கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எங்கள் ஊர் கல்ஹின்னை

Page 1


Page 2


Page 3

பிஸ்மில்லாஹிர் ரீஹ்மாணிக்-ரஹீம
எங்கள் ஊர் கல்ஹின்னை
சட்டத்தரணி, அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா, பி. ஏ.

Page 4
Engal Oor GALHİNNA
(History of Galhinna)
by Alhaj S. M. HANlFFA, B.A. (Cey.)
Attorney-at-Law
(C) All rights reserved,
First pubiished in February, 1991.
Fifty eighth publication of .
THAMIL MANRAM GALHINNA, KANDY, SRI LANKA
Office address :-
Thamil Manram, 10, Fourth Lane, Koswatta Road, Rajagiriya
Printed at :
MILLATH PRINTERS MADRAS-600 001

சென்னைப் புதுக்கல்லூரி, தமிழ் முதுகலைத்துறைத் தலைவர், பேராசிரியர் குளச்சல் S. ஷாகுல் ஹமீத் M.A., M.Phil.
அவர்கள் வழங்கிய அணிந்துரை
கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவின் நடுவண் ஓங்கி யுயர்ந்த மலை வளத்தால் அழகொளிர விளங்குவது மத்திய மாகாணம். அம் மாகாணத்தின் எழிலுக்கு மெருகு ஊட்டும் வகையில் இயற்கை வளத்தால் சிறந்து விளங்குவது "கல் ஹின்னை" கிராமம். நாலாப்புறங்களிலும் சிங்களப் பெருங் குடி மக்கள் வாழும் கிராமங்களால் சூழப்பட்டும், இஸ்லாமிய நெறியும் பண்பும் பேணிப் போற்றும் முஸ்லிம் பெருமக்களைக் கொண்டு, பல்வகை சிறப்புகளோடு உயர்ந்து விளங்குகிறது கல்ஹின்னை. அதன் பூர்வீக வரலாற்றிலிருந்து தொடங்கி இன்று வரை அது பெற்றுள்ள வளர்ச்சியை வரன் முறையாக எடுத்துக் காட்டும் வரலாற்று நூலாக விளங்குகிறது "எங்கள் ஊர் கல்ஹின்னை" என்னும் அரும் நூல்.
இந்த அரிய நூலை, கல்ஹின்னை பெற்றுத் தந்த பன்னூலாசிரியர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா பீ.ஏ. ஆக்கித் தந்திருக்கின்றார். பத்திரிகையாளராகவும், எழுத்தாள ராகவும் பன்னூலாசிரியராகவும், பள்ளி ஆசிரியராகவும், வழக்கறிஞராகவும் இலங்கை நாட்டவர்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமான அவர், இந்நூல் மூலம் ஒரு வரலாற் றாசிரியராகவும், ஆய்வாளராகவும் அறிமுகமாகின்றார்.
ஒர் ஊரின் பழம் வரலாற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம் அவ்வூரில் வாழும் மக்களின் பாரம்பரியத்தையும் பண்புகளையும் அறிய முடிகிறது. அதற்கு அடிப்படையாய் அமைவன, அவ்வூரின் அமைப்பும் சுற்றுப்புறச் சூழலுமாகும். அதற்கேற்ப ‘எங்கள் ஊர் கல்ஹின்னை" என்னும் நூலும்

Page 5
ஊரில் அமைப்பும் பிரிவுகளும் சொல்லி, அவ்வூர் தோன்றிய பின்னணியை விளக்குகிறது. அவ்விளக்கத்தால், முதல் குடி யேற்றம் பற்றியும் அக்குடியேற்றத்திலிருந்து பல்கிப் பெருகிய குடும்பங்கள் பற்றியும் அறிய முடிகிறது. தொடர்ந்து அதன் நிர்வாக அமைப்பு, அங்கு வாழும் மக்களைப் பிணைக்கும் பள்ளிவாயல், அதில் பணியாற்றிய கதீப் முஅல்லிம்கள், பள்ளிவாயல்களைப் பராமரித்த மத்திசம்கள், சமயப் பெரியவர்கள், மார்க்கப் பணிகள் பற்றிய இன்னோரன்ன செய்திகள் விளக்கமாகச் சொல்லப்படுகின்றன. இறுதியாக அவ்வூரின் புவியியல் பொருளாதாரத் துறைகளைக் கூறி, ஊரின் சாதனையாளர்களைச் சுட்டிக் காட்டி முடிவுறுகிறது,
இந்த அரும் நூல், கலாநிதி எம். எம். உவைஸ் அவர் safair Muslim Contribution to Tamil Literature, as an iS) சு. வித்தியானந்தன் ‘இலக்கியத் தென்றல்’ என்னும் நூல் களைத் தந்த கல்ஹின்னை தமிழ் மன்றம் வெளியீடாக வருவது பாராட்டிற்குரியது:
இந்த நல்ல நூலை சென்னை மில்லத் பிரின்டர்ஸ் சிறப் பாக அச்சிட்டுக் கொடுத்திருப்பது நூலுக்கு மெருகு ஊட்டு கிறது.
சென்னை - 24 S. ஷாகுல் ஹமீத் 5ー2ーl99I。

அளவிலா அன்புடைய அல்லாஹ்வின் நல்லருனால், உல கெலாம் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக அரை நூற் றாண்டிற்கு முன், 1940களின் ஆரம்பத்தில் தோன்றிய ஒரு எண்ணம் இன்று அவனருளால் நிறைவேறுகிறது. "கல் ஹின்னையின் வரலாறு என்ன? அதை எழுதி வைக்க வேண்டும்" என்ற எண்ணமே அன்றெழுந்து இன்று நிறைவு பெற்று, புத்தக உருவில் வெளிவருகின்றது. எனது மனதில் தோன்றிய விருப்பத்தை அப்பொழுது நான் முதன் முதலில் எமதுரரின் சிறந்த வைத்தியரெனப் பெயர் பெற்றிருந்த ஈ. எல். யூனூஸ் லெப்பை வெதமஹத்தயா (வைத்தியர்) அவர்களிடம் சொன்னேன் அவர்கள் எனக்குக் குறிப்புகள் தரு வதாகக் கூறியபோதிலும், அவர்கள் காலமாவதற்கு முன்னர் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும், அவர்களிடம் நான் குறிப்புகள் கேட்ட சமயம், இன்னொரு வர் முதியோர்களிடம் விவரங்கள் கேட்டு அதை எழுதியே வைத்திருந்தார் என்பதைப் பின்னர் அறிந்து பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன்.
முதன் முதலில் ஊர் வரலாறை எழுதி வைத்தவர் எனது ஒன்று விட்ட தமையனார் மர்ஹகும் அல்ஹாஜ் மெளலவி எம். எச். எம்.ஷரீஃப் அவர்கள்தான். 1935ம் ஆண்டிலிருந்து, 1939ம் ஆண்டு வரை சென்னை, பெரம்பூர் ஜமாலியா அரபிக் கல்லூரியில் பயின்று அவர் க ள் ஊர் திரும்பியவுடன், இப்பணியை மேற்கொண்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அப்ஸலுல் உலமா பட்டம் பெற்றிருந்த மெளலவி ஷரீஃப் அவர்கள் பெரிதும் சிரமப் பட்டு பல வயோதிபர்களிடம் தகவல்கள் கேட்டறிந்து, எழுத்தில் வடித்து வைத்த விவரங்கள்தான் எமது கிராமம் தோன்றிய பின்னணியைக் கூறுவதற்கு உதவியாயிருந்தன. அதன்பின், மற்றும் தகவல்களைச் சேகரிப்பதில் அவரின் உடன்பிறந்த தம்பி, எனக்கு வலது கை போலிருந்து உதவிய கவியரசு எம். எச். எம். ஹலீம்தீன், பெரிதும் பாராட்டுக் குரியவர். தனது தமையனாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வரலாறு எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டு பெரிதும் முயற்சி செய்து மிக அரிய தகவல்களைச் சேகரித்துத் தந்த அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள், அவர் திரட்டி யுள்ள பழைய குடும்பங்கள் பற்றிய விவரம், பின்னர் புத்தக உருவில் வெளிவரும்,

Page 6
a
கல்ஹின்னையின் புவியியல் நிலைபற்றி முன்ஞள் அதிபர் ஜனாப் எஸ்.எல்.எம். ஹனிபா, எழுதித் தந்தார். கவிமணி எம். சி. எம். சுபைர் அவர்களும் இந்நூல் உருவாவதில், பெரிதும் உதவியாயிருந்தார். இவர்கள் அனைவருக்கும் எனது நன்றி. வேறும் தகவல் தந்துவிய அனைவர்க்கும் நன்றி.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அடர்ந்த காடுகளின் மத்தியில் ஒரு குக் கிராமமாயிருந்த கல்ஹின்னை இன்று பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. முன்னேற்றம் காணத் துடிக்கும் ஏனைய கிராமங்களுக்கு எங்கள் ஊர் ஒரு முன்மாதிரி. எமது முயற்சிகளைப் பலரும் அறிந்து பயன் பெற வேண்டும் என விரும்பியதுடன் இன்றுள்ளவர்களும், இனிவரும் சந்ததிகளும் எமது ஊர் வரலாற்றை அறிய வகை செய்யும் முயற்சியின் வெற்றிதான், இந்நூல். ,
முதன் முதலில் கல்ஹின்னையின் வரலாறு, அச்சுருப் பெறுவதால் புத்தகத்தை வாசிப்பவர்களில் சிலர் தவறுதல் ஏதும் இடம் பெற்றிருப்பதைக் காணக்கூடும். அப்படி ஏதும் தவறு கண்டால், தயவு செய்து நேரில் எனக்குத் தெரிவிக்கும் படி மிக தயவாய்க் கேட்டுக் கொள்கிறேன். பாரிய தவறுகள் இருந்தால், மிக விரைவில், புதிய பதிப்பொன்று வெளியிட உத்தேசம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருவருளால்தான், இந்நூலை எழுதி, அச்சிட்டு வெளியிட முடிந்தது. அவனுக்கே முதலில் என் நன்றி ! பல சிரமங்களுக்கு மத்தியில், பெரும் செலவு செய்து, சொந்த அலுவல்களையும் புறக்கணித்து விட்டு, இதே வேலையில் ஈடுபட்டுக் கடுமையாக உழைத்து எப்படியும் இந்நூல் வெளிவரவே வேண்டும் என்ற உறுதி யுடன் பணியாற்றியதன் பயன்தான், இன்று புத்தகமாகப் பரிணமிக்கிறது. பல வகையிலும் நூல் வெளிவர உதவிய உறவினர்கள், நண்பர்களுக்கும் அழகுற அச்சிட்டுத்தந்த சென்னை மில்லத் அச்சகத்தார்க்கும் எனது நன்றி.
-எஸ். எம். ஹனிபா 10, நாலாவது லேன், கொஸ்வத்த ாோட், ராஜகிரிய, பூரீலங்கா.

அர்ப்பணம்
அழகொளிர் கல்ஹின்னை யரும் புதல்வர் பழகுதற் கினியருற் பண்பினிற் கனிந்தவர் அறபு இலக்கண இலக்கியம் தேர்ந்தவர் அருள்மறை "ஹதீஸ்கலை பிக்ஹாஎலாம் ஆய்ந்தவர் சென்னைப் பல்கலைக் கழகக் தன்னில் "அப்ழலுல் உலமா" வாகிச் சிறந்தவர் கவித்துவம் மிக்கவர்; கருத்தினில் உயர்ந்தவர் மறைமணங் கமழும் மணத்தவர்; எங்கும் கல்லவை வளர நாளும் உழைத்தவர் கல்ஹின்னை வரலாறிதை எழுதும் முயற்சிக் கெழுதுகோல் முதலில் எடுத்தவர் அவர்தான். அல்ஹாஜ் எம். எச். எம். ஷரீப் ஆலிம் அரும்புகழ் கல்ஹின்னைக்குஞ்சாலிம் அவர்தம் ஆத்மா சாந்தியடைய அன்புயர் அல்லாஹ் அருளெலாம் பொழிய அகங்கனிக் திரந்தவர் தமக்கே அர்ப்பணிக்கின்றேம் நூலிதை ஆமீன்

Page 7
உள்ளடக்கம்
எங்கள் ஊர், கல்ஹின்னை
கிராமம் தோன்றிய பின்னணி
நிர்வாகம்
6iroflours di)
கதீப்கள்
முஅல்லிம்கள்
மத்திசம்கள்
aft Du. It பெரியார்கள் குர்ஆன் பள்ளிக்கூடம் ஆரம்பகால தர்மகர்த்தாக்கள்
புவியியல் நிலை
எஸ். எல். எம். ஹனிபா. ஓய்வு பெற்ற அதிபர்
பொருளாதாரத் துறையில்.
சாதனைகள்
பழைய குடும்பங்கள்
பாரம்பரிய வழிமுறைகள்
-கவிமணி எம். சி. எம் 6ስ)`”õõpዚ ዘff ``--
எங்கள் ஊர் கல்ஹின்னை
(கவிதை) -கவியரசு எம். எச். எம். ஹலீம்தீன்
2
20
26
34
38
4@
48
6.
73
0.
141
148
49
155

d 6T66 96TT கல்ஹின்னை அழகிய இயற்கைக் காட்சிகளுக்குப் பெயர் பெற்ற இலங்கையின் மத்திய பகுதியிலுள்ள மலைகளின் மத்தி யில் கல்ஹின்னை அமைத்துள்ளது. அரச நிர்வாகத் திற்குப் பிரிக்கப்பட்டுள்ள இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் மத்திய மாகாணத் தலைநகரான கண்டிக்கு அருகிலிருக்கும் எங்கள் ஊர், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். சிங்கள மன்னர்கள் காலத்தின் பரிபாலனப் பெரும்பிரிவான ஹாரிஸ் பத்துவவின் பள்ளேகம்பஹ என்ற சிறு பிரிவுக்குள், தற்பொழுது இயங்கி வருகின்ற வடபள்ளேகம்பஹ கிராம சபையில், கல்ஹின்னை மூன்று வட்டாரங்களாக இடம் பெற்றுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற கால ஆரம்பத்திலிருந்து, இலங்கைப் பாராளு மன்றத்தில் கடுகண்ணாவ என்ற தொகுதியிலும், TG5õTri 1 9 6 0 lb ஆண்டிலிருந்து அக்குறணைத் தொகுதியிலும், தற்பொழுது (1977ம் ஆண்டிலிருந்து) ஹாரிஸ்பத்துவ என்ற தொகுதியிலும், கல்ஹின்னை அமைத்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல்களின் ஆரம்பத்திலிருந்தே கல்ஹின்னை மக்கள் இரண்டு வாக்கு களைப் பெற்று, இரு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து வந்துள்ளார்கள்.
பிரதிநிதிகள் : 1931ம் ஆண்டில் ஆரம்பமான டொனமூர் ஆட்சி முறையின் சட்டசபையில் கலகெதர

Page 8
10
தொகுதியில் கல்ஹின்னை அமைந்திருந்தது. 1931ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் P.B. நுகவெல திஸாவ கலகெதரத் தொகுதிப் பிரதிநிதியாகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். 1936ம் ஆண்டில் புரக்டர் P.B. ரணராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947ம் ஆண்டுக் கடைசியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மேஜர் ஈ. ஏ. நுகவெல, பிரக்டர் திரு எச். ஆர். யூ. பிரேமசந்திர ஆகியவர்கள். கடுகண்ணுவ இரட்டை அங்கத்தவர் தொகுதியின் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1952ம் ஆண்டும், மேஜர் ஈ.ஏ. நுகவெல, ஜனப் சி. ஏ. எஸ். மரிக்கார் ஆகிய இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1956ம் ஆண்டில், ஜணுப் சி.ஏ.எஸ். மரிக்கார், திரு ஹேமசந்திர சிரிசேன ஆகியவர்கள் எமது பிரதிநிதிகளாய் விளங்கினர். 1960ம் ஆண்டில் அக்குறணைத் தொகுதிக்கு திரு எச். சிரிசேன, ஜனுப் ஏ.சி.எஸ். ஹமீத், தேர்வாகினர். 1965ம் ஆண்டில், ஜணுப் ஏ.சி.எஸ். ஹமீத், திரு எச். சிரிசேன 1970ம் ஆண்டிலும் இவ்விருவருமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1977ம் ஆண்டு ஜூலை மாதம் ந  ைட பெ ற் ற தேர்தலில் ஜனுப் ஏ.சி.எஸ். ஹமீத், திரு ஆர். பி, விஜேசிரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திரு விஜேசிரி 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானர்.
அமைந்துள்ள இடம் : கண்டியிலிருந்து, அக்குறணை வழியாக மாத்தளைக்குச் செல்லும் வழியில், இரு இடங்களில் பிரிந்து செல்கின்ற ப ா  ைத க ள |ா ல் கல்ஹின்னையை அடையலாம். கண்டியிலிருந்து நாலு மைல் தூரத்தில் (மாத்தளைப் பாதையில்) அம்ப தென்ன என்ற இடம் இருக்கிறது. இதில் பிரியும் பாதையில் மேலும் நாலு மைல் சென்றபின் பூஜாப் பிட்டிய என்னுமிடத்தில் பொக்காவள, அங்கும் புர

11
என்ற இடங்களுக்கான பாதைகள் பிரிகின்றன. அங்கும்புரைப் பாதையில், மேலும் நாலு மைல் சென்றதும் கல்ஹின்னையை அடையலாம். இப்படி யாகப் பன்னிரண்டு மைல் வழியில், கண்டியிலிருந்து கல்ஹின்னை சேரலாம். அம்பத்தென்னையில் பிரிந்து பூஜாப்பிட்டி வழியாக கல்ஹின்னை, அங்கும் புரைக்குச் செல்கின்ற பாதை தொடர்ந்து (அங்கும் புரையிலிருந்து ஏழு மைல் சென்றபின்) அளவத்துக் கொடையில், மாத்தளைப் பாதையைக் சேர்கிறது. கண்டி-மாத்தளைப் பாதையில் அளவத்துக்கொடை யிலிருந்து அங்கும்புரை வழியாக கல்ஹின்னையை அடைவதானுல், கண்டியிலிருந்து பத்தொன்பது மைல் பிரயாணம் செய்ய நேரிடும். அங்கும்புரைக்கும் கல்ஹின்னைக்குமிடையில் இரண்டு மைல் தூரமிருக் கிறது. கல்ஹின்னையிலிருந்து வடக்கே மாத்தளை, பதினைந்து மைல் தூரத்திலும், குருநாகல் இருபத்தாறு மைல் தூரத்திலுமுள்ளன. இந்த மூன்று முக்கிய நகரங் களிலிருந்தும் கல்ஹின்னைக்கான பஸ் சேவைகள் உள்ளன.
உட்பிரிவுகள் :- நாலாபக்கங்களிலும் சிங்கள மக் கள் வாழுகின்ற கிராமங்களினல் குழப்பட்டுள்ள கல் ஹின்னையின் முழுச் சனத்தொகையான சுமார் ஆறா யிரம் மக்களும், முஸ்லிம்களாயிருக்கின்றனர். ஊரின் உட்பிரிவுகளாக ஹள்கொள்ள, பீரிஹெல, படகொள் ளாதெனிய, பூதல்கஹ, இக்கரை குடாக்கும்புரை, அக் கரை குடாக்கும்புர, தென்ன, அஸ்துமல, செட்டி தோட்டம், கட்டாப்பு அளவத்தை (ஒரு பகுதி) ஆகியன உள்ளன.

Page 9
12
கிராமம் தோன்றிய பின்னணி
அரபு நாட்டிலிருந்து வியாபாரம் செய்வதற்காக இலங்கையில் வந்து குடியேறியிருந்த அரேபியரில் நாலு பேர், கண்டியில் சுமார் பதினேழாம் நூற்ருண்டு மத்தி யில் குடியிருந்தனர். இவர்களில் ஒருவரின் சந்ததியான உமறு மரைக்கார் அடப்பஞர் முதுனை என்னுமிடத்தில் வசித்து வந்தார். (முதுனை என்ற இடம் அக்குறணை யிலுள்ள மல்வானஹறின்ன எனும் ஊராகும்). இவரின் மூத்த மகன் வாப்புக் கண்டு அடப்பனார். இவர் தான் முதன் முதலில் கல்ஹின்னையில் குடியேறியவர் அதன் பின்னர், அவரின் தம்பி இஸ்மாயில் கண்டு அடப்பனார் கல்ஹின்னைக்கு அருகாமையிலுள்ள, ரம்புக் எல எனும் ஊரில் குடியேறியிருந்தார். சில காலத்தின் பின்னர், தமையனாரின் தனிமையைப் போக்கி, சேர்ந்து வாழும் நோக்கத்துடன் அவரின் மூத்த மகன் தம்பி லெப்பையை கல்ஹின்னைக்கு அனுப்பி வைத்தார்.
உமறு மரைக்காரின் நாலு பிள்ளைகளில் மற்ற இரு வரும் அக்குறணையிலேயே குடியிருந்துவிட்டனர். இவர் களில் ஒருவர் அலி உதுமான். அலி உதுமான் மகன் அஹமது லெப்பை என்பவரின் மகனான முஹம்மது லெப்பை மகன் அப்துல் மஜீத் ஆலிம் (அளவத்து கொட கரீம் ஸ்டோர்ஸ் உரிமையாளரின் தந்தை) எழுதி வைத் துள்ள சரித்திரக் குறிப்புகள் இன்றும் கையெழுத்தி லுள்ளன. (அவரின் எழுத்திலிருந்தே, எம்மால் பழைய பெரியார்களின் பெயர்களைப் பெற முடிந்தது) அப்துல் மஜித் ஆலிம் 1877ல் பிறந்தவர். இவர் 1968-ல் இறந்தார்.
உமறு மரைக்கார் அடப்பனாரின் மற்றொரு மகன் பெயர் சுலைமான் லெப்பை. இவர் கசாவத்தை ஆலிம்

அப்பா என்று புகழ்பெற்ற மார்க்க மேதை, இலக்கிய அறிஞர் ஷெய்க் முஹம்மது லெப்பை அவர்களின் தகப் பனாரான அஹமது லெப்பையின் தந்தையாகும்.
கல்ஹின்னையில் குடியேறிய முதல் முஸ்லிமான வாப்புக் கண்டு பற்றி மெளலவி எம். எச். எம். ஷரீஃப், அவர்கள் குறிப்பிடுவதாவது: "இக் கிராமத்துக்கு முதல், முதலாகக் குடியேறிய முஸ்லிம் வாப்புக்கண்டு பிள்ளை' என்பதிலே பழைய முதியோருக்கிடையில் ஏகோபித்த முடிவுண்டு. இவரை அவர்கள் "நொண்டி அப்பச்சி” என்ற பட்டப் பெயரைக் கொண்டு அழைத்தார்கள். இவர், இக்கிராமத்துக்கு, ஆங்கிலேயர் கண்டி மாநகரை 1815ம் ஆண்டில கைப்பற்றுவதற்கு ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்பே குடியேறி இருக்கிருர் என்ப தற்கு பழைய முதியோரின் கூற்று சான்று பகர்கிறது."
வாப்புக்கண்டு அவர்கள் பெரும் பலசாலி என்றும், ஒரு கால் ஊனமாயிருந்ததால்தான் "நொண்டி அப்பச்சி" என அழைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. ஒரு சமயம் அவரின் வீட்டுக்குப் பின்னல் நீர்கழித்துக் கொண்டிருக் கும் பொழுது அவர்களை ஒரு புலி தாக்க முயன்றதாக வும் ஒரு மரத்தின் பின்னல் நின்ற அப் புலியின் இரு, முன்னங்கால்களையும் மரத்துடன் சேர்த்து வளைத்துப் பிடித்துக்கொண்டு கூக்குரலிட்டு மற்றவர்களை அழைத் துப் புலியைக் கொன்றதாகவும் என்னிடம் முதியவ ரொருவர் சொன்னர். இப்படியான பலசாலியாயில்லா திருந்தால், அன்று கானகமாயிருந்த ஊரில், அவர், வந்து முதன் முதலில் குடியேறியிருக்க முடியாது எனக் கொள்ளலாம்.
அவர், அமைதியாக இருந்து விவசாயம் செய்து முன்னேறலாம் என்ற நோக்கத்துடன் கல்ஹின்னைக்கு,

Page 10
வந்து குடியேறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தற் பொழுதுள்ள "பள்ளிவாசலுக்குத் தென்கிழக்கேயுள்ள மேட்டு நிலத்தில் இவருடைய வீடு இருந்தது. இப்பொழு தும் அந்த வீட்டு மன அங்கு காணப்படுகிறது' என்றும் மெளலவி ஷரீஃப் குறிப்பிடுகிறர். இவருக்கு ஏழு பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் ஐவர் பெண்கள் இருவர் ஆண்கள்.
அவர் சுமார் 1760ல் பிறந்து 1790 அளவில் கல் ஹின்னையில் குடியேறி வாழ்ந்து, 1850 அளவில் காலமா யிருக்கலாம் என முதியவர்களின் வாய்மொழியிலிருந்து ஊகிக்கலாம்.
1940ம் ஆண்டளவில்தான் மெளலவி ஷரீஃப் அவர் கள் தனது குறிப்புகளை எழுதினார்கள். அப்பொழுது கிராமத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும் முதலில் குடியேறிய வாப்புக் கண்டுவைத் தொடர்ந்து இக்கிரா மத்தில் வாழ்வதற்கு'வந்த ஏனைய ஆறுபேருடன் மொத் தம் ஏழுபேரின் பிற்சந்ததிகளே என்பதை பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
**வாப்புக்கண்டு பிள்ளை இங்கு குடியேறியசொர்ப்ப காலத்துக்குள் உள்பதப்பிடிய முஹந்திரம் என்று அழைக் கப்பட்ட ஆதம்பிள்ளை என்பவர் இங்கு குடியேறினர். அவரை அடுத்து றமுக்கல்லையிலிருந்து தம்பி லெப்பை என்பவர் இங்கு வந்தார். இவர் வாப்புக் கண்டு பிள்ளை யின் சகோதரரான றமுக்கல்லையில் வாழும் இஸ்மாஈல் பிள்ளை அடப்பனார் அவர்களின் மூத்த மகனாவார்.
**இதற்கிடையில் வடபுளுவையைச் சேர்ந்த காஸிம் பிள்ளை கம்மன்ஜை என அழைக்கப்படும் உதுமான் பிள்ளை, வாத்தியார் என்று அழைக்கப்படும் அப்துல் ஜப்பார், ஹல்கொல்லையைச் சேர்ந்த மீற கண்டும் இக்

iš
கிராமத்தை இருப்பிடமாக ஆக்கிக் கொண்டனர். இந்நால்வரும் வாப்புக்கண்டு பிள்ளையின் மருமக்களா வார்கள். முறையே இவர்கள் ஒவ்வொருவருக்கும், அவரின் பெண் பிள்ளைகளைக் கலியாணம் செய்து வைக்கப்பட்டது.
"இன்று இக்கிராமத்தில் வாழும் நாலாயிரத்துக்கு அதிகமான மக்கள் யாவரும் இவ்வெழுவர்களின் சந்ததி யாவார்கள். எவ்வழியிலாவது இவர்களைச் சேராதவர் கள் இங்கு இருப்பது அரிது. இவ்வெழுவரும்தான் இங்கே காணப்படும் குடும்பங்களின் மூலகர்த்தாக்களாவார் கள். இங்கு பல குடும்பங்கள் இருப்பினும், நாலு குடும்பங்களே பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. அடப் பனார்வீட்டு குடும்பம், கம்மன்ஜ (கம்மஹளாகெதர) வீட்டுக் குடும்பம், வாத்தியார் வீட்டு குடும்பம், உள்பத பிடி முஹந்திரம் வீட்டு குடும்பம் ஆக இந்த நாலும்
அவைகளாம்"
வீட்டுப்பெயர் : கல்ஹின்னையில் வாழுகின்றவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வீட்டுப் பெயர் என ஒன்றுண்டு. இது பழங்காலத்திலிருந்தே வழங்கி வருவ தாகும். ஏதோ ஒரு காரணத்தினுல் இவரின் வீடு இன்னது" எனக் குறிப்பிடும் அடைமொழி சேர்க்கப்படு தல் முன்னையை காலத்தில் ஏற்பட்ட வழக்கம். அதன்படி அடப்பனர் வீட்டைச் சேர்ந்தவர்கள், அடப்பயாலே கெதர என்ற அடைமொழியுடையவர்களாய் குறிப்பிடப் படுவர். பழைய உறுதிகள் போன்ற பெறுமதியுள்ள பத்திரங்களில் இந்த அடைமொழியுடன் பெயர்களைக் காணலாம். இன்றும், முக்கியமான பத்திரங்கள் எழுதப் படும்பொழுது, இந்த வீட்டுப் பெயர் குறிக்கும் அடை மொழி சேர்க்கப்படுகிறது.

Page 11
அடப்பஞர் எனும் அடைமொழி எப்படி வந்தது என்பதை மெளலவி ஷரீஃப் அவர்கள் பின்வருமர்று குறிப்பிடுகிருர்கள்: "அடப்பனர் என்பது சிங்கள அரசர்களால் வழங்கப்படும் ஒரு பட்டம். இவ்வார்த்தை ஒரு சிங்களச் சொல். இதன் பொருள், சிங்கள தீரசர் களுக்கு உணவுப் பொருள்களைக் கொண்டு போய்க் கொடுப்பவர், அவர்களின் நம்பிக்கைக்கு ரியவர் என்பதாகும்.'
கல்ஹின்னையில் குடியேறியவர்களுடன் தான் அடப்பனர் எனும் அடைமொழி ஆரம்பமானதல்ல. அதற்கு முன்பிருந்தே வழங்கி வந்த பெயர்தான் அந்த வீட்டுப் பெயர். இது பற்றிய அவர் கருத்து வருமாறு: "கல்கின்னைக்கு முதன்முதலாகக் குடியேறிய வாப்புக் கண்டு பிள்ளை, அடப்பனர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரையும், இக்கிராமத்தை அடுத்த ரமுக்கல்லையில் முதன்முதலாகக் குடியேறி இருக்கும் இவர் தம்பி இஸ்மாஈல் பிள்ளையையும் அடப்பனர் என்று அழைக் கப்படுகிறது. இவர்களின் மூதாதைகளில் ஒருவர்தான் அடப்பஞர். அவர் யார் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாமலிருக்கிறது."
முஸ்லிம்கள் குடி யே று வ தற்கு முன்னர், கல்ஹின்னையில் சிங்களவர் வாழ்ந்திருக்கிருர்கள். இன்றும் கல்ஹின்னை ஊரிலுள்ள வயல்களுக்கும், காணிகளுக்கும் சிங்களப் பெயர்கள்தான் வழங்கி வரு கின்றன. பல நூற்ருண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிங்களவர், அவற்றின் சொந்தக்காரராயிருந்தனர். அதனல், அவர்கள் காணி, வயல்களுக்கு சிங்களப் பெயர்களிட்டனர். இன்றும் அ தே பெயர்கள் தொடர்ந்தும் உள்ளன. முஸ்லிம்கள் குடியேறிய பொழுது, அவர்கள் தமது காணி, வயல்களை விற்று

፶? .
விட்டு பக்கத்திலுள்ள ஏனைய ஊர்களில் குடியேறி யுள்ளனர். இதற்கான சான்று, கல்ஹின்னையை அடுத் துள்ள சிங்கள ஊரான அளவத்தை என்னுமிடத்தில் வாழ்பவர்களுக்கு, கல்ஹின்னையிலிருக்கும் வயல்களின் பெயருடைய வீட்டுப் பெயர் இன்றும் வழங்குவதி லிருந்து, கிடைக்கிறது. அதாவது, அந்த வீட்டுப் பெயருடைய இன்றைய அளவத்தை வாசியின் முன்னேர் கல்ஹின்னையில் குடியிருந்தனர் என்பதை அது உறுதிப்படுத்துகிறது. கல்ஹின்னையில் வட்டபேல எனும் பெயருள்ள வயலொன்று இன்றுள்ளது. அதே பெயருடன் கூடிய வீட்டுப் பெயருள்ள பல சிங்களவர், இன்று அளவத்தையில் வாழ்கின்றனர். இதிலிருந்து, அவர்களின் மூதாதையர், இப்பொழுது கல்ஹின்னை இருக்குமிடத்தில் குடியிருந்தனர் என்பது நிச்சயம்.
கல்ஹின்னையில் முஸ்லிம்களின் குடியேற்றம் பதி னெட்டாம் நூற்றண்டின் இறுதிப் பகுதியில் தான் நிகழ்ந்துள்ளது. இது பற்றி மெளலவி ஷரீப் கூறுவதா வது: "இக் குடும்பம் (அடப்பனர் குடும்பம்) கண்டிக்குச் சமீபத்திலுள்ள வடபுளுவையில் வசித்து வந்தது. பிறகு, அக்கு, ணையில் குடியேறிற்று. அங்கிருந்துதான் வாப்புக் கண்டு பிள்ளை, இங்கு குடியேறினர். 1815ம் ஆண்டில் ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றுவதற்கு ஏறக் குறைய 50 ஆண்டுகளுக்கு முன் அவர் இக் கிராமத் துக்குக் குடியேறி இருக்க வேண்டுமென்று சொல்லப் படுகிறது".
எனது சிறுவயதில், 1940களின் ஆரம்பத்தில் கல்ஹின்னையின் மேற்கெல்லையில் (அளவத்த என்ற சிங்களக் கிராமத்தின் ஆரம்பப் பிரதேசத்தில்) செய்யத் லெப்பை என்ற முதியவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அப்பொழுது வயது 90 மட்டிலிருந்திருக்கும். இவர்

Page 12
t
தனது 103-வது வயதில் 1958ம் ஆண்டில் காலமாஞர். இவரும் மெளலவி ஷரீஃப் அவர்களுக்கு வரலாற்றுத் தகவல்கள் கொடுத்தவர்களில் ஒருவர். "நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருக்கும் போது, எமது பெற்றோரி கண்டியை வெள்ளக்காரன் பிடித்தது பற்றிக் கதைக்கக் கேட்டிருக்கிறேன்" என்றும் அவர்கள் அது பற்றி அறிந் திருந்தனர் என்றும் முதியவர் செய்யத் லெப்பை தன்னிடம் கூறியதாக மெளலவி ஷரீப்ஃ அவர்கள், என்னிடம் நேரில் கூறியுள்ளார்கள். இதன்படி பார்த் தால், செய்யத் லெப்பை அவர்கள் (அளவத்த அப்பச்சி என அழைக்கப்பட்டவர்) பத்தொன்பதாம் நூற்ருண்டு மத்தியில் பிறந்திருக்க வேண்டும்; அவரின் பெற்றேர் அவர் ஏழெட்டு வயதாயிருந்த காலத்தில் 1815ம் ஆண்டின் நிகழ்வுபற்றித் தெரிந்திருந்தவர்களாயிருப்பின் அச்சமயம் அவர்கள் குறைந்தது பத்துப் பன்னிரண்டு வயதினராயிருந்திருப்பர். இவரின் தந்தை, வாப்புக் கண்டு அவர்களின் மகன் மீரான் கண்டுவின் மகன்தான் அதாவது, வாப்புக் கண்டுவின் பேரன். அவரின் பெயர் ஹபீப் முஹம்மத். எனவே, வாப்புக் கண்டுவின் பேரன், சிறுவயதினராயிருக்கும் பொழுது தான், ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றியுள்ளனர். அது, 1815ம் ஆண் டில் நிகழ்ந்தது என்பது தெரியும். ஆதலால், வாப்புக் கண்டு அவர்கள், 1815க்குச் சுமார் ஐம்பது ஆண்டு களுக்கு முன்பு தான், பதினெட்டாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் கல்ஹின்னையில் குடியேறினார் என நிச்சயமாகக் கூறலாம்.
கண்டு, பிள்ளை என்ற பதங்கள் பெயரின் பின்னல் வருதல் தென்னிந்தியாவின் மலயாளப் பகுதியிலுள்ள வழக்கம். கண்ணு என்னும் சொல்லே கண்டு எனத் திரி புற்றுள்ளது. அந்தப்பகுதியில்தான் முன்னைய அராபியர்

களின் வர்த்தகத் தொடர்புகள் மிகத் தடிப்பாயிருந்தன. பின்னர், முஸ்லிம்களும் அங்குதான் முதலில் வந்து குடி யேறினர். அவர்களுடன் இலங்கை வந்து குடியேறிய முஸ்லிம்களுக்கு நெருங்கிய தொடர்பிருந்திருத்தல் வேண்டும், அதனல், அவர்களின் பழக்க வழக்கங்களை இலங்கையில் குடியேறியவர்களும் பின்பற்றியிருப்பார் கள். அதன் பயனுகவே, அப்பகுதியில் வாழ்பவர்களினது பெயர்கள் போல இங்கு வாழ்ந்தவர்களின் பெயர்களும் அமைந்துள்ளன. அத்துடனேயே இந்தப் பதங்களும் சேர்ந்துள்ளன. மலயாளப் பகுதியில் இன்று வாழும். மக்கள் கூட. இலங்கையர் போன்ற தோற்றமுள்ளவர், கள் தான். இலங்கையரின் நடையுடை, பாவனைகள் இன்றும் அவர்களிடமுள்ளன. ஆகவே, மலயாளப் பகுதியின் ஆதிக்கம் அன்றைய காலகட்டத்தில், நம்மவர். மீது நிறையவும் இருந்திருத்தல் வேண்டும்.
இது தவிர நாகூரில் வாழ்ந்த தர்கா வித்துவான் குலாம் காதிறு நாவலர் அவர்களின் தந்தை பெயர், வாப்புக் கண்டு. நாகூர் இருக்கும் தமிழ் நாட்டின் தென் கிழக்குப் பகுதியிலுள்ள அதிராம்பட்டினம் என்னுமூரில் "வாப்புக்கண்டு வீடு" என வழங்கிய பகுதியொன்று. இன்றும் அதே பெயரால் அழைக்கப் படுகிறது. இதிலி ருந்து மலயாளப் பகுதியினரின் பழக்கவழக்கம் தென் னிந்தியாவின் பிறபகுதிகளிலும் பின்பற்றப்பட்டுள்ளது தெளிவாகிறது. மலையாளப் பிரதேசத்தினரின் ஆதிக்கம் அப்பகுதிகளிலும், இலங்கை முஸ்லிம்களிடத்தும் விரவி யிருந்துள்ளது.
வழித்தோன்றல் முதற் குடிமகனன வாப்புக்கண்டு அவர்களின் வழித்தோன்றல்களில் முதலாவது ஆண் பிள்ளை மீராக்கண்டு. இவருடைய சந்ததியினர் இன்றும் கல்ஹின்னையில் பெருகி வாழ்கின்றனர். மற்ற ஆண்

Page 13
à 0
பிள்ளை நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்து, கலி பாணமாகாமல் காலமாகி விட்டார். ஐந்து பெண் பிள்ளைகளில், முதலாவதை வட்டபுளுவையைச் சேர்ந்த காஸிம் பிள்ளை, இரண்டாவதை கம்மன்ஜ என்று அழைக்கப்படும் உஸ்மான் பிள்ளை மூன்ருவதை வாத்தி யார் என்று அழைக்கப்படும் அப்துல் ஜப்பார், நாலா வதை ஹல்கொல்லையைச் சேர்ந்த மீராக்கண்டு ஆகி யோர் திருமணம் செய்துகொண்டனர். மற்றப் பிள்ளையை குருநாகல் பகுதியிலுள்ள தோறயாய என்ற ஊரிலிருந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப் பட்டது. தோறயாய குடும்பத்தினர் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. அவர்களின் ஒரு மகன், பகீர் என்பவர் கல்ஹின்னையில் வந்து திருமணம் செய்ததால், அவரின் சந்ததியினர் கல்ஹின்னையில் இருக்கின்றனர்.
கல்ஹின்னையில் குடியிருந்த பிள்ளைகள், தமது தந்தையின் வீடமைந்திருந்த பகுதியிலேயே வசித்து வந்தனர். தற்பொழுது பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியின் தென் பாகத்திலும், மேற்குப் பகுதியிலு முள்ள காணிகளில் இவர்கள் ஆரம்பத்தில் வசித்தனர். பின்னர் அவர்களின் சந்ததிகள் கிராமத்தின் ஏனைய பகுதிகளில் பரவி, மற்றப் பகுதிகளிலும் வாழத் தொடங்கிர்ைகள், வாப்புக்கண்டுவின் எல்லாப் பிள்ளை களின் சந்ததிகளும் பெருகி, தனித்தனிக் குடும்பங் களாகப் பிரிந்து வாழ்கிருர்கள்.
தற்பொழுது அடப்பனர் குடும்பம் என்று, அவருக் கிருந்த அடப்பயாலா கெதர எனும் அடைமொழியைப் பயன்படுத்தி வருபவர்கள், வாப்புக் கண்டுவின் மகனான மீராக் கண்டுவின் குடும்பம், மருமகன்கள் காஸிம் பிள்ளை, மீராக் கண்டு, பேரன் பகீர், தம்பியின் மகனான, தம்பி லெப்பை ஆகியவர்களின் குடும்பங்கள்தான்.

2
அவரின் மற்ற மருமகன் உஸ்மான் பிள்ளையின் குடும்பம் கம்மன்ஜ வீட்டுக் குடும்பம் என்றும், இன்னொரு மருமகனான அப்துல் ஜப்பாரின் குடும்பம் வாத்தியார் வீட்டுக் குடும்பம் என்றும் அழைக்சப்படுகின்றனர். அடப்பனர் வீட்டுக் குடும்பம் கம்மன்ஜ வீட்டுக் குடும்பம் வாத்தியார் வீட்டுக் குடும்பம் ஆகிய முன்றும் வாப்புக் கண்டுவிலிருந்துதான் கல்ஹின்னையில் ஆரம்பமாகி யுள்ளன. அடப்பனார் குடும்பத்தினர், உக்குவளை, அக்குறணை உடதலவின்னை ஆகிய ஊர்களிலும் பரவி யுள்ளனர்.
கம்மன்ஜை: இது சிங்கள அரசர்களால் வழங் கப்படும் ஒரு உத்தியோகத்தைக் குறிக்கிறது. அதாவது கிராம உத்தியோகத்தர் எனப் பொருள்படும். (கம் மன்ஜை என்ற சொல்லிலிருந்தே கம்மஹலா கெதர என்ற அடைமொழி பிறந்தது.) இவரின் கடமை, அரசனுக்குச் சொந்தமான வயல்களின் நெல் வருவாயைச் சேகரித்து, பத்திரப்படுத்தி வைத்திருந்து பின்னர் அரசனிடம் கொண்டு போய் ஒப்படைப்ப தாகும். வாப்புக்கண்டு பிள்ளையின் மருமகனான உஸ்மான் பிள்ளை கம்மன்ஜ வீட்டு குடும்பத்தைச் சேர்ந் தவர். இவரின் மூதாதைகளில் ஒருவர் கம்மன்ஜ உத்தி யோகம் பார்த்திருக்கிருர், பரகஹ தெனியைச் சேர்ந்த கம்மஹலாகெதர வாப்புப்பிள்ளைபின் ம க ன் தா ன் உஸ்மான் பிள்ளை. இவர் பறகஹதெனியிலிருந்து இங்கு வந்து வாப்புக்கண்டுவின் இரண்டாவது மகளைத் திருமணம் செய்து இங்கேயே குடியேறினர்.
வாத்தியார்: வாப்புக்கண்டு பிள்ளையின் மற்ருெரு மருமகனான அப்துல் ஜப்பார் நாகூரைச் சேர்ந்தவர். இவர் கல்ஹின்னையில் வாழ்ந்தவர்களுக்கு, தமிழ் கற்றுக் கொடுத்தபடியால் இவரை வாத்தியார் என

Page 14
22
அழைத்தனர். இவரின் குடும்பம் வாத்தியார் வீட்டுக் குடும்பம் என அழைக்கப்பட்டாலும் பின்னர் அது திரிந்து, "வைத்தியலா கெதற" என இப்பொழுது அழைக்கப்படுகிறது. இவர் சாவென்ன" முதலாளியின் பாட்டனுர்,
உல்பத்தபட்டி முஹந்திரம் : தமிழ் கற்பதைப் போல அரபி பயில்வதையும் முக்கியமெனக் கருதுபவர்கள் தான் முஸ்லிம்கள். அதற்கு வழி செய்யும் விதத்தில், மாத்தளைக்கு அருகிலுள்ள உல்பத்தபிட்டிய என்ற கிராமத்தைச் சேர்ந்த இருவர் கல்ஹின்னையில் குடி யேறினார்கள் இவர்களின் தகப்பனர் உல்பத்தப்பிட்டிய முஹந்திரம் என்றழைக்கப்பட்டார். (முஹந்திரம் என்டது சிங்கள அரசனால் வழங்கப்பட்ட ஒரு பட்டம்" ஒரு கிராமத்தின் அலுவல்களைக் கவனிப்பதற்காக இப்படிப் பட்டம் வழங்கப்படுபவர், நியமிக்கப்படு கிருர்). உல்பத்தப்பிட்டிய முஹந்திரத்தின் இயற்பெயர் ஆதம்பிள்ளை. அவரின் இரு மக்கள். அஹ்மது லெப்பை, அலித்தம்பி ஆகியவர்கள் கல்ஹின்னையில் குடியேறி னார்கள். இங்கு வாழ்ந்தவர்களுக்கு குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுப்பதில் அவர்கள் ஈடுபட்டார்கள்.
அஹ்மது லெப்பையின் பெண் பிள்ளைகள் இருவர். இவர்கள் இருவரில், மூத்தவரை இஸ்மாயில்கண்டுவின் மகன் தம்பிலெப்பையின் புதல்வர்களில் ஒருவரான ஹபீப் லெப்பை திருமணம் செய்தார். சத்தாத் எனப் பெயர் வைக்கப்பட்ட ஒரு பிள்ளை பிறந்தபின், அவர் காலமானதைத் தொடர்ந்து ஹபீப்லெப்பை, கால மாணவரின் தங்கையை மணமுடித்தார். இவர்களுக்கு ஒரு பெண்பிள்ளை மாத்திரம் பிறந்தது. ஊரில் ‘கித்துல் பெரிசாரி" என அழைக்கப்படுபவரின் மனைவி தான், பின்ளையவர்.

