கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மொஸ்கோ அநுபவங்கள்

Page 1


Page 2
No(s) \ \ li


Page 3


Page 4
ISBN 81 88686 00 X
இளம்பிறை வெளியீடு : 19
Apartformany fair dealing for the purpose of Private Study, Research, Criticismor Review as Permitted under the Copyright Act, No part may by reproduced, stored ina retrieval system, or transmitted, in any form or any means, electronic, mechanical or photocopying, recordingorotherwise without prior written permission from the publishers.
முதற்பதிப்பு : subuff 2002 உரிமை க.சபாரெத்தினம்
பக்கங்கள் : 232
விலை : ლეხ. 75.00
MOSCOMVANJEBAVAGKA
(Experience in Moscow)
Essays in Tamil
by K. SABARATNAMC)
First Edition : December 2002
Pages ; 232
Paper : Maplithio 11.6 Kg.
Price RS. 75.00
Published by : ILAMPIRA PATHIPPAKAM
32-8 (375) Arcot Road, Kodambakkam, Chennai - 600024. Ph; 2484 6651

சமர்ப்பனம்
இந்நூல் என்னைப்பெற்று வளர்த்து ஆளாக்கிஇவ்வுலகில் உலாவ விட்டு 1607.1995ல் தெய்வீகமடைந்த என் ஆருயிர் அன்னை திருமதி தங்கமணியம்மாள் கணபதிப்பிள்ளை" அவர்களின் பாதார விந்தங்களில் சமர்ப்பனம்
அன்புடன்

Page 5

பதிப்புரை
Dillலாசிரியரின் முன்னுரையோ முகவுரையோ அழகான தோரனவாயிலாக gyatodiv GuanabrGDub. பெரும்பாலும் முட்புதர்களாக அமைவதினால்தான் அநேகர் அதைப் படிப்பதில்லை. "அறுவை" என ஒதுக்குகின்றனர்.
ஏன் படைத்தோம். எதற்காகப் படைத்தோம் என்பதைத் துல்லியமாக உணர்த்த முகவுரைகள் உதவ வேண்டும். நன்கு சிந்தித்துச் செயலாற்றும் படைப்பானி களினாலேயே அது சாத்தியமாகும். படைப்பின் முழு மொத்தத் தன்மையைச் சிறப்பாகவும் தெளிவாகவும் முகவுரையில் கூறினால், நூலின் பெருமையை உணர்த்தும் மகுடமென அதை அணி செய்வர்.
இத்துணை பீடிகையும் இந்நூலின் தனித்தன்மையை விளக்குவதற்குத்தான். இது LJEJOJ அநுபவங்களைக் கொண்டதாயினும் புதிய நாடு - புதிய சூழல் புனையும் பல அரிய தகவல்களையும் அநுபவங்களையும் கொண்டு தனித்தன்மை வாய்ந்த இலக்கியமாகத் திகழ்கின்றது.
இலங்கையின் அயல்நாட்டுத் தூதரகம் - மொஸ்கோ. அதில், நான்கு ஆண்டுகள் பணியாற்றும் போது, தூதரகம் சார்ந்த பணிகள் - தூதரகம் சாராத பணிகள் என இரு வகைத்தான பணிகளையும் அகம் புறமாக, இந்நூலில் ஆசிரியர் க. சபாரத்தினம் அவர்கள் சுவையாகத் தொகுத்துள்ளார்.
இரும்புத்திரை எனும் சோவியத் ஒன்றியம், துண்டு

Page 6
துண்டாக உடைந்து சிதறும் காலத்தில் அங்கு பணியாற்றியுள்ளார். இவர் பணியேற்ற நான்காவது மாதத்தில் 22.08.1991 இல் சோவியத் ஒன்றியம் உடைந்தது. ஈழத் தமிழர் அகதிகளாக உலகெங்கும் அலைந்து திரிந்த காலமது.
மொஸ்கோவிலும் அகதிகள் வரவு 1992 இல் அதிகமாயிற்று. அத்தோடு ரூஸ்யா பிளவுபடுமுன் படிக்க வந்த இலங்கை மாணாக்கர், ஐரோப்பிய - வட அமேரிக்க நாடுகளுக்கு ஆள்களை அனுப்பும் முகவர்கள், முகவர்களால் ஏமாற்றப்பட்டு அலைந்து திரியும் ஈழத் தமிழர்கள் என மொஸ்கோ நகர் சீர் கெட்டிருந்தது.
தூதரகத்தில் உள்ள ஒரே தமிழர் என்ற முறையில் சட்டபூர்வமான காரியங்களையும், சட்டத்திற்கு அப்பாற்பட்டு மனிதாபிமான ரீதியில் ஆற்றிய பணிகளையும் இந்நூலின் வாயிலான நாம் அறிய முடிகின்றது. சபா, அவர்களின் தன்னலமற்ற சமூகக் கண்ணோட்டம் நூலெங்கும் பரவி நிற்கின்றது. 6) விடயங்களை அவர் மிகவும் தன்னடக்கத்துடனேயே வெளிப்படுத்துகின்றார். “கட்டில்கள் பெறப்பட்டமை அத்தியாயத்தைப் படித்துப் பாருங்கள். ஆறுமாதம் கட்டில் இல்லாமல் வாழ்ந்த கதைமட்டுமல்ல, அந்த விடயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் அவரது பண்பையும் பக்குவத்தையும் பன்மடங்கு புலப்படுத்தும் கதையாகவும் படர்கின்றது.
தமிழிலே, இந்தப் புதுமை இலக்கியத்தை வெளியிடும் வாய்ப்பை இளம்பிறை பதிப்பகத்துக்கு அளித்தமைக்காக ஆசிரியருக்கு எமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வணக்கம்.
எம்.ஏ. ரஹ்மான்
1.12.2002 இளம்பிறை பதிப்பகம்

xx.x t
உலகப் பிரசித்தி பெற்ற லெனின் நூல் நிலையம் - மொஸ்கோ
Opasoqooy
அறிந்தவற்றைப் பிறருக்கு எடுத்துக் கூறுவது அறிவுரை. தெரிந்தவற்றை சுவை குன்றாமல் ஒப்புவிப்பது கட்டுரை அல்லது பேச்சுரை. அறிந்தவற்றையும் தெரிந்தவற்றையும் சேர்த்து ஒழுங்கு படுத்தி அழகு மொழி நடையில் அத்தியாயங்களாக வகுத்து சமர்ப்பிப்பது தொடர் கட்டுரை அல்லது நூல்.
நூலானது, ஆராய்ச்சி மூலம் பரீட்சிக்கப்பட்டு தேர்ந்தெடுத்த கருத்துக்களை மையமாகக் கொண்டவையாகவோ, கற்பனை மூலம் சேகரிக்கப்பட்ட ஜனரஞ்சகப் பொழுதுபோக்கு அம்சங்களை மிகையாக உள்ளடக்கிய நாவல்களாகவோ, அனுபவம் மூலம் பெறப்பட்ட உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்படும் சுயசரிதை அல்லது சம்பவத் திரட்டுத் தொகுப்பாகவோ கூட அமையலாம்.
இம்மூன்று வகைப் படைப்பினுள்ளும் அனுபவத்தால் படைக்கப்படும் விடயக் கோவைகளே யதார்த்தம் மிகக் கூடியவையாகவும் மானிடவியலோடு மிக நெருக்கமான உறவைக் கொண்டவையாகவும் அமைகின்றன.

Page 7
மொஸ்கோ நகரில் யான் வாழ்ந்த காலை, அங்கு பழக, சத்திக்க, பாடம் கற்க நேர்ந்த பல கதாபாத்திரங்களையும் வடிவங்களையும் அவற்றின் மூலமாகப் பெறப்பட்ட மறக்கமுடியாத வாழ்க்கை நிகழ்ச்சிகளையும், முடிந்தளவு அவற்றின் தன்மை, குணாதிசயங்கள், வெளிப்பாடு, சுவை குன்றாவண்ணம் கற்பனை எதுவும் சேர்த்துக் கொள்ளாமல் என் ஞாபகத் திரையில் பிரதிபலித்தவற்றை மட்டுமே அப்படியே தமிழ் கூறும் நல்லுலகிற்கு தொகுத்து வழங்குவதில் மதிழ்ச்சி அடைகிறேன்.
இச்சம்பவங்கள் யாவும் என்னோடு கலந்து என்னோடு மறைந்து போகா வண்ணம் வாசகர்களும் படித்தின்புற்றுப் பயன் பெறுவார்களாயின் யான் பெருமகிழ்ச்சி அடைவேன். அத்தோடு இங்கு தெரிவிக்கப் பட்டுள்ள சம்பவங்கள் யாவும் காலத்தின் தகவல்களே அன்றி விளைவுகள் அல்ல. இவற்றில் சித்தரிக்கப்பட்டுள்ள குண, நலன்களைக் கொண்டு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் இலங்கை வாழ் தமிழ் மக்கள், அங்கு செறிந்து வாழும் சிங்கள இன மக்களுடன் எத்தகைய செளஜன்ய உறவைக் கொண்டிருந்தார்கள் என்றும், காலத்தின் சூடேற்றத்திற்கஞ்சி எவ்விதம் தமது பாரம்பரிய பழக்க வழக்கங்களிலிருந்து மாறப் பழகிக் கொண்டார்கள் என்றும் அவர்கள் பிறநாடுகளில் எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள் எத்தகையன என்றும் ஒரளவு ஊகித்து அறிய வாய்ப்புண்டு.
இதன்கண் தெரிவிக்கப்பட்டுள்ள எந்தவொரு நிகழ்ச்சியும் யாரையும் வேண்டுமென்றே; பழிவாங்க வேண்டுமென்ற குறுகிய நோக்கிலோ, பாராட்டிப் பயன் எய்த வேண்டுமென்ற அவா மேலீட்டினாலோ எழுதப்பட்டவை அல்ல என்பதைத் தயவு செய்து குறித்துக் கொள்ளும்படி அன்பாகக் கேட்டுக் கொள்ளுகிறேன். இதனகத்து இரண்டாம் பாகமாக வெளியிடப்படும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை 1992- 1995 வாக்கில் நோர்வே நாட்டிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘சர்வதேசத் தமிழர் மாதச் சஞ்சிகை மூலம் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்பட்டவை.
எத்தனையோ அறிஞர்களும் வித்துவான்களும், மேதைகளும் ஆற்றலுள்ளோரும் தமிழ் மொழிக்கு உவந்து அளித்துப்போந்த அறிவுக் களஞ்சியங்களோடு இதனை ஒப்பிடும்போது எனது இந்தச் சிறுமுயற்சி நுனிப்புல் மேய்ந்த ஒரு சிறுகதையே. ஆயினும் இந்நூல் மூலம் கிடைக்கும் ஆதரவும் அங்கீகாரமுமே என்னை மேன்மேலும் எழுத்துலகில் உற்சாக மூட்ட உதவியாக அமையுமென எதிர் பார்க்கிறேன்.

இந்நூல் வெளிவருவதற்கு பல வழிகளிலும் காரணமாக இருந்த அன்பு உள்ளங்கள் பல. அவற்றுள் முதற்கண் நோர்வே நாட்டில் வசித்து வரும் இலங்கை இணுவிலைச் சேர்ந்த திரு. என்.எஸ்.பிரபு, பி.எஸ்.சி அவர்கட்கும் அவ்வப்போது பல ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி இந்நூல் உருப்பெற ஊன்றுகோலாக இருந்த என் ஒன்று விட்ட சகோதரர் திரு.த.தருமகிர்த்தி அவர்களுக்கும், பல வேலைப் பளு மத்தியிலும் சிரமம் பாராது சிறந்த முறையில் அச்சு வாகனமேற்றி சிறப்புறச் செய்த பிரபல நூல் வெளியீட்டாளரும் பிரசுரகர்த்தாவுமாகிய ஜனாப் எம்.ஏ.ரகுமான் அவர்கட்கும் என்றென்றும் கடமைப்பாடுடையேன்.
இறுதியாக இதனகத்துக் காணப்படும் குற்றங்கள் குறைகள் ஏதுமிருப்பின் அவற்றையிட்டுப் பெரியோர்கள் மன்னித்து வழுக்களைக் களைந்து சீருறுத்த உதவுமாறும் அன்புடன் வேண்டுகோள் விடுக்க விழைகின்றேன்
வணக்கம்
இங்ங்னம்
க. சபாரெத்தினம் 2001 நவம்பர் 11 பெய்ரூட், லெபனான்.

Page 8
O1, 02, 03, O4. O5. 'O6. Ό7. O8. O9. 1O. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 2O.
01. O2. O3. O4. O5. O6. O7. O8. O9. O. 11. 12.
பகுதி - 1
பொது நிகழ்வுகள் 15 ............................................................................................................................. فانا6-سالا للالت "Dfا W60D85لا கண்காணக் கட்டி காட்டில் விட்ட கதை. 21 மனைவியையும் பிள்ளைகளையும் திருப்பி அனுப்பிய கதை. 27 சிறியின் விவகாரம் . 32 தருமசேனவின் அக்கிரமத்தொல்லை. 37 கட்டில்கள் பெறப்பட்டமை. 42 அம்பசடர் விஜயரெட்ண அவர்கள். 47 சிறிசேன வெடிகுண்டு தேடிய கதை. 60 திரு. விஜயவர்த்தன அவர்கள். 63 சுதந்திர தினக் கொண்டாட்டமும் நானும் . 67 சேவைக்கால நீட்டமும் தாயாரின் மறைவுச் செய்தியும். 7Ο உயிர் பிழைத்த சம்பவம். 82 கந்தசாமி பெரியசாமி. செல்வி காசுப்பிள்ளை விஜயசிறி. 96 சர்வதேசத் தமிழர் சஞ்சிகையும் அதன் ஆசிரியர் பிரபுவும் . 103 திரு. ஜக்ஷன். 109 சுவாமி யக்ஞபதிதாஸ். 112 δυο πιό . . 121. இராஜதந்திர கடவுச் சீட்டும் கெளரவமும். 124 தாயகம் மீண்டது. 127
பகுதி - 2 கடமைசார் நிகழ்ச்சிகள்
சுந்தர மூர்த்தியின் வரவு. 130 ஜவுளி வியாபாரி சீலன். 133 சிறையின் வாடிய சிதம்பரநாதன். 136 இயேசு சீலனின் சோகக் கதை. 146 செல்வி புஸ்பராணி பசுபதி . 153 சின்னையா குகராஜன். 16O திருமதி வசந்தா செல்வராசா . 166 ஜெபராஜ சிங்கத்தின் மரணம். 179
9P(S556) ......................................................... 189 மரிய சீலன் . 193 மனம் கலங்காத மெளலானா . 198
கோமதி சிவசம்பு . 213
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

11 ஆரையம்பதிகசபாரெத்தினம்
*。 る 。 புதிய இடம்; புதிய Ś 1 - 3بند ہے تھ" அறிமுகங்கள்; புதிய அநுப வங்கள். . . இவற்றோடு தொடங்கப்பட்டதுதான் எனது மொஸ்கோ பயணம்.
1991-ம் ஆண்டு மே மாதம் 09-ம் திகதி ஏரபுளட் விமான சேவை மூலம் கொழும்பில் இருந்து புறப் பட்டு மொஸ்கோ நகர் வந்தடைந்தேன். அரச பணி தொடர்பாக வந்தமையால் சகல ஏற்பாடுகளும் வசதி களும் சம்பந்தப்பட்டவர் களால் விரும்பியோ விரும் பாமலோ செய்யப்பட்டிருந் தன. மொஸ்கோ நகரின் மையப் பகுதியாகிய “புரொஸ்பெக்ட் மீரா” என்ற பகுதியில் நிலைகொண்டி ருந்த இலங்கைத் தூதரகத்தில் எனது பணிகளை நான்கு ஆண்டு காலம் தொடர வேண்டிய நியதிக்குட் படுத்தப் பட்டேன். எனக்குத் தரப்பட்ட கடமைகள் முத லில் கொன்சூல் அலுவல்கள் தொடர்பானவை. அதாவது பிறநாட்டில் வசித்து வரும்,

Page 9
மொஸ்கோ அநுபவங்கள் 12
சொந்த நாட்டுப் பிரஜைகளின் அரச அங்கீகாரம் பெறவேண்டிய இயற்கை நியதிக்குட்பட்ட வாழ்வியல் விவகாரங்கள் தொடர்பான பிறப்பு, இறப்பு, விவாகம் பற்றிய சான்றிதழ்கள், மற்றும் அதுபோன்ற ஆவண சட்டபூர்வமாக்கல் என்பனவேயாகும். அத்தோடு அவர்கள் எதிர்நோக்கும் நியாயபூர்வமான சிக்கல்களை அரச அதிகாரம் மூலம் தொடர்பு பட்டுத் தீர்த்து வைக்கும் பணிகளும் எனலாம்.
அப்போதெல்லாம் ரூஸ்ய நாடு சோவியத் ஒன்றியத்துடன் இணைந்திருந்த காரணத்தினால் அதன் இரும்புத்திரைக் கொள்கை நோக்கில் சாதாரணமாக பிறநாட்டவர் அங்கு வருவது கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காரியமாக இருந்தது. யாராவது புலமைப் பரிசில் பெற்று படிப்பு நிமித்தமோ, அல்லது இராஜரீக தொடர்பான அங்கீகாரம் பெற்றோ
 

13 ஆரையம்பதிகசபாரெத்தினம்
மட்டும்தான் அங்கு காலடி வைக்க இயலுமானதாக இருந்தது. இந்த வகையில் இலங்கைத் தூதரகத்தில் கொன்சூல் பணிகள் யாவும் மிக நேர்த்தியான வையாகவும், அதிகம் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கா தனவாகவுமே இருந்து வந்தன.
1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் திகதி சோவியத் ஒன்றியம் சட்டபூர்வமாக உடைந்து, சிதறுண்டு அதன் நேச நாடுகள் எல்லாம் தனித்தனி இராச்சியங்களாகி, பின்பு புதிய பொது நலவாய அரசுகளாக தாபனம் பெற்று இயங்கத் தொடங்கிய பின்பு 1992-ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்தே வெளி உலகின் தொழில் கொள்ளுவோர் படையெடுப்பும் அகதிகளின் ஊடுருவலும் இங்கு ஏற்படத் தொடங்கின. இலங்கையில் இருந்தும் கணிசமான அப்பா வி ஆசைக்காரர்களை, தொழில் முகவர்கள் ஆகர்ஷணித்து அங்கு கொண்டு வந்து இறக்க ஆரம்பித்தனர்.
மொஸ்கோ நகரத்தை வலம்வரத் தொடங்கிய எம்மவர்கள் எமக்கே உரித்தான எமது “பரவணி”யை விடாது தொடரவே செய்தனர். இதனால் நாள்தோறும் புதிய புதிய பிரச்சினைகள் அங்கு கருக்கட்டத் தொடங்கின. எனது அனுபவ அறிவும் விரிந்தது தமிழ் தெரிந்த அல்லது தமிழ் பேசும் இனத்தின் ஏகப் பிரதிநிதியாக தூதரகத்தில் இருந்த எனக்கே அந்தச் சுமைகள் யாவும் பாரபட்சமின்றிப் பாரப்படுத்தப் பட்டன. இனத்திற்கான, நாட்டிற்கான நற்சேவை என்ற காரணத்தினால் நானும் எனது அறிவு, ஆற்றல், விடாமுயற்சி, அனுபவம் என்பவற்றைத் திரட்டி என் பணியினை சுயதிருப்தி தரும்வகையில் ஆற்றிவந்தேன். இதனால் பெறப்பட்ட சில கசப்பான அனுபவங்கள் கூட “சேவை” என்ற மனப்பாங்கில் இனிப்பான வைகளாக ஏற்கப்பட்டே வந்துள்ளன.

Page 10
மொஸ்கோ அநுபவங்கள் 14
எனது இந்த அனுபவங்களை இரு பகுதிகளாக வகுத்து முதலில் “பொது நிகழ்வுகள்” என்ற முதல் பிரிவினுள்ளும் ஏனையவற்றைப் "35 Lao) LD&FIT if நிகழ்வுகள்” என்ற மற்றோர் பிரிவினுள்ளும் அடக்கி வாசகர்கட்கு அளிக்கவே விரும்புகிறேன்.
இவற்றில் சில 1994-ம் ஆண்டு வாக்கில் நோர்வே நாட்டிலிருந்து (புலம் பெயர்ந்து சென்ற எம்மவர்களால்) நடத்தப்பட்டு வரும் “சர்வதேசத் தழிழர்” என்ற சஞ்சிகை மூலம் தொடராக வெளியிடப்பட்டு பலரது பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டதென்பதை மிகவும் விநயமாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.
கீல்ஸ்கயா என்ற இடத்தில் அமைந்துள்ள பாதாள இரயில் நிலையத்தின் மேற்றளம்
 

15
மெற்றோ(பாதாள இரயில்) நிலையங்கள் அடங்கிய வழிகாட்டுப் படம்
01. U4anĝo (174óU uuaĴć
உலகத்தின் அதி பெரிய நகரங்கள் சிலவற்றுள் மொஸ்கோவும் குறிப்பிடத் தகுந்தது. இங்குதானாம் பாதாள உலக ரயில் சேவை விசாலமான முறையிலும் நேர்த்தியாகவும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டு வருகின் றதாம். ஆம்! ஏறத்தாழ மொஸ்கோ நகரில், சுமார் 120 பாதாள இரயில் தானங்கள் 1996-ம் ஆண்டு வரையில் இயங்கி வந்தன. மேலும் சில புகையிரத நிலையங்களுக்கான கால்கோல் இடப்பட்டும் இருந்தன. ஆகவே இப்போது இவற்றின் எண்ணிக்கை 150-க்கு மேலாக உயர்ந்திருக்கலாம் என எண்ண இடமுண்டு.
இந்தப் பாதாள இரயில் நிலையங்களில் சில மிகவும் சிக்கல் (Complication) நிறைந்தவை. அதாவது

Page 11
மொஸ்கோ அநுபவங்கள் 16
இந்நிலையங்கள் வேறு சில இரயில் பாதைகளோடு இணைக்கப்படவேண்டிய நிலையிலும், முடிவாக்கல் பகுதியில் (Termination) அவை மேற்பரப்பு இரயில் சேவைகளோடு அல்லது பஸ் சேவைகளோடு தொடர்புடையதாக்கப் பட்டுள்ள நிலையங்களாக இருப்பதனாலும், இவ்வித இரயில் நிலையங்க ளுக்கான நுழைவு வாயில்களும் வெளியேறும் வாயில்களும் மூன்று அல்லது நான்கைக் கொண்ட வையாக இருக்கும். இதன் மூலமாகப் பயணம் செய்யும் பிரயாணிகளும் ஆயிரக்கணக்கில் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள். இதற்குக் காரணம்: பாதாள இரயில் சேவை மொஸ்கோ நகரம் முழுவதும் அதிகாலை 4.00 மணி தொடக்கம் இரவு 11.30 வரை மூன்று நிமிடங்களுக்கு மேற்படாமல் ஒரு புகையிரதம் என்ற சமச்சீர் விகிதத்தில் நேர் திசையாகவும் எதிர்த் திசையாகவும் வந்த வண்ணம் இருப்பதேயாகும். சிலருக்கு இது மிகைக் கற்பனை போன்று இருந்தாலும் உண்மையிலே நாளாந்தம் நடைபெற்றுவரும் ஓர் அருஞ் சேவை இதுவாகும்.
எனக்கு ஒதுக்கப்பட்ட குடிமனை “நஹிமோஸ்கி புற ஸ்பெக்ட்” என்ற இடத்தில் இருந்தது. அதில் அப்போது வசித்து வந்த அதிகாரி, தற்போது இட மாற்றத்தை எதிர் நோக்கி தவிர்க்க முடியாத சில காரணங்களால் இன்னும் இலங்கைக்குத் திரும்பா ததினால், அவ்வதிகாரிக்கு, தட்டு முட்டு தளபாடங்களை கட்டி ஒழுங்குபடுத்த அவகாசம் கொடுக்கும் வகையில், ஓரிரு நாட்களுக்கு, “லெனின்ஸ்கி புறஸ்பெக்ட்” என்ற மற்றோர் இடத்தில் தனியே குடியிருந்து வந்த திரு. சிறிசேனஅவர்களோடு தற்காலிகமாக தங்குவதற்கு எனக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

17 ஆரையம்பதிகசபாரெத்தினம்
10.09.1991 வெள்ளிக்கிழமை காலை திரு. சிறிசேனவும் நானும் அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு ரொலிபஸ் மூலம் மெற்றோ’ (பாதாள புகையிரத நிலையத்தை) அடைந்தோம். பின்பு அவர் என்னிடம் மூன்று கொப்பெக்ஸ் (சதம்) தந்து நுழைவாயிலில் நிறுவப் பட்டிருந்த உள்ளனுமதிக்கும் அணியான எந்திரங்களில் ஒன்றில் அதைத் திணிக்குமாறும் அவ்வாறு திணிக்கும்போது எந்திரத்தின் மூடு கம்பங்கள் இரண்டும் விலகி வழி விடுமென்றும், அவ்வழி விடுகை ஒரு நிமிடத்திற்கு மேல் தாமதிக்காது என்றும் அதற்குள்ளாக; விரைவில் நகர்ந்து உள்ளே செல்லு மாறும் ஆலோசனை வழங்கினார். சிறிசேனாவிடம் சீசன்கார்ட் இருந்த படியால் அவர் வேறொரு வழிமூலம் வரவேண்டி இருந்தது.
பட்டணம் பார்க்கப்போன பட்டிக்காட்டானின் கதையாக மாறியது என் நிலைமை!
பரபரப்பும் சுறுசுறுப்பும் மிக்க நிலையமாக அது இருந்தது ஒரு காரணம். முன்பு வெளிநாடெதற்கும் சென்று பழக்கமில்லாத எனது அப்பாவித்தனம் ஒருபுறம். பயணிகளின் போக்குவரத்து வற்றாத அமுதசுரபியாக அமைந்தது இன்னொரு காரணம். எல்லாம் சேர்ந்து என்னையும் திரு. சிறிசேன அவர் களையும் வேறுவேறு திசையில் சுற்றவைத்து இருவரும் சந்திக்க முடியாதபடி ஆக்கிவிட்டது! பல நிமிடநேரம் அங்கும் இங்கும் எங்கும் சுற்றி, அள்ளுண்டு, மோதி அலைபாய்ந்து தேடியும் என்னால் சிறிசேனாவை கண்டுபிடிக்க முடியவில்லை. எனது நிலையே சிறிசேனாவுக்கும் அவரும் அதிக முயற்சி எடுத்துத் தேடியும் ஆளாளைச் சந்தித்துக் கொள்ளும் நிலைமை உருவாக வில்லை.
2

Page 12
மொஸ்கோ அநுபவங்கள் 18
எனது நிலையோ அந்தரமாகப் போய்விட்டது.
நாட்டுக்கே புதிது. கையிலே அந்நாட்டுப் பணம் (ருபிள் அல்லது கொப்பெக்ஸ்) ஒரு தம்பிடியும்
இல்லை!
“எங்கே எப்படி போவது?” என்பதை தெளியாத ஆரம்ப அனுபவம் வேறு.
உள்ளே சென்றுவிட்ட என்னால் வெளியே வர முடியும். ஆனால் மீண்டும் உள்ளே செல்ல வேண்டு மானால் புதிதாக மேலும் மூன்று கொப்பெக்ஸ் பணத்தை எந்திரத்தின் பசிக்கு ஊட்டினால்தான் அது என்னை அநுமதிக்கும்! “என்ன செய்வது? எதற்கும் அப்பால் வெளியேறிப் பார்வையிடுவோம்' என்ற மன உந்துதலால் புகையிரத மேடையை விட்டு வெளிப்பட்டு விட்டேன். சில சமயம் மேற்தளத்து வாகன வீதிக்குச் சென்றிருப்பாரோ?’ என்ற ஐய நோக்கில் அங்கும் சென்று பார்த்தேன். எதிலும் பிரயோசனம் இருப்பதாகத் தெரியவில்லை.
இப்போது எனக்கு தனியாக பயணத்தை தொடர்ந்து தூதரகத்திற்குப் போய்ச் சேரவும் முடியாது; திரும்பி, தங்கி இருக்கும் வீட்டுக்குப் போகவும் முடியாத இக்கட்டான நிலை!
எல்லாம் இழந்த அந்த இக்கட்டான நிலையில்தான் இறைவனின் சிந்தனை என் இதயத்தில் வெளிப்பட்டு நின்றது. ஒருவித பயமும் விரக்தியும் என்னைக் கெளவிக் கொண்டன.
பாதையோரமாக பஸ் வண்டிக்குக் காத்திருந்த சிலரை அனாயாசமாக அண்மித்து ஆங்கிலத்தில் “எக்ஸ் கியூஸ் மீ. . .” என்றேன். அந்த வார்த்தைக்கு மரியாதை தராவிட்டாலும் பரவாயில்லை. அதனைக் கேட்டதும்

19 ஆரையம்பதிகசபாரெத்தினம்
வெடுக்கென்று மறுபக்கம் திரும்பும் அவர்களது பாராமுக மனப்பாங்கு என்னுள் அதிக வேதனையை ஏற்படுத்தியது.
ஆங்கிலம் மட்டுமல்ல; அவர்களது தாய்மொழி யான ரூஸ்யனைத் தவிர வேறு எந்த மொழியும் புரியாத மனிதர் கூட்டமாக அவர்கள் இரும்புத் திரைக்குள் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல; வேறு மொழி அறிய வேண்டுமென்ற ஆர்வங்கூட அவர்களிடம் அப்போது இருக்கவில்லை!
எல்லா முயற்சிகளும் பயனற்று ஒடிந்து போய் விடவே நானும் இடிந்து மூலை ஒன்றில் ஒதுங்கி இருந்த சமயம், அவ்வழியால் வருவோரதும் போவோ ரதும் திருவதனங்களைத் தீர்க்கமாக உற்று நோக்கி ஆராய்ந்து கொண்டிருந்தேன். எந்த முகமும் ஆங்கிலம் பேசும் ஆற்றலை வெளிப்படுத்துவனவாக எனக்குத் தோன்றவில்லை.
முகங்களுக்குள் ஒருமுகமாக ஒரு ஒல்லியானஆனால், திடகாத்திரம் கொண்ட இளைஞன்- இறங்கி வந்து கொண்டிருந்தான். அவனால் ஆங்கிலம் பேச முடியும் என்ற களை முகச்சாயலில் படர்ந்திருந்தது. அவ்வுருவத்தை நெருங்கி “எக்ஸ் கியூஸ் மீ. 9 என்றேன். “யேஸ் வாட் கன் ஐ டு போயூ?” என்றது அந்த மனித உருவம். "ஆஹா! கடவுளே எனக்கு இப்போதாவது அருள் பாலித்து விட்டாயே! நமஸ்காரம் ஐயா’ என்று மனதில் கூறிவிட்டு, என் நிலைமையையும் நடந்து போன நிகழ்ச்சியையும் அவருக்கு தெளியவைத்து எனக்கு எப்படியும் உதவும்படி கேட்டேன்.
“தொலைபேசி இலக்கம் அல்லது விலாசம் இருக்கிறதா?” என்று கேட்டான் அவ்விளைஞன்.

Page 13
மொஸ்கோ அநுபவங்கள் 20
ஒருவித காரணமுமில்லாமல் ஏதோ இருக்கட்டுமே என்ற போக்கில் இலங்கையிலிருந்து புறப்பட்டபோது தூதரகத்தின் தொலைபேசி இலக்கம், விலாசம் அடங்கிய புத்தகப் பிரசுரமொன்றின் புகைப்படப் பிரதியை எடுத்துக் கொண்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது. அதுவும் நல்லவேளையாக சட்டைப்பையில் இருந்து விட்டது.
போக்குவரத்து வசதியும், செய்தித் தொடர்பாடல் வசதியும் மொஸ்கோவில் மிகவும் தாராளம். எங்கு பார்த்தாலும் தொலைபேசி வசதி இருக்கும். பாதை, வீடு, பொது இடம் என்று எல்லா இடங்களிலுமே தொலைபேசி நிறுவியுள்ளார்கள். தன்னிடம் இருந்த கொப்பெக்ஸ் மூன்றை எடுத்துப் போட்டு தொலை பேசித் தொடர்பேற்படுத்தி தூதரகத்திற்கு எனது நிலைமையை தெரியப்படுத்தியதோடு, எங்கே, எப்போது எவ்வாறு வந்து என்னை கூட்டிச் செல்வார்கள் என்ற அவர்களது பதிலையும் அளித்துவிட்டு மலர்ந்த முகத்துடன் விடைபெற்ற திரு ஜப்பார் ஒரு வைத்திய மாணவர். லெபனான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதை அவரிடமிருந்து பெற்ற முகவரி எனக்கு உணர்த்தியது.
அந்த உதவியாளருக்கு நன்றி கூற வார்த்தை களைத் தேடி அங்கலாய்த்தேன். எனினும் என் இதயத்தில் அம்மா மனிதன் ஒரு காருண்ய மூர்த்தி யாகவே இருந்து வருகிறார். அவர் அளித்த முகவரி எங்கோ தொலைந்து போய்விட்டதால் இன்று லெபனானில் இருந்தும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பிழந்து நிற்கிறேன்
காலத்தினால் செய்த நன்றி அல்லவா அது? இலேசில் மறந்துவிடுவது சரியா குமா ?

21 ஆரையம்பதிகசபாரெத்தினம்
பாதாள இரயிலில் ஒரு பயணி
02. கண்ணைகி கட்டி MCடில் விட்ட கதை
சின்றுக்கு மேற்பட்ட மொழி அறிவு மனித னுடைய தேவைகளை எவ்வளவு இலகுவாக்குகிறது என்பதை ரூஸ்ய நாட்டு மக்களுடன் பழகும் போதுதான் தெரிந்து கொண்டேன்.
அடுத்த இரு தினங்களில் எனக்கு ஒதுக்கப்பட் டிருந்த வீடு தயாராகி விட்டபடியால், நானும் எனது மனைவி, மக்கள் இருவர்-எனது சகோதரியின் புதல்வன் (மருமகன்) ஆகியோரும் தூதரக வாகன மூலம் திரு சிறிசேனாவின் லெனின்ஸ்கி புறஸ்பெக்ட் வீட்டிலிருந்து நஹிமோவ்ஸ்கி புறஸ்பெக்ட்டுக்குச் சென்று குடியமர்ந் தோம். சேவைக்காலம் முடிவுற்று இலங்கை திரும்ப வேண்டிய ஆணை பெற்றிருந்த அந்த உத்தியோக நண்பரது குடும்பமும், அவ்வீட்டிலேதான் இருந்தது.

Page 14
மொஸ்கோ அநுபவங்கள் 22
அந்த நண்பரது குடும்பம் அவ்வாறு இலங்கை மீள்வதற்கு காலதாமதமானதும் எங்களைப் பொறுத்த வரையில் பெரும் உதவியாகவே அமைந்தது. அந்த நண்பரின் பெயர் ஏ.ஆர்.ஆர். பெர்னாண்டோ புள்ளே. அவரது மனைவி பியற்றீஸ் ஒரு பி.காம் பட்டதாரி. இலங்கையில் ஒரு முன்னோடி தாபனத்தில் அதி உயர் பதவி வகித்தவர். கணவனுடன் ரூஸ்யாவுக்கு வருவதற் காக சம்பளமற்ற விடுமுறையில் வந்து மூன்றாண்டு காலம் மொஸ்கோவில் குடித்தனம் நடத்தியவர். இவர்களது புத்திரிகளில் இளையவர் ரூஸ்யாவில் பிறந்தவராதலால் ருஷ"று என்று பெயர் வைத்ததாக திரு பெர்னாண்டோ புள்ளே பெருமிதமாகக் கூறுவார்.
இந்த இளம் தம்பதியினர் நல்ல குண இயல்பு கொண்டவர்கள். நேர்மையும் விசுவாசமும் உடைய வர்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கயமை கைவரப் பெறாதவர்கள். அதிலும் “பீற்றா” என்று அழைக்கப்பட்ட அந்த அம்மணி பியற்றீஸ் தங்க மான குணமுடையவர். தான் ஒரு பெரிய படிப்பாளி என்ற கர்வமோ படா டோபமோ சிறிதும் இன்றி எனது சாதாரண மனைவி மக்களுடன் ஒன்றாகச் சேர்ந்து, ரூஸ்ய நாட்டின் நடைமுறை, வாழ்வு, போக்குவரத்து, முக்கிய இடங்கள் என்ற இன்னோரன்ன அன்றாடத் தேவைகட்குரிய அனைத்து விடயங்களையும் சிரமம் பாராது தன்னோடு அழைத்துச் சென்று காட்டியும் விளக்கியும் தெளிவித்தும் உதவினார். ஆனால் அவர்கள் எங்களுடன் இருந்த காலப் பகுதியோ மிகவும் குறுகியது. இரு வாரங்கள் மட்டுமே! ஆதலால் நாங்கள் குடியிருந்த அந்த இடப்பிரதேசச் சூழலைத் தவிர வேறு எதனையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள இயலவில்லை. அத்தோடு ரூஸ்ய மொழி தவிர்ந்த வேறு எந்த மொழியும் அந்நாட்டு மக்களின் வாயில்

23 ஆரையம்பதிககூாத்ெதினம்
புரள மறுத்ததால், எமக்கு எல்லாமே சிதம்பரச் சக்கரமாகவே இருந்தது.
நாங்கள் குடியிருந்த வீட்டில் இருந்து தூதரகம் அமைந்த இடம் சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவிருக்கும். தினமும் இத்தூரத்தின் முதல் இருநூறு யார் வரை நடந்து சென்று, நஹிமோவஸ்கி புற ஸ்பெக்ட் மெற்றோ புகையிரத மூலம் தப்ரினிண்ஸ்கா யா என்ற மற்றொரு மெற்றோ சந்தி நிலையத்தை அடைந்து; பின்பு சுரங்கப் பாதைவழிப் பயணத்தை மாற்றி அதிலிருந்து சேர்ப்புக்கோ ஸ்காயா என்ற இன்னொரு மெற்றோ சந்திப் புகையிரத நிலையம் மூலம் பிரதான வட்டப் பாதையில் அமைந்துள்ள புறஸ்பெக்ட் மீராவை அடைய வேண்டும். அங்கிருந்து திறாம் வண்டி மூலமோ அல்லது நடந்தோ தூதரகத்தை சென்றடைய முடியும். இந்தச் சிக்கலான பயணத்திற்கு எடுக்கும் நேரமோ ஆக 45 நிமிடங்களே! அவ்வளவு விரைவானதும் ஒழுங்கானதுமான பயணச் சேவை அது!
மொஸ்கோவில் அமைந்துள்ள பெரும்பாலான
மெற்றோ புகையிரத நிலையங்களின் அமைப்பு ஏறத்தாழ ஒரே மாதிரியானவையாகவே இருந்தன. ஆகவே ஒருவர் ஓரிரு வாரங்களுக்குள் இவற்றை நினைவில் வைத்து பயிற்சி செய்து கொள்வதில் நிறைய சிக்கலும் சிரமங்களும் மலிந்திருந்தன. எத்தகைய கச்சிதமான வழிகாட்டல் குறியீடுகள் மூலம் (Directives) பிறர் உதவியின்றி அவற்றைப் பின்பற்றி உரிய இடங்களைச் சென்றடைய முடியுமானவையாக அவை இருந்தபோதிலும், ரூஸ்ய மொழியறிவு இல்லையேல் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட கதையாகவே அது அமைந்துவிடும். காரணம் அத்தனை வழிகாட்டல் அறிவுறுத்தல்களும் ரூஸ்ய மொழியில் மட்டுமே இடம் பெற்றிருந்தன!

Page 15
Guptaudat suarkait 24
என் பிள்ளைகளில் மூத்தவள் சண்முகப் பிரியாவுக்கு வயது அப்போது எட்டு. சத்தியப் பிரியா அக்காவிலும் பார்க்க இரண்டு வருடங்கள் குறைவு. இந்த இரு பிள்ளைகளினது படிப்புச் செலவில் 75 சதவீதமான பணத் தொகையை அரசாங்கம் - அதாவது தூதரகமே செலுத்தும். மிகுதி 25% என்னைச் சார்ந்தது. மொஸ்கோ நகரில் சர்வதேச பாடசாலைகளை பலநாடுகள் நடத்தி வந்தபோதிலும் இந்திய அரசின் அனுசரணையுடன் நடாத்தப்பட்டு வந்த “கேந்திரியா வித்தியாலயம்” (மத்திய உயர் பாடசாலை) மட்டுமே வளர்முக நாடுகளான, இந்தியா, இலங்கை, சில ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளின் பிள்ளைகள் சேர்ந்து கல்விபெற அதிக வாய்ப்பாக அமைந்திருந்தது. ஆயினும் இலங்கைப் பாடசாலைக் கல்வி முறைமைக்கும் இதற்குமிடையே சில வேறுபாடுகளும் இருக்கவே செய்தன. ஆனால் ஆங்கில கல்வி புகட்டல் முறைமை துரித பலனை தரத் தக்கதாக அமைந்திருந்தது. ஆனால் இப்பாடசாலை அனுமதி விடயத்தில் ஒரு சிக்கலும் இருக்கவே செய்தது.
இந்தியாவின் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த திரு கெங்கால் என்பவர் அதிபராக இருந்தார். அன்பாகப் பேசி ஆதரவு செய்வதில் அசகாய சூரனாக இருந்த போதிலும் அவர் பாடசாலை அனுமதி விஷயத்தில் ஏதோ மர்மத்தை உடையவராகவே இருந்தார். எனது பிள்ளைகள் இருவருக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்த போதிலும் எமக்குக் கிடைத்தது மூத்தபிள்ளைக்கு மட்டுமே! அதுவும் பல நாட்கள் அப்படி இப்படி என்று இழுத்தடித்து இயலாமல் என்னுடன் வேலைபார்க்கும் மேலதிகாரி திரு. ரி.பி. மடு வேகெதர என்பவரின் தலையீட்டினால் இந்தியத் தூதரக அதிகாரி ஒருவரின் கட்டளை பிறப்பிக்கப்பட்ட

25 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
பின்பே சாத்தியமாயிற்று. இளைய மகளினுடைய விடயமாக நானே மூன்று மாத காலம்வரை முயன்றும் ஏமாற்றப்பட்டே வந்தேன்.
காலையில் எனது மூத்த பெண்ணை வெளிக்கிடுத்தி’ முதலில் பள்ளிக் கூடத்திற்குக் கொண்டு போய் விட்டு விட்டு அப்படியே தூதரகம் செல்லுவேன். பாடசாலை பி.ப.2.30 மணிக்கு முடிவடைவதனால் இரண்டு மணியளவில் தூதரகமிருந்து பாடசாலைக்குப் போய் மகளை கூட்டிக்கொண்டு சென்று வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் தூதரகம் வருவது எனக்கு மிகுந்த சிரமமாகவே இருந்தது. வழிப்பாதையை பயிற்சி செய்து கொள் வதற்கு ஒரே வழி ரூஸ்ய மொழியை கற்பதே. அதுவும் உடனடியாக செய்தாலன்றி எனது கருமங்கள் ஒழுங்காக நடைபெற மாட்டா.
பாக்குல்தூரி' என்ற இடத்தில் ஒரு பெரிய புத்தகசாலை இருப்பதாக சிலர் மூலம் அறிந்து நண்பரொருவரின் உதவியுடன் அங்கு சென்றேன். புத்தகசாலை இருப்பது உண்மை. அங்குள்ள புத்தகங் களில் பெரும்பாலானவை ரூஸ்ய மொழியில் எழுதப் பட்டவை. வேற்று மொழி நூல்களும் ஒரு பகுதியில் இருந்தனதாம். அவற்றுள் ரூஸ்யன் - தமிழ் அகராதி ஒன்றை ஒரு ரூபிள் நாற்பத்தெட்டு கொப்பெஸ் (அதாவது 01 ரூபா 48 சதம்) கொடுத்துப் பெற்றுக் கொண்டேன். வீட்டில் இருந்தபடியே வேறு எவரது துணையுமின்றி ரூஸ்யன் அரிச்சுவடியை நன்றாக எழுத வும் உச்சரிக்கவும் கற்றுக் கொண்டேன். பொருள் தெரி யாத போதும் எழுத்துக் கூட்டி வாசிக்கும் திறமையை இரண்டே வாரங்களில் அடைந்து விட்டேன். ஆங்கில அரிச்சுவடியில் இருந்து மிகச் சொற்பமான வேறுபாடே அதில் காணப்பட்டது. அந்தச் சொற்ப ரூஸ்ய

Page 16
மொஸ்கோ அநுபவங்கள் 26
மொழியறிவு, உடனேயே பலன் தரத் தொடங்கி விட்டது. く
மெற்றோ புகையிரத நிலையங்களில் எழுதப்பட்
டிருந்த வழிகாட்டல் அறிவுறுத்தல்களை நின்று வாசித்து அவ் அம்புக்குறிகள் வழியாகப் பின் தொடர்ந்து சென்று நாளாவட்டத்தில் மெற்றோ உலகத்தின் வியாபகத்தை முழுமையாக அறிந்து கொண்டேன். எனது மருமகன் நேசசிறி, என்னையும் விட ஒருபடிமேல் விரைவாக மொழியறிவு பெற்று, பயணத்தை பிறர் உதவியின்றிச் செய்து திரும்பும் ஆற்றல் பெற்று விட்டான். இது பாடசாலைக்கு பிள்ளையை கொண்டுபோய்விடவும், பின்பு மதியத்திற்கு வீட்டுக்குக் கூட்டிக் கொண்டுவரவும் எனக்கு உதவியாக இருந்தது.
மொஸ்கோ தேசிய பல்கலைக்கழகம்
 

27 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
டாக்டர். நிமால் பெம்மாவடு, திரு. ஜெயவர்த்தன, திரு.ஆனந்த, திரு. தயானந்த, திருமதி சுனித்தா வீரசிங்க, திரு. சாபு நவரட்ண, திரு. தர்மசேன, திரு.சிறிசேன ஆகியோருடன் நூலாசிரியர் திரு.க.சபாரெத்தினம்
03. மனைவியையும் பிள்வுைருவுையும் திருப்பி அனுப்பிய கதை
தினமும் காலையில் பிள்ளையை கூட்டிச் சென்று பள்ளிக்கூட வகுப்பறையில் இருத்திவிட்டு, அதிபர் கெங்காலுடனும் சிறிது உரையாடிவிட்டே வேலைக்குச் செல்வேன். அப்போது தவறாமல் எனது இரண்டாவது மகளின் பாடசாலை அனுமதி தொடர்பாகவும் அவரிடம் பிரஸ்தாபிப்பேன். எப்போதும் போல ஒரே பதிலே அவரிடமிருந்து வந்து கொண்டிருந்தது! அது “எனக்கு ஞாபகம் இருக்கிறது, செய்கிறேன்” என்பதுதான் அப்பதில். அப்படியும் இப்படியுமென்று இழுத்தடித்து இப்போது மாதம் மூன்றுமாகிவிட்டது.
பிள்ளையை வீட்டில் வைத்திருப்பதனால் அநியா யமாக படிப்பு சீர்கெட்டுவிடுமே என்ற பயம் என்னுள் இருந்தே வந்தது. தினமும் பள்ளிக்கூடம் விட்டு

Page 17
மொஸ்கோ அநுபவங்கள் 28
வந்ததும் வீட்டில் வைத்து இரவில் மூத்த பிள்ளையின் பாடங்களை கேட்டு அடுத்த நாளுக்கான பாடங்களை ஆயத்தப் படுத்த உதவி செய்து வந்தேன். அவ்வாறு ஈடுபாடு காட்டியதின் பயனாக முதல் மாதம் ஆங்கிலத்தில் மூன்றோ அல்லது நான்கோ மார்க் மட்டும் வாங்கிய என் மூத்த பெண், அடுத்த மாதம் 48 புள்ளிகள் பெற்றார். அப்பாடசாலையில் கற்பிக்கப்பட்டு வந்த ஏனைய பாடங்கள்: விஞ்ஞானம், கணிதம், ஹிந்தி, உடற்பயிற்சி என்பன மட்டுமே. அத்தோடு இவை இலங்கைக் கல்விப் பாடத் திட்டத்தினின்றும் மாறு பட்டவையாகவே இருந்தன. எனது உத்தியோக நிலைமையையும் பிள்ளைகளின் எதிர்கால நிலைமையையும் பற்றி எனக்குள்ளேயே சிறிது ஆராய்ந்து பார்த்தேன்:
எனது இந்த மொஸ்கோ வாசம் நான்கு வருடங்களுக்கு மட்டுமே கூடிய பட்சம் நீடித்திருக்கும். அதன் பின்பு நானும் எனது குடும்பத்தினரும் இலங்கைக்குத் திரும்பிவிடவேண்டும். அப்படியாயின் அந்நேரம் எனது மூத்த மகள் ஆறாம் ஆண்டு படிப்பாள். இளையவளோ நான்காம் ஆண்டில் கல்வி கற்பாள். அப்படி ஒரு நிலையில் இலங்கையில் இவர்கள் எந்தப் பாடசாலையில் கல்வியைத் தொடர அனுமதி பெறுவது? தமிழ்மொழி மூலம் கல்வி கற்பிக்கும் பாடசாலைகளே அங்கு அதிகம். கொழும்பு போன்ற முக்கிய நகரங்கள் சிலவற்றில் சர்வதேச ஆங்கில மொழி மூலப் பாடசாலைகள் இயங்குகின்றனவாம். அவை யாவும் தனிப்பட்ட நபர்களால் அல்லது மட்டுப்படுத்தப் பட்ட தாபனங்களால் இயக்கப்படுவன. அவ்வாறாயின் அதிகப் பணம் செலவிட்டு, கொழும்பில் குடியிருந்து இவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்படும். இது சரியானதா? எனது நிலைக்கும் பிள்ளைகளது சுபாவத்திற்கும் ஒத்துவரக்கூடியதா ?

29 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
எவ்வளவு நீண்ட காலம் ரூஸ்யாவில் வாழ்ந்தாலும், அங்கு குடியுரிமை ஒருக்காலும் தரப்படமாட்டாது. அது சோசலிச நாடாக பலகாலம் இருந்து அந்தக் கொள்கையிலே ஊறி வேர் விட்ட தேசம்.
இவ்வாறெல்லாம் சிந்தித்த எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. என் மனைவியுடன் இதுபற்றி எடுத்துக் கூறி அவரது அபிப்பிராயத்தையும் கேட்டேன். “எனக்கு ஒன்றும் தெரியாது. நீங்கள் விரும்பியபடி செய்யுங்கள்” என்றார். அத்தோடு தனக்கும் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. ஆனால் “நீங்கள் தனியே இங்கே எவ்வாறு சீவிப்பீர்கள் என்றுதான் சிந்திக்கிறேன்" என்றும் கூறினார். “என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நான் எப்படியும் சமாளித்துக் கொள்வேன்” என்றேன். “சிறியாவுதல் உங்களுடன் இருந்தால் பரவாயில்லை. அவனையும் எங்காவது ஒரு பாட சாலையில் சேர்த்து விடத்தானே வேண்டும். தகப்ப னில்லாத பையன்” என்று தனக்குள்ளே விசனப் பட்டுக் கொண்ட மனைவி “நீங்கள் சொல்லுவது தான் சரி. இந்த படிப்பால் எமக்கு பிரச்சினை உருவாகுமே அன்றி விமோசனம் கிடைக்காது” என்றார்.
அன்று இரவு இதைப் பற்றி கடுமையாக சிந்தித்து இறுதியில் தாயையும் பிள்ளைகளையும் ஊருக்கே திருப்பி அனுப்பி வைப்பதென்று முடிவெடுத்தேன்.
இம்முடிவு சரியானதென்றே இன்றுவரை என் மனச்சாட்சி அடித்துக் கூறிக்கொண்டிருக்கிறது. வேறு சிலரைப் போல் நாடோடிக் கூட்டமாக கிடைத்ததைப் பற்றிக் கொண்டு சென்று அன்னிய நாடொன்றில் தஞ்சம் தேட எனக்கு அறவே விருப்பமில்லை. நல்லதோ கெட்டதோ, பிரச்சினை மிகுதியோ சமாதானமோ இறுதிவரை நான் பிறந்த சொந்த மண்ணே எனக்கு தாயகம். அங்காடி வியாபாரியைப் போல் அல்லது

Page 18
மொஸ்கோ அநுபவங்கள் 30
அடிபட்ட பெண் நாயைப் போல் எங்கு போயாயினும் எப்படியும் வாழலாம் என்ற கோட்பாடு என்னிடம் இல்லை. மொஸ்கோ வாசம் செய்த காலக் கட்டத்தில் எத்தனையோ நண்பர்கள் என்னையும் கனடாவிலோ வேறொரு ஐரோப்பிய நாடொன்றிலோ சென்று பிள்ளைகளுடன் குடியேறுமாறு ஆலோசனை வழங் கினர்கள். இராஜ தந்திர உத்தியோக நிலையில் உள்ளவர்களுக்குள்ள சலுகைகளைப் பிரயோகித்து அதனைச் சிரமமின்றி செய்யமுடியுமென்பது அவர்களது எண்ணம். சொந்தவூரில் அன்னமாக இருப்பது பிற ஊரில் காகமாக கணிக்கப்படும் என்பது பேச்சு வழக்கில் உள்ள ஒரு பொன்மொழி. அதுமட்டுமல்ல; மாறுபட்ட மொழி கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட மேலைநாட்டில் எத்தனை காலத்திற்குத் தான் எமது சந்ததி, சந்ததியாக நிலை பெற்று வாழ முடியும்? மொழி முன்னர் சிதைந்துபோக பண்பும் கலாச்சாரமும் அடுத்து “டாட்டா” காட்டிவிடும் எம்காலத்திலேயே இதனைப் பார்த்து பின்பு மனம் வெம்புவதில் என்ன அர்த்தமுண்டு? நமது கீழைத்தேய வாழ்க்கை முறை இயற்கையானது. மேலைத் தேய வாழ்க்கை அமைப்போ இயந்திர மயமானது. போலி அதிகமாகப்பட்டது. ஆகவே அவர வர் மன இயல்புப்படியே வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் தப்பில்லைதான். என்றாலும் அதில் எனக்கு அறவே விருப்புக் கிடையாது. அதுபோலவே என்பிள்ளைகளும், நான் பிறந்த பூமியில் நற்றமிழ் பேசி நலங்குன்றாக் கலாச்சார விழுமியங்களோடு வாழ வேண்டுமென்பதே என் ஆசை.
22.08.1991 அன்றுதான் சோவியத் ஒன்றியம் சிதறுண்டது. அந்த நாளில்தான் எனது மனைவியும் மக்களும் இலங்கைக்கு மீண்டும் பயணமாவதற்கு விமான டிக்கட் மற்றும் ஒழுங்குகள் யாவும் செய்யப்பட்டன. எதிர்பாராத விதமாக அன்று ஊரடங்கு

31 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
உத்தரவு மொஸ்கோ நகர் எங்கும் பிரகடனப் படுத்தப் பட்டது. அதனால் அன்று விமான சேவை இடம் பெறுமோ என்பது கூட நிச்சயமில்லாதிருந்தது. இருந் தாலும் இறைவனது கருணையினால் எந்த ஒரு இடையூறுமின்றி அன்று விசேட பாஸ் பெற்று மொஸ்கோ செரமித்தியோவ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்து ஊருக்கு அவர்கள் மூவரையும் அனுப்பிவைத்தேன்.
திரும்பி வீட்டிற்கு வந்தபோது பிள்ளைகள் இல்லாதது என்னவோ போல இருந்தது. நினைத்தால் அழுகை வரும்போல் தோன்றியது. இடம் வெற்றிட மானபோது அந்த இடத்தை நிரப்ப உஷ்ணக் காற்று வீசி வருவதுபோல என் உள்ளக் குமுறல்களை எல்லாம் சமாளிக்க என் தங்கையின் புதல்வனின் வியாபகம் துணை செய்தது. அவனையும் என் பிள்ளை எனவே கருதி வந்ததால் ஓரளவு ஆறுதல் பெற்றேன்.
மொஸ்கோவின் கொஸ்மொஸ் உலக விற்பனைப் பொருள் கண்காட்சி நிலையத்தில் அமைந்துள்ள மாதிரி செயற்கைக் கலம்.

Page 19
மொஸ்கோ அநுபவங்கள் 32
ரூஸ்ய பொலிசார்
04. சிரியின் திருரம்
இலங்கையில் நிலைமை சீர் இல்லை. சிங்கள:- தமிழ் இனக் குரோத உணர்வு அலை எங்கும் வீசியது. 1990-91 ஆண்டுகளில் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் உக்கிரமான அழிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. யக்கங்கள் என்ற பெயரில் செயல்பட்ட சில குழுக்கள் கூட கட்டாய இராணுவ சேர்ப்பு என்ற சாட்டில்’ தமது தனிப்பட்ட பகைமை உணர்வைப் பயன்படுத்தி பல வயது வந்த பையன்களின் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டிருந்தன. இந்த அச்சுறுத்தலின் பின்னணி காரணமாகவே எனது மருமகன் நேசசிறியையும் என்னோடு சேர்த்து ரூஸ்யாவுக்கு அழைத்து வர வேண்டிய கட்டாய தார்மீகக் கடப்பாடு எனக்கேற் பட்டது. எனது தங்கைக்கு மூன்று குழந்தைகள். இருவர் பெண்கள். ஒரே ஒரு ஆண் பிள்ளை நேசசிறியே.
 

33 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
அத்தோடு குடும்பத்தில் இவனே மூத்தவனும் கூட. பையனின் தந்தை 1986ம் ஆண்டில் இருதய நோய் ஏற்பட்டு சடுதியாகப் போய்விட்டார். இவனுக்கு ஏதாவது நடந்து விட்டால் அவன் தாய் உயிரோடு இருப்பது நிச்சயமல்ல. குடும்பத்தின் மூத்த மாமன் எனக்கு உள்ள கடமை, உரிமை, இரத்த பாசம் என்பன வற்றால் உந்தப்பட்டே இதனைச் செய்யவேண்டிய பொறுப்பிற்குள் தள்ளப்பட்டேன். இறைவனின் கருணையினால் அவனது விடயம் பிரச்சினை எதுவு மின்றி இலகுவாக ஈடேறிய போதிலும், ரூஸ்யாவுக்கு வந்த பின்பு வீட்டில் சும்மா வைத்திருப்பது அவனது எதிர்கால வாழ்க்கையைச் சூனியமாக்குவதற்கு ஒப்பானதல்லவா ?
ஜி.சி.ஈ. (உத) பரீட்சை முதல் தடவை எழுதிய நேரம் தான் அவனுக்கு இவ் இக்கட்டான நிலை தோன்றியது. நிம்மதியற்ற சூழலில் யாரால், எவ்வாறு கிரகித்துப் படித்துப் பரீட்சை எழுதமுடியும்?
ரூஸ்யாவிலும் அதன் நேச நாடுகளிலும் உள்ள சர்வ கலாசாலைகளில் வெளிநாட்டவர் பலர் உயர் கல்வி கற்று வருகிறார்கள். வைத்தியம், என்ஜீனியறிங், ஜேர்ணலிசம், மிருக வைத்தியம் என்ற பலதுறைகளில் இலங்கை மாணவர்களும் கல்வி கற்று வந்தனர். தொழில் வாய்ப்பு நோக்கில் எவ்வாறு முகவர்கள் பணத்தை ஏப்பமிட்டுவிட்டு ஆட்களைக் கொண்டு வந்து அங்கு இறக்குகிறார்களோ அவ்வாறே வேறுசிலரும் உயர்கல்வி என்ற வசியத்தை மையமாக வைத்து இளைஞர்களையும் யுவதிகளையும் தொகையாக கொண்டு வந்து இறக்கினர். ஸ்கொலசிப் என்று கூறியே கூட்டி வரப்பட்டாலும், உண்மையிலேயே இந்த இறக்குமதிக்கும் ரூஸ்ய அரசாங்கத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. 1990 - ம் ஆண்டுக்குப் பின்னர் 3

Page 20
மொஸ்கோ அநுபவங்கள் 34
சோவியத் ஒன்றியம் பொருளாதார ரீதியில் நலிவ டைந்து கொண்டே சென்ற காரணத்தால், நேச நாடுகளுக்கான மாணவர் புலமைக் கொடுப்பனவைக் கூட இரத்துச் செய்துவிட்டது. ஆகவே படிப்பு நோக்கில் கொண்டுவந்து இறக்கப்பட்ட இவர்கள் வருட மொன்றுக்கு 2000 அமெரிக்க டொலர் பணம் செலுத்த வேண்டியவர்களானார்கள். சாதாரணமாக வைத்தியம், என்ஜீனியறிங் ஆகிய கற்கை நெறிகளுக்கான கால எல்லை இங்கு மொத்தம் ஐந்தாக இருந்தபோதிலும், ரூஸ்ய மொழி மூலமே பாட போதனை செய்யப் பட்டதனால் ஆரம்ப வருடம் ரூஸ்யன் மொழியைக் கற்பதற்கென அதையும் சேர்த்து மொத்தம் ஆறு வருடங் களுக்குப் பணம் செலுத்த வேண்டியவர்களானார்கள்.
தூதரகத்தில் பணியாற்றிய காரணத்தால் எனக்கு ஏதோ ஒரு வகையில் இந்தக் கல்வி முகவர்களில் இருந்து மாணவர்கள் வரை அறிமுகம் சேரும் ஒரு கேந்திர நிலையமாக அது அமைந்து இருந்தது. அதிலும் முன்பு சோவியத் யூனியனில் புலமைப் பரிசில் பெற்று கல்வி கற்றுத் தேறிய பலர் தரமான தொழில் ஒன்றைத் தேடிக் கொள்ள முடியாமலோ அல்லது வேண்டா மலோ இந்த ஏஜன்சி தொழிலையே செய்து வந்தனர். அத்தகையவர்களில் ஒருவராக டாக்டர் மல்வத்தை என்பவரும் இருந்தார்.
டாக்டர் மல்வத்தையின் மானசீகமான உதவி ஒத்தாசைகளுடன் 1991-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் திகதி உக்கிரேன் நாட்டின் தனியஸ்க் என்ற பட்டணத்தில் உள்ள ஒரு சர்வ கலாசாலையில் வைத்தியக் கல்வி பெறும் வாய்ப்பை சிறிக்கு ஏற்படுத்திக் கொடுத்து விமானமூலம் டாக்டர் மல்வத்தையுடன் அனுப்பிவைத்தேன்.

