கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழ நாட்டுப் பிரயாணம்

Page 1


Page 2


Page 3

FF LO * լք
நாட்
ட்டுப் ì
யான
n
திதி
திய
JT t
ய நகரம்
ଜଗaf
ങ്ങി
-1 7

Page 4
முதற் பதிப்பு: 1959

ஈழநாட்டுப் பிரயாணம்
6 கண்டுபிடித்து விட்டேன்" என்ருர் மன்னர்.
o o ல்லி முடியாது. அவருக்கு உண்டான குதூகலத்தைச சொல்லி முடியாது. தம் డీ இருந்த சித்திரக் கலைஞரை அப்படியே கட்டிக
கொண்டார். * கலைஞரே ! என்னுடைய மனேரதம் நிறைவேறும் காலம் வந்துவிட்ட்து ' எனறு கூறினர். " எப்பேர்ப்பட்ட இடம் ! எவ்வளவு அருமையான
குகைகள் !" என்று உள்ளம் பூரித்துப் போனர். குகைக்கு
அடியில் போய் உட்கார்ந்து மேலே அண்ணுந்து பார்த்து மகிழ்ந்து போனர்.
கலைஞருக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. ஆன லும் மன்னருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பார்த்துத் தாமும் மகிழ்ந்து போனர். " அரசே 1 என்ன சொல்லு கிறீர்கள்?’ என்று ஆனந்த மிகுதியுடன் கேட்டார்.
* கலைஞரே! கேளும் : நம்முடைய பிரயாணம் முடிந்து விட்டது. காம் இத்தனை காலம் எதைத் தேடிஅலைக்தோமோ, அது கிடைத்துவிட்டது. இந்த உயரமான மலையும் இதன் அமைப்பும்தான் நம்முடைய மனுேரதம் நிறைவேறுவதற்குச் சரியான இடம். ஆகா ! இந்த மலைப் பாறையில் எவ்வளவு கதைகளைச் சித்திரிக்கலாம். நமது கனவில் இருந்து வந்த சித்திர லோகத்தையே நாம் இங்கு அமைத்துவிடுவோம்' என்ருர்,
இவ்வாறு கூறிய மன்னன் காசியப்பனின் சகோதரர் தந்தையைக் கொலை செய்துவிட்டு காட்டைப் பிடித்துக் கொண்ட காசியப்பனை வெல்வதற்காக *சிவனுடைய சகோதரர்_தமிழ் காட்டிலிருந்து ஈழநாட்டுக்குப் படை திரட்டிச் சென்ருர், தமையனை வென்று சிக்ரிகோட் ை யைக் கைப்பற்றி ஆட்சிபுரிந்து வந்தார். பாரத 5ாட்டில் அவர் இருந்து வந்த நாளில் அஜந்தாக் குகைகளிலும்,

Page 5
2 ஈழநாட்டுப் பிரயாணம்
சித்தன்னவாசல் மலைமீதும் தாம் பார்த்த சித்திர அற்புதங் களைப்போல் ஈழ காட்டிலும் ஏற்படுத்த வேண்டும் என்று ஏங்கினர். அதற்குத் தகுந்த இடத்தைத் தேடிக் கண்டு பிடிப்பதற்காகப் பல மாத காலம் சுற்றி வந்தார். கடைசி யில் இக்த மலைக் குகையைக் கண்டார். அதில் சித்திர லோகத்தைச் சிருஷ்டிக்கக் கலைஞருக்கு ஆணையிட்டார்.
நாட்கள், மாதங்கள், வருஷங்கள் ஆயின. காட்டுப் பிரதேசத்தில் இருண்ட மலைக் குகையில் கனவு உலகம் சிருஷ்டிக்கப்பட்டு வந்தது. இருண்ட குகைக்குள், உயிரற்ற கற்பாறைகளுக்கு மேல் அரண்மனை அந்தப் புரங்கள், ராஜ கன்னிகைகள், மலர்த் தட்டுகள் எங்கெங் கும் கண்ணுக்கு இனிய மனேகரமான காட்சிகள். இந்தச் சிரஞ்சீவிச் சிற்பக் காட்சிகள் வாழ்நாளில் மறக்க முடியாத
அறபுதம
சிக்ரியின் இருண்ட குகைகளிலிருக்கும் அழகிகளின் "ஓவியங்களைப்போலவே ஈழநாட்டுச் சாலைகளில் உயிர் பெற்று உலாவும் பெண்மணிகளையும், சிக்ரியாச் சித்திரங் களில் தென்படும் அலங்காரங்களைப் போலவே அந்தப் பெண்கள் உடையணிந்திருப்பதும், ஈழ நாட்டு இயற்கை எழிலுக்கு ஏற்ப அவர்கள் உடல் வனப்பு அமைந்திருப்ப தும், ஏதோ நாடகத்தில் வர்ணத் திரையில் காண்பது போல அவர்கள் வயல்வெளிகளில் சொகுசாக வேலை செய் வதும், நெற்கதிர்களை லாகவமாக அணைத்துப் பிடிப்பதும் பார்த்துப் பார்த்து வியக்கத்தக்கவையாக இருந்தன.
ஈழநாட்டின் இயற்கைத் தோற்றம் கற்பனைக்கு எட்டாதது. இயற்கை வளம் நிரம்பியது ; எதுவும் செழுமையாக வளரக்கூடியது ; எங்கெங்கும் பச்சைநிறக் குன்றுகள் பாயும் அருவிகள் பளிங்கு நீர் புரளும் கங்கைகள கண்ணுக்கு எட்டிய வரையில் அடர்ந்த காடுகள் ; காடுகளில் கூட்டம் கூட்டமாக வாழும் யானை கள் ; கரடிகள் ; மான்கள் காணக் கிடைக்காத பறவைக் கூட்டங்கள் ; ர்ே ததும்பும் குளங்கள் ; போக்குவரத் துக்குச் சுகமான கருங்கல் சாலைகள் !

ஈழநாட்டுப் பிரயாணம் 3
சாலைகள் என்றவுடன் மலைகாட்டில் ஒரு நாள் காலையில் பிரயாணம் செய்தது என்னுடைய நினைவுக்கு வருகிறது.
இளங் காலை. மெல்லிய காற்று வீசுகிறது. ஆகா யத்தில் முகிற் கூட்டம் அணிவகுத்துச் செல்கிறது. அது ஒரு சமயம் சூரியனை மறைக்கிறது; இன்னெரு சமயம் விடுவிக்கிறது. சாலையில் இருந்து பார்த்தால் எதிரே பூமி சரிவாக இறங்கிப் பள்ளத்தாக்காக மாறிவிடுகிறது. அதன் மடியில் ஆறு ஒன்று மலைப் பாம்பு போல் நெளிந்து வளைந்து செல்கிறது. இன்னெரு புறத்தில் ஒலைக் கைகளை வீசி ஆடும் தென்னஞ்சோலைகள். மலையின் மேல்மட்டத்தி லிருந்து கீழ் வரைக்கும் பச்சைப் பசேல் என்று படிப் படியான வயற் பண்ணைகள். குன்றின் இதயத்திலிருந்து இறங்குவதுபோன்ற சிறு சிறு பாதைகள். அதன் வழியில் ஒய்யாரமாகச் செல்லும் கிராமத்து இளம் மடங்தையர்கள் !
மாணிக்கக் கங்கையின் கரையில் கதிர்காமக் கடவுள், தமிழ்த் தெய்வம், முருகன் திருக்கோலம் கொண்டிருக் கிருர், உருவம் இல்லாமல் இருக்கும் முருகன் திருக்கோயில் தனி உருவத்துடனும் தனி அழகுடனும் திகழ்கிறது. இங்கு கடக்கும் ச ட ங் கு க ள் 15ம் நாட்டு வழக்கங்களுடன் ஒத்திருக்தாலும் எவ்வளவோ வித்தியாசங்கள் இருக் கின்றன. தமிழ் காட்டுடன் தொடர்பு கொண்டிருந்த திருக்கோயில் வழிபாட்டுமுறை ஏனே சற்று விலகியிருக் கிறது. ஆனலும் கதிர்காமக் கடவுளும் அவருக்கு நடக்கும் வழிபாட்டு முறைகளும் தமிழ் காட்டுடன் முன் நாள் தொடங்கிய உறவை நினைவூட்டிக்கொண்டு வருகின்றன. கதிர்காமத்தின் எல்லையில் கால் அடி எடுத்து வைத்தவுட னேயே ஏற்பட்ட உணர்ச்சியை எழுதிக் காட்ட இயல வில்லை. இனம் தெரியாத ஏதோ ஒரு புனித பூமியில்புண்ணிய மண்ணில் நிற்பது போன்ற உணர்ச்சிதான் மேலோங்கி இருந்தது அங்கு இருக்கும் கருங்கல்லிலே, வெண் மணலிலே, பச்சை இலையிலே, செம்மலரிலே, நீல மேகத்திலே, காற்றினிலே எங்கும் ஒரு தெய்வசக்தி மிளிர் வதாகவே தோன்றுகிறது இப்பொழுது நினைத்தால்கூட அந்த உணர்ச்சி ஏற்பட்டு மயிர்க்கூச்சம் உண்டாகிறது.

Page 6
g ஈழநாட்டுப் பிரயாணம்
கண்டி நகரின் அழகும் புத்தரின் தந்த ஆலயத்தின் கம்பீரமும் மறக்க முடியாத கண்டி நடனமும் கூட்டம் கூட்டமாகக் குளிக்கும் யானைக் கூட்டமும் சுருள் சுருளாக மனத்திரையில் விரிகின்றன. கண்டி நகரில் நவீன அமைப்பில் கட்டும் சர்வகலாசாலைக் கட்டடங்கள் கூட அல்லவா கண்டியின் புராதன கட்டடக் கலைபாணியில் அமைந்திருக்கின்றன அங்ககளில் உள்ள புகழ் பெற்ற பர்தேனியா தோட்டம் ஒன்றையே வாழ்நாளெல்லாம் பார்த்துப் பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கலாம். அந்தத் தோட்டத்தில் இருக்கும் மரங்கள், செடிகள், கொடிகள், தாவர வர்க்கங்களைப்போல் உலகில் வேறு எங்குமே காணமுடியாது. அப்படிப்பட்ட உலக அதிசயம்
•lنتقلیت
எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே உயர்ந்த நாகரிகம் பெற்றுத் திகழ்ந்த பூமி ஈழம். தமிழகத் துடன் நெருங்கிய தொடர்பு கொண்டு துலங்கிய தீவு இலங்கை. இதை இன்றைக்கும் கமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன அநுராதபுரத்துக் கற்கோயில்களும், பொலன்னருவைச் சித்திரங்களும், சிற்பங்களும். இந்த இடங்களில் போய் நின்றபோது மனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னல் சென்று விடுகிறது. அப்போது இருந்த அநுராதபுரத்து நகரமும் பொலன்னருவை நகர மும் கண் முன்னே வந்து விடுகின்றன. அந்த நாளில் பெளத்தமும், சமணமும், சைவமும் ஒன்ருக நின்று ஓங்கி வளர்ந்த அற்புதத்தை மனக்கண்ணுல் காண முடிகிறது. காலத்தால் சிதைந்த இந்த நகரங்கள் பூமி ஆராய்ச்சிக்காரர் களின் (சார்க்க பூமியாகத் திகழ்கிறது.
棒 谍
இயற்கையோடு இயைந்த தெய்வக் காட்சிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு மலர்ந்த முகங்களுடன் எங்களை வரவேற்ற தமிழ்ப் பெரு மக்களின் முகங்கள் கண்முன் வந்து நிற்கின்றன. கொழும்பு நகரிலும், கண்டி யிலும், மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும், யாழ்ப் பாணத்திலும் இன்னும் பல இடங்களிலும் எங்களை

ஈழநாட்டுப் பிரயாணம் 5
உற்சாகத்துடன் வரவேற்று எங்கள் பேச்சைக் கேட்ப தற்கு அத்தனை ஆர்வம் காட்டினர்களே! தங்களுடைய அன்பையும் ரஸிகத் தன்மையையும் அப்படியே கொட்டி யல்லவா விட்டார்கள் !
நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள் காட்டிய அபிமானம் இருக்கட்டும். கிராமப் பகுதியில் வியாபாரத் துறையிலும் வேறு பல அலுவல்களிலும் ஈடுபட்டு வரும் தமிழ் அன்பர் களும் தேயிலைத் தோட்டத்திலும், ரப்பர் தோட்டத்திலும், ரத்தினச் சுரங்கங்களிலும் உள்ள தொழிலாளர்களும் காட்டிய அன்பையும் பரிவையும் எப்படிச் சொல்வது ? தமிழ் நாட்டிலிருந்து ஈழநாட்டின் தேயிலைத் தோட்டத் திலே ஐயாயிரம், ஆருயிரம் அடிக்கு மேலே வாழும் இக்தியத் தொழிலாளாகள் தங்கள் நாட்டிலிருந்து வந்தவர் களேப் பார்த்ததும் அவர்கள் பேச்சைக் கேட்டதும் எவ்வளவு குதூகலப் பட்டார்கள்?
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கக்கூடிய காரியமா? மரகதத் தீவின் அழகுக் காட்சிகளைப் பார்த்து அனுபவித்ததுதான் மறக்கக்கூடியதா? ஈழநாட்டுத் தமிழ் மக்களின் அன்பும் அபிமானமும்தான் எவ்வளவு உயர் வானவை ! ஈழநாட்டை விட்டுத் தமிழ் நாட்டுக்கு வந்த பிறகும் அல்லவா அந்த இன்ப கினைவுகள் பசுமையாக இருக்கின்றன.
அதற்குள்ளாகத் தமிழ் நாட்டுக்கு வந்து விட்டேன் 1 ஈழநாட்டின் இயற்கையும் செயற்கையும் அங்கு வாழும் தமிழ் மக்களின் அன்பும் பண்பும் அப்படித் திகைக்கச் செய்கின்றன. இதோ ஆரம்பத்திலிருந்து தொடர்பாக ஈழ5ாட்டுப் பிரயாணத்தைத் தொடங்குகிறேன்.
பிரயாண ஆரம்பம்
ஈழநாட்டுக்குப் போகவேண்டும் என்ற ஆசை எனக்கு நேற்று முந்தாநாள் ஏற்பட்டதல்ல. எவ்வளவோ வருஷங் களுக்கு முன்னல் ஏற்பட்டது. ஆனல் அது கிறைவேறு வதற்குச் சென்ற டிசம்பரில்தான் காலம் கூடிற்று.

Page 7
é,3 ஈழநாட்டுப் பிரயாணம்
முன்னலேயே நிறைவேறுவதற்குப் பல காரணங்கள் குறுக்கே நின்றன. கடைசியாகச் சென்ற மாதம் ஈழ 15ாட்டில் உள்ள ஒரு அன்பர் எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டார். கொழும்பு நகரில் உள்ள பாரதி இளைஞர் மன்றத்தின் தலைவர் திரு கல்கி தாசன் என்னை ஈழத்துக்கு அழைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
தமிழ் காட்டிலும் தமிழ் நாட்டுக்கு அப்பாலும் தமிழ் அன்பையும் கலை ஆர்வத்தையும் வளர்த்துவரும் திருக் கூட்டம் ஒன்று இருக்கிறது. பட்டணங்களிலும் கிராமங் களிலும் பட்டிதொட்டிகளிலும் மேற்படி கூட்டத்தார் அறிவு விளக்கை ஏற்றி வைக்கும் அரும் தொண்டை ஆற்றி வருகிருர்கள். இவர்களில் பெரும்பாலோர் பட்டப் படிப்புப் பெருதவர்கள். ஆனலும் படித்துப் பட்டம் பெற்றவர்களைவிட எத்தனையோ மடங்கு அறிவு விலாசம் உள்ளவர்கள். அறிவை வளர்க்கும் தொண்டில் ஆர்வம் கொண்டவர்கள்.
இந்த மாதிரி இனத்தைச் சேர்ந்த உற்சாகமுள்ள இளைஞர்கள் சிலர், “பாரதி இளைஞர் மன்றம்” என்பதாக ஒரு சங்கம் அமைத்து அதன் மூலம் தமிழ்த் தொண் டாற்றி வருகிருர்கள். கொழும்பு நகரில் உள்ள இக்தச் சங்கம் ஆண்டு தோறும் பாரதியார் ஜெயந்தியைக் கொண் டாடி வருகிறது. சென்ற டிசம்பர் மாதம் பாரதி விழாவில் கலந்து கொள்வதற்கு என்னை அழைத்தார்கள். ஈழ காட்டைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு இருக்த ஆவலை எப்படியோ தெரிந்து கொண்ட 'கல்கி' அதிபர் திரு சதாசிவம் அவர்களும் பாரதி ஜெயந்தியில் கலந்து கொள்வதற்கு என்னை அனுப்பி வைத்தார்.
米 米
米
ஈழ நாட்டுப் பிரயாணத்துக்கு ஒழுங்கு செய்வ தென்பது சாமான்யமான காரியமல்ல. ' பாஸ்போர்ட் " வாங்க வேண்டும். விஸா' வாங்க வேண்டும். வருமான வரி காரியாலயத்துக்கு நடையாய் நடந்து அவர்களிட மிருந்து உத்தரவுச சீட்டு பெற வேண்டும். அம்மை ஊசி

ஈழநாட்டுப் பிரயாணம்
குத்திக்கொள்ள வேண்டும். காலரா ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு ஊசிகளும் குத்திக் கொண்டால் மட்டும் போதாது. அதற்கு நகரசபையி லிருந்து விசேஷ சர்டிபிகேட்" பெற வேண்டும் இவை கள் எல்லாம் பெறுவதற்குள் ஈழ நாட்டுப் பிரயாணம் தொடங்க வேண்டாம் என்றே தோன்றிவிடும். ஆனலும் விடாப்பிடியாக முயன்ருலே இவைகளை எல்லாம் பெறுவது சங்கடம் என்ருல், நிதானமாக இருந்தால் எப்படிக் கிடைக்கும் ? எவ்வளவோ கடினப் பிரயத்தனங் களுக்குப் பிறகு பெற்ற "பாஸ் போர்ட் விஸா , அம்மை ஊசி, காலரா ஊசி சர்டிபிகேட்டுகள் இவ் வளவையும் மிகுந்த ஜாக்கிரதையாக எடுத்து வைத்துச் கொண்டு பிரயாணத்துக்குத் தயாராகிக் கிளம்ப வேண்டும்.
விமான கூடத்தில் சுங்க அதிகாரிகளிடமும், சுகாதார அதிகாரிகளிடமும், போலீஸ் அதிகாரிகளிடமும் அவர்கள் கேட்கும் பல விசித்திரமான கேள்விகளுக்குத் தயங்காமல் பதில் சொல்லியாக வேண்டும்.
இவ்வாறு பலவிதமான சோதனைகளுக்குப் பிறகு விமானத்துக்குச் செல்ல வேண்டும்.
来 米 米
விமானத்தில் ஏறி உட்கார்ந்தோம். விமானக் கதவை மூடிவிட்டார்கள். இதோ விமானம் கிளம்பி விட்டது. சக்கரத்தை மடித்துக்கொண்டு "ஜிவ் வென்று கிளம்பி உயரே பறக்க ஆரம்பித்துவிட்டது. விமானம் மேலே மேலே போயிற்று. மேக மண்டலத்துக்கு மேலே போய் விட்டது. கீழே கண்ணுக்கு எட்டிய தூரம் வெள்ளை வெளே ரென்ற மேகக் கூட்டங்கள்தான்.
இம்மாதிரி பரவிப் பரந்திருந்த மேக நிரைகளுக்குள் இப்போது விமானம் புகுந்து செல்கிறது. அதாவது கீழே இறங்குகிறது அதோ வெகு தூரத்துக்கு அப்பால் இலங்கைத் தீவு தெரிகிறது. ஆ | இந்தப் பசுமையை என்னவென்று சொல்வது மரகதத் தீவு என்ருல் மரகதத் தீவுதான். வான வெளியில் இருந்து பார்த்தால்

Page 8
8 ஈழநாட்டுப் பிரயாணம்
தான் அந்த அழகு முழுமையும் அனுபவிக்க முடியும். பார்த்த இடமெங்கும் பசுமைதான். தென்னை மரங்கள் எவ்வளவு அழகாய்க் காட்சி தருகின்றன.
இந்த இனிய காட்சி யைச் சில நிமிடங்கள்தான் பார்க்க முடிந்தது. இதோ! யாழ்ப்பாணம் வந்து விட் டது காதை அடைக்கிறதே! ஏன் காதை அடைக்கிறது" * விமானம் கீழே இறங்கத் தொடங்கி விட்டது ' என்று பதில் கிடைக்கிறது. "தட தட' என்று ஒரு அதிர்ச்சி ஏற்படுகிறது. விமானம் நின்று விட்டது ஒன்றேகால் மணி நேரத்துக்குள்ளாக யாழ்ப்பாணத்துக்கு வந்து விட் டோம்.
யாழ்ப்பாணத்திலேயே ஈழநாட்டுத் தமிழ் அன்பர்கள் வரவேற்க வந்து விட்டார்கள். அவர்களைப் போய்ப் பார்க்க ஆவலுடன் சென்ருல், சுங்க அதிகாரிகள் தடுத்து கிறுத்தி விட்டார்கள். பிறகு அருகிலிருந்த கட்டடத்துக்கு அழைத்துச் சென்ருர்கள் அங்கே இருந்த சுங்க அதிகாரி கள், சுகாதார அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் எல்லா ரிடமும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி விட்டுத் திரும்பினுேம். இவ்வளவு காரியங்கள் முடிந்த பிறகும் யாழ்ப்பாணத்துத் தமிழ் அன்பர்களைப் பார்க்க முடியவில்லை, அவர்களிடம் சற்றுத் தூரத்தி லிருந்தபடியே அளவளாவிப் பேசிவிட்டு மீண்டும் புறப் பட்டோம். இப்பொழுது மரகதத் தீவின் இயற்கை வளங் களே கன்ருகப் பார்க்க முடிந்தது. மேலிருந்தபடியே இந்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு கொழும்பு போய்ச் சேர்ந்தோம்.
புகழ்பெற்ற ரத்மலானை விமான கூடத்தில் பாரதி இளைஞர் மன்ற அன்பர்களும், ஏராளமான தமிழ் நண்பர் களும் குதூகலத்துடன் கூடிகின்று மலர் மாலையும் பொன் மாலையும் சூட்டி உற்சாகமாக வரவேற்றர்கள்.
கொழும்பு நகரில் எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விடுதி விமான கூடத்திலிருந்து ஏழெட்டு மைல் தாரம் இருக்கும். கொழும்பு நகருக்குப் போவதற்குள்ளாகவே

ஈழநாட்டுப் பிரயாணம் 9
வழியில் தமிழ் மன்றக் கழகத் தலைவர் திரு. கா. பொ
ரத்தினம் அவர்கள் எங்களைத் தமது இல்லத்துக்கு அழைத் துச் சென்ருர்.
திரு கா. பொ. இரத்தினம் அவர்களுக்குத் தமிழிடம் உள்ள அன்பைச் சொல்லுவதா? அவருடைய விருந்தோம் பலின் பண்பைப் பற்றிச் சொல்லுவதா என்று தெரியாமல் 5ாங்கள் திகைத்துப் போனுேம் அந்தத் திகைப்பு திரு வதற்குள்ளாகவே அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு கொழும்பு நகருக்குப்புறப்பட்டோம். கொழும்பு 5கர் போய்ச் சேர்வதற்குள்ளாகவே இலங்கையில் வாழும் தமிழ் மக்களைப் பற்றித் தெரிக்த கொள்வது சாத்திய மாயிற்று.
ஒரு காலத்தில் இலங்கைத் தீவு முழுவதற்குமே ஸர் பொன். ராம5ாதன் போன்ற தமிழர்கள்தான் தலைவர் களாக இருந்தார்கள். அவர்கள் காலத்தில் தமிழர் சிங் களவர் வேற்றுமை கிடையாது. இப்பொழுது இலங்கை மந்திரி சபையில் தமிழ் மந்திரி என்று யாருமே கிடை யாது சுமார் பத்து லட்சம் இந்தியத் தமிழ் மக்களுக்கு ஒட்டு உரிமை கிடையாது. அவர்கள் எல்லாம் இலங்கை யில் திரிசங்கு 'போல் இருந்து வருகிருர்கள் அவர்கள் இந்த உலகில் எது தங்கள் தேசம் என்று தெரிந்து கொள்ள முடியாத நிலையில் அவதிப்படுகிருர்கள் சுருக்க மாகச் சொன்னல் இலங்கை காட்டில் உரிமையை இழந்து இயந்திரம் போல் கடைப் பிணங்களாகத் தமிழ் மக்கள் கடமாடுகிருர்கள் என்று சொல்லலாம். இதற்கும் மேலே இன்னுெரு கொடுமையும் இப்பொழுது புதிதாக ஏற்பட் டிருக்கிறது. எந்தத் தமிழ் மக்களால் இலங்கை பொன் கொழிக்கும் தீவாக மாறியதோ அவர்கள் மொழியான இன்பத் தமிழுக்கு ஆபத்து வந்து விட்டது. இத்தனை காலமும் தமிழ் சிங்களத்துக்குச் சமமாக அரசியல் மொழி யாக இருந்து வந்தது. இப்பொழுது அந்த அந்தஸ்தையும் பறித்து விட்டார்கள். இலங்கையில் சிங்கள ஏகாதிபத்தி யமே கடைபெறுகிறது என்று சொன்னுலும் மிகை யாகாது. இவ்வாறு இலங்கையில் தமிழ் மக்கள் படும்

Page 9
f0 ஈழநாட்டுப் பிரயாணம்
அவதிகளைக் கண்ணிருக்கு இடையே கம்மிய குரலில் பாரதி இளைஞர் மன்றத் தலைவர் கூறினர். இதைக் கேட் கும் போது எனக்கும் கண் கலங்கிவிட்டது. இலங்கை யில் தமிழ்ச் சாதிக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை எண்ணி வேதனைப் பட்டேன்.
நம்மிடமிருந்து இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்பார்ப் பது இதுதான். " ஏதோ இந்த மூலைத் தீவில் காங்கள் இருபத்தைந்து லட்சம் தமிழர்கள் இருக்கிருேம். உங்கள் நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாகி விட்டது என்ற மும் மரத்தில் எங்களை மறந்து விடாதீர்கள் ” என்று தான் அவர்கள் கேட்பது
* உங்களை மறந்து விடுவோமா?” என்றேன்.
அந்தச் சமயத்தில் "இதோ கொழும்பு நகரம் வந்து விட்டது’ என்ருர் நண்பர்.
" ஆகா! வரட்டும்’ என்று சொல்லி விட்டு நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த நவீன வசதிபடைத்த விடுதிக்குச் சென்ருேம்.
亲 秦
மறுநாள் கொழும்பு நகரில் உள்ள வெள்ளவத்தை சைவ மங்கையர்க் கழக மண்டபத்தில் பாரதி ஜயந்தி விழா மகாநாடு மிகச் சிறப்பாக ஆரம்பமாயிற்று. மகாநாட்டை ராமகிருஷ்ண மடத்துத் தலைவர் சுவாமி வரானந்தா அவர் கள் திறந்து வைத்தார். அதாவது " திற " என்றதும் பாரதி ஜெயந்தி விழா மகாநாடு திறந்து கொண்டது. கதையில் வரும் மந்திரவாதியைப் போல மகாநாட்டைத் திறந்து வைத்தார். இதோ மகாநாடு ஆரம்பமாகிறது மன்றத் தலைவர் திரு கல்கி தாசன் அவர்களே " கணிர்’ என்ற குரலில் கடவுள் வணக்கம் பாடுகிருர், அவரைப் பின்பற்றி மன்றத்து இளைஞர்கள் அத்தனை பேரும் உற்சாகமாகப் பாடுகிருர்கள். தயவுசெய்து எழுந்து கின்று கடவுள் வணக்கத்தில் கலந்து கொள்ளுங்கள்.

ஈழநாட்டுப் பிரயாணம் 11
"கணபதிராயன்-அவனிரு
காலைப் பிடித்திடுவோம் குணமுயர்ந்திடவே-விடுதலை
கூடிமகிழ்க்திடவே வெற்றிவடி வேலன்-அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம் ; சுற்றிகில்லாதே போ 1.பகையே !
துள்ளி வருகுது வேல் 1’
பாட்டு இன்னும் தொடர்கிறது. " ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம்’ என்று மேலே மேலே பிரார்த்தனை கீதம் போகிறது.

Page 10
2 தமிழ்த் திருநாள் கொண்டாடுவோம்
தமிழ்த் தாயின் மணிக்கொடி வானளாவப் பறக் கிறது. இலங்கைத் தீவில் உள்ள உயரமான மலைக்கு மேலே, மேக மண்டலத்துக்கும் மேலே பட்டொளி வீசிப் பறக்கிறது.
யாழ்ப்பாணத்தின் இளங்தென்றலில் ஆடிப் பறக் கிறது. ஈழத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பாடிப் பறக்கிறது. அந்தத் தமிழ்க் கொடியின் கீழே ஆயிரமா யிரம் தமிழ்ப் பெருமக்கள் அணிவகுத்து நிற்கிருர்கள். ஆடவரும் பெண்டிரும் நிற்கிருர்கள்; முதியோரும் வாலிபரும் நிற்கிருர்கள் ; இந்துக்களும் முஸ்லிம்களும் கிற்கிருர்கள் ; கிறிஸ்தவர்களும் பெளத்தர்களும் கிற்கி ருரர்கள்.
* வாழ்க தமிழ் மொழி 1’ என்று கோஷிக்கிருர்கள். " வாழிய செந்தமிழ்!” என்று முழங்குகிருர்கள். 'வாழிய ஈழத் திருநாடு!” என்று வாழ்த்துகிருர்கள்.
தமிழ்த்தாய் ஈழநாட்டின் சுதந்திரச் சிம்மாசனத்தில் மணி முடிதரித்து வீற்றிருக்கிருள். தமிழ்த் தாய்க்கு அருகிலேயே சரிநிகர் சமானமாகச் சிங்கள அன்னையும் சேர்ந்து அமர்ந்திருக்கிருள். ஈழகாட்டில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளும் ஆட்சி பீடத்தில் அமர்ந்து ஈழ5ாட்டுத் தமிழ், சிங்கள மக்களின் நலத்துக்காகப் பாடு படுகிருர்கள்.
ஈழ நாட்டைச் சிங்கள வீரர்களுடன் வீரத் தமிழ்ப் புதல்வர்களின் கரங்களும் காத்து நிற்கின்றன. தமிழ் அன்னையின் தர்ம ஆட்சியில் தமிழ் பேசும் மக்களும், சிங்களம் பேசும் மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்கிருர்கள்

தமிழ்த் திருநாள் கொண்டாடுவோம் 13
எங்கும் செல்வத்தின் வளம்; எங்கும் கலைகளின் மணம் : மகிழ்ச்சி நிறைந்த மக்கள்.
மேலே கூறியது தமிழ்த் திருகாளைப் பற்றி ஈழ. காட்டுத் தமிழ் மக்கள் காணும் கனவு. இன்றைய தினம் ஈழ5ாட்டில் நூற்றுக் கணக்கான தமிழ்த் தலைவர்கள் இந்தக் கனவைக் கண்டு வருகிருர்கள். இரவில் தூக்கத் திலும் காண்கிருர்கள். விழித்துக்கொண்டிருக்கும்போது பகற்கனவாகவும் காணுகிருர்கள். ஆணுல் கனவு உலகத் திலிருந்து கனவு உலகத்துக்கு வந்து பார்க்கும்போது நிலைமை முற்றிலும் வேறுவிதமாக இருப்பதைக் கண்டு நெஞ்சம் துடிதுடிக்கிருரர்கள்.
தங்களைப் போலவே இலங்கையில் உள்ள எல்லாத் தமிழ் மக்களின் இதயத்திலும் தமிழ் உணர்ச்சித் துடி துடிப்பு ஏற்படவேண்டும் என்பதற்காக ஈழநாட்டின் பல பகுதிகளிலும் தமிழ்ப் பெரியார்களின் திருநாளைக் கொண்டாடி வருகிருர்கள். அதுபோன்ற திருநாளில் ஒன்றுதான் பாரதி ஜயந்தித் திருநாள். பாரதி இளைஞர் சங்கத்தார் கொண்டாடும் பாரதியின் எழுபத்தைந்தாவது பிறந்ததினத் திருநாள்.
பாரதியார் தமிழ் மக்களுக்கு அளித்துவிட்டுப்போன தாரக மந்திரம் "தேமதுரத் தமிழ் ஓசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்பதுதான். அதையே தங்களது மூலமந்திரமாகக் கொண்டு ஈழநாட்டுத் தமிழ்ப் பெருமக்கள் உணர்ச்சியுடன் பாடுபட்டு வரு கிருர்கள்.
மகாகவி பாரதியார் தமிழைப் பாடினர்; தமிழ்ப் பெருமக்களைப் பாடினர்; தமிழ் மக்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சமும் மேன்மையுறப் பாடினர்.
பாரதியார் தெய்வத்தைப் பாடினர் ; தேசத்தைப் பாடினர் ; தேசத்தின் மகா புருஷர்களைப் பாடினர். இன்னும் சமூக விடுதலைக்காகப் பாடினர் ; பெண் விடு தலைக்காகப் பாடினர். "பறையருக்கும் தீயருக்கும் புலைய ருக்கும் விடுதலை’ என்று பறையறைந்து பாடினர். மனித

Page 11
14 ஈழநாட்டுப் பிரயாணம்
சமூகத்துக்காகப் பாடினர்; மனிதர்கள் சுகவாழ்வு அடையு மாறு பாடினர்.
கம்பனுக்குப் பிறகு தமிழ் நாட்டில் உதித்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார். அவருடைய திருநாளைத் தான் கொழும்பு நகரில் கோலாகலமாகக் கொண்டாடி ஞாகள.
பாரதி ஜயந்தி விழா
மகாகவி பாரதியின் எழுபத்தைந்தாவது ஜயந்தி விழா சென்ற டிசம்பர் மாதம் 8, 9 தேதிகளில் ஈழ நாட்டின் தலைநகரமான கொழும்பு நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஈழ நாட்டின் பல பகுதி களில் இருந்தும் தமிழ்ப் பெருமக்களும், தமிழ் எழுத்தாளர் களும் பத்திரிகை ஆசிரியர்களும் திரளாக வந்து விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். தமிழ் ரஸிகர்களும் பெருந் திரளாக வந்திருந்து சொற்பொழிவுகளை நன்கு அனுபவித்து விழாவைச் சிறக்கும்படி செய்தார்கள். ஆண்களைப் போலவே பெண்களும் வந்திருந்து ஒவ்வொரு நாளும் நாலு மணி நேரம் அமைதியாக இருந்து பிரசங்க மாரியில் திளைத்துவிட்டுப் போனர்கள்.
• உலக மகா கவியே! பாட்டுக்கு ஒரு புலவரே ! ஏழைகளின் கண்ணிரைத் துடைக்க வந்த கவிஞரே ! பெண்களைப் போற்ற வந்த புனிதரே! தமிழுக்கும் தமிழ்கூறும் கல்லுலகத்துக்கும் புதிய உயிர் ஊட்டிய சுப்பிரமணிய பாரதியே தங்கள் பிறந்த நாளைக் கொண் டாடுகிருேம். சென்ற பல ஆண்டுகளாகக் கொண் டாடியது போலவே இந்த ஆண்டும் கொண்டாடுகிருேம். ஆனல் தாங்கள் இதையெல்லாம் பார்த்துக் களிக்கி ரீர்களா ? இல்லை, பரமபதத்தில் வள்ளுவரும் கம்பரும், ராமலிங்க வள்ளலாரும் ஆறுமுக காவலரும், வ உ, சி யும், திரு, வி. க. வும், கவிமணியும், ரஸிகமணியும், கல்கி யும் விபுலானந்தரும் வீற்றிருக்கும் தெய்வத் தமிழ்ச் சபையிலே தமிழின் புதிய உயிரைப்பற்றிப் பாடிக் கொண்டிருக்கிறீர்களா ? அல்லது தமிழ் பேசும் புனித

தமிழ்த் திருநாள் கொண்டாடுவோம் 15
நாடுகளை விட்டுப் போக மனமின்றி இங்கேயே வட்ட மிட்டுக் கெர்ண்டிருக்கிறீர்களா? “ தமிழ் தமிழ் !" என்று தாங்கள் இந்த உலகில் வாழ்ந்த நாட்களெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தீர்கள். தமிழ் நாட்டில் தமிழ் அன்னை அரியாசனத்தில் அமர்ந்து விட்டாள். ஈழநாடா கிய இலங்கைத் தீவில் நம் தமிழ் அன்னையை அரியாசனத் திலிருந்து இறக்கி விட்டார்களே ! இதற்கெல்லாம் ஈழ காட்டுத் தமிழ் மக்களாகிய காங்கள்தான் காரணம் தற் கொலைக்கு ஒப்பான சகோதரச் சண்டை போட்டுக் கொண்டு சுயநலம் கருதி வாழ்ந்து வந்தோம். எங்கள் சயகலத்தின் ஆசையினுல் தமிழ் அன்னையின் அரியா சனமே பறிபோய் விட்டது. இன்று விழித்துக் கொண் டோம். தமிழ் அன்னையை மீண்டும் ஈழ நாட்டின் அரியா சனத்தில் ஏற்றுவதற்காக எங்கள் உயிரையே கொடுக்க முன் வந்து விட்டோம். தங்கள் தியாக வாழ்க்கையும், தீர்க்கதரிசனமுமான அமுத வாக்குகளும் வீண் போக வில்லை. இலங்கை காட்டுத் தமிழ்ப் பெருமக்கள், எங்கள் தமிழ்த் தலைவர்கள் தங்களுக்குள் இருந்த வேற்றுமையை மறந்துவிட்டுத் தமிழின் அரசியல் மதிப்பைக் காப்பாற்ற ஒன்று திரண்டு விட்டார்கள். இந்த ஒற்றுமை கடைசி வரையில் நிலைத்து நிற்பதற்கு மகா கவியாகிய தாங்கள் தான் துணைபுரிய வேண்டும். ஈழநாட்டில் தமிழ் அன்னை மீண்டும் மணிமுடி தரித்துப் பவனி வருவதற்கு நல் ஆசி கூறுங்கள் 1’ என்று உணர்ச்சியும் உற்சாகமும் நிறைந்த குரலில் கூறிவிட்டு விழாவுக்கு வந்தவர்களை யெல்லாம் கைகூப்பி வரவேற்ருர் பாரதி இளைஞர் சங்கத் தலைவர். .
விழா, களை கட்டிவிட்டது. தமிழ் மறைக் கழகத்தின் தலைவர் திரு கா. பொ. இரத்தினம் அவர்கள் இவ்விழா வுக்குத் தலைமை வகித்து ஒரு அருமையான சொற்பொழிவு நிகழ்த்தினர். ஈழத் திருகாட்டின் மேன்மைக்கும் தமிழ் மக்களின் உயர்வுக்கும் தடைக் கல்லாக இருக்கும் சாதி வித்தியாசம் தொலைய வேண்டும் என்பதை வற்புறுத்திக் கூறினர். " சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்று பாரதி கூறியிருப் பதை கெஞ்சு நெகிழும்படி எடுத்துக்கூறினர். கொழும்பு

Page 12
16 ஈழநாட்டுப் பிரயாணம்
ராயல் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் திரு கி. லசஷ் மணன் எம். ஏ அவர்கள் 'பாரதி காட்டிய வழி'யைப் பற்றி நின்று நிதானமாக மக்கள் மனத்தில் பதியும்படி பேசினர். தற்காலத்தில் இருக்கும் கல்வி முறையில் உள்ள குறையை வன்மையாகக் கண்டித்தார். இந்தக் கல்வி முறையில் இருக்கும் குறைபாட்டைப்பற்றிக் கவி யரசர் பாரதியார் கூறியிருப்பதைத் தமக்கே உரிய பாணி யில் எடுத்துக் காட்டினர்.
' செலவு தந்தைக் கோராயிரஞ் சென்றது;
தீதெனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன; நலமொரெட்டுணையுங் ஈண்டிலேன் இதை
காற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன்” என்ற பாரதியின் வாக்கை எடுத்துக் கூறியபோது சபை யோர் காட்டிய ஆதரவு தற்காலத்துக் கல்வி முறையை அப்படியே குழி தோண்டிப் புதைத்துவிடத் துடிக்கிருர் கள் என்பதை நன்ருக உணர்ந்துகொள்ள முடிந்தது. வவுனியாவில் இருந்து வந்திருந்த வித்வான் திரு பொன். கனகசபை அவர்கள் 'பாரதியின் சிந்தனை'ச் சிறப்பை அழகான முறையில் எடுத்துரைத்தார் "பாரதி கண்ட அரசியலை’க் கொழும்பு மோகன் குமார் கம்பெனி அதிபர் திரு எம். பி. பாரதி அவர்கள் காட்டியபோது சபையில் எல்லாருக்கும் ஆவேசமே வந்துவிட்டது. பாரதி பொது உடைமைக் கவிஞர், பாட்டாளி மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டுப் பாடிய கவிஞர் என்பதை நன்கு எடுத்துரைத் தார். கொழும்பு விவேகானந்தர் வித்தியாலயம் தலைமை ஆசிரியர் திரு கே. வி. செல்லத்துரை அவர்கள் பாரதி கண்ட சமுதாயத்தைத் தம்முடைய ஜாலக் கண்ணுடியைக் கொண்டு சபையோருக்குக் காட்டி மகிழ்வித்தார். பாரதி சங்கக் கெளரவ அங்கத்தினர் திரு வி. கம்பிராஜன் அவர்கள் " கணிர் ' என்ற குரலில் தமிழ் மொழி வாழ்த்துப் பாடிய பிறகு அன்றையக் கூட்டம் முடிந்தது.
亲 米 崇
மறுநாள் கொழும்பு உணவு விகியோகக் கமிஷனர் திரு கோ, ஆழ்வாப் பிள்ளை அவர்களுடைய தலைமையில் விழா ஆரம்பமாயிற்று. ஐந்து மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய

தமிழ்த் திருநாள் கொண்டாடுவோம் 1?
விழாவுக்கு மக்கள் நாலு மணிக்கே வந்து கூடிவிட் டார்கள். விழாத் தலைவர் திரு ஆழ்வாப்பிளளே குதூகலத் துடன் பாரதியின் பெருமையை எடுத்துப் பறைசாற்ற ஆரம்பித்துவிட்டார். பாரதி ஜயந்தியையும் பாரதி அமரரான தினத்தையும் கொண்டாடினல் மட்டும் போதாது. இன்று ஈழநாடு உள்ள நிலைமையில் பாரதியார் திருநாளை வருஷம் முந்நூற்றி அறுபத்தைந்து நாட்களுமே கொண்டாடலாம். தெருவெல்லாம், தேயிலைத் தோட்ட மெல்லாம், ரப்பர்த் தோட்டமெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்யவேண்டும் என்று அவர் சொன்னபோது சபையில் ஒரே ஆரவாரம்.
விழாத் தலைவரைப் போலவே சபையோரும் குதுர கலம் கொண்டிருந்தார்கள். அன்று கடந்த விழாவைப் போல அத்தனை அழகாகவும், விமரிசையாகவும் வேறு எந்த விழாவும் நடந்ததில்லை என்று அங்கு வந்திருந்த எல்லாரும், அதாவது மேடை மீது நெருக்கி அடித்துக் கொண்டு வீற்றிருந்தவர்களும், விழா மண்டபத்தில் ஒரு வரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவர் களும், மண்டபத்துக்கு வெளியே தலையோடு தலை மோதிக் கொண்டு கால்கடுக்க நின்றவர்களும் ஒரேமுகமாய்ச் சொன்னர்கள்.
வேறு எத்தனையோ காரியங்களில் ஈழநாட்டுத் தமிழ் மக்களிடையே அநேக வித்தியாசங்கள இருக்கலாம், ஆனல் தமிழ்த் திருநாளைக் கொண்டாடுவதிலும், தமிழ் வளர்த்த கவிஞர் விழாக்களே கடத்துவதிலும்மட்டும் கட்சி வேற்றுமை கிடையாது என்பது அன்றைய விழாவில் தெளிவாகத் தெரிய வந்தது. மேடைமீது பலதரப்பட்ட கட்சித் தலைவர்களும் வந்து அமர்ந்திருந்தார்கள். இந்த ஒற்றுமை எப்பொழுதும் எல்லாக் காரியத்திலும் இருங் தால் ஈழ நாட்டுத் தமிழ் மக்களின் பிரச்னை வெகு எளிதில் முடிந்து விடும் என்று எல்லாரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டார்கள்.
இதே கருத்தை, "சுதந்திரத்துக்குப் பின் பாரதி என் னும் பொருள் பற்றிப் பேசிய கொழும்பு பொதுநூல்
2

Page 13
18 ஈழநாட்டுப் பிரயாணம்
கிலைய அதிகாரி திரு எஸ். எம். கமால்தீன் அவர்கள் வலியுறுத்திக் கூறினர். பாரதியின் பாடலின் சிறப்பை, பாரதியை எவ்வாறு பார்த்து அனுபவிக்க வேணும் என்ற முறையை, பானிப்பாய் இந்துக் கல்லூரி ஆசிரியர் வித்வான் திரு க. 15. வேலன் அவர்கள் மிக அருமையாக எடுத்துக் காட்டினர் " காம் காணுத பாரதி ' என்று பேசவந்த திரு வேலன் எல்லாருடைய கண் முன்னிலையி லும் பாரதியைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். பாரதியின் கவி இதயத்தைக் காண்பிப்பதற்காக அவர் பாரதியின் பாட்டு ஒன்றை உதாரணத்துக்காக எடுத்துப் பாவத்தோடு பாடி விளக்க ஆரம்பித்தார்.
திக்குத் தெரியாத காட்டில் திகைத்து நிற்கிருள் அழகு நிறைந்த இளம் மங்கை ஒருத்தி. கையிலே வில் லேக்தி மிருகங்களை வேட்டையாடி வரும் கொலை வேடன் ஒருவன் அந்த அழகு சுந்தரியைப் பார்த்து விடுகிருன், அவளைப் பார்த்ததும் அவள் அழகில் சொக்கிப்போய் விடு கிருன். வெட்கத்தை விட்டு அவளைத் திறந்த கண் மூடாமல் வெறிக்க வெறிக்கப் பார்க்கிருன். அந்த வெறி உணர்ச்சியில் அவளிடம் பேசுகிருன்.
" பெண்ணே! உனதழகைக்கண்டு-மனம் பித்தங் கொள்ளு ’ சென்று நகைத்தான்- அடி கண்ணே!எனதிருகண்மணியே-உனக் கட்டித்தழுவ மனங் கொண்டேன்." இந்தப் பாட்டை மிக அழகாகப் பாடிக் காண்பித்துவிட்டு வேடனின் இதய தாபத்தைத் திரு வேலன் அவர்கள் விளக்கிய பொதுமக்கள் இடையில் உண்டான உற்சாகம் அளவிட்டுச் சொல்லி முடியாது.
கொடிய வேடன் இவ்வாறு சொன்னவுடன் அவனைப் பார்த்துத் தன் இரு கரங்களையும் குவித்து வணங்கி அந்த அழகி சொல்லுவாள் :
* அண்ணு! உனதடியில் வீழ்வேன்டஎனே அஞ்சக் கொடுமைசொல்லவேண்டா பிறன் கண்ணுலஞ் செய்துவிட்ட பெண்ணே-உன்றன் கண்ணற் பார்த்திடவும் தகுமோ ?”

தமிழ்த் திருகாள் கொண்டாடுவோம் 19
。曾
என்று திரு வேலன் பாட்டை ఆస్ట్రీత్యల్డ్
காட்டில் காகரிகமில்லாத சேக் குணம் படைத்த வேட்னின்
முன்னிலையில் அநாதரவாக நிற்கும் பெண்மணியே மேடை
மீது வந்து நின்று கைகூப்பி வணங்கிக் கதறுவதுபோல
இருந்தது. அவள் அபயக் குரலைக் கேட்டுச் சபையோ
ரெல்லாம் அவளுக்கு வாழ்வளிக்க வந்து விட்டது
போலிருந்தது. அப்பொழுது சபையிலே ஏற்பட்ட சல சலப்பு.
பாரதி ஜயந்தி விழாவில் பாரதியாரை மட்டும் நினைக்க வில்லை, பாரதி இளைஞர் சங்கத்தார். பாரதியைப்போலவே தமிழ் வளர்த்த பெரியோர்களையும் நினைத்துப் போற்றி னர்கள். ராயப்பேட்டை முனிவர் என்று போற்றப்பட்ட திரு வி. க. வையும் விழாவில் கொண்டு வந்து நிறுத்தி மகிழ்ந்தார்கள். வீரகேசரி ஆசிரியர் திரு கே. பி. ஹரன் அவர்கள் திரு வி. க. அவர்களின் திரு உருவப் படத்தைத் திரை நீக்கம் செய்து வைத்தது பாரதி விழாவுக்கே பெரு மையைக் கொடுப்பதாயிருந்தது. மட்டக்குளியோன் கல்லூரி ஆசிரியை திருமதி நேசமலர் வேலாயுதம் பிள்ளை அவர்கள் பாரதியின் புதுமைப் பெண்ணைக் கொண்டுவந்து காட்டினர். முடிவாக அடியேனும் பேசினேன்.
மற்ற மொழிகளில் உள்ள சொற்கள் சில நூறு வருஷங்களுக்குள்ளே வழக்கொழிந்து போவதுபோல் தமிழில் இல்லை. மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னல் இருந்த சொற்களே இன்றும் வழக்கத்தில் இருக்கின்றன. இதற்கு வள்ளுவர். கம்பர் போன்ற மகா கவிகளின் இலக் கியங்களே சாட்சி கூறுகின்றன. இதனல்தான் தமிழ் மொழியைக் கன்னித் தமிழ் ’ என்கிருேம். அத்தகைய அழியா இளமை கொண்ட கன்னித் தமிழிலேதான் கம்பரும் வள்ளுவரும் பாடினர்கள். அதே இன்பத் தமிழிலேதான் பாரதியாரும் பாடினர். பாரதி ஜயந்தி விழாவைக் கொண்டாடுவது கம்பர், வள்ளுவர் முதலான கவிஞர் பரம்பரையையே பாராட்டுவதாகும்.
பாரதி வளர்த்த தமிழ் மொழி எல்லாத் துறை களிலும் முன்னேறி வருகிறது. ஆங்கிலத்தில் வழங்கி

Page 14
20 ஈழநாட்டுப் பிரயாணம்
வரும் கலைச் சொற்களை எல்லாம் தமிழாக்கி வருகின்றனர். தமிழ் நாட்டில் தமிழே அரசியல் மொழியாகி விட்டது. ஈழ நாட்டில் தமிழுக்கு உரிய இடத்தைத் தராமல் சிங்களம் ஆக்கிரமித்திருக்கும் நிலை இன்று ஏற்பட்டிருக் கிறது. இந்த நிலை மாற வேண்டும். ஈழநாட்டில் தமிழ் தன்னுடைய அரசியல் அந்தஸ்தை மீண்டும் பெறும்படி ஈழத் தமிழ் மக்கள் செய்ய வேண்டும்.
* காட்டிலே மறைக் கதவம் திறந்தது எங்கள் கன்னித் தமிழ் ; எலும்பைப் பெண் உருவாக்கியது எங்கள் இன்பத் தமிழ் ; முதலையுண்ட பாலனை அழைத் தது எங்கள் முத்தமிழ்!” என்றெல்லாம் கன்னித் தமி ழுக்குக் கடவுள் தன்மை கூருத புலவர் இல்லை. முருகனைத் தமிழ்த் தெய்வம் என்றனர் முன்னேர். "முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகன்’ என்ருர் அருண கிரியார். அந்தச் சக்தியுள்ள தெய்வம் முருகன் திருக் கோயில் கொண்டிருக்கும் இடம் ஈழம். கதிர்காமக் கடவு ளின் கருணையினுல் ஈழத்தமிழ் மக்களின் ஒற்றுமையான உழைப்பினல், கவியரசர் பாரதியின் சக்தியினல் மீண்டும் தமிழ் அன்னை ஈழநாட்டில் அரியாசனம் ஏறுவாள் என்று கூறியதைக் கேட்ட சபையோர் மிகுந்த உற்சாகத்துடன் கரகோஷ ஆரவாரம் செய்து ஆமோதித்தார்கள்.
கடைசியாக, பாரதி இளைஞர் சங்கத் தலைவர் நயமணி திரு கல்கிதாசன் அவர்கள் தமிழ்மொழி வாழ்த்துப் பாடலைப் பாடினர்.
' வாழ்க கிரந்தரம், வாழ்க தமிழ்மொழி !
வாழிய வாழியவே ! வானமளந்த தனைத்து மளந்திடு
வண்மொழி வாழியவே ! ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி யிசைகொண்டு வாழியவ்ே ! எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி 1
என்றென்றும் வாழியவே !”
என்ற பாரதியாரின் பாடலைக் குறைந்த பட்சம் பதினு யிரம் தடவையாவது கேட்டிருக்கிறேன். எனினும்

தமிழ்த் திருகாள் கொண்டாடுவோம் 21
கொழும்பு பாரதி ஜயந்தி விழா முடிவில் திரு கல்கிதாச னும், பாரதி இளைஞர் சங்க அங்கத்தினர்களும் சேர்ந்து பாடியதைக் கேட்டபோது அங்கு ஒரு புதிய சக்தியும் எக்களிப்பும் பொங்கித் ததும்புவதாகவே தோன்றியது. * எங்கள் தமிழ் மொழி !" என்னும் இடத்தில் விசேஷ அழுத்தத்துடன் பாடியபோது சபையில் பூரிப்புடன் கூடிய கலகலப்பே ஏற்பட்டு விட்டது.
ஈழ நாட்டுத் தமிழ் மக்களின் பூரிப்புக்கும் காரணம் இல்லாமற் போகவில்லை. "வான மளந்ததனைத்தும் அளக் திடும் வண் மொழி' என்று சொல்லும்போதெல்லாம் தமிழன் சிறப்பும் அது ஒரு காலத்தில் இந்த உலகையே ஆட்சி செய்ததையும் நினைக்கத் தோன்றும். சீரும் சிறப்பும் வாய்ந்த பழந்தமிழ் நாடும், தமிழ்ச் சங்கமும், அந்தச் சங்கத்தின் பெருமையும், ஈசுவரனே எதிரே வந்து கின்ரு லும், கெற்றிக் கண்ணையே காட்டினுலும் குற்றம் குற்றமே!” என்று கூறிய புலவர்களும் நமது எண்ணத் திலே அலைமோதிக் கொண்டு தோன்றுகிறர்கள். சண் பகம், புட்பகம், சாவகம், சிங்களம் ஆகிய தீவுகளில் எல்லாம் தமிழ்க் கொடி ஓங்கிப் பறந்த கோலம் கண் முன்னே காட்சி அளிக்கிறது. அந்தப் பழைய காலத்தில் ஈழத் தீவு தமிழ்த் தாயின் சிலம்பில் கொஞ்சும் மரகதம் போல் விளங்கிற்று. கல்விக்கும் கலைக்கும் உறைவிட மாக விளங்கி நின்றது. ஈழநாட்டில் கலைவாணி கம்பீர மாகக் கொலு வீற்றிருந்தாள். "
ஆனல் இப்பொழுது ஈழநாடு எப்படி இருக்கிறது? இந்தக் காலத்து ஈழத்துக்கு வேறு பல சிறப்புகள் இருக்க லாம். ஆனல் தமிழ் மொழியைப் பொறுத்தமட்டில் அதன் மதிப்பு அவ்வளவு மகிமை வாய்ந்திருப்பதாகச் சொல்ல முடியாது.
இது காரணமாகத்தான் தமிழ் மொழி வாழ்த்துப் பாடலைப் பாடியபோது அந்த மாபெரும் சபையில் இருந்த அத்தனை பேரும் தமிழ்த் தெய்வத்துக்கே தங்களை அர்ப் பணம் செய்து கொள்ள விரதம் எடுத்துக் கொண்டது போல மெளனமாக எழுந்து கின்ருர்கள். தமிழுக்கு ஏற்

Page 15
38 ஈழநாட்டுப் பிரயாணம்
பட்டிருக்கும் இழுக்கைக் களைந்தெறிவோம் என்று சபதம் செய்வது போல அவர்களின் முகங்கள் உறுதியும் கம் பீரமும் கொண்டு ஒளி பெற்று விளங்கின.
விழா முடிந்து கூட்டம் கலைந்த பிறகும் ' எங்கள் தமிழ் மொழி! எங்கள் தமிழ் மொழி! என்றென்றும் வாழியவே!” என்ற அமுதினும் இனிய பாட்டு எல்லா ருடைய இதயத்திலும் எதிரொலித்துக் கொண்டே இருக்தது.
兼 兼
ஈழ காட்டுக்கு வந்த காரியத்தை முடித்துக் கொண் டோம். பாரதி ஜயந்தி விழாச் சிறப்பாக முடிவடைந்து விட்டது. இனிமேல் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்ப தில் பயனில்லை புறப்படுங்கள். 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும். கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ' என்ருர் அல்லவா பாரதியார், அவர் வாக்குப் படி ஈழநாடு முழுவதையும் சுற்றிப் பார்ப்பதற்கு முன்னல் ஈழ நாட்டின் தலை நகரமான கொழும்பு நகரையும் அதில் இருக்கும் உயிர்க் காலேஜ் என்று கூறும் மிருகக் காட்சிச் சாலையையும், செத்த காலேஜ் என வழங்கும் "மியூஸியத்” தையும் பார்த்து விடுவோம்.
கொழும்பு நகரில் இருக்கும் மிருகக்காட்சிச்சாலை ஆசியாவில் இருக்கும் ஒரு சில சறந்த காட்சிச்சாலைகளில் ஒன்று. இயற்கையும் செயற்கையும் கலந்து பரிமளிப்பது. ஒவ்வொரு பகுதியும் பார்த்துப் பார்த்து அநுபவிக்க வேண்டிய காட்சிகள். பறவை இனங்களையும், பாம்பு வனங்களையும், கொடிய மிருகக் கூட்டங்களையும், கூடித் திரியும் விசித்திர விசித்திர மீன்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். கிட்டத்தட்ட முழுநாள் அதற்குச் செலவிட கேரிடலாம். ஆகையால் கையில் சாப்பாட்டு மூட்டை யையும் எடுத்துக் கொண்டு கொழும்பு நகரில் இருக்கும் மிருகக் காட்சிச் சாலைக்குள் செல்வதற்குத் தயாராக இருங்கள்.

3
காட்டு மிருகங்கள் சிரித்தன !
குயில்களும், கிளிகளும், குலவுபல சாதிப் புட்களும் இனிய பூங்குரல் எடுத்துச் சிரித்தன பாம்புகள் பட மெடுத்துச் சீறிச் சிரித்தன! குரங்குகள் எழுந்து நின்று கூத்தாடிச் சிரித்தன 1 மாடுகள் சிரித்தன சிங்கம், புலி, கரடி, சிறுத்தை எல்லாம் சிரித்தன ஒட்டகம் சிரித்தது! ஒட்டைச் சிவிங்கியோ சத்தம் இல்லாமல் சிரித்தது. யானையும், குதிரையும் சிரித்தன பன்றியும், கழுதையும் இன்னும் பல காட்டு மிருகங்களும் சிரித்தன காண்டா மிருகம் கனத்துச் சிரித்தது! கங்காரு குதித்துச் சிரித்தது ஆமை அசைந்து சிரித்தது! நீர்யானையும் முதலையும் நீட்டி முழக்கிக்கொண்டு சிரித்தன !
இதையெல்லாம் பார்த்த மனிதர்களோ சிரிக்கலாமா, வேண்டாமா?’ என்று சுற்று முற்றும் பார்த்துவிட்டுக் “ குபிர் 1’ என்று சிரித்தனர். மனிதர்கள் சிரித்ததைப் பார்த்ததும் " ங்ேகள் கூடச் சிரிப்பீர்களா?” என்று கேட்டது ஒரு பச்சைக் கிளி.
பச்சைக் கிளி வாய் திறந்து பேசியதைக் கேட்ட மணி தர்கள் திகைத்து நின்ருர்கள்.
"இவர்கள் எல்லாம் தமிழ் பேசும் மனிதர்கள் போலி ருக்கிறது. அதுதான் பதில் கூரு மல் மெளனமாக இருக் கிருர்கள் ' என்றது ஒரு இலங்கைக் கிளி.
இலங்கைக் கிளியின் துடுக்குத்தனத்தைப் பார்த்தும் கூடச் சிறிதும் கோபம் கொள்ளாமல் “கலீர்’ என்று சிரித் தனர் அங்கிருந்த அன்புத் தமிழர்கள்.
" ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டது தூரத்தில் இருந்த ஒரு சிங்கள நாட்டுச் சிட்டுக் குருவி.

Page 16
24 ஈழநாட்டுப் பிரயாணம்
* தமிழ் காட்டில் அமிழ்தினும் இனிய தமிழ் மொழி ஆட்சி மொழி யாகிவிட்டதை எண்ணிச் சிரிக்கிருர்கள்” என்றது தமிழ் நாட்டின் பாடும் குயில்.
" இல்லை, ஈழநாட்டில் தமிழ் ஆட்சி பீடத்தில் இருந்து இறக்கப்பட்டதை எண்ணிச் சிரிக்கிருர்கள் போலிருக்கிறது' என்றது அநுராதபுரத்துக் குரங்கு.
பாடும் குயில் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்தார்கள். குரங்கு சொன்னதைக் கேட்ட போதோ ஒருகணம் வெட் கித் தலை குனிந்தார்கள். ஈழநாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இல்லை என்பதை எண்ணி இந்தக் குரங்குகூட அல்லவா 15ம்மைப் பார்த்துக் கேலி செய்யும்படி ஆயிற்று!" என்று ஈழத்தமிழ் மக்கள் கலங்கிப் பேசினர்கள்.
அதே நேரத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. காக்கிச் சட்டை அணிந்து அங்கு வந்த ஒரு காவற்காரன் குரங்குக் குச் செம்மையாக இரண்டு பூசைகள் கொடுத்து அழைத் துப். போனன். இதைப் பார்த்த இதர மிருகங்களும் பறவைகளும் சிரிப்பதை நிறுத்தின !
இந்த அதிசயமான சம்பவம் எங்கே கடந்தது, தெரியுமா? ஆம் : பறவைகளும் மிருகங்களும் கூடச் சிரிக் கும், கேலி செய்யும் என்பது மட்டுமல்ல, நெருங்கி உற வாடும் ; உதவியும் செய்யும் என்றெல்லாம் கொழும்பு நகரில் உள்ள பிரசித்தி பெற்ற விலங்கு வனத்தில் அதாவது மிருகக் காட்சிச் சாலையில் இருந்த போது காங் கள் அறிந்து கொண்டோம். சிங்கள சர்க்காரின் கொடுமைகளுக்கு உள்ளான தமிழர்கள் சிலர் எங்களோடு விலங்கு வனத்துக்கு வந்து இருந்தனர். அவர்களுக்கு ஈழ காட்டின் விலங்கு வனத்தில் இருக்கும் மிருகங்களும் பறவைகளும்கூடத் தமிழர்களேப் பார்த்துக் கேலி செய்வ தாகத் தோன்றியதில் ஆச்சரியமில்லை. ஈழ காட்டில் உள்ள இருபத்தைந்து லட்சம் தமிழ் மக்களின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது.
பறவைகளும் காட்டு மிருகங்களும் சிரிக்கின்ற இந்தப் புகழ்பெற்ற கொழும்பு விலங்கு வனத்துக்குள் செல்வ

காட்டு மிருகங்கள் சிரித்தன 35
வதற்கு முன்பாக இந்த உலகில் விலங்குவனம் எப் பொழுது உண்டாயிற்று. யார் உண்டாக்கினர்கள் என் பதைத் தெரிந்து கொள்ளுவோம்.
விலங்கு வனத்தின் கதை
பறவைகளையும், இதர காட்டு மிருகங்களையும் ஒன்று சேர்த்து வைத்திருக்கும் வனத்துக்குத்தான் " விலங்கு வனம் ' என்று சொல்லுவார்கள். விலங்கு வனத்தில் பறவைகளும் மிருகங்களும் அதனதன் இயற்கைக்கு ஏற்ற வாறு இருப்பதற்கான சூழ்நிலையை அமைத்திருப்பார்கள். திறந்த வெளியில் திரிய வேண்டிய மிருகங்களுக்குக்கூட அதற்குத் தகுந்தபடி திறந்த வெளிகளும் அமைத்திருப்
ITTG.
இவ்வாறெல்லாம் இக்த உலகில் முதன் முதலில் செய்தது யார், தெரியுமா ! பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜார்டின்டிஸ் பிளான்ட்ஸ் என்ற நிபுணர். நூற்று ஐம் பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னல், 1801-ம் ஆண்டில் பாரிசு நகரில் அவர் ஒரு விலங்கு வனத்தை ஏற்படுத்தி னர். ஆனலும் அவருக்கு முன்பாகவே இரண்டாயிரம் ஆண்டுகளாக இறந்த மிருகங்கள், பறவைகளின் உடல் களையும் சேர்த்து வைத்துப் பார்த்து மகிழும் வழக்கம் உலகில் இருந்துதான் வந்தது. மன்னர்களுக்கும், செல் வக்தர்களுக்கும் இது ஒரு சிறந்த பொழுது போக்காகவே இருந்து வந்திருக்கிறது.
ஜார்டின்டிஸ் பிளான்டஸ் வெறும் வேடிக்கைக்காக. பொழுது போக்குக்காக விலங்கு வனத்தை ஏற்படுத்த வில்லை. பறவைகளையும் மிருகங்களையும் ஒரு இடத்தில் சேர்த்து வைத்து அவைகளின் வாழ்க்கை முறைகளை எல் லாம் ஆராய்ந்து வந்தார். மிருகங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும், நன்மைகளையும் தெரிந்து கொள்வதற்கு முயன்று வந்தார். இதற்காக அந்தத் தனி மனிதர் அந்தக் காலத்தில் பல லட்சக்கணக்கான ரூபாய் களைச் செலவழித்து வந்தார். இதன்மூலம் மிருகங்களைப் பற்றிய எத்தனை எத்தனையோ உண்மைகளை எல்லாம்

Page 17
26 ஈழநாட்டுப் பிரயாணம்
கண்டு உலகுக்கு வழங்கினர். இவ்வாறு அவர் ஆரம்பித்த விலங்குவனம்தான் இப்பொழுது உலகில் பல இடங்களி லும் பரவி இருக்கிறது. பாரதநாட்டில் திருவாங்கூர், கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் நல்ல விலங்கு வனங்கள் இருக்கின்றன. இவைகளைப் போலவே சிறப் புடையது கொழும்பு நகரில் இருக்கும் விலங்குவனம் ஆனலும் சென்னை நகரில் இருப்பதைவிடப் பெரியது.
விலங்கு வனங்களால் உலகத்து மக்கள் பலவிதங் களில் பயன் பெற்று வருகிருரர்கள். உலகின் பல பகுதி களில் இருக்கும் மிருகங்களையும், பறவைகளையும் ஒரே இடத்தில் எந்தவிதமான பிரயாணத் தொல்லைகளும் கஷ் டங்களும் இல்லாமல் பார்த்து மகிழ்ந்துவிட முடிகிறது. ஒவ்வொரு மிருக வனத்திலும் மிருகங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தேர்ந்த பல நிபுணர்கள் இருக்கிருர் கள். மிருகங்களின் உடல் அமைப்பு, ஆகாரம், அதன் வாழ்க்கை முறை, அதற்கு வரும் வியாதிகள் முதலியவை களை எல்லாம்பற்றி விசேஷப் படிப்புப் படிக்கும் மாணவர் களுக்கு இந்த விலங்கு வனங்கள் மிகப் பெரிய உதவியாக இருக்கின்றன. மிருகங்களின் ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் விலங்கு வளத்துக்குள் சென்று விட்டால் ஏதோ சொர்க்கத்துக்குள் சென்று விட்ட தாகவே மகிழ்ந்து போவார்கள். பிறவி எடுத்ததன் பயனை அடைத்து விட்டதாக ஆனந்தப்பட்டுப் போவார்கள். அத் தகைய வனவிலங்கு பறவைகளின் செர்ர்க்கமாகத் திகழ்ந்து வரும் கொழும்பு விலங்கு வனத்துக்குள் இப்போது செல்வோம்.
கொழும்பு விலங்கு வனம்
கொழும்பு நகரில் விலங்குவனம் அமைந்திருக்கும் இடம் மிக அற்புதமானது. இயற்கையாகவே அமைந் துள்ள மலைகளும், சோலைகளும், குளங்களும் கொண்டவை பூஞ்சோலை போல் தோற்றமளிக்கும் அழகு நிறைந்த விலங்கு வனத்தின் வாசலில் நின்று பார்த்தால் பழைய காலத்து மன்னர்களின் அரண்மனைத் தோட்டங்கள்தான்

காட்டு மிருகங்கள் சிரித்தன 2?
நமக்கு நினைவுக்கு வரும் விளங்கு வனத்துக்குள் செல் வதற்கு வசதியாக அருமையான சாலைகளும், தாம் வழி தவருமல் போவதற்கு வழிகாட்டி உதவுவதற்கு அவசிய மான அம்புக் குறிகளும் இருக்கின்றன.
இதோ இந்த அம்புக் குறியைத் தொடர்ந்து செல் வோம். அம்புக்குறி இடது பக்கம் திரும்புகிறது, பறவை கள் வனம் என்று எழுதியிருக்கிருர்கள். ஆமாம் : சிங்கள எழுத்தில்தான் எழுதியிருக்கிருர்கள். இங்கெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்கூடத் தமிழில் எழுதி இருந்தார் களாம். தமிழ் இருக்கட்டும். பறவைகளேம் பார்ப்போம், இந்தப் பகுதி பறவை வனம்தான் என்பதைப் பறவை களின் கலகலத் தொனியே எடுத்துக் கூறிவிடுகிறது.
இரண்டு பக்கங்களிலும் மலர் குலுங்கும் செடிகளும், பச்சைப் பசேல் என்ற புல் வெளிகளும் நிறைந்த இடத் துக்கு மத்தியில் சிறிய பாதை செல்கிறது. அந்தப் பாதை வழியே சென்றபோது "ஹலோ” “ஹலோ” என்ற பெண் குரல் கேட்டது. திடுக்குற்று நின்று குரல் வந்த திசை யைப் பார்த்தேன். அங்கு யாரும் இல்லை.
என் நிலைமையைப் புரிந்து கொண்டு, உடன் வந்த நண்பர் புன்னகை புரிந்தார்.
" தங்களைக் கூப்பிட்டது வேறு யாருமில்லை ; அதோ உட்கார்ந்திருக்கிறதே அந்தப் பறவைதான் ’ என்று உயரே மாத்தின்மீது உட்கார்ந்திருந்த பறவையைக் காண் பித்தார்.
ஆமாம் ; உண்மையிலேயே ஒரு பறவை அங்கு உட் கார்ந்திருந்தது. அது பறவை வனத்துள் வருகிறவர்களை உலகப் பொது மொழியான ஆங்கிலத்தில் "ஹலோ" * ஹலோ !” என்று இனிய குரலில் முகமன் கூறி வரவேற் கிறது. நல்ல வேளை, அந்தப் பறவை ஆங்கிலத்தில் பேசியதோ பிழைத்தது! அதுமட்டும் தமிழில் பேசியிருக் தால் சிங்கள அரசாங்கம் அதைச் சும்மா வைத்திருக்குமா? ஒன்று அந்தப் பறவையைச் சிங்களம் பேச வைத்திருக்கும்

Page 18
28 ஈழநாட்டுப் பிரயாணம்
அல்லது இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டத்தின் கீழ் அந்த இடத்தைவிட்டு வெளியேற்றியிருக்கும் !
இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான பறவை இனங் கள் இருக்கின்றன. அடடா 1 பறவைகளில்தான் எத்தனை விதங்கள் கொட்டைப் பாக்கு அளவுள்ள சின்னஞ்சிறு பறவையில் இருந்து பெரிய மாடு அளவு உள்ள மிகப் பெரிய பறவைகள் வரையில் இங்கு இருக்கின்றன. அங் குள்ள பறவைகளின் நிறங்களும் ஆயிரம் ஆயிரம் வகை கள், அதன் குரல்களும் அப்படியே, பல வித்தைக் குரல் படைத்து இந்தப் பறவைக் கூட்டங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பசியே எடுக்காது ! வெள்ளே வெளேர் என்று இருந்த பறவையைப் பற்றிக் கூறுவதா ! தங்க நிறம் படைத்த குருவியைப் பற்றிச் சொல்வதா? தோகை விரித்து நின்ற வெள்ளை மயிலையும் பற்றிக் கூறு வதா? எதைப்பற்றிக் கூறுவதா? ஆகையால் இத்துடன் கிறுத்திக்கொண்டு பாம்பு வனத்துக்குள் செல்வோம்.
கண்ணுடிப் பெட்டிக்குள்ளும், தண்ணிர் தொட்டி களுக்குள்ளும். பலப் பலவிதமான செயற்கைப் புற்றுகளுக் குள்ளும் விதம் விதமான பாம்புகள் இருக்கின்றன. சின் னஞ்சிறு, கண்ணுக்குத் தெரியாத பாம்பிலிருந்து ஆளையே விழுங்கும் பெரிய மலைப் பாம்புவரை வகை வகையான பாம்புகள் இருக்கின்றன. உலகின் பல பாகங்களில் உள்ள பயங்கர விஷப் பாம்புகள் வேறு இருக்கின்றன. அவை தம் இடத்தை விட்டு வரமுடியாது என்று நன்முகத் தெரிந்த போதிலும் நமக்குப் பயமாகத்தான் இருக்கிறது.
இந்தப் பாம்புகளுக்கு வேளை தவருமல் தண்ணிர் வைத்து ஆகாரம் வைத்து அதற்கு நோய் கொடி வராமல் காப்பாற்றும் அதிசயத்தைக் குறித்து வியந்துகொண்டே அடுத்த பகுதிக்குப் போய்ச் சேருவோம்.
'இதென்ன, காட்டுக்குள் வந்து விட்டோமா !” என்ற பிரமை ஏற்பட்டுவிட்டது. கரடிக் குகைகளைப் பார்த்தபோது, ஏழெட்டுக் கரடிகள் குதித்துக்கொண்டும் கும்மாளம் அடித்துக் கொண்டும் தண்ணிரில் முழுகி விளை யாடிக் கொண்டும் சுதந்திரமாக இருந்தன. விலங்குவனத்

காட்டு மிருகங்கள் சிரித்தன 29
துக்குள் கரடியைப் பார்ப்பது போலவே தோன்றவில்லை. காட்டு மத்தியில் நின்று கரடிகளைப் பார்ப்பது போலவே இருந்தது. அவ்வளவு தத்ரூபமாக இயற்கையாகக் கரடிக் குகைகளை அமைத்திருக்கிருர்கள். இவற்றில் பல தேசத் துக் கரடிகளும் இருக்கின்றன, உலகம்தான் எவ்வளவு விசித்திரமானது; அதில்தான் எத்தனை விதமான விசித் திரப் பிராணிகள் !
இதுவரை விலங்கு வனத்துக்குள் இருந்த நாம் எதோ மந்திர சக்தியினுல் ராமாயண காலத்து இலங்காபுரிக்கே போய்விட்டது போலத் தோன்றியது. அவ்வளவு அபூர்வ மான காட்சிகள் தென்படுகின்றன.
வட்ட வடிவமாகவும், வரிசை வரிசையாகவும், பலவித கோணல்களிலும் உள்ள கூண்டுகளுக்குள் நூற்றுக்கணக் கான குரங்கு இனங்களைக் காண்கிருேம். அவை செய்யும் ஜால வித்தைகளைப் பார்த்து மகிழ்கிருேம். ஒரு இடத்தில், கருங்குரங்கு ஊஞ்சல் ஆடுகிறது. மற்ருேர் இடத்தில் வேறு வகையான குரங்கு தன்னுடைய நீளமான வாலின் நுனியால் மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு தலைகீழாகத், தொங்குகிறது. இன்னெரு இடத்தில் பெரிய மனிதக் குரங்கு மனிதனைப் போலவே சைக்கிள் விடுகிறது, சிக. ரெட் பிடிக்கிறது, கைகொட்டிச் சிரிக்கிறது.
அதோ சிறுவர்களும், பெரியவர்களும் கும்பலாக உட் கார்ந்திருக்கிருர்கள், கைகொட் டி ச் சிரிக்கிருர்கள் " ஆகாகா' என்கிருர்கள், அவர்கள் உட்கார்ந்திருப்பதற்கு வசதியாகப் படிப்படியாக காலு பக்கத்திலும் படி வரிசைகள் அமைக்கப்பட் டிருக்கின்றன. அந்தப் படி வரிசைகளுக்கு மத்தியில் வட்ட வடிவமாக ஒரு இடம் இருக்கிறது. அக்த இடத்தில் காலு ஐந்து யானைகள் வேடிக்கை காண்பித்துக் கொண்டிருக்கின்றன. சின்னஞ் சிறு யானையிலிருந்து படிப்படியாக உயர்ந்து மிகப் பெரிய யானை வரையில் ஆறு யானைகள் சேர்ந்து நின்று காலைத் தாக்கி வணங்குகின்றன. ஒன்றின் வாலை ஒன்று பிடித் துக்கொண்டு சுற்றிச் சுற்றி வருகிறது. இவ்வாறு எத்தனை எத்தனையோ வித்தைகள் செய்கின்றன. அந்தக் குட்டி

Page 19
30 ஈழநாட்டுப் பிரயாணம்
யானை செய்யும் வித்தைகளைப் பார்த்துக் கூடி இருக்கும் மக்கள் மகிழ்ச்சி நிறைந்த ஆரவாரம் செய்கிருர்கள்.
சென்னை நகர விலங்கு வனத்துக்கும் கொழும்பு நகர விலங்கு வனத்துக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். கொழும்பு நகரில் உள்ள விலங்குகள் எல்லாம் கொழு கொழு என்று நன்ருக இருக்கின்றன; வனத்துக்குள் மிருகங்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்திருப்பதுடன் அவர்கள் திருப்தியடையவில்லை. அவைகளுக்குப் பல பல வேடிக்கைகளையும் விளையாட்டுகளையும் சொல்லிக் கொடுத் திருக்கிருர்கள். ஒவ்வொரு நாள் மாலையிலும் அந்த மிரு கங்கள் வேடிக்கை காட்டுகின்றன. இதனல் விலங்கு வனத்துக்கு வேடிக்கை பார்க்க வரும் கூட்டம் அதிக மாகிறது, நல்ல வருமானமும் கிடைத்து வருகிறது. மிருகங்களையும், விலங்கு வனத்தையும் சுத்தமாகவைத்துக் கொள்ள முடிகிறது.
அதோ, ஆசை பெற விழிக்கும் மான் கூட்டங்கள் ! மான்கள் என்ருல் மான்கள்தான். ஆகா! மான்களில்தான் எத்தனை எத்தனை வகைகள் ! அதன் கொம்புகளில்தான் எத்தனை வகைகள் ! கிளேக் கொம்புகள், சாதாரண கொம்புகள், திருகி விட்டிருக்கும் கொம்புகள், முடிச்சு விட்டிருக்கும் கொம்புகள் , இவைகளைப் பார்க்கும்போது மனத்தில் ஏதோ இனங் தெரியாத ஒரு மகிழ்ச்சியே ஏற்படு கிறது. அவற்றின் கண்களைப் பார்க்கும்போதே 15மது மனத்தில் ஒரு தனி இன்பம் ஏற்படுகிறது கவிஞர்கள் பெண்களின் கண்களைப் பார்த்து மான் விழி என்று சொன் னர்களே அதன் முழுப் பொருளையும் இங்குதான் தெரிந்து கொள்ள முடிகிறது. மான் கூட்டத்தையும், அவைகளைப் பார்க்க வந்திருந்த மங்கையர்களையும் சேர்த்துப் பார்த்த போது தான் கவிஞர்கள் கூறியது முற்றிலும் உண்மை என்பதை உணர்ந்து அநுபவிக்க முடிகிறது.
இன்னும் அஞ்சக் குரல் பழகும் புலிகளையும் தன் னிச்சையுடன் அலைந்து கர்ஜிக்கும் சிங்கங்களையும் பார்த்து மகிழ்கிருேம்.

காட்டு மிருகங்கள் சிரித்தன 31
ஆப்பிரிக்கா தேசத்து அதிசயப் பிராணியான கங்காரு வும் இருக்கிறது. நாலரை டன் எடையுள்ள பயங்கரமான ர்ே யானைகள், சிறு சிறு குன்றுகளைப்போல் காட்சி தரும் ஆமைகள், ஆளையே விழுங்கி ஏப்பம் விடும் முதலைகள் எல்லாம் இருக்கின்றன.
ஓரிடத்தில் கண்ணுடிப் பெட்டிகளுக்குள் வைரங் களைப் போலவும், நட்சத்திரங்களைப் போலவும் ஒளி வீசி மின்னுவது தெரிகிறது. ஒரு பெட்டியில் ரத்தினமே சொரிகின்றதோ என்று எண்ணவேண்டி யிருந்தது. இன்னெரு பெட்டியில் மரகதம் துள்ளுகிறதோ என்று தோன்றியது. இன்னும் சில இடங்களில் தங்கத் துண்டுகள் உயிர் பெற்றுத் தாவிப் புரளுவதுபோலிருந்தன.
அந்தக் கண்ணடிப் பெட்டிகளுக்குள் அப்படி யெல்லாம் காட்சி யளித்தவைகள் விண்மீன்கள் அல்ல. ஜலத்தில் உலவும் தண்மீன்கள்தான் 1 விசித்திரமான பல தேசத்து மீன்கள். அவைகளைப் பார்த்த நாமும் கடலுக் குள் மூழ்கி அவைகளுடன் சேர்ந்து விளையாடலாமா என்று ஆசைப்படுகிருேம்.
இந்தக் காட்சிகளை யெல்லாம் பார்த்து அனுபவிப் பதற்கு அறிவு முதிர்ச்சியோ, அனுபவ ஞானமோ, ரஸிகத் தன்மையோ ஒன்றுமே வேண்டியதில்லை. குழந்தை உள்ளம் இருந்தாலே போதுமானது.
விலங்கு வனத்துக்குக் குழந்தைகளை அழைத்துப் போவதைப்போல் சிறந்த கல்வி வேறு ஒன்றுமில்லை. மிருகங்களைப்பற்றி நூறு நூறு புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொள்வதை ஒரு சில மணி நேரத்தில் குதூகலத் துடன் குழந்தைகள் புரிந்துகொண்டுவிடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
இன்னும் இந்த விலங்கு வனத்தில் பார்க்க வேண்டிய பிராணிகள் அநேகம் இருக்கின்றன. பற்பல விதமான எலிக் கும்பல்கள், முயல் கூட்டங்கள், ஆட்டு மங்தைகள் முதலியவைகளைப் பார்த்துக்கொண்டே சென்ருல் ஒட்டக

Page 20
32 ஈழநாட்டுப் பிரயாணம்
மும், ஒட்டைச் சிவிங்கியும், வரிக் குதிரையும் தம் கண்ணில் பட்டே தீரும்.
மற்றும் நடு நடுவே இன்னும் பலவகைப்பட்ட பிராணி களையும் சந்திக்கலாம்.
இவ்வாறு சுற்றிச் சுற்றி, ஏறி இறங்கி வளைந்து நெளிந்து விலங்கு வனத்தைப் பார்த்துவிட்டு அங்கிருக்கும் பூந்தோட்டத்துக்கு வருகிருேம். பலப் பல நிறங்களில் பூத்துக் குலுங்கும் புஷ்பங்களின் காட்சியைக் காண் ருேம். ஜில்லென்று குளிர்ந்த காற்று நம்மீது படுகிறது. மரகதக் கம்பளத்தை விரித்துவிட்டது போன்ற புல்தரை மீது சற்று உட்காரவேண்டும் என்று ஆவல் உண்டா கிறது. காலே நீட்டிப் போட்டுக்கொண்டு மெதுவாக உட்காருகிருேம்.
நம்முடன் வந்த ஈழநாட்டுத் தமிழ் வித்வான் பாடத் தொடங்கி விடுகிருர் ;
காக்கைச்சிறகினிலே கந்த லாலா!-டகின்றன் கரியநிறக் தோன்றுதையே கந்த லாலா !
என்னும் பாரதியின் 'நந்தலாலா’ பாடலை அவர் பாடிய போது, "இந்தக் கொழும்பு விலங்கு வனத்துக்குள் வந்த படியால் அல்லவா காம் இறைவனின் சிருஷ்டித் தத்துவங் களையெல்லாம் தெரிந்துகொள்ள முடிந்தது!’ என்றே தோன்றியதுடன் அங்கு அநுபவித்த இன்பத்தைச் சொல்லத் தெரியாமல் திக்கு முக்காடிப் போனேம். பின்னர், 'ን
கேட்குமொழிகளெல்லாம் நந்தலாலா 1 கீதமிசைக்குதடா 15க்தலாலா !
என்று அவர் பாடி வருகையில் நானவிதமான பறவை களின், மிருகங்களின் குரல்களும் சேர்ந்து கேட்டன. அந்தக் கோஷ்டிக் குரல்கள், 'துயரத்தை அழித்துக் கவலை யைப் பழித்து மகிழ்ந்து வாழ்வோம் வாருங்கள் 1’ என்ற தெய்வக் குரலாகவே கேட்டன !

காட்டு மிருகங்கள் சிரித்தன 33
நேரம் போவதே தெரியவில்லை. எத்தனை நாழிகை வேண்டுமானுலும் இங்கு உட்கார்ந்திருக்கலாம் போல் தோன்றிற்று.
ஆணுல் நண்பர் அவ்வாறு உட்காருவதற்கு விடுகிரு ரா! ** இருட்டிப் போகிறது 1 வாருங்கள், வீட்டுக்குப் போக லாம் ' என்று கச்சரிக்க ஆரம்பித்து விட்டார்.
வீடு திரும்பும் வழியில் " இந்த விலங்கு வனத்தைப் பார்த்தே வியந்து போனிர்களே ! நாளைக்கு மியூஸியத்தைப் பார்த்தால் என்ன சொல்வீர்களோ ?’ என்ருர்,
ஓகோ ! அப்படியா' என்று மியூஸியம் பார்ப்ப தற்குத் தயாரானேன்.
"மியூஸியத்தில் ஈழ நாட்டின் புராதனச் செல்வங்களை அல்லவா கொண்டுவந்து அடைத்து வைத்திருக்கிருர்கள்?” எனருா.
ஓ! அப்படியா? அவைகூட ஈழ நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாகவேண்டும் என்று சத்தியாக்கிரகம் செய்தனவோ?’ என்றேன். s
நண்பருக்கு என் மீது ஏற்கெனவே ஒருமாதிரி சக்தேகம் இருந்தது. இப்பொழுது உண்மையிலேயே அவருடைய தலை சுற்றத் தொடங்கியது.

Page 21
4. தொல் பொருள் கலைமண்டபம்
இந்திர ஜால மகேந்திர ஜால வித்தைகளைச் செய்து காட்டும் சித்தர் ஒருவர் நம் முன்னிலையில் வருகிருர். தமது இடுப்பில் இருக்கும் விபூதி சம்படத்தை எடுக்கிறர். அதைத் திறந்து அதிலிருந்து கொஞ்சம் திருற்ேறைக் கையில் எடுத்து கம்முடைய முகத்துக்கு கேரே ஊதி விடு கிருர், திருறுே புகைபோல வந்து நமது கண்களில் விழுகிறது. நமது கண்ணுக்கு முன் உள்ள பொருள்கள் எல்லாம் அந்தக் கணமே மறைந்து விடுகின்றன. நாம் கால வெள்ளத்தில் பின் நோக்கிப் பிரயாணம் செய்கிருேம். ஒன்று இரண்டு பத்து நூறு என்று பல நூறு வருஷங்கள் சென்று விடுகின்றன.
இப்பொழுது நடைபெற்று வரும் அங்யாயங்கள், லஞ்ச ஊழல்கள், வஞ்சகங்கள், அட்டூழியங்கள், சர்வாதி காரப் போக்குகள், தமிழ்த்திரு காட்டிலும், ஈழநாட்டிலும் :தமிழ்மக்கள் படும் அவதிகள் எல்லாம் மறைந்து விடு
கின்றன.
முத்துமாலைகள். ரத்தின. கிரீடங்கள், மன்னதி மன்னர்கள், அவர்களுடைய பட்டத்து ராணிகள், தங்கச் சிம்மாசனங்கள், 5டனப் பெண்மணிகள், சித்திரக் குகை கள், சிற்ப மண்டபங்கள், ரதகஜ துரகபதாதிகள், அரண் மனைகள், ஆலயங்கள் அவற்றில் உள்ள கலை சொட்டும் விக்கிரகங்கள், அங்கு கடக்கும் காலட்சேபங்கள், தேரோடும் வீதிகள், பெரிய வனந்தரங்கள், அவைகளில் வாழும் யானைகள், புலிகள், சிங்கங்கள், மான்கள், குரங்கு கள், அவைகளுக்கு மத்தியில் வாழும் காட்டு மனிதர்கள். பலவகையான பறவைக் கூட்டங்கள் இவ்வளவும் நிறைந்த அதிசய உலகம் நம் கண் முன்னே காட்சி அளிக்கிறது.

தொல் பொருள் கலைமண்டபம் 35
கொழும்பு நகரில் உள்ள தொல் பொருள் கலைக்கூடத் துக்குள் சென்றதும், அதாவது மியூஸியத்துக்குள் புகுங் ததும் - இத்தகைய உணர்ச்சிதான் உண்டாகிறது. பல நூற்ருண்டுகளுக்குமுன் இலங்கைத் தீவு நாகரிகமில்லாத வேடர்கள் வாழ்க்த காட்டுப் பிரதேசமாக இருந்ததையும், கலையிலும், நாகரிகத்திலும், பொருள் வளத்திலும், அருள் வளத்திலும் சிறந்து விளங்கிய தமிழ் காட்டு மன்னர்கள் இலங்கைக்குச் சென்று அங்குள்ள காட்டை அழித்து ஈழத்தைக் கலைவளத்தில் சிறந்த நாடாக்கியதையும், இடுப்பில் தழைகளைக் கட்டிக்கொண்டிருந்த காட்டு மனிதர்களை நாகரிக மாந்தர்களாக மாற்றியதையும் தொல் பொருள் கலைக்கூடங்களுக்குள் இருக்கும் சிற்பங்கள் ஆதாரம் கூறுகின்றன ; சித்திரங்கள் சாட்சி சொல் கின்றன; தொல்பொருள்கள் சொல் பகருகின்றன ; வெண்கல விக்கிரகங்கள் கிண்கிணி நாதத்துடன் ஆமோ திக்கின்றன.
முதலில் கேயர்களுக்கு ஒரு விஷயத்தை வற்புறுத்திக் கூற விரும்புகிறேன். ஒவ்வொரு பெரிய நகரத்திலும் தொல் பொருள் கலைக்கூடங்கள் இருக்கின்றன. அவை போன்ற கலைக்கூடம் ஒன்றுதான் கொழும்பு நகரில் இருப் பதும். இந்தக் கலைக்கூடத்துக்குள் போகும்போது, 5ாடகத் துக்குப் போவது போலவோ, சினிமாவுக்குச் செல்லுவது போலவோ போகக்கூடாது. பொழுது போகவில்லை என்ப தற்காகவும் போகக்கூடாது. அப்படியெல்லாம் எண்ணிக் கொண்டு தொல் பொருள் கலைக்கூடத்துக்குள் போவது பக்தி இல்லாமல் ஆலயத்துக்குள் செல்வதற்கு ஒப்பாகும். பல நூறு வருஷங்களின் சரித்திர வளர்ச்சியைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பக்தியுடன் செல்ல வேண்டும்.
ஏதோ பானை ஒடுகள்தானே, களிமண் தானே, துருப் பிடித்த கத்தி கேடயங்கள்தானே, உடைந்துபோன சிற்பங்கள்தானே, சிதைந்துபோன சிற்பங்கள்தானே, வேண்டாத துணிமணிகள்தானே, வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்வதற்கு உபயோகிக்கும் பாக்கு வெட்டி தானே, கற்பனையில் செய்திருக்கும் காட்டும் வாழ்க்கைகள்

Page 22
36 ஈழநாட்டுப் பிரயாணம்
தானே என்றெல்லாம் அலட்சியமாக எண்ணினல் தொல் பொருள் கலைக்கூடம் வெறும் தொல்லைபிடித்த கூடமாகத் தான் காட்சியளிக்கும்.
இலங்கையின் வரலாற்றையும், அந்த நாட்டுடன் யார் யார் தொடர்பு கொண்டிருந்திருக்கிருர்கள், யாருடைய காலத்தில் இலங்கை காகரிகம் பெற்றது, யாருடைய ஆட்சி யினல் இலங்கை இன்றுள்ள நிலைமைக்கு உயர முடிந்தது என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உண்மை வரலாற் றைத் தெரிந்துகொள்ளப் போகிருேம் என்ற ஆவலுடன் செல்ல வேண்டும். அவ்வாறு சென்று அங்கிருக்கும் ஒவ்வொரு பொருளையும் ஆற அமர நின்று நிதானித்துப் பார்க்க வேண்டும்.
இப்பொழுது உள்ள இலங்கை சிங்கள சர்க்கார் தங்கள் சக்தியினுல் இலங்கைத் தீவின் பழைய சரித்திரத் தையே திருத்தி எழுத முயன்ருலும், மாற்றி அமைக்க முனைந்தாலும் அது முடியாத காரியம் என்பதைக் கொழும்பு தொல் பொருள் கலைக்கூடத்தில் இருக்கும் ஒவ்வொரு தொல் பொருள்களும் விவாதத்துக்கு இட மின்றிக் கூறுகின்றன.
கொழும்பு தொல்பொருள் கலைக்கூடத்துக்கு வெளி யில் மிகப் பெரிய புத்தர்பிரான் சிலை இருக்கிறது. அந்தச் சிலையுடன் சேர்த்துத் தொல் பொருள் கலைமண்டபத்தைப் பார்ப்பதே அற்புதமான காட்சி! நமது முன்னேர்கள் கலைத் தெய்வத்திடம் கொண்டிருந்த பக்திக்கு அத்தாட்சி யாக விளங்கும் பல பொருள்கள் இங்கு இருக்கின்றன.
கொழும்பு தொல் பொருள் கலை மண்டபத்தில் உள்ள சின்னங்கள் பல, தெய்வத் தமிழ் காட்டின் மூலமாகத்தான் இலங்கைத் தீவு நாகரிகம் பெற்றிருக்கிறது என்னும் சரித்திர உண்மையை எடுத்துக் கூறுகின்றன. இலங்கைத் தீவு இன்பத் தமிழ் காட்டைச் சேர்ந்த பூமியாக இருந்தது தான் என்று பேருண்மையை அவை விளக்கிச் சொல் கின்றன.
将 S.

தொல் பொருள் கலைமண்டபம் 3?
தொல்பொருள் கலைக்கூடத்தை நெருங்கும்போதே ஒரு அற்புதமான கலைக்கோயிலை, சரித்திரத்தையும் வரலாற் றையும் எடுத்துக் கூறும் சர்வகலாசாலையை நெருங்கு கிருேம் என்ற உணர்ச்சிதான் ஏற்படுகிறது.
தொல்பொருள் கலைக் கூடத்துக்குள் நுழைந்ததுமே அதன் அமைப்பும், அங்கிருக்கும் பொருள்களும் நம்முடைய கவனத்தைக் கவர்ந்து விடுகின்றன. கத்திகளும் வாள் களும், வேல்களும், கேடயங்களும் ஒன்றன்பின் ஒன்ருகத் தோன்றுகின்றன. கலை மண்டபத்துக்குள் இருக்கும் பல புராதன சின்னங்களைப் பார்த்து வந்தபொழுது நமது முன்னேர்கள் வீரத்துக்கும் கலைக்கும் எவ்வளவு மதிப்புக் கொடுத்திருக்கிருர்கள் !" என்ற வியப்பு நிச்சயம் உண்
-TG5 D.
பிறகு அங்குள்ள பழங்காலத்து நாணயங்களைப் பார்க்கிருேம் அந்தக் காலத்தில் மக்கள் உபயோகித்த மண் பாண்டங்களைப் பார்க்கிருேம். மரச்சாமான்களைப் பார்க்கிருேம். அவைகள் நமது தமிழ் நாகரிகத்தின் சின்னங் களாக, தமிழ் மன்னர்களின் தர்ம ஆட்சியை நமக்கு மெளனமாக எடுத்துக் கூறுகின்றன யாரும் மறுத்துக் கூற முடியாதபடி அழுத்திச் சொல்கின்றன.
மாடிமீது ஏறிச் சென்ருல் ஈழ நாட்டில் இன்று எங்குமே காண முடியாத ஒரு குடும்பத்தைக் காண்கிருேம். கணவனும் மனைவியுமாக இரண்டு பேர்களைப் பார்க்கிருேம். அவர்களைப் பார்த்ததும் நமக்குத் திகைப்பு ஏற்படுகிறது. ஆகா! எப்படிப்பட்ட இரும்பு உடல், அவர்கள் தலை மயிரும், அவர்கள் அணிந்திருக்கும் காட்டுத் தழைகளால் ஆன உடையும், நெருப்புப் போன்ற கண்களும், கையிலே இறைச்சித் துண்டும் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருக் கின்றன. யாரோ உயர்தரக் கலைஞன் செய்த உருவங் களாக இருப்பதால் அப்படியே உயிருடன் இருப்பது போலவே தோற்றமளிக்கிறது. ஒரு காலத்தில் இப்படி அ5ாகரிகமாக இருந்த மக்களை, தமிழ் மன்னர்கள் இலங் கைத் தீவில் தங்கள் ராஜ்யத்தை ஸ்தாபித்த பிற்பாடு எவ்வளவு நாகரிகமுள்ள மனிதர்களாக மாற்றி யிருக்

Page 23
38 ஈழநாட்டுப் பிரயாணம்
கிருர்கள் என்பதை எண்ணிப் பெருமைப்படத்தான் வேண்டி யிருக்கிறது.
தமிழ் மன்னர்கள் ஈழ நாட்டை எப்படி நாகரிகம் உள்ள நாடாக மாற்றியிருக்கிருர்கள் என்பதற்கு இந்தக் கலை மண்டபத்திலேயே இன்னும் எத்தனையோ ஆதாரங் கள் இருக்கின்றன. இலங்கைத் தீவில் பாழடைந்துபோன புராதன கோயில்களில் இருந்தும், பூமியை வெட்டும் போதும் கிடைத்த பல அரிய சிற்பங்களும், அற்புதமான விக்கிரகங்களும் ஏராளமாக இருககின்றன அழகுக் கலை ததும்பும் நடராஜ விக்கிரகங்களும் பார்வதி பரமேசுவரர், சிலைகளும், அப்பர், சுந்தரர் சம்பக்தர் மாணிக்கவாசகர் சிலைகளும், கண்ணகி அம்மன் விக்கி கமும், ஆஞ்சனேயர் விக்கிரகமும், சிறியதும் பெரியதுமான பல புத்தர் சிலைகளும் இருக்கின்றன.
அந்தக் காலத்து மக்களும் மன்னர்களும் உபயோகித்த இன்னும் எத்தனை எத்தனையோ பொருள்களும் தமிழ் நாட்டின் கலைக்கும், பண்பாட்டுக்கும் அழியா நினைவுச் சின்னங்களாகத் திகழ்ந்து வருகின்றன
யார் என்ன சொன்னலும், இப்பொழுது சிங்கள வர்கள் தங்கள் கையில் அரசாங்கம் இருப்பதை எண்ணித் தமிழ் மக்களையும், அவர்கள் மொழியையும் உதாசீனப் படுத்தினுலும் இலங்கைக்கும் தமிழ் காட்டுக்கும் ஏற்பட் டுள்ள சரித்திரம் காண முடியாத தொடர்பை யாருமே மறுத்துக் கூற முடியாது. இலங்கைக்கும் சிங்கள மக் களுக்கும் ஏற்பட்டிருக்கும் தொடர்பைவிடப் பழைமை LJ (T680T5) தமிழ் மக்களுக்கும் ஈழத்துக்கும் உள்ள தொடர்பு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. தமிழ் மன் னர்கள் இலங்கையை எத்தனையோ நூற்ருண்டுகளாக நீதி தவருமல் அரசாண்டிருக்கிருர்கள். இலங்கையின் கடைசி மன்னனுக வாழ்ந்த கண்டி ராஜன் தமிழ் மன்னன் தான். தமிழ் அரசர்கள் பரம்பரையில் கடைசியாக வந்து சுதந்திரமாக ஆட்சி புரிந்தவனும் அவனேதான்.
அந்த மன்னருடைய பரம்பரையினர் தமிழ் நாட் டிலேதான் இருந்தார்கள் : இப்பொழுதும் இருக்கிருர்கள்.