2:
அஹமது லெப்பையின் ஆண்பிள்ளைகள் இருவரில் முதலாமவர் முஹம்மது லெப்பை. இவர் தம்பி லெப்பை யின் மகளான ஆயிசா என்பவரை மணமுடித்தார். இவர்களுக்கு மூன்று ஆண்பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் பிறந்தனர். கல்ஹின்னையின் குடாக்கும் புரை எனும் பகுதியில் இவர்கள் வாழ்ந்தனர். ஆண்கள் மூவரும், ஹாமித் லெப்பை, ஸாலிஹ் லெப்பை, ஹபீப் முஹம்மது லெப்பை, பெண்ணின் பெயர் ஸ்பியா. இவர் "பெரிய பெரிசாரி என அழைக்கப்பட்ட இஸ்மாயில் லெப்பைக்கும், ஆதம்பிள்ளை என்பவரின் ஒரே மகளான பாத்திமா என்பவருக்கும் பிறந்த முஹம்மது காஸிம் (பெபுல "கொல்லையார் என அழைக்கப்படுபவர்) என்பவரால் மணமுடிக்கப்பட்டார்.
மற்ற ஆண்பிள்ளையான பக்கீர் லெப்பைக்கு முஹம்மது காஸிம் லெப்பை, ஜெமால்தீன் லெப்பை என இரு ஆண்களும் இரு பெண்களும் பிறந்தனர்.
உல்பந்தப்பிட்டி முஹாந்திரத்தின் மற்ற மகனான அலித்தம்பி என்பவருக்கு ஐந்து ஆண்களும் மூன்று பெண்களும் பிறந்தனர். ஆண்களில் மூத்தவரான அப் துல் காதர் என்பவர் மார்க்க அறிவு மேதையாக விளங் கினார். கிந்தொட்டை எனும் ஊரில் இவர் பல்லாண்டு காலம் குர்ஆன் ஒதக் கற்றுக் கொடுத்தார். இன்றும் பெரிய ஆலிம் அப்பா’ என அழைக்கப்படும் அவர்களின் ஸியாரம், கல்ஹின்னை பள்ளி வாசலின் முன்னே அமைந்துள்ளது. அவர் தம்பி ஹபீப் லெப்பை என்பவரும் மார்க்க அறிவில் சிறந்து விளங்கினர். கல்ஹின்னைப பள்ளியின் கதீபா க வும் சிறிது காலமிருந்தார். மற்றைய மூவரில் ஒருவர் கலகெதர எனும் ஊரில குடியேறினார். அவரின் பெயர் செய்யது மற்ற இருவரும் மாத்தளையில் குடியேறினர். ஒருவர்

Page 15
24
பெயர் சுலைமான் லெப்பை மற்றவர் பெயர் முஹம்மது காஸிம்,
மூன்று பெண்களின் ஒருவர், தம்பி லெப்பையின் மகனான அபூபக்கர் என்பவரை மணமுடித்தார். மற் றொருவர் றம்புக் எல எனுமூரில் ஒருவரைத் திருமணம் செய்தார். ஆயிசா என்ற மற்றவர் கல்ஹின்னை யிலேயே மணம் செய்து வாழ்ந்தார்.
தற்பொழுது கல்ஹின்னையில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள், நாலில் ஏதேனும் ஒரு வீட்டு ("கே") பெயர் உடையவர்களாகவே இருக்கின் றனர். பின்னைய காலங்களில் வேறு ஊர்களிலிருந்து வந்து குடியேறியவர்களுக்கு இத்தகைய பெயர் இருப்ப தரிது.
கல்ஹின்னையின் மேற்குப்புறமாக முன்பு பிரசித்தி பெற்ற இறப்பர் பெருந்தோட்டமொன்றிருந்தது. கெப்பிட்டிகாள எஸ்டேட் என அழைக்கப்பட்ட அந்தப் பெருந்தோட்டத்தில் பெருமளவில் தென்னிந்தியர் வந்து வேலைசெய்தனர். அவர்களின் தேவைகளை நிறை வேற்றவென தென்னிந்திய முஸ்லிம்கள் பெருந்தோட் டத்தின் ஆரம்பத்திலுள்ள கட்டாப்பு எனுமிடத்தில் கடை வைத்து வியாபாரம் செய்தனர். இவர்களின் குடும்பத்தினர் இன்றும் கல்ஹின்னையில் வாழ்கின்றனர். இவர்கள் தென்னிந்தியாவின் ஆலங்குடியிருப்பு எனும் ஊரிலிருந்து வந்தாக, முன்னைய வியாபாரிகளின் வழித் தோன்றல்களின் ஒருவரான உதுமான் லெப்பை மகன் ஸய்யத் முஹம்மத் எமக்குத் தெரிவித்தார். உதுமான் லெப்பையின் தந்தை லெப்பைத் தம்பி கட்டாப்பில் கடை வைத்திருந்தவர்களில் ஒருவர். அவரின் தந்தை ஆலங்குடியிருப்பில் வேர் புடுங்கி விற்பனை செய்ததால்,

25,
வேர்ப்புடுங்கியார் வீடு என அழைக்கப்பட்டதாக வும் தெரிகிறது. லெப்பைத் தம்பியின் மூத்த மகன் சேகுத்தம்பி வன்னிப் பகுதியில் வாழ்ந்து வந்தார் ரென்று இரண்டாவது மகன் முஹம்மது மீரா சாய்பு (வேனா மூனா என அழைக்கப்பட்டவர்) கல்ஹின்ன்ை யில் சிறப்புற வாழ்ந்துகொண்டு, வத்து காமம் எனும் ஊரை அடுத்துள்ள பன்விலயில் கடை நடத்தினர். மீராசாய்புவின் சகோதரி உதுமான் லெப்பை என்பவரை மணமுடித்தார்.
வேறு சிலர், பள்ளிவாசலில் மோதிமார் வேலைக் காக வந்து குடியேறி, கல்ஹின்னையில் பெருமளவு காணி உடைமைக்காரர்களாயிருந்தனர். இவர்களில் சிலர், மணலில் எழுதிப் படிப்பித்து வந்ததனால் அண்ணாவியார் குடும்பத்தினர் என அழைக்கப் பட்டனர்.
இவ்வாருக, தென்னிந்திய முஸ்லிம்களும், முன்னைய கால அராபியர் சந்ததியினரும் இப்பொழுது கல்ஹின்னையில் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். அண்மையிலுள்ள இடங்களான அக்குறணை, உக்கு வளை, பரகஹதெனிய, ரம்புக்எல எனும் ஊர்களைச் சேர்ந்த பலரும் திருமண வழியாலும், தொழில் நிமித்த மா க வு ம் கல்ஹின்னையில் குடியேறியுள்ளனர்; பத்தொன்பதாம் நூற்றண்டின் பிரசித்தி பெற்ற மார்க்க மேதை கசாவத்தை ஆலிம் அப்பா என அழைக்கப்படும் அல்ஆரிபுபில்லாஹி முஹம்மது லெப்பை அவர்களின் ஊரிலிருந்து கல்ஹின்னையில் குடியேறியவர்களும், ஏனையவர்களுடன் இரண்டறக் கலந்து, வாழ்கின்றனர். இஸ்லாமிய ஐக்கியம் மிளிரும் ஓர் ஊர் கல்ஹின்னை என்பது மிகையல்ல.

Page 16
26
நிர்வாகம்
சிங்களவர் வாழ்ந்த காலத்தில், கண்டிய மன்னனின் ஆட்சி நடந்த சமயம் கன்சபா (கிராமச் சபை) எனும் அமைப்பின் உதவியோடு எல்லாப் பகுதி களிலும், அரசனின் பிரதிநிதிகள் மூலம், நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்ட பின்னர், இலங்கை மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. எங்களூர் மத்திய மாகாணத்தில் இருக்கிறது. பண்டைய நிர்வாகப் பிரிவான ஹாரிஸ்பத்துவ எனும் பிராந்தி யத்தின் பள்ளேகம்பஹ எனும் பகுதியில், அங்கும்புர என்ற (சிங்களத்தில் வஸ்ம எனப்படும்) கிராமத் தலைவர் பிரிவின் ஒரு பகுதியாக கல்ஹின்னை பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து வந்தது. நூற்றாண்டின் கடைசித் தசாப்தத்தில், சுமார் 1890ம் ஆண்டளவில் கல்ஹின்னை ஒரு தனிக்கிராமத் தலைவர் பிரிவாக ஏற்படுத்தப்பட்டு, கிராமத் தலைவர் பிரிவு எண் 127 எனும் அடையாள எண் வழங்கப்பட்டது,
முதன்முதலில், ஆதம்பிள்ளை மகன் அலி உதுமா லெப்பை கிராமத் தலைவர் (ஊரவர்கள் ஆரச்சி மஹத்தயா என அழைக்கும்) பதவிக்கு நியமிக்கப் பட்டார். சுமார் இரண்டு தசாப்தங்கள் அவர் கடமை யாற்றிய பின், 1910ம் ஆண்டளவில் சுலைமான் லெப்பை மகன் முஹம்மது லெப்பையும், பின்னர் 1927ம் ஆண்டளவில் அவர் தம்பி ஹாமித் லெப்பை யும் பதவி வகித்தனர். 1935ம் ஆண்டில் ஹாமித் லெப்பை காலமானார். பதில் கிராமத் தலைவராகச் சில ஆண்டுகள் கடமை பார்த்து வந்த முஹம்மது லெப்பையின் இரண்டாவது மகன் ஹ"ஸைன் லெப்பை தொடர்ந்தும் வேலை பார்த்துக் கொண்டிருக்கையில்,

经?
1936ம் ஆண்டில் கண்டி அரசாங்க அதிபர் கல்ஹின் னைக்கு நேரில் வந்து நேர்முகப் பரீட்சையை ஊர் மக்கள் மத்தியில் பொதுக்கூட்டம் போல் நடாத்தி, போட்டியிட்ட நால்வரில் ஒருவரான ஹ"ஸைன் லெப்பை அவர்களையே நியமித்தார். இரண்டாவது உலக மகாயுத்த காலத்தில் இவருக்கு அதிகப் பொறுப்புக் கள் இருந்தன. அரிசிப் பங்கீட்டுப் புத்தகம் வழங்குதல், வீடுகளுக்கு இலக்கமிடல், உற்பத்தியாகும் நெல்லின் ஒரு பகுதியை அரசாங்கத்திற்குப் பெறுவதற்காக நெல் அறுவடையான பின் களத்திற்குச் சென்று உற்பத்தியான நெல்லை அளவிடல், சனத் தொகைக் கணிப்பு (Census) ஆகிய அலுவல்களில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனது இரண்டா வது சகோதரி ஜெமீலா உம்மாவின் கணவன் என் பதனால், சொந்த மச்சானுக்கு உதவியாயிருக்கும் பேறு, என்னைக் கிட்டியது.
ஹ"ஸைன் லெப்பை அவர்கள் சொற்ப காலம் சுகவீனமுற்றிருந்து, 1947-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ம் திகதி காலமான பின், அவர் தம்பி எஸ்.எம்.எம். பரீத், அரசாங்க அதிபரால் நேர்முகப் பரீட்சையின் பின் நியமிக்கப்பட்டார். எனினும், சுமார் ஆறு மாத காலம் கடமை பார்த்த பின் அவர் பதவியிலிருந்து விலகி, தன் தம்பி ஜ"னைதீனுக்கு வேலையை ஒப்படைத்தார். இவர் 1948-ம் ஆண்டிலிருந்து, 1962-ம் ஆண்டு இறுதி வரை கடமை புரிந்தார்.
பின்னர் நாடு முழுவதிலும் கிராம சேவகர் (ஜி. எஸ்.)நியமனம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு, கிராம நிர்வாகம் கிராமத் தலைவர் (ஆரச்சி) இடமிருந்து, அரசாங்க அதிகாரியான ஜி. எஸ். சுக்கு மாறியது.

Page 17
28
LIGT6flo).T66)
எங்கெல்லாம் முஸ்லிம்கள் குடியேறினர்களோ, அங்கெல்லாம் இறையில்லம் நிறுவுவதைத்தான் தமது முதற் கடமையாக அவர்கள் மேற் கொண்டனர். எனினும் சில சிற்றுார்களில் வாழ்ந்தவர்கள், ஒற்று மையையும் ஏனைய பல காரணங்களையும் முன்னிட்டு, அக்கம் பக்கத்து ஊரவர்கள் ஒன்றிணைந்து, ஏற்ற ஒரு பள்ளி வாசலைத் தேர்ந்தெடுத்து வெள்ளி தோறும் ஜும்ஆ (கூட்டுத் தொழுகைக்கு) ஒன்று சேர்வது வழக்கம்.
ஏறக்குறைய இரண்டு நூற்ருண்டுகட்கு முன்னர் கல்ஹின்னையில் வாழ்ந்த சிறு தொகையினரான முஸ்லிம்களும் அண்மைக் கிராமங்களான ரம்புக் எல ஹல் கொல்லை வளஹேன, அளவத்துக் கொட ஆகிய கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம்களும் ஜும்ஆத் தொழு கையை நிறைவேற்றுவதற்காக இன்றும் பழம் பெரு மையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கும் அக்குறணைப் பெரிய பள்ளிவாசலுக்குச் சென்று வந்தார்கள்.
பின்னர், "பரகஹதெனிய லெப்பை" என அழைக் கப்பட்டவரான கல்ஹின்னையின் முதற் குடிமகன் வாப்புக் கண்டுப் பிள்ளையின் தம்பி இஸ்மாயில் அடப் பனாரின் மருமகனும் "கல்லூட்டு அப்பச்சி’யின் மாமனு ருமான உமர் லெப்பை என்பவரின் பெரு முயற்சியால் ஹல் கொள்ளையில் முதன் முதலாக ஒரு பள்ளி வாசல் நிறுவப்பட்டது. (இப்பொழுது இருக்கும் ஹல் கொள் ளைப் பள்ளிக்குப் பக்கத்தில், பழைய பள்ளியின் மனை இருப்பதை இன்றும் காணலாம்). அப்பள்ளிக்கு முதல் கதீபாய் இருந்தவர் உமர் லெப்பை அவர்களே.

慧转
தமது மருமகன் முஹம்மது லெப்பையின் (கல்லூட்டு அப்பச்சி) மூத்த சகோதரர் உஸ்மான் லெப்பை அஹ்மது லெப்பை (மத்திச அப்பச்சி) என்ப வரையே முதல் மத்திசமாகவும் நியமித்தார்.
காலம் தவழ்ந்தது. சனப் பெருக்கமும் தொடர்ந் தது. ஏனைய சந்தர்ப்ப சூழ்நிலைகளின் நிர்பந்தங்களும்
தலை காட்டின. அதன் விளைவு, எங்கள் கல்ஹின்னைக்
கிராமத்துக்கென்றே ஒரு தனிப்பள்ளி வாசல் நிறுவப் பட்டதாகும். இன்று பள்ளி வாசல் இருக்கும் இடத்தில் தான் முதன் முதலில் மத்திச அப்பச்சியின் முயற்சியால், ஒலையால் வேயப்பட்ட ஒரு சிறு பள்ளி வாசல் உருவாக் கப்பட்டது. இந்த இடத்தில் தான் பள்ளி அமைய வேண்டும் என்ற மத்திச அப்பச்சியினதும், ஏனையவர் களினதும் ஆலோசனையை அக்காலத்தில் வெளியூரி லிருந்து அடிக்கடி எம்மூருக்கு வருகை தந்த 'பொகுடு
பாவா" என்ற காரணப் பெயரால் அழைக்கப்பட்ட ஒரு.
சமயப் பெரியாரும் அங்கீகரித்து ஆசி வழங்கினுராம்.
பெருந்தகையும், பெரு வள்ளலுமான உமர்
லெப்பை ஹாஜியாரின் (கடை அப்பச்சி) பெரு முயற்சி
யாலும், மக்கள் அளித்த பேராதரவிலுைம், தமது
சகலன் (மத்திச அப்பச்சி) ஆரம்பத்தில் ஒலையால்
நிறுவிய பள்ளியை ஒடு வேயப்பட்ட கட்டடத்தைக் கொண்ட பள்ளியாக மாற்றும் பெரும் பணி நிறை வேறியது.
மார்க்க விஷயத்தில் மட்டு மன்றி, ஏனைய வேலை
களிலும் எவ்வித வேற்றுமை எண்ணமும் காட்டாத அன்றைய எமது மூதாதையர்கள், பள்ளி வாசலைக் கட்டும் பணிக்கு முழு ஒத்துழைப்பு நல்க முன்வந்தனர். பள்ளியை நிறுவும் பொறுப்பை, உமர் லெப்பை ஹாஜி யாரிடம் ஒப்படைத்தனர்.

Page 18
தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பாரிய பொறுப்பை பணப் பிரச்சினையைத் தடைக் கல்லாக எண்ணாது செவ்வனே செய்து முடித்தார் உமர் லெப்பை ஹாஜி யார் அவர்கள். ஈற்றில், ஊர் மக்கள் உவந்தளித்த நன் கொடையையும் கடந்து, தமது சொந்தப் பணம் அப் பொழுது சுமார் இரண்டாயிரம் ரூபா வரை செலவு செய்தார். உமர் லெப்பை ஹாஜியார் அவர்கள் இரண்டாவது முறையாக 1923ம் ஆண்டு புனித ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக மக்கா செல்ல முன்னர், பள்ளிவாசலைப் புனர் நிர்மாணம் செய்தமைக்காக ஊர் மக்கள் தமக்குத் தர வேண்டியிருந்த ரூபா 2000த் தையும், ஊர் மக்களின் சம்மதத்தையும் பெற்று ஊர் மக்களின் சார்பில் அப்பண்த்தைப் பள்ளிவாசலுக்கு வக்பு செய்தார்.
இடைக்கிடை இப்பள்ளி வாசல் காலத்துக் கேற்ற சிறு மாற்றத்தைப் பெற்றது. ஆயினும், சனப் பெருக் கத்தின் தாக்கமும், பெரும் பணியாற்ற வேண்டும் என்ற சான்றோர்களின் பெரு நோக்கத்தினால் ஏற்பட்ட ஊக்கத்தின் பிரதிபலிப்புமே, எழில் தோற்றத்தையும் விசாலமான இடவசதியையும் கொண்டு கல்ஹின்னை ஜும்மா மஸ்ஜித் பின்னர் மிளிர்வதற்குக் காரண Lentu 960r.
1946-ம் ஆண்டு கல்ஹின்னை ஜும்மா மஸ்ஜித் புனர் நிர்மாணிக்கப்பட்டு புதுப் பொலிவு பெற்றது. இதற்கு மூல கர்த்தவாக அமைந்தவர் தொண்ணுாறு வயதுக்கு மேல் வாழ்ந்து காலமான மார்க்க அறிஞரும் பழம்பெரும் உலமாவுமான அல்ஹாஜ் ஏ. ஒ. அப்துல் ஹமீத் ஆலிம் அவர்களே. தமது தந்தை மர்ஹகும் உமர் லெப்பை ஹாஜியாரைப் போன்றே,
இறையில்லத்தை நிர்மாணிப்பதில் எவ்வித குறைவு

姆?
மின்றி நிறைவு செய்வதையே ஒரே இலட்சியமாகக் கொண்டு அவர் அரும் தொண்டாற்றினார்.
கல்ஹின்னை ஜும்மா மஸ்ஜிதை முற்றாக மாற்றி அமைப்பதற்கான நிதியுதவியை கல்ஹின்னை மக்கள் அனைவருமே தயங்காது தாராள மனத்துடன் செய்ய முன்வந்தனர். இப்புண்ணிய கைங்கரியத்தை எண்ணிய வாறு அழகுற முடிப்பதற்கு ஏற்றவர். மஸ்ஜித் நிர் மாணிக்கும் வேலைகள் அத்தனையையும் திருப்தியாக வும், திறமாகவும் மேற்பார்வை செய்து புதுமெருகு ஊட்டக் கூடியவர் என்ற ஊர் மக்களின் ஏகோபித்த முடிவை நம்பிக்கையை ஒளிபெறச் செய்த பெரியார் அப்துல் ஹமீத் ஆலிம் அவர்களாகும்.
அதன் பின்னர், 1946-ம் ஆண்டில் நிர்மாணிக்கப் பட்ட பள்ளிவாசலை முற்றாக உடைத்து, புதுக் கட்டிடம் மேல்மாடியுடன் கூடியதாக அமைந்து, நவீன தோற்றத்துடன் இன்று கல்ஹின்னையின் ஜும்ஆ மஸ்ஜித் காட்சி தருகிறது. புதிய கட்டிடம் அமைப்ப தற்கு சுமார் எண்பது இலட்சம் ரூபா செலவிடப்பட்டது. இந்த முழுத் தொகையும் ஊர் மக்களின் நன்கொடை யாகும். வெளியூர்களிலோ, வெளிநாடுகளைச்சேர்ந்தவர் களிடமோ பள்ளிவாசல் கட்டுவதற்கு ஒருபோதும் பணம் திரட்டப்படவில்லை. புதிய பள்ளிவாசலை, 1989-ம் ஆண்டு மத்தியில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மெளலானா அப்துல் ஸ்மத் திறந்து வைத்தார்கள்.
புதிய பள்ளிவாசல் கட்டிட நிதி திரட்டுவதில் ஈடு பட்டு, பள்ளியைக் கட்டி முடிப்பதற்கு தேர்ந்தெடுக்கப் பட்ட குழுவின் விபரம் வருமாறு : தலைவர் அல்ஹாஜ் ஏ. எச். அப்துல் ரஹீம் ஆலிம், உபதலைவர்கள் :-

Page 19
அல்ஹாஜ் ஏ.எம். இஸ்மாயில் ஆலிம்(கதீப்), அல்ஹாஜ் ஏ, சரீப்தீன், இணைக் காரியதரிசிகள் :- ஜனாப் எஸ். எச். தாஜுதீன், அல்ஹாஜ் எஸ். எல். ஹலீம்தீன், தனாதிகாரி அல்ஹாஜ் ஐ. எல். எம். காலித் ஜே. பி.
ஏனைய குழு அங்கத்தவர்கள்: அல்ஹாஜ் மெளலவி எச். சலாஹ"தீன், அல்ஹாஜ் மெளலவி எஸ். எம். இஸ்மாயில், அல்ஹாஜ் மெளலவி எச்.ஏ. அஸிஸ், அல் ஹாஜ் மெளலவி ஏ. எச். எம். ஹனிபா, அல்ஹாஜ் ஒ. எல். எம். ஹனிபா, அல்ஹாஜ் எஸ். எம். சுபைர், அல்ஹாஜ் எச்.எஸ். ஏ. ரஹீம், அல்ஹாஜ் எச். எம்.இப் ராஹிம், அல்ஹாஜ் எஸ். எம். ஹலீம்தீன், அல்ஹாஜ் ஜி. எஸ். ஏ. மஜீத், அல்ஹாஜ் எச். எம் ஷபீக், அல்ஹாஜ் எஸ்.எம். ஜிப்ஃரி, அல்ஹாஜ் எம். எச் எம். பசீர் அல்ஹாஜ் எஸ். எம். ஜவாத், அல்ஹாஜ் ஏ. எஸ். எம். ஜுனைதீன், ஜே. பி. , அல்ஹாஜ் ஜே. எல். எம்.' ஹ"ஸைன், ஜே. பி. , அல்ஹாஜ் ஒ. எல். எம். காஸிம் ஜே. பி. ஜனாப் எம். சி. எம். முஹ்ஸின் ஜே. பி. ஜனாப் எம். எச். எம். ஹலீம்தீன் சட்டத்தரணி ஜனாப் எம்.ஐ.ஏ. ரஹீம் ஜே.பி. (விவாகப் பதிவாளர்). ஜனாப் எஸ். எல். எம். நஜ்முதீன், ஜனாப் எம். கே. ஜமால்தீன்,“ஜனாப் எஸ். எச். ஜுனைதீன், ஜனாப் எச். எம். ஏ. ரஹீம், ஜனாப் வை. ஏ. அஸிஸ்.
பள்ளிவாசல் வரலாறு பற்றி மெளலவி எம். எச். எம். ஷரீஃப் அவர்களின் குறிப்புகள்:
"எங்கள் கிராமத்தை அடுத்திருக்கும் ஹல் கொள்ளை எனும் கிராமம், அதைச் சுற்றி இருக்கும் எல்லா இஸ்லாமிய கிராமங்களை விடவும் மிகப் பழையதாகும். இங்கு முஸ்லிம்கள், இதைச் சுற்றி இருக்கும் கல்ஹின்னை, றமுக்கல்லை, வளஹேன, அள.

5.
வத்து கொட ஆகிய கிராமங்களில் முஸ்லிம்கள்குடியேறு வதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்டே குடியேறியிருந் தார்கள் என்று சொல்லப்படுகிறது. இங்கு ஒரு பள்ளி இருந்தது. அது இப்பொழுது'காணப்படும் பள்ளி அல்ல. அது வேறிடத்தில் இருந்தது. அதன் மனை இப்பொழு தும் காணக் கூடியதாய் இருக்கிறது. இப் பள்ளியில், மேலே கூறப்பட்ட ஐந்து கிராமத்தவர்களும் ஒன்று கூடி ஜ"ம்ஆ முதலிய மற்றக் கருமங்களையும் நடத்தி வந்தார் கள். ஒல்வொரு கிராமத்துக்கும், ஒரு மத்திசமும் நிய மிக்கப்பட்டிருந்தது. எங்கள் கிராமத்துக்கும் உஸ்மான் பிள்ளை இஸ்மாஈல் லெப்பை என்பவர் நியமிக்கப்பட் டிருந்தார்.
"எங்கள் கிராமம் சற்றுப் பெருகி, போதிய சனத் தொகை அடைந்ததும், வெளியூரிலிருந்து வந்த ஒரு பெரியாரின் ஆலோசனைப் பிரகாரம், அவர் குறிப்பிட்ட இடத்தில் (இப்பொழுது பள்ளிவாசல் இருக்கும் இடம்) ஒரு தற்காலிகமான பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதன் பிறகு, ஹிஜ்ரி 1281ம் வருடம் (கிறிஸ்து வருடம் 1864ல்) ஒரு நிரந்தரமான பள்ளியை நல்ல முறையில் கட்டி முடித்தார்கள். இதோடு, ஹல்கொள்ளை பள்ளி யின் தொடர்பு நின்றுவிட்டது, இப் பள்ளிக்கு முதன் முதலாக உஸ்மான் பிள்ளை அஹ்மத் லெப்பை என்ப வர் மத்திசமாகவும், ஆதம்பிள்ளை அலி உஸ்மான் லெப்பை அல்லது அல்தம்பி லெப்பை என்பவர் முதலா வது கதீபாகவும் நியமிக்கப்பட்டார்கள்.
"அன்று கட்டப்பட்ட பள்ளிவாசலை இடையிடை விசாலமாக்கி வந்து, கடைசியாக 1946ம் ஆண்டு முழு வதையும் உடைத்து சனத்தொகைக்குத் தக்கபடி பெரிய பள்ளியாகக் கட்டி இருக்கிறார்கள். ஊரிலுள்ள எல்லாக் குடும்பங்களும், இதைக் கட்டுவதற்கு பண,

Page 20
உதவி அளித்தனர். இதைக் கட்டி முடிப்பதற்கு வேண்டிய வேலை அத்தனையும் தொடக்கத்திலிருந்து, கடைசி வரைக்கும் செய்து கொடுத்துவரும், இதற்குப் பொறுப்பாளியாக இருந்து அயராது உழைத்தவரும் மகாகனம் உமர் லெப்பை ஹாஜியார் அப்துல் ஹமீத் , ஆலிம் சாஹிப் அவர்களாகும்."
கதீப்கள் கல்ஹின்னை ஜ"ம்மா மஸ்ஜிதில் அன்று தொட்டு, இன்று வரை கதீப்மார்களாக (குத்பா பிரசாங்கம் செய்
வோர்) இருந்து பணிபுரிந்தவர்கள் பற்றிய விவரம் வருமாறு :
முதலாவது கதீப்: அலித் தம்பி லெப்பை மாத் தளைக்கு அண்மையிலுள்ள உள்பத்தப் பிட்டிய கிராமத் திலிருந்து இங்கு வந்து குடியேறிய உள்பத்தப்பிட்டிய முஹாந்திரம்லாகெதர ஆதம் பிள்ளையின் இளைய மகன் அலித் தம்பி அவர்கள் தான் முதலாவது கதீப் ஆகக் கடமை புரிந்தார். இவர் கதீபாக மட்டுமின்றி, ஐந்து நேரத் தொழுகையை பள்ளியில் நடாத்தும் பேஷ் இமாமாகவும் குர்ஆன் ஓதிக் கொடுக்கும் முஅல்லிமாக வும் கடமையாற்றினார்.
இரண்டாவது கதீப்: அப்துல் காதர் ஆலிம் "பெரிய ஆலிம் அப்பச்சி" என அழைக்கப்படும் கல்ஹின்னை கண்ட முதல் பேருலமா மர்ஹஜூம் அப்துல் காதிர் அவர் கள் தமது தந்தைக்குப் பின்னர், சிறிது காலம் கதீபா கவும் முஅல்லிமாகவும் கடமையாற்றினார்.
மூன்றாவது கதீப் ஹபீப் முஹம்மத் லெப்பை. முதலாவது கதீப் அலித் தம்பி அவர்களின் இரண்டா வது மகன் தான் ஹபீப் முஹம்மது (மர்ஹஜூம் அல்ஹாஜ்

剔
ஏ. எச். எம். ஹ"சைன் அவர்களின் தந்தை) இவரின் மூத்த சகோதரர் தான், பெரிய ஆலிம் அப்பச்சி அவா கள.
மூன்றாவது கதீப் ஹபீப் முஹம்மது அவர்கள். 1868ம் ஆண்டு பிறந்தார். இவர் தமது 72வது வயதில் 1940ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.
முதல் முதலாக ஹள்கொள்ளையில் நிறுவப்பட்ட பள்ளி வாசலின் முதல் கதீபான 'பரகாதெனிய" உமர் லெப்பையினதும், பெருமகன் வாப்புக் கண்டுப் பிள்ளை யின் தம்பி இஸ்மாயில் கண்டு அடப்பனாரின் இர ண்டா வது மகளினதும் மூத்த மகன் இஸ்மாயில் லெப்பையின் (ஹள் கொள்ளைப் பள்ளியின் இரண்டாவது கதீபான இவரை "தொங்கல் லெப்பை அப்பச்சி" என அழைப் பர்) மகள் ஹனிபா உம்மாவை, இவர் திருமணம் செய்தார்.
இவருக்கு மூன்று புதல்வர்களும், நான்கு புதல்வி களும் உண்டு.
இவரும் கதீபாகக் கடமையாற்றியதோடு பேஷ் இமாமாகவும், முஅல்லிமாகவும் கடமையாற்றினார்.
சன்மார்க்க நெறிகளுக்கு ஒவ்வாத செயல்களைக் கண்டால், மிக மிகக் கண்டிப்பார். நேர்மை நியாயம் தவறாத இவர், எப்பொழுதுமே அமைதியான போக் குடையவராயிருந்தார்.
நான்காவது கதீப் ஹபீப் லெப்பை அவர்கள் சிறிது காலம் கதீப் வேலை பார்த்ததுடன், பிள்ளைகளுக்குக் குர்ஆன் ஓதிக் கொடுப்பதிலும் வல்லவராயிருந்தார். இவரிடம் ஒதியவர்கள், அவர் கட்டுப்பாட்டில் மிகக் கடுமையான ஆசிரியர் என்றும் அவரிடம் ஒதியதை ஒரு

Page 21
காலமும் மறக்காமலிருக்கும் விதத்தில் பாடம் சொல்லிக் கொடுப்பார் என்றும் கூறுவர்.
ஐந்தாவது கதீப்: "குடாக்கும் புரை லெப்பை" என அழைக்கப்பட்ட ஹாமித் லெப்பை அவர்கள் எமதுரரின் சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவராயிருந் தார். ஊரில் குர்ஆன் ஓதிக் கொடுத்து, மார்க்க அறிவைப் புகட்டுவதற்கென்றே உல்பத்தபிட்டியி விருந்து வந்து கல்ஹின்னையில் குடியேறியவரின் மகனான இவர், பல மார்க்கக் கிரந்தங்களை ஆராய்ந்து, மற்றவர்களுடன் அதுபற்றிக் கலந்துரையாடி மார்க்க அறிவைப் பரப்புவதில் வல்லவராயிருந்தார். இவரின் அறிவை மெச்சியே, கதீப் பதவி வழங்கப்பட்டது
ஆருவது கதீப் "ரத்தொட்டை லெப்பை". கல் ஹின்னையின் முதல் மத்திசம் அஹ்மது லெப்பையின் மூத்த மகன் யூஸ்"ப் லெப்பை என்பவரின் மூத்த மகனன *ரத்தொட்டை லெப்பை'யின் இயற்பெயர் ஹபீப் முஹம்மது ஆரம்பத்தில் இவர் ரத்தொட்டை என்னும் ஊரில் முஅல்லிமாகக் கடமையாற்றியதனுல் இவரை எல்லோரும் ரத்தொட்டை லெப்பை" என்றே அன்பாக அழைத்தனர்.
இவர் கிட்டத்தட்ட பன்னிரெண்டு வருடங்கள்
கதீபாகவும், முஅல்லிமாகவும் அரும்பணி புரிந்தார்.
பெரியார் "பெரிய ஆலிம் அப்பச்சியின் மூத்த மகள் பாத்துமா பீபியைத் திருமணம் செய்தார். இவர்களின் பிள்ளைகளில் மூவர் புதல்வர்கள், மூவர் புதல்விகள்.
ஏழாவது கதீப்; "இஸ்மாயில் ஆலிம் "பெரிய ஆலிம் அப்பச்சியின் கடைசி மகனான இவரை, "இஸ்மாயில்

勢か
ஆலிம் என்ருல் கதீப் இஸ்மாயில் ஆலிமைத்தான் குறிக்கும்.
இவர் 1924ம் ஆண்டு பிறந்தார். கல்ஹின்னை முஸ்லிம் தமிழ்ப்பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். ஆலிமாக வேண்டும் என்ற ஆர்வத்தினால், இவர் வெலிகம மத்ரஸ்த்துல் பாரி அரபிக் கல்லூரியில் போய்ச் சேர்ந்தார்.
இலங்கையில் பிரபல்யம் வாய்ந்த பேருலமாக்களுள் இருவர்களாகிய மர்ஹ9ம் அல்ஹாஜ் முஹம்மது ஸ்க்கரியா ஆலிம், மற்றும் மர்ஹ9ம் அல்ஹாஜ் செய்யத் ஜெமாலியா யாஸின் மெளலானா ஆகிய பெருந்தகை களிடம் அரபுக் கல்வியைநன்கு பயின்று, 1944ம் ஆண்டு ஆலிமாக வெளியேறினார். சுமார் பத்து வருடகாலம் தான் ஒதிய மத்ரஸாவிலேயே உஸ்தாதாகக் கடமை யாற்றினார். பின்னர், உக்குவளை பறகஹ வெலையில் ஐந்து வருடங்கள் முஅல்லிமாக இருந்தார்; 1958ம் ஆண்டு இவர் மெளலவி ஆசிரியராக நியமனம் பெற்றார்.
இவர் A. K. ஹ"ஸைன் லெப்பையின் மகள் ரம்ளத் பீபியைத் திருமணம் செய்தார். இவருக்கு இரண்டு புத்திரர்களும், ஏழு புத்திரிகளுமுண்டு.
தமது தந்தையைப் போன்றே சிறந்த மார்க்க அறி வும் ஆற்றலும் மிக்க இவர். அரசாங்க தொழில் பெற்ற தின் காரணமாக கதீப் வேலையைக் கைவிட்டார்.
மீண்டும், 1973ம் ஆண்டிலிருந்து கதீபாகக் கடமை யாற்றுகின்றார். கல்ஹின்னை அல்மனார் மகா வித்தி யாலயத்தில் மெளலவியாகக் கடமையாற்றிய அல்ஹாஜ்

Page 22
38
ஏ. எம். இஸ்மாயில் ஆலிம் இப்பொழுது கல்ஹின்னை ஜும்மா மஸ்ஜிதின் கதீபாகவும், பேஷ் இமாமாகவும், அத்துடன் கல்ஹின்னை மத்ரஸ்துல் பத்தாஹ் அரபிக் கல்லூரியின் பகுதி நேர முதர்ரிஸ்ஸாகவும் (விரிவுரை யாளர்) பணி புரிகின்றார்.
எட்டாவது கதீப் 'பரீத் லெப்பை மதிப்புக்குரிய "நாகூர் பிச்சை லெப்பை'யின் ஒரே மகனான அல்ஹாஜ் எஸ். எம். பரீத் லெப்பை அவர்கள் ஏறக் குறைய ஆறு வருடங்கள் கதீபாகக் கடமையாற்றினார்.
அத்துடன் சுமார் பத்து வருடங்கள் வரை குர்ஆன் மத்ரஸாவில் முஅல்லிமாகவும் கடமை புரிந்தார். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பது போல். ஆற்றல் மிக்க தந்தை தந்த அரும் பயிற்சியே அவருக்கும் சிறப்புறக் கடமையை புரியும் திறனைக் கொடுத்தது. தேகாரோக்கியம் குன்றியதினால், அரும்பணியைத் தொடர முடியாத நிலைக்காளானார்.
நற்பண்புகள் நிறைந்த பரீத் லெப்பை, தந்தையைப் போன்றே ‘ரபாய் ராத்திபு' வைபவத்தைச் சிறப்பாக நடத்தி வந்தார். "எதிர் காலத்தில் இப்படியான வைபவத்தை மிகவும் பயபக்தியுடன் நடத்தும் ஆற்றலும் ஊக்கமும் படைத்தவர்கள் இருப்பார்களா?" என்ற வேதனையும் விரக்தியும் நிறைந்த வினாக் குறியை இவர் எழுப்பினார்.
1917ம் ஆண்டு பிறந்த இவர் 'மெதில்லே அப் பச்சி" என அழைக்கப்படும் மர்ஹ9ம் முஹம்மது லெப்பையின் மகள் உம்மு அஸிஸாவை விவாகம் செய் தார். இவருக்கு ஏழு புதல்வர்களும், மூன்று புதல்வி களும் இருக்கின்றனர்.

8ፅ
தந்தையைப் போன்றே சன்மார்க்க விஷயங்களில்
அதிக ஈடுபாடுள்ள இவர் 1973ஆம் ஆண்டு புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றினார்.
ஒன்பதாவது கதீப்:- மெளலவி J. M. சரீப் நாலாவது கதீபாக இருந்த ஹபீப் லெப்பை அவர்களின் மகன் ஜெமால்தீன் லெப்பையின் புதல்வரான ஜே. எம். சரீஃப், சொற்ப காலம் கதீப் வேலை பார்த்தார். அவர், பாடசாலையில் மெளலவி ஆசிரியராகவும் இருந் திருக்கிருர், வெளிநாட்டில் தொழில் வாய்ப்புப் பெற்று, மத்தியகிழக்கில் சில வருடங்கள் உழைத்துள்ளார்.
பத்தாவது கதீப் மெளலவி சுலைமான் லெப்பை ('மட்டக்களப்பு ஆலிம்") அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அல்ஹாஜ் மெளலவி சுலைமான் லெப்பை, கல்ஹின்னை அல்மனார் மகாவித்தியாலயத்தில் இவர் மெளலவி ஆசிரியராகக் கடமை புரிந்து, ஒய்வு பெற்றுள் ளார். இவர் கல்ஹின்னையிலேயே மூன்ருவது கதீபாக இருந்த ஹபீப் முஹம்மது லெப்பை அவர்களின் மகளை திருமணம் செய்து, கல்ஹின்னையில் குடியேறி விட்டார்.
பதினொராவது கதீப் மெளலவி ஏ.எம். இஸ்மாயில் ஹாஜியார் இப்பொழுது கல்ஹின்னை ஜ"ம்மா மஸ்ஜி தின் கதீபாக இருக்கும் இவர் முன்பு, ஏழாவது கதீபாக இருந்தார். இன்றும் (1991ல்) அவர்தான் கதீபாக இருக்கிருர்.
முஅல்லிம்கள் திருக்குர்ஆனை ஓதிக் கொடுப்பவர்களை "முஅல்லிம் (ஆசிரியர்) என்று தான் அழைப்பர். எங்களுரிலும்

Page 23
40
வேறு ஒரு சில ஊர்களிலும் முஅல்லிமை-லெப்பை" என்று அழைக்கும் வழக்கம் அக்காலத்திலிருந்தே வேரூன்றி விட்டது. குர்ஆனை ஓதி முடித்தவர்களை யும் அக்காலத்தில் "லெப்பை" என அழைக்கும் பழக்க மும் இருந்து வந்தது. இன்னும், பெயர்களின் ஈற்றில் "லெப்பை" என்ற பதத்தைப் பலர் இணைத்துக் கொள் ளும் "தொன்று தொட்டு" விளங்கி வந்த நடை முறை இருக்கிறது. "லெப்பைக்க"-(அடிபணிந்தேன்) என்ற அரபுப் பதத்திலிருந்து மருவிய சொல்லே "லெப்பை" என்பதாகும். திருமறையை ஒதிக் கொடுக் கும் அரும் பணியைச் செய்த முஅல்லிம்கள்" முதல் நால் வாரும் கதீப்களாகவும் இருந்ததால், முதல் நாலு கதீப் கள் பற்றிய விபரங்களை, கதீப்கள் என்ற பகுதியில் EST 650TG) TLD ... "
ஐந்தாவது முஅல்லிம்: நாகூர் பிச்சை லெப்பை ஏறக்குறைய ஐம்பது அல்லது அறுபது வருடங்களுக்கு முன்னர், கல்ஹின்னைக் குர்ஆன் மத்ரஸாவில் குர்ஆன் ஒதியவர்களின் மனக்கண் முன்னால் தோற்றமளிப்பது அவர்களின் மதிப்புக்குரிய உஸ்தாதின் ஒல்லிய உருவம் தான். உருவம் ஒல்லியாய் இருந்தாலும் கருமம் மகத் தானது! சொல்லிலே செயலிலே நேர்மை ஓர்மை; தமது கடமையை சீருறச் செய்வதிலே அலாதியான அக்கறை, ஆர்வம்; அத்தனை நல்லியல்புகளும் அமையப் பெற்ற அந்த 'உஸ்தாத்” ‘நாகூர் பிச்சை லெப்பை அவர்கள் தான் இது அவரின் பட்டப் பெயர். அவரின் இயற் பெயர் சதக் முஹம்மது என்பதாகும். இவர் உதுமான் அலியார் என்பவருக்கு மகனாக 1885ம் ஆண்டு பரகா தெனியில் பிறந்தார். *
கல்ஹின்னையைச் சேர்ந்த தமது உறவினரான ஹபீப் என்பவரின் மகன் ஸபியா உம்மாவைத்திருமணம்

4
செய்ததுடன் கல்ஹின்னையைத் தமது இருப்பிடமாசு மாற்றிக் கொண்டார்.
இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர், ர்பாய் ராத்தீபை முதல் முதலாக கல்ஹின்னையில் அறி முகம் செய்த "நாகூர் பிச்சை" லெப்பை சுமார் முப்பது வருடங்கள் குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.
"தர்தீபா’க ஒதிக் கொடுப்பதில் தன்னிகரற்று விளங்கினார். கண்டிப்பு. கட்டுப்பாடு, அடக்கம் ஒழுக்கம் இவைகளையே முக்கியமாகக் கருதி ஓதிக் கொடுத்தார். மார்க்க நெறி தவறுபவர்களைக் கண் டால் சீறியெழுவார் சன்மார்க்க சீலர்,
அக்காலத்தில் இயங்கிய கமாலியா மத்ரஸாவில்மாணவர்களுக்குத் தமிழ் படித்துக் கொடுக்கும் உபாத்தி யாயராகவும் ‘நாகூர் பிச்சை லெப்பை" கடமையாற்றி னார்.
1947ம் ஆண்டு மக்கா சென்று வந்த அல்ஹாஜ் சதக் முஹம்மது, 1953ல் இறையடி சேர்ந்தார்.
ஆறாவது முஅல்லிம் ஆறாவது கதீபாக இருந்த "ரதீ
தொட்டை லெப்பை."
ஏழாவது முஅல்லிம்:- எட்டாவது கதீபாக இருந்த 'பரீத் லெப்பை"
எட்டாவது முஅல்லிம்: "களத்துக்கள லெப்பை" கல்ஹின்னையில் முதலில் குடியேறிய வாப்புக் கண்டு அடப்பனாரின் நேர் வாரிசுகளில் ஒருவர் களத்துக்கள லெப்பை" என அழைக்கப்பட்ட மர்ஹஅம் ஹபீப் முஹம்மது அவர்கள்.

