கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2009.03

Page 1


Page 2
(၁&Jဇ်ဇာႀပ် ပÁ,ၾ&J Aynén@ ယိမ်နှဲ#-J
امنه غنی گچیلمی
காற்றைக் கானமாக்கிய புல்லாங்குழல் இணுவையூர் சக்திதாசன் (டென்மார்க்) 150 :טהפת6filat
முன்முகங்கள் (53 தகைமையாளரின் அட்டைப்படக் கட்டுரை) டொமினிக் ஜீவா
மல்லிகை ஜீவா டொமினிக் ஜீவா 650) 5): 150
90களில் மல்லிகைச் சிறுகதைகள் மல்லிகாதேவி நாராயணன்:
, -, - ": : , விலை: 125 Dominic Jeeva "Milki" 2() 1/4, Sri Kanthi resan St, .13 = (htווו ()C()I
T.I. 232 (721
பல்கலைக்கழகங்கள், நூலகங்களுக்குத் தேவையானவை.
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி :7ஆதியினையக வைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவர்
Lutati ELJETiool இலங்கை நாடாளுமன்றத்தில் மாக் திேரம்தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாராட்டப்பெற்ற பெறுமதி மிக்க திசம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு
பாராட்டப்பட்ட சஞ்சிகே மல்விEE 8 இத: நாடாளுமன்றப Lifill:#تiلLFTتي"il iਘ 4 : 21 பழிவ:ாய்ந :துடன் எதிர்காலச் சந்ததியினருக்காக
ஆவணப்படுத்தியமுள்ளது.
50 -வது ஆண்டை நோக்கி. u০্যাঁঠি 8丽8 翡 'ഠ//l് ീ%e Ο βίρα 44 ο βανατικο
|மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர இமல்ல - அது ஓர் ஆரோக்கியமான இலக்கிய இயக்கமுமாகும்.
靶 201 /4, Sri Kathiresan St,
Colombo - 13.
Tel: 2320721 E mallikaiJeeva @yahoo.com
அறிக்கைப் பி/றுத் தயவு செய்து நிறத்துங்கர்/
இந்த ஆண்டு, ஆண்டு மலர் வெளி வந்ததன் பின்னர், நாடு தழுவிய ரீதியில் நம்முடன் பலர் தொடர்பு கொண்டு இலக் கிய உறவைப் புதுப்பித்துக் கொள்ள முயற்
சித்தனர்.
காரணம் எதுவாக இருக்கும் என யோசித்துப் பார்த்தோம்.
இந்த வருடிைம் ஆண்டு மலரைப் பற்றி நாம் எதிர்பாராத வகையில் தொலைக்காட்சி வரிசையிலும் ஞாயிறு வார இதழ்களிலும் அமோக அளவில் அறிமுகம் நடைபெற்றுள்ளதை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம்!
நமது மண்ணில் ஓர் ஆரோக்கியமான இலக்கியச் சங்கதி என்னவென்றால், இந்த நாட்டுப்படைப்பாளிகள் பற்றியும் அன்னாரது படைப்பு வெளிப்பாடுகள் குறித்தும் அடிக்கடி நமது நாளேடுகள் முக்கியமான செய்திகளை வெளியிட்டு, மக்கள் மத்தியில் பிரசாரப்படுத் தியமைதான் பிரதான காரணம் என நாம் 鲇配 இன்னொரு அதிசயத்தையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மெய்யாகவே கருதுகின்றோம்
இத்தனை யுத்த அவலச் சூழ் நிலைகளுக்கு மத்தியிலும் நமது மண் ாரில் நடந்து வரும் கலை,இலக்கிய விழாக்களின் கனம் காத்திரத்தையும் நீங்கள் புரிந்து GEITSETT BIGLIGTIGLEb.
இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

Page 3
நம்மைச் சூழ்ந்த சூழலில் எத்தனை தான் அவலங்கள், கஷ்ட நிஷ்டுரங்கள் நடந்து கொண்டிருந்தாலும், உண்மை யான கலை இலக்கிய ரஸிகர்கள் சூழ்நிலையால் மனம் தளர்ந்து போகாமல், தங்கள் தங்களது ரசனைக்குட்பட்ட வழிகளில் இந்த நாட்டு கலை இலக் கியங்களை உண்மையாகவே நேசிக்கப் பழக்கபட்டுள்ளனர் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.
நமது தேசிய துயரத்தில் பங்கு கொள்வதாக விளம்பரப்படுத்திக் கொண்டு, தினசரி இதழ்களில் ஆதிக்கப் போர் நடத்திக் கொண்டிருக்கும் தமிழகத்தவர்கள், எமக்காக உதவுவதாகச் சொல்லிக் கொண்டே, தமக்குள் தாமே அரசியல் போர் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கின்றது. உங்களது தற்காலிக அரசியல் ஆதாயத்திற்காக எமது பிரச்சி னையை உங்களுக்குள்ளேயே பங்கு போட்டுக் கொண்டு குட்டை குழப்பாதீர்கள்
இந்த மண்ணில் வாழ்ந்து, போராடி தமிழில் புது இலக்கியத்தைப் படைத்து வரும் இந்த நாட்டுப் படைப்பாளிகளின் படைப்புக்கள் எத்தனையை நீங்கள் கடந்த காலத்தில் படித்துப் பார்த்து, ஆதரவுக்கரம் நீட்டியுள்ளீர்கள்?
இந்த மண்ணில் அற்புதங்கள் படைத்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமரிசகர்கள் மறைந்துள்ளனரே, எத்தனை பேர்களுக்கு
உங்களது இலக்கிய இதழ்கள் தமது
வெளியீடுகளில் முக்கிய இடம் கொடுத்து, ஒரு வரிச் செய்தி தானும் பிரசுரித்துள்ள 5076 it?
மூன்றாந்தரச் சினிமாக்காரிகளின் மன்மதச் சிரிப்பழகிற்கும், மோகனப் புன்ன கைக்கும் கொடுத்த முக்கியத்துவதில் ஒரு பங்கைக் கூட, நமது கலைஞர்களின் மறைவுச் செய்திகளை இதுவரை காலமும்
ஒன்றைக் கூட வெளி யிட்டுள்ளிர் களா?- இல்லையே!
நமது நாட்டு மக்களினது பிரச்சினை களை முன் வைத்து பல இளைஞர்கள் தீக்குளித்துத் தமது இன்னுயிரை மாய்ப்ப தைச் செய்திகளில் படமாகப் பார்த்து மெய் யாகவே மனம் வெதும்பிப் போனோம். இந்தக் கொடுரச் சாவு தேவைதானா? இதை முன்னு தாரணமாகக் கொண்டால், தமிழகம் சாவிடா
கலல்லவா மாறிவிடும், இந்த இழப்பைக்
கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
இந்தப் பிரச்சினையின் ஆழ அக லங்களைப் புரிந்து கொண்டவர்கள் பலர் இருக்கின்றனர் என்பது நமக்குத் தெரியா ததல்ல. அவர்களில் இன்னும் பலர் மெளன மாகவே இருக்கின்றனர் என்பதும் எமக் குத் தெரியும்.
இந்த நாட்டுத் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் தேசிய இனம் கடந்த 30
ஆண்டுகளாக இதற்குக் கொடுத்த விலை
இருக்கின்றதே, இது சாதாரண விலை யல்ல. மிகப் மிகப் பாரிய விலை
எனவே, பக்கத்துப் பக்கத்து நாடுகளில் காலாகாலமாக வாழ்ந்து வரும் மக்களின் இதயக் குமுறல் எங்களுக்குப் புரியாததல்ல. அதுவும் தமிழக இதயக் குமுறல் விளங்கிக் கொள்ளக் கூடியதுதான். ஆரோக்கியமான இந்த இதயக்குரல் பிரச்சினைக்குத் தீர்வு காண வழிசமைக்கப் பார்க்கட்டும்!
ஒர் ஆலோசனை சொல்கின்றோம்.
நமது உயிர்ப் பிரச்சினையில் உங்களுக் குள்ளேயே ஒருவொருக்கொருவர் அரசியல் அறிக்கைப் போர் தொடுப்பதை விடுத்து, ஓர் ஒழுங்கு முடிவுக்கு வாருங்கள்.
-அதுதான் இப்போதைய தேவை.
-ஆசிரியர்

மக்கள். ஞாபகமிருக்கட்டும் மக்கள்.
வன்னிப் பிரதேசத்திலிருந்து நாளாந்தம் வெளிவரும் தகவல்கள் நெஞ்சை உருக்குகின்றன. மனசை நோகடிக்கின்றன.
சாதாரண பொதுமக்கள் இந்த யுத்த அரக்கனால் தினசரி பாதிக்கப்பட்டு, ‘என்ன செய்வது? - ஏது செய்வது? என்பது தெரியாமலேயே திகைத்துத் திக்குமுக்காடிப் போயுள்ளனர். வாழ்வே அவர்களுக்குப் பெருஞ் சுமையாகவுள்ளது.
சாதாரன இந்தப் பாமர மக்களின் நாளாந்த அவலங்கள் ஒரு சிலதுகள்தான் செய்திகளாக வெளிவருகின்றன. ஏனைய கோர நிகழ்வுகள் இயல்பாகவே மறக்கடிக்கப்பட்டு விடுகின்றன. காணாமலே போய்விடுகின்றன.
இலங்கையின் நீண்ட கால வரலாற்றில் இந்தக் காலகட்டத்தில் யுத்தத்தினால் ஏற்பட்ட பொதுசன அவலம், நிஷ்டூரம் சொல்லில் அடக்க முடியாதவை. வார்த்தைகளால் விவரிக்க இயலாதவை.
பொதுமக்கள்தான் இந்த நாட்டின் மாபெரும் சொத்து. அப்படியான நிரந்தர நாட்டுச் சொத்தான பாமர மக்கள், யுத்தக் கெடுபிடி காரணமாக மனநோய்க்கு உட்பட்டுக் காணாமலே போய்விடுகின்றனர். சிலர் மறைந்தும் விடுகின்றனர்.
இந்தக் கடூர அவலத்தைத் தவிர்க்க வேண்டிய மாபெரும் கடமை அரசாங்கத்தைத் தான் சாரும். இதைத் தட்டிக் கழித்துவிட முடியாது, அரசு
நாளுக்கு நாள் வன்னிப் பொதுமக்கள் மாத்திரமல்ல, நாட்டுப் பாமர மக்களும் பல பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றனர்.
நாளை நாடு தழுவிய முறையில் அனைத்துப் பொதுமக்களும் தங்கள் தங்களது தார்மீகக் கோபத்தையும் ஆத்திரத்தையும் காண்பிக்கக்கூடிய சூழ்நிலை கூட வந்து Cagepril b.
அத்துடன் சர்வதேசமெங்கும் பயமுறுத்தி வரும் சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகளுக்கு நாடு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
எனவே, சிறுபான்மை இன மக்களினது நீண்ட கால நியாயமான அபிலாஷைகளைத் தீர்த்து வைப்பதில் அரசு முழுக் கவனமும் செலுத்த வேண்டும்.

Page 4
stool-ul-b
உண்மைக்கும் புனைவுக்கும் இடையே
ஒரிரும் ‘முத்து லிங்கம்
- முருகபூபதி
ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது கதை முடிந்த பின்னும் சிறிது துாரம் ஓடவேண்டும். சிறுகதையின் முழுமை அவன் சிந்தனை ஓட்டத்தில்தான் நிறைவேற வேண்டும். ஒரு உண்மையான சிறுகதை அது முடிந்த பிற்பாடுதான் தொடங்குகிறது. இப்படிச் சொல்லியிருப்பவர் தன்னை ஒரு இலக்கிய விமர்சகராகவோ அல்லது இலக்கியப் பேராசிரியராகவோ அறிமுகப்படுத்திக்கொண்டவர். அல்ல. .
ஒரு குடும்பத்தில் திடீரெனக் காணாமல் போனவர் திடுதிப்பென சு:ார் இருபத் தியைந்து ஆண்டுகளுக்குப் விந்தையான இயல்புகளுடனும் கருத்தையும் கவனத்தையும் ஈர்க்கும் தோற்றத்துடனும் திரும்பிவந்து இதோ நான் இன்னமும் இருக்கின்றேன் எனச் சொல்லும்போது அந்தக் குடும்பத்தினரிடம் தோன்றும் வர்ணிக்க வார்த்தைகளைத் தேடும் பரவசம் இருக்கிறதே. அது போன்றதுதான் நண்பர் அ.முத்துலிங்கம் அவர்களின் இலக்கிய மறுபிரவேசம் என்று நினைக்கின்றேன்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நான் இலக்கிய உலகிற்குள் பிரவேசித்த 1970 காலப்பகுதியில் ஒரு மாலைவேளையில் கொள்ளுப்பிட்டி தேயிலைப்பிரசார மண்டபத்தில் நடந்த ஒரு இலக்கியநிகழ்வில் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரைச் சுட்டிக்காட்டி அவர்தான் அக்கா கதைத் தொகுதி எழுதி : அ.முத்துலிங்கம் என்று ஒரு இலக்கிய நண்பர் சொன்னார். எனினும் அன்று அவருடன் பேசும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அக்கா தொகுதியும் படிக்கக் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் முத்துலிங்கம் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவரையும் அவரது அக்காவையும தேடியும் கண்களுக்குத் தென்படாமல் மறைந்து விட்டார்கள். *
1987 இல் நானும் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்ட பின்னும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். எதிர்பாராமல் எனது வீட்டு முகவரிக்கு பாக்கிஸ்தானிலிருந்து ஒரு புத்தகப் பார்சல் வந்தது. அனுப்பியிருந்தவர் முத்துலிங்கம். புத்தகம் திகட சக்கரம் கதைத் தொகுதி.
மல்லிகை மார்ச் 2009 & 4
 
 

உடனே பதில் எழுதினேன். அவரிட மிருந்து பதில் இல்லை. திகடசக்கரத்தை வைத்துக்கொண்டு, மீண்டும் தேடுதல் படலம். ஐ.நா. அதிகாரியாக, அவர் உலகம் சுற்றிக்கொண்டிருப்பதாக நான் விசாரிப்பவர்களெல்லாம் சொன்னார்களே தவிர, சரியான தகவலைத் தரவில்லை. என்னாலும் அவரது சரியான இருப்பிடத் தைபோ, முகவரியையோ கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.
அவர் தமது உத்தியோகத்தி லிருந்து நிரந்தரமாக ஓய்வுபெறும் வரை யில் காத்திருக்க வேண்டியிருந்தது. எனி னும், என்னைப் போன்ற வாசகர்கள்ை காத்திருக்கச் செய்யாமல் தமது கதை கள், கட்டுரைகள் மூலம் இலக்கிய மறு பிரவேசத்துடன் அறிமுகமாகிக் கொண்டி ருந்தார்.
கனடாவிலிருக்கிறார் என்பதை அறிந்து தொடர்பு கொள்வதற்கு 2007 ஆம் ஆண்டு வரையில் காத்திருந்தேன் எனச் சொன்னால் எவரும் நம்பமாட்டார் கள். கனடாவுக்குச் சென்றும் அவரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது. அமெரிக்காவிலிருந்து எனக்கு 2008ஆம் ஆண்டு பிறந்ததும் முதல் வாழ்த்தும், நீண்ட உரையாடலையும் தந்தவர் முத்துலிங்கம் மின்னஞ்சலும் தொலை பேசியும் தொலைத்துவிட்ட நீண்ட பெரிய இடைவெளியை நிரப்பிவிட்டன.
தமிழகத்தில் தீராநதி, ஆனந்த விகடன்,உயிர்மை, வார்த்தை உட்பட பல இணைய இதழ்களிலெல்லாம் எழுது கிறார் ஆனால், ஈழத்து இதழ்களில் எழுதுகிறார் இல்லையே. என்ற
கவலையை சிலர் தெரிவிக்கத் தொடங்கியுள்ள சூழலில்,
மல்லிகை ஆசிரியர் கேட்டதன் பிரகாரம் இந்த ஆக்கம்.
1937இல் இலங்கையில் வட மாகாணத்தில் கொக்குவில் கிராமத்தில் 3)(9 பிள்ளைகளைக்கொண்ட பெரிய குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையாக பிறந்த முத்துலிங்கம், 1960இல் இலக் கியப் பிரவேசம் செய்தார். நான்கு
ஆண்டுகளில் (1964) முதலாவது கதைத்
தொகுதி அக்காவை தந்தவர், மீண்டும் 1995இல்தான் அதாவது. இருபத்தியொரு வருடங்களின் பின்னர் திகடசக்கரம் கதைத் தொகுதியை தருகிறார்.
மீண்டும் எழுதுவதற்கு துண்டு கோலாக இருந்த காரணி என்ன? என்று
கேட்டேன்.
“ஒரு நாள் தற்செயலாக ஒரு சஞ்சிகையை புரட்டியபோது நான் எங்கே விட்டேனோ, அங்கேயே தமிழ் சிறுகதை நின்றது. ஆகவே திரும்பவும் நுழைவது சுலபமாக அமைந்தது” 616ງ-
அவரது நுழைவு பயன்மிக்கது. தமிழ் வாசகர்களுக்கு புதிய அனுப வத்தை வழங்கியது. தமிழ் இலக்கிய உலகிற்கு புதிய வரவுகளைத் தந்தது.
திகடசக்கரத்தைத் தொடர்ந்து, வம்சவிருத்தி (கதைகள்-1996), வட்க்கு வீதி (கதைகள்-1998), மகாராஜாவின் ரயில் வண்டி (கதைகள்-2001), அ.முத்து லிங்கம் கதைகள் (2001), அங்கே இப்ப
மல்லிகை மார்ச் 2009 & 5

