கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அட்டைப் படங்கள்

Page 1
||r|l||||L,
 


Page 2


Page 3

அட்டைப் படங்கள்
தொகுத்தவர்: டொமினிக் ஜீவா
இது
LONINGOdyLificsVy
201-1/1, பூரீகதிரேசன் வீதி, கொழும்பு - 13. தொலைபேசி: 320721 E-Mail: panthalasltnet.lk

Page 4
டொமினிக் ஜீவா அவர்களின் பவள விழா ஆண்டு ஞாபகார்த்தமாக. இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு
44 ~ மதிக்கப்படத் தக்கவர்களின் மல்லிகை அட்டைப் படக் குறிப்புகள்
வெளியீடு : முதற்பதிப்பு
பெப்ரவரி - 2002.
Li++6, 159 + XIV
விலை: 175/=
அட்டைப் படவடிவமைப்பு,
கணினி அச்சமைப்பு: எஸ். சித்திராங்கனி
ISBN: 955-8250-16-3
அச்சிட்டோர்: யு. கே. பிரிண்டர்ஸ், 98 A விவேகானந்த மேடு, கொழும்பு ~ 13. தொலைபேசி: 344046, 074~614153

திட்டோ, பாராட்டோ நான் கவனிக்கப்படுகிறேன்!
இளம் வயசில் நான் யாழ்ப்பாணத்துப் புத்தக சாலையில் தான் அதிகம் மினைக்கெடுவேன். நூல்களை வாங்கி வாசிக்கக் கூடிய பொருளாதார வசதி
அப்பொழுது எனக்கிருக்கவில்லை.
ஆனால், ஆர்வம் மிக்க ஒருவகை உந்துதலின் காரணமாக நான் தொழில் செய்து வந்த நிலையத்திற்கு வெகு அண்மையிலுள்ள புத்தகக் கடைகளுக்குச் சென்று அங்குள்ள புத்தகங்களைச் சஞ்சிகைகளை மேலோட்டமாகச் சும்மா சும்மா பார்த்து மகிழ்வேன். அப்படிப் பார்ப்பதில் கொள்ளை ஆசை எனக்கு.
பிரபல சஞ்சிகைகளின் அப்போதைய விலை நாலனாதான். நமது காசுக்கு இருபத்தைந்து சதம். இத்தனை மலிவு விற்பனையில் இங்கு சென்னை விலைக்கே யாழ்ப்பாணத்துக் கடைத் தெருக்களில் இத்தகைய சஞ்சிகைகள் கிடைக்கப் பெற வாய்ப்பிருந்த போதிலும் கூட சொந்தமாக வாங்கி வாசிக்கக் கையில் போதிய பணமிருக்காது. சொந்தமாக்கிக் கொள்ளக் கையில் காசு இருக்காது.
பத்துச் சதக் காசிருந்தால் மதிய போசனம் உண்ணும் காலமது.
எனவே அத்தகைய இதழ்களைப் புரட்டிப் பார்ப்பதுடன் என்னுடைய வாசிப்புப் பசி அடங்கிவிடும்.
iii

Page 5
ஆனால், அவற்றிலுள்ள உள்ளடக்கத்தை ஓரளவு கிரகித்து மனசில் பதிய வைத்துக் கொள்வேன். அந்தக் காலத்தில் தமிழகத்திலிருந்து வெளிவரும் பல சஞ்சிகைகளில் அரசியல் மேதைகளின் படங்கள் அட்டைப் படங்களாகப் பல வண்ண வடிவங்களில் வெளியாகியிருக்கும். அரசியல் தலைவர்களின் உருவங்கள் மாத்திரமல்ல கோகிலகான இசைவாணி, எம். எஸ, ஏ. கே. செட்டியார், பட்டம்மாள், எஸ். எஸ். வாசன், ஜி. டி. நாயுடு, என். எஸ். கிருஷ்ணன், பாகவதர், முசிரி சுப்பிரமணிய ஐயர். ராஜரத்தினம் பிள்ளை. சுந்தராம்பாள். டி. கே. சண்முகம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த மேன்மக்களின் புகைப்படங்களை அட்டைப் படங்களில் வெளியிட்டு வைத்து அன்னாரைக் கனம் பண்ணியதுடன், வாசகப் பெருமக்களுக்கும் அவர்களது அருமை பெருமைகளைச் சொல்லி அறிமுகப் படுத்தி வைத்தன, அப்பிரசுரங்கள்.
இந்தப் படிமம் என் இளவயசு அடிநெஞ்சில் அப்படியே படிந்து போய் விட்டது என இப்பொழுது யோசிக்கும் வேளையில் என்னால் உணரக் கூடியதாகவுள்ளது.
இலக்கியப் பரிச்சியம் ஏற்பட்ட காலம் அது "சரஸ்வதி, தாமரை போன்ற தமிழக முற்போக்குச் சஞ்சிகைகள் அட்டையில் பிரபலமானவர்களினது உருவப் படங்களை வெளியிட்டு வந்தன.
இதன் அடிப்படையிலேயே நீண்ட தொலைதூர நோக்கோடுதான் ஆரம்ப காலம் தொட்டே மல்லிகை இதழ்களின் அட்டை அமைப்பை வடிவமைத்துக் கொண்டேன். அதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தேன்.
நமது மண்ணில் தங்களது திரு நாமத்தை மெல்ல மெல்லச் செதுக்கி வைத்துள்ள பல முக்கியமான பெருமக்களின் உருவங்களை மல்லிகை அட்டையில் பொறித்து வருகிறேன்.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணப் புத்தகக் கடைகளில்- சஞ்சிகைகளின் அட்டைப் படங்களில் - தமிழகத்தைச் சேர்ந்த மக்களின் கவனத்துக்குரியவர்கள் சஞ்சிகைகளில் தொங்கிக் கொண்டிருந்தார்களோ, அதே போல, நமது மண்ணுக்குரிய நமது நேசமானவர்களின் உருவங்களைத் தாங்கிய நமது சஞ்சிகைகளும் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல, இந்த நாடு பூராவுமுள்ள பிரதான பட்டணங்களிலுள்ள புத்தகசாலைகளிலும் பாமர மக்கள் தெரிந்து கொள்ளத் தக்க வகையில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்ற பேரவாக் காரணமாகவே இந்த அட்டைப் படத் திட்டத்தை நான் மல்லிகை மூலம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறேன்.

மல்லிகை, யாழ்ப்பாணத்து வறண்ட பிரதேசத்து மண்ணிலிருந்து வெளிவந்த போதிலும் கூட உலகப் பெரும் சாதனையாளர்களான லெனின். மார்க்ஸிம் கார்க்கி, ஒவியப் பெருமகன் பிக்காஸோ தொட்டு, பாரதி, ரகுநாதன், தி. க. சி. வல்லிக்கண்ணன், நீல. பத்மநாபன், ஈறாக நமது மண்ணின் மதிப்பு வாய்ந்த சிங்களக் கலைஞர்களான மார்ட்டின் விக்கிரமசிங்ஹ, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், குணதாஸ அமரசேகர, ஹென்றி ஜெயசேன, ரத்னவன்ஸ தேரர். குணசேன விதான ஆகிய பெருமைக்குரிய கனவான்கள் முடிவாக - நமது தமிழ்க் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்விமான்கள், சாதனையாளர்கள் என்ற வரிசையில் பல்வேறு வகைப்பட்டவர்களின் உருவங்களை அட்டையில் பதித்து மல்லிகை இதழ்களை வடிவமைத்து அலங்கரித்து வந்துள்ளேன். தொடர்ந்தும் இதையே செய்து வருவேன்.
மல்லிகை போன்ற ஓர் இலக்கியச் சிற்றேட்டை இந்த மண்ணில் நடத்திப் பார்க்கும் போதுதான் அதன் உள்ளே பொதிந்துள்ள சிரமங்கள் புரியும்.
உண்மையைச் சொல்லப்போனால், நம்மில் பலர் இந்த அட்டைப் பட முயற்சியில் என்னுடன் ஒத்துழைக்கவேயில்லை.
பலர் இந்த முயற்சிக்கு ஆதரவு காட்டினாலும் கூட, வேறு சிலர் வக்கணை பேசியதை என் காதால் கேட்டிருக்கிறேன். நான் இந்த சுயவெறுப்பு விமரிசனங்களுக்கு காது கொடுப்பதில்லை. பேசிக் கொள்பவர்களுக்கு வார்த்தை தான் நஷ்டம். எனக்கோ வாழ்க்கையல்லவா நஷ்டம்.
மல்லிகையில் வெளிவந்த சிலரின் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலை வெளியிட்டால் என்ன என்றொரு யோசனை எனக்குள் முகிழ்ந்தது.
ஒரு நாள் சாயங்காலம் சில நண்பர்கள் மல்லிகையில் சந்தித்தோம். தேநீர் அருந்திய பின் இந்தத் தொகுப்புக்கு என்ன பெயரிடலாம்?’ என எமக்குள் விவாதித்துக் கொண்டோம். என்னால் மதிக்கப்படும் கவிஞரும் எம்முடன் சேர்ந்து கொண்டார். ‘அட்டைப் பட ஓவியங்கள' என்ற பெயரை அவரே இறுதியில் சூட்டினார்.
இந்தப் பெயர் சம்பந்தமாக சிறு சர்ச்சை ஒன்று நமக்குள் மூண்டது. தொடர்ந்து விவாதித்தோம். நண்பர்கள் கருத்தச் சொன்னார்கள்.
"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே! என்ற பாரதியின் பா அடிகள் இங்கே விவாதப் பொருளாகத் தலைகாட்டிற்று.
தேன் நாவினில் தானே சுவைக்கும்? காது எப்ப்டித் தேன் சுவையை

Page 6
அறியும்?' என அந்தக் காலப் பண்டிதத் திருக்கூட்டத்தினர் பாரதிக்கு ஒழுங்காகத் தமிழ் எழுத வராது எனக் கண்டித்ததைக் கவிஞர் இக் கட்டத்தில் எடுத்துச் சொன்னார்.
பண்டிதத் திருக் கூட்டத்தினர் மாத்திரமல்ல, புதுமைப் பித்தனால் சிறுகதைத் துறையின் திருமூலர் எனப் புகழப்பெற்ற 'மெளனி கூட ஒரு கட்டத்தில் “அவனுக்குக் கவிதை எழுதவே வராது!’ எனப் பாரதியைக் கிண்டல் பண்ணியுள்ளார்.
கவித்துவ உலக ஒப்பீடுகளை அல்லது வர்ணனைகளை யதார்த்த மொழி இலக்கணச் சிமிழுக்குள் அடைத்துப் பார்க்கக் கூடாது. அப்படிக் கற்பனைகளை மொழிச் சிறைக்குள் அடைத்துப் பார்க்கப் பழக்கப் பட்டுப் போனது தான் பண்டிதத்தனம். பண்டிதம் இங்கும் சரி. தமிழ் நாட்டிலும் சரி இன்றுவரை இதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றது. 'அட்டைப் பட ஓவியங்கள தலைப்புத் தெரிவாகிவிட்டது.
35 தகைமையாளர்களின் கட்டுரைகளைத் தொகுத்து இதே தலைப்பில் யாழ்ப்பாணத்திலேயே இந்த நூலைத் தயாரித்தேன்.
நான் செய்த இந்தப் பதிப்பு வேலைகளை இலக்கிய சத்தியமாக மனமொன்றிச் செய்து வந்தேன்.
இந்த நூல்தான் மல்லிகைப் பந்தல் மூலம் முதன் முதலில் வெளிவந்த புத்தகமாகும்.
ஜூன் 1986-ல் இந்த நூல் வெளிவந்தது. இந்தப் புத்தகம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதே நூல் இதே பெயருடன் சென்னையிலுள்ள நியூ செஞ்சரி புக்ஸ்’ நிறுவனத்தின் மூலம் 1989 ஜனவரியில் இரண்டாம் பதிப்புக் கண்டது.
யுத்த நெருக்கடியால், யாழ்ப்பாண மண்ணை விட்டுத் துரத்தப் பட்டு, கொழும்பு மாநகர் வந்தடைந்தேன். என்னுடைய வெளியேற்றத்துடன் மல்லிகையும் உள் நாட்டுக்குள்ளேயே புலம் பெயர்ந்த சஞ்சிகையாகப் புகழ் பெறத் தொடங்கியது. ஒருவித வேலையுமில்லை. கொழும்புத் தெருவெங்கும் தெருத் தெருவாகத் திரிந்து உழன்றேன். பகல் முழுவதும் தெருச் சுற்றுவதுதான் எனது பிரதான வேலை.
இந்தக் கட்டத்தில் யோசனை ஒன்று உதித்தது. 'மல்லிகைப் பந்தல’ வெளியீட்டை இங்கு ஆரம்பித்தால் என்ன என்ற யோசனைக்குச் செயல் வடிவம் கொடுக்க முனைந்து உழைக்கத் தொடங்கினேன்.

நண்பர் தெணியான் கடிதத்தில் எப்போதோ சொல்லி வைத்த பெயர்தான் 'மல்லிகை முகங்கள' அப்பேது நண்பர் கணேசலிங்கன் சென்னையில் பதிப்புத் துறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரது மகன் குமரன் கொழும்பில் இந்தப் பதிப்புத் துறைக்கான வேலைகளை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார். அவருடைய ஒத்துழைப்புக் கிடைத்தது. வேலையைத் தொடர்ந்தேன்.
நான் கொழும்பில் கால் பதித்ததும் வெளியிட்ட முதல் நூல்தான் இந்த மல்லிகை முகங்கள். இந்த மல்லிகை முகங்கள் நூலை விற்பனை செய்த காசில் தான் நான் அன்றன்றாடு வயிற்றுப் பசியைப் போக்கிக் கொண்டேன்.
இப்பொழுது மூன்றாவதாக வெளிவருவது தான் அட்டைப் படங்கள் என்ற இந்த நூல், மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவருகிறது.
முதல் நூலில் 35 கனவான்களைப் பற்றிய கருத்துக்களைத் தொகுத்து அட்டைப் பட ஓவியங்கள் என்ற நூலை வெளியிட்டு வைத்தேன். இரண்டாவதாக 1996 ஜனவரியில் மல்லிகை முகங்கள் வெளியீடு மூலம் 65 மதிப்புக்குரியவர்களின்
குறிப்புகளை வெளியிட்டிருந்தேன்.
இப்பொழுது 44 கலை கனந்தங்கியவர்களின் குறிப்புகளைத் தொகுத்து
'அட்டைப் படங்கள்’ என்ற இந்தத் தொகுப்பு நூலை உங்களது கரங்களில் சமர்ப்பித்து மகிழ்கின்றேன்.
ஏற்கெனவே வந்த தொகுப்புகளில் இல்லாத ஒரு முக்கிய அம்சத்தை இங்கு இந்நூல் சம்பந்தமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
கட்டுரைக்கு மேலே அக் கட்டுரைக்கு உரியவர்களின் புகைப்பட உருவங்களைப் பதிப்பித்துள்ளேன். அட்டையிலும் அவர்களது உருவங்களே!
நான் ஏற்கெனவே இந்த முறையைத்தான் பின்பற்றியிருக்க வேண்டும். அந்த முயற்சி அன்றுள்ள யாழ்ப்பாணச் சூழ்நிலையில் நடைமுறைச் சாத்தியமற்றதாகப் போய்விட்டது. இன்று நடைமுறைப் படுத்தியுள்ளேன்.
நவீன அச்சக அசுர வளர்ச்சி காரணமாக இந்த நூலில் சம்பந்தப்பட்டவர்களின் உருவங்களைப் பொறிக்கக் கூடிய வாய்ப்பு இப்போது வந்துள்ளது
என்ைகணிப் பார்த்தால் இதுவரை வெளிவந்துள்ள மூன்று நூல்களிலும் 144 மகிமைக்குரியவர்களின் குறிப்புகள் வெளிவந்துள்ளன. பெருமைப்படும் முயற்சி இது. இந்தச் சாதனைக்கு மல்லிகைப் பந்தல் நியாயமாகவே பெருமைப்படலாம்.
vii

Page 7
இந்தத் தேடல் இத்துடன் முற்றுப் பெற்றுவிடப் போவதில்லை. இதுவரை மல்லிகையின் அட்டையை அலங்கரித்தவர்களை விட, இன்னும் இன்னும் அநேகர் இந்த மண்ணில் இருந்து கொண்டேயிருக்கின்றனர். தொடர்ந்து இப்படியானவர்களைத் தேடிக் கண்டு பிடிக்கவே முயன்று கொண்டிருக்கிறேன்.
மல்லிகை சிறிய சஞ்சிகை தான். அதன் பிரபலம் கடல் கடந்து, கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி இன்று பேசப்படுகிறது. தொடர்ந்தும் இந்த மண்ணின் அற்புத மலர்களை இந்தப் பூப் பந்துக்கு அறிமுகப் படுத்திவைக்கும் கைங்கரியத்தில் தொடர்ந்தும் உழைத்து வருவேன் எனச் சத்தியம் பண்ணுகின்றேன்.
சமீப காலமாக ஏதோ ஒரு வகையில் நான் பலராலும் பேசப்பட்டு வருகின்றேன். திட்டோ, பாராட்டோ, விமரிசனமோ நான் இந்த மண்ணில் பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறேன் என்பது தான் என் வரைக்கும் இதற்கு அர்த்தமாகும். இந்தப் பிரபலப் பரபரப்புகள் எனது இயல்பான குணாம்சத்தை மாற்றிவிடக் கூடாது என்பதற்காகவே தினசரி எனது வேலைத் திட்டத்தை ஒழுங்கமைத்து இயங்கி வருகின்றேன்.
பல மல்லிகை இதழ்கள் கைவசம் இல்லாத போதிலும் கூட, பல பழைய இதழ்களைத் தேடித் தந்து உதவிய தெளிவத்தை ஜோசப், மேமன்கவி, ஆப்டீன், திக்குவல்லைகமால் ஆகியோருக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். அச்சுப் படிவங்களை ஒப்பு நோக்கித் திருத்தி உதவிய மா. பாலசிங்கம் அவர்களுக்கும்
நன்றி.
டொமினிக் ஜீவா 2 - 03 - 2002
viii

ஒரு மல்லிகைச் சரத்தின் நுகர் குறிப்பு
தமிழ் இலக்கியத்திற்கும் அதனூடாகத் தமிழ் இனத்திற்கும் அறிவுசார் தொண்டு புரிந்தவர்கள் அடிக்கடி நினைவு கூரப்பட வேண்டியவர்கள். ஓர் இனத்தினது பண்பாட்டு வரலாறு அந்த இனத் தினது ஆக்க இலக்கியங்களிலேயே தெளிவாகப் பதிவு செய்யப் பட்டுப் பேணப்படுகிறது.
மார்க்ஸிம் கோர்க்கியின் தாய்' நாவலைப் படிக்கும் ஒருவர் மாபெரும் ஒக்ரோபர் புரட்சிக் காலத்தில் ரஷ்ய மக்களின் வாழ்க்கை முறை எவ்வாறிருந்தது, எத்தகைய அர்ப்பன சிந்தையுடனும் மன உறுதியுடனும் அவர்கள் சாதனைகளைச் சரித்திரமாக்கினார்கள் என்பவற்றையெல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்தினுள் பிரவேசம் செய்து தரிசிக்கும் வாய்ப்புகளை இன்றைக்கும் பெறமுடிகிறது.
சமூகத்தை மாற்றியமைப்பதற்கும் அதனை மேம்பாட்டடையச் செய்வதற்கும் மனோவியல் ரீதியாச மக்களைத் தயார்படுத்தும் உளவியற் பணிகளையும் இலச்சியவாதிகளே இடையறாது மேற்கொண்டு வருகிறார்கள். இதனாற்தான் இலக்கியப் பணிபுரிபவர்கள் மரணத்தை வென்று மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களைப் பற்றிய தகவல்கள் இவர்கள் வாழும் காலத்திலேயே சரியான முறையில் பதிவுசெய்யப் படவேண்டும். தவறும் பட்சத்தில் காலப் பயணத்தில் வரலாற்று வழுக்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுவிடும்.
மனித இனம் பெறும் அறிவு என்பது வாழ்ந்து மறைந்த அறிஞர்களின் அனுபவங்களின் மூலம் நமது சமகாலத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் சிந்தனைவாதிகளின் அனுபவப் பரிமாறல்களுடாகவுமே உள்வாங்கப் படுகிறது.
தமிழ் உலகிற்கும் மனித குலத்திற்கும் அணிசெய்தவர்களை அட்டைப் படங்களாகவும், உள்ளே அட்டைப்படக் கட்டுரைகளாகவும் வெளியிட்டுக்
ix

Page 8
கெளரவிக்கும் சிறந்த பனியொன்றை 'மல்லிகை தனது மரபறிந்த செயற்பாடாகக் கொண்டுள்ளது. தமிழகத்திலும் ஈழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்ந்து மறைந்த, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கிய வாதிகள், அறிஞர்கள், கல்விமான்கள், சமூகவியலாளர்கள் ஆகியோரின் முகங்கள் மல்லிகை அட்டைகளில் மாதந்தோறும் பதிவு பெற்று வருகின்றன. இவர்கள் பற்றிய குறிப்புக் கட்டுரைகளை யும் புகழ் புத்த இலக்கியவாதிகளும் அறிஞர்களும் கல்வியன்களுமே எழுதியிருப்பது இரட்டைச் சிறப்பினைச் சேர்க்கிறது.
1970 - ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2001-ம் ஆண்டு ஒக்ரோபர் மதம் வரை மல்லிகையில் வெளிவந்த அட்டைப் படக் கட்டுரையில் தேர்ந்தெடுக்கப் பட்ட 44 ஆக்கங்கள் கொகுக்கப் பட்டு நூலக்கப் பட்டுள்ளது. தமிழகத்துச் சிதம்பர ரகு, கன் பற்றி பேராசிரியர் க. கைலாசபதியினால் எழுதப்பட்ட கட்டுரை முகர் (காஃப்டு வ1 புத்து ஓவிய மேதை ரமணியைப் பற்றி தென்புலத்து 6 முத்தாளர் திச்குவல்லை கபால் எழுதிய கட்டுரைவரை சிறந்த அட்டைப் படக் கட்டுரைகள் பல இந்நூலில் உள்ளடக்கமாகியுள்ளன.
தோழர்கள் பொன். கந்தையா, சரத் முல்தேட்டுவேக போன்ற மார்க்ஸிய சிந்தந்தத் தளத்தில் தடம் பதித்த அரசியல் தலைவர்கள் பற்றிய கட்டுரைகள் எவ்வித சித்தாந்த வழிகாட்டல்களையும் கொண்டிராத வாய்திறனை மட்டுமே நம்பியிருக்கும் அரசியலாளர்களை வேறுபடுத்தி நோக்க வ1)சசெய்கின்றன. லெஸ்ரர் ஜேம்ஸ் ப்ரிஸ், வேல் ஆனந்தன், (; )ன்றி உயசேன போன்ற சர்வதேசப் புகழ் பெற்ற சுவைஞர்கள் பற்றிய கட்டுரைகள் அவர்கள் குறித்து மேலதிகத் தேடல்களுக்கான தாக்கத்தைத் துண்டுகின்றன.
சிதம்பர ரகுநாதன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோர் பற்றி பேராசிரியர் க. கைலாசபதி எழுதியுள்ள கட்டுரைகளும் தி. க. சிவசங்கரன், வல்லிக்கன்னன், வானமாமலை ஆகியோர் பற்றி பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதியுள்ள கட்டுரைகளும் சிந்தனைத் துண்டலை ஏற்படுத்துகின்றன.
வணக்கத்திற்குரிய பண்டிதர் எம் ரத்னவன்ஸ் தேரே பற்றி புலம் பெயர்ந்த எழுத்தாளர் லெ. முருகபூபதி தீட்டியுள்ள குறிப்புகள் தேரரின் விசாலித்த நோக்கையும் மதங் குறித்த விமர்சனங்களை ம6)ாங் கோனாமல் தரிசிக்கும் உயர்ந்த பண்பையும் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
அமைதியையும் அன்பையும் போதிக்கும் அற்புதமான மதங்களைத் தவறாகப் புரிந்து கொண்ட அடிப்படைவாதிகள் மதங்களின் புனிதத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு புரியும் கொலைகளும் வன்முறைகளும்

கேடுந்3ெ1ல்களும் இந்த விஞ்ஞான புத்திலும் அதிகரித்துச் செல்கின்றபேது ரத்னவன்ஸ் கேTேT கெரிவித்துள்ள கருத்துக்கள் 1-2}IᏯ ᎠtᎯIᎧF] Ꭲ gᎩlif ᏧᏏ6lᏧᏯ0llᏝ)Ꭵl Ꮷ5 1[ 1Ᏹl ᏂlᏣ 1Ꭻ, 1 °sii ·l ↑ i , ↑ , ' w [ 1 , m ) P1↑ " ᏧᏂ 2.6ii 6lItᏱL.
(8), B (bö6)6 i ) oli வ1 கர்களையும் பிரச்சினைக்குள்ளாக்கிய மட்டின் விக்கி சிங்காவினுடைய 'பவதரனய' என்ற (ilனலப் பற்றிக் குறிப்பிட்ட ரத்னவன்ஸ் தேரர், "அது ஓர் ஆக்க இலக்கிய நூல். எழுத்தாளன் சுதந்திரபானவனாக இருக்கவேண்டும் என்று கூறுகிறோம். அவ்வாறாயின் அவனுக்குச் சுதந்தரமாகச் சிந்திக்கவும் எழுதவும் முடி யும்தனே! எது எப்படி யிருந்தாலும் அந்த எழுத்தாளன் சமுதயத்திற்குச் சுறம் கருத்துத்தான் முக்கியம். ஓர் எழுத்தாளன் தனது சிந்தனை1ை1 இலக்கிய ரீதியாக (க்கள் முன்வைத்தால் அதனை நாம் அவனு ைய இலக்கியப் படைப்பாகவே நோக்கவேண்டும். கருத்துக்களை ஏற்றல் அல்லது ஏற்காது விடுதல் 1ன்பது முற்று முழுதாக வாசகனைப் பொறுத்த விடயம்!"
ஒரு பெளத்த மதத் துறைவியினால் இத்தனை தெளிவு ன் தெரிவிக்கப் பட்ட இக் கருத்துக்கள் சகல த விசுவாசிகளுக்கும் மதங்களின் புனிதங்களைப் | துகாப்பதாகக் கூறிக்கொண்டு கோடுஞ்செயல்களில் +டுபடுபவர்களுக்கும் , அனைத்தை பும் மத நோக்கில் உரசிப் பார்ப்பவர்களுக்கும் உரத்துப் புகட்டப் பட வேண்டும்.
அயர்லாந்தின் 11ழ்ப்பானத்தான் லோங் அடிகளார் என்ற அட்டைப் படக் கட்டுரை யாழ்ப்பாணச் சமூகத்தின் கல்விப் பரம்பரைக் கட்டும1)த்திற்குப் பெரும் பங்காற்றிய ஆங்கிலேயரைப் பற்றிய சுருக்கத் தகவல்Jxoைlத் தருகிறது.
பல்லி)J, இதழ்கள் வகுக்கப் பட்டுத் தொகுக் படும்போது அவை அற்புதமான + ill fகிவிடுகின்றன. தமிழ்பேசும் இல் i41ள் ஒவ்வொன்றிலும் அவசியம் இருக்கவேண்டிய நூல்களில் இதுவும் முன்றெனத் துணிந்து கூறலாம்.
ராஜரீகாந்தன் பிரதம ஆசிரியர் - 'தினகரன்' லேக் ஹவுஸ், கொழும்பு - 10, 2002-03-30.

Page 9
10.
11.
12.
13.
14.
16.
ஆசிரியரின் நால்கள்
தண்ணிரும் கண்ணிரும் (சிறுகதைத் தொகுதி) (யூனி லங்கா சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற நூல்)
பாதுகை
(சிறுகதைத் தொகுதி)
சாலையின் திருப்பம்
(சிறுகதைத் தொகுதி)
வாழ்வின் தரிசனங்கள்
(சிறுகதைத் தொகுதி) ஈழத்திலிருந்து ஒர் இலக்கியக் குரல் (பேட்டிகள், செய்திகள்)
அநுபவ முத்திரைகள் (பல புதிய அநுபவங்கள் இணைக்கப் பட்டுள்ளன) துரண்டில்
(கேள்வி - பதில்) டொமினிக் ஜீவா-சிறுகதைகள் (50 சிறுகதைகளின் தொகுப்பு)
தலைப்பூக்கள்
(மல்லிகைத் தலையங்கங்கள்) முன்னுரைகள் - சில பதிப்புரைகள்
அட்டைப்பட ஓவியங்கள் (கட்டுரைத் தொகுப்பு நூல்) எங்களது நினைவுகளில் கைலாசபதி (கட்டுரைத் தொகுப்பு)
மல்லிகை முகங்கள்
(கட்டுரைத் தொகுப்பு)
பத்தரே பிரசூத்திய (சிறுகதைகள் சிங்கள மொழிபெயர்ப்பு) எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் (சுய வரலாறு) முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் (பிரயாணக் கட்டுரை நூல்)

1 9
2 orG6T.............
சுவாமி ஞானப்பிரகாசர் தறவி விபுலாநந்தர்
செ. கதிர்காமநாதன்
சிதம்பர ரகுநாதன்
தி, க, சி.
வல்லிக்கண்ணன்
பட்டுக்கோட்டை நீல பத்மநாபன்
ᏝᏰ, 60ᎥᏁᏛᏈᎳᏝᏝᏝᏤᏝᏝᏛᏛu சிந்துபூந்தறை அண்ணாச்சி பொன். கந்தையா
மு. கார்த்திகேசன்
சரத் முத்தெட்டுவேகம சு. இராஜநாயகன்
வண. ரத்னவன்ஸ் தேரர்
எம். எம். சமீம்
லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்
ஹென்றி ஜெயசேன
ஆ. குருசுவாமி
O I
O 6
O 9
2
6
20
22
26
28
33
38
4 I
44
48
SI
57
6 O
6
7 ο

Page 10
2O
2.
22
23
24
25
26
27
28
29
30
3
32
33
34
3S
36
37
38
39
40
4 I
42
43
44
ஆர். பேரம்பலம் பெரி. சோமஸ்கந்தர்
எஸ். தில்லை நடராசா
புதுமைலோலன் பேரா. சோ. சந்திரசேகரம் லெ. முருகபூபதி ஆ. மு. ஷரீபுத்தீன் அன்னலெட்சுமி ராசதரை அருட்திரு. நீ, மரியசேவியர் எம். எச். எம். ஷம்ஸ் இராஜேஸ்வரி சண்முகம் தரை. விஸ்வநாதன்
செ. குமாரசுவாமி
வேல் ஆனந்தன்
வண. பிதா, லோங் சந்தியா கதிர்காமு ஈழகேசரி பொன்னையா அ. வயித்திலிங்கம்
வண. பிதா வின்சன்ற் பற்றிக்
மலரன்பன்
பொன். குமாரசாமி தி. ஞானசேகரன் ஏ. பி. வி. கோமஸ் பிலிப் நீக்கிலஸ்
ரமணி
6ך
9ך
83
87
9 I
94.
97
99
I O3
I OS
I O
II 3
I 6
I 19
I 23
I 26
I 29
I 3
I35
I 39
I 42
I4S
I 49
IS3
I 56

சுவாமி ஞானப்பிரகாசர் நூற்றாண்டு விழாச் சிந்தனைகள்
வாமி ஞானப் பிரகாசர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு 、开 கொண்டாடப்படும் இவ்வேளையில், அன்னாரது வாழ்க்கையும் பணியும் வெவ்வேறு நோக்கு நிலைகளிலிருந்து விளக்கப் படுதல் எதிர்பார்க்கச். கூடியதானறே. இத்தகைய விளக்கங்களிற் சில ஒன்றுக்கு ஒன்று முரணானவையாயும் இருத்தல் ஆச்சரியத்தை உண்டுபண்ண வேண்டியதில்லை. எனினும் அடிப்படை உண்மைகள் சில எவராலும் நினைத்துக் கொள்ள வேண்டியன. அவற்றின் மீதே நியாயமான விளக்கம் எதுவும் அமைதல் சாலும்,
சுவாமி ஞானப்பிரகாசர் (1875-1947) ஈழம் ஈன்றெடுத்த பெருமக்களுள் ஒருவர் என்பதில் எவர்க்கும் அபிப்பிராய பேதம் இருக்க முடியாது. ஆனால் அவரது பெருமை எவ்வாறு விவரித்து விளக்கப் படுகிறது என்பதே கவனத்துக்கு உரியதாகும்.
இன்று ஞானப்பிரகாசரைப் பற்றி எழுதிப் பேசி ஆரவாரஞ் செய்யும் பலர் அவர் எழுதிய நூல்களிற் பெரும்பாலானவற்றைக் கண்ணாலும் பார்த்திலர் என்பதே முதலிற் கூறத்தக்கதொன்றாய் உள்ளது. (சுவாமிகள் வெளியிட்ட நூல்கள் தற்சமயம் எளிதிற் கிடைக்கா என்பது உண்மையே. எனினும் அவற்றையெல்லாம் படித்தவர் போல பாசாங்கு செய்பவரையே நான் இங்கு குறிப்பிடுகின்றேன்). ஞானப்பிரகாசர் எண்ணியிருக்க இயலாத கருத்துக்கள் கூட இன்று அவர் கருத்துக்களாகச் சிலராற் பரப்பப் படுவதைக் காணலாம்.
உதாரணமாக, ஒன்றை எடுத்துக் கொள்வோம். சுவாமி ஞானப்பிரகாசர் மொழிப் போராட்டத்தை ஆதரிப்பவர் போலச் சிலராற் சித்திரிக்கப் படுகின்றார். இவ்வாறு சுவாமிகளைச் சித்திரிப்பதன் நோக்கம் வெளிப்படை. தமது அரசியல்
-0.

Page 11
இயக்கத்துக்கு அடிகளாரைத் துணைக்கிழுப்பதே இவ்வாறு கூறுவோரின் நோக்கமாகும. ஆயினும் இம் முயற்சி உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி, ஆழ்ந்து பார்க்கில், சுவாமி அவர்களுக்கு மாசு கற்பிப்பதாகவும் முடிந்து விடுகிறது.
உண்மை நிலை யாது?
ஞானப் பிரகாசர் அவர்கள் மொழியியலில் முழுமூச்சாய் ஈடுபாட்டிருந்த ஆய்வறிவாள. இத்துறையிலே தமிழறிஞர்களுள் முன்னோடி என்றும் கூறலாம். சுவாமிகள் கtஸ்ததிலும் அதற்கு முன்னரும், இந்திய மொழிகாை. ஆசிய மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடுட்பம் என இரு பெரும் பரிவினாய ஆராய்ச்சியாளர் வகுத்தனர். இந்தோ - ஆரியப் உலகமளாவிய பெருங் குடும் மாக ல்விவரிக்கப் பட்டது. கோல்ட்வெல் டாதிரியார் போன்ற திராவிட பொழியியல் ஆய்வாளரும் இப்பாகுபாட்டினை ஏற்றுக் கொண்டு. இரு மொழிக் குடும்பங்களும் பெரிதும் வேறுபட்டவை எனக் கூறினர். ஆனால் ஞானப்பிரகாசர் இவ்வடிப்படையையே மறுத்தார். வேறுபாடுகள் மேற்படையானவை என்றும் இவ்விரு குடும்பங்களுமே மிக முற்பட்ட ஓர் ஆதி மொழியிலிருந்து கிளைத்தவை என்றும் வ:தாடினார். இவ்வாதி -ெ 7ழி தமிழ் என்பது அடிகளாரின் நமயிக்கையாயிருந்தது. இன்றுவரை இம்முடிபு சர்ச்சைக்குரியதொன்றாய் இருந்துவருகிறது. அறிவுலகில் இது ஒத்துணர்ந்து கொள்ளக் கூடியதுமாகும். ஆய்வறிவு நிலையில், ஆழமாகக் கற்ற நிலையில், இக்கூற்று தொடர்ந்தும் ஆராய்ச்சிக்கு இ.ந்தரக் கூடியது.
ஆனால் இத்ை ஆதாரமாக வைத்துக் கொண்டு, ஞானப்பிரகாசர் அவர்களைத் தமிழ் வெறியுடையவராகச் சித்திரிப்பது சிறிதும் பொருத்தமற்ற செயலாகும. தமிழ் மிகப் புராதன மொழி என்று வாதிட்ட அடிகளார் பலரும பாராடடிய பன் மொழிப் புலவர். இறுதிவரை புதுப்புது மொழிகளைக் கற்று வந்தார். வடமொழியையோ, வேறெந்த மொழியையோ வெறுத்தவருமல்லர். கண்மூடித்தனமான தனித் தமிழ் வாதியும் அல்லர். ஓரிடத்தில் எழுதுகிறார்:
தனித் தமிழெ அன்றி, வடமொழிச் சொற்கலப்புள்ள தமிழ் தக்கதன்றென விலக்குகின்ற நவீன நூலாசிரியர் சில்லோரது அபிமதத்தை இந்நூலுள் மேற் கொண்டிலோம்; ஆரியர் தமிழ் நாட்டினுள் நுழைந்த பின்னர் தமிழில் எழுநதனவான சரித்திரங்கள் சிறுபான்மையினவாயினும் வட மொழிக் கலப்பின்றி இபல மாட்டாதன ஆகின்றன. வடமொழியினை அடியோடு நீக்கி விடுவோமாயின் தருக்கம் ஆகிய சில சாஸ்திரங்கள் இருந்த இடமே தெரியாமற் போய்விடும்.
தனது நூல்களில் இயன்றவரை செந்தமிழையே கையாண்ட சுவாமிகள். மொழிகளின் சரி 'பை வரலாற்று அடிப்படையிலே நோக்கும் பொழுது, நிதானமும்
நேர்மையும் த ரா மனட்டான்மையம் உடையவராய்க் கானைப்படுதல் மாங் கொள்ள வேல் டியதொன்றாகும். பல மொழிகளைக் கற்ற புலமையுடனும், தன்னம்பிக்கையுடனும் தமிழ மிகப் புராதனமான மூல'மொழியாய் இருந்திருக்கலாம என்று சுவாமிகள ஊகித்துக் கூறவது ஆராய்ச்சி முயற்சியின் பாற் படுவதேயாகும.
-O2

அது உயர்ந்த ஊக நிலைக்குரிய கருதுகோள் என்றும் கூறலாம். அதைத் தவறாகப் புரிந்து பகுத்தறிவுக்கு ஒவ்வாத வகையில் கூறும் இன்றைய தேவநேயப்பாவாணர், சி. இலக்குவனார் முதலிய மொழிவெறிப் பிரசாரர்களுடன் சுவாமிகளை ஒப்பிடுவது, அன்னாரை அவமதிப்பதாகும்.
மொழியியல் பற்றி மட்டுமன்றி, எத்துறை குறித்தும் எழுதிய போதெல்லாம், சுவாமிகளிடத்தே ஆராய்ச்சி மாணவருக்கு அமைந்த அடக்கமும் உண்மை நாட்டமும் இருந்தன. உதாரணமாக யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்னும் நூலின் முன்னுரையில் சுவாமிகள் பின் வருமாறு கூறுகிறார்.
வரலாற்றின் கணுள்ள சிக்கல்களையெல்லாம் இந்நால் அறுத்துவிடும் எனக் கூற அமையாதது. எமது ஆராய்ச்சி அறிஞர்களால் மேலும் ஆராயப்பட வேண்டுவதொன்றி. எல்லாத் துறைகளிலும் முடிந்த முடிபை எடுத்தோதுவதன்று. பலப்பல அருந்தறைகளில் புது ஆராய்ச்சியின் மேல் ஊக்கத்தைக் கிளர்த்தி விடுவதே இந்நாலின் கருத்தாமென அறிக’
மொழியைப் போலவே வரலாறு குறித்தும் - குறிப்பாக யாழ்ப்பாண வரலாறு பற்றியும் - சுவாமிகள் எத்தனையோ நுட்பமான ஆராய்ச்சிகள் நடத்தியுள்ளார். அரசியல் தேவைகளுக்காக வரலாறைப் புரட்டி எழுதும் 'ஆய்வாளர் சிலர் சுவாமிகள் கூறாத கருத்துக்களையும் அவர் மீது சுமத்தி வருகின்றனர். இனவாதியாக அடிகளார் எப்பொழுதுமே இருந்ததில்லை. அவரது வரலாற்றுணர்வு அத்தகைய விகார சிந்தைக்கு இடமளித்திருக்காது. சமய ஆராய்ச்சியும் நேர்மையும் என்னும் நூலிலே ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தையும், உள்ளதை உள்ளபடியே எடுத்துக் கூறியுள்ளார். அத்தகைய அப்பழுக்கற்ற ஆய்வறிவாளரை, குறுகிய மொழி. இன வாதங்களுக்குள் பகடையாக உருட்டுதல் உண்மைக்கு மதிப்பளிப்போர் செயலாக இருக்கமாட்டாது.
சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகளிலிருந்து தமிழ்க் கவிதையை இட்டுச் சென்ற பாரதியார் வரை, பல தமிழ்ப் புலவோர்களை எமது காலத்து இனவாதிகள் தமது ஆதரவாளர்களாகச் சித்திரிக்க முயன்று வந்துள்ளமை கண்கூடு. ஆனால் ஆய்வறிவாளரான சுவாமி ஞானப்பிரகாசரை இவ்வாறு பக்கச் சார்புடையவராய்க் காட்ட முற்படுதல் அவருக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என்றே சொல்ல வேண்டும்.
குறுகிய அரசியல் இயக்க எண்ணங்கள் அவருக்கிருக்கவில்லை. அடிப்படையில் அவர் சுவிசேச தொண்டு புரிந்தார். அதனூடே ஆய்வறிவுப் பணியும் புரிந்தார். பரந்த கல்வியறிவால் தான்பெற்ற பயனைத் தனது சமுதாயத்துக்கு வழங்க முற்பட்டார். சொற்பிறப்பு ஒப்பியல் தமிழகராதி முகவுரையிலே தனது பணியின் தன்மையை இரத்தினச் சுருக்கமாக விவரித்துள்ளார், சுவாமிகள்.

Page 12
‘அன்பினால் தாண்டப் பட்டு இடையுறகள், கர்ப்பங்கர் நிறைந்த குருத்துவத் தொண்டுடன் கல்வி விருத்திக்காகவே ): த உழைத்தேன.
உருக்கமான இவ்வாக்கியங்களைப் படிக்கும் ஒருவருக்கு. நல்லூர் தந்த மற்றொரு மாமணியின் - ஆறுமுக நாவலரின் - விக்கியாபன வாசகங்கள் நினைவுக்கு வரும்:
கன்னியை நாயகனிடத்து ஒரு துட்டாயினும் வாங்காது, வீடு ~ விளைநிலம் தோட்டம், ஆபரணம் முதலியவற்றோடு விவாகம் செய்து கொடுக்கும் வழக்க மேயுடையது எண் செண்ம தேசமாகவும். நான் இல்வாழ்க்கையிலே புகவில்லை. இவைகளெல்லா வற்றிற்குங் காரணம் சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையேயாம.
சமயப் பணியும் கல்விப் பணியும் இறுதியில் சமூகப் பணியும் செய்ய முனைந்த இரு பெரும் மக்களது இலட்சிய வேகத்திலே எத்துணை ஒற்றுமை காணப்படுகிறது!
தமது சுவிசேஷத் தொண்டின் ஒரு பகுதியாகச் சுவாமி அவர்கள் வடபகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எத்தனையோ சேவைகளைச் செய்தார். இதனால் தனது கிறிஸ்தவ சகோதரர் பலரது வெறுப்பையும் அலட்சியத்தையும் அவர் சம்பாதிக்க நேர்ந்தது. ’சுவாமி ஞானப்பிரகாசரின் சுவிசேஷத் தொண்டு என்னும் நூலிலே (1926) சூ. எ. சின்னப்ட' என்பார் எழுதியிருக்கும் செய்திகள் இங்கு நோக்கத்தக்கன.
. யோசனை இல்லாத கிறிஸ்தவர்களால் சொல்லப்படுகிற ஆவலாதிகளும் சுவாமி ஞானப் பிரகாசருக்குப் பெரிய பாரச்சிலுவை ஆகிறது. இவர் எளிய பள்ளர் பறையர் ஆகியோரைத் தானே அதிகமாய் வேதத்தில் சேர்க்கின்றார்? பெரிய சாதிக்காரர் தொகையாய்ச் சேருகின்றார்களா? பெரிய பெரிய முறடர்களை ஏன் வேதத்திற் கொண்டு வருவாண்?. சும்மா பழைய வேதக்காரரைப் பார்த்துக் கொண்டிருந்தால் இவரை நாமெல்லாரும் புகழுவோமே. ஆயினும் சுவாமி ஞானப் பிரகாசர் தமக்கியல்பான அஞ்சா நெஞ்சோடு சத்ருக்களால் வருமிடையூறுக்களையும் சகோதரர்கள் சொல்லும் ஊக்கங்கெட்ட வார்த்தைகளையும் கவனியாமல், சருவேசுரன் ஒருவரையே நம்பி வேலை செய்த கொண்டு வந்திருக்கிறார்.
இது விஷயத்திலும் நாவலருக்கும் ஞானப்பிரகாசருக்கும் ஒப்புமைகள் உள்ளன. நாவலரையும் பிறசமயத்தவர் மட்டுமின்றி சைவர்களில் ஒரு பகுதியினரும் சந்தர்ப்பவாத அடிப்படையிலே தாக்கிப் பேசினர்.
சுவாமி ஞானப்பிரகாசர் பல்துறைப் பேரறிஞர். சில துறைகளில் ஈடிணையின்றித் திகழ்ந்தவர். தமிழியல் ஆய்வுக்குப் புதுமை புகுத்தியவர்.
-04

விஞ்ஞான ரீதியான ஆய்வுக்கு வித்திட்டவர். தேசிய நோக்குடன் சர்வதேசிய நோக்கம் பெற்றிருந்தார். இவை யாவற்றையும் ஆர அமர. ஆரவாரமின்றி ஆய்ந்து, நூற்றாண்டு நிறைவு வேளையில் அன்னாரை மதிப்பீடு செய்வது கல்வியாளரது கடமையாகும்.
நூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் இத்தகைய நுண்ணிய மதிப்பீடுகளுக்கு வாய்ப்பளிப்பன. உதாரணமாக 1972-ல் தெல்லிப்பழைப் பாவலர் துரையப்பாபிள்ளை அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. மகாஜனக் கல்லூரித் தாபகர் என்ற அளவிலேயே அதுகாலவரைப் பெரிதும் அறியப்பட்டிருந்த பாவலர் நூற்றாண்டு விழா ஆய்வுகளின் பயனாகப் புதுத் தோற்றம் பெற்றார். சிறந்த தேசிய வாதியாகவும், சிந்தனையாளராகவும், சமூக சீர் திருத்த வாதியாகவும் இன்று அவர் போற்றப் படுகிறார். ஒரு காலத்தில் சைவசமயப் பெரியாராகவே போற்றப்பட்டு வந்த நாவலர் அவர்கள் இன்று தேசியப் பெருமகனாக அனைத்திலங்கை மக்களாலும் போற்றப்படும் நிலைமை தோன்றியுள்ளது. நாவலர் பெருமான் பற்றிய மறு மதிப்பீடுகளே இப் பரிணாமத்துக்குக் காரணமாகும்.
சுவாமி ஞானப்பிரகாசரும் தற்சமயம் ஒரு சாராரால் மொழிக் கூண்டில் சிறைப்படுத்தப் பட்டுள்ளார். இது கவலை தரும் நிலைமையாகும். ”தமிழே உலகத் தாய்மொழி என்று பறை அடித்தோதிய பன்மொழிப் பண்டிதன் என்று சுத்தானந்த பாரதியார் சுவாமிகள் பற்றிப் பாடியதைத் தேவ வாக்காகக் கொண்டு அதனை அளவுகோலாய்க் கருதி அன்னாரின் ஆராய்ச்சிகளைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் எள்ளளவும் பொருந்தாது. கத்தோலிக்க சமய வரலாற்றிலிருந்து, கல்வெட்டு ஆராய்ச்சி வரை எத்தனையோ துறைகளில் துணிவுடனும் சத்திய வேகத்துடனும் வாழ்நாள் முழுவதும் தேடல் நடத்தியவர் சுவாமிகள். இவற்றின் காரணமாய் இருமுனைத் தாக்குதலுக்கு ஆளாகியவர். இவையெல்லாம் எமது கவனத்துக்குரியன. இனிமேலாயினும் ஞானப்பிரகாசர் அவர்களின் உண்மையான பெருமையும் சிறப்பியல்புகளும் எமது நாட்டிலும் அதன் வாயிலாக உலக ஆய்வரங்கிலும் மீண்டும் நிலை நாட்டப்படுவதாக,
(ossFL'ILLbLJif - 1975
A

Page 13
யாழ் நூல் தந்த துறவி விபுலாநந்தர்
சித்தார்த்தன்
ழத்தின் கிழக்குக் கோடியில் காரைதீவு என்ற சிற்றுாரில் 1892-ம் ஆண்டு பிறந்த மயில்வாகனம் - தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞர் விபுலானந்தராக மாறியமைககு - அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி அவரது மனுக்குல நேசிப்பும் காரணமாகும். அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக் கழகங்களின் தமிழ்த் துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழி பெயர்ப்பாளராக விளங்கிய விபுலானந்தர், சமூகத் துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும், தமிழிற்காற்றிய சேவைகளும் அவரை என்றும் நிலைக்கச் செய்வன.
"தமது ஐந்தாம் வயதில் காரைதீவு நல்லரத்தின ஆசிரியரால் எழுத்தறிவிக்கப் பெற்ற மயில்வாகனம், 10வது வயதில் கல்முனை மெதடிஸ்ட் பாடசாலைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் மட்டக்களப்பு செயின்ட் மைக்கேல் உயர்தர ஆங்கிலப் பள்ளியில் கல்வி கற்று வருகையில் தமது கணித நுட்பத்தினால் ஆசிரியரையே வியட்படையச் செய்தார். தனது 16-வது வயதில் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் முதலாவது வரிசையில் தேர்ச்சி பெற்று, 1911-ம் ஆண்டு கொழும்பு சென்று ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கழகத்திற் சேர்ந்து ஆசிரியப் பட்டம் பெற்றார். பயிற்சிக் கழகத்திலிருக்குங் காலையில் உயர்தரத் தமிழாராய்ச்சியிலும் கருத்துச் செலுத்திய இவர் கொழும்பில் தமிழறிஞர்களாக விளங்கிய தென்கோவை கந்தையாப்பிள்ளை ஆகியோரிடம் தமிழிலக்கண இலக்கியம் கற்றார். 1916-ம் ஆண்டில் விஞ்ஞானக் கலையில் டிப்ளோமா பெற்றார். மதுரைத் தமிழ்ச் சங்கப்
-06
 

பண்டிதப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றதும் இவ்வாண்டிலே தான். பின்னர் யாழ்ப்பாணம் சம். பத்திரிசியார் உயர்தரக் கலாசாலையில் விஞ்ஞான ஆசிரியராக இருக்கையில், லண்டன் பல்கலைக் கழக பி. எஸ். ஸி பட்டதாரியானார். அடிகளார் 1931-ல் தமிழ் நாடு சென்று, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மூன்றாண்டுகள் தொண்டு புரிந்தார். பின்னர் ஈழநாடு திரும்பி, இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பெரும் பேராசிரியராக அமர்ந்தார் (பண்டிதமணி ஏ. பெரியதம்பிப் பிள்ளை-1963)
சமூகப்பணி. ح
வித்தகர் விபுலானந்த அடிகளாரின் பன்முகப்பட்ட பணிகனில் சமூகத் துறவியாக அவர் வாழ்ந்து செய்த தொண்டுகள் அளப்பரியவை. அவர் மக்களைத் துறந்து, மக்களைவிட்டு விலகித் துறவறம் பூணவில்லை. மக்களிடையே துறவியாக வாழ்ந்து சமூகத்தின் துயரங்களிலும், மகிழ்ச்சிகளிலும் பங்கேற்றார். யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளின் பழக்கம், துறவுள்ளம் படைத்த மயில்வாகனத்தை, விபுலானந்த அடிகளாக்கியது. சென்னை பூரீ ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்து, காவி பூண்டு சுவாமி விபுலானந்தரானார். அதன் பின் ஈழம் திரும்பி, அந்நியர் ஆதிக்கத்தில் மதம், மொழி, கலாசாரம் முதலியவற்றில் தமது தனித்துவ இயல்புகளை இழந்து கொண்டிருந்த தமிழினத்தைத் தட்டியெழுப்பும் முயற்சியிலிடுபட்டார். கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவினார். சிவானந்த வித்தியாலயம், திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு, விவேகானந்த மகளிர் ஆங்கிலக் கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம் என்பன அவர் நிறுவிய கல்வி நிறுவனங்களாகும். ஒரு சமூகத் துறவி நிறுவிய கல்விச் சாலைகள். அத்துடன் அவர் கொழும்பு மட்டக்களப்பு, திருகோணமலை முதலிய இடங்களில் ராமகிருஷ்ண ஆச்சிரமங்களை நிறுவியுள்ளார். விபுலானந்தர் ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந்தார். நாம் மனிதர் எனும் பெயருக்கு முழுதும் தகுதி பெற வேண்டுமானால், இன்று முதலே சன்மார்க்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும்’ என்றார். பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே தான் நல்ல நிலையை அடைய விரும்புவதே உண்மையான சன்மார்க்கமாகும் என்றெடுத்துரைத்தார்.
ஈழம் பெற்றெடுத்த அறிஞர்களில் விபுலானந்தர் முற்றிலும் வேறுபட்டவர். சாதி, மத, மொழி, இன ஏற்றத்தாழ்வுகளுக்கும், ஏழை பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர். யாழ்ப்பாணத்தில் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும், பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியராகவும் 1917-1922 காலகட்டத்தில் கடமையாற்றியுள்ளார். சைவத்தின் எழுச்சியே தேசிய மறுமலர்ச்சி என்ற கருத்தோடு சாதியடிப்படையில் அமைந்த சமூக பொருளாதார மேலாதிக்கவுணர்வும் மேலோங்கியிருந்த காலம் அது. சேர். பொன் இராமநாதன், ஆறுமுகநாவலர் ஆகியோர் இக்கருத்துக்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். சுவாமி விபுலானந்தர், வெறும் மயில்வாகன ஆசிரியராக சென்பற்றிக்ஸ் கல்லூரியில் கடமையாற்றிய காலவேளையிலேயே, மேற்போந்த
-07

Page 14
கருத்துக்களுக்கு முரண்பட்டார். கடமையொழிந்த வேளைகளில் வறுமையிலும், சாதியப் பாதிப்பாலும் நலிவுற்ற மக்களிடையே உலாவினார். அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். அதனால், "பெரியகோயில் வாத்தியார்’ என அவர் சாதாரண மக்களால் விரும்பி அழைக்கப்பட்டார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய போது, அவரது இந்த மனிதநேய யாத்திரை. இந்திய சேரிப்புறங்களில் பரிவோடு நிகழ்ந்தது. எனவே தான் சமூகத்திலிருந்து பிரிந்து தனித்து விபுலானந்தர் நிற்கவில்லை. அவரது சிந்தனைகள், நடத்தைகள் இரண்டும் அவரை ஏனைய அறிஞர்களினின்றும் வேறு படுத்துவனவாகவுள்ளன.
தாய் மொழிக் கல்விக்கும் அறிவியற் கல்விக்கும் வித்திட்டவர்களில் விபுலானந்தர் குறிப்பிடத்தக்கவர். ஆங்கில மொழிக் கல்வி ஆதிக்கம் பெற்றிருந்த ஒரு காலவேளையில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கி, அறிவியற் கல்வி தமிழிலும் போதிக்க வேண்டும் என்பதில் ஆர்வங் கொண்டிருந்தார். அறிவியற் கலைச் சொல்லாக்கத்துறையில் ஈடுபாடு கொண்டுழைத்துள்ளார். யாழ்ப்பாணம் வாலிப காங்கிரசுடனும் தாய் மொழிக் கல்வியின் வளர்ச்சிக்கு விபுலானந்தர் பாடுபட்டார்.
இலக்கியப் பணி.
அடிகளார் விபுலானந்தரின் இலக்கியப் பணி குறைதது மதிப்பிடுவதற்கில்லை. அவர் ஆக்கிய இலக்கிய ஆக்கங்களில் தமிழுக்குப் புதிதாகவும் மகுடமாகவும் விளங்குவது யாழ் நூலாகும். பழந்தமிழரின் இசை நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல் பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில்யாழ், பேரியாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சகோட யாழ் என்பன பற்றி யாழ்நூல் விபரிக்கின்றது. அடிகளாரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாகத் தமிழுக்கு யாழ்நூல் கிடைத்தது.
அடிகளார் ஆக்கிய மதங்க சூளாமணி, நாடக இலக்கண அமைதி கூறும் ஒரு நூலாகும். பஞ்ச கிருத்திய நுட்பத்தைக் கூறும் நடராஜ வடிவத்தைப் பற்றியும் ஒரு நூலை ஆக்கித் தந்துள்ளார். கர்மயோகம். ஞானயோகம், விவேகானந்த ஞானதீபம் முதலியன அவரது மொழிப்பெயர்ப்பு நூல்களாகும். கட்டுரைகளாகவும். கவிதைகளாகவும் அவர் ஆக்கிய இலக்கியங்கள் நூற்றுக் கணக்கானவையாகும்.
சுவாமி விபுலானந்தரின் இந்த நூற்றாண்டு விழா ஆண்டில் அவரது பணிகளை நினைவு கூர்தல், மனுக்குல உயர்விற்குப் பாடு பட்டோருக்கு நன்றிக்கடன் செலுத்தியதாகும்.
tp-I992.
A
-08

சர்வதேசச் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்ற எழுத்தாளர்
செ. கதிர்காமநாதன்
எழுத்தாளனாகக் கதிர்காமநாதனது பெயரையும் எடுத்துக் கூறி வந்தோம். அப்பெயர் நிற்கிறது. நிற்கும். 'புகழுடம்பு என்பது உண்மையில் இதுதான்.
ழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றின், ஒரு காலப் பிரிவின் உதாரண
பல்கலைக் கழகத்துத் தமிழ்ச் சஞ்சிகை ஆசிரியன், பட்டதாரி, பத்திரிகையொன்றின் மதிப்புறு உதவியாசிரியன், நாட்டின் உயர் நிர்வாச் சேவை உத்தியோகத்தன், இரு நூல்களின் ஆசிரியன், ஈழத்துத் தமிழ் வாழ்க்கையை உலகின் பல்வேறு மொழிகளிலும் பரப்பி நிற்கும் சர்வதேசச் சிறுகதைத் தொகுதியிலிடம் பெறும் எழுத்தாளன்.
இலக்கிய ஆர்வம் மிக்க முப்பது வயது இளைஞனுக்கு இவற்றைவிட, வேறென்ன புகழ் வேண்டும்?
கார்த்திகேசு சிவத்தம்பி
1958-ம் ஆண்டு கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பில் நான் சேர்ந்த காலம். எங்கள் மாணவ மன்றத்தில் ஒரு தினம் ஆலயப் பிரவேசம் பற்றி மாணவர் மத்தியில் விவாதம் ஒன்று எழுந்தது. மாணவர்களில் பெரும்பான்மையோர் ஆலயப் பிரவேசத்தை ஆதரிப்பவர்களாக இருக்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயங்களுள்
-09

Page 15
விடக்கூடாது என்பதில் வன்மையான கருத்துள்ள எங்கள் சக மாணவன் ஒருவன், தனது கட்சிக்குரிய நியாயத்தை எடுத்துச் சொல்லும்போது, தாழ்த்தப் பட்டவர்கள் எங்களுடைய கோயிலுக்குள் ஏன் வரவேண்டும்? தாங்களே ஒவ்வொரு கோயிலைக் கட்டி வழிபடுவது தானே!’ என்ற பொருள்பட நையாண்டியாகப் பேசினான்.
அப்போது அவனுடைய குரலைத் தவிர அமைதி குடி கொண்டிருந்த அந்தச் சபையில் திடீரென ஒரு குரல் குமுறி எழுந்தது. தார்மீகக் கோபமும் கொந்தளிப்புங் கொண்ட மனிதாபிமானத்தின் சங்கநாதமாக ஒலித்துச் சபையின் ஒழுங்கு முறைகளை உதாசீனம் செய்து, பொறுமையின் எல்லையில் பிறந்த அந்தக் குரலின் தகிப்பிலே வாடிப்போனவனாய், அந்த மாணவனும் வாயடங்கி அமர்ந்தான்.
இதுவரை அமைதியாக இருந்த சபையில் சிறு சலசலப்பு. தாங்கள் தோன்றிய வர்க்கத்தின் நலனைப் பாதுகாக்கின்ற பிரதிநிதிகளாக எண்ணிக் கொண்டிருந்த மாணவர்களின் சிந்தனையில் ஒரு திருப்பம். அந்தக் குரல் வந்த திக்கையே மாணவர்கள் எல்லோரும் வியப்போடு நோக்குகின்றனர். உள்ளக் குமுறலை வார்த்தைகளாகக் கொட்டியபின் முகத்தில் துளிர்த்திருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்தது . அந்த எரிமலைக் குரலில் பேசிய சின்னஞ் சிறிய உருவம். அமைதியான இந்தச் சிறிய உருவத்திடமா இவ்வளவு ஆழமான போர்க் குணம் கொண்ட ஒரு நல்ல உள்ளம்! என்ற வியப்பு எங்கள் எல்லோருக்கும்.
அந்த உருவம் வேறு யாருமல்ல. நண்பன் செ. கதிர்காமநாதன் தான்!
"தெணியான்’
தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இலக்கிய வாழ்க்கைக்கும் அதிக வேறுபாடும் இடைவெளியும் இருத்தலாகாது என்ற சிறந்த கருத்துடையவராயிருந்த ஆசிரியருக்குத் தொடக்க முதல் இறுதிவரை வாழ்க்கை சவாலாகவும் போராட்டமாகவுமே இருந்தது. அவற்றை ஏற்று இனிமை நம்பிக்கையுடன் வாழ முயன்றார் கதிர்காமநாதன்.
தன்னையும் தனது நாட்டையும் பாதிக்கிற சகலதையும் நுண்மையாய் வாங்கிக் கொள்பவனே கலைஞன்” என்று ஓரிடத்தில் எழுதினார் அவர். நுண்மையும் நுண்ணயமும் கதிரின் தனிச் சிறப்பாயமைந்திருந்தது.
க. கைலாசபதி.
*கார்க்கி’ இதழில் ஒரு சிறு கதை படித்தேன். செ. கதிர்காமநாதன் எழுதிய 'வெறும் சோற்றுக்கே வந்தது.
-10