Page 24
4:
வாப்புக் கண்டு அடப்பனாரின் மகன் மீராக் கண்டு. அவர் மகன் ஹபீப் முஹம்மது. அவரின் இரு புத்திரர் கள்தான் அளவத்த அப்பச்சி" என வழங்கும் மர்ஹஅம் செய்யது லெப்பையும், மர்ஹ9ம் முஹம்மது லெப்பையு LDTGITT
முஹம்மது லெப்பையின் மூத்த புதல்வர்தான் மர்ஹ9ம் ஹபீப் முஹம்மது அவர்கள். நெற்கதிர்களை ஒன்று கூட்டி நெல் அகற்றுதலை "சூடுமிதித்தல்" என் கின்றோம். இச்சூடு மிதிக்கும் இடத்தைக் 'களம்' என அழைப்பர். களம் இருந்த இடத்தில் இவர் தனது வீட்டைக் கட்டியதினால் களத்துக்கள லெப்பை" என்ற காரணப் பெயரால் கல்ஹின்னை மக்கள் இவரை அழைத்தனர்.
இவர் 1906ம் ஆண்டு பிறந்தார். கல்ஹின்னை ஜ"ம்மா மஸ்ஜிதின் பேஷ் இமாமாக சுமார் பத்து வரு டங்கள் தொடர்ந்து சிறப்புறப் பணியாற்றினார்.
அத்துடன் கல்ஹின்னைக் குர்ஆன் மத்ரஸாவில் முஅல்லிமாகவும் ஏறக்குறைய பதினைந்து வருடங்கள் கடமையாற்றினார்.
அனைவருடனும், பெருந்தன்மையோடும் அன்பாக வும் பழகிய இவர் ஆடம்பரமோ அகம்பாவமோ அற்ற வர். மார்க்க நெறிகளில் கிஞ்சித்தும் தவறாது, நிதான முடன் வாழ்ந்தார்.
முஹம்மது லெப்பையின் மகள் சரிபா உம்மாவைத் திருமணம் செய்தார். இவருக்கு ஏழு புதல்வர்களும் ஐந்து புதல்விகளுமுண்டு.
எழுபத்திரெண்டு வயதிலும் சுறுசுறுப்புடனும் சிறப்படனும் நற்பணி புரிந்த இவர் 1978ம் ஆண்டு காலமானார்,

43
பிர சித் தி பெற்ற முஅல்லிம்களாயிருந்தவர்கள் பற்றிய விபரங்கள் மாத்திரம் இங்கு தந்துள்ளோம். இவர்கள் தவிர வேறு பலரும் குர்ஆன் ஓதிக் கொடுப் பதில் அன்றும் ஈடுபட்டிருந்தனர், இன்றும் ஈடுபட்டி ருக்கின்றனர்.
மத்திசம்கள்
மத்திச அப்பச்சி: இறையில்லத்தை நேர்மையுணர் வுடன், நன்கு பராமரித்து ஊருக்கும், ஊர் மக்களுக்கும் அரும் சேவையாற்றிய அறப் பணி புரிந்த மத்திசம்மார் (தர்மகர்த்தாக்கள்) வரிசையில் முதல் இடத்தை வகிப்பவர் அன்றைய கல்ஹின்னை மக்களால், "மத்திச அப்பச்சி" என அன்புடன் அழைக்கப்பட்ட மர்ஹ9ம் அஹ்மது லெப்பை அவர்களாகும்.
இவருடைய தந்தையார் பெயர் கம்மஹளாகெதர உஸ்மான் லெப்பை. கல்ஹின்னையில் முதன் முதலில் குடியேறிச் சரித்திரம் படைத்த தலைமகன் வாப்புக் கண்டு அவர்களின் இரண்டாவது மகள்தான், இவரு டைய தாயார். ஐந்து சகோதரர்களுக்கு மூத்தவர் தான் "மத்திச அப்பச்சி. இன்றைய முஸ்லிம்களின் பிரிந்து வாழும் எண்ணத்துடனல்ல, பரந்து வாழும் நோக்குடன் இவரின் தம்பிமார்கள் மூவர் அனுராதபுர மாவட்டத்திலுள்ள நாச்சியாதீவு என்ற கிராமத்திலும், குருநாகல் மாவட்டத்திலுள்ள கொஸ்வத்த-மிதியால என்ற கிராமங்களிலும் சென்று குடியேறி, அக்கிராமங் களைத் தமது நிரந்தர இருப்பிடமாக்கிக் கொண்டனர்.
இவரும், இவருடைய தம்பிகளுள் ஒருவரான “கல்லூட்டு அப்பச்சி" என அழைக்கப்படும் முஹம்மத் லெப்பை என்பவரும் தமது பிறந்தகமான கல்ஹின்னை

Page 25
44
யின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும், வழுவிலாப் பணி புரிவதில் அளவிலா இன்பம் கண்டனர். அண்மைக் கிராமமான ரமுக்கல்லையில் முதல் முதல் குடியேறி வாழ்ந்து கொண்டிருந்த இஸ்மாயில் கண்டு அடப்பனார். (வாப்புக் கண்டுவின் தம்பி) என்பவரின் மகன் தம்பி, லெப்பை அவர்களின் மூத்த மகளைத் திருமணம் புரிந் தார். இரண்டு புதல்வர்களும், ஐந்து புதல்விகளும் இவரின் வாரிசாக அமைந்தனர். கல்ஹின்னையின் மார்க்க மேதையும், பேருலமாவுமான "பெரிய ஆலிம்" அப்பச்சி இவரின் மருமக்களில் ஒருவர்.
கல்ஹின்னை ஜும்ஆப் டஸ்ளிக்கு மேற்குப் பக்கத் தில் தான், இவருடைய பிறந்த வீடு (செட்டியார் வீடு அல்லது வலதனியார் வீடு என இவ்வீட்டை அழைப்பர்) இருந்தது. தமது ஒரே அன்புத் தங்கைக்கு அவ்வீட்டை யும், அதைச் சுற்றியிருந்த விசாலமான நிலபுலன்களை யும் அகமுவந்து அளித்து விட்டு, அவரும், அவருடைய தம்பியும் கல்ஹின்னைக்குக் கிழக்கேயுள்ள படகொள்ளா தெணிய என்ற பகுதிக்குத்தமது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டனர். அன்று அஸ்துமலை என்ற இடத்திலிருந்து பீரிஹெல என்ற இடம் வரை இருந்த காணிகள் முழுக்க இவ்விரு சகோதரர்களுக்கே உரியனவாயிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மத்திச அப்பச்சி, தமது காணியிலே பல குடும்பங்களைக் குடியேறச் செய்தார். பெரு மனதுடன் பலருக்குத் தமது காணிகளை அன்பளிப்பாக வும் வழங்கியுள்ளார். ஹல்கொல்லைப் பள்ளியில் இவர் மத்திசமாகக் கடமையாற்றினார்.
-ஆரச்சி அப்பச்சி
கல்ஹின்னையின் ஆரச்சியாராக முதன் முதலில் நியமிக்கப்பட்ட அலித் தம்பி உதுமான் லெப்பை,

இரண்டாவது மத்திசமாகவும் இருந்தார். ஆதம் பிள்ளை எனும் பெரியாரின் கடைசி மகனான இவர் தமது கடமையை சிறப்புறச் செய்தார். இவரின், மாமனாரான அஹ்மது லெப்பை (மத்திச அப்பச்சி) கையளித்த மத்திச வேலையை எவ்வித பிரச்சினைக்கும்" பேச்சுக்கும் இடமின்றி ஊர் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நல்ல முறையில் நிறைவேற்றினார்.
காளியார் : நாற்பது வருடங்களாக கல்ஹின்னை ஜும்மா மஸ்ஜிதைப் பராமரித்து, மத்திசமாக (தர்ம கர்த்தாவாக) ஒரேயொருவர்தான் இருந்துள்ளார், எவ்விதமான சலசலப்பையும் ஏற்படுத்தாது, ஐக்கி யத்தைப் பேணி-மார்க்கத்துக்கு முரணான செயல் களாலோ, செயல்களின் தாக்கங்களாலோ, இம்மியும் தனித்துவத்தை இழக்காது தன்னிகரற்ற முஸ்லிம் கிராமமாகத் திகழ்வதற்கு, அளப்பரிய பணிபுரிந்த தனி மனிதரின் பெயரைக் குறிப்பிடுவதை விடக் 'காளியார்’ என வழங்கும் அவரின் காரணப் பெயரை சொன்னால், அப்பெருந்தகை யார் எ ன் ப ைத இன்றுள்ள கல்ஹின்னை மக்கள் ஒருவருக்கேனும் தெரி யாமலிருக்காது.
ஆயுள் கால மத்திசமாக இலங்கிய அல்ஹாஜ் ஏ.ஓ.எம். சரீஃப் லெப்பை அவர்களை ஊர்மக்கள் 'காளியார்’ என அன்புடன் அழைக்கின்றனர். பெரியார் உமர் லெப்பை ஹாஜியாரின் மூன்றாவது மகனான, இவர் கி.பி. 1900ம் ஆண்டில் பிறந்தார்.
அவரின் ஆற்றலையும் நிர்வாகத் திறனையும் கண்டு தமது சிறிய தந்தை ஒப்படைத்த தர்மகர்த்தாப் பதவியை, 1938ம் ஆண்டிலிருந்து தருமம் தவறாது நடத்தினார். வாழ்க்கையில் அரைவாசிக்கு மேற்பட்ட காலப்பகுதியை இறையில்லத் திருப்பணிக்காக அர்ப்

Page 26
d
பிணித்ததில் ஆத்ம திருப்தி கண்ட காளியார் அவர்கள் 1938ம் ஆண்டிலேயே முஸ்லிம் விவாகப் பதிவாளர் பதவியையும் ஏற்றார்கள். இதனால்தான் இவரை அன்று தொட்டு ஊர்மக்கள் "காளியார்’ என அழைத் தனர். விவாகப் பதிவாளர் பதவியை 1970ம் ஆண்டு வரை வகித்தார். இவருக்கு ஐந்து புதல்வர்களும், ஆறு புதல்விகளுமுண்டு.
அக்காலத்தில் பள்ளிவாசல் மத்திசம், பள்ளி நிர்வா கத்தில் மாத்திர மல்லாது ஊர் நிர்வாகியாகவும் திகழ்ந் தார். நீதி, நியாயம் தீர்ப்பதில் அவ்வப்போது ஊரில் ஏற்படும் சிறு பிரச்சினைகளை, பொதுவிடங்களில் தலையெடுக்கும் சிக்கல்களைச் சுமுகமாக, சமயோசித மாகச் சமாளித்து ஒற்றுமையை நிலைநாட்டுவதில் காளியார் வல்லவராக இருந்தார்.
அனுபவத்தின் மூலமே, திறமை மிக்கவராக விளங்கிய இவர், அமைதியான போக்குடையவர். மார்க்க நெறி சிறிதும் பிறழாதவர். நடு நிலை நின்று செயலாற்றுவதன் மூலமும், நீதி வழங்குவதன் மூலமும் ஊர் மக்களின் அ ன்  ைப யும் அபிமானத்தையும் பெற்றவர். பள்ளி வருமானம் குறைந்த காலத்திலும் தமது சொந்தப் பணத்தைப் பள்ளியின் பரிபாலனத்துக் காகத் தயங்காது செலவழித்த இவரின் பெருந்தன்மை போற்றத் தக்கது.
1970ம் ஆண்டில் பதினொரு பேர் கொண்ட தர்ம கர்த்தா சபை அமைக்கப்பட்ட போது அதற்கு இவரே தலைமை தாங்கி வழிகாட்டினார். அச்சபையின் கால எல்லை முடிவடைந்த பின்னர் ஊர் ஜமாஅத்தாரேபலரைக் கொண்ட தர்ம கர்த்தா சபை இருப்பதைவிட தனியொருவர் அதுவும் இவரே ஆயுள் காலத் தர்ம

கர்த்தாவாக இருந்து அரும்பணியாற்ற வேண்டு மென்ற ஏகோபித்த முடிவெடுத்தனர்.
சமாதான நீதிமானாகவும் பல்லாண்டுகள் இருந்து, எண்பது வயதில் அவர் 1980ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி செவ்வாய்க்கிழமை காலமானார்.
தர்மகர்த்தா சபை : கல்ஹின்னை ஜும்மா மஸ்ஜி தைப் பரிபாலிப்பதற்காக 1970ம் ஆண்டு அமைக் கப்பட்ட தர்மகர்த்தா சபையில் பதினொரு பேர் அங்கம் வகித்தனர். அவர்களின் பெயர்கள் பின்வரு மாறு: தலைவர்: அல்ஹாஜ் ஏ.ஓ.பி.எம். சரீஃப் ஜே.பி. அங்கத்தவர்கள்: அல்ஹாஜ் எம். எச். எம். ஜெலால் தீன், அல்ஹாஜ் ஏ. எம். சரீப் லெப்பை, அல்ஹாஜ் ஏ. சரீப்தீன், அல்ஹாஜ் ஜி. எஸ். ஏ. மஜீத், ஜனாப்கள் எம். கே. எம். ஜெமால்தீன், ஏ. எச். எம். ஹ"ஸைன், ஒ. எல். எம். காஸிம், மெளலவி எச். ஏ. அஸிஸ், அல்ஹாஜ் ஜே. எம். தவ்பீக், அல்ஹாஜ் எச். எம். ஜவ்பர்.
1980-ம் ஆண்டின் பின், தர்மகர்த்தாக்கள் சபை, பள்ளியைப் பரிபாலனம் செய்கிறது. முதன் முதலில், அல்ஹாஜ் எம். எஸ். எம். அஸிஸ் சபையின் தலைவரா யிருந்தார். அவர் மர்ஹூம் ஏ. ஓ. எம். சரீஃப் ஹாஜி யாரின் மூன்ருவது மகன். அவரின் பின்னர், 1946ம் ஆண்டில் பள்ளிவாசலைத் திரும்பக் கட்டிய அல்ஹாஜ் ஏ. ஓ. அப்துல் ஹமீத் ஆலிம் சாஹிப் அவர்களின் மூத்த புதல்வரான அல்ஹாஜ் ஏ. எச். ஏ. ரஹீம் ஆலிம் தலை வராயிருந்து, மேல் மாடியுடன் கூடிய புதிய பள்ளிக் கட்டிடத்தை அமைத்தார். இவர்களுக்கு எமதூர் மக்கள் மனமுவந்து ஒத்துழைப்பு நல்கினர்,

Page 27
சமயப் பெரியார்கள்
"பெரிய ஆலிம் அப்பச்சி": மார்க்க ஞானத்தைக் கற்றுத் தேர்ந்த பல உலமாக்களும், ஆலிம்களும் சன் மார்க்க சீலர்களும் இன்று கல்ஹின்னையில் இருக்கின் றனர். அவர்களில் பல பேருலமாக்களும்-பேரறிஞர் களும் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். அத்தனை பேர்க்கும் முன்னோடியாக கல்ஹின்னையின் முதல் ஆலி மாகத் திகழ்ந்தவர் மர்ஹகும் அப்துல் காதர் ஆலிம் என்ற காரணத்தால் அன்றைய மக்கள் இவரை "பெரிய ஆலிம்" என அன்போடு அழைத்தனர். இளைய தலை முறையினர் பண்போடு "பெரிய ஆலிம் அப்பச்சி" என அழைக்கின்றனர்.
தலைமகன் வாப்புக் கண்டு அடப்பனாருக்குஅடுத்த படியாக, உள்பத்தப்பிட்டியிலிருந்து வந்து இங்கு குடி யேறிய பெருமகன் ஆதம்பிள்ளையின் மகன் அலித் தம்பி யின், மூத்த மகன்தான் "பெரிய ஆலிம் அப்பச்சி அவர் கள். இவர், 1848ம் ஆண்டு பிறந்தார்.
கல்ஹின்னையின் முதலாவது கதீபான உள்பத்தப் பிட்டிய முஹந்திரம்லாகெதற அலித்தம்பி அவர்களின் முதல் மகன் பெரிய ஆலிம், தமது தந்தைக்குப் பின்னர் சிலகாலம் கதீபாகவும் கடமையாற்றினார். எனவே, கல்ஹின்னையின் இரண்டாவது கதீப் இவராகும்.
இவர் தமது தகப்பனாரிடம் குர்ஆனை ஒழுங்காக ஒதி முடித்தார். வரக்காமுறையில் சிலகாலம் குர்ஆன் ஓதிக் கொடுத்து விட்டு, ஏதோ ஒரு வித உரோச உணர்ச்சியால் உந்தப்பட்டுத் தமது 23வது வயதில் இந்தியா சென்றார். காயல் பட்டணத்திலுள்ள அரபு மத்ரஸாவில் எட்டு வருடங்கள் தொடர்ந்து அரபுக்

கல்வி ஞானத்தை அள்ளிப்பருகி, கல்ஹின்னையின் முதல் சன்மார்க்கத் திருமகனாக வெளியேறினார்.
அன்றைய முதல் மத்திசமாகக் கடமையாற்றிய அஹமது லெப்பை அவர்களின் கடைசி மகள் ஆயிஷா உம்மாவைத் தமது இல்லத் துணைவியாக ஏற்றார், ஐந்து புதல்வர்களும், இரண்டு புதல்விகளும் பிறந்தனர்.)
இவர், தென்னிலங்கையிலுள்ள கிந்தோட்டையில் அமைந்த ஆத்தோரத்தைக்கா என அழைக்கப்படும் மத்ர ஸாவில் குர்ஆன் ஓதிக் கொடுத்து அரபியும் கற்பிக்கும் உஸ்தாதாகத் தமது பணியை ஆரம்பித்தார். சுமார் முப்பது வருடங்கள் வரை, இங்கு கடமையாற்றினார், பெரும் மார்க்கத் தொண்டாற்றிய "பெரிய ஆலிம் அப் பச்சி'யை கிந்தோட்டை மக்கள் 'பண்ணாமத்து ஆலிம்" என்ற புனைபெயரில் அழைத்தனர். "பண்ணா மம்" என்பது மாத்தளைக்குள்ள இன்னொரு பெயர். கல்ஹின்னைக்கு அருகான நகர் மாத்தளை என்பதால் இப்படி அழைத்துள்ளனர்.
சாந்த குணமுடைய இவர் சன்மார்க்க நெறியிலும், *சரீஅத்" படி நடப்பதிலும் சிறந்து விளங்கினார். * தக்வா வழி ஒழுகிப பெரியார் பெரிய ஆலிம் அப்பச்சி, தமது 85வது வயதில் 1932ஆம் ஆண்டு காலமானார்.
கல்லூட்டு ஆலிம்
பி ர ப ல் யம் வாய்ந்த ஒரு மாநகரிலுள்ள மஸ்ஜிதில் ஜும்மாத் தொழுகைக்காக மக்கள் திரண்டி ருந்தனர். தொழுகை முடிந்தது. ஒரு வாலிபர் எழுந்து, மார்க்கப் பிரசங்கம் செய்கின்றார். சென்னை, ஜெமாலியா அரபிக் கல்லூரியின் மாணவரான பேச். சாற்றல் மிக்க அவ்வாலிபரின் பேருரைகளை, அனை

Page 28
வரும் அமைதியாக இருந்து செவியுறுகின்றனர். ஆனால், ஒரு தனவந்தர் மட்டும், அமைதி இழந்த வராகக் காணப்படுகின்றார். மார்க்க உபன்னியாசம் முடிவுற்றது. அனைவரும் செல்கின்றனர். அமைதி யற்றுக் காணப்பட்ட அத்தனவந்தரும் வீடு சென்று விட்டு, பின்னர் அஸர் தொழுகைக்காகப் பள்ளியை நோக்கி விரைகின்றார். மார்க்கப் பிரசங்கம் செய்த அவ்விளைஞரும் பிரசன்னமாயிருப்பதைக் கண்டு பூரிப் படைகின்றார்.
கப்பல் தொழில் புரியும் அத்தனவந்தர் அவரை அணுகி, "" ஹஸ்ரத் அவர்களே! எனது சரக்குக் கப்ப லொன்று ஏதோ பழுதின் நிமித்தம் கடலில் தத்தளித் துக் கொண்டிருக்கும் செய்தி நேற்று எனக்குக் கிடைத் தது. உங்கள் பிரசங்கத்தின் ஆரம்பத்தில் புனித ஹஜ்ஜுக் கடமையை நிறை வேற்ற மக்கா செல்லும் வழியில் இங்கு வந்திருப்பதாக நீங்கள் கூறினீர்கள். பிரமாதமான உங்கள் பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்த நான் ஒரு "நிய்யத்’தை வைத்துக் கொண்டேன். அதாவது 'அல்லாஹ் அருளால், எனது சரக்குக் கப்பல் எவ்வித இடையூறுமின்றி வந்து சேர்ந்தால், இப் பொழுது சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும் இளை ஞருக்கு, புனித ஹஜ்ஜ" செய்து திரும்புவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நானே செய்து கொடுப்பேன்’ என்பதே எனது அந்த நிய்யத், ஜும்மா முடிந்து வீடு சென்ற எனக்கு 'கப்பல் திருத்தப்பட்டுக் கரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது" என்ற கரும்பான செய்தி கிட்டியது. எனவேதான், நீங்கள் இங்கு இருப்பீர் களோ, இல்லையோ, என்ற ஐயத்துடன் எனது நிய்யத்தை நிறைவேற்ற ஓடோடி வந்தேன், ஹஸ்ரத்" என்றார், அத்தனவந்தர்.

அல்லாஹ்வின் டேரருளையெண்ணிப் பிரமித்த அவ் விளைஞர், 'அல்ஹம்துலில்லாஹ்' என்ற நன்றிப் பெருக்கிழையும் வார்த்தையைத் தவிர, வேறெதையும் பேசவில்லை,
இது எங்கு? எப்போது எவருக்கு ஏற்பட்ட அனு பவம் என வியக்கின்றீர்களா?
கி. பி. 1905ம் ஆண்டளவில் பர்மாவின் தலை நகரான இரங்கூனில், சைகோன், பினாங்கு, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று விட்டு வந்திருந்த கல்ஹின்னையைச் \சேர்ந்த இளைஞர் ஹ மீ த் லெப்பைக்கு ஏற்பட்ட இனிய அனுபவம்தான் இது.
இந்த இளைஞர்தான், பின்னர் கல்ஹின்னையில் உலமாக்களின் முன்னோடியாக விளங்கிப் பிரபல்யம் பெற்று, 'கல்லூட்டு ஆலிம்" என அழைக்கப்பட்டார்.
கல்ஹின்னையில் முதன்முதல் குடியேறிய வாப்புக் கண்டுப் பிள்ளையின் இரண்டாவது மருமகனான (மகளின் கணவன்) உஸ்மான் லெப்பையின் பேரன்தான் இவர். கல்ஹின்னையின் முதல் மத்திசம் என்ற புகழுக் குரிய அஹ்மது லெப்பையின் (மத்திச அப்பச்சி) தம்பி, முஹம்மது லெப்பையின் பதினொரு புத்திர புத்திரி களில் ஒருவர்தான், ஹமீத் லெப்பை ஆலிம் சாஹிப் அவர்கள். வாப்புக் கண்டுவின் தம்பி இஸ்மாயிலின் பேத்திதான், இவரின் தாயாரான தங்கம்மா என்பவர். 1873ம் ஆண்டு பிறந்த “கல்லூட்டு ஆலிம்" இலங்கை யில் சில மத்ரஸாக்களிலும் பல உலமாக்களிடமும் மார்க்கக் கல்வி கற்றார். பின்னர், தமது 16வது வயதில் இந்தியாவிலுள்ள அதிராம்பட்டினத்திற்குச் சென்று அங்கு அரபு மத்ரஸாவில் கல்வி கற்றார்.

Page 29
சில ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் பெரம் பூர் ஜெமாலியா அரபிக் கல்லூரியில் கற்கும் வாய்ப்பைப் பெற்றார். ஓதிக் கொண்டிருக்கும் போதுதான் புனித ஹஜ்ஜுக்கும் (கி. பி. 1905ம் ஆண்டு) சென்றதை ஆரம்பத்தில் குறிப்பிட்ட நிகழ்ச்சி கூறுகிறது. இரண் டாவது தடவையாக 1932ம் ஆண்டில் புனித ஹஜ்ஜுக் குச் சென்று வந்தார். இவருடன், மைத்துனரான ஏ. ஓ.எம். சாலிஹ் லெப்பை, சகலனான த.க. செய்யத் லெப்பை ஆகியோரும் சென்றனர்.
தனது பதினாறாவது வயதில் இந்தியா சென்ற ஹமீத் லெப்பை, பதினாறு வருடங்களின் பின்னர் தான் ஓர் அறிஞனாக, ஆலிமாக, ஹாஜியாகத் தாயகம் திரும்
9667 Tri.
இவருக்குச் சகோதரர் முறையாகும் செய்யது முஹம்மது ஆலிம் (அல்ஹாஜ் எஸ். எம். ஜுனைத் ஆலிமின் தந்தை) இவரின் சகபாடியாகவும், உற்ற நண்ப ராகவும் திகழ்ந்தார். அத்துடன், இவரின் மைத்துன ரான அல்ஹாஜ் ஏ. ஒ. அப்துல் ஹமீத் ஆலிமும் இவ ருடன் மிகமிகத் தோழமை பூண்டிருந்தார்.
இவர், பெருந்தகை உமர் லெப்பை ஹாஜியாரின் (கடே அப்பச்சி) மகள் பாத்து முத்துவை திருமணம் செய்தார். இவர்களின் ஐம்பத்தைந்து வருட இல்லற, வாழ்வில்பன்னிரண்டு புத்திரர்களையும் இரு புத்திரிகளை யும் பெற்றெடுத்தனர். இத்தம்பதிகளுக்கு பதினான்கு பிள்ளைகள் பிறந்த போதிலும், சிறு வயதிலேயே ஒன்பது பேர் காலமானார்கள். எஞ்சியோர் மர்ஹ9ம் அல்ஹாஜ் சரீஃப் ஆலிம், அல்ஹாஜ் ஜெலால்தீன் (ஒய்வு பெற்ற விலைக் கட்டுப்பாட்டதிகாரி) அல்ஹாஜ் எம்.எச்.எம். காஸிம் (வர்த்தகர், மாத்தளை "டீமாஸ்), திருமதி,

s:
ஹாஜியானி ஹவ்வா சாலி, கவியரசு ஹலீம்தீன் ஆகியோர்.
கல்லூட்டு ஆலிம் என்ற பெயர் இவருக்கு வரக் காரணமென்ன என்பதைச் சிலருக்குத் தெரியாதிருக்க லாம். இவருடைய தந்தை முஹம்மது லெப்பை தான். கல்ஹின்னையில் முதன் முதலில் கற்களால் வீடு கட்டி யவர். அதனால் தான், அவரை ஊர் மக்கள் அக்காலத் தில் "கல்லூட்டார்” என்றும், "கல்லூட்டு அப்பச்சி" என்றும் அழைத்தனர். அதைத் தொடர்ந்து தான் அவரின் மகனான ஹமீத்லெப்பை ஆலிமைக் 'கல்லூட்டு ஆலிம்" என அழைக்கும் பழக்கம் வந்தது.
தமது மார்க்கப் பணியை, பிறந்தகமான கல்ஹின் னையோடு மட்டும் வைத்துக் கொள்ளாமல், அக்கம் பக்கத்து ஊர்களான ரம்புக் எல, உக்குவளை, பாணக் முவ, ரம்புக்கந்தெனி, போன்ற ஊர்களிலும் வேறு சில ஊர்களிலும் அவர் தொடர்ந்தார்.
அமைதியாக வாழ்ந்து மார்க்கப் பணி புரிந்த மதிப்புக்குரிய அல்ஹாஜ் ஹமீத் லெப்பை ஆலிம் சாஹிப் அவர்கள், 30-9-1960ல் இறையடி சேர்ந்தார்கள்.
இவரின் 40வது "கத்த' வைபவத்தின் போது இவரின் மூத்த மகன் மர்ஹஜூம் சரீஃப் ஆலிம் (‘குஞ்சாலிம்") அரபியில் இயற்றிப் பாடிய "பைத் ஒன்றின் சிறு பகுதியை, இவரின் இளைய மகனுன கவிஞர் ஹலீம்தீன் தமிழாக்கம் செய்துள்ளார் :
தவ்ஹீது வழிநின்று போதித்தீர்!
தக்குவாவைப் பேணிநிதம் உயர்வுற்றீர்!
ஒவ்வாத செயல் கண்டு சினந்திடுவீர்!
ஒற்றுமையே உயிர்நாடியாய்க் கொண்டீர்!

Page 30
54
செவ்வானம் ஒளியற்றுப் போனதுபோல்
சீர்வெள்ளி காலையிலே எமைப் பிரிந்தீர்! எவ்விதத்தில் உம்பிரிவை ஈடு செய்வோம்!
எந்தையே! என்றென்றும் இறையருள்வான்!
"பெரிசாரி வீட்டு ஆலிம்': கல்ஹின்னையில் சர் வாங்க வைத்தியத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த "பெரிய பெரிசாரி" என அழைக்கப்பட்ட இஸ்மாயில் லெப்பை அவர்களிள் இரண்டாவது புத்திரர்தான் மதிப்புக்குரிய மர்ஹூம் செய்யது முஹம்மது ஆலிம் அவர்கள். தமது தந்தையின் வைத்தியச் சிறப்பால் பெரிசாரி வீட்டு ஆலிம் என்ற காரணப் பெயர் கொண்டே இவரை மக்கள் அழைத்தனர். இவர் 1875-ம் ஆண்டு பிறந்தார்.
சன்மார்க்க அறிவைப் பருக வேண்டும் என்ற பேரவா சிறுவயதிலிருந்தே இவருள்ளத்தில் பெருக் கெடுத்தது. மார்க்க அறிவைத் தேட விழையும் மகனின் நோக்கத்தைப் புரிந்த இவரின் தந்தையும் எவ்வித ஆட்சேபனையுமின்றி இவரை காலி, கோட்டையிலுள்ள அரபு மத்ரஸாவில் சேர்த்தார். இவரின் சகோதரர் முறையான மர்ஹ9ம் ஹமீத் லெப்பை ஆலிம் 'கல்லூட்டு ஆலிம்") இவரின் சகபாடியாக இருந்தார். ஒன்றாய் ஒதிய இவ்விருவரும், உறவால் மட்டுமல்ல, உள்ளன்பாலும் இணைபிரியாத நண்பர்களாய் மாறி னர். அதுமட்டுமல்ல, கல்ஹின்னையின் இரண்டாவது பேருலமா "கல்லூட்டு ஆலிம் மூன்றாவது பேருலமா 'பெரிசாரி வீட்டு ஆலிம்' என்ற சிறப்பையும் எய்தினர்.
இருவரும் ஒன்றாகவே இந்தியா சென்று, அதிராம் பட்டினத்திலுள்ள அரபி மத்ரஸாவில் சில காலம் பயின்றனர். பின்னர் ஹமீத்லெப்பை ஆலிம் சென்னை யிலுள்ள ஜெமாலியா அரபிக் கல்லூரிக்குச் சென்றதால்

செய்யத் முஹம்மத் ஆலிம் அவர்கள் காயல்பட்டணத்தி லுள்ள அரபு மத்ரஸாவில் தமது மார்க்கக் கல்வியைத் தொடர்ந்தார். "ஹ"ஸைன் மவ்லூாதை" இயற்றிய பெரியார்-மாப்பிள்ளை லெப்பை அவர்களிடமும் இவர் ஒதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்காலத்தில் பிரபல்யம் பெற்று விளங்கிய கதீப் ஹபீப் லெப்பை அவர்களின் மூத்த மகள் சுலைஹாவைத் திருமணம் செய்த இவருக்கு மூன்று புதல்வர்களும் இரண்டு புதல்விகளும் உள் ள னர். தந்தையைப் போன்றே சன்மார்க்க ஞானத்தை நன்கு கற்றுத் தேர்ந்து, இன்று கல்ஹின்னையில் மார்க்கப் பிரசங்கத் தின் மூலமும், ஏனைய பொதுநல சேவைகளின் மூலமும் பிரபல்யம் பெற்று விளங்குபவர்கள்தான் இவருடைய இரு புதல்வர்களான அல்ஹாஜ் எஸ். எம். ஜ"னைத் ஆலிம், அல்ஹாஜ் எஸ். எம். இஸ்மாயில் ஆலிம்.
அண்ணல் நபியின் அன்புப் பேரர்-தியாகி ஹ"ஸைன் (ரலி) அவர்களின் புகழ் கூறும் "ஹ"ஸைன் மெளலூது" அருமைநிறை 'பதுர் மெளலூது’ ‘பறு ஸஞ்ஜி மெளலூது’ ஆகிய ஆத்ம விருந்தளிக்கும் மேன்மை மிகு மெளலூதுகளின் சிறப்பையும், பெரு மையையும் கல்ஹின்னை மக்களுக்கு உணர்த்தி அவர் களின் மத்தியில் அவைகளை அறிமுகம் செய்து வைத்த பெருமை "பெரிசாரி வீட்டு ஆலிம் அவர்களுக்கே உரியது.
மார்க்கப் பிரசங்கம் செய்தல், "முராது" வைத்தல் மற்றும் மார்க்க வைபவங்களை நடாத்தல் முதலியவற் றில் வல்லவரான இவர் மார்க்க விஷயங்களில் மிகவும் பேணுதலும்அக்கறையுமுடையவராயிருந்தார். இவர்அக்

Page 31
5 6
காலத்தில் கொழும்பிலிருந்த "ஹ"ஸைனியா குர்ஆன்" பாடசாலையில் வெகு காலம் உஸ்தாதாகக் கடமை யாற்றினார். இவரை அப்பொழுது "மாத்தளை ஆலிம் ஸாஹிப்" என்றுதான் கொழும்பில் அழைத்தனர்" தமது 62வது வயதில் அவர் 1938ம் ஆண்டு காலமானார்.
"குஞ்சாலிம்" "கல் லூ ட் டு ஆலிம்" என அழைக்கப்படுகின்ற Dர்ஹீம் அல்ஹாஜ்ஹமீத்லெப்பை யினதும், மர்ஹசிமா ஹாஜியானி பாத்துமுத்துவினதும் மூத்த புதல் il TTa மர்ஹ"ஜிம் அல்ஹாஜ் மெளலவி எம்.எச்.எம் சரீஃப் அவர் கள் 14, 5. 1914ல் பிறந்தார். ஊரிலேயே அரபு, தமிழ் ஆகியன பயின்ற பின் காலியிலுள்ள அரபு மத்ரஸாவில் 19 28ம் ஆண்டில் சேர்ந்து, 1935ம் ஆண்டு வரை பயின்றார்.
காலியிலிருந்து, முன்பு தனது தந்தை அரபுக் கல்வி பயின்ற சென்னை பெரம்பூரிலுள்ள ஜெமாலியா அரபிக் கல்லூரியில் 1935ம் ஆண்டில் சேர்ந்து அரபுக் கல்வியில் நல்ல முன்னேற்றம் கண்டார். இவர் அக்கல்லூரியில் பயின்ற காலத்தில, கல்ஹின்னையைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.எம். குதுபுத்தீன் ஆலிம், மர்ஹானும் எஸ். யூ. செய்னுல் ஆப்தீன் ஆலிம் ஆகிய இருவரும் ஜெமாலியா அரபுக் கல்லூரியில் கல்வி பயின்றனர்.
இவர்கள் பயின்ற காலத்தில், பேராசிரியர் அப்ஸலுல் உலமா, மர்ஹீம் அப்துல் வஹாப் புகாரி சாஹிப் கல்லூரியின் அதிபராயிருந்தார். தனது இலட்சியப் போக்கின் காரணமாகவும், ஒழுக்கம், அடக்கம், அறிவாற்றல் திறமையினாலும் சரீஃப் ஆலிம் அவர்கள் அதிபரின் பேரன்பைச் சம்பாதித்தார். அரபு
 

57
இலக்கணத்திலும், ஏனைய பாடங்களிலும் பரீட்சை களில் அதிசயிக்கத்தக்க அளவு தேர்ச்சியும் திறனும் பெற்ற அவர் 1939ம் ஆண்டில் படிப்பை முடித்துக் கொண்டு வெளியேறினார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் அப்ஸலுல் உலமா பட்டம் பெற்ற அவர், இலங்கையிலேயே இரண்டாவது அப்ஸலுல் உலமா பட்டம் பெற்றவர் எனத் திகழ்ந்தார். ஊர் மக்களால், செல்லமாக "குஞ்சாலிம்" என அவர் அழைக்கப் பட்டார்.
1942ம் ஆண்டில் கொழும்பு, ஸாஹிராக் கல்லூரி யில் அரபு கற்பிக்கும் மெளலவியாக நியமனம் பெற்றார். அரபு வித்தியாதரிசி, சர்வகலாசாலையில் அரபு விரிவுரையாளர் எனும் பதவிகள் இவரைத் தேடி வந்தபோதிலும் அவர் மார்க்க நெறி பிறழாது வாழ விரும்பியதால், அப்பதவிகளை ஏற்கவில்லை. இரண்டா வது உலக மகாயுத்தத்தின் போது, ஸாஹிராக் கல்லூரி யும் ஒரு இராணுவ முகாமாக மாறியது. பாடசாலை மூடப்பட்டது. அத்துடன், தன் பதவியை விட்டு விட்டு இவர், வியாபாரத்தில் ஈடுபட்டார்.
தனது தாய் மாமனான "கடேயாலிம்" என அழைக் கப்படும் பேருலமா அல்ஹாஜ் ஏ. ஓ. அப்துல் ஹமீத் ஆலிம் அவர்களின் மூத்த புதல்வி நபீஸா உம்மாவை இவர் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு பெண்களும், நாலு ஆண்களும் பிறந்தனர். இரு பெண் களும் திருமணமாகி தற்பொழுது திருமதி மஸீதா முஹிதீன், திருமதி பவ்சியா இல்யாஸ் என அழைக்கப் படுகின்றனர். மூத்த மகன் முஹம்மது நளிர், கல்ஹின் னையின் முதல் பயிற்றப்பட்ட கணித ஆசிரியர், இரண்டாவது மகன் முஹம்மது அப்துல்லா, பட்டதாரி

Page 32
58
ஒரு ஆசிரியர். மூன்றாவது மகன் முஹம்மது நாஸிர் ஒரு மெளலவி. கடைசி மகன் முஹம்மது இத்ரீஸ் வர்த் தகத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
மேடு பள்ளங்களை வாழ்வில் கண்டாலும், நிதான மும், ஏழ்மையும் நிறைந்த வாழ்வில் இதய நிறைவு கண்டார் ‘குஞ்சாலிம்". எதையும் நயந்து வியந்து இர சிக்கும் இயல்பும், புன்சிரிப் பொன்றாலேயே மற்றை யோரை வசீகரிக்கும் தனித்தன்மையும் அவருக்கே உரியனவாயிருந்தன. தாழ்ந்து போகும் அவர், தலைக் கனம் உள்ளோரிடத்தில் மட்டும் தலைகுனிய மாட்டார்.
"கல்ஹின்னையின் ஒருமைப்பாடும் ஒற்றுமையும் என்றுமே குலையக் கூடாது; உறவு முறைகளையும் குடும்ப வ ர ல |ா று க  ைள யும், பரம்பரையாய் வந்த பாசப் பிணைப்புகளையும் நன்கறிந்து பாசத்தை யும், ஐக்கியத்தையும் நன்கு வளர்க்க வேண்டும்,' என அடிக்கடி வலியுறுத்திய குஞ்சாலிம் கல்ஹின்னை பற்றிய சரித்திரத்தை ஆய்ந்து, அது தொடர்பான குறிப்புக்களை மிகச் சிரமப்பட்டு சேகரித்து வைத்திருந் தார். பெரும் பணியாற்றிய பெருமை மிகு நம் மூதாதையர்களின் பெருந்தன்மைகளையும் சுயநலமற்ற பரந்த நோக்குகளையும் குதும் வாதுமில்லாது ஊரின் ஒற்றுமைக்காய் - உயர்வுக்காய் ஆவன செய்த அரும் பெரியார்களின் சேவைகளையும் நம் இளைஞர்கள் அறிந்திருப்பது மிக, மிகப் பயனுள்ளதாகும் என்ற பரந்த நோக்கத்தின் அடிப்படையில் கல்ஹின்னையின் சரித் திரத்தை எழுதுவதற்கு ஆவல் பூண்டு அதற்கான நட வடிக்கைகளை மேற் கொண்டிருந்தவர் குஞ்சாலிம்.
கல்ஹின்னையில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் வாலி பர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவராகப் பல ஆண்டுகள் இருந்து ‘குஞ்ாசலிம்" அரும் தொண்டாற்றியுள்ளார்.

59
நுண்ணறிவும், எதையும் ஆழ ஆலோசித்து முடி வெடுக்கும் ஆற்றலும் மிக்க மார்க்க அறிஞராய், அரபு மொழியில் பாண்டித்தியம் உள்ளவராய்த் திகழ்ந்த ‘குஞ்சாலிம் ஆங்கிலம், தமிழ், உருது மொழிகளிலும் சிறப்புற்று விளங்கினர், கல்ஹின்னைக் குர்ஆன் மத்ரஸா, அரபி மத்ரஸா ஆகியவற்றின் முன்னேற்றத் துக்காய் தமது இறுதி மூச்சு வரை அளப்பரிய பணியாற் றினார்.
மார்க்க சம்பந்தமான பிரச்சினைகளும் சிக்கல்களும் எழும் போது, ஏனைய உலமாக்கள் இவரின் ஆலோ சனையையே நாடுவர். உலமாப் பெருமக்களிடையே மட்டுமின்றி ஊர் மக்களனைவரிடமும், நன்மதிப்பை யும், நற்பெயரையும் பெற்றிருந்த "குஞ்சாலிம் எப் பொழுதும் கோட்டுடனும் அரபி பாட்சா அறிமுகம் செய்த துருக்கித் தொப்பியுடனும் காட்சியளிப்பார். ஓர் அரபுக் கவிஞராகவும் இருந்தார். அவர் அனேக அரபுப் பாடல்களை {பைத்துக்கள்) அரபு இலக்கணத் திற்கமைய அழகுற இயற்றியுள்ளார்.
பயனுள்ள நற்பணிகளைப் புரிந்து வந்த அன்னா ரின் பிரிவு கல்ஹின்னைக்கு ஈடு செய்ய இயலாத பேரிழப் பாகும்.
ரிஃபாய் ராத்தீப் : ஆத்ம நலம் தரும் அனைத்துச் சன்மார்க்க அலுவல்களிலும் அக் கால முஸ்லிம்கள் அதிக அக்கறை காட்டினர். குறிப்பாக சிறு குடி மக்களாக அன்றைய சிற்றுாராம் கல்ஹின்னையில் பெரு வாழ்வு வாழ்ந்த பெருந்தகைகள், மார்க்க நடவடிக்கை களில் காட்டிய ஆர்வமும், ஈடுபாடும் என்றும் நயக்கத் தக்கது.
அன்று போற்றிப் பேணி ஏற்றமுடன் ஈடுபாடு கொண்டு நடாத்தப்பட்டு வந்த நிகழ்ச்சியொன்று

Page 33
éð
ரிஃபாய் ராத்தீபு அல்ஹாஜ், மர்ஹஜூம் சதக் முஹம்மது ("நாகூர் பிச்சை லெப்பை") என்பவரால் முதன் முதலில் 1932ம் ஆண்டு, கல்ஹின்னையில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
செய்யத் குதுபுத்தீன் முத்துக் கோயாத் தங்கள் அவர்களிடம் ரிபாய் ராத்தீபைப் படித்துப் பழகிய சதக் முஹம்மத் அவர்கள், 1953ம் ஆண்டு வரை, சீர் பெற, பயபக்தியுடன் இதை நடத்தி வந்தார்.
ஜீலானின் ஜோதியான முஹியித்தீன் அப்துல் காதர் ஆண்டகையின் மருகரான சையித் அஹமதுல் கபீர் ரிஃபாயி (ரஹ்), அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான் ரிஃபாய் ராத்தீப். ராத்திபத்து" என்னும் சொல்லில் இருந்து மருவியதுதான் "ராத்தீப்," "ராத்திபத்து" என்றால் "வழமையாகச் செய்தல்" என்று பொருள் படும். ஆத்மீக ஈடேற்றத்துக்காகச் செய்து வரும் வழமையான அமல் என்னும் கருத்துக் கொள்ளலாம். இந்த 'திகிர்" வைபவத்தின் சிறப்பை எவரும் நன்கு அறிவர்.
இதை நடத்துவதற்கு, மிகுந்த மார்க்க பக்தியுள்ள வர்களைத் தெரிவு செய்து கிட்டத்தட்ட 12 பேர் கொண்ட குழுவை, இத்துறையில் மர்ஹ9ம் சதக் முஹம்மது நன்கு பயிற்சி அளித்திருந்தார். இல்லங்கள் தோறும், இவ்வைபவம் நடக்கும் போது பார்த்திருப் பவர்களுக்கு மெய் சிலிர்க்கும்; நெஞ்சங்களில் ஒருவித பயபக்தி தோன்றும். சதக் முஹம்மது காலம் சென்ற பின்னர், அவரின் ஒரே மகன் முஹம்மது பரீத்லெப்பை ரிபாய் ராத்தீப் வைபவத்தை தொடர்ந்தும் சிறப்புற நடத்தி வந்தார். அவர் காலமானபின், இதுவரை, எவரும் இத்துறையில் ஈடுபடவில்லை.