Page 5
என்ன நேரம்? (கட்டுரைகள்), கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது (தொகுப்பாசிரியர்), வியத்தலும் இலமே (நேர்காணல்கள்), பூமியின் பாதி வயது (கட்டுரைகள்), உண்மை கலந்த நாட் குறிப்புகள் (நாவல்) முதலானவற்றை தந்திருப்பதுடன் இல்லாமல், அயராமல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் முத்துலிங்கம் பவளவிழாவை நெருங்கிக் கொண்டிருக்கின்றார்.
தமிழ் இலக்கியச் சூழலில் பல விந்தைகளை அண்மைக்காலத்தில் நிகழ்த்தியிருப்பவர் முத்துலிங்கம் என்பத னால் ஈழத்து தமிழக வாசகர்கள் மத்தி யில் மிகுந்த கவனத்திற்குள்ளாகியிருக் கிறார்.
ஊடகங்கள் உருவாக்கிய எழுத் தாளர்களும் வாசகர்களும் இருக்கிறார் கள். அதேபோன்று புதிதாக வாசகர்கள்” பலரை உருவாக்கிய பெருமையை கொண்டவர் முத்துலிங்கம், திரைகட லோடி திரவியம் தேடியவர்களுக்கு மத்தியில், தேசம் விட்டுத் தேசம் ஓடி இலக்கியப் படைப்புகளைத் தந்தவர்கள் வரிசையில் இன்று முன்னணியில் இருப் பவர் முத்துலிங்கம்.
சியாரா லியேர்ன், சூடான், பாக்கிஸ் தான், ஆப்கானிஸ்தான். கென்யா, சோமா லய்ா, என்று பல நாடுகளில் உலக வங்கிக்காகவும், ஐக்கிய நாடுகள் சபைக் காகவும் வாழ்ந்தவர், தமது அலைந் துலைந்த அனைத்துலக வாழ்வை இலக் கியமாக சித்திரித்து தமிழுக்கு வளமும் புதிய பார்வையும் தந்துள்ளார்.
பழந்தமிழ் இலக்கியங்கள் உட்பட, ஆங்கில இலக்கியங்களிலும் மிகுந்த பரிச்சியம் இவருக்கிருப்பது சிறந்த மூல தனம். அந்த மூலதனத்தை இலக்கிய வாசகர்களுக்கு சுவாரஸ்யத்துடன் பகிர்ந் தளிப்பதில் வெற்றி கண்டவர்.
அவர் ஒரு நைஜீரிய எழுத்தாளரின் கதையில் பிரதான பாத்திர்மாகி ஆபிரிக்க - பிரெஞ்சு இலக்கிய வாசகர் களிடமும் அறிமுகமாகியிருக்கும் விந்தையை தமிழுலகிற்கு தெரியப்படுத் தியவர் ஷோபா சக்தி,
முத்துலிங்கத்தை கதாபாத்திரமாக்கி திருமுடுலிங்க என்ற சிறுகதையை நைஜீரிய எழுத்தாளர் மம்முடு ஸாதி என்பவர் ஆபிரிக்காவின் ஹெளஸ் மொழியில் எழுதியிருந்தார். இந்தக் கதையை ஹிரன் வில்பன் என்பவர் பிரெஞ்சு மொழிக்குப் பெயர்க்க, அதனை ஒரு ஆபிரிக்க இலக்கிய சிறப்பிதழில் படித்த ஷோபா சக்தி, தமிழுக்குத் தந்தார். பல இணைய இதழ்களில் இதனைப் படிக்க முடிந்தது.
முத்துலிங்கம் ஆபிரிக்க நாடொன் றில் ஐ.நா.வுக்கான அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய காலத்தில் அவரிடம் சிற் றுாழியராகப் பணியாற்றியவர்தான், இந்த மம்முடு ஸாதி. இவர், இதுவரையில் மூன்று கதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருப்பதாக ஷோபா சக்தி தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழக ஜனரஞ்சக சஞ்சிகையொன் றில் முத்துலிங்கம் குறித்து விதந்து
மல்லிகை மார்ச் 2009 ஜ் 6

எழுதப்பட்டதைப் பார்த்தவுடன், மல்லிகை
ஆசிரியர் தமது துாண்டில் கேள்வி-பதில் பகுதியில், மிகுந்த உற்சாகமுடன் எம்ம வர் ஒருவருக்கு கிடைக்கப் பெற்ற சிறந்த அங்கீகாரம் என்ற தொனியில் எழுதியிருந்தது இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.
பூமியின் பாதி வயது கட்டுரைத் தொகுப்பு தொடர்பாக உயிர்மை பதிப் பகம் தரும் பின்வரும் குறிப்பு முத்து லிங்கத்தின் எழுத்துலகம் பற்றிய கணிப்பை விளக்குகிறது -
நவீனத் தமிழ் உரை நடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத் தையும் சேர்த்தவை அ.முத்துலிங் கத்தின் எழுத்துக்கள். வாழ்வின் வியப் பும் நெகழ்ச்சியும் கொண்ட தருணங் களை மிக நேர்த்தியான காட்சிகளாக் கும் இவரது கட்டுரைகள், வாசிப்பின் தீராத இன்பத்தை நெஞ்சில் பெருகச் செய்கின்றன. அன்றாட வாழ்வின் சின் னஞ் சிறிய அழகுகளும் அபத்தங் களும் முத்துலிங்கத்தின் துல்லிய மான, அங்கதம் மிகுந்த மொழியின் வழியே வெகு நேர்த்தியாக காட்சிப் படுத்தப்படுகின்றன. தீவிர உலக இலக்கிய வாசிப்பிலிருந்தும் புலம்
பெயர்ந்த வாழ்வின் பரந்துபட்ட அனுப
வங்களிலிருந்தும் எழுதப்பட்ட இக் கட்டுரைகள் ஒரு பிரம்மாண்டமான களத்தை உருவாக்குகின்றன. ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு வெகு அபூர்வ மாகவே சாத்தியமாகும் களம் இது. உண்மைக்கும் புனைவுக்கும் இடையே உள்ள மங்கலான கோட்டை முற்றிலு
மாகவே அழித்துவிடும் முத்துலிங்கம், தான் தொடுகின்ற ஒவ்வொன்றையும் ஒரு அனுபவமாகத் திறந்து விடுகிறார்.
கனடாவிலிருந்து கொண்டு அவ்வப் போது அமெரிக்காவுக்குப் பயணித்தவாறு அதிகாலை எழுந்து கணினியில் படித் தும், கணினியில் எழுதியும் தனது சிந்தனைகளுக்கோ எழுத்துக்கோ ളുഖ கொடுக்காமல் அயர்வின்றி இயங்கும். இவரது எழுத்துக்களைப் படிக்கும் தருணங்களில் வாய்விட்டுச் சிரிக்கலாம். சிலிர்ப்புட்ன் சிந்திக்கலாம்.
வாசகனை கவர்ந்திழுக்கும் மந்திர சக்தி இவரிடம் எப்படி வந்தது என்று அடிக்கடி நான் நினைப்பதுண்டு.
இலக்கியத்தில் மட்டுமன்றி சர்வ தேச ரீதியாக சிறுபான்மை இனங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் - போராட் டங்கள் தொடர்பாகவும் விசாலமான பார்வையைக் கொண்டவர் என்பதை
கடந்த 2008 டிசம்பரில் அவர் தீராநதிக்கு
வழங்கிய நேர்காணலிலிருந்து புரிந்து கொள்ள முடியும். அவரது கருத்துக்கள் விமர்சனத்துக்கும் விவாதத்துக்குமுரி பவை என்பதனால்தானோ தெரிய வில்லை, கொழும்பு தினக்குரல் ஞாயிறு
இதழும் மறுபிரசுரம் செய்திருக்கிறது.
ஒரு முழுமையான இலக்கியவாதி யிடம் இப்படியான சர்வதேச அரசியல் கண்ணோட்டம் இருப்பதும் அபூர்வம்தான்.
ஒரு ஆங்கில இலக்கியவாதியை யும் படைப்பையும் அறிமுகப்படுத்தும் போதிலும் சரி - கிட்டுவிடமிருந்த
மல்லிகை மார்ச் 2009 ஜ் 7

Page 6
குரங்கைப் பற்றிச் சொல்லும் போதும் சரி - பல எழுத்தாளர்களிடமிருந்து கட்டுரைகளைத் தருவித்து தொகுத்து தருகையிலும் சரி - நாட்டியப் பேரொளி பத்மினியை தனது வீட்டு விருந்தாளி யாக வைத்திருந்து உபசரித்து உரை யாடிய பொழுதும் சரி - தனது சகோதரி
சங்கீத வகுப்பில் பயின்ற கோலத்தை
சித்திரிக்கும் போதும் சரி அவருக்கே உரித்தான நளினத்துடனும் அங்கதச் சுவையுடனும் வாசகர்களுடன் பேசுவார். அவரது எழுத்துக்களைப் படிக்கும் பொழுது நாம் அவர் அருகே இருப்பது போன்ற உணர்வுதான் ஏற்படும்.
முத்துலிங்கத்தை பற்றி எழுதுவ தற்கு சில பக்கங்கள் போதாது. அவரது வாழ்வையும் இலக்கியப் பணியையும்
விரிவாக பெரிய நுாலாகவே எழுத
(Մlգեւյtb.
இந்த ஆக்கத்தின் ஆரம்பத்தில் முத்துலிங்கம் அவர்களின் கூற்றாக பதிவு செய்யப்பட்டிருப்பது போன்று, அவரது ஒரு படைப்பை படித்த பின்பும் அந்தப் படைப்பு சில கணங்களுக்கு
சில நாட்களுக்கு சில வருடங்களுக்கு எங்க்ளுடன் தொடர்ந்து வந்துகொண்டே யிருக்கும்.
அப்படி எங்களுடன் வந்துகொண்டே யிருப்பவர்தான் முத்துலிங்கம்.
letchumananm(agmail.com
மல்லிகை மார்ச்
 

இலக்கிய நெஞ்சங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் .ே காத்திருந்த மல்லிகையின் 44ம் ஆண்டு மலர் இப்பொழுது ; வெளிவந்து விட்டது. இந்நேரம் அது இலக்கிய ஆர்வலர்கள் அத்தனை பேர்கள் கரங்களிலும் மணம் பரப்பிக்
கொண்டிருக்கும் என்று எண்ணுகின்றேன்.
ஆவலுடன் முதற் பக்கத்தைப் புரட்டியவுடனேயே i ; அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் முகமூடி : இலக்கியக் கருத்துக்கள் சில' என்ற * தலைப்பின் கீழான ஆசிரியத் தலையங்கம் என்னை வெகுவாகக் கவர்ந்தது மாத்திரமல்லாமல் ஆசிரியரின் எண்ணக் கருவூலங்கள் ஏதோ ஒரு இனம் புரியாத
; ; மனத்தாக்கத்தையும், ஏக்கத்தையும் ஏற்படுத்தியது.
மல்லிகையின் உச்ச நோக்கம் அதன் 50ம் ஆண்டை நோக்கியதாக உள்ளதாக தனது இலட்சியத்தையே ஒரு வரியிலேயே குறிப்பிட்டு விட்டார். இந்த 50 ஆண்டுகள் என்ற இலக்கு ஆசிரியரின் தொடர் முயற்சிக்கு ஒரு முழுமையைத் தேடித் தரும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.
ஏனெனில் இலக்கியச் சிற்றேடுகளுக்கு தொடர் நோய் ஏற்பட்டு இடைநடுவில் மரணித்துப் போவது இலங்கையிலும் சரி, தமிழகத்திலும் சரி தவிர்க்க முடியாதது ஒன்று என்ற கருத்தை ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்.
ஆசிரியர் குறிப்பிடுகின்றார் :
தமிழ்நாட்டில் ரகுநாதன், எழுத்து செல்லப்பா, தீபம் நா.பார்த்தசாரதி, க.நா.சுப்ரமணியம், வல்லிக்கண்ணன்,
விந்தன், ஜெயகாந்தன், கோமல் போன்ற இலக்கிய ஜம்பவான்கள் அனைவருமே இலக்கியச் சஞ்சிகை நடத்திவிட்டு இடைநடுவில் மூடுவிழாச் செய்தவர்கள் மாத்திரமல்லாமல் இலங்கையில் கே.கணேஷ், வரதர், சிற்பி, கணேசலிங்கன் போன்றர்களுடன் இன்னும் பலர் இத்துறையில் ஈடுபட்டு தோல்வி கண்டவர்கள் என்பதையும்
எடுத்துக் காட்டியிருக்கின்றார்.
மேலும், ஆசிரியரின் ஒவ்வொருவரினது வாழ்க்கை யிலும் வரலாறு ஒன்று பொதிந்திருக்கிறது என்ற கருத்துக்
மல்லிகை மார்ச் 2009 ஜ் 9

