கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கல்ஹின்னை நினைவுகள்

Page 1


Page 2

கல்ஹ
றின்னை
நினைவுகள்
பதிப்பாசிரியர் : சட்டத்தரணி, அல்ஹாஜ்
blev bl. ஹனிபா. ம. ஏ. (இலங்கை)

Page 3
GALHINNA NINAVUKA
(Reminiscences of Galhinna) a Collection of articles on Gahinna,
Edited by :
Alhaj S. M. HAN FFA.B.A., (Cey.) Attorney-at-Law No. 10, Fourth Lane, KOSWatta Road, Rajagiriya, Sri Lanka.
(C) Copyright reserved
First published in February, 1991.
Fifty seventh Publication of THAMIL MAN RAM Galhinna, Kandy, Sri Lanka.
Printed at
EM KAY PRINS 2, 1st Lane, Angappa Naicken Street MADRAS-600 001

பளிங்குத் தோற்றம்
அழகினுக்கு அழகு செய்யும் இயற்கைக் காட்சிகள் நிறையப் பெற்ற எங்கள் ஊர், கல்ஹின்னை பற்றி பிரமுகர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளும், எமதுளரின் பிரதான அம்சங்கள் பற்றி காலத்துக்கு காலம் பத்திரிகைகளில் பிரசுரமான சில கட்டுரைகளும், இந் நூலில் இடம் பெற்று ஸ் ள ன. இவற்றை முழுமையாகப் பார் க் கும் பொழுது, கல்ஹின்னை பற்றிய தோற்றம், பளிங்கில் தெரிவது போல், படிப்பவர் மனக்கண்முன் காட்சிதரும். முதலில் இடம் பெற்றுள்ள, 'எனது கல்ஹின்னை நினைவுகள் " மாத்திரம் எ ம தூரி ல் பலகாலம் அரும் பணி புரிந்து ஊர் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவியாயிருந்த முன்னைய தலைமை ஆசிரியர் திரு. ஏ. எஸ். நல்லையா வினால், இந் நூலுக்கென்றே எழுதப்பட்டது. ஏனை யவை, முன்னர் சஞ்சிகை அல்லது பத்திரிகையில் பிரசுர மானவைகளே.
எத்தனையோ சிரமப்பட்டு எழுதிய கட்டுரைகள் சிதறிய நிலையிலிருப்பதைவிட, ஒரே தொகுதியாயிருப் பின் பெரிதும் பயனளிக்கும் எனக் கருதி, இவற்றை நூலுருவில் அமைக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டோம் பின்னர் என்றாவது ஒரு காலத்தில் கல்ஹின்னை பற்றிய முழுமையான வரலாறு எழுதவிரும்புவருக்கு, இவை பெரும் புதையலாயமையும் என்பதில் சந்தேகமில்லை.
தனது இனிய அனுபவங்கள் பற்றி நீண்ட கட்டுரை எழுதித்தந்த திரு. ஏ. எஸ். நல்லையா அவர்களுக்கு எமது நன்றி ஏனையகட்டுரைகளை எழுதியவர்களுக்கும், அவை பிரசுரமான பத்திரிகைகள் சஞ்சிகைகளின் ஆசிரியர்கள் அவற்றை நாம் பிரசுரிப்பதற்கு அனுமதி தந்ததற்கும், மனத்தின் அடித்தளத்திலிருந்து ந்ன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவித அச்சுப்பிழைகளும் ஏற்பட்டு விடாமல் கண்ணுங் கருத்துமாயிருந்து, மிக அழகிய முறை யில் நூலை அச்சிட்டுதந்த எம்கே பிரிண்ட்ஸ் உரிமையாளர் யூ. அபூபக்கர், அவர்களுக்கு எமது நன்றி உரித்தாகும். 10, நாலாவது லேன், எஸ். எம். ஹனிபா கொஸ்வத்தரோட், m
ராஜகிரிய, பூரீலங்கா, 4-2-1991

Page 4
g) Gir GSIT... .
1.
2.
8.
9.
10.
11.
12.
3.
எனது கல்ஹின்னை நினைவுகள் 5
-திரு. ஏ. எஸ். நல்லையா கல்ஹின்னையும் நானும் 19
-அமரர் பேராசிரியர்,கலாநிதி;
சு.வித்திய்ானந்தன் கீர்த்திமிகு கல்ஹின்னை 25 -பேராசிரியர், கலாநிதி,
அல்ஹாஜ் ம. மு. உவைஸ்
கல்ஹின்னையின் அரபிக் கலாசாலை 29
- தினகரன் 15.9.1963 ஜாமி அத்துல் பத்தாஹ் 32
-கவிமணி எம். சி. எம். சுபைர் மர்ஹ"ம் திக்ருல்லா ஆலிம் 36 -கவிமணி எம். சி. எம். சுபைர் பட்டகொல்லாதெனிய ஜமாலியா மு. வி. 40
-கல்ஹின்னை ஸ்ரீனா அள8ஸ் நாற்பதாண்டு இறை இல்லச் சேவை 46
-அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா வாழ்ந்தால் வாழவேண்டும் இவரைப்போல 5
-உதயம் : 24, 10-1980
கல்ஹின்னை வளர்க்கும் தமிழ் 54
-எஸ். எம். இம்தியாஸ், B, Com. யாவரும் கேளிர் 64
-எஸ். எம். இம்தியாஸ் மத்திய இலங்கையில் முஸ்லிம்கள் குடியேற்றம் 81 -அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா முஸ்லிம்கள் கீழை நாடுகளுக்கு வந்த வரலாறு
-அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா சென்னை முஸ்லிம்கள் அளித்த வரவேற்பு 88
--உதயம் 24.12-1982

1. எனது கல்ஹின்னை நினைவுகள்
፲(, , చీ திரு. எஸ். நுல்ல்ையிர்
இலங்கை மலையிசத் ஆலைநகராக விளங்குவ 356,orig. மாநகர். அந்நகருக்கு அழகு செய்வது: தெப்புக்குளம். அதன் வடகரையிலே சித்திர.வளைவுகள் கொண்ட மதிற் சுவர். அதனை அடுத்து அதன் அழகுகள்ைகிக் மக்கள் நடமாடும் நடைபாதை. அந்த நடைபாதையில் இருந்து கீழே இறங்கினல் கண்டி தலதாமாளிகைக்குப் போகும் நெடுஞ்சாலை. அந்த நெடுஞ்சாலையின் மத்தியாக மதிக்கத் தக்க முச்சந்தியைப் பார்த்தபடி கண்டியிலுள்ள பிரபல மான் ‘உல்லாசப் பிரயாணிகளின் உணவு விடுதி குயின்ஸ் ஹோட்டல். அதன் வாசலில் ஆரம்பித்து வடக்கு நோக்கி ஒடும் நெடுஞ்சாலை திருகோணமலை வீதி,
அவ்வீதி மாய்யாவயில் மேற்செல்லும் கண்டி மாத்தளை இரும்புப்பாதையின் அடியிலேயுள்ள குடைவு வழியாகச் செல்வதற்கு இடப்பக்கமாக வளைந்தாலும், மீண்டும் திரும்பி வடதிசையைய்ே நோக்கி ஓடுகிறது. அது மாவில் மட தாண்டி கட்டுகஸ்தொட்டயில் மகாவலி கங்கை மேற்பாலத்தைக் கடக்க இடப்பக்கமாக வளைந் தாலும் மீட்டும் திரும்பி வடதிசை நோக்குகிறது. அது அங்கு கட்டுகஸ்தொட்டப் பிரதான கடைத் தெரு எனப் படுகிறது. அதன் வடக்குப் பக்க முடிவிலே மகாவலி கங்கையுடன் கலப்பதற்காக வடக்கிலிருந்து ஓடிவரும் ஒரு சிற்றாறு குறுக்கிடுகின்றது, அச்சிற்றாற்றையும் அதன் மேலுள்ள பாலத்தின் வழியாகக்கடப்பதற்கு வலப்பகமாக வளைந்தாலும், பாலம் கடந்தவுடன் இடப்பக்கமாகத் திரும்பியும் வடதிசையையே நோக்கி முன்னர் குறுச் கிட்ட சிற்றாற்றின் வலக்கரையோரமாக அம்பத்தன்னைச்
க-1

Page 5
6
சந்தியை அடைகின்றது. அச்சந்தியிலே இடப்பக்சமாக மேற்கு நோக்கிக் கிளை பிரிந்துசெல்லும் அம்பத்தன்னை பூஜாப்பிட்டி அங்கும்புறப் பாதையிலேயே நான் நாற்பது வருடங்களுக்கு முன் தொடர்ந்து எட்டு வருடங்கள் வாழ்ந்த நினைவுகள் தவழும் கல்ஹின்னை இருக்கின்றது. அம்பத்தன்னை பூஜாபிட்டிப்பாதை பழைய பாதை. அதன் தொடர்பாக பூஜாப்பிட்டியில் இருந்து அங்குப் புறவுக்குப் போகும் மலைச்சரிவு வழிப்பாதையோ ஐம்பது வருடங்களுக்கு முன் ஒரு புதிய பாதை, மலையை வெட்டி வழிவகுத்தும் செப்பனிடப்படாத கரடுமுரடான அப்பாதை இடையிடையே கூழாங்கற்களையும் போட்டு நிரவி இரும் புக்கவசம் இட்ட இரட்டைச் சக்கரக் கட்டை மாட்டுவண்டி களே போகத்தக்கதாக அமைக்கப்பட்டிருந்தது. தார் போடவில்லை. தூரத்தை அளவிட்டுக் காட்டும் கட்டைக் கற்களும் அதில் இருக்கவில்லை பலவளைவுகளைக் கொண்ட அப்பாதையில் அப்போது நல்லவேளையாக பஸ் ஓட்டமுமில்லை. அதனால் ஆபத்துக்களின் றிச் சஞ்சரித்த அக்காலத்தை நினைக்கப் பூர்வபுண்ணியம் என்ற மனப்பூரிப்பு உண்டாகின்றது.
இலங்கை அடங்கலுமே எல்லோருக்கும் சுதந்திரம் எல்லோருக்கும் சமசந்தர்ப்பம என்பதே பேச்சாக இருந் தாலும், செயலில் எதுவும் பெரும்பான்மைக்கே உண்டு: கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒன்றையொன்று மாறி மாறித் திட்டித்தீர்த்து ஆட்சிக்கு வந்த அரசுகள் மக்களின் கண்களிலும் காதுகளிலும் போட்டது போதாமல் வயிற்றி லும் வாயிலுமே மண்ணையள்ளிப் போடாமல்விட்டுப் போகும் பாதைகளிலே அதையாவது எதையாவது அள்ளிப்போட்டுச் சீர்திருத்தியிருக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகின்றது. சமீபத்திலே, அந்தப் பாதை யில் சென்ற பஸ் விபத்துக்கு உள்ளான செய்தி. அது என்னைத் திடுக்கிடச்செய்தது. அந்த விபத்திலே சிக்கிய வர்களுக்கு எனது இதயபூர்வமான அனுதாபங்கள். இப்

7
போதும் என் இரத்தம் துடிப்பதனல் எனது பந்தபாசங் களுடன் கூடிய சொந்த உரித்துடையவர்களே இன்னும் அங்கிருப்பதாக எனது எண்ணம். எனக்கு இரத்த பாச முள்ள சல்ஹின்னையில் அமைப்பே ஒரு தனி. பூஜாப் பிட்டி அங்கும்புற புதிய வழியில் சுமார் எட்டாம் பத்தாம் எல்லைக் கட்டைகளுக்கிடைலேயே எதிர்பக்கத்திலே இடது பக்கம் நோக்கினால் குருநாகல் மாவட்டத்தின் செந்நெல் வயல் வெளிகளும், தென்னந்தோப்புகளும், தேயிலைப் புதர்களும், ரபர் மரங்களும் கமுகு, பலா, வாழை முதலான பயன்மரங்களும் சாதிக்காய், கொக்கோ, ஏலம், கராம்பு, சறுவா, மிளகு முதலான பலவகை மரஞ்செடி கொடி களும் பின்னிப் படர்ந்து பச்சை பசேலென இயற்கை எழில் கொஞ்சும் பணியநாடு காட்சியளிக்கின்றது. அந்தநாட்டுக் செல்வங்களையெல்லால் சுமை மாட்டுத்தாவள நிடரை களில் ஏற்றி, குன்றுகளையும் குழிகளையும் அருவிகளை யும் ஆறுகளையும் தாண்டி மலையநாட்டுக்கு எடுத்து வரும் ஒடுங்கிய மலைப்பாதைகள் வளைந்து நெளிந்து வருவதும்? மலையருவிகள் மலைநாட்டில் இருந்து சலசலவென்று ஒசை எழுப்பிககொண்டு அந்நாட்டின் செழிப்பை மேலும் அதி கரிப்பதற்காகச் சரிந்து வளைந்து ஓடிக்கொண்டு போவதும் கண்கொள்ளாக் காட்சி. கண்டி மாவட்டத்தின் எல்லை யில் உயர்ந்த மலை முகட்டிலே முளைபோன்று எழுந்துள்ள பெரிய பாராங்கல்லின் மேல் பரந்து தெரிவதனுல் கல் ஹின்னை என்ற பேர் இதற்கு அமைந்திருத்தல் கூடும்.
எனக்குக் குடும்பப்பாசமுள்ள கல்ஹின்னை எனது மங் களகரமான மலர்ந்த வாழ்க்கை அனுபவங்களுக்கெல்லாம் நிலைக்களனாக எப்போதும் நினைவில் இருக்கும் புண்ணியத் தலம். இக்கிராமத்தில் முழுக்க முழுக்க இனிய கன்னித் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களே தமது அயராத உழைப்பி ல்ை தேடிய செல்வச் செழிப்புடனும் தமக்கே உரித்தான இஸ்லாமியப் பண்பாட்டுடனும் இணைந்து வாழ்ந்து வரு

Page 6
8
கின்றனர். அவ்ர்களின் தூய இஸ்லாமியப் பண்பாட்டு, வாழ்க்கை முறையையும் தமது தாய்மொழியாகிய தமிழ் மொழியையும் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்து வரு
வதை நான் அங்கு கண்டேன். நவீன விஞ்ஞானத்
துறைகளில் வளர்ச்சியடைந்துள்ன மொழிகளுக்கு இல்லாத தனித்தன்மை தமிழுக்குண்டு.
தமிழ் நூல்களே மனித் \வாழ்வுக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவைகளை உணவு,உடை,உறையுள் ஆகிய மூன்றையும் இயற்கை வளத்தினல் வழங்கியருளும் நிலங் களை ஐந்திணைகளாக வகுத்துக்கூறியமுதனூல்கள். அவை கூறிய முறைப்படியே குறிஞ்சி-மலையும் மனல் ”சார்ந்த நிலமும் என்றும், முல்லை-காடும் காடு சார்ந்த நிலமும் என்றும், மருதம்-வயலும் வயல் சார்ந்த நிலமும் என்றும் நெய்தல்-கடலும் கடல் சார்ந்த நிலமும் என்றும், பாலை மணலும் மணல் சார்ந்த நிலமும் என்றும் வழக்கத்தில் அமைந்துள்ளன. அவற்றில் முதல் நாநிலங்களும் ஆதி காலத்தில் இருந்து மனிதக் குடியிருப்புக்கே உறுதுண்ையான ஓர் ஆற்றின் உற்பத்தி முதல் அதன் கழிமுகம் வரைய்ம் தொடர்ந்து வரும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பனவாகவும் அவையே முறைமையிற்றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்துப் பாலையென்பதோர் படிவங் கொள்ளும் என்று கால தேயப் பிறழ்வு காரணமாக ஐந்தாவதாகிய பாலை என்பதாகவும் வகுத்துரைத்தமை தமிழ்மொழியாளரே கண் டு  ைரத்த உண்மையாகும். ஐவகை நிலங்களிலும் முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூவகைப் பொருட்களையும் கண்டு ரைத்ததும் தமிழ் கூறும் நல்லுலகமே. ஐந்திணைகளுக்குரிய ஒழுக்கங்களையும் மனித வாழ்க்கையுடன் சீராகக் கண்டு ரைத்த பெருமையும் தமிழ்மொழியாளருக்கே உரிய தனிச் சிறப்பு. இத்தகைய மனித வரலாற்றுச் சிறப்புகளில்ே உயர்ந்ததான குறிஞ்சிநில வாழ்விலே திளைத்து அதனல்

9
மகிழ்ச்சி கண்டுள்ள கல்ஹின்னைக்கும் குறிப்பிடத்தக்க பெரும்பங்குண்டு. இலக்கியத் தென்றல், தமிழர் சால்பு இஸ்லாமியர் தமிழ் மொழிகாற்றிய தொண்டு, சீறாப் புராண உரைவிளக்கங்கள், ருபாய்யத் முதலானவற்றை, உண்மையான தமிழ்ப் பற்றுடன் உலகறியச் செய்த பெருமையும் கல்ஹின்னைக்கே உண்டு : யாழ்ப்பாணப். பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் முன்னைநாள், பேராத னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவருழஈகியா பேர! சிரியர் சு. வித்தியானந்தன், அவர்களின் நூல்களை அச்சேற்றித் தமிழ் பேசும் நல்லுலகத்திற்கு அளித் த. கல்ஹின்னைத் தமிழ் மன்றம் தோன்றிய வளமிக்க ஊர் அதுவே. அங்கு கல்ஹின்னைத் தமிழ் மன்றம் உருப்பெற இடைவிடாதுழைத்து, அதனைக் கட்டி வளர்த்துப் பல நூல்களை அச்சேற்றி வழங்கிய பணிக்குத் தம்மை அர்ப். பணித்தவர், 1953-ம் ஆண்டில் இளம் கலைமாணிப்பட்டதாரி மாணவராக விளங்கிய ஜனாப் எஸ். எம், ஹனிபா அவர்கள் ஜனாப் எஸ்.எம். ஹனிபா. ஜனாப் எஸ் எல். எம். ஹனிபா என்ற இணைபிரியாத, மைத்துனர்கள் இருவரிலும் நான் கண்ட தமிழ்ப்பற்றும், சேவை மனப் பான்மையும், செயலாற்றலும் இப்போதும் என்மனதில், நீங்காத நினைவுகளாக உள்ளன அவர்கள் தமிழ்த் தொண் டாற்றிய கல்ஹின்னை மாணவர் சங்க அங்குரார்ப்பண விழாவில், ஆரம்ப உரை நிகழ்த்தும். பேறு. எனக்குக் கிடைத்தமை, நான் பெற்ற பெரும் பேறாகும். 1946ஆம் ஆண்டின் இறுதியில், கல்ஹின்னை மாணவர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது, ܗܝ
கல்ஹின்னையில் அப்போன்த்ய இளம் சட்டி மாணவ. ராயிருந்த ஜனாப் எம். எச். எம். ஜலால் தீன் அவர்களும், இளம் சுதேச வைத்திய கலாநிதியாகிய ஜனப் எம்.எஸ். எம். ஜ-&ன் தீன் அவர்களும், அக்காலத்தில் இலங்கையில். முஸ்லிம் இளைஞர் கழகத்தின் (வை. எம். எம். ஏ.) துடிப்பு

Page 7
10
மிக்க கல்ஹின்னைக் கிளையை ஆரம்பித்து மீலாத் ஷரீப்" நபிகள் நாயகம் (ஸல்) ஜயந்தி, விழாக்களை வருடந் தோறும் மிகச் சிறந்த முறையில் நடத்தி முன்மாதிரி காட்டினர். அவர்களின் அன்பான அழைப்பினால் தூண்டப் பட்டு நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை களும் சாதனைகளும் பற்றி அவர்கள் நடத்திய பெருவிழாக் களில் உரையாற்றி மகிழும் பாக்கியம்பெற்றிருந்தேன் அப் போது தலைசிறந்த முஸ்லிம் மதபோதகர்களாகத் திகழ்ந்க மெளலவி கலீலுர் ரஹ்மான், முத்துககோயாத் தங்கள் ஆகிய பெரியோர்கள் என்னை வியந்து பாராட்டிய உரை கள் என்னுள்ளத்தில் பசுமையாக உள்ளன. அந்நிகழ்ச்சி களில் கலந்து கொண்ட பெhயோர்கள இதயம் கனிந்து வழங்கிய வாழ்த்துக்களும் எனது வாழ்க்கையின் மலர்ச்கிக்கு நீர் வார்த்து, உரமூட்டி வளர்ததுள்ளன. எனவே, நான் மதிக்கிறேன். அக்காலத்தில் கண்டி அரசாங்க உதவி அதிபராகப் பணிபுரிந்து வந்த யாழ்பாணத்தின் தவப் புதல்வர்களில் ஒருவரும் இலங்கையின் முதன் முதலாவது முஸ்லிம் சிவில் சேவை அதிகாரியும் தலைசிறந்த முஸ்லிம் தமிழ் எழுத்தாளரும், அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் கழகத் தாபகரும் இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி யின் ஆரம்பகர்த்தாவுமாகிய ஜனாப் ஏ. எம். ஏ. அஸிஸ் அவர்கள் கல்ஹின்னை முஸ்லிம் இளைஞர் கழகத்தினர் நடத்திய மீலாத் விழாவைப் பற்றியும் அவர் முஸ்லிம் கல்விச் சகாய நிதிக்கு உதவிய சேவை பற்றியும் அவ்விரு சமூக சேவைகளிலும் எனது ஈடுபாடு பற்றியும் வழங்கிய பாராட்டுக்கள் எனதுவாழ்வுக்கு வளம் அளித்தன. முன்னை நாள் பிரதமர்களில் ஒருவராகிய கெளரவ சேர் ஜோன் கொத்தலாவலை அவர்களும் முன்னைநாள் கல்வி மந்திரி களில் ஒருவராகிய கெளரவ ஈ. ஏ. நுகவெல அவர்களும் இன்னொருவரும் முன்னைநாள் கம்பளை ஸாஹிறாக் கல்லூரி அதிபராகிய ஜனாப் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களும் அகில, இலங்கை சோனகர் சங்க ஆயுட்காலத்

11
தலைவராகிய ஜனாப் ஏ. ஆர். ஏ. றாஸிக் அவர்களும் கல்வித் திணைக்களத்தின் வித்தியாதிபதிகளாகத் திகழ்ந்த முன்னைநாள் கல்வி அதிகாரிகள் ஜனாப் எம். பீ. நூர்தீன் அவர்களும் திரு. வீ. துரைசிங்கம் அவர்களும் திரு. வீ" சங்கரலிங்சம் அவர்களும் கல்ஹின்னையிலேயே நான் அரி தின் முயன்று ஆற்றிய கல்விப் பணிக்கும் சமூக சேவைக்கும் நான் ஒருநாளும் மறக்க முடியாத மதிப்புரைகளை அக் காலத்திலேயே தனித்தனியாக வழங்கியுள்ளார்கள். அக் காலத்திலே கண்டியில் மத்திய மாகாணக் கல்வித் திணைக களத்தின் தலைமைக் கல்வி அதிகாரியாக விளங்கிய திரு. சி. க. இராசசிங்கம் அவர்கள் எனது வேண்டு கோளை மதித்து றம்புக்வெல என்ற அயற் கிராமத்திலே ஒரு புதிய பாடசாலையை நிறுவிக் கொடுத்து, அப் போது கல்ஹின்னையில் எனது உதவி ஆசிரியர்களில் ஒருவ ராகப் பணிபுரிந்த ஜனாப் என். ஏ. எச். எம். தாஹா அவர் களையே தற்காலிகத் தலைமையாசிரியராக நியமிக்க நான் பரிந்துரைத்ததையே ஏற்று நியமித்து, திறப்பு விழாவிலே என்னைப் பாராட்டிய பாராட்டுகள், என்னை இன்று புழகாங்கிதமடையச் செய்கின்றன. தொன்றுதொட்டு எனது அன்புக்குப் பாத்திரமான ஜனாப் என் ஏ. எச். எம். தாஹா அவர்கள் என்னைப் பின்பற்றியே பதவிகளில் படிப்படியாக உயர்ந்து கல்வி அதிகாரியாகவும் பணி புரிந்து இளைப்பாறியுள்ளமை என்னை என்றுமே விட்டு நீங்காத நினைவுகளில் ஒன்றாகும். பல வசதியீனங்கள் நிறைந்த அக்காலத்திலே என்னுடன் கல்ஹின்னையில் எனது உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவர்களின் ஒத்து ழைப்பும் முன்மாதிரியும் இன்றும் என் மனதை விட்டு நீங்க வில்லை. உதாரணமாக அரபுமொழி ஆசிரியர் மெளலவி என். ஏ. எச். எம், ஹாஷிம்சாய்பு அவர்களும் தமிழ்மொழி ஆசிரியர் பண்டிதர் ச. குமரேசையா அவர்களும் முறையே அரபுமொழி, தமிழ்மொழி ஆகிய இரண்டு மொழிகளை யும் இரு கண்களாகப் பேணி வளர்த்து அவற்றின் தனித் தன்மைக்கும் பெருமைக்கும் பொருத்தமாக கல்ஹின்னை