ஜெலாலியா ராத்தீபு: ஆயிரம் மாத இரவுகளுக் கொப்பான அருமைமிகு நோன்பு 27 ம் இரவில் கல் ஹின்னை ஜும்மா மஸ்ஜிதில் சிறப்புமிகு ஜெலாலியா ராத்தீபு ஒதப்பட்டு வருகிறது.
மாண்பும், மகிமையும் நி  ைற ந் த புனித "லைலத்துல் கத்ர்" இரவில் மட்டுமின்றி, ஏனைய தினங்களில் இல்லங்கள் தோறும், இறையருளால் இன்னல்கள் நீங்கவும், ஈடேற்றம் பெறவும் இன்றும் மிகவும் பயபக்தியுடனும் ஜெலாலியா ராத்தீபை நடத்தி வருகின்றார்கள்.
*ஜெலாலியத்" என்றால் உயர்வான, மேலான, சிறப்பான என்ற பொருள்களைக் கொள்ளலாம். எனவே, **ஜெலாலியா ராத்தீ’ ‘பென்றால், 'ஆத்மீக ஈடேற்றத்துக்காய் செய்யும் மேலான ஓர் அமல்”* என்பதைக் குறிக்கும்.
கீழக்கரை தந்த மார்க்க மேதை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ஸாஹிப் அவர்களால் இயற்றப்பட்டது. தான் ஜெலாலியா ராத்தீப்.
இதை, முதன் முதலாக கல்ஹின்னையில் அறிமுகப் படுத்தியவர்கள் மர்ஹ9ம், அல்ஹாஜ் ஹமீத் லெப்பை ஆலிம் ("கல்லூட்டு ஆலிம்") அவர்களும், மர்ஹூம் செய்யத் முஹம்மத் ஆலிம் ("பெரிசாரி வீட்டு ஆலிம்") அவர்களுமாகும்.
குர்ஆன் பள்ளிக்கூடம் அறபு மொழியைக் கற்றறிதல் எல்லா முஸ்லிம்
களுக்கும் தலையாய கடமையாகும். சிறு வயதிலேயே, முதன்முதலில் அறபு அரிச்சுவடியைப் படித்த பின்னர்

Page 34
ᎯᏰ
தான், ஏனைய மொழிகளைப் பிள்ளைகளுக்குப் படிப்ப தில் ஆர்வம் காட்டுதல், முஸ்லிம் மரபு. இந்த அடிப் படையில் கல்ஹின்னையில் காலாகாலமாக வீடுகளில் அறபு படிப்பிக்கப்பட்டு வந்தது. அறபு ஒதிக் கொடுப் பவர் "லெப்பை" என அழைக்கப்பட்டார். ஒரு "லெப்பை" வீட்டில் சுமார் பத்துப் பதினைந்து பிள்ளைகள் அறபுப் பாடம் கற்றனர். இப்படியாக, பல வீடுகளில் முன்னைய நாட்களில் அறபு கற்பித்தல் நடந்திருக்க வேண்டும்.
இலங்கையில், பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயரின் ஆட்சி ஆரம்பமானது. அதி லிருந்து சுமார் ஒரு நூற்றாண்டின் பின்னர்தான். இலங்கை முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்பிப்பதற்கான பாட சாலை யொன்றை ஆரம்பித்தனர். கண்டியைச் சேர்ந்த புரக்டர் ஜனாப் முஹம்மது காஸிம் ஸித்தி லெப்பை அவர்களின் அயரா முயற்சியால், ஜனாப் வாப்பிச்சி மரைக்கார், ஜனாப் ஐ. எல். எம். அப்துல் அளிஸ் போன்ற இலங்கை முஸ்லிம் பெருமக்களின் ஆதரவுடன் 1892 ம் ஆண்டு மத்தியில் இன்றைய ஸாஹிராக் கல்லூரி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. எகிப்திய விடுதலை வீரர் அஹ்மத் அராபிப் பாஷா அல் மத்ரசதுல் ஸாஹிறா’ என்று பாடசாலைக்குப் பெயரிட்டார். கல்ஹின்னையிலும் அதே ஆண்டில்தான் முறையாக அறபி கற்பிப்பதற்கான மத்ரஸா, ஜனாப் ஸித்தி லெப்பை அவர்களின் சமய வழி காட்டியாகத் திகழ்ந்த கசாவத்தை ஆலிம் அப்பா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது,
மர்ஹகும் அல்ஹாஜ் மெளலவி எம். எச். எம். ஷரீஃப் அவர்கள் ' குர்ஆன் பள்ளிக்கூடம்" என்ற தலைப்பில் எழுதிய முழுவிவரம் வருமாறு :

6
இக்கிராமம் உண்டாகி பல ஆண்டுகள் கழிந்தும், ஓர் அளவு முன்னேறி இருந்தும், இங்குள்ள சிறுவர் களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொள்ள, ஈமான், இஸ் லாம், குர்ஆன் ஆகியவற்றைக் கற்று அறிந்து கொள்ள ஒரு பொது இஸ்தாபனம் உண்டாக்கப்படவில்லை. ஆங் காங்கு காணப்படும் ஒரு சில அறிஞர்களிடம் சிறுவர் களும், மற்றவர்களும் சென்று, குர்ஆன் முதல் ஈமான், இஸ்லாம் முதலிய விசயங்களைக் கற்று வந்தனர்.
அக்குருணையைச் சேர்ந்த கசாவத்தை செய்கு முஹம்மத் ஆலிம் சாஹிப் அவர்கள் மார்க்க விசயங் களைக் கற்றுக் கொள்வதற்கு, இவர்களுக்குப் பேருதவி யாக இருந்தார்கள். அவர்கள் இங்கு அடிக்கடி வந்து மார்க்க உபன்னியாசங்கள் செய்து விட்டுப் போவது வழக்கம். இது இவ்வாறு இருக்க, பள்ளிவாசலை கட்டி முடித்ததும் ஊர்ப் பெரியார்கள் சிலரின் மனதில், எல்லாப்பிள்ளைகளும் படிக்கக்கூடிய விதத்தில் ஒரு பொதுப் பள்ளிக்கூடம் ஸ்தாபிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அது பலரிடமும் பரவிற்று. கடைசியாக எல்லோரும் அது ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்ற ஏகோபித்த முடிவுக்கு வந்து விட்டார்கள். அதன் நிமித்தம் 1892ம் ஆண்டில் கசாவத்தை செய்கு முஹம்மத் ஆலிம் சாஹிப் அவர்களின் தலைமையில் கல்ஹின்னை பள்ளி வாசலில் ஒரு பொதுக் கூட்டம் நடாத்தி இப்பள்ளிக் கூடத்தை நடாத்தும் விதங்களைப் பற்றி ஆராய்ந்து, ஒரு உடன்ட்டிக்கையையும் எழுதி, கைச்சாத்திட்டார்கள். இது தான் குர்ஆன் பள்ளிக் கூடத்தின் ஆரம்பம்.
இப்பள்ளிக் கூடம் இஸ்தாபிக்கக் கூடிய கூட்டம் பற்றிய குறிப்பொன்று கெளரவம் மிக்க கசாவத்தை ஆலிம் சாஹிப் அவர்களின்கையால் எழுதப்பட்டு, கவன

Page 35
94
மாக வைக்கப்பட்டிருந்து, என் கைவசம் இருக்கிறது அதன் சுருக்கத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அதாவது :-
கல்ஹின்னை மக்களால், கல்ஹின்னை பள்ளி வாசலிலே, ஹிஜ்ரத் 1309ம் வருடம் ஜமாதுல் ஆஹிர், மாதம் பதினெராம் திகதி, கிறிஸ்தவ வருடம் 1892ம் வருடம், செப்டெம்பர் மாதம் 30ம் திகதி கசாவத்தை செய்குமுஹம்மத் ஆலிம் சாஹிப் தலைமையில், குர்ஆன் பள்ளிக்கூடம் ஸ்தாபிப்பதற்காக ஒரு கூட்டம் நடத்தப் பட்டது. அதில் பின் வருபவர்கள், மாதாந்த சந்தா செலுத்துவதற்குத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
(சந்தாதாரர்கள்) ரூபா சதம்
1. உத்மான் பிள்ளை அஹ்மத் லெப்பை
மத்திசம் 1 00 2. அவர் தம்பி முஹம்மத் லெப்பை 0 0 3. ஆதம் பிள்ளை இஸ்மாயீல் லெப்பை 0 0 4. அவர் தம்பி உமர் லெப்பை 2 00 5. அலி உஸ்மான் லெப்பை (ஆரச்சி) 0 0 6. மீராக்கண்டு இஸ்மாயீல் லெப்பை OO 7. தம்பி லெப்பை சுலைமான் லெப்பை OO 8. நெய்ன முஹம்மத் I 0 0 9. தம்பி லெப்பை முஹம்மத் லெப்பை 50 10. நெய்ன முஹம்மத் லெப்பை 50 11. வாப்பு கண்டு பிள்ளை ஹபீபு லெப்பை 25 12. மீராகண்டு ஹபீபு லெப்பை 25 13. அபூபக்கர் பிள்ளை ஹபீப் லெப்பை 25
14. முஹம்மத் அலிபாவா ஹபீப் முஹம்மத்
25 லெப்பை تسبی
ஆகக்கூடியது 00.

மேலே கூறப்பட்ட சந்தாதாரர்கள் ஒவ்வொருவரும் மாதக் கடைசியில் அவர் அவர்களுக்கு குறிப்பிடப்பட்ட தொகையை உமர் லெப்பையிடம் கொடுத்து விட வேண்டும். அப்படி கொடுக்கத் தவறிவிடில், அதற்கு தெண்டம் அத்தொகையை இரட்டிப்பாகக் கொடுப் , 5 قھ) لL
உமர் லெப்பை, அந்தப் 11 ரூபாவிலிருந்து பள்ளிக் கூட லெப்பைக்கு மாதாந்தம் 10 ரூபா கொடுக்க வேண்டும். லெப்பை ஒதிக் கொடுப்பதில் திறமையற்ற் வராக இருந்தால் அவரை நீக்கிவிட, இவர்களுக்கு அதி காரம் உண்டு, இவ்விதமாக எழுதப்பட்டு மேலே கூறப் பட்ட ஒவ்வொரும் அதில் முத்திரை மேல் கையொப்பம் வைத்திருக்கிருர்கள்.
இவ்விதமாக இஸ்தாபிக்கப்பட்ட இப்பள்ளிக்கூடம் இடையிடையே மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், 1930ம் ஆண்டு வரைக்கும் நடந்து கொண்டே இருந் தது. அதன் பிறகு கனம் புறக்டர் ஹ"ன்ை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் சங்கம் இதன் நிர்வாகத்தைப் பொறுப்பேற்றது. இச்சங்கத்தின் நோக்கம் ஊரில் சீர்திருத்த வேலைகளைச் செய்வதே. கல்வி விசயத்திலும், போக்குவரத்து விசயத்திலும் இச் சங்கம் இவ்வூருக்கு அளப்பரிய சேவை செய்திருக்கிறது. இவ்வூரால் கண் டிக்கு வாகனப் போக்கு வரத்துச் செய்யும் வீதியும், இங்குள்ள தமிழ் பாடசாலையும் இச்சங்கத்தின் முயற்சி யின் பலனேயாகும்
இச் சங்கம் குர்ஆன் பள்ளிக் கூடத்தைப் பொறுப் பேற்றதும், குர்ஆன் ஈமான் இஸ்லாம் பாடங்களை அதில் போதிப்பதோடு இங்கு தமிழ் பள்ளிக்கூடம் இல்லாதத சூறல் தமிழும் கணக்கும் படித்துக் கொடுப்பதற்கு

Page 36
ஒழுங்கு செய்தது. தனிக் கட்டிடமும் கட்டி, அது அரசாங்கத்தின் உதவியையும் பெற்றது. மேல் பார்வை பள்ளிக் கூடமாக அது இயங்கிற்று. சில காலம் கழித்து, அரசாங்கம் அதைப் பொறுப்பேற்றது.
இச்சங்கம் தளர்ந்து கொண்டு வரும் தருவாயில் Y. M. M. A. சங்கம் தோன்றிற்று. குர் ஆன் மதர ஸாவை இச்சங்கம் நல்ல சீர்திருத்த முறையில் புதிய முறைப்படி பாடத்திட்டம் அமைத்து நடத்திற்று. தமிழ் பள்ளிக் கூடத்தை கனிஷ்ட பள்ளிக்கூடமாக்க முயற்சித்து வெற்றியும் கண்டது. ஊரில் அநேக சீர் திருத்த வேலைகளை செய்வதோடு ஒரு வாகனப் போக்கு வரத்துச் சேவையையும் செய்தது. எதிர்ப்பின் காரணத் தில் அதில் தோல்வியுற்றது.
ஊரில் ஒரு குர்ஆன் பள்ளிக் கூடம் மட்டும் இருந்ததை, இரு பள்ளிக்கூடமாக்கி ஒன்றைக் கூட் டிற்று. என்றுமில்லாத விதத்தில் இரு பள்ளிக் கூடங் களையும் நல்ல சீர்திருத்தமுறையில் ஒரு நிர்வாகத்தின் கீழ் நடத்தி வந்தது.
இக் கிராம பிள்ளைகளுக்கு இப்பொழுது உலகக் கல்வி கற்க போதிய வசதி ஏற்பட்டு விட்டது. ஆனால், மார்க்கக் கல்வியில் ஆரம்ப கல்வி மட்டும் கற்க வசதி யிருந்ததல்லாமல் உயர்தரக் கல்வியை பெற்றுக் கொள்ள இடம் இருக்கவில்லை. ஆகவே, இச்சங்கம் இக் குறையை நிவர்த்தி செய்ய நாடி, ஒரு உயர்தர அரபிக் கலாசாலையை உண்டு பண்ண திட்டமிட்டது. இக் கிராமத்தில் உள்ள பெரியார்கள், மற்றவர்கள், மத்தி யில் இக்கருத்தை வெளியிட்டு இதைப் பற்றி பிரசாரம் செய்யவும் எத்தனித்தது.
வெலிகாமத்தை சேர்ந்த மகா கனம் ஸகரிய்யா ஆலிம் சாஹிப் அவர்கள் இதற்குப் பேருதவியாக இருந்

፴ሃ
தார்கள். இக்கிராமத்தில் அவர்கள் வாரக் கணக்கில் தங்கி, இது விசயத்தில் மக்களை ஊக்குவிப்பதில் கூடிய சிரத்தை எடுத்தவர்களாக மார்க்க உபன்னியாசங்கள் பொழிவதில் பல நாட்களை கழித்தார்கள். கடைசியாக ஊர் மக்கள் எல்லோரும் ஓர் அரபிக் கல்லூரியை ஸ்தா பித்து நல்லமுறையில் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.
இதன் நிமித்தம் 1949ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி கல்ஹின்னை பள்ளி வாசலில் மகாகனம் ஸ்கரிய்யா ஆலிம் சாஹிப் அவர்கள் மத்தியில், ஊர் பெரியார்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பெற்றது.
(1) ஊராலேயே இக்கல்லூரியை நடத்த வேண் டும் என்றும், அதற்கு வேண்டிய பணத்தை ஊரவர் களிடமிருந்தே வசூல் செய்ய வேண்டுமென்றும் தீர் மானித்து அதற்கு ஒரு கமிட்டியும் நியமிக்கப்பட்டது. (2) தர்மகர்த்தாக்கள், அவர்களுக்கு உதவியாக உள்ளவர்களைப் பற்றி ஆராயப்பட்டு அவர்களின் லட்சணங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கனம் ஸ்கரிய்யா ஆலிம் சாஹிப் எடுத்துக் கூறி, இந்த லட்சணங்கள் உடையவர்களை மஹாசபையில் தேர்ந் தெடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
(3) இக்கல்லூரிக்கு மதுரஸதுல் பத்தாஹ் என்று பெயரிட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. இப் பெயரை கனம் ஸகரிய்யா ஆலிம் ஸாஹிப் சிபாரிசு செய்தார்கள்."
1892ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம் பற்றிய கூட்டத்தை நடாத்திய கசாவத்தை ஆலிம் அப்பா அவர்கள் தன் கையால் எழுதிய குறிப்பு. காலா

Page 37
ëravub ësaj gruprg வைக்கப்பட்டிருந்து வந்துள்ளது. அந்தப் பிரதி அல்ஹாஜ் எம்.எச். எம். ஷரீஃப் அவர் களிடம் இருந்ததை நானும் பார்த்துள்ளேன். அக்கால கட்டத்தில், கல்ஹின்னையின் பிரதான சமயப் பெரியா ராயிருந்த "பெரியாலிம் அப்பா என அழைக்கப்பட்ட அப்துல் காதர் ஆலிம் அவர்கள், மதரஸாவிற்குப் பொறுப்பாயிருந்து to Gal(5l-sirab நடாத்தி வந்தார்
யுள்ளது. அதில் #தன்முதலில் 'ஆ உமறு லெவ்வை என "கடே அப்பச்ஓ என்று சீலிசிக்கப்பட்ட பெரிய கையெழுத்து வைத்திருக்கிறார்கள். இந்த உடன் படிக்கையிலும் 'நாங்கள் ஒவ்வொருவரும் அவர வர்க்குக் குறிக்கப்படுகிற தொகையை, அந்தந்த LDT.gi கடைசியில் ஆதம்பிள்ளை * மறு லெப்பை இடம் யாதொரு தடை இல்லாமல் கொடுத்து வருவோம் என்று பொருந்திக் கொண்டு, மேல்குறித்த 2- LippoJ லெப்பை ரூபா இரண்டு, தம்பி லெப்பை <5f 6Ö)@QÜLDrrir லெப்பை ரூபா ஒன்னு, ஆ. அலி * திமான் லெப்பை ஆரச்சியார் ரூபா ஒன்னு, உதுமான் பிள்ளை அஹமது லெப்பை மத்திசம் ரூபா கால், அவர்தம்பி முஹம்மது லெப்பை ரூபா கால், மீறr கண்டு பிள்ளை இஸ்மாஈல் லெப்பை ரூபா கால். ’ என எல்லோர் பெயரும் அவர்களினால் வழங்கப்படும் தொகைகளும் குறிப்பிடப் பட்டுள்ளன.

69) :
}ኄ أسمالت التزلجمه وبدالوصولاية بأمواله
لملمسبته مرتب العالمين والعافية للتقرع والضلاة والتلام علي خيرحلقه بيتين تنا محکچں والس ومحکبڈ اجمعیائ تالابعلها و ان لنکال کا 3 بربڑ اکبری وکیں وہ ・シ が% ما ・ヌ ޝތަ (ا ތައި ببککی خنک کل شبکهtلأكس # ބަޙް:ئތަ29ސައްތަ le 9 ܧܝ̈2 } مرزش یکی چیویی سنة بھی تکون 833؟ا و برسشکیل
●今公;°° M *。_●ー 。 ● 後、*る。%で“雲。リ、eや。 set1. *ʼ» eATAz0eAAAAAAAAAAAAeAAAAeASAeAAAeSe یاق بیماران :11 イ、イ* 2、イ 31を y。* ;33* اه ށ,$ޑަވި7ރر 。< そ *イ.ン با جو ایرانیایی یک بین قبینایی می در فینتینی نیز
TAeeeAeAh0AAAeAeAAAgAAAAAY0AA
كتب ప3 • صيض كان أغلبية سی ، ge 1 *。 *。 陽* w ሥ/፩ بڑھتین بیٹھتصنیٹصیلڑؤ کی ہڑتال کھیتراغ 잇 ムス ア* %
* . مرثیه 公・イ" ・ ・ イ<.lっ、つ"Q3、fp/宮っ «Σ a بہت قلیتوینیتھوپیتھینکیتھوپیتھینیاتی تھی تبلیومیڑفینتینتینیتھ بڑھائی نئی ペイリイ、3 *。*ュ* つ。リー జోళ*.・1 حمله ۶ ص. . پھیلانیہ تھوتھنی پتہ چلبینی کیتھوڑکھنا ہی کی ہتھیلیئے بھی ناہمیت *. ,. . . * ബ محل و عصا محصہ رہ گn12گلعہ می و هم بر م. به بريتية التي يقافية أو في قائلاميين قاية متنانينتينية ثم فيقال يختلفقا لقبيلتي فييتي إيقاعيل لينقل وقلتين eعد 1 ھہ -ްt ޗީ *、*- ~ >』イ 1ご・ محم موسمیہ مصrمحہ علیہ وہ بہ..ه
eTSZeAeA0YSMLSYYezKTAAAAAYYK 00STAAAAAAAYSg0AATALS0AAAA தி ج 1 ص ض ہر محنت وه.1 مربراہ ۔ ? 21 یہ بیس محصہ سمیتotیہ بھ موتائیٹ مستي عثمان وقا كالبنك بوقا لیبیتھائیت كل مكاسكأنيقا أوثق2 窦恕蕊 裴签恕葱 STSAYeYAAAAKYAzAASYS ఫటికి'ఉ%శీడ23ష్ణబ్రహ్లా 。** XV 簿 ། ジ همهي 学子究勃リyy&発え? میلیایی YAeLLeqeA eAAAArrAMeMAgeeeAgghggg
3.
*
تمكن
a
بری
2
சில காலம் சென்ற பின், மூன்று வெவ்வேறிடங் களில் அறபி. கற்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவற்றை ஒன்றிணைப்பதற்கு மீண்டும் முயற்சி செய்யப் ull-gi.
கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியின் மாணவராக விருந்த ஜனாப் ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்கள் ரம்ழான் பெருநாள் தினத்தில் மூன்று அறபுப் பாடி சாலைகளின் மாணவர்கள் பள்ளிவாசலில் பெரு நாள்
தொழுகை முடிந்த பின்னர் தனித்தனியாக "அறபியில்

Page 38
t g 'Gി
۔. A سے وہ • یہ ۔ جھی. ممبر
او یک دبیر یل شتا فیلیپضیدان کلی ሠዒዯ% ̆
sع ۶-ه
பைத்துகள் இதுவதைக் கேட்டார்கள் "ஏன் இப்படி
மூன்று பாடசாலைகள் இருக்க வேண்டும்? இவற்றை ஒன்றிணைத் தாலென்ன? என்ற எண்ணம் அவர்களுக்
 
 

குத் தோன்றியது. ஊரின் பெரியார்களைக் கலந்துருலோ சித்துவிட்டு, பள்ளிவாசலில் அடுத்த நாள் ஜ"ம்ஆத் தொழுகை முடிந்த பின்னர், தனது திட்டத்தை அறி வித்தார்கள்! ஊர்மக்கள் அதை ஏகமனதாக ஆதரித்த தனால், அடுத்த நாளே பள்ளியை அடுத்திருந்த மண்ட பத்தில், புதிய மத்ரஸா ஆரம்பமாகியது. முன்னர் அறபு எழுதவும் வாசிக்கவும் மாததிரமே கற்றுக்கொடுக் கப்பட்டது. புதிய மத்ரஸாவில் அறபு எழுத, வாசிக்கக் கற்பித்ததுடன், தமிழ்மொழி, ஆரம்ப கணிதம் ஆகி யனவும் படித்துக் கொடுக்கப்பட்டன, இந்த முயற்சி 1925ம் ஆண்டு ரப் ழான் பெருநாளுடன் ஆரம்பிக்கப் பட்டது. எனவே, அரபியுடன் தமிழும் கற்கும் வாய்ப்பு, கல்ஹின்னையில் 1925ம் ஆண்டிலிருந்து ஆரம்பமாகியது. இந்நிலை ஒன்பதாண்டு காலம் நிலைத்திருந்தது. அதன் பின் ளர் பாடசாலையின் தரத்தை உயர்த்தி, தமிழில் எல்லாப் பாடங்களும் படிப்பிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதனால், 1934ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதி கமாலியா முஸ் லிம் பாடசாலை தோன்றியது. அந்தப் பாடசாலை தான் படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று அல் மனார் மஹாவித்தியாலயம் என்ற உயர் நிலையை அடைந்துள்ளது. கல்ஹின்னையின் கல்விக்கண் திறக்கப் பட்ட ஆண்டு 1934தான், எனலாம். மத்ரஸா திறப்பு விழா பற்றி கல்ஹின்னை முஸ்லிம் வாலிபர் சங்கம் வெளியிட்ட அறிவித்தல் வருமாறு:

Page 39
7
Galhinna Young Men's Muslim Association
78 6 கல் ஹின்னை
அரபி மத்ரஸா திறப்புவிழா
அன்புடையீர்!
எங்கும் நிறைந்திலங்கும் அல்லாஹ்வின் திருவருளை
முன்னிட்டு ஹிஜ்ரி 1369ம் ஆண்டு முஹர்றம் மீ 28ந் திகதி (20-11-49) ஞாயிற்றுக்கிழமை பி. ப. 2-30 மணியள வில் வெலிகம அல்ஹாஜ் மெளலான மெளலவி சகரிய்யா ஆலிம்சாஹிப் அவர்களின் தலைமையின் கீழ் ஒர் விழா மத்ரஸா மண்டபத்தில் நடைபெறும்.
அவ்வமயம் மார்க்க அறிஞர்கள் அரிய பெரிய பிர சங்கங்கள் நிகழ்த்துவார்கள். முஸ்லிம் சகோதரர்கள் யாவரும் தவருது சமுகம் தந்து, எமது விழாவைச் சிறப்பித்து ஏகுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
மத்ரஸாவில் ஆரம்பமுதல் 'தஹ்சீல்" வரை கல்வி போதிக்கப்படும். அன்று முதல் உள்ளுர் மாணவர் களும், ஓர் குறிப்பிட்ட அளவான வெளியூர் மாணவர் களும் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்.
"அஸ்ஸலாமு அலைக்கும்"
இங்ங்ணம்,- M.H.M. ஜலால்தீன், கெளரவ காரியதரிசி

73.
மத்ரஸ்துல் பத்தாஹ் ஆரம்பகால தர்மகர்த்தாக்கள்
ஏ. ஓ. எம். ஸாலிஹ் ஹாஜியார் : கல்வியாலும் பண்பா ட்டா லும் உயர்ந்து விளங்கும் கல்ஹின்னையின் வளர்ச்சிக்குழைத்த சான்றோர்களில், குறிப்பிடத்தக்க ஒருவர் ஜனாப் ஏ.ஓ. مجھجم எம். ஸாலிஹ் ஹாஜியார் அவர்கள்.
கல்ஹின்னையின் மறுமலர்ச்சிக் காக உழைத்த முன்னோடி, சமூக சேவையாளர், சன்மார்க்க பக்தர் எனச் சிறப்புப் பெற்று விளங்கிய ஹாஜி உமறு லெப்பை அவர்களின் ஆண் மக்கள் ஐவருள் நாலாமவரான இவர் 1903-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தார். அங்கும்புற சிங்களப் பாடசாலையில் நாலாம் வகுப்பு வரை சிங்கள மொழி கற்ற இவர், தனது பரந்த வாசிப்புப் பழக்கத்தால் சிங்களம், தமிழ் மொழிகளிலும் அறபுத் தமிழிலும் பல நூல்களைப் படித்து, சன்மார்க்க நெறிகளிலும், பொதுத் துறைகளிலும் ஆழ்ந்த அறிவு பெற்று விளங் கினார். தனது தந்தையின் அலுவல்களை அவதானித்து தாமும் அவ்வழியில் உழைக்கும் ஆற்றலைப் பெற்றார். 1924-ம் ஆண்டில், குருகொடை எனுமூரின் உயர் குடும்பத்தைச் சேர்ந்த யூஸுப் லெப்பை அவர்களின் மகளான மரியம் பீவியை திருமணம் செய்தார்.
தனது தந்தை, 1923ம் ஆண்டில் மக்காவில் இறையடி சேர்ந்த பின்னர், அவர் செய்து வந்த பொதுப் பணிகளையும், குடும்பப் பொறுப்புகளையும் தனது மூத்த சகோதரர்களுடன் சேர்ந்து செய்து வந்தார்.

Page 40
74
கல்வித் துறையில், தம்பிகளுக்கு ஊக்கம் கொடுத்து வழிகாட்டிய மூத்த சகோதரர் ஏ. ஓ. எம். காஸிம் லெப்பை அவர்களுடைய வழிகாட்டலை மதித்து நன்றிப் டெருக்கோடு நினைவு கூர்ந்து கொண்டிருந்த இவர், தந்தையின் மறைவின்பின் தனது தம்பியும் கல்ஹின்னையின் கல்வி மறுமலர்ச்சித் தந்தையுமான வழக்கறிஞர் அல்ஹாஜ் ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர் களின் உயர் கல்விக்கு உறுதுணையாய் நின்றுதவிய தோடு, அவரின் சமூகப் பணிகளுக்கும் சொந்த முயற்சி களுக்கும் தோள் கொடுத்தார்.
அரசியல் பிரமுகர், சட்ட அறிஞர், மார்க்க மேதை களுடன் நெருங்கிய உறவு வைத்துக் கொண்டிருந்தத னால் பெற்ற அறிவும் அனுபவமும் இவரின் பணிகளுக்கு மிகவும் உதவின. தனது தந்தையார் பொறுப்பேற்று நடத்தி வந்த குர்ஆன் மத்ரஸாவை இவர், சிறப்புற நிர்வகித்து வந்தார். பின்னர், ஊரில் ஆரம்பிக்கப்பட்ட ஜாமியத்துல் பத்தாஹ் எனும் அறபுக் கல்லூரியின் ஆரம்பகால தர்மகர்த்தாக்கள் மூவரில் ஒருவராயிருந்து, இவர் புரிந்த பணி சிறப்பிடம் பெறுவதாகும். அதுவும், ஏனைய இருவரும் காலமான பின், சுமார் நாலைந்து வருடங்கள் வரை, இவர் தனியாக அரபுக் கல்லூரியின் முன்னேற்றத்திற்கும், அதன் இயக்கத்திற்கும் ஈடு கொடுத்து நின்ற அரும்பணி, ஊர் மக்களால் என்றுமே மறக்க முடியாததொன்றாகும். அதே சமயம், பாட சாலையின் விருத்திக்கும், பள்ளிவாசல் நிர்வாக நலத் துக்கும் ஏனைய பொதுப் பணிகளுக்கும் அவசியமான போது ஆலோசனை கூறி வழிநடத்தியதோடு, பொரு ளுதவி தேவைப்படும்போது கைகொடுத்துதவி எம தூரின் மலர்ச்சிக்கு இவரும் அளப்பரிய சேவை ւյflյ5 துள்ளார்.

ή 5
இன்று, கல்ஹின்னையினரின் குடியேற்றக் கிராம் மாக விளங்கும் கொடஹேன என்ற முஸ்லிம் கிராமம் உருவாகுவதில், உரிய உயர் அதிகாரிகள், அரசியல் வாதிகள் போன்றோரிடம் உதவி பெறுவதில் இவரின் பிரதிநிதித்துவப் பங்களிப்பு மகத்தானது, இவருக்கு ஆறு ஆண்மக்களும், மூன்று பெண்பிள்ளைகளும் இருக் கின்றனர்.
1989ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி இவர் இறையடி சேர்ந்தார்.
எஸ். எம். சரீஃப் ஹாஜியார் : கல் ஹி ன்  ைனயின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களில், ஒன்பது பேர் கொண்ட "எஸ். எம், எஸ். குடும்பம்’ என்பதும் ஒன்று. இந்த ஒன்பது பேரும் ஆண்கள். இவர்களுக்குச் சகோதரிகள் இருக்கவில்லை. ஒன்பது பேரில் ஆக மூத்த வர்தான் எஸ். எம். சரீப் ஹாஜியார் அவர்கள். இவர் வெகுகாலம் கல்ஹின்னைக் கூட்டுறவுக் கடையின், முகாமையாளராயிருந்ததால், இவரைப் பொது மக்கள் "மனேஜர் ஹாஜியார்' என அழைத்தனர். மத்ரஸ்துல் பத் தாஹ்வின் ஆரம்ப கால தர்மகத்ர்தாவாகவும் இவர் அரும்பணியாற்றினார். ஜெமீலா என்ற பெண்மணி யைத் திருமணம் செய்து இல்வாழ்க்கை நடத்திய இவர் களுக்கு இரு பெண்களும் ஒரு ஆணும் உள்ளனர். 1948ம் ஆண்டில் ஹஜ் கடமையை நிறைவேற்றிய இவர், சமீபத்தில் காலமானார். ஒன்பது பேரில், இது வரை ஆறு பேர் காலமாகி விட்டனர்.
கல்ஹின்னையின் பிரதான குடும் ہ تم ؟ بہ^ Y பங்கள் எனக் கருதப்படும் 'க டே a குடும்பம்" "எஸ். எம். எஸ். குடும்
பம்' ஆகிய இரண்டிலும், மூலபிதாக் களான வாப்புக்கண்டு, அவர் தம்பி i: இஸ்மாயில் அடப்பனார் ஆகியவர்கள் சந்திப்பது ஒரு சிறப்பம்சமாகும். ஃலிேல:
). s ܕ

Page 41
76
கடே குடும்பத்தின் நடுநாயகரான உமறு லெப்பை ஹாஜியார், மூலபிதா வாப்புக்கண்டுவின் மகள் பெற்ற ஆதம் பிள்ளையின் மூன்றாவது மகன் அவரின் மனைவி மரியம் பீவி, இஸ்மாயில் அடப்பனார் மகன் தம்பி லெப்பையின் மகளாவார். எனவே, இருவரும் இங்கு சங்கமிக்கின்றனர்.
அதே போல், "எஸ். எம். எஸ். குடும்ப" நடு நாயகர் சுலைமான் லெப்பை, தம்பி லெப்பையின் மூத்த மகன். தம்பி லெப்பை இஸ்மாயில் அடப்பனாரின் மூத்த மகன். சுலைமான் லெப்பையின் மகனான எஸ்.எம்.எஸ். குடும்பத்தினர் தந்தை முஹம்மது லெப்பை திருமணம் செய்தது, ஆதம் பிள்ளையின் ஒரே மகளான பாத்திமா வின் மகள் மைமூன் நாச்சா என்பவரையாகும்.
இப்படியாக, மூலபிதாக்களிருவரினும் தொடர் புள்ள இரு குடும்பங்கள் வேறெங்கும் இருப்பதரிது. இத்தகையவர்களின் வழித்தோன்றல்கள், ஊர் முன் னேற்றத்திற்கான பொதுப் பணிகளில் ஈடுபடுதல் வியப்புக்குரியதொன்றன்று.
எம். ஏ. எம். காஸிம் ஹாஜியார் : கல்ஹின்னையின் கடந்த கால வளர்ச்சிக்கு வலுவூட்டியவர்களில், மறைந்த பெருந்தகை எம். ஏ. எம்மும் ஒருவராவர். உடஹ கெதற ஹபீப் முஹம்மது தம்பதியின் மூத்த புதல்வர்.
கல்ஹின்னைக்கு அணித்தாயுள்ள பானுகம முஸ்லிம் கிராமப் பகுதியைச் சேர்ந்த குருமடத்தை என்ற ஊரைச் சேர்ந்தவர் இவரின் தந்தை, திருமண பந்தத்தின் மூலம் கல்ஹின்னையில் குடி யேறினர். இதனால் அக்கால மக்கள் இவரின் தந்தையை "குருமடத்தையார்’ எனவும் அழைத்தனர் .ܗܝ است வாழ்க்கையில், எதிர்நீச்சல் அடித்து ஆ முன்னேறிய தன்நம்பிக்கையாளர் காஸிம் ஹாஜியார்.
 

7
பல பொதுத் தொண்டுகளை, மிகப் பிரியத்தோடு இவர் செய்து வந்தார். 1898ம் ஆண்டு பிறந்த இவர் 1953ம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.
1930க்கும் 40க்கும் இடைப்பட்ட காலத்தில் மாதி தளையில் கடைச் சிப்பந்தியாயிருந்த இவர், பின்னர் மாத்தளையில் எம். ஏ. எம். காஸிம் அண்ட் கோ என்ற பெயரில் இரும்புக் கடையொன்றை ஆரம்பித்துத் தனது தம்பி மர்ஹஇம் எம். ஏ. எம். சரீஃப் ஹாஜியார் (டாக்டர் எம். எஸ். எம். அபூபக்கரின் தந்தை) அவர் களின் துணையோடு, நடாத்தி வந்தார்.
மர்ஹகும் இ. உமறு லெப்பை ஹாஜியாரின் மூத்த மகள் தனினாவைத் திருமணம் செய்த இவர், வர்த்தகத் தின் நிமித்தம் தமது வசிப்பிடத்தை மாத்தளைக்கு மாற்றினார். Y
இடம் பெயர்ந்தாலும் இரத்த உறவுகளையும் பிறந்த ஊரையும் சிறிதுமே அசட்டை பண்ணாத பண் பாளர். "பணம் நல்ல பணிகளைச் செய்வதற்கே யன்றி பூட்டி வைத்துப் பெருமையடிப்பதற்கல்ல" என்ற கொள்கையை உடைய பரோபகாரி காஸிம் ஹாஜியார். கல்ஹின்னையின் அல் பத்தாஹ் அரபுக் கல்லூரியை உருவாக்கியவர்களுள் மிக முக்கியமானவர். அதன் நம்பிக்கையாளர்கள் மூவரில் இவரும் ஒருவராகப் பல காலமிருந்தார்,
இன்றைய அல்மனார் முஸ்லிம் மகா வித்தியாலயத் தின் நிர்மாணத்துக்கு காணி பற்றாக் குறை ஏற்பட்ட போது இரு பங்குதாரர்களிடம் பணம் கொடுத்து காணி வாங்கி, அதைப் பாடசாலைக்கு இனாமாக வழங்கினார்.

Page 42
சமூகப் பணியில் நிறைவு கண்ட பெருமகன் புரக்டர் ஹ"ஸைனின் சகல காரியங்களிலும், பக்கபலமாயிருந் தார். தமது சொந்தவூரின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கெடுத்ததுபோல் தான் வந்து வாழ்ந்தவூராம் மாத் தளையின் நலனிலும் நிறைய ஆர்வம் காட்டினார்.
மாத்தளை ஸாஹிராக் கல்லூரியில் “காஸிம் மண்டபம்’ என்ற பெயரில் இன்றும் பிரதான மண்டப மாகக் காட்சி தரும் கட்டடம், கொடை வள்ளல் காஸிம் ஹாஜியார் கல்வி வளர்ச்சிக்காகச் செய்த கைங்கரியங் களில் முக்கியமானதொன்றாகும். மாத்தளை நாட்டுப் பள்ளிக்கும் ஒரு கடையை வாங்கி வக்ஃபு செய்துள்ளார்.
மாத்தளையின் பிரபல கல்விமானும் மாத்தளை ஸாஹிராக் கல்லூரியின் வளர்ச்சிக்கு வித்திட்ட அதிபர் களில் ஒருவருமான அல்ஹாஜ் எஸ், எச்.ஏ. வதுரத் B.A அவர்கள் இவரின் மூத்த புதல்வி ஹாஜியானி ஜெஸி மாவை மணமுடித்துள்ளார். காஸிம் ஹாஜியாருக்கு நாலு புதல்விகளும் ஐந்து புதல்வர்களுமுண்டு தந்தையைப் போன்றே சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்டவரும், பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் பிரமுகருமான எம். சி. எம். ஹனிபா ஹாஜியார் இவரின் மூத்த மகனாவார்.
o go
பெரிசாரி? : கல்ஹின்னையில் "பெரிசாரி வீட்டுக் குடும்பம்" என்று இன்று பிரபல்யம் பெறக் காரண கர்த்தாவாக இருந்தவர் "பெரிய பெரிசாரி என அழைக் கப்பட்ட இஸ்மாயில் லெப்பை என்பவரே. கல்ஹின்னை யின் முதற்குடி மகன் வாப்புக் கண்டுவின் நான்காவது மகளை திருமணம் செய்தவர்தான் ஹல்கொள்ளையைச் சேர்ந்த மீரான் கண்டு என்பவர். இவரின் மகன்தான் இஸ்மாயில் லெப்பைப் பெரிசாரி". பரிகாரியையே எம்மூர் மக்கள் "பெரிசாரி என அழைத்தனர்.

இவர் சர்வாங்க வைத்தியத்தில் சிறந்து விளங் கினார். இவரின் மகன்தான் ஹபீப் லெப்பைப் "பெரிசாரி என்பவர். அவர் வைத்தியத்தைத் தனது தந்தையிடமே ("பெரிய பெரிசாரி") நன்கு கற்றுத் தேர்ந்தார். பின்னர், அக்குறணையிலிருந்த (கசாவத்த) "வெஞ்ஞனார்" என்னும் பிரபல வைத்தியரிடமும் வைத்தியம் கற்றார். இவருக்கு சகோதரர்கள் மூன்று பேரும் சகோதரிக்ள் ஆறு பேர்களும் இருந்தும், இவரைத் தவிர வேறெவரும் வைத்தியத் துறையில் அவ்வளவு அக் க  ைற காட்டவில்லை. இவர் 1872ம் ஆண்டு பிறந்தார்.
சர்வாங்க வைத்தியத்தில் கை தேர்ந்து விளங்கிய ஹபீப் லெப்பைப் பெரிசாரி"யிடம் இப்பகுதியிலுள்ள சிங்கள மக்கள் கூட வைத்தியம் செய்தனர். டாக்டர் களால் குணமாக்க இயலாமற் போன நோய்கள், புண் கள், காயங்கள் முதலியவற்றைக்கூட சவால் விட்டுக் குணப்படுத்தியிருக்கின்றார்.
இவர் அவ்வளவு தனவந்தராயில்லாவிட்டாலும், தர்ம சிந்தையும் தயாள குணமும் படைத்தவர். உள் ளதைக் கொண்டு நல்லதைச் செய்த ஹபீப் லெப்பைப் பெரிசாரி இலவசமாகக் கூட வைத்தியம் செய்துள்ளார். சர்வாங்க வைத்தியத்தில் வல்லுனராய் விளங்கிய "பெரிசாரி"யின் பிள்ளைகள் எவருமே தகப்பனாரின் வைத்தியத் தொழிலில் அக்கறை செலுத்தாததினால், சர்வாங்கப் பரிகாரம் காலப் போக்கில் அருகி விட்டது. யூனுஸ் லெப்பை வெதமஹத்தயா : கல்ஹின்னையில், இருபதாம் நூற்றாண்டு ஆரம்பித்த இரண்டு, மூன்று தசாப்தங்களின் பின், சுமார் முப்பதாண்டு காலம்
வைத்தியத்தில் பெயர் பெற்றிருந்த மர்ஹலிம் ஈ. எல்,

Page 43
யூனுஸ் லெப்பை அவர்கள் கீழைத்தேச வைத்தியத்தில் கைதேர்ந்தவராயிருந்தார். எப்பொழுதும், வீட்டி லிருந்து வெளியேறும் பொழுது கோட் அணியாமல் அவர் எங்கும் சென்றதில்லை. விலானை என்ற சிங்களக் கிராமத்தில் சில்லறைக் கடைபொன்று நடாத்தி வந்த அவர், தனது பிள்ளைகளின் கல்வியில் பெரிதும் கவனம் செலுத்தினார்.
அவரின் மூத்த மக னான மர்ஹலிம் வை. ஏ. மஜீத், எமது ஊரின் முதல் ஆங்கில ஆசிரிய ராக நியமனம் பெற்ற வர். மற்றொரு மகனான மர்ஹகும் வை. ஏ. அஸிஸ் தான் எமதுTர் ப ா ட சாலையிலிருந்து முதன் முதலில் சிரேஷ்ட தரா தரப் பத்திரப் பரீட்சை (எஸ்.எஸ்.சி.) யில் சித்தி எய்தியவர். அத்துடன், x முதல் தலைமை ஆசிரியர் f பதவி பெற்றவரும் அவர் வா. ஹபீப் லெப்பையின் இரண்டாவது மகளை யூனுஸ் லெப்பை வெதமஹத்தயா, கலியாணம் செய் தார். இவர்களின் ஆண் மக்கள் அறுவர். பெண்கள் இருவர். இவரின் விசேஷத் தன்மையொன்று என்ன வென்றால், காய்ச்சல், தலைவலி, சன்னி போன்ற எந்த நோய்க்கும் கேட்கக்கூடிய சிறு வில்லைகள் சிலவற்றை எப்பொழுதும் தனது கோட் சட்டைப்பையில் வைத்தி ருப்பதாகும். எவருக்கும். வருத்தம் ஏற்பட்டால், உடனே ஒரு வில்லையைக் கொடுப்பார். சில நிமிடங் களில் குணம் கண்டு விடும். எமது கிராமத்திலும்,
 

". .
அயலிலிருக்கும் சிங்களக் கிராமங்களிலும் அவர் பிரபல்ய மடைந்திருந்தார். அனைத்து மக்களினதும், நன்மதிப் பைப்பெற்றிருந்தார்.
ஜெமால்தீன் லெப்பை வெதமஹாத்தயா: முதன் முதலில் கல்ஹின்னையில் கல்லினால் வீடு கட்டி "கல் லூட்டு அப்பச்சி" எனப் புகழ்பெற்ற முஹம்மது லெப்பை அவர்களின் மகனான ஜெமால்தீன் லெப்பை அவர்கள், சர்வாங்க வைத்தியத்தில் பிரசித்தி பெற்றி ருந்தார். சர்வாங்க வைத்தியத்தில் முன்னோடியாகத் திகழ்ந்த "கல்லூட்டு அப்பச்சி (முஹம்மது லெப்பை) தமது வைத்தியக் கலையை முஹம்மது காஸிம் (கிதுல் பெரிசாரி என அழைக்கப்பட்டவர்) ஜெமால்தீன் லெப்பை (கடேட்ட வெதமஹத்தயா) ஆகிய இரு புதல் வர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். ஜெமால்தீன் லெப்பை சுமார் ஐம்பது வருடகாலம் நாட்டு வைத்தியத் தில் பிரபல்யம் பெற்றிருந்தார். இவரிடம் வைத்தியம் பார்ப்பதற்கு சுற்றுப்புறங்களின் சிங்களக் கிராமத்தவர் களும், அக்குறணை மாத்தளை போன்ற ஊர்களிலிருந்து மக்களும் வந்தனர். நோயாளி குணம் கண்டு தேறு வதைத்தான் அவரின் குறிக்கோளாகவும், அவரின் மனம் குளிரும் காரியமாகவும் அவர் கொண்டிருந்தார். சர்வாங்க வைத்தியத்தில் வல்லவர் கடேட்ட வெத மஹத்தயா" என்ற சிறப்பை அக்காலத்தில் இவர் பெற் றிருந்தார். ஏழை, எளியவர்க்கும் மற்றையோர்க்கும் இலவசமாக வைத்தியம் செய்வதில் இன்பம் கண்ட ஜெமால்தீன் லெப்பை வைத்தியர் 1966ம் ஆண்டில் தனது 75வது வயதில் காலமானார்.

Page 44
புவியியல் நிலை
எஸ். எல். எம். ஹனிபா பி.ஏ. (புவியியல் சிறப்பு)
ஓய்வு பெற்ற அதிபர்
கல்ஹின்னை கண்டி மாவட்டத்தில் அமைந்திருக் கும் ஒரு கிராமமாகும். இது மத்திய மாகாணத்தின் மேற்கு மத்திய எல்லையில் காணப்படுகிறது. கண்டி மாநகரத்திலிருந்து வடமேற்காகவும், மாத்தளையி லிருந்து தென் மேற்காகவும் அமைந்திருக்கிறது. இது கண் டி யிலிருந்து அம்பத்தன்னை - பூஜாப்பிட்டிய ஊடாகச் சென்றால் பதின்மூன்று மைல் தூரத்திலும் மாத்தளையிலிருந்து ஒவிலிக்கந்தை ஊடாகச் சென்றால் பதினொரு மைல் தூரத்திலும், குருநாகல் நகரிலிருந்து, கெப்பிட்டிகளையூடாகச் சென்றால் இருபத்தாறு மைல் தூரத்திலும் அமைந்திருக்கிறது.
இது ஹாரிஸ்பத்துவ பாராளுமன்றத் தொகுதி யிலும், பூஜாப்பிட்டிய உதவி அரசாங்க அதிபர் பிரிவி லும் அமைந்துள்ளது. இப்பொழுது இக்கிராமம் கல் ஹின்னை, பள்ளியக்கொட்டுவ, படகொள்ளாதெனிய, கோவில்முதுனை, ஆகிய கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அங்கும்புறை-உடகமை, அளவத்தை, கல்கந்தை, கபல்கஸ்தன்னை, விலானை, வெல்காளை, முதலான சிங்கள மக்கள் வாழும் கிராமங்களும் றம்புக்-எல, குடியேற்றக் கிராமமான கொடஹேனை முதலிய முஸ்லிம் மக்கள் வாழும் கிராமங்களும், கல்ஹின்னை யைச் சூழ்ந்து காணப்படுகின்றன.

