கைகளை மட்டுமல்ல விமர்சகர்களையும் புருவம் தூக்கிப் பார்க்க வைத்தவர். எனக்கு அவரோடு எழுத்து ரீதியில் நெருங்கிய நட்பு இருந்தது. கண்டி பேராதனையில் அரசுப் பணிபுரிந்த போது, மாலை யில் வந்து இரவு வெகுநேரம் வரை மாத்தளையில் இருந்து போன வர். ஒரே வாரத்தில் வெவ்வேறு இதழ்களில் வெவ்வேறு கதைகள் எழுதியிருப்பார். அவ்வளவு வேகம்.
அவரின் வேகத்தைப் பார்த்து நான் மலைத்ததுண்டு. அவரும் நானும் வேறு எழுத்தாளர்களும் சேர்ந்து கூட்டுத்தொடர் கதை எழுத முயன்றோம். அம்முயற்சி வெற்றி பெறவில்லை. எனக்கு அவரிடம் பிடித்த அம்சம் ஏனைய எழுத்தாளர்களைத் தேடிப்போய் மதித்தது.
அவரோடு ஒப்பிடும்போது நான் அப்போது அதிகமாக எழுத வில்லை. ஆனாலும் யாழ்ப்பாண ஈழநாடு இதழுக்காக பெரிய பேட்டி என்னிடம் எடுத்து எழுதினார் அவர் அதுதான் எனது முதல் பேட்டி
அந்தக் காவலூரின் நினைவாக அமைக்கப்படும் அறக் கட்ட ளைத் தொடக்க விழாவில் பாரிசில் நான் கலந்து கொள்வது பாக்கி யத்திற்குரியது. இந்நிகழ்ச்சிக்குப் பாரிசிலிருக்கும் கலை இலக்கிய முன்னோடிகள் பலர் கலந்து கொண்டார்கள். கவிஞர் வி.ரி. இளங் கோவன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் நோக்கம் பற்றி
ஈழநாடு ஆசிரியர் எஸ்.எஸ். குகநாதன் தெளிவுபடுத்திப் பேசினார்.
“காவலர் ஜெகநாதனின் எழுத்துக்களைப் பற்றி நான் பேசினால் அது புகழ்ச்சி எனப் பலர் நினைக்கக்கூடும். அதற்குக் காரணம் அவர் எனக்கு அண்ணன். (உடன் பிறந்த) எனவே அவரின் எழுத்தைப் பற்றி நான் பேசவில்லை. ஆனால் அவர் குடும்பத்தைவிட எழுத் தையே அதிகம் நேசித்தவர் என்பதை இங்கு நான் சொல்ல வேண்டும்.
9] ロ

Page 48
மாத்தளை சோமு
நாங்களும் அவர் எழுத்தை அதிகம் நேசித்தவர்கள். ஆனால் அவரின் மரணம் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது. அவரை இந்தியாவில் வைத்துக் கொன்றவர்கள் தங்கள் இலட்சியத்தில் வெற்றி கண்டார்களா தெரியவில்லை. அவருடைய உடல் கூடக் கிடைக்க வில்லை. இன்று எங்களிடம் அண்ணன் நினைவாக இருப்பது அவ ரின் எழுத்துக்கள் தான். ஆகவே எங்கள் குடும்பம் அவரின் பெயரில் அறக்கட்டளை தொடங்க முடிவு செய்தது. அறக்கட்டளையின் சார் பில் காவலூர் ஜெகநாதனின் பெயரில் ஆண்டு தோறும் வெளிவந்த இலங்கைச் சிறுகதைகளில் மிகச்சிறந்த சிறுகதைக்கு 50,000 ரூபாயும் சிறந்த கவிதைக்கு அமரர் சில்லையூர் செல்வராஜனின் பெயரில் 50,000 ரூபாவும் வழங்கப்படும்.
“சிறுகதைகள், கவிதைகள் இலங்கை, இந்தியா, மலேசியா மற் றும் தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் வெளிவரும் ஏடுகளில் பிர சுரமானதாகவும், இலங்கையைப் பின்புலமாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.” அதற்குப் பிறகு நடந்த கலந்துரையாடலின் போது வெளிவந்த சிறுகதைகளில் கவிதைகளில் சிறந்ததை தெரிவு செய்வது சம்பந்தமாக சிலர் வேறு கருத்தைத் தெரிவித்தபோதும் அறக்கட்டளை சார்பில் குகநாதன் அதற்கு விளக்கம் கொடுத்து,
“தெரிவில் தரம் தான் பேணப்படும் அதையிட்டுச் சந்தேகம் வேண்டாம்” என்றார்.
பிறகு பாரிசில் தமிழ் வீடியோ திரைப்படங்களைத் தயாரித்து வரும் கீழ்க்கரவை பொன்னையன் தனது கருத்துக்களை தெரிவித்த போது,
“கற்பழிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதும் கொதித் தெழுந்தார் உயிர்நிழல் தொகுப்பாசிரியர்களில் ஒருவரான லஷ்மி, “கற்பழிப்பு என்பது பிற்போக்குத்தனமானது ஆணாதிக்கத்தை வெளிப் படுத்தும் ஒரு சொல். ஒரு பெண்ணைக் கெடுக்கும் ஒரு சொல். ஒரு பெண்ணைக் கெடுக்கும்போது அந்த ஆணும் கெட்டுப் போனவன் தான். ஆனால் இங்கே பெண்ணின் கற்பை அழித்ததாக மட்டும் ஏன் சொல்கிறீர்கள்? பாலியல் வல்லுறவு என்று சொல்லுங்கள்’ லஷ்மி யின் கோபாவேசத்திற்குப் பிறகு கற்பழிப்பு என்ற வார்த்தை பாலியல் வல்லுறவு என மாறியது. ஒரு சொல் வெல்லும். கொல்லும் என்ப தில் உடன்பாடு உண்டு. மேலும் நாம் அன்றாடம் பாவனை செய்யும்
92

லண்டன் முதல் கனடா வரை.
சில வார்த்தைகளே பெண்களை இழிவுபடுத்தி ஆணாதிக்கத்தை சிலாகிக்கும். உதாரணம் பெண்புத்தி பின்புத்தி, விஞ்ஞான ரீதியாக இதனை நிறுவமுடியாது’ கீழ்க்கரவை பொன்னையனின் கருத்துரைக் குப்பின் ஒரு கேள்வி எழுந்தது.
“பாரிசில் பத்திரிகையாளர் சபாலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்ட போது ஈழநாடு மிகச் சிறிய செய்தியை வெளியிட்டதோடு அந்தக் கொலையை கண்டிக்கவில்லையே ஏன்?”
ஒரு விநாடி மெளனம். பலரும் எதிர்பாராத கேள்வி. இந்த இடத்தில் பாரிசில் நடந்த தமிழர் சம்பந்தமான அரசியல் சமூகக் கொலைகளைப் பற்றிச் சொல்லவேண்டும். ஈழத்தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளிலேயே பிரான்ஸ் பாரிசில் தான் அரசியல் சார்ந்த கொலை கள் நடந்திருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையாள ரும் பதிப்பாளருமான சபாலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். இக் கொலை தஞ்சம் புகுந்த மண்ணில் தமிழர்களை ஜனநாயக விரோதி களாகப் பார்க்க வைத்தது. இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்னொரு பத்திரிகையாளர் ஈழமுரசு ஆசிரியர் க. கஜேந் திரன் (அவரோடு இயக்கப் பொறுப்பாளர் ஒருவரும்) சுட்டுக் கொல் லப்பட்டார்.
பாரிஸ் வார இதழ் ஈழநாடு அலுவலகம் தாக்கப்பட்டது. இவை கள் அரசியல் சார்ந்தவைகளாக இருக்கலாம். இவ்வாண்டு பெப்ரவரி யில் நடந்த இன்னொரு கொலை. சமூகம் சார்ந்தது. பன்னிரண்டே வயதான இளம் சிறுமி செல்வி நிதர்ஷினி பாலியல் வல்லுறவிற்குப் பின்னர் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை பிரான்ஸ் தமிழர்களை மட்டுமல்ல வேறு தேசங் களில் குறிப்பாக ஐரோப்பிய தேசங்களில் புலம் பெயர்ந்த தமிழர் களைச் சோகத்திற்குள் தள்ளியது. இச்சோகத்தையும் மீறி வந்த தகவல் அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்தப் படு பாதகத்தைச் செய்தவர்கள் பிரான்சில் அகதிகளாக தஞ்சமடைந்த இரு தமிழ்
99. வாலிபர்கள்.
குகநாதன் மெல்ல எழுந்து பதில் கொடுத்தார். ஈழநாடு வாரப் பத்திரிகை. எனவே கடைசியாகக் கிடைக்கிற செய்திகளைச் சிறியதாகத்தான் போட வேண்டி வருகிறது. மேலும்
93 DI

Page 49
D மாத்தளை சோமு
இந்த அரசியல் கொலையை ஏன் கண்டிக்கவில்லையென்றால். இதற்குப் பதில்” என்றவர், சிறிது விநாடி மெளனமாக இருந்து விட்டுச் சொன்னார்.
“எங்கள் குடும்பம் அண்ணன் ஜெகநாதனை இழந்தது போது மென்று நினைக்கிறது. ஜெகநாதன் கொல்லப்பட்டபோது பல இலக் கிய சஞ்சிகைகள் ஒரு வரிச் செய்தி கூட எழுதவில்லை. ஈழத்து இலக் கியத்தை மேம்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிற பல இலக் கியவாதிகள் அதில் அடக்கம். அதில் கூட பலர் இலக்கிய ரீதியாக காவலூர் ஜெகநாதனிடம் பலன் பெற்றவர்கள்.”
அந்த அறக்கட்டளைக் கூட்டம் விருந்தோடு முடிவடைந்தது. நானும் குகநாதனும் காரில் புறப்பட்டோம். கார் குகநாதனின் வீட்டை நோக்கி ஓடியது.
குகநாதனின் வீடு பாரிசை விட்டுத் தள்ளி ஒதுக்குப் புறமாய் இருந்தது. அங்கேதான் நான் தங்கினேன். குகநாதனின் மனைவி பெயர் ரஜினி, ஒரு மகனும் மகளும் அவர்களுக்கு. அவர்களோடு ரஜினியின் அம்மாவும் இருந்தார்கள். காலை 10 மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டால் குகநாதன் இரவு பத்துக்குத்தான் வீடு திரும்பு வார். தமிழ் ஒலி,ஒளி வானொலி தொலைக்காட்சி நிலையத்தில் தான் பகற்பொழுது, மாலைநேரம் எல்லாம் அவருக்கு. ரஜினிக்கோ வீட் டில் இருந்தபடியே ஈழநாடு இதழுக்கு செய்தி சேகரிக்கும் பணி.
இருவரும் அதாவது கணவனும் மனைவியும் மனம் விட்டு நள் ளிரவில் தான் பேசமுடியும். இந்நிலையில் மாதந்தோறும் தொழில் ரீதி யாகத் தனிப்பட்ட முறையில் நண்பர்கள் வருகையைக் கவனிக்க வேண்டும்.
கத்தியில் நடப்பது போன்ற வாழ்க்கை. புலம் பெயர்ந்த நாடு களில் பத்திரிகை. வானொலி மற்றும் இலக்கிய முயற்சிகள் பெரும் பாலானவை அர்ப்பணிப்பு முறையில்தான் நடந்தேறுகின்றன.
சொந்த ஆசாபாசங்களை மூட்டை கட்டி வைத்து விட்டுப் பலர் இதனைச் செய்து வருகின்றனர். தனி மனிதராக இதனைச் செய்வது பெரிய சாதனையில்லை. ஆனால் கணவனோடு மனைவியும் பங்கு போடுவது போற்றுதலுக்குரியது.
3 O 94

லண்டன் முதல் கனடா வரை.
ஈழநாடு மற்றும் வானொலி, தொலைக்காட்சி என்பனவற்றில் கூட்டாகப் பலர் இருந்தாலும் அவரின் பின்னே அவர் மனைவி உற் சாகமாய் இருப்பது மிகப் பெரிய பலமாகும்.
ஒரு நாள் திருமதி ரஜினியிடம் கேட்டேன். “ஆணாதிக்கத்தைப் பற்றி என்னை நினைக்கிறீர்கள்?’ அற்புதமாய் அவரிடமிருந்து பதில் வந்தது.
இங்கே ஆணாதிக்கமும் இல்லை. பெண்ணியமும் இல்லை. எங் கள் குடும்பம் தான் இருக்கிறது. எல்லாமே குடும்பத்தில் அடக்கம்”
அப்போது அங்கே வந்த ரஜினியின் அம்மா என்னைப் பார்த்துச் சொன்னார்.
“இங்கே பிரான்சில் மனிதனுக்குப் பல முகம். அகதியாய் இருக் கும்போது ஒரு முகம். நெசனால்டி கிடைத்துவிட்டால் வேறு முகம். அவர்களில் பலர் ஆணாதிக்கம், பெண்ணியம் பேசிப் பிரிந்து போனார்கள். எனக்கு இவைகளைப் பார்க்கப் பிடிக்கவில்லை. எப் போது ஊருக்குப் போவேனோ?”
அவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. அவரோடு பேசும் போதெல் லாம் சமாதானம் வந்து எப்போது இலங்கை திரும்பலாம் என்பதே ஏக்கமாக வரும்.
இதுபோன்ற ஏக்கத்தோடு வாழ்கிற பலரை எனது இந்தப் பய ணத்தில் கண்டேன். இளையோருக்குப் புலம்பெயர்ந்த நாடு தாயாக மாகி விடலாம். ஆனால் இங்கே மூத்த தலைமுறைக்குப் பிறந்து வளர்ந்த பூமி மீதான ஆசையே பெருகி நிற்கிறது.
difLDIT6 (T Gld T6&T60TT is gir? East or West Home is Best. அந்த home தாயகம் தானே?
A.
பாரிஸில் - 20
பாரிசில் இருந்தபோது என்னைச் சந்திக்கும் ஓர் இடமாக ரி. ஆர். ரியின் தமிழ் ஒலி-ஒளி கலைக்கூடம் இருந்தது. தினந்தோறும் குகநாதனோடு கலையகம் வந்தால் அவரோடு இரவில் தான் திரும் புவேன்.
95 D.

Page 50
D மாத்தளை சோமு
ப்கலில் கலையகத்திலும் இரவில் வேறு இடங்களுக்கும் போய் வருவது எனக்குப் பிடித்திருந்தது. கலையகத்தின் பக்கத்துத் தெரு வில் டிராம் ஒடுகிறது. டிராமில் போனால் மெட்ரோ எடுக்கலாம். மேலும் கலையகத்தில் பணி புரிந்தவர்கள் எல்லோரும் நட்புரிமை கொண்டவர்களாக இருந்தார்கள்.
இதனை எடுத்துக் காட்டும் விதமாக வரவேற்பறையில் சிரித்த முகத்தோடு எல்லோரையும் வரவேற்பவர் பாண்டிச்சேரியில் இருந்து குடியேறிய திருமதி விக்டோரியா.
அந்தக் கலையகத்தில் தான் எனக்கு 'உயிர்நிழல்' கலைச் செல் வன், இலக்கியச்சந்திப்பு எஸ். புஸ்பராஜா, அம்மா' சஞ்சிகை மனோ கரன், அறிவிப்பாளர்கள் கோவை நந்தன் பிலிப்தேவா, என்.ரி. ஜெகன், லோகு, ஏ.எஸ். ராஜா திருமதி நவா ஜோதி, கீழ்க்கரவை பொன்னை யன் பாரிசில் புகழ்பெற்ற இளையநிலா இசைக் குழுவினர், ஜேர்மனி செல்லத்துரை, கவிஞர் வி.ரி. இளங்கோவன் போன்ற பலர் அறிமுக மானார்கள்.
தமிழ் ஒலி வானொலியில், ஒலிபரப்பாளராகக் கடமை புரிந்த கோவை நந்தன் எனக்கு மிக நெருக்கமான நட்பாளரானார். குக நாதன் ரியூனியன் நாட்டிற்கு கருத்தரங்கிற்காகப் போனதால் நந்தன் வீட்டில் பல நாட்கள் தங்கினேன்.
அவர் மனைவி தமிழகம் போய் விட்டதால் நாங்கள் இருவர் மட்டுமே வீட்டில் தங்கினோம். கோவை நந்தன் கோப்பாயைச் சேர்ந் தவர், கோப்பாயைத் தான் கோவை என மாற்றியிருக்கிறார். சொந்த மாக வானொலி ஒலிப்பரப்பு நடத்தியவர். ரிஆர்.ரி. தமிழ் ஒலி தொடங் கியதும் அதனை நிறுத்தி தமிழ் ஒலியில் இணைந்து விட்டார்.
இரவில் பாரிசைப் பார்க்க வேண்டும் என்று கோவை நந்த னிடம் சொல்லியிருந்தேன். ஒரு நாள் பிலிப்தேவாவின் காரில் இரவு செய்தி முடிந்ததும் நானும் கோவை நந்தனும் கிளம்பினோம்.
லா ஸப்பல் உணவு விடுதியில் இரவு உணவு உண்டு விட்டு பாரிஸ் டவர் பகுதிக்குக் காரிலேயே போனோம். மின் விளக்குகளில் பாரிஸ் ஜொலித்தது ஈபிள் டவரின் இரவு நேர அழகு வர்ணிக்க முடி եւ IT5Ֆ].
இரவில் கூட மக்கள் கூட்டம் அங்கே இருந்தது. டவரின் ஒரு பக்கத்தில் 2000ஆம் ஆண்டிற்கு இன்னும் எத்தனை நாட்கள் என்
D 96

லண்டன் முதல் கனடா வரை.
பதைச் சொல்லும் மின்பலகை இருந்தது. போக்குவரத்து அதிகம் இல்லாததால் காரைக் கோபுரத்தின் அருகேயே நிறுத்திவிட்டுப் பட மெடுத்துக் கொண்டு புறப்பட்டோம்.
கார் வேறு பாதையில் போயிற்று “இந்தப் பாதை பிரெஞ்சு ஜனாதிபதியின் மாளிகையைத் தாண் டிப்போகிறது” என்றார் நந்தன்.
“அப்படியானால் கெடுபிடிஇருக்கலாமே.” என்றவாறு வீதியைப் பார்த்தேன். வீதியில் பொலிசாரே இல்லை. மக்கள் நடமாட்டமும் இல்லை.
கார் சிறிது தூரம் போனபோது அறைகுறை உடையுடன் ஆனால் கவர்ச்சியுடன் ஒரு மின் விளக்குத் தூணுக்கருகில் ஒரு நங்கை தனி யாக நிற்பதைக் கண்டேன்.
கோவை நந்தனிடம் கேட்டேன். “இந்த நேரத்தில் ஏன் அவள் இப்படி நிற்கிறாள்?” நந்தன் சிரித்துக் கொண்டே, “அதுக்குத்தான்” என்றார்.
எனக்கு ஆச்சரியம்! பிரெஞ்சு ஜனாதிபதி மாளிகை பக்கத்தில் இந்தப் பெண் வாடகை மனிதனை எதிர்பார்த்து வீதியில் நிற்கிறாளே! அந்தக் கார் இரவு உலகத்தை நோக்கி ஓடியது. பாரிஸ் இரவு உலகம். பல நாட்டுப் பயணிகளிடையே புகழ்பெற்றது. பிலிப்தேவா காரை நிறுத்த இடம் தேடினார். இடம் சுலபமாகக் கிடைக்கவில்லை. அவ்வளவு கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
எங்கு பார்த்தாலும் வண்ண விளக்குகள் நடனமாடின. மிகவும் கஷ்டப்பட்டு ஒரு இடத்தில் பிலிப்தேவா காரை நிறுத்த எல்லோரும் இறங்கினோம்.
கோவைநந்தன் முன்னே போக, அவரைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் நடைபாதையில் நடந்தோம். பிலிப்தேவா மகிழ்ச்சியில் லாமல் இருந்தார். பிறகு தான் அதற்கான காரணத்தை நந்தன் சொன் னார்.
பிலிப்தேவாவின் மனைவி திருமணமான சில ஆண்டிலேயே காலமாகிவிட்டார். மனைவி மீது கொண்ட காதலில் உலகமே பிலிப்
97 ロ

Page 51
மாத்தளை சோமு
தேவாவுக்கு வெறுத்தது. மனைவி இறந்த மறுமாதமே வேறு பெண் ணைத் தேடும் மனிதர்களிடம் அவர் வித்தியாசமானவர்தான்.
கேளிக்கை நிலையங்கள், மற்றும் செக்ஸ் கடைகள் திறந்திருப் பது, நடக்கும் போதே தெரிந்தன. ஒரு செக்ஸ் கடைக்குள் நானும் நந்தனும் முதலில் நுழைந்தோம். எமக்குப் பின்னால் பிலிப்தேவா.
இதுபோன்ற கடைகளை சிட்னியில் பார்த்திருப்பதால் எனக்கு வியப்பாகத் தெரியவில்லை. உள்ளே இருக்கிற பல பொருட்கள் மனி தனின் வக்கிர புத்தியின் அடையாளமாகத் தெரிந்தன. செயற்கை யான உறுப்புகள் ஆபாசமாய் இருந்தன. மனிதனின் புத்தியை என்ன வென்பது? இவ்வளவு கீழ்த்தரமாய்ப் போய் விட்டானே!
செக்ஸ் கடையை விட்டு வெளியே வந்து நாங்கள் நடைபாதை யில் நடந்த போது கோட்டும் சூட்டும் போட்ட மனிதர்கள் பலர் பிரெஞ்சு மொழியில் ‘பச்சையாகப் பேசி பார்க்க வருகிறீர்களா?” என்று கேட்டார்கள்.
“நைட்கிளப் மனிதர்கள். உள்ளே நிர்வாணமாகப் பெண்கள் ஆடு வார்கள். ஒரு டிக்கெட் விற்றால் கமிசன் அவர்களுக்கு.” என்றார் கோவை நந்தன்.
எனக்கு உடனே கிங்ஸ் குரொஸ் (Kings Cross) ஞாபகம் வந்தது. அது சிட்னியில் இருக்கும் இரவு உலகம், சிட்னிக்கு வருகிற வெளிநாட்டுப்பயணிகள் இங்கு போகாமல் போகமாட்டார்கள், பலர் வேடிக்கை பார்க்கத்தான் அங்கு போவார்கள்.
ஜனநாயகம், பெண்ணியம் என்பனவற்றை அறிமுகம் செய்த தாகச் சொல்கிற மேற்கத்திய நாடுகள் தான் பெண்களைப் போதைப் பொருளாக்கி அதனையே காட்சியாக்கி வர்த்தகமாக்கி விட்டன. இதனை உலகில் பல நாடுகளுக்கும் பரப்புகின்றன.
மூன்றாம் உலக நாடுகளில் பெண்களின் உரிமைகள் மறுக்கப் படுவது நிஜம், அதை விட நிஜம். மேற்கத்திய நாடுகள் பெண்களை விற்பனைப் பொருளாக்கியதும் போதைப் பொருளாக்கியதும். இதில் பெரும் வேடிக்கை இவற்றுக்கெல்லாம் பெண்களே துணை போவது தான்.
பணம் என்ற வட்டத்தில் இயங்குகிற உலகம் தனக்கு மனிதாபி மானம் தெரியும் என்பதைக் காட்டவே அவ்வப்போது உதிர்க்கிற
98

லண்டன் முதல் கனடா வரை. D
வார்த்தைகள். ஜனநாயகம், பெண்ணியம், பெண்ணுரிமை, மானிட சிநேகம். ஆனால், பொருளியலுக்கு எதிராக இவை இருக்கின்ற போது அவற்றை மிதித்து நசுக்கவும் தயாராக இருக்கிறது இந்த உலகம் என்பதை இது போன்ற இடங்களில் கண்டேன்.
அடுத்தநாள் ஒரு இலக்கியச் சந்திப்பு நடந்தது. அதற்கு கவி ஞர் ஜி.ரி. இளங்கோவன் தலைமை தாங்கினார். யதார்த்த இலக்கியம் பற்றிக் கடுமையான விமர்சனங்களை அம்மா மனோகரன், கலைச் செல்வன். பி. விக்னேஸ்வரன் ஆகியோர் வைத்தார்கள். முற்போக்கு இலக்கியத்திற்கு எதிரான கருத்துகளும் உதிர்ந்தன. இதுபோன்ற கருத்துகளால் பிரபல எழுத்தாளர் அமரர் எஸ். அகஸ்தியர் போன் றோர் கூட, (உயிருடன் இருந்த போது சங்கடப்பட்டிருக்கிறார்கள்.
நான் எனது உரையில் ஆணித்தரமாக, “யதார்த்த, முற்போக்கு, நவீன எழுத்துக்கள் எல்லாமே மக்களைச் சார்ந்தவை. மக்களைச் சாராதவை இலக்கியமே அல்ல.
நவீன இலக்கியம் வரவேற்கக்கூடியது தான். ஆனால் புஷ்பா தங்கத்துரை போல் அசிங்க வார்த்தைகளோடு முன்னெடுப்பது எப்படி நவீனமாகும்? தமிழகத்திலும் இலங்கையிலும் சாதி, சமய இன. அடக்குமுறை வெறிகளுக்கு எதிராகப் போராட வேண்டிய கட்டாயம் எழுத்தாளர்களுக்கு உண்டு என்பதை எழுத்தாளர்கள் உணர வேண் டும்” என்றேன்.
அந்தச் சந்திப்புக்குப் பிறகும் அதற்குப் பிறகும் பல தடவை ஜி.ரி. இளங்கோவனோடு பேசினேன், இன்னமும் ஊர் நினைவு மாறாத மனிதர். பேச்சின் போது அமரர் எழுத்தாளர் கே. டானியலை அடிக்கடி நினைவுபடுத்தினார்.
“யாழ்ப்பாண சாதிப் போராட்டத்தில் டானியலுக்குப் பங்குண்டு. வெறும் எழுத்தாளனாக மட்டும் இருக்கவில்லை. சமூகப் போராளி யாகவும் அவர் இருந்தீரர்?
எழுத்தாளர் டானியலை நான் நேரில் யாழ்ப்பாணத்தில் சந்தித் திருக்கின்றேன். அவர் மிகச் சிறந்த மானுட நேசிப்பாளர். சில எழுத் தாளர்கள் எழுத்தாளராக மட்டும் இருப்பார்கள். ஆனால் டானியல் எழுத்தாளராகவும் மானிட நேயவாதியாகவும் இருந்திருக்கிறார்
99 а

Page 52
III fomólab - 21
பிரான்ஸில் குறிப்பாக பாரிசில் பார்க்க வேண்டிய அருங்காட்சி யகம் பல இருக்கின்றன. அந்த அருங்காட்சியகங்கள் பிரான்சை தனித் துவமான ஒரு நாடாகவும் பிரெஞ்சு மொழியை தனித்துவமான ஆங்கிலத்திற்கு இணையான ஒரு மொழியாகவும் பாதுகாத்துப் புகழ் பரப்பி நிற்கின்றன.
பிரெஞ்சுக்காரர்களின் தாய்மொழி ஆர்வத்தை வெளி நாட்டவர் கிண்டல் செய்தது உண்டு. ஆனால் பிரெஞ்சுக்காரர்கள் எங்கள் நாட் டிற்கு வருகிற பயணிகள், எங்கள் நாட்டைப் பற்றியும் எங்களின் மொழி பற்றியும் மேலோட்டமாகவாவது தெரிந்து கொண்டு வாருங் கள் என்பதுதான் அவர்களின் கருத்து. அதில் நியாயம் இருப்பதா கவே நான் உணர்கின்றேன்.
ஆங்கிலம் தெரிந்தால் உலகம் சுற்றலாம் என்பது மிகைப்படுத் தப்பட்ட ஒன்று. பிரெஞ்சு 30 நாடுகளில் பேசப்படுகிறது. ஜேர்மனியில் ஜேர்மனிய மொழி. அதுவும் பல நாடுகளில் பேசப்படுகின்றது. பிரான் சில் குடியேறிய மக்கள் பிரெஞ்சு படிக்க அரசு மான்யம் கொடுக்கின்றது.
பிரெஞ்சு மொழி அடிப்படை அறிவு இருந்தால்தான் பிரெஞ்சு குடியுரிமைக்கே விண்ணப்பிக்க முடியுமாம்.
பிரெஞ்சு அருங்காட்சியகங்கள் பிரெஞ்சு மொழியை மேம்படுத்தி நிற்கின்றன. அந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட இலக்கியச் சந்திப்பு எஸ். புஸ்பராஜாவோடு போனேன். பழகுவதற்குப் பொருத்த மானவர். 1988இல் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பை முன்னெ டுத்து வருகின்றவர். 25க்கும் மேற்பட்ட இலக்கியச் சந்திப்புகள் நடந்து விட்டன. கடைசியாக நடந்த இலக்கியச் சந்திப்பின் அடையாளமாக “தோற்றுத்தான் போவோமா?” என்ற தலைப்பிட்ட அழகிய மலரை வெளியிட்டுள்ளார்கள். புலம் பெயர்ந்த படைப்புகளைப் பற்றி எழுதும் போது இந்த மலருக்கு (மலர்களுக்கு பல பக்கங்கள் ஒதுக்க வேண்டும்.
இலக்கியச் சந்திப்புப் பற்றி உரையாடி விட்டு நாங்கள் அருங் காட்சியகம் பார்க்கப் போனபோது மழை தூறத் தொடங்கியது. மழை விடுவதைப் போலத் தெரியவில்லை. எனவே அருங்காட்சியகம்
DI ] 0 0

லண்டன் முதல் கனடா வரை... )
போகாமல் நினைவுப் பொருட்கள் வாங்க ஒரு கடைக்குள் போய்
விட்டுத் திரும்பினோம்.
பிறிதொரு நாள் இரவு, கோவை நந்தனோடு பாரிசில் இருக்கும்
படைப்பாளி உமாகாந்தனைச் சந்திக்கப் போனபோது புஸ்பராஜா வும் வந்திருந்தார். இரவு வெகுநேரம் கலந்துரையாடினோம்.
இனப்போராட்டத்தில் நடந்த அராஜங்களை மன வருத்தத்தோடு எடுத்துச் சொன்ன உமாகாந்தன், கொசவோ அகதிகளுக்கு மிகவும் ஏழை நாடான அல்பேனிய மக்கள் உதவி செய்ததை எடுத்துச் சொன் னார். சமகால அரசியல் இலக்கியம் எழுத்து எல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கிறது. இலங்கை, இந்தியா புலம் பெயர்ந்த நாடுகளில் வரு கிற, சகல ஏடுகளையும் அவர் வீட்டில் கண்டேன். ஒரு படைப்பாளி சகலத்தையும் படிப்பது மிகப் பெரிய பலம். பலதும் தெரிதல், புரிதல், படித்தல், உணர்தல், தேடுதல் எல்லாம் ஒரு படைப்பாளிக்கு அவசி யம். சமீபத்தில் இலங்கைக்குச் சென்றபோது ஒரு எழுத்தாளரிடம் என்னை நண்பர் அறிமுகப்படுத்தியபோது அவர் என்னைப் பார்த் துக் கேட்டக் கேள்வி. மாத்தளையிலிருந்து எப்போது வந்தீர்கள்?”
அந்த எழுத்தாளர் பல ஆண்டுகளாகப் பத்திரிகை படிக்கவில்லை, என்று நினைத்துக்கொண்டேன். தனது எழுத்துக்கு அப்பால் தனது எல்லையை விரிவுபடுத்தவில்லை. அந்த எழுத்தாளர். அம்மா மனோகரனின் அழைப்பில் அவர் வீட்டிற்குப் போனேன். ஒசை மனோ என்றால் பலருக்கும் அவரைத் தெரியும். ஜெயகாந்தனின் எழுத்தால் கவரப்பட்டு முழுமையான இலக்கியச் சஞ்சிகையை நடத்துகிறார்.
புலம் பெயர்ந்த நாடுகளில் வரும் சஞ்சிகைகளில் அம்மா காத் திரமானது. அவர் வீட்டில் இரு இரவுகள் தங்கி குளிரில் கால் போன போக்கில் நடந்து இலக்கியம் பேசினோம். இலக்கியம் என்றால் சர்ச் சைகள் உட்பட்டது தானே? நவீன இலக்கியம் பற்றிய சர்ச்சை எழுந் தது. அவர் என்னிடம் சொன்னார்.
நீங்கள் முயன்றால் நவீன எழுத்து எழுத முடியும். உங்களால் முடியும்.”
“என்னால் முடியும் என்பது வேறு நவீனமாய் யாருக்கு எழுது வது? இன்னமும் எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் இருக்கிறார்கள். அவர்களைப் படிக்க எழுத வைக்க வேண்டும் புரியாமல் எழுதுவதில்
to o