Page 8
12
யின் இஸ்லாமிய கலாசார தமிழ்ப் பண்பாட்டு வாழ்வுக்கு இன்க்கமும் ஆக்கமும் த்ந்தார்கள் என்பதும் என் மனதில் உள்ன்றிப் பதிந்துள்ள நீங்காத நினைவாகும். கல்ஹின்ன்ை யிலே புத்துணர்ச்சி பெற்ற எல்லா மாணவர்களும் எனது ஆலோசனைகளை உடனுக்குடன் செயற்படுத்த முனைந்து ஒருங்கு கூடி, கல்ஹின்னை மாணவர் சங்கம் என்ற நிறு வனத்தை நிறுவி, எனது நல்ல சிகளையே துணை க் கொண்டு அந்நாட்டுக் கல்வி வளர்ச்சிக்கும் சமூக மேம் பாட்டிற்கும் ஆற்றிய தொண்டுகளும் சமூக சேவைகளும் அக்கிராமத்தின் உத்வேகமான துரித வ்ளர்ச்சிக்கு ஊற்றா கவும் உறுதுன் ணயாகவும் அணையாகவும் அரணாகவும் இருந்தன. அந்த நிறுவனத்தின் ஸ்தாபக அங்கத்தவர்கள் ன்னது ஆரம்ப கால மாணவர்கள் என்பது எனக்கு இன்னும் மகிழ்ச்சி தருகின்றது. அவர்கள் எல்லோரினும் முன் னோடி முன்மாதிரி வாழ்க்கை திசை தெரியாது தத்தளிக் கும் மாணவ சமுதாயத்திற்கு ஒளிவிளக்காகப் பிரகாசித்து வழிகாட்ட வேண்டும் என்பதே எனது பிராாத்தனை யாகும். - ! ,
கல்ஹின்னை மக்களின் அடிநாதமான இஸ்லாம் மதத் திலே அவர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தி சிரத்தைக்குச் சீரிய அடையாளமாக அவர்கள் பெரும் பொருட் செல விட்டுப் பெரிதாகவும் அழகாகவும் அமைத்துள்ள பள்ளி வாசல் அக்கால்த்தில்ே அதன் புனிதமான அமைப்பிலும் மதானுஷ்டான அநுசரிப்பிலும் அயற் கிராமங்களுக்கெல் லாம் முன்மாதிரியாக விளங்கியது. அது ஊரின் மத்தியில் இருதய கம்லம் போன்றே அமைந்து ஊர் முழுவதற்கும் உயிர்த் துடிப்பையும் உணர்ச்சி வேகத்தையும் வழங்கிக் கொண்டிருந்தது; அத்ன்ை அடுத்து அதன் அய்லிலே மதரஸா என அழைக்கப்படும் புனித குர்ஆன் ஓதும் பள்ளி யாக ஆரம்பித்துப் பின்ன்ர் அதனுடன் தமிழ்மொழி மூலம் கல்வி பயிலும் "பர்ட்சாலையாக வளர்ச்சியடைந்த அப்

13
பாடசாலையின் தோற்றமே அக்கிராமத்தின் எல்லாச் சிறப்புக்கும் மூலகாரணம். அப்பாடசாலையை முதன் முத லாக 'திருக்குர்ஆன்’ ஒதும் முதற் பள்ளி மத்ரஸாவாக ஆரம்பித்ததற்கு அவர்கள் இஸ்லாம் மதத்தில் கொண் டிருந்த தந்தைப் பாசமும் அதனோடு தமது தாய்மொழி யான தமிழ் மொழிமூலமாகக் கற்பிக்கும் ஒரு அரசாங்க உதவி பெறத்தக்க பாடசாலையாக நிறு வு வ த ற கு அவர்கள் தமிழ் மொ ழி மேற்கொண்டிருந்த தாய்ப் பாசமும் முதற் காரணமாக அமைந்ததெனலாம். இஸ் லாமும் தமிழும் அவர்களுக்கு பெரு மதிப்பு வாய்ந்த ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருந்தன. அரபு மொழி கலாசார மொழியாகவும் தமிழ்மொழி பண்பாட்டு மொழி யாகவும் பேணிக் கற்கப்பட்டன.
மலையகத்தில் கண்டிய அரசு செல்வாக்குடன் இருந்த காலத்திலே குடியேறியவர்கள் என மதிக்கப்படும் இக் கிராமத்தின் பூர்வகுடிகள் அரச குடும்பத் தொடர் கொண்டு தம்மை அடப்பேலாகெதர, வைத்தியலா கெதர, உல்பத்துப்பிட்டியகெதர என்ற குடிப்பெயருடன் தம்மைப் பதிவு செய்து கொண்டு தலைமுறை தலை முறையாக வாழ்ந்து கொண்டிருந்தமையாலும் காலக் கிரமத்தில் பல்கிப் பெருகி ஆற்றலும் வேகமும் வாய்ந்த சில தலைவர்களைப் பெற்றிருந்தமையாலும் ஒரேயொரு அடிவேரைக் கொண்டிருந்தமையாலும் ஏகோபித்த நோக்கமும் ஊக்கமும் கொண்டு பாடசாலை வளர்ச்சிக் குப் பூரண ஒத்துழைப்பும் தூண்டுதலும் கொடுத்தமை அப்பாடசாலை எனது தலைமையில் அதிவேகமாக வளர்ச்சியடைய துணைக் காரணமாயிற்று. எல்லாவற் றிற்கும் மேலாக அந்தக் கிராமத்தில் ‘ஹாஜியார்” குடும்பம் என்ற பெயருடன் நிலைத்து வாழ்ந்து வருகின்ற குடும்பத்தின் மூத்த தலைவராக அக்கிராமத்திலுள்ள எல்லோராலும் “பெரியவர்" என்ற மரியாதைப் பெயரால் அழைக்கப்பட்ட ஜனாப் ஏ. ஓ. எம். காசீம் லெப்பை

Page 9
14
அவர்களும் அவர்களின் இ  ைள ய சகோதரராய் அக் காலத்தில் அக்கிராமத்தில் ஏன் அயற் கிராமங்களிலுமே ஒரேயொரு சட்டத்தரணி (புறக்டர்) ஆகவும் பிரசித்த நொத்தாரிசாசவும் விளங்கிய ஜனாப் ஏ.ஓ எம். ஹ"ஸைன் அவர்களும் அவர்களுக்கும் எல்லா வகையிலும் உதவிய சகோதரர்களும் நெருங்கிய உறவினர்களாகிய ஆராச்சி யார் குடும்பத்தினரும் அக்கிராமத்தின் மற்றெல்லா மக்களும் ஒருவருக்கொருவர் பக்க பலமாக நின்றமையும் எனது ஆளுமைக்கு அவர்கள் தந்த பக்கபலமும் அப்பாட சாலையின் துரிதமான உன்னத உயர்வுக்கு நிமித்த காரணமாயிற்றெனலாம். நா ன் அப்பாடசாலையின் தலைவராக 1-5-1943 ல் பதவி ஏற்றபோது, அப்பாட சாலையில் ஆரம்பக் கல்விப் பிரிவே இருந்தது பெண் பிள்ளைகள் பாலர் பிரிவிலேயே மிகச் சிலர் இருந்தனர். நான் பதவியேற்ற சில மாதங்களுக்கு இடையிலேயே நான் மேலே குறிப்பிட்ட முதல், துணை, நிமித்த காரணங் களைக் கண்டறிந்து அவற்றைத் துணைக் கொண்டு பட கொளாதெனிய, வீரிஎல, விலானை, றம்புக் எல வரையும் நீண்டிருந்த ஒன்றுக்கொன்று தொடர்பான ஊர் முழுவ தும் பரந்திருந்த ஒவ்வொரு குடும்பத்தினரது நல்லெண் ணத்தைப் பெற்றுக் கொண்டமையால் கல்வி கற்கும் வயதையடைந்திருந்த சகல பிள்ளைகளும் குறிப்பாக, பெண் பிள்ளைகள் எல்லோரும் பருவமெய்திய பின்னரும் தொடர்ந்து கற்று உயர் கல்வி பெறும் வா ய் ப் பை பெற்றுக் கொள்ளத் தக்கதாக அப்பாடசாலை 1946-ல் ஒரு மகா வித்தியாலயமாகவும் தரமுயர்த்தப்பட்டது. மதரஸா இருந்த இடத்தில் எல்லா வசதிகளும் கொண்ட மகா வித்தியாலயத்திற்குத் தேவைப்பட்ட நிலம் போதிய ளவு பெற முடியாத நிலையை உணர்ந்தவுடன். புதிய இடத்தில் காணியும் எடுத்து சகல மக்களினுடைய மனப் பூர்வமான ஒத்துழைப்போடு சில தினங்களில் இரவு பகலாகச் சிரமதானம் மேற்கொண்டு றாமாக்கொட்டு

15
வவில் இருந்து பாதையும் வெட்டி, ஆண், பெண் வித்தி யாலங்களுக்கென வெவ்வேறான கட்டடங்களை அமைக்கத் தக்க அடித்தளங்களும் வெட்டிச் சீர்செய்து கட்டடங் களும் அமைத்து பாடசாலைகளை இடம்பெயர்த்துக் குடிபுகுந்த வெற்றி பிரவேசத் திருவிழா இன்றும் எனது மனதில் பசுமையாகவே இருக்கின்றது. 'அரியவற்றிற் கெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் த ம ர |ா க் கொளல்” என்பது அமுத வாக்கு அன்றோ? மக்களின், குறிப்பாக, பெரிய மனம் படைத்த பெரியவர்களின் நல் லெண்ணத்துடன் செய்யும் எக்கருமமும் சிரஞ்சீவித்துவம் பெற்றிலங்கும் என்பது கண்கண்ட உண்மை எனது காலத்தில் கற்றவர்களும் எனது கையினால் ஏடு துவக் கப்பட்டவர்களுமான பல பிள்ளைகள் கல்ஹின்னை என்ற கிராமத்தை ஒரு கல்விக் களஞ்சியமாக்கியுள்ளார்கள் என்ற பெருமையான நினைவுகள் என்மனத்தில் என்றும் நிலைத்த நீங்காத நினைவுகளாகும். கல்ஹின்னையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் கல்விமான்களும் பல்துறை விற்பன்னர்களும் ஆசிரியர்களும் என்றும் நிலைத்து நிற் கும் நினைவுச் சின்னங்களாக மிளிர்வார்கள். அவர்கள் எல்லோரும் எனது எட்டு வருட ஆசிரியப் பணியில் முளை கொண்டு கிளைத்துள்ள குரு பாரம்பரிய வழித் தோன்றல்களும் அவர்களின் சந்ததியினரும்
**தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கெல்லாம் இனிது’
என்னும் திருக்குறளை நினைவூட்டி உள்ளத்தில் என்றும் இன்ப ஊற்றாக விளங்குகின்றனர் எனலாம். “குறிஞ்சிக் குயில்” என்ற புனைபெயரில் தேமதுரத் தமிழோசை பரப்பி, இஸ்லாமியத் தமிழுலகத்தில் என்றும் வாடாத மலராக வாழும் கவிஞராகவும் 'மலர்ந்த வாழ்வு" தந்த புலவராகவும் பேராசிரியர் க. கணபதிபிள்ளை, பேராசிரி யர் வித்தியானந்தன், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா முதலான தலைசிறந்த தமிழ்ப் புலவர்களால் பாராட்டப்

Page 10
6
பட்டு 'காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனிநூங் கில்லை உயிர்க்கு’ என்ற பொய்யா மொழிக்கு இலக்கிய மாக வாழ்ந்து வரும் கல்ஹின்னை 'மணிக்குரல்' . ஆசிரியர் ஜனாப் எம். சீ. எம். சுபைர் அவர்கள் எனது தலைமாணாக்கர் என்பதையும் பெருமையுடன் குறிப்பிடு கின்றேன்.
எனது சொந்தக் குடும்பத்தின் மேம்பாட்டிற்கும் விளை நிலமாக விளங்கியது கல்தறின்னையே. எனது திருமணம் 1943 ல் நிகழ்ந்தது. எனது தேன்மதி நாட்கள் கல்ஹின்னை குறிஞ்சி நாட்டிலேயே இனிய தேனூற்றாகவே நிறைந்து வாழ்நாள் முழுவதும் இனித்தபடியேயுள்ளன. எனது மனைவி எனது மாணாக்கர்களுடனேயே கற்றுத்தேறி கல்வியில் தொடர்ந்து முன்னேறி, என்னுடனேயே இலங் கைப் பல்கலைக்கழகத்தின் கலைமாணிப் பட்டதாரியாகிப் புகழ்பூத்த கல்லூரி அதிபராக வாழ்க்கையிற் பிரகாசம் பெறுவதற்கு உற்சாகம் தந்ததும், கல்ஹின்னையே. கல்ஹின்னையில் நாட்டியக் கலைக்கோயிலின் தரிசனப் பேற்றினால் நானும் உயர்ந்து, உயர்ந்து வடமாநிலத் தில் கல்வித் திணைக்கள கல்வி அதிகாரியாகி மனச் சந்துஷ்டியுடன் ஒய்வுபெற்றமைக்கு ஊற்றாக அமைந்த தலம் கல்ஹின்னையே. எங்கள் மக்கள் எல்லோருமே தங்கள் கல்வியில் முன்னேறித் தத்தம் துறைகளில் எங்கும் பிரகாசிப்பதற்கும் கல்ஹின்னை நிலமும் நீரும் சூழலும் தந்த நன்கொடைகள் பல. எல்லாவற்றிற்கும் கல்ஹின் னைப் பெரியவர் அவர்களும் அவரின் தர்மபத்தினி யாரும் அவர்களின் பிள்ளைகள் அனைவரும் இதயக் கனிவுடன் அளித்த உதவி ஒத்தாசைகளும் அவர் காட்டிய பாசமும் பற்றும் மதிப்பும் எங்கள் மனத்தைவிட்டு அக லாத நினைவுகளே. நானும் மனைவி மக்களும் 1-5-1951-ல் உடலால் பிரிந்து,புத்தளம் மாவட்டத்திற்கு இடமாற்றத்தில் சென்றபோது கல்ஹின்னை மக்கள் நன்றிப் பெருக்குடன்

17
அளித்த பிரியாவிடையின்போது பெரியவர் அவர்கள் என்னை வாஞ்சையுடன் சட்டித் தழுவி தழுதழுத்த குரலில் உரை குழறி, உதிர்த்த கண்ணிர் துளிகள் என்னை உருக்கிப் புனிதமாக்கி எனது குடும்பத்தை உயர்த்திச் சொரிந்த நறுமண வாடா மலர்களாக என்றும் என் நினைவில் வாழ்கின்றன. ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் ஆர்வலர் புண்கண்ணிர் புகல் தரும்”
"நாடாகொன்றோ தாடாகொன்றோ அவலா
கொன்றோ மிசையாகொன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை
வாழியநலனே?

Page 11
,பெரியவர்?? காசிம் லெப்பை
திரு. எஸ். எஸ். நல்லையா கல்ஹின்னை மகாவித்தியாலய முன்னாள் அதிபர், வடமாகாண கல்வித்திணைக்களமுன்னாள் கல்வி அதிகாரி
 
 

கல்ஹின்னையும் நானும் பேராசிரியர், கலாநிதி சு. வித்தியானந்தன்
துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
அப்பொழுது ஈழத்தில் ஒரு பல்கலைக்கழகம் மாத்தி ரமே இருந்தது. அதுவும் தலைநகரான கொழும்பில் இயங்கியது. நான் இங்கிலாந்தில் மேற்படிப்பை முடித் துக்கொண்டு 1950-ம் ஆண்டில் ஈழத்திற்குத் திரும்பி னேன். கொழும்பிலிருந்து பல்கலைக்கத்திலே தமிழ் விரிவுரையாளராகக் கடமையாற்றத் தொடங்கிய காலத் தில், 1951-ம் ஆண்டில் ஜுலை மாதம் புதிய மாணவர் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டனர். இவர்களிலே தமிழையொரு பாடமாகக் கற்ற மாணரொருவர் கல் ஹின்னையைச் சேர்ந்தவரென்றும் , முதன் முதலில் கல் ஹின்னைலிருந்து பல்கலைக் கழகத்தில் அனுமதி பெற்ற வர் அவரேயென்றும் பின்னர் தெரியவந்தது.
பல்கலைக்கழத்தின் தமிழ்ச்சங்க நடவடிக்கைகளை அக்காலத்தில் நான் நெறிப்படுத்தினேன். குறிப்பாக ஆண்டுக்கொரு தமிழ் நாடகம் தயாரித்து அளிப்பதில் நான் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தேன், கல்ஹின் னையைச் சேர்ந்தவர், தமிழ்ச் சங்க அலுவல்கள் அனைத் திலும் மும்முரமாக ஈடுபட்டு, மூன்றாண்டுகளிலும் மேடையேறிய நாடகங்களிலும் பங்கு கொண்டார். அவர்தான் தமிழ் சங்கத்தின் பிரபல்யமான ஆண்டுச் சஞ்சிகையின் ஆசிரியராகவும் ஒரு முறை தேர்ந்தெடுக்கப் பட்டார். ஐந்தாவது இளங்கதிர்” ஆசிரியராக இருந்து, பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு 1952-ம ஆண் டு அக்டோபர் மாதத்தில் மாறிய பின்னர், முதன்முதலிற் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் * இளங்கதிர்ச் சஞ்சிகையைத் திறமான படைப்பாக வெளியிட்டார். ஆறாவது இளங்கதிரின் ஆசிரியராக வேறொருவர் இருந்த

Page 12
20
போதும், அதைையும் தன் கைவண்ணத்தைக் காட்டிச் சிறப்பாக வெளியிட்டதுடன், நூல்களை வெளியிடுவதற் கான தமிழ் மன்றம் கல்ஹின்னையில் நிறுவியவரும் அம்மாணவன்தான். அவர்தான் பிரபல்ய எழுத்தாள ரும் வழக்கறிஞருமாகிய எஸ். எம். ஹனிபா, ஜனாப் எஸ். எம். ஹனிபா கொழும்பிலிருக்கும்போது என்னுடன் நெருங்கிப்பழகி, பேராதனையில் இரண்டாவது மூன்றா வது ஆண்டுகளில் நான் பொறுப்பாயிருந்த ஜயத்திலக்கா விடுதியில் வாழ்ந்ததால், மேலும் நெருங்கிப் பழகினார். என்னைப்பற்றி நூல் வெளியிடுமளவிற்கு இணைப்பு ஏற் பட்டிருக்கின்றது.
ஹனிபாவிற்குப் பின்னர், ஜனாப் எஸ்.எல். எம். ஹனிபா செல்வி பெளஸி ஹ"சைன் (ஆகியோர் என்னிடம் தமிழ் பயின்றனர். எஸ். எல். எம். ஹனிபா இப்பொழுது கண்டி சித்தி லெப்பே மகாவித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றுகின்றார். செல்வி பெளஸி ஹரைசன் (திருமதி பெளஸி றஹீம்) பாத்திமா மகளிர்கல்லூரித் அதிப ராக இருந்து, இப்பொழுது இளைப்பாறியுள்ளார்.
கலாநிதி. ம. மு, உவைஸ் அவர்கள் எழுதிய ‘முஸ்லிம் களின் தமிழ்த்தொண்டு" என்னும் ஆங்கில நூலை கல் ஹின்னைத் தமிழ் மன்றம் முதல் வெளியீடாக வெளி யிேட்டது. ஹனிபாவின் தூண்டுதலால் நான் எழுதிய இலக்கியத் தென்றல்" என்னும் நூல் கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தினால் இரண்டாவது வெளியீடாக 1953 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஹனிபா கே ட் ட த ந் கு இணங்கவே இஸ்லாமியர் தமிழ்த்தொண்டு பற்றி அந் நூலில் ஓரியல் இடம்பெற்றது. இந்நூலே தமிழ் மன்றத் தினால் வெளியிடப்பட்ட முதலாவது தமிழ் நூலாகும்.
* கல்ஹின்னை அல்மனார் மகா வித்தியாலயப் பொன் விழா மலரில் வெளிவந்த கட்டுரை- 1985

21
பேராதனையிலிருக்கும் காலத்தில் 1953ம் ஆண்டில் கல் ஹின்னையில் நடைபெற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினக் கொண்டாட்டமான மீலாத் விழாவை ஒழுங்கு செய்து, என்னையும் அதிற் சொற்பொழி வாற்றும்படி செய்தார், ஹனிபா. இதுவே நான் முதன் முதலாக மீலாத் விழாவிற் பங்குபற்றியது. அவ்விழாவில் எனக்குக் கிடைத்த வரவேற்பு, பின் வந்த ஆண்டுகளில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி மாவனல்லை முத லிய இடங்களில் மீலாத் விழாக்களிற் பங்குகொள்ளத் தூண்டுகோலாயிருந்தது.
கல்ஹின்னைக்கு நான் மேற்கொண்ட முதல் விஜயத் திலேயே பல அறிஞர்களைச் சந்திக்கக்கூடியதாக இருந் தது. அவர்களுள் முதன்மையானவர் நவீன கல்ஹின் னையை உருவாக்கிய பெருந்தகை புரக்டர் (வழக்கறிஞர்) ஒ ஒ:எம். ஹ"சைன் அவர்கள் இவரே பெளசியின் தகப்ப னார். கல்ஹின்னை அவரின் முயற்சியினாலேயே பாட சாலைகளையும், தெருக்களையும் தபாற் கந்தோர்களை யும். மருத்துவசாலையும் பெற்று இன்று முன்னேறியுள்ளது. பல்லாண்டு காலமாகக் கல் ஹின்னைப் பள்ளிவாசலின், தர்மகர்த்தாவாகக் கடமையாற்றிய அல் ஹாஜ் ஏ. ஓ. எம். ஷரீப் அவர்களையும் அப்பொழுது சந்தித்து உணரயாடி னேன். சென்ற நூற்றாண்டில் மத்திய இலங்கையிற் பிர சித்தி பெற்ற மார்க்க அறிஞராயிருந்த புலவர் கசாவத்தை ஆலிம் அப்பா என அழைக்கப்படுகின்ற செய்யத் முஹம்மத் ஹாஜியார் அவர்களின் பேரப்பிள்ளையான அல் ஹாஜ் சஈத் ஆலிம் (செளலத்தி) அவர்களும் நான் பேசிய மீலாத் விழாவிலே உரையாற்றினார்கள். அவர்களுடனும் இஸ் லாம் மதம் தொடர்பான பல விடயங்களைப் பற்றிப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
க-2

Page 13
22
அதன் பின்னர், 1964ம் ஆண்டிற் கவிஞர் எம். சி. எம். சுபைர் அவர்களின் திருமண வைபவத்திற்குக் கலாநிதி உவைசுடன் சென்றேன், கல்ஹின்னையின் மூத்த கவிஞ ரின் தொடர்பு இன்று வரை நிலைத்திருக்கின்றது.
மீண்டும் 1965ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எஸ். எம்" ஹனிபாவின் திருமணத்திற்குப் பேராதனைப் பல்கலைக் கழக விரிவுரையாளர் சி. தில்லைநாதனுடன் சென்றேன்.
கவிஞர் ஸுபைர் மணிக்குரல் பதிப்பகம்" என்ற நிறுவனத்தின் மூலம் கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர் களின் இக்பால் இதயம், ருபாய்யாத், செய்னம்பு நாச்சியார் மான்மியம், இறசூல் சதகம் போன்ற பல நூல்களை வெளி யிட்டார். கலாநிதி எம். எம், உவைஸ் அவர்களின் இஸ் லாமியத் தென்றல் என்ற ஆய்வு நூலையும் மணிக்குரல் பதிப்பகம் வெளியிட்டது.
நான் தமிழ்ப் பேராசிரியராக நியமனம் பெற்றபோது கவிஞர் ஸ"பைர் தலைமையில் இயங்கிய இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர் இயக்கம், கண்டி முஸ்லிம் ஹோட் டலில் எனக்குப் பாராட்டு விழா நடத்திச் சிறப்பித்ததை யும் இங்கு குறிப்பிட வேண்டும்.
ஸ"பைர் சிறந்த ஆசிரியர்; நாடறிந்த கவிஞர்; எழுத் தாளா, வானொலிப் பேச்சாளர். நூல் வெளியீட்டாசிரிய ராகவும் சஞ்சிகை ஆசிரியராகவும் பொதுப் பணியாள ராகவும் புகழ் பெற்றவர். பல்வேறு துறைகளிலே இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டு முகமாக 19\1ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ந் தேதி கொழும்பு ஸஹிறாக் கல்லூரி யில், இலங்கைப் பாராளுமன்ற சபாநாயகர் அல்ஹாஜ் எம். ஏ. பாக்கிர் மக்கார் தலைமையிற் கவிஞர் ஸுபைர் பாராட்டு விழா” நடைபெற்றது. அவ்விழாவில் அவருக்கு *ஈழத்துக் கவிமணி’ என்ற பட்டம் வழங்கி நான் பாராட்டி யதையும் இங்கு மகிழ்வுடன் நினைவு கூர்கின்றேன்.

23
கல்ஹின்னை என். எம். ஹனிபா (மாமா) அவர்களைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். அவர் நிறுவிய கலா நிலையம் அவரின் நான்கு நாவல்களை வெளியிட்டிருக் கின்றது. அவையாவன ஏமாற்றம், இலட்சியப்பெண், பகற் கொள்ளை, மர்மக் கடிதம். இவற்றுள், ஏமாற்றம் என்ற நூலை நான் வெளியிட்டு வைத்தேன், 1963ம் ஆண்டு மார்ச்சு மாதம் 24ந் தேதி கண்டி, திருகோணமலை வீதியி லுள்ள ஜின்னா மண்டபத்தில் இவ்விழா நடைபெற்றது. கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியின் அன்றைய அதிபரா யிருந்த ஜனாப் ஐ. எல். எம். மஷ் ஹசர் அவர்கள் தலைமை யில் நடந்த இவ்விழாவில் 'பள்ளிவாசல்களில் வழங்கும் புனித மொழிகளுள் ஒன்று தமிழ்’ என்ற தலைப்பில் நான் உரை நிகழ்த்தினேன்,
கல்ஹின்னை மெளலாவி எச். ஸலாஹ"தீன் நிறுவிய ஷிபா பதிப்பகம் பற்றியும், அவர் வெளியிட்ட நாற்பதுக் கும் மேற்பட்ட சமயச் சிறு பிரசுரங்கள் பற்றியும் குறிப்பிட வேண்டும்.
இன்றைய கவிஞர்களுள் எம். எச். எம். ஹலீம்தீன் சில நூல்களை வெளியிட்டுள்ளார், இவருடைய முதல் நூல் - தியாகச்சுடர் - மணிக்குரல் பதிப்பகத்தால் வெளியிடப் பட்டது. அண்மையில். காலத்தின் கோலங்கள் என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டுள்ளது.
கே, உபைதுல்லாஹ், எஸ். எம். நஸ்துல்லாஹ் போன்ற
இளைஞர்களும் இப்பொழுது கட்டுரைகள் எழுதி வருகின் றார்கள்.
மேலும் கல்ஹின்னையின் தமிழ் வளர்ச்சியைப் பத்திரிகைகள் மூலமும், எழுத்தாளர்களின் படைப்புக்கள் மூலமும் அறிந்து வருகிறேன்.