岛岛 a re- 酮 SS
*
之 , ؟» همAس
* - 8 چه N్కన్స్ట్ర
SY'. .. '' Foothლ4tu Ni N' R
& 'ኣ « བ་ཡཁ་ Ra w Sപ്രത VXኞ2, e ཀྱི་རྫོང་། AAN iyaళ్ల ع '& ’’ع ** r ܡܶܕܶ iyo ۹ عے O SY: Čითა 4. * ?”。W够 s SS X •
N ി. ' •? አ Aင့ငါ့ငဲ့မှဟိုးဇုံဖါ V NA <_ず ལ་༽ * r çji 4 صبر S\ 象 డీ Nota A?
* tana ܙ Nܝܡܶܫܝܓܕ
W. -- X ' 'മ \\^س& i riyangairis 'idمه 懿
MKEPTIGALisaR §ဎွိန္နဲနှဲနုံးမ္်ဇီ
ლeNჯლIზ W
VA •-Y MS. 2) AX iumbဖွနု်ပါ Noé 2. s[:ಟ್ಟ?:ಸ್ಮಿ”ನಿಷ್ಕಿÅižನಿ; ;ኻ ፡ Sr.S. 公ーリ 3 قهوه حجه \* SS
أه: { لأهمية ، نادي في . {ہ۔; リ *登リ
. ܗ ܐ s\ is: & ‹ኗቓ ኃ A
W !. v N با همچنین ། لأم ندسة لهمپمه Viأ y N KO e ‘v, } -15 2 Tè Yo Nస్త్రీ* S (/ : 

Page 45
d
வட அகலக்கோட்டிற்கும் இடையிலும், ஏறத்தாழ 80.33’ கிழக்கு நெடுங்கோட்டிற்கும் 800.35" கிழக்கு நெடுங்கோட்டிற்கும் இடையிலும் அமைந்துள்ளது. இக் கிராமம் நீளப்பாட்டில் இரண்டு மைலுக்குச் சிறிது குறைவாகவும், அகலத்தில் சில இடங்களில் முக்கால் மைல், சில இடங்களில் அதற்குக் குறைவாகவும் காணப் படுகிறது. எனவே, இதன் நிலப்பரப்பு, ஏறத்தாழ ஒன்றரை சதுர மைலுக்குக் குறைவாகவே உள்ளது.
புவியமைவு: புவி வரலாற்றிய லடிப்படையில், இப்பகுதியில் கொண்டலைட்" பாறைகளே காணப்படு கின்றன. பாறைகளின் அமைவு பொதுவாக வட, வட மேற்கு-தென், தென்கிழக்குத் திசையில் காணப்படு கிறது. கண்டி மேட்டு நிலத்தின் மேற்குப் பகுதியின் அமைவு, இம்முறையிலேயே அமைந்திருக்கிறது.
தரைத்தோற்றம்: கண்டி மேட்டுநிலம் வட, வட மேற்காக ஒடும் பல உயர் பாறைத் தொடர்களைக் கொண்டுள்ளது. இப்பாறைத் தொடர்கள் கடல் மட் டத்திலிருந்து ஏறத்தாழ 2500 அடிவரை உயரும், கல் ஹின்னை இவ்வாறான ஒரு பாறைத் தொடரிலும் அதற்கிடையிலமைந்த பள்ளத்தாக்கிலும் அமைந் துள்ளது. பொதுவாக, கல்ஹின்னைப் பிரதேசம் கடல் மட்டத்திலிருந்து 2000 அடி முதல் 2400 அடிவரையி வான உயர்மட்டத்தில் அமைந்துள்ளது. இதனோடு ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது, கண்டி LDrt 155D ub 1700 அடி உயர் மட்டத்திலும் மாத்தளை நகரம் ஏறத் தாழ 1000 அடி உயர் மட்டத்திலும் அமைந்துள்ளன.
இப்பிரதேசத்தை ஏறத்தாழ மூன்று தரைத் தோற் றப்பிரிவுகளாகப் பிரிக்கலாம்; (1) மேற்கு செங்குத்து நிலம், (2) மத்தியிலுள்ள கிழக்கு முகமாகச் சரியும்

d
பள்ளத் தாக்கு, (3) தொன்விளிம்பிலும் வட விளிம்பிலு முள்ள உயர் நிலங்கள்.
மேற்குச் செங்குத்துகில்ம்: இது இப்பிரதேசத்தின் மேற்கு விளிம்பில் காணப்படுகிறது. சுமார் 2400 அடி உயரத்திலுள்ள நிலம் மேற்காக ஏறத்தாழச் செங்குத் தாகச் சரிந்து இப்பிரதேசத்திற்குச் சிறிது வெளியாக சுமார் ஒரு மைல் தூரத்திலுள்ள இலங்கையின் பிர தான நதிகளுள் ஒன்றான தெதுரு ஒயாவின் கிளை அருவி வரை செல்கிறது. இக்கிளை அருவி சுமார் 800 அடி உயர் மட்டத்தில் ஒடுகின்றது! இச் செங்குத்துப் பிரதேசத்தில் பல வெளியரும்புப் பாறைகள் காணப்படு கின்றன. இதில் ஒன்று பொதுவாகப் "பெரிய கல்லு" என வழங்கப் படும் வெளியரும்புப் பாறையாகும். இப் பாறை ஓர் உயர் மட்டத்தில் இருப்பதால், இதிலிருந்து சிறப்பாக மேற்காகப் பார்க்கின் வெகு தூரத்திற்கு ஓர் இயற்கை எழில்மிக்க காட்சி தென்படும். கல்ஹின்னை யின் இயற்கை எழிலின் முத்திரைத் தலமாக இது அமைந்திருக்கிறது. எனவே மாலையழகை ரசிப்பதற் கும், இயற்கைக் காட்சிகளில் லயிப்பதற்கும் பலரை ஈர்க்கும் தலமாக இது அமைகிறது. மேலும் கெப்பிடி களை, தளுக்களை முதலியவையும் வெளியரும்புப் பாறைகளாம்.
மத்தியிலுள்ள கிழக்குமுகமாகச் சரியும் பள்ளத்தாக்கு: இப்பிரதேசம் கல்ஹின்னையின் பெ ரும் பா லா ன பகுதியை உள்ளடக்கியுள்ளது, இது சுமார் 2300 அடி மட்டத்திலிருந்து கிழக்காகச் சரிந்து, கிழக்கு எல்லை யிலுள்ள பிங்ஒயாவின் கிளையருவிவரை செல்கிறது. இவ்வருவி ஏறத்தாழ 2000 அடி உயர் மட்டத்தில் ஓடுகின்றது.

Page 46
88
தென் விளிம்பிலும் வடவிளிம்பிலுமுள்ள உயர்நிலங்கள்: தெற்கு எல்லையில் கொடஹேனை மலை காணப்படு கின்றது. இது 2500 அடிக்குச் சிறிது மேலாக உயர்ந் துள்ளது. இதுவே, இப்பிரதேசத்தின் மிக உயரமான பகுதியாகும். மேலும் தென் எல்லையிலே, பல வெளி யரும்புப் பாறைகளைக் கொண்ட, பொதுவாக 'கல் வேலி' எனக் கூறப்படும் ஒரு பாறைத் தொடர் காணப் படுகிறது. இக் கல் வேலி நிமித்தம் சிங்கள மொழியில் **கல்ஹின்ன" என எங்கள் ஊர் அழைக்கப்பட்டிருக்க லாம். எனவே, கல்ஹின்னை என்ற கிராமப் பெயரின் தோற்றத்திற்குக் காரணம் இக் கல்வேலிதான் எனப் பொதுவாக நம்பப்படுகிறது. மேலும், வட எல்லையில் துங்கஹமுதுனை, கோவில் முதுனை போன்ற உயர் நிலங்கள் காணப்படுகின்றன. இவை 2400 அடிக்கு மேலுயரத்திலுள்ளன.
வடிகாலமைப்பு : இப்பிரதேசம் ஒருயர் மட்டத்தில் அமைந்திருப்பதால், இங்கிருந்து இரு பெரும் ஆற்றுத் தொகுதிகளுடன் இணையும் அருவிகள் ஆரம்பமாகின் றன. மத்திய பகுதியிலிருந்து வடிந்து செல்லும் நீர் ஓர் அருவியாக மாறிக் கிழக்காக ஒடி பிங் ஒயாவின் கிளையாற்றை அடைகிறது. பிங்ஒயா கட்டுக்கஸ் தொட்டையில் மகாவலி கங்கையுடன் சேர்கிறது. மேற்கு செங்குத்து நிலத்தில் ஒடும் அருவிகள், தெதுறு ஓயாவை அடைகின்றன. எனவே, இருபெரும் ஆற்றுத் தொகுதிகளுக்கிடையிலுள்ள நீர்பிரி நிலத்தின் ஒரு பகுதியாகவும் கல்ஹின்னை காணப்படுகிறது.
காலநிலை :- ஒரிடத்தின் காலநிலை, அவ்விடத்தின் (1) அகலக் கோடு (2) கடல்மட்ட உயரம் (3) கடலி லிருந்துள்ள தூரம் (4) பிரதான காற்றுத் தொகுதிகள்

8
தொடர்பான நிலையம் முதலியவைகளால் ஆதிக்கங் கொள்கின்றது.
எமது கல்ஹின்னைனப் பிரதேசம் 89 வடஅகலக் கோட்டிற்குள் அமைந்துள்ளது. கடல் மட்ட உயரம் 2000 அடிமுதல் 2400 அடி வரையுள்ளது. இலங்கைத் தீவின் மத்தியிலே அமைந்திருப்பதால், மேற்கே அரபியக் கடலுக்கும், கிழக்கே வங்காள விரிகுடாவிற்கும் உள்ள தூரம் குறைவாகவே உள்ளது. எனவே, இலங்கைமேல் வீசும் இரண்டு பருவக் காற்றுக்களாலும் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பான நிலையத்தில், இப்பிரதேசம் அமைந் துள்ளது.
வெப்பநிலை : அகலக் கோட்டு நிலை யமும், குத்துயரமுமே ஒரிடத்தின் வெப்பநிலையை நிர்ணயிக் கும் பிரதான காரணிகளாக உள்ளன. இப்பிரதேசத் தின் வெப்பநிலையை ஆராயும் பொழுது, இது நன்கு புலப்படுகின்றது. இப்பிரதேசத்தின் எல்லையிலுள்ள அங்கும்புறை எனும் நிலையத்தின் ஒரு வருட வெப்ப நிலைத் தரவுகள் தரப்படுகின்றன :-
ஜன பெப் LDfTrië ஏப் Gël D ஜூன்
69, 30ւյ 7 4 . 50ւս 74, 80ւս 7 7, 9 Օւյ 7 8, 60լյ 75. 20ւմ
ஜூலை ஒக செப் ஒக் நவ திச 7 6, 6 0լ յ 75, 8 0լ յ 75 7 0 լյ 7 3 20լյ 7 2 - 80լ յ 72, 29
அங்கும்புறை ஏறத்தாழ 2000 அடி உயர்மட்டத்தில் உள்ள நிலையமாகும். வேறு வெப்பநிலை அவதான நிலையங்கள் கல்ஹின்னைப் பிரதேசத்திலில்லாததால், மேலே கொடுக்கப்பட்ட தரவுகள் ஓரளவாக இக்கிரா மத்திற்குப் பொருந்தும். இத்தரவுகளை அவதானிக் கும் போது, மாதாந்த வெப்பநிலைச்சரிவு 9பே.க்குக் குறைவாகவே உள்ளது. இது, இப்பிரதேசம் மந்திய

Page 47
88
கோட்டிற்கு அணித்தாயுள்ள காரணத்தினாலேயாம். மிகக் கூடிய மாதாந்தச் சராசரி வெப்பநிலை 78. 60ப மே மாதத்தில் காணப்படுகிறது. மிகக்குறைந்த மாதச் சராசரியான 69, 30ப. ஜனவரி மாதத்தில் காணப்படு கின்றது. வருடச் சராசரி வெப்பநிலை 74.0ப ஆக உள்ளது. ஆனால், இப்பிரதேசத்தின் உயரமான பகு திகளில் வருடச்சராசரி ஏறத்தாழ 73.50ப. ஆக இருக்க. லாம். இப்பகுதி அமைந்திருக்கும் அகலக் கோட்டி லுள்ள கரையோரப்பகுதிகளில் வருடச் சராசரி வெப்ப நிலை 800ப. க்குக் கூடியதாகும். எனவே, இங்கு வெப்பநிலை குறைவாகக் காணப்படுவதற்குக் காரணம் இப்பகுதியமைந்துள்ள உயர்மட்டமேயாகும்.
மழைவீழ்ச்சி: மேற்கே அரபியக்கடலுக்கும் கிழக்கே வங்காள விரிகுடாவிற்கும் மத்தியில் வாய்ப்பான நிலை யத்தில் இக்கிராமம் அமைந்திருப்பதால், இலங்கைக்கு மழையைக் கொண்டுவரும் இரு பருவக்காற்றுகளாலும் இப்பிரதேசம் மழையைப் பெறுகின்றது. மேற்கே தென் மேற்குப் பருவக்காற்றைத் தடைபண்ணும் தடைமலை கள் பெரும்பாலும் காணப்படுவதில்லை. கிழக்கே வட கிழக்குப்பருவக்காற்றைத் தடை பண்ண மாத்தளைக் குன்றுகளிருப்பினும் மாத்தளைக் குன்றுகளுக்கிடையி லுள்ள கணவாய்களுக் கூடாக வட கிழக்குப் பருவக் காற்று நுழைந்து, இப்பிரதேசத்தை அடைகின்றது. எனவே, இரு பருவக்காற்றுக்களாலும் இப்பிரதேசம் மழையைப் பெறுகின்றது. எனினும் தென் மேற்கு பருவக்காற்றினாலேயே இப்பிரதேசம் கூடிய மழை பெறுகின்றதை அவதானிக்கலாம்.
ஐந்து வருடங்களுக்கான மாதாந்தச் சராசரி மழை வீழ்ச்சி (நிலையம் : அங்கும்புறை)
ஜன பெப் மார்ச் - ஏப் மே ஜூன் ፊ,80'' 8.8 4” 5.8 a'' 7.88'' 9.07'' 9,98''

89
ஜூலை ஒக GoF ஒக் நவம் திசம் 7.56 7.73 6.27 13.24 8.73 7. II
மேலும் இப்பகுதி பருவக்காற்றுப் பருவங்களுக்கு இடைப்பட்ட காலமான செப்தம்பர்-நவம்பர் காலத் திலேயே மிகக்கூடிய மழை வீழ்ச்சியைப் பெறுகின்றது. எனவே, மழைவீழ்ச்சி உச்சங்கள் தென் மேற்குப் பருவக் காற்றுக் காலத்திலும், செப்தம்பர்-நவம்பர் காலத்திலு மேயே உண்டு. மேலும் ஒரு மாதத்திலாவது 3 அங்குலத் திற்குக் குறைந்த மழைவீழ்ச்சி காணப் படுவதில்லை. குறைந்த மழை ஜனவரி, பெப்ரவரி காலத்தில் காணப் பட்டாலும் வருடத்தில் எல்லா மாதங்களிலும் கணிச மான அளவு மழைவீழ்ச்சிப் பரம்பல் காணப்படுகின்றது மொத்த வருட, மழைவீழ்ச்சி 91. 53 அங்குலம் ஆகும். இப்பிரதேசம், இலங்கையின் ஈரலிப்புப் பிரதேசத்தினுள் அடங்கும்.
மண்வகைகள்: இங்குள்ள மண்வகைகள் இங்கு காணப்படும் மூலப்பாறைகளுக்குத் தொடர்புள்ளனவாக வுள்ளன. மேலும் தரைத்தோற்றம், காலநிலை, இயற்கைத் தாவரம் ஆகியவையும்மண்வகைகளை நிர்ண யிக்கும் காரணிகளாக உள்ளன. இலங்கையின் ஈரலிப்பு வலயத்தில் காணப்படும் சிவப்பு - மஞ்சள் நிற லோமி (Lome) மண் வகையும் சிவப்பு-"லட்டரைட்" மண் வகையுமே மிகுதமாகக் காணப்படுகின்றன. இம்மண் வகைகளில் பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை, ரப்பர், கோப்பி முதலியவை நன்கு வளரும். பள்ளத் தாக்குக்களில், சேற்று மண் வகைகளும் காணப்படு கின்றன.
இயற்கைத் தாவரம் : ஒரிடத்தின் இயற்  ைக த் தாவரம் அவ்விடத்தின் தரைத்தோற்றம், காலநிலை

Page 48
90
மண்வகைகள் முதலியற்றினால் ஆதிக்கங் கொள் கின்றன. கூடிய மழைவீழ்ச்சியும், உயர் வெப்பநிலையும் தாவர வளர்ச்சிக்கு உகந்தனவாயுள்ளன. எனவே, இங்கு இலங்கையின் ஈரலிப்பு வலயத்தில் காணப்படும் செழிப்பான, என்றும் பச்சையான காடுகள் காணப் படல் வேண்டும். கிராம அபிவிருத்தியினாலும், பயிர்ச் செய்கை அபிவிருத்தியினாலும் இங்கிருந்த பழைய காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ, நாற்பது வருடங்களுக்குமுன் இவ்வாறான காடுகள் ஆங்காங்கு காணப்பட்டன.
நிலப்பயன்பாடு: நிலப்பயன்பாட்டை ஆராயின், இப்பிரதேசத்தில் பயிர்ச் செய்கையே பிரதான இடத்தை வகிக்கின்றது. இலங்கையின் மலைநாட்டு ஈரலிப்பு வலயத்திலுள்ள நிலப்பயன்பாட்டு முறைகளுள், பெரும் பாலானவை இங்கு காணப்படுகின்றன. தரைத்தோற் றமும், வாய்ப்பான கால நிலையும் மண்வகைகளும் பயிர்ச் செய்கைக்கு உகந்தனவாக உள்ளன. எனவே, இப்பிரதேசத்தில் பெருந்தோட்டப் பயிரான (1) தேயிலைப் பயிர்ச் செய்கை (2) நெற்பயிர்ச் செய்கை (3) கலவன் தோட்டப்பயிர்ச் செய்கை ஆகியவை காணப்படுகின்றன.
தேயிலைப் பயிர்ச் செய்கை , தேயிலையே இப்பிர தேச மக்களின் பணப்பயிராக உள்ளது. வீட்டு நிலங் களையும், அதைச் சூழ்ந்துள்ள கலவன் பயிர்கள் உள்ள நிலங்களையும் தவிர்ந்த பகுதிகளில், தேயிலைப் பயிர்ச் செய்கை பிரதான இடத்தை வகிக்கின்றது. உண்மை யில் தரைத்தோற்றம், காலநிலை, மண்வகை முதலி யவை தேயிலைப் பயிர்ச் செய்கைக்கு மிகப் பொருத்த மானவையாயுள்ளன. எனினும், குடித்தொகை நெருக் கடியினுல் தேயிலைப் பயிர்ச் செய்கை பாதிக்கப்படு

91
கின்றது. எனவே, இந்தக் கிராம எல்லைக்குள் பெருந் தோட்ட முறையில் நடாத்தப்படும் தோட்டங்கள் காணப்படுவதில்லை. சிறிது அண்மைக் காலத்தில் ஓரளவு பெருந்தோட்டங்களாக இருந்தவையும் இப் பொழுது கூறாக்கப்பட்டு, சிறிய தோட்டங்களாகப் பராமரிக்கப்படுகின்றன. இவ் வா ற ர ன தோட்டங் களுக்கு உதாரணங்களாக உடகெப்பிட்டிகளை. நோவ செம்பளா என்பன உள்ளன. நிலப்பரப்பு குறைவாக இருப்பதால், தேயிலை சிறு தோட்டங்களிலேயே காணப் படுகின்றது. சிறு தோட்டங்கள் ஒரு ஏக்கருக்குக் குறைந்த பரப்பு முதல் சுமார் பத்து ஏக்கர் வரை பரந்து காணப்படுகின்றன.
பொதுவாகத் தேயிலைச் சிறு தோட்டச் சொந்தக் காரர்களுக்கு உள்ள பிரச்சினைகள் இங்கும் காணப்படு கின்றன. தேயிலைப் பயிர்ச்செய்கைக்குக் கூடுதலான அளவு தொழிலாளர் தேவை. இங்குள்ள தோட்டங் களில் பதிவான நிரந்தரத் தொழிலாளர்களில்லை. எனவே, பக்கத்துக் கிராமங்களிலுள்ள, பெரும்பாலும் கமக்காரர்களே இங்குள்ள தோட்டங்களில் தொழில் புரிந்து வருகிறார்கள். இத்தொழிலாளர்கள், வயல் நடும் காலங்களிலும், அறுவடை காலங்களிலும் தோட்டத் தொழிலில் ஈடுபடமாட்டார்கள். எனவே, இவ்வாறான காலங்களில் தோட்டங்களை முறையாகப் பராமரிக்க முடியாமலிருக்கும். மேலும் ஜனசவியத் திட்டத்தினாலும், தேயிலைப் பயிர்ச் செய்கை பாதிக்கப் படுகிறது. தோட்டங்களில் பருவத்தில் புல்லு வெட்டு தல், உரமிடுதல், முறையாகக் கொழுந்து எடுத்தல் போன்றவை திட்டமிட்ட முறையிற் செய்ய முடியா மலிருக்கும். மேலும், எடுத்த கொழுந்தைச் சந்தைப் படுத்துவதும் சிறு தோட்டச் சொந்தக்காரருக்குள்ள

Page 49
ps
ஒரு பிரச்சினையாகும். இக்கிராம எல்லைக்குள், தேயிலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றி ருந்தால், இப்பிரச்சினை தீரலாம். பொதுவாக ஆரா யின், இச்சிறு தேயிலைத் தோட்டங்களின் எதிர்காலம் அவ்வளவு சிறந்ததாயில்லை. குடித்தொகை பெருகப் பெருக தோட்டங்கள் மீண்டும் மீண்டும் கூறாக்கப்பட்டு விருத்தியான முறையில் பண்படுத்த முடியாமலிருக்கும். எனினும், அரசாங்கம் கொடுக்கும் மானிய உதவியுடன் புதிய முறையில் வி.பி. (W.P.) தேயிலைப்பயிர் பண்ணப் பட்டால் உற்பத்தியும் வருவாயும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
இங்கு, சிறிது காலத்துக்கு முன் ரப்பர் பயிரும் ஒரு சிறுதோட்டப் பயிராக இருந்தது. ஆங்காங்கு பல சிறு தோட்டங்களில் இப்பயிர் காணப்பட்டது. இப்பிரதேசத் தின் மேற்காக ஒரு பெருந்தோட்ட அடிப்படையிலான தோட்டமாகச் கெப்பிடிகளை இருந்தது. எனினும், இப்பயிரை மீண்டும் பயிராக்குவதற்குள்ள மான்யத் திட்டத்தை அரசாங்கம் கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயர் மட்டத்திற்குக் கீழ் உள்ள பகுதிகளுக்கே வழங்கத் தீர்மானித்ததால், இப்பயிரின் வளர்ச்சி குன்றத் தொடங்கியது. பெரும்பாலான ரப்பர் தோட் டங்களில், இப்பொழுது தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. எனவே, இப்பிரதேசத்தில் ரப்பர் பயிர் அரிதாகி விட்டது.
நெற்பயிர்ச் செய்கை: அடுத்த பிரதான பயிராக நெற்பயிர் காணப்படுகிறது. இது மலைகளுக்கிடையி லுள்ள பள்ளத்தாக்குகளில் பயிரிடப்படுகின்றது. இது பிரதான உணவுப்பயிராக இருப்பதால் இப்பயிரே இக் கிாாமத்தின் ஆதிக்குடி மக்களின் முதற் பயிராக இருந் தது. காலநிலையும் பள்ளத்தாக்குக்களிலுள்ள மண்

i
வகையும் நெற்செய்கைக்கு உகந்தனவாயுள்ளன. சிறிது உயரமான பகுதிகளில் உள்ள வயல்கள் பெரும்போகத் தில் மட்டும் செய்கை பண்ணப்படுகின்றன. ஏப்பிரல்மே மாதங்களில் பெய்யும் மழை பயிர்ச்செய்கைக்குப் போதியதாக இல்லாமையினால் இக்காலப்பகுதியில் நெற்செய்கை பயிரிடப்படுவது குறைவு. சில பள்ளத் தாக்கான இடங்களில் மழைவீழ்ச்சியின் உதவியுடனும் சிறு அருவிகளின் உதவியுடனும் இரு போகங்களிலும் நெற்பயிர் செய்யப்படுகின்றது.
எனினும், இப்பிரதேசத்தினை ஏனைய பிரதான நெற் பயிர்ப் பிரதேசங்களோடு ஒப்புநோக்கும் போது, இங்கு அறுவடை மிகக் குறைவாயுள்ளது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு ஏறத்தாழ நாற்பது (40) பூசல் நெல்லே உற்பத்தியாகின்றது. பண்டைய பயிர்ச் செய்கை முறை களைக் கையாளுவதும் வளமாக்கிகளை அவ்வளவாகப் பயன்படுத்தாமலிருப்பதுமே இதற்கு முக்கிய காரணங் களாம். மேலும் நிலச்சொந்தக்காரர்களும் அவர்களுக்கு வேறு தொழில்களிருப்பதால், பயிர்ச் செய்கையில் போதிய அளவு கவனம் செலுத்துவதில்லை.
கலவன் தோட்டப்பயிர்ச்செய்கை: உயர் நிலங் களி லுள்ள வீட்டுத் தோட்டங்களில் பல கலவன் பயிர்கள் காணப் படுகின்றன. பாக்கு, கித்துள், தென்னை, கோப்பி, பலா போன்ற நிரந்தரப் பயிர்களையும், வாழை மரக்கறி போன்ற தற்காலிகப்பயிர்களையும் கொண்ட கல வன்பயிர்த் தோட்டங்கள், வீடுகளைச் சூழ்ந்துகாணப்படு கின்றன. மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்குத் தேவை யான பயிர்களாகவே, இவையுள்ளன. சில வேளையில் ஒரளவு வருவாயைப் பெறக் கூடிய பயிர்களாகவும் இவையமையும், எனினும், கோப்பி. தென்னை போன்ற பயிர்கள் வர்த்தகப் பயிர்களாக இருப்பினும், இவற்றை

Page 50
வர்த்தக ரீதியில் பயிரிடக் கூடிய நிலப்பரப்பு இங்
கில்லை.
இப்பிரதேசத்தின் காலநிலையும் மண் வளமும் கராம்பு, சாதிக்காய், மிளகு போன்ற பயிர்களுக்கு உகந்தனவாக உள்ளன. ஆனால் இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் விவசாயமல்லாத தொழில்களிலீடுபட் டிருப்பதால், சிறப்பாக வர்த்தக முயற்சிகளிலீடுபட்டிருப் பதால், விவசாயத்தில் அவ்வளவு அக்கறை கொள்வ தில்லை. எனவே, இப்பயிர்கள் இங்கு பயிரிடப்படுவது மிகக் குறைவு.
கைத் தொழில்கள் : இப்பிரதேச மக்கள் கைத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சூழ்ந் துள்ள கிராமங்களில் காணப்படும் தச்சுவேலை போன்ற கிராமக் கைத்தொழில்கள் கூட, இங்கு காணப்படுவ தில்லை. ஆனால், அண்மைக் காலத்தில் இங்கு ஆடை தயாரிப்புத் தொழில் ஒரளவு செயல்பட்டு வருகின்றது. பெரும்பாலும் இம்பகுதியைச் சூழ்ந்துள்ள கிராமங் களிலிருந்துவரும் இளம் பெண்கள் இந் நிலையங்களில் தொழில் புரிகின்றனர்.
குடித் தொகை : கண்டி மாவட்டத்தில், ஹாரிஸ் பத்துவப் பிரதேசம் ஒரு குடித் தொகை அடர்த்தி மிக்க பகுதியாகும். அதற்கு ஒர் உதாரணமாக கல் ஹின்னை காணப்படுகின்றதென்றால் அது மிகை யாகாது. கல்ஹின்னையின் சரித்திரத்தை நோக்கு மிடத்து இங்கு குடியாக்கம் மிக அண்மைக் காலத்தி லேயே ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ, 18-ம் நூற்றாண் டின் இறுதியில், மூன்று அல்லது நான்கு "குடும்பங்களைக் கொண்டிருந்த இக்கிராமம், இப்பொழுது, ஏறத்தாழ 6000 மக்களைக் கொண்ட ஹாரிஸ்பத்துவத் தொகுதி யில் மட்டுமல்லாமல், இலங்கையிலேயே ஒரு பிரபல்ய

by
மான கிராமமாகத் தோன்றுகிறது. இக்கிராமத்திலிே குடித்தொகை மிக விரைவாக அதிகரித்திருப்பதை அவதானிக்கலாம். 18-ம் நூற்றாண்டு தொடக்கம் இங்கு வாழ்ந்து வந்த குடும்பங்கள் பெருகிக் குடியதி கரிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வதிகரிப்புக்கு கிராமத்தின் அமைப்பான நிலையமும், உவப்பான காலநிலையும், மக்களின் ஒழுக்க முறையான வாழ்க்கையும், ஒற்றுமை யுணர்வுமே காரணங்களாயிருக்கலாம். கீழ்க்காணும் வருடங்களின் பருமட்டான குடித்தொகைத் தரவுகளை நோக்கின் இவ்விரைவான அதிகரிப்பை அவதானிக் фортиђ:-
வருடம் குடித்தொகை (பருமட்டாக)
1800 80
1956 2200
1971 3500
1981 4500
1990 6000
குடியடர்த்தியை நோக்குமிடத்து இங்கு ஒரு சதுர மைலுக்கு 3000 மக்களுக்கு மேலுண்டு. இது கண்டி மாவட்டத்தின் சராசரிக் குடியடர்த்தியைவிட, மிக அதிகமானது,
செறிவான குடியடர்த்தி காணப்படும் இப்பிர தேசத்தில், மக்கள் நிலத்தின் வருவாயை மட்டும் நம்பி யிருக்காமல் வெளிப்பிரதேசங்களுக்குச் சென்று பெரும் பாலும் வர்த்தக நடவடிக்கைகள் மூலம் பொருளாதார விருத்தியேற்படுத்தி வருகின்றனர். மக்கள் வர்த்தகத் திற்காகவோ வேறு தொழில்களுக்காகவோ வெளிப் பிர தேசங்களுக்குச் சென்றாலும் தங்கள் குடும்பங்களை வெளிப்பிரதேசங்களுக்குக் கொண்டு செல்லவில்லை. இது குடிச் செறிவுக்கு இன்னுமொரு காரணமாயிருக்க,

Page 51
防制
லாம். எனினும் அண்மைக்காலத்தில் தங்கள் வசதி காரணமாகவும், நாட்டிலுள்ள நிலைமை காரணமாக வும் சிலர், கிராமத்தை விட்டு இடம்பெயர்வதை அவ தானிக்கலாம்.
குடியிருப்புக்களை அவதானிக்குமிடத்து அண்மைக் காலம்வரை கிராமக்குடியிருப்புக்களே காணப்பட்டன. ஆனால், கிட்டியகாலத்தில் போக்குவரத்துப் பாதைகள் விருத்தியடைந்துள்ளதால், பாதைகளுக்கணித்தாகவே குடியிருப்புக்களை செறிவுறக் காணலாம்.
பிரதான பாதைகள் : இக் கிராமத்தினூடாகச் செல் லும் பிரதான பாதை அங்கும்புரை-பூஜாப்பிட்டியப் பாதையாகும். இப்பாதை கல்ஹின்னையின் மேற்கு எல்லையிலேயே செல்கிறது. இப்பாதை ஏறத்தாழ 55 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டதெனினும் இப் பிரதேச விருத்திக்கு இது ஒர் உயிர்நாடியாக இருந்து வந்துள்ளது. இப்பாதை மூலமே வெளிப்பிரதேசங் களுக்கு, சிறப்பாக அண்மையில் அமைந்திருக்கும் பிர தான நகரங்களுக்கு, போக்குவரத்துத் தொடர்பு நடை பெறுகின்றது. பூஜாப்பிட்டிய வழியாகச் சென்ருல் கண்டிக்குச் செல்லலாம்; அங்கும்புரை மூலமாக மாத் தளைக்கும் அளவத்துக் கொடை சென்று கண்டிக்கும் செல்லலாம், மேலும் கெப்பிடிக்கள மூலமாகவும் பூஜாப் பிட்டிய-ஹேதெனிய மூலமாகவும் குருநாகல்லிற்குச் செல்லலாம். இப்பாதைகள் வழியாக கல்ஹின்னைக்கும் பிரதான நகரங்களுக்குமிடையில் பஸ் போக்குவரத்து நடைபெறுகின்றது.
கிராமத்துக்கூடாகவும், பலபாதைகள் அமைக்கப் பட்டுள்ளன. அங்கும்புரை-பூஜாப்பிட்டியப் பிரதான பாதையிலே பள்ளிப்பாதைச் சந்தியெனும் இடத் திலிருந்து பிரிந்து செல்லும் பாதை, ஏறத்தாழ கிராமத்

9 ሃ
திற்கு மத்தியில் கிழக்கே கிராம எல்லை வரை செல்கிறது. இப்பாதையை ஒரு பக்கம் விலானைக்கும், மறுபக்கம் அங்கும்புரைக்கும் தொடர்புபடுத்தும் திட்டம் அமுலாக்கப்பட்டு வருகின்றது. இப்பாதை வழியாகவும் பீரி-எல என்னும் இடம்வரை பஸ் போக்கு வரத்து நடை பெறுகின்றது. இராமாக்கொட்டுவை எனும் இடத்திலிருந்து அல்மனார் மகா வித்தியாலத் திற்குப் பக்கமாகச் செல்லும் பாதை கிராமத்திற்கு மத்தி யில் செல்லும் பாதையோடு பூதல் கஹ எனும் இடத் தில் சேர்கிறது. மேற்கூறிய பாதைகளிலிருந்து, பல நடைபாதைகளும் பிரிந்து செல்கின்றன.
இது கல்ஹின்னையைப் பற்றிய ஓரளவான புவி யியல் விளக்கமாகும். மேலும் ஆராயின், இதனினும் விரிவான விளக்கத்தைப் பெறலாம்.
எஸ். எல். எம். ஹனிபா, அதிபர் :
கல்ஹின்னையின் அறிவியல் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வ வித்திட்டவர்களுள் ஒருவரான ஜனாப். ஏ. ஓ. எம். சாலிஹ் ஹாஜியார்-மரியம் பீபி தம்பதியர் பெற்ற பதின்மரில் முதல் வராக ஜனாப். எஸ். எல். எம். ஹனிபா அவர்கள் 1931 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் திகதி திங்கட் கிழமை பிறந்தார்.
ஆர்ப்பாட்டமோ, அகம்பாவமோ இல்லாத மென்மை யான சுபாவம், அன்னை மொழியிலும் ஆங்கில மொழியிலும் ஆழ்ந்த அறிவு கொண்ட நிதான நோக்கு, ஆரோக்கியமான நட்புக்கேற்ற இங்கிதமான போக்கு இவைகளே இவரின் கீழ் நான் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கியதிலிருந்து, இவரிடம் கண்ட சிறப்புமிகு உயர்பண்புகள்.
இவர், தமது ஆரம்பக் கல்வியை இவரின் சிறிய தந்தை மர்ஹூம் புரக்டர் ஏ. ஓ. எம். ஹுஸைன் அவர்களால்

Page 52
ஸி ) வரை கற்றார். Hனித தோமஸ் கல்லூரியின் அதிபராக விருந்த திரு.ஸி. றொபின்சன் என்பவரிடம், புவியியல்
தரப்பத்திரக் கல்வியைக் *ற்றார். அங்கு மர்ஹகும். 9• °7tb. @r. gy@5°ñ அவர்களின் ற்படுத்திக் கொண்டார். 1950-195g ஆம் ங்கு பயிலும்போது "ணவர் தலைவர்
1953-ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகக் (5606)
 

99
பாடத்தை சிறப்புப் பாடமாகக் கற்று கல்ஹின்னைக் கிராமத் தின் இரண்டாவது பட்டதாரியாகவும், கம்பளை ஸாஹிறாக் கல்லூரியில் பயின்ற மாணவர்களில் முதலாவது முஸ்லிம் பட்டதாரியாகவும் வெளியேறிய பெருமை இவருக்குண்டு. இவர் பல்கலைக் கழகத்தில் பயிலும்போது முஸ்லிம் மஜ்லிஸ் செயலாளராகவும், இறுதி வருடத்தில் தலைவராகவுமிருந்து பணியாற்றியுள்ளார்.
1957-ம் ஆண்டில், கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர் களின் அழைப்பின் பேரில், கம்பளை ஸாஹிறாக் கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றார். முதன் முதலில் அக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்களைப் பல்கலைக் கழகத் திற்கு அனுப்பி வைத்ததன் மூலம் தமது கன்னி முயற்சியில் வெற்றி கண்டார்.
மறைந்த புவியியல் துறை பேராசிரியர் சோ. செல்வ நாயகம் அவர்களின் சர்வகலாசாலைத் தோழராகவிருந்த தால் அரசகரும மொழித் திணைக்களத்தில் அவர் ஏற்படுத்திச் சென்ற வெற்றிடத்தை இட்டு நிரப்ப 1959ம் ஆண்டில் ஆங்கில-தமிழ் மொழி பெயர்ப்பாளர் பதவியில் அமர்ந்து 1962ம் ஆண்டு வரை புவியியல் துறை சார்பான ஆங்கில நூல்களைத் தமிழ் மொழிபெயர்ப்புச் செய்து, புவியியல் துறைக்கு அளப்பரிய பங்காற்றியுள்ளார்.
அதன் பின்னர். (1962 - 1967) கம்பளை ஸாஹிறாக் கல்லூரியில் உதவி அதிபராகவும் பணியாற்றியுள்ளார். தமது தொகுதிப் பாடசாலைகளின் நலன் கருதிப் பணியாற் றும் பொருட்டு 1967 - 1970ம் ஆண்டு வரை அக்குறணை அஸ்ஹர் மகாவித்தியாலயத்தில் (தற்போது அக்குறனை மத்திய கல்லூரியாக விளங்குவது) அதிபராகப் பணியாற்றிய வேளையில் இப்பாடசாலையிலிருந்து முதன் முதலாக மாணவர்களைப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பிப பெருமை இவருக்குண்டு,
1970 முதல் 1972 வரை கட்டுகஸ்தோட்டை ஸாஹிறாவித்தியாலயம், குமுக்கந்துறை முஸ்லிம் மகாவித்தி

Page 53
யாலயம், 1972லிருந்து 1986 வரை சித்தி லெவ்வை வித்தியாலயத்திலும், இறுதியாக 1986 ஜூன் மாதம் தொடக்கம் 1989 பெப்ரவரி வரை கல்ஹின்னை அல்-மனார் மகாவித்தியாலயத்திலும் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அகில இலங்கை கல்வி மகாநாடு ஸ்தாபக உறுப்பினராக வும், கண்டி முஸ்லிம் கல்வி இயக்கத்தின் பொதுச் செயலாள ராகவும் பணியாற்றியதோடு, தற்போது அகில இலங்கை கல்வி மகாநாட்டின் கண்டிக் கிளை இணைச் செயலாளராக வும் இருந்து மலையக முஸ்லிம்களின் கல்வி மேம்பாட் டிற்குத் தம் பங்களிப்பினைச் செய்து வருகின்றார்.
-அல்ஹாஜ் எம். ஐ. எம். முசாதிக்

பொருளாதாரத் துறையில்.
ஆரம்ப காவத்தில் பொதுவாக கல்ஹின்னை மக்கள் அனைவரும், கண்டியப் பகுதியின் ஏனைய மக்களைப் போன்று விவசாயத்திலேயே தங்கியிருந்தனர். பெரும்பாலும் நெல் வயற்செய்கை, தேயிலை, ரப்பர் போன்ற பணப்பயிர் கள் செய்கை முதலியவற்றில் ஈடுபட்டிருந்தனர். சிலர், தமது வீடுகளுக்கு அருகாமையில் கமுகு, கராம்பு, ஏலக்காய். சாதிக்காய், கொக்கோ. கோப்பி போன்றவற்றையும் சிறி தளவில் பயிர் செய்தனர். சுமார் ஓர் நூற்றாண்டுகாலம் தனியாக விவசாயத்தை மாத்திரமே நம்பியிருந்த பெரும் பாலானோர் சனத்தொகை, அதிகரிப்பின் காரணமாக வர்த்த கத்திலும் ஈடுபட்டனர்.
கல்ஹின்னையிலேயே முதன் முதலில், ஆ. உமறு லெப்பை ஹாஜியார் ஒரு கடையை நிறுவியதன் காரணமாக இன்றும் "கடே முதலாளி' என அவர் அழைக்கப்படுகிறார். அவரின் பிள்ளைகள் ஏனைய வழித்தோன்றல்கள் எல்லோ ரும், "கடே வீட்டுக் குடும்பம்’ என்று இன்றும் அழைக்கப் படுகின்றனர். உமறு லெப்பை ஹாஜியார் அவர்கள் கல் ஹின்னையில் கடை வைத்த சமயம், சென்ற நூற்றாண்டுக் கடைசியில், தா. இ. சரீஃப் லெப்பை ஹாஜியாரின் தந்தை இஸ்மாயில் லெப்பை மாத்தளையில் ஒரு கடை வைத்ததாகத் தெரிகிறது. அதன் பின்னர், அங்கும்புரையில் எம். ஈ. யூசுப் லெப்பை ஹாஜியார், பூதல்கஹ யூசுப் லெப்பையுடன் சேர்ந்து இந் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒகு "சில்லறைக்" கடை ஆரம்பித்திருக்கின்றனர்.
முன்னோடிகளான இவர்களின் பின்னர், கல்ஹின்னை யிலும், அங்கும் புரையிலும் பெருந்தொகையான கல்ஹின்னை யினரின் கடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாத்தளையில், 1930களின் மத்தியில் பிரசித்தி பெற்ற எம். ஏ. எம். காஸிம அன்ட் கோ, அதே தசாப் த இறுதியில் எஸ். எம். இஸ்மாயில் அன்ட் கோ. என்ற இரும்புக் கடைகள் தோன்றின. இவூர்

Page 54
10:
களைத் தொடர்ந்து, மாத்தளையில் மாத்திரமல்லாமல் கண்டி குருநாகல் கடுகண்ணாவ, கொழும்பு, குளியாப் பிட்டிய ஆகிய பல்வேறு நகரங்களில் கல்ஹின்னையினர் பெரும்பாலும் ஜவுளிக் கடைகளும், ஒரு சிலர் இரும்பு, தின சரித் தேவைப் பொருட்கள், மளிகைக் கடைகள் ஆகிய வற்றையும் நடாத்தத் தொடங்கினர். தற்பொழுது விவ சாயத்தை மாத்திரமே நம்பியிருப்பவர்களிள் தொகை மிக, மிகக் குறைந்து விட்டது. நூற்றுக்குத் தொண்ணுாறு விகித மானோர், வர்த்தகத்தை தமது தொழிலாகக் கொண்டுள்ள னர். அரசாங்க சேவையிலிருப்பவர்களில் பெரும்பாலான வர்கள் பாடசாலை ஆசிரியர்கள்தான். வேறு பதவிகளில் மிகச் சொற்பப் பேரேயுள்ளனர்.
எமது மக்களின் பொருளாதார முயற்சிகள் பற்றி, முதன் முதலில் எழுதியவர் தற்பொழுது கண்டியில் கணக் காளாராயிருக்கின்றவரும் பேராதனைப் பல்கலைக்கழகத் தில் இரு பட்டங்கள் பெற்றவருமான ஏ. எஸ். எம். ஹனிஃ பாதான். 1985ம் ஆண்டின் ஆரம்பத்தில் பிரசுரமான கல்ஹின்னை அல் மனார் மஹாவித்தியாலய ஐம்பதாண்டுப் பூர்த்தியைக் குறிக்கும் பொன்விழா சிறப்பு மலரின் 39, 40, 41ம் பக்கங்களில் அவரின் கட்டுரை இடம் பெற்றுள்ளது. * கல்ஹின்னையின் பொருளாதார முயற்சிகள் ஓர் விமர்சனக் கண்ணோட்டம்' எனும் தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை வருமாறு : “ஏறக்குறைய ஒரு நூற்றாண்டிற்கு முன், விரல் விட்டெண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டுமே வாழ்ந்த இக் கிராமம், ஒரு கிராமிய விவசாய அடிப்படையிலான பொருளாதார அமைப்பினையுடையதாகவே விளங்கியது. அதற்கேற்ற நீர் வளமும் நிலவளமும் அக்காலத்தில் போதியளவு கிடைத்தன. அன்று எமது ஊரில் இருந்த நெல்விளை நிலம், அன்று வாழ்ந்த சொற்ப சனத்தொகைக்கு போதிய உணவை வழங்கக் கூடியதாக இருந்தது. ஆனால், சனத் தொகை வளர்ச்சிக்கேற்ப வயற் காணிகளை அதிகரிப் பதற்கு இடவசதி இன்மையாலும், நீர்வளமற்ற மேட்டு நிலப் பிரதேசம் குடியிருப்புத் தேவைகளுக்கு உபயோகிக்கப்

10.
பட்டமையாலும், நெல் வயல்தளிற் பற்றாக்குறை ஏற் பட்டது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மலைநாட்டில் விருத்தியடைந்த தேயிலை, ரப்பர் போன்ற பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை கல்ஹின்னைப் பிரதேசத்தில் வளர்ச்சி யடையவில்லை. இ ல ங்  ைக வாழ் முஸ்லிம்களிடையே தொன்றுதொட்டு நிலவிய வர்த்தக மனப்பான்மை எம்மூரவர் களையும் விட்டு வைக்கவில்லை. மேற்கூறிய காரணங்களால் எமது ஊர் கிராமிய விவசாய சமுதாயம் ஒரு வர்த்தக சமு தாயமாக மாறவேண்டிய நிர்ப்பந்தம் எற்பட்டது.
எமதுரரின் ஆரம்ப வர்த்தக முயற்சி காலஞ்சென்ற உமர் லெப்பை ஹாஜியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்க லாம் என ஊகிக்க இடமுண்டு. இன்றும் அன்னாரின் புதல்வர்களில் ஒரு சிலரை 'கடே ஆலிம்', 'கடே ஹாஜி யார்', 'கடே லொகு முதலாளி" என அழைக்கப்படுவதை நாம் அறிவோம். அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது "கடை" என்ற வியாபார நிலையம், எமதுாரின் அயற் கிராம் மான அளவத்தைக்குப் பிரதான பாதையிலிகுந்து செல்லும் சந்தியில் அமைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. உள்ளூரில் ஆரம்பிக்கப்பட்ட வியாபார முயற்சி, 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எமதுரருக்கு அண்மையில் உள்ள அங்கும்புர, பன்சலதென்ன போன்ற இடங்களில் தேயிலைச் செய்கை யினதும், கெப்பிட்டிகல பிரதேசத்தின் ரப்பர் செய்கை அபிவிருத்தியுடனும், வெளியூர்களிலும் பரவலாயிற்று. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மேற் போன்ற பெருந் தோட்டங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கும் பொறுப்பினை எமதுரர் வர்த்தகப் பிரமுகர்கள் பொறுப்பேற்றிருந்தனர். பெருந்தோட்டங் களுக்கு அண்மையில் அமைந்த அளவத்துக் கொட நகரில் உணவுக் களஞ்சியங்களை அமைத்து, சொந்த மோட்டார் வாகனங்களில் உணவுப் பொருள் வினியோகத்தினை எம்மூர் வியாபாரிகள் மேற்கொண்டனர். அதனாலேயே அக் காலத் தில் அங்கு புரை நகரில் கல்ஹின்னை வியாபாரிகளுள் அதிக மானோர் தொழில் புரிந்தனர். மோட்டார் வாகனப்