தினசரி சாம்பல் மொந்தன் வாழைக் காயையும் பூசனிக்காயையுமே ஆகாரமாய்த் தின்று தின்று நாக்கு செத்துப் போன வள்ளிக்கு அதிர்ஷ்ட மடிக்கிறது. அதை 'அதிர்ஷ்டம்' என்று தான் அவளைப் பெற்ற ஆத்தாளும் அப்பனும் சொன்னார்கள். வள்ளிக்கும் அது அதிர்ஷ்டம் என்று தான் நம்பிக்கை.
இறைச்சி, மீன், முட்டை தினசரி இதைச் சாப்பிடக் கொடுத்து வைக்கிறது என்றால் அது அதிர்ஷ்டம் அல்லாமல் வேறு என்னவாம்? வள்ளிக்கு கொழும்பிலே ஒரு வீட்டில் வேலை கிடைக்கிறது.
‘உன்ரை அதிர்ஷ்டம் தானடி எங்களட்டை வந்திருக்கிறாய். வள்ளிக்கு ஆரம்பத்தில் எஜமானியின் பேச்சு நியாயமாகத்தான் தோன்றுகிறது. பிறகு அது அவமானப் பட வேண்டிய விஷயமாகி கடைசியில் ஆத்திரப்பட வேண்டிய விவகாரமாகவும் ஆகிவிடுகிறது.
கடைசியில் இறைச்சி, மீன், முட்டை அதிர்ஷ்டத்தை விட ஆத்தாள் போடுகிற மொந்தன் வாழ்க்காயும், பூசணிக்காயுமே மேல் என்று பிடிவாதமாகப் புறப்பட்டு விடுகிறாள், வள்ளி.
இந்தக் கதையில் வர்க்க பேதங்களின் அக்கிரமம் பற்றிக் கோபாவேசமான பிரசாரங்கள் இல்லை. சமூகக் கொடுமைக்கு எதிரான கோஷங்கள் எதுவும் இல்லை. வள்ளியின் உணர்வுகள் சிறுகச் சிறுக உருமாறுவது கூட நானாகச் சொன்னதுதான். கதாசிரியர் இதை ஒன்றும் சாவாசமாக விளக்கிக் கொண்டு உட்காரவில்லை.
மலர்மன்னன
- டிசம்பர் - 1972
A

Page 16
சிதம்பர ரகுநாதன்
ங்கிலத்திலே doyen என்றொரு சொல் உண்டு. பிரஞ்சு மொழியிலிருந்து ஆங்கில மொழி பெற்றுக் கொண்ட பல சொற்களில் இதுவும் ஒன்று ஒரு சங்கத்திலே மூத்தவர், முதல்வர், தலையாயவர், பலராலும் மதித்துப் போற்றப்படுபவர் என்றெல்லாம் பொருள் தரும் பதம் அது. இன்று தமிழுலகிலே முற்போக்கு எழுத்தாளருள் doyen என்று வழங்கத்தக்க தனிச் சிறப்பு வாய்ந்தவர் சிதம்பர ரகுநாதன் என்று கூறுவது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப் படுவதொன்றாகும். தோற்றத்தில் இன்னும் இளைஞராகவே இருக்கும் ரகுநாதன் வயதால் மூத்தவர் அல்ல, அவரை விட மூத்தவர்கள் சிலர் முற்போக்கு அணியிலேயே உள்ளனர். ஆயினும் பல்துறைப் பயிற்சியும் சிருஷ்டி ஆற்றலும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற எழுத்தாளர்கள் மிகச் சிலரே இருக்கின்றனர். அவர்களுள் ரகுநாதனுக்குத் தனியிடமுண்டு.
திருநெல்வேலிச் சீமையிலே 1923-ம் வருடம் பிறந்த தொ. மு. சிதம்பர ரகுநாதன் இன்னும் அறுபது வயதை அடையவில்லை. எனினும் ஏறத்தாழ நான்கு தஸாப்தங்களாக எழுதிவரும் அநுபவம் நிரம்பியவர். சொந்தமாக எழுதியவையும் மொழிபெயர்த்தவையுமாக சுமார் முப்பது நூல்களின் ஆசிரியர், இவரது ஆக்கங்களை நான்கு பிரிவுகளுக்குள் அடக்கலாம். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம் என்னும் துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்திருக்கிறார். 'பாரதி - காலமும் கருத்தும் என்னும் நூல் அண்மையில் வெளிவந்தது. ஆயினும் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் அவர் எழுதி வெளியிட்ட இலக்கிய விமர்சனம் (1948)என்னும் நூலே அவரது பெயருடன் ஒட்டிக் கொண்டதாகப் பலராலும் அடிக்கடி பேசப்படுவது. 1956 ம்
-12
 

வருடம் ரகுநாதனை நான் முதன் முறையாகத் திருநெல்வேலியில் அவரது இல்லத்தில் சந்தித்த போது அந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருந்த சமயம் அன்பளிப்பாக ஒரு பிரதி தந்தார். அப்பொழுது நூலைப் படித்த வேளையில் மனத்தில் பதிந்த சில வாக்கியங்களும் சொற்றொடர்களும் இட்பொழுதும் நினைவில் நிலைத்து நிற்கின்றன.
ரகுநாதன் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் சிந்தித்தவை - பல வழிகளில் தமிழுக்குப் புதியதாயும் ஏனையோருக்கு முன்மாதிரிகளாயும் இருந்து வந்திருப்பது சிறப்பாகக் குறிப்பிடவேண்டியதாகும். இலக்கிய விமர்சனம் அவரது இளமைத் துடிப்பின் வெளிப்பாடாக, தமிழவன் ஓரிடத்திற் குறிப்பிடப்பட்டிருப்பது போல, அவ்வப்போது பகுதி பகுதியாக மூளையில் பட்டதையெல்லாம் சொல்லிவிடும் பிரகடன நூலாகத் தோன்றக் கூடுமாயினும். இன்றும் இளமை குன்றாமல் விளங்கும் விமர்சன நூலாகத் திகழ்கின்றது. விமர்சனக் கலை அதன் பின்னர் உலகிலும் - தமிழிலும் - எவ்வளவோ நடந்து சென்று விட்டது. ஆயினும் மேனாட்டு இலக்கிய விமர்சன முறையைத் தமிழ் மயப்படுத்திப் பிரயோக விளக்கம் செய்ய முற்பட்ட முதலாவது நூல் என்ற வகையில் அதன் ஸ்தானம் உறுதிப் படுத்தப்பட்டு விட்டது. விமர்சனத் துறை சார்ந்தவனவாக ‘சமுதாய இலக்கியம், *கங்கையும் காவிரியும்', 'பாரதியும் ஷெல்லியும் பாரதி - காலமும் கருத்தும்' என்பன பின்னர் வெளிவந்தவை. அவற்றுள் சமுதாய இலக்கியம்சமூகவியல் அணுகுமுறையைப் பிரபலியப்படுத்தியதாகும்.
சிறுகதை மன்னர் புதுமைப் பித்தனைப் பற்றிப் பலரும் நன்கு அறியாதிருந்த வேளையில், மணிக்கொடிக் குழுவினர் புதுமைப்பித்தன் பெயரை நழுவ விட்டிருந்த வேளையில், புதுமைப் பித்தன் வரலாறு' (1951) என்னும் நூலை எழுதினார் ரகுநாதன் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு எடுத்துக் காட்டாக அது அமைந்தது. அதனைத் தொடர்ந்து புதுமைப்பித்தன் கவிதைகள் (1954) ரகுநாதனின் நீண்ட முன்னுரையுடனும் விளக்கக் குறிப்புகளுடனும் வெளிவந்தது. வசன கவிதை . புதுக்கவிதை பற்றிய சர்ச்சைகள் மலிந்துள்ள இக்காலத்தில், ரகுநாதன் ஏறத்தாழ இருபது பக்கங்களில் எழுதியிருக்கும் சுவாரஸ்யமான - சிந்தனையைத் தூண்டும் - பதிப்புரை பலரும் படித்துப் பயன் பெறத்தக்கது. வெளிவந்த காலத்தில் தமிழ் ஒளி உட்படப் பலர் அம் முன்னுரை குறித்துக் காரசாரமாக விவாதித்தார்கள் ரகுநாதன் புதுமைப்பித்தன் வரலாற்றினை விரிவாக எழுதி வெளியிட்டதன் பயனாகவே புதுமைப்பித்தன் படைப்புகள் இலக்கிய உலகில் உரிய இடத்தைப் பெறலாயின.
இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அதற்குச் சற்று முன்னதாகவும் நல்ல முறையில் ஆரம்பிக்கப் பெற்ற தமிழ் நாவல். இடையில் தொடர்கதை எழுத்தாளராலும், மிகையுணர்ச்சி எழுத்தாளராலும் திசை திருப்பப்பட்டு நலவுற்றிருந்த வேளையில் பஞ்சும் பசியும் (1953) என்னும் யதார்த்த நாவலை எழுதி மற்றொரு முதலாவது என்னும் சாதனையை நிலை நாட்டிக் கொண்டார் ரகுநாதன். (அதனை முற்பட விமர்சித்துப் பாராட்டியவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் ரகுநாதனுக்கும் எனக்கும் கடிதத் தொடர்பு அடிக்கடி நிகழ்ந்து
-13

Page 17
வந்தது) இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் அறுபதுகள் துவக்கம் வேகமாக வளர்ந்து வந்துள்ள சமூக - யதார்த்த - நாவலுக்கு ரகுநாதனின் பஞ்சும் பசியும் வழி காட்டியாக அமைந்தது என்று கூறுதல் தவறாகாது. கார்க்கியின் தாய் என்னும் நாவலைத் தமிழில் பெயர்த்த ரகுநாதன், தனது நாவலை எழுதுகையில் உலகப் புகழ் பெற்ற அந்த எழுத்தாளனின் ஆக்கங்களின் பாதிப்பைப் பெற்றிருந்தமை வியப்பன்று. 1957ல் 'பஞ்சும் பசியும் நாவல் செக் மொழியில் பெயர்க்கப்பட்டது. ரகுநாதனின் நெருங்கிய நண்பராயிருக்கும் செக் தமிழ் ஆய்வாளர் கமீல் சுவெலபில் நாவலை மொழிபெயர்த்தார். “கன்னிகா', "புயல் ஆகிய நாவல்களையும், தான் சிலகாலம் நடத்திய 'சாந்தி’ என்னும் சஞ்சிகையில் தொடர்கதையாக வெளியிட்டு (முற்றுப் பெறாத) "நெஞ்சிலே இட்ட நெருப்பு என்னும் புனைகதையையும் எழுதியிப்பினும் அவருக்கு அழியாப் புகழை ஈட்டிக் கொடுத்தது. பஞ்சும் பசியும் என்னும் நாவல்தான். தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றிலே அதற்குத் தனியிடமுண்டு.
இவ்வாறு சாதனைகள் பல புரிந்த ரகுநாதன், பல காலமாகப் பொதுவுடமைத் தத்துவத்தைத் தழுவியவராக இருந்து வந்திருக்கிறார். மார்க்சீயத்தை உள்வாங்கி, தமிழ்க் கலை இலக்கிய மரபினை அதனுடன் கலந்து இலக்கியம் படைப்பவராக இருப்பதே அவரது தனிச் சிறப்பு எனலாம். அவரது கவிதைகளில் இதனை மிகத் துல்லியமாய்க் கண்டு கொள்ளலாம். கவியரங்கக் கவிதைகளில் தனக்கெனத் தனிப்பாணி ஒன்றை வகுத்துக் கொண்டுள்ள ரகுநாதன், திருச்சிற்றம் பலக் கவிராயர் என்ற புனைபெயரிலேயே பெரும்பாலான கவிதைகளை எழுதியிருக்கிறார். இடைக்கால இலக்கிய வழக்கையும், திருநெல்வேலிப் பேச்சு வழக்கையும் அளவறிந்து சேர்த்து அற்புதமான ஆற்றலுடனும், அழகுடனும் கவிபாடும் ரகுநாதன் புதுக்கவிதை குறித்துத் திடமான கருத்து உடையவர் அப்பொருள் பற்றிப் பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்தபோதும் ரகுநாதனுடன் கருத்து முரண்பாடுடையவர்களும், அவருடைய எழுத்துக்களில் நெஞ்சைப் பறிகொடுப்பதற்குக் காரணமாயிருப்பது நடைச் சிறப்பாகும். ரகுநாதனைப் புதுமைப்பித்தன் பால் ஈர்த்ததும் நடையில் அவருக்கிருந்த ஈடுபாடு என்றே கருதத் தோன்றுகிறது. கவிதையிலும் உரைநடையிலும் எடுப்பான - வைரம் பாய்ந்த - தற்புதுமையான - சொல்லாட்சியைக் கையாள்பவர் ரகுநாதன். இது யாரும் ஏற்றுக் கொண்ட உண்மை. பல எழுத்தாளர்கள் நடைக்காக, உயிரை விட்டுப் பொருள் வலுவற்ற வெறும் சொல்லங்காரத்திலே சொக்கி நின்று விடுவதையும் காண்கிறோம். ஆனால் சமூகப் பார்வை திறம்பாத ரகுநாதன் பொருளிலிருந்து பிரிக்க முடியாத நடைவளம் நயம்படப் படைப்பவர். கம்பனின் காம்பீர்யத்தைச் சிலாகித்துப் பேசும் ரகுநாதன் நவீன உரை நடையில் அத்தகைய கம்பீரத்தைப் பெய்து காட்டியவர். இவ்விஷயத்தில் காலஞ் சென்ற கு. அழகிரிசாமிக்கும் ரகுநாதனுக்கும் நிரம்பிய ஒற்றுமை உண்டு. ஒரே ஆண்டிற் பிறந்த இருவரும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமன்றி, இணைந்து இலக்கியம் படைக்கும் இரட்டையராயும் இருந்திருக்கிறார்கள். சக்தி சஞ்சிகையில் இருவரும் கடமையாற்றிய காலத்தில் இரட்டையர்' என்ற புனைப் பெயரில் கவிதைகள் எழுதினர். ரகுநாதன் கதைகள் ரகுநாதன் கவிதைகள் என்னும் தலைப்புகளில்
-14

ரகுநாதன் நூல்களை வெளியிட்டதைப் போலவே, ‘அழகிரிசாமி கதைகள் என்னும் தலைப்பில் அழகிரிசாமியும் ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். இரு கதைத் தொகுப்புகளின் முதற் பதிப்பு - சக்தி வெளியிட்டாக அமைந்தது. வைகோவிந்தன் மீது இருவரும் ஆழ்ந்த மரியாதை கொண்டவர்கள். இன்னொரு வகையிற் சொன்னால் 'சக்தி சஞ்சிகையில் அவர்கள் பணிபுரிந்த காலப் பகுதியிலேயே முழுமூச்சாகப் பலதரப் பட்ட இலக்கிய பரிசோதனைகளில் ஈடுபட்டிருந்தனர் எனலாம். "சக்தி வரிசையில் வெளியிடப்பட்ட தொகுப்புகளில் இருவரின் கைவண்ணத்தையும் பூரணமாகக் காணலாம். சிறந்த மொழிபெயர்ப்புகளைச் செய்தனர்.
ரகுநாதனைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். ஆயினும் ஒன்று மட்டும் கூறியே ஆகவேண்டும். எழுத்தையே தொழிலாகக் கொண்டு இன்றுவரை வாழ்ந்துவரும் அவர் எப்பொழுதும் இலக்கியத்தை ஆழமாக நேசித்து அதனை உயர் நிலையில் வைத்து மதித்து வந்திருக்கிறார். வணிக நோக்கோ, மலினப் போக்கோ கிஞ்சித்தும் அவரைத் தொட்டதில்லை. அந்தரங்க சுத்தியுடன் இலக்கியத்தை அணுகுபவர் அவர். அதனாலேயே இலக்கிய எதிரிகளும் அவருக்கு அநேகர் இருக்கின்றனர். புதுமைப்பித்தன் வரலாறு என்னும் நூலிலே, இறுதிப் பந்தியில் புகழ் பூத்த அந்த எழுத்தாளரைப் பற்றி ரகுநாதன் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.
“புதுமைப்பித்தன் யார்? இலக்கியத் திருடனின் பேய்க்கனவு. புத்தகாசிரியர்களுக்கு ஒட்டக் கூத்தன். வலுவற்றுக் கிடந்த தமிழ் வசனத்துக்கு வாலிபம் தந்த சஞ்சிவி. இளம் எழுத்தாளர்களின் இலட்சியம். யதார்த்தவாதிகளின் முன்னோடி’
ஏறத்தாழ இவை ரகுநாதனுக்கும் பொருந்தக் கூடியவை. இலக்கியப் போலிகளையும் சனாதனிகளையும், நவிசிலக்கியக்காரரையும் ரகுநாதன் சாடும் பொழுது அவரது இலக்கிய உணர்ச்சியையும் தர்மாவேசத்தையும் தரிசிக்கலாம். அண்மைக் காலங்களில் அத்தகைய எழுத்துகள் மிகக் குறைவே. எனினும் ‘சக்தி', 'சாந்தி, தாமரை முதலிய ஏடுகளில் காலத்துக்குக் காலம் அவர் எழுதியிருக்கும் மதிப்புரைகளையும், விமர்சனங்களையும் படித்திருப்பவர்களுக்கு, அவரின் அப்பழுக்கற்ற ஆளுமையும் அனாயாசமான இலக்கிய ஆற்றலும் நன்கு பரிச்சயமானவையாய் இருக்கும். கடந்த சில காலமாக, பாரதி ஆய்வுகளிலேயே தனது கவனத்தைச் செலுத்தி வந்திருக்கும் ரகுநாதனிடமிருந்து கருத்தார்ந்த - காத்திரமான - சில நூல்களை இலக்கிய உலகம் எதிர்ப்பார்த்திருக்கிறது. இலங்கைக்குக் கால் நூற்றாண்டுகளுக்கு முன் (1956-ல்) விஜயஞ் செய்த ரகுநாதனுக்குப் பல நண்பர்கள் இங்கு உள்ளனர். இவ்வாண்டு அவர் இங்கு வருவார் என்ற செய்தி இலக்கிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும். பாரதி நூற்றாண்டு விழாக்கள் நடைபெறும். இவ்வாண்டில் சிறந்த பாரதி ஆய்வாளர் ஒருவரின் வருகை வரவேற்கத்தக்கது.
- 1982 - 6D6R) A 28
-15

Page 18
உண்மையான இலக்கிய
உழைப்பாளன்
கார்த்திகேசு சிவத்தம்பி
அவ்விலக்கியத்தின் முற்போக்கு நிலைப்பட்ட ஆழப் பாட்டையும்
அகலப்பாட்டையும் வற்புறுத்துவதும் - அவற்றுக்காகச் செயற்படுவதுமே ‘மல்லிகை தமிழ்ச் சஞ்சிகையுலகில் நிலை நிறுத்த விரும்பும் சுய நியாயப் பாடாகும். அந்த நியாயப்பாட்டின் படி, மல்லிகை தனது முன் அட்டையிற். கட்டாயமாகப் பிரசுரிக்க வேண்டிய புகைப்படங்களுள் திரு. தி. க. சிவசங்கரனது புகைப்படமும் ஒன்றாகும்.
f ழத்துத் தமிழிலக்கியத்தின் பொதுவான வளர்ச்சியையும், குறிப்பாக OC
உண்மையில், இந்த மல்லிகை இதழில் தி. க. சியின் புகைப்படத்தைப் பிரசுரிப்பதற்காக ஜீவாவைப் பாராட்டுவதிலும் பார்க்க, தி.க, சியின் புகைப்படத்தை இதுவரையில் ஏன் பிரசுரிக்கவில்லை என்று கண்டிக்க வேண்டும் போலவே தோன்றுகின்றது.
ஏனெனில், ஈழத்திலக்கியத்தின் முற்போக்குப் பரிமாணத்திலும், அப்பரிமாணம் ஆழமாகவும் அகலமாகவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழக எழுத்தாளனான எமது மதிப்புக்குரிய திரு. தி. க. சிவசங்கரனை விட, வேறு யாரேனுக்கும் அதிக ஆதரவும் சிரத்தையும் இருக்க முடியுமென்று கூறிவிட (Uptgu Tg5.
 

தி. க், சி' என்ற பெயர்க்குறுக்கம் மூலமே தெரியப்பட்டும் அழைக்கப்பட்டும் வரும் திரு. தி. க. சிவசங்கரன் ஈழத்துத் தமிழிலக்கியத்தின் வளர்ச்சிகள், சாதனைகள் தமிழகத்திற் கணிக்கப்பட வேண்டுமென்பதிலும் கெளரவிக்கப்பட வேண்டும் என்பதிலும் பெரும் சிரத்தை காட்டுபவர்.
ஈழத்துத் தமிழிலக்கியம் பற்றித் தி. க. சி. கொண்டுள்ள ஈடுபாடு, நவீன தமிழிலக்கியத் துறையில் அவர் கொண்டுள்ள அக்கறை, ஈடுபாட்டின் ஓர் அங்கமாகும்.
தமிழகத்தில் இன்று தொழிற்படும் மிக முக்கிய இலக்கிய முன்னேற்றச் செயல் வீரர்களுள் மிக முக்கியமானவர்களுள் திரு. தி. க. சிவசங்கரனும் ஒருவர். நவீன இலக்கியம் பற்றிய செயல் தளங்களுக்குச் சென்று தொழிற்படுவோரிடையே அவர்களுள் ஒருவராக நின்று நவீன இலக்கியத்தின் மேற் செலவினைத் துரிதப்படுத்துவது, நவீன இலக்கியத்தின் கருத்து நிலை, வரலாறு போன்றன சம்பந்தமாகக் கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும் பொழுது அதிற் பங்கு கொண்ட விடயம் பற்றிய தெளிவையும் விளக்கத்தையும் ஏற்படுத்துவது போன்றன இலக்கிய அபிவிருத்தித் தொழிற்பாடுகளில் தி. க. சி. முக்கிய இடம் வகிக்கின்றார். தி. க. சியின் இந்த இலக்கிய சேவை இன்று கணிப்புப் பெற்றுள்ளது. இதனால் எழுத்தாளர் நிறுவனங்கள் முதல் பல்கலைக் கழகங்கள் வரை, நவீன தமிழிலக்கியம் பற்றிய நிகழ்ச்சியமைப்புக்களுக்கும் நடத்துகைக்கும் அவரது ஆலோசனையும் உதவியும் பெறப்படுவது பெருவழக்காகியுள்ளது. V
நவீன இலக்கிய அபிவிருத்தியானது திட்டவட்டமான முற்போக்குப் பாதையிலேயே செல்ல வேண்டுமென்பது அவரது எண்ணித் துணிந்த நிலைப் பாடாகும் இது அவரது அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வரும் ஒரு நிலைமையாகும். இதனால் தி. க. சி. தமிழில் முற்போக்கு இலக்கியத்தின் இன்றைய முக்கிய செயற்பாட்டு வீரனாக, மேற்கிளம்பியுள்ளார். இவ்வாறு அவர் முற்போக்கு இலக்கியத்தின் வளர்ச்சிக்குப் போரிடும் பொழுது தமிழ் நாட்டின் முற்போக்கு இயக்கங்களின் அரசியல் இயக்க வரையறைகளாற் கட்டுப் படுத்தப்படாது. தமிழ் நாட்டின் பொதுவான முற்போக்கு வளர்ச்சிக்கு வேண்டிய இலக்கிய முற்போக்கு வளர்ச்சியினை அணி வேறுபாடின்றி ஊக்குவிப்பவராக விளங்குகின்றார். இவ்வாறு கூறும் பொழுது இவர் தனக்கென ஓர் அணியைச் சாராதவர் என்று கருதிவிடக் கூடாது. தனக்கென ஓர் அணியில் நிற்பவர், அணியில் - பற்றுறுதியிலும் கருத்து நிலைப்பாட்டிலும் - உறுதியாக நிற்பவர். அதற்கான கணிப்பினையும் பெற்றுள்ளவர். அவர் உத்தியோகமே அந்தப் பற்றுறுதிக்கான சான்றிதழாக அமைந்துள்ளது:
ஆனால், இலக்கியத் துறையில் அரசியல் அணி வேறுபாடுகள் கொண்டுவரப்பட வேண்டியதில்லை. முற்போக்கு அணிகள் யாவற்றுக்குமுள்ள
-17

Page 19
பொதுவான எதிரியை எதிர்நோக்குவதற்கும் சாடுவதற்கும் சகல முற்போக்குச் சக்திகளும் அணி வேறுபாடின்றி ஒருங்கு சேரவேண்டிய காலத்தேவை இன்று உள்ளது என்பது அவர் நிலைப்பாடாகும்.
முற்போக்கு அரசியற் கட்சிகள் ஓரணிப்பட நில்லாமை காரணமாக இலக்கியத்துறையிலும் ஒன்றுக்கொன்று முரணான வெவ்வேறு நிறுவன நிலைப்பட நின்று போராட வேண்டிய நிலைமை ஈழத்துத் தமிழிலக்கியத்தின் வரலாற்றில் ஏற்படவில்லை. கட்சிப் பிரிவுகளும் அணி வேறுபாடுகளும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவன நிலைப்பட்ட ஒருமைப்பாட்டைக் குலைக்க வில்லை. இலங்கை முற்போக்கு இலக்கிய அணியின் மிகச் சிறந்த சாதனை இதுவே என்பது தி. க. சியின் கருத்து. இதனாலேயே தமிழகம் ஏற்றுக் கொள்ளவேண்டிய முன்மாதிரிச் சாதனைகளை ஈழத்தின் முற்போக்கு இலக்கிய கர்த்தாக்களாற் செய்ய முடிகின்றது என்ற உண்மையை நன்கு அறிந்ததன் காரணமாக இவர் எம்மை மதிக்கின்றார்.
இலக்கியத் துறையின் பொதுவான முற்போக்கு வளர்ச்சிக்குச் சகல முற்போக்குச் சக்திகளையும் உள்ளடக்கி நிற்கும் ஓர் இயக்கப் போக்கே இன்றைய வரலாற்றுச் சூழலில் பொருத்தமானது எனும் கருத்தைக் கொண்டுள்ள இவர் அக்கருத்தினைத் தாம் தாமரை யின் பொறுப்பாசிரியராக இருந்த பொழுது செயற் படுத்திக் காட்டினார்.
தி. க. சி. என்னும் இலக்கிய நடவடிக்கையாளனின் ‘லிற்றறி அக்ரிவிஸ்ற் செல்வாக்கும் ஏற்புடைமையும் தூத்துக்குடி முதல் சென்னை வரை ஏற்கப்படுவதற்கான காரணம் தி.க. சியின் ஆளுமைச் சிறப்பேயாகும். தனது நிலைபாடுகளை விவாதப் பாங்கினால் வற்புறுத்தாது, ஆக்கிரமிப்புணர்வோடு உட்புகுத்தாது, விசால மன விளக்கங்களாலும் எடுத்துக் காட்டும் பண்பு தி. க. சியின் தனியுடைமை யாகும். தி.க.சியுடன் இணைந்து செயலாற்றும் எவரும் தி. க. சியின் சொந்த நண்பனாகாது இருக்க முடியாது. கருத்து நிலையற்ற, உணர்வு நிலைப்பட்ட அத்தியந்த உறவாகவே ஆக்கிக் கொள்வது அவர் பண்பு தி. க. சி. தனிநிலையுறவுகளில் எப்பொழுதும் இதயத்தாற் பேசமுயல்பவர். அதனால் நிறைய நண்பர்களையுடையவர் எதிரியை மூளைப் பலத்தாலும் நண்பனை இதய ஆழத்தாலும் வென்று கொள்பவர்.
திருநெல்வேலியைச் சேர்ந்த சிவசங்கரன் அப்பிரதேசத்தின் பிரசித்திபெற்ற இன்முக விருந்தோம்பலை எடுத்துக் காட்டுவதில் திருநெல்வேலிச் சீமையின் முழுமையான பிரதிநிதியாவர்.
1956-ஆம் ஆண்டு அவரைத் திருநெல்வேலியில் முதல் முதற் சந்தித்தேன். ரகுநாதன் அறிமுகம் செய்து வைத்தார். அப்பொழுது திருநெல்வேலியிற் கடமையாற்றியவர் இப்பொழுது சென்னையில் சோவியத் நாடு அலுவலகத்தில் எழுத்தாளராகக் கடமையாற்றுகின்றார். ܗ
-18

ஒவ்வொரு முறையும் தமிழகம் செல்லும் பொழுது தி. க. சியைச் சந்திக்கத் தவறுவதில்லை. ரகுநாதன், விஜயபாஸ்கரன். தி. க. சி போன்ற எழுத்தாள நண்பர்களும் கடமைபார்க்குமிடத்திற்குச் சென்று அளவளாவும் பொழுது பெரும் திருப்தி ஏற்படுகிறது. அந்த உணர்வினுக்குக் காரணமாக எனக்கு, தி. க. சி. என்றுமே வேறொருவராகத் தோன்றியதில்லை.
இந்தக் குறிப்பினை அந்த நட்புணர்வுக்கான சாட்சியமாகவே முன்வைக்கின்றேன்.
தி. க. சி. பற்றிய இந்தக் குறிப்பை எழுதுவதற்காகக் குறிப்பெடுத்த பொழுது, அவரை விவரிப்பதற்குப் பொருத்தமான 'லிற்றறி அக்ளிவிஸ்ற் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு 'அக்ரிவிஸ்ற் என்பதற்கான மொழிப்பெயர்ப்பினைத் தேடினேன். சென்னைப் பல்கலைக் கழகத்து ஆங்கில - தமிழ் அகராதியில், அச்சொல் பற்றிப் பின்வரும் குறிப்புத் தரப்பட்டுள்ளதைப் பார்த்தேன்.
"தமது உற்பத்தியளவினை, அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்'
இது தி. க. சிக்கு முற்றிலும் பொருந்தும். இந்தக் கருத்திலேயே தி. க. சி. தமிழகத்தின் இன்றைய கணிப்புடைய இலக்கிய உழைப்பாளிகளிலொருவராக விளங்குகின்றார்.
-ஜூன் - 1984

Page 20
வல்லிக் கண்ணன்
கார்த்திகேசு சிவத்தம்பி
ல்லிக்கண்ணனை வாழ்த்துகிறோம். வ 1978-ஆம் வருடத்துக்கான சாகித்திய அகெடமிப் பரிசு ரூபா
ஐயாயிரத்தைப் பெற்றுக் கொண்டமைக்காகவல்ல
1930 களிலே தமிழ் இலக்கிய உலகிலே புகுந்து, இலக்கிய முயற்சிகளை இலட்சிய வெறியுடன் நடத்தி வந்த ஒருவருக்கு
வெகுசனப் பண்பாட்டின் கோரப்பிடிக்குள் இலக்கிய சஞ்சிகைகளும், சஞ்சிகை எழுத்தாளர்களும் சிக்கி இலக்கியத்தையும், இலக்கியகாரரையும் சினிமாப் பாணி ’கிசு கிசு' எழுத்து மரபின் வழியிழுக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்தும் நேரிய இலக்கிய ஆர்வம், எழுத்து என்னும் 'சிறுபான்மைப் பண்பாட்டினைத் தொடர்ந்து பேணியும், இலக்கியத்துக்கேயுரிய விடயங்கள் பற்றியும் எழுதிவந்த ஒருவருக்கு
அரசு நிலைப்பட்ட இலக்கிய அங்கீகாரம், இலக்கிய ஏற்புடமை கிடைத்ததையிட்டு நாம் சந்தோஷப் படுகின்றோம்.
வல்லிக்கண்ணனுக்குக் கிடைத்துள்ள பரிசினைத் தவிர்க்க முடியா இலக்கிய அங்கீகாரம் என்றே கொள்ள வேண்டும். இந்த இலக்கிய அங்கீகாரம் இலைமறை காயாக விளங்கிய ஓர் எழுத்தாளருக்கான சங்கப் பலகை அங்கீகாரமன்று. ஏனெனில் வல்லிக்கண்ணன் இலக்கிய வலிமை 1930 களிலிருந்தே மணிக்கொடி, கிராம ஊழியன் காலத்திலிருந்தே, நியமமான இலக்கியகாரருக்குத் தெரிந்தது தான். இப்பொழுது வழங்கப்பட்டுள்ள இலக்கிய அங்கீகார ஸ்டார் வால்யூ இல்லாதவர்களும், "ஸ்டார் வால்யூ வினை வேண்டாதவர்களும், ஒதுக்கி
-20
 

விடுபவர்களும் சமகால இலக்கிய அங்கீகாரத்துடையவர்கள் என்பதை வழக்கத்திலே முக்கிய புதுமைக்கிடங்கொடாத இந்தியச் சாகித்திய அகெடமி ஏற்றுக் கொண்டுள்ளது தான் மனதுக்குத் திருப்தியளிக்கின்றது.
மேற்குறிப்பிட்ட அங்கீகாரத்திலும் பார்க்க முக்கியமானது தமிழன் புதுக்கவிதைக்கு வழங்கியுள்ள இலக்கிய அங்கீகாரமாகும். 1930 களில் சிறுகதையின் இலக்கிய ஏற்புடைமையிற் காணப்பட்ட தயக்கத்தினை இப்பொழுது புதுக்கவிதைத் துறையிற் காண்கின்றோம். புதுக்கவிதையின் இலக்கிய வம்சாவளி வன்மையாக விவாதிக்கப்பட்டு வரும் இந்நாட்களில் புதுக்கவிதையை ஓர் இலக்கிய வடிவமென ஏற்று அதன் வரலாற்றையும், அதற்கு இலக்கணத்தையும் வகுக்க முனைந்த ஒருவருக்குப் பரிசு வழங்கப்பட்டுள்ளதென்பதனை, அதுவும் அந் நூலைக் காட்டியே பரிசு வழங்கப்பட்டுள்ளதென்பதனை எண்ணும்பொழுது மனம் திருப்தியுறுகிறது.
வல்லிக்கண்ணன் அட்டைப்பட அழகனாக மாற்றப்பட்டுள்ளார். வெகுசனப் பண்பாட்டுக்கு இதுவெல்லாம் கைவந்த கலை.
நாம் முன்னர் எடுத்துக் கூறிய இலக்கிய அங்கீகாரம், ஏற்புடைமை யாவும் இத்தகைய பகட்டாரவாரத்துடன் நின்றுவிடுமோ என நாம் சந்தேகிக்க வேண்டும்.
ஏனெனில், இத்தகைய பகட்டாரவாரத்தினால் இலக்கிய உலகின் எம். ஜி. ஆர் களாகவும் சிவாஜி களாகவும் மாறிய பல நட்சத்திரங்களையும், அவர்களது இலக்கிய அவரோகண நிலையையும் நாம் அறிவோம். ஆனால், ஒரு துணிவு உண்டு. வல்லிக்கண்கண் இதற்கெல்லாம் மசிந்து கொடுக்கக்கூடியவரல்லர்.
வல்லிக்கண்ணனுக்குப் பரிசு வழங்கியமையால் அகெடமி தனது இலக்கிய இதயத்தினை நிரூபித்துள்ளது. அந்த இதயம் புதிய இரத்தத்தினைப் பாய்ச்சுதல் வேண்டும். அடுத்து வரும் பரிசுகள் அவ்வுண்மையை எடுத்துக்காட்டுதல் வேண்டும்
வல்லிக்கண்ணனுக்குக் கிடைத்த கெளரவம் கண்டு இலங்கை எழுத்தாளர் பூரிப்படைவது இயல்பே. இலங்கை எழுத்தாளர், விமரிசகர்களை அவர் எவ்வாறு நோக்குகின்றார் என்பதற்கு அவரது பரிசில் பெற்ற நூலே சான்று. எம்மைப் பொறுத்தவரையில் நாம் வல்லிக்கண்ணனில் வெகுசனப் பண்பாட்டின் சமூகத் திரிபுகளுக்கு இடங்கொடாத, இலக்கிய நேர்மையுள்ள, இலட்சியதாகமுடைய, இலக்கிய தாகத்தைத் தனது அன்றாட வாழ்க்கை முறையாக மாற்றிக் கொண்டுள்ள ஒருவரையே காண்கின்றோம். அதனால் அவருக்கு கிடைத்த இலக்கியக் கணிப்பு எம்மை மகிழ்வடையச் செய்கின்றது.
வல்லிக்கண்ணன் நவீன இலக்கிய ரிஷிகளில் ஒருவர். அந்த ரிஷிமூலம் மேலும் சுரந்து பல நூல்களைத் தருதல் வேண்டும்.
-LDTifé - 1979. A
-21

Page 21
பட்ருக்கோட்டை
ஆய்வு வளர்ச்சி:
ஒரு குறிப்பு
ட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பொன்விழா (13.04.193008.10.1959 கொண்டாடப் படும் இவ் வேளையில், அவரது ஆக்கங்கள் பற்றிய ஆய்வுகள் பரிணமித்து வந்திருக்கும் வரலாற்றை நோக்குதல் சாலப் பொருத்தமாகும் பட்டுக்கோட்டையின் பெருமையை முற்படத் தமிழுலகிற்கு எடுத்துக் கூறிய ப. ஜீவானந்தம் ஒரு சமயம் பின்வருமாறு எழுதினார். ”எந்தப் புலவர்பேரவையும், எந்தப் பல்கலைக் கழகமும், எந்தத் தமிழ்த் தெய்வமும் பட்டுக்கோட்டைக்கு மக்கள் கவிஞர் என்று பட்டம் சூட்ட வில்லை. மக்கள் மன்றமே அவருக்கு மக்கள் கவிஞர் என்ற பட்டத்தை மனமார வாயாரா வழங்கிற்று.” கவிஞர் மறைந்த ஓராண்டு நினைவைக் குறித்து எழுதப் பெற்ற ஒரு கட்டுரையில் (8-10-1960) ஜீவானந்தம் இவ்வாறு குறிப்பிட்டார்.
மக்களினதும் முற்போக்கு இயக்கங்களினதும் பக்கம் சார்ந்து நின்ற கவிஞன் அகால மரணமடைந்ததும், அவன் புகழ் மெல்ல மெல்லத் தமிழ் நாட்டிலும் தமிழ் வழங்கும் ஏனைய ஊர்களிலும் பரவத் துவங்கியது. குறிப்பாக முற்போக்கு ஏடுகள் கல்யாண சுந்தரத்தின் கவிதைகள் பற்றிய திறனாய்வுகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தன. தாமரை இதழ் இத்துறையில் முன்னோடியாகச் செயற்பட்டது. ஜீவானந்தம் உட்படப் பலர் கட்டுரைகள் எழுதிவந்தனர். எடுத்துக் காட்டாக, “எட்டய புரத்தின் வாரிசு பட்டுக் கோட்டை' என்ற தலைப்பில் எம். பி. மணிவேல் (தாமரை, அக்டோபர், 1962), எழுதிய கட்டுரையைக் குறிப்பிடலாம். கவிஞன் மறைந்த காலத்தையடுத்து இலங்கையிலும் கட்டுரைகள் ஆங்காங்கு வெளிவந்தன.
-22
 

உதாரணமாக கா. சிவத்தம்பி. தரை வளர்த்த கவிதை என்ற கட்டுரையில் (மரகதம், அக்டோபர், 1961). முக்கியமான சிந்தனைகளை முன் வைத்திருந்தார்.
பட்டுக் கோட்டையின் கவிதைகளை முழுமையாகவும் ஆழமாகவும் ஆராய்வதற்கு முதல் தேவையாக அக் கவிதைகள் தொகுத்துப் பதிப்பிக்கப்பட வேண்டியிருந்தன. என். சி. பி. எச். வெளியீடாக பி. இ. பாலகிருஷ்ணன் தொகுத்துப் பதிப்பித்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் (1967), என்னும் நூல் ஆய்வாளர்களுக்கு அடிப்படையானதாகும். கவிஞர் மறைந்த வேளையிலேயே அவரை நன்கறிந்தவர்களும் திரையுலகில் தொடர்பு கொண்டிருந்தவர்களும் சிற்சில குறிப்புகளும் கட்டுரைகளும் எழுதியிருந்தனர். உதாரணமாக முற்போக்குக் கலைஞர் டி. கே. பாலச்சந்திரன், நான் கண்ட மக்கள் கவிஞர் என்ற கட்டுரையை 1959 நவம்பரிலேயே (தாமரை) எழுதியிருந்தார். தாம் தாம் கேட்டுச் சுவைத்த பாடலடிகளை இவர்கள் சிலாகித்துப் பேசினர். தொகுதி வெளிவந்த பின்னரே முறையான ஆய்வுகள் மேற் கொள்ள வாய்ப்பு உண்டாயிற்று.
நான் அறிந்த வரையில் பட்டுக்கோட்டையின் பாடல்கள் பற்றிய ஆய்வினைத் தனி நூலாக வெளியிட்டிருப்பவர். பா. உதயகுமார் என்பவர். "பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் - ஒரு திறனாய்வு (1978) என்னும் நூல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம் ட்யில் பட்டத்திற்கான ஆய்வுரையாகும் கையடக்கமான அந்நூல் படிப்போர்க்குப் பயன் அளிக்க வல்லது. சமீப காலத்தில் வெளிவந்த வேறு சில நூல்களில் பட்டுக்கோட்டை பற்றிய அத்தியாயங்கள் உள்ளன. இத்தகைய நூல்களுள் வ. மூர்த்தி என்னும் ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள இக் காலக் கவிதைகள் மரபும் புதுமையும் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை, நா. காமராசன் மு. மேத்தா, ஏ. தெ. சுப்பையன் ஆகிய ஆறு கவிஞர்களை ஆராய்ந்து மதிப்பீடு செய்யும் அந்நூலிலே பட்டுக்கோட்டை பற்றிய பகுதி, நூலிற்குச் சிகரமாயமைந்துள்ளது. பட்டுக்கோட்டையின் கலை இலக்கியக் கொள்கையினை நிர்ணயிக்க முயலும் முக்கியமான அக் கட்டுரையில், மூர்த்தி கூறும் கருத்துக்கள் பலரும் படித்தறிய வேண்டியவை. தான் வாழ்ந்த காலத்தைச் சரியாகப் படம் பிடித்துக் காட்டியதோடு நில்லாமல், எதிர்காலப் படம் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் காட்டினார். கலை நயம் மிக்க கருத்துப் பரப்பலைச் செய்தார் என்பதே மூர்த்தியின் கட்டுரை கூறும் அடிப்படைக் கருத்தாகும். அண்மையில் வெளிவந்த என்னுடைய “சமூகவியலும் இலக்கியமும்’ (1979) என்ற நூலில் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைகளிற் காணப்படும் தனிச்சிறப்பியல்புகள் சிலவற்றை விவரித்தள்ளேன். தற்சமயம் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் பட்டுக்கோட்டையின் ஆக்கங்கள் பற்றிய ஆய்வுகள் சில நிகழ்த்தப் பட்டு வருகின்றன.

Page 22
கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாக வளர்ந்து வரும் ஆய்வுகளின் விளைவாகப் பின்வரும் விஷயங்கள் முன்னணிக்கு வந்திருக்கின்றன.
1. திரைப்படச் சாதனத்துக்கும் கவிதைக்குமுள்ள தொடர்பின் தன்மை. 2. பாரதி பரம்பரையில் பட்டுக் கோட்டையின் ஸ்தானம்.
3. நாட்டார் பண்பாட்டியலை நவீன கவிஞர் கையாளும் விதம். 4. மக்கள் விரும்பும் கலைக்கும் அழகியலுககும் உள்ள நெருங்கிய உறவு.
இரு வகையில் இந்நான்கு விஷயங்களும் அண்மைக்கால ஆய்வுகளில் இடம் பெற்று வருகின்றன. கல்யாணசுந்தரத்தின் பாடல்களை ஆராயும் பொழுது, குறிப்பாக சமூகவியல் நோக்கில் அவற்றைத் திறனாயும் பொழுது பொதுமக்கள் தொடர்பு சாதனவியல், நாட்டார் பண்பாட்டியல், மானிடவியல், அழகியல் என்பனவற்றைத் தொடர்பு படுத்தியே ஆராய வேண்டியிருக்கும் மறுபுறம் மேற்கூறிய துறைகளைத் தமிழிலக்கியங்களின் ஆக்கங்களை மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும். உதாரணமாக நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு (சென்னை 1976) என்ற நூலிலே சு. சண்முகசுந்தரம் எதிர்பார்க்கக் கூடிய விதத்தில் பட்டுக்கோட்டையின் பாடல்களை ஆராய்கிறார். சர்வசாதாரண மக்களின் செழிப்பான வாழ்க்கை அனுபவங்களையே உண்டு உருவாகியிருக்கிறார் பட்டுக்கோட்டையார். கவிஞரிடம் வழி வழி மரபு உண்டு.
பட்டுக்கோட்டை நமது காலத்தின் ஆற்றல் மிக்க படைப்பாளிகளில் ஒருவராக இருப்பதனாலேயே அவரது பாடல்கள். அவரளவில் முக்கியமானவையாக மாத்திரமின்றி, நவீன தமிழ்க் கவிதை சம்பந்தமான பல சிக்கலான பிரச்சினைகளுக்கு ஒளிபாய்சுவனாகவும் இருக்கின்றன. தனிமனித அவலப் புலம்பல்களுக்கும் சமூகப் பிரக்ஞை வாய்ந்த முழு நிறைவான கவிதைகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இதுதான். பாடலாசிரியனது அனுபவ உணர்வினில் பிறந்து பின்னர் அவனது சொந்த, தனிப் பட்ட உலகிற்கு மாத்திரம் கட்டுப்படாமல் பொதுவான உணர்வுகளுக்கு உருவம் கொடுப்பதே உயிர்த்துடிப்புள்ள - உயர்வான - கவிதையாகும். பட்டுக்கோட்டையின் படைப்புக்கள் அத்தகையவை என்பதே மேலும் மேலும் உறுதிப்பட்டு வரும் செய்தியாகும். பாரதிக்குப் பின் வந்த பட்டுக்கோட்டை, சில சில இடங்களில் பாரதியையும் விஞ்சிவிடும் சிறப்பை ஆய்வாளர்கள் காட்டிவருகின்றனர். அண்மையில் "செம்மலர் சஞ்சிகையில் முப்பெரும் கவிஞர்கள்’ என்ற தலைப்பில் அருணன் எழுதிவரும் தொடர் கட்டுரையில், "இயக்கத்தில் இணைந்து நின்ற இணையற்ற கவிஞர் என்ற கருத்து, விரிவாகவும் சான்றாதாரங்களுடனும் விவரிக்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ ஐம்பத்தைந்து (55) திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதிய கவிஞர் கல்யாணசுந்தரம் சினிமா என்ற சாதனத்தை நன்கு உணர்ந்து அதனை ஆண்டு கொண்டார் என்பது இப்பொழுது அதிகம் அதிகமாக உணரப்படுகிறது. உண்மையே
-24

அழகு என்ற மகாவாக்கியத்துக்கு நாம் காண உரைக்கல்லாக இலக்கியம் படைத்த இயக்கக் கவிஞன் பட்டுக்கோட்டை பாரதி பரம்பரையின் பரிணாமத்தையும் அவனது கவிதைகளிலே துலக்கமாகக் கண்டு கொள்ளலாம். இன்று திக்குத் திசை தெரியாது தடுமாறி அல்லற்படும் பல இலக்கிய கர்த்தாக்களுக்குப் பட்டுக்கோட்டை கலங்கரை விளக்கமாவான். கல்யாணசுந்தரத்தின் கவிதைகள் பற்றிய விஞ்ஞான பூர்வமான ஆய்வு பெருகப் பெருக, நவீன தமிழ்க் கவிதை பற்றிய விளக்கம் மேலும் தெளிவடையும் என்பதில் ஐயமில்லை.இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியத்தில் நவயுகத்தைப் பிரகடனஞ் செய்த சுப்ரமணிய பாரதியாரைத்தான் தமிழ் கூறும் நல்லுலகம் முதன் முதலாக 'மக்கள் கவிஞன் என்று மனமாரப் போற்றியது. படைப்பிலக்கியம் (சென்னை 1976). என்ற நூலிலே ந. பிச்சமுத்து பட்டுக்கோட்டை பற்றிக் கூறுமிடத்துக் குறிப்பிடுவது போல, ‘சமுதாயப் பிரச்சினைகளைப் பாடும் புலவருள் யாவரும் பாரதிக்குப் பின்னால் நிற்பவர்கள் தான். கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் அனைத்தும் மக்கள் பிரச்சினைகள் பற்றியவைதான். பட்டுக்கோட்டையின் பாடல்கள், உயிர்த் துடிப்புள்ள மக்கள், இலக்கியம் என்று சொல்லலாம்.
பட்டுக்கோட்டையின் பாடல்களைப் படிக்கும் பொழுதெல்லாம் எனக்கு லெனின் கூறியதுதான் நினைவுக்கு வருவதுண்டு.
“கலை மக்களுக்குச் சொந்தமானது. அதன் வேர் வஞ்சிக்கப்பட்ட பெரும்பாலான உழைப்பாளிப் பெருமக்களுக்கு இடையில் படர்ந்திருக்க வேண்டும். அது அவர்களை ஒன்றுபடுத்தி அவர் தம் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் ஆசைகளையும் நிறைவேறச் செய்வதாய் அவர் தம் கலை உணர்வைத் தூண்டுவதாய் அமைய வேண்டும்”.
-ஏப்ரல் - 1980
A

Page 23
ஆத்மாவின் என்ஜினியர்
றுபதுகளில் தமிழிலக்கியப் பரப்பில் மிக அழுத்தமாகக் கால் sel பதித்து, தற்போது முன்னணியில் நிற்பவர்களில் ஒருவர் நீல பத்மநாபன். சிறு சஞ்சிகைகளில் எழுதியே தம்மை ஸ்தாபித்துக் கொண்டவர். எழுபத்தேழில் கிடைத்த ராஜா சேர் அண்ணாமலைச் செட் டியார் பரிசு, நீ. ப. வை ஒரு இலக்கிய நட்சத்திரமாக வெளியுலகுக்குக் காட்டியதென்றாலும், அவருடைய இலக்கியத் தரம் எப்போதோ உறுதிப்படுத்தப் பட்டதும் ஒப்புக் கொள்ளப்பட்டதுமான ஒன்றாகும்.
பதின்மூன்று நாவல்கள், எட்டுக் கதைத் தொகுதிகள், கவிதைத் தொகுதிகளிரண்டு, கட்டுரைத் தொகுதி ஒன்று - இவ்வளவும் இந்த நாற்பத்தைந்து வயதுக் காரனின் காத்திரம் வாய்ந்த இலக்கிய அறுவடைகளாகும். நீ. ப. வின். நூல்கள், ஆங்கிலம், ஜேர்மன், இந்தி மற்றும் இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. "தலைமுறைகள்', 'பள்ளிகொண்டபுரம்', 'உறவுகள் ஆகிய நாவல்கள், தமிழ் நாவல் வரலாற்றில் மைல் கற்களாக அமைந்தவை. நல்லதொரு நாவலாசிரியராக அமைந்து விட்டமை நீ. ப. வின் சிறு கதாசிரியர் அந்தஸ்தை எவ்விதத்திலும் குறைத்துவிடவும் முடியாதுள்ளது.
‘என்னைச் சூழ்ந்திருக்கும் உலகின் துன்ப துயரங்கள் என்னை வெகுவாகப் பாதிக்கின்றன. அவற்றால் நோக்கொள்ளும் மனமதைத் தேற்ற,
-26
 

என் பேனாவைப் பாவிக்கிறேன்’ என்று சொல்லும் நீல பத்மநாபன், நான் படித்த இலக்கியங்களில் சந்தித்த மனிதர்கள். வாழ்க்கைகளிலும் பார்க்க, கண்ணெதிரே வாழும் மனிதனும் அவன் வாழ்வின் யதார்த்தமுமே என்னில் தாக்கமேற்படுத்திய சக்திகளாக உள்ளன என்று மேலும் குறிப்பிடுகிறார்.
எழுத்தை ஒரு யக்ஞமாய் ஆக்கிக் கொண்டவர் நீ. ப. ‘எழுத்தாளன் என்பவன். தன்னைத் தன் வழியில் உருவாக்கிக் கொள்கிற செயற்போக்கில் எத்தனையோ கசப்பான அநுபவங்களை எதிர் கொள்ள நேரிடும். அபிமானிகளும் நலம் விரும்பிகளும் அதிகரிக்கும் அதே நேரத்தில், வயிற்றெரிச்சல்காரர்களும் குழிபறிப்போரும் கூடவே அதிகரிக்கவே செய்வார்கள். ஆனால், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது தன் பேனாவில் நம்பிக்கை வைத்து. நிஷகாமியாகத்தான் கர்மங்களை இயற்ற வேண்டியவன் எழுத்தாளன்’ என்கிறார் நீ. ப.
நீ. ப. மலையாள மொழியிலும் எழுதக் கூடிய ஆற்றல் கைவரப் பெற்றவர். கேரள மண்ணிற் பிறந்து - வளர்ந்து - வாழ்ந்து வரும் காரணத்தால் மலையாளம் இயல் பாகவே இவரில் சுவறுதல் சாத்தியமாயிற்று. மற்றத் தமிழ் எழுத்தாளர்களுக்குக் கிடைத்திராத வாய்ப்புக்களில், இந்த இரண்டு கலாசாரங்களின் பாதிப்புக்குத் தம்மை ஆட்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஒன்றென கலாநிதி கே. எம். ஜோர்ஜ் அவர்களாற் சுட்டப்படுகிறது. இதற்குச் சார்புடைய இன்னுமொரு காரணத்தையும் அவர் குறிப்பிடுகிறார். நீ. ப. வின் பொறியியல் தொழில்.
இவ்விரண்டும் நீ. ப. வுக்குப் பரிமாணங்களைக் கூட்டுவன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அடிப்படையான விடயமென்னவென்றால், நீ. ப. வுக்குள்ளே ஒரு உயர்தரக் கலைஞன் குடிகொண்டிருப்பதுதான் என நான் நம்புகிறேன்.
அக்டோபர் - 1983
A

Page 24
தமிழின் வளம் பெருக்கும்
GOTT GOTLD TLD GO GOYO
கார்த்திகேசு சிவத்தம்பி
ருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நான்குநேரி என்ற ஊரிலுள்ள திருமால்கோயிலின் மூர்த்திக்கு வானமாமலை என்பது க்ஷேத்திர நாமம். திருநெல்வேலிச் சீமையின் சிறப்பையும் தமிழகத்தின் பொதுமையையும் இணைத்து நிற்கும் நான்குநேரிக் கோவில் மூர்த்தியின் பெயர். பேராசிரியர் நா. வானமாமலைக்கு அமைந்துள்ளமை பொருத்தமாகவேயுள்ளது. பிரதேச வாய்நெறிப் பாடல்களின் ஆர்வலர், ஆராய்ச்சியாளர் என உயர் கல்வி மட்டத்தில் முதன் முதலில் தெரிந்து கொள்ளப்பட்ட நா. வா. இன்று, நாட்டாரியல் மாத்திரமல்லாது வரலாற்றியல், மெய்யியல், இலக்கிய ஆய்வு முதலிய பலதுறைகளில் தமது ஆராய்ச்சியை அகட்டி, அதே வேளையில் மக்களியலில் தனக்குள்ள ஸ்திரமான பிடிப்பை விடாது. தமிழகம் முழுவதும் போற்ற வேண்டிய அளவுக்குப் புலமைச் சாதனையும் உடையவராக தமிழ் ஆராய்ச்சித் துறையில் நிலை பேறுடைய ஒரு மலையாக, அவ்வாராய்ச்சிகளுக்குக் களம் அமைக்கும் ஒரு மாமலையினை இயக்குபவராக முகிழ்ந்துள்ளார்.
மலையையும் வனத்தையும் அருகே நின்று பார்த்து மதிப்பிட்டு விடல் முடியாது. அவற்றின் பூரண பொலிவை தெரிந்து அறிந்துகொள்வதற்கு அவற்றை முழுமைப் பரப்புத் தோற்றமும் புலனாகத்தக்க அளவு தூரத்தே நின்று நோக்கல் வேண்டும். இப்பணியை இலங்கையின் 'மல்லிகை செய்வதில் ஒரு பெரும் பொருத்தமுள்ளது. வானமாமலை அவர்களது உலக நோக்கையே கொண்ட மல்லிகை க்கு வானமாமலையை இனங்கண்டு கொள்வதும், அவரது சேவை மதிப்பீட்டைச் சொல்வதும் சுலபம். மல்லிகையின் முக்கியத்துவத்தை விளங்கிக்
-28
 

கொள்ளும். வானமாமலையின் பன்முக முக்கியத்துவம், மல்லிகைக்கும் அவருக்கும் பொதுவான முற்போக்கு இலக்கியத்தின் முற்போக்கு இலக்கியம் வழங்கும் அறிவுப் பார்வையின், தீட்சண்ணியத்தையும், அத்தியாவசியத்தையும் வற்புறுத்துவதாகும்.
மல்லிகை, மணிவிழா நாயகர் பேராசிரியர் நா. வானமாமலை அவர்களை வாழ்த்துகிறது.
அறுபது வருடங்களைக் கொண்ட ஆண்டுப் பிரிவினையுடைய எமது பாரம்பரிய காலக் கணக்கின்படி, அறுபதாவது வருட வாழ்க்கையைத் தொடங்கும் ஒவ்வொரு வரும் புதிய ஒரு வாழ்க்கை வட்டத்தினுள் புகுகின்றனர் என்பதே நமது நம்பிக்கையாகும். இதுவே சஷ டியப் த பூர்த்தி விழாவின் சமூக, மானிடவியலடிப்படையாகும். புராதன சமூக, பொருளாதாரச் சூழலில் அவ்வயதினை எட்டுவதே ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. இன்று அது சடங்காக உள்ளது. ஆனால், பேராசிரியர் வானமாமலையின் மணிவிழாவில் வானமாமலை என்ற தனிமனிதர் ஒருவரின் அறுபதாவது ஆண்டு பூர்த்தியை மாத்திரமல்லாது, அறுபது ஆண்டுக் கால வரையறைக்குள் அத்தனி மனிதர் தனியொருவராக நின்று ஆற்றிய சாதனைகளை மாத்திரமல்லாது, நா. வானமாமலையுடன் தொடர்புற்று நிற்கும் சமூக - வரலாற்று இலக்கியக் கோட்பாடுகள் தமிழ் நாட்டில் ஏற்புடைய கருத்துக்களாக ஏற்றுக் கொள்ளப்படும் பிரதேச அறிவு முதிர்வினையும் கொண்டாடுகின்றோம்.
“பேராசிரியர் வானமாமலையின் மணிவிழா தமிழாராய்ச்சித் துறையில் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தின் பூப்பு விழா' வாகவும் அமைகின்றது.”
இலக்கிய ஆக்கமும் ஆய்வும் இணைந்து நிற்கும் தலைசிறந்த எழுத்தாளர்கள் பலர் திருநெல்வேலிப் பாரம்பரியத்திலிருந்து முகிழ்ந்துள்ளனர். புதுமைப்பித்தன். ரகுநாதன் பெயர்கள் இத்துறையில் முக்கியமானவை. அப்பாரம்பரியத்தின் ஆராய்ச்சி முனைப்பே பேராசிரியர் நா. வா. அவர்கள்.
எம்மிற் பலரைப் பொறுத்தவரையில், பேராசிரியர் வானமாமலையைச் சரஸ்வதியே முதன் முதலில் அறிமுகஞ் செய்து வைத்ததெனலாம். தமிழ் இலக்கியம், தமிழகச் சமுதாயம், தமிழ் மக்களது நாட்டுப் பாடலில் ஈடுபாடு கொண்டுள்ள பலரில் ஒருவர். என்ற மனப்பதிவே மேலோங்கி நின்றதென்று கூடச் சொல்லலாம். ஆனால் 1960-ல் வெளிவந்த “தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள் என்ற நூல், நூலாசிரியரின் தனித்துவத்தையும் தமிழகத்தின் ஆராய்ச்சிப் பொதுமையினின்றும் வேறுபட்டு நிற்கும் அவரது புறநடைப் போக்கையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.
"1960-இல் புற நடையாகவிருந்த ஒரு சமூக - இலக்கிய நோக்கு, ஒரு சமூக வரலாற்றுக் கண்ணோட்டம் 1978-ல் எவ்வாறு தமிழகத்து உயர் கல்வி மாணவர்களிடையேயும் இலக்கிய விளக்கத்துக்கான அத்தியாவசிய அறிவுப் பார்வையாக முகிழ்ந்துள்ளது என்பது பற்றிய ஆய்வு, பேராசிரியர் நா.
-29

Page 25
வானமாமலையின் அறிவு நோக்கின் தாக்கம் பற்றிய ஆய்வாகவும் அமையுமென்பது மறுக்கமுடியா உண்மையாகும்.
நா. வா. அவர்கள் இச்சாதனையை இருமுனைப் பட்ட நடவடிக்கைகளினாலே சாதித்துள்ளார். (அ) தமது சொந்த ஆராய்ச்சிகள் மூலம் ஏற்படுத்திய கருத்துப் பரவல் (ஆ)ஆராய்ச்சி மாணவர் பலரை நேரடியாகவும், மறைமுகமாகவும், ஊக்குவித்தமை காரணமாக ஏற்பட்ட அறிவுப் பரவல், இவையிரண்டுக்குமே ‘ஆராய்ச்சி, தளமாக அமைந்ததெனலாம். முக்கியமாக (ஆ)வின் தாக்கம் இச் சஞ்சிகையினாலேயே ஏற்பட்டதெனலாம்.
பேராசிரியர் நா. வா. அவர்களது எழுத்துக்களை இருபெரும் பிரிவுகளுக்குள் வகுத்துக் கூறல் வேண்டும்.
1. ஆய்வாழமுடைய ஆராய்ச்சிப் பங்களிப்புகள்.
2. சனரஞ்சக மட்டத்தில் எழுதப்பெற்றவை.
இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவை 'ஜனசக்தி போன்ற வார ஏடுகளில் வெளியானவை. "சரஸ்வதி, தாமரை போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளிற் பலவற்றையும் விஞ்ஞானம் பற்றி எழுதிய கட்டுரைகளையும் இதிற் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால், உண்ைைமயில் நா. வா. ஆய்வறிவுத் துறையில் பெறும் முக்கியத்துவத்துக்குக் காரணமாக இருப்பவை முதலாவது பிரிவைச் சேர்ந்த கட்டுரைகளே. நாட்டாரியல், பொருளாதார வரலாறு, தத்துவம், இலக்கிய விமர்சனம் எனத் தனித்தனியே பல்வேறு துறைகள் பற்றி எழுதியிருப்பினும் தொகுத்து நோக்கும் பொழுது நா. வா. அவர்கள் தமிழகத்தின் சமூக வரலாற்றுக்கான சான்றுகளைக் கோவைப்படுத்தி வந்துள்ளார் என்பதும், அச்சமூக வரலாற்றினை எழுதுவதற்கான நெறி முறைபற்றிய சிந்தனையைத் தமிழ் நாட்டில் வளர்த்து வந்துள்ளார் என்பதும் தெரிய வரும்.
இத்தகைய ஒரு முகிழ்ப்பு வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தைத் தமது சித்தாந்தமாக வரித்துக் கொண்டவர்களிடையே காணப்படுவதாகும். மார்க்ஸிஸத்தின் ஊற்றுக்களிலொன்றான வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தினை அணுகுமுறையாகக் கொள்ளும் போது, அங்கு தெரிவிக்கப் பெறும் வரலாறுதனிலே அரச பரம்பரைகளின் வரலாறாகவோ அரசியல் வரலாறாகவோ அமைந்து விடாது. ஒவ்வொரு சமூக - பொருளாதாரக் கட்டமைவுள்ளும் மனிதர்களது சமூக, பொருளாதார உறவுகள் எவ்வாறு அமைந்திருந்தன. அந்த உறவுகளின் வளர்ச்சியும் முரண்பாடும் எவ்வாறு அச் சமூக பொருளாதாரக் கடமையின் தோற்றம், வளர்ச்சி, சிதைவுக்கு உதவிற்று என்று நோக்குவதே இவ் வரலாற்றணுகுமுறையின் முக்கிய இயல்பாகும். இத்தகைய நோக்கில் வரலாற்றை அணுகும் பொழுது, சமூக - பொருளாதார உறவுகளை விளங்கிக் கொள்வதற்கு ஏற்கெனவே உள்ள வரலாற்றுச் சான்றுகள் போதாதனவெனும் உண்மை புலனாகும்.
-30