Page 14
24
இஸ்லாமிய இலக்கியங்களைச் சேகரித்து வைத்தும், பதம்’ முதலான சோபனப் பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றும் வந்த பழம் பெரியார்களான அல் ஹாஜ் ஏ. ஓ. எம். காஸிம் லெப்பை, மூவன்னா ஹபீப் முகம்மது லெப்பை, பீரிஹெல முகம்மது காஸிம் லெப்பை போன்ற வர்களின் பாரம்பரியத்தில் வளர்ந்து வரும் கல்ஹின்னை யின் தமிழ் வளர்ச்சி பாராட்டுக்குரியது;
இன்று கல்ஹின்னையில் வளரும் தமிழ்தனை நோக்கும் போது ‘கல் தறின்னை மலையகத்தின் தமிழகம்’ என்று கூறுவது மிகப் பொருந்தும்.
கல்ஹினை அல்மனார் மஹாவித்தியாலய பொன் விழா சிறப்பு மலரில் இடம் பெற்ற கட்டுரை - 1985.
 

3. C SE S SSSS
கீர்த்திமிகு கல்ஹின்னை மலை, மலை சார்ந்த இடம் குறிஞ்சி எனப்படும் குறிஞ்சி நிலத்து மக்கள் பற்றிய வருணனைகளைச் சங்க இலக்கிய நூல்களிலே காணலாம். பண்டைய இலக்கியத் தில் காணப்பட்ட குறிஞ்சி நிலத்தில் போக்குவரத்து வசதி கள் இல்லை. அத்தகைய மக்களுக்கு நெடுந்தூரம் போக வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது. குறிஞ்சி நிலமாகக் கொள்ளக் கூடிய மலைப்பாங்கான பிரதேசங்களில் நிறையத் தெருக் கள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள குறிஞ்சி நிலப்பிரதேசம் இதற்கு விதிவிலக்காக அமையவில்லை.
இற்றைக்கு ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் குறிஞ்சி நிலக் கிராமம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப் பட்டேன். பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து வளைந்து, வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் ஊடாகச் செல்ல வேண்டி இருந்தது. பாதையில் செல்லும் பொழுது எட்டிப் பார்த்தாலே நெஞ்சு திடுக்கிடும் செங் குத்தான மலைகளினூடாக பாதைகள் சென்று கொண் டிருந்தன. இத்தகைய தெருக்களில் போவது புதிதாக அத்தகைய பிரதேசங்களின் ஊடாகச் செல்லும் எம்போன் றவர்களுக்கு அபாயகரமானதொன்றாகத் தோன்றினாலும் அப்பிரதேச மக்கள் அதற்குப் பழக்கப்பட்டு சர்வ சாதா ரணமாக அத்தெருக்களைப் பயன்படுத்துவர். இத்தகைய செங்குத்தான பாறைகளில் அமைந்துள்ள தெருக்கள் மார்க்கமாகச் சென்று கல்ஹின்னைக் கிராமத்தை அடைத் தோம்.
அன்று அந்த ஊர் ஒரு கிராமத்துக்குரிய சிறப்பியல்பு கள் அனைத்தையும் கொண்டு விளங்கியது. அந்தக் கிராமத் தில் முஸ்லிம்களே மிகப் பெரும்பான்மையோர் ஆவர்.

Page 15
26
அங்குள்ளவர்கள் கல்வி கற்றுத் தேர்ந்து பட்டதாரிகளாக வும், வைத்தியர்களாகவும், ஆசிரியர்களாகவும், அரசு ஊழியர்களாகவும் விளங்குகின்றனர். அத்தோடு தலை சிறந்த எழுத்தாளர்களையும், ஆற்றல் மிக்க கவிஞர்களை யும் நாணயமுள்ள வணிக மக்களையும் தோற்றுவித்த பெருமை கல்ஹின்னைக்கு உண்டு.
எனச்கும் கல்ஹின்னைக்கும் தொடர்பு ஏற்படக் காரணமாயிருந்தவர் அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா அவர் களாவார், அவர் ஒரு சட்டத்தரணி, ஒரு பட்டதாரி; ஓர் எழுத்தாளர். அவர் கல்ஹின்னையில் ஒரு தமிழ் மன்றத்தை ஆரம்பித்தார். தமிழ் வளர்த்தார், எனது முதல் நூலான ‘முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு’ (Muslim Contribution to Tamil Literature) 6 TGörgguh s ši 66v நூலைத் தமது செலவிலேயே வெளியிட்டார். இந்த நூலுக் குத்தான், எனக்கு முதுமாணி (M. A.) பட்டம் வழங்கப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. ஏட்டு வடிவில் இருந்த எனது இந்த நூலை, அன்று பெரும்புள்ளிகளாக இருந்த வர்கள் பாராட்டியதோடு நின்று விட்டனர். அவலை நினைத்து, உரலை இடித்தனர். விளம்பரங்கள் பெற்று சஞ்சிகை போன்று வெளியிடலாம் என்று ஆலோசனை கூறினர். இந்த மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு என் மீது அத்தகையோர் கொண்ட பொறாமைதான் காரணமாக இருந்திருக்கலாம் என்று, எனக்கு இப்பொழுதுதான் ஞானம் பிறந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில்தான் அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா அவர்கள், எனது ஆங்கில நூலைத் துணிந்து வெளியிட்டார்.
எனது முதல் தமிழ் நூல் 'இஸ்லாமியத் தென்றல்.’ இதனை வெளியிட்ட பெருமையும் ஒரு கல்ஹின்னை பெரு மகனையே சாரும். அவர் வேறு யாரும் அல்லர். கல்ஹின் னையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் எம். ஸி. எம்,

27
சுபைர் அவர்களே. அவர், இப்பொழுது கல்ஹின்னை அளித்த முன்மாதிரி ஆசிரியர் திலகமாக விளங்குகின்றார்.
கல்ஹின்னை எஸ். எம். ஹனிபா அவர்களின் மற்றொரு சாதனை அதே தமிழ் மன்றம் மூலமாக யாழ்ப்பாணத் தமிழ் அறிஞர், பெருந்தகை ஒருவரின் தமிழ் நூல் ஒன் றினையும் வெளியிட்டமையாகும். அவ்வறிஞர்தான், இப்பொழுது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகத் திகழ்பவரும். அப்பொழுது இலங்கைப் பல்கலைக் கழகத்தின் சிரேட்ட தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவருமாகிய பேராசிரியர் கலாநிதி சு. வித்தியா னந்தன் அவர்கள். அப்பெரியாருடைய முதல் நூலான *இலக்கியத் தென்றல்" என்னும் தமிழ் நூலை வெளியிட்ட பெருமையும் கல்ஹன்னை எஸ். எம். ஹனிபா ஹாஜி யாரையே சாரும்.
கல்ஹின்னையின் மற்றொரு சேவையையும் ஈண்டு குறிப் பிட விரும்புகின்றேன். இத்தகைய ஓர் ஏட்டில் இந்நிகழ்ச்சி பதிவாகத் தவறினால் எதிர்காலச் சந்ததியினர் அதனை மறந்தே விடுவர், நான் அப்பொழுது பரீட்சைத் திணைக் களத்திலிருந்து விலகி, இலங்கை வணிகர் மன்றத்தில் (Ceylon Chamber of Commerce) Gafrt figs, Say 15 it "a, Gar சென்றிருந்தன. இலங்கையில் பரீட்சைத் திணைக்களத் தினால் நடாத்தப்படும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர)ப் பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மான வர்களுக்குப் பயன்படும் முறையில் முஸ்லிம் மாணவரின் தமிழ் இலக்கிய விடைத் தாள்களை முஸ்லிம் ஆசிரியர்களே புள்ளியிடும் வாய்ப்பைப் பெறுமுகமாக, இஸ்லாமிய அடிப் படையில் தோன்றிய தமிழ் இலக்கியங்கள், தமிழ் இலக் இலக்கியப் பாடத்துக்கான பாடநூல்களாக இடம் பெறுதல் வேண்டும் என்பதை வலியுறுத்தி, நான் தயாரித்த முறையீட்டு மனுவுக்கு முதலில் கையொப்பம் இட்டவர் கல்ஹின்னை எஸ். எம். ஹனிபா ஹாஜியார் அவர்களே

Page 16
28
ஆவர். அம்முறையீட்டு மனுவில் கையொப்பமிட்ட மூவருள், மற்றைய இருவர் அறபுப் பயிற்சிச் சங்கச் செய லாளரான மெளலவி ஏ. எல். எம் பளீல் அவர்களும், இஸ்லாமிய ஆராய்ச்சி ம ஜ் லி ஸி ன் செயலாளரான மெளலவி எம். ஜே. எம். றியால் (அறபு வட்டாரக் கல்வி அதிகாரி) அவர்களுமாவர். அப்பொழுது பரீட்சை ஆணையாளராகக் கடமை ஆற்றியவர் திருவாளர் எஸ். ஈ. ஆர். பேரின்பநாயகம் அவர்கள். அப்பொழுது கெளரவ கல்வி அமைச்சராக இருந்தவர் அல்ஹாஜ் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூது அவர்கள். கல்வி அதிகாரி யாக இருந்தவர் அல்ஹாஜ் எம். பி. நூர்தீன் அவர்கள். இந்த முறையீட்டு மனுவின் பெறுபேறுதான், இன்று கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண)ப் பரீட்சைக்கு அமைந்துள்ள தமிழ் இலக்கியம் ஆ பாடத்திட்டம்.
இவ்வாறு பார்க்கும்பொழுது ஈழத்து இஸ்லாமிய மறு மலர்ச்சிக்குப் பறைசாற்றாமல் அரும்பணி புரிந்த பெரு மக்களைத் தோற்றுவித்த பெருமை கல்ஹின்னை கிராமத் துக்குச் சாரும். இந்தப் பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ"த்தஆலா நல்லருள் பாலிப்பானாக. ஆமீன். ஆமீன், யாறப்பல் ஆமீன்.
அல்ஹாஜ் டாக்டர் எம். எம். உவைஸ் பேராசிரியர், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறை, மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகம்,
பல்கலைநகர், மதுரை.
ଧୃ>୫<\; శక్త
ASశ

Page 17
30
கான மாணவர்கள் பயின்று வெளியேறியுள்ளனர் இதன் பழைய மாணவர் பலர், இன்று இலங்கை நாட்டின் நாலா பகுதிகளிலும் அரசாங்கப் பாடசாலைகளில் போதனாசிரி யர்களாகக் கடமையாற்றுகின்றனர்.
1949ம் ஆண்டில் இம் மதுரஸா ஆரம்பமாகும்போது இதற்கென்று பிரத்தியேகக் கட்டிடமொன்று இருக்க வில்லை கல்ஹின்னை ஜம்மா பள்ளிவாசலின் மேல் மாடியிலேயே வகுப்புகள் தற்காலிகமாக நடாத்தப் பட்டன.
ஒரு வருட காலத்திற்குள், நிரந்தரமான மாடிக் கட்டிட மொன்று உருவானது. இதன் கட்டிட நிர்மாணத்திற்கான செலவினங்களை கிராமத்தைச் சேர்ந்த மக்களே ஏற்றுக் கொண்டனர். ஹாஜிகள் ஏ.ஓ. அப்துல் ஹமீத், ஏ. ஓ. எம் ஸாலிஹ், எம், ஏ எம் காஸிம் (மர்ஹ"ம்) ஆகிய மூவரும் கட்டிட வேலையில் பெரிதாக ஈடுபட்டனர். மதுரஸாவின் எதிர்காலச் செலவினங்களைச் சமாளிக்கும் வகையிலான வருவாய் தரவல்லதாக சுமார் 70,000 ரூபாய் பெறுமதியான சொத்து, கல்ஹின்னைப் பொது மக்கள் எல்லோரிடமிருந்தும் திரட்டப்பட்டு, இன்னும் வருமானம் கிடைத்துக் கொண்டே இருக்கின்றது.
உள்ளூர் மாணவர்களுக்காகவே ஸ்தாபிக்கப்பட்ட இக்கலாசாலையில், வெளியூர் மாணவர்களும் பயிற்சி பெறு கின்றனர். ஊர் மாணவர்கள் காலை நேரங்களில் பக்கத்தி லுள்ள அல்மனார் மஹாவித்தியாலத்திற்குச் சென்று பல்கலை பயில்வதோடு பிற்பகலிலும், இரவிலும் அறக்கலையோடு அறபுப்பாஷையையும் படிக்கின்றனர். வெளியூர் மாணவர் கள் முழு நேரத்தையும் கலாசாலையிலேயே கழிக்கின்றனர். வெளியூரிலிருந்து இங்கு கல்வி கற்க வந்திருக்கும் மாணவர் களுக்கு தங்கும் விடுதி, மூன்று வேளைச் சாப்பாடு உட்பட

31
யாவும் கலாசாலை விடுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்காக, மாணவரிடமிருந்து எவ்வித கட்டணமும் அறவிடப்படுவதில்லையென்பது குறிப்பிடத்தக்கது
“தவப்பொழுதையும் அவப்பொழுதாக்கலாகாது” என்பதற்கேற்ப, மாணவரின் நலன்கருதி, அவர்களின் ஒய்வு நேரங்கள் வீணாகாது இருக்க இரண்டு சிறிய நூல் நிலையங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று அரபு நூல் நிலையம், மற்றது தமிழ் நூல்களைக் கொண் டது, முந்தியது கலாசாலை மாணவர்களுக்கு மட்டுமின்றி, இக்கிராமத்திலுள்ள கற்றறிந்த உலமாக்களுக்கும் பயன் தரும் வகையில் அமைந்துள்ளது. இதில் அரபு அகராதியில் இருந்து, புஹாரி. முஸ்லிம் ஈறாகவுள்ள உயர்தரக் கிரந்தங்க ளெல்லாம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது, பாராட்டத் தக்கது. இக்கலாசாலையின் பாடத் திட்டத்தில் அரபு, இலக் கியம், இலக்கணம் பாஷை, தப்ஸிர் (மறைமொழி விளக்கம்) ஹதீஸ் (நபிமொழிக்கலை) நீதிசாஸ்திரம், தர்க்க சாஸ்திரம் ஆகியன இடம் பெற்று இருந்த போதிலும், அரபு இலக்க ணத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, பாட போதனையைப் பொறுத்தவரை கூறுவதென்றால், அரபுப் பாஷா விருத்திக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வரும், தமது ஆயுளின் பெரும் பகுதியைப் பாடபோதனை யில் செலவிட்டவருமான கல் எலியாவைச் சேர் ந் த மெளலவி ஏ. எல், எம். யூஸுஃப் ஆலிம் அவர்கள் பொறுப் பாய் இருந்து நடத்துகிறார்கள், கல்ஹின்னை மக்களுக்கு இக்கலாசாலை மீது நீங்காத பற்று ஏற்பட்டு இதை ‘கண் ணைப் போன்று காத்து', பொன்னைப் போன்று பேணி வளர்ப்பதற்கு இறைவன் நல்லருள் புரிவானாக! (நன்றி : தினகரன் 16-9-1963)
O o o OGO OG -- O)

Page 18
5
ஜாமிஅத்துல் பத்தாஹ் கவிமணி எம். சி. எம். 663 ס" (וו( Lif
எழில் மிகும் இலங்கைத் திருநாட்டின் மலையகத் தலைநகரம் கண்டி நகர்க்கு அருகாமையில் அமைந்திருப் பது கல்ஹின்னைக் கிராமம், பழைமையும் பெருமையும் மிக்க இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் வாழ்ந்து வரும் இக்கிராமத்தில், நிறை தரும் ஆத்மிகச் சுடர் பரப்பும் கலை யகமாகத் திகழ்கின்றது ஜாமி அதுல் பத்தாஹ் அறபுக்
6) IT F IT 60) G),
ஆத்மிகச் சுடர் பரப்பும் இந்த அறபுக் கலாசாலை, பூத்த நல்லறிவுலக மேதை இமாம் ஷாபிஈ (றஹ்) அவர்கள் நினைவு தினத்தையும், மார்க்கஞானம் பெற்றுத் தேர்ந்த மாணவர்களுக்கு 'ஆலிம் பட்டமளிப்பு" விழாவையும், மார்க்க உபதேசம் செய்யும் தகுதி காண் மாணவ மணிக ளுக்கு தலைப்பாகை சூடும் விழாவையும் சிறப்பாக நடத்துகிறது.
பொழில் செழிக்கும் மலையகத்தில், புகழ் மார்க்கக் கலைப் பணிக்காய் முதல் அமைந்த கலாசாலை கல்ஹின் னையின் ஜாமிஅத்துல் பத்தாஹ் ஆகும் இக்கலாசாலை ஹிஜ்ரி 1369ம் வருடம், முஹர்ரம் பிறை 28ல், அதாவது 1949ம் வருடம் நவம்பர் மாதம் 21-ம் திகதி ஏற்றமுற ஆரம்பிக்கப்பட்டது
இலங்கை மணித் திரு நாட்டு, எண்திசை வாழ் மக்க ளுக்கும், துலங்கும் மார்க்க அறிவு வழங்கும் இலட்சியத் தோடு எழுந்த இக்கலாசாலை. அன்று, வெலிகம அறபுக் கலாபீடம்-மத்றஸ்துல் பாரியதன் அதிபராகப் பணியாற் றிய மார்க்க அறிஞர், மர்ஹஜூம் அல்ஹாஜ் ஸகரியா ஆலிம் அவர்களால் மார்க்கப்பாடம் சொல்லிக் கொடுத்து, இயக்

33
கப்பட்டது. அன்று முதல் ஆர்வமுள்ள பத்து உள்ளூர் மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கலாசாலை, நாளடைவில் வளர்ச்சி கண்டு, பல வெளியூர் மாணவர்க்கும் இடமளித்து ஏற்றம் தரும் பணியில் நடைபயின்று
வருகிறது.
கல்ஹின்னை ஜும்ஆ மஸ்ஜிதுடன் இணைந்திருந்த ஒரு கட்டிட மேல் மாடியில் இயங்க ஆரம்பித்தது இக்கலா சாலை. இக்கலாசாலையின் ஆரம்ப அதிபராகப் பணியாற் றியவர் கல்-எலியவைச் சேர்ந்த, மர்ஹஅம் ஹஸ்ரத் யூஸ"ப் ஆலிம் அவர்களாவர். அன்னார் 1949 முதல் 1965-ம் ஆண்டு வரை சேவையாற்றினர் அக் காலகட்டத் திற்றான் இன்று இலங்கையின் பிரபல்யம் வாய்ந்து விளங் கும் உலகமாக்க ள் சிலர் இங்கே தமது ஆரம்பக் கல்வியைப் பெற்றனர். இங்கு அவர்கள் பெற்ற ஆரம்ப ஆத்மிக அறிவுப் போஷணைதான் அவர்களின் உயர்வுக்கு வித்திட் டது என்பதனை அவர்களே பெருமையுடன் குறிப்பிடக் காண்கிறோம்.
1966 முதல் 1976-ம் ஆண்டு வரை அக்குறணைக் குருகொடையைச் சேர்ந்த அல்ஹாஜ் என். எச். எம். ஹாஷிம் ஆலிம் அவர்கள் அதிபராக விளங்கினர். அவர் களுக்குத் துணையாக கல்ஹின்னை 'அப்ஸலுல் உலமா" மர் ஹீம் அல் ஹாஜ் எம் எச்.எம், ஷரீப் ஆலிம் அவர்களும் பேஷ் இமாம் அல்ஹாஜ் ஏ. சி. எல். எம். இஸ்மாயில் அவர் களும் போதனாசிரியர்களாக உதவினர்.
1976 முதல் 1978-ம் வருடம் வரை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவரும், உந்துகொடை அறபுக் கலாசாலையின் தற்போதைய அதிபருமான மெளலானா எம். ஐ. அப்துஸ் ஸமது ஆலிம் அவர்கள் அதிபராகத் திகழ்ந்தனர்.

Page 19
34
இந்தக் காலட்டத்தில்தான் இக் கலாசாலை அரசாங்கத் தில் பதிவு செய்யப்பட்ட கலையகமாக மலர்ச்சி பெற்றது. அதனைத் தொடர்ந்து 1978-ம் வருடம் அறுவருக்கு *ஆலிம் சான்றிதழ் வழங்கப்பட்டது,
இந்த நிலையிலும், இக்கலாசாலை போதிய வகுப் பறைகளையோ, மாணவர் விடுதி வசதிகளையோ, நூல் நிலையங்களையோ கொண்டிருக்கவில்லை. இந்தக் குறை யைக் கண்டனர் கல்ஹின்னையின் நல்லெண்ணங் கொண்ட சிலர். இயலுமான வரை விரைவிற் செயற்பட்டுத் திட்டம் தீட்டிக் கலாசாலையை விஸ்தரிக்கும் பணியில் ஈடுபட்டனர். கல்ஹின்னை மக்களும் ஒத்துழைத்தனர். மாடி மூன்று கொண்ட மண்டபம், சகல வசதிகளுடனும் உருப் பெற்றது மார்க்க அறிவு விருத்திப் பணியை மகிழ்வுடன் நிறைவேற்றி வருகிறது.
உள்ளூர், வெளியூர் மாணவர்கள் 40 பேர் இன்று இங்கே பயில்கின்றனர். இவர்களிடமிருந்து விடுதிக் கட்டணமோ வேறு கட்டணமோ எதுவும் அறவிடப்படுவ தில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1981ம் வருட முதல், மன்னார் புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட அல்-உஸ்தாத் எம். ஏ. சி ஸிக் றுள்ளா ஆலிம் (பத்தாஹி) அவர்கள் அதிபராகப் பணிபுரி கிறார்கள். அவர்களுடன் மேலும் மூன்று போதனாசிரியர் களுமுளர்,
இக்கலையகத்தில், அறபு மொழியின் 13 வகைக் கலை களும், ஷரீஆவின் 23 வகைக் கலைகளும் போதிக்கப்படு கின்றன. வானவியல், நிலவியல், கலந்தாய்வுக்கலை, யாப் பிலக்கணம், யாப்பிலக்கண அலங்காரம், பாடல், புவியியல், கணிதம், விஞ்ஞானம் ஆகிய கலைகளும் அறபு மொழி மூலம் கற்பிக்கப்படுகின்றன,

35
இன்று மார்க்க ஞானவளர்ச்சிப் பணியிற் சிறப்பாகச் செயற்பட்டு வரும் இந்த ஜாமிஅத்துல் பத்தாஹ் அறபுக் கலாசாலையின் முப்பெரும் விழாக்கள் நிகழ்வுறும் 2704-86 அன்று மார்க்கஞானம் தேர்ந்த நால்வர் சான்றிதழ் பெறுகின்றனர் மார்க்க உபதேசம் புரியும் தகுதி பெற்ற நால்வர் தலைப்பாகை குடிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
இந்தத் திருநாளிலே இந்த அறபுக் கலாபீடத்தை ஆரம்பித்தவர்களுக்கும், அழகுற நடத்துபவர்களுக்கும், அறிவுப் போதனை புரியும் நல்லாசிரியர்களுக்கும், பயிலும் மாணவர்களுக்குட் அல்லாஹ் எல்லா நலங்களும் தந்தருளப் பிரார்த்தித்து, வாழ்த்துவோம்.(நன்றி, தினகரன்26-4-1986)

Page 20
S. s
மர்ஹசிம் திக்ருல்லா ஆலிம்
கவிமணி எம். சி. எம் ஸ "பைர் 1989 ஜூன் மாதம் நாலாம் திகதி அதிகாலை: "ஸ"புஹ" தொழ அழைக்கும் பாங்கிசை ஓங்கி ஒலித்து ஒய்ந்தது. ஒலிக்கும் பாங்கிசைக்கு முன்னரே உறக்கம் நீத்தெழுந்து உயர் நாயனைத் தொழ எழுந்திருக்கும் ஜாமி அத்துல் பத்தாஹ்வின் அதிபர் அன்று எழுந்திருக்கவில்லை’ ‘தூக்கத்தை விடத் தொழுகை சிறந்தது’ என்ற பாங்கின் அறிவுறுத்தல் கூட, அதன் ஆழத்தையுணர்ந்த அந்த வேதத் தின் போதகரை விழித்தெழச் செய்யவில்லை.
ஆம். அல்லாஹ்வின் நாட்டம் அது. அல்லாவிட்டால் அன்றிரவு பதினொரு மணி வரை அன்பர்களுடனும், சக விரிவுரையாளர்களுடனும் அறிவு பூர்வமான உரையாடலில் ஈடுபட்டு துயில் கொண்ட அந்த நல்லவர், மீளாத்துயிலில் மூழ்கியிருப்பாரா? அன்பு மாணவரையும் சக விரிவுரை யாளரையும் அன்பர்களையும் ஆறாத்துயரில் மூழ்கடித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பாரா?
அதிர்ந்தது ஜாமிஅத்துல் பத்தாஹ். அழுது துடித்து ஏங்கித் தவித்தது. இனி எம் அதிபரை என்று காண் போமோ என இதயம் வெந்து இடிந்து நின்றது. ஜாமி அத்துல் பத்தாஹ் என்னும் சன்மார்க்க அறிவு மலர்ப் பொழிலில் பூத்துமணங் கமழ்ந்த அறிவு, மலர். அதிபர் மலர்- வாடி உதிர்ந்து விட்டது.
நல்லறிவு மலராக மலர்ந்து மணம் கமழ்ந்தாலும் இன் னும் இல்லறம் மலர்ந்து மணம் பெறாத இளமைப் பருவம். வயது முப்பத்தொன்று. ‘இந்த வயதில் இப்படியொரு அறிவா? என்று சன்மார்க்க அறிஞர் உலகே வியக்கும் வண்ணம் வேதத்திருமறையின் ஞானப் பெருக்குடன்