தொல் பொருள் கலைமண்டபம் 39.
அவர்களுக்குச் சிங்கள அரசாங்கம் சமீபத்தில்தான் சுதந்திர இலங்கையின் கெளரவப் பிரஜா உரிமையைக் கூட வழங்கிக் கெளரவித்திருக்கிறது.
கண்டிராஜனன கடைசித் தமிழ் மன்னன் வீற் றிருந்து அரசு செலுத்திய சிம்மாசனமும் இந்தக் கலைக் கூடத்தில் இருக்கிறது. தங்கத்தினல் செய்து கவரத்தி னங்கள் இழைத்துப் பளபளவென்று ஒளி வீசித் திகழும் அந்த சிம்மாசனத்தைப் பார்த்தாலே தமிழ்நாட்டின் கலைப் பண்பு நிறைந்து விளங்கிய சிம்மாசனம் என்பதைப் புரிந்து கொள்ளலாம் அந்தச் சிம்மாசனத்துக்கு அருகி லேயே அந்த மன்னரின் உடைவாள், அவர் அணிந்திருந்த சித்திர விசித்திரமான ஆடைகள், நீதி தவருமல் அரசாண்ட செங்கோல் இவை யாவும் வைக்கப்பட்டிருக் கின்றன. ஏற்கெனவே பிரிட்டிஷார் இந்தப் பொருள் களை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றிருந்தார்கள். இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் இவ்வாறு எடுத்துச் சென்ற பொருள்களை இங்கிலாந்தில் வைப்ப தற்கு இடமில்லாமல் போகவே மீண்டும் அவைகளில் சிலவற்றை அந்தந்த நாட்டுக்கு அன்பளிப்பாக இங்கி லாந்து மன்னரின் பரிசாகத் திருப்பிக் கொடுத்தார்கள். எப்படி இருக்கிறது கதை 1 யாரோ செய்த வெல்லப் பிள்ளையாரை எடுத்து வந்த அந்தப் பிள்ளையாரிலேயே கொஞ்சம் கிள்ளி அவருக்கு நைவேத்தியம் செய்த கதை தான் !
தொல்பொருள் கலை மண்டபத்தில் மிக முக்கியமான பகுதி சிற்பங்கள் சேகரித்து வைத்திருக்கும் பகுதிதான். பழைய நாளில் கருங்கல்லில் எத்தகைய ஜீவகளையைக் கொண்டுவரக்கூடிய மகா சிற்பிகள் இருந்திருக்கிருரர்கள் என்பதற்கு இந்தப் பகுதியில் ஏராளமான சாட்சியங்கள் இருக்கின்றன.
இங்கு கமது தமிழ் மன்னர்கள் எழுதிய சாசனங்கள் இருக்கின்றன. கருங்கல்லில் தமிழில் எழுதிக் கொடுத்த சிலாசாசனங்கள் அவை. தமிழ் நாட்டில் எல்லாக் கோயில்களிலும் காணும் கந்தி, மாமல்லபுரத்துச் சிற்பக்

Page 24
40 ஈழநாட்டுப் பிரயாணம்
கலை, சோழ5ாட்டுச் சிற்பக் கலை-இந்தக் கலைப் பாணி களைத் தழுவி உருவான பல சிற்பங்களும் இருக்கின்றன.
வரிசை வரிசையாகக் கண்ணுக்கு எட்டிய வரை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சிற்பங்களைப் பார்த்தால் பிரமிப்பும் வியப்பும் உண்டாகத்தான் செய்யும். ஆகா ! இத்தனை சிற்பங்களையும் செய்வதற்கு அந்தக் காலத்தில் எத்தனை சிற்பிகள் எவ்வளவு பிரயத்தனம் செய்திருக்க வேண்டும் ?
அந்தக் காலத்துப் பெருமை இருக்கட்டும். இந்தக் காலத்தில் இந்தச் சிற்பங்களையும், இன்னும் இங்குள்ள தொல் பொருள்களையும் சேகரிப்பதற்கு எவ்வளவு மகத் தான முயற்சி எடுத்திருக்க வேண்டும். எத்தனை மனிதர் கள், எத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு இவைகளே எல்லாம் சேகரித்தார்களோ !
தொல்பொருள் கலைக்கூடத்தினுல் எப்பேர்ப்பட்ட பயன் கிடைத்து வருகிறது. எவ்வளவு அரிய உண்மைகள் உலகுக்குக் கிடைக்கின்றன என்பதைக் கலையின் அரு மையை உணர்ந்தவர்கள், கல்வியின் பெருமையை அறிந்த வர்கள், சரித்திரம் வரலாறு முதலியவைகளின் சிறப்புக் களைப் பற்றித் தெரிந்தவர்கள், ஆராய்ச்சி நிபுணர்கள் கன்கு அறிவார்கள். இந்தத் தொல்பொருள்கலைக் கூடத்துக்குள் யாராவது நல்ல அறிவும் ஆராய்ச்சித் திறனும் நியாய புத்தியும் படைத்த சிங்களவர்கள் வர லாம். அவர்கள் தமிழ் மக்களால் இலங்கைத் தீவு பய னடைந்திருக்கும் உண்மையை உணரலாம். அதன் காரணமாக இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மைகள் செய்ய முயலலாம். இந்த ஒரு கன் மையே மனித குலத்துக்குப் பெரும் பயன் கொடுக்கும் காரியமல்லவா ? இதற்காகவே எத்தனை லட்சம் ரூபாய்கள் வேண்டுமானுலும் செலவு செய்து, இதுபோன்ற கலைக் கூடங்களைக காப்பாற்ற வேண்டியது அவசியம் அல்லவா? தொல்பொருள் கலை மண்டபங்களைக் காப்பாற்றுவது என்பது சாமான்யமான காரியமல்ல அதில் உள்ள பொருள்களே அடிக்கடி எடுத்துத் துடைக்க வேண்டும்

தொல் பொருள் கலைமண்டபம் 41
ஒலைச்சுவடிகளா யிருந்தால் அதன் ஆயுளை நீடிப்பதற்கு அவ்வப்போது மருந்து எண்ணெய் தடவ வேண்டும். புத் தகங்களா யிருந்தால் அவைகள் மக்கிக் போகாமல் விஞ் ஞான முறையில் ஏதாவது வழி செய்து காப்பாற்ற வேண்டும். விலையுயர்ந்த பொருள்களை, சரித்திர முக்கியம் வாய்ந்த சாமான்களைக் களவு போகாமல் காப்பாற்ற வேண்டும். இவைகளைக் கண்ணே இமை காப்பதுபோல் காத்து வராவிட்டால் எவ்வளவோ அரும்பாடுபட்டுச் சேகரித்த பொருள்கள் எல்லாம் விணகிவிடும் இதனுல் மனித குலத்தின் வரலாறே, சரித்திர உண்மைகளே அழிக் து போய்விடும்.
பழங்காலத்தில் நமது நாட்டில் எல்லாவற்றுக்கும் முறையான சாத்திரங்கள் இருந்திருக்கின்றன. அவை களின் பெருமைகளை உணர்ந்து காப்பாற்ருமல் விட்டு விட்டோமே என்று நாம் இப்பொழுது துக்கப்பட வில்லையா? இது போன்ற நிலைமை இனியும் வரவிட லாமா? இதை உணர்ந்த பிறகாவது தொல் பொருள் கலைக் கூடங்களைச் சரியாகப் பேணிப் பாதுகாத்து வர வேண்டு மல்லவா?
米 * 米
இந்தக் கலைக்கூடத்தில் முன்பெல்லாம் எல்லாப் பொருள்களுக்கும் அடியில் தமிழிலும் சிங்களத்திலும் குறிப்புகள் இருந்தனவாம். இப்பொழுது சிங்களத்தில் மட்டும்தான் இருக்கின்றன இவற்றில் உள்ள சில சரித்திர வரலாறுகள் தமிழ் மக்களுக்குப் பெருமை யளிக்கக் கூடிய வகையில் இருந்தன. அவைகளைச் சிங் களவர்கள் தங்கள் வரலாற்றுக்குப் பெருமை தரும் முறையில் மாற்றி அமைக்க முயன்று வருகிருர்கள் என்று கேள்விப்பட்டேன். இது எப்படி இருக்கிறது என்ருல், * கலாசாரம்' என்ற சொல்லின் திரிபே. "கல்ச்சர்' என்று ஆங்கிலச் சொல்லாக மாறி வந்திருக்கிறது என்று கூறுவது போல்தான் முடியும். சரித்திர உண்மைகளை அப்படி மூடி மறைத்துவிட முடியாது. கெருப்புக்கோழி பூமிக்குள் தலையை மட்டும் மறைத்துக் கொண்டு உலகம் அஸ்தமித்து விட்டதாக எண்ணி மகிழுமாம். இது

Page 25
43 ஈழ5ாட்டுப் பிரயாணம்
போன்ற விசித்திரக் கதையாகத்தான் அவர்களுடைய அர்த்தமற்ற செய்கை முடியும்.
ஈழநாட்டுத் தமிழ் மக்கள் பழைமையில் பற்றுடைய வர்கள் தமிழ் காட்டின் பழைய பண்பாடு, பழைய இலக்கியங்கள் ஆகியவற்றில் மிக்க பக்தி கொண்டவர்கள். ஆகையால் இலங்கையில் உள்ள தொல் பொருள் கலைக் கூடத்தில் இருக்கும் அருமையான தமிழ் நாட்டின் தொடர்புடைய கலைச் செல்வங்களின் வரலாறுகளை எல்லாம் நூல்களாக எழுதித் தமிழ் மக்களுக்குப் பயன் படும் வகையில் வெளியிட முயலவேண்டும். இதுபோன்ற வேலைகளில் ஆன்ற தமிழ்ப் புலவர்களும் ஆராய்ச்சியாளர் களும் ஈடுபட்டால் காட்டுக்கு எவ்வளவோ நலம் ஏற்படும்.
எத்தனையோ சரித்திர உண்மைகளை எடுத்து விளக்கிக் கொண்டிருக்கும் கொழும்பு தொல் பொருள் கலைக் கூடத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வணக்கம் செலுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.
米 来 ※
கேயர்கள் இனிமேல் மோட்டாரிலும் பஸ்ஸிலுமாக இலங்கைத் தீவு முழுவதும் பிரயாணம் செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். கடுங்குளிரிலும், கரடு முரடான பிரதேசத்திலும், மலை உச்சியிலும், காட்டு வெளி யிலும் செல்லவேண்டி யிருக்கும் ஆகையால் எல்லா வற்றுக்கும் வேண்டிய முன் ஏற்பாடுகளைச் செய்து கொள் ளுங்கள்.
முதலில் ஈழநாட்டின் தலைநகரான, பிரசித்திபெற்ற சிங்கள அரசாங்க மந்திரிகள் இருந்து கருணை ஆட்சி புரியும் கொழும்பு நகரத்தை ஒரு முறை கன்ருகப் பார்த்து விட்டு மேலே நமது ஈழநாட்டுப் பிரயாணத்தைத் தொடர்வோம்.

5 இலங்கைத் தலைநகரில் இரண்டுகாள்
பத்துத் தலைகளையுடைய இராவணனை நேயர்களுக்குத் தெரியாதா, என்ன ? அவன் சீதையைச் சிறைப்பிடித்துச் சென்று இலங்கையில் வைத்ததும் அதன் காரணமாக ராம லட்சுமணர்களும் வானர சேனைகளும் இலங்கைக்குச் சென்று யுத்தம் செய்ததையும் நாம் அறிந்திருக்கிருேம். பின்னர் "இந்தா விபீஷணு இலங்காபுரி ராஜ்யம!" என்று ராமன் இலங்கையை ராவணன் தம்பி விபீஷண ஆறுக்கு மகுடம் சூட்டி வைக்கும்படி நேர்ந்த சம்பவத்தை யும் அறிவோம். அதற்கு அத்தாட்சியாக இப்பொழுது கூட இலங்கையில் விபீஷணன் கோயில் இருக்கிறது
இலங்கைக்குப் போயிருந்த போது விபீஷணன் கோயி லுக்குச் சென்றேன். இலங்கைத் தலைநகரில் இருந்து காலு மைல்களுக்கு அப்பால் கலனி' என்னும் இடத்தில் இந்தக் கோயில் இருக்கிறது. விபீஷணன் கோயிலைப் பார்த்தபோது ஒரு கணம் திகைப்புத்தான் ஏற்பட்டது. ராமனுல் முடிசூட்டப்பட்ட விபீஷணனை இப்படிச் சின்ன ஒரு ஒட்டு வில்லைக் கட்டடத்துக்குள்தான வைப்பது என்று எண்ணி வேதனைப்பட்டேன். அசட்டு விபீஷணன் தனக்குக் கிடைத்த இலங்கை ராஜ்யத்தையும் சிங்கள வர்கள் ஆட்சியில் ஒப்படைத்துவிட்டு அந்த ஒட்டு வில்லைக் கட்டடத்துக்குள் சிம்மிதியாகத் துரங்கிக்கொண்டிருக் தான.
இந்த இடத்துக்கே ஒரு தனி மகிமை இருக்கிறது போலும். இதே இடத்தில்தான் இரண்டாயிரத்து ஐக் நூறு ஆண்டுகளுக்கு முன்னல் புத்தர்பிரான் இலங்கைக்கு வந்தபோது கலனி கங்க்ைக்கு மேலே ஆகாய வெளியில் அமர்ந்து உபதேசம் செய்தாராம்.

Page 26
ஈழநாட்டுப் பிரயாணம் 44ه
" இது என்ன கம்ப முடியாத விந்தையாக இருக் கிறதே !’ என்று கூறி விடாதீர்கள். இதற்கும் ஆதார மாக இங்கு ஒரு புத்தர் கோயிலே இருக்கிறது
இவ்வாறு புத்தர் கோயிலும் விபீஷணன் கோயிலும் இருக்கும் இடத்துக்கு அருகில்தான் இன்றைய இலங்கைத் தீவின் தலைநகரமான கொழும்பு நகரம் இருக்கிறது
கொழும்பு நகரம் சென்னை நகரைக் காட்டிலும் சிறிய ககரம்தான். ஆனலும் அதன் அமைப்பு மிக நேர்த்தி யானது. செல்வத்தில் சிறந்தது, அதாவது வர்த்தகம் கொழிக்கும் நகரம். இவ்வளவு வர்த்தகம் மிகுந்த நகரத் தைத் தமிழ் காட்டில் காண முடியாது. கொழும்பு நகரில் லகங்மிதேவியே கொலுவீற்றிருக்கிருள் என்றுதான் சொல்ல வேண்டும். பார்க்கும் இடமெல்லாம் கடைகள் ! வர்த்தகக் கூடங்கள்தான் 1 வீதியில் தலையில் சாமான்களை வைத்துக் கொண்டு விற்கும் பத்தாம் நூற்ருண்டு வர்த்தக முறையில் இருந்து இன்றைய 15வீன நாகரிகம் நிறைந்த வியாபார முறை வரையில் இந்தச் சின்ன நகரில் இருக் கின்றன.
ஒரு மூன்றடுக்கு மாளிகையைக் காண்பித்து, “ இது ஒரு கடை 1’ என்ருர்கள். இந்தக் கடையில் இல்லாத சாமானே கிடையாது. கீழே ஒரு பெரியகூடம் அதில் பல வர்த்தகப் பகுதிகள். அதே அளவு இட வசதி கொண்ட முதல் மாடியில் இன்னெரு பகுதி. இரண் டாவது மாடியில் இன்னும் பல பகுதிகள் , இவ்வாறு போய்க் கொண்டே இருக்கின்றன. இப்படிப் பல கடைகள் கொழும்பு 5களில் இருக்கின்றன. இந்த முறையில் அமைந்த கடைகள் மிகப் பெரிய வியாபார ஸ்தலமான பம்பாய் நகரத்தில்கூட இருக்குமோ என்பது சங்தேகம் தான, w
பலவகையான வாணிபம் நடந்து வரும் வீதிகளில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய பகுதி பேட்டை என்ற பெயர் கொண்ட வணிக மண்டபமாகும். இங்கு ஏராள மான தமிழ்காட்டு வியாபாரிகள் இருக்கின்றனர். வணி கத்துறையில் உலக மக்களுடன் போட்டி போட்டு உயர்ந்த

இலங்கைத் தலைநகரில் இரண்டு நாள் 会5
ஸ்தானத்தை வகித்துக் காட்டும் திறமை தமிழ் மக்களுக் குச் சிறப்பாக உண்டு என்பதை கிரூபித்து வருகிருர்கள். வியாபார தர்மத்திலிருந்து சிறிதும் பிறழாமல், வெளிநாட் டிலிருந்து வரவழைக்கப்பட்ட பொருள்களாக இருந்தாலும் அவைகளைக் குறைந்த லாபத்தில் மலர்ந்த முகத்துடன் மக்களுக்குக் கொடுக்கும் அழகைப் பார்த்துப பார்த்து அநுபவிக்கலாம்.
கொழும்புத் துறைமுகத்தில் உலகத்தின் பல நாடு களில் இருந்தும் வர்த்தகக் அப்பல்கள் வரிசை வரிசையாக வந்து நிற்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. ஒவ்வொரு கப்பலிலும் அந்தந்த காட்டுக் கொடி வீசிப் பறக்கும் அழகைப் பார்த்தாலே உலக நாடுகள் அனைத்தும் கொழும்பு நகரைத் தங்கள் காட்டுச் சந்தையாகச் செய்துவரும் உண் மையைப் புரிந்துகொள்ள முடிகிறது.
கொழும்பு இலங்கையின் தலைநசரமாக விளங்குவ தற்கு இந்தத் துறைமுகம்தான் தாரணம். இந்தச் சம யத்தில் கொழும்பு நகரின் பழைய சரித்திரத்தையும் சிறிது தெரிந்து கொள்ளலாம்.
கொழும்பு நகரின் கதை
பதினரும் நூற்ருண்டில் இந்த நகரம் போர்ச்சுக் கீசியர் கையில் இருந்தது. பின்னர் டச்சுக்காரர் வசம் சென்றது. பதினெட்டாம் நூற்ருண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்குள் வந்தது. இவர்கள் காலத்தில்தான் இந்தத் துறைமுகம் நன்ருகச் சீர்திருத்தம் செய்யப்பட்டு இன்று இருக்கும் நிலைக்கு உயர்ந்தது.
கொழும்பு 15கரின் அமைப்பை லண்டன்மாநகருடன் ஒப்பிட்டுச் சொல்லுகிருர்கள். காரணம் இந்த நகரைப் புதிய முறையில் அமைத்தவர் லண்டன் நகரை நிர் மாணித்த நகரக் கலைச் சிற்பியான ஸர் பேட்றிக் அபர் கிராம்பி. இவருடைய நகர நிர்மாணத் திறமை கொழும்பு நகரின் ஒவ்வொரு பகுதியிலும் பிரதிபலிக்கிறது.
நேர்நேரான சாலைகள். சாலைகளை நாலு பகுதிகளாகப் பிரிந்து வைத்துப் போக்குவரத்துச் சாதனங்களுக்கு வசதி

Page 27
46 ஈழநாட்டுப் பிரயாணம்
செய்திருக்கும் அழகு 1 சாலைகளுக்கு இருபுறமும் வரிசை வரிசை வரிசையாக மலர் குலுங்கும் மரங்களை வைத் திருக்கும் முறை. சில சாலைகளில் பலவித வர்ணங்களால் பூத்துக் குலுங்கும் மர வரிசைகளின் அழகு எல்லாமே பார்த்து அனுபவிக்க வேண்டிய அருமையான காட்சிகள்.
ஆங்காங்கு ஐந்தாறு சாலைகள் வந்து ஓரிடத்தில் கூடு கின்றன. இந்த மாதிரி ஒவ்வொரு சாலைச் சக்திப்புகளிலும் வட்ட வடிவமான புல் தரைகள் இருக்கின்றன. கொழும்பு நகருக்குப் புதிதாகப் போகிறவர்களுக்கு மேற்படி வட்டப் புல் தரைகளில் ஒன்றுக்கொன்று வித்தியாசம் தெரியாது
கடற்கரை ஓரமாக முக்கியமான சர்க்கார் கட்ட டங்கள் அமைந்திருக்கின்றன. ராணி இல்லம் ' என்ற கவர்னர் ஜெனரல் வசிக்கும் சர்க்கார் மாளிகை. இதற்கு அருகாமையிலேயே பாராளுமன்றக் கட்டடங்கள். இலங் கையின் இதர பகுதிகளில் உள்ள பழங்காலக் கட்டடங் களையும் அதன் நாகரிகத்தையும் உணர்ந்தவர்கள், கலை உணர்ச்சி உள்ளவர்கள் இந்தக் கட்டடங்களை எல்லாம் அவ்வளவு அழகானவை என்று கூறமாட்டார்கள். ஆணு லும் அவற்றின் கம்பீரத்தைப்பற்றி மட்டும் யாரும் குறை கூற முடியாது
கொழும்பு நகரையும், அதன் துறைமுகத்தையும், கடை வீதிகளையும் மிகப் பெரிய ஹோட்டல்களையும் பார்த்தால் இலங்கைத் தீவு என்னவோ தமிழ்நாட்டை விட மிகப்பெரிய பூமியாகத் தோன்றும். ஆனல் இலங்கைத் தீவு அப்படி ஒன்றும் பெரிய நிலப்பரப்பு கொண்டது அல்ல, தமிழ் காட்டில் உள்ள இரண்டு ஜில்லாக்களின் விஸ்தீரணம்கூட இருக்காது. இலங்கைத் தீவின் மொத்த விஸ் தீரணமே 25,833 சதுர மைல்கள்தான் ஏக்கர் அளவில் கூறினுல் 1,62, 13, 480 ஏக்கர் விஸ்தீரணம் உடையது. 1,60,23,040 ஏக்கர்தான் நிலப்பரப்பு. மற்றப் பகுதி எல் லாம் தண்ணிர்ப் பரப்புதான். இருக்கும் நிலப் பரப்பிலும் மக்களுக்கு உபயோகப்படாத நிலப்பகுதியும் இன்னும் பல லட்சம் ஏக்கர்களுக்குக் காடுகளும் இருக்கின்றன.

இலங்கைத் தலைநகரில் இரண்டு நாள் 4?
இலங்கைத் தீவின் அகல நீளத்தை மைல் கணக்கில் சொன்னுல் நீளம் வடக்கில் இருந்து தெற்குவரை 370 மைல், அகலம் மேற்கே கொழும்பிலிருந்து கிழக்கே சங்கமம் வரை 140 மைல், இதையே மேல் மாகாணம், மத்திய மாகா ணம், தென் மாகாணம், ஊவா மாகாணம், வட மாகாணம் கீழ் மாகாணம், வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம் சப்ரகமுவ மாகாணம் என்று ஒன்பது மாகாணங்கனாகப் பிரித்திருக்கிருர்கள்.
இலங்கைத் தலைநகரமான கொழும்பு ககரம் இருப்பது மேல் மாகாணத்தில், கொழும்பு நகரத்தின் ஜனத்தொகை காலு லட்சத்து இருபத்து மூவாயிரத்துச் சொச்சம். சென்னை நகரின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி கூட இல்லை. ஆனலும் சென்னை நகரைவிட எத்தனையோ விதங்களில் பிரயாண வசதிகள் நிறைந்த அழகான நகரம் கொழும்பு என்பதில் சிறிதும் சந்தேகமில்லை
இரண்டு மாடி பஸ்கள், டிராலி பஸ்கள் அதாவது ரப்பர் சக்கரம் போட்ட டிராம்கார்கள், சிறியதும் பெரி யதுமான டாக்ஸிகள் எல்லாம் ஏராளமாக இருக்கின்றன.
கொழும்பு நகரில் ரிக்ஷாக்களைக் காண முடியவில்லை. இதைப்பற்றி விசாரித்ததில் ரிக்ஷாக்களைப் படிப்படியாகக் குறைத்துவிட்டதாகக் கூறினர்கள். சென்னை நகரில் பஸ் ஸ்டாண்டுகளிலும், நாலு பேர்கள் கூடி நிற்கும் இடங் களிலும், கடற்கரையிலும், வீட்டு வாசலிலும் காணும் பிச்சைக்காரர்களைக் காண முடியவில்லை. இதைப் பார்க் கும்போது மனத்துக்குத் திருப்தியாகவே இருந்தது. இந்த நிலை சென்னையில் என்று ஏற்படுமோ ?
சென்னை பஸ்களில், நகரப் பெண்களுக்கு என்று சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது போலக் கொழும்பு நகரில் உள்ள பஸ்களிலும் டிராலிகளும் புத்த பிக்குகளுக் கென்று சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. புத்த பிக்குகள் பஸ்ஸுக்குள் ஏறினல் மக்கள் மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் எழுந்து அவர்களுக்கு இடம் அளித்துக் கெளரவிக்கின்றனர். புத்த பிக்குகளிடம்

Page 28
48 ஈழநாட்டுப் பிரயாணம்
காண்பிக்கும் இந்தக் கருணை பெண்மணிகளிடம் அவர்கள் காட்டுவதில்லை. இந்த நாகரிகத்தை அவர்கள் எப்பொழுது கற்றுக்கொண்டு கடைப்பிடிக்கப் போகிருர்களோ ?
பற்களைப் பார்க்க முடியவில்லை.
சென்னை நகரில் ஆட்டோ ரிக்ஷாக்காரர்களுடனும் டாக்ஸிக்காரர்களுடனும் அல்லல்பட்டு அவதிப்பட்ட வர்கள் கொழும்பு டாக்ஸிகளைப் பாராட்டாமல் இருக்க LO T sób, 6fT.
சென்னை ஜனத்தொகையையும், கொழும்பு ஜனத் தொகையையும் ஒப்பிட்டுக் கொழும்பில் இருக்கும் டாக்ஸி கார்களின் தொகையைக் கணிக்க முடியாது. சென்ஆன நகரில் ஒடும் டாக்ஸி தொகையைவிட மூன்று பங்கு அதிக மான டாக்ஸிகள் ஓடுகின்றன, அடாடா I டாக்ஸி என் ருல் அவையல்லவோ டாக்ஸிகள் !
டாக்ஸி வேண்டும் என்று டெலிபோனில் கூப்பிட்டு விட்டு வாசலுக்கு வருவதற்குள் 15மக்காக டாக்ஸி வந்து விடுகிறது. சிங்கள டாக்ஸிகள் ஒவ்வொன்றிலும் கம்பி யில்லாத் தந்தி சாதனம் பொருத்தி யிருக்கிருர்கள் நாம் டாக்ஸி வேண்டும் என்று டாக்ஸிகார்களின் தலைமைக் காரியாலயத்துக்கு டெலிபோன் செய்தால், அவர்கள் நாம் எங்கிருந்து டெலிபோன் செய்கிருேமோ அந்த இடத்துக்கு அருகில் இருக்கும் டாக்ஸிக்காரரை நம்மிடம் அடுத்த நிமி ஷமே அனுப்பி விடுகிருர்கள்.
நாம் கூப்பிடும் இடத்துக்கு அருகில் இருக்கும் டாக் ஸியை அவர்கள் எப்படிக் கண் டு பி டிக்கிருர்கள் தெரியுமா?
டாக்ஸிகார்களின் தலைமைக் காரியாலயம் குறிப்பிட்ட தெருவில், குறிப்பிட்ட கம்பர் உள்ள வீட்டுக்கு, குறிப் பிட்ட நபருக்கு டாக்ஸிகார் வேண்டும் என்று டெலி போனில் சொல்கிறது. இது நகரில் உள்ள அத்தனை டாக்ஸியிலும் அதில் இருக்கும் ஒலிபெருக்கியின் மூலம் 2கட்கிறது உடனே குறிப்பிட்ட தெருவுக்கு அருகிலோ

இலங்கைத் தலைநகரில் இரண்டு நாள் 49
அல்லது அந்த இடத்திலேயோ இருக்கும் டாக்ஸி டிரைவர் டாக்ஸியில் இருக்கும் டெலிபோன் மூலம் தாம் அங்கு செல்லுவதாகச் சொல்லுகிருர். “சரி” என்று அந்த டிரை வருக்கு உத்தரவு கொடுக்கப்பட்டுவிடுகிறது. கொழும்பு டாக்ஸிகளில் பிரயாணம் செய்யும் காம் இம்மாதிரி சம்பா ஷணைகளை அடிக்கடி கேட்பதன் மூலம் இந்த விவரத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
இதுபோன்ற வசதி இலங்கையைத் தவிர இங்கிலாந்து நகரத்தில்தான் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இலங்கைத் தீ வில் 15 ர ன் கண்ட மற்ருெரு அதிசயம் அங்குள்ள எல்லாருமே டல் அழகுடைய வர்களாக யிருப்பதுதான். அவர்கள் பற்களைப்பார்த்து பார்த்து மகிழலாம். நான் இலங்கைத் தீவில் இருக் கும்போது அனேகமாக எல்லாருடைய பற்களையும் பார்த்தேன். பொதுக் கூட்டங்களில் பிரசங்கங்களைக் கேட்டு மகிழ்ந்த தமிழ் அன்பர்களின் பற்களைப் பார்த் தேன். விலங்கு வனத்தில் மிருகங்களின் பற்களைப் பார்த்தேன். கண்டிகோயிலில் புத்தரின் பல்லைக் கூடப் பார்த்தேன். ஆனல் ஒரே ஒரு இனத்தவர்களின் பற்களை மட்டும் என்னுல் பார்க்க முடியவில்லை. டாக்ஸி டிரை வர்கள் பற்களைத்தான் சொல்கிறேன். அவர்கள் பற்களைப் பார்க்கவேண்டும் என்பதற்கு எவ்வளவோ முயன்றேன். ஒரு இடத்திலிருந்து ஒரு இடத்துக்குப் பிரயாணம் செய்த வுடன் டாக்ஸி மீட்டரில் உள்ள தொகைக்குச் சற்று அதிக மாகக் கொடுத்தேன். அந்த மனிதர் நான் கொடுத்த அதிக மான தொகையைப் பெற்றுக்கொண்டு வாயைத் திறந்து பல்லைக் காண்பிப்பார் என்று எதிர்பாாத்தேன். ஊஹூம்: அந்த டிரைவர் என்னை ஏமாற்றி விட்டார். அந்த மனிதர் தம் மணிபர்ஸைத் திறந்து வாடகைக்குமேல் நான் கொடுத்த அதிகச் சில்லறையைத் திருப்பிக் கொடுத்தார். இன்னுெரு முறை வாடகைத் தொகையைவிடச் சற்றுக் குறைத்துக் கொடுத்தேன். அப்பொழுதும் அவர் வாயைத் திறந்து பல்லைக் காண்பிக்க வேண்டுமே ? கிடையாது. டாக்ஸி மீட்டரைச் சுட்டிக் காட்டித் தமக்குச் சேர வேண்டியதை மட்டும் கணக்காகப் பெற்றுக் கொண்டார்.
4.

Page 29
50 ஈழநாட்டுப் பிரயாணம்
கொழும்பு நகரில் டாக்ஸி டிரைவர்கள் சில்லறைக் காகப் பிரயாணிகளிடம் பல்லைக் காண்பிக்கும் பழக்கமே வைத்துக் கொள்ளவில்லை. கொழும்பு நகரின் செல்வ வளத்துக்கும் பணப் புழக்கத்துக்கும் அங்குள்ள டாக்ஸி வாடகை அப்படி ஒன்றும் அதிகமில்லை. சென்னை நகரை விடக் குறைவுதான். மைலுக்கு எட்டணுதான் 1 ஆனலும் கொழும்பு நகரில் எட்டணுவுக்குள்ள மதிப்பு சென்னையில் நாலு அணுவுக்குத்தான் சமமாகும். அவ்வளவு அதிகமான வித்தியாசம் இருக்கிறது இலங்கைத் தீவின் அதிசயமான வாழ்க்கைத்தரம்.
来
கொழும்பில் நன்ருகச் சாப்பிடுவார்களோ கல்ல வீட்டில் வசிப்பார்களோ என்பதை எல்லாம் பற்றித் தெளிவாகச் சொல்ல முடியாது. ஆணுல் எல்லாரும் மோட்டார்கார் வைத்திருக்கிருர்கள். சுமார் முந்நூறு ரூபாய் வருமானம் உள்ளவர்கள் கூடச் சொந்தத்தில் ஒரு மோட்டார்கார் வைத்திருக்கிருர்கள்.
காரணம் இலங்கை சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கு கார் வாங்குவதற்கு வேண்டிய ரூபாய் கடனுகக் கொடுத்து உதவுகிறது. அதுபோலவே இலங்கையில் உள்ள மோட் டார் கம்பெனிகள் யாருக்கு வேண்டுமானலும் மாதத் தவணையில் கார் விற்பனை செய்கின்றன. கொழும்பு கடை வீதிகளில் கார்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காட்சியைப் பார்த்தபோது எனக்கு ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபைதான் நினை வுக்கு வந்தது.
மாலையில் கடற்கரைக்குச் சென்றேன். சென்னை கடற்கரை அழகானதா, கொழும்பு கடற்கரை அழகானதா என்று கேட்டால் சென்னை கடற்கரையைப் போலவே கொழும்பு கடற்கரையின் அழகும் ஒருவிதத்தில் சிறப் புடையதுதான் என்று சொல்லுவேன். சென்னை கடற் கரையில் நீண்ட நெடுக் துாரத்துக்குக் காணும் வெண் மணல் பரப்பும், அழகுமிக்க கடற்கரையும் இங்கு இல்லை. ஆனல் கடற்கரை அலைமோதும் இடத்துக்கு வெகு

இலங்கைத் தலைநகரில் இரண்டு நாள் 5f
சமீபத்திலேயே மனிதர்கள் கடப்பதற்குரிய அருமையான சாலை இருக்கிறது. அதற்கப்புறம் விசாலமான பசும் புல்தரை, அதையும் தாண்டி அழகு மிக்க பெரிய மோட்டார் சாலை.
சென்னை நகரில் காண முடியாத இன்னெரு காட்சி இங்கு விசேஷமானது. சென்னை கடற்கரையில் தமிழ் நாட்டு மக்களை மட்டும் தான் பெரும்பாலும் காணலாம். ஆனல் கொழும்பு கடற்கரையில் தமிழ் மக்கள், சிங்கள மக்கள், மேல்நாட்டு மக்கள் இன்னும், மலேயா, ஜப்பான், சைன போன்ற உலக மக்களின் கூட்டம் உலவிக் கொண் டிருக்கும்.
சிங்களப் பெண்கள் விதம்விதமான ஆடைகளை அணிந்துகொண்டு உல்லாசமாக நடப்பதையும், புருஷர் களும் குழந்தைகளும் குஆாகலமாகச் செல்வதையும் பார்த்து மகிழலாம். பொதுவாக, கொழும்பு கடற்கரைக் காட்சி பார்த்து மகிழவேண்டிய அற்புதமான காட்சி. இலங்கைத் தலைநகரமான கொழும்பில் இருந்துதான் இன்று சிங்கள மந்திரிகள் இலங்கையில் கருணை ஆட்சி புரிந்து வருகிருர்கள். கொழும்பு நகரைப் போலவே சரித்திரமும் வரலாறும் போதிக்கும் பல நகரங்கள் இலங்கைத் தீவு முழுவதிலும் இருக்கின்றன. ஏன், கொழும்பு நகரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் சில சரித்திரம் முக்கியம் நிறைந்த நகரங்கள் காட்சி அளித்துக்கொண்டிருக் கின்றன.
கொழும்பு நகரையும் அதன் செல்வ வளத்தையும் பார்த்த பிறகு, "இதைவிடச் செல்வவளம் நிறைந்த பகுதி ஈழத்தில் எங்கே இருக்கப் போகிறது?’ என்று எண்ணி னேன். அது எவ்வளவு தவருனது என்பதை ஈழத்தாய் எனக்கு அறிவுறுத்தினுள்.

Page 30
6 சரித்திரத்தை மாற்றிய நவரத்தினங்கள்
15வரத்தினங்கள் சரித்திர வரலாற்றையே மாற்றி அமைத்துவிடுமா? அதைப் பற்றிய கதைகளைச் சொல் லுமா?
" பேஷாகச் சொல்லும் ' என்ருர் வயது முதிர்ந்த பெரியவர்.
"இதெல்லாம் வெறும் பேச்சு ' என்ருன் நவீன நாக ரிகம் படைத்த வாலிபன்.
வயது முதிர்ந்த பெரியவர் மிகப் பெரிய சரித்திர ஆசிரியர் ; ஆராய்ச்சியாளர் . நாகரிகம் படைத்த வாலி பனே பட்டதாரி.
* நான் படித்த பள்ளிக்கூடங்களிலோ, கல்லூரி யிலோ நவரத்தினங்கள் சரித்திர வரலாற்றையே மாற்றி அமைத்துவிட்டதாகப் படித்ததில்லை' என்று வாதாடி னன் வாலிபன்.
பெரியவர் அவனுடன் தொடர்ந்து வாதாட விரும்ப வில்லை. " நவரத்தினங்களில் சிறப்பானது வைரம் என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீரா?” என்ருர்.
*" கேள்விப்பட்டிருக்கிறேன்"
"நவரத்தினங்கள்தான் சரித்திர வரலாறுகளை எப்படி மாற்றியிருக்கின்றன? கவரத்தினங்களில் சிறந்த வைரங் களுக்காகத்தான் எத்தனை அக்கிரமங்கள் நடைபெற்றிருக் கின்றன ? சகோதரர்களைக் கொன்றிருக்கின்றன. பெரிய குடும்பங்களைச் சின்னபின்னப்படுத்தி யிருக்கின்றன; ஆலயங்களையும் விக்கிரகங்களையும் தகர்த்தெறிந்திருக்

சரித்திரத்தை மாற்றிய கவரத்தினங்கள் 53
கின்றன, ஒரு பாதகம்கூடப் பாக்கியில்லாமல் எல்லாப் பாதகங்களையும் புரிந்திருக்கின்றன.”
‘ ஆ, அப்படியா !” என்று வாலிபன் பிரமித்துப் போய்க் கேட்டான்.
* தம்பி! சற்று உட்கார் ! இந்தக் கதையைக் கேள்' என்று அந்த வயது முதிர்ந்த பெரியவர் கதை சொல்லு வதற்கு ஆரம்பித்தார்.
மைசூர் நகருக்குப் பக்கத்தில் பூரீரங்கப்பட்டணம் என்று ஒரு ஊர் இருக்கிறது. ஒரு சமயம் பூரீரங்கப் பட்ட ணம் மைசூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்தது. அந்தநகரம் இப்போது கேட்பாரற்றுக் கிடக்கிறது. இருங் தாலும் அதைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் கொலு விருந்து அரசு புரிந்த இடம் அல்லவா அது? அந்த விர புருஷர்களின் காலடிபட்ட பூமியை கானும் கொஞ்சம் மிதிக்க வேண்டும் என்று எனக்கு நீண்ட காட்களாகவே ஆசை. அந்த ஆசை ஒரு சமயம் நிறைவேறிற்று.
ஹைதர் அலி இந்துக்களைப் பலாத்காரமாக மொட்டை யடித்து இஸ்லாம் மதத்தில் சேர்த்ததாகச் சரித்திரப் புத்த தகங்களில் படித்ததுண்டு, அப்படி எல்லாம் கடந்திருக்க முடியாது என்பதை பூரீரங்கப் பட்டணத்துக்குப் போன போது புரிந்துகொள்ள முடிந்தது. காரணம் ஹைதர், அலியும், திப்புசுல்தானும் வாழ்ந்து அரசு புரிந்து போரிட்டு உயிர்துறந்த இந்த பூீரங்கப்பட்டணத்தில் இரண்டு பெரிய கோயில்கள் இருக்கின்றன. ஒன்று பிரசித்திபெற்ற ரங்கநாதர் கோயில் மற்ருென்று சிவன் கோயில். இந்தக் கோயில்கள் ஏறக்குறைய ஆயிரம் வருஷங்களுக்கு முன் னல் கட்டப்பட்ட கோயில்கள், அப்படிப்பட்ட இடத்தில் தம்முடைய சொந்த ஆதிக்கத்தில் இருந்து வந்த அந்தப் புராதனக்கோயில்களை இடிக்காமல் விட்ட ஹைதர் அலியும், திப்பு சுல்தானுமா இந்துக்களைப் பலாத்காரமாய் இஸ்லாம் மதத்தில் சேர்த்திருக்கப் போகிருர்கள் ! எனக் கென்னவோ அப்படி கடந்திருக்கும் என்று தோன்ற

Page 31
54 ஈழநாட்டுப் பிரயாணம்
ஹைதர் அலி பூரீரங்கப் பட்டணத்தை ஆண்டுகொண் டிருந்த காலத்தில் அங்கிருந்த சிவன் கோயிலுக்கு ஏராள மான சொத்து இருந்தது. சிவபெருமானின் கிரீடத்தில் நவரத்தினங்கள் இழைக்கப் பெற்றிருந்தன. சிவபெரு மானின் நெற்றிக் கண்ணில் பளிர் " என்று ஒளி வீசித் திகழும் அற்புதமான வைரம் பொறிக்கப்பட்டிருந்தது.
ஹைதர் அலியின் அன்பைக் கவர்ந்த பல பிரஞ்சுக் காரர்கள் அவனுடைய சர்க்காரில் இருந்தார்கள். அவர்கள் ஹைதரிடம் அன்பு காண்பிப்பதுபோல அவனிடம் உள்ள செல்வங்களை யெல்லாம் சமயம் பார்த்துக் கொள்ளை கொண்டு போவதற்காகவே திட்டமிட்டுக்கொண்டிருக் தனா.
ஒரு பிரஞ்சுக்காரன் கண்ணில் சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் சுடர்விட்டு மின்னிய வைரம் பட்டு விட்டது. அதன் ஜோதி ஒளியில், சுடர்ப் பிழம்பில் மயங்கிப் போய்விட்டான். இதை எப்படியாவது கொள்ளை கொண்டுபோய்விடத் தீர்மானித்தான்.
பக்தனைப்போல் வேஷமணிந்து சதா சர்வகாலமும் சிவ பெருமானின் வைரத்தைப் பார்த்துக்கொண்டே அமர்ந்து விட்டான். அவனுடைய வஞ்சக எண்ணத்தை அறியாத கோயில் அதிகாரிகள், ஒரு பிரஞ்சுக்காரன் மும்மூர்த்தி யின் சன்னதியில் வந்து வழிபடுகிருனே என்று அவனுக்கு எல்லாவிதமான வசதிகளையும் செய்து கொடுத்தனர்.
ஒருநாள் எல்லாருடைய கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு எம்பெருமானின் நெற்றிக்கண்ணில் ஐகஜ்ஜோதி யாகப் பிரகாசித்துக் கொண்டிருந்த வைரத்தைக் கொள்ளை யடித்துக்கொண்டு மறைந்துவிட்டான், அந்த வஞ்சகப் பிரஞ்சுக்காரன்.
ஈசுவரனின் நெற்றிக் கண் வைரத்தைக் களவாடிய பிரஞ்சுக்காரன் அதை நீண்டகாலம் அனுபவிக்க முடிய வில்லை. அவன் ஏறிச் சென்ற கப்பல் தலைவன் பிரிட்டிஷ் காரன். அவனிடமிருந்து அதை அபகரித்துக்கொண்டு அவனைக் கைலாயத்துக்கே அனுப்பி விட்டான். பிறகு

சரித்திரத்தை மாற்றிய கவரத்தினங்கள் 55
வைரம் பல கைகள் மாறின. கடைசியில் அந்த வைரத்தை ஓர்லோப் என்ற ருஷ்ய இளவரசன் பதினைந்து லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினன்.
ஒளி வீசித் திகழும் அந்த வைரத்தை எடுத்துக் கொண்டு ருஷ்யாவுக்குச் சென்ருன், ருஷ்யாவின் ஆட்சி பீடத்தில் அப்பொழுது ராணி இரண்டாம் காதரைன் அமர்ந்திருந்தாள். அவள் மலர்க்கரத்தில் தான் வாங்கிய வைரத்தைக் கொடுத்து மகிழ்வுகொண்டான் இளவரசன் ஓர்லோப்.
ஓர்லோப் வாங்கி வழங்கிய வைரமானதால் அதற்கு "ஓர்லோப் வைரம்' என்ற பெயர் குட்டினர்கள். அந்த வைரம், என்றைய தினம் ருஷ்ய அரண்மனைக்குள் நுழைங் ததோ அப்பொழுதிருந்தே அங்கு முடியாட்சி ஆட்டங் காண ஆரம்பித்துவிட்டது. ஜாரின் காலத்தில் மன்னர் ஆட்சி மறைந்து மக்கள் ஆட்சி மலர்ந்தது. 15மது பூரீரங் கப்பட்டணத்து சிவனின் நெற்றிக்கண் வைரம் இன்றைய தினம் மாஸ்கோவில் கிரெம்லின் மாளிகையில் தொல் பொருள் கலைப் பொருளாகக் கொலுவீற்றிருக்கிறது.
* அடாடா ! இந்த வைரத்தின் கதை மிக அற்புதமாக இருக்கிறதே ! ருஷ்யப் பொது உடைமைக்கு வித்திட்டது கமது தமிழ்நாட்டு வைரம்தான?" என்று வியப்போடு கேட்டான் வாலிபன்.
* கவரத்தினங்கள் சரித்திர வரலாற்றையே மாற்றி அமைக்குமா! அதைப்பற்றிய கதைகளைச் சொல்லுமா, இல்லையா?” என்று கேட்டார் பெரியவர்.
"கதையா, இல்லை. உண்மைச் சரித்திர வர லாற்றையே அல்லவா சொல்லுகிறது!" என்று மிகுந்த உணர்ச்சியோடு கூறினன் வாலிபன்.
"இன்னெரு அதிசயமான பல குடும்பங்களைக் கெடுத்த வைரத்தின் கதையைக் கேள். இது மிகப் பயங்கர மான கதை 1’ என்று ஆரம்பித்தார் பெரியவர்.

Page 32
56 ஈழநாட்டுப் பிரயாணம்
பிரஞ்சுக்காரர்களுக்குத்தான் வைரத்தின்மீது அலாதி யான மோகம். தவர்னியா என்ற பிரஞ்சுக்காரப் பிரபு ஒருத்தன் 15ம் பாரத நாட்டுக்கு வந்து பல ஆயிரம் ரூபாய் களை அள்ளிக்கொடுத்து ஒரு வைரத்தை விலைக்கு வாங்கி னன். அந்த வைரம் அவன் கைக்குப் போனதுமே அவன் செல்வம் கரைய ஆரம்பித்துவிட்டது. பெரிய கடனளி யானன். கடைசியில் அந்த வைரத்தை விற்றுக் கடனை அடைத்தான். மீண்டும் பொருள் திரட்டும் ஆசையுடன் இந்தியாவுக்கு வரும்போது வழியிலேயே மாண்டு மறைந்து போனன்.
அதே வைரத்தை வாங்கிய பதினலாவது லூயி என்ற மன்னன் தம் காதலி மோந்தஸ்பான் என்னும் அழகியின் கழுத்தில் அந்த வைரத்தைச் சூட்டி மகிழ்ந்தான். அந்த வைரம் கிடைத்த சில நாட்களிலேயே அவள் அரசனின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டாள்.
அந்த வைரத்தை அவளிடமிருந்து இரவலாக வாங்கிச் சென்ருன் பூகே என்னும் வீரன். உடனே அவன்மீது ராஜத்துவேஷக் குற்றம் சாட்டிக் கொலை செய்யப்
1-1-floo
இந்த அற்தமான வைரத்தின் சொந்தக்காரனுன மன்னன் பதினுலாவது லூயியும் அவன் மனைவி ராணி மேரி அன்த்வானெத்தும் கீயோதீனில் வெட்டுண்டார்கள். பிரஞ்சுப் புரட்சியின்போது அந்த வைரத்தைத் திருடிய கள்ளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அந்தக் கள்ளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அந்த வைரத் துக்குப் பட்டை தீட்டிக் கொடுத்த ரத்தினத் தச்சர் உண்ண உணவின்றி மாண்டு போனர்.
கள்ளர்களிடமிருந்து மேற்படி வைரத்தைத் திருடிய பொற்கொல்லரின் பு த ல் வன் தற்கொலை புரிந்து' கொண்டான்.
கடைசியில் அது ஹோப் என்ற அமெரிக்கப் பிரபு வின் கைக்கு வந்தது. அந்த அமெரிக்கரும் கடனளியாகி அதை வேருெருவனுக்கு விற்றுவிட்டார்.

சரித்திரத்தை மாற்றிய நவரத்தினங்கள் 57
பிறகு அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்தது இந்த வைரம். இங்கிலாந்தில் உள்ள ஹோப் என்ற கோடீசுவரன் அந்த வைரத்தை வாங்கினன். வைரத்தை வாங்கிய சில ஆண்டுகளிலேயே கோடீசுவரன் ஹோப் பரம ஏழையானன். அவன் மனைவி மேயோஹே அவனை விட்டு ஓடிப்போய்விட்டாள்.
பின்னர் அது லோரன்ஸ் வாத்யூத் என்ற நடிகை யிடம் வந்தது. அந்த வைரத்தை மார்பில் தரித்துக் கொண்டு நடன மண்டபத்தில் உல்லாசமாக கடனமாடிக் கொண்டிருந்தாள் லோரன்ஸ். வைரத்தின் ஒளியைக்கண்டு எல்லாரும் பிரமித்தனர். இந்தச் சமயத்தில் அவளால் புறக்கணிக்கப்பட்ட அவள் காதலன் அவளைச் சுட்டுக் கொன்ருன்.
அவள் மறைவுக்குப் பின் இந்த வைரத்தைத் துருக்கி மன்னன் அப்துல் ஹமீதுக்கு ஒரு கிரேக்கன் விற்ருன், வைரத்தை விற்ற பணத்தை உபயோகிக்காமலே அந்தக் கிரேக்கனும் அகால மரணம் அடைந்தான்.
இந்த வைரத்தை அணிந்திருந்த அப்துல் ஹமீதின் காதலி ஸல்மாகபாயா அரண்மனையிலேயே சுடப்பட்டுக் கொலையுண்டாள். அப்துல் ஹமீதோ தன்னுடைய ராஜ்யத்தையே இழந்து தவியாய்த் தவித்தான். -
எதுவார் துத்மலின் என்ற அமெரிக்கப் பிரபு இந்த வைரத்தை ஆறு லட்சம் டாலருக்கு வாங்கினர். அந்த வைரம் வந்த சில நாட்களுக்கெல்லாம் அப்பிரபுவின் முதல் மகன், செல்வப் புதல்வன் ஸ்வயசலனி மோட்டாரில் அடிபட்டு அநியாயமாய் இறந்தான்.
ஆனல் அந்த வைரத்துக்கு இப்பொழுதுகூடப் பல லட்சம் ரூபாய் மதிப்பிடுகிருர்கள். என்னே வைரத்தின் மதிப்பு 1
இந்தக் கதையைக் கேட்டதும் வாலிபனின் தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது, ‘ ஆ, ! என்ன பயங்கரம் 1 என்ன பயங்கரம் 1 மனிதர்கள் பைத்தியம் பிடித்துக் கிடக் கிருர்கள் יין என்று அலறிஞன் வாலிபன்.

Page 33
58 ஈழநாட்டுப் பிரயாணம்
பெரியவர் நிதானமாகச் சிரித்தார். * இவ்வாறு நவரத் தினங்கள் ஒவ்வொன்றும் எத்தனை எத்தனையோ சரித்திர வரலாறுகளே மாறிய கதைகளைச் சொல்லும் ' என்ருர், 米 来 米
இந்தக் கதையை எனக்கு யார் சொன்னது தெரியுமா? ஈழ காட்டில் உள்ள ரத்தினபுரியில் பார்த்த நவரத்தினங் கள்தான். நவரத்தினங்கள் பலப்பல வர்ணங்களில் ஒளி விட்டுப் பிரகாசிக்கும் ; நட்பு கொள்ளும் ; கதைகள் கூறும் என்றெல்லாம் கலுகங்கையின் கரையில் இருக்கும் ரத்தி னச் சுரங்கத்தைப் பார்த்துவிட்டு அங்குள்ள கமுகுத் தோட்டத்தின் குளிர்ந்த நிழலில் உட்கார்ந்தபோது காங் கள் அறிந்தோம். மேற்படி கதையை என்னுடன் வந்த மட்டக் களப்பு நண்பர் ஒருவர் கூறினர். வாசக நேயர்கள் பலரும் இந்தக் கதைகளைக் கேட்டிருக்கலாம். ஆனலும் ரத்தினபுரியில் உள்ள ரத்தினச் சுரங்கத்தைப் பார்த்த போது தானே அது கினைவுக்கு வந்தது. மட்டக் களப்பு கண்பர் அவ்வளவு சுவையுடன் இந்தக் கதைகளைக் கூறு வதும் சாத்தியமாயிற்று. எனவே நவரத்தினங்கள் சரித் திரத்தை மாற்றிவிடும் என்று கூறுவதில் என்ன தவறு?
கவரத்தினங்கள் மாற்றி அமைத்த சரித்திர சம்பவம் கிறைந்த வரலாறுகளைக் கூறும் அதிசயமான ரத்தினச் சுரங்கத்துக்குப் போக விருப்பமுள்ளவர்கள் ரத்தின புரிக்குச் செல்லவேண்டும் ரத்தினபுரி கொழும்பு நகரி விருந்து ஐம்பத்தாறு மைல், கொழும்பு நகரிலிருந்து பஸ் ஸிலும் செல்லலாம். ரயிலிலும் போகலாம். வசதி இருப் வர்கள் காரிலும் செல்லலாம். ரயிலில் செல்லுவதைவிட, பஸ்ஸில் போவதைவிடக் காரில் பிரயாணமாவதுதான் செளகரியமானது.
ரத்தினபுரிச் சாலை
ரத்தினபுரியைப் பற்றி யாத்திரைப் புத்தகங்களில் படித்தால், ரத்தினபுரி மலைப் பிரதேசம் என்றும் சப்ரக முக மாகாணத்தின் தலைநகரம் என்றும் காணலாம். ரத்தின புரிக்குச் சென்ருல் இது உண்மை என்பதையும் அறிந்து

சரித்திரத்தை மாற்றிய 15வரத்தினங்கள் 59
கொள்ளலாம். உண்மையில் பல இடங்கள் யாத்திரைப் புத்தகத்தில் எழுதியிருப்பதற்கு எவ்வளவோ மாருக இருக்கின்றன. அதனுல்தான் ரத்தினபுரியைப் பற்றி எழுதியிருந்தது உண்மை என்று சொல்ல வேண்டிய தாயிற்று.
மாலை சுமார் மணி ஐந்துக்குக் கொழும்பு நகரிலிருந்து ரத்தினபுரியை நோக்கிக் கிளம்பினேம். கொஞ்சதூரம் வரையில் நகருக்குள் நெருக்கமான ஜனக்கூட்டத்துக்கு மத் தியில்மோட்டார் போயிற்று.இரு புறங்களிலும்கடைகளில் தமிழ் நாட்டில் காணமுடியாத ஒரு காட்சியைக் கண்டேன், ஒவ்வொரு கடையிலும் குலைகுலையாகச் செவ்விளர்ேக் காய்கள் கட்டித் தொங்கவிட்டிருந்தன. அந்த இளர்ேக் குலேகளைப் பார்ப்பதே மனத்துக்குக் குளுமையாக இருந்தது. இளநீரைச் சாப்பிட்டால் எப்படி இருக் திருக்குமோ ! பிறகு நகர எல்லையைத் தாண்டி அழகான தார் ரோட்டில் வளைந்தும், நெளிந்தும் மேல் நோக்கி ஏறிக் கொண்டே போயிற்று. வெகு சீக்கிரத்தில் சுற்றிலும் உள்ள காட்சிகளின் தோற்றம் மாறிவிட்டது. பசுமையான மரங்கள், அடர்த்தியான பாக்குத் தோட்டம், ரப்பர் தோட்டம் எல்லாம் தோன்றின. இடையிடையே நெருக்க மான பலா மரங்களும் தென்பட்டன.
பலாமரங்களில் பலாக் காய்கள் காய்த்துக் குலுங்கும் அற்புதமான காட்சியை எழுத்தில் வர்ணிப்பது முடியாத காரியம். அப்படியே வர்ணித்தாலும் கேயர்களின் மனக் கண் முன்னல் அந்தப் பலாமரங்களைக் கொண்டுவருவது அசாத்தியம்.
அதோ பலாக்காய்கள் காய்த்துக் குலுங்கும் சிறிய பலாமரம் தோன்றுகிறது. அதன் அருகில் போய் நின்று அண்ணந்து பார்த்தாலோ கழுத்து வலி எடுத்துப் போகிறது. அவ்வளவு உயரமான மரங்கள்.
இதிலே என்ன இப்படிப் பிரமாதமான விசேஷம் ? நம் ஊரில் பலாமரங்கள் இல்லையா? பலாக்காய்கள் gdi)86)uit

Page 34
60 ஈழநாட்டுப் பிரயாணம்
15ம் ஊர்ப் பலாமரங்களில் இல்லாத ஒரு அபூர்வமான விசேஷம் இங்கு உண்டு.
பலாவிலேயே ஈரப் பலா என்று ஒரு சாதிப் பலா இங்கு ஏராளமாக இருக்கிறது. அது அடி மரத்திலிருந்து மரம் முழுதும் காய்த்துக் குலுங்குகிறது. சிங்கள மக்க ளுக்குப் பலாக்காய்தான் முக்கியமான உணவு. பலாக் காயை மேலே தோலைச் சீவி எடுத்துவிட்டுத் துண்டுத் துண்டாக வெட்டிச் சமைத்து 6ாம் சாதம் சாப்பிடுவது போலச் சமைத்துச் சாப்பிடுகிருர்கள். பலாக்காய் சாப்பிடு வதால் தானே என்னவோ அங்குள்ள பெண்கள் கட்டு மாரு உடல் உறுதியுடனும், அடர்த்தியான கூந்தலுட லும், கடைக்தெடுத்த தந்தப் பதுமைபோலும் விளங்கு கிருர்கள் !
சிங்களத்தில் "தெல்' என்று சொல்லும் ஈரப் பலாவை ஈழத்துக்கு முதன் முதலில் போர்ச்சுகீசியர்கள்தான் கொண்டு வந்தார்களாம். சிங்களவர்களை அடிமை கொள்வ தற்காகப் போர்ச்சுகீசியர் இலங்கைக்கு இந்தப் பலாவைக் கொண்டு வந்ததாகச் சொல்லிக் கொள்கிருர்கள் இந்தப் பலாவைச் சாப்பிட்டால் ஒருமாதிரி அதற்கு அடிமையாகி விடவேண்டியதுதானம். ஈரப் பலா அப்படி ஒன்றும் சுவையாகவும் இல்லை. ஆனல் எப்படியோ சிங்கள மக்கள் இதற்கு அடிமையாகி விட்டார்கள். இந்தப் பலாவின் கதையை ஒரு சிங்களவரே என்னிடம் கூறினர். மிகுந்த பெருமையுடன் கூறினர். இதில் என்னதான் பெருமை இருக்கிறதோ !
இதுபோன்ற பலாத் தோப்புக்கள், பாக்குத் தோப்பு கள், கெல் வயல்கள் எல்லாவற்றையும் கடந்து மோட்டார் பறக்கிறது. நடுநடுவில் சிறு சிறு கிராமங்கள் தென்படு கின்றன. அந்தச் சின்னச் சின்ன கிராமங்களிலும் பள்ளிக் கூடங்கள் இருக்கின்றன. மாலைவேளையானதால் குழங் தைகள் பள்ளிக்கூடம் விட்டுக் கூட்டம் கூட்டமாக வீட்டுக்குச் செல்கின்றனர். சிறுவர்கள் ஆணும் பெண் ஆணும் ஒரேமாதிரியான உடை அணிந்து சுத்தமாகக் காட்சி தருகிருர்கள். இங்கு வழியில் காணும் இயற்கைக் காட்சி

சரித்திரத்தை மாற்றிய நவரத்தினங்கள் 61
களைக் காண்பதற்குக் காலால் கடந்து செல்லுவதுதான் சிறந்த வழி. இயற்கையின் அழகைக் கண்டு அனுபவிக்க வேண்டுமென்ருல் மோட்டாரில் செல்லக் கூடாது.
ஒரு இடத்தில் மோட்டாரை விட்டு இறங்கிச் சற்றுத் துாரம் கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டியது. இந்த இடம் மலைப்பாங்கான இடம். ஜம்மு காஷ்மீரத்தில் சில இடங் களைப் பார்ப்பதுபோலவே இருந்தது. கீழே படிப்படியாக இறங்கும் நெல் வயல்கள், மலைகள் இடுக்கு வழியாகத் தொலைவில் தெரியும் லேவானம். எந்தப் பக்கமும் மலையும், தோட்டமும்தான். இந்த காட்டில் இப்போதுள்ள அரசியல் கிலைமைபோல வானத்திலும் தெளிவின்மை. சோழநாடு போல் இருந்தால் இதுபோன்ற மாலை நேரத்தில் ஜிலு ஜிலு வென்று காற்று வீசும், பச்சைப் பசேல் என்ற பயிர்கள் அழகாக ஆடி அசையும். இங்கே காணும் மாலை நேரம் காம் பழகியே அறியாத விசித்திரமான அன்னிய மொழி யைப்போல் தான் இருந்தது.
游 崇 米
ரத்தினபுரியை அடைந்ததும் அங்குள்ள வாடி வீட்டுக்குச் சென்ருேம். “ரெஸ்ட்ஹவுஸ்" என்று ஆங்கி லத்தில் கூறுவதைத்தான் ஈழத்தில் வாடி வீடு என்றும் ஒய்வு விடுதி என்றும் சொல்லுகிருர்கள். மலை உச்சியில் அமைந்துள்ள இந்த வாடி வீட்டில் ஜாகை வசதி, சாப் பாட்டு வசதி எல்லாம் குறைவின்றி இருந்தன. ஆனலும் எங்களுடன் வந்த மட்டக்களப்பு நண்பர் இங்குள்ள தமிழ் அன்பர் வீட்டில்தான் இரவு விருந்துண்ண வேண்டும் என்று எங்களை வற்புறுத்தினர்.
அவருடைய அன்புக் கட்டளேக்கிணங்க ஏழெட்டுத் தமிழ் நண்பர்கள் சேர்ந்து தங்கி இருந்த "பாரி இல்லம்" என்ற பங்களாவுக்குச் சென்ருேம். பாரி இல்லத்தில் உள்ள தமிழ் நண்பர்கள் எங்களை அகமும் முகமும் மலர வரவேற்று உபசரித்தார்கள். ஒவ்வொரு இளைஞரும் எங்களை வந்து கவனித்துக் கொண்டார்கள். அங்கிருக்கும் தமிழ் இளைஞர்கள் எல்லாரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வேலை

Page 35
62 ஈழநாட்டுப் பிரயாணம்
பார்த்து வருகிறவர்கள். தங்கமான குணம் படைத்த வர்கள் 'தமிழ்’ என்ருல் 'அமிழ்தம்' என்று கூறி ஆனந்த மடைபவர்கள். ஈழநாட்டில் மீண்டும் தமிழ் அரசியல் மொழியாகவும், தமிழர்கள் மீண்டும் அமைச்சர்களாகவும் வரவேண்டும் என்று கனவு கண்டு வருகிருர்கள். அவர்கள் கனவு விரைவில் நிறைவேறியே தீரும் என்பதை அவர்க ளுடைய உற்சாகத்தில் இருந்தும் உணர்ச்சி நிறைந்த சம்பாஷணையில் இருந்தும் தெரிந்துகொள்ள முடிந்தது.
இரவு வெகு5ேரம் ஆகிவிட்டபடியால் எல்லாருக்கும் நல்ல பசி உண்டாகிவிட்டது. அது காரணமாக, சாப்பாட் டின்ப்ோது உற்சாகம் அபரிமிதமாயிற்று. ஏதேதோ பல மாதிரியான கறிகாய்ப் பதார்த்தங்கள் எங்கள் சாப்பாட் டுக்காகக் காத்திருந்தன. பாரி இல்லத்துத் தமிழ் நண்பர்களே எடுத்து எல்லாவற்றையும் பரிமாற ஆரம் பித்தனர்.
என்னுடன் வந்திருந்த நண்பர், “அதோ ஒரு தட்டில் ஏதோ இருக்கிறதே அதைக் கொஞ்சம் வையுங்கள் !” * இங்கே என்னமோ இருக்கிறதே, இதைக் கொஞ்சம் வையுங்கள்” என்றெல்லாம் கேட்டு வாங்கிக் கொண்டார். ஆனல் சாதமும், குழம்பும், ரஸமும், கறிகாய்களும் எல்லா முமே நாவுக்கு ஒரேமாதிரியான ருசியாகத்தான் இருந்தன.
சாப்பாடு எல்லாம் முடிந்த பிறகு யாழ்ப்பாண நண்பர் களிடம் • சாதம், ரசம், குழம்பு எல்லாம் ஒரே மாதிரியான சுவையாக இருக்கின்றனவே! ஏன்?" என்று கேட்கலாம் என்று எண்ணிச் சாப்பாட்டைப்பற்றிய பேச்சை எடுத்தேன்.
பாரி இல்லத்தில் இருந்த ஒரு தமிழ் அன்பர் என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். ' ஏன் ஐயா ! உங்களிடம் ஒன்று கேட்கலாம் என்று எண்ணி இருந்தேன். தமிழ் நாட்டுக்கு வந்திருந்தபோது சில நண்பர்கள் வீட்டில் சாப் பிட்டேன் எதைச் சாப்பிட்டாலும் காரம், மணம், ருசி ஒன்றும் இல்லாமல் எல்லாம் ஒருமாதிரி இருக்கின்றனவே, அது ஏன்?" என்று கேட்டு வைத்தார்.

சரித்திரத்தை மாற்றிய கவரத்தினங்கள் 63
எனக்கு ஒரு கணம் மூச்சே கின்றுபோய் விட்டது. கான் அவரிடம் கேட்க எண்ணி இருந்த விஷயத்தைக் கேட்க விரும்பவில்லை. ஒவ்வொரு தேசத்துச் சாப்பாடும் அந்தந்த தேசத்து மக்களின் பழக்கம் என்ற முடிவுக்கு வங்தோம்.
来 来 来源
பேச்சு மீண்டும் தமிழைப்பற்றியும் தமிழ் காட்டைப் பற்றியும் திரும்பியது. அவர்களுடன் நீண்டநேரம் சம்பா வழித்துக் கொண்டிருந்ததிலிருந்து ஒன்று நிச்சயமாயிற்று. ஈழநாட்டுத் தமிழர்கள் எதில் எப்படி யிருந்தாலும் தமிழ் மொழியைப் போற்றுவதில் எல்லாரும் ஒன்றுபட்டு இருப் பார்கள் என்பதுதான். இது எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும் விஷயம் என்பதைச் சொல்ல வேண்டுமா?
கடைசியில் "காலையில் பொழுது புலருவதற்குள் ளாகவே இரத்தினபுரியில் இருந்து புறப்படலாம் என்று இருக்கிருேம். ஆகையால் இப்பொழுதே உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிருேம் " என்று கூறி நண்பர் களிடம் விடைபெற முயன்றேன்.
* அதெல்லாம் முடியாது நாளையதினம் இங்குள்ள இரத்தினச் சுரங்கத்தையும் ரத்தினபுரி நகரையும் பார்த்து விட்டுத்தான் போக வேண்டும் " என்று வற்புறுத்தி ணுர்கள்.
பாரி இல்லத்து நண்பர்கள் வற்புறுத்தலுக்கு இணங்கி ரத்தினகிரி நகரை விட்டுக் காலையிலேயே புறப் படாமல் இருந்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று என்பதை ரத்தினச் சுரங்கத்தைப் பார்த்த பிறகு தான் உணர்ந்துகொள்ள முடிந்தது.

Page 36
7
ரத்தினங்கள் விளையும் ரத்தினபுரி
கT&ல வேளை, மலர்களின் நறுமணம் மலைப்புறங் களிலிருந்து மிதந்து வந்தது. அப்பொழுதுதான் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். மரங்களின் இலைகள், புல் வரிசைகள். புஷ்பச் செடிகள் மீதெல்லாம் பனித்துளி கள் பளபளத்துக் கொண்டிருந்தன. மலைகளின் மோன நெளிவுகளுக்கிடையே மலைப் பாம்புபோல் நீண்டு கிடந்தது ரயில் பாதை. அந்தப் பாதையில் வீல் வீல் ' என்று ஊதிக் கொண்டு சென்றது புகைரதம். ரயிலில் இந்தச் சத்தத்தைத் தவிர வேறு சத்தம் இல்லை. ரத்தினபுரியைச் சுற்றிலும் ஒருவித அமைதி குடிகொண்டிருந்தது. நகர்ப் புறத்தில் கண்ட பரபரப்பு, அவசரம், தடபுடல் ஒன் றையும் காண முடியவில்லை. மக்கள் அவரவர்கள் காரி யங்களை நிதானமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ரத்தினபுரியைச் சுற்றிலும் உள்ள இயற்கைத் தெய் வத்தின் அழகை வர்ணிக்கவே முடியாது. சற்றுக் க்லை உணர்ச்சியும் கவித்ை உள்ளமும் படைத்தவர்கள் இரத் தினபுரிக்குச் சென்ருல் அங்கேயே தங்கி விடுவார்கள். துன்பப்பட்ட இதயத்தைத் துடைப்பதற்குத் தான் இயற்கைத் தெய்வத்துக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது ! இயற்கை வாய் திறந்து பேசுவதில்லை; ஆனல் தன் னுடைய அழகால் 15ம்மை மயக்கி விடுகிருள். மனத் துயரைப் போக்கி விடுகிருள். இயற்கைத் தெய்வத்துக்குப் பேச்சு என்னத்துக்கு?
ரத்தினபுரியை அழகுபடுத்திக் கொண்டு கலு கங்கைக்கரை ஓரமாகச் சென்ருல் எத்தனை எத்தனையோ காட்சிகள் நம் கண் எதிரே தோன்றி மறைகின்றன. ஒவ் வொரு கணமும் ஒரு புதிய சித்திரம் ; அத்தனையிலும்

ரத்தினங்கள் விளேயும் ரத்தினபுரி 65
புதுப்புது உருவம் புதுப் புது அழகு. ஏதோ ஒரு இனக் தெரியாத மரம் நீண்ட தன் கிளைகளை மீட்டிக் கமுகு மரத் துடன் கொஞ்சுவது போலிருக்கிறது. சற்று நேரத்துக் கெல்லாம் தன் ரத்தினம் போன்ற மலர்களைப் பலாமரத்தி னிடம் காட்டச் சென்று விடுகிறது. கூந்தற் பனை கைகளை ஆட்டிக் கலகலவென்று சிரிக்கிறது. மரகதம் போலிருக் கும் மூங்கிற் போத்துகள் இங்கு ஒயிலாகப் பரதம் பிடிக் கின்றன. தூரத்தில் கிற்கும் அரச மரங்கள் ஒற்றைக் கால் மண்டபங்கள் போல் கம்பீரமாக கின்று கொண்டிருக் கின்றன. ஒவ்வொரு மரத்துக் கிளைகளின் இடையிலேயும் தோன்றும் லேவானம் எத்தனை விதமான உருவத்தைத் தான் எடுத்துக் கொள்ளுமோ? நடு நடுவில் மேகக் கூட் டங்கள் அழகிய விமானங்கள்போல அணிவகுத்துப் பவனி வருகின்றன. அவை எடுக்கும் புதுப் புதுத் தோற்றங் களுக்கும் கணக்கில்லை. இதற்கு மத்தியில் சின்னச் சின்னப் பறவைகள் கூட்டம் கூட்டமாக, வரிசை வரிசை யாகப் பறக்து வான வெளிக்கு மாலை சூட்டுவதுபோல் செல்லும் காட்சி, கண்கொள்ளாக் காட்சி மரத்துக்கு மரம் தாவிப் பறக்கும் பட்சி ஜாலங்களின் கலகலத் தொனியும், சூரியன் ஒளி ஆங்காங்கே மரங்களின் அடர்த் திக்கு நடுவே ஊடுருவிப் பாய்ந்து வந்து தரையில் ஒளி யையும் கிழலையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்துப் பிணைத்துக் காட்டும் விக்தையும் ரத்தினபுரியை மாயாபுரியாக்கி விடு கின்றன.
தூரத்தில் எங்கிருந்தோ இனிய குரல் எடுத்துக் கூவுகிறது பூங்குயில். அதன் குரலுக்குத்தான் எத்தனை இனிமை! எப்படிப்பட்ட வசிகர சக்தி! அதுவும் கலு கங்கைக்கரையின் சோலைக்குள் இருந்து கேட்கும் போது உண்டான ஆனந்தத்தை எப்படிக் கூறுவது? இத்தனை அழகுகளையும் கண்ணல் பார்த்துக் களித்துக் கொண்டு, விதம் விதமான பறவைகளின் இனிய கானங்களையும் காதால் கேட்டு அனுபவித்துக் கொண்டு கலுகங்கையின் கரை ஓரமாகச் சென்ருேம். இயற்கைத் தெய்வத்தின் மனம் நிறைந்த மூச்சுக் காற்று எங்களைத் தழுவியபோது இணையற்ற இன்பத்தை அனுபவித்தோம். இயற்கையின்
5

Page 37
66 ஈழநாட்டுப் பிரயாணம்
மிருதுவான மடியில் நாங்கள் எங்களை மறந்து கடந்து சென்றபோது எங்கள் மனத்தில் இது வரை ஏற்பட்டே அறியாத ஒரு சுக உணர்ச்சியை அறிந்து மகிழ்வுற்ருேம். எல்லோரும் ஏதோ ஒருவித இனங் தெரியாத இன்ப மயக்க நிலையையே பெற்றிருந்தோம்.
இந்தச் சமயத்தில் "சோ !” என்ற ஏதோ ஒரு பெரிய சத்தம் எங்கள் மயக்கத்தைக் கலைத்தது. " அது என்ன சத்தம்?" என்று உடன் வந்த பாரி இல்லத்து நண்பர் களைப் பார்த்துக் கேட்டேன்.
" நாம் இப்பொழுது அந்தச் சத்தம் வரும் இடத்துக் குத்தான் போகிருேம். அதுதான் ' ரஜகா' அருவியின் சத்தம்' என்ருர் ஒருவர்.
* ரஜகா அருவியா? அப்படி என்ருல் ?”
* ரஜகா என்பது சிங்களச் சொல். அரசர்கள் நீராடும் இடம் என்று பொருள். பழைய காலத்தில் சிங்கள மன்னர்கள் இந்த அருவியில் வந்து நீராடி மகிழ் வார்களாம். அதனல் இந்த அருவிக்கு 'ரஜகா' அருவி என்று பெயர் வந்தது என்ருர்கள்.
இதற்குள் ரஜ5ா அருவியை நெருங்கி விட்டோம். இரண்டு மலைகளுக்கு இடையில் முப்பதடி உயரத்தி லிருந்து இந்த அருவி விழுகிறது. வெள்ளை வெளே ரென்று விழும்போது அதைச் சுற்றிலும் புகை போலத் தண்ணீர் பொங்கிப் பொங்கிச் செல்கிறது. அடாடா ! அதன் காட்சியே காட்சி! அதன் அழகே அழகு! இந்த அருவிக்கு எதிரிலேயே அழகிய தடாகம் ஒன்றும் இருக கிறது. இந்தத் தடாகத்தில் ஒருமுறை இறங்கிக் குளித்து அதன் சுகத்தை அனுபவித்தவர்கள் மீண்டும் இரத்தின புரியை விட்டே அகலமாட்டார்கள் ! அவ்வளவு அருமை யான தண்ணிர். பளிங்கு போல் இருக்கும். அந்தத் தண் னிரின் சுவைக்கும் இதில் குளித்தால் ஏற்படும் இனபத் துக்கும் ஈடு இணையே கிடையாதாம். ஈழ நாட்டில் ரத்தினபுரியின் தண் ணிரைப் போன்ற சுவை மிகுந்த சுத்தமான தண்ணிரை வேறு எங்குமே கண்டதில்லை.

ரத்தினங்கள் விளையும் ரத்தினபுரி 6አ
** இதற்கு என்ன காரணம்?"
ரத்தினபுரியைச் சுற்றியுள்ள மலைப் பிராந்தியங்களில் ஏராளமான மூலிகைகள் இருக்கின்றன. பூமிக்கு அடி யிலே கவரத்தினங்கள் கிடைக்கின்றன. மூலிகையின் மருந்துச் சத்தும், நவரத்தினங்களின் சத்துமாகச் சேர்ந்து இவ்வூரின் தண்ணிருக்கு இவ்வளவு சுவை இருப்பதாகச் சொன்னர்கள் ! இது உண்மையோ என்னவோ! அவர்கள் கூறிய காரணம் மனத்துக்குச் சமாதானம் அளிக்கும் வகையில் அமைக்திருந்தது. -
ரஜ5ா அருவியைப் பார்த்து விட்டு அங்கிருந்து கவ ரத்தினக் கற்கள் எடுக்கும் சுரங்கத்துக்குத் திரும்பினுேம், வழியில் பாரி இல்லத்து நண்பர் 5வரத்தினங்களின் சிறப் புக்களேயெல்லாம் கூறிக்கொண்டே வந்தார் சட் " டென்று " கோஹினூர்' வைரத்தைப் பற்றிய ரஸமான கதையைக் கூறினர்.
கோஹினூர் வைரத்தின் கதை
இன்றைய தினம் உலகிலுள்ள வைரங்களுக்கெல்லாம் சக்கரவர்த்தி போலிருப்பது கோஹினூர் வைரம். இந்த வைரம் முதன் முதலில் யுதிஷ்டிர மகாராஜா நடத்திய ராஜகுய யாகத்தின்போது பாரதநாட்டு மன்னர்களா லேயே காணிக்கையாகக் கொடுக்கப்பட்டது. எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னல் இந்த வைரம் மாளவ தேசத்து மன்னனிடமிருந்து அலாவுதீன் கைக்குச் சென்றது.
அலாவுதீனிடம் சென்ற கோஹினூர் வைரம் அவ னுக்குச் சந்ததியே இல்லாமல் அவன் குடும்பத்தை அழித் தது. அவனிடமிருந்து பல கைகள் மாறிக் குவாலியரை ஆண்ட ரஜபுத்திர மன்னன் கைக்கு வந்தது.
பிறகு ஹ" மாயூன் கைக்குச் சென்றது. கோஹினூர் வைரம் கிடைத்த சில ஆண்டுகளில் ஹ" மாயூன் ராஜ் யத்தை இழந்தான்.
இந்த வைரத்தை அணிய எண்ணித்தான் ஒளரங்கசீப் தன் சொந்த சகோதரனைக் கொன்று தகப்பனையும் சிறை

Page 38
68 ஈழநாட்டுப் பிரயாணம்
யில் அடைத்தான். தில்லிக் கொள்ளேக்குப் பிறகு அது மகம்மது ஷாவின் ஆபரணங்களில் இல்லாததைக் கண்டு காதிர்ஷா திகைத்துப் போனன். கடைசியில் எப்படியோ மகம்மதுஷா தம் தலைப்பாகையில் வைரத்தை மறைத்து வைத்திருப்பதைத் தெரிந்து கொண்டான். உடனே அவனிடம் சமாதானம் செய்து கொள்ள முயன்ருன் காதிர்ஷா. மகம்மதுஷ்ாவிடம் சென்று. " 5ம் சமாதானத் துக்கு அடையாளமாக நாம் இருவரும் ஒருவர் தலைப் பாகையை ஒருவர் மாற்றிக் கொள்வோம்’ என்ருன் காதிர்ஷா. இவ்வாறு மகம்மதுஷாவிடம் இருக்த வைரம் காதிர்ஷாவின் கைக்கு மாறியது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னரே * தலைப்பா மாற்று வேலை செய்யாதே !’ என்ற பழமொழியும் ஏற்பட்டது.
தலைப்பாகைக்குள்ளிருந்து வைரத்தை எடுத்துப் பார்த்து அதன் சுடர் ஒளியில் தன்னையே மறந்து * கோஹ்-இ-நூர்’ என்று தன்னையும் அறியாமல் கத்தினுன் காதிர்ஷா. அதாவது " ஜோதி மலையே!” என்று கூறி வியந்து போனன். இந்த வைரத்துக்குக் கோஹினூர் என்ற சிறப்புப் பெயரும் வந்தது.
ஆப்கானிஸ்தான் அரசனுன அஹமது அலியின் கைக்குக் கோஹினூர் சென்றது. பஞ்சாபின் சிங்கமான ரஞ்சித் சிங் ஆப்கானியரை வென்று கோஹினுாரைக் கொண்டு வந்தான்.
கோஹினூரின் பிற்காலத்துச் சரித்திரம் எல்லா ருக்கும் தெரிந்ததுதான். ஆங்கிலேயர்கள் பஞ்சாபை வென்று கோஹினூரைக் கைப்பற்றினர்கள். இன் றைக்கு அது இங்கிலாந்து அரசியின் சூடாமணியாகி விட்டது.
இவ்வாறு கண்பர் கோஹினூர் கதையைக் கூறி முடிப்பதற்கும் ரத்தினச் சுரங்கம் வருவதற்கும் சரியாக இருந்தது. ரத்தினச் சுரங்கம் என்ருல் ஏதோ பெரிய கட்டடங்களும் ஏராளமான இயக்திரங்களும் நூற்றுக் கணக்கான தொழிலாளர்களும் வேலை செய்து கொண்டும் இருப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டு வந்தேன்

ரத்தினங்கள் விளையும் ரத்தினபுரி 69
அவர்கள் ஒரு சாதாரணமான கிணற்றைச் சுட்டிக் காட்டி * இதுதான் ரத்தினச் சுரங்கம்” என்றதும் ஒரு கணம் ஒன்றுமே புரியாமல் திகைத்துப் போனேன். * இந்த ரத்தினச் சுரங்கத்தைப் பற்றிய விவரங்களை உங்களுக்கு விரிவாகச் சொல்லக் கூடியவர் அதோ கிற் கிருரே, அந்தச் சிங்களத் தொழிலாளிதான்' என்று கூறிப் பாரி இல்லத்து நண்பர் அந்தத் தொழிலாளியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் சிங்களமும் தமிழும் கலக்த மொழியில் கூறிய விவரங்களை நான் ரத்தினச் சு சங்கத்தை கேரிலேயே பார்த்ததால் ஒருவாறு புரிந்துகொள்ள முடிக்தது.
ரத்தினச் சுரங்கம் பாரீர்!
திடமான உடல், அகன்ற மார்பு, கம்பீரமான முகம், சற்று வளைக்த மூக்கு, சற்றே சுருக்கம் விழுந்த முகத்தில் * பளிர் ' என்று மின்னும் கண்கள். இடையிலே மட்டும் கட்டம் போட்ட லுங்கி ' உடுத்தியிருந்தான். உருண்டு திரண்டிருந்த கைகளே முழங்கால் மீது வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ஏதோ பெரிய வீர புருஷன் போல்தான் அமர்ந்திருந்து பேசினன், அந்த ரத்தினச் சுரங்கத்தின் சிங்களத் தொழிலாளி.
" சுமார் முப்பது வருஷங்களுக்கு மேலாக 15ான் இந்த ரத்தினச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறேன். ஐயா !” என்று ஆரம்பித்தான் அந்தச் சிங்களவன். கமுகுத் தோப்பு மரங்களின் சலசலப்புக்கும், பலா மரத்தைச் சுற்றிச் சுழன்று ரீங்காரம் செய்து கொண் டிருக்த கருவண்டின் சத்தத்துக்கும் மத்தியில் தான் அவன் பேசினுன்.
* ரத்தினபுரி கிலத்தில் ரத்தினங்கள் எங்கு வேண்டு மானுலும் கிடைக்கும். கிலத்தின் மேற்பரப்பைப் பார்த்த வுடனேயே இங்கு ரத்தினங்கள் கிடைக்கும் அல்லது கிடைக்காது என்று தெரிந்து கொள்ளும் அனுபவம் எனக்கு உண்டு. ள்ன்னைப் போலவே இன்னும் பலர் இந்த நாட்டில் இருக்கிருர்கள். எங்கள் உதவியுடன்

Page 39
O ஈழநாட்டுப் பிரயாணம்
தான் ரத்தினச் சுரங்கத்தை வெட்ட ஆரம்பிப்பார்கள்” என்ருன்.
" அதெப்படி உங்களுக்கு மட்டும் பூமிக்கு அடியில் குறிப்பிட்ட இடத்தில் ரத்தினங்கள் இருக்கும் என்று தெரிகிறது ?"
* அதை விளக்கிக் கூற முடியாது. அனுபவத்தின் மூலமாகத்தான் தெரிந்து கொள்கிருேம். உங்கள் நாட் டில்கூடப் பூமிக்கு அடியில் தண்ணிர் இருக்கிறதா என்று கண்டுபிடிக்கும் ஒருவர் இல்லையா? அவருக்குக்கூட "பாணி மகராஜ்' என்று பட்டம் சூட்டி ஆயிரக்கணக்கான ரூபாய் களைக் கொடுக்கவில்லையா? அதுபோலத்தான், நாங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் இடங்களில் பெரும்பாலும் ரத்தினங்கள் கிடைக்கும்.”
"இந்த இடத்தில் ரத்தினம் கிடைக்கும், ரத்தினச் சுரங்கம் தோண்டலாம் என்று நீங்கள் சொல்லிவிட்ட பிறகு உடனே சுரங்கம் வெட்ட ஆரம்பிக்க வேண்டியது தானு I'
* ரத்தினச் சுரங்கம் தோண்டுவதற்கு முன்னல் முதலில் ரத்தினபுரி " அர்பன் கவுன்ஸி’லில் நூறு ரூபாய் கட்டி ரத்தினச் சுரங்கம் வெட்ட உத்தரவு பெற வேண்டும்.'
* நூறு ரூபாய் சர்க்காருக்குப் போய்ச் சேர்ந்து விடுமாக்கும் ”
* அதெல்லாம் ஒன்றுமில்லை. ரத்தினச் சுரங்கத்துக் காகப் பூமியைத் தோண்டுகிருேமே அக்தப் பள்ளத்தைத் தூர்த்துவிட்டால் மீண்டும் பணத்தைப் பெற்றுக்
0 9 y
கொள்ளலாம்.
" ஓகோ 1 கினேத்த இடத்தில் பூமியில் குழியைத் தோண்டி அதை அப்படியே விட்டுவிடாமல் இருப்பதற் காகச் சர்க்கார் நூறு ரூபாய் வாங்குகிருரர்களா ?”
* ஆமாம். '
A பிறகு ဝှ**

ரத்தினங்கள் விளையும் ரத்தினபுரி ?f
* பிறகு என்ன ? வசதியுள்ளவர்கள், தனிப்பட்ட
முறையிலேயே ரத்தினச் சுரங்கத்தைத் தோண்டுவார்கள்,
வசதி இல்லாதவர்கள் கான்கைந்து பேர்களாகக் கூட்டு சேர்ந்துகொண்டும் இத்துறையில் ஈடுபடுவார்கள்."
* ரத்தினச் சுரங்கத்தைப் பார்த்தால் அதற்கு ஒன்றும் மூலதனமே வேண்டாம்போல் தோன்றுகிறதே. ஏதோ கிணறு தோண்டுவதுபோலப் பூமியைத் தோண்டியிருக் கிருர்கள். அவ்வளவுதானே !’
* ஆமாம், சுமார் முப்பதடியிலிருந்து நூறு அடி ஆழம் தோண்டினுலே போதும். அப்படித் தோண்டு வதற்கு ஆட்கள் வேண்டாமா ? குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு ஆட்களாவது வேண்டும். அவர்கள் பூமியை வெட்டிக்கொண்டு செல்வார்கள். கூடவே பக்கத்தில் உள்ள மண் சரிந்து விழாமல் இருப்பதற்காக மரப்பலகை களை அணையாக வைத்துப் பொருத்துவார்கள். ரத்தினச் சுரங்கங்கள் பெரும்பாலும் கலுகங்கையின் கரையிலேயே இருப்பதால் விடாமல் தண்ணிர் ஊறிக்கொண்டே இருக் கும். ஊறும் தண்ணிரையும் தொடர்ந்து இறைக்க வேண்டும். இதற்கெல்லாம் பல நாட்கள், மாதங்கள் கூடச் சில சமயங்களில் ஆகும். இதற்கு மத்தியில் அடிக்கடி மழை வேறு வந்துவிடும். மழை பெய்ய ஆரம்பித்து விட்டால் சுரங்கத்தையே தோண்டமுடியாது. சுரங்கத் தைத் தோண்ட முடியாவிட்டாலும் சுரங்கம் தோண்டும் ஆட்களுக்கு ஒன்றுக்குப் பாதியாவது கூலி கொடுத்து வர வேண்டும். இதற்குச் சில ஆயிரம் ரூபாய்களாவது செலவு செய்யவேண்டும். இப்படிச் சில ஆயிரங்கள் செலவு செய்தாலும் ரத்தினங்கள் கிடைக்கும் என்பதை நிச்சய மாகச் சொல்லமுடியாது. அப்படியே கிடைத்தாலும் செலவு செய்த ரூபாய் பெறுமானத்துக்கு கவரத்தினங்கள் கிடைக்குமா என்பது கூட சக்தேகம்தான். அதனுல்தான் இத்துறையில் காலைந்து பேர்கள் கூட்டுச் சேர்ந்தே ஈடு படுகிருர்கள்."
* நிச்சயமில்லாத முயற்சிதான இது ?"

Page 40
2 ஈழ5ாட்டுப் பிரயாணம்
" கம்பிக்கை உள்ள முயற்சிதான். சாதாரணமாக மழை பெய்து நின்றுவிட்டாலே போதும். இந்த ஊர் மக்கள் எல்லாம் பூமியைப் பார்த்துக் கொண்டு நடப்பார் கள். வெள்ளத்தில் மண் அரித்த இடத்தில் ஏதாவது மாணிக்கக் கற்கள் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டே போவார்கள்."
"இப்படிக்கூடக் கிடைக்குமோ ?”
“இவ்வூருக்கு அருகில் பெல்மதுல்ல என்ற ஒரு கிராமம் இருக்கிறது. அங்கு ஒரு விவசாயி மழை பெய்து நின்ற வுடன் தன் வயலில் உழுவதற்குச் சென்ருன் நிலத்தை உழும்போது ஏர்முனையில் கால் ராத்தல் இடையுள்ள பெரிய மரகதம் கிடைத்தது. நாற்பதினுயிரம் ரூபாய்க்கு அதை விற்ருன், இப்பொழுதுகூட அந்த ஆள் இருக் கிருன். மிகுந்த செளகரியத்துடன் இருக்கிருன். இதை யெல்லாம் பார்த்துவிட்டுத்தான் எப்பொழுதாவது ஏதாவது ஒரு மாணிக்கக் கல் கிடைக்காதா என்ற ஆசையில் ரத்தினச் சுரங்கத்தைத் தோண்டுவதில் பலர் ஈடுபடுகிறர் கள். அனேகமாக அவர்களுக்கும் அவர்களுடைய உழைப் புக்கும், போட்ட பணத்துக்கும் மோசமில்லாமல் ரத்தினக் கற்கள் கிடைத்துக் கொண்டுதான் வருகின்றன.”
* பூமியைக் குடைந்து கொண்டே டோகிறீர்கள் : அதில் ஊறும் தண்ணீரையும் இறைக்கிறீர்கள். பிறகு?”
* முப்பது காற்பது அடிக்குக் கீழே சில இடங்களில் ஒருமாதிரியான கூழாங் கற்கள் தென்படும். அவைகளேப் பார்த்தவுடன் சுரங்கம் தோண்டுபவர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டுவிடும். இந்தமாதிரி கூழாங்கற்கள் எந்தப் பக்கம் கிடைக்கிறதோ அந்தப் பக்கமாகத் தோண்ட ஆரம்பிப் பார்கள். அந்தக் கற்கள் பக்கவாட்டில் கிடைத்தால் அந்தப் பக்கத்தில் குடைய ஆரம்பிப்பார்கள். இப்படிக் குடையும் பாதைக்கு மாணிக்கப்பாதை' என்று பெயர். இந்த மாணிக்கப் பாதையில் கிடைக்கும் கூழாங்கற்களை உடனுக்குடன் மேலே அனுப்பிக் கொண்டிருப்பார்கள்.

ரத்தினங்கள் விளையும் ரத்தினபுரி 3.
அந்தக் கற்களுடன் கலந்தே நவரத்தினக் கற்களும் கிடைக்கும்."
"இந்தக் கற்களைச் சு சங்கத்துக்குள்ளிருந்து எப்படி மேலே கொண்டு வருகிருர்கள்?"
* அதுதான் நீங்கள் பார்த்திர்களே. சாதாரணமாகக் கிணற்றில் உருளை இருக்குமல்லவா? அதுபோல இரணடு அடி மூன்று அடி (ளேமான மர உருளையைச் சுரங்கத் ஆக்கு மேலே உள்ள இரண்டு கட்டைகளுக்கு மத்தியில் பொருத்தி யிருக்கிருர்கள். அதில் சுரங்கத்தின் ஆழத் ஆக்கு ஏற்றவண்ணம் தாம்புக் கயிறு சுற்றப்பட்டிருக் கிறது. அக்கயிற்றின் இரண்டு முனைகளிலும் பெரிய பீப்பாய்களைக் கட்டியிருக்கிருர்கள். மர உருளேக்கு இரண்டு பக்கங்களிலும் அந்த உருளையைச் சுழற்றுவதற்கு வசதியாகப் பெரிய இரும்புப் பிடியை ஒவ்வொரு புறத் திலும் மூன்று மூன்று ஆட்கள் வீதம் நின்று சுழற்று கிருரர்கள். அப்படிச் சுழற்றும்போது உருளையில் சுற்றி யிருக்கும் தாம்புக் கயிற்றின் ஒரு முனையில் கட்டி யிருக்கும் பீப்பாய் சுரங்கத்துக்குள் இறங்குகிறது. அதே சமயத்தில் இன்னெரு முனையில் கட்டியிருக்கும் பீப்பாய் சு சங்கத்துக்குள் இருக்கும் மாணிக்கக் கற்களுடன் மேலே வருகிறது. பீப்பாயில் இருக்கும் மாணிக்கக் கற்களை வெளியே கொட்டிக் கொண்டவுடன் பீப்பாயைச் சுரங்கத் அக்குள் விடுவார்கள். அது சுரங்கத்துக்குள் இறங்கி விடும். இன்னுெரு பீப்பாய் சுரங்கத்துக்குள்ளிருந்து மேலே வரும். இவ்வாறு மாணிக்கப் பாதையில் இருக்கும் சத்தினக் கற்கள் முடியும்வரையில் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்."
"இவ்வாறு எடுக்கும் ரத்தினக் கற்களை எங்கு கொண்டுபோய் விற்பார்கள் ?"
* ரத்தினபுரியிலேயே இந்தக் கற்களே வாங்கிக்கொள் வதற்கு வேண்டிய வியாபாரிகள் இருக்கிருர்கள். அவர் கள் எல்லாரும் முஸ்லிம்கள்தான். அவர்கள் இந்தக் கற்களை ஏதோ கொஞ்சம் ரூபாய் கொடுத்துத்தான் வாங்கு

Page 41
P4 ஈழநாட்டுப் பிரயாணம்
கிருர்கள். பிறகு அதில் இருக்து இனம் பிரித்து அவை களுக்குப் பட்டைத் தீட்டி நல்ல விலைக்கு விற்கிருர்கள். உண்மையில் ரத்தினச் சுரங்கத்தைத் தோண்டி ரத்தினங் கள் எடுப்பவர்களே விட மிக அதிகமான பலனை அடைபவர் கள் பட்டை தீட்டி விற்கும் ரத்தின வியாபாரிகள்தான்.”
" இதற்காகச் சர்க்காருக்காக ஏதாவது விசேஷ வரி செலுத்தவேண்டுமோ?"
" அதெல்லாம் ஒன்றுமில்லை.”
"இந்தத் தொழிலில் தாங்கள் ஏராளமாகச் சம்பாதித் திருப்பீர்கள் இல்லையா?”
* சில சமயம் வெறும் கையுடனும் போயிருக்கிறேன். சுரங்கத்தில் கிடைக்கும் ரத்தினங்களில் தொழிலாளர் களுக்கும் பங்கு உண்டு. இதனுல் பல சமயங்களில் பல ஆயிரக்கணக்கிலும் எனக்குப் பொருள் கிடைத்திருக் கிறது. எவ்வளவு கிடைத்தும் என்ன? வீட்டில் என்னமோ நாளைக்குச் சாப்பாடு கிடையாது.”
" ஏன் அப்படி?”
* இந்த நாட்டில்தான் இன்னும் கள்ளை ஒழிக்க வில்லையே! எத்தனை ஆயிரம் வந்தாலும் எல்லாம் அந்தக் குடியைக் கெடுக்கும் குடியிலேதான் தீர்த்துபோய் விடு கிறது” என்று துக்கத்துடன் கூ றி னன் அந்தத் தொழிலாளி.
* ரத்தினச் சுரங்கத்தில் வேலை செய்தாலும் மறுநாள் சாப்பாட்டுக்குத் திண்டாட்டம்தான?” என்று எண்ணிக் கொண்டே ரத்தினச் சுரங்கத்திலிருந்து புறப்பட்டோம்.
பூமிக்கு அடியில்தான் எத்தனை விதமான அற்புதங் கள் இருக்கின்றன ! இயற்கையின் அற்புதங்களில் சாதா ரண கரிகூட அல்லவா ஒளி வீசி மின்னும் வைரமாக மாறி விடுகிறது.