Page 53
D மாத்தளை சோமு
எனக்கு உடன்பாடில்லை. உடையோடு மனிதன் இருப்பதே கலாச்சாரம் எனப்படுகிறது. நிர்வாணமாய்த் திரிவது பைத்தியக்காரரின் புத்தி எனப் படுகிறது. எல்லோரும் நிர்வாணமாகி விடுகிற பக்குவம் இங்கு வர வில்லை. எனவே புரிகிற மாதிரி எழுதுவது கூடக் கலாசாரம் சம்பந்தப் பட்டது. நவீனம் மனிதனுக்காகத் தானாக வருவது. வரும்” என்றேன்.
எனக்கு இலக்கியம் சம்பந்தமாகச் சர்ச்சைப்படுவது உடன்பாடா னது. தெரியாதததையும் தெரிந்து கொள்ளலாமே!
பிற நாடுகளுக்குப் போனால் விருந்துண்பது ஒரு சடங்காக மாறி விட்டது. எல்லா அழைப்புகளையும் ஏற்க நேரமில்லை. சில அழைப்பு களைத் தவிர்க்க முடியவில்லை. எழுத்தாளர் அமரர் அகஸ்தியரின் மகளும், மருமகனும் என்னை அழைத்தார்கள். அவர்கள் வீட்டிற்குப் போயிருந்தேன். அங்கே இலங்கையில் கண்டியில் இலக்கியத் தொண் டர் இராமன் நடத்திய அமரர் அகஸ்தியர் நினைவு நிகழ்வின் தொகுப்பை தொலைக்காட்சியில் போட்டுக் காண்பித்தார்கள்.
கண்டி, அகஸ்தியரின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட நகர். கண்டியில் இருந்தபோது அவரை அடிக்கடி சந்தித்திருக்கின்றேன். அப்போது வீரகேசரியில் எழுதிய நரகத்திலிருந்து குறுநாவல் தொடரை விரும்பிப் படித்தேன். கண்டியிலிருந்தபோது அகஸ்தியர் ஒதுங்கிப் போயிருந்த மலையக இளைஞர்களை உற்சாகப்படுத்தியவர். இராமன் நடத்திய அந்த நிகழ்வு மலையகமே அகஸ்தியருக்குச் செய்த நன்றிக் கடனாகும்.
பிரான்சில் வாழ்ந்த அகஸ்தியர் கடைசிக் காலத்தில் நோய் வாய்ப் பட்ட போது கூட எழுதுவதை விடவில்லையாம். தமிழில் எழுதுவ தால் பொருளாதாரம் குவிகிறதா எழுத்தாளனுக்கு? இச்சமூகத்தின் மீதுள்ள அக்கறையால் தான் அவன் எழுதுகிறான். இதனைக் கூட இச்சமூகம் சரிவரப் புரிந்து கொள்ளாவிடில் என்ன செய்வது?
ஒரு தடவை அகஸ்தியரின் புத்தக வெளியீட்டின் போது பாரிசில் நவீன இலக்கியம் படைப்பதான மிதப்பில் இருக்கிற சில படைப் பாளிகள் அகஸ்தியரின் படைப்பிலக்கியத்தைக் கடுமையாக விமர் சித்தார்களாம். அதனையிட்டு மனம் நொந்தாரம் அகஸ்தியர். ஒரு படைப்பின் மீதான விமர்சனத்திற்கு உரிமை உண்டு. ஆனால், இப் படி எழுதுவது தான் எழுத்து என்பது உரிமை மீறலாகும். அகஸ்தியர்
O2

லண்டன் முதல் கனடா வரை.
போன்ற எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கிய காலமும், தேவையும் அறியாதவர்கள் எவ்வாறு படைப்பிலக்கிய நியாயத்தைப் புரிந்து கொள்வார்கள்.?
அகஸ்தியரை மாத்திரமல்ல, அவரின் எழுத்துக்களை நேசிக்கிற மனைவி, மகள், மருமகன் என்ற குடும்பத்தைக் கண்டேன். அது எனக்கு மகிழ்ச்சியானதாக இருந்தது. சில எழுத்தாளர்கள் மறைந்ததுமே அவரது குடும்பம் அவரது எழுத்துக்களையும் அடக்கம் செய்து விடுகிறது. ஆனால், இங்கே அகஸ்தியரின் படைப்புகள் ஆண்டு தோறும் வெளிவர அவரின் மருமகனே முன்னிற்கிறார்.
இன்னொரு விருந்தோடு கூடிய சந்திப்பைக் கீழ்க்கரவை பொன் னையன் தன்வீட்டில் வைத்திருந்தார். அங்கே போனதால் பிரான்சில் முன்னெடுக்கப்பட்ட, தமிழ் சினிமாப் படங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். வீடியோ கருவி வழியான திரைப்படம் தமிழில் புலம் பெயர்ந்த நாடுகளிலேயே பிரான்சில்தான், அதிகமாகத் தயாரிக்கப் பட்டன. ஞானம் பீரிஸ், கீழ்க்கரவை பொன்னையன், அருந்ததி ஆகி யோர் தமிழ்ச் சினிமாப் படங்களை எடுத்திருக்கின்றார்கள். வேறு பலரின் தகவல்கள் கிடைக்கவில்லை. பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சினிமாப் படங்கள் வெளிவந்துள்ளன. எந்தப் படத்தையும் பார்க்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே சினிமா தயாரிப்புப் பற்றிக் கீழ்க்கரவை பொன்னையனின் கருத்தைக் கேட்டேன்.
“இது தொடக்க காலம், இப்படித்தான் இருக்கும். தமிழக சினி மாவே அப்படித்தான் இருந்தது. மேலும் புலம் பெயர்ந்த நாடுகளில் நடிப்புத் தொழில்நுட்பம் என்பனவற்றில் பற்றாக்குறையுள்ளது. விநி யோகச் சிக்கல். இத்தனைக்கும் மத்தியில் வருவது தான் பாரிஸ் தமிழ் சினிமா. 1995இல் வெளிவந்த 'சத்திய கீதை' என்ற படத்தை முறிய டிக்க ரஜினி நடித்த வீரா வைத் திரையிட்டார்கள் பாரிசில், ஆனால் வீராவுக்கு 100 பேரும் எனது படமான சத்திய கீதைக்கு 500க்கும் மேற்பட்ட மக்களும் வந்தனர். தொடர்ந்து மக்கள் ஆதரவு தந்தால் தரமான படங்களைத் தயாரிக்க (փգեւյմ):"
தோட்டக்காரியில் பிள்ளையார் சுழிபோட்ட இலங்கைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு புதியகாற்று' திரைப்படத்தின் மூலம் புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்தது தானே!
O3

Page 54
D மாத்தளை சோமு
ίί புலம் பெயர்ந்த தமிழர்கள் முயன்றால் தரமான படத்தைத் தயாரிக்க முடியும். அதற்கு அவசியம், ஒருங்கிணைப்பு. அது இங்கு இல்லாதது தான் பெரும் பிரச்சனை. அவரவர் தனித்தனியே கை தட்ட முனைகிறார்கள்.
ஒரு பரத நாட்டிய அரங்கேற்றத்தில் கலந்து கொள்வதற்காக என்னைக் காலையில் அதிவேக ரயிலில் ஏற்றி விட்டார் கோவை நந்தன். நான் போக வேண்டிய இடமோ Dillen Burg ரயிலோ Kon வரைதான் போகிறது. என்றபோது ரி.ஆர். ரி. கலையகத்தில் சந்தித்த ஒருவர் எனக்கு உதவுவதாகவும் “Kon ரயில் நிலையத்தில் உங்களை அவர் சந்திப்பார்” என்றும் கூறியிருந்தார். 3. அற்புதமான ரயில் பெட்டிகள். இந்தப் பெட்டிக்குள் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு ஜேர்மானிய இளம் பெண்கள் கூட்டம். எழுந்து நடக்கக்கூட இடம் இல்லை. எனது இலக்க இருக்கையில் இருந்து கொண்டு டயரியைப் புரட்டிக் கொண்டு போனேன். பிரான்ஸை அடுத்துச் சின்னஞ்சிறு நாடான பெல்ஜியத்தைத் தாண்டி ரயில் ஒடி யது. கண்ணாடி அதிலும் முகம் பார்க்கும் கண்ணாடிக்குப் பேர் போன நாடு.
டயரியை மூடிவைத்துவிட்டு, லண்டனில் எடுத்த படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எதிர் இருக்கையில் இருந்த இளம் வெள்ளைக்காரப் பெண் என்னைப் பார்த்து,
“அந்தப் படங்களைப் பார்க்கலாமா?” என்று கேட்டாள். நான் மறுப்பேதும் சொல்லாமல் கையிலிருந்த படங்களைக் கொடுத்தேன். அத்தனை படங்களும் லண்டன், பாரிசில் எடுத்தவை. எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டு, “பியூட்டிபுல் பிச்சர்ஸ் என் றாள். பிறகு என்னை எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டாள்.
“நான் இலங்கையைச் சேர்ந்தவன். இப்போது ஆஸ்திரேலியா வில் இருக்கிறேன்” என்று பதில் கொடுத்தேன்.
அவள் சிரித்து விட்டுத் தன்னோடு இருந்த ஒரு சிறுமியிடம் பேசினாள். எனக்குப் புரியவில்லை என்ன மொழி பேசுகிறீர்கள்? என்று கேட்டேன் ஜேர்மனி என்று பதில் வந்தது.
“ஆங்கிலம் படித்திருப்பீர்கள். ஆங்கிலம் பிடிக்குமா?” என்று கேட்டதற்கு அந்தச் சிறுமி வயது பதினைந்து இருக்கும். “நான் ஆங்
D 104

லண்டன் முதல் கனடா வரை.
கிலத்தைப் வெறுக்கிறேன். காரணம் என்னுடைய ஆங்கில டீச்சர்” என்றாள். அவளுடைய தலைமுடியும் உடையும் நாகரிகம் என்ற பெயரில் எல்லை மீறியவை என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.
ஜெர்மனியில் - 22
அந்த ஜெர்மனிச் சிறுமியைப் பார்த்து “ஏன் உனக்கு ஆங்கில
டீச்சரைப் பிடிக்கவில்லை?” என்று கேட்டேன், அவள் அதற்குச் சொன்ன பதில், எனக்கு வியப்பாக இருந்தது. சுதந்திரம், நாகரிகம் என்ற பெயரில் அவளைப் போன்ற இளைய தலை முறை எங்கோ போக விரும்புகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. “எங் கள் ஆங்கில டீச்சர் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறாள். பள்ளிக்கு யூனிபார்ம் உடுத்தச் சொல்கிறாள். விரும்பிய உடையில் போக நான் விரும்புகின்றேன்.”
மிக மெதுவாக ஒவ்வொரு வார்த்தையையும் தேடி எடுத்ததைப் போல் பேசினாள் அந்த ஜெர்மன் சிறுமி.
நான் உடனே அந்த சிறுமியிடம் சொன்னேன். “நீ படிக்க ஆஸ்திரேலியாவில் பள்ளிக்கூடமே இல்லை.”
ஏன்?
“அங்கெல்லாம் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு நிற யூனி பார்ம். உனக்கு அது பிடிக்காதே’
சிறுமியின் முகம் கோணலாகியது. பிறகு சொன்னாள் “ஜெர்மனி யில் அப்படியில்லை. விரும்பிய உடையில் பள்ளிக்குப் போகலாம்.”
அப்போது அவளிடம் சொன்னேன். “யூனிபார்ம் என்பது இள வயதிலேயே கட்டுப்பாடுகளைக் குறிப்பாக ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுக்க உதவுகிற ஒன்று. மனைவியல் ரீதியாகவும் கூட. யூனி பார்ம் பள்ளியில் மட்டுமல்ல. தொழில் துறைகளிலும் உண்டு. அது ஒரு அடையாளம். அதைக் கண்டு ஏன் வெறுக்க வேண்டும்?”
அந்தச்சிறுமி அதற்குப் பதில் சொல்லாது மெளனமானாள். அந்த மெளனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் மற்றவள் என் னோடு பேசத் தொடங்கினாள்.
ם 105

Page 55
0 மாத்தளை சோமு
“போன வாரம் பல்கலைக்கழகத்தில் 'காந்தி படம் பார்த்தேன். காந்தி மிகப்பெரிய தலைவர் எனக்கு அவரைப் பிடிக்கும்?”
“காந்தி இந்தியாவைச் சேர்ந்தவர், ஆனால் உலகத் தலைவர் களில் ஒருவர்.” என்று சொன்ன நான் சர்வாதிகாரி, ஹிட்லரைப் பற்றிக் கேட்க நினைத்து நிறுத்திக் கொண்டேன்
ஜெர்மனி என்றதுமே ஹிட்லரின் நினைவு வருவது தவிர்க்க முடியாதது. அதற்காக ஜெர்மனியர்களிடம் எல்லாம் ஹிட்லரின் சாயல் இருப்பதாக எண்ணுவது மிகப் பெரிய தவறு.
ஜனநாயகத்திற்கு திரும்பி விட்ட ஜெர்மனி உலகின் பல நாட்டு அகதிகளை ஆதரித்து வருகின்றது. இப்போது இலங்கையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஜேர்மனியில் அகதிகளாக இருக் கிறார்கள். இதேபோன்று துருக்கி, ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர் களும் அகதிகளாக இருக்கிறார்கள்.
இந்த அகதிகளின் குடியேற்றத்தைக் கண்டு கொதிப்படைந்த ஹிட்லர் வழி நாஜிகளின் தாக்குதல்கள் ஜெர்மனிய நாட்டைத் தலை குனிய வைத்துள்ளன. என்றாலும், நாஜிகளின் இனத்து வேஷத் திற்கு எதிரான குரல்கள் ஏனைய ஜெர்மனியர்களிடம் ஒலிப்பது மன துக்கு இதமாக இருக்கிறது.
“எங்கே போகிறாய்?’ என்று கேட்டாள் அவள்.
இடத்தின் பெயரைச் சொன்னேன்.
“இந்த ரெயின் Kon என்ற இடத்தோடு நின்று விடும். அங்கி ருந்து வேறு ரெயின் எடுக்க வேண்டும்.”
அதிவேக ரயில் Konஐ நெருங்கியது. அப்போது அவள் சொன்னாள்.
ஸ்ரேசனுக்குப் பக்கத்தில் அழகான அற்புதமான தேவாலயம் இருக்கிறது. கட்டாயம் பாருங்கள்.”
அந்த ரயில் நின்றது. பிளாட்பாரத்தை விட்டு வெளியே வந்தேன். எனக்காக எவரோ காத்து இருப்பார்கள். என்று சொன்னார்களே! எவரையும் காணவில்லையே! பதினைந்து நிமிடத்திற்குப் பிறகும் எவரையும் காணவில்லை. எனவே வெளியே வந்தேன். வெளியே
106

லண்டன் முதல் கனடா வரை.
அந்த ஜெர்மனியப் பெண் சொன்னது போல் அற்புதமான உயரமான தேவாலயம் தெரிந்தது.
அது ஐரோப்பாவிலேயே புகழ்பெற்ற Kothic கட்டிடப் பாணி யில் கட்டப்பட்ட தேவாலயம். இன்று Kon என்று அழைக்கப்படும் அந்நகரத்தின் சரித்திர காலப்பெயர் Cologne என்பதாகும். லத்தீன் சொல்லான Colonyயில் இருந்து இது வந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் ரோமானியர்கள் இந்த இடத்தைச் சுற்றி மதில் சுவர் கட்டி ஒரு காலணியை உருவாக்கியிருக்கிறார்கள்.
இங்குள்ள அந்த ஆலயம் கட்டி முடிக்க 600 ஆண்டுகளாகி யிருக்கின்றன. 1880இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த ஆலயத்தின் கட் டிடக் கலைச் சிற்பச் சிறப்புகள் மிகமிக அற்புதமானவை. ஏராளமான பயணிகள் இங்கு வந்து போகிறார்கள்.
திரும்பவும் ரயில் நிலையத்தின் உள்ளே வந்து பார்த்தேன். எனக் காக எவரும் காத்திருக்கவில்லை. என்ன செய்வது என்று யோசித் துக் கொண்டிருந்த போது இரு இளைஞர்கள் வந்தார்கள்.
அந்த இளைஞர்களை நெருங்கிப் பேசினேன். பிறகு அவர்கள் வேறு ரயிலில் Dillen Burg போவதற்கு உதவி செய்தார்கள். ரயில் புறப்படப் பத்து நிமிடங்கள் இருந்தபோதும். ஒருவர் நான் கொடுத்த பிரிட்டிஷ் பவுணை ஜேர்மன் பணமாக மாற்றி வரவும் மற்றவர் டிக் கெட் வாங்கியும் உதவினார்கள். பரத நாட்டியக்காரருக்குத் தொலை பேசியில் பேச, ஜெர்மன் நாணயங்களைத் தந்தார்கள். '
Dilen Burg என்ற அந்தச் சிறிய நகரைப் பார்த்த போது எனக்கு மலையகத்தின் சிறிய நகர் ஒன்றுதான் நினைவுக்கு வந்தது. பசுமையுடன் கூடிய சிறுசிறு மலைக் குன்றுகள். அந்தக் குன்றுகளில் அழகான வீடுகள். ஆகாயத்தின் நீலம், பாதைகளின் வசதி, அழகான சேர்ச்சுகள் யாவும் ஹிட்லரினால் ஏற்பட்ட உலக யுத்தத்திலிருந்து மீண்டு விட்ட ஜேர்மனியையே காட்டியது.
ஒரு குடும்ப உறவினர்கள் போல் அந்த மண்டபத்தில் கூடி யிருந்தார்கள். லண்டன் நாட்டியாலய அதிபதி திருமதி ராகினி ராஜ கோபாலின் மாணவி செல்வி விசித்திரா சிதம்பரநாதனின் நாட்டிய அரங்கேற்றம் திருமதி ராகினி ராஜகோபால் இரண்டாவது தடவை யாக ஜெர்மனியில் நடத்தும் அரங்கேற்றம்.
O7 O

Page 56
D மாத்தளை சோமு
தனது ஆர்வம் காரணமாக லண்டன் வந்த செல்வி விசித்திரா அங்கே சில காலம் தங்கி, திருமதி ராகினி ராஜகோபாலிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்.
திருமதி ராகினி ராஜகோபால் நாட்டிய விற்பன்னர், சாந்தா பொன்னுத்துரையின் மாணவியாய் இருந்து யாழ். வீரசிங்கம் மண்ட பத்தில் அரங்கேற்றம் கண்டவர். பிறகு பத்ம பூரீ கலாமேதை அடை யாறு லக்ஷமணனிடம் இரண்டாண்டு பரதத்தின் உயர் தத்துவங்களை யும் நட்டுவாங்கத்தையும் பயின்று பட்டம் பெற்றார்.
நாட்டியாலயா என்ற நிறுவனத்தைத் தொடங்கி பல நாட்டிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். 1975ஆம் ஆண்டில் நடன ஆசிரியைகள் கல்வித் துறையில் நியமிக்கப்பட்ட ஐவரில் இவரும் ஒருவர். காலச் சுழற்சியில் லண்டனுக்குக் குடும்பத்தோடு குடிபுகுந்த இவர், லண்டன் நாட்டியாலயா என்ற பெயரில் தனது நாட்டியக் கல் வியைத் தொடர்ந்தார்.
தற்போது லண்டனில் உள்ள அரச ஆங்கிலப் பாடசாலையில் பரத நாட்டியத்தைப் பயிற்றுவிக்கும் முழு நேர ஊழியராக பணியாற் றுவதன் மூலம் பரதநாட்டியக் கலைக்குப் புலம் பெயர்ந்த நாடுகளில் பெருமை தேடித் தந்துள்ளார். பல ஆங்கிலப் பிள்ளைகளும் இவ ரிடம் பரத நாட்டியம் படிக்கிறார்கள்.
இவரின் பரதநாட்டியப் புகழ் லண்டனைக் கடந்து பிரான்ஸ், ஜெர்மன் எல்லைகளை தொட்டதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று எல்லோருடனும் சிரித்த முகத்துடன் பழுகுவது. மற்றது இவரின் கணவர் ஈழகேசரி ராஜகோபால் என்பது.
பல நாட்களுக்குப் பிறகு ராஜகோபாலை அங்கே சந்தித்தேன். அவரின் ஏற்பாட்டில் தான் இந்த அரங்கேற்றத்திற்கு நான் வந்தேன்.
அதிக ஆடம்பரம் இல்லாத அரங்கேற்றம். தமிழை முன்னெ டுத்தது எனக்குப் பிடித்திருந்தது. அரங்கேற்றம் தொடங்கும் முன்பே இலங்கை இனப் பிரச்சினையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந் தது எனக்குப் புதிய அனுபவம்.
அது வேறு நாடுகளில் குடியேறிய ஈழத் தமிழர்களின் பரத நாட் டிய அரங்கேற்றத்தில் பார்க்க முடியாதது.
ра 108

லண்டன் முதல் கனடா வரை.
மேலும் அன்றைய பரதநாட்டியப் பாடல்கள் யாவும் தமிழி லேயே இருந்தன. தமிழை முன்னெடுக்கிற இசை நாடகங்கள் எல் லாம் தமிழரின் அடையாளத்தையும் முன்னெடுக்கின்றன என்பதை மறந்த பலர் பிறமொழியில் பாடி வருகிறார்கள். பிறமொழிகள் நமக் குத் தேவைதான். ஆனால் தாய் மொழியைத் தடுக்கிற ‘நந்தி”களாக இருக்கிற பிறமொழிகள் தேவையல்லைவே!
அன்றைய பரத நாட்டியப் பாடல்கள் தமிழிசையாய் முழங் கின. அதற்குக் காரணமே ஐரோப்பாவில் புகழ் பெற்ற பாடகர் எஸ். கண்ணனின் குரலே, அவர் பொன். சுந்தரலிங்கத்தின் மாணவர் அமரர் சீர்காழி கோவிந்தராஜனின் மகனான சீர்காழி சிதம்பரத்திடம் ‘புரட் சிக்கான காந்தர்வக்-குரலோன்' என்ற பட்டத்தைப் பெற்றவர்.
இனிமையான உணர்ச்சிவயமான பாடகர். அவரோடு இணைந்து இசை, விற்பன்னர்கள், மிருதங்கம் எஸ். பிராணவநாதன், வயலின் பிரான்ஸ் ம. தேவராஜா, கடம் மொசின் அ. சிவரூபன் ஆகியோர் முழு நிகழ்ச்சியையும் அற்புதமாய் தொகுத்தவர் அறிவிப்புத் திலகம் எனப் பட்டம் பெற்ற எல். வலண்டைன். ஜெர்மன் கலைக்காவலர் பயணம் என்னும் கலை இதழை வெளியிடும் சிறிபதி சிவனடியார் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக வானதி வாணி நர்த்தனாலய அதிபர்
திருமதி வானதி தேசிங்கு ராஜா, வெற்றிமணி இதழ் ஆசிரியர் சிவ குமாரன், ஜெர்மனியர் சஞ்சோ ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
பிரான்சில் - 23
பரத நாட்டிய நிகழ்ச்சி முடிந்ததும் திருமதி வானதி ராஜா என் னைத் தேடி வந்து ஜெர்மனியில் அடுத்த வாரம் நடை பெறவிருக் கும் பரத நாட்டிய அரங்கேற்றத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைத்தார்.
ஆனால் அவர் சொன்ன திகதியில் பிரான்சில் இருக்க வேண் டியதால் அழைப்பை ஏற்கமுடியவில்லை. திருமதி வானதி தேசிங்கு ராஜா ஜெர்மனியில் பரதநாட்டிய நிறுவனம் வைத்திருப்பவர். தமிழின்
109 DI

Page 57
மாத்தளை சோமு
மீதும் தமிழிசை மீதும் பற்று வைத்திருப்பதோடு தமிழ் அகதி களுக்கு உதவி செய்யும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியவர். ஏனைய கலைஞர்களை மதிப்பவர்.
ஜெர்மனியில் ஒரு பரத நாட்டியக் கலைஞராக அவர் இருந்த போதும் லண்டனில் இருந்து வந்த இன்னொரு பரத நாட்டியக் கலை ஞரின் முயற்சியைப் பாராட்டியதோடு போற்றினார். இது எல்லாக் கலைஞர்களுக்கும் வராதே!
பிரான்சுக்குப் போகிற மிருதங்கக் கலைஞர் தேவராஜாவின் காரில் ஏறப் போனபோது 'வெற்றிமணி என்ற பலவர்ண இதழ்களை நீட்டினார் அதன் ஆசிரியர் மு.த.சு. சிவகுமாரன். அழகிய அமைப் பில் பல நிறங்களுடன் உயர்ந்த தாளில் மாதம் ஒருமுறை வரும் அந்த பல்சுவை இதழ் இலவசமானது. விளம்பரங்களின் அமைப் பில் சாதனை செய்கிறது 'வெற்றிமணி'
வெற்றிமணி இதழ்களை வாங்கிக்கொண்டு காரில் உட்கார காரை ஓட்டத் தொடங்கினார் தேவராஜா. கார் இப்போது நெடுஞ்சாலையில் ஓடியது. என்னோடு பேசிக் கொண்டே காரை ஓட்டினார் தேவராஜா. காரின் வேகம் சடுதியாக அதிகரித்தது. வேகமுள்ளைக் கவனித்தேன். அது 180க்கு மேலே போயிற்று. மனதிற்குள் நடுக்கம். இரவே பிரான்ஸ் போக வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு. மெதுவாய் ஒட்டுங்கள் என்று சொல்லமுடியாத நிலை. என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்தேன். எப்போது காரை விட்டு இறங்குவோம் என்றிருந்தது. மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.
“சிட்னி நெடுஞ்சாலைகளில் 100-10 தான் வேகத்தின் எல்லை. அதற்கு மேலே போய்ப் பிடிபட்டால் அபராதம். அத்தோடு புள்ளி இழப்பு வேறு”
நான் என்ன சொல்ல வருகின்றேன் என்று மிருதங்கக் கலைஞ ருக்குப் புரிந்துவிட்டது போலும். வேகத்தை 150க்குக் குறைத்தார். பிறகு சொன்னார்.
“எனக்குப் பழகிவிட்டது. ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி இப் படி ஜேர்மனி, சுவிஸ் எனத் தொலைதூரம் போவது எனது வாடிக்கை. சுவிஸில் சனிக்கிழமைகளில் மிருதங்க வகுப்புகள் இருக்கின்றன. ஞாயிறு பிரான்சில் நிகழ்ச்சிகள் இருக்கும். எனவே வீதிகளில்
வேகமாக ஓட வேண்டியிருக்கிறது.”
D 10

லண்டன் முதல் கனடா வரை.
ஐரோப்பிய நாடுகளில் தூரம் ஒரு பிரச்சினை இல்லை. நேரம் தான் பிரச்சினை. பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கிற சுவி சுக்கு பிரான்சிலிருந்து போய் மிருதங்கம் சொல்லிக் கொடுப்பதால், நிதி வந்தாலும் அந்த நிதிக்கு மேல் கலையில் உள்ள ஆர்வம் தான் இப்படி ஒட வைக்கிறது.
அந்தக் கார் பெல்ஜியம் நாட்டு எல்லைக்குள் நுழைந்தது. அது வரை கார் ஓடிய சாலையில் இருந்த இருள் மறைந்தது. சாலையின் இரு பக்கங்களிலும் பெரிய தூண்கள் எழுப்பப்பட்டு அதில் மின் விளக்குகளைப் பொருத்தி, வழி நெடுக வெளிச்சத்தைக் கொட்டி வைத்திருக்கிறார்கள்.
இரவில் அதனைப் பார்க்க அழகாக இருந்தது. பிரான்ஸ் எல்லை வரை இந்த விளக்குகள் இருக்கின்றன. இத்தனைக்கும் பெல்ஜியம் சிறிய நாடு.
“என்னைப் போன்ற காரோட்டிகளுக்கு இந்த விளக்குகள் பெரி தும் உதவுகின்றன.” என்று சொல்லிக் கொண்டே காரை ஓட்டினார். காரின் வேகம் அதிகரித்தது.
அவர் வேகத்தைத் தடுக்க முடியாமல் பேச்சுக் கொடுத்தேன். “பேச்சுத் துணையில்லாத நாட்களில் என்ன செய்வீர்கள்?”
“கர்நாடக இசைப் பாடல்களை, வயலின், நாதஸ்வரம் என்ப
o 99 வற்றைக் கேட்டுக் கொண்டே போவேன்.
“இவ்வளவு வேகமாக போனால் பொலிஸ் பிடிக்காதா?”
“நெடுஞ்சாலையில் வேகத்திற்கு அளவு உண்டு. ஆனால் எவ ரும் அதன்படி போவதில்லை. ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு போவதில் அற்ப சுகம் பலருக்கு. அதோ அந்தக் காரைப் பாருங் கள்.”
வெளியே பார்த்தேன். பக்கத்து வரிசையில் ஒரு கார் படுவேக மாக முந்திக் கொண்டு ஓடுகிறது. அதன் வேகம் 200க்கும் மேலே இருக்கலாம். அதனை ஒரு வெள்ளைக்காரப்பெண் வெகுலாவக மாக ஒட்டிக்கொண்டு போனாள். ஐரோப்பிய நாடுகளில் நெடுஞ் சாலையில் வேகமாக கார் ஒட்டுவது சர்வ சாதாரணமானது. அந்த வேகம்தான் பிரிட்டிஷ் இளவரசியின் உயிரையே விபத்தில் பறித்தது.

