கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்தில் இனிய நாட்கள்

Page 1


Page 2


Page 3
*
T
T
 


Page 4


Page 5


Page 6

ஈழத்தில் இனிய நாட்கள்
Glit). Glit). FiD
சிங்கப்பூர்
/9/兄タ
வெளியிட்டவர் :
எஸ். எஸ். சர்மா
10-13, BLOCK 33
TANGLIN HALT ROAD,
SINGAPORE 0314 Tel 624631

Page 7
No. of Copies 1500 First Edition January, 1982
Price: Singapore Dollars 8-00
SBN 9971 - 83 - 236 - 4
FASCINATING DAYS IN SRI LANKA
Printed by:
Owen Printers 144, Rangoon Road, SINGAPORE 0821.
Published by : S. S. SARMA 10-13, Block-33 Tanglin Halt Road, SINGAPORE-0314. Tel: 62463

ஈழம் தந்த எழுச்சி! ஈழத்தில் இருந்த நாட்கள் ஆறுதான்! இந்தக் குறுகிய காலத்தில் பாசமுடன் பழகிய நெஞ்சங்கள் பல ஈழத்தில் பார்த்தவை, கேட்டவை பற்றி இந்த நூல் வழி வெளிப்படுத்தியுள்ளேன்! யாழ்ப்பாணத்தையும் மற்றும் தமிழர் வாழும் பகுதிகளையும் பாராமல் எழுதப்படும் எந்த நூலும் ஈழத்தைப் பற்றி முழுமையாகத் தந்தது ஆகாது என்பதை நான் நன்கு உணர்கிறேன். எனினும் அதற்கான பயணத்தை மீண்டும் ஒரு முறை மேற்கொள்ளும் போது எழுதலாம் என்ற எண்ணத்துடன், இந்த நூலை வெளியிட்டுள் ளேன்! ஈழத்தில் எங்களுக்கான எல்லா ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்து உதவிய நண்பர்கள் திரு. கே. பாலச்சந்திரன், திரு எஸ். அந்தனி ஜீவா, ராகலை திரு. விசுவநாதன் ஆகியோருக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் பயணத்தின் போது ஆதரவு தந்த இதர அன்பர்களையும் நினைவில் கொண்டுள் ளேன். இந்த நூலை அழகிய முறையில் அச்சிட்டு உதவிய திருமதி. ஜானகி முத்துமணி அவர்களின் பணியும் பார்ாட்டுக்குரியது. வாழ்த்துரை வழங்கியுள்ள பெருந்தகையாளர்களுக்கும் எனது
கனிவான நன்றியைக் காணிக்கையாக்குகிறேன். தமிழ் மொழிக்கும் சமயத்திற்கும் எழுச்சியும் விழிப்பும்
ஏற்படுத்தியுள்ளவர்கள் ஈழத் தமிழர்கள் தமிழ்ச் சமுதாயத்தின் வெற்றியே ஈழத் தமிழர்கள் செய்யும்
முடிவில்தான் உள்ளது என்பதே எனது கணிப்பு "தமிழ் நாட்டில் எட்டு நாட்கள்" நூலை அடுத்து வெளிவரும் இந்தப் பயண நூலுக்கு நல்லாதரவைத் தந்துள்ளவர் களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
எஸ், எஸ். சர்மா

Page 8
to பண்பாட்டுப் பாலம் கி. லட்சுமண ջgu lit. M. A., Dip. Ed, முன்னுள் வித்தியாதிபதி, இலங்கை
*தமிழ் நாட்டில் எட்டு நாட்கள்’ என்ற பெயரில் அருமையான நூல் ஒன்றினை எழுதி, வாசகர்களுடைய பாராட்டினைப் பெற்ற சிங்கப்பூர் எழுத்தாளரும் கலைஞருமான திரு. எஸ். எஸ். சர்மா அவர்கள் இப்போது "ஈழத்தில் இனிய நாட்கள்" என்ற ஒரு நூலையும் வெளியிடுகின் ருர் என்பதை அறிந்து பெரிதும் மகிழ்கின்றேன்.
திரு. சர்மா அவர்கள் ஆற்றல் மிக்க எழுத்தாளர். பல வித கலைகளிலும் விற்பன் னர். நல்ல பண்பாளர். பழகுவதற்கு இனியவர். அவர் எழுதிய “தமிழ் நாட்டில் எட்டு நாட்கள்" என்ற நூல் சமயம், கலை, இலக்கியம், வரலாறு, பயணம் ஆகிய பல துறை அம்சங்களும் ஒருங்கு பொருந்திப் பயனும் சுவையும் நிறைந்ததாக அமைந்திருப்பதை அதனை வாசிப்போர் அனை
வரும் உணர்வர்.
தமிழ் நாட்டைப் பற்றித் திரு. சர்மா அவர்கள் எழுதிய அரிய நூலைப் போலவே அவர்கள் இப்போது இலங்கையைப் பற்றி எழுதியுள்ள நூலும் பயனும் சுவையும் பொதிந்ததாய் இருக்குமென்பதில் ஐயமில்லை.
இந்த நூல் ஒரு பயண இலக்கியமாய் மட்டுமன்றி, சிங்கப் பூருக்கும் இலங்கைக்குமிடையில் பண்பாட்டுப் பாலமாயும் அமையுமெனக் கருதி இதனைப் பெரு மகிழ்ச்சியுடன் வரவேற் கின்றேன்.

ஈழத்தில் இனிய நாட்கள் *மிக நுட்பமான செய்திகளை அறிந்து சொல்கிருர் சர்மா' வாகீச கலாநிதி திரு. கி. வா. ஜ. அவர்கள் போற்றுகிருர்,
இந்தி யா வின் பண்பாட்டோடு தொடர்புடையது இலங்கை, இலங்கை வாழும் தமிழர்கள் சில திறங்களில் தமிழ் நாட்டுத் தமிழரை விடச் சிறப்பாக இருக் கின்றனர். அவர்களுடைய தெய்வ பக்தியும் தமிழ்க்காதலும் மிகமிகப் பாராட் டத்தக்கவை. தமிழ் நாட்டிலிருந்து யார் போனுலும் இலங்கைத்தமிழர்கள் அன்பு ! ::::::: : டன் வரவேற்று உபசரிப்பதை ஒரு தனிக்கலையாகவே பயின்றி ருக்கின்றனர்.
சிங்கப்பூர்வாழ் தமிழரும் இந்தியன் மூவி நியூஸ்' மாத இதழாசிரியருமான திரு எஸ். எஸ். சர்மா அவர்கள் இலங்கை யாகிய ஈழநாட்டுக்குச் சென்று பல இடங்களையும் பார்த்தார். அங்குள்ள இயற்கை எழிலையும் Tமக்களின் அன்பையும், உபசரிப்பையும் அறிந்து இன்புற்றர்.
அதன் பயணுக எழுந்தது, 'ஈழத்தில் இனிய நாட்கள்" என்ற இந்தப் பயண நூல். தாம் சென்ற இடங்களையும், சந்தித்த பெரு மக்களையும் அங்குள்ளவர்களின் இயல்புகளையும் விரிவாகச் சொல்லி இருக்கிருர், மிக நுட்பமான செய்திகளையும் அறிந்து சொல்கிருர்,
பயண நூலுக்கு வேண்டிய பகுதிகள் எல்லாம் இதில் உள்ளன. தம்முடைய சொந்த அனுபவத்தை ஒருவர் தக்க முறையில் எடுத்துச் சொல்லும் போது சுவையாகத்தான் இருக்கும். 0LS ASASqSqqS S L S S S L S SSS S SY
இந்தப் புத்தகத்தைத் தமிழ் நாட்டு மக்கள் படித்துச் சுவை காண்பர். ஈழநாட்டு மக்களும் ஏனைய பிறநாட்டு மக்களும் படித்து மகிழ்ச்சி அடைவார்கள்.
இத்தகைய பயண நூல்கள் வெறும் வழிகாட்டிகளாக இல்லாமல், பயணம் செய்பவருடைய அநுபவத்தைச் சொல்லும் வகையில் அமைந்திருப்பதால்தான் இவற்றிற்கு இலக்கியச் சுவை உண்டாகிறது. காணுதவரும் கண்டது போன்ற அநுபவத்தை உண்டாக்குகின்றன!
இதை எழுதிய திரு. எஸ். எஸ். சர்மா அவர்களை நான் மிகப் பாராட்டுகிறேன்.
கி.வா. ஜகந்நாதன்

Page 9
ஈழத்தில் இனிய நாட்கள் பயன் தரும் நூல்
நாவலாசிரியை சிவசங்கரி அவர்களின் பாராட்டு!
சிங்கப்பூர் வாழ் தமிழர், *இந்தியன் மூவி நியூஸ்” மாத இதழைப் புதுமையாகவும் ரசிக்கும்படியும் தருகின்ற ஆசிரியர் திரு. எஸ். எஸ். சர்மா அவர்கள் எழுதியுள்ள “ஈழத்தில் இனிய நாட்கள்’ என்ற பயணக் கட்டுரையைப் படித்தேன்.
ஈழத்தில் வாழும் தமிழர்களின் நிலை, வரலாறு ஆகிய வற்றுடன், எளிய நடையில் தமது இனிய பயண அனுபவங் களை திரு. சர்மா இதில் வெளியிட்டுள்ளார்கள். புதிய விஷ யங்கள் பல இதில் இருப்பதால் பயனுள்ள நூலாக இது வெளி வருவது பாராட்டுக்குரியதாகும்.
தமிழரின் சிறப்பை உலகம் முழுதும் உணரச் செய்ய இது போன்று மேலும் பல படைப்புகளை பலரின் அன்பையும் பெற்ற திரு. சர்மா அவர்கள் வழங்க வேண்டும் என்பது என்
ஆசை.
அவருடைய நற்பணிக்கு என் அன்பும் நன்றியும் பாராட்டுக்களும்!
சிவசங்கரி
 

"ஒரு பயண நூலே திறம்பட எழுத எஸ். எஸ். சர்மாவிடம் கற்றுக் கொள்ளலாம்!”
என்கிருர் நாவலாசிரியை இந்துமதி.
ஈழத்தில் இனிய நாட்கள்-இதை ஒரு பயண நூல் என்ற எண்ணத்துடன் பிரித்துப் படிக்க ஆரம்பித்த எனக்கு போகப் போகத்தான் வெறும் பயண நூல் மட்டுமில்லை என்பது புரிந்தது. இதில் இலக்கிய நயத்துடன் இனிமை யாகத் தமிழ் தவழ்கிறது. சரித்திரம் தன் கம்பீரத்துடன் உலவுகிறது. வரலாறுகளும், வனப்பும் வெளிப்படுகிறது. மொத்தத்தில் ஆசிரியர் எஸ். எஸ். சர்மா தான் பயண நூலாசிரியரோ, திரையிதழ் ஆசிரியரோ மட்டுமில்லை, ஒரு இலக்கிய எழுத்தாளர், சரித்திர ஆசிரியர், புதிய கண்ணுேட் டத்தில் பயணக்கட்டுரை என்ற பகுதிக்கே புதிதாகப் பயணத்தை ஏற்படுத்தியவர் என்ற பொறுப்பிற்கும் பெருமைக்கும்கூட ஆளாகிருர்!
துரிதமாகவும். ஆதாயமாகவும் ஒரு தொழிலை நடத்த சிங்கப்பூரிடம் பாடம் கற்க வேண்டும் என்று நூலின் முதலில் விமான சேவையைப்பற்றி ஆசிரியர் குறிப்பிடுகிருர். அதையே, ஆசிரியருக்கும் குறிப்பிடலாம். சுவையாகவும், வரலாற்று விரி வுரைகளுடனும் ஒரு பயண நூலை எப்படித் திறம்பட எழுது வது என்ற கலையை இந்நூலாசிரியர் எஸ். எஸ். சர்மாவிடம் கற்றுக் கொள்ளலாம்!
ገ

Page 10
சரித்திரமும் வரலாறும் பின்னிப் பிணைந்த அதே அளவு எழுத்தில் நகைச்சுவை உணர்வும் சரளமாகக் கையாளப்பட்டி ருப்பது சர்மாவின் இன்னுெரு சாதனை. மனத்தை நெகிழ வைக்கிற சில இடங்களும் இதில் இல்லாமல் இல்லே. உதாரண மாக - திரு அமிர்தலிங்கத்தின் சந்திப்பு
"இந்தியன் மூவி நியூஸ்” ஆசிரியராக அதுவும் முப்ப தாண்டுக்கும் மேலாக இருக்கிற காரணத்தால் திரைப்படத் திற்கு வேண்டிய சுவைகளே தெரிந்து கொண்டிருப்பது போல - பயண நூலுக்குத் தேவையான அத்தனை சுவைகளையும் தெரிந்துகொண்டு கையில் எடுத்தால் படித்து முடிக்கிறவரை மூடி வைக்க முடியாதபடி சிறிதும் சுவாரஸ்யம் குறையாமல் எழுதி இருப்பது இந்நூலின் இன்னுெரு சிறப்பு நூலின் தலைப்பு 'ஈழத்தில் இனிய நாட்கள்!"
படித்து முடிக்கிறவரை நம் நாட்களும் இனிமையானவை தான்! ஈழத்தில் மட்டுமின்றி இன்னும் எத்தனையோ நாடு களுக்கும் பயணப்பட்டு அந்த இனிய நாட்களே நம்மோடு தன் இலக்கிய ரசனை மிகுந்த எழுத்தால் பகிர்ந்து கொள்வார்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடனும் அன்புடனும் திரு.எஸ். எஸ். சர்மாவை கேட்டுக் கொள்கிறேன்!
மிகுந்த பிரியத்துடன், இந்துமதி
।
॥
 
 

air husał Larat 3y தீே"ே Lurahimur Pab
■■。
己
鞘*-
*
MV,
唱 | F 霹”
T
s ::

Page 11
----
----
---- No
----
------------
|-!! ±|-
!!!!!!!!: |-|(±)',
-FIFTH * Trự, so *****口**g= "*"白唱「nannānāpā劑。
-----o uso III1songo :또한니크國: · · · · · · · · · · · - |-그너T* || - 1 : : | : " ( )
 
 
 
 
 
 
 

.■ () – ) -- o*) *** (o.
|- a:
*)奥碁
" ".
|× |-

Page 12
... ------
Uri
FLUTT aya
No.|- 侧) |- 「*「|-No ( ) 어원邬)·, ! *)■
---
朝
பாரre #?:*
விங்கைப்
La
g Liriko கிரு.
岛
L SLL SLLLS SLLLL S SLS SLSLSLSLSLS S SLLS SS
;#,"" :ان
L S S S LS SLSSLS SLL S SLLSS SLL SLL
I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

!No._(---- F-)
|-~~ ~~~~ ·---- ---- ---- - - - - - -!— No ----No ( )!!|- |-No.|- ( )..NoNo. ---------____________o : ( ) ---- - - - - --------· --------------------------------------------------------------------------------------------------디 :—------------T----------------------------- -----------------------------------------------------------------------------------------------T-T |-, !- T-「-|- _■
| - - - - -
----------- - - - - - - - - - --------------- - ----¬
_|- (* 1 :
திரு.
rful - சிசிமா விடை பெறு
lidir nafasi BLUFás az
கிருர்,
சந்தித்ததி: மிக்க
ofået r
tag
Li Talik dilir dh da ulda indir
மகிழ்ச்சி
|-

Page 13
T
 


Page 14
தாட் புன்வி
ஆகிம்
J 페 를 =#1 젊 짧 置 E == 職
冉 町 J # }
-------- ------ - - - - -
|---- |- ---- - - - -
(±|-
 

!----------温温胃里里量量量量雷雷雷雷 ======)里冒雷雷雷雷雷雷雷量)雷雷雷雷雷雷雷量雷雷雷雷雷雷具量雷雷雷雷雷雷
----= = = = = = = = = = = = = =|- 劑陣陣間===唱唱團團團團團團叫叫劃劃劃劃劃劃劃制肘劃****===*****日日日日日日間=*肌肌叫間間=温雷雷雷雷雷)■■■■■■ |-韃鱷■■■■■■■*********軍團中卧山口口劃圖刪劃劃劃 *中畢曲曲單曲唱團團團團團團團叫間團團團■■■■■■■■■****庫甲日日日日日日日團壘疊疊團團團團圍劃*間======中中間間叫鼎劃劃劑 *單曲鼎鼎鼎鼎鼎畢事疊團團團團團團團團團雷雷雷雷雷雷雷雷凰*** =========團團團團間劃劑劃劃• • • • • • •*雷雷雷雷雷雷雷雷雷雷雷歌
-*轉鱷口口===*鬥*** !! !! !! ) ■ ■ ■■■■■■■■■■雷雷雷雷雷雷雷雷雷雷雷雷雷雷雷)事墨翟墨 哺庫庫聞豐豐疊團團團團鼎鼎===*雷雷雷雷雷雷雷雷雷雷雷雷雷■■■■■■■■■***** 甲唱間===書雷團團團團團副團唐睿雷雷雷雷雷雷雷雷雷雷) No :■■■■■■■■■■■■■■劃劃劑* - - - - - - - ) +■■■■■■■■■■■雷雷雷雷雷雷雷雷雷雷量■■■■■■■■■■雷雷雷雷雷雷雷重■■■■■■■■■ |-*闇間日間*****「麒重量雷雷雷雷雷雷雷雷量量■■■■■■■■■雷雷雷雷雷雷量量量量青雷雷雷雷雷雷雷雷雷雷雷雷雷雷雷凰量重量 「****間即聞=====團團壘壘團團圍間間關■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■****曲=======*間團團副團雷雷雷雷雷 *軸轉轉轉鱷***劑鬥|---+ +-+ - - -■■■■■■■■■■■■耀雷雷雷雷雷雷雷雷雷==引副副町町雷雷重量雷雷
■■■■■■■雷雷雷雷雷雷雷雷雷雷雷■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■雷雷雷雷雷雷雷雷雷雷雷雷副目前副町副制■■■■■■ ==****豐鼎鼎鼎鼎* =====則叫團劃劃劑*** - - - - - - -雷雷雷雷雷雷雷量量量**********團團可==間間軸劃劃■■■■■量+ *****庫庫畢世間曲晶晶里團團團圍聞聞團團團劃■■■■■■■■■■雷雷雷雷雷雷雷雷雷雷雷雷雷雷■■■■■■■■■■■■■■■■■■■雷雷雷雷雷雷雷雷事蹟 *)量雷雷雷雷雷雷雷雷雷副副剧剧剧剧■■■■■■■■■■= = = = = = = = = = = = = + +雷雷雷雷雷凰事■■■■■■■■■■雷雷雷雷雷雷曾置雷雷雷雷雷雷 雷雷雷雷雷雷雷雷雷雷雷雷默剧韃日日日日日中中日制輕鱷■■■■■■■■■■■■■■■ - ) ! ! !ËEEEEEĦĦ::::::::::::EEEEEEEEEEEEEEEEEEEEEEËËĚĚĒĒĒĒĒĒĒ:■■■■■事中團聞日日間則劃
■■■■■■■■■■****=================********■■■■■■■■■■■■■事雪雷雷雷雷雷雷雷率歌雷雷雷雷i 雷雷雷雷雷雷雷凰*****間========間間間團團劃劃則劃雷-雷雷雷雷雷雷)+ + +嗜-雷雷雷)* * * * = 1
, !* * - - * * * ------------- 中 이 후 5 후 히 미 디디디 제 7 ** * :
。曹仁T卸马户也d题母. *—* 恥白中日『DL sus யாடுகிருர்,
---- ├─ -----.■----
*-)

Page 15
கண்டியில் உள்ள புத்தt பிரானின் புனிதப்பல் உள்ள கேசவிப்ான தலதா is firfields.
كيشتشيفتسمتسلط التابعيا
### + "HT:;": { :انتظ ف
2-न्म
i. -
| နီးရှိူး ဦးဦး၌ ,
YYYYYYYY
கண்டி செtலும் வழியில் ܢܘܘܽܘܫ விருந்துக்குப்பின் சா குடுங்ே குடன் இலங்கைத் தோழிவி இதுTகள் முடள் காட்சி தருகின்றன்.
 

----
45
圈
*...---- *玖*
· · ·..................!!!----
...
k لاله *
ரு சிவப்
Eudios
}Hف
சிரியர் தி
Lili திரு. சிவா.
Frans
திரு.
நாளிதழ் El Ft
4 4 sh d
Ll திமி ஆ יינץ,
f.பா.
"" கிறுமீ
கவனிக் புகைப்ப-க்
(E-saf
(±,±,±)
| lյ մ T
Tripleதி i şi
=|- ....!!!!!!F!T! ----·... ----- ~).|- !
மேலே
பரகேச

Page 16
| .
蚤国直 டேருக்கு உருளே
ாகத்
?: திரு * உருவாவதைக் கவனிக்கிரு
*、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

KARAANBARRIERENINGAR
-
ரகேசரி அச்சகத்தில் உள்ள மிகப் பழமையான அச்சுப்ப்டி எடுக்கும் சாத
蠶 i Alg. artirit.
13
L irid Lin T, Guftuar சர்மா குடும்பத்தினர்

Page 17
彎 குமரி ஜெயந்தியின் பரத
of illus,
t
| .
*飞 臀
 
 

鬥 கரடி தோழியருட சமர்வின் செல்பேர்
■

Page 18
தங்தக மத்திய LITT KALT  ேேப சங்கம் நடத்திய நீதி ஜெயந்திசம்ாவின் நடன நிகழ் சிவிங் இந்து மத்தத்திபேங் திரு. தன் ச சமிப் ழ் ள் இந்திரித்தட்டு ஒன்றைப் பரிசு | ஐக்கிருர் பின் இல் I. ILP IF if
: LT id =
 

இந்நீர்ந்து முந்திரிப்பருப்பு விற்கு #ಣಾಹ್ರಿಸಿ":
Tதிரு பட்ட ஒப்ாங்: T
சே ங் gto: नकन பாா
மற்குெரு சிங்.
==T =
閭 字。 墨 醬 இ * القليبيا

Page 19

■_
ஆாசி முகத்திடலில் சர்மா குழுவினர். பின் குல் த்ெரிவ 蠶 ட ரீ க ம ன் டி ବା
இனன்ட |ங்கோ கட்டிடம், கீழே
பேராதகனப் பூங்காவில் உள்ள கண் | L r iffa u ரேடி
闇

Page 20
... 1 a. s
* சந்திரன், இந்து மாமி சார்பிள் r திருமதி அமர்த்து உள்ளனர்
閭
* 上
**பிங் புத்தரின் புனிதப்பல் உள்ள தத மாளிகையில் திரு. சக ேேதி:
 

ஈழத்தில் இனிய நாட்கள்
ஈழ நாட்டைப்பற்றி நினைத்தாலே உள்ளத்தில் ஒரு வித எழுச்சி உணர்வு ஏற்படுகிறது.
என் பெற்ருேர் (காரைநகர் சே. மு. சாம்பசிவ ஐயர்-செல்லம்மாள்) ஈழத்திலிருந்து 19வது நூற் ருண்டின் இறுதியில் மலேயாவுக்கு நீராவிக்கப்பலில் பல நாள் பயணம் செய்து வந்து சேர்ந்தது பற்றிக் கதைகதையாகக் கூறியிருக்கிருர்கள்.
அவர்கள் மலேயாவுக்கு வந்த பிறகு மீண்டும் ஊருக்குத் திரும்பச் செல்லும் எண்ணமின்றி இங்கேயே காஃல ஊன்றி விட்டனர்.
இருவராக வந்த என்பெற்ருேர், பின்னர் தங்கள் சந்ததி களே உருவாக்கி பத்துக் குடும்பங்களாகப் பெருகிவிட்டன. அந்தக் குடும்பங்களும் இங்கேயே வேரூன்றிவிட்டன.
தந்தையர் நாடு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ளப்போகு முன் ஈழத்தையும் பார்த்துப் போக மனம் விழைந்தது.
தந்தையர் நாடென்ற பற்று மட்டும் காரணம் அல்ல ஈழத்திற்கு என்னே ஈர்த்தது. ஈழத்தமிழின் இனிமையும், மடல் வழி நெடுகிலும் பாசத்தைப் பொழிந்த இனிய நண்பர்களின் அழைப்பும் என்னே இழுத்தது.
நான் ஆசிரியராகப் பணியாற்றும் "இந்தியன் மூவி நியூஸ்" இதழிடம் அபிமானம் கொண்ட வாசகர்கள் இலங்கையிலும் ஏராளமாக இருந்தார்கள்.
இலங்கையில் தமிழ்ப் படத்தயாரிப்பு தொடங்கிய நாள் முதல் அது பற்றிய செய்திகள், கட்டுரைகளே இ, மூ.நி. யில்
25

Page 21
வெளியிட்டு வந்துள்ளேன். நான் நடத்தி வந்த “வேல்' இதழிலும் ஈழ நாட்டுச் செய்திகளை வெளியிட்டு வந்தேன்.
இலங்கைப் படவுலகம் பற்றி அவ்வப்போது கட்டுரை எழுதி வந்தவரான ராகலை விசுவநாதனும் தமிழ்நாடு போகும் வழியில் கொழும்பில் 2, 3 நாட்கள் தங்கிச் செல்லுமாறு எழுதியிருந்தார்.
1980 டிசம்பர் 17ந் தேதி கொழும்புக்குச் செல்ல முடிவு செய்தேன்.
உறவினர்கள்
ஈழத்தில் உற்ருர், உறவினர் நிறைய இருந்தாலும் அவர் களுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போய் விட்டது. திடீரென அவர்களிடம் குசலம் விசாரித்துக் கொண்டு குடும்பத் துடன் முன்னுக்குப் போய் நின்று அவர்களைச் சங்கடப்படுத்த நான் விரும்பவில்லை.
எங்கள் பயணத்திற்கு ஒரு வாரம் இருக்கும்போது திடீரென ராகலை விசுவநாதன் தாம் தமிழகம் செல்வதாகவும் தங்களைத் தக்கபடி கவனிக்க கொழும்பு கலைச்சங்கச் செயலாளர் திரு. கே. பாலச்சந்திரன் அவர்களை ஏற்பாடு செய் திருப்பதாகவும் எழுதியிருந்தார்.
திரு. பாலச்சந்திரன் அவர்களும் எங்கள் வரவை ஆவலு டன் எதிர்பார்ப்பதாக எழுதினர்.
"என்னங்க . முன் பின் யார் என்று தெரியாதவர். இலங்கையில் இறங்கத்தான் வேண்டுமா?’ என்று என் மனைவி பயணத்திற்கு முதல் நாள் வரை கேட்டுக் கொண்டே இருந் தார்.
* போவோம் . * "போவோம். பார்ப்போம். ஊரையும் மக்களையும் தெரிந்து
கொள்ள இது ஓர் நல்ல வாய்ப்பு” என்று மனைவிக்குத் தைரியமூட்டினேன்.
26 .

"அப்பா . கொழும்பு மெட்ராஸ் மாதிரி இல்லை. ரொம்பக் கிளின் சிட்டி என்று என் சிநேகிதி சொன்ஞள். போய்ப் பார்ப்போம்” என்ருள் மூத்த மகள் சாந்தி. இளையவள் ஜெயந்தியும் இளவல் ஆனந்தும் கொழும்பில் இறங்கத்தான் வேண்டுமென்று கையை உயர்த்திஞர்கள் மெஜாரிட்டி வின் !
صاح عد صح
கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியதும் பொருட்களை ஒப்படைத்து விட்டு சென்னை போகும் போது எடுத்துப் போக முடி யு மா என்று சாகர் டிராவலிங் நிர்வாகி திரு. சாமி அவர்களிடம் கேட் டேன்.
ஏனெனில் அவரிடந்தான் எங்கள் பயண டிக்கெட்டுகளை வாங்கியிருந்தோம். கொண்டு போகும் பொருட்களுக்கு இலங் கையிலும் தீர்வை செலுத்தி, பின் சென்னையிலும் செலுத்த நேர்ந்து விட்டால் . . ?
புறப்பட்டோம் *அதெல்லாம் ஒண்ணும் கவலைப்படாதீங்க சார், நீங்க" *டிரான்சிட் பயணி" என்கிறதாலே உங்க பொருட்களை கொழும்பு ஏர் போர்ட்லே வைச்சிட்டு, தேவைப்பட்டதை மட்டும் கையிலே கொண்டு போகலாம்!’ என்ருர் நண்பர் சாமி.
ஏர்லங்கா விமானம் இரவு 8 மணிக்குப் புறப்படுவதை உறுதிப்படுத்திக் கொண்டு, மாலை 6 மணிக்கே விமான நிலையம் வந்து அடைந்துவிட்டோம்.
விமான நிலையச்சடங்குகளை முடித்துக் கொண்டு விமானத் தில் ஏறிய போது மணி எட்டு அடித்தது.
சேலை கட்டிய சிங்களச் சிங்காரிகள் வரவேற்று இருக்கை களைக் காட்டினுர்கள். போய் அமர்ந்தோம்.
27

Page 22
சிங்கப்பூர் உதவி ஏர்லங்கா விமானங்கள் வானில் எழுந்து பறக்க
உதவி செய்துள்ளது சிங்கப்பூர் விமான சேவையே!
34 ஆண்டுகள் சேவையாற்றிய ஏர் சிலோன் பின் முடங் கிப் போனது.
சிங்கப்பூர் விமான சேவையின் துணையுடன் ஏர் லங்கா 1979ல் கேப்டன் எஸ்.ஆர். விக்ரமநாயகா தலைமையில் தொடங் கப்பட்டது.
பூரீலங்கா ஊழியர்களுக்குத் தக்க பயிற்சி தந்து மிகத் துரிதமாக இந்த விமான சேவை இயங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உதவியது. ஏழு மாதங்களில் கொழும்பு கட்டுநாயகா விமான நிலையத்தை ஏற்று நடத்தும் அளவுக்கு ஏர் லங்கா தகுதி பெற்றது.
1-8-1979 முதல் கொழும்பு விமான நிலைய சேவையை ஏர் லங்கா ஏற்றது.
விமான சேவை
துரிதமாகவும் ஆதாயமாகவும் ஒரு தொழிலை நடத்த சிங்கப்பூரிடம் பாடம் கற்க வேண்டும் என்பார்கள் 1 ஏர்லங்கா வின் வளர்ச்சி அதற்கு ஒர் எடுத்துக்காட்டு!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழங்கிய போயிங் 707 விமானங்கள் பாங்காக், பஹ்ரேன், பிராங்பர்ட், லண்டன், சென்னை, பம்பாய் கோலாலம்பூர், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏர் லங்கா பறந் தது. இன்று 14 நாடுகளுக்கும் -15 நகர்களுக்கும் ஏர்லங்கா சேவை விரிவடைந்துள்ளது.
இருப்பினும் தேசிய விமான சேவை என்பது ஒரு நாட்டின் கெளரவத்தைப் பிரதிபலிப்பது. ஆதாயம் காண்பது என்பது அடுத்து வருவது, ஏர்லங்கா சேவை இன்னும் இழப்பில்தான் நடைபெறுவதாக அறிந்தேன். ஆண்டுதோறும் இழப்பு இரண்டரைக் கோடி வெள்ளிக்கு மேல் என்று தெரிகிறது.
28

செயல் திறன் முன்பு சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் இயக்குநராக இருந்த திரு. கே. குலசேகரம் இப்போது ஏர்லங்கா நிர்வாகப் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செயல்படுத்தி வருகிருர்,
சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் போன்று ஏர் லங்காவும் சிறந்த சேவையாற்றுவதுடன், ஆதாயத்தைக் காணும் காலமும் அதிக தொலைவில் இல்லை.
米 米 米
நாங்கள் விமானத்தில் ஏறி இரண்டு மணி நேர மாகியும் புறப்படவில்லை.
இரவு 10 மணிக்கு மேல் சில பயணிகள் வந்து ஏறியதுமே விமானம் புறப்பட்டது.
கடைசிப்பயணி ஒடி வந்து ஏறும் வரை விமானம் (சிங்கப் பூர் ஏர்லைன்ஸ் அல்ல) சுணக்கப்படுவதை சென்னையில் பார்த் திருக்கிறேன்.
சேவை-குறிக்கோள்
ஏர் லங்கா நிர்வாகம் சேவை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டிருந்தது என்பதால் நேரம் ஓடிக்கொண்டிருந்தாலும் நாம் பொறுமை இழக்கவில்லை. ஆணுல் நம் இருக்கையிலிருந்த காதில் மாட்டும் இசைக் கருவியில் தமிழ்ப் பாட்டு எதுவும் கேட்க முடியாமல் இருந்ததுதான் எரிச்சலைத் தந்தது!
அந்த விமானத்தில் பயணிகளாக இருந்தோரில் பெரும் பாலோர் தமிழ் மொழி தெரிந்தவர்கள்.
தமிழுக்கு இடம் தமிழுக்கு உரிய இடம் தரப்படும் என முழங்கி வரும் இலங்கையை ஆளும் கட்சியினர், அதன் விமான சேவையில் தமிழ்ப் பாடல்களுக்கு இடம் தந்தால் என்ன? ஏர் இந்தியா,
29

Page 23
மாஸ், சிங்கப்பூர் விமான சேவைகளில் தமிழ் இடம் பெற்றிருக் கும்போது ஏர் லங்காவிற்கு என்ன கேடு என்ற இகழ்மொழி களை எளிதில் போக்கலாம். எதையும் போராட்டத்தின் மூலம் தான் பெறவேண்டும் என்பது தமிழின் தலைவிதியா ?
தமிழ்ப்பாடல்களைத்தான் காதுக் கருவியில் கேட்க முடிய வில்லை. தமிழ் அறிவிப்புகளையாவது சரியான உச்சரிப்புடன் இனிய நடையில் செய்யக்கூடாது? யாரோ சிங்களப் பெண் ஞெருைத்தி தப்புந்தவறுமாக மோசமான உச்சரிப்புடன் தமிழ் அறிவிப்பைச் செய்வதைக் கேட்டுப் பயணிகள் எள்ளி நகை யாடினர்.
இது சிரிப்பதற்குரிய காரியமல்ல, உடனே திருத்த வேண் டியதாகும்!
2-66) தருவது
தமிழ் மொழி பேசக்கூடியவர்களை வைத்து செம்மையாக ஏர் லங்காவில் அறிவிப்புகளைச் செய்வதுடன், காதுக்கருவியில் தமிழ்ப்பாடல்களையும் இடம்பெறச் செய்தால் தமிழர் உள்ளங் கள் உவகையடையும். அதையும் உடனடியாக அவர்கள் செய்ய வேண்டும். அடிக்கடி இரு நாட்டுக்குமிடையே பயணம் செய் வோரின் விருப்பம் இது என்பதை ஏர் லங்கா நிர்வாகிகள் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் விந்தை!
சும்மா சொல்லக்கூடாது காதுக்கருவியில் இலங்கை நாட் டைப் பற்றிய இனிய ஆங்கில வர்ணனை அபாரம்! அந்த நாட் டைக் காண வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுவதாக அது அமைந்திருந்தது. இதுபோல் தமிழிலும் விளக்கம் இருந்தால் எவ்வளவு நன்ருக இருக்கும். ஆங்கிலப் பாடல்களையும் சிங் களப் பாடல்களையும் கேட்டுக் கொண்டே இருந்தது போரடிப் பதாக இருந்தது. தமிழிசை கேட்க முடியாததால் காது மந்த மானது போன்றிருந்தது.
ஒரு வழியாக விமானம் இரவு 10 மணிக்குப் புறப்பட்டது
30

நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் கொழும்பு கட்டுநாயகா விமான நிலையத்தில் வந்திறங்கியது நம் விமானம்.
பூரீலங்காவின் குளிர்ச்சியான தென்றல்காற்று எங்களை வரவேற்றது.
விமான நிலையத்தில் திரு. பாலச்சந்திரன் வந்திருப்பாரா என்ற கலவரமுடன் சுற்றுமுற்றும் பார்வையை ஒட்டினேன்.
கனிவான சோதனை
வெளியிலிருப்போரைக் கண்டுகொள்ள முடியாதபடி அடைப்பு தடுப்பாக இருந்தது.
விமானத்திலிருந்து இறக்கப்பட்ட பெட்டிகளைப் பின்னர் சென்னைக்குக் கொண்டு போக வேண்டியிருந்ததால் அங்குள்ள * பாண்டில் ஒப்படைத்தோம்.
விமான நிலைய சுங்க அதிகாரிகள் கனிவாக நடந்து கொண்டனர்.
பாஸ்போர்ட் சோதனைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்தோம்.
திரு. பாலச்சந்திரன் எங்களை அடையாளம் தெரிந்து கொண்டு ஓடி வந்து வரவேற்ருர்.
மாலை சூட்டினர்
தமது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் கலைச்சங்க உறுப் பினர்களையும் அழைத்து வந்து நறுமண மலர் மாலைகளை அன் புடன் எங்களுக்குச் சூட்டி எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்!
அகம் கனிந்த வரவேற்பைப் பெறும்போது வயிற்றைக் கிள்ளிய பசிகூட மறந்துபோய் விடுகிறது! எனது త్రాడిణా6 யாரும் நானும் சைவ உணவுக்காரர்கள் என்பதை முன்
கூட்டியே தெரிவிக்காததால் விமானத்தில் எங்களுக்குச் சைவ
3.