Page 55
104
போக்குவரத்து மூலமும், தொழில் தொடர்புச் சாதனங்கள் மூலமும் . அங்கும் புரை நகரம் வெளியூர்களுடன் தொடர்பு கொள்ளாதிருந்த காலத்தில், கல்ஹின்னையின் வர்த்தகப் பிரமுகர்களது செல்வாக்கு அங்கு நிலவியது. எம்மூர் வியா பாரிகள் அனைவருமே அங்கும்புரையில் வர்த்தகம் செய்தனர்.
மேற்கூறிய சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட மாத்தளை, கண்டி போன்ற இடங்களில் வியாபாரம் செய்ய, அங்கும் புரையிலிருந்து எமதுார் வியாபாரிகளுட் பலர் வெளியேறினர். தொடர்ந்து குருணாகல், குளியாப்பிட்டிய, கொழும்பு, நுவரெலியா போன்ற பெருநகர்களுக்கு கல்ஹின்னை வர்த்தகர்களின் வர்த்தக எல்லை விரிவடைந்தது. பெரும் நகரங்களில் துணிமணி வியாபாரமே எமதுரர் வியாபாரிகளின் பிரதான வர்த்தகப் பொருளாகவும் மாறியுள்ளது.
ஏறக்குறைய 40 வருடங்களுக்குட்பட்ட கால கல் ஹின்னை வாழ் மக்களின் வருமானத்தில் அரசாங்க சம்பள மும் ஓர் பிரதான இடத்தை வகிக்கிறது. காலஞ்சென்ற ஹ"ஸைன் லெப்பை ஆாச்சியார் அவர்களே, முதன் முதலாக அரசாங்கச் சம்பளம் பெற்ற கிராமத் g560)6)aQupJrrTeuri. ஆசிரியர் தொழில் மூலம் முதன் முதலாக காலஞ் சென்ற ஜனாப் வை. ஏ. மஜீத் அவர்கள் அரசாங்கச் சம்பளத்தினைப் பெற்றார். அவர்கள் தொடர்ந்து ஆசிரியர் தொழிலை மேற் கொள்ளாது, 1950ம் ஆண்டில் கல்லோயா ஆற்றுப்பள்ளத் தாக்கு அபிவிருத்தித் திட்டத்தில் கடமையாற்றியபோதிலும் அவரை 'மஜீத் மாஸ்டர்' என அழைப்பது கவனிக்கற் பாலது. பல வருடங்களாக விலைக் கட்டுப்பாட்டு அதிகாரி யாகக் கடமையாற்றி ஓய்வு பெற்றிருக்கும் அல்ஹாஜ் எம். எச். எம் ஜலால்தீன் அவர்களும் அரசாங்கத்துறையிலிருந்து சம்பளம் பெற்ற எமதுார்ப் பிரமுகர்களுள் முன்னணியில் குறிப்பிடத்தக்கவராவர். இன்று கல்ஹின்னையில் ஆசிரியர் கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், எழுது வினைஞர் கள், பொறியியலா ளர்கள், கணக்காளர்கள் போன்றபல்வேறு துறைகளில் )5يقfi kg{ பெற்றவர்கள். அரசாங்க வருமானத்

105
தைப் பெற்றுத் தருகிறார்கள். இதில் ஆசிரியர்த் தொழிலில் மட்டுமே பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
அண்மைக் காலத்தில் பயிற்சி பெறாத தொழிலாளர் களுட் பெருந்தொகையானோரும், பயிற்சி பெற்றவர்களில் ஒரு சிலரும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வருவாய் பெறு கின்றனர். ஒரு சிலர், ஐரோப்பிய நாடுகளிலும் வியாபார முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்." V
கட்டுரையின் எஞ்சிய பகுதியில் அவர், "எமதுரவர் களின் எதிர்காலப் பொருளாதாரப் போக்கும், நோக்கும் பற்றி ஒரு சில குறிப்புகள்" கூறியுள்ளார். 'தொழில் நுட்பத் துறை தொடர்பான தொழில்களில் எமது எதிர்காலச் சந்ததியினர் பங்கெடுக்க ஆவன செய்ய வேண்டும். எமதுர்ப் பாடசாலையில் வர்த்தக, விஞ்ஞானத் துறைகளில் உயர் கல்வி பெறுவதற்குரிய வாய்ப்புக்களைத் திட்டமிட்ட அடிப் படையில் ஏற்படுத்த வேண்டும்' என்ற அவரின் ஆலோசனை கள் உடனே கவனத்தில் கொள்ள வேண்டியவைகள், அப்படிச் செய்தால், வர்த்தகத் துறையில், எம் கிராமம் பெற் றுள்ள சீரும் சிறப்பும் போன்று எதிர்காலத்தில் தொழில் நுட்பத் தொழில்கள் மூலமும் நல்ல செல்வாக்கினைப் பெற
லாம்.”*
எங்கள் ஊரின் பணக்காரர் சிலர், பெருந்தோட்டங்கள் வாங்கிப் பராமரிப்பதில் ஈடுபட்டிருந்தனர். இ தி ல் முன்னோடி, மர்ஹலிம் யூ, உமறு லெப்பை ஹாஜியார் அவர் கள், 1943ம் ஆண்டில் அவர் பன்சலதென்ன பெருந் தோட்டத்தின் ஒரு பகுதியான தொடங்கொல்ல எனும் தோட்டத்தை வாங்கினார். முப்பத்தியிரண்டு ஏக்கர் பரப் பான இத்தோட்டம், ஆங்கிலேயரிடமிருந்து வாங்கப் பட்டது. கண்டியன் ஹில்ஸ் எஸ்டேட் லிமிட்டட் எனும் கமபெனிக்குச் சொந்தமான காணியாய் இது இருந்தது. பின்னர், "எஸ். எம். எஸ்." குடும்பத்தின் மூன்றாமவரான

Page 56
106
எஸ். எம். ஸாலிஹ் லெப்பை, நொவ ஸம்ப்லா எனும் தேயிலைத் தோட்டத்தை வாங்கினார். அதன் பின், யூ.பி. உடுறாவன என்பவருடன் சேர்ந்து, மாறாவில பெருந் தோட்டம் அவரால் வாங்கப்பட்டது. இது ஒரு ரப்பர் தோட்டம். இதே சமயம், 'கடே' குடும்பத்தினர் கெப்பிடி கலை ரப்பர் தோட்டத்தை வாங்கினர். அளவத்துக் கொடையில் பிரதான அலுவல்கள் நடை பெற்ற சைஸ்டன் தோட்டத்தை சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்கள் 1944ம் ஆண்டில் வாங்கி, சிறு பிரிவு களாகப் பிரித்துப் பலருக்கும் விற்பனை செய்தார். பின்னர், மாத்தளைக்கு அடுத்துள்ள பிரதேசத்தில் அமைந்திருக்கும் ரொஸ் (எஸ்டேட்) பெருந்தோட்டத்தையும் அவர் வாங்கி, சைஸ்டன் எஸ்டேட்டைச் செய்தது போல், இதையும் பலருக்கு விற்றார்.
போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிப்பதிலும் எம தூரவர் முன்னோடிகளாயிருந்தனர் மூலபிதா வாப்புக் கண்டுவின் தம்பி இஸ்மாயில் கண்டுவின் மூத்த மகனான தம்பி லெப்பையின் மூத்த மகன் சுலைமான் லெப்பை. இவரின் மூத்த மகன் முஹம்மது லெப்பைதான் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அளவத்துக் கொட எனுமிடத் திலிருந்து முதலில் கண்டிக்கு பஸ் சேவையைத் தொடங்கி னார். பின்பு, அங்கும் புரையிலிருந்து அளவத்துகொட ஊடாக கண்டிக்கு பஸ் சேவை ஆரம்பித்தவரும் இவர்தான். அதே சமயம், அங்கும்புரையிலிருந்த பெருந்தோட்டம் ஆங் கிலே ய ரு க் கு ச் சொந்தமானதாயிருந்ததால், அத் தோட்டத்தின் தேவைகளை வழங்குவதிலும் ஈடுபட்டிருந் தார். 1932ம் ஆண்டு மத்தியில் அவர் காலமான பின் அவரின் மக்கள், இச்சேவைகளைத் தொடர்ந்து நடாத்தி, விருத்தி செய்தனர். இதில் பிரதானமாக ஈடுபட்டவர்கள், அவரின் மூத்த மகன் எஸ். எம். சரீஃப் லெப்பை ("மனேஜர் ஹாஜியார்), மூன்றாவது மகன் எஸ். எம். ஸாலிஹ் லெப்பை ஆகிய இருவருமாகும். தனியார் நடாத்தி வந்த

o
பஸ் சேவைகளை இணைத்து, 1940களின் ஆரம்பத்தில் கம்பெனிகளாக அமைக்கப் பட்ட பொழுது இவர்களின் பஸ்கள் சில்வர்லைன் பஸ் கம்பெனியால் பொறுப் பேற்கப்பட்டன. அக்கம்பெனிதான் இவர் கள் நடாத்தி வந்த கண்டி-அங்கும்புர பஸ் சேவையை நடத்தியது. எஸ். எம். ஸாலிஹ் லெப்பை அவர்கள், சில்வர்
லைன் பஸ் கம்பெனியின் முதலாவது டைரக்டர்கள் சபையில் நியமனம் பெற்றார்கள். 1944 ம் ஆண்டில் காலமாகும் வரை டைரக்டராக இருந்த அவர், பெருந்தோட்டப் பொருள் வழங்கலையும் தந்தை செய்தது போல் தொடர்ந்து நடாத்தி, தோட்டத்துரைமாரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அவர் காலமான பின், அவரின் தம்பி எஸ். எம். ஸெய்னுதீன் (கல்ஹின்னையின் முதல் கலாநிதியான அமீர் ஸெய்னு தீனின் தந்தை) டைரக்டரானார். பஸ் சேவை அரசாங்க மயமாக்கப்பட்டும் வரை அவர் டைரக்டராக இருந்தார்.
கம்பெனியால் பஸ் சேவை நடாத்தப்பட்ட காலத்தில், அங்கும்புர-கல்ஹின்ன-கண்டி பஸ் சேவையும் ஆரம்பமானது. அதன்பின் கல்ஹின்னை-மாத்தளை கல்ஹின்னை-குருநாகல் சேவைகள் தொடங்கின. இச் சேவைகள் தொடங்குமுன், அங்கும்புரைக்கும் பூஜாப்பிட்டிக்குமிடையில் 1950ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் திகதியிலிருந்து, கல்ஹின்னை முஸ்லிம் வாலிபர் சங்கம் (வை. எம். எம். ஏ.) போக்கு வரத்துச் சேவை ஒன்றை நடாத்தியது. சிறிய வாகனங்களே இச் சேவையில் பயன்படுத்தப் பட்டன. கம்பெனி பஸ் சேவை ஆரம்பமானதாலும், நஷ்டம் ஏற்பட்டதாலும் வை. எம். எம். ஏ. யின் போக்குவரத்துச் சேவை கைவிடப் யட்டது. ஊரின் நடுவே செல்லும் பள்ளி ரோட், கல் ஹின்னையின் பள்ளிச் சந்தியிலிருந்து, படகொள்ளா தெனி யூடாக பீரிஹெல வரை நீடிக்கிறது. இந்தப் பாதையில், 1970ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி பஸ் சேவை ஆரம்ப மாகியது. அதற்குச் சற்றுப் பின்னர், 1970களின் ஆரம்பத் தில், கல்ஹின்னைக்கு மின்சார வசதி கிடைத்தது. 1990ம்

Page 57
1oè
ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் திகதியிலிருந்து குழாய்நீர் வசதியும் கிடைத்திருக்கிறது.
இரண்டாவது உலக மகாயுத்தத்தின்போது, கல் ஹின்னை மக்களுக்கு மட்டுமன்றி. அண்மையிலிருந்த சிங் களக் கிராமங்களான உடகம, றாமாகொட்டுவ, அளவத்த மக்களுக்கும் பெரிதும் உதவிய கூட்டுறவுக் கடை,கல்ஹின்னை யின் மேற்கு விளிம்பில் றாமாக் கொட்டுவ என்னுமிடத்தில் அமைந்திருந்தது. 1986ம் ஆண்டில் கூட்டுறவுச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், யுத்த காலத்தில்தான் அதன் அருமை பெருமை மக்களுக்கு விளங்கியது. "லேகம் மஹத் தயா’ என அழைக்கப்பட்ட அமரர் திரு கே. பி. குலதுங்க நெடுங்காலம் சங்கத்தின் செயலாளராயிருந்தார். கடை முகாமையாளர் அல்ஹாஜ் எஸ். எம். சரீஃப் லெப்பை கடை முன்னேற்றத்திற்குப் பல ஆண்டுகள், கடுமையாக உழைத் தார். ஊழியர்களாயிருந்தவர்களில் மறக்க முடியாத இரு வர் **கணக்கப் பிள்ளை' என்று அனைவரும் பாசத்துடன் அழைத்த ஜனாப் சாஹ"ல் ஹமீத் (கொழும்பில் டெவலோ பிரின்ட் அச்சகம் நடாத்தும் ஜபுர்தீன். நிலாப்தீன் ஆகியோ ரின் தந்தை) "கட்டாப்பு ஸெய்யத்" என அழைக்கப்பட்ட வர் ஆகியோராகும். யுத்தம் முடிந்த சில வருடங்களில், கூட்டுறவுக் கடை மூடப்பட்டது.
பொருளாதாரத் துறையில் கல்ஹின்னை மக்களின் முயற்சிகள் சில பற்றிக் கிடைத்த தகவல்கள், இங்கு எழுதப் பட்டுள்ளன. வேறு குறிப்பிடத்தக்க முயற்சிகள் எதிலும், எமதுரவர் ஈடுபடவில்லை என்றே கூறலாம்.

கல்ஹின்னையின் 'esh 576)'
ஒரு ஊரின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதற்கு, அந்த ஊர் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். அப்படி ஒத்துழைப்புப் பெறுவதற்கு, எல்லோரும் ஒன்று கூடிச் சங்கம் அமைத்தல் இன்றியமையாததாகும். கல்ஹின்னை, ஒரு காலத்தில் அங்கும்புர கிராமத் தலைவரின் பிரிவில் இருந்ததாலும், கல்ஹின்னைக்கு மிகச் சமீபமான சிறுபட்டின மாக அங்கும்புர இருந்ததாலும், முதன் முதலில் ஆரம்பிக்கப் பட்ட சங்கம் "அங்கும்புர முஸ்லிம் கல்விக் குழு’ என அழைக் கப்பட்டது. 1920களின் ஆரம்பத்தில் இக் குழு அமைக்கப் பட்டிருந்தது. பின்னர், 1925ம் ஆண்டில், அக் குழுவின் பெயர் "அங்கும்புர இளைஞர் முஸ்லிம் சங்கம் (அங்கும்புரயங் முஸ்லிம் லீக்) என மாற்றப்பட்டது. கல்விக் குழு, முஸ்லிம் சங்கம் ஆகிய இரண்டிற்கும் ஆரம்பகர்த்தாவாயிருந்தவர், கல்ஹின்னையிலிருந்து ஆங்கிலம் படிக்க 1921ம் ஆண்டில் முதன் முதலில் மாத்தளைக்குச் சென்று பின்னர் 1925-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் திகதி கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியில் சேர்ந்த ஜனாப் ஏ.ஓ.எம். ஹ சஸைன் அவர்கள் தான். இச் சங்கத்தின் பணிகள் ஒயும் வரை அவரே, சங்கக் காரியதரிசியாக இருந்தார், ஒரு சங்கத்தின் வெற்றி, அதன் காரியதரிசியில்தான் தங்கியிருக்கிறது. எவர் ஊக்கத்துடன் சங்கம் அமைக்க முற்படுகிறாரோ அவரே தொடர்ந்து, சங்கத்தின் குறிக்கோள் அடையப்பெறும் வரை, காரிய தரிசியாயிருத்தல் வியப்புக்குரியதொன்றல்ல. ஊக்கமுள்ள வர் கைவிட்டால், சங்கம் தளர்ந்து விடும்.
அங்கும்புர முஸ்லிம் இளைஞர் சங்கம், 1930க்கு முன் கல்ஹின்னை முஸ்விம் இளைஞர் சங்கம் ஆகியது. அதற்கான ஆதாரம் :

Page 58
Ayy eta Y 4ADY, 8
wY7
0
() THE MUSLIM LEAGUE, GALHINNA.
A. O. M. USSAN ANKUMBURA
pęgęyg. A NigtARW
MATAL........................” “... o יי""י::
கல்ஹின்னையில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர் சங்கத்தின் கடிதமெழுதும் தாள் தலைப்பு
கல்ஹின்னை முஸ்லிம் சங்கம் : குர்ஆன் பள்ளிக்கூடம் எமதுரரில் ஆரம்பமாகி வளர்ச்சியடைந்து வந்து, பின்னர் இச் சங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டது பற்றிக் குறிப்பிட்ட மர்ஹகும் அல்ஹாஜ் எம். எச். எம். சரீஃப் அவர்கள் கூறுவதாவது! "இப் பள்ளிக் கூடம் இடையிடையே மாற் றங்கள் ஏற்பட்டபோதிலும், 1930ம் ஆண்டு வரைக்கும் நடந்துகொண்டே இருந்தது, அதன் பிறகு கனம் புறக்டரி ஹ"சைன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் சங்கம் இதன் நிர்வாகத்தைப் பொறுப்பேற்றது. இச் சங்கத்தின் நோக்கம் ஊரில் சீர்திருத்த வேலைகளைச் செய்வதே. கல்வி விசயத்திலும் போக்குவரத்து விசயத்திலும் இச் சங்கம் இவ் வூருக்கு அளப்பரிய சேவை செய்திருக்கிறது. இவ்வூரால் கண்டிக்கு வாகனப் போக்குவரத்துச் செய்யும் வீதியும் இங் குள்ள தமிழ்பாடசாலையும் இச் சங்கத்தின் முயற்சியின் பலனேயாகும்.
"இச் சங்கம் குர்ஆன் பள்ளிக்கூடத்தைப் பொறுப் பேற்றதும், குர்ஆன், ஈமான், இஸ்லாம் பாடங்களை அதில் போதிப்பதோடு இங்கு தமிழ் பள்ளிக்கூடம் இல்லாததனால் தமிழும் கணக்கும் படித்துக் கொடுப்பதற்கு ஒழுங்கு செய் தது. தனிக் கட்டிடமும் கட்டி அது அரசாங்கத்தின் உதவி யையும் பெற்று, மேல் பார்வை பள்ளிக்கூடமாக அது இயங் கிற்று. சில காலம் கழித்து, அரசாங்கம் அதைப் பொறுப் பேற்றது.

"இச் சங்கம் தளர்ந்து கொண்டுவரும் தருவாயில் Y.M.M.A. சங்கம் தோன்றிற்று. குர்ஆன் மதரஸாவை இச் சங்கம் நல்ல சீர்திருத்த முறையில் புதிய முறைப்படி பாடத்திட்டம் அமைத்து நடத்திற்று. தமிழ் பள்ளிக் கூடத்தை கனிஷ்ட பள்ளிக்கூடமாக்க முயற்சித்து வெற்றி யும் கண்டது. ஊரில் அநேக சீர்திருத்த வேலைகளைச் செய்தோடு ஒரு வாகனப் போக்குவரத்துச் சேவையையும் செய்தது. எதிர்ப்பின் காரணத்தில் அதில் தோல்வியுற்றது.
"ஊரில் ஒரு குர்ஆன் பள்ளிக்கூடம் மட்டும் இருந்ததை, இரு பள்ளிக்கூடமாக்கி ஒன்றைக் கூட்டிற்று. என்றுமில்லாத விதத்தில் இரு பள்ளிக்கூடங்களையும் நல்ல சீர்திருத்த முறையில் ஒரு நிர்வாகத்தின் கீழ் நடத்தி வந்தது."
ஆரம்பத்திலேயே கல்ஹின்னை முஸ்லிம் சங்கம் அதன் குறிக்கோள் இன்னதுதான் என வகுத்துக் கொண்டது. அதாவது, ஊர் மக்கள் நலன் பெறக் கூடிய விதத்தில், நல்ல, நல்ல காரியங்களை எல்லோரும் கூடிச் செய்ய வேண்டும் எனும் கொள்கையைத் தாரக மந்திரமாக வைத்து, சங்கம் இயங்கியது. சங்கத்தை இயக்கியவர் ஒருவர்தான். எனினும், ஏனைய அனைவரும், தடையாயிராமல், பூரண ஒத்துழைப்பு வழங்கியதால், சங்கம் அதன் குறிக்கோளை அடைந்தது.
சங்கம் நிறுவியவர், புறக்டர் ஏ. ஓ. எம். ஹ"ஸைன் அவர்கள். அதன் செயலாளராகவே ஆரம்ப முதல் கடைசி வரை, அவர் இருந்து வந்தார். (அவர் பற்றியும், சங்கத்தின் உத்தியோகத்தர் பற்றியும், விவரங்கள் "மலையகப் பெரு மகன்' என்ற நூலில் தரப்பட்டுள்ளது.) கல்ஹின்னைக்கு முதலில் ஒரு பாடசாலை வேண்டும். அதைத் தொடர்ந்து, வாகனப் போக்குவரத்துக்கான நல்ல பாதை வேண்டும். தபால் வினியோகம் செய்வதுடன், தொலைபேசி வசதியும் சேர்ந்த தபாற் கந்தோர் ஒன்று அமைக்கப்படல் வேண்டும். முழுப் பிரதேசமும் பயனடையக் கூடியதான ஒரு வைத்திய சாலை அரசாங்கத்தால் நிறுவப்படுதல் வேண்டும் என்ற நாலு இலட்சியங்களையும் அடைவதற்காகச் சங்கம் பாடுபட்டு

Page 59
l
ஒவ்வொன்றையும் எய்தியது. கல்ஹின்னை முஸ்லிம் சங்கத் தின்பணி, 1940களின் ஆரம்பத்தில், முற்றுப் பெற்றது. அதன் பின், அச்சங்கம் இயங்கவில்லை.
கல்ஹின்னை முஸ்லிம் வாலிபர் சங்கம் : 1944ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் திகதி வெள்ளிக்கிழமை, ஜனாப் ஏ. ஓ. எம். ஸாலிஹ் ஹாஜியார் தலைமையில், ஆரம்பக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் போஷகர்களாக ஜனாப் ஏ. எம்.ஏ. அஸிஸ், ஜனாப் ஏ. ஓ. எம். ஹ"ஸைன், ஏ. ஒ9 எம். ஸாலிஹ் ஹாஜியார் ஜனாப் எஸ் எம். சரீஃப் லெப்பை, ஜனாப் ஈ. எல். யூனுஸ் லெப்பை ஆகியோர் தேர்ந்து எடுக்கப் பட்டனர். தலைவராக மெளலவி எம். எச். எம். சரீஃப் அவர்களும், உப தலைவராக எஸ் எம். குதுபுத்தீன் ஆலிம் அவர்களும் செயலாளராக ஜனாப் எம். எச். எம். ஜலால்தீன் தனாதிகாரியாக ஜனப் ஏ. ஓ. எம். சரீஃப் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆரம்பத்திலிருந்தே ஊர் முன் னேற்றத்திற்காக வாலிபர் சங்கம் உழைத்து வந்துள்ளது. சங்கத்தின் முயற்சிகள் பற்றி, கல்ஹின்னை மாணவர் சங்கம் அதன் ஐந்தாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை முன்னிட்டுப் பிரசுரித்த 'யூனியன்" என்ற மலரின் ஐம்ப தாம் பக்கத்தில் தகவல்கள் உள்ளன. பின்னர், 1985ம் ஆண்டில் கல்ஹின்னை அல்மனார் மகாவித்தியாலயத்தின் ஐம்பதாண்டு நிறைவு தொடர்பாக வெளியிடப்பட்ட பொன் விழா சிறப்பு மலர் 105ம் பக்கத்தில் பாடசாலைகளின் அபி விருத்திக்கு மேற்கொண்ட முயற்சிகள் பற்றிக் கூறப் பட்டுள்ளது.
கல்ஹின்னை முஸ்லிம் சங்கம் பரிபாலனம் செய்த குர்ஆன் மத்ரஸாவை மேலும் சிறந்த முறையில் நிர்வகித்த துடன், பிள்ளைகளின் தொகை அதிகரித்ததால் மேலதிக மாகவும் ஒரு குர்ஆன் மத்ரஸா வாலிடர் சங்கத்தினால் தொடங்கப்பட்டது. பாடசாலையின் படிப்படியான முன் னேற்றத்திற்கும் முஸ்லிம் வாலிபர் சங்கம் கடுமையாக உழைத்தது. இது பற்றி, அல்மனார் பொன் விழாவின்போது அதிபர் சமர்ப்பித்த அறிக்கையில் பின்வருமாறு குறிப்

盟】鼻
பிடப்பட்டுள்ளது. பாடசாலையின் முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் முகாமையாளர் ஜனாப் ஹ"ஸைன் அவர்களோடு, பல பேருபகாரிகளும் வை. எம். எம். ஏ. இயக்கமும் ஒன்றிணைந்து ஒப்பற்ற உதவிகளை வழங்கின" மேலும், மத்ரஸ் துல் பத்தாஹ் என்ற அரபிக்கலாசாலை நிறுவுவதில், வாலிபர் சங்கம் ஆரம்ப நடவடிக்கைகளை மேற் கொண்டது. கலாசாலையின் நிர்வாகம் தர்மகர்த் தாக்கள் சபையிடம் பொறுப்படைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதிகள் செய்வதிலும் வை.எம் எம்.ஏ, முன்னின்று உழைத்துள்ளது. அங்கும்புர-பூஜாப்பிட்டிய, பாதையின் பல திருத்தங்களுக்குப் பொறுப்பாயிருந்ததுடன், கல்ஹின்னை மத்தியில் பள்ளி ரோட் அமைவதற்கு, முன்னர் முஸ்லிம் சங்கம் 1935ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் திகதி பெட்டிசம் சமர்ப்பித்துத் தொடங்கிய ப னி  ைய த் தொடர்ந்து, 1945ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் திகதி உள் ளு ரா ட்சி அமைச்சருக்குக் . கடிதம் எழுதி மீண்டும் வேண்டு O கோளைப் புதுப்பித்துப் பல கடிதங் களின் பின், வெற்றி கண்டது. இப் பாதை திறக்கப்பட்டு இப்பொழுது, பஸ் சே  ைவ யு ம் ஆரம்பமாகி யுள்ளது. அங்கும்புர த ப ா ற் கந்தோரில் தொலைபேசி வசதி வழங் கப் பட வேண்டுமென்று கோரி, வை.எம்.எம்.ஏ. அதிலும் வெற்றி கண்டது. ஏழைச் சிறுவர்களுக்கு பாடப் புத்தகங்கள், கற்பலகை, அப்பியாசக் கொப்பிகள் டோன்றவையும் சங்கத்தால் ஒரு காலகட்டத் தில் வாங்கி இலவசமாக வழங்கப்பட்டது. அரசாங்கத்தின் கிராமவிஸ்தரிப்புத் திட்டங்களில், ஏழை மக்களுக்குக் காணி பெற்றுக் கொடுப்பதற்கும் சங்கம் உதவியுள்ளது.
கல்ஹின்னை மாணவர் சங்கம் : "கல் ஹின்னையில், ஆரம்பக் கூட்டம் கனிஷ்ட பாடசாலை மண்டபத்தில் 1946ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் திகதி நடைபெற்றது. கல்ஹின்னை அரசினர் தமிழ்ப் பாட சா லை யின்,

Page 60
1.
அப்போதைய தலைமை ஆசிரியர் திரு. ஏ. எஸ். நல்லையா ஆரம்பக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். அன்றைய பிரதான பேச்சாளர், ஜனாப் எஸ். எம். ஹனிபா, சங்கம் அமைப்பதன் நோக்கங்களை விபரமாக எடுத்துச் சொன் னார். "இப்பகுதி மாணவர்களுக்கும்; பொது மக்களுக்கும் இத்தகைய ஒரு இயக்கத்தினால் ஏற்படும் நன்மைகள்" இன்னின்னவென்று அவர் விளக்கமாக எடுத்துக் கூறிய பின், சங்கத்தின் அமைப்புப் பிரமாணங்களைத் தயாரிப்பதற்கு ஒரு உபகுழு நியமிக்கப்பட்டது. ஜனாப்கள் எம். எச். எம். ஜெலால்தீன், எச். எல். பரீத், எஸ். எம். ஹனிபா ஆகி யோர் குழுவில் அங்கம் வகித்தனர். அவர்கள் சமர்ப்பித்த பிரமாண நகல், அடுத்த கூட்டத்தில் சில திருத்தங்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்பின், சங்கம் சிறப்பாக இயங்கி ஆரம்பித்தது.
சங்கத்தின் முதல் முக்கிய முயற்சியாக ஒரு நூல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்கள் மட்டுமல்ல. பொது மக்களும் பயன்படுத்தக் கூடியதாக பள்ளிவாசலுக்கு அருகாமையில் 1947ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. அல்ஹாஜ் ஏ. ஓ. அப்துல் ஹமீத் ஆலிம் அவர்கள் நூல் நிலையத்தைத் திறந்து வைத்தார். 1947ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் திகதி நடைபெற்ற கூட்ட மொன்றில் தீர்மானித்தபடி, நூல் நிலையத்தில் சுவர்ப் பத்திரிகையொன்று ஆரம்பிக்கப்பட்டது. 'முன்னேற்றம்' எனப் பெயரிடப்பட்ட அச்சுவர்ப் பத்திரிகை, சங்க அங்கத் தவர்களின் எழுத்தாற்றலை வளர்ப்பதற்கு உதவியது.
மாணவர் சங்கத்தின் நடவடிக்கைகளினால் பயனடைந்த பலர் சிறந்த பேச்சாளர்களாகவும், எழுத்தாளர், கவிஞர் களாகவும் இன்று பரிணமிக்கின்றனர்.
மாணவர் சங்கத்தின் விடாமுயற்சியால் கல்ஹின்னை யில் ஒரு உபதபாலலுவலகம் நிறுவப்பட்டது. 1952ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதி கல்ஹின்னனயில் ஒரு "சி" தர உப தபால்கந்தோர் ஆரம்பிக்கப்பட்டது. புறக்டர் ஏ. ஓ. எம்.

ஹ"ஸைன் இதனை ஆரம்பித்து வைத்தார். ஆறாண்டு களின் பின், 1.7-1958ல் அது "பி" தரத்திற்கு உயர்ந்தது. பின்னர் 1-10-1976ல் "ஏ" தர உபதபாற்கந்தோராக தர முயர்த்தப்பட்டு, தொலைபேசி வசதியும் வழங்கப்பட்டது. மாணவர் சங்கத்தின் ஆரம்பகால அங்கத்தவராயிருந்த ஜனாப் எம். சி. எம். சஹாப்தீன், உபதபாலதிகாரியாக, ஆரம்ப நாளிலிருந்து இன்று வரை (சுமார் நாற்பதாண்டு காலம்) இருந்து வருகிறார். அவர் கல்ஹின்னையின் "பெரிய வர்" என மரியாதையுடன் அழைக்கப்பட்ட மர்ஹஜூம் அல்ஹாஜ் ஏ. ஒ. எம். காஸிம் லெப்பை அவர்களின் மூத்த புதல்வராவர். 19 29ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதி கல்ஹின்னையில் பிறந்த அவர், முதலில் கல்ஹின்னை கமாலியா முஸ்லிம் பாடசாலையில் கல்வி பயின் றார். மூன்றாம் வகுப்புவரை ஊரில் படித்தபின்னர் 1937ம் ஆண்டில் கண்டி அர்ச். அந்தோனிஸ் கல்லூரி,மாத்தளை அர்ச் தோமஸ் கல்லூரி, கம்பளை ஸாஹிறாக் கல்லூரி ஆகியவற்றிலும் படித்து, 1947ம் ஆண்டு மாத்தளை ஸா ஹி ற ரா க் கல்லூரியிலிருந்து எஸ். எஸ். சி. பரீட்சையில் சித்தியெய்தினார். 1948ம் ஆண் டிலிருந்து 1952ம் ஆண்டுவரை கொழும்பில் உத்தியோகம் பார்த்தபின், 1952ம் ஆண்டின் மத்தியில் உபதபாலதிகாரி tunt Goyntti.
முன்னாள் கிராமத் தலைவராயிருந்த மர்ஹஜூம் எஸ். எம். ஹ"ஸைன் லெப்பை அவர்களின் நாலாவது மகள் செளதுானை திருமணம் செய்துள்ள இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண்பிள்ளையுமுள்ளனர். மூத்த மகன் இம்தியாஸ் பல்கலைக்கழகத்தில் வர்த்தகத் துறைப்பட்டம் பெற்றவர். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இவர், ஒரு எழுத் தாளர். இளைய மகன் ரிலா மக்காவில் தொழில் பார்க்கப் போயிருந்து, திருமணமாகி ஒரு பிள்ளையும் கிடைத்தபின் 1990ம் ஆண்டு டிசம்பர் மாத ஆரம்பத்தில் விபத்துக் குள்ளாகி அங்கு அகால மரணமடைந்தார்.

Page 61
சங்கங்களின் பணியால் எங்கள் ஊர் பெரும்பயன் அடைந்துள்ளது. சுமார் முப்பதாண்டு காலம் 1925லிருந்து 1955 வரை சங்கங்கள் எடுத்த முயற்சியால் கல்ஹின்னை முன்னேற்றம் கண்டது. ஆதலால் அக்காலப் பிரிவை "கல் ஹின்னையின் சங்க காலம்' எனக் குறிப்பிடலாம். பிர தான பணியாற்றிய இம்மூன்று சங்கங்கள் தவிர, மாணவர் சங்கத்துடன் இணைந்த சனசமூக நிலையம் சுமார் ஐந் தாண்டு காலம் நூல்நிலைய அபிவிருத்திக்குச் சற்று தொண் டாற்றியது. மேலும், கல்ஹின்னை கிராம அபிவிருத்திச் சங்கம் எனும் பெயரில் ஒரு சங்கம் சிறிது காலம் சில சேவை களில் ஈடுபட்டது. மர்ஹகும் வை. ஏ. மஜீத் இதன் காரிய தரிசியாகக் கடமையாற்றினார்.

୪୩ g) ୩60] 8 fit
கல்ஹின்னையின் முதல் புறக்டர் என்பதைவிட, பெரும்பகுதியான ஹாரிஸ்பத்துவையில் மாத்திரமல்ல, மத்திய மாகாணத்திலேயே இந் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சித்தியெய்திய வழக்கறிஞர்கள் மிகச் சிலரில் ஒருவர்தான் புறக்டர் ஏ. ஓ. எம். ஹ"ஸைன். கல்ஹின்னையிலிருந்து முதன் முதலில் ஆங்கிலம் கற்கச் சென்றவர் அவர்தான் 1907ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி பிறந்த அவர், முதலில் அங்கும்புர சிங்களப் பாடசாலையில், சிங்களம் படித்தார். 1916ல் சிங்களம் படிக்கத் தொடங்கியவர், 1921ம் ஆண்டில் முதன் முதலில் மாத்தளை அர்ச், தோமஸ் கல்லூரியில் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தார். 1925ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் திகதி கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி யில் சேர்ந்து தொடர்ந்தும் படித்து, இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடாத்திய சிரேஷ்ட தராதரப் பத்திரப் (எஸ். எஸ். சி.) பரீட்சையில் சித்தியெய்தினார். 1929ம் ஆண்டு ஆரம்பத்தில் இலங்கைச் சட்டக் கல்லூரியில் சேர்ந்து, புறக்டராகப் படித்து 1932ம் ஆண்டில் சித்தியெய் தினார். 1933ம் ஆண்டு மார்ச் மாதம் கண்டியில் தன் தொழிலை நடாத்த ஆரம்பித்தார்.
அதன் பின்னர் அவர் ஹாரிஸ்பத்துப் பகுதி மக்களுக் காகச் செய்த அரும்பெரும் பணிகள் பற்றி 1989ம் ஆண்டில் தமிழில் பிரசுரமான 'மலையகப் பெருமகன்' எனும் நூல் விரிவாகக் கூறுகிறது. இந் நூலின் சிங்களப் பதிப்பு 1990ம் ஆண்டில் 'உதார புத்ரயா" எனும் பெயரில் வெளிவந்துள் ளது. முதன் முதலில் ஆங்கிலத்தில் "த கிரேட் ஸன்" எனும் பெயரில் எழுதப்பட்ட இந் நூல், 1981ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. ஆங்கிலத்தில் இரண்டாம் பதிப் பொன்று 1989ம் ஆண்டு ஜூன் மாதம் பிரசுரமாகியது.

Page 62
சேயில் ரிே நற் பிரிவில் தேறிய Graft. T விறலீம்தீன் மிர்ஹனும் எள் ے والا آتاrتو انتق நிறு சஜியார் . #"リp岳み அம்பதிகளின் சிேக்த புது: வர். கல்தறி ன்னர (ரஸ்ஸீர் "டசாலையில் இரண் டு விதிடங்கள் 4-5, Fairagarri
99th ஆண்டு மாதத GF. T நிறிற T கல்லூரியில் சேர்த்து எஸ்.எஸ்.இ விரை படித்தார். பின்னர் கொழும் பிலுள்ள அகுயினாஸ்
ழேகத்தின் சட்டத்துறை பட்டதாரியாது 1Š ዕ Wuñ ஆண்டில் சித்தியெய் தியபின் இலங்கைச் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து, *:53 til i marrr. இவர் சித்தியெய்திய ஆண்டிய திேல் பிரிவில் தேறியவர்களில், இவர் முத விடம் "D』rr. சிேதில் பிரிவி அட்வகேட் பரீட்சையில் தேறிய முஸ்லிம் இவரே. இப்பொழுது, மாத்தளையில் *ஜீவலகம் சிவத்து தொழில் செய்கிற глії.
(P56 Tš, தீேன் முதலில் மேலைத்தேச வைத்திய சிேறு டாக்டர சித்தியெய்தியவர் னோப் எம் தி எம். ữam Lff. I gở ở ஆண்டு vyš3 Tuř பிாதம் 27 திகதி சிேநிறம்மது கான்றி இராஜியார் . ஜெமீலா டேம்பர தீம்பதி
 
 
 
 
 
 
 
 
 
 

மாத்தளை ஸாஹிறாக் கல்லூரியில் சேர்ந்து எஸ்.எஸ். சி. பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், கண்டி அர்ச்அந்தோனிஸ் கல்லூரி, கொழும்பு ஸ் ஹிறாக் கல்லு ரி ஆகிய வற்றில் சேர்ந்தார். 1957ம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கைப் பல்கலைக் கழகத் தி ன் ஒ: மருத்து வ க் கல்லூரியில் * சேர்ந்து, 1988ம் ஆண்டு பார்ச் மாதம் எம். பி. பி. எஸ். பரீட்சையில் சித்தி பெற்று டாக்டரானார். காவி பெரியா ஸ்பத்திரியில் முதல் நியமனம் பெற்று தொழில் செய்த இவர், பின்பு கல்கமுவ மாவட்ட வைத்திய அதிகாரி (டி.எம். ஓ.) யானார். அதன்பின் கண்டிப் பெரி பாஸ்பத்திரி ஜி யிலும், புஸ் ஸில் லா வ டி.எம்.ஓ. வாகவும் கடமை புரிந்து 1987ம் ஆண்டில் இங்கிலாந்துக்குச் செ ன் றார்.
வைத்தியத்துறையில் உயர்கல்வியைத் தொடர்ந்து எம். ஆர். சி. ஒ. ஜி. எனும் பட்டம் பெறுவதற்காகப் படிக்கும் பொழுது, இங்கிலாந்தின் பல வைத்திய சாலை வில் கடமையாற்றினார். 1971ம் ஆண்டில் உயர்பட்டம் பெற்றார். பின்னர் ஸம்பியா, லிபியா ஆகிய நாடுகளிலும் கடமை புரிந்து விட்டு தாய்நாடு திரும்பி, கண்டி பெரியாஸ் பத்திரியில் சில ஆண்டுகள் வேலை செய்த பின், 1990ம் ஆண்டில் ஓய்வு பெற்று, கண்டியில் வாழ்ந்து வருகிறார்.
இவரையடுத்து, எஸ் எம். அஷ்ரப், ஜமால்தீன் முபாரக், ஏ. எம். ஜெமீல், எஸ். எம். ஜவ்பர் ஆகியோரும் வேறு சிலரும் மேலைத் தேச முறை டாக்டர்களாகச் சித்தி யடைந்துள்ளனர்.

Page 63
置盟曹
கீழைத்தேச மு  ைறி டாக்டராக முதன் முதலில் சித்தியெய்தியவர் ஜனாப் ஒ. எம். ஜூனைதீன், உக்குவளை பில் மருத்தகம் நடாத்தும் இவர், 19 ம்ே ஆண்டில் டாக்டராகப் பயிற்சி பெற்று வெளியேறினார். "பெ ரிய பெரிசாரி" என அழைக்கப் பட்ட பிரபல சர்வாங்க வைத்தியர் இ ஸ் மா யில் லெப்பையின் ம க ன ன மர் இறுதிம் ஈ. எம். лъ - tглї லெப்பை ஹா ஜி ய " ச், ! பர்ஹதிமா ஹவ்வா உம்மா ஆகியோரின் மூத்த புதல்வ ரான டாக்டர் ஜ"னைதீன், கல்ஹின்னை முஸ்லிம் பாட சாலையில் கல்வியை ஆரம்பித்தார். பின்பு, மாத்தளை கிரைஸ்ட் சேர்ச் கல்லூரி, அர்ச். தோமஸ் கல்லூரி ஆகிய வற்றில் கல்வி கற்று 1948ம் ஆண்டு எஸ். எஸ். சி. சித்தி பெற்றார். விளையாட்டுத் துறையிலும் திறமைசாலியாய் விளங்கிய இவர், ஹொக்கி விளையாட்டுக் குழுவில் அங்கம் வகித்தார். இல்லத் தலைவராகவும் இருந்தார். மாத்தளை ஸாஹிறாக் கல்லூரியில் உதவி ஆசிரியராகச் சிறிது காலம் இருந்த பின், 1950ம் ஆண்டு, கொழும்பிலுள்ள சுதேச வைத்தியக் கல்லூரியில் சேர்ந்தார். 1955ம் ஆண்டில் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்தார். கல்ஹின்னை மாணவர் சங்க உபதலைவராகவும் இருந்துள்ளார். 1953ம் ஆண்டு மர்ஹானும் எஸ். எம். சரீஃப் லெப்பை (மனேஜர் ஹாஜியார்) மூத்த புதல்வி ரம்ளத் உம்மாவைத் திருமணம் செய்தார்.
உக்குவளை மானம் பொட ஜ"ம்மாப் பள்ளியின் தர்ம கர்த்தாவாகப் பல வருடங்கள் இருந்த இவர், உக்குவளைத் தைக்காவின் தனாதிகாரியாகவும் பல வருடங்கள் சிறந்த முறையில் கடமையாற்றினார். மானம்பொட ஜும்ஆப் பள்ளி தர்மகர்த்தா சபையில் அங்கம் வகிக்கும் இவர், மாத்தளையில் வாழ்கிறார்.
 