Page 58
மாத்தளை சோமு
டயானாவின் கார் விபத்துக்குள்ளான இடம் ஒரு சுரங்கப் பாதை. விபத்து நடந்த இடம் என்று நம்பமுடியாத பாதை அந்த விபத்தில் சதிமுயற்சிகள் இருப்பதாக பிரான்சில் சொன்னார்கள். நான் அந்த இடத்திற்குப் போனபோது, இதுவா விபத்து நடந்த இடம்? என்ற கேள்வியைத்தான் எதிர் நோக்கினேன். விபத்து நடந்த பாதைக்கு மேலே விபத்து நடந்த ஒரு நினைவுச் சின்னம் வைத்திருக்கிறார்கள். பிரான்ஸ் வருகிற பயணிகள் அங்கு வரத் தவறுவதே இல்லை
இரண்டு இடங்களில் கார் நிறுத்தப்பட்டுத் தேநீர் குடித்து பய ணத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் போய்ச் சேர்ந்து போது அதிகாலை யாகிவிட்டது. இரு நாட்களுக்குப் பிறகு பாரிஸில் நடந்த சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு லண்டன் போக கோவை நந்தனின் உதவியோடு ஏற்பாடுகளைச் செய்தேன்.
லண்டனில் சில தினங்கள், பிறகு கனடா பயணம். கனடா பய ணத்திற்கான பயணச்சீட்டைத் தவிர வேறு எதுவுமே ஏற்பாடு செய்ய வில்லை. அதனையறிந்த கோவை நந்தன் கனடா டொரொன்டோ வில் இருக்கும் ஒரு மனித நேயம் மிக்க மனிதரைத் தொலை பேசி யிலேயே அறிமுகம் செய்து வைத்தார்.
அந்த மனிதரும் “அதற்கென்ன நீங்கள் வாருங்கள். நான் ஏர் போட்டே வருகின்றேன்” என்றார். அவர் சாவகச்சேரியைச் சேர்ந்த
துரைராஜா.
லண்டனுக்குப் போக இருந்த திகதிக்கு முதல் நாள் இரவு வெகு நேரம் கோவை நந்தனோடு பலவற்றைப் பேசினேன். அச்சமயத்தில் இடையில் அந்த வீட்டுக்கு வந்து போன ஒரு இளம் பெண்ணை அவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
“இவர் என் பெறா மகள். மன்னார் ராஜம் புஷ்பவனத்தின்
L) SST.
“ஓ மன்னாரிலிருந்து சிறுகதை எழுதிய ராஜம் புஸ்பவனத்தின் மகளா?” - -
அம்மாவைப் பற்றி கேட்க நினைத்தபோது கோவை நந்தனே சொன்னார்.
“அம்மா தவறிட்டாங்க.” 70களின் தொடக்கத்தில் எழுதத் தொடங்கியவர் அவர். @
2

லண்டன் முதல் கனடா வரை.
“முடிந்தால் அவர் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்துப் புத்த கமாகப் போடுங்கள்” என்று அந்த மறைந்த மன்னார் எழுத்தாளர் மகளிடமும் கோவை நந்தனிடமும் ஒரு கோரிக்கை வைத்தேன். பிறகு கோவை நந்தனோடு பிரான்ஸ் தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசத் தொடங்கினோம்.
“பிரான்ஸ் நவீன சிந்தனைகள் மலிந்த நாடு. இங்கு குடியேறிய தமிழர்களின் வாழ்க்கையில் அதனால் மாற்றங்கள் உண்டு என்கிறார் களே, குறிப்பாக விவாகரத்து, மதம் மாறுதல். இது பற்றிய உண்மை நிலை என்ன? என்ற ஒரு கேள்வியைக் கேட்டேன் நான்”
எல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை. விவாகரத்துக்கள் எங்கு இல்லை? இலங்கையில் இந்தியாவில் இல்லையா? மதம் மாறுதலும் அவ்வாறே. இவையெல்லாம் மிகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இங்கு கல்வி கற்கும் இளைய தலைமுறை யினரின் கல்வியும் எண்ணங்களும் மாறிவருகின்றன. பிரெஞ்சு மட் டுமே தெரிந்த தமிழ்ப் பிள்ளைகள் நிறைய இருக்கிறார்கள்.
தமிழை இங்கு முன்னெடுத்தாலும் அது பலன் தருமா என்பது கேள்விக்குரியது. இங்கு கூட எதிர்காலத்தில் பெண்களுக்குத்தான் பிரச்சினை என நினைக்கிறேன். இங்குள்ள இளைஞர்கள் ஊரிலில் இருந்து பெண்களைத் திருமணத்திற்கு இறக்குமதி செய்யவே விரும்புகிறார்கள்.
ஊரென்றால் சீதனத்தைப் பற்றிப் பேசலாம். இது தமிழர் குடி யிருக்கிற ஏனைய நாட்டுப் பிரச்சனையும் கூட. கனடாவில் பல மாறு தல்களை நீங்கள் பார்ப்பீர்கள்” என்று கோவை நந்தன் சொன்ன போது இரவு ஒரு மணி விடிந்தால் லண்டன் பயணம்.
விடிந்தது. ஈரோ ரயிலில் போக இருந்த எனக்கு இது புதிய அனுபவம். ஆழிக்குமரனும் நவரத்தின சாமியும் நீந்திய ஆங்கில கால்வாயைப் பார்க்கலாம் எனச் சொல்லி பஸ்ஸில் ஏற்றி விட்டார். கோவை நந்தன். அந்த பஸ் லண்டன் நோக்கி நெடுஞ்சாலையில் ஓடியது. வழிநெடுக புற்தரையில் வெள்ளை முகில் தலையிறங்கியது போல் பனிப்படலம் உறைந்து கிடந்தது. அது பார்க்க அழகாக இருந்தது. வெகுநேரம் ஓடிய அந்தப் பஸ் ஒரு துறைமுகத்தின் உள்ளே புகுந்து ஒரு இடத்தில் நின்றது. பிரெஞ்சுக் குடிவரவு அதி காரிகள் வண்டியில் ஏறினார்கள்.
3

Page 59
மாத்தளை சோமு
எல்லோருடைய கடவுச் சீட்டையும் பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தார்கள். என்கடவுச் சீட்டை மாத்திரம் திரும்பத் திரும்பப் பார்த்துவிட்டு என்னை வண்டியை விட்டே இறங்கச் சொன்னார்கள். அதாவது சைகை செய்தார்கள். நான் “ஏன்” என்று ஆங்கிலத்தில் .கேட்டேன். அந்த அதிகாரிகளின் முகம் உடனே கோணலாகியது. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கோ பிரெஞ்சு தெரியாது.
நான் வேறு வழியின்றி வண்டியை விட்டு இறங்கியபோது வண்டி யின் டிரைவர் பிரெஞ்சில் அந்த அதிகாரிகளிடம் கேட்டான்.
அவர்கள் சொன்ன பதிலைக் கேட்டு என்னைக் கோபத்துடன் பார்த்துவிட்டு வண்டியை விட்டு இறங்கியவன் என் சூட்கேசுகளை எடுத்து வெளியே வீசினான். நான் திகைத்துப் போய் நின்றேன். சிறிது நேரத்தில் என்னை விட்டு விட்டு அந்த வண்டி புறப்பட்டது.
லண்டனில் - 24
அந்தத் துறைமுகத்தில் இருந்த இமிகிரேசன்' அலுவலகத்
திற்கு என்னைக் காரில் அழைத்துச் சென்ற அதிகாரிகள் அலுவலக
வாசலில் என்னை நிற்கச் சொல்லிட்டு, என் பாஸ்போர்ட்டோடு உள்ளே போனார்கள்.
நான் வாசலில் தன்னந்தனியே நின்றேன். மனதில் பல்வேறு எண்ணங்கள். இனி எப்படி லண்டன் போவது? எனது கடவுச் சீட்டில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால் எனது நிறத்தில் தான் எனது முகவரியே இருக்கிறதே. அவர்களுக்கு என் மீது சந்தேகம். கடவுச்சீட்டில் தலை மாற்றிப் பிரிட்டனுக்குள் நுழைகின்றேன் என நினைத்து விட்டார்கள் போலும்.
இத்தனைக்கும் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன் என பல நாடுகளுக்குள் ப்ோய் வந்ததற்கான விசா முத் திரைகள் அதில் இருந்தன என்ற போதும் ஒரு சந்தேகம். என்னை சிந்திக்க வைத்த ஒரு சம்பவம்.
எமது வேர்களையும் விழுமியங்களையும் துறந்து உயிர் பாது காப்புக் கருதி வேறு நாட்டில் தஞ்சமடைந்து வாழ்ந்தாலும் சர்வதீேச
O 4

லண்டன் முதல் கனடா வரை.
பயணத்தின் போது எமது புதிய முகவரி மீதான சந்தேகம் அவ்வப் போது நம்மை முட்டுகின்றது.
நாமிருக்கும் நாடே நமது என்ற போதிலும் நம்மை நோக்கி வீசப்படுகின்ற கேள்விகள் சந்தேகத்திலே மிதக்கின்றன. புதிய தேசங் களில் வாழ்கின்ற புலம் பெயர் தமிழர்களுக்கு முகவரி இல்லை என் பதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
எனக்குள்ளே அடக்க முடியாத கோபம் வந்தபோதும் யாவற் றையும் அடக்கிக்கொண்டு நின்றேன். பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு எனது கடவுச்சீட்டு என்னிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது ஒரு மன்னிப்போ விளக்கமோ பிரெஞ்சு அதிகாரியிடமிருந்து வர வில்லை. கை சாடையால் போ' என்பது போலச் சொன்னான்.
நான் காரைக் காட்டி "ஏற்றிப்போ’ என்றேன். என்ன நினைத் தானோ என்னையும் பொருட்களையும் காரில் ஏற்றி, Ferry என்ற கப்பலுக்குள் நுழைய இருந்த வண்டி ஒன்றை வழிமறித்து என்னை ஏற்றி விட்டான் அந்த அதிகாரி.
என்னைக் கண்டதும் எதுவும் பேசாத பஸ் டிரைவர் சூட்கேசு களை அவனாகவே தூக்கி வைத்தான். பிறகு என்னைப் பார்த்தான் நான் மெளனமாக இருந்தேன். பிரெஞ்சு அதிகாரியை நான் குறை சொல்லவில்லை.
பாரிசிலிருந்து இந்தக் கப்பல் பாதை மூலம் ஈரோஸ்டார் ரெயின் மூலம் பிரிட்டனுக்குள் அகதிகள் மற்றும் கள்ளக் குடியேற்றவாசிகள் சுலபமாக நுழைந்து விடுகிறார்கள். எனவே இருநாட்டு அதிகாரி களும் விழிப்போடு இருக்கிறார்கள்.
இந்த வழிகளின் மூலம் பிரான்சுக்குள் போகிறவர்கள் மிகக் குறைவு. ஆனால் லண்டனுக்குள் போக பிரான்ஸ் ஒரு தளமாகிறது.
வண்டி அந்த மிதவைப் படகிற்குள் (Ferry) நுழைந்தது அங்கே கார்கள் பஸ்கள் லொறிகள் எல்லாம் இருந்தன. பஸ்ஸை விட்டு இறங்கிய போது எனக்கு ஒரு சினிமாப் பாடல் தான் நினைவுக்கு வந்தது.
வண்டியும் ஒரு நாள் ஒடத்தில் ஏறும்
ஒட மும் ஒரு நாள் வண்டியில் ஏறும்.

Page 60
மாத்தளை சோமு
லண்டன் போகிற வாகனங்கள் கீழ்த்தளத்தில் இருக்க மேலே இரு மாடிகள் கொண்ட அது ஒரு சொகுசு மிதவைப் படகு அல்லது மிதவைக் கப்பல் என்று சொல்லலாம்.
மேல் மாடிகள் பயணிகள் இருப்பிடம். இரு மாடியிலும் உணவு விடுதிகள் இருக்கின்றன. வரியற்றக் கடையும் உண்டு. மேற்தளத்தில் இருந்து ஆங்கிலக் கால்வாயைப் பார்க்கலாம். அக்கால்வாய் வழி யாக 350 கப்பல்கள் போவதாகக் குறிப்பொன்றுத் தெரிவிக்கிறது.
தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் இக்கால்வாய் வழியாக எதிரும் புதிருமாய்ப் போய்க் கொண்டிருக்கிறார்கள், ஈரோ ரயில் ஒடு வதற்கு முன் இப்பாதையில் பயணிகள் தொகை அதிகமாய் இருந்தது. அந்த மிதவைக்கப்பல் பிரிட்டனின் நிலப்பரப்பைத் தொட்டது. ப்ஸ் மறுபடியும் லண்டனை நோக்கி நெடுஞ்சாலையில் ஒடியது. லண் டனில் பொதுவுடைமை சித்தாந்தம் தந்த கார்ல் மார்க்ஸின் கல்லறைக் குப் போவது மட்டுமே உறுதி செய்யப்பட்டதாக இருந்தது.
அதற்கான ஏற்பாடுகளை ஈழகேசரி ராஜகோபால் செய்திருந்தார். இரு தினங்களே இம்முறை லண்டனில் தங்குவதால் வேறு ஏற்பாடு களைத் தவிர்த்தேன்.
ஈழகேசரி ராஜகோபால் வீட்டைப் போய்ச் சேர்ந்தபோது மாலை யாகிவிட்டது. தேநீர் குடித்துக் கொண்டே பிரான்ஸ் அனுபவங்களை அவரோடு பரிமாறினேன். காலையில் சிவானந்தசோதியோடு கார்ல் மார்க்ஸ் கல்லறை போக ஏற்பாடு செய்யப்பட்டதாக ராஜகோபால் சொன்னார்.
சோதி என்று அழைக்கப்படும் சிவானந்த சோதி, கற்பகம் என்ற பெயரில் வர்த்தக நிலையம் நடத்தியவர். தமிழ் நூல்களை பெருமளவில் லண்டனுக்குள் கொண்டு வந்தவர். தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர் கள், கவிஞர்கள் எங்கிருந்து வந்தாலும் உபசரிக்கப் பின்வாங்க மாட்டார். 83 கலவரத்திற்குப் பின்னர் சென்னையில் பத்தாண்டுகளாக வாழ்ந்து வந்தவர்.
காலையில் ஒரு காரில் நானும் சோதியும் கல்லறையைப் பார்க் கப் புறப்பட்டோம். காரை ஓட்டியவர் கங்காதரன். அவர் 36 தமிழ்ப் பாடசாலைகளின் விளையாட்டுச் சங்கச் செயலாளர், நவீன சிந்தனை யாளர். புலம் பெயர்ந்தும் தமிழர்கள் பட்டம், பதவிக்கும் அலை
6

லண்டன் முதல் கனடா வரை. 0
கிறார்கள். சாதீய மேன்மையைக் காட்டுகிறார்கள். பக்கத்திலே வாழ் கிற வெள்ளைக்காரனைப் பார்த்துப் படிக்க வேண்டியதை நம்மவர் கள் படிக்கவில்லை என்று வருத்தப்பட்டார்.
ஆர்ஜ்வே (Archway) ரயில் ஸ்டேஷனிலிருந்து சிறிது தூரம் நடந்தால் ஹைகேட் கல்லறை (Highgate Centery) வருகிறது. நா கள் காரில் போனதால் நேரே கல்லறைக்கே போனோம். கல்லறைக குப் போகிற கேட்டிலேயே நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறார்கள். எனக் குப் பெரிய ஆச்சரியம். ஒரு கல்லறையைப்பார்க்க கட்டணமா? பிறகு தான் அது ஏன் என்றுத் தெரிந்தது.
அந்தக் கல்லறையைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத் திருக்கவே அந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பல பெரிய அறி ஞர்களும் செல்வந்தர்களும் புகழ் பெற்றவர்களும் அடக்கமாகி யுள்ள அந்தக் கல்லறையை ஒரு தனியார் நிறுவனமே பராமரித்து வருகின்றது.
நுழைவுச்சீட்டை வாங்கியதும் கார்ல் மார்க்ஸ் கல்லறையைப் பற்றி விசாரித்தோம். அதற்கு அங்கே பணியாற்றிய பெண் பவ்விய மாகப் பதில் தந்து விட்டு என்னைப் பார்த்துக் கேட்டார்.
“படம் பிடிக்கப் போகிறாயா?”
என்னிடம் கெமரா இருந்தது. “ஆம்” என்றேன். “மார்க்ஸ் கல்லறையைப் படம் பிடிப்பதா னால் டிக்கெட் வாங்கவேண்டும்”
ஆச்சரியப்பட்ட நான், கட்டணம் எவ்வளவு என்று கேட்டேன். அவள் சொன்ன தொகை அனுமதிக் கட்டணத்தை விட அதிகம்.
அங்கே நூற்றுக்கணக்கான கல்லறைகள் இருந்த போதும் கார்ல் மார்க்ஸின் கல்லறையைப் படம் பிடிக்க மட்டுந்தான் கட்டணம்.
சமரசம் உலாவும் இடமான அங்கு, சமரசம் மனித வாழ்விலும் வேண்டும் என்று சொன்ன அந்த மாமேதையின் கல்லறையைப் படம் பிடிக்கக் கட்டணம் என்பது என்னவோ போலிருந்தது. என்றா லும் கட்டணத்தைச் செலுத்தினேன்.
பிறகு நாங்கள் மூவரும் கார்ல் மார்க்ஸின் கல்லறைக்குப் போனோம். ஏற்கனவே சோதி அங்கு வந்திருப்பதால் சுலபமாகிவிட்டது. நந்தன்
7

Page 61
மாத்தளை சோமு
ஆசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களை அங்கு அழைத்து வந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
மிகப் பெரிய கல்லறை. அந்தக் கல்லறையின் மேல் கார்ல் மாக் சின் கழுத்தோடு கூடிய உருவம் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது. 5 (i)a)6OpuSci) Workers of all Lands Unite GT6TD GT(p55).55git பொறிக்கப்பட்டிருந்தன. ஏனைய கல்லறைகளுக்கு உள்ளூர்க்காரர் களே வருகின்றபோது கார்ல்மார்ஸ் கல்லறையைத் தேடி வெளிநாட் டுப் பயணிகளும் வருகிறார்கள்.
சீனா, கொரியா, இந்தியா, பிரான்ஸ் என அந்த நாடுகளின் பட் டியல் நீளும். இந்தக் கல்லறையையும் குறிப்பாகக் கார்ல் மார்க்ஸின் சிலையையும் இதுவரை மூன்று தடவை சமூக விஷமிகள் தாக்கிச் சேதப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் மனந்தளராத கார்ல் மார்க்ஸ் அபிமானிகள் மூன்று தடவையும் கல்லறையைத் திருத்தி விட்டார் கள். கடைசியாக மேற்கொண்ட திருத்தவேலை மிக வலுவானதாம். சமாதியில் இருந்த கார்ல்மார்க்ஸின் சிலையைப் பார்த்தபோது அவரை உயிரோடு பார்ப்பதுபோல இருந்தது எனக்கு அற்புதமான சிலை.
குட்டையான உருவம். நிலக்கரியின் நிறத்தில் தாடி, பெரிய தலை தர்க்கமான கண்கள். மனிதனுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டு கொதித்த உள்ளம். மனிதகுலத்தின் சிந்தனை வரலாற்றிலேயே ஆழமாகச் சிந்தித்த சிந்தனையாளர். தயக்க மயக்கங்களுக்கு இடம் கொடுக்காத புரட்சியாளர். உறுதியான போராட்ட வீரர் இவற்றுக் கெல்லாம் ஒரே பெயர் கார்ல்மார்க்ஸ்.
அவர் உருவாக்கிய வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்ற தத்துவம் உலகத்தின் விஞ்ஞானச் சிந்தனையில் புரட்சியை ஏற்படுத் தியது. அவரின் சிந்தனை வெகு சாதாரணமானது. உழைப்பைக் கொடுப்பவனுக்கு உரிய பங்கு கொடுக்கவேண்டும் என்பதே அவ ரின் அடிப்படை
ஆனால் அதனைக் கூட முதலாளித்துவ சக்திகள் ஏற்றுக் கொள்ள வில்லை. கார்ல்மார்க்ஸ் தொடக்கிவைத்த அந்தப் போரட்டம் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
எந்த ஒரு தத்துவமும் அரசியலானால் அது வீழ்ச்சியைத்தான் தொடும். இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
8

லண்டன் முதல் கனடா வரை.
காந்தியின் தத்துவம் அரசியலானதால் தான் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியைக் கண்டது. இதனால் தான் சுதந்திரம் கிடைத்ததும் காங் கிரஸ் கட்சியைக் கலைத்து விடும்படி சொன்னாராம் காந்தி.
பொதுவுடைமைத் தத்துவம் பின்னடைவு கண்டதற்கு முக்கிய காரணமே அது அரசியலானதுதான். அரசியலை மீறி மக்கள் சக்தி யாக மாறும் போதுதான் அதன் பலனே கிடைக்கும்.
இன்று தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலை, தொழிற் சங்க உரிமை, வேலைப் பாதுகாப்பு என்பனவெல்லாம் கூட கார்ல் மார்க்ஸின் தத்துவத்தின் வெளிப்பாடுதான்.
அவர் எழுதிய மூலதனம் என்ற நூல் எப்போதோ தமிழில் வந் திருக்க வேண்டும் இப்போதுதான் அது மொழி பெயர்க்கப்பட்டு தமி ழகத்தில் வெளிவந்திருக்கிறது.
அதில் கூட ஒரு நெருடல் அதனை மொழி பெயர்த்த தியாகு என்ற எழுத்தாளரைப் பொதுவுடைமைத் தத்துவத்தை முன்னெடுப்ப தாகச் சொல்கிற தமிழக அரசியல் கட்சி புறக்கணித்ததாம். அதற்குக் கூட நான் முன்பே சொன்ன அரசியல் தான் காரணம்.
லண்டனில் - 25
தமிழர்களுக்காக தமிழர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட குரோய் Last (Croydon) சனசமூக நிலையத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு என்னை ஈழகேசரி ராஜகோபால் அழைத்துச் சென்றிருந்தார். அந்தச் சனசமூக நிலையம் தொடங்கி ஓராண்டுகள் ஆகிறது. அது கூட வாட கைக் கட்டிடத்தில் இயங்குகிறது என்பது ஆச்சரியமானதல்ல. வெள்ளி விழாக் கண்ட அமைப்புகள் கூட வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்கு கின்றன.
உலகின் பல்வேறு நாடுகளில் குடியேறிய தமிழர்கள் தங்கள் பண்பாடு, மொழி, கலை என்பனவற்றை ஆராதிக்கவும் போற்றவும் ஒரு தனியான பொதுவான மண்டபத்தை தொலைநோக்கு பார்வை யில் நிர்மாணிக்கத் தவறியமை கவலைக்குரியதாகும்
ם 119

Page 62
மாத்தளை சோமு
இதிலும் பல நாடுகளில் தமிழர்களின் குடியேற்றம் 83ஆம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்திருக்கிறது. கடைசியாக வெளி யான தமிழ் ஓலைகள் 99 (Tamil Pages) இன் குறிப்புப்படி பத்துக் கும் மேற்பட்ட ஆலயங்கள் பல கோடி ரூபா செலவில் உருவாக்கப் பட்டுள்ளன.
மூடப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை கோயிலாக மாற்றத்தான் முனைந்தார்களே தவிர அதனை தமிழ்ப் பண்பாட்டு நிலையமாக மாற்ற நினைக்கவே இல்லை.
தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் கோயில் கட்டுவதில் கூட “சமூக அரசியல்” நிரம்பவே இருக்கிறது. சிலருக்குக் கோயில் வர்த் தக நிலையமாகவும் இருக்கிறது. லண்டனில் அடுக்கு மாடிக் கட்டி டத்தின் உள்ளே கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் சமயத் தையும் கடவுளையும் வழிபடவும் அதற்கான தலங்களைக் கட்டவும் உரிமை இருந்தபோதும் தமிழர்களுக்கே உரிய ‘கோயில் அரசியல்’ தலைவிரித்தாடுகிறது. * குடிபுகுந்த நாட்டில் முதலில் ஒன்று சேர்ந்து ஒரு கோயிலைக் கட்டுகின்றார்கள். அதில் தலைமைப் பிரச்சினை அல்லது வேறு பிரச் சினை வந்ததும் வேறு கோயிலைக் கட்டத் தொடங்குகின்றார்கள்.
பிறகு அந்தக் கோயிலிலும் பிளவு வரவே வேறு ஒரு கோயில் வருகிறது. இப்போது கோயில் மூன்றாகி விடுகிறது. இதுதான் தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கிற கோயில் அரசியல்'
இந்தக் கோயில் அரசியல் இலங்கையில் இருந்து புறப்பட்ட தொற்று வியாதி. இதைப் பற்றி நான்காவது உலகம் என்ற குறுநாவல் தொகுதியில் உள்ள 'ஒரு தோட்டத்து நாதஸ்வரம்' என்ற குறுநாவ ခါဓါ) சொல்லியிருக்கின்றேன். s. அந்தக் குறுநாவலைப் படித்த லண்டனில் இருக்கும் பிரபல அறிவிப்பாளர் - சட்டத்தரணி விமல் சொக்கநாதன் பாரிஸ் ஈழநாடு இதழில் இது விமலின் பக்கம் என்ற பகுதியில் எழுதியிருப்பதை இங்கே தருகின்றேன். கோயில் சிலைகள் உயிராகி வராது என்ற துணிச்சலில் கோயில்“ -ر நிர்வாக சபைக்குப் போட்டி வெடிக்கிறது. அந்தப் போட்டி அரசியல்
o 120 |

லண்டன் முதல் கனடா வரை.
போராட்டம் போன்றது. தேவாரம் தெரியாதவர்கள், புராணம் படிக் காதவர்கள், நம்மிடம் பணம் இருக்கிறது என்ற ஒரே தகுதியினால் கோயில் நிர்வாக சபைக்குள் புகுந்து விடுகிறார்கள்
இது மாத்தளை சோமுவின் கதையில் வந்த ஒரு குமுறல். ஆனால் இங்கு ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் பலர் வர்த்தக நோக்குடன் ஒரு பல சரக்குக் கடை திறப்பது போல் ஒரு சைவக் கோயிலைத் திறந்து பிசினஸ் நடத்துவது மாத்தளை சோமுவுக்கு இதுவரை தெரிந்திருக்க முடியாது. இனிமேல் தெரியவரும்”
விமல் சொக்கநாதனைத் திரும்பவும் குறோய்டன் சன சமூக நிலையத்தில் சந்தித்தேன். சிறிய ஒன்று கூடல். அப்பகுதியின் உதவி மேயர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். என்னையும் பேச அழைத்தார்கள். இறுதியில் விரும்பியவர் பாடும் நிகழ்ச்சி நடந்தது. இந்தச் சனசமூக நிலையத்தை நடத்த யோகராஜா (மாதகலான்) பூரீனி வாசன், கனகசுந்தரம் ராஜேசுவரன் ஆகியோர் முன் நிற்கின்றார்கள்.
அவர்களிடம் சொந்தக் கட்டிடம் வாங்குங்கள். அல்லது கட்டுங் கள். அதுதான் முக்கியமான பணி என்பதை ஞாபகமூட்டினேன்.
விடிந்தால் கனடாவுக்குப் பயணம். இரவு வெகுநேரம் வரை ஈழகேசரி ராஜகோபால் அவர்களோடும் அவரின் மனைவி பிள்ளை களோடும் உரையாடினேன். அவர்களின் அன்புக்கு நன்றி சொன்ன போது, ராஜகோபால் சொன்னார், “நீங்கள் இங்கு வருவதற்கு முன் னர் உங்களை எழுத்தாளராகத்தான் நினைத்தோம். என்னைப் பொறுத்த வரையில் எழுத்தாளர் என்பதில் பல கசப்பான அனுபவங்கள் உண்டு. ஆனால் நீங்கள் மனிதனாக இருந்தீர்கள். அது எங்களைக் கவர்ந்து விட்டது. நீங்கள் எங்கள் குடும்ப நண்பர் இப்போது”
“எழுத்தளான் என்ற வார்த்தையை விட மனிதன் என்ற வார்த் தையைத்தான் நான் விரும்புகிறேன். மனிதனாக இருக்க முடியாத வன் எழுத்தாளனாக இருப்பதில் அர்த்தமே இல்லை. வெறும் உப தேசம், எழுத்துக்கள் வெற்றி தருவதில்லை. ஏனவே மனிதனாக இருக்கவே விரும்புகின்றேன்.” என்று சொன்ன நான் அதிகாலையே விமான நிலையம் போக வேண்டியதால் ராஜகோபாலைத் தவிர ஏனையவர்களிடம் விடைபெற்றுக் கொண்டேன்.

Page 63
D மாத்தளை சோமு
ஆனால் அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் தேநீரைக் கலக்கி எனக்குக் குடிக்கக் கொடுத்தது. லண்டனிலும் தமிழர்களிடையே விருந்தோம்பல் பண்பு, நமது இனத்துவ அடையாளமாய்த் திகழ்வது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.
விமான நிலையத்தில் என்னை வழியனுப்ப ஈழகேசரி ராஜ கோபாலோடு கற்பகம் சோதியும் வந்திருந்தார். அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு உள்ளே போனபோது பாதுகாப்பு அதிகாரிகளின் கேள்விகள் எனக்குக் கோபத்தைக் கொடுத்தன. நானும் காரசாரமான பதில்களையே கொடுத்தேன்.
“நான் இலங்கை, இந்தியா, மலேசியா, பிரான்ஸ், ஜேர்மனி, லண்டன் என எனது பயணத்தை முடித்துக் கொண்டு கனடா போகி றேன். கனடாவிலிருந்து சிட்னி போவதே என் திட்டம். நான் ஒரு எழுத்தாளன். உனக்குச் சந்தேகம் என்றால் என் சூட்கேசுகளைப் பிரித்துப் பார்க்கலாம்.”
அதற்குப் பதில் சொல்லாத அதிகாரி “எத்தனை மணிக்குப் புறப் பட்டாய்? இடையில் வண்டியை நிறுத்தினாயா? இடையில் எவரும் இறங்கிவிட்டார்களா? உனது சூட்கேசுகளில் நீதான் பொருட்களை அடுக்கினாயா?” என்ற கேள்விகன்)ள அடுக்கினார்.
எல்லாவற்றுக்கும் வேறு வழியின்றிப் பொறுமையாகப் பதில் களைச் சொல்லிவிட்டு நின்றேன். சில விநாடியின் பின் “போகலாம்” என்றார் அந்த அதிகாரி.
பிறகுதான் அந்த அதிகாரி அப்படிக் கேட்டதற்கு கொசவோ நெருக்கடியும் - பயணம் செய்ய இருப்பது அமெரிக்காவின் யுனை டெட் ஏர்லைன்ஸ0 மே முக்கிய காரணங்கள் என்பது தெரிந்தது. கொசவோவில் அமெரிக்கத் தலையீடு காரணமாக நேட்டோ சம்பந் தப்பட்ட நாடுகளின் விமான நிலையங்களில் கடுமையான பாது காப்பு ஏற்பாடுகள் உள்ளன.
பாதுகாப்பு அதிகாரியின் கெடுபிடியால் காலதாமதமானதால் என்னால் குறித்த நேரத்திற்குள் விமானத்தைச் சென்றடைய முடியா ததால் என் பெயரை ஒலி பெருக்கிகள் உச்சரிக்கத் தொடங்கின. பெய ரைக் கேட்டதும் விமானம் நிற்கும் நுழைவு தளத்தை நோக்கி ஓடி
22

லண்டன் முதல் கனடா வரை.
னேன். என் ஓட்டத்தைக் கண்டதும் விமான நிலையத்திற்குள் ஒடித் திரிகிற சிறு வண்டி என்னருகே நிறுத்தப்பட்டது. அதை ஒட்டிய வெள் ளைக்காரர் “யூ ஆர் மிஸ்டர். யூ ஆர் வெயிட்டிங் போர் யுனைடெட் ஏர்லைன்ஸ்?’ என்று கேட்டார். நான் “ஆம்” என்று சொல்ல வண்டி யில் ஏறும்படி சொன்னார் அந்த வெள்ளைக்காரர்.
நான் அந்த வண்டியில் ஏற அந்த வண்டி படுவேகமாக ஓடியது. சில நிமிடங்களில் கனடா போகிற விமானம் நிற்கிற கேட்டருகே வண்டி நிற்க நான் அவசரமாக ஓடினேன். நான்தான் கடைசிப் பயணி. நான் விமானமேறியதும் விமானக் கதவு சாத்தப்பட்டது. விமானத்தின் உள்ளே போன என்னை உட்கார்ந்திருந்த பயணிகள் எல்லோரும் பார்த்தது எனக்கு என்னவோ போலிருந்தது.
வியர்வைத்துளிகள் தேகமெல்லாம் பூக்க இருக்கையில் உட் கார்ந்து ஆசுவாசப் பெருமூச்செறிந்தேன். விமானம் ஓடுபாதையில் ஒடி மேல் எழுந்து பறக்கத் தொடங்கியது. நான் கையோடு கொண்டு வந்திருந்த அன்றைய ஆங்கில நாளிதழ்கள் சிலவற்றைப் பிரித்துப் பார்க்கத் தொடங்கினேன். ஏழுக்கும் அதிகமான நாளிதழ்கள் வரு கின்றன. இவற்றை மூன்று விதமாய்ப் பார்க்கலாம். முதலாவது ஆழ மானது, இரண்டாவது மிதமானது. மூன்றாவது ஜன ரஞ்சகமானது. ஜனரஞ்சகமான பத்திரிகைகள், நடிகைகள், அரச குடும்பத்தினர்கள் பற்றிய செய்திகளையே முன்னெடுக்கின்றன.
சிறிய அளவில் இவைகள் வருவதால் பஸ்ஸில் ரயிலில், படித்து விட்டு குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போய் விடுகிறார்கள். செய்திகளைப் பரப்பரப்பாக்குவதையே தொழிலாகக் கொண்டவை 966.J. GT6T 605uSci) gobsb5606). The Independent, The Guardian ஆகிய நாளிதழ்கள் தரத்திற்கும் மதிப்பிற்கும் பேர் போனவை. பிரிட்ட னின் ஜனநாயகத்தில் எதிர்க் கட்சிகளுக்கு மேலாகப் பணியாற்று
60)o.
The Guardian இதழின் முன்பக்கச் செய்தியே பிரிட்டனின் ஜன நாயகத்திற்குக் கறுப்புப் புள்ளி வைத்த சம்பவத்தைச் சொல்லியது. பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வாழ்கிற ஒரு உபநகரில் உள்ள வீடியோ கடை மீது குண்டு வீசப்பட்டிருக்கிறது. அது பிரிட்டனில் இருக்கிற இனவெறிக் குழுவின் நடவடிக்கை.
23