37
விளங்கிய வித்தகர் மெளலவி அஷ்ஷெய்ஃ ஆலிமுல்பாளில் அலீ உஸ்தாத் ஸிக்ருள்ளாஹ் ஹழரத் அவர்களின் பிரிவு ஈடுசெய்ய முடியாதது.
சல்ஹின்னை ஜாமி அத்துல் பத்தாஹ் அரபுக் கல்லூரிக்கு இப்பொழுது வயது நாற்பது. இந்தக்கால கட்டத்தில் அறிவிலும், வயதிலும் முதிர்ந்த பலர் அதிப ராகப் பணியாற்றிச் சென்றனர். கடந்த எட்டு வருடங் களாக ஜாமி அத் துல் பத்தா ஹ் அரபுச் கல்லூரியிலேயே தமது அரபு மொழி வழி சன்மார்க்க அறிவைப்படித்துப் பட்டம் பெற்ற இளம் அதிபர் மெளலவி ஸிக்ருள்ளாஹ அவர் கள், அறிவுலகம் வியக்கத்தக்கதாகும் வகையில் இந்தக் கல்லூரியை நிர்வகித்து ஈழத்திலேயே பிரபல்யம் பெற்றுத் வழி வகுத்தார்கள்.
அரபு மொழியிலும், விளக்கம் மிக்க மார்க்க ஞானத்தி லும், அரபுக்கவி ஆற்றலிலும் அவர் பெற்றிருந்த திறமை அறிவுலகம் வியக்கும் வண்ணமிருந்தது. அதே போன்று வானவியல், புவியியல் கிப்லாவின் திசையறியும் கலை ஆகிய வற்றிலும் அவர்கள் பெற்றிருந்த அறிவு அற்புதமாக மதிச்கப்பட்டது.
அவர்களுடைய கிரகிக்கும் ஆற்றல் ஞாபக சக்தி எந்தப் பிரச்சினையையும். உடனுக்குடன் தீர்க்கும் பண்பு மார்க்க சம்பந்தமான ஐயப்பாடுகளுக்குந் தெளிவான விளக்கம் கூறும் தன்மை ஆகியவை அவர்களுடைய திற் மைக்குச் சான்று கூறும் பண்புகளாக மிளிர்ந்தன.
ஹழ்ரத் ஸிக்ருள்ளாஹ் அவர்கள் அரபு மொழியின் சிறப்பைப்பற்றி அரபு மொழியிலேயே எழுதிய கட்டுரை லிபிய நாட்டு மாத சஞ்சிகையான ‘அத்தஃவத்துல் இஸ். லாமிய்யா” என்ற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுப் பெரும்
5ー3

Page 21
38
பாராட்டுதலைப் பெற்றது. இதேபோன்று அவர்களால் எழுதப்பட்ட பல நல்ல கட்டுரைகளும் அரபு பைத்துகளும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டும் பல அறிஞர்கள் முன் படிக்கப்பட்டுப் பாராட்டுப் பெற்றுள்ளன.
மார்க்கப் பிரச்சினைகளுக்கு அவர்கள் விளக்கம் கொடுத்து அளித்த மார்க்கத் தீர்ப்புகளான ‘பத்வாக்கள்’ பல. அவை மார்க்க அறிஞர்கள் வரவேற்பைப் பெற்றுள் ளன. மையத்தின் கடமைகள் சம்பந்தமாகவும் விளக்கமான ஒரு நூலை அவர்கள் எழுதியுள்ளார்கள். இதுபோன்று மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய மார்க்கப் பிரச்னை களை விளக்கும் பல நூல்களையும் எழுத வேண்டும் என்ற அவர்களது ஆர்வம் நிறைவேறாது போனது நமது துர திர்ஷ்டமே இன்னும், அவர்கள் "ஸ"ன்னத் வல் ஜமாஅத்' அடிப்படையிலேயே உறுதியாக இருந்து தமது தீர்ப்புகளை யும் கருத்துகளையும் வெளியிட்டார்கள்.
மெளலவி ஸிக்ருள்ளாஹ் ஹழ்ரத் அவர்கள் இளமை கொழிக்கும் ஓர் அறிவு மலராக விளங்கினார்கள். அந்த மலரை நாடி அறிவுத்தேன் உண்ண நமது நாட்டின் பல பாகங்களிலும் உள்ள அறிஞரான தேனீத்கள் தேடி வந்து கொண்டிருந்தன. அ வ ரு  ைடய நட்பை அன்புத் தொடர்பை நாடிவந்தன.
ஹழ்ரத் அவர்கள் வெளிநாடுகளில் உள்ள மார்க்க அறிஞர்களுடனும் ஸ்தாபனங்களுடனும் அறிவு பூர்வமான கருத்துப் பரிமாறல்களை அடிக்கடி வைத்துக் கொண்டிருந் தார்கள். அண்மையில் சர்வதேச கதீப்மார்களின் ஈரானின் தலைநகர் தெஹிறானில் நடைபெற்ற மாநாட்டுக்கு அவர் கள் எழுதி அனுப்பிய கருத்தாழ மிக்க பாராட்டுக் கவிதை ஒன்று அங்கு சமுகம் தந்திருந்த அறிஞர் பெருமக்களின் பாராட்டைப் பெற்றது. இதேபோல் பெங்கொக், சிங்கப் பூர், பக்தாத், மலேஷியா, டுபாய் போன்ற நாடுகளில்

39
நடந்த அறிஞர் கருத்தரங்குகளுக்கு இவர்கள் பாராட்டுக் கவிதைகளை எழுதிப் புகழ் பெற்றார்கள்.
ஹழ்ரத் அவர்களின் நற்குணங்களும், ஒழுக்கப் பண்புகளும் பணிவும். பாசமும், பெரியோரை மதிக்கும் பண்பும் சிறியோருக்கு வழிகாட்டும் தன்மையும் அவர்களது அணிகலன்களாகத் திகழ்ந்தன. அடுத்த வருக்கும் வழிகாட் டிச் சிறந்தன.
காலத்தை அவர்கள் பொன்னாக மதித்துக் கருமமாற்றி னார்கள். எந்தக் காரியத்தையும் பின்னர் செய்வோம் என ஒத்திப்போடும் பழக்கம் அவர்களுக்கில்லை. அமைதியாக வும் அடக்கமாகவும் திட்ட மிட்டுச் செயல்படுவார்கள். நண்பராயிருந்தாலும், தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருத்திக் கொள்ளுமாறு அறிவுரை கூறத் தயங்க மாட் டார்கள்.
அறிவு எங்கிருக்கிறதோ அதனை நாடிப் பெற என்றும் சோர்வடைய மாட்டார்கள். உலமாச் சபைத் தலைவர் அப்துஸ்ஸமத் ஆலிம் ஸாஹிப் அவர்களைத் தமது ஞானகுரு வாகக் கொண்டு, அவர்கள் தொடர்பை இறுதிவரை தவறாமல் பற்றித் தமது சன்மார்க்க விளக்கங்களைப் பெருக்கிக் கொண்டார்கள். அதைப்போல மற்றும் அறிஞர் பெருமக்களையும் நாடி அன்புத் தொடர்பு கொண்டு, அறிவைப் பெருக்கிக் கொள்ள அவர்கள் தவறியதே இல்லை. குறிப்பாகச் சொல்வதானால் ஹழ்ரத் அவர்கள் தமது வாழ்நாளில் எல்லாம். அறிவுத்தாகமுள்ள ஒரு மாண வராகவே இருந்து, சன்மார்க்கப் பணி ஆற்றவே விரும்பி னார்கள். (நன்றி: தினகரன் 30-6-1988
W *ళ్లకy 受多领<带 外篆<公

Page 22
7
பத்தாண்டு நிறைவு காணும் பட்டகொல்லாதெனிய ஜமாலியா மு. வி.
கல்ஹின்னை ஸ்ரீனா அஸீஸ்
மலையகத்தின் தமிழகம் என வர்ணிக்கப்படும் கல் ஹின்னைக் கிராமத்தின் ஒரு பகுதியாக ஹாரிஸ்பத்துவை தொகுதியில் பட்டகொல்லாதெனியக் கிராமம் அமைந் துள்ளது. இக் கிராமத்தின் வளர்ச்சிப்பாதையில் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கும் கல்விக் கூடம் ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயமாகும்.
இது இக் கிராமத்தின் பழமை வாய்ந்த கலையகமு மல்ல. பட்டதாரிகள், படிப்பு மேதைகளை உருவாக்கிய பள்ளிக்கூடமும் அல்ல, இற்றைக்குப் பத்தாண்டுகளிற்கு முன்னர் பட்டகொல்லாதெனிய பாலர்களின் படிப்பினைத் தொடர பரிணமித்த பாடசாலையாகும், இன்று இப் பாடசாலை பத்தாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடு வதைவிட்டும் பெருமிதமும்,. பெரு மகிழ்வுமடைகின்றது.
ஏனென்றால், பத்தாண்டிலே பல சோக நிகழ்வுகளைக் கண்டு வேதனைகளை வென்று சாதனையில் காட்டி வரும் இக் கலைக் கூடத்தின் வரலாறு கவலைக்குரிய கடந்த காலத்தைக் கொண்டதாகும்.
1978-ம் ஆண்டு சித்திரைத் திங்கள் 3ம் நாள் இக் கலைக்கூடம் 45 மாணவர்களுடன், பட்டகொல்லாதெ னிய ஹமீதியா தைக்காவில் அன்று பிரதம கல்வியதி காரியாக இருந்த மர்ஹலிம் எம். அமானுல்லா அவர் களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அக்கால கட்டத்தில் எவ்வித வசதிகளும், வளங்களும் அற்ற நிலையிலும் சேவை

41
யுணர்ச்சியுடன் கடமை புரிய முன்வந்த மும்மணிகள் முத் துச்சுடராய் நின்று இன்று வரை கலையகத்தின் வளர்ச்சி யிலும் உயர்ச்சியிலும் அரும் தொண்டாற்றுகின்றனர்.
அவர்களுள் முதலாவது அதிபராக பணி புரிந்த ஜனாப் ஏ. எச். எம். நயிம் அவர்களின் அளப்பரிய சேவை என்றுமே இக் கலையக வரலாற்றில் மறக்க முடியாததாகும். அவர் களிற்குப் பக்கத் துணையாகவும், பாடசாலை வளர்ச்சியின் படிக் கல்லாகவும் இன்று வரை திகழும் திருமதி மர்ஜான் நயீம், திருமதி கே. நிஷா ஹாசிம் ஆகிய இருவரும் பல பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்து மாணவர்களின் முன் னேற்றத்திற்காக ஆற்றிய தொண்டுடன் மட்டுமல்லாது, இப்பாடசாலையை கட்டியெழுப்புவதில் தீவிர அக்கறை காட்டி வந்துள்ளனர்.
தற்காலிக வகுப்பறைகள் அரபு போதிக்கக்கூடிய தைக்காவில் ஆரம்பிக்கப்பட்டிருந்ததால் பாடசாலையை நிரந்தரக் கட்டடமொன்றிற்கு மாற்ற, ஜனாப் ஜே, எல். ஜுனைதீன் அவர்கள் முன்வந்தார்கள். அன்னாரின் தந்தையின் ஞாபகமாக தறபோது பாடசாலை அமைந் துள்ள நிலப்பரப்பை மனமுவந்தளித்து. அழியாத புகழை தனதாக்கிக் கொண்டார்கள். அதே தந்தையின் ஞாபக மாகவே இப்பாடசாலைக்கு ஜமாலியா முஸ்லிம் வித்யால யம் எனப் பெயர் சூட்டப்பட்டது,
இது தவிர, வயல் வரம்பிலே விழுந்தெழுந்து, சேற்றி னிலே புரண்டு பள்ளிக்கூடம் சென்ற பாலகர்களின் அவல நிலைகண்ட பெருந்தகை எம். எச். எம். ஹலீம்தீன் (கல்ஹின்னை கவியரசு) சகோதரர்கள் பாதை அமைப்பதற் கான நிலத்தை அன்னார்களின் அருமைத் தந்தையின் ஞாபகார்த்தமாக வழங்கினார்கள்.
பல சிரமங்களிற்கு மத்தியில் 1979ம் ஆண்டு ஜனவரி 22ம் திகதி மர்ஹஸீம் ஜனாப் வை. ஏ. அஸிஸ் பாஸ்டரின்

Page 23
42
உதவியினால், தற்காலிக ஓலைக் கட்டடம் ஒன்று உரு வானது. 1982ம் ஆண்டு மதிப்பிற்குரிய வெளிநாட்டமைச் சிர் ஜனாப் ஏ. சீ. எஸ். ஹமீத் அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டு 1983ம் ஆண்டு மார்ச் 20ம் திகதி புதிய கட்ட டத்தைத் திறந்து வைத்தார்:
அதற்கிடையில் இயற்கையின் சீற்றம் சிறார்களின் கல்வியைச் சீர்குலைதது விட்டது தற்காலிக கட்டடம் தரைமட்டமாகியது. தெய்வாதீனமாக மாணவர்கள் உயிர் தப்பினர், ஒயாது பெய்த பெருமழையினால் கட்டடத்தளம் சேறாக மாறியதால் குடையின் கீழே ஆசிரியரும் றப்பர் சீலையின் கீழ் மாணவரும் தஞ்சமடைந்து தாளா கல்வித் தாகத்தைத் தீர்த்தனர். பச்சைப் பாலகரின் பிரார்த்தனை யின் பயனாக காலம் சென்ற அல்ஹாஜ் பளீல் தீன் அவர் களின் உதவியால் தகரக் கூரைகள் வேயப்பட்டு மீண்டும் கல்வியைத் தொடர்ந்தனர்.
ஒரு கல்விக் கூட்டத்தின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு இன்றியமையாதது. பெற்றோரின் பேருதவியாலும் ஈழத்து முஸ்விம் கல்வி வளர்ச்சியில் அரும் பெரும் தொண் டாற்றும் அமைச்சர் ஏ. சீ. எஸ். ஹமீத் அவர்களின் மனம் கனிந்த உதவியாலும் மீண்டும் 1986ம் ஆண்டு இன்னொரு நிரந்தரக் கட்டிடமும் உருவாகியது,
இத்தனைக்கும் மத்தியில் இக்கலைக்கூடம் இன்று பத்தாண்டு நிறைவுகளைக் கொண்டாடும் இப்பொன்னரிய வேளையிலே வேதனைகளையும், சோதனைகளையும் கண்டு சளைக்காத மாணவர்களின் கல்வி வளர்ச்சி துரிதமாக வளர்ந்துகொண்டே வருகின்றது;
கல்வியில், புலமைப் பரீட்சைகளிலே தேறி வரும் இப்
பாடசாலையின் மாணவமணிகள் இவ்வருடம் முதன்முறை
யாக சாதாரண தரப் பரீட்சை எடுக்கவிருச்கின்றனர்"

43
அதிலும் சிறந்த பெறுபேறுகளை எதிர்பார்க்கலாம். ஆரம்பக் சல்வியை இவ்வித்தியாலயத்தில் தொடங்கிய மாணவர்கள் வேறு பாடசாலைகளில் கற்றபோதும் சென்ற வருடம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அத்துடன் நின்று விடாமல் கலைத்துறைகளிலும், விளையாட்டுத் துறைகளிலும் இப்பாடசாலை மாணவர்கள் சிறந்த முறையில் தங்கள் திறமைகளைக் காட்டி வருகின் றனர், தமிழ்த்தின விழா, ஆங்கில தின விழா, கலைவிழா, போன்றவற்றிலும் வட்டார ரீதியில் நடாத்தப்படும் சகல போட்டிகளிலும் தங்கள் ஆற்றல்களை பல வழிகளிலும் வெளிப்படுத்தியுள்ளனர். இலை மறை காய்களாயிருந்து, இளங் கலைஞர்கள் பலர் கலைத்துறைகளில் ஈடுபட்டு லருகின்றனர்.
இவற்றிற்கெல்லாம் காரணம் மாணவர்களின் திறமை யும், ஆற்றலும் மட்டுமின்றி ஆசிரியர்களின் நெறி தவழா வழிகாட்டலுமாகும்.
ஏறக்குறைய 9 ஆண்டுகளாக அளப்பரும் சேவை யாற்றி மாணவர்களின் முன்னேற்றத்தில் முழு மூச்சாக நின்று வளர்ச்சிக்கும். உயர்ச்சிக்கும் வித்திட்ட அறிவகத் தின் ஸ்தாபன அதிபர் ஏ. எச். எம். நயீம் அவர்கள் தன் அந்திம காலத்தையெட்டாமலே ஆசிரிய சேவையிலிருந்து ஒய்வு பெற வேண்டிய நிர்ப்பந்தத்திற்காளாயுள்ளது கவலைக்குரிய விடயமாகும். ஜமாலியாவின் கல்வி வளர்ச்சிக்காக மாணவர் நலனில் அக்கறை கொண்டு இரவென்றும், பகலென்றும் இயற்கையின் திருவிளை யாடல்களிற்கு மத்தியிலும் உழைத்து, இன்று நோயாளி யாகி விட்ட அன்னாரின் சேவை கனலயக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

Page 24
44
அத்துடன், 1986 தொடக்கம் வித்தியாலயத்தில் அதிபராக இப்பகுதி மக்களின் ஏ கோபித்த வேண்டுகோளிற் கிணங்கி சேவை புரிய முன் வந்த மூதூரைச் சேர்ந்த ஜனாப் எம். எம்* எம். சாதிக் அவர்களை தன்னலம் கருதாத தியாகியென்றே கூறுதல் பொருந்தும். இவர் தகுதியும். திறமையும், நேர்மையும் மிக்க ஒரு சிறந்த அதிபராவார். அத்தகைய தியாக புருஷர் இந்த கலையகத் தில் இன்றும் கடமை புரிவது பெருமைக்குரிய விடயமே. இவரின் முயற்சியினால் இன்று இக்கலையகம் முன்னேற்றப் பாதையில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது, பல்வேறு முயற்சிகளிற்கும், எதிர்கால நடவடிக்கைகளிற் கும் வித்திடப் பட்டுள்ளது. அதிபரின் முயற்சிகளாலும், சேவை மனப்பான்மையாலும் பல எதிர் காலத் தேவை களிற்கு அடிகோலப்பட்டுள்ளது. இச் செயற்பாடுகன் நிறைவேறுமிடத்து இக்கலையகம் எதிர்காலத்தில் கல்ஹின் னைக் கிராமத்திற்கே ஒளியூட்டும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஏறக்குறைய 400க்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ள டக்கிய இக் கலையகத்தில் பன்னிரெண்டு (12) ஆசிரியர்கள் சேவை புரிகின்றனர். பல்வேறு துறைகளில் மாணவ மணி கள் ஈடுபடுந்தப்பட்டு வருகின்றனர். ஒழுக்கத்திலும், பண் பாட்டிலும் மேம்பட்டு திகழ்கின்றனர். சேற்றில் முளைத்த செந்தாமரைகளாம் நம் மாணவர்கள் கல்விப் பயணத்தில் இன்னல் பல தாண்டி இன்று நன்னிலைக்கு வந்துள்ள்னர்.
இக் கலையகத்தின் வளர்ச்சிக்கு ஒத்தாசையும், உறுதுணையும் நல்கி வரும் கெளரவ வெளிநாட்டமைச்சர் ஜனாப் ஏ. சி ஷாகுல் ஹமீத், உட்பட முன்னாள் கல்வியதி காரி ஏம்; ஏ’ கணி, தற்போதைய கல்வியதிகாரி அல்ஹாஜ் எம். வை. எம், முஸ்லிம், கண்டிப் பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் ஜெனரல் வி. எஸ். குடலிகம் முஸ்லிம் பாட சாலைகளிற்கான, பிரதம கல்வியதிகாரி ஜனாப் எம். ஏ.

45
குத்தூஸ் ஆகியோர் வழி காட்டிகளாக இருந்து, இக் கலையகம் வளர ஒத்துழைப்பு நல்கி வருவதை இக் கலை யகம் பெருமையுடனும், நன்றியுணர்வுடனும் நினைவு கூரு கின்றது
அத்துடன் பெற்றோரும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரும் இப் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு நல்கிடும் உதவியும், ஒத்துழைப்பும் மேலும் பாராட்டக் கூடியதாகும். (நன்றி . தினகரன், - 30-8-1988)
10 ஆண்டு நிறைவு மலர், 1978-1988 ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயம், பட்டகொள்ளாதெனிய, பிரசுரித்துள்ள மலரில் அதிபரின் அறிக்கை வித்தியாலய நடவடிக்கைகள் பற்றி எடுத்துக் கூறு கிறது. வித்தியாலயம் பற்றிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. மலரின் ஆசிரியர் : ஜனாப் எஸ். எச் நிலாப்தீன், ஆசிரியர் குழுத் தலைவர் . அதிபர் ஜனாப் எம். எம். எம் சாதிக், ஏனைய அங்கத்தவர்கள் ஜனாப்கள் ஏ. எச். எம். நயீம், ஜி. ஜி. என். ம ன் சூ ர், என். ஏ. அ ஸிஸ், எம். ஹிலாலி மஜீத், ள்.சி ஏ., எம். எஸ். எம்.எல்.
நகீப். ஜன ; பா கே.என்ஹாகிம்,
5-3A

Page 25
நாற்பதாண்டுக்கு மேலாக
இறை இல்லச் சேவை
அல்ஹாஜ் எஸ். எம்: ஹனிபா
அறம் செய விரும்பு என்ற ஒ ள  ைவ ய ரா ரின் ஆணையை, நன்றாக உணர்ந்திருந்த முன்னைய கால முஸ் லிம் மக்கள், பள்ளிவாசல்களை அமைப்பதில், அதிக சிரத்தை காட்டினர். அவற்றின் பராமரிப்பிற்காக, பல சட்டிடங்கள், காணிகளை அன்பளிப்புச் செய்துள்ளனர். இந்தப் பின்னணியில், கண்டிக்கு அருகிலுள்ள கல்ஹின்னை யில், சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒலை யால் கட்டப்பட்டிருந்த சிறிய பள்ளிவாசலை, அளவில் பெரிதாக்கி நிரந்தரக் கட்டடமும் அமைப்பதற்கு அரும் பாடுபட்டவர் ஆதம்பிள்ளை மகன் உமர் லெப்பை ஹாஜி யார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அவர் இந்த அரும்பணியைச் செய்தார்.
அக்குறணையிலிருந்து முதன் முதலில் கல்ஹின்னை சென்று குடியேறிய வாப்புக் கண்டு என்பவரின் மகளை மணமுடித்த முஹம்மது காஸிம் என்பவரின் மகன்தான் ஆதம்பிள்ளை. முஹம்மது காஸிம் என்பவர் கல்ஹின்னை யில் குடியிருக்கவில்லை. திருமணம் செய்து கொண்ட பின்னர், மீண்டும் கண்டிக்கருகிலுள்ள நித்தவெலயில் அவர் குடியேறினார், அவரின் மகனான ஆதம்பிள்ளை, அங்கி ருந்து கல்ஹின்னையை அடுத்துள்ள ரம்புக்எல எனும் கிராமத்தில் வசித்து வந்தவரும் வாப்புக் கண்டுவின் தம்பியு மான இஸ்மாயில் கண்டு அடப்பனாரின் மகள் ஹலீமாவை மணமுடித்தார். இவர்களுக்கு ஆறு ஆண்களும், ஒரு பெண்

47
ணும் இருந்தனர். ஆதம் பிள்ளையின் மூன்றாவது மகன் உமர் லெப்பை இவர் 1837ம் ஆண்டளவில், பிறந்தார். மரியம் பீவி என்பவரைத் திருமணம் செய்து, கல்ஹின்னைப் பகுதியில் முதன் முதலில் கடை ஒன்று திறந்ததனால் ‘கடே முதலாளி’ எனும் சிறப்புப் பெயரும் பெற்று. வாழ்ந்தார். முதன் முதலில் 1889ம் ஆண்டில் ஹஜ்ஜுக்குச் சென்றார். இரண்டாவது முறை 1923ம் ஆண்டில் ஹஜ்ஜுக்குச் சென்றபோது, தனது எண்பத்தாறாவது வயதில் மக்காவில்
5 f'6) 67 FT fi
ஆதம்பிள்ளையின் முன்றாவது மகனான உமர் லெப்பையின் மூன்றாவது மகன் முஹம்மது ஷரீப், கல்ஹின் னைக்கு அரும்பணி புரிந்த பெருந்தகை இவர் காலமாகி ஓராண்டு பூர்த்தியாகி விட்டது. 1900ம் ஆண்டில் தந்தை முதல் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்த சமயம் பிறந்த இவர், ஹிஜ்ரி 1400 துல்கஃதா மாதம் 27ம் பிறையன்று (7 10.1980) இறையடி சேர்ந்தார்.
கல்ஹின்னையிலிருந்து இரண்டரை மைல் தூரத்தில் உள்ள அங்கும்புரை சிங்களப் பாடசாலையில் தனது தம்பி களான ஸாலி லெப்பை, ஹ"ஸைன் லெப்பை ஆகியோ ருடன் 1916ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதியிலிருந்து சிங்களம் படித்தார்: நாலைந்து வருடகாலம் சிங்களம் படித்த பின்னர் பாடசாலைக்குப் பிரியா விடை சொல்லி விட்டு, வியாபாரத்தில் இறங்கினார், கல்ஹின்னையில் அக்காலத்தில் தமிழ்ப் பாடசாலை இருக்கவில்லை. குர்ஆன் ஒதுவதற்கு மாத்திரம் சில பெரியார்கள், தமது வீடுகளில் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தனர். அத்துடன், மார்க்க அறிவையும் போதித்தனர். தமிழ் படிக்க விரும்பியவர்கள், தெரிந்தவர்களிடம் கேட்டுப் படிக்க வேண்டிய நிலை அப்பொழுதிருந்தது. இவர், தனது மூத்த சகோதரரான