அவரை படுத்து, 1957ம் ஆண்டில் சித்தியெய்தி, மாத்தளைக்கு அருகி லுள்ள கூம்பியாங் கொடை என்னு மிடத்தில் வைத்திய நிலையம் நடாத்து கின்ற ஆல்ஹாஜ் டாக்டர் எம்.எஸ்.எம். ஜுனைதீன் கல்ஹின்னைப்பள்ளிவாசல் மத்திசமாக நாற்பதாண்டுகாலம் சேவை புரிந்த 'காதியார்' என்னும் ஏ.ஓ.எம். S S S LSL S S S L SSS L SSS S ஜீ சரிஃப் ஹாஜியார் அவர்களின் மூத்த புதல்வர். இவர் 1924ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி கல் ஹின்னையில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கமாலியா முஸ்லிம் பாடசாலையில் பயின்றபின் கண்டி அர்ச். அந் தோனிஸ் கல்லூரி, கொழும்பு ஸாஹிராக் கல்லூரி, கம்பளை ஸாஹிறாக் கல்லூரி ஆகியவற்றில் படித்து, சுதேச வைத்தி யக் கல்லூரியில் சேர்ந்து டாக்டராக வெளியேறினார்.
கல்ஹின்னை மாணவர் சங்கத்தின் ஆரம்பகாலத்தனாதி காரியாயிருந்து, சங்கத்தில் இரண்டறக் கலந்து அரும்பணி புரிந்த அவர் கம்பளை ஸாஹிறாக் வில்லூரியில், கல்லூரி மாணவத் தலைவராக (பிரிபெக்ட்) இருந்ததுடன், விடுதி யின் சிரேஷ்ட மாணவத் தலைவராகவும், ஜாயா இல்லத் தலைவராகவும் இருந்துள்ளார்.
"சாவன்னா" முதலாளி என அழைக்கப்பட்ட எம். கே, ஷாஹுல் ஹமீத் அவர்களின் இரண்டாவது மகளான உம்மு ஸ்ஹிதினாவை 137ம் ஆண்டுல் திருமணம் செய்த டாக்டர் ஜ"னைதீனுக்கு, அனிஸ், ரிஸ்வி என்ற இரு ஆண்மக்களும், மூன்று புதல்விகளும் இருக்கின்றனர்.
இவர்களையடுத்து, டாக்டர் எம். எஸ். எம். அபூபக்கர் 1968ம் ஆண்டில் சித்தியடைந்தார். பின்பு டாக்டர் எஸ். எம். மஹ்பூப், டாக்டர் எம். எச். எம் லாபிர் ஆகியோர் சித்தியடைந்தனர்.
டாக்டர் ஒ. எல். எம். ஜூனைதீன் முதன்முதலில் அப் போத்திக்கரி (இரண்டாவது டாக்டர்) படிப்பில் தேறி,

Page 64
அரசாங்க உத்தியோகம் பார்த் தார். இவர் 1928ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ம் திகதி பிறந்தார். யூ. உமர் லெப்பை இறா ஜியார்-ஜெமீலா தி ம் பதி களின் மூத்த புதல்வரான இவர் முதலில் கல்ஹின்னையில் படித்து விட்டு, 193ரம் ஆண்டிலிருந்து 1949ம் ஆண்டுவரை மாத்தளை அர்ச். தோமஸ் கல்லுரரியில் சு ல் வி ையத் தொடர்ந்தார். 1953ம் ஆண்டில், கொழும்பி லுள்ள வைத்தியக் கல்லூரியில் சேர்ந்து படித்து 1956ம் ஆண்டு அப்போத்திக்கரியாகச் சித்திய இடைந்தார். தற்பொழுது, ஓய்வு శీజీకిష్ప్స్టQ L p கண்டிக்கருகிலுள்ள மாவில் மடையில் வசிக்கிறார்.
முதல் பொறியியலாளர்: ஜனாப் ஏ. எம். முனாஸ், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் க ட் டு பெத்த வள்ாகத்தில் பயின்று முதலில் பொறியியலாளராசச் சித்தியடைந்தார், இவர் : 48ம் ஆண்டு புளம்பர் மாதம் ஓம் திசதி பிறந்தார் Liri au JLI al th. Gri. இோமத்-ஜெமீலா தம்பதி க்ளின் மூத்த புதல்வரான இவர், முதலில் கீல்ஜ1றின்னையில் T ஐ 5 தொடக்கம் 1959 வரை கல்வி பேயின்று. பின்னர் மாத்தளை ஸாஹிராக் கல்லூரியில் ஒரே ஆண்டு சேர்ந்து படித்து, 1967 蠱 . ܢ ¬ ஆண்டில் கல்விப் போதுத் தரா : தரப்பத்திரப் பரீட்சையில் சித்தி :ேஃபெடைந்து கண்டி திரித்துவக் கல்லூரியில் சேர்ந்து கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தார்.Tழ70 ஆண்டில் பல் கலைக்கழகத்தில், சேர்ந்து 1937ம் essar (5 B.Sc., (Engi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Îg 3
neering Mechanical) பட்டம் பெற்றார். மஹாவலி அபி விருத்தி சபையில் பொறியியலாளராகச் சேர்ந்த இவர், 1977ம் ஆண்டிலிருந்து கொழும்பிலுள்ள மஹாவலி அபி விரு த் தி த் தலைமையலுவலகத்தில் ஆலோசனைக்குழு உறுப்பினராகக் கடமையாற்றுகிறார்.
ஜனாப் கே. எம். நனமீம்தீன், பின்னர் கட்டுபெத்த வ ள T க த் தி ல் சேர்ந்து, பொறியியலாளரானார். பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமையலுவல கத்தில் தொழில் பார்த்துவிட்டு, சில ஆண்டுகள் குவைத்தில் கடமைபுரிந்த பின், தாய்நாடு திரும்பியுள்ளார். அடுத்து ஜனாப் ஜுனைதின் முபாரக், பொறியியலாளராகச் சித்தி யெய்தினார்.
முதல் கலாநிதி ரசாயனப் பொறியியல் துறையில் கல்வி பயின்று இந்தத் துறையிலேயே கலாநிதி (Ph. பட்ட ம் பெற்றவரான அமீர் ஸெய் னுதீன் தான். எமதுரளில் முதலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர் இவர், 1946ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி எஸ். எர். ஸெப்னு தீன்-சரிபா உார். க + களின் மூத்த பு ; ஃபர பிறந்தார். 1853ம் ஆண்டின் கல்ஹின்னை அ ல் மனார் வித்தியாவயத்தில் படிப்பை ஆரம பித்து, மா த் தி  ைவிள ஸாஹிறா.க கல்லூ ரி பி ல் ே 1953, 1954ம் வருடங்களிலும், கண்டி அர்ச். அந்தோனி கல்லூரியில் 1955லிருந்து 1963ம் ஆண்டு வரையும் கல்வி கற்றார். 1962ம் ஆண்டு டிஸம்பர் மாதம் நடைபெற்ற சாதாரண கல்வித் தராதரப் பத்திரப் பரீட்சையில் எட்டுப் பாடங்களிலும் சித்தியெய்திய இவருக்கு. நாலுபாடங்களில் சிறப்புச் சித்தி கிடைத்தது. பின்னர், கொழும்பு ஸா ஹிறாக் கல்லூரியில் படித்து, 1966ம் ஆண்டு டிஸம்பர் மாதம் நடை

Page 65
1盟
பெற்ற உயர்தர கல்வித் தராதரப் பத்திரப் பரீட்சையில்,
நாலு பாடங்களிலும் சித்தியடைந்தார்.
1987ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து, செப்டம்பர் மாதம் வரை, கொழும்பில், இலங்கை வங்கியில் தொழில் பார்த்து விட்டு, 1967ம் ஆண்டு அக்டேபர் மாதம் லண்டன் சென்றார். அங்கு, ரசாயனப் பொறியியல் டிப்ளோமா பெற்று, பின்பு எம். எஸ். சி. படித்து, 1974ம் ஆண்டு டிவிம்பர் மாதம் கலாநிதிப் பட்டம் பெற்றார். இன்னும் இங்கிலாந்திலேயே தொழிலில் இருக்கிறார்."
முதல் கனக்காளர் : எங்களூரிலிருந்து, படிப்புக்காக பிரிதின்முதலில் இங்கிலாந்துக்குச் சென்றவரும், முதன் முதலில் கரைக்காளர் தொழிலுக்குப் படித்தவருமான ஜனாப் எச். எ . ஐ"னைதீன் துரதம் ஆண்டில் லண்டன் சென்றார். இன்னும் அங்கேயே இருந்து, தொழில் புரிந்து வருகிறார். குடாக்கும்புரை ஹபீப் !ரிமைத் ஹாஜியார் இராஜியானி சரிபா உம்ம தம்பதிகளின் மூத்த புதல்வரான இவர், மர்திரம்ே ர. ஓ. எம். பாலிஹ ஹாஜியாரின் இரண் "வது மகளான ஸாஹிதாவைது திருமணம் செய்தார். இவரைத் தொடர்ந்து, கல்வ ன்னையிலிருந்து lī, இங்கிலாந்தில் மேற்படிப்புக்காக சென்று னர்.
இலங்கையில் டபித்து, ஐனாப் ஏ. எஸ். ம்ே, இறனிபr, எம். எம். ஹிலாலி,மஜித், B. Sc. (Public Finance Taxation) A.C. A., SGIL இருவர் கணக்காளர் தொழில் புரிகின்றனர்.
முதல் கல்வியதிகாரி பட்ட கொ ஸ்ளோதெனியைச் சேர்ந்த மெளலவி அல்ஹாஜ் T = Ffsi ரிேதில் வட்டாரக் கல்வியதிகாரியாகக் கடமையாற்றினார். *திற்கு முன்பு அவர் பல வருடங்கள் ஆசிரியராகயிருந்தார். இப் பொழுது ஓய்வு பெற்று, வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

முதல் தலைமை ஆசிரியர் : க ங் ஹி என்  ைன பி ல், முதல் முகலாக பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர், ஜனாப் வை. எல். ஏ. இனரீஸ் அவர்களாவர். காலஞ் சென்ற பிரபல நாட்டு வைத் தியர் (வெதமஹத்தயா ஈ. எல். பூஆஸ் லெப்பையினதும், חתrf" வறும்ை ஹாஜியானி மரியம்பீபி யினதும்மூன்றாவது புதல்வரான ஜனாப் அளிஸ், 21-7-1928ல் பிறந்தார். இவர் 1938ம் ஆண்டு கல்ஹின்னை முஸ்லிம் பாட சாலையில் தனதுபடிப்பை ஆரம் ஜி பித்தார். இதே பாடசாலையில் 鸥 தொடர்ந்த படித்து, 1947ம் ஜ்ே ஆண்டு எஸ். எஸ். சி. பரிட்சை யில் சித்தியடைந்தார், கல்ஹின்னை முஸ்லிம் பாடசாலை யில் முதன் முதலில் எஸ். எஸ். சி. யில் சித்தியடைந்த மாணவன் இவர் தான்.
ஆசிரிய பயிற்சிக் கலாசாலைப் பிரவேசப் பரீட்சையில் முதல் முறையே சித்தியடைந்து, 1948விருந்து 1949ம் ஆண்டு இறுதி வரை, இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியை அழுத்கம முஸ்லிம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மேற்கொண்டார். 直母岳门凸 ஆண்டு, TPதல் முதலாக ஆசிரிய நியமனம் நி 1ற் றார், 1958ம் ஆண்டு சிரேஷ்ட உதவியாசிரியராகத் தரமுயர்ந்து, 1950ம் ஆண்டு தலைமையாசிரியரானார். 1980ம் ஆண்டி விருந்து, 1984ம் ஆண்டு வரை, மாத்தளை மாவட்டத் தலைமையாசிரியர் சங்கத்தின் செயலாளராக இருந்து, திறம் படச் செயலாற்றினார்.
அனைவராலும் 'அளபீஸ் மாஸ்டர்" என அன்பாக அழைக்கப்படும் இவர் கல்திநின்னையில் 1948ம் ஆண்டு ஆரம் பிக்கப்பட்ட மாணவர் சங்கத்தின் உதவிக் காரியதரிசியாகக் கடமையாற்றினார். தாராள மனம் படைத்த இவர், தான் வாங்கிய நூற்றுக்கணக்கான புத்தகங்களை கேட்பேருக்கெல்

Page 66
லாம் தயக்கமின்றி வழங்கி, வாசிக்கும் ஆர்வத்தை வளர்த்தார்.
சீது காய் மாமனார் அல்ஹாஜ் வா. திர"ைைன் லெப்பை அவர்களின் புதல்வி சவ்துரனை 1955ம் ஆண்டு திருமணம் செய்தார். இவருக்கு ஒரேயொரு மகளும், 呜凰 மகன்களுமுண்டு,
இவரின் பின்னர், ஜனாப்கள் என். எம். ஹனிபா, எஸ். எல். எம். ஹனிபா, எஸ். எம். தாஜுதீன், எம். எச். எம். ஆரித். எச். எம். ஜவ்பர் ஹாஜியார், எஸ். எல். எம். பரீத் எம். சி. எம். ஸ"பைர், எச். எம். சாஹ"ல் ஹமீத் ஆகியவர் கள் பாடசாலைகளின் தலைமை ஆசிரியர் அல்லது அதிபர் கிள் ஆகக்கடமையாற்றியுள்ளனர். ஜனாப் ஜே. எம். தாஜ" தீன் மாத்தளை *ாவிறாவிலும், அல்ஹாஜ் எஸ். எம். ஸ"பைர் கல்ஹின்னை அல்மனாரிலும் பிரதி அதிபர்களா யிருந்துள்ளனர்.
முதல் ஆசிரியர் : ஜனாப் வை. ஏ. மஜித் தான் எமதுரரைச்சேர்ந்தவர்களில் ஆசிரியர் பதவியில் முதன் முதலில் சேர்ந் தவர். அவர் மாத்தளை விஜய கல்லூரி யில் படித்து எஸ். எஸ். சி. சித்தியடைந்த *醫靜"。 பின், 1947ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் *ସ୍ପୃହ୍ଯା 1 திகதி ஆங்கில ஆசிரியராக சுல்தறின்னை | முஸ்லிம் பாடசாலையில் நியமிக்கப் பட்டார். அங்கிருந்து, 1948ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி மாற்றமாகி மாத்தளை போய் சொற்பகாலம் ஆசிரியத் தொழிலிலிருந்து விட்டு 1950ம் ஆண்டில் கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தித் திட்டத்தில் கிராம அதிகாரி யாக நியமனம் பெற்றார். சுமார் ஐந்து வருட காலம் அங்கிருந்தபின், கண்டியில் விவசாய அதிகாரியாக ஒப்வு பெறும் வரை கடமையாற்றினார். கல்ஹின்னை மாணவர் சங்கத்தின் முதலாவது உப தலைவரான அவர், கல்ஹின்னை முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் உபகாரியதரிசியாகவும் இருந் தார். 1981ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி தாலுமானார்.
 
 

செல்வி ஆயிஷா நாவூர் (தற்பொழுது சிருமதி ஹ"ஸைன்) முதன் முதலில் ஆசிரியையாகினார். அவரைத் தொடர்ந்து செல்வி குறைஷா சரீப்தீன் (தற்பொழுது திருமதி எஸ். ஒ. எம். ஹனிபா) ஆசிரியையானார். இவர்களிருவரும் கல் ஹின்னைப் பெண்கள் பாடசாலையிலும், பின்னர் அளுத் காமத்திலும் படித்து, அளுத்காமம் அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்டனர். இவர்களின் பின் 1959, 1960ம் ஆண்டுகளில் பயிற்றப்பட்ட ஆசிரியை திருமதி ஸ்பீனா லதீப், முதன் முதலில் ஒரு பாடசாலைக்குப் பொறுப் பேற்ற கல்ஹின்னையவர். பீரிஹெவ எனுமிடத்தில் தொடங் கப்பட்ட ஆரம்பப் பாடசாலைக்கு இவர் (Unቃsffá] 1980úh ஆண்டு பதில் அதிபராக நியமிக் சப்பட்டார். 1941ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி பிறந்த இவர், கல்ஹின்னை அரசினர் முஸ்லிம் பெண் பாடசாலையிலும் கல்ஹின்னை அல்மனார் மகா வித்தியாலயத்திலும் படித்து, 1957ம் ஆண்டு டிஸம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சையில் அல்மனார் மாணவியாகத் தோற்றிச் சித்தியடைந்தார். 1958ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதி பிலிருந்து ஆசிரியையாயிருக்கிறார்.
1950ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் திகதி, கல் ஹின்னை அரசினர் முஸ்லிம் பெண் பாடசாலை ஆரம்பிக்கப் பட்டது. இங்கு, கல்ஹின்னை ஆரச்சியாராயிருந்த ஜனாப் எஸ். எம். ஜ"னைதீன் அவர்களின் மனைவி, திருமதி குர்ரதுல் ஐன், பல காலம் அதிபராயிருந்து ஓய்வு பெற்றிருக் கிறார். இவர் கம்பளையைச் சேர்ந்தவர். கல்ஹின்னை யிலேயே குடியேறி விட்டார்.
சிறந்த மாணவர் : 1780 ஆண்டில் நடைபெற்ற அகில இலங்கை சிறந்த மாணவர் தெரிவுப் போட்டியில், கண்டிக் கிழக்குப் பிராந்தியத்தில் கல்றிென்னை அல்மனார் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் எம்.எச்.எம். மன்சூர் சிறந்த மாணவனாகத் தெரிவு செய்யப்பட்டார். 1981ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பு, பண்டார நாயக்க

Page 67
Joe
ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழா வில் அதற்கான தங்கப் பதக்கத்தை கல்வி அமைச்சர் அவருக்கு வழங்கினார்.
முதல் எழுதுவினைஞர் : "பெரியாலிம் அப்பா'வின் நாலாவது மகனான ஜனாப் ஏ. எம். ஹ"ஸைன் அவர்கள் தான் முதன் முதலில் அரசாங்க எழுதுவினைஞர் சேவை யில் சேர்ந்த கல்ஹின்னையவர். கல்ஹின்னையில் கமாலியா முஸ்லிம் பாடசாலை ஆரம்பித்தபொழுது பத்து வயதில், அங்கு சேர்ந்து, மூன்றாம் வகுப்பு வரை படித்த பின்னர், மாத்தளை அர்ச். தோமஸ் கல்லூரியில், 1936ம் ஆண்டு ஜூலை மாதம் 6ம் திகதி, அப்பொழுது மாத்தளைக் சச்சேரி யில் உதவி அரசாங்க அதிபராயிருந்த மர்ஹ9ம் அல்ஹாஜ் எ. எம். எ. அஸிஸ் அவர்களின் உதவியுடன் சேர்ந்தார்" எஸ். எஸ். சி. பரீட்சையில் சித்தியடைந்த பின்னர், கல்லூரி யிலிருந்து விலகினார். 1947ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி அரசாங்க எழுதுவினைஞர் சேவையில் சேர்ந்து, முதலில் கண்டிக் கச்சேரியில் வேலை பார்த்தார். 1953ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் திகதி கொழும்பிலுள்ள கைத் தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். குருநாகல், கண்டி, மாத்தளைப் பொலிஸ் அலுவலகங்களில் கடமையாற்றிவிட்டு, அலுவலகப் பிரதான எழுதுவினைஞராயிருந்தபின் ஒய்வு பெற்றிருக்கிறார்.
சமாதான நீதவான்கள் : முதன் முதலில் சமாதான நீத வானாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர், மர்ஹூம் அல்ஹாஜ் ஏ. ஓ. எம். சரீஃப் லெப்பை ஆவார். பின்பு குளியாப்பிட்டியில் வர்த்தகம் செய்த மர்ஹகும் ஜே.எல்.எம். ஹனிபா, மாத்தளை அயின்ஸ்டோர் மூலகர்த்தா ஜே. எல். எம். ஹ"ஸைன், குருநாகல் ட்டீ ஸ்டோர் உரிமையாளர் ஏ.எஸ்.எம் ஜ"னைதீன் ஒ. எல். எம். காஸிம், அல்ஹாஜ் எச். எம்.ஜவ்ஃபர், எம். சி. எம். முஹ்சின், ஒய். எல். எம். ஹை, எம். இஸட். எம். நிலாம்தீன் ஆகியோர் நியமனம் பெற்றனர். விவாகப் பதிவுகாரரான எம்.ஐ.எம்.ஏ. ரஹீமும் ஒரு சமாதான நீதவான்,

முதல் கிராம சேவகர்: ஜனாப் ஒ. எல். எம். ஹனிபா 1970ம் ஆண்டில் முதல் கிராம சேவகராக நியமனம் பெற்றார். ஏழாண்டின் பின் அதை விட்டு விட்டு வர்த்தகம் செய்கிறார்.
முதல் ஹாபிஸ் : கராச்சியிலுள்ள ஜாமியா உலூம் இஸ் லாமிய சர்வகலாசாலையில் பயின்று, ஆறாண்டுகளுக்கு முன் எம். ஜே. எம். முனல்வர், ஹாபிஸ் பட்டம் பெற்றார். இவர், கண்டி ஹிஜ்ராஸ் உரிமையாளர் மர்ஹஅம் எச். எம். ஜ"னைதீன் அவர்களின் இளைய மகன் பொறியியலாளர் எம். ஜே. எம். முபாரக் இவரின் தமையனார்.
பட்டதாரிகள் : கல்ஹின்னையின் முதல் பட்டதாரி எஸ். எம். ஹனிபா, 1951ம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பிலிருந்த பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 1952ம் ஆண்டு அக்டோபர் மாதம் பல்கலைக்கழகம் பேராதனைக்கு மாற்றப்பட்டது. இவரும், பேராதனையில் எஞ்சிய காலம் படித்து, 1954ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியேறினார். பொருளாதாரம், தமிழ்,வரலாறு ஆகிய பாடங்களை பட்டப் படிப்பில் மேற்கொண்டார்.
இரண்டாவது பட்டதாரியான எஸ்.எல்.எம். ஹனிபா, 1953ம் ஆண்டில் சேர்ந்து புவியியல் பட்டம் பெற்று, 1957ம் ஆண்டில் வெளியேறினார். இவர் ஒப்வுபெற்ற அதிபர் கெலிஒயாவைச் சேர்ந்த ஆப்தீன் ஹாஜியாரின் மகள் (ஆசிரியையாயிருந்து ஓய்வுபெற்ற) சலீமாவைத் திருமணம் செய்துள்ளார்.
விஞ்ஞான ஆசிரியராயிருந்து, பின்னர் நைஜீரியாவில் ஆசிரியத் தொழில் புரிந்த எம்.ஐ.எம். ஹனிபா, சென்னை நிவ் கொலிஜில் படித்து பி. எஸ்சி. பட்டம் பெற்றார். 1965ம் ஆண்டில் இவர் பட்டப்படிப்பை முடித்தார். அவரின் தந்தை மர்ஹ9ம் எம். இஸ்மாயில், மாத்தளையில் பிரபல வர்த்தகராயிருந்தார். இப்பொழுது, இவர் கொழும்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். அவரின் மூத்த தம்பி, கல்ஹின்னை விவாகப் பதிவாளர் அப்துல் ரஹீம். இவரும்

Page 68
வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறார். அடுத்த தம்பி முஹம்மது மஹ்ரூப், பயிற்றப்பட்ட ஆசிரியர், ஒமானில் ஆசிரியர் தொழில் பார்த்துவிட்டு, தற்பொழுது மாத்தளையில் தகப்பனார் நடாத்திய வர்த்தக நிறுவனத்தை நடத்துகிறார் மற்றொரு தம்பி, முஹம்மது முஹ்ஸின், சவூதி அரேபியா வில் பிரதான கணக்காளராய்த் தொழில் புரிகிறார்.
காலஞ் சென்ற தனவந்தர் அல்ஹாஜ் யூ. உமர் லெப்பை யின் புதல்வரான ஓ.எல்.எம். ஹலீம்தீன், சென்னை நிவ் கொலிஜில் படித்து 1965ம் ஆண்டில் பட்டம் பெற்றார் ஆசிரியராகத் தொழில் புரிந்தபின் வர்த்தகத்தில் ஈடுபட் டிருக்கும் இவர், கொழும்பு மக்கி ஸ்டோர்ஸ் ஹனிபா ஹாஜி யாரின் மகள் பாயிஸாவை திருமணம் செய்துள்ளார். இவர், சட்டத்தரணி அல்ஹாஜ் ஓ.எல்.எம். சலாஹ"தீன் அவர் களின் தம்பியாவார்.
ஆசிரியராகப் பணிபுரிந்து கண்டி அருப்பொளையிலுள்ள தொழில் நுட்பக் கல்லூரியின் தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப் பாளராயிருந்த ஏ. எஸ். எம். ஹனிபா 1988ம் ஆண்டில் பட்டம் பெற்றார். மீண்டும், பொருளாதாரத் துறையில் 1975ம் ஆண்டு பட்டம் பெற்ற இவர், தற்பொழுது கண்டி யில் கணக்காளராகத் தொழில் புரிகிறார். அக்குறணையைச் சேர்ந்த இவரின் மனைவியும் ஒரு பட்டதாரி.
சட்டத்துறையில் முதலில் பட்டம் பெற்றவர், முதல் அட்வகேட்டாக முதல் பிரிவில் சித்தியெய்திய எஸ். எம். ஹலீம்தீன். அதன் பின், "ரஸாக் முதலாளி எனும் எச்.எம். சாலிஹ் அவர்களின் மூத்த புதல்வரான எஸ்.எம். ஸ்வாஹிர் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். கெலிஒயாவில், பிரபல வைத்தியர், அப்துல் காதர் ஹாஜியாரின் மகளைத் திருமணம் செய்துள்ள இவர், கண்டியில் சட்டத்தரணியாகத் தொழில் புரிகிறார்.
தத்துவத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்ற எஸ். எம். தாஜுதீன், 1970ம் ஆண்டில் வெளியேறினார். ஆசிரியராகத் தொழில் புரிகிறார். "மத்திசம் அப்பச்சி"யின் பேரனான

9.
இவர், மூனேக்கர்" என அழைக்கப்படும் கம்மஹலா கெதரி சாலிஹ் லெப்பை ஹாஜியாரின் புதல்வர். மாத்தளை பெர்சியன் ஹோட்டல் உரிமையாளர் அல்ஹாஜ் ஏ.எம். ஹாசிம் அவர்களின் மகளைத் திருமணம் செய்துள்ளார்.
"ஈ. எச்.' முதலாளி என அழைக்கப்பட்ட அடப்பளா கெதர ஏ. எச். முஹம்மத் அவர்களின் முத்த புதல்வர் எச்.எம். பாருக் முதலில் ஆசிரியராகவும், பின்னர்அதிபராக வும் பணிபுரிந்து, தற்பொழுது கண்டியில் சட்டத்தரணி யாகத் தொழில் பார்க்கிறார். அத்துடன், மத்திய மாகாண சபையில் உறுப்பினராகவும் இருக்கிறார்.
"பெரியாலிம் அப்பா'வின் இரண்டாவது மகன் மர்ஹஅம் அல்ஹாஜ் ஏ. எம். ஹனிபாவின் மூத்த மகனான எச். எம் ஹாரித், பட்டம் பெற்று, பின் கல்வி டிப்ளோமாவும் பெற் றார். ஆசிரியராகவும், பின்னர் அதிபராகவுமிருந்து ஒய்வு பெற்றிருக்கும் இவர், மர்ஹஅம் எஸ்.எல். காஸிம் அவர் களின் மூத்த மகளைத் திருமணம் செய்துள்ளார்.
காலஞ் சென்ற அ.ப. ஜெமால்தீன் ஹாஜியாரின் மூத்த மகன் ஜே. எம். தாஜுதீன், மாத்தளை ஸாஹிறாக் கல்லூரி யின் உப அதிபராயிருந்து, பின்னர் வெளிநாடு சென்று, தற்பொழுது ரியாதில் தொழில் புரிகிறார். மர்ஹூம் எம். ஏ. எம். சரீஃப் ஹாஜியாரின் மூத்த மகள் சலீம் பீபியைத் திருமணம் செய்துள்ளார். சலீம் பீபியும் ஒரு பட்டதாரி.
மர்ஹஜூம் ஏ. எம். காஸிம் லெப்பையின் மகனான எம். சி. எம், அமீர் முதலில் கலைமாணிப்பட்டம் பெற்று, பின்னர் முதுமாணி (எம்.ஏ.) பட்ட மும் பெற்றார். கல்ஹின்னையில் முதல் எம். ஏ. பட்டதாரியான இவர், எழுத்துத் துறை யிலும் ஆர்வமுள்ளவர், ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவர் கல்ஹின்னை அல்மனார் மகாவித்தியாலயப் பொன் விழா சிறப்பு மலர் ஆசிரியராக இருந்து, பாராட்டத்தக்க முறையில் சஞ்சிகையைப் பிரசுரித்தார்.
ஆரம்பத்தில் எழுதுவினைஞராக இருந்து பட்டம் பெற்று வெளிநாட்டில் தொழில் புரியும் இஸட். ஏ. அஸிஸ் (பளில்)

Page 69
முன்பு "ஜெய்னார்' என அழைக்கப்பட்ட மரிஹல்ம் செய்னுதீன் அவர்களின் மகனாவார்.
எம். எஸ். அப்துல்லா: 'கல்லூட்டுக் குஞ்சாலிம்" என அழைக்கப் ட்ட மர்ஹஅம் அல்ஹாஜ் எம். எச். எம். சரிஃப் அவர்களின் புதல்வரும் கல்ஹின்னையின் முதல் பயிற்றப்பட்ட கணித ஆசிரியரான எம் எஸ்.எம். நளியீரின் தம்பியுமான இவர் கொழுப்பு ஹமீத் அல் ஹ"ஸைனி முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராய்ப் பணிபுரிகிறார். இவர் அல்ஹாஜ் எச். எம். லதீப் அவர்களின் மகளை மணமுடித்துள்ளார். கல்விடிப்ளோமாவும் பெற்றிருக்கிறார்.
அல்ஹாஜ் மெளலவி எச். ஏ. அளிஸ்: மர்ஹ9ம் ஹமீத் லெப்பைனயிதும் மக்கிச அப்பச்சியின் பேத்தியினதும் மகனாகும். பயிற்றப்பட்ட ஆசிரியர். அரபு வட்டாரக் கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்த இவர், இப்பொழுது வர்த்தகத்தில் ஈ டு பட் டு ஸ் ளார். மத்திச அப்பச்சி யின் பேரன் மர்ஹலிம் ஹபீப் முஹம்மத் (ரத்தோட்டை லெப்பை) அவர்களின் மகளைத் திருமணம் செய்துள்ளார்.
எம். எல். எம். மக்கீன்: விஞ்ஞானப் பட்டதாரி; இவர் மத்திச அப்பச்சியின் பேரன் மஜீத் லெப்பை அவர்களின் மகனாகும். கணித இயலில் திறமையுள்ள இவர், மாத்தளை ஸாஹிராக் கல்லூரியில் படிப்பிக்கிறார். இவரின் ஆசிரிய மனைவி காத்தான்குடியைச் சேர்ந்தவர்.
எஸ். எம். அஷ்ரஃப் பிரபல வைத்தியர் யூனுஸ் லெப்பை வெதமஹத் தயாவின் மகன் மர்ஹகும் சலாஹ"Cத் தீனின் மூத்த புதல்வரான இவர் கல்ஹின்னையின் முதல் வணிகஇயல் பட்டதாரி. இவர் பெயர்லைன் நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளையின் நிர்வாக இயக்குநராகக் கடமையாற்றி னார். தற்பொழுது கொழும்பில் தமது சொந்த வர்த்தக நிலையத்தை நிர்வகிக்கிறார். இவர் குருகொடையைச் சேர்ந்த தமது தாய்மாமன் ஒய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் பளில் அவர்களின் மூத்த மகளைத் திருமணம் புரிந்துள்ளார்.

14射
எம். எச். எம். பாரூக் - கோயில் முதினிை அல்ஹாஜ் எச். எம். ஹ"லைன் அவர்களின் மூத்த புதல்வர். ஆசிரிய ராய் பணிபுரிந்த இவர் இப்பொழுது களேவெலையில் வர்த்த கத்தில் ஈடுபட்டுள்ளார். அல்ஹாஜ் எஸ். எம் இஸ்மாயில் அவர்களின் மகளை இவர் திருமணம் செய்துள்ளார்.
எஸ். எம். இம்தியாஸ் இவர் கல்ஹின்னையின் முதல் தபாலதிபராய் இதுவரை கடமை பாற்றும் எம். சி. எம். சஹாப்தீன் அவர்களின் மூத்த புதல்வர். வெளிநாடு சென்று தொழில் புரிந்துவிட்டு வந்த பின்னர் வர்த்தக முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வர்த்தகப் பட்டதாரியான இவரின் மனைவி ஹலீமத்துஸ் ஸஹிதியா உயனவத்த (மாவனல்லை) தபால் அதிபர் ஹாசிம் அவர்களின் புதல்வியாவார்.
எச். எம். இல்யாஸ் : மர்ஹ ஜூம் எஸ். யூ. ஹபீப் முஹம் மத் அவர்களின் மகனான இவரும் வெளிநாடு சென்று திரும்பிய பின்னர் வர்த்தக முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மாத்தளை ஸாஹிறாக் கல்லூரியின் முன்னாள் அரபு ஆசிரி யரும் மள்வான ஹின்னையைச் சேர்ந்தவருமான மெளலவி மஜீத் அவர்களின் மகளைத் திருமணம் புரிந்துள்ளார். இவரும் ஒரு பட்டதாரி.
எஸ். எம். நஸீர் : காலஞ்சென்ற 'மெளலானா' என அழைக்கப்பட்ட எச். எம். செய்னுதீன்-கதீஜா உம்மா தம்பதி களின் மகனான இவர் வர்த்தக முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கெலிஒயாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் ஸாலிஹ் அவர்களின் மகளை திருமணம் செய்துள்ளார். இவர் லண்டனில் படித்து, விஞ்ஞானத் துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
வை. எல். எம் ராஸிக் பீரிஹெல யூஸுப் லெப்பை யின் மகனான இவர் கொழும்பில் வர்த்தக முயற்சியில் ஈடு பட்டுள்ளார். கொழும்பு "மக்கி ஸ்டோர்ஸ்" அல்ஹாஜ் ஹனிபா அவர்களின் மகளைத் திருமணம் செய்துள்ளார்.

Page 70
is
எம். இஸட், எம். கரீம் : பீரிஹெல மர்ஹகும் ஏ. எம். ஸுபைர் அவர்களின் புதல்வரும் மாத்தளைக் கச்சேரியில் "சிராப்'பராய் கடமையாற்றும் நிலாப்தீன் அவர்களின் தம்பியுமான இவர் ஆசிரியராய்ப் பணிபுரிகிறார். இவரின்
மனைவியும் ஒரு பட்டதாரியே. இவர் ஒரு வர்த்தகத் துறைப் பட்டதாரி.
எஸ். எச். எம். இக்பால் : “கடே ஹாஜியார்" என அழைக்கப்பட்ட மர்ஹஜூம் ஏ. ஓ. எம். சாலி ஹாஜியாரின் புதல்வரான இவர், இன்று கல்ஹின்னைப் பள்ளி வாசலின் நம்பிக்கையாளர்களில் ஒருவரும், கல்ஹின்னையின் முதல் பயிற்றப்பட்ட விவசாய அதிகாரியுமான அல்ஹாஜ் எஸ். எச். ஏ. ஹலீம் (கமால்தீன்) அவர்களின் தம்பியுமாவார். இவர் துபாய் அரசாங்க விவசாய இலாகாவில் உயர் பதவி வகிக்கிருர்,
எம். எச். எம். ஸமீல் (நளிமி) இவர் முன்னாள் ஆசிரியர் எஸ் ஒ. எம். ஹனிபா-முன்னாள் ஆசிரியை குறைசா ஆகி யோரின் புதல்வராவார். இவரும் ஆசிரியத் தொழில் புரி கிருர். இவர் பூரீலங்கா முஸ்லிம மாணவர் சம்மேளனத்தின் கல்ஹின்னைக் கிளைத் தலைவராய் இருக்கிறார்.
பவ்ஸால் ஹனியா ரஹீம் : கல்ஹின்னையின் முதல் பெண் பட்டதாரியான இவர், கல்ஹின்னையின் பெருமகன் மர்ஹூம் அல்ஹாஜ் ஹ"ஸைன் புரக்கடர் அவர்களின் மூத்த மகள். இப்பொழுது பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியாக இருக்கும் முன்னைய கண்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முதல் அதிபராய் கடமையாற்றியவர். பினனர், கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரியின் நீண்ட கால அதிபராய் இருந்து, ஓய்வு பெற்றுள்ளார். பிரபல கட்டடக் கலைஞர் அல்ஹாஜ் எம்.ஜே. ஏ. ரஹீம் இவரின் கணவராகும்.
சித்தி ஹலீமா ஆப்தீன்:- இவர் கால ஞ் சென் ற மர்ஹ9ம் எம். எச். அஹ்மது அவர்களின் மகள். ஆசிரி யராகப் பணிபுரியும் இவரை மாவத்துப் பொளையைச்

is
சேர்ந்த பட்டதாரி ஏ.டப்ளியு. ஆப்தீன் திருமணம் செய் துள்ளார்.
சித்தி ஹலீமா பரீத் - இவர் என். எம். ஹனிபா அவர்களின் மகளாவார். இவர் பறகஹ தெனியைச் சேர்ந்த ஜனாப் பரீத்தை திருமணம் செய்துள்ளார். இவரின் தாயார் பூதல் கஹயைச் சேர்ந்த செய்யது லெப்பையின் மகளாவார்.
சாயிதா நிஸாம்:- பிரபல வர்த்தகர் அல்ஹாஜ் ஐ.எம். காலித் அவர்களின் மூத்த மகளான இவர் ஆசிரியைப் பணி புரிகிறார். குருநாகலையைச் சேர்ந்த ஜனாப் நிஸாம் அவர்களைத் திருமணம் செய்துள்ளார்.
ஆஸியா (நயிமா) இல்யாஸ்; மர்ஹ9ம் அல்ஹாஜ் ஏ. ஓ. எம். சரீஃப் அவர்களின் புதல்வியும், சட்டத்தரணி எஸ்.எம். ஹ"ஸைனின் தங்கையுமான இவர் ஆசிரியையாகத் தொழில் புரிகிறார். இவர் நிககொள்ளையைச் சேர்ந்த ஜனாப் இல் யாஸை திருமணம் செய்துள்ளார்.
ரசீதா கரீம்: இவர் களத்துக்கள லெப்பை வீட்டு" பாரூக் என அழைக்கப்படும் ஜனாப் எச். எம். பாரூக் அவர் களின் மூத்த புதல்வியாவார். ஆசிரியையாகப் பணிபுரியும் இவர் வர்த்தக ஆசிரியர் என். இஸட். எம் கரீம் பி. கொம். அவர்களின் துணைவியாகும்.
பட்டதாரி மாணவ, மா ன வி க ள் :- வை. எஸ். எம். அஷ்ரப் (வர்த்தகம்-பேராதனை) இவர் ஜனாப் சரீப் அவர் களின் புதல்வனும் கிராம சேவை அதிகாரி இல்யாஸ் அவர் களின் தம்பியுமாவார்.
எஸ். எம். சஹீல் (வர்த்தகம்-பேராதனை) இவர் மூஸா முனையைச் சேர்ந்த ஜனாப் எச். எம். சலாஹ"தீன் அவர் களின் புதல்வராகும். ஆசிரியராகப் பணியாற்றியவர், சித்திரக்கலையில் திறமையுள்ளவர். தனித் தமிழ் எழுத்தைக் கொண்டு தட்டச்சு மூலம் அன்னையொருத்தி குழந்தைக்குப் பாலூட்டுவது போன்ற படமொன்றை மிக நுணுக்கமாய்த்

Page 71
136
தயாரித்தார். இப்படம், 'தினகரன்' பத்திரிகையில் வெளி யானதும், பெரும் பாராட்டுக்குள்ளானது. இவர் எழுத் தாற்றலுமுள்ளவர்.
எம். ஜே. எம். அஷ்ரப் (விவசாயம்-பேராதனை) இவர் அல்ஹாஜ் எஸ்.எம். ஜூனைதீன் ஆலிம் அவர்களின் புதல்வ ராவார். இவர் பல்கலைக்கழகம் செல்ல முன்னர் ஜப்பானில் தொழில் புரிந்தார்.
நஜ்மியா லதீப் (கலை-பேராதனை) இவர் சரிப் லெப்பை வெதமஹத்தயா ("கிதுல் பெரிசாரி"யின் மகன்) அவர்களின் மகன் ஆசிரியர் லத்தீப் (அப்துர் றஹீம்) அவர் களினதும் பீரிஹெல முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய அதிபர் சபீனா வினதும் மூத்த மகளாவார். அல்ஹாஜ் யூ.எம். ஹனிபா "யூ. எம். எச்." அவர்களின் மகன் நயீம்-இப் பொழுது சவூதி அரேபியாவில் தொழில் புரிபவர்-இவரைத் திருமணம் செய்துள்ளார்.
சனூபா ஹனிபா (கலை-பேராதனை) இவர் மாத்தளை ஜெமாலியா ஸ்டோர்ஸைச் சேர்ந்த எச். எம். ஹனிபாவின் மகளாவார்.
பஸிலா ஹலீம்தீன் (கலை-போதனை) இவர் கவியரசு எம். எச் எம். ஹலீம்தீன் ஆசிரியை ஜெமீலா ஆகியோரின் புதல்வியாவார்.
சுக்ரியா ஆப்தீன் (கலை - பேராதனை) இவர் அடப்பளா கெதர ஏ. யூ. ஆப்தீன் அவர்களின் புதல்வியாவார்.
சுப்ரியா ஹலீம்தீன் (விவசாயம் - பேராதனை) இவர் வட்டப்புளுவையார்' என அழைக்கப்படும் மர்ஹகும் அல் ஹாஜ் ஏ. ஓ. எம். சரீஃப் அவர்களின் மூத்த மகன் ஹலீம் தீனின் மூத்த புதல்வியாகும்.
சாயிதா சாஹ"ல் ஹமீத் (வெளிவாரி மாணவி) இவர் வாப்புக்கண்டுவின் நேர் வாரிசுகளில் ஒருவரான மர்ஹகும் (அளவத்த, சாஹுல் ஹமீத் அவர்களின் புதல்வி ஆசிரியைத்

37
தொழில் புரிகிறார். பொதுப்பணிகளில் ஈடுபாடுள்ள இவரின் தமையனார் ஆசிரியர் எஸ். எச். எம். தாஜுதீனின் அயரா முயற்சியால் இவர் இன்று பட்டதாரி இறுதிப் பரீட்சை எழுத இருக்கிறார்.
எஸ்.எம். ரிபாய்தீன் (மருத்துவம்-பேராதனை) இவர் மர்ஹ9ம் எம்.சி.எம். சஹீத் லெப்பை விதானை அவர்களின் மகன். சமூகப் பற்றும் சன்மார்க்கப் பற்றும் மிக்க இவர் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்தார். தனது அயராத முயற்சியினால் உதவி வைத்திய அதிகாரி படிப்புத் துறையை மேற் கொண்டுள்ளார். இவர், மெளலவியா பரீனா ரசீத் என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.
எம்.எச்.எம். ஜிப்ரி (பொறியியல்-பேராதனை) 'ஈனா மூனா வீட்டு ஹனிபா என்றழைக்கப்பட்ட மர்ஹஅம் ஈ.எம். ஹனிபா அவர்களின் மகனான இவர் சிங்கள மொழி மூலம் பயின்றவர். பொறியியல் மூன்றாம் வருட மாணவனாயிருந்த இவர் பொறியியல் படிப்பைத் தொடர, அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
எச்.எம். நசீர் (பொரளை, சுதேச வைத்திய நிலையம்) இவர் காலஞ்சென்ற அல்ஹாஜ் ஏ. எம். ஹனிபா லெப்பை யின் மகனும், ஹாரித் ஆசிரியர் அவர்களின் தம்பியுமாவார்.
எம்.எச்.எம். நஸிம்- (பெராளை சுதேச வைத்திய நிலையம்) இவர் மர்ஹஅம் அப்துல் கபூர் லெப்பை அவர் களின் மூத்த மகன் ஜனாப் ஏ.சி.எம். ஹனிபாவின் மகன்.
வெளிநாடுகளில் கல்வி பயில்பவர்கள் : லண்டனில் ஆரம் பத்தில் போன ஜனாப்கள் எச். எம். ஜுனைதீன், எஸ். எம், சிராஜுதீன், எச். எம். ஸியாவுத்தீன், எஸ். ஏ. அஸிஸ் ஆகி யோர், படித்துத் தொழில் புரிகின்றனர். பின்னர் போன, ஏ. எஸ்.எம். ஹஸன் இலங்கையில் சட்டத்துறைப் பட்டம் பெற்றவர். கண்டியில் கணக்காளர் வேலையிலிருக்கும் ஏ. எஸ், எம். ஹனிபாவின் தம்பியான இவர், அங்கு பாரிஸ்டர்

Page 72
138
பரீட்சையில் தேறி, சட்ட நிறுவனமொன்றில் உயர் பதவி வகிக்கிறார்.
கல் எலியாவில் முஸ்லிம் மாதர்க்கான அரபிக்கலா சாலையில் மவ்லவியா பட்டம் பெற்ற நஸிமா ஜெமால்தீன், சவூதி அரேபியா அரசாங்கத்தின் புலமைப் பரிசில் பெற்று ரியாத் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மேற்கொண்டிருக் கிறார்.
டோக்கியோவில் துணி தயாரிப்புக் கலையில் எம். சி. எம். ஸ்ரூக் உயர்கல்வி பயிலுகிறார். மர்ஹஅம் எஸ். எல். காஸிம் அவர்களின் ஒரே புதல்வரான இவர், ஓய்வு பெற்றுள்ள அதிபர் எச். எம். ஹாரிதின் மைத்துனர்.
அவுஸ்திரேலியாவிள்லுள பேர்த் சர்வகலா சாலையின் கல்லூரியில் எம்.ஜே.எம். நளீம், வர்த்தக முகாமைத்துவம், கொம்பியூட்டா கல்வி ஆகிய துறைகளில் பயில்கிறார் இவர் பிரபல வர்த்தகரும் சமூக சேவையாளருமான குருநாகல் டீ ஸ்டோர் உரிமையாளர் ஏ.எஸ்.எம். ஜ"னைதீன் ஜே. பி. அவர்களின் இளைய புதல்வர். குருநாகல் நூர் டெக்ஸ் உரிமை யாளர் அல் ஹாஜ் எம். பி. நூர் அவர்களின் மகனான எஸ். எம். மன்சூர் வர்த்தக முகாமைத்துவம் கொம்பியூட்டர் கல்வித் துறைகளில் அதே கல்லூரியில் பயில்கிறார்.
பேர்த் நகரிலுள்ள சர்வகலாசாலைக் கல்லூரியில் சேர்ந்து, வர்த்தக முகாமைத்துவம், மைக்ரோ கொம்பி யூட்டர் துறைகளில் பயிலும் இன்னொருவர் எம். எச். எம். பாயிஸ். இவர் மர்ஹூம் எம். சி. எம். ஹனிபா, 'கிதுல் பெரிசாரி" என அழைக்கப்பட்ட காஸிம் லெப்பையின் மகள் அஸிஸா உம்மா ஆகியோரின் இளைய புதல்வர். பேர்த் செல்லுமுன், இங்கு ஐ. சி. எம். ஏ. பரீட்சைக்கு ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தார்.
பேர்த் நகரில், மற்றவர்கள் பயிலும் துறைகளில் எம். எச்.எம், அஷ்ரப், கல்வி மேற்கொண்டிருக்கிறார். இவர் மர்ஹஜூம் அல்ஹாஜ் ஜே. எம். ஹனிபா (ஜன் ஸ்டோர்ஸ்)

139
அவர்களின் புதல்வராவார். பேர்த் செல்லுமுன், இவர் ஜப்பானில் தொழில் புரிந்து கொண்டிருந்தார்.
ரஷ்ய அரசாங்கத்தின் புலமைப் பரிசில் பெற்று, அங்கு சர்வகலாசாலையில் பொறியியல் துறையில் பயிற்சி பெறும் எம். ஆர்.எம். அக்பர், அனைவராலும் அன்போடு "டிரைவர் ரஷீத் நான" என அழைக்கப்படும் ஜனாப் ரஷிதின் மகன்.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் புலமைப் பரிசில் பெற்று பஞ்சாப் பல்கலைக்கழகத்தில், மருத்துவத் துறையில் பயிற்சி பெறும் எம். ஜே. எம். பஹ்மி, அல்ஹாஜ் எம். ஜே. எம். ஜுனைத் ஹாஜியானி தாஜ"ன்னிஸா தம்பதிகளின் புதல்வர்.
ருமேனியா அரசாங்கத்தின் புலமைப் பரிசில் பெற்று ருமேனியாவில் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பயிற்சி பெறும் என்.எம். அக்ரம், படகொள்ளாதெனிய ஜமாலியா வித்தியாலயத்தின் முதல் அதிபர் நயீம், ஆசிரியை மர்ஜான் பீபி தம்பதிகளின் மூத்த புதல்வர்.
முதல் விஞ்ஞான ஆசிரியர் : எஸ்.எம். முளஃப்டர், பயிற்றப்பட்ட முதல் விஞ்ஞான ஆசிரியர். இப்பொழுது மாத்தளை ஸாஹிறாக் கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரியும் இவர், "மனேஜர் ஹாஜியாரின்" மகன்.
மெகானிகல் என்ஜினியர் : எம். எஸ். எம். பஷீர், இலங் கைப் போக்குவரத்து சபை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், கொழும்பில் செளத் வெஸ்டர்ன் பஸ் கம்பெனியில் சாதாரண பழுது பார்க்கும் ஒருவராகச் சேர்ந்து, சுயமுயற்சியால் தொழில் செய்யும் போதே படித்து, பரீட்சைகளில் தேறி பழுதுபார்க்கும் பொறியியலாளர் (மெகானிகல் என்ஜினியர்) ஆனர். அரசாங்கப் புலமைப் பரிசில் பெற்று ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்று விசேஷ பயிற்சி பெற் றுள்ள இவர், தற்பொழுது, பதுளை மாவட்டத்திற்கான பிரதேச பொறியியலாளராகப் பதவியுயர்வு பெற்றுள்ளார். காலஞ்சென்ற பெரியார் வே.மு. மீறா சாஹிப் அவர்களின்