Page 64
p மாத்தளை சோமு
இதுபோன்ற சம்பவங்கள் பல அங்கு நடக்கின்றன. பிரிட்டனில் குடியேறுகிற கறுப்பின மக்களுக்கெதிராகச் செயல்படுகிற வெள்ளை யர் குழுவொன்று ஆங்காங்கே இயங்கி வருகிறது.
இவர்களில் பலர் கல்வியை இடையிலேயே முறித்துக் கொண்ட வர்கள். தாய், தகப்பன் அரவணைப்பு இல்லாதவர்கள், வேலை இல்லாதோர்கள் என்ற பட்டியலில் அடங்குவார்கள் இவர்கள் மிகச் சிறுபான்மையினராக இருந்தபோதும் பிரிட்டனில் இவர்களின் குரல் சற்று உரத்து ஒலிப்பது கவலைக்குரியது.
ஆனால் இதனையிட்டு அங்கிருக்கிற குடிபெயர்ந்தவர்கள் பெரிதாகக் க்வலைப்படுவதில்லை. இதுபற்றி ஒருவர் தெரிவித்த கருத்து, அவர் இலங்கையைச் சேர்ந்தவர், “ஊரிலே சாதியின் பெய ரால் கோயிலின் கதவுகளை மூடியவர்கள் நாங்கள். கட்சி ரீதியாக மற்றவர்களைத் தாக்கியவர்கள், பொருளாதார ஏற்றத் தாழ்வில் பலரை அடக்கியவர்கள் நாங்கள். இங்கே இருக்கிற அணுவளவு நிறத் துவேஷத்தைப் பற்றிப் பேசவே தகுதியற்றவர்கள். காரணம் குடி புகுந்த நாட்டிலும் சாதி, பிரதேசம், பதவி என்பவைகளின் பேரில் துவேஷம் இன்னமும் நம்மவர் மத்தியில் இருக்கத்தானே செய்கிறது?
மனிதனை மனிதன் அடக்குவது என்பது உலகம் முழுமைக் கும் உரியது. நேரடி அடக்குதல் ஆசிய நாடுகளில் பிரசித்தம், மறை முக அடக்குதல் மேற்றிசை நாடுகளில் பிரசித்தம்.
ஆயினும் ஆசிய நாடுகளை விட சகல உரிமைகளும் தமக்கு இருப்பதாக குடியேறிய மக்கள் நினைக்கின்றார்கள். தங்களைத் தாங் களே பாதுகாக்க முன் நிற்கிறார்கள். அந்த நாட்டை நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைதான் புதியவர்களை அங்கே குடியேறத் தூண்டு கிறது. குடியேறிய மக்களை, வாழ்க்கையில் புதிய அத்தியாயங் களைத் தொடங்க வைக்கிறது.
கனடாவில் - 26
பத்திரிகைகளைப் படித்து முடித்ததும் கைவசமிருந்த ஒரு நூலை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். அது லண்டன் தமிழ் தகவல் நிலை யத்தால் தமிழ் ஈழ இலக்கியம்' என்ற தலைப்பில் தமிழிலிருந்து
D 24

லண்டன் முதல் கனடா வரை.
ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ஒரு நூல். அதில் அ.செ முருகானந்தன், வ. அ. இராசரத்தினம், மு. தளையசிங்கம். எஸ்.பொ. சண்முகம் சிவலிங்கம் ஆகியோரின் சிறுகதைகள் தமிழிலிருந்து ஆங் கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. கனதியான முயற்சி. இதன் தொகுப்பாசிரியர் எம்.நேமிநாதன். புலம் பெயர்ந்த அறிவார்ந்த தமிழர்கள் செய்யவேண்டிய பணி.
நமது கலை இலக்கிய முயற்சிகளை நமக்குள்ளே ஒதுவதிலும் பார்க்க ஏனைய மொழியினரின் கதவுகளைத் தட்டவேண்டும். இத் தகைய முயற்சிகளை புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகள் செய்யலாம். லண்டனில் மாத்திரம் 50க்கு மேற்பட்ட தமிழ் அமைப் புகள் இருக்கின்றன. ஒவ்வொரு சங்கமும் ஒரு கை கொடுத்தாலே போதும் பல சாதனைகளைச் செய்யலாமே!
லண்டனிலிருந்து வெளியாகும் Tamilpages 99 என்று அழைக் கப்படும் தமிழ் ஓலைகள் என்ற புத்தகத்தைப் புரட்டினேன். தமிழர் சம்பந்தப்பட்ட லண்டன் முகவரிகள். அதில் லண்டனில் இருக்கிற கோயில், தமிழ் அமைப்புகள், சங்கங்கள், கலைஞர்கள் வர்த்தக நிறுவனங்கள் யாவற்றின் முகவரியும் இருக்கின்றன. பயன் உள்ள முயற்சி லண்டனுக்குப் போகிற தமிழ்ப் பயணிகள் அதனைப் பெற்று ஒரு தடவை பார்த்து விடுவது பயணத்திற்கு உதவும். அதன் எல்லாப் பக்கங்களையும் புரட்டிப் பார்த்தபோது இந்தப் பயணத்தின் போது தமிழை, கலைகளை, பரத நாட்டியத்தை முன்னெடுக்கிற பலரை சந்திக்க முடியாமல் போனது நிஜம்.
குறுகிய கால எனது லண்டன் பயணத்தில் பலரைச் சந்தித்தேன். சிலரைச் சந்திக்க முயன்றும் முடியவில்லை. லண்டனில் தமிழ் இலக் கியத்தோடு தொடர்புடைய, நான் மிகுந்த மதிப்பு வைத்திருந்த ஒரு வரைச் சந்திக்கப் பலதடவை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் முடியாமல் போய்விட்டது.
ஒரு தடவை லண்டன், பாரிஸ், ஜேர்மனி போனதையெல்லாம் திரும்பவும் மீட்டுப் பார்த்துவிட்டு அடுத்து இறங்கப் போகிற கனடா நாட்டைப் பற்றிச் சிந்தித்தேன்.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான கனடாவில் ஐரோப் பாவிலிருந்து குடியேறிய பிரெஞ்சு, வெள்ளை மனிதர்களால் ஏற் கனவே அங்கு வாழ்ந்த ஆதிக் குடிமக்கள் சிறுபான்மையினராக்கப்
25 D

Page 65
மாத்தளை சோமு
பட்டுள்ளார்கள். கிட்டத்தட்ட அவுஸ்திரேலிய ஆதிவாசிகளுக்கு நடந் ததே இங்கும் நடந்திருக்கிறது. அவுஸ்திரேலியாவில் கறுப்பான அபோர்ஜினியர்களே ஆதிவாசிகள், கனடாவில் சிவப்பிந்தியர்களும் எக்ஸிமோக்களுமே ஆதிவாசிகள். ஆனால் இவர்களில் எக்ஸிமோக் கள் இனூயித்கள்) சுமார் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வட துருவத்தில் அமைந்திருக்கும் அலாஸ்கா (Alaska), யூகான் (Yukon) ஆகிய பிரதேசங்களிலிருந்தும் வந்தவர்கள்.
தாங்க முடியாத குளிரோடு போராடி வாழ்க்கை நடத்திய எக்ஸி மோக்களுக்குக் கனடாவின் குளிர் மரங்களோடு கூடிய பிரதேசம் நன்கு பிடித்துக் கொண்டது. மேலும் நீண்ட தூரம் வந்துவிட்டதால் திரும்பிப் போவது கஷ்டமானது என்று அங்கேயே தங்கிவிட்டார் கள். அவர்கள் தான் கனடாவுக்குள் கால் வைத்த முதல் மனித கூட் டத்தினர். வடதுருவத்திலிருந்து வந்த அவர்களை எக்ஸிமோக்கள் அல்லது இனூயித்கள் என்றே அழைக்கிறார்கள். இவர்களுக்கு அடுத் ததாகக் குடியேறியவர்கள் சிவப்பு இந்தியர்கள். அமெரிக்காவில் மிக அதிகமாகக் காணப்பட்ட இவர்கள், கனடாவின் மேற்குக் கரை ஒரப் பகுதிகளில் குடியேறினார்கள். எக்ஸிமோக்கள் தம் இனத்தவர் ஒரு வரை ஒருவர் மிகவும் மதித்தார்கள். அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு கள் கிடையாது. தலைவன் என்று எவனும் இல்லை. சொத்துச் சேர்ட்தில்லை. ஆனால் ஏதோ ஒருவகையான மத நம்பிக்கை அவர் களுக்கு இருந்தது
செவ்விந்தியர்கள் பல பிரிவினராக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அமைதியை விரும்பும் யூரன் (Hyron), எடுத்ததற்கெல்லாம் சினம் கொண்ட இராக்விஸ் (Iroquvios) மற்றும் அல்கோக்கின் (Algoukians) ஆகிய மூன்று இனத்தவர்களே முக்கியமானவர்கள். இம்மூன்று பிரி வினரும் தனித்தனியே வாழ்ந்தார்கள். ஒருவருக்கொருவர் போரிட் டுக் கொண்டார்கள்.
1605இல் பிரான்ஸிலிருந்து வந்த பிரெஞ்சுக்காரர்களே கனடா விற்கு வந்த முதலாவது ஐரோப்பியராவர். பிறகு இரண்டாண்டுக்கு பிறகு இங்கிலாந்திலிருந்தும் வெள்ளைக்காரர்கள் வரத்தொடங்கினார் கள். 1756இல் பிரெஞ்சுகாரர்களும் ஆங்கிலேயர்களும் மண்ணுரிமை நிமித்தம் மோதிக் கொண்டார்கள். இந்த மோதல் ஏழு ஆண்டுகள் தொடர்ந்தது. இறுதியில் பிரிட்டிஷ் வெள்ளையர்கள் பிரெஞ்சுக்கார்ர்
р 126

லண்டன் முதல் கனடா வரை.
களை வெற்றி கொண்டனர். கியூபெக் பகுதியில் மாத்திரம் பிரெஞ்சு மொழிக்கும் கலாசாரத்திற்கும் உரிமம் வழங்கப்பட்டது.
1867இல் கனடா என்ற தனிநாடு உருவாக்கப்பட்டது. 9.976 139 கிலோமீட்டர் சதுரப் பரப்பளவு கொண்ட மண்ணுக்கு மத்திய மாநில அரசு முறை ஆட்சி அமுலாகியது. இதனால் கியூபெக் (QuebeC) பிரெஞ்சு மொழி பேசுபவர்களைப் பெரும்பான்மையினராக கொண்ட மாநிலமாகியது. இது தவிர மேலும் ஒன்பது மாநிலங்களும் மூன்று பிராந்திய ஆட்சி முறை கொண்ட பகுதிகளும் இருக்கின்றன. தமிழர் கள் அதிகமாக இருக்கிற மாநிலம் ஒன்ராறியோ (Ontario) ஆகும்.
கனடாவின் மொத்த மக்கள் (1996) தொகை 2,88,46761 ஆகும். இதில் ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிவப்பிந்தியப் பூர் வீகக் குடிகள் எக்ஸிமோக்கள் 35,000 பேர். இது தவிர குடியேற்ற அகதி திட்டத்தின் கீழ்க் குடியேறிய சீனர்கள், தமிழர்கள், கறுப்பர்கள் என பல்லின மக்கள் கூட்டமும் உண்டு.
கனடா இன்னமும் குடியேற்றத் திட்டத்தையும் ஐ.நா.வின் பரிந் துரையின் கீழ் அகதிகள் ஏற்புக் கொள்கையையும் கடைப்பிடிக்கிறது. அகதிகளுக்கும் பல்வேறு சலுகைகளைக் கொடுக்கின்றது. நவீன வாழ்க்கையில் சங்கமிக்க சிவப்பிந்தியர்களுக்கும் எக்ஸிமோக்களுக் கும் கல்வி கற்கப் பல்வேறு சலுகைகளை கொடுத்துள்ளது. சிவப் பிந்தியர்களின் பாரம்பரிய பூமி எனச் சில பகுதிகள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இன்று சிங்கப்பூருக்கு அடுத்ததாக சுமார் ஒன்றரை லட்சத்துக் கும் அதிகமாக ஈழத்தமிழர்கள் வாழ்வது கனடாவில்தான் டொரண்டோ (Toronto) என்ற பெரிய நகரத்தில் மாத்திரம் 75,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விமானம் டொரண்டோ விமானநிலையத்தில் இறங்கியது. ஆனால் என்னுடைய சூட்கேசுகள் எதுவும் வந்து சேரவில்லை. இன்னும் முப் பது நிமிடத்தில் இன்னொரு விமானம் வருகிறது. சிலவேளை அதில் உங்கள் பொதிகள் வரலாம் எனத் தகவல் தரப்பட்டது. அந்த விமா னமும் வந்து சேர்ந்தது. ஆனால் அதிலும் எனது சூட்கேசுகள் வர வில்லை. கையிலோ சிறிய தோள்பை. மாற்று, உடுப்புகள் கூட இல்லை என்று யோசித்தபோது “உங்கள் முகவரியை அல்லது தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் சூட்கேஸ் வந்ததும் நாளை தங்கியிருக்கும்
27

Page 66
0 மாத்தளை சோமு
இடத்திற்கே கொண்டு வருகிறோம்” என்று விமான நிலையத்தில் சொல்லப்பட்டது. நானும் வேறு வழியின்றி தொலைபேசி எண்ணை மாத்திரம் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். வெளியே வெகு நேரம் எனக்காகவே காத்திருந்த கோவை நந்தன் அறிமுகம் செய்த துரைராஜா என்னைக் கண்டதுமே பெயர் சொல்லி அழைத்தார்.
இருவருமே இப்போதுதான் பார்த்துக் கொள்கிறோம். கைகுலுக்கி கைகுவித்து வணக்கம் செய்துவிட்டு, “என்னுடைய சூட்கேசுகள் இன் னும் வரவில்லையாம் வந்ததும் கொண்டு வந்து தருவார்கள். உங்க ளின் தொலைபேசி எண்களை கொடுத்திருக்கின்றேன்” என்று சொன் னேன். அவர் கவலையோடு என்னைப் பார்த்தார். பதிலுக்கு ஒரு இரவு தானே சமாளிக்கலாம்' என்றேன் நான்.
ஒரு அடுக்கு மாடித் தொடரில் இருந்த துரைராஜாவின் வீட் டுக்குப் போய்ச் சேர்ந்த போது இரவு ஏழு மணியாகிவிட்டது. இரவு உணவிற்குப் பிறகு அவரைப் பற்றிய தகவல்கள் எனக்கு உற்சாக மளித்தது. வி.எஸ். துரைராஜா என்ற அவர் சாவகச்சேரியைச் சேர்ந் தவர். கிராம சேவையாளராகக் கடமை புரிந்த அவர் சாகவச்சேரி அற வழிப் போராட்டக் குழுவின் தலைவராகப் பணி புரிந்திருக்கிறார். சாதி ஒழிப்பு, சமபந்திப் போராட்டங்களில் முன்நின்றவர்.
இன்று டொரண்டோவில் புதிதாக வந்திருக்கிற தமிழர்களுக்கு ஒரு சேவையாளராகவே இருக்கிறார், சமூக சேவையாகப் பல உதவி களை வழங்குகிறார். அவர் வீட்டில் இருந்தால் தொலைபேசி அழைப்பு கள் அவருக்கு வந்து கொண்டே இருக்கும்.
“கனடாவில் உங்கள் திட்டம் என்ன?’ என்று கேட்டார் துரை ராஜா. கைவசம் டயரி கூட இல்லை. இருந்தபோதும் சந்திக்க வேண் டியவர்களின் பெயர்களை நினைவுபடுத்திச் சொன்னேன்.
அவர் உடனே பலருக்கு அடுத்தடுத்துத் தொலைபேசியில் பேசத் தொடங்கினார். அப்போது அவரிடம் சொன்னேன்.
“எத்தனை கோல் என்று கணக்கு வையுங்கள். பிறகு அதற்குரிய கட்டணத்தைத் தருகின்றேன்.”
அவர் அதைக் கேட்டுச் சிரித்தார். பிறகு அவர் சொன்ன பதில் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
28

லண்டன் முதல் கனடா வரை.
கனடாவில் - 27
கனடாவில் உள்ளூர்த் தொலைபேசி அழைப்புக்குக் கட்டண மில்லை என்று சொன்ன துரைராஜா அதன் பின்னணியையும் விப ரித்தார்.
“தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் கனடாவில் பல காலம் வாழ்ந்தவர் என்பதால் அவரைக் கனடா மண்ணின் மைந்தனாக முடிசூடி அதன் நினைவாக மக்களுக்கு இந்த சலுகையைக் கொடுத்திருக்கிறார்கள்.
கிரஹாம்பெல் பிரிட்டனின் ஸ்கொட்லாந்தில் பிறந்து கனடா
வில் குடியேறி அமெரிக்க மசசுசெட் மாநிலத்தில் செவிடர் பள்ளி யில் ஆசிரியராக இருந்த போதுதான் இந்தக் கண்டுபிடிப்பில் இறங் கின்ாராம். அவரின் நினைவாக கனடாவில் தொலைபேசி நிறுவனத் துக்கே பெல் கனடா என்று பெயரும் வைத்திருக்கின்றார்கள்.”
“ஏனைய நாடுகளில் உள்ளூர் தொலைபேசி அழைப்புக்கு காசு கொடுக்கும் போது நீங்கள் எல்லாம் பெல் நாமம் வாழ்க என்று சொல்லிக் கொண்டு பேசிக் கொண்டே இருக்கலாமே!” என்றேன் நான்.
“அப்படித்தான் மற்ற நாட்டவர்கள் நினைப்பார்கள். ஆனால் இந்தப் ப்றி கோலால் பெரிய பிரச்சினை. சனம் தேவையில்லாததை
ம் பேசுது.” என்றார் அங்கிருந்த துரைராஜாவின் மனைவி.
அவர் சொன்னது உண்மை மட்டுமல்ல அனுபவத்தின் வெளிப் பாடு என்பதை நானே அங்கே கண்டேன். அந்த நேரத்தில் கூட அடுத் தடுத்துத் தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன.
அந்த இரவு நேரத்தில் பலரையும் தொலைபேசி மூலம் பிடிக்க முடியவில்லை. பலருடைய தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு இருந்தன. “தமிழர் செந்தாமரை” வார இதழ் ஆசிரியர் கனக, அரச ரட்ணம் மாத்திரம் தொலைபேசி வழியாக வந்தார். அவரை எனக்கு ஏற்கனவே தெரியும். கடைசியாகப் பார்த்தது கொழும்பில்.
பலருடைய வாழ்க்கையை திசை திருப்பிய இனக்கலவரம் (85)
அவரின் வாழ்க்கையைத் திசை திருப்பியதில் வியப்பில்லிை இன்று கனடாவில் கொழும்பில் இருந்தபோது வீரகேசரி’ பத்திரிகையில்

Page 67
D மாத்தளை சோமு
பெற்ற அனுபவத்தோடு தனக்கென ஒரு முத்திரையைக் கனடா தமிழ்ப் பத்திரிகைத்துறையில் பதித்து வருகிறார்.
சுகசேம விசாரிப்புக்குப் பிறகு மறுநாள் மாலை சந்திப்பதாகச் சொன்னேன்.
“காலையில் வரலாமே” என்றார் ஆவலுடன் அரசரட்ணம். அவ ரிடம் “எனது சூட்கேஸ் இன்னும் வரவில்லை.” என்ற விபரத்தைச் சொல்லி விட்டு, “எனக்கும் உங்களைச் சந்திக்க வேண்டும். நிறைய பேச வேண்டும். மாற்று உடுப்பு இல்லாத நிலையில் இருக்கின்றேன். புதிய உடுப்புக்கூட விடிந்தால்தான் வாங்கலாம். பொறுத்ததே பொறுத் தீர்கள். விடியும் வரைக் காத்திருங்கள்” என்று சொல்லிவிட்டு தொலை பேசி ரிசீவரை வைத்தேன்.
அடுத்த நாள் மாலைதான் கனக. அரசரட்ணத்தை சந்தித்தேன். பகல் பத்து மணிக்கு மேல்தான் சூட்கேஸ்கள் வந்த சேர்ந்தன. எனக் காக விடுமுறை எடுத்திருந்த துரைராஜா கனடா தமிழர் மத்தியில் பிரபலமான இளைய பாரதியின் கனடிய தமிழ் ஒளிபரப்புக் கூட்டுத் தாபனம் கீதவாணி ஆகிய தமிழ் வானொலி நிலையங்களோடு தொடர்பு கொண்டு அங்கு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
ஒரு அடுக்கு மாடித் தொடரில் வீட்டையும் பத்திரிகை அலு வலகத்தையும் ஒன்றாக வைத்துக்கொண்டு தமிழர் செந்தாமரையை நடத்தி வருகின்றார் கனக அரசரட்ணம்.
கொழும்பில் 'வீரகேசரியில் பணியாற்றியபோது கிடைத்த அனு பவம் கனடாவில் ஒரு பத்திரிகையை நடத்துவதற்கான துணிச் சலையே கொடுத்துள்ளது. முதலில் 'செந்தாமரையில் பணிபுரிந்த அவர், பலர் கொடுத்த உற்சாகத்தில் தனியே ஒரு வார இதழைத் தொடங்கினார். இதன் பெயரே தமிழர் செந்தாமரை. இன்று கனடா வில் தமிழர்களிடையே மரியாதையும் மதிப்புமிக்க ஒரு பத்திரிகை யாளராக அவர் இருக்கிறார். அவருடைய இந்த முன்னேற்றத்திற்கு மிகுந்த உறுதுணையாக இருப்பது அவரின் மனைவி ராஜி.
எனது இந்தப் பயணத்தில் பத்திரிகைத் துறையில் பணியாற்று கிற, கணவன்மார்களுக்கு உறுதுணையாக இருக்கிற மனைவிமார் களைக் கண்டேன். லண்டனில், ஈழகேசரி, புதினம் நடத்தும் ராஜ கோபாலுக்குத் துணையாக ராகினி. பாரிசில் ஈழநாடு பத்திரிகை
D 30

லண்டன் முதல் கனடா வரை. .
நடத்தும் குகநாதனுக்குத் துணையாக ரஜினி. இப்போது கனடாவில் அரசரட்ணம் அவருக்குத் துணையாக ராஜி.
கனடாவில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்க்கை யைப் பற்றி ஓர் புலம் பெயர்ந்து வாழும் பத்திரிகையாளன் என்ற முறை யில் தமிழர் செந்தாமரை அரசரட்ணத்திடம் சில கேள்விகளைக் கேட் டேன். நான் அவ்வாறு கேட்டதற்குக் காரணம் இருந்தது. தமிழர்கள் குடிப் பெயர்ந்த வேறு எந்த நாட்டிலும் பார்க்க அதிகமான வார ஏடு கள் கனடாவில் வருகின்றன. இது எவ்வாறு சாத்தியம்?
“கனடாவில் இருக்கிற தமிழர் தொகையும் தமிழ் படிக்கிற தொகையும் அதிகமானது. மேலும் இங்கு வர்த்தகர்களின் விளம்பர ஆதரவும் உண்டு. எனவே பல தமிழ்வார ஏடுகள் இங்கேயே அச் சிடப்படுகின்றன. அதே நேரத்தில் தொடக்கக் காலத்தில் வெளிவந்த பல தமிழ் இலக்கிய ஏடுகள் நின்று போய்விட்டன.
தமிழகத்தில் வெளியாகும் எல்லா இதழ்களும் இங்கேயே கிடைக் கின்றன. அதில் கூட பொழுதுபோக்கு இதழ்கள் தான் முன்னணியில் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் இலங்கையில் வீரகேசரி யில் பணிபுரிந்த அனுபவம் இங்கே எனக்குக் கைகொடுப்பது மட்டு மல்ல, ஒரு அறிமுகத்தையும் கொடுக்கிறது. எனவே செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் இதழாக தமிழர் செந்தாமரையை நடத்துகின் றோம். மாதாமாதம் இங்குள்ள கலை இலக்கிய முன்னணியாளர்களின் பேட்டியோடு கூடிய சஞ்சிகையும் வெளியிடப்படுகின்றது.”
“தெரிந்த தொழில் மனதில் திருப்தி” என்றார் அரசரட்ணம்.
வெகுநேரம் உரையாடிவிட்டு பதிலுக்கு எனது அவுஸ்திரேலிய அனுபவங்களை அவரோடு பகிர்ந்துவிட்டு துரைராஜாவோடு ஒரு புத்தகக் கடைக்குப் போக நினைத்தேன். அதையறிந்த அரசரட்ணம் “எனக்கு இன்று விடுமுறை. பத்திரிகை நேற்று வெளிவந்துவிட்டது. நான் உங்களை ஒரு புத்தகக்கடைக்குக் கூட்டிப் போகிறேன்” என்றார்.
“அதுவும் சரிதான் எனது பெரிய மகன் பல்கலைக்கழகப் படிப்பை முடித்துவிட்டு விமானத்தில் வருகிறார். நான் விமான நிலையம் போகின்றேன்” என்று சொல்லிவிட்டுதுரைராஜா புறப்பட்டுப் போனார்.
டொரண்டோ என்ற மாநிலத்தில் ஸ்காபரோ (Scarborough) என்பது ஒரு உபநகரின் பெயர். அந்த ஸ்காபரோவில் அதிகமான
13 o

Page 68
D மாத்தளை சோமு
தமிழர்கள் இருக்கிறார்கள். அதிகமான வர்த்தக நிலையங்கள் இருக் கின்றன.
கனக அரசரட்ணம் தனது காரில் என்னை ஏற்றிக் கொண்டு போய் அங்குள்ள ஒரு புத்தகக் கடையில் இறக்கிவிட்டார். அது மிகப் பெரிய தமிழ்ப் புத்தகக்கடை 'முருகன் புக் டிப்போ' என்பது அதன் பெயர். உள்ளே போனேன். எங்கு திரும்பினாலும் புத்தகங் கள், சஞ்சிகைகள்.
சிட்னியில் இதுபோன்ற தமிழ்ப் புத்தகக்கடை இல்லாததால் அந் தப் புத்தகக்கடையைப் பார்க்கிறபோது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந் தது. தமிழர்களிடையே புத்தகக் கடை என்பது முடியாதவர்களின் வர்த்தகம்,
ஏனைய வர்த்தகத்திற்கு உள்ள மரியாதை தமிழ்ப் புத்தகக் கடைக்காரருக்கு இல்லை.
சிட்னியோ, லண்டனோ, டொரண்டோவோ ஆங்கிலப் புத்தகக் கடைக்கு ஆங்கிலேயர்கள் கொடுக்கிற மரியாதை மகத்தானது. வானொலி, தொலைக்காட்சி, இணையம் (Internet) எனப் பல ஊட கங்கள் இருந்தபோதும் ஆங்கிலேயர்கள் புத்தகம் படிப்பதை விட்டு விடவில்லை. w
இன்று வெளிவருகிற புதிய புத்தகங்கள் உலகெங்கும் குறிப் பாக விஞ்ஞான இயந்திரப் பிடிக்குள் இருக்கிற மேற்றிசை நாடுகளில் லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன. வேலைக்குப் போகிறபோது ரயிலில் புத்தகம் படிக்கிறார்கள் வெள்ளையர்கள். அவர்கள் வீட்டி லேயே நூலகம் வைத்திருக்கிறார்கள். வசதியுள்ளவர்கள் புதிதாகவே புத்தகத்தை வாங்குகிறார்கள். வசதிக் குறைந்தவர்கள் வாசித்த புத்த கங்களை (Second) வாங்குகிறார்கள். ஏனையவர்கள் நூலகத்தில் படிக்கிறார்கள். எந்நிலையிலும் புத்தகங்கள் வாசிப்பதை அவர்கள் நிறுத்தவில்லை.
மேற்றிசை நாடுகளில் புத்தகக்கடைக்கு எப்போது போனாலும் கூட்டம் இருக்கும். மாதாந்த வாங்கலில் (Shoping) புத்தகக்கடையும் இடம்பெறும். ஆனால் தமிழர்கள் மத்தியில் புத்தகம் படிக்கிறப் பழக்கம் குறைந்து வருவதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளிலும் படிப்பதைவிட பார்ப்பதே' அதிகமாக இருக்கின்றது. வீட்டுக்கு வீடு டிவியும், வீடியோவும்
D 132

லண்டன் முதல் கனடா வரை.
இருப்பதால் அங்கு ஒரு குட்டிப் படமாளிகையே இருக்கின்றது. இத னால் மாதம் ஒன்று அல்லது இரண்டு சினிமாப் படம் பார்த்தவர்கள் இப்போது தினமும் ஒரு படமோ அல்லது டெலி டிராமாவோ பார்க் கிறார்கள். படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட, இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். புத்தகங்களைத் தொடுவதற் குக் கூட யோசிக்கிறார்கள்.
அந்தப் புத்தகக்கடை முழுமையும் ஒரு தடவை சுற்றிப் பார்த் தேன். சகல துறைசார்ந்த நூல்களும் விற்பனைக்கிருந்தன. தன் முனைப்பு, சமயம், வைத்தியம், சோதிடம் சம்பந்தமான புத்தகங் கள், சஞ்சிகைகள் விற்பனையில் முன்னணி என்பது ஒரு தகவல்.
கணினி (கம்பியூட்டர்) மூலம் புத்தங்கங்கள் அச்சிடும் முறை வந்ததும் சோதிடப் புத்தகங்கள் கூட பெருகிவிட்டன. புத்தகக்கடை என்கின்ற போது அவைகள் தவிர்க்க முடியாது. ஆனால் அவை களை தவிர்க்க இலக்கிய நூல் விற்பனையாளர் ஒருவரைப் பலருக் குத் தெரியாது. அவர் சென்னையில் புத்தகக்கடை வைத்திருக்கும் திலீப்குமார்.
அவர் பிறப்பால் குஜராத் மாநிலத்தவர். வாழ்வால் தமிழ்நாட்ட வர். அவரின் வாழ்க்கைத் துணைவி, ஈழத்தவர். ஆழமான நவீன தரமான இலக்கிய நூல்கள்ை மாத்திரமே அவர் விற்கிறார். ஒரு தடவை கனடாவில் இருந்து 500 சோதிட நூல்கள் கொள்வனவு சம் பந்தமாக அவரோடு தொடர்பு கொண்டபோது சோதிட நூல் விற்பது என் வர்த்தகமல்ல என்று மறுத்தாராம்.
சென்னை மயிலாப்பூரில் சிறிய புத்தகக்கடை வைத்திருக்கும் திலீப்குமார், புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கிய முயற்சிகளின்
பாலமாக விளங்கி வருகின்றார்.
அந்தப் புத்தகக் கடைக்காரரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்ததும், ஒரு எழுத்தாளன் என்ற அடிப்படையில் என்னோடு மிக நெருக்கமாக பேசத் தொடங்கினார். அவருடைய பேச்சின் சாரம்சம் பிரான்ஸ் நாட்டுத்தலைநகர் பாரிசில் தமிழாலயம் என்ற பெயரில் புத் தகக்கடையின் நிர்வாகியின் பேச்சை ஒத்தே இருந்தது.
“ஜனரஞ்சக இதழ்களே அதிக விற்பனையில் இருக்கின்றன. இலக்கிய சஞ்சிகைகள் குறைந்த பிரதிகளே விற்கின்றன. தரமான நாவல், சிறுகதை நூல்களின் விற்பனையும் அப்படித்தான்.
33