FRA
ரத்தினங்கள் விளையும் ரத்தினபுரி 75
.ரத்தினபுரியிலிருந்து புறப்படுவதற்கு முன்னுல் அங் குள்ள மிகப் பெரிய ஆஸ்பத்திரிக் கட்டடத்தைப் பார்த்து விட்டுத்தான் போகவேண்டும் என்று வற்புறுத்தினர்கள்.
அப்பாடி! ஆஸ்பத்திரி என்ருல் இது அல்லவே" ஆஸ்பத்திரி ! இலங்கை சர்க்கார் உண்மையிலேயே பெரு மைப்பட வேண்டிய அரிய சாதனை, சுமார் நாற்பது லட்சம் ரூபாயில் எல்லாவிதமான வசதிகளுடன் கூடிய இந்த ஆஸ் பத்திரியைக் கட்டியிருக்கிருர்கள். ஈழ நாட்டில் வேறு எங்குமே இவ்வளவு டெ ரிய ஆஸ்பத்திரி இல்லை. இந்த ஆஸ்பத்திரிக்கு அருகிலேயே அதில் தொண்டாற்றும் டாக்டர்கள், நர்ஸ் சகள், இதர சிப்பந்திகள் எல்லாருக்கும் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. உயரமான மலேமீது இந்த ஆஸ்பத்திரி கட்டப்பட்டிருக்கிறது. மூன்றடுக்குள்ள இந்த அழகான ஆஸ்பத்திரிக் கட்டடத்தைப் பார்த்த போது, இந்த ஆஸ்பத்திரியில் வந்து படுத்துக் கொள்வதாக இருந்தால் எந்த மாதிரி கொடிய நோய் வந்தாலும் பாதக மில்லே என்றே எண்ணத் தோன்றியது.
இக்கட்டடத்தைப் பார்த்துவிட்டுத் தமிழ்த் தெய்வம் கோயில் கொண்டிருக்கும் கதிர்காமத்துக்குப் புறப்பட இருக்தோம். அதற்குள் நண்பர் " இங்கு சமீபத்தில் * சிவன் ஒளி பாதமலை’ என்று ஒரு மலே இருக்கிறது. அதில் ஏருமல் போகக் கூடாது” என்ருர்,
* அதில் என்ன அப்படி விசேஷம் ?”
* எல்லா சமயமும் போற்றும் மலை இது. " ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் 1’ என்ற பேருண்மையை விளக்கிக் காட்டும் அற்புதமான மலை, அங்குபோய் நின்று உதய சூரியனைப் பார்த்தால் போதும். பிறவி எடுத்த பயனையே அடைந்துவிட்டதாகத் திருப்தியடையலாம் ; என்று கூறி சிவன் ஒளி பாத மலைக்குச் செல்லும் சாலை யில் மோட்டார்காரைத் திருப்பிவிட்டார்.

Page 42
O யாரோ, இந்தச் சிங்களவர்கள்?
ஈழ நாட்டின் அரசியல் திருவிளையாடல்களைப் பார்த்து கேயர்கள் திகைத்துப் போயிருப்பார்கள். "தமிழ் மக்களை இப்படிக் கொடுமைப்படுத்தும் இந்தச் சிங்கள வர்கள் யாரோ I அவர்கள் எப்படி இருப்பார்களோ ! அவர் களை ஒருதரம் பார்த்துவிட வேண்டும் ' என்ற ஆவல் ஏற் பட்டிருக்கும். எனக்கும் அதே ஆவல்தான் ஏற்பட்டது. இலங்கைத் தீவுக்குப் புறப்படுவதற்கு முன்பே சிங்கள வர்களைப் பார்க்க வேண்டும் என்ற தாபம் பொங்கி எழுந்து கொண்டே இருந்தது. அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதையும் ஒருவாறு கற்பனைசெய்து வைத்திருந்தேன். ஆறடி உயரம் உள்ளவர்களாகவும், ஆஜானுபாகுவாகவும், முறுக்கிவிட்ட மீசையும், அனல் கக்கும் கண்களை உடைய வர்களாகவும், பார்ப்பதற்குப் பயங்கரமான உருவத்துட லும் இருப்பார்கள் என்றுதான் எண்ணிக்கொண்டிருக் தேன். v
ஆனல் இலங்கை வந்த மறுகாளே அந்த எண் ணம் மாறிவிட்டது. சிங்கள மக்களும் நம்மைப்போன்ற வர்கள்தான், சிங்களவர் நாகரிகம் வேறு, இந்திய நாகரிகம் வேறு என்பது இல்லை. அவர்கள் மதத்தாலும் இந்தியர்கள் தான் சாதியாலும் இந்தியர்தான். சூழ்நிலையால்தான்
கொஞ்சம் மாறுபட்ட மனத்தினை உடையவர்களாக இருக் கிருர்கள்.
வெகு காலத்துக்கு முன்னல் வட இக்தியாவிலிருந்து அதாவது வங்காளத்திலிருந்து இலங்கைத் தீவுக்கு வந்து குடியேறியவர்கள். வங்காளத்தைச் சேர்ந்த ராஜகுமாரி ஒருத்தி மிருகங்களின் அரசனன சிங்கராஜனைக் காதலித் தாளாம். அவளேயும் அவள் காதலித்த சிங்கத்தையும்

யாரோ இந்தச் சிங்களவர்கள் קל
கப்பலில் ஏற்றிக் கடலில் விட்டுவிட்டார்கள். கடலில் மிதந்து வந்த அந்தக் கப்பல் இலங்கைத் தீவில் வந்து ஒதுங்கியது. அவர்களுடைய வம்சத்திலிருந்து வந்தவர்கள் தான் சிங்களவர்கள். இப்படிச் சிங்களவர்களைப் பற்றி ஒரு கதை வழங்குகிறது, இந்த விசித்திரக் கதையை காம் கம்பத் தயாராயில்லை. ஆனலும் அவர்கள் வங்கா ளத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. அவர்கள் உடல் அமைப்பு. கடை உடைகள், பழக்க வழக்கங்கள், பெயர்கள் எல்லாமே அவர்கள் இந்தியர்கள்தான் என்பதற்கு இன்றும் சான்று கூறுகின்றன.
米 米
சிங்கள மக்களுக்குள்ளே இருக்கும் சாதி வித்தி யாசக் கொடுமை அப்பப்பா ! எழுத்தில் சொல்ல முடியாது. அவ்வளவு கொடுமை! அவர்களுக்குள்ளேதான் எத்தனை பிரிவுகள், சிங்களவர்களில் ரெளடியா என்ற இனத்தவர் தான் மிகத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள். ஆனல் இக்தச் சாதியைச் சேர்ந்த பெண்கள் அழகு மிக்கவர்கள். அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைப் போலச் சொகு சாக இருக்கிருர்கள். ரதல்ல என்ற இனத்தவர் மிக உயர்ந்த சாதியார், ஆனல் அழகு குறைவானவர்கள். இந்த இரண்டு சாதிகளுக்கும் இடையில் எத்தனையோ பல சாதி கள், அதில் பலப் பல கிளைகள், சாதிக் கட்டுப்பாடு, மூடப்பழக்க வழக்கங்கள், போலி நாகரிகம், வறட்டு ஜம்பம் ஆகியவற்றில் சிங் கள வர் க ளே யாரும் மிஞ்ச முடியாது. அன்ருடம் சாப்பாட்டுக்கு வழி இல்லா விட்டால்கூட அழகான உடைகளை அணிந்துகொள் வார்கள் சிங்களப் பெண்கள்.
சிங்களப் பெண்களின் உடையைப் பார்த்தால் மிக எளிமையாகத்தான் இருக்கிறது. அவர்கள் கேரள காட்டுக் கிராமத்துப் பெண்கள் அணிந்துகொள்வதுபோல மேலே ஒரு ஜாக்கெட்டும், இடையில் ஒரு துண்டும்தான் அணிக் திருக்கிருர்கள். ஆனுல் உண்மையில் அவர்கள் ஒரு துண்டை மட்டும் உடுத்திக்கொள்ளவில்லை. விதம் விதமான வர்ணங்களில் மூன்று முதல் ஐந்து சேலைகள் வரையில்

Page 43
8 ஈழநாட்டுப் பிரயாணம்
அணிந்திருக்கிருர்கள். ஒன்றின்மேல் ஒன்ருகப் பலவித வண்ணப் பொற் சேலைகளை அணிந்திருக்கிருர்கள். அவர்கள் கடக்கும்போது அந்தச் சேலைகள் எல்லாம் ஒவ்வொன்ருகத் தெரிகின்றன. அவைதான் எத்தனை எத்தனை நிறங்களை யுடையவைகளா யிருக்கின்றன. ஒவ்வொரு சேலையும் மூன்றுகஜம் நீளம் உள்ளது. ஒன்றின் மேல் ஒன்ருகக் கட்டியிருக்கும் இந்தப் புடவைகளில் எல்லாவற்றுக்கும் மேலே கட்டியிருக்கும் புடவை மட்டும் மிக உயர்ந்த ரகமாக இருக்கிறது. இதை மட்டும் ஒரு நாளைக்குப் பல தடவை மாற்றி உடுத்திக்கொண்டு விடுகிருர்கள்.
நம் காட்டுப் பெண்களிடம் காணும் நாணத்தைப் போலச் சிங்களப் பெண்களிடம் காண முடியவில்லை. ஆண்களைப்போலவே பெண்களும் சரளமாகப் பழகு கிருர்கள். பொதுவாக இருபது வயதுக்குமேல்தான் பெண் களுக்குத் திருமணம் செய்கிருர்கள். திருமணத்தில் எதிர் ஜாமீன் போன்ற தொல்லைகள் ஒன்றுமில்லை. சமயம் விட்டு சமயம் திருமணம் செய்துகொள்வதும், சிங்களப் பெண் களைத் தமிழர்கள் திருமணம் புரிந்துகொள்வதும் சர்வ சகஜம். விவாகப் பிரிவினை பாத்தியதைகள் உண்டு. இவைகள் எல்லாம் பழங் காலத் தமிழர் நாகரிக அடிப் படையில் அவர்கள் கொண்டவைகளா? இல்லே, இந்தக் காலத்தில் ஏற்ப்ட்டனவா? என்ற விவரங்கள் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை.
சிங்களவர்களின் கிராமத்து வாழ்க்கை மிக ரஸமாக இருக்கிறது. அதிலும் வயலில் காற்று கடுவதை அவர்கள் கிராமப் பொது விழாவாகவே கொண்டாடுகிருர்கள். ஒரு கிராமத்தில் யாராவது ஒரு விவசாயி தம்முடைய வயலில் நாற்று நட வேண்டுமானல் அவருக்கு கடவு ஆட்களைத் தேடிப் பிடிக்கும் தொல்லே கிடையாது. 'இன்றைய தினம் என் வயலில் காற்று நடப் போகிறேன்' என்று கிராமத் தில் உள்ள ஒவ்வொரு விட்டிலும் சொல்லி விடுவார். உடனே அந்தந்த வீட்டில் உள்ள இளம் பெண்கள் எல்லாரும் அலங்கிாரமாக உடை உடுத்திக்கொண்டு வயலுக்கு வந்துவிடுவார்கள். அந்த விவசாயி கொடுக்கும்

யாரோ இந்தச் சிங்களவர்கள் 29
காற்றை எடுத்துக்கொண்டு அவருடைய வயலில் நட ஆரம்பித்து விடுவார்கள். அற்புதமான கடவுப் பாடலைப் பாடிக்கொண்டு அவர்கள் கடவு கடும் அற்புதக் காட்சி கண்கொள்ளாக் காட்சி.
பொன் இழையையும் பட்டின் இழையையும்கொண்ட பல புதுப் புது சேலேகள் அணிந்து ஒரு கையிலே இருக்கும் காற்றை மறு கையால் பறித்து வயலில் அந்தப் பெண்கள் வரிசை வரிசையாக நின்று காற்று நடும் காட்சியைப் பார்க்கும்போது உண்மைச் சம்பவம் போலவே தோன்றுவ தில்லை. ஏதோ நாடகத்தில், சினிமாவில், கற்பனை உலகில் காணும் ஒரு அபூர்வமான காட்சியைப்போல்தான் இருக் கும். கவிஞர்கள் பார்த்துப் பரவசத்துடன் பாட வேண்டிய காட்சி ஒவியர்கள் சித்திரத்தில் தீட்ட வேண் டிய சித்திரம்.
நடவு முடிந்தவுடன் அவர்கள் எல்லாம் உற்சாகமாக வீடு திரும்பி விடுவார்கள். கடவு கட்டதற்காக வேண்டி அவர்கள் எந்தச் சன்மானமும் பெறுவதில்லை. ஒவ்வொரு தொழிலையுமே இப்படி ஊர் திரண்டு வந்து உற்சாகமாகச் செய்வதாயிருந்தால் எவ்வளவு கன்ருக இருக்கும் !
இந்த விவரங்களை யெல்லாம் திரு. நவம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே எங்கள் கார் ஒரு கிராமத்தைத் தாண்டியது. அது சிங்களவர்கள் அதிகமாக வாழும் கிராமம். " இந்தக் கிராமத்தை நன்முகப் பாருங்கள். அமைதி தவழும் இந்தக் கிராமம் சில மாதங்களுக்கு முன்னுல் வெறி பிடித்து கின்றது. இந்தக் கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் கடைகள் பட்டப் பகலிலே குறை யாடப்பட்டன. ஒரு தமிழ் வாத்தியாரின் சாமர்த்தியமும் அவருக்கு உயிர்ப் பிச்சை அளித்த இந்தக் கிராமத் தலைவர் சின் பண்பும் சரித்திர முக்கியம் பெற வேண்டிய அற்புத சம்பவமாகும்' என்ருர் மட்டக்களப்பு நண்பர் திரு. நவம்.
வீரத் தமிழன்
எங்கும் அராஜகம் நிலவியது. நாள்தோறும் அடிதடி யும், கலகமும், கொள்ளையும், சில இடங்களில் கொலேயும்

Page 44
80 ஈழநாட்டுப் பிரயாணம்
கூட நடந்தன. அழகுக்கும் அமைதிக்கும் பெயர் போன இந்தத் திமியாவ என்ற கிராமம் பயங்கரமாகத் தோற்ற மளித்தது. மொழி வெறியால், இனத்தின் பெயரால் மனிதன் மனிதனை அடித்தான் ; கடித்தான்; வெட்டினுன் குத்தினன். சிங்களவர்களும் தமிழர்களும் சேர்ந்து வசித்து வந்த இடங்களில் எல்லாம் பயங்கரமான கலகங்கள் நிகழ்ந்தன. தமிழர்கள் பல இடங்களில் அநியாயமாகத் தாக்கப்பட்டனர். மனிதப் பண்பு சீர்குலைந்தது. மனித 15ாகரிகம் தூக்கி எறியப்பட்டது.
வெறிபிடித்த சிங்களக் கூட்டத்தினர் கையில் தடியும். அரிவாளும், மண்வெட்டியும் தாக்கிக்கொண்டு தமிழர்கள் எங்கு இருக்கின்றனர் என்று தேடித் திரிய ஆரம்பித் தனர். இந்த வெறிபிடித்த கூட்டத்திலிருந்து சில தமிழர் கள் ஒரு மாதிரி தப்பிப் பிழைத்துத் தமிழ்ப் பகுதிக்குச் சென்று விட்டனர்.
இந்த மாதிரி சமயத்தில் மட்டக் களப்பில் இருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது. என் தாயார் மிகவும் அபாய மான நிலையில் இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரவும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் தாய்க்கு நான் ஒரே பிள்ளை. எனக்கு ஒரு தங்கையும் இருந்தாள். அவர்களுக்கு நான்தான் ஆண் துணை. இந்தச் சமயத்தில் திமியாவ கிராமத்திலிருந்து மட்டக்களப்புக்குப் போக முயலுவது? யமனையே எதிர்கொண்டு அழைப்பதுபோலாகும். ஆகவே நான் போகாமல் இருந்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனல் மரணப் படுக்கையில் இருக்கும் என் வயோதிகத் தாய், ஆண் துணையில்லாமல் நிற்கும் என் அருமைத் தங்கை இவர்கள் முகங்கள் என் கண் முன்னே தோன்றிக் கொண்டே இருந்தன. நான் எப்படியும் திமியாவ கிராமத்
தில் இருந்து மட்டக்களப்புக்குப் புறப்பட்டுவிடுவது என்றே தீர்மானித்துவிட்டேன்.
米 来源 米
நான் இங்கு உபாத்தியாயராக வேலைபார்த்து வருகி றேன். சிங்களவக் குழந்தைகளும் தமிழ்க் குழந்தைகளும்

யாரோ இந்தச் சிங்களவர்கள் 81
என்னிடம் படித்து வருகின்றனர். கானும் ஒரு சிங்களவர் வீட்டில்தான் வசித்து வருகிறேன். என்மீது நான் குடி யிருக்கும் வீட்டுச் சொந்தக்காரரான சிங்களவர் உயிரையே வைத்திருக்கிருர், அவர்தான் அந்தக் கிரா மத்தின் தலைவர்கூட. ஆனலும் ஊரே திரண்டு வரும் போது அவர் என்ன செய்துவிட முடியும்?
சூரியன் மறைந்துவிட்டான். என் தாயாரின் நினைவு எனக்கு வந்துவிட்டது. என் தங்கை சின்னக் குழந்தைக் குச் சமானம். அவளுக்கு ஒன்றுமே தெரியாது. ஒடி ஆடி விளையாடிக்கொண்டிருப்பவள். அவளைச் சாப்பிட வைப் பதற்குள் என் தாய்க்குப் போதும் போதும் என்ருகிவிடும். பதினைந்து வயது வந்த பெண்ணுக இருந்தாலும் தூங்கும் பொழுதுகூட பக்கத்தில் பட்டு நூலில் செய்த நாயை வைத்துக்கொண்டுதான் தூங்குவாள். அப்படிப்பட்ட குழந்தை உள்ளம் படைத்த தங்கை இப்பொழுது என்ன செய்கிருளோ என்று நினைக்கும்போது எனக்குத் தலையைச் சுற்ற ஆரம்பித்துவிட்டது. எவ்வளவு அடக்கினலும் ஆத்திரம் பீறிக்கொண்டு வந்துவிட்டது. கண்களில் கண்ணிர் வழிய ஆரம்பித்துவிட்டது. ஒரு கணநேரம்தான் இப்படிப்பட்ட நிலைமை இருந்தது. அடுத்த கணம் சுதாரித்துக் கொண்டேன். என் துணிமணிகளை எடுத்துப் பெட்டிக்குள் வைத்துக்கொண்டு ஊருக்குக் கிளம்பத்
தயாராகி விட்டேன்.
கிராமத்தின் குறுக்குப் பாதை வழியாகச் செல்ல ஆரம்பித்தேன். சிங்களவர் கண்ணில் அகப்பட்டுவிடக் கூடாதே என்று பயந்துகொண்டே சென்றேன். வழியில் காலில் ஏதோ தட்டுப்பட்டதுபோலிருந்தது. குனிந்து பார்த்தேன். ஒரு அழகிய இளைஞன் தமிழ் வாலிபன் ; அடிபட்டு மயக்கம் போட்டுக் கிடந்தான். அந்த வாலிப&ன. அடித்தவுடன் அவன் ஏதோ மயங்கி விழுந்திருக்கிருன். அவன் உயிரே போய்விட்டது என்று அவனை இங்கு ஒதுப் புறமாகத் தூக்கி வந்து போட்டுவிட்டுச் சிங்களவக் குண் டர்கள் ஒடியிருக்க வேண்டும். ஒரு சொட்டுத் தண்ணிருக் காக ஏங்கியதுபோலிருந்தது அந்த வாலிபனின் திறந்த
6

Page 45
83 ஈழநாட்டுப் பிரயாணம்
வாய். அருகில் இருந்த வாய்க்காலுக்கு அவசரமாகச் சென்றேன். கைக் குட்டையை நனைத்துக்கொண்டு வந்து அவன் வாயில் பிழிந்தேன். ஒரு முடக்குத் தண்ணீர் உள்ளுக்குள் சென்றதுமே அவன் மயக்கம் தெளிய ஆரம்பித்துவிட்டது. ஈரக் கைக் குட்டை யால் அவன் முகத்தையும் ஒரு தரம் துடைத்து விட் டேன். அவன் இரண்டு தரம் கண்களைச் சிமிட்டி விட்டு மெதுவாக எழுந்தான். பயத்தால் திருதிரு என்று விழித் தான. w
"பயப்படாதே 1 சிங்களவர் யாருமில்லை நான் தமிழன்தான் ” என்றேன்.
நாலாபுறமும் ஒரு தரம் சுற்றிப் பார்த்து விட்டு, ** அந்தக் குண்டர்கள் எல்லாம் போய் விட்டார்களா !” என்று கேட்டான்.
" போய் விட்டார்கள். இனி இங்கு ஒரு கணம் கூடத் தாமதிக்கக் கூடாது. புறப்படு, மட்டக்களப்புக்குச் செல் வோம்” என்றேன்.
ந்த வாலிபன் மெளனமாக என் பின்னல் வரத் தொடங்கினன். ஒரு கையில் என் பெட்டியைப் பிடித்துக் கொண்டு மற்றக் கையால் அவன் கையைப் பற்றி அழைத் துக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.
அப்பொழுது * கவரத்தினம், கில் 1 எங்கே போகிருய்?’ என்று ஒரு இடி முழக்கக் குரல் கேட்டது. குரல் வந்த திசையைப் பார்த்தேன். கான் குடியிருந்த வீட்டுக்காரச் சிங்களவர் என்னை நோக்கி வெறிபிடித்தவர் போல் ஓடிவந்தார். எனக்கு உலகமே சுழல ஆரம்பித்து விட்டது. " கேற்று வரையில் நம்மிடம் அன்பும் மரி யாதையும் காட்டிய இந்த மனிதரே என்னைத் துரத்து கிருரே ' என்று நடுநடுங்கிப் போனேன். என் மூச்சே கின்றுவிடும் போலாகி விட்டது. r
* தம்பி! இந்தச் சமயத்தில் நீ தனியே கிளம்பலாமா? வழியெல்லாம் குண்டர்கள் இருக்கிருர்களே " என்ருர்

யாரோ இந்தச் சிங்களவர்கள் 83
அந்தப் பெரியவர். இப்படி அவர் சொன்னவுடன்தான் எனக்கு மூச்சு வந்தது. நன்றி ததும்பும் கண்களுடன் அந்தப் பெரியவரைப் பார்த்தேன்.
" ஐயா ! தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி ! என் தாய் மரணப்படுக்கையில் இருக்கிருர் என்று தந்தி வந்திருக்கிறது. என் தங்கை என் தாயை நம்பி இருக்கிருள். இப்பொழுது இரண்டு பேருக்குமே ஆண் துணை இல்லை. 15ான் உடனே ஊருக்குப் போய்த்தான் ஆகவேணும் ” என்றேன்.
* எது எப்படி இருந்தாலும் முதலில் ங்ேகள் இரு வரும் வீட்டுக்கு வாருங்கள். இரண்டு நாட்கள் கழித்துக் கலகம் எல்லாம் அடங்கி ஒடுங்கிய பிறகு செல்லலாம்” என்ருர்.
* ஐயா! நான் ஒரு வீரத் தமிழன் 1 வீரத் தமிழனுக் குப் பிறந்தவன் 1 இந்தச் சமயத்தில் என்ன அபாயம் ஏற் பட்டாலும் என் தாயைப் போய்ப் பார்த்தே ஆக வேண்டும். அவரைக் காப்பாற்றியே யாகவேண்டும” என்றேன்.
* அதற்காக இந்த அபாய சமயத்தில் செல்லலாமா ? உமக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் பிறகு உங்கள் தங் கைக்கும் தாய்க்கும் யார் ஆதரவு?’ என்ருர். அப்போது அவர் முகத்தில் தோன்றிய கணிவை இதற்கு முன் நான் பார்த்ததே கிடையாது.
இதற்குள் சிங்களவக் குண்டர்கள் அந்தப் பக்கம் வந்து விட்டனர். அவர் உடனே தம்பலம் முழுவதையும் பிரயோகித்து என்னைத் தள்ளிக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டார்.
இதைப் பார்த்து விட்டனர் அந்த வெறி பிடித்த கூட் டத்தினர். கும்பலாக வந்து நாங்கள் இருந்த வீட்டைச் சூழ்ந்து கொண்டனர். * சிங்களம் வாழ்க!” என்று கோஷிக்க ஆரம்பித்து விட்டனர்.

Page 46
84 ஈழநாட்டுப் பிரயாணம்
காங்கள் இருந்த வீட்டுச் சொந்தக்காரர், " சிங்களம் வாழ்க!” என்று பதிலுக்குக் கோஷித்து விட்டு வெளியே வந்தார்.
கூட்டத்தில் தலைவனகத் தோன்றிய வெறி பிடித்த இளைஞன், “அந்தத் தமிழர்களை எங்களிடம் ஒப்புவித்து விடும் 1’ என்ருன்.
" அவர்கள் என் உறவினர்கள்’ என்று தயங்காமல் பதில் கூறினர் பெரியவர்.
* தமிழர்கள் உங்கள் உறவினர்களா?” என்று சிங்கம் கர்ஜிப்பது போல் கர்ஜித்து, அவரை ஒதுக்கித் தள்ளி விட்டு வீட்டுக்குள் பாய ஆரம்பித்தான் அந்த
* நில், அப்படியே” என்று இடிமுழக்கக் குரலில் கத்தினர் பெரியவர். கூட்டம் ஒரு கணம் அப்படியே அசந்து விட்டது. " நான் இந்தக் கிராமத்தின் தலைவன். அந்தப் பிள்ளைகள் மேல் கையை வைத்தால் உங்கள் அத்தனை பேரையும் உருத் தெரியாமல் செய்து விடுவேன். முதலில் என்னைக் கொன்று தீர்த்து விட்டுப் பிறகு அந்தப் பிள்ளைகளிடம் செல்லுங்கள் ” என்று அதிகாரமான குரலில் ஆணையிட்டார்.
எனக்காக அந்தப் பெரியார் தம்மையே தியாகம் செய்து கொள்ள முன் வந்தது எனக்கு என்னவோ போல் இருந்தது. திடீரென்று ஏதோ ஆவேசத்தில் உந்தப்பட்ட வன் போல் அந்தப் பெரியாருக்கு முன்னல் சென்றேன். * ஐயா, பெரியவரே ! நீங்கள் இந்தக் குண்டர்களிடம் இறைஞ்ச வேண்டாம். இந்த கவரத்தினம் ஒரு வீரத் தமிழன்; அது மட்டுமல்ல. ஒரு வீரத் தமிழனுக்குப் பிறந்தவன். வீரத் தமிழன் என்றுமே யாரைக் கண்டும் அஞ்சியதில்லை” என்று சொல்லி என் மார்பை நிமிர்த்திக் காண்பித்தேன்.
என்னை அப்படியே தூக்கிக் கொண்டு வந்து வீட்டுக் குள் போட்டு விட்டு வெளிக் கதவை இழுத்துச் சாத்தி

யாரோ இந்தச் சிங்களவர்கள் &等
விட்டார் கிராமத் தலைவர். பிறகு கதவுக்கு வெளியில் கின்று கொண்டு வெளியில் நிற்கும் கூட்டத்தைப் பார்த்து, * இப்பொழுது இங்கிருந்து போகப் போகிறீர்களா, இல்லையா?” என்று கத்தினர்.
கூட்டத்தினர் வாய் பேசாமல் அங்கிருந்து நழுவிச் சென்று விட்டனர்.
பDறுகாளே நல்ல துணையுடன் என்னை மட்டக்
களப்புக்கு அனுப்பி வைத்தார். இதயம் படபடக்க என் தாயைப் பார்க்க ஓடினேன். என்னுடைய தாயார் கோய் கொடி இன்றிச் சுகமாக வீட்டுத் திண்ணையில் உட்கார்க்
திருந்தார். "அப்பா 1 வந்தாயா? எங்கே உன்னை உயி ரோடு பார்க்கப் போகிறேனே என்று துடிதுடித்துக் கொண்டிருந்தேன்” என்று ஆவலுடன் கேட்டுக்
கொண்டே என்னை அணைத்துக் கொண்டாள். என் தங்கை " அண்ணு ' என்று கத்திக் கொண்டே ஓடி வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
" ஆமாம் ! உங்களுக்கு அபாயம் என்று அவசரத் தந்தி வந்ததே ' என்றேன்.
* நீ உடனே அங்கிருந்து புறப்பட்டு வரவேணும் என்று நான்தான் தந்தி கொடுத்தேன்" என்ருர் என் அனுடைய தாயார்.
"அம்மா! சிங்களவர்கள் எல்லாருமே அப்படி இல்லை அம்மா! நான் குடியிருந்த வீட்டுக்காரச் சிங்களவர் மட்டும் இல்லை என்ருல் என்னை மீ உயிருடனே பார்த் திருக்க முடியாது. அந்த உத்தமப் பெரியவர்தான் என் னைக் காப்பாற்றினர்' என்றேன்.
* அந்தச் சிங்களப் பெரியவர் நீடூழி வாழட்டும் ” என்ருர் என்னுடைய தாயார்.
米 米 豪
இந்தச் சம்பவத்தைத் திரு. 5வம் கூறி முடித்ததும் எங்கள் காரை ஓட்டிவந்த டிரைவர், 'ஐயா சொன்ன

Page 47
86 ஈழநாட்டுப் பிரயாணம்
தெல்லாம் உண்மைதான். நானும் ஒரு சிங்களவன்தான். எனக்கு கன்ருகத் தமிழ் பேசவரும் !" என்ருர்.
எனக்குத் தூக்கிவாரிப் டோட்டது. " ஒரு சிங்கள வர் கார் ஒட்டுவதை கம்பியா நாம் இந்தக் காட்டுப் பிர தேசத்தில் பிரயாணம் செய்வது' என்ற பயம் ஏற்பட்டு விட்டது.
என் நிலையை ஒருவாறு புரிந்து கொண்ட அந்தச் சிங்கள டிரைவர் " நீங்கள் ஒன்றும் பயப்பட வேண் டாம். எல்லாம் அரசியல்வாதிகளான சிங்களவர்கள்தான் அப்படிக் கலவரம் செய்வார்கள். நாங்கள் எல்லாம் உங் கள் சகோதரர்கள், கிராமப்புறத்தில் வாழ்ந்து வருப வர்கள். எங்களை நம்புங்கள்’ என்று சொல்லிவிட்டுக் காரை ஓட்டினர். கார் தமிழ்த் தெய்வம் கோயில்கொண்” டிருக்கும் கதிர்காமத்தை கோக்கி அறுபது மைல் வேகத்தில்
பறந்து கொண்டிருந்தது.

11 சிங்கள ஏகாதிபத்தியம்
ரத்தினபுரி நகரத்து ஏற்றமும் இறக்கமுமான மலைச் சாலை வழியாகக் கதிர்காமத்தை நோக்கி மோட்டார் வண்டி சென்று கொண்டிருந்தது. காலை வேளை, வானத்தை காலாபுறமும் மேகங்கள் மூடியிருந்தன.
* இந்த நாட்டில் எல்லாத் துறைகளிலும் குறிப்பாக அரசியல் துறையில் இன்றைய தினம் இப்படித்தான் மேகங்கள் மூடியிருக்கின்றன” என்ருர் உடன் வந்த மட்டக்களப்புத் தமிழ் அன்பர் திரு. 5வம்.
* இந்த காட்டில் மட்டும்தான? எங்கள் தமிழ் காட் டில்கூட ஏறக்குறைய இப்படித்தான் இருக்கிறது" என்றேன்.
* தமிழ் காட்டின் அரசியலுக்கும், ஈழநாட்டின் அர சியலுக்கும் வித்தியாசம் உண்டு. ஐயா ! இங்கு தமிழ் மக்களின் உரிமை பறிபோய்விட்டது. இன்னும் கொஞ்ச நாட்கள் ஆனல் தமிழும் தமிழ் மக்களும் என்ன ஆவார் களோ தெரியாது’ என்ருர்.
தமிழ் சாதியைப் பற்றியும் அவர்கள் எங்கே இருக் தாலும் அவர்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றியும் சிந்தனை செய்யத் தொடங்கினேன். கார் " விர்’ என்று போய்க்கொண் டிருந்தது. சாலையின் இருபுறங்களிலும் இதற்கு முன்னல் பார்த்த இனிய காட்சிகளேதான். வானேங்கி நிற்கும் மலைகள், அடர்த்தியான தோப்புகள்: தேயிலைக் கொழுந்து பறிப்பதும், ரப்பர் பால் எடுப்பதும் முக்கியமான தொழில்கள். தளதளவென்று காட்சிதரும் தேயிலைத் தோட்டமும் அடர்த்தியான ரப்பர்மரக் காடு களும் வழியில் கமக்கு முகமன் கூறிக் கொண்டிருந்தன.

Page 48
88 ஈழநாட்டுப் பிரயாணம்
கடுநடுவே கெல் வயல்கள். அந்த வயல்களுக்கு அருகில் சிறு சிறு வீடுகள், ஆங்காங்கு மக்கள் பவவிதமான வேலை களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் ஒரு வேலை யும் செய்யாமல் உட்கார்ந்து வெறும் வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேச்சில் அப்படி ஒன்றும் சுறுசுறுப்போ உற்சாகமோ உணர்ச்சியோ இல்லை.
அவர்கள் பேச்சில்மட்டும் என்ன ? ஈழநாட்டிலேயே சிங்கள மக்களின் வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. அவர்கள் செய்யும் காரியங்களில் முன் யோசனையும், வன் மையும், வேகமும் மருந்துக்கூடக் கிடையாது. என்ன சோம்பல் ! என்ன சிரத்தைக் குறைவு ! நிலத்தை உழுகிற வன் ஏரின் கொழு முனை நிலத்தில் நன்முகப் படும்படி பிடித்து உழுவதில்லை. மரத்தை அறுக்கும்போதும், பலகைகளை இழைக்கும்போதும் அவர்கள் கைகள் மிகமிக மெதுவாகச் செல்கின்றன. யானேயை அதட்டி ஒட்டும் போதுகூடச் சிங்கள யானைப்பாகன் ஏதோ சப்புச் சவுக் கென்று ரகசியமாக எதையோ சொல்லி அதட்டுகிருன். பூரண பலத்தையும் உபயோகித்து, கடுமையாக உழைத்து, கடினமான காரியங்களைச் செய்து முடிப்பதில் ஊறிவரும் மன எழுச்சியையும் மகிழ்ச்சியையும் அனுபவித்துப் பாடு படுபவர்கள் ஈழநாட்டில் இருக்கும் தமிழ் மக்கள தான். அவர்கள் உழைப்பால் உயர்ந்தது ஈழ நாடு. அதனல் உயர்ந்தவர்கள் சிங்கள மக்கள். இன்று தமிழ் மக்கள் செய்த உதவியை மறந்து அவர்கள் உரிமைகளைப் பறித்துக் கொண்டு அவர்களை ஊரை விட்டே துரத்துவதற்கு ஏற் பாடு செய்து வருகின்றனர் சிங்கள மக்கள. இந்த நிலைமை விரைவில் மாற வேண்டும். மாற்றியே ஆக வேண்டும் அதற்கான உருப்படியான காரியங்களில் தமிழ் மக்கள் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும். வெறும் சோம்பல் வாழ்க்கை கடத்துபவர்கள், பெரு முயற்சியினல் வரும் இன்ப சுகத்தை அனுபவித்தறியாதவர்களுமான சிங்கள வர்களிடமா வீரத் தமிழ் மக்கள் சீர்குலைந்து சிதைந்து போவது?
இவை யெல்லாம் பற்றி எண்ணிக் கொண்டு தமிழ் மக்களின் வாழ்க்கையில் இருக்கும் இன்ப துன்பங்களைச்

சிங்கள ஏகாதிபத்தியம் 89
-சிந்தித்துப் பார்த்துக்கொண்டு மணிக்கு ஐம்பது மைல் வேகத்தில் போய்க் கொண்டிருந்தேன். அரைமணி நேரப் பிரயாணத்துக்குப் பிறகு சாலை ஓரத்துக் கிராமம் ஒன்று வந்தது. ஒரு பக்கத்தில் பத்துப் பன்னிரண்டு கடைகள் இருந்தன. சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இந்தப் பகுதி யில் சேர்க்தே வசித்து வந்தனர்.
கடைகளில் எல்லாவிதமான சாமான்களும் இருந்தன. கருவாட்டின் மணம் மூக்கைத் துளைத்தது. கருவாட்டில் இருந்து நவீன நாகரிக அலங்காரப் பொருள்கள், துணி மணிகள், ரேடியோப் பெட்டிகள், மருந்துச் சாமான்கள், தின-வாரப் பத்திரிகைகள் எல்லாம் இருந்தன. கருவாட் டை எடுப்பதற்கு முயன்று கொண்டிருந்தது ஒரு காய். அதைக் கூடக் கவனியாமல் ஏதோ சிந்தனையில் உட்கார்க் திருந்தார் ஒரு பெரியவர்.
மோட்டார் வண்டி நின்றது. மட்டக்களப்புத் தமிழ் கண்பர் கவம் வண்டியிலிருந்து அவசரமாக இறங்கினர். ஏதோ சொந்தக் காரியம் போலிருக்கிறது, இறங்குகிருர் என்று நினைத்தேன்.
"ஐயா! தயவு செய்து இங்கே கொஞ்சம் இறங் குங்கள். உங்களுக்கு இந்த நாட்டு அரசியல் அலங்கோ லத்தைக் காண்பிக்கிறேன்’ என்ருர்,
இந்த மனிதரிடம் அகப்பட்டுக் கொண்டோமே என்று அலுத்துக் கொண்டே, மோட்டார் வண்டியில் இருந்து இறங்க மனமில்லாமல் இறங்கினேன்.
"என்ன அலங்கோலம்?" என்றேன். *அதோ பாருங்கள்!" என்று சாலைக்குப் பக்கத்தில் வரிசையாக இருந்த கடைகளில் ஒரு மாடி வைத்துக் கட்டி யிருந்த கடையைக் காண்பித்தார்.
“என்னத்தைப் பார்க்கிறது! இடிந்தும் சிதைந்தும்
கிடக்கும் இந்த அலங்கோலத்தில் என்ன அதிசயம் ? இது
மாதிரி தமிழ் காட்டில் எத்தனையோ இடிந்தும் சிதைந்தும் போன கட்டடங்கள் இருக்கின்றனவே!” என்றேன்.

Page 49
90 ஈழநாட்டுப் பிரயாணம்
* இல்லை ஐயா! அவசரப்படாமல் நிதானமாய்ப் பாருங் கள்! இந்தப் புத்தம் புதுக் கட்டடம் தானே இடித்து போகவில்லை. சில மாதங்களுக்கு முன்னுல் இங்கு கடந்த சிங்கள - தமிழ் தகராறில் சிங்கள மக்களால் இடித்துச் குறையாடப்பட்ட ஏழைத் தமிழ் மக்களின் கடைகள்” எனருா.
"ஆ! அப்படியா? இந்த மாதிரியா குறையாடினர்கள்!" என்று கேட்டேன்.
"அதோ அந்த போர்டைப் பாருங்கள்’ என்று சாலை யில் இருந்த ஒரு பெரிய போர்டைக் காண்பித்தார். அதில் இருந்த தமிழ் எழுத்துக்கள் எல்லாம் தாரைக் கொண்டு அடியோடு அழிக்கப்பட்டிருந்தன. "அடாடா ! இந்த எழுத்து அழிப்பு இயக்கம் இங்கேயும் வந்து விட்டதா !” என்று எண்ணி வியந்தேன்.
"இடிந்துபோன கடைகளையும், தமிழ் எழுத்துக்கள் கோரமாக அழிக்கப்பட்டுக் கிடைப்பதையும் பார்க் தீர்களாஐயா!” என்று உணர்ச்சித் துடிப்புடன் கேட்டார்.
ஆம், அவர் உணர்ச்சியை பார்த்ததும் தான் இங்கு சிங்கள-தமிழர் தகராறும், அதனல் தமிழ் மக்கள் எவ்” வளவு தூரம் கஷ்டப் பட்டிருக்கிருர்கள் என்பதையும் நன்ருக உணர்ந்துகொள்ள முடிந்தது.
"ஆமாம் : அலங்கோலத்தைப் பார்த்தேன். ஏன் இப் படித் தமிழ் எழுத்தைக்கூட அழித்திருக்கிறது!’ என்று” கேட்டேன்.
"இவைதான் சிங்களம் ஆட்சி மொழி ஆனதின் சின் னங்கள்” என்ருர். இதைச் சொல்லும்போது அவர் மெலிந்த உடல் முழுதுமே படபடவென்று ஆடித் துடி. அடித்தது.
அதிகார ஆசையும் ஏகாதிபத்திய வெறியும் ஒரு தேச த்தின், ஒரு இனத்தாருக்குத் தான் உண்டு என்பது இல்லை. உலகமெங்கும் சர்வ் வியாபகமாக நிறைந்திருக்கின்றன.

சிங்கள ஏகாதிபத்தியம் 9f*
அந்த ஆசையும் வெறியும் இப்போது ஈழ நாட்டில் உள்ள சிங்கள மொழி வெறியர்களையும், சிங்கள அரசியல் வாதி களையும் பிடித்துக் கொண்டு ஆட்டுகின்றன.
சிங்கள மொழி ஈழ நாட்டின் அரசியல் மொழி ஆவ அதுடன் அவர்கள் திருப்தியடையத் தயாராயில்லை. ஈழ காட்டில் சிங்கள ஏகாதிபத்தியத்தையே நிலைநாட்டப் பிரி யப்படுகிருர்கள். தமிழைச் சிங்களத்துக்கு அடிமையாக்கி விட வேண்டும் என்று எண்ணுகிருர்கள். இதைத் தாய் மொழிப் பற்றுள்ள யாருமே ஒப்புக் கொள்ள முடியாது.
சிங்கள ஏகாதிபத்தியம் ஈழநாட்டில் இப்பொழுது பல இடங்களில் பல உருவங்களில் தலைதூக்கித் திருவிளை யாடல் புரிவதைப் பத்திரிகைகளில் பார்த்துவருகிருேம். சில மாதங்களுக்கு முன்பு கடந்த திருவிளையாடலின் அலங் கோலத்தின் சின்னமாகத்தான் இந்த இடிந்து போன தமி ழரின் கடைகளும் தமிழ் எழுத்தைத் தாரைக் கொண்டு அழித்த போர்டும் நமக்குக் காட்சி தருகின்றன.
"இது ஒன்றும் அதிசியமில்லை. இது ஒரு துளசிதான் அப்பொழுது நடந்த கலவரத்தைக் கேட்டால் இப் பொழுதுகூட மயிர்க் கூச்சம் எடுத்து விடும். ஐயாவுக்குக் கேட்க இஷ்டமென்ருல் சொல்லுகிறேன்” என்ருர்,
** இது என்ன வார்த்தை 1 இஷ்டமிருந்தால் என்று
கேட்பானேன் ! நானும் தமிழன் தானே ! எனக்கு, மட்டும் உணர்ச்சி இல்லையா என்ன? உடனே சொல்லும்!" என்றேன்.
诛 米 诛 米
கடலிலிருந்து அடித்த குளிர்ந்த காற்று, கொழும்பு காலிமுகக் கடற்கரையை அடுத்த தலைநகரத்தில் ஒரு சோக கீதத்தைத் தாங்கி அப்பிரதேசத்தில் வியாபித்திருந்தது. *சுள்' என்று அடித்த சுடு வெய்யிலையும் பொருட் படுத் தாமல் பதினுயிரக் கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழ்த் தலைவர்கள் : தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஈழநாட்டுப் பார்லிமெண்ட் அங்கத்தினர்கள் பத்துப் பேர் கள் கடற்கரையை அடுத்துள்ள புல் வெளியில் அமர்ந்திருக்

Page 50
92 ஈழநாட்டுப் பிரயாணம்
கின்றனர். அவர்கள் சிங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உண்ணுவிரதம் எடுத்து வருகின்றனர். சிங்கள மொழிக்கு எதிராக அவர்கள் உண்ணுவிரதம் பூண்டு சத்தியாக்கிரகம் செய்யவில்லை. தமிழன் கெளரவத்தைக் காப்பதற்காகத் தான் உண்ணுவிரதம் எடுத்தனர். அவர்கள் உண்ணு விரதம் நியாயமானது. அவர்களுக்கு உடனே நீதிவழங்க வேண்டும்’ என்று கொழும்பு பாராளு மன்றத்து உயர்ந்த கட்டடங்கள் கூட வாயிருந்தால் வாதாடியிருக்கும். அது சொல்லியிருந்தால் கூடப் பண்டாரநாயகா சர்க்கார் எடுத்துக்கொண்டிருப்பார்களோ என்னவோ?
தாய்மொழியின் உயர்வைக்காப்பாற்ற உண்ணு விரத கோன்பிருந்த தமிழ்த் தலைவர்களைப் பார்த்துச் சிங்கள, மக்கள் கேலி செய்தனர். கெக்கலி கொட்டினர். கடை சியில் அவர்கள் மீது கற்களைக்கூட வீசி எறிந்தனர். இந்தக் கொடுமைகளை எல்லாம்கூட லட்சியம் செய்யாமல், தங்கள் உடம்பிலே பட்ட காயத்தையும் பொருட்படுத் தாமல், சிங்களவர்களின் சிறுமைத்தனத்தால் தங்கள் ஆடைகள் கிழிந்ததைக்கூட அகற்ருமல் தாங்கள் மேற் கொண்ட தவ வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். அன்பு வழியைக் கடைப்பிடித்துப் புன்முறுவல் பூத்த முகத்துட னேயே இருந்தனர்.
தமிழ்த் தலைவர்கள் கொடுமைப் படுவதைக் கண்டு தமிழ் மக்கள் எத்தனை காலம் பொறுமையாக இருக்க முடியும்? பொறுமைக்கும் எல்லை உண டல்லவா? தங்கள் தலைவர்கள் அவமானப்படுவதைக் கண்டு சில தமிழர்கள் சிறி எழுந்தனர். அதனல் பல இடங்களில் சிறு பூசல்கள் ஏற்பட்டன. நகரத்தில் கலகம் ஏற்பட்டது. தனிமையில் அகப்பட்ட அப்பாவித் தமிழர்கள், சமூகத்தில் கண்யமாக வாழ்ந்து வந்த உபாத்தியாயர்கள், வக்கீல்கள், இன்னும் பல வியாபாரத் துறையில் உள்ள தமிழர்கள் எல்லாம் கையப் புடைக்கப் பட்டார்கள். இந்தச் சமயத்தில்கூட தமிழ்த் தலைவர்கள் " ஏதோ சிங்களவர்கள் அறியாமை யால் செய்கிருர்கள் ! அவர்களைத் திருப்பித் தாக்காதீர் கள் !" என்று அறிவுறுத்தினர்கள். மனித குலத்தின் உயர்ந்த நாகரிகத்தைக் காப்பாற்ற அரும்பாடு பட்டார்கள்.

சிங்கள எகாதிபத்தியம் 93:
தமிழ் மக்களின் இந்தப் பொறுமையைச் சிங்கள வர்கள் தங்களுக்குச் சாதகமாகமாகப் பயன்படுத்தத் தலைப் பட்டு விட்டனர், மட்டக்களப்பில் பட்டிப்பைேரயாற்றில் கல்லோயா அணைத்திட்டம் கடைபெற்று வந்தது. இங் குள்ள மக்கள் எல்லாரும் தமிழர்கள்தான். ஆனலும் இலங்கை சர்க்கார் இங்கு சிங்கள மக்களைக் குடியேற் றினர். எப்படிப்பட்ட சிங்களவர்கள்? கொலைக்குற்றம் செய்தவர்கள், கொள்ளை யடித்தவர்கள், கேடிகள், முடிச்சு மாறிகள் போன்ற பயங்கரக் குற்றவாளிகளை, சிறைக் கைதிகளைத் தமிழ் மக்கள் மத்தியில் குடியேற்றி யிருந்தனர். அவர்களிடம் யாரோ வீண் புரளியைப் பரப்பி விட்டு விட்டனர் , * மட்டக்களப்புத் தமிழர்கள் சிங்களவர்மீது படையே எடுக்கப் போகிருர்கள் ' என்று. அடுத்த கணம் அணைக்கட்டுப் பகுதியில் வசித்த தமிழ் மக்களை எல்லாம் வெறிபிடித்த சிங்களக் கூட்டம் தாக்க ஆரம்பித்து விட்டது. குழந்தைகள், பெரியவர்கள் என்று பாராமல் அவர்களைக் கண் மூடித்தனமாகக் கையில் எது அக்ப்பட்டதோ அதைக் கொண்டு மனம் போனபடி தாக்க ஆரம்பித்து விட்டனர். தமிழ்ப் பெண்களின் கற்புக்கே உலைவைக்க ஆரம்பித்து விட்டனர். சர்க்கார் லாரிகளையே உபயோகப் படுத்திக் கொண்டு மட்டக்களப்புக்குள்ளே புகுவதற்கும் முயன்று விட்டனர்.
விபுலானந்த அடிகளைப் பெற்றெடுத்த புண்ணிய கிராமமான காரைத் தீவுக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலை வந்து விட்டது. தமிழ் மக்கள் திரண்டு எழுந்து விட் டனர். அவர்களிடம் இது வரையில் அடங்கிக்கிடந்த வீரம் விசுவரூபம் எடுத்து விட்டது.
காரைத் தீவின் சாலையில் கூடியிருந்த தமிழ்க். கூட்டம் கடலை கினேவூட்டியது. அது சாவதானமாக முன்னுேக்கி நகர்ந்து சென்றது. கடல் அலைகள் தாங்கி நிற்கும் அழுக்கேறிய நுரையைப் போலிருந்தது தமிழ். மக்களுடைய சாம்பல் கிறமான வீரமுகங்கள்.
கோபத்தினுல் அவர்கள் கண்கள் ஜ்வலித்தன. ஆச்சரிய பாவத்துடன் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்.

Page 51
S4 ஈழநாட்டுப் பிரயாணம்
துக் கொண்டனர். தங்களுடைய உறுதியைத் தாங்களே கம்ப முடியாதவர்களைப் போல் அவர்கள் காணப்பட்டனர். சிறு பறவைகளின் கூச்சலைப்போல் கூட்டத்திலே வார்த்தைகள் வட்டமிட்டன.
தாங்கள் சொல்லுவதை நியாயமென்று சிங்களவர் களுக்கு உணர்த்துவதைப் போல் அவர்கள் தாழ்ந்த குரலிலே பேசிஞர்கள்.
* இந்தக் கொடுமையை இனியும் சகிப்பதென்பது முடியாததாக இருந்தது. அதனுலேயே காங்கள் திரண்டு
வங்தோம்.
* தமிழ் மக்களே ! ஏமாற்றத்துக்கு இடம் கொடுத்து விடாதீர்கள் ' என்று கூட்டத்தில் அடிக்கடி சொல்லிக் கொண்டார்கள்.
சட்டென்று ஒரு சலசலப்பு ஏற்பட்டது. கண்ணுக் குப் புலப்படாத ஆயுதங்களால் தமிழ் மக்களின் கூட்டம் தாக்கப்பட்டதைப் போலிருந்தது. ஒரு கணம் அனைவ ருடைய குரலும் ஒடுங்கியது. ஆனலும் கூட்டம் தயக்க மில்லாமல் முன்னுேக்கிச் சென்றது.
தமிழ் மக்களைப் பார்த்துச் சிங்களவர்கள் துப்பாக்கி யால் சுட்டனர். அங்கும் இங்கும் கூக்குரல்கள் கேட்டன. கூட்டத்தில் இருந்தவர்கள் காலடியில் பலர் மூர்ச்சையாகி யும் அடிபட்டும் விழுந்து கிடந்தனர்.
மீண்டும் துப்பாக்கிகளின் கர்ஜனே கேட்டது. கூட்டம் பின்னே சாய்ந்தது. நூற்றுக் கணக்கானவர்களின் தொண்டையிலிருந்து உடலை நடுங்க வைக்கும் காட்டு மிராண்டித் தனமான கூச்சல் கிளம்பியது.
தமிழர்கள் திருப்பித் தாக்க ஆரம்பித்தனர். மிக ஆவேசத்துடன் கத்திகளாலும் கம்புகளாலும் தாக்கினர். சிங்களவர்களின் கூட்டம் சிதறி ஓடத் தலைப்பட்டது. பீதியினுல் குழப்பமடைந்து காற்றில் அடித்துச் செல்லப் படும் உலர்ந்த சருகுகளைப்போல் கண்மண் தெரியாமல் அவர்கள் ஓடி மறைந்தனர். கியாலனை என்ற இடத்தில்

சிங்கள ஏகாதிபத்தியம் 95
சிங்களவர்களைத் தமிழ் மக்கள் தடுத்து நிறுத்தி மட்டக் களப்புத் தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்றினர். வெறி பிடித்த சிங்களக் குண்டர்களை முறியடித்து வெற்றி கொண்டனர். இந்தக் கலவரத்தில் எண்ணற்ற சிங்கள மக்களும் தமிழ் மக்களும் உயிர் துறந்தனர்.
தமிழ் மக்கள் அன்பு இதயம் படைத்தவர்கள் அல்லவா! காயமடைந்த சிங்கள மக்களுக்கு உதவியும் செய்தனர். அவர்களுடன் பேசவும் செய்தனர். கோபமாக அல்ல ; வருத்தமும் அனுதாபமும் கலந்த குரலில். * சத்தியம் கிலைக்கும்" என்ற நம்பிக்கை அவர்கள் குரலிலே தொனித்தது. எத்தகைய பாதகத்தை இந்தக் குண்டர்கள் இழைத்திருக்கிருர்கள் என்பதைச் சிங்களவர்களுக்கு உணர்த்த முடியும் என்ற நம்பிக்கை அதில் தொனித்தது.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் மட்டக்களப்பில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சமயத் தில் உண்டான வீண்புரளியில் ரத்தினபுரி போன்ற பல இடங்களில் சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்களின் வீடுகள், கடைகள் எல்லாம் குறையாடப் -- it --60T.
இலங்கை சர்க்கார் மிகப் பிரயாசைப்பட்டு இந்தக்
-கலவரங்களை அடக்கி ஒடுக்கினர். ஆனலும் சிங்கள
மக்களின் வெறி மட்டும் தணிந்தபாடாக இல்லை. அது உள்ளுக்குள் குமைந்து கொண்டேதான் இருந்தது.
懒 米
ஒரு நாள், பகல் பன்னிரண்டு மணி. வெண்ணிற மேகங்களால் ஆகாயம் மூடப்பட்டிருந்தது. அவ்வப்போது ஏதாவது இடைவெளியினூடே சூரியன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். உலர்ந்த சருகுகளை அடித்துக்கொண்டு வருவதுபோல் காற்று மக்களைத் தெருவினூடே தள்ளிக் கொண்டு வந்தது. உஸ்ஸென்ற ஓசையுடன் காற் றடித்தது. மட்டக்களப்புத் தமிழ் மக்கள் அமைதியில்லா மல் வீதிகளில் நடமாடிக் கொண்டிருந்தனர்.

Page 52
ᏭᏮ ஈழநாட்டுப் பிரயாணம்
ஒரு வீட்டிலிருந்து ஒரு வாலிபன் வெளிப்பட்டான். அழகாக உடை உடுத்தியிருந்தான்.
கைகூப்பி வணங்கி, ' எங்கே போகிருய்?" என்று கேட்டார் அந்த வாலிபனுக்கு எதிரில் வந்த வயது முதிர்ந்த ஒரு பெரியவர்.
அந்த வாலிபனின் கம்பீரமான முகத்தில் இலேசான முறுவல் மலர்ந்தது, ' எங்கே என்று தெரியவில்லையா? சிங்களவர்களிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றத்தான் போகிறேன்” என்ருன் அந்த வாலிபன்.
* அன்றைய தினம் நீங்கள் எல்லாம் காரைத் தீவுச் சாலையில் சிங்களவர்களைத் தடுத்து கிறுத்தி இருக்காவிட் டால் மட்டக்களப்பில் இன்றையதினம் தமிழ் மக்கள் நிம்மதியாகவே இருக்க முடியாது ' என்ருர் பெரியவர்,
* என் போன்ற வாலிபனின் கடமையைத் தானே செய்தேன்?" என்ருன்.
நான்கு பேர் சவப்பெட்டி ஒன்றைத் தெரு வழியே தூக்கிச் சென்றனர். அப்பெட்டிக்கு முன்னும் பின்னும் ஏராளமான சிங்கள மக்கள் அணிவகுத்து வந்து கொண் டிருந்தார்கள். அவர்கள் முகங்கள் எல்லாம் கல்லில் செதுக்கியது போல் உறுதியாக இருந்தன.
* யாரோ இறந்து விட்டார்கள் போல் இருக்கிறது ” என்ருர் பெரியவர்.
* இல்லை; இதில் ஏதோ குது இருக்கிறது. இவர் களைப் பார்த்தால் சவப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போகிறவர்கள் போலில்லை.”
* சூதோ வாதோ ! பிணம் எதிர்பட்டால் நல்ல சகுனம் என்பார்கள். வா, போகலாம்!” என்ருர் பெரியவர்.
*இல்லை, தமிழ் மக்களுக்கு இந்தச் சவப் பெட்டி மூலம் பெரிய அபாயம் வரப்போகிறது. உடனே மக்கள் தயார்ப்படுத்தப்பட வேண்டும்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்ருன் வாலிபன்.

சிங்கள ஏகாதிபத்தியம் ፵፭”
அந்த வாலிபன் சென்ற சற்று நேரத்துக்கெல்லாம் திடீர் என்று அங்குவந்த சிங்கள போலீஸ் படையினர் அந்தச் சவ ஊர்வலத்தை அங்கேயே தடுத்து நிறுத்தினர் கள்.
சவப்பெட்டியுடன் வந்தவர்கள் எல்லாம் * சவ ஊர் வலத்தைத் தடை செய்யலாமா?” என்று ஆவேசத்துடன் கேட்டனர்.
"பெட்டியில் இருப்பது உண்மையில் சவம் தான?” என்றனர் போலீஸார்.
"ஆமாம்.'
* காங்கள் அதைப் பார்த்த பிறகுதான் மேலே ஊா வலம் தொடரலாம்.”
* சவப்பெட்டியை நடுவீதியில் வைத்துத் திறந்து பார்க்கக் கூடாது.”
இந்த வாதத்தை யெல்லாம் பொருட்படுத்தாமல் சவப் பெட்டியைத் திறந்து பார்த்தனர் போலீஸார். என்ன ஆச்சரியம்! எல்லாம் துப்பாக்கிகள் குண்டுகள் அடைத்த கைத்துப்பாக்கிகள். உடனே அந்தச் சவ ஊர் வலத்தினர் பலரைக் கைது செய்தனர். பலர் சிதறி ஓடிவிட்டனர். அன்றையதினம் சிங்களப் போலீஸ் அவ்வளவு கவனத் துடன் இல்லாமல் இருந்திருந்தால் எத்தனை தமிழ் மக்கள் உயிர் துறந்திருப்பார்களோ ! இந்த நல்ல காரியத்தைச் செய்த சிங்கள சர்க்காரைப் பாராட்ட வேண்டியதுதான் !
பாராட்டவாவது அதற்குத்தான் அவர்கள் இடம் வைத்துக் கொள்ளவில்லையே! கையும் மெய்யுமாக அகப் பட்ட சிங்கள குண்டர்களை சிலநாட்களுக்குப்பின் எவ்வித விசாரணையும் செய்யாமல் விட்டு விட்டனர்.
இதுபோன்று இன்னும் எத்தனை எத்தனையோ சம்ப
வங்கள் என்ருர் மட்டக்களப்பு அன்பர் திரு நவம். அவர்
கூறிய பயங்கரச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் சோகம்
கிறைந்த பல சிறுகதைகள். அவை எல்லாவற்றையும்
எடுத்துச் சொல்வதா யிருந்தால் அதுவே பெரும் பாரத
?

Page 53
98 ஈழநாட்டுப் பிரயாணம்
மாகும். ஆகையால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். திரு நவம் கூறிய இந்தச் சம்பவங்களைக் கேட்டவுடன் எதிரில் தெரிந்த இடிந்துபோன கட்டடம் மிகப் பயங்கர மாகத் தோற்றமளித்தது.
காங்கள் அங்கிருந்து மோட்டார் வண்டியை நோக்கித் திரும்பினேம். கவம் தமது இடது கையால் தலையைத் தடவிக்கொண்டு வலது கையை உயரத்தூக்கி ஓங்கி ஆட்டிக்கொண்டு நிமிர்ந்து கடந்தார்.
* சிங்களவர்களைப் பார்த்தால் அப்படித் தோன்ற வில்லையே! ரொம்ப சாதுக்களாகத் தானே இருக்கிருர் கள்?’ என்றேன்.
* அவர்கள் ரொம்ப சாதுக்கள்தான், கிராமங்களில் இருக்கும் சில சிங்களவர்கள் ரொம்ப நல்லவர்கள். எல்லாம் இந்த அரசியல் வாதிகள் செய்யும் துவேஷப் பிரசாரத்தால் தான் இவ்வாறு சிங்கள மக்கள் வெறிபிடித்துத் தடுமாறு கிருர்கள்.”
அவர்களுக்குள்ளாவது ஒற்றுமையாக இருப்பார்களா? இல்லை. 》乏,。
“தமிழ் மக்களை எதிர்ப்பதில் மட்டும் அவர்களுக்குள் ஒற்றுமைதான். மற்றபடி.”
'அப்படி என்ருல் ஒன்றும் புரியவில்லையே! அவர் களைப் பற்றிச் சற்று விவரமாகச் சொல்லுங்களேன், கேட்போம்” என்றேன்.
திரு கவம் சிங்களவர்களைப் பற்றியும் அவர்களுடைய அதிசயமான வாழ்க்கையைப் பற்றியும் சொல்ல ஆரம் பித்தார்.

10
யாரோ, இந்தச் சிங்களவர்கள் யாரோ!
ஈழ நாட்டின் அரசியல் திருவிளையாடல்களைப் பார்த்து நேயர்கள் திகைத்துப் போயிருப்பார்கள். 'தமிழ் மக்களை இப்படிக் கொடுமைப்படுத்தும் இந்தச் சிங்கள வர்கள் யாரோ! அவர்கள் எப்படி இருப்பார்களோ! அவர்களை ஒருதரம் பார்த்துவிட வேண்டும்’ என்ற ஆவல் ஏற்பட்டிருக்கும். எனக்கும் அதே ஆவல்தான் ஏற்பட் டது. இலங்கைத் தீவுக்குப் புறப்படுவதற்கு முன்பே சிங்களவர்களைப் பார்க்க வேண்டும் என்ற தாபம் பொங்கி எழுந்து கொண்டே இருந்தது. அவர்கள் எப்படி இருப் பார்கள் என்பதையும் ஒருவாறு கற்பனைசெய்து வைத் திருந்தேன். ஆறடி உயரம் உள்ளவர்களாகவும், ஆஜானு பாகுவாகவும், முறுக்கிவிட்ட மீசையும், அனல் கக்கும் கண்களை உடையவர்களாகவும், பார்ப்பதற்குப் பயங்கர மான உருவத்துடனும் இருப்பார்கள் என்றுதான் எண் னிக் கொண்டிருந்தேன்.
ஆனல் இலங்கை வந்த மறுகாளே அந்த எண்ணம் மாறிவிட்டது. சிங்களமக்களும் கம்மைப் போன்றவர்கள் தான். சிங்களவர் நாகரிகம் வேறு, இந்திய நாகரிகம் வேறு என்பது இல்லை. அவர்கள் மதத்தாலும் இந்தியர் கள்தான்; சாதியாலும் இந்தியர்கள்தான். சூழ்நிலையால் தான் கொஞ்சம் மாறுபட்ட மனத்தினை உடையவர்களாக இருக்கிருர்கள்.
வெகு காலத்துக்கு முன்னுல் வட இந்தியாவிலிருந்து அதாவது வங்காளத்திலிருந்து இலங்கைத் தீவுக்கு வந்து குடியேறியவர்கள். வங்காளத்தைச் சேர்க்த ராஜகுமாரி ஒருத்தி மிருகங்களின் அரசனன சிங்க ராஜனைக் காதலித் தாளாம். அவளையும் அவள் காதலித்தள் சிங்கத்தையும் கப்பலில் ஏற்றிக் கடலில் விட்டு விட்டார்கள். கடலில் மிதந்து வந்த அந்தக் கப்பல் இலங்கைத் தீவில் வந்து ஒதுங்கியது. அவர்களுடைய வம்சத்திலிருந்து வந்தவர்கள்

Page 54
100 ஈழநாட்டுப் பிரயாணம்
தான் சிங்களவர்கள். இப்படிச் சிங்களவர்களைப் பற்றி ஒரு கதை வழங்குகிறது. இந்த விசித்திரக் கதையை நாம் கம்பத் தயாரா யில்லை. ஆனலும் அவர்கள் வங்காளத்தில் இருந்து ವಿಸಿ: குடியேறியவர்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. அவர்கள் உடல் அமைப்பு, நடை உடைகள், பழக்க வழக்கங்கள், பெயர்கள் எல்லாமே அவர்கள் இந்தி யர்கள்தான் என்பதற்கு இன்றும் சான்று கூறுகின்றன.
来 米 来 சிங்கள மக்களுக்குள்ளே இருக்கும் சாதி வித்தியாசக் கொடுமை அப்பப்பா ! எழுத்தில் சொல்ல முடியாது. அவ்வளவு கொடுமை! அவர்களுக்குள்ளேதான் எத்தனை எத்தனை பிரிவுகள். சிங்களவர்களில் ரெளடியா என்ற இனத்தவர்தான் மிகத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள். ஆனல் இந்தச் சாதியைச் சேர்ந்த பெண்கள் அழகு மிக்க வர்கள். அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைப் போலச் சொகுசாக இருக்கிருர்கள். ரதல்ல என்ற இனத் தவர் மிக உயர்ந்த சாதியார். ஆனல் அழகு குறைவான வர்கள். இந்த இரண்டு சாதிகளுக்கும் இடையில் எத்த னையோ பல சாதிகள். அதில் பலப் பல கிளைகள். சாதிக் கட்டுப்பாடு, மூடப்பழக்க வழக்கங்கள், போலி நாகரிகம், வறட்டு ஜம்பம் ஆகியவற்றில் சிங்களவர்களை யாரும் மிஞ்ச முடியாது. \ அன்ருடம் சாப்பாட்டுக்கு வழி இல்லா விடடால்கூட அழகான உடைகளை அணிந்து கொள்வார் கள் சிங்களப் பெண்கள்.
சிங்களப் பெண்களின் உடையைப் பார்த்தால் மிக எளிமையாகத்தான் இருக்கிறது. அவர்கள் கேரள காட்டுக் கிராமத்துப் பெண்கள் அணிந்து கொள்வது போல மேலே ஒரு ஜாக்கெட்டும், இடையில் ஒரு துண்டும்தான் அணிக் திருக்கிருர்கள். ஆனல் உண்மையில் அவர்கள் ஒரு துண்டை மட்டும் உடுத்திக் கொள்ளவில்லை விதம் வித மான வண்ணங்களில் மூன்று முதல் ஐந்து சேலைகள் வரை யில் அணிந்திருக்கிருர்கள். ஒன்றின்மேல் ஒன்ருகப் பல வித வண்ணப் பொற் சேலைகளே அணிந்திருக்கிருர்கள். அவர்கள் கடக்கும் போது அந்தச் சேலைகள் எல்லாம் ஒவ்வொன்ருகத் தெரிகின்றன, அவைதான் எத்தனை

யாரோ, இந்தச் சிங்களவர்கள் யாரோ ! 101
எத்தனை நிறங்களையுடையவைகளா யிருக்கின்றன. ஒவ் வொரு சேலையும் மூன்று கஜம் நீளம் உள்ளது. ஒன்றின் மேல் ஒன்ருகக் கட்டியிருக்கும் இந்தப் புடவைகளில் எல்லாவற்றுக்கும் மேலே கட்டியிருக்கும் புடவை மட்டும் மிக உயர்ந்த ரகமாக இருக்கிறது. இதைமட்டும் ஒரு காளைக்குப் பல தடவை மாற்றி உடுத்திக் கொண்டு விடுகிருர்கள்.
கம் காட்டுப் பெண்களிடம் காணும் காணத்தைப் போலச் சிங்களப் பெண்களிடம் காண முடியவில்லை. ஆண்களைப் போலவே பெண்களும் சரளமாகப் பழகு கிருர்கள். பொதுவாக இருபது வயதுக்குமேல்தான் பெண்களுக்குத் திருமணம் செய்கிருர்கள். திருமணத்தில் எதிர் ஜாமீன் போன்ற தொல்லைகள் ஒன்றுமில்லை. சமயம் விட்டு சமயம் திருமணம் செய்து கொள்வதும், சிங்களப் பெண்களைத் தமிழர்கள் திருமணம் புரிந்து கொள்வதும் சர்வ சகஜம். விவாகப் பிரிவினை பாத்தியதை கள் உண்டு. மறுமணம் செய்துகொள்ளும் உரிமையும் உண்டு. இவைகள் எல்லாம் பழங் காலத் தமிழர் நாகரிக அடிப்படையில் அவர்கள் கொண்டவைகளா? இல்லை, இந்தக் காலத்தில் ஏற்பட்டனவா என்ற விவரங்கள் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை.
சிங்களவர்களின் கிராமத்து வாழ்க்கை மிக ரஸமாக இருக்கிறது. அதிலும் வயலில் காற்று நடுவதை அவர்கள் கிராமப் பொது விழாவாகவே கொண்டாடுகிருர்கள். ஒரு கிராமத்தில் யாராவது ஒரு விவசாயி தம்முடைய வயலில் காற்று கட வேண்டுமானல் அவருக்கு கடவு ஆட்களைத் தேடிப் பிடிக்கும் தொல்லை கிடையாது. " இன்றைய தினம் என் வயலில் நாற்று கடப் போகிறேன் ” என்று கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சொல்லி விடு வார். உடனே அந்தந்த வீட்டில் உள்ள இளம் பெண்கள் எல்லாரும் அலங்காரமாக உடை உடுத்திக் கொண்டு வயலுக்கு வந்து விடுவார்கள் அந்த விவசாயி கொடுக்கும் காற்றை எடுத்துக் கொண்டு அவருடைய வயலில் ஈட ஆரம்பித்து விடுவார்கள். அற்புதமான கடவுப் பாடலைப் பாடிக் கொண்டு அவர்கள் நடவு நடும் அற்புதக் காட்சி கண் கொள்ளாக் காட்சி.

Page 55
፲08 ஈழநாட்டுப் பிரயாணம்
பொன் இழையையும் பட்டின் இழையையும் கொண்ட பல புதுப் புது சேலைகள் அணிந்து ஒரு கையிலே இருக்கும் காற்றை மறு கையால் பறித்து வயலில் அந்தப் பெண்கள் வரிசையாக நின்று நாற்று நடும் காட்சியைப் பார்க்கும் போது உண்மைச் சம்பவம் போலவே தோன்றுவதில்லை ஏதோ நாடகத்தில் சினிமாவில், கற்பனை உலகில் காணும் ஒரு அபூர்வமான காட்சியைப் போல்தான் இருக்கும். கவிஞர்கள் பார்த்துப் பரவசத்துடன் பாட வேண்டிய காட்சி. ஒவியர்கள் சித்திரத்தில் தீட்ட வேண்டிய சித்திரம்
நடவு முடிந்தவுடன் அவர்கள் எல்லாம் உற்சாகமாக வீடு திரும்பி விடுவார்கள் கடவு கட்டதற்காக வேண்டி அவர்கள் எந்தச் சன்மானமும் பெறுவதில்லை. ஒவ்வொரு தொழிலையுமே இப்படி ஊர் திரண்டு வந்து உற்சாகமாகச் செய்வதா யிருந்தால் எவ்வளவு கன்ருக இருக்கும்.
இந்த விவரங்களை யெல்லாம் திரு நவம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எங்கள் கார் ஒரு கிராமத்தைத் தாண்டியது. அது சிங்களவர்கள் அதிகமாக வாழும் கிராமம். * இந்தக் கிராமத்தை நன்ருகப் பாருங்கள். அமைதி தவழும் இந்தக் கிராமம் சில மாதங்களுக்கு முன்னுல் வெறி பிடித்து கின்றது. இந்தக் கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் கடைகள் பட்டப் பகலிலே குறை யாடப்பட்டன. ஒரு தமிழ் வாத்தியாரின் சாமர்த்தியமும் அவருக்கு உயிர்ப் பிச்சை அளித்த இந்தக் கிராமத் தலை வரின் பண்பும் சரித்திர முக்கியம் பெற வேண்டிய அற்புத சம்பவமாகும்” என்ருர் மட்டக்களப்பு நண்பர் திரு நவம். வீரத் தமிழன்
எங்கும் அராஜகம் கிலவியது. நாள் தோறும் அடி தடியும், கலகமும், கொள்ளையும், சில இடங்களில் கொலை யும் கூட நடந்தன. அழகுக்கும் அமைதிக்கும் பெயர் போன இந்தத் திமியாவ என்ற கிராமம் பயங்கரமாகத் தோற்ற மளித்தது. மொழி வெறியால், இனத்தின் பெய ரால் மனிதன் மனிதனே அடித்தான்; கடித்தான் ; வெட்டி ஞன், குத்தினன். சிங்களவர்களும் தமிழர்களும் சேர்ந்து வசித்து வந்த இடங்களில் எல்லாம் பயங்கரமான கலகங்

யாரோ, இந்தச் சிங்களவர்கள் யாரோ! 103
கள் நிகழ்ந்தன. தமிழர்கள் பல இடங்களில் அநியாய மாகத் தாக்கப்பட்டனர். மனிதப் பண்பு சீர் குலைந்தது. மனித நாகரிகம் தூக்கி எறியப்பட்டது.
வெறி பிடித்த சிங்களக் கூட்டத்தினர் கையில் தடி யும், அரிவாளும், மண்வெட்டியும் தாக்கிக்கொண்டு தமிழர்கள் எங்கு இருக்கின்றனர் என்று தேடித்திரிய ஆரம்பித்தனர். இந்த வெறி பிடித்த கூட்டத்திலிருந்து சில தமிழர்கள் ஒரு மாதிரி தப்பிப் பிழைத்துத் தமிழ்ப் பகுதிக்குச் சென்று விட்டனர்.
இந்த மாதிரி சமயத்தில் மட்டக் களப்பில் இருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது. என் தாயார் மிகவும் அபாய மான நிலையில் இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரவும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் தாய்க்கு நான் ஒரே பிள்ளை. எனக்கு ஒரு தங்கையும் இருந்தாள். அவர் களுக்கு நான்தான் ஆண் துணை. இந்தச் சமயத்தில் திமியாவ கிராமத்திலிருந்து மட்டக்களப்புக்குப் போக முயலுவது யமனையே எதிர்கொண்டு அழைப்பது போலா கும். ஆகவே நான் போகாமல் இருந்து விடலாம் என்று நினைத்தேன். ஆனல் மரணப் படுக்கையில் இருக்கும் என் வயோதிகத் தாய் ஆண் துணையில்லாமல் நிற்கும் என் அருமைத் தங்கை இவர்கள் முகங்கள் என் கண் முன்னே தோன்றிக் கொண்டே இருந்தன. நான் எப்படியும் திமியாவ கிராமத்தில் இருந்து மட்டக்களப்புக்கு புறப்
பட்டுவிடுவது என்றே தீர்மானித்து விட்டேன்.
谦 来源 米
நான் இங்கு உபாத்தியாயராக வேலை பார்த்து வரு கிறேன். சிங்களவக் குழந்தைகளும் தமிழ்க் குழந்தை களும் என்னிடம் படித்து வருகின்றனர். நானும் ஒரு சிங்களவர் வீட்டில்தான் வசித்து வருகிறேன். என்மீது கான் குடியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரரான சிங்களவர் உயிரையே வைத்திருக்கிருர். அவர்தான் அந்தக் கிராமத் தின் தலைவர்கூட. ஆனலும் ஊரே திரண்டு வரும்போது அவர் என்ன செய்துவிட முடியும்?

Page 56
104 ஈழநாட்டுப் பிரயாணம்
சூரியன் மறைந்து விட்டான். என் தாயாரின் நினைவு எனக்கு வந்து விட்டது. என் தங்கை சின்னக் குழந்தைக் குச் சமானம் அவளுக்கு ஒன்றுமே தெரியாது. ஒடி ஆடி விளையாடிக் கொண்டிருப்பவள். அவளைச் சாப்பிட வைப்பதற்குள் என் தாய்க்குப் போதும் போதும் என்ருகி விடும். பதினைந்து வயது வந்த பெண்ணுக இருந்தாலும் ஆாங்கும் பொழுதுகூட பக்கத்தில் பட்டு நூலில் செய்த காயை வைத்துக் கொண்டுதான் துரங்குவாள். அப்படிப் பட்ட குழந்தை உள்ளம் படைத்த தங்கை இப்பொழுது என்ன செய்கிருளோ என்று நினைக்கும் போது எனக்குத் தலையைச் சுற்ற ஆரம்பித்து விட்டது. எவ்வளவு அடக் கினலும் ஆத்திரம் பீறிக் கொண்டு வந்து விட்டது. கண்களில் கண்ணிர் வழிய ஆரம்பித்துவிட்டது. ஒரு கணநேரம் தான் இப்படிப்பட்ட நிலைமை இருந்தது. அடுத்த கணம் சுதாரித்துக் கொண்டேன். என் துணி மணிகளே எடுத்துப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பத் தயாராகி விட்டேன்.
கிராமத்தின் குறுக்குப் பாதை வழியாகச் செல்ல ஆரம்பித்தேன். சிங்களவர் கண்ணில் அகப்பட்டுவிடக் கூடாதே என்று பயந்து கொண்டே சென்றேன். வழியில் காலில் ஏதோ தட்டுப்பட்டதுபோலிருந்தது. குனிந்து பார்த்தேன். ஒரு அழகிய இளைஞன் , தமிழ் வாலிபன் அடிபட்டு மயக்கம் போட்டுக் கிடந்தான். அந்த வாலிபனை அடித்தவுடன் அவன் ஏதோ மயங்கி விழுந்திருக்கிருன். அவன் உயிரே போய்விட்டது என்று அவனை இங்கு ஒதுப்புறமாகத் தூக்கி வந்து போட்டு விட்டுச் சிங்களவக் குண்டர்கள் ஓடி யிருக்க வேண்டும். ஒரு சொட்டுத் தண்ணிருக்காக ஏங்கியது போலிருந்தது அந்த வாலிபனின் திறந்த வாய். அருகில் இருந்த வாய்க்காலுக்கு அவசர மாகச் சென்றேன். கைக் குட்டையை நனைத்துக்கொண்டு வந்து அவன் வாயில் பிழிந்தேன். ஒரு முடக்குத் தண்ணிர் உள்ளுக்குள் சென்றதுமே அவன் மயக்கம் தெளிய ஆரம் பித்து விட்டது. ஈரக் கைக்குட்டையால் அவன் முகத்தை யும் ஒரு தரம் துடைத்து விட்டேன். அவன் இரண்டு தரம் கண்களைச் சிமிட்டி விட்டு மெதுவாக எழுந்தான். பயத்தால் திருதிரு என்று விழித்தான்.

யாரோ , இந்தச் சிங்களவர்கள் யாரோ! 105
"பயப்படாதே சிங்களவர் யாருமில்லை நான் தமிழன் தான்” என்றேன்.
காலாபுறமும் ஒரு தரம் சுற்றிப் பார்த்துவிட்டு, 'அந்தக் குண்டர்கள் எல்லாம் போய் விட்டார்களா?” என்று கேட்டான்.
‘போய் விட்டார்கள். இனி இங்கு ஒரு கணம் கூடத் தாமதிக்கக் கூடாது. புறப்படு, மட்டக்களப்புக்குச் செல்வோம்" என்றேன்.
அந்த வாலிபன் மெளனமாக என் பின்னல் வரத் தொடங்கினன். ஒரு கையில் என் பெட்டியைப் பிடித்துக் கொண்டு மற்றக் கையால் அவன் கையைப் பற்றி அழைத் துக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.
அப்பொழுது "நவரத்தினம், நில்! எங்கே போகி ருய்!” என்று ஒரு இடி முழக்கக் குரல் கேட்டது. குரல் வந்த திசையைப் பார்த்தேன். நான் குடியிருந்த வீட்டுக் காரச் சிங்களவர் என்னை நோக்கி வெறிபிடித்தவர்போல் ஓடிவந்தார். எனக்கு உலகமே சுழல ஆரம்பித்துவிட்டது "கேற்று வரையில் நம்மிடம் அன்பும் மரியாதையும் காட் டிய இந்த மனிதரே என்னைத் துரத்துகிருரே" என்று 15டு 15டுங்கிப் போனேன். என் மூச்சே நின்று விடும் போலாகி விட்டது.
'தம்பி! இந்தச் சமயத்தில் நீ தனியே கிளம்பலாமா? வழியெல்லாம் குண்டர்கள் இருக்கிருர்களே” என்ருர் அந்தப் பெரியவர். இப்படி அவர் சொன்னவுடன்தான் எனக்கு மூச்சு வந்தது. நன்றி ததும்பும் கண்களுடன் அந்தப் பெரியவரைப் பார்த்தேன்.
"ஐயா! தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி! என் தாய் மரணப்படுக்கையில் இருக்கிருர் என்று தந்தி வந்திருக் கிறது. என் தங்கை என் தாயை நம்பி இருக்கிருள். இப்பொழுது இரண்டு பேருக்குமே ஆண் துணை இல்லே. நான் உடனே ஊருக்குப் போய்த்தான் ஆக வேணும்" என்று சொன்னேன்.
“எது எப்படி இருந்தாலும் முதலில் நீங்கள் இருவரும் வீட்டுக்கு வாருங்கள். இரண்டு நாட்கள் கழித்துக் கலகம் எல்லாம் அடங்கி ஒடுங்கிய பிறகு செல்லலாம்" என்ருர்

Page 57
106 ஈழநாட்டுப் பிரயாணம்
"ஐயா! நான் ஒரு வீரத் தமிழன் வீரத் தமிழனுக்குப் பிறந்தவன்! இந்தச் சமயத்தில் என்ன அபாயம் ஏற்பட் டாலும் என் தாயைப் போய்ப் பார்த்தே ஆகவேண்டும். அவரைக் காப்பாற்றியே யாகவேண்டும்” என்றேன்.
*அதற்காக இந்த அபாய சமயத்தில் செல்லலாமா? உமக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் பிறகு உங்கள் தங்கைக்கும் தாய்க்கும் யார் ஆதரவு?’ என்ருர். அப் போது அவர் முகத்தில் தோன்றிய கணிவை இதற்கு முன் கான் பார்த்ததே கிடையாது.
இதற்குள் சிங்களவக் குண்டர்கள் அந்தப் பக்கம் வந்து விட்டனர். அவர் உடனே தம் பலம் முழுவதையும் பிரயோகித்து என்னைத் தள்ளிக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டார். இதைப் பார்த்து விட்டனர் அந்த வெறிபிடித்த கூட்டத்தினர். கும்பலாக வந்து நாங்கள் இருந்த வீட் டைச் சூழ்ந்து கொண்டனர். ‘சிங்களம் வாழ்க!” என்று கோஷிக்க ஆரம்பித்து விட்டனர்.
நாங்கள் இருந்த வீட்டுச் சொந்தக்காரர், “சிங்களம் வாழ்க!” என்று பதிலுக்குக் கோஷித்து விட்டு வெளியே வகதாா.
கூட்டத்தில் தலைவனுகத் தோன்றிய வெறி பிடித்த இளைஞன், “அத்தத் தமிழர்களை எங்களிடம் ஒப்புவித்து விடும்” என்ருன்.
"அவர்கள் எங்கள் உறவினர்கள்' என்று தயங்கா மல் பதில் கூறினர் பெரியவர்.
"தமிழர்கள் உங்கள் உறவினர்களா!” என்று சிங்கம் கர்ஜிப்பது போல் கர்ஜித்து அவரை ஒதுக்கித் தள்ளி விட்டு வீட்டுக்குள் பாய ஆரம்பித்தான் அந்த இளைஞன். "கில், அப்படியே” என்று இடிமுழக்கக் குரலில் கத்தினர் பெரியவர். கூட்டம் ஒரு கணம் அப்படியே அசந்து விட்டது. “நான் இந்தக் கிராமத்தின் தலைவன். அந்தப் பிள்ளைகள் மேல் கையை வைத்தால் உங்கள் அத்தனை பேரையும் உருத் தெரியாமல் செய்து விடுவேன். முதலில் என்னைக் கொன்று தீர்த்துவிட்டுப் பிறகு அந்தப்

யாரோ, இந்தச் சிங்களவர்கள் யாரோ! 107
பிள்ளைகளிடம் செல்லுங்கள்’ என்று அதிகாரமான குரலில் ஆணையிட்டார்.
எனக்காகப் அந்தப் பெரியார் தம்மையே தியாகம் செய்து கொள்ள முன் வந்தது எனக்கு என்னவோ போல் இருந்தது. திடீரென்று ஏதோ ஆவேசத்தில் உந்தப்பட்ட வன்போல் அந்தப் பெரியாருக்கு முன்னுல் சென்றேன். ‘ஐயா, பெரியவரே! நீங்கள் இந்தக் குண்டர்களிடம் இறைஞ்ச வேண்டாம். இந்த 15வரத்தினம் ஒரு வீரத் தமிழன்; அது மட்டுமல்ல. ஒரு வீரத் தமிழனுக்குப் பிறக் தவன் வீரத் தமிழன் என்றுமே யாரைக் கண்டும் அஞ்சிய தில்லை’ என்று சொல்லி சிங்கக் குண்டர்களுக்கு முன் என் மார்பை நிமிர்த்திக் காண்பித்தேன்.
என்னை அப்படியே தூக்கிக் கொண்டு வந்து வீட்டுக் குள் போட்டு விட்டு வெளிக் கதவை இழுத்துச் சாத்தி விட்டார் கிராமத் தலைவர். பிறகு கதவுக்கு வெளியில் நிற்கும் கூட்டத்தைப் பார்த்து, 'இப்பொழுது இங்கிருந்து போகப் போகிறீர்களா இல்லையா?” என்று கத்தினர்,
கூட்டத்தினர் வாய் பேசாமல் அங்கிருந்து நழுவிச் சென்று விட்டனர்.
மறுநாளே நல்ல துணையுடன் என்னை மட்டக்களப் புக்கு அனுப்பி வைத்தார். இதயம் படபடக்க என தாயைப் பார்க்க ஒடினேன். என்னுடைய தாயார் 5ோய் கொடி இன்றிச் சுகமாக வீட்டுத் திண்ணையில் உட்கார்க் திருந்தார். 'அப்பா வந்தாயா? எங்கே உன்னை உயிரோடு பார்க்கப் போகிறேனே என்று துடிதுடித்துக் கொண்டி ருந்தேன்’ என்று ஆவலுடன் கேட்டுக்கொண்டே என்னை அணைத்துக் கொண்டாள். என் தங்கை "அண்ணு' என்று கத்திக் கொண்டே ஓடி வந்து என்னுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
"ஆமாம்! உங்களுக்கு அபாயம் என்று அவசரத் தக்தி வந்ததே' என்றேன்.
*நீ உடனே அங்கிருந்து புறப்பட்டு வர வேனும் என்று நான்தான் தந்தி கொடுக்கச் செய்தேன்" என்ருர் என்னுடைய தாயார்.

Page 58
108 ஈழநாட்டுப் பிரயாணம்
* அம்மா! சிங்களவர்கள் எல்லாருமே அப்படி இல்லை அம்மா! நான் குடியிருந்த வீட்டுக்காரச் சிங்களவர் மட்டும் இல்லை என்ருல் என்னை நீ உயிருடனேயே பார்த் திருக்க முடியாது. அந்த உத்தமப் பெரியவர்தான்
என்னேக் காப்பாற்றினர் ” என்றேன்.
* அந்தச் சிங்களப் பெரியவர் நீடூழி வாழட்டும்”
என்ருர் என்னுடைய தாயார்.
米 来 拌
இந்தச் சம்பவத்தைத் திரு நவம் கூறி முடித்ததும் எங்கள் காரை ஓட்டிவந்த டிரைவர், " ஐயா சொன்ன தெல்லாம் உண்மைதான். நானும் ஒரு சிங்களவன்தான். எனக்கு நன்ருகத் தமிழ் பேசவரும் !" என்ருர்,
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது ஒரு ‘சிங்களவர் கார் ஒட்டுவதை கம்பியா காம் இந்தக் காட்டுப் பிரதேசத் தில் பிரயாணம் செய்வது' என்ற பயம் ஏற்பட்டு விட்டது.
என் கிலேமையை ஒருவாறு புரிந்துகொண்ட அந்தச் சிங்களவ டிரைவர் " நீங்கள் ஒன்றும் பயப்பட வேண் டாம். எல்லாம் அரசியல் வாதிகளான சிங்களவர்கள் தான் அப்படிக் கலவரம் செய்வார்கள். நாங்கள் எல்லாம் உங்கள் சகோதரர்கள் கிராமப்புறத்தில் வாழ்ந்து வருப வர்கள். எங்களை நம்புங்கள்' என்று சொல்லி விட்டுக் காரை ஓட்டினர். கார் தமிழ்த் தெய்வம் கோயில் கொண் டிருக்கும் கதிர்காமத்தை கோக்கி அறுபது மைல் வேகத்தில் பறந்து கொண்டிருக்தது.