Page 7
குவியல் மூலமாக ஆசிரியரின் மன ஆதங்கத்தையும், கவலையையும் அறிய முடிகிறது. ஏனெனில் அவர் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், பெரியவர்கள், இலக்கிய நண்பர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் இன்னும் பல இன்னோரன்னவர்கள் தம்மைப் பற்றிய சுயசரிதை, சுயவரலாறு ஒன்றையேனும் இவ்வுலகிற்கு விட்டுச் செல்லாமல் வாழ்ந்தோம் மடிந்தோம் என்று வாழ்ந்துவிட்டுப் போனவர்கள் பற்றிய அடிச்சுவடி தெரியாமல் பிற்கால சந்ததி யினருக்கு ஆவணமேதுமில்லாமல் இருப்பது பற்றிய மனக்கிலேசத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.
அவர் தனது இளமைக் காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட பழக்க வழக்கங் களால்தான் அறிஞர் திரு.வ.ரா. அவர் களின் அறிவுரைக்கமைய தனது சுய வரலாற்று வடிவமாக எழுதப்படாத
கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' என்ற
நூல் வரக் காரணமாக அமைந்தது என்றால் மிகையாகாது. ஆங்கிலத்திலும் அதனை மொழிபெயர்த்திருக்கின்றார். அவரது வழியில் ஏனைய பெரியவர்கள்,
அற்புதமானவர்கள், திறமைசாலிகள்,
கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்றெல்லாம் வாழக் கூடியவர்கள் தமது வாழ்நாள் முற்றுப் பெறுவதற்கு முன்னால் தமது சுயவரலாறுகளை ஆவணப்படுத்தி விட்டுச் செல்ல வேண்டும் என்ற கருத்தை விளக்கமாகக் கூறியுள்ளார்கள்.
அடுத்தவர்கள் எப்படியாயினும், தனது முன் முயற்சியாக தனது மல்லிகை முன்பக்க அட்டைப்பட நாயகர்களை ஒவ்வொரு மாதமும் அறிமுகப்படுத்தி,
அவர்களைப் பற்றிய குறிப்புகளையும் பதித்து ஆவணப்படுத்தி வருவது எதிர்காலச் சந்ததியினருக்கு பெரிதும் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.
மல்லிகை 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 356 இதழ்கள் வெளி வந்துள்ளன. இலக்கியம் உட்பட பல்துறை சார்ந்த முக்கியஸ்தர்களின் 220 பேருடைய அட்டைப்படம் மல்லிகை முகப்பை அலங்கரித்து இருக்கின்றன என்றால் பெருமிதம்தானே?
ஆரம்பத்தில் சாதாரண தாளில் பிரசுரிக்கப்பட்ட முன்பக்க முகப்புப் படம் தற்பொழுது அழகிய விலை உயர்ந்த
தாளில் பதிக்கப்படுகிறது.
ஆசிரியர் டொமினிக் ஜீவா இப்படிக் குறிப்பிடுகிறஈர்கள். ۔۔۔۔۔
"இந்த மண்ணில் யாழ்ப்பாணத்திலும் சரி, கிழக்கு மாகாணத்திலும் சரி, மலை யகத்திலும் சரி, கொழும்பு மாவட்டத்திலும்"
சரி ஏராளமான சாதனையாளர்கள் இன்று
வரைக்கும் வாழ்ந்து மடிந்து போயிருக் கின்றனர்.
அவர்களது இழப்பு முப்பத்தோராம் நாளுடன் அல்லது முதலாம் ஆண்டு ஞாயிறு வார விளம்பரத்துடன் முற்றுப் பெற்று விடும்.
இந்த மண்ணுக்கு அளப்பரிய கல்விச் சேவை செய்தவர்கள், அரசியல் தொண்டு புரிந்தவர்கள், ஊருக்கு உழைத்து தன்னையும், குடும்பத்தினரையும் அர்ப் பணிப்புச் செய்தவர்கள், நேர்மை மிக்க வியாபாரிகள், கஷ்டப்பட்ட மக்களுக்கு
மல்லிகை மார்ச் 2009 ஜ் 10

தகுந்த நேரங்களில் தகுந்த முறையில் உதவி செய்தவர்களின் வாழ்க்கைச் சரித்திரம் இந்த ஞாயிறு கலர் விளம்பரத் துடன் முற்றுப் பெற்றுப் போய்விட வேண்டுமா?" என்று கேட்கிறார்.
உண்மைதான், அவரது கேள்வியில்
நியாயம் இருக்கிறது. ஏனெனில் மேற்படி சுட்டிக்காட்டப்பட்டவர்கள் பற்றிய எந்தத்
தகவலும் எதிர்கால சந்ததியினருக்கு ஏன் எமக்கே தெரியாமல் இருக்கிறது. அவரது
கூற்றுப்படி ஒவ்வொருவர் பற்றிய தகவல் களும் பதியப்பட்டு ஆவணப்படுத்தப்
பட்டிருந்தால் பிற்கால சந்ததியினருக்கு
இலகுவில் அறிந்துகொள்ள வாய்ப்பாக .ظالملا ?PL)
பெரியார் ஹென்டி பேரின்பநாயகம், பருத்தித்துறை தருமகுலசிங்கம், மேயர் துரையப்பா, மூதறிஞர் 'வித்தி பத்திரிகை யாளர் கே.ஸி.தங்கராஜா, நாவலாசிரியர் இளங்கீரன், இலக்கியப் போராளி சட்டத் தரணி சுல்தான், தோழர் கார்த்திகேசன், மாநகர சபைப் பிரதிநிதி அபூஸாலி, நிருபர் செல்லத்துரை, ஆன்மீகத்துறை தனித் துவம் மிக்கவரும், எழுத்தாளருமான தங்கம்மா அப்பாக்குட்டி, வித்துவான் வேந்தனார், சிறு சஞ்சிகையாளரான வரதர், கனகசெந்திநாதன், தினபதி - சிந்தாமணி பத்திரிகைகளின் ஆசிரியர் திரு.எஸ்.ரி.சிவநாயகம் (இவரின் கீழ் நானும் மேற்படி பத்திரிகைகளில் 1970இல் இருந்து பத்திரிகைக் கம்பனி மூடும் வரையில் செய்தியாளராகப் பணியாற்றி யிருக்கின்றேன்.) ஈழகேசரி பொன்னையா, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைக்
கட்டியெழுப்பிய அ.ந.கந்தசாமி, பேராசிரியர் கைலாசபதி, டானியல், கவித்துவப் புலவர் சில்லையூர் செல்வராஜன், (இவர்கள் யாழ்ப்பாண மண்ணில் பிறந்தவர்கள்) கிழக்கிழங்கை நீலாவணன், மலைய கத்தைச் சேர்ந்த சி.வி.வேலுப்பிள்ளை, தெளிவத்தை ஜோசப் போன்றவர்கள் தம்மைப் பற்றிய சுயவரலாறுகளைப் பதிக்கத் தவறி விட்டனர். அது மாத்திர மல்லாமல், மருதூர் கொத்தன், கனி, பித்தன், வ.அ.இராசரத்தினம், எம்.எச். எம்.ஷம்ஸ், எச்.எம்.பி.மொஹிதீன் போன்ற வர்களும் இன்னும் பலரும் அதில்
டங்குவர்.
இவ்வாறு நீண்டதொரு பட்டியல் ஒன்றையே தந்திருக்கும் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள், இவர்களது சுயவரலாறு எழுதப்படாததால் அவற்றை ஆவனப்படுத்த எதிர்கால சந்ததியினருக்கு இவர்கள் பற்றிய எதுவித அறிவும் தெரியாதே என மிகவும் மனம் வருந்தி தனது மனவேதனையை வெளியிட்டிருக்கிறார்.
முடியவில்லையே!
அத்தோடு -
"நீங்கள் கல்விமானா? மக்களால் அங்கீகரிக்கப்பட்ட மக்கள் தலைவரா? அல்லது எழுத்தாளரா? கண்டிப்பாக உங்களது வாழ்க்கை அனுபவங்களை இன்றிலிருந்தே எழுத்தில் ஆவணப்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கு சேமித்து வைக்கப் பழகுங்கள். இந்த மண்ணுக்குச் செய்யும் பெரும் கடமையிது' என்று அறிவுரையும் பகிர்ந்திருக்கிறார்.
மல்லிகை மார்ச் 2009 & 11

Page 8
கோபுரமொன்றின் அடிநெடுகிலும் சீருடைகள் காயவிடப்படுகின்றன. சிறிய நிலத்திணிவுகள்
இரண்டை இணைக்கும் ஒரு கோட்டுப்புள்ளியில் தொப்பிகள் தொங்குகின்றன.
ஒவ்வொரு காலடியிலும் மஞ்சள் பருக்கையாய் நெருநெருவென்று ஈரமன் அடம்பன் கொடிகள் dpւջա பீடத்தின் மேலான தூபிகளில் விருப்புத் தொலைத்த உயிர்களின் விளிப்புகள் சேகரித்துக் கோர்க்கப்பட்டுள்ளன. இதையும் மீறி - கோபுரங்களின்
அடிநெடுகிலும்
ஆடைகளைக் காயப்போட வேண்டாம்
என்று நாங்கள் சொல்லவில்லை. "பிஸ்டியா - நீர்த்தாவரங்கள் விலக்கி கட்டுமரம் வலிக்குமனைவரும் இதுபற்றி முடிவெடுங்கள். விரைவில் உலர்ந்து விடும் ஆடைகள்,
மல்லிகை மார்ச் 2009 ஜ் 12
 

வவுனியா குருமன்காட்டுச் சந்தி. அங்கிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் அந்த விடுதி. விடுதியின் பெயர் தாஜ்மகால்". எத்தனை மனக்கவலை இருந்தாலும் விடுதியின் உள்நுழைந்து விட்டால் போதும், அந்தளவுக்கு அது மிகவும் ஆனந்தமாய் தோன்றும்,
குறும்புக் கதைகள் சொல்லி சிரிக்க வைக்கும் வேந்தன்!
இடையிடையே தன்னை ஒரு சிவாஜி. ஒரு எம்.ஜி.ஆர். ரஜினி. என, இப்படிப் பன்முகங்களை உடனுக்குடன் வெளிக்காட்டும் அமலன்!
"இங்கே பாருங்கள், இந்த ஆண்டின் உலக ஆணழகன் நான்தான்! எல்லோரும் என்னையே பாருங்கள். குளிப்பதற்கு ஆயத்தமாய் தன் மேனியில் எந்தவொரு
ஆடையும் இல்லாமல், நிர்வாணமாய் நிற்கும், நிர்மலன்,
"ஹலோ. ஜோதிகாவா கதைக்கிறியள்?"
"ஹலோ. நயன்தாராவா கதைக்கிறியள்? இங்கே நான் கனேஷ் கதைக்கிறன்!"
என்று பிலிம் காட்டும் கணேஷ்வரன்.
'அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் வணக்கம்! நான்தான்
தமிழக் காட்டாறு ஜெயகாந்தன் சேர். உங்கள்
அன்ைவருக்கும் என் இனிய மாலைநேர
6. AICa Vd 2ற்? قلأثرية"
W
வணக்கங்கள்."
இப்படியாக அந்த விடுதியின் குதூகலம் ஆனந்தமாய்த் தொடரும். இவர்கள் அனைவருக்கும் இடையில் நானும் எனது பங்கிற்கு அதை. இதையென்று சொல்லி மற்றவர்களை மகிழ்வூட்டிக் கொண்டிருப்பேன்.
ஆனாலும், என் அலுவலகம் சென்றால் போதும், இனிமையாய் ஊஞ்சலாடும் என் போன்றோரின் இளமை எல்லாம் கருகிய இதயமாய் மாறிவிடும்.
நான் அந்த அலுவலகத்திற்கு முதல் முதல் நியமனம் பெற்றுச் சென்றபோது, இன்றைய ஏ.ஓ. அன்று சீ.சீ. ஆக இருந்துள்ளார்.
7.30ற்கு அலுவலகம் வரும் சீ.சீ. வரவு இட்ாப்பில் 7.00 மணியென்று ஒப்பமிடுவார். பின்னர் தன் இருக்கைப் பக்கம் கொஞ்சமும் எட்டிப்பார்க்க மாட்டார். மீன் வாங்க அல்லது
மல்லிகை மார்ச் 2009 ஜ் 13

Page 9
மலிவான மரக்கறி வாங்கவென்று சந்தைக் குச் சென்றுவிடுவார். பிறகு அந்த அலுவல் இந்த அலுவல் என்று எல்லாம் முடித்து, அலுவலகம் வர எப்படியும் 10 மணியைத் தாண்டிவிடும். அந்த நேரம் அலுவலகத் தில் நுழையும்போது மனதில் ஒரு குற்ற வுணர்வோடுதான் நுழைவார். அதை
மறைப்பதற்கு ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்து
சக உத்தியோகத்தர்களின் அனுதாப வோட்டினை மனதளவிலே வாங்கி உட் கார்ந்து விடுவார். அலுவல்கள் என்று எதுவும் பெரிசாக இருக்காது. அடிக்கடி நேரத்தைப் பார்த்துப் பார்த்து பொழுது போக்கிக் கொண்டிருப்பார். 11.45 ஆனதும் அந்தரத்தில் வந்தவர்போல் உடன் கிளம்பி விடுவார். ஆளையாள் பார்த்து சிரிப்பதை விட எம்மால் எதுவும் செய்துகொள்ள முடிவதில்லை.
"மச்சான் ஆள் வந்த நேரம் தெரியுந் தானே! இப்ப போறார். பாரன் எத்தனை மணிக்கு வருவார் என்று."
இதை மணிவண்ணன் அடிக்கடி எனக்குச் சொல்லுவான். மணிவண்ணன் ஒரு அண்டல்க்காரன். மற்றவர்களைக் கிண்டல் அடிப்பவன். இது அந்த அலுவல கத்தில் எல்லாருக்கும் தெரிந்திருந்த போதும், அவனின் கிண்டல் கதைகளுக்கு ஆரும் சிரித்துத்தான் ஆகவேண்டும்.
3.15 மணிக்கு வரும் சீ.சீ.யைக் கண்டதும் ஒருவரை ஒருவர் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்ளுவினம்.
குற்றம் செய்யும் நெஞ்சு குறுகுறுக்கும்
என்பது போல சீ.சீ.யின் உள்ளமும் குறு குறுத்துக் கொள்கிறது என்பதை அவரது முகமே காட்டிக்கொடுத்து விடும்.
நாமெல்லாம் 4.15 என ஒப்பமிட்டு அலுவலக வளவிலிருந்து வெளியேறி விடு வோம். ஆனாலும், சீ.சீ. வெளியேற மாட் டார். 4.30இற்கு வெளியேறும் டீ.எஸ்.சிற் காக காத்திருப்பார். டீ.எஸ். வெளியேறி ஐந்தாறு நிமிடங்களில் சீ.சீ.யும் வெளியேறி விடுவார். வெளியேறும் நேரம் 5.30 என குறித்துவிட்டு வெளியேறுவார்.
இவரது நாளாந்த நிகழ்வுகளின் பட்டி யலிற்கு வெகுமானமாக மாத இறுதியில் 67G55) is Qasit sittsb Over time Salary எங்களனைவரின் நெஞ்சங்களையும் ஒரு
அடைத்துக் உண்மையில் பசுத்தோல் போர்த்த புலி என்பது இவராகத்தான் இருக்கும். நாகரிக மான முறையில் கொள்ளையடிக்கும்
கணம் கொள்ளும்,
கொள்ளைக்காரன். அதுவும் ஒவ்வொரு பொதுமகனின் வியர்வையால் உருவான அரச பொது நிதியல்லவா..? இவர் போன் றோர் கொள்ளையடித்துக் கொள்கின்றனர். இப்படியாக குமைந்து கொள்ளும் ஆதங்கங்களை எனக்குள் ளேயே ஒன்று சேர்த்துக் கொழுத்தி விடுவேன்.
எனக்குள்
அநியாயம் நடக்கும் இடங்களில் அதைத் தட்டிக்கேட்டு சீர்செய்ய நினைப் பது என்பதெல்லாம் இதிகாசங்களிலும், சினிமாவிலும்தான் நடக்கும். நிஜ வாழ்க் கையில் அப்படியானவர்களை அப்படி. இப்படி. என்று சொல்லி ஊர்சனம் தம் பட்டம் அடித்துவிடும். இதை நான் எத்தனையோ பேர் வாழ்க்கையில் கண்டு தெளிந்த பெரும் உண்மைகள், ஆவேசம், ஆத்திரம், கோபம் வரும் வேளைகளில் அவற்றை எல்லாம் அடக்கிக் கொண்டு விடுவேன்.
ps 6 sps pré 2009 率 14