Page 26
48
ஏ, ஓ, எம். காஸிம் லெப்பை ஹாஜியார் அவர்களிடம் கேட்டு. தமிழைப் படித்தார்.
வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போதிலும், மார்க்கத் தின் முறைப்படி நடப்பதில் அதிக கவனம் செலுத்திய இவரை, சிறிய தந்தையான அலி உதுமா லெப்பை பல காலமாக அவதானித்து வத்தார். கல்ஹின்னையின் முதலா வது கிராமத் தலைலர் (ஆரச்சியார்) பதவியை வகித்துவந்த அலி உதுமா லெப்பைதான், ஊர்ப் பள்ளி வாசலின் நம்பிக் கைப் பொறுப்பாளர் (மத்திசம்) ஆகவு மிருந்தார். தனக்கு வயதாகி வருவதால் இந்தப் பொறுப்பைக் கொடுப்பதற்குப் பொருத்தமான ஒருவரைத் தேடுவதில் அவர் கவனம் செலுத்தியபோது, ஷரீப் லெப்பையின் சமய ஈடுபாடு அவரைக் கவர்ந்தது. 1936ம் ஆண்டின் மிஹ்ராஜ் கந்தூரி யைப் பள்ளிவாசலில் நடத்தும், பொறுப்பையே முதலில் இவருக்குக் கொடுத்தார். அதன் பின்னர், இவரின் திறமை யைக் கண்ட சிறிய தந்தை, சற்றுச் சற்றாகப் பொறுப்பு களை அவரிடமே சாட்டினார். இறுதியில் 1908ம் ஆண்டு, முழுப் பொறுப்பையும் இவருக்குக் கொடுத்து விட்டு, சிறிய தந்தை ஒய்வெடுத்தார். அதே ஆண்டில் கல்ஹின்னையின் முஸ்லிம் விவாகப் பதிவுகாரராகவும் நியமனம் பெற்ற ஷரீப் லெப்பை, ஊர் மக்களால் ‘காதியார்’ என அழைக்கப் பட்டார். அன்றிலிருந்து, இன்றுங்கூட அவர் வீடு ‘காதி யார் வீடு' என்றும் அவரின் பிள்ளைகள் "காதியார் மகன் அல்லது மகள்' என்றும் தான் அழைக்கப்படுகின்றனர். விவாகப் பதிவுக்காரர்தான் காதியார் வேலை பார்ப்பவரும் என்ற தப்பு அபிப்பிராயத்தினால், மக்கள் அவருக்கு இந்த கெளரவமான பட்டத்தைச் சூட்டினர்.
இரு பதவிகளையும் பொறுப்பேற்ற நாளிலிருந்து, காலமாகும் வரை அவர் மிகத் திறம்படச் செய்து வந்தார். ஊர் நிர்வாகம் அவர் 'மத்திசம்’ வேலை பார்த்த காலத்தில்

49
எவ்வளவு சிறப்பாக நடந்தது என்பதை மதிப்பிடுவதற்கு ஊர் மக்களின் கூட்டம் ஒன்றில் 'அவரே ஆயுள்கால நம் பிக்கைப் பொறுப்பாளராய் இருத்தல் வேண்டும்” என்று தீர்மானிக்கப்பட்டதொன்றே போதும். 'பள்ளிவாசலின் வருமானம் போதாது, அங்கே குறை, இங்கே குறை என் றெல்லாம் சிலர் சில சமயங்களில் அவர் மீது பழி சுமத்திக் கொண்டிருந்தனர். அப்படிக் குறை கூறிய கோஷ்டியில் ஒருவரே கூட்டத்தில் எழுந்து, “ஷரீப் ஹாஜியார்தான் ஆயுள்காலத் தர்மகர்த்தாவாய் இருத்தல் வேண்டும். அவரைப்போல், எங்கள் ஊர் நிர்வாகத்தில் யாருமே அளப்பரிய சேவை செய்தவர்கள் இல்லை’ என்று உரத்த தொனியில் கூறியபோது, சபையிலிருந்த பலரின் கண்களில் (நானுட்பட) கண்ணிர் மல்கியதை நான் கவனித்தேன். இறுதிக் காலத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சமயம் அவரின் கடமைகளைச் சரிவரச் செய்வதற்கு மூத்த மகன் டாக்டர் எம். எஸ். எம். ஜ"னைதீன், இரண்டாவது மகன் எஸ். எம். தாஜிதீன் ஹாஜியார், ஆகிய இருவரும் பக்க பலமாய் இருந்து உதவினர். அவர் காலமாவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு பள்ளிவாசல் கடமைகளைப் பார்ப்ப பதில் கவனம் செலுத்திய மூன்றாவது மகனான அல்ஹாஜ் அப்துல் அஸிஸ், தொடர்ந்து தந்தையைப் போல் பள்ளி வாசல் நிர்வாகத்தைச் செய்து வருகிறார்.
முதலில், 1948ம் ஆண்டில் ஹஜ்ஜுக்குப் போன மர்ஹூம் ஏ ஓ. எம். ஷரீப் லெப்பை, இரண்டாவது முறை 1978ம் ஆண்டில் பாரியாருடன் சென்றார். 1961ம் ஆண்டில் சமாதான நீதவானாக அவர் நியமிக்கப்பட்டார். எல்லா நிலைகளிலும் அவர் ஊர் மக்களுக்கு உதவிகள் செய்து, தவறான வழிகளில் செல்ல முனைபவர்களை நல்வழிப் படுத்தி வந்துள்ளார், வெளியூர்களில் இருந்து, “குமர் காரியம்’ என்றும் ஏனைய காரணங்களைச் சொல்லிக் கொண்டும் வந்த அனைவரும், அவரைக் கண்டு உதவி

Page 27
50
பெற்று. திருப்தியுடனேயே செல்வர். அப்படியான கார னங்களுக்காக அவர் ஊர் மக்களுக்கும் பண உதவி செய் துள்ளார். கல்தறின்னைக்கு வெளியில் அவர் பெற்றிருந்த செல்வாக்கிற்குச் சான்று பகரும் வகையில், அவரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்கு கண்டி, மாத்தளை, அக்குறணை, குருநாகல் போன்ற பற்பல இடங்களைச் சேர்ந்தவர்கள் கூடி, கல்ஹின்னையில் என்றுமே காணாத பெருந் தொகையான மக்கள் திரண்டிருந்தனர். அவரின் அரும்பணிகளை அங்கீகரித்து, அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக (நன்றி . தினகரன் 25-10-1981)
கல்ஹின்னை ஏ ஒ.எம். ஷரீப் ஹாஜியார், ஜே.பி
 
 

9
வாழ்ந்தால் வாழ வேண்டும் இவரைப் போல!
அல்ஹாஜ் எஸ் எம். ஹனிபா (பத்திரிகையாளர்- சட்டத்தரணி)
சுண்டி மாவட்டத்தின், ஹாரிஸ்பத்துவ தொகுதியில், அக்குறணைக்கு அருகிலுள்ள கல்ஹின்னையில், பல்லாண்டு காலம் அரிய சேவை செய்து காலமான சமாதான நீத வான் அல்ஹாஜ் ஏ. ஓ. எம். ஷரீப் அவர்கள் மறைந்து ஓராண்டு பூர்த்தியாகி விட்டது. அவரின் தந்தை அல் ஹாஜ் ஏ. உமர் லெப்பை, கிராமத்தின் முன்னேற்றத் திற்குப் பெரும் பணி புரிந்துள்ளார். கல்ஹின்னைப் பள்ளிவாசலைப் புதுப்பித்துக் கட்டிய அவர், மையவாடிக் கான காணியையும் வக்பு செய்தார். குர்ஆன் மத்ரஸா நடத்துவதற்கும் அவர் பெருமளவில் பண உதவி செய்துள் ளார். கல்ஹின்னையிலிருந்து முதன் முதலில் 1899-ம் ஆண் டில் ஹஜ்ஜ"க்குச் சென்ற மூவருள் ஒருவரான உமர், இரண்டாம் முறை 1923-ம் ஆண்டில் ஹஜ்ஜுக்குச் சென்ற போது, தனது எண்பத்தாறாவது வயதில், மக்காவில் காலமானார். தந்தையின் வழியைப் பின்பற்றி, கிராமத் தின் முன்னேற்றத்திற்காக ஆண்மக்களும் சேவை செய்
566TIT
இவர்களில் குறிப்பிடத்தக்கவர் அவரின் கடைசிப் புதல்வரான அல்ஹாஜ் ஏ.ஓ.எம். ஹ"லைன் ஆவார். இவர், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் மாணவனாயிருந்த காலத்தில், 1925-ம் ஆண்டிலிருந்தே, கிராமம் முன்னேறு வதற்கு ஆற்றியுள்ள சேவைகள் பல. அவற்றை எல்லாம். அண்மையில் ஆங்கிலத்தில் வெளியான "த கிரேட் ஸ்ன்" (புகழ் பெற்ற பெருமகன்) எனும் நூல் எடுத்துக் கூறு கிறது. ஜ்னாப் ஹ"ஸைன், ஹாரிஸ் பத்துப்பகுதிக்கே

Page 28
52
முதல் புரக்டராக 1932-ம் ஆண்டில், சித்தி எய்தினார். அன்றைய நிலையில், அவர் அடைந்த கல்வி முன்னேற் றத்தை, ஹாரிஸிபத்துப் பகுதியின் முன்னேற்திற்காக அவர் பயன்படுத்தியது பாராட்டத்தக்கதாகும்.
ஊர்ப் பள்ளிவாசலின் 'மத்திசம்’ எனும் தர்ம கர்த்தாப் பொறுப்பை மிகத் திறமையுடன் சுமார் நாற் பது வருட காலம் ஏற்றிருந்த ஜனாப் ஏ. ஓ. எம். ஷரிப, பல வருட காலமாக கிராமத்திள் முஸ்லிம் விவாகப் பதிவு காரராகவும் இருந்தார். இதனால், இவரை கிராம மக்கள் *காதியார்’ என்று அழைக்கலாயினர். இன்றும், அவரி ருந்த வீடு, அவரின் பிள்ளைகளை ‘காதியார்” வீடு, காதியார் மகன் இன்னார் என்றுதான். மக்கள் குறிப்பிடு கின்றனர்.
காலஞ்சென்ற தந்தையைப்போல், அவர் கிராமத்தில் எழுந்த தகராறுகளை எல்லாம் தீர்த்து வைத்தார். **ஒமர் லெப்பை ஹாஜியார் காலத்தில், எங்கள் ஊரில் யாருமே வழக்குக்குப் போனதில்லை. அவரே சம்பந்தப் பட்டவர்களிடம் பேசிப் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்து விடுவார்’ என்று அப்பொழு வாலிபராயிருந்த இன்றைய முதியவர்கள் பலர் கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். *அவரைப்போன்ற மனிதர் இன்றும் எல்லா ஊர்களிலும் இருந்தால், கோடுகளுக்கு வேலையே இராது" என்றும் நன்றியுணர்ச்சியுடன் பலர் கூறுகின்றனர்.
ஷரீப் ஹாஜியார் காலத்தில், தவறான வழியில் நடந்த ஒரு வாலிபனும், இளம் பெண்ணும் ‘ஹத்து" அடித்து, பள்ளிவாசலில் தண்டிக்கப்பட்டது. ஷரீஅத் முறைப்படி நடாத்தப்பட்ட சம்பவமாகும்:
இப்படியான நிகழ்ச்சி, வேறு முஸ்லிம் கிராமங்களில்
நடப்பதும் அரிது, இத்த முறையில் தண்டிக்கப்படுவதும் அரிதுதான். தனது செயல்களில் எல்லாம் ஷரீஅத் முறைப்

53
படி நடந்து வந்த அவரின் அரும்பணியை, கல்ஹின்னை மக்கள் என்றுமே மறக்க முடியாது.
தன்னால் நேரில் பேசித் தீர்த்து வைக்க முடியாத தகராறுகளை, பள்ளிக்கு எடுத்து ஜமாஅத்தாரின் தீர்ப் புக்கு விட்டு, வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆவுக்கு பின்னர் **விசாரணை' நடத்தி, அவர் தகராறுகளைத் தீர்த்து வைத்த முறையே தனி. அதைப்பற்றி, இ ன் று ஸ் ள படித்த வாலிபர்கள் ஆராய்ச்சி நடாத்தி, ஆக்கமான நூல் ஒன்றையும் வெளியிடலாம்.
தனிப்பட்ட நபர்களுக்கு, வெளிப்படையாகவும், இரகசியமாகவும் அவர் செய்துள்ள உதவிகளைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். இத்தகைய பெருந்தகை 1980-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் திகதி காலமான போது, கல்ஹின்னையின் வரலாறறில் என்றுமே காணாதி பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். பள்ளிவாசலி னுள் ஜனாஸாத் தொழுகைக்காக நெருக்கமாக நின்று இடம் போதாமல், மேல்மாடியிலும், பெருந்தொகை யானோர் நிற்க வேண்டி ஏற்பட்டது. அதே போன்று பெருந்தொகையான முஸ்லிமல்லாதார், பள்ளிக்கு வெளி யில் நின்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். விசேஷ பஸ்களும், கார்களும் அன்று கல்ஹின்னை வந்தது போல் என்றுமே வந்ததில்லை. அவரின் அரும்பணிகளை, அல்லாஹ் (ஜல்ல ஜலாலுஹ") அங்கீகரித்து, பிர்தெளஸ் எனும் சுவன பதியில் நல்லிடம் வழங்குவானாக. ஆமீன்! (நன்றி : உதயம் 9-10-1981)
5 4 ★

Page 29
கல்ஹின்னை வளர்க்கும் தமிழ் எஸ் எம். இம்தியாஸ், பீ கொம்.
மத்திய இலங்கையின் மணிநகர்; மறை பல மாண்புற விளங்கும் திருநகர்; மலையகத்தின் தலைநகர், மதிப்புயர் எழில் நகர்; கண்டி மாநகர்.
இந்த வளநகர் கண்டியின் வட எல்லையில் பதின் மூன்றாவது மைலில் அமைந்துள்ளது, கல்ஹின்னை எனும் கவின் மிகு நல்லூர்.
ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு முஸ் லிம்கள் குடியேறினர் கண்டி நகர்க் கண்  ைம யி ல் அமைந்துள்ள நித்தவெல, வட்டப்புளுவ ஆகிய ஊர்களி லிருந்து இவர்கள் இங்கு வந்ததாகக் கூறுவர்.
இந்தக் கிராமத்தில் குடியேறிய நாள் முதலே குறிப் பிடக் கூடிய அளவிற்கு வளமாகவும், கண்ணியமாகவும், மரியாதையோடும் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் தம்மை நாற்புறமும் சூழ்ந்து வாழும் சிங்கள பெளத்த மக்களுடன் நல்லுறவை வளர்த்து, சமாதானமாக வாழ்ந்து வருகின் றனர்.
சிங்கள மொழிபேசும் மக்களுடன் சேர்ந்து வாழ்ந் தாலும், செந்தமிழ் மொழியையே இவர்கள் தம் தாய் மொழியாகத் தலைக்கொண்டு போற்றி வருகின்றனர்.
ஆரம்ப காலத்தில், அதாவது; 1934 -ம் ஆண்டு வரை கல்வி வளர்ச்சிக்கு இங்கே ஒரு பாடசாலையும் இல்லாமல் இருந்தது.
**லெப்பை" என்றழைக்கப்பட்ட சிலர் தத்தமது வீடு களில் பிள்ளைகளுக்குத் திருக்குர்ஆன் ஓதக் கற் று க்

55
கொடுத்தனர். அத்துடன் அரபுத் தமிழில் அமைந்த தொழுகை அடைவு, அதயு மாலை, பெருமானார் மற்றும் மார்க்க மேதைகள் மீது பாடப்பட்ட 'மெளலிது’. புகழ் மாலைகள் போன்றவற்றையும் கற்றுக் கொ டு த் து
வந்தனர்.
ஆர்வமுள்ள சிலர் அயலூரில் வதியும் பெளத்த குருமாரிடம் ஒரளவு சிங்கள மொழியை வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டனர்.
இவ்வாறு, வீட்டிலே தமிழ் மொழியைப் பேசியும்
சுற்றுப் புற மக்களுடன் சிங்கள மொழியில் தொடர்பு கொண்டும் வாழ்ந்து வந்த கல்ஹின்னை முஸ்லிம்களிடம் பார்க்கப் பற்றும், அதன் காரணமாக எழுந்த தமிழ்ப் பற்றும் மதித்துப் போற்றக் கூடிய அளவு இருந்ததென் பதை அவர்களிடமிருந்த ஒரு பண்பு நிதர்சனமாகக் காட்டிக் கொண்டிருந்தது. போற்றுதற்குரிய அந்தப் பண் பின் பிரதிபலிப்புத்தான் கல்ஹின்னையை மலையகத் தின் தமிழகமாகத்" திகழ வைத்த பணிக்கு அடிநாதமாக அமைந்தது என்பதையும் நாம் அவதானிக்கலாம்.
அரபு மொழிக்கு அடுத்ததாகத் தமது மறை மொழி யாக அமைந்துள்ளது தமிழ் மொழிதான் என்ற அபிப் பிராயம் அவர்கள் மனதில் ஊறி இருந்திருக்க வேண்டு டும். அதனால்தான் போலும் தமிழ் மொழியைத் தணி யாரிடம் கற்றே ஒரளவு எழுத வாசிக்க கற்றுக் கொண்டவர்கள் கூடச் செம்மல் எம்பெருமானின் சிறப்பான வாழ்வைக் கூறும் சீறாப்புராணம், நபி சுலைமான் பல்கீஸ் வரலாற்றைச் சுவைபடக் கூறும் இராஜ நாயகம் கெளதுல் அஃழம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் அற்புத வாழ்வை விளக்கும் முஹியித்தீன் புராணம், நாகையந்தாதி, இராஜமணி மாலை, போன்ற

Page 30
56
பல இஸ்லாமிய இலக்கியக் கருவூலங்களை அவர்கள் ஆர்வத்தோடு வாங்கிப் பாதுகாத்து வைத்திருந்தார்கள். அதே வேளை, திங்கள், வெள்ளி இரவுகளில் இவற்றை பக்திச் சிரத்தையோடு பாடி மகிழ்வதும் இவர்களது வழக்கமாக இருந்தது
கருத்து விளங்கியதோ, இல்லையோ தமக்கு வாழ்வு நெறி காட்டிய கண்ணியத்திற்குரிய பெரியார்கள் பற்றிய நூல்கள் அவை என்று மதித்து, பணம் கொடுத்து வாங்கி வீட்டில் வைத்திருப்பதே பாக்கியமாகும் என்று கருதியிருக்க வேண்டும் இவர்கள்.
அத்துடன் முஸ்லிம் புலவர்கள் பாடிய பதம் என்று வழங்கும் பக்திப் பாடல்களைக் கொண்ட நூல்களையும் அவர்கள் வாங்கி அப் பதம் எனும் பாடல்களை இசை யோடு பாடவும், பயின்றிருந்தார்கள், அவர்கள். அந்தப் பதங்களை அண்ணல் நபி பேரில் ஒதப்படும் மெளலித் மஜிலிசுகளிலும் இத்தகைய மற்றும் வைபவங்களிலும் போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் பாடும் அழகு பார்த்தும், கேட்டும் பரவச மெய்தக் கூடியதாகும்.
இவ்வாறு பதம் பாடும் துறையில் பீ ரி ஹெ ல முஹம்மது காஸிம் லெப்பை, கல்ஹின்னை அல்ஹாஜ் A.O.M. காஸிம் லெப்பை, மூ. ஹபிப் அஹம்மத் லெப்பை, போன்ற பலர் விற்பனத்துவம் பெற்று வி ள ங் கி ன i என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
அதே போலத் திருமண வீடுகளில் மணமக்களை வாழ்த்திப் பாடும் சோபனம்" என்ற பாடல் வகையும் இங்கு பிரசித்தி பெற்று விளங்கியது. இத்துறையில் இன்றும் வாழும் “கண்ணாடி ஹாஜியார்” என்று அழைக் கப்படும் சரீப் ஹாஜியார் அவர்கள் பிரசித்தி பெற்றுத் திகழ்கிறார்கள்.

57
கால மாற்றத்தின் தாக்கத்தினால் நமது கலாசாரத் திற்கு வலுவூட்டி வந்த இந்தப் பழக்கங்சள் அருகி வரு வது கவலை தருவதாகும்.
எவ்வாறிருப்பினும், பக்திப் பெருக்கிலே திளைத்த நமது மூதாதையர் அமைத்த இந்த அடிப்படை இலக்கிய உணர்வு, பின்வந்த வாரிசுகளிடமும் பிரதிபலிக்கத் தவற வில்லை என்பதை நாம் வெளிப்படையாகக் காணலாம். அந்த உணர்வு தழைத்தோங்க மேலும் உரமூட்டியது கல்ஹின்னையின் கல்வி வளர்ச்சிக்கும், மறு மலர்ச்சிக்கும் காலாக உழைத்த கல்ஹின்னையின் ‘கல்வித் தந்தையாக விளங்குபவரும், சட்டத் தரணியுமான மர்ஹ"ம் அல்ஹாஜ் A: O. M. ஹ" ஸைன் அவர்கள் 1934-ம் ஆண்டு ஆரம்பித்த கமாலியா முஸ்லிம் தமிழ்ப் பாடசாலை என்பது நினைவு கூரத்தாகும்.
இந்தப் பாடசாலையில் தமது கல்வியை ஆரம்பித்த வர்களே, இன்று கல்ஹின்னைக்குப் புகழ் சேர்க்கும் தமிழ்ப் பணியின் நாயகர்களாக விளங்குகிறார்கள்.
சிங்களமும், ஆங்கிலமும் கற்றுச் சட்டத்தரணியாக விளங்கிய அல்ஹாஜ் A. O. M. ஹ"ஸைன் அவர்கள் கல்விக்கு ஊக்கம் கொடுத்த முதல்வராக மட்டுமல்ல, கோட்டாறு ஷெய்கு சுலைமானுல் காதிரி பாவா அவர் கள் அரபுத் தமிழில் இயற்றிய பதுறு மாலை எனும் நூலை அச்சிடுவதற்கான முழுச் செலவையும் கொடுத்துதவி, நூல் வெளியீட்டுத் துறைக்கு ஊக்கம் கொடுத்த மலையக முதல்வராகவும், வழிகாட்டி விளங்குகிறார்.
ஆக்கபூர்வமான அவரது வழிகாட்டலை மதித்துப் பின்பற்றிய கல்ஹின்னை இளைஞர்கள் சட்டத்தரணி ஹ"ஸைன் அவர்கள் தமது மறுமலர்ச்சித் திட்டங்களை அமுலாக்க அமைத்த “வாலிபர் முஸ்லிம் லீக்” போலவே

Page 31
58
*கல்ஹின்னை மாணவர் சங்கம்" என்ற அமைப்பை நிறுவிப் பணி புரியத் தொடங்கினர்.
கல்ஹின்னைப் பாடசாலையிலும், அயல் நகர்களாகிய கண்டி, மாத்தளை, கம்பளை மற்றும் கொழும்பு ஸாஹிறா கல்லூரி போன்றவற்றிலும் படித்த கல்ஹின்னை மாண வர்கள் எல்லோரும் இச் சங்கத்தில் அங்கம் வகித்துக் கல்வியுடன், எழுத்துப் பேச்சுத் துறைகளிலும் தம்மை வளர்த்துக் கொண்டனர். குறிப்பாகக் கூறுவதானல் இக் கிராமத்தின் தமிழ், இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டு, உரமூட்டிய காலம் ‘கல்ஹின்னை மாணவர் சங்க காலம்" எனத் துணிந்து கூறலாம்.
இந்த மாணவர் சங்கத்தின் ஆக்கபூர்வமான பணியே இன்று இங்கு எழுத்தாளர்களாகவும், கவிஞர்சளாக வும், பேச்சாளர்களாகவும் பிரசித்தி பெற்று விளங்கும் பெருமக்களை உருவாக்கியது என்பதைப் பெருமையுடன் குறிப்பிடலாம்.
மாணவர் சங்கத்தின் ஆரம்ப கர்த்தாவாகவும், செயலாளராகவும் விளங்கியவர்தான் இன்று "கல்ஹின்னைத் தமிழ் மன்றம்’ நிறுவி ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல் களை வெளியிட்டு, மேலும் இத்துறையில் தொடர்ந்து ழைக்கும் சட்டத்தரணி அல்ஹாஜ் S M. ஹ னிபா பீ. ஏ. அவர்கள். இவர் கண்டி அர்ச். அந்தோனியார் கல்லூரியில் படித்து எஸ். எஸ். ஸி பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றை எதிர் பார்த்திருந்த காலத்தில் ‘சமுதாயம்’ என்ற பெயரில் ஒரு காலாண்டுச் சஞ்சிகையை வெளி யிட்டுத் தமிழ்ப் பணியைத் தொடங்கியவர்.
மறைந்த தமிழ் மேதை யாழ்ப்பணப் பல்கலைக கழகத் துணை வேந்தர் பேராசிரியர், கலாநிதி சு. வித்தி யானந்தன் அவர்களின் முதல் நூலான "இலக்கியத்

வெளிவருகிறது! வெளிவருகிறது!!
* சமுதாயம்”
கட்சி, சமய, சாதி பேதங்களின்றி, தமிழ் வளர்ச்சியையும், சமூக ஒற்றுமை சமுதாய முன் னேற்றத்தையும் குறிக்கோளாகக் கொண்டு மூன்று மாதத்திற்கோருமுறை வெளிவரும்.
முதற் பிரதி மார்ச் மாதத்தில் வெளியாகிறது. இன்றே சந்தாதாராய்ச் சேருங்கள். வருட சந்தா : தனிப் பிரதி:
ரூபா 2-00. சதம் 50.
மற்றும் விபரங்களுக்கும், விளம்பர விகிதம் ஏஜன் வR கிபந்தனைகளுக்கும் எழுதுங்கள்.
மனேஜர், சமுதாயம், கல்ஹின்ன, அங்கும்புற, மாத்தளை. ங்ெஸ்லி பிரஸ் கண்டி V
1948 ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அறிவித்தல்
தென்றல் மதுரை காமராஜ் பல்கலைக் கழக இஸ்லாமிய் இலக்கியத் துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி எம். எம். உவைஸ் அவர்களின் முதல் (ஆங்கில) நூலான