35 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
மேற்கு நாடுகளில் கல்வியாண்டு, செப்டம்பரில் தொடங்கி ஜ"னில் முடிவடையும். இதன்படி இரண்டாம் தவணை விடுமுறைக்காக மார்ச் 1992ல் வந்து என்னோடு இருந்தபோது சிறி, தனக்கு வைத்தியக் கல்வியைத் தொடர விருப்பமில்லை என்றும், ரூஸ்யாவில் பெறப்படும் எந்தச் சான்றித ழுக்கும் உலக நாடுகளில் மதிப்பில்லை என்றும், அதனால் அச்சான்றிதழைக் கொண்டு தொழில் தேடுவது மிகவும் சிரமம் என்றும் கூறிச் சலிப்படைந் தான். சிறியோ டு சேர்ந்து விடுமுறையைக் கழிக்க வந்திருந்த அவனது கலாசாலை நண்பனான அகிலனும் அதனை ஆமோதித்து ஆதரித்துப் பேசினான். அத்தோடு இருவரும் லண்டன் சென்று அங்கு ஏதாவது படிக்கலாம் என்றும் யோசனை கூறினர். எனது சம்மதத்தையும் கேட்டனர். நானும் மறுப்பில்லை என்றேன்.
இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், பாக்கிஸ் தான், சூடான் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்களில் பலர் நேர்மையீனமான செயல்களில் ஈடுபட்டு சலுகைகளைத் துஷ்பிரயோகம் செய்துவிட்டதனால் மேற்குலக நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான தூதரகங்களில் நம்மவர்கள் சென்று விசா பெற விண்ணப்பித்தால் அவர்களை அடித்துக் கலைக்காத குறையாக மறுப்புத் தெரிவித்து திருப்பி அனுப்பி வைப்பார்கள். மொஸ்கோவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகமும் இதற்கு மாறுபட்டதாக இருக்கவில்லை. ஆகவே சிறி, தான் தனியே சென்று விசா பெறுவதற்கு தயக்கமடைந்து என்னையும் கூட வந்து உதவும் படி கேட்டுக் கொண்டான்.
பிரிட்டிஷ் தூதரகத்தில் விசா அதிகாரியாக
அப்போது திரு. பிறவுண் என்ற வயது சென்ற ஒரு அதிகாரியே இருந்தார். வின்ரர் பனிக்குளிரும், ஜில்

Page 21
மொஸ்கோ அநுபவங்கள் 36
என்று அடித்து காதுகளை செவிடாக்கும் காற்றும் அவ்வதிகாரி கூறிய வார்த்தைகளைச் செவிமடுக்க முடியாதபடி செய்துவிட்டது. விசா விசாரணை நடத்துமிடமாக அடைப்பில்லாத ஒரு கட்டிடத்தின் தாழ்வாரத்தையே பயன்படுத்தினார்கள். ஏதோ நல்ல வேளையாக அடுத்த நாள் வரும்படி கூறிவிட்டு மிஸ்டர் பிறவுண் எழுந்து போய்விட்டார்.
அடுத்த நாள் காலை அங்கு சென்றபோது திரு பிறவுண் சற்று மகிழ்ச்சியாகவும் முகப் பொலிவுடன் ஆதரவாகவும் செயல்பட்டதாக தெரிந்தது. முதலில் என்னை ஓர் எம்பசி அதிகாரி எனச் சுய அறிமுகம் செய்து கொண்டு பேச்சைத் தொடர்ந்தேன். ஆரம்பத்தில் உரையாடல் கரடு முரடாக இருந்தாலும் இறுதியில் இசைந்து இறங்கி வந்து உதவி செய்தார் திரு.பிறவுண். இறைவன் நாட்டத்தால் சிறிக்கு நேர்வழியில் பிரிட்டிஷ் விசா கிடைத்து விட்டது.
துரிதமாக பிரிட்டிஷ் எயர் லைன்ஸ் மூலம் பயணச் சீட்டுப் பெற்று 30.03.1992 அன்று மொஸ்கோவிலிருந்து லண்டனுக்கு சிறியைப் பயணப் படுத்தி அனுப்பி வைத்தேன். அன்று என்னுள் பிரிவுத் துயரம் தாங்க முடியாத வகையில் தலை தூக்கியபோதிலும் பையனின் வாழ்வுக்கான ஒரு நற்கருமம் இனிதே நடந்தேறியதை எண்ணி மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை.
இப்போது அவன் லண்டன் வெஸ்மினிஸ்டர் சர்வகலாசாலையில் கணனியியலில் முதுமாணிப் பட்டத்திற்காக படித்துக் கொண்டு இருப்பதாக அறிகிறேன்.

37 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
05. குருச8சன்விே அகிரெசத் தொல்லை
திரு. தருமசேன தூதரகத்தில் பணிபுரிந்து வரும் வர்த்தகப் பிரிவு அதிகாரி. மொட்டைத் தலையும் கருப்பு நிறமும் கொண்ட அவரது தோற்றம் சற்று விகாரமுடையதாக இருந்தது. உணர்ச்சிகளுக்கு எளிதில் பலியாகிவிடும் இயல்பு கொண்டவர். ஆத்திரம் ஏற்படும் சமயங்களில் பற்களை நறுநறு என்று கடித்து ஆர்ப்பாட்டமாக கொக்கரிக்கும் அவரால் சிறிய ஒரு பிரச்சனையைக் கூட நிதானமாக நின்று நோக்கும் பக்குவம் இருக்கவில்லை. அங்குள்ள ஏனைய சிங்களவர்களாலும் வெறுத்து ஒதுக்கப் படத்தக்க ஒரு விசித்திர மனிதனாக திரு. தருமசேன திகழ்ந்தார். சிறு பிரச்சினையாக இருந்தபோதிலும் அது அவரது மனப் போக்குப்படி பெரிய விடயமெனப் பொருள் கொள்ளப் பட்டால் தொடர்ந்து சில நிமிடங்கள் நகங்களைப் பற்களால் கடித்துக் கொண்டே ஆழ்ந்த யோசனையில் மூழ்கி இருப்பதோடு பிறரிடமும் சென்று அதனைப்

Page 22
மொஸ்கோ அநுபவங்கள் 38
பற்றிப் பிரஸ்தாபித்து தனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தை ஏசித் தீர்ப்பது அல்லது அழுது புலம்புவது அவரிடம் இருந்த வழக்கமாகும். முன்யோசனை இன்றி யாருடனும் சண்டையிட்டு தாறுமாறாக வார்த்தையை அள்ளி வீசி விடுவார். பின்பு அதற்காக தானே வருத்தப் படுவதோடு குறித்த அந்த நபரிடம் கூசாமல் சென்று மன்னிப்புக் கேட்டு சமாதானமாகப் போவதும் அவரது நடைமுறை.
இலங்கையில் தேசிய ரீதியாக வெளிப்பட்டு நிற்கும் இனக்குரோத உணர்வு இவரிடம் அதிகம் இருப்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது.
தூதரகப் பணிகளை ஏற்ற அன்று தொடக்கம், தினமும் திரு தருமசேன என்னிடம் வந்து ஏதோ சம்பந்தமில்லாதவைகளைக் கூடப் பேசிக் கொண்டு நேரத்தை வீணடிப்பார். கேலியாக அல்லது ஏதோ விகடமாகப் பேசுவதுபோல் எப்போதும் காரசாரமாக கதைக்கும் அவரது பேச்சில் சிங்கள - தமிழ் இனக்குரோத பழியெண்ணம் கலந்திருக்கும். காலை யில் கந்தோர் தொடங்கும் நேரத்திற்கு முன்பாகவே கடமைக்கு வந்துசேரும் திரு. தருமசேன நேராக தன் மேசைக்குப் போகாமல் அங்குமிங்கும் சென்று ஒவ்வொருவரிடமும் எதை எதையோ கூறிய வண்ணம் பிறருக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதி லேயே ஒரு இனம் புரியாத திருப்தி அடைவார்.
வின்ரர் கால நடுப்பகுதி அன்று. பனிக் குளிரின் அகோரம் மிகவும் கடுமையானதாக இருந்தது. பாதையில் நடந்துவந்தபோது ஐஸ் திவலைகள் அகோரக் காற்றினால் வீசி அடித்தது. வழக்கம்போல் காலையில் கடமைக்கு வந்து கோட்டை கழட்டி கொழுவி வைத்துவிட்டு உடலை ஆசுவாசப் படுத்திக்

39 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
கொள்ளும் பொருட்டு சிறிது நேரம் கதிரையில் உட்கார்ந்திருந்தபோதுதான் திரு. தருமசேன எனது அறைக்குள் நுழைந்து வழமையான அவரது பல்லவி யைப் பாடிக்கொண்டிருந்தவர், திடீரென்று சற்று கீழிறங்கி, “சபா, நீங்கள் இன்னும் இறந்து போக வில்லையா?” என்றார். அதற்கு நான் எந்தப் பதிலும் கூறாமல் அப்படியே இருக்கவே, விகடமேலீட்டால் மேலும் குதூகலமடைந்து “சபா, நீங்கள் செத்து தொலைந்து போய்விட்டதாக அல்லவோ நான் கருதிக் கொண்டிருக்கிறேன்! ஆனால் ஒன்று; எனக்குள்ளதுக்கம் என்னவென்றால் உங்களுடைய அஸ்தியை இராஜீய பொதி (Diplomatic Bag) யில் இட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்க அதிகம் செலவாகுமே என்பதுதான்” என்றார். நான் அப்போதிருந்த அசெளகரிய நிலை யிலோ அல்லது அவரது வார்த்தைகளின் ஜீரணிக்க முடியாத தன்மையினாலோ என்னவோ என்னுள் அது காலமும் “போகட்டும் போகட்டும்” என்று அடக்கி வைக்கப்பட்டிருந்த ஆத்திரப் பூதம் என்னையும் மிஞ்சி வெளிப்பட்டதோடு ஆவேசம் கொண்டு இப்படி பதில் கூற வைத்துவிட்டது.
“ஆம்! திரு தருமசேன அவர்களே! நான் இறந்து ஒழிந்துபோய்விட்டேன்தான். இப்போது உங்கள் முன்னே இருப்பது நான் அல்ல; என் ஆவி என்னால் இப்போது என்ன வேண்டுமானாலும் செய்து நிறை வேற்றமுடியும். கொலையும் புரிய முடியும். ஆனால் எவராலும் என்னைத் தண்டித்து விடமுடியாது” என்று ஆவேசமாக, ஆனால் பக்குவமாக கூறிமுடித்தேன்.
தருமசேன என்ன நினைத்தாரோ தன் நிலையில் இருந்து கீழிறங்கி வந்து, “சபா, நான் ஒரு ஜோக்குக்காக சொன்னேன். கோபப்படவேண்டாம்” என்றார். அதற்கு நான், “மிஸ்டர் தருமசேன, ஜோக்

Page 23
மொஸ்கோ அநுபவங்கள் 40
என்பதன் அர்த்தம் புரியுமா உங்களுக்கு? விகடம் என்பது விகடத்தை உரைப்பவரும், அதனால் நேரடியாக தாக்கத்திற்குள்ளாகுபவரும், கேட்டு ரசிக்கும் ஏனை யோரும் அதன் பொருளைப் புரிந்துகொண்டு மகிழ்ந்து சிரிக்க வேண்டிய அம்சமே அல்லாது ஜோக்கை அவிழ்ப்பவர் மட்டும் மகிழ்ந்து திருப்திப் பட்டுக் கொண்டிருக்க அந்த ஜோக்கினால் குறித்துரைக்கப் படுபவர் ஆத்திரமடைந்து மன வேதனைக்குள்ளாவது விகடமல்ல. அதற்குப் பெயர் பழிவாங்கல் அல்லது தொந்தரை செய்தல் என்பதேயாகும். இங்கே நீங்கள் சந்தோசமடைய நானோ மனவேதனையில் துடிக்க இது எந்தவகையில் ஜோக்காகும்?” என்று ஆத்திரம் தீரக் கூறினேன்.
“ஐயோ! நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்றுதான் இப்படி உரையாடினேன். சரி, சரி நான் போய் விடுகிறேன்” என்று கூறிக்கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்துபோய்விட்டார்.
வேறு சந்தர்ப்பமாக இருந்திருந்தால், இதனைப் பலரிடமும் போய்க்கூறி தனக்கு இழைக்கப்பட்ட துன்பத்தைப் பலவாறாக தூற்றிப் பேசி புலம்பி இருப்பார். இது விடயத்தை அவர் இதுவரை எவருக்குமே தெரியாதபடி கச்சிதமாக மறைத்ததிலிருந்து தருமசேன வேண்டுமென்றே செய்த ஒரு குரோத உணர்வே இதுவன்றிதமாஷாவோ அல்லது விகடமோ அல்ல என்பது வெளிப்படை.
மற்றுமொரு நாள் இரவு பத்து மணி இருக்கும். டெலிபோன் மணி அலறியது. ஒலிவாங்கியை எடுத்து “ஹலோ’ என்றேன். மறுமுனையில் இருந்து தரும சேனவின் குரல் ஒலித்தது.
மொஸ்கோ நகரத்தில் உள்ள வீடுகளில் ஒருவித கரப்பொத்தான் இனப் பூச்சிகளின் தொல்லை மிக

41 s ஆரையம்பதி க. சபாரெத்தினம்
அதிகம். குறிப்பாக சமையல் அறை, குளியலறை போன்ற இடங்களில்தான் அவற்றின் நடமாட்டம் பெருமளவில் இருக்கும். உணவுப் பொருட்கள், பாத்திரங்கள், சுவர் உடைவுகள் ஆகியவையே அவை உறைந்து வாழும் இடங்கள். எத்தகைய பூச்சிக் கொல்லி மருந்துகள் பாவித்த போதிலும் அவற்றின் பெருக்கத் தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இலங்கையி லிருந்து மொஸ்கோவுக்கு வந்த நண்பர் ஒருவர் ஒருவகை வெண் மருந்துத் தூள் அடங்கிய சரைகளை எங்களுக்குக் கொடுத்து அம்மருந்து கரப்பொத்தானை அடியோடு அழித்துவிட வல்லது என்றும் கூறிச் சென்றார். அம்மருந்துப் பொதிகளில் சிலவற்றை திரு தரும சேனவுக்கும் அவர் கொடுத்திருந்தார்.
“சபா! நான் கரப் பொத்தான் மருந்தை பாவித் தேன். அது அவற்றை அழிப்பதற்கல்ல. நான் வைத்தது விருந்து” என்றார். நான் பதில் எதுவும் கூறும் முன் அவரே தொடர்ந்தார்: “சோற்றில் நன்றாகப் பிசைந்து அங்கும் இங்கும் அவை வந்து மேயும் இடமெல்லாம் வைத்தேன். அவற்றைச் சாப்பிட்ட கரப் பொத்தான்கள் இன்று வழமையைவிட உஷா ராக, தேகாரோக் கியமாக, சந்தோஷமாக திரிகின்றன. ஆதலால் நான் கொடுத்தது நாசினி மருந்தல்ல; விஸ்கியோடு கூடிய அறுசுவை விருந்து” என்றார்.
எனக்கு இதைக் கேட்க வேடிக்கையாக இருந்தது. பிறருக்குத் தொல்லை கொடுக்கும் தருமசேனவும் குசினிகளில் தொல்லை கொடுக்கும் கரப்பொத்தானும் இணைந்து விருந்து கொண்டாடியது வாஸ்தவமே. இறைவனின் தொடர்பு படுத்தல் முறையை எண்ணி வியந்து மகிழ்ந்தேன்.
O O O

Page 24
மொஸ்கோ அநுபவங்கள் 42
06. ஆட்டில்கள் பெறப்பட்டமை
நான் குடியிருந்த வீடு, நஹிமோவஸ்கி புறஸ் பெக்ட் பகுதியின் சிம்பொறோ பொல்ஸ்கி புல்வார் வீதியின் 25-ம் இலக்கத்தில் (பன்னிரண்டு மாடிகள் கொண்ட ஐந்து தொடர்மாடிக் கட்டட தொகுதியில்) அமைந்திருந்தது. எட்டாம் மாடியில் அமைந்திருந்த அந்தக் குடிமனை இரண்டு பெட்ரூம்களையும், பாத்ரூம், குசினி அத்தோடு சிற்றிங்கால் ஒன்றையும் உள்ளடக்கியிருந்தது. இரண்டு பெட்ரூம்கள் இருந்தனவே அன்றி அவற்றினுள் ஒரு பெட் கூட இருக்கவில்லை! சிற்றிங்கோலில் கிடந்த நீண்ட சோபா ஒன்றும், மற்றெஸ்கள் இரண்டுமே எங்கள் நால் வருக்கும் படுக்கைகளாக அமைந்தன. எனக்கு முன்பு அங்கு குடியிருந்த திரு/திருமதி பெர்னாண்டோ புள்ளே முதல் அதற்கு முந்திய எவர்களோ அவர்களும் கூட அவ்வாறுதான் அங்கு வசித்து வந்திருக்கவேண்டும்!
என்னுடன் தூதரகத்தில் வேலை பார்த்தவர்களில் திருமதி பிரமிளா தென்னக்கூனும் ஒருவர். இவர் அங்கு கல்வி, கலாச்சார உத்தியோகத்தராக கடமை பார்த்து வந்தார். ரூஸ்யாவிலே படித்துப் பட்டம் பெற்றமை யினால் ரூஸ்ய மொழிப் புலமை மிக்கவராய் விளங்கிய அவர் பழகுவதற்கு இனிய சுபாவம் கொண்டவராக இருந்தார். இவர் ஒரு காலத்தில் இலங்கை அரசின் மந்திரி சபையில் பிரதி அமைச்சராக இருந்த திரு ஷெல்டன் ரணராஜாவின் மூத்த புதல்வியாவார். திரு ஷெல்டன் ரணராஜா இலங்கை அரசியல்வாதிகளில் ஒரு தனித்தன்மை வாய்ந்தவர். சரத் மூத்தட்டு வேகம, காமினி பொன்சேகா, வாசுதேவ நாணயகார என்று விரல்விட்டு எண்ணத்தக்க சிங்கள நடுநிலை அரசியல்வாதிகள் வரிசையில் ஒரு நேர்மையான

43 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
அரசியல்வா தியே ஷெல்டன் ரணராஜா. இலங்கை அரசியல் நெருக்கடி எந்த நிலையில் இருந்த போதும் எப்போதும் இவர் தமிழர் பிரதிநிதியாக அல்ல நீதியின் குரலாக நியாயத்திற்காகவே பரிந்து பேசுபவர். இதனால் சிங்கள மக்களால் வக்கணையாக நடராஜா' என்று ‘தமிழ்ப்படுத்தப்பட்டு அழைக்கப்படுபவர்.
ஒரு விடுமுறை நாள். சனிக்கிழமையாக இருக்கலாம். திரு/திருமதி தென்னக்கூன், நான் குடியிருந்த பகுதியில் அமைந்திருந்த தளபாடக் கடை ஒன்றுக்குச் சென்று மீளும் வழியில் என்னையும் தரிசித்துச் செல்லும் நோக்கில் வீட்டுக்கு வந்தனர். அவர்களை ஆதரித்து அழைத்து உபசரித்த சமயம் அவர்கள் எனது வீட்டைப் பார்வை ஓட்டம் விட்டனர் போலும்!
கணவனும் மனைவியும் தமக்குள் சம்பாஷித்துக் கொண்டு, “சபா, உங்கள் பெட்ரூம் எது?” என்றார்கள் ஆர்வத்தோடு.
“இதோ’ என்று எதிரெதிராக அமைந்திருந்த அறைகள் இரண்டையும் காண்பித்தேன்.
“அது சரி இங்கே பெட் எதையும் காண வில்லையே! நீங்கள் எங்கே நித்திரை செய்கிறீர்கள்?” என்றார்கள்.
அவர்கள் முன்னால் சிற்றிங்ஹாலில் சிறிது பழுதடைந்திருந்த நீண்ட சோபாவைக் காட்டி"இதோ இதில்தான். . .” என்றேன்.
என்னைப் போன்ற ஏனைய உத்தியோகத்தர்கட்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளையும் எனது வீட்டில் காணப்பட்ட அடிப்படைத் தேவையற்ற தன்மையையும் ஒப்பிட்டு விசனப்பட்டு அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டார்கள்.

Page 25
மொஸ்கோ அநுபவங்கள் 44
“பரவாயில்லை. நான் எப்படியும் சமாளித்துக் கொள்வேன்” என்றேன்.
“என்றாலும் இது ஒரு நீதியற்ற செயல்” என்று கூறி விடைபெற்றுவிட்டனர்.
அதனை அடுத்து வந்த திங்கட்கிழமை. வழக்கம் போல தூதரகத்தில் வேலையில் மூழ்கி இருந்தேன். அம்பசடரின் பியூன் வந்து என்னை அவர் அழைப்பதாக கூறிச் சென்றான்.
அறையின் உள்ளே நுழைந்ததும் முக வந்தனம் கூறி உட்காரும்படி பணித்தார்.
“நீங்கள் எவ்வாறு நித்திரை செய்கிறீர்கள்?” என்ற அவரது கேள்வி எனக்கு திணறலாக இருந்தது. ஆனாலும் “வழக்கம் போலதான்” என்று எதுவும் புரியாமல் பதிலளித்தேன்.
“அதுவல்ல என் கேள்வி. வீட்டில் உமக்கு கட்டில்கள் தரப்பட்டுள்ளனவா?” என்று கேட்டார். இப்போதுதான் அவரது கேள்வியே எனக்குப் புரிந்தது.
“இல்லை. இருந்தாலும் சமாளிக்கிறேன்" என்றேன்.
“பாருங்கள். இது ஒரு மோசமான குளிர் நாடு. இங்கு கட்டில்கள் இல்லாமல் எப்படி சீவிப்பது? இந்த ஆறுமாத காலத்திற்கு இந்த விடயத்தை எனது கவனத்திற்கு எவருமே கொண்டுவரவில்லை” என்றவர் சேவகனை அழைத்து “திரு. தயானந்தாவை வரும்படி சொல்” என்று கட்டளை இட்டார்.
திரு. தயானந்தாதான் நிருவாக உத்தியோகத்தர். ஊழியர் சேம நலன்களுக்குப் பொறுப்பான உத்தியோகத்தரும் கூட.

45 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
“இவருக்கு கட்டில்கள் வழங்கப் படாததேன்?” தயானந்தா வைப் பார்த்து அம்பசடர் கேள்வி எழுப்பினார்.
“இங்கு பல தளபாடக் கடைகளில் தேடினேன். கிடைக்கவில்லை”
“இது சரியான பதிலில்லை. அப்படியானால் இந்த ஆறுமாத காலத்திற்கு இவ்விடயத்தை எனது கவனத்திற்குக் கொண்டு வராத தேன்? “தயானந்தா ஏதோ பேச முனைந்தார். ஆனால் அம்பசடர் குறுக்கிட்டு “எதுவும் பேச வேண்டாம். இன்னும் இரண்டு வாரத்திற்குள் கட்டில்கள் நான்கு இவர் வீட்டுக்கு வந்து சேர வேண்டும். ஒகே’
தயானந்தா அதிருப்தியுடன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நானும் அம்பசடருக்கு நன்றி கூறிவிட்டு வெளியே வந்தேன்.
மனதில் எனக்கு ஒருவித கலக்கம். என் முன்னால் அம்பசடர் தயானந்தா வை அழைத்து பேசியதனால் அவன் இப்போது என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளப் போகிறானே! இது எனக்கு வீண் தொல்லை யாகி விடுமே. ஒரு இடத்தில் பணிபுரியும் எங்களுக்குள் இத்தகைய சந்தேகங்கள் மனக் கசப்புகள் நன்மையைத் தேடித்தரா. ஆகவே, தயானந்தாவைக் கண்டு எனது நிலையை எடுத்துக் கூறுவதே பொருத்தமாக இருக்கும். இப்படியே விட்டுவிட்டால் அது, நான் போய் அம்பசடரிடம் முறையிட்டதாகவும் அதற்கு அவர் நடவடிக்கையில் இறங்கியதாகவுமே அர்த்தம் கற்பிக்கப் படலாம். காரணிகள் பொருத்தமாக அமைந்து பனை மரத்தின் கீழ் இருந்து பால் குடித்த கதைபோலா கிவிடும்.
ஆகவே தயானந்தா வைக் கண்டு, “நானாக

Page 26
மொஸ்கோ அநுபவங்கள் 46
எதையும் அம்பசடரிடம் எடுத்துச் சொல்லவில்லை, மாறாக அவரே என்னை அழைத்து விசாரித்தார். அத்தோடு உங்களையும் கூப்பிட்டு பேசினார். தயவு செய்து பிழையாக எதையும் கற்பனை பண்ணி விடாதீர்கள். கட்டில் தேவை என்று எவரிடமும் நான் கூறியதே இல்லை” என்றேன்.
எதை எப்படிக் கூறிய போதிலும், சந்தர்ப்ப சூழ் நிலை நான் கூறியவற்றை நம்ப தயானந்தாவை இசைய வைக்கவில்லை.
அதன் பின்பு அடிக்கடி அம்பசடர் கட்டில்கள் கிடைத்து விட்டனவா? என்பதை இட்டு விசாரித்துக் கொண்டே வந்தார். ஆனாலும் கட்டில்கள் பெறப்படவே இல்லை.
இது குறித்து அம்பசடர் கொழும்பு வெளிவிவகார அமைச்சருக்கு டெலக்ஸ் மூலம் அறிவித்துவிட்டார் என்பது பின்னர்தான் தெரியவந்தது.
இரண்டு மாதங்களின் பின்பு ஒருநாள் பின்னேரம் அம்பசடர் என்னை அழைத்து, “வெளியில் வாகன மொன்றில் இரண்டு கட்டில்கள் ஏற்றப் பட்டுள்ளன. அவை எனக்கென ஆடர் கொடுக்கப் பட்டவை. பரவாயில்லை. ஹன்டிமன் (Handy-man) ஐ அழைத்துக் கொண்டு போய் உமது வீட்டில் பூட்டி எடுத்துக் கொள்” என்றார்.
அவ்வாறுதான் எனக்கு கட்டில்கள் கிடைக்கப் பெற்றன.
O O O

47 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
07. அசிUசடfவிஜயரெட்ண அலுதவி
ஒரு காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் நீதி, உயர்கல்வி ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர் திரு. என்.பி. விஜயரெட்ண. அவர்கள் வரலாற்றுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்ற ஒரு கல்விமான். இலங்கை சிவில் சேவை அதிகாரியாக பலகாலம் சேவை புரிந்தவர். ஆங்கிலத்தில் கவிதைகள் இயற்றும் புலமை பெற்றவர். முன்னாள் அமைச்சராக இருந்த சேர் எட்வின் விஜயரெட்ணவின் மூத்த புதல்வர். இவரையே இலங்கை அரசாங்கம் தனது தூதராக 1991 -இல் இருந்து 1994 வரையான காலப்பகுதியில் ரூஸ் யாவுக்கு நியமித்திருந்தது.
திரு. நிசங்க பராக்கிரம விஜயரெட்ண அவர்களின் சேவை - புலமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இலங்கை சர்வகலாசாலை ஒன்று 1975ஆம் ஆண்டு டாக்டர் பட்டத்தை அளித்துக் கெளரவித்தது. மேலும் 1991 ம் ஆண்டில் அதிமேதகு ஜனாதிபதியாக இருந்த திரு. ஆர். பிரேமதாச அவர்கள் இவருக்கு தேச மான்ய விருது வழங்கிக் கெளரவித்தார்.
பழகுவதற்கு இனிய சுபாவம் உடையவர். உயர் கல்விமான் ஆனபடியா லோ என்னவோ சாதாரண சிங்களவர் ஒருவரிடம் காணப்படும் குறுகிய இனக்கு ரோத பழிவாங்கல் எண்ணம் இல்லாதவர். திறமையும் ஊக்கமும் உடையவர்களுக்கு எப்போதும் உதவிக்கரம் நீட்டி உயர உதவுபவர். அதற்காக சன்மானம் எதையுமோ புகழையோ யாசித்துப் பெற விரும்பாதவர்.
1994 ம் ஆண்டு காலப் பகுதியில் டாக்டர் நிசங்க பி. விஜயரெட்ண உல்லாசப் பயண நோக்கில் ரூஸ்யாவின் ஒரு கிராமப் பகுதியை சுற்றிப் பார்க்கச்

Page 27
மொஸ்கோ அநுபவங்கள் 48
சென்றபோது அவருக்கு ஆங்கில மொழி பெயர்ப் பாளராக உதவிய அலெக்ஸ் என்ற ஏழை ரூஸ்ய வாலிபன் ஒருவன் பண நெருக்கடி காரணமாக அமெரிக்கப் பல்கலைக் கழகமொன்றில் பயிலும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றும் அதனை ஏற்க வக்கில்லாமல் இருந்ததை அறிந்து அவனுக்குப் பண உதவி வழங்கி அப்படிப்பைத் தொடர உதவி செய்தவர். தன்னிடம் எவரொருவர் நியாயமான உதவி கேட்டு அணுகினாலும் அவருக்கு முடிந்த வரையில் நன் மனதுடன் செய்துதவுபவர்.
அம்பசடர் விஜயரெட்ண அவர்கள் ரூஸ்யாவில் பதவி வகித்த காலம் இலங்கையில் இன நெருக்கடி உச்சக் கட்டத்தில் இருந்த நேரம். சிங்களவரும் தமிழரும் ஒருவரை ஒருவர் பகைமை உணர்வோடு பார்த்து ஒதுங்கிய காலக் கட்டம். அதற்கேற்ற விதமாக கொழும்பிலும் வேறு சிங்களப் பிரதேசங்களிலும் விடுதலைப் புலிகள் வெடி குண்டுகளை வெடிக்க வைத்தும், அரசாங்க ஏவல்காரர்களைக் கொன்றும் குடி துரத்தியும் தம் பிரதேச எல்லைக் காவல் போராட்டத்தில் மும்முரமாக செயல்பட்ட சமயம். ஜனாதிபதி பிரேமதாச, காமினி திசநாயக, ரஞ்சன் விஜயரட்ண ஆகியோர் அகால மரணமெய்திய காலமும் அதுவே. அப்படியான உணர்வுகளைத் தூண்டும் நிகழ்ச்சிகள் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போதும் தேசமான்ய டாக்டர் விஜயரெட்ண அவர்கள் தமிழனான என்மீது எப்போதாவது மனம் நோகவோ பாரபட்சமாகவோ நடந்து கொண்டதாக ஞாபகமில்லை. மாறாக, அங்கிருந்த சிங்கள உத்தியோகத்தர்களுக்கு வழங்காத மதிப்பும் சுதந்திரமும் எனக்கு வழங்கியதை என்னால் உணர முடிந்தது. அரச மாளிகை போல் விளங்கிய

49 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
தூதரகக் கட்டிடம் இரு மாடிகளையும் நிலக் கீழ் மாடியையும் கொண்டது. மேல்மாடி முழுவதும் அம்பசடரின் வாசஸ்தலமாகவும், நிலத்தட்டு தூதரகமாகவும், நிலக்கீழ் மாடி பொயிலர் ரூம். களஞ்சிய சாலை, பதிவுச் சுவடிகள் பாதுகாப்பக மாகவும் பாவிக்கப்பட்டு வந்தன.
சிலசமயம் வாசஸ்தலத்தில் இருந்தபடியே சேவகன் மூலம் என்னைக் கூப்பிட்டழைப்பார். அங்கு சென்றால் முதலில் அவர் வாயில் இருந்து பிறக்கும் சொல் “பிளிஸ் சிற்”. சில மேலதிகாரிகளிடம் மருந்துக்குக் கூட காண முடியாததொரு அருங்குணமிது. பண்பு என்பது குடும்பப் பரவணி போலும்.
கடமையோடு சம்பந்தப் பட்ட விவகாரமாகவும் அது இருக்கும். சிலநேரம் என்னோடு அளவளாவி w மகிழும் நோக்காகவும் அது அமையும். தனிப்பட்ட அழைப்பாக இருப்பின், பலதரப்பட்ட விடயங்களைப் பற்றி ஆராய்ந்து தனது கடந்த சேவைக்கால நிகழ்வு களை மீட்டி எனது கருத்துக்களோடு ஒப்பு நோக்குவார். 1948 ஆண்டில் அவர் எனது பிரதேசமான மட்டக்களப்பு மாவட்டத்தின் கச்சேரியில் பணி புரிந்ததாகவும் அப்போது அவருடன் பணிபுரிந்த மட்டக்களைப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட சில தமிழ் உத்தியோகத் தர்கள், பிரமுகர்கள், கல்விமான்களைப் பற்றிக் கேட்டு விபரங்களைத் தெரிந்து கொள்ளுவார். தமிழர் திறமை, நேர்மை, அவர்களது கலாச்சார சீர்மை குறித்து அவர் மிகுந்த ஈடுபாடும் உயர்ந்த எண்ணமும் கொண்டி ருந்தார்.
இலங்கையில் நிலைபெற்றுள்ள இனப் பிரச்சி னைக்குத் தீர்வாக 1975 - ம் ஆண்டளவில் திரு. ஜே. ஆர். தலைமையிலான மந்திரி சபை கூடி ஆராய்ந்து 4.

Page 28
மொஸ்கோ அநுபவங்கள் 50
ஆலோசனைகள் பெறப்பட்டபோது, துணிந்து “யாழ்ப் பாணக் குடா நாட்டைப் பிரித்து யாழ்பாண தமிழருக்கும் தனி ஆட்சி வழங்குவதே சரியானதும் நிரந்தரத் தீர்வானதுமாகும்” எனக் கூறிய நீதி அமைச்சர் விஜய ரெட்னாவின் வார்த்தைகளை ஜீரணிக்க மாட்டாத அப்போதைய விஞ்ஞான கைத்தொழில் அமைச்சராக இருந்த திரு சிறில் மத்தியூ அவர்கள் விஜயரெட்ணா வுக்கெதிராகப் போர்க் கொடி உயர்த்தியதையும் காரசாரமாக அவருக்கெதிராக வார்த்தைப் பிரயோகம் செய்ததோடல்லாமல் “நீர் ஒரு சிங்களவரா?” என்று கேட்டு நையாண்டி பண்ணியதையும் அப்படியே மறைக்காமல் என்னிடம் கூறி இருக்கிறார். அதுமட்டுமல்ல ; “இன்றும் கூட அதுவேதான் தன் மாற்றத் தகாத தீர்வு ஆலோசனை’ என்றும் கூறுவார்.
எனது கடமைகள் தொடர்பான பணிகள் எவையோ அவற்றை நாளை நாளை” என்று பின்போட்டு வைக்காமல், அன்றே பட்டுவாடா செய்துவிடும் பண்பாலும், அம்பசடர் இடும் கட்டளை களை மிகக் கச்சிதமாகவும் முடிந்தளவு விரைவாகவும் செய்து முடிப்பதாலும், பிற ஊழியர் விவகாரங்களில் தலையை ஒட்டிக் கொண்டு வீண் பொழுது போக்காமையினாலும், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடைபெறும் போது உரிய அரச பிரமாணங்களை எடுத்துக் கூறி எனது கருத்துக்களை முன்வைப்பதாலும், பிழையான முடிவுகள் அம்பசடரால் எடுக்கப்படும் சமயங்களில் நடைமுறையில் உள்ள பிரமாணங்களுக் கமைவான ஏற்புடைய திருத்தங்களைக் கூறிக் கருத்துத் தெரிவிப்பதனாலும், கடமைக்கு நேரந் தவறாமை காரணமாகவும் என் மீது திரு விஜயரட்ண அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை அவர் வெளிப்படுத்திய சந்தர்ப்பங்கள் பலவற்றால் என்னால்

51 . . . . . . ஆரையம்பதி க. சபாரெத்தினம்
உணரமுடிந்தது. இது குறித்து பின்வரும் நிகழ்வுகளை இங்கு நினைவு கூர விரும்புகிறேன்.
01: தூதரகத்தில் பணிபுரிந்துவந்த இடைநிலை முகாமை மட்டித்தைச் சேர்ந்த மூன்று உத்தியோகத்தர் களில் திரு தயானந்தா வே சேவையிலும் வயதிலும் கூடியவர். இரண்டாவதாக திரு சிறிசேன. கடைசி யாகவே எனது மூப்புமுறை அமையும். ஆதலால் தயானந்தாவே அற்றச்சியாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரோ கடமையில் அதிக ஊக்கமோ காரியங்களை கச்சிதமாக செய்து முடிப்பதையோ அதிகத் திறமையை வெளிப்படுத்தவோ தவறிவிட்டார். சிறிசேனா கூட வேலைகளை இழுத்தடித்து கால விரயம் செய்து வந்தார். இதனைக் கருத்தில் கொண்ட அம்பசடர் திரு. விஜயரெட்ண பலமுறை இவர்களை எச்சரித்தும் இவர்களது பணிகளில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி ஏற்படத் தவறியதை அடுத்து அதிர்ச்சி தரும் திடீர் தீர்மானமொன்றை மேற்கொண்டார்.
அதாவது சேவை மூப்பில் அதி குறைந்த நிலையில் இருந்த என்னை அற்றச்சியாக - அதி கூடிய நிலைக்கு பதவி உயர்த்த வேண்டுமென்று தீர்மானித் ததாகும். இவரது இந்தத் தீர்மானத்தினால் அங்குள்ள சிங்கள அதிகாரிகள் மட்டுமல்ல நானும் கூட திணறிப் போனேன்.
அம்பசடரை நேரில் கண்டு அத்தகைய தீர்மா னத்தை தயவு செய்து வாபஸ் பெறும்படியும், உண்மையிலேயே அது சேவை மூப்பில் கூடிய உத்தி யோகத்தருக்குரிய கெளரவமே என்றும் எடுத்துக் கூறினேன். அத்தோடு அவர்கள் மத்தியில் அவர்களது ஒத்தாசையின்றி என்னால் இக்கடமைகளை செம் மையாக நிறைவேற்றி வைக்க முடியாது போகும் என்றும் கூறினேன். k" s

Page 29
மொஸ்கோ அநுபவங்கள் 52
தீர்மானம் எடுக்கமாட்டார்; ஒருதடவை தீர்மானித்து விட்டால் அதனை மீள் பரிசீலனை செய்யவும் மாட்டார் திரு விஜயரெட்ண Necessity knOWS no law 67Görgy egy igásig 3égy Gun fi.
அதனால் 18.05.1992 முதல் திரு தயானந்தாவின் கடமைகளை பொறுப்பேற்று செய்யவேண்டிய கட்டாயத்துக்குள் ஆக்கப்பட்டேன். ஆனாலும் இத்தகைய மாற்றம் தயானந்தாவின் பதவியணி யையோ அல்லது சம்பளப்படி நிலையையோ பாதிக்க வில்லை என்பதால் எனக்கு திருப்தி ஏற்பட்டது.
02 : அம்பசடர் விஜயரெட்ண இலங்கையில் மட்டுமல்ல; இந்திய அரசியல் மட்டத்திலும் ஒரு பிரபல்யம் வாய்ந்த பிரமுகர். இதனால் இவருக்கு அதிகம் செல்வாக்கும், உயர்நிலை நண்பர்களும் ஏராளம். இவரைச் சந்திக்க மொஸ்கோவிற்கு வந்த பிரமுகர்கள் ஏராளம். அவர்களுள் உலக நீதி மன்ற நீதிபதிகள் ஒன்பதின்மரில் ஒருவரான திரு. ஜி. வீரமந்திரி டாக்டர் நீலன் திருச்செல்வம், கிறிஸ்தவ பாதிரியார் ஆண்டகை நிக்கலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ மற்றும் வெளிநாட்டவர்கள் இலங்கை நாட்டு மந்திரிகள் பலர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சமயம் எனக்கும் பிரத்தியேக அழைப்பு விடுத்து என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
O3: சிலசமயம் என்னோடு பேசிக் கொண்டிருக்கும் போது எனது கல்வித் தகைமை, குடும்ப நிலை என்பவற்றை வினவி செவிமடுத்து எனக்குள்ள விவேகத்திற்கு சட்டக்கல்வி படிக்கும்படியும், லண்டன் போன்ற இடங்களில் படிப்பதாக தீர்மானிப்பின் தன்னால் முடிந்த எல்லா

ஆரையம்பதி க. சபாரெத்தினம்
உதவிகளையும் செய்து தருவதாகவும் வற்புறுத்திக் கூறுவார்.
04. ஒரு திறமையான முகாமையாளர், தான் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன் தாபனத்தில் எத்தகைய வேலை ஒழுங்குகள் மேற்கொள்ளப் படுகின்றன என்பதை அதன் ஆக்க அபிவிருத்தி வேலைகளைக் கொண்டே அறிந்து கொள்ளுவார். ஒருதடவை ரூஸ்ய நாட்டுக் கல்விமான் ஒருவர் ஏதோ தூதரக அலுவல் தொடர்பாக அம்பசடர் விஜயரெட்ண அவர்களை அவரது வாசஸ்தலத்தில் சென்று கண்டு உரையாடி இருக்கிறார். அப்போது நேரம் காலை 9.00 மணி இருக்கும். அந்த ரூஸ்ய நண்பர் துரிதமாக அவ்வேலையை முடித்துவிட்டு வேறு எங்கோ போவதற்கு அவசரப்பட்டிருக்கிறார், போலும்.
அம்பசடர் விஜயரெட்ண அவர்கள் அந்த ரூஸ்ய நண்பரிடம் முடித்துக் கொடுக்கப்படவேண்டிய வேலை பற்றிய ஒரு குறிப்பை (Note) எழுதிக் கொடுத்து “இப்போது நேரம் 9.00 மணி. போய்ப்பாருங்கள் காரியாலயத்தில் இன்னும் ஒருவரும் வந்திருக்க மாட்டார்கள். ஆனால் அங்கே ஒரே ஒருவர் மட்டும் அமைதியாக இருந்து வேலை செய்து கொண்டிருப்பார். பெயர் சபா ரெத்தினம். அவரிடம் இதனைக் கொடுங்கள்” என்று கூறியிருக்கிறார் போலும்.
அந்த ரூஸ்ய கல்விமான் ஆர்வத்தோடு என்னிடம் வந்து அந்தக் குறிப்பைத் தந்து திரு விஜயரெட்ண அவர்கள் கூறியதை அப்படியே ஆச்சரியத்தோடு செப்பி மகிழ்ந்தார்.
05. 1995 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளவில் @@ நகரில் உலகளாவிய ரீதியில் עrh6r חוL பிரமாண்டமான வர்த்தகக் கண்காட்சியும் விற்பனை

Page 30
மொஸ்கோ அநுபவங்கள் 54
நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இலங்கையும் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விரும்பி காட்சிக்கு வைக்கும் பொருட்களை எயர் லங்கா விமானத்தில் ஏற்றி விட்டு, அவற்றை திறந்து அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் பொருட்டு அடுத்த நாள் காலை வெளிநாட்டமைச்சர் இலங்கையிலிருந்து புறப் படுவதாக ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தன. எதிர்பாராத விதமாக இப்பொருட்களை ஏற்றி வந்த எயர் லங்கா விமானம் மொஸ்கோ செரமித்தியோ வ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும் ஏதோ கோளாறு காரணமாக மேலும் பயணத்தை தொடர முடியாத நிலையில் பழுதடைந்து விட்டது!
பாரிஸ் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் அமைச்சராக இருந்த திரு ஜயந்ததிசநாயக்க இதனை அறிந்து அதிர்ச்சியுற்று, பொருட்காட்சிப் பொருட்களை மொஸ்கோவிலிருந்து மிக விரைவாக வரவழைப்பது எப்படி என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தார். திரு. ஜயந்த திசநாயக, இலங்கை வெளிநாட்டமைச்சில் வெளிநாட்டு நிருவாகத்திற்கு பணிப்பாளராக இருந்த சமயம் அவருடன் பணியாற்றிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருந்தது. அப்போது அவரால் வரவழைக்கும் சிக்கல் நிறைந்த பல தகவல்களையும் புள்ளி விபரங்களையும் எடுத்து இரண்டு நாட்களில் தரவேண்டும் என்று கூறுவார். அவர் தரும் காரியங்களை முடிந்தவரையில் அதே நாளில் அல்லது மூன்று மணித்தியாலங்களில் கூட எடுத்து முடித்துக் கொடுத் திருப்பேன். இந்த ஞாபகத்தை வைத்தோ என்னவோ இரவு 9.30 மணி இருக்கும், ஒரு தொலைபேசி அழைப்பு என் வீட்டுக்கு வந்தது. மறுமுனையில் திசநாயக்க பேசுகிறேன்” என்றது அக்குரல். எனக்கு அடையாளம் தெரியவில்லை. “உமது Overseas Ad

55 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
ministration Director man” GTGörpgãi. (g)ỦGL/Tg5! 6ìg,6ìịigi கொண்டேன். -
நடந்த விடயங்களைக் கூறி எப்படியும் இன்றே அந்த Exhibitsஐ மிகு முந்திய விமானச் சேவை ஒன்றின் மூலம் பாரிசுக்கு அனுப்பி வையுங்கள். செலவைப்பற்றி எல்லாம் யோசிக்க வேண்டாம். தவறினால் அமைச்சர் காரசாரமான முடிவுகளை எடுத்து தண்டிப்பார். தயவு செய்து துரிதமாக இயங்குங்கள்” என்றார். மொஸ்கோ தூதரகத்தைப் பொறுத்த வரையில் முக்கிய மூத்த அதிகாரிகள் பலர் இருக்கிறார்கள். அம்பசடர், அமைச்சு ஆலோசகர், வர்த்தக செயலாளர் என்று பலர். அப்படி இருக்க தலையாடாமல் வால் ஆடுவதா? இதனை திசாநாயக்க அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். அதற்கு “ஐசே, உம்மைப்பற்றி எனக்குத் தெரியும். அவர்கள் உயர் உத்தியோகத்தர்கள்தான். விடயமாக வேண்டுமே! அவர்களைப் போய் கேட்டால் ஒரு கிழமையிலும் அது வந்து சேராது. நீர் செய்யும்” என்றார்.
“இப்போது இங்கு நேரம் இரவு 9.30 மணி. எதுவுமே செய்ய முடியாது. நாளைக் காலை முடிந் ததைச் செய்கிறேன்”
“நான் மறுபடியும் தொலைபேசி அழைப்பு காலையில் தருகிறேன்” என்றபடி உரையாடலை நிறுத்திக் கொண்டார்.
எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. அதிலுள்ள பொறுப்பு, கஷ்டம் விளையப்போகும் நட்டம் என்ற எல்லாவற்றையும் பற்றி சிந்தித்தேன்.
ரூஸ்ய நாட்டு அரச நிறுவனங்களில் எந்த ஒரு கருமத்தையும் விரைவில் இலேசாக செய்து முடிப்பது அசாதாரணம். அவர்கள் ஏதேதோ தான் தோன்றித் தனமான சட்டப்பிரமாணங்களை எல்லாம் புகுத்தி

Page 31
மொஸ்கோ அநுபவங்கள் 56
காலத்தையும் வேலையையும் இழுத்தடித்தே செல் வார்கள். அரச திணைக்கள, கூட்டுத் தாபனங்களுக்கு மட்டுமல்ல; வங்கிகள் போன்ற சபைகளுக்கும் இதுவே நடைமுறை அங்கு!
முதலில் அம்பசடருக்கு தொலைபேசித் தொடர்பேற்படுத்தினேன். வீட்டில் அவர் இருக்க வில்லை. குடும்பத்தோடு நகருக்கு வெளியே உள்ள சனிற்றோறியத்திற்கு சென்றிருப்பதாகவும், இரவு 11.30 மணிக்குப் பின்னரே வருவதாகவும் இரத்நாயக்கா என்ற அவரது வேலையாள் பதிலளித்தான். அவனிடம் எனக்குத் தெரிந்த அரைகுறைச் சிங்களத்தில் கூறி அம்பசடர் வந்ததும் இதனைத் தெரிவிக்கும்படியும் எதற்கும் 11.30 மணிக்குப் பின்பு நானும் தொலைபேசி எடுப்பதாக கூறும்படியும் சொன்னேன். பின்பு ரூஸ்ய- ஆங்கில மொழி பரிவர்த்தனையாளராக இருந்த டாக்டர் நிமால் பெம்மா வடுவுக்கு தொலைபேசி தொடர்பேற்படுத்தினேன். இலங்கையைச் சேர்ந்த இவர், ரூஸ்யா சர்வகலாசாலை ஒன்றில் படித்து ரூஸ்யன் மொழியில் டாக்டர் பட்டம் பெற்றவர். தனக்கு ரூஸ்ய மொழி ஆசிரியையாக இருந்த ரஸ்யப் பெண்ணையே மணந்து கொண்டு அங்கேயே 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருபவர். பிள்ளைகள் இல்லை. ..............
தொலைபேசியை எடுத்து குரல் கொடுத்த திருமதி. பெம்மாவடு சீற்றத்துடன் கனைத்தார் “இப்போது டெலிபோன் பேசும் நேரமல்ல. பேசமுடியாது” என்றபடி போனை வைத்துவிட்டார். மறுபடியும் டயல் செய்தேன், “அம்மணி இது அவசரமான காரியாலய சமாச்சாரம், த்யவு செய்து நீங்கள் குறுக்கிடாமல் போனை திரு பெம்மாவடு விடம் கொடுங்கள்” என்றேன். திருமதி பெம்மா வடுவைப்

57 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
பொறுத்தவரையில் திரு பெம்மாவடு பெட்டிப்பாம்பு! அவரும்,“ இப்போது எதுவும் செய்வதற்கில்லை : நாளை காலை பார்ப்போம்” என்று நித்திரை வாழ்த்துக்கள் கூறிவிட்டார்.
“அடுத்து என்ன செய்யலாம்?” என்று என் மூளை வேக அலை பாய்ந்தது. மற்றொரு இன்றபிரட்டரான குமார் ஜெயசிங்கவுக்கு டயல் செய்தேன்.
இவரும் ஒரு மாஸ்டர் டிகிரி ஹோல்டர். இலங்கைச் சிங்களவர். படிக்கவந்த இடத்தில் மாட்டு பட்டு’ குடியும் குடித்தனமுமாகி விட்டவர். பெண்சாதி ஒரு யூத இனப்பெண். பிள்ளைகள் இருவர் இருக்கி றார்கள். பணவசதியுடன் இருந்தாலும் சுரண்டல் புத்தி அதிகம், இவருக்கு.
ஜெயசிங்க விடயத்தைக் கேட்டு “இப்போதைக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. நாளைக்காலை நேரத் தோடு கருமங்களைப் பார்போம்” என்றார். எனக்கும் அது சரியென்றே தோன்றியது.
11.30 மணிக்கு மீண்டும் அம்பசடருக்கு தொலை பேசியில் அழைப்பு விடுத்தேன். பிரசன்னமாக இருந்தார். இரத்நாயக்கா விடயத்தை ஏற்கனவே தெரிவித்திருந்திருக்கிறான் போலும். குறித்த விடயம் தொடர்பாக என்னால் எடுக்கப்பட்ட விடயங்களைக் கூறினேன். அவற்றைக் கேட்டு மிகவும் திருப்தியடைந்த திருவிஜயரெட்ண என்னைப்போன்ற இப்படியான அதிகாரிகள் தான் தூதரகத்திற்குத் தேவை என்றும் உயர் அதிகாரிகள் இல்லாதவிடத்து அவர்களின் வருகைக்காகக் காத்திருக்காமல் சமயோ சிதமான ஆக்கப் பணிகளை மேற்கொள்ளுவதே விவேகமானது என்றும் பாராட்டினார்.
காலையில் பரிவர்த்தனையாளருடன் சென்று

Page 32
மொஸ்கோ அநுபவங்கள் 58
களஞ்சியத்திற்கு பொறுப்பான விமான நிலைய அதிகாரிகளைக் கண்டு, கதைத்தோம். தமது வெளிநாட்டு அமைச்சின் உத்தரவின்றி தம்மால் எதையும் செய்ய முடியா தென்று கையை விரித்து விட்டனர். பின்பு வெளிநாட்டமைச்சில் அவர், இவர் என்று பல அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியும் காரியம் ஆகவில்லை. எனது யோசனைப்படி கொழும்பு வெளிவிவகார அமைச்சுக்கு உடன் டெலக்ஸ் செய்தி ஒன்று கொடுத்து கொழும்பிலுள்ள ரூஸ்ய தூதரகத்துடன் பேசி Transhipment க்கு ஆகும் செலவினையும் செலுத்திவிட்டு அவர்கள் மூலமாக ரூஸ்ய வெளி விவகார அமைச்சுக்கு செய்தி கொடுக்கும்படியும் அதன் பிரதியை எமக்கு அனுப்பிவைக்கும்படியும் கேட்டுக் கொண்டோம். பின்பு, மீண்டும் ரூஸ்ய விமான நிலைய அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு அன்று பி.ப.2.30 மணிக்கு ஃபல்கன் விமான சேவை மூலம் காட்சிப் பொருட்களை பாரிசுக்கு அனுப்பி வைத்தோம். அதுபற்றி திரு. திசநாயக்காவுக்கும் அறிவித்தோம். ஒரு மணித்தியாலயத்தில் பொருட்கள் பாரிசைச் சென்றடைந்துவிட்டன. திரு. திசநாயக்க தொலைபேசி எடுத்து எனக்கு நன்றி கூறினார். நான் அவருக்கு “அம்பசடர் விஜயரெட்னாவுக்கு ஒரு வார்த்தை நன்றி கூறுங்கள். எனக்கு வேண்டியதில்லை” என்றேன்.
“ஏன் அவரா முயற்சி செய்து தருவித்தார்? இது உங்கள் முயற்சி. சிறந்த சாதனை” என்றார்.
“பரவாயில்லை. அவர்தானே தாபனத்தின் தலைவர். நான் செய்தாலும் அதன் பெருமையோ சிறுமையோ அவருக்குத் தானே சேரவேண்டும். தயவு செய்து ஒரு வார்த்தை கூறிவிடுங்கள்” என்று கூறி

59 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
அவரது பதிலுக்குக் காத்திராமல் போனை அம்பசடருக்கு தொடர்பு படுத்திவிட்டேன்.
பின்பு அம்பசடர் விஜயரெட்ண என்னை அழைத்து “சபா, நீங்கள் இன்று செய்த விடயம் ஒரு சாதாரணம் அல்ல. ஒரு சிறந்த இராஜதந்திரோபாய நடவடிக்கை. இதற்கு உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது’ என்று கூறி ஒரு Commendation letter அனுப்பி வைத்தார்.

Page 33
மொஸ்கோ அநுபவங்கள் 60
“ரூஸ்யபாராளுமன்றம் 1995ம் ஆண்டு ஒக்தோபர் 05ம் திகதி பொதுவுடைமை வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுத் தாக்குதல்களுக்காளாகியது”
08. சிறிசேன் வெடிகுண்டு தேடியத்தை
என்னைப் பொறுத்தவரை யான் எவருடனும் பழகும்போதும் ஒரு எல்லைக்கப்பால் உறவுகளை அல்லது நட்பினை வளர்த்துக் கொள்ளும் இயல்பு இல்லை. இதனால் சிலரைப் போல வேண்டத்தகாத உறவு முறிவுகள், ஜீரணிக்க முடியாத விரக்திகள் ஏற்படும் நிலைகள் பலவற்றில் இருந்து தப்பிப் பிழைத்திருக்கிறேன். தாமரை இலையில் தண்ணீர் போல வாழ்க்கையில் உறவுகளை ஏற்படுத்திக் கொண் டால், வலுவான துன்ப இருள் எம்மைச் சோதிக்க மாட்டா. இதற்கு மனவலிமையும் தேவைகள், ஆசைகள் முதலியவற்றை ஒறுத்துவிடும் தூய சிந்த னையும் தேவை. இதற்கு இறைவனின் அருட்கடாட்சம் கட்டாயம் வேண்டும்.
மொஸ்கோவுக்கு சென்ற காலம் தொடக்கம் 1992
 

61 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
-ஆம் ஆண்டில் திரு. தயானந்தாவின் இடத்திற்கு என்னை நியமிக்கும் வரை திரு. சிறிசேன ஒரு நல்ல நண்பராகவே பழகி வந்தார். நான் என்று தயானந் தாவின் இடத்தில் சென்று அமர்ந்தேனோ அன்று தொடக்கம் திரு. சிறிசேன என்னை ஏறெடுத்துப் பார்ப்பதோ, மனம் விட்டுப் பேசுவதோ கிடையாது. அவரது போக்கில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணம் ஆற்றாமை என்பதாகத்தான் இருக்க வேண்டுமே அல்லாது வேறெந்த குற்றமும் நான் செய்ததாக எனக்கு ஞாபகமில்லை. இருந்தாலும் என்னைப் பொறுத்த வரையில் நான் எப்போதும் போலவே அவருடன் வித்தியாசம் எதுவும் இல்லாமல் நடந்து வந்தேன்.
இலங்கை அரசியல்வாதிகளுள் பொது மக்களைக் கருத்தில் கொண்டு சேவை உணர்வுடன் கருமமாற்றி யதாக இருவரை மட்டுமே குறிப்பிடலாம். ஒன்று பிரதம மந்திரியாக இருந்த திரு. டட்லி சேனநாயக்க. இவர் இன, மத, சாதி வேறுபாடுகள் அதிகம் காட்டாமல் மக்கள் சேவை புரிந்தவர். மற்றொருவர் பிரதமராக, ஜனாதிபதியாக பதவிகள் பெற்று மக்கள் அபிமானம் அதிகம் கொண்ட திரு. ஆர். பிரேமதாச அவர்கள். இந்த ஜனாதிபதி திரு. பிரேமதாச அகால மரணமடைந்தபோது கூட அதிகம் விசனப் படாத திரு சிறிசேன போன்ற வக்கிர புத்தி படைத்த சிங்களவர்கள் திரு. காமினி திசாநாயக்க மரணித்த செய்தி கேட்டு ஆறாத் துயரம் கொண்டு மீளாச் சோகத்தில் மூழ்கி இருந்தனர்.
திரு. காமினி திசநாயக்கவின் தலைமையில் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தல் களத்திற்கு சென்றிருந்த கூட்டம்தான் கிழக்காசியாவிலேயே சிறந்து விளங்கிய பெருமை பெற்ற யாழ்நூலகத்தை திட்டமிட்டு எரித்து தமிழரின் அறிவு அபிவிருத்தியினை அழித்து விடலா

Page 34
மொஸ்கோ அநுபவங்கள் 62
மென்று கனவு கண்டது. இப்படிப்பட்ட குறுகிய சிந்தனையும் இனக் குரோத உணர்வும் கொண்ட காமினி திசநாயக்கவின் மரணத்தை ஒட்டி தூதரகத் திலும் ஒரு இரங்கல் நிகழ்ச்சி ஒழுங்கு செய்திருந்தனர். அச்சமயம் திரு. சிறிசேனஅங்கிங்கெல்லாம் மேலோட் டமாக ஏதாவது வெடிகுண்டு வைக்கப்பட்டுள் ளதா வெனப் பார்த்து வந்தார். நான் கடமைபுரிந்து வரும் அறைக்குள்ளும் வேண்டுமென்றே வந்து எனது மேசையின் கீழ்ப்பாக, லாச்சு முதலியவற்றை பரிசீலனைப் பண்ணிப் பார்த்து விட்டுச் சென்றார். 1991ம் ஆண்டு மொஸ்கோவில் சென்று இறங்கிய நான் இந்த நிகழ்ச்சி தூதரகத்தில் இடம்பெற்ற காலம் வரையில், மொஸ்கோவை விட்டு, வேறு நகருக்காயினும் சுற்றிப்பார்க்கும் நோக்கில் கூட பயணம் மேற்கொள்ளா திருந்த என் நிலையில், வெடிகுண்டு எப்படி, எங்கிருந்து வரும்? இது திரு சிறிசேனவுக்கு தெரியாத ஒரு விடயமல்ல. என் முன்னிலையிலேயே என்னை அவமானப்படுத்தி அதனால் பழிவாங்கவேண்டும் என்ற அவரது ஆக்ரோச குரோத உணர்வே காரணமின்றி வேறெதுவுமில்லை.
இந்தச் செய்கை உண்மையிலேயே என்னை ஆத்திரமடையச் செய்வதற்குப் பதிலாக வேடிக்கை யையும் வினோதத்தையுமே ஊட்டியது. சிறிசேனாவின் இக்குழந்தைத்தனமான செயலுக்காக நான் பரிதாபப்படவேண்டி இருந்தது.