இப்படி மற்றவர்களின் கேலிக்கும் கோபத்திற்கும் ஆளான சீ.சீ. இன்று எங்கள் அலுவலக நிர்வாக உத்தியோகத் தராக வந்தது, ஆச்சரியத்தையும் கூடவே எரிச்சலையும் உண்டுபண்ணியிருக்கிறது.
இது என்ன அநியாயம். எல்லாரும்
ஓ.ஏ.ஐச் சபிக்கத் தொடங்கிவிட்டனர்.
போதாக்குறைக்கு அலுவல்கள் பெற்றுக் கொள்ளவரும் பொதுமக்களும், திட்டத் தொடங்கி விட்டனர்.
‘இவன் ஒரு லூசனை. உந்தக்
கண்ணாடி கூண்டுக்குள்ளை நிறுத்தி
யிருக்கு. கதைக்கும் முறையைக் கற்றுக்கொண்
{{p 5 so Gurtë: o 5 Sofi. Lib 〈罗列 نٹی
டெல்லோ, உந்தப் பதவிக்கு உவர் வந்தி ருக்க வேணும்" என்று திட்டித் தீர்த்துப் போய்க்கொண்டிருக்கும் ஒவ்வொரு பொதுமகனினும் வாய் வாசகங்களைக் கேட்கும்போது நாமே தலைகுனிய வேண்டும் போல்தான் இருக்கும்.
எடுத்த எல்லாத்துக்கும் 'இது ஒபிசா. அல்லது வேற என்னவாம். ஒவி செண்டால் ஒபிசாக இருக்க வேணும்.' இப்படி அறிவுறுத்தும் ஏ.ஓ.இனைக் காண எனக்கென்ன எல்லாருக்கும் கோபம் கொப்பளித்துக்கொண்டு வரும்.
நடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பாரடா. நீ செய்த நாசவேலைகளை நினைத்துப் பாரடா...' என்ற வாசகம் உவருக்குத் தெரியுமோ? தெரியாது என நான் நினைப்பதுமுண்டு.
அலுவலக நடைமுறைகள் என்று எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்த
நிலையிலும் பொதுமகனிடம் ஒரு
அலுவலகன் நடந்துகொள்ளும் முறைகள் ஒன்றுமில்லையே என நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு.
அலுவல் என்று அலுவலகம் வரும் எல்லா பொதுமகனுக்கும் எல்லாம் தெரியு மென்று இல்லைத்தானே. இதைப் புரிந்து கொள்ளாத ஏ.ஒ. ஏன் இப்படி எரிந்து கொள்கிறார்.
நாங்கள் எத்தனை விழாவிற்குச் சென்றோம். அதில் எங்களை எத்தனை போட்டோ எடுத்தார்கள், அதில் எத்தனை பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தன. பிரசுரமாகியிருந்தால் அதையே ஒரு முறைக்கு பல முறை புரட்டிப் புரட்டி அதையே பார்ப்பது, தொடர்ச்சியாகத் தன்னைத் தானே சுயபுராணம் பாடிக் கொள்வது.
இந்த மாதிரியான அதிகாரிகளின் சிந்தனைகளை நினைக்கும் போது. “ஏன் இவர்கள் இங்கிருக்கிறார்கள்? தென்னிந் தியா சென்று ஒருசில படம் நடித்து விட்டால் அது இன்னும் நன்றாகவே இருக்குமல்லவா?
ஒவ்வொரு மனிதனுடைய அற்ப ஆசைகளும் மிகவும் இழக்காரமாகத்தான் இருக்கின்றது. முன்மாதிரியான சிந்தனை களைக் காண்பது என்னமோ குறை
வாகவே உள்ளது.
ஏ.ஒ.இன் நிகரில்லாத செயல்களை நினைக்கும்போது தூக்கி எறியவேண்டும் போல்தான் இருக்கும்.
மல்லிகை மார்ச் 2009 ஜ் 15

Page 10
அவரின் அதிகாரத் தொனியும், முறையற்ற கதைகளும் அந்த அலுவல கத்தில் யாருக்குமே பிடிப்பதில்லை.
குடிகாரன் கதையில் கூட தெளிவும், நிதானமும் இருக்கும். அலுவலக உத்தி யோகத்தர் மட்டுமல்ல, அலுவலக உதவி தேடி வருபவர்கள் கூட புறுபுறுப்பது மட்டுமல்ல, உடல் நிலை கொதிப்புற்ற வர்களாக மாறி வருவதை நான் அவதானிக்கவும் தவறவில்லை.
இந்த மனுசன் என்ன? ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? அன்பாகக் கதைக் கலாம் தானே! அன்புக்கு யாரும் @ഴങ്ങഥ என்ற விடயம் இவருக்குத் தெரியாது போல. அதிகார மமதையில் ஆரையும் தூக்கி
எறிந்து நடப்பதால் என்ன பிரயோசனம்?
வாழ்வது கொஞ்சக் காலம். அதற்குள் ஏன் இந்த ஆவேசம்? இறந்த பிறகு ஆர் எதைக் காணப்போகினம். ஏ.ஓ.வை இப்படி நான் சினந்து கொள்கிறேன்.
‘கடவுள் ஒருவன் இருக்கிறான்.
அவன் எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளுவான்' என்று பெரியதொரு மூச்சு விட்டு அந்த ஏ.ஓ.வைச் சபித்துக்கொண்டு, அதன் பிறகு நானும் என் அலுவல்களும் என் கடமைகளை நிறைவேற்ற தொடங்கி
விடுவேன்.
GDR GDER GNER
வழக்கம் போல் நாம் எல்லோரும் அலுவலகம் வந்து சேருகிறோம். ஏ.ஓ. மட்டும் இன்னும் வரவில்லை. ஆனால் அலுவலகம் ஒரே அல்லோல கல்லோலப்
பட்டுக் கொண்டிருந்தது. என் வரவினை ஒப்பமிட்டு உறுதிபடுத்திக் கொண்டபின் நண்பன் மணிவண்ணனை நோக்கி நடக்கிறேன்.
"ஏன்? என்ன நடந்தது மச்சான்? அலுவலகம் ஒரே இரைச்சலாய் கிடக்கு? என்ன நடந்தது?" என்று கேட்கிறேன்.
"அது ஒண்டுமில்லை மச்சான். ஏ.ஓ. வீட்டில திருடனாம். பிடிச்சுக் கட்டிப் போட்டி ருக்காம், அதுதான் பொடியள் எல்லாம் அங்கை போட்டாங்கள்' என்றான்.
அப்ப நீ ஏன் போகேல்ல." - நான்.
'கொள்ளைக்காரன் வீட்டில்தான் திருட்டு போயிருக்கு. அதுவும் பிடிபட் டிருக்கு. எனக்கு நிறைய வேலையிருக்கு. நான் வரயில்லை."
இப்ப நான் எங்கள் ஏ.ஓ.வின் வீடு நோக்கி கிளம்பிவிட்டேன். அங்கே போய் பார்த்த பின்தான் விளங்கியது, நான்தான் கடைசி ஆள் என்று.
அந்தத் தென்னை மரத்தில் திருடன் கட்டிப்பட்டிருந்தான். அவன் கண்களி லிருந்து நீர் தாரை தாரையாகச் சிந்திக் கொண்டிருந்தன. 'நான் பிடிபட்டுப் போனேனே! என் குடும்ப மானம் போய் விட்டதே.!" என்று நினைத்து அவன் அழவில்லை என்பதை நான் ஒரளவு ஊகித்துக் கொள்கிறேன். இப்படி அவன் கண்களும் அவன் முகமும் நன்கு காட்டி விடுகின்றன.
அவனை ஒருதடவை பார்த்த பார்வை யாளர்கள் அவனை என்ன? ஏது? ஏன்
மல்லிகை மார்ச் 2009 ஜ் 16

திருடினாய்? என்று எதுவுமே கேட்க வில்லை. ஏ.ஓ.வினைச் சுற்றி வளைத்து குசலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். அதிகாரிகளுக்கு ‘வ்ாளி வைத்து பழகி னால் அதில் இவர்கட்கு ஒரு சுகம் இருக்கும் என்ற நம்பிக்கை போலும். அதுதான் இப்படி.
நான் நேராகவே அந்தத் திருடனை நோக்கிப் போகிறேன்.
"ஏன் அண்ணை. உங்கள் உடம்பு நல்லாத்தானே இருக்கு ஒரு குறையும் இல்லையே! ஏன். இப்படி?” என்று இழுத் தேன். அவன் ஏதோ சொல்ல நினைக் கிறான். அழுகை. விம்மலுடன் அவனுக் குள் அழுத்திக் கொண்டிருந்தது.
கடுமையான போராட்டங்களின் மத்தியில் தன்னை சுதாகரித்துக்கொண்டு சொல்லிவிடுகின்றான்.
'சேர். நான் இங்கை திருட வரல்லை. என்ர சைக்கிள் எடுக்க வந்த னான். என் குடும்பம் மிகவும் கஷ்டப் படுகுது. மொத்தம் எனக்கு ஏழு பிள்ளை கள். நாங்கள் பருத்தித்துறை. தும்பளை யில் இருந்தனாங்கள். சுனாமியில எங்களிட்ட இருந்த எல்லாச் சொத்தும் அள்ளுண்டு போட்டுது. என்ர இரண்டு பிள்ளையளையும் காவு குடுத்திட்டன். அங்க வாழப் புடிக்கல்ல. கடலைக் காணும் போதெல்லாம் என்ர புள்ளை யளின்ர நினைவுகள்தான் வருது. அது
தான் இங்க வவுனியா வந்து மச்சானின் காணிக்குள்ள ஒரு குடிசை போட்டு இருக் கிறம். நான் இங்க வந்து மேசன் வேழலை
செய்துதான் குடும்பத்தைப் பாக்கிறன். எங்களுக்குச் சுனாமி வீட்டுத் திட்டமும் தாறன் எண்டு சொல்லிப் போட்டாங்கள்.
போன மாதம் என்ர பிள்ளைக்கெண்டு
சுனாமி நிவாரண சைக்கிளும் வந்தது. ஏ.ஓ. அதை எப்படியோ சுருட்டி எடுத்துப்
போட்டார். என்ர பிள்ளை நல்லாப் படிக்கும். நடந்துதான் பள்ளிக்கூடம், ரியூசன் எண்டு போகும். இந்த சைக் கிளுக்காக டீ.எஸ். ஒபிஸ், ஜி.எஸ். வீடு, ஏ.ஓ. வீடு எண்டு எத்தனை முறை நடந்து அலைந்திருப்பன். என்ர சைக்கிளை கள
வாய் எடுக்கிறதைவிட வேறு வழி எனக்கு
தெரியவில்லை. அதுதான்." அவன் அழத் தொடங்கி விட்டான். பொலபொலவென கண்ணிலிருந்து நீர் வழிந்தோடி அவன் சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது.
இதற்கு மேல் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அவனது கட்டுக் களை அவிழ்த்து விடுகிறேன். தன் இரு கரங்களினாலும் கண்களைப் பொத்திக் கொண்டு உட்கார்ந்து ஒ.வென அழ ஆரம்பித்து விட்டான்.
இப்போ என் சக உத்தியோகத்தர்கள் ஓடிவந்து அவனை என்ன? ஏது? என்று கேட்டு அவன் சொல்லவிருக்கும் பதிலுக் காக காத்திருக்கின்றனர்.
தலை குனிந்து மண் கிண்டி பொன் தேடும் ஏ. ஓ. வின் முகம் பார்த்துவிட எத்தனிக்கிறேன். முடியவில்லை, பெரிய தொரு மூச்சு விடுவதைத் தவிர.
மல்லிகை மார்ச் 2009 & 17

Page 11
வாழும் நினைவுகள் : 11
தென்னிாைங்கை இக்ைகிய விழா
- திக்குவல்லை கமால்
தென்னிலங்கையில் ஓர் இலக்கிய விழா, அதுவும் தமிழ் இலக்கிய விழா வொன்று நடைபெற்ற தென்றால் அது 1973இல் திக்குவல்லையில் நடை பெற்றதுதான்.திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் தனது ஐந்தாண்டு பூர்த்தியை முன்னிட்டே இவ்விழாவைக் கொண்டாடியது.
பாரம்பரிய, நுண்கலைத் துறைகளில் பெயர் பதித்திருந்த இக்கிராமம், இலக்கியத் துறையிலும் தன்னை முன்னோடியாக்கிக் கொண்டிருந்தமைக்கு இவ்விழா அத்தாட்சியாகியது. இப்பகுதிக் கிராமங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு சிலரேனும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவை முன்னிட்டு மலரொன்று வெளியிடுவதென முன்கூட்டியே தீர்மானித்து விட்டோம். இதற்காக விளம்பர உதவியென்று போதிய நிதியை யும் திரட்டி விட்டோம். எழுத்தாக்கங்களையும் தயார் செய்துவிட்டோம். இனி அச்சேற வேண்டும். யாருக்குமே முன்அனுபவம் இருக்கவில்லை. எங்கள் பகுதியிலிருந்து இப்படியொரு தமிழ் பிரசுரம் செய்வதென்றால் கொழும்புக் குத்தான் வரவேண்டும். கல்வித் தேவையின் பொருட்டு நான் யாழ்ப்பாணத் திலிருந்ததால் பொறுப்பு என்தலையில் விழுந்து விட்டது.
இவ்விடயம் தொடர்பாக டொமினிக் ஜீவாவுடன் கலந்தாலோசித்தேன். இறுதியாக அவர் யாழ்ப்பாணம் கூட்டுறவு அச்சகத்தில் அச்சிடுவதற்கு ஒழுங்கு, செய்து தருவதாக வாக்களித்தார். வார இறுதியில் அச்சகம் சென்று ஒப்பு நோக்கும் வேலையைக் கவனித்தேன். ஜிவாண்ணயின் வேலை’ என்று அச்சக ஊழியர்கள் முனைப்புடன் செயற்பட்டனர். ரமணி அட்டைப்படம் வரைந்து உதவினார். காலக்கிரமத்தில் பூ மலர்ந்தாயிற்று.
யாழ் - மாத்தறை புகையிரத சேவை மூலம் பிரதிகளைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டேன்.
மல்லிகை மார்ச் 2009 ஜ் 18

மின்ஹாத் மகா வித்தியாலயம் விழாக்கோலம் பூண்டிருந்தது. இத் தகைய விழாக்களில் பெண்கள் பேர் பாதிக்கு மேல் பார்வையாளர் தரப்பி லிருப்பது எமதூர் வழக்கம். கலை நிகழ்ச்சிகளும் கண்டிப்பாக இடம் பெறும்.
இவ்வ்ெளியீட்டையும், திக்கு வல்லை எழுத்தாளர் சங்கப் பணி களையும் வாழ்த்தி வரவேற்று டொமினிக் ஜீவா, நீர்கொழும்பூர் முத்துலிங்கம், ரத்னசபாபதி ஐயர் ஆகியோர் மலரில் எழுதியிருந்தனர். சங்கத்தினர் முன்னைய வெளியீடு களைப் பாராட்டிக் கடிதம் எழுதி யிருந்த பெரியார்களின் கருத்துரைத் தொகுப்பும் இடம்பெற்றிருந்தது. மற்றப்படி உள்ளூர் எழுத்தாளர் களின் ஆக்கங்களே L6 מU Gתפקס அலங்கரித்தன.
விழாவின் சிறப்பம்சமாக கவி யரங்கு இடம்பெற்றது. உள்ளூர் கவிஞர்களுடன் அன்பு ஜவஹர்ஷா வும் கலந்துகொண்டார்.
சங்கத்தின் உபதலைவர் எஸ்.ஐ. எம்.ஹம்ஸா அக்காவை மாவனல்லை ஸாகிறாவில் கற்பித்தார். அவரது தொடர்பால் எழுத்தாளர் ஏ.பி. வி.கோமஸ் கலந்துகொண்டு உரை யாற்றினார்.
இடையிடையே கலை நிகழ்ச்சி கள் அரங்கேறின.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டொமினிக் ஜீவாவின்
உரையே எல்லோரதும் எதிர்பார்ப் பாகவிருந்தது. அவரை எழுத்தாளர் என்ற வகையிலும், மல்லிகை ஆசிரி யர் என்ற தோரணையிலும் அறிந்து வைத்திருந்த பலர் அங்கே குழுமி யிருந்தனர்.
"திக்குவல்லை போன்ற சிங்களப் பிரதேசத்திலிருந்து தமிழ் இலக்கியம் படைப்பதும் அதற்கு முன்வருவதும் சாதாரண விடயமல்ல. தமிழ் யாழ்ப் பாணம் போன்ற தமிழ்ப் பிரதேசங் களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இப்பகுதி எழுத்தாளர்களது படைப் பிலே ஒரு புதிய வீச்சு காணப்படு கிறது. முஸ்லிம் மக்களின் வாழ்க்கை தமிழ் இலக்கியப் பரப்பில் ஒன்று கலக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. இதை நீங்கள் சாதாரணமாகக் கருதி விடக் கூடாது. இதன் தாக்கத்தை இன்றல்ல, இன்னும் இருபத்தைந் தாண்டுகளின் பின்பே நீங்கள் காண்
பீர்கள்” என்று உணர்ச்சிகரமாக உரை
யாற்றினார்.
அவர் அன்று கூறியது இன்று எந்தளவுக்குச் சரியானதென்று நான் சொல்ல முடியாது. அவர் கொடுத்த ஊக்கமும் மல்லிகை களமும் தொடர்ந்து நல்ல அறுவடையைத் தந்துகொண்டிருக்கிறது.
இலங்கையின் தெற்கையும் இணைத்து ஒரு நெடுங் கோடிட்டால், ஒர் அந்தத்தில் யாழ்ப் பாணமும், மறு அந்தத்தில் திக்கு
வடக்கையும்
வல்லையும் அமையும். இந்த நெடுந்
மல்லிகை மார்ச் 2009 ஜ் 19

