கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமதர்மப் பூங்காவில்

Page 1


Page 2

சமதர்மப் பூங்காவில்
லெ. முருகபூபதி
பாரதி இல்லம் 995, அலஸ் வீதி, நீர்கொழும்பு, இலங்கை.

Page 3
*சமதர்மப் பூங்காவில்’
லெ. முருகபூபதி
முதற் பதிப்பு: பதிப்புரிமை :
வெளியீடு
அச்சகம்
1 ஜனவரி 1990 கமலா முருகபூபதி
பாரதி இல்லம் 995, அலஸ் வீதி, நீர்கொழும்பு,
; சாமர அச்சகம்
22 ஏ, மல்லிகா ஒழுங்கை, கொழும்பு 6. m
“SAMADHARMA POONGAVIL' TRAVELOGUE) L. MURUGAPooPATHY
First Edition:
Publishers :
1st January 1990
. . . BAFRATHY LLAM 99/5, Alles Road, Negombo, Sri Lanka,
copy Right: KAMALA MURUGAPooPATHY
Printers
Chamara Printers
22A, Malika Lane, Colombo 6.

சமாதானத்திற்காகவும் ܗܘܝܧ மனித நேய மேம்பாட்டிற்காகவும் உழைக்கும் உன்னத உள்ளங்களுக்கு
இந்நூல் சமர்ப்பணம்

Page 4
இந்நூலாசிரியரின் பிற நூல்கள்
“சுமையின் பங்காளிகள்' (விறு கதைகள்)
(சாகித்ய மண்டலப் பரிசுபெற்றது)
*சமாந்தரங்கள்" (சிறுகதைகள்)

முனனுரை
காலங்கள் வேகமாக ஓடிவிடுகின்றன. ஆஞல், அக் காலங்களில் தரிசித்த மனிதர்கள் நெஞ்சை விட்டு எப்படி அகலமாட்டார்களோ அதே போன்று காலங்களில் எதிர் நோக்கப்பட்ட அனுபவங்களும் என்றென்றும் நிலைத்தே நிற்கின்றன.
இவ்விதம் நெஞ்சைவிட்டு அகலா மனிதர்களும்-கிட் டிய அனுபவங்களும் சங்கமித்து உருவாகிய பயணக் கதையே இந்த நூல்.
சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு வீரகேசரி வார வெளியீட்டில் என் அன்பார்ந்த வாசகர்களுடன் பதினைந்து வாரங்கள் பகிர்ந்து கொண்டதை இப்பொழுது தொகுத்து தனி நூலாக்கியுள்ளேன்.
இந்நூல் எப்பொழுதோ வெளியாகியிருக்கவேண்டிய ஒன்று. காலம் கனியும் போதுதானே சில கருமங்களும் சாத்
யமாகின்றன. அவ்வாறு சாத்தியமான முயற்சியே
Ag) 点 ,}מ நூல்.
இலக்கிய உலகினுள் பிரவேசித்த காலம்முதல் சோவி யத் இலக்கியங்களையும் சோவியத் அரசியல் வரலாறுகளையும் படித்திருத்தாலும் எச்சமயத்திலும் அந்த சோஷலிள பூமி யை போய்ப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் துளிர்விட்டதேயில்லை.
05

Page 5
வறிய நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்கும் ஆதர்சமா கத் திகழ்ந்த அந்நாட்டைப்பற்றிய தகவல்களை ஆதாரமாகக் கொண்டு பல கட்டுரைகளும் எழுதியதுண்டு. சோவியத் திரைப்படங்களை நேசித்ததுண்டு. ஆயினும் - இப்படி ஒரு எதிர்பாராத பயணத்துக்கு நானும் தயாராவேன் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டேன்.
என் வாழ்வில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பங்களில் ஒன்றுதான் இந்தப் பயணமும் - அது தொடர்பான கதை պւն.
இப்பயணக் கதை எழுதப்பட்ட ஆண்டுக்கும் இது நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியாகும் ஆண்டுக்கும் இடயே எத்தனை யோ மாற்றங்கள் நடந்துள்ளன. ஆயினும் அப்பொழுது வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டதையும் அச்சமயம் விரி வஞ்சி நான் தவிர்த்த பல விடயங்களையும் இத்தொகுப்பில் முடிந்த வரையில் சேர்த்திருக்கின்றேன்.
இந்த உலக இளைஞர், மாணவர் விழா 1985 ஆம் ஆண் டின் நடுப்பகுதியில் நடைபெற்றது. கடந்துள்ள இந்நான் காண்டு காலப்பகுதியில் உலக நாடுகளிலும் சோவியத்திலும் ஏற்பட்ட மாறுதல்களை மேற்படி உலக விழாவின் பின்ன னியிலேயே நான் பார்க்கின்றேன்.
ஒன்பது வருடங்களாக நீடித்த ஆப்கானிஸ்தான் நெருக் கடி தீர்வதற்காக ஜெனீவாவில் கைச்சாத்திடப்பட்ட வர லாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை.
அமெரிக்காவின் முன்னுள் ஜனுதிபதி ரேகனுக்கும் சோவியத் அதிபர் கொர்பச்சேவுக்கும் இடையே நடந்த முதல் சந்திப்பு - அதனைத்தொடர்ந்து அணுவாயுத உற் பத்தியை குறைப்பதற்கு இருதரப்பிலும் உருவான சுமுக மான இணக்கம்.
எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின் பரிணுமவளர்ச்சியினுல் இன்றைய சோவியத்தில் உருவாகியுள்ள மாறுதல்கள். -
06

இவ்விதம் எத்தனையோ விடயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த உலக விழாவில் தோழர் கொர்பச் சேவ் தெரிவித்த ஆணித்தரமான கருத்துக்கள் இப்பொழுது உயிர் பெற்றிருப்பதாகவே நான் கருதுகின்றேன்.
இதேவேளையில் ஒரு கசப்பான உண்மையையும் தெரி விப்பது எனது கடமையாகின்றது. ஒரு தலைவரது கால கட்டத்தில் சரியெனப்பட்டவை, "நியாயம்’ என வாதிக்கப் பட்டவை பிறிதொரு தலைவரது காலகட்டத்தில் தவருன தாகவும் நியாயமற்றதாகவும் வாதிடப்படுகிறது.
காலத்திற்கு ஏற்ப மாறுதல்கள் அவசியமானவை என்ற சிந்தனையை பெரிதும் வரவேற்கின்றேன். ஆனல் - இன்று சோவியத் அதிபரினுல் கண்டிக்கப்படுவனவற்றையும் விமர் சிக்கப்படுபவற்றையும் முன்னர் - நம்மவர்கள் எதுவித தீர்க்கதரிசனமுமின்றி “சரி” என்றும் 'நியாயம்’ என்றும் பேசியதும் எழுதியதும்தான் படைப்பாளி என்ற முறையில் என்னுல் ஜீரணிக்க முடியாதிருக்கின்றது.
இது விடயத்தில் 'நம்மவர்களின்" வாய்ப்பாடுகளுக்கு புதிய உருவம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன்.
மாக்ஸிஸம் வாழும் விஞ்ஞானம் - வளரும் விஞ்ஞா னம் என்பதற்கு உயிரூட்டிய தீரராகவே தோழர் கொர்பச் சேவ் வரவேற்கப்படுகிருர்,
*சமதர்ம பூங்காவில். தொடராகி உலாவந்த சமயம் பலர் பாராட்டினர்-வரவேற்றனர்-விமர்சித்தனர். ஒரே ஒரு சம்பவம் இப்பொழுதும் என் நெஞ்சமதில் பசுமையாக ஆரோகணித்துள்ளது. −
நீர்கொழும்பு நகரில் வீதியொன்றில் வேகமாக சென்று கொண்டிருந்தேன். ஒரு இனைஞர் கைதட்டி அழைத்து என் வேகத்தை நிறுத்தினர். நின்றேன். "பூபதி அண்ணு, உங்களது சமதர்ம பூங்கா தொடரை படித்து வருகிறேன்.இந்த வாரம்
07

Page 6
நீங்கள் எழுதியிருந்த வரிகள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. எங்கள் வீட்டுக்கு வந்து விட்டுப் போகிறீர்களா' - அந்த இளைஞரின் அன்பான அழைப்பை தட்டிக்கழிக்க திராணி யற்று சென்றேன். அவரது வீடு தென்னுேலையால் கூரையும் சுவரும் அமைந்தது. அந்தச் சின்னஞ்சிறு வீட்டின் சுவரில் "சோஷலிஸம் மரணத்தைப் போன்று நிச்சயமானது. என்றே ஒரு நாள் அது உலகை அணைத்துக் கொள்ளும்'-என்ரு வாசகங்கள் எழுதப்பட்ட வெள்ளைக் காகிதம் ஒட்டப்பட்டி ருந்தது. ‘பூபதி அண்ணு . என்னைக்கவர்ந்த வரிகளை இவ்வி தம் சுவரில் பதித்துள்ளேன்” - என்ருர் அந்த இளைஞர். அவர் முகத்தில் உதிர்ந்த பெருமிதத்தை எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை.
சோவியத் பயணத்தின் பின்னர் என் அன்பிற்கினிய நண்பர்கள் எனக்கு தேநீர்விருந்துபசார வைபவங்களை நடத்தி வாழ்த்தினர்கள். கொழும்பில் மலைநாட்டு எழுத்தா ளர் மன்றமும் யாழ்ப்பாணத்தில் மல்லிகைப் பந்தலும் தேநீர் விருந்துகளை ஒழுங்கு செய்திருந்தன.
பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி உயர்தர வகுப்பு மாண வர்கள் என்னையும் - என்னைப்போல் வெளிநாடொன்றுக்கு சென்று திரும்பிய சகோதரி யோகா பாலச்சந்திரனையும் அழைத்து தங்கள் கல்லூரியில் பேச வைத்தனர்.
இலங்கையின் சோவியத் ஸ்தானிகர் தமது வாசஸ் தலத்தில் சோவியத் சென்று திரம்பிய பிரதிநிதிகளுக்கு இராப்போசன விருந்தளித்து பாராட்டிஞர், சோவியத் தகவல் பிரிவு - இப்பயணத்துக்கு முன்னரும் பின்னரும் பத்திரிகையாளர் மகாநாடுகளை நடத்தியது. இலங்கை - ஜெர்மன் நட்புறவுக் கழகம் ஒரு மாலையில் இனிமையான சந்திப்பை ஏற்பாடு செய்தது.
இலங்கை வானெலி எனது பயண அனுபவங்களை நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள வழிவகுத்துத் தந்தது.
08

இவற்றையெல்லாம் ஏதோ "சம்பிரதாய பூர்வ" மான தாக என்ஞல் கருதமுடியவில்லை. வெறுமனே பத்திரிகை யாளனுக வாழ்ந்திருப்பின் அவற்றையெல்லாம் ‘சம்பிரதாய' கணக்கில்தான் சேர்த்திருப்பேன்.
ஒரு படைப்பாளியாகவும் பேனே பிடிக்கின்றமையால் இந்நிகழ்ச்சிகள் என்னை பொறுப்புணர்வுடன் எழுதத் தூண் டின.
இந்த உலக விழாவில் ஏகாதிபத்திய நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலங்களையும் அங்கு வியட்நாம் தேவதை தனக்கு நேர்ந்த கோரமான அனுபவங்களை தெரிவித்து முன்வைத்த கோரிக்கையையும் - என் தாய்த் திருநாட்டின் அனர்த்தங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின் றேன்,
வியட்நாம், பங்களாதேஷ், கம்பூச்சியாவில் தொடர்ந்த சோகம் இலங்கையிலும் நீடித்து அந்நாடுகளில் ஏற்பட்ட உயிரழிவுகள் தொடர்பாக புள்ளி விபரங்கள் திரட்டப்பட் டது போன்று இலங்கையிலும் புள்ளிவிபரங்கள் திரட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ள அபாக்கியவாதிகள் நாங் 956.
20 ஆம் நூற்ருண்டின் இறுதியில் -மனித நாகரிகத் தின் உச்சத்தில் இவ்வாறு புள்ளிவிபரம் தேடும் நிலைக்கு நாம் மாறியிருப்பதும் கூட காலத்தின் கொடுமைதான்.
இன்று உலகில் மிகவும் பிரதான சந்தையாகியுள்ள போதைப்பொருள் மற்றும் ஆயுத பேரவிற்பனைகள் மனுக் குலத்தை நேசிப்பவர்களுக்கு ஒரு சவால். இந்தச் சவாலை நாம் எதிர்நோக்கத்தான் வேண்டும்.
மூன்ரும் உலக யுத்தம் மூளுமோ என்ற பயம் இருந் தது. ஆனல். அதற்கு அவசியமின்றி பல வளர்முக நாடுகளில்
R 99

Page 7
தோன்றிய நெருக்கடிகளினுல் சிவில் யுத்தங்கள் மூண்டு உயிரழிவுகள் தொடருகின்றன. இதனுல் - சமாதானத்தை நாடும் நெஞ்சங்களின் பணி மேலும் தீவிரமடையவேண்டிய தாகியுள்ளது. இதற்கு மனித நேயம் மிக்க படைப்பாளி களின் பங்களிப்பு இன்றியமையாதது.
இப்பயணக் கதையில் நடமாடிய சில பாத்திரங்கள் இன்று உயிருடன் இல்லை. ஆயினும் பத்திரிகையில் பிரசுர மானவை (நூலாகும் போது சுவைகுன்றிவிடக்கடாதென் பதற்காக) அப்படியே இங்கும் இடம்பெற்றுள்ளன.
இப்பயணக் கதையை வீரகேசரி வார வெளியீட்டில். பிரசுரிக்க எனக்கு ஊக்கமளித்த பிரதம ஆசிரியர் திரு. ஆ. சிவதேசச் செல்வன் மற்றும் வாரவெளியீட்டின் பொறுப் பாசிரியர் திரு. பொன். இராஜகோபால் ஆகியோருக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
இக்கதைக்கு மெருகூட்ட படங்களும் தகவல்களும் தந்துதவிய என் அன்பிற்கினிய நண்பர்களான சோவியத் தகவல் பிரிவைச் சேர்ந்த ஏ. ஏ. லத்தீஃப், பிரேம்ஜி, இராஜ குலேந்திரன், ராஜ பூரீகாந்தன் ஆகியோருக்கும் இக் கதையில் மிதந்த சோவியத் கீதத்தை உயிர்சிதையாமல் தமிழாக்கம் செய்ய பெரிதும் உதவிய கவிஞரும் நண்பரு மான சிவலிங்கம் அவர்களுக்கும் என் அன்பார்த்த நன்றி.
t பதினைத்து வாரத் தொடர் இன்று நூலாகியிருப்பதற்கு பின்னணியில் நின்று எனக்கு ஆதரவுக் கரம் நீட்டிய எனதரு மை மனைவி கமலாவின் அக்கறையையும் நினைத்துப்பார்க் கின்றேன்.
என் அசைவு ஏதுவும் இன்றி நட்பிசைவால் இதனை நூலாக்கி இலக்கிய அன்பர்களிடம் சமர்ப்பிக்க பெரிதும்
10

உதவிய நண்பர் ராஜ பூரீகாந்தனின் செயற்கரிய பணியை யும் - இந்நூலை தயாரிக்குமுன்னர் பிரதியெடுக்க துணை நின்ற எனதருமை அவுஸ்திரேலிய நண்பர் பி. எஸ். தர்ம குலராஜாவின் அன்பையும் மறக்கவேமுடியாது. ノ
இந்நூலை என் குழந்தைகளின் 'பாரதி இலத்தின்" சார்பாக வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
விக்டோரியா 3056 லெ. முருகபூபதி அவுஸ்திரேலியா 24 - 1 1 - 1989
11

Page 8
"வாழ்க்கையிலிருந்து மட்டுமின்றி மக்களின் மனங்களிலிருந்தும்
யுத்தங்கள் ஒழிக்கப்படவேண்டும். மாறுபட்ட சமூக அமைப்புகளைக்
கொண்ட நாடுகளின் சமாதான சகவாழ்வை பூரணமாகவும்
சர்வாம்சரீதியிலும் அங்கீகரிப்பது இதற்கு அவசியம். இதுபோலச்
சிறந்த அண்டைய நேய உறவுகளை வளர்த்துக்கொள்வதும் தேசங்
கள் ஒன்றிடமிருந்து மற்றென்று கற்றுக்கொள்வதும் அவசியம்'
t
ஐவகர்லால் நேரு
2

'earsée நல்லது சொல்வேன்-எனக் O 1. குண்மை தெரிந்தது சொல்வேன்'
பாரதி- אי
சமதர்ம சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட மண்ணில் காலடி பதிக்கக் கிட்டிய வாய்ப்பை எண்ணி புளகாங்கிதம் அடைந்த நிலையில் அந்த "ஏரோபுளட் விமா னத்துள் ஏறினேன்.
சோவியத்தின் தலைநகரில் நடைபெறவுள்ள 12 ஆவது உலக இளைஞர், மாணவர் விழாவுக்கு இலங்கையின் சார்பில் கலந்து கொள்ளும் சுமார் நூறு பிரதிநிதிகளில் ஒரு பகுதி யினர் வந்திருக்கின்றனர்.
எம்மை வழியனுப்ப வந்தவர்-மேற்படி உலகவிழா வின் இலங்கைக்கான தேசிய தயாரிப்புக்குழுவின் இணைச் செயலாளர் தோழர் அபூயூசுப். என்னுடன் வேறும் மூன்று பத்திரிகையாளர்கள். .
அவர்கள் மூவரும் மூன்று பிரதான அரசியல் கட்சி களின் பத்திரிகைகளின் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்தவர் கள். i
ஆனல்-நானே-நடுநிலை நாளேட்டின் ஆசிரியர் குழு வைச் சேர்ந்தவன். s
நாம் புறப்படவிருந்த 'ஏரோபுளட் விமானச் சேவை யைப்பற்றி நான் முன்பு கேள்விப்பட்டிருந்ததை தெரியாத்
தனமாக சக பத்திரிகையாளரிடம் சொன்னேன்.
13

Page 9
"முதலில் விமானத்தில் பயணம் செய்துபாரும் அதன் பிறகு இவ்விமானம் செளகரியமான பயணத்துக்கு உகந் ததா இல்லையா என்பதை தீர்மானியும்' என்றர்.
"எனக்கென்ன தெரியும் நான் விமாணத்துள் ஏறு வதே இதுதான் முதல்தடவை' என்றேன்.
உலகவிழாவுக்குப் போகிறேம்’ என்று கூறியதனலோ என்னவோ எமக்கு சுங்க சோதனைகள் எதுவுமில்லை. எனி னும் ஏதேனும் உலோகப்பொருட்கள் கடத்துகின்ருேமா என்ற பொதுவான சோதனைக்கு நாமும் இலக்காக நேர்ந் 岛é1· •
விமானத்தினுள் ஆசனங்கள் பெரும்பாலும் காலியா கத்தான் இருந்தன. ஆயினும் இங்கும் "கோணர்சீட் பிடிக் கும் பழக்கம் நம்மவர்களைவிட்டு அகலவில்லை.
ஆசனங்கள் தாராளமாக இருந்தமையால் ஏறியவர் கள் ஒவ்வொருவருக்கும் "கோணர் சீட் கிடைத்தது.
அமர்ந்தவுடன் இந்தப்பறவை எப்போது பறக்கும்என்ற அங்கலாய்ப்பு.
ஏனென்றல் அந்த மாலை நேர வெய்யிலின் புளுக் கத்தை விமானத்துன் அனுபவித்தோம். விமானம் புறப்படும் போதுதான் குளிர்சாதனம் இயங்கும் என்றனர்.
ஒரு விமானப்பணிப்பெண் அனைவருக்கும் "மாஸ்கோ நியுஸ்’ பத்திரிகையின் பிரதிகளை கொண்டுவந்து நீட்டி
அதனை வாங்கிப் படிப்பதற்குப் பதிலாக, அனைவரும் அதனை விசிறியாக்கிக்கொண்டு காற்றை அழைத்தனர்.
எம் நிலையை புரிந்துகொண்ட மற்றுமொரு விமானப் பணிப்பெண் ஒரு பெரிய கண்ணுடி ஜக்கில் தண்ணீருடன்
14

உந்தார். ஐஸ் கட்டிகள் அதில் நீந்தின. பிளாஸ்டிக் கப்பு களில் ஏந்தி அருந்தினேம்.
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக்கூடாது என்ற முன்னேர் வாக்கு அர்த்தமுள்ளதுதான். தாகத்தால் நாவரண்டு புழுங்கிக் கொண்டிருந்த எமக்கு தாகம் தணித்த தேவதையை வாழ்த்தினேன்.
சொற்பவேளையில்
வெளியே இரையும் சத்தம். அந்தப் பிரமாண்டமான பறவை, தனது வயிற்றுக்குள் எம்மை அடக்கிக்கொண்டு பறக்கப்போகின்றது.
'பெல்டை பொருத்திக்கொள்ளுங்கள்' மதுரமான குரல் வேண்டுகோளை விடுத்தது.
*մագպմ ஒரு கடமையா? கேள்விப்பட்ட கடமை களில் அதுவும் ஒன்றுதானே. ஆனல் அதற்கான அவசிய மில்லையென்ற உணர்வோடு சும்மா இருந்துவிட்டேன்.
காதுகளை இரைச்சல் அடைக்கிறது. விமானம் மெது
வாக நகர்ந்து திரும்பி ஓடி-உயர்ந்து எங்கோ அந்தரத்தில் எழுந்துவிட்டதுபோல் . . . .
அருகிலுள்ள கண்ணுடியூடாக பார்க்கின்றேன். கடல் தாய் தெரிகிருள். அந்தத் தாயினல் பிரச்விக்கப்படும் அலை களின் உதடுகளில் வெண்நுரைகள் வெள்ளைப் பஞ்சுபோல்.
இந்து சமுத்திரத்தாயின் முலைப்பால் இப்படித்தான் இருக்குமோ?
இப்போது கடல் மறைந்து மேகக்கூட்டங்களும் வான மும்தான் தெரிகின்றன. YA
மனதை பல கேள்விகள் குடைகின்றன. நாடுகளைப் பிரிப்பது இந்தக் கடல்தாய்தானே. கடல்
15

Page 10
இல்லாத நாடுகளில் எல்லைச்சுவர்கள் பிரித்துவிடுகின்றன; கம்பி வேலிகளும் பிரிக்கின்றன.
எல்லைகளே அற்று அனைத்து நாடுகளும் ஒரு குடையின் கீழ் வரும், காலம் எப்போது? சமுத்திரங்கள் அழிந்தால் தான் அது சாத்தியமா? அல்லது
*உலக சகோதரத்துவத்தை கட்டி எழுப்புவதற்காகவும் பதற்றத்தை தணித்து அமைதியை பேணுவதற்காகவும் நடத் தப்படவுள்ள சர்வதேச விழாவில் கலந்துகொள்ளச் செல் லும்போது இப்படியெல்லாம் கேள்விகள் எழுந்து மனதை குடைவது இயல்புதானே. 1 - . . "
வெண்முகில் கூட்டங்களே இப்போது தெரிகின்றன. இங்குதான் சொர்க்கம் இருப்பதாகச் சொல்கிருர்களோ? எங்கே அதனைத் தேடிப்பார்ப்பது? அந்த வெண் பஞ்சுப் பொதிகளில் விழுந்து புரண்டு விளையாடிப்பார்க்கவேண்டு மென்ற கற்பனை வேறு. · -
அந்தக் கற்பனையை தட்டிச்சிதைக்குமாப்போல் ஒரு விமானப்பணிப்பெண் வந்து 'வொட்காவா Geoffruntamurt
கொக்கா கோலாவா ?-என்று கேட்கிறர்.
எதனை "வா வென்று அழைப்பது? விரும்பியதை கேட்டு வாங்கிப் பருகினேன்.
இச்சமயம் என்னருகில் வந்தார் அந்தப் பத்திரிகை யாளர்.
"எப்படி "ஏரோபுளட் செளகரியமாக இருக் கிறதா?” . . .
'மற்றவிமானங்களிலும் போய்வந்து பார்த்தால் தானே வித்தியாசங்கள் தெரியும் அதுவரையில் எப் படிச் சொல்வது?
16

"அப்படி இல்லை ஐஸே . ஏனைய விமானச் சேவைகள் அவிழ்த்துவிட்டுள்ள கட்டுக்கதைதான் அது. "ஏரோபுளட் விமானச் சேவை குறைந்த கட்டணத்தைக் கொண்டது. அதனல்-இங்கு க்வனிப்புக்குறைவு என்று கதைகட்டிவிட்டுள்ளார்கள். அதனைக் கேள்விப்பட்டுத்தான் நீர் என்னிடம் அப்போது சந்தேகம் எழுப்பினிர்ே." என்ற
வர். சோவியத்தின் விமானச் சேவைகள் பற்றியும் கீவ்
சிவில் விமானப்போக்குவரத்து பொறியியல் கல்லூரியைப் பற்றியும் ஒரு லெக்ஷரே அடித்துவிட்டுப்போனர்.
எங்காவது படித்ததைச் சொல்கிறர்போலும் என்று மெளனமாகிவிட்டேன்.
எனது மெளனத்தைக் கலைத்த மற்றெரு பத்திரிகை யாளர், "நான் உம்மிடம் தந்த பொருள் பத்திரமாக இருக்கிறதா?’ என்று கேட்டார்.
அப்பொழுதுதான் அவர் விமானநிலையத்தில் வைத்து அவசர அவசரமாக என்னிடம் தந்த பொருள் ஞாபகத்துக்கு வந்தது. .
“ஓம் ஓம் கவலைப்படவேண்டாம் <别gj பத்திரமாக இருக்கிறது' என்றேன்.
"அது என்ன பொருள்' ?
இலங்கையின் தன்னிகரற்ற “சீல்" சாராயம்.
'எனது பெட்டியில் வைப்பதற்கு இடமில்லையாதலால் உங்கள் பேக்கில் வையுங்கள்' அவரது இறுதிநேர வேண்டு கோளை தட்டிக்கழிக்க முடியாத நிலையில் நிறைவேற்ற வேண் டிய நிலைக்கு ஆளான எனது தலைவிதியை நொந்துகொண் டேன். . . . VA
"அது பத்திரமாக இருக்கிறது’-என்று ஆறுதல் கூறி சிவரை அனுப்பிவைத்தபோதிலும் எனக்கு உள்ளூர ஒரு கலக்கம். ' .. . -
17

Page 11
எமது ‘வீரகேசரி யின் முன்னள் பிரதம ஆசிரியர் திரு. க. சிவப்பிரகாசம், இப்படித்தான் ஒரு தடவை மாஸ் கோவுக்கு புறப்பட்டபோது அவருடன் பிரயாண்ம் மேற் கொண்ட ஒருவர் தேன் போத்தலுடன்பட்ட கஷ்டங்களை தனது "சிரித்தன செம்மலர்களில் சுவாரஸ்யமாக விபரித் திருந்தார்.
அதுபோல் நானும் இந்தப்பயணத்தில் பல கஷ்டங் களுக்கு ஆளாகப் போகின்றேன? ' s w
பவன அமுக்கம் குறைந்தமையால் அன்று அந்த தேன் போத்தலின் "புரோப் கழன்று தேன் பொங்கிப் பிரவகித் தது.ஆனல். இந்த 'சாராயம் . அற்கஹோல்
பவன அமுக்கம் இதனை ஒன்றும் செய்யாது!
அதுதானே. இந்த மனிதர்களையெல்லாம் என்ன வெல்லாமோ செய்யத்தூண்டுகிறது . செய்யவைக் கிறது. மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்.
கராச்சியில் விமானம் தரையிறங்கும்போது இரவு
8.45 மணி. இங்கு ஒரு மணி நேரம் விமானம் தரித்துப் புறப்படுமென்ருர்கள்.
ஒரு பஸ்வந்து எம்மை அழைத்தது.
штдТg6 பூமியிலிருந்து பிரிந்த அம்மண்ணில் கால் பதித்து பஸ்ஸில் ஏறினுேம்.
கராச்சி விமானநிலையத்தில் குளிர்பானம்அருந்தி சுற் றிப்பார்த்துக்கொண்டு வருகையில் அனைவரும் வரலாம்" உத்தரவு பிறந்தது. :
கைகளை வீசிக்கொண்டு வாயிலுக்கு வந்தபோது ósär விளக்குகள் காலைவாரின. .
ஒரே இருள்மயம்.
8

சொற்பவேளையில் சில மின்விளக்குகள் சிரித்தன. அச். சிரிப்பு உமிழ்ந்த வெளிச்சத்தில் புறப்படத் தயாரான சம யம் எமக்கு ஒரு சோதனை.
'அனைவரும் வரிசையாக நின்று ஒவ்வொருவராக வெளியே வாருங்கள்' ஒரு பாகிஸ்தான் பாதுகாப்பு உத்தி யோகத்தரின் உத்தரவு இது.
இது என்னடா வம்பு; நாமா இங்குவரவிரும்பினுேம்? விமானம் இங்கே தரித்தது. ‘போய்வாருங்கள்’ என்று அனுப்பினர்கள். எங்கள் விமானப் பணிப்பெண்கள். வந் தோம்; வந்த இடத்தில் குளிர்பானமும் தந்து இப்படி சோதனை என்று சூடேற்றவும் வேண்டுமா?
Fif? . அதற்கும் தயாரானேம். சோதனை முடிந்து பஸ்ஸில் ஏறி விமானத்தை நோக்கி
புறப்பட்டபோது ஒரு நண்பர் சொன்னர்
"நாம் இறங்கியுள்ள நர்டு ஸியா உல்ஹக்கினுடையது" இதனைக் கேட்டு சிரிக்காதவர் அந்த பஸ்ஸின் சாரதி' மட்டும்தான். அந்த பாகிஸ்தான் பிரஜைக்கு எமது மொழி புரிந்திருக்க நியாயமில்லைத்தான். V
அந்த 'sy Gitt புளட் பறவை மீண்டும் எம்மைச் சுமந்துகொண்டு வானில் பறக்கத் தொடங்கியது.
நடு இரவு கடந்து அதிகாலை 1.10 மணிக்கு ட்ாஷ்கன்ட் விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளே சென்று பார்த் தால்-நேரம் 12 மணி.
கைக்கடிகார முட்கள் டாஷ்கன்ட் நேரத்தை தழுவின. ‘டாஷ்கன்ட்-இது உஸ்பெக்கிஸ்தானின் தலைநகரம். மறைந்த பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும் பாகிஸ்தானின் முன்னுள் அதிபர் அயூப்கானும் என் நிலைவில் தோன்றினர்.
19