ஏற்கெனவேயுள்ள வரலாற்றுச் சான்றுகளைப் புதிய கோணத்தில் பார்த்தலும் புதிய சான்றுகளைப் பெறுதலும் இதனால் அத்தியாவசியமாகின்றது. வரலாற்றுப் பொருள் முதல் வாத வழிநின்று வரலாற்றை நோக்கும் பொழுது வரலாறும் சமூகவியலும் ஒருங்கிணையும் தன்மையினைக் காணலாம். வரலாற்றை மன்னர்களின் நடவடிக்கைகளாகக் கொள்ளாது மக்களின் வாழ்க்கை முறை அபிவிருத்தி அவ்வபிவிருத்தியின் வளர்ச்சி தேய்வுகள் எனக் கொள்ள விரும் புபவர்கள் இக் கணி னோட்டத்தை ஏற்றுக கொள்ள வேண்டியவர்களாகின்றார்கள். நா. வா. அவர்கள் நடுகற்கள், சோழர்காலத்துப் பேரரசாட்சியின் ஒடுக்கு முறைமை, கதைப்பாடல்கள். புராதன தமிழ் இலக்கியங்களின் தத்துவப் பின்னணி, புதுக்கவிதையின் தோற்றத்துக்குக் காரணமாகவிருந்த சமூகப் பராதீன உணர்வு ஆகியன பற்றி எழுதியுள்ள கட்டுரைகளையும் நூல்களையும் ஒருங்குசேர வைத்து நோக்கும் பொழுது தமிழ் நாட்டின் சமூக வரலாறு பற்றிய பிரக்ஞை ஏற்படுவதைக் காணலாம். றொமிலா தாப்பாரின் இந்திய வரலாற்றியல் பற்றிய நீண்ட கட்டுரையை நா. வா. அவர்கள் ‘வரலாறும் வக்கிரங்களும் என்ற தலைப்பில் மொழி பெயர்த்து ஆராய்ச்சியில் கட்டுரைத் தொடராகவும் பின்னர் நூலாகவும் வெளியிட்டுள்ளார் என்பதனை நாம் மறந்துவிடலாகாது. றொமிலா தாப்பருடன் இக்கட்டுரையாசிரியர் உரையாடிய பொழுது, தமிழ் நாட்டிலுள்ள பல்கலைக் கழக வரலாற்றாசிரியர்களிற் பொரும்பாலானோர், வரலாற்றை இன்னும் தான் அரசியல், ஆட்சி முறைமை பொருளாதாரம், மதம், சமூகம் பொழுதுபோக்குகள் எனத் தனித்தனியே கூறுபோட்டு எழுதும் பண்புடையவர்களாகவே காணப்படுகின்றனர் என்றும். அத்தகைய பெரும்பான்மைக் கொடுங்கோன்மை நிலவும் ஓர் ஆய்வுத் துறையில், ஒருவர் தமது கட்டுரைத் தொடரைத் தமிழில் வெளியிட முன்வந்தது தனக்கு மிக்க ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது என்றும் கூறினார்.
தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களிற் காணப்படாத ஆய்வியல் நோக்குகளை மேற்கொண்டு புதிய துறைகளிலிறங்கியும் புதிய தகவல்களை வெளிக்கொணர்ந்தும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் நா. வாவைத் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களை விடக் கர்நாடக, கேரளப் பல்கலைக் கழகங்கள் முதன் முதலில் இனங்கண்டு கொண்டமை நா. வா. வின் ஆராய்ச்சி ஏற்புடைமையையும் - தமிழகத்துப் பல்கலைக் கழகங்களின் சமூக வரலாற்றுக் கண்ணோட்டம் முக்கியத்துவம் பெற்றிருப்பதையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்துகின்றது. இத்தகைய - ஆய்வு முறைகள் பற்றிய பிரக்ஞை டாக்டர். சு. வே. சுப்பிரமணியத்தைத் தலைவராகக் கொண்ட அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்துள்ளே பரவத் தொடங்கியுள்ளது உண்மையே என்பதை உணர்த்தும் வகையில் அம் மன்றத்தில் நா. வாவின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இலங்கையன் உன்ற முறையிலே நா. வா. அவர்களது ஆராய்ச்சிப் பங்களிப்பினை நோக்கும் பொழுது தமிழகத்துப் பல்கலைக் கழகத்துத் தமிழாராய்ச்சிகளையும் நா. வா. அவர்களது ஆராய்ச்சியையும் இணைத்து
-31

Page 26
நோக்குவது தவிர்க்கமுடியாததாகி விடுகின்றது. டாக்டர் பட்டத்துக்கான பொருளாதார உந்துதல்கள் அதிகரிக்க அதிகரிக்க, அதனை எழுதுவதற்கான ஒரு வாய்ப்பாடு முறைமையும் - பெரிதும் தனிமைப்படுத்தப் பட்ட - ஆய்வுக் கண்ணோட்ட நெறியும் இவற்றுடன் ஓரிரு துறைகளுக்குள்ளேயே தேங்கி நின்றுவிடும் (நின்று தேங்கி விடும்) தன்மையும் வளர்ந்து செல்வதைக் காணப்படுகின்றன. இத்தகைய ஆய்வுகள் நூல்களாக வெளிவந்து, பதவி முதன்மை காரணமாகவும். மாணவரின் அடிப்படையான அறிவுப் பசி காரணமாகவும் பெரிதும் வாசிக்கப்படும் பொழுது, இவையே ஆராய்ச்சி மரபை நிர்ணயித்துச் செல்வனவாகவுமுள்ளன. இந்த விஷச் சுழியிலிருந்து விடுபட்ட ஒருவராக விளங்குபவர் நா. வா. அவர்கள். அவரது ஆராய்ச்சிக் கட்டுரைகளின் பொருள் பன்முகப்பாடும்ஆழமும் அவரை, மாணவர் விரும்பி வாசிக்கும் ஆராய்ச்சியாளனாக்கியுள்ளது.
சோழப் பேரரசின் உத்தியோக பூர்வமான சன்னதுப் பெற்ற கவிச் சக்கரவர்த்தி களான ஒட்டக் கூத்தர், ஜெயங் கொண்டார் ஆகியோர் பெயர்களுடனல்லாது, அப்பட்டத்தை உத்தியோக பூர்வமாகப் பெறாத கம்பனுடைய பெயருடனேயே கவிச்சக்கரவர்த்தி எனும் விருது நாமம் சேர்த்துப் பேசப்படுவது போன்று நா. வா. அவர்களும் உத்தியோக ரீதியில் தமிழ் நாட்டின் பல்கலைக் கழகங்களிலோ பல்கலைக் கழகக் கல்லூரிகளிலோ பேராசிரியராக விளங்காவிடினும், பேராசிரியர் என்ற அடை அவர் பெயருடன் மதிப்பார்த்தத்துடன் இணைக்கப்பெற்றுள்ளது. நா. வா. தமது படிப்பால், ஆராய்ச்சி முக்கியத்துவத்தாற் பேராசிரியர் ஆனவர். திருநெல்வேலியில் அவர் வளர்த்துவரும் ஆராய்ச்சி மாணவர் குழுவின் கண்ணோட்ட வளத்தையும் ஆசிரிய பக்தியையும் சென்னையிலும் மொஸ்கோவிலும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டிற்று.
நா. வாவின் மணிவிழா தமிழ் வரலாறு, இலக்கியத் துறைகளிற் புதிய சிந்தனைகளுக்குக் கிட்டிய வெற்றிவிழா. விழா நாயகன் தாமிரவர்ணி ஆற்று மணலினும் பலகால ஆண்டுகள் வாழவேண்டுமென்பது வாழ்த்து மாத்திரமன்று. வரலாற்றியலின் வேண்டுகோளுமாகும்.
-நவம்பர் - 1978
A

சிந்துபூந்துறை
அண்ணாச்சி
616 ajld, дубој број б| ||
ருநெல்வேலி ஜங்ஷனை அடுத்துள்ள சிந்துபூந்துறை என்ற சிற்றுாரின் வடக்குத் தெரு ஒரு வீட்டின் திண்ணை. ஈஸிச் சேரில் சாய்ந்திருக்கு
முதிய உருவம், மகாத்மா காந்தியை நினைவுபடுத்தும் தோற்றம். சிரித்த முகம். அன்பு உபசரணைகள் செய்து வயது வித்தியாசம் பாராட்டாது பழகும் தோழமை உள்ளம் 86 வது வயது நடந்து கொண்டிருக்கிறது. ஆயினும், ஓய்வை நாடாத மனம், படிப்பதிலும் எழுதுவதிலும் குறையாத உற்சாகம். சிறு பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதில் தணியாத ஆர்வம் மக்களுக்கும் நாட்டிற்கும் பயன்படக் கூடிய விதத்தில் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை. தன்னைக் காணவருகிற இளைஞர்களையும் நண்பர்களையும் அவ்வாறே உழைக்கும்படி தூண்டுகிற ஊக்கம் இவற்றையும் - இன்னும் சிறந்த பல நற்பண்புகளையும் கொண்டு விளங்குபவர் தான் அண்ணாச்சி சண்முகம் பிள்ளை.
"சிந்துபூந்துறை அண்ணாச்சி' என்றும் 'சண்முகம் பிள்ளை அண்ணாச்சி என்றும், திருநெல்வேலி வட்டாரத்தில் நன்கு அறிமுகமாகியுள்ள சோ. சண்முகம் அரசியல்வாதியாக வாழ்ந்தவர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற விடுதலை வீரர் . தீவிர காங்கிரஸ்வாதியாகச் சிறை சென்று, உள்ளே பயிற்சியும் அறிவு விழிப்பும் பெற்று, கம்யூனிஸ்ட் ஆக வெளியே வந்து பணியாற்றிய அவர் ஒரு எழுத்தாளராக வளர்ந்தார். இன்றும், தன்னை ஒரு எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறார்.
-33

Page 27
மார்க்சிஸ்ட் தத்துவ நூல்கள் பலவற்றையும், மாக்சிம் கார்க்கியின் சிறுகதைகளையும் மற்றும் வீர உணர்வு ஊட்டும் நூல்களையும் சோ. சண்முகம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சோவியத் இந்திய நட்புறவையும் சமாதான உணர்வையும் போற்றி வளர்ப்பதில் உற்சாகம் காட்டியவர் அவர் அண்ணாச்சியின் சேவையைப் பாராட்டும் வகையில், சோவியத் நேரு நினைவுப் பரிசும் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அண்ணாச்சி சண்முகம் அவர்களின் வாழ்க்கையும் வரலாறும் இலட்சியப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு வழிகாட்டக் கூடியன.
சிந்துபூந்துறை என்ற சிற்றுாரில் - இப்போது இது திருநெல்வேலி ஜங்ஷன் எனும் நகர்ப் பகுதியின் ஒரு உட்கிடை போல் ஆகிவிட்டது - நடுத்தர வகுப்பில், 1-10-1896 அன்று பிறந்தவர் சண்முகம். தந்தை - சோணாச்சலம்பிள்ளை. தாய் - லட்சுமி அம்பாள்.
1912-ல் எஸ். எஸ். எல். சி. தேர்ச்சி பெற்றதும், அவருடைய பதினேழாவது வயதில் தந்தை மரணம் அடைந்தார். அதனால், பெரிய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சம்பாத்தியம் பண்ண வேண்டிய நிர்ப்பந்தம் சண்முகத்துக்கு ஏற்பட்டது. தச்சநல்லூர், கடையை நல்லூர் பஞ்சாயத்து போர்டுகளில் குமாஸ்தாவாக அவர் பணியாற்றினார். பிறகு 9 முதல் 1929 வரை சிவகிரி ஜமீனில் குமாஸ்தாவாக உழைத்தார்.
இலக்கிய ஆர்வம், உரிமைக்காகப் போராடும் குணமும் இளமையிலேயே சண்முகத்திடம் இருந்தன. சிவகிரியில் இலக்கிய சங்கம் ஒன்றை அமைத்து, மூன்று ஆண்டுகள் நடத்தினார். அந்த நாட்களில் ஒரு சந்நியாசியிடம் ஐந்து ஆண்டு காலம் வேதாந்தப் பயிற்சியும் அவர் பெற்றார். சிவகிரி ஜமீனில் வேலை பார்த்த காலத்தில், அங்கு பணிபுரிந்த சிப்பந்திகளுக்கு நாலைந்து மாதங்கள் சம்பளம் கொடுக்கப்படாததால், ஜமீந்தாரிடம் பலமுறை அவர் முறையிட்டார். அதனால் பயன் விளையவில்லை. எனவே, வேலை நிறுத்தம் செய்யச் சண்முகம் ஏற்பாடு செய்தார். உடவே ஜமீன் வேலையிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
ஜமீன்தார் இப்படிப் பழிவாங்கிவிட்ட பிறகு, சண்முகம் 1929 ல் சங்கரன் கோயில் தேவஸ்தானம் மனேஜர் ஆனார். அதுவும் ஒத்துக் கொள்ளாததால், அவர் சொந்த ஊரான சிந்துபூந்துறையில் குடியேறினார்.
சண்முகம் சிவகிரி ஜமீனில் வேலை பார்த்தபோதே, அவருக்குத் திருமணம் நிகழ்ந்தேறிவிட்டது. மனைவி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். 1930 முதல் 1936 வரை மனைவி வீட்டாரின் உண்டியல் கடையை சண்முகம் நிர்வகித்தார்.
இந்திய சுதந்திரப் போராட்டம் மும்முரமாக நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. திருநெல்வேலி வட்டாரத்திலும் அன்னியத் துணி பகிஷ்காரம், சாத்வீக மறியல் தீவிரமாக நடைபெற்றது. அப்போது மறியலில் ஈடுபட்ட தொண்டர்களைப் போலீசார் அடித்துத் துன்புறுத்தியதைக் கண்டு சண்முகம் உளக்கிளர்ச்சி பெற்றார்.
-34

‘என் தாய்நாடே எனது சுவர்க்கம்' என்று கூறிய சுவாமி விவேகானந்தரின் நூலைப் படித்ததால் சண்முகத்தின் தேசபக்தி பெருகியது. தேசபக்தர்கள் சிலரது அறிவுரைகளும், தோழர் ஜீவானந்தத்தின் நட்பும் அவரை சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொள்ளத் தூண்டியது. ‘என் தந்தை நெல்லை சுதேசிக் கலகத்தில் பங்கு கொண்டிருந்தார். அதுவும் என் தேசிய உணர்வுக்குக் காரணம்' என்று சண்முகம் குறிப்பிடுகிறார்.
சண்முகத்தின் தேசபக்தி உணர்வு வளர்வதை அறிந்த உறவினர்கள் உண்டியல் கடைப் பொறுப்பிலிருந்து அவருக்கு விடுதலை அளித்து விட்டார்கள். அதனால் அவர் தேசியப் பணியில் முழு மூச்சுடன் ஈடுபடுவது சாத்தியமாயிற்று.
1914-க்குப் பின், திருநெல்வேலி ஜில்லா, நகர காங்கிரஸ் கமிட்டிகள் செயலற்றிருந்தன. காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் அவை 1936-ல் புதுப்பிக்கப்பட்டன. அது முதல் 1938 முடியச் சண்முகம் காரியதரிசியாகச் செயலாற்றினார். அந்த மூன்றாண்டுக் காலத்தில் தேசிய காங்கிரஸின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அண்ணாச்சி செய்த சேவை பெரிது.
அந் நாட்களில் நடைபெற்ற சட்டசபை, ஜில்லா போர்டு. நகர் மன்றத் தேர்தல்களில் காங்கிரசுக்குப் பெருவாரியான ஸ்தானங்கள் கிடைக்கும்படி செய்த பெருமை சண்முகத்துக்கு உண்டு. மாவட்டம் முழுவதும் நடந்து நடந்தே போய், கிராமங்கள் தோறும் கிராமக் கமிட்டிகள் அமைத்து, எங்கும் சுதந்திரப் போராட்டச் செய்தியும் உணர்வும் பரவுவதற்கு அவர் அதிகம் பாடுபட்டார்.
அக்காலத்திய நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டதால், இது எத்தகைய பெரிய சாதனை என்பது புரியும். இப்போது தூரந் தொலைச் சிறு கிராமங்களுக்குக் கூட பஸ்கள் போய்வருகின்றன. அந்நாட்களில் பஸ் போக்குவரத்துக் கிடையாது. கிராமங்களைச் சென்றடைவது சிரம காரியமாக இருந்தது. வேலை செய்வதற்குப் பணமோ மற்றும் வசதிகளோ விடுதலை வீரர்களிடம் இல்லை. என்றாலும், அவர்கள் நாட்டுப் பற்றுடன், விடுதலை வேட்கையுடன், லட்சியப் பணி புரியும் கர்ம வீரர்களாக உழைத்தார்கள்.
அப்போது விக்கிரமசிங்கபுரம் ஆர்வி மில் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக மூன்று மாத காலம் வேலை நிறுத்தம் நடத்தினார்கள். தச்ச நல்லூர் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தமும் நடைபெற்றது. ஜில்லா காங்கிரஸ் கமிட்டி அவற்றுக்கு ஆதரவு கொடுத்தது. காரியதரிசியான சண்முகம் அயராது பாடுபட்டார். அக்காலத்தில் ஷாப் சட்டம் அமுலில் இல்லை. வியாபாரிகள் இரவு 10 மணிக்குத்தான் கடைகளை அடைப்பார்கள். ஆகவே, டவுனில் இரவு 10 மணிக்கு மேல்தான் பொதுக் கூட்டம் ஆரம்பமாகும். இரவு 1 மணிவரை நடக்கும். அதற்கப்புறம் டவுணு bિl 2 மணி அளவில் சிந்துபூந்துறை வீட்டுக்கு வருவது அண்ணுரத்திக்கு ய்ல்பாக அமைந்தது. அந்த நாளைய அனுபவங்களைப் புற்றி அன்ன்ர்ச்சி சொல்லிக் கேட்க வேண்டும்!
-35

Page 28
1940-ல் சண்முகம் நெல்லை நகர் மன்ற உறுப்பினரானார். மூன்று மாதகாலம் பணியாற்றினா. யுத்த எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்டார். அதனால், 1940 நவம்பர் 23 அன்று கைது செய்யப்பட்டார். 1942 மார்ச் 16 முடிய வேலூர், சிறையில் அரசியல் கைதியாக இருந்தார். அங்கேதான் எனது எழுத்து வேலை தொடக்கம்! மறைந்த மேதை எம். கி. வீரபாகுவும், கிங்கை உலக நாதனும் தூண்டுதல் தந்தனர். பாஷ் ஸ்லீன் எழுதிய சோவியத் ஜனநாயகம்' என்ற நூலைத் தமிழாக்கினேன். எழுத்துப் பிரதியை மறைத்து வைத்து வெளியில் கொண்டு வந்து நானே அச்சிட்டேன். அரசு பறிமுதல் செய்து விடுமோ என்ற அச்சம். அதனால், அச்சான ஆயிரம் பிரதிகளையும் சிந்துபூந்துறை விசுவநாதச் செல்வி கோவிலில் மறைவாக வைத்திருந்து, சிறிது சிறிதாக விற்பனை செய்தேன். தெரிந்தவர்களுக்கு இனாமாகக் கொடுக்கவும் பயம்.
முற்போக்கு இலக்கியத்தில் அவருக்கிருந்த ஆர்வம் பற்றி அண்ணாச்சி இப்படிக் கூறும் பொழுது, அவரிடம் நமக்குள்ள மதிப்பும் அதிகரிக்கவே செய்யும்.
சண்முகம் தொடர்ந்து பல முற்போக்கு நூல்களைத் தமிழாக்கி வெளியிட்டார். இறுதியாக தே நெள லெனின் என்ற நூலை அவர் மொழிபெயர்த்தார். மாஸ்கோ பதிப்பகம் அதை வெளியிடும் என்று நம்பியிருந்தார். அவர் எதிர்பார்ப்பு நிறைவேறாதது. அண்ணாச்சிக்குப் பெரும் மனக் குறைதான். சிறந்த நூல் அது. அது தமிழில் அவசியம் வெளிவர வேண்டிய புத்தகம்’ என்பது அவர் கருதது.
முற்போக்கு இலக்கியங்களை வெளியிடுவதற்காக திருநெல்வேலியில் அண்ணாச்சி. சிலர் துணையோடு, நெல்லைப் பப்ளிஷிங் ஹவுஸ் ஆரம்பித்து, இருபது வருடங்களாக அதை இயக்கினார். நல்ல பல நூல்களை இப் பதிப்பகம் வெளியிட்டது. பிறகு, நல்ல நூல்களை மக்களிடம் பரப்புவதற்கென்று. சண்முகம் நிர்வாகத்தில் 'நெல்லை புத்தக நிலையம் நடந்தது. இது பத்தாண்டுகள் செயல்பட்டது.
அண்ணாச்சி. திருநெல்வேலியில், இந்திய - சோவியத் நட்புறவுச் சங்கம் அமைத்து, அதன் மூலம் முற்போக்கு இலக்கியங்களை விநியோகித்து வந்தார். பஸ் தொழிலாளர். அச்சுத் தொழிலாளர். ஓட்டல் தொழிலாளர். பிடித் தொழிலாளர் சங்கங்களும் மற்றும் விவசாய சங்கங்களும் ஆரம்பித்தும் அமைத்தும், அவற்றின் நிர்வாகப் பொறுப்பு ஏற்றும் பொதுப்பணி புரிந்திருக்கிறார். பெரும்பாலும் மாவட்ட அளவிலேயே அவரது செயல்கள் நிகழ்ந்தன.
இலங்கை வாழ் இந்தியர் சங்கத்தின் அழைப்புக்கு இணங்கி 1938-1945 ஆண்டுகளில் சண்முகம் இலங்கை சென்று. இந்தியரின் உரிமைப் போராட்ட வரலாற்றை பொதுக் கூட்டங்களில் எடுத்துச் சொன்னார். 1949-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஜில்லா கவுன்சில் உறுப்பினராகச் செயலாற்றினார்.
1966-ல் நெல்லை மாவட்ட விடுதலை வீரர் சங்கம் அமைத்து, நலிவுற்றிருந்த தியாகிகளுக்கும் அவர்களின் மனைவியருக்கும் பென்ஷன் கிடைக்க வகை
-36

செய்தார். தொடர்ந்து அத் தொண்டில் ஈடுபட்டார். ஏழைகளுக்கும், வயோதிபர்களுக்கும், வாழ்விழந்த பெண்களுக்கும் பென்ஷன் கிடைக்கச் செய்வது, குடியிருக்க வீடு இல்லாத கிராம ஏழைகளுக்கும் - எழுத்தறிவில்லாதவர்களுக்கும் மனுக்கள் எழுதிக் கொடுத்து வழிகாட்டுவதும் அண்ணாச்சியின் வேலையாக இருக்கிறது.
பிரபல அரசியல் தலைவர்கள் - தோழர் ஜிவானந்தம், தோழர் பாலதண்டாயுதம் போன்றவர்கள் - அண்ணாச்சி வீட்டில் அடிக்கடி வந்து தங்கியிருக்கிறார்கள். திருமதி பார்வதி சண்முகம் அரசியல் வாதிகளுக்குத் தாயன்பு காட்டி உபசரித்தது குறிப்பிடத் தக்கது.
தனது நீண்ட வாழ்வில், பொதுநல நோக்குடனும், நேர்மையுடனும் தேசபக்தியோடும் மனிதாபிமானத்துடனும் நடந்து வந்ததால் நன்செய் நிலத்தை அவர் 25 ஆண்டுகளுக்கு முன் ஈனக் கிரயத்துக்கு விற்க வேண்டியதாயிற்று. மனைவியின் சீதன வீட்டில் குடியிருந்து வருகிறார். அது பழங்கால வீடானதால், பழுது பார்க்க வகையின்றி, ஆபத்தான நிலையில் இருப்பது அண்ணாச்சிக்கு மன வேதனை தருகிறது.
மேலும், அறிவு வளர்ச்சிக்காக - சொந்த உபயோகத்துக்காக - அண்ணாச்சி வாங்கிச் சேர்த்த நல்ல நூல்கள் பலவற்றை விற்க வேண்டிய அவசியம் அவருக்கு சமீபத்தில் ஏற்பட்டது.
இத்தகைய சோதனைகளும் வறுமையும் சூழ்ந்திருக்கும் நிலையிலும் அண்ணாச்சி சண்முகம் சோர்வோ முதுமை உணர்வோ விரக்தியோ கொள்ளாது நட்பு உணர்வோடும், மனிதாபிமானத்தோடும் தனது 86வது வயதிலும் உற்சாகமாக உழைத்துக் கொண்டிருப்பது இளைய தலைமுறையினருக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.
அண்ணாச்சிக்கு ஒரு கண்ணில் ஆப்பரேஷன் நிகழ்ந்து பார்வை சரியில்லாது போய்விட்டது. என்றாலும், பகலிலும் இரவிலும் புதிய நூல்களை ஆர்வத்துடன் படித்து அறிவை விரிவு செய்து கொள்ளும் பசி அவர்ளுக்கு இன்னும் இருக்கிறது. இது போற்றுதலுக்குரிய அரிய பண்பாகும்.
பொதுவாக 60 வயதானதுமே 'மணிவிழா கொண்டாடி விட்டு ஒய்வு பெற்றுச் சுகமாக வாழ்வதில் ஆசை கொள்கின்ற பெரியவர்கள் மலிந்த சமூகத்தில் அண்ணாச்சி சண்முகம் ஒரு விதி விலக்கு என்பதில் சந்தேகமில்லை.
-ஏப்ரல் - 1982

Page 29
தோழர் பொன். கந்தையா
அரசியல் மேதை. தமிழனாக அவர் இருந்த பொழுதிலும் சகல ஒடுக்கப்பட்ட மக்களாலும் மதிக்கப்பட்டவர். கெளரவிக்கப்பட்டவர். அன்பு செலுத்தப்பட்டவர். முதன் முதலில தமிழ் மண்ணில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இடது சாரிப் பாராளுமன்றப் பிரதிநிதி. அன்னாரது 20 ~ வத ஆண்டு ஞாபகார்த்தமாக இக் கட்டுரை இங்கு இடம் பெறுகின்றது ~ (ஆ~ர்)’.
லங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய ஸ்தாபகர்களில் | @ဖွဲ့ ခွါဒွါး முன்னணித் தலைவருமாகிய அமரர் பொன்.
கந்தையாவின் 20 வது ஆண்டு மறைவு ஞாபகார்த்த தினம் இம்மாதம் அனுட்டிக்கப்படுகின்றது.
ஒரு இயக்கத்தின் வரலாற்றிலே இருபது ஆண்டுகள் குறுகிய காலப் பகுதியல்ல. குறிப்பாக முன்னெப்போதுமில்லாதவாறு மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்து வரும் இந்நாட்களில்.
இன்று கம்யூனிஸ்ட் கட்சியும் முற்போக்கு இயக்கமும் எதிர்நோக்கும் நிலைமை முற்றிலும் வேறானது. கட்சியை நிறுவிய தலைமுறையிடமிருந்து புதிய தலைமுறை தலைமயைப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில். புதிய பரிமாணங்பளும் புதிய பாணிகளும் உருவாகி வரும் இக் கட்டத்தில் அமரர் கந்தையாவின் வாழ்வையும் சாதனையையும் சிந்தித்துப் பார்த்தல் பயன்மிக்கது.
-38
 

கந்தையா ஒரளவு வசதி படைத்த குடும்பத்தில் வடமராட்சியில் பிறந்தார். யாழ் இந்துக் கல்லூரியிலும் பின்னர் இலங்கைப் பல்கலைக் கல்லூரியிலும் கல்வி கற்றார். அக்காலத்திலே இவ் வசதிகளை மிகக் (கறுகிய உயர் வட்டத்தினரே அனுபவிக்கக் கூடியதாகவிருந்தது. தமது நிர்வாகத்தைச் செவ்வனே நடாத்தக் கூடிய விசுவாசிகளை உருவாக்குவதே ஏகாதிபத்தியத்தின் நோக்கமாயிருந்தது. இத்தகைய சூழ்நிலையைத் தாணி டி, ஏகாதிபத்தியத் தினதும் அதன் அடி வருடிகளினதும் ஆசைவார்த்தைகளையும் புறக்கணித்து மக்களின் அபிலாசைகளுக்கு ஏறற விழுமியங்களை நாடிய பெருமை கந்தையாவைச் சாரும்.
நாம் இருவரும் பல்கலைக் கல்லூரியில் பட்டதாரி மாணவர்களாக இருந்த போது அவரை நன்கு அறியும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அந் நாட்களில் மாணவ ஏகாதிபத்திய எதிர் இயக்கங்களின் முன்னணியில் கந்தையா நின்றார். அவர் பாடசாலை மாணவராக இருந்த போதே யாழ். இளைஞர் காங்கிரசின் இலட்சியங்கள் அவரை ஈர்த்தன. அப்பொழுதே ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக மாணவர்களை அவர் திரட்டத் தொடங்கினார். அக் கால கட்டத்தில் இத்தகைய பணி மிகவும் அபாயகரமானதாக இருந்தது. ஆனால் கந்தையா அஞ்சவில்லை. இம் மாணவக் குழுக்களைச் சேர்ந்தவர்களே பின்னர் இலங்கைக் கட்சியை நிறுவியவர்கள்.
புலமைப் பரிசில் பெற்ற கந்தையா கேம்பிரிட்ஜ், ஒக்ஸ் போர்ட் பல்கலைக் கழகங்களுக்கு மேற்படிப்பிற்காகச் சென்றார். அங்கு பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பேற்பட்டு கட்சி உறுப்பினர் ஆனார். இரண்டாம் உலகப் போர் மூண்டதும் அவர் இலங்கைக்குத் திரும்பி, காலதாமதமின்றிப் பழைய மாணவ நண்பர்களுடன் தொடர்பு கொண்டார். மார்க்சிய கருத்துக்களை அவர்களிடம் பரப்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் உலகளாவிய ஒன்று. ஆதலால் இவ் எதிர்ப்பியக்கம் உலகளவில் அமைந்த இயக்கத்தோடு இணைவதன் அவசியத்தை உணரச் செய்தார். ஒவ்வொரு நாட்டிலும் - தொழிலாளி வர்க் கம் , அடக்கியொடுக்கப்பட்ட விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் - உள்ளனர் என்பதை உணர்த்தினார். இவ்வாறு தான் கந்தையாவும் அவரது தோழர்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்கான அத்திவாரத்தை இட்டனர்.
கந்தையாவின் வாழ்வில் குறிப்பிடக் கூடிய அடுத்த கட்டம் 1947-ல் பொதுத் தேர்தலில் அவர் வேட்பாளராக நின்றமை. வடபகுதியில் கட்சி நிறுத்திய ஒரே ஒரு வேட்பாளர் இவரே. வடபகுதி மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. தேர்தலிலே வெற்றி ஈட்டுவது அல்ல, கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதே கந்தையாவின் பணியாக இருந்தது. இதனை அவர் சிறப்பாகச் செய்தார். காலஞ்சென்ற மு. கார்த்திகேசன், எம். சி. சுப்பிரமணியம், ஆர். ஆர். பூபாலசிங்கம் போன்ற தோழர்களின் ஒத்துழைப்போடு வடபகுதியிலே கட்சியின்
-39

Page 30
கிளைகளை முதன் முதலாக அவர் நிறுவினார். கம்யூனிஸ்ட் இயக்கம் வடபகுதியிலே வளர்ச்சியடைவதற்குப் பல தடைகள் இருந்தன. தொழிலாளர் வர்க்கம் இருக்கவில்லை. நிலமானிய எண்ணங்களும் சாதிப் பாகுபாடுகளும் விரவியிருந்த காலகட்டமது. ஏகாதிபத்தியமே சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்க வல்லது என்ற மாயை நிலவிற்று. இத்தகைய தடங்களையும் சுகவீனத்தையும் வென்று 1956 இல் கட்சிக் கிளைகள் நிறுவப்பட்டு 9 ஆண்டு காலத்தில் பருத்தித் துறைப் பிரதிநிதியாக கந்தையா தேர்ந்தெடுக்கப் பட்டமை அன்னாரின் தலைசிறந்த பணிக்குச் சான்று பகரும்.
இருதய நோயால் பீடிக்கப்பட்ட அவர் இறுதிக் கட்டத்தில் எழும்பி நிற்க முடியாது திணறினார். என்றாலும் தொடர்ந்து கட்சிக்குப் பணி ஆற்றினார். இளம் வயதிலே - 46-ல் அவர் இறந்தமை கட்சிக்குப் பெரும் இழப்பு இன்றும் கூட ஈடு செய்ய முடியாத இழப்பு.
அமரரின் சாதனைகள் கலங்கரை விளக்கமாக எமக்கு உற்சாகமளித்த வண்ணமே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அக்டோபர் - 1980
A
40ے

சில வேளைகளில் சில தீரர்களை வெளி உலகம் அறிவதில்லை
டொமினிக்*ஜீவா
ழர் கார்த்திகேசனை எனக்கு முப்பது ஆண்டுகளுக்கு மோலாகத் தெரியும். ஆரம்ப காலத்தில் தினசரி அவரை நான் காண்பது வழக்கம் என்னை அரசியல் இயக்கத்தில் பங்கேற்கப் பழக்கியவரே அவர்தான்.
திரிகரண சுத்தியாகத் தான் நம்பிய இலட்சியத்திற்கு உழைத்தவர் அவர். எந்தவித கபடு சூதுமற்று உண்மையாக உழைக்கும் மக்களுக்காகக் கடைசி வரையும் பாடுபட்டவர்.
என்னைப் போன்று பல இலக்கியவாதிகளை தமிழுக்குத் தந்த பெருமை அவருக்குண்டு. இது அரசியல்வாதிகள் அதிகம் உற்சாகம் காட்டாத வழி. இருந்தும் அவரது ஆளுமையால் உருவாக்கப்படாத - அவரது தாக்கத்தால் பண்படுத்தப் படாதமுற்போக்கு எழுத்தாளர் இல்லை என்றே சொல்லி விடலாம்.
அவரது நகைச் சுவைச் சம்பாஷணையே தனித் தன்மை வாய்ந்தது. ஆணித்தரமாக அவர் சொல்லும் சிரிப்புக் கதைகள் தொகுக்கத் தக்கவை என்பது எனது கருத்து.
பின் தங்கிய சமூகப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர் மீது காட்டும் பாசம் வெறும் சகோதர பாசம் மாத்திரமல்ல. உண்மையான ஒரு தோழனுக்குரிய
-41

Page 31
ஆழ்ந்த நட்புடனேயே அவர்கள் அவர் மீது அன்பைப் பொழிந்தனர். தோழமை பூண்டனர்.
பிற்காலத்தில் அரசியல் மாற்றுக் கருத்துக் காரணமாக நாங்கள் இருவரும் இரு திசை வழி திரும்பிய பொழுதும் கூட எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியுமற்று அவர் நடந்து கொண்டது அவரது மனித நேயத்தைக் காட்டுகின்றது.
ஒரு பூரண மனிதனுக்குரிய பண்புகளுடன் அவர் யாவருடனும் பழகினார். விவாதித்தார்.
அரசியல்வாதிகளிடையே இப்படியான குணாம்சங்களைக் கொண்டவர்கள்
புகழ் பெறுவது அரிது. அவரது புகழ் அடக்கமானது. ஆடம்பரமற்றது. எனவேதான் அவரது இழப்புக் கேட்ட சகல பகுதி மக்களும் கண்ணிர் விட்டு அழுதனர்.
அந்தக் கண்ணிருக்கு ஒரு வித பெறுமதி உண்டு. அது போலித்தனமானதல்ல. உணர்வின் வெளிப்பாடே அது.
நாங்கள் மிக நெருங்கியவர்கள் அவரைக் குறிப்பிட்டுப் பேசும் போது 'கார்த்தி என்போம். இன்னும் மிக நெருக்கமானவர்களுடன் சம்பாவழிக்கும் போது காத்தார் எனச் செல்லப் பெயரிட்டு அழைத்துக் கொள்வோம். ஆனால் அவருடன் உரையாடும் பொழுது, அல்லது அவருடன் நேரில் பேசும் பொழுது மாஸ்டர் என்றே சொல்லிக் கொள்வோம்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர் யாழ்ப்பாண நகரில் விக்டோரியா வீதியில்தான் குடியிருந்தார்.
யாழ். இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றி வந்தார். அரசியலில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு இயங்கி வந்தார்.
இவரது இருப்பிடத்தில்தான் 1948-ல் நான் முதன் முதலில் தோழர் ப. ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்ததுண்டு.
அதன் பின் எத்தனையோ சந்திப்புக்களுக்கு இவரது இல்லம் இடமமைத்துத் தந்துள்ளது.
அந்தக் காலத்தில்தான் அவரது வீட்டில் எனக்குக் கே. கணேஷை அறிமுகப்படுத்தி வைத்தார். கே. ராமநாதனும் அங்கேதான் அறிமுகமானார். கந்தையா, எம். சி. அரியம், வைத்தி, பூபால் ஆகியோர் அவருடைய அறிமுகத்தின் பின்னர்தான் எனக்கு அறிமுகமானார்கள். அதன் பின் பலர்.
சாதாரண கீழ் மட்டத் தோழர்களையும் தனக்குச் சமதையாக நடத்திக் கெளரவிக்கும் பெரும் பண்பு கடைசி காலம் வரையும் அவரிடம் இருந்து வந்துள்ளதை அவரை அறிந்தவர்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.
-42,

நடு இரவில் கூட்டச் சுவரொட்டிகள் ஒட்ட, அவரது வீட்டிலிருந்துதான் பசை வாளி, பிரஸ”டன் புறப்படுவோம். அவரும் ஒரு வாளியைச் சுமந்து கொண்டு வருவார். போகும் வழியெல்லாம் நகைச் சுவைப் பகிடிகள்தான். இரவு நித்திரை விழிப்பின் தூக்கச் சுமையே அழுத்தாத அளவிற்கு உற்சாகமாகக் கதைகள் பல கூறி வருவார்.
இடைநடுவே இரவுக் கடைகளில் - நடுச் சாம நேரத்தில் தேநீர் அருந்தச் செல்வோம். சகலருக்கும் பிளேன்ம தான் ஓடர்.
யாழ் மாநகர சபையின் உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் ஆற்றிய பணிகளில் குறிப்பிடத் தக்கதொன்று சிறுபான்மை இனத்துக்குள் இன்னும் சிறு பான்மையாக வசித்து வந்த யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்குக் கெளரமளித்து, அவர்களின் பிரதிநிதிகளில் ஒருவரை - சுல்தானை - யாழ்ப்பாண நகர மேயராக்கிய சாதனை, இன்னமும் முஸ்லிம் மக்களால் நன்றியுணர்வுடன் நினைவு கூரத்தக்கதாக அமைந்துள்ளது.
எதற்குமே வளைந்து கொடுக்காத இவரது நேர்மை சகல அரசியல் கட்சியினராலும் அங்கீகரிக்கப் பட்ட ஒன்றாகும்.
கட்சி பிளவுபட்ட காலத்தில் தாய்க் கட்சியை விட்டு அவர் பிரியாமல் ஒரே அணியில் இருந்திருந்தால் இலங்கை அரசியல் வரலாற்றில் - குறிப்பாகக் குடாநாட்டு அரசியல் சக்திகளில் அவர் மிகவும் ஒரு காத்திரமான பங்களிப்புள்ளவராகத் திகழ்ந்திருப்பார் என்பது சர்வ நிச்சயம்.
கார்த்தியின் நெஞ்சம் ஓர் அரசியல்வாதியினுடையதை விட அவரது இதயம் ஒரு கலைஞனுடையது என்பதே சரியானதாகும். ஏனெனில் மனிதாபிமானம் மிக்க மிகச் சிறந்த பெரும் மனிதன் அவர்.
gydä56L[[Lurif - 1977.
A
-43

Page 32
நிதானம் தவறாத ஒரு நேர் கோட்டு வழிப் பயணி
லையில் குளித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் எனது கா மகன் திலீபன் இந்தத் தகவலை ரேடியோவில் கேட்டு வந்து
சொன்னான். உங்க சரத் கார் விபத்திலே செத்துப் போய் விட்டாராம். இப்பதான் சொன்னாங்கள்!
தொடர்ந்து குளிக்க இயலவில்லை. கிணற்றங்கட்டில் அப்படியே குந்தி இருந்து விட்டேன்.
ஒரு யாழ்ப்பாணத்துக் கவிஞன் குறிப்பிட்டது போல மரணங்கள் மலிந்து விட்ட பூமி இது தினசரி சாவுகள். மரண ஒலங்கள், சர்வ நாசங்கள் மலிந்து விட்ட இப் பிரதேசத்தில் இவைகள் அனைத்தையும் பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு மரணம் என்பதே பழகிப் போய் விட்ட ஒரு சங்கதியாகப் போய் விட்டது.
இருந்தும் தோழர் சரத் முத்தெட்டுவேகம இறந்து விட்டார் என்று மகன் சொன்னதும் அப்படியே மனமிடிந்து போய் விட்டேன். இந்தத் திடீர்ப் பிரிவு சொல்லொணாத சோகத்தை என்னுள் பிரவகிக்கச் செய்தது.
எதற்குமே கிறுங்காத மன வலிமை வாய்ந்தவன் நான். துயரத்தை, அவலத்தைக் கண்டு துடை நடுங்கும் சுபாவம். எனக்கு என்றுமிருந்ததில்லை. எதையும் நேருக்கு நேராகச் சந்திப்பதில் பின் நிற்காதவன் நான்.
 

உண்மையைச் சொல்லப் போனால் எனது தாயாரின் மறைவுதான் என்னை வாழ்க்கையில் ஒரு தடவை திக்கித் திணற வைத்த ஒரு சம்பவமாகும். அதுவும் வயோதிபம், மூப்பு என்ற காரணங்களால் ஏற்பட்ட இழப்பு. இது தெரிந்தும் தவித்துப் போய்விட்டேன். அதற்குப் பின் நான் சோகத்தால் துவண்ட சம்பவம் தோழர் சரத்தின் இந்தத் திடீர் இழப்புத்தான்.
இந்த அகால மரணம் என்னை ரொம்பவும் பாதிக்கச் செய்து விட்டது. அதன் தாக்கத்தை அந்தக் கணமே நான் உணர்ந்து கொண்டேன்.
பல தடவைகள் பல சந்தர்ப்பங்களில் நான் தோழர் சரத்தைக் கண்டு உரையாடி இருக்கின்றேன்.
இனிமையாகப் பழகும் அந்த இளம் வயது அரசியல்வாதி, அரசியல் வாதிகளுக்கேயுரிய எந்த விதமான 'பந்தாக்களுமில்லாமல் ஒரு நெருங்கிய நண்பனைப் போல ஓர் உண்மையான தோழனைப் போலப் பேசிப் பழகுவார்.
கொழும்பு செல்லும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அனேகமாக அவரைச் சந்திப்பது வழக்கம்.
கடைசியாக இரண்டொரு மாதங்களுக்கு முன்னர் புதிய நகர மண்டபததில் சந்தித்து உரையாடினேன்.
இனப் பிரச்சினை உச்சக் கட்டத்தை அடைந்து, இனச் சங்காரமாகத் தமிழ்ப் பிரதேசமெங்கும் வியாபித்திருந்த வேளை.
தோழர் சரத் பாராளுமன்றத்தில் இனப்பிரச்சினை பற்றிக் காரசாரமாக வாதித்து ‘நமக்காக நியாயம் கேட்பதற்கும் ஒரு மனிதன் இருக்கிறான்! எனத் தமிழ் மக்களில் பெரும்பான்மையோர், மனசை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் அந்தச் சந்தர்ப்பத்தில் தான் நான் அவரைச் சந்தித்தேன்.
விபரங்களைச் சாங்கோபாங்கமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
உணர்ச்சி வசப்பட்டு அவரது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு நான் சொன்னேன். தோழர் சரத்! நீங்கள் கலவான எம். பி. மட்டுமல்ல. முழுத் தமிழ் மக்களுடையவும் பிரதிநிதி நீங்கள். அப்படித்தான் தமிழ் மக்கள் எல்லாரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள்!' என்றேன்.
குழந்தையைப் போல, அவர் ஓ - ஹோ-ஹோ வெனப் பெருங்குரலெடுத்துச் சிரித்தார். அப்படியா? என்றார். பின்னர் நேசமான முறையில் என்னுடைய தோழைத் தட்டியபடி இங்குள்ள சிங்கள மக்களாயிருந்தாலும் சரி, அங்குள்ள எனது தமிழ்ச் சகோதரர்களாயிருந்தாலும் சரி என்னை ஒரு கூட்டுக்குள் அடைக்கக் கூடாது. அது பெருந் தவறு. ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும் அவர்கள் என்ன பாஷையைப் பேசினாலும் சரி நான் அவர்கள் பக்கந்தான் நின்று நியாயம் பேசுவேன்! - அவர்களுக்காகக் குரல் கொடுப்பதுதான் என்னுடைய கொள்கை
-45

Page 33
நான் சொல்வது சரிதானே எனக் கேட்கும் முறையில் தலையை ஆட்டினார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இந்த மண்மீது இன்று நியாயக் குரல் கொடுத்துப் போராடிய அந்தச் சர்வதேசச் சிந்தனையாளன் இன்று நம்மிடையே இல்லை.
மிக நுணுக்கமாக ஒன்றை அவதானிக்க வேண்டும். தமிழ்த் தலைவர்கள் எனச் சொல்லப்பட்டவர்கள் தங்களைப் பின்பற்றும் மக்களுக்காகவும், சிங்களப் பெருந் தலைவர்கள் தாம் பிரதி நிதித்துவம் வகிக்கும் மக்களுக்காகவும், எதிரும் - புதிருமாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் நெருக்கடியான - இன உணர்ச்சி கொழுந்து விட்டெரியும் காலகட்டத்தில், சகல மக்களுக்காகவும் . குறிப்பாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த ஒரேயொரு தேசியத் தலைவன் சரத்தான்!
ஓர் தேசியத் தலைவனுக்கு இருக்கக் கூடிய அத்தனை பண்புகளும் இலட்சணங்களும் பொருந்தியவராக அவர் கடைசிரை மிளிர்ந்து வந்தார்.
ஒரு இளம் தேசியத் தலைவனை இன்று நாடு இழந்து தவிக்கின்றது.
பாராளுமன்றத்தில் ஒரேயொரு தனி மனிதனாக நின்று கொண்டு முழு நாட்டுக்காகவும் - மனித குலம் அனைத்துக்காகவும் - சிந்தித்துச் செயலாற்றியவர். அவர் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் தான் கொண்ட கொள்கைக்காகக் கடைசிவரை விடாப்பிடியாக உழைத்தவர் தோழர் சரத். மனுக் குலத்தை நேசித்த மாமனிதர் அவர்.
ஒரு மாமனிதனை இழந்து இன்று நாடு சோகத்தால் துவண்டு துடிக்கிறது. தோழர்களை அவர் நேசித்த பாங்கு, நெஞ்சு நெகிழ வைக்கும். அவர்களோடு அவர் பழகிய தன்மை நினைத்து மகிழத்தக்க ஒன்றாகும். அரசியல் எதிராளிகளுடன் கூட அவர் காரசாரமாக விவாதிப்பதுண்டு. ஆனால், என்றுமே அவர்களின் தனி மனித உணர்வுகளைப் புண்படுத்தியதில்லை. சரத்தை அவரது அரசியல் எதிரிகள் கூட மனசார நேசித்தனர்.
மதிக்கத்தக்க அற்புதமான தோழனொருவரை நண்பர்கள் இழந்து இன்று துக்கிக்கின்றனர்.
அவர் தோன்றிய குடும்பம் பிரபலமான நிலப் பிரபுத்துவக் குடும்பம். ஆனால், அவர் நிலமற்ற உரிமையற்ற உழைக்கும் மக்களின் தொண்டனாகவே கடைசி வரை உழைத்தார். மரணித்தார்.
எங்குமே நடக்காத ஒரு அதிசயம்இன்று தமிழ் மண்ணில் நடைபெறுகின்றது. சகல அரசியல் கருத்துக் கொண்டவர்களும், பாமரப் பொது மக்களும் உழைப்பாளி வர்க்கமும் தமிழ் மண்ணில் இன்று அவரது ஞாபக அஞ்சலிக் கூட்டங்களை நடத்துகின்றனர். அப்படியான நினைவஞ்சலிக் கூட்டங்களில் பங்கு கொண்டு தமது சகோதரனுக்கு இறுதி மரியாதையைச் செலுத்துகின்றனர்.
-46

தமிழ் மக்கள் இன விரோதிகள் அல்ல என்பதை நிரூபிப்பதற்கு இது போதுமான காரணமாகும்.
தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை எவர் சரியாகப் புரிந்து கொண்டு அந்த நியாயத்தின் பக்கம் செம்மையாக நின்று குரல் கொடுக்கிறார்களோ, அவர்களை மனசார நேசிப்பதில் தமிழ்ப் பெரும் மக்கள் முன் நிற்பார்கள் என்பதற்குத் தோழர் சரத் சாட்சி.
இனவாதிகள் இரண்டு பக்கமும் எப்படித்தான் கூக்குரலிட்டாலும் தமிழ்ப் பொது மக்கள் இனவாதத்தின் பக்கம் சாய்ந்தவர்களல்ல. நின்று நிதானமாகச் சிந்திக்கத் தெரிந்த மக்கள் பல கட்டங்களில் இனவாதிகளின் விஷக் கூக்குரல்களை நிராகரித்ததுமுண்டு.
இருந்தும் 1983 ஜூலைக்குப் பின்னர் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்ப, துயரங்களுக்கு ஆட்பட்டதின் பின்னர்தான் தமது பின் சந்ததியினரின் எதிர்கால சுபீட்ச வாழ்வைக் கருத்தில் கொண்டு தமக்கென ஓர் ஆட்சியதிகாரம் வேண்டுமென முற்றுமுழுதாக நம்பினர். செயல் பட்டனர்.
-இதைச் சரிவரப் புரிந்து கொண்டு. இந்த நியாயக் கோரிக்கையின் அடிப்படையிலேயே பிரதேச சுயாட்சி என்ற தத்துவத்தைச் சிங்கள மக்கள் மத்தியில் தெளிவாகக் கொண்டு சென்றவர்தான் நமது சரத் முத்தெட்டுவேகம,
தெளிவான நேர்க்கோட்டில் சளையாது பயணம் செய்த அந்த மாமனிதன் இன்று மறைந்து விட்டார். அவர் பயணம் செய்த நேர்க் கோட்டுப் பாதை இன்றும் எம் முன் தெளிவாகத் துலங்குகின்றது.
-ஜூன் 1986
A
-47

Page 34
ағөпт6КозьGорот இலக்கியமாக்கிய
படைய்பாளி
லாபகரமான சில நினைவுகள். முதன் முதலில் நிகழ்ந்த சந்திப்பை மீண்டும் மீண்டும் புதியவற்றோடு பொருத்தி மலர்த்துவது என் மனத்தியற்கை.
உடலளவில் 'ஒல்லியான - மற்றவரோடு பழகுவதில் வெக்கறை யான ஒரு மாணவன், எனக்கு ஒரு வகுப்புக் கீழே படிக்கின்றான். அந்தத் திருநெல்வேலி சைவ வித்தியாசாலையில் எஸ். எஸ். சி படிக்க நான் சேர்ந்த புதிசு.
முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முந்திய அந், நாளிலும் ஆசிரியர் பற்றாக்குறை. சில சமயம். அந்த மாணவனின் வகுப்பையும் எங்கள் வகுப்பையும் ஒன்றாக்கிப் பாடம் நடக்கும்.
இலக்கணத்தையும், புவியியலையும் இலக்கியமாக்கிக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர். திரு. சம்பந்தன். அன்னாரின் நிழலிலே கல்வி கற்கும் பாக்கியம் எங்களுக்கு அந்தப் பாக்கியத்தினால் அந்த வெக்கறை க்கும் எனக்கும் ஏற்பட்ட இலக்கிய நட்பு, இன்றும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
எங்கள் பாதைகள் மாறி விட்ட போதும், தொடர்பு மாறி விடவில்லை. சு. வே, நாவற்குழயர் நடராஜன் என்போர் எனது கிராமத்தவர். அவர்கள் மறுமலர்ச்சி
-48
 
 

இயக்கத்தில் எனக்கும் ஈடுபாடு. அந்த இயக்கம் நடத்திய மாதப் பத்திரிகை 'மறுமலர்ச்சி. அது 1946-ஆம் ஆண்டு வாக்கில் ஒரு சிறுகதைப் போட்டியை ஏற்படுத்தியது.
ஈழத்து இலக்கிய முயற்சிகளின் உதயதாரகை என வர்ணிக்கப்படும் 'மறுமலர்ச்சி’யின் சிறுகதைப் போட்டியின் முடிவை அறியப் பேராவல் எல்லோருக்கும். முதற்பரிசைப் பெற்றவர் இராஜநாயகன். எனது நண்பன். அந்த வெக்கறை நண்பன். அப்பொழுது அவர் மாணவன், யாழ். இந்துக் கல்லூரியில், அதற்கு முன்பே, அவரது சில சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்திருந்தன.
பிறகும் அவர் ஏராளமான சிறுகதைகள் எழுதியுள்ளார். ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் தனித்துவம் பெற்றிருந்தது.
வாழ்க்கையைப் பல கோணங்களில் இருந்தும் பார்க்கலாம். இராஜநாயகன் எக்கோணத்தில் இருந்து பார்க்கிறாரோ, அவரது எழுத்திலே இருக்கிற வலிமையும் சக்தியும் மிகப் பெரியன.
ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் கண்ணம்மா என்ற தீண்டத்தகாத பெண் சேர்ந்த போது அங்கே ஏற்பட்ட புயலைப் புயலாகவும், காட்டு மத்தியிலே ஏழைகளுக்காக நடைபெறும் பாடசாலை மாணவி லக்ஷ்மியின் நெருப்புக் காய்ச்சலை நெருப்பாகவும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே எழுதுகிற முற்போக்குப் பார்வை கொண்ட இராஜநாயகனுக்குத் தமிழ் மிக லாவகமாக வளைந்து கொடுக்கிறது.
கதையிலே, கட்டுரையிலே நாவலிலே இவரது மொழி கவிதைபோல் தவழ்ந்து விளையாடும். அதே சமயத்தில், அந்த எழுத்துக்களிலே ஆழமான சமூகப் பிரக்ஞை ஊடுருவி நிற்பதையுங் காணலாம்.
இவர் ஓர் இடதுசாரி, யாழ்ப்பாணக் கல்லூரி மாணவராய் இருந்தபோது, பட்டதாரி மாணவர் சங்கத் தலைவராக, இலங்கையின் இன்றைய அமைச்சர்களான சில இடது சாரித் தலைவர்களை வரவழைத்து அங்கே சொற்பொழிவுகள் ஆற்றுவித்தவர்.
மாணவப் பராயத்திலேயே ஊறிவிட்ட இடதுசாரித் தனம், ஆசிரியரான பின்பு, பெரிதாக வளர்ந்து விட்டது. வட பிரதேசச் சமசமாஜ வாலிப சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவராக இன்று இருக்கிறார். இலங்கை ஆசிரியர் சங்க நல்லூர்த் தொகுதிக் கிளையில் தலைவராகவும் இருக்கிறார்.
இவரின் இடதுசாரி நோக்கு 'ஈழநாடு நடத்திய நாவல் போட்டியில் முதற்பரிசு பெற்ற இவரது பிரயாணி'யில் முழுமையாக இழையோடி நிற்கிறது. போலித்தனத்தையும், கெளரவமான சுரண்டல் களையும் சாடி நிற்கும் இந்த நாவல், காதல் என்ற பொழுதுபோக்காளரின் "தெய்வீக சங்கதிக்கே
-49

Page 35
இடமளிக்கவில்லை. இந்த நாவல் புத்தக உருவில் வெளிவந்தால், ஈழத்து இலக்கிய முயற்சிகளுள் தனித்துவம் வகித்து நிற்கும் என எண்ணுகிறேன்.
கடைசியாக இவர் எழுதிய சிறுகதை, இளம் பிறை வெளியீடான 'காந்தியக் கதைகள் என்ற தொகுதிக்குப் பிரத்தியேகமாக எழுதப்பட்டது என நினைக்கிறேன். தலைப்பு: ‘ஓநாய்கள், கவனம். சமூகத்தில் நிரம்பியுள்ள ஓநாய்கள், வெள்ளாடு நனைய அழுவது ஏன், தொண்டு செய்ய முன்வருவது ஏன் என்பதை மிக அழகாகக் காட்டுவது. அது, இளம்பிறையில் மறுபிரசுரஞ் செய்யப்பட்டதே அதன் பெருமைக்கு ஒரு சான்று.
ஈழத்து இலக்கியம் பற்றியும். இறக்குமதி இலக்கியம் பற்றியும் இராஜநாயகன் கொண்டுள்ள ஆணித்தரமான கருத்துக்கள் சக்தியில் அவர் விமர்சித்த குமுதம், கல்கி பற்றிய கட்டுரைகளில் தெளிவாகத் தொனிக்கின்றன.
இராஜநாயகன் ஒரு சிறந்த எழுத்தாளன் இன்றைய இலங்கையில் தொடர்ந்து எழுதவேண்டிய ஒருவர் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். எனினும், அவர் பெரிய சோம்பல் படைத்தவர், சவால் கிடைத்தாலன்றி எழுதமாட்டார். வாழ்விலும், சமூகத்திலும் அவருக்குச் சவால் கிடைத்தால், அவரது எழுத்தை ஈழத்து இலக்கியச் செல்வத்தோடு சேர்த்து விடலாம்.
-9/ášG ITILIif - 1973.
A

வண. பண்டிதர்
எம். ரத்னவன்ஸ் தேரோ
ர்கொழும்பிலிருந்து சுமார் பன்னிரண்டு மைல் தூரத்தில் இருப்பது மினுவாங்கொடை எங்கள் நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் உப தலைவரான வண. பண்டிதர் ரத்னவன்ஸ் தேரோ அவர்களைச் சந்திப்பதற்காக பஸ்ஸில் பிரயாணமாகிறேன். மினுவாங்கொடையிலிருந்து இன்னுமொரு பஸ்! உடுகம்பொலை என்ற இடத்திற்குப் போய் இங்கிருந்து “கொரஸ் என்ற கிராமத்திற்குப் போகவேண்டும். அப்பப்பா. சுவாமியைப் பார்ப்பதென்றால் மூன்று பஸ்களில் ஏறி இறங்கியாக வேண்டும். அது LDÜ (6LDII. ஒரு நாள் பொழுதே அதற்குத் தேவை.
‘ஒரு நாள் பொழுது விரயமாகிறதே என்ற அங்கலாய்ப்பு மன அவஸ்தை ஆனால். அவ்வளவு தூரம் சென்று சுவாமியைப் பார்த்துவிட்டால் - அந்தப் புன்னகை தவழும் முகத்தைத் தரிசித்துவிட்டால் அங்கலாய்ப்பும், மன அவஸ்தையும் வெய்யில் கண்ட பணிபோல் மறைந்துவிடும். தமிழ் பேசக் கூடிய முகங்களையே காணமுடியாத முழுக்க முழுக்கச் சிங்கள பெளதத மக்களே வாழுகின்ற ஒரு குக் கிராமத்தில் விஹாரைக்குள் வாழ்ந்து கொண்டு தமிழ் மொழி மீதும். தமிழ் இலக்கியத்தின் மீதும் அளவிடற்கரிய பற்றும் பாசமும் கொண்டு பரம இலக்கிய இரசிகராக இருக்கும் மதிப்புக்குரிய சுவாமி ரத்னவன்ஸ் அவர்களைச் சந்திக்கிறேன்.