Page 12
தொலைவை இலக்கியப் பாதை யாக்கி பலதடவை
பெருமை டொமினிக் ஜீவாவையே
பயணித்த
சாரும்.
வாழும் நினைவுகள் 12 பஞ்சமர் - விமர்சன அரங்கு
பலாலி ஆசிரிய கலாசாலையில் (1973) நான் முதல் வருட மாணவன். அதுவும் ஒரு மாதம்கூட ஆகவில்லை. கலைவாதி கலீல் இரண்டாம் வருடத்தைச் சேர்ந்தவர். அவருக்கு கலையக நிலைப்பாடும் நெளிவு சுழிவுகளும் தெரியும்.
அக்காலத்தில் கே.டானியலின் "பஞ்சமர் முதற்பதிப்பு வெளிவந் திருந்தது. நூல் வடிவம் பெற்ற அவரது முதல் நாவல். சமூக ரீதியாக வும், இலக்கிய ரீதியாகவும் மிகுந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த வர்களில் டானியலும் ஒருவர்.
பஞ்சமருக்கு ஒரு விமர்சனக் கூட்டம் நடப்பதாகவும், தான் போக விருப்பதாகவும், அங்கு சென்றால் பல எழுத்தாளர்களைச் சந்திக்க முடியுமென்றும் கலைவாதி என் னிடம் சொன்னார்.
பலாலிக்கு பயிற்சிக்கு வந்த போதும் அது எனக்கு முக்கியமாகப் படவில்லை. இந்த இரண்டு வருடத் திலும் இலக்கிய ரீதியாக அதிஉச்சப் பயனைப் பெறவேண்டுமென்பதே எனது நோக்கமாகவிருந்தது.
“சரி நானும் வருகிறேன்" என்று தயாராகி விட்டேன்.
கூட்டம் பின்னேரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வரலாமென்று முதலில் நினைத்த போதும், இடை நடுவில் விட்டுவிட்டு வர மனம் இடங்கொடுக்கவில்லை.
நான் நினைத்தது போல் sgil நகர்ப்புற மண்டபமொன்றில் நடக்க வில்லை. ஒரு கிராமப்புற மேடை யிலேயே இடம்பெற்றது. இலக்கியக் கூட்டம் அல்ல. விழாவாகவே நடைபெற்றது.
"பஞ்சமரில் இடம்பெறும் ஒவ்
வொரு கதாபாத்திரத்தையும் ஒவ்
வொருவர் விமர்சித்தனர். பழந்தமிழ் இலக்கியங்களில்தான் பாத்திர
ரீதியான விமர்சனங்களைக் கேட்டு வந்த எனக்கு இது வியப்பாக விருந்தது. நாவலில் வீமன்’ என்றொரு நாய்
எந்தளவுக்கென்றால்
வருகிறது. அதைக்கூட ஒருவர் விமர் சன எடைபோட்டார்.
அக்காலப்பகுதியில் சிந்தாமணி, வீரகேசரிகளில் அடிக்கடி கதை எழுதி வந்த தெணியான் இவ்விழாவுக்கு வந்தார். இடையில் வருகைதந்து உணர்ச்சிகரமாகப் பேசிவிட்டு இடைநடுவிலேயே விடைபெற்றார். சந்திக்க முடியவில்லை. அது எனக்குப் பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது.
கலைவாதி ஒவ்வொரு எழுத் தாளராக எனக்கு அறிமுகம் செய்து
மல்லிகை மார்ச் 2009 & 20

வைத்தார். பெரும் பெரும் எழுத் தாளர்களைச்சந்திக்கக் கிடைத்ததை எனது அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொண்டேன்.
இரவோடிரவாக வென்றாலும் கலாசாலைக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்று “நாளைக்குப் போவோம்" என்று
பார்த்தேன்.
கலைவாதி ல்ேசாகத் தட்டிவிட்டார்.
நாளை விரிவுரைக்குப் போய்ச்
சேர்ந்துவிட்டால் சரியென்று மனம்" சொன்னது.
கூட்டம் முடிய டானியல் எங்களை விடவில்லை. எப்படியோ வண்டியில் ஏற்றிவிட்டார். வண்டி புறப்பட்டது. எனக்கு எல்லாமே புதிதுதான். எப்படியோ டானியலின் வீட்டுக்குப் சேர்ந்து
விட்டோம்.
போய்ச்
பிரயாணம், ஓய்வு, இராச் சாப் பாடு, படுக்கை எல்லாமே இலக்கிய மாகவிருந்தது. இளங்கீரன், சில்லை யூர் செல்வராசன், மெளனகுரு. இப்படிப் பெரும் இமயங்கள்தான். இவர்களுக்கு மத்தியில் ஒரு குட்டி எழுத்தாளனாகநானும்.
பொழுது விடிந்தது. தேநீரும் பருகியாயிற்று. அதற்கு மேல் எனக்குப் பொறுமையிருக்கவில்லை. ஆனால் கலைவாதி எந்தக் கவலையு
தார். கலாசாலைக்குப் வேண்டுமென்ற எண்ணம்ே அவருக் கிருக்கவில்லை.
తెస్తిపై 7.
18"ெ :ேக : வ்றமeழுக்:ே வ்குTஆம83)-பாக க்.03.Tபப்ப3ண?
நான் வகுப்பு போகவிருப்பதை எல்லோரும் விளங்கிக் கொண்டனர். முகம் அலம்பிக்கொள்ள கிணற்றடிக் குச் சென்றபோது எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஒடவில்லை. பெரிய கிணறும் மேலே தெரிந்த துலாவும் எனக்குப் பயமூட்டியது. அப்படியொரு துலாவை தொட்டுப் பார்த்த அனுபவம்கூட எனக்கில்லை. எப்படி தண்ணிர்அள்ளுவது?
எனது தடுமாற்றத்தை ஜன்ன லுக்கூடாக அவதானித்து விட்டார் டானியல்.
"தங்கச்சி கமாலுக்கு தண்ணி யள்ளிக் குடு” என்றார் சத்தமிட்டு.
அந்தச் சகோதரி எனக்குத் தண்ணிர் அள்ளித்தர, நான் எனது பூர்த்திசெய்து கொண்டு புறப்பட்டேன்.
தேவையைப்
“தம்பி கமால பஸ்டாண்டில
கொண்டு போய் விடு" - மீண்டும்
டானியலின் குரல்.
நான் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டேன். 3ں۔ : c, udice că Ce îi 33 புரட்சிதாஸன் இது மகனுக்கு
டானியல் இட்ட இயற்பெயர்.
”ܐ . . à;
。っミリ? 。
* மல்லிகை மீர்ச் 2009 & 21

Page 13
nேரேசின் ஆட&த் தொகுப்பு ஆல்
எஸ்.எச்.எம்.ஜெமீல்
நாவலாசிரியர் இளங்கீர்னின் தியாகம்' என்பது நாடகத் தொகுப்பு நூலாகும். 2000ஆம் ஆண்டு செப்டெம்பரில் வெளிவந்துள்ள இந்நூல் கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் தொண்ணுற்றி ஆறாவது பிரசுரமாகும். இத்தமிழ் மன்ற நிறுவனரான அல்ஹாஜ். எஸ்.எம்.ஹனிபா அவர்கள் ஏற்கனவே இளங்கீரன் அவர்களின் சில நூல்களைப் பிரசுரித்துள்ளார்.
தியாகம்’ எனும் இந்நாடகத் தொகுதிக்கான முன்னுரையில் நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார் "எமது வானொலி நாடகங்களில் சிலதை 1993ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் கனவல்ல' எனும் பெயரில் கல்வறின்னைத் தமிழ் மன்றம் பிரசுரித்தது. எனது வானொலி நாடகங்களில் இரண்டாவது தொகுதி ஒன்றையும் வெளி யிடுவதற்குத் தமிழ் மன்றம் முன்வந்தது பற்றிப் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இத்தொகுதியில் மொத்தம் ஏழு நாடகங்கள் வந்துள்ளன. இவை சரித்திர சம்பந்தமான பின்னணியைக் கொண்டவைகள். ஃபிர்தவ்ஸி ஒரு மணி நேரம் ஒலிபரப்பாகியது. ஏனையவை 20 நிமிடங்களே ஒலிபரப்பாகின. இந்தக் குறுகிய நேரத்திற்குள் இவற்றை அடக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதனால் பெருமளவு விரிவான விவரங்களைத் தரமுடியவில்லை. இவை சுருக்கமாக அமைந்துவிட்டன" என்கிறார்.
இவ்வேழு நாடகங்களும் பின்வருமாறு : பிர்தவ்ஸி, திப்பு சுல்தான், நீதியின் சந்நிதானத்தில், ஜிஹாத், சொல்லமாட்டேன், ஷைத்தானின் அடிமைகள், தியாகம் என்பனவாகும். பாரசீக சாம்ராஜ்யத்தை சுல்தான் மவுற்மூத் கஸ்னவி ஆட்சி செய்த காலத்தில் ஓர் இலட்சத்து இருபதினாயிரம் அடிகளில் இறவாப் புகழ் பெற்ற ஷாநாமா எனும் பெருங்காப்பியத்தைப் படைத்த அபுல்காசிம் எனும் இயற்பெயருடைய ஃபிர்தவ்ஸி யைப் பற்றிய முதலாவது நாடகமாகும். பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்ட மைசூர் மன்னனும், ஹைதர் அலியின் மகனுமான திப்புசுல்தானைக் கதாநாயகனாகக் கொண்டது இரண்டாவது நாடகமாகும். முகலாய சாம்ராஜ்யத்தின் அரசனான ஒளரங்கசீப் பின் நீதி நெறி வழுவா ஆட்சியைக் காட்டுவது நீதியின் சந்திதானத்தில் என்பதாகும். நான்காவது நாடகமான 'ஜிஹாத்' போர்த்துக்கேயருக்கெதிரான இலங்கை முஸ்லிம்களின் நிலைப்பாட்டைக் காட்டுவதாகும். அடுத்துவரும் நாடகமான சொல்ல டேன்' என்பதும்,
மல்லிகை மார்ச் 2009 & 22

இறுதி நாடகமான தியாகம்' என்பனவுங் கூட போர்த்துக்கேயரின் அராஜகத்தினால் முஸ்லிம்கள் பட்ட அவஸ்தையை விபரிப் பனவாகும். சீதனம் கேட்டு கொடுமைப் படுத்துவோரை விபரிப்பது 'ஷைத்தானின் அடிமைகள்' என்பதாகும்.
இளங்கீரனின் நாடகங்களைப் பற்றிச் சென்னையைச் சேர்ந்த நெ.அ.பூபதி பின் வருமாறு குறிப்பிடுகிறார் : "நாடகத்துக்காக இவர் எடுத்துக் கொண்ட கருவும் காட்சி யமைப்பும் உரையாடலும் என்னை வெகு வாகக் கவர்ந்தன. என்னை மட்டுமா? படிப் பவர்களையும் கவரத்தான் செய்யும், ஏதோ பொழுது போக்குக்காக எழுதப்பட்ட நாடக
மாக இல்லாமல், வாழ்க்கையை, வர
லாற்றை, பண்பாட்டைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் படைத்திருக்கும் பண்பு பாராட்டுக்குரியதாகும். இலங்கைத் தமி ழில், எளிய நடையில், எதையும் அலசிப் பார்க்கும் புதிய நோக்கில் இவரது படைப் புக்கள் அமைந்திருக்கின்றன. ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும், நாவலாசிரியரு மான இளங்கீரன் அவர்களை நானும் நாடக ஆசிரியன் என்ற வகையில் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்."
யாழ்ப்பாணத்திற் பிறந்து, முஹம்மது கலீல் எனும் பெயரைக் கொண்டிருந்த சுபைர் இளங்கீரன் தனது இலக்கியப் பணியை முதலில் மலாயாவில் ஆரம்பித் தார். 'இனமணி எனும் பத்திரிகையின் ஆசிரியரானார். பிரித்தானிய ஆட்சிக்கெதி ரான கட்டுரைகளை எழுதியதன் காரண மாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, சென்னை வந்து சேர்ந்தார். அங்குதான் மிகக் குறுகிய காலத்துட் பெருந்தொகை யான நாவல்கள் பிரசுரமாகின. அக்கால
கட்டத்தில் இவ்வளவு வேகமாகத் தமிழில் நாவல்களை எழுதியவரும், பிரபலமடைந்த வரும் இவரே எனக் கருதப்படுகின்றது. பைத்தியக்காரி, மரணக்குழி, கலாராணி, மீண்டும் வந்தாள், காதல் உலகிலே, ஒரே அணைப்பு, பொற்கூண்டு, பட்டினித் தோட்டம், அழகு ரோஜா, வண்ணக்குமரி, மாதுளா, ஆணும் பெண்ணும், காதலன், நீதிபதி, எதிர்பார்த்த இரவு, மனிதனைப் பார் என்பன வெளிவந்தன.
1954இல் இலங்கை திரும்பிய பின்னர் தினகரன், பின்னர் வீரகேசரி ஆகிய பத்திரி கைகளில் தொடர்கதைகள் எழுதி லட்சக்
கணக்கான வாசகர்களைப் பெற்றார்.
அத்துடன் வானொலி நாடகங்கள், மேடை
நாடகங்கள், சிறுகதைகள், ஆய்வு, அரசி யல் கட்டுரைகள் என்பனவற்றையும் பெருந் தொகையாக எழுதினார். தேசாபிமானி, தொழிலாளி, ஜனவேகம், முஸ்லிம் அபேத வாதி ஆகிய வார இதழ்களுக்கும் ஆசிரிய ராக இருந்துள்ளார். மகரதம்' எனும் கலை - இலக்கிய சஞ்சிகையையும் வெளியிட்டார்.
இலங்கையில் அவரது பின்வரும் நூல் கள் வெளிவந்துள்ளன. தென்றலும் புயலும், பாரதி கண்ட சமுதாயம், இலங்கையின் இரு மொழிகள், நீதியே நீ கேள், தடயம், பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துகளும், நிறைவைத் தேடி, தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும், வெறுங் கனவல்ல, ஈழத்து முற்போக்கு இலக்கிய மும் இயக்கமும், தியாகம்,
மலாயாவில் இலக்கியப் பணியைத் தொடங்கி, தமிழ்நாட்டில் நாவலாசிரியராகப் பிரபல்யமடைந்து, இலங்கையிலும் அப் பணியைத் தொடர்ந்த இளங்கீரன் நீர் கொழும்பில் வாழும் பொழுது 1996இல்
மல்லிகை மார்ச் 2009 ஜ் 23