Page 24
உணவு கிடைக்கவில்லை. பிஸ்கட்டும் காப்பியும் மட்டுமே பரிமாறிஞர்கள்! "
முன்பின் சந்தித்திராதவர்களின் உற்சாகமான வரவேற் பில் திணறிப் போனுேம்,
வரவேற்பு
அரசியல், சமூகத் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் மட்டுமேதான் வரவேற்புக்குரியவர்கள் என்பதில்லை, எந்த நாட்டிலிருந்தாலும் ஏதோ ஒருவிதத்தில் மொழிக்காக, கலைக்காக, மக்களுக்காகப் பங்காற்றியிருக்கிருேம் என்பது தெரிய வரும்போது அதைப் பாராட்டிப்போற்றி வர வேற்கும் பெரிய மனம் கொண்டவர்களும் இருக்கிருர்கள் என் பதை அன்றுதான் தெரிந்து கொண்டோம். எங்கள் உள்ளம் நன்றி உணர்வால் பரிமளித்தது.
திரு. பாலச்சந்திரன் ஒரு பேருந்து ஏற்பாடு செய்து எல் லோரையும் அழைத்து வந்திருந்தார். பாவம், அவர்கள் மூன்று மணி நேரம் தாமதமாக விமானம் வந்தபோதும் பொறு மையுடன் காத்திருந்தார்கள்!
இருளை அகற்றித் தண்ணுெளி பரப்பிய நிலவில் ரம்யமாகக் காட்சியளித்தது கொழும்பு நகர்!
ffGLT 6S
விமான நிலையத்திலிருந்து கொழும்பு நகர் 34 கிலோ மீட் டர் (21 மைல்) இருந்தது.
அந்த இரவின் அமைதியை கலகலவென்ற சிரிப்பும் பேச் சொலியும் நாங்கள் சென்ற பேருந்தில் எதிரொலித்துக் கலைத்தது.
எங்கள் வாகனம் ராமகிருஷ்ணு மிஷன் தங்கும் விடுதியில் வந்து நின்றது.
அழைத்து வந்த அன்பர்களுடன் சற்று நேரம் உரையாடி விட்டு அனுப்பும் போது இரவு மணி ஒன்றரை சிங்கப்பூர் நேரப்படி மணி மூன்றரை!
32

அமைதியான அந்த விடுதி கடற்கரை அருகிலிருந்ததால் ஓம். ஓம் என்ற அலை ஓசை சந்தம் தவருமல் ஒலித்துக் கொண் டிருந்தது.
இயற்கை எழில்
விடுதியின் முன்னிருந்த இளந்தென்னங்கீற்றுகளினூடே நிலவு எழிற்கோலம் காட்டியது. தென்றல் காற்றின் சலசலப் பில் நிலவின் பொன்னுெளி தென்னங்கீற்றுகளில் பட்டுப் பள பளத்தது. நம் பட்டணத்தில் காண முடியாத இயற்கை எழில் காட்சி,
அந்த ரம்யமான சூழலில் அலுப்பு நீங்கி அயர்ந்த உறக் கம் வந்தது. அதுவும் சற்று நேரமே!
ஆதியும் அந்தமுமில்லா அரும் பெருஞ்சோதி
யை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின் செவிதான். என்ற பாடல் அந்த இரவில் இனிமையாக ஒலிக்கபடுக்கையை விட்டுத் துள்ளி எழுந்தேன்.
பஜனைக் குழு சங்கொலி, சேமக்கலம், ஜால்ரா இசைமுழங்க பஜனைக்குழு வினரின் பாடல் கணிரென ஒலித்தது.
நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வெளியே 15, 20 பேர் கூடியிருந்து பாடிக்கொண்டிருந்தனர்.
மார்கழி மாதப் பஜனை அது. தீந்தமிழில் திருவெம்பாவைப் பாடல்களைக் கேட்க இனிமையாக இருந்தது.
கொட்டும் பணியில் தனுர் மாதத் தணிப்பைத் தாங்கிக் கொண்டு பாடுகிறவர்கள் நல்ல குரல் வளத்தைப் பெற முடியும்,
புகழ் பெற்ற பாடகர்கள் தொண்டைக் கரகரப்பையும் பிசிறையும் போக்க விடியற்காலையில் கிணற்றுக்குள்ளோ குளத் தில் குளிர் நீரிலோ பாடிப் பயிற்சி செய்திருக்கிருர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
33

Page 25
வைகறைப் பாடல் மார்கழி மாத பஜனைக் குழுவில் பாமாலைகளைப் பாடுவதால் பக்தி மட்டும் வளர்வதில்லை, நல்ல பாடகர்கள் உருவாகவும் வழி பிறக்கும்.
ராமகிருஷ்ணு விடுதியில் தங்கியிருந்த ஐந்து நாட்களும் அன்ருடம் அதிகாலையில் மார்கழி பஜனைப் பாடல்கள் பரவச மூட்டின. நடுங்க வைக்கும் பணி கொட்டும் வைகறையில் படுக் கையை விட்டு எழ நம்மில் எத்தனை பேர் தயாராயிருக் கின்றனர்? எத்தனை பேர் இப்படிக் குழுக்களாகப் பாடச் செல் வார்கள்? f
ஆண்கள் மட்டுல்ல, பெண்கள், பிள்ளைகள்கூட பனி வாடைக் காற்றைப் பொருட்படுத்தாமல் இறைவன் துதிப் பாடல்களை இனிமையாகப் பாடிச்சென்றனர்.
“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னுளால் நீராடப் போதுவீர் போதுமினே நேர்இழையீர்!” என்ற பாடல் காதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது!
மறு நாள் காலையில் ஒன்பது மணிக்கே பாலச்சந்திரனும் அவரது துணைவியார் யோகா மற்ருெரு பத்திரிகையாளரான அந்தனி ஜீவா ஆகியோரும் வந்துவிட்டனர்.
பாலச்சந்திரன் 'சிலோன் டெய்லி" என்ற ஆங்கில நாளி தழில் பணியாற்றி வந்தார் ஈழத்தின் மிகப்பழைய நாளேடு களில் இதுவும் ஒன்று. அத்துடன் கொழும்பில் கலை சேவை யிலும் முக்கிய பங்காற்றி வந்தார்.
பாலச்சந்திரனின் துணைவியார் யோகா பத்திரிகை. வானெலி, கலைத்துறைகளில் நிரம்பிய ஈடுபாடு கொண்டவர்.
பெரிய திட்டம்
பாலா எங்களுக்காகத் தயாரித்திருந்த நீண்ட நிகழ்ச்சி நிரலைப் பார்த்ததும் வியப்பால் என் விழிகள் மலர்ந்தன.
34

ஏதோ இரண்டு, மூன்று நாட்கள் சுற்றிப் பார்த்துப் போக குடும்பத்துடன் வந்திருந்த எங்களுக்கு, காலை முதல் இரவு வரை சந்திப்புகள், விருந்துகள், சுற்றுலா எனப் பல திட்டங் கள் போட்டு வைத்திருந்தார்.
'இதென்ன நடக்கக்கூடிய காரியமா?” என்று நான் கேட் டதும் "எல்லாம் திட்டப்படி நடக்கும் சார்!’ என்ருர் பாலா உறுதியான குரலில்!
"எங்களால் உங்கள் நேரத்தை வீணடிக்கப் போகிறீர்கள்! நீங்கள் விமான நிலையத்தில் தந்த மிகப் பெரிய வரவேற்பே எங்களை மகிழ்ச்சியில் திணற வைத்துவிட்டது. இப்போது நீங்கள் போட்டிருக்கிற திட்டங்கள் எங்களை மலைக்க வைக் கின்றன!” என்றேன்.
விருந்தோம்பல் "நாங்கள் அன்புடன் செய்கிற ஏற்பாடுகளை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்' என்ருர் திருமதி யோகா.
நாட்டுக்கு நாடு விருந்தோம்புவதில் தமிழர்கள் உயர்ந்து விடுகின்றனர்.
இந்தோனேஷியாவில் இரு தடவை நாடகங்களை நடத்தச் சென்றபோது அங்குள்ளோர் செய்த உபசரிப்புகளைப் பார்த்த தும் சிங்கப்பூர், மலேசியர்களை மிஞ்சிவிட்டார்கள் எனப் பெருமிதப்பட்டோம். ஆணுல் இலங்கையிலோ தமிழகத்தை விட இன்னும் ஒரு படி உயர்ந்து விட்டனர் விருந்தோம்பலில். முன்பின் அறியாதவர்கள் அன்பைப் பொழியும் போது அவர்கள் வாழும் நாட்டின் மீதும் மக்கள் மீதும் நம் மதிப்பு உயர்ந்து விடுகிறது.
“உங்களுக்கு இங்கே எப்படி வசதிகள் எல்லாம்.? ' அந்தனி ஜீவா அக்கறையுடன் விசாரித்தார்.
தேநீர் “மதி நிறைந்த மார்கழி நன்னுளில் வைகறையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்தோம். அரிசிப் புட்டும் சாம்பாரும்
35

Page 26
அருமை. தேநீரும் கிடைத்தது. காலையில் சுடச்சுட காப்பி அருந்தியே பழக்கம். இங்கே தேநீர் மட்டும்தான் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள்!' என்றேன்.
"இங்கே எல்லா இடங்களிலும் பெரும்பாலும் தேநீர்தான் கிடைக்கும்! “ என்ருர் அந்தணி!
தேயிலை பெருமளவில் விளையும் நாடு என்பதை நினைவு படுத்துவது போல் அடிக்கடி தேநீரையே அருந்தினுேம், இரண்டு நாளில் எனக்கும் அலுத்துவிட்டது. ராமகிருஷ்ணு விடுதிக்கு எதிரே இருந்த பிரைட்டன் ஒட்டலில் காப்பி சாப் பிடப் போய்விடுவோம்! அங்கே காப்பி ஒரு கப் 20 ரூபா என்று பில் போட்டு வாங்கினர்கள்! என்ன விலை கொடுத்தாலும் காப்பியின் சுவைக்கு எது ஈடாகும்!
காலேக்கதிரவன்
எல்லோரும் இரு கார்களில் ஏறி அமர எங்கள் பயணம் தொடங்கியது.
கடற்கரை வழி உள்ள தெருவில் கார் சென்றபோது காலைக்கதிரவன் எங்களை வரவேற்பது போல் ஒளிக்கதிர்களை பரப்பியிருந்தான்! கடற்காற்று இதமாக வீசியது.
**இது என்ன இடம்?" என்று கேட்டேன்.
“வெள்ளவத்தை!” என்ருர் அந்தனி ஜீவா.
வெள்ளவத்தை எங்கோ கேட்ட பெயராக இருக்கிறது என்று யோசனையில் ஆழ்ந்தபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு வானுெலியில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை இரவுகளில் வெள்ளவத்தை பிள்ளையார் கோயிலின் பூசை, வழிபாடுகளை நேரடியாக ஒலிபரப்புவதைக் கேட்ட நினைவு வந்தது.
பம்பலப்பிட்டி "இங்குள்ள பிள்ளையார் கோயில் பிரபலமானது" என்ருர் ust 6).T.
36

'இது பம்பலப்பிட்டி, இது கொள்ளுப்பிட்டி!” என்றும் சொல்லிக் கொண்டே வந்தார் அந்தணி.
தமிழ்நாட்டில் நிறையப் பட்டிகள் உள்ளன. இங்கே பிட்டி என்கிருர்கள் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன். கொள்ளுப் பிட்டி வந்ததும் "இதோ பார்த்தீர்களா?" என்ருர் அந்தணி.
"ஏன் என்ன, குதிரைகளா?" என்று கேட்டேன். 'நீங்க என்னங்க கொள்ளு இருக்கிற இடத்தில் குதிரை கள் இருக்கும் என்று நினைக்கிறீர்களே! அதோ அந்த மாளி
கையைப் பார்த்தீங்களா?”
அலரி மாளிகை
'ஆஹா ரொம்ப அழகாய் இருக்கிறது '
*அதன் பெயர் அலரி மாளிகை! "
'அலரிப் பூக்கள் அங்கே நிறைய இருக்கும் போலி ருக்கிறது!’
'இல்லீங்க. இது இலங்கைப் பிரதமரின் உத்தியோக பூர்வமான இல்லம்! "
"அப்படியா?. காரை நிறுத்துங்கள்!'.
கார் நின்றது.
"ஏன் பிரதமரைப் பார்க்கவா? அவரைப் பார்க்கத்தானே பாராளுமன்றத்திற்குப் போகிருேம்!' - இது பாலா.
"ஒ . அப்படியா ? சரி புறப்படுவோம். நான் பிரதமரின் மாளிகையையாவது பார்க்கலாம் என்றுதான் காரை நிறுத்தச் சொன்னேன். நீங்கள் பிரதமரையே காட்டுகிறேன் என்கிறீர் கள். அந்தப் பாக்கியம் எல்லோருக்குமே கிடைக்காது!" என்றேன்.
கார் பாராளுமன்றத்தை நோக்கி விரைந்தது.
37

Page 27
இனப் பூசல்
எங்கள் உரையாடல் ஈழத் தமிழர்கள் நடத்திவரும் உரி மைப் போராட்டம் கலவரங்கள் பற்றிய திசைக்குச் சென்றது. கொழும்பு போன்ற நகர்களில் பெரும்பான்மைச் சிங்களவர் களின் நடுவே வாழும் தமிழர்கள் நிலை இனப் பூசல்களின் போது எங்ங்ணம் இருந்தது என்று திரு. பாலாவிடம் கேட் டேன்.
“சிங்களவர்களும் தமிழர்களும் சேர்ந்து வாழும் பகுதி களில் பகைமை உணர்வு இருப்பதில்லை. ஆனல் அதைத் தூண்டிவிட சிலர் முனையும் போது இக்கட்டான நிலை ஏற்பட வே செய்கிறது !" என்ருர் பாலா.
சிங்கள - தமிழர் இனக் கலவரங்களால் ஏற்பட்ட இரத்தக் களரி பற்றிப் பலரும் பின்னர் கதை கதையாகக் கூறினுர்கள். நெஞ்சை உலுக்கும் அது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்றே நாம் உளமார நினைக்கிருேம்.
அந்தச் சம்பவம்
1974 ஜனவரி 10ந் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழ் மாநாட்டில் திரண்டிருந்த ஐம் பதினுயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூட்டத்தை நோக்கி போலீ சார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி, துப்பாக்கிச் சூடுகளைக் கிளப்பி நடத்திய அமளி, பெரிய கலவரமாகி, பல அப்பாவி மக்கள் உயிர்கள் பலியாகின. இந்தச் சம்பவம் காலத்தால் மாருத வடுவாக தமிழ் மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஆழப் பதிந்துள்ளது.
“கொலை வாளினை எடடா - மிகு கொடியோர் செயல் அறவே குகை வாழ் ஒரு புலியே உயர்
குணமே விய தமிழா”
என்னும் பாரதிதாசனின் பாடலுக்கு ஒப்ப தமிழ் ஈழ விடுதலைப்
38

புலிகள், சிங்களவர் ஆட்சியிலிருந்து தமிழர் வாழும் பகுதி களுக்கு விடுதலை பெற வேண்டி தலைமறைவாக இயக்கங்களை நடத்தி வருகிறது.
இதற்கெல்லாம் அமைதியான வழியில் ஒரு தீர்வு ஏற்பட வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமுமாகும். வன்செயல் கள், படுகொலைகள், கலவரங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. இவை நாட்டை அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும், ஆகவே ஆளும் கட்சியினர் தமிழரின் நியாயமான உரிமைகளை விட்டுக்கொடுத்து, சுமுகமாக இவற்றைத் தீர்க்க முன்வர வேண்டும் என்பதே நம் விருப்பம் !
资 决 荣
பிர்மாண்டமான கட்டிடத்தின் முன் எங்கள் கார் கள் வந்து நின்றன.
காலைக் கதிரவனின் ஒளிபட்டு பளிரெனக் காட்சியளித்த அந்தக் கட்டிடந்தான் பாராளுமன்றம். சுற்றிப் போலீசார் நீட்டிய துப்பாக்கியுடன் காவல் காத்து நின்றனர்.
திரு. பாலா அந்தக் காவல் அதிகாரியிடம் சென்று ஏதோ கூற, அவர் எங்களை ஒரு நோட்டம் பார்த்த பிறகு உள்ளே போக அனுமதித்தார்.
தேசிய அரசப் பேரவை
“தேசிய அரசப் பேரவை என்று இந்தப் பாராளுமன்றத் தை அழைக்கின்றனர்" என்ருர் அந்தணி.
“பாராளுமன்றம் என்ருல் உலகத்தை ஆளும் மன்றம், தேசிய அரசப் பேரவை பொருத்தமான பெயர். எங்களூரில் நாடாளு மன்றம் என்கிருேம். சென்னையில் சட்டசபை என் பார்கள்” என்றேன்.
*பாராளுமன்றம் என்பதற்கு உலக நடவடிக்கைகளை விவாதிக்கும் மன்றம் என்றும் சொல்லலாம்" என்ருர் என் துணைவியார்.
39

Page 28
"அது சரி. ஆனல் உள்ளூர் நடவடிக்கைகளைக் கவனிக்க வே இவர்களுக்கு நேரம் இல்லை. பிறகு எங்கே உலக விவ காரங்களைக் கவனிக்கிறது" என்ருர் திருமதி பாலா.
“உஷ் . உங்கள் பேச்சை வீட்டில் வைத்துக் கொள்ளுங் கள். இது அரசியல்வாதிகள் பேசும் இடம். நீங்கள் பேசாமல் வாருங்கள் !" என்ருர் பாலா தன் துணைவியார் பக்கம் திரும்பி !
தமிழில் . அகன்ற மாடிப் படிகளில் ஏறி மேலே சென்ருேம். எங்கும் சிங்கள மொழியில் மட்டுமே அறிவிப்புப் பலகைகள் இருந்தன. ஓர் இடத்தில் மட்டும் தமிழ் அறிவிப்பு எங்கள் விழிகளை மலர வைத்தது. அது எதிர்க் கட்சித் தலைவர் திரு. அமிர்தலிங்கம் அவர்களின் அறையை அடைவதற்கான வழி எனத் தமிழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழர் இருக்குமிடத்திலாவது தமிழ் வாழ்கிறதே என்று வாழ்த்திக் கொண்டே அவர் அறையை அடைந்தோம்’
நெடிய உயரமுடைய ஒருவர் வேட்டி, சால்வை அணிந்து புன்னகையுடன் எங்களை வரற்ேருர்,
“வணக்கம் ஐயா! உங்களை நேரில் சந்தித்தில் மிகவும் மகிழ்ச்சி. படத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசமாக இருக்கிறீர்கள்’ என்றேன். திரு. அமிர்தலிங்கம் 'இவர் தான் திரு. அமிர் த லிங் கத்தின் செயலாளர் பேரின்பநாயகம்” என்று கூறி அறிமுகப்படுத்தினுர் பாலா.
என் அசட்டுத் தனத்தை புன்னகையால் சமாளித்தேன். எங்களை இன்முகத்துடன் வரவேற்று அமரச் சொன்னர் திரு. பேரின்ப நாயகம்.
திரு. அமிர்தலிங்கம் அவர்கள் தமிழ் ஆசாரப்படி வேட்டி சர்ல்வையுடன், கூப்பிய கரமுடன் எங்களை வரவேற்ருர்,
40

தனிப்பெருந்தலைவர் 35 லட்சம் ஈழத் தமிழர்களின் தனிப்பெருந் தலைவராகப் போற்றப்படும் திரு. அமிர்தலிங்கம் அவர்களின் ஆஜானு பாகுவான தோற்றம், அன்பு பரிமளிக்கும் பார்வை, கணிவான மொழி இவை அனைவரையும் வசீகரித்துள்ளன.
திரு. பாலா எங்களை அறிமுகப்படுத்தி வைத்தார். சுவையான தேநீருக்கிடையே சிங்கப்பூர், ... மலேசியா, இலங்கை தமிழக மக்களின் நிலை, மொழி வள்ர்ச்சி, பிரச்னைகள் குறித்து நாங்கள் கருத்துப் பரிமாற்றம் செய்தோம்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் தாம் வருகையளித் திருப்பதாகவும் அங்குள்ளவர்கள் நம் மொழி, பண்பாட்டு வளர்ச்சியில் காட்டும் ஆர்வம் தம்மைப் பெரிதும் கவர்ந்திருப் பதாகவும் திரு. அமிர்தலிங்கம் கூறினுர்,
இலங்கைத் தமிழர்களின் மொழி, உரிமை பற்றிய விவாதத் தில் ஈடுபட்டோம்.
அமைதி வழியில்.
"முன்பெல்லாம் புரட்சி, போராட்டம் என்று அவற்றில் தீவிரம் காட்டினுேம். இப்போது அமைதி வழியில் எங்கள் லட்சி யத்தை அடைய முனைந்திருக்கிருேம்' என்ருர் தமிழர் தளபதி.
இந்த நூல் அச்சிலிருக்கும் போது யாழ்ப்பாணத்தில் ஊராட்சி மன்றத் தேர் த லின் போது பெரும் அமளி மூண்டு, பல உயிர்கள் பலியாகின. ஊரடங்குச் சட்டம் விதிக்கப் பட்டது. அமிர்தலிங்கம் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார். அமிர்தலிங்கத்தின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக் கட்சி நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தது. எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கத்தின் மீது நம்பிக் கையில்லாத் தீர்மானத்தை ஆளும் கட்சி கொண்டு வந்தது. தொடர்ந்து மேலும் பல கலவரங்கள் இலங்கையின் பல பகுதி களில் 1981 ஆகஸ்டில் மூண்டன. இந்த இனக் கலவரங்கள், வன்செயல்களிஞல் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டது.
41
B

Page 29
ஒன்றுபடுத்தியது
திரு அமிர்தலிங்கம் பொதுச் செயலாளராக உள்ள தமிழர் ஐக்கிய முன்னணி 1976ல் அமைந்தது.
சிங்களவர்களின் தலைமைத்துவத்தில் தமிழர்களின் மொழி, உரிமை, சமய, பண்பாடு அழிந்துவிடாமல் காக்க வேண்டு மென்ற குறிக்கோளில் பிரிந்து கிடந்த தமிழர்களின் அமைப்பு களே ஒன்றுபடுத்தியது தமிழர் ஐக்கிய முன்னணி. இதில் முஸ்லிம் ஐக்கிய முன்னணியும் இனந்துள்ளது.
தனித்த ஆட்சி
இலங்கை இப்போது ஒரே நாடாக இருந்தாலும் உண்மை யில் சிங்கள நாடும் தமிழ் ஈழமும் இணைந்ததாகும்.
வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே சிங்கள நாடும் தமிழ் ஈழமும் தனித்தே ஆட்சி செலுத்தி வந்துள்ளதாக சிங்கள வரலாற்று நூலான மகாவம்சமும் கூறுகிறது.
சேனன், குட்டிக்கன், ஈழாழன் போன்ற தமிழ் மன்னர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செலுத்தி வந்ததை யும் பல போராட்டங்களுக்குப் பின்னர் சிங்களவர்கள் தமிழர் களிடமிருந்து ஒதுங்கிச் சென் று தெற்கில் அரசாட்சியை அமைத்ததையும் வரலாறுகள் கூறுகின்றன.
4-2-1948 ல் பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. தமிழ் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 பார்விமெண்ட் உறுப்பினர்களில் 15 பேர் தமிழர்களுக்குத் தனி உரிமை தராத அரசியல் சட்டத்தை ஏற்க மறுத்துப் புறக்கணித் தனர். அரசியல் சட்டம் சிங்களவர்களுக்கே சாதகமாக இருப் பதைச் சுட்டிக்காட்டி அதனே எதிர்த்தே வந்துள்ளது தமிழர் ஐக்கிய விடுதலே முன்னணி,
壹 * 背 எதிர்க் கட்சித் தலைவர் என்ருல் எதிர்ப்பு, புரட்சி, போராட்டம் என்று அனல் பறக்கப் பேசுவார் என்று
42

எதிர்பார்த்த எங்களுக்கு, இலங்கைத் தமிழ்த் தளபதி திரு அமிர்தலிங்கத்தின் ஆழ்ந்த அமைதியான உரை வியப்பையே தந்தது.
“எடுத்த குறிக்கோளில் வெற்றி பெறுவதுதான் நமது திட்டம், அராஜக முறைகளே விட அமைதியான வழியில் அடைய முடியும் என்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது ஆஜல் வன் செயல் கட்டவிழ்த்து விடப்படும் போது விளைவுகள் விபரீதமாக முடிந்து விடுகின்றன" என்று கூறிய அவர் ஈழத்துப் புலிகள் நடத்தும் பயங்கரவாதத்துக்கும் தமது கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் தெளிவு படுத்தினூர்.
முன்னர் ஆட்சியிலிருந்து இப்போது எதிர்க்கட்சியாகி யு ள்ள திருமதி சிறிமா பண்டாரநாயகாவின் பூரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட திரு. அமிர்தலிங்கத்தின் ஆதரவையே இப்போது நாடி நிற்கிறது.
அழகிய வெளியீடு.
திரு. அமிர்தலிங்கம் அவர்களிடம் நான் "எழுதிய தமிழ் நாட்டில் எட்டு நாட்கள்" நூஃப் வழங்கினேன்,
*அருமையான பதிப்பு, அழகிய வெளியீடு' என்று அந்த நூலின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தபடி கூறிஞர்.
"எட்டு நாட்களில் தமிழ் நாட்டைப் பார்த்து விட்டு இவ்வளவு பெரிய நூலே எழுதியிருக்கிறீர்களே 11 என்று வியப்புடன் கூறினும் தமிழர் தளபதி.
"இதுபோல் இலங்கைப் பயணத்தைப் பற்றியும் நூல் வெளியிடுவீர்களா?" என்று கேட்டார்.
தமிழர் பிரதிநிதி "நாங்கள் இங்கே நான்கைந்து நாட்களே தங்க எண்ணி புள்ளோம், வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்குப் போகவும்
3.

Page 30
அவகாசம் கிடைக்கவில்லை. இருந்தாலும் உங்களைப் போன் தந்நலமற்ற சேவையாளர்களைச் சந்தித்த பிறகு நூல் ஒன்றைச் சிறிய அளவிலாவது வெளியிடவேண்டுமென்ற ஆர்வம் ஏற் பட்டுள்ளது!" என்று கூறினேன்.
"யாழ்ப்பாணம் போக முடியவில்லை. அங்குள்ளோரின் அன்பான விருந்தோம்பல் பண்பை அறிய முடியவில்லே என்ற மனக்குறை எங்களுக்கு இருந்தது. ஆணுல் தமிழ்ப் பேசும் மக்களின் பிரதிநிதியான உங்களைப் பார்த்த பிற எங்கள் மனக் குறை நீங்கியது. உங்கள் அரும் சேவைகன் தமிழ் கூறும் நல்லுலகம் என்றுமே மறக்காது" என்று கூறி அவர்களிடம் விடைபெற்ருேம்.
திருமதி யோகா எங்கள் சார்பில் நன்றியுரை மொழிந்தார்
வெற்றி உங்களுக்கு "தமிழுக்காக, தமிழர்களுக்காகவே வாழ்நாளே அர் பணித்த அரும் பெரும் தலைவரான தாங்கள், எங்களுக்கா உங்கள் பொன்னுன நேரத்தை ஒதுக்கியதற்காக நன் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். ஆண்டவன் தங்களுக் துணையிருப்பான். உங்கள் லட்சியத்தில் நிச்சயம் வெற்றி கா பீர்கள்" என்று உற்சாகத்துடன் திருமதி. யோகா மொழிந் போது அவர் விழிகளிலிருந்து கண்ணrர் தாரையாக ஓடிய எங்கள் விழிகளும் கசிந்தன.
நெஞ்சை நெகிழ வைத்த நிகழ்ச்சி இது
திரு. அமிர்தலிங்கம் அவர்கள் வயது 58. ஆகஸ்ட் 26 பிறந்தவர். யாழ்ப்பானத்தில் பன்னுகம் என்ற ஊரைச் சேர்ந் வர். சுழிபுரம் விக்டோசியா காலேஜில் படித்தபின், 1949 வழக்கறிஞரானுர், அப்போதே தமிழர சுக் கட்சி மூல அரசியலில் அடி எடுத்து வைத்தார். 1956 முதல் தமி ஈழத்தை அடைவதற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிருர் போராடி வருகிறர்.
d4
 
 
 
 
 
 
 
 
 
 

உலகத் தலைவர்
இலங்கை வாழ் தமிழர்களுக்கு மட்டும் அவர் தலைவராக எனக்குத் தோன்றவில்&ல. t
உலகத் தமிழர்களேயே வழி நடத்தும் ஆற்றல் பெற்ற அருந்தலேவராக அவர் எனக்குத் தோன்றினும்.
மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுத் திறப்பு விழாவில் திரு. அமிர்தலிங்கத்தின் பேச்சு மடை திறந்த வெள்ளம் போல் வெளிப்பட்டது. அந்தக் கருத்துமிக்க பேச்சு இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. (உலகத்தமிழ் மாநாடு பற்றிய வர்ணஃனயை எனது 'தமிழ் கூறும் நல்லுலகம்" நூலில் காணலாம்.)
மன்ற நடவடிக்கை பாராளுமன்றத்தில் (இதுவே இலங்கையில் பழக்கப்பட்ட சொல்) நடைபெறும் சபை நிகழ்ச்சிகளையும் காண வருமாறு எங்களை திரு. அமிர்தலிங்கம் அழைத்தார். அத்து டன் இலங்கைத் தமிழர் பிரச்னைகள், அவரது பாராளுமன்றப் பேச்சுக் குறிப்புகளைக் கொண்ட ஏடுகளேயும் அன்பளிப்பாக வழங்கிஞர். நாங்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளேப் பார்ப்பதற்கான விசேஷ அநுமதிகளே அவர் பெற்றுத் தந்ததும், பார்வையாளர் களுக்கான விசேஷ இருக்கைகளில் போய் அமர்ந்தோம்.
மிகப் பெரிய மண்டபம், இரு அடுக்குகளைக் கொண்டது. பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆளும் கட்சி ஆதர வாளர்கள் மேல் மாடியிலிருந்து கீழ் தளத்தில் நடக்கும் சபை நடவடிக்கைகளைத் தெளிவாகக் காணமுடிந்தது.
சபாநாயகர் வந்தார்
ஒரு புறம் அரசாங்கத் தரப்பினர் அமர்ந்திருந்தனர். அவர் களுக்கு எதிரே எதிர்க்கட்சியினர் இருந்தனர்.
நடுவே இருந்த நீண்ட மேசையில் நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் அலுவலர்கள் அமர்ந்திருந்தனர்.
事5

Page 31
இரு வில்லைச் சேவகர் சீருடையில் செங்கோல் ஏந்தி முன் வர, சபாநாயகர் பெரிய கறுப்பு நிற அங்கி அணிந்து வர எல் லோரும் எழுந்து மரியாதை செலுத்தினுேம்.
சபாநாயகர் அல் ஹாஜ் எம். ஏ. பக்கீர் மாக்கார் அவர்கள் தமது ஆசனத்தில் அமர்ந்ததும் சபை நிகழ்ச்சிகள் தொடங் கின.
நம்பிக்கை இல்லே
அன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட விஷயம் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணையாகும்!
சட்டத்தை வகுக்கும் சபையின் நடுவர், நாயகர் மீதே நம்பிக்கை இல்லை என்று எதிர்க்க்ட்சியினர் பிரேரணை கொண்டு வந்திருக்கிறர்கள் என்ருல் அது ஓர் அதிசயமான நிகழ்ச்சி தானே! -
அந்தச் சுவையான நடவடிக்கைகளை அன்று காணும் வாய்ப்பைப் பெற்ருேம்,
விவாதம் ʻ v.
கலவானை எம். பி.யாக திரு. அபேரத்ன பிலப்பிட்டிய என்பவர் தொடர்ந்து பதவி வகிக்கலாம் என சபாநாயகர் தீர்ப் பளித்ததால், கலவானையில் ஜனவரி மாதம் 12-ந் தேதி நடை பெறுகிற இடைத் தேர்தலில் போட்டி போடும் உறுப்பினரும் நியமனம் பெற்றுள்ள உறுப்பினரும் எங்ங்ணம் சபையில் உறுப் பினராக முடியும்? இருவரையும் கலவானை உறுப்பினர்களாக்க சட்டவிதிகள் இருக்கின்றனவா என்றெல்லாம் வாதிட்ட எதிர்க் கட்சித்தலைவர், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் திர் மானத்தைக் கொண்டுவந்தார். அதனை டிசம்பர் 23-ந் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதென முடிவு செய்யப்பட்டது.
டிசம்பர் 23 கிறிஸ்மஸ் சமயமாக இருப்பதால் தேதியைத் தள்ளிப் போடவேண்டுமென்று எதிர்க் கட்சியினர் பேசினர்.
46

எதிர்க்கட்சித் தலைவர் தமது விவாதத்தைத் தொடங்கு முன், பூரீலங்கா சுதந்தரக் கட்சியின் தலைவியும் முன்னுள் பிரத மருமான திருமதி சிறிமா பண்டாரநாயகாவின் புதல்வர் திரு. அநுரா பண்டாரநாயகா (இவரும் நாடாளுமன்ற உறுப் பினர்) திரு. அமிர்தலிங்கத்திடம் வந்து ஏதோ ஆலோசனை கேட்டார்.
கலந்துரை பின்னர் பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரும் எம். பி. யுமான திரு. மைத்திரி பாலசேனநாயகா திரு. அமிர்தலிங்கத்திடம் ஏதோ உரையாடினர்.
அதன் பின் அரசு சார்புக் கட்சிக்காரர். ஏதோ கலந்துரை யாடினர்.
களத்தில் இறங்கு முன் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கூட அணுக்கமாகக் கூடி சில அம்சங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டுதான் வாதம் செய்கின்றன!
பிரதமர் வந்தார் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் பல ஆதாரங்களை எடுத்துக் காட்டி, சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத் தேதியைத் தள்ளிப் போட வேண்டுமென்று ஆங்கி லத்தில் பேசினுர்,
அவர் பேசிக் கொண்டிருந்த போதுதான் இலங்கைப் பிரத. மர் ஆர். பிரேமதாசா சபையில் வந்து அமர்ந்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த முல்லைத் தீவு எம் பி. செல்லத் தம்பி விவாதத் தேதியைத் தள்ளிப் போடும் படி பேசினர்.
பிரதமர் பிரேமதாசா பிறகு பேசிஞர். முத்லில் சிங்களத் தில் பேசினர். பின்னர் எதிரே பார்வையாளர் வரிசையில், எங் களைப் பார்த்ததாலோ என்னவோ, ஆங்கிலத்தில் பேசத் தொடங்கிஞர், தேதியைத் தள்ளிப் போட முடியாது என்று திட்டவட்டமாக அவர் கூறிஞர்.
47

Page 32
எதிர்க்கட்சியில் இருந்தவர்
முந்திய அரசின் போது எதிர்க்கட்சியில் திறமையான பேச்சாளராக இருந்தவர் இன்றைய பிரதமரான பிரேமதாசா. ஆகவே பேச்சில் ஆற்றல் பெற்றவராக இருந்ததில் அதிசய uჩlნსშ%lა !
பாவம் சபாநாயகர் ! தன் மீது நம்பிக்கை இல்லாத் தீர் மானத்தை விவாதிக்க தேதி குறிப்பிடுவதில் இரு சாராரும் நடத்திய விவாதங்களைக் கேட்டு நல்ல தீர்ப்புக் கூற வேண்டிய நிலையிலிருந்தார் !
இலங்கைப் பார்லிமெண்டில் உலகில் காண முடியாத விநோதங்கள் நடக்கின்றன. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் பற்றி விவாதிக்கிருர்கள். அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் திரு. அமிர்தலிங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கப்பட்டதும் வேறு எந்த நாடாளுமன்றத்திலும் நடந்திராத நிகழ்ச்சியே
திரு. அமிர்தலிங்கம் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல் லாத் தீர்மானத்தை விவாதிப்பதற்கான தேதியைத் தள்ளிப் போட வேண்டுமென்று பேசினர்.
“டிசம்பர் 29ந் தேதி கிறிஸ்மஸ் சமயம். 23ந் தேதி நள்ளிர வில் கிறிஸ்தவர்கள் - கத்தோலிக்கர்கள் உபவாசம் தொடங்கு வார்கள். 24ந் தேதி நள்ளிரவுடன் உபவாசம் முடிந்துவிடும். எனவே 23ந் தேதி சபை கூடுவது பொருத்தமற்றது" என்ருர் அமிர்தலிங்கம்.
விவாதம்
டிசம்பர் 23ந் தேதி இதற்கு முன்னர் சபைக் கூட்டம் நடந்திருப்பதை ஆதாரமுடன் எடுத்துக்காட்டிஞர் பிரதமர்.
"அப்படி 23ந் தேதி பாராளுமன்றம் கூடினுல் அந்தக் கூட்டத்தில் நம்பிக்கை இல்லாப் பிரேரணையை நாம் கொண்டு வரமாட்டோம்” என்ருர் அமிர்தலிங்கம்.
48