Page 32
60
'இஸ்லாமியர் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய தொண்டு, கல்ஹின்னை கவிமணி எம். ஸி. எம். ஸுபைர் அவர்களின் *மலர்ந்த வாழ்வு" எனும் காவியம் ஆகியவற்றை ஆரம்ப வெளியீடுகளாகக் கொண்டு, தமிழ்நூல் வெளியீட்டுப் பணியை ஆரம்பித்த இவர், இலங்கையின் பி ர சித் தி பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதை, நாவல், கவிதை . வாழ்க்கை வரலாறு, இலக்கியச் சுவை சொட்டும் கட்டுரைத் தொகுப்புகள் எனப் பல்வேறு துறைகளிலும் நூல்களை வெளியிட்டும். எழுத்தாளர்களை ஊக்கியும் கல்ஹின்னை யின் தமிழ்ப் பணிக்குத் தன்னிகரற்ற பங்களிப்பை ஈந்து வருகிறார்.
அடுத்ததாகக் கவிமணி எம். ஸி. எம். ஸ" பைர் அவர்களின் மணிக்குரல் பதிப்பகம் செய்து வரும் பணி யைக் குறிப்பிடலாம்.
கவிமணி ஸ"பைர் அவர்கள் கல்ஹின்னை மாணவர் சங்கத்தின் உப தலைவராகவும், துணைச் செயலாள ராகவும் பணி புரிந்தவர் சங்கத்தைக் காத்து வளர்த்தும், அதனால் தான் வளர்ந்தும் தமிழ்ப் பணியாற்றி வருபவர்.
1961 முதல், 864 வரை மாணவர்க்காக "மணிக்குரல் என்ற மாதாந்த சஞ்சிகையை வெளியிட்ட இவர் கல் ஹின்னையின் மூத்த கவிஞராகவும் விளங்குகிறார். இவர் கிராமிய இலக்கியக் கட்டுரைகளைக் கொண்ட *கண்ணான மச்சி", சிறுவர் இலக்கியமாக "மலரும் மனம்", எங்கள் தாய் நாடு இலக்கிய மலர்கள்' போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.
இவரது பணிகளுள் குறிப்பிடத் தக்க ஒன்று தானே ஒரு கவிஞனாக இருந்து கொண்டு, ‘முகில் மறைத்த முழுமதி போல மறைந்திருந்த மற்றொரு முஸ்லிம் கவிஞரை-கவிஞர் திலகம் அப்துல் காதர் லெப்பை

6
ஊக்குவித்து மீண்டும் பல்லாயிரம் கவிதைகளை எழுதத் தூண்டி, அவற்றைத் தமது மணிக்குரல் பதிப்பகம் மூலம் நூலாகவும் அச்சிட்டு வெளியிட்டுதவிக் குறி ப் பா சி முஸ்லிம் சமூகத்திற்கும், சிறப்பாசத் தமிழுலகத்திற்கும் அறிமுகப்படுத்தியதாகும். இதன் பயனாக கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்கள் மூலம் மகாகவி அல்லாமா இக்பால் அவர்களின் ஜாவீத் நாமாவும், உமர் கையாமின் ருபாய்யாத்தும், மற்றும் இக்பால் இதயம் இறசூல் சதகம், செய்னம்பு நாச்சியார் மான்மியம், தஸ்தகிர் சதகம், கார்வான் கீதம், முறையீடும் தேற்றமும் எனப் பல கருத்துக் கருவூலங்களாய் விளங்கும் கவிதை நூல்கள் தமிழுலகத்திற்குக் கிடைத்தன.
தொடர்ந்து, கல்ஹின்னையின் நாவலாசிரியரான ‘மாமா' என். எம் ஹனிபா அவர்களுடைய கலா நிலை யம் புரியும் பணியைக் குறிப்பிடலாம்.
‘மாமா' ஹனிபா அவர்கள் பகற்கொள்ளை, ஏமற்றம், மர்மக் கடிதம், இலட்சியப் பெண், குடும்ப விளக்கு பாவை பெற்ற பரிசு போன்ற பல நாவல்களை எழுதித் தமது கலாநிலையம் மூலமே வெளியிட்டுள்ளார்.
இவருடைய நாவல்களின் பெயர்கள் ஏதோ மர்ம நாவல்கள் போலத் தோன்றினாலும் சமூகப் பிரச்சினை களைத் துல்லியமாக விளக்கிச் சிந்தனையைத் தூண்டு பனவாக அமைந்துள்ளதை வாசிப்போர் உணரலாம்.
மற்றும் சிபா பதிப்பகம் மகளே கேள் என்ற நூலு டன் மார்க்கப் பிரச்சினைகளைச் சாதாரணமாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக ஹலாலும் ஹராமும், நான் கண்ட மக்கா, பெற்றோரும் பிள்ளைகளும் போன்ற பிரசுரங்கள்
as 4A

Page 33
62
நாற்பது வரையில் வெளியிட்டுள்ளதைக் குறிப்பிடலாம் இந்தப் பதிப்பகம் பெரும்பாலும் மார்க்க சம்பந்தப்பட்ட நூல்களையே வெளியிட்டு வருவது குறிப்பிடதக்கதாகும். கவியரசு கல்ஹின்னை எம். எச். எம். ஹலீம் தீன் அவர்கள் செய்து வரும் தமிழ்ப் பணியும் காத்திரமானது. ஆங்கிலக் கவிதைகளும் எழுதி வரும் இவர் ரோசஸ்’ புளசம்ஸ்" ஆகிய ஆங்கில நூல்களையும் மற்றும் தியாகச் சுடர், காலத்தின் கோலங்கள், இதய மலர் போன்ற தமிழ்க் கவிதை நூல் க  ைள யு ம் எழுதியுள்ளார், டீமாஸ் பதிப்பகம் என்ற தனது நிறுவனத்தின் மூலம் இவர் தனது சில ஆக்கங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்குறித்த ஐந்து பதிப்பகங்களும் செய்து வரும் தமிழ்ப்பணி கல்ஹின்னையில் வளரும் தமிழுக்குச் சிறப் பான ஆக்கம் தந்து வருவது கவனிக்கற்பாலதாகும்.
அத்து டன், கல்ஹின்னை எழுத்தாளர்களிற் பலர் இலங்கை அறிஞர்களுடனும், தமிழகம், மலேஷியா, சிங் கப்பூர் போன்ற நாடுகளின் தமிழறிஞர்களுடனும் கொண் டுள்ள தொடர்புகளும் கல்ஹின்னையின் தமிழ் வளர்ச் சிக்கு இன்னொரு காரணமாக அமைந்துள்ளது.
இன்று வளர்ந்து வரும் இளைஞர்களிலும் ஆர்வமுள்ள பலர் எழுத்துத் து  ைற யி ல் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பிரதிபலிப்பாக "அறிவு மொட்டு’ ‘கலை முத்து' என்ற பெயர்களில் கையெழுத்து மாத சஞ்சிகை வெளி யிடப்பட்டு வருவதும் நோக்கத் தக்கதாகும்.
உண்மையிலேயே முழுக்க முழுக்கச் சிங்களச் சூழலி லேயே வாழ்ந்த போதும், இலங்கையின் வேறெந்தக் கிராமத்திலும் இல்லாத அளவிற்கு கல்ஹின்னையில் தமிழ்

63
வளர்ச்சிக்கான முயற்சிகள் சீரிய முறையில் நடந்து வரு கின்றன என்பதை அவதானிக்கும் போது, மறைந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணை வே ந் த ர் பேராசிரியர், சு. வித்தியானந்தன் அவர் க ள் கல்ஹின் னையை ‘மலையகத்தின் தமிழகம்” என்று குறித்துப் பாராட்டியது, மிகமிகப் பொருந்தும் என்பது மறுக்க முடியாததாகும்.
ძზ ઈદ ძზ
கீழக்கரையில், 1990-ம் ஆண்டு டிஸம்பர் மாதம் 29 30, 31-ம் தேதிகளில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லா மியத் தமிழ் இலக்கிய மகாநாட்டின் சிறப்பு மலரில் இடம் பெற்ற கட்டுரை.

Page 34
11
Шbljih 66
ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்கு முன் ஒரு நாள் அதிகாலை நேரம். ஒற்றையடிப்பாதையில் ஓர் இளைஞர் நடந்து செல்கிறார்.
பேரறிஞர் ரி. பி ஜாயா அவர்கள் அதிபராகப் பணி புரிந்த கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியில் உளரீனியர்* வகுப்பில் படிக்கும் இளைஞர் அவர். கண்டி நகர் சென்று கொழும்புக்குச் செல்லவே தான் பிறந்த கிராமத்திலிருந்து, அளவத்துக்கொடை வரை ஏழு மைல் நடந்து சென்று, அந்த இளைஞர் பஸ் ஏற வேண்டியிருந்தது.
ஒற்றையடிப் பாதையில் அவர் கால்க ள் நடந்தன. ஊர் முன்னேற்றத்துக்கு உழைக்கும் திட்டம் தீட்டிக் கொண்டே சிந்தனையும் தொடர்ந்தது ஆம்! தான் படும் கஷ்டத்தை தனது சந்ததியினரும் படக்கூடாது என்பது அவர் எண்ணம். அதனால், தனது ஊருக்கு வாகனப் போக்குவரத்துக்குப் பாதை அமைக்கவேண்டும்; தபாற் கந்தோர் ஒன்று நிறுவவேண்டும். வசதியற்ற ஏழைகள் ஊரிலேயே கல்வி கற்க ஓர் பாடசாலை உருவாக்க வேண் டும்; வைத்தியசாலையொன்று அமைக்க வேண்டும். இதற் காக உழைக்க ஓர் சங்கம் நிறுவவேண்டும், இப்படி அவர் சிந்தனை தொடர்ந்தது
அந்தச் சிந்தனையின் பயனாக வாலிப முஸ்லிம் இயக் கம்" என்ற சங்கம் உருவானது! அந்தத் சங்கத்துக்கு கெளரவ ஆலோசகராகத் தனது மதிப்புக்குரிய அதிபர் ஜனாப் T. B. ஜாயா அவர்களையே அந்த இளைஞர் தெரிந்துகொண்டார். அந்த இளைஞரே வாலிப முஸ்லிம் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றித் தனது திட்டங்

65
களைப் படிப்படியாகச் செயல்படுத்தினார். படிக்கும் பொழுதே தனது பிறந்தகத்தின் உயர்வுக்காகப் பணியாற் றிய இளைஞர்தான் வசதிக்காக கண்டியில் வாழும் சட்டத் தரணி ஏ. ஓ. எம் ஹ"சைன் அவர்கள்
அவர்கள் பிறந்த ஊர்தான் கல்ஹின்னை என்ற கிரா மம். கல்ஹின்னை கண்டி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறு கிராமமாகும். இயற்கை அழகு இனிது விளங்கும் கிராமம் கல்ஹின்னை. பார்த்கும் திசையெல்லாம் பயன் தரும் மரங்கள் பசுமையாகக் காட்சிதரும் கிராமம் இது கல்ஹின்னையின் மேற்கு எல்லையிலே ஒர் அசுர யானை படுத்துறங்குவது போன்ற பெரிய கல் அமைந்துள்ளது. இந்தக் கல்லிலிருந்து பார்க்கும்போது குருனாகல் மாவட் டத்திலே பசுமையாகத் தோன்றும் பரந்த வயல்வெளிகள்; அவற்றினிடையே தோற்றமளிக்கும் தென்னந்தோப்புகள்; ரப்பர் தோட்டங்கள் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்! உளமகிழ்வூட்டும் ஒரு பொழுதுபோக்குத் தலம் இந்தப் பெரிய கல்லாகும். இப்படி இன்னும் எத்தனையோ காட்சி கள் இன்ப விருந்தளிக்கும் கிராமம் கல்ஹின்னை.
மலையகத்தின் தலைநகரமான கண்டிமாநகரிலிருந்து பூஜாப்பிட்டிய வழியாகப் பன்னிரண்டாவது மைலிலும்; அளவத்துகொட வழியாகப் பத்தொன்பதாவது மைலிலும் அமைந்துள்ளது கல்ஹின்னை, ஏறக்குறைய மூன்று சதுர மைல் பரப்புள்ள கல்ஹின்னை ஒரு முஸ்லிம் கிராமமாகும். இதனைச் சூழ்ந்து நான்கு பக்கமும பெளத்த மக்கள் வாழ் கின்றனர். அவர்களுடன் மிக அன்னியோன்னியமாக வாழ் கின்றனர் கல்ஹின்னை முஸ்லிம் மக்கள்! "யாவரும் கேளிர்? என்ற பண்பாடு இங்கு மலர்ந்து மணம் மகிழ்கின்றது,
கல்ஹின்னைக்கு அருகிலுள்ள புகையிரத நிலையம் கண்டியாகும். பன்னிரண்டு மைல் தூரத்தில் இது அமைத்

Page 35
66
துள்ளது. மாத்தளை நகரம் 16 மைல் தூரத்திலும், குருனா கலை நகரம் 26 மைல் தூரத்திலும் அமைந்துள்ளன. இந்த மூன்று நகரங்களிலிருந்தும் கல்ஹின்னைக்கு பஸ் சேவை நடைபெறுகின்றது.
கல்ஹின்னைக்கு அருகிலுள்ள மிகப் பெரிய முஸ்லிம் ஊர் அக்குறணை, இது 12 மைல் தூரத்திலுள்ளது. கல்ஹின் னையில் ஏறத்தாழ 500 வீடுகள் உள்ளன, குடின சத் தொகை 6,000 வரையுண்டு.
கல்தறின்னையில் முஸ்லிம்கள் குடியேறிக் கிட்டத்தட்ட 200 வருடங்கள் ஆகின்றன. கண்டிக்கருகிலுள்ள வட்டப் புளுவை; அக்குறணை, றம்புக்எல ஆகிய கிராமங்களி லிருந்தே முஸ்லிம்கள் இங்கு வந்து குடியேறினர்; பாது காப்பு நோக்கியும்; பொருளாதார விருத்தி நோக்கியுமே இங்கு குடியேறியிருக்கலாம் என்று கருதப்படுறது.
ஆங்கிலேயர் கண்டியை கைப்பற்றுவதற்கு ஐம்பது வரு ஷங்களுக்கு முன்னர், இங்கு முஸ்லிம்கள் குடியேறியுள்ள னர். கல்ஹின்னைக்கு முதலில் வந்து குடியேறிய முஸ்லிம், வாப்புக் கண்டுப்பிள்ளை என்பவர் இவரைத் தொடர்ந்து *முஹந்திரம்” என்று அழைக்கப்படும் ஆதம்பிள்ளை, தம்பி லெப்பை முதலான ஏழுபேர் கல்ஹின்னையில் குடி யேறினர்; இந்த எழுவரின் சந்ததியே இன்று இங்கு வாழும் முஸ்லிம்கள்.
கல்ஹின்னையில் பல குடும்பங்கள் பரம்பரையாக வாழ்ந்தாலும், அடப்பனார் வீ ட் டு க் குடும் பம் கம்மன்ஜை வீட்டுக் குடும்பம் வாத்தியார் வீட்டுக் குடும்பம், உ ள் பத் த பி ட் டி முஹந்திரம் வீட்டுக் குடும்பம் ஆகிய நான்கு குடும்பங்களுமே பிரசித்தி பெற்று விளங்குகின்றன. மக்கள் பணியாலேயே இவர்கள் இந்த மதிப்பை பெற்றுள்ளனர் என்பது மறுக்கமுடியாத

67
தாகும்; கல்ஹின்னையில் முதல் குடியேறிய வாப்புக்கண்டு பிள்ளை, அடப்பனார் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
கல்ஹின்னையின் முதல் பள்ளிவாசல் நிரந்தரக் கட்டிட மாக 1864-ம் வருடம் சட்டப்பட்டது. இந்த பள்ளிவாசலின் முதல் மத்திசமாக (தர்மகர்த்தா உஸ்மான் பிள்ளை அஹ மது லெப்பை என்பவரும், முதல் கத்தீபாக அலித்தம்பி லெப்பை என்பவரும் நியமனம் பெற்றனர். முதல் கிராம அதிகாரியாக நியமனம் பெற்றவர் ஆதம்பிள்ளை அலி உஸ் மான் லெப்பை என்பவராவார்.
கல்ஹின்னை ஆரம்பகால முதலே சன்மார்க்கத்துறை யில் மிகவும் போற்றத்தக்க நிலையில் இருந்து வருகிறது.
பிரயாணக் கஷ்டம் நிரம்பிய 1899-ம் வருடத்திலேயே கல்ஹின்னையிலிருந்து முதன் முறையாச, அஹமது மத்தி சம், ஆதம்பிள்ளை உமறு லெப்பை, சுலைமான் லெப்பை ஆகிய மூவரும் புனித ஹஜ் பயணம் சென்று திரும்பினா.
காயல்பட்டணம் சென்று, கருத்தூன்றிப் பயின்று மார்க்க அறிஞராக வந்தார் அப்துல் காதர் ஆலிம்ஸாஹிப் அவர்கள். “பெரிய ஆலிம் அப்பா" என்று மரியாதையாகக் குறிக்கப்படும் இவர்கள், காலிக்கருகிலுள்ள கிந்தொட்டை அறபு மதுறஸ்ாவில் இருபது வருடத்துக்கும் அதிகமாக அறபு ஆசிரியராகப் பணியாற்றினார்கள். அந்திம காலத் தில் கல்ஹின்னை பள்ளிவாசலின் கதீபாகவும் பணியாற்றி னார்கள் பெரிய ஆலிம் அப்பா இவர்களே கல்ஹின்னை யின் முதல் ஆலிம் ஆவார்கள்.
கல்ஹின்னையின் கல்வி வளர்ச்சிக்காக முதன் முதலில் 1892 ம் வருடம் குர்ஆன் மதுறஸா ஆரம்பிக்கப்பட்டது. கசாவத்தை முஹம்மது ஆலிம் அப்பா அவர்களே இதனை ஆரம்பித்து வைத்தார்கள். கசாவத்தை ஆலிம் அப்பா

Page 36
68
அவர்களின் தொடர்பு கல்ஹின்னையின் சன்மார்க்கச் சிறப்புக்குக் காரணமாக அமைந்தது. இவர்கள் ஆரம்பித்த குர்ஆன் மதுறஸா ஆதம்பிள்ளை உமறு லெப்பை அவர் களின் நிர்வாகத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மதுறஸாவே 1934 ம் வருடம் கல்ஹின்னையின் முதல் சட்டத்தரணி, ஏ. ஓ. எம். ஹ"சைன் அவர்களின் முயற்சியால், முஸ்லிம் பாடசாலையாக உயர்ந்தது. இன்று அது அல்மனார் மகா வித்தியாலயமாக அறிவுப் பணி யாற்றி வருகிறது. இந்தப் பாடசாலையின் வளர்ச்சியை எண்ணும்போது, நமது பாராளுமன்ற அங்கத்தவரும், அன் றைய கல்வியமைச்சருமான கெளரவ ஈ. ஏ. நுகவெல அவர் களை கல்ஹின்னை மக்கள் என்றும் மறக்க முடியாது.
கல்ஹின்னையின் மதுறஸத்துல் பத்தாஹ் என்ற அரபுக் கல்லூரி இன்று சன்மார்க்க அறிவைச் சிறப்பாகப் பெருக்கி வருகிறது! வெலிகமையின் மார்க்க அறிஞர் ஸ்கரியா ஆலிம் ஸாஹிப் அவர்களால் 1949 ம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த மதுரஸா, காலஞ்சென்ற மெளலவி யூ. எம் தாஸிம், எம். ஏ. போன்ற மார்க்க அறிஞர்களுக்கு ஆரம்பக் கல்வியூட்டிய பெருமைக்குரிய தாகும்.
ஷெய்கு ஸ்"லைமானுல் காதிரி என்ற தமிழக மார்க்க அறிஞர் கல்ஹின்னையுடன் நெருங்கிய தொடர்புள்ள வராக இருந்தார். இவர் இயற்றிய ‘பதுறுமாலை" என்ற நூலை அச்சிட ச் சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ. ஓ. எம். ஹபீஸைன் அவர்கள் பொருளுதவி செய்தார் அதனைப் புகழ்ந்து பாடியுள்ளார் செய்கு அவர்கள்.
உலகக் கல்வியும். உயர்மார்க்க கல்வியும் ஒன்றிணைந்து வளர்வதால் கல்ஹின்னை உயர்ந்த கலாசாரத்தையும், அறிவு வளத்தையும் கொண்டு திகழ்கிறது

69
கல்ஹின்னை, சீதனச் சிக்கலுக்குப் பெரும்பாலும் பலி யாகாத திருமண சம்பிரதாயத்தைக் கொண்டுள்ளது ஆரம்பகால திருமண முறையை கல் ஹி ன்  ைன ப் பெண்மணிகள் இருவர் வாயிலாகவே கேட்கலாம், கல்ஹின் னையின் இயல்பான பேச்சு வழக்கும் அவர்கள் உரையில் விளங்கக் காணலாம். (இரண்டு பெண்கள் உரையாடல்)
திருமண வீட்டில் பதம் பாடுவதும்; சோபனம் கூறி வாழ்த்துவதும் பழங்கால வழக்காகும் அல்ஹாஜ் ஷரீப் லெப்பையவர்களின் வாழ்த்துப் பாடலைக் கேட்கலாம்.
(பாட்டு ஒலிப்பதிவு)
கல்ஹின்னையின் பழைய கலாசார நிகழ்ச்சிகளில் கோலாட்டம்; தீ ப்ப ந் தம் சுழற்றி யா டு த ல் வாள்வீச்சு; சீனடி போன்றவை இடம்பெற்றிருந்தன. பெரும்பாலும் திருமண வீடுகளில் இவை வழங்குவதுண்டு. அந்தரத்தீவு அபூ ஸாலிஹ் தங்கள் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட ஹிபாய் மாத்தீபும் இங்குநடைபெறுவதுண்டு
கல்ஹின்னையின் மறுமலர்ச்சி இயக்கங்களாக வாலிபர் முஸ்லிம் சங்கம், வை எம். எம் ஏ., கல்ஹின்னை மாண வர் சங்கம் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
குறிப்பாக கல்ஹின்னையின் தமிழ் வளம் கொழிக்கும் தண் புகழ் நிலைக்குக் காரணம், கல்ஹின்னை மாணவர் சங் கமே இந்த மாணவர் சங்கத்தின் ஆரம்பகாலச் செயலா ளர்; இன்று சட்டத்தரணியாக விளங்கும் அல்ஹாஜ் எஸ். எம் ஹனிபா அவர்களின் பணி பாராட்டத்தக்கதாகும். *சமுதாயம்” என்ற சஞ்சிகையை வெளியிட்ட அவர் சிறந்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமாவார்.
க 5

Page 37
70
மறைந்த அல்ஹாஜ் A. O. M. காஸிம் லெப்பை மு.ஹபீப் முஹம்மது லெப்பை பீரிஹெல முஹம்மது காஸிம்லெப்பை ஆகியோர் பதம் பாடுவதில் புசழ் பெற்ற வராக விளங்கினர். அதேவேளையில், சீறாப்புராணம், முஹியித்தின் புராணம், நாகையக்தாதி போன்ற பல இஸ்லாமிய இலக்கிய நூல்களையும் இவர்கள் சேர்த்துப் பாதுகாத்து வைத்திருந்தனர்.
கல்ஹின்னை மலையகத்தில் ஒரு தமிழகமாகத் திகழ் கிறது’ என்று பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர் கள் ஒரு முறை குறிப்பிட்டார்கள். பே ரா சிரியர் வித்தியானந்தன் அவர்களின் முதல் நூல், இலக்கியத் தென்றல் அடுத்தது, தமிழர் சால்பு. இவை இரண்டை யும்; கலாநிதி எம். எம். உவைஸ் அவர்களின் முதல் நூல் Muslim Contribution to Tami Literature ( (typ Giv Góth 35 Gir தமிழ் தொண்டு,) என்பதையும் கல்ஹின்னைத் தமிழ் மன்றமே அச்சிட்டு வெளியிட்டது! கல்ஹின்னையின் தமிழ் மன்றம்; மணிக்குரல் பதிப்பகம், கலா நிலையம், சிபா பதிப்பகம் ஆகியவை செய்யும் தமிழ்த் தொண்டு எவரும் மறக்க முடியாததாகும்.
கல்ஹின்னையின் எழுத்தாளர்களான சட்டத்தரணி எஸ். எம். ஹனிபா, கவிஞர் எம். ஸி. எம். ஸ"பைர் மெளலவி எச். ஸலாஹ"த்தீன் 'மாமா? என். எம். ஹனிபா, கவிஞர் எம். எச். எம். ஹலீம் தீன், M. C. M ஸாலிஹ் போன்றோர் தமிழுக்கும். தமது தாயகத்துக்கும் பெருமை தேடித் தருகின்றனர்.
கல்ஹின்னை சிறு கிராமாக இருந்தாலும்; கல்வித் துறையிலும், வர்த்தகத்துறையிலும், வைத்தியத் துறை யிலும், எழுத்துத்துறையிலும், பொருளாதாரத் துறையி லும் போற்றத்தக்க அளவுக்கு முன்னேறியுள்ள நிலை மகிழ்ச்சிக்குரியதாகும். T

ןף
கல்ஹின்னையில் 1890-ம் வருடம் ஆதம்பிள்ளை உமறு லெப்பையவர்களால் ஆரம்பிக்கப்பட்டது முதல் வர்த்தக நிலையம், இது பல சரக்குக்கடை, அந்த ஆரம்பம், இன்று மாத்தளை, குருனாகல் ஆகிய நகர்களின் முன்னணி வர்த்தகர்களாகவும் மற்றும் பல இடங்களிற் குறைந்த அளவிலும் கல்ஹின்னையினர் வணிகத்தில் சிறந்து விளங்க அடி கோலியுள்ளது.
வர்த்தகத்தில் ம ாத் தி ரம ல் ல, கல்வித்துறையில் ஆசிரியர்களாகவும், மார்க்க அறிஞர்களில் ஆலிம்களாக வும் பல்துறை எழுதுவினைஞர்களாகவும், சட்டத்தரணி களாகவும் ட்ொக்டர்களாகவும், என்ஜினியர்களாகவும், உயர்ந்து விளங்குகின்றனர் கல்ஹின்னையினர்.
மத்தியதரமான பொருளாதார நிலையையும், பக்தி நிரம்பிய மார்க்கத் துறையையும்; பலதுறை அறிவு விருத்தியையும் கொண்டு திகழும் கல்ஹின்னை; மத்திய இலங்கையில் ஒரு மதிப்புயுர்ந்த கிராமம் என்பதை யெண்ணிப் பெருமைப்படுகிறது.
சிறிய கல்ஹின்னை தனது மிதமான பணிகளால் தனக்கும், தாயநாட்டுக்கும்; தாய்மொழிக்கும் நலன் தரும் நல்ல பணிகளை நாளும் செய்வதில் ஆர்வம் கொண்டு அமைதியாக இயங்கித் திருப்தி காணுகிறது! யாவரும் கேளிர் என்ற உணர்வு அதன் தாரக மந்திர மாகத் திகழ்கிறது.
கல்ஹின்னை எஸ். எம். இம்தியாஸ் எழுதி. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிப்பர பான நிகழ்ச்சியின் பிரதி.
米米