Page 36
மல்லிகைக்கு ஓர் பேட்டி!
என்னை அழைத்துச் சென்று அமருவற்கு ஒரு பங்குப் பலகை தருகிறார். வழக்கமாக அவரைக் காணச் செல்பவர்கள் சில சம்பிரதாய விதிமுறைகளை அனுசரித்து நடக்க வேண்டும். ஆனால் என்னைப் போன்ற இலக்கியக்காரர்களுக்கு அவர் தரும் செளகரியங்கள் கொஞ்சம் அதிகம் தான். அன்பு நிறைந்த நல்ல
D60lb. -
சாது. எங்கள் மல்லிகைக்கு ஒரு பேட்டி தரவேண்டும். கேள்விகள் தயாரித்துக் கொண்டு வந்துள்ளேன். - இது நான்.
'திரும்பவும் ஒரு பேட்டியா..? வியப்புடன் என்னை நோக்கிக் கேட்கிறார். ஆம். எனக்கு நினைவிற்கு வருகிறது. முன்பொரு சமயம் இலங்கை வானொலியில் அவர் தமிழில் பேட்டி அளித்தார். மல்லிகைக்குத்தான் இந்தப் பேட்டி என்று கூறியதும் மல்லிகையையும் ஜீவாவையும் அன்புரிமையோடு விசாரிக்கிறார். நான் வந்த அலுவல் செயல்பாடாகிறது.
கே. நீங்கள் ஒரு பெளத்த மத குரு. இருப்பினும் தங்களுக்கு எங்கள்
மொழி மீதும், இலக்கியத்திலும் ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படக் காரணம் uJTg
ப. எமது பெளத்த மதத்தில் ஒரு சிறந்த பண்பு உண்டு. அதாவது
எல்லா மனிதர்களையும், சகல மொழிகளையும், மதங்களையும் நேசிக்கின்ற உன்னதமான பண்புதான் அது. எனவே ஒரு மொழி, ஒரு இலக்கியம் மனுக்குலத்துக்குச் சிறந்த பலனை அளிக்குமாயின் அதனை நாம் நேசிக்க வேண்டும். அந்த வகையில் தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும், சிறந்தது என்று நான் கருதுகின்றமையினால் நான் அவற்றை மனதார நேசிக்கின்றேன். இதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. இன்னுமொரு விசயத்தையும் குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது எமது சிங்கள மொழியில் நாம் நாளாந்தம் பேசுகின்ற பொழுது கையாளுகின்ற பல சிங்களச் சொற்களில் பெரும்பாலானவை தமிழ் மொழியில் இருந்து தான் வந்திருக்கின்றன.
கே. நவீன சிங்களக் கலை, இலக்கியங்கள் பற்றி அறிந்துள்ள தாங்கள் தமிழ் கலை. இலக்கியங்கள் சம்பந்தமாக என்ன கூற விரும்புகிறீர்கள்?
ப; நான் படித்துள்ள பல சிங்கள இலக்கியங்களில் சமுதாயப் பார்வை
இருப்பதை அவதானித்துள்ளேன். தமிழ் இலக்கியம் என்று வரும்பொழுது அதனைச் சில வகைகளாகப் பிரிக்கலாம். அவை சங்க கால இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள். சங்ககால பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி நான் அறிந்துகொள்ள விரும்பினாலும் இந்தச் சுறுசுறுப்பான யுகத்தில் ஆற அமர இருந்து அவற்றைப் படித்துச் சுவைக்கப் போதிய அவகாசம் இல்லாமல் இருக்கிறது. ஆனால் சமகாலத்தில் உங்களைப் போன்ற இலக்கியகாரர்களது
-52

தொடர்புகள் எனக்கேற்பட்டதன் பின்னர் மல்லிகை போன்ற தரமான இலக்கிய சஞ்சிகைகள் எனக்கு கிடைத்து வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக மல்லிகை படித்து வருகிறேன். நவீன தமிழ் இலக்கியம் பற்றிக் கூறுவதாயின் மல்லிகை பற்றித் தான் இப்போது என்னால் கூற முடிகிறது. இன்றைய காலகட்டத்திற்கு உகந்த சமுதாயப் பார்வையுள்ள ஆக்கங்கள் பலவற்றை மல்லிகை வாயிலாக நான் படித்து வருகிறேன்.
கே. எத்தகைய இலக்கியங்கள் இன்றைய சமுதாயத்திற்கு பயன் தரும்.
ப; மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதற்கு இலக்கியம்
சிறந்த கருவி. சமுதாய விழிப்புணர்வுக்கு ஏற்ற சிந்தனை தரக்கூடிய தரமான முற்போக்குக் கருத்துக்கள் கொண்ட இலக்கியங்கள் எழுத்தாளர்களால் படைக்கப்படல் வேண்டும். முழுக்க முழுக்க கற்பனாவாதப் போக்கு கொண்ட இலக்கியங்களை, வேண்டுமானால் பொழுது போக்கிற்காக அல்லது இரவில் தூக்கம் வரவில்லை ஏதாவது பார்ப்போம் என்ற எண்ணத்திற்குப் பயன் படுத்தலாம். இது விஞ்ஞான யுகம். இதனை மனதில் கொண்டு. முட நம்பிக்கைகளை உருவாக்கிச் சிந்தனையை தேயச் செய்கின்ற இலக்கியங்களைப் படைக்காது - சமுதாய மாற்றத்திற்கு, மனுக்குலத்தின் விடிவுக்குப் பயன் தரக்கூடிய உன்னதமான இலக்கியங்களை இன்றைய எழுத்தாளர்கள் படைக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
கே. தாங்கள் விரும்பிப் படித்த தமிழ், சிங்கள எழுத்தாளர்களைப் பற்றி
கூற முடியுமா?
ப; ஏன் கூற முடியாது! சிங்களத்தில் மார்டின் விக்கிரம சிங்கா, டபிள்யூ
ஏ. சில்வா, பியதாஸ் சிறிசேன, கருனாசேன ஜயலத், கே. ஐயத்திலக்க, ஏ. வி. சுரவீர, குணசேன விதான ஆகியோரது படைப்புக்களும் தமிழில் நா. பார்த்தசாரதி, அகிலன், ஜெயகாந்தன், ஜானகிராமன் ஆகியோரது நூல்களும் ஈழத்து எழுத்தாளர்கள் கணேசலிங்கன். தளையசிங்கம், செங்க்ை ஆழியான், டொமினிக் ஜீவா, எச். எம். பி. மொஹிதீன், டானியல் ஏன். சமீபத்தில் உமது புத்தகமும் தான் படித்தேன்.
கே. தேசிய ஒருமைப்பாடு என்பது பற்றிப் பரவலாகப் பேசப்படும்
இக்கால கட்டத்தில் ஒருமைப்பாடு எச்சந்தர்ப்பத்தில் எப்படி உருவாகும் என்று நினைக்கிறீர்கள்?
ப, தேசிய ஒருமைப்பாடு சம்பந்தமாக நாம் இன்னும் பேசிக்
கொண்டிருக்கின்றோமென்றால் அதற்கு அர்த்தம் - இன்னும் ஒருமைப்பாடு தோன்றவில்லை என்பதுதான். தேசிய ஒருமைப்பாடு எப்பவோ தோன்றியிருக்க வேண்டும். சில காலத்திற்கு முன்னர் சில்லறைத் தனமான சில அரசியல்வாதிகள் ஒருமைப்பாட்டிற்குக் குழிபறித்து வந்தனர். முடிவில் அவர்கள்
-53

Page 37
தாம் பறித்த குழியில் தாமே புதைய வேண்டியதாகிவிட்டது! இன்று நிலைமைகள் மாறிக் கொண்டு வருகிறது. நான் நினைக்கிறேன், சுரண்டும் வர்க்கம் ஒழிந்து - சுரண்டப்பட்ட வர்க்கம் சுபீட்சம் பெற்று - எழுச்சி கண்டு - சமதர்ம சமுதாயம் உருவான பின்னர்தான் தேசிய ஒருமைப்பாடு சாத்தியமாகும். தேசிய ஒருமைப்பாடு பற்றிய சிந்தனை மக்களிடம் பரவுவதற்கு இலக்கியம் சிறந்த சாதனம். இந்நற்பணியினை ஆக்கபூர்வமான முறையில் செயல்படுத்தக் கூடியவர்கள் முற்போக்கு எழுத்தாளர்களே! மனிதர்களை இனத்தின் பெயரால், மொழியின் பெயரால் பிரித்து வைத்துத் தம்மை மட்டும் வளர்த்துக் கொள்ளும் சுயநலமிகள் இச்சமுதாய அமைப்பில் இருக்கும் வரை ஒருமைப்பாட்டிற்கான செயல்பாடுகள் மந்த கதியிலேயே இருக்கும். இலக்கியத்தினாலும் ஒருமைப் பாட்டை உருவாக்க முடியும் என்று ஏற்கெனவே நான் குறிப்பிட்டதன் காரணம். மனிதர்களைப் புரிந்து கொள்ள இலக்கியம்தான் தேவைப்படுகிறது. பலதரப்பட்ட மனித மனங்களை, உணர்வுகளை, சிந்தனைகளை இலக்கியத்தின் மூலம் சித்திரிக்க முடியும். அப்போது இன ஐக்கியம் தோன்றச் சாதகமான சூழல் ஏற்படும் இனத்துவேஷம், வகுப்புவாதம், பிரிவினைவாதம் என்பன மக்களிடத்தில் தவறான செயல்களை உருவாக்க வழிசமைத்துவிடும். இத்தகைய துர்ப்பாக்கிய நிலை ஏற்படாதிருக்க நல்லெண்ணம் படைத்த எழுத்தாளர்கள் அனைவரும் தத்தமக்குள் பலதரப்பட்ட முரண்பாடுகள் இருந்தாலும் அவற்றைக் கருத்துப் போராட்டமாக மட்டும் மனதில் கொண்டு மக்கள் நலனுக்காகவும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் ஒருங்கிணைந்து பொது இலட்சியத்திற்காக அயராது உழைக்க வேண்டும். அப்போதுதான் கலைஞர்களும் எழுத்தாளர்களும் மக்களுக்கு வழிகாட்டக் கூடியவர்கள் - "ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றவர்கள்’ என்ற நமது முன்னோர்களது கூற்றுக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கும்.
கே. தமிழ், சிங்கள இலக்கிய உலகிற்கு தாங்கள் என்ன பணியாற்ற
உத்தேசித்துள்ளிர்கள்?
ப; மொழி பெயர்ப்புத் துறையில் ஈடுபாடு காட்டி வருகிறேன். சில
முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன். சிங்கள இலக்கியங்கள் பற்றி தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த அளவு தகவல்கள் - தமிழ் இலக்கியம் பற்றிச் சிங்கள வாசகர்களுக்கு கிடைக்கவில்லை. இது வருந்தத் தக்க விசயம். இந்நிலை மாறவேண்டும். தமிழ், சிங்கள மொழிகளில் புலமையும் ஆற்றலும் உள்ளவர்கள் மொழிபெயர்ப்புத்துறையில் கொஞ்சம் கவனம் எடுத்தால் - நல்லது. பல தமிழ் எழுத்தாளர்களுக்குச் சிங்கள மொழியிலும், இலக்கியத்திலும் நல்ல அறிவு இருக்கிறது என்பதைக் கடந்த காலங்களில் மல்லிகை படித்ததன் மூலம் அறிந்து கொண்டேன். பல மொழி பெயர்ப்புப் படைப்புகளையும் பிரசுரித்துச் சிங்கள எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் அட்டையில் படம் போட்டு அறிமுகம் செய்து வைத்துள்ளது மல்லிகை.
-54

இது இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவமான விசயம். இவ்விசயம், நமது சிங்களப் பத்திரிகைகளுக்கும் முன் மாதிரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். தமிழிலும், இலக்கியத்திலும் ஆர்வம் காட்ட விரும்பும் நம் சிங்கள எழுத்தாளர்கள் தமிழைப் பயின்று அதன் மூலம் தமிழ் இலங்கியங்களைச் சிங்களத்தில் பெயர்த்து சிங்கள வாசகர்களுக்குத் தரவேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். வருங்காலத்தில் எனது விருப்பம் நிறைவேறும் என்று நம்புகிறேன்.
கே. எமது நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தில் உப தலைவராக இருக்கும்
தாங்கள் வேறு வெகுஜன இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளிர்களா?
ப. கம்பஹாவில் உள்ள சர்வதேச பிக்கு கலாசாலையில் விரிவுரையாளராகக
கடமையாற்றும் யான், கொரஸ் சுதர்மானந்த விஹாராதிபதியாகவும், இங்கு நடைபெறும் சமய போதனை வகுப்புகளுக்கு அதிபராகவும் எங்கள் பிரதேச வாலிபர், மாதர் சங்கங்களுக்குக் காட்பாளராகவும், யட்டியேன் என்ற கிராமத்தில் உள்ள 'விஜயமங்கள அகடமியின் அதிபராகவும் செயல்படுகின்றேன்.
கே. முக்கியமான விசயம் பற்றிக் கேட்கிறேன். உங்களைப் போன்ற
வர்களையும், இந்நாட்டு சிங்கள வாசகர்களையும் பிரச்சினைக்குள்ளாக்கிய மார்டின் விக்கிரமசிங்காவினுடைய 'பவதரனய என்ற நூலைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
ப. நான் இன்னும் அந்நூலை பூரண ஆய்வுக் கண்ணோட்டத்துடன்
படிக்கவில்லை. மேலோட்டமாக ஒருமுறை அதனைப் படித்துப் பார்த்தேன். அதனால் ஒரு விசயத்தை சொல்லி வைக்க விரும்புகிறேன். அந்தப் பவதரனய என்ற நூல் தூய்மையான சமய நூல் அல்ல! அது ஒரு இலக்கியம்! எழுத்தாளன் சுதந்திரமானவன் என்று கூறுகிறோம். அப்படியாயின் அவனுக்குச் சுதந்திரமாகச் சிந்திக்கவும் முடியும் தானே! எது எப்படி இருந்தாலும். அந்த எழுத்தாளன் சமுதாயத்திற்குக் கூறும் கருத்துத்தான் முக்கியம். ஒரு எழுத்தாளன் தனது சிந்தனையை இலக்கிய ரீதியாக மக்கள் முன் வைத்தால் அதனை நாம் இலக்கியமாகத்தான் ஏற்கவேண்டும். அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை ஏற்றல் அல்லது ஏற்காது விடுதல் என்பது வாசகனைப் பொறுத்த விசயம்.
புத்திஜீவிகள் பெரும்பாலாக வாழும் சமுதாயத்தில் எந்த ரகத்தைச் சேர்ந்த இலக்கியமும் சலசலப்பை ஏற்படுத்த முடியாது. வெறும் சலசலப்புக்காக எழுதப்படும் இலக்கியங்கள் சலசலப்போடு மட்டும்தான் நிற்க முடியும். காலத்தை வென்று நிற்க முடியாது!
கே. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அண்மையில் நடத்திய தேசிய
ஒருமைப்பாட்டு மாநாட்டில் முன்வைத்த பன்னிரண்டு அம்சத் திட்டம் பற்றி
-55

Page 38
என்ன கருதுகிறீர்கள்? அதனை நடைமுறைப்படுத்துவது பற்றி என்ன கூறுகிறீர்கள்?
ப; மாநாட்டின் இரு நாள் நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொண்டேன்.
பன்னிரெண்டு அம்சத் திட்டம் பற்றியும் அங்கு கருத்து வெளியிட்டேன். அப்போது சொன்னவைகளைத்தான் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. அதாவது எத்தகைய நல்ல திட்டங்களையும் நாம் கொள்கையளவில் மட்டும் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது. அவை நடைமுறையில் செயல்படுத்தப் படல் வேண்டும். அப்போதுதான் அத்திட்டங்கள் தீட்டியதன் உண்மையான பயனை நாம் அடைய முடியும். பிரதமர் அவர்களும் மற்றும் அமைச்சர்களும், பல வெகுஜன இயக்கத்தவர்களும் அப் பன்னிரண்டு அம்சத் திட்டங்களை வரவேற்றுள்ளார்கள். தம் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்கள். இது எமது நோக்கத்தின் முதல் கட்ட வெற்றி. நாம் அடுத்த கட்டத்திற்குப் போவதாயின் அப் பன்னிரண்டு அம்சத்திட்டமும் நடைமுறைப் படுத்தப்படல் வேண்டும். இந்நாட்டின் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினால் அத்திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இலக்கிய வாதிகளால் சமர்ப்பிக்கப்பட்ட அத்திட்டம் அரசியல் ரீதியாகச் செயற்படுத்தப் படல்வேண்டும். அச் செயல்பாட்டிற்கான சகல ஏற்பாடுகளையும் எழுத்தாளர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அரசும் இதுபற்றி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் அத்திட்டம் எழுத்தாளர்களுக்கு மட்டும் என்று சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் அல்ல! இந்நாட்டுச் சகல மக்களுடைய விடிவையும், சிறுபான்மை மக்களது நியாயமான கோரிக்கைகளையும் வேண்டி நிற்கும் திட்டம் அது.
LOITAfgf - 1976.
A

இலக்கியத்தில் பிரகாசிக்கும்
விளையாட்டு வீரர்
நல்லை அமிழ்தன்
ன்று நான் எஸ். எஸ். ஸி படித்துக்கொண்டிருந்த வேளை. நல்லூர் 'சாதனா பாடசாலையில் எங்கள் தலைமயாசிரியர் 'விடி வெள்ளி وك
கே. பி. முத்தையா அவர்கள் தினசரி கொண்டு வரும் இலங்கை, இந்தியப் பத்திரிகைகளில் எழுத்தாளரது விடயங்களைப் பார்த்து, வாசித்து, ரசித்துச் சிந்திக்கக் கூடியதாயிருந்தது. அன்று நான் மாணவனாய் இருந்த நேரம். இவர்களையெல்லாம் காணவேண்டும், கதைக்கவேண்டுமென்று பேரவாக் கொண்டிருந்தேன். படிப்பை முடித்து எழுத்துத் துறையுள் நுழைந்த வேளையில் எழுத்தாளர் ஜனாப் எம்.எம். சமீம் அவர்களைத் தவிர மற்ற அத்தனை எழுத்தாளர்களையும் யாழ்ப்பாணத்தில் நடந்த இலக்கியக் கூட்டங்களில் சந்தித்து விட்டேன். ஆனால் ஜனாப் எம்.எம். சமீம் அவர்களைச் சந்திக்க வில்லையே! என்ற சுமை மட்டும் நெஞ்சில் ஏதோ குறையாகத் தென்பட்டது.
1967 - ம் ஆண்டு எழுதுவினைஞனாக நியமனம் பெற்று மட்டக்களப்புக் கல்வி அலுவலகத்திற்குச் சென்றேன். அடுத்தாண்டே ஜனாப் எம்.எம். சமீம் அவர்களும் எமது அலுவலகத்திற்குப் பிரதம கல்வி அதிகாரியாக நியமனம் பெற்று வந்துவிட்டார். நான் எழுத்தில் கண்ட - இது வரை கண்ணால் காணாத - எழுத்தாளரே எனக்கு அதிகாரியாக வந்தது கண்டு என் சுமையை இறக்கி இரட்டிப்பு மகிழ்ச்சி கொண்டேன்.
-57

Page 39
“தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் நடந்த தமிழ் விழாவில் தூய தமிழில் முற்போக்குக் கருத்துக்களைக் கொட்டிக் கொண்டிருந்தார். அங்கு குழுமியிருந்த பலநூறு மக்களும் பெட்டிப் பாம்பாக அடங்கியிருந்தனர். இப்படி ஒரு சிறந்த தமிழ் பேச்சாளர் தமிழ் பேசும் மக்களிடையே இருக்கிறாரே என அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பாரதியார் கருத்துக்களைத் தர்க்க ரீதியாக விளக்கிக் கொண்டிருந்தார், ஜனாப் சமீம்.
அடுத்தநாள் காரியாலயத்தில் அவரை நான் எப்படியும் சந்திக்க வேண்டுமென்று காத்திருந்தேன். ஆனால் அலுவலகத்திலோ டெலிபோன் அலறல் - இடமாற்றம் கோரும் ஆசிரியர்கள் - இலக்கியக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்ல எழுத்தாளர்கள், பிரச்சினைகளுடன் எம். பீக்கள் - இத்தனைக்கும் மத்தியில் அமைதியாக அவரவர் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டிருந்தார். இந்த இளம் வயதில் கல்வித் திணைக்களத்தில் எந்தப் பெரிய பொறுப்பான வேலையை நிதானமும் அடக்கமும் அணி செய்ய செய்து கொண்டிருக்கின்றார். அப்படியான எழுத்தாளரைக் காண மெல்ல அடிவைத்து அவரது அறையுள் நுழைகின்றேன். நான் கதையைத் தொடக்கவில்லை. இந்தாரும் நான் மல்லிகைக்கு இப்பவே சந்தா தருகிறேன். சந்தாப் பத்திரங்கள் எடுத்துத் தாரும். நானே மல்லிகைக்குச் சந்தா சேர்த்துத் தருகிறேன். ஜீவாவை இஞ்சாலுப்பக்கம் வரச்சொல்லும்!
பணத்துடன் நான் திரும்பிவிட்டேன். ஜீவாதான் இன்னும் மட்டக்களப்பிற்கு வரவில்லை. எம். பீக்கள். ஆசிரியர்கள், ஊழியர்கள் மத்தியில் அதிக வேலை செய்து கொண்டிருந்த நேரம், மல்லிகை என்றவுடன் மனம் திறந்து கதைத்து. சந்தா தந்து மகிழ்ந்தவர் ஜனாப் சமீம்.
மட்டக்களப்பு கல்வி இலாகா கலை வட்டம் நடத்திய பல இலக்கியக் கருத்தரங்குகளில் அவரின் சுவை மிகுந்த தாக்கமான - முற்போக்கான பேச்சுக்களை கேட்க முடிந்தாலும் அவர் கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றதும் அவரின் சொற்பொழிவுகளை, பாடசாலை விளையாட்டுப் போட்டிகளிலும், பரிசளிப்பு விழாக்களிலும் தான் காண முடிந்தது. சங்கீதமோ, விஞ்ஞானமோ, எந்த விடயத்தையும் மக்களுக்கு விளக்கிப் பேசும் திறன்மிக்கவர் இவர். கிழக்குப் பிராந்திய கல்விப் பிராந்தியத்தில் இவர் கல்விப் பணிப்பாளராக இருக்கும் போதுதான் இருதடவைகள் பாடசாலைகளின் அகில இலங்கை தமிழ்த் தின விழா மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் அரசாங்க முத்திரையுடன் நடந்தது. இலங்கையில் முதல் தடவையாகக் கல்வி அமைச்சர் டாக்டர் அல்ஹாஜ் பதியுதீன் முகமட் கடைசியாக நடைபெற்ற தமிழ்த் தின விழாவில் பங்குகொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஈழத்தின் பிரபல எழுத்தாளரும், விமர்சகருமான ஜனாப் எம். எம். சமீம் 1971-ம் ஆண்டு முதல், ஈழத்திலேயே மிகப்பெரிய கல்விப் பிராந்தியமான
-58

கிழக்குப் பிராந்தியத்தின் கல்விப் பணிப்பாளராக பதவி உயர்ச்சி பெற்றது. எழுத்தாளர் பெற்ற கெளரவமாகும். இலங்கையில் நான்கு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரேயொரு கல்விப் பிராந்தியம் இதுதான். மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்குகின்றன.
பட்டதாரி ஆசிரியராகத் தமது பணியை ஆரம்பித்த ஜனாப் சமீம் அவர்கள் மிகக் குறுகிய காலத்தில் வட்டாரக் கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி ஆலோசகர், பிரதம கல்வி அதிகாரி, முதலிய பதவிகளை வகித்துத் தற்போது கல்விப் பணிப்பாளராக உயர்ச்சி பெற்றிருப்பது மிகக் கடுமையான உழைப்பின் வெற்றி என்பதில் சந்தேகமில்லை.
இலங்கை சர்வகலாசாலைப் பட்டதாரியான இவர் சர்வகலாசாலை மாணவனாய் இருந்த காலத்தில், எல்லா விளையாட்டுகளிலும் பங்குபற்றி சிறந்த விளையாட்டு வீரனாகத் திகழ்ந்தவர். குறிப்பாக ஹொக்கி கோஷடிக்கு தலைவராக இருந்ததோடு நீச்சல், உதைபந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களில் விசேட பத்திரங்களும் கலர்ஸ் கெளரவங்களும் பெற்றவர்.
விளையாட்டுத் துறையில் ஈடுபாடுள்ளவர்கள் எழுத்துத் துறையில் பிரகாசிப்பது மிக அபூர்வம் - ஆனால் ஜனாப் சமீம் அவர்கள் எழுத்துத் துறையில் ஈடுபட்டுப் பிரபல எழுத்தாளராக வளர்ந்தது விந்தையே. இவருடைய படைப்புகள் முற்போக்கான ஆழமான நோக்குடையவை, அகலமான பார்வையுடையவை - பல்வேறு புனை பெயர்களில் மணியான சிறுகதைகளை எழுதியுள்ள இவர் "இலங்கை முஸ்லீம்களின் திருமறைச் சம்பிரதாயங்கள் வரலாறு கண்ட முஸ்லீம் "பெரியார்கள், இலங்கை முஸ்லீம்களின் வரலாறு போன்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் - மற்றும் வல இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.
இவர் கட்டுரைகள் தினகரன் பத்திரிகையில் தொடர் கட்டுரைகள் வெளிவந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். இவர் எழுதிய மதரசாக் கல்வி என்ற ஆய்வுக் கட்டுரை பாரிசிலுள்ள யுனெஸ்கோஸ்தாபனத்தின் நிரந்தரக் கட்டுரைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கிழக்கு மாகாண முஸ்லீம்களைப் பின்னணியாகக் கொண்டு ஓர் ஆராய்ச்சி நடத்தி சமய பொருளாதார காரணிகள் கல்வியை எவ்வாறு பாதிக்கின்றன? என்ற பொருள்பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதி முடித்திருக்கின்றார். இவர் எழுதிய 'இஸ்லாமிய கலாச்சாரம்' என்ற நூல் ஏற்கெனவே வெளிவந்துள்ளது.
தமிழிலும், சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசவும் - எழுதவும் - மொழி பெயர்க்கவும் வல்லவரான இவர் வீட்டில் நிறைய இருப்பது புத்தகங்கள் - காரியாலயத்தில் நிறையக் கிடைப்ப ஆசிரியர்கள் பிரச்சினைகள் சம்பந்தமான கடிதங்கள்!
ஜூன் - 1972 A
-59

Page 40
ஈழத்துக்கு ஒரு லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்
லகிலேயே மிகவும் ஏமாற்றமளிப்பது (75 ஆண்டுச் சரித்திரமுள்ள) *D_ இந்தியச் சினிமாத்துறை தான். தென்னிந்தியாவில் உருவாகும் சினிமாப் படங்களில் 20 வீதம் மட்டுமே வர்த்தகரீதியாகவாவது வெற்றிபெறுகின்றன. உயர்ந்தோர் கலைமரபைக் கொண்டது தென்னிந்தியா. தென்னிந்தியாவின் சங்கீதம் உலகிலே முதன்மையான ஒன்று. தென்னிந்தியரின் நடனம் உலகெங்குமுள்ளவர்களால் மிகவும் போற்றி ரசிக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பண்டைக்காலச் சிற்பங்கள் ஈடிணையற்றவை. இப்படியாக ஒரு உன்னதமானதும், ஆழமானதுமான கலைமரபை வளர்த்து வந்திருப்பவர்கள், சினிமாத்துறையிலே இத் துணை பின்தங்கியிருப்பது ஏமாற்றமும் வேதனையுமளிப்பதாகும். இவ்வாறு உணர்ச்சியுடன் கூறியவர், உலகம் பெருமைப்படும் நம் நாட்டுத் திரைப்பட இயக்குனரான லெஸ்டர் ஜேம்ஸ் பிரிஸ் அவர்கள்.
கலையம்சத்தில் வரண்ட தென்னிந்தியத் திரைப்படக் கும்பலில் எண்பது சதவீதமானவை வர்த்தக ரீதியாகக் கூடப் படுதோல் வியையே காண்கின்றனவென்றால், எதற்காகத் தொடர்ந்தும் இதேபாணியில் திரைப்படங்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன?
 
 
 

எல்லோர் மனதிலும் எழக் கூடிய இந்தக் கேள்விக்கு லெஸ்டர் விளக்கம் கூறினார். "வழமைக்கு முரணான ஒரு திரைப்படத்தை எடுப்பதை விட வர்த்தகரீதியான தோல்வியை விரும்பி ஏற்றுக் கொள்ளத் தென்னிந்தியத் திரைப்படத் துறையினர் தயாராக இருக்கின்றார்கள். நமது திரைப்பட மரபில் மாற்றம் அல்லது புரட்சி ஏற்படுவதை அவர்கள் அடியோடு வெறுக்கிறார்கள். அப்படியாக ஏற்படும் ஒரு திருப்பம் தமக்கே ஆபத்தாக முடியுமென்று படமுதலாளிகள் பயப்படுகின்றனர். பழைய பட்டியல் முறைப் படங்களே பாதுகாப்பானவை என்ற நம்பிக்கையால் வழமை குலைந்து போகாத வகையில் தொடர்ந்தும் பழைய மாதிரியான படங்களை மாத்திரமே அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம் நாட்டில் சிங்களத் திரையுலகுக்கு, பிரமிக்கத்தக்கதான ஒரு கலைத்துவ வேகத்தை அளித்தவர்களில் முதன்மையானவர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்கள். தமிழ் திரையுலகைப் போலவே, தரமற்ற, பட்டியல் முறைப் படங்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட சிங்களத் திரைத் துறையில் இவரது படங்கள் புத்தெழுச்சியூட்டும் புதுச் சுடர்களாக, வேகத்துடன் எழுந்தன. புதுடில்லியில் நடைபெற்ற அகில உலகத் திரைப்பட விழாவில் இவரது கம்பெரலியா தங்கமயில் பரிசுபெற்றுப் பெரு வெற்றியீட்டியபோது, ஈழம் முழுவதுமே பெருமைப்பட்டது. இப்படியான ஒரு கெளரவத்தின் கால் தூசு கூட இன்னும் ஒரு தமிழ்ப் படத்தின் மீது படவில்லையென்பது வேதனைக்குரியது. கலரியிலிருந்து எழுகின்ற விசிலடிப்புகளையே எதிர்பார்த்துத் திரைப்படமெடுக்கும் தமிழ்த் திரைப்பட நெறியாளர்களிடமிருந்து வேறுபட்டவர் லெஸ்டர். அவர் கூறினார்.
நான் பம்பாய்க்குச் சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு திரைப்படத் தயாரிப்பாளரைச் சந்தித்தேன். அப்பொழுது அவர் தாம் பன்னிரண்டு திரைப்படங்களை ஒரே நேரத்தில் எடுத்துவருவதாக என்னிடம் சொன்னார். இப்படிச் செய்தால் நல்லபடம் உருவாகுமா? இந்தப் பன்னிரண்டு படங்களுக்காகவும் 48-லட்சம் ரூபாய்களைச் செலவிடுகிறாராம். ஆனால், எனது கம்பெரலியா போன்ற தன்மையுள்ள ஒரு படத்தைத் தாம் ஒருபொழுதுமே எடுக்கத் துணியமாட்டாராம் தரமற்ற படங்களைத் தயாரிக்க 48 இலட்சம் ரூபாய்கள் செலவழிக்கும் ஒருவர் அதன் ஒரு மிகச் சிறு பகுதியையாவது - குறைந்தது கலைத்தரமுள்ள ஒரு படத்திற்காவது செலவிடக் கூடாதா?
‘தங்கள் திரைப்பட மரபில் மாறுதல் ஏற்படுவதை அனுமதிக்க இவர்கள் விரும்பவில்லை என்று லெஸ்டர் அழுத்தமாகச் சொன்னார். 'ஏன், எமது இலங்கையிலும் கூட நான் ஒன்பது ஆண்டுகள் வரையில் நல்ல படம் எடுக்கப் முடியாதவாறு விலக்கப்பட்டேன். பட்டியல் முறைப் படங்கள் தங்களுக்குப் பாதுகாப்பபென்று திரைத்துறை முதலாளிகள் கருதுகிறார்கள் என்றார் இவர்.
தென்னிந்தியத் திரையுலகைப் பொறுத்தவரை ஜெய காந்தனின் முயற்சிகள் குறிப்பிடப்பட்ட வேண்டியவை என்று அவா கூறினார். 'உன்னைப்போல் ஒருவன்
-61

Page 41
என்ற திரைப்படத்தை ஜெயகாந்தன் எனக்காகத் திரையிட்டுக் காட்டியதோடு தாமே என்னருகில் இருந்து விளக்கங்களும் தந்தார். அவரது முயற்சிகளுக்கு அங்குள்ள படவர்த்தகர்கள் பெரும் இடையூறுகளும், தடைகளும் விளைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன் என்றார் லெஸ்டர்.
சினிமாத்துறையில் நுழைய முன்னர். லெஸ்டர் அவர்கள் நாடகக்குழு நடாத்திக் கொண்டிருந்தார். பின்னர் இங்கிலாந்தில் துண்டுப்படங்கள் எடுத்த அவர், செய்திப்படத் துறையிலே புகுந்தார்.
இன்று சிறந்த சிங்களப் பட இயக்குனராக விளங்கும் லெஸ்டருக்குச் சிங்கள மொழியறிவு மிகவும் குறைவென்ற உண்மை சிலருக்கு வியப்பூட்டலாம். முன்னரைவிட இப்பொழுது தமது சிங்கள அறிவு ஓரளவு அதிகரித்திருப்பதாகக் கூறிக் கொண்ட அவர், பேசும் மொழியில் ஒரு இயக்குனர் அதிக அறிவு பெற்றிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை' என்றார். "சினிமாவில் இரண்டு மொழிகள் வருகின்றன. ஒன்ற - பேச்சு. மற்றது - காட்சி. காட்சிதான் சினிமாவில் அதிக முக்கியமானது. சிங்களம் அதிகம் தெரிந்த சிங்களப் பண்டிதர்கள் தமது அறிவையெல்லாம் வைத்துக்கொண்டு எப்படிப் பட்ட கீழ்த்தரமான படங்களை எடுத்து வருகிறார்கள் பார்த்தீர்களா? என்று கேட்டார் லெஸ்டர்.
லெஸ்டரின் படங்களில் வாழ்க்கையின் நுண்ணிய உணர்வுகளையும், சாதாரண சமூக வாழ்வின் அம்சங்களையும் அதிகம் சந்திக்கிறோம். அவரது கலையுலகக் கோட்பாடுபற்றிப் பேசப் பட்டபோது அவர் பின்வருமாறு சொன்னார். "கலைக்குச் சமுதாயப் பணி உண்டு. ஆனால், இது அரசியல் ரீதியானது மட்டும் தான் என்பதல்ல. என்னைப் பொறுத்தவரையில் சினிமாவின் வாயிலாக, வாழ்க்கையின் சில அனுபவங்களைப் பார்வையாளனுக்கு அளிப்பதை விரும்புகிறேன். சில உணர்ச்சிகளை ஏற்படுத்துவதை விரும்புகிறேன். மிகச் சாதாரணமான விடயங்கள் கூட திரைப்படத்திலே புதிய உயர்வுகளை ரசிகனுக்குத் தருகின்றன. திரையிலே பார்க்கின்ற வரைக்கும் இதை நான் அறிந்திருக்கவில்லை என்று அவன் சொல்கிறான்.
சிலர் சிரிப்பு. காதலும், களியாட்டங்களும் தான் மகிழ்வூட்டுவன 'என்று எண்ணுகிறார்கள். கனமான விடயங்களும் மகிழ்ச்சியை அளிப்பனவே. பதர் பாஞ்சாலி ன்னற படத்தை எடுத்துக் கொண்டால், அதில் எந்தவிதமான களியாட்டங்களும் இல்லாதிருந்தும். அது மக்களிடையே அமோகமான வெற்றியைப் பெற்றது. ஆனால், திரைத்துறை முதலாளிகளோ தோல்வியில் முடிந்ததாக ஒரு பொய்க்கதையை வேண்டுமென்றே பரப்பிவிட்டார்கள்.
எனது கொலுஹத வத்த படம் வெளியாக முன்னர் பலர் என்னிடம், இந்தப் படத்தில் ஜனரஞ்சகம் இல்லையென்றும் அது ஓடாதென்றும் சொன்னார்கள். ஆனால் அது அமோக வெற்றியை ஈட்டியது. மக்கள் அதை விரும்பிப் பார்த்தார்கள். "மக்களிலிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கும் கலையென்று எதுவுமில்லை. மாபெரும் ஓவியக் கலைஞரான பிக்காசோவிடம் அவரது ஓவியத்தின் அர்த்தமென்ன
-62

வென்று யாரோ கேட்டபோது அவர் அழகாகப் பதிலளித்தார். ஒரு பறவை பாடும் போது, அதற்கு அர்த்தமென்னவென்று அந்தப் பறவையிடம் கேட்பீர்களா? என்று அவர் கேட்டார்.
லெஸ்டரின் முதலாவது திரைப்பட விழா 1965-ல் சென்னையில் நடந்தது. அண்மையில் அவரது படங்கள் அமெரிக்காவில் நவீன கலைக்காட்சி நிலையத்தில் திரையிடப் பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றன. இசிகாவோ, ஓசோ ஆகியோருக்குப் பின்னர் இந்தக் கெளரவத்தைப் பெற்ற ஆசிரியர் இவரேயாவர். இந்தத் திரைப் படவிழா நடந்தபோது இலங்கையில் எழுந்த சில எதிர்ப்புக்களை அவதானித்தவர்கள் உங்களுக்கெதிராக உங்கள் நாட்டவர்களின் குரல்களே எழுவது ஆச்சரியமாக இருக்கிறது. மற்றவர்களின் திரைப்பட விழாக்கள் நடைபெற்ற போது இப்படியான சம்பவங்கள் நிகழ வில்லை’ என்று நியூயோர்க்கில்லெஸ்டரிடம் சொன்னார்களாம்
உரையாடலின் மற்றொரு கட்டத்தில் லெஸ்டர் அவர்கள் "எம்முடையது ஒரு படைப்பாளிகளின் நாடாக இல்லாமல், 'விமர்சகர்களின் நாடாகவே அதிகம் காணப்படுகிறது என்றார். ஈழத்தில் தமிழ்த் திரைப்படத் துறையின் ஆரம்பநிலை மிகவும் தாழ்வாக இருப்பதாக அவர் அபிப்பிராயம் தெரிவித்தார். உலகக் கலை வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் சிங்களக் கலைத்துறை பின்தங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டர்ர்.
"தென்னிந்தியப் படங்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று சொல்பவர்களிற் சிலர் அவை தி. மு. க. பிரச்சாரம் செய்வதால் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்கள். உங்கள் கருத்தும் அப்படித்தானா?
நான் தமிழ் படங்கள் நிறையப் பார்க்கவில்லை. உங்களுக்குத் தெரிய வேண்டுமே, அவை தி. மு. க. பிரச்சாரம் செய்கின்றனவென்பது உண்மை தானா?
லெஸ்டருடன் அன்றைய ஒன்றரை மணி நேர உரையாடலும் மிகவும் சுவாரசியமாகத்தான் இருந்தது. அவரது குறிப்புக்களில் தெளிவையும், நிதானத்தையும் காண முடிந்தது. பட இறக்குமதியைத் தடை செய்வதென்பது எனக்குச் சம்மதமில்லாத ஒன்று. அது கட்டுப்படுத்தப்பட வேண்டுமென்பதே என் கருத்து என்றார் லெஸ்டர்.
லெஸ்டரின் திரைப்படங்களிற் பல, பிரபலமான சிங்கள நாவல்களைத் தழுவி எழுந்தவை எதை வேண்டுமானாலும் திரைப்படமாக்கலாம். ஒரு டெலிபோன் டிரக்டரியை வைத்துக் கூடப் படமெடுக்கலாம். படைப்பாற்றலே முக்கியம் என்று அவர் கூறுகிறார்.
இலக்கிய ஆக்கங்களை நீங்கள் திரைப்படமாக்கியபோது, உங்களது அந்த முயற்சிகள் முழுமையைப் பெற்றனவா?

Page 42
“அவை முழுமைபெற முடியாது. எப்பொழுதும் ஏதாவது இழக்கப்படத்தான் செய்யும். பெரும்பாலும் அது ஆய்வறிவுப் பாகம் அல்லது சமூகவியற் துறையின் ஒரு பாகமாகத்தான் இருக்கிறது. இலக்கியம் வாசிப்பின் மூலமும், சினிமா காட்சியின் மூலமும் அளிக்கப்படுபவை. உணர்வு ரீதியாக, சினிமாவே அதிக பலம் வாய்ந்தது.
திரைப்பட வெற்றிக்கு அதன் எந்த அம்சத்தை முதன்மையானதெனக் கருதுகிறீர்கள்?
‘கதைதான் முதன்மையானது. சக்திவாய்ந்த ஒரு கதைக்குப் படத்தில் மற்ற அம்சங்கள் குறைபட்ட போதிலும்கூட - ரசிகர்களைக் கலந்து வைத்திருக்கும் லயம் உண்டு. வசனம் அப்படியல்ல. எவ்வளவு அற்புதமான வசனமாக இருந்தாலும் கூட அது தனியே பலத்துடன் விளங்காது. ஆனால், ஒரு உன்னதமான நடிகனால், தனது நடிப்பை மாத்திரம் கொண்டு சபையைக் கவர்ந்து வைத்திருக்க முடியும். அவன் மிகத் திறமையானவனாக இருக்க வேண்டும்.
தமது திறமையால் சிங்களத் திரையுலகில் மகத்தான வெற்றியை ஈட்டியுள்ள லெஸ்டர் அவர்கள், ஆங்கில மொழிப் படமொன்றை இலங்கையிலேயே எடுக்கத் திட்டமிட்டுள்ளார். குழந்தைகளுக்கான படம் பற்றிப் பேசப்பட்டபோது, அத்தகைய படங்கள் எடுக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமென்றும், இந்தியா இத்துறையில் ஓரளவு ஈடுபட்டிருப்பதாகவும் சொன்னார். அவரது மனைவியாரான திருமதி சுமித்திரா பீரிஸ் அவர்கள் இப்பொழுது பாரிஸ் நகரில், குழந்தைப் படங்களிலும், தொலைக் காட்சியிலும் ஒழுங்கமைப்புச் செய்வது பற்றிய பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். லெஸ்டரின் படங்களுக்கு ஒழுங்கமைப்புச் செய்யும் பணியை ஆற்றிவருபவர் இவரே. அப் படங்களின் வெற்றிக்கு இவரது திறமையும் ஒரு காரணமெனக் கருதப்படுகிறது. 1957-ம் ஆண்டு லெஸ்டரின் ரேகாவ' என்ற படம் பாரிஸ் நகரில் திரையிடப்பட்டபோது தான் அவரை "சுமித்திரா முதன் முதலிற் சந்தித்தாராம். அப்பொழுதும் திரைப்படத் துறைக் கல்வியின் பொருட்டே சுமித்திரா பாரிஜில் இருந்தார்.
தமிழ் - சிங்கள எழுத்தாளர்கள், கலைஞர்களிடையே பரஸ்பர அறிமுகம். பரிவர்த்தனையும் இருக்கவேண்டிய தேவையை லெஸ்டர் குறிப்பிட்டார். அவரது படங்கள் தமிழ்ப் பகுதிகளில் திரையிடப்படவில்லை என்ற செய்தி "இதுவரை அவரால் கவனிக்கப்படாத புதிய ஒன்றாக இருந்தது.
அவை வேண்டுமென்றே திரையிடப்படாது புறக்கணிக்கப்பட்டன.
தமிழ் விளக்கக் குறிப்புக்களுடன் இப்படங்களைத் திரையிடலாம்?
ஆனால் இதற்குப் பெருந்தொகையான செலவேற்படுமாதலால் இவ்வேலை சிக்கலானது. லெஸ்டரின் படங்கள் ஆங்கில விளக்கக் குறிப்புக்களோடு அண்மையில் நியூயோர்க்கில் நடந்த திரைப்பட விழாவிற் காட்டப்பட்டன. இத்தப்
-64

பிரதிகள் இன்னும் அங்கேயே இருக்கின்றன. அவற்றை இங்கு தருவிக்க லெஸ்டர் முயற்சி மேற்கொள்வார். நியூயோர்க் மக்கள் பார்த்துவிட்ட தரமான ஈழத்துத் திரைப்படங்களை ஈழத்துத் தமிழர்கள் இன்னும் பார்க்கவில்லை, அவரது திரைப்பட விழாவொன்றை யாழ்ப்பாணத்தில் நடாத்த மிகவும் ஆவலும், மகிழ்ச்சியும் தெரிவித்தார். லெஸ்டர்.
லெஸ்டரின் திரைப்படங்கள் காண்பிக்கப்படுமானால், அவற்றைத் தமிழ் மக்கள் தவறாது சென்று பார்ப்பார்களாக, அப்பொழுதுதாவது அடுத்த வீட்டுக் காரர்கள் விழித்தெழுந்து அதிக நேரமாகிவிட்டது என்கிற சங்கதி அவர்களுக்குத் தெரியவரலாம். தமது வீட்டில் இன்னும் இருள் கவிந்திருப்பது புரியலாம். தமிழ்ப் படமே படம் என்று எண்ணுகின்ற நிலைமை சற்றே மாறலாம். கலைத்தரமுள்ள தமிழ்ப் படங்களை எடுங்கள் என்று நம்நாட்டுக் கலைஞர்களையாவது நோக்கி இரண்டு குரல்கள் அதிகமாகக் கேட்கலாம்.
செப்டம்பர் - 1970
A

Page 43
கலையில்
புதுமையை விரும்பும்
அற்பதக் கலைஞன்
நெல்லை க. பேரன்
னிமாவைவிட நாடகத்தையே நான் அதிகம் விரும்புகிறேன். ಜ್ಞೆ உயிரோட்டம் நிறைந்த நாடக மேடையில் நடிகனாகவும் தயாரிப்பாளனாகவும் இருப்பதில் திருப்தியடைகிறேன்.
இப்படிச் சொன்னார் திரு. ஹென்றி ஜயசேனா அவர்கள். பிரபல சிங்கள நாடகத் தயாரிப்பாளரும் நடிகரும் எழுத்தாளரும் சிங்களத் திரைப்பட நடிகருமான ஹென்றி ஜயசேனாவுடன் அவருடைய காரியாலயத்தில் வைத்து ஒரு மதிய போசன வேளையில் 'மல்லிகை க்காகச் சந்திப்பு நிகழ்த்தினேன். தரமான சிங்களக் கலைஞர்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியை மல்லிகை செய்துவருகிறது. அந்த வகையில் உங்களை இன்று முதன் முதல் சந்திக்கிறேன் என்றதும் மிகவும் மகிழ்ச்சியோடு உரையாடலை ஆரம்பித்தார். ஆரம்பத்திலேயே தாம் சமீபகாலத்தில் பார்த்த புதியதொரு வீடு (மஹாகவி எழுதியது) தமிழ் நாடகத்தைப் பற்றிக் கட கடவென்று சொல்ல ஆரம்பித்தார். இந்திய சினிமாவைப் பிரதிபலிக்காமல் மீனவ மக்களின் வாழ்க்கையை இயற்கையாகச் சித்திரித்தனர் என்றும், இந்த நாடகத்தின் நல்ல இனிமையான சங்கீதமும் நடிப்பு, உத்தி முறைகளும் தம்மைக் கவர்ந்தன என்றும் இப்படியான புதிய நோக்குடன் இலங்கையில் தமிழ் நாடகங்கள் தயாராவதைத் தாம் வரவேற்பதாகவும் சொன்னார். வேறு தமிழ் நாடகங்களை நீங்கள் பார்க்கவில்லையா? என்று கேட்டேன். சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. புதியதொரு
-66
 
 

வீடு கூடத் திருகோணமலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற போது பார்க்கக் கிடைத்தது. எனக்குத் தமிழ் வசனங்கள் புரியாவிட்டாலும் எனது மேடையனுபவத்தை வைத்துக் கொண்டு அங்கு நடப்பனவற்றைப் புரிந்து கொண்டேன். இன்னொரு தடவை கலாநிதி சு. வித்தியானந்தனின் 'இராவணேசன் நாடகமும் பார்த்தேன் அதுவும் எனக்கு மிகவும் பிடித்துக் கொண்டது என்றார்.
கம்பஹாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஹென்றி ஜயசேனா தமக்கு இப்போது நாற்பது வயதாகிறது என்று சிரித்துக் கொண்டே சொன்னார். 1950 - ம் ஆண்டில் ஒரு உதவி ஆங்கில ஆசிரியராக வாழ்க்கையை ஆரம்பித்து 1951 நவம்பரில் பொது வேலைத் திணைக்களத்தில் எழுதுவினைஞராகச் சேர்ந்து தற்போது (திணைக்களம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பின்னர்) நெடுஞ்சாலைகள் திணைக்களத்தில் கடமையாற்றுவதாகவும் தெரிவித்தார். அமைச்சர் இலங்கரத்தினாவின் நாடகத்தை 1952 - ல் அரங்கேற்றிய பின்னர் 1954-ல் இருந்து ஒழுங்காக நாடகங்களைத் தயாரிக்க ஆரம்பித்தேன். இதன் பின்னர் என் வாழ்க்கையுடன் நாடகமேடை இரண்டறக் கலந்து விட்டது என்றார்.
நாடகம், திரைப்படம், புத்தகம் ஆகிய மூன்று துறைகளிலும் ஆர்வமுள்ள இவர் குவேனி, ஜனலேய (சரளம்), தவத் உதாசனக் (இன்னொரு காலைநேரம்), ஹ"ணுவடயேகதாவ, அபட புத்தே மகக்நத்தே (எங்களுக்கு வழியில்லை மகனே) போன்ற தரமான நாடகங்களைச் சிங்கள மொழியில் வழங்கியுள்ளார். அபட புத்தே. என்ற நாடகம் இளைஞர்களின் பிரச்சினைகளைச் சொல்வதாகவும் 'ஜனேலய நகர வாழ்க்கையின் அலங்கோலங்களைச் சித்திரிப்பதாகவும் தெரிவித்த இவர் தமது நாடகங்களின் மூலம் மக்களுக்கு ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தமுடியுமா? என்றுதான் தாம் பார்ப்பதாகச் சொன்னார். கற்பனா ரீதியான நாடகங்களைத் தாம் அடியோடு விரும்புவதில்லை என்று சொன்ன இவர் கலை, இலக்கியங்கள் மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற கருத்தை மிக நன்றாக வலியுறுத்தினார். பழைய கதைகளுக்குப் புதிய வடிவம் கொடுப்பதாகவும் தமது 'குவேனி அப்படியான ஒரு நாடகந்தான் என்றும் சொன்னார்.
அதனை ஆமோதித்ததுடன் கடுழியம் என்ற தமிழ் நாடகம் பற்றிச் சிறிது நேரம் கதைத்தேன். நாடக பாத்திரங்கள் பாவனைகள் மூலம் தமது செயல்களை உணர்த்தும் உத்திமுறை (உதாரணமாகப் பாண் இல்லாமலேயே பாணைக் கடித்துச் சாப்பிடுவது போன்ற பாவனை) பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றேன். மிகவும் நல்லது. என்னுடைய நாடகங்களில் இப்படியான உத்திமுறைகளை அதிகம் புகுத்தி வருகின்றேன். புரிந்துகொள்ளும் வகையில் சுருக்கமாகவும் தெளிவாகவும் உத்தி முறைகளைக் கையாள்வதில் தவறில்லை. எனது ஸ்டிரைக் பே (வேலை நிறுத்தச் சம்பளம்) என்ற நாடகத்தில் இப்படியாகத் தொழிலாளர்கள் மகன் சுமந்து கொட்டுவது (பாரத்தைக் கஷ்டப்பட்டுத் தூக்குவது போன்ற பாவனை) போன்ற காட்சிகளைப் பாவனை மூலம் காட்டியுள்ளேன் என்றார்.

Page 44
"மினிசுன்வூ தறுவோ (மனிதர்களாக மாறிய சிறுவர்கள்) என்ற நாவலை 1962 - ல் எழுதி வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்த இவர் தமது சிறுவர்களுக்கான பாடல் தொகுதியொன்றும் மேற்கத்திய நாடகங்களின் மொழிபெயர்ப்புத் தொகுதியொன்றும் அச்சில் இருப்பதாகச் சொன்னார்.
மெக்சிக்கோவில் தங்கமயில் பரிசுபெற்ற மார்ட்டின் விக்கிரமசிங்காவின் கம்பரலிய (கிராமப் பிறழ்வு), தஹாசக் சிதுவிலி (ஆயிரம் எண்ணங்கள்) போன்ற திரைப்படங்கள் மூலம் தமக்கெனத் தனி முத்திரையைப் பொறித்துக் கொண்ட ஹென்றி ஜயசேனா தாம் இப்பொழுதும் சினிமாவைவிட உயிரோட்டமுள்ள நாடகங்களைத் தயாரித்து நடிப்பதையே விரும்புகிறேன் என்று சொல்வதன் மூலம் அவரது உண்மையான கலைப்பண்பை அறிந்து கொண்டேன்.
தீடீரென்று புறோக்கர் கந்தையா என்ற தமிழ் நாடகத்தைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன என்று என்னிடம் ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார். நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், பொதுமக்களைச் சிரிக்கவைக்கும் ஒரு பொழுதுபோக்கு நாடகம் இப்படியான தமிழ் நாடகங்களுக்கே கூட்டம் சேர்கிறது என்றேன். தாமும் அதைத்தான் சொல்ல வந்ததாகவும் சிங்களத்திலும் இப்படியான பல பொழுதுபோக்கு நாடகங்கள் இருப்பதாகவும் சொன்ன இவர் தமது ஆரம்ப காலத்தில் நாடகங்களை அரங்கேற்றுவதிலும் டிக்கட்டுக்களை விற்பதிலும் பட்ட கஷ்டங்களைப் பற்றிச் சொன்னார். ஜனேலய என்ற நாடகத்தை 34 ஆட்கள் தான் முதலில் பார்த்தார்கள் என்றும் அப்போது தாம் மிக வேதனைப் பட்டதாகவும் இப்போது தமது நாடகங்களுக்கு டிக்கட் கிடையாமல் பலர் திரும்பக் கூடிய தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் ரசிகர்களின் ஆதரவும் வளர்ந்துள்ளதாகவும் சொன்னார்,
தாம் நாலாந்தா வித்தியாலத்தில் படிக்கும்போது "ஹரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசனாக நடித்தேன் என்ற இவர். தமிழ்ப் பகுதிகளில் விடிய விடிய நடைபெறும் கூத்துக்களை மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தார். அவற்றின் பழைய தன்மைகளுக்குப் புதிய வடிவம் கொடுத்தால் நல்லது என்றும் அபிப்பிராயம் தெரிவித்தார். தமிழ் மொழி பெயர்ப்பு நூல்கள் ஏதாவது படித்தீர்களா என்று கேட்டேன். திருக்குறள் சிங்கள மொழிப் பெயர்ப்புப் படித்தேன். நல்ல கருத்துக்கள் என்றார்.
தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்ன என்று கேட்டேன். சினிமா ஒரு வியாபாரத் தொழில். அதைக் கலை நோக்குடன் எவரும் செய்வதில்லை என்ற பீடிகையோடு ஆரம்பித்து தமிழ்ப் படங்கள் போலியான வாழ்க்கையையே சித்திரித்து மக்களை ஏமாற்றுகின்றன. அனேக சிங்களப் படங்களும் இப்படித்தான். சில தமிழ்ப் படங்களைப் பாட்டு முதற் கொண்டு அப்படியே பிரதிபண்ணிச் சிங்களத்தில் வெளியிடுபவர்களும் இருக்கிறார்கள். சினிமாத்துறையிலும் தனித்தன்மை பேணப் படுவதையே நான் விரும்புகிறேன். சினிமாவின் மிகுதியான போலித்தன்மை காரணமாகவே நான்
-68

நாடகத்தை அதிகம் நேசிக்கிறேன்’ என்றார். ஈழத்தில் தமிழ் நாடகத் தயாரிப்பாளர்கள் யாரையாவது தெரியுமா? என்று கேட்டபோது அதிகம் தெரியாது. ஆனால் மோ. தார்சீயஸ் என்பவரின் முயற்சிகளை ஒரளவு தெரியும். இவரிடம் புதிய நோக்கில் நாடகங்களைத் தயாரிக்கும் ஆர்வத்தைக் காண்கிறேன். இவரைப் போன்ற இதர தயாரிப்பாளர்களும் நல்ல நாடகங்களைத் தயாரிக்க வேண்டும் என்றே விரும்புகிறேன் என்றார்.
கடைசியாக சிங்கள நாடகங்களைப் பற்றிப் பொதுவாக என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டேன். ‘சிங்கள நாடக உலகம் பத்து ஆண்டுகளின் பிறகு சிறப்பாக இருக்கிறது. அரசாங்கத்தின் உதவியும் தேவை. எம்மைப் பொறுத்த வரையில் நாடகங்களைத் தயாரித்து முடித்த பிறகுதான் சொற்ப உதவி கிடைக்கிறது. தரமான தயாரிப்பாளர்களிடம் அரசாங்கம் ஆரம்பத்திலேயே பணத்தைக் கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டும். வேலை முடிந்த பிறகு கொஞ்சம் கொஞ்சம் உதவி கிடைப்பதில் வேலையில்லை என்றார்.
சிகரெட்டுகளைத் தொடராகப் புகைத்தவாறே மிகவும் நிதானத்துடனும் அமைதியாகவும் சுமார் 45 நிமிடங்கள் என்னுடன் ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் உரையாடிய திரு. ஹென்றி ஜயசேனா அவர்களுக்கு மல்லிகையின் சார்பில் நன்றி தெரிவித்து விட்டு ஒரு தரமான கலைஞனை முதன் முதலில் சந்தித்த மகிழ்வோடு விடைபெற்றேன்.
ஏப்ரல் - 1972.