11
அருவி கொட்டும் அழகு
மேல் காட்டில் ஒரு பழமொழி உண்டு. "கேபிள்ஸைப பார்த்து விட்டுச் செத்துப் போ” என்று. நமது தமிழ் காட்டிலும் அப்படி ஒரு அருமையான இடம் இருக்கிறது என்று முற்றும் துறந்த முனிவர் ஒருவரே சொல்கிருர், செத்துப் போவதற்கு முன்னல் குற்ருலத்தைப் பார்த்து விடு” என்கிருர் கமது பட்டினத்து அடிகள்.
* காலன் வருமுன்னே
கண்பஞ்சடை முன்னே பாலுண் கடைவாய்
படுமுன்னே - மேல்விழுந்தே உற்ருர் அழுமுன்னே
ஊரார் சுடுமுன்னே குற்ருலத் தானையே
கூறு!” என்னும் பாடலில், ஒருவன் இறந்து போவதற்கு முன்னல் திருக் குற்ருலத்தைப் பார்த்துவிடவேண்டியதன் அவசியத் தைப் பட்டினத்தார் குறிப்பாக உணர்த்துகிருர்,
*கொல்லை முல்லை
மெல்லரும்பீனும் குற்ருலம்’ *தேனருவித் திரையெழும்பி
வானின்வழி ஒழுகும்” *கூதல்மாரி நுண்துளி தூங்கும் குற்ருலம்’ “ஒடக் காண்பது பூம்புனல் வெள்ளம்;
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்” என்பது போன் ற அருமையான தமிழ்ப் பாடல்களைப் பெற்றது குற்ருலம். குற்ருலத்துக்குச் சென்று அருவி கொட்டும் அழகை ஒருதரம் பார்த்தவர்கள் மீண்டும் மீண் டும் அந்தக் காட்சியைப் பார்க்கத் துடித்துக் கொண்டிருப் பார்கள். அதில் ரோடி மகிழ்ந்தவர்களைப் பற்றியோ கூற

Page 59
110 ஈழநாட்டுப் பிரயாணம்
வேண்டியதில்லை. தாங்கள் பிறவி எடுத்ததன் பயனை அடைந்து விட்டதாக மகிழ்வார்கள். குற்ருலத்து அருவி அவ்வளவு சுகமான அருவி. இங்கு வீசும் மலைச்சாரல், இது அமைந்திருக்கும் இடம், சூழ்நிலை எல்லாமே உடலுக் கும் உள்ளத்துக்கும் உவகை கொடுக்கும் சக்தியுடையவை,
ஈழநாட்டில் நாம் இப்போது பார்க்கப் போகும் அருவி இவ்வாறெல்லாம் பாடல் பெற்ற அருவி அல்ல. அதில் யாரும் ரோடி மகிழ முடியாது. வானத்துக்கும் பூமிக்குமாக அருவி கொட்டும் அழகை வேண்டுமானல் பார்த்து மகிழலாம். பார்த்து வியந்து கொண்டே இருக்க லாம். தினம் தினம் டார்க்கலாம். ஒரு மணி இரண்டு மணி மூன்று மணி என்று நேரம் போவதில் நினைப்பின்றிப் பார்த்து மகிழலாம். அவ்வளவுதான்.
ரத்தின புரியிலிருந்து கதிர்காமம் செல்லும் வழியில் கொஸ்லாந்தைக்கும். வெள்ளவாயாவுக்கும் இடையில் இந்த அருவி விழுகிறது. இந்த அருவி விழும் இடத்துக் கருகில்தான் அப்புத்தளை என்ற ஊர் இருக்கிறது.
பூமி மட்டத்திலிருந்து சுமார் ஐயாயிரம் அடி உயரம் உள்ள இந்த அப்புத்தளை இரண்டு மலைகளுக்கு இடையில் அமைந்திருக்கும் கச்சிதமான சிறு நகரம், உலகத்திலுள்ள அழகுமிக்க இயற்கைச் சூழ்நிலைகளுக்கு மத்தியில் அமைக் துள்ள அழகான சிற்றுார் அப்புத்தளை என்ருல் மிகையா காது. இந்த ஊரில் இருந்து அடுக்கடுக்காக, ஒன்றன்பின் ஒன்ருக இருக்கும் மலைத் தொடரையும், பரந்து விரிந்து காணும் சமவெளிப் பிரதேசத்தையும் பார்க்கும்போது மனத்தில் ஏற்படும் ஆனந்த உணர்ச்சி அங்கு நின்று பார்த்துத்தான் அநுபவிக்க வேண்டும். சில சமயங்களில் அங்கிருந்து பார்த்தால் சங்கிலித் தொடர்போல் வரிசை யாகத் தோன்றும் ஐந்து மலைச்சிகரங்களைப் பார்க்கலாம். இந்த ஐந்து மலைகள் உள்ள புண்ணிய பூமிதான் அழகுத் தெய்வமான முருகன் எழுந்தருளி இருக்கும் கதிர்காமம். அப்புத்தளையிலிருந்து சுமார் ஐம்பது மைல்களுக்கு அப்பால் இருக்கும் கதிர்காமத்தைப் பார்க்கும்போது மனத்திலே ஒரு தெய்விக உணர்ச்சி ஏற்படுகிறது. ,* •

அருவி கொட்டும் அழகு 111
இந்த மலைக்கணவாயின் ஒரு பகுதியில் பிரசித்திபெற்ற அப்புத்தளை என்ற சிற்றுாரும் மற்ருெரு பகுதியில் அழகு மிக்க தியாலுமா அருவியும் இருக்கின்றன.
ஈழநாடு ஒரு அபூர்வமான நாடு. இதில் இல்லாத அதிசயமே இல்லை என்று சொல்லி விடலாம். உலகில் எத்தனை எத்தனை இயற்கை விக்தைகள் உண்டோ அவ் வளவையும் கொண்ட அழகான காடு ஈழநாடு. இந்த காட் டில் எத்தனையோ அருவிகள் கொட்டுகின்றன. இந்த அருவிகளுக்கெல்லாம் முதன்மையான அருவிதான் இந்தத் தியாலுமா அருவி.
சுமார் இரண்டு மைல் தூரத்துக்கு அப்பால் இருக்கும் போதே தியாலுமா அருவியின் ஒசை காதில் விழுகிறது. ‘ஓ’ என்ற பேரிரைச்சலுடன் விழும் இந்த அருவிச்சத்தம் கணத்துக்குக் கணம் அதிவேகத்துடனும் எத்தனை எத்தனையோ இனிய நாதத்துடனும் மாறி மாறி ஒலிக்கிறது. அருவியின் ஒசையை நெருங்க நெருங்க நமக்கு என்னவோ செய்கிறது. நெஞ்சு "திக் திக்கென்று அடித்துக் கொள் கிறது. ஈழநாட்டில் இருக்கும் மிகப் பெரிய தியாலுமா அருவியைப் பார்த்து ஆனந்திக்கப் போகிருேம் என்ற துடிதுடிப்பு அதிகமாகிறது.
அதோ துர ரத்தில் பனித்திரைபோல் ஏதோ தெரிகிறது. இன்னும் சற்று கெருங்குகிருேம். ஆகாயமே பொத்துக் கொண்டது போல் லே வானத்திலிருந்து நீர் கொட்டுகிறது. அதன் ஆரம்பம் எது என்றே தெரிய வில்லை. அவ்வளவு உயரத்திலிருந்து அருவி விழுகிறது. சற்றுத் தூரம் வரையில்தான் வெள்ளியை உருக்கி ஊற்றுவதுபோல வெள்ளை வெளே ரென்று தண்ணிர் தெரிகிறது. பிறகு ஒன்றும் தெரியவில்லை. கீழே பூமியிலிருந்து தண்ணிர், புகை போலப் பந்து பந்தாக எழும்பி அங்க அருவியின் அழகைத் தாவி அணைத்துக் கொள்ள முயலுவது போலிருக் கிறது. சுமார் அறுநூற்று முப்பது அடி உயரத்திலிருந்து, வானத்திலிருந்தே விழுவது போலிருக்கும் இந்தத் தியாலுமா அருவியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமக்குத் தலையைச் சுற்றுகிறது. கம்மை யறியாமலே காம்

Page 60
112 ஈழநாட்டுப் பிரயாணம்
சுழலுகிருேம். தியாலுமா அருவி அப்படியே சாய்ந்து வந்து 15ம் மீது விழுந்து விடுமோ என்ற பிரமை ஏற்படு கிறது. அடுத்த கணத்திலேயே இந்தப் பிரமை மாறுகிறது. நாமே பூமியிலிருந்து எழும்பி இந்த அருவிக்கு மத்தியி லேயே போய்ச் சிக்கிக் கொண்டு மூச்சுத் திணறுவது போன்ற மயக்கம் ஏற்படுகிறது. மாறி மாறித் தோன்றும் இந்த இனிய மயக்கத்தை அனுபவித்துக் கொண்டு மணிக் கணக்கில் நாள் கணக்கில், ஏன், வாழ்நாள் முழுவதுமே இருக்கலாம். அலுப்பு சலிப்பே ஏற்படாது. இந்த அருமை யான அருவி கொட்டும் அழகுக் காட்சியை விட்டுச் செல்லவே மனமில்லை. ஆனலும் உடன் வந்த நண்பர்கள் விடுகிருர்களா? 'நாழிகையாகி விட்டது. கதிர்காமத்தி லிருந்து திரும்பி வரும்போது மிண்டும் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொள்ளலாம், வாருங்கள்' என்று வற்புறுத்தி ணுாகள.
உடனே காரில் ஏறிக் கொண்டால் இந்தக் காட்சி மறைந்து விடுமோ என்று நடந்தே சென்ருேம். கின்று கின்று இந்த அருவி கொட்டும் அழகைப் பார்த்து அனுப வித்துக்கொண்டே சென்ருேம். இப்படி எவ்வளவு தூரம் சென்ருேமோ தெரியாது. அருவி கொஞ்சம் கொஞ்சமாக அந்த மலைத்தொடரில் மறைந்து, அடர்ந்து கிற்கும் வனத் துக்குள் புகுந்து விட்டது. எதையோ பறிகொடுத்து விட்டதுபோல ஒரு ஏக்க உணர்ச்சி ஏற்படுகிறது. அப்படி ஒரேயடியாக ஏங்கிப்போனுல் அப்புறம் வாழ்க்கையில் சுவை ஏது? மேலே பிரயாணத்தைத் தொடங்கினேம். காரில் ஏறிக் கொண்டோம். இதுவரையில் கலகலவென்று பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்த நண்பர் கூட்டம் இப்பொழுது ஒன்றுமே பேசாமல் மெளனமாக இருந்தது விங்தையிலும் விங்தைதான்!
இந்த மெளனத்தைக் கலைத்துக்கொண்டு ஒரு நண்பர் பேச ஆரம்பித்தார். "அதோ! பார்த்தீர்களா, யானே!" எனருா. −
ஆமாம் யானைதான்! யானையேதான் ஒன்று இரண்டு மூன்று என்று பல யானைகள் ஒன்றன்பின் ஒன்ருகச்

அருவி கொட்டும் அழகு 113
சென்று கொண்டிருந்தன. துதிக்கைகளில் மிகப் பெரிய மரத்தைத் தூக்கிக் கொண்டு சென்றன. "இவைகள் எங்கே செல்கின்றன? “சற்றுத் தூரத்தில் நிற்கும் லாரியை நோக்கிச் செல் கின்றன.”
"அங்கு போய் என்ன செய்யும்?” "தங்கள் துதிக்கைகளில் தூக்கிக் கொண்டு செல்லும் மரங்களை லாரியில் அடுக்கும்."
"அப்படியா?” **ஆமாம்?"
ஈழநாட்டுச் சாலைகளில் யானைகள் தென்படுவது சர்வ சாதாரணம். அவைகள் மனிதர்களைப் போல எல்லாவித மான வேலைகளையும் செய்கின்றன. அவைகளுக்குப் பக்கத் தில் மனிதன் செல்லும் போது அதன் காலில் பாதி உயரத் துக்குக் கூட எட்டாமல் நிற்கிருன் இந்தச் சின்னஞ்சிறு மனிதன் சொன்னதை எல்லாம் ஒழுங்காகக் கேட்கிறது மிகப் பெரிய அந்த யானைக் கூட்டம்.
யானைக் கூட்டத்தையும் அதன் நடுவில் துளிபோல நிற்கும் மனிதனையும் பார்க்கும்போது எனக்கு மனிதன் முதன் முதலில் யானையைப் பார்த்தபோது என்ன நினைத் திருப்பான் என்று எண்ணத் தோன்றியது.
தொடக்கத்திலிருந்தே மனிதன் இயற்கையின் கட்டுப் பாடுகளை எதிர்த்துப் பல வழிகளில் தன் கொடியை உயர்த்திப் பிடித்திருக்கிருன். எண்சாண் உயரமுள்ள மனிதன் இன்றளவும் இந்தப் பிடிவாதத்திலிருந்து தளரா மல் உழைத்து வருகிருன். அவனுடைய அந்த இடை விடாத உழைப்பு காரணமாகத்தான் மண்ணையும், விண்ணை யும், கடலையும் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ்கொண்டு வர முடிந்தது.
காட்டில் வாழ்ந்த மனிதனின் கண்ணில் முதலில் இந்த யானை பட்டிருக்கும். பயங்கர உருவத்துடன் இருந்த இந்தக் காட்டு யானை, உபத்திரவமே உருவெடுத்த பிரும் மாண்டமான ஐந்து, இடி குமுறும் புயல் மேகம் போன்ற
8

Page 61
114 ஈழநாட்டுப் பிரயாணம்
தாக அவனைத் துன்புறுத்தியிருக்கும். மலை போன்ற அதன் கரிய பெரிய உருவத்தைப் பார்த்து மனிதன் பயந்திருப் பான? மாட்டான். அலட்சியமாகச் சிரித்திருப்பான். கட்டுக்கடங்காத இந்த மாமிச பருவதம் தன் துதிக்கை யைத் தூக்கிக் கொண்டு பிளிறுவதைப் பார்த்து எள்ளி நகையாடி இருப்பான். "உன்னை அடக்கி உன்னிடமே. வேலை வாங்குகிறேன் பார்!" என்று சபதம் கூறியிருப் பான். தன் சபதத்தை நிறைவேற்றுவதற்குள், யானையை அடக்குவதற்குள் மனிதன் எத்தனை கஷ்டப்பட்டிருப் பான்! மீண்ட நெடுங்காலம் அவன் எண்ணம் கைகூடாமல் போயிருக்கலாம். எத்தனையோ தோல்விகளும், தொல்லை களும் மனிதனுக்கு ஏற்பட்டிருக்கும். எண்ணற்ற மனித உயிர்கள் இந்த முயற்சிக்குப் பலியாகியிருக்கும். ஆனல் மனிதன் துன்பத்தைக் கண்டு பின்னடையவில்லை; தனக்கு ஏற்பட்ட துயரத்துக்காக அஞ்சி அவன் களைத்துவிட வில்லை. அவைகளை எல்லாம் தாண்டி முன்னேறிக் கொண்டே இருந்தான். ஒருநாள் மனிதன் கஜேந்திரனை, யானையை அடக்கி விட்டான். அதனிடமே வேலை வாங்கு வதற்குக் கற்றுக் கொண்டான்.
காட்டு வாழ்க்கையில் இருந்த மனிதன் முதன் முதலில் மிகப் பெரிய மிருகமான யானையை வென்று வெற்றி பெற்று விட்டதால், தன் வெற்றிப் பொருளான யானை யையே தெய்வமாக வழிபட ஆரம்பித்தானே என்னவோ! அப்பொழுதிருந்துதான் மனிதன், தான் ஏதாவது ஒரு காரியம் செய்ய ஆரம்பித்தால் அது விக்கினம் இல்லாமல் நிறைவேறுவதற்காக வேழ முகத்தவனுன விநாயகனை, சித்தி தரும் கடவுளாகப் போற்றி வணங்குகிருன் போலும்!
கதிர்காமத்துக்குச் செல்வதற்கு முன்னல், தீந்தமிழ்த் தெய்வமாகிய சுப்பிரமணியக் கடவுளைத் தரிசிப்பதற்கு முன்னல் வழி நெடுக விநாயகர்களின் தரிசனம் வேண்டிய மட்டும் கிடைத்துக்கொண்டே வந்தது. - பயங்கரப் பாதை
ஈழநாட்டுக் சாலைகளில் பிரயாணம் செய்யும்போது நாம் இந்த உலகில் பிரயாணம் செய்வதாகவே தோன்றது.

அருவி கொட்டும் அழகு 115
ஏதோ கதைகளிலே, காவியங்களிலே வர்ணித்திருக்கும் கறுப்புச் சலவைக்கல் தளம்போட்ட சாலையில் பிரயாணம் செய்வதாகவே தோன்றும். சாலைகளில் அப்பழுக்கு ஒன்றும் காணமுடியாது. வெள்ளவாயாவிலிருந்து கதிர் காமத்துக்குச் செல்லும் சாலையில் இரண்டு புறத்திலும் பசுமைக் காட்சி. சில இடங்களில் பசிய மரங்கள், செடி கள் நிறைந்த அடர்த்தியான காடுகள். கண்ணுக்கெட்டிய துாரம் வனம் வனம் வனுந்திரம்தான்! இந்தக் காட்டுக்கு மத்தியில் எப்படித்தான் சாலைகள் போட்டார்களோ! இப்பொழுது இந்தச் சாலையில் பட்டப் பகலில் பிரயாணம் செய்யும்போதே பயமாக இருக்கிறதென்ருல், சாலை போடும் போது எப்படிப்பட்ட அபாயத்தை எல்லாம் பொருட் படுத்தாமல் அவர்கள் சாலை போட்டிருக்க வேண்டும்.
**கதிர்காமக் காட்டுக்கு மத்தியில் செல்லும் இந்தச் சாலையில் இப்பொழுதுகூடச் சில சமயங்களில் காட்டு யானைகள் வந்து குறுக்கே நிற்கும்” என்ருர் நண்பர்.
'காட்டு யானையா? சாலையில் குறுக்கே வந்து நிற்குமா? அப்படியானல் அதைப் பார்க்க வேண்டும்” என்றேன்.
*நல்ல ஆசை உங்களுக்கு வழியில் பழக்கப்பட்ட யானைகளைப் பார்த்தீர்களே அவை போல் சாதுவாக வந்து சாலையில் நிற்கும் என்று நினைக்கிறீர்களா?”
"பின் எப்படி நிற்கும் ?” "சென்ற ஆண்டு இப்படித்தான் சில பேர் கதிர்காமத் துக்குப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். திடீ ரென்று காட்டு யானை ஒன்று குறுக்கே வந்துவிட்டது. இந்தச் சாலையில் கார் ஒட்டிப் பழக்கப்பட்ட டிரைவராக இருந்தால் அதனிடமிருந்து எப்படித் தப்புவது என்று அவருக்குத் தெரிந்திருக்கும். அந்த டிரைவர் புதுசு போலிருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் காரை நிறுத்தி விட்டார். அவ்வளவுதான். வெறி பிடித்த காட்டு யானை பிளிறிக் கொண்டு வந்து அந்தக் காரை ஒரு மோது மோதி உருட்டிவிட்டது. பிறகு தலையை வைத்து ஒரு முட்டு முட்டியிருக்கிறது, கார் அப்பளம்போல 15சுங்கிப் போய்விட்டது. அதற்குள் காருக்குள் இருக்த

Page 62
116 ஈழநாட்டுப் பிரயாணம்.
வர்கள் தப்பித்தேன், பிழைத்தேன்" என்று எப்படியோ தலைதெறிக்க ஓடி மறைந்து போயிருக்கிருர்கள்’ என்ருர், இந்தச் சம்பவத்தைக் கேட்ட பிறகு அந்தச் சாலையில் பிரயாணம் செய்வதே பயமாயிருந்தது. எங்கே காட்டு யானைகள் வந்து காரைத் தாக்கி நசுக்கி விடுமோ என்று பயந்து கொண்டே இருந்தோம்
இந்தச் சமயத்தில் எதிரில் ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ‘என்ன ஐயா! இந்தச் சாலையில் காரில் சென்ருலே அபாயம் என்கிறீர்கள்! இதோ சைக்கிளில் போகிருரே ஒருத்தர்!" என்றேன்.
"இந்தச் சமயத்தில் செல்லலாம். அபாயமில்லை. இன்னும் கொஞ்சம் நேரம் ஆகிவிட்டால்தான் அபாயம். சூரியன் மறையும் சமயத்திலே தான் யானைகள் காட்டுக் குள்ளிருந்து வெளிக் கிளம்பும். சென்ற மாதத்தில் இந்தப் பக்கத்தில் சைக்கிளில் சென்ற ஒரு மனிதரைக் காட்டு யானை ஒன்று வளைத்து விட்டது. சைக்கிளில் சென்றவன் நடு நடுங்கிப் போய்க் கீழே விழுந்திருக்கிருன், சைக்கிளை யும் அவனையும் சேர்த்துப் பிடித்துத் தூக்கிப் பூமியில் அறைந்து, காலால் தேய்த்து விட்டது. சைக்கிளும் ஆளும் அப்படியே கூழ் கூழாகி விட்டார்கள். அந்தக் கண்ணரா வியை கேரிலே பார்க்கும் துர்ப்பாக்கியம் பெற்றவர்களில் கானும் ஒருவன்’ என்ருர்,
இந்தச் சம்பவத்தைக் கேட்கக் கேட்க மேலும் பயம் தான் அதிகமாயிற்று. பயத்தைப் போக்கிக் கொள்வதற் காகப் பேச்சை மாற்ற முயன்றேன். 'யானைகளைத் தவிரக் காட்டுக்குள் வேறு ஒன்றுமிருக்காதோ காடு என்ன அப்படி அடர்த்தியான காடா? இதில் யாரும் வேட்டைக் குச் செல்வதில்லையா?" என்று பல மாதிரி கேள்விகளைக் கேட்டு வைத்தேன். அவர் இந்தக் கதிர்காமக் காட்டில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னர்: காட்டுக்குள் குமாரசாமி
கிழக்கு மாகாணத்துச் சர்க்கார் அதிகாரியாக இருந்து வந்தார் குமாரசாமி அவர் பெரிய வேட்டைக்காரர், அவரிடம் உயர்ந்த வேட்டைத் துப்பாக்கிகள் இருந்தன. சளைக்காமல் இந்தப் பக்கத்தில் உள்ள எல்லாக் காட்டுக்

அருவி க்ொட்டும் அழகு ፳፲?
குள்ளும் எங்கு வேண்டுமானுலும் அலட்சியமாகப் போய் வருவார். இந்தக் காடெல்லாம் அவருக்குத் தண்ணிர் பட்ட பாடு. காட்டுப் பன்றி, மான் இவைகளைத் தான் அதிக மாகச் சுடுவார். அவர் புலிகளைக் கூடக் கொன்று இருப்ப தாகச் சொல்லிக் கொண்டார்கள். வெள்ளைக்காரர்கள் எல்லாம் அவருக்கு உற்ற நண்பர்கள். குமாரசாமிக்கு வேட்டைப் பைத்தியம் கன்ருகப் பிடித்திருந்தது. அடர்த் தியான காடுகள் எங்கிருந்தாலும் அங்கெல்லாம் அவரைப் A ITIT55 Guti O.
குமாரசாமி நல்ல உயரம். அதற்கு ஏற்ற பருமன். அவரிடம் எல்லாருக்குமே கல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. இந்தக் கதிர்காமக் காட்டுக்கு அவர் எத்தனையோ முறை வேட்டைக்கு வந்து வெற்றியுடன் திரும்பியிருக் கிருர், அதுபோல அன்றைய தினமும் வேட்டைக்குப் புறப்பட்டார்.
அன்று முழுவதும் காட்டுக்குள் அலைந்திருக்கிருர், ஒரு மிருகத்தைக்கூடச் சுடமுடியவில்லை போலிருக்கிறது. ஒரு மானே காட்டுப் பன்றியோ, கேவலம் ஒரு முயலோ அவர் கண்ணில் தென்பட வேண்டுமே. இல்லை. வேட்டை வெறி தலைக்கு ஏறிவிட்டது. காட்டுக்குள் மூலைக்கு மூலை புகுந்து அலைய ஆரம்பித்திருக்கிருர். பொழுது சாயும் வரையில் இப்படி அலைந்து திரிந்திருக்கிருர், மான்களும், பன்றிகளும், முயலும் செய்த தவப்பயனே, அல்லது குமாரசாமியின் துரதிர்ஷ்டமோ வேட்டை ஒன்றும் கிடைக்கவில்லை. அன்றெல்லாம் அலைந்த அலைச்சலும், களேப்பும், ஏமாற்றமும் குமாரசாமிக்குத்தானே தெரியும்? இருந்தாலும், ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு காட்டி லிருந்து வெளியே வர ஆரம்பித்தார். வழிதெரியவில்லை. இருட்டி விட்டது. அதன் பிறகும் சுற்றியிருக்கிருரர். பசித் தாங்காமல் தவித்திருக்கிருர், பயம் வேறு அவரைப் பற்றிக் கொண்டது. எங்கெங்கோ மூலை முடுக்கெல்லாம், ஓடி ஓடிப் பார்த்திருக்கிருர், எத்தனையோ முறை இந்தக் காட்டுக்குள் வந்து வேட்டையாடிப் பழக்கப்பட்ட்' குமாரசாமியினலேயே இந்தக் காட்டுக்குள்ளிருந்து வெளி யில் வர முடியவில்லை .

Page 63
118 ஈழநாட்டுப் பிரயாணம்,
வேட்டைக்குச் சென்ற கிழக்கு மாகாண ஏஜண்டு குமாரசாமியைக் காணுமல் போகவே, பல வேட்டைக் காரர்கள் காட்டுக்குள் புகுந்து மிகப் பிரகாசமான ஒளி வீசும் டார்ச் லைட்டைக் கொண்டு தேடினர்கள். கிடைக்க வில்லை. மிகப் பெரிய சர்க்கார் அதிகாரியல்லவா? ஊரே கலகலத்துப் போய்விட்டது. “குமாரசாமி காட்டில் அகப் பட்டுக் கொண்டார். அவர் திரும்பி வருவது என்பது சங்தேகம் தான்’ என்றெல்லாம் கவலையோடு பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
ராணுவத்தினர் உபயோகிக்கும் 'ஹெலிகாப்டர்’ விமானம் மூலம் காட்டுக்கு மேலே பறந்து மிகப் பிரகாச மான ஒளி வீசும் ‘சர்ச் லைட்டைப் போட்டுப் பார்த்துத் தேடினர்கள். ஒரு நாள் இரண்டு நாள் மூன்று 15ாள் என்று தேடினர்கள். பகலெல்லாம் இந்தக் காட்டில் நன்கு பழக்கப்பட்ட பல வேட்டைக்காரர்கள் காட்டுக்குள் புகுந்து தேடினர்கள்.
கடைசியாக, குமாரசாமி ஒரு இடத்தில் சோர்ந்து கிடந்ததைக் கண்டார்கள். மிகக் கஷ்டப்பட்டு அவரைக் காட்டுக்குள்ளிருந்து வெளியே கொண்டு வந்தார்கள். யார் செய்த புண்ணியமோ அன்று அவர் தப்பினர்.
அப்படிப்பட்ட காடு இந்தக் கதிர்காமக் காடு. குமார சாமி போன்ற பழக்கப்பட்ட வேட்டைக்காரர்களே வழி தவறி விடுகிருர்கள் ஏன்ருல் எப்படிப்பட்ட பயங்கர அடர்த்தியான காடாக இருக்கும் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினர்.
இந்தச் சம்பவத்தை அவர் சொல்லி முடிப்பதற்குள் கார் திசைமாருமை என்ற ஊரை நெருங்கிவிட்டது. அதற்குள் மாலை மறைந்து இருட்டி விட்டது. "நீங்கள் தான் இத்தனை நேரம் இந்தப் பாதையின் பயங்கரத்தைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தீர்களே! இதற்குமேல் பிரயாணம் செய்தால் அபாயம் தான். இங்கேயே “ரெஸ்ட் ஹவுஸ்ல் தங்கி விடுவதுதான் நல்லது' என்ருர் டிரைவர். எங்களுக்கு இருந்த மனநிலையில் டிரைவரே காரை ஓட்டத் தயாராயிருந்தாலும் காங்கள் மேலே பிரயாணம்

அருவி கொட்டும் அழகு 119
செய்யத் தயாராயில்லை. ஆனலும் அதைக் காண்பித்துக் கொள்ளாமல் "டிரைவர் மிகவும் களைத்துப் போய்விட் டார். இரவு இங்கேயே தங்கிக் காலையில் தான் போவோமே!” என்று சொல்லித் திசைமாருமையிலேயே தங்கினுேம்.
திசைமாருமை ஒய்வு விடுதி மிகப் பெரிய தடாகக் கரையில் அமைந்திருக்கிறது. ஒய்வு விடுதியைச் சுற்றி விசாலமான வராங்தாக்கள். வராந்தாக்களில் பிரம்பாலான சாய்வு நாற்காலிகள். தடாகக்கரை இருக்கும் திசையி லிருந்து குபுகுபுவென்று காற்று வீசுகிறது. வானத்தின் மூலை முடுக்குகளில் மேகங்கள் தனித்தனியே பிரிந்து
ருண்ட பயங்கரத்தைக் கலைத்து விட்டன.
பக்கத்து அறையிலிருந்து யாரோ உல்லாசமாக ராகங்களைப் பாடிக் கொண்டிருந்தார். வானத்தில் நோக் கின்றித் திரியும் சிறுசிறு மேகக் கூட்டங்களைப் போல் ராகங்கள் உருமாறிக் கொண்டே போயின.
துல்லியமான லேவானத்திலிருந்து சந்திரன் பால் நிலவைப் பொழிந்து கொண்டிருந்தான். மனத்தில் ஒரு அமைதியும் தென்பும் ஏற்பட்டிருந்தன. மறுநாள் காணப் போகும் கதிர் காமத்தையும், அங்கு கோயில் கொண்டிருக் கும் கந்தப்பெருமானையும் கற்பனைக் கண்ணுல் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
"என்ன, மானசீகமாகக் கதிர்காமத்தில் இருக்கிருர் போலிருக்கிறது. நாளைக்குத்தான் அங்கேயே போய்க் கதிர்வேலனைத் தரிசிக்கப் போகிருேமே” என்று சொல்லிக் கொண்டே வந்து அருகில் அமர்ந்தார் நண்பர்.
ஆமாம் இந்த இரவு கழிந்து விட்டால் போதும். நாளை தமிழ்த் தெய்வத்தைத் தரிசித்து விடலாம். தயவு செய்து ஒரே ஒரு இரவு பொறுத்துக் கொள்ளுங்கள்.

Page 64
12
இதுதானே கதிர்காமம் !
தமிழ் காட்டில் சென்ற சில ஆண்டுகளாகப் பலவகை
யான பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் குறிப்பாகச் சொல்ல வேண்டியது கடவுள் ஒழிப்புப் பிரசாரமாகும். கடவுளைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஜாபாலி முதலிய முனிபுங்கவர்களும், இரணியன் முதலான இராட்சதர்களும், இங்கர்ஸால் போன்ற உலகப் புகழ்பெற்ற அறிவாளிகளும் எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் கடவுளை யாரும் அசைக்க முடிய வில்லை. கல்லுப்பிள்ளையார் போல் அழுத்தமாக, ஆழமாக வேர்விட்டுக்கொண்டு கடவுள் மக்களின் இதயங்களில் அமர்ந்திருக்கிருர்,
தமிழ் காட்டில் உள்ள முருகனின் ஆறுபடை வீடு களான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, அழகர் கோயில், ஈழநாட்டில் உள்ள கதிர்காமம் ஆகிய வேலன் தலங்களில் உற்சவம் நடக்கும் போது ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் முருகனடி யார்கள் வருகிருர்கள். அவர்களில் ஆயிரக்கணக்கானேர் புஷ்பக் காவடி என்றும், பால் காவடி என்றும், மச்சக் காவடி என்றும் பலவிதமான காவடிகளை எடுத்து வருகிருர்கள். பட்டதாரிகள்; பணக்காரர்கள்; பாமரர் கள் : சைவ, வைஷ்ணவ, பெளத்த மதத்தைச் சேர்ந்தவர் கள் எல்லாரும் காவடி எடுத்து வருகிருர்கள். முருகனின் சங்கிதியில் காவடியுடன் ஆடிக் குதிக்கிருர்கள்
காத்திகப் பிரசாரங்கள் மக்கள் மனத்தில் பக்தி உணர்ச்சி பொங்கித் ததும்பிப் பூரணமாகப் பெருகி வெள்ளமாக ஒடுவதற்குத்தான் உதவி செய்கின்றன.
தமிழ் காட்டிலும் சரி, ஈழநாட்டிலும் சரி முருக னுடைய பக்தர்கள் ஏராளமாக இருக்கிருர்கள். அவர்கள்

இதுதானே கதிர்காமம் 1 2f
நீண்ட வழிப் பிரயாணம் செய்யும்போதெல்லாம் கலியுகத் தின் கடவுளான கதிர்வேலனை மறப்பதில்லை.
* கதிர்காமக் கந்தன்
கைபிடித்து வருவான் ” என்ற மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு போவார்கள். வனப்பிரதேசங்களில் பயங்கர மிருகங்கள் நிறைந்த காட்டுவழிகளில் தனிமையில் பிரயாணம் செய்யும்போது கந்தனடியார்கள் இந்தத் திரு மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு போவார்கள்.
* நம்பினேர் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு ' என்று கவியரசர் பாரதியார் பாடியுள்ளபடி முருகனிடம் கம்பிக்கை வைத்திருப்பவர்களுக்குத் தமிழ்த் தெய்வமான முருகனே கைப்பிடித்து வருவான் என்று சொல்லப்படு கிறது. அதற்கு எத்தனை எத்தனையோ கம்ப முடியாத பல அதிசய சம்பவங்களை யெல்லாம் முருகனடியார்கள் எடுத்துக் காட்டுகிருர்கள்.
இவ்வளவு சக்தியுள்ள தெய்வம், தமிழ்க் கடவுள் கையிலே வேலேந்தி நிற்கும் கம்பீரமான காட்சியை மனத் தில் நினைத்துக் கொள்ளுங்கள். அந்த அற்புதக் காட்சி,
* சுற்றி நில்லாதே போ - பகையே துள்ளி வருகுது வேல்!” என்று ஈழநாட்டுக்கு அபயம் அளிப்பதுபோலத் தோன் றும். ஆம், அப்படித்தான் கதிர்காமத்தில் கதிர்வேலன் காட்சி அளிக்கிருன், கதிர்காமக் கடவுள் குடிகொண் டிருப்பதால்தானே என்னவோ ஈழத் தீவே வேல்வடிவத் திலே காட்சி தருகிறது. கதிர்காமத்தில் இருந்தபோது, தமிழ்க் கடவுளான முருகன் தமிழ் மக்களுக்குத் தன் னுடைய பக்தர்களுக்கு அபயம் அளிப்பதற்காகக் கையில் வேலேந்தி நிற்பதுபோன்ற மன உணர்ச்சி ஏற்படுகிறது. கதிர்காமக் கடவுளின் சக்கிதியில் நிற்கும்போது, அங்கு கின்று "ஓ! முருகா!' என்று நினைத்தவுடன் * மயிலேறி அயிலெடுத்துவரும் செவ்வேள் ” நம் முன் காட்சி தருகிருன்,

Page 65
122 ஈழ5ாட்டுப் பிரயாணம்
இந்தப் புண்ணிய பூமியான கதிர்காமத்துக்குச் செல்வ தற்குத்தான் திசை மாருமையிலிருந்து அதிகாலையிலேயே புறப்பட்டோம், இங்கிருந்து கதிர்காமம் சுமார் முப்பது கிமிடப் பிரயாணம்தான். அதிகமாக இருந்தால் பன்னி ரண்டு மைல் இருக்கும். காட்டுக்கு மத்தியில் உள்ள சாலையில்தான் கார் போகிறது. இருபுறமும் இப்பொழுது காடுகளை அழித்து, சேனைப் பயிர் வைத்திருக்கிருர்கள். ஒவ்வொரு தோட்டத்திலும் நட்ட நடுவில் ஒரு உயரமான கம்பத்தின் மீது ஒரு குடிசை இருக்கிறது. அந்தக் கம்பத்தைச் சுற்றி இரவில் தீ வளர்த்திருப்பார்களாம்.
* ஏன் அப்படித் தீ வளர்க்கிருர்கள்?"
" இது யானைகள் வாழும் காடு. இரவு நேரத்தில் சேனைக்கிழங்கைச் சாப்பிடுவதற்காகக் காட்டு யானைகள் வரும். அதை விரட்டுவதற்குத் தோட்டத்தின் மத்தியிலே உயரமான கம்பத்தின் உச்சியில் அமைத்திருக்கும் குடி சையில் இருக்கும் காவற்காரன் ஏதாவது சத்தம் செய் வான். அப்பொழுது காட்டு யானை அந்தக் குடிசையை மோதிக் காவற்காரனைக் கொன்று விடாமல் இருப்பதற் காகக் குடிசை கட்டியிருக்கும் கம்பத்தைச் சுற்றித் தீ வளர்த்து வருகிருர்கள்."
அடாடா! மனிதன் ஒரு சாண் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்காக என்னென்ன அபாயமான முறையிலெல் லாம் வாழ்க்கையை கடத்த வேண்டி யிருக்கிறது!
இவ்வாறு கதிர்காமத்துக்குச் செல்லும் வழி நெடுகி லும் இருக்கிறது. இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே கதிர்காமத்துக்குச் செல்வவற்கு முன் கதிர்காமத் தலத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
来 米 米
ஈழநாட்டின் தென்பகுதியில் ஊவா மாகாணத்தில் தீயனகம என்னும் காட்டில் இருக்கிறது கதிர்காமம். மாணிக்கக் கங்கைக் கரையில் உள்ள சிற்றுாருக்குத்தான் கதிர்காமம் என்று பெயர். வேலாயுதம்போல முக்கோண வடிவமுள்ள இந்தச் சிற்றுாரில் கதிர்காமக் கடவுளான கதிர்வேலன் கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கிருர்,

இதுதானே கதிர்காமம் l 123,
கதிர்காமன் சங்கிதி தெற்கு நோக்கியும் வள்ளியம்மன் சங்கிதி வடக்கு நோக்கியும் இருக்கிறது. தம்முடைய இளம் மனைவி வள்ளியை எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பதற்காகத்தான் கதிர்காமன் கோயிலை இப்படி அமைத்துக் கொண்டாரோ என்னவோ! இவர்களுடைய இந்தக் காதலுக்கு இடையூறு செய்ய விரும்பாமல் தெய்வ யானை தமது கோயிலைக் கிழக்கு நோக்கி அமைத்துக் கொண்டிருக்கிருர் போலும் !
"முருகக் கடவுள் எல்லா இடத்தையும் விட்டுக் கதிர் காமத்துக்கு ஏன் வந்தார்?"
குரபன்மனைச் சங்கரிக்கும் நோக்கத்துடன் முருகன் புறப்பட்டபொழுது கதிர்காமத்தை அடைந்து மாணிக்கக் கங்கையின் கரையில் கூடாரம் அமைத்திருந்தார். பின்னர் குரபன்மனை வென்று வாகை குடி மீண்டபொழுது கதிர் காமக் குன்றில் கவகங்கா தீர்த்தம் உண்டாக்கிச் சிந்தாமணி ஆலயத்தில் தேவர்கள் துதிக்க வள்ளி தெய்வயானையுடன் வீற்றிருக்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
சீதாபிராட்டியைத் தேடி இலங்கைக்கு வந்த அநு மான் வெற்றி வேலனன கதிர்காமப் பெருமானை வணங்கிச் சென்றதாகச் சில முருக பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த விவரங்களை உடன் வந்த நண்பர் கூறிக் கொண்டிருக்கும்போது சாலை திரும்பியது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் "இதோ கதிர்காமம் வந்துவிட்டது!" என்ருர் நண்பர்.
கதிர்காமம் என்ருல் எப்படி எப்படி எல்லாமோ இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டிருந்தேன். கொஞ்ச தூரத்துக்கு அப்பாலேயே கதிர்காமத் தேவனின் ஆலயத்தின் கோபுர தரிசனம் கிடைக்கும், பிறகு கோயி லும் பெரிய மதிள் சுவரும் தெரியும். கோயிலைச் சுற்றிப் பெரிய ஊர் இருக்கும் என்றெல்லாம் எண்ணிக் கொண் டிருக்தேன். நண்பர் ஏதோ ஒரு சிறு தோப்பைக் காண் பித்து, 'இதுதான் கதிர்காமம் 1’ என்றதும் எனக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. " இதுதானே, கதிர்காமம்!” என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டேன்.

Page 66
124 ஈழநாட்டுப் பிரயாணம்
வண்டி மாணிக்கக் கங்கையின் கரையில் வந்து நின் றது. வட இந்தியாவில் உள்ள கங்கை நதியையும், தமிழ் காட்டின் காவேரி நதியையும் பார்த்துப் பழகியவர்களுக்கு மாணிக்கக் கங்கையைப் பார்த்ததும் ஒன்றும் மலைப்புத் தோன்ருது. ஆனல் திகைப்புத்தான் தோன்றும். "இதுதான் மாணிக்கக் கங்கையோ !” என்று எண்ணத் தோன்றும், எல்லாம் ஒரு கண நேரம்தான். பிறகு மனத்தில் நம்மை அறியாமல் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. மாணிக்கக் கங்கைக் கரையில் அடர்ந்து படர்ந்து இருக்கும் மருத மரங்களின் அழகும் சல சல என்ற சத்தத்துடன் மாணிக்கக் கங்கை யின் ஒரு ஓரத்தில் பளிங்கு போன்ற தண்ணீர் ஓடிவரும் கோலமும் நம்மைச் கவர்ந்து விடுகின்றன.
அந்தத் தண்ணிரில் அடிக்கடி ஏதோ சலசலப்பு ஏற்படுகிறது. திடீர் திடீர் என்று தண்ணீர் வெண் முத்துக்கள் போல் சிதறித் தெறிக்கிறது. அது என்ன என்று ஆவலுடன் பார்க்கிருேம். பார்த்தபடியே நிற் கிருேம். மீன்கள் கூட்டம் கூட்டமாகத் திரிதின்றன. நம்மைப் டார்த்தவுடன் காதலோடு ஓடிவருகின்றன. மாணிக்கக் கங்கையில் கதிர்காமக் கடவுளின் சக்ரிதியில் மீனுய் இருப்பதைவிட பாக்கியம் வேறு என்ன வேண்டும். அவைகள் எல்லாம் உண்மை மீன்களோ? இல்லை மீன் உருவில் இருக்கும்முருக பக்தர்களா? யார் கண்டார்கள்? 'திருவேங்கடச் சுனையில் மீணுய்ப் பிறக்கும் விதியுடை யேன் ஆவேனே!” என்று ஆழ்வார் இறைவனிடம் உள்ளம் உருகி இறைஞ்சவில்லையா?
இந்த மீன்களைப் பார்த்தவுடனேயே அவை மீது ஒரு அன்பும் இரக்கமும் 15மக்கு ஏற்பட்டு விடுகின்றன. நாம் அருகிலிருக்கும் கடைக்குச் சென்று ஒரு ரொட்டியை வாங்கி வந்து அந்த மீன் கூட்டத்துக்குக் கொடுக்கிருேம். கண்மூடிக் கண் திறக்கும் நேரத்துக்குள் மீன் கூட்டம் ரொட்டியைக் காலி செய்து விடுகிறது. இன்னும் ரொட்டி கிடைக்குமா என்று அந்த மீன்கள் கம்மை ஆவலுடன் பார்க்கின்றன. அவைகளுக்கு ரொட்டி வாங்கிப் போடவா நாம் கதிர்காமத்துக்கு வந்தோம். இல்லையே! -

இதுதானே கதிர்காமம் 125
நான்குபுறத்திலிருந்தும் வரும் " அரோகரா’ என்ற மந்திரச் சத்தம் நாம் வந்த கடமையை நினைவூட்டுகிறது. நம்மையும் அறியாமல் 'அரோகரா !” என்று சொல் கிருேம், முழங்கால் அளவுக்குத் தண்ணிர் ஒடும் "ஜில்" லென்ற மாணிக்கக் கங்கையில் ரோடுகிருேம். நீராடி எழுந்ததும் நம்முடைய உடல் இலேசாகி விட்டதுபோன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. பாப மூட்டைகள் கரைந்து விட்டனவோ என்னவோ! மாசு படிந்த உள்ளத்தின் மாசு நீங்கி இதயம் மாணிக்கம் போலாகி விட்டதோ என்னவோ? இறைவன் திருவடியைத் தரிசிப்பதற்கு வேண்டிய மனத் தூய்மையைப் பெற்று விட்டது போன்ற மன நிலை உண் டாகி விடுகிறது. கதிர்காமத்து மாணிக்கக் கங்கையில் நீராடியவுடன் மனசில் இதுவரை இல்லாத ஒரு விசாலம் ஏற்பட்டு வருவதை உணர முடிகிறது. அப்பொழுதிருந்த மன நிலையை எழுத்திலே எழுதிக் காட்டுதல் அவ்வளவு எளிதல்ல. ஒரு முறை கதிர்காமத்துக்குச் சென்று மாணிக் கக் கங்கையில் ரோடி, பக்தி வெள்ளத்தில் பரவசமுற்று, * அரோகரா’ என்ற திரு மந்திரத்தைச் சொல்லிப் பாருங் கள். ஏதோ இனக்தெரியாத ஒரு பேரின்ப சுகமே கிடைத்துவிட்டது போன்ற மகிழ்ச்சி ஏற்படும்.
மாணிக்கக் கங்கையில் நீராடியவுடன் அதன்மீது கட்டப்பட்டிருக்கும் பாலத்தைக் கடந்து கதிர்காமத்துக் குள்ளே செல்கிருேம். கதிர்காமத்து வீதியில் செல்லும் போதே தூரத்தில் தெரியும் ஒடு வேய்ந்த ஒரு சிறு மண்ட பத்தைக் காண்பித்து, "இதுதான் கதிர்காமக் கோயில் ” என்று கூறிவிட்டு 'அரோகரா !” என்று பக்திப் பெருக் குடன் கன்னத்தில் போட்டுக் கொண்டார் நண்பர்.
கதிர்காமத்துக்குச் செல்வோர் விண்ணை முட்டும் கோபுரத்தின் அழகைக் கண்டு களிக்கலாம் என்றே, வீதி யின் அழகையும் ஆாய்மையையும் கண்டு வியக்கலாம் என்ருே, கர்ப்பூர தீப ஆரத்தின் ஒளியைக் கண்டு மயங்க லாமென்ருே, வரிசை வரிசையாக இருக்கும் கடை வரிசை களையும், விதம் விதமான ஆண் பெண் கூட்டத்தையும் பார்த்து மகிழலாம் என்றே எண்ணிக் கொண்டு சென்ருல் உண்மையிலேயே ஏமாற்றம் அடைவார்கள். உண்மை

Page 67
126 ஈழநாட்டுப் பிரயாணம்
பக்தியுடன்தான் செல்ல வேண்டும். கதிர்காமக் கடவுளை தரிசிக்கப் போகிருேம் என்ற உணர்ச்சியுடன்தான் செல்ல வேண்டும். இந்த உணர்ச்சியில் தான் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் ஆண்டு தோறும் இங்கு வருகின்றனர்.
இந்தப் புனிதமான எண்ணத்துடனேயே கதிர்காமக் கடவுளின் ஆலயத்துக்குச் செல்வோம். போகும்போதே இந்தத் திருக்கோயிலின் அற்புத மகிமையையும் சிறிது நினைவுபடுத்திக் கொள்வோம்.
முன்பெல்லாம் அதாவது கதிர்காமத் தலத்துக்குச் சாலை வசதிகள் இல்லாத காலத்தில் நினைத்தபோது யாரும் கதிர்காமத்துக்குச் செல்லுவதில்லை. கதிர்காமத்துக்குச் செல்ல வேண்டும் என்று முருகனைப் பிரார்த்தித்துப் பல ஆண்டுகள் கோன் பிருப்பார்கள். பக்தனின் பிரார்த்த னேக்கு இரங்கிக் கதிர்காமன் கனவில் தோன்றுவான். "பக்தா ! நீ கதிர்காம யாத்திரை செய்யலாம் !" என்று உத்தரவு கொடுப்பான். இதன் பின்னர்தான் பக்தர்கள் கதிர்காம யாத்திரை செய்வார்கள். அவ்வாறு கதிர்க்காமக் கடவுளின் உத்தரவு பெருமல் சென்ருல் கொடிய மிருகங் கள் நிறைந்த காட்டு வழியில் பல இன்னல்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்ற நம்பிக்கை.
கதிர்காமனின் சக்கிதியில் சாதி மதபேதம் ஒன்றும் இல்லை. ஈழ காட்டில் இதர இடங்களில் தீண்டாமை கடுமையாக அநுசரிக்கப்பட்டு வரும்போது கதிர்காமக் கடவுளின் சங்கிதியில் மட்டும் அந்தக் கொடுமை இல்லை. இது பன்னெடுங்காலமாகவே இங்கு இருந்து வருகிறது. காரணம் கடவுளின் உண்மைத் தத்துவத்தை உணர்ந்தவர் களே கதிர்காம யாத்திரையை மேற்கொண்டு வந்தார்கள். எல்லாரும் கடவுளின் மக்கள் என்ற எண்ணம் கொண்ட வர்கள் மட்டுமே கதிர்வேலனைத் தரிசிக்கச் சென்ருர்கள். பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக அனுபவித்த பெரியோர் கள் மட்டும் ஆண்டவனை நாடிச் சென்ருர்கள். 'அரோ கரா !” என்ற திருமந்திரத்தை உச்சரிப்பதில் அவர்கள் உண்மையான ஆனந்தத்தை அடைந்தார்கள். எந்தப் பொருளிலும் அவர்கள் தமிழ்க் கடவுளைக் கண்டு மகிழ்க்

இதுதானுே கதிர்காமம் ! 12?
தார்கள். அதனுல் தமிழ்த் தெய்வத்தின் சங்கிதியில் கதிர் வேலனின் முன்னுல் சாதிமதம் என்னும் பேய்கள் தூர விலகி ஒதுங்கி நின்று வந்திருக்கின்றன.
இத்தகைய சர்வமத சமரச மனப்பான்மைக்குச் சாட்சி யாக விளங்குவதுதான் கதிர்காமக் கோயில். ஆனல் இந்தக் கோயிலுக்குள் விக்கிரகம் இல்லை. கர்ப்பக்கிருக மும் சிறு மண்டபமும் கொண்ட இந்தச் சிறு கோயிலுக்குள் கர்ப்பக்கிருக வாசலில் திரையிடப்பட்டிருக்கிறது. கதிர் காமத்தில் ஆறுமுகப்பெருமான் சிறியதொரு கோயிலில் திரை மறைவில்தான் வீற்றிருக்கிருர், திரை மறைவில் வீற்றிருந்தே திசையனைத்தையும் ஆண்டு வருகிருர் தீந்தமிழ்க் கடவுளான முருகன்.
நமது கோயில்களில் இருப்பது போலவே இங்கும் பூசை செய்பவர்கள் இருக்கிருர்கள். இவர்களைக் கப்புராளை மார் என்று சொல்லுகிருர்கள். கப்புராளைமார் பூசை செய் யும் முறை நமது கோயில் சம்பிரதாயங்களுக்கும் சடங்கு களுக்கும் மாறுபட்டவைகளாக இருக்கின்றன. வள்ளி மணுளணுக்குப் பூசை நிகழும்போது அவனை வரவேற்பதற் காகப் பெண்கள் ஆரத்தி எடுக்கிருர்கள். கப்புராளை மார் தம் வாயை மஞ்சள் துணியினல் கட்டிக் கொண்டு, நிவே தனத்துக்கு வேண்டிய அமுதைக் காவித் துணியால் மூடிக் கொண்டு உள்ளே செல்கிருரர். பிறகு வெளியே வந்து திரைச்சிலைக்கு முன்பாக தலைக்குமேல் கைகுவித்து நின்று வழிபாடியற்றுகின்றனர். இவர்கள் எல்லாரும் சிங்களவர் கள்தான். தமிழ்த் தெய்வமான முருகனுக்குப் பூசை செய்யும் இவர்களுக்குத் தெய்வத் தமிழின் இனிமை தெரியாதது விந்தையே!
சாதாரணமாக, பக்தர்கள் கதிர்காமக் கடவுளின் கோயிலுக்குப் போகும்போது தேங்காய் பழம் ஊதுவத்தி முதலியவைகள் கொண்டு செல்கின்றனர். அவைகளைத் தட்டில் வைத்துக் கப்புராளைமாரிடம் கொடுக்கின்றனர். கப்புராளைமார் சட்டை, தலைப்பாகை எல்லாம் அணிந்து கொண்டுதான் இருக்கின்றனர். இப்பொழுது அவர் தம் வாயைத் துணியினுல் கட்டிக் கொள்வதில்லை. பக்தர்கள்

Page 68
128 ஈழநாட்டுப் பிரயாணம்
கொடுக்கும் தேங்காய், பழத் தட்டுகளைப் பெற்றுக் கொண்டு கர்ப்பக் கிருகத்துக்கு முன்னல் இருக்கும் திரையை விலக்கிக் கொண்டு உள்ளே போகிருர், உள் ளிருந்து தேங்காய் உடைக்கும் ஓசையும், மணி அடிக்கும் நாதமும் கேட்கின்றன. இவையே நம் செவியில் தேன் மாரி பொழிகின்றன. "ஓசை ஒலி யெலாம் ஆணுய் நீயே ’ என்ற தேவாரத்தின் பொருள் விளங்கி ஆனந்த பரவசம் அடைகிருேம் ; மெய்யுருகி நிற்கிருேம்.
மண்டபத்தில் எரியும் ஊதுவத்தியின் மணமும் சாம்பி ராணி வாசனையும் கம்மென்று வருகின்றன. சற்று நேரத் துக்கெல்லாம் கர்ப்பக் கிருகத்துக்குள் இருந்து கப்புராளை மார் தேங்காய், பழத்தட்டுடன் வெளியில் வருகிருர் பக்தர் களுக்கு விபூதி வழங்குகிருர், இந்த விபூதி காம் இதர கோயிலில் பெறும் விபூதி போன்றதன்று. கதிர்காமத் துக்கே உரிய தனிச் சிறப்பும் உரிமையும் பெருமையும் உடைய விபூதியாகும். இதர சிவஸ்தலங்களில் பசுஞ் சாணத்திலிருந்து விபூதி தயாரித்து அளிக்கின்றனர். ஆணுல் கதிர்காமத்தில் வழங்கும் திருநீறு இயற்கையாக விளைந்த திருறுே. கதிர் காமக் கோயிலுக்கு அருகில் இருக் கும் விபூதி மலையிலிருந்தே எடுத்து வரும் புனிதமான திருருேகும்.
இந்தத் திருநீற்றைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து செல்வதற்குத் திரும்புகிருேம். கப்புராளேமார் நம்மை ஒரு மாதிரிபார்க்கிருர், நம்முடைய சட்டைப் பையைப் பார்க் கிருர். எல்லாக் கோயிலுக்கும் உள்ள பொதுவான சம்பிர தாயம் ஒன்று நமக்கு நினைவுக்கு வந்துவிடுகிறது. சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து அவர் கையில் வைக் கிருேம். அவர் முகம் மலருகிறது. கமது முகத்திலும் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்டு கோயிலுக்கு வெளி யில் வந்து சேர்கிருேம்.
கதிர்காமக் கோயிலில் விசேஷமான திருவிழா வருடத் துக்கு நான்கு முறை கடக்குமாம். முதல் திருவிழா,
சித்திரை வருடப்பிறப்பு தினத்தன்று நடைபெறும். இரண் டாவது திருவிழா கந்தசாமியார் வள்ளி நாச்சியாரை மணம்

அருவி கொட்டும் அழகு 18
சென்று கொண்டிருந்தன. துதிக்கைகளில் மிகப் பெரிய மரத்தைத் தூக்கிக் கொண்டு சென்றன. "இவைகள் எங்கே செல்கின்றன?” “சற்றுத் தூரத்தில் நிற்கும் லாரியை நோக்கிச் செல் கின்றன." ●
"அங்கு போய் என்ன செய்யும்?" "தங்கள் துதிக்கைகளில் தூக்கிக் கொண்டு செல்லும் மரங்களை லாரியில் அடுக்கும்."
"அப்படியா?” **ஆமாம்?"
ஈழநாட்டுச் சாலைகளில் யானைகள் தென்படுவது சர்வ சாதாரணம். அவைகள் மனிதர்களைப் போல எல்லாவித மான வேலைகளையும் செய்கின்றன. அவைகளுக்குப் பக்கத் தில் மனிதன் செல்லும் போது அதன் காலில் பாதி உயரத் துக்குக் கூட எட்டாமல் நிற்கிருன் இந்தச் சின்னஞ்சிறு மனிதன் சொன்னதை எல்லாம் ஒழுங்காகக் கேட்கிறது மிகப் பெரிய அந்த யானைக் கூட்டம்.
யானைக் கூட்டத்தையும் அதன் நடுவில் துளிபோல கிற்கும் மனிதனையும் பார்க்கும்போது எனக்கு மனிதன் முதன் முதலில் யானையைப் பார்த்தபோது என்ன நினைத் திருப்பான் என்று எண்ணத் தோன்றியது.
தொடக்கத்திலிருக்தே மனிதன் இயற்கையின் கட்டுப் பாடுகளை எதிர்த்துப் பல வழிகளில் தன் கொடியை உயர்த்திப் பிடித்திருக்கிருன். எண்சாண் உயரமுள்ள மனிதன் இன்றளவும் இந்தப் பிடிவாதத்திலிருந்து தளரா மல் உழைத்து வருகிருன். அவனுடைய அந்த இடை விடாத உழைப்பு காரணமாகத்தான் மண்ணையும், விண்ணை யும், கடலையும் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ்கொண்டு வர முடிந்தது.
காட்டில் வாழ்ந்த மனிதனின் கண்ணில் முதலில் இந்த யானை பட்டிருக்கும். பயங்கர உருவத்துடன் இருந்த இந்தக் காட்டு யானை, உபத்திரவமே உருவெடுத்த பிரும் மாண்டமான ஐந்து, இடி குமுறும் புயல் மேகம் போன்ற
8

Page 69
114 ஈழநாட்டுப் பிரயாணம்
தாக அவனைத் துன்புறுத்தியிருக்கும். மலை போன்ற அதன் கரிய பெரிய உருவத்தைப் பார்த்து மனிதன் பயந்திருப் பான? மாட்டான். அலட்சியமாகச் சிரித்திருப்பான். கட்டுக்கடங்காத இந்த மாமிச பருவதம் தன் துதிக்கை யைத் துரக்கிக் கொண்டு பிளிறுவதைப் பார்த்து எள்ளி நகையாடி இருப்பான். 'உன்னை அடக்கி உன்னிடமே வேலை வாங்குகிறேன் பார்" என்று சபதம் கூறியிருப் பான். தன் சபதத்தை நிறைவேற்றுவதற்குள், யானையை அடக்குவதற்குள் மனிதன் எத்தனை கஷ்டப்பட்டிருப் பான்! நீண்ட நெடுங்காலம் அவன் எண்ணம் கைகூடாமல் போயிருக்கலாம். எத்தனையோ தோல்விகளும், தொல்லை களும் மனிதனுக்கு ஏற்பட்டிருக்கும். எண்ணற்ற மனித உயிர்கள் இந்த முயற்சிக்குப் பலியாகியிருக்கும். ஆனல் மனிதன் துன்பத்தைக் கண்டு பின்னடையவில்லை; தனக்கு ஏற்பட்ட துயரத்துக்காக அஞ்சி அவன் களேத்துவிட வில்லை. அவைகளை எல்லாம் தாண்டி முன்னேறிக் கொண்டே இருந்தான். ஒருநாள் மனிதன் கஜேக்திரனை, யானையை அடக்கி விட்டான். அதனிடமே வேலை வாங்கு வதற்குக் கற்றுக் கொண்டான்.
காட்டு வாழ்க்கையில் இருந்த மனிதன் முதன் முதலில் மிகப் பெரிய மிருகமான யானையை வென்று வெற்றி பெற்று விட்டதால், தன் வெற்றிப் பொருளான யானை யையே தெய்வமாக வழிபட ஆரம்பித்தானே என்னவோ! அப்பொழுதிருந்துதான் மனிதன், தான் ஏதாவது ஒரு காரியம் செய்ய ஆரம்பித்தால் அது விக்கினம் இல்லாமல் நிறைவேறுவதற்காக வேழ முகத்தவனுன விநாயகனை , சித்தி தரும் கடவுளாகப் போற்றி வணங்குகிருன் போலும்!
கதிர்காமத்துக்குச் செல்வதற்கு முன்னல், தீந்தமிழ்த் தெய்வமாகிய சுப்பிரமணியக் கடவுளைத் தரிசிப்பதற்கு முன்னுல் வழி நெடுக விநாயகர்களின் தரிசனம் வேண்டிய மட்டும் கிடைத்துக்கொண்டே வந்தது. பயங்கரப் பாதை
ஈழநாட்டுக் சாலைகளில் பிரயாணம் செய்யும்போது நாம் இந்த உலகில் பிரயாணம் செய்வதாகவே தோன்ருது,

அருவி கொட்டும் அழகு 115
ஏதோ கதைகளிலே, காவியங்களிலே வர்ணித்திருக்கும் கறுப்புச் சலவைக்கல் தளம்போட்ட சாலையில் பிரயாணம் செய்வதாகவே தோன்றும். சாலைகளில் அப்பழுக்கு ஒன்றும் காணமுடியாது. வெள்ளவாயாவிலிருந்து கதிர் காமத்துக்குச் செல்லும் சாலையில் இரண்டு புறத்திலும் பசுமைக் காட்சி. சில இடங்களில் பசிய மரங்கள், செடி கள் நிறைந்த அடர்த்தியான காடுகள். கண்ணுக்கெட்டிய துாரம் வனம் வனம் வனுந்திரம்தான்! இந்தக் காட்டுக்கு மத்தியில் எப்படித்தான் சாலைகள் போட்டார்களோ! இப்பொழுது இந்தச் சாலையில் பட்டப் பகலில் பிரயாணம் செய்யும்போதே பயமாக இருக்கிறதென்ருல், சாலை போடும் போது எப்படிப்பட்ட அபாயத்தை எல்லாம் பொருட் படுத்தாமல் அவர்கள் சாலை போட்டிருக்க வேண்டும்,
'கதிர்காமக் காட்டுக்கு மத்தியில் செல்லும் இந்தச் சாலையில் இப்பொழுதுகூடச் சில சமயங்களில் காட்டு யானைகள் வந்து குறுக்கே நிற்கும்” என்ருர் நண்பர்.
'காட்டு யானையா? சாலையில் குறுக்கே வந்து நிற்குமா? அப்படியானல் அதைப் பார்க்க வேண்டும்" என்றேன்.
*நல்ல ஆசை உங்களுக்கு வழியில் பழக்கப்பட்ட யானைகளைப் பார்த்தீர்களே அவை போல் சாதுவாக வந்து சாலையில் நிற்கும் என்று நினைக்கிறீர்களா?”
"பின் எப்படி நிற்கும் ?" "சென்ற ஆண்டு இப்படித்தான் சில பேர் கதிர்காமத் துக்குப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். திடீ ரென்று காட்டு யானை ஒன்று குறுக்கே வந்துவிட்ட்து. இந்தச் சாலையில் கார் ஒட்டிப் பழக்கப்பட்ட டிரைவராக இருந்தால் அதனிடமிருந்து எப்படித் தப்புவது என்று அவருக்குத் தெரிந்திருக்கும். அந்த டிரைவர் புதுசு போலிருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் காரை நிறுத்தி விட்டார். அவ்வளவுதான். வெறி பிடித்த காட்டு யானை பிளிறிக் கொண்டு வந்து அந்தக் காரை ஒரு மோது மோதி உருட்டிவிட்டது. பிறகு தலையை வைத்து ஒரு முட்டு முட்டியிருக்கிறது, கார் அப்பளம்போல நசுங்கிப் போய்விட்டது. அதற்குள் காருக்குள் இருக்த

Page 70
ஈழநாட்டுப் பிரயாணம்
வர்கள் தப்பித்தேன், பிழைத்தேன்" என்று எப்படியோ தலைதெறிக்க ஓடி மறைந்து போயிருக்கிருர்கள்’ என்ருர். இந்தச் சம்பவத்தைக் கேட்ட பிறகு அந்தச் சாலையில் பிரயாணம் செய்வதே பயமாயிருந்தது. எங்கே காட்டு யானைகள் வந்து காரைத் தாக்கி நசுக்கி விடுமோ என்று பயந்து கொண்டே இருந்தோம்
இந்தச் சமயத்தில் எதிரில் ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். 'என்ன ஐயா! இந்தச் சாலையில் காரில் சென்ருலே அபாயம் என்கிறீர்கள்! இதோ சைக்கிளில் போகிருரே ஒருத்தர்!" என்றேன்.
"இந்தச் சமயத்தில் செல்லலாம். அபாயமில்லை. இன்னும் கொஞ்சம் நேரம் ஆகிவிட்டால்தான் அபாயம். சூரியன் மறையும் சமயத்திலே தான் யானைகள் காட்டுக் குள்ளிருந்து வெளிக் கிளம்பும். சென்ற மாதத்தில் இந்தப் பக்கத்தில் சைக்கிளில் சென்ற ஒரு மனிதரைக் காட்டு யானை ஒன்று வளைத்து விட்டது. சைக்கிளில் சென்றவன் நடு நடுங்கிப் போய்க் கீழே விழுந்திருக்கிருன், சைக்கிளை யும் அவனையும் சேர்த்துப் பிடித்துத் தூக்கிப் பூமியில் அறைந்து, காலால் தேய்த்து விட்டது. சைக்கிளும் ஆளும் அப்படியே கூழ் கூழாகி விட்டார்கள். அந்தக் கண்ண ரா வியை கேரிலே பார்க்கும் துர்ப்பாக்கியம் பெற்றவர்களில் நானும் ஒருவன்' என்றர்.
இந்தச் சம்பவத்தைக் கேட்கக் கேட்க மேலும் பயம் தான் அதிகமாயிற்று. பயத்தைப் போக்கிக் கொள்வதற் காகப் பேச்சை மாற்ற முயன்றேன். 'யானைகளைத் தவிரக் காட்டுக்குள் வேறு ஒன்றுமிருக்காதோ! காடு என்ன அப்படி அடர்த்தியான காடா? இதில் யாரும் வேட்டைக் குச் செல்வதில்லையா?” என்று பல மாதிரி கேள்விகளைக் கேட்டு வைத்தேன். அவர் இந்தக் கதிர்காமக் காட்டில் கடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னர்: காட்டுக்குள் குமாரசாமி
கிழக்கு மாகாணத்துச் சர்க்கார் அதிகாரியாக இருந்து வந்தார் குமாரசாமி அவர் பெரிய வேட்டைக்காரர், அவரிடம் உயர்ந்த வேட்டைத் துப்பாக்கிகள் இருந்தன. சளைக்காமல் இந்தப் பக்கத்தில் உள்ள எல்லாக் காட்டுக்

அருவி கொட்டும் அழகு it?
குள்ளும் எங்கு வேண்டுமானுலும் அலட்சியமாகப் போய் வருவார். இந்தக் காடெல்லாம் அவருக்குத் தண்ணிர் பட்ட பாடு. காட்டுப் பன்றி, மான் இவைகளைத் தான் அதிக மாகச் சுடுவார். அவர் புலிகளைக் கூடக் கொன்று இருப்ப தாகச் சொல்லிக் கொண்டார்கள். வெள்ளைக்காரர்கள் எல்லாம் அவருக்கு உற்ற நண்பர்கள். குமாரசாமிக்கு வேட்டைப் பைத்தியம் நன்ருகப் பிடித்திருந்தது. அடர்த் தியான காடுகள் எங்கிருந்தாலும் அங்கெல்லாம் அவரைப் பார்க்கலாம்.
குமாரசாமி 15ல்ல உயரம், அதற்கு ஏற்ற பருமன். அவரிடம் எல்லாருக்குமே நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. இந்தக் கதிர்காமக் காட்டுக்கு அவர் எத்தனையோ முறை வேட்டைக்கு வந்து வெற்றியுடன் திரும்பியிருக் கிருர், அதுபோல அன்றைய தினமும் வேட்டைக்குப் புறப்பட்டார்.
அன்று முழுவதும் காட்டுக்குள் அலைந்திருக்கிருர், ஒரு மிருகத்தைக்கூடச் சுடமுடியவில்லை போலிருக்கிறது. ஒரு மானே காட்டுப் பன்றியோ, கேவலம் ஒரு முயலோ அவர் கண்ணில் தென்பட வேண்டுமே. இல்லை. வேட்டை வெறி தலைக்கு ஏறிவிட்டது. காட்டுக்குள் மூலைக்கு மூலை புகுந்து அலேய ஆரம்பித்திருக்கிருர், பொழுது சாயும் வரையில் இப்படி அலைந்து திரிந்திருக்கிருர், மான்களும், பன்றிகளும், முயலும் செய்த தவப்பயனே, அல்லது குமாரசாமியின் துரதிர்ஷ்டமோ வேட்டை ஒன்றும் கிடைக்கவில்லை. அன்றெல்லாம் அலைந்த அலைச்சலும், களைப்பும், ஏமாற்றமும் குமாரசாமிக்குத்தானே தெரியும்? இருந்தாலும், ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு காட்டி லிருந்து வெளியே வர ஆரம்பித்தார். வழி தெரியவில்லை. இருட்டி விட்டது. அதன் பிறகும் சுற்றியிருக்கிருர். பசித் தாங்காமல் தவித்திருக்கிருர், பயம் வேறு அவரைப் பற்றிக் கொண்டது. எங்கெங்கோ மூலை முடுக்கெல்லாம் ஓடி ஓடிப் பார்த்திருக்கிருர், எத்தனையோ முறை இந்தக் காட்டுக்குள் வந்து வேட்டையாடிப் பழக்கப்பட்ட்' குமாரசாமியினலேயே இந்தக் காட்டுக்குள்ளிருந்து வெளி யில் வர முடியவில்லை W د “ د “ . په

Page 71
118 ஈழநாட்டுப் பிரயாணம்
வேட்டைக்குச் சென்ற கிழக்கு மாகாண ஏஜண்டு குமாரசாமியைக் காணுமல் போகவே, பல வேட்டைக் காரர்கள் காட்டுக்குள் புகுந்து மிகப் பிரகாசமான ஒளி வீசும் டார்ச் லைட்டைக் கொண்டு தேடினர்கள். கிடைக்க வில்லை. மிகப் பெரிய சர்க்கார் அதிகாரியல்லவா? ஊரே கலகலத்துப் போய்விட்டது. “குமாரசாமி காட்டில் அகப் பட்டுக் கொண்டார். அவர் திரும்பி வருவது என்பது சங்தேகம் தான்’ என்றெல்லாம் கவலையோடு பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
ராணுவத்தினர் உபயோகிக்கும் "ஹெலிகாப்டர்’ விமானம் மூலம் காட்டுக்கு மேலே பறந்து மிகப் பிரகாச மான ஒளி வீசும் ‘சர்ச் லைட்டைப் போட்டுப் பார்த்துத் தேடினர்கள். ஒரு நாள் இரண்டு நாள் மூன்று காள் என்று தேடினர்கள். பகலெல்லாம் இந்தக் காட்டில் நன்கு பழக்கப்பட்ட பல வேட்டைக்காரர்கள் காட்டுக்குள் புகுந்து தேடினர்கள்.
கடைசியாக, குமாரசாமி ஒரு இடத்தில் சோர்ந்து கிடந்ததைக் கண்டார்கள். மிகக் கஷ்டப்பட்டு அவரைக் காட்டுக்குள்ளிருந்து வெளியே கொண்டு வந்தார்கள். யார் செய்த புண்ணியமோ அன்று அவர் தப்பினர்.
அப்படிப்பட்ட காடு இந்தக் கதிர்காமக் காடு. குமார சாமி போன்ற பழக்கப்பட்ட வேட்டைக்காரர்களே வழி தவறி விடுகிருர்கள் ஏன்ருல் எப்படிப்பட்ட பயங்கர அடர்த்தியான காடாக இருக்கும் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினர்.
இந்தச் சம்பவத்தை அவர் சொல்லி முடிப்பதற்குள் கார் திசைமாருமை என்ற ஊரை நெருங்கிவிட்டது. அதற்குள் மாலை மறைந்து இருட்டி விட்டது. "நீங்கள் தான் இத்தனை நேரம் இந்தப் பாதையின் பயங்கரத்தைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தீர்களே! இதற்குமேல் பிரயாணம் செய்தால் அபாயம் தான். இங்கேயே “ரெஸ்ட் ஹவுஸ்ல் தங்கி விடுவதுதான் நல்லது' என்ருர் டிரைவர். எங்களுக்கு இருந்த மனநிலையில் டிரைவரே காரை ஓட்டத் தயாராயிருந்தாலும் காங்கள் மேலே பிரயாணம்

அருவி கொட்டும் அழகு 119
இதுத் தயாராயில்லை. ஆணுலும் அதைக் காண்பித்துக் கொள்ளாமல் "டிரைவர் மிகவும் களைத்துப் போய்விட் டார். இரவு இங்கேயே தங்கிக் காலையில் தான் போவோமே!” என்று சொல்லித் திசைமாருமையிலேயே தங்கினுேம்.
திசைமாருமை ஒய்வு விடுதி மிகப் பெரிய தடாகக் கரையில் அமைந்திருக்கிறது. ஒய்வு விடுதியைச் சுற்றி விசாலமான வராத்தாக்கள். வராந்தாக்களில் பிரம்பாலான சாய்வு நாற்காலிகள். தடாகக்கரை இருக்கும் திசையி விருந்து குபுகுபுவென்று காற்று வீசுகிறது. வானத்தின் மூலை முடுக்குகளில் மேகங்கள் தனித்தனியே பிரிந்து இருண்ட பயங்கரத்தைக் கலைத்து விட்டன.
பக்கத்து அறையிலிருந்து யாரோ உல்லாசமாக ராகங்களைப் பாடிக் கொண்டிருந்தார். வானத்தில் நோக் கின்றித் திரியும் சிறுசிறு மேகக் கூட்டங்களைப் போல் ராகங்கள் உருமாறிக் கொண்டே போயின.
துல்லியமான லேவானத்திலிருந்து சந்திரன் பால் நிலவைப் பொழிந்து கொண்டிருந்தான். மனத்தில் ஒரு அமைதியும் தென்பும் ஏற்பட்டிருந்தன. மறுநாள் காணப் போகும் கதிர் காமத்தையும், அங்கு கோயில் கொண்டிருக் கும் கந்தப்பெருமானையும் கற்பனைக் கண்ணுல் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
"என்ன, மானசீகமாகக் கதிர்காமத்தில் இருக்கிருர் போலிருக்கிறது. நாளைக்குத்தான் அங்கேயே போய்க் கதிர்வேலனைத் தரிசிக்கப் போகிருேமே” என்று சொல்லிக் கொண்டே வந்து அருகில் அமர்ந்தார் நண்பர்.
ஆமாம் இந்த இரவு கழிந்து வீட்டால் போதும். நாளை தமிழ்த் தெய்வத்தைத் தரிசித்து விடலாம். தயவு செய்து ஒரே ஒரு இரவு பொறுத்துக் கொள்ளுங்கள்.

Page 72
12 இதுதானே கதிர்காமம்!
தமிழ் காட்டில் சென்ற சில ஆண்டுகளாகப் பலவகை
யான பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் குறிப்பாகச் சொல்ல வேண்டியது கடவுள் ஒழிப்புப் பிரசாரமாகும். கடவுளைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஜாபாலி முதலிய முனிபுங்கவர்களும், இரணியன் முதலான இராட்சதர்களும், இங்கர்ஸால் போன்ற உலகப் புகழ்பெற்ற அறிவாளிகளும் எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் கடவுளை யாரும் அசைக்க முடிய வில்லை. கல்லுப்பிள்ளையார் போல் அழுத்தமாக, ஆழமாக வேர்விட்டுக்கொண்டு கடவுள் மக்களின் இதயங்களில் அமர்ந்திருக்கிருர்,
தமிழ் காட்டில் உள்ள முருகனின் ஆறுபடை வீடு களான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, அழகர் கோயில், ஈழநாட்டில் உள்ள கதிர்காமம் ஆகிய வேலன் தலங்களில் உற்சவம் நடக்கும் போது ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் முருகனடி யார்கள் வருகிருர்கள். அவர்களில் ஆயிரக்கணக்கானேர் புஷ்பக் காவடி என்றும், பால் காவடி என்றும், மச்சக் காவடி என்றும் பலவிதமான காவடிகளை எடுத்து வருகிருர்கள். பட்டதாரிகள் : பணக்காரர்கள்; பாமரர் கள் ; சைவ, வைஷ்ணவ, பெளத்த மதத்தைச் சேர்ந்தவர் கள் எல்லாரும் காவடி எடுத்து வருகிருர்கள். முருகனின் சங்கிதியில் காவடியுடன் ஆடிக் குதிக்கிருர்கள்
நாத்திகப் பிரசாரங்கள் மக்கள் மனத்தில் பக்தி உணர்ச்சி பொங்கித் ததும்பிப் பூரணமாகப் பெருகி வெள்ளமாக ஓடுவதற்குத்தான் உதவி செய்கின்றன.
தமிழ் காட்டிலும் சரி, ஈழநாட்டிலும் சரி முருக னுடைய பக்தர்கள் ஏராளமாக இருக்கிருர்கள். அவர்கள்

இதுதானே கதிர்காமம் ! 12t
நீண்ட வழிப் பிரயாணம் செய்யும்போதெல்லாம் கலியுகத் தின் கடவுளான கதிர்வேலனை மறப்பதில்லை.
* கதிர்காமக் கந்தன்
கைபிடித்து வருவான்’
என்ற மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு போவார்கள். வனப்பிரதேசங்களில் பயங்கர மிருகங்கள் நிறைந்த காட்டுவழிகளில் தனிமையில் பிரயாணம் செய்யும்போது கந்தனடியார்கள் இந்தத் திரு மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு போவார்கள்.
* நம்பினேர் கெடுவதில்லை
நான்குமறை தீர்ப்பு ' என்று கவியரசர் பாரதியார் பாடியுள்ளபடி முருகனிடம் 15ம்பிக்கை வைத்திருப்பவர்களுக்குத் தமிழ்த் தெய்வமான முருகனே கைப்பிடித்து வருவான் என்று சொல்லப்படு கிறது. அதற்கு எத்தனை எத்தனையோ கம்ப முடியாத பல அதிசய சம்பவங்களை யெல்லாம் முருகனடியார்கள் எடுத்துக் காட்டுகிருர்கள்.
இவ்வளவு சக்தியுள்ள தெய்வம், தமிழ்க் கடவுள்
கையிலே வேலேந்தி நிற்கும் கம்பீரமான காட்சியை மனத் தில் நினைத்துக் கொள்ளுங்கள். அந்த அற்புதக் காட்சி,
* சுற்றி நில்லாதே போ - பகையே
துள்ளி வருகுது வேல் 1’
என்று ஈழநாட்டுக்கு அபயம் அளிப்பதுபோலத் தோன் றும். ஆம், அப்படித்தான் கதிர்காமத்தில் கதிர்வேலன் காட்சி அளிக்கிருன் கதிர்காமக் கடவுள் குடிகொண் டிருப்பதால்தானே என்னவோ ஈழத் தீவே வேல்வடிவத் திலே காட்சி தருகிறது. கதிர்காமத்தில் இருந்தபோது, தமிழ்க் கடவுளான முருகன் தமிழ் மக்களுக்குத் தன் னுடைய பக்தர்களுக்கு அபயம் அளிப்பதற்காகக் கையில் வேலேந்தி நிற்பதுபோன்ற மன உணர்ச்சி ஏற்படுகிறது. கதிர்காமக் கடவுளின் சங்கிதியில் நிற்கும்போது, அங்கு கின்று "ஓ! முருகா!' என்று நினைத்தவுடன் " மயிலேறி அயிலெடுத்துவரும் செவ்வேள் " கம் முன் காட்சி தருகிருன்,

Page 73
122 ஈழ5ாட்டுப் பிரயாணம்
இந்தப் புண்ணிய பூமியான கதிர்காமத்துக்குச் செல்வ தற்குத்தான் திசை மாருமையிலிருந்து அதிகாலையிலேயே புறப்பட்டோம். இங்கிருந்து கதிர்காமம் சுமார் முப்பது கிமிடப் பிரயாணம்தான். அதிகமாக இருந்தால் பன்னி ரண்டு மைல் இருக்கும். காட்டுக்கு மத்தியில் உள்ள சாலையில்தான் கார் போகிறது. இருபுறமும் இப்பொழுது காடுகளை அழித்து, சேனைப் பயிர் வைத்திருக்கிருர்கள். ஒவ்வொரு தோட்டத்திலும் நட்ட நடுவில் ஒரு உயரமான கம்பத்தின் மீது ஒரு குடிசை இருக்கிறது. அந்தக் கம்பத்தைச் சுற்றி இரவில் தீ வளர்த்திருப்பார்களாம்.
* ஏன் அப்படித் தீ வளர்க்கிருர்கள்?"
" இது யானைகள் வாழும் காடு. இரவு நேரத்தில் சேனைக்கிழங்கைச் சாப்பிடுவதற்காகக் காட்டு யானைகள் வரும். அதை விரட்டுவதற்குத் தோட்டத்தின் மத்தியிலே உயரமான கம்பத்தின் உச்சியில் அமைத்திருக்கும் குடி சையில் இருக்கும் காவற்காரன் ஏதாவது சத்தம் செய் வான். அப்பொழுது காட்டு யானை அந்தக் குடிசையை மோதிக் காவற்காரனைக் கொன்று விடாமல் இருப்பதற் காகக் குடிசை கட்டியிருக்கும் கம்பத்தைச் சுற்றித் தீ வளர்த்து வருகிருர்கள்.”
அடாடா! மனிதன் ஒரு சாண் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்காக என்னென்ன அபாயமான முறையிலெல் லாம் வாழ்க்கையை நடத்த வேண்டி யிருக்கிறது!
இவ்வாறு கதிர்காமத்துக்குச் செல்லும் வழி நெடுகி லும் இருக்கிறது. இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே கதிர்காமத்துக்குச் செல்வவற்கு முன் கதிர்காமத்தலத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
来 米 米
ஈழ5ாட்டின் தென்பகுதியில் ஊவா மாகாணத்தில் தீயனகம என்னும் காட்டில் இருக்கிறது கதிர்காமம். மாணிக்கக் கங்கைக் கரையில் உள்ள சிற்றுாருக்குத்தான் கதிர்காமம் என்று பெயர். வேலாயுதம்போல முக்கோண வடிவமுள்ள இந்தச் சிற்றுாரில் கதிர்காமக் கடவுளான கதிர்வேலன் கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கிருர்,

இதுதானே கதிர்காமம் 123
கதிர்காமன் சங்கிதி தெற்கு நோக்கியும் வள்ளியம்மன் சங்கிதி வடக்கு நோக்கியும் இருக்கிறது. தம்முடைய இளம் மனைவி வள்ளியை எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பதற்காகத்தான் கதிர்காமன் கோயிலை இப்படி அமைத்துக் கொண்டாரோ என்னவோ! இவர்களுடைய இந்தக் காதலுக்கு இடையூறு செய்ய விரும்பாமல் தெய்வ யானை தமது கோயிலைக் கிழக்கு நோக்கி அமைத்துக் கொண்டிருக்கிருர் போலும் !
"முருகக் கடவுள் எல்லா இடத்தையும் விட்டுக் கதிர் காமத்துக்கு ஏன் வந்தார்?"
குரபன்மனச் சங்கரிக்கும் நோக்கத்துடன் முருகன் புறப்பட்டபொழுது கதிர்காமத்தை அடைந்து மாணிக்கக் கங்கையின் கரையில் கூடாரம் அமைத்திருந்தார். பின்னர் குரபன்மனை வென்று வாகை சூடி மீண்டபொழுது கதிர் காமக் குன்றில் நவகங்கா தீர்த்தம் உண்டாக்கிச் சிந்தாமணி ஆலயத்தில் தேவர்கள் துதிக்க வள்ளி தெய்வயானையுடன் வீற்றிருந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
சீதாபிராட்டியைத் தேடி இலங்கைக்கு வந்த அநு மான் வெற்றி வேலனன கதிர்காமப் பெருமான வணங்கிச் சென்றதாகச் சில முருக பக்தர்கள் கூறுகின்றனர்.
இக்த விவரங்களை உடன் வந்த நண்பர் கூறிக் கொண்டிருக்கும்போது சாலை திரும்பியது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் 'இதோ கதிர்காமம் வந்துவிட்டது!" என்ருர் நண்பர்.
கதிர்காமம் என்ருல் எப்படி எப்படி எல்லாமோ இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டிருந்தேன். கொஞ்ச தூரத்துக்கு அப்பாலேயே கதிர்காமத் தேவனின் ஆலயத்தின் கோபுர தரிசனம் கிடைக்கும், பிறகு கோயி லும் பெரிய மதிள் சுவரும் தெரியும். கோயிலைச் சுற்றிப் பெரிய ஊர் இருக்கும் என்றெல்லாம் எண்ணிக் கொண் டிருந்தேன். நண்பர் ஏதோ ஒரு சிறு தோப்பைக் காண் பித்து, “இதுதான் கதிர்காமம் 1’ என்றதும் எனக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. " இதுதானே, கதிர்காமம்!” என்று வாய்விட்டுச் சொல்லிக் கொண்டேன்.

Page 74
124 ஈழநாட்டுப் பிரயாணம்
வண்டி மாணிக்கக் கங்கையின் கரையில் வந்து நின் றது. வட இந்தியாவில் உள்ள கங்கை கதியையும், தமிழ் காட்டின் காவேரி நதியையும் பார்த்துப் பழகியவர்களுக்கு மாணிக்கக் கங்கையைப் பார்த்ததும் ஒன்றும் மலைப்புத் தோன்ருது. ஆனல் திகைப்புத்தான் தோன்றும். "இதுதான் மாணிக்கக் கங்கையோ !” என்று எண்ணத் தோன்றும், எல்லாம் ஒரு கண நேரம்தான். பிறகு மனத்தில் நம்மை அறியாமல் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. மாணிக்கக் கங்கைக் கரையில் அடர்ந்து படர்ந்து இருக்கும் மருத மரங்களின் அழகும் சல சல என்ற சத்தத்துடன் மாணிக்கக் கங்கை யின் ஒரு ஓரத்தில் பளிங்கு போன்ற தண்ணிர் ஓடிவரும் கோலமும் நம்மைச் கவர்ந்து விடுகின்றன.
அந்தத் தண்ணிரில் அடிக்கடி ஏதோ சலசலப்பு ஏற்படுகிறது. திடீர் திடீர் என்று தண்ணிர் வெண் முத்துக்கள் போல் சிதறித் தெறிக்கிறது. அது என்ன என்று ஆவலுடன் பார்க்கிருேம். பார்த்தபடியே நிற் கிருேம். மீன்கள் கூட்டம் கூட்டமாகத் திரிதின்றன. நம்மைப் டார்த்தவுடன் காதலோடு ஓடிவருகின்றன. மாணிக்கக் கங்கையில் கதிர்காமக் கடவுளின் சங்கிதியில் மீனுய் இருப்பதைவிட பாக்கியம் வேறு என்ன வேண்டும். அவைகள் எல்லாம் உண்மை மீன்களோ ? இல்லை மீன் உருவில் இருக்கும் முருக பக்தர்களா? யார் கண்டார்கள்? 'திருவேங்கடச் சுனையில் மீனுய்ப் பிறக்கும் விதியுடை யேன் ஆவேனே!” என்று ஆழ்வார் இறைவனிடம் உள்ளம் உருகி இறைஞ்சவில்லையா?
இந்த மீன்களைப் பார்த்தவுடனேயே அவை மீது ஒரு அன்பும் இரக்கமும் நமக்கு ஏற்பட்டு விடுகின்றன. காம் அருகிலிருக்கும் கடைக்குச் சென்று ஒரு ரொட்டியை வாங்கி வந்து அந்த மீன் கூட்டத்துக்குக் கொடுக்கிருேம், கண்மூடிக் கண் திறக்கும் நேரத்துக்குள் மீன் கூட்டம் ரொட்டியைக் காலி செய்து விடுகிறது. இன்னும் ரொட்டி கிடைக்குமா என்று அந்த மீன்கள் கம்மை ஆவலுடன் பார்க்கின்றன. அவைகளுக்கு ரொட்டி வாங்கிப் போடவா நாம் கதிர்காமத்துக்கு வந்தோம். இல்லையே!

இதுதானே கதிர்காமம் ! 125
நான்குபுறத்திலிருந்தும் வரும் " அரோகரா’ என்ற மந்திரச் சத்தம் நாம் வந்த கடமையை நினைவூட்டுகிறது. நம்மையும் அறியாமல் 'அரோகரா !” என்று சொல் கிருேம், முழங்கால் அளவுக்குத் தண்ணீர் ஓடும் "ஜில்" லென்ற மாணிக்கக் கங்கையில் நீராடுகிருேம். நீராடி எழுந்ததும் நம்முடைய உடல் இலேசாகி விட்டதுபோன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. பாப மூட்டைகள் கரைந்து விட்டனவோ என்னவோ! மாசு படிந்த உள்ளத்தின் மாசு நீங்கி இதயம் மாணிக்கம் போலாகி விட்டதோ என்னவோ? இறைவன் திருவடியைத் தரிசிப்பதற்கு வேண்டிய மனத் தூய்மையைப் பெற்று விட்டது போன்ற மன நிலை உண் டாகி விடுகிறது. கதிர்காமத்து மாணிக்கக் கங்கையில் நீராடியவுடன் மனசில் இதுவரை இல்லாத ஒரு விசாலம் ஏற்பட்டு வருவதை உணர முடிகிறது. அப்பொழுதிருந்த மன நிலையை எழுத்திலே எழுதிக் காட்டுதல் அவ்வளவு எளிதல்ல. ஒரு முறை கதிர்காமத்துக்குச் சென்று மாணிக் கக் கங்கையில் ரோடி, பக்தி வெள்ளத்தில் பரவசமுற்று, * அரோகரா’ என்ற திரு மந்திரத்தைச் சொல்லிப் பாருங் கள். ஏதோ இனக்தெரியாத ஒரு பேரின்ப சுகமே கிடைத்துவிட்டது போன்ற மகிழ்ச்சி ஏற்படும்.
மாணிக்கக் கங்கையில் நீராடியவுடன் அதன்மீது கட்டப்பட்டிருக்கும் பாலத்தைக் கடந்து கதிர்காமத்துக் குள்ளே செல்கிருேம். கதிர்காமத்து வீதியில் செல்லும் போதே துர ரத்தில் தெரியும் ஒடு வேய்ந்த ஒரு சிறு மண்ட பத்தைக் காண்பித்து, 'இதுதான் கதிர்காமக் கோயில் 1” என்று கூறிவிட்டு 'அரோகரா !” என்று பக்திப் பெருக் குடன் கன்னத்தில் போட்டுக் கொண்டார் நண்பர்.
கதிர்காமத்துக்குச் செல்வோர் விண்ணே முட்டும் கோபுரத்தின் அழகைக் கண்டு களிக்கலாம் என்ருே, வீதி யின் அழகையும் ஆாய்மையையும் கண்டு வியக்கலாம் என்ருே, கர்ப்பூர தீப ஆரத்தின் ஒளியைக் கண்டு மயங்க லாமென்ருே, வரிசை வரிசையாக இருக்கும் கடை வரிசை களையும், விதம் விதமான ஆண் பெண் கூட்டத்தையும் பார்த்து மகிழலாம் என்றே எண்ணிக் கொண்டு சென்ருல் உண்மையிலேயே ஏமாற்றம் அடைவார்கள். உண்மை

Page 75
126 ஈழநாட்டுப் பிரயாணம்
பக்தியுடன்தான் செல்ல வேண்டும். கதிர்காமக் கடவுளை தரிசிக்கப் போகிருேம் என்ற உணர்ச்சியுடன்தான் செல்ல வேண்டும். இந்த உணர்ச்சியில் தான் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் ஆண்டு தோறும் இங்கு வருகின்றனர்.
இந்தப் புனிதமான எண்ணத்துடனேயே கதிர்காமக் கடவுளின் ஆலயத்துக்குச் செல்வோம். போகும்போதே இந்தத் திருக்கோயிலின் அற்புத மகிமையையும் சிறிது நினைவுபடுத்திக் கொள்வோம்.
முன்பெல்லாம் அதாவது கதிர்காமத் தலத்துக்குச் சாலை வசதிகள் இல்லாத காலத்தில் நினைத்தபோது யாரும் கதிர்காமத்துக்குச் செல்லுவதில்லை. கதிர்காமத்துக்குச் செல்ல வேண்டும் என்று முருகனைப் பிரார்த்தித்துப் பல ஆண்டுகள் கோன் பிருப்பார்கள். பக்தனின் பிரார்த்த னைக்கு இரங்கிக் கதிர்காமன் கனவில் தோன்றுவான். 'பக்தா ! நீ கதிர்காம யாத்திரை செய்யலாம் !" என்று உத்தரவு கொடுப்பான். இதன் பின்னர்தான் பக்தர்கள் கதிர்காம யாத்திரை செய்வார்கள். அவ்வாறு கதிர்க்காமக் கடவுளின் உத்தரவு பெருமல் சென்ருல் கொடிய மிருகங் கள் நிறைந்த காட்டு வழியில் பல இன்னல்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்ற நம்பிக்கை.
கதிர்காமனின் சந்நிதியில் சாதி மதபேதம் ஒன்றும் இல்லை. ஈழ காட்டில் இதர இடங்களில் தீண்டாமை கடுமையாக அநுசரிக்கப்பட்டு வரும்போது கதிர்காமக் கடவுளின் சக்கிதியில் மட்டும் அந்தக் கொடுமை இல்லை. இது பன்னெடுங்காலமாகவே இங்கு இருந்து வருகிறது. காரணம் கடவுளின் உண்மைத் தத்துவத்தை உணர்ந்தவர் களே கதிர்காம யாத்திரையை மேற்கொண்டு வந்தார்கள். எல்லாரும் கடவுளின் மக்கள் என்ற எண்ணம் கொண்ட வர்கள் மட்டுமே கதிர்வேலனைத் தரிசிக்கச் சென்ருர்கள். பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக அனுபவித்த பெரியோர் கள் மட்டும் ஆண்டவணை காடிச் சென்ருர்கள். 'அரோ கரா !” என்ற திருமந்திரத்தை உச்சரிப்பதில் அவர்கள் உண்மையான ஆனந்தத்தை அடைந்தார்கள். எந்தப் பொருளிலும் அவர்கள் தமிழ்க் கடவுளைக் கண்டு மகிழ்க்

இதுதானே கதிர்காமம் 1 t9۶
தார்கள். அதனுல் தமிழ்த் தெய்வத்தின் சந்நிதியில் கதிர் வேலனின் முன்னல் சாதிமதம் என்னும் பேய்கள் தூர விலகி ஒதுங்கி நின்று வந்திருக்கின்றன.
இத்தகைய சர்வமத சமரச மனப்பான்மைக்குச் சாட்சி யாக விளங்குவதுதான் கதிர்காமக் கோயில். ஆனல் இந்தக் கோயிலுக்குள் விக்கிரகம் இல்லை. கர்ப்பக்கிருக மும் சிறு மண்டபமும் கொண்ட இந்தச் சிறு கோயிலுக்குள் கர்ப்பக்கிருக வாசலில் திரையிடப்பட்டிருக்கிறது. கதிர் காமத்தில் ஆறுமுகப்பெருமான் சிறியதொரு கோயிலில் திரை மறைவில்தான் வீற்றிருக்கிருர். திரை மறைவில் வீற்றிருந்தே திசையனைத்தையும் ஆண்டு வருகிருர் தீந்தமிழ்க் கடவுளான முருகன்.
நமது கோயில்களில் இருப்பது போலவே இங்கும் பூசை செய்பவர்கள் இருக்கிருர்கள். இவர்களைக் கப்புராளை மார் என்று சொல்லுகிருர்கள். கப்புராளைமார் பூசை செய் யும் முறை 15மது கோயில் சம்பிரதாயங்களுக்கும் சடங்கு களுக்கும் மாறுபட்டவைகளாக இருக்கின்றன. வள்ளி மணுளணுக்குப் பூசை நிகழும்போது அவனை வரவேற்பதற் காகப் பெண்கள் ஆரத்தி எடுக்கிருர்கள். கப்புராளைமார் தம் வாயை மஞ்சள் துணியினுல் கட்டிக் கொண்டு, நிவே தனத்துக்கு வேண்டிய அமுதைக் காவித் துணியால் மூடிக் கொண்டு உள்ளே செல்கிருர், பிறகு வெளியே வந்து திரைச்சிலைக்கு முன்பாக தலைக்குமேல் கைகுவித்து நின்று வழிபாடியற்றுகின்றனர். இவர்கள் எல்லாரும் சிங்களவர் கள்தான். தமிழ்த் தெய்வமான முருகனுக்குப் பூசை செய்யும் இவர்களுக்குத் தெய்வத் தமிழின் இனிமை தெரியாதது விந்தையே!
சாதாரணமாக, பக்தர்கள் கதிர்காமக் கடவுளின் கோயிலுக்குப் போகும்போது தேங்காய் பழம் ஊதுவத்தி முதலியவைகள் கொண்டு செல்கின்றனர். அவைகளைத் தட்டில் வைத்துக் கப்புராளை மாரிடம் கொடுக்கின்றனர். கப்புராளைமார் சட்டை, தலைப்பாகை எல்லாம் அணிந்து கொண்டுதான் இருக்கின்றனர். இப்பொழுது அவர் தம் வாயைத் துணியினல் கட்டிக் கொள்வதில்லை. பக்தர்கள்

Page 76
128 ஈழநாட்டுப் பிரயாணம்
கொடுக்கும் தேங்காய், பழத் தட்டுகளைப் பெற்றுக் கொண்டு கர்ப்பக் கிருகத்துக்கு முன்னுல் இருக்கும் திரையை விலக்கிக் கொண்டு உள்ளே போகிருர். உள் ளிருந்து தேங்காய் உடைக்கும் ஓசையும், மணி அடிக்கும் நாதமும் கேட்கின்றன. இவையே நம் செவியில் தேன் மாரி பொழிகின்றன. "ஓசை ஒலி யெலாம் ஆணுய் நீயே ' என்ற தேவாரத்தின் பொருள் விளங்கி ஆனந்த பரவசம் அடைகிருேம் ; மெய்யுருகி நிற்கிருேம்.
மண்டபத்தில் எரியும் ஊதுவத்தியின் மணமும் சாம்பி ராணி வாசனையும் கம்மென்று வருகின்றன. சற்று நேரத் துக்கெல்லாம் கர்ப்பக் கிருகத்துக்குள் இருந்து கப்புராளை மார் தேங்காய், பழத்தட்டுடன் வெளியில் வருகிருர் பக்தர் களுக்கு விபூதி வழங்குகிருர், இந்த விபூதி காம் இதர கோயிலில் பெறும் விபூதி போன்றதன்று. கதிர்காமத் துக்கே உரிய தனிச் சிறப்பும் உரிமையும் பெருமையும் உடைய விபூதியாகும். இதர சிவஸ்தலங்களில் பசுஞ் சாணத்திலிருந்து விபூதி தயாரித்து அளிக்கின்றனர். ஆனல் கதிர்காமத்தில் வழங்கும் திருநீறு இயற்கையாக விளைந்த திருறுே. கதிர் காமக் கோயிலுக்கு அருகில் இருக் கும் விபூதி மலையிலிருந்தே எடுத்து வரும் புனிதமான திருருேகும்.
இந்தத் திருநீற்றைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து செல்வதற்குத் திரும்புகிருேம். கப்புராளைமார் 15ம்மை ஒரு மாதிரிபார்க்கிருர், நம்முடைய சட்டைப் பையைப் பார்க் கிருர், எல்லாக் கோயிலுக்கும் உள்ள பொதுவான சம்பிர தாயம் ஒன்று நமக்கு நினைவுக்கு வந்துவிடுகிறது. சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து அவர் கையில் வைக் கிருேம். அவர் முகம் மலருகிறது. கமது முகத்திலும் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்டு கோயிலுக்கு வெளி யில் வந்து சேர்கிருேம்.
கதிர்காமக் கோயிலில் விசிேஷமான திருவிழா வருடத் துக்கு நான்கு முறை நடக்குமாம். முதல் திருவிழா,
சித்திரை வருடப்பிறப்பு தினத்தன்று நடைபெறும். இரண் டாவது திருவிழா கந்தசாமியார் வள்ளி நாச்சியாரை மணம்

இதுதானே கதிர்காமம் 1, 19
புரிவதற்காக வேண்டி, கன்னிக்கால் கடும் திருவிழா. இது ஆனி மாதம் கடைபெறும். மூன்ருவது ஆடிமாதத் திலும் நான்காவது கார்த்திகை மாதத்திலும் நடைபெறும்.
திருவிழாக் காலங்களில் கர்ப்பக்கிருகத்துக்குள்ளி ருந்து ஏதோ ஒரு பொருளைத் துணியால் மூடி எடுத்து வருகின்றனர். அதற்குள் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாதாம். அதை யார் தூக்கினலும் அவர வர்கள் சக்திக்குத் தாக்குவதற்கு வேண்டிய கனம் உடைய தாக இருக்குமாம். அதைக் கொண்டு வந்து யானைமீது உள்ள பெட்டியில் வைத்துக் கட்டிவிடுவார்கள். கப்புராளை மார்களின் தலைவருக்குச் சுவாமி கப்புராளை என்று பெயர். சுவாமிகப்புராளே யானைமீதுள்ள பெட்டியைக் கவனமாகப் பிடித்துக் கொள்கிருரர். இந்தப் பொருள்தான் கந்தன் சந்நிதியிலிருந்து வள்ளியம்மன் சங்கிதிக்கு உலா போகிறது. அடியார்கள் தங்கள் தலைமீதும், தோள் மீதும் கொண்டு செல்லும் விபூதிச் சட்டியில் ஏற்றிய கற்பூர வெளிச்சம் இரவைப் பகலாக்கிக் கொண்டிருக்கும். ஊதுவத்திகளின் நறுமணம் ஓங்கிப் பரவப் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், 'அரோகரா’ என்று கதறி கண்ணீர் மல்க, கதிர்காமக் கடவுள் உலா போகும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்குமாம். இந்த காட்சியை ஒருதரம் பார்த்தவர்கள் அப்புறம் ஆயுள் காலம் வரையில் அதை மறக்கவே மாட்டார்களாம்.
விழாக் காலத்தில் பவனி வரும் யானைமீது ஏற்றிச் செல்லும் பெட்டியில் முத்துலிங்கசாமி அவர்கள் அமைத்த இயந்திரம் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்கிருர்கள்.
米 来 来源
கதிர்காமத்தில் முருகன் திருக் கோயிலைத் தவிரப் பார்க்க வேண்டியது அங்குள்ள திருமடங்கள். கதிர்காமத் துக்கு வரும் பக்தர்க்ளை உபசரிப்பதற்காக வென்றே கட்டப்பட்ட மடங்கள். உண்மையான பக்திக்கு நினைவுச் சின்னங்களாக இந்த மடங்கள் விளங்குகின்றன. நகரத் தார் மடம், வைத்தியலிங்கர் மடம், சடையம்மா மடம், தம்பையா மீனம்பாள் மடம், தம்புச்சாமி மடம், பொன்

Page 77
30 ஈழகாட்டுப் பிரயாணம்
னம்பலசாமி மடம், கங்காணியார் மடம், தியாகராச பண்டிதர் மடம், டாக்டர் அப்பாசாமி மடம், புலிலிங்கச் செட்டியார் மடம், மருத்துவர் மடம், பழனியாண்டவர் மடம் என்று எத்தனையோ மடங்கள் இருக்கின்றன.
இந்த மடங்களுக்கெல்லாம் சிறந்த மடமாக விளங்கு வது ராமகிருஷ்ண மடம், கதிர்காமத்துக்குச் சென்று இந்த ராமகிருஷ்ண மடத்தைப் பார்க்காவிட்டால் காம் கதிர்காமத்துக்கு வந்துதான் என்ன பிரயோசனம்? எனவே இந்த ராமகிருஷ்ண மடத்தையும் அவர்கள் ஆற்றிவரும் தொண்டையும் பார்ப்போம்.