63 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
%ళ్లఃః%్క ٭٭٭٭
விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்களைப் பயிற்றுவிக்கும் மாதிரி அமைப்புக் கலம்
09. திரு. விஜயலுத்தனி அவர்கள்
மந்திர ஆலோசகராக பதவி வகித்து வந்த திரு. ரி.பி. மடுவே கெதர அவர்கள் இடமாற்றம் பெற்றதைத் தொடர்ந்து அவரது கடமைகளை ஆற்றுவதற்காக கொழும்பு வெளிவிவகார அமைச்சு திரு. ஆரியரட்ண விஜயவர்த்தன என்பரை மொஸ்கோ தூதரகத்திற்கு அனுப்பி வைத்தது. திரு. மடுவே கெதர போலல்லாது இவர் சிறிது கர்வமும்.பிறர்மீது நம்பிக்கை கொள்ளாத மனப்பக்குவமும் உடையவராக அடையாளம் காணப் பட்டார். ஆரம்பத்தில் சிறிசேனவுக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடுகள் நிறைய இருந்திருக்க வேண்டும். எப்போதும் இவரைப்பற்றி சிறிசேன குறைப்பட்டுக் கொண்டே இருந்தார். சிறிசேன நிதியும் கணக்கீட்டு வேலையும் செய்து வருவதனால் ஒவ்வொரு பணக் கொடுப்பனவு, சேவை பெறப்படல், மற்றும் பொருள்

Page 35
மொஸ்கோ அநுபவங்கள் 64
கொள்வனவு விடயங்களில் சந்தேகக் கண்ணோட் டத்துடன் திரு. விஜயவர்த்தன செயல் பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆறுமாத காலத்தினுள் நிலைமை திருந்தி தலைகீழாகி விட்டது. இப்போதெல்லாம் திரு சிறிசேன விஜேவர்த்தனா வை மிகச் சிறந்த அதிகாரி என்றும் நேர்மையாளர் என்றும் பகிரங்கமாகவே பாராட்டுத் தெரிவித்து மகிழ்வதோடல்லாமல் அவரது அந்தரங்க காரியத்தனாகவும் மாறிவிட்டார்! இருவரும் எப்போதும் அடைந்த அறைக்குள் இருந்தபடியே காரியம் பார்த்தனர். அது சமயம் யாராவது உள்ளே கடமை அலுவல் தொடர்பாகச் செல்ல முற்பட்டால் கூட அவர்களுக்கு ஏற்படும் கோபத்தை சொல்லி விளக்க (Մ) Լգ Ամո Ցl. இதனால் அங்குள்ள பலரும் பலவிதமாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் சிறப்பாக திரு தருமசேன ஒவ்வொருவரது மேசைக்கும் சென்று ஒட்டைக் குடத்தால் தண்ணீர் சொரிவது போல எந்நேரமும் இவர்களைப் பற்றிய விமர்சனத்தையே மேற்கொண்டிருந்தார். அவர் தன் பொழுதைக் (கரைப்பதற்கு) கழிப்பதற்கு இவர்களது விவகாரம் உதவியாக இருந்தது.
எப்போதும் போல நான் பக்கம் சாரா நிலையில் இருந்து என் கடமைகளைத் தொடர்ந்தாலும் இவர் களுடைய அணியில் என்னையும் சேர்க்க எடுத்த முயற்சிகளுக்கு நான் ஆதரவு வழங்கவில்லை.
திரு. விஜயவர்த்தனாவின் மற்றொரு குணாதி சயமான தன்னைப் புகழ்வோரை - மதிப்போரை ஆலிங்கனம் செய்யும் பண்பு அவரிடம் நிறையவே இருந்தது. இதனை அவரது பலம் என்பதை விட பல யீனம் என்பதுவே சரியாக இருக்கலாம். இந்த பலயினத்தைப் பயன்படுத்தியே திரு சிறிசேன சில பல காரியங்களை தனது சுயதேவைக்காக பயன்படுத்தி

65 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
அனுபவித்துக் கொண்டிருந்தார்.
ஆங்கில மொழியாற்றல் அவ்வளவு மேம்படத்தக் கதாக இல்லா திருந்த போதிலும் திரு விஜயவர்த்தன தன்னைப் பற்றி அதிகமாகவே சிந்தித்துக் கொண்டி ருந்தார். ஆனாலும் ஒரு கடித வரைவினை சிறப்பான முறையில் தாமாக எழுதும் வல்லமை இல்லாத வராகவே இருந்தார். மற்றவர்கள் எழுதும் வரைவினில் பிழை கண்டுபிடித்து அதைத் துலாம்பரமாக வெட்டித் திருத்தி தரமற்றதென்று காட்டுவதில் இவருக்கு அலாதி பிரியம்! பெரும்பாலும் இவ்வாறான கடித வரைவுகள் தேவைப்படும் போது நிர்வாகப் பணிபுரிந்து வந்த எனக்கு விலாசமிட்டு, ஒரு மாதிரி வரைவினை பூரணப்படுத்தி சமர்ப்பிக்கும் படி கட்டளை இடுவார். பலமுறை முயன்று திறமையாகச் செய்து அனுப்பி வைக்கும் ஆக்கத்திலும் கூட வேண்டுமென்றே பிழை கற்பித்து வெட்டி விளாசி விடுவார். என்னைப் பொறுத்தவரையில் ஒரளவு வரைவு (Drafting) செய்வேன் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
கல்வி அதிகாரியாக பணிபுரிந்து வந்த பிரமிளா தென்னக்கூன் கூட தேவை ஏற்படும்போது (அவருக்கான வரைவினை செய்ய வேண்டிய தேவை ஏற்படின்) அதற்கு உதவும் படி என்னைக் கேட்பார். பலமுறை உதவியும் இருக்கிறேன். அவ்வாறான வரைவுகளிலும் திரு. விஜயவர்த்தன தன் சண்டப் பிரசண்டத்தை காட்டி இருந்தார். உண்மையிலே நான் கையாளும் மொழி நடை குறைவுடையதா அல்லது வேண்டுமென்றே இவ்வாறு படி இறக்கப்படுகிறதா என்பதை பரீட்சித்துப் பார்த்தே அறியவேண்டும் என்ற நோக்கில் ஒரு உபாயம் செய்தேன். வழக்கம்போல ஒருமுறை புதிதாக நியமனம் பெறும் பணியாள் ஒருவருக்கு நியமனக் கடிதம் வழங்குவதற்கான மாதிரி கடித வரைவொன்றை
5

Page 36
மொஸ்கோ அநுபவங்கள் 66
தயாரிக்கும்படி திரு. விஜயவர்த்தனா அவர்கள் என்னைப் பணித்திருந்தார். தாபனக் கோவை என்ற அரச காரியாலய பிரமாணப் புத்தகத்தின் பின்னிணைப் புகளில் ஒன்றில் காணப்பட்ட, மாதிரி நியமனக் கடித வரைவினை அப்படியே பிரதி பண்ணிச், சமர்ப்பித்து விட்டேன். அதற்கு முன்னதாக எல்லாவற்றையும் பிரமிளாவுக்கு விளக்கமாகக் கூறிக் காண்பித்துவிட்டு இந்த வரைவிலும் திரு விஜயவர்த்தனா பிழை கண்டு பிடிப்பாரேயானால் இதுவரை திருத்தம் செய்யப்பட்ட 6 TLD35 வரைவுகள் யாவும் தரமானவையும், வேண்டுமென்றே அவரால் உதாசினம் செய்யப்பட்ட வையும் என்றே கொள்ளப்பட வேண்டும். இல்லை யேல் எமது வரைவுகளில் குறைபாடுகள் உண்டுதான் என்று ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் தீர்மானித் தோம். காரணம், தாபனக் கோவையில் இடம்பெறும் அந்த வரைவுகள், பிரசித்தி பெற்ற சட்டநிபுணர்களாலும் மொழி வல்லுனர்களாலும் ஆக்கப்பட்டவை யாகும். அவற்றில் பிழைகண்டு பிடிக்கும் ஆற்றலும் அதிகாரமும் அவருக்கில்லை.
பாவம். விஜயவர்த்தனாவுக்கு இது எங்கே தெரிந்தது! வழக்கத்தை விடவும் கூடுதலாக தன் கைவரிசையைக் காட்டி அந்த வரைவில் பல பிழைகள் கண்டுபிடித்து திருத்தி கிறுக்கித் தீர்த்திருந்தார்! அதனைப் பார்த்து நாங்கள் விஜயவர்த்தனாவின் வக்கிர புத்தியை எடைபோட்டுச் சிரித்தோம்! வேறென்ன செய்வது?

67 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
88 8.
மொஸ்கோ கிரம்பிளின் அலக்சான்றியா தோட்டத்தின் ஒரு வசீகரிக்கும் காட்சி
10. சுதந்திதிகதி கொண்டCடமும் நூனுசி
இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 4ம் திகதியில் உலகமெங்குமுள்ள இலங்கைத் தூதரகங்களிலும் நினைவு கூரப்பட்டு, அன்றைய தினம் பல நாட்டு இராஜதந்திரிகள், பிரமுகர்கள் அங்கு வாழும் சொந்த நாட்டுப் பிரஜைகள் என்று எல்லோரையும் அழைத்து விருந்துபசாரம் செய்விப்பார்கள். எமது கீழைத்தேச பண்பாட்டு மரபினை ஒட்டிய சமய நிகழ்ச்சிகள், தேசிய கீதம் இசைத்தல், சுதந்திர தினச் செய்தி என்று ஆசி வழங்குதல் என்பனவும் இடம் பெற்ற பின்பு, உணவு பரிமாறப்படும்.
முதலில் பெளத்த தர்ம முறைப்படி வண ஒதுதல். அதன் பிறகு இந்து முறைப்படி கடவுள் வாழ்த்து, தோத்திரம் படித்தல், அதனை அடுத்து இஸ்லாமிய முறைப்படி கிராஅத் ஒதுதல் என்பனவே அங்கு

Page 37
மொஸ்கோ அநுபவங்கள் 68
இடம்பெறும் சமய நிகழ்ச்சிகள். தூதரகத்தில் பணிபுரிந்த ஒரே தமிழர் என்பது மட்டுமல்லாது இந்துவாகவும் நானே இருந்தமையினால் தமிழில் வாசிக்கப்பட வேண்டிய சுதந்திர தினச் செய்தியும், இந்து மத அனுட்டான நிகழ்ச்சியும் அங்கு வாழ்ந்த நான்கு வருடங்களும் எனதாகவே அமைந்துவிட்டது. ஆயினும் இவை யாவும் வெறும் கண்துடைப்பே அன்றி இதய சுத்தியுடன் கூடிய ஒன்றுகூடவல்ல. இதன் காரணமா கவோ என்னவோ இந்த நிகழ்ச்சியில் அங்கு வாழ்ந்து வந்த அல்லது படித்து வந்த எந்தவொரு தமிழ் மகனாவது வந்து கலந்து கொள்ளவில்லை!
சொந்த நாட்டில் தமிழர்களை மனிதத் தன்மை யற்று விலங்குகளுக்கொப்பாக அல்லது அடிமை களைப் போல் நடாத்தி வரும் இவர்கள் வெளிநாட்ட வர் முன்னிலையில் தாம் பெரிய அசோகச் சக்கரவர்த்தி போல் சகலரையும் சமமாக நடாத்தி வருவதாக பாசாங்கு செய்வதற்காகவே இந்த ஏற்பாட்டினை செய்து வருகின்றார்கள். உள்ளூர என்மனதில் ஆத்திரமும் ஏனோதானோ என்ற உணர்வுமே வேரூன்றி இருந்தது. ஒவ்வொரு முறையும் தேவார திருவாசக பாக்களை அங்கு பாடி அவற்றின் புனிதத்துவத்தை அவம்போக்கி வர எனக்கு இஷ்டமாக இருக்கவில்லை. இறுதியாக இடம்பெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது தேவார பராயணத்திற்குப் பதிலாக தவசிரேஸ்டர் குருநாதர் இரவிந்திரநாத் தாஹ"ர் இயற்றிய கீதாஞ்சலி நூலில் இருந்த ஒரு ஆங்கிலப் lumt ll68) @v “Where the mind is without fear and the head is held a high.” பாடி முடித்தேன். இந்தப்பாடலிலே உண்மையான சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும்; அதன் தார்மீகத் தன்மை எத்தகையது ; அப்படியான சுதந்திர நிலையை என் நாடு பெற இறைவனைப் பிராத்திக்கிறேன் என்ற பொருளை விளக்கியுள்ளது.

69 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
இந்தக் கீதாஞ்சலியின் பொருள் அங்கு இருந்த எத்தனை பேருக்குப் புரிந்ததோ: எத்தனைபேர் செவிமடுத்துக் கேட்டார்களோ; ஆனால் கல்விமானான அம்பசடர் டாக்டர் நிசங்க பராக்கிரம விஜயரெட்ண அவர்கள் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந் தார்.
அதனை அடுத்து இரண்டொரு நாளின் பின்னர், ஏதோ அலுவலாக அவரைக் காண அவரது வாசஸ்தலத்திற்கு சென்றபோது, அங்கே சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் சிறிது தயங்கி நிற்கவே, மேடம் விஜயரெட்ண அவர்கள் என்னைக் கண்டு கொண்டு "மிஸ்டர் சபா ரெட்ணம் வந்திருக்கிறார்” என்று குரல் கொடுத்தார். அப்போது என்னை உள்ளே வருமாறு அழைத்த அம்பசடர் மிஸ்டர் சபா ரெட்ணம் அல்ல. பண்டிட் சபா ரெட்ணம்” என்று பெருமையாகக் கூறினார். அதன் பொருள் அவருக்கும் எனக்குமே அன்றி வேறெவரும் அறிந்திருக்க ஞாயமில்லை.

Page 38
மொஸ்கோ அநுபவங்கள் 70
1. சேவைகி கால நீட்டமும் தாயரின் முறுைவுச் செய்தியுசி
வெளிநாட்டு சேவைக்கான எழுத்துப் பரீட்சை, நேர்முகப் பரீட்சை என்ற இரண்டிலும் தேறியவர்களை தேர்ந்தெடுத்து கடல்கடந்த தூதரகங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு முன்பு, இலங்கை வெளி விவகார அமைச்சு அத்தகையோருடன் ஒரு சட்டபூர்வமான ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளும். இதன்படி அந்தக் கடமைக்குள்ள தன்மை, கால எல்லை, அக்கால எல்லையினுள் செய்யத் தகாத உரிமைத் தத்தங்கள் என்பனவெல்லம் தெளிவாக்கப்பட்டிருக்கும்.
எனக்கு வழங்கப்பட்ட SITG) எல்லை நான்காண்டுகள். அதாவது இலங்கையைவிட்டுப் புறப்பட்ட தினத்தில் இருந்து சரியாக 4 ஆண்டுகள். ஆகவே எனது கடமைக் காலம் 08.05.1995 அன்று முடிவுறுகிறது.
 

71 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
எவ்வாறு ஒரு பிற நாடு, செளகரியமும் வாழ்க்கை வசதிகளும் கொண்டிருந்தாலும் அது அவரவர் பிறந்த நாட்டுக்கு நிகராக எண்ணத் தோன்றாது. வறுமை, பிணி, இயற்கைச் சீற்றங்கள், போர் அழிவுகள் என்று எவ்விதத் தடைகள் அங்கு நிலைபெற்று இருந்தாலும் பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் நற்றவத்திலும் நனி சிறந்ததுவே.
நான்கு ஆண்டுகளை தொடராக மொஸ்கோவில் கழித்த எனக்கு இலங்கை திரும்பி விடவே ஆவல் அதிகமாக இருந்தது. 1995 ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 28 ம் திகதி கொழும்பு வெளிவிவகார அமைச்சுக்கு, எனது காலம் அடுத்த இருமாதங்களில் பூர்த்தியாக உள்ளதால் தயவு செய்து எனது இடத்திற்கு வேறொரு அதிகாரியை அனுப்பி வைக்கும்படியும், குறித்த தினத்திற்குப் பிந்தாமல் என்னை இலங்கை வர அனுமதிக்குமாறு” கேட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தேன். உலகத்திலே அதிக குளிர் கூடிய இடங்களில் மொஸ்கோவும் ஒன்று. இங்கு சிலசமயம் வெப்ப நிலை - 30° செல்சியசிற்கும் கீழ் இறங்கிவிடும். அப்போது குழந்தைகள் சிறுவர்களால் அக் குளிரைத் தாங்கிக் கொள்ள இயலாது. ஆதலால் பாடசாலைகளைக் கூட இரண்டொரு நாட்களுக்கு விடுமுறையாக்கி விடுவார்கள். இங்கே அதிக குளிர் நிலவுவதற்கு காரணமாக பின்வருவனவற்றைக் கூறமுடியும்.
முதலாவது: மொஸ்கோ, வடதுருவத்தை அண்மிய பிரதேசமான சைபீரிய குளிர் வனாந்தரத்தை அடுத்து அமைந்திருப்பது ஒரு காரணம். ' . .
மற்றையது; கடற்பரப்பிலிருந்து வெகு தூரத்துக்கப்பால் நகரம் அமைந்து உள்ளது இன்னொரு காரணம். கடலின் ஆளுமையினால் ஒரு நிலப் பிரதேசத்தின் சீதோஷ்ண நிலை மாற்றமடையும்

Page 39
மொஸ்கோ அநுபவங்கள் 72
என்பதற்கு, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளைக் குறிப்பிடலாம்.
குளிர் அதிகமான காரணத்தினாலும், வேறு ஐரோப்பிய நாடுகளைப் போல் வருமானம் பெருக்கும், வாழ்க்கையை உல்லாசமாகக் கழிக்கும் படா டோப வசதிகள் ரூஸ்யாவில் குறைவான படியாலும், இந்த இடத்திற்கு சேவை செய்வதற்கு வர எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை!
தொழில் தேடுவோரை ஆயிரக்கணக்கில் ஏஜன்சிமார் மொஸ்கோவில் கொண்டுவந்து இறக்கிவிட்டு போனதால், அவர்களது அகதி நிலைப் பிரச்சினைகள் எம்பசிக்கு ஒரு தலையிடியாக இருந்த நேரம் அது. அதிலும் இவ்வாறான அவல நிலைக் குள்ளாவோர் பெரும்பாலும் தமிழராகவே இருந்தனர். ஆகவே டாக்டர் நிசங்க விஜயரெட்ண போய் புதிதாக வந்த திரு. ஹ"சைன் என்ற மற்றொரு அம்பசடர் எனது இடத்தை நிரப்ப தகுந்த பதிலீடு செய்து ஒருவரை அனுப்பினாலன்றி என்னை விடுவிக்க இயலாதென்று அமைச்சுக்குத் தெரியப் படுத்திவிட்டார். ஆகவே திட்டமாக எப்போது என்னால் நாடு திரும்ப முடியும் என்பது முடிவுறாத தீர்மானமாகவே இருந்தது. ரூஸ்ய நாட்டிற்கு புரிந்தோ புரியாமலோ வந்து பிரச்சனைகளை எதிர்கொண்டு அவற்றைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்துக்கொண்டு வாழ்ந்து வந்த எம்மவர்களுக்கு முடிந்தளவு எனது கடமை எல்லைக்கு அப்பாலும் சென்று தார்மீக உதவிகளைப் புரிந்து கொண்டு இருந்தமையினால் எனது உருவத்தைக் கண்டிரா தவர்களும் கூட எனது பெயரை ஞாபகத்தில் வைத்திருந்தனர். இந்த நன்நோக்கு, பரோபகாரம் பல சமயங்களில் என்னை இழிச்சவா யனாக ஆக்கியது

73 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
மட்டுமல்ல, பல சிக்கல்களில் கூட நுழைக்க எத்தனித்தும் இருக்கின்றன.
சிலர் என்னைக் கண்டு கதைப்பதற்காகவும், சிலர் நோட்டம் விட்டு ஆளை எப்படி என்று அறிந்து கொள்வதற்காகவும், சிலர் குறுகிய சிந்தனைகளோடு வந்து என்னையும் அவர்களது வலையில் வீழ்த்துவதற்காகவும் எம்பசிக்கு வந்து கொண்டிருந்தனர். ஆயினும் உண்மை, நேர்மை, கண்ணியம் என்பவற்றில் இயல்பாகவே நான் கொண்டிருந்த பற்றுக்கோடு காரணமாக அத்தகையோர்களது ஏமாற்றுச் சதியில் வீழ்ந்து விடவில்லை. இப்படி, தூதரகத்திற்கு அடிக்கடி வருகை தந்தோரில் மிகச் சிலரையாயினும் இங்கு குறிப்பிடாவிட்டால், எனது அனுபவ உண்மைகளை வாசகர்கள் சிறந்த முறையில் ஊகித்தறிந்து கொள்ளும் வாய்ப்பு குறுகியதாகவே போய்விடும்.
ரெட்ணம் றொபின்சன் என்ற ஒரு இளைஞன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். அடிக்கடி தூதரகத்திற்கு வந்து செய்தித் தாள்களை படிக்கும் சாக்கில் என்னுடனும் கதைத்துக் கதைத்து அறிமுகமானான். இவன் ஒரு அணுங்கு மாதிரி. என்ன தான் சொல்லி விளங்கப் படுத்தினாலும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்துவிட்டு பழைய கதைக்கே வந்து அதே பல்லவியைப் பாடும் பக்குவ நெஞ்சம் அமைந்தவன். ஐரோப்பிய நாடொன்றுக்கு போவதற்காகவே இலங்கையிலிருந்து புறப்பட்டு வந்திருக்கிறான். விடுதலைப் போராட்ட இயக்க மொன்றில் அங்கத்தவனாக இருந்ததாக கூறினான். அதில் எவ்வளவு தூரம் உண்மையோ தெரியாது. ஆனால் கடவுச் சீட்டில் ஏதோ பிரச்சினை. பிரச்சினை என்ன என்பதை இப்போது ஞாபகப்படுத்த முடியவில்லை.

Page 40
மொஸ்கோ அநுபவங்கள் 74
அதனை மாற்றி வேறொரு ஆவணம் பெற்றுத் தரும் படியோ அல்லது தூதரகக் கடிதமொன்றோ கேட்டு என்னைத் தொல்லைப் படுத்திக் கொண்டிருந்தான். என்னைப் பொறுத்தவரைக்கும் முடிந்தவரையில் உதவ இதய சுத்தியுடனான விருப்பம். பொய், களவு, ஏமாற்றுக்கு உடந்தைபோதல், என்பனவற்றை நினைத்துப் பார்க்கவும் சகிக்காதது. இவ்வாறு அப்பழுக்கான காரியத்தில் ஈடுபட்டு, அதில் மாட்டிக் கொண்டு மானத்தை இழப்பதை விரும்ப மாட்டேன். அதையும் விட உயிரைப் போக்கிக் கொள்வதாக இருந்தால் சம்மதிப்பேன். எவ்வளவோ தரம் தெளிவாக என் நிலையை விளக்கி அவ்வுதவியை பெற்றுத்தர முடியாது என்று கூறியும் சிணுங்கிச் சிணுங்கி அலுப்புத் தட்ட பேசிக்கொண்டே இருந்தான் றொபின்சன். கடைசியாக அவனது தொல்லை பொறுக்க மாட்டாமல் ஏசிக் கலைத்தும் பார்த்தேன். அதற்கும் அவன் மசியவில்லை. துஞ்சார், பசிநோக்கார், அவலம் பாரார் கருமமே கண்ணாயினார்.
16-07-1995 ஞாயிற்றுக்கிழமை தூதரகம் முடிந்து வீடு வந்து விட்டேன். இரவு ஏழு மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. றொபின்சனின் நாராசத் தொனி. தொணதொணத்தது. மீண்டும் ஏசி எச்சரிக்கை செய்து விட்டு போனை வைத்துவிட்டேன். திரும்பவும் அடித்தது, அதே இரங்கல், பசப்பு வார்த்தை. பேசாமல் ரிசீவரை வைத்து விட்டேன். அதற்குப் பிறகும் பலதடவைகள் தொலைபேசி மணி ஒலித்ததுதான். ஆனால் நான் சட்டை பண்ணாமல் அப்படியே இருந்துவிட்டேன்.
வழமைபோல் காலையில் தூதரகத்திற்கு சென்று எனது கடைமைகளில் ஈடுபடத் தொடங்கினேன். என் உடன் பணிபுரிந்த கோஸ்தியா “உங்களுக்கு ஒரு துயரச்

75 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
செய்தி..” என்று கூறி பேச்சை ஆரம்பித்தான். ஆனால் நேரடியாக என்னவென்று கூறவில்லை. பக்கத்தில் இருந்த டாக்டர் நிமால் பெம்மா வடு, துணிந்து “மன்னிக்கவும். காலையில் லண்டனில் இருந்து ஒரு தொலைபேசிச் செய்தி பெற்றோம். உங்கள் மருமகன் நேசசிறி கதைத்தார். உங்களது அம்மா... தவறிவிட்டதாக. ” என்று நிறுத்தினார். 'மறுபடியும் நேசசிறி கதைக்கக் கூடும்’ என்றும் கூறினார்.
எதிர்பாாத இந்த அதிர்ச்சி, என்னை மனவேதனை கொள்ளச் செய்வதற்குப் பதிலாக தம்பிக்கச் செய்துவிட்டது. மூளை வேலை செய்ய மறுத்துவிட்டது. என்ன? என்ன செய்வது? அடுத்த தென்ன? என்றெல்லாம் சிந்தித்துப்பார்க்கும் திராணி வேரோடு சாய்ந்து விட்டது. ஏதோ பித்தம் தலைக் கேறியவனைப் போல பேசாமல் இருந்திருக்க வேண்டும் நான்.
சிறிது நேரத்தில் சிறியிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. என்ன? அதேதான்; அம்மா உயிருடன் இல்லை அவ்வளவுதான். அவனுடன் பேசுவதற்குக் கூட வார்த்தைகள் வர மறுத்தன. என் நிலையை அறிந்துதான் சொன்னானோ என்னவோ, “ஆறுதலாக யோசித்து முடிவெடுங்க. நான் ஒரு மணித் தியாலயத்தில் திரும்பவும் தொடர்பு கொள்ளுகிறேன்” என்றான். அது எனக்கும் ஆறுதலாகவும் அவகாசமாகவும் இருந்தது.
1991ம் ஆண்டு மே மாதம் ஊரிலிருந்து புறப்படுவதற்கு முன்னால் அதுவும் அவசர அவசரமாக ஓடோடிப்போய் சென்று என் அன்னையரின் தரிசனம் பெற்று வந்த பின்பு, நான் என் தாயாரின் முகத்தைக் காணவில்லை. இனி. இப்பிறப்பில். எனக்கு அந்தப் பாக்கியம் கிட்டப் போவதில்லை. முடிந்தால்

Page 41
மொஸ்கோ அநுபவங்கள் 76
உயிரற்ற சடலமாக உணர்வற்றுக் கிடக்கும் பூதவுடலை கண்குளிரப் பார்த்து கண்ணிரால் அஞ்சலி செலுத்திவிட மட்டுமே ஒரு சந்தர்ப்பம் இருந்தது. அதுவும் 10500 மைல்களுக்கப்பால் இருந்து பயணத்தை மேற்கொண்டு புறப்படுகையில் எது எதுவோ எல்லாம் இடம்பெறலாம். எது ஆனாலும் பரவாயில்லை. புறப்பட்டுப் போய் என் கடமைகளை செய்து மனச்சாந்தி பெறவேண்டும்”
"ஆம், அதுவே முடிவு, இதில் மாற்றம் இல்லை" “புறப்படுவதானால் விடுமுறை கொழும்பு வெளிவிவகார அமைச்சு அனுமதிக்க வேண்டுமே! விமானச் சேவையில் இடம் பெறவேண்டும்.’ போராட்டம் எப்படி என்னை அலைக்கழிக்க முயன்றாலும் இரும்புபோல் நான் உறுதி தளராமல் இருந்துவிட்டேன்.
“எத்தனை நாள் ஆனாலும், நான் அங்குவந்து சேரும்வரை பிரேதத்தை அடக்கம் செய்ய வேண்டாம்’ என்று உடனே வீட்டாருக்கு அறிவித்து விடு” என்று மறுபடி தொலைபேசி தொடர்பு கொண்ட சிறியிடம் கண்டிப்பாகக் கூறிவிட்டு எனது பயணத்திற்கான ஒழுங்குகளில் இறங்கிவிட்டேன்.
மனப்
கண்ணில் காணாததைக் கண்டதென்றும், நடவாததை கற்பனை உணர்வுடன் ஆலாபனை செய்தும் புறங்கூறிப் பழிமுடித்தும் பல ஈனக் காரியங்களை அவ்வப்போது செய்தும் வரும் சிங்கள நண்பர்கள், ஒருவரின் துயரிடை சிறந்த உதவி ஒத்தாசை புரிந்து அனுதாபம் தெரிவிப்பார்கள்! இவ்வகையில் இவர்களது மனிதத்துவம் என்றும் பாராட்டப்பட வேண்டியதே. என் உடன் பணிபுரிந்த திரு. சில்வா, டாக்டர் பெம்மா வடு, திரு. ஜயசிங்க ஆகிய

77 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
அனைவரும் எனக்கு ஆறுதல் கூறியதோடு, வெளிநாட்டு அமைச்சு, விடுமுறை, பயணசீட்டு ஆகிய சம்பந்தப் பட்ட விடயங்களை எல்லாம் அவர்களே முன்னின்று அக்கறை எடுத்து, அடுத்த ஏரோ புளட் சேவையான வியாழக்கிழமைக்கு ஒழுங்கு செய்து தந்தனர்.
20-07-95 வியாழக்கிழமை பி. ப. 3.30. மணிக்கு கொழும்பை வந்தடைந்த என்னால் எனது சொந்த இடமான மட்டக்களப்பு ஆரையம் பதியை சென்றடையும் வாகன வசதிகள் எதுவுமின்றித் திகைத்தேன். கொழும்புக் கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரைக்கும் விஸ்தரிக்கப் பட்டிருந்த புகையிரதச் சேவை அப்போது இனப் பிரச்சினை காரணமாக பொலநறுவை வரைக்குமே மட்டுப் படுத்தப் பட்டிருந்தது.
கொழும்பிலிருந்து இலங்கை விமானப்படைப் பிரிவினால் நடாத்தப்பட்ட ஹெலிக்கப்டர் உள்ளூர் சேவை கூட குறித்த அந்த நாளில் இருக்கவில்லை! பயண ஒழுங்கில் தெளிவின்றியே விமான நிலைய வாடகை வண்டி ஒன்றை அமர்த்திக் கொண்டு கொழும்புக் கோட்டை புகையிரத நிலையம் வரை பயணம் செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் சென்று கொண்டிருந்தேன். வாகனம் சென்று கொண்டிருக்கும் போதே பேச்சு வாக்கில் சாரதியுடன் நல்லிணக்கம் ஏற்பட்டு விட்டது. எனது நிலை, மொஸ்கோவிலிருந்து புறப்பட்டு வரும் காரணம் எனது நடை உடை பாவனை என்பவற்றைக் கிரகித்து அறிந்து அனுதாபம் கொண்ட சாரதி சிந்திக பெர்னாண்டோ ஓர் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். வயது போன அவனது தந்தை பாரிச வாதத்தினால் முடங்கி வீட்டிலேயே கிடையாக இருந்தார். அறிவுள்ள

Page 42
மொஸ்கோ அநுபவங்கள் 78
தங்கையின் ஆற்றலை படிப்பிலே வளர்த்து ஒரு ஆசிரியையாகவாவுதல், ஆக்கத் துடிக்கும் பாசக் கடமையுடன் உழைத்துக் கொண்டிருந்த சிந்திக, மட்டக்களப்பிற்கு போய்ச் சேர பயணச் சாதனங்கள் எதுவும் இல்லாத என்நிலைக்கு இரங்கி, நேரே கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு தனது வாகனத்தில் கொண்டு போய்விடத் தனக்குச் சம்மதம் என்றும், எனது விருப்பம் எதுவோ அதன்படி செய்வதாகவும் கூறினான். கொழும்பில் உள்ள தொழிலாளிகளும் பிறரும் இப்படித்தான் இனிக்கப் பேசி, கச்சிதமாக நடித்து நட்புறவு கொண்டாடி, அபகரிப்பில் ஈடுபடுவது என்பது எனக்கும் தெரியும்தான்! ஆனாலும், எனக்கோ அவசரமாக சென்று தாயாரின் பூதவுடலையாவது தரிசித்துவிட இருந்த அரிய வாய்ப்பு தாமதமாகும் ஒவ்வொரு விநாடியும் தடைப்பட்டு விடுமோ என்ற ஆவலினால் இறைவனை முழுமையாக நம்பி, சிந்தகவின் பேரத்திற்கு இசைந்தேன். ஐயாயிரம் ரூபா தரப்படவேண்டும் என்றான். பணம் முக்கியமல்ல; நேரத்திற்கு வீட்டுக்குச் சென்றுவிடவேண்டும் என்றேன். சரியாக இரவு 10 மணிக்கு முன் முடியும் என்றான். “இடையில் தேனீர், உணவு என்று எங்குமே வண்டியை நிறுத்துவதில்லை. எல்லாம் வீட்டுக்குப் போய்த்தான்” என்றான். “சரி” என்றேன். வழியில் ரூபா ஆயிரம் பெற்று வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டான். அத்தோடு எனது வேண்டுகோளின் பேரில் தொலைபேசிக் கடையொன்றின் முன்னால் வாகனத்தை நிறுத்தி வீட்டுக்கு செய்தியை கொடுத்தும் விட்டேன்.
ஒழுங்காகவும் கவனமாகவும் ஆர்வத்துடனும்
வண்டியை செலுத்திவந்த சிந்தகவினால், இரவு பத்துமணிக்கு பொலநறுவையை மட்டுமே அடைய

79 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
முடிந்தது. பாதை எங்கும் வெறிச்சோடிக் கிடந்தது. அங்குமிங்குமாக வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப் பட்டிருந்தன. கடைத்தெருவின் இருமருங்கும் அமைந்து இருந்த வர்த்தக நிலையங்களில் சில மூடியபடியும் சில திறந்த நிலையிலும் வியாபாரம் செய்த வண்ணம் இருந்தன. ஊர்ச் செயல்பாடு அடங்கிய நேரமாதலால் சன நடமாட்டம் கட்டுப்படுத்தப் பட்டிருந்தது.
தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த 6TL Dg51 வாகனத்தை ஆச்சரியத்தோடு வழிமறித்த வர்த்தகச் சிப்பந்திகளான இரண்டொரு முஸ்லீம் இளைஞர்கள் சிந்தகவிடம் “எங்கே போகிறீர்கள்?’ என்று வினவினர். அந்தப் பாதையால் இரவு 6.00 மணிக்குப் பின்பு எந்த வாகனமும் செல்வது தடை செய்யப்பட்டிருந்ததை அறியாமல் நாங்கள் சென்று கொண்டிருந்ததாலேயே அவர்களுக்கு இச்சந்தேகம் ஏற்பட்டு எமக்கு உதவுமுகமாகவே வழிமறித்தனர். நான்கு வருட காலமாக நாட்டில் இருந்திராத எனக்கோ, கொழும்பு வாசியான சிந்திகவுக்கோ இதுபற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை.
புலிகள், துப்பாக்கி வழிமறிப்பு என்ற வார்த்தைகளை செவிமடுத்த சிங்களவரான சிந்திக தொட்டாற் சுருங்கி போல் நிலைகுலைந்து உற்சாகம் இழந்து, தன்னை மன்னித்து விடும்படியும் தொடர்ந்து எனது பயணத்தை நிறைவேற்றி வைக்க முடியாமல் இருந்ததற்கு வருத்தமும் தெரிவித்தான்.
எந்த விடயத்திலும் நான் எனது தனிப்பட்ட நன்மையை மட்டும் கருத்தில் கொண்டு தீர்மானிப்பதில்லை. பிறரது நியாயமான, மனிதாபிமான உரிமைகளையும் கருத்திற் கொண்டே

Page 43
மொஸ்கோ அநுபவங்கள் 80
நடைமுறைப் படுத்துவேன். ஆத்திரம், அவசரம் ஆகிய உணர்வுகள் ஏற்படும் சமயங்களில்கூட சுயநலவாதியாக மாறும் தன்மை என்னிடம் என்றும் இருந்ததில்லை.
சிந்தகவின் பதற்றம், பயம், மறுப்பு எனக்கும் சரியென்றே பட்டது. அவசரத் தேவை என்பதற்காக கண்மூடித்தனமாக ஓர் உயிரை பணயம் வைக்க நான் ஆயத்தமாக இருக்கவில்லை. அந்த சிந்தகவின் உருவத்தில் ஒரு பாசம் நிறைந்த நோயாளித் தந்தை; தாய், சகோதரன் என்ற எல்லாமுமாய் விளங்கி இலட்சியத்துடன் உழைத்துவரும் அன்புச் சகோதரனின் அருமை சகோதரி என்ற இந்த இரு உயிர்களுக்கும் கண்களாக, உயிராக உடலாக இயங்கிய ஒரு மனித சீவனை, மாண்டு போன என் தாயாரின் பெயரால் உலைவைக்க நான் ஆயத்தமாக இருக்கவில்லை.
அந்த முஸ்லீம் வர்த்தக இளைஞர்களிடம் சொல்லி ஒரு முஸ்லீம் விடுதியில் இரவைக் கழிக்க வசதி ஏற்படுத்தித் தந்ததோடு, மறுநாட்காலை என்னை இரயிலில் அல்லது பஸ்சில் ஏற்றி அனுப்பி விடுமாறும் கேட்டுக் கொண்டே சிந்தக கொழும்பு திரும்ப ஆயத்தமானான். பேசிய பேரத்தின்படி இன்னும் 90 மைல்கள் பயணம் செய்யவேண்டி இருந்தது. சிந்தக எதுவும் கேட்கவில்லை. நானாகவே அந்தப் பணத்தை தள்ளுபடி எதுவுமின்றி சந்தோஷமாக கொடுத்தேன்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த முஸ்லீம் வர்த்தக இளைஞர்கள் என்னிடம் வந்து “எவ்வளவு கொடுத்தீர்கள்?’ கொழும்பிலிருந்து மட்டக்களப்பு செல்ல ரூ. 3000/- மட்டுமே வாடகைக் கூலி. நீங்களோ பொலநறுவைக்கு ரூ. 5,000/- கொடுக்கலாமா? “ஐயோ அநியாயம்” என்று பச்சாதாபப்பட்டார்கள் என்று கூறுவதைவிட வயிற்றெரிச்சல் அடைந்தார்கள் என்பதே சரியானதாக இருக்கும். நான் கூறினேன் “பணத்தை

81 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
விட அன்பும், நேர்மையும் தான் பெறுமதி கூடியவை. எனக்கு எந்த துக்கமும் இல்லை. நீங்களேன் அனாவசியமாக இதைப்பற்றி அலட்டிக் கொள்கிறீர்கள்” என்றேன்.
அடுத்த நாள் வெள்ளிக் கிழமை காலை 10.30 மணிக்குத்தான் பயணத்தை முடித்து எனது தாயாரின் மரணச் சடங்கில் பங்கு கொண்டேன். 10,500 மைல்களுக்கு அப்பால் உள்ள மொஸ்கோவில் இருந்து கொழும்பு வர பதினொரு மணித்தியாலங்கள். ஆனால் 180 மைல் இடைத்தூரம் கொண்ட கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வந்துசேர 19 மணித் தியாலங்கள்
ரூஸ்ய இராணுவ தளவாட அருங்காட்சியகம்

Page 44
மொஸ்கோ அநுபவங்கள் 82
12. உயிர்பிழைத்த சசிUலும்
1995-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ம் திகதி பகிரங்க விடுமுறையாதலால் அன்று தூதரகம் மூடப்பட்டிருந்தது. அதற்கடுத்த நாளான 01.01.1996 புதுவருடத்தின் முதல் நாள். 02.01.1996ம் திகதியும் ஏதோ ஒரு விடுமுறை நாள். தெளிவாக எதற்கென்பது இப்போது ஞாபகமில்லை. ஆகவே தொடர்ந்து எமக்கு மூன்று நாட்கள் விடுமுறை தினங்கள்.
ரூஸ்ய நாட்டு மக்களின் ஒரு சிறந்த பழக்கம் எப்போதும் புத்தகம் படித்தல். பஸ் சிற்கு காத்து நிற்கும்போதோ சரி, பாதாள இரயில் பயணத்தின் போதோ சரி, வேறு சிறு ஓய்வுகள் கிடைக்கும்போதோ சரி ஏதாவது ஒரு நூலைப்பிரித்து வாசித்துக் கொண்டு இருப்பதை அவதானிக்க முடியும். இந்த பழக்கத்தினால் எமக்கு அறிவு விருத்தியடைவது மட்டுமல்ல; வீண்பொழுதைப் போக்கி தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைத்து வாங்கிக்கட்டும் அவலத்திற்கும் காலம் இல்லாமல் போகிறது. வாசிப்புப் பழக்கம் ரூஸ்யநாடு எங்கும் காணப்பட்டாலும் அவர்கள் படிக்கும் நூல்களோ எல்லாம் ரூஸ்யன் மொழியில் எழுதப்பட்டவை மட்டுமே! அங்கே நூல்கள் விற்பனை பன்மடங்கு அதிகம் . ஆனால் ஆங்கில மொழிப் புத்தகங்கள் மி அபூர்வமாகவே காணப்பட்டன.
சமீபத்தில் தூதரகத்திற்கு ஒரு புதிய மொழி பரிவர்த்தனையாளர் நியமிக்கப்பட்டிருந்தார். பெயர் புட்றீன். இளைஞர். ஆங்கிலம் சரளமாகப் பேசக்கூடிய ஆற்றல் அவரிடம் இருந்தது. அத்தோடு பல விடயங்களைப் பற்றியும் ஆராய்ந்து அறிவை விரிவாக்கிக்கொள்ளும் ரசனையும் அவரிடம் இருந்தது.

83 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
எனது கொன்சூலப் பிரிவுக்கே அவர் மொழி பரிவர்த்தனையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆதலால் ரூஸ்யர்களின் கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் ரூஸ்ய நாட்டில் உள்ள விசேட அம்சங்கள் என்ற விபரங்களை அவர் மூலமாகக் கேட்டு அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
அவரும் எனது கீழைத்தேய - சிறப்பாக இந்துமத கோட்பாடுகள் பாரம்பரியங்கள் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஒருமுறை என்னிடம் அறுகோணம், சுவஸ்திகா சின்னங்களை எழுதிக்காட்டி இவை இந்து மதச் சின்னங்களல்லவா ? இவை எவற்றை குறித்து நிற்கின்றன? ஏன்? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். இந்து மதம் ஆழ்ந்த கருத்துக் கருவூலங்கள் அடங்கிய அர்த்தமுள்ள ஆன்மிக நெறி. அதன் தத்துவங்களை விளங்கிக் கொள்ள எமக்கு பரந்துபட்ட அறிவு மட்டுல்ல ஆன்மிக ஞானமும் தேவை. என்னைப் பொறுத்தவரையில் இந்துமதம் மீது பற்றும் மதிப்பும் இருக்கின்ற போதிலும் அதனுள் பொதிந்துள்ள வேதக்கருத்துக்கள் பற்றிய அறிவு அதிகமில்லை. சுவஸ்திகா, அறுகோணம் ஆகிய சின்னங்கள், விநாயகர் சக்தி, போன்ற தெய்வங்களை பற்றிய குறியீட்டு மூலங்கள் என்பதைத் தவிர அதற்கான விளக்கம் தெரியவில்லை. ஆகவே, எனக்கு அவை பற்றிய அறிவு போதா தென்றும் வேறு, மத அறிவு நிரம்பிய அறிஞர்கள் மூலம் கேட்டு சொல்கிறேன் என்றும் கூறி ஒருவாறு தப்பிப் பிழைத்தேன்.
அத்தோடு இந்தியாவில் தேவிஉபாசகர் ஒருவரின் பெயரையும் விலாசத்தையும் சர்வதேசத் தமிழர் சஞ்சிகை மூலம் பெற்று இது தொடர்பாக விளக்கி கடிதம்

Page 45
மொஸ்கோ அநுபவங்கள் ) -- - 84 - ܘ - ܙ
அனுப்புமாறு அவரைக் கேட்டு எழுதினேன். இரண்டு மாதத்தின் பின்பு அவரிடம் இருந்து வந்த பதிலில் எனது சந்தேகங்களுக்கான விடை எதுவும் தரப்பட்டிருக்கவில்லை. மாறாக அம்மனின் அருள்பற்றிய வியாக்கியானமும் திருவாரூர், மதுரை ஆகிய இடங்களில் கோயில் கொண்டருளி இருக்கும் உலக மாதாவின் இரட்சக குங்கும விபூதியுமே கிடைத்தன. புட்றீனுக்கு ஏற்கனவே ஒரு சந்தேகம் இருந்தது. இஸ்ரேல் யூதர்களும், ஜெர்மனிய நாசிகளும் இந்த இரு சின்னங்களையும் தமதாக்கிக் கொண்டதற்கும் இந்து மதத்திற்கும் ஏதோ ஒற்றுமை இருக்கவேண்டும் என்பது அவரது ஆராய்ச்சியின் முடிவு. அதுமட்டுமல்ல. இவை இரண்டு சின்னங்களும் இறைவனின் கெட்ட சக்திகளாகிய சாத்தானின் வடிவமைப்பே என்பதும் அவரது வாதமாகும். அதனால் இந்து மதம் இத்தகைய அம்சங்களை அடக்கியதொரு நாசகார தத்துவம் என்ற தொனிப்பொருள் அவரது அடிமனதில் பதிந்திருந்தது.
அறுகோணம் உலக மாதாவாகிய வல்லமையின் வடிவமைப்பு. அது ஆக்கச்சக்தியே அன்றி அழிவுச்சக்தியல்ல, சுவஸ்திகா சின்னம் சித்தியும் முத்தியும் தரும் அறிவுச்சக்தி. இவை இரண்டும் மனிதனின் மனதில் தோன்றும் கெட்ட சிந்தனைகளைக் களைந்து நல்வழிப்படுத்த உதவும் இறை முகூர்த்தங்களின் குறியீடுகளே அன்றி, நீங்கள் கருதுவதுபோல் நாசகார கருவிகள் அல்ல என்றேன். அத்தோடு “இந்து மதத்தில் கையாளப் பட்டு வரும் இச்சின்னங்களை இந்த இருசாராரும் திருடித் தமதாக்கிக் கொண்டுள்ளதோடு அவற்றை பிழையான நோக்கில் பயன்படுத்தியும் வருகின்றனர்” என்றேன். எந்த விளக்கத்தை எப்படி விவரித்த போதும் புட்றீனுக்கு

85 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
அவர் மனப் பக்குவத்திலிருந்து தெளிவானது. பின்னர் நான் அதை விடுத்து வேறு திசையில் என் உரையாடல்களைத் தொடர்ந்தேன்."
நண்பர் புட்றீன் மூலமாசிமொஸ்கோவில் உள்ள ஆங்கில புத்தகசாலைகள் இரண்டின் அமைவிடங்களை அறியமுடிந்தது. 31.12.1995 அன்று இடம் பெற்ற விடுமுறை, இலங்கை நாட்டுக்கான ஏதோ ஒரு விசேடத்துவம் தொடர்பானதாகையால் ரூஸ்யாவில் அன்றையதினம் வேலை நாளாக அமைந்தது. அன்று காலை 10.00 மணிக்கு புத்தகசாலைக்குச் சென்ற நான் பி. ப. 2.30 மணிவரை அங்கேயே மகிழ்ச்சியாகச் செலவிட்டு, ஏராளமான பெறுமதி வாய்ந்த ஆங்கில நூல்களை தரிசிக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றேன். இலங்கை பணப் பெறுமதியில் 4000 ரூபா ($100)க்கும் அதிகமான விலையில் சில புத்தகங்களையும் பெற்றுக்கொண்டேன்.
புத்தக சாலையில் நின்றபோதுதான் அடுத்த இருதினங்களும் ரூஸ்யநாட்டு விடுமுறை நாட்கள், வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருக்குமே. பால், மரக்கறி போன்ற சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைக்கவேண்டுமே என்ற ஞாபகமும் ஏற்பட்டது. டிசம்பர் மாதக் கடைசி யாதலால் சூரிய அஸ்தமனம் ரூஸ்பாவில் பி.ப. 4.00 மணிக்கே நடைபெற்று விடும். ஆதலால் அவசர அவசரமாக மெற்றோ இரயில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன். எனது இருப்பிடத்திற்கு 200 யார் தொலைவில் “றிநொக்” என்று அழைக்கப்படும் பெரிய சந்தை இருந்தது. அவ்விடம் சென்றபோது வியாபாரிகள் தத்தமது விற்பனைகளை முடித்துக் கொண்டு புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

Page 46
மொஸ்கோ அநுபவங்கள் 86
இருந்தாலும் ஏதோ மரக்கறிகள் சிலவற்றை வாங்கிக் கொண்டு பால் வாங்கும் பொருட்டு நடுவே அமைந்திருந்த திறாம் லைனைக் கடக்க முற்பட்டேன், பெரிய அகன்ற கற்பாதை (High Way) க்கு நடுவே போகவும் வரவும் ஏற்றாற்போல் அந்த திறாம் தண்டவாளங்கள் போடப்பட்டிருந்தன.
சுமார் 200 யார் என மதிப்பிடத்தக்க தூரத்திற்கப்பால் ஒரு கார் விரைந்து வந்து கொண்டிருந்தது. என்னோடு பாதை ஒரமாக, றோட்டையும் திறாம் லைனையும் கடந்து செல்ல விருப்பமுடையவராக ஒரு ரூஸ் யரும் காத்து நின்றிருந்தார். ஏதோ ஒருவகைக் குதூகலம் எனக்குள் ஏற்பட்டாற்போல் உணர்ந்து, பக்கத்தில் நின்றிருந்த அந்த ரூஸ்யரையும் “தவாய், தாவாய்...... ( Come on. Come on.) என்று அழைத்துக் கொண்டு பாதையை குறுக்கிட என் பாதத்தைப் பதித்தேனோ இல்லையோ, சொல்லி வைத்தாற்போல் தூரத்தில் காணப்பட்ட அந்தக் கார் கண் இமைக்கும் கணநேரத்தில் எனது உடலில் பட்டும் படாமலும் பறந்து போய்க் கொண்டிருந்தது! ஓரிரு மில்லி மீற்றர் இடைவெளியில் தான் எனது வாழ்வு அன்று காப்பாற்றப்பட்டது யார் செய்த பூசா பலனோ நானறியேன். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ரூஸ்யர், அதற்கப்பால் விற்பனைச் சரக்குகளைத் தீர்த்து விட்டு வீடு செல்ல பஸ்சுக்காகத் தரித்துக் காத்து நின்ற வயது சென்ற ரூஸ்ய பெண்மணிகள் சிலர் “ஒப்” என்றுஅலறி வாயில் கையை வைத்து விட்டனர்! எனக்கு எதுவும் ஏற்படாதது அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்திருக்க வேண்டும். எனக்கோ எவ்வித பதட்டமும் தெரியவில்லை. ஆனால் ஏதோ இனம் புரியாத உந்து சக்தி ஒன்று என் நெஞ்சை அழுத்திப்பிடித்து பின்

87 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
நோக்கித் தள்ளுவதை மட்டும் தெளிவாக உணர முடிந்தது! வேகமாக முன்னோக்கி நகரும் ஒரு பொருள் முயன்றாலும், பின்நோக்கி நகர சில நிமிடநேரமாவது எடுக்கவே செய்யும். அவ்வாறு திசைவேக மாற்றுதலுக்கு உட்பட கணிசமான காலமும் எடுக்கும். ஆகவே, என்னை அவ்வாறு அழைத்துத் தள்ளி உயிரைக் காக்க உதவிய மறைமுக சக்தி எது? என்று எனக்குள்ளே பல கேள்விகள் பிறந்தன! அங்கிருந்த எல்லோரும் என்னை ஓர் அதிசயப் பொருளாக உற்று நோக்கியதால், சங்கோச உணர்வு மேலோங்கி அவ்விடத்தை விட்டு விரைவாக அகன்று வீடு வந்து சேர்ந்து விட்டேன். பால் வாங்கும் எண்ணத்தைக் கூட இதனால் கைவிட்டு விட்டேன்.
எனது சுபாவம், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதனை பெரும்பாலும் ஒரு பதினைந்து நிமிடங்கள் வரையே கடுமையாக சிந்திப்பேன். அதன் பிறகு சிந்தனையில் ஏதோ ஒரு முடிவுக்கு வந்து அதனை அப்படியே விட்டு விடுவேன். இந்த அதிர்ச்சிதரும் விடயத்தைக்கூட வீட்டுக்கு வந்த பின்பு சற்று வேகமாக சிந்தித்தேன். “ஏதோ மொஸ்கோ பாதையொன்றில் என் உயிர் அவம்போவது எதனாலோ தப்பி பிழைத்துவிட்டது” என்று எனக்கு நானே ஆறுதல் கூறி விடயத்தை விட்டுவிட்டேன்.
03.01.1996 அன்று வேலை நாள். கழுவி மடித்துவைத்த காற்சட்டை, சேர்ட் என்பவற்றை அணிந்துகொண்டு முந்திய வாரம் அணிந்த அழுக்கான சேர்ட் பாக்கட்டில் இருந்த அடையாள அட்டை, பணம் என்பவற்றை எடுத்து புதிதாக அணிந்து கொண்ட சேர்ட்டினுள் புகுத்தும்போது தான் அதனுள் பகவான் ரீ சத்திய சாயி பாபா வின் சிறிய புகைப்படம்

Page 47
மொஸ்கோ அநுபவங்கள் 88
இருப்பதைக் கண்டு, எனது சிந்தனையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டதை உணர்ந்தேன்.
என்னைப் போலவே பரீட்சை எழுதி அதில் சித்தியடைந்து நேர்முகப் பரீட்சைக்கு முகம் கொடுத்து அதிலும் தெரிவாகி, சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டவர் தான் திரு. ஆனந்த ராசா. இவருக்கு ஒரு வளர்ந்த மகனும் மகளும் இருக்கிறார்கள். இவர்களது கல்வி சம்பந்தமான அனுகூலத்தை கருத்தில் கொண்டு, சீனாவுக்கு குடும்பத்துடன் செல்லாமல் ஆனந்த ராசா மட்டும் தனியே சென்றார். அங்கு தனிமை. பிள்ளைகள், மனைவி ஆகியோர் பால் கொண்ட பாசத்தின் உந்துதல். புதிய இடமானபடியால் எல்லாவற்றிலுமே தோன்றிய சிக்கல் தன்மை, முயற்சி அதிகம் வேண்டற்தக்கவையாக மாற்றியதும் அவருக்கு விசனத்தை அதிகரிக்கச் செய்தன. இதனால் மனம் விரக்தியுற்று நிம்மதியற்ற நிலையில் கஷ்டப்பட்டிருக்கிறார். நாங்கள் இருவரும் கொழும்பு வெளி விவகார அமைச்சில் 1990 - 1991 வாக்கில் ஒன்றாகப் பணிபுரிந்து கொண்டு வந்த சமயம். எமது மத அனுட்டான விடயங்களிலும், ஆன்மீக ஈடேற்ற விடங்களிலும் சாதனை செய்ய முயன்றதோடு அதுபற்றி கருத்துக்களையும் பரிமாறியுள்ளோம். இந்த நினைவு ஆனந்தராசாவுக்கு ஏற்படவே அங்கிருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். தனக்கு சில நாட்களாக மனதில் நிம்மதியே கிடையாதென்றும் சில சமயம் அதனால் பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயமாக இருக்கிறதென்றும், மன அமைதி பெற தனக்கு ஆலோசனை ஏதும் வழங்கும் படியும் அதில் கேட்டிருந்தார். ஆனந்தராசாவின் இந்தக்கருத்தை வாசிக்க எனக்கு சிரிப்பாகவும் விகடமாகவும் இருந்தது. குருடன், குருடனுக்கு வழிகாட்டிய கதைபோலல்லவா இது இருக்கிறது?

89 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
எனது பதில் கடிதத்தில், அவர் நினைப்பதுபோல் நான் ஆன்ம ஈடேற்றம் பெற்ற ஜீவன் முக்தர் அல்ல என்றும் அந்த நிலை அடைவதற்காகவே ஆன்மீக ஞானிகள் சிலர் காட்டிய வழியைக் கடைப்பிடித்து வருகின்றபோதிலும் அந்த பயிற்சிக்கு மிகவும் வேண்டற் பாலதாகிய மனதை, ஒரு நிலைப் படுத்தல் (Stability) இன்னமும் கைவரப் பெறவில்லை என்றும்; ஆதலால் நானும் ஒரு சாதாரண சாதகனே அன்றி குருவின் தானத்திற்கு உயர்ந்து விடவில்லை என்றும் எழுதியனுப்பினேன். அத்தோடு, “தேவைப்படின், பரிபக்குவ மடைந்து இறைவனோடு கலந்து விட்ட சுவாமி இராமதாஸ் அவர்களால் உபதேசிக்கப்பட்ட ஆன்மீக விதிப்படி நீங்கள் மனதில் வரித்து வணங்கி வரும் உங்கள் இறை முகூர்த்த மொன்றின் நாமார்ச்சனையை இடைவிடாது மனமொருமித்து செபித்து வாருங்கள். இது உங்கள் மனதிலிருக்கும் அழுக்காறுகள்ை நீக்கி பிரச்சினைகளிலிருந்து விடுபடத்தக்க திடத்தையும் அமைதியையும் தோற்றுவிக்கும். நம்பிக்கையுடன் முயன்று வாருங்கள்” என்று குறிப்பிட்டேன்.
சுமார் மூன்று மாதங்கள் கழிந்த பின்பு ஆனந்தராசாவிடம் இருந்து ஒரு கடிதத்தைப் பெற்றேன். அதில் பின்வருமாறு கூறி இருந்தார்.
தற்போது தனக்கு இறை அருள் பாலிக்கப்பட்டு, மன அமைதி கிடைத்து விட்டதாகவும் அது வர்த்தக முயற்சி ஒன்றின் காரணமாக சீனாவுக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரமுகர் ஒருவரால் சத்திய சாயிபாபா சமிதி ஒன்றுக்கு தன்னை அழைத்துச் சென்று வழிகாட்டியதன் மூலம் ஏற்பட்டதென்றும் தெரிவித்து, பகவான் பூரீ சத்யசாயி பாபாவின் உருவப் படங்கள் ஐந்தையும் உறையில் இட்டு அனுப்பி இருந்தார்.