Page 45
திருச்சிவானொலி LITUTIT IPuLI
வானொலிக் கலைஞர்
இரா. சந்திரசேகரன்
ராண்டுக்கு முன்னர் ஒரு நாள் முற்பகல் நேரம். நண்பர் டொமினிக் 9. ஜீவாவும் நானும் புறக்கோட்டை மெலிபன் தெருவில் நடந்து
கொண்டிருக்கிறோம். 137-ம் எண் கொண்ட கடையினுள் நாங்கள் நுழைகிறோம். அங்கே மனேஜர் ஆசனத்தில் இருந்தவரை, இவர்தான் குருஸ்வாமி என நண்பர் எனக்கு அறிமுகஞ் செய்துவைக்கிறார். என்னையும் அவருக்கு அறிமுகஞ் செய்கிறார். அவர் இருகரங் கூட்பி எங்களை வரவேற்கிறார். கம்பீரமான தோற்றம். நேர் கொண்ட பார்வை இவற்றோடு அவரின் அட்சர சுத்தமான பேச்சு என்னை முதலில் ஈர்த்தது. அவர் பேசும் போது சொற்கள் அழகு பெறுவதை நான் கவனிக்கிறேன். அண்மையில் வெளிவந்த இலக்கிய இதழ் பற்றியும் புதுமைப்பித்தன் பற்றியும் அவர் எங்களோடு உரையாடுகிறார். பார்த்த மாத்திரத்தில் பழகலாம். பழகியதுபோன்ற நட்புரிமை,
திரு. ஆ. குருஸ்வாமி அவர்களைப் பற்றி நான் சிறிது கேள்விப் பட்டிருக்கிறேன். அன்று தான் முதன் முதலில் சந்தித்தேன். அதன் பின்னரும் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர் இலக்கியம் பற்றிப் பேசத் தொடங்கினால் நேரம் போவதே தெரியாது. உரையாடலில் அவர் வல்லுநர். மிக இனிமையாக அவர் உரையாடலைக் கொண்டு செல்வார். அண்மையில் டொமினிக் ஜீவா, மு. தளையசிங்கம், மு. பொன்னம்பலம், செம்பியன் செல்வன், எஸ். எம். பஷீர்
-70
 

ஆகியோரோடு ஒரு நாள் மாலை அவர் இல்லத்தில் நடந்த இலக்கிய உரையாடலைக் கவனித்த போது உரையாடற் கலையில் இவர் இணையற்றவர் என்பதை உணர்ந்தேன். பல கோணங்களிலிருந்து எழுந்த கருத்துக்களையும் கேட்டு அவற்றை ஒட்டிய தன் கருத்தையோ அல்லது எதிர்க் கருத்தையோ அவர் சொல்லும்போது அவரின் உச்சரிப்புமிக்க சொற்கள் அவருக்குத் துணை நிற்கின்றன. நேரிலே மாத்திரமல்ல டெலிபோனிலும் அவர் உரையாடல் தனிச்சிறப்புடையது. நேரிலே இருந்து பேசுவது போல் அவர் அந்த உரையாடலை ஆக்கிவிடுவார். நகைச்சுவை நிறைந்த உரையாடலாக அது அமைந்துவிடும்.
குருஸ்வாமி அவர்கள் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர். இப்போது அவர் ஏனோ எழுதுவதில்லை! இலக்கிய சம்பந்தமாக வரும் கடிதங்களை இவர் சேகரித்து வைத்திருக்கிறார்.
1944-ல் இருந்தே இலங்கை வானொலியில் இவருக்குக் கணிசமான பங்கு இருந்திருக்கிறது. வானொலியில் இவரின் முதற் பேச்சு பாரதியின் வசனங்கள் என அமைந்தது. அதன் பின்னர் கட்டுரைகள் பல எழுதி வாசித்திருக்கிறார். வானொலி நாடகத்துறையில் குருஸ்வாமிக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. நாற்பதுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதித் தயாரித்து நடித்துமிருக்கிறார். நாடகப் போட்டி ஒன்றில் இவரது "சீதனம் என்ற நாடகமும் பரிசுபெற்றது. பாஞ்சாலி சபதத்தை ஒரு மணிநேர நாடகமாக்கினார். இந்த நாடகத்தில் இவரோடு அப்போது வானொலித் தமிழ் நிகழ்ச்சி அதிகாரியாக இருந்த சோ. சிவபாத சுந்தரம், கிராம நிகழ்ச்சி அதிகாரியாகவிருந்த வி. என். பாலசுப்பிரமணியம், நாடக நிகழ்ச்சி அதிகாரி சானா. சோ. சிவபாத சுந்தரத்தின் துணைவியார் (இவர் மிகுந்த கலை ஈடுபாடுடையவர் வீணை வாசிப்பதில் சிறந்தவர்) எம். எஸ். இரத்தினம். வி. கே. சுந்தரலிங்கம் ஆகியோர் நடித்தனர். இவ்வளவு கலையார்வம் இவர்களிடம் இருந்தது. இந் நிகழ்ச்சி பலராலும் பாராட்டப் பட்டது. திருச்சி வானொலி நிலைய அன்பர்கள் தனிப்பட்ட முறையில் குருஸ்வாமி அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்திருந்தார்கள்.
நாடகத்தை ஓர் இரவிலேயே உட்கார்ந்து எழுதி முடித்துக் கொடுத்து விடுகிற ஆற்றலும் ஆர்வமும் அப்போது இவரிடம் இருந்தன. 1951 தொடக்கம் வானொலியிலிருந்து ஒதுங்கியிருந்தார். 1963-ல் இருந்து 1969 வரை குருஸ்வாமி அவர்களைப் பின்னரும் வானொலியில் ஈடுபட வைத்தவர்களில் முக்கியமானவர் திரு. சி. வி. ராசசுந்தரம், கம்பராமாயண சம்பந்தமான சித்திரங்கள் மற்றும் நிகழ்ச்சிச் சித்திரங்கள் கருத்தரங்குகள் போன்றவற்றில் இவர் பங்கு பற்றி நடத்தியிருக்கிறார். வானொலியில் இலங்கையின் சிறந்த நரேட்டர் ஆக விளங்கியவர். வானொலிக் கருத்தரங்குகளில் இவர் குரல் கணிரென்று ஒலிக்கும். இப்போதெல்லாம் ஏனோ அவர் குரல் வானொலியில் கேட்பதில்லை. நண்பர்கள் மத்தியில் தான் ஒலிக்கிறது.
1944 இலக்கிய நண்பர் கழகம்’ என்ற ஓர் அமைப்பை கொழும்பில் ஆரம்பித்து நண்பர்களின் இலக்கியக் கருத்துப் பரிமாறல்களுக்குக் களம்
-71

Page 46
அமைத்தவர். இக்கழகத்தில் சோ. சிவபாதசுந்தரம், சி. வைத்தியலிங்கம், எம். எஸ். இரத்தினம், வி. என். பாலசுப்ரமணியம், சானா போன்றோர் அங்கம் வகித்தனர்.
குருஸ்வாமி அவர்கள் நிதிக் குழுச் செயலாளராகவிருந்து 1951-ல் புதுமைப்பித்தன் நிதிக்கு ரூபா 3310 திரட்டிக் கொடுத்தார். சக்தி ஆசிரியர் வை. கோவிந்தன் அப்போது தனாதிகாரியாக இருந்தார். இந்த நிதித் திரட்டலைப் பாராட்டி, தமிழகம் ஈழத்தைப் பின்பற்றுக’ எனத் தலையங்கமிட்டு ஒரு கட்டுரையைப் பிரசண்ட விகடன் (1-8-50) எழுதியது. கு. ப. ரா இறந்தபோதும் இவ்வாறே பணம் திரட்டி உதவியிருக்கிறார்.
1944-ம் ஆண்டிற்குப் பின்னர் "நேதாஜி வாலிபர் சங்கம்' என்ற இடதுசாரி மனோபாவமுடைய அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இயக்கத்திற்குக் கண்டி நாவலப்பிட்டி, கொட்டக்கல போன்ற இடங்களில் கிளைகள் அமைக்கப்பட்டன. இலங்கை இந்தியக் காங்கிரஸிற்கு எதிராக இது ஆரம்பிக்கப்பட்டது. அதிக காலம் இது நீடிக்காவிட்டாலும் அதிக சாதனை புரிந்த இயக்கம் இதுவாகும். இளைஞர்களிடையே இடதுசாரி எண்ணங்களை இந்த நேதாஜி வாலிபர் சங்கம் உண்டாக்கியது எனலாம்.
வ. உ. சி. பிறந்த இடமாகிய திருநெல்வேலியைச் சேர்ந்த ஓட்டப்பிடாரம், குருஸ்வாமி அவர்களின் சொந்த ஊராகும். யாழ்ப்பாணம் நாவலர் வித்தியாலயத்திலும் இவர் படிதிருக்கிறார். எட்டயபுரம் பாரதி குழுவினருடன் தொடர்புடையவர். இவர் ஒரு மணிக்கொடி ரசிகன். புதுமைப்பித்தனில் இரசனை மிக்கவர். மிகுந்த ஈடுபாடுடையவர். தமிழக முற்போக்கு எழுத்தாளர்களோடு நெருங்கிய தொடர்புடையவர். அவர்கள் இங்கு வந்தால் இவரோடு தங்காமலும் இலக்கியம் பற்றி உரையாடாமலும் போவதில்லை. அமரர் கு. அழகிரிசாமி இவரது நெருங்கிய நண்பராகவிருந்தவர். திரு. ரகுநாதன் சிறந்த நண்பர். ரகுநாதன் முன்னர் இலங்கை வந்தபோது இவரோடு ஒரு மாதத்திற்குமேல் தங்கியிருந்த நினைவுகளை நினைத்துப்பார்த்து, 'அந்த நினைவுகளே ஓர் இலக்கிய விருந்தாகும் 6T60TUTT.
தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் இந்திய அரசாங்கத்தின் கைதி வாரண்டை ஒட்டித் தலைமறைவாக இலங்கையில் கொஞ்சக்காலம் தங்கியிருந்த சமயம் அவருக்கும் குருஸ்வாமி அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பிலிருந்தது. அனேகமாக மாலை வேளைகளில் ஜீவா இவரின் இடத்திற்கு வருவார். மிகவும் சுவைமிக்க இலக்கிய அரசியல் சர்ச்சைகள் நடக்குமிடமாக இவர்களிருக்குமிடம் மாறிவிடும். இந்த நினைவுகள் பற்றியும் ப. ஜீவானந்தம் அவர்களைப் பற்றியும் கேட்கும் போது குருஸ்வாமி அவர்களின் கண்கள் கலங்கி விடுகின்றன.
அவரிடம், நீங்கள் ஏன் உங்கள் எழுத்தைத் தொடர வில்லை? இப்போதெல்லாம் எழுதுவதில்லையே! என்று கேட்டால் ஒரு சிறந்த வாசகனாக மாறி விட்டேன். என்ற காரணத்தாலேயே எழுதுவதில் இப்போதெல்லாம்
-72

ஈடுபாடில்லை. சிறந்த வாசகன் என்பதிலேயே எனக்கு விருப்பமாக இருக்கிறது என்று அவர் சொல்வார். உண்மை தான்! அவர் ஒரு சிறந்த வாசகர்தான். இன்றைய தரமான எல்லாப் பத்திரிகைகளையும் இதழ்களையும் நூல்களையும் அவர் வாசிக்கிறார். இவை பற்றி நண்பர்களோடு கலந்துரையாட நேரும்போது குருஸ்வாமி அவர்களின் தொனி பல புதிய கருத்துக்களோடு பல புதிய பார்வைகளையும் தோற்றுவித்துத் தனியாக ஒலிக்கும். நண்பர்களுக்கு இது பெரு விருந்தாகும். W
ஆழமான இலக்கிய ஞானமும் ஈழத்து இலக்கியம் பற்றிய தெளிவான பார்வையுமுடையவர். இந்தியாவில் எழுத்தின் அளவு கூடியிருக்கிறது. ஆனால் கனம் கூடவில்லை. ஈழத்தில் எழுத்தாளர் தொகையும் கூடி இருக்கிறது. கனமும் இருக்கிறது என்று கூறுமிவர் ஈழ்த்துப் படைப்புகளில் கனமிருக்குமளவிற்கு கலைத்தன்மையில்லை என்றும் சொல்கிறார். இதைக் குறிப்பிடும் போது மு. தளையசிங்கம் அவர்களின் இது சம்பந்தமான கருத்தோடு தனக்கு உடன்பாடு உண்டு என அவர் சொல்கிறார்.
1945-க்கு முன் நல்ல சிறு கதைகளை எழுதியவர்கள் என ‘சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன், இப்போது ஈழ நாட்டில் ஒதுங்கியிருக்கும் முருகானந்தன், சோ. சிவபாதசுந்தரம் போன்றோரைக் குறிப்பிடுகிறார்.
‘மணிக்கொடியின் பாதிப்பு ஈழத்திலும் ஏற்பட்டது. மறுமலர்ச்சி இலக்கிய கர்த்தாக்களை அது இங்கும் சிருஷ்டி செய்தது என்று கருத்துத் தெரிவிக்கும் குருஸ்வாமி அவர்கள் யாழ்ப்பாணத்தில் அப்போது வரதர். தேவன் போன்ற இளைஞர்கள் முன்னணியில் நின்றார்கள் என்றும் சொல்கிறார்.
இக் காலகட்டத்தைத் தாண்டி இருபத்தைந்து வருடத்திற்குப் பிறகு இப்போது இலங்கையில் இலக்கியத் தரம் அளவிலும் கனத்திலும் நிச்சயமாக முன்னேறி வளர்ந்திருக்கிறது என்னும் கருத்துடைய குருஸ்வாமி அவர்கள் எஸ். பொன்னுத்துரை, டொமினிக் ஜீவா, டானியல், செ. கணேசலிங்கன் போன்றோரும் குறைந்தவர்கள் அல்ல என்றும் குறிப்பிடுகிறார். அதிகமான வாசகரும் எழுதுவதற்கேற்ற களமும் கிடைத்தால் இவர்கள் இன்னும் சாதிப்பார்கள் என்பது இவரின் கருத்து.
"இலங்கையில் புதுமைப்பித்தனின் வாரிசுகள் இருக்கிறார்கள். 'கல்கியின் வாரிசுகள் இல்லை. வாசகர்கிளை உண்டாக்கியவர்தான் கல்கி என்று அடிக்கடி சொல்லும் இவரது கருத்து எனக்கு மிகவும் பிடித்ததாகும்.
“வேளுர் கந்தசாமிக் கவிராயர் (புதுமைப்பித்தன்) கவிதையில் செய்த சித்து வேலைகளைத் திருச்சிற்றம்பலக் கவிராயராக ரகுநாதன் தொடர்ந்து செய்தார். அவர்களின் வாரிசாகத் தான் தோன்றிக் கவிராயர் என்ற சில்லையூர் செல்வராசன் பாராட்டத்தக்க ரசனைகளைக் கவிதைத் துறையில் செய்திருக்கிறார் என்று கவிதைத்துறை பற்றிப் பேசத் தொடங்கும் குருஸ்வாமி அவர்கள்,
-73

Page 47
முருகையன், நீலாவணன், தமிழ்நாட்டிலுமில்லாத புதுமையாகக் குறும்பா எழுதிய 'மஹாகவி, ஏ. இக்பால், மு. பொன்னம்பலம் போன்ற கவிஞர்களையும் குறிப்பிட்டார்.
புதுக்கவிதை பற்றி நல்ல கருத்துக்களையுடைய இவர் இதுபற்றிப் பேசும்போது இவர் அடிக்கடி சொல்லும் கருத்துக்களைக் கீழே தொகுத்துத் தருகிறேன்.
‘புதுக்கவிதை தேவையா? தேவையற்றதா? என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனெனில் புதுக்கவிதைகள் இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டன. மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் சிறுகதைகளைப் புதிய உத்தி முறைகளில் எழுதியபோது பலர் இது என்ன. தலையுமில்லாமல் காலுமில்லாமல். ? என்று முணு முணுத்தார்கள். காலக்கிரமத்தில் அந்த உத்திமுறைகளே ஒரு நியதியாகிவிட்டது. கவிதையைப் பொறுத்தவரை ஓசை நயத்துக்குக் கொடுத்து வந்த முக்கியத்துவத்தைக் கொடுத்தே ஆகவேண்டும்.
புதுக்கவிதை முன்னோடியாகவுள்ள ந. பிச்சமூர்த்தி இருபது வருடத்திற்கு முன்னர் தனக்கு எழுதிய கடிதமொன்றை அவர் குறிப்பிட்டு, அவர் எழுதிய ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது என்றார். யுகம் மாறிவிட்டது என்று காதுகளுககுச் சொல்ல வேண்டும். இது அச்சுயுகம் இந்த வசனத்தை குருஸ்வாமி அவர்கள் அடிக்கடி சொல்லுவது வழக்கம்.
புதுக்கவிதை என்ற பேரில் கலைக்குதவாத குப்பைகளும் அச்சுவாகனமேறி விடுகின்றன என்பதை எண்ணும்போது கவலைதான் என்பார்.
‘விமர்சனம் இலங்கையில் முன்னணியில் நிற்கிறது என்று கருத்துச் சொல்லும் குருஸ்வாமி சிறந்த விமர்சகர்களாக ஏ. ஜே. கனகரத்தினா, மு. தளையசிங்கம், க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, தருமு சிவராமு போன்றோரைக் குறிப்பிடுகிறார். மு. தளையசிங்கம் விமர்சனத் துறையிலேயே ஈடுபடுவதுபோலத் தெரிகிறது. இதனால் அவரின் படைப்பாற்றல் குறையக் கூடும். அவர் படைப்பும் வளரவேண்டும் என்பது அவரது கருத்து.
'தரமற்ற பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் தடைசெய்து நல்ல தரமானவற்றை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற இன்றைய கருத்தைப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னவை. குப்பைகள் எவை என்று காண்பதில் கஷடமே இருக்கமுடியாது. இவற்றைக் கண்டுபிடித்து நிற்பாட்ட வேண்டும். சந்தா கட்டி எடுக்கும் இயக்கம் உதவி செய்யப்போவதில்லை. குப்பைகளே திரும்பவும் வரலாம்.
குப்பைகளை எதிர்ப்பவர்கள் இங்குமட்டுமில்லை. இந்தியாவிலும் இருக்கிறார்கள். குப்பைப் பத்திரிகைகள் நிறுத்தப்பட்டு நல்ல பத்திரிகைகள் வளரவேண்டுமென்ற நல்ல நோக்கமுள்ள சிலர் இந்தியாவிலும் இருக்கிறார்கள். இலட்சியம் ஒன்றையே முன்வைத்து இலக்கிய கர்த்தாக்கள் நடத்திய
-74

பத்திரிகைகள் குப்பைகளின் ஆதிக்கத்தால் அற்றுப்போயின. 'மணிக்கொடி’ முதல் ‘கிராம ஊழியன்', 'கலாமோகினி, தேனி, சந்திரோதயம் இவை உட்பட நேற்றைய 'சாந்தி, சரஸ்வதி வரை இதே நிரந்தரத் தலைவிதி தான்.
“இங்கே நல்ல இலக்கியப் பத்திரிகைகள் வெளிவரவேண்டும். பணவசதி படைத்தவர்கள் வர்த்தக முறையிலாவது பத்திரிகைகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்தத் துறையில் வசதிபடைத்த தமிழர்கள் கவனம் செலுத்தாமலிருப்பது துர்ப்பாக்கியம் என இவர் சொல்வதுண்டு.
"ஈழத்து மக்களிடத்தில் இந்தியர்களுக்கு ஒரு தனிமரியாதை உண்டு. ஈழத்துப் படைப்புகளுக்கும் என்றும் இந்தியாவில் மதிப்பு இருக்கும் என்று குருஸ்வாமி அவர்கள் கூறும்போது நமக்கெல்லாம் நல்ல நம்பிக்கைகளும் மனத் தெம்பும் உண்டாகின்றன.
கொழும்பு மாநகரில் சிறந்த வர்த்தகராக அறிமுகமாகியுள்ள திரு. குருஸ்வாமி அவர்கள் சிறந்த இலக்கிய ஞானஸ்த்தராயுமிருப்பதைப் பலர் நம்பமாட்டார்கள். இவரது உயர்ந்த இலக்கியப் பரீட்சியமும் - எளிமையும் - உரையாடற் கலையுமே இவரது தகைமைகளுக்குக் காரணம் என்பது என் எண்ணம்.
நவம்பர் - 1970
A

Page 48
நாடகத் துறைக்கு வாழ்வையும்
மூச்சையும் தந்த கலைஞர்
செ. திருநாவுக்கரசு.
மார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வானொலி gi நிலையத்திலிருந்து, கைகேயி, ராமனாகிய என்னைப் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு அனுப்பியபோது, வீராவேசத்துடன் கொதித்தெழுந்து, கணிரென்ற குரலில் முழக்கமிட்ட தமிழ் இலக்குமணனாகவே அண்ணன் பேரம்பலம் அவர்களை நான் முதன் முதலில் சந்தித்தேன். அன்று நடந்த முக்கால் மணி நேர நாடகம் முடியு முன்பே பேரம்பலம் அவர்கள். தான் ஒரு சிறந்த நடிகர் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டார்.
நாற்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் சிறு பையனாகக் கொழும்பில் சூசையப்பர் கல்லூரி மேடையில் ஏறி நடித்த பேரம்பலம் அவர்கள் அதற்குப் பின் இன்றுவரை நாடக மேடையை விட்டிறங்கவே இல்லை! அவர் இலங்கையிலும் இந்தியாவிலும் ஏராளமான நாடகங்களில் நடித்ததோடு பல நாடகங்களைத் தயாரித்தும் மேடையேற்றியும் இருக்கிறார். நாடகக் கலைக்காக இவர் செய்துவரும் சேவையை உணர்ந்து, பொன்னாடை போர்த்து, புகழ்மாலை போட்டுப் பட்டம் சூட்டிப் பாராட்ட இவரின் அடக்கமான பண்பு இடங்கொடுக்கவில்லையோ! அல்லது ஈழத்துக் கலாரசிகர்கள். எது எப்படி இருந்தாலும் பேரம்பலம் அவர்களை நன்கு அறிந்தவர்கள் அவர் பட்டம் பதவிக்காக இக்கலையில் ஈடுபடுபவர் அல்ல என்பதைத் தெரிந்திருப்பார்கள்.
-76
 
 
 

ஆரம்பக் கல்வியை முடித்து, அர்ச். சூசையப்பர் கல்லூரியிலே தங்கப் பதக்கம் பெற்றபின் சர்வகலாசாலையிலும் நாடகங்களில் பற்கு பற்றினார். பின்பு அரசாங்கத்தில் சேவை புரிந்த போது எங்கெங்கு கடமையாற்றினாரோ அங்கங்கெல்லாம் ஊக்கத்துடன் நாடகக்கலையில் ஈடுபட்டு அயராது உழைத்து வந்தார். கொழும்பிலே ஒரு திணைக்களத்தில் பணிபுரிந்தபோது இவரது திறமையை அறிந்த சிங்களச் சக உத்தியோகத்தர் நடிகர் சங்கமொன்றை ஸ்தாபித்துப் பேரம்பலம் அவர்களையே தயாரிப்பாளராகத் தேர்ந்தெடுத்தார்கள். இவர் அந்த இலாகாவிலே வேலைபார்த்த காலத்தில் அச்சங்கம் நன்கு இயங்கிப் பல சிங்கள நாடகங்களை மேடையேற்றிற்று. சிங்கள மக்களால் பெரிதும் வரவேற்கப் பட்டு பாராட்டப் பட்ட அந்நாடகங்களுக்குப் பேரம்பலம் அவர்களே கால் என்று குறிப்பிடுவது அவசியமில்லை. இவர் மாற்றலாகி மட்டக்களப்புக்குப் போனபின் மேற்படி சங்கம் இருந்த இடந்தெரியாமல் மறைந்து போயிற்று என்று குறிப்பிடுவதே யாவற்றையும் விளக்கிவிடும்.
இரண்டாம் உலக யுத்தத்தின் போது சாரணர் இயக்கத்தில் பணியாற்றிய பேரம்பலம் அவர்கள் பல திறமான தமிழ், ஆங்கில நாடகங்களை மேடையேற்றியுள்ளார். ஓர் ஆங்கில நாடகத்தைப் பார்த்த அந்நாளைய கவர்னர் சேர். அன்றியு கல்டிகொட் அவர்கள் இவரைப் பெரிதும் பாராட்டி வருங்காலத்தில் இவர் ஒரு சிறந்த நடிகராகவும் தயாரிப்பாளராகவும் புகழ் பெறுவார் என்றும் கூறினார். கவனரின் வாக்குப் பொய்யாகவில்லை என்பதற்கு பேரம்பலம் அவர்கள் தமிழ் நாட்டில் மண்டபம் முகாமில் கடமையாற்றிய காலத்திலும் பின்பு இலங்கையில் சேவை புரிந்த காலத்திலும் ஓயாது இக்கலையின் வளர்ச்சிக்காக உழைத்து ஆற்றிய தொண்டே சான்று கூறும். மதுரையில் இவர் நடித்துத் தயாரித்த நாடகங்களுள் நரகாசுரன், வள்ளி திருமணம்', 'பக்த துருவன், ‘சிறுத்தொண்டனார். பிலோமினா அம்பாள் ஆகியவை தமிழ் நாட்டவரால் மிகவும் பாராட்டப் பட்டவை.
பேரம்பலம் அவர்கள் இலங்கை வானொலியில் தமிழ் நாடகங்களிலும், ஆங்கில நாடகங்களிலும் கடந்த முப்பது ஆண்டுகளாகப் பங்குபற்றி வருகிறார். இடையில் சில காலம் வானொலி மாமாவாகவும் - சிறுவர் சிறுமிகளுக்கு ' நாடகத் துறையில் ஆர்வத்தைக் கொடுத்ததற்கு இவரது குழந்தை மனம் பெரிதும் உதவியாக இருந்திருக்கும்.
1967-ல் யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகி வந்த நாளிலிருந்து இன்றுவரை இவர் நாடகக் கலையில் காட்டிவரும் ஆர்வத்தை யாழ் மக்கள் நன்கு அறிவர். "பெண்பாவை, "அழகவல்லி', 'சாணக்கியன் முதலியவற்றில் பங்குபற்றியதோடு 1968-ல் திருநாவுக்கரசு நாயனார் நாடகத்தை நடித்துத் தயாரித்து அளித்தார். 'சானாவின் சரித்திர நாடகமாகிய 'சாணக்கிய னில் சாணக்கியனாக நடித்த பேரம்பலம் அவர்களையும் அவரது நடிப்பையும் அந்நாடகத்தைப் பார்த்தவர்கள் ஒருகாலமும் மறக்க மாட்டார்கள்.

Page 49
நடிப்புத் திறமையோடு ஒரு நடிகனுக்கு வேண்டிய சகல நற் குணங்களும் இருப்பதைப் போலத் தயாரிப்புத் திறமையோடு ஒரு தயாரிப்பாளனுக்கு வேண்டிய சகல நற்குணங்களும் இவரிடமுண்டு. நேரந்தவறி ஒரு நடிகன் ஒத்திகைக்கு வருவதை எப்படி விரும்பமாட்டாரோ அதேபோலத் தானும் நேரந்தவறி ஒத்திகைக்குப் போகவும் மாட்டார்.
சில நாட்களுக்கு முன் இவரை நான் சந்தித்தபோது, 'உங்கள் அரை நூற்றாண்டுகால நாடக வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் கூறுங்கள்’ என்று கேட்டேன். ஒன்றென்ன ஒன்பதைக் கூறினார். அவற்றுள் எம்மைச் சிந்திக்க வைக்கத் தக்க ஒன்றைக் கீழே தருகிறேன். இவர் மண்டபம் முகாமிலே வேலை பார்த்த காலம். நாடகமன்றம் ஒன்றை நிறுவி நல்ல நாடகங்களை மேடையேற்றி வந்து கொண்டிருந்த காலம். சென்னையில் ஒரு நாடகத்தை மேடையேற்றுவதற்காகத் தனது குழுவினருடனும் நண்பர் ஒருவரின் அறிமுகக் கடிதத்துடனும் சென்னை சென்றிருந்தார். அங்கே இவர் அறிமுகக் கடிதத்தைக் காட்டியதும் ஒரு பெரியவர் இவரை நல்ல மரியாதையுடன் உபசரித்து வேண்டிய உதவிகள் எல்லாவற்றையும் செய்தாராம். பின்பு இராப்போசனம் முடிந்தபின் இவர் பெரியவரின் வேண்டுகோளின்படி மேல்மாடியிலுள்ள தனது அறைக்குச் செல்ல அங்கே நாலைந்து இளம் பெண்கள் இவர் வருகைக்காகக் காத்திருந்தார்களாம். கீழே பதறியோடிப் போய் பெரியவரிடம் விசாரித்த போது ‘அந்த அறிமுகக் கடிதத்திலே நண்பர் எழுதியிருக்கிறாரே ஜயாவை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்று. அது தான் கவனிக்கிறோம்.' என்றாராம். நல்ல வேளை ஈழத்து நாடக உலகம், இப்படி ஜயாவைக் கவனிக்கும் நிலைக்கு வரவில்லை என்று பெருமையுடன் கூறினார். இவரைப் போன்றவர்கள் இருக்கும் வரைக்கும் நாம் பயப்படத் தேவையில்லை என்று நான் மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.
நாடக மேடையிலிருந்து திரைவானுக்குப் பாய்ந்த பேரம்பலம் அவர்களின் உணர்ச்சிமிக்க நடிப்பை 'குத்துவிளக்கு எடுத்துக் காட்டும். மோட்டார் வாகன உதவிக் கொமிஷனராக முக்கிய பதவியை வகித்து வந்த இவர் காலத்தையும் நேரத்தையும் பொருட்படுத்தாமல், சிரமம் பாராமல், கெளரவ நடிகராக "குத்துவிளக்கிலே பங்கு பற்றியமையே, ஈழத் தமிழ்த் திரையுலகின் ஒளிமிக்க எதிர்காலத்தை எடுத்துக் காட்டுகிறது.
ஈழத்து நாடகக் கலைக்காகவே தன் வாழ்வும் மூச்சுமாகப் பாடுபடும் பேரம்பலம் அவர்களிடம் உங்கள் இலட்சியம் நிறைவேறி விட்டதா? அல்லது இன்னும் பாக்கி இருக்கிறதா? என்று கேட்டதற்கு அவர், யாழ்ப்பாணத்திலே எவரும் எந்நேரமும் சிரமமின்றி நாடக ஒத்திகை பார்க்கவோ, நாடகத்தை மேடையேற்றவோ நல்ல வசதிகளுடன் ஓர் அரங்கு அமைக்க வேண்டும் என்பதே என் இலட்சியம் எனறாா.
Glo – 1972. A
-78

வடமேல் மாகாணத்தின்
ஒளிக் கீற்று
வீரசொக்கன்
தமிழ்க் கிராமங்கள் இருந்து வருகின்றன. இங்கெல்லாம் தமிழ் மக்கள் நிறைவாகவும் செறிவாகவும் வாழ்ந்து வரும் இடம் உடப்பு. இக்கிராமம் தமிழும் சைவமும் தழைத்தோங்கும் தளமாக இருக்கின்றது.
டமேல் மாகாணத்தில் ஒரு கூறு புத்தளம். இம் மாவட்டத்தின் வ அணிகலனாக விளங்குவது முன்னேஸ்வர ஆலயம். எண்ணற்ற
தமிழரின் பாரம்பரியத்தையும் கலை, கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களையும், கலைப்பாலம் அமைக்கும் இடமாக கவிஞர்களும், அறிவு ஜீவிகளும் காணப்பட்டாலும் இவைகளுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழும் கலைஞர் தான் கலாபூஷணம் உடப்பூர் பெரி. சோமசுந்தரம்.
நான் பாடசாலை மாணவனாக இருந்தபோது உடப்பு மேடை நாடகங்களில், இலக்கியச் சொற்பொழிவுகளில், திருமண மேடைகளில், அரங்கக் கலைகளில் தன்னை இனம் காட்டி அடக்கத்துடன் கலைப் பணிபுரிந்தவராகப் பெரி. சோமஸ்கந்தரைக் கண்டேன்.
1965 காலப் பிற்கூற்றில் உடப்பு பிரதேச நாடகக் கலைக்கு, மெருகு பாய்ச்சிய இவர் ஆரம்ப காலங்களில் மேடை நாடகங்களில் நகைச்சுவை நடிகனாகவே தன்னை இனம் காட்டிக் கொண்டார்.
பின்னர் தன்னை நாடக நடிகனாக, ஒரு சிறந்த நெறியாளனாக, நாடக ஆசிரியராக, ஒப்பனைக் கலைஞராகநூெசிக்க வைத்தி" தேர்மத்ந்தும் இப்பகுதியின் வளர்ச்சிக்குப் புதுப் பாய்ச்சலை உண்டாக்கினார்.

Page 50
அறுபத்தெட்டுப் பிற்கூற்றில் ஆசிரியனாக நியமிக்கப்பட்டு நீர்கொழும்பு, பின்னர் இராகலை தமிழ் வித்தியாலங்களில் ஆசிரியர் பணியை மேற்கொண்டார்.
இவ்விடங்களில் தனது கலைப் பயணத்தின் ஊற்றுக்களை பல்வேறு வடிவங்களில் துளிர் விடச் செய்தார். இளைய தலைமுறை மாணவர்களிடத்தில் கலை வடிவங்களைப் புகுத்தியதுடன் தன்னை ஒரு சிறந்த நடிகனாக இனம் காட்டியதுடன் எண்ணிறந்த இலக்கிய மேடைகளில் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
பலாலி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் எழுதிய உடப்பின் பாரம்பரியம் என்ற கட்டுரைத் தொகுதி இவரின் எழுத்தாற்றலை விதந்துரைக்கிறது.
இசைக் கலையில் ஆர்வம் கொண்ட இவர் தன்னை வில்லிசைக் கலைஞராக இனம் காட்டிக் கடந்த நான்கு தசாப்த காலமாக வில்லிசைக் கலையை நாடளாவிய ரீதியில் நடாத்தி வருகின்றார்.
இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில் புரூக்சைட் தோட்டத்தில் முதல் முதலாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடாத்தினார்.
அன்றிலிருந்து இன்று வரையும் 2000க்கு மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார். சமயக் குருக்கள், மகாபாரதம், இராமாயணம், முகமது நபி, இயேசு, காந்தி மகான் கதை மற்றும் பெரியார்களின் வரலாறுகளை வில்லிசை மூலம் பாடி வருகின்றார்.
சிங்கப்பூர், மலேசியா போன்ற கடல் கடந்த நாடுகளிலும் வில்லிசைக் கலையை மேற்கொண்டதுடன் பல பாட்டங்களையும் பெற்றுள்ளார்.
வில்லிசை வித்தகன்’, ‘வில்லிசை மாமணி', 'வில்லிசைத் தென்றல்', ‘வில்லிசை வாரி’, ‘கருத்தோவியன்', 'வில்லிசை கலாபவனி’, ‘தெய்வீக இசைச் சித்தர் போன்ற கலா விருதுகளைப் பெற்ற இவரை வடமேல்மாகாணக் கலாசார ஒன்றியம் பல்கலை வேந்தன்' - இந்து கலாசார அமைச்சு 1993-ல் பக்திப் பெருவிழாவில் "அருங்கலைத் திலகம்’ - 1997 ஆம் ஆண்டு கலாசார அமைச்சு 'கலாபூஷணம்’ ஆகிய சிறப்பு விருதுகளையும் வழங்கிக் கெளரவித்துள்ளது.
இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்ட இவர் ஓர் இலக்கியப் பேச்சாளன். இவருடைய பேச்சுக் கலையை உணர்ந்த இராகலை இலங்கைத் தொழிலாளர் கழகப் பேரவை “சொல்லிசைச் செல்வன்’ (1965) பட்டத்தை வழங்கி பெருமைப் படுத்தியது.
அடக்கமாகவும், ஆதர்ஷ உணர்வுகளுடனும், எழுத்துப் பணிபுரிந்திடும்
-80

இவர், கும்பாபிஷேக மலர், ஆன்மீகக் கட்டுரைகள், கல்வெட்டுமாலை, கவிதைகளைப் படைத்து வருவதிலும் தனது திறமைகளைப் பதித்து வருகின்றார்.
உடப்பின் பாரம்பரிய கலைகள் தெம்மாங்குப் பாடல்கள் கிராமிய சந்தங்கொண்ட அசைப் பாடல்கள் ஆகியவற்றின் களஞ்சியமாகத் திகழும் இவரின் ஆற்றல்கள் வருங்காலச் சமூகத்துக்கு முன்னோடியாக இருக்கும்.
தற்பொழுது ஓய்வு பெற்றுச் சமூக, சமயப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு உழைப்பதுடன், ஆலயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.
வடமேல் மாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் நடைபெறும் சகல வைபவங்கள், கிரியைகளிலும் தன்னை அர்ப்பணித்து உழைத்து வருவதுடன் அங்கு இடம் பெறும் ஒதுவார் பணிகளிலும் சேவை புரிகின்றார்.
உடப்பு திரெளபதையம்மன் ஆலயத்தில் வருடாவருடம் இடம் பெறும் தீ மிதிப்பு விழாவில் தானும் ஒருவராக இருப்பதோடு, சுவாமியை அலங்கரிக்கும் சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றார். இப்பணியைக் கடந்த 20 வருடங்களாக மேற்கொண்டுள்ளார்.
உடப்புப் பிரதேசங்களில் காணப்படும் மரபு ரீதியான விழாக்கள் அங்கு காணப்படும் பாரம்பரியத் தெம்மாங்கு. அம்மானை அப்பாப் பாடல்கள், சிந்தில பாடல்களை மெருகூட்டி காலத்துக்கு ஏற்ற முறையில் பாடி, புதிய அலைகளைப் பரப்பும் கலைஞராக இருக்கின்றார்.
தான் ஒய்வு பெற்றாலும் தனது வாழ் நாளைக் கலைக்கும் சமூகப் பணிக்கும் காத்திரமான முறையில் அர்ப்பணிப்பதோடு சிங்களச் சூழ்நிலையில் உள்ள தனது ஊரை வெளியுலகத்துக்கு அடையாளம் காட்டும் கலைஞராகவும் காணப்படுகின்றார்.
உடப்பு என்றால் முதலாவதாக ஞாபகம் வருவது உடப்பு திரெளபதை அம்மன் ஆலயம். அங்கு நிகழ்வுறும் தீ மிதிப்பு விழா. அதைத் தொடர்ந்து கலை, இலக்கிய நெஞ்சங்களுக்கு தெரியவருவது உடப்பூர் பெரி. சேமஸ்கந்தரைத் தான்! தன்னையும் வளர்த்து தனது ஊரின் பெருமையையும், புகழையும் நிலைநாட்டும் கலைஞராகச் சோமஸ்கந்தர் திகழ்கிறார்.
கலைஞராக நடிகனாக, பாடகனாக, இலக்கியப் பேச்சாளனாக இசைக் கலைஞராக தன்னைப் பல்கலை வித்தகராக இனம் காட்டி வரும் இவர் உடப்பு கிராமத்தின் தனிப் பெரும் சொத்தாவார்.
தான் கடமையாற்றிய பாடசாலைகளில் மட்டுமல்லாது, தனது ஊரில்
-81.

Page 51
கூட ஒரு கலை இலக்கிய நிறுவனத்தை ஏற்படுத்திய தேசிய கலைஞர். அவரின் வழியில் இன்று இலக்கிய ஆர்வலர்கள் பெரும் கூட்டமே உருவாகியுள்ளது என்றால் அது மிகையாகாது.
உடப்பு பிரதேசத்தில் ஒரு புதிய கலைப் பரிமாணத்தை ஏற்படுத்தி, ஒரு முன்னோடிக் கலைஞராகத் திகழ்ந்து, கலைத்துறையில் ஆளுமையை பதித்து, புதுப்பித்து வரும் பெரி. சோமஸ் கந்தரின் ஆற்றல்களை கலையுலகம் இன்றும் பல பரிமாணங்களில் எதிர்பார்த்து இருக்கின்றது.
பழகுவதற்கு இனியவரும், பண்பாளருமான இவருடன் உரையாடுவதே தனி இன்பம் , தருவதாகும். தனது அனுபவங்களை இவரது வாய்மொழி மூலம் கேட்பதே தனிச் சுவை ததும்புவதாகும். இத்தனைக்கும் இவரது குரலின் இனிமை கேட்கக் கேட்கத் திகட்டாச் சுவையாகும். ஒரு தரமான இசைக் கலைஞனைப் போல, இவர் தனது உழைப்புச் சாதகத்தின் மூலம் குரலை. தமிழ் உச்சரிப்பை, ஓசை நயத்தைப் பண்படுத்தி வைத்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
அபாரமான ஞானஸ் தன். அபாரமான ஞாபகசக்தி கொண்டவர். உடப்பு மண்ணுக்கு வெளியேயும், தரமான அறிஞர்களால், கலைஞர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர்.
தான் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் இத்தனை சிறப்புத் தடங்களையும் பதித்துத் தனது சொந்த மண்ணை மேன்மைப் படுத்தும் இவர், தனது அனுபவங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டால் இளைய தலைமுறையினருக்கு அது பெரிதும் உதவும்!
-ஏப்ரல் - 2001
A

வயல்களைப்
பாசனப்படுத்தும் நதி
| DTGOOnisas6Iggi
னிய சுபாவம் எத்தகைய நெருக்கடியான சூழ்நிலையாக
இருந்தாலும் துவளாத மலர்ச்சியான முகம். கோபம்
வரமாட்டாதோ என்று வியக்க வைக்கும் வகையிலான ஒரு பண்பு!
கடமைகளைச் சவால்களுக்கு மத்தியிலும் பொறுப்போடு செவ்வனே நிறைவேற்றும் செயலார்வத்துடன் கூடிய அரிய தன்மை! நிருவாகச் செயற்பாடுகள், ஆள் புலம் தொடர்பான விபரங்கள் - நிலைமைகள் மட்டுமல்லாமல், கலை, இலக்கியம், நாடகம், ஆன்மீகம் என்று எந்த விடயமாக இருந்தாலும் எந்த வேளையிலும் எதுவித முன் ஆயத்யூமின்றி அழகாகவும் ஆழமாகவும் சூழ்நிலைக் கேற்ப ஆணித் தரமான் கருத்துக்களைக் கூறவல்ல திறமையை இயல்பாகவே வரப்பெற்றவர்.
இவ்வளவும் ஒருங்கே இணையப் பெற்ற அன்பர் - தில்லை நடராஜா அவரோடு நெருங்கிப் பழகுபவர்கள், அவரைத் ’தில்லை என்று அன்பாக அழைப்பார்கள். கலை இலக்கியம், நாடகம் என்றால் போதும். நேரம் போவது தெரியாது. பசி தாகம் என்பவையும் ஏற்படாது. கலைத்துறை அவருடைய பொழுது போக்கு அம்சம் என்று சாதாரணமாகக் குறிப்பிட்டால் அதனைக் கொச்சைப்படுத்தியதாக ஆகிவிடும். இந்தத் துறைகள் அவருடைய உயிர் மூச்சு. எழுதுவார், நடிப்பார், நாடகங்கள் தயாரிப்பார். நன்றாக மேடைகளில் பேசுவார். இவற்றில் சமூக நலன்களுக்கான ஆழமான
-83

Page 52
விசுவாசமும் கடின உழைப்பும் இழையோடியிருக்கும். இதுதான் அவருடைய அரச கடமைகளுக்கு அப்பால் உள்ள அவருடைய வேலைகள்.
அரச கடமைகளில் எவ்வளவு சுமையிருந்தாலும் கலைஞர்கள், எழுத்தாளர்களைச் சந்திப்பதென்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு விடயம். அவரை அறியாத ஊடகங்கள் இல்லை. பத்திரிகை, வானொலி, தொலைக் காட்சி எனச் சகல உளஞர், வெளியூர் ஊடகங்களுக்கும் தில்லை நடராஜா நன்கு பரிச்சயமானவர்.
அவருடைய படைப்புகளும் ஆழமாக இருக்கும். இதன் காரணமாக அவருடைய படைப்புகள் பரிசுகளை வென்றுள்ளன. அவர் நடித்த நாடகங்களும், தயாரித்த நாடகங்களும் மேடைகளில் சக்கைபோடு போட்டிருக்கின்றன. நாடகம் அரங்கேறும் மணி டபங்களிலும் மைதானங்களிலும் அவருக்காகவே கூட்டம் அலைமோதும்.
ஊடகங்களுக்கு அவரால் தெரிவிக்கப்படும் நிலைப்பாடுகள் தொடர்பான தகவல்களில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், பிரதேசங்களின் யதார்த்த நிலைமைகளைப் பிரதிபலிக்கும் அம்சங்கள் நிறையவே இருக்கும். முரண்பாடுகள் இருக்காது. தெளிவான விடய அனுபவக் கருத்துக்கள் அவற்றில் பிரதிபலிக்கும்.
அதனால் அவருடனான பேட்டிகள் அநேகமானவை செய்தியாகவே ஊடகங்களில் இடம் பிடித்துக் கொள்ளும். இந்த வகையில், அவர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றியபோது இராணுவக் கட்டுப் பாடற்ற வன்னிப் பகுதியின் நிலைமைகள் குறித்து அவள் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டி, கேட்போரைக் கலங்கி வருந்தச் செய்தது. பல்வேறு உணர்வலைகளைப் பலரின் மத்தியிலும் ஏற்படுத்தியது.
பொலிஸ் திணைக்களத்தில் சாதாரண எழுதுவினைஞராக அரச சேவையில் இணைந்து. பின்னர் போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை நிருவாக சேவைக்கு நியமனம் பெற்றுக் கூட்டுறவு உதவி ஆணையாளராகக் கடமையாற்றி, முதன் முதலாக வவுனியாவில் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளுக்கான பணிப்பாளர் பதவியையும் வகித்ததன் பின்னர், அரசாங்க அதிபர், மேலதிகச் செயலாளர் எனப் பதவிகளில் படிப்படியாக உயர்ந்து வாழ்க்கையில் முன் நிலைக்கு வந்தவர் தில்லை நடராஜா.
அவர் வவுனியாவில் பொலிஸ் திணைக்களத்தில் பணிபுரிந்த காலத்தில் இருந்தே நாடகத் துறை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஒழுங்கு செய்த அல்லது நடித்த நாடகங்கள் மேடையேறும் போது சிலவேளைகளில் இயற்கையின் இடையூறுகள் காரணமாக ஏற்படுகின்ற தாமதம், தடங்கல்கள் என்பவற்றின் போது
-84

ரசிகர்கள் பொறுமையிழந்து நடந்து கொண்டாலும் புன்முறுவலோடு நிலைமைகளைக் கையாளும் நிர்வாகத் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். இந்த ஆரம்ப கால அனுபவம்தான் பின்னர் அவர் வவுனியாவில் அரசாங்க அதிபராகக் கடமையேற்றபோதும், வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளராகக் கடமையாற்றிய போதும், மாகாண மட்டத்திலான நிகழ்ச்சிகளை அழகாகவும் நேர்த்தியாகவும் மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டத்துடனும் ஒழுங்கு செய்து வெற்றிகரமாக நடத்துவதற்கு உறுதுணை புரிந்தது என்று துணிந்து கூறலாம்.
அந்த அனுபவ முதிர்ச்சியின் ஊடாகவே, பாரிய பொறுப்புகளை ஏற்று லாவகமாக நிறைவேற்றத்தக்க சிறந்த வினைத்திறமை அவருக்கு கைவரப் பெற்றுள்ளது என்றால் மிகையாகாது.
கடந்த 1990 ஆம் ஆண்டு வவுனியாப் பிரதேசம் போரினால் சிதைந்து சின்னா பின்னமாகியது. இடம் பெயர்ந்த மக்கள் படிப் படியாகத் தமது இடங்களுக்குத் திரும்பி வந்து தமது வாழ்க்கையை ஆரம்பித்ததன் மூலம் வவுனியாப் பிரதேசம் அழிவுக்குள்ளிருந்து துளிர்விடத் தொடங்கியபோது தில்லை நடராஜா அவர்கள் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவின் கவனம் வவுனியாப் பகுதி மீது திரும்பியிருந்தது. அவருடைய ஜனாதிபத நடமாடும் சேவை நடைபெறுவதற்கு முன்னோடியாக அழிவுகளுக்குள்ளாகிய நகரப் பகுதி கட்டியெழுப்பப் பட்டது. அதில் தில்லை நடராஜாவின் பங்கு அளப்பரிய வகையில் வெளிப்பட்டது. புனர்வாழ்வுப் பணிகள் மிகவும் துரித வேகத்தில் மேற்கொள்ளப்பட்டன. கடிகாரத்தின் விநாடிக் கம்பியோடு போட்டியிட்ட நிலையில் அவருடைய தலைமையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆடைத் தொழிற்சாலைகள், ரயில் நிலையம், மணிக்கூட்டுக் கோபுரம் எனப் பல்வேறு முக்கிய அம்சங்களுக்கான கட்டிட நிர்மாணப் பணிகள் மின்னல் வேகத்தில் மேற்கொள்ளப் பட்டு ஜனாதிபதியின் பாராட்டையும், பொது மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றன.
அரசாங்க உயரதிகாரியாக இருந்த அவர், அவ்வப்போது எழுதிய சிறு கதைகளின் தொகுப்பாக வெளிவந்த நிர்வாணம் என்ற நூல் பலரையும் வியக்க வைத்தது. அந்த நூலுக்கான பெயரும், அதன் அட்டைப் படமும் பலரையும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடச் செய்தது. சிங்கள மொழியிலும் மொழி மாற்றம் பெற்ற அந்த நூல் இந்தியாவில் பரிசுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டு விருதளித்து அவர் கெளரவிக்கப்பட்டார். இதன் மூலம் தமிழ் இலக்கியத் துறையில் ஆழமான அடிச்சுவடொன்றை அவர் பதித்தார்.
பின்னர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக தில்லை நடராஜா நியமனம் பெற்றபோது, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில்
-85

Page 53
பெரும் போர் நிகழ்ந்தது. அப்போது வேரோடு இடம் பெயர்ந்து ஸ்கந்த புரத்தில் கால் பதித்தபோது அவர் அப்பிரதேசத்தைக் கட்டுக்குலையாமல் இடம் மாற்றி நிர்வாகச் செயற்பாடுகளை பூஜ்ஜியத்திலிருந்து கட்டியெழுப்பினார். வயர் பாக் (Wire bag) ஒன்றும் அரசாங்க அதிபரின் ரப்பர் முத்திரையையும் முக்கியமான சில கோவைகளையும் காவிக் கொண்டு நடமாடும் அரசாங்க அதிபராக கடமையாற்றினார். ஆரம்பத்தில் அவருடைய அலுவலகம் மரநிழலின் கீழ்ப் போடப்பட்ட மேசையுடன் அமைந்திருந்தது.
அரசாங்க அதிபராக இருந்து கொண்டே, ஆளணி பற்றாக் குறை காரணமாக அப்பகுதிக்குப் புதிய அரசாங்க அதிபர் மற்றும் முக்கிய உயர் பதவிகளுக்குத் தகுதிவாய்ந்த அதிகாரிகள் தேவையெனப் பகிரங்கமாக விளம்பரம் செய்த புதுமையான அனுபவம் அவருக்குக் கிடைத்திருந்தது. மரணத்துள் வாழ்ந்த அந்தக் காலப் பகுதியானது அவருடைய வாழ்க்கை வரலாற்றில் மட்டுமல்லாமல் - வன்னிப் பிரதேசத்தின் வரலாற்றிலும் மைல் கல்லாகத் தடம் பதித்துள்ளது. பலரையும் இணைத்துக் கொண்டு புதுமைகள் பல செய்ய வேண்டும் என்ற செயல் வேகமிக்க அவர்,செல்லும் இடங்களில் எல்லாம் தனியான தனது முத்திரையைப் பதித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர். கலாசார அமைச்சின் இந்து கலாசாரப் பணிப்பாளர் என்ற பொறுப்புமிக்க பல பதவிகளின் வரிசைகளில் இப்போது கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளராகப் பணியாற்றும் அவர் பாடசாலை நூலகம், இலங்கை எழுத்தாளர்களின் நூல் கொள்வனவு, பாடப் புத்தகங்களை வெளியிடுதல் ஆகிய பாரிய பணிகளில் தனது முத்திரைத் தடத்தைப் பதிப்பதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ்ச் சமூகம் பெற்றெடுத்த தவப் புதல்வர்கள் பலரில் அவரின் பல்துறைப் பணிகள் மேலும் சிறக்க வேண்டும். அதற்குத் தேவையான ஆரோக்கியத்தையும் நீடித்த ஆயுளையும் இறைவன் அவருக்கு அருள வேண்டும.
-፰ግ6Ù - 2001

மூத்த எழுத்தாளர் புதுமைலோலன்
国、 சிறுகதை வரலாற்றில் 1950-1963 காலகட்டத்தில்,
C
புதுமைலோலனின் சிறுகதைகளை கணிப்பீட்டிற்குள்ளாக்காது விடுபடமுடியாது. அக்காலகட்டத்தில் ஈழத்துச் சிறுகதைத் துறையில் வீறு கொண்ட இளைஞர் கூட்டமொன்று பிரவேசித்தது. சமுதாயச் சீர்திருத்தக் காலம் ஈழத்து இலக்கியத்தில் நிறைவுற்று, முற்போக்கு இலக்கியக் காலமும் தமிழ்த் தேசியக் காலமும் இலக்கியத்தில் முன்னெடுக்கப்பட்ட காலம் உதயமானது. வ. அ. இராசரத்தினம், புதுமைலோலன், நாவேந்தன். கே. டானியல், டொமினிக் ஜீவா, என். கே. ரகுநாதன், நீர்வைப் பொன்னையன் சிறுகதைத் துறையை புத்திலக்கியமாக்கினர்.
புதுமைலோலனின் இயற்பெயர் வேலுப்பிள்ளை கந்தையா கந்தசாமி - வி. கே. கந்தசாமி. வி. கே என்ற பெயர்களிலும் ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதியுள்ளார். ஈழகேசரிப் பண்ணையும், சுதந்திரன் பண்ணையும் இவரை உருவாக்கிவிட்டன. ஈழகேசரி இராஜ அரியரத்தினமும் சுதந்திரன் எஸ். ரி. சிவநாயகமும் புதுமைலோலனின் சிறுகதைகளை விரும்பி வெளியிட்டு - இந்தச் சிறுகதை எழுத்தாளனின் உருவாக்கத்திற்குக் காரணமாயினர். தொடர்ந்து புதுமைலோலனின் சிறுகதைகள் ஆனந்தன், புதினம், தினகரன், ஐக்கிய தீபம், சமூகத்தொண்டன், காதல், விவேகி முதலான பத்திரிகைகளில் வெளிவந்தன. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாவலர் வித்தியாசாலையிலும், யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரியிலும் கல்வியைக் கற்றுப் பாலாலி அரசினர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் கற்றுப் பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பத்தொன்பது வயதில்
-87

Page 54
வெளிவந்தார். கிங்கிராக்கொடை, வெலிகந்த பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றிப் பின்னர் யாழ்ப்பாணம் மஸ்ர உத்தீன் பாடசாலையின் ஆசிரியரானார். ஆனைக்கோட்டை தமிழ் கலவன் பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.
ஈழத்தில் பேச்சுக் கலை கைவரப் பெற்றவர்களில் புதுமைலோலன் முக்கியமானவர். பேச்சுக் கலையை ஒரு கலையாக அவர் கைக் கொண்டார். ஆற்றொழுக்கான வார்த்தைகள் அழகு தமிழில் அவர் மேடையில் சொற்பெருக்காற்றும் போது பிரவகிக்கும். தமிழரசுக் கட்சியின் அரசியல் மேடைகளில் அவர் முக்கியமான பேச்சாளராக விளங்கினார். அவரைப் பேச்சாளராகத் தான் இன்றைய தலைமுறை அறிந்துள்ளது. ஆனால் கணிப்புக்குரிய எழுத்தாளர்களில் ஒருவரென்பதை அறியவில்லை.
புதுமைலோலனின் முதலாவது சிறுகதை 1952ஆம் ஆண்டு மார்ச் 30ம் திகதி சுதந்திரனில் வெளிவந்தது. அப்பொழுது புதுமைலோலனுக்கு வயது 23 ஆகும். கட்டுரைகளும் எழுத ஆரம்பித்துவிட்டார். 1946ஆம் ஆண்டு சிரேஸ்ட தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர் நூல்களையும் பத்திரிகைகளையும் நிறைய வாசிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டார்.
ஈழத்துப் பத்திரிகைகள் அனைத்தும் அவரால் வாசிக்கப்பட்டன. நூல்கள் பத்திரிகைகள் வாங்குவதற்குப் பணம் வழங்குவதில் அவரது தந்தை கந்தையா எப்பொழுதும் தயங்கியதில்லை. இந்த நிலையில் தானும் எழுதினாலென்ன என்ற எண்ணம் எழுந்தது. தனது முதலாவது சிறுகதைக்குக் கரு கிடைத்த விதத்தினை அவர் பின் வருமாறு கூறியுள்ளார். ”எங்கள் வீட்டு முற்றத்தில் மாதர் மாநாடு ஆரம்பமாகும். அயலவர்கள் பலரும் அம்மாநாட்டின் உறுப்பினர்கள். கதைக் கச்சேரியும் கிண்டலும் சிரிப்பொலியும் என் வாசனையைக் குழப்பும். இவர்களது பேச்சில் அயற் பொண்ணொருத்தி பற்றிய விமர்சனம் அடிக்கடி நிகழும். அவள் கணவன் கொழும்பிலிருந்தான். அவள் ஒரு குழந்தையைச் சொந்தக் கணவனுக்கு உரித்தாக்கவில்லை எனவும் பேசினர். தாசி என்று அந்த மாநாட்டில் தர்ப்பு வழங்கப்பட்டது. ஓரிரவு மேசை முன் இருந்து எழுதத் தொடங்கி விட்டேன். அந்தப் பெண் என் கதையின் கதாநாயகியானாள். கதை பின்னி விட்டேன். ஏழை தாசியா? என்ற பெயரைக் கதைக்கிட்டேன். திரும்பவும் நான் எழுதிய கதையைப் படித்தேன். மனம் ஆனந்தத்தால் துள்ளியது. ஒரு கதையைப் பிரசவித்து விட்டேன். சுதந்திரனுக்கு அக்கதையை அனுப்பி வைத்தேன். இரண்டு கிழமைகளில் அக்கதை சுகந்திரனில் இன்றைய சமுதாயக் கண்ணாடி என்ற குறிப்புடன் வெளிவந்தது. எத்தனை முறை சுதந்திரனைப் படித்தேன் என்பது நினைவில்லை. பத்திரிகை நைநது போகுமளவிற்குப் படித்திருப்பேன். மனதிலே இன்ப மயக்கம். என்னாலும் எழுத முடியும் என்ற திட நம்பிக்கை குடிகொண்டது”. என்கிறார்.
"சுகந்திரன், ஈழகேசரி, தினகரன் முதலிய பத்திரிகைகளில் அக்காலங்களில் அடிக்கடி எழுதினேன். எழுத எழுத வேண்டுமென்ற அவா மிகக் கொண்டேன்.
-88

அப்போது முற்போக்கு - பிற்போக்கு - நற்போக்கு - யதார்த்தம் என்ற விவகாரங்கள் கிடையாது. அன்று எழுத்தாளன் என்பதில் பெருமைப் பட்டேன். பெருமை மிக்க அக்காலத்தில் எழுதினேன். எனது முதல் கதையையே, பலரை எழுத்தாளனாக்கிய சுதந்திரனில் எழுதினேன். தன்னம்பிக்கையும் உயர்கொள்கைகளும் கொண்ட சமுதாயமாக எங்கள் சமுதாயம் மாற வேண்டும். எண்ணப் புரட்சி கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் எழுதினேன்.” எனப் புதுமைலோலன் கூறுகிறார்.
“எழுத்தாளன் ஓர் இலட்சியத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமெனவும் அவன் நிச்சயம் அரசியல் சார்ந்தவனாக இருக்க வேண்டுமெனவும் புதுமைலோலன் கருதுவார். வாழ்வுடன் பிணைந்து விட்ட அரசியலில் கொள்கையாளனாக எழுத்தாளன் இருக்கவே செய்வான். வெளிப்படையாகக் கூறாவிடினும் அவனது உள்ளம் ஒரு கொள்கையில் பற்றுக் கொண்டேயிருக்கும். எந்த அரசியலிலும் சேராத மனிதன் நான் எனக் கூறும் எழுத்தாளன் நடிக்கிறான். திட்டவட்டமான கொள்கையுடன் அரசியலில் ஈடுபடும் எழுத்தாளனே சமூகம் வளர உதவுபவன். அவனது பேனாவே வலிமையுடையதாக இருக்கும். ஒரு எழுத்தாளன் அரசியல் வாதியாக இருக்கும் போது சமூகச் சிக்கலின் அடிப்படைகளையும் மனித வாழ்வில் அரசியலின் பெரும் பங்கினையும் உணர முடியும். உயிரூட்டமுடன் எழுதும் எழுத்தாளர்கள் அரசியல் வாதியாகவுமிருப்பர்” என்கிறார் புதுமைலோலன் “எழுத்தாளன் அரசியல் சார்ந்தவனாக விளங்க வேண்டும்” என்பது அவரின் 35(535.
புதுமைலோலன் பேச்சாளனாகவும் சிறுகதை எழுத்தாளனாகவும் மட்டும் இருக்கவில்லை. ஏமாற்றம் (கருகிய ரோஜா) என்ற குறு நாவலையும், தாலி, நிலவும் பெண்ணும், ஆகிய நாவல்களையும் படைத்துள்ளார். அத்துடன் மூத்த எழுத்தாளர் வரதர் நடாத்திய 'ஆனந்தன்' என்ற திங்கள் இதழின் இணை ஆசிரியராகவும் விளங்கியுள்ளார். ஒன்றரை ஆண்டுகாலம் தமிழரசு என்றொரு அரசியல் வாரப் பத்திரிகையை நடாத்தியுள்ளார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இலங்கை எழுத்தாளர் சங்கத்திலும் அங்கத்துவம் வகித்துள்ளார். தமிழரசுக் கட்சியில் அங்கத்துவம் வகிப்பதற்கு முன்னர் மு. கார்த்திகேசனின் மேடைகளில் அவருடன் இணைந்து அவர் புகட்டிய மார்க்சியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழ்த் தேசியம் பற்றிய கருத்து நிலை அரசியலில் முதன்மை பெற்றபோது அதன் பாதையில் தந்தை செல்வாவின் வழியை ஏற்றுக் கொண்டார்.
புதுமைலோலனின் சிறுகதைகளின் இலக்கு வெகு தெளிவானது. சமூகத்திற்கு எடுத்துக் கூறிவிடல், சமூக விமர்சனத்தின் மூலம் சமூகத்தின் இழி நிலைகளைச் சுட்டிக் காட்டுதல். கருத்தினைப் பிரச்சாரம் செய்வது அவர் நோக்கமல்ல. சமூகத்தின் பல்வேறு உணர்வு நிலைகள் அவர் சிறுகதைகளின் உள்ளடக்கமாகியுள்ளன. வறுமையின் கொடுரங்கள், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், காதல் ஏமாற்றங்கள், பணக்காரர்களின் பண்பற்ற நடத்தைகள், வர்க்கியச் சிந்தனைகள், குடும்ப உறவுகள் முதலானவை இவரது கதைகளின்
-89

Page 55
பொருளாகும். சிறுகதைக்குரிய வடிவம் அவருக்கு நன்கு கைவந்துள்ளது. முரண்படாத பாத்திர வார்ப்பும் யதார்த்தமான சித்திரிப்பும் எளிமையான நடையும் அவரின் சிறுகதைகளிற் காணப்படும் சிறப்பம்சமாகும்.
புதுமைலோலனின் சிறுகதைகளில் ரொமாண்டிசப் பண்பு மிகத் தூக்கலாகவே இருக்குமென்பது மறுப்பதற்கில்லை. அதனைவிடத் தமிழ்த் தேசியம் பற்றிய சிந்தனைகள் கொண்ட சிறுகதைகள் 1956ம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டத்தின் விளைவாக ஏற்பட்ட அரசியல் நிலைமைகள், இனவொடுக்கல்கள் தமிழ்த் தேசிய சிந்தனைகளை உருவாக்கிவிட்டன. காலி முகத்திடலில் சாத்வீகச் சத்தியாக்கிரகமிருந்து சிங்களக் காடையரால் தாக்கப்பட்டவரில் புதுமைலோலன் ஒருவர். மூட்டுடன் அவர் வலக் கை கழன்ற நிலையில் பெயிரா ஏரிக்குள் தூக்கி வீசப்பட்டார். யாழ்ப்பாணம் கச்சேரி முன் சத்தியாக்கிரகம் இருந்தமைக்காகத் தமிழ் தலைவர்களுடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அவ்வேளை எழுதிய நூல் தான் "அன்பு மகள் அன்பரசிக்கு என்பதாகும். இனவொடுக்கலின் பல்வேறு நிலைகளிலும் பாதிக்கப்பட்ட பங்காளனாக விளங்கிய புதுமைலோலன் தமிழ்த் தேசிய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சிறுகதைகளை எழுதியுள்ளார்.
புதுமைலோலனின் சிறுகதைகளில் பல கெளதம புத்தரோடு சம்பந்தப் பட்ட ஒழுக்க விசாரமாக இருக்கின்றது. புத்தரின் கருத்துக்களில் அவருக்கிருக்கின்ற பற்றுதலை அச் சிறுகதைகளிலிருந்து உணர்ந்து கொள்ளலாம். சிந்தனை அவதாரம், அழகு மயக்கம், புத்தன், பரிசு, மாகந்தி என்பன இவ்வாறான சிறுகதைகளாகும். இச்சிறுகதைகளில் அவர் கையாண்டுள்ள உரை நடை வெகு கம்பீரமானது. அரண்மனை வாழ்வு, அழகிய மனைவி, ஆளணிகள், அனைத்தையும் துறந்து புத்தன் வெளியேறுகிறான். ஞானத்தைத் தேடிச் சிந்தனை அவதாரமாகிறான். “கடவுள் ஆலயத்திலுள்ள சிலையல்ல” என்றான். “பிராமணன் மட்டும் உயர் ஜாதியல்ல" என்றான் பகுத்தறிவுடன், “கடவுளைப் பற்றிக் கவலைப் படாதே" என்றான் ஆராய்வுடன், மனிதனுக்கு உதவி புரிந்து வாழ். மனிதனுக்கு மனிதன் துன்பம் கொடுப்பவனாக இராதே. ”அகிம்சை தான் நல்லாயுதம்' என்றான் புத்தன். புத்தனை அவதார மூர்த்தியாகக் காணாமல் சிந்தனையும் பகுத்தறிவுங் கொண்ட அறிஞனாக ஆசிரியர் இச்சிறுகதைகளிற் காண்கிறார்.
புதுமைலோலனின் சமூகக் கதைகளில் காதல் தூக்கலாகவே இருக்கும். எனினும் அவற்றில் சமூகப் பிரக்ஞை இருக்கும்.
ஈழத்தின் சிறுகதை இலக்கியத்திற்குப் புதுமைலோலனின் பங்களிப்பு ஒரு காலகட்டத்தின் சிறுகதை வரலாற்றில் முதன்மையானது. நமது சிறுகதை இருப்பினை வரலாற்றடிப்படையில் மதிப்பிட்டறியப் புதுமைலோலனின் சிறுகதைகள் உதவும்.
-245670 - 2001 A
-90

கல்வியியற் பேராசிரியர்
சோ. சந்திரசேகரன்
லங்கையிலுள்ள பல்கலைக் கழக ஆசிரியர்களுள் பல்வேறு பரிமாணங்களுடன் பணியாற்றிவரும் ஒருவர் என்ற வகையில் பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் முதனிலையில் உள்ள ஒருவராகத்
திகழ்கின்றார். இவருடைய கல்வித்துறைப் பணிகளும் தமிழினத்துக்குப் பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றன.
பேராசிரியர் அவர்கள் பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தமது ஆரம்பக் கல்வியைப் பதுளை ஊவாக் கல்லூரியில் பயின்றவர். சிறந்த கல்விப் பாரம்பரியத்தைக் கொண்டு விளங்கும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் இடைநிலைக் கல்வி கற்றவர். 1964-ல் பேராதனைப் பல்கலைக் கழகத்திற் சேர்ந்து பயின்றார். கல்வியியலைப் பயின்ற முதலாவது மாணவர் தொகுதியைச் சேர்ந்த இவர் அத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்று. பேராதனைப் பல்கலைக் கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.
பின்பு சிறிது காலம் இலங்கை மத்திய வங்கியில் மொழிபெயர்ப்பாளராகவும், பாடசாலை ஆசிரியராகவும், ஆசிரியர் கல்லூரி விரிவுரையாளராகவும் பணியாற்றினார். கல்வித் துறை சார்பாக வெவ்வேறு மட்டங்களில் நல்ல
-91

Page 56
அனுபவங்களைப் பெற இவை உதவின. இதன் பின்னர், 1975 ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக் கழகத்தில் கல்வியியல் துறை விரிவுரையாளராகச் சேர்ந்து கொண்டார். 1977 இல் யப்பான் நாட்டு அரசாங்கப் புலமைப் பரிசில் பெற்று ஹிரோசிமா பல்கலைக் கழகத்தில் கல்வித்துறையில் உயர் பட்டம் பெற்றார். ஏறக்குறைய ஒரு கால் நூற்றாண்டு காலமாகக் கல்வித்துறையில் அளப்பரிய சேவையை நல்கிக் கொண்டு இருக்கின்றார். அத்துடன் கொழும்புப் பல்கலைக் கழக சமூக விஞ்ஞானக் கல்வித்துறைத் தலைவராகவும் பல ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.
கல்வியியலாளர்கள் வெறுமனே கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிகளுடன் மட்டும் நின்றுவிடாமல், தாம் பெற்றுக் கொள்ளும் புதிய அறிவானது சமூகத்தின் மத்தியிலும் பரப்பட்டல் வேண்டும் என்ற கருத்தில் உறுதியுடையவர். இவ்வாறான சிந்தனையின் வெளிப்பாடாகவே அவருடைய கல்விப் பணிகள் அமைந்துள்ளன. இது வரைக்கும் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட கல்வியியல் நூல்கள் வெளியிட்டுள்ளார். இவரது முதலாவது நூல் "இலங்கை இந்தியர் வரலாறு என்னும் பொருளில் 1989-இல் வெளிவந்தது. இலங்கை வாழ் இந்தியத் தமிழரின் வருகை முதற் கொண்டு அவர்களுடைய சமூக பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த விடயங்களைச் சான்றாதாரங்களுடன் எடுத்துக் காட்டும் விரிவான நூலாக இது வெளிவந்தது. அவரது ஏனைய நூல்கள் யாவும் கல்வியியலின் புதிய பரிமாணங்களையும் செயல்நெறிகளையும் எடுத்துக் காட்டுபவையாக உள்ளன.
இவற்றுடன் இலங்கையில் வெளிவரும் நாளாந்த, வாராந்தத் தமிழ்ச் செய்தித்தாள்களில் நிதானமான பார்வையுடன் இதுவரையில் 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ்மொழி பேசும் மக்கள் செறிந்து வாழும் தமிழ் நாட்டிற் கூட. இவ்வளவு பெருந்தொகையான கல்வியியல் கட்டுரைகள் தமிழ்மொழியில் வெளிவரவில்லை. இவரது கட்டுரைகள் மாணவர் பெற்றோர், ஆசிரியர் மற்றும் கல்வியியலில் ஈடுபாடு கொண்டோரது அறிவுக்கும் சிந்தனைக்கும் ஏற்ற புதிய விடயங்களை எடுத்துக் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஆங்கில சஞ்சிகைகளிலும் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. வெளிவருகின்றன.
பேராசிரியர் அவர்கள் சிறந்தவொரு முற்போக்குச் சிந்தனையாளர். இவர் பல்கலைக் கழகத்தில் பயின்ற காலத்துப் பின்னணி இத்தகைய சிந்தனைக்கு உரமூட்டியிருந்தது. தான் மட்டுமின்றி ஏனையோரையும் அச்சிந்தனைகளின்பால் ஈர்க்கும் சக்தி கொண்டவர். இவருடைய முற்போக்குச் சிந்தனையின் சாயல்களைப் பல்வேறு ஆக்கங்களிலும் கருத்துப் பரிமாற்றங்களிலும் இனங்காண முடியும். கல்வியியல் மற்றும் சமூகம் சார்ந்த சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் ஏனையவரை அவ்வழியிலே சிந்திக்கத் தூண்டுவதிலும் மகிழ்ச்சி காண்பவர். முக்கியமாகப் பின்தங்கிய மக்களின் கல்வி மேம்பாட்டில் அக்கறை கொண்டு குறிப்பாக மலையக மக்களின் கல்வி நிலை வளர்ச்சிக்கான செயல் திட்டங்களை வகுக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். ܗܝ
-92