Page 12
அந்த சமாதான ஒப்பந்தம் இந்த டாஷ்கன்ட் நகரில் தச்சாத்திடப்பட்டபோது நான் சாதாரண பள்ளிமாண
வன்.
அந்த ஒப்பந்தம் முடிந்து திரும்புகையில் லால்பக தூர் தனது இன்னுயிரையே அர்ப்பணித்துவிட்டு வந்ததாக அப்போது படித்த பத்திரிகைச் செய்திகள் நினைவுக்கு வரு கின்றன. . .
உலக இளைஞர் மாணவர் விழாவுக்கு வருகை தரு வோரை வரவேற்கும் விதத்தில் அமைந்த வண்ண வண்ண சுவரொட்டிகள் எம்மை எதிர்கொண்டு அழைத்தன அவ் விமான நிலையத்தில். v
ඉෂ மணி நேரம் கழித்து டாஷ்கன்டை விட்டு எமது விமானம் புறப்பட்டது.
ஒடு பாதையில் விமானம் ஓடிக்கொண்டிருக்கையில் வெளியே தெரியும் (தரித்து நிற்கும்) சோவியத் விமானங் களை ஒரு குழந்தையைப்போல் ஒவ்வொன்முக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
பது வரையில்தான் எண்ணமுடிந்தது. அதற்குள் எங்கள் "ஏரோபுளட்" பற்வை மேலே எழுந்துவிட்டது.
அதிகாலை 2.30 மணிக்கு வைன், சீஸ், பணிஸ், கேக் தக்காளிப்பழம், கோழி இறைச்சி, பட்டர், சொக்கலேட் இவற்றுக்கும் மேல் கோப்பியோ, பால் தேநீரோ தந்தார் கள். எமது வயிறு இவற்றையெல்லாம் தாங்குமா? அதுவும் இந்த அதிகாலை வேளையில்.
எமக்கெல்லாம் இந்த வேளை பெரும்பாலும் வீடுக ளில் இரண்டாம் சாமம்தான். ஆனல் ஏரோபுளட் ப்ற வையின் வயிற்றில் அதுதான் எமக்கு காலை ஆகார வேளை.
20

தூங்கி வழிந்த 'முகத்துடன் விழித்தபோது "மாஸ்கோ நெருங்கிவிட்டதாக மதுரமான குரல்விடுத்த
அறிவிப்பைத் தொடர்ந்து “ஆகா . இந்தப்பறவை யின் வ்யிற்றிலிருந்து எமக்கு பூரண விடுதலை கிடைக்கப் போகிறது' என்ற மகிழ்ச்சி . உற்சாகம்.
‘உலக விழாவுக்கு வருகை தந்துள்ள பிரதிநிதிகள் முதலில் வாருங்கள்’’ தலைமை விமானப் பணிப்பெண் அழைத்தார். -
மாஸ்கோ விமான நிலையத்தில் வழக்கமான கடவுச் சீட்டு சோதனைகள் முடிந்தன. எமது பேக்குகள் திறக்கப்படா மலேயே சோதனைக்கு ஆளாகின.
ஒரு இயந்திரம் போன்ற பெட்டிக்குள் எமது பேக்கு கள், பெட்டிகள் ஒவ்வொன்ருக நகர்ந்தன. அருகே அமர்ந் திருந்த ஒரு சோவியத் தோழர் மேசையிலிருந்த ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் பொத்தான்களை அழுத்துகிறர் பேக்கின் இடப்புறம் வலப்புறம், மேற்புறம் அடிப் Lurral5ub உட்புறம் தொலைக்காட்சிப் படம் எடுத்து காட்டுகின்றது.
அந்தத் தொலைக்காட்சியைப் பார்த்து நான் திடுக்கிடு
எனது பேக்கினுள் இருந்த அந்த நண்பர் தந்த சீல் சாராயப்போத்தலும் அதன் “லேபலுடன் தெட்டத் தெளிவாக அங்கு தெரிந்தது.
விஞ்ஞானத்தின் மகிமையே மகிமை. எம்மை அழைத்துச் செல்ல மாஸ்கோ விமான நிலையத் துக்கு வருகைதந்திருந்த இரண்டு வழிகாட்டித் தோழர்கள் தம்மை எமக்கு அறிமுகம் செய்து கைகுலுக்கி-மார் போடு அணைத்து வரவேற்றனர். s
21

Page 13
எமக்கென்று தயாராக நின்ற சொகுசு பஸ்ஸில் ஏறி குேம். 'வெளியே பனி மழை பெய்துகொண்டிருக்கிறது.
அந்த அகலமான வீதியூடாக பஸ் வழுக்கிக்கொண்டு விரையும்போது கண்ணுடியூடாக வெளியே பார்க்கிறேன்.
மாஸ்கோ மாநகர் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
22

வெவ்வேறு நாடுகளில் 02 விளையும் சுவாத்தியத்தில்
s அந்தந்த இனங்களிலே
. சமாதான விளைச்சலுக்காய்
முளைகொண்ட நாற்றுக்கள் நாம் --சோவியத் கீதம்
அந்த சொகுசு பஸ்ஸின் வானெலியிலிருந்து மிதந்து வருகிறது ஒரு கீதம். அதன் இசையை ரசித்துக்கொண்டே மரநகரையும் ரசிக்கின்றேன்.
"எங்களது பாடல் இளமையதன் புதுப்பாடல் இளமையதன் புதுப்பாடல், இளமையதன் புதுப்பாடல் வசந்தத்தின் குளிர்த் தென்றல் வந்து தரை சமுத்திரத்தில் V தவழ்ந்தசைந்து செல்வது போல் மிதந்து வரும் புதுப்பாடல் . இனிமையான இந்தக் கீதத்தை முழுமையாக இந்த அத்தியர்யத்தின் இறுதியில் தருகிறேன்.
மாஸ்கோநெடிதுயர்ந்த கட்டிடங்கள், விசாலமான வீதிகள், இவற்றுக்கிடையே பசுமையான புற்தரைகள், மரங்கள், செடிகள், பூங்காக்கள்.
'காடுவளர்ப்போம்" என்று பாரதி எங்களுக்குச் சொன் ஞர். நாமோ, மரம் நடும் இயக்கத்தை மரங்களை வெட்டிச் சாய்த்து விற்பனை செய்து கொண்டே நடத்துகிருேம்.
23

Page 14
கட்டிடங்கள் அமையவேண்டுமெனில், ஏதும் தேrைe ܫ கள் ஏற்படும் பட்சத்தில் எத்தனை மரங்களையும் வெட்டிச் சாய்க்க நாம் தயார். دی
ஆனல் மாமேதை லெனின் நகரங்களை நிருமாணிக் கும் திட்டங்களைத் தயாரிக்கும் போது எங்கெங்கே கட்டிடங் கள் அமையவேண்டும், எங்கு விளையாட்டு மைதானங்கள் உருவாக்க வேண்டும், எங்கு பூங்காக்கள் மலரவேண்டும், என்றெல்லாம் நகரநிருமாணிப்பாளர்களிடம் சுட்டிக்காட்டி யிருந்தாராம். - ...
இந்த உலகிலேயே பசுமையான தாவரங்கள் நிரம் பிய தலைநகரங்களில் மாஸ்கோ முதலிடத்தை வகிப்பதாக வும் கூறப்படுகிறது. A
காற்றைத் தூய்மைப்படுத்தவும் சூழல்ைப் பாதுகாக்க வும் இந்த மரங்களும் செடிகளும் பூங்காக்களும் பெரிதும் உதவுகின்றன.
எமது வழிகாட்டித் தோழர்களிடம் நாம் இதுபற்றி வினவியபோது அவர்கள் அளித்த பதில் அதுதான். *
மாஸ்கோவில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பூங் காக்கள் இயற்கை வனப்புமிக்க தோட்டங்களாக அரசினல் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இம்மாநகரின் அபிவிருத்திக்காக 2010 ஆம் ஆண்டு வரையிலான மாபெரும்திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட் டத்தின் பிரகாரம் 21 ஆம் நூற்ருண்டின் தொடக்கத்தில் நடப்படும்மரங்கள் மற்றும் செடி, கொடிகளின் பரப்பளவு 45 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்குமாம்.
இங்கு மரம்வெட்டுதல் போன்ற இயற்கைக்குத் தீங்கு இழைக்கும் செயல்கள் தடுக்கப்பட்டுள்ளன.
விஞ்ஞானம் அபரிமிதமாக, வளர்ந்துள்ள அதேவேளை
இயற்கையையும் பாதுகாக்கின்றர்கள். இயற்கை சதாகால
24

மும் பாதுகாக்கப்படுவதனல் மக்களின் ஆரோக்கியமும் பாது காக்கப்படுகிறது.
விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாம் தங்கவிருக்கும் பிரசித்தி பெற்ற "இஸ்மாயிலோவா" ஹோட்டலுக்கு வருமுன்பு அது அமைந்துள்ள பகுதியின் மற்றுமோர் மூலையில் இருந்த தக வல் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்படுகிருேம்.
அங்கு சாம். ஒவ்வொருவருக்கும் உரிய அடையாள அட்டைகளும் ஒரு நீண்ட வெள்ளை நூலும் தரப்படுகிறது.
ஒரு நண்பர் சொல்கிருர்-"இனித்தான் தாலிகட்டும் சடங்கு நடக்கவிருக்கிறது’-என்று.
அடையாள அட்டையுடன் நூலும் தரப்படும்போது அப்படித்தானே சொல்லத் தோன்றும்.
அந்த அடையாள அட்டையில் நாம் முன்பே அனுப்பிவைத்த புகைப்படம் இருக்கிறது. பெயர் தந்தை பெயர், நாடு தங்கவிருக்கும் ஹோட்டல், முதலிய விபரங் களுடன் (ரஷ்யமொழியில்) அழகிய முறையில் தயாரிக்கப் பட்டிருந்த அந்த அடையாள அட்டை, உலக விழா முடியும் வரை மட்டுமல்ல, மாஸ்கோவை விட்டுப் புறப்படும்வரை யில் இனி அதுதான் எமக்கு உற்ற தோழன்.
மொழி தெரியாத நாட்டில் எம்மைப்பாதுகாக்கும் கவச அணியும் அதுதான். அதனை நூலில் கோர்த்து கழுத் தில் மாட்டிவிட்டார்கள்.
ஒருவரை ஒருவர் பார்த்து புதுமணமக்கள்போல் சிரித் துக் கொள்கிருேம். V
இனி எமக்கு அனைத்தும் இலவசம்தான். பஸ்பயணம், பாதாள ரயில் பயணம் உட்பட அனைத்தும் இலவசம்தான்.
25

Page 15
இங்கு g2CD உண்மையை அவதானிக்க முடிகிறது. அவர வர்க்கு இடப்பட்ட கட்டளைகளை அவரவர் சிறப்பாக செம் மையாக செய்து முடிக்கின்றனர். இந்த வழிகாட்டிகள் இருக் கின்றனரே-அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஒழுங்கு முறைப்பயிற்சி நிச்சயம் நாமும் பின்பற்றவேண்டிய ஒன்று தான். -
ஒருவரது பணியில் மற்றவர் தலையிடுவதும் இல்லை; விமர்சிப்பதும் இல்லை, நாம் கேட்பதற்கெல்லாம். பதில் அளிக்கிருர்கள். தெரியவில்லையென்முல் ‘தெரியாது கேட்டுச் சொல்கிருேம்' என்கிருர்கள்.
எல்லாம் தெரிந்தவர்கள் போல் பம்மாத்து காட்ட வில்லை. சோவியத் பிரஜைகளிடம் இந்தப்பண்பைக் காண
தகவல் பிரிவிலிருந்து வெளியே வருகிறேம். ஹோட் டலை அடைந்ததும் மற்றுமொரு வழிகாட்டித் தோழர் எமக்கு அறிமுகமாகின்றர்.
“எனது பெயர் அலெக்ஸான்டர். "அலெக் என்றும் கூறலாம்" புன்முறுவலுடன் தன்னை அறிமுகப்படுத்துகி (grf. . . .
'நன்றி' என்றேன். “எதற்கு நன்றி கூறுகிறீர்கள்' இது அலெக். “உங்கள் பெயர் அழைப்பதற்கு இலகுவாக இருக் கிறது. அதனுல்தான்.’’
'ஒ. அப்படியா .. உங்களுக்கு எதுவுமே இலகுவாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? என் முதுகில் தட்டிச்சிரிக்கிறர்.
அந்த வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்ப தாகத் தோன்றியது.
26

நேரமோ காலை 10 மணி.
ஒவ்வொரு அலுவல்களும் நிறைவேறிக்கொண்டிருக் கின்றன. இனி எமக்கு அறைகளை ஒதுக்கிக்கொடுக்கும் வேலை தான் பாக்கி.
இவ்விதம் தாமதங்கள் ஏற்படும் என்று தெரிந்துதானே என்னவோ-காலை ஆகாரத்தை அந்த நடுச்சாமவேளையில் (அதிகாலை 2.30 மணிக்கு) "ஏரோபுளட்"டில் வழங்கினர்கள்?
நாம் தங்கும் ஹோட்ட்லுக்கு மூன்று பகுதிகள். ஒவ் வொரு பகுதியிலும் சுமார் 28 மாடிகள். ஒவ்வொரு மாடி யிலும் 50 அறைகள்.
தென் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக் காக இந்த மூன்று ஹோட்டல் பகுதிகளும் ஒதுக்கப்பட் டுள்ளதாகவும்-தென் கிழக்காசிய மக்களின் தேவைகளுக்கு ஏற்பவே அந்த ஹோட்டலின் அறைகள் அம்ைந்திருப்பதாக வும் கூறப்படுகிறது. . ,
மாஸ்கோவில் ஒலிம்பிக் பந்தயம் நடந்த சமயம்அதற்காகவே நிர்மாணிக்கப்பட்டதுதான் இந்த "இஸ்மாயி லோவா" ஹோட்டல்.
இந்த ஹோட்டலுக்கு வந்துசேர்ந்த முதலாவது வெளி நாட்டுப் பிரதிநிதிகள் நாங்கள்தான். எம்மைத் தொடர்ந்து வடகொரியா, பிலிப்பைன்ஸ், இந்திய பிரதிநிதிகள் வந்தனர் ஆனல் அவர்கள் கூட இரண்டு நாள் தாமதித்துத்தான் வந்து சேர்ந்தனர்.
நாமனைவரும் ஒருதடவை மாஸ்கோவின் ரம்மியத்தைச் சுற்றிவந்து பார்க்கவேண்டுமென விரும்பினேம். எமக்கென ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அந்த சொகுசு பஸ் மீண்டும் எம்மைச் சுமந்துகொண்டு புறப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் இங்கு ஒரு முக்கியமான விடயத் தைச் சொல்ல விரும்புகிறேன். இலங்கையில் வெவ்வேறு
27

Page 16
துருவங்களாக விள்ங்கும் அரசியல்வாதிகளை மாஸ்கோ இணைத்துவிட்டது. இந்த நட்புறவு இணைப்பு என்றென்றும் நீடித்திருக்கமாட்டாதா என்ற ஏக்கம் என்னுள் படர்கிறது. இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளான ஐ. தே, க., பூரி. ல, சு. க., மக்கள் கட்சி, சமசமாஜக் கட்சி. மாஸ்கோ சார்பு கம்யுனிஸ்ட் கட்சி, மக்கள் ஐக்கிய முன் னணி, நவசமசமாஜக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங் கிரஸ், யுனெஸ்கோ ஸ்தாபனம், வை. எம். எம். ஏ., பல்கலைக்கழக மாணவர் அணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் என்று நூறுபேர் கொண்ட குழு-இந்த உலகவிழாவில் இலங்கையின் சார்பில் கலந்துகொண்டது.
அமைச்சர் அநுரா பஸ்தியான்-கல்வி அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கா, கலைஞர் விஜயகுமாரணதுங்கா (மக் கள் கட்சி) வஜிரபெல்பிட்ட (கம்யூ. கட்சி) மகிந்த விஜே சேகரா (பூஜீ. ல. சு. க) ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். ሓ;
இலங்கையில் வெவ்வேறு துருவங்களாக நடமாடுபவர் கள் இந்த உலகவிழாவில் இணைந்திருப்பது புதுமைதான். அதுவும் தோழமை உணர்வுகளுடன் அவர்கள் பழகியமை குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று.
கலைஞர் விஜயகுமாரணதுங்கா சினிமா நடிகராக இருந்து பிரபல்யம் பெற்று அரசியலுக்கு வந்தவர். இவரது வளர்ச்சி தனித்துவமானது.
வஜிர பெல்பிட்ட ஒரு பெளத்த மதகுருவாக வாழ்ந்து துறவறத்தை களைந்து அரசியலுக்கு வந்தவர். சிறந்த பேச்சாளர்.
மகிந்த விஜேசேகர 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது கைதாகி தடுப்புக்காவலில் இருந்து விடுதலையானவர். ஆளும் ஐ. தே. கட்சிக்கு எதிராக தெவிநுவர என்ற தொகுதியில் போட்டியிட்டவர்.
28

பல்வேறு அரசியல் கருத்தோட்டங்களும் சங்கமித்த இந்த சமதர்ம பூங்காவில் சமாதான மகரந்த மணிகளை பெற்றுச்செல்ல வந்த வண்டுகளாக நாம் உலாவித் திரிந் தோம்.
வானத்தில்-மாலையாகியும் இருள் இல்லை.
இரவு 12 மணிவரையில் மாஸ்கோ நகரில் சூரியன் உறங்கப் போகவில்லை.
இதனைத்தான் “வெள்ளை இரவு' என அழைக்கிருர் கள். நாம் போயிருந்த வேளை கோடை காலம் என்பதனுல் மாஸ்கோவில் இரவும் பகலாகத்தான் காட்சி அளிக்கிறது.
லெனின் கிராட் நகரில் 24 மணிநேரமும் சூரியனுக்கு ஒய்வில்லை என்ருர்கள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களை கண்களினல் சிறைப்பிடித்துக்கொண்டு ஹோட்டலுக்குக் திரு ம்பும் போது இரவு ஏழு மணியாகிவிட்டது.
இன்று காலையில் மாஸ்கோ விமான நிலையத்திலிருந்து நாம் புறப்பட்டு வந்த பஸ்ஸில் கேட்ட அந்த மதுரமான கானம் மீண்டும் கேட்கிறது.
ஆம் இதுதான் உலக இளைஞர் மாணவர் விழாவின் கீதம்.
"எங்களது பாடல் இளமையதன் புதுப்பாடல்
sy
இளமையதன் புதுப்பாடல் . பஸ்ஸில் இருந்த வானெலியில் நாம் அரைகுறையாகக் கேட்டு ரசித்த அந் கப்பாடல் இப்போது "இஸ்மாயி லோவா" ஹோட்டலில் ஒலிக்கிறது.
இங்கே ஒரு தேவதை இசைக்கலைஞர்கள் புடைசூழ அந்தக் கானத்தை எமக்கு விருந்தாகப் ப்ொழிந்துகொண் டிருக்கிருள். Y
29

Page 17
30
"எதிரிடைகள் மோதிவரும் இன்னல் மிகு நாட்களிலே இனிய சமாதானக் கனவுகளை எங்கெங்கும் வளர்ப்பதற்காய்
இணைந்துள்ள பிள்ளைகள் நாம்
வெவ்வேறு நாடுகளில் விளையும் சுவாத்தியத்தில் அந்தந்த இனங்களிலே சமாதான விளைச்சலுக்காய் முளைகொண்ட நாற்றுக்கள் நாம்.
எங்கெங்கும் பெருகியெழும் எங்களது இளம் குலமே நேர்மையுடையிரேல் நீங்களெலாம் எங்களது நீளணியில் வாருங்கள்
இங்கினிய எங்களது நண்பர்கள் நீர் வந்துமது பாடல்களை வளம் குலுங்கப்பாடுங்கள் எங்களது பாடல் இளமையதன் புதுப்பாடல் இளமையதன் புதுப்பாடல், இளமையதன் புதுப்பாடல் வசந்தத்தின் குளிர்த்தென்றல் வந்து தரை சமுத்திரத்தில் தவழ்ந்தசைந்து செல்வதுபோல் மிதந்துவரும் புதுப்பாடல் நாமெல்லாம் நண்பர்களே நற்சுத்த சத்தியங்கள்-நீதிக்காய் போராடப் பிறந்தவர்கள்! எங்களது பாடல் இளமையதன் புதுப்பாடல் இளமையதன் புதுப்பாடல் இளமையதன் புதுப்பாடல்
அருகருகாய் நின்று அடுகளங்கள் ஆடியதை நின்று நினைக்கின்ருேம். செங்குருதியாலேதான்
எங்களது தோழமை இறுகியது
என்றெனினும் இளகிக் குலையாது.

எங்களது தோழர்களே இன்னும் இனிய மகிழ்ச்சியின் பக்கங்களை எதிர்வரும் யுகத்துக்காய் எழுதிக் குறையின்றி நிரப்புங்கள்.
பெருகியெழும் அந்த யுகத்தின் அழகு, மகிழ்ச்சி, மகத்துவங்கள் அத்தனையும் உம் கரத்தினில் தங்கியிருக்கிறது. உண்மையிது இளம் நண்பா நெஞ்சின் உறவோடு மீண்டும் நாம் பாடுவோம் எங்களது சத்தியத்தின் உறுதி சரியாது முடிவு வரை
உயர்த்திப் பிடியுங்கள் உமது புனித வாசகங்களை
எங்களது இளையவரை துணிவுள்ள வீரர்களை மரணக் குழிக்குள் மண்போட்டு மூடிவிட இருளின் முழுப்பலமும் என்றும் தயார் நிலைதான்.
நேர்மை நிறைந்தோரே நீங்களெலாம் வாருங்கள் எங்கள் அணிகளிலே இணைந்து வந்து சேருங்கள் இளம் இனிய நண்பர்களே பாடுங்கள் எம் இனிய பழுதற்ற பாடலிதை
எங்களது பாடல் இளமையதன் புதுப்பாடல் இளமையதன் புதுப்பாடல் இளமையதன் புதுப்பாடல்.
31

Page 18
அந்த இனிய கானம் இன்னமும் என் நெஞ்சைவிட்டு அகவவில்லே,
நிதர்சன வாழ்வை அர்த்தங்களுடன் கூறிய அந்த கானம் இன்னும் நெஞ்சமதில் நீக்கமற நிறைந்துள்ளது.
32

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலேச் 03 செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் --Lu TT
"மெட்ரோ"
"அது என்ன மெட்ரோ" வழிகாட்டித் தோழர் அலெக்ஸாண்டரைக் கேட்கிறேன்.
"வாருங்கள் இன்று உங்கள&னவரையும் எமது மாஸ்கோ "மெட்ரோ" வில் அழைத்துச் செல்லவிருக்கிருேம். ான்ருர்,
நாம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் மனம் பரப்பிக்கொண்டிருக்கிறது "இஸ்மாயிலோவா" பூங்கா. மறுபுறத்தில் அமைந்துள்ளது "இஸ்மாயிலோவா பார்க்' ான அழைக்கப்படும் பாதாள ரயில் நிலையம்.
இந்தப் பாதார ரயிலேத்தான் "மெட்ரோ" என ழைக்கிறர்கள்.
கஃல மனித வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது ன்பதை சோவியத் மக்கள் நடைமுறை வாழ்விலேயே ாற்றுக்கொண்டிருக்கிருர்களென்பதை அந்த பாதாள ரயில் லேயத்தை சென்றடைந்ததன் பின்பு என்னுல் புரிந்து காள்ளமுடிந்தது.
இந்தப் பாதாள ரயிலுக்கு விரைவில் 50 வயதாகப் பாகிறது. பொன்விழாக் காணவுள்ள இந்த "மெட்ரோ"
33

Page 19
இதுவரையில் சுமார் 16 ஆயிரம் கோடி மக்களை ஏற்றி இறக்கிச் சென்றுள்ளது.
இப்பொழுது சுமார் 126 பாதாள ரயில் நிலையங்கள் மாஸ்கோவில் உள்ளன. ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் நவீன எலக்ரோனிக் மற்றும் தானியங்கிச் சாதனங்களு முள்ளன.
சோவியத் நாட்டில் பிரதானமான ஒன்பது நகரங்க ளில் இந்த பாதாள ரயில்கள் ஒடுகின்றன. அவையனைத் துக்கும் முன்மாதிசியாக மாஸ்கோ மெட்ரே திகழுகின்றது.
ரயில் என்ருல் அதற்கு ஒரு சாரதி இருப்பார் ஒரு *கார்ட்" இருப்பார், ரயிலில் ஏறும் பிரயாணிகளுக்கு டிக்கட் டுகளை வழங்கும் ஊழியர் இருப்பார் வாயிலில் அந்த டிக் கட்டுகளைப் பரிசோதித்து அனுப்பும் மற்றுமொரு வாயில் காவலர் இருப்பார், இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒடும் ரயில்களில் திடீர் திடீரென ஏறும் டிக்கட் பரிசோதகர்கள் இருப்பார்கள், இதெல்லாம் எம் நாட்டில்தான்.
ஆளுல் மாஸ்கோவில் நாம் கண்ட பாதாள ரயில்களிலு சாரதியை மட்டும்தான் கண்டோம். மேலே குறிப்பிட்ட வேறு எவரையும் காணவில்லையென்ருல் சோவியத் மக்களின் நேர்மையும் கண்ணியயும் எவ்வளவு உயர்வானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்
ஒரு நாட்டின் மக்களை நேர்மையுடன் வாழத்தூண்டுவது அந்நாட்டின் ஆட்சி அமைப்பு முறையே. ஆட்சியாளர்கள் நேர்மையை இழக்கும்போது மக்களும் நேர்மையை இழந்து விடுவது இயல்புதான்.
'அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழிதான் "' என்ற மூதுரை அர்த்தமுள்ளது. சோவியத் நாட்டில் இப் போது அரசனும் இல்லையென்பது வேறுவிடயம்.
34

ஐந்து “கொப்பெக் நாணயத்தை வாயிவில் உள்ள அந்தப்பெட்டியில் உள்ள துவாரத்தில் போட்டு விட்டு எம் பரட்டுக்கு செல்லவேண்டியதுதான். மேடைக்குச் சென்ற தும் வரும் ரயிவில் போக வேண்டிய இடத்துக்கு புறப்பட வேண்டியதுதான்.
ஐந்து "கொப்பெக் நாணயத்தை போடாமல் செல்ல முடியுமா? என்று கேட்கலாம். முடியாது! எவரும் வந்து உங்களைத் தடுக்க மாட்டார்கள். ஆனல் அந்த இயந்திரப் பெட்டியிலிருந்து நீளமாக வந்து விழும் தடைக்கம்பி உங் களை உட்செல்லவிடாது தடுத்துவிடும்.
எவருமே அந்த அவமானத்திற்கு இலக்காவதில்லை. நான் பரீட்சித்துப் பார்த்தபோது அந்த அதிசயத்தை கண்ணுரக் கண்டேன்.
ஐந்து கொப்பெக் நாணயம்தான் முழு மாஸ்கோ நகரத்திற்கும் ஒரு வழிப்பயணக் கட்டணம், விரும்பிய
இடத்தில் இறங்கி அலுவல் பார்த்துவிட்டு மீண்டும் ஐந்து
கொப்பெக் செலுத்தி பயணத்தை தொடரலாம்.
ஐந்து கொப்பெக் நாணயம் பயணத்துக்கு தயாரா கும்போது கைவசம் இல்லையே என்ற கவலையும் வேண்டாம் ஒவ்வொரு “மெட்ரோ ரயில் நிலையங்களிலும், வேறு பெறுமதியுள்ள சோவியத் நாணயங்களை 5 கொப்பெக் நாண யங்களாக மாற்றிக் கொள்ளக்கூடிய இயந்திரங்களுமுண்டு.
சோவியத் நாட்டில் இனிவரவிருக்கும் நூற்றண்டு களுக்குப் பின்னரும் பிறக்கும் பிரஜைகள் எது வித நெருக் கடிகளும் இன்றி பயணம் செய்யவேண்டுமென்ற முன்னேற் பாடான திட்டங்களில் ஒன்றுதான் இந்த பாதாள ரயில் நிலையங்கள்.
ஒரு நாளைக்கு மட்டும் ஒரு இலட்சத்துக்கும் மேற் ாட்ட மக்கள் இந்த பாதாள ரயில்களில் பயணம் செய்கின்
35