Page 48
மொஸ்கோ அநுபவங்கள் VV
அந்தச் சேர்ட் பொக்கற்றினுள் இருந்த பகவானின் திருஉருவப் Lu L – Üd இவ்வாறு அனுப்பிப் பெறப்பட்டவற்றுள் ஒன்றேயாகும்! அப்போதுதான் எனக்கு பழைய அந்தக் கதை ஞாபகத்திற்கு வந்தது. ," சாயிபாபா வைப் பற்றி ஆனந்த JIT g T வரைந்தனுப்பிய மேற்படி கடிதத்திற்கு எனது பதிலாக முன்பு இவ்வாறு தான் எழுதினேன்.
பூரீ சத்யசாயி பாபா ஓர் அவதார புருடர் என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடில்லை. அவரால் தினமும் வாரிவழங்கப் படுவதாக பத்திரிகைகளில் வெளிவரும் போதனைகள் உண்மையிலேயே தனித்துவமானவை மட்டுமல்ல, இறை அருளை நன்கு உணர்ந்து அனுபவித்த ஒரு மகானேயன்றி வேறொருவரால் இப்படியான அநுபூதித் தத்துவங்களை தெரிவிக்க முடியாது என்பதிலும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. ஆயினும் நீண்ட பலகாலமாக என்னுள்ளே ஒரு சந்தேகம் ஏற்பட்டு அது இன்னமும் எவராலும் தீர்த்து வைக்கப்படாமல், என்னை அலைக்கழித்து வருகின்றது. இரண்டு தடவைகள்; முதலில் என் தாய்மொழியான தமிழிலும், இரண்டு மாத இடைவெளிக்குப் பின்பு திரும்பவும் அதையே ஆங்கிலத்திலும் பூரீசத்திய சாயி பாபாவுக்கே நேரடியாக விலாசமிட்டு கடிதங்கள் எழுதியனுப்பியும் இதுவரை அவை எதற்கும் எதுவிதப் பதிலும் கிடைக்கவில்லை!
தம்மோடு உறவாடும் ஏழை எளியவர்கள் வாழ்க்கையில் உயர்வு பெறுவதை அறவே கண்டு சகித்துக்கொள்ளாமல் குது செய்வோரும், விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இருப்போரும் சமூகத்தில் பலவிதமான நேர்மையீனங்களுக்கு முழு உத்தரவாதமாக இருப்போருமே பகவானின் முதலாம்

91 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
தரப்பக்தர்கள் என்ற அந்தஸ்தைப் பெற்றிருப்பதோடு, அவரது விசேட தரிசனமும் பெற்று அவரிடம் இருந்து நேரில் வெகுமதிகள் கிடைக்கப் பெற்றும் உள்ளனர். இது எங்ங்னம்? பகவான் இவர்களுக்கு கனவிலாவது தோன்றி தம் பாவச் சிந்தனைகளை விட்டாலன்றி அவர்கள் தன்னிடம் காட்டும் அன்பை ஏற்க முடியாதென்றோ தன்னிடம் காட்டும் இந்த அன்பினை ஏனைய பிற படைப்புகள் மீதும் செலுத்தும் படியோ கட்டளை இடலாமல்லாவா? இதுவே என்னுள் முனைப்புடன் இன்றும் எழுப்பப்படும் சந்தேக வினா. இதற்கு ஆனந்தராசா அடுத்த மடலில் தெரிவித்த பதில்: “பகவான் தமக்கு வரும் கடிதங்களுக்கு நேரடியாகப் பதில் அனுப்பமாட்டார். அவ்வாறாயின் நாளொன்றுக்கு வந்து குவியும் ஆயிரக்கணக்கான கடிதங்களுக்கு எவ்வாறு பதில் அனுப்புவது? “ நேரம் வரும்போது உங்களுக்கு உணர்த்துவார்” என்று முடித்திருந்தார்.
s பகவான் உணர்த்திய அந்த நேரம்: 31.12.1995ம் தினமா? அவர் உணர்த்திய விதம் மரணத்திலிருந்து என்னைத் தடுத்துக் காப்பாற்றியதா? நெஞ்சை அழுத்திப் பிடித்துத் தள்ளியது போல் உணர்ந்தேனே அது பகவானின் அருட்சக்தியா? இன்னும் எனக்குள் அச்சந்தேகம் சரியானபடி தீர்க்கப்படவில்லை! சந்தேகம் மற்றொரு சந்தேகத்தைப் பிறப்பித்ததேயன்றி ஏற்கனவே ஏற்பட்ட சந்தேகத்திற்கு சாட்சியாக அது அமையவில்லை.

Page 49
மொஸ்கோ அநுபவங்கள் 92
சில அறிமுகங்கள்
6ി&/7ந்த நாட்டில் இருக்கும்போது ஏற்படாத வாஞ்சையும் குதூகலமும் பிறநாட்டில் எம்மொருவரைச் சந்திக்கும்போது ஏற்படுகிறது/ பகைமை, வேற்றுமை என்பன கூட மறக்கப்பட்டு ஒரே இனம் - ஒரே சாதி - ஒரே மதம் என்ற ஒருவித நெருக்க உறவினை இது தே7ற்றுவிக்கிறது.
தூதரகத்திற்கு வந்துபோகும் எம்மவர்களில் எல்லே/7ரும் ஒரே மாதிரியான குண நலன்களைக் கொண்டவர்களல்லர் கருமமே கண்ணாயினராக அதிக வீதமானோர் இருப்பினும், அவர்கவிடையே, நல்லெண்ணம், பச்சாதாபம் கொண்டவர்களும் இல்லாமல் இல்லை.
 

93 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
13. கந்தச்(சிபெல்84சி
வாராவாரம் இலங்கையில் இருந்து இராஜீய தொடர்பான பொதி ஒன்று ( Diplomatic Pouch) வெளிவிவகார அமைச்சிலிருந்து, கிடைக்கப் பெறும். அதன் உள்ளடக்கம் பெரும்பாலும் இராஜ தந்திர, இருநாடுகள் சம்பந்தமான தகவல்கள், தாபன ரீதியான அறிவுறுத்தல்கள், ஆணைகள் மற்றும் கடிதக் கோரிக்கைக்கான பதில்கள், படிவங்கள், ஆவணங்கள், முன்னைய வார செய்தித் தாள்கள் என்பனவாகவே இருக்கும். இந்தச்செய்தித் தாள்களை எடுத்துப்படித்து விட்டு, வெளியில் பொதுமக்கள் கூடும் சலூன் (Salon) ல் எடுத்துப் போடுவார்கள். நாட்டு நிலைமை புதினங்கள் என்பனவற்றை அறிய விரும்புவோர் அவற்றை எடுத்துப் படித்து விட்டுச் செல்லுவார்கள். கிரமமாக பத்திரிகைகள் படித்து நாட்டு நிலைபரம் அறிய வென்று தூதரகத்திற்கு வருவோரில் திரு. கந்தசாமி பெரியசாமியும் ஒருவர். இவர் இலங்கையின் [ ፫) 6∂) G፯) ዚ ! ቇ தலைப்பட்டணமான கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1990 ம் ஆண்டு வாக்கில் சோவியத் ஒன்றியத்தினால் வளர்முக நாட்டு மாணவர்களது உயர் கல்வி மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டு வந்த புலமைப் பரிசில் மானியம் பெற்று மொஸ்கோ வந்தவர். மொஸ்கோ இராஜீய பல்கலைக் sp&sji Sai ( Moscow State University) LÉcijd, Giugi கால் நடை வைத்தியத் துறையில் ஆறு வருடங்கள் பயிற்சி பெற்று இப்போது இலங்கையில் தொழில் புரிந்து வருபவர். குடும்பப் பொறுப்பும், பெற்றோரின் பால் அதிக பாசமும் உடையவர். &Fr75 T |J 6007 இளைஞர்களைப் போன்று அங்கும் இங்கும் சல்லாப விநோத நோக்கில் யாருடனும் இணைந்து சுற்றும் மனப்பாங்கு அற்றவர். கல்வியில் ஊக்கமும் கடும்

Page 50
மொஸ்கோ அநுபவங்கள் 94
உழைப்பும் மிக்கவர். பணத்தில் சிக்கனமும் கருமித்தன்மையும் உடையவர்.
ஆரம்பத்தில் என்னோடு உரையாடும்போது என்னை அறியாமலே எனது போக்கினை வேவு பார்த்து குண, நல, ஈடுபாடுகள் எத்தகையன என்று தன் மதிநுட்பத்தால் தெரிந்து ஒரளவு திருப்திப்பட்ட பின்பே அணுகி வரத் தொடங்கினார். பின்பு, பத்திரிகைகளைப் படித்து முடிந்ததும் அங்கே தாமதித்து ஒரு குறிப்பிட்ட நேரம் என்னுடனும் உரையாடி விட்டே விடுதிக்குத் திரும்பிச் செல்வார். பேச்சு வாக்கில் அவரை எனது வீட்டுக்கு அழைத்தபோது கூட முதலில் தயங்கினார். வீட்டில் எனது மனைவி, பிள்ளைகள் உறவினர் என்று யாராவது இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பினால் அவருக்கேற்பட்ட சங்கோச இயல்பு, அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். நான் மட்டும் தனியாக அங்கு வாழ்ந்து வருகிறேன் என்பதை தெரிந்து கொண்டபின்பே ஒருநாள் அங்கு வருகை தந்தார். அதன் பிறகு அதிகமாக ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் என்னிடம் வந்து போவார். காலை பத்துமணி சுமாருக்கு வந்தாரென்றால் பிற்பகல் ஐந்து அல்லது ஆறுமணி வரை என்கூடவே இருந்து ரூஸ்யநாட்டு மற்றும் பிற தகவல்களை எல்லாம் வழங்குவார். இவரது தந்தையார் கண்டி கொழும்பு வீதியில் பூரீ முத்துமாரி அம்மன் ஸ்ரோர் முதலாளி. பெரியசாமியும் மற்றொரு பையனுமே பிள்ளைகளாக உள்ள குடும்ப்த்தில் ஏழ்மை நிலை இல்லை. ஆயினும் பெரியசாமி சொற்ப பணத்தையும் கறாராகவே கணக்கிட்டு செலவு செய்து சிக்கனத்தைக் கடைப்பிடித்து வந்தார். °・。
ஒரு சமயம் பல்கலைக் கழக விடுதியில் ஒரு களவு இடம் பெற்றதாம். சில மாணவர்களின் பெறுமதிமிக்க

95 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
உடைமைகள், பணம் என்பன திருடப்பட்டுவிட்டதாம். விடுதியில் இரு மாணவர்கட்கு ஒரு பாதுகாப்பான அறை என்ற விகிதத்தில் டாகிர்ந்தளிக்கப்பட்டிருந்த போதிலும், இவ்வாறான களவுகள் இடம் பெறுவதற்கு அவர்களிடையே ஏற்பட்டு வளர்ந்த அபரிமிதமான முறையற்ற நட்பு, காலப் போக்கில் எல்லைமீறி சில பிழையான அணுகுமுறைகளோடு கூடிய முயற்சிகளிலும் ஈடுபட வைத்திருக்கவே, பின்னர் அது கருத்து வேறுபாடுகள் வழியே பிரிவாக மாறிய போது அதற்குப் பழிதீர்க்கும் வகையில் அல்லது தகவல் தெரிந்த நிலையில் பகையாக மாறி அவர்களுக்கிடையே அவ்விதம் நடைபெற்றிருக்கலாம் என்பதே உண்மை. அது எதுவோ பெரியசாமி இந் நிகழ்ச்சியினால் விசனமுற்று, தன்னிடம் இருந்த சில உடைமைகளையும் வெளிநாட்டு நாணயத்தில் இருந்த பணம், பயணிகள் காசோலைகள் என்பவற்றையும் பூனை, குட்டிகளைக் கவ்விக்கொண்டு வந்து நின்றாற்போல் எனது வீட்டின் ஓரிடத்தில் பாதுகாப்புக் கருதி கொண்டு வந்து வைத்திருந்தார். தேவைப்படும்போது அங்கு வந்து அளவுக்களவு எடுத்தெடுத்துச் செல்வார். இதனால் அவரது வருகை சிலசமயம் அவசர தேவைகள் நோக்கில் வார நாட்களுக்கும் விரிந்தது.

Page 51
மொஸ்கோ அநுபவங்கள் 96
స్టీ . 酸
இவர்கள்தான் செல்வி வளர்மதி, செல்வி அன்சலா, செல்வி விஜயசிறி
14. செல்றி ஆயப் பின்வுைதித்யசிரி
மேற்கு உலக நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி சாதாரண மக்களிடம் இருந்து சுளை, சுளையாக பல இலட்ச ரூபாய்களை ஏப்பமிட்ட பின் அவர்களை மொஸ்கோவில் கொண்டுவந்து இறக்கிவிட்டு ஆள் மாறிவிடும் ஏஜன்சிக்காரர் ஒரு புறம், மற்றொரு புறம் இலங்கையில் உயர் கல்விகற்கும் வாய்ப்பினைத் தவறவிட்டு விட்ட சிலரின் ஆசையைத் தூண்டி மொஸ்கோவில் மருத்துவம் பெளதிகவியல் என்று அழைத்துக்கொண்டு வந்து ஏதோ ஒரு சர்வகலாசாலையில் சேர்த்துவிட்டுப் பணம் சம்பாதிக்கிற தொழில் பார்க்கும் கல்வித் தரகர்.
இந்த இருசாராரினாலும் ரூஸ்யாவிலும்
அதனைச் சேர்ந்த இணை நாடுகளிலும் இத் தொல்லை பன்மடங்கு பெருகியது. ஏஜன்சிக்காரருக்கோ
 

Կ7 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
வருமானம் பெருகியது. இந்தக் கூட்டு முயற்சியில் ரூஸ்ய நாட்டுப் பல்கலைக் கழகங்களில் பணிபுரிந்து வந்த பீடாதிபதிகள் (Deens), பேராசிரியர்கள் என்போர் கணிசமான பங்கினை வகித்து வந்தனர். இம் முறையற்ற பணத் தேடலில் ஒரு பகுதி இவர்களுக்கும் தாரை வார்க்கப்பட்டது! சோவியத் யூனியன் உடைந்தபின்பு அச் சாம்ராஜ்யத்தால் கட்டிக்காக்கப் பட்டு வந்த பொதுவுடமைத் தத்துவம் மட்டுமல்ல, சீரிய வாழ்வியல் நெறி முறைகளும் கூடவே தகர்ந்துவிட்டன!
இலங்கையில் இருந்து அழைத்துக் கொண்டு வரும்போது “ஸ்கலசிப்” என்று கூறி ஏமாற்றியே காரியத்தைச் சாதித்தனர். இலங்கைப் பல்கலைக் கழகமொன்றில் சேர்ந்து பட்டம் பெற்று வெளியேறும் பாக்கியம் தவறிப் போய்விட்டாலும் அதனை ஈடுசெய்யும் வகையில் தமக்குக்கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பம் அதைவிடவும் அதிகம் என மனப்பால் குடித்துக் கொண்டு இருக்கும் மாணவர்கள் ரூஸ்யநாட்டில் காலடி வைத்து வேரூன்றி மூன்று மாதங்கள் கழிந்து நிலைமை நன்கு தெளிந்து விட்டபின்புதான் தாம் எவ்வாறு முகவரால் ஏமாற்றப் பட்டுவிட்டோம் என்பதை உணருகிறார்கள்!
இதுவரையில் எவர் இந்த உண்மையை படித்துப் படித்துப் உரத்துக் கூறினாலும் அவர்களது காதுகளில் கழுதைக்குபதேசமாகவே, அது அமையும். அத்தகைய இவர்களது ஆவல் நிறைந்த பேதைமை நிலையே முகவர்களின் தொழில் முயற்சிக்கும் சாதகமாயிற்று. எத்தனையோ ஏழைப் பெற்றோர் தமது அருமைப் பிள்ளைகள் 'படித்து மேலோங்கட்டும்’ என்ற நோக்கில் சொத்துக்களை கூட அடவு வைத்துப் பணத்தைப் பெற்று அனுப்பி வைத்திருக்கிறார்கள். இத்தகையவர்கள் தாம் 7

Page 52
மொஸ்கோ அநுபவங்கள் 98
செய்யப்போகும் முயற்சியில் எத்தகைய லாபம் கிடைக்கப்போகிறது? அதன் உண்மை நிலை என்ன என்பதை விளங்கிக் கொள்ளட்டும் என்ற தூய நன்நோக்கு எண்ணத்தில் மொஸ்கோவில் இருந்தவாறே இலங்கையிலுள்ள இரண்டு முன்னோடித் தேசிய தமிழ்ப் பத்திரிகைகட்கும் கட்டுரைகள் எழுதி அனுப்பி அவை அப்படியே பிரசுரிக்கப்பட்டிருந்ததையும் அறிவேன்.
* சிலர் அவற்றைப் படித்துத் தெரிந்து கொண்ட
பின்பும் மாட்டிக்கொண்டு ரூஸ் யாவுக்கு வந்தபின்பு என்னை இனங்கண்டு தமது மடைத்தனத்தை பறைசாற்றினர். -
ஆசை ஒருவர் உள்ளத்தில் பிறந்துவிட்டால் அதனை ஆண்டவனாலும் மாற்றிவிடமுடியாது. அனுபவித்து அறிந்து கொண்ட பின்புதான் அவலத்தை பற்றி சிந்திப்பர். இதனைத் தானோ எமது ஒளவை மூதாட்டியார் பெண்புத்தி பின்புத்தி என்றார். புத்தியில் இரு வகைகள் உண்டு. ஒன்று வருமுன் காத்து நிற்பது. இதுவே விவேக புத்தி அல்லது ஆண்புத்தியாக இருக்கவேண்டும், வலிமையான புத்தி, பெண் நாய் தானாகச் சண்டைக்குப் போய் வாங்கிக் கட்டுவதுபோல், இந்தப்பெண் புத்தியானதும் நடந்து முடிந்த பின்பு பிரலாபிப்பது என்றே நினைக்கிறேன். ஆதலால் பெண்புத்தி என்று ஒளவையார் குறிப்பிட்டது பெண்களுக்கு மட்டுமே உரித்தான புத்தி என்று கருதாமல் தீர ஆராய்ந்து பார்க்காமல் முன் யோசனை இன்றி முடிவெடுக்கும் (Wake analysis) ஆண், பெண் என்ற இருபாலாரும் எடுக்கும் முடிவினையே குறித்து நிற்பதென்று கொள்ளப் படவேண்டும்.
மனைவியிடமிருந்து கிடைத்த கடிதத்தில், ஊரைச் சேர்ந்த விஜய சிறி என்ற பெண் பிள்ளை ஒருத்திக்கு

(99 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
ரூஸ்யாவில் படிக்க ஸ்கொலசிப் கிடைக்கப்பெற்று அங்கு வருவதாகவும், அவர் மூலம் சில உணவுப் பதார்த்தங்களை தயாரித்து எனக்குக் கொடுத்தனுப்பி வைத்துள்ளதாகவும் இடத்திற்கு அவள் அந்த புதிதானபடியால் என்னையே அவளிடம் சென்று அவற்றை வாங்கிக் கொள்ளுமாறும் அத்தோடு; முடிந்த உதவிகளை அப்பிள்ளைக்கு வழங்குமாறும் கேட்கப்பட்டிருந்தது. மொஸ்கோவில் ரூஸ்ய மொழி நன்றாக தெரியா விட்டால் எந்த ஒரு தொடர்பாடல் கருமமும் இலேசில் பார்க்க முடியாதென்பதை எங்கே அவர் அறியப்போகிறார்? அரைகுறை விலாசத்தை மட்டும் வைத்துக்கொண்டு இடம் கண்டு பிடிப்பதென்பது வெறும் பிரயத்தனம். தொலை பேசி இலக்கம் தெரிந்தாலாவது ஏதாவது செய்து தொடர்பு கொள்ளமுடியும். ஆகவே நான் பேசாமல் இருந்துவிட்டேன்
என்னிடம் வந்துபோகும் பெரியசாமி மூன்றாண்டு காலம் ஏற்கனவே படிப்பை முடித்திருந்த படியால், அவருக்கு ரூஸ்ய மொழிப்பயிற்சி நல்ல நிலையில் இருந்தது. இந்தக் கதையை பெரியசாமியிடமும் கூறினேன். ஆரம்பத்தில் அதனைச் சிரமம் என்று கூறியபோதிலும் சிரமத்தையும் பொருட்படுத்தாது அவருக்குத் தெரிந்த பல மாணவ நண்பர்களிடம் இதனைக் கூறி விசாரித்துப் பார்த்திருக்கிறார். இரண்டு வாரத்திற்குப் பின்பு ஒரு தெளிவற்ற செய்தி அவருக்குக் கிடைக்கப் பெறவே “அவ்விடம் போய் ஆராயலாம்” என என்னையும் அழைத்துக் கொண்டு ஒரு சனிக்கிழமை புறப்பட்டார். இறுதியில் அவரது பெருமுயற்சியினால் அங்கு இங்கு என்று சந்து பொந்துகளெல்லாம் வளைந்து நெளிந்து திரும்பி இடத்தைக் கண்டு பிடித்துவிட்டோம். பின்பு அப் பல்கலைக்கழக பெண் மாணவர் விடுதியின் 4வது நுழைவாயிலின்

Page 53
மொஸ்கோ அநுபவங்கள் " 1OO
இரண்டாவது தட்டில் 589 வது அறையின் முன் சென்று கதவைத் தட்டினோம். கதவைத் திறந்து கொண்டு ஒரு வாட்டசாட்டமான பருவப்பெண் முகமலர்ந்து வரவேற்றாள். எனக்கோ விஜயசிறியின் உருவமைப்பு தெரியாது. ஊரில் இருந்தபோது கூட நான் பார்த்ததில்லை. அப்போது பெயரையும் மறந்து “கமலசிறி” எங்கே இருக்கிறார்? என்று ஆங்கிலத்தில் வினவினோம். சரளமாகவும் அழகாகவும் ஆங்கிலத்தில் உரையாடிய அந்தச் சிங்களப் பெண் கமல சிறியா? விஜயசிறியா? என்று கேட்டார். “ஏதோ ஒரு சிறி. மட்டக்களப்பில் இருந்து வந்திருக்கிறார்” என்றோம். “அப்படியானால் இங்கேதான் இருக்கிறார்; தயவு செய்து சில நிமிடம் தாமதியுங்கள்” என்று பண்பாகக் கூறிய அப்பெண் அவ்விடத்தில் நின்றவாறே உள்ளே தலையை திருப்பி “விஜயசிறி உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள் என்றவள் தயவு செய்து உள்ளே வாருங்கள்" என்றும் கோரிக்கை விடுத்தாள்.
விஜயசிறி கூட என்னைப் பார்த்தோ கதைத்தோ பழகியதில்லை! அவருக்கும் எனது உருவம் புதியதே. இருந்தாலும் நாமாகவே அறிமுகத்தை வளர்த்துக் கொண்டு ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக் கொண்டோம். அவளது தமையன் துரை ராசசிங்கம் எனக்கு நன்கு அறிமுகமான நண்பர். அப்படி இருந்தும் “ஏன் ஒரு வார்த்தை என்னை அல்லது ஊரில் இருக்கும் என் மனைவியை தொடர்பு கொண்டு விசாரித்துப் பார்க்காமல் இவ்வாறான முயற்சியில் இறங்கினீர்கள்? என்மனைவி ரூஸ்யாவில் என்னோடு சிலகாலம் வாழ்ந்தவர். அவருக்கும் நன்றாகத் தெரியுமே இந்தத் துறையில் இன்று ஏராளமான ஏமாற்றுகளும் பித்தலாட்டமும் இருக்கின்றன என்று. ஸ்கொலசிப்

S101 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
என்ற பேச்சே ரூஸ்யாவில் இன்று இல்லை. சோவியத் யூனியன் உடைந்ததில் இருந்து ரூஸ்ய நாடு பொருளாதார ரீதியில் மிகவும் தாழ்ந்துபோய்விட்டது. இதுவரை ஸ்கொலசிப் பெற்று வந்தவர்களைக் கூட பணம் செலுத்தினால் மட்டுமே படிப்பை தொடரமுடியும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவித்தல் விடுக்கும் போது புதிதாக ஸ்கொலசிப் உங்களுக்குத் தருவார்களா ? இவை யாவும் ஏஜன்சிகளின் தந்திரோபாய ஏமாற்று வித்தைகள்” என்றேன். நான் அப்படிச் சொன்னது அந்தப் பெண்ணுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்ததோடு நான் இதனை வேண்டுமென்றே கதை திரிக்கிறேன் என்று எண்ணி என்னோடு காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டுவிட்டார். தனது ஏஜன்சி கூறிய வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றையே தேவ வாக்காக பரிந்துரைத்தாள். என்னைவிடவும், ரூஸ்யாவில் கல்வி பயின்று வரும் இலங்கை மாணவர் சம்பந்தமான ஒவ்வொரு விடயத்தையும் தெரிந்து கொண்டுள்ள முன் மாணவரான (Senior Student) திரு. பெரியசாமியும் சிரித்துக்கொண்டே நிலைமையை என் சார்பாக விளக்கினார். அத்தோடு எனக்கும் எச்சரிக்கை செய்து, "நீங்கள் பேசாமல் இருங்கள். இன்னும் சில மாதங்களில் அவர்கள் அறியத்தானே போகிறார்கள்” என்றார்.
அப்போது செப்டம்பர் மாதம். இலையுதிர்காலம் நீங்கி, பனிக்கட்டி விளையும் குளிர் காலம் அரும்பி இருந்தது. ஊரில் இருந்து வந்த பிள்ளை; அதுவும் ஒரு பெண் அனுபவம் இல்லாதவள். அத்தோடு தமையன் எனக்கு நண்பன். முன்பின் தெரியாத புதிய நாடு. இவற்றை எல்லாம் உத்தேசித்து அன்றிலிருந்து

Page 54
மொஸ்கோ அநுபவங்கள் 102
தினமும் தூதரகம் முடிவுற்றதும் அப்படியே மெற்றோ மூலம் விஜயசிறியிடம் சென்று குறை, நிறைகளைக் கேட்டு தெரிந்து கொண்டு என்னால் ஆனவற்றை புரிந்து கொண்டு வரலானேன். ஒரு மாத காலம் கழித்து, மன்னாரைச் சேர்ந்த மற்றொரு பெண் “அன்சலா”வும் விஜயசிறிக்குத் துணையாக வந்து சேர்ந்து விட்டார். ஏற்கனவே அங்கு மூன்றாண்டுகள் வைத்திய துறையில் படிப்பை முடித்துவிட்ட கொழும்பைச் சேர்ந்த மற்றொரு தமிழ் பெண்ணின் நட்பு இவர்களுக்கு கிடைத்து விட்டதால் eyp Gau GUB Üb மிக அன்னியோன்னியமாக சேர்ந்து பழகி தம் படிப்பிலும் வெளிவிவகாரங்களிலும் ஆளுக்காள் உதவியானார்கள். என்மீதும் ஒரு சொந்த தமையனை அல்லது உறவினனை எவ்வாறு கருதுவார்களோ அவ்வாறே மதித்து நடந்து ஓய்வான போதெல்லாம் அங்கு வரும்படியும் எனக்கு அன்புக்கட்டளை இட்டனர். சிலசமயம் எனது இருப்பிடத்திற்கும் வந்து போயினர். மொழித் தேர்ச்சி அபிவிருத்தி அடைய அடைய, எனக்கும் அவர்களது உதவி அதிகம் கிடைத்தது.
 

103 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
சொறக்கின் மி. கொன்ஸ்ரன்ரினோவிச் குடும்பத்தாருடன் நான்
15. சர்வதேசத் தமிழ் சஞ்சிதையும் அதன் 3*víójusy6
1983-ம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கையில் ஏற்பட்ட சிங்கள - தமிழ் இனக்கலவர வன்செயல்களை அடுத்து வடக்குக் கிழக்கில் வாழ்ந்து வந்த தமிழர்களில் ஆயிரக்கணக்கானோர் தமது வாழ்வுக்கும் வசதிக்குமென நாட்டைவிட்டு வெளியேறி இங்கிலாந்து, ஜேர்மன், பிரான்ஸ், 65 GTL IT , சுவிர்ச்சலாந்து, நோர்வே அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சென்று அகதி உரிமை கோரித் தஞ்சம் புகத் தொடங்கினார்கள். இலங்கையில் நிலைபெற்றிருந்த கடின கடுர நிலை காரணமென்றிருந்தாலும், இது இத்தகையோருக்கு ஒரு பெரும் சந்தர்ப்பமாகவே இருந்தது. பணமும் அந்தஸ்தும் உடையவர்கள் இவ்வாறு முயற்சி செய்து

Page 55
மொஸ்கோ அநுபவங்கள் − 104
தப்பித்துக் கொள்ள, அவ்வித வசதிகள் இல்லாதோர் அங்கேயே பிரச்சினைகளோடு பிரச்சினையாக வாழ்ந்து வருகின்றனர். அகதிக்கு ஆகாயமே துணையல்லவா?
புலம்பெயருதல் ஆண்மைக்கு இழுக்கு. கோழைத்தனத்திற்குச் சகபாடி. காலம் காலமாக தமிழர்கள் தாம் வாழ்ந்து வந்த நிலப்பிரதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து அல்லது ஒதுங்கி ஓடி ஒளிந்து கொண்டமையினால் தான் அன்று முதல் தமிழர் மத்தியில் அன்னிய காலாச்சாரம் விரைவில் ஊடுருவி பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது மட்டுமல்ல; தாம் வாழ்ந்து வந்த மண்ணும் சிறிது சிறிதாக பறி போகக் காரணமாகியது. இதனால் சொற்ப லாபம்
பெறப்பட்டாலும் தீமைகளே அதிகம். இது இலங்கைக்கு மட்டுமல்ல தமிழர்கள் எங்கெங்கு வாழ்ந்தார்களோ அங்கங்கெல்லாம் இதே
நிலைமையையே தோற்றுவித்துள்ளது. மற்றது
தற்போது இவர்கள் புலம் பெயர்ந்து குடியேறி வாழ்ந்துவரும் நாடுகளில்தான் எதிர்பாரா வேறொரு நெருக்கடி தோன்றி வளரின் அதற்கும் தாக்குப் பிடிக்காமல் இன்னுமொரு இடத்திற்கு இடம்பெயர மாட்டார்கள் என்பதில்தான் என்ன உத்தரவாதம்
இருக்கிறது?
ஆகவே பெட்டை நாய் வாழ்க்கை வாழ நினைக்கும் இவர்கள், தமிழருக்கே அவமானச் சின்னங்கள் என்பது கசப்பான உண்மையே.
உலகமெங்கணும் புலம்பெயர்ந்து சென்று குடியேறிய இலங்கைத் தமிழர்கள் அந்தந்த நாட்டின் வாழ்க்கை வசதிகளைப் பெற்று வாழ்ந்து வருவதோடு பாரம்பரியத் தமிழ்மொழியை பேணி வருவதும் தமிழ் கலாச்சாரத்தை அரைகுறையாகவேனும் காப்பாற்ற

105 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
முயற்சிகள் மேற்கொண்டு வருவதும் நாமறிந்த செய்திகளே. பல நாடுகளில் தமிழ் மாத வார சஞ்சிகைகள் ஆரம்பிக்கப்பட்டு அவை விற்பனைக்கு விடப்படுகின்றன. இவ்வாறு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரான யாழ்ப்பாணத்தின் இணுவிலைச் சேர்ந்த திரு. என். எஸ். பிரபு பி.எஸ்சி, ஜேணலிசம் (பிரித்தானியா) என்பவரை ஆசிரியராகக் கொண்டு 1995ம் ஆண்டு ஆரம்பப் பகுதியிலிருந்து நடாத்தப்பட்டு வரும் மாதமொருமுறை வெளிவரும் சஞ்சிகை *சர்வதேசத் தமிழர் ஆகும். இதன் நோக்கம் : தமிழரின் ஐக்கியம், முன்னேற்றம், செயற்பாடு என்பனவேயாம்.
எவ்வாறு எனது பெயர் முகவரி பெறப்பட்டதோ தெரியாது, சர்வதேசத் தமிழர் மாத சஞ்சிகையின் ஆரம்ப இதழொன்று கனகரெத்தினம் எனப்பெயரிடப்பட்டு தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. ஆரம்பகாலத்தில் “லண்டன் முரசு' சஞ்சிகை எவ்வாறு அமைந்திருந்ததோ அவ்வாறேயான தோற்றப் பொலிவுடன் கவர்ச்சியாகவும் இருந்தது. படித்து முடித்து விட்டு பேசாம ல் இருந்து விட்டேன். அதனைத் தொடர்ந்து தொலைபேசி அழைப்பொன்றும் பெற்றேன். திரு. பிரபு அவர்கள் பேசினார். அவருக்கு என்பெயர் கனகரெத்தினம் அல்ல சபாரெத்தினம் என்று கூறி விடயத்தை செவிமடுத்தேன். அவரது சஞ்சிகைக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும்படி கேட்டுக் கொண்டார். அவராகவே ரூஸ்ய நாட்டைப் பற்றியும் அங்கு நான் பெற்ற அனுவங்களைப் பற்றியும் எழுதும்படி கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க “ரூஸ்ய நாட்டில் தமிழர் படும் இன்னல்கள்” என்ற தொனிப் பொருளில் ஒரு கட்டுரையை வரைந்தனுப்பினேன். உடனே பிரசுமாகியது. மீண்டும் என்னை எழுதும்படியும், அது தொடராக அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறினார்.

Page 56
மொஸ்கோ அநுபவங்கள் 106
ஒருவருக்கு வாக்களித்து விட்டால் அந்த
வேலையைச் செய்து ஒப்படைக்கும் வரையில் ஓயவே மாட்டேன். எப்போதும் அதுவே சிந்தனையாக வந்து வந்து என்னை ஊக்குவித்துக்கொண்டே இருக்கும் இது என் உடன் பிறந்த பழக்கம் என்பதை விட வியாதி என்றே குறிப்பிடவேண்டும். காரணம் அதுவரையில் எனக்கு நிம்மதியே ஏற்படாது. ஒருமுறை என்னிடம் ஒருவர் ஒரு விடயத்தைக் கூறி அதற்கு நானும் உடன்பட்டுவிட்டால், இரண்டாம் முறை அவர் அதனை நினைவு படுத்துவதற்கு முன்பே அதனை முடித்து வைத்துவிடுவேன். இதனால் என் கடமை நிமித்தம் பாராட்டுதல்களுக்குப் பதில் தண்டனைகளையே அனுபவித்திருக்கிறேன். சாதாரணமாக ஒரு காரியா லயத்தில் சம்பந்தப்பட்ட எழுதுநரைப் பார்த்து ஏன் அதனைச் செய்யவில்லை! ஏன் இதனை முடிக்கவில்லை?” என்ற கேள்விகளையே எழுப்பு வார்கள். ஆனால் என்னிடமோ “இப்போது ஒரு கடதாசியையும் அனுப்பா தே” என்று மேலதிகாரிகள் கூறிய அனுபவமே எனக்குண்டு. அவற்றை எல்லாம் எடுத்துரைக்க முயன்றால் எனது இந்த நூல் திசைமாறிய பறவையாகி விடக்கூடுமாகையினால் இதனை இத்துடன் நிறுத்திவிட்டு, விட்டஇடத்திலிருந்து தொடருவோம்.
ÅR
ஒய்வு கிடைத்த நேரமெல்லாம் இரவு பகலாக இருந்து, எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி “எனது கொன்சூலக் கடமை அனுபவங்கள் சில” என்ற தலைப்பில் எழுதி அனுப்பிவைத்தேன். சர்வதேசத் தமிழரில் பன்னிரண்டு இதழ்களில் அவற்றைப் பிரசுரிக்க ஆவன செய்திருந்தார் திரு. பிரபு அவர்கள்.
எனது எழுத்துப் பிரதிகள் அவரைச் சென்றடைந்த அன்று எனக்குத் தொலைபேசி இணைப்பு ஏற்படுத்திப்

107 ஆரையம்பதி க. சபாரெத்தின.
பேசினார். “உங்கள் ஆக்கம் இன்று எனக்குக் கிடைத்தது. எல்லா வேலைகளையும் ஒரு புறம் தள்ளிவிட்டு அதனைப் பிரித்து மேலோட்டமாகப் படித்தேன். அது கீழே வைக்க விடாமல் முழுவதையும் என்னை படித்துச் சுவைக்குமாறு தூண்டியது. எல்லாவற்றையும் இப்போது படித்து விட்டேன். மிகவும் சிறப்பாக இருக்கிறது. என்னப்பா அது? நீங்கள் எந்தப் பல்கலைக் கழகம்? நான் 1975ல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேறியவன். நீங்கள். . . . . . 2”
எனக்குச் சிரிப்பாக இருந்தது. “பல்கலைக்கழகமா ? நானா? உலகமென்னும் கலைக் கழகத்தில் அன்றாட மனித வாழ்வியலைக் கற்றுத்தேறி அனுபவமென்னும் பட்டம் பெற்றவன்.” என்றேன். “நிஜமாகவா ? உங்கள் எழுத்து..... பிரம்மாதமாக இருக்கிறது”.
“அப்படியா? முதற்படி என்னைப் பெற்று வளர்த்த தந்தை, தாயாருக்கும் அதற்கடுத்து தமிழில் என்னை ஊக்குவித்து ஞானம்,புகட்டிய துறை போகக்கற்ற அறிஞர் பெருமான் உயர்திரு வி. சீ. கந்தையா, பண்டிதர் பி.ஓ.எல், அவர்களுக்குமே உங்கள் பாராட்டுதல்கள் சேர வேண்டும்.”
பிரபு என்மீது அதிகப் பிரியம் கொண்டிருந்தார் என்பது அவரது உரையாடல்கள் மூலம் தெளிந்தது. பின்னாளில் என்னையும் நோர்வே நாட்டுக்கு வந்து குடியேறுமாறு பலமுறைகள் கேட்டு வற்புறுத்தினார். தனது செல்வாக்கினை உபயோகித்து அவ்விடம் வருவதற்கு உதவ ஆயத்தமாக இருப்பதாகவும் கூறினார். எல்லாவற்றையும் அன்பாக மறுத்து என் இயலாமையைத் தெரிவித்து விட்டேன். அதற்காக நான் இன்றும் வருந்தவில்லை. பிரபுவிடம் பேசும்

Page 57
மொஸ்கோ அநுபவங்கள் 108
போதும் சரி எவருடன் பேசும் போதும் சரி “நான்” என்ற அகங்காரத்தை அடக்கிக்கொண்டு உரை யாடுவதே என் வழக்கம். இளம் வயதிலிருந்தே எனக்கு கல்வி கற்றுத்தந்த மிகச் சிறந்த ஒழுக்க சீலர்களான என் ஆசான்களிடமிருந்து தொற்றிக் கொண்ட பழக்கமே இது. அது மட்டுமல்ல, ஆன்மீக ஈடேற்றத்தின் பால் இசைவுள்ள எவரும் இவ்வாறுதான் வாழவேண்டும் என்பதும் விதி. என்னோடு நன்றாகப் பழகிய பின்பு பிரபு அடிக்கடி கூறுவார்: “உங்களிடம் திறமை இருக்கிறது அதனை நீங்கள் தாழ்த்திக் கொள்ளக்கூடாது” என்று. திரு பிரபுவுக்கும் எனக்கும் உரையாடல்கள் தொலைபேசியில் தான் இடம் பெற்றன. சஞ்சிகையில் இது தவிர வேறுபல ஆக்கங்களையும் எழுதியுள்ளேன். கட்டுரைகள், சிறுகதை, கவிதைகள் என்றெல்லாம் எழுதியதாக ஞாபகம். ஒவ்வொரு இதழ் வெளியீட்டின் பின்பும் அதிகமாக பிரபு என்னைத் தொலைபேசியில் அழைத்து “உங்கள் ஆக்கத்தைப் படித்த பல அன்பர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளார்கள். லண்டன், இந்தியா, போன்ற இடங்களில் இருந்தெல்லாம் மகிழ்ச்சியை தெரிவித்து அறிவித்துள்ளார்கள்” என்பார். அவரது சொந்தத் தங்கை கூட (அவருடன் நோர்வேயில் வசிப்பவர்) சர்வதேசத் தமிழரை எடுத்துப் பிரித்தவுடன் முதலில் தான் தேடி வாசிப்பது எனது ஆக்கத்தைத் தானாம் என்றும் கூறி இருக்கிறார். இவற்றை எல்லாம் இங்கே எனது அனுபவங்கள் என்ற காரணத்தினாலேயே அப்பட்டமாக எழுதுகிறேன். ஆகவே வாசகர்கள் (Beating the own trampet) g)560607 g (5 Ju Sug IT Did என்று மட்டும் தயவு செய்து எண்ணிவிட வேண்டாம் என்று மன்றாட்டாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

109 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
ബ
16. திரு. ஜகிலுடன் மொஸ்கோவில் அமைந்திருந்த பூீரீலங்கா எம்பசி ரூஸ்ய நாட்டு நலனுக்கு மட்டுமல்லாது, சோவியத் யூனியனாக ஒன்று சேர்ந்திருந்த 16 நாடுகளுக்கும்; போலந்து, செக்கோசுலோவேக்கியா ஆகிய நாட்டு நலன்களை பேணுவதற்காகவும் அமைக்கப்பட்டிருந்தது. இப்போது போலந்து, செக்கோசுலோவேக்கியா ஆகிய நாடுகளில் தனித்தனி
தூதரகங்களை நிறுவியுள்ளார்கள்.
r லிதுவேனியா என்ற நாடு பால்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ளது. அந்த நாட்டில் வாழ்ந்துவரும் இலங்கைப் பிரஜைகளின் நலன் காக்கும் பொறுப்பு மொஸ்கோவில் அமைந்த தூதரகத்திற்கே இருந்தது.
ஒரு வேலை நாள் 19.05.1995 அன்று தொலைபேசி அழைப்பொன்று லிதுவேனியாவிலிருந்து வந்தது. திரு. ஜக்ஷன் என்றொருவர் உரையாடினார். “கடவைச் சீட்டைத் தொலைத்துவிட்ட இலங்கைப் பிரஜை ஒருவர் புதியதோர் சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள் எவை என்பதைக் தெரிவிக்க முடியுமா?” என்று கேட்டார். ஆங்கிலத்திலேயே உரையாடல் இடம் பெற்றது
ஒரு பாஷையின் பேச்சு மொழியூற்று சில சமயங்களில் மடைதிறந்த வெள்ளமாகச் சுரந்து கொண்டே வருவதும், சிலசமயம் திக்கித் திணறி உரிய சொற்களுக்குச் கூட பஞ்சமேற்பட்டு சோபை இழக்க வைப்பதும் அனுபவத்தில் நான் கண்ட புதுமை. அதிலும் ஆங்கில உரையாடலின்போது இவ்வனுபவம் எனக்கு அதிகம் ஏற்பட்டிருக்கிறது. அன்று மொழி ஊற்றுக்கண் திறந்து வாயில் ஆங்கிலம் சரளமாகப்

Page 58
மொஸ்கோ அநுபவங்கள் 110
புரண்டது. அவர் கேட்ட கேள்விகளுக் கெல்லாம் தெளிவாகவும் அழகாகவும் நான் பதிலளித்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். எல்லாவற்றையும் கேட்டு திருப்தியடைந்து விட்ட ஜக்ஷன் “சிங்களம் உங்களால் பேசமுடியுமா ?” என்று கேட்டார். “அவ்வளவாக இல்லை” என்றேன். “ஆனாலும் மிஸ்டர் சபா ரெத்தினம், உங்களுடைய ஆங்கிலம் சிறப்புடையது. அழகாக மொழியைப் பேசினீர்கள்” என்றார் ஜக்ஷன். நான் “அப்படியா?” என்றேன் " I appreciate your language” 67 airpit i. 6T6015. உரையாடலில் அப்படி ஏதாவது திறமை அமைந்திருந்தால் அது எனக்கு ஆங்கில மொழியை கற்றுத் தந்த ஆசிரியருக்கும் நான் கல்வி கற்ற பாடசாலைக்குமே அந்தப் பாராட்டு உரிமையாக்கப் படவேண்டும்”
t e g உங்கள் ஆங்கில ஆசான் யார்? “திரு. குகதாசன் என்ற ஒரு மகான்” “நீங்கள் எந்தப் பாடசாலையில் கல்வி கற்றீர்கள்”
“இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் சுவாமி விபுலானந்தரினால் தாபிக்கப்பட்ட ஈழத்துச் சாந்தினிகேதன் அது. பெயர் சிவானந்த வித்தியாலயம்.”
ஆம். ஆம். எனக்குத் தெரியும் அங்கெல்லாம்“ ۔ நான் பயணம் செய்திருக்கிறேன்”
参考
GŚg (3qugofiu prlią Gö * (Public Service Language Institute') என்ற ஒரு மொழி கற்பித்தல் கலா சாலையில் ஆங்கில விரிவுரையாளராக இங்கிலாந்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.ஜக்சன் பணிபுரிந்து வருகிறார். அவருடன் சிற்றுாழியராக பணிபுரிந்து வரும் இலங்கையின் ஆனமடுவைச் சேர்ந்த

111 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
ஒரு சிங்களப் பெண்ணின் கடவுச் சீட்டு சம்பந்தமாகவே திரு. ஜக்ஷன் என்னோடு உரையாடினார் என்பதை அவர் விளக்கமாகக் கூறினார்.
அன்றைய தினம் எனது மனதில் நிறைந்த மகிழ்ச்சி இட ம் பெற்றது. சாதாரண எனது மொழி உரையாடலைச் செவிமடுத்த ஆங்கிலேயரான அதுவும்; ஆங்கில மொழிகற்பிக்கும் ஒரு விரிவுரையாளரான திரு. ஜக்ஷன் புகழ்ந்துரைக்கிறாறென்றால், அது ஒரு சின்ன விடயமா; என்ன? V
அன்று என் நண்பர்கள் பலருக்கு இந்த நிகழ்ச்சியினைக் கூறி ஆனந்த மடைந்தேன்.

Page 59
மொஸ்கோ அநுபவங்கள் 112
17. அவசியக்ஞபதிதல்
காகங்கள் எங்கிருந்தாலும் குப்பை மேட்டில் புதைந்து கிடக்கும் உணவுப் பண்டத்தை எளிதில் கண்டுவிடும். ஆகாயத்தில் உயரப் பறக்கும் இராஜாளியின் நோக்கு எல்லாம் ஒளிந்திருக்கும் சீவசந்துகளின் நடமாட்டம் பற்றியதாகத் தான் இருக்கும். அதுபோலவே மொஸ்கோவில் தங்கியிருந்த தமிழர்களுக்கும் என் பதவிக் கதிரையை எனது உருவமைப்பை பார்த்திராதவர்கள் கூட எனது பெயரை நன்றாக எடுத்து உரைத்து கற்பனையில் என்னைப் பார்த்தார்கள். இத்தனைக்கும் என்மீது அவர்கள் கொண்ட பாசமோ நல்ல அபிப்பிராயமோ காரணமல்ல. துறையைக் கடக்கத் தோணி எப்படி இன்றியமையாததெனக் கருதப்படுகிறதோ அதேபோல மொஸ்கோ வாழ் தமிழர்களுக்கும் எனது உத்தியோகக் கடமை அவசியமாகப் பட்டது.
தொலைபேசி அழைப்பொன்று ஒரு நாள் மதியம் 11.30 மணிக்கு மேல் வந்தது. அடையாளம் தெரியாத ஒருவர் பேசினார். 'எனக்கு உங்களால் ஒரு உதவி ஆகவேண்டி உள்ளது. நீங்கள் பலருக்கும் உதவி செய்பவர் என்று இங்கு பேசிக் கொள்கிறார்கள்.”
“என்ன உதவியை நீங்கள் எதிர்பார்க்கீறீர்கள்? முடிந்த வகையில் உதவுவேன். கந்தோர் சம்பந்தப்பட்டதா ; இல்லை. 2”
“இது எனது தனிப்பட்ட விடயம் சம்பந்தப்பட்டது?”
‘என்ன செய்ய வேண்டும்?”
‘ஒரு கடிதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தரவேண்டும்”

113 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
“அவ்வளவுதானா ? சந்தோசமாக செய்கிறேன் முடிந்தவரையில் விரைவாகவும் செய்து முடிக்கப் பார்க்கிறேன்.”
“இப்போது அங்கு வரட்டுமா ?”
“சரி வாருங்கள்”
அடுத்த ஒரு மணிநேரத்தினுள் ஆள் தூதரகத்திற்கு வந்துவிட்டது! பீயூன் என்னை அழைத்துக் கூறினான். கரும பீடத்திற்குச் சென்று கண்டேன், தலைமுடியை சிரைத்து ஒரு சிறு குடுமி மட்டும் விடப்பட்டிருந்தது; வட்ட வடிவமான முகத்தில் இரு தீட்சண்யம் வாய்ந்த கண்கள் துருதுரு என விழித்தன. புன்னகை தவழும் ஆன்மீக வதனம். என்னை இனங்கண்டு இருக்கையை விட்டு எழுந்து வந்தது. “நீங்கள்தானே தொலைபேசியில் உரையாடினீர்கள்?”
Ć ć. 。**
«Չէ ԼD
தமிழில் அப்படியும் இப்படியும் எழுதப்பட்டிருந்த ஒரு காகிதம் பரிமாறப் பட்டது. கண்களைப் பதித்து கவனமாகப் படித்துப் பார்த்தேன். “இதோ இருங்கள் அரை மணிநேரத்தில் தந்துவிடுகிறேன்” என்று கூறிவிட்டு எனது அறைக்குச் சென்றுவிட்டேன்.
ஆங்கிலத்தில் வரைவு செய்து, பின்பு தட்டச்சு செய்து அழகாக ஒப்படைத்தேன். அமெரிக்க நாட்டினரான தன் ஆன்மீகக் குருநாதர் தனக்கு எழுதிய கடிதத்திற்குப் பதில் கடிதமே அது என்றும் தனக்கு ஆங்கிலம் சரளமாக எழுத வராது என்றும்.நன்றியேறி கூறி விடைபெற்றுச் சென்றார்.
இலங்கையின் வடபுலத்திலுள்ள காரை நகர் நாகபூஷணி அம்மன் ஆலய பிரதம குரு பிரம்மீழீழ் 8

Page 60
மொஸ்கோ அநுபவங்கள் 114
சுப்பிரமணியக் குருக்களின் ஏகபுத்திரான யக்ஞபதிதாஸ் தொழில் நிமித்தம் மலேசியாவில் உள்ள ஒரு சைவ ஆலயத்திற்குப் பூசகராகச் சென்று பணிபுரிந்து வந்தார். அப்போது முற்பிறப்பில் அவர் செய்த தவவலிமையோ, கர்மவிதிப் பயனோ, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்க அன்பர் ஒருவரது உறவு ஏற்பட்டு அவர் மூலமாக அவ்வியக்கத்தின் பால் ஆகர்சிக்கப்பட்டு, சகல போகங்களையும் துறந்து துறவியாகத் திடசங்கல்பம் பூண்டு விட்டார். பின்பு தனது ஞான குருவான அமெரிக்க சன்னியாசியின் கட்டளைப்படி மொஸ்கோவில் ஏற்படுத்தப்பட்ட ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்க கிளைத் தாபனத்தில் Food for life “உயிர் வாழ்வதற்கு உணவு” என்ற பிரிவுக்குப் பொறுப்பாக இருந்து சேவையாற்றுகிறார். இவரது இயற்பெயர் யாதெனத் தெரியவில்லை.
இந்த அறிமுகத்தை அடுத்து யக்ஞபதிதாஸ் அடிக்கடி ஓய்வு கிடைக்கும் போது என்னிடம் வந்து செல்வார். பெரும்பாலும் செவ்வாய்க் கிழமைகளில் 10 மணிக்கு மேல் வருவார். காரணம் அன்றைய தினம் அவருக்கு ஓய்வு நாள் என்பார்.
w உலகத்தை வஞ்சிப்பதற்கும், தன் கபட நாடகத்தை கச்சிதமாக நடாத்தி முடிப்பதற்கும் உகந்த வேடங்களில் தவக் கோலமே மிகவும் பிரபல்யமானது. எத்தனையோ பேர்கள் சுவாமிகள் என்ற பாங்கில் மக்களைக் கவர்ந்து உலகம் பழிப்பன எல்லாவற்றையும் கூசாமல் செய்து வருகின்றார்கள். இதற்கு குறிப்பிட்ட இனம், மதம், சாதி என்ற வரையறை கிடையாது. எல்லா மதத்தினிலும், எல்லாச் சமூகத்தினிலும் எல்லா இனத்தினிலும் இக் கீழ்நிலையாளர்கள் இருக்கவே செய்கின்றனர். இந்தக் காரணத்திற்காக அவ்வேட தாரிகள் சார்ந்த இனத்தையோ மதத்தையோ இகழ்வது,

115 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
வஞ்சம் தீர்க்க முனைவது என்பன விவேகமானதல்ல. நல்ல அம்சம் எங்கு நிலைபெற்று இருக்கிறதோ அங்கேதான் தீமையும் முளைவிட்டுக் கிளம்ப முனையும். அமிர்தத்திலே தான் ஆலகால விடமும் பொங்கியது.
R யக்ஞபதிதாஸ் செவ்வாய்க் கிழமைகளில் என்னிடம் வந்தால் எனது காரியாலய அறையினுள் எனக் கெதிராக போடப்பட்டுள்ள கதிரையில் அமர்ந்து கொண்டு முக்கியமான சமய ஆன்மீக விடயங்கள் பற்றி மட்டுமே பேசுவார். நான் என் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் கையில் எப்போதும் வளர்த்துக் கொண்டிருக்கும் உருத்திராட்ச (துளசிமணி) மாலையின் ஒவ்வொரு மணியாக கைவிரல்களால் மேவி இதயபூர்வமாக இறை ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பார். நான் பலமுறை இதனைப் பார்த்து என் மனதில் யக்ஞபதிதாசுக்கு ஒர் உயர்ந்த இடத்தை வழங்கி இருந்தேன். அப்போது நான் ஏதாவது கேட்டால் கூட திடுக்கிட்டு ஞான மண்டலத்திலிருந்து பூவுலகிற்கு வந்தவர்போல் தடுமாறி பதில் தருவார். எனது பார்வையில் - என்னோடு நெருங்கிப் பழகியதில் அப்பழுக்கற்ற ஒரு அடியார் என்றே யக்ஞபதிதாஸை நான் கொள்வேன்.
காலை பத்து அரை மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் தூதரகத்தில் தேநீர் தயாரித்து வழங்குவார்கள். இலங்கைத் தேயிலைச் சபையினால் விளம்பரத்திற்கென்று அனுப்பி வைக்கப்படும் அதி உயர் ரக தேயிலைத் தூளைக் கொண்டு தயாரிக்கப்படும் அப்பானத்திற்கு ஒவ்வொரு உத்தியோகத்தரும் தாம் தாம் சீனி வாங்கி வைத்துக் கொண்டு பருகுவார்கள். யக்ஞபதி தாஸ் தேநீர், காப்பி எதுவுமே பருகமாட்டார். அவரது ஆன்மீக இயக்கத்தின் கொள்கைப்படி தேநீரிலும்

Page 61
மொஸ்கோ அநுபவங்கள் 116
காப்பியிலும் உடம்பை உற்சாகப்படுத்தும் அல்ககோல் இருப்பதாக கொள்ளப் படுவதால் இவை தவிர்க்கப்பட்டுள்ளனவாம். வற்புறுத்தினால், சீனியில் ஒரு கட்டித் துண்டை வாயில் போட்டுக் கொள்வார்.
யக்ஞபதிதாஸை நான் எவ்வாறு ஆராய்ந்து மனதில் ஏற்றுக் கொண்டேனோ அதுபோலவே மர்க்ஞபதிதா ஸ"ம் என் ஒவ்வொரு செய்கையையும் அவதானித்து திருப்திப்பட்டுக் கொண்டார் போலும்! எங்களிடையே நல்லுறவும், ஆன்மீக உரையாடலும் வளம் பெற்றிருந்தன. ’’ ب
ஒரு நாள் யக்ஞபதிதாஸ் பிற்பகல் 2.00 மணி இருக்கும் கந்தோரில் என்னைக் காண வந்தார். வழமைபோல் அழைத்து முன்னால் இருந்த ஆசனத்தில் இருத்தினேன். முகத்தில் தேஜஸ் ஒளி தென்பட்டது. மகிழ்ச்சியாகவும் காணப்பட்டார். வந்ததும் வராததுமாக தன் தோளில் வழக்கமாகத் தொங்கும் நீண்ட நார் வைத்த சீலைப் பையைத் தேடினார். அது தோளில் இருக்கவில்லை!
“ஹரே ராம்! e) எங்கோ மாறிப் போய்விட்டதே! ஹரே ராம். ஹரே ராம்” என்றார். பிரகாசத்துடன் செழிப்பாய் இருந்த அவரது முகம் அன்றலர்ந்த தாமரைபோல் வாடி வதங்கிச் சென்றது. “ஐயோ நான் 6) போனதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதற்குள். . அதற்குள். .” என்றவருடைய நா தழதழத்தது. “என்ன?, பையில் பணமுமா வைத்திருந்தீர்கள்?’ என்றேன். “அதைப்பற்றி நான் கவலை கொள்ளவில்லை. என் குருநாதர் அமெரிக்காவிலிருந்து பதில் அனுப்பி இருந்தார். இன்றுதான் கிடைத்தது ஓட்டமோட்டமாக உங்களிடம் கொடுத்து வாசிப்பதற்காக எடுத்து வந்தேன். ராமா! வழியில் தவறி விட்டதே” என்று ஆதங்கப்பட்டுக்

117 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
கொண்டே இருந்தார். அவரைப் பார்க்க எனக்கு ஒருபுறம் பரிதாபமாகவும் மறுபுறம் அவரது குருபக்தியைக் காண பெருமையாகவும் இருந்தது. ஏதாவது ஆறுதல் சொல்லலாம் என்ற பாங்கில் “பயப்படாதேயுங்கள். அந்த பை உங்களுக்கு மீண்டும் வந்து சேரும். ஒன்றில் தொலைபேசி மூலம் எடுத்தவர் உங்களுக்குத் தகவல் கொடுப்பார். அல்லது நீங்கள் உங்கள் மடத்திற்குப் போய்ச் சேர அங்கு அவர் அதனைக் கொண்டு வந்து கையளிப்பார். அதனுள் உங்கள் விலாசம் தொலைபேசி இலக்கம் இருக்கிறது தானே?”
: -2, LD T LD
“விசனப்படாதீர்கள்”
s's “உண்மையாகவா ?
ஆச்சிரமத்துக்கு கனத்த நெஞ்சோ டு போய் அமர்ந்து கொண்ட யக்ஞபதிதாஸ் சுவாமிகளுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. ஆவலுடன் ரிசீவரை எடுத்து “ஹலோ’ என்றார். யாரோ ஒருவர் ரூஸ்யன் மொழியில் உரையாடினார். பாதையில் ஒரு 6. கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குச் சொந்தக்காரார் நீங்களா? என்ற விபரங்களை கேட்டு திருப்திப்பட்டுக் கொண்ட அந்த நல்லுள்ளம் படைத்தவர் சில நிமிடநேரங்களில் அதனைக் கொண்டு வருவதாக கூறினார். பை கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறம். நான் சொல்லியபடியே தேவ வாக்குப் போல் நடைபெற்று முடிந்தது மறுபுறம். யக்ஞபதிதாஸ் இன்பமும் அதிர்ச்சியும் சேர்ந்த நிலையில் கிறங்கிப் போனார். இந்த நிகழ்ச்சி நடைபெற்றதற்குப் பின்பு, யக்ஞபதிதாஸ் என்மீது உயர்ந்த மதிப்பு வைத்திருந்தார். எனது நடவடிக்கைகளைச் சதா கவனித்த யக்ஞபதிதாஸ்

Page 62
மொஸ்கோ அநுபவங்கள் 118
அடிக்கடி கூறுவார்: "எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கும் உங்களுக்குமிடையே வேறுபாடுகள் அதிகமில்லை. தேநீர் அருந்துவதை விட்டு விட்டால் ஏனைய அனைத்து நடைமுறைகளும் எங்கள் சாதனைகளையே ஒத்திருக்கின்றன’ என்று.
இலங்கையிலுள்ள தனது தந்தை தாயாரை விட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் சென்றுவிட்டன. வயதான தாயார் அடிக்கடி யக்ஞபதிதாசுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார், தம்மை வந்து ஒருமுறையேனும் பார்த்து விட்டுச் செல்லும்படி பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது போல் யக்ஞபதிதாஸ் அவற்றை எல்லாம் சிரத்தை எடுக்காமல் இருந்தே வந்திருக்கிறார்.
1995ம் ஆண்டு பிற்பகுதியில் யக்ஞபதிதாஸின் மனதில் ஒரு சிறுசலனம் படர்ந்தது. ஹரே ராமா ஹரே கிருஸ்ணா இயக்க ஸ்தாபகரான பூரீ பக்திவேதாந்த பிரபு பாதா சுவாமிகளால் கிருஸ்ண பக்தி குறித்து எழுதப்பட்ட நூல்கள் நூற்றுக்கும் அதிகம். இவை அனைத்திலும் பாகவதம், பகவத்கீதை, வேதம், வேதாந்தக் கருத்துகளை அவற்றின் மையப் பொருள் பிசகாமல் அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்த ஆங்கில மொழிபெயர்ப்புகளை அவரது சிறந்த சீடர்களான பலர் உலகின் வெவ்வேறு மொழிகளிலும் பெயர்த்துள்ளனர். இந்த நூல் அச்சிட்டு வினியோகிக்கும் பணியை இயக்கத்தின் ஒரு பிரிவினர் அமெரிக்காவிலிருந்து மேற்கொண்டு வந்தாலும் பொருளாதார சந்தைப்படுத்தல் நடைமுறை வாய்ப்புகளை நோக்கி நோர்வே, சிங்கப்பூர், ஆகிய நாடுகளிலும் அச்சுக்கூடங்களை நிறுவிப் பராமரித்து வருகின்றனர். இறுதியாகக் கிடைக்கப்பெற்ற தனது தாயின் கடிதத்தில், தான் இனி மடிந்து விட

119 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
போவதாகவும் அதற்கிடையில் ஒருதடவை தன் மகன் யக்ஞபதிதாஸை பார்த்துவிட மனம் துடித்துக் கொண்டிருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது. சுவாமிகளின் தடுமாற்றத்திற்குக் காரணம் இதுவே. இந்த மனஅலை மோதல் இடம்பெற்ற காலக்கட்டத்தில்தான் அமெரிக்காவில் இருக்கும் தன் குருநாதர் மூன்று மாத விடுதலையில் மொஸ்கோவை விட்டு நோர்வேக்குச் சென்று அங்கு அச்சுக்கூடம் செம்மையாக இயங்குவதை மேற்பார்வை செய்து திடப் படுத்தும்படியும் பணித்திருந்தார்.
தீர்மானம் ஒன்றை எடுத்து விடுவதில் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்த காரணத்தால் இந்த இரு விடயங்களையும் தெரிவித்து எனது ஆலோசனையை வேண்டி இருந்தார் அவர்.
இந்து மதத்தின் பிரதான கட்டளை ஒவ்வொருவரும் தத்தமக்கென்று வகுக்கப் பட்டுள்ள கடமைகளை உணர்ந்து தெளிந்து அவற்றை பயன் ஏதும் எதிர்பாராது நிறைவேற்றி மகிழ்வதே. இந்த வகையில் ஒரு தந்தை, தாய், மகன், மகள், சுற்றம், சூழவுள்ளோர் என்ற அனைவருக்கும் ஆத்மார்த்தமான சில சில கடமைகள் ஐயம்திரிபுக்கு இடமின்றி அமைந்துள்ளன. அவற்றை நாம் தூய உள்ளத்துடனும் மகிழ்வுடனும் நிறைவேற்றி வைக்கும்போது இறைவனை நெருங்கும் LD 667 it பக்குவத்தை அடைந்தவர்களாவோம். அதன்பின்பு ஆற்றப்படுகின்ற பிற சேவைகளும் தெய்வ பக்தியுமே எம்மை ஆன்மீக எல்லைக்கு இட்டுச்செல்ல Quai Gyao.T. Charity begins at home
“இது தொடர்பாக கெளவிகன் என்ற தவமுனிவரின் கதையொன்றும் உள்ளதல்லவா?” என்றேன். ஆனால் அந்தப் புராணக்கதை யக்ஞபதிதாசுக்கு தெரிந்திருக்கவில்லை. ஆகவே

Page 63
மொஸ்கோ அநுபவங்கள் 120
சுருக்கமாக கெளவிக முனிவனின் தவத்தால் ஏற்பட்ட செருக்கையும், ஆலமர நிழலின் கீழிருந்த போது எச்சமிட்ட பறவையை எரித்த சம்பவத்தையும் அதனால் ஆணவம் கொண்டு பசிக்கு உணவளிக்கப் பிந்திய பதிவிரதையை கோபங்கொண்டு 3FIT Lu L6) முயன்றதையும் கற்பெனும் திண்மையினால் உயர்ந்து நின்ற அவ்வம்மணி முனிவரின் கொக்கெரித்த கதையை கூறி, உண்மையை உணரச் செய்ததையும், அவளது வழிகாட்டலின் பேரில் கசாப்புக்காரனைச் சந்தித்துப் பெற்ற அபூர்வ அனுமான உபதேசத்தை பற்றி எல்லாம் கூறி தாய் நமது வாழும் தெய்வம்; எல்லாவற்றிற்கும் அடிப்படை அதுவே. தாயை ஞானிகள் மட்டுமென்ன; இறைவனும் கூட மறந்துபோய் விடுவதற்கில்லை. ஆகவே முதலில் உங்கள் தாயின் வேண்டுகோளை இந்தத் தள்ளாத வயதிலேனும் ஒரு முறையாகினும் சென்று தரிசித்து நிறைவுறுத்திப் பின்பு வாருங்கள்" என்றேன்.
9
இதற்கு ‘குருவின் கட்டளை. ?’ என்றார். “இது பற்றி ஒரு கடிதம் விளக்கமாக எழுதுங்கள் நான் உதவி செய்கிறேன்’, என்றேன்.
எதுவுமே பதில் கூறாமல் அப்படியே இருந்து விட்டு சுவாமிகள் சென்றுவிட்டார்கள். அதன் பிறகு அவரைச் சந்திக்க வில்லை. அத்தோடு என்னிடம் வருவதையும் நிறுத்திக் கொண்டுவிட்டார். ஏன்? நான் மொஸ்கோவிலிருந்து வந்த பின்பு என்ன நடந்தது? எங்கிருக்கிறார்? என்ற விபரங்கள் எதுவுமே தெரியவில்லை!