இவர் மனிதரை மதிக்கும் பண்பினர் என்பதை அவருடைய அணுகு முறைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. எவ்வித பேதங்களுக்கும் அப்பாற்பட்ட இனிய மனிதரான இவர் இருக்கும் இடத்தில் எப்பொழுதும் கலகலப்பு நிலவும், கருத்துப் பரிமாற்றங்களுக்கும் பஞ்சம் இருக்காது.
பேராசிரியருடைய கல்வித்துறை அனுபவம், எழுத்துக்களின் காரணமாக அவர் இலங்கை தேசிய ஆசிரியர் கல்வி அதிகாரசபை, தேசிய நூலக சபை, தமிழ் இணையப் வழிகாட்டிக் குழு, கலைச்சொல்லாக்கக் குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும், சார்க் நாடுகளின் கல்வியியல் ஆராய்ச்சிச் சஞ்சிகையின் ஆசிரியர் பீட ஆலோசகராகவும் நியமனம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஒபோன் பல்கலைக் கழகத்தின் அதிதிப் பேராசிரியராக அழைக்கப்பட்டார். அச் சந்தர்பத்தில் ஆசிய நாடுகளிலுள்ள பின்தங்கிய மக்களின் கல்விநிலை என்ற பொருளில் ஆராய்ச்சிகளையும் விரிவுரைகளையும் மேற்கொண்டுள்ளார்.
தமிழ் இலக்கிய ஆர்வமும் இவரிடம் மிகுந்து காணப்படுகின்றது. இவர் ஓர் ஆக்க இலக்கிய கர்த்த அல்லர். எனினும் இலக்கியங்களைத் திறனாய்வு செய்யும் காலகட்டத்தில் இவர் கலந்து கொள்ளாத இலக்கிய விழாக்கள். கலாசார விழாக்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், கருத்தரங்குகள் இல்லையென்றே கூறலாம். மற்றும் தமிழ்மொழியின் புதிய பரிமாணங்களுக்கு வித்திடுவதிலும் ஆர்வமுள்ளவர். அண்மையில் சென்னையில் நடைபெற்ற தமிழ் இணைய மகாநாட்டில் கலந்துகொள்ளக் கிடைத்த வாய்ப்பினைத் தொடர்ந்து, அதன் தொடர் நிகழ்வுகள் இலங்கையில் இடம் பெறச் செய்வதற்குரிய பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
இலங்கையின் கல்வியுலகும், தமிழ் மக்களும் பேராசிரியர் சோ. சந்திர சேகரனின் கல்வி, சமுதாய மற்றும் இலக்கியப் பணிகள் மூலம் மேலும் பல பயன்களைப் பெறவேண்டும் என்ற எமது பெருவிருப்புடன் அவரை வாழ்த்துகின்றோம்.
-ஏப்ரல் - 2000
A

Page 57
முற்போக்கு எழுத்தாளர் G)6V). (Uxbabblig5 காத்திரமான படைய்பாளி
ண்பர் லெ. முருகபூபதி அவர்களை நான் கடந்த இரண்டு தசாப்தங்களாக அறிவேன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அதன் கொழும்புக்
கிளை தொடர்பான அலுவல்களில் ஈடுபட்ட போதுதான் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அதுவரைக்கும் நான் அவரை ஒரு சிறுகதை எழுத்தாளர், கலை இலக்கிய ஈடுபாடுகள் மிகுந்த ஒரு பத்திரிகையாளர் என்று மட்டுந்தான் அறிந்து வைத்திருந்தேன்.
ஆனால் அவருடன் நெருங்கிப் பழகிய போதுதான் அவர் எவ்வளவு அடக்கமானவர், மானுட நேயம் மிகுந்தவர் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
முருகபூபதி அவர்களின் இனிய சுபாவமும், எவரையும் கவரும் உரையாடலும், பிரச்சனைகளை நிதானமாக ஆழ்ந்து ஆராய்ந்து. எவரது மனமும் நோகாது தோழமையுடன் தீர்வுகள் எடுப்பதும் அலாதியானது. வெகு இலகுவாக நண்பர்களை ஈர்த்து வழி நடத்திச் செல்வதில் ஒரு பொறுப்புள்ள தலைவனுக்குரிய குணாம்சங்கள் இயற்கையாக இவரிடமிருப்பதை இ. மு. எ. ச. வின் செய்திட்டங்களை இவர் நடைமுறைப் படுத்தும்போது அவதானித்து வைத்திருக்கிறேன்.
“எழுதுவதோடும் சமூகப் பணி புரிவதிலும் காலம் ஓடிக் கொண்டிருக்கிறதே." என்று கேட்டால்.
“நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து எழுதும் அதே வேளை, சமூகத்துடனும் ஒன்றிணைந்திருக்க வேண்டும் என்ற பண்பில் ஊறிப் போய்விட்டமையால்
-94
 

எதிலிருந்தும் விடுபடமுடியாத நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகியிருக்கிறேன். a என்று கூறும் பூபதிக்கு அத்தகைய நிர்ப்பந்தங்களின் அழுத்தத்துக்கும், நெளிவு சுழிவுகளுக்கும் ஆளாகும் போது இவருக்கு கதைகள் பிறக்கின்றன. வேகம் என்ற சிறுகதை அத்தகைய சூழலில் பிறந்தது என்று அவரே குறிப்பிடுகிறார்.
இப்படியாகப் பல்வேறுபட்ட சோதனைகளை அனுபவித்திருக்கும் அவர், ஒவ்வொரு சிறுகதைக்குப் பின்னணியாக ஒவ்வொரு கதை இருப்பதை, தெளிவுபடுத்த சமாந்தரங்கள் என்ற இவரது சிறுகதைத் தொகுதியில், கதைகள் பிறந்த கதைகளை விரிவாகக் கூறியுள்ளார்.
இவரது கதைகள் யதார்த்த பூர்வமாகவும் கலைத்துவம் உள்ள படைப்புக்களாகவும் இருக்கும்.
“முருகபூபதி பல சிறுகதை ஆசிரியர்களைப் போன்று - சமூகத்தினை உள்ளவாறு சித்திரிக்கவில்லை. உணர்ந்து சித்திரிப்பதோடு, இப்படி இருக்கும் சமூகம், எப்படி இருக்க வேண்டும் எனக் காட்டிச் செல்கிறார். அதனால் தான் புதிய தலைமுறை எழுத்தாளர்களில் முருகபூபதிக்குரிய இடம் முதல் ஐந்துக்குள் அமைந்துவிடுவது சாத்தியமாகிறது.’ இவ்வாறு பிரபல எழுத்தாளரும் நாவலாசிரியருமான செங்கை ஆழியான் (மல்லிகை 88) கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
1987ம் ஆண்டு இவர் பத்திரிகைத் தொழிலை விட்டுவிட்டு. அவுஸ்திரேலியாவுக்குச் செல்லலவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
கடல் கடந்து சென்றாலும் இலங்கை நாட்டைச் சேர்ந்த இலக்கிய வாதி இலக்கியம்தான் படைப்பான் என்பதை இவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
கடல் கடந்து சென்றபின் அவரது இலக்கிய ஆளுமை இன்னும் உயர்ந்து செழுமையடைந்திருப்பதைப் பத்திகை, சஞ்சிகைப் வாயிலாக அவர் வெளிநாடுகளில் நிகழ்த்தும் கலை, இலக்கிய நிகழ்வுகள் மூலமாக வெளிச்சம் போன்ற சிறுகதைத் தொகுப்புக்கள் மூலமாகவும் அறிய முடிகிறது.
எல்லாமாக அவர் ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார். சுமையின் பங்காளிகள், சமாந்தரங்கள், வெளிச்சம். ஆகியன சிறுகதைத் தொகுதிகள். சுமையின் பங்காளிகள் இலங்கையின் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. 'நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள். 'இலக்கிய மடல்’, ‘சமதர்மப் பூங்காவில் ஆகியன கட்டுரைத் தொகுதிகள். ’பாட்டி சொன்ன கதை என்பது உருவகக் கதைத் தொகுப்பு நேர்காணல்களை உள்ளடக்கியது 'சந்திப்பு என்ற நூல்.
முருகபூபதி போன்ற ஒரு சமூகப் பிரக்ஞையுள்ள முற்போக்கு எழுத்தாளர் அந்நிய நாடு சென்றும், பல நூல்களை வெளியிட்டும், இலக்கியச் சந்திப்புக்கள் நடத்தியும் தாய் நாட்டிற்குப் பெருமை சேர்க்கிறார் என்றால் அவர் புலம் பெயர்ந்து சென்றது சொகுசு வாழ்க்கையை விரும்பியல்ல என்பது நிரூபணமாகிறது.

Page 58
எழுத்தாளனும் மனிதன்தான். மனிதனுக்குச் சில அடிப்படைத் தேவைகள் இன்றியமையாதவை. நம் நாட்டின் தொழில் வாய்ப்புகளால் அவற்றைப் பெறமுடியாது. கடல் கடந்து சென்றதால் தான் இந்த எழுத்தாள மனிதனுக்குச் சற்றுத் தலை நிமிர முடிந்தது. பல நூல்களை வெளியிடவும் வாய்ப்புக் கிட்டியது. இதனால் இலக்கியம் சமூகப் பணி ஊடாகக் காத்திரமான பங்களிப்புச் செய்து வரும் பூபதி தனது சொந்த மண்ணில் மட்டுமல்லாது வெளி நாடுகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார்.
இனவேறுபாடற்ற மானுட நேயமும், சமூக ஒருமைப்பாடும் தான் இவரது எழுத்துக்களில் விரவிக் கிடக்கும். ஒரு பத்திரிகையாளனாகச் செயற்பட்டாலும் ஒரு நல்ல படைப்பாளியாக இருக்க வேண்டுமென்பதே இவரது இலட்சியம். இவரது சிறுகதைகள் அனைத்தும் இலங்கை மண்ணை மட்டும் பகைப்புலமாகக் கொண்டவையல்ல. அந்நிய நாட்டு மண்வாசனை கமழும் கதைகளையும் இவர் படைத்திருப்பதால் இவரது ஆக்கங்கள் சர்வதேச ஒருமைப்பாட்டிற்கும் அடித்தளமிடுகின்றன எனக் கூறுவது மிகையல்ல. சமூகப் பிரக்ஞையுள்ள ஒரு முற்போக்கு எழுத்தாளனாலேயே இது சாத்தியப்படும்.
“உயிருக்கு நிறம் இல்லை. மதம் இல்லை. இனம் இல்லை. மொழி இல்லை. என் வாழ்வின் தரிசனங்களே நான் எழுதும் கதைகள்.” என்று லெ. மு. பல சந்தர்ப்பங்களிலும் கூறியிருப்பது இங்கு ஞாபகப்படுத்த வேண்டியதொன்று. தொகுதிகள் மூலம் தனது எழுத்துத் தகைமையை உலகத் தமிழ் அரங்கில் முத்திரை பதித்துள்ளார்.
இந்தியா, சோவியத் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து இலக்கியப் பயணக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். வீரகேசரியின் ஆசிரியர் குழுவில் கடமையாற்றிய முருகபூபதி அவர்கள் ரஸஞானி என்ற புனைப்பெயரில் ஒவ்வொரு ஞாயிறு இதழிலும் பல ரசமான தகவல்களைத் தருவதில் முன் நின்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் ‘கலைக் கோலம் நிகழ்ச்சி மூலம் பல இலக்கியவாதிகளின் நெஞ்சங்களோடு இணைந்தார்.
1964-ம் ஆண்டு இவர் மல்லிகை ஆசிரியரை ஒரு இலக்கிய மேடையில் பார்த்தாலும், 1971-ம் ஆண்டுதான் முதற் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. 1972-ம் ஆண்டு மல்லிகை நீர்கொழும்புப் பிரதேசச் சிறப்பு இதழில் இவரது முதலாவது ஆக்கம் வெளிவந்துள்ளது.
“என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியதோடு, தொடர்ந்தும் எனது ஆக்கங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது மல்லிகை. மல்லிகை ஆசிரியரது வழிகாட்டலில் வளர்ந்தவன் நான். மல்லிகையும், மல்லிகைப் பந்தலும் என்றும் என் நெஞ்சை விட்டகலாது” என்று பெருமைப் படுகிறார் முருகபூபதி. காத்திரமான படைப்பாளியும், பத்திரிகையாளரும். முற்போக்கு எழுத்தாளருமான லெ. முருகபூபதியிடமிருந்து இலக்கிய உலகம் இன்னும் ஏராளமான ஆக்கபூர்வமான இலக்கியப் பங்களிப்பை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது.
gങ്ങബ - 1999 A
-96

தமிழுக்கு மகிமை செய்த புலவர்மணிஷரிபுத்தீன்
மருதுர்க் கொத்தன்
முனையாய் அமைந்து, மற்றவர்களையும் ஆற்றுப்படுத்திய பெருமையைத்
தனதாக்கிக் கொண்டவர். குள் ஆன் பாடசாலைக்குச் சென்று குர் ஆன் ஒதுவதும், இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான பாடங்களைக் கற்றுக் கொள்வதும் தான் முஸ்லிம் சிறுவர்களுக்கு ஆகுமான கல்வி என்று முஸ்லிம்கள் நினைத்திருந்த ஒரு காலமிருந்தது. தமிழும் ஆங்கிலமும் கற்பது ‘ஹறாம் என்று கூட உலக மக்கள் சிலர் மார்க்கத் தீர்ப்பு வழங்கினர்.
லவர்மணி ஆ. மு. வடிரிபுத்தீன் கல்வித் துறையில், சாலையின் திருப்பு
1911-ம் ஆண்டு மருதானையில் அரசினர் தமிழ்ப் பாடசாலை ஆரம்பமான போது வடிரிபுத்தீன் தந்தையார், ஆதம்!ாவா மரைக்கார் சகல எதிர்ப்புக்களையும் புறங்கண்டு தன் மகனைத் தமிழ்ப் பாடசாலைக்கனுப்பினார். ஷரிபுத்தீன் தொடர்ந்து கற்று மாணவ ஆசிரியர் பரீட்சையிலும், ஆசிரியர் பரீட்சையிலும், தேறி ஆசிரியராய் அமைந்தது, தமிழ்கற்று ஆசிரியராகும் பாரம்பரியம் ஒன்று கிழக்கிலங்கை முஸ்லிம்களிடையே உருவாவதற்கு உந்து சக்தியாகியது.
தமிழ்க்கடல் எனத்தக்கவரான தலைமையாசிரியர் கே. எஸ். வைரமுத்துவிடம் கற்ற காரணத்தால் முறையான தமிழ்ப் புலமை வாய்ந்தவராக வடிரிபுத்தின் அமைந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் சுவாமி விபுலானந்தரிடம் யாப்பும் அணியும் சமஸ்கிருதமும் கற்கும் வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது. வைரமுத்துவால் கண்டெடுக்கப்பட்டுத் தூய்மை செய்யப்பட்ட வைரம் விபுலானந்தரால் பட்டை தீட்டப் பட்டுப் பிரகாசமாகியது.
புலவர் மணி ஆ. மு. வடிரிபுத்தீன் புலவர் பரம்பரைக் கவிஞராகத்தான் அநேகரால் அறியப்பட்டிருக்கிறார். ஆனால் பல தளங்களில் காலைப் பதித்து பெருமை செய்த அற்புதக் கலைஞர் அவர்.
அறுபதுகளின் நடுக்கூற்றில், கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர்தான்
-97

Page 59
அவரது செய்யுள்கள் வெளியுலகுக்கு அறிமுகமாகின. அவரும் அவற்றை அறிமுகம் செய்தார்.
ஆசிரியப் பணியின் போது பாடசாலையின் தேவைக்காக, மேடை நாடகங்கள் எழுதி நெறிப்படுத்தியுள்ளார். பல இசைப் பாடல்களை சாஸ்திரீயம் தவறாமல் கஎழுதி மாணவர்களைக் கொண்டு பாட வைத்தார்.
மரபு சார்ந்த ஓவியக் கலையிலும், வல்லவராகத் திகழ்ந்தார். அவரது ஓவிய வெளிப்பாட்டின் கண்காட்சி அரங்கமாகப் பாடசாலைச் சுவர்கள் அமைந்தன. கலை நுட்பம் வாய்ந்த கைப் பணியையும் செய்து காட்டி மாணவரைப் பயிற்றுவித்தார்.
அவரது கலைப்பணியின் முக்கிய கூறாகக் கொள்ளத்தக்கது நாட்டார் இயலாகும். வாய்வழிச் செவி நுகர் கனியாக இருந்த மட்டக்களப்பு நாட்டுக் கவிதைகளைத் திரட்டிக் கதைகளாகவும் வாதுக் கவிச் சித்திரமாகவும் அமைத்துப் பாடசாலை மேடைகளில் அரங்கேற்றிக் கட்புலக் கலையாகவும் மாற்றினார். அவரால் உரைச் சித்திரமாக வடிவமைக்கப்பட்ட மட்டக்களப்பு நாட்டுக்கவி 1951 மார்கழியில், இலங்கை வானொலிக் கலையகத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அரைமணித்தியால ஒலித்தட்டு அது. நாட்டார் இலக்கியத்தை ஒலிப்பதிவு செய்த முதலாவது கலைஞன் புலவர்மணி ஆ. மு. ஷரீபுத்தீன் 36)/FTA.
சங்கம் மருவிய கால இலக்கியப் பண்புகளைப் பெரிதும் சிலாகிப்பார் புலவர் மணி ஷரிபுத்தீன். வாழ்க்கைக்குத் துணை போகும் அறக்கருத்துக்கள் மாணவப் பருவததில் மனனம் செய்யும் வண்ணமாகச் சில செய்யுட்களாக அமைந்திருப்பதை எப்போதும் மெச்சுவார். அதன் பிரதிபலிப்பாக அமைந்தன. அவரது நபிமொழி நாற்பது, நாமொழி நாற்பது, முதுமொழி வெண்பா, இசைவருள் மாலை. "மக்களுக்கு இதோபதேசம் என்பன. அவரது சூறாவழிப் படைப்போர்” உருவக அணியில் அமைந்த நயக்கத் தக்க சிறு காப்பியமாகும்.
சீறா பதுறுப் படல உரை, சீறா பாதை போன்ற பாடல்கள் உரை, புது குஷ்ஷாம் உரைகள் என்பன அவர் செய்த உரை நூல்களாகும். இலங்கை சாகித்திய மண்டலம், இந்து கலாசார ராஜாங்க அமைச்சு, பிராந்திய அபிவிருத்தி அமைச்சு, இஸ்லாமிய விவகார ராஜாங்க அமைச்சு, வடகிழக்கு மாகாணக் கலாசாரத் திணைக்களம், கொழும்பு கம்பன் கழகம், தமிழ்ச் சங்கம், அனைத்துலக இஸ்லாமிய தமிழிலக்கிய ஆராய்ச்சி அமைப்பு என்பவை புலவர்மணி வடிரிபுத்தினை மதித்து, கெளரவித்து. பட்டங்களும், விருதுகளும், பொற்கிழியும் வழங்கிக் கெளரவித்துள்ளன. பொன்னாடை போர்த்திப் பெருமை செய்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை அவர்கள், ஒரு சாற்றுக் கவி வாயிலாக, “என் நாமம் உனக்களித்தேன். நண்பா' என்று புலவர் மணி என்ற பட்டத்தையே வழங்கி மகிழ்ந்தார். அந்தப் பட்டத்தையே தமிழுலகம் மனப்பூர்வமாக உச்சரித்துத் தமிழுக்கு மகிமை செய்த வரிபுதீனை மரியாதை செய்கிறது.
Difié - 1995 A
-98

அன்னலசுஷ்மி இராசதுரை
கோகிலா மகேந்திரன்
சையில் இருந்து எழுதத் தொடங்கிய உடனேயே அவனுக்குப் மே பக்கத்தில் தேநீர்க் கோப்பையை வைத்து, "அப்பா எழுதுகிறார்,
குழப்பாதே!” என்று பிள்ளைகளைக் கட்டுப்படுத்தி, கடைக்குப் போவது முதல் சமையலைக் கச்சிதமாக முடிப்பது வரை குடும்பப் பொறுப்புகளைத் தானே சுமக்கும் மனைவியர் வீட்டில் இருக்கும் போது, ஒரு ஆண் எழுத்தில் எதையும் சாதிப்பது கடினமில்லை. ஆனால், இந்நாட்டில் அல்லது எந்த நாட்டிலுமே இரட்டைச் சுமையுடன் ஒரு பெண் சிலவற்றைச் சாதிக்கும் போது, சமூகத்தின் வரம்புகளை உடைத்து வெளிவந்து, அவள் தன் திறமையை நிரூபிக்கும் போது அதுதான் உண்மையிலேயே மனப்பூர்வமாக, பாராட்டப் படவேண்டிய விடயம், என்று அடிக்கடி உணர்வு பூர்வமாகக் கூறும் அன்னலகூஓமி அக்காவை நான் பல வருடங்களாக அறிந்திருந்தாலும் அவரை நெருங்கிப் பார்க்க முடிந்தது 1995-ல் பீஜிங்கில் தான்.
அரசு சார்ந்த நிறுவனங்களின் நாலாவது அனைத்துலகப் பெண்கள் மகா நாட்டில், பத்து நாள்கள் நாங்கள் பக்கத்து அறைகளில் தங்கி, ஒன்றாக உண்டு, அருகருகே உறங்கி, ஒருமித்துப் பயணம் செய்து, பேசி, விவாதித்து, உதவி செய்து வாழ்ந்த போது அவரின் முழுப் பரிமாணத்தையும் என்னால் தரிசிக்க முடிந்தது.

Page 60
பெயருக்கேற்ற லக்ஷமி கரமான உள்ளம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. அன்னலசஷ மி இராசதுரை அவர்கள் தனது ஆரம்பக் கல்வியைத் திருநெல்வேலி செங்குந்தா இந்துக் கல்லூரியிலும், உயர்கல்வியைச் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் பெற்றார். அந்தக் காலத்தில் நல்ல குடும்பத்துப் பெண் பிள்ளைகள் படிக்கும் பாடசாலையெனப் பெயர் பெற்றிருந்த இராமநாதன் கல்லூரி வழங்கிய ஒழுக்கமும் பண்பாடும் அடக்கமும் இன்றும் அவருக்கு அணி செய்வதை நிதர்சனமாகக் காண முடிகிறது.
தன்னை அதிகம் முதன்மைப் படுத்திக் கொள்ள விரும்பாத தன்மையும், யாருடனும் இலகுவில் இயைந்து நடக்கக் கூடிய இயல்பும் அக்காவின் ஆளுமைக் கூறுகளில் விசேட கவனத்திற்குரிய பண்புகள்.
சிறுமியாக இருந்த காலத்தில் வீட்டின் மூலை முடுக்குகளில் இருக்கும் சில்லறைகளைப் பொறுக்கிக் கொண்டு கடைக்குப் போவாராம் இவர் கடலை வாங்க என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. பெண் பிள்ளை என்பதால் ரப்பர் வளையல் வாங்கவாக இருக்கும் என்று நீங்கள் முணுமுணுத்தால் அதுவும் தவறுதான்! வெறும் வெள்ளைக் கடதாசி வாங்கியா காசை முடிக்கிறாய்? என்று இவரது தாயார் ஆச்சரியமாகக் கேட்பாராம். வெள்ளைக் கடதாசியில் கன்னா பின்னவென்று எழுதும் ஆசை அப்போதே இவரிடம் முளை கொண்டுவிட்டது. வளரும் பிள்ளையை மண்விளையாட்டில் தெரியும் என்றும் சும்மாவா சொன்னார்கள்.
1950-களில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரத் தொடங்கிய கலைச் செல்வி சஞ்சிகை பல எழுத்தாளர்களை உருவாக்கிய சங்கதி பலரும் அறிந்ததே. கலைச் செல்வி வளர்த்து விட்ட முக்கியமான பெண் எழுத்தாளர் அன்னலக்ஷமி. இன்றும் சிற்பி ஐயாவை அவர் நன்றியுடன் நினைவு கூருவது அவரது காலத்தால் செய்த நன்றியை மறவாத பண்பினைச் சுட்டி நிற்கிறது.
*விழிச் சுடர் என்ற குறுநாவல், வீரகேசரிப் பிரசுரமாக வந்த 'உள்ளத்தின் கதவுகள் என்ற நாவல், "நெருப்பு வெளிச்சம் என்ற சிறுகதைத் தொகுதி. இரு பக்கங்கள்’ என்ற கவிதைத் தொகுதி ஆகியவை இதுவரை நூலுருப் பெற்ற அவரது பிரசவங்களாகும். உலக வாழ்வு என்ற நாடக மேடையில் அன்னல கூடி மி அவர்கள் எடுத்துக் கொணி ட இரண்டு பிரதான பாத்திரங்களில் ஒன்று, எழுத்தாளர், மற்றது பத்திரிகையாளர். முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு கொஞ்சம் மறைத்துவிட்டதும் உண்மைதான்!
-100

1993-ல் இந்து கலாசார அமைச்சு இவருக்குத் தமிழ் மணி என்ற பட்டம் வழங்கிய போதும், 1994இல் எஸ்மண்ட் விக்கிரமசிங்க விருது தரப்பட்டபோதும் பத்திரிகையாளர் என்ற சுட்டியே இவருடன் அதிகம் ஒட்டிவிட்டதை நாம் தரிசித்தோம். பத்திரிகை இவரிடத்தில் அவசரமான எழுத்துக்களை நிர்ப்பந்தித்ததால், இவரது உண்மையான ஆற்றல் இலக்கியமாக வெளிப்பாடும் நிலை பின்தள்ளப்பட்டது. ஆயினும் தொழில் ரீதியான தனது பொறுப்பையும், கடமையையும் மிகுந்த விழிப்புணர்வுடன் இவர் செய்து வருவது பலராலும் அவதானிக்கப்பட்டுள்ளது. 35 வருடங்கள் தமிழ்ப் பத்திரிகை உலகில் தொடர்ந்து நின்று நிலைப்பதற்கு ஒரு தனிப்பட்ட சிறப்பான ஆளுமை வேண்டும். அது இவரிடத்தில் இருப்பது வெள்ளிடை மலை. இந்த நிலையைச் சரியாக உணர்ந்த தமிழ் இளைஞர் கலாசாரக் கூட்டமைப்பு சில வருடங்களுக்கு முன் இவரைப் பாராட்டிக் கெளரவித்துப் பொன்னாடையும் போர்த்தி நிறைந்தது.
இவரது முதலாவது சிறுகதை, தினகரனில் அதுவும் டாக்டர் கைலாசபதி அவர்கள் ஆசிரிய பீடத்தில் இருந்த போது வெளிவந்தது என்பதே இவருக்குப் பெருமை தரும் விடயமாகும். பிற்காலத்தில் 1970 களிலும் 80 களிலும் இவர் மித்திரன் வாரமலர் ஆசிரிய பீடத்தில் இருந்த போது கைதுக்கி விட்ட பெண் எழுத்தாளர்கள் பலர். அவர்களில் நானும் ஒருத்தி என்பது எனக்குப் பெருமை தருவது.
*சிரித்திரன்' சஞ்சிகையில் அன்னலக்ஷமி எழுதிவந்த தீவாந்தரம என்ற சிறுவர் தொடர் கதையையும், வீரகேசரியில் அவர் எழுதிவந்த ‘சந்திரனில் சுந்தர் தொடர் கதையையும், மாணவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள. சிறுவர் இலக்கியங்கள் மிகக் குறைவாகச் செய்யப்படும் எமது நாட்டில் இவை குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்.
ஆங்கிலக் கதைகள் பலவற்றையும் மொழிபெயர்த்துள்ள திருமதி இராசதுரை அவர்கள் ஆரம்ப காலத்தில் வானொலி நாடகங்களையும் எழுதிவந்தார். பல்வேறு துறைகளிலும் சகோதரி அவர்கள் கால்வைத்துள்ள போதிலும், பெண்கள் பிரச்சினை பற்றிப் பேசும் பத்திரிகையாளர் என்பதே முனைப்பாகி நிற்கும் அறுவடையாகும்.
1995 ஆகஸ்டில் தமிழ்ப் பெண் பத்திரிகையாளர் என்ற வகையில் எம்முடன் சீனாவில் நடைபெற்ற பெண்கள் மகாநாட்டிற்கு வந்த இவர், அதுபற்றித் தொடர்ந்து இருபது வாரங்கள் வீரகேசரியில் எழுதினார். முக்கியமான அந்த மாநாட்டைப் பற்றித் தமிழில் ஊடகப் படுத்திய முக்கிய பெண்ணிய வாதியாக அதன் மூலம் இவர் அவதானிக்கப்பட்டார். விட்டுக் கொடுக்கும் பண்பு, எளிமை, பொறுமை, சொல்ல வேண்டிய இடத்தில் தனது கருத்தைத் துணிந்து சொல்லிவிடும் இயல்பு,
-101

Page 61
மற்றவர்களின் திறமைகளை மதித்துப் பாராட்டும் பண்பு ஆகியவற்றால் அந்த வேற்று நாட்டில் இவர் என்னை ஈர்த்துக் கொண்டார். அதன் விளைவாக, அவரது கமெரா தட்டிய படங்களில் எல்லாம் காணப்படும் அளவுக்கு அன்னலக்ஷமியும், புஷ்பா கணேசலிங்கமும் நானும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.
தனது கணவரும் இரண்டு ஆண் பிள்ளைகளும் தனது சமூகப் பணிகளைப் பொறுமையுடன் சகித்துக் கொள்ளுகிறார்கள் என்று கூறும் சகேர்தரி தனது குடும்பத்தினர் மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருப்பதை அவருடன் நெருங்கிப் பழகும் யாரும் இலகுவில் இனங்கண்டு கொள்ள
(ԼՔլգԱվմ).
1982-ல் மணிலாவில் நடைபெற்ற ஆசியப் பத்திரிகையாளர் மகா நாட்டில் கலந்து கொண்ட இவர், இங்கு திரும்பிய பின் எழுதிய 'மணிலாவில் மணியான நாட்கள்’ என்ற பயணக் கட்டுரை பல வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. வானொலி நேயர்களுக்காக அறுபதுகளில் இவர் செய்த பூஞ்சோலை' என்ற நிகழ்ச்சியும், எழுபதுகளில் செய்த மகளிர் அரங்கு என்ற கிராமியப் பெண்கள் நிகழ்ச்சியும் பல விமர்சகர்களின் பாராட்டையும், பல ஆயிரம் நேயர்களின் விருப்பையும் பெற்றமையும் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் ஆகின்றன.
ஒருவரது ஆற்றல்கள் முழுவதும் பூரணமாக வெளிப்படுத்தப்படும் நிலைபற்றிச் (Selfactualisation) சிந்திக்கக்கூடிய இவர் தனது மணி விழாக் காலம் வருவதற்கு முன் பத்திரிகைத் தொழில் தன்னை எவ்வளவு மாற்றியுள்ளது என்பதைச் சரியாக அளந்தறிந்து, தகவம் பரிசு பெற்ற புதிய அடிமைகள் போன்ற படைப்புக்கள் பலவற்றை ஆக்கித் தர வேண்டும் என்று இலக்கிய உலகின் சார்பில் இவரைக் கேட்டுக்கொள்வது பொருத்தமானது. அதற்காக அவரை ஊக்குவிப்பது எமது பணி.
-செப்டம்பர் - 1997
A
-102

அருட்திரு. நீ. மரியசேவியர் அடிகளார்
பேராதனை ஏ. ஏ. ஜூனைதீன்
வர் ஒரு கிறிஸ்தவப் பாதிாயார். பேராசிரியர். கலாநிதியுமாவார். இவைகளெல்லாவற்றையும் விடச் சிறந்த ஒரு கலைஞர். நாட்டுக் கூத்து விற்பன்னர்.
அவருடைய ஆடைதான் அவரை ஒரு கிறிஸ்தவராகவும் பாதிரியாராகவும் இனங்காட்டுகின்றதே ஒழிய, அவர் மனநிலையும் செயற்பாடுகளும் நடைமுறைகளும் அவரை அவ்வாறு எண்ணத் தோன்ற வைக்கவில்லை.
காரணம் இவர், இனம், மதம், குலம், கோத்திரம் என்பவற்றுக்கெல்லாம் மிகமிக அப்பாற்பட்டவர். "ஒன்றே குலம் - ஒருவனே தேவன் என்ற தாரக மந்திரத்தோடு, 'இறைவழி - கலைப்பணி என்ற கோட்பாடும் ஒன்றிணைந்தே இவரின் இயக்கமும் பணியும் செயற்படுகின்றன.
"மனித நேயம்' ஒன்றையே இவரிடம் காணமுடிகிறது. கலை என்ற புனிதமான பாதையில் மனித நேயம் என்ற ஒளியைத் தேடிப் பூரணத்துவமான பாதையில் சலசலப்பின்றித் தெளிந்த நீரோடை போல் தனது பயணத்தைத் தொடர்பவர்.
-103'

Page 62
இவ்வளவையும் அடங்கப் பெற்ற இந்தப் புனிதன் யார்?
அவர் பேராசிரியர் கலாநிதி அருட்திரு. நீ. மரியசேவியர் அடிகளார்.
இவரின் சேவைகள் ‘திருமறைக் கலாமன்றம்’ என்ற கலை முகட்டிலிருந்தே தாய் நாட்டிலும் வெளிநாடுகளான ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஹோலன்ட், சுவிற்சலாந்து, இந்தியா போன்ற நாடுகளிலும் வியாபித்திருக்கிறது. இந்தத் திருமறைக்கலா மன்றத்தின் ஸ்தாபகரும் இயக்குநரும் அருட்திரு நீ மரியசேவியர் அடிகளாரே ஆவார்.
இந்தத் திருமறைக்கலா மன்றம் 1962-ஆம் ஆண்டில் குழு நிலையில் இயங்க ஆரம்பித்தாலும், 1968-ஆம் ஆண்டில் தான் உரும்பிராயில் திருமறைக் கலாமன்றம் என்ற பெயரில் புனரமைப்புச் செய்யப் பட்டது. இன்றுவரை தொடர்ந்து கலைப் பணி செய்து வரும் இத் திரு மறைக்கலாமன்றம் மூலம் அடிகளாரின் கலைப்பணி மகத்தானது.
1971 - ஆம் ஆண்டில் 'அன்பில் மலர்ந்த காவியம்' என்று நாடகத்தைச் சுமார் 300 நடிக, நடிகையரை வைத்துத் தயாரித்து வெற்றி கண்டார். அதன் பின்னர் காட்டிக் கொடுத்தவன்', 'பலிக்களம்', 'நல்ல தங்காள்', நெஞ்சக்கனல்’, ‘நீ ஒரு பாதை', 'யூதகுமாரி", "ஞான செளந்தரி, ‘சத்தியவேள்வி', 'சீவகசிந்தாமணி', 'திருச்செல்வர் காவியம், தர்சனம்', ‘அசோகன்’, ‘கி. மு. 2000', 'பெண்ணியம் பேசுகிறது. களங்கம்', 'சாகாத மனிதம்' போன்ற இன்னும் பல நாடகங்களை உள்ளுர்மேடையில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளிலும் மேடையேற்றி வெற்றி கண்டுள்ளார்.
இதில் `அசோகா', 'தர்சனம்', 'கி. மு. 2000 போன்ற நாடகங்கள் எதுவித வசனமுமின்றி முற்றிலும் ஊமைப்பாணியில் (மைமிங் முறையில்) நடிக்கப்பட்ட நாடகங்களாகும். இந்த மைமிங் முறையில் பல நாடகங்களை மேடையேற்றிய பெருமை திருமறைக்கலாமன்றத்துக்கே உரியதாகும்.
இது தவிர 1988 முதல் கலைமுகம்' என்ற காலாண்டு சஞ்சிகையை அடிகளார் தங்கு தடையின்றி 'தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். "கலைமுகம் வெளிநாடுகளிலுள்ள கிளைகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. இன்னும் ஆற்றியல்’ என்னும் அரங்கியல் சார் சஞ்சிகையையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார். கவின் கலைகளுக்கான பயிற்சி வகுப்புக்களோடு குருத்தரங்குகள், நூல் வெளியீடுகள், நாடகப் பட்டறைகள், சமய ஒப்பியல் ஆக்க ஆய்வுகள், என்பவற்றையும் இனமத பாகுபாடின்றிப் பணியாற்றி வருகின்றது அடிகளாரின் திருமறைக்கலா மன்றம்.
மேற்படி நாடகங்களும் நிகழ்ச்சிகளும் பெரும்பாலும் இலவசமாகவே காண்பிக்கப்படுகின்றன. இதற்கான முதலீட்டை உள்நாட்டு வெளிநாட்டு
-104

நிறுவனங்கள் உதவி செய்வதை அடிகளார் எப்போதும் நன்றியோடு நினைவு கூருவார்.
ஆனால் அவர்களுடைய உதவிகள் திருமறைக்கலா மன்றத்தின் பணிகளை ஆற்றப் போதுமானவைகளாக இல்லை. எனவே சொற் பொழிவுகள் போன்ற அடிகளாரின் தனிப்பட்ட உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கூட கலைக்காகவே தியாகம் செய்து வருகிறார்.
திருமறைக்கலா மன்றத்தின் பிறப்பிடமாகிய யாழ் மண்ணில் தற்சமயம் தொடர்ந்துவரும் யுத்த நிலை காரணமாக அதன் கலைப்பணி பெரிதும் பாதிப்படைந்து இருந்தாலும் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் அதன் கலைப்பணி முன்பை விடச் சிறப்பாகவே இருக்கின்றது என்றே கூறவேண்டும்.
அடிகளாரின் மனித நேயம் என்னைக் கவர்ந்த காரணத்தினால் தான் நான் இன்றும் அதன் ஆலோசகர்களில் ஒருவனாக இருக்கிறேன். இன்னும் பெரும் கவிஞர் ஜின்னா சரிபுத்தீன் அவர்களும் ஒரு ஆலோசகரே!
இனமத சார்பற்ற கலைப்பணியின் காரணமாகவே கடந்த 1997-ல் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 26 வரையிலான 'கலைப்பாலம்' என்ற சிறப்பான பல நிகழ்ச்சிகளை திருமறைக் கலாமன்றத்துக்காக என்னால் நடத்த முடிந்தது.
அடிகளாரின் மனித நேயம் மகத்தானது. கலைப்பணி அளப்பரியது. பழையன கழிந்து புதிய தேசிய கலைப்பணிகள் இனி வளரவேண்டும் என்பதே என் அவா!
ജബ് - 1998
-105

Page 63
தெற்கிலிருந்து ஒரு சூரியோதயம்
திக்குவல்லை கமால்
ரு இஸ்லாமிய கீதப்பாடகராகவும் பாடலாசிரியராகவும் எனக்கு ஷம்ஸ் மாஸ்டர் அறிமுகமானார். இவ்வாறாக ஏதோவொரு
கலைச் செயற்பாட்டுக் கூடாக ஊரில் ஒவ்வொருவருக்கும் அவர் அறிமுகமாயிருந்தார்.
அப்போது நான் பள்ளிச் சிறுவன். கலை இலக்கிய ஈடுபாடு இருக்கவில்லை.
அறுபதுகளின் பிற்கூற்றில்தான் நான் எழுத ஆரம்பித்தேன். அதே கட்டத்தில் இன்னும் பல நண்பர்கள் மிகுந்த உற்சாகத்தோடு எழுதிக் கொண்டிருந்தார்கள்.
இவ்வாறு எழுதிக் கொண்டிருந்தவர்களை ஒன்று கூட்டி ஓர் அமைப்பாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை, ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியப் பிரவேசம் செய்துவிட்ட எம். எச். எம். ஷம்ஸ், யோகபுர ஷம்ஸா ஆகியோர் எமக்கு எடுத்துக் கூறி வந்தனர். இதன் விளைவாக 1968-ல் திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் உதயமானது. "
-106
 

அதன் செயலாளராக ஷம்ஸ் அவர்கள் பொறுப்பேற்றார். அவர் வீடே சங்கக் காரியாலயமாயிற்று. காலம் நேரமின்றி கருத்துப் பரிமாறல். இலக்கிய வாசிப்பு. ரசனை வெளிப்பாடு. சுயவிமர்சனம் என்று ஏதாவதொன்று அரங்கேறிக் கொண்டேயிருக்கும்.
இன்று முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தப் பின்புலத்தில் ஒரு முழுமையான வளர்ச்சியின் வீச்சான ஆளுமையாகவே எம். எச். எம். ஷம்ஸ் அவர்களைப் பாாக்க வேண்டும்.
1965களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவோடு, ஏ. ஏ. லத்திட்ப் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த “இன்ஸான்’ வாராந்தரியோடு ஏற்பட்ட தொடர்பே அவரது எழுத்துக்கு 5 (p65) பார்வையைக் கொடுத்தது. வல்லையூர்ச் செல்வன், பாகிறா, இஷதிறாக்கி போன்ற பல பெயர்களில் எழுதித்தள்ளினார். பின்னர் வீரகேசரி, மல்லிகை என்பன கனதியான அவரது எழுத்துக்குக் களமாகின.
பாலர் கவிதைகளில் ஆரம்பித்து மரபுக் கவிதைகளாக ஏராளமாக எழுதிக் கொண்டிருந்தார். கொங்ரீட் கவிதை, புதுக்கவிதை, குறும்பா என்றெல்லாம் எழுத ஆரம்பித்தார். சித்திரங்களோடு சுயசமூகப் பின்னணியில் எழுதப்பட்ட குறும்பா தொகுதியொன்று அச்சுக்குத் தயாராக அவர் கைவசமுள்ளது.
முப்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளா இவரது “வளவையின் மடியிலே' என்ற தொகுதி அச்சாகிக் கொண்டிருக்கிறது. ‘கிராமத்துக் கனவுகள்’ என்ற நாவலைப் பூரணப்படுத்தியுள்ளார்.
ஆய்வுத் துறையில் மிகுந்த ஈடுபாடுடைய இவரது “இன்றைய ஈழத்துப்
புதுக் கவிதைகள்’ ’ஹைக்கூ எழுதுவது எப்படி? "மாத்தறை காஸிம் புலவர்”, “தென்னிலங்கை இலக்கிய வளர்ச்சி” என்பன நூல்வடிவம் பெற்றுள்ளன. இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டு மலர்களில் வெளிவந்த, "தமிழ்ச் சிறுகதை ஆக்கத் துறையில் இலங்கை இந்திய முஸ்லிம் கதைக்கும் பங்கு’, புதுக்கவிதைளில் புராணவியல் படிமம், என்பன பாராட்டுப் பெற்ற ஆய்வுக் கட்டுரைகளாகும். தினகரனில் தொடராக வந்த "செவிநுகர் கனிகள்’ குறிப்பிடத்தக்கதாகும்.
“ஏ. எம். ஏ. அஸிஸ் நூல் விமர்சனம்’ ’பத்ர் ஓர் வரலாற்றுத் திருப்பம்” “விலங்குகள் நொருங்குகின்றன”. என்பன கூட்டு முயற்சியாக இவர் வெளியிட்ட நூல்களாகும். *
தமிழ் ச் சிங்கள மொழிப் புலமை காரணமாக இவர் இனங்களுக்கிடையிலான ஒரு பாலமாகத் திகழ்ந்து வருகிறார். உதிரியாகச் சிறுகதை, கவிதை, இலக்கியக் கட்ரைகளை நிறைய மொழி
-107

Page 64
பெயர்த்துள்ளார். நண்பர்கள்” என்ற மொழி பெயர்ப்பு நாவல் விரைவில் வெளி வரவுள்ளது. ”தேசத்தில் பிறந்த குழந்தைகள்” என்ற மற்றொரு நாவலை மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறாா.
பத்திரிகைத் துறைகளில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. "ஆசிரியர் குரல்'. "பாமிஸ்’. ஆசிரியர் குழுவில் கடமையாற்றிய அனுபவத்தோடு "அஷஷ"ரா” ”செய்திமடல்’ பத்திரிகைகளைத் தாக்கம் நிறைந்த வகையில் நடாத்தினார். 1994-ல் தினகரனில் சேர்ந்து இன்று பிரதி ஆசிரியராக உயர்வு பெற்றுள்ளார். பரவலாகப் பேசப்படும் சிங்கள இலக்கிய அறிமுகப்பகுதியான சாளரத்தையும், இளைய இதயங்களின் ஆக்கக் களமாக புதுப் புனலையும் நடத்தி வருகிறார்.
இசைத்துறையில் இவருக்கு மிகுந்த ஈடுபாடுண்டு. 1974-ல் ஒலி பரப்புக் கூட்டுத்தாபன இசைப் பரிசோதனையில் தேறி நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார். தற்பொழுது சுயமாக இசையமைத்துப் பாடிவருகிறார். இவர் இயற்றிய "வெளிச் சிறகடிக்கும் வெண்புறாவே' தொலைக்காட்சிப் பாடல் அவருக்குப் பெரும் பிரபல்யத்தை ஏற்படுத்தியது. வெண்தாமரை இயக்கப் பாடலின் தமிழ்வடிவம் இவருடையதே. எஸல களுவர. யுகவிளக்கு போன்ற டெலி நாடகங்களிலும் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
தொழில் காரணமாக குருநாகல் பகுதியில் கடமையாற்றியபோது பாரம்பரிய கிராமியக் கலைகளில் இவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அந்த அனுபவங்களை நண்பர்களோடு இணைந்து சொந்தக் கிராமத்தில் பிரயோகித்ததால், இன்னும் அக்கலைகள் திக்குவெல்லையில் செழித்து நிற்கின்றன.
கலை - இலக்கிய சமூக மேம் பாட்டை அடிநாதமாகக் கொண்டு ஒவ்வொரு, காலகட்டத்திலும் பல்வேறுமட்டங்களில் இளைஞர்களை ஒன்று திரட்டிச் செயற்பட்டு வந்துள்ளார். இன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. சர்வசமயச் சமாதான அமைப்பின் மாத்தறை மாவட்ட உபதலைவராகவும், தென்னிலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளராகவும், பூரீலங்கா முஸ்லீம் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அமைப்புச் செயலாளராகவும் காரியமாற்றும் இவர் ஊடக ஆலோசனைச் சபை உறுப்பினருமாவார்.
அரச பிரதிநிதியாகவும், தனிப் பட்ட அழைப்பின் பேரிலும் சோவியத் ரஷ்யா, லிபியா, பாகிஸ்தான், இந்தியா முதலிய நாடுகளில் இடம் பெற்ற மகாநாடுகளில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியுள்ளார்.
இவரது கலை - இலக்கியச் சேவையை மதித்து முஸ்லீம் கலாச்சார அமைச்சு ‘அறிவுத் தாரகை” என்ற பட்டமளித்து கெளரவித்தது. ஒலிபரப்புத் துறைக்கான சர்வதேச உண்டா விருது “கலைச் சாளரம் வாராந்த
-108

நிகழ்ச்சியை முன் நிறுத்தி வழங்கப்பட்டது. மக்கள் சமாதான அமைப்பின் இலக்கிய விருதும் இவரை நாடிவந்தது.
இளம் வயதிலேயே ஆசிரிய நியமனம் பெற்ற இவர் பயிற்றப்பட்ட ஆசிரியராக, பட்டதாரியாக, சர்வதேச விவகார டிப்ளோமாதாரியாகத் தனது அறிவை விருத்தி செய்து கொண்டார். மாத்தறை மாவட்டத் தமிழ்மொழி ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது சுயவிருப்பத்தின் பேரில் ஓய்வு பெற்றார். பின்னர் திறந்த பல்கலைக் கழக விரிவுரையாளராகவும் சிலகாலம் கடமையாற்றினார்.
தற்பொழுது வெலிகமையில் மனைவி பாகிறாவோடு வாழ்ந்து வரும் இவருக்கு ஐந்து குழந்தைகள். பெண் பிள்ளைகள் இருவரும் திருமணம் செய்துவிட்டனர். தந்தையின் வழியில் தனயன் ஒருவர் தேசியப் பத்திரிகையொன்றில் கடமையாற்றுகிறார்.
பன்முகக் கலைஞராகச் செயற்படும் எம். எச். எம். ஷம்ஸ் அவர்களிடம் இலக்கிய ஆளுமையே மேலோங்கி நிற்கிறது. இலக்கிய சிருஷ்டித்துவமே இவரது இருப்பை உறுதிப்படுத்தும் என்பதால், தனது படைப்புக்களை கூடிய கரிசனையெடுத்து வெளிக் கொணர வேண்டுமென்பதே, இலக்கிய உலகின் எதிர்ப்பார்ப்பாகும்.
ஆகஸ்ட் - 1998
A.

Page 65
இலங்கை வானொலியின் இனிய பெண்
அறிவிப்பாளர்
தம்பிஐயா தேவதாஸ்
ரசியல், சமூகம், பொருளாதாரம், கலை, கலாசாரம் போன்ற பல்வேறு
துறைகளில் பெண்களும் சாதனைகள் படைத்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஒலிபரப்புத் துறையிலும் பல பெண்கள் முன்னணியில் நிற்கிறார்கள். இவர்களில் திருமதி. இராஜேஸ்வரி சண்முகத்தை மிகவும் விசேடமாகவே குறிப்பிட வேண்டும்.
கவிக்குயில் என்றால் சரோஜினிநாயுடு. கானக் குயில் என்றால் எம்.எஸ்.சுப்புலட்சுமி, இசைக் குயில் என்றால் சுசீலாவும், லதாமங்கேஸ்காரும், சின்னக்குயில் என்றால் சித்ரா என்று அமைவதை நாம் தெரிந்து கொண்டு விடுவோம். இந்தக் குயில்களிடையே வானொலிக் குயில் ஒன்றும் இருக்கிறது. அது ஒரு இலங்கைக் குயில். அதுதான் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள்.
இலங்கை வானொலி வர்த்தக சேவையின் “பொங்கும் பூம்புனல்" மூலமும் கொழும்பு சர்வதேச ஒலிபரப்பின் “பொதிகைத் தென்றல்" மூலமும் இலங்கை இந்திய நேயர்களை மட்டுமின்றித் தமிழ் கூறும் நல்லுலகில் வாழுகின்ற அனைத்துத் தமிழ் ரசிகர்களையும் தன் இனிய குரலால் கவர்ந்து வந்தவர்தான் இந்த ராஜேஸ்வரி சண்முகம்.
-110
 

கொழும்பில் பிறந்து வளர்ந்த திருமதி. ராஜேஸ்வரி சண்முகம் கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்றவர். 1952ஆம் ஆண்டு வானொலிக் கலைஞராகத் தனது ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தவர். 1971-ஆம் ஆண்டு நிரந்தர அறிவிப்பாளராக நியமனம் பெற்று முதலாந்தர அறிவிப்பாளராக உயர்ந்து அண்மையில் ஓய்வு பெற்றார். வானொலி நிலையத்திலிருந்து ஓய்வு பெற்று விட்டாரே தவிர, அவரது இனிய குரல் இன்னும் வானொலிகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது. அவர் வானொலி நிலையத்தில் சேவையாற்றிய போது செய்த சாதனைகள் மிக அதிகமே.
திருமதி ராஜேஸ்வரி நாடகத்துறை மூலமே முதன் முதலில் கலைத்துறைக்கு அறிமுகமானவர்.
பாடசாலைகளுக்கிடையிடையிலான நாடகப் போட்டியில் இவர் கண்ணகியாகத் தோன்றி மேடை ரசிகர்களை அதிர வைத்தார். எஸ். எம். ராமையா எழுதிய “விடிவெள்ளி” என்ற நாடகமே இவர் முதன் முதலில் நடித்த வானொலி நாடகமாகும். சில்லையூர் செல்வராஜன் எழுதிய ”சிலம்பின் ஒலி” என்ற தொடர் நாடகத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றவர். வானொலி நாடகங்களைப் போலவே உரைச்சித்திரம், மாதர் நிகழ்ச்சிகள் எல்லாம் இவர் குரலால் சிறப்புப் பெற்றன.
இலங்கையில் தயாரான பல தமிழ்ப் படங்களின் கதாநாயகிகள் வாயசைத்தனரே தவிர, அவர்களில் பலருக்க ராஜேஸ்வரி சண்முகமே குரல் வழங்கியிருந்தார். வி. எஸ். துரைராஜா தயாரித்த “குத்துவிளக்கு” அவற்றுக்கு ஒரு நல்ல உதாரணமாகும்.
ஒலிபரப்புத்துறையில், வானொலி நாடகங்கள், நிகழ்ச்சி அறிவுப்புக்கள், விளம்பர நிகழ்ச்சிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகளைத் தயாரித்துக் குரல் கொடுத்த போதும் கொழும்பு சர்வதேச ஒலிபரப்பில் இவர் தயாரித்து வழங்கிய “பொதிகைத் தென்றல்” என்ற நிகழ்ச்சியே இவருக்குப் பெரும் புகழை வாங்கிக் கொடுத்தது. இந் நிகழ்ச்சித் தொடர் 150 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து ஒலித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டிலுள்ள சாதாரண நேயர்களை மட்டுமன்றி அங்கேயுள்ள பேராசிரியர்களையும் கவர்ந்து விட்டது. ஏன் கவிஞர் வைரமுத்துவைக் கூடப் பேசவைத்து விட்டது. அவர் ராஜேஸ்வரிக்கு பாட்டினாலேயே பாராட்டுப் பத்திரம் அனுப்பி இருந்தார்.
"வசந்தத்தில் தான் குயில் கூவுமாம். இந்த வானொலிக் குயிலுக்கு வருடமெல்லாம் வசந்தமாகவே திகழ வாழ்த்துகிறேன். வாழ்த்துக்களோடு வைரமுத்து' என்று பாட்டு எழுதி அனுப்பினார். ராஜேஸ்வரி சண்முகத்தின் மணி விழாவுக்காகக் கவிஞர் வைரமுத்து அனுப்பிய மணியான வாழ்த்துக் கவிதை அது.
-111

Page 66
இவருக்குக் கவிஞர்கள், ரசிகர்கள் மட்டுமல்ல, சில நிறுவனங்களும் பட்டங்கள் வழங்கிக் கெளரவித்தன. 1987-இல் அமைச்சராக இருந்த செ. இராசதுரை இவருக்கு “மொழிவளச் செல்வி’ என்ற பட்டத்தை வழங்கினார். 1992-இல் சாஸ்தா பீடம் “வாசிக கலாமணி’ என்ற பட்டத்தை வழங்கியது. 1994-இல் இந்து கலாசார அமைச்சு "தொடர்பியல் வித்தகர்' என்ற பட்டத்தை வழங்கியது. 1995-இல் இந்தியாவின் தென் பொதிகைத் தமிழ்ச் சங்கம் "வானொலிக் குயில்” என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது.
“இந்தப் பட்டங்களைவிட நேயர்களின் உள்ளங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றனவே வாழ்த்துப் பட்டங்கள் அவை தான் என்னை மகிழ்வடையச் செய்கின்றன. எந்த நிகழ்ச்சியானாலும் அர்ப்பணிப்புச் சிந்தையுடன் கடமை புரிந்தேன். எனது குரல் இறைவன் கொடுத்த வரம் என்று கூறும் ராஜேஸ்வரி, தான் தயாரித்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கேட்கத் தவறுவதேயில்லையாம்.
திருமதி ராஜேஸ்வரியின் குடும்பமே ஒரு கலைக் குடும்பமாகும். கணவர் சி.சண்முகம் யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவில் பிறந்தவர். அரசாங்க உத்தியோகத்தரான இவர் ஒரு அறிவிப்பாளராகவும் இருந்தவர். பல வானொலி நாடகங்களை எழுதினார். சில சிங்களப் படங்களின் மூலக்கதை இவருடையதே.
மகள் வசந்தி இலங்கை வானொலியில் தயாரிப்பாளராகக் கடமையாற்றி இப்பொழுது திருமணம் முடித்து இந்தியாவில் வாழுகிறார்.
மூத்த மகன் சந்திரமோகன் பிரபல பாடகர். இளைய மகன் சந்திரகாந்தன். சுவர்ணவாகினியில் அறிவிப்பாளராகக் கடமையாற்றுகிறார்.
இவர்களைப் போலவே திருமதி ராஜேஸ்வரி சண்முகமும் எமது ஒலிபரப்புத்துறைக்கு மேலும் சேவை செய்ய வேண்டும் என்று நாமும் வாழ்த்துகிறோம்.
-செப்டம்பர்-2000
A
-112

இலக்கியக் காவலர்
துரை விஸ்வநாதன்
கே. கோவிந்தராஜ்
றக்கும் போதே யாரும் பேரோடும் புகழோடும் பிறப்பதில்லை. பிறந்தவர்கள் எல்லாருமே பேரோடும் புகழோடும் வாழ்ந்ததுமில்லை. எப்படியும் வாழலாம் என்று பலர் இருக்கிறார்கள். இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு சிலர், வாழ்க்கையை வரையறுத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.
இப்படித்தான் வாழவேண்டாம் என்று இருப்பவர்கள் செய்யும் செயல்கள், கடைப் பிடிக்கும் ஒழுக்கங்கள், நேர்மை, பேச்சுத் தவறாமை, நல்லோர் இணக்கம் போன்ற விடாப்பிடியான கொள்கைகள் மனிதனை மகான்களாக்கி விடுகின்றன!
அந்த வகையில், பெரியவர் துரை விஸ்வநாதன் அவர்கள், நேர்மை வழுவாத, பேச்சு மாறாத, சொன்னதைச் செய்து காட்டும் சாதனையாளராக, இலக்கிய நெஞ்சங்களை நேசிப்பவராக, நல்ல வாசகராக, வலதுகை கொடுப்பதை இடதுகைக்குத் தெரியாதவாறு உதவிசெய்யும் மனப்பாங்குடையவராக இருப்பதுடன் ஒரு தொழிலதிபராகவும் இருக்கிறார் என்றால், அவருக்கு நிகர் அவரேதான்! - இது எதார்த்த உண்மை!
எழுத்தாளர்களை, இலக்கியவாதிகளைக் கண்டதும், “ஏதும் கேட்க வருகிறானோ? என்று ஒளிந்து கொள்ளும் முதலாளிமார்களிடையே, அவர்களைத் தேடி உதவி செய்யும் பண்பாளராகத் திரு. துரை விஸ்வநாதன் திகழ்கின்றார்.
-113

Page 67
தொழிலதிபராக இருந்து கொண்டு. இலக்கியத்தையும், இலக்கிய நெஞ்சங்களையும் நேசிப்பவராக இருப்பது அவரின் மேன்மையான பண்புகளில்
Q960.
இன்று எதற்கெடுத்தாலும், மலையகம், மலையகச் சிறுகதை, மலையக நாடகம், மலையக நூல்கள் எனத் தேசிய இலக்கியம் பற்றி விமர்சனம் எழுதுபவர்கள் தேடி அலைகிறார்கள்.
மலையக எழுத்துக்களை, இலக்கியங்களை, ஒரு காலத்தில் வசதியாக மறந்து போனவர்கள். “மலையக இலக்கியத்தை உள்ளடக்காமல் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பூரணப் படுத்த முடியாது’ என்று சொல்கிறார்கள்.
அவர்களின் தேடுதல்களுக்கு துரை. விஸ்வநாதனின் இலக்கியப் பணி துணை செய்திருக்கிறது என்றால் மிகையாகாது!
கள்ளத்தோணி, நாடற்றவன், தோட்டக் காட்டான், மலைநாட்டான், என்று ஓரங் கட்டப்பட்ட காலத்திலேயே மலையக மக்களின் விழிப்புக்காக எழுதத் தொடங்கிய திரு. நடேசய்யர் அடங்கலாக இன்று எழுதிவரும் மலையக இளம் எழுத்தாளர்களின் கதைகளையும் தெரிந்தெடுத்து "மலையகச் சிறுகதைகள்” என்ற பெயரில் மலையகச் சிறுகதைத் தொகுப்பொன்றை இவரது “துரைவி” பதிப்பகத்தின் முதலாவது நூலாக வெளியிட்டார். இது வரலாற்றுச் சாதனைகளில் ളു60|[].
முதன் முதலில் முப்பத்தி மூன்று மலையக எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புக்களையும் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்!
இரண்டே ஆண்டில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு, சேவை மனப்பான்மையுடனும், பெருந்தன்மையுடனும், துரைவி பதிப்பகத்தின் மலையகம் பற்றி ஏழு நூல்கள் வெளிவந்திருக்கின்றன என்றால் நம்புவீர்களா?
முப்பத்தி மூன்று மலையக எழுத்தாளர்களின் முன்னூற்று இருபத்தெட்டு பக்கத்தில் "மலையகச் சிறுகதைகள்’ தொகுதி.
நூற்றி அறுபது பக்கத்தில், மலையகத்தின் இலக்கியச் சொத்தாக விளங்கும் தெளிவத்தை ஜோசப்பின் மூன்று குறுநாவல்களடங்கிய "பாலாயி’ என்ற நூல்.
ஐம்பத்தைந்து எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து "உழைக்கப் பிறந்தவர்கள்” என்ற தலைப்பில், ஐநூறு பக்கங்களில் மிகப்பிரமாண்டமான அழகிய கவருடன் மூன்றாவது நூல்.
தொடர்ந்து, சாரல் நாடனின், "மலையகம் வளர்த்த தமிழ்”, “சக்தி பாலையாவின் கவிதைகள்', ரூபராணி ஜோசப்பின் “ஒரு வித்தியாசமான விளம்பரம்", அந்தனி ஜீவாவின் "மலையக மாணிக்கங்கள்" என்று ஏழுநூல்களை
-114

