கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: என் அம்மாவின் கதை

Page 1
| הוא
____ ="ت"===
 

|

Page 2


Page 3

11ú ðiúJMí é M9;
பேராசிரியர் என்.ண்முகலிங்கன்

Page 4
En. Amma vin KathaiLife of My Mother
By ProfN.Shanmugalingan CMrs. Gowri Shanmugalingan
First Edition 29.04.2004
Cover concept & design Shan & Sujen
Front Ancestor figure in the form of a squatting mother holding a child, BaKongo, - African Sculpture
Back Somaskanda-early eleventh century, Chola period. Bronze Tamilmadu,
Printed by Harikanan Printers, K.K.S.Road, Jaffna.
Published by NagalingamNoolalayam, Nagulagiri" Myliddy South, Tellippalai.

அணிந்துறை
கலாநிதி சண்முகலிங்கன் அவர்களின் அம்மா, திருமதி நகுலேஸ்வரி நாகலிங்கம் அவர்களின் மறைவு பற்றி அறிந்து பெரிதும் வருந்தினேன். சண்முகலிங்கன் தாய்மீது கொண்ட ஆழமான அன்பினை நீண்ட காலமாக அறிவேன்.
சண்ணின் பிரிவுத்துயருக்கு ஆறுதல் சொல்ல எங்களிடம் வார்த்தைகள் இல்லை. நல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகமானது. பல ஆய்வு நூல்களை, பண்பாட்டியல் சார்ந்த அறிவூட்டல்களை, கலை இலக்கியங்களை, எம் சமுகத் திற்குத் தந்த சண்முகலிங்கன் இன்று எங்கள் சமூகவியல் துறையின் முதல் பேராசிரியர். அவரது பல்கலை ஞானமும், சமூகமேம்பாட்டிலான அக்கறையும், உலகறிந்தது.
வழமையான 31ம் நாள் கல்வெட்டாக இல்லாமல் என் அம்மாவின் கதை என்ற வாழ்வியல் இலக்கியத்தினை எங்களுக்குத் தரும் சண்ணை வாழ்த்துவோம். தன் அம்மா வின் பெயரில் பேராசிரியர் சண்முகலிங்கன் உருவாக்கும் பண்பாட்டு மேம்பாட்டுக்கான நிறுவனம் நிலை பெறவும், அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம். எதிர்காலத்து மேன்மேலும் பல உயர்வுகளைக் கண்டு பெற்றதாய்க்கும், பிறந்த பொன் நாட்டிற்கும் சண்முகலிங்கன் புகழ் சேர்ப் பாராக.
பேராசிரியர் எஸ்.மோகனதாஸ், துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
iii

Page 5
தொடக்கவுரை
வலிகாமம் வடக்கு, கட்டுவன் - மயிலிட்டி தெற்கு கிராமப்புலம் ஒரு செம்பாட்டு விவசாய பூமியாகும். கிராமியப் பண்பாடு மேலோங்கி நின்ற அக்கிராம மக்கள் தமக்கிடையே ஒருவித உறவுப் பிணைப்புடன் வாழ்ந்தனர். இக்கிராமப்புலம் பலாலி விமானத்தள ஆக்கிரமிப்புக் குட்பட்டதால் எண்பதுகளின் பிற்கூறில் அங்கிருந்து இடம் பெயர்ந்த மக்கள் இன்னும் அங்கு மீளக்குடியேற வில்லை. தமது சொந்த மண்ணில் கால் பதிக்கும் நாளை எண்ணி, ஏங்கி நிற்கும் மக்களுள் சண்முகலிங்கன் அவர்களின் குடும்பத்தவரும் அடங்குவர்.
கட்டுவன் - மயிலிட்டி தெற்கில் கல்விப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் தோன்றிவர்கள் பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்களின் பெற்றோர்கள். தன் தமையன் கிளாக்கர் கந்தவனம் பொன்னலம்பலம் அவர்களின் வழிநடத்தலில், அவருடன் இணைந்தும், தனித்தும் கட்டுவன் - மயிலிட்டி தெற்கு - வறுத்தலை விளான் ஆகிய கிராமப்புலங்களை உள்ளடக்கிய அபிவிருத்திச் சங்கங்கள் பலவற்றின் நிர்வாகத்திலும், செயற்பாட்டிலும், சமூக, சமயத் தொண்டு களில் முன்னின்று உழைத்தவர். ஒழுக்கம் மிக்க கல்வி மான். சிறந்த நிர்வாகி, சமூகத்தொண்டன்.
தாயார் நாகலிங்கம் நகுலேஸ்வரி அவர்கள் சோதிடம், வைத்தியம், கலை, இலக்கியம் எனப் பல்கலை வல்ல பரிகாரியார் நாகமுத்து அவர்களின் ஐந்தாவது மகள். அவர் தந்தை வழியில் கலை ஞானமும், புலமையும் மிக்கவர். கல்வியில் நாட்டம் கொண்டவர். தன் இல்லறப் பணியுடன்
iv

கணவரின் சமூக, சமயப் பணிகளுக்கும் கை கொடுத்தவர். கூடவே மகளிர் மேம்பாட்டிலும், பெரும் அக்கறையுடன் ஊரில் அமைந்த மாதர்சங்கத்தில் பொறுப்பான பதவிகளில் கடமை புரிந்தவர். அவர்களின் கட்டுவன் வீடு நகுலகிரியில்" வழமையாக இடம்பெறும் இலக்கியச் சந்திப்புக்கள், நாடகப் பயிற்சிகள், விருந்துபசாரங்கள் யாவும் சிறப்பாக நடைபெற, கணவருடன் சேர்ந்து முன்னின்று உழைத்த பெருமாட்டி அவர் என அறிந்து கொண்டேன்.
பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்களுடன் நான் கொண்ட நட்புறவு, காலகதியில் அவர் குடும்பத்தவரையும் பிணைத்து நின்றது. அவரின் தாயாரின் அறிமுகமும், பழக்க மும் மிக அருமையானவை. தன்னைப் பற்றியோ தன் பிள்ளைகளைப் பற்றியோ கதைப்பதை விட, நாட்டு நடப்பு, பல்கலைக்கழக விடயங்கள், பத்திரிகைச் செய்திகள் போன்ற பொது விடயங்கள் பற்றி அறிவதிலும், கலந்துரை யாடுவதிலும் மிக்க ஆர்வம் உடையவர். தன் கணவர் அமரர் நாகலிங்கத்தின் அனைவாக "நாகலிங்கம் நூலாலயம்" என்ற பதிப்பகத்தை நிறுவி, அதன் அதிபராக அன்னார் பணிபுரிந்தார் என்றால் அவரின் அறிவுத் தேடலும், ஆர்வமும் பற்றி அறிந்து கொள்ள முடியும். மிக்க ஆளுமை கொண்ட அவர் ஆரவாரமில்லாமல் அமைதியாக உரையாடு வார். தன் வீட்டு நிர்வாகத்திலும் சரி, பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திலும் சரி மிக்க அக்கறை உடையவராக இருந் தார். என் மகன், பேராசிரியர் சண்முகலிங்கன் என்ற மன நிறைவும், பூரிப்பும், அண்மைக்காலத்து நோயுற்றிருந்த அவருக்கு புதுத்தெம்பை ஊட்டியது எனலாம்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவந்ததுதாயுள்ளம்.
அன்னாரின் பிள்ளைகள் - பேராசிரியர் சண்முகலிங்கம் அவர்களும், செல்வி காந்தா அவர்களும் பெற்றோர் மீது மிக்க பக்தியும், மரியாதையும், பாசமும் கொண்டவர்கள். மருமகள் பட்டதாரி ஆசிரியை சண்முகலிங்கன் கெளரி அவர்களும் மாமியார் மீது அன்பும், பரிவும் உடையவர்.

Page 6
அவர்களின் உரையாடல்களில் எப்பொழுதும் ஒரு பகுதி அம்மா/மாமி பற்றியதாகவே இருக்கும்.
பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதற் பேராசிரியராகப் பெருமை பெற்றார். பேராசிரியர் சமூகவியற் பாடநெறியை வளர்த்து தானும் நன்னிலையை எய்தி உள்ளார். அவர் கல்வியியல் பின்புலத்தைத் துணையாகக் கொண்டு சிறப்பாகக் கற்பிக்கும் ஆற்றல் மிக்கவர். மேலும் அவரின் கவித்துவமும், இசை ஞானமும் அவர் பெற்ற முதுசொம்கள். அவர் வெளியிட்ட ஒலிப்பேழைகள் சமூகத்தில் மிக்க வரவேற்பைப் பெற்றன. யாவருடனும் சுமுகமாகப் பழகும் இயல்பினர்.
அமைதியும், அடக்கமும் மிக்க மகள் காந்தா அவர்கள் யாழ்ப்பாணம் சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரியின் உப அதிபர், மரபுவழி வைத்தியப் பட்டத்துடன் எங்கள் வெளிவாரி பட்டப்படிப்பினை நிறைவு செய்து இப்பொழுது ஒரு B.A பட்டதாரியும் ஆவார். பிள்ளைகள் இருவரும் தமது கல்விப் பணிகளுடன் எச்சந்தர்ப்பத்திலும் தாயாரின் மனங் கோணாமல் அவரின் மனக்குறிப்பறிந்து நடந்து கொண்டனர். தாயார் மேல் அவர்கள் கொண்ட பரிவும், அவரைப் பராமரித்த விதமும்.
அது தாயாரின் பூர்வபுண்ணிய பலன்.
இந்த புண்ணியத்தின் ஒருபேறாகத்தான் சண்ணின் என் அம்மாவின் கதை இன்று எங்களைச் சேர்கின்றது.
பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, முன்னாள் துணைவேந்தர், யாழ் பல்கலைக்கழகம்.
vi

uதிப்புறை
அம்மா,
இதுநாள் வரை நீங்கள் வகித்த அப்பாவின் நினைவெழுதும் பதிப்பாலயத்தின் தலைமைப் பொறுப்பை எனதாக்கி சென்றனை.
உங்களின் இறுதிப் பிரியாவிடையைக்கூட இங்கிருந்த படியே தரவேண்டிய காலநிர்ப்பந்தம். உங்கள் நினைவு களை, கனவுகளை வாழ்நாள் உள்ளவரை காத்திருப்போம்; வாழவைப்போம்.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் எஸ்.மோகனதாஸ், தொடக்கவுரை வழங்கிய பொன் பாலசுந்தரம்பிள்ளை, நிறைவுரை நல்கிய மயிலங்கூடலூர் பி. நடராசன் ஆகியோருக்கு என் அன்பான நன்றி. அழகாய் இந்நூலை அச்சிட்டு தருகின்ற கரிகணன் பிறிண்டேர்ஸ் என்றும் எங்கள் அன்புக்குரியவர்கள்.
அம்மாவின் சடங்குகளில் கலந்தும், எங்கள் துயரிலே இணைந்தும் நின்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த இடத்தில் நன்றிசொல்ல விரும்புகின்றோம். அம்மாவின் பொன்னடிகளில் தம்பியின் என் அம்மாவின் கதையுடன், அம்மாவின் பெயரிலமையும் நகுலேஸ்வரி பண்பாட்டு மேம்பாட்டு நிறுவனம் பற்றிய அறிவிப்பும் இன்று வெளியா கின்றது.
அம்மாவின் பொன்னடிகளில் அர்ப்பணம்.
சென்னை- 10, பேராசிரியர் மனோ சபாரத்தினம்,
தமிழ்நாடு அதிபர், நாகலிங்கம் நூலாலயம். vii

Page 7

ன்ெ இம்மnவின் கதை
ஓம்மா, அம்மா மந்திரம் - நடும் ஆறுறுவில் ஆரினே என் +ங்ஆேம்
என் புதிய பாடலை அம்மா கேட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் என் பாடல்கள் ஓய்ந்து போயின. வெறும் பதிவுகள் மட்டுமே மிஞ்சியுள்ளன. ஓய்வில்லாத உழைப்பினில் சுழன்ற வாழ்க்கை ஒடுங்கி அழுதல் மட்டுமே செயலாகியது.
முலைக்கு முலை ஆளுக்கு ஆள் ஒழித்து ஒழித்து யாருடைய இடையீடுமின்றி அழுதலே வாழ் வானது.
இதுநாள்வரை எப்ப கேற் திறக்கும் என்று காத்திருந்து வெளியே பாய்ந்து ஓடிவிடும் ‘ஜொனியின் நடத்தையில் கூட திடீர் மாற்றம், பகலெலாம் அம்மா
--

Page 8
எங்களுக்காக காத்திருக்கும் ஈசிச்சியர்' பகுதியிலேயே அதன் இருப்பும்.
வீடு வெறிதாய் - தெரு வீதி வெறிதாய், அம்மா இல்லாத எல்லாமே சூனியமாய் நீள்கின்றன. நேற்று வரை விருப்பமான, பழக்கமான எல்லாமே திடீரென அன்னியப்பட்டனவாய் - வேண்டப்படாதனவாய்த் தெரி கின்றன.
ஆறுதல் சொல்ல நெருங்கும் உறவுகள் மீதும் ஆத்திரம் வருகின்றது. நாள் செல்லச் செல்ல வெறு வெளிப்பரப்பு அதிகரிக்கின்றதே தவிர குறுகுவதாய் இல்லை.
‘இனி நாங்கள் ஏன் அண்ணை இருக்க வேணும்' எனும் தங்கச்சியின் ஆத்ம கதறல் இந்த வெறு வெளியையே அதிர வைக்கும். அவளை அணைத்தபடி அம்மாவின் நினைவுக்குள் வாழும் தவத்தைச் செய்தல் ஒன்றே இப்போதுள்ள ஒரே தெரிவாகும். இந்தத் தவத்தின் தொடக்கமாய், என் அம்மாவின் கதையை எழுதும் நினைப்பிடை சடுதியில் மற்றொரு இடியும் விழுந்தது.
அம்மாவின் பிரிவுப் பொழுதில் எங்களுக்கு ஆறுதலான ‘அம்மம்மா'வின் இறுதிக் கிரியைகளையும் ஒரே வாரத்துக்குள் முடிக்கும்படியான காலக்கொடுமை யும் நிகழ்ந்து முடிந்தது. அயல் வீட்டு உறவாகத் தொடங்கி அம்மம்மாவாக மலர்ந்த உறவில் விழுந்த இடியில் உறைந்துபோன இதயமும் சிதறும்.
-02