விவாதம் காரசாரமாக இருந்தது.
எனது புதல்வி சாந்தி அந்த விவாதத்தை மிகவும் ரசித் தாள். நம் தொலைக்காட்சியில் நடைபெறும் பள்ளி மாணவர் களின் பேச்சுப் போட்டி போல் உள்ளது என்ருள் !
பிரதமர் விவாதத்தில் விட்டுக் கொடுக்கவில்லை. எளிதில் எதிலும் விட்டுக் கொடுக்காதவர் அவர் !
வாக்கெடுப்பு
"சபாநாயகர் மதுரையில் நடைபெறும் உலகத் தமிழா ராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்கிருர், நம்பிக்கை இல்லாப் பிரேரணை இருக்கும் நிலையில் அவர் அப்படி வெளி நாடு செல்வது பொருத்தமல்ல. அதற்கு முன்னதாக விவா தித்து முடிவு காண்போம். 23ந் தேதி பிரேரணையை நீங்கள் சமர்ப்பிக்காவிட்டால் பிரேரணை காலாவதியாகும். சபாநாயகர் மீது எல்லோருக்கும் நம்பிக்கை இருப்பதாக ஆகிவிடும்" என்ருர் பிரதமர். V
இறுதியில் விவாதம் முடிந்து வாக்கெடுப்புக்கு விடப் பட்டது. ஆளும் கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் போது அவர்களுக்குச் சாதகமாகத்தானே எதுவும் இருக்கும் ! 23ந் தேதி மன்றத்தைக் கூட்டுவதற்கு ஆதரவாக 51 வாக்கு களும் எதிராக 17 வாக்குகளும் பதிவாகின !
* 紫
சபை இடைவேளையின் போது கலைந்தது. நாங் கள் மன்றத்தைச் சுற்றிப் பார்த்தோம்.
இதற்கிடையில் திரு. பாலா எங்கோ அவசரமாகப் போய் விட்டு விரைந்து வந்தார்!
"எல்லாரும் வாங்க, சபாநாயகரைப் போய்ப் பார்ப்போம்".
என்ருர் it ar.
49

Page 33
சநீதிப்பு
சபாநாயகர் தமிழ்ப் பேசுகிறவர் என்று தெரிந்த பிறகு அவரைச் சந்திக்கலாம் என்று திரு. பாலாவிடம் கூறியிருந் தேன். அவர் அவ்வளவு விரைவாக ஏற்பாடு செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை! அசகாய மனிதர் என்று வியந்தேன்!
சபாநாயகரின் அறைக்குள் அடி எடுத்து வைத்த எங்களை அன்புடன் வரவேற்ருர் அந்தரங்கச் செயலாளர் திரு. ஏ. எச். எம். அஸ்வர்.
சற்று நேரத்தில் சபாநாயகர் திரு, அல்ஹாஜ் பாக்கிர் மாக் கர் அவர்கள் இன்முகத்துடன் எங்களை வரவேற்றுக் கணிவான குரலில் பேசிஞர்.
அன்புடன் வரவேற்பு நாடாளு மன்றத்தை வழி நடத்தும் அந்தப் பெருந்தகை யாளர் அன்பும் பண்பும் பொலிய மலர்ந்த முகத்துடன் வர வேற்ருர்,
தமிழ் மொழி பேசும் அந்த முஸ்லிம் பெருமகளுர் மும்மொழி பேசப்படும் அந்த நாட்டின் சபாநாயகர் பதவியில் இருப்பது உலகத் தமிழினமே பெருமைப்படக்கூடிய பெருஞ் சிறப்பு என்று பாராட்டினுேம். ܵ
பெரும்பான்மைப் பிறமொழி இனமக்கள் கொண்ட இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் நாம் பெருமைப்படத்தக்க தலைமைத்துவப் பதவிகளைத் தமிழர்கள் பெற முடிகிறது என்ருல் அதற்குக் காரணம் அவர்களுடைய உழைப்பு, நாணயம், வழிநடத்திச் செல்லும் ஆற்றல் ஆகியவை என்பதில் ஐயமில்லை.
இஸ்லாமிய சமூகத்தினரின் வழிகாட்டியாக, தலைவராகத் திகழும் இலங்கைச் சபாநாயகர் அல்ஹாஜ் அவர்கள் சிங்கப் பூருக்கு வந்திருப்பதாகக் கூறினர்.
50

சிங்கப்பூர் வழிகாட்டி
“சிங்கப்பூர் பலவிதத்திலும் முன்னேறியுள்ள நாடு. எங்கள் பூரீலங்காவும் சிங்கப்பூரைப் பின்பற்றி முன்னேறி வருகிறது!" என்ருர் அல்ஹாஜ்.
"ஆமாங்க, பூரீலங்கா எல்லாத் துறையிலும் துரிதமாக முன்னேறி வருவதை நேரிலே தெரிந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளோம். அதற்கும் மேலாக தங்களைக் காணும் வாய்ப் பைப் பெற்றதில் பெருமகிழ்ச்சியடைகிருேம். தமிழுலகம் பெரு மிதப்படும் பீடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்!" என்றேன். அவர் மெல்லப் புன்னகை பூத்தார்.
இணைப்பு “உங்கள் சேவை பற்றிக் கேள்விப்பட்டோம். சிங்கள மொழி பேசும் அதிபர், பிரதமர், மற்றும் சிங்கள உறுப்பினர் களுக்கும் தமிழ்ப்பேசும் எதிர்க்கட்சிப் பெருமகனருக்கும் தாங்கள் ஒரு நல்ல இணைப்புப் பாலமாக இருக்கிறீர்கள்' என்று அவரைப் பாராட்டினுேம்!
“உங்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை நாங்கள் காண வந்த வேளை பாருங்கள், உங்கள் மீதே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கிருர்கள். ஆணுல் உங் கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது' என்றேன் வேடிக்கையாக! அவர் புன்னகைத்தார்!
எங்சளுக்குக் குளிர் பானம் வழங்கப்பட்டது.
ஒற்றுமை தேவை 'இன்று வெள்ளிக்கிழமை ஜம்மா தொழுகைக்குப் போவ தற்காக சபைக்கூட்டத்தை முன்கூட்டியே முடித்து விட்டேன். அந்த நேரத்தை உங்களுக்கு ஒதுக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் மொழி பேசுகிறவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் ஒற்று
5

Page 34
மையுடன் வாழவேண்டும். நம்மொழி பண்பாட்டு வளர்ச்சி யில் நாம் அனைவரும் கருத்துச் செலுத்த வேண்டும்" என்ருர், அவரது அன்பான ஆழ்ந்த அநுபவக் கருத்துக்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது. ஆயினும் அவர்கள் தொழுகைக்குப் போக வேண்டியிருந்ததால் எங்கள் உரையாடலை நீட்டிக்க விரும்பாமல் விடைபெற்ருேம்.
அன்பளிப்பு
தமிழ்நாட்டில் எட்டு நாட்கள் நூல் மற்றும் இந்தியன் மூவி நியூஸ், வேல் இதழ்களையும் அவரிடம் வழங்கினுேம்,
அவர்களும் தமது வெளியீடுகளை அன்பளிப்பாகத் தந்தார்.
திரு. அல்ஹாஜ் அவர்களிடம் விடை பெற்ருேம். ஆயினும் அவர்களின் அருமையான உரையைப் பின்னர் மதுரையில், நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் தொடக்க விழாவில் கேட்கும் வாய்ப்பைப் பெற்ருேம். 'தமிழ் வளர்த்த இஸ்லாமி யர்கள்’ பற்றிய அவர்களின் அரிய சொற்பொழிவு பற்றிய விவரத்தை “தமிழ் கூறும் நல்லுலகம்" நூலில் வெளியிட்டுள் ளேன். n
* 火》
நாடாளு மன்றக் கட்டிடத்தை விட்டு வெளி வந்த போது நேரம் நண்பகலைத் தாண்டிவிட்டது. அருகே அலைகடலின் எழிலையும் பசுமையான காலி முகத்திடலையும் ரசித்தோம். a
அருகே இருந்த இண்டர்காண்டினன்டல் ஒட்டலின் வாயிலில் பல நாட்டு வண்ணக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தன. அவை எங்களை வரவேற்பது போல் தோன்றவே அங்கே சென்ருேம்.
52

கலைக்கோயில்
அந்த ஒட்டலின் வாயிலில் அழகிய சிற்பங்கள் இருந்தன. ஒட்டல்களில் சிற்பங்களை வைத்து கலைக்கோவில்களாகக் கவினுறச் செய்திருப்பதை சென்னையில் கன்னிமாரா ஒட்டலில் பார்த்திருக்கிறேன். கோல்டன் பீச்சும் சிற்பக்கலைக்காட்சியு டன் உல்லாச விடுதியாக உள்ளது.
"என்ன வேண்டும் சொல்லுங்கள்?’ என்று கேட்டார் பாலா.
"காப்பி சாப்பிட வேண்டும்! அதில்லாமல் ஒன்றுமே ஒட வில்லை!" என்றேன். காப்பி வந்தது! مر
திரு. பாலாவும் நண்பர்களும் தேநீருக்கு ஆர்டர் கொடுத் தனர்! பாலா நிகழ்ச்சி நிரலை எடுத்துப் பார்த்துவிட்டு 'இன்று நண்பகல் உணவு பம்பலப்பிட்டியிலுள்ள கொழும்பு கலைச் சங்கப் பிரமுகர் திரு. ஏ. பி. ராஜ் இல்லத்தில்!” என்ருர்!
சாப்பாடு
எதில் முனைப்பாக இல்லாவிட்டாலும் பந்திக்கு எப்போதும் முந்திக்கொண்டு விடுவேன்! சாப்பாட்டைப் பற்றிச் சொன்ன பிறகு சட்டுபுட்டென்று புறப்பட்டோம்! メ
"மாடர்ன் எலக்ட்ரிக்கல்" என்ற போர்டு மாட்டப்பட்ட வர்த்தக நிறுவனத்தின் முன் எங்கள் கார் வந்து நின்றது. அத் நிறுவன உரிமையாளரான ராஜ், மற்றும் அவரது குடும்பத்தி னர்கள் எங்களை அன்புடன் வரவேற்றrர்
தலை வாழை இலைபோட்டு அறுசுவை உணவு பரிமாறப் பட்டது! அந்த இனிய விருந்தோம்ப்லுக்கு ஈடு ஏது உறவினர் கள், நண்பர்கள் விருந்துக்கு அழைக்கும்போது அதை இயல் பான ஒன்ருகக் கொள்கிருேம். ஆணுல் நாடு விட்டு நாடு வந்த இடத்தில் முன்பின் அறிந்திராதவர்கள் அன்புடன் அமுது பரி மாறும்போது நாம் உண்மையில் நன்றிக் கடன்பட்டுவிடுகி. ருேம்.
53

Page 35
வாழைப்பூ, பலாப்பிஞ்சு, அகத்திக்கீரை, வாழைத்தண்டு இதெல்லாம் எங்கள் நாரில் தேடினுலும் கிடைக்காது. இந்த வகை சாப்பாடு கிடைத்ததால் சரியானபடி ஒரு கை பார்த்து விட்டேன்.
"சாப்பாடு உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ என்னமோ தெரியவில்லே. ஏனென்ருல் உங்களுக்கு எது பிடிக்கும், பிடிக் காது என்று எங்களுக்கும் தெரியவில்ஜல என்ருர் ராஜாவின் துனேவியார் திருமதி இந்திரா.
"என்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள். எல்லாமே எங்க ளுக்குப் பிடித்தமான விசேஷமான அயிட்டங்களே! என்ருர் என் துனேவியார்
"திக்கு முக்காட வைத்துவிட்டீர்கள், இப்படி ஓர் அருமை யான சாப்பாட்டைப் போட்டு!" என்றேன் நான்!
விருந்து போட்டவர்களுக்கு எங்களுக்கு ஏற்பட்ட திருப்தி யில் தனி மகிழ்ச்சி கண்டனர்!
"சிலோனுக்குப் போனுல் தேங்காய்ப்பால் சொதிதான் கிடைக்கும் என்று என் வீட்டுக்காரியிடம் சொல்வியிருந் தேன், அதைத்தான் கானுேம்!" என்றேன் நான் வேடிக்கை ILImal ".
இதை ஏன் சொன்னுேம் என்ருகிவிட்டது. ஏனெனில் அதன் பிறகு நடந்த விருந்துகளில் சொதிச் சட் டியுடன் வந்து நின்றுவிடுவார் திருமதி பாலா! ஏற்கனவே எங்குபோனுலும் தேநீர் அருந்தி அலுத்துப் போன எனக்கு, சொதியைப் பார்த் தீதும் பசியும் மறந்துவிடும் போலிருந்தது!
வேண்டாம் தேநீர் உண்ட மயக்கம் தெ ண்டருக்கும் உண்ட ல் ல வ ச ? திரு. ராஜன் போட்ட விருத்தில் விழிகள் சொக்கின
"நம்ம புரோகிராம்படி சினிமா ஸ்டூடியோக்கஃளப் பார்ப்பது, தமிழ்ப் படத்தயாரிப்பாளர் கன்ேசன் வீட்டில் தேநீர்!" என்ருர் LITET! ",
54 1985,
 
 
 

"தேநீர் வ்ேண்டாங்க! வேறு ஏதாவது இருந்தால் சொல் லுங்க!" என்றேன்.
"அதன் பிறகு, வானுெவி நிலையத்திற்குப் போவது!" STsirggi Lu IT su IT!
"அதைச் செய்வோம்! இப்போது சற்று இளைப்பாறு வோம்!" என்றேன்.
"பாலாவுக்கு நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்வதில் பிரிய மில்ஃப், நாங்கள் வருவதாக அவர் சொல்லி வைத்திருக்கிருர், போகா விட்டால் நன்முயிருக்காது!" என்ருர் என் துணைவியார், "அதனுல் பாதகமில்லை. போன் செய்து கணேசனுக்குச் சொல்லிவிடுகிறேன்!" என்ருர் பாலா 1
曹 情 背
மீண்டும் , நாங்கள் புறப்பட்ட போது மாலை மயங்கும் இனிய வேளை!
வண்ண விளக்கு வரிசைகளும் தோரணங்களும் அழகாகச் சோடனே செய்யப்பட்டிருந்தன!
"ஆமாம், இது என்ன இடம்?" என்று கேட்டேன்' "இலங்கை வானுெலி நிலையம்" என்ருர் பாலா!
அலங்காரம் "ஏங்க . நாங்க வர்ருேம்னு இவ்வளவு அலங்காரம் எல்லாம்!" என்று கேட்டாள் சாந்தி!
"இலங்கை வானுெலியின் ஐம்பதாவது ஆண்டு விழா இப் போது நடக்கிறது. அதற்குத்தான் இந்த அலங்காரம்!" என்றும் அந்தணி,
"உங்களுக்குத் தெரியாது அங்கிள் நாங்கள் வரும்போது தான் ஐம்பதாவது ஆண்டு விழாவையும் நடத்த நிண்த்திருக் கிருரர்கள் எங்களுக்காகத்தாள் காத்திருந்து இப்போது நடத்து
55.

Page 36
கிருர்கள்!" என்ருள் சாந்தி! அந்தனிக்கு என்ன கூறுவது என்று தெரியாமல் வாயடைத்து விட்டார்.
“இந்த வானெலி நிலையம் ஆசியாவிலேயே பெரியது!' என் ருர் அந்தணி.
'நீங்க என்ன சார் எந்தக் கட்டிடத்தைக் காட்டினுலும் ஆசியாவிலேயே பெரியது என்று சொல்கிறீர்கள்!” என்ருள் சாந்தி
மிகப் பெரிய நிலையம் ஆணுல் இலங்கை வானுெலி நிலையம் பெருமைக்காகச் சொல்லப்பட்டதல்ல, ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையம் என்பது உண்மையே!
வானெலி நிலையத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கான அநுமதி களைப் பெற்றுக் கொண்டு வந்து சேர்ந்தார் பாலா.
தமிழ், சிங்கள, ஆங்கில நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதி களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தோம். ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமான ஊழியர்கள் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தனர்.
வர்த்தக ஒலிபரப்பு இலங்கை வானுெலியை “இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்" என அழைக்கிருர்கள். இலங்கை வானுெலி வர்த்தக ஒலிபரப்பு ஒரு காலத்தில் நம் ஊர்களில் மிகவும் தெளிவாகக் கிடைத்தது. முன்பு மயில்வாகனத்தை அறிவிப்பாளராகக் கொண்ட இந்த வர்த்தக ஒலிபரப்பில் புதிய தமிழ், இந்திப் படங்களின் முன்னேட்டத்தையும் புதிய திரைப் பாடல்களையும் அன்ருடம் கேட்டு வந்தோம். ஆனல் இப்போது சிங்கப்பூர் மலேசியாவில் இந்த ஒலிபரப்புகள் தெளிவாகக் கிடைப்பதில்லை. ஆயினும் தமிழ் நாட்டில் இலங்கை வர்த்தக ஒலிபரப்பிற்கு தொடர்ந்து இன்னும் வரவேற்பிருக்கிறது. தமிழ் நாட்டில்
56

அதிகமானவர்கள் இலங்கை வர்த்தக ஒலிபரப்புகளை விரும்பிக் கேட்பதை நானும் கவனித்தேன். ی
பொன்மணி குலசிங்கம் இலங்கை வானுெலியின் தமிழ்ப் பகுதிப் பொறுப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் எங்களை வரவேற்று, சுவை யான் தேநீரும் வழங்கினர்.
வானுெலி ஆற்றி வரும் பணிகளை அவர் விரிவாக எடுத்து விளக்கினுர்,
பேச்சின் இடையே தாம் சிங்கப்பூர் வாஞெலியிலும் கொழும்புத் திட்டத்தின் கீழ் பங்காற்றியதாகக் கூறிஞர். சிங்கப்பூர் வானுெலியைச் சேர்ந்த திரு. ஏ. முருகையன், திரு. ராமையா ஆகியோர் நலம் பற்றி விசாரித்தார். கவிஞர் பெருமாள் காலமாகிவிட்டார் என்று கூறியபோது அவர் ஒரு கணம் அதிர்ந்து போனர். தமிழுக்குச் சேவை செய்பவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் கள T யி னும் அவர்கள் பிரிவு ஆற்ருெணுத் துயரத்தை உண்டு பண்ணவே செய்கிறது.
இலங்கை வானுெலியில் அறிவிப்பாளராகப் பணியாற்றும் திருமதி ராஜேஸ்வரி சண்முகம், சில்வேஸ்டர் பாலசுப்ரமணி யம், அப்துல் ஹமீட், ராஜகுரு, சேனதிபதி, கனகரட்னம் ஆகி யோர் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஓரிருவருடன் உரையாடும் வாய்ப்பும் பெற்ருேம். அவர்களின் அயராப் பணியைப் பாராட்டினுேம்,
சிறந்த தரம் தமிழ் ஒலிபரப்பில் ஒரு நல்ல தரத்தை இலங்கை வாஞெலி நெடுகிலும் பேணி வருகிறது. வானெலியில் பங்காற்றும் கலைஞர்களுக்கு மக்களும் நன்மதிப்பை வழங்குகிருர்கள், சிறப் புக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் கொடை ஊதியம் (அல வன்ஸ்) வழங்குகிருர்கள். நம் நாட்டு வானெலிகளும் இதைக் கைக்கொள்ளலாம்.
57 C

Page 37
கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் சேவைகளுக்கு இத்தகைய மாதாந்தரக் கொடை ஊதியம் தருவது வானுெலி களுடன் உள்ள இணைப்பை வலுப்படுத்தும்.
சிங்கப்பூர் வானெலியில் கடந்த 17 ஆண்டுகளாக கலைமஞ் சரி நிகழ்ச்சிக்கு நான் எழுதி வருகிறேன். என்னுடைய நாட கங்கள் பல வானுெலியில் ஒலிபரப்பாகியுள்ளன.
தொலைக்காட்சியில்
சிங்கப்பூர் வானுெலிப் பகுதியினர் எழுத்தாளர்கள், கலை ஞர்களுக்குத் தரும் அளவு ஊக்கத்தையும் ஆதரவையும் அதன் மற்ருெரு பிரிவான தொலைக்காட்சித்தமிழ்ப் பகுதியினர் செய்ய வில்லை என்பதை இங்கே நான் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்,
சிங்கப்பூர்த் தொலைக்காட்சித் தமிழ்த் தயாரிப்பாளர்கள் சிங்கப்பூரில் உள்ள திறமையான கலைஞர்களைப் பட்டியல் போட்டு வைத்திருந்து ஆண்டுக்கு ஒன்றிரண்டு நிகழ்ச்சியிலா வது அவர்களுக்கு இடமளிக்க வேண்டும். அதை விட்டு தங் களுக்கு வேண்டிய ஒரு சிலரையே சுற்றிக் குறுகலான வட்டம் போட்டுக் கொண்டிருப்பது, திறமைக்கு மதிப்புக் கொடுக்காதது ஆகிய போக்கினுல் தமிழ் மக்களின் வெறுப்பையே தேடிக் கொண்டிருக்கிருர்கள்.
பொதுச் சேவைத் துறையிலிருப்போருக்கு விரிந்த, பரந்த மனம் தேவை. கலைஞர்களை, எழுத்தாளர்களை வேற்றுமை பாராட்டாமல் மதித்துப் பாராட்டும் நல்ல மனம் நிலையத் தயா ரிப்பாளர்களிடம் இருந்தால்தான் அவர்கள் படைப்புகளுக்கு வரவேற்பு இருக்கும்.
இலங்கை வானெலித் தயாரிப்புகளைப் பற்றி நான் விசா ரித்த நண்பர்கள் ஒவ்வொருவரும் நல்ல பாராட்டுகளை வழங்கி ஞர்கள்! இங்கேயும் வானெலித் தயாரிப்பாளர்கள் பெற்றுள்ள
58

நன்மதிப்பைத் தொலைக்காட்சி தயாரிப்பினர் பெற முனைய
வேண்டும்!
பொன்விழாக் கொண்டாடிக் கொண்டிருந்த இலங்கை
வானுெலி நிலையம் எனது பேட்டியையும் பதிவு செய்தது.
எனது புதல்விகள் சாந்தி, ஜெயந்தியின் பேட்டியையும் பதிவு செய்தார்கள்.
துதிப்பாடலை அடுத்து. திருமதி பொன்மணியின் புதல்வியும் பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்றவரா கையால் நாட்டியத்துறை பற்றி அக்கறை யுடன் விசாரித்தார்.
இலங்கை வானெலியில் காலையில் இனிய துதிப் பாடல் களை ஒலிபரப்பிய பின், காலமானவர்களின் பெயர் விவரங்களை இலவசமாக ஒலிபரப்புகிருர்கள்.
米 米 >k வானுெலி நிலையத்திலிருந்து புறப்பட்ட நாங்கள் அங்கிருந்து பண்டாரநாயகா சர்வதேச மண்டபத் தைக் காணச் சென்ருேம்.
கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான மிகப் பெரிய மண்டபம் இது
சீன அன்பளிப்பு 'ஆசியாவிலேயே பெரிய மண்டபம் இது!" என்ருர்
அந்தணி ஆணுல் சாந்தியைப் பார்த்ததும் மேற்கொண்டு அவர் எதுவும் கூறவில்லை.
"ஆசியாவிலேயே பெரியது என்கிற அடைமொழியை இனிமேல் சேர்க்கவில்லை” என்ருர் அந்தனி! اس حساس---۔ . . . ۔
59

Page 38
*அள்ளிவிடாதீங்க, அவ்வளவுதான்! " என்ருள் சாந்தி வேடிக்கையாக! -
சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாகக் கட்டப்பட்ட மண்ட பம் இது சீனுவிற்கு வெளியே சீன அரசாங்கம் செய்துள்ள ஒரே அன்பளிப்புப் பணி இதுதான் போலும்!
இலங்கையின் முன்னுள் பிரதமர் காலஞ்சென்ற எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயகாவின் நினைவாக சீன அரசு நிர்மாணித்த இந்த மண்டபம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
விருந்து
அன்றிரவு ராகலை விஸ்வநாதனின் இல்லத்தில் பெரிய விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
ராகலை சொந்தமாக ஒரு அச்சகத்தை நடத்தி வருகிருர், அவரது மாமனுர் வீடு கொழும்பில் இருந்ததால் அடிக்கடி வந்து பேரஞர்.
ராகலையின் துணைவியார் மணமாது, மைத்துணி கனகா, இன்னும் இவர்களின் ஐந்து சகோதரிகள் கூடி அமோகமான வரவேற்பைத் தந்தனர். ராகலையின் ஒரே மகன் நவநீதன் எல்லோரையும் தன் மழலை மொழியில் பேசி மகிழ்வித்தான் !
米 米 米 இலங்கைக்கு வந்துள்ள நாம் அந்த நாட்டின் வரலாற்றையும் ஓரளவுக்குத் தெரிந்து கொள்வது நல்லதல்லவா? -
மணி பல்லவம் இந்தியக் கடலின் நடுவே நன்முத்து எனத் த.ழும் இலங்கைத் தீவு எழிலும் வளமும் கொழிப்பது.
மணி பல்லவம், நாகதீவம் என்று இலங்கைத் தீவைக் குறிப்பிடுகின்றன தொன்மையான வரலாற்று நூல்கள்.
60

லங்கா என்பதும் மிகப் பழைய பெயரே. TAPROBANE - “டப்ரோபேன்" என்ற பெயரில் கிரேக் கர்கள் இலங்கையைப் குறிப்பிட்டுள்ளனர்.
SERENDIB - “செரன்டிப்” ள்ன்று அராபியர்கள் இலங் கையைக் குறிப்பிடுகின்றனர்.
ZEYLON - “ளிலோன்” என்பது போர்த்துக்கீசியர் வைத்துள்ள பெயர்.
ஈழம் என்ற பெயரை எப்படிப் பெற்றது ? அந்தக் காலத்தில் இலங்கையில் வசித்த நாகர் "ஈழு" என்னும் மொழி பேசியதால் 'ஈழம்" என்ற பெயர் பெற்றது.
ஈழம், சீழம், சிஹழம் என மருவி சிங்களம் ஆனது 'சிஹ” என்னும் பாலி மொழி சிங்கம் என்ற பொருளை உடையது. இலங்கையின் தேசியக் கொடியில் சிங்கத்தின் சின்னமே இடம் பெற்றுள்ளது. சிஹழம் என்ற பெயரே பின்னர் சிங்களம் ஆனது!
சிலோன்
சிலாங் என்ற பெயர் பிறகு சிலோன் என்று வழங்கப்
பட்டது.
25,332 சதுர மைல் பரப்பைக் கொண்டது இலங்கை, வடக்
கிலிருந்து தெற்கு வரை 270 மைல் நீளமும், அகலத்தில் விரி வான பகுதி 140 மைலும் கொண்டது.
இலங்கையின் பூர்விக மக்களாக தமிழர்களும் சிங்களவர் களும் இருந்து வந்துள்ளனர் என்பதை வரலாறுகள் மெய்ப்பிக் கின்றன.
சிலப்பதிகாரத்தில் .
சிலப்பதிகாரத்தில் கூறப்படும் கயவாகு மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையை ஆட்சி செய்துள்ளதாக அறிய முடிகிறது.
61.

Page 39
மகாபாரதத்தில் (கி.மு. 1500) காணப்படும் குறிப்பில் பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் நகுல மலையில் (கிரி மலை) சிங்கக் கொடியும் பனைக்கொடியும் நாட்டினுன் என் பதைக் காண்கிருேம். V−
இராவணன் இராமாயணத்தில் இலங்கையைப் பற்றியும் அதனை ஆட்சி செலுத்திய இராவணனைப் பற்றியும் அறிகிருேம்.
சீதையை மீட்க இராமர் இலங்கைக்கு அமைத்த பாலத் தின் சுவடுகள் இன்னும் இருப்பது பற்றி நான் எழுதிய 'தமிழ் நாட்டில் எட்டு நாட்கள்’ நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.
இலங்கையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பாலத்தை 'ஆதாமின்பாலம்’ (Adams Bridge) என்று குறிப் பிடுகிறர்கள்.
தமிழ் மன்னர்கள் கிறித்துவ சகாப்தம் தொடங்கு முன்னர், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் மன்னர்களின் ஆட்சி இருந்து வந்துள்ளது. தமிழ் மன்னர்களான சேனன், குட்டிக்கன், எல்லாளன், சங்கிலியன் போன்ருேர் செங் கோலோச்சியுள்ளனர்.
இலங்கையின் மிகத் தொன்மையான வரலாற்று நூலான மகாவம்சம் கி. பி. 543ல் இலங்கைக்கு வந்து சேர்ந்த விஜயனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. a
கலிங்க நாட்டில் சிங்கபுரத்தை ஆண்ட சிங்கவாகு என்ற மன்னனின் புதல்வன் விஜயன்,
கீரிமலையில் விஜயன் எழுப்பியது நகுலேசுரம் கோயில். தம்பலகாமத்தில் திருக்கோணேசர் கோயில், தெய்வந்துறை சந்திரசேகரன் கோயில், கதிர்காமம் கோயில் ஆகியவற்றை விஜயன் கட்டியதுடன் திருக்கேதீசுவரர் கோயிலின் திருப்பணி
62

களையும் செய்தான் என 1933ல் முதலியார் செ. இராசநாயகம் எழுதிய யாழ்ப்பாண சரித்திரம் என்ற நூலில் அறிகிருேம். சிங்களவர் ஆட்சி
விஜயனுக்குப் பின் ஆண்ட அவன் வழி வந்த பாண்டு வாசன் அநுராதபுரத்தைத் தலைநகராக்கி ஆட்சி செலுத்தினுன்,
இலங்கையின் வடக்கு மையத்தில் அமைந்துள்ள அநுராத புரத்தில்தான் சிங்களவர்களின் முதல் அரசாட்சி அமைந்தது. தமிழர்களின் படையெடுப்பால் அநுராதபுரம் அழிந்தது. பின் னர் மேலும் தெற்கே பொலனருவை சிங்களவரின் முக்கிய நகரமாகியது.
புத்தர் ஞானம் பெற்ற அரச மரத்தைப் போதி மரம் என் றும் குறிப்பிடுவார்கள். வட இந்தியாவில் மகத நாட்டை ஆண்ட அசோகன், புத்த சமயத்தைப் பரப்ப அனுப்பிய பிக்கு கள் இலங்கை வந்தனர். இவர்களுடன் வந்த அசோகனின் இளவரசி சங்க மித்ரா கொண்டு வந்த அரசமரக்கிளை அநுராத புரத்தில் நடப்பட்டது. அந்த மரமும் புத்த விகாரைகளும் இன்னும் அங்குள்ளன.
ஆட்சிப் போர்
நாட்டை ஆட்சி செய்வதில் தமிழ் மன்னர்களுக்கும் சிங் களவ மன்னர்களுக்கும் நெடுகிலும் போராட்டங்கள் நடந்து வந்துள்ளன என்பதை இலங்கை வரலாறுகள் காட்டுகின்றன. அது இன்னும் முற்றுப் பெருது தொடர்கிறது!
பதின் மூன்ருவது நூற்ருண்டு முதல் மேற்குக் கடற்பகுதி யான சீலம், புத்தளம் முதல் மன்ஞர் வரையும் வடக்குப் பகுதி முதல் கிழக்கு வரையிலான திருக்கோணமலை, பட்டிக்காலோ, குமணு வரையிலான இடங்கள் தமிழர்களின் வசமே இருந்து வருகின்றன. இதைத்தான் தமிழ் ஈழம் என வரலாற்று அடிப் படையில் பிரித்து தங்கள் ஆட்சியில் வைத்திருக்க தமிழர்கள் போராடுகின்றனர்.
63

Page 40
சோழ அரசன் கரிகாலன் இலங்கைக்குப் படை எடுத்து வெற்றி கண்டு, அங்கிருந்து ஆட்களைக் கொண்டு சென்று தமிழ் நாட்டில் காவிரி ஆற்று அணையைக் கட்டியுள்ளான் என வரலாறு காட்டுகிறது!
சிங்கள வீழ்ச்சி கி. பி. 945ல் சோழப் பராந்தகன் சிங்கள அரசனுகிய மூன் ரும் உதயனை வென்று வட பகுதியை ஆட்சி செய்தான்.
“மதுரையும் ஈழமும் கொண்ட பராந்தகன்' என இவன் போற்றப்பட்டான்!
ராஜராஜன் ஆட்சியில் பராந்தகனுக்குப் பின் கி. பி. 1014ல் முதலாம் ராஜராஜன் என்ற அரசன் இலங்கையை முழுமையாக வெற்றி கொண்டு தன் ஆட்சியில் வைத்திருந்தான்.
* மும்முடிச் சோழ மண்டலம்’ என்ற பெயரில் இலங்கையையும் சோழ மண்டலத்துடன் இணைத்து ஒரே ஆட்சியில் நடத்தியவன் பராந்தகன். தமிழகத்துடன் இணைந்த நாடாக இலங்கை இருந்து வந்துள்ளது. 1070ல் முதலாம் குலோத்துங்கன் ஆட்சிக்கு வந்தான்.
126 ஆண்டுகள் சோழ அரசர்களின் ஆட்சியில் இலங்கை இருந்தது.
வீழ்ச்சி சோழ அரசாட்சி மேலும் தொடர முடியவில்லை. சிங்கள வர்களும் பாண்டியர்களும் தந்த எதிர்ப்புகளாலும் தொல்லை களாலும் சோழர்களின் அரசாட்சி வீழ்ச்சி அடைந்தது.
கி. பி. 1070ல் பொலனருவையைத் தலைநகராகக் கொண் டிருந்த விஜயவாகு சோழர்களை வெற்றி கொண்டான்.
64

விஜயவாகு இறந்த பின் அவன் வழி வந்த பராக்கிரமவாகு இந்தோனேஷியாவின் சில பகுதிகளையும் கம்போடியாவையும் வெற்றி கொண்டான் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் வளர்த்தவன் கி. பி. 1410 முதல் 1440 வரை பரராசசேகரன் ஆட்சி செலுத்திஞன். இவனே திருக்கோணமலை கருங்கற்களைக் கொண்டு இராமேசுவரம் கோயில் கர்ப்பக்கிரகத்தை 1414ல் கட்டியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
பரராசசேகரனுக்குப் பிறகு அவன் மகன் கனகசூரியன் ஆட்சிக்கு வந்தான். இவனே இரண்டாவது தமிழ்ச்சங்கத்தை நிறுவி, தமிழ்ப்புலவர்களை ஒருங்கிணைத்து தமிழ் வளர்ச்சிக்கு பெருஞ்சேவை ஆற்றியவன்.
1450ல் செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தை வென்று நல்லூரைத் தலைநகராக்கி 17 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர். புகழ்பெற்ற நல்லூர்க் கந்தசாமிக் கோயிலைக் கட்டியவர் இவரே. பூரீ சங்கபோதி புவனே சவாகு என்ற சிங்களப் பெயருடன் இவர் விளங்கினர். பின் விஜயவாகு என்ற சிங்கள அரசன் இவரை வென்ருன், • x V
பரநிருபசிங்கன், சங்கிலி ஆகிய தமிழ் மின்னர்களும் ஆட்சி நடத்தியுள்ளார்கள்.
சங்கிலி
செகராச சேகரன் என்ற பெயர் கொண்ட சங்கிலி யாழ்ப் பாணத்தில் கலகம் செய்த சிங்களவர்களைத் தன் ஆட்சியின் எல்லையிலிருந்து வெளியேற்றுவதில் பெரும் பங்காற்றியவன். இதனுல் சங்கிலியைத் தமிழர்கள் இன்றும் போற்றுகின்றனர்.
கி. பி. 1627ல் பெரும் 'சூருவளியினுல் யாழ்ப்பாண்ம் பேரழி ஷக்காளாயிற்று. இந்த இயற்கைப் பேரிடரைத் தொடர்ந்த
65

Page 41
அம்மை, கோதாவரி நோய்களிலிருந்து நாட்டை மறு சீர்ப் படுத்த நெடுங்காலம் பிடித்தது.
வட்டார, கிராம, சிற்றுார் தலைமைத்துவத்துக்காக நடந்த சண்டைகள் பல உள்ளன. சிற்றரசர்களிடையே ஏற்பட்ட போர்களும் பூசல்களும் கணக்கிலடங்கா.
வன்னியர் ஆட்சியில்
அக்காலத்தில் திருக்கோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகள் வன்னியர்களின் ஆட்சியில் இருந்தன.
15, 16ம் ஆாற்ருண்டுகளில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒன்பதாம் பராக்கிரபாகுவும் கண்டி அரசன் விமல தர்மனும் சிற்றரசர்களுடன் பூசல்களை வளர்த்துக் கொண்டிருந்த வேளை யில்தான் போர்த்துக்கீசியர் வர்த்தகம் செய்பவர்கள் போல் அடி எடுத்து வைத்து நாட்டைத் தம் வசப்படுத்தினர்.
பறங்கியர் வருகை போர்த்துக்கீசியரைப் பறங்கியர் (Feringhees) என அழைத் தனர்.
கி. பி. 1518ல் பராக்கிரமவாகுவின் அநுமதியுடன் போர்த் துக்கீசியர் வர்த்தக நிலையங்களை அமைத்தனர். அவர்கள் பின்னர் ஆட்சியைப் பிடிப்பதிலும் முனைப்பாக இருந்து வெற்றி கண்டனர்.
நல்லூர் வீழ்ச்சி 1560ல் பேர்த்துக்கீசிய-பறங்கிப் படையினர் செகராச சேகரனின் ஆட்சியிலிருந்த நல்லூர்க் கோட்டையையும் கோப் பாய் அரணையும் தம்வசமாக்கினர். பின் அவர்களுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர் போர்த்துக்கீசியர்.
போர்த்துக்கீசியர் திருக்கேதீசுவரர் ஆலயத்தை இடித்து அந்தக் கற்களைக் கொண்டு மன்னுரில் பாதுகாப்புக் கோட்டை
66