121 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
18. ஹிவுதிெ
இளமதி தொடராக வரும்போது வளர்மதியாகி முழுமதியாய்த் திகழ்கிறது. இந்த முழுமதிக்கு ஏற்ற உதாரணமான முகப் பொலிவையும் உடல் பொலிவை யும் கொண்டிருந்த ஒரு தமிழ் நங்கை தூதரகத்திற்கு வந்து, என்னை விசாரித்து சந்தித்தாள். யாரென்று எனக்குத் தெரியாது.
யாரோ ஒரு இளைஞனை காதலித்து அவனைக் கைப்பிடித்துக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பி கனடாவுக்குச் செல்வதற்காக மொஸ்கோ வரை வந்திருக்கிறாள். பத்து வருடங்களுக்கு மேல் கனடா வில் வசித்துவரும் அவனும் வளர்மதியைத் தன்னோடு இணைத்துக் கொள்ள விரும்பி வீசாவுக்கான தாபரிப்புத் தத்துவத்தை (Sponsorship) கனடியன் தூதரகத்துக்கு அளித்து விட்டான். வீசா பெற்று அங்கு செல்வதுவே பாக்கியாக இருந்தது.
மொஸ்கோவிலுள்ள கனடியன் தூதரகத்தில் சென்று உரிய படிவங்களை நிரப்பி, அவர்களால் நேர்முகப் பரீட்சை செய்து கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்க ஒரு தகுந்த துணை அவளுக்குத் தேவைப்பட்டது.
அரைகுறையாக ஆங்கிலத்தைப் பேசவும், பேசு வதை விளங்கிக் கொள்ளவும் பலரால் இயலுமேயா யினும் குறிப்பான கேள்விகளுக்கு அர்த்தத்துடன் கூடிய பதிலை அளிக்கும் பக்குவம் இல்லை. இதனால் என் பெயரை கேள்வியுற்ற வளர்மதி தூதரகத்திற்கு வந்து தனக்கு உதவி செய்யும்படி கோரினாள். “படிவங்களை வாங்கிக் கொண்டு வாருங்கள் நிரப்பித் தருகிறேன்” என்றேன். “படிவங்கள் அங்கு பெறப்பட்டு அவ்விடத்திலேயே நிரப்பப்படுவதோடு நேர்முக

Page 64
மொஸ்கோ அநுபவங்கள் 122
உரையாடலுக்கும் சமுகம் கொடுக்க வேண்டும் என்றாள். “எனக்கும் இங்கு வேலையே! நாலே முக்காலுக்கு தூதரகம் மூடப்பட்டபின்பு வர சம்மதம்” என்றேன். “ஐயா, அவர்களும் அதே நேரத்துக்கு மூடி விடுவார்களே. எப்படியாவது எனக்கு உதவி செய்யுங் கள். எனக்குத் தெரிந்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது.” இதுவோ ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விவகாரம். கட்டாயம் உதவவேண்டியதுதான். ஆனால் எனக்கோ லீவு எடுப்பது சிரமம். இருந்தும் முயன்றேன் மேலதிகாரிக்கு இதனைத் தெரிவித்து அரை நாள் விடுமுறையில் வளர்மதியோடு இணைந்து கனடிய தூதரகத்திற்குச் சென்றேன்.
படிவங்களை நிரப்பி நேர்முகப் பரீட்சை நடத்துவதற்கு இருபக்க மொழி பெயர்ப்பாளராக செயல்பட்டேன். பிரித்தானிய ஆங்கிலேயரது மொழி உச்சரிப்புக்கும் அமெரிக்கரது மொழி உச்சரிப்புக்கும் கனடியரது மொழி உச்சரிப்புக்குமிடையே வேறு பாடுகள் அதிக முண்டு. எமது நாட்டில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மலை நாட்டுத் தமிழ் உச்சரிப்பில் கணிசமான ஒலி வித்தியாசங்கள் அமைந்திருப்பது போலவே, இந்த மூன்று திறத்தாரும் பேசும் ஆங்கிலத்தி லும் பாரிய வேறுபாடுகள் உண்டு. கனடாவில் ஆங்கிலமும் பிரஞ்சும் கலந்திருப்பதால் பிரஞ்சு கலந்த ஆங்கிலச் சொல் உச்சரிப்பு அதிகம் போலும் கேட்கப் பட்ட சகல கேள்விகளையும் தமிழில் வளர்மதிக்கு பெயர்த்துக் கூறி அவள் சொன்ன பதில்களை ஆங்கிலத்தில் அந்த அதிகாரிக்குத் தெரியப்படுத்திக் கொண்டு வந்தபோது ஒரிடத்தில் அவர் எதையோ "ஒழுங்காகப் பெற்று வருகிறீர்களா?" என்று கேட்டார். அந்தப் பொருளைக் குறித்த உச்சரிப்பு எனக்குத்

123 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
தெளிவாக இருக்கவில்லை. இரண்டு தடவைகள் “மன்னிக்கவும் மன்னிக்கவும்’ என்று கேட்டு மீளச் செவிமடுத்த போதிலும் அச்சொல்லை என்னால் கிரகித்து விடமுடியவில்லை. அந்த அதிகாரி மிகவும் நல்லவர். மீண்டும் சற்றுத் தெளிவாக எடுத்துரைத்தார். “Do you receive letters from your friend regularly' என்பதுவே அதன் முழுப்பதமும், Letters என்பதை ஏதோ ஒரு விதமாக உச்சரித்ததால் தடுமாற்றமுற்றேன். பின்பு அதனை தெளிந்து கொண்டதும் "ஆஹா இதுதானா?” என்று என்னை அறியாமலே வாய் உளறியதை அறிந்தோ அறியாமலோ அந்த அதிகாரியும் சிரித்துவிட்டார். நானும் சிரித்து மகிழ்ந்தேன்.
அந்த அதிகாரி இலங்கையில் கனடியத் தூதரகத் தில் 1983ம் ஆண்டில் பணியாற்றியதாகவும் அங்கே நடைபெற்ற வன்செயல்களின் கோரக் கொடுமைகளை நேரில் பார்த்ததாகவும் கூறி வேதனைப்பட்டார். இலங் கைத் தமிழரின் நிலைமையையும் அவர்களது இன்னல் களையும் அவர் அறிந்திருந்தது வளர்மதியின் கோரிக் கைக்கு மேலும் உரம் ஊட்டியதென்றே சொல்லப் படவேண்டும்.
வீசா பெறும் வரை ஐயா, பையா என்று பறைத் தாளம் போட்டுக் கொண்டிருந்த வளர்மதி தான் ஒருகாலமும் என்னை மறந்து விடமாட்டேன். கனடாவுக்கு சென்ற பின்பும் கடித மூலம் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்வேன் என்றும் கூறிய உத்தரவாதங்கள் காற்றிலே கரைந்துபோயின. நானும் தன்நலம் கருதாத சேவையாக இதனை செய்துதவிய காரணத்தால் இதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.
மொஸ்கோவில் இருந்த காலத்தில் விஜயசிறி, அன்சலா ஆகிய நம்மூர் மாணவிகளோடு இணைந்து என்னுடனும் நன்கு பழகி வந்தார்.

Page 65
மொஸ்கோ அநுபவங்கள் 124
19. இராஜதந்தி கடவுச்சீட்டும்
ஆெவுரவமும்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி, அமைச்சர்கள், பிரதம நீதியரசர், வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திர பதவி வகிக்கும் உத்தியோகத்தர் ஆகிய அட்டவணைப் படுத்தப்பட்ட ஒரு சில மிக மிக முக்கியத்தர் (VVI.P.) களுக்கே இந்த இராஜ தந்திர கடவுச் சீட்டுகள் வழங்கப்படும். இக்கடவுச் சீட்டுக்குரியோர் இலங்கை அரசங்கத்தின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எனக் கொள்ளப் படத்தக்க . . சட்டவலு அதற்குரியதாகையினால் அத்தகைய கெளரவத்தைப் பெறுகின்றனர்.
இலங்கைத் தூதரகத்தில் அற்றச்சியாகப் பணிபுரிந்து வந்தமையினால் எனக்கும் இந்த இராஜதந்திரக் கடவுச்சீட்டும், ரூஸ்ய நாட்டு
வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்பட்ட டிப்பொளோ மட்டிக் அடைய T 7ெ அட்டையும் கிடைத்தன.
உலகில் இன்று ஏராளமான நாடுகளின் இன மத கலாச்சார பிரிவினை வாதமும் அகங்கார அடக்குமுறை எதேச்சதிகாரமும் தலை விரித்தாடுவதனால் நாடுகளுக்கிடையேயும் நாட்டின் உள்ளே இனங்களுக்கிடையேயும் சில கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடைபெற்று வருகின்றன. ரூஸ்ய நாட்டிலும் 1993ம் ஆண்டு வாக்கில் புதிதாக ஏற்பட்ட செச்செனியா என்ற சுயாதிக்கம் (autonomy) கொண்ட பிரதேசத்தில் ஜெனரல் துதாதேவ் என்பவர் தலைமையில் தனிநாடுக் கோரிக்கையை முன்வைத்துப்

125 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
போராட்டம் நடைபெற்று வருகிறது. *
செச்சென்யா என்ற நிலப்பிரதேசம், சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து சென்ற தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாட்டு எல்லைகளின் வடபுலமாக அமைந்துள்ளது. இங்கு வசிப்பவர்களில் ஏராளமானோர் முஸ்லீம்கள். இவர்கள் மொஸ்கோவை தாக்கி அழிப்பதற்குத் திட்டமிட்டுப் பல நாசகார வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இதனால் ரூஸ்ய அரசாங்கம் மிகவும் கவனமான கண்காணிப்பு நடவடிக்கைகளில் படையினரையும் பொலிசா ரையும் ஈடுபடுத்தி வந்தனர்.
ரயில் நிலையங்கள், சந்தைகள், காரியாலயக் கட்டிடங்கள், பஸ் நிலையங்கள் என்ற இன்னோரன்ன அரசாங்க இடங்களில் எதிர்பாராத திடீர்ப் பரிசோதனைகள் செய்யப்பட்டுவந்தன.
அன்று ஒரு சனிக்கிழமை. தூதரகம் விடுமுறைக்காக மூடப்பட்டிருந்தது. காலையில் எழுந்து நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு பான ஆகாரமொன்றைப் பருகி இறை பிரார்த்தனை செய்து விட்ட பின்பு, எங்கே போகலாம்? எப்படி பொழுதைக் கழிக்கலாம்? என்று சிந்தித்தேன். குளிர் காலமானபடியால் அக்காலத்தில் சில இடங்களில் சிறுவர் சந்தை நடைபெறும். திறாம் வண்டி ஏறி நோக்கமின்றிப் பயணித்துக் கொண்டிருக்கையில் வழியில், சிறுவர் சந்தை கூடி இருந்ததைக் கண்டு அவ்விடம் இறங்கி நடந்து சென்றேன்.
எதிர்பாராத வகையில் என்முன்னே வந்த பொலிஸ்காரர் ஒருவர் “கடவுச்சீட்டு.” என்றார். சட்டைப் பையில் வைத்திருந்த ரூஸ்ய வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர

Page 66
பொஸ்கோ அநுபவங்கள் 126
அடையாள அட்டையை எடுத்துக் கொடுத்தேன். அதனை படித்து என்னை அடையாளம் கண்டு கொண்ட அந்தப் பொலிஸ்காரர், அட்டையை தந்துவிட்டு அப்படியே நின்றிருந்தபடி நிலத்தில் வலது காலை உதைத்து மறு காலையும் இணைத்து கம்பீரமாக வலதுகையை தலையில் மடித்து வைத்து சலூட் என்று சொல்லப் படும் இராஜ மரியாதையை எனக்கு வழங்கினார். நான் திணறிப்போனேன். எதிர்பாராத இந்த நிகழ்ச்சியினால் எனக்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. அப்படியே நின்றிருந்த நான் செய்வதறியாது அந்தப் பொலிஸ்காரரின் கையை பிடித்து லாகு கொடுத்து விட்டு அவ்விடத்தை விட்டு அகன்று சென்றேன்.
பின்பு ஒரு நாள் பேச்சுவாக்கில் டாக்டர் நிசங்க விஜயரெட்ன அவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது இது பற்றி அவருக்குத் தெரிவித்தேன். அதற்கு அவர், பொலிஸ்காரர் மிகச் சரியாகவே நடந்துகொண்டிருக்கிறார் என்றும், இராஜ தந்திர உத்தியோகத்தரை கெளரவப் படுத்த வேண்டியது அவர்களது கடமை என்றும் கூறினார்.
 

127 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
20. தாயகம் சீண்டது
கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக எனது ஒப்பந்தக் காலத்திற்கும் மேலாக நீடிக்கப்பட்டுக் கொண்டே போன எனது சேவைக் காலம் ஒருபடியாக திரு. முருகேசபிள்ளை என்பவரின் வரவினால் முற்றுப் பெற நேரம் கனிந்தது. கொழும்பு வெளிவிவகார அமைச்சு அச்செய்தியை பக்ஸ் மூலம் தெரியப்படுத்தி இருந்தது.
மொஸ்கோவில் குடியிருந்த காலத்தில் என்னால் உபயோகிக்கப்பட்டு வந்த தட்டுமுட்டுச் சாமன்கள், உபகரணங்கள், உடுப்புகள், புத்தகங்கள் மற்றும் உடமைகளை அரசாங்கச் செலவில் ஏற்று, வெளிவிவகார அமைச்சு மூலம் எனக்குக் கொழும்பு கொண்டு வந்து கையளிப்பதற்கான ஏற்பாடுகளை தூதரகம் டிரான்ஸ் போர்ட் ஒப்பந்தக்காரர் ஒருவர் மூலம் செய்திருந்தது. 1996ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தில் மொஸ்கோ விலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு வந்தடைந்து ஊருக்குப்புறப்பட்டுச் சென்றேன்.
ஐந்து மாதங்கள் கழித்துப் பெறப்பட்ட என் உடமைகளை கொழும்பு நகரிலிருந்து மட்டக்களப்புக்கு எனது சொந்தச் செலவில் ஏற்றிச் செல்ல வேண்டி இருந்தது. வழிப்பாதையில் அமைந்த ஏராளமான பாதுகாப்புப் படையினரின் பரிசோதனைச் சாவடி களைக் கவனத்திற்கொண்டு, வெளிவிவகார அமைச்சிலிருந்து ஒரு அறிமுகக் கடிதத்தையும் பெற்றிருந்தேன்.
மன்னம்பிட்டி கழித்து அடுத்து வந்த வெலிக்கந்தை பாதுகாப்புச் சாவடியில் நின்றிருந்த படைச்சேவிதர்

Page 67
மொஸ்கோ அநுபவங்கள் 128
என்னிடம் இருந்த வெளிவிவகார அமைச்சின் கடிதத்தையோ எனது இராஜதந்திர கடவுச்சீட்டையோ கவனத்திற் கொள்ளாமல் காரசாரமான கடும் வார்த்தைகளைக் கொட்டி அடிக்காத குறையாக அவமதித்ததோடு, வாகனத்திலிருந்து கீழிறங்குமாறும் வேண்டுமென்றே வற்புறுத்தினர்.
இவற்றை எல்லாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த வாகனச் சாரதியான முஸ்லீம் அன்பர் கீழே இறங்கிச் சென்று அந்த சேவிதரோடு இரசியப் பேச்சு வார்த்தைகளை முடித்து விட்டு, கையுறையாக ஏதோ கொடுத்து அவரைச் சாந்தப் படுத்தினார். பின்பு எமது வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த பொருட்களை ஏது? என்ன? என்று நோக்காமலே வண்டியை நகர்த்துவதற்கு அனுமதி தந்து விட்டார் அச்சேவிதர்!
விலை மதிப்பில்லாத அந்த இராஜதந்திர கடவுச் சீட்டின் நியம விலை ரூபா 50/- கூட இல்லை! அப்போதுதான் வண்டிச் சாரதி என்னுடன் பேச்சை தொடங்கினார்.
“ஐயா நீங்கள் உயர் உத்தியோகத்தர்; மறுக்க வில்லை. உங்கள் ஆவணங்களும் பெறுமதியானவை தான். ஆனால் இயல்பு வாழ்க்கைக்கு இவை எல்லாம் இலைச் சருகுகள். தயவு செய்து நீங்கள் உங்கள் கடவுச்சீட்டை மூடிவைத்துவிடுங்கள். அதற்கெல்லாம் மருந்து என்னிடம் உண்டு.”
அடுத்து வந்த ஒவ்வொரு செக் பொயின்டிலும் இவ்வாறே சாரதி இறங்கி சன்மான கீதம் இசைக்க திறவாக் கதவு திறந்து எமது உடமைகளுக்கு வழிவிட்டுக் கொண்டே வந்தது!

ஆரையம்பதி க. சபாரெத்தினம்
இந்நூலின் முதற் பகுதி யில் தூதரகத்துக்கு வெளியே நிகழ்ந்த சம்பவங்களையும் அதனோடு சம்பந்தப்பட்ட வர்களுடன் எனக்கேற்பட்ட அ னு ப வ ங் க  ைள யு ம் அப்படியே கற்பனை எதுவும் கலக்கப் படாமல் விபரித் திருந்தேன். இப்பகுதியில் தூதரகத்தினுள் நிகழ்ந்த விடயங்களையும் எனது உத்தி யோக நிலையில் ஏற்பட்ட கடமையோடு 9. Igu அனுபவங்களையும் விவரிக்க
லாமென விழைகிறேன்.

Page 68
மொஸ்கோ அநுபவங்கள் 130
01. சுந்தரமூர்த்தியின் உரவு
1992 ம் ஆண்டு மார்ச்சு மாதம் 14ம் திகதியாக இருக்கலாம். பனிக்கட்டி உரமேறி வலித்துக் கிடந்த நேரம் அது. சுமார் 10 மணி இருக்கும். தூதரக வாயிலில் “ஐயா. . . ஐயா. ..” என்று உரத்த குரலில் அழைக்கும் தூய தமிழ் ஒலி என் காதுகளில் நுழைந்தது.
என்னை அறியாமலே எனக்குள் ஓர் உற்சாகம்.
ஏறத்தாழ ஒரு வருட காலத்தின் பிறகு அதுவும், நம் நாட்டுப் பொது இடமொன்றில் கேட்கும் குரலமைப்புடனான அழைப்பு அது.
கடமையில் இருந்த காவலாளி ஏதோ அலுவலாக வெளியே சென்றிருக்க வேண்டும். அங்கு ஒருவரும் இருக்கவில்லை. அதனால் குரலுக்குரியவர் LI IT TIT 95 இருக்கலாமென்பதை எதிர்கொண்டு விசாரிக்கும் ஆவலில் நான் எழுந்து வெளியே வந்து கரும பீடச் சாளரம் வாயிலாக நோக்கினேன்.
பிரத்தியட்சமாகவே அவர் ஒரு இலங்கைத் தமிழர் என்பதை அந்த உருவமைப்பு பறைசாற்றியது. பேச்சு, பார்வை, தோற்றம் என்ற எல்லாமே அவர் ஒரு யாழ்ப்பாணத் தமிழர் என்பதைக் கட்டியம் கூறியது.
4. و O “என்ன சமாச்சாரம். . .?’ என்றேன்
புன்னகைத்தபடியே.
“ஐயா தமிழரா?” அப்படி ஒரு நிலையில் அவர் எதிர்பார்க்கவில்லை போலும்.
“ஆமாம்; என்ன வேணும்?”

131 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
“ஐயா, நான் யாழ்ப்பாணம் - கொக்குவில். எனக்கு முதல்ல கொஞ்சம் தண்ணீர் தாருங்கோ; பச்சைத் தண்ணீர். நா வரளுது. மூன்று நாட்கள் நான் சாப்பிட்டு” இவ்வாறு கூறும்போதே கண்ணீர் இடைமறித்தது.
எனக்கும் ஓர் இனம் புரியாத அனுதாபம்.
குசினிப் பக்கமாகச் சென்று ‘எலியா’விடம் தேனீர் ஒரு கோப்பை தரும்படி கேட்டு வாங்கிக் கொடுத்தேன்.
தேனீரைக் குடிக்க மறுத்த அவ்வுருவம் வெறும் தண்ணீர் மட்டுமே கொஞ்சம் தரும்படி கட்டாயமாகக் கேட்டது. அதுமட்டுமல்ல; கேட்கும்போதே உடலை அப்படியும் இப்படியும் ஆட்டி உயிர் பிரியும் ஆளைப் போல பாசாங்கும் செய்தது. is ,
அனுதாபம் மேலும் அதிகரித்தது, என்னுள். மீண்டும் உள்ளே சென்று தண்ணீர் பெற்றுக் கொடுத்தேன். ... " :4 م x
சிறிது தாகம் தணித்துவிட்டு கண்ணிரும் கம்பலையுமாக தன் கதையை லேசாக விபரிக்கத் தொடங்கி விட்டது அவ்வுருவம்.
“வேறு யாருமில்லை, ஐயா, என்னுடைய சொந்த மச்சினன் - என் பெண்சாதியின் தமையன்தான். தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி என்னை இங்கு அழைத்து வந்து விட்டுவிட்டு தலை மறைவாகி விட்டான். எனக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை! கையிலே காசும் இல்லை. தங்குவதற்கும் இடமில்லை. என் அண்ணர் ஒருவர் ஜேர்மனியில் இருக்கிறார். ஐயா, தயவு செய்து அவருடன் தொடர்பு கொண்டு என் நிலைமையை அவருக்கு தெரிவியுங்கள். . .”

Page 69
மொஸ்கோ அநுபவங்கள் ' 132
கதையை முடிக்கு முன்பாக " விம்மலும் அழுகையும் பொத்துக் கொண்டு வார்த்தைகளை வ மறித்தன.
“தொலைபேசி இலக்கம் வேணுமே. ?”
“ஐயா, வைத்திருக்கிறேன்” ஓவர் கோர்ட் பக்கட் எல்லாம் துழாவித் தேடி ஒரு கசங்கிய காகிதத் துண்டை எடுத்து நீட்டினார். பல குடும்ப விவகார கிறுக்கல் எழுத்துப் புதர்களுக்கிடையே மின்னியது அந்தத் தொலைபேசி இலக்கமும் பக்ஸ் நம்பரும் தானாடா விட்டாலும் தன் தசையாடும் என்பார்களே! அதுபோல. எனது சக சிங்கள ஊழியர்களது கேலியையும் உதாசீனத்தையும் பொருட்படுத்தாமலே விரைந்து செயல்பட்டேன். ஆனாலும் தொலைபேசி அழைப்புக் கான தொடர்பேற்படுத்த முடியவில்லை. பக்ஸ் மூலம் செய்தியை சொன்னபடி அனுப்பி வைத்தேன். அதற்கான கட்டணத்தையும் நானே செலுத்தினேன்.
கையில் கிடைத்த சில ரூபிள் நோட்டுக்களைக் கொடுத்து தூதரகத்தின் எதிர்ப்புறமாக இருந்த கூலிநாரியா’ என்றழைக்கப்படும் கபேயில் ஏதாவது புசித்து பசி ஆறிவிட்டு வந்து வெளியே போடப்பட்டி ருந்த பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருக்கும்படி கூறிவிட்டு என் அலுவல்களைக் கவனிக்க சென்று விட்டேன்.
ஜேர்மனியில் இருந்து பதில் வந்ததும் இல்லை; பதிலுக்குரியவர் சாப்பிட்டுவிட்டு திரும்பியதும்
இல்லை!
அன்று பிற்பகல் தூதரகம் மூடும் வரையில் எதிர்பார்த்திருந்தேன்.

: 133 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
சிங்கள நண்பர்கள் என்னைக் கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள் “பார்த்தீரா? படித்துப் படித்துச் சொன்னோமே. கேட்டீர்களா ? உங்கள் நண்பர் ஒரு ஏமாற்றுக்காரர். மட்டுமல்ல. புலிகளின் வேவு பார்க்கும் ஒற்றணும் கூட” என்றார்கள்.
என்ன செய்வது? வாயடைத்து மெளனியாக இருந்தேன்.
முகத்தில் கரிபூசுவது நம்மவர்கட்கு அவ்வளவு சிரமமானதல்ல. சுந்தரலிங்கமும் அதற்கு விதி விலக்கல்ல.
என் அனுபவத் தொலைநோக்குக் கண்ணாடியில் விழுந்த முதல் பிம்பம் அதுவே.
02. ஜவுளிவில்(பரிசீலன்
தமிழர்களைச் சந்திக்க நேர்ந்தால், அல்லது அவர்களோடு சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தால், அப்போது நான் இருந்த நிலையில் அது ஒரு பெரிய உற்சாகமும் மகிழ்ச்சியுமாக இருந்தது. அந்நிய நாட்டில் தமிழ் மொழி உபயோகம் இவ்வாறுதான் தேர்ச்சி கண்டது.
கரும பீடத்தின் முன்பாக ஒரு வாட்டசாட்டமான உருவம் நின்றிருந்தது. தேக அமைப்புப் போலவே புன்னகை பூத்த ஆண்மை வதனமும், கனிவான பார்வையும், இளமையும் கவர்ச்சியை எடுத்துக் காட்டின.
O o 99 “பாஸ்போட்டை புதுப்பிக்க வேண்டும்

Page 70
மொஸ்கோ அநுபவங்கள் 134
நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவம், கடவுச்சீட்டு ஆகியவற்றை பெற்று மேலோட்டமாக ஆராய்ந்து பார்க்கிறேன். ஒரு மாதத்திற்கு முன்புதான் சீனாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் அது புதுப்பிக்கப் பட்டிருந்தது. எனது பார்வையில் இருந்து பெறப்பட்ட கருத்தை அறிந்தோ என்னவோ “சீனாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் வேல செய்யிறவர தெரியும். ஐந்து வருடங்கள் புதுப்பித்துத் தரும்படி கேட்டனான். கொழும்பில் இருந்து பதில் வர பிந்தும் எண்டு சொல்லிப் போட்டு ஒரு வருடத்திற்கு மட்டும் போட்டுத் தந்தவர், இங்க உங்களோட கதைக்கச் சொன்னவர். ஐந்து வருடத்திற்கு புதுப்பித்துத் தாருங்கோ”
சீனாவில் வேலை செய்யும் அந்தத் தமிழ் அதிகாரி வேறு யாருமல்ல. ஆனந்த ராஜா என்று முன்னர் தெரிவிக்கப்பட்டுள்ள எனது நண்பர்தான். நேர்மையும் கண்ணியமும் கொண்ட அவர் போக்கிரித் தனம் எதையும் புரியும் மனப்போக்குடையவரல்லர்.
“நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்?”
66
நான் . . சும்மா பிசினெசி பண்றன்”
“பிசினசி என்றால் எப்படியான பிசினெசி ?"
“டெக்ஸ்டைல் காமண்ஸ் பிசினசி. பாங்கொக், சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குப் போய் அங்கே வாங்கிக் கொண்டு வந்து இங்கே விற்கிறது. அதனால.
அங்கெல்லாம் அடிக்கடி போய்வருவன்’
பிசினெசி பற்றிய அறிவு எனக்கு அதிகமில்லாத காரணத்தினாலும், ஆனந்த ராஜாவைப் பற்றி

135 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
எடுத்துரைத்ததாலும் அதற்கு மேல் வேறு கேள்விகளை
அடுக்க வேண்டிய தேவைகள் எனக்கிருக்கவில்லை. சீனாவில் புதுப்பிக்கப்பட்ட ஒருவருடம் போக, மீதியாக இருந்த நான்கு வருடங்களுக்கும் கடவுச்சீட்டுக் காலத்தை நீடித்து அனுப்பி வைத்தேன்.
அதன் பிறகு அடிக்கடி அந்த நபர் தூதரகத்திற்கு வந்து போவார். பத்திரிகைகளைப் புரட்டிப் படிப்பார். என்னுடனும் கதைப் பார், சிரிப்பார். நட்பும் சிறிது நெருங்கி வரவே செய்தது.
தொழிற் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டிய மகத்தான பொறுப்பு என்னுடையதானபடியாலும், இயல்பாகவே எனது சுபாவம் எதிலும் அளவோடு இருந்து கொள்வதானபடியாலும் எம்மிடையே நட்பு, வேக வளர்ச்சி காண முடியவில்லை. அவர் என்னைத் தன் வலையில் வீழ்த்துவதற்கான சில ஆரம்ப முயற்சி களான - வலிந்து வந்து உதவி செய்தல், சிறு பரிசுப் பொருட்கள் வழங்குதல் போன்ற காரியங்களால் பரீட்சித்துப் பார்த்தும் அவற்றிலெல்லாம் பின் வாங்கிவிட்டார்.
ஆனாலும் பேசும்போதும், பழகும்போதும் திருடனைப்போல தன் பார்வையால் அளந்து நோட்டம் விட்டபடியே இருந்த அவர் ஒரு இன்ரலக்ஷ"வலே! நான் கேட்டவைகள் அனைத்திற்கும் அவரது சரித் திரத்தை மூடி மறைத்துக் கொண்டு கச்சிதமாகவே பதில் கூறி வந்தார். ஆனாலும் அவர் நல்லவரே. தொழிலுக் காக அவ்விதம் வல்லவராகப் பழக வேண்டிய கட்டாய நியதி அவருக்கு!
என்ன செய்வது?

Page 71
மொஸ்கோ அநுபவங்கள் 136
03. சிறையில் ஊடிய சித்பேரருதன்
காலை 8 மணி இருக்கும்.
அவசரம் அவசரமாக தூதரகத்திற்குப் போக ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன்.
தொலைபேசி மணி அலறியது.
“ஹலோ, கியர் சபா ரெட்ணம்”
“ஐயா, நான் சீலன் பேசுகிறேன்; ஓமந்தை சீலன்” “ஆ1 எப்படி? என்ன சமாச்சாரம். . .?”
“ஒண்ணுமில்ல, ஐயா சின்னப் பிரச்சின ஒண்டு. என்னோட இங்க தங்கி இருக்கிற பையன் ஒருவன் நேற்று செக்கோசுலோ வாக்கிய எம்பசிக்கு போன வனை ஏதோ பாஸ்போட் பிரச்சினையாம் எண்டு ஜெயிலுக்கு கொண்டு போயிற்றாங்கள். பாவம் ; அழுகிறான். கொஞ்சம் பார்த்து உதவி செய்யுங்கோ.”
“சரி முயற்சி பண்ணுறேன். பாஸ்போர்ட் பிரச்சினை எண்டால். . .? உண்மையிலேயே என்ன நடந்தது?”
“ஒண்டுமில்ல ஐயா. பொலிஸ் சஸ்பிசனில் கொண்டு போயிருக்கும் போல”
“வேற ஒண்டுமில்லையே! சரி பார்க்கறன்”
தூதரகத்திற்குச் சென்றபோது இதே சமாச்சாரம் ரூஸ்ய இமிகிரேஷன் பொலிசாரினால் எம்பசிக்கு
அறிவிக்கப்பட்டிருந்தது.

137 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
“சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவர், பாஸ்போட் போர்ஜறி சம்பந்தமாக எங்களால் தடுத்து வைக்கப் பட்டுள்ளார். இவரது வாக்கு மூலத்தைப் பெறுவதற்கு மொழி தடையாக உள்ளது. உங்களது அதிகாரி ஒருவரை அனுப்பி உதவி செய்தால் வசதியாக இருக்கும்.”
மொழிச்சிக்கல் என்பது ரூஸ் யாவுக்கு புதியதல்ல. ரூஸ்ய மக்கள் தங்களது தாய்மொழியைத் தவிர வேற்று மொழி எதனையும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கம்மியானவர்கள். பிற மொழி பேசுபவர்களைக் கண்டாலே பிடிக்காது அவர்களுக்கு. தமது தாய்மொழியில் உரையாடுவோ ருக்கு உதவுவதில் விருப்பம் அதிகம் கொண்டவர்கள்.
இத்தகைய நிலையில் ரூஸ்ய மொழியறிவு குறைந்த நான் விசாரணையை மேற்கொண்டு எந்த மொழியில் அதனைப் பரிவர்த்தனை செய்வது?
ஆகவே ரூஸ்யன் - ஆங்கிலம் தெரிந்த ஒரு சிங்களப் பரிவர்த்தனையாளருடன் சென்று இமிகிரேசன் பொலிசா ரைச் சந்தித்தேன். பொலிசார் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டார்கள். கூண்டிலிருந்து விடுவித்து சிதம்பரநாதனை அழைத்துக் கொண்டு வந்து நிறுத்தினர். எங்களைப் பார்த்துப் பேந்தப் பேந்த விழித்த சிதம்பரநாதன், தலையைக் கவிழ்த்து கொண்டார். அவரது கண்கள் கலங்கி இருந்தன.
முதலில் நானே பேச்சைத் தொடங்கினேன்.
“இலங்கையில் நீங்கள் எவ்விடம் ?”
“யாழ்ப்பாணம். இப்போது இருப்பது வவுனியாவில் தான்”

Page 72
மொஸ்கோ அநுபவங்கள் 138
“என்ன பெயர்?’
“சிதம்பர நாதன்”
“என்ன பிரச்சினை. ..?
8 கண்ணீரின் மெளன பார்வை மட்டுமே பதில்!
“பிரச்சினை முழுவதையும் மறைக்காமல் என்னிடம் சொன்னால்தான் ஏதாவது முடிந்த உதவியை செய்ய எனக்கு வாய்ப்பாக இருக்கும். நானும் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன்தான். உதவி செய்ய முடியா விட்டாலும் உபத்திரவம் மட்டும் செய்யமாட்டேன் என்பது நிச்சயம்”.
கண்ணீரும் கம்பலையுமாக தன் சோகக் கதையை விபரிக்க முற்பட்டு விட்டார் சிதம்பரநாதன்.
உலகமெங்கும் இலங்கையர் என்றாலே போதும். எந்த ஒரு நாடும் நுழை வீசா வழங்குவதில் தயக்கம் - தடுமாற்றம்! ரூஸ்யாவிலிருந்து செக்கோ சுலோ வேக்கியா (அப்போது இந்நாடு பிரிந்து செல்ல வில்லை) வுக்குச் செல்வதற்காக போலிச் சிங்கப்பூர் பாஸ்போட் ஒன்றில் நிழல்படத்தை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக தன்னுடைய உருவப்படத்தை மாற்றிப் புகுத்தி அதனை அசல்போல் எவரும் சந்தேகம் கொள்ளாதிருக்க உறுதிப்படுத்திச் சீர்செய்யும் நோக்கில் சில இலச்சினைகளையும் பதித்து கனகச்சிதமாக இந்த மோசடி வேலையைச் செப்பனிட்டுக் கொண்டு செக் எம்பசிக்குள் நுழைந்தார் சிதம்பர நாதன். விசா பெறுவதற்கான படிவத்தை நிரப்பி கடவுச் சீட்டுடன் ஒப்படைத்தார்.

139 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
எம்மவர்களின் கள்ளத் தனமும் கபட நாடகமும் பற்றி அதிகம் தெரிந்திராத அந்த செக்கோசுலோ வேக்கிய எம்பசி அதிகாரியான பெண், மேலோட்ட மாகப் பார்த்துவிட்டு வீசா வழங்குவதற்கான தனது சிபாரிசுகளுடன் மேலொப்பமிட்டு விட்டார். அலுவல் முடிந்து வீசா வழங்கும் வரை சிதம்பரநாதன் வெளியே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கற்பனையோடு காத்துக் கொண்டிருந்தார்.
செக்கோ நாட்டுக்குச் சென்றுவிட்டால் அப்படியே போலந்து எல்லை வழியாக ஜேர்மனியை அடைந்துவிட்டது போலவும், அங்கே முதலில் அகதி முகாமில் அடைக்கப்பட்டு மாதாமாதம் பெறும் உதவித்தொகையைப் பெற்றுக் கொண்டே வேறு வாய்ப்புகளைத் தேடும் முயற்சியில் ஈடுபடுவதாகவும், திறமையான வக்கீல் ஒருவரின் சேவையைப் பெற்று விரைவில் ஜேர்மன் பிரஜை ஆகிவிட்டால், ஊரில் உள்ள தன் குடும்பத்தவர்களையும் வருவித்துக் கொண்டு உல்லா சமாக வாழ்வை மாற்றிவிடலாம் என்றும் அவரது கற்பனை சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது.
இரண்டு யாழ்ப்பாணத்து இளைஞர்கள்; அவர்களும் சிதம்பரநாதனைப் போன்று வீசா பெற்றுக் கொள்ளும் நோக்கில் வந்தவர்கள் - வாயிலில் தரித்துக் காத்திருந்த சிதம்பர நாதனிடம் குசலம் விசாரித்து விடயங்களைக் கிரகித்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். அவர்களும் தங்கள் விண்ணப்பங்களைக் கொடுத்தபோது அவ்வதிகாரி மறுத்து “இலங்கை யர்களுக்கு இங்கு வீசா வழங்கப்பட மாட்டாது. இலங்கையில் உள்ள செக் தூதரகத்தில் போய் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறிய நேர் எதிர்ப் பேச்சினால், ஆக்ரோசமடைந்துவிட்ட அவ்விளைஞர்கள் இருவரும் அதிகாரியோடு வாக்குவாதத்தில் இறங்கிவிட்டனர்.

Page 73
மொஸ்கோ அநுபவங்கள் 140
தமிழர்களிடம் மலிந்து காணப்படும் பல இழிகுணங்கள்ல் மிக மோசமான இரண்டு அம்சங்கள்: தற்பெருமை பேசி பிறர் கருத்தை உதாசீனம் செய்தலும், தன் நலத்திற்காக பிறனைக் காட்டிக் கொடுத்தலுமாகும்.
அதிலும் யாழ்ப்பாணத்துத் தமிழர் இவ்விடயங் களில் ஜாம்பவான்கள்.
கல்வி அறிவு மேம்பட்ட மக்கள் இவர்கள் என்று பலரும் கூறினாலும், இவர்களில் படித்த முட்டாள்களே அதிகம் காணப்படுகின்றனர்.
அதிகாரி, தனக்கு வழங்கப்பட்டுள்ள அரச அதிகாரத்தின் பிரகாரம், அவர்களது எந்தக் காரணத் தையும் ஏற்றுக் கொள்ள முடியாதெனத் திட்டமாக மறுத்துவிடவே, தமது வாதத்தில் எப்படியும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற மதியீனத்தினால் சொந்த சகோதரனான சிதம்பரநாதனின் வீசா விவகாரத்தை ஒர் அஸ்திரப் பிரயோகமாக விடுத்தனர். “அவரும் இலங்கையர் தானே, அவருக்கு வீசா வழங்க முடியுமானால் எமக்கேன் தரப்பட முடியாது?’ என்று முரண்பாட்டைச் சுட்டிக் காண்பித்தனர்.
அதுவரை சிதம்பரநாதன் ஒரு சிங்கப்பூர்க்காரர் என்றே எண்ணம் கொண்டிருந்த அவ்வதிகாரி, தன் தவறை உணர்ந்து சிதம்பரநாதனை அழைத்து மீள் விசாரணை செய்யத் தொடங்கினார். அக்கு வேறு ஆணி வேறாக ஒவ்வொரு அம்சமாக ஆராய்ந்து பார்த்து இறுதியில் சிதம்பரநாதன் சிங்கப்பூர்காரர் இல்லை என்பதையும், அவர் வைத்திருந்த கடவுச் சீட்டு போலியானது என்பதையும் கண்டுபிடித்து விட்டார்.
பின்பு போலிசாரின் உதவி கோரப்பட்டு, சிதம்பர நாதன் ஆள்மாறாட்டம், மோசடி ஆகிய குற்றங்களைப்

141 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
புரிந்ததற்காக நீதி விசாரணையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டார்.
இப்போது எனக்கு சிதம்பரநாதனின் “சுயவிபரக் கோவை’ நன்றாகவே பளிச்சிட்டது. விம்மி அழுது தன்னை எப்படியும் சிறையிலிருந்து வெளியே எடுத்து விடும்படி மன்றாடினார். பார்க்க எனக்கும் பரிதாப மாகவே இருந்தது. எப்படியும் சிதம்பர நாதனுக்கு உதவவேண்டும் என்ற மனநிலையே என்னுள் மேலோங்கி இருந்தது. பகுத்தறிவு ரீதியாக ஒரு விடயத்தில் தகவல்களை முழுமையாகப் பெற்ற பின்பு, அவற்றின் அடிப்படையிலே நுட்பமாகச் சிந்தித்து சிறந்த தீர்மானம் பெறப்படவேண்டும் என்பது நியதி. அத்தோடு பக்கம் சாரா நடுநிலை நின்று அதனிலுள்ள சாதக, பாதக காரணங்களையும் கவனத்தில் எடுக்கப் படவேண்டுமாம். ஆனால் பொதுவாக ஒரு சம்பவத் துடன் நாம் அறிமுகமாகும்போது அச்சம்பவத்தோடு தொடர்புடைய எமது இயல்பான பச்சாதாபம் அல்லது பழிக்குணமே முனைந்து முதலில் தீர்மானத்திற்குக் கால்கோல் இடுகிறது. அதன்பின்பு அது அவ்வாறு கால் கோலிடப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவான சாட்சியங்களைத் தேடுவதிலும், அதனை உறுதிப்படுத்தி ஒப்புவிப்பதிலும் பகுத்தறிவு சார்ந்த பலத்தை உபயோகப் படுத்துகிறது. ஆனால் இவ்வாறில்லாமல் சுய இச்சைகளுக்கு அப்பால் நின்று அந்நீதி அமைய வேண்டும். இதனால்தானோ மகாகவி சுப்பிரமணிய பாரதியார் “நீதி, உயர்ந்த மதி, கல்வி நிறைய உடையவர்கள் மேலோர்” என்று பாடினார்.
கல்வியினால் பெறப்படுவது உயர்ந்த மதி (மதிநுட்பம்). கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு. உயர்ந்த மதி அமைந்த ஒருவருக்குத்தான் பல திசை சார்ந்த ஆராய்ச்சி அனுகூலமாக அமையும். அந்த

Page 74
மொஸ்கோ அநுபவங்கள் 142
ஆராய்ச்சியினூடாகப் பெறப்படும் நுண்ணிய தீர்மானமே நீதி. இவ்வாறான நீதி நெறி சார்ந்த கரிகாற் சோழனாக அவ்விடத்தில் இருப்பதை நான் விரும்பவில்லை.
பொய்யும் புகன்றிடலாம்; ஒருவர்க்கு புரை தீர்த்த நன்மை பயக்குமெனில் என்ற வள்ளுவத்தின் அடிப் படையிலேயே எனது நீதியைச் செலுத்த விழைந்தேன்.
“யார் எதை எப்படிக் கேட்டாலும், எனக்கு ஒன்றும் தெரியாது; என்னை இங்கு அழைத்துவந்த தொழில் முகவர் தந்த ஆவணங்களை அவர் கூறிய படியே சமர்ப்பித்தேன். இதைத் தவிர வேறொன்றும் அறியேன் பரா பரமே” என்று தாபிக்கும்படி சிதம்பர நாதனுக்கு ஆலோசனை வழங்கினேன். அவ்வாறே நானும் அந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறி சிதம்பரநாதன் ஒரு நிரபராதி என்று வாதிட்டேன்.
அவர்களோ பல கேள்விகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டே சென்றனர். சிதம்பர நாதனோ அதற்கெல்லாம் அசையவில்லை.
தில்லையிலே ஆடும் நாதனாக விளங்கும் சிதம்பரநாதன் மொஸ்கோவில் அசையாப் பெருமானாக மோனநிலையில் வீற்றிருந்தார்.
சிதம்பரநாதனின் வாக்குமூலத்தில் ஏற்பட்ட முரணான பதில்களை தணிக்கை செய்து, ஆங்கிலத்தில் அதனைச் சீராக பரிவர்த்தனை செய்தேன்.
இப்போது பொலிசார் சிதம்பரநாதனை நம்பினாலும், குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தனர்.

143 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
ஆகவே தொழில் முகவரைப் பற்றிய தகவல்களை அறிந்துவிடத் துடித்தனர்.
தொழில் முகவர் ஒருவாரத்திற்கு முன்பாகவே இத்தாலி போய்ச் சேர்ந்து விட்டதாகவும், ஒரு புரளியை புகுத்திவிட்டோம்.
போலிசாரினால் அதனிலும் ஒருவித பிடியையும் பெற்றுக்கொள்ள இயலவில்லை. முடிவில் வழக்கு ஜெயித்தது. சிதம்பரநாதன் மூன்றாம் நாள் விடுதலையானார்.
I990- ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டையினுள் சுற்றி வளைக்கப்பட்டு, விடுதலைப் புலிகளிடம் கைதியாக இருந்து மீண்ட இலங்கை பொலிஸ் படைப் பிரிவைச் சேர்ந்த ஒரே தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள் இந்தச் சிதம்பர நாதன்தான் என்ற விபரம் பின்புதான் தெரியவந்தது.
அந்த வீரசாகச சாதனையை மதித்து, மெச்சி அரசாங்கம் வழங்கிய நட்ட ஈட்டுத் தொகையான ரூபா இரண்டு இலட்சம் ரூபாய்களையும் அப்படியே எடுத்து தொழில் முகவருக்குத் தாரைவார்த்துக் கொடுத்து விட்டு ஈனமடைந்து நிற்கும் சிதம்பரநாதன் ஒரு துரதிருஷ்டசாலியே.
மோசடி செய்யப்பட்ட கடவுச் சீட்டை ஆராய்ந்து பார்த்தேன். ஜவுளி வியாபாரி சீலனும் பொலிஸ் கான்ஸ்டபிள் சிதம்பர நாதனும் இணைந்து அதில் புகைப்படத்தை மட்டும் மாற்றி அமைக்கவில்லை; அதில் தொகுக்கப்பட்டிருந்த ஒவ்வொரு இதழையும் வேறு வேறு கடவுச்சீட்டுகளில் இருந்து பெறப்பட்ட தாள்களைக் கொண்டு கோர்த்து புதியதோர் அற்புதப் படைப்பினை செய்திருந்தார்கள் ஒவ்வொரு கடதாசி

Page 75
மொஸ்கோ அநுபவங்கள் 44
யிலும் துவாரமிடப்பட்டுப் பொறிக்கப்பட்டிருந்த தொடர் இலக்கங்கள், வேறு வேறு இலக்கங்களைக் காட்டி இருந்தன.
இதனை அந்த இமிகிரேசன் பொலிசார் கூட கண்டு கொள்ளவில்லை. !
புதிய கடவுச்சீட்டின் சிருஸ்டி கர்த்தாவான சீலன் அதுவரை நடுங்கி வெலவெலத்துப்போயிருந்தார். எங்கே சிதம்பரநாதன் தன் குட்டுகளை பொலிசாரிடம் அம்பலப்படுத்தி விட்டு விடுவாரோ என்று!
அதுவரை அடிக்கடி தொலைபேசி மூலம் என்னைச் சிரமப்படுத்திக் கொண்டே இருந்தவர், சிதம்பர நாதன் விடுவிக்கப்பட்டதுமே அப்படியே மறந்து கைகழுவி விட்டு விட்டார்!
சீலன் ஒரு ஜவுளி வியாபாரி அல்ல. பாஸ் போர்ட் வியாபாரியும் உற்பத்தியாளரும் கூட முன்பு தனது கடவுச்சீட்டின் செல்லுபடிக் காலத்தை நீடித்துப் பெறுவதற்குத் தெரிவிக்கப்பட்ட காரணங்களும் போலி யானவையே. இருந்தும் நான் அமைதியானேன். ஆனால் எச்சரிக்கையாக இருந்தேன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறும் உத்தமர்களின் உறவை நான் என்றுமே விரும்புவதில்லை.
சில நாட்களாக சீலனின் நெருக்கம் தானாகவே குறையத் தொடங்கியது. இதனை இட்டு, நலமாகவே கருதி நானும் வாளா விருந்து விட்டேன்.
பலமாத கால இடைவெளிக்குப் பின்பு மீண்டும் சீலன் எம்பசியில்!
“ஐயா, எப்படிச் சுகம்? இந்தப் பக்கம் வந்துகொள்ளக் கிடைக்கவில்லை”

145 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
“ஏதோ படைத்தவனின் கிருபையால் குறை ஏதும் இல்லை”.
“சென்ற வாரம் இலங்கைக்குப் போயிருந்தேன். அங்கே தேசிய அடையாள அட்டை புதிதாகப் பெற்று வந்துள்ளேன். முந்திய இலக்கத்தை மாற்றி இதனைப் பதிந்து தாருங்கள்.”
ஒருமுறை ஒருவருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டால், அது தொலைந்து போய்விட்டாலோ, அழிந்துபோய் விட்டாலோ, பதிலீடு செய்யப்படும் புதிய அடையாள அட்டையும் அதே இலக்கத்தையே கொண்டிருக்கும். புதிதான இலக்கம் வழங்கப்படுவதில்லை என்பதை சீலன் அறிந்திருக்க வில்லை. பாவம்.
அதற்கு மேலும் என்னால் பொறுமையைக் கடைப்பிடிக்க இயலவில்லை. “சீலன், ஒருவர் ஒருமுறை ஒரே காரணத்திற்காக ஏமாந்துபோய் விட்டால் அவர் ஒரு ஏமாளி அல்ல. ஆனால் இருமுறை ஏமாந்து போய்விட்டால் அவர் ஒரு முட்டாள். இதனை நான் சொல்லவில்லை. சிறந்த மேல்நாட்டு அறிஞர் ஒருவரின் கூற்று. இரண்டாம் தடவையும் ஏமாற நான் ஆயத்தமில்லை.”
“ஐயா, என்ன கதைக்கிறீங்கள்? என்ன நடந்தது ”
“ஒன்றும் நடக்கவில்லை. இலங்கைக்குப் போயி ருந்த நீங்கள் அங்கே இமிகிரேசன் காரியாலயத்துக்குச் சென்று புதிதாகப் பெறப்பட்ட இந்த அடையாள அட்டையையும் பாஸ்போர்ட்டில் பதித்து எடுத்து வந்திருக்கலாமல்லவா ? அதுவே சரியானதும் கூட. அவ்வாறு செய்ய முடியாமல் போனதற்குக் காரணம் என்ன? அத்தோடு ஆள் அடையாள அட்டையின் 10

Page 76
மொஸ்கோ அநுபவங்கள் 146
தேவை, இலங்கைக்கு வெளியே வாழும் வரையில் ஒருவருக்கு அவசியப்படப் போவதில்லை. பாஸ் போட்டில் அடையாள அட்டை இலக்கம் உள்ளடக்கப் படாதது அவசியமானதென்றும் கருதப்பட இல்லை. ஆகவே அங்கெல்லாம் அகப்படாத ஒரு முட்டாளாக இங்கே நான்தான் அகப்பட்டேனா என்ன? சீனாவில் வைத்து பாஸ்போட்டை அவசரமாக ஒரு வருடம் புதிப்பிக்கப் போட்டதே நாடகம் தான்; போகட்டும். இப்போது புதிதாக இன்னும் ஒன்றா ? சீலன், தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்"
சீலன் இதனை எதிர்பார்க்கவில்லை.
கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் டக்குமுக்கு டிக்குத் தாளம். பண்பு, அன்பு ஆகிய யோக்கிய தாம்சங்களுக்குக் கட்டுப்பட்டு சீரிய வாழ்க்கை வாழ்ந்து வருவோரை ஏமாளிகள் என்றோ, பலவீனர்கள் என்றோ, தப்பாகப் புரிந்து கொண்டு கழுதை மேய்க்க முயலுவது சுத்தப் பேதமையின் சிறந்த பிரதிபலிப்பு என்பதை காலம் உணர்த்தியே தீரும்.
04. இயேசு சீலனின் 344க்கிததை
குறித்த அந்த நாள் இன்று ஞாபகமில்லை. ஆனாலும் சம்பவங்கள் பசுமையாக மனத்திரையில் காட்சிகளாக அசைந்து கொண்டே இருக்கின்றன.
மொஸ்கோ வொத்கினா அரசினர் வைத்திய சாலையிலிருந்து தூதரகத்திற்கு தொலைபேசி அழைப் பொன்று வந்தது.
“இலங்கை நாட்டு பிரஜை ஒருவர்

147 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
மாடியிலிருந்து விழுந்ததால் முறிவுக் காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இவரது வாக்கு மொழி முறைப்பாட்டை பதிந்து கொள்வதில் சிரமம் உண்டு. உங்கள் நாட்டுத் தேசிய மொழி தெரிந்த ஓர் அதிகாரியின் உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”
ரூஸ்யன் - ஆங்கிலம் தெரிந்த மற்றொரு பரிவர்த்தனையாளரான திரு சாபு நவரட்ணவுடன் புறப்பட்டுச் சென்றேன்.
வொத்கினா என்ற பெயருடைய ஒரு ரூஸ்ய வைத்தியப் பேராசிரியர், பொதுமக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற தரும சிந்தனையுடன் தனது செல்வத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய வைத்திய தாபனமே இந்த வொத்கினா அரசினர் வைத்தியசாலை. இது சோவியத் மக்களுக்கு மட்டுமின்றி இன, மத, மொழி, நாடு வேறுபாடுகளின்றி, எவ்வவர்க்கு வைத்திய சேவை அவசியமோ, அவ்வவர்கட்கு தயக்க மின்றி உடனடியாக அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அவரின் மரண உயிலில் தெரிவிக்கப்பட்டதற்கு இசைவாக வெளிநாட்டவர் களுக்கும் இச்சேவை வேறுபாடின்றி வழங்கப்பட்டு வருகின்றது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு வைத்தியப் பிரிவுகளை உள்ளடக்கிய இத்தரும ஆஸ்பத்திரி ஒரு மாபெரும் வைத்திய நிவாரணக் கூடமாக இயங்கி வருகிறது.
பல சதுர கிலோ மீற்றர் விஸ்தீரணத்தைக் கொண்ட நிலப்பரப்பினில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலை மொஸ்கோ நகரின் வடக்கு எல்லையில் ஓர் ஒதுக்குப் புறமாக அமைந்துள்ளது.