எதையுமே செய்யமுடியாத, எதையுமே எண்ண முடியாத கடமைக்காய் விடியும் பொழுதிடை அம்மா வின் நினைவுத் தீபத்தை அணையாமல் காக்கும், அந்த இடத்தில் அம்மாவுக்குப் பிடித்த முற்றத்து மல்லிகைப் பூக்களை அர்ப்பணமாக்கும், ஒரே ஒரு கடமையில் மட்டும் மனம் லயிக்கும்.
‘நான் இனி சாமி கும்பிடமாட்டன்' என்று தங்கச்சி அம்மாவின் நினைவுத் தீபத்தை மட்டுமே கும்பிட்டு நிற்பாள். காந்தா அன்ரி மாதிரித்தான் நானும் எங்கடை அம்மம்மா போன பிறகு சாமிகும்பிடுகிறதில்லை என பக்கலில் நிற்கும் சிந்துவும் சொல்கிறாள்.
நானும் ஒருகிழமையாக சாமியறைப் பக்கம் போகவில்லைத்தான், ஆனாலும் ‘நித்தமும் அம்மா ஏற்றும் சாமியறைத் தீபத்தை நூர்ந்து போக விடலாமா என்ற எண்ணத்தவிப்பு உந்த, (அம்மாவுக்கு 5 பூ, உங்களுக்கு 3 பூவும் அம்மாவின் குட்டி கிருஷ்ணனுக் காக துளசியும் மட்டும்தான் என்ற நிபந்தனையுடன்) மெள்ள மெள்ள உள் நுளைந்தேன். தனித்திருந்து அழுவதற்கும் அந்த இடமும் பொழுதும் வசதியானது.
நாளும் பொழுதும் ‘அம்மா, அம்மா' மந்திரத்தில், அந்த தீபங்களில் தரிசிக்கக் கிடைத்த அம்மா உயிர்ப்பினிடை அம்மாவின் கதையை, அம்மாவின் கனவுகளை வாழவைக்கும் உறுதி மீட்கப்படும். அம்மாவின் நினைவுக்குள் உறைந்து உறைந்து கரைந்து கரைந்து என் அம்மாவின் கதையை எழுதும் பெருந்தவமாய் இன்றைய என் இருப்பு.
-03

Page 9
தவமான என் இந்த இருப்பிடை அம்மாவுக்கும் எனக்கும் பிடித்தமான அந்த ‘என்ன தவம் செய்தனை பாடல் எனக்குள் விஸ்பரூப தரிசனமாகும்.
யார், யார் யாருடைய தவப்பயன்? - மெளனமாய் எங்களுக்குள் ஆளையாள் பயனாளியாக்கும் கணங் கள் மனவெளியில் மின்னலிடும். உண்மையில் அம்மாவின் தவம் உயர்வானது தான். நான் வெறு மனே அந்த தவத்தின் பயன்தான். ஆனாலும் அம்மாவை என் அம்மாவாக பெற நான் என்ன தவம் செய்தேனோ. நாங்கள் என்ன தவம் செய்தோமோ.
என் அம்மாவின் கதையை எங்கே தொடங்கு வேன். எப்படிச் சொல்லி முடிப்பேன். ஓரிரண்டு பொழுதுக்குள், ஒருசில வரிகளுக்குள் அடங்கிவிடும் சிறுகதையா? எழுதி முடிப்பதற்கு. நீளும் என் மனவெளியின் வியாபகமாய், எல்லையற்று விரியும் அம்மாவின் அன்பு அலைகளை - அந்த அலைகளின் போர்வைக்குள் இதமாய் அர்த்தங்கள் கண்ட எங்கள் உயிர் அனுபவங்களை எழுத இப்பிறவி போதுமா.
மீண்டும் ஒரு பிறப்புண்டேல் - ஏன் ஏழேழு ஜென்மங்களுக்கும் என் கண்மணிகள் இரண்டுபேரும் தான் எனக்கு செல்வங்களாக வேண்டும் என அம்மா அடிக்கடி சொல்லுவார். அம்மாவின் வேண்டுதல் என்றும் பொய்த்ததில்லை; இனி, என் அம்மாவின் கதையும் முடிவதில்லை.
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்குப் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயம் விளங்கிய எங்கள் பாரம்பரிய
-04

கிராமங்களில் ஒன்றுகட்டுவன்; கட்டுவனில் வளமாரி யென ஒரு வளமான குறிச்சி. அங்குதான் என் அம்மா வின் உதயம்.
மரபுவழி ஞான ஊற்றுக்கண்களாய், உயிர் மையங்களாய் எங்கள் சமுதாய வாழ்வினை நெறிப் படுத்திய அந்நாளின் புகழ்பூத்த சுதேசவைத்திய - சோதிட - மந்திர - இலக்கிய ஆளுமைமிக்க குடும்பத் தின் புதல்வியாகும்பேறு அம்மாவுக்கு வாய்த்தது.
பரிகாரியார் நாகமுத்து - அன்னமுத்து தம்பதி களின் மகள் என்பதில் அம்மாவுக்குப் பெருமை. பரிகாரியார் நாகமுத்துவின் பேரன் என்பதில் எனக்குப் பெருமையும், பெருமிதமும். இரண்டறக் கலந்த இந்த பெருமிதங்களின் குறியீடாக ‘அப்பு என் செல்லப் பேரானது. அப்புவின் சாயலில் நானிருப்பதாக ஆரம்பத் தில் இந்தப் பெயரிடல் பின்நாளில் அப்புவே நானாகிய படிமலர்ச்சி.
அப்புவைத் தரிசிக்கும் பாக்கியம் எனக்கில்லை. அம்மாவுக்கே, 12 ஆண்டுகள் மட்டுமே தந்தையின் அரவணைப்புப்பேறு என காலம் நிர்ணயமாகி இருக்கை யில் நான் பேராசைப்பட்டென்ன. அப்புவைத் தெரியா விட்டாலும், அம்மாவின் கலைஞான வெளிச்சத்தில் அவரின் ஆளுமை வீச்சினை உணர முடிந்தது. அம்மாவுக்குள் அப்பு மூட்டிய அறிவுக்கனல், அம்மா வுக்குள் அப்பு ஏற்றிய ஞானச்சுடர் அணையாமல் அம்மாவால் காக்கப்பட்டது. காக்கப்பட்டதென்பதற்கு மேலாக அப்படியே எங்களுக்கு ஊட்டப்பட்டது.
-05

Page 10
அப்புவுடனாவது 12 ஆண்டுகள் வாழும் பாக்கியம் வாய்த்தது. ஆனால் தன் அம்மாவை இரண்டு வயதி னிலேயே இழந்துபோன அம்மாவின் துயரம் தாங்க முடியாதது. அம்மா மடியிலிருந்து அம்மாவின் கதையை நாங்கள் கேட்கின்றநாட்களில், 'தாய்முகம் கூட என் நினைவில் இல்லையே' என அம்மா அழும்போது அம்மாவை அணைத்தபடி நாங்களும் அழுவோம். ஆனாலும் அப்புவின் கதை தொடரும்போது அம்மாவின் அழுகையும் நின்றுவிடும். அப்புவைப் பற்றிய அம்மா வின் விவரணம் அத்துணை உற்சாகமாக அமையும். ஒவ்வொரு தரமும் புதிதாகச் சொல்வதான உயிர்ப்புடன் அவை எங்களைச் சேரும்.
குணரத்தினம், விசாலாட்சி, பரமேஸ்வரி, சடாட்சர குமரன் என்ற வரிசையில் அம்மா தான் ஐந்தாவது பிள்ளை. அம்மாவுக்கு பிறகு தங்கை மகாலகூழ்மி. இரண்டு அண்ணன்மார், இரண்டு அக்காமார். ஒருதங்கையென அமைந்த குடும்பத்தில் அப்புவுக்கு அம்மாதான் செல்லப் பிள்ளை.
அதிகாலையிலேயே எழுந்து முற்றத்துத் துளசிக்கு நீருற்றி, பூவைத்து சாமியறைக்கு செல்லும் அம்மாவின் வழமை அப்புவுடன் வாழ்ந்த அந்தப் பிள்ளைப் பராயத்திலேயே தொடக்கம் பெற்றது. கண்மூடி மூச்சடக்கி, ஐம்புலன்கள் ஒடுங்க அப்பு செய்யும் தியானம் பற்றி அம்மா எடுத்துச் சொல்லாத நாளே இல்லையெனலாம்.
"அப்பு கண்ணைத் திறவுங்கோ” என்று ஆரம்பத்
தில் கத்தி அழுத அம்மாவுக்கும், ஒருவித தியானஞானப் பயிற்சியை அப்பு அந்த வயதிலேயே ஊட்டிய
-06

வாண்மையை அம்மாவின் ஆளுமைக்குள் இன்றுவரை எங்களால் உணரமுடிந்தது.
இன்னும் புத்தகமும் கையுமாகவே எங்கள் சாமியறை அனுபவம் இடறும்வேளை, கண்மூடியபடி தேவார திருவாசகங்கள், சிவபுராணம், விநாயகர் அகவல், கந்தசஷ்டி கவசம் என மனஒன்றிப்புடன் மந்திரமாய் ஒலிக்கும் அம்மாவுக்கு முன்னால் எங்கள் பூசைகள் வெறும் ஆரவாரங்கள்தான்.
எதிலும் மன ஒன்றிப்புடன் கலந்துவிடும் இந்த தியான மனதின் வழிதான், எதனையும் தன் மனம்போல காணும் நேரான நினைவுகளின் வழிதான் ‘யாண்டு பலவாக நரையிலவாதல்’ என்ற புறநானூற்றுக் கால வாழ்வு அம்மாவுக்கு சாத்தியமானது என்பேன். இப்பொழுதுதான் கன்னத்தில் நாடகத்திற்கு பூசிய மாதிரி ஓரிரண்டு நரை மயிர்கள் தெரியும். பலருக்கு வியப்பான அல்லது அம்மாவும் தலை மைப்பூச்சோ என்ற சந்தேகத்திற்கான பதில் தெளிவானது.
நேற்றுவரை எங்கள் பரமேஸ்வரன் ஆலயத்திலா கட்டும், வேறெந்தக் கோயிலோ - வேளையோ - நான் பஞ்சபுராணம் பாடும் போதும், திருவெம்பாவை, சகலகலாவல்லிமாலை பாடும்போதும் என் பக்கத்தில் நின்றபடி மெதுவாக எனக்கு மட்டும் கேட்கும் வண்ணம் என் ஆதார சுருதியாக அம்மாவின் குரல் ஒலித்தி ருக்கும்.
என்னுடைய ராகசுகத்துள் எப்பவாவது ஒரு வரியை நான் மறந்து தொலைத்துவிடும் பொழுதுகளில்
-07

Page 11
அம்மாவுக்கு வருகின்ற கோபம் தணிய நீண்டநேரம் எடுக்கும்.
"பிழையாக உச்சரித்தால், பிழையாகப் பாடினா லும் அப்புவின் குட்டுதான் பரிசு. அழகாகப் பாடினால் கேட்டது கிடைக்கும் பரிசு’ என்று அம்மா அப்புவிடம் பயின்ற கண்டிப்பு இன்றுவரை என்னையும் வழிப் படுத்தும். ‘அண்ணையாக்கள் தான் அப்புவிடம் குட்டுவாங்குவாங்கள், நான் ஒருநாளும் குட்டுவாங்கி யதில்லை' என்னும் அம்மாவின் பெருமிதத்தில் அம்மாவின் ஞான செருக்கும் வெளிப்படும்.
அப்பு தன் ஞானவாரிசாக அம்மாவையே இறுதி வரை நம்பியிருந்தார். ‘என் வாழ்வின் தொடர்ச்சிக்கு உன்னைத்தான் நம்பியிருக்கிறேன். இந்த வைத்திய ஏடுகள், வைத்திய ஞானம், உன்னால் எங்கள் மக்க ளுக்காக வேண்டும். என ஆதங்கத்தோடு மகள் நகுலேஸ்வரியைப் பார்ப்பர்ராம் அப்பு
‘அப்பு எனக்கு புதுத்தோடு வாங்கித்தருவி யளோ. அப்பு கைநிறைய கலர்கலரா காப்பு வாங்கித் தருவியளோ. அப்பிடியெண்டால் கட்டாயம் படிப் பேன்’ இது சிறுமி நகுலேஸ்வரியின் எதிர்வினை.
“இப்பதானே புதுத்தோடு போட்டது என்று அப்புவின் பதில் வந்தால் அடுத்த பொழுதில் சுரையை கழற்றி தோட்டைத் தொலையவிட்டு புத்தம் புதுத் தோட்டினை எப்படியும் போட்டுவிடுவேன்' என தன் பிள்ளைப் பராயத்து தந்திரத்தை எங்களுக்கு சொல்லும் அம்மா.
-08

‘ஐயோ மேனை இந்த முறை திருவிழாவுக்கு ஒரு காப்புகாரனும் வரவில்லை; எல்லாரும் செத்து போனாங்கள்’ என்று அப்பு சொல்வதை அப்படியே கேட்டு, செத்ததான காப்புக்காரங்களுக்காக அழுகின்ற தன் அறியாமையையும் மறைப்பதில்லை.
இந்த கதைகள் அனைத்தினதும் முடிவில் ஒரு நீண்ட பெருமூச்சு; மெய் விதிர்ப்பு; அப்புவின் ஆசையை நிறைவு செய்யமுடியாத பாவி நான் என கண்கலங்கும் அம்மாவின் கண்ணிரைத் துடைக்க நாங்கள் புறப்பட்ட போதுதான் அம்மாவின் மனம் நிறைய தொடங்கியது.
பிள்ளைப்பிராயத்திலே அப்பு அம்மாவுக்குள் ஏற்றிய கனவுகள் பெரும் அழகாக அம்மாவுக்குள் வளர்ந்தன.
அம்மாவின் கனவுகள் எல்லையில்லாதன. எல்லையற்ற வான்வெளியையும் கடந்து நல்லன எல்லாம் எமதாக்கும் பெருங்கனவுகளாய் அமைவன.
ஒவ்வொரு தடவையிலும் தன் கனவுச் சிறகுகள் வெட்டப்பட்ட விதங்களைப் பற்றியும், சிறகுகள் முறிய தான் சிறைப்படுத்தப்பட்ட நாட்களைப் பற்றியும் நெஞ்சிலே ரத்தம் கொட்ட எங்களுக்கு தெரிய வருந்திய பொழுதுகள் பல, தனக்குள் அம்மா எரிந்த பொழுதுகளின் கனம் அளவிடமுடியாதது.
குடும்ப நண்பராக அந்நாளில் செனட்டர் நடேச பிள்ளை அவர்கள் இராமநாதன் கல்லூரியில் அம்மாவைச்சேர்த்து படிப்பிக்க மேற்கொண்ட ஏற்பாடு
-09