Page 69
மாத்தளை சோமு
இலங்கை எழுத்தாளர்களின் பல நூல்கள் விற்பனைக்குக் கிடைப்பதே இல்லை. புத்தகங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் இருந்துதான் கொள்முதல் செய்கின்றோம்.
“புத்தகம் படிக்கிற ஆர்வம் இங்கு எப்படி இருக்கின்றது?”
“கனடாவில் தமிழர் தொகை வெகு சீக்கிரம் இரண்டு லட்சத்தைத் தொடலாம். டொரண்டோ நகரில் மாத்திரம் எண்பதாயிரம் பேர் இருக் கிறார்கள். எனவே தமிழ்ப் படிக்கிறவர்க்ள் அதிகமாக இருக்கிறார்கள். மேலும் இங்கு தமிழ் தெரிந்தவர்கள், தமிழில் ஆர்வமாக உள்ளவர்கள் அதிகம்.
“அடுத்த தலைமுறையில் இது தொடருமா?”
அந்தக் கேள்விக்குப் புன்னகையே பதிலாய் வந்தது. காரில் உட் கார்ந்த நான், “இங்கு வேறு புத்தகக்கடை இருக்கிறதா?” என்று கேட் டேன்.
“கனடாவில் இன்னொரு புத்தகக்கடை பிரசித்தம் அது கலைமகள் புத்தக நிலையம், நாலு இடத்தில் கடை வைத்திருக்கிறார்கள். அதன் உரிமையாளர் கடையில் இல்லை. பிறிதொரு நாளில் சந்திக்கலாம்.” என்றார் கனக அரசரட்ணம்.
கனடாவில் - 28
கனடாவில் தலைநகராக ஒட்டாவா (Ottawa) என்ற நகரம் இருந்தபோதும் அது அரசியல் சம்பந்தமான நகராக மட்டுமே இருக் கின்றது. ஆனால் டொரண்டோ (Toronto) மாநகரம்தான் பாரிஸ், லண்டன், நியூயோர்க், டோக்கியோ, சிட்னி, ரோம் ஆகிய மாநகரங் களுடன் ஒப்பிடக்கூடிய மிகப் பெரிய நகரங்களில் ஒன்றாகக் கருதப் படுகின்றது. சின்னஞ்சிறு மலைகளின் இடையே ஒன்டோரியோ ஏரியின் கரையில் அது அமைந்திருக்கின்றது.
1800இல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட டொரண்டோ பீவர் (Beaver) என்னும், நீரிலும் நிலத்திலும் வாழும் மிருகத்தால் வளர்ந்த நகரம். 1850 முதல் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கே குடியேறி னார்கள். இவர்கள் அனேகமாக ஐரோப்பியர்களாகத்தான் இருப்பார்கள்.
D 134

லண்டன் முதல் கனடா வரை.
சுரங்கங்களில் வேலை செய்யச் சீனர்கள் கூட கொண்டு வரப் பட்டார்கள். 1960இல் தளர்த்தப்பட்ட கட்டுப்பாட்டில் கறுப்பினத்த வர்களும் குடியேறத் தொடங்கினார்கள். இன்று டொரன்டோவில் 75,000 தமிழர்கள் இருக்கிறார்கள்.
தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் தைரியமாகப் போய் இறங்கக் கூடிய நகரங்களில் டொரண்டேர்வும் ஒன்று. இதே கருத்தைச் சீனர் கள் கூடச் சொல்ல முடியும். சீன மொழி மாத்திரம் தெரிந்து கொண்டு அங்கு போய் இறங்க முடியும். சீனர்கள் அதிகமாக உள்ள சைனா LG|6öT (Chinatown) egyál(5Lb 2 6óTG).
கனடாவில் அதிகமான ஆங்கிலத் தினசரிகள், வார இதழ்கள் டொரண்டோவில் இருந்துதான் வருகின்றன. அரசியல் தவிர்ந்த ஏனைய துறைகளின் தலைநகரமாக அது இருப்பதற்கு வர்த்தகப் பரி மாற்றங்களும் ஏனைய நகரங்களோடு இருக்கின்ற தொடர்புகளுமே காரணம்.
வேலை வாய்ப்புகளும் தொழில் வசதிகளும் அதிகமாக இங்கி ருப்பதால் பிறநாடுகளில் இருந்து குடியேறுகின்ற மக்கள் இங்கேயே தங்கி இருக்கின்றார்கள். இன்றைய கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை முப்பது லட்சத்துக்கும் அதிகம் என சொல்லப்படுகின்றது.
டொரண்டோவைச் சுற்றிப் பார்க்க நானும் கனக அரசரத்தினத் தோடு சுரங்க ரயிலில் புறப்பட்டேன். பகல் பதினொரு மணிக்கும் மக்கள் கூட்டம் இருந்தது. “கைக்கடிகாரத்தைக் காட்டிய கனக அரச ரத்தினம், காலையிலேயே வந்திருக்க வேண்டும். எனவே சிஎன் டவரை மாத்திரம் பார்க்கலாமா?’ என்று கேட்டார். நான் சரியென் றேன். வெறுங்கட்டிடங்களை எவ்வளவு நேரம் தான் பார்ப்பது? டவ ரில் ஏறினால் முழு டொரண்டோவையும் பார்க்கலாமே?
ரயில் ஒரு இடத்தில் நின்றது. நாங்கள் ரயிலில் இருந்து இறங்கி சுரங்கத்தில் நடந்து மேலே வந்தபோது ஆகாயம் துண்டு துண்டாகத் தெரிந்தது. எங்கு பார்த்தாலும் உயர்ந்த கட்டிடங்கள். அவைகளின் நிழல் சூரியனின் வெளிச்சத்தையே தடுத்து விட்டது போல் எங்கும் படிந்திருந்தது. மெல்லிசான குளிர்காற்று வீசியது.
சி.என். கோபுரம் (CN Tower) 1976இல் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. பாரிஸ் ஈபில் (Eiffel Tower) கோபுரத்தின் உயரத் தைப் போல் இருமடங்கு உயரமான அதன் உயரம் 1815 அடியாகும்.
35

Page 70
D மாத்தளை சோமு
உலகிலேயே உயரமான இக்கோபுரத்திற்குப் போட்டியாக மலேசிய கோலாலம்பூரில் அதே அமைப்பில் ஒரு கோபுரம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அது கனடா சி.என். கோபுரத்தைவிட உயர மானது என்றபோதும், சி.என். டவர் பணியாளர்கள் அதனை ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் மலேசியாவோ கோலாலம்பூர் கோபுரமே உலகிலேயே உயரமானது என்ற அடித்துச் சொல்கிறது.
சி.என். கோபுரத்தின் உள்ளே மேலே போவதற்கு நீண்ட வரிசை இருந்தது. அதே நேரத்தில் அந்த வரிசை மிக மெதுவாகவே நகர்ந் தது. ஒரே ஒரு கவுண்டர் திறக்கப்பட்டு நுழைவுச்சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு டிக்கெட் வாங்கிக் கொண்டு லிப்டில் மேலே போனோம். லிப்ட் மேலே போகிறபோதே ஒரு பணியாளர் லிப்டில் இருந்தவாறே எல்லோரையும் வரவேற்று உலகிலேயே உய ரமான டவருக்கு வருகிறவர்களுக்கு வாழ்த்துக்கள் சொன்னார்.
அவரிடம்தான் மலேசியாவின் டவரைப் பற்றிச் சொன்னேன். ஆனால் அவர் அதற்குச் சொன்ன பதில், “சி.என். டவர்தான் உலகி லேயே மிக உயரமானது. மலேசிய டவரைப் பற்றி எனக்குத் தெரி யாது.”
எவ்வளவு நாசுக்கான பதில். ஒரு பொருளை விற்கிற போது கூட அதனைவிடத் தரமான பொருள் இருக்கிறதா என்று கேட்டால் மிக மென்மையான பதில், இது நல்ல பொருள். ஆனால் இதைவிட நல்ல பொருள் இருப்பதைப் பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது என்றுதான் வரும். இதனைக் கேட்டு எவரும் கோபப்படப் போவ தில்லை. இதெல்லாம் ஒரு வகை வர்த்தகத் தந்திரம் என்று சொல்வ திலும் பார்க்க வெள்ளையர்களின் வாழ்க்கை மந்திரம் என்று சொல் 6) GOTLD. '
அரசியலுக்காகச் சினிமாவுக்காக தலைவனுக்காக, நடிகனுக்காக அல்லது வேறு தனிப்பட்டி காரணங்களுக்காக நாலு பேர் பார்க்கிற பொது இடத்தில் ஒருத்தரோடு ஒருத்தர் கோபப்பட்டு நான் பார்க் கவே இல்லை.
தெரியாத விஷயத்திற்காக தெரியாத இருவர் சண்டை போட்ட தில்லை. தெரியாததை தெரியாது என்று சொல்லி உயர்வான இடத் தில் நிற்கிறார்கள் அவர்கள். 德
DI 136

லண்டன் முதல் கனடா வரை. ப
கோபுரத்தின் வெளிப்புறக் காட்சித் தளத்தை மிகக் குறுகிய வினாடி களிலே போய்ச் சேர்ந்தோம். நாங்கள் கீழே இருந்து மேலே வர ஆறு லிப்ட்கள் இருக்கின்றன.
லிப்ட்கள் போவதும் வருவதுமாகவே இருக்கின்றன கனடிய தேசிய ரயில் இலாகாவால் கட்டப்பட்ட இக்கோபுரம் ஆண்டு தோறும் 2 மில்லியன் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது.
கனடா என்றால் நயாகரா நீர் வீழ்ச்சிக்கு அடுத்ததாக இந்தக் கோபுரம் உல்லாசப் பயணிகளை நினைக்க வைக்கின்றது.
அந்த வெளிப்புறக்காட்சித் தளத்தின் உயரம் சுமார் 1200 அடி எனத் தெரிய வந்தது. அது கொஞ்சம் அகலமான பகுதி, அங்கு கடை கள், உணவுச் சாலைகள் என்பன இருந்தன. கண்ணாடி ஜன்னல்கள் வழியே டொரன்டோவையே பார்க்கலாம். பார்த்தேன் நான் டொரன்டோ நகரின் அமைப்பு, அழகுக் கட்டிடங்கள் எல்லாம் தெரிந்தன. கால நிலை தெளிவான காலத்தில் அங்கிருந்து நயகரா நீர் வீழ்ச்சியைப் பார்க்கலாமாம். நானும் முயன்று பார்த்தேன். முடியவில்லை. அதா வது தெரியவில்லை.
எங்களோடு வந்திருந்த கனக அரசரத்தினத்தின் மகன் ஒவ்வொரு கண்ணாடி ஜன்னலருகேயும் போய் நின்று வேடிக்கை பார்த்தான். அவனுக்குத் துணையாகத் தகப்பன்.
ஒவ்வொரு கண்ணாடி ஜன்னலையும் பார்த்து விட்டு ஒரு இடத் திற்கு வந்தபோது அங்கே சிலர் நின்று கொண்டும் படுத்துக் கொண்டும் வேறு சிலர் எட்டிப் பார்த்தவாறும் இருந்தார்கள்.
என்ன என்று பார்த்தேன். அங்கே 256 சதுர அடி கொண்ட கண்ணாடியில் நிலத்தளம் போட்டிருக்கிறார்கள். மெல்லமாய் எட் டிப் பார்த்தேன். அகல பாதாளமாய்க் கீழே தெரிந்தது. அந்தக் கண் ணாடியில் கால் வைக்க என் கால்கள் கூசின. ஆனால் அங்கு வெள் ளைக்கார (கனடா) சிறுவர்களும் சிறுமிகளும் அந்தக் கண்ணாடித் தளத்தில் நின்று கொண்டும், நடந்து கொண்டும் இருந்தார்கள்.
நான் பயத்தோடு அரசரத்தினத்தைப் பார்த்தேன். அவர் புன்முறு வல் பூத்தவாறு நின்றார். மகன் அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றான் அப்போது என் பக்கத்தில் இருந்த வெள்ளைக்காரன், “கண்ணாடி மீது நடக்கலாமே? ஏன் தயக்கம்? பயப்பட வேண்டாம்.
37

Page 71
D 'மாத்தளை சோமு
14 பெரிய நீர் யானைகளை இந்தக் கண்ணாடி தாங்கும் வல்லமை கொண்டது.”
“என்ன 14 நீர்யானைகளை இந்தக் கண்ணாடி தாங்குமா? என்று மனதில் நினைத்துக் கொண்டு கண்ணாடி மீது கால் வைத்து நடந்தேன். என்னதான் உறுதியாக அந்தக் கண்ணாடி என்னைத் தாங் கினாலும்கூட அதில் நடக்க என் கால்கள் தயங்கவே செய்தன. நான் நடப்பதைப் பார்த்து அரசரத்தினத்தின் மகனும் அந்தக் கண்ணாடி மீது நடக்கத் தொடங்கினான்.
கீழே போக லிப்ட்டுக்கு போனபோது இன்னும் கொஞ்ச உயரம் மேலே போக வேறு ஒரு வழி இருந்தது. அதற்குத் தனிக் கட்டணம். “டிக்கெட் வாங்கவா?” என்று கேட்டார் அரசரட்ணம்
“மேலே என்ன விசேஷம் இங்கேயே புள்ளியாய்த் தெரிகிற உரு வங்கள் மேலே போனால் தெரியவும் செய்யாது. கீழே போவோம்” என்றேன் நான். எங்களைப் போல் பலர் மேலே போக ஆர்வம் காட்டவில்லை, லிப்டில் ஏறி கீழே வந்தோம்.
அந்த சி.என் டவரை விட்டு வெளியே வீதிக்கு வந்தால் வீதி யோரத்தில் கை ரிக்ஷாவோடு ஒரு வெள்ளைக்காரர். அது தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் (1960ற்கு முன்) நகரங்களில் ஒட்டப்பட்ட கை ரிக்ஷாவின் நவீன வடிவமாய் அங்கு நின்றது.
வடிவம் நவீனமான போதும் அதனை இழுப்பது வெள்ளைக் காரன் தானே? மனிதனை மனிதன் இழுக்கக் கூடாது என்றுதான் தமிழ் நாட்டில் கை ரிக்ஷா ஒழிக்கப்பட்டது. ஆனால் கனடாவில் அதே கைரிக்ஷா உல்லாசப் பயணிகளுக்காக ஒடுகிறது.
அதில் ஒரு சுற்று சுற்றி வரக் கட்டணம் இருபது டொலர். டொரன்டோ வருகிற ஜப்பானிய உல்லாசப் பயணிகள் விரும்பிப் பயணம் செய்கிறார்கள். கட்டணத்தைப் பற்றிக் கவலையில்லை அவர் களுக்கு அதனால் அந்த வெள்ளைக்காரருக்கும் நல்ல வருமானம்.
கனடாவில் - 29
தமிழ் நாட்டு வார, மாத இதழ்களின் படையெடுப்பு மற்றும் கொழும்பு வாரப் பத்திரிகைகளின் அணிவகுப்பு ஆகியவற்றுக்கு
D 138

லண்டன் முதல் கனடா வரை.
மத்தியிலும் டொரன்டோவிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட வார இதழ் கள் உற்சாகமாய் வருகின்றன. அந்த உற்சாகத்தை ஒரு போட்டி என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் ஈழநாடு (கனடா பதிப்பு) செந்தாமரை, உலகத் தமிழர், தமிழர் செந்தாமரை, நம்நாடு என்பன விற்பனையில் போட்டி போடுகின்றன. இவை தவிர உதயன் கனடா, முரசொலி, முழக்கம், வாசனை என்பன இலவசமாய்க் கொடுக்கப்பட்டாலும் அதிலும் ஒரு போட்டி உண்டு.
இலவச இதழ்களில் விளம்பரங்களே அதிகம் இருக்கின்றன. விற்பனை இதழ்களில் யுத்த முனை, இனப்பிரச்சினை பற்றிய செய்தி கள், கட்டுரைகளே முக்கியமாக இடம்பெறுகின்றன.
இன்றைய தகவல் விஞ்ஞானத்தின் துணையில் கொழும்பில் வெளியாகாத செய்திகள் கனடாவில் தெரிய இவ்விதழ்கள் உதவு கின்றன. என்றாலும், ஒரு நிறுவன அடிப்படையில் இதழ்கள் வரு வது குறைவு. பல இதழ்கள் நண்பர்கள் இணைப்பில் கணவனும் மனைவியும் இணைந்து ஒரு குடும்ப முயற்சியாக வருகின்றன. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நின்ற போன இதழ்கள் மிக மிக அதிகம்.
ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் தரமான காத்திர மான கலை, இலக்கியம், அரசியல் சார்ந்த இதழ்கள் புதுப்புதுப் பெயர் களில் வெளிவந்தன. அவைகளின் அமைப்பும் தாள்களின் தரமும் சர்வதேச இதழ்களை எட்டிநின்றன. அவைகளை ஒரு இலக்கிய எல்லைக்குள் அங்கீகரிக்கும் முகமாகவே தமிழ் நாட்டின் தேசிய நாளிதழான தினமணி, தனது வாராந்த வெளியீடான தினமணி சுட ரில் புலம் பெயர்ந்த இலக்கியச் சிறப்பிதழை வெளியிட்டது.
ஆனால் இன்று பல நல்ல இதழ்கள் (லண்டனில் நாளிகை, லண்டன் முரசு - கனடா நான்காவது பரிமாணம், மனிதம், தேடல் எனப்பல) நின்று போய்விட்டன. புதிதாக இதழ் தொடங்கவும் யோசிக் கிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று பார்த்தால், புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழில் படிக்கிற பழக்கம் குறைந்து வருவது தான் முக்கியமாக இருக்கிறது. வீடியோ வழி தமிழ் சினிமா, தொலைக் காட்சி நாடகம் பார்ப்பது அதிகமாகி விட்டது. அதனோடு இணை யம் எனப்படும் இன்டர்நெட்டும் சேர்ந்து விட்டது. இந்த இரண்டும் வீட்டிலிருந்து பார்க்க வைக்கிறது.
39 O.

Page 72
D மாத்தளை சோமு
படிப்பது சிலர் தான். இது மூத்த நடுத்தர வயது சம்பந்தப்பட்ட வர்களின் பக்கத்துச் செய்தி. ஏனைய இளம்தலைமுறையோ முற்று முழுதான வேற்றுமொழியில் முழு நேரக் கல்வி கற்று வருகின்றது. அவர்கள் மத்தியில் தமிழ்க் கட்டாய பாடமல்ல, விரும்பிக் கற்கிற ஜனநாயகம். அவர்களிடம் நாவல், சிறுகதை இலக்கியம் வாசிக்கிற தமிழ் அறிவு இருக்குமா? இதுதான் இன்றைய கேள்வி.
“அடுத்த தலைமுறையில் தமிழில் பத்திரிகை படிக்கிறவர்கள் இருப்பார்களா?” என்ற கேள்விக்கான பதிலை மிக நிதானமாகவே தந்தார் துரைராஜா.
“அடுத்த தலைமுறை என்கின்றபோது எனது பிள்ளைகளும் அதில் அடங்குவார்கள். எனது பிள்ளைகள் தமிழ் பேசுகிறார்கள் தமிழைப் படிக்க விரும்புகிறார்கள் படிக்கிறார்கள். ஆனால் இது எல்லா வீட்டிலும் அப்படித்தான் என்று சொல்ல முடியாது. குழந்தை கள் தமிழ் படிக்கப் பெரும் முயற்சி நடக்கின்றது. தமிழ் வானொலி கள் ஒலிக்கின்றன. தமிழ்ப் பத்திரிகைகள் வருகின்றன. முன்பைவிட இப்போது தமிழ் படிக்கக்கூடிய சூழ்நிலை இங்கு அதிகமாக இருக் கின்றது. மேலும் இங்கு பிறந்து வளர்ந்திருக்கிற ஒரு சிறுவனோ சிறுமியோ தாயகமே கனடா என்ற உணர்வோடு வாழ்கிறார்கள்.
அந்தச் சிறுவர்களின் தாய்மொழியே ஆங்கிலமாக மாறிப் போய் விடுகிறது. தமிழ் வெறுமனே வாய்மொழியாக மட்டுமே இருக்கிறது. இவர்கள் எங்கள் மூதாதையரின் மண்ணுக்கு அதாவது தந்தையர் பூமிக்குப் போய் வருகிற பாக்கியம் இல்லாதவர்கள்.
மேலும் தாய்மொழி, பண்பாட்டுப் பாரம்பரிய பூமியோடான தொடர்பு அறுந்த நிலையில் வாழ்கின்றனர். எனவே அவர்களைப் புதிய சூழ்நிலை தன் வசப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றது. இருந்தபோதும் தமிழைப் பற்றி அறிகிற முயற்சிகள் தமிழ் படிக்கக் கூடிய வாய்ப்புகள் இங்கு அதிகம்.
அவருடைய பதிலில் உள்ள யதார்த்த நிலையை நான் உணர்ந் தேன். எனது கேள்விக்கு நேரடியாக ஆம், இல்லை என்ற பதில் சொல்ல முடியாத சூழ்நிலை தவிப்பு அவருக்கு மட்டுமல்ல பலருக்
'கும் இருக்கிறது.
' தற்போது கனடாவில் டொரன்டோவில் வசந்தம் என்ற தமிழ்
முதியோர் நிறுவனத்தின் இயக்குநராகவும் இன-இனக்குழு முதியோர்
а 140

லண்டன் முதல் கனடா வரை.
திட்ட ஆய்வாளாராகவும் ரொறன்டோ பல்கலைக்கழக உளவியல் திட்ட இணைப்பாளாராகவும் இருக்கின்ற கலாநிதி பார்வதி கந்தசாமி பூசி மெழுகாத நிஜமான பதில்களைச் சில கேள்விகளுக்குக் கொடுத்தார்.
கனடா வந்தவுடன் தமிழ் பற்றிய ஆர்வம் பெரும்பாலானவர் களுக்கு இல்லாமல் போய் விடுகிறது. அதேநேரம் தமது பிள்ளை கள் தமிழ் படிக்க வேண்டுமென்ற ஆர்வமுள்ளவர்களும் நிறை யவே உள்ளனர். ஆனால் தாய் தந்தை இருவரும் வேலைக்குச் செல் வதால் பிள்ளைகளின் மேல் கூடிய கவனமெடுத்துப் பராமரிக்க முடி யாமல் போகிறது.
இது தமிழ் மொழி மூலக் கல்வியும் தமிழ் பற்றிய ஆர்வமும்
எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கான பதில்.
அடுத்த கேள்வி, "கனடாவில் தமிழ் மொழியின் எதிர்காலம்?”
இரு ஒரு கேள்விக்குரிய விடயமே. கனடாவில் உள்ள பெரும் பாலான தமிழர்களுக்குத் தமிழ் பற்றிய ஆர்வம் குறைவாகவே உள் ளது. இது பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு பேணிப் பாதுகாக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
தமிழ் இலக்கியப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பனவற்றின் ஆர்வம் வளர்ச்சி எவ்வாறான நிலையிலுள்ளது?
பலருக்கு ஆர்வம் இருந்தாலும் நேரமில்லை. இலக்கிய நிகழ் வுகள் ஏதாவது நடந்தால் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே வரு கிறார்கள். அதில் இளைய தலைமுறையினரைத் தேடவேண்டும். ஆனால் தென்னிந்தியத் திரைப்பட நட்சத்திரங்களின் நிகழ்ச்சி என் றால் இரண்டு மாதத்துக்கு முன்பே டிக்கெட் விற்று விடுகிறது. ஒவ் வொரு வீடுகளிலும் தென்னிந்தியத் திரைப்படங்களின் வீடியோ நாடாக்கள் நிரம்பிக் கிடக்கின்றன. சினிமா மோகத்திலிருந்து இன் னும் விடுபடமுடியாத சூழலே உள்ளது.
ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளிலே கனடாவில் அதிக மான தமிழ் மாணவர்கள் கல்வி கற்கும் வயதில் இருப்பதால் அவர் கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகம் என்பதைவிட அவை கள் பல்வேறு வடிவங்களாய் உருவெடுத்ததே உண்மை. இதனைத் கண்டறிந்து பரிகாரம் காணப் பல முயற்சிகளை கனடா வாழ், s அறிஞர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். அவர்களின் #? கேஸ்வரி நடராசர் என்பவரும் ஒருவர். * *."

Page 73
o மாத்தளை சோமு
அவர் “எங்கள் (கனடா) மாணவரின் பிரச்சினைகள்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். அப்புத்தகம் படுகொலை செய்யப்பட்ட பிரபல பத்திரிகையாளர் திருச்செல்வத்தின் மகன் அகிலனின் எட்டாவது ஆண்டு நிறைவு வெளியீடாக வந்திருக்கிறது.
அப்புத்தகத்தில் தாய்மொழிக்கல்வி கற்பதால் பெற்றோருட னும் சமூகத்துடனுமான தொடர்பு நெருக்கமாகிறது என்ற தலைப் பில் புலம் பெயர்ந்த எல்லாத் தமிழர்களும் கட்டாயம் அவதானிக்க வேண்டியதைச் சொல்லியிருக்கிறார். புலம் பெயர்ந்த நாம் புகுந்த நாட்டின் மொழியையே நம் பிள்ளைகள் கற்க வேண்டும் என்னும் எண்ணத்தைத் தலையாய கடமையாகக் கொண்டுள்ளோம். அதனை எம் பிள்ளைகள் கட்டாயம் கற்றே தீருவார்கள்.
ஏனெனில் பாடசாலைக்கும் அதற்கு வெளியேயும் நாம் வாழும் நாட்டின் மொழியையே ஒவ்வொரு கணமும் அவர்கள் கேட்ட படி யும், பேசியபடியும், வாசித்தபடியும், எழுதிய படியும் இருப்பதனால் அது அவர்களின் நாளாந்த வாழ்க்கையின் ஒரு அம்சமாகவே மாறி விடுகிறது.
இந்நாட்டில் எம் பிள்ளைகள் திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்து கொண்டிருக்கும் ஆங்கில மொழியைக் கற்பது பிள்ளைகளுக்கு மிக வும் சுலபமாகும். தாய் மொழியைப் படிப்பது, அதில் பாண்டித்தியம் பெறுவதும் கடினமான ஒரு விடயமாகும். எந்த ஒரு பிள்ளையின தும் முழு ஆளுமையும் பூரணத்துவம் பெறுவதற்கும் தங்களைப் பற்றிய எண்ணக் கருக்கள் வலுவடைவதற்கும் தாய்மொழி அறிவு இன்றியமையாதது.
தாய்மொழி புலம் பெயர்ந்த தமிழர்களிடையே இருந்தால்தான் தமிழ் இதழ்கள், பத்திரிகைகள் படிப்பவர்கள் இருப்பார்கள். இது தான் உண்மைநிலை. ஆனால் ஆங்கிலம் தாய்மொழியாகிற பட்சத் தில் குழந்தைகளின் சிந்தனையிலும் பாரிய மாற்றம் ஏற்படும். அந்த மாற்றத்தை நெறிப்படுத்துகிற தகுதி தாய்மொழிக்கு உண்டு. எனவே தாய்மொழியின் அவசியம் குறித்து தமிழர் புலம் பெயர்ந்த நாடு களில் பெரிய இயக்கமே நடத்த வேண்டியிருக்கின்றது.
குழந்தை நிபுணரின் கருத்துப்படி ஒரு குழந்தையை 1 வயது முதல் 3 வயது வரைத் தாய்மொழிச் சூழல் இருக்கத் தக்கதர்கப்
42

லண்டன் முதல் கனடா வரை.
பராமரிக்க வேண்டும். ஆனால் கணவனும் மனைவியும் வேலைக் குப் போவதால் குழந்தைகள், குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் விடப்படுகின்றனர். அங்கு குழந்தை வாடகைத் தாயின் மொழியை யும் அவள் காட்டுகிற சூழலையும் இலகுவாகக் கற்றுக் கொள்கிறது. அதுவே தாய்மொழியாகவும் ஒரு தாயிடமிருந்து கற்றுக் கொள்கிற விஷயமாகவும் மாறி விடுகிறது.
எனவே குழந்தை தன்னையும் சுற்றுப்புறச் சூழலையும் உண ரும் வயதில் தாய்மொழி பண்பாட்டுச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தாயையே இழக்கிற குழந்தையைத் தான் காண்பீர்கள்.
இதைக் கவனிக்காத பட்சத்தில் நிறத்தால் கறுப்பர்களாகவும் வாழ்க்கை முறையால் வெள்ளையர்களாகவும் வாழ்கிற ஈழத் தமிழர் களையே பல நாடுகளில் பார்க்க வேண்டிவரும்.
கனடாவில் - 30
“கனடாவில் எத்தனை ஆலயங்கள் இருக்கின்றன?’ என்று நான் கேட்ட கேள்விக்குப் ‘பத்துக்கு மேற்பட்ட ஆலயங்கள் இருக் கலாம். எல்லா விபரமும் இந்தக் கையேடுகளில் இருக்கின்றன. பாருங் கள்” என்று சொன்ன துரைராஜா மூன்று பெரிய புத்தகங்களைத் தூக்கி என் வசம் கொடுத்து விட்டு மேலும் சொன்னார்.
“நீங்கள் கனடாவுக்கு வரப் போவதாகப் பிரான்சில் இருந்து சொன்னதுமே உங்களுக்காக இம்மூன்று கையேடுகளையும் வாங்கி வைத்துவிட்டேன். அந்தக் கையேடுகளில் கனடா வாழ் தமிழர் சம் பந்தப்பட்ட விபரங்கள் இருக்கின்றன. இப்புத்தகங்கள் கனடாவில் எல்லாத் தமிழர் வீட்டிலும் கட்டாயம் இருக்கும்.
அவர் கொடுத்த புத்தகங்களில் இரண்டு பெரியது. அதில் ஒன்று செந்தியின் தமிழன் வழிகாட்டி. மற்றது தமிழர் மத்தியில் சிறியது. தமிழருவி'இம்மூன்றுமே இலவசமாய் வழங்கப்படுகின்றன.
"செந்தியின் தமிழன் வழிகாட்டியைப் புரட்டிப் பார்த்தேன். கனடாவில் தமிழர் சகலவிதமான வர்த்தகத்திலும் கால் வைத்து விட் டார்கள் என்பதைக் காட்டுகின்ற விளம்பரங்கள் ஏராளமாய் இருந்தன.
| 43 E

Page 74
மாத்தளை சோமு
என்னைப் போன்ற ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான சில தகவல் களும் இருந்தன.
அந்தக் கையேட்டின் மூலம் பார்த்ததில் பதினைந்துக்கும் மேற் பட்ட ஆலயங்கள் கனடாவில் டொரண்டோவில் இருப்பது தெரிய வந்தது. இதுபோக இன்னும் சில ஆலயங்கள் எதிர்காலத்தில் வர லாம். ஆனால் எல்லா ஆலயங்களும் வெறுமனே வழிபாட்டுத் தலங் களாகவே இருக்கின்றன. வழிகாட்டும் தலங்களாக இல்லை. இது தனிமனிதனின் கருத்தல்ல. புலம் பெயர்ந்த தமிழர்களின் கருத்தா கும். ஒரு நூலகம் திறப்பதற்குக் கூட கோயில் நிருவாகங்களோடு போராடிய வரலாறு உண்டு.
“அவுஸ்திரேலியாவில் எத்தனை கோயில்கள் இருக்கின்றன? துரைராஜா கேட்டார்.”
“அவுஸ்திரேலியாவில் பத்துக்கும் மேற்பட்ட ஆலயங்கள் இருக்கலாம். சிட்னியில் தமிழர் சம்பந்தப்பட்ட இரு ஆலயங்கள் இருக்கின்றன. மெல்போர்னிலும் இரு ஆலயங்களே இருக்கின்றன. மெல்போர்ன் சிவா விஷ்ணு ஆலயமும் சிட்னி சிவா விஷ்ணு ஆல யமும் மிகப் பெரியவை. இதோ பாருங்கள் படங்கள். “என்று நான் சில புகைப் படங்களைக் கொடுத்தேன். மெல்போர்ன் சிவா விஷ்ணு கோயில் படத்தைப் பார்த்து வியந்தார் துரைராஜா. உயரமான கோபு ரங்களைக் கொண்ட கோயில் அது. அவுஸ்திரேலியாவிலேயே கட் டப்பட்ட மிகப் பெரிய கோயில்.
அப்போது ஒரு இளைஞர் வந்தார். அவரை எனக்கு அறி முகம் செய்து வைத்தார். “இவர் என் மகன். கலாநந்தன். பல்கலைக் கழகப் பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு வந்திருக்கிறார். இவர் இன்று உங்களை வெளியே கூட்டிப் போவார்.”
அடுத்த சில நிமிடங்களில் இருவரும் காரில் புறப்பட்டோம். கலாநந்தன் தான் காரை ஓட்டினார். வெய்யில் கடுமையாக அடித் தது. கார் எங்கே போகிறதென்று எனக்குத் தெரியவில்லை. எனவே கலாநந்தனையே பார்த்தேன். என் பார்வையின் அர்த்தம் புரிந் திருக்கக் கூடும்.
“முதலில் ரிச்மன்ட் ஹில்லில் (Richmand Hill) உள்ள விநா யகர் ஆலயத்திற்குப் போகிறோம். பிறகு ஜெராட் வீதிக்குப் போவோம்” என்றார். நான் புன்னகையோடு சொன்னேன் “நேற்று இரவு நானும்
44