13 இதுவன்ருே தெய்வத் தொண்டு
இந்தக் காலத்தில் எத்தனையோ விதமான தொண்டு களைச் செய்கிருர்கள். கோயில் கட்டுகிருர் கள். குளங்கள் வெட்டுகிருரர்கள். மடங்கள் கட்டுகிருரர்கள் மக்களுக்கு அன்ன தானம் செய்கிருர்கள். கல்வி தானம் செய்கிருர்கள். இவைகள் எல்லாமே தொண்டுதான் இவ்வாறு செய் யும் தொண்டுகளும் தெய்வத் தொண்டுதான். ஆனல் ஈழ நாட்டில் கதிர்காமக் காட்டுக்குள் ராமகிருஷ்ண மடத் தார் ஆற்றி வரும் தொண்டைப் போன்ற சிறப் ான தொண்டை நான் பார்த்தது கிடையாது. இதைப் பார்த்த போது " இதுவன்ருே தெய்வத் தொண்டு!” என்று எண் ணத் தோன்றியது.
எந்தவித செளகரியமும் இல்லாத அந்தச் சின்னஞ் சிறு கிராமத்தில் எல்லாவித சுக செளகரியங்களுடன் கூடிய அருமையான மடம் கட்டியிருக்கிருர்கள். பிளஷ் அவுட்" போன்ற சுகாதார வசதிகளுடன் கூடிய அழகான ஓய்வு விடுதிகள் பல அமைத்திருககிருர்கள். கதிர்காமக் கடவுளைத் தரிசிக்கச் செல்லும் யாத்ரிகர்கள் தங்குவதற்கு வசதியான மடம். தனித்தனி அறைகள். குளிப்பதற் கென்று தனி அறைகள் சாப்பிடுவதற்கென்று தனிக் கூடம். தெய்வ வழிபாட்டுக்கென்று விசாலமான மண்ட பம். கதிர்காமத்துக்குச் செல்பவர்கள் இந்த மடத்தில் தாராளமாகத் தங்கலாம். அங்கு அவர்களுககு நடக்கும் உபசாரங்கள், அங்குள்ள சூழ்நிலை எலலாமே தெய்வ மணத்துடன் விளங்குகிறது. அவர்கள் செய்துவரும் ஒவ் வொரு பணியையும் பார்க்கும்போது " இதுவ ைருே தெய் வத் தொண்டு!”, “ இதுவன் ருே தெய்வத் தெண்டு 1” என்று சொல்லத் தோன்றும்.
ஒரு சிலர் இருக்கிருர்கள், மக்களை விட்டுத்தூர விலகி மின்று ஆண்டவனிடம் அந்தரங்கத் தொடர்புகொண்டு

Page 78
1. ஈழநாட்டுப் பிரயாணம்
ஆத்மீக ஆனந்தத்தில் ஈடுபட்டிருக்கிருரர்கள். இன்னும் சிலா இருக்கிருரர்கள். தாங்கள் பின்னல் தேர்தலுக்கு சிற்பதற் காகவோ, அல்லது தாங்கள் ஆற்றும் தொழிலுக்கு ஒரு விளம்பரம் வேண்டும் என்பதற்காகவோ தானதர்மங்கள் செய்கிருர்கள். ஆண்டவன் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுக்கிருர்கள், வேறு சிலர் இருக்கிருர்கள். அவர்கள் தாங்கள் ஏதோ தெய்வத் திருப்பணி செய்வதாக, கடவுள் தொண்டு ஆற்றுவதாக மக்கள் நினைக்க வேண்டும் என் பதற்காகப் பல வகைகளில் விளம்பரம் செய்து கொள் கிருர்கள். ஆணுல் ராமகிருஷ்ண மடத்தார் ஆற்றும் தொண்டு அப்படிப்பட்ட பலன் கருதி ஆற்றும் தொண் டல்ல. மனித குலத்துக்குத் தொண்டாற்றுவதே தெய் வத்துக்கு ஆற்றும் தொண்டு என்பதை உணர்ந்து செய் கிருர்கள். தமிழ் காட்டிலும் சரி, இதர பல இடங்களிலும் சரி, எத்தனை எத்தனையோ மடங்கள் இருக்கின்றன. தெய்வப் பணிக்கென்றே இருக்கும் திருமடங்கள் அவை. ஆனலும் அந்த மடங்கள் உண்மையான தொண்டு எது என்பதை உணர்ந்து கொள்ளாமல் மக்களை விட்டுத் தூர விலகி நின்று கொண்டிருக்கின்றன. அந்த மடத்துத் தலை வர்கள் ஏதோ மடத்தின் சம்பிரதாயங்களையும், சடங்கு களையும் கவனமாக நிறைவேற்றி வருகிருர்களே தவிர கட மாடும் தெய்வங்களான மக்களுக்குத் தொண்டாற்றுகிருர் களா என்பதைக் கூற முடியாது.
ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்தவர்களோ உண்மை யிலேயே தெய்வத் தொண்டாற்றி வருகிருர்கள். இந்தக் காலத்தில் எவ்வளவோ விதமான காஸ்திகப் பிரசாரங் களுக்கும் மத்தியில் இக்காட்டில் கடவுள் பக்தி நின்று வரு கிறது என்ருல் அதற்கு ராமகிருஷ்ண மடத்தார் ஆற்றி வரும் ஒப்பற்ற தொண்டுதான் ஓரளவு காரணம் என்று துணிந்து கூறலாம்.
இத்தகைய உத்தமமான திருப்பணிகள் புரிந்து வரும் ராமகிருஷ்ண மடங்களில் ஒன்றன கதிர்காமம் ராம கிருஷ்ண மடத்துக்குள் இப்போது செல்வோம். மடத்துக் குள் செல்வதற்கு முன்னல் யார் இந்த ராமகிருஷ்ண பரம

இதுவன்றே தெய்வத் தொண்டு f
ஹம்சர் ? அவருடைய மகிமை என்ன என்பதைச் சற்று நிதானமாக நினைவுபடுத்திக் கொள்வோம்.
சென்ற ஆண்டில் தமிழ் காட்டில் பெரும் புயல் அடித் தது. அந்தப் புயலின் கொடுமையினுல் எண்ணற்ற மக்கள் துன்பத்துக்கு ஆளானர்கள். அவர்களுக்குத் தொண் டாற்ற எத்தனையோ தேச பக்தர்கள் வந்தனர். காவி உடை தரித்த சங்கியாசிகளும் வந்தனர். அவர்கள் நமது தெய்வத் தமிழ் நாட்டில் ைேண்ட காலமாக இருந்து வரும் மடங்களைச் சேர்ந்த சங்நியாசிகள் அல்ல. ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சக்கியாசிகள் தான். அந்தச் சக்கியாசிகளும் நம் மைப் போன்ற மனிதர்கள்தான். ஆனல் அவர்களுடைய வாழ்வு முறைதான் மாறுபட்டிருக்கிறது. காம் மக்களுக்குத் தொண்டாற்றும்போது அரசியல் தலைவர்களின் குணு குணங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிருேம். அவர்களோ சகுண கிர்குணப் பிரம்மங்களின் இயல்பு களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிருர்கள். அல்லல் பட்ட மக்களுக்குத் தொண்டாற்றுகிருேம் என்று வீரம் பேசிக் கொள்ளும் தேசத் தலைவர்கள் மந்திரி பதவியை ஏற்பதா, சட்டசபை அங்கத்தினர் பதவியை மறுப்பதா என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது ராம கிருஷ்ண மடத்துச் சங்கியாசிகள் மெளனமாகத் தேசத் தொண்டாற்றி வருகிருர்கள். தேசத்துக்குத் தொண் டாற்றுகிருேம் என்று தம்பட்டமடித்துக் கொள்ளும் தலைவர்கள் சொந்தமனைவி,மக்கள்,உறவினர் இன்பதுன்பங் களைப் பற்றி எண்ணமிடுகையில் அவர்கள் சேரியில் உள்ள ஹரிஜனக் குழந்தைகள், இன்னும் எண்ணற்ற ஏழைக் குழந்தைகள் கேஷம லாபங்களைப் பற்றிச் சிந்திக்கிருர்கள் ; அவர்களே கடமாடும் தெய்வங்களாக எண்ணி அழைத்து வந்து கல்வி புகட்டி மகிழ்கிருர்கள்.
இப்படி ஒரு சில மக்களின் வாழ்க்கை முறை மாறி அவர்கள் காவி உடை தரித்த சக்கியாசியாவதற்கு என்ன காரணம்? அந்தக் காரணம் சரியாக நூற்று இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. காமெல்லாம் பிறப்பதற்கு முன்னமேயே இந்த மண்ணுலகில் இருந்து,

Page 79
134. ஈழநாட்டுப் பிரயாணம்
மறைந்து போனது. அதனுடைய பெயர் திரு ராமகிருஷ்ண தேவர்.
* 来 来
நூற்று இருபது ஆண்டுகளுக்கு முன்னல் இந்த காட் டில் எத்தனையோ பேர் பிறந்தார்கள். அவர்கள் எல்லோரும் * பிறந்தன இறக்கும் ' என்ற வாக்கை நிரூபிப்பதற் காகவே பிறந்தவர்களைப் போல் வாழ்ந்து மடிந்து போனுர் கள். ஆனல் அவர்களில் ஒரே ஒருவர் மட்டும் இறந்தும் இறவாமலருக்கிருர், கேவலம் ஒரு உடலைத் துறந்தாரா யினும், கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் கிரக் தரமாகக் குடிகொண்டு இன்னும் உயிருடன் இருக் கிருர். அவர்தான் திருப்பெருந் திரு ராமகிருஷ்ண பரம ஹம்ஸர்.
சென்ற நூற்ருண்டில் ஒரு தனிமனிதரால் பாரத காடு மிகவும் பயன் பெற்றது என்பதைப்பற்றிச் சிந்தித் தோ மானல், அந்தத் தனி மனிதர் " திரு ராமகிருஷ்ண தேவர் ” தான் என்ற முடிவுக்கு வந்துவிடுவோம் இந்த நூற்ருண் டில் காந்தி மகாத்மா நமக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத் ததுபோல, சென்ற நூற்ருண்டில் ராமகிருஷ்ண பரம ஹம்சர் அந்தச் சுதந்திரத்துக்கு வேண்டிய நல்ல அடிப் படையை அம்ைத்துக் கொடுத்துவிட்டார். சென்ற நூற் ருண்டில் திரு ராமகிருஷ்ணர் தோன்றி தொண்டாற்ற வில்லையானுல் இந்திய சரித்திரத்தின் போக்கே வேறுவித மாகச் சென்றிருக்கும்.
உலக சரித்திரத்தின் போக்கை மாற்றி அமைத்தவர் கள் என்னும் பெருமை ஒரு சிலருக்குத்தான் கிடைக்கும். அவர்களில் பெரும்பாலோர் தீமைகள் பல புரிந்து சாம் ராஜ்ய வெறிக்காக உலக சரித்திரத்தின் போக்கை மாற்றி
LIGAT 56MT.
தேச சரித்திரத்தின் போக்கை நன்மைக்காகவே மாற்றி அமைத்தவர்கள், சாம்ராஜ்ய எண்ணம் சிறிது மின்றி மக்களின் நல்வாழ்வுக்காகச் சரித்திரத்தை மாற்றி பவர்கள் திரு ராமகிருஷ்ண தேவரும், காந்தி மகாத்மாவு

இதுவன்ருே தெய்வத் தொண்டு 135,
மாவார்கள். ராமகிருஷ்ண பரமஹம்ஸருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பள்ளிக்கூடமே போனவர் இல்லை. பொருள் சேர்த்தவரும் அல்ல. பட்டம் பதவி பெற்றவரு மல்ல. இந்த காட்டு அரயசிலில் கலந்துகொண்டு, கேவலம் ஒரு சட்ட சபைத் தேர்தலில் கூட நின்றவரில்லை. ஆயினும் அவர் இந்தியாவின் சரித்திரப் போக்கை மாற்றிவிட்டார். இந்த அற்புத சாதனையை அவர் எப்படிச் செய்தார்?
இதை அறிந்து கொள்வதற்குப் பத்தொன்பதாம் நூற் ருண்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை, இந்தியாவுக்கு நேரவிருந்த பெரும் ஆபத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்பொழுது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் வேரூன்றியதைப் பற்றிச் சொல்லவில்லை. இந்திய மக் களின் அரசியல் சுதந்திரம் பறிபோனது பெரிய ஆபத்துத் தான். ஆனல் அது பாரத நாட்டுக்குப் பழகிப் போன விஷயம் அதற்குப் பல நூற்ருணடு காலத்துக்கு முன் பாகவே பாரசீகர், ஆப்கானியர் முதலானேர் இந்தியா மீது படையெடுத்து வந்து தங்கள் ராஜ்யத்தை நிலைகாட்டி விட்டுச் சென்றிருக்கின்றனர்.
ஆனல் அப்போதெல்லாம் நேராத பயங்கர ஆபத்து சென்ற நூற்ருண்டில் ஏற்பட இருந்தது. அதுதான் மேல் காட்டு நாகரிகத்துக்குப் படித்த அறிவாளிகள் அடிமை tLITGOT.gil.
掺 海
சென்ற நூற்ருண்டில் பாரத காட்டில் ஆங்கிலக் கல்வியைப் பரப்பும் பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது நம்மை ஆண்ட பிரிட்டி ஷார். ஆங்கிலக் கல்வியை அப்பொழுது ஆவலுடன் படிக்க ஆரம்பித்தவர்கள் யார்? ாம்முடைய தர்மத்துக்கும், நமது கல்விச் செல்வத்துக்கும் யார் காவலர்களாக இருந்தார்களோ அவர்கள்தான். அதன் பயனக மேல்நாட்டு விஞ்ஞான ஞானமும், இயந்திர நாகரிகமும் பாரத நாட்டின் பரமார்த்திக ஞானத்தை விட மேலானது என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் பரவலாயிற்று. கமது தர்மம், கமது பண்பாடு, கமது கல்வி

Page 80
188: ஈழகாட்டுப் பிரயாணம்
எல்லாவற்றின் மீதும் அவர்களுக்கு அலட்சியம் வந்து விட்டது. ஆங்கிலேயர்கள் உண்மையாகவே கம்மை அடிமையாக்குவதற்கு வேண்டிய பலமான அடிப்படையை இவர்களைக் கொண்டு அமைக்கத் தொடங்கி விட்டனர்.
இந்த அடிப்படையை ஆரம்பத்திலேயே பெயர்த் தெறிந்தவர் மகான் ராமகிருஷ்ண தேவர். உலகில் உள்ள நாகரிகத்தில் எல்லாம் சிறந்தது பாரத நாட்டு நாகரிகம். உலகில் உள்ள சமயங்களில் எல்லாம் உயர்வானது, விசாலமானது, குறுகிய கோக்கமும் கட்டுப்பாடும் இல்லா தது இந்து சமயம். கல்தோன்றி மண் தோன்ருக் காலத் துக்கு முன் தோன்றிய உயர்ந்த பண்பாடு பாரதப் பண்பாடு என்பதை உலகுக்குக் காட்டியவர் திரு ராம கிருஷ்ண தேவர்.
மேல்நாட்டு நாகரிகத்தின் தெய்வம் பணம்தான் ; கமது காட்டின் நாகரிக மனிதரான திரு ராமகிருஷ்ண தேவரோ பணத்தைத் தீண்டுவதில்லை என்று விரதம் பூண் டவர். மேல்நாட்டு நாகரிகம் உலகை யெல்லாம் கட்டி யாளும் பேராசை கொண்டது. திரு ராமகிருஷ்ண தேவருக்கோ தமக்கென்று ஒரு குழி நிலமும் இல்லாதவர். மேனுட்டு நாகரிகம் கல்விச் செருக்குக் கொண்டது. விஞ் ஞான சாஸ்திர ஆராய்ச்சியில் தமக்கு யாரும் நிகரில்லை என்றும் இறுமாப்புடையது. திரு ராமகிருஷ்ண தேவரோ எழுத்து வாசனை அற்றவர்; பள்ளிக்கூடத்தின் வாசற் படியைக் கூட மிதித்து அறியாதவர்.
திரு ராமகிருஷ்ணரின் லட்சியத்தை சுவாமி விவே கானந்தர் நிறைவேற்றினர். சிங்கத்தை அதன் குகைக் குள்ளேயே அடித்து வீழ்த்தி வெற்றி பெற்ருர், மேனட்டு காகரிகத்தின் தலைசிறந்த அமெரிக்காவுக்குச் சென்று அங்கே நமது பாரத தர்மத்தின் பெருமையை எடுத்துக் காட்டினர். பணப் பேய் அரசு புரிந்த நாட்டில் கையில் காலணு இல்லாமல் சென்று தியாக வாழ்வின் உயர்வை விளக்கிக் காண்பித்தார். “உலகம் அநித்தியம், கடவுள் சத்தியம்” என்று கர்ஜனை புரிந்தார். திரு ராமகிருஷ்ண பரமஹம்ஸரும், சுவாமி விவேகானந்தரும் அமைத்த இந்த

இதுவன்றே தெய்வத் தொண்டு
உறுதியான அடிப்படையிலே தான் சத்தியாக்கிரக தர்மத்தை நிலைநாட்டி பரிபூரண விடுதலை வாங்கிக் கொடுத்தார்.
素 来源
ஆராய்ச்சி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் சில சமயம் கடவுள் உண்மையைப் பற்றிச் சங்தேகம் உண்டாவது இயற்கை, “கடவுள் ஒருவர் இருந்தால் உலகில் துன்பங் கள் ஏன் இருக்கின்றன?’ என்ற கேள்விக்குத் தெளிவான விடை இதுவரை யாரும் சொல்லவில்லை. இது சாதாரண மனித அறிவினுல் அறிய முடியாத இரகசியம். இவ்வாறு நமது அறிவின் குறையை நாமே ஒப்புக் கொள்வது என்பது சற்றுக் கஷ்டம்தானே !
ஆனல் சென்ற நூற்ருண்டில் கடவுளை நேருக்கு கேர் கண்டவர் ராமகிருஷ்ண பரமஹம்ஸர். அவர் தாம் கட வுளைக் கண்டதுடனல்லாமல் இன்னும் பலரையும் காணச் செய்திருக்கிருர், கல்வி அறிவில் தேர்ந்த பல அறிவாளி கள் அவரைக் கண்டு வழிபட்டு அவரிடம் கடவுள் சாங்கித் தியம் இருப்பதை உணர்ந்திருக்கிருரர்கள். அவரிடம் சீடர் களாக இருக்கும் பாக்கியம் பெற்ற சிலருடன் சுவாமி விவேகானந்தர் ஸ்தாபித்த உத்தமமான ஸ்தாபனம்தான் ராமகிருஷ்ண மடம். இது உலகம் முழுவதும் இன்று பரவி யிருக்கிறது. மேல் நாட்டிலெல்லாம் நமது பாரத தர்மத் தின் சிறப்பைத் தன்னுடைய தொண்டின் மூலமாகக் காட்டி வருகிறது. அத்தகைய மடாலயங்களில் ஒன்று தான் கதிர்காமத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம்.
இந்த மடத்துக்குள் யார் வேண்டுமானுலும் செல்ல லாம். எல்லா இடத்துக்கும் சுதந்திரமாகச் செல்லலாம். சாதிமத வேறுபாடு ஒன்றும் இல்லை. மடத்தின் கம்பீரத் தோற்றமும், அது இருக்கும் அமைதி கிரம்பிய சூழ்நிலையும் 'வாருங்கள் வாருங்கள்" என்று நம்மை மெளனமாகக் கூவி அழைக்கின்றன.
மடத்துக்குள் இப்போது பிரவேசித்து விட்டோம். அதோ காவி உடை தரித்த ஒரு சங்கியாசி கை கூப்பி வரவேற்கிருர், அவர் கம்மைப் போன்ற மனிதர்தான்.

Page 81
138 ஈழநாட்டுப் பிரயாணம்
கரிய திருமேனி உடையவர்தான். ஆனல் முகத்திலே மட்டும் தெய்வத் தொண்டின் ஒளி வீசுகிறது. அந்தச் சிரிப்பு சாதாரண மனிதர்களிடம் காணமுடியாத தெய்வத் தொண்டில் சிறந்த உயர்ந்த சிரிப்பு. அவரிடம் சென்ற தும் நீண்ட நாள் நெருங்கிப் பழகிய நம்முடைய நண்பர் ஒருவரிடம் சென்றது போன்ற திருப்தியே நமக்கு ஏற் பட்டு விடுகிறது.
நம்மைப் பார்த்தவுடன் நாம் யார் என்று தெரிந்து கொள்வதில் கூட அவர் அக்கறை காட்டவில்லை "காலை ஆகாரம் ஆகிவிட்டதா? நீராடிவிட்டீர்களா?" என்றுதான் கேட்கிருர். அந்தக் கேள்வியில்தான் எவ்வளவு அன்பு. மனித குலத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாருமே தமது உறவி னர் என்ற உயர்ந்த உண்மை அல்லவா அதில் தெரிகிறது.
அவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி நாம் காலைச் சிற்றுண்டியை முடிக்கிருேம். இலங்கைத் தீவில் காணுத ஒரு அதிசயம், அந்த நாட்டில் வேறு எங்குமே கிடைக்காத முறையில் தமிழ்நாட்டு முறைப்படி சுகாதாரமும் சுத்தமும் நிறைந்த சைவ உணவு, இட்லி சாம்பார் கிடைக்கின்றன. இதுபோலவே அந்தந்த நாட்டுக்காரர்களுக்கு ஏற்ற வண் ணம் அவரவர்கள் விரும்பும் சைவ உணவு வழங்கப்படு கிறது. திருப்தியுடன் சாப்பிட்டு விட்டு எழுந்திருக்கிருேம்.
ராமகிருஷ்ண மடத்துச் சங்கியாசி கம்மை அழைத்துக் கொண்டு மடம் முழுவதும் சுற்றிக் காண்பிக்கிருர், மடத் தின் துப்புரவும் அதன் அமைப்பும் மனத்தைக் கவர்ந்து விடுகின்றன. அதிலும் எந்தவிதமான செளகர்யமும் இல்லாத அந்தக் கதிர்காமக் காட்டுக்குள் இவர்கள் எப்படி இவ்வளவு சுத்தமாக மடத்தை வைத்துக் கொண்டிருக் கிருர்களோ இந்த மடத்தின் தூய்மையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே எனக்கு அதற்குமுன் ஈழநாட் டில் ஏராளமான ரூபாய்கள் கொடுத்துத் தங்கியிருக்த “ரெஸ்ட் ஹவுஸ்" என வழங்கும் ஒய்வு விடுதிகளின் நினைவு வந்தது. அங்கெல்லாம் ஓய்வு விடுதிகளையும், அதன் சூழ் கிலையையும் எவ்வளவோ சுத்தமாகத்தான் வைத்திருக்க முயன்றிருக்கிருர்கள். அங்குள்ள மேஜை, காற்காலி,

இதுவன்ருே தெய்வத் தொண்டு 139
கட்டில், மெத்தை எல்லாம் சுத்தமாக இருந்தன. சூழ் கிலையும் கூடிய வரையில் சுத்தமாகத்தான் இருந்தது. ஆனல் அவர்கள் வழங்கும் சாப்பாட்டில் மட்டும்தான் சுகாதார சுத்தம் கிடையாது. சமைப்பவர்கள் சுத்தமாக இல்லை. ஒய்வு விடுதிக்கு அப்பால் உள்ள சூழ்நிலையின் சுகாதாரக் கேடால் ஈக்கள் கூட்டத்துக்கும் குறைவில்லை. கதிர்காமத்திலும் வேண்டியமட்டும் ஈக்கள் இருக் கின்றன. ஆனல் ராமகிருஷ்ண மடத்தார் ஈக்களைக்கூட அல்லவா விரட்டி அடித்திருக்கிருரர்கள்! கதிர்காமத்துக்கு வரும் யாத்ரிகர்களுக்கு வேண்டிய உணவும், இருக்க இட மும் அளிப்பதுடன் ராமகிருஷ்ண மடத்தின் தொண்டு முடிந்து விடவில்லை. அந்தக் கிராமத்தில் உள்ள மக்களுக் கும் சிறந்த முறையில் தொண்டு செய்து வருகிருர்கள் என்று அறிந்தேன். ஏழை எளிய மக்களின் குழந்தை களுக்குப் பால் வழங்குகிருர்கள். அவர்கள் அறியா மையைப் போக்கக் கல்விப் பணி செய்கிருர்கள். சுருக்க மாகச் சொன்னல்
'பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்" என்று பாரதி பறையறைந்து முரசு கொட்டினரே அந்தக் கவியின் வாக்கை நிறைவேறறி மகிழ்கிருர்கள் என்று துணிந்து கூறிவிடலாம். இவர்கள் ஆற்றும் தொண்டைப் பார்த்துவிட்டு, 'இதுவன்ருே தெய்வத் தொண்டு!" என்று சொல்லிச் சொல்லி வியந்து கொண்டே வந்தார் என்னுடன் வந்த கிறிஸ்தவ நண்பர், "இந்த ராமகிருஷ்ண மடத்தில் எல்லாம் இருக்கிறதே, ராமகிருஷ்ணரையும், சாரதாமணி அம்மையாரையும, விவே கானந்தரையும் காணவில்லையே?’ என்ருர் கிருஸ்தவ நண்பர்.
ராமகிருஷ்ண மடத்துச் சங்நியாசி புன்முறுவல் பூத் தார். எங்களே யெல்லாம் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த அறைக்குச் சென்ருர், அறைக் கதவைத் திறக் தார். அடாடா என்ன ஆச்சரியம் உண்மையிலேயே அங்கு பகவான் ராமகிருஷ்ணர் மோன நிஷ்டையில் அமர்க்

Page 82
1 40 ஈழ5ாட்டுப் பிரயாணம்
திருந்தார். எங்களுக்கெல்லாம் ஒரு கணம் ஒன்றும் புரிய வில்லை. எங்கள் திகைப்பைப் புரிந்து கொண்ட சுவாமி, ‘இது சிலேதான் ” என்ருர்,
எல்லாருக்குமே அது சிலைதான் என்று தெரிந்தாலும் அந்த உருவத்தைப் பார்த்தவுடன் காங்கள் திருப்பெருங் திரு பரமஹம்ஸரையே பார்த்து விட்டது போன்ற பரமானந்தத்தைப் பெற்று விட்டோம்.
ராமகிருஷ்ணரின் சிலைக்கு எதிரில் அன்னை சாரதா மணி தேவியாரின் திருவுருவமும், சற்றுத் தூரத்தில் சுவாமி விவேகானந்தரின் உருவச் சிலையும் இருந்தன.
அந்த முகங்களில் இருந்த தேஜோமயானந்தமும், கண் களில் மின்னிய ஞானக் களையும் நம்மைக் கவர்ந்து விடு கின்றன. ஆகா இப்பேர்ப்பட்ட அற்புதச் சிலைகளைச் செய்த சிற்பிகள் யார்? அவர்கள் மனிதர்களா? அல்லது தேவர்கள்தானே?
அந்தப் புண்ணிய மூர்த்திகளைத் தரிசித்து விட்ட மனத்திருப்தியுடன் ராமகிருஷ்ண மடத்திலிருந்து புறப் பட விரும்பினுேம்.
புறப்படுவதற்கு முன்னல் அங்கு தங்கியிருந்ததற்கும், சிற்றுண்டிகள் அருந்தியதற்கும் எவ்வளவு ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்க விரும்பினுேம், எங்கள் விருடபத்தைப் புரிந்துகொண்ட அந்தச் சங்கியாசி, "இது என்ன ஹோட்டலா, நீங்கள் சாப்பிட்டதற்கெல்லாம் பணம் வசூலிப்பதற்கு ?" என்று சொல்லிவிட்டார். எங் களுடன் வந்திருந்த நண்பர் 'காங்கள் ஏதாவது மடத்துக்கு நன்கொடை வழங்கலாமல்லவா ?’ என்று கேட்டார்,
*அதை எப்பொழுதும் வரவேற்போம்” என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னர் ராமகிருஷ்ண மடத்துச் சங்கியாசி.
மடத்துக்கு நன்கொடை கொடுத்த பணம் முக்கிய மல்லவானுலும் மடத்தின் தொண்டை மட்டும் மறக்க முடியவில்லை. பாலிலிருந்து நீரைப் பிரித்துவிட்டுப் பால மாத்திரம் அருந்தும் அபூர்வ சக்தி அன்னபட்சிக்கு உண்டு

இதுவன்ருே தெய்வத் தொண்டு 141 என்று சொல்லுவார்கள் அல்லவா? அதுபோல உலகத்து சமயங்களில் உள்ள உயர்ந்த அம்சங்களையும் பாரத தேசத் தின் பண்பாட்டுக்கும் பெருமைக்கும் நாகரிகத்துககும் உள்ளவாறு பல விசேஷ அம்சங்களையும் சேர்த்துக் கொண்டு மக்களுக்குத் தொண்டாற்றுவதற்காக அருமை யான திட்டம் வைத்துக் கொண்டிருக்கும் ராமகிருஷ்ண மடத்திலிருந்து புறப்பட மனமேயில்லை. எங்களை வர வேற்று உபசரித்த சக்கியாசியிடமிருந்து பிரியா விடை பெற்றுக்கொண்டோம்.
米 来 米
நேயர்களை இப்பொழுது இலங்கைத் தீவில் உள்ள மிகச் சிறந்த மலை வாசஸ்தலமான நுவரேலியாவுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். அங்கு போவதற்குள் வழியில் சில அருமையான இடங்களை யெல்லாம் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. அதையும் பார்த்துவிடு வோம். திசைமாருமை என்ற ஊருக்குப் பக்கத்தில் பறவைத் தீவு' ஒன்று இருக்கிறது. இந்தத் தீவில் உல கில் உள்ள அத்தனை விதமான பறவை இனங்களும் இருக் கின்றன. அந்தப் பறவைக் கூட்டத்தைப் பார்ப்பதற்காக உலகின் பல பாகங்களிலிருந்தெல்லாம் பறவை ஆராய்ச்சி நிபுணர்கள் வருகிருரர்களாம். வாருங்கள் அந்தப் "பறவைத் தீவை பார்க்கப்போகலாம்.

Page 83
14
பறவைத் தீவு
இலங்கைத் தீவிலே இப்பொழுது தமிழ் மக்களை இருக்க முடியாமல் செய்து வருகிருர்கள். அவர்கள் வோட்டு உரிமையைப் பிடுங்கிக்கொண்டு அவர்களை அர சியல் அநாதைகளாக்கி (5ாடற்றவர்களாகச் செய்து இலங் கையை விட்டே அனுப்பி விடுவதற்கான வழிகளில் இலங்கை சர்க்கார் தீவிரமாக ஈடுபட்டிருப்பது உலகறிந்த விஷயம். ஆனல் இதே இலங்கையில் உலகிலிருந்து வரு பவர்களை யெல்லாம் "வா 1 வா !” என்று வரவேற்று இருக்க இடம் அளித்து உண்ண உணவளித்து உபசரிக்கும் இடம் ஒனறு இருக்கிறது என்ருல் ஆச்சரியமாக இருக் கிறது அல்லவா ? உண்மையிலேயே அப்படி ஒரு இடம் இருககிறது. அப்படிப்பட்ட அதிசயமான இடத்துக்குத் தான் இப்பொழுது போகப் போகிருேம்.
திசைமாருமை என்னும் ஊரிலிருந்து நுவரேலி யாவுக்கச் செல்லும் பாதையில் கொஞ்ச தூரம் சென்ற வுடன் சாலையின் இருபுறமும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கண்ணுக்கு எட்டிய துாரம் ஒரே தண்ணிர் மயம்தான்; இந்தத் தணணிருக்கு மத்தியில் ஒரு சிறு தீவு இருக்கிறது. இந்தத் தீவைச் சுட்டிக் காட்டி, "இந்தச் சின்னஞ்சிறு தீவில்தான் உலகத்தின் பல பாகத்திலுள்ள பல இனத்த வர்கள் ஒன்ருகச் சேர்ந்து வாழ்ந்து வருகிருர்கள்’ என்ருர் உடன் வந்த ஆராய்ச்சி நிபுணர்.
அந்தத் தீவுக்குச் செல்லச் சாலை வசதியில்லை. தண் ணிரில் நீக்தியோ, படகு மூலமாகவோதான் செல்ல வேண் டும். அப்படிச் சென்ருல் அந்தத் தீவில் பார்ப்பதற் கென்று விசேஷமாக ஒன்றுமில்லை. கேவலம், ஒரு கட்ட டம் கூட இல்ல. வெறும் காடு மண்டிக் கிடக்கும் கோலத் தைத்தான் பார்க்க முடிகிறது.

பறவைத் தீவு 143
** இதிலேயா உலகின் பல பாகத்தில் உள்ள பல இனத்கவர்களும் குடியேறி ஒற்றுமையாக இருக்கிருர் கள் ?" என்றேன்.
அவர் ஒரு கணம் காட்டைப் பார்த்து விட்டுக் 'களுக்' கென்று சிரித்தார். " இன்னும் புரியவில்லையா உங் களுக்கு? தயவு செய்து நன்ருய்ப் பாருங்கள் தெரியும்" என்று பதில் சொன்னர்.
காட்டுக்குள் ஒரு முறை கூர்ந்து பார்த்தேன் காடாக இருந்தாலும் இடத்துக்கு இடம் எவ்வளவோ வித்தியாச மாக இருந்தது. அதைக் கூர்ந்து பாாக்கப் பார்க்க அதன் சிறப்புக்கள் தெரிய வந்தன. அதோடு வேதாந்தக் கருத் துக்கள் கூடத் தோன்ற ஆரம்பித்தன. காடு ஒவ்வொரு இடத்திலும் மாறுபட்டுத் தோன்றியது. ஒரு இடத்தில் முட்கள் அடர்ந்து கரடும் முரடுமாக இருந்தது. வேருெரு இடத்தில் சுகமான சூழ்நிலையுடன் கூடிய மரக் கூட்டங் களுடன் விளங்கியது. இவ்வாறு மனத்தினுல் கற்பனை செய்து பார்க்க முடியாத பலவிதத்தோற்றங்களிலும் சூழ் சிலைகளிலும் காடு விசித்திரமாகக் காட்சி அளித்தது. ‘இந்தப் பரந்த உலகத்தின் இயல்பை மனித சஞ்சாரமறற காட்டிலே கூட அல்லவா காண முடிகிறது' என்று எண்ணி வியந்து போனேன்.
" என்ன, புரிந்து கொண்டீர்களா?" என்ருர் உடன் வந்த ஆராய்ச்சி நிபுணர்.
* உலகத்தின் இயல்பை இக் காட்டுக்குள் வந்து உணர்ந்து கொண்டேன்’ என்றேன்.
* என்ன வேதாந்தம் பேசுகிறீர்களே? இந்த பறவைக் கூட்டத்தைப் பார்க்கவில்லையா ?” என்று கேட்டார்.
* பறவைகளையா! இதைத்தான் பார்த்துக் கொண்டே இருக்கிறேனே!” என்றேன்.
* இங்கு உலகில் உள்ள எல்லாவிதமான பறவை இனங்களும் இருக்கின்றன. இத்தீவுக்கே "பறவைத் தீவு' என்றுதான் பெயர் ' பாஸ்போர்ட்' " விஸா’ அம்மை, காலரா, பிளேக் ஊசி முதலிய தொந்தரவுகள் ஒன்றுமில்

Page 84
144 ஈழநாட்டுப் பிரயாணம்
லாமல் இந்தத் தீவுக்கு உலகின் பல பாகங்களில் இருந்தும் பறவைகள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருப் பதுடன் கிம்மதியாக வாழ்ந்தும் வருகின்றன” என்ருர் ஆராய்ச்சியாளர்.
இந்த விசித்திரக் கதையைக் கூறுகின்ற நண்பரை நேயர்களுக்கு அறிமுகப்படுத்தவில்லையே! இவர் ஒரு ஐரோப்பிய இளைஞர். தம் இளம் மனைவியுடன் உலகின் பல்வேறு காட்டுப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வருகிருர், ஈழ நாட்டின் காட்டுப்பகுதிகளையும் சுற்றிப் பார்த்து அங்கு வாழும் பறவைகளின் வாழ்க்கை முறைகளை ஆராய்ந்து வருவதாகச் சொன்னர். “மனிதன் உலகத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக் கின்றன. பறவைகளைத் தினம் தினம் பார்க்கிருேம். அவைக்ளைப் பற்றிய சிந்தனை நமக்குத் தோன்றுவதில்லை. அப்படித் தோன்றினலும் "பறவைகள் ஏதோ கூடு கட்டு கிறது, சாப்பிடுகிறது, முட்டையிடுகிறது, குஞ்சு பொரிக் கிறது, கடைசியில் செத்துப் போகிறது!’ என்றுதான் தோன்றியிருக்கும். ஆனல் பறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன’ என்று சொல்லி என்னைப் பறவைத் தீவுக்குள் அழைத்துச் சென்ருர் அந்தப் பறவை ஆராய்ச்சி நிபுணர். அப்படிச் செல்லும்போதே பறவைகளின் அதிசய வாழ்க்கை முறை களைப் பற்றிச்சொல்ல ஆரம்பித்தார்.
来 来源 来
மனிதர்களைப் போலவே உலகம் முழுவதும் பறவை கள் வாழ்கின்றன. பனி மூடிய வட துருவங்களிலும் தென் துருவங்களிலும் கூட வசிக்கின்றன. அடர்த்தி யான காடுகளிலும், விரிந்து பரந்து கிடக்கும் சம வெளி களிலும் இருக்கின்றன. சின்னஞ்சிறு தேனி அளவு உள்ள மிகச் சிறிய பறவையிலிருந்து ஆறடி உயரம் உள்ள மிகப் பெரிய பறவைகள் வரை இருக்கின்றன. ஆறடி உயரமுள்ள பறவைதான் கெருப்புக்கோழி. இதற்கு இறகுகள் உண்டு. ஆனல் பறக்க முடியாது.
பறவைகளிலேதான் எத்தனை நிறங்கள் பச்சைக்கிளி, பஞ்சவர்ணக் கிளி, சாம்பல் வர்ணக் கிளி, மஞ்சள் வர்ணக்

பறவைத் தீவு 145
கிளி, நீலக் கிளி, ஊதாக் கிளி என்று ஆயிரக்கணக் கான நிறங்களை உடைய பட்சி ஜாலங்கள் இருக்கின்றன. அதன் இறகுகளில்தான் எத்தனை விதங்கள்! மயில் தோகையைப் பார்த்திருக்கிருேம். இதுபோல விதம் வித மான தோகைகளும் வர்ண ஜால விக்தைகளை உடைய இறகுகளும் கொண்ட எண்ணற்ற பட்சி ஜாலங்கள் இருக் கின்றன. ஒவ்வொரு பறவையும் ஒரு விதமான வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டிருக்கிறது. கடலில் நீக்தி யும், கடல் நீரில் மூழ்கியும் வாழ்ந்து வரும் விசித்திரமான பறவைகளும் இருக்கின்றன. பல நாட்கள் எங்குமே தங்காமல் எல்லையற்ற ஆகாயத்திலேயே பறக்கும் பறவை களும் இருக்கின்றன.
காடுகளில் வாசம் செய்யும் பறவைகளும் வயல்வெளி யில் வசிக்கும் பறவைகளும் நகர்ப் புறத்தில் வாழும் பறவைகளும், கிராமத்தில் உலவும் பறவைகளும் என்று தனித்தனியே சில பறவை இனங்கள் இருக்கின்றன.
மனிதர்கள் பல நூறு ஆண்டுகளாகப் பறவைகளைப் பார்த்துப் பார்த்துப் பரமானந்தம் அடைந்து வந்திருக் கின்றனர். அவற்றின் நிறமும், அழகும், அவற்றின் இறகுகளின் அமைப்பும் மனிதனின் மனத்தைக் கவர்ந்து அவனுக்கு உற்சாகத்தை ஊட்டி வந்திருக்கின்றன. சித்தி ரக்காரர்கள் பறவைகளைச் சித்திரத்தில் தீட்டி மகிழ்க் திருக்கிருரர்கள்; சிற்பிகள் கல்லிலே செதுக்கிக் களிப் படைந்திருக்கிருர்கள், கவிகள் பறவைகளை வாழ்த்திப் பாடிப் பாடி ஆனந்தித்திருக்கிருர்கள். இதோ கமது கவிமணி அவர்கள் பச்சைக் கிளியைப் பார்த்துப் பரவசப் பட்டிருப்பதைப் பாருங்கள்.
“மாணிக்கச் செப்பினிலே-அமுதை வடித்துச் சுவைபெருக்கி பேணி யுனக்களித்த-பிரமன் பெரியன் பெரியனம்மா” என்று பாடிக் களித்திருக்கிருர், இன்னும் காத லர்கள் பறவைகளைத் தங்கள் காதல் தூதுவனுக்கிக் களித் திருக்கிருர்கள். வெறி பிடித்த மனிதர்கள், வேட்டை
10

Page 85
146 ஈழநாட்டுப் பிரயாணம்
யாடி மகிழ்வதற்கு என்றே சில பறவை இனங்களும் இருக்கின்றன. அவை மனிதனின் வேட்டை வெறியைத் தணிப்பதுடன் அவர்களுக்கு நல்ல உணவாகவும் இருக் கின்றன.
பறவைகள் மனித இனத்துக்குப் பல வழிகளில் உதவி செய்து வருகின்றன. உணவுத் தானியப் பயிர்களுக்கு இடையில் முளைத்து, அதை வளர விடாமல் தடை செய் யும் புல் பூண்டுகளை மட்டும் தின்று ஜீவிக்கும் பறவைகள் இருக்கிறன. உணவுப் பயிரை அழிக்கும் பூச்சி புழுக்களை மட்டும் கொத்தித் தின்று வாழும் குருவிக் கூட்டங்களும் இருக்கின்றன. இதனல் மனித இனம் அடையும் பயன் கொஞ்ச நஞ்சமல்ல. பயிர்களுக்குக் களையெடுத்து அதை அழிக்கும் புழுக்களைத் தின்று பயிர்களைக் காப்பாற்றி மனித இனத்துக்குத் தொண்டாற்றும் இந்தப் பறவை களின் ஒப்பற்ற தொண்டை மனிதர்கள் தெரிந்து அதற்கு நன்றி செலுத்த வேண்டாமா? சில பறவைகள் பழங்களை யும் தானியங்களையும் தின்ருலும் அவைகள் மனித இனத் துக்கு வேறு வகையில் அளிக்கும் உதவியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதை ஒரு கெடுதலாகவே எண்ண முடியாது.
பல நூறு வகைப் பறவை இனங்கள் இருந்தாலும், உருவத்திலும் நிறத்திலும் பேதப் பட்டிருந்தாலும் அவற் றின் உடல் அமைப்பு என்னவோ ஒன்றுதான். எல்லாப் பறவைகளுக்கும் இறக்கைகள் உண்டு; இரண்டு கால்கள் உண்டு. இறகுகள் உண்டு; அலகும் உண்டு. எல்லாப் பறவைகளும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவைதான். இந்த விவரங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த பறவையைக் காண்பித்து, "இதைப் பார்த்தீர்களா?" என்று கேட்டார் பறவை ஆராய்ச்சி நிபுணர். V "பார்த்தேன்’ என்றேன். "இந்த சாதிப் பறவை அடிக்கடி இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். தான் வசிக்கும் இடத்துக்கும் சீதோஷ்ண நிலைமைக்கும் ஏற்றவாறு தன்னைச் சீர்படுத் திக் கொண்டு வசிக்கும் திறமை உடையது” என்ருர்.

பறவைத் தீவு 14?
"ஏன் இவ்வாறு தான் வசிக்கும் இடத்தை அடிக்கடி மாற்றிக் கொள்கின்றது?"
"பறவைகள் ஏன் ஒரு இடத்தை விட்டு மற்ருெரு இடத்துக்குச் செல்கின்றன என்பதற்குச் சரியான கார ணம் கூற முடியவில்லை. ஆணு,லும் சீதோஷ்ண மாற்றத் தினலோ ஆகாரங்களின் வசதிக் குறைவினலோ அடிக் கடி இடத்தை மாற்றிக் கொள்கின்றன. பறக்கும் வசதி அதற்கு இருப்பதால் இஷ்டம் போல் இடத்தை மாற்றிக்கொள்ள முடிகிறது. இதோ பாருங்கள், இந்தக் காட்டிலே உலகத்தில் உள்ள பல்வேறு சாதிப் பறவைகளும் இருக்கின்றன. ரஷ்யா, ஆஸ்திரேலியா, சீன, ஜப்பான் முதலிய தேசத்துப் பறவைகள் கூட இங்கு வந்து வசிக்கின்றன. குளிர்காலத்தில் சற்று உஷ்ணமான இடத்துக்கும், அதிக உஷ்ணமான காலத்தில் சற்றுக் குளிர்ச்சியான இடத்துக்குமாகத் தங்கள் இடத்தை வெகு சுலபமாக மாற்றிக்கொண்டு விடுகின்றன."
"என்ன ஆச்சரியம் பெரிய மனிதர்கள் கோடை காலத்தில் மலைப் பிரதேசங்களுக்குச் செல்வது போல் அல்லவா இருக்கிறது’!
"மனிதர்களில் வசதி உள்ளவர்கள்தானே செல் கிருர்கள்? பறவைகள் அப்படி இல்லையே! எல்லாமே அல்லவா கிளம்பி விடுகின்றன.”
"பறவைகள் தாங்கள் எங்கு போகிருேம் என்பதை நிச்சயித்துக் கொள்ளுமோ?"
"ஆமாம். நிச்சயித்துக் கொள்கின்றன. ஒரு இடத்தி லிருந்து இன்னெரு இடத்துக்குக் குறிப்பிட்ட நேரத்தில் தான் செல்கின்றன. ஏதோ மனம் போனபடி யெல்லாம் அவைகள் செல்வதில்லை. தாம் போக வேண்டிய இடத் துக்குச் சென்று ஒழுங்காகத் திரும்பி, வரவேண்டிய இடத் துக்கு வந்து விடுகின்றன.”
"இந்த விவரங்கள் எல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தன?”
"எனக்கு இந்தப் பறவைகளின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ைேண்ட நாட்

Page 86
芷48 ஈழநாட்டுப் பிரயாணம்
களாகவே ஆசை. அதனல் பறவைகளின் வாழ்க்கை முறை களைப் பற்றிப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து சில உண்மைகளைத் தெரிந்து கொண்டேன். எனக்கு முன் பறவைகளின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்த நிபுணர் களின் நூல்களைப் படித்தும் பயன் பெற்றேன். ‘பனிக் காலத்தில் பறவைகள் பூமிக்குள் தவளை, தேரை முதலிய பிராணிகளைப் போல் வசிக்கும். பிறகு வெய்யில் காலத் தில் வெளியில் வரும்’ என்று தான் கொஞ்ச காலத்துக்கு முன் வரையில் கூட மனிதர்கள் நினைத்துக் கொண்டிருங் தார்கள். அது பொய், பறவைகள் பல ஆயிரக்கணக் கான மைல்கள் தங்கள் சீதோஷ்ணத்துக்கு ஏற்ற வண் ணம் இடத்தை மாற்றிக் கொள்வதற்காக எல்லையற்ற வான வீதியில் பறந்து செல்கின்றன என்ற உண்மையை இப்பொழுது கண்டு பிடித்திருக்கிருர்கள்.”
"பறவைகள் பல ஆயிரம் மைல் பறக்குமா?”
"ஆமாம், 'தங்கக் குஞ்சம்' என்று ஒருவகைப் பறவை இருக்கிறது. இது பார்ப்பதற்குத் தங்கத்தால் செய்த குஞ்சம் போலவே தோற்றமளிப்பதால் இதற்குத் தங்கக் குஞ்சம் என்றே பெயர். இது குளிர்ப் பிரதேசங்களில் பனிக்கட்டிப் பகுதிகளில்தான் வசிக்கும். பனி உருகிவிட் டால் பனிப் பிரதேசத்தைத் தேடிப் போகும். அப்படிப் போகும் போது சில சமயம் சமுத்திரத்தின் மேலே வந்துவிடும். இந்தக் குருவியால் தண்ணிரில் உட்கார முடியாது. அதனல் சமுத்திரத்தில் பல ஆயிரம் மைல் எங்குமே தங்காமல் பறந்து செல்லும்."
"நீங்கள் கூறுவது ஏதோ கற்பனைக் கதையைப் போலல்லவா இருக்கிறது.”
"இதைக் கேட்டே இப்படி வியந்து போகிறீர்களே! "துருவப் பறவை' என்று ஒரு பறவை இருக்கிறது. சாதா ரண சிட்டுக் குருவியைவிடச் சற்றுப் பெரிதாக இருக் கும். சாம்பல் கலந்த வெள்ளை நிறம் கொண்டது. செக்கச் செவேல் என்ற சிறிய அலகுடையது. வட துருவத்திலும் தென் துருவத்திலும் வசிப்பதால் இதற்குத் துருவப் பறவை என்று பெயர். இதற்கு இருட்டே பிடிக்காது.

பறவைத் தீவு 149
இருபத்தி நாலு மணி நேரமும் குரிய வெளிச்சம் உள்ள பிரதேசத்தில் தான் வாழும். ஆண்டுக்கு ஒருமுறை சூரியன் திசை மாறும்போது, நடுஇரவில் துருவப் பிர தேசங்களில் சூரிய அஸ்தமனம் தெரியும். இந்தக் காலங் களில் துருவப் பறவை தன் பிரயாணத்தைத் தொடங்கி விடும். ஒரு துருவத்தில் இருந்து இன்னெரு துருவத்துக்கே சென்றுவிடும். அதாவது உலகின் பாதி தூரத்தை ஒரு சில மாதங்களில் கடந்து விடும். மைல் கணக்கில் சொன்னல் இருபத்திரண்டாயிரம் மைல்கள் பறந்துவிடும். இவ்வளவு நீண்ட நெடுந்தூரம் பறந்து பிரயாணம் செய்து இன்னுெரு துருவத்தை அடைந்து அங்கு இருபத்து 15ாலு மணி கேரமும் குரிய ஒளியைப் பார்த்துக்கொண்டே ஆனந்த மாகத் தன்னுடைய வாழ்க்கையை கடத்தும்.”
"இந்தப் பறவைகள் எப்படி வானவெளியில் வழி வகுத்துக் கொள்கின்றனவோ?”
"விஞ்ஞானிகள் எல்லாம் பறவைகளுக்கு ஆருவது அறிவு கிடையாது என்கிருர்கள். ஆனல் எல்லையற்ற கடல் நீர்மீதும், வானவெளியிலும் எப்படியோ வழியைத் தெரிந்து கொண்டுதான் இந்தப் பறவைகள் போகின்றன. சுமார் இரண்டாயிரம் அடி உயரத்தில் பறவைகள் பறக் கின்றன. அங்கிருந்து பார்த்தால் அறுபத்தைந்து மைல் சுற்றளவு நிலப்பரப்போ, நீர்ப்பரப்போ தெரியும். மலை யின் சிகரங்களாக இருந்தால் இன்னும் கொஞ்சம் அதிக மைல்களுக்கு அப்பால் உள்ளவைகள் கூடத் தெரியும். ஆனல் பூமியின் வட்ட வடிவமான அமைப்பில் மலைச் சிகரம் தெரிந்தாலும் அதன் அடிப்பாகம் நிலப்பரப்பா நீர்ப்பரப்பா என்பதை எப்படி அறிந்துகொள்ள முடியும்? ஆனலும் பறவைகளுக்கு இருக்கும் உணர்ச்சி அதிசய மானது. மழை காலம், கோடை காலம், புழுக்கம் உள்ள காலம், இப்படிப் பல்வேறு சீதோஷ்ணங்களை எப்படியோ தெரிந்துகொள்கின்றன. வெகு வேகமாகப் பறந்தாலும் மிக ஜாக்கிரதையாகவே பறக்கின்றன. இதனலெல்லாம் தன்னுடைய பாதையைத் தெரிந்துகொள்கின்றனவோ என்னவோ இருந்தாலும் இதைப் பற்றி இன்னும் பல நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிருர்கள்,

Page 87
150 ஈழநாட்டுப் பிரயாணம்
இவ்வாறு பறவைகள் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்பவர் களுக்கு இத்தீவு ஒரு சொர்க்கம் என்றே சொல்லலாம்" என்று சொன்னர்.
இந்தப் பறவைத் தீவில் சற்று நேரம் உல்லாசமாகச் சுற்றிப் பார்த்தோம். எத்தனை எத்தனையோ விதம் வித மான பறவைகள் இங்கு இருக்கின்றன. பவழம் போன்ற மூக்கும், குண்டுமணி போன்ற கண்களும், சின்னத் தலை யும், சிறு சிறு இறக்கைகளும், துளித் துளி கால்களும் கொண்ட பலப் பல பறவைகளைப் பார்க்கும்போது மனத் தில் ஏதோ இனக்தெரியாத ஒரு இன்ப உணர்ச்சி ஏற்படத் தான் செய்கிறது.
பறவைகளிலும் ஆண், பெண் இருக்கின்றன. கூடு கட்டிக் கொள்ளுகின்றன. கொஞ்சிக் குலாவுகின்றன. குலம் தழைக்கக் குஞ்சு பொரிக்கின்றன. அவைகள் உல்லாசமாகப் பறந்து செல்வதைப் பார்க்கும்போது நமக் கும் இறக்கை முளைத்து இப்படிப் பறக்க மாட்டோமா என்றே எண்ணத் தோன்றுகிறது அந்தப் பறவைகளின் கண்களில் காணும் தெளிவும், அதன் முகத்தில் தோன்றும் குதூகலமும் நம்மை எங்கோ கொண்டு செல்கின்றன.
இதைப் பார்த்தபோது எனக்குப் பாரதியார் சிட்டுக் குருவியைப் பார்த்துச் சொன்ன வாசகம் நினைவுக்கு வந்தது. அடாடா அவர் அல்லவா கவிஞர் இந்த உலகை எப்படி எப்படி யெல்லாம் அனுபவித்திருக்கிருர் என்று எண்ணத் தோன்றியது. பாரதி, குருவியைப் பார்த்துவிட்டுச் சொல்வதைக் கேளுங்கள்:
"தெய்வமே எனக்கு இரண்டு இறகுகள் கொடுக்க மாட்டாயா? பாழ்பட்ட மனிதர் கூட்டத்தையும், அதன் கட்டுகளையும், நோய்களையும், துன்பங்களையும், உதறி எறிந்துவிட்டு நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்ல மாட்டேன? ஆகா! எத்தனை தேசங்கள் பார்க்க லாம்! எத்தனை பூக்கள்! எத்தனை மலைகள், எத்தனை சுனைகள், எத்தனை அருவிகள், எத்தனை நதிகள், எத்தனை கடல் வெளிகள் வெயில், பணி, மழை, காற்று இவை எல்லாம் எனக்கு கன்ருய்ப் பழக்கப்பட்டு, இவற்ருல்

பறவைத் தீவு 151
எனக்கு நோய்கள் உண்டாகாமல், எப்போதும் இன்ப உணர்ச்சிகளே உண்டாகும் நிலை ஏற்பட அருளலாகாதா?
"குருவிக்குப் பேசத் தெரியும்; பொய் சொல்லத் தெரியாது. குருவியில் ஆண் பெண் உண்டு; தீராத கொடுமைகள் இல்லை. குருவிக்கு வீடு உண்டு; தீர்வை கிடையாது. குருவிக்கு உணர்வுண்டு; உழைப்புண்டு; நாயகரில்லை; சேவகரில்லை.”
ஆகா! எவ்வளவு அருமையான மொழி இந்த அமர மொழியை ஒருதரம் எண்ணிவிட்டு, பறவைகளின் வாழ்க் கையை நேரில் பார்த்ததும் எனக்கும் தெய்வத்திடம் ஒரு பிரார்த்தனை செய்யத் தோன்றியது.
"தெய்வமே குருவிகளின் இந்த வாழ்க்கை முறை யைப் பார்த்தாவது இலங்கை சர்க்கார் புரிந்துகொள்ளும் படி அவர்களுக்கு அறிவூட்டக் கூடாதா? மனிதர்கள் எல்லாரும் சமம். சிங்களவரும் தமிழரும் ஒன்று. தமிழர்கள் சிங்களவருடன் எல்லாவித உரிமைகளையும் பெற்றுச் சுகமாக இருக்கலாம் என்று ஒரு அவசரச் சட்டம் இயற்றும்படி ஆட்சியாளர்கள் மனத்தை மாற்றி விடக் கூடாதா?’ என்று ஆண்டவனிடம் இறைஞ்சத் தோன்றியது.
மனித இனத்தை விட்டு விலகி வந்து பறவைகளின் வாழ்க்கை முறையைப் பார்த்தபோதுதான் சமதர்மத்தின் உயர்வை நன்ருக உணர்ந்துகொள்ளமுடிந்தது. பறவைகள் வாழ்ந்துவரும் இந்த அருமையான சமதர்ம வாழ்க்கை முறையை மனிதர்கள் என்று கடைப்பிடித்து உயரப் போகிருர்களோ?
"என்ன ஐயா இது, இந்த ஐரோப்பிய இளைஞருடன் காட்டில் சுற்றிக் கொண்டு? வாருங்கள், நுவரேலியா வுக்குப் போகலாம்’ என்று உடன் வந்த நண்பர் சற்று கடுமையாகச் சொன்னதும்தான் எனக்கு இந்த உலக நினைவு வந்தது. அந்த ஐரோப்பியப் பறவை ஆராய்ச்சி நிபுணரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு பறவைத் தீவிலிருந்து மனமில்லாமல் கிளம்பினேன். கார் நுவரேலி யாவை நோக்கிச் சென்றது.

Page 88
5
பாடுகின்ற மலர்கள்
“புத்தம் சரணம் கச்சாமி” என்று இனிய குரலில் பாடியது தாமரை மலர். "ஓம் நமோ நாராயணு!" என்று ராகம் இழுத்தது செம்பரத்தை மலர். "ஓ! முருகா! போற்றி!” என்று நெஞ்சுருகிப் பாடியது இருவாட்சி மலர். "குட்மார்னிங் ஹவ் டு யுடு” என்று வாய் திறந்து கீதம் இசைத்தது சிலுவை மலர். இன்னும் எத்தனை எத் தனையோ விதமான மலர்கள் என்னென்னவோ விந்தை மொழிகளில் அற்புதமாகப் பாடிக்கொண்டிருந்தன. ஆமாம் தலையை ஆட்டிக்கொண்டு பாடுவதுபோல்தான் அந்த வண்ண மலர்கள் எல்லாம் தோற்றமளித்தன. ஆனல் வாயைத் திறக்கவும் இல்லை; இனிய குரல் எடுத்துப் பாடவும் இல்லை. இயற்கையின் விந்தைகளில் மலர்கள் காட்டும் ஆவல்கள் இப்படித்தான். வாயைத் திறப்பது போலவும் பலவிதமான ராகங்களில் பாட்டுகள் பாடுவது போலவும் காணப்படும்; கடைசியில் பாடாமல் ஏமாற்றி விடும். `*,
நன்ருய்க் க்வனியுங்கள். அந்த லே ரோஜா மலர், பச்சை ரோஜா மலரைப் பார்க்கிறது. அந்தப் பார்வையில் தான் காதல் எப்படித் துள்ளி விளையாடுகிறது. இதோ வெள்ளை ரோஜா, மஞ்சள் ரோஜாவை மூண்டுவரும் இன்ப வெறியுடன் முத்தமிட அல்லவா நெருங்குகிறது ஆகா! அதோ முல்லை தன் முத்துப் போன்ற பற்களைக் காட்டிக் கொண்டு தன் அருகில் இருக்கும் மல்லிகையைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறது! தேனில் விழுந்த வண்டுபோல ஆவ லுடன் தழுவிக் கொஞ்சுகிறது! இதோ கொன்றை மலர்கள் கும்பல் கும்பலாகக் கூடி நின்று குலவி மகிழ் கின்றன என்ன விந்தையோ மாயா ஜாலமோ இந்த மலர்கள் எல்லாம் திடீர் என்று மறைந்து விடுகின்றன!
நம் கண் முன்னே வார்த்தைகளினுல் வர்ணிக்க முடி யாத விந்தைக் காட்சி தோன்றுகிறது! ஆசைக் கடலின்

பாடுகின்ற மலர்கள் 153
அமுதம்போல மலர்கள் எல்லாம் இளம் மங்கைகளாக உருவம் பெற்றுவிட்டன மலர்கள் பெண் உருக்கொண் டால் அவர்கள் அழகை எந்த மொழியில் இயம்புவது? மலர்மங்கைகளின் கண்கள் ஆளை விழுங்கும் அதிசயத் தைச் சொல்வதா? மருளுகின்ற அந்தக் கரு விழிகளில் மிதந்த காதல் கவிதைகளைச் சொல்வதா? தூய சுடர் முத்தைப் போன்ற பற்களில், கனி இதழ்களில், பாய்ந்த நிலவினைக் கூறுவதா? இந்தத் தேனிலினியாளின் திருக் கூட்டத்தின் அழகினில் மயங்கி அவர்கள் அருகில் நம்மை யறியாமலேயே நெருங்குகிருேம். "ஐயா! தொடாதீர்!" என்று அதட்டும் குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிற்கிருேம். இதுவரையில் எதிரில் இருந்த அந்தப் பெண் தெய் வங்கள் மறைந்துவிட்டனர். ஆங்காங்கு கொத்துக் கொத் தாய்ப் பூத்துக் குலுங்கும் மலர்க் கூட்டத்தைத்தான் பார்க்க முடிந்தது. "மலர்களைப் பறிக்காதீர்கள்!” என்று சொல்லிக்கொண்டு எதிரில் வந்து நின்ற தோட்டக்கார ரைப் பார்த்தபோதுதான், “கக்களைப் பூந்தோட்டத்துக் குள் நிற்கிருேம். இந்தத் தோட்டத்து அற்புதப் பூக்களின் அழகில் தோன்றிய ஈடறியா விந்தைக் காட்சிகள்தான் இதுவரையில் தோன்றியவை” என்ற உணர்வு ஏற் பட்டது.
கக்களைப் பூந்தோட்டத்துக்குள் இருந்த ஒரு சில மணி நேரத்தில்தான் மலர்கள் பாடும், பேசும், உறவாடும், காதல் புரியும், பலவித உருவங்களில் மாறி மாறித் தோன்றி மனத்தை மயக்கும் என்பதை யெல்லாம் தெரிந்து
கொண்டோம்.
மலர்கள் பாடுகின்ற இந்த அதிசயமான மலர் வனத் துக்குப் போகும்போது ஏற்பட்ட பிரயாண அநுபவங்களை இப்போது நினைக்கும்போது கூட ஒரு பக்கம் திகைப் பாகவும் இன்னுெரு பக்கம் இரக்கமாகவும் இருக்கிறது.
திசை மாருமையிலிருந்து கார் புறப்பட்டது. "விர்" ‘விர்' என்று காரின் வேகத்தால் காற்று வீசியது. அசுர வேகத்தில் கார் செல்வதால் புதுப் புது காட்சிகள் நம் கண் முன்னே தோன்றித் தோன்றி மறைகின்றன. அந்தக் காட்சிகள் நமக்குப் புதுப் புது இன்பத்தை அளித்து மகிழ் ஆட்டுகின்றன.

Page 89
154 ஈழநாட்டுப் பிரயாணம்
கடந்து செல்வதற்கும் காரில் செல்வதற்கும் ஒன்றுக்கு ஒன்று முரணுன இரண்டு அநுபவங்கள் நமக்கு ஏற்படு கின்றன. நடக்கும்போது நாம் காட்சிகளை நோக்கிச் செல்கிருேம். காரில் செல்லும்போதோ காட்சிகள் நம் மைத் தேடி ஓடி வருகின்றன. இதனுல் நமக்குப் பிரயாண அலுப்புத் தோன்றுவதில்லை. சுற்றுப்புறக் காட்சிகளின் அழகில் மயங்கி அதன் சுவையை ரஸித்து அநுபவிப்ப திலேயே பொழுதைப் போக்கி விடுகிருேம்.
நுவரேலியா செல்லும் சாலையில் இயற்கைத் தேவி பச்சை நிற உடை அணிந்த காடுகளாக இருபுறமும் நின்று முறுவல் செய்துகொண்டிருந்தாள். நாம் அவள் அழகைப் பார்த்துக் களிக்கிருேம். இந்த இன்ப அநுபவத்தை எழுத்திலே வடிக்கும்போது அது இலக்கியமாக, கலையாக மாறி நம்மை மீண்டும் இன்பத்தில் ஆழ்த்திவிடுகிறது.
"ஆமாம். எங்கோ பார்க்கும் காட்சிகளை எடுத்துக் கூறுவதால் யாருக்கு என்ன பிரயோசனம்? ஒருவாய் சோற்றுக்கு அதனல் வழியுண்டா?” என்று சிலர் கேட்கலாம்.
சரியான கேள்விதான். இதற்கு எத்தனையோ ஆண்டு களுக்கு முன்பே நமது பெரியோர்கள் மறுமொழி கூறி வைத்திருக்கிருர்கள். நல்ல உவமையோடு வெகு அழகாக எடுத்து விளக்கி யிருக்கிருர்கள்.
ஒரு கிளையின்மீது இரண்டு பறவைகள் அமர்ந்திருக் கின்றன. அதில் ஒன்று கனியைச் சுவைத்துத் தின்கிறது. மற்ருென்று அதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது. பார்க்கும் பறவையின் ஆனந்தம் இருக்கிறதே அது எல்லை யற்றது; கட்டுக் கடங்காதது. கலப்பற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கவல்லது.
பிரயாண இன்பமும் இதுபோலத்தான். பிரயாணத் தில் காணும் காட்சியோ, பொருளோ முக்கியமல்ல. காணு கின்ற கண்கள்தான் முக்கியம். பிரயாணம் செய்து செய்து பலவித அநுபவங்களைப் பெற்றுப் பல விஷயங் களைக் கண்ட கண்களை யுடையவர்கள் சிந்தனையில் எத் தனையோ எண்ணங்கள் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் 'காட்சிகள் எவ்வாறு நிகழ்கின்றன? எவ்வாறு நிகழ வேண்டும்? எவ்வாறு நிகழ்ந்தால் மனத்துக்கு இன்ப

பாடுகின்ற மலர்கள் 155
மளிக்கும்? என்பதைப் பற்றி ஆராய்வார்கள். அப்படி ஆராய்ந்து அதன் சுவையை வெளியிடுபவர்கள்தான் கலை ஞர்கள். அவர்கள் சிந்தனைகளில் உண்டாகும் கருத் துக்கள்தான் அழியாத அமர இலக்கியம்.
வ்வாறு பிரயாண இன்ப ரகசியங்களைப் பற்றிச் சர்ச்சை செய்துகொண்டே சென்றபோது இருபுறங் களிலும் கண்ட குரங்குக் கூட்டங்கள் பேச்சைத் தடை செய்தன. கூட்டம் கூட்டமாகக் குரங்குகள் கூனிக் குக்தி யிருந்த கொலு நேர்த்தியிலும் அவை ஆடிக் குதித்த அழகிலும் எங்களை மறந்திருந்தோம். தாய்க் குரங்கின் வயிற்றைத் தாவிப் பிடித்திருக்கும் குரங்குக் குட்டிகளும், அந்தக் குட்டிகளுடனே வேகமுறப் பாய்ந்த தாய்க் குரங்கு களின் லாவகமும் அதைத் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்ருகப் பாய்ந்து சென்ற குரங்குக் கூட்டமும் "இது இலங்கைதான்! இது இலங்கைதான்!” என்பதை நினை இயூட்டிக்கொண்டிருந்தன. இவ்வாறு சாலைகள் இருபுறத் திலும் குரங்குகள் தாவிக் குதித்து விளையாடிய காட்சி யைப் பார்த்துக்கொண்டே இருந்தபோதுதான் அந்த எதிர்பாராத அசம்பாவிதம் கடந்துவிட்டது.
திடீர் என்று ஒன்றன்பின் ஒன்ருகப் பல குரங்குகள் சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்துக்குத் தாவிக் குதித்து ஓட ஆரம்பித்தன. 'தட்'டென்று ஒரு சத்தம் கேட்டது. ஆ என்ன சொல்வேன். அந்தக் கணம் வரை யில் உற்சாகமாகத் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்த ஒரு குரங்கு காரில் அடிபட்டுவிட்டது. அந்த இடத்திலேயே மாண்டும் விட்டது!
ஒரு கணம் எண்சாண் உடலும் ஒரு சாண் உடலாகக் குன்றிவிட்டது போன்று வேதனைப்பட்டோம். டிரை வரோ "பாவம்" என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டுக் காரை நிறுத்தாமல் ஒட்டிக்கொண் டிருந்தார்.
"என்ன ஐயா! உமக்கு இரக்கமில்லையா? காரைக் கூட நிறுத்தாமல் போகிறீரே!”
"திரும்பிப் பாருங்கள்!” திரும்பிப் பார்த்தால் அடிபட்ட குரங்கைச் சுற்றித் திமுதிமுவென்று நூற்றுக்கணக்கான குரங்குகள் வந்து கூடியிருந்தன.

Page 90
置5ö ஈழநாட்டுப் பிரயாணம்
"இத்தனை குரங்குகளும் ஒரு கணத்தில் எப்படி வந்தன?”
"எல்லாம் இருபுறமும் உள்ள இந்தக் காட்டுக்குள் இருந்துதான்.”
"இந்தக் குரங்குகள் கூட்டமாகக் கூடி வந்து என்ன செய்யும்?
"நாம் மட்டும் காரை நிறுத்தி யிருந்தால் உயிரோடு திரும்பி யிருக்க மாட்டோம்."
"அப்படியா?" "ஆமாம்! நம்மை எல்லாக் குரங்குகளும் கூடக் கொன்றே போட்டிருக்கும்."
"அதுதான் காரை சிறுத்தாமலேயே ஒட்டிக்கொண்டு வந்திரோ?
"ஆமாம்.” "செத்த குரங்கைச் சுற்றி நின்று மற்றக் குரங்குகள் என்ன செய்யும்?
"என்ன செய்யும்? அந்தக் குரங்கைத் தூக்கிக் கொண்டு அலையும். அதன் உடல் கெட்டுப் போகும் வரையில் செத்த குரங்கை மற்ற குரங்குகள் கீழேயே விடாது. கடைசியில் கீழே போடும். அவ்வளவுதான்." இந்தக் கதையை அவர் சொல்லிக்கொண்டு வரும் போதே ஒரு கிராமம் குறுக்கிட்டது. அந்தக் கிராமத்தில் இன்னெரு அசம்பாவிதமும் நேர்ந்துவிட்டது. ஒரு கோழி வந்து காரில் மாட்டிக்கொண்டது. "ஐயோ!” என்று அலறிவிட்டார், உடன் வந்த நண்பர்.
'காட்டு வழியிலும் கிராமப்புறங்களிலும் பிரயாணம் செய்தால் இதுபோன்ற சங்கடங்கள் இல்லாமல் செல்லவே முடியாது” என்று நிதானமாக சொல்லிவிட்டுக் காரை நுவரேலியாவை நோக்கி வேகமாக ஒட்டிக்கொண்டிருக் தார் டிரைவர்.
சுமார் ஐந்து மணி நேரம் பிரயாணமானதும் சாலை கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏற ஆரம்பித்தது. மலைப் பிரதேசங்கள் வழியே செல்ல ஆரம்பித்தோம். "சுள்’ ளென்று வெய்யில் அடித்தாலும் "ஜில்லென்று காற்று

பாடுகின்ற மலர்கள் f5?
வீசிக்கொண்டிருந்தது. அந்தப் பக்கத்து ஊரையே மின் சார இயந்திரத்தின் மூலம் குளிர்சாதனம் செய்து வைத் தது போலக் குளிர்ச்சியாக இருந்தது. "ஜம்’மென்று தேயிலை மணம் வீசத் தொடங்கியது. தோட்டக்காரர் களின் சொர்க்கம் இதுதான்!” என்று தேயிலைத் தோட் டங்களைக் காட்டிச் சொன்னர் மட்டக்களப்பு நண்பர்.
அரை மணி நேரம் சென்றதும் சாலை ஒரு இடத்தில் வந்து சற்று வளைவாகத் திரும்பியது. "இதோ! கக்களைப் பூந்தோட்டம் வந்து விட்டது என்ருர்,
"கக்களைப் பூந்தோட்டம் எங்கே வந்தது? நாம்தானே கக்களைப் பூந்தோட்டத்துக்கு வந்திருக்கிருேம்” என்று ஒரு ஹாஸ்ய, வெடி குண்டைத் தூக்கிப்போட்டார் உடன் வந்த சென்னை நண்பர்.
எல்லா முகங்களும் "கலீர்’ என்று வெடித்து மலர்க் தன. பற்கள் கடகடவென்று தாளம் போட்டன. தாளம் போடாமல் என்ன செய்யும்? கக்களைப் பூந்தோட்டம் கொஞ்சமான உயரத்திலேயா இருக்கிறது! சமுத்திர மட்டத்திலிருந்து ஐயாயிரத்து ஐநூற்று எண்பத்து ஓர்அடி உயரத்தில் அல்லவா இருக்கிறது! அதிலும் நாங்கள் சென் றிருந்த போது முப்பத்தெட்டு டிகிரிதானே உஷ்ணம் இருக் தது! எங்களை வரவேற்பதற்கென்று தேவர்கள் வான வீதியில் இருந்து மலர் கொட்டுவது போல வெள்ளைப் பனியை யல்லவா "சிலுசிலு" வென்று உதிர்த்துக் கொண் டிருந்தார்கள்.
கக்களைப் பூங்தோட்டம் சாமான்யமான தோட்டம் அல்ல. ஐம்பத்தைந்து ஏக்கர் சுற்றளவு உள்ளது என்ருல் பார்த்துக் கொள்ளுங்கள். நீளத்திலும் அகலத் திலும் பரந்திருப்பது போல உயரத்திலும் மிக உயர்ந்திருப் பது. உலகத்தில் எத்தனை விதமான பூச்செடிகள் உண்டோ அவ்வளவு செடிகளும் இத்தோட்டத்தில் இருக்கின்றன. இந்தத் தோட்டத்தை "மலர்களின் சொர்க் கம்' என்று சொல்லுகிறர்கள். இந்தத் தோட்டத்தில் சுமார் நூறு மலர் ஆராய்ச்சி நிபுணர்கள் வேலை செய் கிருர்கள். கக்களைப் பூந்தோட்டத்தின் குப்பிரண்டு துரைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் என்ருல் தோட்டம்

Page 91
158 ஈழநாட்டுப் பிரயாணம்
எப்படிக் காப்பாற்றப்பட்டு வருகிறது என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இந்தத் தோட்டத்தின் வெளிப்பகுதியைக் காரிலிருந் தும் உள்பகுதியை கடந்தும் பார்த்தோம். பார்க்குமிட மெங்கும் பூக்கள்! பூக்கள்! பூக்கள்தான்! அடடா! பூக் களில்தான் எத்தனை வகைகள் எத்தனை நிறங் கள் தண்ணிரில் மலரும் மலர்கள் செடியில் பூக் கும் பூக்கள் மரத்தில் மலரும் புஷ்பங்கள் கிழங்கு வகைப் பூச் செடிகள் கொடி வகை பூச்செடிகள்! மணலில் வளரும் பூச் செடிகள்! மலைப்பாறையில் வளரும் புஷ்பச் செடிகள் மரப்பட்டையிலும், கரித்தூளிலும் தண்ணிரே இல்லாமல் வளரும் விக்தை மலர்ச் செடிகள்! கண்ணுடி வீட்டுக்குள் ஒய்யாரமாக வளரும் மலர்ச் செடிகள் ஓயாத மழையில் மலரும் பூச் செடிகள் என்று எண்ணத் தொலையாத அளவு பூச்செடிகள் இருக்கின்றன.
ரோஜாத் தோட்டத்திலேதான் எத்தனை விதமான ரோஜாக்கள் ரோஜாக்களில் சிவப்பு கிற ரோஜாவைத் தான் சாதாரணமாக எல்லோரும் பார்த்திருப்பார்கள். சிலர் வெள்ளை ரோஜாவைப் பார்த்திருக்கலாம். இங்கே சிவப்பு: சிவப்பில் பல ரகங்கள். வெள்ளை, லேம், பச்சை, ஊதா என்று எண்ணற்ற வகை ரோஜாச் செடிகள் இருக் கின்றன. அவை பூத்துக்குலுங்கி நிற்கும் அழகைப் பார்க்கப் பதினுயிரம் கண்கள் வேண்டும்.
கிழங்கு வகைப் பூங்தோட்டம் ஒரு விசித்திரமான தோட்டம். இந்தத் தோட்டத்தின் மத்தியில் ஒரு குளம் இருக்கிறது. அந்தக் குளத்தை இலங்கைத் தீவு போல அமைத்திருக்கிருரர்கள்! இதில் அல்லியும், நீலோற்பலமும், வெள்ளைத் தாமரையும், செக்தாமரையும் என்று பலவகை யான கிழங்கு வகைப் பூக்கொடிகள் இருக்கின்றன. இதில் சில பூக்கள் பூத்து சின்று நம்மை மலர்ந்த முகத்துடன் வரவேற்கின்றன. இந்தக் காட்சியைப் பார்க்கும்போது இலங்கைத் தீவில் இப்போது நிலவிவரும் அரசியல் பூசல்கள் மறைந்து, தமிழர் சிங்களவர் தகராறு தீர்ந்து, தமிழ் மக்கள் எல்லா உரிமையும் பெற்று இந்தத் தோட் டத்து மலர்கள் போல ஒன்ருக நின்று மலர்ந்த முகத்

பாடுகின்ற மலர்கள் 159
துடன் வரவேற்கும் நாள் வராதா என்று தான் எண்ணத் தோன்றியது.
மலைத் தோட்டம். அடாடா உண்மையாகவே மலை மீதே மலைத்தோட்டம் அமைத்திருக்கிருர்கள். இந்தத் தோட்டத்துக்குள் புகுந்து விட்டால் இரும்பு நெஞ்சில்கூட அன்பு தோன்றும். ரஸமற்ற இதயம் படைத்தவர்கள் பரம ரசிகர்கள் ஆகிவிடுவார்கள். "சங்கீதம் வீசை என்ன விலை? என்று கேட்பவர்கள் கூடப் பாட ஆரம்பித்து விடுவார்கள். அப்படிப்பட்ட மயக்க நிலை ஏற்படுகிறது.
இந்த மலர் சொர்க்கத்தை அமைத்தவர் நிச்சயமாக மிகப் பெரிய கலை உள்ளம் படைத்தவராக இருக்க வேண்டும். அந்த மனிதரைப் போன்று பல மனிதர்கள் தங்கள் ஆயுள்காலம் எல்லாம் பாடுடட்டு இந்த மலர்த் தோட்டத்தை அமைத்திருக்க வேண்டும். இந்தத் தோட் டத்தை அமைக்க எத்தனை மக்கள் ஊக்கத்துடன் உழைத் திருப்பார்கள் என்பதை அங்குள்ள மலர்ச்செடிகளே சொல்கின்றன! இக்தத் தோட்டத்தை இங்கு அமைக்க வேண்டும் என்று என்ன என்ன யோசனை செய்திருப் பார்கள் என்ன என்ன ஆலோசனைகள் நடைபெற்
றிருக்கும்
ஏதோ தேவலோகத்தில் இருப்பது போலல்லவா இருக்கிறது, இந்தத் தோட்டத்தில் இருக்கும்போது. இந்த மலர் வனத்தை நிர்மாணித்த மகா கலைஞனுக்கு மானசீகமாக ஒரு வணக்கம் செலுத்திவிட்டு நுவரேலியா நகரை நோக்கிப் புறப்பட்டோம்.
கக்களைப் பூந்தோட்டத்தை விட்டு வந்த பிறகும் அந்தத் தோட்டத்தின் அமைப்பும் அதன் அழகும் இன்ன மும் கண்முன்னே காட்சி அளித்துக் கொண்டேதான் இருக்கின்றன. அங்குள்ள மலர்கள் பாடும் குரல் காதிலே கேட்டுக்கொண்டே இருக்கின்றது. கக்களைத் தோட்ட்த்து மலர்கள் அழகின் மயக்கத்தால் உள்ளத்தில் தோன்றிய இன்பபோதை இன்னமும் இறங்கவில்லை!

Page 92
160 ஈழநாட்டுப் பிரயாணம்
ஈழநாட்டுச் சிங்கள மக்கள் தமிழை வெறுத்தாலும் கக்களைத் தோட்டத்து மலர்கள் தமிழை விரும்பி வரவேற் கின்றன. அந்தப் பொல்லாத மலர்கள் நமது நாஞ்சில் நாட்டுக் கவிமணியின் பாட்டில் மூழ்கித் திளைத்திருக்கும் அதிசயத்தையும் பார்த்தேன்.
"மண்ணிலிருந்து பொருள் வரினும்-அதை
மாற்றி மணம் பெறச் செய்திடுவோம்! கண்ணுக்கினிய கிறங்களெல்லாம்-விண்ணிற்
காணும் கதிரிடம் பெற்றிடுவோம்!”
என்று சில மலர்கள் கூடி நின்று "கோரஸ்" பாடிய காட்சி யும், இன்னும் சில மலர்கள்,
“ஈசன் அடியில் பணிந்திருப்போம்-அவர்
ஏந்து முடிமீதும் ஏறிநிற்போம் பூசனை செய்யும் அடியவரின்-உள்ளம்
பொங்கு களிப்பெலாம் காட்டி கிற்போம்”
என்று மிகுந்த கர்வத்துடன் பாடிக் களித்த கோலமும் மனத்தை விட்டே மறையவில்லை.
நுவரேலியாவுக்குச் செல்லும்போதே வழியில் சிதே லியாவையும் பார்க்கலாம் இங்குதான் சீதாதேவி இலங்கை யில் சிறைப்பட் டிருந்தாராம். சீதை சிறைவைக்கப்பட் டிருந்த புனிதமான இடத்தையும், புகழ்பெற்ற அசோக வனத்தையும் பார்ப்பதற்கு கேயர்களை அழைத்துப் போக விரும்புகிறேன்.
இதோ வண்டி வந்து தயாராக நிற்கிறது. எல்லாரும்
வண்டியில் ஏறிக்கொள்ளுங்கள்.

16
சிதேலியாவும் நுவரேலியாவும்
ஈழ நாட்டுக்கு வந்து ஒரு வாரங்தான் ஆகிறது. ஆனலும் வெகு நாட்கள் கடந்து விட்டது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டு விட்டது. ஈழ நாட்டின் காடுகள், ஏற்றமும் இறக்கமும் வளைவும் நெளிவுமான மலைப் பாதை கள், தேயிலைத் தோட்டம் நிறைந்த குன்றுகள், சிங்கள மக்கள், சிங்களப் பெண்கள், அவர்கள் தம் அங்க அசைவு களே அற்புதமாக எடுத்துக் காட்டும் முறையில் அணிக் திருக்கும் உடைகள், ஈழநாட்டுத் தமிழ் மக்கள், அவர்கள் பேசும் தேனினும் இனிய தமிழ் எல்லாமே புதுமையாக கமது கண்ணுக்குத் தோன்றினுலும், காதுக்குக் கேட்டா லும் மனத்திலே என்னமோ ஆழமாகப் பதியவில்லை. எல்லாவற்றிலும் பழைமை அதிகமாகக் கலந்திருக்கிறது. பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத கலை உணர்வு நிறைந்த புதுமை என்று ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை.
நமக்குத் தெரியாத புதுமை என்று இந்த உலகில் அதிக மாக இருக்கமுடியாது. ஆனலும் எப்போதாவது ஏதாவது ஒரு புதுப் பொருள் 5ம் கண்களில் படத்தான் செய்கிறது. இதுவரை நாம் பார்த்த பொருளாக அது இருப்பதில்லை. நம்முடைய மனத்தில் பழக்கப்பட்டு வந்த சூழ்நிலைக்கும் அது ஒத்து இருப்பதில்லை. உடனே கமக்குப் பழக்கமான வேருெரு பொருளோடு அதை ஒப்பிட்டுப் பார்ப்போம். அப்படிக் கூட ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அபூர்வமான புதுக் காட்சியாக இருந்தாலும் காம் அதற்கும் தயாராகி விடுகிருேம். அம்மாதிரியான காட்சிகள் நம்முடைய பழைய இலக்கியங்களில் இருந்தால் அதை நினைவூட்டிக் கொண்டு மகிழ்கிருேம்.
இவ்வாறு நமது பழைய இலக்கியக் காட்சியை நினை வூட்டி மகிழும்படியான மறக்க முடியாத இடம்தான் சிதேலியா. கக்களைத் தோட்டத்துக்கு அருகிலேயே சாலை

Page 93
162 ஈழநாட்டுப் பிரயாணம்
ஒரமாக ஒரு சிறு கோயில் இருக்கிறது. அந்தக் கோயி லுக்கு கேரில் வந்ததும் கார் கின்றது. "இந்தக் கோயிலை யும் இதைச் சுற்றியுள்ள பிரதேசங்களையும் பார்க்காமல் போகக் கூடாது. தயவு செய்து காரை விட்டு இறங்குங் கள்’ என்ருர் உடன் வந்த நண்பர்.
"இங்கு அப்படி என்ன விஷேசம்?" "இந்தக் கோயிலின்மீது எழுதி யிருப்பவைத் தயவு செய்து படித்துப் பாருங்கள். எல்லாம் தங்களுக்கே விளங்கிவிடும்’ என்ருர் நண்பர்.
"சிவமயம். சீதையம்மன் கோயில்” என்று கொட்டை எழுத்தில் நல்ல தமிழில் எழுதி யிருந்ததைப் படித்தேன். உடனே எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. "ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்? "சைவ சமயத்துக்கும் சீதையம்மனுக்கு மூடிச்சுப் போட்டு வைத்திருக்கும் சமரச சன்மார்க்க மனப்பான் மையை எண்ணிச் சிரித்தேன்’ என்றேன்.
"இதுவரையில் நான்கூட இதைக் கவனிக்கவில்லை" என்று சொல்லிவிட்டு அவரும் விழுந்து விழுந்து சிரித்தார். "தயவு செய்து கால் அணிகளைக் கழற்றிவிட்டுக் கோயிலுக்குள் வாருங்கள்” என்ருர்.
"காலில் இருக்கும் பாதுகைகளைக் கழற்றி வைப்பது இருக்கட்டும். இந்தச் சீதையம்மன் கோயிலுக்குள் கட்டாயம் போய்த்தான் ஆகவேண்டுமா?’ என்று நண்பரைப் பார்த்துக் கேட்டேன்.
"என்ன அப்படிக் கேட்கிறீர்கள் இந்த இடத்தில் தான் சீதையை இராவணன் சிறைப்படுத்தி வைத்திருக் தான். இதுதான் சீதாதேவி தவம் இருந்த புனிதமான அசோகவனம்' என்று சென்னர்.
"அடாடா இதையல்லவா கூறியிருக்க வேண்டும்" என்று சொல்லிக்கொண்டேகாலில் அணிந்திருந்த பாதுகை களைக் கழற்றிவிட்டுத் தரையிலே காலை வைத்தேன். அவ்வளவுதான். ஐஸ் கட்டியின் மீதே பாதத்தை வைத் ததுபோல ஜில்லென்று ஒரு தாக்குத் தாக்கிற்று. பாதத் தில் இருந்து உடலில் ஒரு சக்தி பாய்ந்து ஓடியதை உணர்க் தேன். அடுத்த கணம் கான் இந்த உலகில் இல்லை. கால

சிதேலியாவும் நுவரேலியாவும் 163
வெள்ளத்தில் மிதந்து எத்தனையோ ஆயிரம் ஆண்டு களுக்குப் பின்னல் சென்றுவிட்டேன். என் எதிரில் தெரிந்த சீதையம்மன் கோவிலில் மறைந்து விட்டது. உடன் வந்த நண்பர்களும் மறைந்துவிட்டனர்.
பத்தரைமாற்றுப் பசும்பொன்னல் செய்த தங்க விக்கிரகம் போன்ற சீதா பிராட்டி தலைவிரி கோலமாய் அசோக மரத்துக்கு அடியில் சோகமே உருவமாக உட்காக் திருக்கிருர். எங்கே திரும்பினுலும் சீதாதேவியின் சாக்தம் குடிகொண்ட திருமுகம் தோன்றிக்கொண் டிருக்கிறது! அவருடைய இதய தாபத்தை அங்குள்ள அசோக மரங் களின் சத்தத்தில் கூடக் காண முடிந்தது. அவருடைய தவத்தின் அற்புத சக்தி காற்று வெளியெல்லாம் பரவிச் சூழ்ந்து அந்தப் பிரதேசத்துக்கே துரய்மையை அளித்துக் கொண்டிருந்தது.
அசோக வனத்துக்கு அப்பால் உள்ளே இலங்கை நகரிலோ கேர்மாருண காட்சி. அங்கு வானளாவிய கூட கோபுரங்களையுடைய இராவணனின் தங்கமயமான அரண் மனை. முத்து மாலைகளும், ரத்ன கிரீடமும் தரித்த, இராவணன் தர்பார் மண்டபத்தில் கம்பீரமாக அமர்க் திருக்கிருன். தேவர்கள் எல்லாம் அவன் இட்ட வேலை யைப் பணிவுடன் செய்து கொண்டிருக்கிருர்கள். அவ னுடைய பட்டத்து ராணி மண்டோதரியோ அந்தப்புரத் தில் அமர்ந்திருக்கிருள். கற்பின் தெய்வமான அவள் சக்தி யினுல்தானே என்னவோ சீதையைப் சிறைப்படுத்திய பின்னரும்கூட இராவணன் எல்லாவிதமான சுகபோகங் களுடன் இருக்கிருன் போலும் மந்திரி பிரதானிகளும், முத்துப் பல்லக்குகளும், துவந்த யுத்தங்களும், இன் னிசைப் பொழிவுகளும், செளக்தரிய நடனங்களும் என்று இராவணனின் அரண்மனை கோலாகலமாக இருக்கிறது எல்லாவற்றிலுமே ஒரு வெறி மூண்டு கிடக்கும் அதிசய கோலத்தைத்தான் பார்க்க முடிகிறது.
ஒருபுறம் வெறியூட்டும் கேளிக்கையும், இன்னெரு புறம் சாந்தமும் அன்பும் நிறைந்த தூய்மையும் மாறி மாறித் தோன்றுகின்றன.

Page 94
164 ஈழநாட்டுப் பிரயாணம்
சத்தியம் தவழும் அசோக மரத்தின்மீது அநுமன் உட்கார்ந்திருக்கிருன். சீதையின் தவத்தைக் கண்டதும், அநுமனின் ஆனந்தம் எல்லை மீறிப் போகிறது. அழுக்குப் படிந்த ரத்தினத்தையும், தேய்ந்த சந்திரனையும் போல மலினமான நிலையிலிருக்கிருள் சீதை. அந்த நிலையிலும் அவள் கற்பும் காவலும் சிறிதும் கெடாமலிருக்கின்றன. இந்தக் கோலத்தைப் பார்த்தவுடன் அநுமனுக்குத் தைரி யம் ஏற்பட்டுவிடுகிறது. அறம் என்றுமே அழியாது என்ற கம்பிக்கையும் பிறந்துவிடுகிறது. மாசுண்ட மணியனுள்
வயங்கு வெங்கதிர்த் தேசுண்ட திங்களும்
என்னத் தேய்ந்துளாள் காசுண்ட கூந்தலாள் கற்பும் காவலும் ஏசுண்ட தில்லையால்
அறத்துக் கீடுண்டோ !
என்று கூறிக்கொண்டு அநுமன் ஆடுகிருன், பாடுகிருன், அங்கும் இங்குமாக ஆனந்த வெறிகொண்டு ஓடுகிருன்! இன்னும் அவனது தவத்தைப் பார்த்துவிட்டு, அவள் இருந்த நிலையைக் கண்டதும் அநுமனுக்கு ராமபிரானது நினைவு வந்துவிடுகிறது.
*காண கோற்றிலன்
அவன் கமலக் கண்களால்"
என்கிருன். ராமன் சீதா தேவியின் இந்தப் புனிதமான திருக் கோலத்தைத் தன்னுடைய கமலக்கண்களால் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று எண்ணிக் கொண்டே தாவித் தாவிக் குதிக்கிருன். 'தருமம் காத் ததோ? ராவணனுடைய வினைதான் அவளைக் காத்துக் கொடுத்ததோ? அல்லது சீதையின் கற்புத்தான் வேருேர் துணை பலமும் இன்றி அவளைக் காத்து வந்ததோ? யாரால் இவ்வளவு அபாரமான தற்காப்பு செய்துகொள்ள முடி யும்? இந்தச் செய்தியை என் தோழன் ராமனுக்கு எத் தனே தரம் சொன்னலும் என்னுடைய ஆவல் அடங்காது

சிதேலியாவும் நுவரேலியாவும் 165
போலிருக்கிறதே! இவள் தவத்துக்கு முன்னுல் தீவினைகள் என்ன செய்ய முடியும்? முடிவில் சத்தியம்தான் வெல்லும் என்று மேலே மேலே என்னென்னவோ சொல்லி அடுக்கிக் கொண்டே போகிருன் ராமதூதனன அநுமன்.
திடீரென்று காட்சி மாறுகிறது. ராமன் கொடுத்த சூளாமணியைச் சீதையிடம் அளிக்கிருன் அநுமன். பிறகு அவளிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்படுகிருன். போகும்போது இலங்கை நகரையே தீவைத்துக் கொளுத்தி விட்டுப் போகிருன். இலங்கைத் தீவு மட்டுமா எரிகிறது? ராவணன் கிர்மாணித்திருந்த அழகு நகரமே தீயில் எரிந்து அழிகிறது. அசோக வனத்தில் இருந்த சீதையும் இத் தீயினல் சிறிது சிரமப்படுகிருள். இந்த அழகு மிக்க இலக்கியக் காட்சிகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்ருக மனத்திரையில் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.
"என்ன நீங்கள் இந்த உலகிலேயே இல்லை போலிருக் கிறதே" என்று கேட்டுத் தோளைப் பிடித்து உலுக்கினர் நண்பர். அப்பொழுதுதான் எனக்கு இந்த உலக நினைவு வந்தது. இந்த உலக நினைவு வந்தவுடனேயே பாதத்தி லிருந்து உடலில் "ஜில்" என்று ஏறும் சிதேலியாவின் குளிர் வேதனையைத் தாங்க முடியாமல் தவித்துப்போனேன்.
குளிர்ச்சியின் வேதனை ஒருபுறம் இருந்தாலும் சீதை யம்மன் கோயிலுக்குள் சென்றதும் ராமாயண காலத்து அசோக வனத்துக்குள் அநுமனுடனேயே நாமும் வந்து விட்டது போன்ற உணர்ச்சிதான் ஏற்படுகிறது.
நேயர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். இந்தக் கட்டுரையைப் படிப்பதினலோ, அல்லது முன்னமே ஏற்பட்ட விருப்பத்தினுலோ சிதேலியாவுக்குப் போக விரும்புகிறவர்கள் அங்கே ஏதோ அசோக வனத்தையும், சீதையையும், அநுமனையும் இராவணனையும் நேருக்கு நேர் பார்க்கப்போகிருேம் என்று எண்ணிப் போகக்கூடாது. ராமாயணத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், கம்பனின் காவியத்தைப் படித்து அனுபவித்த ரஸிக உள்ளம் படைத்தவர்களுக்கும் ஒருவேளே அங்கு சீதையும் அநு மனும் காட்சி தந்தாலும் தரலாம். ஆகையால் அதற்கு வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்டு போனுல்

Page 95
166 ஈழநாட்டுப் பிரயாணம்
தான் சிதேலியாவை அனுபவிக்க முடியும் என்பதைக் கூறிவிடுகிறேன்.
சிதேலியாவில் சிதையம்மன் கோவிலுக்குப் பின்னல் ஒடை ஒன்று இருக்கிறது. அக்த ஓடையில் ஒரு சிறு சுனை காணப்படுகிறது. "இந்தச் சுனையில்தான் சீதாதேவி குளித்தாள். அதனுல்தான் இந்த இடத்துக்குச் சிதேலியா என்று பெயர் வந்தது” என்று சொல்கிருர்கள். இந்த ஓடையிலும் ஒரு அதிசயம். சலசலவென்று வேகமாக ஓடிவரும் இந்த ஓடை ஒரு இடத்துக்கு வந்ததும் பூமிக் குள் மறைந்துவிடுகிறது. கொஞ்ச தூரத்துக்கு அப்பால் பூமிக்குள்ளிருந்து கொப்புளித்துக்கொண்டு மீண்டும் மேலே வருகிறது. அந்த இடத்தில் ஓடையின் வேகம் அதிகமில்லை. அதில் இறங்கிக் குளிப்பதற்கு வேண்டிய வசதியான சூழ்நிலையில் இருக்கிறது. இதற்கும் ஒரு கதை சொல்கிருர்கள். "தான் குளிப்பதற்காக வேண்டிக் கங்கையை அமைதியுடன் வரும்படி சீதை வேண்டிக் கொண்டாளாம். அவள் வேண்டுகோளுக் கிணங்கிக் கங்கை இப்படித் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டு வருகிருள்' என்று சொல்கிருர்கள். இவ்வாறு பலப்பல கதைகள் அங்கு வழங்கி வருகின்றன.
ஒரு முக்கியமான விஷயம். இந்தக் கதைகளெல்லாம் எப்படியவது போகட்டும். இந்த இடத்தைப் பற்றி ராமா யண காவியத்தில் படிக்கும்போது மிக கன்ருய் இருக்கும். நேரில் போய்ப் பார்க்கும்போதோ "இவ்வளவுதான? என்று எண்ணத் தோன்றி விடும். ஆனல் இங்குள்ள வேறு சில இடங்களின் மகிமையை நேரில் பார்ப்பதில் உண்டாகும் உணர்ச்சியில் பத்தில் ஒரு பங்குகூட காவியத் தில் காணமுடியாது. சிதேலியா அமைப்பு அத்தகையது.
அநுமன் இலங்கையைக் கொளுத்தியதால் ஊர் அழிந்து போன பரிதாபக் காட்சியை இன்றும் சிதேவி யாவில் நேரில் பார்க்கலாம். அந்தப் பிரதேசத்தில் உள்ள மண் கூடச் சுமார் இரண்டடி உயரத்துக்கு அப்படியே தீயால் வெந்து கருகியது போல் கன்னங் கரேல் என்று கரிசலாகக் காட்சி தருகிறது.
சீதை குளித்த மகிமையினுல் தானே என்னவோ அந்தச் சுனையில் எப்போதும் வற்ருத நீர் ஊற்று இருந்து

சிதேவியாவும் நுவரேலியாவும் 167
வரும் அதிசயத்தைப் பார்க்கலாம். அந்தச் சுனையைச் சுற்றியுள்ள பிரதேசம்தான் அசோகவனம் என்று சொல் கிருர்கள். அங்கே ஏராளமாக வளர்ந்திருக்கும் ஒரு வகையான குட்டை மரங்களில் செக்கச் செவேல் என்று அழகான புஷ்பங்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக் கின்றன. இந்த மரம்தான் அசோக மரம்.
இதெல்லாம் உண்மையா இல்லையா என்பதைப் பற்றி கம்மால் உறுதி கூற முடியாது. ஆனல் இந்த இடம்தான் சீதை சிறை இருந்த இடம் என்பதை நிரூபிப்பதற்குப் பல அறிஞர்கள் முயன்றிருக்கிருர்கள். அநுமன் சீதையைப் பார்த்துச் சூளாமணியைக் கொடுத்த அசோகவனம் தான் இது என்பதை நிரூபிப்பதற்கு இன்னுெரு அத்தாட்சியும் இருக்கிறது. அநுமனின் சந்ததியார்கள் கூட்டம் கூட்ட மாக அங்கு ஆடிவரும் காட்சியைப் பார்க்கலாம். ஈழநாட்டுச் சொர்க்கம்
நேயர்கள் தயவுசெய்து நிமிர்ந்து உட்கார வேண்டும். கவனத்தை இந்தப் பக்கத்தில் திருப்ப வேண்டும். ஏனென் ருல் இப்பொழுது ஈழநாட்டுச் சொர்க்கத்துக்கு உங்களை அழைத்துச் செல்லப் போகிறேன்.
ஈழநாட்டைப் பொன் கொழிக்கும் தீவு என்றும், ஈழ நாட்டின் மலை மங்கையான நுவரேலியாவை லட்சுமி தேவி யின் இருப்பிடம் என்றும் சொல்லலாம் என்ருல், லட்சுமி தேவி கொலு வீற்று அரசு புரியும் இடம் நுவரேலியாவில் உள்ள தேயிலைத் தோட்டங்கள்தான். அந்தத் தோட்டத் தையும் அதைச் சுற்றியுள்ள இடங்களையும் பார்த்த போது "இதுதான் ஈழநாட்டுச் சொர்க்கம்!" "இது தான் ஈழநாட்டுச் சொர்க்கம்' என்று வாய் விட்டுச் சொல்லிச் சொல்லி மகிழத் தோன்றுகிறது.
நுவரேலியா உலகில் உள்ள மிகச் சிறப்பு வாய்ந்த மலை வாசஸ்தலங்களில் ஒன்று என்பதை மறந்துவிடக் கூடாது. ஆசியாக் கண்டத்தில் ஐரோப்பிய நாடு புன் முறுவல் பூக்கும் இடம் இதுதான். இங்கிலாந்தையும் சுவிட்சர்லாந்தையும் நுவரேலியாவில் பார்க்கலாம் என்கின் றனர், உலகைச் சுற்றுப் பிரயாணம் செய்த நிபுணர்கள், இங்கிலாந்தில் பூக்கும் வண்ணப் புது மலர்களையும், இன்

Page 96
168 ஈழநாட்டுப் பிரயாணம்
னிசையோடு செல்லும் சிற்ருறுகளையும், வானின்று ஒழு கும் அழகு மிக்க அருவிகளையும் நுவரேலியாவில் கண்டு களிக்கலாம். அதே போல சுவிட்சர்லாந்து தேசத்தில் காணப்படும் அழகு நிறைந்த சில இயற்கை அற்புதக் காட்சிகளையும் இங்கு காணலாம்.
வாருங்கள், நுவரேலியா நகரத்தைக் கடந்து சென்று அதன் அழகு மிக்க இயற்கைக் காட்சிகளையும் செளந்தர்ய தேவி இன்ப கடனமிடும் உல்லாசப் புல் வெளிகளையும் பார்த்து அனுபவிக்கலாம். குளிச்சியின் சுகத்துடன் கண் ஆணுக்குத் தோன்றும் எல்லாப் பொருள்களுமே புது அழ குடன் சுடர்விட்டு ஜொலிக்கின்றன. நூற்றுக்கணக்கான் ஆயிரக் கணக்கான ரூபாய்களை அள்ளிக்கொட்டி நகர்ப் புறங்களில் பூங்காவின் மத்தியில் புல் வெளிகள் அமைத் திருக்கிருர்களே அதெல்லாம் இங்கு காணும் இயற்கைப் புல் வெளிகளிடம் உறையோடக் காணுது. மரகதக் கம்ப ளத்தை, பச்சைநிற வெல்வெட்டுப் பாயைத் தரையில் விரித்திருப்பது போலக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யில் புல்வெளிகள் பரந்து விரிந்து கிடக்கின்ற காட்சியே காட்சி! இந்தக் காட்சியே போதும் நுவரேலியா ஈழநாட் டின் சொர்க்கம் என்று சொல்வதற்கு. அதன்மீது அடி வைத்து கடக்கவே கால்கள் கூசுகின்றன. இந்தப் புல் வெளியைத் தாண்டிச் செல்கிருேம். இரு புறமும் அலை மோதிக் கொண்டிருக்கும் நீர் நிலையைப் பார்க்கிருேம். மிகப் பெரிய ஏரி. இதற்குக் கிரகரி என்று பெயர். இந்தக் கிரகரி ஏரியின் கரையில் நின்று கொண்டிருக்கும் போது அங்கு ஏற்படும் இயற்கையின் இந்திர ஜால வித்தைகளை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை.
ஏரிக்கரையில் சற்று நேரம் நில்லுங்கள். நின்று நீர் நிலையையும் வானத்தின் அழகையும் பார்த்துக் கொண்டே இருங்கள். இதுவரை பூலோகத்தில் இருந்த நாம், ஏதோ ஒரு அபூர்வ சக்தியினல் சொர்க்கலோகத்துக்குப் போய் விட்டோம் என்றே தோன்றும். அவ்வளவு அபூர்வமான காட்சிகள் தென்படுகின்றன. கிரகரி ஏரியையும், நிலா தவழும் புல்வெளி என்று வழங்கும் மரகதப்புல் வெளிகளை யும் கடந்துசென்ருல் அங்கு ஒரு சிறுகுன்று மங்கை நம் மைச் சிரிக்காமல் சிரித்து வரவேற்கிருள். அவள் அழகில்

சிதேலியாவும் நுவரேலியாவும் 169
மயங்கி வெறி பிடித்தாற்போல அந்த மலையை நோக்கிச் செல்கிருேம். பிதிருத்தலகாலா என்ற இந்த மலையில் ஏறிச் செல்வதற்கு மூன்று மணி நேரம் ஆகிறது. மூன்று மணி ஆனலும் களைப்பு என்பதே ஏற்படவில்லை. கம் ஊரில் அரை பர்லாங்கு தூரம் கடப்பதற்குள் வியர்த்து விரு விருத்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கக் களைப்பு ஏற்பட்டு விடுகிறது. துவரேலியாவில் எத்தனை மைல் கடந்தாலும் களைப்பே ஏற்படுவதில்லை. 15டக்க கடக்க உற்சாகமும் மனத்தில் ஒரு இன்பமும் ஏற்படும் அதிசயத்தை அனுப வித்துப் பார்த்துத்தான் மகிழவேணும். பிதிருத்தலகாலா மலையின் அழகைச் சொல்ல வேண்டுமானல் ஒரே வார்த் தையில் சொல்லி விடலாம். அழகு நிறைந்த இளம் மங்கை ஒருத்தி நம் முன் நின்று கைகாட்டிக் கண்சிமிட்டி மயக்கு வது போன்ற பிரமைதான் ஏற்படுகிறது. இந்த மலையின் அழகைப் பார்ப்பதற்காக எலிசபெத் மகாராணியே இங்கி லாந்திலிருந்து ஈழத்துக்கு வந்திருந்தார் என்ருல் அதன் அழகைப் பற்றி அதிகம் விவரித்துக் கூற வேண்டுமா?
இந்த மலைமீது கின்று வான வெளியைப் பார்த்த போது அந்த வெளியில் உண்டான மாய வித்தைகளை இப் பொழுது நினைத்தால் கூட விக்தையாக இருக்கிறது. காரணமின்றிப் பலவித கோலங்களைப் புனைந்தது மேகம். எத்தனை எத்தனையோ நிறச் சாயல்களைப் பெற்றது வான வெளி. மேகத்தின் வடிவங்களும், வர்ணத்தின் கலவை களும் எத்தனை உண்டோ அத்தனையும் பார்க்க முடிந்தது. கலல கீர்த்தனையில் வரும் சங்கதிகளைப் போல் படிப் படி யாக வர்ணத்தின் பல்வேறு கலவைகளும் வான வெளியில் உதிர்ந்துகொண்டிருந்தன. மேகத்தின் வடிவங்களும் வர்ண பேதங்களும் ஒன்றுக்கு ஒன்று முரண்படவில்லை. ஆனலும் வான வெளியில் மேகங்கள் விசித்திரமான வேற்றுமை கொண்டு விளங்கி வந்தன. ஒரு புறத்தில் வாரிவாரி அள்ளி விட்டிருக்கும் வர்ணக் கோலம், இன்னெரு புறத்தில் அமைதியும், அடக்கமும், மென்மையும், ஆழமும் கொண்டு விளங்கும் விக்தைவெளி. ஒரே சமயத்தில் தெம்மாங்கையும், கீர்த்தனையையும் உற்சாகமாகப் பாடுகிருள் இயற்கைத் தேவி. இவை இரண்டும் வெவ்வேறு வகையானலும் ஒன்றுக்கு ஒன்று அழகு குறைந்து போய்விடவில்லே.