Page 73
இளைய புதல்வர். இவர். பarரின் மூத்த மகன் முஹம்மது ந வ் பர் கம்பியூட்டர் எஞ்சினியராயிருக்கிறார். இவர் இலங்கையிலுள்ள 1. B. M. (இன்ஸ்டிடியூட் ஒஃப் பிஸினஸ் மனேஜ்மன்ட்ல் விரிவுரையாளராயிருந்து, இப்பொழுது செளதி அரேபியாவில் ஒரு நிறுவனத்தில் கடமையாற்று கிறார்.
வெளிநாட்டுத் தொழில் வெளிநாட்டில் தொழில் பார்ப்பதற்கென்றே முதன் முதலில் எமதுரரிலிருந்து சென்ற வர்கள் 1974ம் ஆண்டின் பிற்பகுதியில் ஈரான் சென்ற எஸ்.எச்.எம். நிஸார், வை.எல்.ஏ. ஸலாம் ஆகிய இருவரு மாவர். இவர்கள் முதலில் ஈரான் சென்று பந்தர் அப்பாஸ் எனுமூரில் வேலை பார்த்தனர்.
கல்ஹின்னையில் சமூக சேவையில் ஈடுபட்டிருக்கும் எஸ். எச். எம். ஜூனைதீன், ஆசிரியர் எஸ்.எச்.எம். தாஜுதீன், ஆகியோரின் தம்பியான நிஸார், இன்னமும் துபாயில் தொழில் புரிந்து வருகிறார். அவருடன் சென்ற ஸலாம், மர்ஹீம் ஈ.எல். யூனுஸ் லெப்பை வெதமஹத்தயாவின் இளைய மகன். அவர் நாடு திரும்பி, சுயதொழில் முயற்சி களில் ஈடுபட்டுள்ளார். இவர்களைத் தொடர்ந்து, நாற்பது பேர் வரையில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று தொழில் புரிந்தனர். இன்னும் சிலர், அங்கு தொழிலில் இருக்கின்றனர். ஒரு சிலர் ஐரோப்பிய நாடுகளிலும் தொழில் பார்ச்கின்றனர்.
கல்விக்காக முதன்முதலில் லண்டன் சென்ற எச்.எம். ஜ"னைதீன், 1988ம் ஆண்டில் லண்டன் சென்ற எச்.எம். லியாவுதீன், அதே ஆண்டில் சென்ற எஸ். ஏ. அஸிஸ் 1969ம் ஆண்டில் சென்ற எஸ்.எம். சிராஜுதீன், பின்னர் சென்ற எஸ்.எச்.ஏ. வஹாப், எச் எம். ஸ்கரியா, கே.எம். ஜமீல் ஆகியோரும் வேறு சிலரும் இப்பொழுதும் லண்டனில் தொழில் புரிகின்றனர். அச்சகக் கலையில்: எமதுரளில் "கணக்கப்பிள்ளை" என அழைக் கப்பட்ட மர்ஹீம் சாஹுல்ஹமீத் அவர்களின் மூத்த

புதல்வர் ஜனாப் ஜெபுர்தீன் தான் முதன் முதலில் அச்சகக் கலை பயின்றவர், இவர் 1960ம் ஆண்டளவில், அச்சுக் கோர்ப்பவராக (Compositor) அரசாங்க அச்சகத்தில் சேர்ந் தார். சுமார் பதினைந்து வருடங்கள் தமது சுய முயற்சி பாலும், திறமையாலும் பல அச்சுக்கலை நுணுக்கங்களைப் பயின்றார். பின்னர் துபாய் நாடு சென்று இத்தொழிலையே பத்து வருடங்கள் வரை செய்தார். தாய் நாடு திரும்பித் தன் தம்பியோடு அச்சகத்தைச் சில காலம் நிர்வகித்த பின்னர் மீண்டும் துபாய் சென்று அச்சக நிலைய மொன்றில் பொறுப்பான பதவியிலிருக்கின்றார்.
இவரின் உடன் பிறந்த தம்பியான நிலாப்தீனும் I ή 7 Ι ή ஆண்டு இதே கலையில் ஈடுபட்டார். கொஞ்சக்காலம் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அச்சக நிலையமான I.P.C.யில் மனேஜராகக் கடமையாற்றிய பின்னர் கொழும்பு, தெமட்டகொடையில் "டிவலோ பிரிண்ட்" என்ற சொந்தி அச்சகத்தை நிறுவினார். அவர் தொழில் நிமித்தம் ஜப்பான் சென்றுள்ளதால்,அவரின் ஒன்றுவிட்ட் தம்பி ஜனாப் சுல்தான் முஸ்திம்ே டிவலோ பிரின்டை நிர்வகிக்கிறார். இவரின் தங்கை பெளஸ"ல் க கரீமா எழுத்துக்கோப்பதிலும் ஏனைய அச்சக நுணுக்கங்களிலும் தற்பொழுது பயிற்சி பெற்று வருகிறார்.
எழுத்தாளர்கள் :- கல்ஹின்னை யின் முதல் எழுத்தாளர் சட்டக் தரணி அல்ஹாஜ் எஸ். எம்: ஹனிபா 1947ம் ஆண்டின் ஆரம்பத் தில் 'தினகரன்" பாலர் கழகம் பகுதி யில் முதன் முதலில் எமதூர் பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுதினார். 17ம் ஆண்டு முடிவில் எஸ். எஸ். பரீட்சை எழுதி விட்டு ஒய்வா யிருந்த சமயம், "சமுதாயம்' எனும் தமிழ்ச் சஞ்சிகைய்ை ஆரம்பித்து, நடத்தினார். பின்னர் கல்ஹின்னை மாணவர் சங்கத்தின் ஐந்தாண்டுப் பூர்த்தி "மலர்" த யூனி பன்
காழும்பு ஸாஹிறாக் கல் லூரியின் ஆண்டு சஞ்சிகை "அஸ் லாஹறிறா"

Page 74
இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கச் சஞ்சிகை "இளங்கதிர்" போன்ற பல சஞ்சிகளின் ஆசிரியராயிருந்து விட்டு, பட்டம் பெற்ற பின் ஈராண்டுகள் பாடசாலை ஆசிரியராயிருந்தார். அதன்பின் "லேக் ஹவுஸ்" எனும் பத்திரிகை நிறுவனத்தில் சேர்ந்து, 'தினகரன்" ஒப்ஸர்வர், டெய்லி நியூஸ் ஆகிய பத்திரிகைகளின் உபபத்திராதிபராகப் பத்தாண்டுகாலம் கடமையாற்றினார். அதன்பின், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் செய்திப் பகுதியில் ஏழாண்டு காலம் பொறுப்பு ஆசிரியர் எனும் உயர் பதவியில் வேலை பார்த்துவிட்டு, ஒய்வு பெற்றார்.
தமிழ் மன்றம் எனும் அமைப்பின் மூலம் அறுபது நூல் கள் வெளியிட்டுள்ள இவர், வேறும் பல நூல்களை ஏனை பவர்களுக்காகப் பிரசுரித்துக் கொடுத்துள்ளார். சட்டத் தரணியான போதிலும், அத்தொழிலைப் பார்க்காமல் நூல் வெளியீட்டுப் பணியில் ஈடுபட்டிருக்கும் இவர், ஆறேழு நூல் களை சொந்தமாக எழுதியிருக்கிறார். இலங்கை அரசாங் கத்தால், "இலக்கிய மாமணி" பட்டம் வழங்கி இவர் கெளரவிக்கப்பட்டுள்ளார். இலக்கிய உலா' எனும் இவரின் வாழ்க்கை வரலாறு நூல்" 1987ம் ஆண்டில் சென்னை மில்லத் பப்ளிஷர்ஸால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
எம்.சி.எம். சுபைர் கல்வறின் னையில் மூத்த கவிஞர் கவிமணி எனப் பட்டம் விழங்கப்பட்ட வர் பல நல்ல நூல்களின் ஆசிரியர், மாணவ, மாணவி சுளுக்காக "மணிக்குரல்" மாத சஞ்சிகை நடத்தியவர். மணிக் -- குரல் பதிப்பகம் வைத்துப் பல பிரகரித்தவர். பயிற் 'றப்பட்ட ஆசிரியரான இவர், சுமார் முப்பத்தைத்து கால ஆசிரியப் பணி பி ன் பின், இளை ப்பாறினார். : 1933ம் ஆண்டு ஆகஸ்ட் :மாதம் 27ம் திகதி பிறந்த ஸ"பைர், கல்ஹின்  ைன யி ல்
 
 
 
 
 
 
 

அவரின் சிறிய தந்தை புறக்டர், அல்ஹாஜ் ஏ. ஓ. எம். ஹாஸைன் அவர்களின் முய ற்சியால் ஆரம்பிக்கப்பட்ட கமாலியா முஸ்லிம் பாடசாலையில் கல்வி கற்று, 1950ம் ஆண்டில் சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தி பெப்தினார். 1932-33ம் ஆண்டுகளில், அளுத்கமை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஈராண்டு காலம் பயிற்றப்பட்டார், 1954ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் திகதி தனது ஆசிரியப் பணியை பண்டாரவளை ஸாஹிறாக் கல்லூரியில் தொடங்கி 1990ம் ஆண்டு டிஸம்பர் மாதம் கல்ஹின்னை பள்ளிய கொட்டுவ ஆரம்பப் பாடசாலை அதிபர் பதவியி விருந்து ஒய்வு பெற்றதுடன் முடித்துக் கொண்டார்.
இவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய முழு விவரம் 1981ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற, கவிஞர் 8-பைர் பாராட்டு விழாவை முன்னிட்டுப் பிரசுரமான 'காலத்தின் குரல்கள்' எனும் தனிப்பாடல் தொகுப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளது.
"மாமா' என். எம். ஹனிபா: "மாமா" என்ற புனை பெயரில் சுமார் முப்பத்தைந்து வருடங்களாக எழுத்துப் பணி புரிந்து வருபவரே நாவலாசிரியர் என். எம். ஹனிபா. 24 வருடங்கன் ஆசிரியராய்ப் பணியாற்றினார். பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர் கல்ஹின்னை அல் மனார் மகா வித்தியால யத்தின் அதிபராய் 7 வருடங்கள் கடமையாற்றி சிறிது சுக வீனம் காரணமாக ஓய்வு பெற்றுள்ளார்.
குறிஞ்சி மாமா' என்ற புனே பெய ரில் இஸ்லாமியச் சிறுகதைகள், கட்டுரை கள் புனைய ஆரம்பித்த இவர் தாலப் போத்தில் மாமா' என்ற பெயரிலேயே தமது, பகற்கொள்ளை, ஏமாற்றம் மர்மக் கடிதம், இலட்சியப்பெண் ஆகிய சமூக நாவல்களை தான் நிறுவிய கலாநிலையத் தின் மூலம் வெளியிட்டார். (Ligarrt : பிடித்து "மாமா' பொதுப் பணிக்காகவே ஜ்: தம் பொழுதையெல்லாம் செலவழித் தார். "சுயநலமோ, பேர் புகழோ நாடாத சமூகப் பணியே

Page 75
Í 44
சுகம் தரும் சுகந்த மணமாகும்" என்ற மனிதாபிமானக் கவிஞர் மீலாஸின் கருத்துக்கு இலக்கணமாய் இலங்கினார். பணமல்ல, பணியேதான் இவரின் வாழ்வின் இலட்சியமாய்த் திகழ்கிறது.
சற்றுப் பிணியுற்றிருந்தாலும் தமது பணியை மருத்துவப் பணியாய் மாற்றியுள்ளார். யூனானி வைத்திய முன்னோடி லுக்மானுல் ஹக்கீம் அவர்களின் வைத்திய முறையைத் தழுவி "இஸ்மஸ்மா' வைத்தியத்தில் ஈடுபட்டுள்ளார். பெரி யார் பூக்கோயாத் தங்கள் அவர்களே இவரின் வைத்தியக் குரு. அல்லாஹ் அருளால் ஊரிலும், வெளியூர்களிலும் இவ ரின் வைத்தியத்தால் குணமடைந்தவர் ஆயிரமாயிர முண்டு,
"படிக்கும் காலத்திலேயே அறிவுப் பணி புரிவதை இலட் சியமாகக் கொண்டியங்கிய சட்டத்தரணி எஸ். எம் ஹனிபா வின் பெரு முயற்சியால் அன்று கல்ஹின்னையில் அமைக்கம் பட்ட கல்ஹின்னை மாணவர் சங்கமும், அதன் வாசிக சாலையுமே என்னை எழுத்தாளனாய், சமூகப் பணியாற்று வதில் ஆர்வமுள்ளவனாய் ஆக்கின' என்பதை நன்றியுணர் வோடு நினைவு கூர்கிறார்.
எல்லோரினதும் அன்புக்குரிய "மாமா' ஹனிபா அக் குறணை, குருகொடை முஹாம்திரம்லா கெதர மர்ஹகும் நூர் முஹம்மது லெப்பை மர்ஹஸீமா ஜெமீலா உம்மா தம் பதிகளின் ஏக புதல்வன். இவர் தமது தாய் மாமன் பிரபல சர்வாங்க வைத்தியர் ஈ. எல். யூனுஸ் லெப்பையின் மகள் நபீஸாவை திருமணம் செய்தார். மூன்று புதல்வர்களும் மூன்று புதல்விகளும் இவருக்குண்டு. மனைவி இறையடி சேர்ந்ததனால், குருந்துகொள்ளையைச் சேர்ந்த மாஜிதா என்பவரை தன் வாழ்வின் துணையாய் இப்பொழுது ஏற்றுள்ளார்.

கவியரசு, கல்ஹின்னை எம்.எச். எம். ஹலீம்தீன் கல்லூட்டுஆலிம்" மர்ஹகும் அல்ஹாஜ் ஹமீத் லெப்பை,பெரியார் உமறுலெப்பை ஹாஜியார் (கடே அப்பச்சி) அவர் களின் மகள் மர் ஹகுமா ஹாஜி யானி பாத்துமுத்து ஆகியோரின் கடைசி மகன் கவியரசு ஹலீம்தீன்.
ஆங்கில ஆசிரியராகப் பணியை ஆரம்பித்த இவர், சுமார் 25 வருடங்களாக எழுத்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றார். முதலில், தமிழ் மொழியில் மாத்திரம் எழுதிய இவர், இப்பொழுது ஆங்கிலத்திலும் கவிதை எழுது( .............سسة .கிறார்” ܥܣ܀
பிரசங்க மேடைகள், வானொலிக் கவியரங்குகள், சன் மார்க்க விழாக் கவியரங்கங்களிலெல்லாம், இவரின் உரைகள் கலகலப்பூட்டும். கல்லூட்டுக் கவிராயர், அபூபஹ்மி. செல்வம், அல்ஹஜர் என்ற புனைபெயர்களில் எழுதும் இவர் சமூக அவலங்களையும் அநீதிகளையும் ஆணவப் போக்குகளை யும் தயங்காது சாடுபவர்.
சீர்திருத்தக் கருத்துக்களை "மனிதாபிமானம்" என்ற
தேனில் கரைத்து, கவிதையாய்த் தரும் இப் பன்னுரல் ஆசிரியர் நாட்டுப்பற்றையும், பிறந்த ஊர்ப் பற்றையும் அதிகம் ஊக்குவிப்பவர். இவர் நகைச் சுவை ததும்பப் பேசி னாலும், ஒவ்வாத கருத்துக்களை அஞ்சாது எதிர்ப்பவர். இஸ்லாமியத் தனித்துவத்தைப் பேண வேண்டுமெனத் துடிப்பவர்.
"கல்ஹின்னை என்கின்ற போதினிலே
கல்பில் ஒர் குளிர்ச்சி பிறக்குது தன்னுலே?" என அடிக்கடி கூறுவார். நாட்டுப் பற்றுக்கு அடித்தளமான ஊர்ப்பற்றே, ஒற்றுமை ஐக்கியம் சகோதர பாசம் என்ப வற்றை உள்ளடக்கியுள்ளன என்பதே இவரின் கருத்து. -4ta

Page 76
jad
தெல்தோட்டையின் ஒய்வு பெற்ற ஆராச்சியாரி அல்ஹாஜ் என்.எம். அப்துல் காதர் ஹாஜியானி ஜெய்னம்பு ஆகியோரின் மூத்த மகள் ஆசிரியை ஜெமீலா இவரின் இல்லத் தரசியாவார். இவர் கல்ஹின்னை பள்ளியக் கொட்டுவ முஸ்லிம் வித்தியாலயத்தின் உப அதிபராவார். முஹம்மது பஹ்மி, பாத்திமா பஸிலா, பாத்திமா பரீலா, முஹம்மது ஹில்மி ஆகிய நால்வரும் கவியரசு ஹலீம்தீனின் வாரிசுகள்.
இருபது வருட ஆசிரிய சேவையை விட்டகன்று, கவியரசு ஹலீம்தீன் இப்பொழுது தனது அன்புத் தமையனார் அல்ஹாஜ் எம்.எச்.எம். காஸிம் அவர்களுடன், மாத்தளை யில் "டீமாஸ்" என்ற பெயரில் இயங்கும் வர்த்தகத்தில் ஈடு பட்டுள்ளார்.
வளரும் எழுத்தாளர்
எம். கே. எம். அமானுல்லாஹ் : இ வ ரி அல்ஹாஜ் எம். டி. கமால்தீன் அவர்களின் மூத்த புதல்வர். அல்ஹாஜ் மெளலவி எச். சலாஹ"த்தீன் அவர்களின் மூத்த மகள் மெளலவியா சிபாவை திருமணம் செய்துள்ளார். வர்த்தகத் தில் ஈடுபட்டிருக்கிறார். இவர் அண்மையில் எழுதிய நூல் "வாழ்க்கையில் நிம்மதி', என்பதாகும்.
எஸ். எச். எம். நயீம் : இவர் மர்ஹஅம் எம். எல். சாஹ"சல் ஹமீத் அவர்களின் புதல்வரும், பொதுப் பணி களில் மிகுந்த ஈடுபாடுள்ள அளவத்தை எஸ். எச். எம். ஜ"னைதீனின் தம்பியுமாவார். இவர் மர்ஹ9ம் ஏ. எம். சஹாப்தீன் ஹாஜியாரின் மகள் அணிமாவைத் திருமணம் செல்ப்துள்ளார். இவர் "மீஹான்" என்ற புனைபெயரில், சிறுகதைகள் எழுதிவருகிறார். சமூகச் சீர்கேடுகளும், அநீதி களுமே இவரின் கதைகளில் அநேகமாக இழையோடும்.
ப்ஹ்மி ஹலீம்தீன் : இவர் கவியரசு எம். எச். எம். ஹலீம்தீன் ஆசிரியை ஜெமீலா தம்பதிகளின் மூத்த புதல்வர் புதுக்கவிதை எழுதுவதில் திறமையுள்ளவர். இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வெளியிடும் மாதாந்த சஞ்சிகை

ᏧᏪ
"அல்ஹஸனாத்தின் ஆசிரியர் குழு பரிசீலனைக்கு எடுத்துத் கொண்ட இளம் கவிஞர்களின் சுமார் ஐம்பது புதுக்கவிதை களில், இவர் எழுதியது இரண்டாம் இடத்தைப் பெற்றது. இப்பொழுது ஜப்பானில் தொழில் புரிகிறார். இவர் பூரீலங்கா முஸ்லிம் மாணவர் சம்மேளனத்தின் கல்ஹின்னைக் கிளையின் முன்னாள் காரியதரிசி.
எம். எச். எஸ். ஹக் இவர் ஒரு மாணவர், நாவலாசிரி யர் "மாமா'வின் மூத்த புதல்வன். "கலைமுத்து" என்ற சஞ்சி கையை மாதா மாதம் ரோனியோவில்" வெளியிடுகிறார்.
எம். இஸட். எம் நயீம்: இவர் மர்ஹஅம் எம். சி. எம். ஸ"பைர் அவர்களின் மகனும் "அண்ணாவி அப்பா" என அழைக்கப்பட்டவரின் பேரனுமாவார். இவர் ஒரு மாணவர், கலை முத்தின் இணையாசிரியர்.
எம். ரி. எம். ஸ்க்கி: இவர் M. C. M. தாஜுதீனின் மூத்த மகன். எழுதும், எழுதத் துடிக்கும் இளைஞர் அறிவு மொட்டுக்கள் என்ற மாதாந்த சஞ்சிகையை ரோனியோ அச்சில் வெளியிட்டவர்.
எம். ஆர். எம். ரிஸ்வீன்: இவர் ரஸ்ஸாக்-ஹலிஸா தம்பதிகளின் புதல்வர். தடிப்புள்ள இளைஞர். அறிவு மொட்டுக்களின் இணையாசிரியர்களில் ஒருவர்.
எஸ். எம். முனாப் இவர் எச். எம். சஹாப்தீன் ஹாஜி யார் அவர்களின் மகன். அறிவு மொட்டுக்களின் ஆசிரியர். எழுத்தாற்றலுள்ளவர்.
ஸரினா பர்ஹான்: இவர் எம். கே. எம். அஸிஸ் அவர் களின் மகள் புதுக்கவிதை, கதை, கட்டுரை எழுதி வருகிறார் இவர் பரகஹதெனியைச் சேர்ந்த எம். யூ. எம். பர்ஹான் அவர்களைத் திருமணம் செய்துள்ளார்.
ஆயிஷா நவ்சாத் இவர் "ராலஹமி என அழைக்கப் பட்ட கல்ஹின்னையிலிருந்து முதன் முதலில் போலிஸ் உத்தி யோகத்தில் சேர்ந்த மர்ஹலிம் எம். கே. எம். ஜெமால்தீன்

Page 77
d
அவர்களின் மகளாகும். ஜனாப் நவ்சாத் என்பவரைத் திரு மணம் புரிந்துள்ளார். இவரும் புதுக்கவிதை, கட்டுரை எழுது வதில் ஈடுபாடுள்ளவர். இவரின் தங்கை ஸல்பிகா ஜெமால் தீனும் எழுத்துலகப் பிரவேசத்தில் இப்பொழுதுதான் அடி யெடுத்து வைத்துள்ளார்.
ஒரே பார்வையில் பல பழைய குரும்பங்கள் கவியரசு, கல்ஹின்னை, எம். எச். எம். ஹலீம்தீன்
1. கல்ஹின்னையின் தலைமகன் வாப்புக்கண்டின் குடும்பம், 2. தலைமகன் வாப்புக்கண்டின் வாரிசுகள், 3. அளவத்தைக் குடும்பம், 4. இஸ்மாயில் கண்டின் குடும்பம் 5. ஆராச்சி வீட்டுக் குடும்பம் (எஸ்.எம்.எஸ். குடும்பம் என்றும் கூறப்படுகிறது,) 6. கடேக் குடும்பம் 7. கல்லூட்டுக் குடும்பம், 8. மத்திச அப்பச்சி வீட்டுக் குடும்பம், 9. பெரிசாரி வீட்டுக் குடும்பம், 10. வாத்தியார் வீட்டுக் குடும்பம், 11. உள்பத்தப் பிட்டி முஹாந்திரம் லாகெதறக் குடும்பம், 12. "ஆனாக் கானா’ வீட்டுக் குடும்பம், 13. சுப்பனார் வீட்டுக் குடும்பம், 14. கட்டாப்புக் குடும்பம், 15. கசாவத்தையார் வீட்டுக் குடும்பம், 16. அறபி வீட்டுக் குடும்பம், 17. ஸ்ாறட வீட்டுக் குடும்பம், 18. "ஸைட் துரை வீட்டுக் குடும்பம், 19. வன்னியார் வீட்டுக் குடும்பம், 20. பறகஹதெனிய லெப்பை வீட்டுக் குடும்பம், (பழைய குடும்பங்கள் பற்றி கவியரசு கல்ஹின்னை ஹலீம்தீன் அயராதுழைத்துத் திரட்டி யுள்ள விபரங்கள், தனி நூலாக வெளிவரும்.)

பாரம்பரிய வழிமுறைகள் கவிமணி எஸ். சி. எம். ஸுபைர்
எழில் தவழ் கல்ஹின்னையின் முதல் குடிமகன், ஏற்ற மிகும் பண்பாளரான வாப்புக்கண்டு என்பார். அவர் வழி வந்த அனைத்து நல்லோரும் அழகிய கல்ஹின்னையின் நிலைத்த பண்பாட்டுப் பாதையை உருவாக்குவதில் முன் நின்று உழைத்தனர். முன்மாதிரியாகத் திகழ்ந்தனர். அவர் தம் உழைப்பினாலும், அழகிய பண்பாட்டினாலும் கல் ஹின்னை மக்கள் நிறைவுதரும் மரபு வழிவந்த பாரம்பரியப் பழக்க வழக்கங்களால் தம்மை நேர் வழியிலே நெறிப்படுத்தி வாழ்ந்து வந்தனர்.
சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்து வரும்போதும், சீரான வாழ்க்கை முறையாலும், சமய கலாசாரங்களினாலும், சமூகப் பழக்க வழக்கங்களாலும் மலர்ந்த தனித்துவப் பண். பாட்டைச் சிறப்பாகப் பாதுகாத்து வரும் இக் கிராமம் மற்றும் கிராமங்களுக்கேயொரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. அத்துடன் இந்தத் தனித்துவச் சிறப்பு கல்ஹின்னையைக் கட்டுக்கோப்புள்ள ஒரு சமுதாய மக்களின் வாழ்வகமாக ஆக்கி வைத்தது என்பதும் மிகைப்பட்ட கூற்றாக முடியாது. மறையுணர்வும், அதன் வழியெழுந்த ஒழுக்கப் பண்புகளும் வழிநடாத்த வாழ்ந்த சான்றோரான நம் மூதாதையர் கண்ணியமும், கட்டுப்பாடும் மிளிரும் ஒரு வாழ்க்கை முறையை நமக்குப் பாரம்பரியமாக விட்டுச் சென்றுள்ளனர்.
கல்ஹின்னையில் முஸ்லிம்கள் குடியேறி ஏறத்தாழ இருநூறு வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆரம்ப காலத் தில் குடியேறிய மக்களே சன்மார்க்கப் பேணுதல் உள்ளவர் களாகத் திகழ்ந்தமை இவ்வூரின் பண்பான வளர்ச்சிக்கு அத்திவாரமாக அமைந்தது எனலாம். அக்காலத்திலிருந்தே இவ்வூர் மக்களுக்கு இறையருட் செல்வர்களாக விளங்கிய

Page 78
isið
சமயப் பெருமக்கள் தொடர்பும் உறுதுணையாக அமைந்து வழி நடாத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
முதலில், நம் அயலூரான கசாவத்தை என்னும் ஊரில் பிறந்து, மத்திய இலங்கையின் மறைஞான ஒளிவிளக்காகத் திகழ்ந்த ஸெய்யிதுல் உலமா அல்ஹாஜ் முஹம்மது ஆலிம் ஸாஹிப் (கசாவத்தை ஆலிம் அப்பா) அவர்களுடைய தொடர்பை விசேஷமாகக் குறிப்பிட வேண்டும். இலங்கை முஸ்லிம் மக்களின் மறுமலர்ச்சித் தந்தையென விளங்கிய அறிஞர் சித்தி லெப்பை அவர்களுக்கு, மார்க்கப் பிரச்சினை கள் எழும்போது ஆலோசனை கூறி வழி நடாத்திய இந்த மேதையே, கல்ஹின்னையின் சமயக் கல்வி மலர்ச்சிக்கும், சால்புயரும் பண்பாட்டு எழுச்சிக்கும் வழிகாட்டி வளமூட்டிய வர். மர்ஹம்ை அல்ஹாஜ் ஆதம் பிள்ளை உமறு லெப்பை அவர்கள், இந்தப் பெரியாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு, ஆலோசனைகள் பெற்றுக் குர்ஆன் மத்ரஸா ஆரம்பித்தும், பள்ளிவாசல் பரிபாலன முறையையும், சமூக ஒழுக்க நெறிகளையும் அறிந்தும் சமூகம் மலரும் வழியில், உழைத்தனர்.
இவர்களைப் போன்றே தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த மார்க்க மேதைகளான "பாவா ஷெய்கு சுலை மானுல் காதிரி வலியுல்லாஹ் அவர்களும், அவர்களின் சந்த தியினரதும், ஷெய்கு அபூ சாலி தங்கள் அவர்களதும், அவர் களின் சந்ததியினரதும் மறைஞானப் போதனைகளும், வழி காட்டலும் இவ்வூரின் சமய நெறிச் செல்லும் சீரான வாழ்க்கைக்கு வழியமைத்தன. இவர்களைத் தொடர்ந்து மட்டக்களப்பு அக்கரைப்பற்றைச் சேர்ந்த யூசுப் ஆலிம் ஸாஹிப் அவர்கள், வெலிகமை அறபு மத்ரஸா அதிபராயி ருந்த அல்ஹாஜ் ஸகரிய்யா ஆலிம் ஸாஹிப் அவர்கள் அல் ஹாஜ் ஸெய்யித் யாஸின் மெளலானா அவர்கள் முதலான மார்க்கப் பெரியார்களின் வருகையாலும் சீரான வழிகாட்ட லாலும் இவ்வூர் பண்பாட்டு நலம் பல பெற்று வந்தது.
குறிப்பாகச் சொல்வதானால், மார்க்க அறிஞர்களை மதித்து, மரியாதை செய்து மறைவழி வாழ்வில் சிறந்து

isi
விளங்கி வந்தது, நமதுரர் கல்ஹின்னை. இத்தகைய நல்லோர் தொடர்பு, நம் மூதாதையர்களை வழி நடத்தியதால் அவர் களின் எண்ணமும், செயலும் உழைப்பும் நேர் வழியிலே எழுந்தன. மஸ்ஜிதிலும், வீடுகளிலும் திங்கள் வெள்ளி இரவுகளில் விசேஷ “றாத்திப், புர்தா" ஓதுதல் போன்ற பக்தியை வளர்க்கும் நிகழ்ச்சிகளும், மார்க்கப் பிரசங்கங்களும் நிகழ்த்தப்பட்டுக் கட்டுக் கோப்பான ஓர் அமைப்பு உருவாகி வந்தது. இந்த அடிப்படையிலே, கல்ஹின்னையின் நிர்வாக அமைப்புக்கு ஆதாரமான ஒரு நிகழ்வாக, தீனுக்குப் புத்து யிரூட்டிய மேதையான முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பேரில் ஒதப்பட்டு வந்த மெளலித் அமைந்தது.
"பள்ளிக் கந்தூரி" என்ற பெயரில் நிகழ்ந்த இந்த 'மெளலித்’ ரபியுல் ஆகிர் மாதம், முதல் பன்னிரண்டு நாட் களும் நடைபெறும். இந்தக் சந்தூரி ஆரம்ப காலத்தில் அக் குறணைப் பெரிய பள்ளிவாசலுடனே தொடர்புபட்டிருந் தது. பின்னர், வசதி நோக்கி, கல்ஹின்னையின் ஒர் எல்லை யான ஹல்கொல்லைப் பள்ளிவாசலுடன், அத்தொடர்பு ஏற் படுத்தப்பட்டது. அங்கும் ஏற்பட்ட சில வசதிக் குறைவு களின் பிரதிபலிப்பே, கல்ஹின்னையின் முதல் பள்ளிவாசல் உருவாகவும் அங்கேயே இந்தப் பள்ளிக் கந்தூரி தொடர்ந்து நடைபெறவும் காரணமாக அமைந்தது. இந்த அடிப்படை யில் நோக்கும்போது, இந்தப் பள்ளிக் கந்தூரியே கல் ஹின்னைப் பள்ளி வாசலின் ஆக்கத்திற்கும், அதன் நிர்வாக அமைப்புக்கும் உதவும் ஒரு வழிமுறையாக அமைந்து, சீரான தோர் கலாசாரப் பின்னணியையும் உருவாக்கித் தந்துள்ளது.
இக் கந்தூரியின் நடைமுறை அமைப்பும் சிந்திக்கற் பாலதாகும். அதாவது, முதல் பதினொரு நாட்களிலும் கந்தூரியை நடாத்துவதற்கு முழு ஊர் மக்களையும் குடும்ப அடிப்படையில் பதினொரு பிரிவுகளாகப் பிரித்தனர். இவ்வாறு பிரிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பப் பிரிவும் ஒவ் வொரு "பொங்கல்" என வழங்கப்பட்டு வந்தது.

Page 79
isa
உதாரணமாக, முதலாம் பொங்கலைச் சேர்ந்தவர்கள் முதலாம் நாள் தங்கள் வீட்டிலே சோறு சமைத்துப் பள்ளி வாசலுக்குக் கொண்டு செல்வர். ஊரில் வாழ் மக்கள் எல் லோருக்கும் பகிர்ந்தளிக்கக்கூடிய அளவுக்குச் சோறு சமைக் கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பள்ளிவாசலிலே மெளலித் ஒதிய பிறகு, ஊர் மக்களுக்குச் சோறு பங்கிட்டுக் கொடுக்கப்படும். இவ்வாறு இந்தப் பொங்கல் ஒவ்வொன்றி னாலும் பதினொரு நாட்களும் கந்தூரி ஆக்கி அன்னதானம் வழங்கப்படும். ப ன் னி ர ண் டாம் நாள், பதினொரு பொங்கலையும் சேர்ந்த அனைவரும் சேர்ந்து ஆக்கி அளிப்பர் இந்தப் பொங்கல் ஒவ்வொன்றினும் மெளலித் நடைபெறும் போது அந்தப் பொங் கலைச் சேர்ந்த திருமணமான ஆண் களிடமிருந்து பள்ளிச் செலவுகளுக்காக "எண்ணெய்க் காசு" என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணம் வசூலிக்கப் படும். அவ்வாறு "எண்ணெய்க் காசு கொடுத்து வந்தவர் களே எங்களூர்ப் பள்ளிவாசல் ஜமாஅத் அங்கத்தவர்களாகக் கணிக்கப்பட்டு வருவது பாரம்பரிய ஊர் வழக்கமாகும். பெரும்பாலும், திருமணம் ஒரு மனிதனைப் பொறுப்புணர் வும். கட்டுப்பாடும், பண்பு நலனும் சேர்ந்து பக்குவமுள்ளவ ராக ஆக்கும் என்று உணரப்பட்டதாலேயே இவ்வழக்கம் உருவாகியுள்ளது. w
மற்றும், எம்பெருமானார் பிறந்த மாதமாகிய ரபியுல் அவ்வல் மாதத்தில் பெருமானார் அவர்கள் பேரில் மெளலித் நடைபெறுவதும் எங்களூர் வழக்கமாகும். மாதத்தின் முதல் கந்தூரி பள்ளி வாசலில் நடைபெற்று ஊர் மக்களுக்கு அன்ன தானமும் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து மாதம் முழுவதும் பல இல்லங்களிலும் மெளலித் ஓதி விருந்து வழங்கப்படும். மேலும், ரஜப் மாதத்தில் "மிஃறாஜ்" தினத்தை நினைவு கூரும் முகமாகவும் பள்ளிவாசலில் மெளலிது ஓதி அன்னதானமும் வழங்கப்படும்.
கந்தூரி என்னும் போது, எங்களூரில் நடந்து வந்த "காட்டுக் கந்தூரி நிகழ்ச்சியும் நினைவு கூரத்தக்கதாகும். ஊரரில் ஏற்படும் "பலாய் முஸிபத்துகள்" பயங்கர நோய்கள்,

5
ஆபத்துகளில் இருந்து பாதுகாப்புத் தேடும் பொருட்டு, 'ஹில்று அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பேரில் இந்த மெளலித் ஒதப்பட்டு, அல்லாஹ்விடம் துஆ கேட்கப்படும். இந்தக் கந்தூரி ஊரின் ஒதுக்குப் புறமாகிய காட்டுப் பகுதி களில் ஒதப்பட்டு வந்தது. குறிப்பாக ஹல்கொல்லை ஊடா கச் கெல்லும் "பிங் ஒயா" கரையிலும் "கல்வேலி' எனப்படும் ஊரின் ஒரு புற எல்லையிலும், "கோவில் முதுன" என்னு மிடத்திலுள்ள கல்லிலும் இந்தக் கந்தூரி நிகழ்ந்து வந்தது. அடுத்து கந்தூரிக் காலங்களிலும் ஏனைய வசதியான நாட் களிலும் "ஹிபாய் றாத்திப்" என்றதொரு பக்தி நிகழ்ச்சியும் எங்களூரில் நடைபெற்று வந்தது. கெளதுல் அஃலம் முஹியித் தீன் அப்துல் காதிர் ஜிலானி அவர்களுடைய அன்பைப் பெற்று, அல்லாஹ்வின் அருளில் தோய்ந்து, ஏற்றமிகப் பெற்று விளங்கிய இறையருட் செல்வர், ஸுல்தானுல் ஆரி பீன் அஹமதுல் கபீருர் றிபாயி ஆண்டகை அவர்கள் தான் இந்த ராத்திப் ஒதும் வழக்கத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
இந்த "றிபாய் றாத்திபை" இலங்கையில் அறிமுகப்படுத் தியவரும், தென்னிந்தியாவைச் சேர்ந்த மார்க்க மேதை அபூ சாலிஹ் தங்கள் அவர்களே என்பர். எங்கள் ஊரான கல்ஹின்னையிலும் அவர்களே இதனை அறிமுகப்படுத்தி னார். மர்ஹலிம் நாகூர் பிச்சை லெப்பை அவர்களை றாத்தி புக்குத் தலைமை வகிக்கும் கலீபாவாகக் கொண்டு இங்கு இந்த றாத்திப் நிகழ்ந்து வந்தது. பக்தி சிரத்தையோடு ஒதப்பட்டு வந்த இந்த றாத்திப் ஒதும் நிகழ்ச்சி, இப்பொழுது அருகி விட்டது. றாத்திப் எனும் போது ரமழான் மாதத் தில் லைலதுல் கத்ர் இரவிற் செய்யப்படும் விசேஷ பிரார்த் தனைகள் உடன் ஜலாலியா றாத்திப்" ஓதப்படுவதும் குறிப் பிடத்தக்கதாகும்
இத்தகைய அடிப்படையில், ஸபர் மாதம் "வித்திரியா?
ஒதுவதும், ஒல்வொரு மாதமும் வெள்ளி, திங்கள், இரவு களில் பள்ளி வாசலில் "புர்தா", "பத்ர் மெளலித்’ போன்ற

Page 80
154
நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்ததும் நினைவு கூரத்தக்க தாகும். பக்தி ததும்பும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்த தோடு, பக்தி கலந்து மக்களை நல்வழிச் செலுத்தும் பயன் உள்ள பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற்று வந்தன.
நமது கலாசாரப் பின்னணியில் வளர்ந்த இந்நிகழ்ச்சி களில் "கம்படி" என்று வழங்கிய கோலாட்ட நிகழ்ச்சியும், 'சீனடி", சிலம்படி, வாள்வீச்சு போன்ற வீரத்தை விளக்கும் நிகழ்ச்சிகளும், எண்ண இனிக்கும் நிகழ்ச்சிகளாகும். இவற் றைப் போலவே மெளலித் வீடுகளில் “பதம்’ என்று அழைக்கப் பட்ட பக்தி கீதம் இசைக்கும் நிகழ்ச்சிகளும், திருமண வீட்டிலே மணமக்களை வாழ்த்திப் பாடும் "சோபனம்" என்னும் பாடல் நிகழ்ச்சிகளும் மக்களைப் பரவசப்படுத்து வனவாகும். எவ்வாறு நோக்கினும், இங்கு கூறப்பட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மக்களைப் பண்படுத்தி, வழிநடாத் தும் பக்திச் சுவை நறுமலர் மாலையை அலங்கரிக்கும் தங்கச் சரடுகள் போல இழையோடி விளங்குவதைக் காணலாம். எனவே, இந்த நிகழ்ச்சிகள் மக்களை இறையச்சம் கொண்டு நிறைவாழ்வு வாழும் நெறிப்படுத்தி வந்த பாரம்பரியப் பழக்க வழக்கங்களாகத் திகழ்ந்து வந்தன, என்பதை நாம் அவதானிக்கலாம்.
இத்தகைய நிகழ்ச்சிகளிற் பல நம் மத்தியில் மறக்கப் பட்டு வருவது கலாசாரப் பேரிழப்பாக அமைவதோடு இறை யருள் சொரிவதை விட்டும் நம்மைத் தூரப் படுத்துவது மாகும். ஆகவே, இவற்றை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வது நமக்குப் பெரும் பயன் தருவதாக அமையும்.

எங்கள் ஊர் கல்ஹின்னை
கவியரசு, கல்ஹின்னை எம். எச். எம். ஹலீம்தீன்
எங்களூர் கல்ஹின்னை
இயற்கையெழில் தவழ்ந்திழையும் எங்களூர் இறையருளால்
ஏற்றமுறும் கல்வியறிவில் சங்கத்தமிழ் நல்லிலக்கியத்தில்
சந்தனத் தோப்பாய் இன்று இங்கிதமுற்று ஒளிர்கிறதே!
பேருலமாக்கள் அறிஞர்கள்
புகழ்பூத்த மருத்துவர்கள் சீரறிவைப் போதிக்கும்
சிறந்தநல் ஆசான்கள் சேர்புகழ்க் கவிஞர்கள்
செல்வம்நிறை சீமான்கள் ஆர்வமுடன் சமூகப்பணிகளை
ஆற்றுவோர்கள் அனேகருண்டு.
சிங்களக் கிராமங்கள்
சூழவே இருந்தாலும் பங்கங்கள் ஏதுமின்றிப்
பேணும் இன ஐக்கியத்தில் சங்கமித்தே யொன்றாய்ச்
சகோதர பாசடிணர்வுடனே எங்களூர் மக்களெல்லோரும்
இணைந்து வாழ்வதும் ஓர் அழகே!

Page 81
குறிஞ்சியும் மருதமொன்றாகக்
குடியிருக்கும் மலையகத்தின் அரும்தலையகமாம் கண்டிக்கு
அண்மையிலே அமைந்துள்ள சிறுகிராமம் கல்ஹின்னையின்
சிறப்புக்குக் காரணிகள் நிறையவுண்டு என்றாலும்,
நினைக்கின்றேன்-சிலவற்றை
தலைமகளுர் வாப்புக்கண்டின்
தூய்மைநிறை நல்லெண்ணத்தால் நிலைகுலையா அவர்தம்பி
நல் இஸ்மாயில் கண்டவரின் நலம்விளையும் நடவடிக்கையால்
நீதி நேர்மை தவறாத பல பெருந்தகைகள் சேவையால்
பொலிவடைந்தது நம்பிறந்தகமே!
இந்த நல்ல பேறுகளை
இணையில்லாத் தொண்டுகளை
நிந்தனைசெய்து ஒதுக்காமல்
நன்கு ஆய்ந்து அறிவதுடன்
சிந்தனையிலே நாம் பதித்துச்
சுயநலம்போலி கெளரவம்விட்டு
சொந்த ஊரின் நன்மைக்காய்
சேவைகள் தொடரக் கரம்கோப்போம்!
அல்ஹம்து லில்லாஹ் ஸல்லல்லாஹ" அலா முஹம்மத் ஸல்லல்லாஹா அலைஹி வஸல்லம்,


Page 82


Page 83
wer tests: rests:
6): கல்ஹின்னை யத்தில், 1974ம் ஆண்டு நை விழாவில் சிறப்புப் பேச்சாளரா றிய தமிழகத்தின் பிரபல கவிஞ சிரியர் கா. அப்துல் கபூர் அ கனிந்து ஒளிர்ந்த அனுபவப் பி
"நெஞ்சத்தைக் கொ
எழில் கொஞ்சி விளையாடு இந்த மாலைப் பொழுதினிே ஹின்னை' என்பது முதலி: பதத்தை நோக்கும் போது ' இறைவனின் முதல் ஆணை கடனம் பொலிவு பெறுகிறது மத்தின் பேருக்கேற்றபடி அல் கத்தைக் கற்றவர்கள் கல்வி தாளர்கள் இங்கு அநேகர் போது இக் கிராமமும் இப் பெற்றவர்கள் என்ற என் முதற்கண் தெரிவித்துக் கெ
"இன்று கல்ஹின்ை நோக்கும்போது "கல்ஹின்ை என்று கூறுவது மிகப் ெ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி சு. வி ஹின்னை அல்மனார் மஹா சிறப்பு மலருக்கு வழங்கிய இதே கருத்தை அவர் முன்பு தானர் சங்கம் கண்டியில் நடா வித்தார்.
dóS.: éóry Sego: se
Fífl FMH) eIbu T, 25-00

oy: 7: SE27* 1927
அல்-மனார் மகா வித்தியால டபெற்ற பிரமாண்டமான மீலாத் "கக் கலந்துகொண்டு உாையாற் நர் "இறையருட் கவிமணி பேரா அவர்களின் தெளிந்த ஆய்வில் பிரகடனம்,
ள்ளை கொள்ளும் இயற்கை ம் இச் சூழலிலே மயக்கும் ல, நயக்கும் சொல்லாம் "கல் ல் இணைந்துள்ள கல் எனும் கல்' அதாவது "படி'.என்ற ாயான ஈடு இணையிலாப் பிர து. ஆகவே, இவ்வரும் கிரா ப்லாஹ் உதவியால் சன்மார்க் மான்கள், கவிஞர்கள், எழுத் உண்டு என்பதை அறியும் பெருங் மக்களும் பே [ိုနီ ရှီရှီမှီနီ၊ မန္တိနှီ ாள்கின்றேன்"
னயில் வளரும் தமிழ்தனை ன மலையகத்தின் "தமிழகம்" பாருந்தும்' என்று முன்நாள் கத் துணைவேந்தர் அமரர். த்தியானந்தன் அவர்கள் கல் வித்தியாலயத்தின் பொன்விழா கட்டுரையை முடித்துள்ளார். இலங்கை இஸ்லாமிய எழுத் த்திய கூட்டமொன்றிலும் தெரி
2: Sets: rer (9.
Milath Printers, Madras.