ஒன்றை எழுப்பினுர்கள். ஆலயங்கள் பலவற்றை இடித்து அரண்களை எழுப்பி ஆட்சியைப் பாதுகாப்புடன் வைத்திருக்க போர்த்துக்கீசியர் முனைந்தனர்.
யாழ்ப்பாணம் 800 ஆண்டுகள் வரை ஆரியசேகர அரச சந்ததியினரின் ஆட்சியிலேயே இருந்தது.
தஞ்சாவூர்ப் படை
கி பி. 1620ல் போர்த்துக்கீசியர் யாழ்ப்பாணத்தைக் கைப் பற்றிய பிறகு அவர்களை அமைதியாக நாட்டை ஆளவிட்டு வைக்கவில்லை தமிழர்கள்! போர்த்துக்கீசியரை எதிர்த்து அவர் கள் ஏந்திய போர்க்கொடிக்கு அணியாக தஞ்சாவூர் நாயக்கரின் படைகளும் துணை சென்றன.
போர்த்துக்கீசியர் கத்தோலிக்க சமயத்தைப் பரப்புவதில் தீவிரம் காட்டினர். யாழ்ப்பாணத் தமிழர்களின் சைவ சமய நம்பிக்கையை வேரறுக்க, 1621ல் நல்லூர் கந்தசாமி கோயிலை "இடித்துத் தரை மட்ட மாக்கினர்கள். பல சைவ ஆலயங்கள் மட்டுமின்றி, புத்தர் ஆலயங்களும் இடிக்கப்பட்டன. பலவந்த மாகப் பலர் மதமாற்றம் செய்யப்பட்டனர். சிலுவை அடை யாளம் அணியாதவர்கள் தாக்கப்பட்டனர்.
இலைகளை மறைத்தனர்
வாழை இலைகளில் சாப்பிடுவதைக்கூட சைவசமய்ச் சார்பு *டையவர்கள் என அடையாளங் காட்டிவிடும் எனக்கருதி சாப் பிட்ட வாழை இலைகளை வெளியே எறியாமல் கூரைகளில் சொருகி மறைத்தனர். பின்னர் இது ஒரு வழக்கமாகவே மாறி விட்டது
விரத நாட்களில் சாப்பிட்ட இலைகளைக் கூரைகளில் சொருகி வைக்கும் வழக்கத்தை இன்றும் சிலர் யாழ்ப்பாணத் தில் செய்கின்றனர்!
67

Page 42
16வது நூற்ருண்டில்தான் மலாயாவில் மலாக்காவை போர்த்துக்கீசியர் கைப்பற்றி ஆட்சி செய்தனர்.
இந்தியாவில் கோவா வைத் தலைமை இடமாகக்கொண்டு ஆசியாவில் தங்கள் ஆளுகையை வலுப்படுத்திய போர்த்துக்கீசி யர், கிறித்தவர்களுக்கு அதிக உரிமைகளும் சலுகைகளும் வேலை வாய்ப்புகளும் பதவி உயர்வுகளும் தரவே, கிறித்துவ சமயத் தைத் தழுவ வேண்டிய நிர்ப்பந்தம் பலருக்கும் ஏற்பட்டது.
100 ஆண்டு ஆட்சி மலாக்காவை 130 ஆண்டுகள் ஆட்சி செய்த போர்த்துக் கீசியர் பிறகு டச்சுக்காரர்களிடம் சரணடைந்தனர்.
决赛 상 상 ች: இலங்கையில் 100 ஆண்டு கால போர்த்துக் கீசியர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது டச்சுக் காரர்களின் வருகை
தமிழ்ப் பணி போர்த்துக்கீசியரின் காலனித்துவ ஆட்சியில் அமைந்தது தான் மன்ஞரிலுள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் கல்லூரி.
தூரக்கிழக்கிலே இதுதான் மிகப் பெரிய கல்லூரி. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் கூட போர்த்துக்கீசியர் ஆதிக்கத்தினை நினைவுபடுத்தும் விதத்தில் செயின்ட் 66 கல்லூரிகளும் தேவாலயங்களும் இன்னும் உள்ளன.
மலாக்கா வந்தார் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் இந்திய, இலங்கைச் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு 1550லும் பின்னர் 1553லும் மலாக்காவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களு டைய பயணத்தின் நோக்கம் கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவ தாக இருந்தது.
68

இலங்கைத் தமிழர்களின் ஆழ்ந்த சைவ சமயப்பற்று இன்று உலகெங்கும் பிரசித்தி பெற்றிருக்கிறதென்றல் அதற்குக் காரணம் போர்த்துக்கீசிய சமயப் போதகர்கள் அந்த நாட்களில் பிற சமயச் சார்புடையவர்களை கிறிஸ்துவ சமயத் திற்கு மாற்றக் கைக்கொண்ட வன்முறைகளும் பிற வழிகளு
er (5 D.
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்ப தமிழ் மொழியைக்கற்று சமய நூல்களை வெளியிட்டனர் ஐரோப்பிய போதகர்கள்.
தேம்பாவணி
அதில் குறிப்பிடத்தக்கது தேம்பாவணி. அதை இனிய நடையில் அமைத்திருந்தார் வீரமா முனிவர் என்ற பெயர்
கொண்ட பாதர் பெர்ச்சி (FATHER BERCH1). 1650ல் வெளி யிடப்பட்ட தேம்பாவணியின் செய்யுட்களை தமிழறிஞர்கள் போற்றி வீரமா முனிவரின் தமிழ் அறிவைப் பாராட்டிஞர்கள்.
தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களை நன்கு கற்ற மற்ருெரு தத்துவ ஞான போதகர் ராபர்ட் டி நோபிள்ஸ் (ROBERT DE NOBILIS). ரோம் நாட்டிலிருந்து வந்து பல கிறிஸ்துவ சமய நூல்களை இவர் வெளியிட்டார். 1742ல் இவர் காலமாகவே அந்தப் பணியும் நின்றது.
சப்பாத்து
போர்த்துக்கீசியரின் ஆட்சியின் போது அவர்களின் சொற்கள் தமிழிலும் கலந்து விட்டன.
சட்டை, கதிரை (நாற்காலி), மேசை, வாங்கு, கவுச்சி, அலமாரி, அலவாங்கு, கோப்பை, பீங்கான், பேணு, கடுதாசி, மேஸ்திரி, சப்பத்து - இவையெல்லாம் போர்த்துக்கீசியச் சொற்கள்.
சிங்களவர்களில் பலர் இன்றும் போர்த்துக்கீசியப் பெயர்
களையே வைத்திருக்கிருர்கள். டிசில்வா, டிமெல், பெர்ன்ைடு,
69

Page 43
சொயிசா, பிறீஸ், பின்றே, மாச்சாடு, சேவியர், மனுவல், ஆண்ட்ரூ போன்றவை வழிவந்த குடும்பப் பெயர்களாக இன்றும் நிலைத்துவிட்டன.
டச்சு வருகை
கி. பி. 1595ல் வர்த்தகம் நடத்தும் நோக்கத்தைக் காட்டி, நாடுகளைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருக்க எண்ணங் கொண்டு இலங்கைக்கு வந்த டச்சுச்காரர்கள் மட்டக்களப்பில் வன்னிய சிற்றரசனைச் சந்தித்தனர். அவன் உதவியுடன் கண்டியரசன் விமல தர்மனையும் பார்த்தனர்.
போர்த்துக்கீசியரை வெளியேற்ற டச்சுக்காரர்கள் உதவி செய்வதாக வாக்களித்தனர். அதன் படி டச்சுக்காரர்கள் மூன்று மாதங்கள் யாழ்ப்பாணக் கோட்டை முன் முற்றுகை போட்டு போர்ச்சுக்கீசியரைப் பணிய வைத்தனர்.
பெயர் மாறியது
இலங்கை, இந்தியக் கடற்கரைப் பகுதிகள் கொழும்பிலி ருந்த டச்சு இந்தியக் கம்பெனி ஆட்சித் தலைவனின் கீழ் வந்தன.
ஊர்களின் பெயர்களை டச்சுப் பெயர்களாக மாற்றினுர்கள்.
காரை தீவுக்கு அம்ஸ்டர்டாம் எனப் பெயரிடப்பட்டது.
ஊராத்துறை - கயிற்ஸ், புங்குடுதீவு-மிடில்பெர்க், நயின தீவு-ஹார்லெம், நெடுந்தீவு-டெல்ப்ட் என்றெல்லாம் பெயரி டப்பட்டிருந்தன! ,
ஜோங்காஸ், டீகுரூஸ் போன்ற பெயர்களை இன்னும் சிங்களவர் வைத்துக் கொள்கின்றனர். இவை டச்சுப் பெயர் களாகும் 1
米 米 米
கிறித்துவ சமயத்தைப் பரப்புவதில் டச்சுக்காரர்
களும் தீவிரம் காட்டினர்.
70

6g IT6troit 60T தேவாலயங்களைக்கட்டிஞர்கள். dFLOL சார்புப் பள்ளிக்கூடங்களையும் கட்டினுர்கள். அரசாங்க வேலைகள், பதவி உயர்வுகள், விருதுகள் கிறித்தவர்களுக்கு மட்டுமே தரப் பட்டன. இது பற்றி பல்தேயஸ் பாதிரியார் பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். る
அரசாங்க வேலைகளை மேற்கொண்டவர்கள் கிறித்துவ சமயத்திற்கு மாற வேண்டிய நிலையை டச்சுக்காரர்கள் ஏற்படுத் திஞர்கள்.
ஆயினும் காலப் போக்கில் மக்களின் ஆழ்ந்த சமய நம்பிக் கைகளை மாற்றுவதில் தோல்வி கண்ட டச்சுக் காலனிவாதிகள் பிற சமய சார்புடையோரின் ஒத்துழைப்பைப் பெற தங்கள் போக்கை மாற்றிஞர்கள். -
முத்துக்குளிப்பதற்கான குத்தகையைப் பெற்றிருந்த வைத் திலிங்கம் செட்டியார் கி. பி. 1787ல் வண்ணுர் வைத்தீஸ்வரன் கோயிலை எழுப்ப டச்சு ஆட்சியினர் அனுமதி அளித்தனர்.
நல்லூர்க்கோயில் போர்ச்சுக்கீசியரால் தரைமட்டமாக்கப்பட்ட நல்லூர்க் கந்தசாமி கோயில் 1793ல் மீண்டும் எழுப்ப அனுமதிக்கப் பட்டது.
கொழும்பிலிருந்து ஆட்சி நடத்திய டச்சு அதிபர் ஜான் மக்காரர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மாதகல் மயில் வாகனப் புலவர் எழுதிய “யாழ்ப்பாண வைபவமாலை" என்ற வரலாற்று
நூலை கி. பி. 1736 ல் எழுதி வெளியிட்டார்.
பிலிப் டிமெல்லோ என்ற பாதிரியார் தமிழிலும் நல்ல புலமைபெற்றிருந்தார். இவர் 1753ல் மானிப்பாய் அச்சுக் கூடத்தில் இவரே அமைத்த 20 பாடல்கள் கொண்ட சூடாமணி நிகண்டு நூலை வெளியிட்டார். இதற்கு முன்னர் 1749 ல் கிரேக்க மொழிலியிருந்த புதிய ஏற்பாடு பைபிளை தமிழில் மொழி பெயர்த்து இவர் வெளியிட்டிருந்தார். டச்சுக்காரர்
71

Page 44
ஆட்சியில்தான் முதல் அச்சுயந்திரம் இலங்கைக்குத் தருவிக் கப்பட்டி து:
டச்சுக்காரர்களின் ஆட்சியில் புகழ்பெற்றிருந்த இலங்கைத் தமிழ்ப் புலவர்கள் இவர்கள்
சுன்னுகம் வரத பண்டிதர் மாதகல் மயில்வாகனப் புலவர் சிற்றம்பலப் புலவர்
தெல்லிப்பழை அருளப்ப நாவலர் வட்டுக்கோட்டை கணபதி ஐயர்
அச்சுவேலி நமச்சிவாயப் புல்வர் மன்னுர் கவுரியேல் பச்சேக்கு
வண் ணுர்பண் soor கூழங்கைத்தம்பிரான் @(L11 డి சேனுதிராய முதலியார் இனுவில் கதிர்காமசேகர சின் னித்தம்பிப் புலவர் கண்டிருப்பாய் வில்லவராய சின்னத்தம்பிப் புலவர்.
இத்தகைய சிறந்த புலவர்கள், பலர் அந்த நாட்களில் தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு இலங்கையில் அரும் பங்காற்றியுள்ளனர்.
பழம் பெரும் புலவர்களின் கையெழுத்துப் பிரதிகள், சாசனங்களுடன் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட நூல்கள் கொண்ட யாழ்ப்பான நூலகம் கடந்த 1984 மே 31 ந் தேதி யாழ்ப்பாணத்து பஞ்சாயத்து தேர்தல் நடப்பதற்கு முன் சிங்களப் போலீசார் நடத்திய வெறியாட்டத்தில் தீ வைத்து முற்ருக அழிக்கப்பட்டுவிட்டன. தமிழர் ஆட்சி நடத்திய ஆதாரங்களையும் அவர்களின் அக்கால இலக்கிய ஆய்வுகளை யும் அழிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் திட்டமிட்டுச் செய்த சதிநாச வேலைகளில் இதுவும் ஒன்று என்றுதான் கொள்ள வேண்டும்! தமிழ் மொழியும், சமயமும் காலத்தை வென்று நிற்கின்றன. அதைக் காடையர்களால், இனவெறியர் களால் ஒழித்து விட முடியுமா?
72

140 ஆண்டுகள்
போர்த்துக்கீசியரின் நூறு ஆண்டு ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தது டச்சுக்காரர்களின் வருகை !
கொழும்புக்கு அருகேயுள்ள காலியில் டச்சுக்காரர்கள் அமைத்த கட்டிடங்கள், குடியிருப்புகள் இன்னும் உள்ளன.
டச்சுக்காரர்களின் ஆட்சி 140 ஆண்டு கள் வரை நீடித்தது.
1795ல் டச்சு ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்த னர் பிரிட்டிஷார். கடைசியாக ஆண்ட கண்டி மன்னனின் ஆட்சிக்கு 1815 ல் முற்றுப்புள்ளி வைத்தனர் பிரிட்டிஷார்.
பிரிட்டிஷாருடன் ஆங்கில மொழியும் இலங்கையில் இடம் பிடித்துக் கொண்டது.
பிரிட்டிஷ் ஆட்சி
ஆட்சியில் ஓர் ஒழுங்கு முறையை ஏற்படுத்தியவர்கள் பிரிட்டிஷாரே!
இந்திய, போர்த்துக்கீசிய, டச்சு ஆட்சிகளுக்குப் பின் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தேயிலை, ரப்பர், தென்னைத் தோட்டங்கள் ஏராளமாகப் பயிரிடப்பட்டன, இவற்றில். பணியாற்ற ஏராளமான இந்தியர்கள் வந்தனர்.
காட்டைத் திருத்தி நாட்டை வளமாக்க இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் தருவிக்கப்பட்டனர். இவர்களுக்குப் பின்னர் இலங்கை குடியுரிமை மறுக்கப்பட்டு, நாடற்றவர்களாயினர்.
அது மட்டுமல்ல போர்த்துக்கீசிய, டச்சு, ஆங்கில ஆட்சி களின் கீழ் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் தனித்தே இருந்தன என்பது வரலாறு காட்டும் உண்மை. அந்நிய காலனித்துவ
73
D

Page 45
ஆட்சியினர்கூட தமிழர் வாழும் பகுதி க ளின் தனித் தன்மையை மதித்து, அதன் நிர்வாகத்தில் தலையீடுகள் செய்த
சுதந்திர நாடு 1947ல் இந்தியா, பர்மா, பாகிஸ்தான் நாடுகள் பிரிட்டிஷ் பிடியிலிருந்து விடுதலை பெற்றபோது இலங்கையும் சுதந்திர நாடாயிற்று. ஆணுல் ஈழத்தமிழர்கள் தலையெடுக்காதபடி, அழுத்திவைக்கும் போக்கை பெரும்பான்மைச் சிங்களவர் களைக் கொண்ட ஆட்சிப் பொறுப்பினர் மேற்கொள்ளத் தொடங்கினர்.
4-2-1948ல் இலங்கை சுதந்திரம் பெற்றது எனினும் பிரிட்டிஷ் அரசியாரின் தலைமையில் இரு ந்து வந்தது. 22-5-1972ல் குடியரசான நாடு அரசியல் சட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் உரிமைகளை மதிக்கத் தவறி விட்டது என்று கூறி தமிழர்களால் நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப் பட்ட 19 பேரில் பதினைவர் புறக்கணித்து விட்டனர். இந்த அரசியல் சட்டத்தை ஆரம்பத்திலிருந்தே தமிழ்ப் பேசும் பகுதி மக்கள் ஏற்கவில்லை.
போராட்டம் ஓயாது
தனித்து இயங்கிய தமிழ் ஈழத்தின் மீது 1819ல் போர்ச்சுக் கீசியர் போர் தொடுத்து ஆக்கிரமித்துக் கொண்டனர். பின் டச்சுக்காரரிடம் கைமாறியது. அடுத்து பிரிட்டிஷாரின் ஆட்சி க்கு வந்தது. ஆணுல் சிங்களவர் தமிழ் ஈழத்தின் ஆட்சியைச் சட்டபூர்வமான முறையிலோ அல்லது போராடியோ பெற்ற தில்லை என்பதைச் சுட் டி க் காட்டுகிறது தமிழர் ஐக்கிய முன்னணிக் கட்சி. அனைத்துலக நியதிப்படி சுயாட்சியைப் பெற்று, சட்டபூர்வமான அரசியல் அந்தஸ்தை அடையும் வரை போராட்டம் தொடரும் என அறைகூவல் விடுத்துள்ளது தமிழர் ஐக்கிய முன்னணி.
74 ,

அரசியல் சட்டம் m பிரிட்டிஷார் நாட்டை விட்டுப் போகுமுன் அகில இலங் கைத் தமிழர் காங்கிரஸ் தலைவர் திரு. ஜி ஜி. பொன்னம்ப்லம் அவர்கள் சிறுபான்மையராக உள்ள தமிழர்களுக்கு விசேஷ உரிமைகளும் பாதுகாப்பும் கேட்டு பிரிட்டிஷாரை வற்புறுத்த, அவை அரசியல் சட்டம் (பிரிவு 29ல்) வரையறுக்கப்பட்டன!
ஆனல் 1972ல் ல் இது நீக்கப்பட்டது! இலங்கைத் தமிழரசுக் கட்சி (பெடரல் பார்ட்டி) யின் தலை வர் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் தமிழர்களின் பிரதேச உரிமைகளிலும் மொழியிலும் தலையிடக் கூடாது என்று அப்போதைய ஆளும் கட்சியான பூரீலங்கா விடுதலைக் கட்சியுடனும் பிரதமர் பண்டார நாயகாவுடனும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
நிராகரித்தது
பின்னர் பிரதமர் டட்லி சேன நாயகாவும் தமிழரின் பிர தேச சுயாட்சிக் கோரிக்கைக்கு இணக்கம் காட்டினர். ஆனல் சிங்களவர்களின் எதிர்ப்புகளினுல் இவற்றை நிறைவேற்ற முடியாது என ஆளும் கட்சி நிராகரித்தது.
தமிழர் ஐக்கிய முன்னணியின் ஆறு அம்சத் திட்டம், தமிழறிஞர்களின் 20 அம்சத் திட்டம் எல்லாமே வெற்று வாக்குறுதிகளினுல் இழுத்தடிக்கப்பட்டு சிங்களவர் காற்றில் பறக்கவிட்டனர்! வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்தே கடந்த 30 ஆண்டுகளாகத் தாங்கள் ஏமாற்றப்பட்டு வரு வ ைத உணர்ந்தனர் தமிழ் அரசியல் தலைவர்கள்!
தேசிய மயம்
சிங்கள மொழி மட்டுமே அரசாங்க மொழி என 1956ல் அறிவித்த ஆளும் கட்சியினர், தோட்டப்புறத் தமிழர்களின் குடியுரிமையையும் மறுத்து, ஒடுக்கும் போக்கைத் திட்ட மிட்டு மேற்கொண்டுள்ளதையும் உணரத் தலைப்பட்டனர் தமிழர் தலைவர்கள். 1975ல் அந்நியர் உரிமை பெற்றிருந்த

Page 46
தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டதால் அதில்வேலை செய்த அநேக தமிழர்கள் வேலை இழந்து வேதனைப்பட்டனர். பல தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டன. அதற்குப் பதில் சிங்கள மொழி போதனைப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்த நாடு தமிழ் ஈழம்! அது தனி நாடாகப் பிரிந்தால்தான் தங்கள் மொழியும் சமயமும் நலன் களும் பாதுகாக்கப்பட முடியும் என்ற முடிவுக்கு வந்தனர்!
சிறுமைப்படுத்த
மக்கள் தொகையில் எழுபது விழுக்காட்டினர் சிங்களவர் கள். முப்பது விழுக்காட்டினரே தமிழர்கள். தமிழர்களை மேலும் எண்ணிக்கையில் சிறுமைப்படுத்தவே, 1948 ல் சுதந்தி ரம் பெற்றதும் முதல் வேலையாக நாட்டை வளப்படுத்த ப்ாடு பட்ட பல ஆயிரம் பாட்டாளித் தமிழர்களின் குடியுரிமை மறுக் கப்பட்டு நாடற்றவர்களாக்கப் பட்டனர். இவர்களில் அநேக குடும்பங்கள் பல தலைமுறைகளாக அந்த நாட்டையே தாயக மாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் !
ஊடுருவல்
இது ஒரு புறமிருக்க தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளிலும் பிரதேச அபிவிருத்தி மறு குடியேற்றம் என்று கூறிக் கொண்டு சிங்கள மக்களை அரசாங்கம் குடியேற்றி வருகிறது.
யாழ்ப்பாணத்தில் அமரசேகரபுரம் எ ன் ற பகுதியில் சிங்களவர்கள் பெருமளவில் குடி அமர்த்தப்பட்டுள்ளனர்.
மன்னர் பகுதியில் 'கொண்டைச்சி" என்ற இடத்தில் இரண்டாயிரம் சிங்களக் குடிகள் இடம் பெயர்த்துக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
குடியேற்றம்
தமிழ் ஈழத்தின் கிழக்குப் பகுதிகளான மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா போன்ற இடங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் பல ஆயிரம் சதுர
76

மீட்டர் பிரதேசங்களை அரசாங்கம் எடுத்துக் கொண்டுள்ளது. இவற்றில் சிங்களவர்கள் குடி அமர்த்தப்படுகின்றனர்.
1948ல் கிழக்கு மாநிலத்தில் பத்தாயிரம் சிங்களவர்களே இருந்தனர். இன்று இவர்களின் எண்ணிக்கை 1,80,000 ஆகப் பெருகிவிட்டது.
இது திட்டமிடப்பட்டு தமிழர் பகுதிகளில் நடத்தப்படும் ஊடுருவல் என்று கூறப்படுவதில் நியாயம் இருக்கவே செய் கிறது.
நாட்டின் அபிவிருத்திப் பணிகளை எல்லோருமே வரவேற் கிருர்கள். மறு குடியிருப்புகள் மூலம் மக்கள் நல் வாழ்வு பெறக் கூடிய திட்டங்கள் நல்லதே ஆணுல் இந்த அபிவிருத் திப் பணிகள் ஒரு குறிப்பிட்ட சாராரை ஒடுக் குவ தற்காக என்ருல் அது எதிர் விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும்.
சிங்கப்பூர்க் குடியரசிலும் தமிழர்கள் மிகுதியாக வாழ்ந்த சிராங்கூன், தஞ்சம் பகார் பகுதிகளும் மலாய்க்காரர்கள் அதிக எண்ணிக்கையிலிருந்த கேலாங் பகுதியும் நகரப் புனரமைப்பு களாலும் மறுகுடியேற்றத்தாலும் அந்த இனமக்களின் பெரும் பான்மை எண்ணிக்கை இன்று மாறிவிட்டதைக் காண்கிருேம். இப்படிப்பட்ட நிலைதான் இலங்கைத் தமிழர் பகுதி யி லும் நேர்ந்து வருகிறது.
பெயர் மாற்றம் மறு குடியேற்றம் என்ற பெயரில் தமிழர்களின் பெரும் பான்மை எண்ணிக்கையைக் குறைப்பதுடன் மட்டும் ஆளும் கட்சியினர் நிற்கவில்லை.
ஊர்ப்பெயர்களையும் சிங் களத் தி ல் மா ற் றி யும் வருகின்றனர்.
தமிழர்கள் வாழும் பட்டிப்பளை என்ற ஊர்தான் இப்போது 'கல்லோயா’ என்ற சிங்களப் பெயரைப் பெற்றுள்ளது.
இது ஒயப்போவதில்லை என்பதை முன்மொழிவது போல் கல்லோயா என்ற பெயர் எதிரொலிப்பது போல் இல்லையா?
77

Page 47
குமரன் கடவை என்ற ஊர் "கோமரன் கடவல" என்றும் முதலிக்குளம் "மொரவே வா" என்ற பெயரிலும் புடவைக்கட்டு என்ற ஊர் 'சாகரபுர" எனவும் புல் மோட்டை "கணிகபுர" எனவும் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன.
ஆறு, அல்ல, கந்தாஃள, படவிக்குனம் போன்ற கிழக்கு மாநிலப் பகுதிகளில் உள்ள இடங்களில் சிங்களவர் பெருமள வில் குடியேற்றப்பட்டுள்ளனர்.
இரத்தக்களரி
1958ல் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பெரிய இரத்தக்களரிப் போராட்டம் நடைபெற்றது. இலங்கையர் நினேவில் அது இன்னும் மாருத தழும்பாக உள்ளது.
அந்த இனவெறிப் போராட்டத்தைத் தொடர்ந்து ஏற் பட்ட கொந்தளிப்பு அவ்வப்போது குமுறி வெடிக்கிறது!
1974: ஜனவரி 1ந்ெதேதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் போது ஐம்பதினுயிசம் தமிழர்கள் திரண்டிருந்த கூட்டத்தில், தமிழ் அறிஞர்கள் மேடையில் இருந்த போது சிங்களப் போலீசாரும் கைக்கூலிகளும் கை யெறி குண்டுகளே வீசி நடத்திய வெறியாட்டமும் வன்செயலும் பெருங்கலவரமாக மாறி, பல உயிர்கள் பலி வாங்கப்பட்டன. அநேகர் காயமுற்றனர். செத்துக்கள் நாசமாக்கப்பட்டன.
அந்தக் கோரம் "The Tragedy of January Tenth 1974'-'ggers, if 10 1974ல் நடைபெற்ற கோரம்" என்ற நூலே ஓர் அன்பர் என் எளிடம் தந்தார். அதில் இந்தக் கலவரம் பற்றிய விசாரண்க் குழுவின் விரிவான விளக்கம் தரப்பட்டிருந்தது. இதுவும் திட்ட மிட்டுத் தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்செயல் என்பதை இந்த அறிக்கை தெளிவு படுத்தியது.
78

வன் செயல்கள்
இந்த நூலே நான் எழுதிக் கொண்டிருக்கும் போது மே, 1981ல் பெருங் கலவரம் ஏற்பட்டு, பல உயிர்கள் பலியாகின.
யாழ்ப்பாணத்திலிருந்த பழ ம் பெ ரு ம் தமிழ் நூல் நிஃலயத்தை எரித்துச் சாம்பலாக்கினர்.
தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைமையகம் தீக்கிரை யாக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்த மிகப் பழைய மார்க் கெட்டும் 22 கடைகளும் தீயில் அழிக்கப்பட்டன.
யாழ்ப்பாணத்தின் ஒரே நாளிதழான ஈழநாடு அலுவலகம் தாக்கப்பட்டு எ ரிக் க ப்ப ட் ட து. இதன் ஆசிரிய ச் திரு வி. சிவானந்தன் கழிவறையில் புகுந்து மறைந்து உயிர் தப்பினுர்,
3 தமிழ் எம். பி க்கள் கைது செய்யப்பட்டனர். இத்தனே அட்டூழியங்கள் நடுவிலும் தமிழர் பகுதிகளில் நிறுத்தப்பட்ட 10 தமிழர் ஐக்கிய முன்னணிக் கட்சியில் நிறுத்தப்பட்ட 10 பேரும் தேர்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக ஆதரவு தமிழர்களின் நியாயமான உரிமைகனேச் சிங்களப் பெரும் பான்மையினர் உனர்ந்து மதித்து விட்டுக் கொடுத்துப் போகாத வரை போராட்டங்களும் கீழறுப்பு நடவடிக்கைகளும் தொடரும் என்றே தோன்றுகிறது. ஈழத்தின் 15 லட்சம் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசாங்க மும் தமிழ் நாட்டின் அஃாத்துக் கட்சிகளும் வெளிப்படை
பாகவே ஆதரவு தரத் தொடங்கியுள்ளன.
யாழ்ப்பானத்தில் நடந்த வன் செயல்கள் குறித்து விசாரஃன நடத்தவும், இந்த வன் செயல்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளேத் தண்டிக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப் பீடு வழங்கவும் இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
79

Page 48
அடிப்படைப் பிரச்னை இதன் தொடர்பாக மூன்று மாதங்களுக்கு மேலாக தமிழர் ஐக்கிய முன்னணி நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்தது. அரசாங்கம் இவர்களின் கோரிக்கைக்கு இணங்கி வந்திருப்பதால் புறக்கணிப்பைக் கைவிட்டு, நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளத் தொடங்கியிருப்பதாக அண்மைச் செய்திகள் கூறுகின்றன.
ஆயினும் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அரசாங் கமும் தமிழர் ஐக்கிய முன்னணியினரும் அமைதியான வழியில் ஒரு சுமுகமான முடிவைக் காண வேண்டும் என்பதே நம் விருப்பம்.
வெற்று வாக்குறுதிகளும் வன் செயல்களும் கீழறுப்புகளும் அடக்கி ஒடுக்குவதும் பிரச்னைகளுக்குத் தீர்வு தர முடியாது என்பதை ஆளும் கட்சியினரும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் தலைவர்களும் உணர்ந்து தமிழர்களுடன் இணைந்து
நாட்டை வளமாக்க முன்வர வேண்டும்.
இனக் கலவரங்களைத் தூண்டிவிடுவதில் பொறுப்புள்ள அரசியல் தலைவர்களும் காரணமாக இருந்துள்ளார்கள்.
"நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள சிங்களத் தாய் மார்களும் தமது குடும்பத்தில் குறைந்தது ஒரு துட்ட கைமுனு வையாவது உருவாக்க வேண்டும். அப்போதுதான் பெளத்த சமயமும் கலாச்சாரமும் காப்பாற்றப்பட முடியும்" என்று கண்டி மாவட்ட அமைச்சரும் கம்பளை எம். பி. யுமான டபிள்யு பி. பி. திசநாயகா பேசிய செய்தி 'தினபதி” 5-8-81 இதழில் வெளியாகியுள்ளது. துட்டகைமுனு போன்ற துஷ்டர்கள் நாட் டில் பெருகினுல் இனவெறியாட்டம் தொடரவே செய்யும்!
இலங்கையை ஆண்டுகொண்டிருந்த தமிழ் வேந்தன் எல்லாளனை ஒழித்து விட்டுப் புத்தமதத்தைப் பரப்பக் காரண
மாக இருந்தவன் துட்டகைமுனு.
80.

அவன் பெயரால் சிங்களவர்களிடையே தமிழர்களுக்கு எதிரான வெறியைத் தூண்டி விட்டிருக்கிருர் பொறுப்பான ஒரு சிங்களத் தலைவர்.
பிரிவினைதான் தீர்வு
"இதயம் பேசுகிறது' இதழுக்கு அளித்த பேட்டியில் தமிழர்களின் தலைவரான திரு. அமிர்தலிங்கம் அளித்துள்ள பேட்டியில் “யாழ்ப்பாணத்திலும் பிற இடங்களிலும் தமிழர்கள் பெருவாரியாக இருப்பதால் எங்களைக் காத்துக்கொள்ள முடிகி றது. அது போல் தமிழ் ஈழத்தைத் தனி நாடாக்கிவிட்டால் நாங்கள் பாதுகாப்பாக, உரிமையோடு வாழலாம்” என்று
குறிப்பிட்டுள்ளார்,
'இலங்கைத் தமிழர்கள் 1956 முதலே பாதிக்க்ப்பட்டுள் ளோம். இதற்கு முந்தி இலங்கையில் ஆண்ட இன வெறியுள்ள அரசுகளைவிட தற்போதைய அரசு தமிழர்கள்பால் மிகவும் நில் லெண்ணத்துடன் நடந்து கொள்கிருர்கள் என்பதை நாங்கள் மறக்கவில்லை. இவர்கள் எங்களுக்கு உதவிகரமாகவே இருக்கிருர் கள். ஜனதிபதி ஜெயவர்த்தனே அநுகூலமாகவே செயல் படுகிருர். இருந்தும் ஜஞதிபதியின் நல்லெண்ணம் நடை முறையில் செயல் வடிவம் பெறுவது சிரமமாக இருக்கிறது. ” இதற்குக் காரணம் அவரைச் சார்ந்திருக்கும் பல அதிகாரிகளும் அமைச்சர்களும் அவருடைய எண்ணத்திற்கு முரண்பட்ட வர்கள். சிங்களப் போலீசாரில் பெரும்பான்மையோர் தமிழரை வெறுப்பவர்கள். அதனுல்தான் சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனுல்தான் தமிழர்களைக் காத்துக்கொள்ள தமிழ் ஈழம் கேட்கிருேம். அரசியல் நல்லெண்ணம் செயல் வடிவம் பெருதபோது பிரிவினை களைத் தீர்க்க வழியே இல்லை. பிரிவினைதான் ஒரே தீர்வு" என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் திரு. அமிர்தலிங்கம்,
வெளி நாடுகளில் வாழும் பல ஈழக்குடி மக்கள் தங்களுக்கு நேர்ந்துள்ள அடக்கு முறையை எதிர்த்தும் தமிழ் ஈழம்
81.