Page 20
றனர். அவை மிகவும் துப்புரவாக இருக்கின்றன. எவரும் புகைபிடிக்கமுடியாது, அசுத்தம் செய்ய முடியாது.
நம்மவர்கள் பல சந்தர்ப்பங்களில் அந்த நல்ல விதி முறைகளை மீற முயன்றபோதெல்லாம் அதனைக் கண்டு விடும் சோவியத் தோழர்கள், அருகே வந்து பவ்வியமாக புகைக்காதீர்கள்’ என்று கூறும்போது நம்மவர்கள் அவ மானத்தால் தலைகுனிய வேண்டியதாயிற்று.
எம் நாட்டில், பல இடங்களில் ஒடும் பஸ்களில் புகை த்தல் தடை செய்யப்பட்டிருந்தாலும் யார்தான் அதனை அனுசரித்து நடக்கிருர்கள்.
திரைப்பட அரங்குகளில் புகைக்கூடாது என்று அறி வித்து வெண்திரையில் 'சிலேட்டு களும் போட்டுக்காண் பித்து விட்டு அங்குள்ள “பார்’ களில் சிகரட் விற்கும் "ஜனநாயக த்தை கண்டவர்கள் அல்லவா நாங்கள்.
இந்த ஜனநாயகம் சோவியத் நாட்டில் இல்லை. அதனற்தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்கிருர்கள்.
ஒவ்வொரு பாதாள ரயில் நிலையங்களும் கண்காட்சிக் கூடங்கள் தான்.
சோவியத் நாட்டின் பிரபல்யமான கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், யுத்தத்தில் வீரமரணமெய்திய தோழர்களின் பெயர்களை அந்த நிலையங்கள் தாங்கியுள் ளன. அவர்களின் பெருமைகளை நினைவுகூரும் கலைக்கூடங் களாக அவை திகழுகின்றன. V−
ஒரு ரயில் நிலையம் முழுக்க முழுக்க வெண்கலச் சிற் பங்களினலானது, மற்றென்று ஓவிய்ங்களினலானது,வேறெ ன்று பளிங்குச் சுவர்களில் வர்ணக்கற்கள் பதிக்கப்பட்டு அவையே ஓவியங்களைப்போன்று காட்சிதரும். இப்படி அனைத்து பாதாள ரயில் நிலையங்களும் கண்ணையும் கருத்தை யும் கவர்ந்து கொண்டிருக்கின்றன.
36

இந்த ரயில்களைச் செலுத்தும் சாரதிகள் பெரும்பாலும் பெண்கள்தான் என்பது குறிப்பிடத்தக்தது.
★ 大 女
புஷ்கின் கவின்கலை மியூசியம்.
இந்த காட்சியகத்துக்கு நாம் சென்றபோது சோவி யத் மக்களின் தேசிய விடுதலைக் கவிஞரும் அற்பாயுளில் மறைந்து போன தேசபக்தருமான அலெக்ஸாந்தர் புஷ்கி னைப்பற்றி நான் அறிந்ததை, படித்ததை நினைவுகூர்ந்தேன் ரஷ்ய உரைநடை வளர்ச்சிக்கு வித்திட்ட அந்த இலக்கிய மேதையின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே பிரதிபலிக்கத் தக்கதாகத்தான் இந்த கவின்கலை மியூசியம் அமைந்திருக் கலாம் என எதிர்பார்த்துச் சென்றது எனது தவறுதான் என்பதை உட்புகுந்தபின்புதான் உணர முடிந்தது.
இங்கு உட்புகுந்த சமயம் வாயிலில் கடமையிலீடுபட் டிருந்தவர்கள் கெமராவுடன் செல்லுங்கள், ஆணுல் "பிளாஷ்" போட்டு படம் எடுத்து விடாதீர்கள் என அன்புக்கட்ட '2ntuLL-6tri.
கெமராவினுல் கக்கப்படும் "பிளாஷ் ஒளி அங்குள்ள ஒவியங்களின் புராதன அழகை கெடுத்துவிடுமாம். இந்த ஒளிக்கதிர்கள் அந்த ஒவியங்களின் வர்ணங்களுக்கு எதிரி யென்பதனுல் எமக்கிடப்பட்ட கட்டளையை பெரிதும் மதித் தோம்.
இக்கவின்கலை மியூசியத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழா 1984 ஆம் ஆண்டு நடந்துள்ளது.
இக்கவின்கலைக் கட்டிடம் புஷ்கினின் வாழ்க்கையை மட் டும் எமக்குப்பிரதிபலிக்கவில்லை, பலநாடுகளின் கலை, கலா சாரங்களை அதுவும் பலநூற்ருண்டு காலத்திற்த முந்திய நாகரிகங்களை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
37

Page 21
பல பெரிய கூடங்களைக் கொண்ட இக்கலையகம் பல இலட்சத்துக்கும் மேற்பட்ட ஒவியங்களையும் செதுக்குச் சிற்பங்களையும் கொண்டு விளங்குகிறது.
*கிளேய்ன்’ என்பவர் (1858-1924) இந்த கலைக் கூடத்திற்கான மாதிரி அமைப்பை வரைந்துள்ளார்.
வரலாறு படிக்கும் மாணவர்கள் இந்தக்கலையகத்தால் தல்ல பயனடைகின்றனர். கல்வெட்டுக்கள், புதைபொருட் கள், ஓவியங்கள், எகிப்தின் "மம்மிகள்" அதாவது எகிப் தில் முற்காலத்தில் இறப்பவர்களின் சடலங்களை பாதுகா த்து வைக்கும் மரத்தினுலான பெரிய பெரிய உருவமைப் புக் கொண்டவை. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை அவை எனக் கூறப்படுகிறது.
அழகியற்கலை பயில்வோருக்கு இக்கலையகம் மாபெரும் விருந்துதான். இக் கலையகத்தின் ஒவ்வொரு அறையிலும் பெண் பாதுகாவலர்கள் பணிபுரிகின்றனர். 14 ஆம், 15ஆம் நூற்ருண்டு காலத்திய ஓவியங்களைக்கூட இங்கு பாதுகாத்து வைத்துள்ளனரென்ருல் பார்த்துக் கொள்ளுங்களேன்.
17 அடி உயரமுள்ள பிரமாண்டமான ஆணின் முழு நிர்வாணச் சிலை அனைவரையும் பெரிதும் கவர்த்தது. ஒன் றல்ல, இரண்டல்ல, பல சிலைகள் அவ்வாறு. ஆண் பெண் ஆலிங்கனம் செய்வது போன்ற சிலேகள். கலைக்கண்கள் ஆயிரம் வேண்டும் அவற்றை ஒரே சமயத்தில் கண்டுகளிப் பதற்கு.
எகிப்து, டச்சு, பெல்ஜியம், ஸ்பெயின், நெதர்லாந்து, கிரீஸ், பிரான்ஸ்,. இப்படி பல நாடுகளின் பழம்பெரும் கலாசாரங்களை நினைவுகூர்ந்து கொண்டு விளங்கும் அவைய னைத்தையும் பார்த்து ரசித்து முடிப்பதற்கு ஒருமுழு நாள் போதாது. அதற்கு பலநாட்கள் தேவைப்படலாம்.
மதசுதந்திரம் இல்லையென்று பலரால் வெளியில் அவ தூறு பொழியப்படும் அந்த சமதர்மப்பூமியின் தலைநகரில்
38

இந்த கவின் கலையகத்தை ஒரு முறை சென்று பார்த்தால் அவர்கள் கட்டுக் காவல்களுடன் பாதுகாத்து வரும் கத்தோ லிக்க மதத்தவர்களின் கடவுளர்களின் ஓவியங்களின் மீது சோவியத் ஆட்சியாளர்களின் அக்கறையை நன்கு புரித்து கொள்ள முடியும்.
"மனிதனது ஆன்மீக உலகமும் வாழ்க்கைபற்றிய அவனது கண்ணுேட்டமும் பெரும்பாலும் கலை, இலக்கியத்தின் பேராற்றல் மிக்க தாக்கத்தால் உருவாக்கப்படுகின்றன.' என்று எங்கோ படித்ததாக நிளைவு. எங்கேயென்று தேடிப் பார்க்க முனைத்த போது சோவியத்தின் செயற்திட்ட மொன்று கண்ணில் தென்பட்டது.
அது கூறுவது என்ன?
"கலையும் இலக்கியமும் கோடிக்கணக்கான மக்களது உத்வேகம் மற்றும் மகிழ்ச்சியின் ஊற்றுக்கண்ணுடியாகத் திகழ வேண்டும். அவர்களின் விருப்பத்தையும் உணர்ச்சி களையும் கருத்துக்களையும் வெளியிடவேண்டும். சித்தாந்த ரீதியில் அவர்களை பயிற்றுவிக்க வேண்டும்’ என்று அந்த செயற் திட்டம் கூறுகின்றது.
இத்தப் பின்னணியில், சோவியத் மக்களின் கலையின் மீதான, கலைக் கூடங்கள் மீதான சிந்தனையை, அக்கறை யை நிதர்சனமாக புரிந்து கொள்ளமுடிகிறது.
39

Page 22
O 4. வானத்திலேறி சந்திர மண்டல
வாசலைத் தொடலாமா ?
-கண்ணதாசன்
சோவியத் நாட்டில் 1917 இல் அக்டோபர் புரட்சி நடத்து முடித்து உலகின் முதலாவது சோஷலிஸ் அரசு உருவானதன் பின்பு பல பிரச்சினைகள் எதிர் நோக்கப்பட்
60.
அப்பிரச்சினைகளின் அடிப்படையில் மூன்று பிரதான கடமைகள் சோவியத் அரசை எதிரிட்டன.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவது. அதன் தற்காப்பு ஆற்றலை வலுப்படுத்துவது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை அபிவிருத்தி செய்வது.
ஆஞல், இம்மூன்று பிரதான கடமைகளையும் ஒரே
சமயத்தில் படிப்படியாக நிறைவேற்ற அரசிடம் போதிய நிதி வசதி இருக்கவில்லை.
இந்நிலையில், 1918-20 ஆண்டு காலப்பகுதியில் 14 நாடுகளின் ஆயுதம் தாங்கிய தலையீட்டினலும் உள்தாட் டுக்கிளர்ச்சியினுலும் சுமார் 80 இலட்சம் மக்களை பலி
40

கொடுக்க வேண்டியதாயிற்று. இதனையடுத்து, 1941-45 இல் நாஜி ஜெர்மனிக்கு எதிரான யுத்தத்தில் சுமார் 2 கோடி மக்களை பறிகொடுக்க வேண்டியதாகியது. பெறு மதியான உயிர்களை இழந்த அதேசமயம், ஏற்பட்ட பொரு ளாதார நாசம் அளவிடமுடியாதது.
இத்தகைய பகைப்புலத்தில் சோஷலிஸ் வாழ்க்கை முறையொன்றை கட்டியெழுப்புவதென்பது அசாதாரணமா னது.
எனவே, சோவியத் அரசு பல திட்டங்களை வகுத்தது அவை ஐந்தாட்டுத் திட்டங்களாக உருப்பெற்று இதுவரை யில் பதினுெரு ஐந்தாட்டுத் திட்டங்கள் சீரிய முறையில் , நிறைவேற்றப்பட்டுவிட்டன.
சோவியத்தின் அசாதாரணமான வளர்ச்சியை ஒரே இடத்தில் நாம் பார்க்க வேண்டுமென்பதற்காகவே மிகப் பிரம்மாண்டமான மு றை யி ல் அமைக்கப்பட்டிருந்த பொருட்காட்சிச் சாலைக்கு அழைக்கப்பட்டோம்.
சோவியத் நாடு குறிப்பிட்ட ஒரு துறையில் மட்டும் முன்னேறியிருக்கவில்லை. கல்வி, விஞ்ஞானம், பொரு ளாதாரம், மருத்துவம், தொழில் நுட்பம், பொறியியல், இயந்திரவியல், சிற்பம், ஒவியம், கைவினை. இவ்விதம் சொல்லிக்கொண்டே போகலாம்.
இக்கண்காட்சிசாலைலில் 17 நிமிட திரைப்படம் காண் பிக்கப்படுகிறது.
வட்டவடிவமான உள் மண்டபமொன்றில் நாமனை வரும் அப்படத்தை நின்று கொண்டே பார்த்து ரசித்தோம் ரகித்தோம் என்று கூறுவதை விட வியந்தோமெனக் கூறுவதே பொருத்தமானது.
சோவியத்தின் படிமுறை வளர்ச்சியை அக் குறுந்தி ரைப்படம் விளக்தகிறது.
41

Page 23
இங்குள்ள 14 பெவிலியன்களில் சோவியத்தின் இளம் கம்யூனிஸ்ட்டுகளின் சாதனைகள் கண்டுபிடிப்புகள் அனைத் தும் காட்சிப் பெருளாகியுள்ளன.
இளைஞர்களின் உழைப்பினல் திருமாணிக்கப்பட்ட கிராம மொன்றின் மாதிரி உருவமைப்பு எம்மை பெரிதும் கவர்ந்தது. அவ்விளைஞர்களின் கடின உழைப்பு மூவாயிரம் கிலோ மீற்றர் தூரமுள்ள ரயில் பாதைைைய நிர்மாணித் துள்ளதென்றல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நிதிவசதி மட்டும் இருந்தால் அச்சாதனைகளை நிலைநா ட்ட முடியுமென நினைப்பது பெரும் தவறு. அதற்கும் மேலாக மனித சக்தி சரியான முறையில் பயன்படுத்தப்பட் டதன் விளைவே அச்சாதன்ைகள் என்பது தெட்டத்தெளிவு.
விவசாயம், கைத்தொழில் துறைகனிலும் அந்த இளம் கம்யூனிஸ்ட்டுகள் சாதனைபடைத்துள்ளனர்.
இக்கண்காட்சிச் சாலையை பார்த்ததன் பின்பு கொஸ் மோஸ்" என்ற விஞ்ஞான தொழில் நுட்ப காட்சியகத் திற்கு செல்கிழுேம்.
"வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொட லாமா?" என்று கவிஞர் கேட்டார்.
"ஆம், தொடமுடியும்' என வழிகாட்டிய நாடு சோவியத் நாடு.
யூரிககாரின், வலன்டின, இலக்கர், ஸ்புட்னிக், சோயுஸ், புரோகிரஸ், சல்யூட் இப்படி பல பெயர்களை ஏற்கனவே கேட்டிருந்த, படித்திருந்த நான் அந்த "கொஸ்மோஸ்" கூடத்துள் சென்றதன் பின்பு என்னையே மறந்து மாதிரி அமைப்புகளைக் கண்டு வியந்து கொண்டிருந்தமையால் என் வாழ்வில் என்றைக்குமே கிட்டாத புது அனுபவத்திற்கும் ஆளானேன்.
42

"ஒருவர் தன்னை மறந்தால் தன்னை இழந்தால் ஏனையவர் களிடமிருந்து காணுமல் போய்விடவேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படும்" என்ற பாடத்தை எனக்கு புகட்டியது மாஸ்கோ பயணத்தில் ஏற்பட்ட ஒரு அனுபவம்.
அப்புதுமை அனுபவத்திலும் சோவியத்தின் மகிமை யைத் தான் உணர முடிந்தது. அந்த அனுபவத்தை அடுத்த அத்தியாயம் கூறுகிறது. அதற்கு முன்னர் இந்த கொஸ் மோஸ் சாட்சியகம் பற்றி சிறிது கூறலாம்.
விண்வெளி வீரர் யூரி ககாரின் சோவியத் நாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்படுகிருர், அவர் மறைந்தாலும் அவரது புகழும் பெருமையும் அங்கு நீக்கமற நிலைத்துள்ளதை அவதானிக்கின்ருேம்.
ககாரினின் நாமம் அங்கு வீதிகளில், நகரங்களில் பாட சாலைகளில், மருத்துவமனைகளில் விஞ்ஞான ஆய்வு கூடங் களில் நிலைத்து வாழ்கின்றது.
அந்த வீரனர மட்டுமல்ல ஏனைய வீரர்களையும் வீரா ங்கனைகளையும் கொஸ்மோஸ் காட்சியகம் கெளரவிக்கிறது.
அவர்கள் பயணம் மேற்கொண்ட விண்கலங்களின் மாதிரி அமைப்புகள், விண்வெளியில் விண்கலங்கள் எடுத்து வந்த படங்கள், விண்வெளிக்குச் செல்லும்போது விண்கலங் களினுள் அவர்கள் எவ்விதம் இருந்தனர் என்பதை சித்தி ரிக்கும் மாதிரி உருவங்கள், விண்ணில் வலம்வரும் போது அருந்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட உணவுப்பதார்த் தங்களை உள்ளடக்கிய சாதனங்கள் என்பன காட்சிப் பொ ருட்களாக விளங்குகின்றன.
மிகப்பிரமாண்டமான யூரிககாரின் உருவப்படம் என் னைக் கவர்கிறது. அவரது கரத்தினில் ஒரு சமாதானப்புரு. அவர் என்ன அருகே அழைப்பது போன்ற பிரமை ஆம் அவர் என்னை அழைக்கிறர்.
நான் என்னை மறக்கின்றேன்.
அவர் அருகே செல்கிறேன்.
43

Page 24
05 குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி, கடியொன்றிலெழுந்தது பார், குடியரசென்று உலகறியக் கூறிவிட்டார்.
-பாரதி
வீரர் ககாரினுடன் என்ன பேசுவது? அவர் என்னை ப்பார்த்து முறுவலிக்கின்ருர், கையிலே அமர்ந்துள்ள புரு எச்சமயமும் பறக்கத் தயார் நிலையிலா?
உயிரோட்டமுடன் காட்சிதரும் அப் பிராமாண்டமான படத்தின் முன்னே நிற்சின்றேன்.
‘ககாரின். நீங்கள் எங்கள் நாட்டுக்கு வரும்போது நான் சிறியவன். உங்கள் படங்களை பத்திரிகைகளில் பார்த்து வெட்டி எடுத்து என் பாடப் புத்தகங்களில் ஒட்டினேன்."
“உங்கள் நாட்டுக்கு வருவேன் என்று அப்போது நான் கனவிலும் நினைத்திருக்க மாட்டேன். நீங்கள் இப் பொழுதும் இளமையாகத்தான் இருக்கிறீர்கள்.அனைவரையும் கவரும் உங்கள் புன்னகையை எனக்கும் இரவல் தரமாட் டீர்களா?
'உங்களை ஒரு படம் எடுக்கவா?'
"எங்கே சிரியுங்கள்' என்று நான் சொல்லத் தேவை யில்லை. நீங்கள் மறைந்தாலும் உங்கள் புன்னகை நெஞ்சில் நிலைத்துவிட்டது"
44

"சரி. அப்போ. நான் வரட்டுமா?"
திரும்புகின்றேன் வந்த வழியால் திரும்பி நடக்கின் றேன். எங்கே மற்றவர்கள். என்னுடன் வந்தவர்கள் எங்கே?
"எங்கே போயிருப்பார்கள்'?
கீழ் தளத்தில் நிற்கலாம் விரைந்து வருகிறேன் அங் கும் இல்லை. நம்மவர்களின் தலைக்கறுப்பையே காணவில்லை. அக்காட்சியகத்தை வேகமாக சுற்றி வலம் வந்து பார்க்கி றேன். எவரையும் காணவில்லை.
மூச்சிறைக்கிறது. வாயிவில் நின்று பார்க்கிறேன். கண் ணுக்கெட்டிய தூரம் வரை பார்க்கிறேன். இல்லை, இல்லை, இல்லவே இல்லை.
தவறு என்னுடையதா? என்னுடன் வத்தவர்களுடை யதா? இப்போது வழிகாட்டித் தோழர் தோழியர்கள் மீது எனக்கு கோபம் வருகிறது.
வீரர் சுகாரினின் உருவப்படம் இருக்கும் இடம் வரை யில் வராமல் இப்படி இடைநடுவில் மற்றவர்களையும் அழை த்துக் கொண்டு போய்விட்டார்களே.
இனி என்ன செய்வது?
நிமிடங்கள் கரைகின்றன. எமது நாட்டின் முக ங் களையே காணவில்லை. என் மனம் தழம்புகிறது; பேதலி க்கின்றது.
‘ச்சா. இப்படி ஒரு தவறு செய்து விட்டேன். இனி எங்கு போய் அவர்களேத் தேடுவது. நேரத்தைப் பார்த்தேன் பகல் 2 மணியும் கடந்துவிட்டது. பசி வயிற்றைக் கிள்ளி யது. அவர்களுக்கும் கிள்ளியிருக்க வேண்டும்.
'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்பார் களே அதுபோல் பத்தோடு பதினென்முக என்னையும் மற ந்து விட்டு விட்டு பறந்துபோய் விட்டார்களோ?
- - 45

Page 25
"தன்னே இழந்தால், தன்னை மறத்தால், மற்றவர்களா லும் மரக்கப்படுவார், இழக்கப்படுவார் என்ற அறிவுரை சரியானதா?" என்ற கேள்வி மனதைக் குடைகிறது.
இr செய்ய வேண்டியது என்ன? வானம் வேறு இருண்டு கொண்டு Eருகிறது. மெல்விய தூறல் மழையும் பெய்கிறது. இனியும் தாமதிக்கிக் கூடாது.
கடையில் நின்ற டொக்கிஸ்காரரிடம் போய் எErது நிலமையை ஆங்கிலத்தில் பீதி விபரிக்கிறேன்.
அவருக்கோ ஆங்கிலம் தெரியாது. விழித்தார். சிசித் தார். மீண்டும் விழித்தார். சித்தார்.
கிட்டத் தட்ட என் நிலேயும் அதே நிவேதான்.
என் கழுத்தின் தொங்கிய அடையாள அட்டையைக் காட்டி மீண்டும் விளக்கினேன். ஓரளவு புரிந்து கொண்ட வர் போல் தஃபாட்டிவிட்டு தன் வசமிருந்து 'ரோக்கி டோக்" யில் ரஷ்யன் மொழியில் ஏதோ சொல்கிருர்,
யாருக்குச் சொல்கிரர்?
பின்பு என்ஃன அழைத்துக் கொண்டு சுமார் நூறுபார் தூரமுள்ள சிறிய கட்டிடமொன்றின் அருகில் செல்கிறர் அங் கிருந்த மூன்று சோவியத் இன்னஞர்களே அழைத்து ஏதோ கூறினுர்,
அம் மூவரும் மலர்ந்த முகத்துடன் என்னருகில் சிந்து கைகுலுக்கி ஆஃராக்கின்றனர்.
அந்த நேரத்தில் அந்த சம்பிரதாயம் கூட எனக்கு எரிச்சலேத் தருகிறது என்ன செய்வது? எனது இசிங்கைப் புத்தி என்ஃாவிட்டுப் போகங்: பேசி
பின்னர் ஆங்கிலத்தில், இது ஈடாது தாடு அதே சமீ பம் இப்பொழுது உங்கள் நாடு; எனவே கவஃபப்படாதீர்
46

கள், பதற்றப்படாதீர்கள் எமது நாட்டிற்கு வந்த எவரை யும் சிரமப்படவிடமாட்டோம். அமைதியாக இருங்கள் உங்கள் நண்பர்களிடம் இ ன்னும் சொற்பவேஃாயில் உங் சேர்த்து விடுகிருேம்" என்றனர் அந்த இஃாஞர்கள்.
பாஃவனத்தில் தண்ணீர்த்தாசும் எடுத்து அலேடவனு க்கு பசும்பாலேயே கொண்டு வந்து வார்த்து விட்ட து போன்றிருக்கின்றது.
பின்னர் வேறு மூன்று பொலிஸ் அதிகாரிகள் அங்கு வருகின்றார். இவர்களே அந்த "வோக்கி டோக்கி' அழை ப்புத்தான் சுட்டி வந்திருக்க வேண்டும்.
"உங்களுடன் வந்த பிரதிநிதிகள் குழுவின் த ஃ வர்
உநகளு !J FJ E : T 5( !!!!!!!! اللہԱր கள் அல்ல்து வழிகாட்டித் தோழர்களின் பெயர்கள் தெரி KI LCJ r ? ' "
"ஆம் தெரியும்" சொல்கிறேன்
என்னப்பற்றியும் தெரிந்து கொண்டு என்னுடன் வந் வந்தவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்க ஏற் பாடு நடக்கிறதாக்கும்.
மெளனமாக நிற்கிறேன்.
சில விஜடிகளில் ஒரு கறுப்புநிற பெரிய கார் என் முன்னே வந்து நிற்கிறது. அதனுள்ளே ஒரு ரஷ்யர் கோட் டும் சூட்டும் அணிந்து சாரதி ஆசனத்தில் காணப்பட்டார்.
அவர் ஒரு டொவிஸ் சாரதியாக இருக்கலாம்.
அவர் உள்ளிருந்து கொண்டே அதவைத்திறந்து என்னே அஎழக்கிருர்,
தாராகினேன்.
அருகில் நிற்கும் அந்த இளைஞர்களேயும் போவிஸ்
47

Page 26
அதிகாரிகளேயும் பார்க்கிறேன். என் பார்வை அவர்களுக்குப் புரிந்திருக்கிறது.
புன்னகைத்தவாறு "கவலைப்பட வேண்டாம்; இப் பொழுது நீங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அழை த்துச் செல்லப்படுகிறீர்கள்' என்றனர்.
கையசைத்து விடைகொடுத்தனர்.
ஏறி அ8ருகின்றேன்.
அந்தக் கார் விழுக்கிக் கொண்டு விரைவிறது. கார்ச் சாரதியான அந்தப் பொவிஸ்காரருக்கும் ஆங்கிலம் தெரி
யவில்லே. எனது அடையாள அட்டையை மட்டும் த ன் கு பார்த்து விட்டு வீதியிலேயே பார்வையை செலுத்துகிறார்.
நான் பேசும் போதெல்லாம் புன்னகைதான் அவரி டமிருந்து பதிலாகப் பிறக்கிறது. வெளியே மழை பொழி ந்து தள்ளுகிறது.
இப்பொழுது எனக்குள் கவலே மற்றவர்களேப் பற்றி த்தான். இங்கு நான் சும்மா காரில் சவாரி செய்யும் போது நம்மவர்கள் என்ஃனத் தேடி எங்கே அலேகின்றனரோ ?
அந்த மாநகரில் என்னேயோ அல்லது நான் அ வர் களேயோ இனி சந்திப்பதாயின் இரு தரப்பினருமே ஹோட் டலுக்குத்தான் ந்ேதாக வேண்டும்.
அந்தக் காரின் வேகம். சுமார் இருபது நிமிடத்தில் ஹோட் டலின் வாயிலே அடைந்து விடுகிறேன்.
- நேரம் மாயே 3 மணி
அங்கே எமது வழிகாட்டிகள் குழுவின் தஃவரும் மற் றும் வேறு சில வழிகாட்டிகளும் எம் அனே வருக்காகவும் காத்து நிற்கின்றனர்.
நான் பொலிஸ் காரில் வந்து இறங்கியதைக் கண்டு.
48

கைப்புடன் "என்ன நடந்தது?" கேள்வி அம்பு பேர ல்
நடந்ததை ஆதியோடந்தமாகச் சொல்கிறேன். "சரிதான். நீர் வந்து வி ட் டீ ர் . அவ:ள் இப் போது அங்கு இன்னும் உம்மைத் தேடுகிருர்களாக்கும்,
'அதுவும் சரிதான்" என்று மட்டுமே தவறிழைத்த என்னுல் கூத முடிந்து. பின்பு சொன்னேன்
"என்னே மன்னித்து விடுங்கள். இனிமேல் இப்பர். ாணுமல் போக மாட்டேன். இது எனக்கு நல்வ அணு பிேஇந்த அனுபவத்தின் மூலம் சோவியத் பொலிஸ்கரரின் ண் புகளே உணர முடிகிறது. அந்தப் பண்புகளே அஜ் - வபூர்வமாக ஒரு பத்திரிகையாeான் என்ற முறையில் அறி ந்து மகிழ்ச்சியடைகிறேன். நான் இங்வாறு காணுமல் போது? ருக்காவிட்டால் இப்படி ஒரு நல்ல அனுபவம் எனக்தி என்றைக்குமே கிடைக்காது."
சில நிமிடங்களில் எம் சகாக்கஃா அந்த பஸ் சு: து வந்தது. என்னேக் கண்டதும் சிலர் திட்டினூர்கள் சிலர் கைகுலுக்கி அனைத்து மகிழ்ந்தனர்.
"என்னப்டா நடந்தது?" அவர்களுக்கும் சொல்லுகிறேன். ஒரு நண்பர் சொல்கிருர் "பத்திரிகையாளன் எர் குமே காணுமல் போக மாட்டான். அப்படித்தான் காஞழி மல் போனுலும் ஏதேனும் புது அனுபவத்துடன் தான் வத்து சேருவான்"
ப்ெகுமிதப் புன்னகையை உதிர்த்தேன்.
பொலிஸார் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குதி லக்கணமாக திகழ்ந்த சோவியத் நகர் காவலர்களை எட் டிப் பாராட்டுவது? இன்னும் அதற்கு வார்த்தைகன்தி தேடிக்கொண் புருக்கிறேன்.
في 4

Page 27
157 நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பிரதிநிதிகள் கலத்து கொண்ட உலக விழாவை கண்டு களிக்க இலட்சக்கணக்கானேர் சோவியத் தலைநகரில் கூடினர்கள். . . . .
ஆயிரக்கணக்கான பஸ்வண்டிகள் வீதிகளில் பிரதிநி திகளை சுமந்து சென்றன. இது தவிர உள்ளூர் வாகனப் போக்குவரத்து சேவைகளும் வழமை போன்று தொட ர்ந்தன. எனினும் எத்தகைய போக்குவரத்து நெருக் கடிகளும் இங்கு தோன்றவில்லை. ஒரு வாகனம் பிறிதொரு வாகனத்துடன் மோதியதாக செய்தி கிட்டவில்லை.
எவரேனும் வாகன விபத்துக்கு ஆளானர்கள் என்ற தகவலும் இல்லை இந்த விழாவுக்கென சேவையில் நிறு த்தப்பட்டிருந்த இலட்சக்கணக்கான பொலிஸாரிடத்தில் துப்பாக்கிகளே இருக்கவில்லை; குண்டாந் தடிகளும் இல்லை.
அங்கே பொலிஸாரும் ஒழுங்காக வாழ்கின்றர்கள்: மக்களும் சீராக வாழ்கின்றர்கள்.
50