Page 12
களை, ‘அப்பு இல்லாமல் இனி, நீ இங்கு எப்படி தனிய இருப்பது, நட என்னுடன் எஸ்ரேற்ருக்கு என்று மூத்த அண்ணனால் பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது. அப்புவுக்கு பிறகு அண்ணன் காவல்; பெண் ணுக்கு படிப்பைவிட காவல் தான் முக்கியம் எனும் அந் நாளின் எங்கள் பண்பாட்டு நியமமொன்று அம்மாவின் இதயம் கதற கதற காக்கப்பட்டது.
அந்த கதறலை சங்கீதமாக்கும், அந்த மனசின் அழகை மீட்டெடுக்கும் உன்னதவாழ்வு எனக்கு அருளப் பட்டது.
ஆனாலும் அம்மா அடிக்கடி சொல்லுகின்ற மாதிரி எல்லாமே எங்களுக்கு ஒரு பெரும் காத்திருப்பின் பின்தான் கைவசமாகின்றது. அந்தக் காத்திருப்பின் கணங்களே எங்கள் வாழ்வானது.
அம்மாவின் பெருங்கனவாய், இலட்சியமாய் நான் வந்து சேர எத்தனை நாள் அம்மா காத்திருக்க நேர்ந்தது.
அம்மாவின் திருமணம் எப்படி நிர்ணயமானது என்பதனைப்பற்றி ‘என் அப்பாவின் கதையில் விரி வாகச் சொல்லியிருக்கிறேன். அப்புவின் ஐந்தாவது மகளான அம்மாவை அப்பா கைப்பிடித்த கதைக்குள் ளும் மனம் நெகிழும் பக்கங்கள் நிறையவேயுண்டு.
அம்மாவின் ‘தென்னாசிய சந்திர விம்ப முகமலர் அழகும், அறிவும் அப்பாவைக் கவர்ந்ததில் வியப் பில்லை. அப்பாவின் இந்த விருப்பத்திற்கு அண்ணன்
& -10

பொன்னம்பலத்திடமிருந்து வந்த எதிர்ப்பினை அப்பா ஏற்கும் நிலையில் இல்லை. எப்படியாவது அண்ணனின் பிடியிலிருந்து அம்மாவை விடுவித்து அம்மாவுக்கு கல்லூரிப் படிப்பினை தந்துவிடும் முயற்சியில் ஐயையா தோற்றுப்போக வேண்டியிருந்தது (பெரியய்யாவை ஐயையா என்றே அழைப்போம்). பெரியம்மாவுக்கு நாங் கள் வைத்தபெயர் அம்மம்மா. உண்மையில் இரண்டு வயதில் அம்மாவைத் தொலைத்த அம்மாவிற்கு பெரி யம்மா தான் அம்மா. அப்ப எங்களுக்கு அம்மம்மா தானே).
அம்மா மீது அப்பா கொண்ட காதல் உறுதி சங்க காலத்து மடலெழுதலாக - பழனியிலிருந்து உரக்கக் கேட்டது.
"அண்ணை, திருமணம் என்றால் நகுலையுடன் தான்; இல்லை என்றால் என்னை மறந்துவிடுங்கள், என்னுடைய கதை இங்கேயே முடியட்டும். பழனியி லிருந்து வந்த அப்பாவின் தந்தி, ஐயையாவை உலுப்பி யிருக்க வேண்டும். அம்மாவின் நெகிழ்ந்த மனதும் அதிர்ந்திருக்க வேண்டும்.
அம்மாவின் குடும்பவாழ்க்கை தெனவத்தை தோட்டத்தில் ஆரம்பமாகியது. அம்மாவின் உலகம் விரியவும், பன்மைப்பண்பாட்டு உணர்வுடன் எல்லோரை யும் நேசிக்கும் உள்ளம் வளரவும் இந்தக்காலம் பெரிதும் துணையானது. வெள்ளைக்காரத் துரை குடும்பத்திலிருந்து தோட்டத் தொழிலாளி குடும்பம் வரை மலையகத்துச் சிங்களக் குடும்பங்கள் தொடங்கி ஏனைய இஸ்லாமிய, தமிழ் நட்புகள் வரை அம்மாவின் உறவுவட்டம் பரந்திருந்தது. மானுடமே அம்மாவின்
-11
"$ ట్ర గ్రాs

Page 13
மனவெளி எங்கணும் நிரைந்திருந்தது. எந்தவகையான தாக்கங்களிடையேயும் அம்மாவின இந்த அடிப்படை கள் தளர்ந்ததில்லை அண்மையில் ஏடி பாதைத் திறப்பு டன் யாழ்ப்பாணம் பார்க்கவென காநதன் அழைத்து வந்த அந்த "அம்மே குடும்பத்துடனான அம்மாவின் பொழுதுகள் இன்னமும் நெஞ்சில பசுமையாய் பளிச்சிடும்.
இரண்டே நாள் பொழுது உறவுதான் இருவரிடத் தும் வாழ்மொழி தொடர்பாடலுக்கான வழியில்லை. ஆனாலும் இரண்டாவதுநாள் முடிவில், பிரிய விடைப் பொழுதில் கட்டித் தழுவி அம்மா சொரிந்த கண்ணீர், கூரிய வாளாகி இந்த நாாட்டின் இனவாதத்தையே அடியோடு அழித்திடாதா, அம்மாவின் பிரிவில் கொழும் பிலிருந்தபடி இந்த "அம்மேயின் மருமகன் நண்பர் ராஜா - ராஜபக்-2 தளதளக்கும் குரலில் அந்தக் கணங் களின் அர்த்தங்களை சிர்ந்து கொள்வார்.
தெனவத்தை தோட்டத்து பங்களா வாழ்வுபற்றிய அம்மாவின் பதிவுகள் யாவுமே அழகானவை; ஆனந்த
LÖTELE) till.
"தோட்டத்து பங்களாவில் இருந்து பார்த்தால் என்ன அழகாய் இருக்கும் வானுயர்ந்த இறப்பர் மரங்கள், பசுமை படர்ந்த தேயிலைச் செடிகள். கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும் பூமரங்கள். எத்தனை வகையான பறவைகள், அருவிகள்'
அந்தநாள் அனுபவ பகிர்வின்போது ஒரு கவிஞரா கவே அம்மா மாறிவிடுவார். இயற்கையை நேசிக்கும் இயற்கையின் எழிலில் தன்னை மறக்கும் அம்மாவின்
-2-

சுபாவம் இன்றுவரை சற்றும் தணிந்ததில்லை. இன் றைய எங்கள் கந்தன் அருள் முற்றத்து மல்லிகை, அருகருகே அழகழகாய் பூத்துக்குலுங்கும் எக்ஸோராக் கள், கலர் கலராய் இதழ் விரிக்கும் றோஜாக்கள், தினம் அம்மாவின் பூசைக்கெனவே தவறாது மலரும் வண்ண வண்ண செவ்வரத்தைகள், நித்தமும் மலர்ந்த நித்திய கல்யாணி, இலகுவில் அம்மாவின் கைகளுக்
*
|.... "

Page 14
குள் எட்டும் அழகிய அந்த மஞ்சள் பூக்கள் என நீளும் அத்தனையும் அம்மாவின் நண்பர்கள். அம்மாதான் அவர்களின் தொடர்பாளர். வேலை அவசரத்தில் புதிய பூக்களை நான் காணத்தவறினாலும் ‘மாலையில் பூ வாடியபின் வந்து வருந்தாமால் கொஞ்சநேரம் பார்த்துவிட்டுப் போ’ நித்தமும் இந்த அழகிய கணங் 356T.
எங்கள் இயந்திர பணிகளிடை அம்மாவை தனிய விட்டுவிட்டு நாங்கள் ஒடித்திரிகின்ற பொழுதுகளில், 'இராணி மாதிரி அந்தநாள் சீவியம்; என்னை கவனிக்க எத்தனை பணியாளர்கள்; சதா என்னோடு உரையாட, உறவாட எத்தனை உறவுகள். எவ்வளவு வசதியான வாழ்க்கை. பெருமூச்செறிய அந்தக் காலம் பற்றிய அம்மாவின் நினைவுகள் மீட்கப்படும்.
உலகமகாயுத்த காலம் அது. பெண்களை ஊருக்கு அனுப்பி, ஆண்கள் தனிக்குடித்தனம் நடத்திய வேளைகளிலும், இணைபிரியாத அம்மா அப்பா குடும்ப வாழ்வு அந்த நாள் செய்திகளாய், தகவல்களாய் அம்மாவிடம் நாங்கள் கேட்ட, கற்ற விடயங்கள் தான் எத்தனை. குடியேற்ற நாட்டாதிக்கக் காலத்து வடிவம் பெற்ற நாட்டார் பாடல்களை அம்மா பாடக்கேட்கும் போது உள்ள சுகமே தனிதான்.
முடி துறந்தாரே மன்னர் முடிதுறந்தாரே போல, எத்தனை பாடல்களை கேட்டோம். அம்மாவின் அனுப வங்களை பகிர்ந்திடும் விருப்பில் சிலவற்றை அம்மாவின் பெயரில் எங்கள் நாளிதழ்களிலும் இடம் பெறச் செய்ததுண்டு. நியமமாய் அம்மாவின் அனுபவ
-14

முழுமையையும், நூலாக்கும், ஒலி - ஒளிச்சித்திரமாக் கும் என் கனவு கால, கடமை அழுத்தங்களிடை நிறை வேறாமலேயே போனது. என் மனச்சித்திரங்களிலிருந்து மீட்க முடிந்தவை மட்டுமே மிச்சமாகும்.
அந்தநாள் அம்மா,அப்பா உறவுப்பிணைப்பினிற்கு சாட்சியான சில கடிதங்களை அப்பாவின் கடிதக் கோவைகளில் இருந்து என்னால் காப்பாற்ற முடிந் திருக்கிறது. இந்தக் கடிதப் பிரதிகளை அவர்களின் அந்தரங்கமென முன்நாளில் நான் படித்ததில்லை. 1988ல் என் அப்பாவின் கதையை எழுதியபொழுது தயக்கத்துடன் ஓரிரண்டைப் படித்தமைபற்றிக் குறிப் பிட்டிருக்கின்றேன்.
‘எல்லாம் வல்ல வைரவ சுவாமியின் திருவரு ளால் வாழும் அருமை ஆசைக் கண்ணே!’ என்று அப்பாவின் கடிதங்கள் ஆரம்பமாகும். ‘என் பிரிய நாதருக்கு’ என் அம்மாவின் பதில் கடிதங்களில் அன்பு கனியும்.
‘அன்பு கனிந்த கனிவே சக்தி' என்ற பாரதியின் கவிதை அடிகளை அர்த்தமாக்கும் அம்மாவின் வல்லமையில், அப்பாவின் வாழ்விலும் புதிய மலர்ச்சி கள். மல்லாகம் ஆங்கிலப் பாடசாலைக் கல்வியுடன், மலையகத்து தோட்டப்பாடசாலை ஆசிரியரான அப்பாவுக்குத் தமிழ் ஆசிரியையாக அம்மா வாய்த்த பேறுபற்றி அப்பா வெட்கத்தோடும், அம்மா தன்னடக் கத்தோடும் சொல்லக் கேட்டிருக்கின்றோம்.
-15

Page 15
அம்மாவின் இந்த ஆசிரியத்துவ விவகாரத்துள் ளும், ஒரு சோகமான மனவடுவைக் காணமுடியும். தானும் ஒரு ஆசிரியராகும் கனவில் மரபுவழி இலக்கிய இலக்கண ஞானமும், கல்வியும் தரும் பண்டிதர் பட்டப்படிப்புக்கான நூல்களை வாங்கிப் படிக்கத் தொடங்கிய வேளை, "முதலில் எனக்குச் சொல்லித் தாவன்; நான் பாஸ்பண்ணியபின் நீ படிக்கலாம் தானே' என்று அப்பாவின் இடையீடு மீளவும் ஒரு தடவை அம்மாவின் கல்வி ஆசைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
எப்பொழுதுமே தன்னை புறந்தள்ளி தன்னுடைய ஆசைகளை ஆழப்புதைத்து தன் அன்புக்குரியவர் களுக்காக வாழும் அம்மாவின் உள்ளமே அம்மாவின் பலமும் பலவீனமுமாகும். பின்னாலே ஊருக்கு மீளுதல், ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ் பரீட்சைக்குத் தயாராகுதல், எ நெருக்கிய பொழுதுகளிடை பின் அப்பாவுக்கும், பண்டிதர் பாடநூல்களைத் திறந்து பார்க்க நேரம் கிடைத்ததில்லை. ஊர் ஊராக இந்து போட் பாடசாலைகளில் ஆசிரியர் பணி. இடையே ஊரை நிமிர்த்தும் சமூக மேம்பாட்டுப் பணிகளில் பெரியய்யா பொன்னம்பலம் அவர்களுடன் தொண்ட னாய் தொடங்கி பின் சகாவாக ஊரிலுள்ள அத்தனை சங்கங்களிலும் முதன்மையான பதவிகளில் அப்பாவின் காலம் செல்லும்,
இந்த சமூகப்பணிக் களங்களிடையே அம்மா வின் பங்கும் நிறையவே இருந்தது. ஐக்கிய நாணயச் சங்க கணக்குவழக்குகள், கூட்டுறவுச்சங்கக் கடையின் கணக்குகளைச் சரிபார்த்தல் என அப்பாவோடு
-16

அம்மாவும் பின்நாளில் நாங்களும் இணைந்து பணிபுரிய வேண்டியிருந்தது.
இதற்குப் புறம்பாக அம்மாவின் சங்க சமுதாயப் பணிகள் தனித்தும் இடம்பெற்றுள்ளன. ஊரில் ஆரம்பிக் கப்பட்ட மாதர் சங்கத்தில் ஊரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அம்மாதான் பொருளாளர் பதவியில் அமர்த்தப்பட்டார்.
சங்கம் வளர்த்த -சங்கத்தினால் வளர்ந்த எங்கள் ஊரின் சமூக வாழ்வில் அப்பாவும் அம்மாவும் பிரிக்க முடியாத அங்கங்கள் ஆயினர்.
ஊருக்கு வந்தபின் அம்மாவின் கல்விக் கனவுகள், காலம் கடந்தவைகளாய் ஆழப்புதைக்கப்படு கையில் புதிதாய் ஒரு பெரும் கனவு மேலெழும். எஸ்ரேட்டில் இருந்தபோது கேட்கப்படாத, உணரப்படாத கேள்வி ஒன்றுக்குள், ஏக்கக் கனவுக்குள், அம்மாவின் மனது தள்ளப்படும். இந்த ஏக்கக் கனவு பலிதமாவதற்கு முன்தான் எத்தனை சத்திய சோதனைகள் அம்மாவுக்கு.
எத்தனை விரதங்கள் - கால்நடையாய். யாத்திரையாய். எத்தனை கோயில்கள், அடியழிப்பு கள்.
கடல் கடந்து இராமேஸ்வரம், பழனி, திருச்சி மலை கோட்டைப்பிள்ளையார், மதுரை மீனாட்சி என எத்தனை தலங்களில் வேண்டுதல்கள்.
இங்கே கதிர்காமயாத்திரையில் காட்டு வழி யெலாம் கல்லு முள்ளு பாரா நடைநடந்து - மாணிக்க
--17 سے ,