லண்டன் முதல் கனடா வரை. D
தமிழர் செந்தாமரை அரசரட்ணமும் ஜெராட் வீதிக்குப் போனோம். இரவில் தான் ஜெராட் வீதியைப் பார்த்தேன். ஆனாலும் பகலில் பார்க்க வேண்டும்.”
இரவு எட்டு மணிக்குப் போன போது கூட ஜெராட் வீதியில் கடைகள் திறந்தே இருந்தன. அந்தக் கடைகளின் விளம்பரப் பல கையில் இருந்த பல வண்ண மின்விளக்குகள் எரிந்து தமிழ் எழுத் துக்களைப் பளிச்சிட வைத்தன. தமிழர் நாட்டில் வர்த்தக நிறுவனங் களின் பெயர்களைத் தமிழில் எழுதுங்கள் என்று தமிழக அரசே கெஞ்சும் போது இங்கே கனடாவில் ஜெராட் வீதியில் எந்தப் பக்கம் திரும்பினாலும் தமிழில் கடைகளின் பெயர்கள். ஒரு உணவு விடுதி யின் பெயர் 'கிராமத்து விருந்து' ஒரு துணிக்கடையின் பெயர். “அம்மன் பட்டு மாளிகை”ஒரு நகைக் கடையின் பெயர் “அம்மன்ஸ் நகை மாளிகை’ அந்தத் தமிழ்ப் பெயர்களைப் பார்க்கும் போது மன துக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தமிழக அரசியல்வாதிகள் அடுத்த முறை கனடா வருகின்ற போது ஒரு நடை ஜெராட் வீதிக்குப் போய் வருவது நல்லது.
நீண்ட வீதியான ஜெராட் வீதியின் இருபக்கமும் பல்வேறு வர்த் தக நிலையங்கள். பெரும்பான்மையான கடைகளை ஈழத் தமிழர்களே நடத்துகிறார்கள். வீதியோரங்களில் தமிழர்களின் - இந்தியர்களின் நடமாட்டம் நிறையவே இருந்தது.
வீதியில் கார்களோடு டிராம் வண்டியும் ஒடுகிறது. டிராம் வண்டி அந்தப் பகுதிக்குத் தனி மரியாதையைக் கொடுத்திருக்கிறது.
வீசுகின்ற குளிர்காற்றையும் பொருட்படுத்தாமல் என்னை ஜொரட் வீதியின் எல்லாப் பகுதிக்கும் அழைத்துச் சென்றார். தமிழர் செந் தாமரை அரசரட்ணம், குட்டி யாழ்ப்பாணமோ (யுத்தத்திற்கு முந்திய) என எண்ணக் கூடியதாக கடைகளும் தமிழர்கள் நடத்துகிற சினிமா தியேட்டர்களும் அங்கிருந்தன. ஒரு சினிமா தியேட்டரின் பெயர் வெலிங்டன் நாங்கள் போனபோது ரஜினியின் படையப்பா ஒடியது. அரசரட்ணத்தைப் பார்த்த தியேட்டர் மனேஜர் எங்களை வரவேற்று படையப்பாவைப் பார்க்க அழைத்துப் போனார். தியேட்டர் உள்ளே போனோம். முதலாவது காட்சி முடியும் தறுவாயிலிருந்தது. இரண் டாவது காட்சிக்கு அப்போதே வெளியே ரசிகர்கள் வரத் தொடங்கி யிருந்தார்கள்.
45

Page 75
D மாத்தளை சோமு
இந்தியன் என்ற பெயரில் உள்ள இன்னொரு திரையரங்கைப் பார்க்கப் போனோம். அது பூரீலங்கா கண்டி கட்டுகஸ்தொட்ட பகுதி யைச் சேர்ந்த நண்பர்களின் திரையரங்கு. அந்தத் திரையரங்கோடு ஒரு அருமையான உணவு விடுதி இருந்தது.
அந்த உணவு விடுதியையும் அந்த இந்தியன் தியேட்டரே நடத்துகிறது. அன்றைய இரவு உணவை அங்கே முடித்துக் கொண்டு அந்தப் பகுதியில் நடந்து போனோம். அப்போதே அந்த வீதிக்குப் பகலில் வரவேண்டும் என்று நினைத்தேன்.
ரிச்மண்ட் ஹில் பெயருக்கு ஏற்றாற்போல் செல்வந்தர்களின் (Richman) பகுதியாகும். அதன் ஒரு பகுதியில் விநாயகர் ஆலயம் இருக்கிறது. குடியிருப்புகளை விட்டுத் தள்ளி இருந்தாலும் அமைதி யான பகுதியில் அந்த ஆலயம் அமைந்திருப்பது வழிபாட்டுக்கு உகந்ததாக இருந்தது. நாங்கள் போன போது கோயிலில் காலை பூஜை முடிந்து மூடுகிற நிலையானதால் வேகமாக எல்லாவற்றையும் பார்த்து விட்டுக் காரில் ஏறினோம்.
வெயில் கடுமையாக அடித்தது. கடுமையான குளிர் இருப்பதை போல் கடுமையான வெய்யில் இருக்கும். வழியில் சிலேவேக்கிய மக்களின் தேவாலயம் ஒன்றைப் பார்த்து விட்டு மறுபடியும் ஜெராட் வீதிக்கே போனோம். அந்த வீதியைப் பகலில் பார்க்க வேண்டும் என்று நான் சொன்னதால் கலாநந்தன் காரை அங்கேயே ஒட்டினார். காரை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு சுற்றிப் பார்த்து விட்டு “கிரா மத்து விருந்து”உணவு விடுதியில் தேநீர் குடித்தோம். பலநாட்களுக் குப் பிறகு ஒரு அருமையான இலங்கைப் பாணி தேநீர் குடித்த திருப்தி.
வீட்டுக்குக் காரில் திரும்பும் வழியில் மென்மையாய் கலா நந்தனோடு பேச்சுக் கொடுத்தேன்.
“உங்களின் படிப்பு?”
“முடிந்து விட்டது. இப்போதைக்கு மேலே படிப்பதானாலும் படிக்கலாம்.”
“உயர்கல்வி படித்தது.”
“இந்தியாவில்.”
“இந்திய வாழ்க்கையைப் பற்றி.”
D 46

லண்டன் முதல் கனடா வரை.
“என்னால் மறக்க முடியாது. எனக்குத் தாயகம் ஈழம் என்றா லும் இரண்டாவது தாயகம் தமிழ் நாடுதான். அகதியாகச் சென்ற என்னை ஆதரித்த தமிழ் நாட்டை நன்றியுடன் நினைப்பேன். கடல் பிரித்திருந்தாலும் ஈழ - தமிழக மக்களை மொழி பண்பாடு பிணைத்தே இருக்கிறது”
“சரி ஒரு கேள்வி, ஈழத்தில் சமாதானம் வந்தால்” என்று கேள் வியை முடிக்காமல் கேட்டேன் நான்.
கலாநந்தனிடமிருந்து அதற்குப் பதில் தெளிவாக வந்தது. “நிரந் தரமாய் சமாதானம் வருமேயானால் யாழ்ப்பாணத்தில் பணிபுரிய வும் வாழவும் நான் விரும்புகின்றேன். ஆனால் சமாதானம் என்று வருமோ?”
இலங்கையில் இனப்பிரச்சினை தீர்ந்து சமாதானம் வரவேண்டும் என்பதில் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் வெகு ஆவலாய் இருக் கிறார்கள். என்பதற்கான அடையாளமே கலாநந்தனின் பதில்.
கனடாவுக்குப் போனதுமே நான் சந்திக்க ஆவலாய் இருந்தவர் களில் கவிஞர் கந்தவனம் முக்கியமானவர். நான் பள்ளியில் படித் துக் கொண்டிருந்த போது மாத்தளையில் கவிதைக்குரல் எழுப்பி யவர் அவர்
மாத்தளையில் புனித தோமையார் கல்லூரியில் பணிபுரிந்த அவர் அப்போது மாத்தளையில் இருந்த நவாலியூர் சொக்கநாதன், ஈழவா ணன் ஆகியோரோடு இணைந்து வெளியிட்ட சிட்டுக்குருவி என்ற கவிதை நூல் புகழ்பெற்றது.
அந்த மூன்று கவிஞர்களும் மாத்தளையில் எழுப்பிய கவிதைக் குரலால் அங்கு தமிழ் எழுந்தது. அதனோடு கவிதையும் எழுந்தது. இதில் ஈர்க்கப்பட்ட நானே கவிதைகளைத் தான் முதலில் எழுதினேன். அந்தக் கவிதைகளை நவாலியூர் சொக்கநாதனிடம் திருத்தியது இன் றும் நினைவில் இருக்கின்றது.
தொலைபேசியில் தகவல் கொடுத்து விட்டு கவிஞர் கந்தவனம் அவர்களை அவர் வீட்டில் சந்தித்தேன் என்னோடு துரைராஜாவும் வந்திருந்தார். எனக்குக் கந்தவனம் அவர்களின் முகம் நினைவில் இருந்தது. ஆனால் என்னை அவருக்குத் தெரிய நியாயமில்லை.
47

Page 76
மாத்தளை சோமு
“உங்களை நேரில் பார்க்காவிட்டாலும் உங்கள் எழுத்துக்களை பத்திரிகையில் பார்த்திருக்கின்றேன்” என்று கவிஞர் கந்தவனம் சொன் னதுமே மாத்தளை சம்பந்தமான நினைவுகளைத் தூண்டிவிட்டேன், அடுத்த விநாடி உற்காத்துடண் என்னோடு பழைய நினைவுகளை மீட்கத் தொடங்கினார்.
கவிஞர் கந்தவனம் மாத்தளையில் இருந்தபோது நான் அவ ரோடு பேசியதில்லை. ஆனால் அவர் பங்கு பற்றிய கவியரங்கு களைப் பார்த்துக் கேட்டிருக்கின்றேன். அவர் மாத்தளையில் இருந்த போது நான் வெறுமனே ஒரு மாணவனே.
புகழ் பெற்ற மாத்தளை முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமகத் தேர்த் திருவிழாவைச் சிலாகித்து பேசத் தொடங்கிய அவர் தான் பணியாற்றிய காலத்தில் இருந்தவர்களை விசாரித்தார். தமிழ் விழா, வள்ளுவர் விழா நடத்திய புனித தோமஸ் கல்லூரியில் தமிழ்ப் பிரிவே இல்லையென்ற உண்மை அவரைக் கவலைப்படவைத்தது.
“என்று இலங்கையில் கல்விக் கூடங்களை மத ரீதியாக மொழி ரீதியாக பிரித்தோமோ அன்றே இனப்பிரச்சினை வேரூன்றி விட்டது என்றுதான் அர்த்தம்”
அவரோடு விடை பெற்றபோது தான் தமிழில் எழுதிய சிறு கதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்களைக் கையெழுத்திட் டுத் தந்தார். அந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரும் அவரே.
கனடாவில் - 31
உலகப் புகழ்பெற்ற நயாகரா நீர் வீழ்ச்சியைப் பார்க்க (Niagara Falls) ஒரு காரில் துரைராஜா, மகாதேவன் ஆகியோரோடு நானும் நயாகரா நீர்வீழ்ச்சிப் பகுதியருகே போய் இறங்கியபோது பகல் பதி னொன்றிருக்கும். சூரிய வெளிச்சத்தையே காணவில்லை. வானமெங் கும் சாம்பல் நிறமேகங்கள் தவழ்ந்து கொண்டிருந்தன. எப்போது வேண்டுமானாலும் மழை வரும்போல் இருந்தது.
ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு நடைபாதையில் நடந்து கொண்டே நயாகராவைப் பார்த்தவாறு போனது அற்புதமான அனு
48

லண்டன் முதல் கனடா வரை.
பவம். மேலிருந்து கீழே விழுகிற நீரினால் ஏற்படுகிற ஆவி மெல்லிய மேகங்களாக அந்தப் பகுதியில் மிதந்தன. மழைத்தூறல் போல் தண் ணிர்த்துளிகள் தெறித்து விழுந்து கொண்டிருந்தன.
கனடாவுக்குப் புகழ் சேர்த்த நயாகரா இன்று உலக மக்களைக் கவர்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தைப் பொறுத்தவரை நயாகரா ஒரு நீர்வீழ்ச்சி என்று மட்டுந்தான் தெரியும் ஆனால் அது ஒரு நதி யென்பது பலருக்குத் தெரியாது, உலகப் புகழ்பெற்ற நயாகரா நதி யாக அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் ரோசெஸ்டர் (Rochester) என்னும் இடத்தில் உற்பத்தியாகி ஒன்றாரியோ ஏரிக்கரை ஓரமாக ஓடி ஹாமில்டன் (Hamilton) வழியாகப் பாய்ந்து புளு மவுன்டன் (Blue Mountain) மலையை உராய்ந்து கொண்டு போகிறது. பிறகு யூரன் ஏரியை இரண்டாகப் பிளந்து ஓடுகிறது. அங்கிருந்து பாய்ந்து மீண் டும் மிக்சிகன் ஏரியின் மேற்குக் கரை ஓரத்தில் வெளிப்படுகிறது. மெக்சிகன் ஏரிக்கும் நயாகரா நதிக்கும் இடையே உள்ள பூமி செழிப் பானதால் அங்கு பழங்கள் (Peagplum) உற்பத்தியாகின்றன. அந்தப் பழத் தோட்டங்களில் உற்பத்தி குறைவது போல் ஒன்றாரியோ ஏரி யின் கரை ஓரத்தில் ஏகப்பட்ட தொழிற்சாலைகள் தோன்றி விட்டன.
நயாகரா நீர்வீழ்ச்சி மிகப் பெரியது. மாபெரும் ஓசையுடன் மலைப் பாறையில் இருந்து தண்ணீர் விழுகிறது. அதன் ஓசை பல மைல் தூரத்துக்குக் கேட்கிறது. ஒரு வினாடிக்கு 35000 கன அளவு (Cubic Littres) தண்ணீர் விழுகிறதாம். கனடா அமெரிக்கா எல்லைப் பகுதி யில் இருக்கும் இந்த நயாகரா இரு நீர் வீழ்ச்சிகளாக விழுகின்றன. கனடிய பகுதி ஹோர்ஸ்வீ (Horse Shoe) என அழைக்கப்படும். நீர் வீழ்ச்சியின் உயரம் 176 அடி (54 மீட்டர்). அதன் அகலம் 2215 அடி (675 மீட்டர்) அமெரிக்க பகுதி நீர்வீழ்ச்சியின் உயரம் 184 அடி (56 மீட்டர் ) அதன் அகலம் 1060 அடி (323 மீட்டர்) இந்த இரண்டும் இணைந்ததே நயாகரா. எனவே ஒரு பகுதியை அமெரிக்காவும் மறு பகுதியைக் கனடாவும் சொந்தம் கொண்டாடுகின்றன. காவிரி நதித் தண்ணீர் போல் இங்கு சண்டை இல்லை. உற்பத்தியாகிற மின்சாரத் தைப் பிரித்துக் கொள்கிறார்கள்
நயாகரா நீர் வீழ்ச்சியை பார்க்கத் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். வட அமெரிக்காவுக்குப் போகும் ஒவ்வொரு வரும் எப்படியாவது அதனைப் பார்த்து விட்டுத் திரும்ப எண்ணு கிறார்கள். அமெரிக்கர்கள் திருமணமானதும் தேன் நிலவுக்கு நயா
49

Page 77
0 மாத்தளை சோமு
கரா நீர்வீழ்ச்சியைப் பார்க்கப் போகிறார்கள். நீர்வீழ்ச்சியைச் சுற்றி லும் அதன் பக்கத்து நகரிலும் தங்கிச் செல்வதற்கு ஹோட்டல்கள் - மோட்டல்கள் நிறைய இருக்கின்றன.
ஜப்பானியர்கள் ஏராளமானவர்கள் பயணிகளாய் இங்கு வந்து போகிறார்கள். அந்த நீர் வீழ்ச்சியைப் பார்த்து விட்டுத் தரை வழியே அமெரிக்காவுக்குள் நுழைய நயாகரா, நதியாக ஓடுகிற பகுதியில் பாலம் இருக்கிறது. பாலத்தின் நடுவே வரியற்ற கடைகளும் இருக் கின்றன.
சில்லென்ற குளிர் காற்று வீச நடந்து கொண்டிருந்த நான், அந்த நயாகராவை ஒரு இடத்தில் நின்று நிதானமாகப் பார்த்தேன். அங்கு காதை அடைக்கிற சத்தம். வெண்பஞ்சு மேகங்களாய்த் தெரிகிற நீராவி. அவற்றையும் மீறி என் மனக்கண்ணில் சிலவரிகள் ஓடின. அவை கவிதையாக.
ஒ! நயாகராவே ! ஈழத்தில் மக்கள் சிந்தும் இரத்தத்தை வெள்ளையாக இங்கு கொட்டினால் யாவும் மறந்து போகுமென எண்ணிச் சிரித்தாயோ?
இரத்தத்தை நீ வெள்ளையாக்கலாம் ஆனால் என் கண்களுக்கு அது ரத்தமாகவே தெரிகிறது.
இது இலங்கையை நினைத்தபோது எழுந்த கவிதை)
ஓ ! நயாகராவே ! நீ. ஒரு மோசக்காரி !
தமிழ்நாட்டில் என் தம்பியும் தங்கையும் ஆப்பிரிக்காவில் அண்ணனும் அக்காவும் தண்ணிர் இல்லாது தவிக்கிற போது இவ்வளவு தண்ணிரைப் பதுக்கிக் கொண்டு இங்கு சாகசமா செய்கிறாய்?
இது தமிழ் நாட்டை நினைத்தபோது எழுந்த கவிதை
150

லண்டன் முதல் கனடா வரை. ப
ஓ ! நயாகராவே ! வெள்ளையாய் சிரிக்கிறாயே! இங்கு வெள்ளை நிறத்தை இவர்கள் விதவைக்குக் கொடுத்ததை அறிவாயோ?
சிலர் சமாதானம் செய்யவும் இந்த வெள்ளையைக் காட்டுவார். நீயேன் வெள்ளையைக் காட்டுகிறாய்?
உன்னை எவரேனும் மோசடி செய்து விட்டாரோ? இல்லை பொல்லா மனிதனோடு இங்கு சமாதானம் செய்ய வெள்ளையாய் நிற்கிறாயோ?
உன் சமாதானத்தை இவன் ஏற்க மாட்டான். சரணடைந்தோருக்குச் சமாதிகட்டும் இந்த மனிதனோடு சமாதானம் செய்யாதே !
வெள்ளை நிறத்தை மாற்று. !
இது வேறு)
ஒ நயாகராவே ! உன்னை எழுச்சியென்பது
வார்த்தையிலாக் கவிஞனின் வேலை !
மேலே போனால் கீழே வந்துதான் ஆக வேண்டும் ! நீ மேலே போய்
எதைக் கண்டாய்? ஏன் இவ்வளவு வேகமாக. சொல்லப் போனால் கோபமாக விழுகின்றாய்?
என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார் துரை ராஜா.
51 DI

Page 78
D மாத்தளை சோமு
நயாகராவைப் பார்த்ததும் கவிதை வந்தது. அதைத்தான் மன தில் எழுதிக் கொண்டிருந்தேன் என்றேன் நான் அப்போது மகாதேவன் சொன்னார். குளிருகிறது. சூடா டீ குடிப்போம்.
அது நல்ல யோசனை என்றபடியே மகாதேவனைப் பின் தொடர்ந்தோம். பக்கத்தில் இருந்த ஒரு கட்டிடத்தின் உள்ளே நுழைந் தார் அவர் மூவரும் ஒரு மேஜையைச் சுற்றி உட்கார்ந்து டீ குடித் தோம். அப்போது மகாதேவனைக் கேட்டேன். பல தடவை நயாகரா விற்கு வந்திருப்பீர்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இங்கே வருவதை நான் விரும்புகின்றேன். எப்படிப் பார்த்தா லும் மாதமிருமுறை இங்கே வந்து விடுவேன். எனக்குச் சலிப்பு வர வில்லை. அது மகாதேவன் நீங்கள் என்று துரைராஜாவிைக் கேட் டேன். எப்பொழுது இங்கே வருவதற்கு வாய்ப்பு வந்தாலும் அதனை விரும்புவேன். கனடா வருகிற எவரும் நயாகராவைப் பார்க்காமல் போகக் கூடாது என்றார் துரைராஜா. நான் அவரை நன்றியுடன் பார்த்தேன் அவர்தான் நாயகராவைப் பார்க்க ஏற்பாடு செய்தார்.
தேநீர் குடித்து விட்டு வெளியே வந்து திரும்பவும் நான் நயாக ராவைப் பார்த்தேன் நடைபாதையோரமாக நின்று பார்த்தால் நீர் கீழே விழந்து ஓடுவது எல்லாம் தெரியும். கீழே நீர் வீழ்ச்சியருகே சிறிய பாதுகாப்பான கப்பலில் போய் வருகிற சேவை இருந்தது. அந் தக் கப்பலில் போகிறவர்களுக்கு மஞ்சள் நிற பிளாஸ்டிக் ஓவர் கோட் கொடுக்கப்படுகிறது.
அந்தக் கப்பலில் போகிறீர்களா? என்று கேட்டார் மகாதேவன். நான் இங்கிருந்தே நயாகராவைப் பார்க்கவே விரும்புகின்றேன் என் றேன். அதுசரி, இங்கே ஏவராவது விழுந்து தற்கொலை செய்திருக் கிறார்களா? என்று நான் கேட்டதும் அந்த இருவரும் என்னையே பார்த்தார்கள். -
நான் அப்படிக் கேட்டதற்குக் காரணம் உண்டு. பாரிஸ் ஈஃபில் டவரிலிருந்தே பலர் தற்கொலை செய்து, செய்தியாகி இருக்கிறார்கள் சிலர். அதுபோல் எவராவது இங்கே தற்கொலை செய்தார்களா என்று தான் கேட்டேன்.
இதுவரை எந்தத் தற்கொலை செய்தியும் கேள்விப்படவில்லை. ஆனால் சிலரின் சாகசச் செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார் துரைராஜா என்ன சாகசச் செய்தி?
O 52

லண்டன் முதல் கனடா வரை.
அவர் அந்த சாகசத்தைச் செய்தியாகச் சொன்னார். அன்னி எட்சன் டெய்லர் என்பவர் ஒரு பீப்பாய்க்குள் நுழைந்து கொண்டு அந்த நீர்வீழ்ச்சியில் விழுந்தாராம். ஆனால் அவர் உயிருடன் பிறகு வெளியே வந்தார். அதற்குப் பிறகு இன்று வரை எவரும் அது போன்று முயற்சி செய்யவில்லை.
நயாகராவின் அழகைப் பார்த்துப் பிரிய மனமில்லாமல் திரும் பிய எனக்கு வானொலிப் பேட்டி காத்திருந்தது. கீதவாணி என்ற வானொலி நிலையத்திற்கு துரைராஜா அழைத்துப் போனார். கீதவாணி இருபத்தி நாலு மணி நேர வானொலியாகத் தொடங்கி சில தினங் களே ஆனபோதும் கீதவாணி அதிபர் நடராஜ் குமார் என்னைச் சந்தித்து நேர் காணல் செய்யவும் ஒப்புக் கொண்டிருந்தார்.
கீதவாணி கனடாவில் ஒலிக்கும் இரண்டாவது 24மணி நேர வானொலியாகும். 24மணி நேர ஒலிபரப்பைத் தொடங்கி மிகவும் பர பரப்பாக இருந்த அந்த நேரத்திலும் முன்ஏற்பாடு இல்லாமல் என் னைச் சந்திக்கவும் நேர் காணலை ஒலிபரப்பவும் கீதவாணி நடாராஜ் குமார் முன் வந்தது ஒலிபரப்புக் கலை மீது அவருக்கு இருந்த ஈடு பாட்டைக் காட்டியது.
கனடாவிலேயே பல வருடம் வானொலி நிகழ்ச்சி நடத்திய அவர், கனடிய தமிழ் மக்கள் மீது கொண்ட நம்பிக்கையில் தான் இந்த 24மணி நேர ஒலிபரப்பைத் தொடங்கியதாகச் சொன்னார். கனடா வில் இருக்கிற தமிழர்களின் தொகையே அந்த நம்பிக்கைக்கு முக் கிய காரணம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
நான் அங்கிருந்தபோது பல தமிழ் நேயர்கள் வானொலி பெட்டி களை வாங்கிக்கொண்டு போவதைக் கவனித்தேன். அவர்கள் விற் கிற வானொலிப் பெட்டிகளை வாங்கினால் தான் அந்த ஒலிபரப்
நாடுகளில் 24மணி நேர தமிழ் வானொலிகள் ஒலிபரப்பாகின்றன.
இன்று பல 24 மணி நேரத் தமிழ் வானொலிகள் இருந்தபோதும் முதன்முதலாகத் தமிழில் 24மணி நேர வானொலி ஒலிபரப்பைத் தொடங்கிய நாடு கனடாதான். அதனை சாதித்தவர் ஒரு தமிழர். அவ ரைத்தான் அடுத்த நாள் சந்திக்க இருந்தேன்.
153 ロ

Page 79
கனடாவில் - 32
‘சூரியன் பகலில் மட்டுமே. நிலவு இரவில் மட்டுமே. ஆனால் இரவிலும் பகலிலும் வானலைகளில் செந்தமிழ் பரப்பும் கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்’ என்பது ஒரு விளம்பரம். அதனைச் சாதிக்கக் கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைத் தொடங்கி யவர் இளையபாரதி.
அவர் வானொலிப் பேட்டிக்குக் கொடுத்த நேரத்திற்கு என்னால் போக முடியவில்லை. மறுநாள் போனேன். ஒரு மணி நேர வானொலி உரையாடல் இடையிடையே நேயர்களின் கேள்விகள் வேறு.
நேர்காணல் முடிந்ததும், “உங்கள் நேர்காணல் எதிர்பார்த்ததை விட நன்றாக வந்திருக்கிறது. அதனை அவ்வப்போது ஒலிபரப்பு வேன்’ என்றார் இளைய பாரதி.
“இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் கூட 24 மணி நேர தமிழ் வானொலி தொடங்காத போது கனடாவில் 24 மணிநேர தமிழ் வானொலி தொடங்க என்ன காரணம்?” என்று நான் கேட்ட போது, அதற்கு ஒரே வரியில் இளையபாரதி சொன்ன பதில். “கன டிய நாட்டுத் தமிழ் நேயர்களே” அவரின் இந்தப் பதிலில் உண்மை இருந்தது. இன்று கனடாவில் வானொலி நேயர்களிடம் காந்த சக்தி கொண்ட அறிவிப்பாளராக அவர் இருக்கிறார்.
ஒரு தடவை அவர் பிறந்த தினத்தை எப்படியோ தெரிந்து கொண்ட ஒரு நேயர். தொலைபேசியில் வாழ்த்துக்கூறி அன்பளிப்பாகச் சிறு நிதியை (டொலரில் வழங்குவதாக அறிவித்தார்.
அந்த அறிவிப்பு அப்படியே வான் அலைகளில் மிதந்தது. அத னைத் தொடர்ந்து அடுத்தடுத்து நேயர்களின் வானொலி ஒலி ஊடாக வந்த அழைப்பில், அன்று இரவு சேர்ந்த தொகை ஆயிரக்கணக்கான டொலராகும். அத்தனையும் இளைய பாரதியால் அகதிகள் நிவாரண நிதிக்குப் போய்ச் சேர்ந்தது.
அடுத்து நிகழ்ச்சிக்குப் போக இருந்த இளையபாரதியிடம், “உங் களிடம் படம் தேவை. (போட்டோ) பயணக் கட்டுரையில் பிரசுரிக்க வேண்டும்.” என்றேன் நான். அதற்கு அவர் என்னிடம் போட்டோ
54

லண்டன் முதல் கனடா வரை.
எதுவும் இல்லை. என் போட்டோவைப் பிரசரிப்பதில் எனக்கு அக்கறை யில்லை. இந்த ஒலிபரப்புக்கூடத்தில் கூட என் படம் இல்லை.” என்று சொன்னார்.
இப்போது கனடாவில் தமிழில் மூன்று 24 மணிநேர தமிழ் வானொலிகள் இருப்பதாகத் தெரிய வருகின்றது. உலகம் முழுவதும் தனியார் மயமாக்கலும், விஞ்ஞான வளர்ச்சியும், தனியார் வானொலி களுக்கும், தனியார் தொலைக்காட்சிகளுக்கும் வழி விட்டுள்ளன.
ஆனால் இந்த தனியார் என்ற சொல்லின் அர்த்தமே தனிநபர் என்பதாகத்தான் தமிழில் அர்த்தமாகியுள்ளது. தமிழ் முழுக்க முழுக்க மக்கள் சார்ந்த ஒலி, ஒளி ஊடகங்கள் இனித்தான் வரவேண்டும்.
தமிழில் இந்நிலை என்பதல்ல. உலக ஒலி ஒளி ஊடகங்களே ஒரு அரசியல் சார்ந்த அல்லது வல்லரசு சார்ந்ததாக இருக்கின்றன. இதற்கு காரணமே எல்லோரும் யாவும் வர்த்தக மயமானதுதான்.
தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் வானொலி ஊடகங்களில் சிறிது போட்டி மனப்பான்மை இருந்தபோதும் இலங்கையில் மறைக்கப்படு கின்ற யுத்தம் சார்ந்த உண்மைகள் வெளியாகி விடுகின்றன.
தமிழ் மொழி மீதான நேசம் கொடி கட்டிப் பறக்கிறது. எதிர்கால இளைய தலைமுறையினரிடம் தமிழ், தமிழர் சார்ந்த உணர்வுகளைப் போற்றி வளர்க்க முன்னிற்கின்றன. பல தமிழ் வானொலி ஒலிபரப்பு களில் பணியாற்றுபவர்கள் 'தொண்டு அடிப்படையிலேயே பணி புரிகின்றார்கள். அவர்கள் எல்லாம் பாராட்டுக்குரியவர்கள்.
ஒலி, ஒளி ஊடகங்களில் இன்னுமொரு பிரிவுதான் வீடியோ திரைப் படங்கள். வீடியோ முயற்சி மூலமாகத் தரமான குறுந் திரைப்படங்கள் தயாரிக்க முடியும். உலகில் பல நாடுகளில் வீடியோ மூலம் தரமான குறுந்திரைப் படங்கள் தயாராகின்றன. ஆனால் தமிழில் சினிமா வுக்கு மாற்று 'வீடியோ என்பதாகக் கற்பிதம் செய்துகொண்டு தொலைக் காட்சி வடிவங்களைத் தயாரிக்கின்றார்கள்'
சினிமாவில் நினைத்துப்பார்க்க முடியாத காவியங்களை, நாவல் களை 'வீடியோ’வில் தயாரித்து சின்னத் திரையில் காட்டமுடியும். ஆனால் தமிழ்நாட்டில் பெரிய திரையில் ஒரம் கட்டப்பட்டவர்களின் ஆதிக்கம். சின்னத்திரையில் அதிகமாகி அதன் வடிவமே சினிமா போல் மாறிப்போய்விட்டது.
155 ロ