பொன்னும் நல்ல மணியும்-சுடர்செய் 06 አ பூண்களேத்தி வந்தாய்; ܖ
மின்னு நின்றன் வடிவிற்-பணிகள் மேவி நிற்கும் அழகை.
.பாரதி
உலகவிழா ஆரம்பமாவதற்கு இன்னும் 24 மணி நேரம் உண்டு. இஸ்ம்ாயிலோவா ஹோட்டல் இப்பொழுது நிரம்பி வழிகிறது தென்கிழக்காசிய நாடுளைச் சேர்ந்த பிரதிநிதி கள் அனைவரும் வந்து விட்டனர்.
ஒரே ஆரவாரம்; எந்தத் திக்கில் திரும்பினலும் ஒரு ஆந்திய முகம் தேன்படுகிறது.
இந்தியாவின் 16 மாநிலங்களையும் சேர்ந்த சுமார்
ஐநூறு பிரதிநிதிகளும் வந்து விட்டனர். இவர்களில் இந் திய கலாசார குழுவினரும் இடம் பெறுகின்றனர்.
தமிழையும் சிங்களத்தைம் ஆங்கிலத்தையும், ரஷ்ய னையும் கேட்டுக் கேட்டு அகமகிழ்ந்திருந்த வேளையில் தெலு ங்கும். கன்னடமும், மலையாளமும், மராத்தியும், இந்தி யும். பாரதி கூறிய செப்பு மொழிகள் பதினெட்டை யும் ஒரே இடத்தில் கேட்டு களிப்புறுவதற்கு இதனை விட வேறு சந்தர்ப்பமா கிடைக்கப்போகிறது.
மொழிகளை ஒருபுறம் வைப்போம் அந்தந்த மாநிலங் களுக்கே உரித்தான பாரம்பரிய உடைகளையும் அவற்றி டையே நிலவும் வேறுபாடுகளையும். ஒரே சமயத்தில் தரிசி
51

Page 28
க்கக்கிடைத்த வாய்ப்புக்காக பெருமிதமடைகிறேன்.
ஜனவிட மேலோங்கிய சர்வதேச உணர்வும் இருந்த போதி லும் அவனது தாய் மொழியை பேசுகின்ற வேற்று நாட்ட வரை காணும் போது பரவசம் ஏற்படுவது இயல்பல்லவா?
நானும் மனிதன்தானே?
இப்பரவச இயல்பைவிட்டு நானும் தப்பிக்க முடியாதே 'தமிழ் நாட்டுப் பிரதிநிதிகள் எப்போது வருவார்கள்?" என்று நாளும் பொழுதும் அழகிய மிதிலை நகரினிலே யாரு க்காக ஜானகி காத்திருந்தாளோ- அது போல். காதலு க்காக அல்லாவிடினும் எம் 'ஈன நிலைகண்டு துள்ளியெ ழுந்த' நாட்டின் பிரதிநிதிகளைக் காண்பதற்காக காத்திரு ந்தேன்.
இந்திரா காங்கிரஸ். வலது கம்யூனிஸ்ட், இடது கம்யூனிஸ்ட், ஜனதா, தி. மு. க. அ. தி. மு. க இவ்விதம் பல கட்சிகளின் பிரதிநிதிகளைக் காண்கிறேன்.
உலக விழா ஆரம்பிப்பதற்கு முதல் நாள்
'இன்று கொம்சமோலுக்கு போகிருேம் என்ருர்கள்.
அது என்ன "கொம்சமோல்'
சோவியத் நாட்டின் மிகப் பெரிய இளைஞர் அமைப்பின் பெயர்தான் "கொம்சமோல் ' சோவியத்தின் இளைஞர் கழகமே இவ்விதம் அழைக்கப்படுகிறது.
இந்தக் கழகத்தில் 4.2 கோடிக்கு மேற்பட்ட உறுப்பி னர்கள் அங்கம் வகிக்கின்றனர். சோவியத்தின் பல்வேறு அமைச்சுகள், மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றிலும் "கொம்சமோல்' பிரதிநிதிகள் நிர்வாக மற்றும் பணிக ளில் ஈடுபட்டு உழைக்கின்றனர்.
52

அயல் நாடுகளில் உள்ள இளைஞர் அமைப்புக்களுடனும், இந்த கொம்சமோலுக்கு தொடர்புகள் உண்டு.
உலக இளைஞர் மாணவர் விழாவுடன் மிக நெருங் கிய தொடர்பு கொண்டுள்ள இந்த அமைப்புத்தான் மாஸ் கோவுக்கு வந்துள்ள அனைத்து நாடுகளினதும் பிரதிநிதிக ளையும் வரவேற்கும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறது. இந்த விழாவை இம்முறை கோடை விடுமுறையின் போது மாஸ் கோவில் கோலாகலமாக நடத்தவேண்டும் என்ற யோசனை யை முன்வைத்ததும் இந்த ‘கொம்சமோல்' தான்.
ஐக்சிய நாடுகள் சபையின் "புங்கெடுத்தல், வளர்ச்சி, சமாதானம், என்ற கோஷத்தின் கீழ் பிரகடனமாகியுள்ள சர்வதேச இளைஞர் ஆண்டும், இத்த உலக விழாவும் மூன்று பிரதான காரணிகளின் பின்னணியில் முக்கியத்துவம் பெறு கின்றன.
★ பாஸிசத்தை வைற்றி கொண்ட நாற்பதாவது ஆண்டு நிறைவின்போது இந்த விழா நடைபெறுகிறது.
* வியட்நாம் மக்கள் வீரசுதந்திரம் பெற்று பத்தாவது ஆண்டு நிறைவுறும் காலமிது. * ஹெல்சிங்கி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு பத் துவருடங்கள் இச் சந்தர்ப்பத்தில் பூர்த்தியுற்றுள்ளது.
மேற்குறித்த பின்னணிகளோடு ‘ஏகாதிபத்திய எதிர் ப்பிற்காக சமாதானம் மற்றும் நட்புறவிற்காக என்ற முழ க்கத்துடன் 157 நாடுகளையும் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் யுவதிகளுடன் சோவியத்தின் தலை நகரம் களைகட்டத் தொடங்கிவிட்டது.
எமது நாட்டின் பிரதிநிதிகள் அனைவரும் இரண்டு பஸ் வண்டிகளில் ‘கொம்சமோல்' மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுகிருேம்.
இதமான குளிர் காற்று வெளியே தவள்கிறது அந்த "இகம்" இனிமையான 6፩)dቻ= ல் மேலும்மெருகூட்டப்
凸 f யின GB Qଗ
53

Page 29
படும் உணர்வு; எங்கோ தொலை தூரத்திலிருந்து சன்னமாக ஒலிக்கிறது அந்த கானம்.
நாம் அந்த மாளிகையின் வாசலை அண்மித்து நிற் கி ருேம். எம் முன்னே நீண்டுள்ள அம்மண்டபத்தின் மாடியை நோக்கிச் செல்லும் படிக்கட்டுகளில் செங்கம் பளம் பொலிவைத் தருகிறது.
வெளியில் நாம் வந்து கொண்டிருந்த போது சன்ன மாகக் கேட்ட அந்த கானம் படிப்படியாக மேலெழும்புகிறது
அந்தப் படிக்கட்டுக்களின் இரு மருங்கிலும் GFfrGulu த்தின் அழகு தேவதைகள் தம் பாரம்பரிய பாடலை இசை த்த வண்ணம் நடனமாடிக் கொண்டு இருக்கிருர்கள்.
நடுவே மேலும் ஒன்பது தேவதைகள் வானத்தில் இருந்து இறங்கி வருவதுபோல் ஆடை அணிகலங்களின் அசைவுகளுடன் முத்துதிரும் புன்னகை தவள வருகின்றனர்
எம் கரங்கள் எம்மையறியாமலேயே கரவோசை எழு *ப்புகின்றன. அவர்களும் தம் கரங்களே ஒரு தாளலயத்துடன் தட்டிப் பாடுகிருர்கள். நாமும் இப்போது அகற்கு இசை வாக கரங்களை இணைத்து இணைத்து பிரிக்கின்ருேம்.
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைப் பது போல் அழகேயுருவான ஒரு பெண் அன்னம் போன்று நகர்ந்து வருகின்ருள்,
அவள் கரத்தில் 'ஜீவில் என ப்டும் சோவியத்தின் பாரம்பரிய வட்ட வடிவான அதற்கு முன்பு நாம் எங்குமே பார்த்திராத ஒரு பணிஸ் போன்ற உருவம் அது உண்மை யில் பாண்தான். அதன் மேற்புறத்தில் உள்ள வெள்ளிக் கிண்ணத்தில் வெள்ளை வெளேரென்ற உப்புத்தூள்.
இது என்ன. பாணும். உப்பும்தான் அதிசயத் துடன் பார்க்கிறேன்.
54

ஒகோ. *உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்ற முதுமொழியை சோவியத் மக்களும் ஏற்றுக் கொண்டிருக் கின்றனரோ?
ஒவ்வொரு நாடும் தம் நாட்டிற்கு வரும் வெளிநா ட்டு விருத்தினர்களை வரவேற்பதில் தனித்துவமான பார ம்பரிய சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பது வழக்கமல் வா?
சோவியத் நாட்டில் "ஜீவில்" எ ன ப் படும் இந்தப் பாணும் உப்பும் எம் ஒவ்வொருவருக்கும் நீட்டப்படுகிறது
அந்த அழகுதேவதையின் முத்துதிரும் புன்னைைகயை ஏற்றுக் கொண்டு பாணைப் பிய்த்து உப்பில் தோய்த்து வா யில் வைத்து சுவைத்த போது. உவர்ப்புச் சுவையை நான் உணரவில்லை. மற்றவர்களுக்கு எப்படியோ?
**Go).5nt libérGL font Gi)’’. பிரதிநிதி தோழர் அன்டோமு செக் கோவ்ஸ்கி எம்மை வரவேற்று உரை நிகழ்த்தினர்.
- فیر
55

Page 30
07 வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமையில்லை எண்ணங்கள் செய்கைகளெல்லாம் - இங்கு யாவர்க்கும் ஒன்றெனல் காணிர்! −
-பாரதி
'மீர்துர்ஷ்பா. பெஸ்டிவல். சால்யூட். பெஸ்டிவல் மீர்துர்ஷ்பா. பெஸ்டிவல். சால்யூட். பெஸ்டிவல்'
மாஸ்கோ நகர வீதிகளில் விண்ணதிர ஒலிக்கிறது இந்தக் கோவும்.
குழந்தைகள், சிறுவர், சிறுமியர், இளைஞர், யுவதிகள் மாணவர்கள், தாய்மார், தந்தையர், வயோதிபர்கள் இப் படி எதுவித வயது வித்தியாசங்களுமின்றி அனைவருமே
உரத்த குரவில் கோஷிக்கின்றனர்.
‘சமாதான நட்புறவுப் பெருவிழா வாழ்க’ என்ற கோஷத்தின் ரஷ்ய மொழிவடிவமே “மீர்துர்ஷ்பா. பெஸ் டிவல். சால்யூட் பெஸ்டிவல்.”
எங்கள் கைகளில் பலூன்கள் கொடிகள். ஆடல், பாடல், கோஷம். இனி கேட்க வேண்டியதில்லை. ஊர்வலம் களைகட்டத் தொடங்கிவிட்டது. நாம் செல்லும் வீதியின் இருமருங்குகளிலும் சோவியத் நாட்டின் அனைத்து குடியர சுகளிலுமிருந்து வந்த மக்கள் வெள்ளம் ஆரவாரம் செய்து வரவேற்கின்றது.
56

'யுத்தம் வேண்டாம், அணுவாயுதம் வேண்டாம் சோஷலிஸம் வாழ்க. இலங்கை - சோவியத் நட்புறவு வாழ்க. என்றெல்லாம் எம் பிரதிநிதிகள் உரத்த குரலில் கோஷமெழுப்புகின்றனர்.
எமக்கு முன்னும் பின்னும் இந்தியா, அங்கோலா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், வடகொரியா முதலியநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள்.
சோவியத் குழந்தைகள் தம் பிஞ்சுக்கரங்களால் தட்டி மகிழும் காட்சி நெஞ்சையள்ளுகிறது. -
அந்தந்த நாடுகளுக்கே சொந்தமான மொழிகளில் கோஷங்கள் எழுகின்றன. எத்தனை மொழிகள் எமக்குத் தெரியும்? எத்தனை மொழிகளை எம்மால் புரிந்து சொள்ள முடியும்? உலக மொழிகள் அத்தனையும் இப்படி மாஸ்கோ நகர வீதிகளுக்கு வந்துவிட்டனவோ?
மாஸ்கோவின் மத்தியில் உள்ள லெனின் ஸ்ரேடியத்தை நோக்கி ஊர்வலம் நகருகின்றது. 'சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம்" என்றர்கள். எதுவித களைப்போ சோர் வோ இல்லை. உற்சாகம் மேவிப்பறக்கிறது.
உலக சகோதரத்துவத்தை பேணிக்காக்கவேண்டு மென்ற கோஷம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இனடயினடயே நாமும் சோவியத் மக்களுடன் ○g庁 ந்து, 'மீர்துர்ஷ்பா. பெஸ்டிவல் சால்யூட் பெஸ்டி வல்" கோஷமெழுப்புகிருேம். ܖ
அன்றைய தினம் மாஸ்கோவில் கருமேகக் கூட்டங்கள் ‘மழைவரும்’ என்று அச்சுறுத்திக் கொண்டிருந்தன. "இயற் கையை நேசிக்கும் எம்மால், தேவைப்படும் போது அதனை வெல்லவும் முடியுமென நிரூபித்துக் காண்பித்தவர்கள் அல் லவா சோவியத் விஞ்ஞானிகள்.
57

Page 31
வானில் தோன்றிய கருமேகக் கூட்டங்களே கலேப்பதற் காக ஒரு விமானம் ஆறுயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து "சில்வர் அயோடைட்' கலந்த ஒருவகைத்துகனே வானத் தில் தான்கிறது. கருமேகங்கள் சுலேந்து சூரியன் எம்மை வர வேற்றுச் சிரிக்கிருன்,
காலே பத்து மணிக்கு ஆரம்பமான ஊர்வலம் மாவே நான்கு மணியளவில் "லூஜ்னிகி' என்ற இடத்தில் அமைந் துள்ள லெனின் ஸ்ரேடியத்தை வந்தடைகிறது.
இங்கு ஒரு முக்கிய விடயத்தை அவதானிக்கமுடிகிறது
ஊர்வலம் சென்ற வீதிகளில் வாகனப்போக்கு நிறுத் தப்பட்டிருந்தது. சோவியத் குடியரசுகளிலிருந்து வந்திருந்த மக்கள் விதிகளின் இருமருங்குகளிலும் மணித்தியாக்கனக் தில் கால்சுடுக்க நின்று எம்மை வரவேற்று ஸ்ரேடியத்தி ணுள் அனுப்பினுர்களே தவிர தாங்களும் அங்கே வருவதற்கு மூண்டியடிக்கவில்லே.
உலக நாடுகளின் பிரதிநிதிகள் வரவேற்று அவர்களின் எல்ஃ யில்லா மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்வதுடன் அவர்கள் சிரமம் எதுவுமின்றி வந்த நோக்கத்தை நிறை வேற்பிக் கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற மேன்மையான எண்ணமே சோவியத் பிரஜைகளின் மனதில் குடிகொண்டிருந்ததை உணர முடிகிறது.
அங்கு கடமையாற்றிய பொலிஸ்ார் கூட மிகவும் முன் மாதிரியாகச் செயல்படுகிருர்கள்.
1937 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடந்த உலக இ:ே சூர், மானவர் விழாவுக்காக நிர்மாணிக்கப்பட்ட ஆந்தி லெனின் ஸ்ரேடியத்தில் ஒரே சமயத்தில் சுமார் ஒரு இலட் சம் பேர் அமர்ந்து எதுவித இடையூறுகளுமின்றி நிகழ்ச்சி களே கண்டுகளிக்க முடியும்.
58

பிண்ணுக் கெட்டிய ஆாரம் கரையின் மனிதத்தஃசுஃா
/ம், பலூன்களேயும், வர்ணக் கொடிகளேயுமே பார்க்க Աքitվ,
கிறது. மத்தியில் Př337, z tři sti விரித்தாற் போன்று மைதானம், அதனே சுற்றி செங்கம்பளம்,
தாம் ஒவ்வொருவரும் எமக்கா ஒதுக்கப்பட்டிருக்கும் ஆசனங்களில் மருகின்ருேம். ஒரு ஆகான விசிறியும் கையேடும் எமக்காத ஆசனத்தில் காத்திருக்கிறது. அக்கை யேடு முழுச்சு முழுக்க ரஷ்ய மொழியில் இருத்தது. எழுத்துக் களில் வடிக்க முடியாத அக் கண்கொள்ளாக் ... fr. 33,2it. பற்றி படித்துத் தெரிந்து கொள்ளவும் ஒரு கையேடா?
எமிக்கு அது அவசியப்படவில்:
மைதானத்தைச் சுற்றி டெலிவிஷன் கமராக்கள் ஆணி வகுத்து நிற்சின்றன. சோவியத் தேங்கள் ஒலிபெருக்கிகளு பாக காற்றில் மிதக்கின்றன. துெ பொதுவாக காற்றில் மிதந்த தேங்கள் மறைய அழைப்பு சமிக்ஞை ஒலி எழுகி
.
"மனிதக் காட்சிப் பலகை" என அழிைக்கப்படும் ஒரு பகுதியில் அமர்ந்துள்ள ஒன்பதியிைரம் சோவியத் தோழர் தோரியர் கிரெம்ளினின் சிவப்புத்தாரா சபை உருவாக்கு கின்றனர்.
அந்த செந்தார: நெஞ்சை பள்ளுகிறது. ஒன்றல்ல, ரண்டல்ல, பல்வேறு 1ெ:ங்ஃஃா அந்த மனிதக்காட்சிப் railfi). சித்திரிக்கின்றது. அந்த அதியற்புதக்காட்சியை கண்டு கனிக்க ஆயிரம் கண்கள் வேண்டும்.சுமார் முன்னுTது காட்சிகளே அவர்கள் சித்திரித்தார்கள் ான்றுள்.
மனித சக்தியின் வித்துவம் எத்தகையது என்பதை பித்துள் காட்டுகின்று அம்மாந்த53ர பாராட்டுவதற்கு வார்த்துைகளைத் தேடவேண்டும்.
59

Page 32
இந்த உலக விழாவின் பிரதிநிதிகளையும் விருந்தினர் களையும் வரவேற்று உரை நிகழ்த்துகிருர் சோவியத் அதியர் தோழர் மிகையில் கொர்பச்சேவ். அவரது வரவேற்புரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
“இத்தகைய விழாக்கள் எப்போதும் ஒரு மகத்தான வாய்ப்பாகும். அத்துடன் முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச நிகழ்ச்சியுமாகும். இதனை ஒரு சிறந்த வாய்ப்பென கூறு வதற்குக் காரணம், அனைத்து கண்டங்களையும் சேர்ந்த இளம் பிரதிநிதிகள், வெவ்வேறு உலகக் கண்ணுேட்டங்களை யும் தேசியப் பாரம்பரியங்களையும் கொண்ட பல்லின மக் கள் ஒன்ருகக் கூடுகின்றனர். இதனுல் பரஸ்பரம் ஒருவ ரை ஒருவர் புரிந்துகொள்ள ஏதுவாகின்றது. நட்புறவை வளர்த்துக் கொள்ளமுடிகிறது.
"இயற்கையாகவே இத்தகைய விழாக்கள் ஒரு சந்தர்ப் பம் மட்டுமல்ல, வாழ்க்கையைப் பாதிக்கும் பிரச்சினைகள் முன்னைய தலைமுறைகளைப் போலவே அதேதீவிரத் தன்மை யுடன் இளைஞர்களையும் பாதிக்கவே செய்கின்றன. உள்ளா ர்ந்த் உற்சாகத்துடன் கூடிய இனஞர்கள் சமூக நீதிக்கும் மெய்யான சுதந்திரத்திற்கும் போராடுகின்றனர். வன்முறை யையும் நிறவெறியையும அசமத்துவத்தையும் ஒடுக்கு முறையையும் ஆக்கிரமிப்பையும் மனித வாழ்விலிருந்தும் மனித குலத்தின் வாழ்விலிருந்தும் ஒழித்துக்கட்டுவதற்கும் அவர்கள் தயாராகின்றனர்.
'தாளைய உலகம் வருகின்ற நூற்ருண்டின் உலகம் உங்களுடையது. இன்றைய் உங்க்ளுடைய சிந்தனைகளும் செயல்களும் அந்த நாளைய உலகம் எப்படி இருக்கும் என் பதை நிர்ணயிக்கும்.
"தற்போது மனித குலத்திற்கு சமாதானத்தைப் பாதுகாப்பதையும் பலப்படுத்துவதையும்விட கூடுதலான முக்கியத்துவம் வாய்ந்த ஜீவாதார கடமை வேறு இல்லை.
60

வருங்காலம் தொடர்பான எமது அக்கறையும் கடந்தகால அனுபவங்களும் அக்கடமைகளை எமக்குப் போதிக்கின்றன
"மண்ணிலோ அல்லது விண்ணிலோ அணுவாயுதங் களை மீண்டும் பயன்படுத்துவதை தடுக்க ஒவ்வொரு மனித னும் பிரதிக்ஞை எடுக்க வேண்டும். இந்த ஆயுதங்களை முற்ருக ஒழித்துக்கட்ட நாம் ஒவ்வொருவரும் என்ன செய் தோம். என்ன செய்யப்போகின்முேம்."
சோவியத் அதிபரின் விஞவுக்கு உடனடியாக எவரா லும் அச்சமயம் பதில் அளிக்க வாய்ப்புக் கிட்டாதுபோஞ லும் நான் தாயகம் திரும்பியதும் படித்த தகவல் ஒன்று அந்த அர்த்தம் பொதிந்த விஞவுக்கு பதிலாகியது.
அந்தத் தகவல் இதுதான்.
பிரிட்டனில் கிரீன்னன் ஹோமன் என்று ஓரிடம். அது ஒரு பொட்டல் புதர்க்காட்டுப் பிரதேசம். மக்கள் நடமாட்ட மே இல்லாத ஒதுக்குப்புறமானபகுதி. இப்பகுதியில் பல இடங்களில் சகதியையும் சதுப்பு நிலத்தையுமே காணமுடி Այւն .
கொடுமையான வெயில் கடும் குளிர்கொட்டும்பனி. இப்படி திடீர் திடீரென மாறும் சுவாத்தியம். அங்கே இத் தனை நிலைமைகளுக்கும் மத்தியில் ஆயிரக்கணக்கான பெண் கள் தம் குழந்தைகளுடன் வயோதிபத் தாய்மார்களுடன் அறப்போராட்டம் ஒன்றையே நடத்திக் கொண்டிருக்கிருர் Ꮿ5ᎧrᎢ .
இந்த மகளிர் அறப்போர் பட்டாளம் இந்தப் பொட் டல்புதர்க் காடுகளில் முகாமிட்டு போராட்டம் நடத்துவது எதற்காக? தாம் வறுமையில் வாடுகிருேம் என்பதற்காகவா? தமது கணவன்மார் கொடுமைப்படுத்துகிருர்கள் என்பதற் காகவா? அல்லது சீதனம் கொடுக்க வழியில்லை என்பதற் காகவா? எதற்காக?
61

Page 33
உண்மையிலேயே அந்த அறப்போர் எதற்காக என அறிந்தால், எவரும் ஆச்சரியமடைந்தால் வியப்பல்ல.
இந்த கிரீன்னன் ஹோமன் பொட்டல் புதர்க்காட் டில் அமெரிக்காவின் அணுவாயுத ஏவுகணைத்தளம் அமைக் கப்பட்டுள்ளது. இந்தத் தளத்தினை பாதுகாக்க அமைக்கப் பட்டுள்ள முள்வேலிகளைச்சுற்றி இருந்து கொண்டுதான் மக ளிர் அறப்போர் நிகழ்த்திக் கொண்டிருக்கிருர்கள்.
இந்தப் பொட்டல் வெளியில் குடிசைகளை அமைத்து அடுப்பு மூட்டி சமைத்து உண்டு தரிக்குறவர்கள் போன்று வாழ்கின்றனர் அந்த ஆயிரக்கணக்கான பெண்கள்.
தினமும் முள்வேலிக்கு அப்பால் நின்று கொண்டு அணு வாயுத எதிர்ப்பு முழக்கங்கள் ஆர்ப்பாட்டங்கள் பிரார்த்த னைகள். இயற்கையின் கோபத்துக்கும் சட்டத்தின் கெடுபி டிகளுக்கும் அஞ்சாது இரவு பகலாக தொடர்ந்து போரா டுகின்ருர்கள்.
பெண்ணினம் பெருமைக்குரியது என்பதை நிலைதாட் டிக் கொண்டிருக்கும் இங்கிலாந்தின் கிரீன்னன் ஹோமன் பொட்டல் புதர்காட்டின் அறப்போராட்ட மகளிர் அணி யின் முழக்கம்தான் தோழர் கோர்பச்சேவின் வினவுக்கு பதில் என்பது மட்டுமல்ல உலக நாடுகளிலுள்ள ஏகாதிபத் தீய எதிர்ப்பாளர்கள் மற்றும் அணுவாயுத எதிர்ப்பாளர் களுக்கு ஒரு முன்மாதிரியும்தான்.
62

08 ஊதுமினுே வெற்றி ஒலிமினுே வாழ்த்தொலிகள்
ஒதுமினுே வேதங்கள் ஒங்குமினுே! ஒங்குமினுே!
தீதுசிறிதும்பயிலாச் செம்மணி மாநெறிகண்டோம்
வேதனைகள் இனிவேண்டாவிடுதலையோதிண்ணமே
—LuITUğ6
பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் சோவியத் அதி பர் தோழர் மீகையில் கொர்பச்சேவ் தனது வரவேற்புரை யை முடிக்கின்றர்.
மீண்டும் ‘சமாதான நட்புறவுப் பெருவிழா வாழ்க’ என்ற கோஷம் லெனின் ஸ்ரேடியத்தை அதிரவைக்கிறது. 157 நாடுகளின் பிரதிநிதிகளும் மற்றும் இராஜாங்க விருந் தினர்களும் சோவியத் அரசின் அமைச்சரவையினரும் சோவியத் மக்களும் தத்தம் ஆசனங்களில் அமர்ந்தவாறே மைதானத்தை கூர்ந்து குனிந்து பார்க்கின்ருேம்.
நான்கு பெரிய வாயில்களின் முன்னே பல வர்ணங் களிஞலான பலூன்கள் தென்படுகின்றன.
சொற்பவேளையில் எம் அனைவர் மத்தியிலுமிருந்து 'ஹோ' - வென்ற இரைச்சல் எழுகின்றது.
அந்த ஆயிரக்கணக்கான பலவர்ண பலூன்கள் இப் போது பச்சைக்கம்பளம் விரித்த அப்பிரமாண்டமான மை தானத்தை மறைத்துவிடுகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒன்றையொன்று முட்டி மோதி மேலே எழுகின்றன.
ஐதரசன் நிரப்பப்பட்ட பலூன்களின் குணம் தெரியும் தானே? அனைத்து பலூன்களும் மேலே எழுந்து. எங்கே.
'63

Page 34
வானம்.? எங்கே மேக்ம்..? நாம் அந்த நிர்மலமான ஆக யத்தை தேடுகிருேம். வானோபும் :றக்கம் பலுTள்கள் 3.L.-r r:fr?
சில கனத்தில் அந்த பல்லாயிரம் பல வர்ண பஜான் ரூம் அங்கொன்றும் இங்கொன் :ாக பேங்வேறு நி1 க3ள நோக்கி. வெவ்வேறு நகரங்களே நோக்கி வெவ்வேறு தேசங்கரே நோக்கி. பறந்து செல்கின்றன.
இந்த அதியற்புதக் காட்சியை மெய்சிவிர்த்து ரசி கொண்டிருந்த வேளேயில் மறு புறத்தில் அந்த 'மிளி காட்சிப்பு:க" 12 ஆவது உலக இஃாரூர் மானோ விழாவின் இலச்சினே யை சித்திரித்துக்கொண்டிருக்கிறது.
அதனேயே கண்ணி மக்காமல் பார்த்துக் கொள்: கும் வோேயில்.
"அதோ அதோ அங்கே பாருங்கள் " எம்முடன் அமர்த்திருக்கும் சிம் பிரதிநிதிகள் காட்டிய தினசரி பார்க்கிறேன்.
ਸੁਨਘ . Tਨ। விழாவின் ரொடின : அன்ேவருக்கும் காண்பித்துக்கொண்பி
நடந்து வருகிருர்கள். நெடிதுயர்ந்த கம்பத்தினருகே நேருங் குகிருர்கள்.
நாம&னவரும் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போன்று எழுகின் ருேம். எம் சுரங்கள் தாள 3:த்துடன் காலோ:
ரிேய எழுப்புகின்றன.
உலக சமாதானத்தை வலியுறுத்தும் அந்த இலச்சிஃப்' யை இத்திரித்த விநாயின் :ெ - நெபுதுபர்ந்த கம்' தை தழுவிக்கொண்டு மேலே முகின்றது.
மீண்டும் "அதோ. அதே .." என்ற குரல். வீழ
வின் திபத்தை ஏற்றி வைக்கவரும் ஒரு தோழரும் தே"
64
 