வெளியிட்டு இவ்வருட இறுதிக்குள், கே. கோவிந்தராஜ் எழுதிய "தோட்டத்து கதாநாயகர்கள் (நடைச்சித்திரம்) என்ற நூலையும் வெளியிட உத்தேசித்துள்ளார்.
சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கியக் கட்டுரைகள், சின்னஞ்சிறு கதைகள், மலையக முன்னோடிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய நூல், நடைச்சித்திரம் என்று வித்தியாசமாக மலையக இலக்கியங்களை நூலுருவாக்கி மலையகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் திரு. துரை. விஸ்வநாதன்! W
மேற்குறிப்பிட்ட ஏழு நூல்களும் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட வருடகால மலயக மக்களின் வாழ்க்கை வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சரித்திர ஆவணமாகத் திகழும் என்பது மறக்க முடியாத உண்மை.
இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற் போல் இவர் தனது பெற்றோர்களான அமரர். திரு. துரைசாமி ரெட்டியார். திருமதி சிவகாமி அம்மாள் இருவரின் நினைவாகத் தினகரன் அனுசரணையுடன் நடத்தும் அகில இலங்கைச் சிறுகதைப் போட்டி திகழ்கின்றது.
இலங்கையின் இலக்கிய வரலாற்றிலேயே ஒரு சிறுகதைப் போட்டிக்குப் பரிசுத் தொகையாக ஒரு இலட்சத்து ஓராயிரம் ரூபாய் (ரு 101000/=) வழங்குவது இதுவே முதற் தடவையாகும். அது இவரது பரந்த மனத்தையும் இலக்கிய ஆர்வத்தையும் பறைசாற்றுகிறது.
முதற்பரிசாக ஒரு சிறுகதைக்கு 15000/= ரூபாயும், இரண்டாவது பரிசாக இரண்டு சிறுகதைகளுக்கு 20000/= ரூபாயும், மூன்றாவது பரிசாக மூன்று சிறு கதைகளுக்கு 21000/= ரூபாயும், ஆறுதல் பரிசாக ஒன்பது சிறுகதைகளுக்கு 45000/= ரூபாயும் பரிசளித்து எழுத்தாளர்களைக் கனம் பண்ணும் மனம் எத்தனை பேருக்கிருக்கிறது?
ஈழத்து இலக்கிய உலகில் பொதுவாகவும் மலையக இலக்கிய உலகில் குறிப்பாகவும் திரு. துரை விஸ்வநாதன் அவர்களின் நாமம் என்றும் மலையாக உயர்ந்து நிற்கும் என்பது திண்ணம்.
- அக்டோபர்.98
A
-115

Page 68
கும் Ub சர்வதேசய் புதல்வன்!
முதல் சந்திப்பு
களனி புகையிரத நிலையத்தில் ஒரு நாள்.
- 48 காலத்தில் என நினைக்கிறேன். தாடி வளர்த்து, வெள்ளை 1947 நிற தேசிய உடையில் தோன்றும் ஒரு சுவாமியார் போன்றிருந்த ஒருவரின் தோற்றம் என் மனதைப் பெரிதும் கவர்ந்தது.
அணுகினேன். அறிமுகமானேன்.
அவரது பெயர்தான் செல்லப்பா குமாரசாமி.
அப்பொழுது நான் சமசமாஜக் கட்சியில் தொழிற் சங்கத்துறையில் இயங்கி வந்தேன். அடிக்கடி தோழர் கும் முடன் பொருள் செறிந்த தத்துவார்த்த விவாதங்களை நடத்தினேன். கம்யூனிஸ்ட் தத்துவங்களின் பிசகற்ற - தவறற்ற கொள்கையும் தன்மையும் தீட்சண்யமும் கும்மின் விவாதங்கள் மூலம் வெளிப் பட்டது.
அவரது வாதங்களினால் ஆகர்ஷரிக்கப்பட்ட எனது சிந்தனை தூண்டப்பட்டது. இதுவே பிற்காலத்தில் கம்யூனிஸ்டாவதற்கு வழி
-116
 

கோலியது. என்னைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய வைப்பதற்கு முதலில் தகுந்த ஆலோசனைகளை நல்கிய தோழர் கும்மை இந்த வகையில் எனது வழிகாட்டி என்றே குறிப்பிடலாம்.
6-வது மாநாட்டில் அவரது திறமை வெளிப்பட்டது.
கட்சியின் 6-வது மாநாட்டில் தேசிய முதலாளித்துவ உறவு - ஏகாதிபத்திய எதிரணிகளில் இடதுசாரிகளின் பங்கு, கம்யூனிஸ்ட் கட்சி இப்பயணத்தில் தனது சுயாதீனத்தைப் பாதுகாத்துத் தீர்க்கதரிசனத்துடன் இயங்குவது போன்ற பிரச்சினைகளை மிகத் தெளிவாக, ஆழமாக ஆராய்ந்தார் தோழர் கும். இம் மாநாட்டில் மத்திய குழுவில் அங்கத்துவமும் அரசியல் குழுவில் அங்கத்துவமும் அவருக்கிக் கிடைத்தன.
G3UTJ Tu' Lë
தமிழ் மக்களினது உரிமைகள் பற்றிப் போராடுகையில் தானொரு சர்வதேசியவாதி என்கின்ற நிலையிலிருந்து ஒரு சிறிதும் வழுவாமல் மிகப் பொறுப்பு வாய்ந்த மார்க்ஸியவாதி என்ற முறையில் தனக்குச் சரியெனப் பட்ட கருத்துக்களை முன்வைத்து நிமிர்த்தாட்சண்யமாக வாதாடுவதில் வல்லவர். கட்சியின் கட்டுக்கோப்பை ஆணித்தரமாகக் கட்டிக் காப்பதுடன் அதை வழி நடத்துவதிலும் தளம்பலற்ற உறுதியுடன் செயல்பட்டவர்.
சொந்த வாழ்க்கை
சிறு குழந்தையைப் போன்ற சுாபாவம். பழகுவதற்கு இனியவர். நகைச்சுவையாகச் சம்பாவிப்பதில் வல்லவர். மிக எளிமையானவர். தோழர்களை நேசிப்பதில் எதற்கும் பின் நிற்காதவர். அவர்களின் தனிப்பட்ட கஷட நஷ்டங்களில் அனுதாபமும் அக்கறையும் கொண்டவர். கட்சிக்காகத் தன்னை அர்ப்பணித்து இயங்குபவர். தனது சொந்த இன்ப துன்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கடைசிவரை பிரமச்சாரியாக வாழ்ந்தவர்.
ஒரு சம்பவம்.
நான் அவருடன் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசிற்கு மத்திய குழுவின் சார்பில் பிரதிநிதிகயாக விஜயம் செய்திருந்த நாட்கள் அவை. ஒரு நாள் ஒரு நிகழ்ச்சியில் பங்கு பற்றிவிட்டு நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பியிருந்த வேளையில் அங்கு விஷேச அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்ததைக் கண்டு நாங்கள் ஒன்றும் புரியாமல் விழித்தோம்.
இந்தத் திணறுதலிலிருந்து விடுபடுமுன், ஜே. ஜ. குடியரசின் கட்சித் தலைவர்களின் ஒருவர் முன் வந்து தோழர் கும்மைக் கைலாகு கொடுத்து
-117

Page 69
வரவேற்று, கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்தார்.
நாங்கள் ஏதுமறியாது திணறித் தவித்தோம்.
ஆச்சரிய மிகுதியுடன் விசாரித்தார் தோழர் கும்.
‘இதெல்லாம் என்ன? என்ன விசேஷம்? என்றார்,
அவர்கள் பதிலளித்தார்கள்! “ஏன் உங்களுக்கு இந்தத் தினம் நினைவில்லையா? இன்று தான் உங்களுடைய 50-வது பிறந்த நாள்!" என்றார்கள்.
அப்பொழுதுதான் எனக்கும் கும்மிற்கும் புரிந்தது.
பிறந்த நாளா? அது எங்கே என் நினைவில் இருக்கப் போகின்றது என்று கும் கூற, நானும் தலையசைத்தேன்.
இன்று எவரெவர்களெல்லாம் பிறந்த நாள் விழா எடுப்பதைப் பார்க்கின்றோம். ஆனால் இச் சம்பவம் இரண்டு சம்பவங்களை எனக்கு உணர்த்தியது. ஒன்று கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குத் தன்னை பூரணமாக ஒப்புக் கொடுத்து வேலை செய்பவன் தனது சொந்த விருப்பு, வெறுப்பு ஏன் வாழ்க்கையையே துறந்து செயல்படுகிறான். இரண்டு, சர்வதேசிய ரீதியில் நேசக் கட்சிகளின் மீதும் அவைகளின் அங்கத்தவர்களின் மீதும் சோஷலிஸ் , நாட்டுக் கட்சிகள் எவ்வளவு அக்கறையும் அபிமானமும் பேரன்பும் கொண்டுள்ளனர் என்பதாகும்.
-3;"6ả7 - 1978
-118

எங்கள் சமகாலத்தில் சர்வதேசத் தரத்தில் ஓர் ஆடற் கலைஞன்
புதுவை இரத்தினதுரை
னது வாழ்க்கைக்கான தொழிலே சிற்பக் கலையாக வாய்த்ததின் 6 அதிர்ஷ்டமோ என்னவோ இயல்பாகவே எனக்குப் பிற கலைகள்
மீது மோகம் அதிகம். எனினும் பரதத்தைப் பற்றியோ அல்லது கதகளி, மணிப்புரி, குச்சிப்பிடி என்பன பற்றியோ எனக்கு எதுவுமே தெரியாது. என்றாலும் இவைகளின் பால் எனக்கு நாளுக்கு நாள் நாட்டம் அதிகரித்தே வருகின்றது. இந்தக் கலைகளின் நயப் பால், வேல் ஆனந்தன் என்ற நாட்டியக் கலைஞனின் நாமத்தை நானறிந்து பத்து வருடங்களுக்கு மேலாகின்றது.
ஆண்டோ, தேதியோ எனக்குச் சரியாக நினைவில்லை. வீரசிங்க மண்டபத்தில் வேல் ஆனந்தனின் திருநெல்வேலிக் கலைக் கோவில், கீழைத்தேய நடனக் கூட்டு நாட்டிய நிறுவகம் வழங்கிய பஸ்மாசுரன் 77 நாட்டியம் மேடையேறியபோது பார்வையாளர்களில் ஒருவனாகி மெய்மறந்து மகிழ்ந்திருக்கிறேன். அரங்கத்தில் இந்த அற்புதமான ஆடற்பாதங்களைப் பார்த்து ஆனந்தப் பட்டதைத் தவிர, எனக்கும் இவருக்கும் பழக்கமென்று எதுவுமில்லை.
ஆனால் பிறகு இந்தக் கலைஞனுடன் சேர்ந்து பழகவும், இணைந்து பணியாற்றவும் வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தபோது தான் வேல் ஆனந்தன் எவ்வளவு அற்புதமான ஆடற்கலைஞனோ, அதைவிட மேலான மனிதன், நண்பன் என்பதை என்னால் உணர முடிந்தது.
-119

Page 70
நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட இந்தக் கலைஞன் எத்தனையோ கற்பனைகளை நெஞ்சில் சுமந்தபடி, நண்பர்களிடம் மட்டும் தன் கனவுகளைக் கதைத்தபடி, சதா நடனம், நாட்டியம் என்ற மையத்தைச் சுற்றியே வலம் வந்தபடி, வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாகவே கழித்துக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் ஏற்றாற் போல் இணைந்து கொள்ளும் நல்ல வாழ்க்கைத் துணைவியை அவர் தேடிக் கொண்டதும் ஒரு காரணமாகும். எனக்குச் சில வேளைகளில் என்னுடைய சமகாலத்தில், எங்களுடன் ஒருவனாக, ஒரு நாட்டிய மேதை வாழ்க்கின்றான் என்ற நினைப்பே சுவையாகி விடுகின்றது.
தனது தாயாரினதும் நெடுந்தீவு மகா வித்தியாலய முன்னை நாள் அதிபர் திரு. நவரத்தின சிங்கத்தினதும் தூண்டுதலாலும், இயல்பாகவே ஆடப்பிறந்த தன் பாதங்களின் உந்துதலாலும் பதினாறு வயதிலேயே இந்தியாவுக்குப் பயணமானார். அங்கு இவரது குரு நாதரும், கதகளி நாட்டியத்தை நவீன மயப்படுத்தியவருமான நாட்டிய மேதை கோபிநாத்தின் தொடர்பு ஏற்படுகின்றது. இரண்டு வருடங்கள் அவருடன் உடனிருந்து கதகளி நாட்டியத்தைக் கற்று விட்டு, கோபிநாத்தின் ஆலோசனையின் பேரில் டில்லி சென்று கேரளா கலா கேந்திராவில் இரண்டு வருடங்கள் தனது பயிற்சியைத் தொடர்ந்தார். பின்னர் பந்தன நல்லூர் சுப்பராய பிள்ளையிடம் முறைப்படி பரதம் கற்றுத் தெளிந்தார்.
ஆடப் பிறந்த கால்கள் ஓரளவுடன் நின்று விடுமோ? போதாது, போதாது என்று பாதங்கள் துடித்தன போலும். இதனால் சர்வதேச கலா நிலையமான கேரள விஸ்வ கலா கேந்திராவில் மேலும் இரண்டு வருடங்களைப் பயிற்சிக்காகச் செலவிடுகின்றார். மேலதிகமாக ஒன்பது மாதங்களை அங்கு கழித்துவிட்டு, பூரணத்துவம் பெற்ற ஆடல் அழகனாக 1966-ம் ஆண்டு இலங்கை திரும்பினார். 1968-ம் ஆண்டு இந்தக் கலைஞனுக்குத் திருமணம் நடைபெற்றது. 1970-ம் ஆண்டு ‘பஸ்மாசுர மோகினி இவரது நாட்டிய நாடகம் மேடையேறிப் பல்லாயிரக் கணக்கானோரின் பாராட்டுக்குள்ளாகின்றார்.
இந்திய மக்கள் தேற்றா அமையம், 1973-ம் ஆண்டு ஈழத்திலிருந்து அங்கீகரித்த ஒரே ஒரு ஆடல் வல்லுனன் வேல் ஆனந்தன் என்ற தகைமையை அளித்து இவரைக் கெளரவித்தது. அந்த அமையம் அங்கீகாரம் வழங்கிய இலங்கைக் கலைஞன் இன்றுவரை இவர் ஒருவரே. 1978-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள மாநில அரசு நடாத்திய மகாகவி வள்ளத்தோள் நூற்றாண்டு விழாவுக்கு உலகறிந்த, நர்த்தகி ருக்மணி அருண்டேல் தலைமை தாங்கிய அரங்கில் இலங்கையில் இருந்து கேரள அரசின் அழைப்பின் பேரில் சென்ற ஒரே ஒரு கலைஞனும் இவரே தான். இந்தப் பயணத்தின் போது ஈழத்தின் மகிமையைக் கேரளாவில் மீண்டுமொரு முறை காட்டிவிட்டுத் திரும்பினார். 1982-ம் ஆண்டு லண்டன் ஸ்கொட்டின் அழைப்பை ஏற்று ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தைத் தனது நாட்டியக் குழுவுடன் ஆரம்பித்தார்.லண்டன் பல்கலைக் கழகத்து மண்டபத்தில் இவரது நாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றபோது, இந்தியக் கலைஞர்களுக்கே
-120

நிரம்பாத அந்த மண்டபம் நிரம்பி வழிந்ததாக இன்றும் லண்டனில் இலங்கையர் மத்தியில் பேசப்படுகின்றது. லண்டனில் இருந்து மேற்கு ஜேர்மனி, பெர்லின், பிரான்ஸ் என்று பல நாடுகளுக்குச் சென்று அங்கெல்லாம் தனது பாதப் பதிவுகளை பதித்து விட்டு, யாழ்ப்பாணக் கலைஞர்கள் சர்வதேசத்துக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிறுவி விட்டுத் தாயகம் திரும்பினார். பிரான்சில் முதல் நாள் இவரது நிகழ்ச்சியைப் பார்வையிட்ட குஜராத்திய கலாச்சார அமைப்பு மறு நாள் அதே நிகழ்ச்சியைத் தங்கள் அமைப்பின் சார்பில் நடத்தி வேல் ஆனந்தனையும் குழுவினரையும் கெளரவித்து அனுப்பியது.
இவர் ஐரோப்பிய நாடுகளுக்காக நாட்டியச் சுற்றுலா செய்த காலத்தில் இவரின் நடனத்தால் கவரப்பட்ட செல்வி சூரியேபக்லோப் என்ற ஐரோப்பிய இளம் பெண் நடனம் கற்றுச் சில அரங்குகளில் இவரது குழுவினருடன் இணைந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்தக் கலைஞனின் முத்திரை பதித்த நாட்டிய நிகழ்ச்சிகளாக இதுவரை இந்திரன் ஆணை, பஸ்மாசுர மோகினி, பாமா விஜயம், கீதா அபசுரணம், பெண்புறா. அருளும் இருளும், ஆலய மணி, தேரோட்டியின் மகன். பஸ்மாசுரன் 77 என்ன தான் முடிவு போன்றவை அரங்கேறியுள்ளன. இதை விட விஸ்வாமித்திர மேனகா, கீதா உபதேஷ், கணையாழி, சுந்தோ உபசுந்து, திலோத்தமை, போன்ற ஓரங்க நாடகங்களையும் உருவாக்கி எமக்குத் தந்துள்ளார். இவற்றில் ஆலயமணி, சாதி அமைப்பை நொருக்கவும், பஸமாசுரன் 77, வகுப்புவாதப் புயலின் கொடுரங்களையும், என்னதான் முடிவு, ஈழ விடுதலைப் போரின் போக்கையும் காட்டி நிற்கின்றன.
இந்தக் கலைஞனால் திருமதி பத்மினி, செல்வேந்திரகுமார், திரு. வின்சன் உட்பட ஐம்பதுக்கு மேற்பட்ட இளம் ஆடற் கலைஞர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வேல் ஆனந்தனின் புதல்வி செல்வி ஷோபனா ஆகும். புலிக்குப் பிறந்தது புலிதான் என்பதை மேடையில் நிரூபிக்கும் செல்வி ஷோபனாவின் ஆடலையும், அபிநயங்களையும், பாவத்தையும் அண்மையில் இவர்கள் மேடையேற்றிய என்ன தான் முடிவு நாட்டிய நிகழ்வைப் பார்த்தவர்கள் அனைவருமே பாராட்டுகின்றனர். மேடையில் அப்பனும், மகளும், அருச்சுனனும், கண்ணனுமாக நிற்கும் காட்சி அற்புதமானது.
போலிகளுக்கு அளிக்கப்படும் அங்கீகாரங்கள் திறமைகளைப் பின் தள்ளி விடுவதாக அடிக்கடி வேல் ஆனந்தன் கூறுவார். வைத்திய கலாநிதி பிலிப் தம்பதிகள் கலைக்கோவிலின் வளர்ச்சிக்காக எடுக்கும் நடவடிக்கைகளையும் வியந்துரைக்கும் கலைகளின் மீதான தணியாத தாகத்தையும் வியந்துரைக்கும் இவர் நடனம், நாட்டியம் உட்பட அனைத்துக் கலைவடிவங்களும் கிராமிய மட்டத்துக்கும், வெகு சனத்தரத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அந்த அடி மட்ட மக்களினால் அங்கீகரிக்கப்படுவதோடு, அம்மக்களுக்குப் பணிபுரிபனவாக வேண்டும் அல்லாது விட்டால் வெறும் சமூக அந்தஸ்துக்கும் விளம்பரத்துக்குமான அரங்கேற்றத்துடன் நின்றுவிடும், கறுவாக்காட்டுக் காரார்களது நடனப் பங்களிப்புப் போலாகிவிடும் என்று பேசும்போது அடிக்கடி குறிப்பிடுவார்.
-121

Page 71
பேராசிரியர் கைலாசபதி “உம்மைப்போல நான்கு பேரைத் தயார்ப்படுத்தி விட்டீரானால், நீர் நினைப்பதைச் சாதித்துவிடுவீர்.” என்று கூறியதை நினைவில் வைத்துக் கொண்டு இயங்கி வருகின்றார், வேல் ஆனந்தன். பேசப் பழக நல்ல நண்பனான ஒருநடன மேதை எங்களுடன் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது எமக்கெல்லாம் மகிழ்ச்சியானதே. ,
மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தைத் தனது குழுவினருடன் மேற்கொள்ள இருக்கும் வேல் ஆனந்தன் தமிழர்களின் வாழ்வையே மிகவும் துன்புறுத்தும் சீதனப் பிரச்சினையை மையமாக வைத்து நீறுபூத்த நெருப்பு என்ற நாட்டிய நாடகத்தை உருவாக்குகின்றார். விளங்காத குறியீடுகளைக் காட்டிப் பாமரமக்களைப் பயமுறுத்தும் சில நாடகக்காரர்களைப் போலல்லாது, அப்படிப் பயமுறுத்தித் தங்களை அறிவு ஜீவிகள் என்று அங்கீகரிக்க வைக்க முயல்பவர்களைப் போலல்லாது, தனது நாட்டியத்தை எல்லோருக்கும் புரியவேண்டுமென்பதில் மிகவும் கவனமாக இவர் செயற்படுகின்றார்.
மிகவும் நகைச் சுவையாகவும், கலகலப்பாகவும், பேசும் சுபாவம். ஒருவரிடமுள்ள ஆற்றல்களை அவதானித்தால், தோழமையுடன் பந்தாக்கள் ஏதுமின்றிப் பழகும் பண்பு எல்லாவற்றுக்கும் மேலாகப் பேரும், புகழும் தேடத் துளிகூடப் பறதியில்லாத தன்னடக்கம். இவைகளின் மொத்த வடிவமே வேல் ஆனந்தன் என்ற கலைஞன். எங்களுடன் - எங்களது சமகாலத்தில் - சர்வதேசத் தரத்துக்கு நிகராக ஒரு ஆடற்கலைஞன் வேல் ஆனந்தன் என்ற பெயருடன் வாழ்ந்து கொண்டிருப்பது எமக்கெல்லாம் பெருமை சேர்க்கின்றது.
ஜூலை - 1986
-122

அயர்லாந்தின்
யாழ்ப்பாணத்தான்
அதிவண. லோங் அழகளார்
வண. பிரான்சிஸ் யோசவ் அடிகள்
வ்வருடம் தேசிய வீரர் தினத்தன்று அதிவண. லோங் அடிகளார் நினைவாக முத்திரையொன்று வெளியிட்டு வைக்கப் பட்டுள்ளது. Golgif நாட்டவர் ஒருவர் நமது நாட்டின் தேசிய வீரராகக் கணிக்கப்படுகின்றாரெனின் அவர் எமது நாட்டு மக்களுக்கு ஆற்றிய சேவை அளப்பரியதாக இருக்கவேண்டும். அடிகளார் அவர்கள் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியராகவும், பின்னர் அதிபராகவும் இருந்து கொண்டே இத்தகு சேவையை வழங்கினாராதலின், அடிகளாருக்கு வழங்கப்படுகின்ற இக்கெளரவம் குறித்து, இக்கல்லூரியின் தற்போதைய அதிபர் என்ற வகையில், பெருமிதம் அடைகின்றேன்.
அடிகளாரை எண்ணும்போதெல்லாம் என் நினைவுக்கு வருபவற்றுள் முதலிடம் வகிப்பது அடிகளாரின் சமய வாழ்வுதான். நான் மாணவனாக இருந்த காலத்தில் கல்லூரில் நடைபெறும் பூஜைகளின்போது பாடல்கள் பாடும் பாடகர் குழாமில் நானும் ஒருவனாக இடம் பெற்றிருந்ததனால் அடிகளாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியது. தனிப்பாடல் வரிகளை நான் பாடிய வேளைகளில் என் குரலினிமையை மெச்சி யார் இந்தச் சிறுவன்? என ஏனையோரிடம் விசாரித்து என்னைப் பாராட்டி ஆர்வமூட்டியமையும் இன்றும் என் மனக்கண்ணில் நிற்கின்றது. ‘ஆண்டவனின் தொண்டன், நான் அவரின் கட்டளைப் படியே நடப்பேன் என்ற அவரின் கூற்று இன்றும் அவரின் இறைபக்தியை முரசறைவித்து, ஒலித்துக் கொண்டிருக்கிறது. சமய வாழ்வினுடாகவே மக்கள் தொண்டனாகவும் விளங்க
-123

Page 72
முடியுமென அவர் வாழ்ந்து காட்டிய முறைமை இறைபக்தியில் மேலும் மேலும் பற்றுக்கொள்ளச் செய்கின்றது.
அக்காலம் யுத்தகாலம். அந்த யுத்தகாலத்தில் பாதுகாப்புப் படையினரின் ஆன்மீக ஆலோசகராகவும் அடிகளார் விளங்கினார். பலாலி விமானத் தளத்திற்கு திருப்பூஜை நடாத்தச் சென்ற வேளைகளில், திருப்பாடல்களைப் பாடவென என்னையும் இன்னும் ஒரு சிலரையும் பல சமயங்களில் தம்முடன் அழைத்துச் சென்றமையும், திருப்பூஜை வேளை தவிர்ந்த ஓய்வு நேரங்களில், மாணவர்களான நாம், றோயல் விமானப்படையின் ஓடுதளமாகப் பாவிக்கப்பட்ட பலாலி விமான நிலையத்தைப் பார்த்து வியந்து நின்றதையும், அங்கே பொருத்தப்பட்டிருந்த 'றேடர் மற்றும் சமிக்ஞைக் கருவிகளையும், பேரிரைச்சலுடன் அங்கே வந்திறங்கும் யுத்த விமானங்களையும் ஆர்வம் மீதுாரக் கண்டு களித்தமையும், இன்றும் பசுமையாகவே என் நினைவிலுள்ளன. அடிகளார் வழங்கிய ஆன்மீக வழிகாட்டல் காரணமாகப் படைத்துறையினர் பலர் அவருக்கு நண்பர்களாயினர். இவ்வகையில் அன்று விமானப் படைத் தளபதியாக விளங்கிய ஏ. ஆர். வாட்லி என்பவர் அடிகளாரின் அரிய நண்பனாக இருந்ததனாலேயே யாழ் மக்களுக்கு விமானசேவை அவசியம் என்பதை உணர்த்தி அவர் மூலமாகத் தமது விடா முயற்சியினால் இரண்டாம் உலகப் போருக்குப் பின் பலாலி யுத்த விமானத்தைச் சிவில் உலகப் போக்கு வரத்து விமான நிலையமாக மாற்றிப் பெற்றுத்தர முடிந்தது.
அயர்லாந்திலுள்ள லிமெரிக் என்னுமிடத்தில் 1896-ல் பிறந்த அடிகளார். இளமையிலேயே பக்திமையில் நாட்டம் கொண்டிருந்தார். 1910-ல் யேசு சபைக் கல்லூரியில் கல்வி பயிலுங்காலத்தில், யாழ் புனித பத்திரியார் கல்லூரியின் அதிபராக விளங்கிய அதிவண மத்தியூஸ் அடிகளாரால் தெரிந்தெடுக்கப் பட்டு அமல மரித்தியாகிகளின் நவசந்நியாசத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். குருத்துவப் படிப்புகளை முடித்துக் கொண்டதும் 1920-ல் திருநிலைப்படுத்தப்பட்ட அடிகளார் யேசுவின் திராட்சைத் தோட்டத்தில் சேவையாற்றவென வரவழைக்கப்பட்டார். அடிகளார் கல்லூரித் தளத்தில் பணிக்கு அமர்த்தப் பட்டதினால் 1921-ல் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். குருத்துவப் படிப்புகளை முடித்துக் கொண்டதும், 1920-ல் திருநிலைப் படுத்தப்பட்ட அடிகளார் யேசுவின் திராட்சைத் தோட்டத்தில் சேவையாற்றவென வரவழைக்கப்பட்டார். அடிகளார் கல்லூரித் தளத்தில் பணிக்கு அமர்த்தப் பட்டதினால் 1921-ல் யாழ். புனித பாதிரிசியார் கல்லூரியின் ஆசிரியர் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டு. விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பாளருமாக நியமிக்கப்ட்டார். இவரின் வழி காட்டலில் விளையாட்டுத் துறையில் கல்லூரி முன்னேற்றம் கண்டதுடன் பல சிறந்த விளையாட்டு வீரர்களையும் உருவாக்கிற்று. இக்காலத்தில் தமது பட்டப் படிப்பை கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் முடித்துக் கொண்டு பின்னர் கலை முதுமாணிப் பட்டத்தையும் (எம். ஏ.) பெற்றுக் கொண்டார். சிறந்த கல்விமானாகவும் தன்னை உயர்த்திக் கொண்டு புனித பத்திரிசியார் கல்லூரிக்குத் திரும்பிய இவர் தொடர்ந்தும் நிர்வாகத்தோடு ஒத்துழைத்துக் கல்லூரியில் ஆசிரியப் பணி புரிந்தார். இவரது சிறந்த சேவையினாலும்,
-124

ஆற்றலினாலும் அடிகளார் அவர்கள் 1936 தொடக்கம் 1954 வரை தொடர்ந்து 18 வருடங்களாக இக் கல்லூரியின் அதிபராக இருந்து இக் கல்லூரியைத் திறமையாக நிர்வகித்ததோடு, இப் பதவிக் காலத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு ஆற்றிய சேவைகளினூடாக அம் மக்களின் மனங்களில் நிறைந்தார்.
அதிகாரம் பன்முகப் படுத்தும் போது, பலரின் ஒத்துழைப்பையும் பெற்று நல்ல பல செயற்றிட்டங்களையும் நிறைவேற்ற முடியும் என்பதை உணர்ந்த அடிகளார் அதிகாரப் பன்முகவாக்கல் மூலம் ஆசிரியர்களையும், மாணவர்களையும் “கல்லூரியின் பங்காளராக மாற்றியதோடு அனைவரிடையேயும் புரிந்துணர்வை வளர்த்து வந்தார். சிறந்த நிர்வாகி என்ற சிறப்பும் பெற்றார். ஒரு கல்லூரியின் வளர்ச்சி என்பது அக் கல்லூரிச் சூழலிலுள்ள மக்களின் உண்மையான வளர்ச்சியுமாகும் என்பதை உணர்ந்து கொண்ட அடிகளார் யாழ். மக்களின் அறிவு வளர்ச்சிக்கெனப் பொது நூல் நிலையமொன்றை ஈட்டும் பொருட்டு, உலகின் பல பாகங்களுக்குச் சென்று பணம் திரட் டிவந்து, தென்கிழக்காசியாவிலேயே சிறந்த நூல் நிலையமெனப் போற்றப்படும் அளவுக்குச் சிறந்த நூல் நிலையமொன்றின் உருவாக்கத்தின் பிரதான பங்காளியானார்.
யாழ். மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தமது பரிசளிப்பு விழா அறிக் கைகளினுTடாகவும் பத் திரிகைகளுக்கு எழுதிய கட்டுரைகளினூடாகவும் தேசிய மட்டத்தில் முன் வைத்ததோடு. அப் பிரச்சினைகளுக்கான தீர்வையும் தமது அறிக்கைகளினூடு கோடி காட்டினார். யாழ் நகரில் முதன் முறையாக மாபெரும் கைத்தொழில் களியாட்ட விழாவை நடாத்தியும், யாழ்ப்பாணத்தின் விடை என்ற பெயரால் களியாட்டம் நிகழ்த்தியும், யாழ்ப்பாணத்தின் மீதும், அதன் மக்கள் மீதும் தாம் கொண்ட நேயத்தை வெளிப்படுத்தினார். அடிகளார் யாழ்ப்பாணத்தின் மீதும் மக்கள் மீதும் கொண்ட ஆழமான அன்பை வியந்து பிரபல நகைச்சுவை ஒவியர் கொலெற் அவர்கள் அடிகளாரைத் தமிழராக உருவகப் படுத்திப் பல கேலிச் சித்திரங்களையும் வரைந்திருந்தார்.
சிறந்த ஆன்மீக வழிகாட்டியாகவும், சிறந்த நிர்வாகியாகவும். சிறந்த செயல் வீரனாகவும் திகழ்ந்து வந்த அடிகளார் ஆஸ்திரேலியாவுக்குச் சேவை புரியவென அழைக்கப்பட்டபோது, யாழ்ப்பாணத்து மக்கள் அனைவருமே கண்ணிர் மல்க விடை பெற்றுக் கொண்ட சிறப்பும் பெற்றார். இதனாலேயே இவர் அயர்லாந்தின் யாழ்ப்பாணத்தான் எனப் பலராலும் குறிப்பிடப்பட்டார்.
30-04-1961-ல் இலண்டனில் இறைபதமடைந்த அடிகளாரின் உடல் அயர்லாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
øJÚJ6Ů - 1990. ZA
-125

Page 73
நாடகக் கலைஞர்
சந்தியா கதிர்காமு
செங்கை ஆழியானும் சி. தனபாலசிங்கமும்
க்களின் சிந்தனையைப் பிரயோசனமான வழியில் திருப்பி, d சில பொழுதுகள் தமது நாளாந்த வாழ்க்கையின் தாங்கொணாத்
துயர்களை மறந்து, வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் கட்புலச் சாதனமாக நாடகங்கள் விளங்குகின்றன எனக் கருதும் நாடகக் கலைஞர் ஒருவர் கிளிநொச்சியில் இருக்கிறார். ஒன்பது வயதிலிருந்து நாற்பதாண்டுகளாக நாடகக் கலையின் ஏற்றத்திற்கு அயராது உழைத்துவரும் அற்புதமான கலைஞர் ஒருவர், தமிழ் கூறும் நல்லுலகிற்குரியவராக நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.
அவரே . நாடகக் கலைஞர் சந்தியாபிள்ளை கதிர்காமு!
ஒடுக்கப்பட்ட மக்களின் கலைத்துவ விழிப்புக்கும், பங்களிப்புக்கும் தக்க உதாரணமாக விளங்கும் சந்தியா கதிர்காமு, நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சுன்னாகத்தில் வளர்ந்த வேளையில், ஒன்பது வயதில் நாட்டுக் கூத்துப் பேரறிஞர் வி. வி. வைரமுத்துவின் அரவணைப்புக் கிடைத்தது. திரு. வி.வி. வைரமுத்துவின் காத்தவராயன் கூத்தில் சின்னக்
-126
 
 
 
 

காத்தானாகச் சந்தியா கதிர்காமு தோன்றி நடித்தார். முதன் முதல் நாடகத் துறையில் கால் வைத்த நிகழ்ச்சி இதுவே. அதன் பின் நாடகப் பித்தேறி, நாட்டுக் கூத்துகள் பலவற்றில் நடித்தார்.
1945-ம் ஆண்டில் கிளிநொச்சிக்கு வந்து நிரந்தரமாகக் குடியேறிய அவர், கிளிநொச்சியில் இயல், இசை, நாடகத்துறைக்குத் தனித்துத் தன்னுடைய பங்களிப்பை வழங்கி வருகிறார். நந்தனார், கோவலன் சரித்திரம், சிலப்பதிகாரம், அரிச்சந்திரன், வள்ளி திருமணம் போன்ற புராணக் கதைகளை நாட்டுக் கூத்துக்களாக மேடையேற்றினார். 1965ம் ஆண்டு கதிர்காமு நெறிப்படுத்தி நடித்த நந்தனார் நாடகம் கிளிநொச்சி இலக்கிய விழாவில் முதல் பரிசைப் பெற்றது.
"கலைஞர்களுக்கு ஊக்கந்தருவது மக்களின் கரகோஷ ஆதரவே. சமூகம் தங்களது கலையை மதிக்கிறது என்பதை, சமூகத்தின் பரிசளிப்புகள் நிரூபிக்கின்றன’ என்ற கூறும் கதிர்காமு, நாட்டுக் கூத்துக்களில் மட்டுந்தான் தோன்றித் தன் திறனைக் காட்டியவரல்லர். கால மாற்றத்திற்கு இணங்கக் கலைகளும் மாறும் இயல்பின. எனவேதான் அவர் பல நவீன சமூக நாடகங்களையும் பல்துறை சார்ந்த நாடகங்களையும் நெறிப்படுத்தி மேடையேற்றி நடித்து வருகிறார். கண்கள், யேசுவே ரட்சிப்பார், அப்பு முட்டாள் போன்ற சமூக நாடகங்களையும், எடடி உலக்கை, கண்டறியாக் கலியாணம் போன்ற நகைச்சுவை நாடகங்களையும் மேடையேற்றிக் கிளிநொச்சியின் பிரபல நாடக கர்த்தாவாக விளங்குகிறார்.
கிளிநொச்சி மண்ணிற்குப் பெருமையைத் தேடித் தந்த ஒரு சிலரில் கிளிநொச்சியின் மூத்த குடிமகனான சந்தியா கதிர்காமுவும் ஒருவராவார். இவருடைய நாடக முயற்சிக்குச் சிகரம் வைத்தாற் போல, 1978-ம் ஆண்டு அகில இலங்கைத் தேசிய நாடக விழாவில் நந்தனார் என்ற நாடகத்திற்கு ஜனாதிபதியின் தங்கப் பதக்கமும், பிரதம மந்திரி விருதும், கலாச்சார அமைச்சின் சான்றிதழும் கிடைத்தன. நந்தனார் கொழும்பு ரவர் தியேட்டர் மேடையில் மேடையேறிய போது, அதனைப் பார்த்து ரசித்த சிங்களக் கலைஞர்கள், "அப்படிப்பட்ட அற்புதமான கலைஞர்கள் தமிழரில் உள்ளனரா? என வியந்துரைத்தனர்.
திரு. சந்தியா கதிர்காமு தேசிய நாடக விழாவில் பரிசு பெற்றதன் மூலமாகப் பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தமிழ் நாடக ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பதவி ஏற்று, இன்றும் பணியாற்றி வருகிறார். நாடக முயற்சிகள் போல, வில்லிசை, கரகம் போன்ற துறைகளிலும் வல்லவராக விளங்குகிறார். ’கணி ரென்ற வெண்கலக் குரலில் பாடும்போது சபையோர் அமைதியில் ஆழ்ந்துவிடுவர்.
-127

Page 74
‘இன்றைய சூழ்நிலை, பாரம்பரியமான கலைகளை மேடையேற்றி வளர்க்கத் தடை புரிகிறது என வருந்தும் சந்தியா கதிர்காமு தமிழரின் பாரம்பரியக் கலைகள் எந்த இடரினும் அழியாதவை. வெட்ட வெட்டத் துளிர்ப்பவை என ஆறுதலடைகிறார். இன்று கிளிநொச்சி கனகாம்பிகைக் குளத்தில் ஆறு பிள்ளைகளுடன் அமைதியாக வசித்து வருகிறார். தற்போது கட்டிடத் துறையில் ஒரு தலைசிறந்த விற்பன்னராகத் திகழ்கிறார்.
திரு. சந்தியா கதிர்காமுவின் நாடக விற்பன்னத்தைக் கெளரவிக்கும் நிகழ்வாக அண்மையில் ஒரு செயற்பாடு நிகழ்ந்தது. பிரதேச அபிவிருத்தி அமைச்சின் தமிழ் அலுவற் பிரிவு, இலங்கை எங்கினும் தமிழ்க் கலைஞர்களுக்கு விருது வழங்கியும், பொற்கிழி அளித்தும் கெளரவித்தது. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரு கலைஞர்கள் அதற்காகத் தெரிவாகினர். ஒருவர் கதிர்காமு மற்றவர் கண்டாவளைக் கவிராயர் இராசையா, 1987-ம் ஆண்டு ஜனவரி 3-ம் திகதி பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் வைத்து, கதிர்காமு அவர்களுக்கு, அவரின் நாடகச் சேவையைப் பாராட்டிப் பொற்கிழியும் விருதும் வழங்கப் பட்டது.
தமிழுக்கும், தமிழ் நாடகத்துறைக்கும் அயராது உழைத்து வரும் கலைஞர் சந்தியா கதிர்காமுவை வாழ்த்துகின்றோம். நல்ல கலைஞர்கள். நாட்டின் கலாசாரத்தைக் கட்டி வளர்க்கும் பெரு மக்களாவர்.
ID/TijF - 1987
A
-128

'ஈழகேசரிய்
பொன்னையா
டொமினிக் ஜீவா
ழகேசரி’ என்றொரு வாரப் பத்திரிகை வட பிரதேசத்திலிருந்து தேசியக் குரலை ஒலித்துக் கொண்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அது நிறுத்தப்பட்டு விட்டது. கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக, இந்தத் தேசத்தின் பொது வாழ்வில் - குறிப்பாக கலை, இலக்கியத் துறையில் - அது ஆற்றிய பெரும் பங்கு சாமானியமானதல்ல. அதன் தாக்கத்தை இன்று கூட உணரலாம்.
அதன் ஆரம்ப கர்த்தாவும் ஸ்தாபகரும் இவரேதான்.
அந்தக் காலத்தில் அப்படியொரு வார இதழைத் தொடர்ந்து நடத்துவதற்கு வேண்டிய தன்னம்பிக்கையும் உறுதிப்பாடும் தேசிய உணர்வும் இவரிடம் நிறைந்திருந்ததாலேயே இப்படியான காத்திரமான பணி அவருக்குச் சாத்தியமாக இருந்தது.
சிவபாதசுந்தரம் - கனக. செந்திநாதன் - இராஜ அரியரத்தினம் - சர்மா போன்ற சென்ற தலைமுறை இலக்கிய மணிகளை நாட்டுக்குத் தந்தது இந்த ஈழகேசரிப் பண்ணைதான். அதற்காகத் தனது உழைப்பையே பசளையாக்கியவர் பொன்னையா அவர்கள்.
-129

Page 75
சென்ற மாதம் பொன்னையா அவர்களினது ஞாபகார்த்த விழா அவரது பிறந்த ஊரான குரும்பசிட்டியில் நடைபெற்றது. திரு. க. கைலாசபதி, அன்னாரது ஞாபகார்த்தச் சிறப்புச் சொற்பொழிவாக, இலக்கியச் சிறப்புரை நிகழ்த்திக் கெளரவித்தார்.
குரும்பசிட்டி சன்மார்க்க சபையில் எழுத்தாளர் ஏ. ரி. பொன்னுத்துரை அவர்களது தலைமையில் மேற்படி விழா நடைபெற்றது. குரும்பசிட்டிக் கிராமத்தையே ஓர் இலக்கிய முன்னோடிக் கிராமமாக மாற்றியமைத்ததில் ஈழகேசரிப் பொன்னையா அவர்களுக்கு மிகப் பெரிய பங்குண்டென்பதை நாடே நன்கறியும். அவர் ஒரு யாதார்த்த வாதி! துணிச்சல் மிக்கவர். காரியசாத்தியமானதைச் சிந்தித்தவர். செயல்படுத்தியவர்.
இந்த மண்ணின் இலக்கிய வளத்திற்காகத் தங்களது சர்வத்தையும் தானமாக நல்கி உழைத்த பெரியார்களினது நாமத்தை இன்றைய இளம் தலைமுறை அவசியம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். அது இவர்களினது எதிர்கால வளர்ச்சிக்கு வேண்டிய ஊட்டச் சத்து நிரம்பிய அறிவு உணவாகும்.
அப்படியான ஒருவரது உருவத்தை அட்டையில் இன்று பிரசுரித்து அன்னாரது ஞாபகார்த்தத்தில் மல்லிகையும் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கின்றது.
gar - 1976
-130

கொண்ட
கொள்கைக்காகச்
சலியாது உழைப்பவர்
ஐ. ஆர். அரியரத்தினம்
லங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக உறுப்பினரும், கணித g நிபுணரும், கல்வியாளருமான தோழர் அ. வைத்திலிங்கம்
அவர்களது 70-வது பிறந்த தினத்தை 25-05-85 அன்று நண்பர்களும், தோழர்களும் அபிமானிகளும் கொண்டாடினோம்.
இத்தினம், அவரது வாழ்வில் மாத்திரமல்ல, அவர் முக்கிய பங்கு கொண்டு உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றிலும் ஒரு மைல் கல்லாகும். அக்காலத்தில் இருந்த பல்கலைக் கழகக் கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அரை நூற்றாண்டுக்கு முன்னர், கணிதத் துறைப் பகுதி நேர விரிவுரையாளராக அவர் வந்து சென்று கொண்டிருந்தார். அக்காலத்திலேயே அவருடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. இப்பொழுது போலவே அன்றும் அமைதியாக அடக்கமுள்ள மனிதராக அவர் விளங்கினார். இலகுவில் எவரும் கண்டு கொள்ள முடியாத திறமையுடன் அவர் தம் பணிகளைச் செய்து வந்தார். அரசியலில் அவருக்கு அக்கறையுண்டு என்பதை அவர் சிறிதும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. அவர் பெரிதும் தேசிய உடைகள் அணிந்தார். இது அக்கால பல்கலைக் கழக மாணவர்களுக்கு புதுமையாகத் தோன்றிற்று. ஆனால் இதைத் தவிர்த்து அவரது ஆர்வமெல்லாம் கணிதத்தில்தான்
-131.

Page 76
இலயித்து நின்றது. முப்பதுகளின் நடுப்பகுதியில் கணிதத்துக்கான அரசாங்கப் புலமைப் பரிசில் கிடைத்தது. அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் சென்றபோது எவருமே ஆச்சரியமுறவில்லை.
கேம் பிரிட்ஜ் படித்துக் கொண்டிருக்கும்போது அவரது மனம் மார்க்ஸியத்தின்பால் திரும்பியது. ஐரோப்பாவிலும், உலகிலும் அப்போது பெரும் புயல் வீசிக் கொண்டிருந்த காலமது ஹிட்லரும் முஸோலினியும், ஜேர்மனியிலும், இத்தாலியிலும் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தார்கள். ஐரோப்பாவையும் உலகத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள். ஐரோப்பாவில் ஜனநாயக அமைப்புக்களைக் கொண்ட பல நாடுகள் இவர்கள் இருவரில் ஒருவரின் ஆதிக்கத்துக்குள் வந்திருந்தன. உணர்ச்சி மிக்க சிந்தனையாளர்கள் தமது சொந்த விருப்பு வெறுப்புக்களிலிருந்து விடுபட்டு உலகத்தைப் பாஸிஸத்திலிருந்தும் காப்பாற்றுவது எவ்வாறு என்று ஆராய வேண்டிய காலமாகவிருந்தது. இந்த வழியைத் தான் இளைஞரான வைத்திலிங்கம் அன்று மேற்கொண்டார்.
அதுவே பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு உறுப்பினராகவும் ஆக்கியது அவரை காலனித்துவ ஆட்சிக்குட்பட்ட சகல மக்களினதும் விடுதலைக்காகப் போராடி வந்த ஒரே ஒரு கட்சியாக அன்று பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி விளங்கி வந்தது.
கேம்பிரிட்ஜ் கல்வியை முடித்துக் கொண்டு திரு. வைத்திலிங்கம் நாடு திரும்பினார். உடனடியாகவே நாட்டில் ஒரு கம்யூனிஸ்ட், உழைப்பாளிகள் ஸ்தாபனத்தைக் கட்டியெழுப்புவதில் தம் வாழ் நாள் முழுவதையுமே அர்ப் பணிப்பது என முடிவு செய்தார். அந்தக் காலகட்டத்தில் இப்படி ஒரு முடிவினை எடுப்பது வழக்கத்துக்கு மாறானது மட்டுமல்ல துணிச்சல்மிக்கவொரு செயலுமாகும். கேம்பிரிட்ஜில் நின்று அப்பொழுது தான் நாடு திரும்பியிருந்த திரு. வைத்திலிங்கத்துக்கு வருமானம் தரக்கூடிய பல்வேறு வாய்ப்புக்கள் காத்திருந்தன. அவைகள் அனைத்தையுமே புறக்கணித்து விட்டு தாம் சரியென்று கருதிய ஒரு லட்சியத்துக்காகப் போராடுவதென்று அவர் முடிவெடுத்தார். அன்று நாட்டிலிருந்த ஒரே ஒரு அரசியல் கட்சியும், இடதுசாரிக் கட்சியுமான லங்கா சமசமாஜக் கட்சியில் அவர் சேர்ந்தார். சமசமாஜக் கட்சியில் சிறிது காலம் பணியாற்றியதின் பின்னர், அமரர் டாக்டர். எஸ். ஏ. விக்கிரமசிங்க, வண. யு. சரணங்க, மற்றும் பலருடன் சேர்ந்து ஐக்கிய சோஷலிஷட் கட்சியை ஆரம்பித்தார். இதுவே 1913-ம் ஆண்டு ஜூலை மாதம் உருவான இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முன்னோடியாக அமைந்தது. முன்னெப்போதும் மேற்கொள்ளப்படாத முயற்சிகளில் திரு. வைத்திலிங்கமும் மற்றவர்களும் அந்தக் காலத்தில் ஈடுபட வேண்டியிருந்தது. முதலில் புதிய முறையிலான அரசியல் கட்சியொன்றைத் தோற்றுவிக்க
-132

வேண்டியிருந்தது. - அதுவே கம்யூனிஸ்ட் கட்சி! இரண்டாவதாக, பாட்டாளி மக்கள் தாம் ஈடுபட்டிருந்த தொழில்களையே அடிப்படையாகக் கொண்ட விரிவான தொழிலாளர் ஸ்தாபனம் ஒன்றை உருவாக்கியதாகும். கம்யூனிஸ்ட் கட்சியும், தொழிற் சங்கங்களும் இன்று நிலைபெற்றுச் செயற்படுவதைப் பார்க்கிறோம். ஆனால் அவைகளை இங்கு உருவாக்குவதற்காக மற்றவர்களைப் போலவே வைத்திலிங்கம் அவர்கள் வழங்கிய பங்களிப்பினைப் பற்றி ஒரு சிலரே அறிவார்கள். சம்பள நிர்ணயசபை தீர்மானங்களின்படி சம்பளம், சம்பளத்துடன் விடுமுறை மற்றும் பலவிதமான நன்மைகளை இன்று தொழிலாளர்கள் அனுபவிக்கின்றார்கள். 40 வருடங்களுக்கு முன் இவை நினைத்துப் பார்க்க முடியாதவை. நாம் அனுபவிக்கும் இந்த நன்மைகள் வைத்திலிங்கத்தின் அயராத உழைப்பினால் வந்தவை என்பதை ஒரு சில தொழிலாளர்கள் தான் அறிவர் என்பது கவலைக்கிடமான விடயம்.
வைத்திலிங்கம் கொழும்பில் பத்து வருடகாலம் இவ்வாறு பணி புரிந்த பின் ஐம்பதுகளின் முற்பகுதியில் யாழ்ப்பாணம் திரும்பி கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கும் ஏனைய முற்போக்குச் சக்திகளின் வளர்ச்சிக்கும் உழைத்து வந்தார். வட்டுக் கோட்டைத் தொகுதியில் நான்கு முறை போட்டியிட்டு தோல்வி கண்டார். இந்தப் போட்டிகளில் ஈடுபட்டமைக்குப் பாராளுமன்றம் செல்வது மாத்திரம் நோக்கமாக இருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும் நோக்கங்களையும் மக்கள் மத்தியில் பரப்புவதும் நோக்கமாகவிருந்தது. வைத்திலிங்கமும் கட்சியால் நியமிக்கப்பட்ட ஏனைய வேட்பாளர்களும் குடாநாட்டின் அரசியல் வரைபடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரை நிலைநாட்டினார்கள். பல ஆண்டுக்காலம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கணித ஆசிரியராகப் பணியாற்றியுள்ள அவர் பிற்காலத்தில் உரும்பிராய் இந்துக் கல்லூரியின் அதிபராகவும் பணிபுரிந்துள்ளார். ஆசிரிய ஸ்தாபனங்களில் முக்கிய பங்கெடுத்துள்ள அவர் வடமாகாண ஆசிரிய சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
எழுபது வயதில், மனிதன் தனது வாழ்வின் அந்திப் பொழுதை வந்தடைந்து விட்டதாகக் கூறுவார்கள். வைத்திலிங்கத்தை விதிவிலக்காகக் கருதி விட முடியாது. அவர் தம் நடு வயதில் இந்த நாட்டில் புது மாதிரியான அரசியல் கட்சியொன்றை உருவாக்க வேண்டிய பொறுப்பை அவர் நிறைவேற்ற வேண்டியிருந்தது. இந்தப் பொறுப்பினை திறமையாகவே அவர் நிறைவேற்றினார். இப்போது 70 -வது வயதில் வைத்திலிங்கம் இன்னொரு வித்தியாசமான பொறுப்பினை எதிர்நோக்குகின்றார் என்றே எனக்குத் தோன்றுகின்றது. அதாவது, இப்பொழுது பரிணமித்துவரும் புதிய சூழ்நிலைகளை நோக்கி கம்யூனிஸ்ட் கட்சியையும் இதர முற்போக்குச் சக்திகளையும் எவ்வாறு வழிநடத்தலாம் என்பதே அது!
-133 نم

Page 77
இந்த நாட்டின் மக்கள் எல்லாரும் ஒரு நாள் ஒரே தேசிய இனமாக இணைந்துவிடுவார்கள் என்ற கற்பனையுடன் பிரிட்டிஷார் இந்த நாட்டை ஒன்றரை நூற்றாண்டு காலம் ஆட்சி புரிந்தார்கள். இந்த மாய்மாலத்தில் சகல பூர்ஜுவா கட்சிகளும் சில இடதுசாரிக் கட்சிகளும் கூட, தொடர்ந்து நம்பிக்கை வைத்து வருகின்றன. சிங்களத் தேசியம் பிறந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த மாயக் கருத்துக்கள் மறைத்துவிட (LD9T.
இயற்கையைப் போன்று ஒரு தேசிய இனம் பிறக்கும் போது பிரசவ வேதனைகள் ஏற்பட்டே தீரும். இப்பிரசவ வேதனையின் துன்ப துயர வெளிப்பாடுகளைத்தான் தமிழ் மக்கள் இன்றைய தினம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இயற்கையிலோ ஒவ்வொரு புதிய பிறப்பும் வரவேற்கப்பட வேண்டியதே. ஒரு புதிய இனத்தின் பிறப்போ வரவேற்கப்படுவதுடன் அது பிறந்த உடனேயே அதை அழிப்பதற்கும் சில சக்திகள் விரும்புகின்றன. காலத்தை இகழ்ந்து தட்டிக் கழிக்கக் கூடிய போக்குகளை எதிர்த்து, உருவாகி வரும் புதிய சக்திகளுக்கு கடந்த காலத்துச் செழுமையான அனுபவங்களை எப்படி உணர்த்துவது என்பது வைத்தி போன்ற தூர திருஷடியுள்ள தலைவர்களுக்குரிய பணியாகும். இதைச் சொல்வது எளிது. செயலில் காட்டுவது கடினம். இந்தக் கடினமான பணியைச் செவ்வனே ஆற்றுவதற்குத் தோழர் வைத்திக்கு நீண்ட ஆயுளும் பலமும் கிடைக்க வேண்டுமென விரும்புகின்றேன்.
ஜூன் - 1985.
-134

יש * ... רזין"
வித்தியாசமானவர்
ஜோசப் பாலா
ற்காலச் சிந்தனைகளைச் செயலிலும், பலருக்குத் தனது பணிகளோடும் மத போதனைகளுடனும் மட்டும் நின்றுவிடாது. மதங் கடந்த நிலையில் தன் சேவையால் பலரது மனதில் பதிந்தவர் உளவியல் துணை நூலான நான் மஞ்சரியின் ஆசிரியராகப் பன்னிரெண்டு ஆண்டு பணிகளை ஆற்றிப் புதிய பல கருத்துக்களை மக்கள் மத்தியில் ஆழப் பதித்தவர் அருட் திரு வின்சன் பற்றிக் அடிகள்.
நான் என்ற ஆணவம் அல்ல. நான் என்ற ஆளுமையின் வளர்ச்சியையே என்னுள் வளர்க்கிறேன் என மல்லிகையின் 21-வது ஆண்டு விழாவில் மல்லிகை ஆசிரியர் குறிப்பிட்டது போல், நல்ல ஆளுமையுடன் நான் வளர்ந்தால் நாம் வளர்வோம்’ என்ற தத்துவத்தை மக்கள் மனதில் உணர வைக்கும் அரிய கருத்துக்களைத் தனது பேச்சிலும், எழுத்திலும், செயலிலும் வளர்க்க முனைந்து, அவ்வழியே பணியைத் தொடர்ந்து வரும் அமல மரித் தியாகிகள் சபை தந்த அருட் திரு. வின்சன் பற்றிக் அடிகளார் இன்றைய மல்லிகையின் அட்டைப் படத்தை அலங்கரிப்பவர்.
பல எழுத்துலக வித்தகர்களைத் தந்த புங்குடுதீவு மண்ணில் பிறந்த டேவிற் தம்பதிகளின் மைந்தர்களான, மூன்று அண்ணன் மாரையும் ஒரு அக்காவையும் சகோதரராகக் கொண்ட ஐந்து பிள்ளைகளில் கடைக்குட்டியாக 07-06-36ல் பிறந்தவர்தான் அருட்திரு வின்சன் பற்றிக் அடிகளார்.
-135

Page 78
இவர் தமது ஆரம்பக் கல்வியைப் புங்குடுதீவு றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிற் பயின்று தொடர்ந்து ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் மேற்கொண்டு குருமட மாணவராகத் தன்னைத் தயார்செய்யக் கொழும்பு சென்றார். இவ் அழைப்பை அவராகவே தேர்ந்தெடுத்தார்.
தனது ஞான அறிவைக் கற்கக் கொழும்பு புனித வளனார் குருமடத்திற் சேர்ந்தார். அங்கு உயர் கல்வியை பொதுத் தராதரப் பரீட்சைப் படிப்பினை மேற்கொண்டார். தொடர்ந்து கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் மெய்யியல், இறையியல் பட்டதாரி, றோமாபுரி பட்டப்படிப்பில் சிறப்புச் சித்தி பெற்றுப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளம் கலைஞர் (பி. ஏ.) பட்டம் பெற்றுக் கொண்டார். புங்குடுதீவு சவேரியார் ஆலயத்தில் இவர் தமது குருத்துவப் பட்டத்துக்காக யாழ் ஆயர் அதி வந்தனைக்குரிய வ. தியோகுப்பிள்ளை ஆண் டகையால் 1981-ம் ஆண்டு புரட்டாதி மாதம் 4ம் திக திருநிலைப்படுத்தப்பட்டார். ሰ
இலக்கிய உலகில் நான் மஞ்சரியின் வளர்ச்சியால் தன்னை அறிமுகப்படுத்தி அவரது கட்டுரையாலும், ஆசிரியத் தலையங்கத்தாலும் சீரிய கருத்துக்களை உணர்த்தி - பல வாசக நெஞ்சங்களைத் தனதாக்கிக் கொண்டதோடு, புதிய எழுத்தாளர்களை வெளிக் கொணரவும் பலவித முயற்சிகளை மேற்கொண்டார். பள்ளிப்பராயம் முதல் இற்றைவரை கலைத்துறையில் அரிய பல கருத்துக்களை நாட்டுக் கூத்து, நாடகங்களால் மக்கள் மனதில் பதியவைத்தவர்.
இலக்கிய நெஞ்சங்களின் அன்பைத் தனது அரிய கருத்துக்களாலும் பண்புடன் பழகும் நற்குணப் பணிகளாலும் ஈர்த்து, எல்லோரது தொடர்புப் பாலமாகத் தன் சேவையோடு இணைத்தவர். தேசியப் பத்திரிகையான தினகரனிலும், உள்ளுர்ப் பத்திரிகையிலும் கத்தோலிக்கச் செய்திகளை. தற்கால நிகழ்வுகளோடு இணைத்து எழுதும் கட்டுரைகளால் பல வாசக நெஞ்சங்களுக்கு இலகு தமிழில் நற்சிந்தனை புகட்டும் குருவாகவும் திகழ்கிறார்.
இன்றைய கால கட்டத்தில் பல்துறைப் பணிகளாலும் பலரது மனதில் பதிந்து விட்ட அடிகளார் வெள்ளாடை தரித்து இளம் துறவியாக இன, மத, மொழிகள் எமக்குத் தடையாய் இராது என்ற இலக்கோடு இலக்கிய உலகில் மேலும் பணியாற்ற, கத்தோலிக்க கலை இலக்கியப் பணியினால் மறைந்து ஒதுங்கி வாழும் புதிய தலைமுறையினரைத் தட்டி எழுப்புவதோடு நல்வழி காட்டும் ஆசானாகத் திகழ்கிறார்.
மக்கள் மனதில் கிடக்கும் மூடக் கொள்கைகளைக் களைந்தெறியவும், குடும்ப உறவில் உள்ள ஏற்றத் தாழ்வைப் புரிந்து திருந்தி வாழவும் வழிகாட்டும் இவரது கன்னிப் படைப்பான உறவுகளின் இராகங்கள் என்னும் நூலில் குடும்ப உறவிற்கு இது வரை தமிழில் வெளியிடப்படாத அரிய விளக்கங்களை உளவளத்துணை கொண்டு வெளியிட்டுள்ளார்.
-136

பாமரர் முதல் பல்கலைக் கழக அறிஞர் வரை, பக்தர்கள் முதல் பல மதத் தலைவர்கள் வரை, உதவி அற்றோர் முதல் உதவிப் பணி உத்தியோகத்தர்வரை தனது தூய சேவையால் இலக்கிய நெஞ்சங்களைக் கவர்ந்தது போல் எல்லோருக்கும் அறிமுகமானவர்தான் அருட்திரு பற்றிக் அடிகளார்.
இவருடன் நெருங்கிப் பழகும் பலரும் இவரை வி. பி. என அழைப்பர். இவரது எழுத்துலகச் சேவை சுவாமி ஞானப்பிரகாசியார், தனிநாயகம் அடிகளார். டேவிற் அடிகளார் வரிசையில் தொடர வேண்டுமென தமிழ் உலகம் எதிர்பார்த்து நிற்கிறது.
இன்னலால் பாதிக்கப்பட்டு அன்னை, தந்தையரை இழந்து தவிக்கும் மழலைச் செல்வங்களின் எதிர்கால வளர்ச்சிக்காக அமல அன்னை அன்பகம்’ என்னும் ஓர் சிறுவர் பராமரிப்பு இல்லத்தை அயராத முயற்சியின் பயனாக ஆரம்பிக்க வழி சமைத்தார். இது ஒரு காலமறிந்த - காலத்தை வென்ற சேவையின் சான்று அல்லவா?
இவர் குறுகிய கால வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டு, இத்தாலி நாட்டிற்குச் செல்லக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை வரலாறுகளை, கலாசாரங்களை அறிந்து, அங்கு வாழும் இலங்கையரைச் சந்திப்பதிலும் அவர்களின் நிலைகளை அறிவதிலும் ஆர்வம் காட்டி அவர்களுடன் அண்மைக்கால அமைதியின்மையினைப் பகிர்ந்து ஆறுதல் கூறும் ஆராதனைகளை நடத்தியதோடு இத்தாலியில் பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் அவர்களைச் சந்தித்தும் அவருடன் இணைந்து பிரார்த்தனை நடாத்தியதும் அவர் பேறே எனலாம்.
யாழ் பல்கலைக் கழகத் துணை வேந்தர் சு. வித்தியானந்தன் அவர்கள் இவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் பல இடர்பாட்டுக்கும் பிரச்சினைகளுக்கும் மத்தியில் வாழும் மக்கள் உளவளத் துணையோடு வாழும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகப் பயன் உள்ள பல அரிய கருத்துக்கள் தரும் அருட் திரு. வின்சன் பற்றிக் அடிகளிடம் தமிழ் கூறும் நல்லுலகம் இன்னமும் பல புதிய படைப்புக்களை எதிர்ப்பார்க்கிறது என்கிறார்.
“தேக்கிவைப்பதால் நாற்றமடிப்பது சாக்கடை பாய்ந்து செல்வதால் தூய்மை காப்பது நதி'
இன்றைய உலகில் பலரது அறிவுச் சிந்தனைகள் எவருக்கும் பயன் படாத நிலையில் கற்றதனால் ஆன பயனை மற்றோரும் அறிந்து பயன் படுத்தும் விதத்தில் எத்திக்கும் தன் விடாமுயற்சியின் பயனால் அரிய பல கருத்துக்களைப் பருகவைத்து காலமறிந்து சேவையாற்றும் நிலையில் வாழும் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்பவர் தான் அருட்திரு வின்சன் பற்றிக் அடிகளார் என அமல மரித்தியாகிகள் சபை வடமாநில முதல்வர் லூமீஸ் பொன்னையா அடிகளார் குறிப்பிட்டதும் இவருக்குச் சாலப் பொருந்தும்.
-137