Page 49
அமைய ஆதரவு வேண்டியும் குரல் எழுப்பி வருகின்றனர். பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடு களில் உள்ள பத்திரிகைகளில் ஈழத்தமிழர்களின் குரல் எதிரொலித்து வருகிறது.
ஐ. நா. சபையில்
இதில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியவர் திரு. கிருஷ்ண வைகுந்தவாசன். இவர் இலண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர். ஈழத்தின் முன்னுள் தொழிற் சங்கத் தலைவர். வழக்கறிஞர். 60 வயதை எட்டியுள்ளவர்.
5-10-1978ல் நடைபெற்றுக் கொண்டிருந்த ஐக்கிய நாட்டு சபைக்கூட்டத்தில் திரு கிருஷ்ண வைகுந்தவாசன் நுழைந்து 35 லட்சம் தமிழர்கள் வாழும் தமிழ் ஈழத்தின் சார்பாக தன் நாட்டில் சிங்கள ஆட்சியினர் நடத்தும் அட்டூழியங்களை எடுத்துரைத்தார். 'தமிழ் ஈழம் சுதந்திரத் தனி நாடு காணும் வரை போராட்டங்கள் ஒயப் போவதில்லை. பாலஸ்தீனிய, சைப்ரஸ் பிரச்னைகளை விட இது முக்கியமானது என்பதை உலகத்தலைவர்கள் உணர்ந்து இதில் தலையிட்டுத் தீர்வுகாண உதவுமாறு வேண்டுகிறேன்" என்று குரல் எழுப்பினுர்,
ஐக்கிய நாட்டு சபையில் இவரது பேச்சு பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அனுமதியின்றி இவர் எப்படி அந்தச் சபையில் நுழைந்து பேசிஞர் என்று எல்லோரும் வியப் புக்கொண்டனர். அவர் பிறகு அப்புறப்படுத்தப் பட்டார்.
திரு. கிருஷ்ண வைகுந்தவாசன் முன்பு சாம்பியா நாட்டின் மாநில நீதிப்தியாகக் கடமையாற்றியவர். அமெரிக்க சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கைத் தமிழர் தளபதி அமிர்தலிங்கத்தை ஐக்கிய நாட்டு சபையில் பேச ன்வத்து ஈழத் தமிழர் பிரச்னையை உலகப் பேரவையின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்பிஞர் திரு. கிருஷ்ண வைகுந்தவாசன். ஆணுல் அது ஈடேறவில்லை. பாலஸ்தீன உரிமை கேட்டு யாசர்
82

அராபத் ஐக்கியநாட்டு சபையில் உரையாற்ற இடமளிக்கப்படும் போது ஏன் தமிழ் ஈழத்தைப் பற்றிப் பேச திரு அமிர்தலிங்கத் திற்கு அனுமதி தரக்கூடாது என்று அப்போதைய ஐக்கிய நாட்டுச் சபை உதவிச் செயலாளர் திரு. சி. வி. நரசிம்மனிடம். கேட்டார். 'அராபத்திற்கு அரபு நாடுகள் அத்தனையும் ஆதரவு அளிக்கின்றன. அதுபோல் திரு. அமிர்தலிங்கத்தின் நிலை இல்லை' என்று சொல்லி திரு. நரசிம்மன் ஆதரவு தர மறுத்து விட்டார்.
பின்னர்தான் திரு. கிருஷ்ண வைகுந்தவாசன் நியூயார்க் கில் இருந்தபடி ஐக்கிய நாட்டு சபைக்கு அடிக்கடி சென்று கட்டுக் காவலர்களின் நம்பிக்கையையும் பெற்ருர். சந்தர்ப்பம் வந்த போது உலகநாடுகளின் சபையில் முழங்கினர். தமிழ் ஈழம் பற்றி உலகநாடுகள் கவனத்திற்கு கொண்டுவர அவர் செய்த முயற்சி பெரிய வெற்றி தந்தது! பத்திரிகைகள் அது பற்றிப் பரபரப்பாகச் செய்திகளை வெளியிட்டன!
ஈழத்தின் வரலாற்றையும் இன்றைய நிலையையும் கண் ணுேட்டமிட்டோம்.
இனி நம் பயணத்தைத் தொடர்வோம்!
மறுநாள் மாலை இலங்கையின் மிகப் பெரிய நாளிதழான வீரகேசரி அலுவலகத்திற்குச் சென் ருேம், V
வீரகேசரி அலுவலத்திற்குச் செல்ல என் உள்ளம் உற்சாகம் கொண்டது. இதற்குக் காரணம் பத்திரிகைத் துறையில் எனக்கிருந்த ஈடுபாடுதான்.
தமிழ்முரசில் சிங்கப்பூரில் தமிழ் முரசு நாளிதழில் பத்தாண்டுகள் வரை இரவைப் பகலாக்கி உழைத்துள்ளேன். அந்த அச்சுத் துறை
83

Page 50
அனுபவத்தினுல்தான் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியன் மூவி நியூஸ் இதழின் ஆசிரியராக, சிறப்பாகப் பணியாற்ற முடிந்துள்ளது. "வேல்" இதழையும் 14 ஆண்டு களாக வெளியிட்டு வரவும் தொடக்கத்தில் பெற்ற அந்த அச்சக அநுபவம் உதவியாக இருந்தது.
மேலும் என் எழுத்து ஆர்வத்திற்கு அந்த நாட்களில் 'ஈழகேசரி’யும் ‘வீரகேசரி" யும் அடித்தளங்களாக இருந்தன. ஈழகேசரியில் பள்ளிப் பருவத்தில் நான் எழுதிய கட்டுரை களும் வெளிவந்த ஆண்டையும் இங்கே தருகிறேன்:
கட்டுரைகள் மலாயாத் தமிழர் - ஈழகேசரி - 24-7-1949 மலாய் நாடு - ஈழகேசரி - 28-8-1949
மலாயாவில் ஜப்பானியர்
- ஈழகேசரி - 9-10-1949
ஆட்சி (தொடர் கட்டுரை) புராதன ೧೫ LT ஈழகேசரி - 5-11-1950 (தொடர் கட்டுரை) பெர்னுட் ஷா - ஈழகேசரி - 24-12-1950 பாரதியார் - ஈழகேசரி - 9-9-51 மலாயாவில் உள்ள
இந்து ஆலயங்கள் சிங்கப்பூரில் சீனர்கள் வாழ்க்கை - வீரகேசரி - 2-9-1951"
. வீரகேசரி - 15-1-1950
நாளிதழ்களைத் தொடர்ந்து நடத்துவதில் உள்ள சிரமங்
கள் எண்ணிலடங்கா!
இரவைப் பகலாக்கி
தமிழ் முரசில் பணியாற்றும் போது ஞாயிறு இரவை வெளி யிடுவதற்காக சனிக்கிழமை இரவு முழுதும் விழித்திருந்து பணியாற்றிய நாட்களை என்னுல் மறக்க முடியாது. விடிய விடிய வேலை செய்வதற்கு 50 காசு காப்பிச் செலவுக்குத் தரப் படும். ஒவர்டைம், போனஸ், விடுமுறை என்று எதையும்
84

நாங்கள் அப்போது பார்த்தது இல்லை. இப்படி ஆண்டுக் கணக்கில் அன் ருடம் அல்லல் பட்டு தமிழ் நாளிதழைக் கொண்டு வர தமிழ்வேள் கே. சாரங்கபாணி அவர்களுடன் உழைத்துள்ள நாட்களை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். இன்றைய இளஞ்சந்ததியினரிடம் இத்தகைய மொழி உணர்வு, சமுதாய உயர்வுக்கான குறிக்கோள் இருக்குமானுல் தமிழ்ப் பத்திரிகைத் துறையிலும் முனைப்பான வேகத்தைக் கொண்டு
வர முடியும்.
தமிழர்கள் இப்போது தனித்து விடப்பட்டவர்கள் அல்லர். அனைத்துலகிலும் உள்ள ஆறு கோடித்தமிழர்களையும் ஒருங் கிணைத்து அவர்கள் எதிர்நோக்கும் மொழி, கலை, சமய, அரசி யல், சமுதாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் அமைப்பை ஏற்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
அண்மையில் பம்பாயில் நடை பெற்ற ஒரு கூட்டத்தில் கலைஞர் மு. கருணுநிதி பேசுகையில் ஈழத் தமிழர்களின் பிரச்னையை மட்டுமல்லாது, உலகின் எந்த மூலையில் இருந்தா லும் அந்தத் தமிழனின் நலன் காண உலகத்தமிழ்ப் பேரவை ஒன்றைத் தொடங்க வேண்டு மென்று மொழிந்துள்ளார்.
உலகத் தமிழ்ச் சங்கம்
மதுரையில் நடை பெற்ற உலகத் தமிழ் மாநாட்டிலும் உலகத் தமிழ்ச் சங்கத்தைத் தமிழக முதல் வர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். மூன்று சங்கம் கண்ட மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் உதய மாகியுள்ளது. அது உதயத்துடன் மறைந்து விடாமல் நன்கு செயல்பட வேண்டும்.
உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அதன் பணிகளும் விரிவுபட வேண்டும்.
உலகத் தமிழர்களை இன்னும் அணுக்கமாகப் பிணைக்கக் கூடிய சக்தி பத்திரிகைகளுக்கு உள்ளது.
85

Page 51
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் மலேசியா, தமிழர்களைப் பற்றி நான் எழுதிய கட்டுரைகளை இலங்கையின் ஈழகேசரியும் வீரகேசரியும் வரவேற்று வெளியிட்டுள்ளன இந்த முப்பதாண்டுகளுக்குப் பின்னர் பார்க்கும் போது உலகத் தமிழர்களை இன்னும் நெருக்கத்துக்குக் கொண்டு வரக் கூடிய முயற்சி போதியதாக இல்லை.
விழிப்பைத் தந்தது
எண்ணியவுடன் விரைந்து போக ஜும்பேரி ஜெட் விமானங்கள் உலக நாடுகளை அணுக்கமாகக் கொண்டு வந்திருந்தும் தமிழர்களை ஒன்றிணைக்கும் காரியங்கள் மட்டும் மர்ட்டு வண்டி யுகத்தில் இருப்பதையே உணர்த்துகின்றன. தமிழ் ஈழம் காண வேண்டுமென்ற குரல்தான் ஏதோ ஒரு விழிப்பை ஏற்படுத்தியுள்ளது. அது நல்ல விடிவைக் கொண்டு வர தமிழ் மொழி பேசும் ஒவ்வொருவரும் தூக்கத்தை விட்டு ஊக்கம் காட்ட வேண்டும். பிரச்னை ஈழத் தமிழர்களுக்கு உரியது மட்டுமல்ல. உலக மெங்குமே உள்ள தமிழர்களுக்கு உரியது. w
பெங்களூரில் தமிழர்களுக்கு எதிராக அணி, பம்பாயில் தமிழர்களை எதிர்த்து அமளி, பிரிட்டனில் இனவெறி, மலாயா வில் இந்து ஆலயங்கள் மீது தாக்குதல், சிங்கப்பூரில் காவடி களுக்கு அடக்கு முறை என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்தி களைப் படிக்கும் போது அதற்கெல்லாம் குரல் கொடுக்க f அனைத்துலகத் தமிழர் இயக்கம் செயல்பட வேண்டும்.
வீரகேசரி அலுவலகத்திற்குள் அடி வைக்கும் போது இப்படி உலகத் தமிழர்களை இணைக்கும் சக்தி தேவை என்ற சிந்தனையுடன் சென்ற என்னை வீரகேசரியின் பிரதம ஆசிரியர் திரு. க. சிவப்பிரகாசம் அவர்கள் கனிவுடன் வரவேற்ருர்,
தமது அறையில் எங்களை அமர வைத்தார். சுவையானதேநீர் வந்தது!
86

திரு. பாலா, திருமதி பாலா, திரு. சிவம், திரு. அந்தோனி ஜீவா, திரு. ராகலை விஸ்வதாதன் மற்றும் எனது குடும்பத்தி னர் எல்லோரும் சேர்ந்து வந்ததால் பத்திரிகை அலுவலகத் தில் சற்று பரபரப்பு ஏற்படவே செய்தது
தென்னை மரங்களும் புளிய மரங்களும் அடர்ந்த சோஆல நடுவே வீரகேசரி அலுவலகம் குளிர்ச்சியான சூழ்நிலையில் அமைந்திருந்தது.
நெடிய தோற்றத்தைக் கொண்ட சிவப்பிரகாசம் அவர் களுடன் பத்திரிகைகளின் நிலை பற்றி உரையாடினுேம்,
தாம் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் வருகையளித்திருப் பதாகவும் அங்குள்ள தமிழ் நாளேடுகள் நல்ல தரத்துடன் வருவதாகவும் திரு. சிவப்பிரகாசம் பாராட்டினர்! Y
“பெரிய அளவில் அதிக பக்கங்களுடன் ஆங்கி ல ப் பத்திரிகைகளை மட்டுமேதான் வெளியிட முடியும் என்பதில்லை. தமிழ்ப்பத்திரிகைகளும் செய்ய முடியும் என்பதை உங்கள் வீரகேசரிதான் உலகிற்கே முதலில் செய்து காட்டிப் புகழ் பெற்றது' என்றேன். அதை அவர் புன்னகையுடன் ஒப்புக் கொண்டார்.
தமிழகத்தில் சுதேசமித்திரன், தினத்தந்தி, தினமணி, அண்ணு, தினகரன், தினமலர் போன்ற நாளிதழ்கள் வெளி வந்தாலும் ஒரு நல்ல தரத்தை இன்னும் அவை ஏற்படுத்த வில்லை. தினத்தந்தியின் சதக் சதக் வெட்டு, குத்துச் செய்தி கள் பாமர மக்களிடையே பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை.
சென்னை 'தினமணி" பரபரப்பாகச் செய்திகளை வெளி யிடுவதில்லை என்ருலும் படித்தவர்களிடையே அது செல்
வாக்கைப் பெற்றுள்ளது.
நம் நாட்டுச் செய்திப் பத்திரிகைகளில் அதிகமான பக்கங் களுடன் வண்ணத்தில் வெளிவருவது தினமணி (முன்னிய
87

Page 52
தமிழ் மலர்). கடந்த தீபாவளியின் போது 40 பக்கங்களுடன் தினமணி வெளி வந்தது.
வீரகேசரியில் எனது கட்டுரைகள் வெளி வந்ததைப் பற்றிக் குறிப்பிட்டு சிங்கப்பூர்-மலேசியா பற்றி ஈழத்து மக்கள் தெரிந்து கொள்ள எனது கட்டுரைகளும் படங்களும் பெரிதும் உதவியதாக அப்போது அதன் ஆசிரியர் திரு, ஹரன் அவர் கள் எனக்கு எழுதியிருந்தார் என்றும் கூறினேன்.
மாணவப் பருவத்தில் எனக்கு ஏற்பட்ட எழுத்து ஆர்வத் திற்கு உரமாக அமைந்தன இலங்கை ஏடுகள்.
வீரகேசரி அலுவலகம் கிராண்ட்பாஸ் என்ற இடத்தில் இருந்தது.
பொன் விழா இலங்கை வானுெலியின் ஐம்பதாம் ஆண்டுப் பொன் விழாவைக் கண்ட நாம், இப்போது தமிழ் உலகிற்கு அருஞ் சேவையாற்றி வரும் வீரகேசரியின் பொன் விழாத் தருணத்தில் தான் வந்துள்ளோம் என்பதைக் கேட்டு மகிழ்ச்சி கொண் டோம்.
தமிழ் நாளிதழ்களில் பொன் விழாக் கண்டவை மிகச் சில ஏடுகளே!
சென்னையில் சுதேசமித்திரன் நூருண்டுப் பழமை வாய்ந்த நாளேடு.
மலேசியாவில் தமிழ் நேசன் பெரன் விழாவைக் காண உள்ளது.
தமிழ் முரசு இந்த 1982-ல் பொன் விழாக் காண இருக் கிறது.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் ஆங்கில, சீனமொழிப் பத்திரிகைகள் அதிக பக்கங்களில் தெளிவான அச்சில் உயர்ந்த தரமுடன் வரும் போது, அதுபோல் ஆப்செட்டில் தமிழ் நாளி தழ்களும் வெளிவர வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிருேம்.
88

தமிழ்ப் பத்திரிகைகளைப் படிப்போர் எண்ணிக்கை பெருகிளுல் தான் பத்திரிகைகளை விரிவு படுத்த முடியும் என்கிருர்கள் பத்திரிகை நிர்வாகிகள்.
ஆணுல் தமிழ் நாளிதழ்கள் ஆங்கில இதழ்களின் தரத்தை எட்டிப் பிடிக்காத வரை அதை வாங் கி ப் படிப்போரின் எண்ணிக்கையும் உயர முடியாது என்பது என் கருத்து. இதை நன்குணர்ந்து செயல் பட்டு வெற்றி கண்டு வருகிறது கோலா லம்பூர் 'தினமணி".
இருமொழி இதழ் நாளிதழ் நடத்துவது என்பது யானையைக் கட்டித் தீனியைப் போடுவது போல் என்பது உண்மைதான். ஆனல் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, வரலாறு எல்லா வற்றையும் பிரதிபலிப்பது நாளேடுகள் என்பதை நாம் மனதில் கொண்டு அவற்றிற்கு ஆதரவு தர வேண்டும். ஆங்கிலம் படித்த தமிழர்களின் இல்லங்களில் தமிழ் நாளிதழ்கள் இன்னும் இடம் பெருத நிலை எங்குமே நிலவுகிறது. இதனைப் போக்க தமிழ்-ஆங்கில இரு மொழிகள் இணைந்த நாளிதழ்களை வெளியிடலாம்.
திரு. சிவப்பிரகாசம் அவர்கள் உதவி ஆசிரியர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
வீரகேசரியின் பொன்விழா மலர் ஒன்றையும் வழங்கினர். பெரிய அளவில் 40 பக்கங்களைக் கொண்டிருந்த வீரகேசரி பொன் விழா மலரில் வீரகேசரியின் பணியைப் பாராட்டி, ஏராள மான வாழ்த்துச் செய்திகளும் கட்டுரைகளும் இடம் பெற்றி ருந்தன.
பிரதமர் ஆர். பிரேமதாசா, அ. அமிர்தலிங்கம், முன்னுள் பிரதமர் திருமதி பூரீமாவோ பண்டார நாயகா, சபாநாயகர் அல் ஹாஜ் எம். ஏ. பாக்கீர் மா க் கார் ஆகியோருடன் கி. ஆ. பெ. விசுவநாதம், சாலை இளந்திரையன் போன்ற தமிழ்
89 E

Page 53
அறிஞர்களின் வாழ்த்துச் செய்திகளும் மலரை அலங்கரித் திருந்தன. "
மித்திரன் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளி யீடான வீரகேசரி தேசிய கண்ணுேட்டத்தில் நடு நிலை வகிக் கிறது. மாலை இதழாக மித்திரன் என்ற இதழும் 1966 முதல் வெளிவருகிறது.
6-8-1930 ல் கொழும்பு நகரில் நாட்டுக் கோட்டைச் செட்டியாரான திரு. பி. பி. ஆர். சுப்பிரமணியம் செட்டியார் அவர்களால் தொட்ங்கப்பட்டது வீரகேசரி. எட்டுப்பக்கங் களில் ஐந்து சத விலையில் வெளி வந்தது.
வீரகேசரி வெளிவரு முன்னர் தமிழ் நாளிதழ் எதுவும் வர வில்லை என்று கூறப்படுகிறது. ஆயினும் “தினத்தபால்’ என்ற இதழ் வந்ததாகச் சிலர் கூறுகின்றனர்.
ஆங்கில-தமிழ் இரு மொழி இதழான "உதயதாரகை," “இந்துசாதனம்,” “சத்தியவேத பாதுகாவலன்" ஆகிய வார இதழ்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து கொண்டிருந்தன.
'ஆப் சர்வர்,” “டைம்ஸ்," "சிலோன் மோர்னிங் ஸ்டார்" "ஸ்டாண்டர்ட்," "சிலோனிஸ்," "கதலிக் மெ ச ஞ் சர்’ "தி லாம்ப்" ஆகிய ஆங்கிலப் பத்திரிகைகள் அப்போது வெளி வந்தன. جی
இன்று வீரகேசரியில் 300 ஊழியர்கள் பணியாற்றுகின்ற னர். வீரகேசரி ஊழியர் நலன் புரிச் சங்கம் ஒன்று இவர்கள் நலனைக் கவனிக்க நன்கு செயற்பட்டு வருகிறது. அன்ருடம் பெரிய அளவில் 12 பக்கங்களில் வீரகேசரி வெளிவருகிறது.
வீரகேசரியின் முதல் இதழிலேயே அதன் ஆசிரியர் திரு. எல். நெல்லையா எழுதிய "இரத்ணுவளி அல்லது காதலின் மாட்சி" என்ற தொடர் கதை வெளி வந்தது. இவர் பல நாவல்களைத் தொடர்ந்து வெளியிட்டார்.
90

விளம்பரங்கள்
வீரகேசரியின் தொடக்க இதழ்களில் சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த 'முன்னேற்றம்" கோலாலம்பூரிலிருந்து வந்த 'மலாய்நாடு," பர்மாவிலிருந்து வெளிவந்த “சுதந்தரன்" 'சுகேசபரிபாலினி’ ஆகிய இதழ்களின் விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன.
இதற்கிடையில் வீரகேசரி படப்பிடிப்பாளர் திரு. நசீர், எங்களைப் படம் எடுத்தார். அந்தப் படங்கள் மறுநாள் வீரகேசரியில் வெளி வந்தன.
நாளிதழ்களை வெளியிடும் பத்திரிகை நிறுவனங்கள் புத்தகப் பிரசுரங்களிலும் பொறுப்புள்ள பங்காற்ற முடியும் என்பதற்கு வீரகேசரி நிறுவனம் நல்ல வழிகாட்டி வருகிறது.
1940 தொடக்கமே வீரகேசரியின் நூல் பிரசுரங்கள் வெளி வருகின்றன. கே. வி. எஸ். வாஸ் (ரஜனி) எழுதிய பல நாவல்கள் மற்றும் பல நாவல்கள் சிறுகதைத் தொகுதிகள், நாடகங்கள் என 70க்கு மேற்பட்ட புத்தக வெளியீடுகள் வீரகேசரிப் பிரசுரமாக வந்துள்ளன.
நம் நாட்டில் நாளேடுகளை நடத்துவோர் புத்தகப் பிரசுரத் திலும் சற்று உதவலாம். கோலாலம்பூரில் “வானம்பாடி' வார ஏடு புத்தக வெளியீட்டில் சில காலம் கவனம் செலுத்தியது. பிறகு அதுவும் நின்று விட்டது. இது மீண்டும் தொடர வேண்டும்.
வீரகேசரி அலுவலகத்திற்கு நாங்கள் போனது மாலை நேரமாகையால் சுறுசுறுப்பாக எல்லோரும் இயங்கிக் கொண்டி ருந்தனர்.
ஞாயிறு பதிப்பு வீரகேசரி ஞாயிறு மலர் பொறுப்பாசிரியர் திரு.ராஜகோபால்,
டேவிட்ராஜா மித்திரன் வாரமலர் ஆசிரியை லட்சுமி, உதவி ஆசிரியர் நடராசர் ஆகியோருடன் பத்திரிகை அலுவல்கள்
9.

Page 54
பற்றி விசாரித்தேன். ஞாயிறு பதிப்பை 16 பக்கங்களில் வெளியிடத் தயாரித்துக் கொண்டிருந்தனர்.
கம்போசிங் பகுதி பெரிய தொழிற்சாலை போன்று தோன்றி யது. ஏராளமான அச்சுக் கோப்பாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
இன்னுெரு பக்கம் லைஞே, மோணுே எனப்படும் மின் இயல் அச்சுக் கோர்ப்புகளையும் பார்த்தோம்.
"இது எப்படி வேலை செய்கிறது” என்று மோனுே அச்சு இயந்திர ஊழியரிடம் கேட்டேன்.
'உங்கள் பெயர் என்ன சார்?" என்று அவர் கேட்டார்.
*எஸ். எஸ். சர்மா’ என்று கூறினேன்.
தம் முன்னிருந்த தமிழ் டைப்ரைட்டரைப் போன்ற சாதனத்தில் எதையோ தட்டிஞர்.
அதைக் தட்டி முடிப்பதற்குள் ஒரு பட்டையான ஈயத் துண்டு வந்து விழுந்தது. அதில் அழகாக தமிழில் என் பெயர் இருந்தது.
“இந்த இயந்திரத்தில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் விரைவாக அச்சுக் கோர்த்து விடலாம். அச்சடித்த பின்னர் அந்த ஈயத்தை மீண்டும் உருக்கில் போட்டு அன்ருடம் புதிய எழுத்துக்களை உருவாக்கலாம்!" என்ருர் அவர்
"இதுகூடப் பழைய முறை. எங்கள் ஊர் ஸ்டிரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிகை போட்டோ கம்போசிங் எனப்படும் கம்பியூட் டர் முறையில் விரைவாகப் பக்கங்களைச் செய் கி ருர் கள். ஐ. பி. எம் எனப்படும் நவீன அச்சுக் கோர்க்கும் முறை இன்னும் தமிழில் வரவில்லை. உங்களைப் போன்ற பெரிய பத்திரிகைகள்தான் அதை அறிமுகப்படுத்த வேண்டும்" என போர்மனிடம் கூறிக் கொண்டு அவர்களிடம் விடை பெற்றேன்.
92

அங்கிருந்து வந்த போது ஒரு பெரிய புரூப் எடுக்கும் மெஷின் என் கவனத்தைக் கவர்ந்தது. பெரிய சுழலும் கைப் பிடியுடன் இன்னும் இயங்கக்கூடிய நிலையில் இருந்த அது இலங்கைக்கு வந்த முதல் படி எடுக்கும் சாதனம் என்று தெரிந்தது
ரோட்டரி இயந்திரம்
அங்கிருந்து புத்தகப் பிரசுரப் பகுதி, பைண்டிங் பகுதி ஆகியவற்றைப் பார்த்து விட்டு பத்திரிகை அச்சிடும் இடத் திற்கு வந்தோம்.
மிகப் பெரிய ரோட்டரி இயந்திரம் அந்தத் தனிக் கூடத்தை அடைத்துக் கொண்டிருந்தது.
பிர்மாண்டமான சுருள்தாள் அச்சடிப்பதற்குத் தயாராக இருந்தது.
அடுத்த நாள் வீரகேசரி இதழின் பக்கங்களை ஈய உருக் கில் பதித்து இயந்திரத்தில் பூட்டிக் கொண்டிருந்தார்கள்.
அந்தப் பெரிய ரோட்டரி இயந்திரம் 1950ம் ஆண்டி லிருந்து இயங்கி வருவதாகக் கூறிஞர் மெஷின்மேன்! .
தடைப்படாது
“இவ்வளவு பெரிய இயந்திரம் பழுதாகிவிட்டால் பத்திரிகை வெளியீடு தடங்கல் படுமே?" என்று கேட்டபோது, அதை உடனே பழுது பார்க்கத் தங்களால் முடியும் என்றும் கூறிஞர்,
"உடனே பழுது பார்க்க முடியாத நிலை ஏற்படும் போது சிறிய இயந்திரங்களில் அச்சடித்து, பத்திரிகை எப்படியும் தடைப்படாமல் வெளிவந்துவிடும்" என்ருர் அவர்கள் பொறுப் புணர்ச்சி, உழைப்பு உண்மையில் பாராட்டுக்குரியது.
ஏராளமான நிருபர்கள், உதவி ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்களின் அயராத உயர்ந்த சேவையினுல் நாடும் மக்
93

Page 55
களும் போற்றும் விதத்தில் வெளிவரும் வீரகேசரி உண்மையில் உலகத் தமிழர்கள் பெருமிதப் படத்தக்க ஏடாகும்!
>k 米 >k
அன்று மாலை விடுதிக்குத் திரும் பிய தும் வீரகேசரியில் வெளி வந்த சினிமா விளம்பரங்களை எனது துணைவியார் ஆவலுடன் பார்த்துக் கொண்டி ருந்தார்,
*என்னங்க ரத்தத்தின் ரத்தமே படம் நூறு நாளாய் ஒடு தாம். போய்ப் பார்ப்போமா? என்ருர்,
நல்ல படம் "பேரே என்னமோ போல இருக்கு. ஒரே குத்தும் கொலை யுமாய் இருக்குமா? என்று கேட்டார்!
*சேச்சே.அது நல்ல படம். இலங்கையிலே தயாரிக்கப் பட்டது. ஜெய்சங்கர், ராதிகா, நாகேஷ், ஆகியோர் நடிக் கிருங்க போய்ப் பார்க்கலாம்” என்ருர் அந்தனிஜீவா.
அன்றைய அலைச்சலில் பிள்ளைகள் சோர்ந்து காணப் படவே படத்திற்குப் போகும் திட்டத்தைக் கைவிட்டோம்.
இலங்கையில் சில தமிழ்ப் படங்கள் ஆறு மாதங்கள், எட்டு மாதங்கள் என்று தொடர்ந்து ஓடுகின்றன. இது தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்பட்ட நாட்டில்கூட கிடைத்திராத ஆதரவைக் காட்டுகிறது.
நாங்கள் போயிருந்த சமயம் பைலட் பிரேம்நாத், மீனவ நண்பன் போன்ற படங்கள் ஆருவது மாதமாக ஓடிக் கொண் டிருந்தன! -
படக்கட்டுப்பாடு
இலங்கையில் தமிழ்ப் பட இறக்குமதி கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. இலங்கைத் திரைப்படக் கார்ப்பரேஷனே
94

ஆண்டுக்குக் குறிப்பிட்ட சில படங்களைப் பெரும்பாலும் , _urf? மாற்ற அடிப்படையில் தருவிக்க அனுமதிக்கிறது.
இதனுல் இலங்கையில் தமிழ்ப் படத்தயாரிப்பு நல்ல வளர்ச்சி காண முடிந்துள்ளது.
நட்சத்திர ஓட்டல்
சிங்களப் படங்கள் ஏராளமாக தயாராகி வெளிவந்து கொண்டிருக்கின்றன. சிங்களப் படங்கள் இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டிலும் திரையிடப்படுவதில்லை. இதனுல் அவர்களுக்கு இந்தியப் படத் தயாரிப்பாளர்கள் மீது ரொம்பக் கோபம்! இந்தியப் படங்கள் மட்டும் இங்கே திரையிடப்பட்டு ஏராளமாகச் சம்பாதிப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவேதான் அதைக் கட்டுப்படுத்தி விட்டார்கள்
ரத்தத்தின் ரத்தமே படத்தின் நிர்வாகி திரு. அரியரட்னம் நாங்கள் தங்கியிருந்த ராமகிருஷ்ணு லாட்ஜுக்கு எதிரே இருந்த பிரைட்டன் ஒட்டலின் நிர்வாகிகளில் ஒருவர் என்று திரு. அந்தனி ஜீவா கூறினுர். தமிழ்ப்பட நட்சத்திரங்கள் யார் வந்தாலும் அந்த ஒட்டலில் தான் தங்குவார்கள் என்ருர் அவர்!
*உண்மையில் அது ஒரு நட்சத்திர ஓட்டல்தான்" என்று பாராட்டினேன் நண்பரிடம்!
இலங்கையில் இது வரை ஏறத்தாழ 30 தமிழ்ப் படங்கள் தயாராகியுள்ளன. -
சமுதாயம், தோட்டக்காரி, டாக்சி டிரைவர், கடமையின் எல்லை, நிர்மலா, மஞ்சள் குங்குமம், வெண்சங்கு, குத்து விளக்கு, மீனவப்பெண், புதிய காற்று, வாடைக் காற்று, கோமாளிகள். இப்படிப் பல தமிழ்ப் பிடங்களை இலங்கையில் உருவாக்கியிருக்கிருர்கள்.
,95

Page 56
சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களால் இன்னும் ஒரு தமிழ்ப் படத்தைக்கூட ஒழுங்காக உருவாக்க முடியவில்லை!
கூட்டுத் தயாரிப்புகள் இந்திய-இலங்கைக் கூட்டுத் தயாரிப்புகளாகவும் சில தமிழ்ப்படங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. நங்கூரம், பைலட் பிரேம்நாத், நீலக்கடலின் ஓரத்திலே, ரத்தத்தின் ரத்தமே ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை.
இலங்கையில் உள்ள மூன்று சினிமாப் படப்பிடிப்பு
அரங்குகளான விஜயா ஸ்டூடியோ, சிலோன் ஸ்டூடியோ, ஆ. டி. ஸ்டுடியோ ஆகியவை தமிழர்களுக்கே சொந்தமானவை.
திரைப்படத் > துறையில் வீடியோ படப் பதிவுகளில் முனைப்புடன் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அங்கே காண முடிந்தது.
ck k >k
இலங்கையில் தமிழ்த் தினசரிகளான வீரகேசரி,
தினகரன், ஈழநாடு, தினபதி, மித்திரன் ஆகியவை சிறப்பாகச் செய்திகளைத் தருகின்றன.
உள்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகள், விமரிசனங் கள், கட்டுரைகள் யாவும் ஞாயிறு வெளியீடுகளுக்கு எழிலாக அணி செய்கின்றன. "சுதந்திரன்’ வார இதழும் நல்ல வர வேற்பைப் பெற்று வருகிறது.
சிந்தாமணி வார இதழில் (தினபதி வெளியீடு) கவர்ச்சி யுடன் கட்டுரைகள், கவிதைகள், மீாதர் அங்கங்கள் வெளி யிடப்படுகின்றன. இலங்கை ஓவியர்களின் சிறந்த கைவண் ணத்தையும் இதில் காண முடிந்தது.
96

1930ம் ஆண்டு முதல் வெளி வந்த ஈழகேசரி' 1958ல் நின்று விட்டது.
எங்கள் நாடு
அன்று கொழும்பு கடைவீதிகளுக்குச் சென்று இலங்கைத் தமிழ் வெளியீடுகள் சிலவற்றை வாங்கினேன்.
“சுடர்' கலை இலக்கிய மாத இதழ் படிப்பதற்குச் சுவை யான பல அம்சங்களைக் கொண்டிருந்தது. 'மணிக்கவிதை மலர்ச் சரங்கள்" பகுதியில் பல இளங் கவிஞர்களின் கவிதை கள் இடம்பெற்றிருந்தன. இதில் இளம் கவிஞர் முருகுவின் பாடல் இது:- w -
எங்களுக் கென்ருெரு நாடு இருந்தது
என்பதை நாம் அறிவோம்!
எங்களின் நாட்டினைத் தமிழே ஆண்டது,
என்பதும் நாம் அறிவோம்!
எங்களின் நாட்டினை எம்மவர்கள்தான்
ஆண்டனர் நாம் அறிவோம்! எங்களின் நாட்டினை எங்கிருந்தோ வந்த
அந்நியர் பறித் தெடுத்தார்!
எங்கள் தமிழ்க்கலை பண்பாடு என்பவை
வளர்ந்திட நாடு வேண்டும் எங்கள் தமிழ் மொழி முன்னர் போல் மீளவும்
ஆண்டிட நாடு வேண்டும்!
எங்கள் தமிழினம் இன்றுள்ள நிலை நீங்கி
வாழ்ந்திட நாடு வேண்டும்!
எங்கள் மூதாதையர் அன்றிழந்திட்ட எம்
நாட்டினை மீட்க வேண்டும்!
97

Page 57
இளம் படைப்பாளர்களின் மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் இவை போன்ற கவிதைகள் வெளிப்படுத்தி புது எழுச்சியைத் தந்து வருகின்றன.
வசந்தம்
"வசந்தம்” என்ற மற்ருெரு இதழ். இதில் கலை, இலக்கிய விமரிசனங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த இதழ் ஓர் இலக் கிய வட்டத்தை உருவாக்கி, அவர்களின் விமரிசனங்களுக்குத் தக்க இடமளித்து வருகிறது.
என்னைக் கவர்ந்த மற்ருெரு திங்கள் இதழ் 'கதம்பம்" கே. வி. எஸ். மோகன் இதன் ஆசிரியர்.
இந்த இதழில் சில கதைகள் இலங்கைக்கே உரித்த நடை யில் இருந்தன.
'வாரும் வேய் ராமசாமி, காலங்காத்தாலே என்ன சோலியா வேய் வந்திரு'
"இந்தா பொட்ட, ஒரு சொம்பு நீத்தண்ணி கொண்டு வா’ என்று கத்தினர். ی
"இவதான் என்னுடைய ஒரே பொ ட்ட ப் புள்ள சிந்தாமணி. எப்படியிருக்கா?”
இப்படிச் சுவைபட அந்த மண்வாடையுடன் உரையாடல் உள்ள கதைகளையும் காண முடிந்தது.
தமிழ் நாட்டிலிருந்து வெளியாகும் எண்ணற்ற சஞ்சிகை களின் நடுவே ஈழத்தின் வெளியீடுகள் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
*சிரித்திரன்" என்ற இதழ் நகைச்சுவையுடன் சிறப்பாக உள்ளது. “அலை" என்ற மாத இதழும் மனங்கவர்ந்தது. திரு. நா. முத்தையா அவர்களை ஆசிரியராகக் கொண்ட "ஆத்மஜோதி" க்கு நாடெங்கும் வரவேற்பு உள்ளது.
98

டொமினிக் ஜீவா எழுதிய “வாழ்வின் தரிசனங்கள்" சிறுகதையிலும் மண்ணின் வாசனை மலர்வதைக் காணலாம். இதோ அதில் ஒரு பகுதி.
மகன் மேகமூர்த்தியின் கையாலாகாத தனத்தைக் கண்டு தையலம்மா கோபித்துக் கொண்டாள்.
“போணை ! சனியன் பிடிச்ச கோழி கள்ளுக்கொட்டில் வளவுக்கை ஒடீட்டுது. அதுக்கை ஆக்கள் இருக்கினம். நான் கொட்டில் வளவுக்கை போறதில்லை . எடேய் தம்பி, மேகம் இந்தப் பால் போத்தல் ரெண்டையும் மடத்திலை குடுத்துப்போட்டு அப்படியே பெரிய கடைப் பக்கம் போய்ப் பசு மாடுகளுக்குப் பிண்ணுக்கும் பருத்திக் கொட்டையும் வாங்கிக் கொண்டு வா ராசா, ’
“போணை எனக்குத் தெரியாது! நான் எங்கையும் அவசரமாப் போக வெளிக்கிட்டால் தான் உனக்கும் வேலை. நேத்துச் சோதனை இண்டைக் கொண்டா லாவது 'மாச்" ப்ாக்கப் போகலா மெண்டால் எனக்கு வேறை வேலை சொல்லுருய். வேணுமெண்டால் மடத்திலை பாலைக் குடுக்கிறன். பெரிய க  ைட க் குப் போக 'ז6- 'upr
("போ மகனே!" என்பதைத்தான் “போனை" என்று குறிப்பிடுவது!)
புதுக் கவிதை சிறு கதைகளைக் கண்ணுேட்டமிட்டோம். கவிதைத் துறையிலும் புகழ் பெற்றவர்கள் நிரம்ப உள்ளனர்.
நாவற்குழியூர் நடராசன் எழுதிய “இல்லையான காவியம்” என்ற கவிதையில் ஒரு பகுதி இது:
சூழ நீள்கடல் சூழ்ந்து கிடப்பினும் ஆழ நீளம் அறிந்தில வாறுபோல், ஆளை ஆளங்களந்தறி யாதது *கீழம்' என்ருெரு நாடிருக் கின்றது.
99

Page 58
ஆனையான அடங்கிக் கிடப்பதும் பூனையான புடைத்துக் குதிப்பதும் சேனை நாயகர் சித்திரச் சிங்கங்கொண் டானை ஆள நினைத்ததும் அங்குதான் மந்தி சிங்க மயிரினப் போர்த் (து), "ஒரு முந்தி வந்த முழுமுதல் தான்' என நந்தி தம்மை நவை செயும்; இங்கிவை வெந்து நொந்து வெடித்தெழுந்தார்த்திடும்
புதுக் கவிதைத் துறையிலும் பெரிய திருப்பத்தை இலங்கையின் இளம் கவிஞர்கள் செய்து வருகின்றனர். தமிழ கத்தில் கூட இந்த அளவுக்குப் புதுக் கவிதைகள் வளர்ச்சி அடையவில்லை.
புதுக் கவிதைகள் என்பது வலையில்லாமலே பூப்பந்தாடு
வது போன்றது என்று ஒருவர் விளக்கம் கொடுத்திருந்தது நினைவுக்கு வருகிறது. 0
இலக்கணம் தேவையில்லை எளிமையான நடையில், நகைச்சுவையுடன் தமிழ் மொழியைப் பரப்ப, கவிதை ஞானத்தை வளர்க்க புதுக் கவிதை கள் புதுப்பாதை காட்டுகின்றன. இலக்கிய உலகம் இதையும் வரவேற்று ஏற்கிறது.
திரு. கு. அழகிரிசாமி இது பற்றிக் கூறியது என் நினை வுக்கு வருகிறது. “கவிதைக்கு இலக்கணம் இல்லாவிடினும் பரவாயில்லை. ஆணுல் அதற்கு உயிர் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது மக்கள் மனத்திலே பதிந்து நல்ல ரசனையைத் தர முடியும்!”
புதுக்கவிதைகளும் இப்படி ஒரு புது மலர்ச்சியைக் கொண்டு வருகின்றன.
100

தமிழின் மறுமலர்ச்சிக்கு, இலக்கிய வளர்ச்சிக்கு ஈழம் ஆற்றியுள்ள பெரும் பங்கை வெளி உலகம் இன்னும் சரிவர அறியவில்லை. அண்டையிலுள்ள தமிழகம் கூட ஈழத்துக் கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு உரிய மதிப்பை, ஆதரவைத் தர்வில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. தமிழக சஞ்சிகைகளுக்கு, திரைப்படங்களுக்கு இலங்கை பெரிய சந்தையாக இருந்த காலத்தில் கூட அங்குள்ள இலக்கியகர்த் தாக்களுக்கு இடமளிக்க ஏணுே அவர்களுக்கு மனம் வந்த தில்லை. குறுகிய எண்ணங்கள் மறைந்து உலகத் தமிழர்களின் குரல் எங்கும் எதிரொலிக்க வேண்டிய தருணம் இப்போது வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும் தமிழுக்குக் கர்த்தாக் கள் அல்லர், தமிழனின் படைப்புகள் எந்த நாட்டிலிருந்து வந்தாலும் அதைப் போற்றும் பெரிய மனம் இனியாவது ஏற்பட வேண்டும்.
திறமையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களை வரவேற்று ஆதரிக்கும் பரந்த உள்ளம் வேண்டும். அதுபோல் யாழ்ப் பாணத் தமிழர்களும் தங்கள் வட்டத்திற்குள்ளேயே குறுகி இராது வெளி உலகோடு உலா வர வேண்டும்!
நாவலர் قط) [9,10یے
பிற சமயங்களில் மயங்கிய தமிழர்களுக்கு சைவத்தின் மாண்பை விளக்கிய ஆறுமுக நாவலர், இசை ஆராய்ச்சியில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத “யாழ் நூல்" தந்த சுவாமி விபுலாநந்தர், கலைஞர் ஆனந்தக் குமாரசுவாமி, தத்துவ விளக் கங்களை எளிமைப்படுத்தித் தந்த சிவயோகர் சுவாமிகள், ஞானப்பிரகாச அடிகள், திரு. வி. க. அவர்களின் குருநாதர் யாழ்ப்பாணம் மேலைப்புலோலி சதாவதானம் திரு. நா. கதிர வேற்பிள்ளை போன் ற பேரறிஞர்களைத் தந்து பெருமை பெற்றுள்ளது ஈழம். M−
101.