 
 

அதற்கான எரியூட்டப்பட்ட பந்தத்தை ஏந்தியவாறு ரு திறந்த காரில் பவனி வருகின்றனர்.
அத்திறந்த காரின் முன்னும் பின்னும் மோட்டார் கிகிள்களில் சிலர் அணிவகுத்து வருகின்றனர்.
பாசிஸத்தை பூரறியடித்த 40 ஆவது ஆண்டு நிறைவின் பாது நடைபெறும் இப்பெருவிழா - அந்த 2ஆம் உலக "புத்தத்தில் உயிர்த்தியாகப் புரிந்த பெயர் தெரியாத ரவின் கல்ஃபரையிலுள்ள அணேயாத திடத்திலிருந்து எரி டப்பட்ட பந்தத்தைக் கொண்டே இந்த உலக விழா ங் தீபமும் ஏற்றப்படுகிறது.
அந்தத் தீபக்கனத ஏற்றின் வந்த தோழி வேறுயாரு ல்ல. விண்ணில் வலம் எந்த வீரர் அமரர் யூரி ககாரினின் நல்விதான்.
திறந்த காரிலிருந்து இறங்கும் தோழி கலிதசகாரினு டன் அந்தத் தோழரும் தீபமேற்றப்படவேண்டிய கோபுரத் ன்ெ முன்னேயுள்ள "லிஃப்டி"ல் ஏறுகின்ருர், ஆந்த "விஃப்ட்" அவர்களே ஏந்திக்கொண்டு சுமார் நூறு மீட்டர் உயரமுள்ள கோபுரத்தை நோக்கிச் செல்கிறது. அக்காட்சி எம்மை பர
வசத்தில் ஆழ்த்துகிறது.
அக்கடபை முடிந்ததும் 157 நாடுகளின் அணிவகுப்பு ரேடியத்தினுள் ஆரம்பமாகிறது.
பதினேராவது உலக மாணவர் இளேஞர் விழாவின் பொது விருத்தோம்பும் நாடாகவிருந்த கியூபாவின் இளம் பிரதிநிதிகள் முதலாவதாக அணிவகுத்து வருகின்றனர்.
பலத்த கரகோஷத்துடன் ஆந்த அணிவகுப்பு வர வெற்கப்படுகிறது.
இனிவரும் ஒவ்வொரு நாடுகஃrயும் வரிசைக்கிரமமாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஒலிபெருக்கியில் ஒவ்வொரு

Page 35
நாடுகளினதும் பெயர்கள் தெரிவிக்கப்படுகின்ற அதே வேளை ஸ்ரேடியத்தின் இருமருங்கும் உயரத்திலுள்ள பிரமாண்ட மான தொலைக்காட்சிகள் இரண்டும் நாடுகளின் பெயர்களை எழுத்தில் சித்திரிக்கின்றன.
ஒவ்வொரு நாட்டினதும் அணிவகுப்பு ஒன்றைத்தொ டர்ந்து மற்ருென்ருக மைதானத்திற்குள் வந்து வேறுவாயில் வழியாக திரும்பிச் செல்கின்றன.
கியூபாவைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, ஆர்ஜன் டைஞ, ஆப்கானிஸ்தான், பார்படோஸ், பஹ்ரேய்ன், பெல்ஜியம், பெனின், பல்கேரியா, பொலிவியா, பொட்ஸ் வானு, பிரேஸில், புர்கினபாஸே, புருண்டி, வெனிசுலா, ஹங்கேரி, அடுத்து வியட்நாம்.
இப்போது கரவோசை உச்சஸ்தாயியில் எழுகிறது.
**வியட்நாம், வியட்நாம்."
**வியட்நாம் வாழ்க. வியட்நாம் வாழ்க.."
வியட்நாமைத் தொடர்ந்து ஜப்பான், கபோன், ஹெயிட்டி, குயான, சாம்பியா, கானு, கெளதமாலா, குவாடலுபே, ஹொண்டூறஸ், கிரெனடா.
கிரெனடாவுக்காக மீண்டும் உச்சஸ்தாயிலில் கரவோசை
பின்பு கிறீன்லேண்ட், கிறீஷ், டென்மார்க், டொமி னிக்கன் குடியரசு, எகிப்து, ஸாம்பியா, மேற்குஸஹாரா, ஜிம்பாப்வே, இதனைத் தொடர்ந்து இந்தியா.
இந்தியாவின் 16 மாநிலங்களையும் சேர்ந்த மக்களைப் பிரதிபலிக்கும் விதத்தில் அந்தந்த மாநிலங்களுக்கே உரித் தான பாரம்பரிய உடையணிந்த பிரதிநிதிகள் (ஆண்கள், பெண்கள்) கைகூப்பி வணக்கம் தெரிவித்தவாறு வந்து கொண்டிருக்கின்றனர்.
66

‘இந்தியா வாழ்க. இந்தியாவட்ட ஜயவேவா. இந் தியா ஜித்தா பாத். ஜெய்ஹிந்த். ஆரவாரமான கோ ஷம் நாலாதிக்கிலிருந்துமெழுகின்றது. சோவியத்தின் நெரு ங்கிய நட்புறவு நாடுகளில் இந்தியாவும் ஒன்றுஎன்பதை சோவியத் பிரதிநிதிகள் இருந்த பக்கமிருந்து எழுந்த கர கோஷம் உணர்த்திக்கொண்டிருந்ததோ தெரியவில்லே.
இந்தியாவை அடுத்து ஜோர்தான், ஈராக், அயர்லா ந்து, இஸ்லாந்தியா, ஸ்பெயின், இத்தாலி, யேமன், கம்பூச் சியா, கனடா, சைப்பிரஸ், கொரியா, கொலம்பியா, கொங்கோ, கொஸ்டரிக்கா, குவைத், குரகாவோ, லாவோ ஸ், லைபீரியா, லெபஞன், லெசோதோ, லக்ஸம்பேர்க், மடகஸ்கார், மலாவியா, மலேஷியா, மாலைதீவு, மால்டா, மொரோக்கோ, மக்ஸிக்கோ, மொஸாம்பிக், மங்கோலியா, நமீபியா, யேமன் ஜனநாயகக் குடியரசு, நேபால், நைஜீரியா நெதர்லாந்து, பராகுவே, நியூசிலாந்து. நிக்கரகுவா
நிக்கரகுவா’ என்றதும். ஆபிரிக்க நாட்டுப் பிரதி நிதிகள் இருந்த பக்கம் மட்டுமல்ல. அனைத்துப் பக்கமிருந் தும் பிரதிநிதிகள் எழுந்து கரகோஷமெழுப்பி வரவேற்கின் றனர்.
'நிக்கரகுவா. நிக்கரகுவா. நிக்கரகுவா." என்று தாளலயத்துடன் உரத்த குரலில் அனைவரும் அழைக்கின் றனர். அந்த அழைப்பினுரடே, சுமார் பத்து நிமிட நேரம் வரையில் அங்கு கரகோஷம் வியாபித்திருந்தது.
பின்பு, நோர்வே, ஓமான், வேர்ட்ஐலண்ட், பாகிஸ், தான், அடுத்து பாலஸ்தீனம்.
‘வாழ்க பாலஸ்தீனம். பாலஸ்தீனயட்ட ஜயவேவா? எம் பக்கமிருந்தும் அவ்விதம் கோஷம் எழுத்தபோது என் நெஞ்சம் எனது தாய்த்திரு நாட்டை நோக்கிசிறகடித்துப் பறக்கிறது. இந்த விழா நடைபெறும் வேளையிலாவது என் தாயகத்தில் அமைதிப்புரு சிறகடித்துப்பறக்க வேண்டுமென மனம் வேண்டியது.
67

Page 36
திடீரென என் நாட்டையும் அதன் அவலங்களையும் நெஞ்சமதில் நிழலாடவைத்த பாலஸ்தீன பிரதிநிதிகளை மனமார வாழ்த்தினேன்.
பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து பணுமா, பாபுவா நியு கிணி, பராகுவே, பெரு, போலாந்து, போர்த்துக்கல், பொட்ஸ்வானு, பிலிப்பைன்ஸ், பசுபிக்திவுகள், பொலிவியா ரூமேனியா, சிங்கப்பூர், சிலி.
*சிலி கோரமாகக் கொல்லப்பட்ட அலண்டே க்ண் ணெதிரே வருகிருர், 'சிலி என்றதும் கர கோஷத்தின் தொனி வேகமாகியது.
பின்னர் எமது நாடு.
"பூரீலங்கா."
எம் பிரதிநிதிகள் எழுந்து நின்று வரவேற்கின்ருேம். தாய்நாட்டுப் பாசம் அல்லவா? எம்மைத் தொடர்ந்து எமக் கருகிலிருந்த இதர நாட்டுப் பிரதிநிதிகளும் "பூரீலங்கா., பூரீலங்கா. குரீலங்கா.' வென வாயோயாமல் உரத்துக் கூவுகின்றனர்.
பின்பு - சோமாலியா, சூடான், சொலமன்தீவு, சீசெல்ஸ், சைப்பிரஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, சுவீடன், சிரியா, துருக்கி, டிரினிடாட், தியகோகார்ஷியா, தாய் லாந்து, தன்சானியா, டியுனிஷியா, உகண்டா, யூ. எஸ். ஏ அதாவது அமெரிக்கா என்றதும் அனைவரும் மீண்டும் கர கோஷம் எழுகிறது. ஆரவாரம் செய்கின்றனர்.
இருதுருவங்கள் என அழைக்கப்படும் சோவியத் யூனி யனும் அமெரிக்காவும் இவ்விதம் ஓரிடத்தில் சந்திக்கும் போது ஏற்படும் வித்தியாசமான பரவசஉணர்வைநேரில் பெற்ற அனுபவம் கிட்டியது. அமெரிக்க பிரதிநிதி ஒருவர் இந்த உலக விழாவைப்பற்றி கூறிய அருமையான கருத்தை இந்நூலின் பிறிதொரு அத்தியாயத்தில் பார்க்கலாம்.
68

யூ. எஸ். ஏ. ஐ. அடுத்து உருகுவே, யூகோஸ்லாவியா, யூ. கே. (பிரிட்டன்) வெனிசூலா, மேற்கு ஜெர்மனி, மேற்கு
இத்தியத் தீவுகள்.
இறுதியாக
"யூ. எஸ். எஸ். ஆர். யூ. எஸ். எஸ். ஆர். யூ. எஸ். எஸ். ஆர்." அனேவருமே எழுந்து பாடுகின்ருேம். உலக நாடுகளனைத்தையும் தனது வசந்தமான மண்ணுக்கு அழை த்து விழா நடத்துகின்ற சமதர்ம நாட்டின் பிரதிநிதிகள் தம் கரங்களை உயர்த்தி அசைத்த வண்ணம் வருகின்றனர்.
நீண்டநேரம் நாம் கையசைத்தும் கரவோசை எழுப் பியும் எமது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்ருேம்.
இந்த 157 நாடுகளினதும் அணிவகுப்புகளும் முடிவுற்ற தும் கலைநிகழ்ச்சிகள் ஆரம்பிக்கின்றன. நடந்து முடிந்த அணிவகுப்புகளின் போது உணரவும் புரிந்து கொள்ளவும் முடிந்த சில அம்சங்களை இங்கு தெளிவுபடுத்த விரும்புகி றேன்.
ஏகாதிபத்திய கிரணங்களால் அடக்கப்பட்ட ஒடுக்கப் பட்ட, நசுக்கப்பட்ட நாடுகள் விரைவில் பூரண சுதந்திரம் பெற்றுவிட வேண்டும், மனித உரிமைகள் பறிக்கப்பட்டு அல்லல்படுகின்ற தேசங்கள் இழந்த உரிமைகளைப் பெற்று தன்மானத்துடன் வாழவேண்டும், பசி, பட்டினி, பஞ்சம் தலேவிரித்தாடும் வறியநாடுகள் சகலதிலும் தன்னிறைவு பெறவேண்டும், என மானசீகமாக வாழ்த்தும் பாங்கினை அந்த லெனின் ஸ்ரேடியத்தில் எழுந்த கரகோஷங்கள் நன்கு புலப்படுத்தின.
எதனையும் கலையம்சத்துடன் சித்திரிக்கின்ற சோவியத் மக்கள், இந்த ஆரம்ப விழாவையும் கலேவிழாவாகவே நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
69

Page 37
'கலேயம்சமற்ற வாழ்வும் ஒரு வாழ்வா..?" என கலை யுள்ளம் கொண்டவர்கள் கேள்வி கேட்பது சாதாரண மானதுதான். கலேயின் பெறுமதியை அறியாதவர்களைக் கூட இந்தப்பெரியவிழா அறியவைத்திருக்கும் என நிச்சய மாக நம்பலாம்.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் நான்கு வாயில்களினூடாகவும் வெவ்வேறு ஆடையணிகலன்களுடன் மைதானத்துள் ஒடிவந்து பல்வேறு வடிவங்களில் காட்சிகளை அமைத்து கண்களுக்கு விருந்து படைத்தனர்.
ஒவ்வொரு குழுவும் பிரிந்து - சேர்ந்து ஆடி. ஓடி.
வலம் வந்து ஒன்றிணைந்து. உண்மையில் அதனே இங்கு எழுத்திலே வடிக்கமுடியாதுதான்.
70.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே - நம்மில் 09 ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
ஒன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
.பாரதி
*சத்தியத்தையும் அஹிம்சையையும் பறிகொடுத்து விட்டு அதனுல் வரும் சுயராஜ்ஜியத்தை நான் எவ்வாறு ஏற்றுக்கொள்ளமாட்டேனே, அது போலத் தாய்மொழியை புறக்கணித்துவிட்டு வரும் சுயராஜ்ஜியத்தையும் ஏற்றுக் கொள்ளமாட்டேன்' - என்றவர் அண்ணல் காந்தி.
சமதர்மப்பூங்காவில் நடமாடித்திரியும் வேளையில் அண் ணலின் வாக்கு நினைவுக்குவர சில சம்பவங்கள் காணமாக இருந்தன.
ரஷ்யா, உக்ரைன், பைலோரஷ்யா, உஸ்பெக்கிஸ் தான், கஜாகிஸ்தான், ஜார்ஜியா, அஸார்பைஜான், லிது வேனியா, மொல்டாவியா, கிர்கீஸியா, தாஜிக்ஸ்தான், ஆர்மீனியா, துருக்மேனியா, எஸ்தோனியா, முதலிய 15 குடியரசுகளைக் கொண்ட சோவியத் யூனியனில் மேலும் 20 சுயாட்சிக் குடியரசுகளும் 8 சுயாட்சிப் பிராந்தியங்களும் 10 சுயாட்சிப் பிரதேசங்களுமுள்ளன.
இதனைக் கேள்வியுற்றபோது மூக்கின் மேல் விரல்வை த்து நான் வியக்காது போனலும் ஒரேயொரு விடயத்திற் காக நாமனைவரும் வியக்கத்தான் வேண்டும்.
71

Page 38
இத்திரே குடியரசுகளிலும், இத்தனே குடியரசுகளேயும் சேர்ந்த பற்பல கோடிமக்கள் வாழகின்ற அந்தப்பூமியிலும் ரஷ்யமொழி ஆட்சி மொழி அல்ல?
அந்தந்தி குடியரசுகளேச் சேர்ந்த மக்கள் தத்தம் தாய் மொழியிலேயே தமது அரசதொடர்பு உட்பட அனேத்து நிருவாகப் பஈரிகளேயும் மேற்கொண்டு 'சுகமாக வாழ்கிரு Při ko,
எந்தவொரு மொழியும் அவர்களே அடக்கவில்லே,
எந்தவொரு மொழியும் அவர்களே அபுசுமப்படுத்த
-- قي" - எந தவொரு மொழியைக் கண்டும் அவர்கள் „%Hლe:#;-5* வில்லே.
தத் தம் தாய் மொழியை நேசிக்கின்ற அதேவேளேயில் ரஷ்யபொறியையும் தெரிந்து வைத்திருக்கிமூர்கள். நேசிக்கின் ரூர்கள், அதேவேளே உலகிலுள்ள அனேத்து பொறிகளேயும் அறிந்து கொள்ள மு:கிருர்கள், ஆர்வம் காட்டுகின்குர்கள்
எம் இலங்கை மணித்திருநாட்டில் நாம் இரண்டே இரண்டு மொழிகளே எரிவத்துக் கொண்டு படும்பாட்டை நினேத்தால் .
அன்று வியாழக்கிழமை
ஹோட்டவில் என்னேச் சூழ அர்ைந்து கொண்டு உண வருந்துகிறீர்கள் எம்முடன் வந்த இலங்கையின் முஸ்லிம்
பிரதிநிதிகள்,
அவர்கள் "கட்டைக்கால்" (பன்றி இறைச்சி) சாப்பி டாதவர்கள் என்பதனுல் - எத்த இறைச்சி :
7.

மே சாப்பிடாத என்னுடனேயே எப்போதும் தமது ஆகா
ஐ ரத்ன தெைத்துக்கொண்டவர்கள்.
ஒருவர் மக்கள் கட்சி, மற்றவர் சுதந்திரக்கட்சி, மூன்
. I . . . . . உறுப்பினர்.
மங்கள் கட்சியைர் சேர்ந்த நண்பர் சொல்ருேர், 'ஐளே. நாாேக்கு வெள்ளிக்கிழமை. ஜும்மாத் தொழு விக்குப் போக வேண்டும். சான்ன செய்யிறது.
இதனேக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு சிங்கள தண்டார் தீள்து தாய் மொழியில் கம்யூனிஸ்ட் நாட்டுக்கு வந்து தொழுகைக்குப் போகப் போ கிறிர நல்ல வேடிக்கை இங்கே 'பிெ ஸ்க்"-இருக்குமா-என்றுர்,
அப்பொழுது அதனேக் கேட்டுக்கொண்டிருந்த எமது எழிகாட்டித் தோழர் அலெக்ஸாண்டர் அருகில் பெருகிருர்,
"ஏம கிபன்ட எ சா. சகோதரயா அபே நட்டே "மொஸ்க்" நியனவா. கrத ஏ. பன்ட ஒனே. நம கியன் ட. அபி எக்கங் பன்னங் (அவ்வாறு சொல்ல է նալ:Tr IT I fi தோழரே. Tபது நாட்டில் :F உண்டு. யார் அங்கே செல்லவேண்டும். பேர்களேத் தாரு ங்கள். நாம் அழைத்துச் செல்கிறுேம். இவ்வாறு பழலேச் சிங்களத்தில் சொல்கிரூர் தோழர் அலெக்ஸாண்டர்.
இப்பொழுது சிங்கள் நண்பரின் முகத்தை நான் பார்க் கிறேன். அவர் முகத்தில் ஆச:- மறைத்துக் கொண்டு
வியப்பு" பிரகாசி கிறது.
அந்த ரஷ்யத் தோழரை கட்டிமனோக்க வேண்டு மென்ற த.ப் ,
ஒரு மனிதன் எத்தனே மோழிகளேயும் படிக்கமுடியும் ஆரியின் படைத்த மனிதனுக்குள்ள விசேட சக்தியே அது "ள். ந்ேது சக்தியை தாம் முறையாக பிரயோகித்தால்
73

Page 39
இன்று எமது இலங்கையில் ஒரு மொழியை மற்றமொழி சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலை வந்திருக்காது.
அலெக்ஸாண்டர் குறிப்பிட்ட பிரகாரம் மறுநாள் வெள்ளிக்கிழமை அம் மூன்று முஸ்லிம் நண்பர்களும் பிரத்தி யேகமாக வரவழைக்கப்பட்ட ஒரு காரில் மாஸ்கோ நகர மசூதியொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சோவியத் நாட்டின் மதசுதந்திரம்பற்றி இதற்குமேல் நான் விளக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.
ஜும்மா தொழுகையை முடித்துக் கொண்டு அந்த நண்பர்கள் பரம திருப்தியோடு திரும்பிஞர்கள்.
உலக விழா ஆரம்பித்து இரண்டாம் தாள்.
லெனின் கிராட்ஸ்கி சதுக்கத்தை நோக்கி ஊர்வலமா கச் சென்று கொண்டிருக்கிருேம்.
முதல்நாளைவிட சொற்பமேனும் குறையாத ஆரவாரங் கள், கோஷங்கள், ஆடல், பாடல்கள். v
என் கவனம் இப்பொழுது முழுக்க முழுக்க காட்சி களை கெமராவினுள் சிறைப்பிடிப்பதிலேயே தங்கியிருக்கிறது
லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்த்த ஒரு சிங்கள நண்பர் என்னைத் தேடிக்கொண்டு வருகிறர்.
“ஹலோ. அமெரிக்காவிலிருந்து ஒரு பெண் வந்துள் ளார். பூரீலங்காவா. என்று கேட்டுவிட்டு தமிழ் பிரதிநிதி கள் வந்துள்ளார்களா? என்று கேட்டார். உமது நினைவு இருந்தபடியால் ஆமென்று கூறினேன். ஒரு தமிழ்ப் பத்திரி கையாளர் வந்துள்ளாரென்று சொன்னேன்.'
அந்த நண்பரின் பேச்சு என் கவனத்தைக் கவர்ந்தது. "ஏனம். தமிழ்ப்பிரதிநிதிகளைப்பற்றி அந்தப்பெண் கேட்கி
74

முர்?’ என்று வினவினேன்.
'ஐஸே. அந்தப் பெண்ணுக்கு நன்ருக தமிழ் பேச முடிகிறது. எனக்குத்தான் உங்கள் தமிழ் மொழியை பேச முடியாதே. அதுதான் உம்மைப்பற்றி சொல்லியிருக்கி றேன்.' என்ருர் நண்பர். T
இப்பொழது எனக்கு புகைப்படம் எடுக்கும் எண்ண மில்லை. அந்த அமெரிக்கப் பெண்ணை எங்காவது தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்.
எனது ஆவலை தகவல் கொண்டோடிவந்த நண்பரி டம் தெரிவிக்கின்றேன்.
“கொஞ்சம் பொறும். இந்த கூட்டத்துக்குள் தேடு வது கஷ்டம்தான். ஸ்ரேடியத்துக்குள் போய்விட்டால், அமெரிக்கப் பிரதிநிதிகள் இருக்குமிடத்தை தேடிப்பிடித்து அந்தப் பெண்ணையும் பார்த்துவிடலாம். அவர் கூறுவதும் சரிதான்.
ஸ்ரேடியத்தை வந்தடைகிருேம்.
எமது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. சுமார் நூறு மீட்டர் தொலைவிலிருந்த அந்த அமெரிக்கப்பெண்ணை எனது நண்பரின் கழுகுக் கண் பார்த்துவிட்டது. அவர் ஓடி வருகி ருர், ஐஸே. ஐஸே. வாரும் அதோ இருக்கிறர் அந்த அமெரிக்கப்பெண்."
இருவரும் சென்ருேம்.
"இதோ நீங்கள் தேடும் இலங்கைத்தமிழர். பத்தி ரிகையாளர்'-நண்பர் ஆங்கிலத்தில் கூறி அறிமுகப்படுத்த அந்தப்பெண்ணுே தயக்கமெதுவுமின்றி என் கரங்களை பற் றிப் பிடித்தபடி' எப்படி செளக்கியமா..? நீங்க. இலங் கையா. நான் நல்லா தமிழ் பேசுவேன்’
75

Page 40
என் கண்கள் வியப்பினுல் அகலவிரிந்திருக்க வேண்டும்.
என்ன. அப்படிப் பார்க்கிறீங்க."
வீட்டில் என் செல்வமகள் தமிழில். மழலைத்தமிழில் பேசுவது காதில் ஒலிப்பது போன்றஉணர்வு.
"என்ன. எதுவும் பேசாமல் இருக்கிறீங்க ஆச்சரியமா?"
**ஆமாம் ஆச்சரியம்தான். மாஸ்கோவில் உங்கள் சந் திப்பு வாழ்நாளில் மறக்க முடியாததுதான். அதனுல்தான் ஆச்சரியப்படுகிறேன்."-என்றேன்.
‘அடேயப்பா. வாங்கோ. உட்கார்ந்து பேசுவோம்’ அந்தப்பெண்ணே கலகலப்புடன் பேசுகிருர்,
இனியென்ன இலங்கைத் தமிழும் அமெரிக்கத்தமிழும் பலதும் பத்தும் பேசின. அந்தப்பென் பேசுவதை யெல்லாம் எழுத்தில் குறித்துக் கொள்கிறேன்.
‘என்ன. இது. இப்படிக்கலந்துரையாடும்போதும் உங்களது பத்திரிகைத்தனம் உங்களை விட்டுப் போகாதா?’’ இது அவரின் கேள்வி.
இக் கேள்வியினுல் எனக்கு வெட்கம் வந்தது. சிரித்து சமாளித்தேன்.
அவரது பெயர் என். எம். வெர்போவ்
வாஷிங்டனில் நகர மேயரின் அலுவலகத்தில் 'ஸ்டெ ஞே' வாக பணியாற்றுகிருராம்.
தமிழ் நாட்டில் இரண்டு வருடங்கள் (81-83) அமெ ரிக்கன் காலேஜில் படித்தவேளையில் தமிழை பேசக்கற்றுக் கொண்டேன் என்கிருர், மதுரையில் பலமாதங்கள் கிராம மக்களுடன் அவர் வாழ்ந்து பழகியமையால் சரளமாக
T6

தமிழ் பேச முடிகிறது.
அமெரிக்காவில் இளைஞர், யுவதிகள் விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து பட்டம்பெற்றுள்ளார்.
**உங்கள் இலங்கையிலிருந்து எத்தனை பெண் பிரதிநிதி கள் வந்துள்ளார்கள்?’’ இது அவரின் கேள்வி.
**இரண்டே இரண்டு பெண்கள்தான்'
'நூறு பிரதிநிதிகளில் இரண்டு பெண்களுக்குத்தான இடம்? ஒரு பெண் பிரதமர். அதுவும் உலகின் முதல் பெண் பிரதமர் பதவியில் இருந்த நாட்டிலும் இப்படியா?"
இதுபற்றி நான் என்ன கூறமுடியும்.
"நான் விழா தயாரிப்புக்குழுவில் இல்லை’ என்று மட்டுமே என்னல் சொல்ல முடிகிறது. இப்பெண்ணை எமது சக பிரதிநிதிகளுக்கு குறிப்பாக பிரதியமைச்சர் அநுரா பஸ்தி யான், பொல்காவலை எம். பி. சுனில் ரஞ்சன் ஜயக்கொடி, மற்றும் மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் நடிகர் விஜய குமாரணதுங்கா, விழா தயாரிப்புக்குழுவின் இலங்கைப் பிர திநிதி அபூயூசுப் ஆகியோருக்கு அறிமுகப்படுத்துவதற்காக அழைத்துச் செல்கிறேன்.
நான் அறிமுகப்படுத்தி வைப்பவர்கள் அனைவருமே தமிழர்கள்தான் என்று நினைத்துக்கொண்ட அந்தத் தோழி
பிரதியமைச்சர் அநுரா பஸ்தியானிடம் தமிழிலேயே பேசத் தொடங்கிவிட்டார்.
பின்னர் நான் அந்தத் தோழிக்கு விளக்கினேன், அவர் களுக்கு தமிழ் தெரியாத விவகாரத்தை.
பின்பு இருதரப்பாருக்கும் *சர்வதேச மொழி துணை செய்தது.
7ך

Page 41
நண்பர் அபூயூசுப்பிடம் அழைத்துச்சென்ற போது அந்தத் தோழி அவரைப் பார்த்து ‘நீங்கள் தமிழரா. சிங் களவரா?"-என்று கேட்டார்.
"நான் இலங்கையன்’-என்று ஒரே வார்த்தையில் பதில் தந்தார் நண்பர் அபூயூசுப்.
கதைத்துவிட்டு திரும்பும்போது அந்தப்பெண் என் காதுக்குள் கிசுகிசுத்தார்.
'தன் தாய்நாட்டை நேசிப்பவர் அப்படித்தான் நிச்ச யம் சொல்லுவார். அந்த நண்பரையிட்டு நீங்கள் பெருமை யடையலாம்."
நானும் ஆமோதிப்பதுபோல் தலையசைத்தேன்.
"இந்த உலக விழாவைப்பற்றி அமெரிக்கரான உங்க ளது பார்வை என்ன?’-இது என் கேள்வி.
'நண்பரே. நாங்களும் லொஸ் ஏஞ்ஜல்ஸில் ஒரு ஒலிம்பிக் விழாவை நடத்தினுேம். எமது நாட்டில் செல்வம் உண்டு. செல்ல 6:1ளங்களைக் கொண்டு அந்த ஒலிம்பிக் விழா வை கோலாகலமாக நடத்தினுேம். இங்கும். அதாவது சோவியத் நாட்டிலும் செல்வத்திற்கு குறைவில்லைத்தான். அதே நேரம் செல்வம் இருந்தால் மட்டும் இப்படி ஒரு விழாவை வெகு சிறப்பாக நடத்தமுடியாது. அதற்கும் மேலாக மனித உழைப்பும் கடும் பிரயாசையும் கட்டுக்கோப் பும் வேண்டுமென்பதை எம் கண்முன்னே காட்டுகின்றனர்
இந்த சோவியத் பிரஜைகள்."
ஒரு துருவத்தைப்பார்த்து மற்றெரு துருவத்தைச்சேர் ந்த பிரதிநிதி அதுவும் பெண் பிரதிநிதி சொன்ன அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவரை மேலும் பலருக்கு சுறி முகம் செய்து வைக்கவேண்டும் என்ற உற்சாகத்தை எனக்கு ஏற்படுத்தியது. ۔۔۔ـــــ .
T8