Page 16
கங்கையில் தோய்ந்தெழுந்த கையோடு சுவாமிமலை யேற்றம்.
ஊரிலே அப்பாவின் உரிமையான தண்ணிர்த் தாழ்வு ஞானவைரவர், அம்மாவின் உரிமையான வளமாரி வைரவர் மடைபரவு நேர்த்திகள்.
அம்மாவின் தவக்காலம், அம்மாவின் கனாக் காலம், ஓரிரண்டு ஆண்டு நீட்சி அல்ல; ஆண்டு பத்து கடந்த காத்திருப்பு.
மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல் தாய் என்ற பெருமை தனை மனங்குளிரத்தந்தவனே
இந்தப் பாடலை எத்தனைதடவைகள் என்னைக் கொண்டு பாடுவித்திருக்கின்றார். அந்தக் கணங்க ளெல்லாம் என்னைக் கட்டியணைத்து முத்தமிடும் அம்மாவின் கண்களில் வழியும் கண்ணிர் - அந்தக் கண்ணிர்த் துளிகளையும் ஊடறுத்து சுடர்விடும் முக LD6)fréd.
என்னுடைய வருகையுடன் அம்மாவின் மன வெளியில் மீளவும் புதிய புதிய கனவுகள் துளிர்விடத் தொடங்கின. ஆழப்புதைந்திருந்த அம்மாவின் முன்னை நாள் கனவுகளும் வாழ்வு பெறத் துடிதுடிக்கும். அத் தனை கனவுகளுக்கும் நான் வாரிசாக்கப்பட்டேன்.
அம்மாவின் மடியே என் பல்கலைக்கழகமானது
அம்மாவின் மனமே என் பெரும் செல்வமானது. அம்மாவின் ஆத்ம அலை வீச்சே என் சாரதியானது
-1.8-

என்னுடைய மானஸி - ஆக்க இசை அரங்கில் தொடக்கப் பாடலாக நீங்கள் அடிக்கடி கேட்கும்
நீல வண்ண கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா நிலையான இன்பம் தந்து எனை ஆளும் செல்வா வாடா
என் முதல் இசைப்பாடம், இந்தப் பாடலுடன் என் அம்மா மடியில் தொடங்கும். அம்மாவுக்கு சங்கீதம் பயிலவேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் அந்த நாளில் ஞானோதய வித்தியாசாலையில் ஆரம்பம்இடைநிலை வகுப்புக்களில் பயின்ற காலத்துடன் முடிந்து போனது. பள்ளிக்கூடத்தில் நடந்த குப்பிளான் செல்லத்துரை மாஸ்டரின் பண்ணிசை வகுப்புக்களில் சம்பந்தரின் ‘மாதர் மடப்பிடியும் தேவாரத்தை கடினமான அதன் தாளநடை பிசகாது பாடி ஆசிரியரின் பாராட்டை பெற்றுக் கொண்டதை என்ன ஆசையுடன் அம்மா சொல்லுவா.
பள்ளிப்படிப்போடு அம்மாவின் பண்ணின்ச கல்விக்கு முற்றுப்புள்ளி இடப்பட்டாலும், பண்மீதும் மண்மீதுள்ள கலைகள் மீதும் அம்மா கொண்ட பற்றும் ஈடுபாடும் சற்றும் தணிந்ததில்லை. ‘இறைவா, இத் தனை நாள் காத்திருக்க வைத்து நீ தந்த என் சண் முகத்தெய்வம், சகலகலா வல்லவனாக வாழவும் துணையாக வேண்டும். இதுதான் அம்மாவின் பிரார்த் தனையின் உச்ச வேண்டுதலாக இருக்குமாம்.
வேண்டுதலை நிதர்சனமாக்கும் வண்ணமாய் எனது சமூகமயமாக்க-பண்பாட்டுமயமாக்க சூழலும்
-19

Page 17
அம்மாவால் வடிவமைக்கப்பட்டது. எனக்கான கர்நாடக இசைப் பயிற்சி, சின்ன வயதிலேயே மாவிட்டபுரம் மணி ஐயர் அவர்களை வீட்டுக்கு அழைத்து அம்மாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொடரும் காலத்து இசைப்பயில்வுகள், அண்ணன் பரா(சிங்கண்ணை)வுட னான, ஆக்க இசை அனுபவப் பகிர்வுகளின் வழி என்னையும் ஒர் ஆக்கக் கலைஞனாக இன்று உலகம் கேட்கும்.
என்னுடைய அந்த புதிய பாடலின் தொடக்க வரிகளில் சொல்வது போல ‘அம்மா அம்மா மந்திரம் - தரும், ஆற்றலில் தானே என் சங்கீதம்' என் வாழ் வையே சங்கீதமாக்கியது அம்மா என்ற ஆதார ஸ்ருதிதான்.
என் பள் பருவ நாட்களில் நடந்த பேச்சுப் போட்டிகள், பாடடுப்போட்டிகள், எழுத்துப்போட்டிகள் என எவையாயினும் .ன் கலந்துகொண்டே ஆகவேண்டும், கலந்து கொள்வது மட்டுமல்ல, முதல் பரிசுடனும் வீடு திரும்ப வேண்டும். குரலை வளமாக்க வேப்பெண்ணை குடிக்க வைத்தல், கற்கண்டு - பால் என பெரிய ஏற்பாடுகளும் உடன் இருக்கும்.
என்றுமே அம்மா எங்களிடம் கேட்டது இந்த முதன்மையை, அவையத்து முந்தியிருக்கும் வாழ்வைத்தான்.
இந்த வகையில் என் தொடக்க கால பேச்சுக் களின் தயாரிப்பாளர்கூட அம்மாதான், எனது கன்னிப் பேச்சு இன்னமும் நினைவில் உள்ளது. திருவிளை
-20

யாடல் புராணத்தில் சிவன் கண்களை உமை அம்மை பொத்திக்கொள்ள உலகு இருண்டதான கதை பற்றி யது அந்தப் பேச்சு. இரண்டாவது பேச்சும் அம்மா எழுதித் தந்தது தான். “பாட்டுக்கொரு புலவன் பாரதி” - பேச்சுத் தலைப்பு பாரதியாரைப் போல நிமிர்ந்து நின்று பேசு என என் நெஞ்சை, நினைவுகளை, அறிவை, உணர்வு களை, நேராக பிஞ்சு வயதிலேயே நிமிர்த்திய அம்மாவின் அணைப்பிலே நானும் அழகாகவே வளர்ந்தேன்; அறிவாகவும் மலர்ந்தேன். எத்தனை கதைகளை அம்மா மடியிலிருந்து கேட்டேன்.
வட்ட நிலவு கதைகள் பலவும் வடிவாய் சொல்லி என்னை கெட்டிக்கார னாக்கி அறிவுக் கலைகள் தந்தாள் அன்னை
அம்மாவைப் பாடிய என் முதல் பாடலிலே இந்த கதை தந்த நலம் பற்றியே முதலில் குறிப்பிட்டிருக்கிறேன்.
வெறுமனே சிறுவர்க்கான கதை, நாவல், மட்டுமன்றி பாண்டிமாதேவி, பொன்னியின் செல்வன் என நீளும் கதைகளையும் கூட புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கும்போதே எனக்கு சொல்லியாக வேண்டும். கூடவே இடையிடையேயோ அடிக்கடியோ எனக்குத் தோன்றுகிற சந்தேகங்கள், கேள்விகளுக் கான விடைதேடும் வேலையும் அம்மாவுக்காகும்.
அறிவுத்தேட்டத்தில் அம்மா என்றும் சலித் ததில்லை. அந்த நாட்களில் அப்பாவின் முதுசொமாய் அவர் சேகரித்த புத்தகச் செல்வங்கள் முழுவதையும், படித்து முடித்த ஒரே ஆள் அம்மா தான். (1987ல்
-21

Page 18
எங்கள் நகுலகிரியை விட்டு இடம்பெயர்ந்த வேளை அத்தனையையும் இராணுவம் தூள்தூள் ஆக்கிய கதையை என் அப்பாவின் கதையிலே நீங்கள் படித்திருக்கிறீர்கள். அப்பாவின் கதைமுடிந்த கதையாக என் வீடுபேறு சிறுகதையையும் நீங்கள் படித்தி ருக்கலாம்.)
பின்நாளில் நான் தேடிய தேட்டங்களிலும், அம்மா படித்த நூல்கள் தான் அதிகம். T6) நெருக்கடிகளிடை அம்மாவிடம் நூல்களைக் கொடுத்து அம்மா தந்த 'குறிப்புக்களின் துணையுடன் சிலமேடை களை நான் சந்தித்ததும் உண்டு.
என்னுடைய நூலகத்தில் என்னுடைய எழுத்துக் களில் அம்மாவால் படிக்க முடியாத ஆங்கில நூல்க ளைக் கண்டு அம்மா விடுகின்ற ஏக்கப் பெருமூச்சும் அந்த மூச்சுடன் புலம்பலாகவே அம்மா வெளிப்படுத்தும் பேச்சும் நெஞ்சைச் சுடுவன.
“இப்படி ஒரு பிறப்பு" என நொந்து துவழும் அம்மாவுக்கு அந்த நூல்களின் சாரத்தையேனும் சொல்லி விடுவதன் மூலம் அவரின் நோவை தணிக்க முயன்றதுண்டு. என்னால் முடியாதது என் மகனால் இயலும் என்ற பெருமிதத்துள் தனது இந்தக் கவலை களை புதைத்து மீளவும் தன் இயல்பான கடமை களுக்குள் சட்டென நுழைந்துவிடுவார் அம்மா.
அறிவைத்தேடி அன்பைத் திரட்டி ஊட்டியது போலவே, எங்கள் உணர்வுகளை, உளச்சார்புகளை,
நடத்தைக் கோலங்களை அம்மா வழிப்படுத்திய வண்
-22

ணமே தனிதான். கற்றல் - கற்பித்தலில், அம்மாவின் வெகுமதி - தண்டனை முறை பற்றியே ஒரு தனி ஆய்வினை செய்யமுடியும். வகுப்பிலே முதலாம் பிள்ளையாக வராது விட்டால் வீட்டில் அம்மா முகம் பார்த்து கதைக்க நாள் எடுக்கும், அவ்வாறே பொருத் தப்பாடான நடத்தைக் கோலங்களுக்கான வழிப்படுத் தல்களும். இன்றைக்கும் சோடாப்போத்தல் ஒன்றை தொடுகின்ற பொழுது எனக்குள் பளிச்சிடும் அந்தப் பிள்ளைப்பருவச் சம்பவம். அன்று அம்மாவின் மாதர் சங்கக் கூட்டம் முடிகின்றவேளை, மாதர் சங்க அங்கத் தவர்களுக்கென வாங்கப்பட்டு மேசையில் இருந்த மீதிச் சோடாவை கேட்டு நான் அம்மாவிடம் பெற்றுக் கொண்ட பாடத்தைத்தான் இங்கு நினைவில் மீட்டு கிறேன். கூட்டம் முடிந்த கையோடு ‘வா அப்பு' என்று சங்கக் கடைக்கு என்னை அழைத்துச் சென்ற அம்மா தம்பிக்கு ஒரு கொழும்புச்சோடா போத்தல் குடுங்கோ' என்று வேலுப்பிள்ளை மாமாவிடம் சொல்லுவார். நானும் வெகு ஆனந்தமாகவே அந்தப் போத்தலை குடிக்கத் தொடங்குவேன். அரைப்போத்தலுக்கு மேல் குடிக்கமுடியாத பிஞ்சுவயிற்றுக் காலம் அது. ‘போதும் அம்மா’ இது நான். ‘இல்லைக் குடி. இது அம்மா. ஒரு வாறு அழுதுஅழுது அந்தப் போத்தலை முடித்தபின் என் கண்ணிரைத் துடைத்தபடி அம்மாவின் பாடம் மிக இதமாகவே எனக்கு புகட்டப்படும்.
இயல்பில் அம்மா ஒரு பெரும் சாத்விகி தான், தன்னை ஒறுத்தல், விட்டுக்கொடுத்தல், அம்மாவின் தனித்துவங்கள். முரண்பாடான பிரச்சினை நிலைமை களில் முடிவு தன் விருப்பத்திற்கு முரணானதாயினும் நாங்கள் தோற்றுவிடக்கூடாது அல்லது தோற்றதான
, -23

Page 19
கவலையில் துவண்டுவிடக்கூடாது என்பதில் எப்பொழு துமே அம்மா குறியாக இருப்பார். ஆனாலும் அடிப்படி யான வாழ்வியல் ஆதாரமான பண்புகளில் நடத்தைக் கோலங்களில் அம்மாவின் கண்டிப்பான நிலைப்பாட் டினை அம்மாவுடன் நெருங்கிப்பழகாதவர்களும் கூட உணர்ந்திருக்கிறார்கள்.
உண்மையில் நான் குறிப்பிட்ட முரண்பாடு களிடையில் நாங்கள் வென்றதான நிலைமைகளிலும் கூட காலவெளியில் இறுதியாகவென்று நிற்பது அம்மா தான். இத்தனைக்கும் அம்மாவின் நிலைப்பாடு என்பது எங்களுக்கு நல்லனவாக்கும் தன்மையினவே தவிர, சற்றும் தன்னிலை சார்ந்தனவல்ல. இவ்வாறான நிலைமைகளில் அம்மாவின் சொல் சார்ந்த (verbal) தொடர்பாடலை விட சொல்சாராத சமிக்ஞைகள்(Cues) தான் மிகமிகத் தாக்கமானவை. ஒரு பார்வை, அல் லது பாராமை; மெளனம் அம்மாவின் மிகப் பலமான தொரு ஆயுதம். கன்னம் குழிவிழ கணிகின்ற அந்தச் சிரிப்பும்கூடத்தான்.
இந்த இடத்தில் அம்மாவின் மன உறுதி பற்றிஅம்மாவின் மொழியில் மன ஓர்மம் பற்றியும் சொல்ல வேண்டும். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பத மாக அந்த சினிமா ஒறுப்பு விவகாரத்தைச் சொல்ல லாம். தியாகராஜபாகவதர், எம்.எஸ் சுப்புலக்சுமி, ரி.ஆர்.மகாலிங்கம், சிவாஜிகணேசன் என அபிமான நட்சத்திரங்களின் ரசிகையாய் வலம் வந்த அம்மா ஒரு தடவை குழந்தையான என்னையும் கூட்டிக்கொண்டு உறவினர்களுடன், தியேட்டருக்கு போயிருக்கிறார்.
-24