Page 59
இன்னும் அறிஞர்கள் சி. கணேசையர், சோமசுந்தரப் புலவர், பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை, பண்டிதர் கந்தையா, கா.பொ. இரத்தினம், செல்வநாயகம், மு. கணபதிப்பிள்ளை, த. கைலாய பிள்ளை, இளமுரு க ஞர், மு. இராமலிங்கம், சோ. சிவபாதசுந்தரம், இலங்கையர் கோன் (இயற்பெயர் ந. சிவஞான சுந்தரம்), சோ. நடராசன், பண் டி த ம சி, கணபதிப்பிள்ளை, சின்னத்தம்பிப் புலவர், கனகசெந்தி நாதன், சி. வைத் திய லிங் கம், பண்டிதர் க. வீரகத்தி க, ச, அருள்நந்தி, தி. சதாசிவ ஐயர், அ. வ, மயில்வாகனன், மா. பீதாம்பரன், ம. வே. சிவஞான சம்பந்தர், வ. குமாரசுவா புலவர் இப்படிப் பல அறிஞர் பெருமக்களின் படைப்புகள் ஈழத்தில் இலக்கியத்தை வாழ வைக்க அருந்துணையாற்றி யுள்ளன. -
害 毒 膏 翡 ஈழத்தின் நாடகக் கலையின் வளர்ச்சியில் நான் முன்பே கருத் துச் செலுத்தி வந்துள்ளேன். திரு. ரகுநாதன் என்ற நண்பர் நாடக நிலை குறித்து அடிக்கடி எனக்கு எழுதுவார்.
நாடக்கலையில் ஈடுபாடுள்ள எனக்கு இலங்கையர் கோன் சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய “யாழ்ப்பாணத்தில் நாடகக்கலை" என்னைக் கவர்ந்தது. பின்னர் சிங்கப்பூரில் நான் நாடகம் தயாரித்தபோது இலங்கை நாடக ஆசிரியர்களின் ஆசியையும் பெற்று நாடகச் சிறப்பு மலரில் வெளியிட் டுள்ளேன்.
நாடகக்கலே "விண்வெளி வீரன்" என்ற எனது விஞ்ஞானக் கற்பனை நாடகத்தை சிங்கப்பூரில் 12-10-1966 ல் அரங்கேற்றியபோது அதை ஒட்டி வெளியிட்ட சிறப்பு மலரில் யாழ்ப்பாணம் திரு. இ. மகாதேவன் ("தேவன்") 'நாடகம் தொல்லை மிக்க கலை" என்ற தலைப்பில் அருமையான கட்டுரை ஒன்றை எழுதி யிருந்தார்.
イ
102
 
 
 
 
 
 
 
 
 

ஈழத்தின் நாடகத் தந்தை என ப் போற்றப்படும் கலேயரசு க. சொர்ணலிங்கம் அவர்கள் வாழ்த்துச் செய்தியுடன் "உன்னையே நீ அறிவாய்" என்ற ஆழ்ந்த நாடக ஆய்வுக் கட்டுரை ஒன்றையும் அனுப்பியிருந்தார். அப்போது அவருக்கு வயது 77.92 வயது முதுமையடைந்துள்ள அவரை நேரில் சென்று பார்த்து ஆசிபெற ஆவலுடன் முயன்றும் அது நிறை வேருதது எனக்குப் பெரிய மனக்குறையாக இருக்கிறது. நாடகப் பணிக்காக அறுபதாண்டுகளுக்கு மேலாக உழைத்த கலைச்சக்ரவர்த்தி இவர்,
அந்த நாடக மலரில் மு. சிவ சிதம் பரம் (எம். பி.) சா. ஜே. வே. செல்வநாயகம் (தமிழரசுக் கட்சியைத் தோற்று வித்தவர்), மு. திருச்செல்வம் (உள்ளூராட்சி அமைச்சர்) ஆகியோரின் ஆசிச் செய்திகளும் அலங்கரித்தன. நாடகத் துறையில் நான் செய்த புதுமையான முயற்சிக்கு நல்ல ஆதரவை ஈழத்து அறிஞர்கள் அப்போது தந்ததை நன்றி யுடன் இன்றும் நிண்வில் கொள்கிறேன்.
இது வரை 16 மேடை நாடகங்களை நான் எழுதித்தயாரி த்து, இயக்க முடிந்துள்ளது என்ருல் அதற்கு அடிப்படை அந்த அறிஞர் பெருமக்கள் அளித்த ஊக்குவிப்புதான்!
சமயத்துறையில்
நாவல், சிறுகதை, கவிதை, புதுக்கவிதை, நாடகம் என இப்படித் தமிழ் இலக்கியத்திற்குப் புதுமலர்ச்சி, புது வடிவம் தந்துள்ளனர் ஈழத் தமிழர்கள். சமயத் துறையை எடுத்துக் கொண்டால் அதிலும் ஈழமே வழிகாட்டியாக முன் நிற்கிறது. கோயில் வழிபாட்டில் நல்ல ஒழுங்கையும் நியதிகளையும் இலங் கையில் காணமுடிகிறது. சைவ சமயத்திற்கு நேர்ந்த சோதனை களே அவர்கள் எப்படிச் சமாளித்து நின்ருர்கள் என்பதை முன் காட்டிய வரலாற்றில் தெரிந்து கொண்டோம்,
OS

Page 60
வேதம், ஆகமம், ஆசாரம், கிரி ய்ைகள் போன்ற வற்றை இன்னும் விடாப்பிடியாகப் பின்பற்றும் ச ம ய ப் பற்றுள்ளவர்களை இன்றும் இலங்கையில் காண முடிகிறது.
இளந் தலைமுறை சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் கூட இலங்கைத் தமிழர் களின் நிர்வாகத்திலுள்ள கோவில்களில் பூசை, வழிபாடுகளில் இன்றும் ஒரு முறையான நியதிகள் இருந்து வருவதைக் காண்கிருேம், வழி வழி வந்த பழக்கவழக்கங்களை எளிதில் மாற்ற முடியாது, அதை ஒட்டத்தான் வாழ்க்கையையும் அமைத்து வந்தனர். ஆணுல் காலத்தின் வேகத்திற்கு இளந் தலைமுறையினர் ஈடுகொடுக்க முடியாத நிலையும் உருவாகி வருவதால் ஒரு பெரிய இடை வெளி உருவாகி வருகிறது.
சிங்கப்பூரில் சிலோன் ரோடு செண்பக விநாயகர் ஆலையம் இலங்கைத் தமிழரின் நிர்வாகத்தில் இருக்கிறது. மாதந்தோ றும் சதுர்த்தித் திருவிழா இங்கே கோலாகலமாக நடத்தப் பட்டு வருகிறது. ஆனல் இந்தத் திருவிழாவில் இளைஞர் களின் பங்கை அன்று காண முடியவில்லை. சுவாமியை உள் வீதியில் தூக்கி வருவதற்குக்கூட வயதானவர்களே வலுக்கட் டாயமாகச் செய்கின்றனர். இளைஞர்களை அழைத்து அவர்களி டம் பொறுப்பை விடத் தயங்குகின்றனர். பழ  ைமக் கும் இளமைக்குமிடையே உள்ள இந்த இடைவெளி விரிவடைந்து கொண்டே போகிறது. இதனுல் நம் சமய வளர்ச்சி தேக்க மடைந்தது போல் தோன்றுகிறது.
அந்நாளில் இங்கே வந்த யாழ்ப்பாணத்தார்கள் கட்டிய கோவில்களும் நிர்வகித்த ஆலயங்களும் சமய வளர்ச்சிக்கு சரியான அடித்தளத்தை அமைத்தன.
மோதகம் சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில், ஊட்லண்ட்ஸ்
சிவன் கோயில், கோலாலம்பூர் ஸ்காட் ரோடு கந்தசாமி
104

கோயில், ஆதிஸ்வரன் கோயில், கிள்ளான் சுப்பிரமணியர் கோயில், கோலப்பிலா கந்தசாமி கோயில், சிறம்பான் பாலதண் டாயுதபாணி கோயில் இப்படி யாழ்ப்பாணத்தவரின் ஆதிக் கத்தில் உள்ள ஆலயங்களில் ருசியான மோதகப் படையலுடன் உற்சவங்கள், பூசைகள் செம்மையாக நடைபெறுகின்றன. கந்த புராணத்திற்குத் தொடர்ச்சியாகப் பலநாட்கள் பயன் சொல்லி விரிவுரைகள் நடத்துவது, ஆடிவேல் விழா, திருவெம் பாவை, கந்தர் சஷ்டி, சூரசம்காரம், வருஷப் பிறப்பு, புரட்டாசிச் சனி போன்ற திருநாட்கள் இந்த ஆலயங்களில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன.
யாழ்ப்பாணத்திலிருந்து வேதாகமம் தெரிந்த குருக்கள்மார் இந்த ஆலயப் பூசைகளைச் செய்யத் தருவிக்கப்பட்டனர்.
நான்கு யாழ்ப்பாணக் குடும்பங்கள் இருந்தால் போதும் அந்த ஊர்க்கோவிலில் விளக்கேற்றப்பட்டு, பூசை முறைகள் பொலிவோடு நடக்கும் என்பது சாதாரணமாக நம் காதில் விழும் பேச்சாகும்.
சுவாமிகள்
ஈழத்தில் பிரசித்த பெற்ற திருக்கோணேசுவரம், முனிஸ் வரம், செல்வச்சந்நிதி, திருக்கேதீசுவரம், காரைநகர் ஈழத்துச் சிதம்பரம், நல்லூர், கீரிமலை, கதிர்காமம் போன்ற தலங்களுக்குப் போக வேண்டுமென்று மனம் விரும்பினுலும் திருவருள் துணை செய்யவில்லை.
அண்மையில் முக்தி நிலைபெற்ற நல்லூர் ஆதீன பரமா சாரிய சுவாமிகள் (மணி பாகவதர்) என்னுடன் முன்பு மடல் தொடர்பு கொண்டிருந்தார்கள். சிங்கப்பூர் மலேசிய சுற்றுப் பயணங்களை அவர்கள் மேற்கெண்டபோது என்னுலான உதவி களைச் செய்துள்ளேன்.
அவர்களுடைய பணியைப் பாராட்டி மணி மலர், மணிவிழா மலர் ஆகிய சிறப்பு மலர்களையும் வெளியிட்டுள்ளேன். அவர்
105

Page 61
களுக்காக நல்லூர்க் கந்தசுவாமி கோயில் மலர், நல்லூர்க் கந்தன் வண்ணப் படம் ஆகியவற்றையும் தயாரித்துக் கொடுத்தேன்.
ஈழத்துக் கோவில்கள் பற்றி அவர்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
கொழும்பில் 1982 ஜனவரி 22ந்தேதி முதல் நடைபெறும் உலக இந்து மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்லும்போது ஈழத்துக் கோயில்களேப் பற்றி இன்னும் விளக்கமாகத் தெரிந்து கொண்டு மற்றுெரு நூலே எழுத எண்ணியுள்ளேன்.
அரசாங்க உத்தியோகஸ்தர் களாக, ஆசிரியர்களாக ஈழத் தமிழர்கள் சிறப்பான இடம் வகித்துள்ளனர், ஐரோப்பியர் களுக்கு அடுத்த உயர்ந்த அதிகாரத்தை வகித்தவர்களே "கறுப்புத் துரைகள்" என்று அடைமொழி வைத்து அழைப் பார்கள்
米 ck >k உலக அரங்கின் முன் தமிழுக்கு ஈழம் செய் துள்ள பங்கு இலக்கிய, சமயத் துறையில் மட்டுமல் லாது, அமைதி வழியில் அரசியல் தீர்வு காண்பதில் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கடைப் பிடிப்பதிலும் வெளிப்படுத்தி வருகிறது.
நான்காவது உலகத் தமிழ் மாநாட்டை கோலாகலமாக யாழ்ப்பானத்தில் நடத்தியிருந்தாலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயலால் பின்னர் பெரும் அமளி மூண்டதை முன்பே குறிப்பிட்டுள்ளேன்.
உலகத் தமிழ் மாநாட்டில்
அண்மையில் மதுரையில் நடத்தப்பட்ட உலகத் தமிழ், மாநாட்டிற்கு நான் சென்றிருந்தபோது அங்கே வந்திர ருந்த
1)
 
 
 
 
 
 

அறுபதுக்கு மேற்பட்ட ஈழப்பேராளர்கள் மிகவும் சுறுசுறுப்பு டன் பங்காற்றி மாநாட்டிற்கே தனி உயிரோட்டத்தைத் தந்த னர். சிறப்பான தமிழ் ஆய்வுகளையும் அவர்கள் செய்திருந் தனர்.
தமுக்கம் மைதானத்தில் நடந்த மாநாட்டுத் தொடக்க விழாவில் இலங்கையின் ஆளும் கட்சிப் பேராளர்களான அமைச்சர் இராசதுரை, சபாநாயகர் அல்ஹாஜ் பக்கீர் மாக்கார், எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் ஆகியோர் தமிழ்மொழி, தமிழர் ஒருமைப்பாடு பற்றி ஆற்றிய அருமையான உரைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
அஞ்சல் தலையில் தமிழ்
இலங்கையின் அஞ்சல் த&லகளில் தமிழ் நெடுங்காலமாக இடம் பெற்றுள்ளது. ஆணுல் தமிழ் பிறந்த மண்ணில்கூட தமிழ் இடம் பெற்ற அஞ்சல் த&லகளே இன்னும் நாம் கான முடியவில்லே!
கொழும்பு, பரதேனியா, பேரா த ஃன , கள னரி யா, துககேதா, யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக் கழகங்களில் தமிழில் பி. ஏ., எம். ஏ. டாக்டர் பட்டங்களைப் பெறக்கூடிய கல்வியைப் பெற முடியும், தமிழர்களுக்குக் கிடைத்துள்ள அரிய பெரிய வாய்ப்பு இது. தமிழர்கள் ஒடுக்கப்படுவதாகக் கருதப்படும் நாட்டில் தமிழ் வாழவகை செய்துள்ளனர் அறிஞர் பெருமக்கள்.
இலங்கையில் சிங்களவர்கள் பெளத்த சமயத்தைப் பின் பற்றுகிறவர்களாயினும் இஸ்லாமிய, கிறிஸ்துவ, இந்து சமய வளர்ச்சிக்கும் இடமளித்திருக்கிருர்கள்.
இந்து சமயத்திற்கு அமைச்சர் உலகிலேயே இந்து சமயத்தின் நலனைக் கவனிக்க ஓர்
அமைச்சரை நியமித்துள்ளது இலங்கை அரசாங்கமே,
107

Page 62
மாண்பு மிகு அமைச்சர் செ. இராசதுரை அவர்கள் இந்து சமய வளர்ச்சிக்காக அரும்பணியாற்றி வருகிருர்கள். அரசாங்க ஏற்பாட்டில் உலக இந்து மகாநாட்டை 22-1-1982 முதல் ஒரு வாரம் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறர்கள். இந்த மாநாட்டில் உலக நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பேராளர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டு உலகின் மிகத் தொன்மையான இந்து சமயத் தின் சிறப்புகளை எடுத்துக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழிவகைகளையும் ஆராய்வார்கள்.
இந்தப் பெரும் பணியை மேற்கொண்டு செய்து வரும் அமைச்சர் செ. இராசதுரை அவர்களைப் பாராட்டி நான் மடல் எழுதிய போது, அவர்களும் நன்றி தெரிவித்து எழுதினர்கள். பெரும் பொறுப்புகளின் நடுவே பதில் மடல் எழுதும் இந்தப் பெருந்தகைமை எல்லோருக்கும் வருவதில்லை.
உலகத் தமிழ் வரலாற்றில் அமைச்சர் இராசதுரை அவர் களின் அருஞ் சேவை பொறிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
紫 * 杂 충’
தமிழும் சைவமும் இரு கண்ணெனப் போற்றும் ஈழத் தமிழர்கள் சோதனைகள் பல வற்  ைற யும் சந்தித்து வந்தாலும் அதனிடையே அவர்கள் ஆற்றி வரும் சாதனைகள் நம்மை வியப்பிலும் பெருமிதத்தி லும் ஆழ்த்தவே செய்யும் -
இலங்கை சிறிய நாடு என்ருலும் இலங்கைத் தமிழர்கள் வெளி நாடுகளில் ஆற்றிய பணியும் பங்கும் என்றும் யாரும் மறக்க முடியாதவை.
சிங்கப்பூர், மலேசியாவுக்கு வந்த தமிழகக் தமிழர்கள் பெரும்பாலும் இரப்பர் தோட்டங்களிலும் சாலைகள் அமைப்பதி லும் இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்தனர்.
108

ஆணுல் ஈழத் தமிழர்களோ பிரிட்டிஷார் ஆட்சியில் உயர்ந்த உத்தியோகங்களை வகித்தனர்.
d6)TT ரயில்வேயில் முழுக்க முழுக்க யாழ்ப்பாணத் தமிழர்களே பணியாற்றிய காலத்தை நாம் மறக்க முடியாது. யாழ்ப்பாணத் தமிழர்கள் நேரம் தவருமல், விபத்துகள் இன்றி ரயில்களை ஒட்டிஞர்கள். இன்றும் ஈழத் தமிழர்கள் பலர் ரயில் வேயில் முக்கிய பங்காற்றுகிருர்கள்.
மருத்துவமனைகளிலும், சர்வே அலுவலகங்களிலும் யாழ்ப் பாணத் தமிழர்களே மிகுதியாக ஈடுபட்டிருந்தனர்.
தமிழ்ப் பெண் எம். பி. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரே தமிழ்ப் பெண் திருமதி. ரங்கநாயகி பத்மநாதன்.(
இவரது கணவர் பத்மநாதன் அரசாங்க அமைச்சர் உயர் அதிகாரியாகப் பணியாற்றுகிருர். இவரது சகோதரர் மட்டக் களப்பு மாவட்ட அமைச்சர் எம். கனகரத்தினம் அவர்களின் செயலாளராகப் பணியாற்றிய அநுபவம் இருவருக்கு இருக் கிறது.
இலங்கைப் பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட இவரது தொகுதியில் முஸ்லிம்கள் 27 ஆயிரமும் தமிழர்கள் 21 ஆயிரமும் சிங்களவர்கள் ஒன்பதாயிரமும் உள்ளனர். மூவினத்தவரின் ஒற்றுமையையும் இவர் பெற்றுள்ளார். இவரது மகன் கனகசபை சென்னை உதவி அஞ்சல் அதிபராகப் பணியாற்றுவதுடன் 'தமிழர்களின் தொன்மையான வரலாறு" என்ற நூலையும் எழுதியுள்ளார்.
>k >k
மறுநாள் திரு. பாலா ஓர் அன்பருடன் பேட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
109

Page 63
பிரதேச அபிவிருத்தி அமைச்சுக்கு திரு. பாலா எங்களை அழைத்துச் சென்ருர், Ae
திரு. தொண்டமான்
"த்ாங்கள் சந்திக்கப் போவது மதிப்பிற்குரிய அமைச்சர் எஸ். தொண்டமான் அவர்களை" என்ருர் திரு. பாலா.
'தொண்டமான் அவர்களா ?" என வியப்புடன் கேட் டேன்.
திரு. தொண்டமான் அவர்கள் பற்றி முன்பே நிறையக் கேள்விப்பட்டிருந்தேன்.
இலங்கையின் பல்லாயிரக் கணக்கான தோ ட் ட த் தொழிலாளர்களின் நம்பிக்கைக்குரிய த லை வ ரா க த் தொண்டாற்றி வருபவர் தொண்டமான். இலங்கை கிராமிய, தொழில் துறை அபிவிருத்தி அமைச்சர் தொழிலாளர்களின் உற்ற தோழனுக, அவர்களின் எழுச்சிக்கும் ஏற்றத்துக்கும் உரிய தலைவனுக விளங்குபவர் தொண்டமான்.
வாழ்க்கைத் தரம் ரப்பர் மரங்களை நடவும், தேயிலை பயிரிடவும் மற்றும் நாட்டை வளப்படுத்தும் திட்டங்களுக்கும் பல்லாயிரக் கணக் கில் தென்னிந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டனர் தொழி லாளர்கள். இவர்களால் நாட்டின் பொருளாதாரம் பெருகியது.
ஆணுல் அந்த ஏழைத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரவே இல்லை.
மலேசியத் தோட்டத் தொழிலாளர்கள் போல் இவர்களும் உழைத்து ஓடாகினர். இலங்கையிலும் மலையகத்துத் தொழி லாளர்களின் அவதி பற்றி பின்னர் நாங்கள் கண்டிக்குச் சென்ற போது மலையக இலக்கியப் பேரவைத் தோழர்கள் மூலம் அதிகமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
110

முதல் குரல் மலைப் பிரதேசங்களில் அடக்கி ஒடுக்கி நசுக்கப்பட்ட பாட்டாளித் தமிழர்களின் வாழ்வுக்கும் உரிமைக்கும் முதன் முதலில் குரல் கொடுத்தவர் திரு. செளமிய மூர்த்தி தொண்ட LoTesör.
1935ல் இலங்கை இந்திய காங்கிரஸ் அமைக்கப்பட்ட போது அதன் மூலம் 26 வயது இளைஞராக இருந்த தொண்ட மான் தொழிலாளர்களின் நலனுக்காக அன்றே போராட்டத் தைத் தொடங்கி விட்டார். 1944 ல் காங்கிரசின் தலைவராகத் தேர்வு பெற்ருர், 31 வயதில் அவர் பெற்ற தலைமைப் பதவியை இன்று எழுபது வயதை எட்டிப் பிடித்த நிலையிலும் தளராது, உறுதியோடு வகிக்கிருர்,
அமைச்சராக
1947ல் தொழிலாளர்களின் பிரதிநிதியாக நாடாளு மன்றத்துக்கு தேர்வு பெற்ற அவர், தொடர்ந்து அப்பதவியில் இருந்தார். இன்று கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி
அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.
சிங்கப்பூரிலுள்ள தேசியத் தொழிலாளர்களின் சம்மேள னம் போல் (என். டி. யு. சி. ) பத்து லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்களின் பேர்வையாக இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரசை வலுவுடன் இயங்கச் செய்துள்ளார் திரு. தொண்ட LIDA 6RUT
“தொழிலாளர்களுக்கு வாக்குரிமை தருவதிலும் பதிவுப் பிரஜை, வம்சாவளிப் பிரஜை ஆகிய பாகுபாடுகளை அகற்று வதிலும் நாங்கள் வெற்றி கண்டோம். தொழிலாளர்கள் பிள்ளை களின் தற்குறித்தனத்தைப் போக்கி சரியான கல்வியறிவு பெற அரசாங்கமே தோட்டப் பள்ளிகளின் பொறுப்பை ஏற்கச் செய் தோம். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை
111

Page 64
உயர்த்துவதில் வெற்றி கண்டுள்ளோம். ஆயினும் அவர்களின் நிலையை மேம்படுத்துவது இடைவிடாத ஒரு பணியாகும்” என்று விளக்கிஞர் தொண்டமான்.
தேநீரைத் தொடோம்
தூய வெண்ணுடையில் மலர்ந்த முகத்துடன் தேநீர்
வழங்கினர்.
எனது துணைவியார் " ம் . தேத் தண்ணி சாப்பிடுங்க!”
என்று என்னைக் கிண்டல் செய்வது போல் எ டு த் துக் கோப்பையை நீட்டிஞர் -
“ஏன் உங்களுக்கு தேநீர் பிடிக்காதா?” என்று கேட்டார் தொண்ட மான் சிரித்துக் கொண்டே!
"அதெல்லாம் ஒன்றுமில்லை. தேநீரைப் பார்க்கும் போதெல்லாம் அடர்ந்த காடுகளிலும் மலைகளிலும் தேயிலைத் துளிர் பறிக்கும் பாட்டாளி மக்கள் படும் பாடு நினைவுக்கு வரு கிறது!" என்று ஏதோ கூற முயன்றேன்.
திரு. தொண்டமான் சிரித்தபடி "தேநீர் அருந்தாதீர்கள்"
என்ற இயக்கத்தை ஒரு காலத்தில் நாங்களே நடத்தியுள் ளோம்" என்ருர்,
*அது எப்போது . ? வியப்புடன் கேட்டேன்.
*வெள்ளையர் ஆட்சியின் போது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ருதவரை தேநீரைத் தொடுவதில்லை என்று பிரசாரம் செய்து வெற்றி கண்டோம். எங்கள் கோரிக்கைக்கு பிறகு நிர்வாகம் பணிந்து வந்தது" என்ருர்.
திறமையான தலைவர்
“எங்கள் சிங்கப்பூர் தேசிய தொழிற்சங்கம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? இது என் கேள்வி.
112

"அவர்கள் நடத்திய கருத்தரங்க கூட்டங்களில் நான் வந்து கலந்து கொண்டிருக்கிறேன், திரு தேவன் நாயர் எனது நெருங்கிய நண்பர். அவரைப் போல் ஒருநல்ல, திறமையான தலைவரை நான் எங்கும் பார்த்ததில்லை" என்று பாராட்டிஞர் திரு. தொண்டமான்.
இன்று சிங்கப்பூர்க் குடியரசின் அதிபராக திரு தேவன் நாயர் இருப்பது திரு. தொண்டமான் போல் இன்னும் பல நாட்டு தொழிற்சங்கத் தலைவர்களும் எண்ணிப் பூரிக்கத்தக்க தாகும்!
திரு. தொண்டமான் அவர்களிடம் “தமிழ் நாட்டில் எட்டு நாட்கள் ' நூலை அன்பளிப்பாக வழங்கினேன். அதை வாங்கி ஆவலுடன் பார்த்துப் பாராட்டினர். அவரும் தமது மணி விழா மலரை அளித்தார். ஏராளமான படங்களுடன் அழகிய பதிப் பாக அது வெளியிடப்பட்டிருந்தது.
ck পদ্ধ தொழிலாளர்களின் நம்பிக்கைக் குரிய தலை வராக, நண்பராக, அருந்துணை அமைச்சராக எல் லோருடைய நன் மதிப்பையும் பெற்றுவிளங்கும் தொண்டமான் அவர்களிடம் விடை பெற்றபோது என் நினைவிற்கு வந்த குறள் இது: s வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு.
எடுத்த பணியைச் சிறப்பாக நடத்தும் ஆற்றல் பெற்ற அமைச்சர் தொண்டமான் அவர்கள் குறள் வழிப்படி செய லாற்றுவதை நேரில் அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற் ருேம்,
வழிகாட்டி லட்சக்கணக்கான பாட்டாளி மக்களின் துயர் துடைத்து,
அவர்கள் வாழ்க்கை நிலையை உயர்த்தப் பாடுபட்டு வரும்
13

Page 65
செம்மல் தொண்டமான் அவர்கள் எல்லோருடைய அன்பை யும் நன்மதிப்பையும் பெற்றவர்.
ஒரு நாட்டின் தன்னலம் கருதாச் சிறந்த தொண்டர்கள் தான் பின்னர் வழிகாட்டும் ஒப்பற்ற, தலைவர்களாகவும் திகழ முடியும். நம் சிங்கப்பூர் குடியரசுக்கு அதிபராகியுள்ள திரு. தேவன் நாயர் அவர்கள் அதற்கு எடுத்துக் காட்டு.
திரு தொண்டமான் அவர்களின் தொண்டுகளைப் பார்த்த போது எனக்கு மறைந்த மலேசியாத் தலைவர் சம்பந்தனின் நினைவுதான் வந்தது.
கோழை அல்ல
'ஏழையென்றலும் கோழை அல்ல," "குருவிக்கும் கூடு உண்டு நமக்கு குடியிருக்க வீடில்லை" என்று அமைச்சர் துன் டாக்டர் வீ. தி. சம்பந்தன் அவர்கள் அடிக்கடி முழங்குவார்.
22 ஆண்டுகளுக்கு முன்னர் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தைத் தொடங்கி, தோட்டத் தொழிலாளர்களின் நல் வாழ்வுக்கு வழி செய்தார் மச்றைந்த திரு. சம்பந்தன் அவர்கள்.
ஒப்பந்தக் கூலிகளாய் வந்து உழைத்து உருக்குலைந்து சீரழிந்த பாட்டாளி மக்களுடைய வாழ்வுக்கு மேலும் சோதனை யாக வந்தது தோட்டத் துண்டாடல்.
பல சந்ததிகளாக வாழ்ந்து வந்த தோட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது அதைத் தடுக்க அந்தத் தோட்டங்களைக் கூட்டுறவு சங்கத்தின் மூலம் வாங்கி நிர்வகிக்க திட்டம் வகுத்தார் திரு. சம்பந்தன்.
இன்று ஏறத்தாழ 2 கோடி வெள்ளி மூலதனத்தில் 17 தோட்டங்கள் இந்தக் கூட்டுறவு சங்கத்துக்கு உரிமையாகி யுள்ளன. \
114

காணி நிலம்
*காணி நிலம் வேண்டும்" என்று பாரதி கண்ட கனவை கூட்டுறவுத் தந்தை என்று போற்றப்படும் திரு. சம்பந்தன் செயலில் காட்டி, உலகமே வியக்கும் சாதனை செய்துள்ளார்.
மலேசியாவில் தொழிலாளர் நலனுக்கு உை ழ க் கும் மற்ருெரு தலைவர் டாக்டர் பி. பி. நாராயணனின் சேவைகளை யும் நாம் மறக்க முடியாது.
ஒளி விளக்கு
தொழிலாளரின் மேம்பாட்டுக்கு உழைக்கும் மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வி. டேவிட்டின் தொண்டும் நாடு நன்கு அறிந்தது.
ஈழத்தில் திரு. தொண்டமான் தொழிலாளர் சமுதாயத் தின் ஒளிவிளக்காக ஒளிர்கிருர், அவர்கள் இன்னும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்தி விடை பெற்ருேம்.
திரு. தொண்டமான் அவர்களுக்கு உற்ற துணையாக விளங்கும் தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர் எம். எஸ். செல்லசாமி அவர்களிடமும் உரையாடிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டோம்.
>< i > >k
'தொண்டமான்' செய்யும் சிறந்த தொண்டுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் நேரில் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் இப்போதுதான் கிடைத்தது!” என்றேன் அந்தனி ஜீவாவிடம்,
"நீங்க என்ன சார்! தொண்டு என்ருல் என்ன சாதாரண மானதா? ஹாம். அவர் வழி நடத்துவது கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய தொழிற் சங்கம்" என்ருர் அந்தனி ஜீவா
115

Page 66
உணர்ச்சியுடன். பிறகு ஏணுே என் முகத்தைக் கூர்ந்து நோக் கிஞர்!
ஆசியாவிலேயே.
"இந்த விஷயத்தை நான் மறுக்கப் போவதில்லே. கிழக்கா சியாவில் அல்ல ஆசியாவிலேயே பல லட்சம் தொழிலாளர் களின் தலைவர் திரு. தொண்டமான் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுங்கள்|* என்றேன்.
அந்தனி என் கையைப் பற்றிக்கொண்டு கண்ணில் ஒத்திக்கொண்டார்!
"பல பேர் பல மாதிரிப் பேசுவார்கள். நீங்கள் மனந் திறந்து சொல்கிறீர்கள்!" என்ருர் அந்தணி,
"கனி உள்ள மரத்திற்குத்தான் கல்லடி கிடைக்கும். உண்மையான சேவையாற்றுகிறவர்களுக்கு சொல்லடிகள் கிடைக்கவே செய்யும் இவர்கள் செயல் திறன் அப்போதுதான் நன்கு வெளிப்படும்!" என்றேன்.
சமுதாயத்திற்குச் சேவையாற்ற அடி எடுத்து வைக்கிற வர்கள் பல பழிச் சொற்களையும் ஏச்சுகளையும் ஏற்றும் தாங்கும் இதயம் பெற்றவர்களாக இருந்தால்தான் ஏற்றம் பெற முடியும், தொடுக்கப்படும் கண்களே மலர்களாக வரவேற்க வேண்டும். அதுதான் பண்படுத்தும். உரைத்துப் பார்க்கும் போதுதான் பொன் ஒளிரும்!
வழிகாட்டும் தஃலவர்கள்
வழி காட்டும் தலேவர்கள் இருந்தால் தாள் சமுதாயம் மேம்படும்.
சிங்கப்பூரின் பல இன மக்களின் தொகையில் ஆறு விழுக் காடே தமிழர்கள் உள்ளனர். நம் குடியரசில் திரு. தேவன்
11
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாயர் அவர்களே பல இன மக்களும் அதிபராக ஏற்று நாட்டின் தஃலமகளுகத் திகழ்கிருர், இரண்டாவது துனேப் பிரதமராகவும் வெளி உறவு அமைச்சராகவும் திரு հT 5iլ} இராசரத்தினம் அவர்கள் இருக்கிருர்கள். வெளி உறவு அமைச்சராகவும் கலாச் சார அமைச்சராக திரு. தனபாலன் இருக்கிருர், மற்றெரு அமைச்சராக பேராசிரியர் ஜெயகுமார் இருக்கிறர். இன்னும் நாடாளு மன்றத் தமிழ் உறுப்பினர்களாக திரு. சந்திரதாஸ், திரு. எம். கே. ஏ. ஜப்பார், திரு. வி. செல்லத்துரை ஆகி யோரும் இருக்கிருர்கள்.
கடந்த 18 ஆண்டுகளாக எதிர்க்கட்சியே இல்லாத சிங்கப் பூர்க் குடியரசில் முதன் முதலாக ஒரு தமிழர் திரு எஸ். ஜெய ரத்னம் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார்.
சிறுமை நினைவு வேண்டாம்
ஒவ்வொரு நாட்டிலும் வாழும் தமிழர்கள் தாங்கள் சிறு பான்மையோர் என்று தங்களேச் சிறுமைப்படுத்திக் கொண்டி ராமல், தங்கள் அறிவு, ஆற்றலேக்காட்டி, வாழும் நாட்டிற்குப் பெருமையும் பெரும்பான்மை மக்களின் நன்மதிப்பும் பெற்றுத் தர வேண்டும்.
தமிழ் நாட்டிற்கு வெளியே சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் ஈழத்திலும் ஒரு பெரிய விழிப்பை ஏற்படுத்தி வருகின்றனர் தமிழர்கள். இதைத் தமிழக அறிஞர்கள், தமிழக இதழ்கள் உணர்ந்து போற்ற முன்வர வேண்டும்!
ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருவதற்கு அடையாளமாக முதன் முத லா க இப்போதுதான் தமிழ் நாட்டில் கதவடைப்பு செய்து "அர்த்தால் நடத்தியிருக்கிருர் கள் அப்பாடா. இப்போதாவது அவர்களுக்கு அண்டை நாடான ஈழத் தமிழர்களின் பிரச்ஃன புரிந்ததே! அதுவே பெரிய காரியம் r
117