என்னுடன் வந்திருந்த நண்பர்கள் சிவசுந்தரம், தாமோதரம்பிள்ளை, வீரசிங்கம், சுகைப் ஆகியோருக்கும் அந்தத் தோழியை அறிமுகப்படுத்தினேன்.
நண்பர் சுகைப் சொன்னர்- 'நான் ஒரு தமிழ் பேசும் முஸ்லிம்தான். ஆணுல் என்னைவிட தெளிவாக சுத்த மாக நீங்கள் தமிழ் பேசுகிறீர்கள்.
'அப்புறம் சந்திக்கிறேன். வரட்டுமா." அவர் மட்டு மல்ல, நானும்தான் விடைபெற மனமின்றி விடைபெற் றேன்.
மொழி
உணர்வுபூர்வமான ஊடகம். ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள - புரிந்து கொள்ள - மனிதர்கள் வாழ் வதற்கு வழி சொல்லும் மொழியானது எவரையும்-எந்த இனத்தவரையும் - எந்தநாட்டவரையும் வாழவைக்குமே தவிர ஒழித்துக்கட்டிவிடமாட்டாது.
*செப்பு மொழிகள் பதினெட்டுடையாள். எனில். சிந்தனை ஒன்றுடையாள். 'என்ற பாரதியின் வாக்குப் போல் ஆயிரம் மொழிகள் வாழ்ந்த போதிலும் சிந்தனை ஒன்ருகவே - உயர்ந்ததாகவே இருந்துவிட்டால் சிக்கல் களுக்கே இடமில்லையல்லவா?
O O
T9

Page 42
O ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
இந்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’
-கண்ணதாஸன்
"சிறுநண்டு கரைமீது படம் ஒன்றுகீறும். சிலவேளை கடல் வந்து அதைக்கொண்டு போகும்."
இலங்கையின் மகாகவி - உருத்திரமூர்த்தியின் மூத்த புதல்வர் பாண்டியனை மாஸ்கோவில் சந்தித்த போது, "உங் கள் அப்பாவின் அந்தப்பாடல் வரிகள் பல்வேறு அர்த்தங் களை வழங்கும்' - என்றேன்.
மகாகவியைப் போல் மிகுந்த தமிழ்ப்பற்று மிக்கவர் பாண்டியன். மகாசவி - தனது பிள்ளைகளுக்கு பாண்டியன் சேரன்-சோழன்-ஒளவை- இனியாள் - எனப்பெயரிட்
Tri
பாண்டியனே-தான் ஒரு ரஷ்ய-உக்ரைன் பெண்ணை மணந்த போதிலும் - தமக்குப் பிறந்த மகனுக்கு “எல் லாளன்' எனப் பெயர் வைத்துவிட்டார்,
இலங்கைப் பிரதிநிதிகள் மாஸ்கோவுக்கு வந்துள்ளனர் எனக் கேள்விப்பட்டதும்-தமிழ்ப் பிரதிநிதிகளும் நிச்சயம் வந்திருப்பர் என நம்பிக் கொண்டு முதலில் ஓடோடி வந்த வர் இந்தப் பாண்டியன்.
என்னுடன் கதைத்த ஒவ்வொரு வேளையிலும் இலங்கை நிலைமைகளை அறிந்து கொள்வதிலேயே ஆர்வம் காட்டி
80

ஞர். அச்சமயங்களில் அவரது தந்தையார் 'மகாகவியின்' அந்தப் பாடல் வரிகளின் அர்த்தத்தை நயத்தை என் பார் வைக்கு தகுந்தவாறு கூறினேன்.
பேரினவாதம்-சிறுபான்மை மக்களை சிறுமைக்குள் ளாக்கும் நிலைமையை "சிம்பாலிக்காக ‘அப்பாடலின் ஆரம்ப வரிகளிலேயே மகா கவி சித்திரித்துள்ளார் என்பதே என் அபிப்பிராயம். •
பாண்டியனுடன், ஹரிதரன் சீவரட்ணம், பத்மநா தன் நாகலிங்கம், ஜெயந்தா யோகராஜா, செல்வி தவமணி தேவி ஆகிய இலங்கை மாணவர்களையும் சந்தித்தேன்.
மாஸ்கோ லுமும்பா பல்கலைக்கழக மாணவர்களான அவர்களுடன் எனக்கேற்பட்ட நட்பு பசுமையானது. மாஸ் கோவில் பல இடங்களை இவர்களின் துணையுடனேயே சுற் றிப் பார்த்தேன். எனக்கு பல சந்தர்ப்பங்களில் அவர்களே மொழிபெயர்ப்பாளர்களாக செயல்பட்டனர்.
இஸ்மாயிலோவா பூங்கா.
ஒரு நாள் மாலை நேரம். நானும் பாண்டியனும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிருேம். மூன்று ரஷ்ய யுவதிகள் புன்னகை தவழ எம்மையே பார்ந்துக் கொண்டு வந்து எம் மருகே அமருகின்றனர்.
s O ፩?” ந்கைச் து என்னடா சங்கடம?" - பாணடியன் முகததைச் "சுழிக்கிருர்,
"நீங்கள் வெளிநாட்டவரா? உங்களுடன் பேச விரும்பு கிருேம். பேசலாமா?" - ரஷ்ய மொழியில் உதிர்ந்த வார் த்தைகளின் அர்த்தத்தை பாண்டியன் கூறியதை கேட்டும் --பாண்டியனே - ரஷ்ய மொழியில் பேசுவதைக் கண்டும் அம் மூன்று யுவதிசளும் வியக்கின்றனர். பாண்டியன் முத லில் தன்னை அவர்களுக்கு அறிமுகபபடுத்திவிட்டு என்னைப் பற்றி சொல்கிருர்,
81

Page 43
என் கழுத்தில் தொங்கும் அடையாள அட்டையை பிடித்துப்பார்த்து - என் பெயரை எழுத்துக்கூட்டி வாசித்து "சரியா' - என்று கேட்கின்றனர்.
இவர்களை கொஞ்சம் பேட்டிகண்டால் என்ன? பாண் டியன் துணை இருக்கப் பயம் ஏன்?
மாத்சேவா ஒல்கா, கிதாயோவா தமாரா, மாத்சேவா இரீன ஆகிய அம் மூன்று யுவதிகளும் என் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர்.
அதற்கு முன்பு தமது பெயர்களை தமிழில் எழுதித் தருமாறு கேட்கின்றனர்.
நானும் ஒரு காகிதத்தில் எழுதிக்கொடுக்கின்றேன்.
ஒரு யுவதி எனது பெயரை ரஷ்ய மொழியில் எழுதித் தருகிருர்,
ஏதோ பொக்கிஷங்களை பெற்றுவிட்டவர்கள் போன்று ஒருவரோடு ஒருவர் பார்த்து முறுவலிக்கின்ருேம்.
அவர்கள் மூவரும் சொன்னவற்றை இங்கு சுருக்கமாகத் தருகின்றேன்.
"அனைத்தும் பொது உடைமையாக இருப்பதனல் மக் கள் இங்கு சுகமாக வாழ்கின்றனர். சோஷலிஸ் அமைப்புக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்தும் இருப்பதஞல் பிரச்சினையே இல்லை. a
சராசரி கணவனும் மனைவியும் வேலைசெய்கிருர்கள். டாக்டர்கள் - பொறியியலாளர்கள் - ஆசிரியர்கள் போன் ருேரின் அடிப்படைச் சம்பளம் மாதமொன்றுக்கு 120 ரூபிள் கள்,
கடுமையான உழைப்பாளி, மெக்கானிக்,வாகன சார திகள் ஆரம்பத்தில் மாதமொன்றுக்கு 180 ரூபிள்களும்
82

மூன்று வருட காலத்தின் பின்னர் 280 ரூபிள்களும் சம்பள மாகப் பெறுகின்றனர்.
அவர்களது விளக்கம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது:
"சரி. அதென்ன. டாக்டர்கள், பொறியியலாளர் கள், ஆசிரியர்களை விட கடுமையான உழைப்பாளியும் வாக னச் சாரதியும் கூடுதலான வருமானம் பெறுகின்றனரே. இந்த வருமான ஏற்றத்தாழ்வு-சோஷலிஸத்துக்கு முரண் அல்லவா? தொழிலாளர் வர்க்க அரசு என்பதஞல் அத்த கைய உழைப்பாளிகளுக்கு விசேட சலுகையோ..?'- இது எனது கேள்வி.
'இல்லை . இல்லை. ஒவ்வொரு சோவியத் பிரஜைக்கும் அரசே அனைத்தையும் வழங்குகிறது. சராசரி ஒரு பாடசாலை மாணவனுக்கு, அரசு வருடாந்தம் ஆயிரம் ரூபிள்கள் வரை யில் செலவுசெய்கிறது."
எட்டாம் வகுப்புடன் கல்விக்கு முழுக்குப்போடும் பிரஜை மெக்கானிக்காக அல்லது வாகனச்சாரதியாக தொழில் பார்க்கிருர், அரசு அவருக்கு எட்டாம் வகுப்புக்குப் பின்பு எதுவித நிதி உதவியும் செய்வதில்லை. ஆனல் ஒரு டாக்ட ரோ - பொறியியலாளரோ-தொடர்ந்து படித்து பட்டம் பெற்ற பின்பு தொழில் பார்க்கிருர், அரசு அவருக்கு தொடர்ந்து செலவு செய்தமையால் அவருக்கு தொழில் கிடைத்தவுடன் சம்பளத்தை குறைத்துக் கொடுக்கிறது. குறைந்தளவு நிதி உதவியை அரசிடமிருந்து பெற்ற தொழி லாளி - வாகனச் காரதி - மெக்கானிக் போன்ற தரத்தி னர் கூடுதல் சம்பளத்தை பெறுகின்றனர்."
“எனினும், அவர்கள் பகல் முழுவதும் வேலை செய்து விட்டு இரவு நேரக் கல்வியைத் தொடர்ந்து டாக்டராகபொறியியலாளராக மாறுவதும் உண்டு.
"ஒரு டாக்டர் பெண்மணி - ஒரு வாகனச் சாரதியை மணந்துள்ளார். இதனுல் - ஏற்றத்தாழ்வு என்ற பேச்சுக்கே
83

Page 44
இடமில்லை. எல்லோரும் சமதையாக நடந்து கொள்கின் றனர்."
இவ்வாறு அந்த யுவதிகள் சொல்லும்ஸ் போது. சமதர் மத்தின் உண்மையான நடைமுறையை காஅதுகுளிரக்கேட்டுக் கொண்டிருந்தேன்.
தத்துவங்கள் - தத்துவங்களாகவே இருப்பதில் அர்த் தமில்லை. அவை நடைமுறைப்படுத்தப்பட்டு உரியபலனை காணுவதில்தான் உண்மையான அர்த்தம் புலனுகும்.
பமாமேதை லெனின் காட்டிய அந்தவழியில் உலக நாடுகளனைத்தும் செல்லும் காலம் எப்டோது? - எனக் கேட்கின்றேன்.
"அது சொல்ல முடியாது. இன்னும் நூறு வருடங்க ளுக்குள் முழு உலகும் சோஷலிஸப்பாதையில் வத்துவிடு மென்று கூறுவதற்கில்லை. அதற்கும் முன்னல் தீர்வுகாண வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன."
இந்த 12 ஆவது உலக இளைஞர் மாணவர் விழா பற்றி.?”
"இந்த நாட்கள் எமக்கெல்லாம் மகிழ்ச்சிகரமானவை. மீண்டும் இப்படி ஒரு சந்தர்ப்பம் எப்போது வருமென ஆவ லுடன் எதிர்பார்க்கின்றேம்." Վ.
* மாமேதை லெனின் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?? இப்படியும் ஒரு கேள்வியை நான் போட்டேன்.
அந்த யுவதிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரிக்கின்றனர். பின்பு வாய்மலர்ந்தனர்.
"அவரைப் பற்றி நிறையச் கொல்லலாம். சுருக்கமா கச் சொல்வதானல்- அவர் ஒரு நல்லமனிதர்"
84

"உலக நாடுகள் பலவற்றில் இன்று தோன்றியுள்ள நெருக்கடிகளுக்கு எது காரணமாக இருக்கமுடியுமென நினை க்கிறீர்கள்??
"சொல்கிருேம் - குறித்துக் கொள்ளுவ்கள்’’-என்று கூறிவிட்டு மூன்று பெயர்களை கூறினர்கள். இப்படியும் மூளைச் சலவையா ~ என வியந்தவாறு சொன்னவற்றை குறித்துக் கொள்கிறேன்.
அந்த மூன்று பெயர்கள்
ஒன்று - ஒரு வல்லரசின் ஜனதிபதி.
இரண்டு - மற்ருெரு வல்லரசின் "சீமாட்டி' மூன்று - பிரபல்யமான உளவுப் படை.
சரி. நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்?"
"ஒரு நெசவாலையில் நூல் பின்னும் வேலைபார்க்கிருேம். 280 ரூபிள்கள் வரையில் மாதமொன்றுக்கு சம்பாதிக்கின் ருேம்.’
'திருமணமாகிவிட்டதா?”
"இன்னும் இல்லை’
'உங்கள் வருமானத்தில் மிச்சம் பிடிப்பதுண்டா?”
*சில சமயங்களில் மிச்சம் பிடிப்போம்”
'அவ்விதம் சேமிப்பதை என்ன செய்வீர்கள்?"
"விதம் விதமான ஆடைகள் வாங்குவோம்"
'தங்க நகைகள் வாங்கி அணிந்து அழகுபார்க்க வேண் டும் என்ற ஆசை இல்லையா?"
85

Page 45
"தங்கமா. இல்லை. இல்லை. எமக்கு அதில் நாட்டம் இல்லை."
"காணிகள், வீடுகள் வாங்க வேண்டுமென்ற விருப்பம் இல்லையா?*
"எம் ஒவ்வொருவருக்கும் வீடுகளுண்டு, வசிப்பதற்கு அது தாராளம், அதற்கும் மேலதிகமாக வீடுகள் எதற்கு?”
* * grյի ... நீங்கள் மணமுடித்தபின்பு பிறக்கும் பிள்ளைக ளுக்கு வீடுகள் வேண்டாமா?"
'அதுதான் அரசு கொடுக்கிறதே. நாம் ஏன் புதிதாக வாங்க வேண்டும். சோவியத் பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் உணவு - உடை, உறையுள் உண்டு. இந்த அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள போது மேலும் தேவை களை நாம் ஏன் பெருக்கிக்கொள்ள வேண்டும்?"
அந்த மூன்று யுவதிகளும் கைகுலுக்கி விடைபெறும் போது.
எனது தாய்த்திரு நாடு - தேவைகள் - அடிப்படைத்
தேவைகள் பூர்த்தியுற்ற தேசமாக மலரும் காலம் விரை வில் வரமாட்டாதா - என்ற ஏக்கம் மனதில் விம்மியது.
86

"பகுத்துண்டு பல்லுயிரும் ஓம்பி வாழும்
1. பண்பாட்டைப் பாவலர்கள் பல்லாற்ருனும்
வகுத்துரைத்துச் சென்ற தெலாம் நனவேயாகி வாழ்க்கையிலே வடிவெடுக்க, பிறர்தம்வாழ்வைச் செகுத்துண்டு வாழ்ந்தார் தம் சூழ்ச்சியாவும் சென்ருெழிய பொது வுடைமை நியதி தன்னைப் புகுத்தியிந்த உலகுக்கே விளக்கம் ஏந்திப் போந்தவனே லெனினென்னும் புகழோய் வாழி
-தொ. மு. சி. ரகுநாதன்
பொதுவுடைமைத் தத்துவத்தை நடைமுறையில் பிர யோகித்து வெற்றி கண்ட சோவியத் மக்களின் நிகரற்ற தலைவர் மேதை லெனினை தரிசிக்கச் செல்கிருேம்.
சோவியத் பயணத்தின் நோக்கம் உலக இளைஞர், மாணவர் விழாவாக இருந்த போதிலும் பயணத்தின் முழுமை மேதை லெனினைத் தரிசிப்பதிலேயே பெரிதும் தங்கியிருந்தது?
கிரெம்ளின் மாளிகையின் முன் மண்டபத்தில் நிரந்த ரத் துயிலில் ஆழ்ந்திருக்கும் அவரை தரிசிக்கச் செல்கிருேம்.
1870 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி - உலகப் புகழ்பெற்ற வோல்கா நதிக்கரையில் அமைந்த கிரா மத்தில் பிறந்த விளநீமிர் இலியீச் உலியானேவ் என்ற குழந்தை பிற்காலத்தில் உலகம் போற்றும் மேதையாக வருவார்,
87

Page 46
வாழ்வார் என எவருமே அன்று கனவிலும் நினைத்திருக்க
DinT LITriřás Gir.
ஜாராட்சியின் கொடுங்கோலுக்கு எதிராக புரட்சிப் பாதையில் மக்களை வழிநடத்திய அவர் தன் தலைமறைவு வாழ்க்கைக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் தன்பெயர்களை மாற்றிக் கொண்டார். அவருக்கு இருநூறுக்கும் அதிகமான புனைபெயர்கள் இருந்ததென்றல் வியப்பல்லவா?
எனினும் - லெனின் - என்ற நாமமே நீடித்து - நிலை த்துவிட்டது.
லெனின்கிராட் நகருக்குச் சென்று உலகப்புகழ்பெற்ற ஹெமிடேஜ் மியூசியத்தை பார்வையிட வேண்டுமென ஆவல் கொண்டிருந்த எனக்கு - அதற்கான சந்தர்ப்பம் சித்திக் காது போனலும் - லெனின் பூதவுடலையாவது தரிசிக்க வாய்ப்புக்கிட்டியதனுல் புளகாங்கிதம் அடைந்தேன்.
புதன்கிழமைகளில் மாத்திரம் லெனின் உறங்கும் அந்த மண்டபம் பொதுமக்களின் அஞ்சலிக்காக திறக்கப்படும். ஒவ்வொருவரும் அமைதியாக - வரிசையாகச்சென்று அஞ்சலி செலுத்தித் திரும்புவர்.
எதேனும் காரணங்களுக்காக எம்தாயகத்தில் நீண்ட கியூவரிசைகளை நான் கண்டுள்ளேன். ஆனல் - சோவியத் நாட்டில் - கியூ" வரிசை உண்டென்ருல் - அது மேதை லெனின் பூதவுடலே தரிசிப்பத்ற்கு மட்டும்தான்.
பிரசித்திபெற்ற லெனின் நூர்தனசாலைக்கு அருகில் அமைந்துள்ள செஞ்சதுக்கப் பிரதேசம் சோவியத் நாட்டிற்கு வரும் அனைவருக்குமே வரப்பிரசாதம்தான். அங்கு செல்லும் வெளிநாட்டினர்-லெனினை தரிசிக்காமல், பெயர் தெரியாத வீரனின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தாமல்
திரும்பமாட்டார்கள்.
88

அங்கே நாம் போய்ச் சேர்ந்தபோது இனம்புரியாக அமைதி நிலவியது. பத்து அடிக்கு ஒருவர் வீதம் பொலிஸ் காரர்கள் நிற்கின்றனர். அவர்களிடம் துப்பாக்கிகள் இல்லை ‘வாக்கி டோக்கி' களை மட்டுமே காண்கின்றேன்.
இவ்விரண்டு பேராக வரிசையாக செல்கிருேம்.
முதலில்
இரண்டாம் உலக மகா யுத்தத்தில் மாண்ட பெயர் தெரியாத வீரனின் கல்லறையில் நாம் மலர்க்கூடை ஒன்றை வைத்து அஞ்சலி செலுத்துகிருேம். அங்கே அணையாத தீப மொன்று சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
நம்மவர்கள் திருமணம் முடித்தால் முதலில் கோயி லுக்கு அல்லது வணக்கத்தலத்திற்கு செல்வார்கள் வழி படு வதற்கு. அதேவேளை வயதால் மூத்தவர்களின் ஆசிகளையும் பெறச் செல்வர்.
ஆணுல் - சோவியத் நாட்டில் புதுமணத் தம்பதிகள் ஒவ்வொருவரும் முதலில் செல்வது அந்தக்கல்லறையை தோக்கித்தான்.
பெயர் தெரியாத அந்த வீரப் புதல்வனுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் தாங்களும் ஒரு வீரப் புதல்வனையோ அல்லது வீராங்கனையையோ பெறல் வேண்டும் என்பதற் காக இருக்கலாம், அல்லது - அந்த வீரப்புதல்வனின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் எனப் பிரார்த்திப்பதன் மூலம் மீண்டும் ஒரு உலக யுத்தம் மூண்டு விடக்ககூடாதென்ற வேண்டுதலை விடுப்பதாகவும் இருக்கலாம்.
நாமும் அங்கே வரிசையாக நின்று எமது மெளனஞ்
சலிகளை மலர்களை வைத்துத் தெரிவித்தோம். சோகமான இசை எம் காதுகளில் ரீங்காரம் செய்கிறது.
எங்கிருந்து அந்த இசை எழுகின்றது?
'89

Page 47
கிரெம்ளின் சுவர்களினூடாக அந்த நாதம் மிதந்து வருகின்றதோ?
இப்போது-லெனின் உறங்கும் அறைக்குள் ஒவ்வொரு வராக பிரவேசிக்கின்முேம்.
அந்த அறையின் வாயிலில் இரண்டு பொலிஸ் உத்தி யோகத்தர்கள் பளபளக்கும் துப்பாக்கிகளுடன் காவலுக்கு நிற்கின்றனர் - துவாரபாலகர்களைப் போன்று.
சோவியத்தின் துப்பாக்கியை அங்குதான் நான் கண்
டேன். வேறெங்கும் காணவில்லை. அந்தத் துப்பாக்கிகள் கூட மரியாதைக்காகத்தான் அங்கு ஏந்தப்பட்டுள்ளதாகவே கருதமுடிகிறது.
ஆம் துப்பாக்கி மரியாதைக் குரியதுதான்.
குளிரூட்டப்பட்ட அந்த அறையில் எம் நாசிகளை ஊடு ருவிச் செல்லும் அந்த நறுமணம்..? தான் இனங்கண்டு கொண்டேன்.
துளசி இலையை உள்ளங்கையில் நசித்துவிட்டு கையை முகர்ந்தால் கமழும் நறுமணம்தான் அங்கும் தவழ்கின்றது.
ஒரு தேவனைப் போல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அந்த மேதையின் முகம் - கண்கள் மூடியிருந்தாலும் பிரகாச மாகத்தான் இருக்கிறது.
கோடிக்கணக்கான மக்களை தன் அன்பாலும் தத்துவங் களாலும் அரவணைத்த மேதை இடதுகரத்தை பொத்தியபடி நிரந்தரமாக துயில் கொள்கிருர்,
1924 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி தனது உயிர்ப்பறவையை சிறகடித்துப்பறக்கச்செய்துவிட்டு பூதவுடலாகி பல்லாண்டு காலமாக அங்கே உறங்கிக் கொண் டிருக்கிருர் லெனின்,
90

வெளியே வரும்போது மறைந்த சோவியத் தலைவர் களின் மார்பளவுச் சிலைகளை தரிசிக்கின்ருேம்.
ஸ்டாலின், பிரஷ்னேவ், ஆந்திரபோவ் உட்படபல தலை வர்கள் அங்கே சிலையாகியுள்ளனர்.
செஞ்சதுக்கத்தை விட்டு வெளியே வரும்போது "குருஷ் சேவ், ட்ரொஸ்கி. இருவரையும் காணவில்லையே." - என்று சிலர் சொல்லிக்கொண்டு வந்தது என் காதுகளையும் எட்டியது.
91.

Page 48
2 உடன் பிறந்தவர்களைப் போலே - இவ் வுலகினில் மனிதரெல்லோரும் திடங்கொண்டவர் மெலிந்தோரை - இங்கு தின்று பிழைத்திட லாமோ?
- பாரதி
*உலக இளைஞர், மாணவர் விழாவென்ருல் முழுக்க முழுக்க மக்கள் கூடும் விழாவாகத்தான் இருக்கும் என எண் னவேவண்டியதில்லை. ' - என்ருர் நண்பர் அபூயூசுப்.
‘இன்று ஒரு நீதிமன்றத்துக்குப் போகிருேம்’-என்ருர்,
** சோவியத் நீதிமன்றத்துக்கா?"
**இல்லை. இல்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பு நீதிமன்றத் துக்கு? - இது அவரது பதில்.
‘அங்கே என்ன வழக்கு? யார் நீதிபதி - யார் குற்ற aurrødf? umrii Frr.S?””-
'இந்த "யார்' களுக் கெல்லாம் பதிலை அங்கே வந்து தெரிந்து கொள்ளும் நண்பரே.' "
'ஹோட்டல் கொஸ்மோஸில் அமைந்துள்ள மகா நாட்டு மண்டபம் நீதிமன்றமாக மாறியிருந்தது.
ஏகாதிபத்தியமும் - அதன் அச்சுறுத்தல்களும் அடTவ டித்தனங்களும் வறிய நாடுகளையும் வளர்முக நாடுகளையும்
92

எந்தவகையில் பாதித்தன அதனல் ஏற்பட்ட விளைவுகள் என்ன - என்பதையெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் - நேரில் கண்டவர்கள் - சம்பவங்களை ஆய்ந்தறிந்த ஆய்வாளர் கள் தத்தம் வாக்கு மூலங்களை சமர்ப்பிக்கவுள்ளனர்-" என்ற தகவல் அந்த நீதிமன்றத்தை சென்றடைந்ததும் கிடைத்தது.
அன்றைய தினம் சுமார் 15 நாடுகளைச் சேர்ந்த பிரதி நிதிகள் பல சான்ருதாரங்களை சமர்ப்பித்து தமது நாடுக ளில் ஏகாதிபத்தியம் நிலைகொண்டு ஏற்படுத்திய பாரதூர மான விளைவுகளையும் கொடுமைகளையும் விபரிக்கின்றனர்.
அவர்களின் வாக்குமூலங்கள் பதிவாகின. அதனை யொட்டிய வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. ஏழு நாடு களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நீதிபதிகளாக செயற்பட்டனர்
நண்பர் அபூயூசுப் உரையாற்றுகையில் - காலனித்துவ ஆட்சிக் காலத்தில் - இந்திய மக்கள் எவ்விதம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு காடாகக்கிடந்த மலைநாட்டில் அடிமை களாக நடத்தப்பட்டனர் என்பதையும் இன்றும் அம்மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளையும் விஸ்தாரமாக எடுத்து விளக்கினர்.
இலங்கையிலும் ஏகாதிபத்தியத்தின் தாக்கத்தினுல் தோற்றுவிக்கப்பட்ட பாதிப்புகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்து சமுத்திரப் பிராந்தியம் பதற்றமடை வதற்கு இலங்கையின் திருகோணமலைப்பகுதியும் காரணி யாகியுள்ளதே - என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அக்கேள்விகளுக்கு தக்கடதில்களை நண்பர் தெரிவிக்கின் it.
இலங்கையின் விவகாரங்கள் சர்வதேச மட்டத்தில் அலசப்படுவதை - இந்த உலக விழாவின் பல மையங்களில் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் அறிந்து கொண்டேன்.
93

Page 49
மாஸ்கோ நகர வீதிகளிலோ அல்லது பொது மக்கள் கூடுமிடங்களிலோ-"இலங்கைப் பிரதிநிதிகள்' என - எம் மை வேற்று நாட்டவர்கள் அடையாளம் காணுமிடத்து கேட்கப்படும் முதல் கேள்வி - இலங்கையின் சமகாலப் பிரச்சினைகள் பற்றியதாக இருந்தது.
இந்நிலையில் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு நீதிமன்றமும் விதி விலக்கல்ல.
எமது விவகாரங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளமை நன்கு புலணுகியது.
இந்நீதிமன்றத்தில் என் கண்களை குளமாக்கிய சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தது.
வியட்நாமைப்பற்றிய ஒரு குறுந்திரைப்படம்-வியட் தாம் தரப்பு வாக்குமூலங்களுக்கு முன்னர் காண்பிக்கப்பட் l-gilt
வியட்நாமில் அமெரிக்கப்படைகள் ஏற்படுத்திய நாசங் களை விபரித்த அத்திரைப்படத்தில் ஒரு ஒன்பது வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமைான அனுபவம் சித்திரிக்கப் பட்டிருந்தது.
சுமார் பத்து வருடகாலமாக (1965-1975) தொடர்ச் சியாகப் போராடி இறுதியில் வெற்றியீட்டிய வியட்நாம், அக்கால கட்டத்தில் 40 இலட்சத்து 700 பேரை இழந்தது என்ற நெஞ்சுருக்கும் செய்தி வெளியிடப்பட்டது.
அதே வேளை - 'ட்ராங்பேங்" என்ற வியட்தாம்கிராமம் ஒன்றில் நேபாம்குண்டுகளை அமெரிக்கயுத்த விமானங்கள் பொழிந்த போது அந்த ஒன்பது வயதுச்சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை அவள் உயிருக்காக போராடிய காட்சிகளை அப்படம் சித்திரிக்கிறது.
94