முள்ளியவளை வித்தியானந்தாவில் அப்பொழுது அப்பா ஆசிரியராக இருந்தார். விடுமுறைக்கு வீடு வந்த வேளையில் தான் அம்மாவின் திரைப்படப் பயணம் தெரியவந்தது. ‘என் பிஞ்சுக் குழந்தையையும் கொண்டு ஒரு படம் பார்ப்பா- அப்பாவின் அன்றைய கண்டனத்துடன், நின்றுபோனது அம்மாவின் படம் பார்த்தல். அம்மாவின் இந்த விரதம், நான் இணை இயக்குநராக சம்பந்தப்பட்ட ‘மாமியார் வீடு' திரைப் படத்தை பார்த்தலின்போதுதான் முடிவுக்கு வரும். அதுவும் என்னுடைய; பெயரை இயக்குநராய், பாட கராய், பாடலாசிரியராய், நடிகராய், திரையில் காணும் அம்மாவின் ஆவலில் தான் சாத்தியமானது.
என்பள்ளிப்படிப்பின் முடிவோடு, அம்மாவூட்டிய கனவுகளின் சுமையோடு, கற்பனைச் சிறகுகளோடு, கொழும்புக்கு நான் புறப்பட, காலம் நிர்ப்பந்தித்தது. அந்நாட்களில் அறிமுகமான தரப்படுத்தலும், குடும்பத் தின் பொருள்சார் அழுத்தங்களும், இந்த முடிவுக்கு என்னை இட்டுச்சென்றன.
வாழ்நாளிலேயே அம்மாவைப் பிரிந்து அதிகளவு தூரம் நான் புறப்பட்ட நாள் அதுதான். விக்கி விக்கி அன்று அம்மாவும், தங்கச்சியும் அழுத அழுகை. (அப்பா தன் மனவெழுச்சிகளை வெளியாகக் காட்டு வது குறைவு; தனக்குள் தன் சோகத்தினை அவர் விழுங்கிக்கொண்டிருப்பார்.) பின்நாளில், இன்றுவரை கல்விசார்ந்து, தொழில்சார்ந்த, அல்லது வேறு தேவைகளின் அடியாக நான் தூரப் புறப்படும் வேளை களிலும் கூட அந்த அழுகையின் அளவு குறைந்தது இல்லை. தூரத்துக்கு ஏற்ப, பிரிவு நாட்களுக்கு ஏற்ப,
-25

Page 20
அழுகையின் உச்ச எல்லை அதிகரிக்குமே தவிர தணி வதில்லை.
‘எப்ப வருவாய் - பதில் ‘கெதியிலை வருவ னம்மா’
‘நல்ல காரியத்துக்கு போகேக்கை அழுத முகத்தையா நான் பார்த்துப் போவது - அம்மாவின் அழுகையை தணிக்க சகுனம் பற்றிக்கூட நான் பிரகடனப்படுத்தவேண்டியிருக்கும். அடக்கிய அழுகைச் சத்தம் நான் கேற்றை தாண்டிய கையோடு மீள எழும். அழுதபடியே என்னுடைய பயணமும் தொடரும்.
முதல் தடவை நான் கொழும்பு சென்ற வேளை தாங்கமுடியாத இந்த உணர்வு அழுத்தங்களினால், அம்மாவுக்கு வாதம் வந்து நடக்கமுடியாமல் போனதும், அம்மாவின் வைத்தியச் செலவுக்கென உழைக்கும் நிர்ப்பந்தத்தில் நேரிலும் வந்து பார்க் காமல் நண்பன் குகனிடம் மருந்தை - காசை அனுப்பி வைத்த கொடுமையென அந்தக் காலத்து நெருக்கீடு கள் கொஞ்சமல்ல.
கொஞ்சக்காலம் வெள்ளவத்தை இராமகிருஷ்ண தியான மண்டபத்தில் gong - மணிஓசையும், கடற்கரை யின் அலை ஓசையும் தான் எனக்குத்துணை. அம்மா அம்மா என்று அந்த ஓசை எனக்குள் பேசும். அந்த ஒலிக்குள் ஒளித்தபடி கண்மூடியும், கடல் அலைகளை பார்த்தபடி கடற்பாறைகளில் இருந்தபடியும், என் தியானமும் அம்மாவுடனான உறவாடலும் நிகழும்.
-26

இந்த தியானப் பொழுதுகளிடையே தான் மெல்ல மெல்ல எனக்குள் இருந்த கவிஞனின் பிறப்பும், ஆக்க இசை வெளிப்பாடும் தலை நீட்டும்.
'அந்தி மயங்கிடும் வேளையிலே
அழகிய கடற்கரை மீதினிலே என் முதற் பாடலா கும்.- வரிசை வரிசையாக பல புதிய பாடல்கள் இந்தப் பாடல்கள். எல்லாம் வானொலி ஒலிப்பதிவுகளாகி ஒலிபரப்புமாகும். பாடல்களை யாத்தவர், பாடியவர், கவிஞர் என்.சண்முகலிங்கன், என ஊரறிய, உலகறிய இந்த ஒலிபரப்புக்களிடை அம்மாவுக்கு ஏற்பட்ட ஆனந் தந்தான் அம்மாவை அன்றைய வாதத்தில் இருந்து எழுப்பிய பெருமருந்து என உறுதியாகச் சொல்லு வேன்.
‘சந்தனமேடை என் இதயத்திலே.’, பரா அண்ணனின் பாடலைக் கேட்கும் போது சதங்கை ஒலி என சிரித்துச் சிரித்து மகிழும் அம்மா, 'ஆத்மாவின் இராகம் அழுகின்றதே.’, எனும் என்னுடைய பாடலைக் கேட்கும் வேளை தன் ஆத்மாவையே பிழிந்து அழுதல் தவிர்க்கமுடியாததாகும். பின்நாளிலே நேரிலே என்னைக் காணும்வரை என் பாடல் துயரத்துக்கான என் அம்மாவின் துயரம் கலைவதில்லை. "இப்ப நான் நல்ல சந்தோஷமாய்த்தானே இருக்கிறன் அம்மா." என்ற பிரகடனத்தோடு மகிழ்ச்சியாகவும் இருந்து காட்டவேண்டும். எனது துயரங்களின் வெளிப்படுத்தல் களை, படைப்புக்களை நானே தணிக்கை செய்யும் நடைமுறைகூட அந்நாளில் தவிர்க்கமுடியாததாகும்.
--22۔

Page 21
எவ்வாறெனினும் இந்தப் பாடல்கள் ஏனைய என் படைப்புக்கள் ஈட்டித்தந்த புகழ் ஓசைகளுக்கும் அப்பால், அம்மாவின் மனக்கனவுகள் வானைமுட்டும் வாஞ்சையுடன் அலைந்தபடிதான் இருந்தன. அதே வேளை கொழும்பில் ஆரவாரமான ஒலிகளுக்கு மத்தியிலும், எனக்குள்ளும் ஒரு வெறுமை தொடரத் தான் செய்தது. ஆனால் என்ன செய்வேன், ஏது செய்வேன் என்ற தெளிவில்லாது தவித்த எனக்கு சின்னக்கிளி அண்ணையின் கலியாணவீட்டிற்கு அம்மா வும், அப்பாவும் கொழும்புக்கு வந்தவேளை எனக்காக கொண்டு வந்த பாய் - பார்சலுக்குள் கண்ட அம்மாவின் மந்திரச் சொல் கடிதம் வழியுரைக்கும்; வழியுரைக்கும் என்பதற்கு அப்பால் என் விழி திறக்கும்.
அந்த நாள் சீவியத்தில் ஒரு கட்டில் வாங்கவும் வசதியில்லாத இருப்புப் பற்றிய சங்கதிகளை விட்டு விடுவோம். வீட்டில் இருந்த மட்டக்களப்பு பாயைத்தான் நான் கொண்டுவரச் சொல்லியிருந்தேன், அது பார்சல் வடிவில் இருந்தபோது ஏதும் புரியவில்லை. என் அறைக்கு கொண்டுபோய் விரித்த போது நான் வீட்டில் விட்டுவந்த என் புத்தகங்கள், நோட்ஸ் கொப்பிகளின் திரளுக்குள், மணியான - மந்திரமான என் அம்மாவின் அந்தக் கடிதம் பளிச்சிட்டது. −
"உன்னை நான் பெத்தது உன்னைக் கொண்டு உழைப்பித்து தின்னவல்ல, உலகம் போற்றும் பேரறிவாளனாக - உத்தமனாக நீ வளர, சான்றோன் என கேட்ட தாயாக நான் மகிழவேண்டும்.
- இப்படிக்கு,
D 60T 9LDLDT
-28

அந்த இரவின் மெல்லிய மின்விளக்கு வெளிச் சத்தில் ஒரு கோடி சூரியப் பிரகாசமாய் அம்மாவின் கடிதம் எனக்குள் ஒளிபாய்ச்சும்.
உறங்க முடியவில்லை. எப்படியும் நான் படித்து ஒரு பட்டதாரியாக அம்மா சின்னஞ்சிறு வயது முதல் சொல்லுகிறமாதிரி முன்னாலே, பின்னாலே நீள நீள எழுதுகிற பட்டங்களை பெறுகின்ற, அம்மாவுக்கு புகழ் தருகின்ற ஒருவனாகும் நினைவிடை - முடிவிடைதான் மனதுக்கு சமநிலை ஏற்பட்டது. அந்த இரவின் உறுதி யில்தான் என் கல்விப்பயணமும், அதன் கனிகளும் எனதாயின.
பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்ட பத்தில் தன் "பெஸ்ற் கிளாஸ்” மகனின் பட்டமளிப்பு விழாவில் முன்வரிசையில் இருந்த அம்மாவின் மிடுக்கு தொடர்ந்தது. என் பட்டங்கள், மேடைகள் என எங்கள் தேசமெலாம் விரிந்தது. கோயிலா, குளமா, இலக்கிய களமா, அரசியல் அரங்கமா; என் ஆய்வுப்புலங்களில் கூட பங்கேற்பு அவதானியாக அம்மாவின் துணை தொடர்ந்தது. என்னுடைய படைப்புக்கள் அனைத்தின தும், முதல் இரசிகையாக, முன்வரிசை இரசிகையாக, என் அம்மாவே இருந்தார், வாழ்வின் ஒவ்வொரு அசைவியக்கத்திலும் அகத்தும் புறத்தும் எத்தனை கொண்டாட்டங்கள் எங்களுக்குள். அம்மாவின் வாழ்த் தும், அம்மாவை வாழ்த்தும் எந்தனின் பாட்டும் கணந்தொறும் தொடர்ந்திருக்கும்.
அம்மாவின் வாழ்த்துக்களும் வழிகாட்டல் களும் எப்பொழுதுமே திருக்குறளாய் பளிச்சிடும்.
-29

Page 22
என்னைப் போலவே தங்கச்சி பற்றியும் அம்மா விடம் எல்லையற்ற எதிர்பார்ப்புக்கள்.
ஆசைக்கொரு மகன், ஆஸ்திக்கு ஒரு பெண் என்று அம்மாவுக்குள் எல்லையில்லாத ஆனந்தம். ஆனாலும் சின்னனில் வருத்தக்காரியாக தங்கச்சியை அடிக்கடி சின்னத்துரை டாக்குத்தரிடமும், கோயில் கோயிலாக நேர்த்திக்கடனுக்குமென கொண்டு செல்லும் பொழுதுகளிடை இந்த ஆனந்தம் நிலை குலைந்து போனதுண்டு. எனக்கு இப்பொழுதும் நல்ல ஞாபகம். அம்மா நெடுக தங்கச்சியை தூக்க பாவம் என்று என் இடுப்பில் அங்காலும், இங்காலுமாக இரண்டு கால்களும் தூங்க அவளை தூக்கித் திரிந்தது. நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலில் சத்தம் போட்டு அழ அழ பொன்னம்மா மாமிக்கு அவளை விற்று வாங்கிய பின்தான் ஆள் கொஞ்சம் உருப்பட்ட தாக அம்மா சொல்லுவா
இவ்வாறானதொரு நிலைமையில் எனக்குத் தந்தது போல நிறையக் கனவுகளை தங்கச்சிக்குத் தர அம்மாவால் இயலவில்லை.
‘அண்ணைக்கு மட்டும் சங்கீதம், எனக்கு மட்டும் ஏன் இல்லை' என்று பின்நாளில் அம்மாவுடன் தங்கச்சி செல்லமாக சண்டைபிடிக்கின்ற நாட்களில் அம்மாவுக் குள் கனன்ற தங்கச்சி தொடர்பான ஏக்கங்களை உணரமுடிந்தது.
அப்புவின் வேரைத்தாங்கும் விழுதாக, அம்மா விடம் அப்பு எதிர்பார்த்த அந்த கனவுகளின் நிதர்சன
-30

மாய் தங்கச்சியை உருவாக்கும் எங்கள் உறுதியிடை இன்று அவள் ஒரு ஆயுள்வேத வைத்திய பட்டதாரி. தான் படித்த லங்கா சித்த ஆயுள்வேத வைத்தியக் கல்லூரியிலே விரிவுரையாளராக, உபஅதிபராக பணிபுரியக் கிடைத்த வாய்ப்பினிடை அம்மா மனது ஆறினாலும், அவரின் ஏக்கங்கள் தணிந்ததில்லை. மேலே மேலே படிக்க வேண்டும்; சார்ந்த துறையில் சாதனைகளைப் படைக்க வேண்டும். இறுதிவரை இந்த கவலை அம்மாவுக்குள் இருக்கும்.
அவளை ஒரு பட்டதாரியாகக்காணும் அம்மாவின் கனவை ஒரு நீண்ட காலம் அம்மா சுமக்க நேரிட்டது. ‘அவளை நீ சரியாய் வழிப்படுத்தவில்லை' என்று என்னோடு கூட இந்த விடயத்தில் அம்மாவின் கோபம் விழுந்ததுண்டு.
ஆனாலும் அயராத அவள் உழைப்பில் அம்மாவின் அந்த ஆசையை தாமதித்தேனும் அவள் நிறைவேற்றிக் கொண்டாள். தங்கச்சியின் இந்த கலை மாணி - B.A தேர்வுக்காலங்களில் தங்கச்சி உறங்காத பொழுதுகளை விட அம்மா உறங்காத பொழுதுகள் தான் அதிகம். இந்தக் காலப்பகுதியையும் கூட விநாய கர் மணிமாலை போன்ற பல வழிபாட்டுப் பாடல்களை மனனம் செய்ய அம்மா பயன்படுத்திக் கொள்வார். 'எழும்பு, எழும்பு', 'படி, படி - அம்மாவின் தாரக மந்தி ரங்கள்.
எப்பவுமே எங்கள் வீட்டுக்கு நாலுபேர் யோகம்தானோ என அடிக்கடி எங்களுக்குள் கதைப்ப
-31

Page 23
துண்டு. அப்பாவை இழந்து மூன்றான தவிப்பிடை தான் நான்கென கெளரி வந்து சேர்ந்தாள்.
என்னை மணக்கோலத்தில் காணும் அப்பாவின் பேராவல் அவரை வழியனுப்பியபின் தான் சாத்திய மாதல் நியதியாகும். அப்பாவை கெளரிக்கு தெரியாதே என்ற ஏக்கம் இன்றைக்கும் எங்களுக்குள். இப்பொழுது அம்மாவின் பெருங்கனவாய் அம்மாவின் 10 ஆண்டு கால தவப்பொழுதையும் தாண்டி வளரும் எங்கள் குல வாரிசு வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் எங்களின் நான் கெனும் நியதி வெல்லும்.
தொலைபேசி வழி அந்த செய்தியைக் கேட்ட கணத்தில் ‘அம்மா’ என்று கெளரி அலறிய சத்தம் உறைந்துபோன என் இதயத்தையே அதிரவைக்கும்.
மருமகளாக வந்தநாள்முதலே கெளரிக்கும் அம்மா - அம்மாதான். அம்மா என்றுதான் இறுதிவரை அவள் அழைத்தாள்.
குடும்பம்பற்றிய என் சமூகவியல் வகுப்புக்களில் மரபுவழி கூட்டுக்குடும்பத்தின் இயங்கியல் சார்ந்த விளக்கங்களுக்கு நிதர்சனமாய் எங்கள் வாழ்வியல் இனிமைகள் என்றுமே எனக்கு துணையாகும்.
அம்மா உங்களோடை தானோ இப்பவும் இருக்கிறா’ என்று கேட்பவர்களுக்கான எங்கள் பதில் - இல்லையில்லை அம்மாவோடுதான் நாங்கள் இருக்கி றோம் என்பதாகத்தான் எப்பவும் இருந்தது. அப்படி சொல்லுகின்ற பொழுது நெஞ்சுநிமிர்ந்த ஒரு பண்பாட்டு பெருமையும் எங்களுக்குள் நிறைந்திருந்தது.
-32