Page 97
፲?0 ஈழநாட்டுப் பிரயாணம்
நுவரேலியாவில் செல்லுகின்ற இட மெ ல் லாம் கொடிய மிருகங்கள் நிறைந்த காடுகளும், பசுமை நிறைந்த சமவெளிகளும், அழகு மிளிரும் குன்றுகளும் காணப்படு கின்றன. அவைகளிலிருந்து விழுகின்ற சிறுசிறு அருவிகள் மலைகளுக்கு முத்து மாலைகள் குட்டியது போல இன்ப மளிக்கின்றன. மலையிலிருந்து விழும் அருவிகளின் ஒசை, சாக்தம் தவமும் அந்தமலை மங்கையின் மங்காத இனிய கானமாக, மகர யாழின் அமுத கீதமாக எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இத்தகைய செளந்தர்ய தேவதையின் கொலு மண்ட பத்திலிருந்து எத்தனை எத்தனையோ வழிகள் செல்லுகின் றன. ஒவ்வொரு வழியில் சென்ருல் ஒவ்வொரு இன்பத்தை அனுபவிக்கலாம். மீன் பிடிப்பவர்க்கு வேண்டிய வசதி இருக்கிறது. நியூஸிலாந்தில் கிடைக்கும் ‘வானவில்" என்ற ஒரு வகை விசேஷ மீன் நுவரேலியாவில் கிடைக் கிறது. வேட்டையாடுபவர்களுக்கு வேண்டிய வேட்டைக் காடுகள் இருக்கின்றன "கால்ப்" என்ற பந்தாட்டத்துக்கு வேண்டிய சுகமான மிகப் பெரிய திடல் இருக்கிறது. குதிரைப் பந்தய மைதானம் இருக்கிறது. எல்லாம் இயற் கையாகவே அமைந்திருக்கின்றன.
உலகம் வியக்கும் அற்புத இடமான நுவரேலியாவைப் பார்த்து அனுபவிப்பதற்கு அறிவு வேண்டாம், அநுபவம் வேண்டாம், ரஸிக உள்ளம் வேண்டாம், ஒன்றுமே வேண் டாம். பின் என்ன வேண்டும்? வயிற்றுப் பசி மட்டும் இல்லாமல் இருந்தால் போதுமானது நுவரேலியா சொர்க்க, பூமியாகக் காட்சிதரும். "பசியோடு இருந்தால் நுவரேலியா என்ன உலகத்தில் எதையுமே அனுபவிக்க முடியாது” என்று கேயர்கள் சொல்லுவது காதில் விழுகிறது. "ஆமாம்; அது முக்காலும் உண்மை யாராலும் மறுக்க முடியாத உண்மை' என்று ஒப்புக் கொள்ளுகிறேன்.
அழகும் அமைதியும் நிலவித் தவழும் நுவரேலியா மலை மங்கைக்கு ஒரு வணக்கம் செலுத்தி விட்டு, ஈழ5ாட் டுச் சொர்க்கத்தினின்று கிளம்புவோம். ஈழ நாட்டிலேயே மிகப் பெரிய, ஏன்? கிழக்கு ஆசியாவிலேயே மிகச் சிறந்த தேயிலைத் தோட்டத்துக்குள் இப்பொழுது செல்வோம்.

7
தேயிலைத் தோட்டத்திலே 1
ஒரு ரசமான சிறு கதை. சில நூற்ருண்டுகளுக்கு முன்னல் நம்முடைய பாரத நாட்டில் ஒரு யோகி இருக் தார். அவர் இடைவிடாமல் தவம் செய்து கொண்டிருக் தார். தவத்தின் மத்தியிலே பல இடையூறுகள் ` ஏற்பட்டன. எல்லாவற்றையும் தம்முடைய மன உறுதி யினுல் வென்ருர், ஆனல் "அவள் பெண்மையைக் கண்டு” மயங்கி விட்டார். உடனே அவருடைய தலை கிறங்க ஆரம்பித்து விட்டது. இந்தச் சமயத்தில் அவர் தம்முடைய இக்கட்டான நிலையை உணர்ந்தார். மீண்டும் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு கடுமையான தவத்தில் ஈடுபட் டார். அப்போதும் அந்த மாதரசி வந்து கண்ணின் மணிகளை மூட ஆரம்பித்தாள். அவருக்கு வந்த கோபத் தில் இன்னது செய்வதென்று தெரியவில்லை. கருவிழிகளின் இமைகளையே கத்திரித்துப் போட்டு விட்டுத் தவம் புரிந்தார். மறுபடியும் அந்த மோகனங்கியின் தொல்லை தான் அவருக்கு ஏற்பட்டது. அவளுடைய மோகக் கிறுக் கிலிருந்து மீள முடியாமல் தவித்தார். எல்லாவற்றையும் துறந்து தவக்கோலம் பூண்ட அந்தத் துறவியையே சொக்க வைத்த அந்தப் பெண்மணி வேறு யாரும் இல்லை. உலகில் உள்ள எல்லாரையும் மயக்கித் தனக்கு அடிமை யாக்கிக் கொள்ளும் சாட்சாத் நித்திரா தேவிதான்! நித்திரா தேவியின் தொல்லையிலிருந்து விடுபடுவதற்குத் தவயோகி மேற்கொண்ட எல்லா முறைகளும் பயனற்றுப் போய்விட்டன. அவ்வணங்கின் மாயப் பிடியிலிருந்து மீள வழி தெரியாமல் தவியாய்த் தவித்தார். இந்தச் சமயத்திலே தான் அவருக்கு ஒரு பச்சிலை உதவி செய்தது. காட்டில் கந்த மூலங்களைச் சாப்பிட்டு வந்த தவயோகி ஒரு நாள் ஏதோ ஒரு செடியின் இலைகளிைப் பறித்துச் சாப்பிட் டார். என்ன ஆச்சரியம்! தம்மைப் பிடித்து ஆட்டி வந்த

Page 98
172 ஈழநாட்டுப் பிரயாணம்
மாயமோகிணி ஒதுங்கி மறைந்து விட்டாள். தூக்கம் கலைந்து விட்டது கித்திராதேவி யோகியை விட்டே போய்விட்டாள். அந்தப் பச்சிலையின் தயவால் தம்முடைய தவத்துக்கு இடையூறு செய்து வந்த நித்திரா தேவியை விரட்டி விட்டு வெற்றி கொண்டார்.
அந்த மகான் கண்டு பிடித்த பச்சிலைதான் தேயிலை. பிற்காலத்தில் மக்கள் எல்லாரும் இந்த இலையைச் சாப்பிட்டு வந்தார்கள். வெறும் இலையைத் தின்று இன்ப மயக்கத்தைப் பெற்று வந்த முறை மாறித் தேயிலை யிலிருந்து தேநீர் தயாரித்துச் சாப்பிட ஆரம்பித்தார்கள். தேயிலையைக் கண்டு பிடித்தது பாரதநாடாக இருந்தாலும் அதற்கு அடிமையாகாமல் இருந்து வந்தது. வெள்ளைக் காரர்கள் நம்மை ஆண்ட காலத்தில் இந்தத் தேநீர் குடிக்கும் வழக்கம் நமக்குச் சற்று அதிகமாயிற்று. நமக்கு வேண்டிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தேநீர் விருந்து வைத்தே உபசரிக்கத் தலைப்பட்டோம்.
இந்தியாவிலும் ஈழத்திலும்தான் அதிகமாகத் தேயிலை பயிராகிறது. ஆனலும் இங்கிலாந்து, சைன, ஜப்பான், ருஷ்யா ஆகிய இந்த நான்கு தேசங்களும்தான் தேயிலையை அதிகம் உபயோகப்படுத்துகின்றன. இந்த நாலு நாடு களின் தேசியபானமாகத் தேநீர் இருந்து வருகிறது. உலகின் பல பாகங்களிலும் கோடிக் கணக்கான மக்கள் தேர்ே அருந்துகிருர்கள். தேநீர் அருந்தாவிட்டால் வாழ் வின் சுவையே போய் விட்டதாகக் கருதுகிருர்கள். ஜப்பான் தேசத்தில் தேநீர் அருந்துவது ஒரு சமுதாய வழக்கமாக இருந்து வருகிறது. இதற்காகப் பெரிய கட்டுப்பாடும் சில சம்பிரதாயங்களுமே அவர் க ள் ஏற்படுத்தி யிருக்கிருர்களாம்.
ஜப்பானியப் பெண்கள் தம் வீட்டுக்கு வரும் விருந் தினர்களை வரவேற்று வணங்கியதும் தேநீர் தயாரிப்பார் களாம். அவ்வாறு வணங்கி உள்ளே சென்று தேநீர் தயாரிப்பது வரை ஒவ்வொரு காரியமும அபூர்வ கலை நயத்தோடு விளங்குமாம். பீங்கான் பாத்திரங்களைச் சுத்தம் செய்வது, அடுப்பு மூட்டுவது, பாத்திரத்தின் மூடியை விலக்குவது, சற்று கேரம் மூடி வைப்பது, பிறகு

தேயிலைத் தோட்டத்திலே 178
அந்தத் தேநீரைக் கோப்பைகளில் சாய்ப்பது, அதிலிருந்து தனித்தனி கிண்ணங்களில் ஊற்றி விருந்தினர்களுக்கு வழங்குவது ஆகிய இந்த ஒவ்வொரு பணியிலும் அழகு மண்டிக் கிடக்குமாம், தேர்ே அருந்தும் பீங்கான்களும் மதிப்பிட முடியாத சிற்பச் சிறப்புடன் விளங்குமாம். இவ்வாறு எவ்வளவோ அருமையாகத் தேநீர் வழங்கும் கலையைப் பாதுகாத்து வருகிருர்களாம்.
ஜப்பான் தேசத்தில் தேநீர் வழங்குவது எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். நமது நாட்டிலேயே தேநீர் குடிப்பது என்பது சர்வ "சாதாரணமாகி விட்டது. நித்திரா தேவியை வெல்லுவதற்கு மட்டுமல்ல, மனத்துக்கு உற்சாகம் ஏற்படுவதற்காகவே தேநீர் அருந்த வேண்டிய நிலை ஏற்பட் டிருக்கிறது.
"இந்த அதிசயமான மூலிகை எங்கு கிடைக்கிறது? எந்த மரத்தில் காய்க்கும்? மரத்தில் டின் டின்னகவே காய்த்துத் தொங்குமா?” என்றெல்லாம் கேட்டுக் கேலி செய்துகொண்டே வந்தார் எங்களுடன் வந்த நண்பர்.
"அப்படி யில்லை. மரத்திலும் காய்க்காது. டின்னகவும் தொங்காது. அது தோட்டத்தில் செடியில் விளைகிறது” என்ருர் சிறிதும் முகம் கோ ன ம ல், நுவரேலியா பெட்ரோ தேயிலைத் தோட்டத்துத் தொழிலாளர் கல அதிகாரி திரு தனுஷ்கோடி அவர்கள்.
"ஐயா, தனுஷ்கோடி அவர்களே! நாங்கள் தேயிலைத் தோட்டத்தைப் பார்த்தாக வேண்டுமே! அதற்கு ஒழுங்கு செய்ய முடியுமா?’ என்றேன்.
"முதலில் இந்தத் தேநீரைச் சாப்பிடுங்கள். பிறகு தேயிலைத் தோட்டத்துக்கும் போகலாம், தேயிலையை விஞ் ஞான முறையில் பதனிடும் தேயிலைத் தொழிற்சாலைக் குள்ளும் போகலாம்" என்று கூறி விட்டு ஒரு கோப்பை சூடான தேநீர் வழங்கினர் திரு தனுஷ்கோடி. அடாடா தேநீர் என்ருல் இதுவன்ருே தேநீர் தேநீரைச் சாப்பிட்ட தும் இதுவரை எங்களைச் சிரமப்டடுத்திக் கொண்டு வந்த நுவரேலியா குளிர்கூட எங்களை விட்டுச் சென்றுவிட்டது. திடீர் என்று உற்சாகம் பிறந்து விட்டது. புது மனிதர்

Page 99
፲?4 ஈழநாட்டுப் பிரயாணம்
களாகவே மாறி விட்டோம். தேயிலைத் தோட்டத்துத் தொழிலாளர் நல அதிகாரி திரு தனுஷ்கோடியும் மிகுந்த உற்சாகமாகத் தேயிலைத் தோட்டத்தைப் பற்றிக் கூறிக் கொண்டே எங்களைப் பறந்து விரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டத்துக்கு அழைத்துச்சென்ருர்,
ஈழ நாட்டின் செல்வமே இந்தத் தேயிலைத் தோட்டம் தான். தமிழ் நாட்டின் இரண்டு ஜில்லா விஸ்தீரணம் கூட இல்லாத ஈழ நாட்டில் விளையும் தேயிலையின் அளவு உல கத்தின் இரண்டாவது ஸ்தானத்தில் இருக்கிறது என்ருல் ஈழநாட்டின் தேயிலை வளத்தைப்பற்றி கேயர்கள் ஒருவாறு கற்பனை செய்துகொள்ளலாம்.
தேயிலைச் செடி செழித்து வளருவதற்கு உயரமான மலைப் பிரதேசமே பொருத்தமானது. மூவாயிரம் அடியி லிருந்து ஆருயிரம் அடி உயரம் வரை உயர்ந்திருக்கும் மலைப் பிரதேசங்களில் தேயிலைச் செடி நன்ருக வளரும். தேயிலைச் செடிக்கு நல்ல மழை வேண்டும். நிலம் எப் போதும் ஈரமாக இருக்க வேண்டும். ஆனல் நீர் தங்கி கிற்க முடியாமல் நிலம் சரிவாகவும் இருக்கவேண்டும்.
"ஈழ நாட்டில் அப்படிப்பட்ட இடங்கள் நிறைய இருக்கின்றனவோ?”
"ஆமாம். நுவரேலியா, கண்டி, ஹட்டன், பதுளை, ரத்னபுரி, ரத்வாளை முதலிய இடங்களிலெல்லாம் தேயி லைத் தோட்டங்கள் அதிகமாக இருக்கின்றன’ என்று கூறினர் தனுஷ்கோடி. V−
ஈழ நாட்டில் உள்ள ஒவ்வொரு தேயிலைத் தோட்ட மும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணம் கொண் டது. சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் இங்கு இருக்கின்றன. இந்தத் தோட்டங் களில் பல வெள்ளைக்காரர்களுக்குச் சொந்தமானவை. இப்பொழுது சில தோட்டங்கள் தமிழர்களுக்கும் சிங்கள வர்களுக்கும் சொந்தமாக இருக்கின்றன. வெள்ளைக்காரர் களின் தேயிலைத் தோட்டங்கள் எல்லாம் கூட்டுறவு முறையில் நடைபெற்று வருகின்றன. தமிழர்கள் சிங்கள வர்கள் தோட்டங்களே சிறு சிறு பகுதிகளாகச் சிதறிக்

தேயிலைத் தோட்டத்திலே 175
கிடக்கின்றன. தமிழர்களுடைய தோட்டங்களின் தலைவர் களைப் பற்றித் திரு தனுஷ்கோடி சொன்னவை ரசமாகவும் அதிசயமாகவும் இருந்தன. ஆகவே நம்ப முடியாததாகவும் இருந்தன. ஆனலும் அவர் கூறியவை அத்தனையும் உண்மை என்று அறிந்தேன்.
கையில் காலணு இல்லாமல் கங்காணிகளின் உதவி யினுல் தேயிலைத் தோட்டத்துக்குக் கூலியாளாக வந்தவர் களில் சிலர் தங்களுடைய இடைவிடாத முயற்சியின் காரணமாகத் தேயிலைத் தோட்டத்துக்கு அதிபராகி யிருக் கிருர்கள். இவர்களுடைய வாழ்க்கை நாம் படித்திருக்கும் கதைகளில் வரும் கதாநாயகர்களுடைய வாழ்க்கையை விட அதிசயமானது. இப்படி ஒரு சில தமிழர்கள் தோட்ட அதிபர்களாகவும், தோட்டங்களில் வேலைசெய்யும் தொழி லாளர்களிடம் வேலை வாங்கும் கங்காணிகளாகவும் உயர்க் திருக்கிருர்கள்.
தெய்வத் தமிழ் நாட்டில் இருந்து இலங்கைத் தேயி லைத் தோட்டத்துக்குச் சென்ற பல லட்சம் தமிழ் மக்களில் இப்படி விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில தமிழர் களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் வெறும் கூலி ஆட்க ளாகத்தான் இருக்கிருர்கள். இந்த லட்சக்கணக்கான தமிழ்மக்களின் உழைப்புத்த்ான் இலங்கையின் இன்றையப் பொருளாதார உயர்வுக்கே மூலகாரணமானது. தமிழ் மக்களின் உழைப்பு மட்டும் இல்லாமல் போயிருந்தால் இலங்கை வெறும் காட்டு மிருகங்கள் உலவும் பயங்கரக் காடாகத்தான் இருந்திருக்கும். காட்டு மிருகம் உலாவும் வனத்தைச் செல்வம் கொழிக்கும் பொன்னுடாக மாற்றிய இந்தத் தமிழர்களை "மலை நாட்டுத் தமிழர்கள்’ என்று அன்போடு அழைக்து வருகின்றனர். புத்தபிரானின் அன்பு வழியைக் கடைப்பிடிக்கும் கருணே உள்ளம் கொண்ட சிங்கள அரசாங்கம் இந்த மலைத் தமிழருக்குப் பெருங் தன்மையோடு வழங்கிய சட்டம்தான் உலக பிரசித்தமான பிரஜா உரிமைச் சட்டம் இவர்களுக்கு அளித்திருக்கும் இன்னெரு கெளரவம் தமிழை அரசியல் அந்தஸ்திலிருந்து இறக்கியதாகும்!
"என்ன ஐயா! இப்படியும் கடக்குமா?" என்று கேயர்கள் கேட்டது காதில் விழுகிறது. இது அத்தனையும்

Page 100
176 ஈழநாட்டுப் பிரயாணம்
உண்மை. ஒரு புறத்தில் மேல்,நாட்டு ஏகாதிபத்தியங்கள் அணுகுண்டைப் போட்டு மக்களைக் கொல்லுகின்றன. அதற்கு வசதி இல்லாத ஈழ நாட்டுச் சிங்கள ஏகாதிபத் தியம் தமிழ் மக்களுக்கு உள்ள அரசியல் உரிமையையும், மொழி உரிமையையும் பிடுங்கிக் கொண்டு கொடுமைப் படுத்துகிறது. காலம் இப்படியே செல்லுமா? மாறித்தானே தீரவேண்டும்.
இவ்வாறு பல விஷயங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும்போதே, "இதோ பாருங்கள்! இதுதான் தோட்டம்’ என்ருர் தொழிலாளர் நல அதிகாரி.
இயற்கை வளம்மிக்க மலைகளில் வரிசை வரிசையாகக் குத்துக் குத்தாக அழகாகக் கத்திரித்து விடப்பட்ட செடி கள் கண்ணுக்கு எட்டிய தூரம்வரையில் பச்சைப் பசேல் என்று காட்சி அளித்தன.
"இவ்வளவும் தேயிலைச் செடிகள்தானே?" "ஆமாம், இதுதான் தேயிலைத் தோட்டம்." "இதை எப்படிப் பயிரிடுகிருர்கள்?"
"காடும் மேடுமாக இருக்கும் இதுபோன்ற மலைப் பிரதேசங்களில் காட்டை வெட்டி கிலத்தைப் பண்படுத்து வார்கள். பிறகு தண்ணிர் தங்காமல் ஓடுவதற்கு வசதி யாகச் சிறு சிறு வாய்க்கால்கள் அமைப்பார்கள். மூன்று அடிக்கு ஒன்ருகக் குழிகள் வெட்டி அதில் பசும்தாள் உரம் போடுவார்கள். உரம் மக்கி மண்ணுேடு மண் ஆனதும் தேயிலைக்கன்றை நடுவார்கள். சில சமயங்களில் தேயிலை விதைகளையும் ஊன்றுவதுண்டு. தேயிலைக்கன்றுகள் மூன்று அல்லது நான்கு அடி வளர்ந்ததும் அதன் நுனி களைக் கத்திரித்துவிடுவார்கள்."
"ஏன் கத்தரிக்க வேண்டும்?"
"அப்பொழுதுதான் செடிகள் ஓங்கி வளராமல் படர்ந்து வளரும். செடிகளில் ஏராளமான துளிர்கள் வரும்.” ܚ
"எப்பொழுது தேயிலை பறிப்பார்கள்?"

தேயிலைத் தோட்டத்திலே 177
"ஒரு தேயிலைச் செடி, தேயிலைக் கொழுந்து எடுப்ப தற்கு வேண்டிய பக்குவம் அடையச் சுமார் மூன்று வருடங்கள் பிடிக்கும். இதற்குள் இந்தச் செடிக்கு நூறு முதல் நூற்று ஐம்பது ரூபாய் வரை செலவாகிவிடும்."
"ஒரு செடிக்கா நூற்று ஐம்பது ரூபாய்? அப்படி யானுல் இந்தத் தேயிலைத் தோட்டத்திலேயே ஆயிரக் கணக்கான செடிகள் இருக்கின்றனவே! இதற்கே ஏராள மான ரூபாய்கள் செலவாகியிருக்கும் போலிருக்கிறதே!"
"ஆரம்ப காலத்தில்தானே இந்தச் செலவு. மூன்று ஆண்டுகளுக்குப் பின்தான் செடியிலிருந்து கொழுந்து எடுக்க ஆரம்பித்திருக்கிருர்களே! அந்தச் செடியே பணம் கொடுக்க ஆரம்பித்து விடுகிறதே"
"ஒரு தேயிலைச் செடியில் எவ்வளவு காலத்துக்குக் கொழுந்து பறிக்கலாம்?"
"நாற்பது ஐம்பது ஆண்டுகள் வரை கொழுந்து பறிக்கலாம். ஆனல் இடையில் செடியைக் காப்பாற்றி வர வேண்டும்.”
"அதற்கு என்ன செய்ய வேண்டும்?” "செடிக்கு உரம் போட வேண்டும். களை எடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கம்மாத்துச் செய்ய வேண்டும்.”
"கம்மாத்துச் செய்வதா? என்ன ஐயா வேடிக்கை பண்ணுகிறீர்.”
'கம்மாத்து என்ருல் செடியின் முனைகளை அப்படியே கறுக்குவது. அதாவது "கிராப்' செய்துவிடுவது."
"ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? "அப்பொழுதுதான் தேயிலைச் செடியில் கொழுந்து கன்ருக வளரும்."
"அது என்ன "கொழுந்து "கொழுந்து' என்று விடா மல் சொல்லுகிறீர்கள்?"
13

Page 101
178 ஈழநாட்டுப் பிரயாணம்
“தேயிலையே கொழுந்துதானே செடியின் ஒவ்வொரு கிளையிலும் துளிர்க்கும் ஒரு மொட்டையும் இரண்டு கொழுந்தையும் சேர்த்துக் கொய்ய வேண்டும். இவ்வாறு கொய்யும் தேயிலைக் கொழுந்துகளில் இருந்துதான் தேயிலை தயார் செய்வது”
"கொழுந்து இல்லாமல் இலையையும் பறித்துவிட்டால், என்ன செய்வீர்கள்?"
"முற்றிய பச்சை இலைகளில் தேயிலையின் காரம்
மணம் ஒன்று மிருக்காது.”
"ஒரு மொட்டையும் இரண்டு துளிரையும் மட்டும் கொய்கிருர்கள் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?"
“தேயிலைக் கொழுந்து கொய்யும்போது அவர்கள் மத்தியில் கங்காணி நின்று கவனித்துக் கொண்டே இருப் பான். பிறகு கொய்த தேயிலைக் கொழுந்துகளை நிறுத்து வாங்கும்போது கவனிப்பார்கள். இதையும் மீறிவிட்டால் தேயிலைக் கொழுங்தைப் பாடம் செய்யும் இடத்தில் பார்த்து எடுப்பார்கள். அதையும் தாண்டி விட்டால் தேயிலைத் தூளிலேயே பார்த்துப் பொறுக்கிவிடுகிருர்கள்."
"தேயிலைக் கொழுங்தை கொய்த பிறகு இவ்வளவு வேலை இருக்கிறதா?”
"ஆமாம்; அது தொழிற்சாலையில் கடப்பது. பிறகு அதையும் பார்க்கலாம்."
"சரி. தொழிற்சாலைக்குள் செல்வதற்குள் இன்னும் சில விஷயங்களையும் சொல்லிவிடுங்கள். தோட்டத்தில் தொழிலாளர்கள் எத்தனை மணி நேரம் வேலை செய்கி முர்கள்? அவர்கள் வேலைமுறை எப்படி?
"பெரிய தேயிலைத் தோட்டங்களில் காலை ஐந்தரை மணிக்கே சங்கு ஊதும். சில தோட்டங்களில் 'தப்பு" கொட்டித் தொழிலாளர்களைத் துயில் எழுப்புவார்கள். தொழிலாளர்கள் எழுந்து அரை மணி நேரத்துக்குள் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு ஆறு மணிக்கெல் லாம் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மைதானத்துக்கு

தேயிலைத் தோட்டத்திலே 179
வந்து குழுமி விடுவார்கள். இந்த இடத்துக்குப் 'பிரட்டுக் களம்' என்று பெயர். பிரட்டுக்களத்துக்கு வந்திருக்கும் தொழிலாளர்களைப் பெரிய கணக்குப்பிள்ளை பதிந்து கொண்டு, ‘இன்னுருக்கு இன்ன வேலை’ ‘இன்னுருக்கு இன்ன வேலை’ என்று இனம் பிரித்துக் கொடுப்பார். பெண் களுக்குப் பெரும்பாலும் கொழுந்து கொய்யும் வேலையே கிடைக்கும். ஆண்களுக்கு 'கான் வெட்டல்’ ‘வாது வெட் டல்" "கவாத்து வெட்டல்" முத(பிய வேலை தரப்படும். பதினன்கு வயதுள்ள சிறுவர் சிறுமியர்களுக்குக் களை பறிக்கும் வேலை தரப்படும்.
“தேயிலைக் கொழுந்துகளைக் கொய்த பின்னர் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்வார்கள். அங்கு கொழுந்துகளே நிறுத்துக் கணக்குப் புத்தகத்தில் பதிந்து கொள்வார்கள். தினம் ஒவ்வொருவரும் இருபத்தெட்டு ராத்தல் கொழுந்து பறிக்கவேண்டும். அதற்குமேல் ஒரு ராத்தலுக்கு ஆறு சதம் அதாவது ஒரு அணு வீதம் அதிகம் கிடைக்கும். அவர்கள் சம்பளத்தைவிட அதிகமாக அவர் கள் கணக்கில் வரவு வைப்பார்கள். ஈழநாட்டில் நாள் ஒன்றுக்கு எண்பது ராத்தல் கொய்யக்கூடிய தமிழ்ப் பெண்கள் கூட இருக்கிருர்கள்."
"அது என்ன தமிழ்ப் பெண்கள் என்று அழுத்திச் சொல்கிறீர்கள்?
"ஆமாம் தமிழ்ப் பெண்கள்தான் நன்முக வேலை செய் வார்கள். சிங்களப் பெண்கள் எல்லாம் சொகுசுக்காரிகள். இருபத்தெட்டு ராத்தல்கூடக் கொய்ய மாட்டார்கள்.”
'மழை பெய்தால் என்ன செய்வது?"
"மழை பெய்தாலும், குளிர் அடித்தாலும் கொழுந்து கொய்தே ஆகவேண்டும். அந்தச் சமயத்தில் கொழுந்து களைக் கொய்யாவிட்டால் முற்றிவிடும். பிறகு பயன் ul-IT gill.'
"தோட்டத்தில் தேயிலைக் கொழுந்துகளைக் கொய் வதைப் பார்க்கலாமா?"

Page 102
180 ஈழநாட்டுப் பிரயாணம்
"நாம் அங்கேதானே போகிருேம்” என்று சொல்லிப் பக்கத்திலிருந்த தேயிலைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்ருர்,
அடாடா தேயிலைத் தோட்டத்துக்குள் நுழைந்ததும் திடீரென்று விசித்திரமான நாட்டிய உலகுக்கு வந்து விட்டது போன்ற பிரமை ஏற்பட்டது. வரிசை வரிசை யாக இளம் பெண்கள் நின்று கொண்டிருக்கிருர்கள். அந்த அழகிகளின் தலையிலிருந்து நூல்கயிற்றின் உதவி யால் முதுகில் ஒரு கூடை தொங்குகிறது. தேயிலைச் செடிகளுக்கு முன்னல் கின்றவண்ணம் தங்கள் முத்துப் பற்கள் தெரிய முறுவலித்துக் கொண்டு கொழுந்து கொய் கிருர்கள். பெண்மணிகளின் தளிர்கரங்கள் வெகு வேக மாகத் தேயிலைத் தளிர்களைக் கொய்து தங்கள் முதுகில் இருக்கும் கூடைக்குள் போடுகின்றன. இது ஏதோ அபிநயம் பிடிப்பது போலிருக்கிறதே ஒழிய, தேயிலை கொய்வது போலவே இல்லை. தேயிலைச் செடிகள்மீது அந்தப் பெண்களின் விரல்கள் மேவும் அழகைச் சொல் வதா? கண்மூடிக் கண் திறக்கும் 5ேரத்துக்குள் கொழுந் தைக் கொய்து கூடையில் போடும் பாவத்தைச் சொல்வதா? எதைச் சொல்வது என்றே தெரியவில்லை. தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து கொய்யும் காட்சியே, காட்சி தங்க விக்கிரகம் போன்ற அந்தப் பெண்கள் தோட்டத் தில் நின்று தேயிலைக் கொழுந்தையா கொய்கிருர்கள் இல்லை. தேயிலைச் செடி தன் கொழுந்திலே வைத்திருக்கும் தங்கத்தை யல்லவா கொய்கிருரர்கள்
தேயிலைக் கொழுந்தெடுக்கும் இந்த அற்புதமான காட்சியைப் பார்த்துவிட்டுத் தேயிலைத் தொழிற்சாலைக் குள் செல்வோம்.
தேயிலைத் தொழிற்சாலைக்குள் கடக்கும் விக்தைகளை யெல்லாம் இன்னும் சில மணி நேரத்தில் பார்க்கலாம்.

18
தொழிற்கூடம் பாரீர் 1
கொத்துக் கொத்தாகத் தழைத்திருக்கும் தேயிலைத் தோட்டத்துக்கு மத்தியிலே நாலு மாடிகளை உடைய தொழிற்சாலை கம்பீரமாக நின்று நம்மை வரவேற்கின்றது. மலேயின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் இந்தத் தொழிற் சாலைக்குள் செல்கிருேம். மலை என்றதும் நம் மனக்கண் முன் எழும்புவது போன்ற மலை அன்று இது. அது போலவே காம் நகர்ப்புறங்களில் பார்த்திருக்கும் தொழிற் சாலைகளைப் போன்ற தொழிற்சாலையும் அல்ல இது.
சிகரக் கூட்டங்கள் தென்படும் கருங்கல் பாறைகளா லான மலைகள் அல்ல, தேயிலைத் தொழிற்சாலைகள் அமைக் திருக்கும் மலைகள். நாம் அங்கு நின்று பார்த்தால் எதிரே பூமி சரிவாகக் கீழ்நோக்கி இறங்கும். அதில் சிறு சிறு புதர்களாகத் தழைத்திருக்கும் தேயிலைச் செடிகள். வரிசை வரிசையாகக் கண்ணுக்கெட்டிய தூரம் இந்தத் தேயிலைப் பண்ணைகள் குன்றின் மேல் மட்டத்திலிருந்து கீழ்வரைக்கும் படிப்படியாக இறங்கிச் செல்லும். இந்தப் பசுமை நிறைந்த தேயிலைத் தோட்டத்தின் மத்தியிலே மங்கைப் பருவமடைந்த பெண்கள் மலர் கொய்வது போலத் தேயிலைக் கொழுந்தைக் கொய்து கொண்டிருப் பார்கள். இந்தக் காட்சியைப் பார்த்து அனுபவிப்பதற் காகவே காம்கூட ஒரு தேயிலைத் தோட்டத்தை வாங்கி விடலாமா என்ற ஆவல் உண்டாகும். தேயிலைக் தோட்டத்தை வாங்குவது என்ன சாமான்யமான காரியமா ? லட்சக்கணக்கான ரூபாய்கள் அல்லவா வேண்டும்! "
தேயிலைத் தொழிற்சாலை என்ருல் அதில் பதினுயிரக் கணக்கானவர்கள் வேலை செய்ய மாட்டார்கள். கரும் புகைகளைக் கக்கிக்கொண்டு வானுேங்கி நிற்கும் உயரமான

Page 103
183 ஈழநாட்டுப் பிரயாணம்
புகை போக்கிகள் கொண்ட ராட்சஸக் கட்டங்கள் உடை யவை அல்ல, தேயிலைத் தொழிற்சாலைக் கட்டடங்கள். ஆனல் ஒன்றின்மேல் ஒன்முக அடுக்கு அடுக்காகத் தேயிலைக் கொழுந்தைப் பாடம் செய்யும் அறைகளும், பாடம் செய்த கொழுந்துகளை அரைத்துப் பக்குவப் படுத்தும் இயந்திரங்களும், அரைத்த தேயிலைத் தூளை இனம் பிரிக்கும் அறைகளும், இனம் பிரித்த தேயிலைத் தூள்களைப் பெட்டியில் அடைக்கும் இடமும் கொண்ட விசாலமான நாலு அடுக்குகள், மூன்று அடுக்குகள் கொண்ட அழகான கட்டடங்களை உடையவை. இந்தத் தொழிற்சாலைக்குள் அதிகபட்சமாக வேலை செய்யக் கூடியவர்கள் ஐம்பது, நூறு அல்லது நூற்றைம்பது பேர்கள் இருக்கலாம். அவ்வளவுதான்.
"வாருங்கள். தொழிற்சாலையை மேல் மாடியிலிருந்து பார்த்து வருவோம்’ என்று சொல்லித் தொழிற்சாலையின் மேல் அடுக்குக்கு அழைத்துச் சென்ருர் திரு தனுஷ்கோடி.
வெளியில் ஜிலுஜிலு என்று குளிர் காற்று அடித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து தொழிற்சாலையின் உள்ளே சென்றதும் ஒருகணம் ஒன்றும் புரியவில்லை. தேயிர்லத் தொழிற்சாலைக் கட்டடத்தின்மேல் மாடியில் சற்று வெப்பம் நிறைந்த புயல் காற்றே வீசிக்கொண்டிருந்தது.
"என்ன காற்று இது? எங்கிருந்து இப்படி மிகுந்த உஷ்ணத்துடன் வீசுகிறது?"
"கீழ் அறையில் காற்றைச் சூடாக்கும் இயந்திரம் இருக்கிறது. காற்றைச் சூடாக்கிய பின்னர் அந்தக் காற்றை இந்தக் குழாய்கள் மூலம் தேயிலைக் கொழுந்து களைப் பாடம் செய்யும் அறைக்குள் விடுகிருேம்” என்று சொல்லி அருகிலிருந்த ஒரு குழாயைக் காண்பித்தார். இளம் சூட்டுடன் காற்று புயல்வேகத்தில் அந்தக் குழாய்க் குள்ளிருந்து சிறிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.
"காற்றை ஏன் சூடாக்குகிறீர்கள்?"
“தேயிலைக் கொழுந்து காய்ந்து பாடமாக வேண்டும். அதை வெய்யிலில் உலர்த்தக் கூடாது! இங்கு வெய்யிலும் அடிக்காது. அதனல் தேயிலைக் கொழுந்தும் உலர்ந்து

தொழிற்கூடம் பாரீர் 183
வாடிப் பாடமாகாது. அப்படியே வெய்யிலில் உலர்த்தின லும் எல்லாக் கொழுந்துகளும் ஒன்றுபோல் உலர்ந்து பாட மாகாது. அதற்காகத்தான் இப்படிக் காற்றச் சூடாக்கிக் குழாய்கள் மூலம் தேயிலைக் கொழுந்துகளை உலர்த்திவைத் திருக்கும் அறைக்குள் விடுகிருேம்” என்று சொல்லித் தேயிலைப் பாடம் செய்யும் அறைக்குள் எங்களை அழைத் துச் சென்ருர் திரு தனுஷ்கோடி.
சாக்குகளைக் கொண்டு தட்டுத் தட்டாகச் செய்த பெரிய அலமாரிகள் கிறைந்த விசாலமான அறை. அந்த அலமாரிகளில் ஒவ்வொரு சாக்குத் தட்டுகளுக்கும் மத்தி யில் அரை அடி இடைவெளி இருந்தது. அந்தச் சாக்குத் தட்டுகளில் தேயிலைக் கொழுந்துகளை ஒன்றின்மேல் ஒன்று படாமல் பரப்பி உலர்த்தி வைத்திருந்தார்கள். தேயிலைக் கொழுந்துகளின் சுகமான மணம் அந்த அறையில் பரவி மனத்தை மயக்கியது.
"ஏன் இப்படிச் சாக்குத் தட்டுகள் வைத்திருக்கின் றன? இங்கெல்லாம் நல்ல பலகைகள் கிடைக்காதோ? என்றேன்.
"சாக்குக்குத்தான் தேயிலைக் கொழுந்திலுள்ள தண் ணிரை இழுக்கும் சக்தி உண்டு. அத்துடன் இந்த உஷ்ணச் காற்றும் சேர்ந்தால் தேயிலைக் கொழுந்துகள் சற்று வாடி உலர்ந்து பாடமாகிவிடும்."
"பாடமான தேயிலைக் கொழுந்துகளே என்ன செய் வார்கள்?
அருகில் இருக்கும் ஒரு அறைக்கு அழைத்துச்சென்று அங்கு தரையில் இருந்த ஒரு சில துவாரங்களைக் காண் பித்தார்.
"இக்தத் துவாரத்துக்கும் தேயிலைக் கொழுந்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்டேன்.
"அவசரப் படுகிறீர்களே! இந்தத் துவாரங்களுக்குள் பாடம் செய்யப்பட்ட தேயிலைக் கொழுந்துகளைக் கொண்டு வந்து கொட்டுவார்கள். அது நேரே கீழ் அறையில் இருக்கும் இயந்திரங்களில் போய் விழும்" என்று சொன்னர்,

Page 104
184 ஈழநாட்டுப் பிரயாணம்
"கீழே இயந்திரங்கள் வேறு இருக்கின்றனவா?”
"ஆமாம்” என்று சொல்லி இயந்திரங்கள் இருக்கும் அறைக்கு எங்களை அழைத்துக் கொண்டு சென்றர்.
வீடுகளின் மாவரைக்கும் இயந்திரத்தில் அரிசி யையோ உளுந்தையோ போட்டு உடைக்கிருேமல்லவா? அது போல மிகப் பெரிய ராட்சஸ இயந்திரங்கள் இருக் கின்றன. அதன் மத்தியில் இருக்கும் துவாரத்தில் பாடம் பண்ணப்பட்ட தேயிலைக் கொழுந்துகள் விழுகின்றன. அந்தத் தேயிலைத் தூள்கள் மேலும் கீழுமாக உள்ள இரண்டு பெரிய இரும்பு உருளைக்கு மத்தியில் அப்படியே உருட்டப்பட்டுத் தூள் தூளாகப் பக்கத்தில் விழுகின்றன. தோயிலைத்தூள் விழும் இடத்தில் பெரிய சல்லடை ஒன்று ஓயாமல் சலித்துக் கொண்டே இருக்கிறது. அதில் உள்ள சிறு சிறு துவாரங்கள் வழியாக ஒரே அளவான தூள்கள் கீழே இருக்கும் தட்டில் விழுகின்றன. அந்தத் தட்டை அங்கிருந்து எடுத்துக்கொண்டு போய் விடுகிருர்கள். சல்ல டையில் தங்கிய பெரிய தூள்களை மீண்டும் அந்த இயந்தி ரத்தில் போட்டு அரைக்கிருர்கள்.
"இவ்வாறு அரைத்துப் பொடி செய்தபின் அந்தத் தேயிலைத் தூளை எங்கே கொண்டு போகிருர்கள்?"
"இந்தத் தூளை இன்னெரு இயந்திரத்தில் வறுப்பதற் காகக் கொண்டு போகிருர்கள்’ என்று சொல்லி அந்த இடத்துக்கு அழைத்துச் சென்ருர் தனுஷ்கோடி.
அங்குள்ள ஒரு விசித்திரமான இயந்திரத்துக்குள் தேயிலைத் தூளைக் கொட்டுகிருர்கள். அந்தத் தூள்கள் இயந்திரத்துக்குள் பல்வேறு விதமான உஷ்ண அறைகள் வழியே சென்று வருவதால் நன்ருக வறுப்பட்டுப் பக்குவ மான தேயிலைத் தூளாக வெளிவருகிறது. அப்படி வெளி வரும்போது 'கம்' என்ற தேயிலை மனத்துடன் நாம் பார்க் கும் தேயிலைத் தூளாக நிறம் மாறிக் கறுப்பாக வந்து விடுகிறது.
இந்தத் தூளை மீண்டும் சலித்துப் பெரிய தூள், சிறிய தூள், புழுதி என்று தரம் தரமாகப் பிரிக்கப் படுகின்றன அவ்வாறு பிரித்து எடுத்த தூள்களைப் பெரிய பெரிய.

தொழிற்கூடம் பாரீர் . 185
கள்ளிப் பெட்டிகளில் அடைத்து "பாக்' செய்து லாரிகளில் ஏற்றிக் கொழும்பு நகருக்கு அனுப்புகிருர்கள். அங்கிருந்து அந்தப் பெட்டிகள் இங்கிலாந்துக்கோ, அமெரிக்காவுக்கோ ஆஸ்திரேலியாவுக்கோ கப்பல்களில் ஏற்றி அனுப்பப்படு கின்றன. அந்த நாடுகளிலிருந்து பெரிய டின்களிலும் சிறிய டின்களிலும் பொட்டலங்களிலும் அடைத்து நம் கடைகளில் வியாபாரத்துக்கு வருகின்றன.
அந்தத் தூள் வீட்டிலும், ஹோட்டல்களிலும் பல் வேறு இடங்களுக்கு வந்த பிறகு பல மாதிரிகளில் பக்கு வம் செய்யப்பட்டுச் சூடான தேரோக மாறுகிறது.
இந்த விவரங்களைத் தனுஷ்கோடி சொல்லி முடித்த தும், "எல்லாத் தேயிலைத் தொழிற்சாலைகளும் இப்படித் தான் இருக்குமோ?’ என்று கேட்டேன்.
"எல்லாத் தொழிற்சாலைகளும் இவ்வளவு சுகாதார மாகவும் சுத்தமாகவும் இருக்கும் என்று உறுதி கூறமுடி யாது. நுவரேலியாவில் உள்ள இந்தப்பெட்ரே தேயிலைத் தொழிற்சாலை கிழக்கு ஆசியாவிலேயே நவீன வசதிகள் கொண்டது. இங்கிலாந்து மகாராணி எலிஸபெத், ஜப் பான் தேசத்து இளவரசி எல்லாரும் இந்தத் தொழிற்சாலை யைப் பார்த்து வியந்து போயிருக்கிருர்கள்' என்ருர்,
"டீ தூளில் உயர்ந்தது, மட்டமானது என்று எப் படிக் கண்டுபிடிக்கிருரர்கள?” என்று திரு தனுஷ்கோடி யிடம் கேட்டேன்.
"அதற்கென்று தனியாகப் பரிசோதனைக் கூடமே இருக்கிறது. வாருங்கள், அங்கு போகலாம்!” என்று சொல்லி ரசாயனக் கூடம்போல் தோற்றமளித்த ஒரு அறைக்குள் எங்களை அழைத்துச் சென்ருர். அந்த அறை யில் இருந்த ஒருவரைக் காண்பித்து, "இவர்தான் டீயின் தரத்தைப் பரிசோதிக்கும் நிபுணர்’ என்று அறிமுகப் படுத்தினர்.
அவர் எங்களை அகமும் முகமும் மலர வரவேற்று நாங்கள் கேட்ட கேள்விகளுக் கெல்லாம் முகம் சுணங்கா மல் பதில் கூறியதுடன் எங்களுக்கு நீண்ட நெடுநேரம் தேயிலையின் தரத்தைப் பிரிக்கும் விஷயத்தைப் பற்றிக்

Page 105
186 ஈழநாட்டுப் பிரயாணம்
கூறிய பிரசங்கத்தைச் சுருக்கமாக இங்கே சொல்வி விடுகிறேன்.
ஒவ்வொரு தேயிலைத் தோட்டத்துக் கொழுந்துகளை யும் தனித்தனியாகப் பிரித்துக் கொள்கிருச்கள். அந்தந்தத் தோட்டத்துத் தேயிலைத் தூளைத் தேரோக்கிச் சுவைத்துப் பார்க்கிருர்கள். தேைேரச் சுவைத்துச் சுவைத்துப் பார்த்து அனுபவப்பட்ட நிபுணர்கள் ஒவ்வொரு தொழிற்சாலையி லும் பலர் இருக்கிருர்கள். அவர்கள் "இந்த இந்தத் தேயி லைத் தோட்டத்துத் தேநீர் கன்ருக இருக்கிறது. நல்ல மணத்துடன் உயர்வாக இருக்கிறது' என்று அபிப்பிராயம் கூறுகிருரர்கள். அவர்கள் திடறும் அபிப்பிராயத்தைக் கொண்டு முதல் தரம், அடுத்ததரம் என்று இனம் பிரித்து விடுகிருர்கள்.
பொதுவாக, ஒரு தேயிலைத் தோட்டத்துத் தேயிலைத் தூள் எப்பொழுதுமே முதல்தரமாக இருப்பதில்லை. அந்தக் தக் காலத்துச் சீதோஷ்ண நிலைக்குத் தகுந்தாற்போல் டீயின் தரமும் மாறுபடுகிறதாம். அதனல் அடிக்கடி இவ்வாறு பரிசோதனை செய்து பரிசோதனைச் சாலையில் உள்ள நிபுணர்கள் அபிப்பிராயத்துக்கு இணங்கத் தேயிலைத் தூளின் தரம் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப அந்தத் தேயிலைக்கு விலைகளை நிர்ணயம் செய்கிருர்கள்.
ஏதோ கடைக்குச் சொன்று டீத்தூள் வாங்கிவந்து தேநீர் போட்டுச் சாப்பிட்டுவிடுகிருேம். ஆனல் அதற்கு எவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டி யிருக் கிறது எத்தனை லட்சக்கணக்கான மக்கள் இரவு பகல் என்று பாராமல், மழை குளிர் என்று கருதாமல் உழைக்க வேண்டி யிருக்கிறது. மனிதனின் நாக்கு இருக்கிறதே! அடே, அப்பா அதற்கு இருக்கும் ரஸிகத்தன்மைக்கு ஈடு இணையே கிடையாது! சும்மாவா சொன்னர்கள் நம் முன் னேர்கள், 'தின்று ருசி கண்டவன், சும்மா இருக்கமாட் டான்' என்று.
இந்த நுணுக்கங்களை யெல்லாம் தெரிந்து கொண்டு
தேயிலைத் தரம் பிரிக்கும் பரிசோதனைக் கூடத்திலிருந்து வெளியில் வந்தோம்.

தொழிற்கூடம் பாரீர் . 187
"இன்னும் ஏதாவது கேட்கவேண்டுமா?’ என்ருர் திரு. தனுஷ்கோடி.
"ஆமாம். தேயிலைத் தோட்டம் தொழிற்சாலை முதலி யவைகளைப் பார்த்தாகிவிட்டது. தொழிலாளர் வாழ்க்கை முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்" என்றேன்."
அவர் தொழிலாளர் நல அதிகாரியாக இருந்ததால் தொழிலாளர்களுக்கு ஏதோ ஏகப்பட்ட வசதிகள் செய்து கொடுப்பதாகச் சொன்னர். உண்மை அப்படியில்லை. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னும் வசதிகள் செய்து கொடுக்கத்தான் வேண்டும்.
திரு. தனுஷ்கோடி சொன்னது, இன்னும் தேயிலைத் தோட்டத்துத் தொழிலாளர்கள் கூறியது, ஈழத்தில் நான் கேள்விப்பட்டது எல்லாவற்றையும் சுருக்கமாகக் கூறு கிறேன்.
தொழிலாளர்கள் வாழ்க்கை முறை
காலை ஐந்து மணிக்கெல்லாம் தொழிலாளர்கள் எழுங் திருக்கிருர்கள். இயந்திரம் போல் ஆறு மணிக்குத் தேயிலைத் தோட்டத்தில் இருக்கும் "பிரட்டுக்களம்' அதா வது தொழிலாளர்களின் பெயரைக் கூப்பிட்டுக் கணக் கெடுக்கும் களத்துக்குப் போகிருர்கள். பெரிய கணக்குப் பிள்ளையிடம் பெயர் பதிவு செய்துகொள்கிருர்கள். ஏதோ வீடு என்ற பெயரில் அவர்களுக்குக் கட்டிக் கொடுத்திருக் கும் தகரக் கொட்டகைக்குத் திரும்பி வருகிருரர்கள். ரொட்டியும் தேநீரும் அருந்திவிட்டு மீண்டும் தேயிலைத் தோட்டத்துக்குச் சென்றுவிடுகிருர்கள்.
அங்கு கங்காணியின் மிரட்டல்கள், கண்டிராக்டரின் அதட்டல், கணக்குப் பிள்ளையின் கண்காணிப்பு, அவர்க ளுடைய அற்பத்தனமான ஆசைகள் இப்படிப் பல்வேறு கஷ்டங்களை யெல்லாம் சகித்துக்கொண்டு பொறுமை யுடன் வேலை செய்கிருர்கள். பகல் பன்னிரண்டு மணிக்கு சங்கு ஒலிக்கும். வேலையை நிறுத்திவிட்டு 'வீட்டுக்கு

Page 106
188 ஈழநாட்டுப் பிரயாணம்
(வீடுகளா அவைகள்) வருவார்கள். அவர்களுக்குத் தரப் படும் ஒரு மணி நேரச் சாப்பாட்டு ஓய்வு காலத்துக்குள் ஏதோ சமைத்தோம் சாப்பிட்டோம் என்று பரக்கப் பரக்கக் காரியங்களை முடித்துக்கொண்டு மீண்டும் ஒரு மணிக்குத் தேயிலைத் தோட்டத்துக்குள் சென்றுவிடு வார்கள். மாலை நாலு மணிக்குச் சங்கு ஒலிக்கும். காலை யில் இருந்து தாங்கள் கொய்த தேயிலைக் கொழுந்துகளைத் தொழிற்சாலைக்குள் கொண்டு கொடுத்துவிட்டு வருவதற் குள் இரவு ஏழு மணியாகிவிடும்.
குழந்தைகளுடன் கொஞ்சுவதோ, கணவன்மாருடன் ஆதரவுடன் பேசுவதோ, மனத்திருப்தியுடன் உண்பதோ எல்லாம் அதன் பின்னர்தான். மீண்டும் காலைச் சங்கின் சத்தமோ, தப்புகொட்டும் ஒலியோ கேட்டுவிடும்.
மாதந்தோறும் பத்தாம் தேதிதான் சூப்பிரண்டன்டு வந்து தொழிலாளர்களுக்குச் சம்பளம் தருவார். தோட் டத்துக் கணக்கில் இவர்களுக்கென்று ஒரு கூட்டுறவு பண்டகசாலையும் இருக்கிறது. மாதக்கணக்கில் தேவை யான சாமான்கள் வாங்கிக்கொள்ளலாம். அந்தச் சாமான் களுக்கான பணத்தைப் பிடித்துக்கொண்டுதான் சம்பளம் கொடுப்பார்கள்,
தோட்டத்து நிர்வாகத்திலேயே தொழிலாளர்களின் குழந்தைகளுக்காகப் பள்ளிக்கூடம் உண்டு. அவரவர்கள் மதத்துக்கு உரிய ஆலயங்களும் உண்டு. பாடசாலை ஆசிரி யர் எஸ். எஸ். எல். ஸி. வரை படித்திருந்தால் போதும். தோட்ட கிர்வாகிகளே ஆசிரியருக்கு நூறு ரூபாய் சம்பளம் கொடுத்துவிடுவார்கள். குழந்தைகளுக்கு அறிவு புகட்டும் ஆசிரியரும் தோட்டத் தொழிலாளி போல சூப்பிரண்டுக்கு அடங்கித்தான் கடக்கவேண்டும். ஆசிரியர்களுக்கு "அழ கான வீடு உண்டு. ஒரே ஆசிரியர் ஆறு ஏழு வகுப்பு களுக்குக் கல்வி கற்பிப்பார்.
இந்த நிலையில் இருந்த தோட்டப் பாடசாலையைச் சிங்கள சர்க்கார் எடுத்துக்கொண்டு பல செளகரியங்களைச் செய்து தருவதாகக் கேள்விப்பட்டேன். உண்மையான கல்ல எண்ணத்துடன்தான் இந்தக் காரியத்தைச் செய்

தொழிற்கூடம் பாரீர் 1 189
கிருர்களோ, அல்லது இதற்குள் ஏதாவது சூழ்ச்சிகள் இருக்குமோ என்னவோ? யார் கண்டது? ஆண்டவனுக் குத்தான் வெளிச்சம்!
கல்வி வாசனையற்ற தோட்டத் தொழிலாளர்களைக் கிறிஸ்தவர்களாக மத மாற்றும் காரியங்களைக் கிறிஸ்தவ மத குருமார்கள் தாராளமாகச் செய்து வருகிருர்கள். இது வரையில் தூங்கிக்கொண்டிருந்த சைவர்களுக்குச் சூடு பிடித்துத் தொழிலாளர்களின மத மாற்றத்தைத் தடுத்து வருகிருர்கள். இந்த விஷயத்தில் ஒன்றை மட்டும் மறந்து விடக்கூடாது. நாம் பிற மதத்துக்கு விரோதிகள் அல்ல வென்றலும் 5ம்முடைய மதத்தில் பிறர் குறுக்கிடுவதை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு ஒருகாலத்தில் தாங்கிய தன் பலன்தான் இப்பொழுது பாரதத்துக்கு ஏற்பட் டிருக்கும் தலைவேதனை. காஷ்மீரப் பிரச்னை, காஷ் மீரத்தில் உள்ளவர்கள் அத்தனைபேரும் இந்துக்கள்தான். அரசியல் காரணங்களினல் அவர்கள் பலாத்காரமாக மத மாற்றப்பட்டவர்கள். அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, மீண்டும் இந்து மதத்தில் சேருவதற்கு விரும்பியபோது, இந்து மதத்தின் உண்மைத் தத்துவத்தை உணராத காசி நகரத்துப் பண்டாக்கள் அதைத் தடுத்து நிறுத்திவிட் டனர். அதன் பலனுக லட்சக்கணக்கான மக்களை இந்து மதம் இழந்துவிட்டது. அது காரணமாகக் காஷ்மீரப் பிரச்னை இன்று உலகப் பிரச்னையாகி விட்டது.
ஆகையால் மத மாற்றத்துக்குச் சைவர்கள் இடம் கொடுக்கக்கூடாது. கூடவே, சைவ சமயத்துக்கு வருகிற வர்களை "வருக! வருக!" என்று இரு கைகளயும் கூப்பி வரவேற்கவும் தயாராக இருக்கவேண்டும். மத மாற் றங்கள் ஒருபுறம் இருக்கட்டும். தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்னைகளைப் பார்ப்போம்.
மாதக் கணக்கில் பார்த்தால் ஒரு தொழிலாளியின் குடும்பத்தில் கணவன், மனைவி, சிறுவர்கள் எல்லாருமாகச் சேர்ந்து முந்நூறு ரூபாயிலிருந்து அறுநூறு ரூபாய் வரை யில் சம்பாதிக்கிருர்கள். என்ன சம்பாதித்து என்ன? வருவாயில் பாதிக்குமேல் அங்கு மது அரக்கன் அல்லவா கொண்டுபோய் விடுகிருன்.

Page 107
190- ஈழநாட்டுப் பிரயாணம்
தமிழ் நாட்டில் சில அதி மேதாவிகள் மது விலக்கின் தன்மை தெரியாமல் இன்னும் கேலி செய்துகொண்டிருக் கிருர்கள். அவர்கள் எல்லாம் ஒரு முறை இலங்கைக்குச் சென்று தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் குடும் பங்களைப் பார்த்தால் மது அரக்கனின் கோர உருவத்தை உணர்ந்து கொள்வார்கள். ஈழ நாட்டுத் தோட்டத் தொழி லாளர் நிலை உயர வேண்டுமானுல் அங்கிருந்து மதுவரக்கனை அடியோடு ஒழிக்கவேண்டும்.
இந்த விவரங்களைப் பற்றி யெல்லாம் விவரித்துக் கொண்டே தேயிலைத் தோட்டத்தையும் தொழிற்சாலையை யும் எங்களுக்குக் காண்பித்த தொழிலாளர் கல அதிகாரி திரு. தனுஷ்கோடியிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தேயிலைத் தோட்டத்திலிருந்து, ஏன்? நுவரேலியாவி லிருந்தே புறப்பட்டோம்.
光 景 膏
தேயிலைத் தோட்டத்தில் மட்டும் தமிழர்கள் இல்லை. இன்னும் பல இடங்களிலும் அவர்கள் இருக்கிருரர்கள். ஈழத்தின் சிறப்புக்கு இன்று கேற்று அல்ல,இரண்டாயிரம் ஆண்டுகளாகவே தமிழர்கள் அரும் பாடுபட்டு வந்திருக் கிருர்கள் என்ற பேருண்மையைத்தெரிந்துகொளவதற்காக நாளைய தினம் கண்டிக்குச் செல்வோம்.

9
காதல் நகரம் கண்டி
நுவரேலியாவிலிருந்து கண் டி க்கு ப் பிரயாணம் தொடங்கி விட்டோம். வானத்தை மூடி யிருந்த மேகத் திரை விலகி விட்டது. சூரியன் இன்முகத்துடன் வழி அனுப்பி வைத்தான். நுவரேலியாவிலிருந்து கண்டி வரையில் இருபுறமும் இயற்கையின் பசுமை வெள்ளம் பெருகி ஓடியது. தேயிலைப் பண்ணைகளில் உள்ள தேயிலைச் செடிகள் மீது காற்றின் அலைகள் மோதும் காட்சி, புல்லாங் குழலில் படிப்படியாக எழும் தாள வரிசைகளை ஒத்தி ருந்தன. காடுகளில் மரங்களின் தளிர்கள் பொன்னிற வனப்புடன் விளங்கின. தூரத்தில் தெரிந்த ஒரு மலைச் சிகரத்தைக் காண்பித்து, "அதோ தெரிகிறதே, அதுதான் கண்டி, கந்தா” என்ருர் நண்பர்.
"கந்தவா? அப்படி என்ருல்?” "கந்தா என்ற சிங்களச் சொல்லுக்கு மலை என்று பொருள். அதனுல் கந்தா என்றேன்."
"மலைமீது அமைந்துள்ள நகரமானதால் அதைக் கண்டி என்று சொல்லுகிருர்களோ?"
"ஆமாம்."
இதற்குள் கண்டி நகரை நெருங்கி விட்டோம். பச்சைப் பசேல் என்ற பசுமை நிறைந்த மலைச் சிகரத்திலே கண்டி நகரம் அமைந்திருப்பது தன் காதலனின் மடியிலே காதலி ஆசையோடுவீற்றிருப்பது போலிருந்தது. அவர்கள் மெய்மறந்த நிலையில் இருந்தார்கள். அதனுல் தங்கள் ஆடை குலைவுற்று யிருப்பதைக்கூட அவர்கள் கவனிக்க வில்லை போலும் கண்டி நகரின் வழியே வளைந்து நெளிந்து செல்லும் மாவலி கங்கை கண்டி கங்கையின் பட்டுத்துகில் கழுவுவது போலக் காட்சி யளித்தது. இந்த எழில்மிக்க அற்புதக் காட்சியைப் பார்த்தவுடனேயே "கண்டி, காதல்

Page 108
193 ஈழநாட்டுப் பிரயாணம்
நகரம்தான்!” “காதல் நகரம் தான், கண்டி” என்று மனத்துக்குள் சொல்லிச் சொல்லி, பின் வாய்விட்டே பாடி மகிழ வேண்டி யிருந்தது.
உலகத்தில் தோன்றிய நகரங்கள் எல்லாம் மனிதன் தன்னுடைய ஆர்வத்தைக்கொண்டு நிர்மாணித்தவைதான். ஆனலும் வட இந்தியாவில் உள்ள தில்லி, காசி, ஆக்ரா, தமிழ் நாட்டில் உள்ள மதுரை, திருச்சி, தஞ்சை ஆகிய நகரங்களோ மனிதன் உணர்ச்சி வசத்தில் ஈடுபட்டுப் படைத்தவை. இந்த அற்புத நகரங்களின் அழகைத் தற்கால நாகரிகம் குலைத்துவிட்டது. இதற்கு உடந்தை யாக இருந்து வருபவள் வாணிபம் என்னும் திருமடத்தை. அவள் பொற்பாதங்களின் கீழ் மனிதனின் எண்ணக் கடலில் மலரும் அழகுக் தாமரை பூக்குமா? வாணிபத்தின் குறிக்கோள் பொருள் சேர்ப்பதுதானே மனிதனும் அவன் உணர்ச்சிகளும் அல்லவே!
வாணிபம் ஓங்கிவளரும் இடங்கள் லட்சுமியின் உறைவிடங்கள் என்று முன்பெல்லாம் மனிதன் பாராட்டி வந்தான். அன்று அவன் வழிபட்டது வெறும் செல்வத்தை மட்டும் அல்ல. அழகையும் சேர்த்தே வழிபட்டான். அதனுல் வாணிபமும் மனிதத் தன்மையும் ஒன்றை ஒன்று பிரியாமல் ஓங்கி வளர்ந்தன. வாணிபம் என்னும திரு மடங்தை கருணை உள்ளம் படைத்த அன்னபூரணி யாகக் காட்சி அளித்தாள். அன்று அன்னபூரணியாக இருந்த வாணிபத் திருமடந்தை இன்று பயங்கரக் காளி யாக மாறிவிட்டாள்
இதற்குத் தமிழ் நாட்டில் உள்ள பல நகரங்களை ஒப்பிடலாம். பழைய மதுரைமா நகரையும் இன்றைய மதுரையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே நான் சொல்வது கேயர்களுக்குச் சுலபமாகப் புரிந்துவிடும். மதுரை நகரம் இருக்கட்டும். கண்டியைப் பார்ப்போம்.
இந்தக் காலத்தில் நகரங்கள் அந்தந்த நாட்டுக்குரிய நகரங்களாக இராமல் காலத்துக்கு ஏற்ற பட்டணங்களாக மாறி வருகின்றன. இயந்திரப் புதுமை தந்த அலங்கோலம் அவை. நகரங்களின் முகங்கள் எல்லாம் ஒரே சாயல் தான். அலங்காரத்தில்தான் சில சில வேறுபாடுகள்.

காதல் நகரம் கண்டி 193
ஆனல் கண்டி நகரம் மிகவும் திருத்தமாக, பழைய காலத்துக் கண்டியைப் போலவே ஒளிவீசிக் காட்சி தருகிறது.
இந்தக் காலத்து நகரங்கள் எல்லாம் ஒரே தோற்றம் உடையவை என்று கூறினேன் அல்லவா ? அது கூட அவ்வளவு பொருத்தமல்ல. நகரத்தின் எழில் நிறைந்த முகத்தின் லட்சணத்தை நாம் பார்க்க முடிவதில்லை. அவற்றின் முகமூடியைத்தான் பார்க்கிருேம். அவை ஒரே தொழிற்சாலையில் ஒரே அச்சில் உருவானவை. சில நகரங்கள் இந்த முகமூடியைச் சுத்தமாக வைத்துக் கொள்கின்றன. மற்றவை கவனிப்பின்றி அழுக்கு வழியப் போட்டுக் கொண்டிருக்கின்றன. இவைகளை மணம் புரிந்த மாப்பிள்ளைகள் வெவ்வேருனவர்கள். இவர்கள் காட்டும் ஆதரவுக்கு ஏற்ற வண்ணம் ககரத்தின் முகச் சாயல்கள் வேறுபடுகின்றன. திருமதி கண்டி நங்கை இருக்கிருளே அவள் காலத்தின் போக்கைக் கண்டு கலங்க வில்லை. தன்னுடைய பண்பு மிக்க பழைய நாகரிகத்தைத் துறக்க அவள் தயாராயில்லை. உச்சங் தலைமுதல் உள்ளங் கால் வரையில் குறைவில்லாமல் அலங்காரம் செய்து கொண்டிருக்கிருள். அதற்குமேல் மணம் தரும் தைலம் பூசி மேனி அழகை மேலும் விருத்தி செய்து கொண்டிருக் கிருள். இன்றைய நவீன நாகரிக நகரில் வசித்துவரும் எனக்குக் கண்டி நகருக்குள் புகுந்தும் ஏதோ புது உலகத் துக்குள் புகுந்தது போன்ற பிரமையே ஏற்பட்டது. அமாவாசை இருட்டில் இருந்து பரிபூரண நிலவின் வெளிச் சத்தில் காலடி வைத்ததுபோன்று மன ஆறுதல் உண்டாயிற்று.
பழைய நாகரிகத்தின் என்றும் இளமையான உருவைக் கண்டியில்தான் கண்டேன். பழைய காலத்து அழகு இந்த இடத்தில் இன்னும் தன் நிறமும் ஒளியும் குன்ருமல் சுடர்விட்டுத் திகழ்கிறது. லட்சுமிதேவி தாமரை மலரில் அமர்ந்திருப்பதுபோல 6) j TGÖT விளிம்புவரை பசுங் கொழுந்துகள் படபடக்கும் தேயிலைப் பண்ணைகள், கமுகுச் சோலைகள், ரப்பர்த் தோட்டங்கள், பலாத் தோப்புகள், இங்கிழற் சோலையுள் அமைதியுடன் மனிதர் கடத்தும் அருமையான வாழ்க்கை, வேண்டிய அளவு ஓய்வு, அந்த
13

Page 109
194 ஈழநாட்டுப் பிரயாணம்
ஓய்வைப் பயன்படுத்த விசித்திரமான விழாக்கள்,-இங்கு இருப்பவை யாவும் கித்தியமானவை. பருவ காலங்கள் தோறும் பூவும், புள்ளும், வண்ணமும், மணமும், காயும், கனியும் மாறுவதைப்போல அங்குள்ள மக்கள் அன்ருெரு நாள் இருக்த விதமே, வழி வழியாகப் பெருகிவரும் கூத்தும் பாட்டும் விழாவும் இன்றளவும் தம் வாழ்வில் பொலிய இருந்து வருகிருர்கள். அதற்கு அவர்கள் கடத்தும் பெரஹாரா என்னும் திருவிழாவே சாட்சி சொல்கிறது.
கண்டி நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினுேம். கட்டடங்கள் எல்லாம் கண்டியின் கட்டடக் கலை நுணுக்கத்துடன் கம்பீரமாகக் காட்சியளித்தன. கேர் நேரான சாலைகள், நெருக்கமான கடைத் தெருக்கள். இந்தக் கடைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைத் தெருவில் உள்ள கட்டங்கள் பளிச் சென்று இருந்தன. வழி எங்கும் தமிழ் மக்கள்தான். தமிழ் மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் இங்குமங்கும் தெளித்தாற்போல் பல நிறப் பட்டு உடைகள் அணிந்த சிங்களப் பெண்களும் ஆண்களும் இருந்தனர். இந்தப் பெண்களின் நிறம் மாகிறம்தான். வனப்பில் முல்லைக் கொடியினை ஒத்திருந்தனர். இந்தமாதிரி பெண் களே அதிகமாகக் கண்ணில் படுகின்றனர். இவர்கள் கிளைகிளை யாகப் பரவி நாடெங்கும் பூத்து விளங்குகின்றனர். கண்டி நகரம் என்ன இலங்கைத் தீவு முழுவதுமே இந்தப் பெண் மலர்கள்தானே என்று ஐயம் கொள்ளும் அளவுக்கு இந்தச் சிங்களப் பெண்கள் வக்ளயவந்து காட்சி அளிக்கின்றனர்.
கடைத்தெருவைத் தாண்டி அப்பால் நகர்ந்தால் மிகப் பெரிய ஏரி 15ம்மை வரவேற்கிறது. கண்டி நகரின் அழகுக்கு அழகு செய்வதுபோல ஏரி எழில்பெற்று விளங்குகிறது. ஏரியின் அமைப்பு இலங்கைத் தீவுபோல் இருக்கிறது. சமுத்திரம் போன்ற இந்த ஏரி இல்லா விட்டால் கண்டிக்கு உயிர் இருக்காது என்றே சொல்லி விடலாம். கண்டி நகரை உயிர்த் துடிப்புடன் செய்து வருவது இந்த அழகு ததும்பும் ஏரிதான். ஆகா! இகத ஏரியைச் சுற்றிக்கொண்டு செல்லும்போது மனத்தில் ஏற்பட்ட உணர்ச்சிகளைச் சொல்லுவதா ? மிகப் பெரிய

காதல் நகரம் கண்டி 195
இந்த ஏரி, இயற்கை ஏரி இல்லை என்று கேள்விப்பட்ட பின் ஏற்பட்ட வியப்பைச் சொல்வதா ? இந்த ஏரியை வெட்டிய அரசன் கண்டியின் கடைசி அரசனுகப் போன ஆச்சரியத்தைப் பற்றிச் சொல்வதா? அவன் இந்த ஏரியை வெட்டிய காரணத்தைக் கேட்டுச் சிரித்ததைப் பற்றிச் சொல்வதா ? எதைப்பற்றிச் சொல்வது என்றே தெரிய
ఐ6డి). -
'கண்டி நகரின் கடைசி மன்னன் இந்த ஏரியை ஏன் வெட்டினன் ? கண்டி நகரில் மக்களுக்குக் குடி தண்ணிர்
கஷ்டமா ?”
"கண்டியின் தண்ணிரைப் போன்ற சுவையான தண்ணிர் வேறு எங்குமே கிடைக்காது. இங்கு தண்ணிர்ப் பஞ்சமும் இல்லை!"
"பின் எதற்கு வெட்டினன் ?”
"கண்டி மன்னனுக்குப் பல எதிரிகள். அவர்கள் தன்னை வந்து தாக்காமல் இருப்பதற்காக இந்த ஏரியை வெட்டினன்.”
"இக்த ஏரியைப் பார்த்தால் தற்காப்புக்காக வெட்டிய தாகத் தோன்றவில்லையே! '
"பின் எப்படித் தோன்றுகிறது?"
'நன்முக நீராடி மகிழ்வதற்காகத்தான் வெட்டியிருக்க வேண்டும். ஏரியின் மத்தியில் கண்டியின் கலைமணம் கமழும் அற்:தமான நீராழி மண்டபம்கூட இருக்கிறதே?” "ஆமாம். அந்த அரசன் பெரிய ரஸிகன்தான். அவனுக்கு ஏராளமான மனைவிமார்கள் உண்டு. அந்த மனைவிமார்கள் பேரில் கம்பிக்கைக் குறைவால் அவர்களை இந்த நீராழி மண்டபத்தில் வைத்திருந்தான் என்றும், அதற்காகவே இந்த ஏரியை வெட்டினன் என்றும் சொல்லுகிருர்கள்.”
"அப்படி இருக்கும் என்று என்னல் கம்ப முடிய வில்லையே!”
"ஆமாம். தங்களைப் போலவே பலரும் அபிப்பிராயப் படுகிறர்கள் மன்னன் தன் காதல் மனைவிகளுடன் இந்த

Page 110
196 ஈழநாட்டுப் பிரயாணம்
ஏரியில் உல்லாசமாகப் பவனி வருவான். அப்பொழுது ஏரியின் மத்தியிலிருக்கும் நீராழி மண்டபத்திலிருந்து பலவித வாத்தியங்களின் இன்னிசை ஒலிக்கும் என்றும் சொல்லிக் கொள்கிருர்கள்.”
"ஆம்; அப்படித்தான் இருக்க வேண்டும்." "அப்படித்தான் இருந்திருக்குமோ இல்லையோ இந்த ஏரியைப்பற்றி இப்படிப் பல கதைகள் மட்டும் சொல்லி வருகிருர்கள்."
"யார் என்ன வேண்டுமானுலும் சொல்லட்டும். இந்த ஏரியைப் போலவே அந்த அரசனின் இதயமும் விசாலமாக இருந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.”
இந்த ஏரியைச் சுற்றிக்கொண்டே போனல் அந்தப் பாதை எதிர்க்கரையில் உள்ள குன்றுக்குச் செல்கிறது. அந்தக் குன்றின்மீது சென்று ஏரியின் மத்திய பகுதிக்கு வந்து நின்று கண்டி நகரின் அழகைப் பார்க்க வேண்டும். பகல் நேரத்தில் பார்த்தால் கண்டி நகரம் கடையும் கடைத் தெருவுமாய், வீடும் வாசலுமாய், கோயிலும் குளமுமாய் விளங்குவதைப் பார்க்கலாம். இரவு நேரத்தில் பார்த் தாலே வானத்தில் இருந்த நட்சத்திரங்கள் எல்லாம் கண்டி நகரில் வந்து தங்கிவிட்டனவோ என்று வியக்கும்படி மின் விளக்குகள் பளிச் பளிச்சென்று மின்னும். அழகும் இளமையும் நிறைந்த கண்டி5கரம் குதூகலத்துடன் இந்தக் குன்றின்மீது உட்கார்ந்து இன்பக் கனவு காண்கிறதோ என்ற மனமயக்கத்தை ஏற்படுத்தும். இந்தக் காட்சி யைப் பார்ப்பதற்காகவே கண்டிக்குப் போகலாம். பழமையும் புதுமையும் கைகோத்துக் களிகடனம் புரியும் கண்டி நகரின் அழகை வார்த்தைகளால் அவ்வளவு சுலப மாக வர்ணித்துவிட முடியாது. போய்ப் பார்த்துத்தான் அனுபவித்து மகிழ வேண்டும்.
நகரின் அழகு இருக்கட்டும். இரவு நேரங்களில் ஏரியில் கடக்கும் இந்திர ஜாலங்களைப் பாருங்கள். நீலப் பட்டாடை விரித்தாற் டோன்ற இந்த ஏரியின் நீரில் வானத்து சட்சத்திரங்கள் கண்சிமிட்டி மின்னும். நிலா மண்டலம் தனது குளிர்ந்த கதிர்களோடு இனிது பெறத்

காதல் நகரம் கண்டி () 197
துலங்கும். நகரத்தில் எரியும் மின்சார விளக்குகள் பலவித வர்ணங்களில் ஜால வித்தைகள் காட்டும். இயற்கையும் செயற்கையும் ஒன்றை யொன்று தழுவிக்கொண்டு அந்த ஏரியில் அ டி க்கு ம் கும்மாளத்தை என்னவென்று சொல்வது?
"இந்த அழகுமிக்க ஏரியை வெட்டிய அந்த மகா ரஸிகரான கடைசி கண்டி மன்னரின் பெயர் என்னவோ?’
"அவர் பெயர் திரு விக்கிரமசிங்கன். இவர்தான் இலங்கையில் கடைசியாக நீதி செலுத்திய தமிழ் மன்னன். இருவருக்குப் பின்னர் ஆங்கிலேயர் கண்டி நகரைக் கைப் பற்றிக் கொண்டு அந்த மன்னரை காடு கடத்தி விட்டனர் அப்பொழுது கண்டி மன்னரின் குடும்பம் இலங்கையை விட்டு வெளியேயேறித் தமிழகத்துக்கே சென்றுவிட்டது. இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு மீண்டும் கண்டி மன்னர் சந்ததியாரை இலங்கைக்கு வருவதற்கு அனுமதி அளித்து அவர்களை இலங்கையின் கெளரவப் பிரஜைக ளாகச் செய்து பெருமைப் பட்டனர் இன்றைய இலங்கை சிங்கள சர்க்கார்.”
"இந்த அருமையான கண்டி நகரம் எப்பொழுது நிர்மாணிக்கப்பட்டது?"
"பதினைந்தாம் நூற்ருண்டில் விக்கிரமபாகு என்னும் அரசனுல் இந்தக் கண்டி நகரம் நிர்மாணிக்கப்பட்டது. இப்பொழுது சுமார் இரண்டு லட்சம் மக்கள் இந்த நகரில் வசிக்கிருர்கள். அவர்கள் பல்வேறு மதத்தைச் சேர்ந்த வர்களாக இருந்தாலும் ஒன்ருகவே வசித்து வருகின்
pati.'
இரண்டு லட்சம் மக்களில் பெரும்பாலோர் தமிழ் மக்கள்தான். கடைத் தெருவில் ஏராளமான தமிழர்களின் கடைகளும் இருக்கின்றன. தமிழர்கள் எல்லா விதமான தொழில்களிலும் ஈடுபட்டுக் கண்டியின் சிறப்புக்குப் பாடு பட்டு வருகின்றனர். முக்கியமாக, கண்டியில் உள்ள ஆண் மக்களை நாகரிகம் உள்ளவர்களாகச் செய்யும் தொண்டில் ஈடுபட்டுத் தொழில் புரிந்து வரும் தலையலங் காரக் கலைஞர்களே ப் பற்றிக் குறிப்பிடவேண்டும். ஆயிரக் கணக்கான தலையலங்காரக் கலைஞர்கள் தமிழ் காட்டி

Page 111
198 ஈழநாட்டுப் பிரயாணம்
லிருந்து இலங்கைத் தீவுக்குச் சென் றிருக்கிருர்கள்" கொழும்பு நகரிலும், கண்டியிலும் அவர்கள் நூற்றுக் கணக்கான தல அலங்கார நிலையங்களைத் திறந்து மிகச் சிறந்த முறையில் பணியாற்றி வருகிருர்கள். தமிழ் 5ாட்டின் பண்பையும், மொழி உணர்வையும் தங்கள் தொழிலுடன் இணைத்து அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டு பாராட்டுதற்குரியது.
இலங்கைக்குச் சென்று முன்னேற்ற மடைந்துள்ள இந்தத் தலையலங்காரக் கலைஞர்கள் நல்ல தமிழ் இதயத் துடன் வாழ்ந்து வருகிருச்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அபிமானத்தைவிடத் தமிழ் நாட்டிலிருந்து சென்ற இவர்களிடம் அதிக தமிழபிமானத்தைக் கண்டோம். இவர்களுடைய தமிழ் அபிமானத்தைக்குறித்து ஒரு யாழ்ப் பாண நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அவர் சொன்னர்: "தமிழ் அபிமானம் மட்டுமல்ல; தமிழ் வளர்த்த பெரியார்களிடம் இவர்கள் காட்டும் அபி மானம் இருக்கிறதே அது இன்னும் பெரிது’ என்ருர்,
"அது எப்படி?”
"பேராசிரியர் கல்கி அவர்கள் அமரரானுர் என்று கேள்விப்பட்டவுடன், இங்குள்ள தலை அலங்காரக் கலை ஞர்கள் எல்லாம் தங்கள் தொழில் நிலையங்களை மூடி மிகப் பெரிய கூட்டம் போட்டு அந்தப் பெரியாருக்கு மரியாதை செய்ததைப்போல் தமிழ் நாட்டில் கூடச் செய்திருக்கமாட் டார்கள்' என்ருர்.
இதைக் கேட்டபோது என் மனம் இளகிவிட்டது. கண்களில் கண்ணிர் வந்துவிட்டது. தமிழ் பக்தி என்ருல் இதுவல்லவா பக்தி? இவ்வளவு தமிழ் பக்தியும், தமிழ் வளர்த்த பெரியார்களிடம் நம்பிக்கையும் கொண்ட தமிழ் மக்கள் கண்டியில் இருப்பது போலவே இலங்கைத் தீவு முழுவதும் இருக்கிருர்கள். அவர்களுடைய உண்மையான தமிழ் பக்தி, இன்று இல்லாவிட்டால் என்ருவது ஒருநாள் வெற்றி பெற்றே தீரும். தமிழ் அன்னை இலங்கையின் அரியாசனத்தில் ஏறி அமர்ந்து அரசு செலுத்தி நீதி வழங்குவாள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

காதல் நகரம் கண்டி 199
இந்த உண்மையான தமிழ் இதயம் படைத்த தமிழ் மக்களைப் பார்த்த மனத் திருப்தியுடன் கண்டி நகரத்தின் இதர எழில் மிக்க பகுதிகளைப் பார்க்கப் புறப்பட்டோம். "கண்டியில் முக்கியமாக இன்னும் என்னென்ன பார்க்க வேண்டும்?” என்ருர் உடன் வந்திருந்த சென்ன்ே s56OOTUIT.
"ஹா கண்டியில் இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டும். புத்தர் தந்த ஆலயத்துக்குச் செல்லவேண்டும். அதற்குப் பக்கத்தில் உள்ள தொல்பொருள் கலை மண்ட பத்துக்குப் போகவேண்டும். அங்குள்ள சரித்திரப் பிர சித்தி பெற்ற கலைப் பொருள்கள், கண்டியின் கலைமணம் கமழும் சித்திர விசித்திர வேலைப்பாடுகள் நிறைந்த சாமான்கள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். அதை யெல்லாம் பார்த்த பிறகு உலகத்திலேயே மிகப் பெரிய தோட்டமான பெரதேனியா தோட்டத்துக்குப் போக வேண்டும். இதற்கெல்லாம் இன்று ஒருநாள் மட்டும் போதும் என்று எனக்குத் தோன்றவில்லை" என்ருர் இலங்கை நண்பர்.
"வாருங்கள், இப்பொழுது புத்தர் பல் ஆலயத்துக்குப் போய்த் தரிசித்து விட்டு வருவோம். பிறகு நேரமிருந்தால் பெரதேனியா தோட்டத்துக்குப் போகலாம்" என்றேன்.
“சரி” என்ருர் இலங்கை நண்பர். நேயர்களே! புத்தர் தந்த ஆலயத்துக்குக் கிளம்புவதற்குத்தயாராக இருங்கள்.

Page 112
20
பாரதமும் புத்தரும்
இந்தப் பரந்த உலகத்தில் முதன் முதலில் மனித குலத்தில் நாகரிகம் பிறந்தது பாரத நாட்டில்தான். கடவுள் அறிவு பிறந்தது இந்தப் புண்ணிய பூமியில் தர்ன். உலகமெல்லாம் மக்கள் வன விலங்குகளைப்போல் வசித்து வந்த காலத்தில் இந்த நாட்டு மக்கள் அறிவிலும், அன் பிலும் சிறந்து விளங்கினர்கள். ஐயாயிரம் ஆண்டுகளாக மக்கள் ஒரே நாகரிகத்தில் வாழ்ந்து உயர்ந்து ஓங்கிவருவது இந்த நாட்டில்தான். பதினுயிரம் ஆண்டுகளாக ஒருவர் பின் ஒருவராகப் பல முனிவர்களும் மகா புருஷர்களும் தோன்றி இந்த நாட்டின் நாகரிகத்தை, மக்களின் அறிவை வளர்த்து வந்திருக்கிருர்கள். அந்த முனிவர்களின் பரம் பரையில் வந்த மகா புருஷர்தான் புத்தர்.
இரண்டாயிரத்து ஐந்நூற்று எண்பது ஆண்டு களுக்கு முன்னல் வட இந்தியாவில் கபிலவாஸ்து என்னும் புண்ணிய பூமியில் அம்மகான் தோன்றினர். மன்னர் மகனு கப் பிறந்தாலும் மக்கள் வறுமை, நோய், மூப்பு முதலிய துன்பங்களால் அவதிப்படுவதை உணர்ந்து வேதனைப் பட்டார். அரசைத் துறந்தார்; அருமை மனைவியையும் மகனையும் துறந்தார்; ஏன்? உலகையே துறந்தார். மக்கள் படும் துன்பங்களைப் போக்குவதற்காக வெகு நாட்கள் தவம் செய்து ஞான ஒளி பெற்ருர், துன்பத்தையும் துயரத்தையும் ஒழிக்கும் மார்க்கம் அஹிம்சையும் அன்பும் தான் என்பதைக் கண்டார். அந்த உண்மையை மக்க ளிடம் பரப்பினர். அந்தக்காலத்தில் கடவுளின் உண்மைத் தத்துவத்துக்கு மதிப்புக் கொடுப்பதைவிட வீண் சம்பிர தாயங்களுக்கும் சடங்குகளுக்கும் மதிப்புக் கொடுக்கும் வழக்கம் ஓங்கி நிலவி வந்தது. அதை நீக்குவதற்கு அரும் பாடுபட்டார்.