Page 77
மொஸ்கோ அநுபவங்கள் 148
உடல் உரமும் முகவசீகரமும் கொண்ட கரிய நிற இளைஞர் ஒருவர், கட்டிலின் மீது கிடத்தப் பட்டிருந்தார்.
நாங்கள் அருகே சென்றதும் வாஞ்சையுடன் எழுந்து உட்கார முயன்றும் அவரால் அவ்விதம் செய்யமுடியவில்லை. ஊனமுற்ற கால்களும் முறிவு பட்ட விலா எலும்பும் உடல் உபாதையைக் கொடுத் திருக்க வேண்டும்.
“தேவையில்லை. . சிரமப் படாமல் அப்படியே படுத்திருங்கள்” என்று சைகை மூலம் காட்டி அவர் படுத்திருந்த கட்டிலின் ஒரமாக சென்று நின்றிருந்தேன். மலர்ச்சி பெற்ற கண்களால் நன்றி உணர்வை வெளிப்படுத்தி எங்களை வரவேற்ற அந்த இளைஞரின் முகத்தில் உற்சாகத்தின் சாயல் பரிணமித்ததைக் கண்டேன். அந்தத் தாங்கொணா உடல் உபாதை, தனிமை, துயரம் என்பவற்றிற்கிடையேயும் அவர் உள்ளத்தில் இவ்வாறானதொரு உற்சாகம் பிறந்ததற்குக் காரணம், சக உதிரமான இலங்கைத் தமிழனான என்னை அந்த விபரீதமான இடத்திலும் காண நேர்ந்தமையாகத் தான் இருக்க முடியும்.
தமிழ் அன்னையின் இணைப்பால் மலர்ந்த இதயத் துடிப்பை நினைத்து நானும் எனக்குள் வியந்தவாறு “நீங்கள் இலங்கைத் தமிழர் அல்லவா? உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்றேன்.
அதுவரையும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உணர்ச்சிகள் வார்த்தைகளாக வெடித்து விம்மலுக்கும் அழுகைக்கும் இடையே ஒலித்தது: “ஐயா, நான் இனிச் செத்து மடிந்து போனாலும் கவலைப்பட மாட்டேன். எங்கே, என் இனத்தைச்

149 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
சேர்ந்த ஒருவரையேனும் கண்டு கதைத்து விடாமல் உயிர் பிரிந்து விடுமோ என்று ஆதங்கப்பட்டுக் கொண்டே இருந்தேன். ஜீசஸ் வடிவில் இன்று உங்களைக் கண்டதும் என் உள்ளத்தில் பொங்கும் ஆனந்தத்தை சொல்லிட வார்த்தை இல்லை. என் கவலைகள், துன்பங்கள் எல்லாம் பறத்தோடிப் போய்விட்டன. நான் பாக்கியசாலி. இனி என் ஆத்மா பிரிந்து விட்டாலும் பரவாயில்லை” இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை வீசியெறிந்து கூறிய அந்த இளைஞரின் கண்களில் இருந்து வழிந்தோடிய கண்ணிர் ஆனந்தக் கண்ணிரா ? துன்பக் கண்ணீரா? என்பதை என்னால் நிதானிக்க முடியவில்லை.
“இடுக்கண் வரும்போது நகுக” என்ற குறளோவியக் கருத்து “சாத்தியமான ஒன்றா?" என ஐயுறும் பகுத்தறிவு மாந்தருக்கு நல்லதோர் உதாரணமாக மொஸ்கோ நகரினில் உயிர்பெற்று விளங்கிய இக் காட்சியைக் கண்டேன்.
அந்த இளைஞரின் வார்த்தைகள் என் நெஞ்சத்தைத் தொட்டன! கூடவே என் கண்களிலும் நீர் அரும்பி என் மனநிலையைப் பிரதிபலித் திருக்க வேண்டும். ஒருகணம் செய்வதறியாது திக்கு முக்காடினேன். அந்த இளைஞன் உதிர்த்த மானசீகமான வார்த்தைகள் இன்னும் என்காதுகளில் உயிரோட்ட முடன் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
அன்பான இனிய மொழிகளால் அவருக்கு ஆறுதலும் தேறுதலும் கூறினேன். நடந்து முடிந்த அந்தக் கோரச் சம்பத்தை ஆறுதலாகச் செவிமடுத்தேன். இரக்கம், வீரம், சோகம் என்ற பல ரசனைகள் நிறைந்த அந்தக் கதையில், அர்ப்பணிப்பும் தியாகமும் கூட மறைந்திருந்தன.

Page 78
மொஸ்கோ அதுபவங்கள் 150
ரூஸ்ய மொழி பெயர்ப்பாளரான சாபு நவரட்ண மூலமாக டாக்டர்களை அணுகி அவ்விளைஞரை நன்றாகக் கவனிக்கும்படியும் தேவைகள் ஏதாவது இருப்பின் எனக்கு அறிவிக்கும்படியும் விநயமாகக் கூறிவிட்டு திரும்பினேன். அதன் படி அடுத்த இரண்டொரு நாட்களில் பெறப்பட்ட டாக்டர்களின் வேண்டுகோட்படி, வங்கியிலிருந்து இரத்தம் இரண்டு லிற்றர் அளவில் பெற்றும் கொடுத்தேன். அடிக்கடி அங்கு சென்று ஆறுதல் கூறிவர விருப்பம் இருந்தபோதிலும், தனியாக அங்கு சென்று வருவதில் உள்ள சிரமங்களான மொழி அறிவு இன்மை, வைத்தியசாலையின் ஒழுங்குவிதிக் கட்டுப்பாடுகள், ஓய்வின்மை என்பனவற்றால் அவ்விதம் செய்துவர முடியவில்லை.
ஜேசுநாதர் மீது அயராத பக்தியும் அதீத நம்பிக்கையும் கொண்டிருந்த இளைஞருக்கு இன்முகம் காட்டி உதவி நல்க அவ்வாஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்த ஒரு ரூஸ்ய மங்கை கூட வாய்க்கப் பெற்றது கன்னி மரியாவின் அருளே அன்றி வேறென்ன?
மம்மி மம்மி என்று அந்த மங்கையை அன்பு சொட்ட அழைத்தார் அவர் அந்த மங்கையும் சிரமம் பாராது கடமைகளுக்கு அப்பாலும் நற்சேவை புரிந்து வருவதாக புகழாரம் சூட்டினார். மாடியில் இருந்து விழுந்த போதிலும் உயிர் தப்பிப் பிழைத்ததுவும், அனாதரவற்ற நிலையில் இருந்த யேசு சீலனுக்கு ஆதரவளிக்க நல்லுள்ளங்களை சேர்ப்பித்ததும் இறைவனின் கருணையன்றி வேறேது? நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறை தீர்ப்பு. நடந்தது இதுதான்:
நள்ளிரவு வேளை. உவின்ரர் பனிக்கட்டிகள்

151 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
பாய்விரித்தது போன்று எங்கும் வெள்ளை வெளேரென பரவிக்கிடந்தன. மின்சார ஒளி அவற்றில் பட்டுத் தெறித்து இரவு முழுவதும் குளுமையான பகலாக ஜொலித்துக் கொண்டிருந்தது. இரவின் அமைதி, குளிரின் நடுக்கம் எல்லோரையும் ஆழ்ந்த உறக்கத்தில் அரவணைத்துக் கொண்டதால் பயங்கர அமைதி நிலவியது. கறுப்பின மக்கள் தெருவோர மாடி வீடுகளில் குடியிருப்பதை தெரிந்து கொண்டு கன்னக் கோலிடுவதற்காக ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று அவ்வீட்டை முற்றுகை இட்டது.
I992 ஆண்டு சோவியத் யூனியன் சிதறுண்டு போனதை அடுத்து ரூஸ்ய நாட்டில் வறுமை, பஞ்சம் பிணி என்பன பீடிக்கத் தொடங்கியது. எத்தனையோ மனிதாபிமானம் கொண்ட நல்ல பழக்க வழக்கங் களுக்குச் சொந்தக்காரராக இருந்து வந்த ரூஸ்ய மக்கள், தமது உதார குணங்களை உதறித் தள்ளிவிட்டு களவு, கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற காரியங்களில் ஈவிரக்கமின்றி ஈடுபடத் தொடங்கினர்.
"மிடி’ என்றொரு பாவி வெளிப்படின் குணம், குலம், குடி நலம் எல்லாமே போய்விடும் என்ற அருணகிரிநாதரின் அனுபூதி மொழிக்கேற்ப இவை அமைந்தன!
வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், பிள்ளைகள் என்று எல்லோருமே கலவர மடைந்தார்கள். துப்பாக்கி முனையில் பணம், பண்டம், நகைகள், கடவுச்சீட்டுகள் என்பன கொள்ளையடிக்கப் பட்டன. வீட்டில் இட நெருக்கடி காரணத்தால் குசினிக்குள்ளே படுத்திருந்த ஜேசுசீலனும் அவனோடு அங்கு வாழ்ந்து வந்த ஓர் ஐந்து வயதுப் பாலகனும் மெதுவாக வீட்டை விட்டு

Page 79
மொஸ்கோ அநுபவங்கள் 152
வெளியேறிவிடத் தீர்மானித்து மேலே பல்கணி வழியாக
கடந்து சென்றனர். பையனை தூக்கி அடுத்த வீட்டு மம்மியின் பல்கணிக்குள் நுழைத்து விட்டு ஜேசுசீலனும் தாவி ஏறிப்பாய முற்படுகையில். ஐயோ! கால் தடுக்கி...... அந்தோ பரிதாபம்! கீழே மெத்தென மணல் போல் குவிந்து கிடந்த பனித்திடலில் வீழ்ந்து பிரக்ஞை இழந்த நிலையில் கிடந்தான்.
இடுப்பும், இடதுகாலும் உடைந்து போய் விட்டது. கொல்லும் பனிக் குளிரில் கீழேவிழுந்து கிடந்த ஜேசுசீலனை யாரோ உள்ளம் படைத்தவர்களின் தயவால் அம்புலன்ஸ் வண்டி மூலம் வொத்கினா அரசினர் வைத்திய சாலைக்கு எடுத்துச்சென்றனர். அங்கே வைத்திய சிகிச்சை அளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்த ஜேசுசீலன் குடும்பத்தில் மூத்த பிள்ளை. ஆண், பெண் சகோதர சகோதரிகள் நான்கு பேர். தந்தை கால் வழங்காத ஊனமுற்றவர். வறுமை. அந்த வறுமையின் கோரப் பிடியிலிருந்து குடும்பத்தை மீட்கவும் தங்கையர் இருவரையும் வாழ்க்கை எனும் புயலிலிருந்து தென்றல் என்னும் அமைதிக்கு அழைத்துச் செல்லவும் தேவைப்படும் பணம் தேடவென்றே புறப்பட்டு வந்த பரோபகார சிந்தனையாளன் ஜேசுசீலனுக்கு விதி சதி செய்துவிட்டது. சோதனை மேல் சோதனை!
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கு மென்று!
இறைவன் சிரிப்பதுண்டு பாவம் மனிதனென்று!

153 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
ܦܵ2 Valstragte ཧན་་ ་་ ..
ܨܹܛܠ
ギー 、薄、 تغ: انت 8 انجامد.
05. செல்விபுல்பரணிபrUதி
爱 மனித வாழ்வில் ಙ್ಕ್ತೆ: மூலகாரணமாக அமைந்தது அவன்கீத்தேமுகைவிட்டு
வளரும் ஆசை என்பதை புத்த பகவான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பரீட்சித்து கூறினார். போது மென்ற மனமும் கிடைத்ததைக் கொண்டு அமைதி யடையும் சுபாவமும் ஒருவருக்கு வாய்க்கப் பெற்று விட்டால், அதுவே தெய்வீக அமைதியும் கிடைத் தற்கரிய பேறுமாம். இலங்கையில் இனப் பிரச்சினை காரணமாக வன்செயல்கள் அதிகரித்தாலும், மக்கள் துயருறுவதற்கு அதுமட்டுமே முழுக் காரணமும் ஆகாது. ஆசையும் அங்கலாய்ப்பும் கொண்ட பலர் அதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி நயம் பெற முனைவதால் தான் அங்கு பிரச்சினைகளே பன்மடங்கு அதிகரித்த வண்ணம் தொடர்கின்றன.
மொஸ்கோ செரமித்தியோவ் சர்வதேச விமான நிலைய இமிகிரேசன் பொலிசாரிடமிருந்து தொலை பேசி அழைப்பு பெறப்பட்டது. “இலங்கை நாட்டை சேர்ந்த ஒரு பெண்மணி முறையற்ற கடவுச் சீட்டைப் பயன்படுத்தி, ஜெர்மனி செல்ல முயன்றபோது விமானநிலையத்தில் பொலிசாரால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுவதற்காகத் தூதரகத்திலிருந்து சம்பந்தப் பட்ட ஒரு அதிகாரியை அழைக்கிறோம்” என்பதே அதன் தாத்பரியம்.
வழக்கம் போல் மொழிப் பரிவர்த்தனையாளரை உடன் அழைத்துக் கொண்டு, விமான நிலையம் சென்றேன். இமிகிரேசன் பொலிசார் மூவர் அமர்ந் திருந்தனர். அவர்களுக்கு அப்பால் சுவர் ஒரமாக

Page 80
மொஸ்கோ அநுபவங்கள் 154
பெட்டகம் ஒன்று! எமது பழைய வசதிபடைத்தவர்கள் வீட்டில் வைத்திருப்பார்களே. அதுபோன்ற விசா ல மான மரப்பெட்டி. பரிவர்த்தனையாளர் அப்பொலிசா ரிடம் சென்று எம்மைப் பற்றியும் எமது வரவின் நோக்கம் பற்றியும் எடுத்துரைத்தார். அப் பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் எங்களை அழைத்துக் கொண்டு அந்த மரப்பெட்டி அண்டை வந்தார். பேச்சொலி, காலடி ஒசை கேட்டோ என்னவோ அப்பெட்டிக்குள் இருந்து பாம்பு ஒன்று படமெடுத்து நின்றாற்போல ஒரு பெண் உருவம் அதனுள் இருந்து எழுந்து நின்றது!
எனக்கு வியப்பு ஒரு புறம் மறுபுறம், அதனைப் பார்க்க குதூகலமாகவும் இருந்தது.
உரோமாபுரி சாம்ராஜ்யம் நிலைபெற்றிருந்த காலை ஆபிரிக்க கறுப்பு இன அடிமைகளை இவ்வாறுதான் மனித நேயமற்ற விதத்தில் நடாத்தி இருப்பார்களோ என்று எண்ணத் தோன்றியது. இதயத்தில் துளிர்த்த வேதனையை அதிர்ச்சியுடன் அடக்கிக்கொண்டேன்.
தமிழரின் நிலை பிறந்த நாட்டில் மட்டுமல்ல, பிற நாடுகளிலும் கூட விலையற்ற தொன்றாய் இப்படியா அமையவேண்டும் ?
அவ்வுருவத்தை நெருங்கி நிதர்சனமாக உற்று நோக்கினேன். மங்கல குங்குமத்தின் மலர்ச்சியோடும்,
துயர் உற்றும் துவண்டு போகாத மனத்திடத்தோடும்,
தீட்சண்யம் வாய்ந்த துரு துரு விழிகளோடும் என்னை அப்படியே ஒரு மாடல் அழகி போலப் பார்த்துக் கொண்டிருந்த மங்கை; ஒரு தமிழ் நங்கை என்பதைத் திடப்படுத்திக் கொண்டு விட்டேன். சிரிப்பு, அழுகை சிந்தனை என்ற எந்த ஒரு வித குணசித்திரங்களுக்கும்

155 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
ஆட்பட்டிராத அவ்வுருவத்தை அந்த நிலையில் பார்த்த எனக்கு பரிதாபம் மட்டுமல்ல; ஆச்சரியமும் மேலோங்கி இருந்தது. சாதாரணமாக தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் வளர்ந்து விட்ட பெண்ணொருத்தி இப்படியான தொரு இக்கட்டான நிலையில் தன்னை மறந்து பதட்டமுற்று கலக்கமடைந்து இருப்பதுவே நியதி. பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்த அந்த ஜந்திரப் பெண்ணுக்கு வயது எப்படிப் பார்த்தாலும் இருபதுக்கு மேல் இருக்காது.
இலங்கைத் தமிழர் தம் வாழ்வில் இன்னல் களையே வருடப் பிறப்பாக பல காலம் அனுபவித்துத் தேறி விட்டதனாலோ என்னவோ அவர்களுக்கு எப்பேரிடர் வந்துற்ற போதிலும், அவை மனதை அத்துணை வாட்டமடையச் செய்வதில்லை போலும்.
நானே முதலில் பேச்சைத் தொடங்கினேன்.
“அம்மா, என்ன நடந்தது உங்களுக்கு?”
“பாஸ்போட்டை பறித்து வைத்துக் கொண்டு என்னை இங்கே விட்டிருக்கிறாங்கள்”
சட்டவாத ரீதியான அவளது பதிலைக் கேட்டு,
“காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியாதா?’ என்றேன்.
“தெரியாது” என்ற பாவனையில் தலையை மட்டும் தஞ்சாவூர் பொம்மைபோல் ஆட்டி விட்ட அப்பெண்ணின் பார்வை, என்னைக் கூர்ந்து ஊடறுத்துச் சென்று “யார் இவர்” என்று ஆராய முற்பட்டது.
மாயை பல புரிந்து வஞ்சம் செய்ய வந்த மாரீசனோ; மனதைக் கவர்ந்து உண்மை தெரிந்து

Page 81
மொஸ்கோ அநுபவங்கள் 156
கொள்ள வந்த சீ. ஐ . டீ யோ என்ற சந்தேகம் போல அவளுக்கு. “அம்மா, நான் தமிழன். இலங்கையன். நீங்கள் எவ்விடம்?”
“யாழ்ப்பாணம் - இணுவில்”
“முடிந்த உதவியை செய்யவே நான் இங்கு வந்திருக்கிறேன் வீணான சந்தேகங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம். அப்படி முடியா விட்டாலும் உபத்திரவம் தரமாட்டேன்; நம்பலாம்” இப்போது அவளது தலை கவிழ்ந்து விட்டது. பேச்சு எதுவுமே இல்லை.
“நடந்த விடயங்களை மறைக்காமல் எனக்குக் கூறினால்தான் ஏதாவது உதவி செய்யலாமா என்று சிந்திக்க வாய்ப்பாக இருக்கும். மறைத்தால் பிரச்சினை தான் அதிகரிக்கும். இது உங்களுடைய பாஸ்போட் தானா?”
“இல்லை! அக்காவினுடையது”.
‘அது எப்படி. 9
“அண்ணா ஜேர்மனியில் இருந்து இங்கு வந்தவர்; அக்காவின் பாஸ்போட்டில் என்னை அழைத்துப் போக”.
o g o 99 "உங்களுடைய பாஸ்போட் எங்கே?
“இதில் உள்ள படம் என்னுடையதல்ல என்று பொலிசார் சொல்லுறாங்கள்.”
“அவர்கள் சொல்வது சரிதானே? அக்காவின் பாஸ்போட்டில் உங்களுடைய படம் எப்படிவரும்? பரவாயில்லை. யார் கேட்டாலும் இது உங்களுடைய பாஸ் போட் என்றே கடைசி வரை சொல்லுங்கோ, சரிதானே?”

157 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
“ஆம்” என்பதற்கு அடையாளமாக தலையை மட்டும் பலமாக ஆட்டினாள். எனது இந்த ஆலோசனை இல்லாதிருந்தால் கூட அந்த யுவதி கடைசிவரை சாதித்தே இருப்பாள்.
அத்துணை சலனமில்லாத தைரியசாலி.
பொலிசாருக்கு எடுத்துக் கூறினேன்: “விசாரித்து பார்த்ததில் பாஸ்போட்டும் அதில் உள்ள புகைப்படமும் சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணினுடையதே. வித்தி யாசத்திற்கு இடமில்லை” இதனை மொழிபெயர்ப்பு மூலம் கேட்ட பொலிஸ் ஆத்திரமடைந்தது.
என்னை மீண்டும் அழைத்துக் கொண்டு அப்பெண் இருந்த பெட்டி அருகே சென்றவன், அவளை எழுந்து நிற்கச் செய்து அங்க லட்சன பரிசோதனை செய்யத் தொடங்கிவிட்டான். காதுகள், மூக்கு, உதடு, மோவாய், புருவம், நெற்றி என்று எல்லாப் பகுதி களையும் புகைப்படத்துடன் ஒப்பு நோக்கி ஆராய்ந்து அதில் காணப்பட்ட வித்தியாசங்களை சீற்றத்துடன் எனக்கு புலப்படுத்தினான்.
குமுதம் பத்திரிகையில் “ஆறுவித்தியாசங்கள் கண்டு பிடியுங்கள்” பொழுதுபோக்கைப் போன்றி
ருந்தது எனக்கு!
எனக்குதான் என்ன இது தெரியாதா? அக்காவின் பிரிதிபிம்பம் தங்கையின் சாயலில் ஓரளவு விழுந்தாலும் முழுமையாக அமைந்து விடுமா என்ன? அவன் கதைத்து முடிந்ததை பரிவர்த்தனையாளர் ஆங்கிலத்தில் பெயர்த்து எனக்கு ஒப்புவிக்கும் வரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் என் சிந்தனையோ கிரிமினல் லாயர் ஒருவரது மூளை, வழக்கொன்றின் போது எவ்வாறு இயங்குமோ அவ்வாறே வேலை

Page 82
மொஸ்கோ அநுபவங்கள் 158
செய்து யுக்தி ஒன்றைத் தேடி பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தது.
புகைப்படக்கலை எனக்கு அறவே தெரியாது! கமறா வைக் கூட சரியாக இயக்கத் தெரிந்திருக்க வில்லை, அப்போது. ஏதோ புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்ற கலைஞர் பாலு மகேந்திரா வைப் போன்று கலை நுட்பம் அதிகம் தெரிந்தவனாக வாதிட்டேன்: “குளோசப் பில் படம் எடுக்கும் போது பிம்பம் எப்படி அல்லது அதிர்வின்போது எவ்வாறு நிழல் பிம்பமாக விழும் என்றெல்லாம் எனது கற்பனையில் கிடைத்தவற்றையும் பிறர் கூறக் கேட்டவற்றையும் தொகுத்து அழகாக சரளமாக எடுத்துரைத்து “புகைப்படங்களில் நூறு வீத அசலை எதிர்பார்க்க முடியாது” என்றும் கூறி முடித்தேன்.
என்னோடு மொழிபெயர்ப்புச் செய்யவென்று இணைந்து வந்த டாக்டர் நிமால் பெம்மாவடு என்ற சிங்களவர் “இது கள்ளப்பாஸ்போட். ஆளுக்கும் புகைப்படத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது” என்று அடிக்கடி, புலம்பிக் கொண்டே இருந்தார். அவரை நோக்கி
“மிஸ்டர் பெம்மாவடு, தயவு செய்து எனது வேலையில் குறுக்கிடாதிருங்கள். உங்கள் பணி எதுவோ அதைச் செய்தால் போதும்” என்று கூறியதும் அதற்குமேல் அவர் மூக்கை நுழைக்கவில்லை. எப்படி நான் கூறியபோதிலும் என் பேச்சில் அவன் திருப்திப்பட்டதாகத் தெரியவில்லை. அவனோ பொலிஸ் அதிகாரி தன் சேவைக் காலத்தில் இதுபோன்ற எத்தனையோ மாறாட்டங்களைக் கண்டு பிடித்திருப்பான். தொழில் திறமை, அனுபவம் ஆகியன அவனை இந்த உயர் பதவிக்குக் கூட உயர்த்தி

159 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
இருக்கலாம். ஆனாலும் தூதரக அதிகாரியான எனது பேச்சை தட்டிக்கழித்து விடும் அதிகாரம் அவனுக்கு இருக்கவில்லை. சிறிது நேரம் இருந்து யோசித்தவன் அதிருப்தியுடன் கூறினான்; ‘அப்படியானால் ஆளை விடுவிக்கிறேன் எடுத்துக் கொண்டு போங்கள்” என்று.
இப்போது எனக்கு ஏற்பட்டது திண்டாட்டம். இல்லை; சங்கடம். யுவதியான அப்பெண்ணை நான் பொறுப்பேற்றுக் கொண்டு என்ன செய்வது? பழி - பாவம் என்று என்னைப் பற்றிக் கொள்ளுமே! நிச்சயமாக பாவம் சேராது என்பது எனக்குத் தெரியும். எதற்கும் முதலில் காரியத்தில் இறங்கினேன்.
ஆளைப் பொறுப்பேற்றுக் கொண்டு வந்து வெளியில் விட்டுவிட்டு அவளை வினவினேன்! “யாராவது உறவினர் மொஸ்கோவில் இருக்கிறார் களா?” என்று. ஒருவரல்ல ஒரு கூட்டமே அவளது விடுதலையை எதிர்பார்த்து பின்னணியில் இருந்து கொண்டிருந்தது. தொலைபேசி மூலம் அந்தப் பெண்ணை அவர்களோடு தொடர்பு படுத்தி பேசச்செய்து அவர்களது வரவிற்காக அங்கேயே காத்திருக்கும் படி கூறிவிட்டு நாங்கள் புறப்பட்டுச் சென்றோம்.
பொய்மை மூலம் கடமை, நன்மையாக நடந்து முடிந்தபோதிலும் தருமத்தின் சன்னிதானத்தில் அல்ல; ஆத்ம பீடத்தில் திருப்தி ஏற்படவே செய்தது.
புரைதீர்ந்த நன்மையைத் தந்த அந்நிகழ்ச்சி ஒருபுறம் மறுபுறம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட இவ்வளவு சாமர்த்தியமாக, தத்ரூபமாக நடித்திருப்பா ரோ என்று நினைக்க என்னுள் பெருமிதமும் ஏற்படவே செய்தது.

Page 83
மொஸ்கோ அநுபவங்கள் 160
06. சின்னைய4 ஆகராஜன்
உண்ண உணவில்லை. உடுக்க மாற்று உடை இல்லை. தங்கி வாழ்ந்து வர ஓர் இல்லம் இல்லை.
பி.ப 4.00 மணியளவில் தூதரகத்திற்கு வந்து சேர்ந்து விட்ட அந்த இளைஞன், மெய் வருந்திக் கண்ணிர் சொரிந்து தன் நிலைமையை அழுது தெரிவித்தான். மனம் நெகிழ்ந்தது. ஆனால் எப்படி உதவி செய்வது?
ஆயிரம் ஆயிரமாக உழைக்கலாமென்று ஆசைகாட்டி இலட்சம் இலட்சமாகப் பணத்தைப் பறித்தெடுத்து விட்டு, முற்றிலும் புதிய அறிமுக மில்லாத மொஸ்கோ நகரில் கொண்டு வந்து அனாதரவாக கைவிட்டு நழுவிச் செல்லும் தொழில் முகவர்களால், ஏமாற்றப்பட்டு வரும் தமிழ் அபலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இவர்கள் எதிர்நோக்கும் கஷ்ட நஷ்டங்களோ எண்ணிலடங்கா. மானமற்று விலங்குகள் ஒப்ப மண்ணில் வாழ்ந்து வாழ்க்கையை அமைத்திடத் துடிக்கும் இவர்களது அவலமோ சொல்லிலடங்கா.
தூதரகம் என்பது இராஜியத் தொடர்புகள், இரு நாட்டு இரகசியங்கள் பேணப்பட வேண்டிய ஒரு
நிறுவகம்.
அதனுள் பிறர் எவரையும் அழைக்கவோ தங்க வைக்கவோ கூட அனுமதியில்லை. இவ்வாறிருக்க அறிமுகமே இல்லாத ஒருவரை - அதுவும் தமிழரான இந்த இளைஞனை அனுமதிப்பதென்பது. கற்பனை கூட செய்யமுடியாத விடயம்!

161 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
ஏதோ பணநோட்டுகள் சிலவற்றை கையில் கொடுத்து, “வெளியே பாதையால் சென்று கொண் டிருந்தால், உம்மைப் போன்று இங்கு வேலை வாய்ப்புத் தேடி வந்த பல தமிழர்கள் அலைகிறார்கள். அவர்கள் தனியாக வீடெடுத்து பலர் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை அணுகி அங்கே அவர்களோடு தங்குவதற்கு ஓர் இடம் பெற்றுக் கொண்டு, துரிதமாக நாடு திரும்பும் உத்தியைப் பாருங்கள்” என்று புத்திமதி கூறினேன்.
நான் கூறிய வார்த்தைகள் எதையும் செவி மடுக்காத அந்த இளைஞன் மீண்டும் மீண்டும் அதே தாரக மந்திரத்தையே உச்சாடனம் செய்து கொண்டி ருந்தான்: “ஐயா என்னைக் காப்பாத்துங்க. ஐயா என்னைக் காப்பாத்துங்க” என்பதே அந்தராக Gav Lu LD IT (Sg5 Ltd.
தூதரகத்தினுள் தங்க வைப்பது சட்டவிரோதம். அவ்வாறு தங்க இடம் கொடுத்து விட்டாலோ அது பார தூரமான குற்றமாகக் கருதப்பட்டு என்மீது குற்றச்சாட்டுகள் பல சுமத்தப் படலாம். குறிப்பாக தமிழரான அந்த இளைஞனுக்கு, உதவிசெய்த தமிழரான என்மீது “புலிச்சாயம் "பூசப்பட்டு கொழும்பு சீ. ஐ. டீ. யினரின் புனித பிரதேசமான நான்காம் மாடிக்கு விருந்தாளியாகக் கூட அழைத்துச் செல்லப் படலாம்! அல்லது முன்னறிவித்தல் எதுவுமின்றி என்னை உடனடியாக இலங்கைக்கு மீள அழைத்துக் கொள்ளவும் முடியும். இது ஒரு பெரும் அவமானமான தண்டனை. தொழிலை, பதவியை, பணத்தை ஏன் உயிரைக் கூட இழக்கத் தயார்! ஆனால் மானத்தைப் போக்கி தலைகுனிந்து நிற்க நான் என்றுமே தயாரில்லை. ஆகவே என் நிலை - திரிசங்கு சொர்க்கம் என்பார்களே - அது போன்றதாக இருந்திருக்கலாம். 11

Page 84
மொஸ்கோ அநுபவங்கள் 162
ζε பிற்பகல் 4.45 மணிக்கு தூதரகம் மூடப்பட்டு விடும். அதுவரை சிணுங்கிச் சிணுங்கி நின்று கொண்டிருந்த குகராஜன் பலர் வற்புறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும் எதற்கும் அசையாது அப்படியே இருந்து விட்டான். இறுதியாக குளிர் தாவும் சீமெந்துத் தரையில் சாட்டாங்கமாக வீழ்ந்து அப்படியே கிடந்து விட்டான். ஆனவரை சொல்லிவிட்டேன். அழுதழுது பார்த்துவிட்டேன். இன்னுமெனக்குச் செய்ய எதுவுமில்லை என்றிருந்து விட்டேன்.
கந்தோர் சேவகன் சென்று தூதருக்கு விடயத்தை கூறிவிட்டான் போலும்! தூதரும் அவ்விடம் வந்து குகராஜனிடம் தமிழில் கூறுமாறு பல அறிவுறுத்தல் களை எனக்குப் பணித்தார். குகராஜனோ எதையும் கணக்கெடுத்துக் கொள்ளாமல் குப்புறப் படுத்திருந்தபடியே கிடந்தான். இறுதியாக தூதரின் ஆணைப்படி வாயிலில் காவலிருந்த ரூஸ்ய பொலிசார் வந்து குகராஜனைப் பிடித்து சரசர வென இழுத்து கொண்டு வெளியேற்றி விட்டனர்.
அன்று முழுவதும் என் மனக்கண் முன்னால் குகராஜனின் அழுகை தோய்ந்த அவலக்காட்சியே மாறிமாறி வந்து நின்று கொண்டிருந்தது. என்மனம் வேதனையால் அழுதது. உதவிகேட்ட ஓர் அபலைக்கு உதவ முடியாத என்நிலையை எண்ணி வேதனைப் பட்டேன். தமிழா, நீ தலை மயிரினிலும் மலிவா? உன் தலை விதி இதுவா?’ என்று எனக்குள் சொல்லி ஆறுதல் அடைந்ததைத் தவிர, வேறேதும் செய்து விடமுடியவில்லை.
குகராஜன் ஒரு மனநோயாளியும் கூட என்பது பின்னால்தான் தெரிந்தது. பொலிசார் அவன் மீது இரக்கம் காட்டி வொத்கினா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்கள்.

163 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
இரண்டு மாதங்களுக்குப் பின்பு மீண்டும் ஒரு நாள் குகராஜன் எம்பசியில்! அதே பிரலாபம். விண்ணப்பம். வேண்டுகோள். மீண்டும் பழைய இடத்துக்கே சென்று தங்கி இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
இப்போது சிறிது குணமடைந்தவன் போல் காணப்பட்டான் அவன். பூர்வீகம் எது என்று கேட்ட போது தன்னைப்பற்றி அவன் கூறிய விபரம் இதுதான்!
பிறந்தகம் யாழ்ப்பாணத்து நல்லூர் என்றும் தந்தை இல்லாத அவனை மாமன் இராசதுரையே பாதுகாத்து வளர்த்து வந்ததாகவும், தமையன் அற்புத ராசா சுவிர்ச்சர்லாந்தில் மனைவி மக்களுடன் வாழ்க்கை நடத்தி வருவதாகவும், தன் நிலைபற்றி அவருக்கு தெரியப்படுத்தினால் ஏதாவது உதவி செய்யக்கூடும் என்றும் தெரிவித்தான். தமையனுடைய தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டேன். அதன்படி அற்புத ராசா வைத் தொடர்பு கொள்ள பல முறை முயன்றும் அது கைகூடவில்லை. தொலைபேசி அலறியது. வீட்டில் எவரும் அதற்கு பதிலளிப்பதாக இல்லை. இரண்டாம் நாளும் முயன்றேன். முடிவில் செய்தியை அற்புதராசாவுக்கு தெரியப்படுத்தி விட்டேன்.
அதன் பிறகு அற்புதராசா ஒவ்வொரு வார இறுதி விடுமுறை நாட்களிலும் எனது வீட்டுத் தொலைபேசி மூலம் என்னுடன் தொடர்பு கொண்டு குகராஜன் பற்றி அறிந்து கொள்வார். UNHR மூலம் குகராஜனையும் தன்னுடன் சுவிர்ச்சலாந்துக்கு அழைக்க அவர் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாகவும், அது பயனளிப்பின் அடுத்த ஓரிரு மாதங்களில் குகராஜ னுடைய கவலைகள் நீங்கிவிடும் என்றும் கூறினார்.

Page 85
மொஸ்கோ அநுபவங்கள் 164
“அதுவே சரியான அணுகுமுறை” என்று நானும் அதனை வரவேற்றேன். அம்முயற்சிக்கு உதவும் பொருட்டு பாஸ்போட்டை இழந்திருந்த குகராஜ னுக்கு தற்காலிக பயண ஆவணமான ஓர் அடையாளச் சான்றிதழை தூதரகம் மூலம் பெற்று கொடுத்தேன். இலங்கை இமிகிரேசன் சட்டப்படி அச்சான்றிதழ் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வலுவுடையது. அதன் பின்பு தானா வே காலாவதியாகியதாகக் கருதப்பட்டுவிடும்.
ஒருநாள் சனிக்கிழமை காலை. சுமார் 10 மணி இருக்கும். அற்புதராசாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது. வழக்கம்போல் குகராஜனின் சுவிச்சர்லாந்துக்கான பயண ஒழுங்கு முன்னேற்றம் பற்றி உரையாடிக் கொண்டிருந்தவர், தி பீரென்று “ஐயா உங்கள் உதவிகளுக் கெல்லாம் எப்படி என்ன கைமாறு செய்வதோ தெரியவில்லை” என்றார், சாவதானமாக, “உதவிக்கு ஏது கைமாறு?” என்றேன், “இல்லை ஒரு நூறு அமெரிக்கன் டாலர்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்; பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.
இதனைக் கேட்க எனக்கு அதிருப்தி மட்டுமல்ல மன வருத்தமாகவும் இருந்தது.
மனிதன் மனிதனுக்கு முடிந்த உதவியை அளிப்பது மனிதத்தன்மை. அந்த மனித்தன்மையையும் ஒரு சந்தைப் பொருளாக மதிப்பிட்டு வியாபாரமாக்க முற்படும் அநேகர் எம்மத்தியில் இருக்கவே செய்கின் றனர். இதனால் தான் கைலஞ்சம் கைக்கூலி, அழுக்காறு என்பன நமது நாளாந்த வாழ்க்கையில் ஓர் சமூக அங்கீகாரம் பெற்ற துர்நடத்தையாக வியாபகம் பெற்று வருகிறது. “இல்லை இல்லை. தயவு செய்து

165 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
இவ்வாறான காரியம் எதிலும் இறங்கி விடாதீர்கள்" என்றேன்.
{{
ஏன?
“பாடு பட்டு உழைத்துப் பெறும் பணம் தவிர்த்த வேறுஎதையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை. இது எனது விடாப்பிடியான கொள்கை. தயவு செய்து மன்னியுங்கள்”
“ஏதோ பிரதியுபகாரம் செய்ய வேண்டுமாப் போல் தோன்றியது. அது தான். 9y
“அப்படியா? நன்றி. நீங்கள் ஏதாவது எனக்குத் தரவேண்டும் என்று கருதினால் கட்டாயமில்லை. அங்கு வெளியாகும் ஆங்கில அல்லது தமிழ் நூல் ஒன்றை மட்டும் அனுப்பி வையுங்கள். உங்கள் அபிலாஷையும் தீர்ந்துவிடும். எனக்கும் அது மகிழ்ச்சியாக இருக்கும்”.
அதன் பிறகு அற்புதராசாவின் தொடர்பாடல் குறைந்து கொண்டே போனது.
பின்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டும் விட்டது! ஏன் என்பதை என்னால் நிர்ணயம் செய்து கொள்ள முடியாமலே இருக்கிறது. குகராஜன் சுவிச்சர்லாந்து சென்றானா? அற்புத ராஜா வின் குடும்பத்துடன் இணைந்தானா? என்ற மிகுதி அம்சங்கள் சஸ்பென் சாகவே விடப்படவேண்டிய கட்டாய நிலைக்காக வருந்துகிறேன். அற்புதராசாவைப் பொறுத்தவரையில் நான் ஒரு கணக்கு வாத்தியார் போலும்!

Page 86
மொஸ்கோ அநுபவங்கள் 166
07. திருமதி வசந்தர் செல்வர484
லங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சூலர் பிரிவிலிருந்து டெலெக்ஸ் செய்தி ஒன்று இலங்கைத் தூதரகத்திற்கு (மொஸ்கோ) அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இலங்கைப் பிரஜையான திருமதி வசந்தா செல்வராசா என்பவர், கொழும்பு 12ல் வசித்து வரும் தன் தமையனான குணசேகரத்திற்கு அறிவித்துள்ளபடி தன்னை எப்படியாவது முயற்சி எடுத்துக் காப்பாற்றத் தவறினால், தான் குழந்தையுடன் மாடிவீட்டிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டு விடுவதாகப் பயமுறுத்தப் பட்டிருந்ததை அச்செய்தி சுருக்கமாக தெரிவித்திருந்தது.
அத்தோடு மொஸ்கோவில் உள்ள தொலைபேசி இலக்கம் 3172577 உடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்வதோடு அதுபற்றிய விபரங்களை அறிவிக்குமாறும் கேட்கப் பட்டிருந்தது. திருமதி வசந்தா செல்வரா சாவை இலங்கையிலிருந்து மொஸ்கோவுக்கு அழைத்து வந்த தொழில் முகவர் ஏமாற்றுவதாக அல்லது துன்புறுத்துவதாகவே அதன் தாத்பரியம் உணரப்பட்டது.
டெலக்ஸ் பத்திரத்தை என்னிடம் ஒப்படைத்து குறித்த அந்த ரெலிபோன் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு என்னைப் பணித்தார் மேலதிகாரி. மந்திரி காரியாலயத்திலிருந்து கிடைக்கப் பெற்ற அறிவுறுத்தலான படியால் அதற்கு அப்படி ஒரு மேலாட்சியும் துரித நடவடிக்கையும். துரிதமாகவே செயல்பட்டேன். கடமை என்பதற்காக மட்டுமல்ல; காவுகொள்ளப் பட இருந்த மனித உயிர்களை காப்பாற்றும் முயற்சியாகவுமே அது

167 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
அமைந்தது. இலக்கங்களை அழுத்தி தொலைபேசி அழைப்பு விடுத்தேன்.
கம்பீரமான ஒரு ஆண்குரல் “ஹலோ” என்றது.
“ஹலோ இங்கு சிறிலங்கா எம்பசியில் இருந்து பேசுகிறேன். உங்கள் வீட்டில் திருமதி வசந்தா செல்வராசா என்ற பெண்மணி இருக்கிறார் அல்லவா? அந்தப் பெண்ணுடன் கொஞ்சம் பேச முடியுமா ?”
“இலங்கையில் இருந்தா பேசுகிறீர்? சும்மா கரடி விடாதேயும்.”
“ஐயோ இலங்கையில் இருந்தல்ல. இலங்கைத் தூதரகத்தில் இருந்து பேசுகிறேன். உங்களுக்கு விளங்கவில்லையே. . . . . . . . . . | "
O 99. “உண்மையாகவா ? ஏன்?
“ஒரு முக்கிய சமாச்சாரம் அவருடன் தான் பேசவேண்டும்”
“ஓகோ முக்கிய சமாச்சாரமோ ? இலங்கையில் இருந்து இவ்வளவு தெளிவாகவா? யார் நீ?”
“இலங்கை வெளி விவகார அமைச்சில் இருந்து எங்களுக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அவர்களது உத்தரவுப்படி வசந்தா செல்வராசாவுடன் பேசி அவர் பற்றி சில தகவல்கள் அறியவேண்டி உள்ளது”.
“சும்மா ஏங் காணும் புலுடா விடப்பார்க்கிறீர்?"
"g Gal வீண் பேச்சு வேண்டாம். இது ←9፱ ፱óቻ கட்டளை. அந்த அம்மாவுடன் பேசவேண்டும். அவ்வளவு தான்"

Page 87
மொஸ்கோ அநுபவங்கள் 168
“பேச முடியாது” என்று உரத்துக் கூறிய குரல் நடுவே ஒரு பெண்குரல் பதட்டமாக” யார் பேசுறீங்கள்?" என்று ஒலித்தது.
s 歌 9. வசந்தா செல்வராசாவா ?
“ஆம்” என்பதற்கிடையில் ஒலிவாங்கி பறித் தெடுக்கப் பட்டது போலவும், பின்பு அந்த ஆண்குரலே ஏளனமாகக் குரல் கொடுத்தது! “யாரடா நீ. p
அத்தோடு துண்டிக்கப் பட்டும் விட்டது.
மீண்டும் டயல் செய்தேன். மணி அலறியது. யாரும் ஒலி வாங்கியை தூக்கவில்லை. தொடர்ந்து டயல் செய்து கொண்டே இருந்தேன்.
இப்போது ரிசீவரை உயர்த்துவது புரிந்தது. “ஹலோ இங்கு சபா ரெத்தினம். இலங்கைத் தூதரகத்தில் பணிபுரிந்து வரும் ஒரு அதிகாரி. மீண்டும் வசந்தா செல்வராசாவுடன் தொடர்பு கொள்ள முயலுகிறேன்!”
“என்ன மிஸ்டர், சேட்டை விடுகிறீரா?”
“சேட்டை விட நீரென்ன மச்சானா எனக்கு?”
色
“இங்கு பலர் இப்படித்தான் அடிக்கடி.”
“ஹலோ உமக்குப் புரியாதுபோல் இருக்கிறது அந்தப்பெண் வசந்தா இலங்கையில் வசித்துவரும் தன் தமையனுக்கு அறிவித்து அவர் விடயமாக எங்களைத் தலையிடும்படி கேட்டு கொழும்பு வெளிவிவகார அமைச்சுக்கு புகார் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் கட்டாயம் அந்தப் பெண்ணுடன் பேசியே ஆகவேண்டும்”.

169 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
“பேச முடியாது. என்ன செய்யப் போகிறீர்?”
“யானையின் பலம் அறியாத பன்றி, பாதை விலகாத கதையாகத்தான் இது இருக்கிறது. எப்படி உமக்குப் புரியவைப்பதென்றே எனக்கு தெரிய வில்லை.”
“எனக்கு எல்லாம் புரியும். உமது ஆலோசனை தேவையில்லை.”
“நன்றி. இதன் விளைவு அசாதாரணமாக இருக்கப் போகிறது. நன்றாக யோசித்துச் சொல்லும்.”
“முடியாது! முடியாது! முடியாது! பேசவே முடியாது!”
“இன்னும் ஒரு அரைமணித்தியாலத்தில் மீண்டும் டயல் செய்வேன். அதற்குள் நன்றாக சிந்தித்து உன் முடிவைக் கூறும். பின் விளைவுகளுக்கு நான் பொறுப் பாளியல்ல. கசப்பானதாக, கடுமையானதாக அது அமையலாம்.”
அரை மணித்தியாலத்தின் பின்பு மீண்டும் தொலைபேசித் தொடர்பேற்படுத்த முயன்றேன். இம்முறை பதிலே இல்லை. மூர்க்கனும் முதலையும் கொண்டதை விடா!
தொலைபேசி கூவி அழைத்தது. குரல் கொடுக்க யாரும் முன்வரவில்லை
‘என் செயலதாவது யாதொன்றும் இல்லை, இனித் தெய்வமே' என்ற பட்டினத்தடிகளது பாடல் என் ஞாபகத்தை தொட்டது.
வாயில் அதனை முணுமுணுத்துக் கொண்டே

Page 88
மொஸ்கோ அநுபவங்கள் 70
எனது அறிக்கையினை மேலதிகாரியின் கவனத்திற்குச் சமர்ப்பித்தேன். அதைவிட என்னால் செய்ய முடிந்தது ஒன்றும் இருக்கவில்லை.
அதனைப் படித்துப் பார்த்த அதிகாரி திடுக் குற்றார். இதன் பின்னணியில் ஏதோ தீவிரவாதம் இருக்கவே வேண்டும். ஏதாவது நடந்து விடும்முன் காரியத்தில் இறங்கிவிட வேண்டும் என்று கூறிவிட்டு, சர்வதேச புகழ்வாய்ந்த ரூஸ்ய துப்பறியும் படை யினரான கே.ஜி.பி. யிடம் உதவிக்கான கோரிக்கையை விடுத்தார்.
ஒரு நாட்டு அரசாங்கத்தின் பிரதிநிதிகளான தூதரகம் விடுத்த கோரிக்கையானபடியால், அதற்கு மதிப்பளித்து அடுத்த அரை மணிநேரத்தில் தூதரக வாயிலின் முன், ஜீப் வண்டியுடன் ஆஜர் ஆனார்கள் பொலிசார்.
வீட்டு முகவரியோ, வேறு விபரமோ தெரிந்திருக்கவில்லை.
தொலைபேசி இலக்க மொன்றே உள்ள ஒரே ஒரு தடயம். சிறிது நேரம் அவர்களுக்குள் ஏதோ சம்பாஷித்தனர்.
பின்னர் வெளியேறி விட்டனர். அரை மணி நேரம் கூட ஆகவில்லை. திருமதி வசந்தா செல்வராசா, மூன்று வயது மதிக்கத்தக்க அவரது பெண் குழந்தை மற்றும் பெட்டி உடுப்பு உடைமைகள் என்ற யாவற்றோடும், தூதரகத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.
நாங்கள் நினைத்ததுபோல் விடயம் பாரதூரமானதாக இருக்கவில்லை!

171 ஆரையம்பதி க.சபாரெத்தினம்
பார்வைக்கு அந்தப் பெண் ஒரு பைத்தியம் போலக் காணப்பட்டாள். ܖ
சுவிச்சர்லாந்தில் வேலை பார்க்கும் தன்னுடைய கணவனான செல்வராசா வின் வேண்டு கோட்படியே ஒரு தொழில் முகவர் மூலம் பணம் கட்டி மொஸ்கோ வரை கொண்டுவரப்பட்ட வசந்தாவும், பிள்ளையும் அவ்விடம் போய்ச் சேர்வதற்கான வசதியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர்.
சட்டபூர்வமாக விசா பெற்றுச் செல்வது இயலாத காரியமாதலால், இம்முறையற்ற விதத்தில் பணத்தை இறைத்து பயண முகவரின் கடற்கொந்தளிப்பு அமைதி யடைந்து சுமூகமான ஒரு சூழ்நிலை ஏற்படுமட்டும், மொஸ்கோவிலேயே தங்கவேண்டிய கட்டாய நியதி ஏற்பட்டது. வசந்தா மட்டுமல்ல; இவருடன் அந்தக் குடியிருப்பு வீட்டில் முகவரால் கொண்டு சிறை வைக்கப்பட்டவர்கள் பலர். அவர்களுள் சில பெண் களும் இருந்தனர்.
நாள் அடித்துக் கொண்டே போனதை மட்டுமே கருத்திற்கொண்ட அந்தப் பேதைப் பெண் வசந்தா, கொழும்பு கிராண்பாஸ் வீதியில் வசித்துவரும் தன் ஒன்று விட்ட தமையனான திரு. குணசேகரத்திற்கு இவ்வாறு ஒரு தப்பான தகவலை தொலைபேசி மூலம் வழங்கி இந்த சிக்கலை ஏற்படுத்தி இருந்தார்.
குணசேகரம் தலையிட்டு முகவரை வற்புறுத் தினால் அதன் பயனாக, தன் சுவிச்சர்லாந்துப் பயணம் விரைவில் கைகூடிவிடும் என்ற பேதைப் புத்தியினால் ஏற்பட்ட விபரீதமே இதுவாகும் a
வசந்தா ஒரு தமிழ் மாது. தூதரகத்தில் பணிபுரிந்து வந்த ஒரே தமிழரும் நானே. இதனால் லுசக்தாவுக்கும்

Page 89
மொஸ்கோ அநுபவங்கள் 172
பிள்ளைக்கும் தங்குமிடம் அளித்து உதவி புரியவேண்டிய கடமை எனதாகியது. எனது வீடோ பிரம்மச்சாரி விடுதி. என்னைத் தவிர அங்கு எனது இஷ்டதெய்வமான விநாயகப் பெருமானும் அவரது வாகனமெனக் கொள்ளப்படத் தக்க சில எலிகளுமே உள்ள ஜீவன்கள்! அன்று இரவு வசந்தாவுக்கு தூக்கம் பிடிக்க வில்லை. எதையோ பறிகொடுத்து விட்டவர்போல் பரக்கப் பரக்க விழித்துக் கொண்டு, சிந்தனையிலேயே மூழ்கி இருந்தார்.
நானோ அறிமுகமில்லாத ஆடவன். இடமும் புதிது. நடந்து முடிந்த சம்பவமும் திரைப் படம் போல் திகிலூட்டும் மர்மங்கள் நிறைந்தனவாக அமைந்தன. இருந்த வீட்டிலோ எல்லோரும் அறிந்தவர்கள், புரிந்தவர்கள். கூடவே பெண்களும் இருந்ததனால் சுமுக யியலில் அமைந்ததானதொரு திருப்தி வேறு இருந்தது. இங்கே நான் முற்றிலும் அறிமுகமில்லாத ஆண்மகன். எனது போக்கு கருத்து மன்நிலை எப்படி இருக்கும் என்பதும் தெரியாது. நடந்து முடிந்துவிட்ட விடயமும் என்னை தமிழ் திரைப்பட வில்லன் நம்பியாருக்குச் சமமான கொடியவனாக்கி விட்டி ருந்தது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது? ஆகவே வசந்தாவின் கண்களைத் தூக்கம் தழுவாது நின்றதற்கான காரணங்களை என்னால் உணர்ந்தறிய முடிந்தது.
உளமார அப்பேதையின் நிலைக்கு பச்சாதாபப் பட்டேன். வசந்தாவுக்கு மட்டுமல்ல; எனக்கும் கூட அது ஒரு அசெளகரியமானதும் சங்கடமானதுமான சூழலாகவே அமைந்தது.
குடும்பத்தராக இருக்கும் தூதரக அதிகாரி ஒருவரின் வீட்டில் புகலிடம் அளிக்கும் படியே நானும்

173 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
ஆலோசனை கூறினேன். ஆனால் அதனை ஓர் நகைச் சுவையாக எடுத்துக்கொண்ட அதிகாரி ஒருவர், நாசூக்காக “சபா உங்கள் மீது எங்களுக்கு நிறைய நம்பிக்கை உண்டு; சந்தேகமே இல்லை. ஆகவே பயப்படவேண்டாம். தமிழ் தெரியாத எங்களுடன் அவர் எப்படி. ?” என்று காரணம் காட்டித் தட்டிக்கழித்து விட்டார்.
அன்று வெள்ளிக்கிழமை. எனக்குச் சுத்த போசனம். காலையில் சமைத்த உணவு மீதம் இருந்தது. சிறிய அளவு சோறும், வேறும் ஏதோ மேலதிகமாகத் தயாரித்த உணவும் கொள்ளும்படி வசந்தா வைக் கேட்டேன்.
‘நான் ஒருபோதும் மச்சம் மாமிசம் உண்பதில்லை, ஐயா எனக்கு வேண்டாம்’ என்று மறுத்து விட்டார் வசந்தா.
“இன்று நானும் சுத்த போசனம் தான். சைவச் சாப்பாடுதான் சமைக்கப்பட்டிருக்கிறது. பரிமாறுங்கள்; பிள்ளைக்கும் ஊட்டி விடுங்கள்” என்றேன்.
“எனக்குப் பசி இல்லை, ஐயா வேண்டாம்” என்றவள் கவலை தோய்ந்த முகத்தோடும் கண்ணிர் ததும்பும் பாவனையிலுமே காணப்பட்டாள்.
பிள்ளையோ தனக்குப் பசிக்கிறது என்று தாயைத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தது. “உங்களுக்கு வேண்டாம் என்றால் பிள்ளைக்குப் பசிக்கிறது. எடுத்துப் பக்குவமாக கொடுங்கள்” என்றேன். இவை ஒன்றிலும் கவனம் கொள்ளாத அந்தச் சிறு குழந்தை உணவை ரசித்துச் சுவைத்து உண்டது. மேலும் வேண்டும் என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டது.

Page 90
மொஸ்கோ அநுபவங்கள் 174
பசி உள்ளவன் ருசி அறியான் என்ற வார்த்தையில்தான் எத்தனை அர்த்தப் பொதிவு!
நான் சமைக்கும் உணவு எனக்கே திருப்தி தராதபோது பசியுடன் இருந்த அந்தக் குழந்தைக்கு அது அமிர்தம் போன்று இருந்தது போலும்! அந்தப் பிஞ்சு உள்ளத்தைப் பொறுத்தவரையில் நான் ஒரு நளமகாராஜன்! நானும் தமிழன். இருவரும் ஒரே சாகியம். இலங்கையில் இருந்து இப்போது பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறோம். ஆகவே என்னை வேற்றுமை இன்றி உங்கள் சகோதரனாக நினையுங்கள். வீண் பயத்தைப் போக்குங்கள். முதலில் எனது வார்த்தையை நம்புங்கள்” என்று பேச்சை தொடங்கி மெல்ல மெல்ல அவளது சரித்திரத்தை கேட்டு அறிந்து கொண்டேன்.
யாழ்ப்பாணம் நல்லூர் சொந்த இடம். வறுமையான குடும்பம். ஒரே ஒரு ஆண் சகோதரன். மூத்தவன். அவனே குடும்பத்தின் உழைப்பாளி, வழிகாட்டி, ஊன்றுகோல் எல்லாம். அரச வான்படை மேற்கொண்ட விமானத்தாக்குதல் ஒன்றில் சிக்கி துடிதுடித்து இறந்துபோனான். தந்தையும் இல்லை. தாயும் இல்லை. ஒன்று விட்ட அண்ணனான குணசேகரம் ஒருவரே இன்று எல்லாமுமாய் வாழ்ந்து வருகிறார். அதனால்தான் தன் பாதுகாப்பை உறுதிப் படுத்த அவருக்கு செய்தியைப் பரிவர்த்தனை செய்து விட்டாள் வசந்தா.
அன்றிரவு மின்சாரத்தை அணைக்கவில்லை. நான் படுக்கை ஒன்றைக் கொடுத்து உறங்கும் படி கூறிவிட்டு அப்புறமாகச் சென்று சரிந்து படுத்துக்கொண்டேன்.
அன்று இரவு முழுவதும் அப்பெண்

175 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
உறங்கவில்லை போலும்! விழித்த போதெல்லாம் வேதனையுடன் கண்ணீர் சிந்திக் கொண்டே இருந்தார்.
தன்னை எப்படியும் பழைய இடத்திற்கே கொண்டு போய் விட்டு விடும்படியும், அங்கே தான் சந்தோஷமாக இருக்க வேறு சினேகிதிகள் உள்ளார்கள் என்றும் கேட்டுக் கொண்டாள். அங்கே தான் இருந்த வீட்டில் அடுத்து என்ன நிகழப் போகிறதோ என்ற பயத்தில் எல்லோரும் நிலை குலைந்து போய் இருப்பதாகவும், என்னோடு வீணாக வாதிட்டவரை எல்லோரும் சேர்ந்து எச்சரித்ததாகவும் கூறினாள். அதனால் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக தொலைபேசியை பாவிப்பதற்கு எனது அனுமதியையும் கோரினாள். அவ்வாறே தொடர்பு கொண்டு, என்னைப் பற்றியும், தனக்கு ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ள வசதிகள் பற்றியும் பொலிசாரால் கொண்டுவந்து இறக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற விபரங்கள் அனைத்தையும் கூறி அவர்களை பயம் களைந்து ஆறுதலடையும் படியும் அறிவுறுத்தினாள்.
என்னுடன் வாதித்தவர் மதன் என்றும் அவர் இப்போது தன் தவறை உணர்ந்து என்னிடம் மன்னிப்புக் கேட்க விரும்புவதாகவும் என்னை அத் தொலைபேசி தொடர்பினிலேயே கதைக்கும்படியும் கேட்டுக் கொண்டாள்.
ரிசீவரைப் பெற்று “ஹலோ” என்றேன். “ஐயா என்னை மன்னியுங்கள்”
“அப்போதே சொன்னேன்! எத்தனை தடவைகள் கூறியும் நீங்கள் கேட்கவில்லையே!”
“ஆம் ஐயா! பிழை என்னுடையதுதான். இங்கே

Page 91
மொஸ்கோ அநுபவங்கள் 176
அடிக்கடி இவ்வாறுதான் பலர் தொலைபேசியில் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அதனால்தான்.............
“உண்மை தான். ஆய்ந்து ஓய்ந்து பாராக் காரியம் தான் சாகக்கெடும் என்பார்கள். எதற்கும் அந்தப் பெண்ணுடன் கதைக்க விட்டிருந்தால் அந்த இடத்திலேயே இந்தப் பிரச்சினை முடிந்திருக்கும். வீணாக உங்களுக்கும் எங்களுக்கும் வேலை மினக்கேடு ஏற்பட்டிருக்காதே! அரசாங்க விடயமாதலால் விட்டு விடவும் முடியாது. எத்தனை தடவைகள் முயன்றேன்”.
“நீங்கள் என்னை மன்னித்து விட்டதாக ஒரு வார்த்தை கூறுங்கள். அப்போதுதான் என் மனம் நிம்மதி அடையும். இப்படியான நல்ல மனிதரை அறியாது மடத்தனமாக நடந்து கொண்டுவிட்டேன். இப்போது உங்களுடன் பேசவே எனக்குக் கூச்சமாக இருக்கிறது.”
“இப்போது தவறை மானசீகமாக உணர்ந்து விட்டீர்கள் தானே! இதுவே பெருந்தன்மை. பெருந் தன்மை மனிதனுக்கு ஏற்படும்போது மன்னிப்பும் கூடவே கிடைத்து விடுகிறது. பழையன மறப்போம். எனக்கு உங்கள் மீது கோபம் இல்லை.”
பின் நாட்களில் மதன் அடிக்கடி தொலைபேசி யில் என்னுடன் அன்பொழுக குசலம் விசாரித்து, சமய விசாரணைகள் கூட நடத்துவார்.
மதன் ஒரு சிறந்த கிறிஸ்தவர். காங்கேசன் துறையைச் சேர்ந்தவர். கிறிஸ்தவராக இருந்த போதிலும், கிறிஸ்தவத்தில் முற்போக்கு வாதத்தை ஏற்பவர். அர்த்தமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் எவற்றையும் தீவிரமாக எதிர்ப்பவர். பைபிளில் கூறப்பட்டுள்ள புனித வசனங்களுக்கிடையே மெய்ப்

177 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
பொருள் கண்டுணரும் ஓர் ஆர்வலர். ஆனால் பிற சமயக் கருத்துக்களை இகழ்பவர் போலும் இந்து மதத்தைச் சார்ந்த என்னுடன் இந்து மதத்தில் ஆன்மீகம் பற்றிக் கூறப்பட்டுள்ள சில ஐய வினாக்களை எழுப்பி அதற்கு அவர் எதிர்பார்க்கும் ஒரு பதிலையும் தன் மனதில் வைத்துக் கொண்டு ஏளனம் செய்து விடும் எத்தனிப்புடன் அணுகுவதுண்டு. அவ்விதம் அவர் நடந்து கொள்வதற்கு, என் பதில் என்றும் அமைந்ததில்லை.
காலையில் எழுந்து கடன்களை முடித்துக் கொண்டு கடமைக்குச் செல்ல ஆயத்தமானேன். அதற்கு முன் உயர் அதிகாரியின் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வசந்தாவின் நிலைமை யையும் முன்பு இருந்த இடத்தில் அவர் தொடர்ந்தும் வசித்து வருவதால் பாதிப்பு ஒன்றும் இல்லை என்றும் விளக்கிக் கூறினேன். ஆகவே வசந்தாவின் விருப்பப்படி அவரையும் குழந்தையையும் அங்கேயே போய் இருக்க அனுமதிக்கும்படியும் கேட்டுக்கொண்டேன். உடுப்பு முதலிய பொருட்களோடும் குழந்தையோடும் பொதுப்பயணச் சாதன மொன்றில் பயணிப்பதில் உள்ள சிரமத்தை விளக்கி, தூதரக வண்டியை அனுப்ப உதவும் படியும் கோரிக்கை விடுத்தேன். அதன்படி வாகனத்தில் தூதரகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று இருத்தி விட்டு தொலைபேசி மூலம் தொழில் முகவருக்கு அழைப்பு விட்டு, வருகை தரச் செய்து வசந்தாவையும் பிள்ளையையும் கூட்டிச் செல்லுமாறு பணித்தோம்.
தொழில் முகவர் சுரேன் என்பவருடன் மதனும் அங்கு வந்தார். வசந்தாவையும் குழந்தையையும் விரைவில் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கும் படி கேட்கவே, அவர் அதற்கு மேலும் இருவாரங்களில் சுவிர்ச்சலாந்துக்கே இருவரையும் தன்னால் அனுப்பி
12

Page 92
மொஸ்கோ அநுபவங்கள் 178
வைத்து விட முடியும் என்று கூறிய பசப்பு வார்த்தையை நம்பி, வசந்தா ஏமாறாமல் இருக்க நான் தலையிட்டு, “இல்லை இல்லை! அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பி விடுங்கள்” என்றேன்.
இதுதொடர்பாக முகவரிடமிருந்து ஓர் ஒப்பந் தத்தையும் கைச்சாத்திட்டுப் பெற்றுக் கொண்டோம்.
வசந்தாவும் பிள்ளையும் அவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக முகவர் விடுதிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
முகவரோ செவிடன் காதில் ஊதிய சங்காக அவ்விடத்திலேயே எல்லாவற்றையும் அலட்சியமாக விட்டுவிட்டார்.
இரண்டு வாரங்கள் என்ன; இரண்டு மாதங்கள் சென்ற பின்பும் வசந்தாவால் எங்கும் போய்விடமுடியவில்லை.
சுவிர்ச்சலாந்தில் இருக்கும் வசந்தாவின் கணவர் இதனை அறிந்து அங்கிருந்தபடியே எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். முகவர்களின் அயோக்கியத் தனமான போக்கினை உணர்ந்து கொண்ட அவர், பின்பு தானே பண முதலீடு செய்து விமானப் பயணச்சீட்டொன்றை இலங்கையில் இருந்து பெற்று அனுப்பி, வசந்தாவையும் பின்ளையையும் இலங்கைக்கே திருப்பி அழைத்துக்கொண்டதாகத் தகவல்.
இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்பு மதன் மிகுந்த மரியாதையுடனும் அன்னியோன்யமாகவும் பழகி வந்தார்.