Page 38
12
மத்திய இலங்கையில் முஸ்லிம்கள் குடியேற்றம் அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா
அரபு நாட்டினர், முன்னைய காலங்களில் பெயர் பெற்ற வணிகர்களாய் இருந்தனர்; உலகின் பல பகுதி களிலும், வர்த்தக நிலையங்கள் ஏற்படுவதற்கு அராபியர் களே காரணமாயிருந்தனர், ஐரோப்பாவில் வாழ்ந்த மக் களு க் குத் தேவையான வாசனைத்திரவியங்கள், இரத்தினக்கற்கள் போன்றவற்றை, அராபியர்கள்தான் கீழைத்தேசங்களிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத் துச் சென்றார்கள்.
, இலங்கையின் வாசனைத் திரவியங்களால் கவரப் பட்ட அராபியர்கள், இலங்கையுேடனும் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். சுமார் 22 நூற்றாண்டுகளுக்கு முன்பு, இந்தத் தொடர்பு ஏற் பட்டதாக வரலாற்று நூல்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அன்று முதல் 16-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்த்துக்கீசர் இலங்கை வரும் வரை. அராபியர்கள்தான் வாசனைத் திரவியங்கள் போன்ற வற்றை ஏனைய நாடுகளுக்கு, இலங்கையிலிருந்து எடுத் துச் சென்றார்கள்.
கரையோரப்பகுதிகளில் நிரந்தரமாகக் குடியேறி வர்த்தகம் நடத்திக் கொண்டிருந்த அராபியர்களுக்கு, சமய அடிப்படையிலும்; வர்த்தகப் போட்டி காரண மாகவும் போர்த்துக்கீசருடன் அதிருப்தி ஏற்பட்டது. 1505-ம் ஆண்டில்தான் முதல் போர்த்துக்கீசன், இலங்கை

73
யின் மேற்குக் கரையில் அடியெடுத்து வைத்தான். அதைத் தொடர்ந்து, அராபியர்கள், கரையோரங்களில் போர்த் துக் சீசர் குடியேறாத இடங்களுக்கும், சில உள்ளூர்களுக்கும் சென்று குடியேறினார்கள். 1656-ம் ஆண்டில், ஒல்லாந் தரின் ஆட்சி, இலங்கையின் மேற்குக் கரையில் நிறுவப் பட்டது சமய சம்பந்தமான குரோதம் தீவிரமாக அமைந்தது, ஒல்லாந்தரிடம்தான். போர்த்துக்கீசரை மிஞ்சிய இவர்களின் கொடுமைகளினால், அராபியர்கள் இலங்கையின் மத்திய பகுதிகளில் குடியேற முற்பட்டார் கள். கண்டி இராச்சியம் என்று கூறப்படுகின்ற இலங்கை யின் மத்திய பகுதியில் சிங்கள மன்னனே ஆட்சி புரிந் தான். சிங்களவர்களுக்கு வர்த்தகத்தைப் பற்றி அதிகம் தெரியாமல் இருந்ததனால், அராபியர்களை சிங்கள மன்னன் அன் போடு வரவேற்று உபசரித்தான். இதனால் தான். கூடுதலான அராபியர்கள் கண்டிப் பகுதிகளில் குடியேறினார்கள்.
இலங்கையின் மத்திய பகுதியில் அராபியர்கள் குடி யேறியது பற்றி வாய்வழி வந்த வரலாறு ஒன்றுண்டு." நாலு அராபியர்கள் கண்டி என்ற தலைநகரைப் போய்ச் சேர்ந்த போது, அரசன் அவர்களை வரவேற்று, தங்கு வதற்கான வசதிகள் செய்து கொடுத்தானாம். சில காலத் தின் பின்னர், இந்த நால்வரும் தாய்நாடு திரும்புவதற்குப் புறப்பட்டு மன்னனிடம் தாங்கள் செல்ல இருப்பது பற்றிக்
* நாலு அராபியர்களின் சம்பவம் பற்றி, அக்குற ணையை அடுத்துள்ள மள்வானஹறின்னையில் வாழ்ந்து காலஞ்சென்ற எம். அப்துல் மஜீத் ஆலிம், தனது குடும்ப விபரம் பற்றி எழுதிய கையெழுத்துப் பிரதியொன்றில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். நாலு அராபியர்களினது வமிசத்தைப் பற்றிய விபரங்களை இவர் எழுதியிருக்கிறார். 1877-ல் பிறந்த இவர் 1968-ம் ஆண்டில் காலமானார்.

Page 39
.74
கூறியதும், அதற்குக் காரணம் என்ன என்று அவன் கேட்க, *எங்களுக்கு மனைவியர் இல்லை, அரபு நாட்டிற்குச் சென்று விவாகம் செய்துகொள்ளப் போகிறோம்” என் றார்களாம். அவர்கள் தாய்நாடு சென்றால், திரும்பமாட் டார்கள் என்று நினைத்த மன்னன், 'உங்களுக்கு மனைவி கள்தானே வேண்டும், அதற்கு நான் ஏற்பாடு செய் கிறேன்" என்று சொல்லி, அடுத்த நாளே கண்டியில் இருந்த இளம் பெண்களை எல்லாம், மாளிகை முன்றி லுக்கு வரும்படி உத்தரவிட்டானாம். இளம் பெண்கள் எல்லோரும் வந்த பின்னர் வரிசையாக நிற்கும்படி சொல்லிவிட்டு, அராபியர்களைப் பார்த்து 'உங்களுக்கு விருப்பமான பெண்களைத் தெரிந்தெடுங்கள்’என்று சொன் னானாம். அவர்களும், அழகிய பெண்களைப் பார்த்துத் தெரிந்தெடுத்து, விவாகம் செய்து கொண்டு கண்டியில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்களாம். இந்த வரலாற்றில் ஓரளவேனும் உண்மையில்லாமல் இருக்க முடியாது. இன்று கூட, மத்திய இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர் களுக்கும் இடையில் காணப்படுகின்ற ஐக்கியத்தைப் பார்த் தால், இந்த வரலாறு முற்றிலும் உண்மை என்றே கொள் ளக்கூடியதாய் இருக்கிறது. முன்னைய காலங்களில், சிங் களவர்களும், முஸ்லிம்களும் சகோதரர் போல் நெருங்கிப் பழகியுள்ளனர் என்று வயது முதிர்ந்தவர்கள் சொல்வ துண்டு.
1796-ம் ஆண்டில்தான், ஒல்லாந்தரின் கரையோரப் பகுதி ஆட்சி முடிவடைந்தது. பின்னர், கரையோரப் பகுதிகளில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டது. கண்டிய இராச்சியத்தில், மேல் நாட்டார் ஆட்சியொன்றும் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பவரையில் ஏற்படவில்லை. 1815-ம் ஆண்டில்தான், பிரிட்டிஷார் கண்டிய இராச்சியத்தையும், தமது ஆட்சிக்குள் கொண்டுவந்தார்கள். இதுவரை, கரையோரப்பகுதிகளுக்கும் கண்டிய இராச்சியத்திற்கும்

75
இடையில் போக்குவரத்து மிகக் கஷ்டமாகவே இருந்தது. பிரிட்டிஷாரின் வருகையின் பின்னர்தான் பா  ைத க ள் அமைக்கப்பட்டு, பிரயாணம் செய்தல் இலேசாகியது. எனவே, ஒல்லாந்தரின் கொடுமையினால் அந்தக் காலத் தில் கண்டியப் பகுதிக்கு முஸ்லிம்கள் கால் நடையாகவே சென்றிருக்க வேண்டும். முதன் முதலில் கண்டி மன்னனி டம் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகின்ற நாலு அராபியர்களும், 1660 ம் ஆண்டளவில் கண்டி போய் சேர்ந் திருக்கலாம். 1656 ம் ஆண்டில் ஒல்லாந்தர் ஆட்சி ஏற் பட்டு, அவர்களின் கொடுமைகள் ஆரம்பமான பின்னர், புறப்பட்ட அராபியர்கள் கண்டிக்குப் போய்ச் சேர ஓராண்டு காலமாவது கழிந்து இருக்க வேண்டும்.
கண்டி நகரின் அருகில் மஹியாவ என்ற இடத்தில் சிங்கள மன்னனால் முஸ்லிம்களுக்காகக் கட்டிக் கொடுக்கப் பட்டதாகக் கூறப்படுகின்ற பள்ளிவாசல் ஒன்றிருக்கிறது. இந்தப் பள்ளிவாசல் 1730 அல்லது 1740 ம் ஆண்டளவில் தோன்றியிருக்கலாம். மஹியாவ என்ற இடத்தில், பெரு மளவில் முஸ்லிம்கள் வசித்திருத்தல் வேண்டும். இது தவிர, அடுத்தடுத்துள்ள தென்னக்கும்புர, வட்டபுளுவ, மாவில்மட ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளார்கள். இன் றும், இந்த இடங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்
கள்.
தென்னக்கும்புர என்ற இடத்தில் தற்பொழுது, சொற்பப்பேர்தான் இருக்கின்றனர். மற்ற இடங்களில், பெருந தொகையான முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
ஒல்லாந்தரின் ஒடுக்குதல் காரணமாக கண்டிய இராச்
சியத்தின் தலைநகரான மஹநுவர (பெரிய நகரம்) என்றும் அழைக்கப்படுகின்ற கண்டியில் குடியேறிய முஸ்லிம்கள்,

Page 40
76
மத்திய பகுதியின் பல்வேறு பகுதிகளில் எப்படிக் குடியேறி னார்கள்? இன்று பெருந்தொகையான சிங்களவர் வாழு கின்ற பகுதிகளின் மத்தியில், முஸ்லிம் கிராமங்கள் காணப் படுகின்றன. இப்படியான அமைப்புக்குக் காரணமென்ன? அதாவது, சிங்களவர் வாழும் பகுதிகளால் சூழப்பட்டு, முஸ்லிம் கிராமங்கள் ஏன் அமைதல் வேண்டும் ?
முஸ்லிம்கள் காலத் கிரமத்தில் பெருகியதனால் வெவ் வேறு ஊர்களில் சென்று குடியேறியிருக்கலாம் என்று கூறுவதற்கு இடமுண்டு. மற்றொரு காரணம், சிங்கள அரசர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் அதிருப்திகள் ஏற்பட்டதனால், சச்சரவுகள் ஏற்பட்ட பொழுது, முஸ்லிம்கள் குழப்பங்களைத் தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு பிற பகுதிகளுக்குச் சென்றிருக்க லாம். இவை தவிர, மேலுமோர் விசித்திரமான காரணம் கூறப்படுகிறது.
குடிகள் கண்டெடுத்த அதிசயப் பொருட்களை அந்தக் காலத்தில் அரசனிடம் கொண்டுபோய்க் கொடுக் கும் வழக்கம் இருந்துள்ளது. தென்னக்கும்புர என்னு மிடத்தில் ஒடிக்கொண்டிருக்கின்ற ஆற்றில், ஒருவர் கண்ட மிக நீளமான தலைமயிர் ஒன்றை அரசனிடம் கொண்டு போய்க் கொடுத்தார். சுமார் ஏழெட்டு அடி நீளமான இந்தத் தலைமயிரைக் கண்டு, அதிசயமடைந்த மன்னன், தலைமயிருக்குரியவர் யாரென்று கண்டுபிடிக்கும்படி உத்தர விட்டு, அதன்படி கண்டுபிடிக்கப்பட்டபொழுது, அவர் ஒரு அழகிய முஸ்லிம் யுவதியாயிருந்ததாகவும், அவரை மணமுடிக்க மன்னன் விரும்பியதாகவும் தெரிகிறது.
உறுதியான இஸ்லாமிய நம்பிக்கையுடையவர்களாய் முன்னையோர் இருந்ததனால், முஸ்லிமல்லாத ஒருவருக்கு முஸ்லிம் யுவதியை திருமணம் செய்ய இடமளிக்காமல்,

77
யுவதியைக் கொன்றுவிட்டு, வேறு தூர இடங்களில் குடி யேறினார்கள் என்றும், அதனால்தான் பல்வேறு முஸ்லிம் கிராமங்கள் தோன்றின என்றும் கூறப்படுகின்றது.
இப்படியாக, ஏதோ ஒரு காரணத்திற்காக, சில முஸ்லிம்கள் அக்குறனை என்ற இடத்தில் போய் குடியேறி னார்கள். கண்டியிலிருந்து, பாதையில் ஆறு மைல் தூர முள்ள இந்த ஊர், முன்பு யாராலும் எளிதில் செல்ல முடியாத கரடுமுரடான வழியிருந்த இடமாயிருந்திருத் தல் வேண்டும். இங்கிருந்து, பின்னர், சிலர் ரம்புக்எல ஹள் கொள்ள, கல்ஹின்னை போன்ற இடங்களில் போய் குடியேறினார்கள். வாய்வழிவந்த வரலாற்றினால், சில ரின் பெயர்களை அறிந்திருக்கிறோம்.
கல்ஹின்ன என்ற இடத்தில், முதன் முதலில் வாப்புக் கண்டு என்பவர் குடியேறியுள்ளார். இவர், அக்குறணை என்னும் இடத்திலிருந்து, கல்ஹின்னைக்கு சுமார் 1770-ம் ஆண்டிற் சென்றிருக்க வேண்டும். இவரின் சகோதரரான இஸ்மாயில் கண்டு என்பவர், இதே பகுதியில் உள்ள ரம்புக்எல என்னுமிடத்தில் குடியேறினார்; இந்த இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட ஹள்கொள்ள என்ற இடத்தி லும் முஸ்லிம்கள் குடியேறியிருக்கிறார்கள். ஆதலால் தான், இடையில் உள்ள அந்த ஊரில் இரண்டு நூற் றாண்டுகளுக்கு முன்பு, பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட் டிருக்கிறது கல்ஹின்னையிலிருந்தும், ரம்புக்எலயில் இருந்தும், ஹள்கொள்ள பள்ளிக்குத்தான் ஜும்மாத் தொழுக்கைக்காக முஸ்லிம்கள் சென்றதாய் கூறப்படு கிறது, அந்தப் பள்ளிவாசல் இருந்த இடத்தில் இப் பொழுது பள்ளிவாசல் ஒன்றில்லை. ஆனால், இன்றும் பள்ளிவாசல் இருந்த அடையாளம், காணக்கூடியதாக
இருக்கிறது
as-5A,

Page 41
78
தொலைவான இடங்களில் வசித்தபோதிலும், அன் றைய முஸலிம்கள் தங்களுக்குள் தொடர்புகள் வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
பள்ளிவாசல்களில் ஜ"ம்மாத் தொழுகைக்காகக் கூடுவது போல், சில வைபவங்களுக்காகவும், அவர்கள் ஒன்று சேர்ந் திருக்கிறார்கள். அக்குறணை என்ற ஊரில், கல்விமான் கள் வாழ்ந்துள்ளார்கள், அங்கிருந்துதான் குர்ஆன் ஓதிக்கொடுப்பதற்கு, சுமார் ஐந்து மைல் தூரத்தில் உள்ள கல்ஹின்னைக்கும், ஆலிம்கள் சென்றுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமிருக்கிறது. இவை தவிர, விவாக அடிப்படையிலும் அவர்களுக்கிடையில் தொடர்புகள் இருந்திருக்கின்றன.
மறியாவையிலிருந்த காஸிம்பிள்ளை எ ன் ப வர் வாப்புக் கண்டுவின் முதற் பிள்ளையை, கல்ஹின்னை சென்று விவாசம் செய்துகொண்டார் இ வர் க ள் மஹியாவையில் அல்லது சற்றுத் தூரத்திலுள்ள வட்ட புளுவையில் வாழ்ந்தார்கள், இவர்களுக்குப் பிறந்த ஒரே மகனான ஆதம்பிள்ளை, பின்னர், ரம்புக்எலவையில் வாழ்ந்த வாப்புக் கண்டுவின் சகோதரரான இஸ்மாயில் பிள்ளையின் மகளை, சுமார் 1790-ல் திருமணம் செய் தார். இந்தப் பெண்மணியின் பெயர் ஹலீமா என்று சொல்லப்படுகிறது. இவர்களுக்கு ஆறு ஆண்களும், ஒரு பெண்ணும் பிறந்தார்கள். இந்த ஏழுபேரின் சந்ததியி னரும், இன்று கல்ஹின்னைக் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் மூன்றாவது மகனான உமறு லெப்பை, கிராமத்தின் முன்னேற்றத்திற்காக அரும்பணி புரிந்துள்ளார். தந்தையின் வழியைப் பின்பற்றி உமறு லெப்பையின் ஆண்மக்கள் இன்றும், கிராமத்திற்காகத் தொண்டாற்றி வருகிறார்கள்.

79
வாப்புக்கண்டு என்பவருக்கு ஒரு கால் ஊனமாயிருந்த தால், அவரை (மரியாதையாக) ‘நொண்டி அப்பச்சி " என்று அழைத்துள்ளார்கள். வயது முதிர்ந்தவர்களுக்கு, சங்கைக்காக, பெயர் சொல்லாமல் 'அப்பச்சி’ என்ற அடைமொழி வைத்துப் பேசும் பழக்கம் இன்றும் இருக் கிறது. பெயரைச் சொல்வது அவமரியாதை என்று கருதுவதனால் அவரின் அடையாள மொன்றைச் சேர்த்து அ த் துட ன், முதியவர்களுக்கு, 'அப்பச்சி” என்று இணைத்துக் கூறப்பட்டுள்ளது. ‘நொண்டி அப்பச்சிக்கு”. மீராக் கண்டு என்ற மகன் ஒருவரும் இருந்தார்.
**கண்டு" "பிள்ளை” என்ற அடை மொழிகள் சேர் வதற்குக் காரணம், தென்னிந்திய முஸ்லிம்களின் ஆதிக்கம் என்றே கொள்ள வேண்டும். அரபுப் பெயர்களுடன் இவைகளும் சேர்த்துக் கொள்ளப்படுகின்ற வழக்கம் தென்னிந்திய முஸ்லிம்களுடன் ஏற்பட்ட தொடர்புகளில் தோன்றியிருக்கவேண்டும்.
கண்டியப் பகுதிகளில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கே உரிய சிறப்பம்சம் ஒன்றுண்டு. அதுதான் அவர்களில் ('கே') வீட்டுப் பெயர் ஆகும். இலங்கையில் வேறு பகுதியில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு இந்த ‘கே’ பெயர் இல்லை கண்டியப் பகுதிச் சிங்களவர்களுக்கும் செய்கின்ற தொழில் அல்லது வாழுகின்ற காணியைக் குறிக்கும் ‘வீட்டுப் பெயர்” உண்டு. உதாரணமாக, **முஹந்திரம்லா கெதர” என்றால், முஹந்திரத்தின் வீட்டார் என்பதாகும். அந்தப் பெயர், தொன்றுதொட்டு, இன்றுவரை வழங்கப் படுகிறது.
கல்ஹின்னையில், ஒரு குடும்பத்தார்க்கு அடப்பயலா கெதர என்ற வீட்டுப் பெயர் இருக்கிறது. ‘அடப்ப? என்ற சிங்களச் சொல்லிற்கு "பொருட்கள்’ என்ற கருத் துண்டு, எனத்தெரிகிறது, 'அடப்பயா’ என்று பொருட் களை (விற்பனைக்கு) கொண்டு திரிபவர் அழைக்கப்பட்

Page 42
80
டார். அதனால், இன்றுவரை அந்தக் குடும்பத்தார் அனைவரும் 'அடப்பயாலாகெதர" என்ற முன்மொழியை தமது பெயருடன் சேர்த்துக்கொள்வார்கள். இது சிங்கள அரசனால் வழங்கப்பட்ட ஒரு பட்டம் என்றும் சிலர் அபிப்பிராயம் கூறுகின்றனர். **வட்டப் பேலா" என்பது ஒரு காணியின் பெயர். இந்தக் காணியில் வாழ்ந்தவர் "வட்டபேலகெதர*’ என்ற வீட்டுப்பெயரை, இன்று வரை பாவித்து வருகின்றனர்.
மத்திய இலங்கையில் உள்ள முஸ்லிம் கிராமங்களில் வாழ்பவர்களின் வரலாறு சுவையான அம்சங்களைக் கொண்டதாயிருக்கிறது. இது பற்றி விரிவாக ஆராய் வதற்கு முனைந்தால், மேலும் பல சிறந்த உண்மைகளைக் காணலாம். கண்டியப் பகுதியின் சிங்கள மன்னர் களுக்கு உற்ற நண்பர்களாவும், ஆலோசனை கூறுபவர் களாகவும் இருந்த பழங்கால முஸ்லிம்களில் ஓரிருவர், மன்னரின் மந்திரி சபையில் அங்கம் வகித்ததாகவும் கூறப்படுகிறது.
முன்னைய முஸ்லிம்கள் மன்னருக்கு அரும்பணியாற்றி யுள்ளார்கள். வைத்திய பரம்பரையில் தோன் றி ய 'உடையார்’ என்னும் சிலர், இன்றும் வாழ்ந்து வரு கிறார்கள். கண்டியப் பகுதி முஸ்லிம்களின் வரலாற்றைத் தெளிவான முறையில் ஆராய்தல் அவசியம். அதற்காக, இன்றைய இளைஞர்கள் தமது அறிவையும், நவீன சாதனங்களையும் பயன்படுத்தி முன்வருதல் இன்றியமை தொன்றாகும்.
(1974-ம் ஆண்டில் ஜூன் மாதம் 8ம், 9ம் திகதிகளில் சென்னையிலுள்ள புதுக் கல்லூரியில் நடைபெற்ற இரண் டாவது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மகா நாட்டில் வெளியிடப்பட்ட 'ஈழத்து முஸ்லிம் முதுசொம்” எனும சஞ்சிகையில், அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா எழுதிய இக்கட்டுரை பிரசுரமானது). W

13
முஸ்லிம்கள் கீழை நாடுகளுக்கு வந்த வரலாறு
இஸ்லாம் மார்க்கம் அராபியாவில் தோன்றிய பின்னர் உலகின் பல்வேறு பாகங்களிலும் பரவுவதற்கு முதலில் முஹம்மது நபி (ஸல்) அவர்களும், பிறகு முஸ்லிம் மன்னர்களும் காரணமாயிருந்தனர். முஸ்லிம் ம ன் னர் களைவிட, ஓரளவிற்காவது அக்காலத்தில் வியாபாரத் துறையில்ே பெயர் பெற்றிருந்த அராபியர்களும் பொறுப் பாயிருந்தனர் என்பது மிகையாகாது. அக்காலத்தவர் அறிந்திருந்த உலகின் பல பாகங்களிலும் இஸ்லாமிய ஒளி வீச வேண்டுமென்று அவாவினர் அன்றைய முஸ்லிம் மக்கள். அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும் அவன் அருளிய திரு வேதமும் துணையாய் இருந்தன. இப்படியான நிலையில் எப்படிப் ւյւգւնւյւգ, யாக இஸ்லாம் கிழக்கத்திய நாடுகளில் பரவியது என்பதை நாம் அறிய முயலுதல் வேண்டும்.
இஸ்லாத்தின் பிரகாசம் கிழக்கில் தோன்றுவதற்கு முன்னர், அரேபியர் கீழ் நாடுகளை அறிந்திருந்த தனர். ஈஸா நபி (அலை) பிறப்பதறகு முன்பு, அதாவது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அரேபியர், கீழ்நாடுகளில் வியாபாரம் செய்தனர், என்பதை “பெரிபிளஸ்” போன்ற சரித்திர நூல்களிலிருந்தும் பிற வரலாற்று ஆசிரியர் வழியாகவும் அறியக்கூடியதாக இருக்கிறது. சீனாவில் 356ăr GT Gör (Canton) என்ற இடத் திற்குச் சமீபமாய், இஸ்லாத்துக்கு முன்பே அரேபியர், குடியேறியிருந்தனர்.
இந்தியாவில் தென்மேற்குக் கரைக்கும், வியாபாரத் திற்காக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்த அரேபியர்கள், இலங்கைக்கு வந்தனரா, இல்லையா என்று

Page 43
82
திட்டவட்டமாகக் கூற முடியாமலிருக்கிறது. ஆனால், ஏழாம் நூற்றாண்டில் அரேபிய முஸ்லிம்கள் இலங்கைக்கு வியாபாரம் தொடர்பாக நேரில் வந்தனர் என்பதை உறுதி யாகக் கூற முடியும். அது முதல், இலங்கைக்கும் அரேபி யாவுக்குமிடையில் வியாபாரத் தொடர்பு தொடர்ந்து இருந்து வந்தது. பத்தாம் நூற்றாண்டு முடிவுக்குள், முஸ்லிம்கள் கொழும்பில் ஒர் பகுதியை தாங்கள் குடி யிருந்து வியாபாரம் செய்வதற்கென்று அமைத்துக் கொண்டனர். இப்படியாக, இலங்கையில் ஏழாம் நூற் றாண்டில்-ஏறக்குறையகி. பி. - 640-ல் முஸ்லிம்கள் குடி யேறினர். பத்தாம் நூற்றாண்டுக்குள், இவர்கள் தங்க ளுக்கென்று ஒரு பகுதியையும் ஏற்படுத்தினர் இதன் பயனாக, இலங்கையினது அக்காலத்தைய வியாபாரத் தின் முதுகெலும்பாக இருந்தனர் முஸ்லிம்கள்.
இந்தியாவுக்கும் முஸ்லிம்கள் ஏழாம் நூற்றாண்டில் தான் வரத்தொடங்கினர், நபிகள் நாயகம் (ஸல்) அவர் களின் வாழ்க்கை நாளிலேயே முஸ்லிம்கள் இப்பகுதிக்கு வந்தனரோ என்பதை திட்டமாகச் சொல்வதற்கில்லை. இரண்டாவது கலீபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் தான் இந்துச முத்திரத்தில் முஸ்லிம்களின் கப்பல்கள் தென் ப்ட்த்தொடங்கின என்று வரலாற்றாசிரியர் கூறுவர்" கி. பி. 637-ல் முஸ்லிம்கள் கடல்மார்க்கமாக வந்து, தற் போதைய பம்பாய் நகரத்துக்குப் பக்கத்தே உள்ள தானா என்ற இடத்தைத் தாக்கினர். அதனைத் தொடர்ந்து மேற்குக் கரையில் உள்ள பல துறைமுகங்களைத் தாக்கிக் கொண்டுதான் இருத்தனர். என்றாலும், அவ்விடங்களை கைப்பற்றி ஆட்சி புரியவேண்டுமென்ற நோக்கம் அவர் களுக்கு வரவில்லை. மேற்கே, ஸ்பெயின் தேசத்திலிருந்து, கிழக்கே சீனாவுக்கும் வடக்கில் உள்ள மங்கோலியா வரை ஆட்சிபுரிந்த முஸ்லிம்கள். இந்தியாவினுள் ஏன் புகவில்லை என்ற கேள்வி எழுகின்றது. பாரசீகத்தைக் கைப்பற்றி விட்டு, கிழக்கே வந்த அவர்களை ஹிந்து குஷ் என்ற