Page 14
காலமானார். அவரது இறப்புக்குப் பின்னர் வந்துள்ள நூல் "தியாகம்' எனும் இந்நாடகத் தொகுதியாகும்.
"ஃபிர்தவ்ஸி எனும் முதலாவது நாட கத்தின் கதாபாத்திரங்கள் அபுல்காசிம் எனும் இயற்பெயருடைய பிர்தவ்ஸி, அவ னது நண்பன் அப்பாஸ், பாரசீக மன்னன் சுல்தான் மவுற்மூத் கஸ்னவி, பிரதம அமைச்சர் மய்மன்தீ, அரச சபைக் கவிஞர் 566 அன்சாரி, பாரூக்கி, அஸ்ஜதீ என்போராவர். பாரசீக சாம்ராஜ்யம் வியாபித்
திருந்த காலமது. குரஸான், தபரிஸ்தான்,
சீஸ்தான், ஸியானா, அப்கானிஸ்தான், காஷ்மீர், பஞ்சாப், ஹிந்துஸ்தானிஷ், உத் தரப் பிரதேசம் இவ்வளவையும் உள்ளடக் கிய அவ்விராச்சியத்தின் அரசனான கஸ்னவி பாரிய காவியமொன்றை இயற்று மாறு தனது அரசவைக் கவிஞர்களைப் பணிக்கிறார். பல வருடங்களாகியும் அது நிறைவேறவில்லை. இறுதியில் ஃபிர்தவ்ஸி யிடம் அப்பணி ஒப்படைக்கப்படுகிறது. அவர் இயற்றும் ஒவ்வொரு ஈரடிப் பாடலுக் கும் ஒரு தீனார் தங்க நாணயம் பரிசளிக்கப் படுமெனவும் கின்றது.
வாக்குறுதியளிக்கப்படு
ஒரு லட்சத்து இருபதாயிரும் அடி
களைக் கொண்ட அறுபதாயிரம் பாடல்
களைக் கொண்ட காவியம் இயற்றி முடி வடைகிறது. எனினும் முதலமைச்சரதும், அரசவைக் கவிஞர்களதும் சூழ்ச்சியினால் வாக்களிக்கப்பட்ட சன்மானம் வழங்கப்பட வில்லை. இதனால் வெறுப்புற்ற கவிஞன் அரண்மனையை விட்டு வெளியேறி தன் ஊருக்குத் திரும்புகிறார். காலக்கிரமத்தில் தன் தவறையுணர்ந்த அரசன், உரிய பரிசை அனுப்பி வைக்கிறான். ஆனால்
பரிசைச் சுமந்த ஒட்டகைகள் வந்து சேரு வதற்கு முன்னமேயே ஃபிர்தவ்ஸி இல் வுலகை விட்டுப் பிரிந்து விட்டார்.
இரண்டாவது நாடகம் திப்புகல்தான் என்பதாகும். மைசூர் மன்னர் திப்புசுல் தான், அவனது திவான்களான பூரண்யா, மீர்சாதக், திப்புவின் தளபதி உதீன்கான், சதிகாரன் அப்பாஸ், ஆங்கிலேயத் தலை வன் கார்ன் பாலிஸ், ஆங்கிலேய உள வாளி ரிச்சார்ட் ஹேஸன் என்போரே பாத்தி ரங்களாவர். திப்புசுல்தான் அரசன் மட்டு
மல்ல, ஆராய்ச்சியாளன், அறிவாளி,
வேதாந்தி, நூலாசிரியன், கல்விக்கும்
கலைக்கும் நேசன், அவனிடம் பெரிய நூல்
நிலையமே இருந்தது. அவனது பொருட் செல்வத்தையும் விட, நூல் நிலையமே பெரிய பொக்கிஷமாகக் கருதப்பட்டது.
1778இல் இருந்து 1799 வரை கர்நாடகத்
தில் ஆட்சி செலுத்திய திப்புசுல்தான், பலாத்காரமாக நாடு பிடிக்க வந்த ஆங்கிலே பருக்கு சிம்மசொப்பனமாக விளங்கினான். சூழ்ச்சி, சதி, கொடுமை என்பனவற்றின் மூலம் இந்தியத் துணைக் கண்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் தமது ஆட்சிக்குள் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை இந்தியாவின் பிளேக் நோய் என திப்புவின் தந்தை ஹைதர் அலி விப ரித்திருந்தான். அந்த பிளேக் நோயை முற் றாக ஒழித்தலே திப்புவின் இலட்சியமாகும். எனினும் அண்டைய சிற்றரசர்கள், நவாப் கள் மற்றும் பாளையக்காரர் என்போர் ஒவ் வொருவராக ஆங்கிலேயரின் சூழ்ச்சிக்குப் பலியாகிக் கொண்டு வந்தனர். இதே போன்று திப்புவின் இராச்சியத்திலும் ஐந் தாம் படையொன்றினை ஆங்கிலேயர் உரு வாக்கியதனை இந்நாடகம் விபரிக்கிறது.
மல்லிகை மார்ச் 2009 & 24

‘நீதியின் சந்நிதானத்தில்" என்பது மூன்றாவதாக இடம்பெற்றுள்ளது. முக லாய மன்னன் ஒளரங்கசீப், ஆசாத்கான், மிர்ஜாதபக்கூர், மேனகா, முனிரா என்போர் இங்கு வருகின்றனர். ஒளரங்கசீப்பின் முத லமைச்சரின் மகன் மிர்ஜாதபக்கூர் என்ப வன் அவரது சிறிய தாயாரின் மகனும் கூட. இவர் ஒரு துஷ்டனாக மாறி அடாவடித் தனங்களில் ஈடுபடுகிறான். கடைசியில் ஒர் இந்துப் பெண்ணைக் கடத்திச் சென்று விடு கிறான். இம்முறைப்பாடு கிடைக்கப் பெற்
றதும், அவனைக் கைது செய்து சிறையில்
அடைத்துத் தண்டனை வழங்குகிறான். அன்பு, பாசம், ஈரம், இரக்கம் என்பன நீதியை முடமாக்கி விடக்கூடாது எனக் கூறும் ஒளரங்கசீபின் சிறப்பான ஆட்சி முறையைக் காட்டுவது இந்நாடகமாகும்.
ஜிஹாத், சொல்லமாட்டேன், தியாகம் ஆகிய மூன்றும் இலங்கையிற் போர்த்துக் கேயர் தமது ஆட்சியை நிலைநாட்ட முற் பட்ட காலகட்டத்தில், இங்கு வாழ்ந்த முஸ் லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை களையும், அதனால் அவர்களது இயல்பு வாழ்வு முற்றாக சீரழிந்ததையும், எனினும் சிங்கள மன்னர்கள் வழங்கிய அடைக்கலத் தினால் அவர்களது இராச்சியத்தில் தஞ்ச மடைந்து வாழ்ந்ததையும் சித்தரிக்கின்றன. யாழ்ப்பாண முஸ்லிம் தலைவர் காதர் வாவா, அவரது உதவியாளர் முபாரக், மனைவி மர்யம், போர்த்துக்கேய தளபதி சாண்டியாகோ, அவனது மனைவி டென் டினா ஆகியோர் 'ஜிஹாத்' நாடகத்தில் முக்கியமானோர். கண்டியின் இராசசிங்க
மன்னர் ஒழிந்திருக்கும் இடத்தைக் காட்டு
மாறு, போர்த்துக்கீசர்களால் சித்திரவதை செய்து கொல்லப்படும் ஒரு முஸ்லிம் பெண்
னின் கதை சொல்ல மாட்டேன்’ எனும் நாடமாகும்.
முஸ்லிம் சமூகத்தில் காலாதி கால மாகப் புரையோடிப் போயுள்ள சீதனப் பிரச்சினையை மையமாகக் கொண்டது. 'வைடித்தானின் அடிமைகள்', கல்யாணப் பேச்சுவார்த்தையின் போது சீதனத்தை மோகிக்கிறவர்கள் மற்றும் மாப்பிள்ளை
மாரை விலைக்கு வாங்குகிறவர்கள் அனை
வருமே வைடித்தானின் அடிமைகள் என் கிறது இந்நாடகம்.
இலங்கை வானொலியில் ஒலிபரப்பப் பட்ட மேற்கூறிய நாடகங்கள், நூலுருப் பெற்றுள்ள காரணத்தினால் காற்றிலே கலந்து விடாமல், வாசகரிடையே நிலைத் திருக்கும் தன்மையைப் பெற்றுள்ளன.
இலங்கை வானொலி
30.07.2001
“a
•էb
જી દ્ર 蟹
6 鱷疆勘 鬍獸議疆 强 函 琵 强函 é 盛 9 翁爵 登器鼠 露
...A 強 雪罪憲 蜀 蟻馬蠶 謝關鬍 魯g 墨 帝激 彦座 융 བློ་ @ さ
மல்லிகை மார்ச் 2009 & 25

Page 15
இலக்கியக் கலாநிதி பண்டிகுமணிகயைதிப்பிள்ளை நினைவாக சம்பந்தர் விருது அறக்கடிடளை சபை
சம்பந்தன் விருது - 2007
இலக்கியக் கலாநிதி பண்டிதமணி கணபதிப்பிள்ளை நினைவாக வருடா வருடம் சம்பந்தன் விருது வழங்கப்பட்டு வருகின்றது. 2007ஆம் ஆண்டு வெளிவந்த மிகச் சிறந்த நூல்களிலொன்றாக
பேராசிரியர்இரா.வை.கனகரத்தினம் எழுதிய நாவலர் ஆளுமையும் புலமைத்துவமும்
என்ற ஆய்வு நூல் விருதுக்கும் பரிசுக்குரியதாகத் தெரிவாகியுள்ளது. கடந் காலங்களில் பேராசிரியர் அ. சண்முகதாஸ், கலாநிதி பண்டிதர் க. சச்சிதானந்தன், எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், பேராசிரியர் எஸ்.பத்மநாதன், படைப்பாளி சு.வே. ஆகியோர் பெற்றுள்ளனர். இவ்வாண்டு பேராசிரியர் இரா.வை.கனகரத்தினம் பெறுகிறார். அன்னார் பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராவார். இதுவரை ஆறுமுகநாவலர் குறித்து நான்கு ஆய்வு நூல்கள். பல ஆய்வுக் கட்டுரைகள் ஆக்கியுள்ளார். பலதுறை ஆளுமை கொண்ட பேராசிரியர் இவ்வாண்டுக்கான சம்பந்தன் விருதினைப் பெறுகின்றார். எழுத்தாளர் சம்பந்தனின் மகள் திருமதி. திரிவேணி கஜன் இவ்விருதுக்கான பணப்பரிசில் 10000 ரூபாவை வழங்கி பேராசிரியரைக் கெளரவிக்கின்றார். விருது வழங்கும் விழா யாழ்ப்பாணத்தில் ஏப்பிரல் மாதமளவில் நடைபெறவுள்ளது.
யாழ். இலக்கிய வடிடம் நாவேந்தன் விருது - 2007
யாழ் இலக்கிய வட்டம் தனது இலக்கிய முயற்சிகளைப் பரவலாக்கும் நடவடிக்கை களின் விளைவாக ஒவ்வோர் ஆண்டும் வெளிவரும் சிறுகதைத் தொகுதிகளில் சிறந்ததுக்கு நாவேந்தன் விருது’ வழங்கிக் கெளரவிப்பதெனத் தீர்மானித்து அச்செயற்றிட்டத்தை 2005 - 2006 ஆண்டுகளிலிருந்து தொடங்கியுள்ளது. ஈழத்தின் மூத்ததோர் புனைகதைப் படைப்பாளர் த.திருநாவுக்கரசு நாவேந்தன் ஆவார். ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியராகத் தன் வாழ்வைத் தொடங்கிய நாவேந்தன், பின்ன சட்ட முதற் பரீட்சையில் தேறினார். அதன் பின்னர் முதலாந்தர அதிபராகக் கடமையாற்றினார். சிறுகதைப் படைப்பாளியாக பரிணமித்த நாவேந்தனின் வாழ்வு சிறுகதைத் தொகுதிக்கு 1964ஆம் ஆண்டு சாஹித்திய மண்டலப் பரிசில் கிடைத்தது. ‘தெய்வமகன்' அன்னாரின் இன்னொரு சிறுகதைத் தொகுதியாகும். இவற்றைவிட சிலப்பதிகாரச் செந்நெறி, மானவீரன் கும்பகர்ணன், பெருநெருப்பு (நாடகம்), மாக்டர் ஜோன் ஸ்கட்டர் (வரலாறு), மகதலேனா மரியாள் (குறுங்காவியம்), மண்டோதரி
மல்லிகை மார்ச் 2009 & 26

(நாடகம்), தாரை (நாடகம்) முதலான பல் துறை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண மாநகர சபையின் மேயராகவும் பதவி வகித்துள்ளார். தீவிரமான தமிழ் அரசியல்வாதியாக இயங்கியுள்ளார். 1990 இல் தனது ஏழாலை இல்லத்தில் தான் சேகரித்து ஸ்வத்திருந்த நூல்கள் நூற்றுக் கணக்கானவற்றை வட்டுக்கோட்டை யாழ்ப் பாணக் கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங் கினார். தமிழ்க்குரல் (1950), சங்கப்பலகை (1962), தமிழன் (1967), நாவேந்தன் (1985 - 1988) என்பன அன்னார் நடாத்திய பத்தி ரிகைகளாகும். ஒரு காலகட்டத்தில் ஈழத் தின் கணிப்புக்குரியவராக அவர் திகழ்ந் தார். அவர் நினைவாக வருடா வருடம் சிறந்த சிறுகதைத் தொகுதிகளுக்கு விருது வழங்க யாழ் இலக்கிய வட்டமும், நாவேந் தனின் சகோதரக் கவிஞர் வ.துரை சிங்கமும் முன்வந்துள்ளனர்.
இவ்வாண்டு நாவேந்தன் விருதுக்காக இரண்டு நூல்கள் தெரிவாகியுள்ளன.
1. செங்கை எழுதிய
வற்றாத நதி'
ஆழியான்
2. தெணியான் எழுதிய 'இன்னொரு புதிய கோணம் என்ற சிறுகதைத் தொகுதிகளாகும்.
2007ஆம் ஆண்டுக்கான விருதுக்கு இவை இரண்டும் நடுவர்களால் தெரிவாகி யுள்ளன என்பதை அறிவிக்கின்றோம்.
ஈழத்தின் மூத்த படைப்பாளிகளில் இருவர் இவர்கள் ஆவர். சிறுகதை, குறு
நாவல், நாவல், விமர்சனம், கட்டுரையியல்
ஆகிய இலக்கியத்துறைகளில் கைவந்த வர்கள். ஈழத்துப் புனைகதைத்துறைக்குப் பெருமை சேர்த்தவர்கள்.
-།
t
மல்லிகை ஆண்டுச் சந்தா
(மலருக்கான தபாற் செலவு 65/= ரூபா) வங்கித் தொடர்புகளுக்கு: Dominic Jeeva 5305014- Hatton national Bank. Sea Street,Colombo - 11. 44வது ஆண்டு மலர் தரமான தயாரிப்பு. விரும்பியோர் தொடர்பு கொள்ளவும்.காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva எனக் குறிப் பிடவும்.காசுக்கட்டளை அனுப்புபவர்கள் Dominic Jeeva Kotahena, P.O. எனக் குறிப்பிட்டு அனுப்பவும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : ز 2320721: முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி ,201/4 ܢܬܠ
மல்லிகை மார்ச் 2009 & 27