179 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
ga) மாதங்களின் பின்பு ●@ நாள் இவ்வாறானதொரு கடமை நிமித்தம் பொலிஸ் நிலையத்தில் மதனை சந்திக்க நேரிட்டது. இதன் விபரத்தை பின்னர் தொகுக்கப்பட்டுள்ள மரிய சீலன் பற்றிய சரித்திரத்தில் வாசகர்கள் அறிந்துகொள்ளலாம்.
08. ஜெபர4ச் சிங்கத்தின் மரணம்
காலை நேரம் சுமார் 10.00 மணி இருக்கும். சராசரி உடலமைப்பும், கம்பீரமான பார்வையும் கொண்ட இளைஞன் ஒருவன்; வயது ஏறத்தாழ 35 இருக்கலாம். பெயர் செல்லத்துரை என்று அழைக்கப் பட்ட ஜெபராச சிங்கம்.
யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவன். தூதரகத்துக்கு வந்து ஒரு முறைப் பாட்டைக் கூறினான்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து தொழில் முகவரால் மொஸ்க்கோவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், ஜேர்மனிக்கு போய்ச் சேருவதே தன் குறிக்கோள் என்றும் அதற்காகவே முகவர் தன்னிடமிருந்து பணம் பெற்றார் என்றும் நடப்பு நிலைமைகளை அவதானித்த அளவில் மொஸ்கோவிலிருந்து மேற்கு நாடு எதற்கும் போகக் கூடிய சாத்தியம் தென்படவில்லை என்றும், அதன் காரணமாக தான் இலங்கைக்கே திருப்பிப் போய்விடத் தீர்மானித்து முகவரிடம் தன் கருத்தைக் கூறியபோதும் அவர் சாட்டுப் போக்குக் கூறி தட்டிக்கழித்து வருகிறார், என்றும் தொடர்ந்தும்; தான் அவரை கரைச்சல் கொடுத்து வருவதினால் ஆத்திரமுற்று

Page 93
மொஸ்கோ அநுபவங்கள் 180
இருதடவைகள் தன்னை நையப்புடைத்து விட்ட தாகவும், மேலும் அதே வீட்டில் தொடர்ந்து தங்கி இருப்பின் அது தன் உயிருக்கே ஆபத்து விளைவிக்க கூடும் என்பதனால் பொலிசில் சென்று தான் சரணடைந்து விட்டதாகவும் கூறினான்.
இரவு முழுவதும் பொலிஸ் நிலையத்தில் தங்கி இருந்த ஜெபராசசிங்கத்தை காலையில் பொலிசார் ஜீப் வண்டியில் ஏற்றிக் கொண்டுவந்து தூதரக வாயிலில் இறக்கி விட்டுச் சென்று விட்டதாகவும் கூறினான். இப்போது தனக்கு தங்கி இருக்க ஒரு இல்லிடமோ, தன்னை தாபரிக்க பொருளாதார வசதி எதுவுமோ இல்லாதபடியால் தான் இலங்கைக்குத் திரும்பிப் போகும் வரை உண்டி, உறைவிடம் அளித்து காப்பாற்றி உதவும்படி கோரிக்கை விடுத்தான்.
இலங்கை அரச பிரமாணங்களின் படி இதுவரை இவ்வாறானதொரு நிலைக்குத் தள்ளப் பட்டுள்ள எவருக்கும் உதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை. விசேட காரணங்கள் ஏதும் இருப்பின் அதுவும்; அமைச்சின் முன் அனுமதியை பெற்றுக் கொண்ட பின்பே நிதிச் செலவீனம் எதையும் அரசாங்கக் கணக்கொன்றிற்கு வரவு வைக்கப்படலாம். பாவம்! செல்லத்துரைக்கு இது ஒன்றுமே தெரியாது. தெரிய வேண்டிய நியாயமோ அவசியமோ கூடஇல்லை. இருந்தும் இதனை எடுத்துக்கூறி அவனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் விளக்கினேன்.
பயணமென்று புறப்பட்டு வந்துவிட்ட பின்பு, எல்லாவற்றிற்கும் விட்டுக் கொடுத்தும், நெகிழ்ச்சி யடைந்தும் ஒத்துப்போவதே சிறந்த வழி. கருமம் எதுவானாலும் எண்ணியபின்பே துணிதல் வேண்டும்.

181 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
துணிந்துவிட்ட பின்பு எண்ணுவம் என்பதினால் இழுக்கே இலாபம். ஆகவே, பிழை யார் பக்கம் என்பதல்ல இப்போது பிரச்சினை. பிழையை நீக்கி சரியானதைப் பெற்றுக் கொள்வதெங்ங்னம் என்ற நோக்கிலேதான் எமது கருமங்கள் யாவும் அமைய வேண்டும். பல மைல்களுக்கு அப்பால் இருந்து இங்கு வந்து சேர்ந்துவிட்ட பிறகு சண்டை, சச்சரவு, விடாப்பிடி, விதண்டாவாதம் என்ற எதனையும் கைக்கொள்ளாமல் சகிப்புத் தன்மையுடன் முகவரோடு சேர்ந்து ஒத்துழைத்தே காரியத்தைச் சாதிக்க வேண்டும். எந்த ஒரு தொழில் முகவரது அணுகுமுறையும் இவ்வாறு தான் இருக்கும். பாவத்திற்கு அஞ்சாத அவர்கள் நீதி நியாயத்தை மதிக்க மாட்டார்கள். பணநோட்டுக்களே அவர்களுக்கு எல்லாம். நேர்மை என்றால் என்ன? அது கிலோ எவ்வளவு என்றே கேட்பார்கள். அப்படி யானவர்களுடன் நேராக மோதினால் உங்களுக்கே நட்டம் ஏற்படும். காரணம் உலகம் பணம் படைத்த தன்மை ஒன்றுக்குப் பல்லை இழிக்குமே தவிர, உண்மை நேர்மை என்ற எதற்குமல்ல. ஆகவே பேசாமல் விட்டு விட்டு அவர்களுடன் போய் சேர்ந்து சமாதானமாக இருந்து கொண்டு மெதுவாக முயற்சி செய்யுங்கள்” என்றேன்.
மீண்டும் மீண்டும் தன் மனதில் ஏற்பட்ட அந்தக் கொலைப் பயமுறுத்தலையே சொல்லி வெளிப்படுத்திக் கொண்டு, அதனால் தன்னால் திரும்பவும் அவ் வீட்டுக்குச் சென்று தங்கி இருக்க முடியாதென்று மறுத்து விட்டான்.
அப்படியானால் பிரச்சினையை எவ்வாறு தீர்த்து வைப்பது? என்று கேட்டேன்.
எப்படியாவது உதவி செய்யும் படியே மீண்டும்

Page 94
மொஸ்கோ அநுபவங்கள் 182
வற்புறுத்திக் கேட்டுக்கொண்டான்.
“இதுவோ முற்றிலும் உங்கள் தனிப்பட்ட விவகாரம். அத்தோடு முகவர்தான் உங்களை இங்கு அழைத்து வந்தவர். அவரது நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் நீங்களும் இங்கு வந்திருக்கிறீர்கள். ஆகவே அவரது கட்டுப்பாட்டில் அவரது ஆலோசனைப் படிதான் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். அதுவும் அவர் முடியாதென்று கூற வில்லையே? நீங்களாக இடைநடுவில் குழப்ப விரும்புகிறீர்கள்” என்றேன்.
“அவர்கள் என்னை நிச்சயம் கொலை செய்து விடுவார்கள். எனக்குத் தெரியும். அதனால் நான் திரும்பிப் போகவே வேண்டும்.”
“இதற்கு வழி எனக்குத் தெரியவில்லை”
“முகவர் வீட்டுத் தொலைபேசி இலக்கம் என்னிடம் உண்டு. தயவு செய்து அவருடன் தொடர்புபட்டு கதையுங்கள்.”
செல்லத்துரையின் இந்த யுக்தி எனக்கும் சரியானதாகவே தெரிந்தது. அந்த இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தினேன். முகவர் குமாரநாயகத் துடன் பேசக் கேட்டேன். குரலுக்குரியவரே குமார நாயகமாகவும் இருக்கலாம். ஆனாலும் "அவர் இல்லை" என்றே பதில் வந்தது.
“யார் பேசுகிறீர்கள்? அவர் இப்போது எங்கிருக்கிறார்?"
“அவர் லெனின்கிறட் போயிருக்கிறார். நாளைதான் வருவார்.”
“அவரோடு சம்பந்தப்பட்ட விடயங்களை

183 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
வேறுயாருடன் பேசமுடியும்? இலங்கைத் தூதரகத்தில் இருந்து பேசுகிறேன்.”
“என்ன பிரச்சினை?"
செல்லத்துரை என்றொருவர், கொக்குவில். இங்கு வந்து நிற்கிறார். இலங்கைக்கு திரும்பிப்போக விரும்புகிறார். "
“அது எங்கள் பிரச்சினை"
“அதனால் தான் தொலைபேசிமூலம் பேசுகிறன்"
“அதற்கு இப்போது என்ன?”
“ஒன்றும் இல்லை. செல்லத்துரையை இங்கு தத்தளிக்க விட்டுவிடாமல் விரைவில் திருப்பி அனுப்பி வையுங்கள்.”
“அது உங்களுக்கு ஏன்?”
“இது இலங்கைத் தூதரகம். செல்லத்துரை இலங்கைப் பிரஜை. தன்னுடைய பிரச்சினையைத் தெரிவித்து தீர்த்து வைக்குமாறு முறையீடு செய்துள் ளார். அதனால் தலையிடவேண்டிய கட்டாயத் தேவை.”
“யாராக இருந்தாலும், எமது சொந்தப் பிரச்சினையில் தலையிட முடியாது"
“அப்படியா? எது சொந்தப் பிரச்சினை? ஊரானின் பணத்தை சுருட்டிக்கொண்டு ஊர் சுற்றிக் காட்டிவிட்டு நடுவீதியில் நிறுத்தி வைத்துள்ளது சொந்தப் பிரச்சினையா? இலங்கைப் பிரஜை ஒருவர் வெளிநாடொன்றில் நீதியான பிரச்சினை ஒன்றை எதிர்நோக்கும் பட்சத்தில் எந்தப் பிரச்சினையாக

Page 95
மொஸ்கோ அநுபவங்கள் 184
இருந்தாலும் அதில் தூதரகம் தலையிட்டு நீதி பெற்றுக் கொடுக்கவேண்டிய பொறுப்பு உண்டு. நீங்கள் நீதியாக நியாயமாக நடந்திருந்தால் மட்டுமே அது சொந்தப் பிரச்சினை.”
“ஐயா, ஆத்திரப் படாதீங்கோ. இப்போ முகவர் இங்கில்லை. வந்ததும் சொல்கிறோம் அவருக்கு”.
"அப்படியல்ல; அவர் இல்லா விட்டால் அவரது பிரதிநிதியாவுதல் இங்கு வந்து விடயத்தை செட்டில் செய்யவேண்டும்.”
“சரி இரண்டு பேரை அனுப்பி வைக்கிறன்.”
மூன்று மணித்தியாலங்கள் கழிந்தும் எவரும் இன்னும் வந்ததாக இல்லை. மணி 1.30 க்கு மேல் போய்க் கொண்டிருந்தது. முகவரின் திருகுதாளம் எனக்கும் சிறிது புரிந்தது. மீண்டும் டயல் செய்தேன். “நீங்கள் வருவதா அல்லது பொலிஸ் மூலம் வரவழைப்பதா?”
“ஐயா ஆட்கள் புறப்பட்டு விட்டார்கள். இப்போது நடு வழியில் பயணம் செய்து கொண்டிருப் பார்கள் என்று எண்ணுகிறேன்.”
“இவ்வளவு நேரமாகவா ? இன்னும் அரைமணித்தியாலத்தில் ஆட்கள் வந்து சேர்ந்தால் சரி. இல்லையென்றால் பொலிஸ் நடவடிக்கை மேற்கொள்ளும்”
இருவரல்ல; மூவர் சேர்ந்து வந்தனர். அவர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறினேன்.
“தொழில் முகவர்களால் எங்களுக்கு இங்கு

185 ஆரையம்பதி க.சபாரெத்தினம்
பெரும் தொல்லை. பணத்தைப் பெற்றுக் கொண்டால் பக்குவமாக அந்தப் பணியை நிறைவேற்றிக் கொடுப்பதுதான் நாணயம். அதைவிடுத்து சுற்றுமாற்று செய்வதால் பெயரும் கெடும். பிரச்சினையும் வளரும்.”
“முகவர் திங்கட்கிழமைதான் வருவார். வந்ததும் டிக்கட் புக் பண்ணி இவரை அனுப்பி விடுவோம். அதுவரை இவர் வந்து எங்களுடன் இருக்கட்டும்.
எனக்கும் அது சரியாகவே தெரிந்தது.
“இடம் இல்லாத செல்லத்துரை! நீ எங்கே போவாய்? ஏதோ இரண்டு மூன்று நாட்களுக்கு இவர்களுடன் போய் இருந்து விட்டு, திங்கட்கிழமை முகவர் வந்து மேலும் டிமிக்கி விட்டால் திரும்பவும் வாரும்” என்றேன்.
“நான் அங்கு போக ஏலாது. என்னைக் கொலை செய்து போடுவானுகள்’ செல்லத்துரை.
“ஐயா இவருக்குக் கொஞ்சம் மூளை பிசகு. அதுதான் ...” என்றார்கள் அந்த மூவரும்.
“இல்லை இல்லை மூளை சரியாக தொழில் படுவது செல்லத்துரைக்குத் தான். அவன் பைத்தியமல்ல. நீங்களும் அவனைப் பைத்தியமாக்க வேண்டாம்” என்றேன்.
செல்லத்துரை இறுதிவரை அவர்களோடு இசைந்துபோக மறுத்துவிட்டான்.
“அப்படியானால் இரவைக்கு எங்கே தங்கப்போகிறீர்?”
"பொலிசில் தங்குவேன் ஐயா"

Page 96
* Charaivasar guardialdir 186
"அப்ப சரி பொலிசில் சென்று தங்கி இருந்து விட்டு திங்கட்கிழமை காலை 10 மணிக்கு செல்லத்துரையும், டிக்கட் ஒழுங்குடன் முகவரும் இங்கு வாருங்கள். எல்லோருமாகப் பேசித் தீர்ப்போம்"
வந்த மூவரும் செல்லத்துரையை அழைத்து தனியாக ஏதோ கதைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் செல்லத்துரை சம்மதித்ததாகத் தெரியவில்லை.
பின்பு எல்லோரும் சேர்ந்து சென்று விட்டார்கள்
திங்கட்கிழமை செல்லத்துரையோ முகவரோ மூவரோ எவருமே பிரசன்னமாகவில்லை.
“பிரச்சினையை தமக்குள் சுமுகமாக தீர்த்து விட்டார்கள் போலும்” என்று நானும் எண்ணினேன்.
அடுத்தநாள் செவ்வாய்கிழமை, பழையவர்கள் மூவரோடு மற்றுமொருவரும் சேர்ந்து நால்வராகப் பிரசன்னமானார்கள்.
“аgшт, செல்லத்துரை Lont guløb இருந்து குதித்து தற்கொலை செய்து விட்டான்”
“நேற்றிரவு சம்பவம் இடம் பெற்றது. ஜேர்மனியில் உள்ள அவரது சகோதரனுக்கு அறிவித்துள்ளோம்.”
செய்தியைக் கேட்டதும் என்னை நான் மறந்தேன்.
"ஒரு உயிர் அவம் போய்விட்டதா? நீங்கள் கொலை செய்துவிட்டு வந்து இங்கே போலிச்சாட்டுக் கூறுகிறீர்கள். அன்று அவன் படித்துப் படித்துக் கூறினானே போனால் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என்று. அவனை பைத்தியம் என்று கூறி

187 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
படுகொலை செய்து விட்டீர்கள். பிரச்சினை செற்றில் பண்ணப் பட்டுவிட்டது. சமாதானமாக அல்ல. சாமார்த்தியமாக” எனது உறவினர் ஒருவர் இறந்து விட்டது போன்ற துயரம் என்னுள் உருவெடுத்தது!
செல்லத்துரையின் முகபாவமும் அவனது பேச்சும் என் மனக்கண் முன்னால் வந்து வந்து போயின.
“என்ன என்ன பொறுப்புகளை உடையவனோ! யார் யாருக்கு கடமை செய்ய வேண்டியவனோ! கொலைகாரக் கும்பல் பிணமாக்கி விட்டதே! நான்காம் மாடியில் இருந்து விழுந்து சாவதா? இது சுத்தப் பொய்” என்று உரத்துக் கூக்குரல் இட்டதும் வந்த நால்வரும் மெளனமாக எந்தப் பதிலும் கூறாதிருந்தனர். அவர்கள் ஆள் ஆளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்
“ஜேர்மனியில் உள்ள சகோதரன் வந்ததும் இங்கு அழைத்துவாருங்கள்"
“ஆகட்டும்” என்றார்கள்.
இரண்டு நாட்களில் கணேச மூர்த்தி, மனைவி சமேதராய் எழுந்தருளினார். s வாட்ட சாட்டமான உருவம். அவசர அவசரமாக முடித்து விட்டு ஓடிவிடும் துரிதம். அவரது செய்கையில் தெரிந்தது. அவரது பாவனை உயிரின் மதிப்பை பணத்தில் அளவிடக் கூடிய ஒருவரெனக் காட்டியது! கணேச மூர்த்தியை அழைத்து செல்லத்துரை உங்களுக்கு தம்பியா?" என்று கேட்டேன்.
“ஒன்று விட்ட தம்பி. தகப்பன் இரண்டு; தாய் ஒன்று.”

Page 97
மொஸ்கோ அநுபவங்கள் 188
வேறு நெருங்கிய உறவினர் யாராவது இல்லையா ?”
இல்லை" அவருக்கு மூளை சரியில்லை. குடும்பத்திலும் பிசகு'
பதில், சகோதரத்தின் பாசத்தை வெளிப்படுத்து வதாக இருக்கவில்லை!
சரி, செல்லத்துரையின் மரணத்தில் உங்களுக்கு ஒரு சிறு சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கூறிவிடுங்கள். முடிந்த உதவியை நான் செய்கிறேன்"
இடையே விம்மி அழ ஆரம்பித்து ஏதோ கூற முற்பட்ட அந்த மங்கை நல்லாளை (தனது சம்சாரத்தை) சாட்சாத் கணேசமூர்த்தி அவர்கள் அதட்டலால் அடக்கி அப்படியே அவளைச் சிலையாகச் சமைத்து விட்டார்! பின்பு என்னை நோக்கி “எங்களுக்கு சந்தேகமில்லைப் பாருங்கோ. அவன் இந்த மாதிரித்தான்” என்று கனிவாகக் கூறினார்.
நடந்து முடிந்த ஒவ்வொரு அம்சத்திலும் செல்லத்துரை அவமே கொலை செய்யப் பட்டிருந்ததற்கான பல நம்பகக் காரணங்கள் இருந்தன. இருந்தாலும் என்ன செய்வது?
என் மனம் ஆறுதல் அடையவில்லை!
“செல்லத்துரையே என்னை மன்னித்து விடு' என்று மானசீகமாக எனக்குள் சொல்லிக்கொண்டேன்,எனது இதய ஆறுதலுக்காக,

189 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
09. அழ2ஆல்வரிஅழுகுதுை
மொஸ்கோ நகரில் உள்ள அதி பெரிய மனநோயாளர் ஆஸ்பத்திரி கஷன்கோ வைத்திய சாலையாகும். இப்போதும் இது “அலெக்சீப்” மன நோயாளர் வைத்தியசாலை என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இந்த மனநோயளர் ஆஸ்பத்திரியின் 33ம் இலக்க சிகிச்சை விடுதி (Ward) க்குப் பொறுப்பாக இருந்த பெண் வைத்திய அதிகாரி தொலைபேசி மூலம் தூதரகத்திடம் தொடர்பு கொண்டு அறிவித்த பிரகாரம் இலங்கைப் பெண்ணொருத்தி செரமித்தியோ வ் சர்வதேச விமான நிலையத்தில் தத்தளித்துக் கொண்டி ருந்ததாகவும், அவர் ஒரு மனநோயாளி என்று விமான நிலைய அதிகாரிகள் கருதியதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், தற்போது குணம டைந்து நல்ல நிலையில் இருப்பதனால் உடனடியாக அவரை வைத்திய சாலையிலிருந்து எடுத்துச்செல்ல தவறினால் - தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் மேலதிகக் கட்டணத்தை இலங்கைத் தூதரகமே செலுத்தவேண்டும் என்றும் அர்த்தம் கொள்ளப்பட்டது. தாமதத்தை சாட்டாக வைத்து கொடுப்பனவுக்கான உண்டியல் படிவத்தை (Bi) அனுப்பி வைத்து விட்டால், பின்பு பொறுப்புகள் யாவும் தூதரகத்தைச் சார்ந்ததாகவே ஆகிவிடும்.
ரூஸ்யாவின் அரச நிறுவனங்களிலும் ஏனைய வங்கிகள் போன்ற அரச சார்பு நிறுவனங்களிலும் 1992ம் ஆண்டுக்குப் பின்னர் அங்கு பணிபுரிந்து வரும் அதிகாரிகள் தத்தமது விருப்பின்படி மனம் போன போக்கில் எல்லாம் நடைமுறை விதிகளை ஏற்படுத்தி நடத்திக்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக

Page 98
மொஸ்கோ அநுபவங்கள் 190
வெளிநாட்டவர் சம்பந்தப்படும் விடயங்களில் ஈவிரக்கமின்றி எவ்வளவுக்கு அதிக கடும்போக்குகளைக் கடைப்பிடித்து அவர்களிடமிருந்து பணம் அறவிட முடியுமோ அவ்வளவுக்கு பணவசூல் செய்யப் படுகின்றது.
உதாரணமாக ரூஸ்ய வெளிநாட்டு வர்த்தக வங்கி (Bank of foreign trade of Russia) gou 6TGigli கொண்டால், நாளாந்தம் புதிய புதிய நடைமுறைகள் அமுல் செய்யப்படுவதைப் பார்க்கலாம். சாதாரணமாக வங்கிகள் போன்ற உயர்தர வர்த்தக நிலையங்கள், தனது வாடிக்கையாளர்களின் உரிமையைக் கண்ணியப் படுத்தி, அவர்களது தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதில் அதிக அக்கறையோடு செயல் பட்டு வருவதே முறைமையாகும். அதன் மூலம் அத்தாபனம் தனக்கும் நாட்டுக்கும் 60-פ( up t"60נ( Lנ ஈட்டித் தருவதோடல்லாது நற்பெயரையும் பேணிவரும். ஆனால் இங்கோ மறைமுகமான சுரண்டல் இடம் பெறுவதையும் வாணிப அபிவிருத்தி குன்றுவதையும் அவதானிக்கலாம். அரச இயந்திரம் அச்சாணி உடைந்து செயலூக்கமற்றுக் கிடப்பதால் உத்தியோகத்தர்களின் மேலாட்சி இங்கு அதிகரித்துள்ளது.
மொழிப் பரிவர்த்தனையாளர் நால்வரும் ஏதேதோ காரணங்களுக்காக அன்று தூதரகத்திற்கு சமூகம் கொடுக்காத காரணத்தினால் அங்கு மெசஞ்சர் (Courier) ஆகப்பணி புரிந்துவரும் கோஸ்தியா என்றழைக்கப்படும் திரு. சொறக்கின் மிக்கேல் Gosmt Göravaraär ffîGaoTintaj (Sorokin Michael Constantinovich) என்ற ரூஸ்யரை அழைத்துக் கொண்டு அவ்விடம் புறப்பட்டுச் சென்றேன்.
திரு. சொறகின் மி. கொன்ஸ்ரன் ரினோவிச் மொஸ்கோ ஸ்ரேற் சர்வகலாசாலையில் கீழைத் தேய

191 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
மொழிகள் பிரிவில் பயின்று பட்டம் பெற்றவர். சிங்கள மொழியைச் சிறப்புப் பாடமாகக் கற்றுத் தேர்ந்தவர் இதனால் சிங்கள மொழியில் வியக்கத் தக்க அறிவும் ஆளுமையும் உடையவர். அத்தோடு ஆங்கிலம், கன்னட மொழி அறிவும் உடையவர். (இவர் பற்றிய விரிவான கட்டுரை ஒன்றை இலங்கை ஆங்கில நாளிதழான “த ஐலண்ட்’ பத்திரிகையில் 02.07.1994ம் திகதிய இதழில் எழுதியுள்ளேன்.
நாங்கள் அவ்விடம் சென்றதும் அந்த டாக்டர் அம்மா முகமன் கூறி வரவேற்றதோடு, அவரது காரியாலய அறைக்கு கூட்டிச் சென்று எங்களை இருத்தி விட்டு வார்ட்டில் தங்கிச் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து எங்கள் முன் நிறுத்தினார்.
பார்வைக்கு ஒரு சிறுமி போன்றிருந்த அந்தப் பெண்ணுக்கு வயது இருபத்தொன்பது! இலங்கை மலைப் பிராந்தியத்தின் மாத்தளை நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டுப் பணிப் பெண்ணாக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்தவர், வீட்டு எஜமானரின் கெடுபிடிகள், கொடுமைகள் என்பவற்றால் அவ்வீட்டைவிட்டு வெளியேறி இரக்கம் கொண்ட ஒருவரது சிபாரிசுடன் வேறொரு வீட்டில் பணியாளராக சேர்ந்து உழைத்து வந்தார்.
ஏழ்மையில் பிறந்தவர்களுக்கு உலகம் வழங்கி வரும் தண்டனைகள் பலவிதமானவை. அவற்றில் இந்த ஏஜமானர் கொடுமை ஜீரணிக்க முடியாத தொன்று. சேவை ஒப்பந்தப்படி கால எல்லை முடிவில் நாடு திரும்புவதற்காக இலவச விமானப் பயணச்சீட்டு பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பும், ஒப்புதல்

Page 99
மொஸ்கோ அநுபவங்கள் 192
செய்யப்பட்ட நிபந்தனைகளுள் ஒன்று. அதன்படி அழகேஸ்வரி தன் உரிமையை வெளிப்படுத்தியபோது எஜமானி சீற்றமுற்று அவளை நன்றாக நையப் புடைத்ததோடல்லாமல் ஏதோ மயக்க மருந்தையும் ஊட்டி விமானத்தில் ஏற்றி அனுப்பியும் விட்டார்.
ஏழைகள் வயலை வளப்படுத்தும் மண்புழு போன்றவர்கள். சமூதாயத்திற்கு வேண்டாதவர்களாக அவர்கள் கருதப்படினும் அச்சமுதாயத்தின் வளத்திற்கு வேண்டிய உழவை வெளிப்பாடின்றி ஊட்டிக் கொடுப்பவர்கள் அவர்கள்தான். விமானத்தில் ஏறிய நேரத்தில் இருந்து அழகேஸ்வரிக்கு ஒருவித மயக்கம் ஏற்பட்டதாம். அபுதாபியில் இருந்து மொஸ்கோ வந்த அந்த விமானம், இப்பெண்ணின் நிலைமையை உணர்ந்து அவளை செரமித்யோவு - விமான நிலைய பொறுப்பதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டுச் சென்று விட்டது. இதுவே நடந்த சம்பவத்தின் பின்னணி.
Dலையகத்தைப் பிறப்பிடமாகப் கொண்டிருந்த மையினால் செல்வி அழகேஸ்வரினால் சரளமாக சிங்கள மொழியில் உரையாட முடிந்தது. சிங்கள மொழி விற்பன்னரான கோஸ்தியா வைத்தியசாலை அதிகாரி களோடு இணைந்து ஏற்பாடுகளைச் செய்து, விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று அழகேஸ்வரியை இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப் பெண்களாக வேலைக்கு அமர்த்தப்படும் ஆசிய நாட்டுப் பெண்களில் பலர் எஜமானர்களின் இரக்கமற்ற சித்திர வதைக்கு ஆளாகி வருவதோடு பாலியல், வேதனம் வழங்காமை ஆகிய பிற துன்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருந்து வருவதாக செய்தித் தாள்கள் கூறுகின்றன.
எலிக்கு மரணம் பூனைக்கு விளையாட்டு!

193 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
1O. முfல்சீலன்
1992-ம் ஆண்டுக்கு முன்னர் ரூஸ்ய சம்மேளனம் சோவியத் ஒன்றியத்தில் இணைந்திருந்த சமயம். மக்கள், வாழ்வியலைப் பொறுத்த வரையில் போற்றத்தக்க பல அருங்குண நலன்களை உடையவர் களாக மிளிர்ந்தனர். பிறர் சொத்துக்கா சை கொள்ளாமை, பொய், களவு போன்ற காரியங்களில் ஈடுபடாமை, ஒழுக்கமுடைமை என்ற அருங் குணங்களில் சிறந்து விளங்கினர். அதன் பின்புதான் கொலை, கொள்ளை, களவு, சூதாட்டம் முதலான குற்றச் செயல்கள் பெருமளவு பல்கிப் பெருகின.
மாபியா என்றழைக்கப்படும் ஒரு சர்வதேச கேடிகள் கும்பல் ஒன்றும் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியது. இந்த நிலை வளர்ச்சி கண்டு வருவதற்கு வறுமை மட்டும் முழுக் காரணியல்ல. ஆட்சி நிர்வாகத் தலைமைப் பீடத்தின் கையாலாகாத்தனமும் அல்லது திறமையின்மையுமே அடிப்படையாகும்.
திறாம் வண்டியில் பயணம் செய்து கொண் டிருந்தபோது ஆங்கிலம் தெரிந்த ஒரு ரூஸ்யப் பெண் விஞ்ஞானியைச் சந்திக்க நேர்ந்தது. அவரோடு உரையாடிய சில நிமிட நேரத்தில் யதார்த்த பூர்வமான கருத்துக்களை, அறிய முடிந்தது. அப்பெண்ணின் கூற்றுப்படியும் ரூஸ்யாவின் இன்றைய பிற்போக்கு நிலைக்குத் தலைமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளே காரணம் என்று உணரப்படுகிறது!
வெளிநாட்டவர்களைப் பொறுத்தவரையில் ரூஸ்யா வில் பாதுகாப்பு நிலைமை பாரதூரமான தென்றே சொல்லப்படவேண்டும். அவர்களது உயிர்,
13

Page 100
மொஸ்கோ அநுபவங்கள் 194
உடமை என்பவற்றிற்கு உத்தரவாதமே கிடையாது. வெளிநாட்டவர் பலர் வேண்டுமென்றே வழிப்பறி கொள்ளை, கொலைச் சம்பவங்களுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். எனினும் தகுந்த பாதுகாப்பு நடவடிக் கைகள் ஏதும் அரசினால் மேற்கொள்ளப் படவில்லை.
வெளிநாட்டவர்கள் தமது உபயோகத்திற்காக வைத்திருந்த மோட்டார் கார்கள் கூட பட்டப் பகலில் கடத்தப்பட்டு கொள்ளையிடப் பட்டுள்ளன.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராஜ தந்திரி களும் பிரமுகர்களும் தொடர்ச்சியாகச் செய்து கொண்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து 1995ம் ஆண்டு காலப் பகுதியில் அரசாங்கப் பொலிஸ் படைப்பிரிவில் வெளிநாட்டவர் பாதுகாப்பு அணியொன்றைத் தோற்றுவித்துள்ளது. ஆயினும் திருடர்கள் உணர்ந்து இதனை விட்டொழிக்காத வரை அவலம் என்றுமே தீரா. காரணம்: வேலியே பயிரை மேயும் நிலைதான்!
புறஸ்பெக்ட் மீரா இல5ல் புதிதாக அமைக்கப் பட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப் பதிகாரியாக திரு. விளடிமீர் அவர்கள் நியமிக்கப் பட்டிருந்தார். இவர் ஒரளவு கண்ணியமும் கடமை உணர்வும் கொண்டவராக விளங்கினார். அன்று திரு. விளடிமீரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு தூதரகத்திற்கு வந்தது.
“தகன்ஸ்கா யா மெற்றோ நிலையத்துக்கருகா மையில் இலங்கைப் பிரஜை ஒருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டு அவரை அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்த்திருக்கிறார்கள். இதுபற்றிய சாட்சியங்களை தெரியப் படுத்துவதற்காக தங்கள் உத்தியோகத்தர்

195 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
ஒருவரின் ஒத்தாசை வேண்டப்படுகிறது.”
தூதரகத்தில் இரண்டு வாகனங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று மேஷடேஸ் பென்ஸ் கார். இது அம்பசடரின் உத்தியோக பாவனைக்கு. மற்றையது ஏசஸ் வான் இது ஏனைய பிறதேவைகள் எல்லாவற்றிற்கும். W
அன்று வான் ஏதோ அலுவல் நிமித்தம் வெளியே சென்றுவிட்டது. பயண ஒழுங்குகளை செய்து உதவினால் அதிகாரியை அனுப்பி வைப்பதில் தயக்கமில்லை என்ற தூதரகத்தின் பதிலை ஏற்றுக் கொண்டு பி.ப 2.30 மணியளவில் திரு. விளடிமீரும் தகன்ஸ்கா யா பொலிஸ் பிரிவு உயர் அதிகாரியும் ஜீப் வண்டியொன்றில் வந்தார்கள்.
கலினா என்ற பெண் பரிவர்த்தனையாளரும் நானும் அவர்களுடன் சேர்ந்து புறப்பட்டுச் சென்றோம். நேராக தகன்ஸ்காயா பொலிஸ் நிலையத்துக்குச் சென்று அங்கு காத்துக் கொண்டிருந்த சாட்சியங்களைப் பதிவு செய்தனர். அந்தச் சாட்சி வேறுயாரும் அல்ல, முன்பு வசந்தா செல்வராசாவின் விவகாரத்தில் வாதிட்ட அதே மதன் தான்.
மதன் சோர்ந்த வதனத்துடன் இருந்தபோதும் எங்களைக் கண்டு புன்முறுவல் பூத்து வரவேற்றார். கத்திக்குத்துக்கு இலக்கான மரியசீலனும் மதனும் ஒரே வீட்டில் தங்கி இருந்தவர்கள். இதன் காரணமாக சாட்சியம் அளிப்பதற்கென்று மதனை அவ்விடம் பொலிசார் அழைத்திருந்தனர்.
மதனுக்கு வேற்று மொழி எதுவும் தெரியாது.
மதனது வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் பொலிசார் இருவர்; நாங்கள் இருவர்; நால்வரும்

Page 101
மொஸ்கோ அநுபவங்கள் 196
சேர்ந்து வைத்திய சாலைக்குச் சென்றோம். அங்கே கரிய நிறம் கொண்ட திடகாத்திரமான இளைஞன் ஒருவன் கட்டிலில் கிடத்தப் பட்டிருந்தான். அடிவயிற்றில் ஆழமான கத்திக்குத்து ஏற்பட்டதனால் இரத்தம் பெருமளவில் வெளியேறி விட்டதாக இருக்கவேண்டும். புரண்டு படுக்கவோ எங்களுடன் நேராகக் கதைக்கவோ அவனுக்குச் சிரமாக இருந்தது. ஒரளவு ரூஸ்ய மொழியையும் ஆங்கிலத்தையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் அவனுக்கு இருந்தது. பொலிசார் கேட்ட கேள்விகள் பலவற்றிற்கு எனது ஒத்துழைப் பில்லாமலே கலீனாவின் உதவியோடு வாக்கு மூலத்தை பதிவு செய்ய முடிந்தது. ஓரிரு தடவைகள் மட்டும் அவனுக்கு புரியாதிருந்த சில குழப்பமான கேள்விகளுக்கு மட்டுமே எனது பணி அங்கு தேவைப்பட்டது.
தான் குடியிருந்த அந்தப்பகுதியில் வாழ்ந்து வந்த ரூஸ்ய இளைஞர்களோடு சேர்ந்து குதூகலிப்பது கைப்பந்து ஆடுவது போன்ற பொழுதுபோக்குகளில் தன்னை ஈடுபடுத்தி வந்ததனால், மரியசீலனுக்கு நல்ல செளஜன்னிய உறவு மட்டுமல்ல ரூஸ்ய மொழியறிவும் கூடவே விருத்தியடைந்திருந்தது! சில காலம் மொஸ்கோவில் கல்லூரி ஒன்றில் சேர்ந்து ரூஸ்ய மொழியைக் கற்று வந்ததாகவும் கூறினான். சொந்த இடம் : யாழ்ப்பாணம் பாஷையூர்.
இரவு 9.00 மணிவரை கைப்பந்தாடிவிட்டு சூரிய அஸ்தமனத்திற்கு பின்பே களைப்புடன் வீடு வந்து சேர்ந்த மரியசீலனுக்கும் அங்கு தங்கியிருந்த வேறு சிலருக்கும் எஞ்சி இருந்த உணவு பற்றாக்குறையாக இருந்துவிடவே அந்த நேரத்திலும் பாண் வாங்கிக் கொண்டு வரும் நோக்கில் வெளியே சென்றான் மரிய சீலன்.

197 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
கோடை காலத்தில் சூரிய அஸ்தமனம் சில சமயம் இரவு 11.00 மணிக்கும் மொஸ்கோவில் நிகழும். இதனால் சில அங்காடி வியாபாரிகள் பாண், வொட்கா போன்ற பண்டங்களை மெற்றோ புகையிரத தானங்களுக்கு அண்மையில் வைத்து விற்பது வழக்கம். அந்த நேரங்களில்தான் குடிகாரக் கும்பலும் திருடர் கூட்டமும் மற்றும் விலை மாதர்களோடு சம்பந்தப் பட்டவர்களும் வீதிகளில் அலைந்து திரிவார்கள்.
திறாம் வண்டி மூலம் ஒரு நிற்பாட்டிடம் (One Stop) வரை பயணம் செய்து மெட்றோ நிலையத்திற் அருகே பாண் கட்டிகள் 05ஐ வாங்கிக் கொண்டு மீண்டும் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தவேளை, யாரோ ஐந்து இளைஞர்கள் மரிய சீலனை வழி மறித்து கடுமையாக நடத்த முற்பட்டனர். ப்ணம்; அதாவது அமெரிக்கன் டாலர் தரும்படி வற்புறுத்தினர். வெளிநாட்டவர் எவரைக் கண்டாலும் அவர் மேலைத் தேயத்தவரோ கீழைத் தேயத்தவரோ அவர்களிடம் எல்லாம் அமெரிக்க டாலர் காய்த்துப் பழுத்துக் கிடக்கும் என்று எதிர்பார்ப்பது ரூஸ்ய மக்களின் விவேகமற்ற ஒரு சிந்தனை. சீலன் பணம் கொடுக்க மறுத்தான். தனக்குத் தெரிந்த அரைகுறை ரூஸ்ய மொழியில் வாதிடவும் முற்பட்டான். வாக்குவாதம் இறுக்க நிலைக்குச் சென்றுவிட்டது. இரண்டு இளைஞர்கள் சீலனின் கைகளைக் கெட்டியாகப் பிடித்து மடக்க, மற்றொருவன் இடுப்பிலிருந்து கத்தியை உருவி சீலனின் அடிவற்றில் குத்திவிட்டான்.
சீலனின் ஒலத்தைக் கேட்டு அங்கொருவர் இங்கொருவர் மையிருட்டில் அசைவதை அவதானித்த திருடர் கூட்டம், விரைவாக ஓடி மறைந்து விட்டது.
கத்திக் குத்தையும் வாங்கிக் கொண்டு வெகு

Page 102
மொஸ்கோ அநுபவங்கள் 198
சாமார்த்தியமாக மெல்ல மெல்ல நடந்து வந்து குடியிருந்த வீட்டுக் கதவண்டை சேர்ந்து அழைப்பு மணியை அழுத்தி விட்டு, அப்படியே தரை சாய்ந்து விட்டான். வீட்டின் உள்ளே இருந்த சகபாடிகள் வந்து பார்த்தபோது சீலன் முக்கி, முணுங்கி வேதனையுடன் கிடப்பதைப் பார்த்து பக்கத்து வீட்டு ரூஸ்ய நண்பர் ஒருவரின் உதவியைக் கோரி அவர் மூலமாக அம்புலன்ஸ் வண்டியில் சீலனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மரிய சீலனின் கதையைக் கேட்ட பொலிசாரும் இரக்கப்பட்டனர்.
ஆயினும் குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களைக் கைதுசெய்யக் கூடிய தடயங்கள் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
இருந்தபோதிலும், நான்கு மாதங்களுக்கு பின்னர் 1994ஒத்தோபர் மாதமளவில் குற்றவாளிகளில் சிலரைக் கைது செய்து விட்டதாகவும், அவர்களை அடையாளம் காண்பிக்க மரிய சீலனை அங்கு வரும்படியும் திரு. விளடிமீர் எனக்குப் போன் செய்தார்.
மதனும் மரியசீலனும் இக்கசப்பான பயங்கர அனுபவத்திற்குப் பிறகு ஜாகை மாறினரா? அல்லது நாட்டை விட்டே எங்கோ சென்று விட்டனரா ? எதுவுமே தெளிவில்லை!
1. முன்சி ஆலந்ேத செவுலன்
மே மாதம் 22ம் திகதி இலங்கை மணித்திரு
நாட்டைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்த தொன்று.

199 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
1972ம் ஆண்டின் மே மாதம் 22ம் திகதிதான் இலங்கை குடியரசு தினமாகப் பிரகடனப் படுத்தப்பட்டது.
இதனை நினைவு கூரு முகமாக நாட்டினுள் ளேயோ நாட்டிற்கு வெளியே அமைந்துள்ள தூதரகங்களிலோ எந்த விதமான அனுசரிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படுவதில்லை.
தூதரக குசினிக்குள் அற்றாச்சி தயானந்தா ஒரு வெளி ஆளோடு மிகவும் அன்னியோன்யமாக அளவளாவிக் கொண்டிருந்தார். சிலசமயம் அவ்வாறு சிலர் அவரைக் தேடிக்கொண்டு வருவதும் அவர் அவர்களோடு பொழுதைப்போக்குவதும் புதிதல்ல. மதிய போசனம் உண்பதற்காக நானும் மற்றும் சில ஊழியர்களும் அவ்விடம் போயிருந்தோம். என்னைக் கண்டதும் தயானந்தா ஏதோ அவருக்குக் கூறியிருக்க வேண்டும். அவ்வுருவம் அறிமுகமானவர் போன்று என்னுடன் பழக முற்பட்டது. கிட்ட நெருங்கியபோது மது நெடி ‘கும்’ என்று வீசியது.
நான் பின்வாங்கி விட்டேன்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தென் கோடியில் உள்ள பொத்துவிலை பிறப்பிடமாகக் கொண்டவர் பெயர் ஜனாப் எஸ்.ஏ. மெளலானா !
மதுபோதையில் புத்தி பேதலித்து, அதன் காரணமாக ஒரே பிதற்றிக் கொண்டிருப்பவர்களோடு பழகுவதை முடிந்தளவு தவிர்த்துக் கொள்ளும் யல்புடைய நான், மெளலானா இருந்த நிலைமையை ஊகித்துக் கொண்டு அவரது அனுசரணை வார்த்தைகளுக்குக் கட்டுப்படாமல் அப்பால் சென்று எனது வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

Page 103
மொஸ்கோ அநுபவங்கள் 200
முன்னைய சோவியத் ஒன்றியத்தின் துணை நாடாக இருந்து வந்த தஜிகிஸ்தான் பாடசாலை ஒன்றில் மூன்று மாதம் ஆங்கில போதனை நெறி ஒன்றிற்காக இலங்கை ஆங்கிலம் பேசுவோர் சங்கத்தின் ஏற்பாட்டின் பேரில் அவ்விடம் வந்தவர் மெளலானா.
கடமை முடிந்து தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்லும் நோக்கமாக அங்கிருந்து ஆயிரத்து இருநூறு மைல்களுக்கப்பால் உள்ள மொஸ்கோ செரமித்தி யோவ் 2 சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து வழி மாற்று (Transit) பயணத்தில், அங்கு தரித்து நின்றவர். ஏதோ காரணங்களால் பயணம் செய்த அதே விமானத்தில் தொடர முடியாதவராகி விட்டார். இதனால்,
(1) அவரது வெளிச் செல்லும் வீசாவின் காலம் செல்லுபடியற்றதாகிவிட்டது.
(2) கொண்டு வந்த உடமைகள் யாவும் சோரம் போய்விட்டன.
(3) “பயணி’ என்ற அந்தஸ்துப் போய் அகதி’ என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஆனாலும் மெளலானா சித்தம் கலங்காத தீரானாகவே செயல்பட்டார்!
மதுப்பழக்கம் உள்ளவர்கள் ஒருவகையில் நாய்களைப் போன்றவர்கள். எங்கிருந்தாலும் மோப்பம்
பிடித்து இனம் சேர்ந்து விடுவார்கள்.
மெளலானாவும் வந்ததும் வராததுமாக முன்பின் அறிமுகமில்லாத தயானந்தாவுடன் அன்னியோன்ய மாக இணைந்து விட்டார்.
கை நழுவிப் போய்விட்ட பொதிகளைத் தேடிக்

201 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
கண்டுபிடிக்கவென்று முறைப்பா டொன்றைச் செய்து கொள்ளவும், காலாவதியாகி விட்ட வீசா வைப் புதுப்பித்து தாய் நாட்டுக்கான தன் பயணத்தைத் தொடரவுமென்றே மெளலானா தூதரகத்திற்கு வந்து சேர்ந்தார்.
மணிவாசகப் பெருமான் - (திருவாதவூரர்) உயரினக் குதிரைகள் வாங்கி வரவென்று பயணம் செய்தவர். வழியில் ஞானகுருவின் வேத போதனையில் கட்டுண்டு, வந்த காரியத்தை மறந்து ஞான இன்ப சாகரத்தில் மூழ்கி இருந்ததுபோலவே, மெளலானாவும் தன் அல்லலெல்லாம் அயர்ந்து மது வாழியிலே மயங்கி மகிழ்ந்து நீந்தினார். தூங்கினார். தயானந்தாவின் ஒத்துழைப்புக் கரிசனை மூலமாக அடுத்த நாள் 24.05.1992ல் அவரது பயணத்திற்கான செல்லுபடிக் காலம் நீடிக்கப்பட்டது. பயணச்சீட்டு உறுதிப்படுத்தப் பட்டது. ஆனால் அதுவும் அவரது பராமுகத்தால் கைகூடாமல் போய்விட்டது. அது தடைப்பட்டதா? தவிர்த்து கொண்டாரா? என்பது புரியாத புதிர்!
மீண்டும் விசா 27.05.1992 வரை தூதரகத்தின் வேண்டுகோளைக் காரணம் காட்டி நீடிக்கப்பட்டது.
கூடவே பயணச்சீட்டுக்கும் வேண்டிய ஒழுங்குகள் செய்யப்பட்டன. இம்முறை சகாக்கள் மெளலானாவை அனுப்பி விடவேண்டுமென்ற எண்ணத்தோடுதான் இருந்தனர். அவர்களது தொடர்பாடல்களும் அணுகு முறையும் இதனைத் துலாம்பரப் படுத்தின. ஆயினும் முன்னைய முறைகளில் காண்பித்த ஆர்வமும் அக்கறையும் இத்தடவை அவர்கள் செலுத்தியதாகத் தெரியவில்லை. அதுமட்டுமல்ல அதிக காலநேரத்தை மெளலானாவுடன் செலவிட்டு மகிழ்ந்ததாகவும் இல்லை. மெளலானா தனித்து விடப்பட்டு

Page 104
மொஸ்கோ அநுபவங்கள் 202
குட்டிபோட்ட பூனை மாதிரி அங்குமிங்கும் சுற்றியலைந்து கொண்டே திரிந்தார்.
அன்று அதாவது 26.05.1992 பி.ப 4.45 மணிக்கு தூதரகம் மூடப்படும் நேரம் வரை மெளலானாவை அழைத்துச் செல்ல எவரும் வரவில்லை. தூதரகத் திலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.
சிறிசேனவும் நானும் வழக்கம் போல் எமது கடமைகளை நிறைவுறுத்தி விட்டு வீடு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம்.
எங்கள் இருவருடைய வெளியேற்றத்துடனும் தூதரகம் வெறிச்சோடிப் போய்விடும். இப்போது மெளலானாவின் நெஞ்சிலே ஒரு சிறு ஐயுறவு தோன்ற ஆரம்பித்து விட்டது. அப்போது அவர் மதுபோதையில் இருந்து விடுபட்டிருந்தார். நண்பர்களால் அவர் கைவிடப் பட்டுமிருந்தார். மருந்தும் விருந்தும் மூன்று வேளை என்ற காரணத்தினாலா? பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பதனாலா? மெளலானா தள்ளிவைக்கப் பட்டாரா? தவிர்த்துக் கொள்ளப்பட்டாரா? எதுவுமே புரியவில்லை!
இப்போது மெளலானாவின் சித்தத்திலே ஒரு சிறு கலக்கம் ஏற்பட்டு விட்டது. நட்டாற்றில் நழுவவிடப்பட்டதன் நிலையை நன்றாகவே எண்ணிப் பார்த்தார். முகத்திலே கவலை இருள் கெளவிக் கொண்டது. இப்போதுதான் முதல்தடவையாக அறிவுக்கு வேலை கொடுத்திருக்கிறார் மெளலானா .
'உங்கள் இருவரில் யாராவது ஒருவர் உங்கள் இருப்பிடத்திற்கு என்னையும் அழைத்துப் போங்கள். தயவு செய்து எனக்கு இரக்கம் காட்டுங்கள்’ என்று கூறிய இரக்கமான விண்ணப்பத்தை ஏதுவித

2O3 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
தயக்கமுமின்றி ஏற்றுக் கொண்டேன்.
உதவ வேண்டிய தருணம் இது. யாராயிருந் தாலும் மனிதத் தன்மைக்கு முக்கிய இடம் கொடுக்கப்படவேண்டும்.
தூதரகம் அமைந்திருக்கும் ஷெப்கினா வீதி யிலிருந்து அதி சேய்மையிலுள்ள பாதாளப் புகையிரத தானம் புறஸ்பெக்ட் மீராதான். இவ்விரு நிலைகளுக்கு மிடைப்பட்ட தூரம் சுமார் 200 மீற்றர் தான் இருக்கும். திறாம் வண்டி மூலமும் போய்ச் சேரலாம். ஒரு நிற்பாட்டிடம் மட்டுமே. ஆனால் அதற்கு நிறைய நேரம் காத்து நிற்க வேண்டும். வழக்கமாக அத்தூரத்தை நான் நடந்தே செல்வேன்
வரும் வழியில் மெளலானா நடந்து முடிந்த சம்பவங்களை சிறிது அசைபோட்டார். மூன்று மாத இடைவெளிக்குப் பின்பும், தான் வீடு திரும்ப இருக்கும் விடயத்தை மனைவி மக்களுக்கு அறிவிக்கவில்லை!
கற்பொழுக்கம் தவறி விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விலை மாதரும், சிற்சில சமயங்களில் தம்மைப் பற்றி தற்சோதனை செய்து பார்ப்பதுண்டு. இனி இந்தக் கொடிய பழக்கத்தை விட்டு விடவேண்டும் என்று மானசீகமாக விரும்புவதும் உண்டு. அடுத்த நிமிடமே பிறழும் சூழ்நிலைக் உட்பட்டபோது எல்லாவற்றையும் மறந்து நாய்வாலாக மீண்டும் சுருண்டு போய்விடுவர். அப்போது தனக்குத்தானே தேறுதல் சொல்லிக் கொள்ளும் விதத்தில் “இன்று மட்டும் ஒரு நாளுக் குத்தான்: இன்றோடு இதற்கு முற்றுப் புள்ளி வைத்துவிடவேண்டும்” என்று தீர்மானிப்பர். இப்படியே அவர்களதுகூெழக்கமும்” “இன்றேங்கும் இன்றோடு” என்று என்றென்றும் தொடர்ந்து கொண்டே

Page 105
மொஸ்கோ அநுபவங்கள் 204
வரும்! இதுபோலவே தான் இந்தக் குடிபோதைக்கு அடிமைப்பட்டோரும்!
22.05.1992. அன்று மத்தியானம் மெளலானாவை தூதரகக் குசினியில் சந்தித்த விபரம் முன்பே கூறியுள்ளேன்.
அன்று இரவு சுமார் 8.30 மணியிருக்கும். தொலை பேசியில் மெளலானா பேசினார். அவரது தகவலின்படி மெளலானா தயானந்தாவின் ஏற்பாட்டின் பிரகாரம் கோஸ்தியாவின் வீட்டில் தங்கியிருப்பதாகவே தெரிகிறது. மனைவி மக்களின் நச்சரிப்புக்கு அஞ்சி தயானந்த இவ்வேற்பாட்டை செய்திருக்கிறார் போலும்.
“சபா, நீங்களும், நானும் ஒரே ஊர். அப்படி இருந்தும் நீங்கள் என்னோடு நன்றாகப் பேச வில்லையே! ஒரு சபா வை எதிர்பார்த்தேன் கிடைத் ததோ தயாவின் உதவி.”
“உங்கள் கேள்வியிலேயே அதற்கான பதிலும் கிடைக்கிறதே. சபா என்றால் வெளிப்படை. தயா என்றால் உதவி. நீங்கள் சரியாகத்தான் பெற்றிருக் கிறீர்கள். மதுபோதையில் இருப்பவர்ளோடு நான் அதிகம் பேச்சுக் கொடுப்பதில்லை. காரணம், இரு பகுதியாருக்கும் அது நலமாக அமையும் என்பதனால்தான். நீங்கள் ஒரு மெளலானா வாகவே இருந்திருந்தால். நிச்சயமாக அவ்வாறு நடந்து கொண்டிருக்க மாட்டேன்” r
“நாளை சனிக்கிழமைதானே? இங்கு வந்து சந்திக்க முடியுமா ?”
நான் சம்மதிக்கவில்லை. அப்போதும் கூட

205 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
மதுபோதையில்தான் இருந்தார் என்பதை அவரது உரையாடல் அம்பலப் படுத்தியது. சம்பந்தமில்லாமலே “நான் ஒரு ஜேணலிஸ்ட்” என்றார்.
“அதற்கென்ன இப்போது வந்தது? பயமுறுத்துறிர்களா 2”
“உங்கள் ஊரைச் சேர்ந்தவன் நான் ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப்போகக்கூடமுடியாதா?”
“அதுதான் பிற்பகல் பார்த்து, பேசி விட்டோமே! புதிதாக பேசுவதற்கு வேறென்ன உண்டு?”
“அவ்வளவு தானா?”
எனக்குச் சற்று ஆத்திரம் ஏற்பட்டது. “நீங்கள் ஒரு மெளலானா - முதன்மை முஸ்ஸிம். வெட்கமாக இல்லையா ?”
Gé ஏன்?”
“மதுபோதையில் ஒரு மெளலானா ! இஸ்லாத்தின் புதிய ஏற்பாடா, இது?”
“இந்துக்கள் எல்லோரும் இந்து தர்மப்படிதான் நடந்து வருகிறார்களா ?”
“பெரும்பாலானவர்கள் இந்துக்களாக இல்லாமல் ஜந்துக்களாகவே வாழ்ந்து வருகிறார்கள் தான். இந்து மதத்தில் கட்டாயம் இப்படித்தான் வாழவேண்டும் மென்ற மதத் தீவிரம் இல்லையே! ஆனால் இஸ்லாம் அப்படியல்ல. உண்மை முஸ்லீம் இப்படி இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு. அல்லாதோருக்கு மதச்சட்டப்படி தண்டனை கூட இருக்கிறதே!”