Page 80
g மாத்தளை சோமு
பெரிய சினிமாவுக்கு மாற்று, சின்ன சினிமா, என்றாகிவிட்டது. சின்ன சினிமா, என்றாகிவிட்ட சின்னத்திரைக்கு வரைவிலக்கணமே வேறு இதனை பல நாடுகள் பயன்படுத்துகின்றன. சிங்கள மொழியில் கூடத் தொலைக்காட்சி திரைவடிவங்கள் தரமானதாயும் ஆக்கபூர்வ மாகவும் இருக்கின்றன. தமிழில்? சினிமாவின் நிழலாக அதுமாறிப் போய்விட்டது. தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் வீடியோ மூலம் பல முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் அவைகள் அவ் வடிவங்களை புரிந்து கொண்டதாக இல்லை, என்றபோதும் இது தொடக்கக் காலம் என்பதால் ஆழமான விமர்சனத்தை வைக்கமுடியாது. கனடாவிலும் வீடியோ மூலம் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும் அத்தகைய முயற்சிகள் பொழுதுபோக்கு அம்சத்தையே முன்னிறுத்தி நிற்கின்றன.
நவராகங்கள் என்ற ஒளி இழை நாடாவினைப் (வீடியோ கஸட்) பலர் ஒன்றிணைந்து கனடாவில் வெளியிட்டுள்ளனர். அந்த நவரா கங்கள் என்ற முயற்சியில் சம்பந்தப்பட்ட எஸ். பாலச்சந்திரனை தற்செயலாகச் சந்தித்தேன் சில நிமிடங்கள் அந்த நவராகங்களைப் பார்த்தேன்.
தென்னகத் திரைப்படம் பாடல்களுக்கு மீளவும் அபிநயம் பிடிக் கிற காட்சிகளைக் கனடா வாழ்க் கலைஞர்களை வைத்து புதிய, புதிய காட்சி சூழலில் வைத்து எடுத்திருக்கிறார்கள். இதில் புதிதாக கலை முயற்சிகளோ வெளிப்பாடோ இல்லாதபோதும், காட்சி அமைப்பு, தொகுப்பு, படப்பிடிப்பு நேர்த்தி என்பன பாராட்டும் படியாக இருந்தது.
ரவி அச்சுதன் என்ற கலைஞரே படப்பிடிப்பைத் தரமாக செய் திருந்தார். பிரபல டைரக்டர் பாரதிராஜா முன்னுரை வழங்கியிருந்தார்.
இக்கலைஞர்கள் நினைத்தால் அசலாய் ஒரு படைப்பை முன் *னிறுத்த முடியும். எனவே அதுபற்றி எஸ். பாலச்சந்திரனிடம் பேசி னேன். அதற்கு அவர் கொடுத்த பதில் உன்னிப்பாகக் கவனிக்கக் கூடி யது. “தென்னகத் திரைப்படங்களில் மூழ்கிய நம்மவர்களை ஒரே அடி யாக எம் பக்கம் இழுக்க நாமே பாடல் எழுதி அதற்கு இசையமைத்து காட்சி அமைப்புக்களை ஏற்படுத்தினால் அதன் மூலம் வெற்றியடைய முடியும் என்பது இயலாத காரியம். இந்த மாயையில் இருந்து விடுபட வேண்டுமானால் தென்னக சினிமாப் பாடல்களுடன் எமது பாடல்கள் சிலவற்றையும் புகுத்தி அதனோடு இணைத்து மெல்ல மெல்லத்தான்
56

லண்டன் முதல் கனடா வரை.
எங்கள் கலைகளை நம்மவர்கள் மத்தியில் வெளிக்காட்ட முடியும் என்பதே யதார்த்தம்.
மக்கள் ஒருவித ரசனையில் மூழ்கிய பின்னர் அதனை அகற்றுவ தென்பது பெரிய கடினமான விடயம் என்பதை முதலில் புரியாது. காவடியெடுத்தால் அது அன்னக் காவடியாகத்தான் இருக்கும்.
அந்த வகையில் நவராகங்கள் ஒன்றில் கிடைத்த வரவேற்பைப் பயன்படுத்தி, நவராகங்கள் இரண்டாம் பாகத்தையும் சற்று மேலும் மெருகேற்றித் தென்னகப் பாடல்களையும், நம்மவர் பாடல்களையும், புகுத்தி ஒரு திருப்புமுனையில் உருவாக்கியிருக்கின்றேன். எதிர் காலத் தில் மிகத் தரமான குறும்படங்கள் தயாரிக்க நினைத்துள்ளேன்.
பாடல், நடிப்பு, அறிவிப்பு என பல கலைகளில் முத்திரை பதித்த எஸ். பாலச்சந்திரம், கே. எஸ் பாலச்சந்திரன், எஸ். எஸ். அச்சுதம் பிள்ளை ஆகியோரின் மேடை நாடகங்களில் நடித்து அவர்களின் பாராட்டுதல்களைப் பெற்றுக் கொண்டார்.
சிங்கப்பூரில் இருந்தபோது பல மேடைகளில் பாடியதும், சிங்கப் பூர் இந்தியன் இசைக் குழுவின் தயாரிப்புகளும் கனடாவில் நவரா கங்கள் தயாரிக்க பாலச்சந்திரனுக்கு உதவின. தற்போது நவராகங் களின் மூன்றாவது பாகம் விரைவில் வெளிவரவிருக்கின்றது.
அதுபோக பெயர் சொல்லும் முயற்சியாக ஆத்ம ஜோதி நா. முத்தையா அவர்களின் நினைவு மலராக அறுபது நிமிடம் ஓடக் கூடிய ஒரு 'வீடியோ கசெட்டை வெளியிட்டுள்ளார் அவர். ஆத்ம ஜோதி முத்தையா அவர்கள் இலங்கையில் நாவலப்பிட்டியில் இருந்து ஆன்மீகப் பணிகளைச் செய்து வந்தார். ஆத்மஜோதி என்ற ஆன் மீகச் சஞ்சிகையை மாதாமாதம் வெளியிட்டார்.
அச்சஞ்சிகைக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆத்ம ஜோதி சஞ்சிகை பலரிடம் நன்மதிப்பு பெற்றதால் அதன் ஆசிரியராக இருந்த நா. முத்தையா பின்னர் ஆத்மஜோதி முத்தையாவானார். அவர் மலையகத்தில் இருந்து தமிழுக்கும் ஆன்மிகத்திற்கும் தொண்டாற்றி வந்தார். இனக்கலவரத்தில் (1983) அவருடைய இல்லமும் அச்சகமும் எரிந்துபோயின. மனம் தளர்ந்து அவர் வடபகுதியில் குடியேறினார்.
பிறகு கனடாவில் குடியேறினார். கனடாவில் தமிழ் ஆன்மிகப் பணிகளைத் தொடர்ந்து செய்து அங்கேயே அமரத்துவம் எய்தினார்.
57

Page 81
மாத்தளை சோமு
கனடாவில் முதன்முதலாக வெளிவந்த 'ஏமாற்றம்' வீடியோ திரைப்படம் முழு அளவில் திருப்தியைத் தராவிட்டாலும் கனடாவில் தமிழ்த் திரைப்படத் துறைக்கு அதுதான் வித்திட்டது.
பிறகு நவராகங்கள் வந்தது. அடுத்தாக உயிரே உயிரே என்ற பெயரில் அனுபவம் மிக்க கலைஞர்களின் முயற்சியில் வீடியோ திரைப் படம் வந்தது. இது தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ராகமலர்கள். மனோரஞ்சிதம் சுதந்திரதாகம், அதிசயராகங் கள், தரிசனம் ஆகிய ஒளிநாடாக்கள் வந்தன.
மிக அதிக பணச் செலவிலே 35mm இல் படமாக்கப்பட்ட புனி தம் மற்றும் கனடிய - இந்தியக் கூட்டுத் தயாரிப்பான தமிழ் மகன் ஆகி யவை எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
இறுதியாக கனடாவில் வெளியான 'எங்கோ தொலைவில்' என்ற ஒளி வடிவம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றதோடு கனடிய தமிழ்த் திரைக்கலையின் வளர்ச்சியைக் காட்டியது என்ற போதிலும் கனடிய (தமிழர் புலம்பெயர்ந்த ஏனைய நாட்டு முயற்சிகள்) தமிழ்த்திரை வடி வங்கள் தென்னிந்திய வர்த்தக ரீதியான திரை வடிவங்களோடு மோத வேண்டும். டொரண்டோவில் நிரந்தரமாய்ப் பல தமிழ்ப்பட மாளிகை கள் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடுகின்றன.
தமிழ் நாட்டில் வெளியாகும், அதே நாட்டில் வெளியாகும் அதே நாளில் கனடாவிலும், ஏனைய நாடுகளிலும் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
ஒரு காலத்தில் 'தென்னகமெங்கும்' என்ற விளம்பரம் செய்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் இப்போது 'உலகெங்கும்' என்று விளம்பரம் செய்கிறார்கள். வர்த்தக ரீதியாக எதிர்பார்ப்பு தருகிற இயக்குநர் அல்லது நடிகரின் படங்கள் பூஜை போடும் போதே உலக உரிமைக்கான பணம் கொடுக்கப்படுகின்றது.
தரமான திரைவடிவங்கள் தமிழகத்தில் மட்டுமல்ல. ஏனைய நாடுகளில் கூட மக்கள் ஆதரவு இல்லாமல் தவிக்கின்றன. இந்த இடத் தில் சமீபத்தில் வெளியான வித்தியாசமான திரை வடிவமான 'முகம் (நாசர் நடிப்பு) பற்றி எழுதியதை நினைவுபடுத்துகின்றேன். 'முகம் தரமான சினிமா நடிப்பு இயக்கம் புதிய பாதையைக் காட்டுகிறது. ஆனால் இந்தப் படத்திற்கு விருதுகள் வரலாம். மக்கள் வருவார்களா?
D 58

கனடாவில் - 33
நவராகங்கள் ‘பாலச்சந்திரனை மாலை வேளையில் சந்தித்து விட்டு, இரவு உதயன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களைச் சந்தித்தேன். 64 பக்கங்களில் வாரா வாரம் வெளியாகும் 'உதயன்' பத்திரிகை இலவசமாய் வாசகர்களைச் சென்றடைகிறது. செய்திகள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதை, தொடர் கதை என்பன போன்ற அம்சங்கள் அந்த இதழில் இருந்தபோதும் அதிகமான பக்கங்களில் விளம்பரங்கள் இருப்பதையிட்டு, எதுவும் சொல்ல முடியாது. காரணம் இதழுக்கு விலையே இல்லையே!
இலங்கையில் இருந்தபோது 'உதயன்' லோகேந்திரலிங்கம் மலையன்பன்' என்ற பெயரில் கவிதை, கட்டுரை, சிறுகதை என்பன எழுதியிருக்கிறார். அந்த ஆர்வம் கனடா வந்ததும் 'உதயன் இதழை வெளியிட வைத்திருக்கிறது. முழுக்க விளம்பரங்களை நம்பி "உதயன்' வந்தபோதும் அதற்கு ஒரு வாசகர் கூட்டம் இருக்கிறது. இல்லாவிட் டால் உதயன் ஆண்டு விழாவை எப்படி நடத்த முடியும்? நான் அவ ரைச் சந்தித்த போது உதயன் ஆண்டு விழாவில் தீவிரமாக இருந் தார் அவர் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைர முத்து வருவதால் உற்சாகமான ஏற்பாடுகள்
ஆண்டுவிழா ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன? என்று கேட் டேன் நான்.
லோகேந்திரலிங்கம் புன்னகை செய்து கொண்டே ஒரு கடிதத் தைக் காட்டினார். பிறகு சொன்னார். “இது போன்ற கடிதங்கள் இங் குள்ள தமிழ் அமைப்புகளுக்கும், தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் அனுப் பட்டிருக்கின்றன. கடிதத்தைப் படியுங்கள்.”
அந்தக் கடிதத்தைப் படித்தேன். அது கவிஞர் வைரமுத்துவின் வருகையைக் கண்டித்து அனுப்பப்பட்ட ஒரு வகையில் பார்த்தால் மொட்டைக் கடிதம்.
s கனடாவிலுமா மொட்டைக் கடிதங்கள்? என்று நான் கேட்டபோது அவர் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது “எனக்குப் பல மொட்டைக் கடிதங்கள் வரும். அதனையிட்டு நான் கவலைப்
159 D

Page 82
0 மாத்தளை சோமு
படவில்லை. ஆனால் கனடிய அரசுக்கு இல்லாததையும் பொல்லாத தையும் சேர்த்து கடிதங்கள் அனுப்புவதுதான் நம் இனத்தையே பாதிக் கிறது அதுதான் என் கவலை.” அப்போதுதான் எனக்கு தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் "மொட்டைக் கடிதம் எழுதுவதும், கை குலுக்கிக் கொண்டே கைகுலுக்கியவரையே அர்த்தமில்லாமல் தாக்கிப் புனை பெயரில் எழுதுவது ஒரு மனோவியாதியாக சிலரிடம் வியாபித் திருப்பதே புரிந்தது.
நான் அவரைப் பார்த்தேன். அப்போது அவர் பேசத் தொடங் கினார். “நேருக்கு நேரான ஆக்க பூர்வமான விமர்சனத்தை நான் விரும்புகின்றேன். உதயன் பத்திரிகையில் விளம்பரம் அதிகம் என்று ஒரு விமர்சனம் உண்டு. அது உண்மை. ஆனால் நாங்கள் பத்திரி கையை இலவசமாகவே கொடுக்கின்றோம். கனடாவில் அதிகமான பிரதிகள் அச்சிடப்படுவது உதயன் இதழே. இதனை வாராவாரம் வெளியிட நாங்கள் எதிர்நீச்சலே போடுகின்றோம்.”
கடைசியாக லோகேந்திரலிங்கத்திடம் உதயன் ஆண்டு விழா விற்கான வாழ்த்துக்களைச் சொல்லி விட்டு விடை பெற்றேன். அன்று இரவு முழுவதும் எதிர்நீச்சல் பற்றியே என் சிந்தனை இருந்தது. கூடவே எதிர் நீச்சல் திரைப்பட நாகேஷின் வேடமும் நினைவுக்கு வந்தது.
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சாதனை செய்தவர்கள் யாவரும் நிச்சயம் எதிர்நீச்சல் போட்டிருப்பார்கள். எதிர்நீச்சல் போடா மல் வெற்றி கிடைக்குமா என்ன?
அடுத்த நாள் "கொக்காகோலா குளிர்பானத்தோடு எதிர்நீச்சல் போட்டு வெற்றிக்கண்ட ஒரு இலங்கைச் தமிழரைச் சந்தித்தேன். அவர் போர்ட்டலோ (PORTELLO) என்ற குளிர்பானக் கம்பனி உரி மையாளர் ராமலிங்கம் ராசதுரை. ராசதுரை நானு ஓயாவில் பிறந்தவர். அவரின் தந்தை ராமலிங்கம் சாவகச்சேரியைச் சேர்ந்தவர். நானு ஒயாவில் நீண்ட காலம் தொழில் செய்து அப்பகுதி மக்களின் நன் மதிப்பைப் பெற்றவர்.
என்னோடு பேசியபோது ராசதுரை நானுஓயா நினைவுகளை மீட்டுக் கொண்டார். ‘ரயில் பயணிகளின் வசதிக்காக நானு ஒயா ரயில்வே ஸ்டேசனருகே காந்திமடம் 1955இல் திறக்கப்பட்டது. அது திறக்க என் தந்தையும் பாடுபட்டார். அதனைத் திறந்து வைத்தது அட்ட
60

லண்டன் முதல் கனடா வரை.
போது தமிழகத்திற்கு வந்த பெருந்தலைவர் காமராஜர், அவரோடு அனந்த நாயகியும் வந்த ஞாபம். இந்த மடம் ரயிலில் வரும் பயணிகள் குளிரில் நடுங்காமல் தங்கிப்போகக் கட்டப்பட்டது. ஒரு வாசிகசாலை யையும் என்தந்தையார் அப்பகுதியில் திறந்தார். நானுஒயாக்காரர் களுக்கு ராமலிங்கம் என்ற என் தந்தையைத் தெரியும்.”
நானு ஓயா நினைவிலிருந்து மீண்ட ராசதுரை தான் கனடா வந் ததைச் சுருக்கமாகச் சென்னார் “பொறியியல் படித்து ஒமானில் 13 வருடங்கள் பணிபுரிந்துவிட்டு கனடா வந்து பல மாதங்கள் எதுவும் செய்யாமல் என்ன செய்யலாம் என்ற யோசனையில் சும்மாவே இருந் தேன். பிறகுதான் இந்தத் குளிர்பானக் கம்பனியைத் தொடங்கினேன். போர்ட்டலோ ஒரு பிரிட்டிஷ் கம்பனி. கனடாவில் அவர்களுக்கு விற் பனை முகவரே இல்லை. நான் அவர்களோடு தொடர்புகொண்டு கனடாவிலேயே போர்ட்டலோ குளிர்பானத்தை தயாரித்தேன். பிரிட் டனின் போர்ட்டலோ தரம் நிறம் அடிப்படையில் குளிர்பானம் தயா ரித்தோம். கொக்காகோலாவில் உள்ள கபின் (Caffeine) இதில் இல் லாததால் விற்பனை பெருகியது. றொரன்டோவில் உள்ள கொக்கா கோலா கம்பனி எங்களின் விற்பனை வளர்ச்சியைக் கண்டு அஞ்சியது. சில சுப்பர் மார்க்கட்டுகளில் போர்ட்டலோ உள்ள குளிர்சாதனப் பெட்டியை அகற்றினால்தான் கொக்கா கோலா தருவோம். என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் பல சுப்பர் மார்க்கட்டுகள் போர்ட்ட லோவை வாங்க மறுத்தன.”
"அப்புறம் என்றேன்” ஆவலோடு.
“நாங்கள் சிறிய கடைகளில் வைத்து விற்றோம் அதே நேரத்தில் போர்ட்டலோ இல்லாததால் வாடிக்கையாளர்கள் அப்பர் மார்க்கட் நிறு வனத்தோடு பேசியிருக்கிறார்கள். பிறகு வேறு வழியின்றி மறுபடியும் போர்ட்டலோ அப்பர் மார்க்கட்டுக்குள் புகுந்தது: எங்கள் வாடிக்கை யாளர்கள் வெள்ளைக்காரர்கள். எனவே கடிதங்கள் எழுதியும் இண் டர் நெட்டில் தகவல் கொடுத்தும் எங்களை உற்சாகப்படுத்தினார்கள். இன்று போர்ட்டலோ மட்டுமல்ல சுத்தமான சோயாவையும் அமெ ரிக்காவில் பயிரிட்டு விற்கிறோம். நல்ல வரவேற்பு’ என்று சொன்னவர் ஒரு போர்ட்டலோ போத்தலைத் தந்தார். பிறகு சொன்னார், “இதை பிரிட்ஜில் வைத்தால் போத்தலின் மேலே DRINK UPITS COOL என்ற எழுத்துக்கள் மின்னும்” என்றார். நான் அப்போதே அந்த போத் தலை பார்த்தேன். எந்த எழுத்தும் தெரியவில்லை.
16 o

Page 83
மாத்தளை சோமு
பிறகு போர்ட்டலோ தொழிற்சாலையை சுற்றிப் பார்த்தேன். சிறிய தொழிற்சாலை எதிர்காலத்தில் பெரிதாகக் கூடும்.
“உங்கள் முயற்சிக்கு எப்படியான வரவேற்பு?’ என்ற கேள்வி ராசதுரையை ஒரு நிமிடம் சிந்திக்க வைத்திருக்க வேண்டும். ஒரு நிமி டம் மெளனம், பிறகுப் பேசினார். “கனடாவில் கடன் பெற்று எமது Qg5 TgaOG) bl 55) ua) Guriésair ua) Whole Sale Business People காத்திருக்கிறார்கள். ஆனால் நேரம் தவறாது அதைத் திரும்பிக் கொடுத்துக் கடன் உதவி செய்தவர்களின் நன்மதிப்பைப் பெறுவது முக்கியமானது. எங்களின் கொடுக்கல் வாங்கல் நன்றாக இருந்தால் Credit Rating அவர்களாகவே உயர்த்துவார்கள். எடுக்கிற கடனை வியாபாரத்தைத் தவிர வேறு எதிலும் செலவழிக்கக் கூடாது. மேலும் தமிழ் மக்களின் வியாபாரங்கள் தனித்து இருந்து கனடிய நீரோட்டத் தில் எதிர்நீச்சல் போடுவது கடினமானது. சில பொது விடயங்களில் நாம் ஒன்று சேர்ந்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும். எதிரி என எண்ணி மற்றவர்களை அழிப்பதைவிட எங்கள் வியாபாரத்தை அழ காக அனுகூலமாகச் செய்வதே வெற்றிக்கு வழி”
அவர் சொன்ன வார்த்தைகளில் அனுபவ முத்திரைகளே இருந் தன. அவர் கனடா வந்துதான் வர்த்தக நிறுவனத்தையே தொடங்கினார்.
பல்வேறு பணிகள் இருந்த போதும் ராசதுரை அவர்கள் என்னை ஒரு சுப்பர் ஷொப்பிங் காம்ளக்சுக்கும், ஒரு புத்தகக் கடைக்கும் அழைத்துச் சென்றார். புத்தகக் கடை என்னை கவர்ந்தது மிகமிக பெரிய புத்தகக் கடை சுருக்கமாகச் சொன்னால் புத்தகக்கடல் அது எனலாம். அதுபோன்ற பெரிய கடையை சிட்னியில் கூட நான் பார்க்கவில்லை. எல்லா வகையான புத்தகங்களும் அங்கிருந்தன. அந்தக் கடையின் உள்ளேயே உட்கார்ந்து தேநீர் காபி குடிக்க கடையும் இருந்தது. அந் தப் புத்தகக் கடைக்குள்ளே ஒரு தடவை வலம் வந்து செவ்விந்தியர் களைப் பற்றியப் புத்தகங்களையும் அவர்களிடையே வழங்கி வந்த ஆதிகாலக் கதைகள் அடங்கிய புத்தகங்களையும் வாங்கி கவுன்ட ரில் பில்' போடக் கொடுத்தேன். பில் வந்தது. என்னருகில் இருந்த ராசதுரை “நான் கொடுக்கின்றேன்” என்று பணத்தை எடுத்தார். நான் அதனைத் தடுத்து நானே பணத்தைக் கொடுத்து விட்டு சொன்னேன். “உங்களின் அன்பே போதும் பணம் எதற்கு? எழுத்தாளன் என்ற பெயரைச் சொல்லி இதுவரை எவரிடமும் என் புத்தகம் போட நிதி
162

லண்டன் முதல் கனடா வரை.
கேட்டதே இல்லை. அதே நேரத்தில் என் புத்தகங்களை எவருக்கும் இலவசமாய்க் கொடுத்ததில்லை
அப்போது ராசதுரை சொன்னார். “நான் பலரைச் சந்தித்திருக் கின்றேன். அதில் சிலர் ஏதாவது வாங்கித் தருவார்களா? என்று எதிர் பார்ப்பார்கள் நீங்கள் வித்தியாசம். அடுத்தமுறை குடும்பத்தோடு வர வேண்டும்.
நான் யோசித்தேன். அடுத்த முறை அது எப்போது என்று தெரி யாது. இந்தப் பயணமே நானே மேற்கொண்ட பயணம். இதுகூடப் புலம் பெயர்ந்த தமிழர்களைச் சந்திக்கவும் புலம் பெயர்ந்த தமிழ் எழுத்து முயற்சிகள் எப்படி இருக்கின்றன என்பதை அறியவும் உதவியாக அமைந்தது.
கனடாவில் - 34
கனடாத் தமிழர்களிடையே புகழ் பெற்ற 'ஈஸ்டவுன் (East town Restaurants & Banquet Hall) LDGioTLug56) (b. 9a).5 fu& 35 திப்பு நடந்தது. அந்தக் கூட்டத்தை வி. எஸ் துரைராஜாவும், கனக அரசரட்ணமும் இணைந்து நடாத்த எனக்கு உதவினார்கள். அந்தக் கூட்டத்திற்குப் பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கி னார். கவிஞர் கந்தவனம் அவர்கள் ஒரு அருமையான அறிமுக உரையை “நான்காவது உலகம்’ என்ற குறுநாவலுக்கு வழங்கினார்.
மாத்தளையில் பணி புரிந்ததை நினைவுபடுத்திய கவிஞர் கந்த வனம் “நான்காவது உலகம் தொகுதியில் மூன்று குறுநாவல்கள் இருக் கின்றன. ஆனால் அவைகளைப் பெரிய சிறுகதைகளாகவே தருகின் றேன். அதில் உள்ள ‘ஒரு தோட்டத்து நாதஸ்வரம்' அருமையானது யாழ்ப்பாணத்தையும், மலையகத்தையும் இணைத்து எழுதப்பட்டுள் ளது. இரு பிரதேசத்தையும் நன்கு அறிந்தவன் என்ற முறையில் அந்தக் குறுநாவல் நன்கு எழுதப்பட்டிருக்கிறது” என்று பேசினார். அதன் பிறகு, பதிலுரை வழங்கினேன் நான். பதிலுரைக்குப் பின்னர் பல கேள் விகள் பார்வையாளர்களிடமிருந்து வந்தன. சில கேள்விகள் சர்ச்சையை உருவாக்கும் விதமாக எழுந்தன. (அதனை இந்தக் கட்டுரைத் தொட ரில் எழுதுவது பொருத்தமில்லையென நினைக்கின்றேன்) எல்லா வற்றுக்கும் என் பதிலைத் தெரிவித்து விட கூட்டம் முடிந்தது
63

Page 84
0 மாத்தளை சோமு
அன்றையை கூட்டத்தில் நம்நாடு வார இதழ் ஆசிரியர் தீவ கம், வே. இராஜலிங்கம், கனடா முரசொலி ஆசிரியர் கே. ரீ. சண்முக ராஜா, நான்காவது உலகம் முதற்பிரதி வாங்கிய சிவபூரீ என். குமார சாமி குருக்கள், உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டை கனடாவில் நடத்திய எஸ். செல்லையா. திருமதி லலிதா புரோடி, இலங்கை வானொலி தொலைக்காட்சி, முன்னாள் அறிவிப்பாளர் கமலா தம்பி ராஜா, தமிழன் வழிகாட்டி செந்தி ரோயல், பேங்க் முகாமையாளர் எஸ். சுந்தர மோகன், வீ. திவ்வியராஜன் ஆகியோர், கூட்டம் முடிந்த பிறகும் என்னோடு பேசினார்கள். அவர்கள் எல்லோரும் போன பிறகு ஒரு இளைஞர் வந்து “என் கையைக் குலுக்கி. முரளிதரன். கவிதை எழுதுபவன்’ என்றார். “ஓ கடைக்குள் தேசம் முரளிதரனா? உங்களை நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றேன் நான். மலையகத்தில் புதுக் கவிதைகளில் புகழ் பெற்றவர் முரளிதரன். கடைக்குள் தேசம் அவரின் புதுக்கவிதை நூல் அவரைக் கவிதை உலகில் தூக்கி நிறுத்தியது. அவர் தற்போது கனடிய பல்கலைக் கழகம் ஒன்றில் ஆய்வுக் கல்வி மேற்கொண்டிருக்கிறார்.
முரளிதரன் என்ற பெயரை மலையகமே ஏன் இலங்கையே மறக் காது. கிரிக்கட் உலகில் 'முரளிதரன்' என்ற பெயரில் ஒரு வீரர் இருக் கிறாரே! இலங்கை அணி உலகக் கிரிக்கட் கோப்பை வென்றபோது இலங்கை அணியோடு ஆடியவர். அவரின் பந்து வீச்சை உலகின் பல நாடுகளும் விளையாட்டு நிபுணர்களும் அங்கீகரித்த போதிலும், ஆவுஸ்திரேலியாவிற்கு முரளிதரன் வரும்போது, அவரின் பந்து வீச்சைப் பற்றி இங்கு தேவையில்லாத முறைப்பாட்டை முன் வைக் கிறார்கள். கிரிக்கட்டைப் பொறுத்தவர்ை எவ்வளவு பலமானவர்களோ அவுஸ்திரேலியர்கள். அவ்வளவுக்குப் பலவீனமானவர்கள். அதனால் தான் தேவையற்ற முறைப்பாடுகள்
எனது தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டு முரளிதரன் விடை பெற்றுக் கொண்டார். பிறகு, நான் அடுத்தது என்ன என்பது போல் கனக அரசரட்ணம் அவர்களைப் பார்த்தேன். அவர் உடனே ஈஸ்டவுன் மண்டப உரிமையாளர்களான ஜெய் மற்றும் சசி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். ஈஸ்டவுன் மண்டபம் கனடியத் தமிழர் களிடையே நன்மதிப்பைப் பெற்றது. திருமணம், சாமத்தியச் சடங்கு போன்ற வைபவங்கள் தொடர்ந்து அங்கு நடந்து கொண்டே இருக் கும். ஒரு திருமணம் எவ்வாறு நடக்கும் என்பதை விளக்கும் வீடி
D 64

லண்டன் முதல் கனடா வரை.
யோவைப் போட்டுக் காட்டினார். பிறகு அந்த மண்டபத்தில் நடந்த திருமணப் படங்களைக் காட்டினார். அதில் கனடிய வெள்ளைக்கார ஆண் மற்றும் பெண்களைத் தமிழர்கள் மணந்து கொள்ளும் திரு மணப் படங்களும் அடக்கும். ஆண்டுக்கு ஐந்து அல்லது ஆறு கனடிய வெள்ளைக்காரர்களுடனான தமிழர்களின் கலப்புத் திருமணம் தமிழ் முறைப்படியே நடக்கிறதாம். s
இந்த மண்டபத்தை ஏன் தொடங்கினீர்கள்? வேறுவேறு தொழில் கள் இருக்கும் போது.”இந்தக் கேள்வியைக் கேட்டேன் நான்.
“மிக அவசரமான கனடிய வாழ்க்கையில் ஒரு திருமணத்தை ஒரு குடும்பம் நடத்தி முடிப்பது மிக சிரமமான வேலை, அதிகமான அலைச்சல். தவிப்பு அதிகம். பணத்தைச் செலவு செய்தும் திருப்தி இல்லை. பலர் திருமணம் நடத்தப் பட்ட கஷ்டத்தைப் பார்த்தேன். அப் போது தான் நாமே ஒரு மண்டபம் தொடங்கி வர்த்தக ரீதியாக உதவி னால் என்ன என்று நினைத்தேன். பிறகு, இதனைத் தொடங்கினேன். இன்று பல வருடம் அனுபவம் எங்களுக்கு இருக்கிறது. உதாரணமாக, திருமணத்திற்கு எங்கள் மண்டபத்தை முன்பதிவு செய்தால் ஐயர், மேளதாளம், மணவறை அலங்காரம் விருந்தினர் உபசரிப்பு, விருந்து பரிமாறல் இலை அல்லது தட்டு) பூமாலை, மலர்கள் என எல்லாவற் றையும் நாங்களே பார்த்துச் சிறப்பாகப் பூர்த்தி செய்கின்றோம். பல வெள்ளைக்காரர்கள் எங்களோடு பணி புரிகிறார்கள். தமிழ் முறைப்படி வரவேற்புச் செய்யப் பல வெள்ளைக்கார இளம் பெண்களைப் பழக்கி வைத்திருக்கிறோம். மண்டபம் முன்பதிவு செய்தவர்கள் மண மக்களை யும், உறவினர்களையும், நண்பர்களையும் மாத்திரம் அழைத்து வந் தால் போதும். எங்களை மண்டபத்தில் திருமணம் செய்கிற மண மக் களுக்கு வலம்புரிச் சங்கு பரிசளிக்கின்றோம்” என்று ஜோய் மிகத் தெளிவான பதிலைக் கொடுத்தார்.
திருமணம் நடக்கிற மண்டபத்தை ஜோய் அவர்களோடு சுற் றிப் பார்த்து விட்டு, காரில் ஏறினேன். காரை ஓட்டிக் கொண்டே கனக அரசரட்ணம் அவர்கள் ஒரு செய்தியை அப்போதுதான் சொன் னார். இன்று நடந்த இலக்கியக் கூட்டத்துக்கு கட்டணம் வாங்க வில்லை. மற்றும் பரிமாறப்பட்ட தேநீருக்குக் கூடக் கட்டணமில்லை.
ஈஸ்டவுன் ஜோய்க்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத் துக் கொண்டேன். கார் ஒரு உணவகத்தின் முன்னே நிறுத்தப்பட்டது.
65