Page 16
-- ܨ - ܩ .
- /Er70a56?
|- గా- , si
ாவிட இயக்கத்தின் கலை ஆயுத na,
தமையால் தமிழின் சினிமா என்ப
E ti'. ..
ܸ ܼ ロ | = نه ,
"" — ez -
திருந்த காலகட்டம் அது திர بعد سنة = ولد سمعة معـة قـا ,、 p க்கிய சுறாக வசனமே முக் கியத்துவம் பெற்றிருந்த காலகட்டத்தில் உடல் ெ ாழிக்கு முக்கியத்துவம் ந்துறைக்கு வந்த சிவாஜி கணேசன் போன்றோரின் வருகை
: TET வருகையாக )Ir ஆனால், திராவிட இயக்க நாடக மரபிலிருந்து விலகி நிற்கும் ஒரு க்கும் அக்காலகட்டத்தில் தமிழகத்தில் உருவாகியது. அப்போக்கின்
ாடகப் போக்கிலிருந்து வி லகி நிற்கும் நாடகப் போக்கை ஜன தோ சினிமா எனும் ஊடக த்தி ಪವಾರ புரிந்துக் கொண்டு ಙ್ಞ್ಞಞ · · |
திகழ்ந்தவர் நடிகர்
LDEEEEE DITht 2008 盛 E
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதேவேளை, திராவிட நாடக இயக்கமானது தனக்கு எதிர்நிலையில் வைத்து பார்த்த நாடக இயக்கத்தில் பங்காற்றிய கே.பாலசந்தர் தனது நாட க்ங்களிலும், சினிமாக்களிலும் கை பாண்ட கருத்தியலைச் சார்ந்த பல் தரப் பட்ட விமர்சங்களை எதிர்கொண்ட பொழுதும் கூட, அத்தகைய விமர்சனங் களில் நாகேஷின் நடிப்புத் திறன் விதந்துதான் சொல்லப்பட்டிருக்கிறது.
நாகேஷ் அவர்களிடமும் நாடக ஊடகத்திற்கு தேவையான உடல்மொழி
வெளிப்பட்ட பொழுதும் அவரது அந்த
உடல் மொழியானது. சினிமா எனும் ஊடகத்திற்து பொருந்தக் கூடிய மொழி யாக அவருக்கு பயன்பட்டது. இன்றைய வெகுசன தமிழ் சினிமாவில் விதந்து பேசப்படும் வடிவேல் முதற் கொண்டு கருணாஸ், தாமு, சார்லி போன்ற நகைச் சுவை நடிகர்களிடம் நாகேஷ் கை பாண்ட உடல் மொழியின் நீட்சி காணப் படுவதாக பலர் கூற முற்படலாம். ஆனால், ஆழ்ந்து நோக்கினால் நாகேஷ் கையாண்ட உடல் மொழியின் முன் வைப்புக்கும் நான் மேற்சொன்ன நகைச் சுவை நடிகர்களின் உடல் மொழி முன் வைப்புக்குமிடையில் வித்தியாசம் இருந் துள்ளது. (விவேக் திராவிட இயக்க நாடகப் போக்கு ஆரம்ப காலகட்டத்தில் தங்கியிருந்த வசனத்தையே மீள் ஆயுத மிக பயன்படுத்தி தன்னை தக்க வைத் துக் கொண்டிருக்கிறார்.) அவ்வாறான வித்தியாசத்தை அடையாளப்படுத்த நாம் நாகேஷ் அவர்கள் ஏற்று நடித்த நகைச் சுவை பாத்திரங்களின் வழியாக இனங் காட்ட முடியாது. மாறாக, அவர் ஏற்று
நடித்த குணச்சித்திரப் பாத்திரங்களின் வழியாகத்தான் காணக்கூடியதாக இருக்கும். சரியாகச் சொல்வது என்றால், இன்றைய தமிழ் சினிமாத் தளத்தில் விவாதிக்கப்படும் நடிகர் - நடிகைகளின் உடல் அழகு சம்பந்தமான (அழகு, அழகின்மை என்ற மாதிரியான) சொல் லாடலின் பார்வையில் தமிழ் சினிமாக் களில் நடிகர்கள் நடிகைகளின் வருகையை பற்றியும், இருப்பை பற்றிய விவாதத்திற்கும் தொடக்கப்புள்ளியாக நாகேஷ் திகழ்ந்தார் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயம்,
அவர் ஏற்று நடித்த முழுக்க நகைச் சுவை பாத்திரங்களை முக்கியத்துவப் படுத்தியும், அவர் ஏற்று நடித்த குணச் சித்திரப் பாத்திரங்களில் பாதிக்கு பாதி வெளிப்பட்ட நகைச்சவை நடிப்பையும் வைத்துக் கொண்டு, அவரை வெறுமனே ஒரு நகைச்சுவை நடிகராக அடையாளப படுத்துவதே வழக்கமாக உள்ளது. ஆனால், நான் அறிந்த மட்டில் முழு திரைப்படத்திலும் எந்தவொரு இடத் திலும் நகைச்சவை உணர்வை பார்வை யாளர்கள் மத்தியில் ஏற்படுத்தாத வகை யில் அவர் நடித்த திரைப்படம் என்றால் அது யாருக்காக அழுதான்? எனும்
திரைப்படம்தான்.
(இத்தருணத்தில் அவரது மறைவை முன்னிட்டு ஒளி - ஒலிபரப்பட்ட நிகழ்ச்சி களில் சொல்லப்பட்ட அவர் நடித்த திரைப்படங்களின் பட்டியலில் அவரது MASTER PIECE I LI GOD L LI LI GDI யாருக்காக அழுதான்? பற்றி ஊடகங்கள் அதிகம் பேசவில்லை என்பதும் இங்கு குறித்து சொல்லப்பட வேண்டிய செய்தி.)
மல்லிகை மார்ச் 2009 & 29

Page 17
தமிழில் சினிமா எனும் ஊடகத்தின் ஆரம்ப காலகட்டத்தில், தனது உடல் மொழி மூலம் தன்னை தக்கவைத்துக் கொண்ட நாகேஷ் என்ற அந்த கலைஞனின் மறைவு நிரம்ப முடியா வெளிதான். .
பதிவுகள் எனும் இணையத் தளத்தை வ.ந.கிரிதரன் நடத்துகிறார். இவர் அமரர் அ.ந.கந்தசாமியின் மருமகனி . அவரது பதிவுகள் இணையத் தளத்தில் உலா வந்துக் கொண்டிருக்கையில் கனடாவுக்கான சிறப்பிதழ் கண்ணில் பட்டது. அதில் கிரிதரன் மொழிபெயர்த்த கனேடிய கவிதைகள் உங்கள் பார்வைக்கு.
ക8തuർ കവിതക്രങ്ക് സl மொழிபெயர்ப்பு வ.ந.கிரிதரன்
கனவுக் குதிரைகள்!
(Walt Bresette Él6D606)JT5)!
ஆங்கிலத்தில் : அல் ஹண்டர்
(Al Hunter)!
நிலவு வெளிச்சத்திற்குக் கீழாக
எனது கனவுக் குதிரைகள் தெற்கு நோக்கி ஓடும்
தெற்கு பயணம் இங்குதான் (1Քtջեւյlf, 9:53/ւ607 தெற்கு பயணம் இங்குதான் மீண்டும் தொடங்கும் - ஆத்மாக்களின் பயணத்தில் தெற்காகச் செல்லும் அடிச்சுவட்டில்
செல்லுமிடம் தெரியாமல் ஒருவேளை மூடப்பட்ட நதிப் பள்ளத்தாக்கு நோக்கி அல்லது மறைந்திருக்கும் மலைப்பாறைகளினுச்சியின் மேலாகச் செல்லும் கிளைவிட்டுச் செல்லும் பாதைகளுமுண்டு குதிரைகள் அங்கு போவது கிடையாது. நான்கு நாட்களாக இரவும் பகலுமாகப் பயணித்து விட்டு அதிகாலைப் பொழுதில் உண்பதற்காக அவை தங்கும். கனவுக் குதிரைகள் முன்னர் கடந்து சென்ற இந்த வழியில், நினைவுகளின் ஞாபகங்களின் பழந்தியில் அவை இரவுகளினூடும் அந்திக் கருக்களினூடும் தம்மைச் சூடேற்றிக் கொள்ளும் ஐந்தாவது நாட்
காலையில் அவை
கடக்கத் தேவையில்லாத ஆற்றங்கரையினை வந்தடையும் மீண்டுமொரு வைகறையில் மீள்பிறப்பிற்காக ஏனைய கனவுக் குதிரைகள் கூடும் தெற்குக் கரையினை அடையும் வரையில், |5|f6ö7 6lgjLJULÍgDTL/Iá5 வைரங்களைப் போல்
மல்லிகை மார்ச் 2009 ஜ் 30

நர்த்தனமிட்டபடி அவற்றின் குளம்புகளே அவற்றினை இழுத்துச் செல்லும் ஓ! உயர்ந்த
ஞாபகசக்தி மிக்கவரே திரும்பி வாரும் திரும்பி வாரும் எனது கனவுகளின் வளம் மிக்க நீல வயல்களிற்குள்.
2
பனித்துளிகள் ஒட்டிக் கொண்டிருக்கும் இனிய புதிய புற்களிருக்குமிடத்தில், உதிக்கும் சூரியனை நோக்கி உனது குதிரையினைத் திருப்பியபடி, அதன் பிடரி மயிரினை ஒரு சேரப் பிடித்தபடி, கனவுகள் பயிரிடப்படாத வயலிற்குள் முறைத்தபடி நீல இருதயத்துடன்
நீ!
அதனை
நீர் அருந்தவிடு அதனைச்
சுவைக்க விடு அதன் பின்
அதன் மீது
சவாரி செய்.
மூலம்: பிரிட்டிஸ் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்படும் d5(863ĩlọ JJ Q6ù5 5ìụJL) (Canadian Literature abTGOTTGOŠTIọgbyþ, LDTÍ 2000, இதழ் இலக்கம் 167)
எனது விடுதி!
(3d, Gyu (3Uri. (Duke Red Bird)
தமிழில்
எளிமையாயிருந்தது எனது பேர்ச் மரத்திலான விடுதி தூய்மையாயிருந்தது நான் அருந்திய தண்ணர் வேகமாயிருந்தது என்னைச் சுமந்து சென்ற படகு, நேராயிருந்தது என்னைக் காத்த அம்பு மூர்க்கமாயிருந்தது நான் உண்ட இறைச்சி இனிமையாயிருந்தது மேப்பிள்மரச் சக்கரை, வலிமையாயிருந்தது என்னைத் தாங்கிய மூலிகை. உயர்வாயிருந்தது எனது
gഞ്ഞാണു് uഥി.
வ.ந.கிரிதரன்
அவளது தலைமயிர்!
p6olb: GuD6d LMei (Mel Dagg)
தமிழில்: வந.கிரிதரன்
அவளது தலைமயிர் இரு கரிய பின்னல்களாகப் பின்னப் பட்டிருந்தது இப்பொழுது அத்துடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வருடமும் என்னுடைய காதலைப் போல் அவை வளர்ந்து கொண்டேயிருந்தன. துதித்தலுடன் நான் பின்னால் நடந்தபடி நீண்ட கரிய பின்னல்கள் நகரத்து விதிகளைத்
மல்லிகை மார்ச் 2009 ஜ் 31

Page 18
தொட்டுவிடாமல் தூக்கும் வரையில்
ஆனால் கிராமத்திலோ அவள் அவற்றைச் சுயமாகவே நிலத்தைக் கூட்டும்படி தொங்க ஓட விட்டவளைப் போல் இருக்கும்.
அவை எப்பொழுதுமே தொடுவதற்காக வளர்ந்திருந்தன.
கரும் பாத மொழி epaob : GLD6òLTd, (Mel Dagg)
தமிழில்
எங்களது மொழி மிருகங்களினதும் மரங்களினதும் உருவங்களில் எழுதப்பட்டது. அதனால் தான் உன்னால் அதனைப் பேச முடியாது. ஆனால் உனது காதுகளை நிலத்தில் வைத்துக் கேட்பாயானால் வெளகிளை எருமைகளின் ஆத்ம7ர்த்த உணர்வுகளை நீ கேட்கலாம் அவற்றின் குளம்புகள்
இப்பொழுதும் எங்களது புல்வெளிகளினூடாகச் செல்கின்றன.
வ.ந.கிரிதரன்
மேற்படி கவிதைகள் வில்லியம்'. 6ß6ùọ6őT (84 DT6 TL (William Christine Mowat) ஆகியோரால் பதிப்பிக்கப்பட்டு, மாக்மில்லன், கனடா பதிப்பகத்தினால் (Macmillan of Canada) G6)16sul i Lil' L
Native People in Canadian Literature
என்னும் நூலிலிருந்து பெறப்பட்டவை.
கோடைப் பல்லி!
(3Julp6i GasToroLi (Raymond
Souster)
தமிழில் வந.கிரிதரன்
வெம்மை கிளைவிட்டுப் பரந்து கிடக்கும் ந7க்கு.
இந்தக்
கோடைப் பல்லி
எம்முடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஏறக்குறைய காதலுடன் நக்கும்.
பனி உறைந்த ஆற்றின் மீது
நடத்தல்! ۔۔۔۔ ரேய்மன் சொஸ்டர் (Raymond Souster)
தமிழில்: வ.ந.கிரிதரன்
எனக்கும் கண்ணிற்குப் புலப்படாத இந்த தண்ணிகீரின்
சளசளப்பிற்குமிடையில் ஆறு அங்குல பனிக்கட்டி இடைவெளி
நான் இன்னும் s மிகவும் அவதானத்துடன் குற்றம் சாட்டும்
பயத்துடன் கூடிய
குதிகளுடன் நடக்கின்றேன்.
மல்லிகை மார்ச் 2009 & 32

ஆறு அங்குலத்திற்கும் கீழ் இந்த ஆறும் என்னைப் போல் தனது உறைந்துவிட்ட பெருமைகளை மற்ாம7லிருப்பதில்
.இரகசியமெதுவுமில்லை -܀
முதல்
மூலம் : மார்கரெட் அவிசன் (Margaret Avision)
மிகவும் அதிகமான ஆனந்தம் இந்த முப்பரிமாண, பரிதியற்ற வட்டத்தை கடந்தகாலமும்
வ.ந.கிரிதரன்
அத்னைச் சுற்றி எல்லையாக விரிந்திருக்காவிடின்
ர் உயர்ச்சியான
கடவுளின் கணக்கில் நூறிற்கும் மேலும் சதவீதமுண்டு
அவருடைய L/glLj L/60LLIL/
முழுமையானது.
ഉണ്ണിTബട്ടു. ஆரம்பம் மிக்கது.
மேற் படி மொழிபெயர்ப் புக் கவிதைகள் அனைத்தும் பதிவுகளின் 'கனடாச் சிறப்பிதழில் (ஜனவரி 2002) வெளிவந்தவை. இங்கு மீள்பிரசுரமாக வெளியாகின்றன.
Driving Licences Within 15 Minutes
3DD, Modera Street, Colombo -15. N Tel : 2526345
§လဲလဲ့လဲ့လဲလႊဲေျ§ iš Happy i
N
Photo
S. Excellent N Photographers ミ ŠModern Computerizedè iš Photography N For
N Wedding Fortraits
N &
ミ
N Child 5ittings
N
N
Photo Copies of
N Identity Cards (NIC), N Pasaport &
N
N
Š
ミ
N
も
ミ
སྲི་གྲགས་དྲ་དྲང་སྲི་གྲགས་སུ་གྲགས་སུ་སྲིང་དྲགས་དྲགས་
மல்லிகை மார்ச் 2009 ஜ் 33

Page 19
"என்ன தம்பி இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறாய்? இப்ப நீ என்ன முடிவு எடுக்கிறதாய் உத்தேசம்?" இவ்வாறு கூறிய தாயின் குரலைக் கேட்டுத் திடுக்குற்றுத் தன் சுயநினைவிற்கு வந்தான், சுரேஷ்,
சுரேஷ் ஒரு குடும்பத்தின் சுமையை தாங்கும் சுமைதாங்கி. அவனது தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்டார். தன்னுடைய தாயையும் இரண்டு சகோதரிகளையும் பாதுகாத்து வளர்த்தெடுக்கும் பொறுப்பு அவனுடையது ஆயிற்று. படிப்பு எட்டாம் ஆண்டுடன் நின்றுவிட, அவன் தனக்கேற்ற தொழிலாக சைக்கிள் திருத்தும் வேல்ையைத் தேர்ந்தெடுத்தான்.
பிறந்ததிலிருந்து எவ்வித சுகத்தையும் அனுபவித்திராத அவனுக்கும் அல்னது குடும்பத்தினருக்கும் நல்லதொரு அதிர்ஷ்டம் வீடு தேடி வந்தது. 'அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவை தட்டும்' என்பார்கள். இந்த அதிர்ஷ்டத்தை ஏற்பதா? விடுல்தா? என்பதுதான் அவனது இப்போதைய மனச்சஞ்சலம்.
நேற்றிரவு கல்யாணத் தரகர் சுரேஸின் வீட்டிற்கு வந்திருந்தார்.
ఖో
V9 oథలో నితో 7يه
"என்ன அண்ணை, இந்தப் பக்கம் வந்திருக்கிறியள்?' என சுரேஸின் தாய் இராசம்மா கேட்டாள். V
"நல்லதொரு விஷயமாத்தான் வந்திருக்கிறன், புள்ளை உன்ர குடும்பத்திற்கு நல்ல காலம் பிறந்திட்டுது, நீ பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் விடிவுகாலம் கிடைக்கப் போகுது."
என்னண்ணை புதிர் போடுறியள். நீங்க சொல்லுற ஒண்டுமே விளங்கேல்ல! விபரமா சொல்லுங்கோவன்." w
"எல்லாம் உன்ர பொடியன்ர விசயமாதான்!"
அதற்கிடையில், 'மாமா ஒருவாய் தேத்தண்ணி குடியுங்கோவன்' என இராசம்மாவின் மூத்த மகள் வசந்தி, குறுக்கிடுகிறாள்.
“அட எங்கட வசந்தியே. இவ்வளவு பெரிசா வளர்ந்திட்டாய்!” என்றவாறு அவள்ை மேலும் கீழுமாக உற்றுப் பார்த்தார், தரகர்.
மல்லிகை மார்ச் 2009 & 34