பாரதமும் புத்தரும் 30
பிற்காலத்தில் புத்தரின் லட்சியங்களே புத்த மத மாகிவிட்டது. பாரதத்திலிருந்து பர்மா, ஜப்பான், சீனம் ஆகிய நாடுகளுக்கெல்லாம் புத்த மதம் சென்று பிரபல மாகியது. பாரத நாட்டிலோ அதன் செல்வாக்கு குறைந்து விட்டது. காரணம் : பாரதத்தில் அதற்கு முன்பாகவே இந்து மதம் தழைத்தோங்கி இருந்தது. புத்த மதத்தில் இருந்த கொள்கைகளை இந்து மதம் தன்னுடன் சேர்த்துக் கொண்டுவிட்டது. புத்த மதம் மறைந்துவிட்டது. ஆனல் பாரத நாட்டின் தென்பகுதியில் உள்ள இலங்கைத் தீவில் மட்டும் இப்பொழுதும் புத்த மதம் இருந்து வருகிறது.
இலங்கையில் உள்ள பெளத்தர்களுக்கு, இலங்கை என்ன? உலகில் உள்ள பெளத்தர்களுக்கெல்லாம் புண் ணிய ஸ்தலமாக விளங்கிவருவது கண்டிதான். இவ்வளவு சிறப்பு அதற்கு எப்படி வந்தது? மகான் புத்தரின் பல் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் இடம் புகழ்பெற்ற இந்தக் கண்டிதான். பகவான் புத்தரின் பல்லை வைத்து எழுப்பியிருக்கும் ஆலயத்துக்குத்தான் ‘புத்தர் தந்த ஆலயம்' என்று பெயர். இந்தப் புனிதமான புத்தர் பல் ஆலயத்துக்குத்தான் நாம் இப்பொழுது செல்லப் போகிருேம்.
இந்த ஆலயத்துக்குள் பார்க்கவேண்டிய அபூர்வக் காட்சிகள் பல இருக்கின்றன. இதுவரை இலங்கையில் பார்த்த சில புத்த கோயில்களுக்கும் இதற்கும் வித்தியா சங்கள் இருந்தன. அவைகள் எல்லாம் கோவில் என்னும் புனித சொல்லுக்கு ஏற்பத் தூய்மையுடன் விளங்கவில்லை. இந்தக் கோயில் அதற்கெல்லாம் மாருகத் தனி எழிலுடன் விளங்கியது. மனத்துக்கு அளவற்ற இன்பத்தைக் கொடுத்தது. நகர்ப்புறங்களில் நடமாடும் தமிழ் நாட்டு நாகரிக மங்கைகளைப் பார்க்கிருேம். அவர்களிடம் தமிழ் நாட்டின் பெண்மையின் அழகைவிட நவநாகரிகத்தின் கோரமே அதிகமாக இருக்கிறது. இந்தச் சமயத்தில் அன்பும் பண்பும், அடக்கமும் காணமும் கொண்ட தமிழ்ப் பெண்மணிகளைப் பார்த்தால் நமக்கு என்ன தோன்று கிறது? வெறும் மணல் பரப்பாகத் தோன்றும் பாலாற்றில் வெள்ளம் பெருகி அதன் இரு கரைகளும் பசுமை பெற்று விட்டது போல மகிழ்ச்சி ஏற்படுமல்லவா? கண்டி புத்தர்

Page 113
202 ஈழநாட்டுப் பிரயாணம்
தந்த ஆலயத்துக்குள் நுழைந்ததும் அப்படிப்பட்ட உணர்ச்சிதான் உண்டாயிற்று. கண்டி நகரில் இதர இடங்களில் துலங்கிவரும் பழைமை இந்த ஆலயத்துக்குள் இன்னும் பரிசுத்தமாகத் தெரிந்தது. ஆலயத்தை இப் பொழுது புனர் நிர்மாணம் செய்து வருகிருர்கள். ஆல்ை அதன் பழைமை கெடாமல் புது மெருகு கொடுத்து வருகிருர்கள்.
கோயிலுக்கு வெளியில் பூ, பழம், சாம்பிராணி, வத்தி முதலிய பூஜைக்கு உரிய பொருள்களை விற்கும் சிறு கடைகள் இருக்கின்றன. விற்பனை செய்பவர்களில் பெண் களும் இருக்கிருர்கள். அவர்கள் விற்கும் தாமரை மலரின் நிறங்களுடன் போட்டியிட்டன அவர்கள் அணிக்திருந்த பட்டாடைகள், மாலை நேரத்தின் மஞ்சள் வெய்யிலும், கோயிலின் நீண்ட நிழலும், அந்த நிழலுக்கு மத்தியில் செல்லும் துவராடை அணிந்த பெளத்த பிக்குகளும், கோயிலின் கண்டாமணிகள் அசைந்து அசைந்து ஒலிக்கும் இனிய ஓசையும், முரசங்கள் மாறி மாறி எழுப்பும் கம்பீர ஒலியும் சேர்ந்து ஒரு விசித்திர உலகையே நிர்மாணித்து விடுகின்றன.
ஆலயத்தைச் சுற்றிலும் இல்லற வாழ்க்கைக்கு. வேண்டிய எல்லாக் காரியங்களும் குறைவின்றி கடந்து கொண்டுதான் இருக்கின்றன. நவீன உலகத்துப் பண்பும் தெய்வீகப் பண்பும் ஒன்றிலே ஒன்று தோய்ந்து கிடக் தன. இவைகள் எல்லாம் சேர்ந்து சற்று இரைச்சலை ஏற் படுத்தினுலும் அந்த இடம் என்னமோ ஏகாக்தமாக இருக் தது. அங்கு மோனம் திகழாமல் போன லும் அமைதி நில வியது. இக்த மாதிரி ஒரு அதிசயச் சூழ் சிலையில் எட்டு கோண அமைப்பில் கட்டப்பட்டிருக்கும் புத்தர் கோயில் தம்மை வருக! வருக! என்று வாய் பேசாமல் வரவேற் கிறது.
படிகள்மீது ஏறி மேலே சென்ருேம். தமிழ் நாட்டின் கோயில்களில் காணும் காம்பீர்யம் இல்லை. ஆனலும் கோயிலுக்குள் இருக்க வேண்டிய பேரின்ப மோனம் திகழ்ந்தது. இந்த ஆலயத்துக்குள் நடக்கும் புத்தர் விக் கிரக் வழிபாடும், அதன் அலங்காரங்களும் ரஸமாக இருக்

பாரதமும் புத்தரும் 203
கின்றன. கோலிலின் மேலே சிறு சிறு ஓடுகள் வேய்ந்த கூரை. அதன் நடுவில் தூப கலசம். அந்தக் காட்சியைப் பார்த்தால் களங்கமற்ற சிறுவர்கள் கலகல வென்று கைகொட்டிச் சிரிப்பது போலவும், அந்த இன்ப ஒலிகள் அலை அலையாகப் பரவி ஆகாயத்தை நோக்கி உயர்ந்து செல்வது போலவும் இனம் தெரியாததோர் அற்புத உணர்ச்சி நமது உள்ளத்தில் எழுகிறது.
கோயிலின் சுவர்களில் உள்ள பல திறப்பட்ட ஒவியங் கள் நம் கவனத்தைக் கவருகின்றன. இந்த உலகில் பாவம் செய்பவர்கள் நரகத்தில் அனுபவிக்கும் தண்டனைகளைச் சிறப்பாக எடுத்துச் சித்திரிக்கும் வண்ண ஒவியங்கள். கோயிலுக்குள் செல்வோர்களுக்கு அறிவு புகட்டுவது போல இந்த ஒவியங்கள் காட்சி தருகின்றன. இந்தச் சித்திரங்களை ஒருமுறை கூர்ந்து பார்த்துவிட்டால், நரகத் திலும் சொர்க்கத்திலும் கம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கூடப் பாவம் செய்வதற்குத் தோன்ருது. சாதி சமய வேறு பாடின்றி எல்லா மக்களும் இந்தக் கோயிலுக்குள் சென்று வழிபட்டு வருகின்றனர்.
கோயிலுக்குள் பிரவேசித்து விட்டோம். புத்த தேவ னின் பல் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு மக்கள் கையில் புஷ்பங்களுடன் அதாவது செங்காமரை மொட்டு களுடன் செல்லுகின்றனர். அந்தக் கோயிலில் உள்ள ஆறு கர்ப்பக் கிருகங்களின் மத்தியில் உள்ள கர்ப்பக் கிருகத் துக்குச் செல்லுகின்றனர். அலங்காரமான கர்ப்பக்கிருகப் பெரிய கதவுகள் நமக்குக் கலை உணர்ச்சியையும் பக்தி உணர்வையும் ஊட்டுகின்றன. கதவுகளின் இருபுறங்களி லும் உள்ள யானைதந்தங்கள் நம்கவனத்தைக்கவர்கின்றன. இந்தச் சமயத்தில் கர்ப்பக்கிருகத்தின் கதவு திறக்கப்படு கிறது. உள்ளே இருந்து ஒரு புத்த சங்கியாசி நம்மை வரவேற்பது போல எட்டிப் பார்த்து விட்டுத் திரும்பிக் கொள்கிருர், புத்தர் பிரானின் பல் வைத்திருக்கும் கர்ப் பக் கிருகக் கதவுகள் பொன்னலும் வெள்ளியாலும் இழைக்கப்பட்டு மின்னுகின்றன. கர்ப்பக்கிருக அறையின் உள்ளே கண்டியின் கலை நுணுக்கம் நிறைந்த வெள்ளி மேஜை ஒன்று இருக்கிறது. அதன்மீது கண் கவர் வனப்பு களுடன் கூடிய ஏழு அடுக்குகள் கொண்ட தங்கப் பெட்

Page 114
204 ஈழநாட்டுப் பிரயாணம்
டியில் புத்தரின் பல்லை வைத்துப் போற்றிக் காப்பாற்றி வருகிருர்கள்.
இந்தப் பெட்டிக்கு முன்னுல்தான் மக்கள் மலர்களைப் போட்டுவிட்டு அருகில் இருக்கும் உண்டியில் பணத்தை யும் போட்டுவிட்டு வணங்கிச் செல்கின்றனர். சாதாரண நாட்களில் புத்தரின் பல் இருக்கும் பெட்டியைத் திறக்க மாட்டார்களாம். ரொம்பவும் விசேஷமான நாட்களில் மட் டும்தான் மக்களுக்கு அதைத் திறந்து காண்பிப்பார்களாம்.
இந்தக் கோயிலுக்குள் சென்று மக்கள் புத்த பிரா னின் சங்கிதிக்கு எதிரில் மலர்தூவி மண்டியிட்டு வணங்கும் காட்சி மறக்க முடியாத அழகுக் காட்சி. கணவன், மனைவி, குழந்தைகளுடன் வந்து மண்டியிட்டு வணங்குவதைப் பார்த்தால் பக்தியில்லாதவர்களுக்குக் கூட பக்தி ஏற்பட்டு விடும். இந்தக் கோயிலில் வழிபடுகிறவர்கள் தங்கள் மன உணர்ச்சிகளைத் தங்கள் அவயவங்களின் அசைவு களின் மூலம் ைெளியிடுவதும் அழகாகக் கைகளைக் குவித்து வணங்குவதும் பார்ப்பவர்களுக்கு மெய்சிலிர்ப்பை உண்டாக்குகிறது.
தொல்பொருள் கலை மண்டபம்
பழைமையான பெருங்குலத்தில் வந்த கண்டி அரசர் அவர். அவர் எவ்வளவோ அரும்பாடுபட்டு ஓலைச்சுவடி களைச் சேகரித்தார். அந்த ஒலைச்சுவடிகள் எல்லாம் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள். அந்த மன்னர் ஆட்சி முடிந்து விட்டது. ஆனல் அவர் அரும் பாடுபட்டுச் சேர்த்த ஒலைச் சுவடிகள் இந்தக் கண்டி தொல்பொருள் கலை மண்ட பத்தில் இருக்கின்றன. இந்த ஒலைச் சுவடிகளில் என்ன என்ன இலக்கியங்கள் இருக்கின்றனவோ? இதிகாச புரா ணங்கள் இருக்கின்றனவோ? காவியங்களும் கணித சாஸ் திரங்களும் இருக்கின்றனவோ? ஒப்பற்ற அரசியல் சாஸ் திரங்களும் உடற்கூறு சாஸ்திரங்களும் இருக்கின்ற னவோ? அவற்றை யெல்லாம் யார் கண்டார்கள்?
கலைமகள் கோயில் கொண்டிருப்பது போன்ற அழ கான இந்தத் தொல் பொருள் கலை மண்டபத்தில் ஒக்லச் சுவடிகள் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்

பாரதமும் புத்தரும் 205
கும் அழகைப் பார்த்தால் பிரமிப்பும் வியப்பும் உண்டாகத் தான் செய்கிறது. இந்த ஒலைச்சுவடிகளைச் சாதாரண மரக்கட்டைகளைக் கொண்டா மூடிக் கட்டியிருக்கிருர்கள்? பொன், வெள்ளி, நவரத்தினங்கள் பதித்த சந்தனக் கட்டைகளால் அல்லவா அந்தச் சுவடிகளை அழகுடன் மூடி வைத்திருக்கிருர்கள்? இன்னும் சில ஓலைச்சுவடிகள் மீது யானைத் தந்தங்களைப் பலகைகளாகச் செய்து அவற்றைக் கொண் டல்லவா கட்டப்பட்டிருக்கின்றன! கலைமகளை எவ்வாறு போற்றியிருக்கிருர்கள் கண்டி மன்னர்கள் என்பதற்கு இந்த ஒலைச்சுவடிகளே சிறந்த அத்தாட்சி
கண்டி மன்னர்களின் 'காளோலக்க மண்டபம்,-- அதாவது மன்னரும் மக்களும் கூடி இருந்து நீதி வழங்கும் அரச நீதி மன்றம்,-சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் புகழ்பெற்ற மணி மண்டபத்தை ஆயிரத்து எழுநூற்று எண்பத்துநாலாம் ஆண்டில் ராஜாதி ராஜ சிங்கன் என்னும் அரசன் கட்ட ஆரம்பித்தான். அவன் காலத்தில் இந்த மண்டபம் கட்டி முடியவில்லை. அவ னுக்குப் பின் வந்த விக்கிரமசிங்கன் காலத்தில் இந்த மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. மண்டபத்தின் தூண் களில் மிகச் சிறந்த கலை சொட்டும் சிற்பங்கள் கொஞ்சு கின்றன. கண்டியின் கலை நுணுக்கத்தின் சிகரமாக அவை காட்சி தருகின்றன. இந்த மணி மண்டபத்தில் அமர்ந்து தான் கண்டி மன்னர்கள் நீதி செலுத்தி வந்தார்களாம். யார் செய்த பாவத்தாலோ அடிமைப்பட்ட பாரதம் காந்தி மகானின் அன்பு வழியால் அஹிம்சைப் போரால் இருநூறு ஆண்டுகளுக்குப் பின் சுதந்திரம் பெற்றது அந்த வேகத் தில் இலங்கைத் தீவுக்கும் சுதந்திரம் கிடைத்தது. சுதக் திரம் பெற்ற அந்த 1948-ம் ஆண்டில் இலங்கைச் சுதக் திரப் பிரகடனத்தை இந்தச் சரித்திரப் பிரசித்திபெற்ற மண்டபத்தில்தான் வெளியிட்டார்களாம்.
இந்த மண்டபத்துக்கு அருகிலேயே பழைய அரசர் களின் மாளிகை ஒன்று இருக்கிறது. இந்த மாளிகையின் ஒரு பகுதியில்தான் தொல் பொருள் கலைக் காட்சியை வைத்திருக்கின்றனர். கலைக் காட்சியில் கண்டு மகிழ வேண்டிய தொல் பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன.

Page 115
206 ஈழநாட்டுப் பிரயாணம்
அந்தப் பொருள்கள் கண்டியின் பழைய கதைகளையும், புத்தர் பல் ஆலயக் கதைகளையும் சொல்கின்றன.
இதோ இந்தப் பொருள்கள் என்னவோ சொல்லு கின்றனவே! என்ன சொல்லுகின்றன ? சற்று காது கொடுத்துக் கேட்கலாம். புத்தர் பல் ஆலயத்தைப் பற்றிய சம்பவங்களைப் பற்றி யல்லவா அவை கூறு கின்றன! புத்தரின் பல்லுக்காகப் பெரிய பெரிய மன்னர்கள் கடத்திய பயங்கர யுத்தங்களைப் பற்றிக் கூறு கின்றன. பல முறை புத்தரின் புனிதப் பல்லை எதிரிகள் கொண்டு போனலும் அத்தனை முறையும் அதைத் திருப் பிக்கொண்டு வந்த வீர சாகத்தைச் சொல்கின்றன. ஒரு முறை புத்தரின் பல் பாரத நாட்டுக்கே சென்று விட்ட தும் மீண்டும் இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட வரலாறு களையும் பகருகின்றன. போர்ச்சுகீசியர்கள் புத்தரின் பல்லை அபகரித்ததையும் அதனுல் ஏற்பட்ட வீரப்போராட் டங்களையும் 15மக்கு மெளனமாக எடுத்து முழங்குகின்றன.
இதோ இந்தத் தனி அறையில் இரண்டாம் ராஜசிங் கனின் சிம்ம கர்ஜனை கேட்கிறது. அவன் தரித்திருந்த பொன் முடி நம்மைப் பார்த்து என்னென்னவோ சொல் கிறது. நாம் அவன் வாழ்ந்த பதினேழாம் நூற்ருண் டுக்கே சென்று விடுகிருேம். அந்தக்காலத்தில் கணடி மக்களின் வாழ்க்கை மிகவும் ஆனந்தமாகவும் அமைதி யாகவும் இருந்திருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இங்கு எத்தனையோ கலைப்பொருள்கள் இருக் கின்றன.
அதோ கண்டி மன்னர் அமர்ந்து ஆட்சி செலுத்திய பொன்னலான சிங்காசனம்; அவர் உபயோகித்த வைரம் பொதித்த தங்கவாள். அக்தச் சிங்காசனத்திலும் உடை வாளிலும் காணப்படும் கலை நுணுக்க வேலைப்பாட்டைப் பார்த்தால் அவர்கள் எவ்வளவு நாகரிகமான உயர்ந்த வாழ்ககை கடத்தி யிருப்பார்கள் என்று ஊகிக்க முடிகிறது.
இன்னும் இலங்கையில் வழங்கப்பட்ட தொல் பொருள்களும், ஆயுதங்களும், பொன், வெள்ளி, தக்தம் முதலியவைகளில் செய்யப் பட்டிருக்கும் சிங்கார அலங் காரங்களும் பார்த்துப் பார்த்து அனுபவிக்க வேண்டியவை

பாரதமும் புத்தரும் 207
அம்மம்மா! அவைகளைப் பற்றி ஒன்றும் சொல்லுவதற் கில்லை, போங்கள்!
இத் தொல்பொருள்கள் தமிழ் நாட்டுக்கும் ஈழத்துக் கும் உள்ள நெருங்கிய தொடர்பைக் தான் அழுத்தமாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டுக் கும் ஈழத்துக்கும் உள்ள தொடர்பு இன்று கேற்று ஏற் பட்டதல்ல. எத்தனையோ நூற்ருண்டுகளாக இருந்து வருவது என்று அவை அறுதியிட்டு உறுதி கூறிக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பேருண்மைகளை உலகுக்கு எடுத்துக் கூறும் பழங்காலக் கலைப் பொருள்களைப் பாதுகாத்து வருபவர் களை மனமார வாழ்த்துகிறேன். அவர்கள் கன்ருக இருக் கட்டும்; உண்மையிலேயே நன்ருயிருக்கட்டும்!
பெரஹரா திருவிழா !
கண்டி கோயிலில் நடக்கும் விசேஷமான திருவிழா ஆகஸ்டு மாதத்தில் நடக்கும். இந்தத் திருவிழாவிக்குத் தான் பெரஹரா திருவிழா என்று பெயர். இந்த விழா வுக்கு ஈழ5ாட்டில் உள்ள மக்கள் எல்லாருமே திரண்டு வருவார்கள்! ஏன் உலகின் பல பகுதிகளில் இருந்தும் யாத்திரிகர்கள் வருவார்கள்! பெரஹரா திருவிழா ஊர் வலத்தில் நாற்பது யானேகள் கலந்துகொள்ளும். அந்த யானைகளுக்குத் தங்கத்தினுலும் வெள்ளியினலும் அலங் கரித்த முகபடாங்களைச் சூட்டியிருப்பார்கள். அந்த முக படாம் பளிர் என்று ஒளி வீசி ஜொலிக்க யானைகள் கம்பீர மாக நடந்து ஊர்வலத்தின் முன்னல் செல்லும். யானை களுக்குப் பின்னுல் கண்டியின் பிரசித்திபெற்ற நடனம் நடைபெற்றுக்கொண்டிருக்கும். இந்த 15டனக் குழுவினர் விசித்திரம ன ஆடைகள் அணிந்திருப்பார்கள். முத்துக் களால் அலங்கரித்த கிரீடம் தரித்திருப்பார்கள். முத்தா ரங்கள் சூட்டிக்கொண் டிருப்பார்கள். அவர்கள் ஆட்டத் துக்கு ஏற்ற மேளங்களும் உண்டு. அவர்களும் கூட்டம் கூட்டமாக கின்று மேளத்தை வாசித்துக்கொண்டிருப் பார்கள். மேளத்தின் தாளத்துக்கு ஏற்றபடி நடனக் குழுவினர் பிரமாதமாக ஆடுவார்கள். அவர்களுக்கு மத்தி யில் ஒருவன் ‘கிர்'ரென்று சுழன்றுகொண்டே மேலே

Page 116
208 ஈழநாட்டுப் பிரயாணம்
கிளம்புவான். பூமியிலிருந்து சுமார் ஐந்தடி உயரத்துக்குச் சுழன்றுகொண்டே சென்று விடுவான். பிறகு சட்டென்று தரையில் வந்து கின்றுகொண்டு நிதானமாக ஆடுவான்; ஆடிக்கொண்டே இருப்பான்.
இந்த ஆட்டமும் பாட்டமும் கண்கொள்ளாக் காட்சி யாக இருக்குமாம். இதைப் பார்த்தால் நம் கண் முன்னல் இப்படி ஒரு விழா நடைபெறுகிறதா? இல்லை, ஏதாவது கற்பனை உலகில் இருக்கிருேமா என்ற பிரமை ஏற்பட்டு விடுமாம். அவ்வளவு அற்புதமும் அதிசயமும் குதூகலமும் நிரம்பிய பெரஹரா திருவிழாவைப்போல் உலகில் வேறு எங்குமே கடப்பதில்லை என்று கண்டி மக்கள் சொல்லிச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிருர்கள். எங்களுக்கு என்னவோ இந்தக் காட்சியைப் பார்ப்பதற்குக் கொடுத்து வைக்கவில்லை.
எங்களுக்கு இந்த விவரங்கஃா யெல்லாம் எடுத்துச் சொல்லிக்கொண்டு வந்தவர் முஸ்லிம் மதத்தினர்தான். ஆனலும் அவருக்கு இருந்த உற்சாகத்தையும் உணர்ச் சியையும் பார்த்தால் இந்தப் பெரஹரா திருவிழா சாதி சமயங்களைக் கடந்த திருவிழா என்றுதான் எண்ணத் தோன்றியது. இந்தத் திருவிழாவைப் பார்க்கக் கொடுத்து வைத்தவர்கள் பாக்கியசாலிகள்தான். இவ்வளவு சிறப் பான திருவிழாவைப் பழைய காலத்துக் கலை உணர்ச்சியுட னும் புதுமைப் பொலிவுட்னும் தொடர்ந்து கடத்திவரும் விழா நிர்வாகிகளுக்கு மானசீகமாக என்னுடைய வணக் கத்தைத் தெரிவித்துக் கொண்டேன்.
நேயர்களைப் பெரதேனியா தோட்டத்துக்கு அழைத் துப் போகலாம் என்றுதான் இருந்தேன். ஆனல் பெரதேனியா தோட்டத்துக்குப் போவதற்கு முன்னல் நாம் கண்டியிலிருந்து கொழும்புக்குத் திரும்ப வேண்டி யிருக்கிறது. கொழும்புக்குப் பாரதத்தின் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு வருகிருர். கொழும்பு நகரில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள் கிருர். பின்னர் அநுராதபுரம் சென்று அந்தப் புனித நகரைத் திறந்து வைக்கிருர். நாமும் நேருஜியுடன் கலந்துகொண்டு அந்தக் குதூகல வைபவங்களை எல்லாம் பார்த்து மகிழ்வோம்.

21
கடல் மறைந்தது! கதிரவன் மறையவில்லை!
பாரத நாட்டுப் பழம் பெரும் இதிகாசங்களிலும், உலக மகா இலக்கியங்களிலும் முப்பத்திரண்டு இலட்ச னங்களையுடைய இலட்சிய புருஷர்களைப் பற்றிச் சொல் லப்படுகிறது. அத்தகையவர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டு இதிகாச இலக்கியங்கள் புனையப்படுகின்றன. அப்படிப்பட்ட மகா புருஷர்களுடைய வீரதீர சாகசங் களைப் பற்றி உலகத்துச் சரித்திரங்கள் எல்லாம் கூறுகின் றன. அந்த இலட்சிய மகா புருஷர்களால் அவர்கள் பிறந்த நாடுகளுக்குப் பெயரும் புகழும் மதிப்பும் மரியாதை யும் ஏற்படுகின்றன.
புண்ணியம் செய்த நாடுகளிலே, பாக்கியம் செய்த தேசங்களிலே அத்தகைய முப்பத்திரண்டு இலட்சணங் களும் பொருந்திய வீரபுருஷர் தோன்றுகிருர், பல நூற் முண்டுகளுக்கு ஒருமுறைதான் அத்தகைய மகாபுருஷர் ஒருவர் பிறக்கிருர். அவருடைய முகத்தின் காந்தி மக்க ளைக் கவர்கிறது. அவருடைய உள்ளத்தின் ஒளி, வாக்கிலே சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. அவருடைய வீரமும் தீரமும் ஒழுக்கமும் நடத்தையும் சுயநலத் தியாகமும் பொதுநலத் தொண்டும் மக்களின் இதய சிம்மாசனத்தில் அவரை ஏற்றி வைக்கின்றன. அதனுல் ராஜாதி ராஜனுக அவரைப் போற்றிப் புகழ்ந்து வணங்குகிருர்கள் உலகத்து
A)55GT.
அப்படிப்பட்ட அபூர்வ இலட்சியமனிதரைப் பார்த்து மகிழ மக்கள் ஓடோடியும் வருகிருர்கள். மணிக் கணக்கி லும் நாள் கணக்கிலும் மழையிலும் வெய்யிலிலும் அலுக் காமல் சலிக்காமல் உற்சாகத்துடன் அவருக்காகக் காத் திருக்கிறாகள். அந்தத் தெய்வ மனிதரின் திருமுகத்தைப் பார்த்தவுடன் பரவசமடைந்து விடுகிருர்கள். அவர் தேனி
14

Page 117
&f0 ஈழநாட்டுப் பிரயாணம்
னும் இனிய தீங்குரலை, அமுது பொங்கும் அன்புக் குரலைக் கேட்டதும் மெய்மறந்து புளகாங்கிதம் அடைந்து விடுகிருர்கள்.
இப்படிப்பட்ட உலகத்து இலட்சிய மகாபுருஷர்களின் பரம்பரையில் வந்து உதித்த ஒரு மனிதர் கம்முடைய காலத்தில் நம்முடைய நாட்டில் இருக்கிருர், அவர்தான் பண்டித ஜவாஹர்லால் நேரு, சென்ற மாதம் அவர் ஈழ காட்டுக்கு விஜயம் செய்தார். ஈழ நாட்டு மக்கள் அவருக்கு அளித்த கோலாகலமான வரவேற்பைப் பார்த்தபோது, அவர் "உலகத்து இலட்சிய மகா புருஷர்தான்" என்பது ஐயமற நிரூபணமாயிற்று.
景
மே மாதம் பதினேழாம் தேதி வெள்ளிக்கிழமை பிற் பகல்; வான வீதியில் பவனி வந்து கொண்டிருந்த சூரியன் தன் பிரயாணத்தை நிறுத்திவிட்டு இலங்கை இரத்மலானை விமான கிலேயத்தில் உள்ள கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னல் இதைப் பற்றி விசாரித்த போது ஒரு உண்மை தெரிந்தது. வானத்துச் சூரியன் பாரதத்திலிருந்து வரும் மற்ருெரு சூரியனை எதிர்பார்த்துக் கொண்டு நின்று கொண் டிருப்பதாகவும் அந்தச் சூரிய னிடம் ஈழ நாட்டை ஒப்படைத்து விட்டுப் போகப் போவ தாகவும் கேள்விப்பட்டேன்.
இன்னும் ஒரு அதிசயமும் நடைபெற்றது. கொழும்பு நகரில் உள்ள காலிமுகக் கடற்கரைப்பக்கம் சென்றவர்கள் அலைமோதும் கடலை அங்கு காணுமல் திடுக்குற்ருர்கள். இவ்வாறு திடீர் என்று மறைந்து போன கடல் புரண்டு கொழும்பு ககருக்குள் புகுந்து இரத்மலானை விமான நிலையம் வரை பொங்கி நின்றது. சமுத்திர ராஜனும் அவன் பரி வாரங்களும் மனித உருவம் பெற்று இரத்மலானை விமான நிலையக் கட்டங்களையும் அதன் சுற்றுப்புறங்களேயும் மானிட அலைகளால் மூழ்கடித்திருந்த காட்சியை ஈழநாட் டின் இரண்டாயிரத்து ஐந்நூருவது புத்த ஜயந்தி வைப வத்தைப் பற்றி எழுதும் சரித்திர ஆசிரியர்கள் பொன் எழுத்துக்களில் எழுதுவார்கள் என்பதில் ஐயமில்லை.

கடல் மறைந்தது கதிரவன் மறையவில்லை ! 311
சமுத்திர ராஜனும், சூரிய பகவானும் பாரதத்தின் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவை வரவேற்க இப் படி யுக்தி செய்தால் புகழ் பெற்ற இலங்கை பண்டார நாயகா சர்க்காரும் அவருடைய சர்க்கார் அதிகாரிகளும் சும்மாவா இருப்பார்கள்
இராஜ உபசாரத்துடன் பாரதத்தின் பிரதமரை வர வேற்கப் பிரமாதமான ஏற்பாடுகள் செய்திருந்தனர். "பொதுமக்களே மனித குலத்தின் மாணிக்கத்தை வர வேற்கப் பிற்பகல் இரண்டு மணிக்கே இரத்மலான்ை விமான நிலையத்துக்கு வாருங்கள்’ என்ற சர்க்கார் அறிக் கைகள் இலங்கைப் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தன. இலங்கை வானெலி இந்த அறிக்கையை விடாமல் ஒலி பரப்பிக் கொண்டிருந்தது.
"அன்பார்ந்த மக்களே! பிற்பகல் ஒன்றரைமணிக்கே வந்துவிடுங்கள், சமாதானமூர்த்தியான ஜவாஹர்லால் நேருவை வரவேற்க!" என்று ஈழ5ாட்டுத் தமிழ்த் தலைவர் களும் சிங்களத் தலைவர்களும் உத்தரவிட்டிருந்தார்கள்.
இவ்வாறு ஈழநாட்டு சர்க்காரும், அதன் தலைவர்களும் நம்மை வற்புறுத்தி அழைக்கையில் நாம் போகாமல் இருக் கக்கூடாது என்று பிற்பகல் இரண்டு மணிக்கே இரத் மலானை விமான நிலையத்துக்குச் சென்று விட்டேன். அதாவது கொழும்பு நகரிலிருந்தே ஜனப் பிரளயத்தில் மிதந்து சென்ற நான் இரத்மலானை விமான கிலேயத்துக்கு முன்னல் ஜனப் பிரளயத்தில் குதிக்கு எதிர் நீச்சல் போட்டு, விமான நிலையத்துக்கு உள்ளே சென்றுவிட் டேன். என்னைப் போலவே எண்ணற்ற பலசாலிகளும் பலசாலிகளின் தயவில் உள்ளவர்களும்,இலங்கை சர்க்கார் மக்திரிகளும், அதிகாரிகளும், ஈழநாட்டுப் பிரமுகர்களும், தலைவர்களும் வந்து சேர்ந்திருந்தார்கள்.
வானத்தில் ஏதாவது சத்தம் கேட்க வேண்டியது தான் தாமதம், "ஜவாஹர்லால் நேருவுக்கு ஜே!’ என்ற கோஷம் இடி முழக்கம் போல் எழும். அதைத் தொடர்ந்து உற்சாகமான கரகோஷம் அலை அலையாக எழும்பி ஆகா யத்தை நோக்கிச் செல்லும். பாரதத்தின் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவை ஏற்றி வந்த ராஜஹம்ஸம் விமா

Page 118
212 ஈழநாட்டுப் பிரயாணம்
னம் சரியாக மூன்றரை மணிக்கு இரத்மலான விமான நிலையத்தை வந்து அடைந்தது. வருவதற்கு முன்னுல் இலங்கைத் தீவை ஒரு வட்டமிட்டு "அது எப்பொழுதும் போல்தான் இருக்கிறதா?” என்று கோட்டம் பார்த்துக் கொண்டு வந்தது. ராஜஹம்ஸம் விமானம் தன்னுடைய ஒரு காதில் பாரதத்தின் அசோகச் சக்கரம் பொதித்த மூவர்ணக் கொடியையும், மற்ருெரு காதில் ஈழத்தின் சிம்மக் கொடியையும் மாட்டிக் கொண்டு கம்பீரமாக வந்தது.
இரத்மலானை விமான நிலையக் கட்டடங்கள் எல்லாம் கல்லால் கட்டினவை போலல்லாமல் மனிதர்களின் தலைக ளால் கட்டப்பட்டது போலவே காணப்பட்டன. இங் கிருந்த மக்கள் பிரளயம் இரத்மலானை விமான நிக்லயக் கட்டடங்களைப் பதின்மூன்று மைல்களுக்கப்பால் உள்ள கொழும்பு நகருக்கே புரட்டிக் கொண்டு சென்றிருக்கும். யார்செய்த புண்ணியமோ கட்டடங்கள் அந்த இடத்தை விட்டுச் சற்றும் நகரவில்லை.
ராஜஹம்ஸம் விமானம் வந்து இறங்கியதுதான் தாம தம், மக்களின் உற்சாகம் பீறிட்டுக் கொண்டு விட்டது. ஜெயகோஷங்கள் வானைப் பிளந்தன. பாரதத் தின்குரிய னைப் பார்த்தவுடன் ஈழத்தை அவரிடம் ஒப்படைத்து விட்ட மகிழ்ச்சியில் திடீர் என்று மறைந்து விட்டான் வானத்துச் சூரியன். அது வரையில் மேகமற்றிருந்த ஆகா யத்தில் மேகம் வந்து சூழ்ந்து கொண்டது. இலங்கை உள் காட்டு மந்திரி திரு ஏ. பி. ஜயசூரியா, சுகாதார மந்திரி திரு ஜயவீர குருப்பு, போக்கு வரத்து மந்திரி திரு மைத்திரிபால சேனநாயகா ஆகியோர் ராஜஹம்ஸம் விமா னத்துக்குள் சென்று நேருஜியையும் அவர் புதல்வி இந்திராகாந்தியையும் குழுவினரையும் சக்தித்து இலங்கை சர்க்கார் சார்பில் நன்றி தெரிவித்து வரவேற்ருர்கள். விமா னத்துக்குள் நடைபெற்ற இந்த ராஜாங்க வரவேற்புக் குப் பின்னர் பாரதத்தின் பிரதமர் பண்டித நேரு கூப்பிய கரங்களுடனும் மலர்ந்த முகத்துடனும் விமானக் கதவின் முன்னுல் வந்து காட்சி அளித்தார். ஜவாஹர் தூய வெள்ளை உடை தரித்திருந்தார். அவருடைய ஷர்வாணி

கடல் மறைந்தது ! கதிரவன் மறையவில்லை 213
யில் சிவப்பு ரோஜா மலர் சிரித்துக்கொண் டிருந்தது, தேவ லோகத்திலிருந்து இறங்கி வரும் தெய்வ புருஷர் போல மெதுவாகப் படியிலிருந்து இறங்கினர்.
இலங்கை மண்ணில் நேருஜியின் திருப்பாதங்கள் பட்டவுடன் ஈழநாட்டுப் பிரதமர் பண்டார நாயகா நேருஜியின் கைகளைப் பற்றிக் குலுக்கிப் பின்னர் கரம் குவித்து வரவேற்ருர், நேருஜிக்குப் பின்னல் பாரதத்தின் தவப் புதல்வி இந்திரா காந்தி இலட்சுமி தேவி போல் இறங்கி வந்தார். திரு பண்டார நாயகாவின் புதல்வர் பண்டித நேருவுக்கு மலர் மாலை அணிவித்தார். திரு பண் டார நாயகாவின் புதல்வி, திருமதி இந்திரா காந்திக்கு மலர்ச் செண்டைக் கொடுத்தார். ܖ
ராஜஹம்ஸ் விமானப் படியிலிருந்து ராணுவ மரியா தையை ஏற்றுக் கொள்ள வேண்டிய மேடை வரையில் செந்நிறப் பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அந்தப் பட்டுக் கம்பளப் பாதை வழியே பண்டித நேரு கடந்து வந்து முப்படைகளும் அளித்த ராணுவ மரியாதைகளை ஏற்றுக்கொண்டார். பின்னர் புத்த குருமார்கள் கூடி யிருந்த விசேஷ மண்டபத்துக்குச் சென்றர். அங்கு இரு பத்தைந்து புத்த குருமார்கள் 'பிரித்’ ஒதினர். அப்பொழுது நேருஜி ஆடாமல் அசையாமல் தலைகுனிந்து நின்ருர். அவ ருக்குப் பக்கத்தில் திரு பண்டார நாயகாவும் கரம் குவித்த படி பக்தி சிரத்தையுடன் நின்ருர். அவர் அப்பொழுது என்ன நினைத்துக் கொண்டு கின்ருரோ திரு பண்டார நாயகா புத்த பிக்குகளின் முன்னல் கரங் குவித்து நிற்ப தைப் பார்த்தால் தம்மையே இந்த ஆட்சியில் நிலைத்து வைத்திருக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்பது போலிருந்தது. "இப்பொழுது இலங்கையில் கடப்பது பண்டார நாயகா ஆட்சி என்று கூறுவதைவிடப் புத்த பிக்குகளின் ஆட்சிதான் நடக்கிறது என்று சொல்ல வேண்டும்” என்று ஈழ நாட்டில் பலர் சொல்லிக்கொள்வது நினைவுக்கு வந்தது. அதனுல்தான் எனக்கு அவ்வாறெல் லாம் எண்ணத் தோன்றியது. புத்த பிக்குகள் ஆணையின் ாடி பண்டாரநாயகா சர்க்கார் ஆட்சி செய்தால் ஈழத்தில்

Page 119
214 ஈழநாட்டுப் பிரயாணம்
அன்பு ஆட்சிதானே மலரும்!! அது நாட்டுக்கு நல்லது தானே என்று எண்ணிக் கொண்டேன்.
புத்த குருமார்களின் மண்டபத்திலிருந்து நேருஜியை திரு பண்டார நாயகா அழைத்துச் சென்று தம்முடைய மந்திரிகள், ராஜதந்திரிகள், பிரமுகர்கள் எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். ஈழநாட்டுத் தமிழ் மக்களின் தனிப் பெரும் தலைவராகத் திகழும் திரு எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் கைகளைப் பற்றி நேருஜி குலுக் கும் போது மக்கள் மத்தியில் ஏற்பட்ட கரகோஷம் தமிழ் மக்களின் இதயக் குரலாக ஓங்கி ஒலித்தது. இதற்குப் பின்னர் திறந்த வண்டியில் நின்று கொண்டு கூப்பிய கரங்களுடன் சிரித்த முகத்துடன் விமான நிலையத்தில் குழ்ந்து நின்ற மக்களுக்கு அருகில் சென்ருர், ஜவஹர் லாலைச் ஜனங்கள் பார்த்து மகிழ்ந்தார்கள்! ஜெயகோஷம் செய்தார்கள்! அதே சமயத்தில் பாரதத்தின் சூரியனை வரவேற்க வருணனும் வந்துவிட்டான். கொட்டுக் கொட் டென்று மழை கொட்ட ஆரம்பித்து விட்டது.
மழையினுல் கலைக்கப்பட்ட மக்கள் மத்தியில் சென்று நேருஜி காரில் ஏறுவதற்குள் தெய்வப் பிரயத்தனமாய் விட்டது. போலீஸ் படைகள் எல்லாம் இந்தக் குதூகல மான கூட்டத்தின் மத்தியில் இருந்த இடம் தெரியாமல் போனர்கள். சில போலீஸ் கான்ஸ்டேபிள்களும், உக்தி யோகஸ்தர்களும் பட்டபாட்டில் அப்படியே சுருண்டு கீழே விழுந்துவிடுவார்கள் போலிருந்தது. ஜவாஹர்லால் நேரு அவர்களின் நிலைமையே இப்படி யென்ருல் என்னைப் பற்றி என்னத்தைச் சொல்வது?
கூட்டத்திலிருந்து எப்படியோ தப்பி வெளியே வந்த தும் என் அங்கங்களை எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அன்று இரவு என்னைப் பார்த்த நண்பர் என்னை வெகுநேரம் அடையாளம் தெரியாமல் தவித்தார். பிறகு "மத்தியானம் பார்த்ததற்குள் இப் போது ஆறு அங்குலம் உயர்ந்து விட்டீர்களே!" என்று வியந்து போனர். "ஈழநாட்டில் வைத்து நேருஜியைப் பார்த்த மகிழ்ச்சியில் இப்படி உயர்ந்து விட்டேன். கூட்டத் தில் மாட்டிக்கொண்டு இடிபட்டதில் இவ்வாறு நெகிழ்ந்து

கடல் மறைந்தது! கதிரவன் மறையவில்லை ! 215
விட்டேன்’ என்று சொல் லிப் பெருமையடித்துக் கொண்டேன்.
இரத்மலான விமான நிலையத்திலிருந்து கொழும்பு நகரில் இருக்கும் கவர்னர் ஜெனரல் மாளிகையான "ராணி பவனம்’ வரை அரசாங்க மரியாதையுடன் நேருஜியை அழைத்துச் சென்றனர். இப்பொழுது மழை சற்று விட் டிருந்ததால் திறந்தமோட்டார்வண்டியில் நின்றுகொண்டே நேருஜி சென்ருர். 5ேருஜியைப் பார்த்த மக்கள் இதயத்தி லிருந்தே அன்புக் குரல் எடுத்து ஜெயகோஷம் செய்தனர். ஈழநாட்டுச் சாலைகளில் எல்லாம் பாரதத்தின் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறந்தது! விமான நிலையத்தி லிருந்து கொழும்பு நகரம் வரையில் உள்ள பதின்மூன்று மைல் தூரத்திலும் பலவித வரவேற்பு வளைவுகள் கட்டி யிருந்தனர். சில வளைவுகள் மனத்தைவிட்டு இன்னும் மறையவில்லை, மூங்கி% க் கொண்டு கோபுரம் போல் அமைத்து அதில் இளநீர்களையும் பலாமோஸ்களையும் கட்டித் தொங்க விட்டிருந்தனர். மரகதமும் தங்கமும் இளநீர்க் காய்களாகவும் பலாமோஸ்களாகவும் தொங்க அதன் மத்தியில் தென்னங் குருத்தோலைகளால் ஆன தோரணங்கள் அழகுக்கு அழகு செய்து கொண்டிருந்தன. இந்த அலங்காரங்களுக்கு இடையில் "சமாதான தூதரே வருக!” என்ற வரவேற்பு வாசகங்கள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தன.
பதின் மூன்று மைல் தூரமும் சாலையின் இருபுறமும் நெருக்கி அடித்துக்கொண்டு நின்ற மக்கள் தங்கள் கையில் பாரதத்தின் தேசியக் கொடி.யை வைத்து ஆட்டி நேருஜியை வரவேற்றுக்கொண் டிருந்தனர். இவை தவிர சாலையின் இருபுறங்களிலும் புத்தஜயந்திக் காட்சிகள் வேறு அலங்காரமாக இருந்தன. இரண்டடி புத்தரிலிருந்து இருபது அடி முப்பது அடி ஐம்பது அடி அறுபது அடி வரையில் வானுேங்கி நிற்கும் புத்த சித்திரங்கள். புத்தர் ஜாதகக் கதைகளைச் சித்திரிக்கும் சித்திர அற்புதங்கள் என்று திரும்பிய பக்கமெல்லாம் புத்தரை நினைவூட்டும் சித்திரங்கள்தான். பகலில் பளபள வென்று கண்ணைப் பறிக்கின்றன புத்தர் பிரானின் இந்த வர்ணச் சித்திரங்கள்.

Page 120
216 ஈழநாட்டுப் பிரயாணம்
இரவிலோ இந்த புத்த சித்திரங்களைச் சுற்றி ஜகஜ்ஜோதி யாக மின்னும் மின்மினி விளக்குகள்! தமிழ் நாட்டில் ஏன் இந்தியாவிலேயே எந்த விழாவும் இவ்வளவு உற்சாக மாகக் கொண்டாடப்பட மாட்டாது என்றுதான் சொல்ல வேண்டும். அத்துடன் புத்தர் பிறந்த பாரத நாட்டிலிருந்து இந்தக் காலத்துப் புத்தராக விளங்கி உலகில் அன்பையும் சமாதானத்தையும் நிலைநாட்டப் பாடுபட்டு வரும் ஜவாஹர்லால் நேரு வருகிருர் என்று கேள்விப்பட்டதும் ஈழநாட்டு மக்களின் உற்சாகம் எல்லையை மீறிவிட்டது. சாலையின் இருமருங்கிலும் உள்ள புத்தபிரானின் அற்புதச் சித்திரங்களுடன் புத்தஜயந்திக் கொடிகள் வேறு பறந்து கொண்டிருந்தன. காரிலே புத்தஜயந்திக் கொடி! வீட்டிலே புத்தஐயந்திக் கொடி மக்களின் கைகளிலே புத்தஜயந்திக் கொடி பனைமரத்திலே கொடி! தென்னை மரத்திலே கொடி திரும்பிய பக்கமெல்லாம் புத்த ஜெயந்திக் கொடிதான்! இந்தப் புத்தஜயந்திக் கொடிக் காட்சியே கண் கொள்ளக் காட்சியாக இருந்தது. நேருஜி இந்த அருமையான காட்சியையெல்லாம் கண்டு மகிழ்ந்தார்.
ஈழநாட்டு மக்களோ ஒரு கையில் புத்த ஜெயந்திக் கொடியையும், மறு கையில் பாரத நாட்டின் தேசியக் கொடியையும் வைத்துக்கொண்டு நேருஜியை வர வேற்றனர். நேருஜியின் கார் அந்தக் கூட்டத்துக்கு மத்தியில் சென்றது. கூட்டத்தினர் "பாரத மாதாவுக்கு ஜே! "இலங்கை மாதாவுக்கு ஜே!" என்ற கோஷ மிட்டார்கள்! இதைத் தொடர்ந்து இளம்பிள்ளைகள் மெய் மறந்து குதித்தார்கள்; கூச்சலிட்டார்கள்; வாழ்த்தினர்கள். ஆண்களும், பெண்களும், பெரியோர்களும், புத்த பிக்கு களும் கூடி நின்று நேருஜியை வரவேற்று மகிழ்ந்தார்கள்.
இத்துடன் மக்களின் ஆர்வம் நின்றுவிட்டதா ? இல்லை; இல்லவே இல்லை. ஈழநாட்டில் நேருஜி தங்கி இருந்த மூன்று தினங்களும் அவர் எங்கே போனலும் அங்கே எல்லாம் ஜனங்கள் திரண்டுபோய்ப் பார்த்தார்கள். பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தார்கள்.

கடல் மறைந்தது கதிரவன் மறையவில்லை 1 217
கொழும்பு நகரசபை மண்டபத்தைச் சுற்றிலும் பதினுயிரக்கணக்கில் மக்கள் நின்ருர்கள்! பாராளுமன்றக் கட்டடத்துக்கு வெளியில் பல்லாயிரக் கணக்கில் நின்ருர்கள், காலிமுக ஹோட்டலைச் சுற்றிக் கடல் அலைகளுடன் போட்டியிட்டுக்கொண்டு கணக்கின்றி கின்றர்கள். ராமகிருஷ்ண மடத்துக்கு எதிரில் இருந்த திறந்த வெளியில் ஏராளமாகக் கூட்டம். கொழும்பு நகரிலிருந்து நூற்றுமூன்று மைல்களுக்கு அப்பால் இருக்கும் அனுராதபுரி வரையிலும் மக்கள் கூட்டம்தான். அனுராதபுரத்திலோ கூட்டம் எல்லை மீறிவிட்டது.
ஈழநாட்டு மக்களின் இதயதாபத்தை, அவர்கள் பாரதத்தின் பிரதமர் பண்டித நேருவிடம் கொண்டிருக்கும் பக்தியைத் தெரிந்து கொள்வதற்கு மே மாதம் பத்தொன்ப தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு நகரில் கடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த கூட்டத்தை யும், அன்றைய இரவு திரு பண்டார நாயகாவின் "ஆலய அசோகம்” என்ற அரசியல் மாளிகையில் ஜவாஹருக்கு அளித்த அரசாங்க விருந்துக்கு வந்திருந்த ஆயிரக்கணக் கான பிரமுகர்களின் கூட்டத்தையும் பார்த்திருக்க வேண்டும்.
ஈழநாட்டு மக்கள் பாரதத்தின் பிரதமரிடம் தங்களுக்கு உள்ள அன்பைக் காண்பிப்பதற்குத் தவித்துக் கொண்டிருந்திருக்கிருர்கள் போலும், இந்தச் சந்தர்ப்பம் கிடைத்ததும் அவர்கள் அன்பைப் பொழிந்து தள்ளி விட்டார்கள். மூன்று நாட்களும் ஈழநாட்டு மக்களின் இதயக் கடல் பொங்கிப் பெருகி, கொழும்பு நகரிலிருந்து அனுராதபுரம் வரையில் பரவிக்கொண் டிருந்ததால் இலங்கையில் இருந்த கடல் மறைந்து போய்விட்டது இரவென்றும் பகல் என்றும் பாராமல் பாரதத்தின் பிரதமர் பவனி வந்துகொண்டிருந்ததால் எல்லா நேரமும் ஜகஜ்ஜோதியாக இருந்தது கொழும்பு நகரம். இதனல் வானத்தில் கதிரவன் மறையவில்லையோ என்று வியக்க வேண்டியிருந்தது.
இவ்வளவு மக்களின் அன்புக்கும் பாரதத்தின் பிரதமர் சரியான பாத்திரம்தான் என்பதை, பண்டித நேரு

Page 121
ኃ18 ஈழநாட்டுப் பிரயாணம்
நிரூபித்துவிட்டார். இரத்மலானை விமான நிலையத்தில் மே மாதம் பதினேழாம் தேதி மாலை இறங்கியதிலிருந்து இருபதாம் தேதி காலை விமானம் ஏறும்வரையில் ஒரு கிமிஷம்கூட ஒய்ச்சல் ஒழிவென்பதே இல்லை. ஒவ்வொரு 5ாளும் பத்துப் பன்னிரண்டு நிகழ்ச்சிகளில் உற்சாகத் துடன் கலந்துகொண்டார். உணர்ச்சியுடன் பேசினர். குறிப்பிட்ட காலம் தவருமல் அந்தந்த இடத்துக்குச் சென்ருர், தம்முடைய ஒளிபெற்ற கண்களால் ஈழநாட்டு மக்களின் திருமுகங்களைக் கருணையோடு பார்த்தார்.
ஒவ்வொரு இடத்திலும் அந்தக்த இடத்துக்குத் தகுந்தபடி யெல்லாம் அழுத்தம் திருத்தமாகப் பேசினர். உள்ளத்தில் தோன்றியதை ஒளிக்காமல் பேசினர். அதனல் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சக்தி நிறைந்த வார்த்தையாக இருக்தது. அவருக்கு அளித்த வரவேற்பும் அற்ப சொற்பமானதல்ல. கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பைப் பாருங்கள்.

22
அபூர்வ நகரம் அநுராதபுரம்
மே மாதம் பதினேழாம் தேதி மாலை. கொழும்பு ககர சபை மண்டபத்துக்கு எதிரில் பதினுயிரக்கணக்கான மக்கள் அமர்ந்திருந்தனர். சூரியன் மறைந்துவிட்டான். பகலின் ஒளி சிறிது சிறிதாக மங்கி வந்தது. இருள் சூழ்ந்தது. நகரசபை மண்டபத்துக்கு எதிரில் சட்டென்று. ஒரு பிரகாசம் தோன்றியது. ஆசியாவின் ஜோதி, பார தத்தின் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு மலர்ந்த முகத்துடன் காரிலிருந்து இறங்கினர். "நமோ நமோ மாதா” என்ற இலங்கையின் தேசீய கீதம் கணிரென்று ஒலிக்க ஆரம்பித்தது! இலங்கைத் தீவே எழுந்து நின்று மரியாதை செய்வது போல அங்கு கூடியிருந்த எல்லா மக்களும் எழுந்து நின்றனர். தேசீய கீதம் முடிந்தவுடன் கொழும்பு நகர மேயர் திரு. ஏ. வி. சுகத தாஸா ஊதா நிற மலர்களைக்கொண்டு கலை மணத்துடன் கட்டிய அழகான மாலையைச் சூட்டி ஜவாஹர்லால் அவர்களை வரவேற்ருர். பின்னர் வழக்கமான சம்பிரதாயச் சடங்குகள் நடை பெற்றன. நகராண்மைக் கழக அங்கத்தினர்கள் 5ேரு ஜிக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். வர வேற்புப்பத்திரம் வாசித்துக் கொடுக்கப்பட்டது. நேருஜி வரவேற்புக்கு ஏற்றவண்ணம் பதில் அளித்தார். "இலங்கையும் இந்தியாவும் சமாதானப் பாதையில் கை கோத்துக்கொண்டு செல்லவேண்டும்’ என்ருர். இதற்குப் பின்னர் கலை நிகழ்ச்சிகள் இருந்தன. கலை நிகழ்ச்சிகளுக் கான ஏற்பாடுகள் தயாராவதற்குள் நேருஜி தூரத்தில் இரும்பு வேலிகளுக்கு அப்பால் கெருக்கி அடித்து நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை நோக்கிப் பாய்ந்து சென்ருர், கன்னித்தமிழில் “நேருஜி வாழ்க!” என்று வாழ்த்தி வரவேற்றது அந்த மாபெரும் கூட்டம். மக்களின் உணர்ச்சிப் பிரவாகத்தைத் தாங்காது பல இடங்களில்

Page 122
320 ஈழநாட்டுப் பிரயாணம்
பலம் பொருந்திய அந்த இரும்புக் கிராதிகள் உடைந்து விட்டன
நேருஜி கூட்டத்தின் மத்தியிலிருந்து திரும்பி வருவ தற்கும் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்கும் சரியாக இருந்தது. 5ேருஜி கலா மேடைக்கு எதிரில் உள்ள ஆசனத்தில் வந்து அமர்ந்ததும் "கணிர் கணிர் என்று மத்தளத்தின் ஓசை எழுந்தது. திரைக்குப் பின்னல் இருந்து ஒருவர் பின் ஒருவராக மூன்று 5டன மணிகள் வந்தனர். அவர்கள் அழகான நடன உடை அணிந்திருக் தனர். கண்ணைக் கவரும் வெள்ளை நிற ஆடை அணிக் திருந்தனர். அந்த ஆடைகளுக்கு மேலே கருத்தை பறிக் கும் அலங்காரங்கள் மிளிர்ந்தன. அவர்கள் போக்கில் திடீரென்று ஆனந்தம் துள்ளியது. கண்கள் பிரகாசித்தன. சின்னஞ்சிறு வெண்ணிறப் புஷ்பங்களைப் போலிருக்கும் வெறும் காலுடனே அவர்கள் ஆடத் தயாரானர்கள். மத்தளம் முழங்க ஆரம்பித்தது. வசந்த காலத்து வெள்ளை ரோஜா மலர்கள் தென்றலில் அசைவதுபோல் மெதுவாக அசைந்தார்கள். அன்னப்பறவை காலைத் தூக்கி வைப்பது போல ஒவ்வொரு காலாகத் தூக்கி வைத்தார்கள். மத்தள ஒலி கணத்துக்குக் கணம் அதிகமாகியது. அந்தக் கண்டி கடன மணிகளின் ஆட்டமும் வேகம் பெற்றன. அந்தப் பெண்கள் சுழன்று சுழன்று ஆடினர்கள். கால்களை மாற்றி மாற்றி வைத்து ஆடினர்கள். நெளிந்து கெளிக்த ஆடி னர்கள். வளைந்து, குனிந்து, நிமிர்ந்து, ஓடி, ஒடுங்கி ஆடினர்கள். ஆட்டம் முடியும் தறுவாயில் அவர்கள் கடனம் அபார அழகுடன் துலங்கியது. சட்டென்று ஆட்டத்தை நிறுத்தினர்கள். பனி முத்துக்களைப் பெற்ற புது மலர்கள் போல முகங்களில் வியர்வை அரும்பி நிற்க இரு கைகளையும் குவித்து வணங்கினர்கள். அடுத்த கணம் நீலத் திரைக்குப் பின்னல் ஓடி மறைந்துவிட்டார்கள்.
ஜவாஹர்லால் அவர்களோடு அப் பெரும் சபை கை கொட்டித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டது. அதே சமயத்தில் மேட்ைமீது ஈழத்தின் புகழ் பெற்ற கண்டி நடனக்காரர் தோன்றினர். "ஜல் ஐல்" என்று சலங்கை கொஞ்ச கடந்து வந்தார். சபையோருக்கு வணக்கம் செய்து நிமிர்ந்தார். அடுத்த கணமே ஆட

அபூர்வ சகரம் அநுராதபுரம் 221
ஆரம்பித்துவிட்டார். ஆரம்பிக்கும் போதே புயலின் வேகத்தில் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. மின்னல் வேகத்தில் சுழன்றுகொண்டே ஆடினர். அந்த ஆட்டத் தில் ஒரு பயங்கர அழகு பொங்கித் ததும்பியது. இதற்கு மேல் ஆட்டத்தைப் பார்க்க முடியவில்லை. கலை நிகழ்ச்சி யில் வருண தேவன் வந்து கலந்துகொண்டார். "உஸ் உஸ்" என்ற காற்றின் பல்லவிக்கு ஏற்ப "சோ சோ' என்று மழை பக்க வாத்தியம் இயக்கத் தொடங்கிவிட்டது. இயற்கையின் இந்த கடனத்தைத் திறந்த வெளியில் இருந்து அனுபவிக்க முடியாமல் மக்கள் கூட்டம் கலையத் தொடங்கியது. கண்டி நடனக்காரர். ஆடிக்கொண்டே நீலத் திரைக்குப் பின்னுல் மறைந்துவிட்டார். நேருஜி மழையில் நனைந்துகொண்டே கொழும்பு நகர சபை மண்ட பத்துக்குள் சென்ருர், அவரைத் தொடர்ந்து சென்ற ஜனசமுத்திரத்தைத் தடுத்து நிறுத்துவதற்குள் கொழும்பு ககரப் போலீஸ் படைக்குப் போதும்போதும் என்ருகி விட்டது.
இரவு காலிமுக ஹோட்டலில் இலங்கையில் உள்ள எல்லா இந்திய சங்கங்களும் சேர்ந்து நேருஜிக்கு வரவேற். பளித்தன. அந்த வரவேற்பிலும் கலை நிகழ்ச்சி இருந்தது. எல்லாம் சின்னஞ்சிறு பெண்கள். அந்தப் பெண்கள் ஆடிய பரத நாட்டியத்தைப் பற்றிக் கூறுவதா? கிராமக் காதலர்கள் நடனத்தைப் பற்றிக் கூறுவதா? குறவன் குறத்தி கடனத்தைப் பற்றிச் சொல்வதா? எதைப்பற்றிச் சொல்வது? ஆறு வயதுகூட கிரம்பாத அந்தக் குழந்தை தன் கமலக் கண்களைத் திறந்து ஒரு சுழற்று சுழற்றி ணுளே! அதில் நேருஜியே அல்லவா மயங்கிப்போனர் அந்தக் குழந்தையைத் தாவி அணைத்துக்கொண்டு உச்சி முகர்ந்து ஆசீர்வாதம் செய்தார். "மனிதத்தன்மை, சகிப்புத் தன்மை, பிறருக்குத் தீங்கு செய்யாமை இந்த அடிப் படையில் எல்லாப் பிரச்னைகளையும் தீர்க்கவேண்டும்” என்று கூடியிருந்த மக்களுக்கு யோசனை கூறினர்.
அன்றைய நிகழ்ச்சிகள் இத்துடன் முடிவடைந்தன.
மறுநாள் விசேஷ ரயிலில் கொழும்பு நகரிலிருந்து நூற்று மூன்று மைல்களுக்கு அப்பால் உள்ள மிகப் பழைய நகர

Page 123
223 ஈழநாட்டுப் பிரயாணம்
மான அநுராதபுரத்துக்குச் செல்கிருர் நேரு, வாருங்கள், அவருக்கு முன்னதாகவே நாம் அநுராதபுரத்துக்குச் செல் வோம். நேருஜி வருவதற்குள் அநுராதபுரத்தின் சரித்திர முக்கியம் பெற்ற இடங்களைப் பார்ப்போம்.
赛 著 赛
இதோ அநுராதபுரத்துக்கு வந்துவிட்டோம். அநு ராதபுரம் ஒரு அபூர்வ நகரம்தான். பழைய காலத்திலும் அபூர்வ நகரமாகத்தான் இருந்தது. இந்த நாளிலும் அபூர்வ நகரமாகத்தான் இருக்கிறது. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளின் தொடர்பான சரித்திர வரலாற்றை இங்ககளில் இன்றைய தினமும் கண்ணுல் காணலாம். ஆமாம், அதற்கு வேண்டிய சரித்திர ஆதாரமான அழியாச் சின்னங்கள் இங்கு இருக்கின்றன. இந்த மாதிரி சரித்திர முக்கியத்துவமும் பெருமையும் வாய்ந்த நகரம் உலகில் ஒரு சிலதான் இருக்கலாம்.
அநுராதபுரத்துச் சாலையில் நடந்து இடிந்தும் சிதைக் தும் போயிருக்கும் புத்த விஹாரங்களேப் பார்த்துக் கொண்டு மகாமேக நந்தவனத்துக்கு வருகிருேம். அங்கு இருக்கும் போதி மரத்தைப் பார்க்கிருேம். அந்த மரத்தை மக்கள் பக்தி சிரத்தையுடன் வணங்குவதையும், அந்த மரத்தில் கிளைகளிலெல்லாம் பக்தர்களின் காணிக்கையான வெள்ளைத் துணிகள் கட்டித் தொங்கவிட்டிருப்பதையும் பார்த்தவுடன் நம்முடைய மனமெல்லாம் கால வெள் ளத்தில் பின்னுேக்கிப் பிரயாணம் செய்யத் தொடங்கு கிறது. 15ம் எதிரில் தோன்றும் இன்றைய அநுராதபுரத் துக் காட்சிகள் மறைந்துவிடுகின்றன.
பளபளவென்று ஐகஜ்ஜோதியாக மின்னும் பசும் பொன்னலான தேரில் வெள்ளை நிறக் குதிரைகள் பூட்டி யிருக்கின்றன. தேரைச் சுற்றிலும் மன்னரும் மந்திரி களும் மகாராணிகளும் பிரபுக்களும் மக்களும் பக்தி சிரத்தையோடு சூழ்ந்து நிற்கிருர்கள். மங்கள வாத்தி யங்கள் முழங்குகின்றன. அந்தத் தேருக்குள் என்ன இருக்கிறது? ஏதோ கிக்ளபோல் அல்லவா தெரிகிறது. ஆமாம், கிளேயேதான் மகான் புத்தர் எந்த அரசமரத்

அபூர்வ நகரம் அநுராதபுரம் &33
தடியில் அமர்ந்து தியானம் செய்து ஞானே தயம் பெற் ருரோ, அந்தப் போதி மரத்தில் இருந்து எடுத்த சிறிய கிளைதான். அந்தக் கிளையை யார் கொண்டு வந்தார்? அசோகச் சக்கரவர்த்தியின் அருமை மகள் சங்கமித் திரையே கொண்டுவந்தாள். அந்த அரசங்கிளையைத்தான் தங்கச் சட்டியில் வைத்து, பொன் தேரில் ஊர்வலமாக எடுத்து வருகிருர்கள். தேர் வரும் சாலை எல்லாம் வெண் மணல் பரப்பப்பட்டிருக்கிறது. அதன் மீது பலவித மலர்கள் தூவப்பட்டிருக்கின்றன. சாலை யெல்லாம் தோர ணங்கள், மகாமேக நந்தவனத்துக்கு அருகில் வந்ததும் தேர் நிற்கிறது. தேரிலிருந்த போதிக் கிளே இருக்கும் பொற் சட்டியை சங்கமித்திரை எடுத்து அரசன் தேவனும் பிரிய திஸ்ஸனிடம் அளிக்கிருர், அரசன் தலைவணங்கி, பக்தி மரியாதையுடன் போதிக் கிளையைப் பெற்றுக்கொள் கிருன். அரசனுக்குப் பின்னல் பதினறு பிரபுக்கள் கை கட்டி தலைவணங்கி நிற்கிருர்கள். கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிருர்கள். அன்று அநுராதபுரத்தை தெய்வ லோகம்போல் அலங் கரித்துக் கோலாகலமாக விழா எடுத்து கட்ட போதி மரக் கிளேதான் வேர் பரவி வளர்ந்து உயிருடன் இருக்கிறது. இது உலகிலேயே வயதான மரமாம்!
இந்த மரத்தின் ஒரு பாகத்தில் இப்பொழுது ஏதோ நோய் கண்டிருக்கிறதாம். அதற்காக உலகிலேயே பிரசித்தி பெற்ற பல வன ஆராய்ச்சி நிபுணர்களை வரவழைத்து அந்த மரத்துக்கு ஏற்பட்டிருக்கும் நோயின் காரணத்தைக் கண்டறிந்து அதைப் போக்குவதற்காக வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது இலங்கை சர்க்கார் என்று கேள்விப்பட்டேன். அசோக மன்னன் காலத்து மரமல்லவா? போதி பகவானுக்கு ஞான ஒளி தந்த புண்ணிய விருட்சமல்லவா? பெளத்த மதத்தையே தன் னுடைய அரசியல் கொள்கையாகக் கொண்ட இலங்கை சர்க்கார் இதைக்கூடச் செய்யவேண்டாமா? கட்டாயம் செய்யத்தான் வேண்டும். அதுபோலவே இன்றைய ஈழத்து மக்கள் சமுதாயத்தில் பரவியுள்ள சமூகத் துவேஷ நோயையும் போக்குவதற்கு புத்த பகவான் அவர்களுக்குக் கருணை புரியவேண்டும்.

Page 124
824 ஈழநாட்டுப் பிரயாணம்
இந்தப் புண்ணிய போதி மரத்தைத் தரிசித்துவிட்டு மேலே செல்கிருேம். அநுராதபுரத்தின் வீதியிலே மெது வாக கடந்து செல்கிருேம். வீதியை ஒட்டினுற்போலிருக் கும் சிதைந்துபோன புத்த விஹாரம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது ஆமாம். நம்முடன் துணை வந்த இலங்கை நண்பரின் குரல் மூலமாகத்தான் சிரிக்கிறது!
, "ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்?"
"அது ஒரு கதை"
"அந்தக் கதையைத்தான் சொல்லுங்களேன், கேட் கலாம்.” V−
இலங்கை நண்பர் அந்த புத்த விஹாரத்தைப்பற்றிய ரஸமான கதையைச் சொல்லத் தொடங்கினர்.
அநுராதபுரம் மகோன்னத நிலையில் இருந்த காலம். எல்லாளச் சோழன் என்ற தமிழ் மன்னன் அநுராத புரியை ஆண்டு வந்தான். அவனுடைய தர்ம ஆட்சியில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இரு கண்களாக வேற்றுமை யின்றிப் பாதுகாக்கப்பட்டனர். சைவமும், பெளத்தமும் ஒன்றை ஒன்று அணைத்துக்கொண்டு ஓங்கி நின்றன. மன்னர் தாமே தேர் ஒட்டிக்கொண்டு சென்று மக்களின் குறைகளை விசாரிப்பார். அதற்கு வேண்டிய பரிகாரங்களையும் உடனுக்குடன் செய்து வருவார். அவ்வாறு ஒருநாள் தேர் ஒட்டிக்கொண்டு சென்ருன் எல்லாளச் சோழன். அன்று என்னவோ குதிரைகள் அவன் கைக்கு அடங்கி ஓடவில்லை. எவ்வளவோ சாமர்த்தியமாகத்தான் தேரை ஓட்டிக் கொண்டு சென்றன். அந்த இடக்குப் பிடித்த குதிரைகள் ஒரு துள்ளுத் துள்ளி அருகில் இருந்த புத்த விஹாரத்தின் பக்கம் தேரை இழுத்துச் சென்றன. தேர் புத்த விஹாரத் தில் மோதியது. தேர் நசுங்கியது. புத்த விஹாரம் கொஞ்சம் சிதைந்து விட்டது. புத்த விஹாரம் சிதைந்ததைப் பார்த்தான் மன்னன் எல்லாளச் சோழன். மனம் பதறிப்போய் விட்டான். தான் ஒட்டிவந்த தேரால் புத்த விஹாரத்துக்குச் சேதமா ? தன்னுடைய கவனக் குறைவால் புத்த விஹாரையில் சிதைவு ஏற்பட்டு விட்டதா என்பதை எண்ணிப் பார்த்தான். அவன்

அபூர்வ நகரம் அநுராதபுரம் 32.5
இதயமே சுக்குநூருக வெடித்து விடும்போல் இருந்தது. அதற்குப் பிராயச்சித்தமாக என்ன செய்வது என்று யோசித்தான். தன்னுடைய தவறுக்குத் தானே தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்தக் கணத்திலேயே தன்னைச் சிதைத்துத் கொள்ளத் துணிந்து விட்டான். சிதைந்துபோன அந்தப் புத்த விஹாரத்தின் முன்னுல் சாஷ்டாங்கமாகத் தரையில் விழுக்தான். கண்ணிர் விட்டான். கதறினன். "என் தலையில் இந்தத் தேரை ஒட்டி என்னைச் சிதைத்துக் கொல்லுங்கள்" என்று புத்த பிக்குகளைப் பார்த்து வேண்டினன். அவர்கள் தலைவர்களாகிய தேரோக்களைப் பார்த்துக் கெஞ்சினன். இந்தமாதிரி உலகில் எந்த மன்னராவது மனம் பதறி இருக்கமுடியுமா ? உயிருள்ள பொருளுக்காக உயிரைக் கொடுக்க முன் வந்திருப்பார்கள். உயிரற்ற கல் கட்டடத் தின் சிதைவுக்காக மனம் பதறித் தன்னையே தியாகம் செய்துகொள்ள ஒரு தமிழ் மன்னனுல்தான் முடியும் தமிழன்தான் பிற மதத்தினரின் உணர்ச்சிக்கு மதிப்பும் மரியாதையும் வைத்துப் போற்றுபவன். அப்படிப்பட்ட புண்ணிய மூர்த்தியான, சிதைந்துபோன செங்கல் கட்டடத்துக்காகவே தன் உயிரைத் துறக்க முன்வந்த தியாக புருஷரான, நியாயம் காத்த மன்னன் எல்லாளச் சோழன் அரசாண்ட தர்ம பூமி இந்த அநுராதபுரம்.
இந்தக் கதையைச் சொல்லிவிட்டு நண்பர் என்னைப் பார்த்தார். இடிந்துபோன அந்த புத்த விஹாரத்தைப் பார்த்தார். "ஒருகால் அந்த மன்னர் தேர்பட்டுச் சிதையும் பாக்கியம் பெற்ற புத்த விஹாரம்தானே என்னவே இது' என்று வியந்தார். *
"எல்லாளச் சோழன் போன்ற தமிழ் மன்னர்கள் ஆண்ட இந்தத் தர்ம பூமியிலா தமிழ் மக்களையும் தமிழை யும் வேண்டாம் என்று இப்பொழுது ஒதுக்குகிருர்கள் ?" "எல்லாளச் சோழன் காலத்தில் அந்த உத்தமத்தமிழ் மன்னனையே சிங்கள மன்னர்கள் வெறுத்தார்கள். அவன் மீது போர் தொடுத்தார்கள். இப்பொழுதுதான் எல்லாரும் இந்த நாட்டு மன்னர்கள் ஆயிற்றே; இதனுல் எல்லாத் "தமிழ் மன்னர்’களையும் வேண்டாம் என்கிருர்கள் சிங்களவர்கள்.”
15

Page 125
226 ஈழநாட்டுப் பிரயாணம்
"எல்லாளச் சோழனைக் கூடவா சிங்கள மன்னர்கள் எதிர்த்தனர் ?”
"ஆமாம். துட்டகமனு என்ற சிங்கள மன்னன் எல்லாளச் சோழன் மீது போர் தொடுத்து அவனை வீழ்த்தினன். ஆனல் அந்தத் தமிழ் மன்னனின் வீரத்துக் குத் தலைவணங்கினன். வருங்காலச் சிங்களவர்கள் தமிழர் களைத் தங்கள் சகோதரர்கள் போல் பாவிக்க வேண்டும். எல்லாளச் சோழனின் கல்லறைக்கு ஒவ்வொரு சிங்கள வனும் வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று செம்பிலும் கல்லிலும் வெட்டுவித்தான்.”
"உண்மையாகவா ?”
"ஆமாம். உண்மையாகவேதான்."
"இந்திய மக்களின் மீது இனத் துவேஷம் ஏற்படு வதற்காகத் துட்டகமனுவைச் சுட்டிக்காட்டி துவேஷப் பிரசாரம் செய்கிருர்களே சில சிங்களத் தலைவர்கள் ?”
"அவர்கள், அவர்களையும் அறியாமலேயே தங்கள் மன்னரின் சிறந்த பண்புகளையும், உயந்த குணங்களையும் தாழ்த்துகிருரர்கள். அவர்கள் அறியாமையைக் கண்டு துட்டகமனு வானவீதியில் வாட்டத்துடன் நின்று கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பான்.”
Ν
இவ்வாறு அந்த இலங்கை நண்பருடன் பேசிக் கொண்டு அநுராதபுரியைச் சுற்றி வந்தோம். அங்கு பார்க்கும் இடமெங்கும் தாகபாக்கள்தான். அதாவது புத்தரின் திருமேனியில் இருந்து எடுத்த தாதுக்களில் ஏதாவது ஒன்றை அடக்கம் செய்து அதன் மீது கட்டிய பிரமாண்டமான வட்ட வடிவமான குன்றுகள்தான் தாகபாக்கள் `ሯ
தாகபாக்கள் எல்லாம் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டவைதான். வெறும் குன்றுபோல் கட்டி அதற்குமேல் கலசம் அமைத்திருப்பார்கள் அவ்வளவுதான். ஆனல் இந்தத் தாகபாக்களைக் கட்டுவதற்கு எவ்வளவு செங்கற்கள் வேண்டியிருக்கும் தெரியுமா? ஒரு தாகபாவில் உள்ள செங்கற்களை மட்டும் எடுத்தால் சென்னை காந்தி

அபூர்வ நகரம் அநுராதபுரம் 22?
ககரைப்போன்று பத்து காந்தி நகரம் நிர்மாணிக்கலாம் என்ருல் அதற்கு எவ்வளவு செங்கற்கள் வேண்டி யிருக்கும் ? தாகபாக்கள் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை நேயர்கள் ஒருவாறு கற்பனை செய்து கொள்ளலாம்.
"இலங்கையில் இது போன்ற தாகபாவை யார் முதலில் கட்டினர்களோ ?”
"சிங்கள மன்னன் தேவனும்பிரிய திஸ்ஸன் கட்டியது தான் முதல் தாகபா. அதற்குப் தூபராம தாகபா என்று பெயர்."
"அவனுக்குப் பிறகு யார் யார் இது போன்ற தாக பாக்களைக் கட்டினர்கள் ?”
"துட்டகமனு கிரிசவடிய தாகபாவையும், ருவான் வலிஸயா என்னும் மகாஸ்தூபியையும் கட்டினன். வட்டகமனு அரசன், அபயகிரிதாகபா, லங்கராமதாகபா என்ற இரண்டு தாகபாக்களைக் கட்டினன். மகாசேன சக்கரவர்த்தி ஜேதாவனராமதாகபா என்று ஒரு தாகபா, வைக் கட்டினன். இதற்குப் பின்னர் யார் யாரோ எத்தனையோ தாகபாக்களைக் கட்டினர்கள். அந்தத் தாக பாக்கள் ஒன்றும் அவ்வளவு முக்கியமானவை இல்லை."
"இந்தத் தாகபாக்கள் எல்லாம் இப்பொழுது எங்கே இருக்கின்றன ?”
"இதோ தெரிகிறதே! வானுற ஓங்கி நம்முடைய கண் களைக் கவருகின்றனவே! இவைகள்தான்!” என்று சொல்லி அங்கு தெரிந்த தாகபாக்களை எல்லாம் காட்டினர்.
இத் தாகபாக்களைப் பார்த்தபோது நான் எத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு முன்னல் சென்றுவிட்டேன். தேவனம் பிரிய திஸ்ஸன், வட்டகமனு, துட்டகமனு, மகாசேனன் முதலிய மன்னதி மன்னர்களும், அவர் களுடைய மந்திரிகளும், மகாராணிகளும், இளவரசர்களும் அந்தத் தாகபாக்களேச் சுற்றி, சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டனர். குன்றுபோல் வட்ட வடிவமாக உயர்ந்து கிற்கும் அந்தத் தாகபாக்கள் தாமரை மலர்களைக் கொண்டு மூடப்பட்டிருந்தன. ஆமாம், வைசாக பெளர்ணமி

Page 126
228 ஈழநாட்டுப் பிரயாணம்
போன்ற விசேஷ விழாக் காலங்களில் தாகபாக்களை அவ்வாறு தாமரை மலர் கொண்டுதான் மூடி அலங்கரித் திருப்பார்கள். இந்த அலங்கார தாகபாக்களுக்கு முன்னுல் ஆயிரக்கணக்கான புத்த பிக்குகளும் அவர்களுடைய குரு மார்களாகிய தேரோக்களும் அந்த நகரின் வீதிகளில் வளையவர ஆரம்பித்தனர். லட்சக்கணக்கான நகர மக்கள் பலவித ஆடை ஆபரணங்களை அணிந்துகொண்டு அந்த வீதியில் குதூகலத்துடன் வந்து கொண்டிருந்தனர். நான் இந்தக் காட்சி இன்பத்தை அனுபவித்துக்கொண்டே என்னை மறந்து இருந்தேன்.
இலங்கை கண்பர் என்னைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி, "நீங்கள் என்ன இந்த உலகில் இல்லையா ?” எனருா.
அப்பொழுதுதான் எனக்குச் சுய உணர்வு வந்தது. கான் கண்ணை விழித்துப் பார்த்தேன். என்ன ஆச்சரியம் நான் கனவு உலகில் எந்தக் காட்சியைக் கண்டேனே அதே காட்சியைத்தான் நேரிலும் கண்டேன். கண்களை ஒரு முறை கசக்கி விட்டுக்கொண்டு பார்த்தேன். அதே வைசாக விழாக் காட்சிதான்! உடலை ஒரு தரம் கிள்ளி விட்டுக்கொண்டு பார்த்தேன்! அதே கோலாகலமான காட்சிதான்.
உண்மையாகவே அப்பொழுது அநுராதபுரத்து வீதி களில் ஆயிரக்கணக்கான புத்த பிக்குகள் அணி அணி யாகச் சென்று கொண்டிருந்தனர். மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கையிலே தாழங்குடைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் நடமாடிய காட்சி மறக்க முடியாத காட்சி. பல்லாயிரக்கணக்கான மக்கள் பலவிதமான ஆடைகளில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். காலையில் வெறிச்சென்று இருந்த இந்த அநுராதபுரத்தில் அதற்குள் இத்தனை ஆயிரம் மக்களா என்று வியந்து போனேன். என் வியப்பை உணர்ந்துகொண்ட இலங்கை , நண்பர் "ஆமாம். இந்தக் காலப் புத்தரான ஜவாஹர்லால் நேரு அவர்கள் வரும் சமயம் 5ெருங்கி விட்டதல்லவா ? இவ்வளவு மக்கள் கூட்டத்துக்கும் புத்த பிக்குகளின் கூட்டத்துக்கும் அதுதான் காரணம்" என்ருர்,

23 அன்பென்று கொட்டுமுரசே
தேவர்களே! முரசு கொட்டுங்கள்; சங்கம் ஊதுங்கள்! உங்கள் சொர்க்கத்தில் மலர்கள் இருப்பது உண்மையானல், உடனே அவற்றை ஏராளமாகத்
திரட்டிக் கொண்டு வாருங்கள். ஈழ நாட்டின்மீது மலர் மாரி பொழிவதற்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் வேறு வாய்க்கப் போவதில்லை.
எந்தையே பாரதத்தின் தந்தையே புத்த பகவானே வானுலகத்தில் தாங்கள் இன்று எங்கே இருந்தாலும், பரம்பொருளின் பாத கமலத்தடியில் வீற்றிருந்தாலும், புண்ணிய ஈழத் தீவுக்கு மேலே ஆகாச வெளியில் வட்ட மிட்டுக் கொண்டிருந்தாலும், தங்கள் திருவுளம் குளிர்க் திருக்கும் என்பதில் ஐயமில்லை. "நிச்சயமாக அழிந்து போகும் நிலையிலிருக்கும் இந்த உலகைக் காப்பாற்ற அன்பு, சகிப்புத்தன்மை, சமாதானம், அஹிம்சை ஆகிய வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. உலக நாடுகளில் வாழும் சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் எல்லாரும் இதை உணர்ந்து விட்டனர்" என்று மனிதகுல மாணிக்கமான ஜவாஹர்லால் நேரு அவ்ர்கள் அநுராத புரத்தில் புதிய நகரைத் திறந்துவைத்து அருமையான சொற்பொழிவு சிகழ்த்தினர். போதிக் கடவுளே! தாங்கள் இந்த மண்ணுலக வாசியாக இருந்தபொழுது எதைச் சொன்னீர்களோ, எதற்காக வாழ்ந்தீர்களோ, அதைத் தங்கள் நாட்டில் தோன்றிய ஜவாஹர்லால் நேரு நிறை வேற்றி வைக்க அரும் பாடுபட்டு வருகிருர். அவருக்கும் உலக மக்களுக்கும் ஆசி கூறுங்கள்.
ஈழநாட்டுப் பொதுமக்களே! பாரதத்தின் பிரதமர் ஜவாஹர்லால் நேரு அவர்களிடம் நீங்கள் வைத்திருந்த திட நம்பிக்கையை நிறைவேற்றி விட்டார். அதற்காக உங்களையே நீங்கள் வாழ்த்திக் கொள்ளுங்கள்.

Page 127
230 ஈழநாட்டுப் பிரயாணம்
சந்தேகப் பிராணிகளே! "இந்தியா ஈழத்தின்மீது படை எடுத்துவிடும்” என்று ஐயமுற்றுக் கொண்டிருங் தீர்கள் அல்லவா? உங்கள் சந்தேகம் இவ்வளவு சீக்கிரத் திலேயே தீர்ந்து விட்டது, பார்த்தீர்களா? "இந்தியா எப்பொழுதும் ஈழத்தின்மீது படை எடுக்காது” என்று 3ಞ್ಞಣ್ಣಿ உறுதி கூறி விட்டார். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான
ஈழநாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் உரிமையையும்,அவர்கள் மொழியை யும் எதிர்த்துவரும் ஈழநாட்டு அருமைச் சகோதரர்களே! உங்களுக்கு நமது மனமார்ந்த நன்றி. உங்கள் எதிர்ப்பு காரணமாகத்தான் ஈழநாட்டுத் தமிழ்ச் சகோதரர்கள் எல்லாரும் இன்று ஒன்று திரண்டு நிற்கிருர்கள், ஜவஹர்லால் கேருவும் ஒரு உண்மையை உங்களுக்காகச் சொல்லாமல் சொன்னுர்: "இந்தியாவில் எல்லாருக்கும் எல்லா உரிமைகளையும் வழங்கி யிருக்கிறேன். அதனல் ஜனநாயகம் ஓங்கி வளருகிறது. புத்தர் பிரானின் அன்பைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை இதுதான்” என்று கூறினர். தமிழ் மக்கள் உரிமையை நீங்கள் எதிர்ப்பதினுல்தானே உரிமை இழந்து நாடற்றவர்களாக இருக்கும் தமிழ் மக்களுக்கு நேருஜி இந்தத் தைரிய மொழிகளை மறைமுகமாகச் சொன்னர். தமிழ் மக்களை எதிர்த்து வரும் ஈழநாட்டுச் சகோதரர்களே, நீங்கள் அடியோடு வாழ்வீர்களாக உங்களால் அல்லவா ஈழத் தீவில் உரிமை முரசு கொட்டும் முழக்கம் கேட்கிறது. அந்த முரசு 'அன்பென்று கொட்டுவோம்!” என்றல்லவா முழங்குகிறது.
மேலே குறிப்பிட்ட அன்பு முரசத்தைப் பற்றி கேயர்களுக்குச் சொல்லவும் வேண்டுமா? துவேஷத்தை யும் வகுப்பு உணர்ச்சியையும் ஒழித்து மனிதர்கள் மத்தியில் அன்பு மலர நேருஜி கொட்டிய முரசு முழக்கம்தான் அது!
புத்த மதமும் அதன் கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங் களும் ஈழ நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் னல் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டவைதான். அவை

அன்பென்று கொட்டுமுரசே 28t,
மிக உயர்ந்த நோக்கத்துடன் தான் கொண்டுவரப்பட்டன. மக்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் போல வாழ வேண்டும் என்பதுதான் அவற்றின் இலட்சியம். ராஜ்ய ஆசை மிகுந்த சில வெறியர்கள் மக்களின் அன்பை நசுக்கி
விடக்கூடாது என்பதுதான் அவற்றின் குறிக்கோள். இவை எல்லாம் நல்ல நோக்கங்கள் இல்லை என்று யார் சொல்லமுடியும். ஆனல் நோக்கத்தைக் காட்டிலும் அதை கடத்துபவர்கள் கொடியவர்கள் ஆனர்கள். அன்பையும் அஹிம்சையையும் நிலைநாட்டத் தோன்றிய புத்தமதம் அன்பையும் அஹிம்சையையும் தீர்த்துக் கட்டி விடுமோ என்று பயப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஈழநாட்டில் இன்றைய தினம் புத்த மதத்தின் போக்கு அந்த மாதிரி கி%க்கு வந்துவிட்டது.
"பட்டினி கிடந்து செத்தாலும் பாதகமில்லை; உரிமை கிடைத்தால் போதும்; தமிழ்மொழிக்கு அந்தஸ்தும் அரியா சனமும் கிடைத்தால் போதும்’ என்று ஈழநாட்டுத் தமிழ் மக்கள் வாய்விட்டுச் சொல்லும் அவல நிலைமை சுதந்திரம் பெற்ற ஈழத் திரு 5ாட்டில் இன்று ஏற்பட்டுவிட்டது.
அந்த அளவுக்கு ஈழ நாட்டுத் தமிழ் மக்களின் வாழ்க்கை சிம்மதி குறைந்து மோசமாகிக் கொண்டு வருகிறது.
தமிழ் மக்கள் ஈழநாட்டுச் சுதந்திர சர்க்காரைக்கண்டு பயப்படுகிருர்கள்; அவர்கள் போடும் சட்டத்தைக் கண்டு நடுங்குகிருர்கள்; அதை அமுல் நடத்தும் அதிகாரிகளைக் கண்டு அஞ்சுகிருர்கள்;அவர்களை வீதியில் பார்த்தால் பீதி அடைகிருர்கள்; அடுத்த வாரம் ஈழநாட்டில் தங்கு வோமோ மாட்டோமோ என்று தயங்கித் தவிக்கிருர்கள்; டி. ஆர். பி. கோட்டீஸைக் கண்டு திடுக்கிடுகிருர்கள்; அந்த கோட்டீஸில் கண்ட நாள் கடந்துவிட்டால் இன்னும் அதிகமாகத் திகில் அடைகிருர்கள் பிரஜா உரிமை மனு ஆபீசைக் கண்டால் பரிதவிக்கிருர்கள்; அந்த ஆபீஸ் வாசலில் நிற்கும் க்யூ வரிசையை எண்ணிக் கில கொள்கி ருர்கள்; பிரஜா உரிமைக்கு மனுப்போட்டவர்கள் பயப்படு கிருர்கள் போட மறந்தவர்களைப் பற்றியோ ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் இன்னும் அதிகமாகப் பயப்படுகிருர்கள்.

Page 128
232 ஈழநாட்டுப் பிரயாணம்
பிரஜா உரிமைக்கான மனு போட்டிருக்கும் தமிழ் மக்கள் அஞ்சி நடுங்குவதைப் பற்றி என்னத்தைச் சொல்வது?
பிரஜா உரிமை மனுவில் பிறந்ததேதியை, ஊர் முதலி யவைகளைப் பற்றிச் சரியாக எழுதினுேமா என்ற பயம்; எழுதிய தேதியையும் ஊரையும் அதிகாரிகள் சரி என்று ஒப்புக்கொள்வார்களா என்ற பயம்; எந்தச் சமயம் வீட் டுக்கு வந்து டி. ஆர். பி. கோட்டீஸ் கொடுத்து ஊரை விட்டுப் போ என்று சொல்லுவார்களோ என்ற பயம்: காலம் எல்லாம் பாடுபட்டுச் சம்பாதித்த சொத்து சுகங்க ளைப் பிடுங்கிக் கொண்டு ஊரைவிட்டே துரத்தி விடுவார் களோ என்ற பயம்; "ஐயா, இப்படிச் செய்யலாமா” என்று கேட்டால் தடியால் அடிப்பார்களோ என்ற பயம்; அடிப்பதையும் அடித்து விட்டுக் கோர்ட்டில் வழக்கையும் போட்டு இழுத்து அடிப்பார்களோ என்ற பயம்.
மொத்தத்தில் ஈழநாட்டுத் தமிழ் மக்கள் ஈழ நாட்டில் வாழ்வதே ஒரு பயங்கரமான, ஆபத்தான காரியம் என்று ஆகிவிட்டது.
இந்த மாதிரி சமயத்தில் உண்மையான புத்தமதத்தை எடுத்துக் காட்டும் ஒரு மகான் தேவைப்பட்டார். எல்லா வற்றையும் அலசி ஆராய்ந்து மக்களுக்கு உண்மையைத் தைரியமாக எடுத்துச் சொல்லும் ஒரு மகா புருஷர் அவசியமா யிருந்தது.
கடவுளின் அருளால் அத்தகைய மகா புருஷர் கம்முடைய நாட்டில் இப்பொழுது நம்மிடையே வாழ் கிருர். ஜவாஹர்லால் நேரு ஈழ நாட்டில் சுற்றுப் பி ர யாண ம் செய்தபோதெல்லாம் அன்பைப்பற்றியும் அஹிம்சையைப் பற்றியும் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொன்னர்.
அநுராதபுரத்து வீதியில் பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள் தமது புலல்வி இந்திரா காந்தியுடனும் இலங்கைப் பிரதம மந்திரி, போக்கு வரத்து மந்திரி, புதை பொருள் ஆராய்ச்சிக் கமிஷனருடனும் திறந்தகாரில் பவனி வந்தபொழுது இந்தப் புராதன நகரம் புத்துயிர் பெற்று எழுந்துவிட்டது.

அன்பென்று கொட்டுமுரசே 333.
ஜவாஹர்லால் நேரு அநுராதபுரத்நுக்கு வருவதற்குப் பல மணி நேரத்துக்கு முன்னதாகவே மக்கள் கூடிவிட்ட னர். அதனல் அவர் வரும் வழியில் கூடியிருந்த மக்களின் மீது சிறிது கவனம் செலுத்த முடிந்தது. தமிழ் மக்கள், சிங்கள மக்கள், ஆண்கள், பெண்கள், வயது முதிர்க்த பெரியவர்கள், சிறுவர்கள் என்று பலதிறப்பட்டவர்களும் கூடியிருந்தார்கள். இவ்வளவு பேரும் அநுராதபுரத்தில் வசிப்பவர்களா? இல்லை. ஈழநாட்டுத் தமிழ்ப் பிரதேசங் களில் வசிக்கும் தமிழ் மக்கள் பெருந்திரளாக அங்கு வந்திருந்தார்கள். அதில் யாழ்ப்பாணத் தமிழர்கள் அதிகம் காணப்பட்டார்கள். அவர்கள் முகங்களில் தமிழ்க் களை சொட்டிக் கொண்டிருந்தது. வெள்ளை வெளேர் என்ற தூய உடை உடுத்திக் கொண்டிருந்தார்கள், பெண்மணிகளும் தங்கள் விசால நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டுக் கொண்டு சாட்சாத் சரஸ்வதிதேவி போல் விளங்கினர்கள். மொத்தத்தில் யாழ்ப்பாணத் தமிழ் மக்களைப் பார்ப்பதே மனத்துக்கு இன்பமாக இருந்தது.
இப்படி யாழ்ப்பாணத் தமிழ் மக்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவர்களிடையே ஒரு பரபரப்பு உண்டாயிற்று. அதற்குக் காரணம் ஜவாஹர்லால் 5ேரு அவர்களின் கார் அங்கு வந்ததுதான்.
கேருஜியைப் பார்த்தேன். இரண்டு கண்களைக் கொண்டு எவ்வளவு நிறையப் பார்க்கலாமோ அவ்வளவு நிறையப் பார்த்தேன். அப்பொழுது என் மனத்தில் பொங்கி எழுந்த உணர்ச்சிகளை எல்லாம் இப்பொழுது விவரிக்க இயலாதவனுக இருக்கிறேன்.
எத்தனையோ நூற்றுக் கணக்கான படங்களில் அவ ருடைய திருமுகத்தைப் பார்த்திருக்கிறேன். அவரைப் பலமுறை நேரிலும் சந்தித்திருக்கிறேன். அந்தத் திரு முகத்தில் இதுவரையில் கான் காணுத ஒரு உணர்ச்சியை அப்பொழுது கண்டேன். என் அருகில் இருந்தவரைப் பார்த்து, "நேருஜியின் முகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்தப் புதிய உணர்ச்சிக்குக்காரணம் என்ன?"என்று கேட்டேன். "புத்தர் பிரானின் புனிதத் திருமேனியில் இருந்து எடுத்த தாதுக்களை அடக்கம் செய்து அதன்மீது எழுப்பப்பட்ட

Page 129
334 ஈழநாட்டுப் பிரய்ாணம்
தாகபாக்கள் கட்ட ப்ப ட் ட அநுராதபுரத்துக்குள் அல்லவா 5ேருஜி வருகிருர், அதனுல் அவர் முகத்தில் புதிய உணர்ச்சிகள் உண்டாகின்றன” என்று சொன்னுர், இப்பொழுது நான் நின்று கொண்டிருந்த இடத்துக்கு நேராக நேருஜியின் கார் வந்துவிட்டது.அவ்விடம் வந்ததும் மக்கள் ஜெயகோஷமிட்டனர். எல்லாரும் தங்களை மறந்து பரவசமாகித் தாங்களே நேருஜியாக எண்ணியிருந்த சம யத்தில் ஒரு குழந்தை "வீல்" என்று கத்திக்கொண்டு அழத் தொடங்கிவிட்டது. அதன் தாயார் எவ்வளவோ சமா தானம் செய்து பார்த்தார். "நேருஜியைப் பாரு” “அதோ பாரு நேருஜியை’ என்று சொல்லிப் பார்த்தார். அந்தக் குழந்தை அழுகையை நிறுத்தியதாகத் தெரியவில்லை. நேருஜி அந்தக்குழந்தையின் பக்கம் திரும்பித் தம்கழுத்தில் கிடந்த மாலைகளில் ஒன்றை எடுத்து அதன் கழுத்தில் போட்டார். உடனே அந்தப் பொல்லாத குழந்தையின் அழுகை நின்றுவிட்டது. “சரிதான்; இந்தக் குழந்தை பெரியவனுகும்போது மிகப் பெரிய அரசியல் வாதியாக விளங்கும்’ என்ற தீர்மானத்துக்கு வந்தேன். அரசியல் வாதிகள் பலர் இப்படித்தானே முதலில் பலமாகக் கூச்சல் போடுவார்கள். யாராவது அவர்களைவிடப் பெரிய தலை வர்கள் வந்து முதுகில் தட்டிக் கொடுத்துக் கழுத்தில் ஒரு மாலையைப் போட்டால் "கப்சிப் என்று அடங்கிவிடு வார்கள்!
பின்னர் 5ேருஜி பழைய அநுராதபுரத்துக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நகரைத் திறந்து வைத்து அருமையான சொற்பொழிவு நிகழ்த்தினர். "இன் றைய உலகில் மனித வர்க்கத்தைப் பிடித்துள்ள சகல துன்பங்களுக்கும் புத்த பிரானின் போதனையே சிறந்தது' என்ருர், ஈழநாட்டுக் கலாச்சார மந்திரி ஜகவீர குருப்பு , புத்தபிரானின் சமாதி வடிவ உருவச்சிலை ஒன்றை நேருஜி யிடம் கொடுத்தார். சங்கமித்ரையின் உருவப்படம் ஒன்றை இந்திரா காந்தியிடம் கொடுத்தார். நேருஜியும் இந்திரா காந்தியும் ஈழநாட்டுக்கு விஜயம் செய்ததின் ஞாபகார்த்த மாக அந்தப் புனிதப்பொருள்கள் அவர்களுக்கு அன்புடன் அளிக்கப்பட்டன.