Page 106
மொஸ்கோ அநுபவங்கள் 206
நான் நினைத்தால் எதையும் எழுத முடியும் ”
‘ஓ! அப்படியா? எழுத்து உங்களுக்கு மட்டும்தான் சொந்தமல்ல. எழுத்துதுறையில் நானும் ஒரு சிறு ஆர்வலன்”
“ஆ! அப்படியா ?”
“ஓம்’
“ஒம் என்றால் பொருள் தெளியுமோ ?”
“புரியாததால் தானே உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்?”
“இந்து மதத்தின் உயிர் நாடி ஓம். அது தெரியாமல்."
அதற்குப் பிறகும் நான் மெளனம் சாதிப்பது பொருத்தமல்ல.
“ஒம் இந்து மதத்தின் உயிர்நாடி அல்ல. இந்த அகில உலகம், பிரபஞ்சம், அதற்கப்பாலுள்ள அனைத் துக்கும் உயிர் நாடி. அகர, உகர, மகர ஓசைகளின் சேர்க்கை அது. நாதத்தின் அடி அத்திவாரமாக பிரபஞ்சத்தினின்றும் தோன்றும் முதல் ஒலி. அதுவே பிரம்மம். அதுவே ஆதி. அதுவே அந்தம். அதுவே எல்லாவற்றிற்கும் மூலமும் முடிவும். விளக்கம் போதுமா ? இல்லை இன்னும் தேவையா ?”
“ஐயா நீங்கள் பெரியவர்தான். ஒப்புக் கொள்ளுகிறேன்.”
“நான் பெரியவனல்ல எல்லோருக்கும் பெரியவன் எல்லாம் வல்ல பரம்பொருள் - அதனை அல்லாஹ்

2O7 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
என்று நீங்கள் கூறுவீர்கள்”
உரையாடல் அத்தோடு நின்று விட்டது.
மெற்றோ புகையிரத நிலையம் நோக்கி இருவரும் நடந்து கொண்டிருந்தபோது, பாதை ஒரமாக விற்பனைக்காக வைத்துக் காத்திருந்த ஒருவரிடம் 100 ருபிள்கள் கொடுத்து ஒரு வொட்கா சாராய போத்தலையும் வாங்கிக் கொண்டார் மெளலானா. வீடு போய் சேர்ந்ததும் நன்றாகக் குளித்தார். உணவு ஏதோ இருந்தவற்றோடு புதிதாக சிலவற்றையும் தயாரித்து பரிமாறினேன். அதை அவர் சுவைக்கவில்லை.
м முன் அறையில் (ஹாலில்) இருவரும் உரையாடிக் கொண்டிருந்தபோது, அடிக்கொருதடவை பின்னால் பாத் ரூம் சென்று வருவதை அவதானித்தேனாயினும் சிலருக்கு அவ்வாறான அடிக்கடி சீறுநீர் கழிக்கும் பழக்கம் இருப்பதை உணர்ந்து அதிகம் சிந்திக்காமல் இருந்து விட்டேன். சிறிது நேரத்தில் பித்தரைப் போல் பிதற்ற ஆரம்பித்துவிட்டார் மெளலானா. அப்போது தான் என் சிந்தனையில் பளிச்சிட்டது, பாத்றுாம் அடிக்கடி போய்வந்த சமாச்சாரம் வொட்கா நமஸ்காரம் செய்வதற் காகத்தான் என்று. எழுந்து பின்புறமாகச் சென்று பார்த்தேன். பாவம்! அந்த நிறை போத்தல் உயிர் பிரிந்த சடலம் போல் வெறுமை பெற்றுக் கிடந்தது!
அன்று இரவு 1.00 மணி விமான சேவையில் மெளலானாவைப் பயணப்படுத்தி உதவுவதற்காக கோஸ்தியாவோ அல்லது வேறொரு மொழி பெயர்ப்பாளரோ வந்து கூட்டிச் செல்வதற்குரிய ஒழுங்குகளைத் தயானந்தா செய்துள்ளதாகவும் அது

Page 107
மொஸ்கோ அநுபவங்கள் 208
வரைக்கும் தங்கி இருப்பதற்கே மெளலானாவிற்கு ஓர் இடம் தேவை என்ற மாதிரியே எனக்குக் கூறப்பட்டது.
அப்படியாயின் குறைந்தது மூன்று மணித்தியாலங் களுக்கு முன்பாக விமான நிலையத்திற்கு பிரசன்னமாகி இருக்க வேண்டும். எனது வீட்டிலிருந்து விமான நிலையத்திற்குச் செல்ல குறைந்தது ஒரு மணித் தியாலமாவது எடுக்கும். எப்படிப்பார்த்தாலும் ஒன்பது மணிக்குப் புறப்பட்டால்தான் பிரமாணப்படி மூன்று மணித்தியாலத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்குச் சென்றுவிட வாய்ப்பாக இருக்கும்.
இரவு 9.30 மணியைத் தாண்டியும் இன்னும் எவரும் வந்து சேரவில்லை. அது தொடர்பான தகவல் கூட இல்லை. எனக்கோ இந்தக் குடிமகனோடு காலம் தள்ளுவது பெரும் சிரமமாக இருந்தது. தொலைபேசி மூலம் தயானந்தா வுக்கும் கோஸ்தியாவுக்கும் மாறி மாறி டயல் செய்தேன். அவர்கள் வீட்டில் இல்லை என்றே பதில் கிடைத்தது. அது மட்டுமல்ல; வீட்டில் ருந்த அவர்களது மனைவிமார் என்னையும் ஓர் குடிகார கூட்டு எனக்கருதியோ என்னவோ எரிச்சலோடு கடும் வார்த்தைப் பிரயோகம் செய்யவும் தலைப் பட்டனர். மொத்தத்தில் மெளலானாவின் பயணத்தில் எவருக்குமே அக்கறை இல்லாத நிலையே இருந்தது! ஏன்? மெளலானாவுக்குக் கூட ஆர்வமோ அக்கறையோ எதுவுமே இல்லாமலே இருந்தது. நேரம் ஆக ஆக எனக்கு ஏமாற்றமும் ஆத்திரமுமே பீறிட்டுக்கொண்டு வந்தன.
மதுபானம் பாவிப்பவர் மிருகத்திற்கொப்பா னவர். அவருடன் சேர்ந்திருப்பதை நினைக்க பைத்தியம் பிடித்து விடும் போல் தோன்றியது.
நேரம் இப்போது பத்து மணியைத் தாண்டிக்

209 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
கொண்டிருந்தது. மதுபோதையில் புரண்டு எழுந்த மெளலானா, “இன்றைக்கும் என்னால் பயணம் செய்ய முடியாது. இன்று இல்லா விட்டாலும் என்றோ ஒரு நாள் பயணம் செய்வேன் தானே” என்று பிதற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது விழிகளின் நேரெதிரில் மாட்டப்பட்டிருந்த எம்பெருமான் விநாயகனின் திருவுருவப்படம் பட்டுவிட்டது. விநாயகப் பெருமானைப் பற்றி ஏதோ அரற்ற ஆரம்பித்து விட்டார்.
“விநாயகனுக்குத் தேங்காய் உடைக்கிறீர்களே அது ஏன்?” அவரது ஒவ்வொரு கேள்வியும் இந்து மதத்தவருக்கு அவர்களது மதம் பற்றிய அறிவு இல்லை என்பதையே கருதுவதாக அமைந்தது.
அதில் ஒரளவு உண்மையும் இருக்கவே செய்கிறது. இன்றைய நிலையில் இந்து மதத்தின் எதிரிகள் அம்மதத்தைச் சார்ந்து அதற்குள்ளேயே வாழ்ந்து வருபவர்கள்தான். தெரியாமல் இருப்பது ஒன்று. அவ்வாறு தெரியாமல் இருப்பதையிட்டு பெருமைப் பட்டுக் கொள்வது மற்றொன்று. இந்த இருவகை அவலங்களும் இந்து மதத்திற்குள் இருந்து வருவது தெளிவு. மெளலானா இருந்த நிலையில் அவரது கேள்விக்கு பதில் அவசியம் இல்லாததொன்று தான். இருந்தாலும் அவரது கேள்வியில் தொக்கி நிற்கும் சுட்டுப்பொருள் சுயமரியாதைக்கு அறை கூவல் விடுப்பதுபோல் அமைந்திருந்தது.
“தேங்காய் ஒன்றின் முக்கிய பகுதி அதன் சுவையான வெண்நிறப் பதார்த்தமே. இதனை வைத்து மூடி, மேற்றோல், தும்பு, சிரட்டை என்ற மூன்று வகையான பொருட்கள் உள்ளன. மேற்றோல்
14

Page 108
மொஸ்கோ அநுபவங்கள் 210
வழவழப்பானதாக கவர்ச்சியாக, பார்த்ததும்
ச்சையை ஊட்டக்கூடியதாக உள்ளது. இதுவே மாயை. இந்த உலகமும் இச்சையை மனதில் தோற்றுவித்து அதனால் ஆத்மாவை அலைக் கழிக்கின்றது. அதனைக் கடந்து சென்றால், தும்பும் நாரும் சிக்கல் படைத்தனவாக அமைந்துள்ளன. இதுவே கர்மம். உயிர்கள் கர்மவினைக்குட்பட்டு சிக்கல் தன்மையை அடைகின்றன. இறுதியாக சிரட்டை என்ற கடும் ஒடு. இது இலேசில் அகற்றப்பட முடியாதது. உடைத்தாலன்றி உள்ளே புகமுடியாதது இந்தச் சிரட்டைபோன்றதுதான் உயிர்களை இயல்பாகவே பற்றி இறுதிவரை இணைந்து நிற்கும் ஆணவம் என்ற மலமும். ஆலயத்திற்கு எடுத்துச் செல்லும் தேங்காய் முன்னர் கூறிய மேற்றோலும், தும்பும் நீக்கப் பட்டதாகும். அதாவது ஆத்மா கடின பிரயாசத்தின் மூலம் - வைராக்கியத்தின் மூலம் மாயை கன்மம் ஆகிய மலங்களிலிருந்து நீக்கமடைந்து, இறை உணர்வு ஏற்பட்டதாயினும், இயல்பாகவே பற்றி நிற்கும் ஆணவம் இறைவனோடு ஐக்கியமாவதற்குத் தடை விதித்தவண்ணம் உள்ளது. ஆலயம் என்பதன் பொருளே ஆணவம் ஒடுங்கும் இடம் என்பது தானாம். அதனா லேயே தேங்காயை உருவகித்து (Symbolic) மலபரிபாகம் செய்து கொள்ள வேண்டி அதனை உடைத்து வழிபடுகின்றார்கள். அதனால் தேங்காய் உடைத்து விநாயக வழிபாடு இயற்றுதல் மிகமிக அர்த்தம் மிக்கதொன்றே”
மெளலானாவுக்கு நான் கூறிய அனைத்தும் செவியில் நுழைந்த தென்பதை என்னால் ஒப்ப முடியவில்லை. சிரசு வரை சென்று விட்ட மதுவின் ஆக்கிரமிப்பு அவரை ஏறெடுத்துப் பார்த்துப் பேச அனுமதிக்கவில்லை.

211 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
சில நிமிட நேர மெளனாஞ்சலிக்குப் பிறகு தலையை நிமிர்த்தி ஏளனம் தொனிக்கும் குரலில்
“விநாயகா, என்னை இன்று பயணம் செய்ய அனுமதிப்பாயா? எனக்கு அதில் நம்பிக்கையே இல்லை’
இந்த வார்த்தைகளைக் கேட்க எனக்கு என்னவோ போல் இருந்தது. மனதில் மிகுந்த வேதனையைத் தோற்றுவித்தது. என் இதயதெய்வம் அது. இதுவரை அத்தெய்வம் என்னைக் கைவிட்ட தில்லை. எப்போது மனச் சஞ்சலம் ஏற்பட்டு அதற்கு பரிகாரம் காணவேண்டி அவனை மனமுருகி விண்ணப்பித்தாலும் அப்போது அதிசயிக்கத்தக்க விதத்தில் அவன் கருணை மழை என்மீது பொழிந்து இடரிலிருந்து காப்பாற்றி விடும். அப்படிபட்ட என் தெய்வத்தை இகழ்ந்து பேசும் சந்தர்ப்பம் எனக்கு முன்னாலேயே இடம் பெறுகின்றதே! இந்த மெளலானா கூட பழிக்கும் நிலைக்கு வைத்துவிடாதே என்று மானசீகமாக வேண்டினேன்.
மொஸ்கோவில் ரூஸ்ய மொழி பேச தெரியாதவர்களால் தனித்து எக்கருமமும் ஆற்றி நிறைவேற்றுவதென்பது அதிக சிரமமானது. இதனால் தான் அங்கு பல அவலங்கள். மெளலானாவின் நண்பர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டுச் சதி செய்து விட்டார்கள். அவர்கள் வந்து கூட்டிச் சென்று விமான மேற்றுவதென்பது இனிப் பகற்கனவு.
என்முன்னால் அபயக்கரம் நீட்டி அமர்ந்திருந்த என் அப்பன் விநாயகனின் உருவத்தை சிலவிநாடி நேரம் உற்று நோக்கினேன்.

Page 109
மொஸ்கோ அநுபவங்கள் 212
மின்னலென சிந்தையில் எழுந்ததோ ஒர் ஒளிக்கீற்று!
'மெளலானா வை டாக்சி ஒன்றில் ஏற்றிக் கொண்டு தனியாகப் புறப்பட்டால் என்ன?”
“டாக்சி சாரதியுடன் அவனது கட்டணம், சேருமிடம் என்பன பற்றி எப்படி எடுத்துரைப்பது?”
சிந்தனையில் இருந்து பிறந்த அந்த யோசனையை செயலாக்க உரம் பெற்று எழுந்தது இதயத்தில் ஒர் உற்சாகம். ஒரு வித தைரியம் பிறந்து விட்டது. தீர்மானத்துடன் செயல்பட்டேன். என் உடன் தூதரகத்தில் கல்வி அதிகாரியாக பணிபுரிந்து வரும் திருமதி பிரமிளா தென்னக்கூன்னுக்கு தொலைபேசித் தொடர்பேற்படுத்தினேன். நேரம் இரவு 11.00 மணி. அன்று இரவு முழுவதும் அடிக்கடி தொலைபேசி மூலம் கோஸ்தியா, தயானந்த பற்றி விசாரித்ததில் அப்பெண்ணுக்கும் எனது நிலை புரிந்திருக்கும். எனது தீர்மானத்தை அவளுக்குத் தெரிவித்து, மெளலானாவை அவ்விடம் அழைத்துக் கொண்டு வருவதாகவும் அவ்விடத்திலிருந்தவாறே ஒரு டாக்சியை பேசி ஒழுங்கு பண்ணி என்னையும் மெளலானாவையும் ஏற்றி விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்க ரூஸ்யன் மொழியில் கதைத்து உதவி செய்யும்படியும் கேட்டுக்கொண்டேன். அவளும் அதுவே சிறந்த தென்று கூறி தயக்கமின்றி உதவி செய்ய முன்வந்தாள். அது மட்டுமல்ல; அவளது கணவன் திலினா தென்னக்கூனும் வலிந்து முன்வந்து தாமும் விமான நிலையம் வருவதற்கு தயாரானான்.
விமான நிலையம் சென்று திரும்பி வரும்போது மெற்றோ சேவை இல்லாதிருக்கு மென்பதால் டாக்சியில் வந்து பிரமிளாவின் வீட்டில் தங்கி இரவைக்

213 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
கழித்து விட்டு காலையில் நான் வீட்டுக்குப் போவது என்று முடிவு செய்தோம்.
மெளலானா வுக்குப் பயணம் செய்ய விருப்பமே இல்லை. பலவந்தமாக இழுத்தெடுத்து சிரமத்தோடு கூட்டிச் சென்றேன். பாதையில் பல இடங்களில் தரித்து நின்றும் இடறி விழுந்தும், எழுந்தும் போவோர் வருவோருடனெல்லாம் கதைகள் சொரிந்தும் தீபாவளி கொண்டாடியே வந்துகொண்டிருந்தார். ஆயினும் பயணம் மிகவும் சுலபமானதாக, சுகமானதாக அதிக செலவுக் கிடமில்லாததாக அமைந்தது. எனக்கு அதன்பெயரால் ஏற்பட்ட நட்டம் 30 டொலர் மட்டுமே.
எனது இஷ்டதெய்வம் என்னைக் கைவிட்டு விடவில்லை. மெளலானா இனியும் எம்பெருமானை ஏளனம் செய்ய முடியாது. அத்தோடு என் தெய்வம் தன்னை இகழ்ந்த மெளலானாவுக்கும் உகந்த வழியைக் காட்டி உதவி புரிந்தார் அல்லவா ?
12. 2தfமதி சிவச்சிபு
குள்ளமான உடலமைப்புக் கொண்ட பெண் ஒருத்தி, இரு இளைஞர் சகிதம் தூதரகத்திற்கு வந்து பாஸ்போட்டை தொலைத்து விட்டதாகவும், இலங்கைக்குத் திரும்பிச் செல்ல இருப்பதனால் தனக்கு தற்காலிக பயணப் பத்திரம் ஒன்று வழங்கும்படியும் விண்ணப்பித்தாள். கடவுச்சீட்டு என்பது மிகவும் கவனமாகவும் அக்கறையுடனும் பாதுகாத்து வர வேண்டிய ஒரு ஆவணம்.
ஆனால் தூதரகத்திற்கு வரும் பலரும் தமது “கடவுச் சீட்டு காணாமல் போய்விட்டது”

Page 110
மொஸ்கோ அநுபவங்கள் 214
g
“கைதவறிவிட்டது” “தீயில் எரிந்து விட்டது” “களவு போய்விட்டது” என்ற பல நரிச்சாட்டுகளைத் தான் கூறுகிறார்கள். இவ்விதம் தெரிவிக்கும் பலரில் மிகவும் சொற்பமானோர்களே உண்மையில் அத்தகைய நிலைக்குள்ளானவர்கள். ஏனைய அனைவரும் 'களவென்ற சீதேவி கையில் இருக்கும்போது வாயால் கேட்டு வாங்குபவன் வழங்கா முட்டு” என்ற தாரக மந்திரத்தைக் கைக் கொள்பவர்களே. புறநடையாக வெளிநாடு சென்று குடியுரிமை தேடுபவர்களுக்கு இந்த கடவுச்சீட்டு ஒரு அட்டமத்துச் சனி போன்றது. தன்னைப் பற்றி உண்மை விபரங்கள் எல்லாவற்றையும் எடுத்தியம்பி தம் காரியத்தை சாதிக்க முடியாதபடி செய்துவிடும். அதுமட்டுமல்ல; யாரோ ஒருவருடைய பாஸ்போட்டில் தலையை மாற்றி, பெயரை மாற்றி, வயதை மாற்றி, விலாசத்தை மாற்றி, போலிப் பெயரில் சென்றடைந்தவர்களுக்கும் அங்கு தமது நிஜப்பெயரில் வதி விடஉரிமை கோரிப் பெறுவதற்கு இக்கடவுச்சீட்டு ஒரு பெரும் தடையாகி விடுகிறது! எல்லாவற்றிற்கும் சுமூகமான வழி, கடவுச்சீட்டை வீசி எறிந்துவிட்டு தொலைந்துபோய் விட்டதென்று தாபித்து நின்றால் சட்டம் ஏமாந்து விடும், காரியம் இலகுவாக சித்திக்கும்.
இலங்கை அரசாங்கமும் இந்தப் பாஸ்போட் மோசடியை இல்லா தொழிக்க அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ புதிய புதிய நடவடிக்கைகளை, முறைமைகளைக் கையாண்டும் இன்னும் அதனை முற்றாகச் சீர் செய்து விடமுடியவில்லை. சாதாரணமாக கடவுச் சீட்டொன்று பெறுபவர் முதலில் அவர் அந்நாட்டு பிரஜை என்பதை நம்பகத்தன்மையுடன் நிருபிக்க வேண்டும். அதன் பின்பு குறித்த பெயர் விபரங்களுக்குரியவர் தாம்தான் என்பதை அத்தாட்சிப் படுத்தப் பின்வரும் ஆவணங்களைக் கட்டாயமாகச்

215 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
சமர்ப்பித்தே ஆகவேண்டும்.
(1) பிறப்புச் சாட்சிப் பத்திரம் (அல்லது) விவாகச் சான்றுப் பத்திரம்
(2) தேசீய அடையாள அட்டை
(3) மிக அண்மையில் எடுக்கப்பட்ட மூன்று புகைப்படங்கள். அத்தோடு ஒரு தகுதி வாய்ந்த பிரமுகர், விண்ணப்பதாரின் புகைப்படத்தையும் அவரால் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களையும் சரியானவை என அத்தாட்சிப் படுத்தவும் வேண்டும்.
வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் இலங்கையர்கள் தாம் பயணம் செய்து அவ்விடம் வந்து சேர்ந்த கடவுச்சீட்டின் புகைப்பட பிரதியுடன் விண்ணப் பிக்கலாம். இவ்வாறு எதுவுமில்லாமல் உள்ளவர் களுக்கு குறித்த அந்தப் பயணத்தை மட்டும் மேற்கொண்டு நாடு போய்ச் சேர ஒரு தற்காலிக பயணச் சீட்டை அல்லது பத்திரத்தை தூதரகம் வழங்கி உதவலாம். அதற்கும் கடவுச்சீட்டு தொலைந்துபோய் விட்டதை உறுதிப் படுத்தக்கூடிய பொலிஸ் அறிக்கை, திரும்பி நாட்டுக்கே போய்ச் சேருவதை மெய்ப்பிக்கத் தக்கதாக விமானப் பயணச்சீட்டு என்பன, வேண்டிய பிற முக்கிய ஆவணங்களாகும்.
அந்தப் பெண்ணிடம் மேற்கூறப்பட்ட எந்தவொரு ஆவணமும் இருக்கவில்லை. பணம் கூட இல்லை. ஆனால் வயிற்றில் கர்ப்பம் தரித்திருந்தது வெளிப் படையாக தெரிந்தது. எந்த வகையிலாயினும் இவ்வாவணங்களைச் சமர்பிக்காத பட்சத்தில் பயணச்சீட்டை வழங்க மேலதிகாரிகள் அனுமதிக்க மாட்டார்கள். இதனை அவளுக்கு இரக்கத்தோடு எடுத்துச் சொன்னேன். சலிப்புடன் நோட்டம் விட்டு

Page 111
மொஸ்கோ அநுபவங்கள் 216
பார்த்து நின்று விட்டு வந்தவர்கள் சென்றுவிட்டார்கள். இரண்டு நாட்கள் கூட இல்லை; பிறப்புச் சான்றிதழ், திரும்புவழி விமானப் பயணச்சீட்டு, பொலிஸ் அறிக்கை என்பவற்றோடு வந்து அதற்கான கட்டணமான மூன்று அமெரிக்கன் டொலரையும் தந்து பத்திரத்தை தந்துதவும் படி கோரிக்கை விடுத்தனர். இப்போது பிரச்சினை எதுவுமில்லை. குறுகிய நேரத்திற்குள் அவளது பெயரில் ஒரு தற்காலிக கடவுச்சீட்டை தயார் செய்து கொடுத்தனுப்பி வைத்தேன்.
அங்கிங்கென்று அலைமோதாமல் நேராக தாய் நாட்டுக்கே திரும்பிச் சென்று விடும்படி அறிவுரையும் வழங்கினேன்.
அறிவுரை வழங்குவதுதான் நாம் ஆற்றும் கருமங்கள் யாவற்றிலும் மிகச்செளகரியமானதும் மலிந்து போய்விட்ட ஒரு சமாச்சாரமுமாகும். ஆகவே அந்தப் பெண் அதனை தெருவால் போய்க் கொண்டிருக்கும் போது காதில் விழுந்த பொப்பிசைப் பாடலுக்கு கொடுக்கும் இரசனையாக எடுத்திருக்க வேண்டும் வழங்கப்படும் தற்காலிகப் பயணச்சீட்டின் செல்லுபடிக் காலம் ஒரு மாதம் மட்டுமே. அதன்படி அது 13.07.1995ல் காலாவதியாகி விடும். 12.07.1995 அன்று மீண்டும் அந்தப் பெண்தூதரகத்திற்கு வந்தாள். இப்போது புதிதான வேறு இரு வாலிபர்களின் அரவணைப்போ டு காணப்பட்டாள். விமானத்தில் இருக்கை கிடைக்காத காரணத்தால் தன்னால் குறித்தகால எல்லைக்குள் பயணம் செய்ய முடிய வில்லையாம். ஒரு வாரம் அவகாசம் தந்து மேலும் அவ்வாவணத்தின் காலக்கெடுவை நீடித்துத் தரும்படியும் கேட்டுக்கொண்டாள்.
இப்போது அவளின் வயிறு பிரத்தியட்சமாகவே

217 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
பெரிதாகப் போய்விட்டிருந்தது.
இத்தகைய தற்காலிக பயண ஆவணம் தமிழருக்கு வழங்குவதில் தூதரகம் மிகுந்த உதாசீனத்தையும் அக்கறையின்மையையும் கடைப்பிடித்து வருவதனால், ஏற்கனவே வழங்கப்பட்ட ஆவணத்தை கால நீட்டம் செய்வதிலுள்ள சிரமங்களை கற்பனை கூடப்பண்ணிப் பார்க்கமுடியாது. இது அதிகச் சிரமத்திற்கும் அவர்களது நையாண்டிக்கும் இடம் தரும் ஒரு சந்தர்ப்பமாகும். இக்காரணங்களால் ஆத்திரமடைந்த நான் கடுமையாக அவளைத் திட்டித் தீர்த்தேன்.
கண்ணிரால் காரியம் சாதிக்கும் திறமை பெண் களுக்கு எப்போதுமே கை வந்தகலை. இப்பெண்ணும் அதே ஆயுதத்தை பிரயோகித்துப் பார்த்தும் தூதரகஅதிகாரி இணங்க மறுத்து விட்டார். பின்பு எப்படியோ எப்போதோ வந்தவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்று போய் விட்டார்கள்.
1995ம் ஆண்டு நவம்பர் மாத நடுப் பகுதியில் வெலமூஸ்யாவின் தலைநகரான மின்ஸ்க் நகரில் இருந்து தொலைபேசி அழைப்பொன்றும் அதைத் தொடர்ந்து வெலரூஸ்ய சுகாதாரத் திணைக்களத்தின் பக்ஸ் செய்தியும் கிடைக்கப்பெற்றது. ரூஸ்ய மொழியில் இருந்த அவற்றின் சாராம்சம் இதுதான்!
“கோமதி சிவசம்பு என்ற இலங்கைப் பெண் ஒருத்தி இங்குள்ள வைத்தியசாலையில் பிள்ளை ஒன்றைப் பிரசவித்துள்ளாள். இலங்கைக் கடவுச்சீட்டை ஒத்த ஒரு ஆவணத்தை வைத்துக் கொண்டிருக்கும் இவள், பிறந்த குழந்தையை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறாள். இது தொடர்பாக இலங்கைத் தூதரகம் ஆவன புரிவதோடு இவர்கள் இருவரையும்

Page 112
மொஸ்கோ அநுபவங்கள் 218
கையேற்றுக் கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளு கிறோம்.”
பல ஆயிரம் மைல்களுக்கப்பால் அமைந்துள்ள மின்ஸ்க் நகரம் இப்போது ஒரு வேற்றுநாட்டுப் பட்டணம். முன்பு அது சோவியத் ஒன்றியத்தில் இருந்து வந்தது. அன்றியும் இதுதொடர்பாகத் தூதரகத்தின் பணி அதிகம் என்பதற்கில்லை. சட்டவிரோதமாக நுழைந்த வேற்று நாட்டுப் பிரஜை ஒருவர், அனாகதியாக விடப்பட்டிருப்பின், அந்த நாடு அவருக்கு அகதிக்கான அடிப்படைச் சலுகைகளை வழங்கவேண்டியது அல்லது அந்நாட்டிலிருந்து திருப்பி அனுப்பி வைக்கவேண்டியது குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் வரன்முறையாகும்.
இலங்கை அரச நடைமுறைப் பிரமாணங்களின் கீழ் இவ்வாறு ஒரு பிரஜை வேற்று நாடொன்றில் நிர்க்கதியாகி இருக்கும் சந்தர்ப்பத்தில், தாய்நாட்டில் வாழ்ந்துவரும் அவரது இரத்த உறவினர்களுக்கு விடயத்தை தெரியப்படுத்தி அவர்கள் மூலமாக பண ஏற்பாடுகளைப் பெற்றுக் கொண்டு திருப்பி அழைத்து வருவதே நடைமுறைச் செயல்பாடாகும். வெளி விவகார அமைச்சின் கொன்சூலர் பிரிவு இது தொடர் பான இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்.
ஆகவே, தத்தளிப்பு நிலையில் இருந்த கோமதி சிவசம்புவின் (இலங்கையில் உள்ள அவரது) மிக நெருங்கிய இரத்த உறவினரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்ற விபரங்களைப் பெற்று எமக்கு பக்ஸ் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டு, வெலருஸ்யன் சுகாதார அமைச்சுக்கு பதில் அனுப்பி வைத்தோம். பின்பு அவர்களது பதிலில் தெரிவிக்கப் பட்டிருந்த விபரங்களைத் தொகுத்து இலங்கை வெளிநாட்டமைச்சின் கொன்சூலர் பிரிவுக்கு உடனடி

219 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
நடவடிக்கைக்காக மற்றொரு பக்ஸ் அனுப்பி விட்டோம். ஆனால் வெளிநாட்டமைச்சில் இருந்து எவ்வித பதிலையும் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. மாதம் ஒன்றும் கடந்து விட்டது. சங்கதி அவர்களால் மறந்தே விடப்பட்டு விட்டது போலும் 24.11.1995 வெள்ளிக்கிழமை, கண்காணாத இடமொன்றில் முட்டை இட்டு அடைகாத்து குஞ்சு பொரித்துக் கூட்டிக் கொண்டு வரும் பேட்டுக் கோழியைப் போல, கோமதி தூதரக முன்றில் வந்து நின்ற போது, அது புரிசனோடு சண்டை போட்டுக்கொண்டு புகுந்த இடத்தை விட்டு நீங்கி பிறந்தகத்திற்கு வந்து நின்ற ஒரு மாட்டுப் பெண்ணை நினைவு கூரத் தோன்றியது.
சிக்கலான சீரற்ற குழப்பமான விவகாரங்களாயின் அவற்றை என்னிடமே மெல்ல தள்ளி விட்டு இருந்து விடும் தூதரக நிருவாகம், கோமதியின் அருவருப்பான பிரச்சினையையும் என் மீதே சுமத்தி விட்டது. காரியா லய அறையில் இருந்த என்னை பீயூன் கருமபீடத்திற்கு அழைத்துச் சென்று கோமதியைக் காண்பித்தான் . கோமதியைக் கண்டதும் என் ஆத்திரம் தீரமட்டும் நன்றாக ஏசினேன். முன்பு சொன்ன புத்திமதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு விட்டு இப்போது எந்த முகத்தோடு இந்தநிலையில் வந்தாய்? அறிவை உனக்கு ஆசை மறைத்து விட்டதா? கெடுகுடி சொற்கேளாது என்பது உண்மைதானா? என்றெல்லாம் என் கோபம் தீரும்வரை திட்டித் தீர்த்தாலும் ஏதோ ஒரு வித பச்சாதாபமும் என் இதயத்தின் ஒரு மூலையில் உணரப்படாமல் இல்லை.
வெலருஸ்யன் அரசாங்கமோ வீணான பாரத்தை ஏற்றுத் கொள்ளும் மனப்பக்குவம் இன்றி தாயையும் சேயையும் இரயிலேற்றி மொஸ்கோவுக்கு அனுப்பி விட்டது. மெஸ் கோவில் வந்திறங்கிய கோமதி

Page 113
மொஸ்கோ அநுபவங்கள் 220
வாடகைக் கார் ஒன்றை அமர்த்திக் கொண்டு தூதரகத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறாள். தங்க இடம் இல்லை. விமானப் பயணச்சீட்டுக்கும் பணம் இல்லை. தான் போக வழியறியாதான் தவில் போல மாரா ப் புடன் வந்தானாம் என்றது போல் கைக்குழந்தை வேறு.
கோமதியின் உறவினர்களை தேடிக் கண்டு பிடித்து எப்படியாவது வற்புறுத்தியேனும் பணத்தை பெற்று அனுப்பி வைக்குமாறு கேட்டு வெளி விவகார அமைச்சுக்கு மற்றுமொரு டெலக்ஸ் செய்தி அனுப்பப் பட்டது. பதில் வரும்வரை கோமதி குழந்தையுடன் எங்காவது சென்று தங்கி இருக்கும்படி கேட்கப்பட்டாள். “எங்கே போவது? யாரையும் எனக்குத் தெரியா தே! தயவு செய்து உதவுங்கள்” என்றாள். தூதரகத்தின் உயர் அதிகாரி மிகவும் கடுமையாகி "பிடித்துக் கலை ஆளை’ என்ற பாங்கில் கோஷமிட்டு விரட்டினார். கோமதிக்கு சிங்களம், ஆங்கிலம் எதுவுமே புரியாது. கொச்சை ரூஸ்யன் நாலு சொற்கள் வாயில் புரளுமாம். அனுதாபத்துடன் அணுகி 20 டாலர்களைக் கொடுத்து இந்தக் காசை வைத்துக் கொண்டு எங்காவது சென்று இரக்கப் பட்டோருடன் தற்காலிகமாக தங்கி இருக்குமாறும், அனுப்பிய கடிதத்திற்கு பதில் வந்ததும் மேற்கொண்டு பார்க்கலாம் என்றும் கூறினேன். திரு. சில்வா என்ற இரண்டாவது நிலையில் இருந்த அதிகாரியும் 30 டொலர் கொடுத்தார். ஆனாலும் கோமதி அவ்விடத்தை விட்டு அசையவே
இல்லை.
பிற நாட்டுக்குள் தஞ்சங்ச்கோரி செல்லும் நம்மவர்கள், அந்நாட்டில் எப்படியான கெடுபிடிகளை பிரயோகித்து விரட்டிவிட முயன்றாலும், அவற்றை எல்லாம் சகித்துக்கொண்டு அசையாமல் இருந்து விடவேண்டும் என்பது அவர்களது சூத்திரம். அழுது

221 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
அழுது அசையாமல் அப்படியே இருந்துவிட்டால் இறுதியில் தஞ்சம் கிடைத்துவிடும் என்ற அனுபவ வித்தையில் பயிற்சி பெற்றிருந்த கோமதியின் நடிப்பினை அப்போது நானும் புரிந்துகொள்ள வில்லைத்தான்.
நவம்பர் - டிசம்பர் மாதங்களில் மொஸ்கோ நகரம் பி.ப 4.00 மணிக்கே இருண்டுவிடும் காலை 8.15. மணிக்குப் பின்னர்தான் இருள்பிரியும். தூதரகத்திலிருந்து ஏறத்தாள 45 கி.மீட்டர் தொலைவில் குடியிருந்த என்னால் அங்கு மேலும் தாமதித்து நிற்க முடியவில்லை. பி.ப 4.00 மணிக்கு புறப்பட்டு சென்று விட்டேன். அப்போதும் கோமதி அப்படியே தான் இருந்து கொண்டிருந்தாள்.
முன்னைய தூதுவரது உதவியாளராக மொஸ்கோ வுக்கு வந்து சேர்ந்த இரத்தினாயக, ஆனந்த என்ற இருவரில் ஆனந்த தொழிலிழந்து சிலகாலம் மொஸ்கோவில் இருந்த ஒரு இந்தியன். உணவகத்தில் சொற்ப சம்பளத்திற்காக வேலை செய்து வந்தான். அப்போது உடன் வேலை பார்த்து வந்த இலங்கை மலையகத்து சுகுமார் என்ற பையனின் தொடர்பு அவனுக்கு ஏற்பட்டது. சுகுமார் மொஸ்கோவில் ஒரு ரூஸ்ய குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தபோது அங்கிருந்த ஒரு ரூஸ்யப் பெண்ணை மணம் முடித்து குடியும் குடித்தனமுமாக இருந்து வந்தான். ஆனந்தவின் இந்த அறிமுகத்தைப் பயன்படுத்தி சுகுமாரை அழைத்து கோமதிக்கும் குழந்தைக்கும் அடைக்கலம் கொடுக்குமாறு கேட்கப்பட்டான். மொத்தமாக 100 டொலர் மட்டுமே அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அந்நிய குடும்பமொன்றில் குடியிருந்து வரும் சுகுமாரால் வாரக் கணக்கில் ஒரு தாயையும் பிள்ளையையும் வைத்துக் காப்பாற்றி வருதல் என்பது

Page 114
மொஸ்கோ அநுபவங்கள் 222
இலேசுப்பட்ட காரியமா என்ன? அப்படி இருந்தும் சுகுமார் அவ்விரு வரையும் O7. 12. 1995 @lのcmDT கைகொடுத்துக் காப்பாற்றி வந்தார்.
இது இவ்வாறிருக்க சுகுமார் வேலை செய்து வந்த இந்தியன் உணவகம் திடீரென மூடப்பட்டு விட்டதால் வேலை இழந்த நிலையில் கஷ்டத்துடன் போராடிக் கொண்டிருந்தான் அவன். ஆனந்த புதிதாக வந்த தூதருக்கு வேலையாளாகச் சேர்ந்து விட்டான். சுகுமாருக்கோ அப்படி ஒருவரும் உதவுவாரில்லை. தங்கி இருந்த ரூஸ்ய வீட்டுக் குடும்பம் கோமதியை எப்போதும் நச்சரித்துக் கொண்டும் ஏசிக் கொண்டுமே இருந்தது. அந்நிய வீட்டில் இருக்கும் நாம் அவர்களுக்கு இடைஞ்ச லாகவோ, பாரமாகவோ அவர்களைப் புறந்தள்ளி விட்டு மகாராணி என்ற நினைப்பிலோ இராமல், அன்பாகவும் பண்பாகவும் சுத்தமாகவும் பழகிவர வேண்டும் என்ற எண்ணம் கூட கோமதிக்குக் கிடையாது. ஐயோ என்றால் ஆறுமாதத்திற்குப் பாவம் பிடிக்கும் என்ற நிலையில் தான் கோமதியின் செயல்பாடுகள் அமைந்திருந்தனவாம். இதனால் பிடரியைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக கோமதியைக் கலைத்து விட கங்கணம் கட்டிக் கொண்டிருந்த ரூஸ்யக் குடும்பத்தோடு மோதியதால் பாவம் சுகுமாருக்கும் பிரச்சனை அங்கு தோன்றியது.
இந்தக் கெடுபிடிகளால் சுகுமார் தூதரகத்தை நெருக்க, தூதரகம் அதன் கும்பகருண நித்திரையை விட்டொழித்து அப்போதுதான் Feed memoryயில் தொழிற்பட ஆரம்பித்தது. ஆனாலும் இந்தப் பிரச்சினையை விடுவிக்க வேண்டி வேறொரு பிரச்சினையை உருவாக்குவதா என்று சிந்தித்துக் கொண்டிருந்த சமயம், தூதரக அதிகாரி ஒருவர் குடியிருந்து இடைநடுவில் விட்டுச் சென்று விட்ட

223 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
வீடொன்று வெறுமையாக இருந்ததை நினைவு படுத்தி தற்காலிகமாக கோமதியையும் குழந்தையையும் அங்கு தங்க வைத்தால் என்ன என்ற யோசனையைத் தெரிவித்தேன். அது அவர்களுக்கு திருப்தியாக இல்லா திருந்த போதிலும் வேற்றுவழி எதுவும் இல்லாதிருந் தமையினால் கோமதியை அங்கு குடிவைப்பதற்கு அரை மனதுடன் சம்மதித்தார்கள்.
முன்னைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தபோது அரசியல் செல்வாக்குப் பெற்று, கல்வி, கலாசார உத்தியோகத்தராக தூதரகத்திற்கு நியமனம் பெற்றவர் திரு. சாந்த பண்டார குலசேகர. 1995ம் ஆண்டு பிற்பகுதியில் பூரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை அமைத்ததும் ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்கில் நியமனம் பெற்றவர்கள் பலர் திருப்பி அழைக்கப்பட்டார்கள். இதனால் சாந்த குலசேகர தன் சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்யுமுன்பாகவே அவரது நியமனம் ரத்துச் செய்யப்பட்டு விட்டது. ஆனால் அவர் குடியிருப்பதற்கு என்று வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடு அவ்வருடம் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை வெறுமனே கிடக்க வேண்டிய நிலை இதனால் ஏற்பட்டது. கோமதியும் குழந்தையும் மாடி வீடொன்றின் 7ம் தட்டில் குடியிருத்தப் பட்டார்கள். குடியிருத்தப் பட்டார்கள் என்பதிலும் பார்க்க - சிறைவைக்கப் பட்டார்கள் என்று சொல்லுவதுவே பொருத்தமானது. கோமதிக்கு இவ்வாறானதொரு அனுதாபத்தை தேடிக்கொடுக்க அவளது மூன்று மாதக் குழந்தையே காரணமாகியது. குழந்தையின் பாதுகாப்பினதும் பராமரிப்பினதும் இன்றியமையாமையை எவராலும் தட்டிக்கழிக்க வொண்ணாமல் போயிற்று.

Page 115
மொஸ்கோ அநுபவங்கள் 224
வீட்டில் கொண்டுபோய் விடப்பட்டாளேயன்றி மனிதாபிமானத்துடன் உயிர் வாழ்ந்து வருவதற்கான எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. மாறாக வீட்டைப் பூட்டிச் சாவியை எடுத்து வரவேண்டும் என்றும், தொலைபேசி தொடர்பை துண்டித்து தூக்கிக் கொண்டு வரவேண்டும் என்றும் தீர்மானித்தார்கள். இதனைக் கேட்டு என்மனம் கொதித்தெழுந்தது.
“முற்றிலும் ஓர் அன்னிய இடத்தில் அதுவும் கைக்குழந்தையுடன் தனியாக இருக்கும் ஒரு பெண்ணை வைத்து வீட்டைப்பூட்டி திறப்பை எடுத்துக் கொண்டு வந்தால் ஏதாவதொரு ஆபத்து நேர்ந்து விட்டதென்று வைத்துக்கொள்ளுவோம்; அதிலிருந்து அவளால் எப்படி ஒடி உயிர்தப்பமுடியும்? வெளியிலிருந்து யாரால் உதவ முடியும்? அதுபோக செய்தியை யாயினும் பரிவர்த்தனை செய்து உதவி கோருவதற்கு இல்லாமல் தொலைபேசியையும் நீக்கி விட்டால் அவளது நிலைமை எவ்வாறிருக்கும்? மனிதத் தன்மையுடன் சிந்தித்துப்பாருங்கள்” என்று சத்தமிட்டேன். அதனால் அந்த யோசனை விடுபட்டு விட்டது,
அந்த வீட்டில் குளிர் சாதனப்பெட்டி கூட இருக்கவில்லை. அரிசி, காய்கறி, பால், சீனி, என்று எதுவுமே இருக்கவில்லை கைக் குழந்தையுடன் சென்று பொருட்கள் வாங்கி வரும் நிலைமையும் அவளுக்கு இல்லை. குளிர் அகோரமாக இருந்தது. வீட்டில் கொண்டு வந்து விட்ட அன்று தொடக்கம், ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை வேலை முடிந்ததும் என் சிரமத்தின் மத்தியிலும் அவ்விடம் சென்று தேவையான பொருட்களை கேட்டு வாங்கிக் கொடுத்து வந்தேன்.
உலகிலேயே மொஸ்கோ நகரமே அப்போது

225 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
வாழ்க்கைச் செலவு அதிகம் கூடிய இடமாக கருதப்பட்டது. தனியாள் ஒருவருக்கு மாதச் செலவாக சராசரி 1505 வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது. குடிவகை, புகைத்தல் வேறு ஆடம்பர செலவுகள் இதனுள் அடக்கப்படவில்லை. அப்படி இருந்தும் அந்தப் பெண் திருப்திப்படாமல் அது இது என்று எப்போதும் ஏதோ ஆடம்பரப் பொருட்கள் பலவற்றை வாங்கித் தருமாறு கோரிக்கை விடும். இத்தனைக்கும் செலவுகள் யாவும் எனது தனிப்பட்ட கணக்கிலிருந்தே செய்யப்பட்டன. “அன்றுபோனதும் அரசாண்டதும்” என்றபடி தூதரகம் கோமதியின் பிரச்சினையை திரும்பவும் மறந்து விட்டிருந்தது. ஆனால் எதிர் மறையாக என்தலை மீது சுமத்தி விடப்பட்டிருந்தது. பொறுப்பை மனிதாபிமான அடிப்படையில் நான் சிரமமெடுத்து செய்து கொண்டு வந்தேன். ஆயினும் வாரக்கணக்கில் அல்லது மாதக் கணக்கில் வைத்துக் காப்பாற்ற நான் என்ன ஒப்பந்தம் எழுதிக் கையெப்பமிட்டவனா? அல்லது ஏமாளியா?
தூதரகத்தால் கோமதியின் திரும்பு வழிப் பயண ஒழுங்குகளை கவனிக்கவெனக் கோரி அமைச்சுக்கு அனுப்பப்பட்ட டெலக்ஸ், பக்ஸ் செய்திகளுக்கு பதில் அனுப்பி வைக்கப்பட்டது. கோமதியின் கணவனென்று கூறப்பட்ட ஜோர்ஜ் எட்வேட் இராஜேந்திரா, குவைத்தில் சிலகாலம் பணிபுரிந்த அவளது தாயார் தவமணி ஆகியோர் அவளுக்குப் பணம் கொடுத்து உதவ மறுத்து விட்டனர் என அதில் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்க நடைமுறையில் உள்ள பிரமாணங்க ளின்படி அரசு பணச்செலவு செய்து அனுப்பி வைக்கப் படுவதென்பது நடக்க முடியாத ஒன்று. உறவினரும் அரசாங்கம் பொறுப்பெடுத்துச் செய்யும் என்ற நப்பாசையில் தங்களால் உதவ முடியாது என்று கையை
15

Page 116
மொஸ்கோ அநுபவங்கள் 226
விரித்திருக்கிறார்கள். ஆகவே கோமதியும் பிள்ளையும் மொஸ்கோவை விட்டு புறப்பட எந்த ஒரு வழியும் தெளியவில்லை. இதற்கிடையில் அடைக்கலம் கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டு வாடகைக் காலமும் 31.12.1995 உடன் காலாவதியாகி விடும். அதன் பிறகு நடு வின்ரரில் வீதியில் தான் நிற்க வேண்டிய அவலம் ஏற்படும். இதற்கிடையில் இவர்களால் எனக்கேற்படும் தேவையற்ற செலவினங்கள் அதிகமாகிக்கொண்டே போகின்றன.
அப்பப்பா நான் அப்பனல் லடா!
பப்பப்பா நான் தாயுமல்லடா!
எங்கோ எவரோ பெற்ற பிள்ளையோ.. என்பது போல் யாரோ பெற்ற பிள்ளையின் பேராலும் எங்கிருந்தோ வந்த கோமதியின் பெயராலும் எனது தோளில் வீண் சுமைகள் ஏறிக்கொண்டே இருந்தன.
உண்மையும் நேர்மையும் கொண்ட பண்பாளர் களை உலகம் பலயினர்கள் என்றுமட்டும் கருதவில்லை. பெருத்த முட்டாள் என்றும் ஒரே மட்டமாக தீர்மானித்து விடுகிறது. அதுமட்டுமல்ல அரச பொதுச் சேவையிலும் கூட இன்று குறுகிய மனப்பான்மைக்கும் சுய இச்சைகட்கும் இடமளித்து “அனைத்துப் பிரஜை களுக்கும் ஒரேமாதிரியான அணுகுமுறை கையாளப் படுதல்" என்ற கோட்பாட்டை விடுத்து குறுகிய இனக்குரோத விரோத சிந்தனைகளோடு செயலாற்றி வருவதும் கூட மலிந்து விட்டது. இது இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியா, ரூஸ்யா போன்ற வல்லரசு நாடுகளுக்கும் பொருந்துவதாக உள்ளது.
கோமதியின் பிரச்சினை பற்றி எனக்குள்ளே பலவாறாகச் சிந்தித்தேன். அன்று சனிக்கிழமை

227 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
விடுமுறை நாள். கோமதியுடன் சிறிது நேரம் உரையாடினேன். கோமதியின் வாழ்கை வரலாறு, நடத்தை, குண நலன், உறவினரது செல்வச் செழிப்பு என்பவற்றை எல்லாம் அவளது வாய்மொழி மூலம் அறிந்து கொண்டேன்.
உறவினர்கள் பலர் ஜேர்மனியில் இருப்பது தெளிந்தது. தொலைபேசி உபயோகிக்க கூடாது என்ற தூதரகத்தின் உத்தரவு, அவளை வெளித் தொடர்பு கொள்ள முனையாதபடி தடுத்தது. பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டு ஜேர்மனியில் இருந்த அவளது மச்சாளுடனும் அண்ணனுடனும் தொலைத் தொடர்பு கொள்ளும்படி கூறினேன். அவர்களுக்கு தன் நிலைமையை விளங்கப்படுத்திக் கூறி உதவிசெய்யுமாறு வேண்டுகோள் விடுக்கும்படி ஆலோசனை பகன்றேன். ஜேர்மனி மச்சாள் இரஞ்சனியுடன் பேசும்போது எவ்வளவு சாகசமாக உண்மைகளை மறைத்து பொய்யை கூறி விம்மலுக்கும் அழுகைக்குமிடையே ஒப்பு வித்தாள் பாம்பின் காலைப் பாம்பறியாதா? ரஞ்சனி மச்சாளும் விட்டுக்கொடுக்காமல் கோமதியின் நடிப்புக் கெல்லாம் தகுந்த பதிலடி கொடுத்தாள். அவளது குட்டுகள் பலவற்றை அம்பலமாக்கினாள். ஏசினாள். தூற்றினாள். பிள்ளை பிறந்தது, சோரம் போனது, அதனை வீசி எறிந்து விட்டு ஒட நினைத்தது என்ற எல்லாவற்றையும் அடுக்கிக் கொண்டே போன ரஞ்சனியை இடைமறித்து தொலைபேசியை பெற்று நானும் கதைத்தேன். “எப்படி இருந்தாலும் பழிவாங்குவதற்கு இதுவல்ல தருணம். கோமதியின் இக்கட்டான நிலைமையை உணர்ந்து நீங்கள் யாராவது உதவி செய்தாலன்றி அவளால் மீளமுடியாது” என்றும் கூறினேன். கடைசியாக, அங்குள்ள ஏனையவர்களிடமும் கதைத்து

Page 117
மொஸ்கோ அநுபவங்கள் 228
விட்டு திங்கட்கிழமை எனக்கு அழைப்பு விடுப்பதாக உறுதியளித்தாள். இரஞ்சனியின் பேச்சு, தொனி என்பன அவரை RC5 தீர்மானமுள்ளவர் என்பதைப் பறைசாற்றியது.
திங்கள் போய் புதன்கிழமை வந்தும், செய்தியே வரவில்லை. இரஞ்சினியை ஏனைய உறவினர்கள் தடுத்திருக்கவேண்டும் என நம்புகிறேன். கோமதி தூதரகத்தின் அனுசரணையில் இருப்பதனால் எல்லாவற் றையும் அரசாங்கமே கவனிக்கும் என்ற கண்மூடித்தன DG எதிர்பார்ப்புடன் இப்படி அவர்கள் நினைத்திருக்கலாம். இங்குள்ள நிலைமை அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது.
இலவசமாக கிடைப்பது இலவசமாக காரிங்களைக் கவனித்துக் கொள்வது என்பவற்றில் எம்மவர்கட்குள்ள வாஞ்சை பிரத்தியேகமானது. இதனால் அவலத்தைக் கூட மறந்து மந்தைக் கூட்டம் போல் பண்பற்று வாழ்ந்து வருகின்றனர்.
என்போன்ற சில ஏமாளிகளும் கோமதிக்கு தூரத்து உறவினர்களாக ஜேர்மனியில் இருந்தனர். தொலை பேசியில் தொடர்பு கொண்டதும் நடராசா என்ற சாரதி ஒருவர் கோமதியின் வார்த்தைகளை நம்பி இரக்கப்பட்டு 850 டொச் மார்க் அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். அதன் படி ஒரிரு தினங்களில் அவ்வாறு பணத்தை அனுப்பியும் வைத்தார். இப்போது கோமதியின் விடயத்தில் ஒரு புதியதொரு அணுகுமுறை தென்பட்டது. எப்படியும் விமான பயணச்சீட்டைப் பெற்று நாடுக்கு அனுப்பி விடும் முயற்சியில் வெற்றி பெறப்பட்டு விட்டது என்றே சொல்லலாம்.
வெளி விவகார அமைச்சும் தூதரகமும் முயன்று

229 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
சாதிக்க முடியாத இந்தப் பிரச்சினையை தனி நபராக இருந்து கொண்டு சா மார்த்தியமாக விடை கண்டுகொண்ட நற்செய்தியை உத்தியோக பூர்வமாக அறிக்கை இட விரும்பி, அரச தொலைபேசியை தற்றுணியின் பேரில் உபயோகிக்க அனுமதித்து எவ்வாறு கோமதியின் உறவினர்களோடு தொடர்பு கொண்டு பணம் பெறமுடிந்தது என்பதை அறிவித்தேன். தீர்மானத்தை வரவேற்ற மேலதிகாரி தொலைபேசியை துண்டித்து விடுமாறு கட்டளை பிறப்பித்திருந்தார்! இதனை அறிந்து ஆத்திரமுற்ற நான் “எதுவேண்டு மானாலும் செய்யுங்கள். இன்று முதல் நானும் *, இவ்விவகாரத்தில் தலையிடாது பேசாமல் இருந்து விடுகிறேன். அப்போதுதான் தமிழர் மீது எவ்வாறு பாரபட்சம் காட்டப்படுகிறதென்ற சமாச்சாரம் அம்பலத்திற்கு வரும்” என்று உரத்துக் கூக்குரலிட்டேன். அதனை அடுத்து தொலைபேசியை விலக்கும் முடிவு இடை நிறுத்தப்பட்டது. அப்போது எனக்கு அது வெற்றியைத் தேடித்தந்த தென்று ஆனந்தப்பட்டேன் ஆனால் உண்மையிலே அதுவே ஒரு பெரிய இடியை என் தலையில் விழுத்தும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவே இல்லை.
இத்தனைக்கும் இந்த விடயங்கள் யாவும் கோமதிக்கு தெளிவாகவே தெரியும்.
26.12.1995. அன்று வங்கியிலிருந்து பணம் பெறப்பட்டது. 800 மார்க் மட்டுமே அனுப்பப் பட்டிருந்தது. அதாவது வங்கிக் கட்டணம் 20 மார்க் போக மிகுதியாக 533 டாலர்கள் மட்டுமே தேறின. பணம் கிடைத்தும் பயணத்திற்கான ஏற்பாடுகள் துரிதமாக்கப்படவில்லை. ஏனோ தானோ என்ற இழுத்தடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்கிடையில் விடயமறிந்த சிலர் இரவு நேரங்களில்

Page 118
மொஸ்கோ அநுபவங்கள் 230
கோமதி குடியிருந்த வீட்டின் மணியை ஒலிக்கச் செய்வதும் வேடிக்கை காட்டுவதுமாக நையாண்டி பண்ணிக் கொண்டு திரிந்தனர். 25.12.1995 நத்தார் கொண்டாட்ட தினத்தன்று யாரோ சிங்கள இளைஞர்கள் கோமதியை தொலைபேசியில் அழைத்து அங்கு அவளிடம் வருவதற்குக் கேட்டனராம். இதில் உண்மை இருக்குமோ என்னவோ கோமதியின் வாய் மொழிக் கூற்றே இவைகள்.
நான் தூதரகத்தில் நடைபெற்ற இந்த அவலங்களைக் கூறி, “நீங்கள் அவளது பயணத்தை இழுத்தடியுங்கள். உங்கள் பையன்கள் இப்படி சேட்டை விடட்டும்” என்று கூப்பாடு போட்டதைத் தொடர்ந்து 28. 12. 1995 அன்று கோமதி குழந்தையுடன் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல வழி அமைக்கப்
--gil.
முன்பு ஒருவழி விமானப் பயணச்சீட்டு 350$ என்று கூறிய முகவர் இப்போது தாய்க்கு 450$ என்றும் குழந்தைக்கு 65$ என்றும் மொத்தம் 5158 தரப்படவேண்டும் என்று கட்டணத்தை உயர்த்தி விட்டார். கோமதியோ தன்னால் 400$ மட்டுமே தரமுடியும் மிகுதி தன் குழந்தைக்கு பொருட்கள் வாங்கவும் பிற செலவுகட்கும் வேண்டும் என்று அடம் பிடித்தாள்.
ஒரு சிக்கல் போய் வேறொன்று கருக்கட்டி நின்றது. எப்படியும் இதனைமுடித்து விடவேண்டும் என்ற மனப்பக்குவத்தோடு இருந்த நான் 450$ ஐ கோமதியைக் கொடுக்கும்படியும் முகவர் மூலம் கட்டணத்தைக் குறைத்து 500$ ஆக்கி வித்தியாசப் படும் 50$ ஐ நான் கொடுப்பதற்கும் ஒப்புக்கொண்டேன். அதன்படி பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. இதை

231 ஆரையம்பதி க. சபாரெத்தினம்
விட வீசாக்கட்டணமாக 158 தேவைப்பட்டது. அதனை இரண்டாவது அதிகாரியான திரு. சில்வா பொறுப் பேற்றார்.
இதற்கிடையில் எத்தனை தடவை சொல்லியும் அவற்றை எல்லாம் கருத்திற் கொள்ளாமல் தொலை பேசியில் கோமதி உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பேசிய கட்டணமாக 150$ ஐயும் நானே பொறுப்பேற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது!
தொலைபேசியை அகற்றுவதென்ற அவர்களது
முடிவுக்கு குறுக்கே நின்று உதவியதற்குப் பயன் தண்டனை - அபராதம் 150$.
யானை அறிந்தறிந்தும் தன் பாகனையே கொல்லுமல்லவா ?
(அநுபவம் தொடரும்)

Page 119
இளம்பிறை பதிப்பகம்
நந்தாவதி (சிறுகதைகள்) - நவம், இலங்கை ரூ. 30.00 காத்திருத்தல் (கவிதைகள்) - நவம் அரவிந்தன், ஜேர்மனி ரூ. 21.00 புதியதல்ல புதுமையுமல்ல (கவிதைகள்)
. கவிஞர் எழிலன், ஜேர்மனி ரூ. 50.00 பாவலரேறு பெருஞ்சித்திரனார் (கட்டுரை)
- இர.ந. வீரப்பனார், மலேசியா ரூ. 25.00 ஈரமுள்ள காவோலைகள் (நாடகம்)
. எம்.பி. செல்லவேல், இலங்கை. ரூ. 40.00
உலகத் தமிழர் (பாகம் - 2)
. இர.ந. வீரப்பனார், மலேசியா ரூ. 100.00 மும்மொழித் திருக்குறள். இர ந. வீரப்பனார், மலேசியா ரூ. 10.00 கனவுச் சிறை (நாவல்) - தேவகாந்தன், இலங்கை ரூ. 7500 பத்துப்பாட்டு (கவிதைகள்)
- கவிஞர் வி. கந்தவனம், கனடா ரூ. 25.00 ஆறுமுகம் (கவிதைகள்) - கவிஞர் வி. கந்தவனம், கனடா ரூ. 35.00 புதுக்கோலங்கள் (மெல்லிசை பாடல்கள்)
. கோவிலூர் செல்வராஜன், நோர்வே ரூ. 30.00 எனக்காகப் பூக்கும் (நாவல்) - ஏ. ரகுநாதன், பிரான்ஸ். ரூ. 40.00 உலகத் தமிழர் (பாகம் 3) - இர.ந.வீரப்பனார், மலேசியா ரூ. 120.00 பர்மா பெரியார் டி.எஸ். மணி - பர்மா . 12.00
அரை மனிதர்கள் (சிறுகதைகள்)
கவிவேழம் பாரதிபாலன், டென்மார்க் ரூ. 60.00
குருதி மண் (சிறுகதைகள்) 4.
- கனகசபை தேவகடாட்சம், இலங்கை ரூ. 30.00
பிரான்சில் அரசியல் புகலிடம் (சட்ட வழிகாட்டி நூல்)
. . . ஆர். சகாதேவன், எம்.ஏ. பிரான்ஸ் ரூ. 35.00 மொஸ்கோ அநுபவங்கள் - ஆரையம்பதிக. சபாரெத்தினம்
- பெய்ரூத் லெபனான் ரூ. 7500


Page 120


Page 121