Page 85
D மாத்தளை சோமு
காரைவிட்டு இறங்கி உணவகத்தின் பெயரைப் பார்த்தேன். பெயர் ‘கிராமத்து விருந்து றொரன்டோவில் இதுபோன்ற தமிழ்ப் பெயர் களுடன் பல (பிருந்தாவனம் - மொக்கன் கடை - விறாந்தை) உணவு விடுதிகள் இருக்கின்றன. “இன்று உங்களுக்குக் கிராமத்து விருந்து” என்றார். கனக அரசரட்ணம். அந்த உணவு விடுதியின் உள்ளே போய் ஒரு மேஜையின் எதிரும் புதிருமாய் நானும் அரசரட்ணமும் உட் கார்ந்தோம். அடுத்த சில நிமிடங்களில் அறுசுவையுடன் கூடிய பதி னாறு வகைக் கூட்டுப் பொரியல் என உணவு வந்து சேர்ந்தது. மிகச் சுவையான உணவு, கடல் கடந்த நாட்டில் அதுவும் கனடாவில் அவ் வளவு சுவையான ஒரு தமிழ் உணவை நான் எதிர்பார்க்கவில்லை. உணவு சாப்பிட்டு முடிந்ததும், ஒரு குறிப்பேட்டைக் கொண்டு வந்து கொடுத்தார்கள் அது கிராமத்து விருந்து உணவு நிலையத்திற்கு வந்து போகிறவர்களின் குறிப்புகள் அடங்கிய குறிப்பேடு. அதில் கிராமத்து விருந்துக்கு வாழ்த்து எழுதிவிட்டு வெளியே வந்தேன்.
இரவு துரைராஜா வீட்டுக்குப் போனபோது அங்கே எனக்காக ஒரு சைனீஸ் டேக் எவே டின்னர் காத்திருந்தது. அதை அனுப்பிய வர் ரோயல் பேங்க் முகாமையாளர் மோகன். கிராமத்து விருந்தில் சாப்பிட்டு விட்டதால் அதை பிரிட்ஜில் வைக்க சொல்லிவிட்டு மோக னோடு தொலைபேசியில் பேசினேன். காலையில் தன்னை பேங்கில் வந்து சந்திக்கும்படிக் கேட்டுக் கொண்டார். மறுநாள் காலையில் பேங் கிற்குப் புறப்பட்டபோது ஒரு தொலைபேசி அழைப்பு, எனக்குத் தான். பேசினேன். என்னோடு பேசியவர் திவ்வியராஜன். கவிதை, பாடல், மெல்லிசை துறைகளில் ஆர்வமானவர் என்னோடு எழுத்து இலக்கியம் பற்றிப் பேசினார். “இலக்கியக் கலந்துரையாடலில் சிலர் எழுப்பிய கேள்விகள் அர்த்தமற்றவை. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஒரு இலக்கு உண்டு. இலக்கு உள்ளதுதான் இலக்கியம். சொந்த அளவு கோலால் எழுத்தாளனின் அளவுகோலை மதிப்பிடக் கூடாது. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் என்றார். பிறகு நாங்கள் புலரும் வேளையில் என்ற மெல்லிசைத்தட்டு வெளியிட்டிருக்கிறோம். அதில் பல பாடல் களை வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன், சண்முகம், சிவலிங்கம் ஆகிய பல ருக்குத் தெரிந்த ஈழத்துக் கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். அமரர் மஹாகவியின் பாடலையும் சேர்த்திருக்கிறோம். தயவுசெய்து நீங்கள் ஒரு இசைத் தட்டை வாங்கிச் செல்ல வேண்டும். நாளை நீங்கள் பயணமாவதால் என்னால் கொண்டு வர முடியாது.” என்று கேட்டுக் கொண்டார்.
D 66

லண்டன் முதல் கனடா வரை. 0
“நான் கட்டாயம் கடையில் வாங்கிக் கொள்கின்றேன்” என்று சொல்லிவிட்டு, கனக அரசரட்ணம் அவர்களோடு காரில் ரோயல் பேங்கிற்குப் போனோம். போவதற்கு முன்னமே தொலைபேசியில் அவருக்குத் தகவல் கொடுத்தேன்.
அந்த ரோயல் பேங்க் தமிழர்கள் அதிகமாக இருக்கிற ஸ்காபரோ என்ற பகுதியில் இருந்தது. கனடாவில் புகழ்பெற்ற மிக முக்கியமான
வங்கி, ரோயல் பேங்க்.
ஆங்கிலம் கலக்காமல் தமிழிலேயே பேசினார் மோகன் இளைய வயது. மேலும் முன்னேறுவதற்கான ஆர்வத்தோடு இருப்பவர்.
“அவுஸ்திரேலியாவிற்கு குடியேறத்தான் முதலில் யோசித்தேன். பிறகு எப்படியோ கனடா வந்து விட்டேன். ஆனால் எனது உறவினர் கள் அங்கு தான் இருக்கிறார்கள்’ என்று சுருக்கமான அறிமுகத்தைச் சொன்னார் மோகன்.
அப்படியானால் நீங்கள் சிட்னிக்கு வந்து போகலாமே! என் றேன் நான்.
“வருவதற்கு யோசிக்கிறேன். டிசம்பர் எப்படி? டிசம்பரில் கனடா வில் குளிர் சிட்னியில் வெய்யில் சுற்றிப் பார்க்க பொருத்தமான காலம்’ என்று பதில் கொடுத்த நான், ரோயல் பேங்க் பற்றி என் பேச்சைத் திருப்பினேன்.
“தமிழர்கள் அதிகமாக இருக்கிற இந்தப் பகுதிக்கு என்னை இந்த பேங்கிற்கு மேனேஜராகப் போட்டிருக்கிறார்கள். தமிழர்களில் அதிக மான வாடிக்கையாளர்கள் இருப்பதால் தமிழ் பேசக் கூடியவர்களை (Teler) வேலைக்குச் சேர்க்க விரும்புகிறது எனது நிர்வாகம்’
“நிற துவேசம், இன வேற்றுமை எப்படி?”
“இங்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனக்குக் கீழே பல வெள்ளையர்கள் வேலை செய்கிறார்கள். நீங்களே அதனைப் பார்க்கலாம்.”
“பொதுவாகக் கனடாவில் நிறப் பிரச்சனை எப்படி? ஏன்று நான் கேட்டதற்குப் புன்னகையே பதிலாக இருந்தது. அவர் பதில் கூறாது புன்னகைத்ததற்குக் காரணம் உண்டு. பொறுப்பான பதவியில் ஒரு புகழ் பெற்ற வங்கியில் இருப்பவர் எவ்வாறு பதில் சொல்ல முடியும்?.
67

Page 86
D மாத்தளை சோமு
கருத்துச் சுதந்திரம். ஜனநாயகம் அவருக்கும் இருக்கிறதுதானே என்று கேட்கலாம். அந்தக் கருத்துச் சுதந்திரமும் ஜனநாயகமுமே கூட இன வெறியாளர்களுக்கு ஒரு கவசங்களாக மாறி இருப்பதை ஜனநாயக நாடுகளில் பார்க்கலாம். அதில் கனடா விதிவிலக்கா என்ன?
கனடாவில் - 35
றொரன்ரோ மாநகரிலும் கனடாவின் ஏனைய பகுதிகளிலும் மறை முகமாக இருக்கிற இனப்பாகுபாடு (Racism) பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவும் நிகழ்ந்துள்ளது. அதனை கடந்த காலங்களில் அங்கு நடந்த பல சம்பவங்கள் நியாயப்படுத்தியதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
றொரன்ரோ மாநகரில் மறைமுகமாய்த் தெரிகின்ற இந்த இனப் பாகுபாடு அல்லது இனவிரோதம் திடீரென்று உருவாகியதல்ல. வர லாற்று சமூகவியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி له لا நூற்றாண்டுக ளுக்கு முன்பாக உலகில் நிலவிய மூன்று பிரதான மனித இனங்களான காகேசியன் (Caucasian), மொங்கலைட் (Mongoloid), நீக்ரொயிட் (Negriod) என்பனவற்றுக்கிடையில் நிற அடிப்படையில் இனவேறு பாடு தோன்றியது. இந்த வகையில் அமெரிக்காவில் ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகக் கொண்டு வந்து குடியேற்றிய நிகழ்வு படிப்படியாக இன வேற்றுமையைத் தூண்டியது குறிப்பாக நிறவேற்றுமையை முன் னெடுக்கிற KKK என்ற பெயரில் (Ku Klux Klan) ஒரு இயக்கம் நேரடியாகக் கறுப்பர்களைத் தாக்க நீக்ரோக்களைத் தொடங்கியது. இந்த இயக்கம் தம்மை வெள்ளையர் இயக்கமாகவும் வெள்ளையர் களைப் பாதுகாக்கும் இனமாகவும் பிரகடனம் செய்தது. 10000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இவ்வியக்கத்தில் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
1984ல் Skin Heads என்ற இயக்கமும், வெள்ளையர்களுக்கா 55 G5ITL155.JLJug). 95GUTS, White Aryan Resistance (W.A.R) என்ற இயக்கம் அமெரிக்க கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டு அதன் எதிரொலிகனடாவிலும் கேட்டது.
கனடாவில் வளர்ச்சியடையும் இந்த இன விரோத நடவடிக்கைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. வெளிப்படையில் நிற வேறு
68

லண்டன் முதல் கனடா வரை. 0
பாடு முக்கிய காரணமாக இருந்தாலும், எடுக்கப்பட்ட புள்ளி விபரப் படி வெள்ளை இனத்தவர்களின் எதிர்கால அச்சமே முக்கிய காரண மாகிறது. குடியேற்றவாசிகளினால் தாங்கள் சிறுபான்மையினராக மட்டுமல்ல வேலை வாய்ப்புகள் கூடப் பாதிக்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்களாம். அதற்கேற்றாற் போல் 1995ல் Turner என்பவரது ஆய்வுப்படி 2001ல் சிறுபான்மையினர் 53 வீதம் உயர்ந்து விடுவர் வெள் ளையர் 47 வீதமாக மாறுவர் என்ற செய்தி தீவிரவாத வெள்ளையரை கலக்கத்தில் இட்டுச் சென்றுள்ளது. பொதுவாக சிட்னி, மெல்போர்ன், லண்டன். பாரிஸ், நியூயார்க், றொரன்ரோ போன்ற நகரங்களில் குடி யேற்றவாசிகளே (பல்வேறு வகையினர்) அதிகமாக உள்ளனர். இதனை யிட்டுப் பெரும்பான்மை வெள்ளையர்கள் விசனிக்கவில்லை. சில சிறு பான்மைக் குழுக்களே துவேசத்தை முன்வைக்கின்றன. ஆயினும் இவ் வின விரோதத்தினை ஒழிப்பதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.
கனடாவில் ஒருவரோடு (பெயர் விரும்பவில்லை) மேற்கண்ட இன விரோதத்தைப் பற்றிப் பேசியபோது, அவர் சொன்ன கருத்துக்கள் இனத் துவேசத்தை எதிர்நோக்குகின்ற இலங்கைத் தமிழர்கள் சிலரி டையே பல்வேறுவிதமான சாதி, பிரதேசம் என்ற துவேச உணர்வு கள் இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.
சமீபத்திலும் அதற்கு முன்னரும், கனடாவில் குடியேறிய தமிழர் களில் மிகச் சிலர் குழு மோதலில் பகிரங்கமாக மோதிக் கொண்ட செய்தி, புலம் பெயர்ந்த தமிழருக்கும், கனடா வாழ் தமிழருக்கும் சங் கடத்தைக் கொடுத்த அதே நேரத்தில் இத்தகைய சம்பவங்கள் திரி படைந்து ஏனைய நாடுகளில் புகுந்துள்ள தமிழர்களிடையே, கனடா வில் வாழ்கின்ற தமிழர்களிடையே பரவலான மோதல்கள் - குற்றச் செயல்கள் - விவாக ரத்துகள் அதிகமாகி இருப்பது போன்ற ஒரு எண்ணம் வேரூன்றியுள்ளது. இதில் உண்மை இல்லாமல் இல்லை. கனடாவில் இருக்கின்ற தமிழர்களின் தொகைக்கு ஏற்ப தகாத சம்ப வங்கள் அங்கு இருக்கலாம். ஆனால் அவைகள் மிகைப்படுத்தப் பட்டது என்பதை நான் நேருக்குநேர் உணர்ந்தேன். அதே நேரத்தில் புலம் பெயர்ந்து வெவ்வேறு தேசங்களில் வாழ்ந்தபோதும் சிலர் மட் டும் தமது குறுகிய எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதது மட்டும் தெளிவாகத் தெரிந்தன. லண்டனோ, பாரிசோ, றொரன்டோ. நியூயார்க்கோ. குடியேறிய தமிழர்களுக்கு சிலப் பிரச்சனைகள் இருக்கலாம் ஆனால்
169cm ロ

Page 87
மாத்தளை சோமு
அவைகள் அன்றாட வாழ்கையைப் பாதிக்கக் கூடியதாக இல்லை. அரசியல்வாதியின் தலையீடுகள் இல்லை.
பதினைந்து வருடமாக கனடாவில் வாழ்கிற ஒரு தமிழர் சொன் னதை இங்கு நினைவு கொள்கின்றேன். “நான் 15 வருடமாக றொரன் டோவில் இருக்கின்றேன். பல தேர்தல்கள் நடந்துவிட்டன. எனது இரு பிள்ளைகளும் பல்கலைக்கழகத்தில் இருக்கின்றார்கள். வங்கிக் கட னில் வீடு வாங்கியிருக்கின்றேன். இதுவரை என் தேவைக்காக இங் குள்ள மந்திரியையோ எம்.பி.யையோ நான் பார்க்கவில்லை. அரசி யல்வாதிகள் இல்லாமலே என் வாழ்க்கை ஓடுகிறது.” என்றவர் ஒரு பெருமூச்சு விட்ட பிறகு சொன்னார், இலங்கையில் என்றால் எத்தனை தடவை எம்.பியையும், மந்திரயையும் போய்ப் பார்க்க வேண்டியிருக் கும்! ஆபிரகாம் லிங்கன் சொன்ன உண்மையான ஜனநாயகம் இங்கு தான் இருக்கின்றது.”
அவரை ஆமோதிப்பவர் போல் தமிழ் நாட்டிலிருந்து வந்தவர் சொன்னார். “சாதாரணமான மனிதன் தண்ணீருக்கும் மின்சாரத்திற்கும் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருக்கிறது. தொலைபேசி, கேஸ் இணைப்புக்கு எம்.பி.யைப் பார்க்க வேண்டும். சாதியின் பெயரால் பிரச்சனைகள், லஞ்சம் கொடுக்காமல் எந்தக் காரியமும் நடக்காது. இதனால் தலைசிறந்த அறிவாளிகள், முன்னணியாளர்கள் நாட்டை விட்டே போய்விட்டார்கள்.”
அவர்கள் சொன்னது போல் மேற்றிசை நாடுகளில் குடியேறிய மக்கள் தங்கள் சமயத்தையும் மொழியையும் இன அடையாளத்தை யும் “அரசியல் ஆக்காமல் பின்பற்ற முடிகின்றது. ஆங்கிலம் தெரி யாதவர்களுக்கு அவரவர் மொழிகளில் தகவல் கொடுக்கிற வசதியை அரசே செய்திருக்கிறது. ஒரு தமிழன் தன் தாய்மொழியை பின்பற்றத் தடையில்லை. இதற்கு மேலாகத் தனிமனித சுதந்திரத்திற்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. பள்ளிவாசல்கள். கோயில்கள் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஒலிபெருக்கிகள் மூலம் தொழு கையையோ, பூஜையையோ வெளிப்படுத்த முடியாது. சொல்லப் போனால் மணி அடிக்க முடியாது. சுருக்கமாகச் சொன்னால் எந்த மதமும் வீதியில் வந்து கொண்டாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. பல மேற்றிசை நாடுகளில் தமிழ் படிக்கவோ, தமிழில் பேசவோ தடை யில்லை ஆனால் படிப்பதற்குப் பலர் முன் வராததுதான் பிரச்சனை தேசிய மொழியென்றும் நாட்டு மொழியென்றும் அரசியல் பேசிய பலர்
a 70

லண்டன் முதல் கனடா வரை.
மேற்றிசை நாடுகளில் தங்கள் பெயரை வெள்ளையனின் வாயில் உருளுவதற்கு வசதியாக சுருக்கிக் கொள்வதும் மாற்றுவதும் பெருகி வருகின்றது. சிலர் கிறிஸ்தவப் பெயரை (MiddleName) ஆக வைத் துக் கொண்டிருக்கிறார்கள்.
ரோயல் பேங்க் முகாமையாளர் மோகனிடம் புத்தாண்டு வாழ்த் துக் கூறி விடைபெற்ற போது, என் கையில் இருந்தது. Millenium Gift என்ற பெயர் பொறித்த (ஆயிரமாண்டியம்) ஒரு பேனா. அது மோகன் எனக்கு ஈராயிரமாண்டு வாழ்த்துக் கூறிக் கொடுத்தது.
புதிய நூற்றாண்டில் ஈராயிரம் ஆண்டு மலரயிருக்கிறது. உலகெங் கும் இந்தப் புதிய ஆயிரமாண்டியம் மலர்வதை எதிர்பார்த்து மக்கள் உற்சாகமாய் இருக்கிறார்கள். அரசியலால் இரு உலகப் போர்களை யும் மதச் சண்டைகளையும் இன மோதல்களையும் சந்தித்த ஈராயிரம் ஆண்டில் தான் விஞ்ஞானத்தில் புதுமைகளும், மருத்துவத்தில் வசதி களும், ஆன்மீகத் தலைமைகளும், அரசியல் ஞானங்களும் வியா பித்தன. ஆனாலும் இன்னமும் பூமிப்பந்தில் போர் முழக்கம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
வல்லரசுகள் யுத்தத் தவிப்பு - அணுவாயுத உற்பத்தி நிறுத்தல் என ஒப்பந்தம் செய்தபோதும் ஆங்காங்கே இருக்கின்ற சில தனியர சுகள் மதம், மொழி, இனம் என்பனவற்றின் பேரால் இன்னமும் யுத் தம் செய்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் சில 'மனிதர்கள் தான் காரணம்.
இம்மனிதப் பிறவி அற்புதமானது. அவன் அறிவும் அற்புதமானது. அந்த அறிவு கண்ட விஞ்ஞான மாயங்கள் அற்புதமானவை. இந்த உலகம் அற்புதமானது. இப்படி இத்தனை அற்புதங்கள் இருக்க இந்த மனிதன் ஏன் சாதி, சமயம், மொழி, இனம் என்பனவற்றால் 'குறுகிப் போய் நிற்கின்றான்?”
வானிலும் மண்ணிலும் பறவைகள் பறக்கத் தடைகளே இல்லாத போது, மண்ணில் தான் மனிதனுக்கு எத்தனை எத்தனைக் கோடுகள். ஒலி, ஒளி, எழுத்து ஆகியனவற்றை தனக்காக கைகட்டி சேவகம் செய்ய வைத்த இந்த மனிதன் தான் தனக்காக 'பொய்' கட்டி வாழ முயல்கின்றான்.
இத்தகைய 'மனிதர்களை மகாகவி பாரதி,
ם || 17

Page 88
மாத்தளை சோமு
ஜாதிச் சண்டை போச்சோ ? - உங்கள் சமயச் சண்டை போச்சோ ?
நீதி சொல்ல வந்தாய் ! - கண்முன் நிற் கொணாது போடா !
என்று விரட்டுகின்றான். எனவே இனிவரப் போகிற ஈராயிரமாண்டின் ஆண்டுகளில் அந்த மகாகவி பாரதி அடையாளம் காட்டித் தந்த அந்த 'மனிதர்களைக் கண்டுக் கொண்டாலே மனித வாழ்க்கை இனிமை யாகும்.
கனடாவில் - 36
தொலைபேசியில் திவ்வியராஜனிடம் பேசியபடி புலரும் வேளை யிலே' என்ற இசைத்தட்டை வாங்கிய பிறகு கடைசி நேரக்கடை சுற்றலை (Shopping) முடித்துக்கொண்டு சிட்னி புறப்படுவதற்கான ஆயத்தங் களைச் செய்து கொண்டிருந்தபோது மாத்தளையில் தமிழ்ப் பள்ளியில் அதிபராகக் கடமை புரிந்த டி விஸ்வலிங்கம் அவர்கள் பலகாரம் செய்து எடுத்துக் கொண்டு வந்தது என்னை நெகிழ வைத்தது. இத்தனைக்கும் நான் அவரிடம் படித்தவன் அல்ல. ஆனால் அவர் மாத்தளையில் பள்ளி அதிபராக இருந்தபோது, அவரோடு சமூகப் பிரச்சனை சம்பந்த மாகத் தொடர்பு வைத்திருந்தேன் நான். அவர் பிறந்தது யாழ்ப் பாணம். ஆனால் மாத்தளையில் அவர் வெகுகாலம் வாழ்ந்து மாத் தளைக்காரரானார். கனடாவிற்குப் போவதற்கு முன் மாத்தளைக்குப் போய் வந்ததால் அவர் என்னிடம் மாத்தளையைப் பற்றி அவருடைய நண்பர்களைப் பற்றி ஏனைய தெரிந்தவர்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அவருக்கு இருந்த ஊர்த் தாகம் புலம் பெயர்ந்த தமிழர்களுக் கும் இருக்கிறது. ஆனால் பலருக்கு ஊருக்குப் போய் வர முடியாத சூழ்நிலை.
விமான நிலையம் புறப்படுவதற்கு முன்னர் தொலைபேசியில் தமிழர் செந்தாமரை கனக அரசரட்ணம் அவர்களோடும் வேறு பல ரோடும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டபோது ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. அழைத்தது நம் நாடு வார இதழ் ஆசிரியர்
177 נם

லண்டன் முதல் கனடா வரை.
தீவகம் வே. இராஜலிங்கம் அவர்கள். சிட்னி திரும்பும் உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். பயணம் நலமாகட்டும் ஒரு வேண்டு கோள் நம்நாடு பத்து இதழ்களைப் போகிற வழியில் ஒரு கடையின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொண்டு போய் நண்பர்களுக்குக் கொடுங்கள்’
அவர் சொன்னது போல் நம்நாடு' இதழ்களை குறிப்பிட்ட தமிழர் கடையில் வாங்கிக்கொண்டு விமான நிலையத்திற்கு காரில் போனேன். காரை ஓட்டியவர் கலாநந்தன். என்னோடு துரைராஜா அவருடைய சகோதரியாரும் வந்தார்கள். விமான நிலையத்தில் விடை பெற்றபோது என் கண்களில் மட்டுமல்ல துரைராஜா அவர்களின் கண்களில் கூட கண்ணிர்த் துளிகள். சில நாட்களே கனடாவில் தங்கியிருந்த போதும் எங்களுக்குள் ஏற்பட்ட ஒரு நட்புணர்வின் அடையாளமே அந்தக் கண்ணீர்த் துளிகள்.
விமானத்தில் என் இருக்கையில் உட்கார்ந்தபோது லண்டனில் இருந்து வெளிவரும் புதினம்' இதழில் வந்த கட்டுரையின் சில பகுதி கள் நினைவுக்கு வந்தன.
அடுத்த நூற்றாண்டில் காலடி எடுத்து வைப்பதற்காக உலகமே திரண்டு ஆவலோடு எதிர்நோக்குகிறது. இந்த நூற்றாண்டு மாற்ற நிகழ் வில் புலம்பெயர் தமிழினம் என்னதான் செய்வதாக உத்தேசம்? ஒரு சில அமைப்புகளோ சினிமா நட்சத்திரங்களைக் கூட்டி வந்து, அவர் கள் கையால் டிக்கெட் வாங்கினால் 50 பவுன் என்றும் அந்த நடிகை யுடன் கடைக்குப் போனால் 100 பவுன் என்றும் விளம்பரப்படுத்திக் 'காசு சேர்க்கிறார்கள். லண்டனில் வாழும் பெரும்பான்மையான தமிழ் இளைஞர்கள் சாதாரணமாக தமிழ்ப் பத்திரிகைகள் கூட படிப்பதில்லை. வீடியோ படங்களும், பிறந்த நாள் பார்டிகளும் கடைகளுக்கு முன் னால் நின்று நேரத்தைப் போக்குவதும் தான் இவர்களது பொழுது போக்கு பழபெரும் குடி மக்களோ கோவில் கும்பாபிசேகம் என்று பல் வேறு தொண்டுகள் தமிழ் வளர்க்கிறார்களா? தமிழ்மான உணர்வை வளர்க்கிறார்களா?
எங்கள் முன்னோர் தமிழ்நாட்டில் இருந்து நல்லவற்றை இறக்கு மதி செய்தார்கள், பாரதியைக் கண்டார்கள். பாரதிதாசனை நேசித் தார்கள் வள்ளுவனைக் கோள் காட்டினார்கள். நல்ல கலைஞர்கள், அறிஞர்கள், கல்விமான்கள் என்று பலரையும் அழைத்துக் கலையை யும் தமிழையும் வளர்த்தார்கள்.
73

Page 89
மாத்தளை சோமு
ஒரு காலத்தில் படித்தவர்கள் பட்டம்பெற வந்தவர்கள் மட்டும் தான் லண்டனில் இருந்தார்கள். இதில் வேதனை என்னவென்றால், அவர்களும் வயிற்றுப் பாட்டுக்காகத்தான் படித்தவர்களேயன்றி அறி வாளியாக உயர்ந்து தம் இனத்தை நினைத்து வாழ்ந்தவர்கள் சிலரே. அவர்களும் ஆன்மிகமும் வேதாந்தமும் என்று நிம்மதி தேட எங் கெங்கோ போய் விட்டார்கள்.
உன் பிள்ளையை நீ பாதுகாக்க வேண்டும். அது நியதி. உன் பெற் றாரை, உற்றாரை நீ தான் பார்க்க வேண்டும் - அதுவும் கடமை.
உன் மொழியை - உன் இனத்தை - அதற்கு மேலாக நீ பிறந்த சமூகத்தை யார் காப்பது? அது யார் கடமை?
'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லி நியாயப்படுத் தக் கூடாது.
அந்தக் கட்டுரை நினைவை நிறுத்திக் கொண்டு நான் யோசித் தேன். இன்று யாவரும் கேட்கிற ஒரு மந்திரம் யாதும் ஊளரே உல கின் பல நாடுகள் புலம் பெயர்ந்தவர்களுக்கு 'யாதும் ஊராய் இருக்க லாம். ஆனால் ஏது நமது தேசம்? இன்னமும் 'வசதியான ஒரு தேசத்தை தெரிவு செய்யவில்லையென்ற கவலை புலம் பெயர்ந்த பலருக்கு இருக்கிறது.
இது கற்பனையல்ல. லண்டனுக்கு வருகிற ஏனைய நாடுகளில் வாழ்கிற தமிழர்கள் குறைபட்டதாகச் சொல்கிற ஒரு கவிதை அதனை விபரிக்கிறது.
வருகிறது விடுமுறை வாருங்கள் லண்டனுக்கு வந்த பின்பு நீங்கள் சொன்னதை வைத்து வரைந்துள்ள மடல் ஒன்று கேளுங்கள் !
அசுத்தமான வீதி அலங்கோலமாய் இருக்கே.
ஒடுக்கமான றோட்டு ஒழுங்கை மாதிரி இருக்கே. 'கனடா’க்காரர்கள் கதைத்துக் கொண்டார்கள்.
கனகாலத்து கட்டடமோ கைபட்டால் விழுந்திடுமோ ! "ஜெர்மன்காரர்கள்' முறைப்பாடு செய்தார்கள்.
என்ன மெற்றோ இது ஒழுங்கா ஒடுதில்லை. ஒருக்கால் நீங்கள்
74

லண்டன் முதல் கனடா வரை. D
எங்கள் நாட்டுக்கு வந்து பாருங்கோ "பிரெஞ்சுக்காரர் விளக்கம் தந்தார்கள்.
குழாய்த் தண்ணீர் குடித்தால் வருத்தம் வருமோ?
“டென்மார்க்காரர்கள்’ கேள்வி கேட்டார்கள்.
காற்றுக் கூடச் சுத்தமில்லையே என்று 'நோர்வேக்காரர்கள்' நொந்து கொண்டார்கள்.
வீட்டுக்குப் போனால் விசாரிக்க ஆளில்லை வேலை வேலை என்று ஒடுகினம் லண்டனிலே ‘சுவிஸ்காரர்கள்' சுட்டிக் காட்டினார்கள்.
போனால் போகுது போக்குவரத்து சுகாதார வீடமைப்பு அமைச்சர்களிடம் பேசிப் பார்க்கிறேன் சமாதானம் செய்து வைத்தேன்.
இத்தனைக்கும் அத்தனை பேரும் 'ஈழத்திலிருந்து அகதிகளாக ‘புலம் பெயர்ந்து' அகதிகளாகப் புலம் பெயர்ந்து இங்கு வந்தவர்கள் தானே'. வந்த இடத்திலும் எந்த இடம் நல்ல இடம் என்பதுவும் எங்களுக்குப் பிரச்சனைதான்.
(கவிதை - ஆவரங்கால் மீரா)
அதே நேரத்தில் பல முதிய வயதினர் அழகான அந்த பனைமரத் துடன் கூடிய சொந்த ஊரைப் பார்க்க வேண்டும். பிரச்சனைகள் முடிந் தால் அங்கு போக வேண்டும் என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இளம் தலைமுறையினரோ புதியக் கலாசாரத்தில் மூழ்கிப் போயிருக் கிறார்கள். அவர்களுக்கு தமிழும் தமிழ் மண்ணும் அந்நியமாகி விடுமோ என்ற கவலை பெற்றோர்களுக்கு மேற்றிசை நாடுகளில் வசதிகள் தாலாட்டிய போதும் பண்பாடு - தாய்மொழி என்பனவற்றில் இளம் தலை முறையினர் பல பிரச்சனைகளை எதிர்ப்பார்த்து இருக்கின் றார்கள்.
'கடவுள் நாட்டை உருவாக்கினான். ஆண் நகரத்தை உருவாக்கி னான். பெண் சமூகத்தை உருவாக்கினாள் என்கிற ஒரு ஆங்கில அறிஞனின் கருத்துப் படிப் பார்க்கின்றபோது புலம் பெயர்ந்த நாடு களில் கணவனும் மனைவியும் வேலைக்குப் போவதால் குழந்தைகளின்
175 O

Page 90
DT T
சமூகத்தை வாடகைத் தாய்தான் உருவாக்குகின்றாள். இதனால் வாட கைத் தாயின் மொழியும் பண்பாடும் குழந்தைக்குச் சொந்தமாகின்றது. சுருக்கமாகச் சொன்னால் புலம் பெயர்ந்த தமிழர்களிடையே பல கேள் விகள் விடை கான் முடியாமல் இருக்கின்றன.
விமானம் சிட்னி விமான நிலையத்தில் இறங்கப் போகின்றது மனதில் மகிழ்ச்சிப் பூக்கள் பூக்கின்றன. அது சிட்னியில் இறங்கப் போவதால் ஏற்பட்டது அல்ல பல நாட்கள் பிரிந்திருந்த மனைவி, பிள்ளைகளைப் பார்க்கப் போகின்றோம் என்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சி மட்டுமே பல வருடங்களாக சிட்னியில் வாழ்ந்தபோதும் இதுதான் எனது ஊர் என்ற உணர்வு எனக்கு ஏனோ வரவில்லை.
இந்த உணர்வு லண்டன் பாரிஸ், ஹொரன்டோ நகரங்களில் வாழ் கிற தமிழர்களுக்கும் இருக்கின்றது எப்போதும் இங்கு அந்நியமாக வாழ்கிறோமோ என்ற கேள்வி அவர்கள் நெஞ்சைக் குடைந்து கொண்டிருக்கின்றது.
கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்து சிந்தித்தபோது ஒரு பாடல் செவிகளில் ஓவித்தது. அது கனடாவில் வெளியாகி இருக்கிற புலரும் வேளையிலே என்ற இசைத்தட்டில் செழியன் என்பவர் எழுதியது அது இந்தத் தொடரின் இறுதியில் எடுத்தாளப் பொறுத்தமானது என நினைக்கின்றேன்
அந்தப் பாடல் இதோ!
அகதி இல்ல அகதி இல்ல என்று சொல்லுங்கள் நமக்கு ஒரு தேசம் உண்டு நிமிர்ந்து நில்லுங்கள் ! கனடாவில் வாழ்கிற தமிழ்க் கலைஞர்களால் வெளியிடப்ட் டிருக்கிற இந்தப் பாடலில் ஆழமான கருத்துகள் இருக்கின்ற புலம் பெயர்ந்த தமிழர்களுக்குப் பொருத்தமானதாகவும் இருக்கிறது மேலே உள்ள பாடலின் கடைசி இரு வரிகளை உற்று நோக்கும் போது புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை அந்தத் தே எது என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்து நிற்பது தெளிவாகத் தெரியும்.
OOO
D 76

|
சோதி
ான்ந்த
திரு.

Page 91

il-Li;i

Page 92

|lkյն| في التي
புற்றுமது

Page 93


Page 94


Page 95