Page 79
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் குறிப்பில் 'வின்சன் பற்றிக் அடிகளார் தமது மதப் பணிகளின் ஊடே இந்தத் தனி மனித பராதீனத்தை - அந்நியப் பாட்டினை நன்கு அவதானித்துக் கிறிஸ்தவ மதச் சடங்குகளைச் செய்பவராக மாத்திரம் அல்லாது இன்றைய சமூகச் சூழலில் தமது சொந்த ஆளுமைச் சீரிணக்கத்தின் மூலமே நாம் இழந்து செல்லும் உறவு அந்நியோத்தியங்களை நாம் மீண்டும் பெறலாம் என்று அறிவுரை கூறும் அடிகளார் வாழ்த்தப் பட வேண்டியவரே.
வி. பி. அடிகளார் புனித சூசையப்பர் குருமாணவ பயிற்சிக் குரு மடத்தில் உதவி அதிபராகவும், விரிவுரையாளராகவும், யாழ் பல்கலைக் கழக பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
'அறுவடையோ மிகுதி, வேலையாட்களோ குறைவு என்ற குறை வார்த்தைக்கு ஒப்ப இன்றைய தமிழ்ச் சமூகம் எந்தவித வழிகாட்டல் இன்றிப் பல திசை நோக்கிப் பயணம் செய்கின்றது. அவர்களின் பாதையைச் செம்மைப் படுத்தி, நல்வழி காட்டி, சிந்தனைகளைக் காட்டி, செயலிலும் காட்டிவரும் இவரது சேவை எமது மக்களுக்குத் தேவை என்பதனை உணர்ந்து அவரது முயற்சிக்கு உதவிகள் செய்ய வாய்ப்பில்லாவிடினும், உபத்திரவங்கள் செய்யாது எந்த முயற்சியையும் முன்னேற்றத்துடன் செயற்படுத்த ஒத்துழைத்து, உற்சாகப் படுத்தி, ஊக்குவித்து நல்ல பயன் எமது மண்ணில் எமது மக்கள் பெற முனைவோம்.
“உங்களிடம் மதமாற்றத்தை அல்ல, நல்ல மன மாற்றத்தையே எதிர்ப்பாக்கிறேன்’ என நல்லூர் இந்து விடுதியில் நான் அறிமுக விழாவில் அறைகூவல் விடுத்தார் வி. பி. அடிகளார். அவரது சிந்தனைகளைச் செயல்படுத்த எமது வாழ்க்கையைச் செம்மைப் படுத்த அவரது முயற்சிக்கு உந்துசக்தியாய் இருந்து ஒத்துழைத்தால் எமது சமுதாய மறுமலர்ச்சிக்கு அவரது தொண்டு பயன் தரும் பல திட்டங்களைச் செயல்படுத்தும் முன்னோடியாகத் திகழ வைக்கும் அவரது முயற்சியில் இணைந்து செயற்படுவோம். தூய பணிக்கு துணைநிற்போம்.
IgorućLIf-1986.
A
-138

மலரன்பன்
பண்ணாமத்துக் கவிராயர்
மகால ஈழத்திலக்கியத்தில் முத்திரை பதித்துள்ள நோர்த் மாத்தளை
g மலரன்பன் அறுபதுகளின் பிற்பாதியில் - 1967இல் தினபதியில் வெளியான பார்வதி என்ற சிறுகதை மூலம் இலக்கியப் பிரவேசம் செய்த மலையகப் படைப்பாளியாவார்.
தனது முதல் சிறகதை மூலமே கவனிப்பும், கணிப்பும் பெற்ற பெருமைக்குரியவர் மலரன்பன்.
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத் தொகுதியொன்றுக்காக அதுவரை (1976) வெளிவந்த மிகச் சிறந்த பத்து சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பதாயின் அவற்றுள் மலரன்பனின் "பார்வதி நிச்சயம் இடம்பெறல் வேண்டுமென இளம்பிறை ரகுமானின் அரசு வெளியீடான கதைவளம் என்ற விமர்சன நூலில் கருத்துத் தெரிவிக்கின்றார் ரகுமான
இச்சிறுகதை தமிழமுது சஞ்சிகையில் ”அவளொன்று நினைக்க” என்ற தலைப்பில் 1970-ல் மறுபிரசுரமானபோதே அதனை நான் படிக்க நேர்ந்தது.
மேட்டு லயத்து அண்ணாவிக் கங்காணியார் எழுத்துக் கூட்டி சுருதிசேர்த்துப் படிக்கும் பெரிய எழுத்து இராமாயணக் கதை தொடர்ந்து கொண்டிருக்க, அத் தோட்டத்தில் அந்த நான்கு நாட்களாய்ப் பணிய லயத்துப் பார்வதியின் அந்தரங்க வாழ்வில் புயல் கிளப்பி உச்சம் பெற்றுத் தணியும் புராணக்கதைக்கு எதிர் நிலையான யதார்த்த நிகழ்வொன்றினைக் கலைத்துவம் குன்றாமல் கூறும் சிறுகதை இது.
-139

Page 80
பின்னர் நான் படித்த மலரன்பனின் "உறவுகள் அஞ்சலி என்ற சஞ்சிகையின் மலையக மலரில் வெளிவந்த சிறுகதையாகும் மாத்தளை கார்த்திகேசு தயாரித்து அரங்கேற்றிய “காலங்கள் அழுவதில்லை’ மேடை நாடகமும் "காலங்கள்’ டெலி நாடகமும் மலரன்பனின் உறவுகள் சிறுகதையைத் தழுவியதாகும் என்ற உண்மையை கார்த்திகேசு பற்றி மல்லிகையில் எழுதும்போது தெளிவத்தை ஜோசப் குறிப்பிடுகிறார்.
மலையகத்தின் வட வாயிலான மாத்தளைக்கு வடக்கே நோர்த் மாத்தளை எஸ்டேட்டில் பிறந்தவர் மலரன்பன். இவர் நோர்த் மாத்தளை மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு மலையகப் படைப்பாளியான மாத்தளை வடிவேலனின் மூத்த சகோதரர் ஆவார்.
நோர்த் மாத்தளை மலரன்பன், மாத்தளை வடிவேலன் இருவரும் தம் சுயம்காட்டும் தனித்துவமான ஆளுமைகளுடன் மண்வாசனை வீசும் சிறந்த சிறுகதைகளைத் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கும் வீறும் விறலும் கொண்ட மலையகப் படைப்பாளிகளாவர்.
இவ்விருவருடன் மாத்தளை சோமுவும் சேர மூவரினதும் மூர்த்திகரம் வாய்ந்த சிறுகதைத் தொகுதியாக தோட்டக் காட்டினிலே எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவந்தது. "இலங்கை தமிழ் இலக்கியத்துக்கு மலையகம் புதிய இரத்தம் பாய்ச்சுகிறது” எனக் குறிப்பிட்ட காலஞ் சென்ற பேராசிரியர் கலாநிதி கைலாசபதியின் முன்னுரையோடு வெளியான இத் தொகுதியில் மலரன்பனின் பார்வதி, உறவுகள், தார்மீகம் முதலிய சிறந்த சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
மாத்தளை கிறிஸ்தவ தேவாலயக் கல்லூரியில் கல்விகற்று ஐந்து வருடங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்து விட்டு, தற்போது தனியார் நிறுவனமொன்றில் நிர்வாகியாகப் பணிபுரிந்துவரும் மலரன்பனின் சிறுகதைகளில் யாவும் சிகரம் வைத்தாற் போல மாத்தளை சிவஞானத்தின் பெரு முயற்சியால் சுஜாதா பிரசுரம் வெளியிட்ட இவரது “கோடிச் சேலை” சிறுகதைத் தொகுதி 1989 ஆம் ஆண்டுக்கான சாகித்தியப் பரிசை சுவீகரித்துக் கொண்டது. இலக்கிய வித்தகர் என்ற பட்டத்தையும் வழங்கி இந்துக் கலாச்சார அமைச்சு இவரை கெளரவித்தது.
கோடிச் சேலைக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் சி. தில்லைநாதன் “இத்தொகுப்பில் மிகவும் சிறந்ததெனப் பாராட்டத் தக்கது “கறிவேப்பிலைகள்” ஒருமைப்பாடு நடை, தலைப்பு யாவும் நன்கமைந்துள்ளன. ஆசிரியரின் அவதான சக்தியும், சிருஷ்டியாற்றலும் இக்கதையிலும் கோடிச்சேலை, சுயம்வரம் ஆகியவற்றிலும் மெச்சத்தக்க வகையில் காணப்படுகின்றன. ஒரு தொகுப்பில் ஒரு நல்ல சிறுகதை தேறினாலே அது விதந்துரைக்கப்பட வேண்டியதாகும்.” என்கிறார்.
கொழுந்துக் கூடைக்குள் இந்த தேசத்தையே சுமக்கும் மலையகத் தோட்டத் தொழிலாளியின் "துன்பக் கேணி" யான வாழ்வை அதன் பன்முக விலாசங்களோடு, சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தினூடாகக் கலையாக்கித்தரும் மலரன்பன்
-140

என்ற சமூகப் பிரக்ஞை கொண்ட இம்மனித நேயப் படைப்பாளி சமகாலச் சிங்களக் கலை இலக்கியங்களோடு ஓரளவு பரிச்சயமுள்ளவர்.
பிரபல சிங்கள எழுத்தாளர் ஜி. பி. சேனாநாயக்காவின் “பலி கெனிம” என்ற கதையைத் தமது துணைவியாரின் உதவியுடன் தமிழில் மொழியாக்கஞ் செய்துள்ளார். “பலி’ என்ற தலைப்பில் இக்கதை மல்லிகையில் பிரசுரமாகியது.
மலரன்பனின் தார்மீகம் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “விவரண” சஞ்சிகையில் வெளியாயிற்று. இப்னு அசுமத் மொழிபெயர்த்த சிறுகதைத் தொகுப்பான "காளிமுத்துகே புருவேசிபாவய (காளிமுத்துவின் பிரஜாவுரிமை) என்ற தொகுதியில் மலரன்பனின் "உறவுகள் இடம் பெற்றுள்ளது. இத்தொகுதிக்கு முன்னுரை வழங்கியுள்ள பேராசிரியர் சுநந்த மகேந்திர உறவுகள் சிறுகதையைச் சிலாகித்துக் கூறியுள்ளார்.
நண்பர்களின் நச்சரிப்புக் காரணமாக மலரன்பன் 1975-ல் எழுதிய “உலகம் யாருக்காக” என்ற திரைக்கதை வசனக் கையெழுத்துப் பிரதிக்கு திரைப்படக் கூட்டுத்தாபனம் ("B") “பி” தரம் வழங்கியது. (B தரம் கணிப்பு பெறும் திரைக்கதையைப் படமாக்குவதெனில் அதற்குத் திரைப்படக் கூட்டுத் தாபனத்திடமிருந்து அன்று 50% நிதிக்கடன் பெறமுடியும்) எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் அம்முயற்சி கைவிடப்பட்டது.
மலையகச் சிறுகதைச் சிற்பி காலஞ் சென்ற என். எஸ். எம். ராமையா வழங்கிய உற்சாகமே தன்னை நல்ல சிறுகதைகள் உருவாக்க வழிகோலிற்று என நன்றியுணர்வுடன் நினைவு கூருகிறார் மலரன்பன்.
இசைத்துறையில் ஈடுபாடு காட்டிவரும் இவரது மெல்லிசைப் பாடல்கள் பிரபலமானவை. இலங்கை வானொலியிலும் ரூபவாஹினியிலும் ஒலி, ஒளி பரப்பாகி வருகின்றது.
வீரகேசரியில் வெளியான மலரன்பனின் “பிள்ளையார் சுழி’ இருநூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட மலையகத் தோட்டத் தொழிலாளரின் வருகையைப் பிள்ளையார் சுழியிட்டுக் காட்டும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியதொரு சிறுகதையாகும்.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களது நல்வாழ்வில் ஆழ்ந்த அக்கறை கொண்ட இவ்வாக்க இலக்கியவாதி கலாசார அமைச்சர் லக்ஷமன் ஜெயக்கொடி அவர்களினால் உருவாக்கப்பட்ட கலாச்சார மேம்பாட்டுக் குழுவிலும் ஓர் உறுப்பினராவார்.
மலரன்பன் தமிழுக்கு மேலும் பல நல்ல சிறுகதைகளைத் தரவேண்டுமென்பது இலக்கிய நேசங் கொண்டோர் அனைவரதும் எதிர் பார்ப்பாகும். s
29'06-1997 A
-14

Page 81
மக்களை நேசிக்கத்
தெரிந்தவர் மக்களால்
நேசிக்கப்பட்டவர்
டொமினிக் ஜீவா
ழர் பொன். குமாரசாமியை நான் நேரில் சந்தித்தது 1996 தேர்தல் சமயத்தில்தான். தி
பருத்தித்துறைத் தொகுதியில் தோழர் பொன், கந்தையா பாராளுமன்றத்திற்கு ஓர் அபேட்சகராகப் போட்டியிட்டார். அந்தச் சமயத்தில் நான் அந்தத் தொகுதிக்குப் பிரசாரத்திற்காகப் போய் வந்தேன், அப்பொழுது ஒரு பொதுக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் முதன் முதலில் அவரைக் கண்டேன்.
சும்மா அறிமுகமே தவிர, அது அப்படியொன்றும் பெரிய தொடர்ந்த தொடர்பல்ல. அதற்குப் பின்னர் சில சந்தர்ப்பங்களில் கொழும்பில் சந்திப்பதுண்டு. அச் சந்திப்புகள் கூட, ஏதோ திடுகூறாக அமைந்து விடும். வீதியில் அல்ல பொதுக் கூட்டங்களில் சந்தித்துத் தலையசைக்கும் சந்திப்பாகவே அவைகள் பெரும்பாலும் அமைந்து விடுவது வழக்கம்.
1972-ம் ஆண்டு மாத்தளையில் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க கலாசார மகாநாடு நடைபெற்றது. அக் கலாசார மகாநாட்டில் என்னைக் கலந்து கொள்ளும்படி காரியதரிசி என்கின்ற முறையில் தோழர் கும் எனக்கும் ஓர்
-142
 

அழைப்பு விடுத்திருந்தார். மலையகத்திற்குப் போவதென்றாலே எனக்கொரு குஷி! அந்த அழைப்பை மெத்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன்.
மாத்தளையில் ஒரு கல்லூரியில் விழா நடைபெற்றது. எக்கச்சக்கமான சனக் கூட்டம். அக்கூட்டத்தில் நானும் பேசினேன். அந்த விழாவில்தான் நான் பிரபல மலையக எழுத்தாளர் திரு. சி. வி. வேலுப்பிள்ளையைச் சந்தித்தேன்.
விழாவின் உச்சக் கட்டம்.
கலைஞர்களைக் கெளரவிக்கும் நிகழ்ச்சியில் முதலிடம். مي
மலையகப் படைப்பாளர் திரு. சி. வி. வேலுப்பிள்ளை அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கும் நிகழ்ச்சி ஆரம்பிக்கப் போகின்றது.
தோழர் கும் மேடையில் இருந்த என்னை நெருங்கி வந்தார், சி. வி. அவர்களுக்கு நீர் தான் எமது சார்பில் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நான் அவரது வேண்டுகோளை மறுதலித்தேன். வேறு உங்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லையா? எனக் கேட்டேன்.
‘அதல்ல முக்கியம். மலையகப் புதல்வனுக்கு, யாழ்ப்பாணத்து உழைக்கும் வர்க்கத்துக் கலைஞனைக் கொண்டு கெளரவிக்கச் செய்வதுதான் எமது திட்டம் என்றார் கும்.
உண்மையிலேயே சொல்லுகின்றேன். என் உடம்பு ஒரு கணம் புல்லரித்தது. என் வாழ்க்கையிலேயே எனக்குக் கிடைத்த மகா கெளரவம் இது என நான் இப்போதும் இதைக் கருதி வருகின்றேன்.
அதன் பின்னர் எனக்கும் தோழர் கும்மிற்கும் தோழமை நெருக்கம் வெகு கச்சிதமாக வளர்ந்தது. நான் எங்கிருந்தாலும் எனக்கு மாசா மாசம் மல்லிகை ஒழுங்காகக் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
‘எட அப்பா, நான் முழு நேர ஊழியன். என்னட்டை மொத்தமாகச் சந்தாக் காசைக் கேட்காதை. அப்ப அப்ப இருக்கேக்கை தாறன்’ என ஒவ்வொரு மல்லிகையும் பெற்றுக் கொள்ளும் போது சொல்லுவார்.
என் வளர்ச்சியிலும், மல்லிகையின் வளர்ச்சியிலும் மிகக் கண்ணும் கருத்துமாக அவதானமாக இருந்தார். எழுத்தாளர்களில் பரம விசுவாசம் இந்தப் புத்தி ஜீவிகள் இப்படித்தான். ஆனாலும் அவர்களது அறிவும் செயல்பாடும் நான் நம்புகின்ற வர்க்கத்தின் மேன்மைக்குக் கிடைக்க வேணும் என்பார்.
ஒவ்வொரு எழுத்தாளர் பற்றியும் தனித் தனியாகக் கேட்டு வைட்பார். மல்லிகை உள்ளடக்கம் பற்றி நேரம் கிடைக்கும் போது விமர்சிப்பார்.
ஒரு நல்ல இலக்கிய நெஞ்சத்திற்குத் தேவையான அத்தனை நெகிழ்ச்சிக் குணங்களும் - மனிதாபிமானப் பார்வைகளும்-அவரிடம் நிறைய நிறைய உண்டு.
-143

Page 82
கடைசியாகக் கொழும்பிற்குப் போவதற்கு முன், முதல் நாள் என்னுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் நெஞ்சத்தை நிறைத்துக் கொண்டிருந்த ஒரேயொரு விஷயம் இன்று தமிழ் மக்கள் படும் சொல்லொணா வேதனைகள், கஷடங்கள், சிரமங்கள் பற்றியதாகும்.
இந்த மாபெரிய நாசத்திலிருந்து நமது மக்களை விடுவிக்க நம்மாலியன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் எனச் சொல்லிப் பெருமூச்சு விட்டார்.
அப்பொழுது சரத்தினுடைய ஓவியத்தைப் பூர்த்தி செய்து ஒருவர் கொண்டு வந்தார். ஒரு நிமிஷம் மெளனமாகத் தோழர் சரத்தின் ஒவியத்தையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார். சாவு எப்பொழுதும் வரலாம். ஆனால் வாழ்வதானால் இந்த மனுசன் போலத்தான் ஒருவன் வாழ வேணும் என உணர்ச்சி ததும்பச் சொன்னார்.
13-வது தேசிய மகாநாட்டுக்கு முன்னேற்பாட்டு வேலைகளுக்குக் கொழும்பு சென்ற அவர் அந்த வேலைகளுக்கும் மத்தியில் கட்சிக் காரியாலயத்திலேயே உயிர் விட்டார்.
அவரோடு பழகுவது தனிச் சுவையானது. எத்தனை பாரிய பிரச்சினையாயிருந்தாலும் அதைத் தனது அனுபவச் சாணையில் உரசிப் பார்த்து அப் பிரச்சினைக்கு அவர் தரும் விளக்கம் அபாரமானது.
இனப் பிரச்சினை சம்பந்தமாகப் பல்வேறு கட்டங்களில் நான் அவருடன் உரையாடியிருக்கின்றேன். தமிழ் மக்கள் இன்று படும் கொடிய துயரங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் உணர்ச்சி வேகத்தில் கத்தியிருக்கின்றேன்.
எனது உணர்வுகளைச் சரிவரப் புரிந்து கொண்டு இனப் பிரச்சினையின் நிரந்தரத் தீர்வுக்கு அவர் காட்டிய வழி தெளிவாக எனக்குப் புரிந்தது.
ஆரம்பத்தில் சோஷலிஸம் பேசலாம், பின்னர் நடந்து வந்த பாதையை விட்டுத் திசை திரும்பலாம். சாய்வு நாற்காலித் தத்துவங்கள் கதைக்கலாம். பின்னர் சந்தர்ப்பவாதிகளாக மாறலாம். ஒன்றை உத்தரவாதப் படுத்துகிறேன் கும் என்றுமே நான் தொடர்ந்து நடந்து வந்த பாதையிலிருந்து தடம் புரளமாட்டேன்!
(წup-1987.
A

வரலாற்று ஆவணம் தந்த நாவலாசிரியர்
சாரல்நாடன்
-ல் ஒரு பத்து மாதங்கள் புசல்லாவை, நியூபீக் கொக் 1994 தோட்டத்தில் நான் கடமையாற்றினேன். என்னுடைய முப்பத்து
மூன்று வருட தொழில் அனுபவத்தில் வெகு குறுகிய காலம் கடமையாற்றியது அங்குதான்.
அங்கு நான் பெற்ற அனுபவம் புதுமையானது. அங்கு எனக்கு நல்ல நண்பர்கள் சிலர் கிடைத்தனர். இலக்கிய நண்பராக எனக்கு நேரில் அறிமுகமானவர் தான் தி. ஞானசேகரன். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அந்தத் தோட்டத்தில் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றும் அவர், இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினை இருமுறை பெற்ற நாவலாசிரியர் என்பதை நானறிந்து வைத்திருந்தேன். 'குருதிமலை’ என்ற ஒரு காலகட்ட வரலாற்று ஆவணத்தை உள்ளடக்கிய மலையக நாவலை எழுதியவர் என்று அவர்மீது எனக்கு மண்ணின் பாசத்தால் மதிப்பிருந்தது. அவரும் நானும் நெருங்கிய நண்பர்களானோம்.
இயந்திரமயமான என்னுடைய தொழிலுலகில், இலக்கியத்தோடு பரிச்சயம் கொண்ட நண்பர்களின் சகவாசம் வாழ்வில் ஒரு புதிய பிடிப்பினையைக் கொடுத்து வருவதால், தினந்தோறும் மாலைவேளைகளில் நாங்களிருவரும் மணிக்கணக்கில் கதைத்துக் கொண்டிருப்போம். எனது ஒரு தலைமுறைத் தொழில் அனுபவத்தில் இப்படி நடந்தது இதுவே முதலும் கடைசியுமாகும்.
-145

Page 83
'காலதரிசனம்' என்ற சிறுகதைத் தொகுதி ஒன்றை அவர் ஏலவே வெளியிட்டிருப்பதை அதன் பின்னரே அறிந்து கொண்டேன்.
கல்வி கேள்விகளில் சிறந்திருந்த தமது பெற்றோர்களிடமிருந்து இலக்கிய அறிவைப் பெற்றுக் கொண்ட பிரம்மபூரீ து. தியாகராஜா அய்யரின் மகனான ஞானசேகர அய்யர் தமக்கு இயல்பாய்க் கிடைத்த மனித நேயத்துடனும் சமூக இசைவாக்கத்துடனும் வாழ்வில், தமது தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்ற வேண்டிய தன் மகத்துவத்தை உணர்ந்துள்ள மனிதராகச் செயற்படுவதை, நான் இனம் கண்டு கொண்டேன்.
யாழ்ப்பாணத்திலுள்ள புன்னாலைக்கட்டுவன் இவரது சொந்த இடமாகும். தனது ஆரம்பக் கல்வியை உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியை இலங்கை மருத்துவக் கல்லூரியிலும் பெற்றுக் கொண்ட ஞானசேகரன் மலையகத்தில் மருத்துவ உதவி அதிகாரியாகக் கடமையாற்றி, புசல்லாவை அரசாங்க மாவட்ட வைத்தியசாலையில் பயிற்சி பெற்றுப் பதிவு பெற்ற மருத்துவ அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். இவர் பேராதனைப் பல்கலைக் கழக வெளிவாரிக் கலைப் பட்டதாரியுமாவார்.
1964-ல் கலைச்செல்வி என்னும் சஞ்சிகையில் இவரது 'பிழைப்பு என்ற முதலாவது சிறுகதை வெளியாகியது. பெரும் பாலான படைப்பாளிகளைப் போலவே ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதிய ஞானசேகரன் நாளடைவில் நாவல் துறையில் பிரவேசித்தார். நாவல் துறை அவருக்கு இலக்கிய உலகில் ஓர் அழியாத இடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. நான் படைப்பதைவிட, வாசிப்பதே அதிகம். எனவே என்னிடம் குவிந்து கிடந்த சஞ்சிகைகளும் நூல்களும் அவருக்குப் பயன்படச் செய்தேன்.
ஞானசேகரன் எழுதிய ‘புதிய சுவடுகள்’ என்ற யாழ்ப்பாணப் பிரதேச நாவலும், குருதிமலை’ என்ற மலையகப் பிரதேச நாவலும் அமரத்துவம் பெற்ற க. கைலாசபதி, கனக செந்திநாதன், சு. வித்தியானந்தன் என்போரால், சிலாகித்துப் பேசப்பட்டன என்பதை அறிந்து வைத்திருந்த நான். உடனடியாகப் புதிதாக ஒரு நாவலை எழுதவேண்டுமென்று அவரை நிர்ப்பந்திக்கத் தொடங்கினேன். அப்படி எழுதப்படும் நாவல் மலையகக் கலை இலக்கியப் பேரவையின் சகோதர நிறுவனமான மலையக வெளியீட்டகம் மூலமே வெளிவருதல் வேண்டும் என்றும் ஆலோசனை கூறினேன். எனது ஆலோசனை அவரைப் பொறுத்த மட்டில் 'திக்கற்ற காடு தான். எனினும் சம்மதம் தெரிவித்து லயத்துச் சிறைகள்’ நாவலை வெளியிட்டார். முதற்பதிப்பு விற்பனையாகி இரண்டாவது பதிப்பிற்கான தேவை ஏற்பட்டிருப்பது அவரது எழுத்துக்கும், எங்களது வெளியிட்டுத் துறைக்கும் கிடைத்த வெற்றியாக நாங்கள் கொள்ளலாம்.
-146

இடையில் நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் தொழில் புரிந்த காலையில் ஈழத்துக் குறுநாவல் போட்டி ஒன்றைத் தமிழகத்துச் “சுபமங்களா' சஞ்சிகை நடத்தியது. முழுவிபரங்களையும் கூறி ஞானசேகரன் இதில் பங்கு பெற வேண்டும் என்று கூறினேன். இவ்விவரங்களை வேறு நான்கு மலையக எழுத்தாளர்களுக்கும் அனுப்பி அவர்களையும் பங்கு புற்றும்படி வேண்டினேன். ஈழத்துக் குறுநாவலில் மலையகப் பிரதேசத் தின் முக்கியத் துவம் உணரப் படுதல் வேண்டுமென்பதும் என் ஆசை. ஞானசேகரன் தன் ஆற்றலை நிரூபித்தார். சுபமங்களாப் போட்டியில் அவருக்குப் பரிசு கிடைத்தது. "கவ்வாத்து என்ற குறுநாவலைப் பின் மலையக வெளியீட்டகம் மூலம் வெளிக் கொணர்வதற்கு அவரே முன்னின்று உழைத்தார். இது நட்புக்கோர் உதாரணமாக அமைந்த செயல் என்பதை நானும் அந்தனி ஜீவாவும் விளங்கிக் கொண்டோம்.
இந்தக் குறுநாவலுக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் "திரு. ஞானசேகரனின் இந்தக் குறுநாவல். மலையகப் பெருந்தோட்டத் தமிழர் எதிர்நோக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை நோக்குகிறது. அது, தொழிற் சங்கங்களின் பயன்பாடு என்பதாகும். எந்தத் தொழிற்சங்க இயக்கம் அவர்கள் சமூக - பொருளாதாரத் தனித்துவங்களை உணர்ந்து அவர்களின் நல்வாழ்க்கைக்குப் போராடிற்றோ, இன்று அதே மக்களின் ஒற்றுமையின்மைக்கு வழிவகுக்கும் சமூகக் கருவியாக மாறியுள்ள நிலைமையை இந்தக் குறுநாவலிலே காண்கிறோம். மலையகப் பெருந்தோட்ட மக்களை, எதிர் நோக்கியிருக்கும் இன்றைய மிகப் பெரிய சவால் இது. இந்தப் பிரச்சனையின் ஒரு வெட்டு முனைப்புடன் இந்தப் படைப்புத் தருகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். ஞானசேகரனின் படைப்புகள் யாவும் இவ்வாறே சமகால நிகழ்வுகளைச் சமூகப் பொறுப்புடன் சித்திரிப்பனவாக அமைத்துள்ளமையைக் காணக்கூடியதாக இருக்கிறது.
இவர் அமரர்கள் கைலாசபதியும் கனக செந்திநாதனும் ஒரு சேரப்படப் பாராட்டிய படைப்பாளி. புதிய சுவடுகள் என்ற யாழ்ப்பாணத்துப் பிரதேச நாவல் ஆழமான சமுதாயப் பார்வையை வீசி நிற்கும் நாவல் என்பர் அமரர் வித்தியானந்தனும் பேராசிரியர் அருணாசலமும். இலங்கைத் தமிழ் நாவல்கள் குறித்தாராய்ந்துள்ள கலாநிதி நா. சப்பிரமணியம் குருதிமலை குறித்து எழுதுகையில் "அது ஒரு இலக்கியம் மாத்திரமல்ல. மலையக மக்களின் ஒரு காலகட்ட வரலாற்று ஆவணம்" என்பார். கூடவே பேரினவாதத்துக்குப் பணியாத தமிழுணர்வின் முதற் கட்ட வெற்றிக்குக் கட்டியங் கூறி நிற்கும் படைப்பு” என்றும் சிலாகித்துள்ளார்.
குருதிமலையில் சமகால வரலாற்றை நாவலாக்கிய ஞானசேகரன் லயத்துச் சிறைகளில் வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கும் சமகால நிகழ்வுகளைச் சித்திரித்துள்ளார்.
-147

Page 84
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம். ஏ. படிப்பிற்குத் துணைப் பாடநூலாகக் குருதிமலை நாவல் வைக்கப் பட்டிருந்தது.
இவரது சிறுகதைகள் பற்றி பேராசிரியர் க. அருணாசலம் அவர்கள் குறிப்பிடுகையில், “தி. ஞானசேகரன் அவர்கள் கதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமின்றி உருவ அமைதியிலும் தீவிர கவனம் செலுத்தியுள்ளமையை அநேகமாக எல்லாக் கதைகளிலுமே காணமுடிகிறது. உள்ளடக்கங்களுக்கேற்ற மிகப் பொருத்தமான கதைத்திருப்பங்கள் சிந்தனையைத் தூண்டும் முடிவுகள், பண்பு நலனை வெளிப்படுத்தும் பாத்திர வார்ப்புகள், உவமைப் பிரயோகங்கள் கச்சிதமான வருணனைகள் முதலியன அவரது கதைகளுக்குத் தனிச் சோபையை அளிக்கின்றன’ என்கிறார்.
வைத்திய அதிகாரியாக ஒரே இடத்தில் நீணி ட காலம் கடமையாற்றிவரும் திரு. ஞானசேகரனின் தொழில் திறமை பற்றி நான் அவருடன் இருந்த காலப்பகுதியில் நன்கு உணர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. தொழில் செய்யும் இடத்தில் மட்டுமின்றி பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்தும் அவரைத் தேடிப் பலர் வருவதை நான் பார்த்திருக்கின்றேன். சுற்றுப் புறத்தில் வசிக்கும் சகல இன மக்களாலும் இவர் மிகவும் உயர்வாக மதிக்கப்படுகிறார். இவரது தொழில் திறமை காரணமாக, பாங்கொக் நகரில் நடந்த குடும்பத்திட்டம் சம்பந்தமான சர்வதேசக் கருத்தரங்கில் இலங்கையின் பிரதிநிதிகளில் ஒருவராகப் பங்கு பற்றியதோடு இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் இது தொடர்பான கல்விச் சுற்றுலாவிலும் பங்குபற்றும் வாய்ப்பும் இவருக்குக் கிட்டியது.
ஏப்ரல் - 1998
A
-148

அங்கமெல்லாம் நெறைஞ்சமச்சான' பல்கலைச் செல்வர்
ஏ. பி. வி. கோமஸ்
‘'தோன்றின் புகழொடு தோன்றுக; அதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”
ன் ற வரையறைக் கே இலக் கணமாக வாழ் நீ து 6 கொண்டிருப்பவர். அறுபது அகவையைக் கடந்து ஆழமான
கடல் போன்று அமைதியாக இருப்பவர். தன்னை விளம்பரம்
செய்ய வேண்டும் என்ற எண்ணம் எள்ளளவும் இல்லாமல் வாழ்பவர். என்றும் சிரித்த முகம் , இளமைத் தோற்றத்தை இழக்கமாட்டேன் என்ற பிடிவாதம் கொண்டவர் போல் தோற்றமளிப்பவர். எம்மதமும் சம்மதம் என்று கூறுபவர். அவர் தான், ‘அங்கமெல்லாம் நெறைஞ்ச மச்சான்’ தந்த அன்புக்குரிய ஏ. பி. வி. கோமஸ்.
1954 களிலிருந்து இலக்கியத்துக்கு பங்களிப்புச் செய்து வருபவர். சமயம், கல்வி, கலாச்சாரம், சிறுகதை, குறுநாவல், நாடகம், கல்வி, சொற்பொழிவு, நெறியாழ்கை, விளையாட்டு, கட்டுரை ஆகிய எல்லாத்துறையிலும் திறன் கொண்டு தன் எண்ணங்களை எழுத்து வடிவில் தருபவர். இவ்வளவு துறைகளிலும் தன் திறமையை வெளிப்படுத்திய காரணத்தால் தான் தினகரன் வாரமஞ்சரி இலக்கிய உலகத்தினால் 'பல்கலைச் செல்வர்' என்ற நாமம் கொடுக்கப்பட்டது.
-149

Page 85
மலையக இலக்கிய வரலாறு ஒன்று எழுதப்படும் பொழுது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துக் கொள்வார். இவருடைய ஆக்கங்கள் அனைத்தும் தற்காலத்துக்கு ஏற்றவகையில் எளிமை உடையவை. தான் யாருக்கு எழுதுகிறேனோ அவர்களை உணர்ந்து அவர்கட்கு ஏற்ற விதத்தில் எழுதியவர். எழுதிக் கொண்டிருப்பவர்.
“ஒளியொருவற்கு உள்ள வெறுக்கை’ என்றார், வள்ளுவர். பிறனாற் செய்ய முடியாத ஒன்றினைத் தன்னாலே செய்ய முடியும் என்ற ஊக்க மிகுதியே ஒருவனுக்கு ஒளியாகும் என்பதே இவ்வடியின் கருத்தாகும். ஊக்க மிகுதி இவரிடம் என்றும் காணப்படும் சிறப்பம்சமாகும். எந்த வேளையும் எதையாவது செய்ய வேண்டும் என்ற வேட்கை கொண்டவர். தான் செய்வது மற்றவர்க்கு ஏதோ ஒரு வகையில் பயன்பட வேண்டும் என்பதிலும் மிக்க கவனமுடையவர்.
இவரொரு பட்டதாரி. பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் பொழுதே எழுத் தாக்கத் தை வெளிப்படுத் தரியுள்ளார். பல தமிழறிஞர்களுடன் பழகும் சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளார். அதுவும் அவரின் கலைப் பயணம் வளர்ச்சியடைய உதவியது. பேராசிரியர் கைலாசபதி அவர்களோடு கலாநிதி வித்தியானந்தன் அவர்களின் துரோகி’ எனும் நாடகத்தில் நடித்துள்ளார். கைலாசபதி கதாநாயகன் கோமஸ் அவர்கள் அந் நாடகத்தில் வில்லன், பேராசிரியர். கா. சிவத்தம்பியும் இந்நாடகத்தில் நடித்துள்ளார்.
எவ்வளவு திறமை இருந்தாலும் தன்னை ஊக்கப்படுத்த ஒருவர் இருந்தால் தான் தன் திறமை வெளிப்பட வாய்ப்பாக இருக்கும் என்பதை யாவரும் அறிவர். அவ்வகையில் நமது கோமஸ் அவர்கட்கு ஆரம்ப காலம் தொட்டே ஊக்கமும் உற்சாகமும் அளித்தவர் பிரபல பத்திரிகையாளரான அமரர் எஸ். டி. சிவநாயகம் என்று மன நெகிழ்வுடன் நினைவு கூருகிறேன்.
இவர் அதிகமான சிறுகதைகள் எழுதியுள்ளார். ஆனால் 12 சிறுகதைகள் அடங்கிய ஒரேயொரு தொகுப்பு ‘வாழ்க்கையே ஒரு புதிர்' என்ற பெயருடன் வெளி வந்துள்ளது. மலையக மக்களின் வாழ்வியல் அம்சங்களை உணர்வு பூர்வமாகவும் மாணவர்களின் பொருளாதார அவல நிலையை அநுபவ பூர்வமாகவும் இக்கதைகளில் எடுத்துக் காட்டியுள்ளார்.
இவர் அதிகமான கவிதைகளை எழுதியுள்ளார். இக்கவிதைகளைச் சொந்தப் பெயர்களிலும் ‘ஜெயம்' என்ற பெயரிலும் எழுதியுள்ளார். நூற்றுக் கணக்கான கவிதைகளை எழுதிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றினூடாக வெளிக் கொணர்ந்துள்ளார். அவை இன்னும்
-150

நூலுருப் பெறாமலிருப்பது மனதுக்கு ஒரு துன்பத்தையே தருகிறது. விரைவில் வெளிவர வேண்டும்.
நாட்டார் பாடலில் இயல்பான ஆர்வம் கொண்டவர் இவர். மலையக நாட்டார் பாடலில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் நாட்டார் பாடல்களைப் பாடும் திறன் தனித்தன்மை கொண்டது. கேட்போரைக் கிறங்கச் செய்யும் வகையில் தாள லயத்துடன் பாடிக்காட்டுவார். கேட்போர் மெய்மறந்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள். மலையக நாட்டார் பாடல்களைக் கொண்டு 'அங்கமெல்லாம் நெறைஞ்ச மச்சான்' என்ற தலைப்பில் குறு நாவல் ஒன்றை இவர் சுதந்திரனில் எழுதினார். பின்பு இது நூலுருப் பெற்றது.
இவர் பேசும் பொழுதும், கவிதை வாசிக்கும் பொழுதும் கணிரென்று குரல் கேட்போரை தன்வசப்படுத்திடும். வசீகரக் குரல் கொண்டவர். பல கவிதை அரங்குகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். கவிதையரங்கை நயமிக்கதாக நடாத்திச் செல்லும் பாங்கு இவரின் தனிப்பண்பாகும்.
இவரால் உருவாகிய கலைஞர்கள் பலர் உள்ளனர். தானொரு ஆசிரியராக இருக்கும் காலத்தில் கல்வியைக் கற்றுக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மாணவர்களைக் கலையில் ஈடுபாடுள்ளவர்களாக மாற்றும் பணியையும் மேற் கொணி டவர். மாணவர்களைப் பேச்சாளர்களாக, கவிஞர்களாக, நடிகர்களாக, எழுத்தாளர்களாக உருவாக்கியுள்ளார். இவரின் உறுப்பமைய அழகாக எழுதும் எழுத்தை அப்படியே பார்த்து அதுபோல எழுதிய மாணவர்களையும், ஏன் ஆசிரியர்களையும் நான் கண்டுள்ளேன்.
இவரொரு பரந்த மனப்பான்மை கொண்டவர். எல்லோரையும் மதிக்கும் எளிமை நிறைந்தவர். மற்றவர் மதங்களை மதிக்கும் தன்மையோடு மற்ற மதங்களைப் பற்றி நன்றாக வாசித்துத் தெரிந்தும் வைத்திருக்கின்றார். இவரொரு கத்தோலிக்கராக இருந்தும் சைவக் கோயில்களில் சைவ சமயத்தைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் பல்வேறு சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பத்துக்கு அதிகமான இஸ்லாமியப் பாடல்களை எழுதி உள்ளார். இதனை இலங்கை வானொலி ஒலிபரப்பியுள்ளது.
இவரின் குடும்பம் கலைக் குடும்பமே. மனைவி, இரு ஆண் மக்கள், இரு பெண் மக்களைக் கொண்ட குடும்பம். அனைவரும் கலையில் நேரடி ஈடுபாடு கொண்டவர்கள். பெண்கள் நடனம், பாட்டுப் பாடுவதில் சிறந்து விளங்கியவர்கள். விளங்குகிறார்கள் - ஆண் மக்கள் நல்ல நடிகர்கள்.
-151

Page 86
இவ்வளவு கலையார்வம் மிக்கவராக பல்கலைச் செல்வராக, இருந்தமையால் தான் இந்து கலாசார அமைச்சு இவருக்குத் ‘தமிழ்மணி பட்டமளித்து இவரைக் கெளரவித்தது.
ஆசிரியராகக் கடமையாற்றி, அதிபராகி, பின் மாகாண கல்வியமைச்சில் கடமையாற்றி இன்னும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார். இவரின் அபாரத் திறமை என்று தமிழ், ஆங்கிலம், சிங்களம், ஆகிய மொழிகளில் உள்ள புலமையைக் கூறலாம். மும்மொழியிலும் அழகாகவும், ஆழமாகவும் பேசவும், எழுதவும், பாடவும் கூடிய ஆற்றல் கொண்டவர்.
இன்றும் இவர் ஒரு எழுத்தாளராக இருக்கின்றார். நாம் வாழும் போதே ஒரு கலைஞனை வாழ்த்த வேண்டும். இவரை இன்னும் நன்றாக வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும். இவரில் இருக்கும் பயனைப் பெற வேண்டும். இவரின் ஆக்கங்களை நூலுருப் பெறச் செய்ய வேண்டும். அப்பொழுதே அவை இன்றைக்கும் என்றைக்கும் இவரை நினைவு படுத்திக் கொண்டிருக்கும்.
ஏ. பி. வி. கோமஸ் அவர்களின் கலைப் பயணம் இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும். அதற்காக நாமும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
gas 61 frt if - 2001
A
-152

புகைப்படக் கலையில் புதுமைகள் பல செய்தவர்
ந. இராசரெட்னம்
O -ம் ஆண்டு என நினைக்கிறேன். நான் செல்லம்ஸ் ஸ்ரூடியோவுக்குப் 1958 போயிருந்தேன். புகைப்படக் கலையில் எனக்கு எப்படியோ ஆர்வம்
ஏற்பட்டிருந்த காலம் அது. அந்த நிறுவனத்துக்குள் போயிருந்து ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த என்னை அன்புடன் விசாரித்து இருக்கையில் அமரச் சொன்னார், ஒருவர். எனக்குக் கூச்சமாக இருந்தது. கதிரையில் இருந்தேன். அப்பொழுது வெளியில் இருந்து வந்த ஒருவர் என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து "நீக்கிலஸ் நான் பேந்து வாறன்’ எனச் சொல்லி விட்டுச் சொன்றார்.
அப்பொழுதுதான் நான் தேடி வந்த ஸ்ரூடியோ பிலிப் நீக்கிலஸ் இவர்தான் என மட்டுக் கட்டிக் கொண்டேன். மரியாதையின் நிமித்தம் சட்டென எழுந்து நின்றேன். நான் திடீரென எழுந்து கொண்டு மரியாதை செய்ததைக் கண்டு அவர் சொண்டுக்குள் சிரித்துக் கொண்டே, முதுகில் தட்டிக் கொடுத்து “இருந்து கதையும், தம்பி!” என ஆதரவாக என்னைத் தன் பக்கம் இருத்திக் கொண்டார்.
அந்தக் கணமே எனது குருநாதராக மனதுள் வரித்துக் கொண்டேன்.
“எனக்கு இந்தப் போட்டோ பிடிக்கிற கலையிலை ரொம்ப ஆசை. கொஞ்சம் கொஞ்சம் தெரியும். அதை முறையாகப் படிச்சுப் போட வேண்டுமென்பதுதான் என்ரை விருப்பம். அதுதான் உங்களைத் தேடிக் கொண்டு வந்தனான்!” வார்த்தைகள் திக்கித் திறணித்தான் வந்தன. பயம் வேறு. எங்கே என்னை நிராகரித்துப் போடுவாரோ என்ற மனக் கிலேசத்துடன் தான் சொல்லி முடித்தேன். “நான் நல்லா யோசிக்க வேணும் தம்பி. எதுக்கும் நாளைக்கு ஒருக்கா வந்து என்னைப் பாருமன்’ எனச் சொல்லி எனக்கு விடை தந்தவர், எழுந்து
-153

Page 87
வாசல்வரைக்கும் வந்தார். என்னை அவர் நடத்தின விதம் என் மனசை அப்படியே
கவ்விக் கொண்டது. என்ன பாடுபட்டாவது அவரிடம் வேலை பழகி விட
வேண்டும் என்ற ஓர் ஆவலைத் தூண்டியது.
அடுத்த நாள் அதே நேரம் தேடிச் சென்றேன்.
“டாக் ரூம் வேலைகளைப் பாரும் தம்பி. அதுக்குப் பின்னர் தான் உம்மட திறமையைப் பார்த்து வேலைக்கு எடுக்க முடியும்” என்றார்.
அன்று அவர் என்னை அவதானித்து எனக்குத் தன்னம்பிக்கை ஊட்டிய படியால் அவரிடம் நிறைய நிறையக் கற்றுக் கொண்டேன்.
இவரது தந்தையாரும் ஒரு புகைப்படக் கலைஞர். அத்துடன் ஓர் ஓவியரும் கூட. பெயர் மாணிக்கத்தம்பி. 1922-ல் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இவர் ஓவியத்தை மையமாகக் கொண்ட ஸ்ருடியோ ஒன்றை நடத்தி வந்தார். அந்தக் காலத்தில் இவர் சிறுவனாக இருந்த போதிலும் ஸ்ரூடியோவுக்கு அடிக்கடி சென்று வந்தார். இவரது ஆரம்பக் குருவே இவரது தந்தையார் தான் தந்தையாரின் அடியொற்றி இவரும் புகைப்படக் கலையில் பலரும் வியந்து பேசும் அளவுக்குக் கலை நுட்பம் செறிந்த புகைப்படங்கள் பலவற்றைக் கடந்த காலங்களில் எடுத்துள்ளார்.
1941-ல் யுத்த காலத்தில் திடீரென்று இவருக்குப் பட்டாளத்தில் சேர வேண்டுமென்ற ஆசை தோன்றியது. பட்டாளத்தில் சேர்ந்து இந்தியா, ஆபிரிக்கா, அபிசீனியா, எகிப்து, பலஸ்தீன், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்குப் பட்டாளத்தானாகக் கடமை புரிந்துள்ளார். இந்தக் காலத்தில் புகைப்படக் கலையை மறந்து, ஊர் ஊராகச் சுற்றி வந்தார். 1947-ல் திரும்பி வந்த இவர், சொந்தமாக ஸ்டுடியோ ஒன்றில் பங்காளராகச் சேர்ந்தார். பின்னர் அபிப்பிராய பேதம் காரணமாக அதிலிருந்து விலகி, சொந்தமாக 1950-களில் "செல்லம்ஸ் ஸ்ரூடியோவை நிர்வகித்தார். இந்தக் கால கட்டத்தில் தான் நான் இவரிடம் சென்று இவரைச் சந்தித்தேன். என்னைப் போலவே இவரைக் குருவாகக் கொண்டு வேலை பயின்றவர்கள் பலர். அவர்களில் பிரபல படப்பிடிப்பாளர்களான எஸ். டி. அரசு, சாவகச்சேரி முத்துலிங்கம், ஞானம் ஸ்ரூடியோ ஞானப்பிரகாசம் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
தொழில் நுட்பம், நுணுக்கம் சம்பந்தமாக யார் வேண்டுமானாலும் - இளந் தலைமுறையைச் சேர்ந்த யார் என்றாலும் இவரிடம் போய்க் கேட்டால் சகல நுட்ப, நுணுக்கங்களையும் சிரமம் பாராது சொல்லிக் கொடுப்பார். தொழிலைத் தெய்வமெனக் கொண்டாடும் மனதினரான இவர் பழகுவதற்கு ரொம்பவும் இனிமையான சுபாவங்களைக் கொண்டவர். ஏதாவது அலுவல்கள் காரணமாக வெளிக் கிளம்பும் பொழுது ஒரு சில நிமிடங்களுக்கு முன்னரே அங்கு போய்ச் சேரக்கூடியதாக நேரத்தைக் கனம் பண்ணிச் செயல் படுபவர்.
சமீபத்தில் யாழ் பல்கலைக் கழகத்தில் நடந்த புகைப்படக் கலை சம்பந்தமான ஓர் அங்குரார்ப்பணக் கூட்ட ஆரம்பத்தில் பல ஆர்வலர்கள் மத்தியில் இவர்
-154

கெளரவித்துப் பாராட்டப் பெற்றது குறிப்பிடத் தக்கது. "புறநிலைப் படிப்புகள் அலகு" என்ற இந்தப் புதிய அமைப்பின் இணைப்பாளரான திரு.இரா.சிவச்சந்திரன் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க, கலைப் பீடாதிபதி பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் அப் பாராட்டுரையை நடத்தி அப்படியான முதிர்ச்சி பெற்ற கலைஞரைக் கெளரவித்தது. யாழ்பபாணத்தில் நடந்த மிகப் பெறுமதி மிக்க சம்பவங்களில் ஒன்றாகும்.
திரு. நிக்கலஸ் அவர்கள் தனது புகைப்படப் பிடிப்பு முதல் அனுபவத்தைப் பற்றிச் சமீபத்தில் ஓர் பேட்டியின் போது குறிப்பிட்டதாவது: சென் பற்றிக்ஸ் கல்லூரியின் இவரது ஆசிரியரான கே. எஸ். பி. செல்லத்துரை என்பவரது மகனுக்கு முதற் சற்பிரசாதம் என்ற தேவநற்கருணை பெறும் முதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர், மாணவரான இவரை அந்த நிகழ்ச்சியைப் படமெடுத்து உதவும்படி கேட்டுக் கொண்டார். இவரும் ஒரு விதத் திகிலுடன் படத்தை எடுத்து முடித்தார். எடுத்த முதல் படமே மிக அழகாகவும் கச்சிதமாகவும் அமைந்தது. இதையிட்டு இவருக்கு மிகவும் மகிழ்ச்சி.
இவருக்கு 1930-ல் மற்றொரு மறக்க முடியாத நிகழ்ச்சியும் நடந்தது. அன்றைய வெள்ளைக்கார கவர்னர் சேர். அன்று கால்டிகொட் அவர்கள் யாழ்ப்பாண விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அவரை அன்னம் போல அமைத்த அலங்காரப் படகொன்றில் ஊர்காவற்றுறைக்கு அழைத்துச் சென்றார்கள். அதை இவர் அழகிய கோணத்தில் புகைப் படமாக்கினார். அந்தப் புகைப்படம் கொழும்பில் இருந்து வெளிவரும் ரைம்ஸ் ஒவ் சிலோன் பத்திரிகையில் முழு உருவத்தில் முன் பக்கத்தில் வெளிவந்தது. இதை அவதானித்துப் பார்த்த பலர் நாடு பூராவும் இருந்து தமது பாராட்டுக்களை அப்போதே இவருக்குத் தெரிவித்துக் கொண்டனர்.
இத்தனை சிறப்புத் தகுதிகளும் பொருந்தியுள்ள ஒருவரை நான் எனது குருநாதராக வரித்துக் கொண்டதை எண்ணியெண்ணி மகிழ்ச்சி கொள்ளுகின்றேன். இன்னும் இத் துறையில் ஏதாவது ஆலோசனையோ ஒத்துழைப்போ தேவை என ஏற்படும் சமயங்களில் எல்லாம், இவரைத் தேடி இவரது வீட்டுக்குச் செல்வது எனது வழக்கம். தேவை ஏற்படின் இவர் சிரமத்தைப் பாராமல் என்னைத் தேடி பேபி போட்டோவுக்கே வந்து விடுவதுமுண்டு.
இன்று எழுபது வயதுக்குள் நுழைந்திருக்கும் திரு. பிலிப்நிக்லஸ் அவர்கள் பலராலும் நேசிக்கப்படும் ஒருவராகும். தனது பரம்பரையைத் தொடரும் நிமிர்த்தமாகத் தனது மகனையும் புகைப்படத் துறைக்குள் பணிபுரிய வைத்துள்ளார். இவரது மகன் ஜோய் ஜெயக்குமார் வீரகேசரிப் படப் பிடிப்பாளராகும்.
பல சாதனைகளைப் படப்பிடிப்புத் துறையில் சாதித்த இவர், இன்னும் மெளனியாகவே தொழில் செய்து வருகிறார். பரபரப்பை அறவே விரும்பாத இவரது சுபாவம் கெளரவிக்கத்தக்கதாகும்.
LDITIfat-1993 A
-15S

Page 88
தனித்துவம் மிக்க
ஓவியக் கலைஞர்
வியங்கள் - கதைகளுக்கு உயிர்த் துடிப்பை ஊட்டுவதோடு கதை 9. சித்திரிக்கும் பாத்திரம், பகைப்புலம், காட்சிகளை வாசகர் மனதில்
பதியவும் செய்கிறது என்பதில் தவறிருக்க முடியாது.
சிலவேளை எனது கதைகளுக்கு வரையப்பட்டுள்ள படங்களைப் பார்த்துக் கொண்டு அதில் நான் ஒன்றிப்போய் விடுகின்றேனென்றால் அது ரமணியின் படங்களில் தான். இப்படிச் சொல்லும் போது ஒரு ஓவியன் எவ்வளவு தூரம் வெற்றியடைகின்றானென்பதை, அப்படைப்பாளியால் தான் மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும் என்ற உண்மையை யாரும் மறுக்க மாட்டார்களென்றே நினைக்கிறேன்.
அப்போதெல்லாம் யார் இந்த ஓவியர் ரமணி? பெரிய பத்திரிகை நிறுவனங்களில் கொழுத்த சம்பளத்துடன் கடமையாற்றுகின்றவரோ! என்ற எண்ணம் தவிர்க்க முடியாது ஏற்பட்டதுதான்!
அன்று. பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் முதல் வருட மாணவனாகப் பிரவேசித்த முதலாம் நாள் - முன்பே தெரிந்த சில நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போதுதான், புன்னகை சிந்திய படி சாந்தம் ததும்பும் அந்த உருவம் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.
‘இவர்தான் ரமணி இவரது சொந்தப் பெயர் வி. சிவசுப்பிரமணியம் அறிமுகப் படலம் நடக்கிறது. திறமையில் மாத்திரமல்ல வயதிலும் முதிர்ந்தவர் தானென்ற எனது எண்ணத்தை உடனே மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. மகிழ்ச்சித் துடிப்பில் அந்த ஆற்றல் மிக்க கரத்தை என்னால் விட்டு விட முடியவில்லை.
-156
 

அவருடைய அனுபவங்களையிட்டுக் கதைக்க வேண்டும் போலவும் இருந்தது. ஆயினும் இனித் தொடர்ந்து சந்திக்கும் வாய்ப்பு முழுமையாக இருக்கிறது தானே என்பதால் கூடவே ஒரு நிம்மதி.
“காலையில் இருந்தே எதிர் பார்த்திருந்தனான்'இதுதான் முதன் முதலில் என் செவிகள் சந்தித்த ரமணியின் குரல்.
முதல் வருட மாணவர்களை, பழைய மாணவர்கள் - ஆசிரிய கலாசாலை. பல்கலைக் கழகம் முதலிய இடங்களில் எதிர்பார்த்திருப்பது எதற்காகவென்று தெரியும்தானே. ? அத்தகைய முதன்மைத் திமிர்களைத் தாண்டிய அக்குரலில் ஒரு புலமை நெஞ்சின் துணை முதல் நாளிலேயே கிடைத்துவிட்ட பூரிப்பு எனது மெய்யெலாம் பரவியது.
அதைத் தொடர்ந்து எந்த வேளையிலென்றாலும் எத்தனை முறையென்றாலும் தனக்கேயுரித்தான புன்னகையை உதிர்த்த படிதான் செல்வார். நானும் கூட எப்பொழுது கலாசாலை நேரத்தில் ஓய்வ கிடைக்கிறதோ, அப்பொழுது நுண்கலைப் பகுதியை ஒருமுறை நோட்டம் விட்டு, அங்கும் பாடவேளையில்லாமலிருந்தால் ரமணியை நெருங்கி விடுவேன். நண்பர் அன்பு ஜவஹர்ஷாவும் கூடவே வந்து விடுவார். பிறகென்ன? பரஸ்பரம் கருத்துப் பரிமாறல்களும் அனுபவ வெளிப்பாடுகளும் தான்.
கொழும்பிலிருந்த காலத்தில் சில பத்திராசிரியர்கள் நாலைந்து கதைகளைத் தூக்கித் தந்து, விருப்பமானதொன்றுக்குப் படம் கிறித் தருமாறு தந்துவிடுவதாகவும் இதனால் மிகுந்த ஆர்வத்துடன் அனுப்பும் குறிப்பாக இளம் எழுத்தாளர்களின் நிலையை எண்ணிப் பார்க்கத் தவறுகிறார்களென்றும் அவர் சொல்லும் போது, ஒரு பத்திரிகாசிரியன் எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டுமென்ற கருத்தை ரமணி அனுபவ வாயிலாகச் சொன்னது இன்று கூட பத்திரிகாசிரியர்களுக்குப் பொருத்தமானதுதான்.
இன்று நேற்றல்ல, கடந்த பத்தாண்டுகளாக ஒவியத் திறமையை, பத்திரிகைத் துறையோடு பிணைத்துப் பணிபுரிந்து வரும் இவர் இதுவரை சுமார் நூறு புத்தகம், சஞ்சிகைகளுக்கு அட்டைப்டம் வரைந்துள்ளார். அநேகமாக எல்லா ஈழத் தமிழ் தேசியப் பத்திரிகைகளிலும், தவஸ, வீரகேசரி வெளியீடுகளிலும் படம்வரைந்து வருகின்றார். குறிப்பாக நவீன பாணித் தமிழ் எழுத்துக்களையும் பத்திரிகை, சஞ்சிகைகளில் அறிமுகப்படுத்தியதும் ரமணி என்றே சொல்ல வேண்டும்.
இதை எழுதும் போது, அண்மையில் திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட பூ ஞாபகம் வருகின்றது. அதன் உள்ளடக்கத்தைப் பாராட்டியவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமானோர் நேரிலும் கடிதமூலமும் அதன் அட்டையைத்தான் பாராட்டினார்களென்ற செய்தி இதைப் படித்த பின்புதான் ரமணிக்குக் கூடத் தெரியவரலாம்.
பஞ்சமர் வெளிவந்த புதிதில், அதன் அட்டையைப் பார்த்தவுடனே ஒருவர்.
-157

Page 89
"ஏன் இந்த முகங்கள் இவ்வளவு ஆவேசமாக இருக்கின்றன? என்று கேட்டதாக மன்னார் நண்பரொருவர் சொன்னார். "போராட்ட உணர்வு கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களை டானியல் சித்திரித்துள்ளார். அதைத் தானே ரமணி அட்டையில் தீட்டியுள்ளார் என்று அவரிடம் கேட்டேன் நான்.
அதிகமேன் கடந்த பல வருடங்களாக மல்லிகை அட்டையை அலங்கரித்து வருவது இவரது நவீன படங்கள்தானே.
"மல்லிகை அட்டையா? அது ரமணிதான் வரைய வேண்டும்' என்று திரு. டொமினிக் ஜீவா வாய்விட்டுச் சொல்வார். "ஈழத்தின் முதல் தரமான ஒவியர் என்று ஓவியக் கலைஞரான 'சிரித்திரன் - சுந்தர் கூடப் பலதடவை மனந் திறந்து கூறியுள்ளார்.
இத்தனைக்கும் இவர் ஒரு சிற்பக் கலைஞரும் கூட என்பது பலருக்குத் தெரியாமலிருக்கலாம். என்ன இருந்தாலும் இங்கு கலைஞர்களுக்கு ஏற்ற சன்மானங்களும் கெளரவங்களும் அளிக்கப்படுவதில்லையென்ற உண்மையை "சில வேளை நான் அட்டை வரைந்த புத்தகங்களை நானே வாங்கிப் பாதுகாக்க வேண்டியுள்ளது என்று கூறும் பொழுது அறிந்துகொள்ள முடிகிறது. இந்த நிலைமை எப்போதுதான் மாறுமோ? ஒருநாள் கையில் 'கணையாழி யுடன் நடந்து கொண்டிருந்தேன் நான். எதிர்ப்பக்கமாக சைக்கிளில் வந்தவர், நிறுத்தி இறங்கி என் கையிலிருந்த சஞ்சிகையை வாங்கி அட்டைப் படத்தைப் பார்த்தவர் “இத்தகைய நவீன ஓவியங்களை ஈழத்துச் சஞ்சிகைகளும் வெளியிட வேணடும். இத்தகைய படங்களை வாசகர்கள் இரசிக்கச் செய்ய வேண்டுமல்லவா? என்று கேட்டவாறே பக்கங்களைப் புரட்டத் தொடங்கினார்.
இடையிடையே அவரது கவனம் புதுக்கவிதைகளில் படிவதை நான் அவதானிக்கத் தவறவில்லை. "ஆழமான விடயங்களைக் கூட மிக அழகாகப் புதுக்கவிதைகளில் எழுதுகிறார்கள். ஈழத்தில் கூட நிறைய வெளிவருகின்றன என்று தனது கருத்தைக் கூட அப்போது கூறி வைத்தார்.
இயற்கையான கலைத்துவம் கொண்ட ரமணி அத்தோடு மாத்திரம் நின்றுவிடவில்லை. நுண்கலைகளைக் கல்லூரியில் பயின்று, தனது ஆற்றலை நெறிப்படுத்தி டிப்ளோமா இன் ஆட்' இல் முதற்தரத்தில் சித்தியடைந்ததைத் தொடர்ந்து, தேசிய நூதன சாலையில் தயாரிப்பு உதவியாளராக மூன்று வருடம் கடமையாற்றியுள்ளார்.
மல்லாகத்தில் வசிக்கும் இவர் தற்பொழுது ஏறாவூர் அலிகார் மகாவித்தியாலயத்தில் விசேட ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
ரமணியிடமிருந்து கலையுலகம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறது இந்த எதிர்ப்பார்ப்பு நிச்சயம் வீண் போகாது என்றே நம்புகிறேன்.
- DTiff - 1974
A
-158


Page 90


Page 91
ISBN 955 - 8250 -
IIIIIIII