அன்பென்று கொட்டுமுரசே &35
"பழைய அநுராதபுரம் அப்படியே இருக்கும்போது புதிதாக ஏன் ஒரு நகரத்தை கிர்மாணிக்க வேண்டும்?
"பழைய அநுராதபுரத்தைப் புனித நகரமாக மாற்றி யுள்ளார்கள். அந்த நகரில் உள்ள புத்தர் பிரான் ஞானம் பெற்ற போதி விருட்சத்தையும் தாகபாவையும் சுற்றி ஒரு மைல் தூரத்துக்குக் கடையோ கடைத்தெருவோ வீடு வாசல்களோ, இதர சுகாதாரக் குறைவான, பக்தியைக் குறைக்கும், நகரத்தின் புனிதத்தைக் கெடுக்கும் எந்தப் பொருளும் இருக்கக்கூடாது என்று இன்றைய இலங்கை சர்க்கார், உத்தரவிட்டுவிட்டது. அங்குள்ள பழைய கட்டடங்களைக் எல்லாம் இடித்து விட்டு அவற்றின் சொந்தக்காரர்களுக்குப் புது நகரை அமைத்துக் கொடுத் திருக்கிருர்கள்."
"அடாடா மிக நல்ல ஏற்பாடாக இருக்கிறதே! திருக்கோயிலையும் அதன் சுற்றுப் புறங்களையும் இப்படி அல்லவா காப்பாற்ற வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள கோயில் நிர்வாகிகள் பின்பற்றவேண்டிய சிறந்த வழி. தமிழ் நாட்டில் உள்ள கோயில்களில் எல்லாம் விளம்பரப் பலகைகளும், கடைகளும். கடைத் தெருவுமாகக் கோயி லின் புனிதத்தையே அல்லவா கெடுத்து வருகின்றன."
"கோயிலின் புனிதத்துக்காக வேண்டிப் பழைய அநு ராதபுரத்தைச் சுற்றியுள்ள இடங்களைக் காலி செய்தால் அது எவ்வளவோ போற்றக்கூடிய காரியமாயிற்றே! அதற் காக அவர்கள் செய்யவில்லை. பழைய அநுராதபுரத்தில் இப்பொழுது காலி செய்யப்பட்டிருக்கும் இடங்களெல் லாம் தமிழ் மக்களுக்குச் சொந்தமானவை. தமிழ் மக்களே அங்கிருந்து அகற்றி இந்த நகரைச் சிங்கள மயமாக்குவதற் காக அல்லவா இந்த ஏற்பாடு செய்திருக்கிருர்கள்.”
"எதற்காக செய்தாலும் அநுராதபுரத்தைப் புனித மாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த பக்தி உணர்ச்சியைப் பாராட்ட வேண்டியதுதானே!"
இந்த இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டுப் புராதன சிங்கள மன்னர்கள் உபயோகித்த இரட்டைத் தடாகத்துக்கு அருகில் நேருஜி வந்தார். அந்தத் தடாகங்

Page 130
236 ஈழநாட்டுப் பிரயாணம்
களில் வசித்த ஆமைகள் பெருங் கூட்டமாகக் கூடி வந்து நேருஜியை வரவேற்றன. நேருஜி அவைகளின் உணவு என்ன என்று விசாரித்தார். பிறகு ஆமைகள் புசிக்கும் "பாண்’ தருவித்துத் தம்முடைய கையினலேயே அந்தத் தடாகத்து ஆமைகளுக்கு வழங்கினர்.
இந்தக் காட்சியைப் பார்த்ததும் எனக்கு மனசை என்னவோ செய்ய ஆரம்பித்து விட்டது. மன்னர்களும் மகாராணிகளும் இளவரசர்களும் இளவரசிகளும் நீராடி மகிழ்ந்த இந்த இரட்டைத் தடாகத்தில் இன்று ஆமைகள் கிடக்கின்றன. என்னே காலத்தின் விசித்திர aftel).
இரட்டைத் தடாகத்தைப் பார்த்து விட்டுச் சமாதி புத்தரின் சக்கிதியில் வந்து நேருஜி நின்ருர். பிரம்மாண்ட மான சமாதி புத்தரையும் நேருஜியையும் பார்த்ததும் நான் திகைத்துப் போனேன். வேதனை ஒன்று என் மனத்தை அலைத்தது. எத்தனை மகா சிற்பிகள் பக்தி சிரத்தையுடன் கூடியிருந்து இந்தப் பிரமாண்டமான சிலையை இங்கு ஒரு காலத்தில் உருவாக்கி யிருக்க வேண்டும்.
அந்த மகா சிற்பிகளுக்கு இந்த நாட்டு மன்னன் எவ் வளவு கவனத்துடன் காணிக்கை செலுத்தி இந்த சமாதி புத்தர் சிலையை இங்கு ஸ்தாபனம் செய்திருப்பான் அன் றையதினம் இந்தப் பகுதியில் எவ்வளவு குதூகலம் ஏற் பட்டிருக்கும் என்ன பரபரப்பு உண்டாகி யிருக்கும் எவ் வளவு மக்கள் கூடியிருக்திருப்பார்கள் அவர்கள் இதயத் தில் எவ்வளவு ஆர்வம் பொங்கிப் பெருகி இருக்கும் இக் தப் பெரிய கல் உருவம் இங்கே எழுந்தருளும் போது இந்த அடர்த்தியான மரங்களுக்கு அடியில், சூரியவெளிச் சம் துலங்கிய வானத்தின் கீழ் மன்னனும் மக்களும் மகா சிற்பிகளும் கூடியிருந்து தங்கள் முயற்சிகள் வெற்றி அடைந்ததைக் குறித்து எவ்வளவு ஆர்ப்பரித்திருப் பார்கள்!
நிச்சயமாக இந்தப் பிரும்மாண்டமான சிலையை உரு வாக்க வெகு நாட்கள் பிடித்திருக்க வேண்டும் ஒரு மனிதன் தன் ஆயுளில் இந்தப்புத்த பிரானின் சிக்லயை நிர்

அன்பென்று கொட்டுமுரசே, 23?
மாணித்திருக்க முடியும் என்று சொல்ல முடியாது! இதை முடிக்க எத்தனை மனிதர்கள் தங்கள் ஊக்கத்தையும் உழைப்பையும் கொடுத்தார்களோ அவர்கள் உழைப்பை யும் ஊக்கக்தையும் இந்த சமாதி புத்தர் சிலை இன்றைக் கும் எடுத்துக் கூறிக்கொண் டிருக்கிறது.
இந்தச் சிலையை அமைக்க என்ன என்ன யோசனை செய்திருப்பார்கள் பொய்யும் மெய்யும் கலந்த எத் தனையோ கதைகள் இந்த அநுராதபுரத்தின் ஒவ்வொரு சிதைந்த சிற்பங்களைப் பற்றியும், தாகபாக்களையும், புத்த விஹாரங்களைப் பற்றியும் வழங்கி வருகின்றன. இந்தக் கதைகளே அந்தக் கால மக்களின் வாழ்க்கையை, விசித் திர வாழ்க்கையை 5மக்கு எடுத்துக் காட்டி விடுகின்றன:
புத்தர் சிலை எடுத்து பிரதிஷ்டை செய்தாயிற்று. நாள் தவருமல், பருவம், தவருமல் பூவும் புனலும் தூவித் தூப தீப நைவேத்திய ஆராதனைகள் செய்து காணிக்கை செலுத்தி பக்தியுடன் வழிபட்டவர்கள் எத்தனைபேரோ
திடீரென்று அந்தக் காலம், அந்த உலகம் எல்லாம் மறைந்து விட்டன. அன்று எது உண்மையாக இருந்ததோ இன்று அதுவே தன் பொருளே இழந்து நிற்கிறது. அருவி வறண்டு விட்டது அருவி கொட்டிய தேய்ந்த கற்கள் பழைய காலத்தில் அருவி கொட்டியதை நினைவுபடுத்துவது போல இந்த சமாதி புத்தர் தனிமையில் இருந்து பழைய பெருமைகளை நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிருர், இந்த புத்தர் பேசிய மொழியை மக்கள் மறந்து விட்டனர். மனிதன் ஒரு காலத்தில் உண்டாக்கிய இந்த ஒப்பற்ற கீர்த்தி மீண்டும் சுடர் விடுவதற்கு வழிவகுப்பதுபோல நேருஜி அந்த சமாதி புத்தருக்கு முன்னுல் மெளனமாக நின்று கொண்டி ருந்தார்.
இந்த சமாதி புத்தர் சிலைக்கு அருகில் எக்ஸத் புத்த பெரமுனையைச் சேர்ந்த சுமார் ஐயாயிரம் புத்தபிக்குகள் கூடியிருந்து பாரதப் பிரதமருக்கு ஒரு வரவேற்பு அளித் தனர். வனசிவாலி தேரோ நேருஜியை வரவேற்றுப் பேசி ஞர்: "உலகில் சமாதானம் நிலவுவது இலங்கை இந்தியப்

Page 131
238 ஈழநாட்டுப் பிரயாணம்
பிரதமர் கூட்டு முயற்சியில் இருக்கிறது" என்று குறிப்பீட் டார். நேருஜியை வரவேற்பதில் இலங்கையில் உள்ள எல்லாப் பெளத்தர்களும் உண்மையாகவே பெரு மகிழ்ச்சி அடைவதாகக் கூறினர்.
அன்று மாலை ஏழு மணிக்கு அநுராதபுரத்திலிருந்து கொழும்புக்குத் திரும்பினுர் 5ேருஜி.
மறுநாள் கொழும்பு நகரில் பல விழாக்களில் கலந்து கொண்டார். மாலையில் இலங்கைப் பிரதமர் பண்டார நாயகா அளித்த அரசாங்க விருந்து அற்புதமான முறை யில் இருந்தது. ஆகா! அந்தக் காட்சியின் சிறப்பை என்னென்று சொல்வது? "பிரதமர் பண்டரா நாயகாவின் "ஆலய அசோக’ பவனத்தில் இரவு தீபாலங்காரம் கன்ரு யிருக்கும்” என்று சொல்லக் கேட்டு ஒரு அபூர்வமான காட்சிக்கு நான் தயாரானேன். ஆனல் நேரில் பார்த்த போதோ நீான் எதிர்பார்த்ததை எல்லாம்விடஅதிசய மாக இருந்தது.
"இந்த 'ஆலய அசோக பவனம் மின்சார விளக்கு களால் அலங்கரிக்கப்படுவதற்கென்றே ஏற்பட்டது போலும்” என்று ஒரு சமயம் தோன்றியது. "மின்சார விளக்கைக் கண்டுபிடித்ததே இந்த ஆலய அசோக பவ னத்தை அலங்கரிக்கத்தானே என்னவோ?’ என்று மற் ருெரு சமயம் தோன்றியது.
ஆகாயத்தில் மின்னும் கட்சத்திரங்களை எண்ணினு லும் எண்ணிவிடலாம். ஆனல் அன்றிரவு ஆலய அசோக பவனத்தில் போட்டிருந்த விளக்குகளை எண்ண முடியாது.
இரவைப் பகலாக்குவது இதுதான் போலும்.
இது மட்டும்தான? அற்புதமான நடன விருந்துகள் வேறு கதகளி நடனம், கண்டி நடனம், ரதி மன்மத நடனம் என்று பலப்பல நடனங்கள் வேறு இருந்தன. இந்த நடனத்தில் மூன்று பெண்மணிகள் நாட்டியம் புரிந்தனர். ஏதோ கண்ணுக்கு அழகாய் இருந்தன. குற்றங்குறை இல்லை என்று சொல்ல முடியாது. ஆனலும்

அன்பென்று கொட்டுமுரசே 239
இந்த அபிநயத்தில் வழங்கிய முத்திரைகள் உயர்ந்த கலைப் பண்பை எடுத்துக் காட்டின. இதன் நுட்பத்தை உணர்க் தவரே இந்த அபிநயத்தில் ஆனந்தம்கொள்ள முடியும் காட்டியங்களைக் கற்பிக்க ஈழ நாட்டில் ஒரு பள்ளிக் கூடமே வைத்து கடத்துகிருர்களாம்.
米 赛 赛
நேருஜி அவர்கள் ஈழ நாட்டில் தங்கியிருந்த இரண்டேகால் நாளிலும் 'அன்பென்று கொட்டு முரசே! உலகில் அத்தனை டேரும் நிகராம்!” என்று அன்பு முரசம் கொட்டிவிட்டுப் பாரதத்துக்குக் கிளம்பினர். அவர் அடி எடுத்து வைத்த வேளை தானே என்னவோ ஈழ நாட்டில் இன்னும் சில முரசங்கள் முழங்கும் சத்தம் கேட்கிறது. அந்த முரசு வெற்றி முரசாக முழங்கவேண்டும் அன்பு முரசாக ஒலிக்கவேண்டும்!
நேயர்கள் தொடர்ந்து ஈழநாட்டில் பிரயாணம் செய்வ தற்கு முன்னுல் அவர்களைக் கம்பளைக் காங்கிரஸ் மகாநாட் டுக்கு அழைத்துப் போக விரும்புகிறேன்.

Page 132
24 உதய சூரியனும் உலகத் தொழிலாளர்களும்
சென்ற பொதுத் தேர்தலின் போது தமிழ்நாட்டின் பல ஊர்களில் ஒரு காட்சியைக் கண்டோம். தெரு வீதி களில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வீட்டுச் சுவரிலும் ஒரு
உதய சூரியன் படம போடப்பட் டிருக்தது. இதற்கு என்ன காரணம் என்பது முதலில் யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. உதய சூரியன் போட்ட இடங்களில் எல்லாம் ஒரு அதிசயமும் நடைபெறவில்லை. ஆனல் இந்த மாதிரி உதயசூரியன் படத்தைப் போடாவிட்டால் ஏதாவது அபாயம் ஏற்பட்டு விடுமோ என்று எண்ணிப் பலர் தங்கள் வீட்டுச் சுவர்களில் எல்லாம் உதயசூரியன் படத்தைத் தாங்களே எழுதி வைத்துக் கொண்டார்கள்.
மே மாதம் பதினெட்டாம் தேதி இலங்கைத் தீவில் உள்ள கம்பளைக்குப் போயிருந்தபோது அம்மாதிரி, ஆனல் கொஞ்சம் வித்தியாசமான உதயகுரியனைப் பார்த்தேன்.
கண்டி என்னும் சிறு பட்டணம் நடனத்துக்குப் பெயர் போனது. ஈழ நாட்டில் வேலை வெட்டி செய்யாமல் அலைகிறவர்களைப் பார்த்து, ‘என்ன கண்டி நடனம் செய் இருயோ? என்று சொல்லுவார்களாம். இன்னும் புத்தர் தந்த ஆலயம் அங்கிருக்கிறது என்பதைச் சரித்திரத்தில் சுவையுள்ளவர்கள் தெரிந்திருப்பார்கள். அப்பேர்ப்பட்ட கண்டிப் பட்டணத்துக்குப் பக்கத்தில் உள்ள கம்பளையில் கடந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகா நாட்டுக்குப் போயிருந்தேன். அப்போதுதான் மேலே சொன்ன அற்புதமான காட்சியைக் கண்டேன். .
கம்பளையின் ஒவ்வொரு வீட்டிலும், வெளிச் சுவரிலும் மூன்று வர்ணக் கொடியின் மத்தியில் உதயசூரியன் சித்திரம் வரையப் பட்டிருந்ததது. அது ஏன் என்று விசாரித்ததில், அதுதான் இலங்கைத் தொழிலாளர்

உதயகுரியனும் உலகத் தொழிலாளர்களும் 341
காங்கிரஸ் இந்த ஆண்டில் தங்கள் கட்சியின் சின்னமாகத் தயாரித்திருக்கும் கொடி என்று அறிந்தேன்.
கம்பளையின் வீட்டுக் கூரையிலும், தெருச் சந்து களிலும் மேற்படி உதயசூரியன் பொறித்த மூவர்ணக் கொடி பட்டொளி வீசி ஆடிப் பறந்தது. மகாகாட்டுப் பந்தலிலும் கம்பீரமாகப் பறந்தது.
பத்து மைல், இருபது மைல், முப்பது மைல்தூரத்தி லிருந்து கும்பல் கும்பலாக மகாநாட்டுக்கு வந்த தொழிலா ளர்கள் மேற்படிச் சின்னம் தாங்கிய மூவர்ணக் கொடி யைப் பிடித்துக் கொண்டு, "தன் மானத்தை இழக்காதீர்!" "தமிழன் உயர்வை மறக்காதீர்!" "மலைநாட்டுத் தமிழர் களுக்கு நாடற்றவர் என்ற பட்டம் கட்டாதீர்” “மலை நாட்டை வளப்படுத்தியவன் பாட்டாளியே” என்று கோஷமிட்டுக்கொண்டுவந்தார்கள்."உதயகுரிய மூவர்ணக் கொடி வாழ்க’ என்றுகோஷங்களும் அடிக்கடி எழுந்தன. மேற்படி காட்சிகள் உணர்ச்சியூட்டும் கோஷங்கள் எல் லாம் எனக்குப் பெரும், வியப்பை அளித்தன.
தேயிலைத் தோட்டத் தொழிலாளருக்கும் உதய சூரியன் ப்ொறித்த மூவர்ணக் கொடிக்கும் என்ன சம்பந்தம்?
இலங்கையில் மலை நாட்டில் வாழும் ஏழைத் தோட் டத் தொழிலாளிக்கும் பிரிட்டீஷ் ஆட்சியை இந்தியாவில் இருந்து ஒழித்துக் கட்டிய பாரதத்தின் மூவர்ணக் கொடிக்கும் என்ன சம்பந்தம் 峰
தொழிலாளர்கள் இலங்கை சர்க்காரின் சிங்கக் கொடியைப் பிடித்துக் கொண்டு வந்தால் அல்லவா அது பொருத்த மாகவும் அர்த்த முடையதாகவும் இருக்கும்.
உதயசூரியன் பொறித்த மூவர்ணக் கொடியை இவர் கள் ஏன் பிடித்துக் கொண்டு வருகிருர்கள்? அந்தக் கொடியை ஏன் இவ்வளவு உரத்த குரலில் வாழ்த்து கிருர்கள்?
இப்படி யெல்லாம் நான் அதிசயப்பட்ட போதிலும் அதற்குக் காரணம் கண்டு பிடிப்பது அவ்வளவு கஷ்டமாக @6డి. 16

Page 133
24& ஈழநாட்டுப் பிரயாணம்
இரண்டு காரணங்கள் மட்டும் சந்தேகத்துக் கிட மின்றி மிகத் தெளிவாகத் தெரிந்தன.
அவற்றில் ஒன்று அங்குள்ள தொழிலாளர்கள் இயக்கத்தில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலை; இரண்டாவது மலைநாட்டுத் தமிழ் மக்களின் துயரம் நிறைந்த அவல நிலை.
பரம சாதுக்களான மலை நாட்டுத் தமிழ் மக்களே, தோட்டத் தொழிலாளர்களை "தன்மானத்தை இழக் காதீர்; தமிழன் உயர்வை மறக்காதீர்!’ என்று புரட்சிக் கோஷம் இடுபவர்களாக, உதய சூரிய மூவர்ணக் கொடி யைத்தூக்கிப்பிடிப்பவர்களாக மாற்றுவதற்குக் காரணமா யிருந்து வருவது என்ன என்று கேட்டால்:-
சென்ற சில வருஷங்களாக இலங்கை சர்க்கார் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இழைத்து வரும் கொடுமை: அவர்களுடைய வோட்டு உரிமையைப் பிடுங்கியது; அவர் களுடைய தமிழ் மொழியை அரசியல் அந்தஸ்திலிருந்து இறக்கியது; அவர்களை நாடாற்றவர்களாகச் செய்தது; இந்தியாவில் உள்ள அவர்களுடைய உற்ருர் உறவினர் களுக்குப் பணம் அனுப்ப முடியாமல் செய்தது; அவர் களைப் போய்ப் பார்த்துவிட்டுத் திரும்பி வராமல் தடுத்து விட்டது ஆகிய இவை யெல்லாம்தான்.
எனினும் இந்த மாதிரி சக்தர்ப்பங்களில் ஏற்பட்ட குழ்நிலையானது செவிடன் காதில் ஊதிய சங்கைப் போல் ஒரு பிரயோசனமும் இல்லாமல் போயிருக்கும் இலங்கை சர்க்கார் மட்டும் கொஞ்சம் கிதானத்துடனும் தாராள புத்தியுடனும் கடக்திருந்தால்.
இலங்கைத் தீவில் உள்ள மலைநாட்டுத் தமிழ் மக்களும், இதர தமிழ் மக்களும் புரட்சிக்காரர்களாக மாறி வருவதற்கு முக்கிய காரணம், அடிப்படையான காரணம் இலங்கை சர்க்காரின் விதண்டாவாதமான பிடி வாதம்தான்.
அது என்ன? இலங்கைத் தமிழ் மக்கள் அற்புதமாக உழைக்கிருர் கள். அவர்களுடைய உழைப்பால் இலங்கையின்
பொருளாதாரம் உயர்கிறது. இலங்கை சர்க்கார் பணத் தட்டு இல்லாமல் இருக்க முடிகிறது.

உதய சூரியனும் உலகத் தொழிளாளர்களும் 248
ஆனல் இவ்வளவு இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்தி என்ன பிரயோசனம்?
தமிழ் மக்களுக்கு உரிமை யில்லையே! தங்கள் வாக்குகளை உபயோகப்படுத்தித் தங்கள் தலைவர்களை அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்க முடிய முடியவில்லையே!
எனவே அவர்கள் ஆத்திரமூண்டு கிடக்கிருர்கள். ஆனல் வெறும் ஆத்திரம் மட்டும் என்ன செய்ய முடியும்? ஒரு பக்கத்தில் தொழிலாளர்களுக்குள் இரண்டு கட்சிகள். எவ்வளவோ ஆர்வத்துடன் தொழிலாளர்கள் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிருரர்கள். ஆனல் அவர்கள் ஆர்வத்தை ஒன்று திரட்டி ஒரே குரலாகச் செய்யத் தலைவர்களுக்குள் ஒற்றுமை யில்லை.
மற்ருெரு பக்கத்தில் இது 5ாள் வரையில் இலங்கை யின் அரசியல் மொழியாக இருந்து வந்த தமிழ் இப் பொழுது அரசியல் அந்தஸ்திலிருந்து தள்ளப்பட்டு விட் டது. மொழிக்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது.
ஐயோ! உரிமையில்லையே உரிமை இருந்தால் நமது வோட்டுகளை உபயோகப்படுத்தி இலங்கை சர்க்காரில் பல மான எதிர்க்கட்சியை உண்டாக்கி இந்த அவல நிலை ஏற்படாமல் தடுக்கலாமே. இந்தக் காலத்தில் தமிழுக் கும் தமிழ் மக்களுக்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்தைத் தடுக்காவிட்டால் வேறு எந்தக் காலத்திலும் இதைத் தடுத்து நிறுத்துவதற்கு முடியாமல் போய் விடுமே
உரிமை உரிமை உரிமை
உரிமை யார் கொடுப்பார்கள் ?
இலங்கையின் சுதந்திரத்துக்கு நாங்களும் இரத்தம் சிந்தினேமே. எங்கள் தியாகத்தையும் கொடுத்துத்தானே இலங்கையின் சுதந்திரத்தைப் பெற்ருேம். இப்பொழுது ஆட்சியில் இருக்கும் சர்க்கார் இதையெல்லாம் எண்ணிப் பார்க்கிருர்களா? ஈழநாட்டுத் தமிழ் மக்களையும், அவர்கள் உயிரினும் மேலான தமிழையும் அமுக்கி அழித்துவிடப் பார்க்கிருர்களே!

Page 134
244 ஈழநாட்டுப் பிரயாணம்
ஏன் எங்களுக்குப் பிரஜா உரிமை தரமாட்டேன் என்கிருர்கள் ? அப்படித் தருகிறவர்கள் ஒரு குடும்பத்தில் பிள்ளைகளுக்கு மட்டும் கொடுத்துவிட்டுப் பெற்ருேருக்கு இல்லை என்கிருர்களே!
இந்த அநியாயம் உண்டா ? இந்த உலகில் இதைப் பற்றிக் கேட்பார் இல்லையா ? ஏதோ அன்பு என்கிருர் களே ? புத்த பகவான் என்கிருர்களே! புத்த ஜெயந்தி கொண்டாடுகிருர்களே! இவைகள் எல்லாம் வெறும் ஆடம்பரமா ? வெளி வேஷமா
இதற்காக ஒரு சர்க்காரா? கடவுளே! நீயாவது இந்த அநியாயத்தைக் கேட்கக்கூடாதா ? எங்களுக்குப் பிரஜா உரிமை வாங்கிக் கொடுக்கக் கூடாதா ? இவ்வாறெல்லாம் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எண்ணி எண்ணி ஏங்கித் தவிக்கிருர்கள்.
அப்பா மகாராஜாக்களே! வாருங்கள்! என்ன சொல்கிறீர்கள் ? பாரத நாட்டில் எல்லாருக்கும் வோட்டு உரிமை கிடைத்திருக்கிறதல்லவா ? எல்லா மொழி களுக்கும் சம அந்தஸ்து கொடுத்திருக்கிறதல்லவா ? அவர்கள் என்ன, நாமும் பிரிட்டிஷாரை இலங்கையில் இருந்து விரட்டுவதற்கு இந்த மூவர்ணக் கொடியைத் தானே தூக்கிப் பிடித்தோம்! அதே கொடியை இப்பொழுது கமது உரிமைக்காகத் தூக்கிப் பிடிப்போம். நம்முடன் சிலர் ஒத்துவர மாட்டேன் என்கிருர்களா ? பாதகமில்லை. அவர்களுக்காகவும் சேர்த்து நாம் பலமான தொழிற்சங்கம் அமைப்போம்.
ஆகா! இந்தத் தொழிலாளர் சங்கத்தில் நாங்கள் எல்லாம் சேருகிருேம். சந்தா கட்ட வேண்டுமா ? கட்டுகிருேம் மகாநாடு கூட்ட வேண்டுமா, கூட்டுகிருேம் உதய சூரியன் பொறித்த மூவர்ணக் கொடியைத் தூக்கிப் பிடிக்க வேண்டுமா ? பிடிக்கிருேம் உலகத் தொழிலாளர் ஸ்தாபனத்திலும்இணையவேண்டுமா?இணைந்து விடுகிருேம். உதய சூரியனும் உலகத் தொழிலாளரும் வாழ வேண்டும் என்று கோஷமிட வேண்டுமா ? கோஷமிடுகிருேம்.

உதய சூரியனும் உலகத் தொழிலாளர்களும் 345
எங்களுக்காக மட்டுமல்ல, உலகத் தொழிலாளர்களுக்காக வும் பாடுபட தயாராகவே இருக்கிருேம்.
எப்படியாவது எங்களுக்குப் பிரஜா உரிமை கிடைத் தால் போதும். இவ்வாறெல்லாம் பாடுபட்டு வரும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு, தோட்டத் தொழிலாளர் களுக்குப் பிரஜா உரிமை கிடைக்குமோ இல்லையோ?
பரம சாதுக்களான தோட்டத் தொழிலாளர்கள் தன்மானமுள்ள புரட்சிக்காரர்களாக மாறிய வரலாறு மேற்கண்டதுதான்.
கம்பளை என்னும் சின்னஞ்சிறு ஊரில் இரண்டு லட்சம் பேர்கள் கொண்ட மகாநாடு கடந்தது. அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டைப்போல் விமரிசையாக கடந்த தற்குக் காரணமும் மேலே கூறியதுதான்.
இதை யெல்லாம் நான் சொல்லவில்லை. மேற்படி மகாகாட்டின் தலைவர், இலங்கைத் தோட்டத் தொழி லாளர்களின் பேரன்புக்கும் பெரு மதிப்புக்கும் பாத்திர மான தலைவர் திரு. தொண்டமான் அவர்கள் சொன்ன தைத்தான் திரும்பச் சொல்கிறேன்.
தமிழ் மக்களின் துயரம்
கம்பளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பதினேழாவது மகாநாட்டில் நான் கண்டது, கேட்டது, பிறகு சாவகாசமாக ஈழ நாட்டில் விசாரித்துத் தெரிந்து கொண்டது ஆகியவற்றைச் சுருக்கமாக கேயர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
தேயிலைத் தோட்டம்தான் இலங்கையின் முக்கியமான தொழில்.
இலங்கையில் பிரிட்டிஷார் ஆட்சி நடத்திய காலத் திலே, பிரபுத்துவ சகாப்தத்திலிருந்த அடிமைகளைப் போலத் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைத் தேயிலைத் தோட்டத்துக்குச் சென்ற தமிழ் மக்கள் ஒப்பந்தக் கூலிக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர் கும்பலாகக் கருதப்பட்ட

Page 135
246 ஈழநாட்டுப் பிரயாணம்
னர். ஆனல் இன்றைய நவீன சகாப்தத்திலும் இந்தத் தொழிலாளர்கள் அதே கஷ்டங்களை வேறு போர்வையின் கீழ், வேறு பெயர்களின் கீழ் அனுபவிக்கின்றனர்.
அந்தக் காலத்தில் தேயிலைத் தோட்டத்திலே மக்கள் படும் அவதிகளை இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் தங்களுடைய பிரசங்கங்களில் பிரலாபிப்பது வழக்கம். அதையே சுயராஜ்யக் கிளர்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறுவதும் உண்டு.
தற்சமயம் சுதந்திரம் பெற்ற இலங்கையில் பயங்கர மான அடக்குமுறை தமிழ் மக்களின் மேல் ஏற்பட் டிருக்கிறது.
சிங்களப்பகுதியில் தமிழ் மக்கள் தாராளமாக உலாவ முடியாதபடி அமைதியின்மை ஏற்பட்டிருக்கிறது. கம்பளை காங்கிரஸ் மகாநாடு கடந்து கொண்டிருக்கும்போதே இந்தக் காட்சியைக் காண முடிந்தது. சிங்களக் குண்டர்கள் மகாநாட்டுக்கு வந்த பல தமிழ் மக்களை அடித்து மண்டையை உடைத்து விட்டனர். அடிபட்ட தொண்டரை மகாநாட்டுக்குத் தூக்கி வந்து போட்டுக் கதறிய காட்சி இன்றும் கண்முன்னே நிற்கிறது. அப் பொழுது மகாநாட்டில் சிறு குழப்பம் ஏற்பட்டுவிட்டது. தொழிலாளர் தலைவர் திரு தொண்டமான் மிகுந்த ஆவே சத்துடன் வந்து குழப்பத்தை அடக்கினர்.
இந்த நிலைமைக்குக் காரணம் என்ன?
இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பிரஜா உரிமையும் அங்கு தமிழ்மொழி ஆட்சி மொழியாக இல்லாததும்தான்.
இந்த நிலைமையை உடனே மாற்றத்தான் வேண்டும். அதுதான் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இப்பொழுது முக்கிய விஷயம்.
தமிழ் மக்களுக்குப் பிரஜா உரிமையும், தமிழ் மொழிக்கு அரியாசனமும் கிடைக்காததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இலங்கைத்

உதயகுரியனும் உலகத் தொழிலாளர்களும் 247
தமிழ் மக்களுக்குள் போதிய ஒற்றுமை இன்மை. இரண்டு சிங்கள சர்க்காரில் பதவியில் இருப்பவர்களின் சிங்கள வெறி.
சில தமிழ்த் தலைவர்கள் தங்கள் சுய கெளரவத்துக் காக எதிர்காலத் தமிழ் மக்களின் நலன்களை எண்ணிப் பார்க்காது தாங்கள் பிடித்ததே பிடியாக இருக்கிருர்கள். அதனல் தமிழ் மக்களுக்குள் ஒற்றுமை குறைந்து பிளவு ஏற்பட்டு வருகிறது.
தமிழ் மக்களுக்குப் பிரஜா உரிமையும் தமிழ் மொழிக்கு அந்தஸ்தும் கொடுத்துவிட்டால் எங்கே சிங்கள மொழிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று சிங்களவர் களுக்குப் பயம்.
சிங்கள அரசியல்வாதிகள் இப்பொழுது சுலபமாக மக்கள் மத்தியில் சிங்கள வெறியை உபயோகப்படுத்தி அரசாங்கத்தைக் கைப்பற்றி யிருக்கின்றனர்.
இம்மாதிரி எதிர்காலத்தில் கடப்பதற்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று தமிழ் மக்களுக்குப் பிரஜா உரிமையும் தமிழுக்கு அந்தஸ்தும் கொடுக்க மறுக்கிருர்கள்.
ஆகக்கூடி இலங்கைத் தமிழ் மக்களின் துயரத்தைத் தீர்க்கப் பாடுபடுபவர்கள் இல்லாமலே போய்விட்டது.
இப்பொழுது நிலைமை சற்று மாறி வருகிறது. தமிழ்த் தலைவர்களில் சிலர் தங்கள் பொறுப்பை உணரத் தலைப் பட்டிருக்கிருர்கள். தமிழ்த் தலைவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டுத் தமிழ் மக்களின் துயரம் தீரக் கடவுள் கருணை புரிய வேண்டும்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மகாநாட்டில் தொழிலாளர்கள் நலனைப்பற்றிப் பேசியதுடன், தீர்மானம் போட்டதுடன் நிற்கவில்லை. இலங்கை சர்க்கார் கொண்டு வந்திருக்கும் கெற் சட்டத்தை, அதாவது இலங்கையில் பாடுபடும் விவசாயிகளின் பொருளாதார நலனை உயர்த்தும் சட்டத்தை வரவேற்றுப் பாராட்டியும் தீர்மானம் நிறை வேற்றி யிருந்தார்கள்.

Page 136
248 ஈழநாட்டுப் பிரயாணம்
இதில் விசேஷம் என்ன வென்ருல் அத்தனை ஆயிரம் தொழிலாளர்களும் தீர்மானம் என்ன சொல்கிறது என் பதை நன்கு தெரிந்துகொண்டு விட்ட பிறகு வோட்டுச் செய்து நிறைவேற்றியதாகும்.
ஆம்; சென்னை முதலிய நகரங்களில் படித்துப் பட்டம் பெற்ற ஜனங்கள் கூடும் கூட்டங்களில் அரசியல் பிரச்னை களை எவ்வளவு நன்ருய்த் தெரிந்து கொள்வார்களோ, அதைப் போலவே கம்பளை காங்கிரஸ் மகாநாட்டுத் தொழி லாளர்களும் தங்கள் அரசியல் பிரச்னைகளை வெகு நுட்ப மாக ஐயந்திரிபுக்கு இடமின்றித் தெரிந்து கொண்டிருக் தாாகள.
மகாகாட்டில் பிரதிநிதிகள் பேசும்போது இது விஷயம் நன்ருய்த் தெரிக்தது. சபையோருக்குப் பிடித்தமான அரசியல் விஷயங்களைப் பிரசங்கிகள் வெளியிடும்போது காது செவிடுபடும்படியான கரகோஷம் சபையில் எழுக் தது. சபையோருக்கு அவ்வளவாகப் பிடிக்காத விஷயங் கள் சொல்லப்படும்போதோ சபை நிசப்தமாக இருந்தது.
தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்த அரசியல் ஞானம் உண்மையில் அதிசயிக்கத்தக்கதுதான். அவர்களை இவ்வளவு அரசியல் நிபுணர்களாகச் செய்திருக்கும் இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு. தொண்ட மான், திரு. ராஜலிங்கம், திரு. வெள்ளையன், திரு. அண்ணு மலை ஆகியவர்களைப் பாராட்டவேண்டும்.
ஆம்; இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்தான் தோட்டத் தொழிலாளர்களின் கட்டுப்பாடான முன்னேற் றத்துக்குக் காரணமானது. எனவே மகாநாட்டை ஒட்டி கட5த ஊாவலம, கனடி நடனங்கள, கரக ஆடடங்கள, காவடி நடனங்கள், சிலம்ப விளையாட்டுக்கள், மேடை அலங்காரங்கள், ஊர்வலத்தில் பவனி வந்த யானைகளின் அலங்காரங்கள் எல்லாமே ஒரே குஷி மயமாக இருந்ததில் ஆச்சரியமில்லை.
ஊர்வலம் வந்த வீதிகளில் தலைவர்களுக்குப் போட்ட மாலைகள் மலையாகக் குவிந்திருந்தன. வீட்டுக்கு வீடு தலைவர்களை நிறுத்தி அவர்களுக்கு மங்கள ஆரத்தி எடுத்து

உதயசூரியனும் உலகத் தொழிலாளர்களும் ጳጓ49
நெற்றியில் குங்குமத் திலகம் இட்ட காட்சி, போருக்குப் புறப்படும் வீரர்களுக்கு ஊர் மக்கள் வாழ்த்துக் கூறி அனுப்புவது போலிருந்தது.
உதய சூரியன் பொறித்த மூவர்ணக் கொடியைப் பாரத நாட்டில் இருந்து வந்த சோஷலிஸ்ட் தலைவர் திரு. அசோக் மேத்தா மகாநாட்டுப் பந்தலில் ஏற்றி வைத்தார்.
கம்பளை எம். பி.யும் நகர சபைத் தலைவருமான திரு. ஆர். எஸ். பெல்கபால மகாகாடு கிர்மாணிக்கப்பட்டிருந்த பெரிசுந்தர நகரைத் திறந்து வைத்தார். இலங்கைத் தொழில் மந்திரி திரு. இலங்கரத்னு மகாநாட்டைத் திறந்து வைத்தார். உணவு மந்திரி திரு. பிலிப் குணவர்த்தன, திரு. ராமாநுஜம், திருமதி சரோஜினி ராமாநுஜம், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. ராஜாராம் நாயுடு, ஆசியத் தொழிற் சங்கக் காரியதரிசி திரு. மாபரா, திருமதி மரகதம் சந்திரசேகரன் ஆகியோர் மகாநாட்டில் பேசினர்கள்.
இந்த மகாநாட்டில் கலந்துகொண்டு இந்த அறிஞர் களின் சொற்பொழிவைக் கேட்ட தோட்டத் தொழி லாளர்களின் வாழ்வின் சோக்கமே விரிந்து அவர்களுடைய உள்ளம் விசாலமாகி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தொழிலாளர் காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்ட தொழிலாளி பழைய தொழிலாளியே அல்ல; புதுக் கருத்துக்களை உடைய புதிய மனிதர்தான்!
கடைசியாக ஒரு விஷயம். சாதாரணமாகத் தொழிற்
சங்கத்துக்கு ஒரு பெரிய கேடு உண்டு. "தொழிற் சங்கத்தை நடத்துகிருேம்; தொழிலாளர்களுக்காக உயிரை விடுகிருேம்" என்று வெளியிலிருந்து சிலர் முன் வந்து தொழிற் சங்கத்தில் சேர்ந்துகொள்வார்கள். ஏழைத் தொழிலாளிகள் நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடு பட்டுத் தேடி, தங்கள் வயிற்றைக் கட்டி மீத்துக்
கொடுத்த சந்தாத் தொகையைச் “சுளையம்” வைக்கத் தொடங்கி விடுவார்கள். இன்னும் சில சமயங்களில், தங்கள் சொந்த கலம் கருதித் தொழிலாளர்களுக்குத்
துரோகம் செய்து விடுவார்கள்.

Page 137
250 ஈழநாட்டுப் பிரயாணம்
இலங்கைத் தொழிலாளர்கள் இது விஷயத்தில் மிக்க
பாக்கியம் செய்தவர்கள். சுயநலம் அறவே அற்ற, தொழிலாளர்கள் நலத்துக்காகவே தம் வாழ்நாளைத் தியாகம் செய்த திரு தொண்டமான் போன்ற தலைவர் களைப் பெற்றிருக்கிருர்கள். தொழிலாளர்களுடைய பரிபூரண நம்பிக்கையையும் திரு தொண்டமான் பெற்றிருக் கிருர். திரு தொண்டமான் பெயரைச் சொல்லும்போதே தொழிலாளர்கள் முகம் மலருவதைக் கண்டேன். இவ்வளவு ஒற்றுமையுடனும் பரஸ்பர கம்பிக்கையுடனும் நடைபெறும் இலங்கைத் தொழிலாளர்கள் காங்கிரஸ் மூலமாக இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மேன்மை ய  ைடய ப் போகிருர்கள் என்ற கம்பிக்கையுடன் திரும்பினேன்.
米 崇
நேயர்கள் இனி ஈழ நாட்டின் இதர பகுதிகளைச் சுற்றிப் பார்க்கத் தயாராக இருக்க வேண்டியதுதான். நாளைய தினம் காதல் நகரமான கண்டியில் உள்ள உலகப் புகழ் பெற்ற பெரதேனியா தோட்டத்துக்குப் போகலாம்.

25
பெரதேனியா தோட்டம்
கண்டியைக் காதல் ககரம் என்றும், ரதியும் மன்ம தனும் பவனிவரும் பட்டணம் என்றும் சொல்லலாம் என்ருல் ரதியும் மன்மதனும், இந்திரனும் இந்திராணியும் இன்னும் தேவலோகத்தில் உள்ளவர்கள் எல்லாருமே கொலு வீற்றிருக்கும் தோட்டம் என்று சொல்லத்தக்க ஒரு இடமும் கண்டி நகருக்குச் சமீபத்தில் இருக்கிறது. அதுதான் புகழ் பெற்ற “பெரதேனியா தோட்டம்.” இந்தத் தோட்டத்துக்குள் சென்ருல் நாம் திடீரென்று தேவலோகத்துக்குச் சென்று விட்டதை உணர்வோம். இத்தோட்டத்தில் போகும் இடங்களில் எல்லாம் குரியனின் ஒளிக் கதிர் செய்யும் ஜால வித்தைகளையும், புல் வெளிகள் தோறும் இளம் பெண்களும் அவர்கள் அருமைக் காதலர்களும், குழந்தைகளும், பெரியவர்களும் ஆயிரம் விதமான போகங்களிலே பொழுதைக் கழிக்கும் காட்சிகளையும் காணலாம். பாடுகின்ற குயில்கள், மலர் குலுங்கும் மரங்கள், கூடி விளையாடும் புள்ளினங்கள், ரீங்காரமிடும் வண்டுகள், மிருதுவான மகரந்தத் தூளைக் கொண்டுவரும் இனிய தென்றல் எல்லாம் "இது தேவ லோகம்தான்! இது தேவலோகம்தான்!” என்று சொல்லிக் கொண்டிருக்கும். இது போன்ற அற்புதத் தோட்டங்கள் உலகத்திலேயே இரண்டொன்றுதான் இருக்கின்றனவாம்
பெரதேனியா தோட்டத்துக்குள் செல்லும் வாசலில் அழகான தூண்கள் நிறுத்திய வாசற்படி இருக்கிறது. அதைத் தாண்டி உள்ளே சென்ருல் ஒரு கணம் நமக்கு ஒன்றும் தோன்றது. மூன்று அடி. தாண்டியதுமே இவ்வளவு மாற்றமா என்று வியந்து போவோம். அந்த வியப்புக்கலைந்தவுடன் சற்றுநகர்ந்தால் ஒரு சிறு மண்டபம் இந்தத் தோட்டத்தைக் கட்டிக் காத்த தோட்டக் கலை

Page 138
352 ஈழநாட்டுப் பிரயாணம்
நிபுணர்களின் பெயர்கள் எல்லாம் பொறிக்கப்பட்டு வைத்திருக்கும் பெரிய புத்தகமும் இருப்பதைக் காணலாம்.
மிக நீளமான அந்தத் தோட்ட குப்பிரன்டெண்டு ஜாபிதாவில் ஒரு இந்தியரின் பெயரையோ, ஒரு இலங்கை யரின் பெயரையோ காண முடியவில்லை. எல்லாம் வெள்ளைக்காரர்களின் பெயர்கள்தான். ஆனலும் இந்தத் தோட்டத்தை ஒரு கண்டி மன்னர்தான் உண்டாக்கி இருக்கிருர் என்பதைத் தெரிந்துகொண்டு சற்று பெருமைப்பட முடிகிறது. மூன்ருவது விக்கிரமபாகு மன்னன் ஆயிரத்து முந்நூற்று எழுபத்தோராம் ஆண்டிலேயே இந்த அருமையான தோட்டத்தை அமைத் திருக்கிருரர். அவர் காலத்திலிருந்து கொஞ்சம் கொஞ்ச மாக வளர்ந்து இன்று நூற்று ஐம்பது ஏக்கரா கிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கிறது, இந்தப் பெரதேனியா தோட்டம். தோட்டத்தின் அமைப்பே தனி அழகுடன் இருக்கிறது. கோழி முட்டை போன்ற வடிவமாக அமைந்திருக்கிறது. சமுத்திர மட்டத் திலிருந்து சுமார் ஆயிரத்து அறுநூறு அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தத் தோட்டத்தின் ஒரு பக்கத்தில் இலங்கையின் மிகப் பெரிய நதியான மாவலி கங்கை ஒடு கிறது. அது ஒடும் பாவத்தை இன்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஒரு சமயம் பார்த்தால் பெரதேனியா தோட்டத்தை ஆசையோடு கட்டித் தழுவிக்கொண்டு ஒடுவது போலிருக்கிறது. மற்ருெரு சமயத்திலோ பெர தேனியா தோட்டத்து அழகில் மயங்கி, ஓடுவதையும் மறந்து நிலைத்து நிற்பது போலிருக்கிறது. இன்னுெரு சமயத்திலோ கம்பீரமான இசை வெள்ளத்தை வாரி வழங்கிக்கொண்டு பெரதேனியா நங்கையின் காதலைப் பெறுவதற்காக நடனமாடுவது போலிருக்கிறது. நாம் இந்தக் காட்சிகளைப் பார்த்து அனுபவிக்க ஆரம்பித்து விட்டோமானுல் தோட்டத்துக்குள் செல்லவே மனம் இருக் காது. இந்தக் காட்சிகளையே பார்த்துக்கொண்டு இருந்து விடுவோம். ஆகையால் மாவலி கங்கையையும் அதன் அழகையும் மறந்துவிட்டுப் பெரதேனியா தோட்டத்துக் குள் செல்லுவோம்.

பெரதேனியா தோட்டம் 353
இந்தத் தோட்டத்தைக் காரில் ஏறிக்கொண்டும் பார்க்கலாம்; காலால் கடந்தும் பார்க்கலாம். கடந்து சென்று பார்த்தால்தான் பெரதேனியா தோட்டத்தின் அழகு முழுமையும் அனுபவித்து மகிழலாம். ஆகையால் நாம் நடந்தே செல்வோம். தோட்டத்தின் மத்தியில் முதல் தரமான சாலை அமைந்திருக்கிறது. அந்தச் சாலையின் இரு புறமும் மரகதக் கற்களால் படிகள் கட்டியது போலப் பசும் புற்கள் வளர்ந்திருப்பதைக் காண் கிருேம். இன்னும் கொஞ்ச தூரம் செல்கிருேம். பொன் மயமான மூங்கில் வேலி போட்டது போலச் சாலையின் இருபுறமும் விதம் விதமான மூங்கில்கள் வளர்ந்திருப்பதைப் பார்க்கிருேம். அடாடா இந்த மூங்கில்களில்தான் எத்தனை விதங்கள். ஒன்றில்கூட முள்ளைக் காண முடியவில்லை. இன்னுெரு. சாலைக்குப் போகிருேம். அதன் இருபுறமும் ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்று 5மக்கு மரியாதை செய்வது போல் கமுகு மரங்கள் வானேங்கி நிற்கின்றன. அதைத் தாண்டி அப்பால் செல்கிருேம். ஒரு கொடி வீடு கம். கவனத்தைக் கவர்கிறது. வாடாத செடிகளாலும் கொடி களாலும் ஆன கொடி வீடும், அதனருகில் ஆடும் துளி ருடன் விளங்கும் அழகான மரமும் இன்னும் பலவிதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் அபூர்வ மரங்களும் இருக்கின்றன. அவற்றின் மத்தியில் மரகதத்தால் செய் ததுபோல மனத்தை மயக்கும் பச்சைப் பசேல் என்ற மேஜைகளையும் நாற்காலிகளையும் பார்க்கிருேம். சற்றுக் கூர்ந்து பார்த்த பின்னர்தான் இவை எல்லாம் சாதாரண சவுக்க மரங்கள் என்பதை அறிகிருேம். சவுக்க மரம் வளர வளர இவ்வாறெல்லாம் பல்வேறு உருவங்களில் அதை வெட்டி விட்டிருக்கிருர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு ஆச்சரியப்படுகிருேம்.
இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்துக்கொண்டு அந்த அந்த இடத்தில் அப்படி அப்படியே மூக்கின்மீது விரலை வைத்துக்கொண்டு நின்றுவிடுகிருேம். உடன் வந்த நண்பர் "இன்னும் நாம் பார்க்கவேண்டியது ஏராளமாக இருக்கின்றன. கிளம்புங்கள்!” என்று நம்மைத் தள்ளிக் கொண்டு போகிருர். ஆங்காங்கு வரிசை வரிசையாகவும் வட்டவடிவமாகவும் பலவித மலர் குலுங்கும் செடிகள்

Page 139
254 ஈழநாட்டுப் பிரயாணம்
இருக்கின்றன. அவைகளுக்கு மத்தியில் பல்வேறு கோணங் களில் தண்ணிரை வாரி வீசும் பொங்கு புனல் குழாய்கள் இருக்கின்றன. அவைகளிலிருந்து பொங்கிவரும் ஜலத் திரள்கள் இந்திர ஜால மகேந்திர ஜால வித்தைகளைக் காட்டி நம்மை மயக்கிக்கொண் டிருக்கின்றன.
இவற்றை யெல்லாம் தாண்டி அப்பால் சென்ருல் ஒரு இடத்தில் குலே குலையாகப் பழுத்துத் தொங்கும் பழத் தோட்டத்தைப் பார்க்கிருேம், இன்னெரு பக்கத்தில் நெருக்கமாகப் பூத்துக் குலுங்கும் இளம் மரக் காவைக் காண்கிருேம். மற்றேர் பக்கத்துக்குச் சென்ருலோ கிழங்கு வகைகளும், காய்கறி வகைகளும் உற்பத்தியாகும் விவ சாயப் பண்ணையைப் பார்த்து மகிழ்கிருேம். வேருேர் பக்கத்துக்குப் போனல் விதம் விதமான மருந்துச் செடிகள் பயிரிடப்பட்டிருக்கின்ற காட்சி நம்முடைய கவனத்தைக் கவருகிறது. அது “மனித குலத்துக்கு இடையூறு விளை வித்துவரும் கொடிய கோய்களைக் கொன்று ஒழிப்பேன்’ என்று மெளனமாக முரசு கொட்டிக்கொண் டிருப்பது போலத் தோன்றுகிறது.
இந்த மாதிரி காட்சிகளைப் பார்த்துக்கொண்டே சென்ருேமானல் சிற்சில இடங்களில் இளங் காதலர்கள் இன்புற்றிருந்து விளையாடுவதற்கு வசதியான எழில் மிக்க சோலைகளைக் காணலாம். வண்ணக் கிண்ணங்களை வைத்து அமைத்திருப்பதைப் போல அழகிய மலர்கள் குலுங்கும் செடிகளையும் அங்குள்ள மணிவாவிகளில் பூத்துக் கிடக்கும் பொற்ருமரை மலர்களையும் பார்த்து இன்புறலாம். இடையிடையே மரகதக் கம்பளத்தை விரித்துவிட்டது போன்ற அருமையான புல் வெளிகள். அந்தப் புல் வெளியைப் பார்த்தால் அதில் சற்று 5ேர மாவது காலை மீட்டிப் படுத்துக் களைப்பாறத் தோன்றும். அவ்வாறு அந்தப் புல் வெளியில் படுத்துக்கொண்டு பெர தேனியா தோட்டத்தைப் பார்த்தால், காவியங்களிலே, இதிகாசங்களிலே, கவிஞர்கள் கற்பனையிலே வர்ணித் திருக்கும் சக்கரவர்த்திகளின் அரண்மனைத் தோட்டங்கள் தான் நமது நினைவுக்கு வரும். ஆனல் அந்தப் புல் வெளி யிலிருந்து எழுந்திருந்து மேலே தோட்டத்தில் கடக்க

பெரதேனியா தோட்டம் 255
ஆரம்பித்துவிட்டால் தேவலோகம் பூமிக்கு வந்துவிட் டதோ என்று எண்ணத் தோன்றும். "இயற்கையே தெய்வம், தெய்வமே இயற்கை” என்று ஒரு ஞானி சொல்லி யிருக்கிருர், அது எவ்வளவு அனுபவ பூர்வமான வார்த்தை என்பதைப் பெரதேனியா தோட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் காண முடிகிறது.
ஆகா! இந்த மகத்தான தோட்டத்தை நடந்து கடந்து, பார்க்கப் பார்க்க,-ஏன்? கால்களைத்தான் வலிக்கிறது. எவ்வளவு நீளம் எவ்வளவு அகலம் எத்தனை விதமான மரங்கள் உலகில் உள்ள அத்தனை விதமான மரங்களும் அல்லவா இங்கு இருக்கின்றன! இத்தனை பெரிய தோட் டத்தை இப்பொழுது நினைத்தால் யாராவது உண்டாக்கி விட முடியுமா? சுமார் அறுநூறு வருஷத்துத் தோட்ட மல்லவா இது அறுநூறு வருஷங்களுக்கு முன்னல் இது எந்த மன்னனுடைய உள்ளத்தில் தோன்றியதோ? அப் படிப்பட்ட அவனுடைய உள்ளம் எத்தனை பெரியதா யிருந்திருக்க வேண்டும்? இலங்கைத் தீவில் இயற்கையும் செயற்கையும் எல்லாமே அற்புதம்தான்! இலங்கைத் தீவே வலம்புரிச் சங்குபோல இருக்கிறது! வலம்புரிச் சங்கு என்ன சாமான்யமாகக் கிடைக்கக் கூடியதா? இங்குள்ள இயற்கையின் திருவிளையாடல்களோ எண்ணற்றவை இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் பெரியவை! புத்தர் விக்கிரகங்கள் இருக்கின்றனவே அவை எல்லாம் பெரி யவை அற்பமாகவும் சின்னதாகவும் எதுவுமே இலங்கைத் தீவில் இல்லை.
இப்படிப்பட்ட அற்புதங்கள் கொண்ட ஈழ நாடு, எத்தனையோ மகா மன்னர்கள் வாழ்ந்து அரசு புரிந்த இலங்கைத் தீவு இப்போது எவ்வளவு சிறுமை அடைக் திருக்கிறது? கேவலம், செய்த நன்றியைக்கூட அல்லவா மறக்துவிட்டது! தமிழ் மக்களுக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டிய பிரஜா உரிமையைக்கூட அல்லவா இரக்க மின்றிப் பிடுங்கிக்கொண்டது வெட்கம் வெட்கம்!
இவ்வாறு எண்ணமிட்டுக்கொண்டே புல் வெளியி லிருந்து எழுந்திருந்தேன். “அதோ, தொங்கும் பாலம்

Page 140
856 ஈழநாட்டுப் பிரயாணம்
பார்த்தீர்களா?” என்ருர் நண்பர்; ஆம், மாவலி கங்கையில் ஒரு சிறு பாலம் தெரிந்தது. அது ஆகாயத்திலிருந்து தொங்கிக் கொண்டிருப்பது போலவும், காற்றிலே இலே சாக அசைந்து அசைந்து ஆடுவது போலவும் தோன்றியது, ஆனல் அது ஆகாயத்தில் இருந்து தொங்கவும் இல்லை; காற்றில் அசைந்து ஆடவும் இல்லை. பாலம் அமைக்கும் இன்ஜினியர்கள் செய்திருக்கும் விங்தைப் பாலம் இது. பெரதேனியா தோட்டத்திலிருந்து மாவலி கங்கையின் மறுகரையில் அமைந்துள்ள அரசாங்க விவசாயப் பண் ணைக்குச் செல்வதற்காக அமைந்துள்ள சிறிய இரும்புப் பாலம். இதில் மனிதர்கள் மட்டும் தான் போகலாம். அதிலும் ஒரு சமயத்தில் ஐந்து பேர்கள்தான் சேர்ந்தாற் போல் போக வேண்டும். அப்படிப் போகும்போது அவர்க ளுடைய கனம் தாங்காமல் அவர்கள் நடையின் அதிர்ச்சி யால் பாலம் இலேசாக ஆடிக் குதிக்கிறது. அப்படி ஆடுவதை அனுபவிப்பதற்காகவே பலர் இந்தப் பாலத்தில் அடிக்கடி போய் வருகிருர்கள்.
பாலத்தின் நடுவிலே ஆற்றிலிருந்து எந்த விதமான தாங்கும் தூண்களும் இல்லாமல் மாவலி கங்கையின் இக்கரையிலிருந்து அக்கரை வரையில் ஒரே பாலமாக அமைத்திருப்பதால் அதைத் தொங்கும் பாலம் என்று கூறுகிருர்கள். அவ்வளவுதான்!
இப்பொழுது இந்தத் தொங்கும் பாலத்தில் கடந்து சென்று அதன் மையம் வரையில் வருவோம். இங்கிருந்து இருபுறமும் பார்க்கலாம். நுங்கும் நுரையுமாகச் செல்லும் மாவலி கங்கையின் அழகைப் பார்க்கிருேம். அதிலிருந்து நாம் ஆற்றின் நடுமத்தியில் நின்று கொண்டிருக்கிருேம் என்பதைச் சந்தேகமறத் தெரிந்து கொள்கிருேம். இந்தச் சமயத்தில் பாலமே முறித்து விழுவது போன்று ஏதோ ஒருவிதமான சத்தம் கேட்கிறது. சற்றுத் திடுக்கிட்டுத் திரும்பி எதிரே பார்க்கிருேம். என்ன ஆர்சரியம் ! ஏழெட்டு யானைகள் மாவலி கங்கையில் இறங்கிக் குளிக் கின்றன. அவை மாவலி கங்கையின் நீரில் விழுந்து புரளும் சத்தம்தான் கம்மை அவ்வாறு திடுக்கிடச் செய்து விட்டது.

பெரதேனியா தோட்டம் 257
தமிழ் நாட்டில் பல இடங்களில் ஆற்றுக்கு ஆடு மாடுகளை ஒட்டி வந்து குளிப்பாட்டுவதை நேயர்கள் பலர் பார்த்திருக்கலாம். அது போலவே யானைகளைக் கொண்டு வந்து மாவலி கங்கையில் குளிப்பாட்டுகிருரர்கள். குன்று போல இருக்கும் அந்த உருவம் சின்னஞ் சிறு மனிதன் சொன்னபடி யெல்லாம் கேட்டு ஆற்றில் குளிப்பதைப் பார்க்கும்போது மனிதனின் ஆற்றலை எண்ணி வியக்கத் தான் வேண்டி இருக்கிறது. திடீரென்று ஒரு யரினை ஆற்றுத் தண்ணிரில் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டு பாலத்தை நோக்கி வருகிறது. நாம் அதற்குமேல் அந்தத் தொங்கும் பாலத்தில் நிற்க விரும்பாமல் "தப்பித்தோம், பிழைத்தோம்’ என்று பாலத்தை விட்டுத் தோட்டத் துக்குள் வந்து விடுகிருேம்.
பெரதேனியா தோட்டத்துக்குப் போகிறவர்கள் குறைந்த பட்சம் ஒரு நாளாவது அங்கு இருந்து அதன் அழகையும் இயற்கைக் காட்சிகளையும் பார்த்துஅனுபவிக்க வேண்டும். அந்தத் தோட்டத்திலிருந்து பார்த்தால் வானத்து மேகங்கள் எல்லாம் காதல் புரிகின்றன. தூரத் தில் தெரியும் மலைச்சிகரங்கள் மரகத மயமாகக் காண்கின் றன. இவைகளுடைய சோபைகளை யெல்லாம் அதிகப்படுத் திக் கொண்டு கம்மைச் சுற்றிலும் பலவித நிறங்களில் பூத் துக் குலுங்கும் மரங்கள் காட்சி தருகின்றன. இவ்வாறு எத்தனை எத்தனையோ இன்பங்களை நாள் முழுதும் அனு பவித்து மகிழலாம். தாவர ஆராய்ச்சியில் விருப்பம் உள்ளவர்கள் இந்தத் தோட்டத்துக்குள் சென்று விட் டால் பிறகு வாழ்நாள் முழுவதும் திரும்பி வரமாட்
TT 5 GT .
இந்தப் பெரிய தோட்டத்தின் ஒரு சிறு பகுதியைத் தான் கடந்து பார்க்க முடிந்தது மற்றப் பகுதிகளைக் காரி லிருந்தபடியே ஒருவாறு சுற்றிப் பார்த்து முடித்தோம்.
மறுபடியும் ஒரு முறை சாவகாசமாக இலங்கைக்குச் சென்று உலகப் புகழ்பெற்ற இந்தப் பெரதேனியா தோட்டம் பூராவையும் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே தோட்டத்தை விட்டுப் புறப்பட மனமில்லாமல் புறப்பட்டோம்.
1?

Page 141
258. ஈழநாட்டுப் பி ரயாணம்
இலங்கை சர்வ கலாசாலை
கண்டி நகரை விட்டுப் புறப்படுவதற்கு முன்னுல் இன்னும் ஒரு இடத்தை அவசியம் பார்த்துவிட வேண்டும். அதுதான் இலங்கை சர்வகலாசாலை. இயற்கையின் எழி லுக்குப் பெரதேனியா போன்ற சிறந்த இடம் இலங்கை யில் இல்லை என்றே கூறிவிடலாம். அத்துடன் இலங் கைத் தீவுக்கு மத்திய இடம் கண்டிமா நகரம்தான். கண்டி நகருக்கு அருகில் இருக்கும் பெரதேனியாவில் சர்வகலாசாலை அமைப்பதுதான் மிகப் பொருத்தம் என்று எண்ணி இங்கு இலங்கை சர்க்கார் சர்வகலாசாலையை அமைத்திருக்கிருர்கள் போலும். இலங்கை சர்வகலாசாலை நீண்டகாலமாகக் கொழும்பு 5கரில்தான் இருந்து வந்தது. சமீபத்தில்தான் அதைப் பெரதேனியாவுக்கு மாற்றி யிருக் கிருர்கள். கங்கைக் கரையில் காசி சர்வகலாசாலை அமைக் திருப்பதுபோல மாவலி கங்கைக் கரையில் எழில் மிக்க இயற்கையின் சூழ்நிலையில் இலங்கை சர்வகலாசாலை அமைந்திருக்கிறது. ஏற்கெனவே பெரதேனியா தோட் டத்தினுல் புகழ் பெற்றிருக்கும் பெரதேனியா இப்பொழுது இந்தச் சர்வகலாசாலை மூலம் மேலும் புகழ்பெறும் என்பதில் ஐயமில்லை.
இலங்கை சர்வகலாசாலைக் கட்டடங்களைத் தூரத் திலிருந்து பார்க்கும்போதே மனதில் ஒருவிதமான பக்தி உணர்ச்சி உண்டாகி விடுகிறது. இவற்றைப் பார்த்ததும் “ஆகா! சர்வகலாசாலை என்ருல் இதுவல்லவா சர்வகாலா சாலை. இதுபோன்ற இடத்தில் அல்லவா கலைமகள் வாசம் செய்வாள்' என்று எண்ணினேன். அவ்வாறு எண்ணி யதை ஒரு தரம் வாய்விட்டும் சொன்னேன்.
உடன் வந்த நண்பர் "பொதுவாக இலங்கைத் தீவுக்கு வரும் யாத்திரீகர்கள் எல்லாம் இலங்கைக் தீவையும், இந்தச் சர்வகலாசாலையையும் பிரமாதப் படுத்துகிருர்கள்' என்று சொல்லி அலுத்துக் கொண்டார்.
"உலகின் பல தேசங்களில் பிரயாணம் செய்து அனுபவப்பட்டவர்களுக்குப் பல விஷயங்கள் தெரியும். அவர்கள் இதயம் கலை உணர்ச்சியுடன் இருக்கும். ஆகை

பெரதேனியா தோட்டம் W 859
யால் அவர்கள் தாங்கள் பார்க்கும் பொருள்களில் உள்ள நல்ல கலை அம்சங்களை மட்டும் பார்த்து அனுபவிப்பார்கள் அதை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி மகிழ்வார்கள். ஆனல் இலங்கையிலேயே இருப்பவர்களில் சிலருக்கு இலங்கையின் அருமை பெருமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிவதில்லை. அவர்கள் ஈழத்தின் மலைகளைப் பார்க்கிருர்கள் இங்கு இருக்கும் மாடமாளிகைகளைப் பார்க்கிருரர்கள், ஆனல் அதில் இருக்கும் கலையை அறிந்து அநுபவிக்கும் சக்தி அவர்களுக்கு இல்லை. அப்படி அறிந்து அனுபவித்துச் சொல்கிறவர்களையும் ‘இவர் வீணுக எல்லாவற்றையும் பிரமாதப்படுத்துகிருர்’ என்று அலட்சிய மாகச் சொல்லி விடுகிருர்கள். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?" என்ருர் உடன் வந்த சென்னை நண்பர்.
இப்படியாக அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டதைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இலங்கை சர்வகலாசாலைக் கட்டங்களுக்கு அருகில் வந்துவிட்டோம்.
ஏதோ சர்வகலாசாலைக் கட்டடங்கள் தானே! செங் கல்லும் சுண்ணும்பும் கொண்டு கட்டியதுதானே சென்னை யிலும், பம்பாயிலும், தில்லியிலும் இல்லாத பெரிய கட்ட டங்களா இவை என்றெல்லாம் எண்ணிக்கொண்டு இந்தச் சர்வகலாசாலைக் கட்டடங்களைப் பார்ப்பதில் பயனில்லை. உண்மையிலேயே கண்டியின் கட்டடக் கலை நுணுக்கப் பாணியில் இலங்கையின் பண்பு கெடாமல் அமைத் திருக்கும் உயர்ந்த கட்டடங்கள் என்று எண்ணி அந்தச் சர்வகலாசாலைக் கட்டடத்துக்குள் பிரவேசிக்கலாம், வாருங்கள்!
இலங்கை சர்வகலாசாலைக் கட்டடங்கள் கலைமகள் கோயில் கொண்டு எழுந்தருளுவதற்கு உகந்த கலைக் கோயில்களாகும். சர்வ கலாசாலைக் கட்டடத்துக்குள் நுழைந்ததும் அதன் கம்பீரமும், அழகும், கலை உணர்ச்சி யுடன் கூடிய கட்டடச் சுவர்களும் 5ம்முடைய கவனத் தைக் கவருகின்றன. மேலே அண்ணுந்து நோக்கினுல் அக்த மண்டபத்தின் விசாலமும் அழகிய வேலைப்பாடு களும் காட்சி தருகின்றன. இந்தக் காலத்திலே வேறு இடங்களில் உள்ள சர்வகலாசாலைக் கட்டடங்களுக்குள் சென்ருல் நமக்கு ஏதோ ஒரு புது உணர்ச்சி ஏற்படுகிறது.

Page 142
260 ஈழநாட்டுப் பிரயாணம்
தம் தமிழ் நாட்டிலேயோ, அல்லது பாரத நாட்டிலேயோ உள்ள சாவகலாசாலைக் கட்டடங்களுக்குள் இருக்கும் போது நாம் இந்தியாவில் இருப்பது போன்ற உணர்ச்சி ஏற்படுவதில்லை. எங்கோ அமெரிக்காவிலோ, இங்கிலாங் திலோ இருப்பது போன்ற பிரமைதான் ஏற்படுகிறது. அந்த மாதிரியான சர்வகலாசாலைக் கட்டடங்களுடன் இலங்கை சர்வகலாசாலைக் கட்டடங்களையும் ஒப்பிட்டால் "ஆகா! இலங்கையில் கல்விப் பணிக்குத் தொண்டாற்றும் பெரியவர்கள், அதற்காக வேண்டிய நல்ல சூழ்நிலை ஏற்படுத்துவதற்காகக் கட்டடங்களே அமைத்திருக்கும் முறையை எண்ணிப் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் கல்விக்கும் கலைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிருர்கள், எவ்வாறு போற்றி யிருக்கிருர்கள்! என்ற வியப்பு நிச்சயம் உண்டாகும்.
சர்வகலாசாலைக் கட்டடங்களுக்குள் பிரவேசித்ததும் அங்கிருந்த சில மாணவர்கள் முதலில் தங்கள் கல்லூரி மாணவர் விடுதியின் சமையல் அறைக்கு அழைத்துச் சென்ருர்கள்.
"எல்லாவற்றையும் விட்டு விட்டு முதன் முதலில் சமையலறைக்கு அழைத்து வந்தீர்களே, ஏன்?’ என்று கேட்டேன்.
"மற்ற இடங்கள் எல்லாம் இதர சர்வகலாசாலை களில் உள்ள கட்டடங்களைப்போல்தான் இருக்கும். ஆனல் சமையல் விடுதியில் மட்டும் நவீன வசதியுடன் கூடிய பல அபூர்வமான இயந்திரங்கள் இருக்கின்றன. அதை நீங்கள் பார்க்க வேண்டும்" என்ருர்கள்.
ஆமாம்; அந்த மாணவர்கள் கூறியது உண்மைதான். சமையல் விடுதியில் கண்ட காட்சிகள் எல்லாம் ஒரே ஆச்சரியமாக இருந்தன. பல நூறு மாணவர்களுக்குச் சமையல் கடக்கும் இடத்தில் பெரிய பெரிய அடுப்புகள் இல்லை. அதிகமான சமையற்காரர்கள் இல்லை. புகை சூழ்ந்த சுவர்கள் இல்லை. ஏழெட்டுச் சமையற்காரர்கள் கன்முக உடை உடுத்திக் கொண்டிருந்தார்கள். பளபள வென்று சுத்தமாக இருந்தது சமையல் அறைச் சுவர்கள். பெரிய பெரிய எவர்சில்வர் பாத்திரங்கள் ஆங்காங்கு இருந்தன. அவ்வளவுதான் இவற்றைப் பார்த்ததும்

பெரதேனியா தோட்டம் 261
"இது என்ன சமையற்கூடமா? அல்லது இங்கிருக்கும் எவர்சில்வர் பாத்திரங்களை அலங்காரமாக வைத்திருக்கும் இடமா?" என்றுதான் எண்ணத் தோன்றியது. இருக் தாலும் அந்த உணர்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளா மல் அங்கிருந்த ஒரு பெரிய எவர்சில்வர் பாத்திரத்தைக் காண்பித்து "இது என்ன?’ என்று கேட்டேன்.
"இது சமையல் செய்யும் பாத்திரம்” என்று கூறி அந்தப் பாத்திரத்தைத் திறந்து காண்பித்து அதை எப்படி உபயோகிப்பது என்பதையும் விளக்கினர் அங் கிருந்த சமையற்காரர்.
அந்தத் தவலையில் ஆறு மரக்கால் அரிசியையும் அதற்கு வேண்டிய தண்ணிரையும் ஊற்றிவிட்டு அருகில் இருந்த மின்சாரப் பித்தானை அமுக்கி விட்டுக் கடிகாரத் தைப் பார்த்துக் கொண்டிருந்தார். நாற்பது நிமிஷங்கள் ஆனவுடன் இன்னெரு பித்தானை அமுக்கினர். அந்தத் தவலை ஏதோ மந்திரத்தால் மாயவித்தை காட்டுவதுபோல் அப்படியே ஆகாயத்தில் கிளம்பி அருகில் இருக்கும் பெரிய எவர்சில்வர் தொட்டிக்குப் பக்கத்தில் சென்றது. பின்னர் அதன் மூடி திறந்தது. அடுத்த கணம் அந்தத் தவலையை யாரோ தூக்குவதுபோல் இருந்தது. ஆனல் யாரும் தூக்க வில்லை. தானுகவே கிளம்பி அந்தத் தொட்டிக்குள் சாதத் தைக் கொட்டி விட்டுத் திரும்பி விட்டது. இதுபோலவே இட்டிலிகள் செய்ய, இடியப்பம் செய்ய, தேங்காய் திருக, வெந்த உருளைக்கிழங்குகளின் தோலை உரிக்க எல்லா வற்றுக்கும் இயந்திரங்கள் இருக்கின்றன. அது வேலை செய்யும்போது பார்த்தால் மாயாபஜார் சினிமாவில் காரியங்கள் கடப்பது போன்ற விங்தைக் காட்சியாகத் தான் இருக்கிறது. பல நூறு மாணவர்களுக்குச் சமையல் செய்யும் இடத்தில் ஒரு தூசிகூட இல்லாமல் சுத்தமாகச் சமையல் நடைபெறும் இடத்தை இலங்கை சர்வ கலா சாலையில்தான் பார்த்தேன்.
இந்தச் சர்வகலாசாலையில் உள்ள நாற்காலிகள், மேஜைகள் எல்லாமே கண்டியின் மர வேலைப்பாடுகளுடன் மிளிர்கின்றன. நாற்காலிகள் எல்லாமே சாதாரணமாக இருந்தாலும் சாய்ந்து கொள்ளும் இடத்துக்கு மேலும் கைப்பிடிகளிலும் இரண்டிரண்டு குமிழிகளைக் கடைந்து

Page 143
262 ஈழநாட்டுப் பிரயாணம்
வைத்துக் கண்டியின் கலைப்பண்பைக் காப்பாற்றி யிருக் கிருர்கள். அதுபோலவேதான் ஒவ்வொரு பொருளிலும் எப்படியாவது தங்கள் காகரிகம் மிளிரும் வகையில் ஏதா வது செய்திருக்கிருரர்கள்.
பெண்களுக்கென்று தனியாகக் கட்டும் கலாசாலைக் கட்டடங்களைப் பார்க்கும்போது, "அடாடா இந்தக் கலா சாலாசாலையில் படிப்பதற்காவது அடுத்த ஜன்மத்தில் பெண்ணுக பிறக்கலாமா” என்று தோன்றியது. அவ்வளவு அழகுடன் அந்தக் கட்டடத்தை அமைத்திருக்கிருரர்கள். இவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருப்ப தாகவும் அங்கெல்லாம் அழைத்துப் போகப் போவதாகவும் மாணவர்கள் கூறினர்கள். ஆனலும் அன்று மாலையில் இன்னெரு முக்கியமான கூட்டத்துக்குப் போகவேண்டி யிருந்ததால் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்ள வேண்டியதாகி விட்டது. விடைபெற்றுக் கொள்ளும் போது "இந்தச் சர்வ கலாசாலைக் கட்டடத்துக்கு இவ் வளவு சிறந்த முறையில் பிளான் எழுதிக் கொடுத்த இஞ்ஜினியர் யார்?’ என்று கேட்டேன்.
"லண்டன்மா நகருக்குப் பிளான் அமைத்துக் கொடுத்த சர் பாட்ரிக் அபர் கிராம்பி என்ற அதே மயன் தான்' என்ருர்கள்.
"மயன! அப்படி என்ருல்? “வெகு விரைவில் அற்புதமான நகரங்களை நிர்மாணிப் பதில் புகழ் பெற்றவன் அல்லவா மயன், அவனைப் பற்றி நம்முடைய புராண இதிகாசங்களெல்லாம் கூறுகின் றனவே!" என்று மாணவர்களிடமிருந்து பதில் வந்தது.
"மயன் என்பது நல்லதோர் வார்த்தைதான். இனிமேல் இன்ஜினியர்களை "மயன்" என்றே சொல்கிறேன்!” என்று கூறி அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன். "நாழியாகிவிட்டது. கூட்டத்துக்குப் போகவேண் டும். வேகமாகக் காரை ஒட்டு” ஒன்று காரோட்டியை அவசரப்படுத்தினர் உடன் வந்த சென்னை நண்பர்.
"அப்படி என்ன முக்கியமான கூட்டம்?" என்று கேட்கிறீர்களா? இன்னும் சற்று பொறுங்கள். அந்தக் கூட்டத்துக்கே சென்று கலந்துகொள்ளலாம்.

26
கல்கி கலை மன்றம்
ി காலமாகத் தமிழ் நாட்டிலும், தமிழ் கூறும் நல்லுலகமெங்கிலும் தமிழ் அன்பும், தமிழ் வளர்ச்சியில் ஆர்வமும் பொங்கிப் பெருகுவதைப் பார்க்கிருேம். "வாழிய செந்தமிழ்!” “வாழ்க தமிழ் மொழி” என்னும் முழக்கங் களைத் தமிழ் கூறும் கல்லுலக மெங்கும் கேட்டுவருகிருேம். சென்ற முப்பது ஆண்டுகளாக எத்தனையோ எழுத்தாளர் களின் சக்தி வாய்ந்த எழுத்துக்கள் தமிழ் மக்களின் தமி ழபிமானத்தைத் தூண்டிவிட்டு வளர்த்து வந்திருக் கின்றன. தமிழை வளர்ப்பதற்காகப் பல சங்கங்கள் தோன்றி யிருக்கின்றன. மாநாடுகள் நடைபெற்றிருக்கின் றன. இப்படியெல்லாம் தமிழ் கூறும் கல்லுலகமெங்கும் தமிழ் உணர்ச்சி பரவுவதற்குப் பல தமிழர்கள் பாடுபட் டிருக்கிருர்கள். அப்படித் தம் வாழ்நாளெல்லாம் பாடு பட்டு வந்தவர்களில் பேராசிரியர் கல்கி அவர்கள் மிக முக்கியமானவர் என்பதைச் சென்ற முப்பது ஆண்டின் தமிழ் நாட்டு வரலாற்றைக் கூர்ந்து கவனித்த பேரறி ஞர்கள் மறுக்க மாட்டார்கள்.
ஆதிசிவன் பெற்று, அகத்திய முனிவன் உவந்து பணி செய்த தமிழ்த் தாயை, மூன்று குலத் தமிழ் மன்னவர்கள் போற்றி வளர்த்த தமிழ் அன்னையை எத்தனையோ ஆண்டு களுக்குப் பின்னல் மகாகவி பாரதியார் வணங்கி வாழ்த்தி வளர்த்தார்.
அந்தத் தமிழ்த் தாயின் வாயிலாகக் கவியரசர் புலம்பி யதைக் கேளுங்கள்;
“என்றந்தப் பேதை உரைத்தான்!
இந்த வசை எனக்கெய்திடலாமோ!”
என்று மனம் நொந்து வருந்தினர். எதைக் குறித்துப் பாரதியார் இவ்விதம் வருந்தினர்? மேல்நாட்டுப் புதுக்

Page 144
264 ஈழநாட்டுப் பிரயாணம்
கலைகளைத் தமிழில் சொல்ல முடியாது; சொல்லும் சக்தி தமிழுக்கு இல்லை” என்று யாரோ ஒரு பேதை உரைத்தது பாரதியார் காதில் விழுந்தது. உடனே அவருக்குக் கோபம் மூண்டது. 'கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!” என்று மனம் வெதும்பினர். இவ்வாறு மனம் வெதும்பிய பாரதி யார் தமிழன்னைக்கு எவ்வித மெல்லாம் பாமாலை புனைந்து அணிவித்திருக்கிருர் என்பது அனைவரும் அறிந்ததே.
*சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!' என்று கவியரசர் பாடினர். இவ்வாறெல்லாம் தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் சேவை புரிந்த கவியரசர் பாரதியாரை அவருடைய ஜீவிய காலத்தில் தமிழர்கள் தக்கபடி கவ னிக்கவில்லை என்றும் மகாகவிக்கு உரிய மரியாதை செய்யவில்லை என்றும் அவச்சொல் ஏற்பட்டது. தமிழும் தமிழர்களும் தமிழகமும் செழிக்கப் பாடிய மகாகவியைத் தமிழ் மக்கள் புறக்கணித்து விட்டார்கள் என்ற அப கீர்த்தி ஏற்பட்டது. "பாரதியாரைப் பட்டினி போட்டுக் கொன்ருர்கள்' என்று அவர் வாழ்ந்த காலத்துத் தமிழர்கள்மீது சிலர் பச்சையாகக் குற்றம் சாட்டினர்கள்.
அந்த அவச் சொல்லை நீக்கப் பேராசிரியர் கல்கி அவர்கள் அரும்பாடுபட்டார். அவர் பிறந்த எட்டயபுரத் திலே அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்டி எட்டயபுரத்தை ஒரு புனித யாத்திரை பூமியாக உயர்த்தினர். தமிழ் மக்கள் தங்கள் கவிக்குச் செய்திருக்கும் மரியாதையைப் பார்த்து உலகம் வியக்கும்படி செய்தார். பாரதியார் குடும் பத்தினருக்கு உதவி நிதி அளிக்க ஏற்பாடு செய்தார். "செத்துப் போனவர்களுக்குத்தான் மணிமண்டபம் கட்டு வார்கள்’ என்று சிலர் பாரதியின் ஞாபகார்த்தமாக எழுப் பிய புனிதமான பணியைக் கேலி செய்தார்கள். அந்தப் பழிக்கும் தமிழ் மக்கள் ஆளாகக் கூடாது என்று தீர் மானித்தார். கவிகளும் எழுத்தாளர்களும் அவர்கள் வாழ் நாளிலேயே வசதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டார். நாமக்கல் கவிஞருக்கு நிதி திரட்டிக் கொடுத்தார். பேராசிரியர் வ. ரா. அவர்களுக்கு நிதி திரட்டி வழங்கினர்.

கல்கி கலை மன்றம் 265
இந்தப் பணி என்னவோ பேராசிரியர் கல்கி அவர்கள் புதிதாகச் செய்தது என்று யாரும் எண்ணிவிட வேண்டாம்.
பழந் தமிழ் நாட்டு மக்கள் தமிழ்க் கவிகளையும் பெரியோர்களையும் போற்றுவதில் இணையற்றவர்களா இருந்தார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னல் அதிகமான் என்று ஒரு மன்னன் இருந்தான். அவனுக்கு 5வ யெளவனத்துடனும் தேக ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்ற ஆசை உண்டாகிவிட்டது. அதற்காகச் சித்த புருஷர் ஒருவரிடம் சென்று யோசனை கேட்டான். சித்தர் சொன்னர்:
"உன்னுடைய காட்டின் எல்லைப்புறத்தில் ஒரு மலை இருக்கிறது. அதன் உச்சியில் ஒரு கருகெல்லி மரம் இருக்கிறது. அந்தக் கருநெல்லி மரத்தில் பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை ஒரு 5ெல்லிக் கனி உண்டாகும். பட்சிகள் முதலியவற்ருல் அதற்குப் பல ஆபத்துகள் ஏற்படும். அவ்வாறு அதற்கு ஆபத்து கேராமல் பாது, காத்து அதுவாகப் பழுத்து விழும்போது அதைத் தரையில் விழாமல் துணியால் ஏந்த வேண்டும். பிறகு அந்தக் கனியை ஆண்டவனுக்கு நிவேதனம் செய்துவிட்டு அருந்தினுல் உன்னுடைய விருப்பம் நிறைவேறும்.”
அதிகமான் அவ்வாறே பன்னிரண்டு ஆண்டுகள் அக்தக் கருநெல்லி மரத்துக்குக் காவல் போட்டு, கனி பழுக்கும் சமயத்தில் தானே சென்று பூமியில் விழாமல் ஏக்தி எடுத்து வந்தான். அரண்மனைக்குக் கொண்டுவந்து ஆண்டவனுக்கு நிவேதனம் செய்து சாப்பிடப்போன சமயம் ஒளவைப் பாட்டி அதிகமானின் அரண்மனைக்கு வந்தாள். "தொலைதூரம் வழிநடந்து வந்தேன் மிகக் களைப்பாயிருக்கிறது' என்ருள்.
இதைக் கேட்ட அதிகமான் "இதை அருந்துங்கள், களைப்புத் தீரும்" என்று கூறித் தான் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் இருந்து பெற்ற, கிடைத்தற்கு அரிய

Page 145
ኃ66 ஈழநாட்டுப் பிரயாணம்
நெல்லிக் கனியை ஒளவையிடம் கொடுத்தான். கனியைச் சாப்பிட்ட ஒளவையின் களைப்பு உடனே தீர்ந்தது.
"இது என்ன அதிசயமான கனி ?’ என்று கேட்டாள் ஒளவை.
அதிகமான் அந்த கெல்லிக்கனியின் வரலாற்றைக் கூறி “நீங்கள் இந்தக் கனியை அருந்தியதால் தமிழ் நாடும் தமிழ் மக்களும் பல வழிகளில் நலம் அடையப் போகிருரர்கள். உங்கள் கவிதையால் தமிழ் நாடு உயர்ந்து மகோன்னதமடையப் போகிறது. நான் இந்தக் கருநெல்லிக் கனியை அருந்துவதினுல் யாருக்கு என்ன பிரயோசனம் ?” என்ருன்.
"மீ அல்லவோ வள்ளல்" என்று அதிகமானைப் பாராட்டினுள் ஒளவை.
இப்படி ஒரு கர்ண பரம்பரைக் கதை தமிழ் நாட்டில் வழங்கி வருகிறது. இப்படிப் புலவர்களைப் பாராட்டுவது தான் தமிழ் மக்களின் பழைய பண்பாடு. இடையில் சில காலம், முக்கியமாக, சென்ற தலைமுறையில் தமிழகம் தன்னுடைய பண்பாட்டை இழந்துவிட்டதோ என்று சங்தேகப்படும்படி இருந்தது. அப்படி யிருந்த தமிழ், நாட்டை மீண்டும் பண்பாடுள்ள தமிழகமாக மாற்று. வதற்கு அரும்பாடுபட்டு அதில் மகத்தான வெற்றியைக் கண்டவர் பேராசிரியர் கல்கி அவர்கள்.
மகாகவி பாரதியார் கூறினரே, "கூறத்தகாதவன் கூறினன்' என்று. அப்படிக் கூறியவனின் தலை கவிழும்படி மேற்கில் வளரும் புதுக் கலைகளையெல்லாம் அமுது ததும்பும் தமிழில் வேகமும் விருவிருப்பும் குறையாமல் எழுதிக் காண்பித்தவர் கல்கி அவர்கள்.
பேராசிரியர் கல்கி அவர்கள் அரசியலில் ஈடுபட ஆரம்பித்த காலத்தில் தமிழுக்கு ஒரு இழுக்கு இருந்து வந்தது. "அரசியல் விஷயங்களைத் தமிழ் மொழியில் எழுத முடியாது” என்று ஒரு குருட்டு நம்பிக்கை இருந்து வந்தது. அந்தக் குருட்டு நம்பிக்கையை அடியோடு தொலைத்தவர் பேராசிரியர் கல்கி அவர்கள். அவர்களுடைய முப்பதாண்டு தமிழ்த் தொண்டின் காரணமாக "அரசிய

y
கல்கி கலை மன்றம் 86ሻ
லைப் பற்றித் தமிழில் எழுதுவதுபோல் வேறு எந்த மொழியிலும் எழுத முடியாது’ என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் பஞ்சாங்கம்போல் இருந்து வந்தன. அப்படி இருந்துவந்த பத்திரிகைகளைக் கலை மணம் கமழும் பத்திரிகைகளாக உயர்த்திய பெருமையும் பேராசிரியர் கல்கி அவர்களைச் சேர்ந்ததுதான். பாரத நாட்டுப் பத்திரிகைகளுக்குள்ளே தமிழ்ப் பத்திரிகை களுக்கு நிகராக வேறெந்த மொழிப் பத்திரிகையையும் கூற முடியாது என்று சொல்லும் அளவுக்குத் தமிழ்ப் பத்திரிகையின் தரத்தை உயர்த்தினர். பகலெல்லாம், தமிழும், தமிழ் மக்களும், தமிழ் நாடும் உய்யச் சிந்தித்தார்; சிந்தித்தவைகளே எழுதினர். இரவெல்லாம் அவை களைப் பற்றியே கனவுகள் கண்டார். அவருடைய உழைப்பும், அவர் கண்ட கனவும் வீண் போகவில்லை என்பதை இப்பொழுது கண்டு வருகிருேம். அவர் வளர்த்து விட்டுப்போன உயர்ந்த பண்பு தமிழ் நாட்டில் மட்டுமில்லாது தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் ஓங்கி வளர்வதைக் காண்கிருேம்.
அவ்வாறெல்லாம் பாடுபட்ட பேராசிரியரைத் தமிழ்ப் பெருமக்கள் மறக்கவில்லை. தமிழ் மக்கள் நன்றி மறந்த வர்கள் இல்லை என்பதைச் சென்ற 1956-ம் ஆண்டு டிசம்பர் மாதக் கடைசியில் இலங்கை கண்டி நகரில் நடைபெற்ற கல்கி கலை மன்ற விழாவில் கண்டேன். அன்றைய தினம் பேராசிரியர் கல்கி அவர்களைப் பற்றி அறிஞர்கள் பேசியபோது பொங்கிய தமிழ் வெள்ளம் இலங்கைத் தீவையே அடித்துக்கொண்டு போய்விடுமோ என்றுகூடப் பயப்பட வேண்டியிருந்தது.
கமது கன்றி
கில்கி கலைமன்ற விழாவைப் பற்றிக் கூறுவதற்கு முன்னல் இந்த விழா நடப்பதற்கு மூலகாரணமா யிருக்த வர்களுக்குத் தமிழ் மக்கள் சார்பாகவும், தமிழ்க் கலை அன்பர்கள் சார்பாகவும் மனமார்ந்த வந்தனத்தைத் தெரி

Page 146
268 ஈழநாட்டுப் பிரயாணம்
வித்துக் கொள்ள விரும்புகிறேன். நமது நன்றிக்கும் வந்தனத்துக்கும் உரிய அந்தப் பெரியவர்கள் யார்?-கேட் பானேன்?--சிங்களவர்கள்தான்! சிங்கள மந்திரிமார்கள் தான் அவர்கள் தமிழின்மீது அவ்வளவு துவேஷம் பாராட்டாமல் இருந்திருந்தால், கொஞ்சம் மனத்தை விசாலப்படுத்திக் கொண்டு ஈழநாட்டில் தமிழ் மொழிக்கு உரிய ஸ்தானத்தைக் கொடுத்திருந்தால் கல்கி கலை மன்ற விழா நடைபெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான். இலங்கை சர்க்கார் தமிழ் மொழியின் மீது பகைமை பாராட்டி, "இலங்கை அரசியலில் ஆங்கிலத்துக்கு இடம் கொடுத்தாலும் கொடுப்போம்! தமிழ் மொழிக்கு இடம் தரமாட்டோம்!” என்று பிடிவாதம் பிடித்து வருவதனல் தான் கண்டி நகரில் கல்கி கல்ை மன்ற விழா கோலாகல மாக நடைபெற்றது. எனவே இலங்கை சிங்கள மக்திரி களுக்கும், அவர்களுடைய தமிழ் மொழித் துவேஷத்துக் கும், வறட்டுப் பிடிவாதத்துக்கும், நமது மனமார்ந்த நன்றி!
赛 # 资 =
ஜன்னல் வழியாக ஏறி உள்ளே குதித்து இட நெருக் கடியை உண்டாக்குவதை அடிக்கடி ரயில் வண்டிகளில் பார்த்து வருகிருேம். சில சமயங்களில் சென்னை நகர பஸ்களிலும் பார்க்கிருேம். ஏன்? இலங்கையில் உள்பகுதி களில் ஒடும் பஸ்களிலும் இந்தக் காட்சியைக் காணலாம். ஆனல் ஒரு மண்டபத்துக்குள்ளே நடக்கும் தமிழ்ப் பேச்சைக் கேட்பதற்கு மக்கள் ஜன்னல் வழியாக ஏறிக் குதித்து இட நெருக்கடியை உண்டாக்குவது என்பது அடிக்கடி பார்க்கக் கூடிய காட்சி அல்ல.
இந்த அதிசயக் காட்சியைக் கண்டியில் கல்கி கலை மன்ற விழா நடைபெற்ற மண்டபத்தில்தான் பார்க்க முடிந்தது. ஏற்கனவே மண்டபத்தில் மக்கள் நிறைந்து விட்டார்கள். விழாவுக்காக வந்திருந்த அறிஞர்கள், ஈழகேசரி ஆசிரியர் திரு ராஜ அரியரத்தினம், திருமதி சரோஜினிராமானுஜம் திருமதி ரூபராணி ஜோஸப்,திருகே, ராஜகோபால், கல்கி துணை ஆசிரியர் ஆகியவர்கள் மண்ட பத்துக்கு வந்தபோது வெளியில் திறந்த வெளியில் கின்று

கல்கி கலை மன்றம் 269
கொண்டிருந்தவர்கள் எல்லாம் திறந்திருந்த பலகணி வழி யாகத் திமுதிமு வென்று உள்ளே வரத் தொடங்கினர்கள். கல்கி கலை மன்ற விழா நடைபெற்ற இரண்டு மணிநேரமும் அவர்கள் ஆர்வத்துடனும் ஆரவார கரகோஷத்துடனும் சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
உண்மையில் கண்டி நகரவாசிகள் எவ்வளவு தூரம் பேராசிரியர் கல்கிமீது பக்தி கொண்டவர்கள், தமிழின் மீது எவ்வளவு மோகம் கொண்டவர்கள் என்பது அப் போது கன்கு தெரிந்தது. மண்டபத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நெருக்கி அடித்துக்கொண்டு நின்று கொண் டிருந்த மக்கள் கூட்டம் பேராசிரியர் கல்கி அவர்களின் பெருமையை இரண்டுமணி நேரத்துக்கு அதிகமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. மண்டபத்துக்கு வெளியிலும் ஒலி பெருக்கி வைத்திருந்தபடியால் வெளியில் கின்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் நடைபெற்ற கல்கி கலை மன்ற விழாவில் ஏராளமான மக்கள் கூடி யிருக் ததுபோல் வேறு எந்த விழாவுக்கும் கூடியதில்லை என்று கண்டி நகர மக்களே கூறிக் கொண்டார்கள். மன்றத்தின் நோக்கம்
பேராசிரியர் கல்கி அவர்கள் தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் செய்த சேவைக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் நினைவைப் போற்றுவது, அவர் விட்டுப் போன தொண்டைத் தொடர்ந்து செய்வது. குறிப்பாக, இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பேராசிரியர் கல்கி அவர்கள் செய்திருக்கும் மறக்க முடியாத பணிக்கு ஞாபகார்த்தமாக அவர் பெயரால் மன்றம் நிறுவி அதன் மூலமாகத் தமிழுக்குத் தொண்டாற்றுவது ஆகியவைதான், கல்கி கலை மன்றத்தின் நோக்கங்கள். கல்கி கலை மன்ற விழாவில் பேசியவர்கள் எல்லாருமே இதை கன்கு வலி யுறுத்திக் கூறினர்கள்.
பேராசிரியர் கல்கி அவர்களிடம் பெருமதிப்பும் பேரன்பும் கொண்ட ஈழகேசரி ஆசிரியர் திரு ராஜஅரிய ரத்தினம் விழாவுக்குத் தலைமை தாங்கியது மிகவும் பொருத்தமா யிருந்தது.

Page 147
270 ஈழநாட்டுப் பிரயாணம்
இந்த விழாவில் திரு ராஜ அரியரத்தினம் நிகழ்த்திய தலைமைப் பிரசங்கம் திரு கல்கி அவர்களின் வசன நடை யைப் போலவே அற்புதமாய் அமைந்திருந்தது.
பேராசிரியர் கல்கி அவர்கள் தமிழுக்குச் செய்த சேவையைப் பற்றித் திரு ராஜ அரியரத்தினம் கூறியதைக் கேளுங்கள் :
"தமிழ் அன்னையைப் பிணைத்திருந்த விலங்குகளை வெட்டித் தமிழன்னையை அரியாசனத்தில் ஏற்றி வைத் தவர் பேராசிரியர் கல்கி. கல்கி அவர்கள் தமிழ் எழுத ஆரம்பிக்கவில்லை என்ருல் தமிழ் எந்த நிலையை அடைக் திருக்குமோ அதை இப்பொழுது கூற முடியாது. அவர்கள் எழுத்திலே துள்ளிய ஹாஸ்யத்தைப் போல் வேறு யாருடைய எழுத்திலும் காண முடியவில்லை. அவர் எழுதும்போது எதுகையும் மோனையும் போட்டி போட்டுக் கொண்டு வந்து சேவை செய்தன. வார்த்தைகளோ "நான் முந்தி நீ முந்தி’ என்று அவருக்கு முன்னுல் கைகட்டி கின்றன. தமிழ் கூறும் கல்லுலகில் வாழும் தமிழ் மக்களே எல்லாம் தட்டி எழுப்பித் தமிழ் அன்னைக்குத் தொண் டாற்றும்படி செய்தவர். என்னைப் போன்ற எண்ணற்ற இளைஞர்களைத் தமிழுக்குச் சேவை செய்யும்படி செய்தவர்” என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறினர். திரு ராஜ அரிய ரத்தினத்தின் தலைமையுரை அப்படியே பேராசிரியர் கல்கி அவர்களைச் சபையில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது.
பேராசிரியர் கல்கியின் கதாநாயகர்களையும் கதாநாயகி களையும் தம்முடைய ஜாலக் கண்ணுடியின் மூலமாகக் சபையோருக்குக் காட்டினர் திருமதி ரூபராணி ஜோஸப்.
அவர் தமிழ் மீதும் தமிழ்ப் பத்திரிகைகள் மீதும் ஒரேயடியாக மோகம் கொள்ளும்படி செய்தது பேராசிரியர் கல்கி அவர்களின் தமிழ் எழுத்துத்தானம். பல்லாயிரக் கணக்கான மக்களும் அறிஞர்களும் கூடி யிருக்கும் சபையில் மேடையேறி உற்சாகமாகப் பேசும்படி செய்தது கூட ஆசிரியர் கல்கி அவர்களின் எழுத்துத்தான் என்று கூறி அவருடைய கதைகளேப் பற்றியும் கட்டுரைகளைப் பற்றியும் உற்சாகமாகப் பாராட்டிக் கூறினர். கள்வனின்

கல்கி கலை மன்றம் 271
காதலியில் வரும் முத்தையனையும் கல்யாணியையும்பற்றிக் கூறும்போது சபையோர், கண்ணிர் விட்டு விட்டனர். பார்த்திபன் கனவில் வரும் பொன்னனையும் வள்ளியையும் பற்றிக் கூறும்போதோ "கலகல" வென்று சபை சிரித்து மகிழ்ந்தது. இத்துடன் அவர் கின்று விட்டவில்லை. சிவகாமி யைப் பற்றிப் பேசியபோது அவர் சிவகாமியாகவே மாறி விட்டார். அவர் சிவகாமியைப் பற்றிப் பேசினரா? இல்லை அவளைப் போலவே நடனமாடினரா? என்பதை விளக்க முடியாது. திருமதி ரூபராணி ஜோஸப் என்னவோ ஆடாமல் அசையாமல் ஒலிபெருக்கியின் முன்னல் கின்று கொண்டுதான் பேசினர். ஆனல் சபையோர்தான் அவரு டைய பேச்சில் சிவகாமியின் நடனத்தையும், வீணை பவா னியின் வீணுகானத்தையும், பார்த்திபனின் வீரத்தையும், மகுடபதியின் தியாகத்தையும் கண்டு வியந்தவண்ணம் இருந்தனர்.
திரு கோ. ராஜகோபால் அவர்கள் போராசிரியர் கல்கி அவர்களை முற்றிலும் வேறு கோணத்தில் பார்த்தார். தாம் கண்டதைச் சபையோருக்குப் புரியும்படி விளக்கினர். கல்கியவர்கள் ராஜாஜியின் அரசியலில் ஊறி, ரஸிகமணி யின் இலக்கியத்தில் மூழ்கிப் பண்பட்ட விதத்தைப் பாவத் துடன் விளக்கினர். கல்கி அவர்கள் அரசியலைப் பத்திரிகை களில் படித்துவிட்டு எழுதவில்லை. தாமே அரசியலில் ஈடு பட்டுப் பல முறை சிறை சென்று அனுபவ பூர்வமாக எழுதினர் என்று கூறி, குழந்தைகளுக்குப் பால் வழங் குவதுபோல மண்டத்தில் கூடியிருந்த மக்களுக்கு இலக் கியப் பாலை வழங்கி மகிழ்ந்தார்.
திருமதி சரோஜினி ராமானுஜம் அவர்கள் பேரா ரிசியர் கல்கி அவர்கள் பெண் குலத்துக்குச் செய்த பெரும் சேவையைப் பற்றிக் குறிப்பிட்டார். தமிழ்ப் பெண் மணிகள் தமிழ்ப் பண்புடன் வாழ்வதற்காக முப்பது ஆண்டுகளாக அவர் எழுதிய எழுத்தைப் பற்றியும் பேச் சைப் பற்றியும் எடுத்து விளக்கினர். சங்கீதத்தை எழுதிக் காட்டிய தமிழ்ப் பெரியார் அவர் என்று பாராட்டினர்.

Page 148
272 ஈழநாட்டுப் பிரயாணம்
இந்தக் கல்கி கலை மன்றத்தை ஆரம்பித்து நடத்தி வரும் தமிழ் அன்பர் திரு ரா. மு. நாகலிங்கம் அவர்களை எவ்வளவு பாராட்டினுலும் தகும். கல்கி கலை மன்றத் துக்கு வந்தவர்களே அவர் மரியாதை செய்து அழைத்துப் போய் உட்காரவைத்த பண்பைப் பாராட்டுவதா? ஏதோ நெருங்கிய நண்பர்கள் வீட்டுத் திருமணத்துக்கு வருவது போல் கண்டி நகரத் தமிழ் மக்களைக் கல்கி கலை மன்ற விழாவுக்கு வரும்படி செய்திருந்தாரே அந்த அன்பைப் பாராட்டுவதா? வந்திருந்தவர்கள் குஷியாக இருக்கும்படி அருமையான பிரசங்கங்கள் ஏற்பாடு செய்திருந்ததைப் பாராட்டுவதா? எதைப் பாராட்டுவது என்று புரியவில்லை. ஆனலும் திரு நாகலிங்கம் அவர்களின் உயர்ந்த தமிழ் அன்பைப் பாராட்டியே தீரவேண்டும். அவரைப்போன்ற இளைஞர்களின் உற்சாகம் நிறைந்த தொண்டால் தான் இன்றையதினம் ஈழத்தில் தமிழ் உணர்ச்சி மேலோங்கி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.
கல்கி கலை மன்ற விழாவின் மூலமாகக் கண்டி நகரில் -ஏன்? ஈழநாட்டிலே தமிழ்த் தாய் அடைந்திருக்கும் மகத் தான வெற்றியை எண்ணிப் பெருமிதம் கொள்ளவேண்டி யிருக்கிறது. தமிழ்நாட்டிலும் தமிழ் கூறும் கல்லுலகிலும் தமிழ் மொழி உணர்ச்சி தழைத்து வளர்வது மட்டும் போதாது; தமிழ் மொழி உயர்ந்து ஓங்கவும் வேண்டும். தமிழ் தழைப்பதற்குரிய முயற்சிகளோடு தமிழை உயர்த் துவதற்குரிய முறைகளையும் தமிழ் மக்கள் தெரிந்து கடைப் பிடிக்க வேண்டும்.
தமிழ் மக்கள் தமிழ் மொழி வளர்ச்சியில் ஒன்றுபட்டு ஒருமுகமாக வேலை செய்யக் கற்றுக் கொள்ளவேண்டும். பின்னர் தாம் ஈடுபட்டிருக்கும் உயர்ந்த பணியை நன்கு புரிந்து கொண்டு பாடுபடவேண்டும்.
இதற்குத் துணை புரிவதற்கு முதலில் ஆங்காங்கு கல்கி கலை மன்றத்தைப் போன்ற தமிழ் வளர்க்கும் சங்கங்கள் அமைத்து அதன் மூலம் தொண்டாற்ற வேண்டும். எனவே, கல்கி கலை மன்றத்தையும், அந்தக் கழகத்தை நடத்தி வரும் தமிழ் அன்பர்களையும் மனப்பூர்வமாக வாழ்த்துகிருேம்.


Page 149


Page 150