Page 67
ஈழத்தில் ஏற்பட்டது போன்ற அநீதி இதர நாட்டிலுள்ள தமிழர்களுக்கும் ஏற்படும் போது முதல் கண்டனக்குரலை எழுப்ப தாய்த் தமிழகம் முந்திக் கொள்ள வேண்டும்
مح " تصبح صح
அன்றைய தினம் மற்ருெரு தமிழ் அறிஞரைச் சந்திக்கும் அரும் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தார் திரு. பாலா.
அவர்தான் திரு. லட்சுமண ஐயர், ஒல்லியான உடற்கட்டு. எலுமிச்சம் பழம் போ ன் ற பொ ன் னி ற மேனி. அந்தப் பேரறிஞர் தன்னடக்கமுடன் காணப்பட்டார். கற்றவர்களின்
சிறப்பே அதுதானுே?
லட்சுமண ஐயர்
"நீங்கள் எழுதிய 'தமிழ் நாட்டில் எட்டு நாட்கள்' நூலைப் படித்தேன். தமிழ் நாட்டுக் கோவில்களைப் பற்றி நுணுக்கமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள்!' என்று வந்ததும் வராததும் எனது நூலைப் பாராட்டிஞர்.
“ஏதோ பொழுது போக்காக எழுதினேன். அதைப் போய்ப் பாராட்டுகிறீர்களே! உங்களைப் பற்றி திரு. பாலா நிறையச் சொன் ஞர். உங்களைப் போன்று கற்றறிந்தவர்களின் அநுபவ மொழிகளைக் கேட்க வேண்டுமென்றுதான் வந்தோம்" என்றேன்.
ஐயரின் துணைவியார் பலவித சிற்றுண்டிகளுடன் சுவை யான காப்பியும் கொண்டு வந்து வைத்தார்! எனது துணைவி யாருடன் அவர்கள் தனி உரையாடலை வைத்துக் கொள்ள, நாங்கள் சிங்கப்பூர், ஈழ நாட்டின் இலக்கிய வளர்ச்சி, அரசியல் நிலை பற்றிப் பேசினுேம்,
118

தத்துவ ஞான நூல் திரு. லட்சுமண ஐயர் அவர்கள் எழுதிய “இந்தியத் தத்துவ ஞானம்" என்று நூலைக்கொண்டு வந்து கொடுத்தார். அதன் பக்கங்களைப் புரட்டிய போது ஒவ்வொரு பக்கமும் அறிவுக்களஞ்சியமாக, பொன்னேடாக எனக்குத் தோன்றியது. இவ்வளவு பெரிய ஆய்வு நூலை எழுதியவர் எவ்வளவு அடக்க மாக இருக்கிருர் என்று ஆச்சரியப்பட்டேன்!
சாகித்ய அகாடமி பரிசு "இந்திய தத்துவ ஞானம்’ என்ற அந்தச் சிறந்த ஆய்வு இலக்கியப் படைப்பிற்கு இலங்கை அரசாங்கம் சாகித்திய அகாடமிப் பரிசை அளித்துள்ளது.
படைப்பாளனுக்குத் தரப்படும் மிகச் சிறந்த பாராட்டு இது. s
திரு. லட்சுமண ஐயர் கல்வி அமைச்சின் கல்வி அதிப ராகக் கடமையாற்றியவர். பல பாடப் புத்தகங்களை எழுதியவர். இந்து சமயத்தில் ஆழ்ந்த ஞானம் உள்ளவர். அதனுல் தான் திரு ஐயர் அவர்களை ஜனவரி 1982ல் நடக்கும் உலக இந்து மாநாட்டின் செயலாளராக நியமித்துள்ளது இலங்கை அரசு. இந்த மாநாட்டின் பெரும் பொறுப்புகளை ஏற்றுள்ள லட்சுமண ஐயர் அதைச் சிறப்பாகச் செய்யும் ஆற்றலும் அநுபவ ஞானமும் கொண்டவர்.
திரு. ஐயரின் புதல்வர் திரு. சூரியநாராயணனையும் சந் திக்கும் வாய்ப்பு அன்று கிடைத்தது. திரு. சூரியநாராயணன் அனைத்துலக பெற்ருேர் திட்ட சம்மேளனப் பிரதேச நிதிக் குழுத் தலைவர் என்று அறிந்தோம். பல நாடுகளையும் சுற்றி வந்தவர். அனைத்துலகப் பதவியொன்றில் சிறப்பாகப் பணியாற்றுபவர்.
தமிழ் இலக்கிய, சமய, கல்வித்துறையில் ஆழமான ஆராய்ச்சி செய்துள்ள ஐயர் அவர்களிடம் இரண்டு மணி நேரத்
119

Page 68
துக்கு மேல் உரையாடினுேம் என்பதை அப்போதுதான் உணர் முடிந்தது.
நாட்டிய மணி
ஐயரின் புதல்வி பரத நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற அழகிய நாட்டிய மணி. அவருடைய எழில் நடனத் தோற்றப் படங்களைப் பார்த்ததும் அவர் ஆடலைக் காண முடியவில்லையே என்ற மனக்குறையை எனது துணைவியார் வெளியிட்டார், அழகும் தேர்ச்சியும் எல்லோருக்கும் சேர்ந்திருப்பதில்லை! அவர் புதல்வியார் நடன அபிநயத் தோற்றங்களில் சிலவற்றைச் செய்து காட்டியபோது, அந்த முத்திரைகளில் கலை அழகு பரி மளித்தது.
இந்து சமயத்தில் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து நூல்கள் பல எழுதிய திரு. லட்சுமண ஐயர் அவர்கள் தமிழ் கூறும் நல்லு லகம் பெற்ற பேரறிஞர். அவர்களின் ஆய்வுகளையும் புலமை யையும் தமிழுலகம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,
அவர்களை மீண்டும் காணவேண்டும் அவர்களது நல்லு ரைகளைக் கேட்க வேண்டுமென்ற அவாவுடன் விடைபெற் ருேம்.
W صالح 米 >k ZA
தினகரன்
மறுநாள் காலை நாங்கள் தங்கியிருந்த ராம கிருஷ்ணு விடுதிக்கு அருகிலிருந்த 'தினகரன்" நாளிதழின் பிரதம ஆசிரியர் திரு. ஆர். சிவகுரு நாதனைக் காண அவர் க ள் இல்லத்திற்குச் சென்ருேம்.
நெற்றியில் திருநீறுடன் அன்புடன் எங்களை வரவேற்ருர் திரு. சிவகுருநாதன். இவர் ஒரு வழக்கறிஞர். நீண்ட கால மாக தினகரன் ஆசிரியராகப் பணியாற்றுகிறவர். இவரிடம் பேசிய போது பல நாள் பழகிய நண்பருடன் உரையாடுவது போல் தோன்றியது.
120

தினகரன் நாளிதழ் லேக் ஹவுஸ் என்ற நிறுவனத்தின் வெளியீடு. இவர்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நாளிதழ்கள் வெளியிடுகின்றனர்.
இலக்கிய உலகம் *உங்கள் நாளிதழில் செய்திகள் மட்டுமல்லாது எழுத் தாளர்களின் படைப்புகளுக்கும் நிறைய இடமளிக்கிறீர்கள். அது பாராட்டுக்குரியது!" என்றேன்.
"தினகரனில் அநேகமாக எல்லா எழுத்தாளர்களுமே ள்முதியுள்ளனர்" என்று அவர் கூறி ஞர். உங்களுடன் வந்துள்ள அந்தனி ஜீவா அவர்கள் கூட ஞாயிறு தோறும் வெளிவரும் இலக்கிய உலகம் பகுதியில் எழுதுகிருரே என்ருச் திரு. சிவகுருநாதன்! அந்தனி ஜீவா அது பற்றி எதுவும் கூருதது அவரது தன்னடக்கத்தைக் காட்டியது.
நாங்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்றது, திரு. அமிர் தலிங்கம் ஆகியோரைச் சந்தித்தது பற்றிய செய்திகளும் படங் களும் தினகரனில் வெளிவந்திருந்தது. இவ்வளவு துரிதமாகச் செய்திகளையும் படங்களையும் நம்ம ஊர்த் தினசரிகள் வெளி யிடுவதில்லை. அரசியல் தலைவர்களுக்கு ஆலவட்டம் பிடிப்ப திலும் ஊர்ச் செய்திகளில் "லேட்டஸ்ட் எது என்று தெரிந்து ஊர்ப் பத்திரிகைகளிலிருந்து வெட்டி எடுத்துப் போடவுமே அவர்களுக்கு நேரம் போதாதே! வருகிறவர்கள், போகிறவர் களைப் பற்றி ஏன் கருதப் போகின்ருர்கள்.
தினகரன் ஆசிரியரைச் சந்தித்து விட்டு விடுதிக்கு வந்த நாங்கள் பக்கத்திலிருந்த ராமகிருஷ்ணு மண்டபத்தில் ஒரே கூட்டமாக இருப்பதைப் பார்த்து அங்கே என்ன நடக்கிறது . என்று அந்தனி ஜீவாவிடம் கேட்டேன். களனிப்பாலம் சிங்கள நாடகம் *களனிப் பாலம்' நடை பெறுகிறது" என்ருர் அவர்.
121.

Page 69
நாடகத்தின் ஆசிரியர் ஆர். ஆர். சமரக்கோன் அவர் களிடம் அந்தணி எங்களை அறிமுகப்படுத்த, அவர் எங்களை அன்புடன் வரவேற்று நாடகத்தைக் காண அழைத்தார்.
ராமகிருஷ்ணு மண்டபம் நவீன முறை யி ல் அமைந் திருந்தது. 600 பேருக்கு மேல் அமர்ந்து பார்க்க நாற்காலி கள் போடப்பட்டிருந்தன. அழகிய பெரிய அரங்கும் இருந்தது. அதையும் குளிர்சாதன வசதிப் படுத்தத் திட்டமிட்டிருக் கிருர்கள்.
ராமகிருஷ்ணு ஆலயமும் அருகிலேயே இருந்தது. விடுதி, மண்டபம், ஆலயம் ஆகியவற்றின் சிறப்பான நிர்வாகத்தையும் மக்களுக்கு அ வை செய்யும் அற்புதமான சேவைகளையும் பார்த்த போது ராமகிருஷ்ணர், விவேகானந்தர் கண்ட கனவு களை அவை செவ்வனே நிறைவேற்றி வருவதாகவே தோன்றி
U35.
*உங்களூரில் ராமகிருஷ்ணுமிஷன் இருக்கிறதா?” அந்தனி கேட்டார்.
"ஆஹா, இருக்கிறதே! காலஞ் சென்ற் வள்ளல் பி. கோவிந்தசாமிப்பிள்ளை அவர்கள் ஒரு லட்சம் வெள்ளிக்கு மேல் செலவு செய்து, பெரிய மண்டபம் ஒன்றை எழுப் பியுள்ளார்”
'பிறகு ஏன் சலித்துகொள்கிறீர்கள்?"
மக்களின் தேவை "மக்களுக்கும் மடத்திற்குமிடையே இங்கிருப்பது போன்ற தொடர்பைக் காண முடியவில்லை. ஏதோ இயங்கிக் கொண்டிருக்கிறது! மக்களுக்கான சேவையை இன்னும் விரிவு படுத்தவில்லையே என்ற ஆதங்கத்தினுல்தான் இதைச் சொல் கிறேன்!"
122

"உண்மைதாங்க, சிங்கப்பூரைப் பற்றி அங்கிருந்து வரு கிறவர்கள் கூறும் போது நாளுக்கொரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகச் சொல்வார்கள். இப்படி வளர்ந்து வரும் ஊரில் காலத்துக் கேற்ற வளர்ச்சியைக் காட்ட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்!"
'நன்ருகச் சொன்னீர்கள். ராமகிருஷ்ணு மடங்கள் வெறும் போதனைக் கூடங்களாக, தியான மண்டபங்களாக மட்டுமே இயங்க வேண்டும் என்பதல்ல. மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு இன்னும் அணுக்கமாகச் சேவை யாற்ற இடமிருக்கிறது. உங்கள் ஊரில் இருப்பது போல் எங்கள் நாட்டிலும் தங்கும் விடுதிகளை அமைக்கலாம். கல்வி, கலாச்சார வளர்ச்சி, மருத்துவ சேவை போன்று இன்னும் சிறப்பாகப் பணியாற்ற முடியும்" என்றேன்.
எங்கள் உரையாடல் நாடகம் தொடங்கவே நின்றது! களனிப் பாலம் பாட்டாளி ஒருவனின் தியாகத்தை விளக் கும் நல்ல படைப்பாக இருந்தது. முதல் காட்சிக்கும் இரண் டாவது காட்சிக்கும் டிக்கெட்டுகள் யாவும் விற்று முடிந்தன.
சிங்கள சினிமாவை விட நாடகங்களுக்கு நல்ல ஆதரவு இருப்பதாக நாடக ஆசிரியர் சமரக்கோன் கூறிஞர்.
மறுநாள் கண்டிக்குப் புறப்படுவதற்கு ஆயத்தங்களைச்
செய்தோம்.
நாட்டிய இசை
புறப்படுவதற்கு முதல் நாள் திரு. பாலா அவர்கள் தமது கொழும்பு கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் எனது புதல்விகளின் நாட்டிய நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். வந்திருந்த கலைச்சங்க உறுப்பினர்கள் நிகழ்ச்சியை மிகவும் பாராட்டிஞர்கள். இலங்கைப் பிரதமரின் உருவப்படம் பொறித்த அழகிய தட்டை கலைச்சங்க சார்பில் திருமதி பாலா வழங்கினுர்,
123

Page 70
நாட்டிய நிகழ்ச்சியைப் பெரிய அளவில் கொழும்பில் நடத்தத்திட்டமிட்டிருந்தார் திரு. பாலா. ஆளுல் டேப் நாடா வில் பதிவு செய்யப்பட்டிருந்த இசை விமான நிலைய எக்ஸ்ரே சோதனையில் பாதிக்கப்பட்டு அழிந்துவிட்டதால் எங்களுக்குப் பெரிய ஏமாற்றமாகிவிட்டது. கிடைத்த பாடல்களை வைத்து நிகழ்ச்சியை நடத்தினுேம்.
கண்டியில் பெரிய திட்டமுடன் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் இசையைத் தேடுவதில் எனது துணைவியாரும் திருமதி பாலாவும் எங்கெங்கோ அலைந்தனர்.
尝 彝 举
ஐந்து நாட்கள் கொழும்பில் ஓய்வில்லாமல் அரசியல் தலைவர்களையும் பிரமுகர்களையும் சந்திப் பதில் ஒட்டி விட்டோம்.
கண்டியை நோக்கி ஒரு பெரிய சொகுசான வேனிலும் காரி லும் திரு. பாலா, திரு. ராகலை விஸ்வநாதன், திரு. அந்தணி, திரு. சிவம் ஆகியோரின் குடும்பத்தினருடன் நாங்களும் புறப்பட்டோம்.
ஏதோ பிக்னிக் போவது போல் காருக்குள் எல்லோரும் உற்சாகமுடன் சிரித் து, அரட்டையடித்துக் கொண்டு போனுேம்.
இயற்கையின் எழில் கொழும்பிலிருந்து கண்டி 115 கிலோ மீட்டர் (75மைல்)
தூரம் இருந்தது. நகரைத் தர்ண்டி வந்ததும் வயல்களும் பச்சைப் பசேரென தென்னை மரங்களும் கண்ணுக்கழகாக
இருந்தன.
“இந்த மாதிரி இயற்கையான சூழலில் அமர்ந்து கட்டுச் சாப்பாடு கொண்டு வந்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்
தெரியுமா?’ என்றேன்.
124

"பிரமாதமான பிக்னிக்காக இருக்கும்!" என்ருர் அந்தணி, “பாலா, என்ன அமைதியாக இருக்கிருர்?" என்று கேட் Gusir!
*வேணுக்குள் எட்டுப் பெண்களும் சேர்ந்து போடும் இரைச்சலை ரசிக்கிருர் போலிருக்கிறது!" என்ருர் அந்தனி.
பிக்னிக்
நாங்கள் இருந்த வேனுக்குள் ஒரே கலகலப்பும் சிரிப்பு மாகவே இருந்தது!
“வேனை எந்த இடத்தில் நிறுத்தலாம் என்று பார்க் கிறேன்!" என்ருர் பாலா!
*ஏன் நிறுத்தப் போகிறீர்கள்?? புரியாமல் வினவினேன்!
'நீங்கள்தானே சொன்னீர்கள். இந்த மாதிரி இயற்கை யான சூழலில் விருந்துடன் பிக்னிக் நடத்தினுல் நல்லது என்று!"
"ஆமாம் ஆணுல் நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா? என்றேன் நான்!
'ஏன் நடக்காது! இங்கே இப்போதே நடத்துவோம்!” என்ருர் பாலா!
நினைவுச் சின்னம்
'பாலா, வெறுங்கையாலே முழம் போடுகிறவர்!” சலிப்பு டன் கூறிஞர் அந்தனி!
"நாணுவது முழம் போடுகிறேன்! உம்மால் அதுவும் முடி யாது” என்ற பாலா, டிரைவரிடம் "வேனை அப்படி
நிறுத்தப்பா!” என்ருர்!
அந்த இடத்தில் சில சுற்றுப்பயணிகள் பஸ்கள் இருந்தன.
125

Page 71
"இது என்ன இடம் ? என்று கேட்டேன்!
*முன்னுள் பிரதமர் எஸ். டபிள்யு. ஆர். டி. சேனநாயகா வின் சமாதி உள்ள இடம்” என்ருர் அந்தணி, அழகிய பூங்கா நடுவே நினைவுச் சின்னம் ஒன்றை தேசத் தந்தைக்கு எழுப்பி யிருந்தனர்.
பாலா அங்கே போகாமல் எதிரே இருந்த தென்னஞ் சோலைக்குள் எல்லோரையும் வரச் சொன்னுர்!
"நம்ம பிக்னிக்கிற்கு இது நல்ல இடமல்லவா? பாலா கேட்டார்.
"ஆஹா . அழகான இடம் ஆணுல் . “ என்று இழத் தேன்.
"ஆணுல் என்ன?” "சாப்பாடு இல்லாத பிக்னிக் சோபிக்காது!" 'சாப்பாடுதானே! வந்து விடும்!" “நம்மிடம் என்ன ஜிபூம்பா பூதமா இருக்கிறது, சாப்பாடு வரவழைப்பதற்கு!? புரியாமல் கேட்டேன்!
சாப்பாடு
திரு. பாலா தன் துணைவியாரிடம் ஏதோ கூற, பின்னுல் வந்த காரின் டிக்கியிலிருந்து பெரிய பெரிய பாத்திரங்களில் உணவுப் பண்டங்களை இறக்கத் தொடங்கிஞர்கள்!
சாம்பார் சாதம், புளியஞ் சாதம், இடியாப்பம், வடை, தோசை, காப்பி, குளிர்ந்த நீர், பழங்கள் என ஏதேதோ வரிசையாக எடுத்துக் கொண்டு வந்தனர். ஒரு கம்பளத்தை விரித்து வைத்தனர்.
“எல்லாரும் வந்து ஒரு கை பாருங்கள்! . பக்கத்தில் கிணறு இருக்கிறது. அதில், போய் தண்ணீர் எடுத்துக்
கொள்ளுங்கள்!” என்ருர் பாலா!
26

பசுக்கள்
சமயம் அறிந்து செய்வது எல்லோருக்கும் வரக்கூடியது அல்ல! பாலாவும் அவரது துணைவியாரும் சமயோசிதமாக அந்த உல்லாச விருந்தைச் செய்து எல்லோரையும் உற்சாகப் படுத்தினுர்கள்! எங்கள் விருந்தை ரசிக்க அங்கே மேய்ந்து கொண்டிருந்த பசுக்களும் காக்கைகளும் கூடிவிட்டன! அவற் றுக்கும் சாப்பிடக் கொடுப்பதில் சாந்திக்கும் ஜெயந்திக்கும் ஆனந்துக்கும் ஒரே போட்டி கிணற்றில் கயிற்றைப் போட்டு வாளியில் தண்ணீர் இழுப்பதில் ஓர் உற்சாகம் சிங்கப்பூர்ப் பட்டணத்தில் பசுக்களோடு பழக முடியுமா? கரீகங்கள் கூடி வந்து உண்பதைப் பார்க்க முடியுமா? கிணற்றைத்தான் பார்த் திருப்பார்களா?
ck k >k
சுள்ளென்று வீசிய காலைக் கதிரவனின் ஒளியை இதமான குளிர்ந்த காற்று போக்கியது!
எங்களுக்காக விடியற்காலையிலேயே எழுந்து இந்த வகை யான சாப்பாட்டைத் தயாரித்த திருமதி யோகாவைப் பாராட்டி னுேம்,
வளைந்து வளைந்து சாலை, உயர்ந்த மலைக்குன்று களினூடே சென்றது.
யானைகள்
வழியில் யானைகளைக் கொண்டு தெருவின் ஓரங்களிலிருந்த பெரிய பாறைகளை நகர்த்திச் செல்லப்பயன்படுத்திக் கொண்டி ருந்தார்கள். நீண்ட தந்தங்களில் பெரிய மரங்களை அவை ஏந்திக் கொண்டு சென்றன.
127

Page 72
நவீன யுகத்தில் டிராக்டர்கள் செய்யும் பளுவான வேலை களை இன்னும் யானைகளைக் கொண்டு எளிதாகச் செய்து வரு கிருர்கள். டிராக்டர்களுக்கு ஆகிற செலவைவிட யானையைக் கட்டித்தீனி போடுவது குறைவாகத்தான் இருக்க வேண்டும்!
விரைவு, வேகம், துரிதம், பரபரப்பு இதெல்லாம் சிங்கப் பூசைப் போல் நவீன யுகத்துடன் போட்டி போடும் நாடுகளுக் குத்தான் தேவை. ஆண்டுக்கு ஆண்டு கார் மாடல் மாறு கிறது. ஸ்டீரியோ செட் மாறுகிறது. உடுத்தும் உடைகளில் புதுப்புது பேஷன்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. பொருளாதாரம் உயரும் போதுதான் வசதிகளையும் மாற்றங் களையும் நாடும் நிலை ஏற்படும்!
கண்டிக்குப் போகும் வழியில் யானைகளைக் கூட்டமுடன் வைத்திருக்கும் இடம் ஒன்றையும் பார்த்தோம். கட்டுகஸ்தா என்ற இடத்தில் யானைகளைக் கொண்டு வந்து அன்ருடம் பிற்பகல் 2 மணி முதல் நான்கு வரை குளிப்பாட்டுவார்கள் மாவுத்தர்கள்.
, !-bẩi đsĩr
ஓர் அழகிய பூங்கா அருகில் எங்கள் வேனும் தொடர்ந்து
வந்த காரும் நின்றன!
“இந்தப் பூங்கா தென் கிழக்காசியாவிலேயே பெரியது!” என்று உற்சாகமாகக் கூறிக் கொண்டே இறங்கினர் அந்தணி.
அவர் கூறியதை மறுக்க முடியாதபடி அந்த எழில் பூங்கா கண்ணுக் கெட்டிய தூரம் வரை விரிந்த நிலப்பரப்பில் பரந் திருந்தது. அந்தப் பூங்காவை ஒட்டி சலசல வென்ற ஓசையு டன் ஆற்றுநீர் ஓடிக் கொண்டிருந்தது. அழகிய மங்கை நெளிந்து ஆடுவது போல ஒடிக் கொண்டிருந்த அந்த ஆறு தான் மகாவலி கங்கை இலங்கையின் நீளமான நதி. 200 மைல் நீளம் உள்ளது மகாவலி கங்கை
128

“இந்தப் பூங்காவிற்கு என்ன பெயர்?" "பேராதனை தாவர இயல் பூங்கா" என்ருர் சிவராஜ். புகைப் பட நிபுணர் சிவராஜ் தாம் அடிக்கடி அங்கே வந்து பல வித பூக்களைப் படம் எடுப்பதாகக் கூறிஞர். "அந்தப் படங்களை என்ன செய்வீர்கள்?
*பத்திரிகைகளுக்கு, ஆண்டு மலர்களுக்கு அனுப்பு கிற்ேன். வெளி நாட்டு ஆங்கிலப் பத்திரிகைகள் இத்தகைய படங்களை வரவேற்கின்றன’ என்ருர்,
"இந்தப் பூங்காவில் இறங்கிச் சுற்றிப் பார்ப்பதென்றல் ஒரு நாளாகும்” என்ருர் சிவராஜ்
"ஐயையோ அப்படியென்ருல் கண்டி நிகழ்ச்சி என்னவா கிறது? அங்கே எல்லோரும காத்திருப்பார்களே!’ என்றேன். இதற்குள் பாலா விரைந்து வந்தார். 'எல்லாரும் காரில் ஏறுங்கள்!" என்ருர்,
சமயோசித பாலா "இந்த அழகான பூங்காவை இன்னும் சரியாகக்கூடப் பார்க்கவில்லை. அதற்குள் புறப்படச் சொல்கிறீர்களே!” என்று வருத்தமுடன் பெண்கள் பகுதியிலிருந்து பல குரல்கள் ஒலித்தன!
"காரிலிருந்தபடியே சுற்றிப் பார்க்கலாம். அதற்காக இதோ தனிக் கட்டணம் செலுத்தி அனுமதி வாங்கி வந்திருக் கிறன்” என்ருர் பாலா!
*சமயோசித பாலா’ என்று நீங்கள் சொன்னபடி எவ் வளவு சாமர்த்தியமாகச் செய்திருக்கிருர் பார்த்தீங்களா?" என்ருர் அந்தணி.
குளுகுளுப்பான அந்தப் பூங்காவில் பலவித வண்ணங் களில் பல்லாயிரம் விதமான மலர்ச் செடிகளும் மரங்களும் இருந்தன.
129

Page 73
தேவர்கள் பூசைக்கு மலர் கொய்ய பூலோகத்திற்குத்தான் வருவார்கள் என்பார்கள்! அந்தத் தேவர்களின் பூங்கா இது தானுே!
கண்டி நடனம்
எங்கள் வாகனங்களை ஒரு பக்கமாக நிறுத்தி விட்டு, ஆர்க் கிட் மலர்கள் இருந்த கண்ணுடி மாளிகைக்குள் வந்தோம்! அங்கே ஆர்க்கிட் மலர்களில்தான் எத்தனை வகை, எத்தனை வண்ணங்கள்!
ஒரு காலத்தில் காட்டுத் தாவரங்களாக இருந்த ஆர்க்கிட் மலர்கள் இன்று விலை மதிக்க முடியாத மலர்களாக இருக்கின் றன.
சிங்கப்பூரின் தேசிய மலரும் ஆர்க்கிட் மலர்தான்!
*கண்டி நடனம் பார்க்கப் போறிங்களா? என்று அழைத் தார் திருமதி யோகா.
*எங்கே நடக்கிறது? என்று ஆவலுடன் கேட்டார் எனது துணைவியார்!
"இதோ முன்னுல் பாருங்களேன்!” என்ருர் அவர் சிரித்த படி!
“என்ன விளையாடுநீங்கிளா?" என்று பதிலுக்குக் கேட் டார் எனது துணைவியார்
“எதிரே இருக்கே இந்த மஞ்சள் ஆர்க்கிட் மலர் இதுக்குப் பேர்தான் கண்டி நடனம்! நன்ருக உற்றுப் பாருங்கள் இந்த மலரை!” என்ருர் யோகா.
கண்டி நடனம் ஆடுகிறவர் போல் தலைப்பாகை, உடையு டன் நெளித்துக் கொண்டு நின்ற கோலத்தில் அந்த மஞ்சள் நிற ஆர்க்கிட் மலரின் தோற்றம் தெரிந்தது.
130

தேசிய மலர் வெளி நாட்டுச் சுற்றுப் பயணிகள் அந்த மலரைப் படம் எடுப்பதில் முனைப்புடன் இருந்தார்கள்!
இலங்கையின் தேசிய மலராக இன்னும் எதுவும் தேர்வு செய்யப்படவில்லை என்ருல் நிச்சயம் இந்தக் கண்டி நடன ஆர்க்கிட் மலரே இந்தப் பெருமையைப் பெறும் என்று நம்ப 6)Th.
ஆர்க்கிட் மலர்க்கூடத்திலிருந்து புறப்பட்ட நாங்கள் ஒரு தாமரைக் குளத்தருகே வந்ததும் நின்ருேம்.
"இந்த இடத்திலே ஒரு விசேஷம்!’ என்று பீடிகை போட் டார் அந்தனி
திரைப்படம் "ஏன், இங்கேயும் ஏதாவது ஒரு நடனப் பூவைக் காட்டப் போகிறீர்களா?” என்று கேட்டேன்.
"நோ.நோ.இந்த இடம் ஒரு தமிழ்ப் படத்திலே வந் திருக்கிறது!’ என்று புதிர் போட்டார் அவர்!
“படத்துக்குப் படம் பூங்காவும் காதலர்கள் ஒடியாடி *கேச்சிங்" விளையாடுவது இருக்கும். இந்த இடத்தை எந்தப்
படத்திலே தேடமுடியும்? என்ருள் மகள் சாந்தி!
"பைலட் பிரேம்நாத் படத்தில் இந்தப் பூங்காவைப் பார்க்க லாம்!” என்ருர் அந்தணி.
"அந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. இனி வந்தால் கண்டிப்பாகப் பார்க்கிறேன்" என்ருள் சாந்தி!
'சிவாஜி கணேசனும் இலங்கையின் புகழ் பெற்ற நடிகை மாலினி பொன் சேகாவும் நடித்த படத்தின் காட்சி இந்த இடத்தில் தான் எடுத்தார்கள்!" அந்தணி விடாமல் வர்ணித்த படி அங்கேயே அமர்ந்து கொண்டார்!
13.

Page 74
"சிவபெருமான் காலடி வைத்த இடம் என்று சொல்லுங் கள்! இந்த மண்ணையாவது எடுத்துத் திருநீறு இட்டுக் கொள்கிறேன்! சிவாஜி நடித்த இடம் என்று இங்கே சிலைகூட வைத்து விடுவீர்கள் போலிருக்கே!" என்று கிண்டல் செய்தாள் சாந்தி!
"அந்தணி சார்! இங்கே ரஜனிகாந்த் நடித்த இடம் என்று சொல்லுங்கள். அவர் நினைவாக ஒரு மலர்ச் செடியை நடுகி றேன்” என்று ஒரு பெண்மணி குரல் கொடுத்தார். அவருக்கு வயது 40க்கு மேல் இருந்தது ஒரே சிரிப்பொலிதான்!
இன்று நம் திட்டம் ஒன்றும் சரிவராது போலிருக்கிறது" என்று சலித்தபடி வந்தார் டாலா.
ஏன் என்ன விஷயம்?" என்று கேட்டேன்.
“பக்கத்தில் தான் பேராதனைப் பல்கலைக்கழகமும் குறிஞ்சிக் குமரன் கோயிலும் மலைப்பகுதியில் அமைந்துள்ளன. அங்கே நாங்கள் வருவதாகச் சொல்லி அனுப்பியிருந்தேன். இப்போதே மணியாகி விட்டது. இனிப் போக முடியாது” என்ருர்,
"அதனுல் என்ன? இந்தப் பூங்காவின் அழகுக்கு எதுவும் இணையாகாது” என்ருேம்!
பேராதனைப் பூங்கா கி.பி. 1871ல் மன்னன் விக்ரமபாகு III தனது ஆட்சியின் போது அமைத்தார். பல நூற்ருண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் அந்த அழகிய பூங்கா, நதிக்கரையில் காண வருவோரை மெய்மறக்க வைக்கிறது. அங்கிருந்து போக மனமின்றிப் புறப்பட்டோம்.
கண்டி நகர்
வரலாற்றுப் புகழ் பெற்ற கண்டி நகருக்குள் அடி எடுத்து வைத்தோம்.
132

மலையகத்தின் தலைநகரான கண்டியில் கேமரன் மலையின் குளிர்ச்சியைப் பெற்ருேம்.
மலைப் பிரதேசத்தின் செழிப்பும் குளுமையும் ஒரு வித கிளு கிளுப்பைத் தரவே செய்தன.
எங்களுக்கு மலர் மாலை சூட்டி வரவேற்ருர் பெரியார் திரு. பி. டி. ராஜனின் குடும்பத்தினர்.
திரு. ராஜன் அவர்கள் தமது மாளிகையில் நாங்கள் தங்கு வதற்கான வசதிகளைச் செய்து சிறப்பான விருந்துபசரிப்பும் நடத்தினர்.
ஆழ்ந்த கல்வி ஞானமும் சமூகத் தொண்டும் ஆற்றி வரும் திரு. பி டி. ராஜன், ஜே. பி. அவர்கள் கண்டி நகரில் பெரிய கல்லூரி ஒன்றைச் சொந்தமாக அமைத்துள்ளார்கள்.
அசோகா பள்ளி அசோகா மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்றையும் திரு. ராஜன் அமைத்துள்ளார்கள்.
அசோகா வித்தியா சாலை என்ற தமிழ்ப் பள்ளிக்கூடம் 1955ல் தொடங்கப்பட்டது.
இப்போது 300 பிள்ளைகள் படிப்பதாக திரு. ராஜன் தெரிவித்தார். அந்தப் பள்ளியில் 15 ஆசிரியர்கள் பணியாற்று கின்றனர்.
“மாணவர் விடுதி 9 பிள்ளைகளுடன் 1935ல் தொடங்கி னேன்! தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் தங்கிப் படிக்க வசதி இல்லாததால் அவர்கள் படிப்பறிவு பெற முடியா மல் போவதை உணர்ந்து 40 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கள் தங்கிப் படிப்பதற்கான விடுதியைத் தொடங்கினேன்!" என்ருர் திரு. ராஜன்.
'1960ல் இந்த விடுதியின் வெள்ளி விழா சர் சி. பி. ராம சாமி ஐயர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ராஜாஜி
133

Page 75
அவர்கள் இங்கே வருகை அளித்த போது இந்திய மாணவர் விடுதி என்றிருந்ததை அசோகா மாணவர் விடுதி என்று மாற்றச் சொன்னர்" என்று கூறினர் ராஜன்.
பாட்டாளி மக்களின் தற்குறித்தனத்தைப் போக்க அந்த நாட்களில் பட்டபாடுகளை நினைவு படுத்திக் கூறிஞர் ராஜன். அவர் தொடங்கிய கல்விப் பணியினுல் நல்ல பண்பும் படிப்பும் பெற்ற மாணவர்களைச் சமுதாயம் பெற முடிந்துள்ளது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின்போது கல்வி அறிவுத் துறையில் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தனர் பாட்டாளி மக்கள். இன்று அவர்களின் பிள்ளைகள் படித்து முன்னேற முடிந்துள்ளதென்ருல் அதற்குக் கார ண ம் திரு. ராஜன் போன்ற அன்பர்களின் சிறந்த சேவைதான்.
40 ஆண்டுப் பணி
'பிள்ளைகளுக்குப் படிப்பைச் சொல்லிக் கொடுப்பது மட்டு மல்ல, நல்ல பழக்க வழக்கங்கள், சுத்தம், சுகாதாரம், பண்பாடு இவற்றையெல்லாம் கண்டிப்பான முறையில் பின்பற்றி அநு சரிக்கச் செய்தோம்! " என்ருர் ராஜன்.
அவரது மாளிகையில் மாட்டப்பட்டிருந்த ஏராளமான புகைப் படங்களில் அவரது 40 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பணி க%ளயும் சேவைகளையும் தெரிந்து கொள்ள முடிந்தது. திரு. ராஜன் கிறித்துவ சமயத்தைச் சார்ந்தவரென்ருலும் சமயபேதம் பாராது சேவை செய்யும் பெரிய உள்ளம் படைத்த வர். கண்டியிலுள்ள மத்திய மாகாண இந்து மாமன்றத்தின் கெளரவ உறுப்பினராகவும் அவர் பங்காற்றுகிருர். பல பொதுப் பணிகளுக்கும் அவர் முன் நின்று சேவையாற்றி வருவதாக நான் சந்தித்துப் பேசியவர் ஒவ்வொருவரும் அவரைப் பாராட்டி ஞர்கள். “தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற வள்ளுவர் வாசகத்துக்கு ஏற்ப வாழ்ந்து காட்டுகிருர் ராஜன்.
134

அன்று இரவு திரு. ராஜனின் மாணவர் விடுதியில் எனது புதல்விகளின் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தால் அவர்களுக்கான ஒப்பனைகளைக் கவனிப்பதில் ஈடுபட்டி ருந்தார் எனது துணைவியார்.
பேரவை வரவேற்பு
மலையகக் கலை இலக்கியப் பேரவை, மூலம் அன்று மாலை தேநீர் விருந்து ஏ ற் பா டு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அழைக்க வந்திருந்தனர் திரு. சிவம், திரு. மலை த் தம் பி ஆகியோர்.
அசோக வித்தியாலயத்தின் தலைமை ஆசிரியராகப் பணி யாற்றும் திரு நடராசாவும் அவரது துணைவியார் திருமதி லலிதா நடராசாவும் திரு. ராஜன் இல்லத்தில் அளித்த அன் பான உபசரிப்பையும் உதவிகளையும் நாங்கள் மறக்க முடியாது.
இந்து மாமன்றத்தின் பிரிவாக இயங்கும் இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராகவும் திரு. நடராசா பங்காற்றுகிருர்,
ராஜன் இல்லத்தில் நடத்தப்பட்ட மிகப் பெரிய விருந் துபசரிப்பை முடித்ததும் வீரகேசரியின் கண்டி நிருபர் திரு. க. ப. சிவம் எங்களைப் பேட்டி கண்டார்.
முதல் நாள் தான் வீரகேசரி அலுவலகத்திற்குப் போய் வந்திருந்தோம் என்பதை அவரிடம் தெரிவித்தோம். திரு. சிவம் எதிலும் சுறுசுறுப்புக் காட்டும் இளைஞர். விரைந்து செயல் படும் தீரர்.
தேநீர் விருந்து 'கண்டி இம்பாலா ஒட்டலில் மலையக கலை இலக்கியப் பேரவை உங்களுக்கு வரவேற்பு தேநீர் விருந்தளிக்கிறது. நீங்கள் அவசியம் வரவேண்டும்" என்று கூறி அழைப்பிதழைத் தந்தார் கவிஞர் மலைத்தம்பி.
135