எங்களை பிரிக்க எந்த சக்தியாலும் முடிய வில்லை. கெளரி வந்த கையோடு தனிக்குடும்ப அட்டைகள் எடுக்கும் நிர்ப்பந்தங்களிடை அன்றைய கிராமசேவை உத்தியோகஸ்தர் முதல், உதவி அரசாங்க அதிபர்வரை கூட்டுக்குடும்பம் பற்றி கற்பிக்க முயன்று, முடியாமல் பேருக்கு இரண்டு அட்டைகளை எடுத்துவிட்டு இறுதிவரை அம்மாவை தலைவியாகக் கொண்ட ஒரு அட்டையை மட்டும் பயன்படுத்தி எங்கள் ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய சம்பவத்தில் அம்மா கண்ட நிறைவை ஆழ உணர்ந்திருக்கிறேன்.
-ത്സ
* - ४ :- r V یہ جd روزہ مL ,(نک نے 0ط \چط2 دL - ۱ آکا یا تا ۶ ماr |
باد • روان ) - س ه ق به F یا 6 و 6
` s भी ?** '
عن عمر
93ነ དཀའ་
-33=

Page 24
எவ்வளவு மிடுக்காக எங்கள் பண்பாட்டின் இலட்சிய குடும்பமாக நாங்கள் நடைபோட்டோம். கண்பட்ட மாதிரி எல்லாமே முடிஞ்சுதே அண்ணை’ என்றவாறு அழும் தங்கச்சியின் தர்க்கம் மட்டுமே இப்பொழுது மிஞ்சும்.
தொலைக்காட்சி வழி ஸ்கானிங் பற்றிய புது அறிவு அம்மாவை சேர்ந்த நிலையில் கெளரியின் "ஸ்கானிங் பற்றிய செய்திகளையும் தனதாக்கி, ‘நேற்றிரவு ஓடிவிளையாடும் உங்கள் அழகான செல்வக்குஞ்சைக் கண்டேன்’ என அம்மா சொல்லி ஒருவாரம் கூடமுடியவில்லை. பதிலுக்கு ‘நேற்றிரவு அம்மாவின் அழகான முகம் என் கட்டிலின் மேலாக தரிசனமாகும்’ என அழுதபடி கெளரி சொல்லும்படியான காலக்கொடுமை எங்களுக்காகும்.
முன்னர் நான் குறிப்பிட்டபடி தன்னை ஒறுத்த, தன்னிலை மறுத்த, ஒருவித துறவு வாழ்விடை ‘இனித்தான் எனக்கு வாழவேண்டும் என்ற ஆசை துளிர்க்குதடா’ என்று கொஞ்சநாட்களாக அம்மா சொல்வதை சொல்லிச் சொல்லி அழும் தங்கச்சிக்கு ஆறுதல் சொல்லிச் சொல்லி நானும் அழுது கொண்டி ருக்கிறேன். எப்பவும் போல என்னுடைய வாழ்வின் உயர்வுகளில், வல்லமைகளில், துயரங்களில் துணை யாக இருக்கும் மனோஅக்கா, கெளரி பக்கத்தில் அவளுக்கு ஆறுதல் தந்தபடி எங்களை தேற்றிக் கொண்டிருக்கிறா. தன்னுடைய கவலைகளை எல்லாம் உள்விழுங்கி எங்களை தேற்றும் வழியில் 'பன்னிரண்டு வயதிலேயே அம்மாவும் அப்பாவும் இல்லாத அநாதை
ன்ெ இம்மாவின் கதை -34

யாக நான் வளர்ந்ததை நினைத்துப் பார்த்தேனும் உன்னுடைய அழுகையை நிற்பாட்டடா" என்று அக் கரையில் இருந்து சீவியத்தில் யாருடைய காலிலும் விழாத அக்கா அன்று எங்களை ஆசீர்வதிக்கும் சிவஞான அம்மையின் பாதங்களை வணங்கி கேட்ட வரம், இப்படி கேட்கப்படாமலேயே போகும் என கனவில் நாங்கள் நினைக்கவில்லை. தம்பியின் குழந்தையை அம்மா கையிலே அள்ளி கொஞ்சுதற்கு அருளவேண்டும். என எங்கள் குழந்தை - அம்மா நலத் தினை ஒரே வரத்துக்குள் இணைத்த அக்காவின் மதி நுட்பத்தை எங்களுக்குள் மெச்சி சில மாதங்கள் கூட முடியவில்லை.
இப்பொழுது கிடைத்த வரத்தை காப்பாற்றும் தவத்திடை அம்மாவின் இறுதிச் சடங்குகளிலும் கலந்து கொள்ளாமல் அக்கரையில் கெளரியும், அக்காவும்.
அப்பாவைப்போலவே அம்மாவின் இறுதிச் சடங்கும் எங்கள் உரிமை மயானத்தில் - எங்கள் தாய் மனையில் நிகழ, விதியில்லை.
இலந்தைக்காடான அம்மாவின் சீதனக்காணியை தன் உடல்உழைப்பால் ஒரு பெரும் சோலையாக்கி அந்த சோலை நடுவினிலே அம்மா பெயரில் அப்பா அமைத்த எங்கள் நகுலகிரி'யை தொலைத்த சோக மும், அம்மாவின் அடிமனதில் புதைக்கப்பட்டிருந்தது. தம்பிக்கும், தங்கச்சிக்கும், ஒரே தளத்தில் வாசஸ்தலம் என அம்மாவிடம்தான் எத்தனை திட்டங்கள் இருந்தன.
என் இம்முவின் கதை

Page 25
இந்த திட்டங்கள், உழைப்புக்கள் எல்லாவற்றி லும், இடிவிழ 1987ல் இரவோடு இரவாக ஊரைபிரியும் சோகம் நிகழ்ந்து முடிந்தது. ஜனவரி பத்தாந்திகதி ஆளையாள் தேற்றமுடியாத அழுகையுடன் ஊரில் இருந்து புறப்பட்ட பின் தைப்பொங்கலுக்கு நானும் அம்மாவும், சச்சி அண்ணையும் ஒழித்து ஒழித்து பயந்து பயந்து போன சம்பவத்தினை அம்மாவின் அந்த ஈசிச்சியரில் இருந்தபடி இன்று சச்சி அண்ணை நினைவு படுத்துவார்.
ஊரிலிருந்து 1988ல் பொங்கல்பானையுடன் புறப்பட்ட ஒருமாதத்தில் அப்பாவை தொலைத்திடும் சோகம் நிகழ்ந்து முடியும். ஊரை, உறவுகளை, பிரிந்து உயிர்வாழ விரும்பாத அப்பாவின் வைராக்கியத்தில் இன்றைய எங்கள் தேசிய உணர்வின் - உயிர்ப்பின் விஸ்வரூப தரிசனத்தினைக் கண்டோம். அம்மாவின் மடியிலேயே அப்பாவின் உயிர் பிரியும், மெளனமாய் உறைந்து போகும் அம்மாவின் இயக்கம், எங்களுக் காய் மீளவும் தொடரும். கதறி விழுந்த என்னை எழுப்பி அப்பாவின் கதையை எழுதவைத்து மெல்ல மெல்ல மனச்சமநிலையையும் எனக்குத் தருவார் அம்மா.
ஊரை - எங்கள் உயிரான வீட்டைப் பிரிந்த துயரம், நாங்கள் மாறி மாறி வசதிகளுடனும், வசதிகள் இல்லாமலும், அலைந்த வாடகை வீட்டு முற்றங்களில் பொங்கல் இடும் பொழுதுகளில் பொங்கி வழியும், எங்கள் புதிய இல்லத்து முற்றத்து துளசிமாடத்து மீது, மல்லிகை மீது. மற்றும் உள்ள பூமரங்கள், கனிமரங் கள் மீது அன்னியோன்னியமான உறவினை வளர்த்துக்
-36

கொண்ட பின்னரும் கூட ‘நகுலகிரி” முற்றத்துக்கான அம்மாவின் ஏக்கப் பெருமூச்சு தணிந்ததில்லை.
எங்கிருந்தாலும், “பிளாஷ் பாக்காக - பின்
நோக்கி நகர்ந்து தன் நினைவுகளுக்குள் வாழ்ந்து விடும் அம்மாவின் வல்லமையில்தான் இந்த ஊர்பிரிந்த சோகத்திலும் அம்மாவை எங்களால் காப்பாற்ற முடிந்தது என்பேன். எங்களது முற்றம் என்பது கூட அம்மாவை பொறுத்தவரை நகுலகிரி முற்றத்தையும் தாண்டி பின் சென்று அப்புவின் முற்றத்து பொங்கல் வரை நீள்வது.
அதிகாலையில் எழுந்து சூரியன் உதிக்கும்போது படைத்துவிடவேண்டும்; அப்பு காலத்திலிருந்து தொட ரும் அம்மாவின் பொங்கல் நியமம் அது. கூடவே “மாறாத நோய்கள் தலையிடி, கபாலம்' எனத் தொடங்கி 'சிவசூரியாய நம சிவசூரியாய நம சிவ சூரியாய நமக' எனும் அப்புவின் பாடலை கண்மூடி அம்மா பாடுதல் எப்பொழுதுமே எங்கள் பொங்கல் சடங்கின் சிறப்பு நிகழ்வாகும்.
ஆவணி ஞாயிறு, தைப்பொங்கல், புதுவருடம், (ஜனவரி முதல் திகதியிலும் கூட) என அம்மாவின் சூரிய பொங்கல்கள் நேற்றுவரை நேரம் தவறாத பெரும் சடங்குகள். 'வருஷத்திற்கு முந்தி தூசி தட்டி வீடுகழுவவேணும், முற்றத்து பூந்தோட்டத்து புல்லெல் லாம் துப்புரவாக்கவேண்டும், நெல்லு குற்றி அரிசி ஆக்க வேண்டும் - காத்திருந்த வருடம் இம்முறை எங்களுக்கு விடியாமலேயே போனது. எங்களது இல்லத்து சூரியனே மறைந்த பின்னால் இனி யாருக்கு, ஏன் பொங்கல்.
-37
ல்ெ ஏவின் ஆத

Page 26
அம்மாவுக்குள் இருந்த சமுதாய நேசிப்பு உயர்வானது. அம்மாவுக்குள் இருந்த மானுடம் உன்ன தமானது. ஒரு ஈ, எறும்புக்குக்கூட தீங்கு நினையாத அம்மாவின் உள்ளம் அந்த ஈ, எறுப்புக்காகவும் துடிக் கும் அம்மாவின் இதயம் எங்களிடத்திலும் அதிர்வு களை சேர்க்கும்.
Empathy - பிறர்துயரை தன்துயராக உணர்தல் என்ற பதத்திற்கான உட்பொருள் முழுமையை நான் கண்டுணர்ந்து கொண்டது என் அம்மாவிடத்தில் தான், சமூகத்தில் நலிவடைந்த மக்கள் தொடர்பான அம்மாவின் ஏக்கம்; அந்த நலிவுக்கு காரணமாகின்ற வர்கள் மீதான அம்மாவின் கோபம்; இவை அனைத் துக்கும் மேல:க அவர்களுக்கு நல்ல வாழ்வு தரும் படியான வல்லமை தன்னிடம் இல்லையே என்ற வருத் தம் - என்றும் தணிந்ததலலை.
சின்னனில் இருந்து அம்மாவூடாக எங்களுக்குள் பாய்ச்சப்பட்ட இந்த அதிர்வுகளின் வழிதான் எல் லோர்க்கும் வாழ்வு' என்ற சித்தாந்தம் மீதான எனது பற்றுறுதியும் கட்டியெழுப்பப்பட்டது. சமூகவியல் எனது வாழ்வானது, அதனை வெறும் பிழைப்பிற்கான கல்வி யென இல்லாமல், சமூக விழிப்புணர்வின், மனித - பண் பாட்டு மேம்பாட்டின் பெருந்தளமாய் என்னால் ஆக்க முடிந்ததன் பின்னால் சின்னனில் அம்மா எனக்கு ஊட்டிய உளச்சார்புதான் காரணம் என்பேன். இன்று என் பிள்ளைகளுக்கு என் பாடங்களிடை நான் ஆழ விதைத்திட விரும்புவதும், இதனைத்தான்.
-38

சமுதாய விவகாரங்களில், உலக விவகாரங் களில், அம்மாவுக்குள்ள ஈடுபாடு ஆழமானது. சமூக - அரசியல் செய்திகள், செய்தி விமர்சனங்கள் எதனை யும் அம்மா விட்டுவைப்பதில்லை. அனைத்திலும் அம்மாவுக்கென ஒர் அபிப்பிராயம் இருக்கும். என்னி டம் வருகின்ற என் நண்பர்கள் - பேராசிரியர்கள் வரை இந்த விமர்சனப் பகிர்வுகள் இடம்பெறும்.
அம்மாவின் விமர்சனம் வெறுமனை அறிவுலக விசாரணையாக மட்டும் முடிந்துபோவதில்லை; உணர்வுபூர்வ மனவெழுச்சி வெளிப்பாடுகளுடன் கூடிய தாக உண்மையானதாகவே என்றும் அமைந்திருந்தது. ஆளுக்கு, இடத்துக்கு தக கருத்தியல்களை மாற்றும் போலி விமர்சனம் அல்ல அம்மாவுடையது.
பார்ப்பது அரசியல் சார்ந்த உரையாடல்களா கட்டும், தொலைக்காட்சி நாடகத் தொடராகட்டும் - தீங் கான நியமங்கள், பிடியாத நடத்தைக் கோலங்கள் வெளிப்படும் வேளை உடனுக்குடன் பலமான எதிர்க் குரல் அம்மாவிடம் இருந்து வெளிப்படும். சில தொலைக்காட்சித்தொடர்களைப் பார்த்துக்கொண்டிருக் கையில், அம்மா, கெளரி, காந்தாவுக்குள் கட்சிகள், முரணான நிலைப்பாடுகள், எழுகின்ற சந்தர்ப்பங்களை யும் அவதானித்திருக்கின்றேன். இப்ப விடணை பிறகு விமர்சனங்களை வைத்துக்கொள்ளுவோம்’ என கெளரி யும், காந்தாவும் தொடருக்குள் உள்நுழைந்து விடுவ துண்டு. ஆனால் அம்மாவுக்கென்று ஒரு எல்லைப்புள்ளி எப்பொழுதுமே இருந்தது. அதுவரை சமாளிப்பார். அதற்கு அப்பால் எழுந்து வெளியே வந்து விடுவார்.
-39