ஒரு யுத்தப்படத்தை பார்க்கின்ற உணர்வே ன்னக்கு ஏற்படுகிறது.
ஆனல் அது வழக்கமான அமெரிக்க பிரிட்டன் நாடுக ளில் தயாரிக்கப்பட்ட யுத்தப்படம் அல்ல, அதில் நடித்தவர் களும் நடிகர்கள் அல்ல.
நேபாம் குண்டுகள் பொழியப்பட்டபோதே ஒளிப்பதிவு செய்யப்பட்டமையால் அப்படம் உயிரோட்டமுடன் திகழ்ந் திதி,
அந்தக் கிராமம் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்ட வேளையில், அந்த ஒன்பது வயதுச்சிறுமி ‘பான்திக்கிம் பிட் விக்" - எரிந்த நிலையில் தப்பி ஓடுகிருள். அவளது முதுகுப் புறம் எரிந்து தீச்சுவாலே எழுகிறது. ஐயோ. இதென்ன. கொடுமை. அவள் ஓடுகிருள். ஒடிக் கொண்டே இருக்கி ლpair.
பின்னர் அவள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு-படிப் படியாக தேறி வருகிருள். ஏகாதிபத்தியம் அச்சிறுமியின் பொன்னுடலைத் தீண்டி அடையாளச் சின்னங்களை பதித்துள் ளது. அவள் உடலில் தீக்காயத் தழும்புகள்.
திரைப்படம் முடிகிறது.
நீதிமன்றத்தின் மின் விளக்குகள் ஒவ்வொன்முக ஒளி உமிழ்ந்து - படிப்படியாக முழு மண்டபமும் இருளை விரட் டியடிக்கிறது.
மேடையிலிருந்த திரையை பார்க்கிருேம். அங்கே திரை இல்லை. அது சுருண்டு கொண்டது.
திரை இருந்த இடத்தில் இப்போது ஒரு யுவதி.
கைகளை உயர்த்தி-குவித்து-அசைத்து புன்னகையை உதிரவிடுகிமுள்.
95

Page 50
யார் இந்தத் தேவதை.
எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே.
சொற்பவேளைக்கு முன்பதாக பார்த்த முகம். அதே முகம்.
எம் கண்களையே நம்பமுடியவில்லை.
ஒவ்வொருவரும் தம்மை உணராமலேயே ஆசனத்தை விட்டு எழுகின்றனர். அந்தத்தேவதையைப் போன்றே கைகளை உயர்த்தி கரகோஷம் செய்து வாழ்த்துகின்றனர்.
அந்தித் தேவதை.
அவள்தான் அந்தக் குறுந்திரைப்படத்தில் எம்மையெல் லாம். ‘இதென்ன கொடுமை' என கலங்கவைத்த 'பான் திக்கிம் பிட்விக்"
என்கைகள் சிலிர்க்கின்றன. கண்களில் பெருகிய கண் ணிரை சிரமப்பட்டு அடக்கிக்கொள்கிறேன்.
**வியட்நாம் தேவதையே - நீ பல்லாண்டு வாழ்க’ என் மனம் வாழ்த்துப்பா பாடுகிறது.
அவள் இப்போது 22 வயதுப்பருவம் எய்திய யுவதி. அவளது வாக்குமூலம் பதியப்பட்டபின்பு -மேடையிலிருந்து இறங்கி வருகின்ருள்.
ஓடோடிச் சென்று கைகுலுக்கி - என் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
'நான் உயிர் பிழைப்பேன் என்று எதிர் பார்த்திருக்க வில்லை. அதிலும் எமது நாட்டின் வெற்றிவிழாவை நான்
96

கண்குளிரக் கண்டது பாக்கியம்தான். எமது வெற்றியின் பத்தாவது ஆண்டுப் பூர்த்தியை முடித்துக் கொண்டு இந்த சமதர்மப்பூமிக்கு வந்துள்ளோம்’ என்றுள் அத் தேவதை.
புனர்ஜென்மம் பெற்று வந்துள்ள அவளை வாழ்த்தி விடைபெறும்போது.
"நிச்சயம். மீண்டும் ஒருநாள் சத்திப்போம்" - என்ருள்.
அந்தத் தேவதையின் குழந்தை முகத்தை இன்றும்தான் மறக்க முடியவில்லை.
97

Page 51
3 மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையை கொளுத்துவோம்
பாரதி ۔۔۔۔۔۔۔
ஆசியா கிளப்.
இளைஞர், மாணவர் விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த ஆசிய நாடுகள் கண்காட்சிகளை நடத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடமே இந்த ஆசியா கிளப்.
பிரமாண்டமான பல அறைகளைக்கொண்டிருந்த அந் தப்பெரிய கட்டிடத்தில் இலங்கைக்கும் கண்காட்சி நடத்து வதற்கென அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனல்-அங்கு கண்காட்சி இடம் பெறத்தவறிவிட்டது இதுபற்றி வினவப்பட்டபோது திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. இது குறித்து எனக்கு வருத்தம்தான்.
ஒருநாள் கம்பூச்சிய நாட்டின் பிரதிநிதிகள் - தமது கண்காட்சியை காணவருமாறு அழைப்பு விடுத்திருந்கனர்.
சென்ருேம். எமக்கு அங்கு தல்ல வரவேற்பு
எமது இலங்கையைப் போன்றே கம்பூச்சியாவிலும் அரிசி, உளுந்து, பயறு மற்றும் தானிய வகைகள் உற்பத்தி யாகின்றன.
'98

புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டபோது என் நெஞ்சம் பதறியது. கண்கள் கலங்கின உதடுகள் துடித்தன.
கம்பூச்சியாவில் பொல்பொட் நிருவாகத்தின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரங்களை கம்பூச்சிய பிரதிநிதிகள் தெரிவித்தபோது விக்கித்துப் போனேன்.
25 ஆயிரத்து 168 பெளத்த துறவிகள்
594 டாக்டர்ாள், மருத்துவர்கள், பல்வைத்தியர்கள்;
18 ஆயிரம் ஆசிரியர்கள்.
10 ஆயிரத்து 550 மாணவர்கள்.
1120 கலைஞர்கள்.
ஆயிரம் அறிவு ஜீவிகள்.
இத்தனை மனித உயிர்களும் மூன்ருண்டு காலத்துள், அதாவது 1975 - 1978 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் மடிந்துள்ளன வென்ருல். இக்கொடுமையை யாரிடம் போய்ச் சொல்லி அழுவது?
மிருகங்களை வேட்டையாடுவது போன்று பெறுமதி யான மனித உயிர்களையும் வேட்டையாடும் மனிதப் (?) பிறவிகளை என்ன பெயர் சொல்லி அழைப்பது?
நோயிஞலோ அல்லது ஏதேனும் விபத்தினுலோ பாதிக் கப்படும் மனித உயிர்களை - மரண அவஸ்தையில் துடிக்கும் உயிர்களை காப்பாற்ற - டாக்டர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை நேரிலும் - திரைப்படங்களிலும் பார்த்தி ருக்கிறேன்.
உலகிலேயே மிகவும் பெறுமதிவாய்ந்த மனித உயிர்கள் வெகு சாதாரணமாக கிஞ்சித்தும் ஈவிரக்கமின்றி கொல்லப்
99

Page 52
படுகிற இக்காலப்பகுதியில் மனித நாகரிகம் இன்னும் வாழ் கின்றது என்று சொல்லிக் கொள்வதற்கு நாம் உண்மை யிலேயே வெட்கித் தலைகுனியவேண்டும்.
மனித மண்டை ஓடுகளும் எலும்புக்கூடுகளும் குவிய லாகக் கிடந்த காட்சி புகைப்படமாக சுவரிலே தொங்கியது.
"இது விற்பனைப்பண்டம் அல்ல, விலைமதிக்க முடியாத கம்பூச்சிய மனித உயிர்களின் மண்டை ஓடுகளும் எலும்பு களும் தான்" - எனப் பெயரிடலாம் அந்தப்புகைப்படத் திற்கு- என்று மனதிற்குள் நினைத்துக் கொள்கிறேன்.
சாம்பல் மேட்டிலிருந்து புத்துயிர் பெற்ற நாடுகளின் வரிசையில் இடம்பெற்றுள்ள கம்பூச்சிய மக்களின் கலாசா ரங்களை சித்திரிக்கும் திரைப்படத்தை எமக்கு வீடியோவில் போட்டு காண்பித்தார்கள்.
கம்பூச்சிய கிராமியப்பாடல்களை அந்தப் பிரதிநிதிகள் தாளலயத்துடன் பாடி ஆட - அவர்களுடன் இணைந்து நாமும் ஆடினேம்.
ஆடிக்களைத்து ஓய்ந்தபோது, எம்மை விருந்துக்கு அழைத்தனர் கம்பூச்சிய தோழர்கள்.
பரிமாறப்பட்ட கம்பூச்சிய மதுபானத்தின் பெயர் *பேயோன்" அதனைச் சுவைத்தவர்கள் காரம் மிகுதியால் பெரிதும் அவதிப்பட்டு சோடாவைத் தேடினர்.
அது என்ன "பேயோன்?"
பத்திரிகை மூளை - என்னை அப்படி கேள்வி கேட்க வைக் கிறது.
கம்பூச்சிய மக்களின் குலதெய்வத்தின் பெயர்தான் "பேயோன்." - என்ருர்கள்.
100



Page 53
ஆளுல் - சோவியத் மக்களுக்கு, உள்ளூர் அரசியல் நெருக்கடிகளோ அச்சுறுத்தல்களோ இல்லாதமையால்.அவர் கள் தமது ஓய்வு நேரங்களை - புத்தகம், பத்திரிகை வாசிப் பதிலும் சர்க்கஸ், சினிமா, நாடகம் போன்றவற்றை கண்டு களிப்பதிலும் பயன்படுத்துகின்றனர்.
ஆசியா சிளப்பை விட்டு வெளியே வருகிறேன்.
வீதியின் இருமருங்கும் - குளிர்மையான காற்றை படர விடும் சோலையாக காட்சிதரும் அடர்ந்த மரங்கள். அந்த மரங்களின் நிழல் படிந்த நடைபாதைகளினூடே சில மாதர் கள் தள்ளிக் கொண்டு செல்லும் அந்த தள்ளு வண்டில் களைப்பார்க்கின்றேன்.
ஒவ்வொன்றிலும் குழந்தைகள்.
ஒரு மாதுவை உன்னிப்புடன் கவனித்தபோது. அவள் கரத்தில் ஒரு பெரிய புத்தகம்.
வண்டியில் ஆறுமாதம்கூட மதிக்க முடியாத ஆரோக் கியமான குழந்தை - ஆழ்த்த உறக்கத்தில். அதன் வாயில் குளிர்பானம் நிரம்பிய சூப்பியுடனுன போத்தல் குழந்தை உறங்குகிறது.
அதே சமயம் அதன் தாய் - அந்தப்புத்தகத்தை படித்து முடிப்பதில் அக்கறை கொண்டிருக்கிருள் தள்ளு வண்டியை மெதுவாக தள்ளிக்கொண்டே நகரும் அத்தா யின் கவனம் முழுவதும் புத்தகத்தில்தான்.
**இதுவல்லவா வாழ்க்கை, எங்கள் வீட்டுப் பெண்க ளாயின் குழந்தையை தொட்டிவில் கிடத்திவிட்டு அடுத்த வீட்டுப் பெண்ணுடன் வம்பளப்பார்கள். அல்லது தாமும் தொட்டிலுக்கு அருசில் ஒரு பாயைப் விரித்து படுத்து விடு வார்கள்." - என்று சொல்லிக்கொண்டு வந்தனர் சில நண்
lurifissir. ・・
102

இதுபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் தண்பர் பாண்டி யனுடன் கதைத்தபோது அவர் மாறுபட்ட கண்ணுேட்டத் துடன் நல்ல விளக்கமொன்றைத் தந்தார்.
'இது ஒன்றும் பிரமாதமான விடயமல்ல, நமது இலங் கைத் தாய்மார்களை மட்டும் இது சம்பந்தமாக கவனத்தில் எடுக்காதீர்கள். கீழைத்தேய நாடுகளிலும், வறிய, வளர்முக நாடுகளிலும் பெண்களின் நிலை எவ்விதமுள்ளதென்பது பற்றி எங்களைவிட பத்திரிகையாளராகிய உங்களுக்கு அதி கம் தெரிந்திருக்கலாம்'.
'ம். மேலே சொல்லுங்கள்'
"சோவியத் நாட்டில் பெண்களுக்கு பிரச்சினைகள் என்று சொல்வதற்கு எதுவுமில்லை என்று கூறலாம். கணவன் வேலைக்குச் சென்றதன் பின்பு, மனைவி பொழுதை பயனுள்ள முறையில் கழிக்க முடிவது என்னவோ உண்மைதான். கார ணம் - கணவனுே - அல்லது அரசாங்கமோ, அந்தப் பெண் ணுக்கு எந்தவிதமான பிரச்சினைகளையும் வைக்கவில்லை. அத ணுல் அவள் தள்ளுவண்டியில் தன் குழந்தையை வைத்துக் கொண்டு அப்படி உலாத்தலுக்கு செல்ல முடிகிறது.
‘எங்கள் தாய்நாட்டில் அப்படியா?"
கணவனுக்கு பணிவிடையெல்லாம் செய்து அவனை தொழிலுக்கு அனுப்பும் பெண், பின்னர் வீட்டில் தேங்கிக் கிடக்கும் வேலைகளையும் செய்கிருள். சமைப்பது, துணி துவைப்பது, வீட்டை கூட்டிப் பெருக்கி துப்புரவு செய்வது. தண்ணிர் அள்ளி வருவது. சமையலுக்குத் தேவையான விறகு மற்றும் மரக்கறிவகைகளை கொண்டு வந்து சேர்ப்பது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் அல்லவா?
'கணவன் வேலைத்தலத்தில் நடமாட்டித் திரியும் தூரத்தை விட அதிக தூரத்தை மனைவி வீட்டினுள்ளே
103

Page 54
நடக்கிருளே. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்று பதில் கேள்வியும் கேட்டார் பாண்டியன்.
"அப்படி யெல்லாம் உடலை வருத்தி வேலைசெய்யும் எம் குடும்பப்பெண்கள் தமது ஓய்வுக்காக பாயை விரித்து படுத்து றங்குவது தப்பில்லையே."
"உண்மைதான் மாத்ர் தம்மை இழிவு செய்யும் மடமை யை கொளுத்தாத வரையில் எம் மாதர்களுக்கு விடிவு இல் லேத்தான்.
பெண் விடுதலை முறையாக சோவியத்தில் அமுலில் உள்ளமையால் அவர்கள் தமது ஒய்வு நேரத்தை பயனுள்ள முறையில் கழிக்கின்றனர் என்ற முடிவுக்கு வரவேண்டிய தாயிற்று.
164

1. 4. பாரத தேசமென்று பெயர் செல்லுவார்-மிடிப்பயங் கொல்லுவார் துயர்ப்பகை வெல்லுவார்
- பாரதி
பாரதி வர்ணித்த பழம்பெரும் பூமியிலிருந்து மாஸ் கோவுக்கு வந்திருந்த பிரதிநிதிகளும் எம்மவர்களைப் போன்று பல்வேறு கருத்தோட்டம் மிக்கவர்களாகவே திகழ்ந்தார்கள்
வந்திருந்த 500 பிரதிநிதிகளில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 50 சட்ட மன்ற உறுப்பினர்களும் கலா சாரக் குழுவில் 60 உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர்.
இந்தியாவின் இளைஞர் காங்கிரஸில் இருந்துமட்டும் 225 பிரதிநிதிகள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தெரிவாகி யிருந்தனர்.
தமிழ்நாட்டுப் பிரதிநிதிகளை சந்திக்க வேண்டும் என ஆவல் கொண்டிருந்த நான், இந்திய மாநிலங்கள் அனைத் தையும் சேர்ந்த பிரதிநிதிகளை ஒரே இடத்தில் சந்திப்பதற்கு கிட்டிய வாய்ப்பிஞல் பெரிதும் மகிழ்ச்சியடைந்திருந்தேன்.
தாம் தங்கியிருந்த அதே ஹோட்டலிலேயே அவர்களும் இருந்தமையால் விடிய விடிய நித்திரை விழித்திருந்து பேச வும் கருத்துப் பரிமாறவும் முடிந்தது.
பகலில் அனைவருக்கும் நிறையக்கடமைகள்.
105

Page 55
இரவு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திரும்பினுல் ஹோட்டலுக்கு முன்பாகவுள்ள திறந்த வெளியில் குளிரை யும் பொருட்படுத்தாமல் இசை நிகழ்ச்சிகள் நடந்து கொண் டிருக்கும். ஆடுவதும் பாடுவதுமாக ஒரு புறம் சிலருக்கு பொழுதுகள் கழிந்து கொண்டிருக்க, என் கவனம் முழுவதும் இந்தியப்பிரதிநிதிகளுடன் உரையாடுவதிலேயே தங்கியிருக் கிறது.
இந்திய மாணவர் சம்மேளனத்தின் தலைவர் சீத்தாராம யச்சூரி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வலது கம்யூனிஸ்ட் கட்சியினைச் சேர்ந்த ராஜா, மாக்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நன்மாறன், அகத்தியலிங்கம், தி.மு.க. மிஸா க்ணேசன், அ. தி. மு. க. டாக்டர் ராமலிங்கம், முரு கானந்தம், ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ. திருமதி நீலிமா கிருஷ்ணு, செல்வி சுரேகா வர்மா உட்பட பலருடன் உரை யாடி கருத்துப்பரிமாறிய அதே வேளை, ஹைதராபாத்தி லிருந்து வந்திருந்த நாட்டிய தாரகை சரளகுமாரி உட்பட தமிழ்நாட்டின் இசைக் கலைஞர்களுடனும் பேசினேன்.
சரளகுமாரி
குச்சுப்புடி நடனத்தில் பெயர் பெற்றவர். தொடர்ச்சி யாக 24 மணிநேர நடனமாடி கின்னஸ் புத்தகத்தில் பெயர் பதித்த சாதனையாளர்.
'ஆர். யூ. புரொம் பூரீலங்க."
எங்கோ பார்த்துக் கொண்டு நின்ற நான் திரும்பிப் பாக்கிறேன்.
தமிழ் நாட்டிலிருந்து நடிகை வட்சுமியும் வந்துள்ளா ரே. என அக்கணம் என்னை நினைக்கவைத்தவர் சரளகுமாரி.
தோற்றம் அப்படி.
106

தன்னை சறிமுகப்படுத்திக் கொண்டு - தனது கலாசார குழுவைப்பற்றி கூறுகிருர், இந்தியா ஹவுஸில் அன்று நடக்க விருந்த அவரது நிகழ்ச்சிக்கு அழைப்பும் விடுத்தார்.
எனக்கெங்கே நேரம்?
பின்னர் சந்தித்த வேளையில் அவரிடம் மன்னிப்பு கோரினேன்.
இந்த "மன்னிப்பு’ என்ற சொல்லுக்கு பஞ்சமில்லைத்தா {3ଜor? Y
"இந்தியா ஹவுஸ்' - என்றதும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.
“அது இந்தியா ஹவுஸ் அல்ல. இந்திரா ஹவுஸ்"- என்ருர் ஒரு மார்க்ஸிஸ்ட் பிரதிநிதி.
'ஏன் அப்படி சொல்கிறீர்கள்?
"இந்திரா காந்தி சம்பந்தப்பட்ட படங்களை மட்டும் வைத்துவிட்டு இதுதான் 'இந்தியா ஹவுஸ்" என்று சொன் ரூல் எப்படி ஏற்பது.? ஜனதிபதி ஜெயில்சிங்கின் படம் கூட அங்கு இல்லை. இது பெருங்குறை' - என்ருர் காட்டமாக,
சோவியத் - இந்தியா (இந்திரா) நல்லுறவுதான் அதற்கு காரணமாக இருக்கலாம் அல்லவா?”
இருக்கலாம். எனினும் இந்த விவகாரத்தை தாம் பெரிது படுத்த விரும்பவில்லை. விருந்தினர்களாக வந்துள்ள இடத்தில் நம் உள்ளூர் விவகாரங்கள் எதிரொலித்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறுேம்." -- என்ருர்,
நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும் அது நமக்குள் இருக்கட்டும் என்ற பெருந்தன்மையை பாராட்டினேன்.
1ፅ7

Page 56
தமிழ் நாட்டின் பிரதிநிதிகளுடன் உரையாடுவதற்கு அதிகம் ஆர்வம் காட்டியவர்கள் இலங்கையின் மக்கள் கட்சி மற்றும் இடது சாரிக் கட்சியினர்தான்.
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் முற்றிலும் மாறுபட்ட கண்ணுேட்டத்துடன் - தமிழ் மக்களுக்கு சாதகமானவர்களாக விளங்குபவர்கள் இந்த மக்கள் கட்சி யினரும் இடதுசாரிக் கட்சியினரும்தான்.
இது தொடர்பாக தமிழ் அரசியல் இயக்கங்களுக்கு அபிப்பிராய பேதம் இருக்கலாம். ஆயினும் தேசிய முதலாளி த்துவக் கட்சிகளிலிருந்து-மாறுபட்ட கொள்கையையும் கருத்தோட்டத்தையும் கொண்டவர்கள்தான் இந்த மக்கள் கட்சியினரும் இடதுசாரிக்கட்சியினரும் என்பதை தமிழர் இயக்கங்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றன.
மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் நடிகர் விஜய குமாரணதுங்கா - தமிழ்தாட்டின் பிரதிநிதிகளை பெரிதும் கவர்ந்தார்.
இ இவ்விதம் அவர் கவரப்படுவதற்கு சில காரணங்கள்
ருக்கலாம்.
அவர் ஒரு பிரபல்யமான சிங்கன நடிகர், இலங்கை யின் முந்நாள் பிரதமர் ரீமாவோ பண்டாரநயக்காவின் மருமகன், அபிப்பிராய பேதத்தினுல் சுதந்திரக் கட்சியிலி ருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்து விரைவில் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெருக்கியவர்.
இப்படி சில காரணங்களை கூறமுடியும்.
தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் அவரிடம் முன்வைத்த கோரிக்கை கவனிப்புக்குரியது. * マ
108

'நீங்கள். சிங்கள மக்கள் மத்தியில் கணிசமான செல் வாக்கை பெற்றிருக்கிறீர்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளை யும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் உங்கள் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறலாம் தானே?"
**ஆம். அதனைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். தமிழ் மாணவர்கள் தரப்படுத்தல்" கொள்கையினல் பாதிக் கப்பட்டதையும்-யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப் பட்டதையும் கண்டித்து குரல் எழுப்பியிருக்கிறேன். எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் உள்ளனர். அதுபோல் பல தமிழர் கள் எமது கட்சியிலும் அங்கம் வசிக்கின்றனர்."
"இருக்கலாம் உங்களது அரசியல் செல்வாக்கை பிர யோசித்து - தமிழ் விடுதலை இயக்கத்தினர்களுக்கும். இலங் கை அரசுக்கும் இடையே சமாதான பேச்சுவார்தைகளை தொடருவதற்கு நீங்கள் ஆக்கபூர்வமான வழிவகைகளை ஆராய்வது நல்லது சுல்வவா?”
'உண்மைதான். இது சம்பந்தமாக என் மனதில் ஒரு திட்டம் உருவாகியுள்ளது. உ ரிய தருணத்துக்காக காத்திருக்கிறேன். தமிழ் நாட்டின் அரசியல்கட்சிகளைச் சேர்ந்தவர்களை சந்தித்து கருத்துப் பரிமாறியதன் பின்னர்என் மனதில் உள்ள திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தோன்றியுள்ளது."
விஜயகுமாரணதுங்கவின் பதில்களை நான் கூர்ந்து கவனித்தேன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் மாஸ்கோவில் இருந்த இலங்கை தூதுவர் நெவில் கனகரத்ன, எம்மண் வருக்கும் அளித்த இராப்போசன விருந்துபசாரத்தி போது விஜயகுமாரணதுங்க நிகழ்த்திய பேச்சும் அஃ0 வரையும் பெரிதும் கவர்ந்தது.
'நாம் அனைவரும் இலங்கையர், இலங்கை மாதாவின் தல்வர்கள்.ஒரு இனத்தை மற்ருெருஇனம் அடிமைப்படுத்து வதை அனுமதிக்க முடியாது. இந்த சமதர்ம நாட்டில் நல்ல
109

Page 57
நோக்கத்துக்காக கூடினுேம், அந்த நல்ல நோக்கத்தை நாடு திரும்பிய பின்னரும் செயல்படுத்துவதே - இந்தப்பயணத் திற்கு நிறைவைத்தரும்.'
ஆளும் கட்சி பிரதிநிதிகளும் இந்த உரையைகைதட்டி வரவேற்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானர்கள்.
இத்தியப் பிரதிநிதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தங்க
¢ ̆” ጦ*
பாலுவிடம் சில கேள்விகள் கேட்கிறேன்.
*இலங்கைப் பிரச்சினைக்கு உங்கள் கட்சி என்ன தீர்வி னைச் சொல்கிறது சார்."?
'இந்தியாவில் உள்ளது போன்று மாநில ஆட்சி முறை தான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்க முடியும்' - என்ருர் தங்கபாலு.
"இலங்கை விவகாரம் தொடர்பாக இலங்கைத்தலே வரும் இத்தியத் தலைவரும் ஏதோ ஒரு முடிவுக்கு வந்து விட்ட தாக -அதாவது, பங்களாதேஷில் குருவளி அனர்த்தங்களே பார்வையிட தனி விமானத்தில் செல்லும்போது இருவரும் தீர்மானித்து விட்டதாக கூறப்படுகிறதே?' என்றேன்.
"இருக்கலாம்" "அது என்ன தீர்வு என்று நீங்கள் கருதுகிறீர்கள்?"
அதனே தான் எப்படிச் சொல்லமுடியும்" - நிச்சய மாக - அனைவருக்கும் சாதகமான தீர்வு ஒன்று கிடைக்கத் தான் போகிறது. எனவே நீங்கள் நிம்மதியடையலாம்’
என்று நம்பிக்கையூட்டிஞர் தங்கபாலு.
*இலங்கையின் சமகாலத்து நிலவரங்கள் அத்தகைய நம்பிக்கையை தரவில்லையே."
110

இலங்கையிலிருந்து வந்து பெருகும் அகதிகளின் த்ொகை யால் நமது பாரதநாடு பல பிரச்சினைகளை எதிர் நோக்கு கிறது. எனவே, எமது பிரதமர் இவ்விவகாரத்தில் நிச்சயம் ஒரு நல்ல தீர்வினைக் கண்டுவிடுவார்' - என்று பேச்சை வேறுவழியில் திசை திருப்பினர் கைதேர்ந்த அரசியல் வாதி யான தங்கபாலு.
"இனிமேல் சார் . இலங்கை தமிழ் தீவிரவாதிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லி புறக்கணிக்க முடியாது சார் அவர்களின் தலைவர்களும் உங்கள் நாட்டின் அரசின் பிரதிநிதிகளும் ஒன்ருக அமர்ந்து பேசும் சந்தர்ப்பம் வந் துள்ளதே" - என்ருர் அ. இ. அ.தி. மு. க. எம். எல். ஏ. யான டாக்டர் ராமலிங்கம்.
'கண்டுபிடித்து தருபவர்களுக்கு எத்தனையோ இலட்சம். ரூபா சன்மானம்' - என்று விளம்பரப்படுத்தப்பட்டவர் கள் இன்று பேச்சுவார்த்தையில் அழைக்கப்பட்டுள்ளமை பெரிய மாற்றம் அல்லவா..? - என்றர் மற்றுமொரு அ.இ. அ. தி. மு. க. பிரதிநிதி.
'அதெல்லாம் சரிதான். இந்தியாவுக்குள்ளேயே ஏகப் பட்ட பிரச்சினேகள். பஞ்சாப், திரிபுரா, அஸ்ஸாம். இதற் கும் மேல் தீர்க்கப்படாத பொருளாதரா நெருக்கடிகள். இவற்றிடையே உங்கள் இலங்கைப்பிரச்சினையே எம் நாட்டுப் பிரதமர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை உண்டா? சார்."- என்று ஒரு போடு போட்டார் மிஸா கணேசன்.
இந்திரா காந்தியின் "மிஸா' சட்டத்தில் தடுப்புக் காவலில் இருந்தமையால் தன் பெயருடன் "மிஸா' வை சேர்த்துக் கொண்டவர்.
'உங்கள் கலைஞர் என்ன சொல்கிருர்?" ‘எங்கள் கலைஞர் இன்னும் உறுதுணையாகத்தான் இருக்கி ருர், அவரது முடிவு தளரவில்லை" - என்று பேச்சுக்கு முத்
தாய்ப்பு வைத்தார் மிஸா கணேசன்,
11.1:

Page 58
"லெனின் சொன்ன சுயநிர்ணய உரிமை என்பது பிரி ந்து போகக் கூடிய, ஒவ்வொரு இனமும் தம்மைத் தாமே நிர்ணயித்துக் கொள்கிற உரிமை, எனவே, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்கவேண்டுமென நாம் பிரசாரம் செய்து வருகிழுேம்" - என்றனர் இலங்கையின் நவ சம சமாஜக் கட்சியின் பிரதிநிதிகள்.
அது சரிதான். உங்கள் கட்சி, எதிலிருந்து பிரிந்து வந்த கட்சி."- இது மாக்ஸிஸ்ட் ஃட்சி பிரதிநிதி ஒருவரின் முக்கிய கேள்வி.
"நாம். லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து பிரிந்தவர் கள்." - இது பதில்.
f( அக்கட்சி. ட்ரொஸ்கிலத்தில் நம்பிக்கைوه * கொண்டது. என அறிந்துள்ளோம். அப்படியாயின், உங்க ளது லெனினிய கண்ணுேட்டம் சற்று வித்தியாசமாக இருக் கிறதே."
ஆம். நாம் ட்ரொஸ்கிஸத்தை ஏற்றுள்ளோம். அதே வேளை இலங்கைத் தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையை யும் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
'நல்லது . தனித்து நின்று தமிழ் மக்களின் சுயநிர் ணய உரிமை குறித்து சிங்கள மக்களிடம் பிரசாரம் செய்யா தீர்கள். சிங்கள மக்களிடம் ஆதரவு பெற்றுள்ள ஏனைய இடது சாரிக் கட்சிகளையும் முற்போக்கு சக்திகளையும் இணைத்துக் கொண்டு முன்னேறுங்கள். இல்லையேல் தனி மைப்பட்டு விடுவீர்கள்." - என்றனர் அந்த இந்திய மாக் ஸிஸ்ட் கட்சியினர்.
112