Page 76
'மூன்று மணிக்கு தேநீர் விருந்து என்று கூறுகிறீர்கள் இப்போதே மணி மூன்ருகி விட்டதே, புறப்படுவோமே" என்று அவரைக் கிளப்பினேன்!
எங்கள் கார்கள் கண்டி இம்பாலா ஒட்டலை நோக்கி விரைந் தன. வாயிலில் ஏராளமானுேர் எங்கள் வருகைக்காகச் காத்தி ருந்தனர்.
இவர்கள் யாவரும் மலையகக்கலை, இலக்கிய, பத்திரிகைத் துறைகளில் ஈடுபாடுள்ளவர்கள். உங்களைக் காண வேண்டும், கலந்துரையாட வேண்டும் என்ற ஆவலுடன் வந்திருக்கிருர் கள்” என்று அறிமுகப்படுத்தினுர் மலைத்தம்பி.
எல்லோரும் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து
மண்டபத்திற்குச் சென்ருேம்.
திரளானுேர்
நூற்றுக்கு மேற்பட்டோர் கூடியிருந்த அந்த இலக்கிய அன்பர்களைப் பார்த்ததும் எனக்கே பெரும் மலைப்பாக இருந் Jeقیقت ح
தமிழ் இலக்கியத் துறையில் இத்துணை ஈடுபாடு கொண்டு சிறியேனுகிய என்னை கெளரவிக்க இவ்வளவு பெரிய ஏற்பாட் டைச் செய்திருந்தவர்களிடம் என் உள்ளம் நன்றி உணர்வால் நெகிழ்ந்தது.
மலையகத்தின் இலக்கிய முன்னுேடியான மூதறிஞர் திரு. சி. வி. வேலுப்பிள்ளை, திரு. கே. கணேஷ், முன்னுள் டெய்லிமிரர் நாளிதழ் ஆசிரியர் திரு. பொ. கிருஷ்ணசுவாமி இலக்கிய ஆர்வலர் திரு. எம். ரெங்கநாதன் ஆகியோருடன் பெரியார் திரு. பி. டி. ராஜனும் கலந்து கொண்டு உரையாற் றிஞர்.
பேரவைத் தலைவர் திரு. க. ப. சிவம் அவர்கள் பேசுகையில் "இலக்கிய, கலை, பத்திரிகைத் துறையிலும் சிங்கப்பூரிலும் மலே
136

சியாவிலும் நீண்டகால அநுபவமுள்ள ஒருவருக்கு முதன் முதலாக இங்கே இந்த அறிமுகக் கலந்துரையாடல், தேநீர் விருந்தை நமது பேரவை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறது. ஈழ நாட்டு-சிங்கப்பூர் இலக்கிய ஆர்வலர்கள் இன்னும் அணுக்கமாகப் புரிந்து கொண்டு தமிழுக்குச் சேவையாற்ற திரு. சர்மாவின் வருகை மிகவும் துணை புரிந்துள்ளது" என்ருர்,
வாழ்த்துப்பா கவிஞர் திரு. மலைத்தம்பி இனிய கவிதையில் வாழ்த்துப்பா, ஒன்றை வாசித்தளித்தார்.
திரு. கே. பாலச்சந்திரன், திரு. நடராசா மற்றும் பலர் உரையாற்றிஞர்கள்.
"தமிழகத்தில் மட்டுமல்ல தமிழகத்திற்கு வெளியே பிறந்து வளர்ந்து, வாழும் தமிழர்கள் செய்யும் பெரும் இலக்கிய, கலை சேவைகளை உலகம் முழுதும் உணர்ந்து பாராட்டும் ஒரு நல்ல பண்பு இப்போது மலர்ந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. அதற்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைந்துள்ளது எங்கோ இருந்து வந்த எனக்கு உங்கள் பேரவை தந்துள்ள இந்தப் பெரிய வரவேற்பு ! நீங்கள் தரும் விருந்தோம்பலும் காட்டும் அன்பும், பண்பும், பாசமும் நம் பாரம்பரியத்தின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. உங்களின் அன்பையும் ஆதரவையும் எங்கள் நாட்டிலும் எடுத்துக் கூறுவேன்" என்று நான் கூறிய போது எல்லோரும் உற்சாகமுடன் கைதட்டி வரவேற்றனர்.
பின்னர் ஓர் அன்பர் தோட்டப்பாட்டாளிகள் படும் அவதியை எடுத்துப் பேசினர். " பிரச்னைகளும் தொல்லைகளும் எல்லா நாட்டுக்கும் பொதுவானவை. அவை தீர்க்கப்பட்டு மகிழ்ச்சியுடன் தமிழர்கள் வாழ்வு விளங்க நம்மாலான உதவி யையும் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தர முன்வருவோம்" என்று கூறினேன். -
*தோட்டப் பாட்டாளிப் பிள்ளைகள் கல்வியறிவில்லாமல் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்தார்கள். வெள்ளைக்
137

Page 77
காரத் தோட்டத் துரைமார் பாட்டாளி மக்களின் நலனில் கொஞ்சமும் அக்கறை காட்டாமல் அவர்கள் உழைப்பில் பெரிய ஆதாயம் தேடி தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிக் கொண்டி ருந்தார்கள். பெரியார் ராஜன் போன்றவர்கள் தந்த கல்வி என்ற ஒளிதான் இன்று அவர்களின் அறிவுக் கண்ணைத் திறந் தது” என்று மனந்திறந்து பாராட்டிஞர் கவிஞர் மலைத்தம்பி
கவிஞர் மலைத்தர்பி வாசித்த வரவேற்பு மடலில் கவிதை நயம் இனிய சந்தமுடன் ஒலித்தது.
தாக மலர்கள் நாம்!
தக தகத்த மதியின் கண்
ஏறி இறங்கி வந்து
எழுச்சியுற்ற மானிடர் முன்
வாழும், வளமையுறும்
வழி முறைக்காய்ப் போராடும்
தோட்டத் தொழிலாளர்
தொன்மை மிகு பரம்பரையின்
வாரிசு நாம் இதயத்தே
வரிந்த மனப் பாங்கால்
பூரித்த சிங்கப்பூர்
புதின இதழ் ஆசிரியர்
பான்மை மிகு சர்மாவை
பண்டைத் தமிழாலே
வாழ்த்தி வரவேற்ருேம்
வணக்கங்கள், வாழியவே!
தோட்டத் தொழிலாளர் பரம்பரையிலிருந்து வந்த கவிஞர்
மலைத்தம்பி தாம் கற்ற தமிழ் மூலம் சீரிய சேவையாற்றி வரு கிருர்,
விளக்கம் கலை இலக்கியப் பேரவையின் உறுப்பினர்கள் சிங்கப்பூர்த் தமிழர்களின் வாழ்க்கை நிலை, அரசியல், இலக்கிய, சமய, கலை
138

நிலை பற்றி விடுத்த சரமாரியான வினுக்களுக்கு விளக்கங்களைத் தந்தேன்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நிலை பற்றி அறிந்து கொள்ள அவர்கள் கொண்டிருந்த ஆவலுக்கு என் விளக்கம் தெளிவு தந்ததாக எல்லோரும் கூறினர்.
"உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள் இன்னும் அதிக அளவில் பத்திரிகைகள் வெளியிட வேண்டும்!" என்று என் கருத்தைக் கூறினேன்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட "செய்தி" என்ற இதழின் ஆசிரியர் திரு. ராமு நாகலிங்கம் அதை வரவேற்ருர், "ஆணுல் தமிழகத்திலிருந்து வந்த சில தமிழ்ப் பத்திரிகை யாளர்கள் மேல் மட்டத்திலுள்ளவர்களுடன் மட்டுமே தொடர்பு கொண்டு விட்டுப் போய் விடுகின்றனர். ஐந்து நட்சத்திர ஒட்டல்களில் தங்கிக் கொண்டு பெரிய அந்தஸ்திலுள்ளவர் களை மட்டுமே சந்தித்துப் பேட்டி காண்கின்றனர்!" என்று குறைப்பட்டார் திரு. மலைத்தம்பி.
கண்டி கலா ரசிகர் மன்றச் செயலாளர் திரு. மு. சுப்பிர மணியம், மத்திய மாகாண இந்து மாமன்றத் தலைவர் திரு. அ. துரைசாமிப் பிள்ளை போன்ற பிரமுகர்களும் கனிவும் அன்பும் காட்டிஞர்கள்.
ck >k
நேர ம் நெருங்கிக் கொண்டிருந்தது. இரவு 7 மணிக்கு எனது புதல்விகள் சாந்தி-ஜெயந்தி யின் நாட்டிய நிகழ்ச்சி அசோக வித்தியாலயத்தின் அசோக வெள்ளி விழா மண்டபத்தில் தொடங்க இன்னும் சில நிமிடங்களே இருந்ததால், பேரவை அன்பர்களிடம் விடை பெற்ருேம்.
139

Page 78
வெள்ளி விழா மண்டபத்திற்கு வந்த போது மண்டபம் நிரம்பி, வெளியிலும் ஏராளமானுேர் திரண்டிருந்தனர்.
மண்டபத்தின் பாதிப் பகுதி முழுவதும் பெண்கள் நிறைந் திருந்தனர். மறு பாதியில் ஆண்கள் அமர்ந்திருந்தனர்.
ஆண்களும் பெண்களும் தனித்தனியே இருப்பதை பஸ் களில், பொது நிகழ்ச்சிகளில் கோவில்களில் பார்க்கும் போது எனக்கே வியப்பாக இருந்தது.
கணவன் ஒரு புறம் மனைவி ஒரு புறம் என்று பிரித்து வைக்கும் இந்த வழக்கம் நம் நாட்டில் இல்லை! சரிநிகர் சமான மாக ஆண்களுடன் பெண்களையும் காண்போம் என அமர கவி பாரதியார் கண்ட கனவு இன்னும் சில இடங்களில் நிறை வேருமலே இருக்கிறது. காலம் வழி காட்டும் என்று எதிர் பார்ப்போம்.
நடனம் ஆடினர்
மண்டபம் நிரம்பியிருந்த உற்சாகமான கூட்டத்தினரின் மனம் நிறைவு பெறும் விதத்தில் நடன நிகழ்ச்சி அமைய வேண்டுமே என்று என் மனம் அடித்துக் கொண்டது. இதற்குக் காரணம் செல்விகளுக்குப் பயண அசதியுடன் லேசான காய்ச் சலும் கண்டிருந்தது.
விநாயகர் துதியுடன் 'வாதாபி கணபதி” பாடலுடன் ஆடல் தொடங்கியது. தொடர்ந்து அலாரிப்பு, தில்லான வகைகளை அடுத்து 'முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே,” "தாயே யசோதா," "ஆடும் அருள் ஜோதி” ஆகிய பாடல்களு டன் இரண்டு மணி நேர நடன நிகழ்ச்சி அமோக வரவேற்பு டன் நடைபெற்றது.
பரதச் சிறப்பு
இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர் திரு. நடராசா சிறந்த முறையில் வரவேற்புரை நிகழ்த்தினர்.
140

“சிங்கப்பூர்க் குடியரசிலிருந்து வந்துள்ள திரு. சர்மாவை யும் அவரது கலைக் குடும்பத்தினரையும் வரவேற்று இந்த நிகழ்ச்சியை நடத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிருேம். அவர் களுடைய புதல்விகளின் நாட்டியம் நம் கலாச்சாரப் பெரு மையை அற்புதமாக வெளிப்படுத்தின! வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு நம் பரதக்கலையைக் கற்று, தில்லை ஆடும் பெருமான் முன் அரங்கேற்றியவர்கள் இன்று நாமும் கண்டு மகிழும் அரும் வாய்ப்பை வழங்கினுர்கள். சகோதரிகள் சாந்தி ஜெயந்தி இருவரும் மிகவும் துடிப்பாக ஆடி நம் அனைவரையும் பரவசத் தில் ஆழ்த்தினர்கள்" என்று பாராட்டினர் திரு. சி. நடராசா அவர்கள்.
மறக்க முடியாதது
திரு. கே. பாலச்சந்திரன், தி ரு ம தி யோ கா, திரு. க. ப. சிவம், திரு. அந்தனி ஜீவா ஆகியோரும் பாராட்டு ரைகள் வழங்கிய பின், என் துணைவியாருக்கும் எனக்கும் கண்டி மத்திய மாகாண இந்து மா ம ன் ற ப் பிரமுகர் திரு. எம். பெரியசாமி அவர்கள் மலர் மாலைகளைச் சூட்டினர்
SST
எனது நன்றியுரையில் ஒரு தமிழர் இவ்வளவு பெரிய கல்வி நிலையத்தை அமைத்துள்ளது நம் நெஞ்சத்தைப் பூரிக்க வைக்கிறது. அந்தக் கல்வி நிலையத்தின் வெள்ளி விழா மண்ட பத்தில் அதன் ஸ்தாபகர் பெரியார் திரு. ராஜன் அவர்கள் முன்னிலையில் எனது புதல்விகளின் நாட்டிய நிகழ்ச்சியும் எங் களுக்குப் பாராட்டு விழாவும் நடத்தப்படுவது நம் வாழ்வில் மறக்க முடியாத அரிய நிகழ்ச்சியாகும். இந்தச் சிறப்பான ஏற் பாட்டைச் செய்துள்ள கண்டி இந்து வாலிபர் சங்கத்திற்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கி ருேம். பெரியார் ராஜன் அவர்கள் ஆற்றிவரும் கல்விப் பணி களையும் பொதுச் சேவைகளையும் நேரில் அறிந்து கொள்ளும் அரும் வாய்ப்பினை எங்களுக்குத் தந்த திரு பாலச்சந்திரனையும்
141

Page 79
திரு. அந்தனி ஜீவாவையும் நன்றியுடன் நினைவில் கொள்கி ருேம்" என்று கூறியதுடன், "இந்தப் தொடர்பு ஒரு வலுவான பிணைப்பை நம் நாடுகளுக்கிடையே ஏற்படுத்த வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டேன்.
வெள்ளித் தட்டுகள் இந்து வாலிபர் சங்கம் கண்டி இந்து மாமன்றத்தின் முயற்சியால் உருவாகும் கண்டி இந்துக் கலாச்சார நிலையக் கட்டிட நிதிக்காக வசூலிக்கப்பட்ட ஐயாயிரத்து ஒரு ரூபாய்க் கான காசோலையை இந்த மாமன்றப் பொருளாளர் திரு வை. மாரிமுத்து அவர்களிடம் வழங்கினர் திரு. வெ. பால
இந்து மாமன்றத் தலைவர் திரு. அ. துரைசாமிப் பிள்ளை ஜே. பி. அவர்கள் செல்விகள் சாந்திக்கும் ஜெயந்திக்கும் அழகிய கலை வேலைப்பாடமைந்த கண்டி வெள்ளித் தட்டுகளைப் பரிசாக வழங்கினர்கள். ر
இரவு பத்தரை மணிக்கு நிகழ்ச்சி இனிது முடிவுற்றது வந்திருந்த மக்களில் அநேகர் குழுமிக் கொண்டு அன்புடன் விசாரித்தனர். பலர் முகவரிகளைத் தந்தனர்.
பின்னர் நாங்கள் சிங்கப்பூர் வந்த பிறகு இவர்களில் சிலரு டன் மடல் தொடர்பு நீடிக்கிறது. சில அன்பர்களை சிங்கப்பூர் வந்தபோது வரவேற்கும் வாய்ப்பையும் பெற்ருேம்.
திரு. கெளரி நாதன் சிங்கப்பூருக்கு அப்படி வந்து அன்புத் தொடர்பை ஏற் படுத்திக் கொண்டிருப்பவர்களில் கண்டி ராதிகா நகை மாளிகை உரிமையாளர் திரு கெளரி நாதனும் ஒருவர்!
கண்டியில் நடன நிகழ்ச்சி முடிந்ததும் எங்களுக்கான இரவு உணவை ஒரு பெரிய ரெஸ்டாரெண்டில் ஏற்பாடு செய்ய முன் வந்திருந்தார் திரு. கெளரி நாதன்.
142

கெளரி நாதன் வயதில் இளையவர். திருமணமாகாதவர் ஆகவே அவரை வம்புக்கு இழுத்து எல்லோரும் வேடிக்கை செய்தனர்.
*ஏன் சார் உங்களுக்கு ரயில் ராதிகா மீது பிரியமா? அதஞல் தான் உங்கள் கடைக்கு ராதிகா என்ற பெயரை வைத் தீர்களா?”
"ஏன் சார் உங்கள் பெயரை கெளரி என்று வைத்தார்கள். நீங்கள் “டெளரி" நிறையக் கேட்பீர்கள் என்பதாலா!" என்று “பெட்டைகள்' அவரைக் கேலி செய்து அவரை வாயடைக்க வைத்து வெற்றி கண்டனர்! பாவம், கெளரி இந்த வேடிக்கை, தமாஷ்களையெல்லாம் சிரித்த முக த் துட ன் ஏற்றுக் கொண்டார்!
நள்ளிரவு கெளரி நாதன் அவர்கள் தந்த விருந்துபசரிப்பை சும்மா சொல்லக்கூடாது! பலரிடம் இறைச்சியும் பிரியாணியும் வாய்க் கும் கைக்கும் விடாப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன! கெளரி அவர்கள் கூடவே இருந்து ஒவ்வொருவருக்கும் பரி மாறிஞர்
'உங்களைக் கட்டிக் கொள்ளப் போகிறவள் அதிர்ஷ்டம் செய்தவள்!" என்று அதற்கும் கிண்டல் செய்தனர் பெண்கள்! எங்களுக்குத் தனியே சைவ உணவு ஏற்பாடு செய்திருந் தார் கெளரி1
கண்டியில் நடக்கும் ஒவ்வொரு பொதுப்பணியிலும் கெளரி முன்னின்று உழைப்பார் என்று பாராட்டிஞர் அந்தணி.
இரவில் நேரத்துடன் படுக்கைக்குப் போய்விடும் வழக்கத் தைக் கொண்டிருந்த பெரியார் ராஜன் அன்று இரவு எங்களு டன் உற்சாகமாக இருந்தது அவரது நண்பர்களுக்கு வியப் பாக இருந்தது.
அவர் உடல் நலத்தை உத்தேசித்து உடனே அவரை அவர் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல அன்பர்கள் முன்வந்த
143

Page 80
போது அவர் மறுத்து விட்டார். 'இவர்கள் இனி எப்போது இங்கே வரப்போகிருர்களோ? இப்படிச் சந்தோஷமாக தாம் பேசி மகிழ மீண்டும் வாய்ப்புக் கிடைக்குமா? என்று அவர் உருக்கமுடன் கூறிய போது, அவரது குழந்தை உள்ளத்தை எண்ணி வியந்தோம்.
நள்ளிரவு நேரமாகி விட்டதால் நண்பர்களைப் பிரிந்து கொழும்புக்குப் பயணம் செய்ய வேண்டுமென்ற கவலை எல்லோருக்கும் வந்து விட்டது.
'பெண்களும் பிள்ளைகளும் மிகவும் அசதியுடன் இருக்கிருர் கள். எல்லோரும் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்து காலையில் போகலாம்" என்ருர் ராஜன். அவரது அன்புக் கட்டளையை மீற மனமின்றி அங்கேயே இரவு தங்க முடிவு செய்தோம்.
கண்டி நகரம் எங்களை விடுவதாக இல்லை! மலைவாச நண்பர்களின் குளுமையான உபசரிப்பில் உள்ளம் குளிர்ந் தோம்! உடலும் குளிரில் கிடுகிடுத்தது!
மலைகளும் அடர்ந்த காடுகளும் கொண்ட கண்டி யில்தான் கண்டி அரசர்கள் பெரிய அரண் அமைத்து ஆட்சி நடத்தினர்கள்.
1815 ல் பிரிட்டிஷாரின் ஆளுகையுடன் கண்டி அரசர் களின் ஆட்சியும் ஒரு முடிவுக்கு வந்தது.
தலதா மாளிகை ஆயினும் அந்த அரசர்களின் மகோன்னத ஆட்சியின் சுவடுகள் இன்னும் மறையாமல் உள்ளன. சிங்களவர்களின் சிறப்பைக் காட்டும் சின்னங்களை எங்கும் பார்க்கிருேம்.
பெரிய கோட்டை கொத்தளமுடன் அமைந்த ஒரு பகுதிக்கு நாங்கள் சென்ருேம்.
'இதுதான் தலதா மாளிகை. இங்கே தான் புத்தரின் புனிதமான பல்லை வைத்திருக்கிருர்கள்!" என்ருர் பாலா.
144

வெளியே பெரிய அகழியுடன் கோட்டை போல் தோற்ற மளித்தாலும் அது ஒரு புத்தர் கோவிலாக இப்போது மாறியுள்ளது.
காவி உடை அணிந்த ஒரு சிங்கள பிக்கு எங்களை வர வேற்ருர்,
உள்ளே நுழைந்ததும் அறிவிப்புப் பலகையில் வழிபாட்டு நேர விவரக் குறிப்புகளைத் தமிழிலும் தந்திருப்பதைப் பார்த்த தும் மகிழ்ச்சியடைந்தோம். ஆணுல் அந்தத் தமிழைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாதபடி நிறைய எழுத்துப் பிழைகள் இருந்தன.
. "இந்த அறிவிப்பு தப்புந்தவறுமாக இருப்பதாக முன்பே கூறியிருந்தேன். எப்போதுதான் திருத்தப் போகிறீர்கள்' என்று அந்த பிக்குவைப் பார்த்துக் கேட்டார் திரு. பாலா,
புனிதப் பல்
"அதைப் பற்றி அவர்கள் அக்கறை காட்டமாட்டார்கள். தமிழ் அறிவிப்பை நாம் ஒரு தாளில் சரிவர எழுதிக் கொடுத் தால் அதைப் பார்த்துச் செய்வார்கள்" என்றேன் நான்!
அது நல் ல யோசனையாகத் தோன்றவே பாலாவும் அந்தனியும் அதைத் தயாரிப்பதில் ஈடுபட்டனர்.
நாங்கள் தலதா மாளிகையைச் சுற்றிப் பார்க்கப் புறப் பட்டோம்.
புத்தரின் புனிதப் பல் வைத்துள்ள இடத்தின் கதவு தாழிடப்பட்டிருந்ததால் அதைக் காண முடியவில்லையே என்று வருந்தினுேம், எங்களுடன் வந்த திரு. மலைத்தம்பி மற்ருெரு புத்த பிக்குவைச் சந்தித்து நாங்கள் சிங்கப்பூரிலிருந்து வந்திருப்பதாகக் கூறினர்.
145

Page 81
புனிதப்பல் வைத்திருந்த மண்டபத்தின் கதவுகளை அந்த புத்த பிக்கு திறந்து விட்டு தரிசனம் செய்ய அனுமதித்தார். அவர் வாழ்க!
ஏட்டுச்சுவடிகள் இரண்டு மாடிகளைக் கொண்டது அந்த மாளிகை. மேல் தளத்தில் ஒரு பகுதியிலிருந்த நூல் நிலையத்தையும் பார்த் தோம். ஏராளமான சுவடிகள் கட்டு கட்டாக அங்கே வைக்கப் பட்டிருந்தன.
ஓர் ஏட்டுச் சுவடிக் கட்டைப் பிரித்துப் பார்த்தேன். அதில் ஏதோ கிரந்த மொழியில் எழுதப்பட்டிருந்தன. எழுத்துக்கள் அச்சுப்போல் ஆணியால் எழுதப்பட்டிருந்தன.
"இது பாலி மொழியில் உள்ளது" என்ருர் அந்த பிக்கு. பாலி மொழிக்கும் சிங்கள மொழிக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும். நூற்றுக்கணக்கில் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த ஏடுகளில் உள்ள செய்திகள் என்ன வாயிருக்கும்? அந்த பிக்கு தமக்கு பாலி மொழி தெரியாது என்று கூறிஞர்.
"புத்த பகவானின் பெருமைகளை இந்தச் சுவடிகளில் எழுதியிருக்கிருர்கள்" என்ருர் திரு மலைத்தம்பி.
பெரிய ஏரி தலதா மாளிகையிலிருந்து அருகிலிருந்த ஏரிக்கரையைச் சுற்றி வந்தோம்.
கண்டி நகருக்கு அழகு சேர்க்கும் அந்தப் பெரிய ஏரியை கண்டியை ஆண்ட கடைசி ராஜா பூரீ விக்ரமராஜசிங்கா 1806ல் அமைத்தார்.
"இந்த ஏரி, கண்டி நகர் அழகை எல்லாம் நன்கு ரசிக்க வேண்டுமென்ருல் அந்த மலை உச்சிக்குப்போக வேண்டும்” எனருா பாலா.
"அம்மாடியோ, அவ்வளவு உயரமான இடத்திற்கு எங்க ளால் வரமுடியாது" என்று பெண்கள் சரணடைந்தார்கள்!
146

*கண்டிராசா ஆண்ட் இந்த ஊரில் இப்படிச் சண்டித் தனம் செய்யாமல் போவோம் புறப்படுங்கள்!” என்று தூண்டினேன்.
"நீங்கள் யாரும் நடக்க வேண்டாம். எங்கள் ஊர்தியில் ஊர்ந்து போகலாம்? என்ருர் பாலா!
நெளிந்து வளைந்த குறுகிய அந்தச் சாலையின் பெயர் விகாரமகாதேவி மாவட்டா! அதன் வழியே சிகரத்தை அடைந் தோம். −
ஆகா, என்ன அற்புதமான காட்சி சண்டி நகரும் ஏரி யும் எழிலுடன் காட்சி அளித்தன. அந்தச் சிகரத்தின் மீது பல தங்கும் விடுதிகளும் இருந்தன. கண்டி உல்லாச நகர். ஆகவே நவீன ஒட்டல்களுக்குக் குறைவில்லை.
கொழும்பிலிருந்து கண்டிக்கு ரயிலில் வர முடியும். இவ்வளவு உயர்ந்த மலைப்பிரதேசத்திற்கு எப்படி இரும்புப் பாதையை அமைத்தார்களோ என்று வியந்தோம்.
பாலியின் சாயல்
கண்டி நடனம் உலகப் பிரசித்தி பெற்றது. கண்டி நடனங் களை கண்டியில் ஆண்டு தோறும் ஆகஸ்டில் நடக்கும் புனிதப் பல் ஊர்வலக் காட்சியில் கண்டு களிக்கலாம், அலங்கரிக்கப் பட்ட யானையில் புனிதப் பல் ஊர்வலமாகக் கொண்டு வரப் படும். நடனங்களைப் போதிக்கும் பள்ளிகளும் இங்கே உள்ளன.
குடும்ப பாரம்பரிய வழி வழியாக கண்டி நடனக்கலையைப் பயின்று தேர்ந்த குடும்பங்கள் அமுனுகாம என்ற இடத்தில் இருப்பதாகவும் அறிந்தோம். கண்டி நடனமும் இசையும் கவர்ச்சியாக உள்ளவை. பாலி நடனத்தின் சாயலைக் கொண் டவை இவை எனக் கூறப்படுகிறது.
கண்டியில் கலை களு ம் கைத்தொழிலும் பிரசித்தி பெற்றவை. தங்க, வெள்ளி, செம்பு, தந்த வேலைப்பாடுள்ள
147

Page 82
ஆபரணங்கள் செய்யும் திறன் பெற்றவர்களை எங்கும் காண முடிகிறது. பிரம்புகளினுல் செய்யப்பட்ட அழகிய நாற்காலிகள், முடையப்பட்ட கூடைகள் விற்கும் கடைகளை கண்டிக்கு வரும் தெரு வழியே தெடுகிலும் காணமுடியும்.
உள்ளம் நெகிழ்ந்தது பெரியார் ராஜன், மற்றும் அவர் குடும்பத்தினரிடம் விடை பெற்ற போது நெடுநாள் பழகியவர்களிடமிருந்து பிரிந்து போவது போன்று உள்ளம் நெகிழ்ந்தோம்!
மலைவாழ் மக்களின் இனிய உபசரிப்புகளுக்கு மனங் கனிந்து வாழ்த்தியபடி கொழும்புக்குப் புறப்பட்டோம்!
பனிபடர்ந்த மலைகளையும் குளுமையான தென்றலையும் விட்டு அனல் காற்று வீசும் கொழும்புக்கு வந்து சேர்ந்தோம். நிகழ்ச்சி நிரலை எடுத்துப் பார்த்து, விட்டுப் போன விலங்குக் காட்சி சாலைக்குப் போகலாம் என்ருர்,
ஒன்றுமே வேண்டாம், ஆளை விட்டால் போதும் என்றி ருந்தது எங்களுக்கு ஆணுல் அவர் விடுவதாக இல்லை.
“நாளை காலையில் நாங்கள் சென்னைக்குப் போக வேண் டும். இன்று ஒரு நாள் ஒய்வு விடுங்கள்!" என்றேன் அவரிடம்.
காப்பி “சரி அப்படியென்ருல் இன்று மாலை எங்கள் வீட்டில் விருந்து. சில நண்பர்களையும் வரச் சொல்லியிருக்கிறேன்!" என்ருர் பாலா. -
“உங்களுக்கு ஏதும் குறை இருந்தால் சொல்லுங்கள்!" என்றர் திருமதி யோகா!
“ஒரே குறைதான்! கண்டிக்குப் போய் வந்ததிலிருந்து இன்னும் காப்பியே கண்ணில் படவில்லை!" என்றேன்.
148

"ப்பூ . இவ்வளவு தானே!" என்று கூறிய பாலா கார்களை நேரே ஒரு ரெஸ்டாரண்ட் முன்னுல் நிறுத்தினர்!
'என்னங்க வழியிலே ஒரு வண்டியிலே இளநீர் விற்கிற வங்க இருந்தாங்க. இந்த வெயிலுக்கு அதுதான் நல்லது!’ என்ருர் என் துணைவியார்!
இளநீர் அவ்வளவுதான் நமது வண்டிகள் "ரிவர்ஸில்" பின்னுேக்கி விரைந்தன! m
இளநீர். தேவாமிர்தமாக அப்போது இருந்தது! இலங் கையில் எங்கும் கிடைக்கும் இந்த இளநீரை வழுக்கையுடன் நன்கு பதப்படுத்தி புட்டியில் அடைத்துக் கொடுத்தால் நான் காப்பியைக் கைவிடத் தயாராயிருப்பதாகக் கூறினேன்!
"அதற்கும் சிங்கப்பூரிலிருந்து யாராவது வந்து அந்தத் தொழிலைத் தொடங்க வேண்டும். எங்கள் அரசாங்கம் இப் போது எதற்கும் சிங்கப்பூரைத்தான் வழிகாட்டியாகக் கொள் கிறது!" என்ருர்,
உடனே அந்தணி எதிரே தெரிந்த பாதசாரிகள் நடப்பதற் கான மேம்பாலத்தைக் காட்டி **இதுவும் சிங்கப்பூரைப் பார்த்து இங்கே இப்போது ஏற்படுத்தியதுதான்" என்ருர்,
வளம் கொழிக்கும் ராகலை விஸ்வநாதனும் சிங்கப்பூரை ஒட்டியே கொழும்பில் நவீன மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகக் கூறிஞர்.
அரசியல் பிரச்னைகள் ஒரு புறமிருந்தாலும் இலங்கையின் வாழ்க்கைத்தரம் தென்கிழக்காசியாவில் சிங்கப்பூர் - மலேசி யாவை அடுத்து மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இலங்கை வளம் கொழிக்கும் நாடாக, மற் ருெரு சிங்கப்பூராக உயர்வடையும் என்று எதிர்பார்க்கலாம். அன்று மாலை பெரிய விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி ஞர் திரு. பாலச்சந்திரன்.
149

Page 83
மறுநாள் காலே நாங்கள் புறப்படுவதால் அது ஒரு பிரியா விடை நிகழ்ச்சியாகவே அமைந்தது.
கொழும்பு கலைச் சங்க உறுப்பினர்கள் காட்டிய் அன்பிற் கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்து விடைபெற்ருேம்,
மறுநாள் பொழுது புலருமுன்பே நாங்கள் புறப் படத் தயாராகி விட்டோம்!
விமான நிலையத்திற்கு எங்களை வழியனுப்ப வந்த திரளான அன்பர்களிடையே திருமதி யோகா கண்ணிர் மல்க நின்ற காட்சி எங்கள் உள்ளத்தை
உருக்கியது.
முன்பிள் அறியாத முகங்கள் இன்று பாசத்தால், பழக்கத் தால் பிரிய மனமில்லாத உள்ளத்தினராகி விட்டோம்!
கூடியிருந்த அன்பர்களிடையே விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.
இமிகிரேஷன், சுங்கச் சோதனைகளே முடித்துக் கொண்டு ஏர் லங்காவில் சென்னை நோக்கிப் புறப்பட்டோம். மதுரையில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு அதில் "சிங்கப்பூரில் தமிழ் நாடகங்கள்" பற்றிய எனது ஆய்வுக் கட்டுரையைப் படிப்பதற்கான ஏற்பாடுகளேக் கவனிக்கத் தொடங்கினேன்.
எனது துனேவியார் விமானத்தின் சன்னல் வழி கீழே காட்டினுர்!
மேகங்களினூடே இந்துமாக் கடலின் நடுவே ஒரு நள் முத்துவாக இலங்கைத் தீவு தெரிந்தது.
ஈழத்தில் இருந்த ஆறு நாட்களும் பெற்ற இனிய நினைவு களே உள்ளத்தில் ஏந்தியபடி எங்கள் பயணம் தொடர்ந்தது ;
150

SE-Eur. Égar ein -legu lág sidg மாழின்தச் செபங்ாார் திரு. மாரிமுத்து Lിfി.g്.
திரு. சரிமா
i.
E. b Li
அசோக வித்திய மீண்டபத்தில் *
ாங்ழாவில் தி ❖ኳ u" ጴfi
சந்தின் பட்டிய
நியினருக்கு கண்
தீதப்பட்ட பா rt
s Luar na Li f ta li விழகிமு.

Page 84
*-- -*-o-o-o-o-o-o-o-o-o-o--
----
5:Tour திருதி
7. Im ser i i star
E. L.T.
- - --
უზ - Kri.jpg
ஆர் திரு.
La di Lrrr.
தமிழறி thւ- քո
T
전
■ 출연
}''
ug:
FF***="،"T
O
3.
Kini af T ir ripi KTT
LJ4 fil-Tı sır Tiyah
தம்பர்களின் கஃன விரிவாக எடுத்
it. Tint "Ti sa s čačili cxef
5 r L ru స్టోర్మీ th11 : கிய, பக்தி துணரக் கிமுர்.
| ± ---- _____
-- :)
- 『---------------- Non -- ----
 
 

S SS SS SS SS SS S Y S LLL SY S SYS S LS SS S S SSLSSS LSS S SS SS S Y S C SY SS S S L L L S L S S S SSSLSSS Y S L L S LT S L L S L S L L S SSS S S SSY SSSSSSS S 甲
. . . . . . . . S S Y S L S L S S S LS S S SSLL S SSSSSSSS SSS i i i i u u S S S S S Y S L SLL S L S L S SLS S L S L S L SL S S S S S S S LS S LSL S S S + . . . . . . .
S S Y S Y S S L L S L S L S L SSY SSSSSSS SSS SSS S SSS S SSS S S S LSSSS SY S Y S L S L S S LSL LS S Y S S S S S SSS SS
S L S L SLL SY S S L L S L L SSLS S Y S Y SLS SSS S SSSS SY S L SY S SSY SSSSSLS SSL S L L L L L S L S L 晤 甲 ■
S L SSSY SLL SS Y SSLSL SLL S L L S L L L L S SSLS S 甲 ■
. . . . . . . . . . .
S S S S S SY S T SL L S S L S L L L LS LSSL L S S S S S SS S S
SS S S S S LS SL SLL SL S LS S L Y L SL L SSS S
. . . . . . .
* ■ 睡 睡 ■ ■
*8*ந்தி (இ.
曹
排
睡 睡 ■ -
L L L L S L LS L S L S L L L L L S LLLLSLLLLLLLL LLLLLLLSL
in
t
t Hi qari
曜 翻
Hii i ..". ...
=
.."
睦
疆丁鲁”画 疆下 E.
朝
瞄
藝璽■
曙
в
-
ஒ
罩 pp
置_晒
daero-g-g PPTPTP RRRRRRSES Pada

Page 85
---- - - -
|--------------- ___- - - - - - -
- - -
*)
lil Il Lji
வந்த
- - - - - - - - - - - ---- - - --------, -,
நீ டி பம் தோழரும் தோழியரும்மீண்டும்
குடும்பத்தினரை வழிய
r
LI LITT
---- .- - - - |- + - || !! !! !!
கோழம் அன்புக்
rum
வாரு
ΣΤΑΣΕΩΣ ΠΗ ΓΥΤΣΙΣ
 
 
 
 
 
 
 
 

எதிர்பாருங்கள் !
எஸ். எஸ். சர்மாவின்
அடுத்த வெளியீடுகள்!
: இனியவளே!
* தமிழ் கூறும் நல்லுலகம் !
:: உலகத் தமிழ் மாநாடு மற்றும் உலக
இந்து சமய மாநாடு பற்றிய சுவை யான அனுபவங்கள் செய்திகள் !
விவரங்களுக்கு
எஸ். எஸ். சர்மா
Block-33 13-J Tanglin Halt Road SINGAPORE-O34

Page 86
எஸ். எஸ். சர்மா எழுதிய
இனிய பயண இலக்கியம்
: 400 பக்கங்கள்
:ஏராளமான வனனப
படங்கள்
:கவியர சர் கண்ணதாசன்
அகிலன் ஆகியோரின்
வாழ்த்துக்கள்.
>ቚ தமிழகத் தல ங்களின்
வரலாறு.
வில $ 10
தமிழ் நாட்டில் எட்டு நாட்கள்
திருவள்ளுவர் புத்தக நிலயம் 121 Serano Road SINGAPORE-8
 


Page 87
麟
ཤ །
翡
*
A.
 


Page 88


Page 89