Page 27
சில அரசியல்சார் கலந்துரையாடல்கள், நேர் காணல்கள் தொடர்பான அம்மாவின் விமர்சன வெளிப் பாடு மிகமிக தெளிவானது; நாகரிகம் கருதி நாங்கள் தவிர்க்க நினைப்பவை கூட அம்மாவால் தணிக்கை ஏதுமின்றியே வெளிப்படுத்தப்படும். காலப்போக்கில் அம்மாவுடன் நான் கற்றுக்கொண்ட மிக முககிய பாடமாகவும் இந்த அறிவுத்துணிவு அமைந்தது என் பேன். சபைகளில் உள்ளதை பேசவும் - உண்மைகளை நிலைநாட்டவும் நான் குரல் தரும் வேளைகளில் எப்பொழுதுமே அம்மாவின் ஆசீர்வாதம் உடன் இருந்தது.
சில வேளைகளில் ‘எங்கே கூடக்குறைய கதைத்து விட்டேனோ’ என இரவில் நான் மனங் குழம்பும் பொழுதுகளை அம்மா டக்கென்று கண்டு பிடித்து விடுவார். பின்னர் நடந்தவை பற்றிய மறு ஒலி பரப்பு. முடிவில் ‘சரியானதைத் தானே கதைத்திருக்கி றாய். பிறகு ஏன் கவலைப்படுகிறாய், என அம்மாவின் பின்னூட்டல் தெளிவாகவே என்னை தட்டிக் கொடுக்கும்.
எழும்பு எழும்பு படி படி அம்மாவின் தாரக மந்திரங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன் இந்த மந்திரங் கள் எங்களுக்கானவை மட்டுமல்ல; எங்களைச் சார்ந் தவர்கள் - சாராதவர்கள் என்ற எல்லைகளை கடந்த வை. 'எல்லோர்க்கும் கல்வி' என்று யுனெஸ்கோவும், ஏனையவர்களும் இன்று பிரகடனப்படுத்தும், இந்த தத்துவத்தின் உட்பொருளாய் செயல் அறிவாகவே
-40

அம்மாவின் வாழ்வும் வாழ்த்துக்களும் என்றும் அமைந்தன.
காணுகின்ற எந்தப்பிள்ளையிடமும், அம்மா கேட்கின்ற முதற்கேள்வி என்ன படிக்கிறாய் எத்தனை யாம் பிள்ளை, ஏன் படிக்கவில்லை, கவனமாய் படி - கொஞ்சம் வளர்ந்தவர்களானால், 'படியாத என்னை போன்றவர்களைப் பார்த்தாவது படியுங்கோ' என்பது வரை அம்மாவின் அறிவுறுத்தல்கள் செல்லும். இதனால் நல்லாய் படிக்கிற பிள்ளைகள், சாதனை நிலைநாட்டு கின்ற பிள்ளைகளைக் கண்டால், கட்டியணைத்து தான் சாதித்து விட்டதான ஒரு துள்ளல் மகிழ்ச்சியில், அவர்களுக்கு சொக்கிலேட் கொடுத்தல், இன்னும் இன்னும் பரிசுகள் தருதல் என அம்மாவின் உற்சாகம் கரைபுரளும்.
இந்தவகையில்தான் என்னுடைய பிள்ளைகள் எல்லோருமே அம்மாவின் பிள்ளைகளும் ஆனார்கள். என்னுடைய உறவுகள், நண்பர்கள் எல்லோருமே அம்மாவுக்கும், உறவும், நட்புமானார்கள்.
நாகலிங்கம் நூலாலயத் தலைவியாக அம்மா வின் செயற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான வாசகர் களின் உறவு அம்மாவுக்குக் கிடைத்தது. நாகலிங்கம் நூலாலய வெளியீட்டு அரங்குகள், ஏனைய பண்பாட்டு நிகழ்வுகளின் போது அம்மாவின் அன்பின் ஆளுகை வீச்சு எங்கணும் பரந்தது.
-41

Page 28
E. ப்ரீத்ே
 

அம்மாவின் பிரிவிடை என் பிள்ளைகளும், ஏனைய உறவுகளும் துடித்த துடிப்பிடை அனைவரை யும் ஒருசேர போர்த்த அம்மாவின் பேரன்பின் மகத்துவம் வெளிப்படும்.
அம்மாவின் இறுதிக்கிரியைகளில் யாதொரு குறையும் நேராமல் காத்தலையே தம் அஞ்சலியாக்கி, யோகா அண்ணையும், சுந்தரலிங்கம் அங்கிளும் எங்கள் நெஞ்சைத் தொடுவார்கள். -
இறுதிப் பிரியாவிடையில் ஆயிரமாய்த் திரண்ட எங்கள் தேசத்து அறிவியல், அரசியல், சமூக பண்பாட்டு முதன்மை ஆளுமைகள் தொடக்கம் வாழ்வின் அனைத்துத் தளங்களையும், பிரதிநிதித்துவப் படுத்திய மக்கள் திரளில் அம்மாவின் சமூக வாழ்வின் அர்த்தம் தெளிவாகும். தொழிலுக்கு தேவாரம் பாட வந்த அந்த பாட்டுக்கார ஐயாகூட சேர் உங்கடை அம்மாவா என்று அழுதழுது அபிராமி அந்தாதியை பாடிநிற்பார்.
"உங்கள் அம்மாவின் மறைவு ஈடுசெய்ய முடியா தது, எல்லோரோடும் இனிமையாகப் பழகும் அவர், நல்லதொரு குடும்பத்தலைவி, இவரது இழப்பு உங் களை மட்டுமன்றி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தி யுள்ளது' என ஆறுதல் மொழி சொன்னார் நல்லை ஆதீன ஸ்வாமிகள்.
"A lovely mother, I have expericnced in my
lite time - ஓர் இரண்டு நாட் பழக்கத்தில் நாத் தள தளக்க அஞ்சலிப்பார் அந்த யப்பானிய மானுடவியல் பேராசிரியர் அஷிவா,
-4-

Page 29
‘என்னுடைய இன்றைய கல்வி உயர்விற்கு நீங்கள் தானே அம்மா காரணம்; போரின் உச்சத்தில், இழப்புக்களின் கொடுமையில் இழக்கக்கூடா உறவு களைத் தொலைத்து ஊரைவிட்டே சென்றுவிடும் எங்கள் முடிவைத் தடுத்து, பல்கலைக்கழகக் கல்வி முக்கியத்துவத்தை என்ன ஆணித்தரமாக எடுத்து ரைத்தீர்கள். அதனால் நான் இன்றொரு M.Sc பட்டதாரி. இப்ப எங்களை தனிக்கவிட்டு நீங்கள் போனதென்ன' என தன் மனத்துயரை மடலாக்குவாள். தங்கை தாரிணி பரமசிவம்.
‘மூன்றே மாதப் பழக்கம் தானே அம்மா, ஆனாலும் பல ஜென்ம பந்தமாய் என் உணர்வு களம்மா. என்னை ஒரு காலமும் ஏமாற்றாத எங்கள் வைரவர் சுவாமியிடம் அம்மாவின் நலத்திற்காக நான் வைத்த நேர்த்தி நிறைவேறாமலே போகுமென்று துளிகூட நினைத்ததில்லை. பிறப்பால் வரும் உறவு களைவிட பிணைப்பால் வரும் உறவின் வலுவினை நான் படித்துக் கொண்டது அம்மாவிடம் தான்’ என தன் உள்ளம் குமுற அம்மாவை ஆராதிப்பாள் என் மாணவி ஜெயந்தினி.
‘எங்கள் கல்வி உயர்வினில் நிறைவு கண்ட தாயே, அம்மா என்ற உணர்வின் உன்னதத்தை உணர்த்திய தாயே என மனம் உறைய போற்றி நிற்பான் ராஜேஸ் கண்ணன்.
‘என் சமூகவியல் - அரசறிவியல் - மானுடவியல் - பண்பாட்டியல் மாணவ சமூகம் முழுமையும் கண்ணிர் சொரிய, கவிதா அஞ்சலிகளுடன் அம்மாவை வலம் வருவார்கள்.
-44

என் மாணவர்களின் அத்தனை பொதுநிகழ்வு களிலும், அம்மா கலந்து நிறைந்திருக்கிறா. அம்மா இல்லாத அரங்கு என்று ஏதும் இல்லை எனும்படியாய் என்னுடைய வாழ்வின் அரங்குகளில் என்ன அந்தரங் கங்களில் என்ன அம்மாவின் அன்பெனும் குளிர் நீழல் எப்பொழுதுமே எனக்கு வாய்த்திருந்தது.
‘சண், நீ கொடுத்துவச்சவன்ரா - எப்பவும் அம்மாவுடன் குறையாத அன்புடன் இந்தக் காலத்திலும் வாழ காலமும், காலமாற்றங்களும் எத்தனைபேரை அனுமதித்தது என என் நண்பர்கள் எனை வாழ்த்தும் கணங்களில் எனக்குக் கிடைத்த வரமாக நான் மகிழ்ந்த பொழுதுகள் இனி வரலாறாக மட்டுமே எஞ்சும்.
அம்மா விடைபெறுவதற்கு சில நாட்களின் முன்னர்தான் அம்மாவின் நெடுநாள் எதிர்பார்ப்புக்களில் ஒன்றான என் பேராசிரியர் பதவி பற்றிய முடிவு தெரிய வரும்.
இந்த முடிவைச் சொன்ன வேளை, ‘என்ரை பேராசிரியர் எப்பவும் பேராசிரியர்தானே' என்றபடி தன் மென்விரலால் என் சேட்டிலே கொழுவி என்னை இழுத் தணைத்து முகம்மேல் முகம்வைத்து முத்தாடிய அம்மா, பெருமூச்சுடன், இந்த மகிழ்ச்சியை கொண்டாட முடியாதபடி உடல் தளர்ந்துபோன தன் நிலைக்காக வருந்திய பொழுதின் கொடுமை, வாழ்நாள் முழுவதும் நான் அழுதாலும் தணியாது.
எங்கள் துணைவேந்தர்கள் தொடக்கம், துணை யாக துயரிடை கலந்த அத்தனை உறவுகளும், "சண்
- -45

Page 30
பேராசிரியர் பதவி அடைந்ததை கேட்டு மகிழ்ந்துதானே அம்மா போயிருக்கிறா’ என எனக்கு ஆறுதல் சொல் லிக் கொண்டிருக்கிறார்கள்.
எத்தனை பதவிகள் இனி என்னைச் சேர்ந் தென்ன?
‘அம்மா இல்லாத சண்முகலிங்கன்’ என்ற என் இந்த நிலையை எதுவும் மாற்றிவிடுமா.
நானும் மேலேபோய் அப்பாவுக்கும், அம்மாவுக் கும் நடுவில் நித்தியமாய், நிரந்தரமாய், சோமஸ் கந்தனாய் வாழும் ‘சாரூப பதவியில்தான் இனி என் ஆறுதல்.
-46
 

நிறைவுரை
வட்ட நிலவு கதைகள் பலவும் வடிவாய் சொல்லி என்னை கெட்டிக் காரனாக்கி அறிவு கலைகள் தந்தாள் அன்னை என்பது குழந்தைக் கவிஞர் என் சண்முகலிங்கன் அவர்களுடைய முதற்குழந்தைப் பாடல். இது எல்லா குழந் தைகளும் தம் அன்னையைப் பற்றி எண்ணும் விடயந்தான். ஆனாலும், இளமைப் பருவத்திலேயே எங்கள் கவிஞர். அதனைப் பாடியிருக்கிறார் என்பது கவனத்திற்குரியது.
விளையும் பயிர்; முளையிலேயே தெரிந்தது. குழந்தைப் பருவத்திலேயே வளமான சமூகமயமாக்கம் சண்முகலிங்கனுக்கு வாய்த்தது. அம்மா - அப்பா அன்பிலே அவரின் ஆளுமை சிறப்பாக வளர்ந்தது. நாகலிங்கம் - நகுலேஸ்வரி தம்பதியினர், தங்கள் இரண்டு பிள்ளைகளை யும் உயர் நிலைக்கு கொண்டுவந்துள்ளனர். சண்முகலிங்கன், யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் - சமூகவியல் துறையின் தலைவர், நாகேஸ்வரி (காந்தா) லங்கா சித்த ஆயுள் வேதக் கல்லூரி உபஅதிபர். பல்துறைப் பேரறிஞரும் கலைஞரும் எழுத்தாளருமான சண்முகலிங்கன் தந்தையார் 1988ல் அமரரான போது, 'என் அப்பாவின் கதை' என்ற நூலை எழுதி வெளியிட்டார். ஒருவர் அமரரானால் அவரின் நினைவாக சில பக்கங்களைக் கொண்ட கல்வெட்டு நூலை வெளியிடுவதே நீண்ட மரபாக இருந்தது. இந்த நூற்பிரதிகளில் பெருமளவு அன்றே மறைந்துவிடும். இந்த நிலையை நீக்க சமய நூல்கள், குழந்தைப்பாடல் நூல்கள், கவிதை நூல்கள், நாடக நூல்கள் முதலியதரமான நூல் களை வெளியிடுவதும் மரபாகியது. நினைவாக நூல் வெளி யிடும் மரபில் 'என் அப்பாவின் கதை' தமிழுக்கு ஒரு புதிய வரவாக இலக்கியத் தரம் வாய்ந்த நூலாக, சமூக வரலாற்று நூலாக அமைந்துவிட்டது. தனிமனிதனின் சுயவாழ்வு மட்டுமன்றி, சமூகவாழ்வும் விரிவாக இடம்பெற்றுள்ளது. இது
ன்ெ இம்மாவின் கதை -47

Page 31
இப் புது மரபு இலக்கிய நூலின் சிறப்பாகும்.
இந்த நூலை வெளியிட நாகலிங்கம் நூலால யத்தை' நிறுவி, அதன் அதிபராகப் பொறுப்பேற்றுப் பணி யாற்றி எட்டு நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டவர் திருமதி நகுலேஸ்வரி நாகலிங்கம். அந்த முதல் நூலின் முதற் பதிப்புரையில்,
அப்பா, என்னை ஒரு பதிப்பாலயத்தின் தலைவியாகவும் பணித்தனை. அரை நூற்றாண்டு காலப் பயணத்தில், உங்கள் தொண்டுகளில் தொடர்ந்த என்னிடம் ஒடத்தையே செலுத்தும் பொறுப்பினையும் தந்தனை. உங்கள் பெயர் சொல்லிப் பணியாற்றும் நாகலிங்கம் நூலாலயத்தின் இந்த முதனுாலை ஆசீர்வதியுங்கள்"
என்று அமரராகிவிட்ட தலைவரோடு நகுலேஸ்வரி பேசுகின்றார்.
தமது பதிப்பகத்தின் எட்டாவது நூலில்; அவர் பின்வருமாறு தமது பதிப்புரையை எழுதினார்.
தமிழை அறிவியல் மொழியாக்கும் எங்கள் பதிப்பகக் கனவுக்கு வடிவம் தருவதாய் சண்முகனின் பண்பாட்டின் சமூகவியல் நூல் புதுவரவாகின்றது. மீண்டும் எங்கள் அடுத்த நூலில் சந்திப்போம்"
அடுத்த நூலில் எங்களைச் சந்திப்பதாகக் கூறிய திருமதி நகுலேஸ்வரி நாகலிங்கம் அவர்கள் பேராசிரியர் சண்முகலிங்கனின் 'என் அம்மாவின் கதை' என்ற ஒன்பதா வது நூலில் அமரராக எம்மைச் சந்திக்கிறார். இது எமக்குப் பெருந்துன்பத்தைத் தருகின்றது. முதல் நூலைப் போலவே இதுவும் ஓர் இலக்கிய நூலாக சிறப்பாக அமைந்துள்ளது. 'அம்மா"வின் வாழ்வு சமூக, இலக்கியமாக விரிவாக எழுதப் பட்டுள்ளது. இவ்விரு நூல்களிலும் பேராசிரியர் சண் அமரராகிவிட்ட தந்தை, தாயரின் நல்வாழ்வை முழுப்
-48