83
மலைத் தொடர் இந்தியாவினுள் வர முடியாமல் தடுத்து விட்டது. இம் மலைத் தொடருக்கு சற்று வடக்கில் உள்ள சமர்காந், அதற்கும் வடக்கேயுள்ள பொகாரா என்ற இடங்களையும் கைப்பற்றிக் கொண்டு கிழக்கு நோக்கி மொங்கோலியாவரை சென்ற முஸ்லிம்கள், தெற்கு நோக்கி, இந்தியாவினுள் வராமல் விட்டதற்கு இந்த இயற்கை யின் இடர்தான் காரணம். இந்தியாவுக்குள் பிற்காலங் களில் பற்பல அந்நியர் கூட்டங்கள் வந்து குவியக் காரண மான இந்த வடமேற்குப் பாதையை, அராபியர்களால் திறந்துவிட முடியாமல் போய்விட்டது.
எட்டாம் நூற்றாண்டில் கி.பி. 712-ல் தான், இந்தியா வின் மீது முதலாவது முஸ்லிம்படையெடுப்புத் தொடங் கியது ஆனால், ஆரம்பப் படையெடுப்பாளர்கள் கடல் மார்க்கமாக வத்து இந்து நதிப் மள்ளத்தாக்கு வரை சென்றனரேயொழிய, அதற்கு அப்பால் இந்தியாவின் உட் பாகங்களுக்குச் செல்ல வில்லை. இப் பகுதியையும், இந்தியாவின் மறுபகுதியையும் இடையே இருந்து ஒரு பாலைவனம் பிரித்ததே இதற்குக் காரணமாகலாம். இது தான், இந்தியாவின்மீது அரேபியர்கள் நடத்திய ஒரே தரைப் படையெடுப்பு. இதேகாலத்தில், ஒமய்யாக்களின் ஆட்சியில் நடைபெற்ற இன்னும் இரு சம்பவங்கள் குறிப் பிடத் தக்கன. அவற்றுள் முதலாவது, கி. பி. 710-ல் ஸ்பெயின் தேசம் முழுவதையும் முஸ்லிம்களின் ஆட்சிக் குள்ளாக்கியதாகும். இப்படி, மேற்கே எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்று இஸ்லாத் தைப் பரப்பிய முஸ்லிம்கள், 712 ல் தொடங்கி 714க்குள் ஸ்மர்காந்திலிருந்து இன்னும் கிழக்கே கல்ஹகார் என்ற இடம் வரை இஸ்லாமியக் கொடி பறக்கும் படி செய்தது, இரண்டாவது குறிப்பிடத் தக்க சம்பவம். இந்தியப் படையெடுப்புடன் சேர்ந்து, இம் மூன்று சம்பவங்களும், முஸ்லிம்களுக்குள்ளேயே மிகச் சிறத்ததோர் ராஜ தந்திரி யான அல்ஹஜ்ஜாஜ் என்பவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தன. SS S SH S S SS SSAASS SSS

Page 44
84
அல்ஹஜ்ஜாஜ், சல்டியா என்ற இடத்தில் தேசாதிபதி யாக இருந்த பொழுது, தனது இனத்தவரான முஹம்மது இப்னு காஸிம் என்பவரது தலைமையில் கி.பி 712-ம் ஆண்டு இந்தியாவின் மீது படையெடுக்கும்படி செய் தார். அப்போதைய கலீபா இந்தப் படையெடுப்புக்கு அரைமனதுடனேயே சம்மதித்தார். இத்தனை தூரத் தில், எத்தனைச் செலவுசெய்து எவ்வளவு உயிர்களைப் பலியாக்கி ஏன் யுத்தம் புரியவேண்டுமென்றுதான் கலீபா தயங்கினார். என்றாலும், அல்ஹஜ்ஜாஜின் ஆசை நிறை வேறியது.
முஹம்மது இப்னு காசிமின் படையெடுப்பை பற்றிய வரலாறு சரித்திரத்திலோர் சுவைமிக்க பகுதி. அவர் இந்தியாவின் மீது படையெடுத்த காலத்தில், அவருடைய வயதோ 17. அது மாத்திரமல்ல, இதுவரை எந்த அரேபியரும் படையெடுத்தே கண்டிராத பூமியில் அவர் அடியெடுத்துவைக்க முனைந்துவிட்டார். ஆனால், இதை விடவும் வியப்பென்னவென்றால், தான் படையெடுத்துச் செல்லும் நாட்டில் வாழ்பவர் படைத்திறம் படைத்தவர், ஆதியிலிருந்தே நாகரிகத்தில் திழைத்திருந்தவர் என்பதை யும் அவருக்குத் தெரியும். இந்த நிலையில் இஸ் லாமிய ஆட்சி பீடத்திலிருந்து எத்தனையோ மைல் தூரத்தில், கடல், மலை, பெரும்பாலைவனங்களால் மதத்தவர். இனத்தவரிடமிருந்து பிரிக்கப்பட்ட ஒரு தனிப் பிராந்தியத்தில், இஸ்லாமியஆட்சியை நிலைநிறுத்த இந்த இளைஞர் துணிந்துவிட்டாா.
இளமையும், அவருடைய சிறந்த உணர்ச்சியும் அவரிட மிருந்நு பயம் என்பதை விலக்கின. ஆதலால், யுத்தத்திற் கான ஆயத்தங்களையெல்லாம் செய்துகொண்டு, தனது குறிக்கோளை நிறைவேற்ற அடிகோலினார் இப்னு காஸிம், இந்தப் படையெடுப்பைப் பற்றி கி. பி. 840 அளவில் எழுதிய அல் பலதுாரி என்ற வரலாற்று ஆசிரியர், விப்ரமாய் கூறியுள்ளார், அவர் என்ன எண்ணத்தோடு,

85
வெளியேறி வந்தாரோ, அதை நிறைவேற்றினார் இப்னு காஸிம். அவரது வெற்றி பின் பின்னர், இஸ்லாமிய ஆட்சி வடமேற்கு இந்தியாவில் முதன் முதலாகத் தொடங்கியது.
இந்து நதியின் வட பகுதியில் உள்ள , முல்ரான் ( 'ultan) என்ற இடத்தை முஸ்லிம்கள் கைபற்றியதும் அங்கு ஒரு சுவையான சம்பவம் நடைபெற்றது. அப் பகுதியில் உள்ள மக்கள் எல்லோரும் புது ஆட்சியாளரை வரவேற்க ‘மணியடித்துக்கொண்டும், முரசு கொட்டிக் கொண்டும் நடனமாடிக்கொண்டும் வந்தனர்." அவர் களை, அதுவரை ஆண்டு வந்தவர்களின் கொடுமையைத் தாங்கவொண்ணாதிருந்தபடியால்தான், அவர்கள் புது ஆட்சியாளரை அவ்வளவு சிறப்புடன் வரவேற்றனர். இவர்களை இப்னு காஸிம் மிகவும் சிறப்பாக நடத்தி னார், அவர்களது கோயில்களைப் பாதுகாத்துக் கொடுத் தார்; மிகவும் எளிதாக வரிகளைக் கட்டுவதற்கு வழி வகுத்தார்; இந்தியர்களுக்கே உயர்ந்த உத்தியோகங்களும் கொடுத்தார் தனது உத்தியோகத்தர்கள் எல்லோருக்கும் ஒரு சிறந்த கட்டளையிட்டார் 'நேர்மையாக நடவுங் கள்’ என்பதே அவரிட்ட சட்டம். மேலும், "விநியோகிப் பதற்கு உள்ளதைச் சரிசமமாக விநியோகியுங்கள் வரி விதிக்கும்பொழுது, ஒருவரின் தகுதிக்கு ஏற்றவாறு வரி விதியுங்கள். உங்களுக்குள் சச்சரவுகளை ஏற்படுத்தி நாடு சீர்குலைவதற்குக் காரணமாகாமல், நீங்கள் ஒற்றுமையா யிருங்கள்” என்று தனது உத்தியோகத்தர்களுக்குச் சொன் னார். இவர். ر
இத்தனை சிறப்புடன் ஆட்சி நடத்திய இளைஞருக்கு ஏற்பட்ட முடிவு, பரிதாபமானது. இவர் படையெடுத்த காலத்திலிருந்த கலீபா மறைந்து, ஒரு புதியவர் அந்த இடத்தில் அமர்ந்திருந்தார். சல்டியத் தேசாதிபதி அல் ஹஜ்ஜாஜும் இறைவனடி சேர்த்துவிட்டார். எனவே இப்னு காஸிமின் நலனைப்பற்றி, கலீபாவிடம் எடுத்துக்
as 6

Page 45
86
கூற ஒருவரும் இல்லாத காலத்தில், கலீபாவின் காதில் விழும்படி இவரது நடத்தைகள் பற்றிய கதைகளைக் கட்டிச் சொல்லினர், சிலர். அவசர புத்தியால் தடுமாறிய கலீபாவும், தகாத காரியம் செய்துவிட்டார். வீரன் இப்னு காஸிம் உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார். நமக்கு வியப்பை உண்டுபண்ணும் செய்தி ஒன்று இங்கே இருக் கிறது. கலீபாவின் ஆட்சிபீடத்திலிருந்து ஆயிரம் மைலுக்கு அப்பால் இருந்தபடியால், இவ்விளைஞர் கலீபாவின் மரண உத்தரவைத் தடுத்து, அதற்கு அடிபணிய மறுப்பதற்கு சந்தர்ப்ப்ம் இருந்தும், தனது உயிரைப் பாராட்டாது தலைவன் உத்தரவுககுத் தலைசாய்த்து, தனது இளமையில் காட்டிய அதே அச்சமின்மையைக் காட்டிவிட்டார். இந்த வீரச்செயலைக் கண்டு திகைத்தோ என்னவோ, அவர் மீது பொய்க்கதைகள் சொல்லி பழி சுமத்தியோர் தாம் வஞ்சம் தீர்ப்பதற்கென்றே அப்படிச் செய்ததாக இப்னு காஸிமின் தியாகத்திற்குப் பிறகு, வெளிப்படையாக சொல்லிக்கொண்டார்கள். தனது கோபத்தைத் தணிப் பற்காக கலீபா அவர்களையும் தண்டித்தார்.
அரேபியர்களின் ஆட்சி, வடமேற்கு இந்தியாவில் வெகு கால ம் நிலைத்திருக்கவில்லை. இப் னு காஸிமினுடைய ஆட்சியின் பின்னர், ஹிந்துவில் தனித் தனி முஸ்லிம் அரசுகள் எழுந்தன. மஸ் ஊதி என்ற யாத்திரிகர் பத்தாம் நூற்றாண்டில் அங்கு வந்தபோது நபிகள் நாயகத்தின் சந்ததியர்களாகிய குறைஷித் கூட் டத்தைச் சேர்ந்தவர்கள் ஸிந்து மாகாணத்தின் மேற்பகுதி கீழ்ப்பகுதி, இரண்டிலும் ஆட்சி புரிவதைக் கண்டா, . அவர் வந்த சிறிது காலத்திற்குப்பிறகு, இப்னு ஹெளகல் அங்கு வந்தபொழுது முஸ்லிம்களும் ஹிந்துக்களும் மிக ஒற்றுமையாக வாழ்வதை அவதானித்தார். இப்னு காஸி மின் படையெடுப்புக்குப் பிறகு, எந்த அரேபியரும் இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வரவில்லை. அதன் பிறகு, பத்தாம் நூற்றாண்டில் துருக்கியர் இந்தியா மீது படையெடுத்து வந்தனர்.

87
எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்த அரேபி யர் வருகைக்கும், பத்தாம் நூற்றாண்டின் கடைசியில் ஸ்புக்தஜின் என்பவரது முதற்படையெடுப்புடன் தொடங் கிய துருக்கியர் வருகைக்கும் இடையில் படையெடுப்புக் கள் நிகழாதபொழுதும், இந்தியர்க்கும் அராபியர்க்கும் இடையில் தொடர்புகள் அதிகரித்து வந்தன. பல யாத்திரி கர்கள் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்குமாய் வந்து சென்று கொண்டிருந்தனர். அரசர் தம் பிரதிநிதிகளை இங்குமங்கும் அனுப்பினர். இந்திய வைத்தியர் பலர் பாக்தாத்துக்குச் சென்றனர் இப்படியாக, கலாசார வணிகத் தொடர்புகள் வட இந்தியாவுடன் மாத்திர மல்லாமல், தென்னிந்திய ராஜ்யங்களுடனும் ஏற்பட்டன. குறிப்பாக, மத்திய இந்தியாவின் மேற்குக் கரையில் ஆண்ட ராஷ்ட்ரகூத்தர் என்போர் வணிகத் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டனர். இப்படி, இஸ்லாத்தைப் பற்றி இந்தியர் அறிய வாய்ப்பு ஏற்பட்டது காலஞ்செல்லச் செல்ல, மதத்தைப் பரப்பும் நோக்கத்துடன் பலர் வந்தனர். பள்ளிகள் பல கட்டப்பட்டன. முஸ்லிம்களும் இந்துக் களும் ஒரு சச்சரவுமின்றி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.
๐
(எஸ். எம். ஹனிபா அவர்கள் 28-7-54-ல், இலங்கை வானொலியில் பேசியதிலிருந்து, அதேயாண்டு ஒக்டோபர் 18-ம் திகதி வெளியான இலங்கை வானொலி சஞ்சிகையில் பிரசுரமான கட்டுரை) பின்னர், 1954-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 24-ம் தேதி வெள்ளிக்கிழமை இக் கட்டுரையின் விரிவான படைப்பு 'தினகரன்’ பத்திரிகை யில் வெளியானது),
※<>@<

Page 46
14
சென்னையில் அளித்த வரவேற்பு
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், தமிழ் அறிஞர் அல்ஹாஜ் எஸ். எம் ஹனிபா அவர்களுக்கு சென்னை யில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. முஸ்லிம் தமிழ்க் கவிஞர் மன்றமும், தமிழ்நாடு காயிதே மில்லத் நற்பணி மன்றத்தினரும் வழங்கிய இவ்வரவேற்பு விழா 9-12-82 அன்று சென்னை முஸ்லிம் தமிழ்க் கவிஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்குத் தலைமையேற்ற கவிஞர் மன்றத்தின் தலைவர் கலைமாமணி கவி கா. மு. ஷரீப் சாஹிப்,
 

89
தன்னுடைய தலைமயுரையில் அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா அவர்கள் ஓர் வழக்கறிஞராக இருந்தும் அதனைத் தனது தொழிலாக ஆக்கிக்கொள்ளாமல், தனக்குள்ள ஆற்றலையும், அறிவையும் இஸ்லாமிய இலக்கியப் பணிக்கே அர்பணித்துக் கொண்டதை எண்ணி மகிழ்கி றேன்" என்றார். "அவர் எழுதிய உத்தமத் தூதர் (எல்) அவர்களின் வரலாறு," இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி" ஆகிய நூல்கள் பெரும் பாராட்டுக்குரியன என்றும் கூறினார்.
'பசுங்கதிர்' ஆசிரியர் ஜனாப் எம். கே. ஈ. மவ்லானா அவர்கள் தனது வரவேற்புரையில் "இலங்கைத் தமிழ் அறிஞர் எஸ். எம். ஹனிபா அவர்களை வரவேற்பதில் அ ள வ ற் ற மகிழ்ச்சியடைகிறேன். இஸ்லாத்தையும், இறுதித் தூதரையும் சிங்களவர்கள் தெளிவாக உணரும் வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றை சிங்கள மொழியில் எழுதியுள்ளது சிறப்புக்குரியது. வேறு யாரும் செய்யாத ஒர் பணியை இவர் செய்துள்ளதைப் பாராட்டுகிறேன்' என்று குறிப்பிட்டார்.
“காயிதே மில்லத்' மாத இதழின் ஆசிரியரும் - தமிழ் நாடு காயிதே மில்லத் நற்பணி மன்றத்தின் தலைவரு மான ஜனாப் கா. மு. ஆதம் பேசுகையில் "இலங்கையும், இந்தியாவும் ஒரே நாடாகக் கருதப்பட்டு ஒன்றாக இருந்த காலத்தில், அங்கே சென்று அந்த நாட்டை வளப்படுத்திய நம் முன்னோர்களின் சந்ததிகள் தான் இன்றைய இலங்கையர், நம்மவர் ஒவ்வொருவருடைய வாழ்விலும், இலங்கை இரண்டறக் கலந்துள்ளது. தமிழ் நாட்டிலிருந்து இலங்கையைப் பிரித்து வைத்துள்ள கடலை நினைத்து, நினைத்து நொந்தேன் என ஒரு தமிழ்ப் பெரியார் கூறுகிறார். அந்த வகையிலே இலங்கையர் நம் இன பந்து மித்திரர்களாகத் திகழ்கிறார்கள்.
இலங்கை மண்ணில் தமிழ் NGAY F6F ALIA GT1) as av arris வர்களில் பலர் முஸ்லிம் சமு தாயத்தைச் சார்ந்தவர்கள்

Page 47
90
எண்ணுகின்ற போது-நமக்கு பெருமையாக இருக்கிறது. அத்தகையவர்களில், சிறப்புக்குரிய ஒருவரான ஜனாப் எஸ். எம். ஹனிபா அவர்கள் இங்கு வந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நமக்குள் இருக்கின்ற இந்தப் பந்த பாசம் நின்று நிலைக்கக் கூடியது. வருங்காலத் தலை முறைக்கு வழிகாட்டக் கூடியது. உங்களையும் எம்மையும் இன்று ஒன்று சேர்த்த இஸ்லாம் வாழ்க! இனிய தமிழ் வாழ்க!” என்று அவர் வாழ்த்தினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் நாடு தலைவர் *சிராஜுல் மில்லத்" அல்ஹாஜ் எ. கே. எ. அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு அல்ஹாஜ் எஸ். எம். ஹனிபா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டுரை வழங்கியது சிறப்புக்குரிய அம்சமாகத் திகழ்ந்தது. தனது பாராட்டுரையில் சிராஜுல் மில்லத் குறிப்பிட்டதாவது:
இலங்கை அறிஞர் ஹனிபா அவர்களை வரவேற்று வாழ்த்துரை வழங்கும் இவ் விழாவில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொருவரும், ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் பிரதி நிதிகளாகத் தோன்றுகிறார்கள். நடைபெற்றுள்ள இஸ் லாமிய இலக்கிய மாநாடுகளில் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து, ஓர் வரலாற்றுப் பெட்டகமாக நூல்வடிவில் ஆக்கிய பெருமை ஜனாப் ஹனிபா அவர்களுக்கு உண்டு.
*தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடலை நினைத்து நொந்தேன்’ எனக் காயிதெமில்லத் ஆசிரியர் கா. மு. ஆதம் சுட்டிக் காட்டியபோது, அது கடலில் மூழ்காமல் தப்பித்ததே என எண்ணி மகிழ்ச்சியடைந் தேன். இன்று கூட அங்கே சுற்றி வருகின்றபோது இலங்கைத் தீவின் எந்தப் பகுதியானாலும் அங்கே தமிழ் முழக்கம் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது. முழுக்க முழுக்க முஸ்லிம்கள் பேசும் மொழி தமிழாக இருப்ப தால், தமிழ் ஒரு இஸ்லாமிய மொழி என்கின்ற வகை.

91.
யிலே இஸ்லாமிய இலக்கியங்கள் வளர்ந்துள்ளது அப்படி வளர்ந்து வரும் தமிழ் இலக்கியத்திற்கு தன்பங்கை செவ்வனவே செய்துவருபவர் ஜனாப் ஹனிபா. எந்தவித ஆரவாரமும் இல்லாத அமைதியான சேவையை, அவர் ஆழமாகச் செய்து வருகிறார். அவரின் சேவை சிறந் தோங்க வாழ்த்துகிறேன்.” -
*நெஞ்சில் நிறைந்த நபிமணி?நூலாசிரியர் மெளலவி பாஸில் ஜி.எம் எஸ். ஸிராஜ் பாக்கவி அவர்கள் பேசுகை யில் “நான் இலங்கை சென்றபோது நண்பர் எஸ். எம். ஹனிபா அவர்களோடு தங்கியிருக்கும் வாய்ப்பைப் பெற் றேன். அப்போது அவர்களிடம் உள்ள மார்க்க அநுஷ்டா னங்களையும் சமுதாயப் பணியையும் நேரில் கண்டு உணர்ந் தேன். அவர்கள் எழுதியுள்ள அனைத்து நூல்களும் முஸ்லிம் தமிழ் இலக்கியத்திற்கு பெருஞ் சிறப்புச் சேர்க்கக் கூடிய னவே அவருக்குக் கொடுக்கப்படும் இவ்வரவேற்பில்,தமிழ் முஸ்லிம் சமுதாயத்தின் தானைத் தலைவரே கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள் என்றால் இந்தச் சமுதாயமே வாழ்த்து வதற்கு ஒப்பாகும். இந்த நல்லநேரத்தில், இலங்கை முஸ் லிம் தமிழ் அறிஞரான எஸ். எம். ஹனிபா அவர்களுக்கு *இலக்கிய முரசு’ என்ற பட்டத்தை இவ்விழாக் குழுவினரின் சார்பில் சூட்டி மகிழ்கிறேன்’ என்ருர், -
‘முஸ்லிம் முரசு’ முன்னுள் ஆசிரியர் ஜனாப் எம். செப் யது முஹம்மது "ஹஸன்" அவர்களும், பெருங் கவிக்கோ வா. மு சேதுராமன் அவர்களும் வாழ்த்திப் பேசினார்கள்
அல்லாஹாஜ் எஸ். எம் ஹனிபா அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். கவிஞர் மன்றத்தின் பொதுச் செயலாளர் க விஞர் மு. மூலா, நன்றி, நவில, விழா இனிது முடிந்தது. (நன்றி: "உதயம் 24-12-1982)
முற்றும்

Page 48
சட்டத்தரணி, அல்ஹாஜ்
எஸ். எம். ஹனிபா எழுதிய நூல்கள் :
உத்தமத் தூதர் (நான்காம் பதிப்பு)
உத்தும் நபித்துமாணோ (சிங்களம்- இரண்டாம் பதிப்பு)
உத்தமர் உவைஸ்
மஹாகவி பாரதி (சிங்களம்)
இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி
Los Ts6úl ury (தமிழ்)
எங்கள் ஊர், கல்ஹின்னை
இஸ்லாமிய இலக்கிய மறுமலர்ச்சி


Page 49
!';
萤
*
禺
疇
激>多<※米>*<※
எனக்குக் குடும்ப பாசமுள் களகரமான மலர்ந்த வாழ்க்ை நிலைக்களனாக எப்போதும் னியத்தலம். இக்கிராமத்தில் கன்னித் தமிழ் பேசும் முஸ்லி உழைப்பினால் தேடிய செல்வச் வாழ்ந்து வருகின்றனர், அவ பண்பாட்டு வாழ்க்கை முறை யாகிய தமிழ் மொழியையும் வாழ்ந்து வருவதை நான் அங் ஞானத் துறை களில் வளர்ச்சிய இல்லாத தனித்தன்மை தமிழுச்
இஸ்லாமும் தமிழும் அவர்க ஒரு நாணயத்தின் இரு பக்க மொழி கலாசார மொழியாகவு மொழியாகவும் பேணிக் கற்கப்
பேராதனையிலிருக்கும் க கல்ஹின்னையில் நடைபெற்ற கள் பிறந்த தினக் கொண்டா ஒழுங்கு செய்து என்னையும் அ படி செய்தார் ஹனிபா.இதுே மீலாத் விழாவில் பங்கு பற்றிய கிடைத்த வரவேற்பு பின்னைய மட்டக்களப்பு, கொழும்பு, கர் இடங்களில் மீலாத் விழாக் தூண்டுகோலாயிருந்தது.
-அமரர் பேர
李リ<>。<言米字。<釜>リ<
விலே ரூ. 25

을 >용 늦>용<을늦>용<을
ௗ கல்ஹின்னை, எனது மங் |க அனுபவங்களுக்கெல்லாம் நினைவில் இருக்கும் புண்
முழுக்க முழுக்க இனிய ம் மக்களே தமது அயராத செழிப்புடனும் இணைந்து ர்களின் தூய இஸ்லாமியப் யையும் தமது தாய்மொழி இரு கண்களாகப் போற்றி கு கண்டேன். நவீன விஞ் டைந்துள்ள மொழிகளுக்கு குண்டு.
ளுக்கு பெருமதிப்பு வாய்ந்த ங்களாக இருந்தன, அரபு ம் தமிழ் மொழி பண்பாட்டு
பட்டன.
晶
-ஏ, எஸ். நல்லையா
ாலத்தில் 1953-ம் ஆண்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர் ட்டமான மீலாத் விழாவை தில் சொற்பொழிவாற்றும் வ நான் முதன் முதலாக து, அவ் விழாவில் எனக்கு ஆண்டுகளில் யாழ்ப்பாணம் ண்டி, மாவனல்லை முதலிய களில் பங்கு கொள்வதை
N
آئی۔
ாசிரியர் சு. வித்தியானந்தன்
EM KAY PRINTS, Madras-1.