சுருக்கமாகச் சொல்வதாயின், கருத்துக்களை பரிமா றிக் கொள்வதற்கும், சந்தேகங்களை தெளிவு படுத்தவும் இச்சந்திப்புகள் பெரிதும் உதவின.
அண்டை நாடொன்று பதட்டமடைந்திருந்தால் மற்ற நாட்டின் நிம்மதி கலையும் என்பது முற்றிலும் உண்மை தான். ሰ
அந்த உண்மையை இக்கருத்துப்பரிமாற்றங்கள் உணர்த்தின.
113

Page 59
5 பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும், இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்
- பாரதி
தமிழர்கள் பிறக்காத - தமிழர்கள் பெரும்பான்மை யாக வாழாத - ஒரு நாட்டில் தமிழ் மொழி வாழ்கிறது. தமிழ் நூல்கள் வெளிவருகின்றன.
இந்தப் பெருமையும் சோவியத் நாட்டைத்தான் சார்ந் துள்ளது.
கார்க்கி, புஷ்கின், துர்கேனிவ், தாஸ்தாவ்ஸ்கி முத லிய இலக்கிய மேதைகளையும், லெனின், மார்க்ஸ், எங்கல்ஸ் முதலிய அரசியல் விடிவெள்ளிகளையும் மாஸ்கோ முன்னேற் றப்பதிப்பகத்தின் வெளியீடுகள் மூலமே படித்துத் தெரிந்து கொண்டேன்.
இந்த நூல்களையெல்லாம் அழகுற அச்சிட்டு வெளியி டும் முன்னேற்றப்பதிப்பகம், மற்றும் ராதுகா பதிப்பகத்தில் தமிழ் அச்சுக் கோப்பாளர்கள் அச்சுக்களை கோர்த்து சிறப் புடன் அச்சிட்டு வெளியிடுகிருர்க்ள் என்றுதான் நினைத்தி ருந்தேன்.
என் நினைப்பு தவறு என்பதை 'ராதுகா' வுக்கு போன பின்புதான் தெரிந்து கொள்கிறேன். என் தவறை திருத்தி விளக்கமளிக்கிறர் நண்பர் டாக்டர் விதாலி பெத்ரோவிச் பூர்ணிக்கா,
14

ஈழத்து இலக்கிய உலகத்திலும் இந்திய இலக்கிய உல கிலும் தன்கு பிரபல்யமான இந்த நண்பரைப்பற்றி நிறைய அறிந்து வைத்திருந்தமையால் மாஸ்கோ பயணமாகு முன்ன ரேயே கடிதத் தொடர்பு மூலம் எனது வருகையை அவ ருக்கு அறிவித்திருந்தேன்.
மாஸ்கோவில் இறங்கிய பின்னர் தான் எடுத்த முதலா வது தொலைபேசி கோல் ஃபூர்ணிக்காவுக்காகத்தான்.
*வணக்கம்' - என தமிழில் பேசினர்.
முன்பின் அறிமுகமில்லாத - முகமே பார்த்தறியாத பூர்ணிக்காவிடம் என்னை அழைத்துச் சென்றவர் நண்பர் பாண்டியன்தான்.
'தமிழ் மொழியை - அதன் வரிவடிவங்களினூடாக மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு அச்சுக் கோர்க்கும் சோவியத் தோழர்கள் இந்தப்பதிப்பகத்தில் பணியாற்று கிருர்கள். அவர்களுக்கு கமிழ் டேசத் தெரியாது. தமிழ்ச் சொற்களின் அர்த்தமும் புரியாது. ஆளுல் தமிழ் எழுத்துக் களின் உருவமைப்பை மட்டும் புரிந்து கொண்டு அதற்கேற்ப பிழையின்றி அச்சுக் கோர்க்கும் திறன் படைத்தவர்கள் இந் தத் தோழர்கள்' - என்ற ஃபூர்ணிக்காவின் தகவல் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.
மாஸ்கோ ராதுகா பதிப்பகத்தின் தமிழ்ப்பிரிவுக்கு பொறுப்பாக பணியாற்றும் அவரிடம் 'ராதுகா'-என்ருல் என்ன அர்த்தம்?' - இது என் கேள்வி.
"வானவில்'
ராதுகா பதிப்பகத்தில் பத்துப்பிரிவுகள் இருப்பதாக வும் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் உட்பட பலமொழிகள் இப்பிரிவுகளில் அடங்கியிருப்பதாகவும் இந்திய மொழிகளுக் கென மட்டும் பன்னிரண்டு பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளதாக வும் விளக்குகிருர் ஃபூர்ணிக்கா,
V
115

Page 60
வருடாந்தம் 15 புத்தகங்களை இந்திய மொழிகளில் வெளியிடும் இந்நிறுவனம் குழந்தை இலக்கிய நூல்களில் குறைந்தபட்சம் ஒவ்வொன்றிலும் 15 ஆயிரத்துக்கும் அதிக மான பிரதிகளை வெளியிடுவதாகக் கூறி என்ன ஆச்சரியத் தில் ஆழ்த்துகிறர்.
"இலங்கை நண்பர்கள் அனைவரும் நலமா? ஃபூர்னிக்கா விசாரிக்கிருர்?
"யாரைக் கேட்சிறீர்கள்.?"
பல எழுத்தாளர்களின் பட்டியலையே அவரது உதடுகள் தட்டுத் தடுமாற்றம் இன்றி தெளிவாக பிரசவிக்கின்றது.
நண்பரே. உங்களிடம் ஒரு உதவியை நாடுகின்றேன் செய்ய முடியுமா?"
"என்னிடமா?. சொல்லுங்கள்."
இலங்கை எழுத்தாளர்கள் கே. கணேஷ் எச். எம். பீ. மொஹிதீன் ஆகியோரை உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அவர்களின் முகவரி அவசியம் தேவைப்படுகிறது. இவர்கள் எங்கள் உக்ரைன் மகாகவி தாராஸ் செவ்சென்கோவைப் பற்றி - எழுதியிருக்கிறர்கள். எங்கள் கவியின் கவிதைகளை தமிழுக்குத் தந்துள்ளார்கள். அவர்களுடன் நான் தொடர்பு கொள்ள உதவ முடியுமா..?"
'உங்களுக்கில்லாத உதவியா. கவலைவேண்டாம். இலங்கையில் இறங்கியவுடன் முதல்வேலையாக உங்கள் கட்ட ளையை நிறைவேற்றுகிறேன்.
"மிக்க நன்றி"
"உங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். எங்கள் எழுத்தான நண்பர்களை யெல்லாம் . பெயர்களையும் மறக்கா மல் நினைவில் வைத்திருக்கிறீர்களே. அதற்காகத்தான்.'
1165

"எங்கள். உங்கள். என்ற பேதம் எதற்கு . நாங் கள்' ஆகிவிடுவோம்." - குழந்தையைப் போல் சிரிக்கிழுர் ஃபூர்னிக்கா,
தராஸ் ஷெவ்சென்கோவைப்பற்றி அவர்கறிய விளக் கங்களை கூர்ந்து செவிமடுக்கின்றேன்.
தமிழ் இலக்கியக்கியத்திற்கு பாரதி எப்படியோ வங் காளத்துக்கு தாகூர் எப்படியோ அதுபோல் உக்ரைன் இலக் கியத்துக்கு ஒரு ஷெவ்சென்கோ, அவரது 125 ஆம் வருட நினைவுநாளை சிறப்பாக உலகுக்கு அறிவிக்கும் வண்ணம் பல நிகழ்ச்சிகளை தடத்த விருக்கிருேம். அத்துடன் ஒரு சிறப்பி தழும் வெளியிடப்படவிருக்கிறது.
'உக்ரைன் மக்களின் ஆத்மாவை பிரதிபலித்த ஷெவ் சென்கோவை ஜெயகாந்தன் தனது சுற்தரகாண்டத்தில் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். படித்திருப் பீர்கள். இந்த மகா கவியைப்பற்றிய படைப்புகள் தொடர் ந்தும் வெளிவரவுள்ளன. அதற்கு நான் குறிப்பிடும் அவரது 125 ஆம் வருட நினைவு நாள் நிகழ்ச்சிகள் வழிகோல விருக் கின்றன.'
‘இந்திய - இலங்கை தமிழ் இலக்கியங்களில் ரஷ்யரா கிய உங்களுக்கு நாட்டமும் ஆர்வமும் ஏற்பட என்ன கார ணம் என நினைக்கிறீர்கள்?’- இது எனது ஆர்வம் மீதூறிய கேள்வி.
"கார்க்கியையும், டால்ஸ்டாயையும், புஷ்கினையும படிக்கவேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட் டது நண்பரே. அதற்கு ஒரு இலக்கிய நேசிப்பு எப்படி இருந்ததோ அதே நேசிப்புத்தான் என்னிடமும் இருந்திருக் கும் அல்லவா. அதற்கு காரணம் தேடத்தேவையில்லை. இலக்கிய நேசிப்பும் மனிதாபிமானத்தை நாடும் கலையுள்ள முமே அடிப்படை.
117

Page 61
"நன்றி நண்பரே. எப்பொழுது எங்கள் நாட்டில். உங்கள் பாதம் படியும்.?’’
'முன்பொருசமயம். 1981 ஆம் ஆண்டு வந்து மூன்று நாட்களில் திரும்பினேன். மீண்டும் வரவேண்டும். நண்பர் களையெல்லாம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் உண்டு. நிச் சயம் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுண்டு.'
'நம்பிக்கைதானே எம் வாழ்க்கை நண்பரே"
"ஆமாம். ஆமாம். என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள் உங்களை வெறுங்கையுடன் அனுப்பமாட்டேன். இதோ எனது புத்தகம். இந்திய நாகரீகத்தையும் தமிழரின் பாரம்பரிய பழக்க வழக்கவ்களையும் பண்பாட்டையும் ஆராய்ந்திருக்கி றேன். இந்தியக்கலைகள் கரகம், காவடி, கும்மி, கோலாட் டம், பொய்ப்க்கால் குதிரை, மயிலாட்டம் உட்பட தமிழ் மக்களின் இறை நம்பிக்கை தொடர்பாகவும் என்னுல் இய ன்ற வரையில் தகவல்களை திரட்டி எழுதியுள்ளேன். இதனை எழுதி முடிக்க பல தமிழ் எழுத்தாளர்கள் எனக்கு துணை நின்றனர். இப்போது இது ரஷ்ய மொழியில் வந்துள்ளது. விரைவில் இதனை நீங்கள் தமிழில் படிக்கும் காலம் நெருங் கும் என நினைக்கிறேன்.'
"'உங்கள் பெயரை எழுதித் தாருங்கள் நண்பரே.”*
'நண்பர் முருகபூபதிக்கு வாழ்த்துக்களுடன். விதாலி
ஃபூர்ணிக்கா' - என தமிழில் எழுதித்தருகிருர்.
'உங்களுக்கு திருமணமாகி விட்டதா. எத்தனை பிள்
ளைகள். காதல் திருமணமா...?"
"ஆமாம் காதல் திருமணம்தான். இப்பொழுது இரண்டு
பெண் குழுந்தைகள்."
118 &

"வாழ்க.. மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.உங் கள் குழுந்தைகளுக்கு" என்றவர் "இதயம் தருவோம் குழந் தைகளுக்கு" - சோவியத் குழந்தை இலக்கிய நூலையும் - 'இதோ. இது. உங்கள்காதல் மனைவிக்கு" - என்று சொல்லி இவான்துர்கேணிவ்வின் “மூன்று காதல் கதைகள் நூலையும் தருகிருர் அர்த்தமுடன் பேசத் தெரிந்த ஃபூர் னிக்கா.
‘என்றென்றும் எங்கள் நட்பு நிலைத்திருக்கட்டும்.' கட்டி அணைத்து வாழ்த்தி விடைபெறுகிறேன்.
119

Page 62
1. 6 எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு, சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் தரணிக்கெல்லா மெடுத்து ஒதுவோமே
- பாரதி
நாட்களுக்கு கால்கள் முளைக்கும் - அல்லது சக்கரங் கள் பூட்டப்படலாம். வந்த வேகத்தில் ஓடி மறைகின்றன
பன்னிரண்டு நாட்கள் எப்படித்தான் ஒடியதோ?
உலக விழாவின் இறுதிநாள் -
மாஸ்கோவின் வசந்தகாலம் எமக்கும் உலக நாடுகளி லிருந்து வருகை தந்த தோழர்கள் தோழியர்களுக்கும் உவந் தளித்த குதூகலமும் உற்சாகமும் இன்றுடன் பிரியாவிடை பெறப்போகின்றனவோ என்ற ஆழ்ந்த கவலை அனைவருக்கும்
இனம், மதம், மொழி, தேசம் கடந்து உலக சகோத ரத்துவத்தை சங்கமிக்கச் செய்வதற்காகவும் யுத்தங்கள் வேண்டாம் உலக சமாதானமே எடிது இலட்சிய நோக்கம் என ஏகோபித்துக் குரல் கொடுப்பதற்காகவும் ஒன்று கூடிய பல்லாயிரம் பேரும் இன்று தடக்கும் இறுதிவிழா நிகழ்ச்சி களுடன் விடைபெறப் போகின்ருேம்.
இந்த விடைபெறுதலை நினைத்தபோது ஏனே என் கண் கள் பனித்தன.
120

இது என்ன இனம்புரியாத சோகம்?
"வசந்தத்தின் குளிர்த்தென்றல்.
வந்து தரை சமுத்திரத்தில்
தவழ்ந்தசைந்து செல்வது போல்
மிதந்து வரும் புதுப்பாடல்.’
மீண்டும் அந்த கானம் லெனின் ஸ்ரேடியத்தில் தவழ் ந்து வருகிறது.
இலட்சத்துக்கும் அதிகமானேர் கூடியிருக்கிருேம்.
அவ்வேளையில், ஒரு நண்பர் ஒருநாள் சொன்னவைகள் என் சிந்தையில் ஓடின.
"அளந்து சாப்பிட மறந்து அள்ளிச் சாப்பிடுபவர்க னால் எதிர்காலமே சிக்கல் நிறைந்ததாக மாறும், எதிர் கால சந்ததிகளையும் கருத்தில் கொண்டு இப்பொழுது முத லே நாம் அளந்து காப்பிடுவோம்.'
"சோஷலிஸம் மரணத்தைப்போல் உறுதியானது, நிச்சயமானது, ஒரு மனிதனுக்கு மரணம் எப்படி நிச்சயமா னதோ அதே போன்று சோஷலிஸமும் உலக வரலாற்றில் நிச்சயமானதுதான். அது என்றே ஒரு தாள் உலக நாடுகள் அனைத்தையும் அணைத்துக்கொள்ளத்தான் போகிறது"
என் சிந்தையில் ஒடிய அக்கருத்துக்கள் சாசுவதமானவை. அத்தகைய உன்னத உலகம் தோன்றுவதாயின் உலகில் யுத்தங்கள் தோன்றக்கூடாது. யுத்த மேகங்கள் கருக்கட்டக் don. LfTol.
இரண்டாம் உலக மகா யுத்தத்தினை வெற்றி கொண்ட நாற்பதாவது ஆண்டின் நிறைவின்போது கொண்டாடப் பட்ட 12 ஆவது உலக இளைஞர், மாணவர் விழா, அதில்
121

Page 63
கலந்துகொண்ட பல்லாயிரக் கணக்கானேருக்கும் பல படிப் பினேகளை, புது அனுபவங்களை பெற்றுத் தந்தது எனலாம்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தில் மரணித்த ஒவ் வொருவரதும் ஆத்மா சாத்தியடைய வேண்டுமென நாமனை வரும் ஒரே ஒரு நிமிடநேரம் தொடர்ச்சியாக மெளனம் அனுட்டித்தால் முழு மனித குலமும் ஒரு நூற்றண்டு காலம் மெளனமாகவே இருக்க வேண்டும்.
இதேவேளை, (இப் பயணக்கதை தொடராக வெளிவரும் 1985 காலப்பகுதியில்) கடந்த ஐந்தாயிரத்து 500 ஆண்டு களில் மட்டும் 14 ஆயிரத்து 550 பெரிய சிறிய யுத்தங்கள் மூண்டுள்ளன. இவற்றில் சுமார் 350 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தம் இன்னுயிரை இழந்துள்ளனர்.
இப்பொழுதும் உலகம் அமைதியிழந்தே காணப்படு
கின்றது. அமைதி தோன்றவேண்டுமாயின் முதலில் பதற் றம் தணிய வேண்டும், பதற்றம் தணிய வேண்டுமாயின் ஆணு ஆயுத யுத்தம் தொடர்பான சிந்தன. எந்த மனித மனங்களில் உதயமாகிறதோ அதே மனித மனங்களில் புதைக்கப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலம் தம் பிக்கையான - ஒளிமயமானதாக இருக்கும். இருக்கவும் முடியும்.
இவ்விழா நடைபெற்ற எட்டு நாட்களில் சுமார் மூவா யிரத்து 145 நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றின் மொத்த நேரம் 7 ஆயிரத்து 581 மணித்தியாலங்கள். கூட்டிப் பார்த் தால் 315 நாட்களுக்கான மணிநேரங்கள்.
அம்மணிநேரங்கள் அனைத்தும் பசுமையானவை. இறுதி நாளன்று முழு உலகிற்குமே ஒரு செய்தி வாசிக்கப்பட்டது. அதனை வாசிக்கும் கெளரவம் நிக்கரகுவா நாட்டிற்கு வழங் கப்பட்டது.
122

சுதந்திரத்திற்காகவும் மனித உரிமைக்காகவும் போரா டிவரும் அந்த நாட்டின் சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதி ஒருவர் அச் செய்தியினை வாசிக்கிருர்.
பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் சமர்ப்பிக்கப்பட்ட அச்செய்தியின் சுருக்கம் இதோ.
'இளைஞர்களே ஒளிமயமான எதிர்காலத்தை எய்த முடியும், எய்த வேண்டும். இந்த குறிக்கோளே அடையும் பொருட்டு ஒவ்வொருவரும் பாதுகாப்பு உணர்வை பெற்றுக் கொள்வதற்கும் வேலை செய்வதற்கும் அதேவேளை, பண்பான வாழ்க்கை வாழ்வதற்கும் உரித்தான உரிமையை பெறுவதற் கும் அடிப்படையான சமூக, பொருளாதார, அரசியல், சிவில் மனித உரிமைகளை அனுபவிப்பதற்கும் நாம் உறுதி பூணவேண்டும்."
இன்று பல உலகநாடுகளில் தோன்றியுள்ள நெருக்கடி களுக்கு மனித உரிமை மீறல்களே அடிப்படையாகும். இதனை தெட்டத்தெளிவாக நிக்கரகுவா பிரதிநிதி தமது செய்தியில் தெளிவுபடுத்தியிருந்தார்.
எமது தாய்த்திரு நாட்டில் இனவாத வன்செயல்கள் தலை தூக்கியமைக்கும், தேசியஇனப்பிரச்சினை கூர்மைய டைந்து இளைய தலைமுறையினரில் ஒரு பகுதியினர் ஆயுதங்க ளில் நம்பிக்கை வைத்தமைக்கும் - மேற்படி மனிதஉரிமை மீறல்களே அடிப்படை.
மனித உரிமைகள் பேணப்படும் பட்சத்தில் ஒவ்வொரு இனத்தினதும் பாரம்பரிய பிரதேசங்களும் பொருளாதார மும், வாழ்க்கையும், பாதுகாக்கப்படும் பட்சத்தில் இன மோதல்கள் நிச்சயம் தவிர்க்கப்படலாம்.
ஆனல் - நடந்ததும் - நடப்பதும் - மக்களின் எதிர் காலத்தை சூனியமாக்குகின்றன.
23

Page 64
இந்த உலக விழாவின் முதல் நாளில் இடம்பெற்றதைப் போன்றே கலைநிகழ்ச்சிகள் லெனின் ஸ்ரேடியத்தை ஆக்கிர மித்திருந்தன.
குழந்தைகள், சிறுவர், இளைஞர், யுவதிகள் ஆயிரக் கணக்கில் நாலா திக்கிலிருந்தும் ஒடி ஒடிவந்து பல்வேறு வண்ணங்களில் சேர்ந்து - பிரிந்து - நகர்ந்து கலைநிகழ்ச்சி களை விருந்தாகப் படைக்கின்றனர்.
முன்பே குறிப்பிட்டவாறு அவற்றை வர்ணிக்க வார்த் தைகளைத் தேடிச் செல்லும் ஏழைகளாகிவிட்டோம்.
"சமாதான நட்புறவுப் பெரு விழா வாழ்க' - என்ற கோஷம் பல்வேறு ஒலிகளில் - மொழிகளில் விண்ணதிர எழுகின்றன.
சோவியத்தின் சர்வதேசப் புகழ்வாய்ந்த சயிக்கோவிஸ் கியின் 'அன்னத் தடாகம்" கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அரங்கேறுகிறது.
எதனையும் கலையம்சமுடன் செய்து பழக்கப்பட்ட அம் மக்களின் வாண வேடிக்கைகளில் கூட கலைத்துவம் நிரம்பி யிருந்தது.
விழாவின் கொடியை ஏற்றிவைத்த தோழர் தோழி யரே அதனை இறக்கியும் வைத்தனர். விழாவின் தீபமும் படிப்படியாக அணைகிறது.
இப்பொழுது முழு ஸ்ரேடியமும் இருளில் மூழ்கிவிடு கிறது. இவ்விதம் இருளடையும் போது எமக்கு முன்பே தெரிவிக்கப்பட்ட பிரகாரம் எம் ஒவ்வொருவரதும கைகளில் இருந்த "டோர்ச் லைட்டு’களை உயரே தூக்கிப்பிடித்து ஒளி யை உமிழ வைக்கின்றேம.
24

வர்ணஜாலமா - வர்ணக் கோலமா?
முழு ஸ்ரேடியமும் இலட்சக்கணக்கானுேரின் மின் மினி ஒளிகளினல் பிரகாசத்தை தேடியது.
அதே வேளை நாலாதிக்கிலிருந்தும் வாண வேடிக்கைகள்.
'விடைபெறுவோம் நண்பர்களே. மீண்டுமோர் முறை புதிய பெருவிழாவில் சந்திக்கும் வரையில் விடைபெறுவோம் தோழர்களே. தோழியரே" நெஞ்சை நெகிழவைத்து எழு கிறது அக்கோஷம்.
கரகோஷம் எழுப்பியவாறு ஸ்ரேடியத்தை விட்டு நாம்
வெளியேறும் போது வாழ்நாளில் மறக்கமுடியாத பிரியா விடை. t
கைகளைப்பற்றிக் குலுக்கி, கட்டி அணைத்து, முத்தம் பொழிந்து, கண்கள் பனிக்க 'சந்திப்போம், சந்திப்போம், மீண்டும் சந்திப்போம்," - ஒவ்வொருவரும் பரஸ்பரம் விடைபெறும் போது.
அந்தத் தேவதை பாடிய கீதம் காற்றில் தவழ்ந்து வரு கிறது.
‘எங்கெங்கும் பெருகியெழும்
எங்களது இளங்குலமே
நேர்மையுடை யீரேல்
நீங்களெல்லாம் எங்களது
நீளணியில் வாருங்கள்
வந்தெமது பாடல்களை
வளம் குலுங்கப் பாடுங்கள்
125

Page 65
எங்களது பாடல்
இளமையதன் புதுப்பாடல்.
அந்த நாத வெள்ளத்தில் மித்ந்து கொண்டே அங்கி ருந்து விடைபெறுகிருேம்.
அன்று ஆகஸ்ட் 4 ஆம் திகதி.
பல்லாயிரம் முகங்கள் பல்வேறு திசைகளிலிருந்து வந்த இதயங்கள் பரஸ்பரம் நினைவில் வைத்திருப்பதற்காக பரிசு களையும் அடையாளச் சின்னங்களையும் பரிமாறிக் கொள் கின்றனர்.
‘எங்கெங்கு வாழ்ந்திடினும் நாமெல்லோரும் ஒரு இலட்சியத்திற்காகவே இங்கே கூடிளுேம், அந்த இலட்சிய நோக்கை தாங்கம் சென்றதன் பின்பும் பரப்புவோம்' என்று மனதளவில் உறுதி பூணுகின்ருேம்.
வானளாவ உயர்ந்திருக்கும் பிரமாண்டமான 'இஸ் மாயிலோவா" ஹோட்டலை அண்ணுந்து பார்க்கின்றேன்.
நாம் தங்கியிருந்த அந்த 13 ஆவது மாடி எது- என் பதை ஆராயும் குழந்தைத்தனத்தால் ஒவ்வொரு கண்ணுடி யன்னவ்களையும் எண்ணிப்பார்க்கின்றேன்.
எமக்கு இதுநாள் வரையில் வழிகாட்டிகளாக செயல் பட்ட சோவியத் தோழர் தோழியரை கைகுலுக்கி கட்டி அணைத்து விடைபெறும் போது என் கண்கள் பனிக்கின்றன.
'மீண்டும் சந்திப்போம்' -நா தழுதழுக்க சென்னவர் களையும் பார்க்கின்றேன்.
இது என்ன பிரிவுத்துயர்-இதுவும் ஒரு கொடுமையா?
அவர்கள் யாரோ..? நாங்கள் யாரோ?
126

ஆனல் - எம்மனைவரையும் இப்படி சேர்த்து வைத்தது எது?
ஆம், உலக சமாதானம், சகவாழ்வு, யுத்தத்திற்கு எதிரான ஐக்கியம்.
மாஸ்கோ விமான நிலையத்தை நோக்கி மீண்டும் அந்த சொகுசு பஸ் எம்மை சுமக்கத் தயாரான போதும், அசையும் கரங்கள் ஓயவில்லை. வெளியே நின்று விடை கொடுக்கும் அவர்களைப் பார்த்து எம் இரு கரங்களையும் ஒன்றின் மேல் ஒன்றைப் பதித்து பற்றிப்பிடித்து உயர்த்துகிறேம்.
கையிலே முத்தமிட்டு காற்றிலே எறிகிருேம். இதற்குத் தான் 'ஃபிளையிங் கிஸ்' - என்கிருர்களோ?
மீண்டும் அந்த இராட்சத "ஏரோபுளட் பறவை எம்மை தன் வயிற்றினுள் சுமந்து கொள்கின்றது. சமதர்மப் பூங்காவை விட்டு அப்பறவை மேலே எழும்போது - உலக சமாதானத்திற்காக பல்லாயிரம் மலர்களை மணம்பரப்பச் செய்த அந்த சமதர்மப் பூங்காவை விட்டு அந்தப் பறவை எழும்போது.
'சோஷலிஸம் மரணத்தைப் போன்று நிச்சயமானது தான்' - என்ற வாக்கு என் காதுகளில் ரீங்காரம் செய்தது.
127

Page 66


Page 67
- இப் பயண அனுபவ நூை பூபதி ஈழத்து இலக்கிய மண்ணில் கியமான வித்து.
ஒரு பண்பட்ட பத்திரிகை கதை எழுத்தாளருமாவார். இவ பான 'சுமையின் பங்காளிகள் 'டலப் பரிசினைப் பெற்றுள்ளது காலச் சிறுகதைகள் இவரைச் சரி யுள்ளன. 'மொழி', 'புதர்க் கதைகள் இக் கூற்றிற்கு உரத்த
இலங்கை முற்போக்கு கொழும்புக் கிளைச் செயலாள உறுப்பினராகவும் பணியாற்றிய தில் வாழ்கின்றபோதிலும் இன் பின் செயற்பாடுகளுக்கு உதவி மனித அவலங்களையும் இ யெழும் இவர் இவற்றை எழு நின்றுவிடாமல் ஆக்கபூர்வமா அந்த அவலங்களையும் இன்னல் யல்ரீதியாக அயராது உழைத்து வில் 'இலங்கைத் தமிழ் மான டத்தை உருவாக்கி இதற்கென குடும்பத்தின் மூல உழைப்பாள வர்கள் தமது கல்வியை பல்க வதற்குப் பாதை சமைத்துக் ே
 

సారాజూ..
ல எழுதியுள்ள லெ. முருக ஊன்றப்பட்ட ஒர் ஆரோக்
பாளரான இவர் சிறந்த சிறு ருடைய சிறுகதைத் தொகுப் ’ இலங்கை சாகித்ய மண் 1. இவருடைய அண்மைக் ர்வதேச தரத்திற்கு உயர்த்தி
காடுகளில்’ போன்ற சிறு சான்று பகர்கின்றன. எழுத்தாளர் சங்க த்தின் ராகவும் தலைமைக் (5(Լք இவர் கடல்கடந்த கண்டத் 2ம் இந்த இலக்கிய அமைப் பருகிருர்,
ன்னல்களையும் கண்டு குமுறி ந்தில் வடிப்பதுடன் மட்டும் ன முறையில் செயலாற்றி ளையும் களைவதற்கு இயங்கவி வருகிறார். அவுஸ்திரேலியா வர் புலமைப் பரிசில்' திட்
ad ● ടൂ ரு நிதியத்தையும் அமைதது யைப் பறிகொடுத்த மாண லக் கழகம்வரை தொடர் காடுத்துள்ளார்.
ராஜபூரீகாந்தன்