பரிமாணத்துடன் புதுமை நோக்கில் அறியத் தந்துள்ளார். இவை மகன் தந்தை, தாயர்க்கும் அவர் சார்ந்த சமூகத் தினர்க்கும் ஆற்றும் பெரும்பணியாகும்.
அமரராகிவிட்ட நகுலேஸ்வரி நாகலிங்கம் அவர்கள் நினைவாக நகுலேஸ்வரி பண்பாட்டு மேம்பாட்டு நிறுவனம்" (Naguleswary Foundation for Cultural Development) 6762itb அமைப்பு உருவாக்கப்படவுள்ளதான செய்தி 'என் அம்மா வின் கதை' என்ற இந்த நூலின் வழி அறிவிக்கப்படுகின்றமை மகிழ்ச்சி தருகின்றது. இந்நிறுவனம் அம்மையாரின் நினை வோடுஅரிய பணிகளை ஆற்றுமென்பது உறுதி.
மகாஜனக் கல்லூரிப் பழைய மாணவரான பேராசிரியர் சண்முகலிங்கன் மாணவராக இருந்த போதே இயல், இசை, நாடகம் என முத்தமிழ் வல்ல கலைஞராக விளங்கினார். எமது ஆசிரியரான கவிஞர் கதிரேசர்பிள்ளை அவர்கள் கல்லூரி மாணவர்களுடன் நாடகப் போட்டிக்கு மட்டக்களப்பிற்கு வருவதாக அறிவித்திருந்தார். மட்டக்களப்பில் ஆசிரியராக இருந்த யான் அவர்களை அங்கு சந்தித்தேன். அகில இலங்கை நாடகப் போட்டியில் பங்குபற்றிய கல்லூரி முதற் பரிசு பெற்றது. அன்று முதல் நாடகத்தில் நடித்த சண்முகலிங்கன் என் அன்பரானார். யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரான காலம் முதல் அவரை அவர் குடும்பத்தினர் வாழ்ந்த திருநெல்வேலி இல்லங்களில் சென்று சந்திப்பேன். அக்காலம் முதல் 'அம்மா" அவர்கள் அன்போடும் பண்போடும் எப்பொழுதும் என்னோடு உரை யாடுவார். அவரின் மறைவு குடும்பத்தினரைப் போல எனக்கும் மறக்க முடியாத துன்ப நினைவைத் தருகின்றது.
அவர்களது நினைவால் பிள்ளைகள் மேன்மேலும் எதிர்காலத்தில் உயர்நிலை அடைவார்கள் என்பது திண்ணம்.
மயிலங்கூடலூர் பி. நடராசன்
-49

Page 32
துணையும், தோழன் தேய்வதும் ீேதாம் சுருதிகளின் uanawayé, கோழுந்தும் திகொண்ட்வேரும் பனிமலர்ப்பூங் கண்ைwக் கருப்புச்சினையூக்கின்ைாசாங்குசமும், ஐகயில் சீண்ை/ர்திரிரசுந்தரிதவது அறிந்தனர்.
-அபிராஜிதந்தாதி
சீர்மா, அம்மா ஆந்திரம்-தருச் ஆற்றலில்தானே சின் சங்கீதம் கீக்கிநிஜத்தின் என் உயர்வென்றார் ரீன்தார் தருகின்று அர்த்தங்கள்
அன்ஜைத் தாலாடில்
அன்பு விளைந்தது
தக்கலைகள் சிற்றூர்
சீழ்காப் வளர்ந்தது
அன்னை கலைவாணியாப்
ஆதிதாசத்திரீர்
ஆர்தர், அக்ரா இந்திரர் ஆர்தலில்தானே சின் சங்கீதம்
rண்லோர்க்தர் ஆாத்திலும்
என் இத&ம்
சின் தான்கின் உருவாதம்
திருதிதிர்
சித்தன் பேருங்கோயிலாw
தான் Wங்துக் தேwr
சீக்ர சுங்ா ஆந்திரத் ஆர்தலில்தானே என் சங்கீதம்
-Jāryмдугууgy
 
 

நகுலேஸ்வரியண்Uneரு மேம்Unடீடு நிறுவனம்
எண்னக்கருவாக்கமும் ஆரம்ப நிேவிப்பும்
ωηώύνηωήώ 29-0ፋ200ፋ

Page 33
பண்பாடு என்பது வாழ்க்கை முறையாகவும், வாழ்வுக்கான அர்த்தமாகவும் அமைவது.
சமுகத்தின் அனைத்து மக்களுக்கும் சமமான வாழ்வினைத் தரும் திசையில் பண்பாட்டினை ஜனநாயகப் படுத்தும் பாரிய பணியிலே சமூக மேம்பாட்டில் உழைக்கும் அனைவரும் இன்று இணைந்து செய்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் தேசிய அளவில் கொள்கை வகுத்தலும், செயற்பாடும் முதன்மைப் பணிகளாகின்றன.
மேம்பாடு என்பதனை வெறுமனே தலாவீதவருமானத் திரளாக அல்லது பொருள்சார் வளர்ச்சியாக கருதிய நிலைமை இன்று மாற்றம் காணும். மேம்பாட்டுக்கான இன்றைய சமூகவியல் வரைவிலக்கணங்கள் தனித்துவ மானதும், ஒன்றுடன் ஒன்று தொடர்பானதுமான பொருளா தார, சமூக, பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கி நிற்கின்றன. இந்த வகையில் மூன்றாம் உலக நாடு களின் மேம்பாடு தொடர்பான போட்ஸின் (Ports) வரை விலக்கணம் குறிப் பிடத்தக்கது. D நீடித்து நிலைக்கக்கூடிய திசையில் தேசிய உற்பத்தியின் துரித அதிகரிப்பு; இதன் வழி எதிர்காலவிருத்திக்கு வழி காட்டும் பொருளாதார சுதந்திரம். 0 சமத்துவமான முறையில் வருமான பங்கீடு; இதன் வழி சமூகப் பண்டங்களான கல்வி, சுகாதார சேவைகள், போதுமான வீட்டு வசதிகள், பொழுதுபோக்கு வாய்ப்புக்கள், அரசியல் முடிவுகள் எடுத்தலில் பங் கேற்பு. 0 தேசிய அடையாளத்தையும், மரபுகளையும் உறுதிப்படுத்தும் திசையில் மேட்டுக்குடிகள், பொது மக்கள் என்ற வேறுபாடுகள் அற்ற புதிய சுய
-52

பிரதிமைகளை காணல்; இதன் வழி இரண்டாந்தர
பிரஜை என்ற உணர்வு நிலையை இல்லா தொழித்தல்.
பொருளாதார உருமாற்றம்; சமுக உருமாற்றம், பண்பாட்டு உருமாற்றம் என்ற தலைப்புக்களின் கீழ் போட்ஸின் வரைவிலக்கணம் மேற்கண்டவாறு அமையும்.
பொருளாதார மேம்பாடு சமூக, பண்பாட்டு உருமாற்றங் களை விளைவிக்கும்; சமூக - பண்பாட்டு உருமாற்றம், பொருளாதார விருத்தியினைத் தீர்மானிக்கும்.
இந்த வகையில் மேம்பாடு என்பது, ஒருசமூகம் அவாவி நிற்கும் இலக்கினை நோக்கிய, பொருள்சார் - பொருள்சாரா கூறுகளை உள்ளடக்கிய சமுக முழுமையின் மேல்நோக்கிய அசைவு என்றாகின்றது. இவ்வாறானதொரு கருத்தியல் பின்னணியிலேயே மேம் பாட்டில் பண்பாட்டின் இடம் பற்றிய கவனம் இன்று அதிகரித் துள்ளது. சமுக ஒழுங்கு, பொருளாதார விருத்தி, வெளிவிவகாரம், தேசிய பாதுகாப்பு என்கின்ற குவியங்களைத்தாண்டி, பண்பாட்டுக் கொள்ளை (Cultural policy) பற்றி இன்றைய அரசுகள் அக்கறை கொள்வது இந்த சிந்தனை விழிப்பின் தடத்தில் தான்.
நவீன வாழ்வில் ஒரு தேசத்து மக்களின் அபிலா ஷைகளை எய்தும் வகையில் பண்பாட்டுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். சுய பண்பாட்டு எழுச்சியும், வளர்ச் சியுமே இங்கு உச்ச இலக்குகளாகும். நவீன வாழ்வின் மாற்றங்களிடை சுயத்தைக்காணும், பேணும் இந்தப் பண்பாட்டுக் கொள்கையின் இன்றியமையாமை எனது புலங்களில் பெரிதும் உணரப்படுவது, குடியேற்ற நாட்டா திக்க கால செல்வாக்கினுள் முடமாகிப்போன சுதேச அடையாளங்களை மீட்டெடுத்தலிலிருந்து, இன்றைய
-53

Page 34
நவகுடியேற்றவாத, உலகமயமாக்க அலைகளிடை தொலைந்து போன சுயங்களை மீளமைத்தல் வரை பண்பாட்டு பணிகள் எங்களைக் காத்திருக்கின்றன.
மேம்பாடு என்றாலே அது மேலைமயமாக்கம் தான் என்ற மயக்கம் கலைந்தாக வேண்டும். மரபு வழிப் பண்பாட்டின் செழுமையான - அநுபவங்கள் பற்றிய மறதிக்குரிய மருந் தினை உடன் கண்டாக வேண்டும். கடந்த காலம் பற்றிய உணர்வை இழத்தலின் ஆபத்து, இன்றைய வாழ்வின் அனைத்து முகங்களிலும் உணரப்படுகின்றது.
நவீனத்தை மரபின் எதிரியாக்கி, அதனையே மேம்பாட்டின் சாரமாகியதில் நாம் இழந்தவைகள் தான் அதிகமெனலாம்.
விண்ணைத் தொடும் அறிவு வந்தது உண்மை; ஆனால் மண்ணுள் மனிதம் புதையும் நிலைகளுக்கு அது துணையாகி விடக்கூடாது. தொழிநுட்பத்தின் உச்சம் மனித உயிர்களின் அழிவில் முடிதல் கூடாது. அறிவு அநீதிகளின் காவலன் ஆகிவிடக்கூடாது.
உண்மையில் மரபும், நவீனத்துவமும் மனித சமூக மேம்பாட்டில் கைகோர்த்து நடைபோடவேண்டும். இந்தப் பயணதில் மரபின் தேவையற்ற கூறுகளை தவிர்ப்பதும், அநீதியான பகுதிகளை அகற்றுதலும் இயல்பாய் இணைதல் வேண்டும்.
பண்பாட்டின் புத்தாக்கம் என்பது பண்பாட்டுக் கொள்கையின் ஆதார சுருதியாய் அமையும்போது இந்த
இணைவும் இசைவும் கைவசமாகும்.
س-54

பண்பாட்டுப் புத்தாக்கம் என்ற கனவு மெய்ப்பட, பண்பாடு தொடர்பான விழிப்புணர்வு அடிப்படையாகின்றது. இந்தப் பண்பாட்டு வழிப்புணர்வை விதைப்பதில் சமுக உணர்வு கொண்ட அனைத்து பிரிவினரினதும் ஒன்றிணைதல் இன்றியமையாத தாகின்றது. கவிஞர்கள், கலைஞர்கள், சமூக சிந்தனையாளர்கள், சமூக பண்பாட்டு இயக்கமாக இந்த ஒன்றிப்பு முகிழ்தலும் அவசியமானதாகின்றது.
அநீதியான மேலான்மைகளைக் கேள்விக்குள் ளாக்கும், அழகான நற்பண்புகளை நிலை பேறாக்கும் பண்பாட்டு இயக்கமே மேம்பாடு தொடர்பான பண்பாட்டுக் கொள்கை களின் செயல் முகவரெனலாம்.
குடும்பம் - சாதி - சமயம் - அறிவியல் அமைப்பு 66 அனைத்துப் புலங்களிலும் பண்பாட்டு இயக்கங்களின் அறிவும் அனுபவமும் பயன்காேைவண்டும்.
நவீன வாழ்வின் உலகமயமாக்க அலைகளில், நுகர்வு கலாசார நுரைகளில் துரும்பாகி அலையும் சுதேச பண்பாடுகளை மீட்கும், புதுக்கும் இந்த பணியை இனியும் தாமதமின்றி தீவிரப்படுத்த வேண்டும்.
காலம் தாழ்த்தியதில் கரைந்து போன பண்பாடு களின் அனுபவங்கள் இந்த வகையில் எங்களுக்கான எச்சரிக்கை களாகலாம். அதே வேளைகளில் சுய விழிப்புடன், உயிர்ப்பு டன் பண்பாட்டு மறு மலர்ச்சிவழி மேம்பட்ட சமூக அநுபவங்கள் வழிகாட்டிகளாகலாம்.
நாங்கள் என்ன செய்யப் போகின்றோம்.
-55

Page 35
தனித்தும் கூட்டாகவும் சாதகமான பதிலை எழுதும் சமூக பொறுப்பு, எங்கள் ஒவ்வொருவருக்கும் உரியதாகின்றது.
(மரபுகளும் மாற்றங்களும், 2001)
இந்த வகையில் என் ஒரு நீண்டகாலத்துக் கனவு, இந்த கனவை எனக்குள் விதைத்த என் அம்மாவின் பெயரில் இன்று வடிவம் பெறும்.
பண்பாட்டு மேம்பாட்டுக்கென திட்டமிட்ட செயற்பாடு களை, சமூக அணித்திரட்டலை வழிப்படுத்தும் களமாக இந்நிறுவனம் எதிர்காலத்து எங்கள் தேசத்து பண் பாட்டினை வளம்படுத்தும். எங்கள் செயற்திட்டங்கள்
பற்றிய அறிவிப்பு விரைவில் உங்களைச் சேரும்.0
V -56


Page 36


Page 37
" ዖ Na at:1 les
FEITO "Cultur