"பொறு பிள்ளை. ஒரு இனிப்பான விசயத்தைச் சொல்லிப்போட்டுப் பேந்து தேத்தண்ணியைக் குடிக்கிறன்."
"அண்ணை. அண்ணை கெதியா விஷயத்தைச் சொல்லுங்கோ' என இரா சம்மா மீண்டும் அவரை துரிதப்படுத்
.
அவ்வீட்டிலுள்ளோரின் முகத்தை ஒரு றை பார்த்து விட்டுத் தரகர் தான் வந்த ஷயத்தை கூறத் தொடங்கினார். "ராசம், உன்ர புருஷனை இழந்ததில இருந்து, இந்த மூண்டையும் வளர்க்கப்பட்ட பாட்டை நேராகப் பார்த்தவன், நான். உன்ர குடும் பத்தையும் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரத்தான் நான் எவ்வளோ தெண்டிக் கிறன். கனகாலமா முயற்சி செய்தனான். இப்பத்தான் எல்லாமே கைகூடியிருக்கு” எனக்கூறி, சில கணங்கள் அமைதியாகி விட்டு, மீண்டும் கூறத் தொடங்குகிறார்.
"உன்ர பொடியனுக்கு நல்லதொரு இடத்தில சம்பந்தம் பேசி வந்திருக்கு. நல்ல பணக்காரர், பெட்டையின்ர மூண்டு சகோதரங்களும் லண்டனில நிற்கிறான் கள். நல்ல காணி, பூமி உள்ள ஆக்கள். நல்லப் பெரிய சீதனமும் தருவினம் போல." எனக் கூறியபடி அவர்களது முகத்தைப் பார்க்கிறார், தரகர்.
எல்லோருடைய முகத்திலும் சிறு புன்னகை அரும்பியிருந்தது.
"அப்ப நல்ல இடமெண்டால் நீங்கள் பேசி முடியுங்கோவன். தம்பியின்ர சாதகம், உங்களிட்டதானே இருக்குது. பொருத் தத்தையும் ஒருக்காப் பார்த்துச் சொல்லுங் கோவன்.”
"அதெல்லாம் நான் முதலே பாத் திட்டன், பிள்ளை. எல்லாப் பொருத்தமும் நல்லபடியா அமைஞ்சிருக்குது."
'அப்ப ஏன் யோசிக் கிறியள், அண்ணே? ஆக வேண்டியதை நேரகாலத் தோடை பாருங்கோவன்."
"இல்ல ராசம். அதில சின்னொரு
பிரச்சினை இருக்குது."
‘என்னண்ணை இழுக்கிறியள்? என்ன பிரச்சினை எண்டு சொன்னாத் தானே எங்களுக்கும் விளங்கும்?"
'இந்தா பிள்ளை, எல்லோரும் ஒருக்கா பொம்பிளையின்ர படத்தைப் பாருங்கோவன்’ என்றபடி படத்தை மடி
யிலிருந்து கையிலெடுக்கிறார்.
இரண்டாவது மகளான தீபா, ஒடிச்சென்று அப்படத்தை வாங்கிப் பார்க்கிறாள். சட்டென அவளது முகத்தில் ஏற்படும் மாறுதலைக் கண்டு, வசந்தி அவள் கையிலிருந்த படத்தை வாங்கிப் பார்த்துவிட்டு தாயிடம் கொடுக்
இராசம்மாவின்
கிறாள்.
முன்னர் இருந்த குதூகலம் எங்கோ ஒடி மறைய, எல்லோரும் என்ன கதைப்ப தென்று தெரியாமல் விழிக்கின்றனர்.
‘என்ன, எல்லாரும் அமைதியா யிட்டியள்?
'இல்லை, அண்ணை என்ர மோனுக்கு நான் மனமறிஞ்சு கெடுதல்
GeFijuljLDITL L-6T."
இராசம்மா இப்படிச் சொல்லக் காரணம், அந்தப் படத்தில் இருந்த உரு
upsiosSisches Lortitë 2009 率 35

Page 20
வத்தின் தோற்றம்தான். ஆறடி உயர முள்ள சுரேஸிற்கு நாலடி உயரமுள்ள பெண்ணா? செக்கச் செவேலேன்ற சுரேஸிற்கு இந்தக் கறுப்புக் காக்கையா? எனப் பல எண்ணங்களை, அவள் மனதுக்குள் அசைபோட்டுப் பார்த்தாள்.
சுரேஷ், என்னதான் கஷ்டத்தில் வளர்ந்திருந்தாலும், அவனுக்கென்று ஆசாபாசங்கள் இருக்கும்தானே. ஆனால், அந்தப் பெண், சாதாரண பெண்ணின் உயரம் கூட இல்லை. கை கால்கள் சூம்பிப்போயிருந்தன. அவள் இவனுக்கு எப்படிப் பொருத்த மென்று (UpLçuqub'?
Gay Ts)6)
தரகர் தொடர்கிறார், "இஞ்ச பார் -ر இராசம், பெட்டையின்ர தோற்றத்தைப் பார்த்து ஒண்டும் யோசிக்க வேண்டாம். உன்ர பெட்டைகள் இரண்டையும் நல்ல இடத்தில கரை சேர்க்க வேணுமெண்டால் இதைவிட உன்ர குடும்பத்திற்கு வேற வழியேயில்லை. சுரேஷ் வரக் கதைச்சுப் போட்டு எனக்கு நல்ல முடிவாய் சொல்லு. அப்ப நான் வாறன், பிள்ளை' என்றபடி தரகர் எழுந்து செல்கிறார்.
மாலை ஆறரை மணியிருக்கும். அந்தி வேளையில்தான் சுரேஷ் வேலை முடித்துக் கொண்டு வீடுவந்து சேர்ந்தான். தன் வழமையான கடமைகளை முடித்த பின் சாப்பிட அமர்ந்தான். அவனருகே மூன்று பெண்களும் அமர்ந்தனர். அவர்கள் முகத்தில் என்றுமில்லாதவாறு ஒருவித பிரகாசம்.
'அம்மா இண்டைக்கு எண்பது ரூபா தான் கிடைச்சது. இதை வைச்சு
நாளைக்கு வேண்டிய செலவை
audrysfusic&sn'
"சரி தம்பி.”
அம்மூன்று பெண்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து எதையோ சொல்லத் துடிப்பதை உணர்ந்தவனாய், "என்ன எல்லாரும் ஒருமாதிரி இரு கிறியள்? என்ன சங்கதி எண்டு சொல்லு
(Sassi 667.'
'ஒண்டுமில்லையண்ணா' என வசந்தி சமாளிக்க முயன்றாள்.
தாயின் முகத்தை அவன் பார்க்கின் றான், ஒருவித மெல்லிய சந்தோஷம் அவள் முகத்தில் தெரிவதுடன், எதையோ சொல்ல தவிப்பதும் முகத்தில் தெரிகிறது.
“676ôT 60 bpm, sei6OT 6o L e C35r சொல்ல நினைக்கிறியள் போலக் கிடக் குது. என்னெண்டாலும் பயப்படாமல் சொல்லுங்கோவன்."
'தம்பி, இண்டைக்குக் கல்யாணத்
தரகர் வீட்டை வந்தவர்."
"தரகர் மாமா, தங்கச்சிகளுக்கு சம்பந்தம் பேசிக்கொண்டு வந்தவரோ?"
"இல்லையப்பா, உனக்குத்தான் ஒரு நல்ல இடத்திலை சம்பந்தம் பேசி வந்தவர். உனக்கும் அந்தப் பிள்ளைக்கும் நல்ல பொருத்தம். மூண்டு தமையன்மார் வெளி நாட்டிலையாம். சீதனம் அள்ளித் தருவின மாம். எங்கட குடும்பம் இருக்கிற நிலையை பார்க்கேக்க, இந்தச் சம்பந்தத்தை முடிக் கலாம் போலக் கிடக்கு. எங்களுக்குப் பிடிச்
மல்லிகை மார்ச் 2009 ஜ் 36

சிருக்கு. நீதான் இப்ப உன்ர முடிவைச் சொல்ல வேணும்.'
'அம்மா உங்களுக்கெல்லாம் விருப் பம் எண்டால், எனக்கும் சம்மதம்தான்."
"அதெல்லாம் சரியடா, தம்பி! நீயும் அந்தப் பிள்ளையின்ர போட்டோவை ஒருக்காப் பார்க்க வேணுமடா?”
'ஏனம்மா நீங்களெல்லாம் பார்த்தால் சரிதானே?"
"அதில்லை தம்பி. பெட்டைக்கு உன்னை விட ஐஞ்சு வயசு கூடவாம்." என்றபடி அந்தப் படத்தை அவன் கையில் கொடுத்துவிட்டு, அம்மூன்று பெண்களும் எழுந்து உள்ளே சென்றனர்.
அன்றிரவு முழுக்க சுரேஷால் தூங்க முடியவில்லை. புரண்டு புரண்டு படுத்தபடி ஒரு முடிவுக்கு வந்தவனாய் துரங்கி விட்டான்.
விடிந்ததும் தாயிடம் சென்றான். 'அம்மா, எனக்கு என்ர வாழ்க்கையை விட, தங்கைமாரின் வாழ்க்கைதான் முக்கியம். பிறந்ததிலிருந்து அவள்கள் படுற கஷ்டங்களை இவ்வளவு நாளா நான் பார்த்து சகித்தது போதும். நான் உழைக் கிற உழைப்பு இரண்டு வேளைச் சாப் பாட்டுக்கே போதாது. இந்த நிலையில, எங்க நான் அவயளை கட்டிக் கொடுக் கிறது? இப்ப நான் செய்யப்போற இந்தக் கலியானம்தான் எல்லாப் பிரச்சினை களுக்கும் முடிவா அமையப் போகுது. நீங்க மேற்கொண்டு ஆக வேண்டியதை கவனி யுங்க' இவ்வாறு சுரேஷ் கூறியதைக் கேட்டு மூன்று பெண்களும் மகிழ்ச்சியில்
ஒத்துழையுங்கள். ஏனெனில் மல்லிகை
ܓܠ .
༄། சந்தா செலுத்தி விடீடீர்களா?
புதிய ஆண்டு தொடங்கி விட்டது. தயவு செய்து தமது சந்தாக்களைப் புதுப்பித்துக் கொள்ளவும்.
தயவு செய்து மல்லிகையுடன்
உங்கள் ஒவ்வொருவரினதும் இலக்கியக் குரலாகும்.
3:5-6)- செய்வோருக்கு முன்னறிவித்தலின்றி இதழ்
நிறுத்தப்படும். l
ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்
கொண்டனர்.
இரண்டு மாதங்களின் பின்னர் சுரேஷின் திருமணம் நல்ல முறையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
சில நாட்களின் பின்.
அன்றொரு நாள் காலையில் வசந்தி மிகவும் பரபரப்புடன் காணப்பட்டாள். 'அம்மா தங்கச்சி தீபாவைக் காணேலை யம்மா. வீடு முழுக்க தேடிப் பார்த்திட்டன்."
“என்னடி சொல்லுறாய்? வடிவாய்த் (oga urr! 6TSuJõp 6.Gü jääb போயிருப்பாள். ஒருக்காப் பாரடி’
"அங்கை எல்லாம் விசாரிச்சுப் போட் டுத்தான் வாறனம்மா’ எனக் கூறும்போது அவளுடைய கண் முன்னாலிருந்த மேசை யில் கடிதமொன்று சிறகடித்தது. அதிர்ச்சி அடைந்தவளாய், அந்தக் கடிதத்தை எடுத்துப் படிக்கிறாள்.
மல்லிகை மார்ச் 2009 * 37

Page 21
நூல் விமர்சனம் :
அய்ம்பது வருட இலக்கிய ஆவணம்
- தருமசீலன்
அகவை எழுபதையும், இலக்கிய சேவை ஐம்பதையும் தாண்டி நிற்பவர் கவிஞர் ஏ.இக்பால்.
ஆக்க இலக்கியம், வரலாறு, கல்வி, சமயம் என்று தனது எழுத்தாற்றலை பல பக்கமாகவும் பதிவுசெய்து வருகிறார்.
இவரால் உருவாக்கப்பட்ட தர்கா நகர் படிப்பு வட்டத்தினர் இந்த 'அய்ம்பது வருட இலக்கிய ஆவணத்தை வெளிக்கொணர்ந் துள்ளனர். இது செயற்பாட்டு ரீதியான இக்பாவின் இன்னொரு வெற்றியென்றால்
அதில் தவறில்லை.
பெரிய அளவில், உயர்தரக் காகிதத்தில், சுமார் இருநூறு பக்கங்களில் இந்த ஆவனம் தயாரிக்கப்பட்டுள்ளது. பக்க வடிவமைப்பு பிரமாதம், இருபக்க மாஜின் விட்டு, கட்டுரையின் முக்கிய கருத்துக்களை குறித்த பக்கங்களில் பதிந்துள்ளமை வாரகர் தேவையை இலகுபடுத்துகிறது.
எழுத்தாளர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகளென்று முப்பத்திநான்கு பேர் இக்பாலை மதிப்பீடு செய்துள்ளனர். பல்வேறு பார்வைகள் இதனூடாக வெளிப்பட்டபோதும்
சகலருமே இரண்டு விடயங்களில் ஒன்றுபடுகின்றனர்.
1. கவிஞர் இக்பால் தனது கருத்துக்களைப் பட்டவர்த்தனமாக வெளியிடும் இலக்கிய கலகக்காரனாகவும், அதற்கான ஆதாரபூர்வமான தகவல் பின்புலத்தை தன் விரல் நுனியில் வைத்திருப்பவராகவும் காணப்படுகிறார்.
2. எப்பொழுதும் நண்பர்களை அரவனைத்து அன்பு காட்டுவதில் முன்னிற்பவர்.
மல்லிகை மார்ச் 2009 ஜீ 38
 

கடந்த ஐம்பது வருட காலத்தில் அவ ருடைய எழுத்துக்கள், ஈட்டிய வெற்றிகள், இலக்கிய சாதனைகள், வெளியிட்ட நூல்கள் ஆய்வுகள் செயலாற்றிய களங்கள், ஒளிப்படத் தகவல் போன்ற அனைத்து விபரங்களும் தொகுத்துத் தரப்பட்டுள்ளமை தேடல் ஆய்வுகளில் ஈடு படுவோருக்கு மிகவும் வாய்ப்பாகவுள்ளது.
இத்தொகுப்பை
படித்து முடிக்கும்போது இரண்டு விடயங்களைக் குறிப்பிட வேண்டியுள்ளது.
| || Li।
1. ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக் கிய நூல்களை வெளியிடுவதில் இனி அக்கறை கொள்ள வேண்டும்.
2. இலங்கை முஸ்லிம் ஆக்க இலக்கிய வரலாற்றை தொகுத்தெழுதுவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.
ஐம்பதைத் தொடர்ந்து நகரும் அனுபவம் நிறைந்த இக்காலப் பகுதியில் மேற்கூறிய பணிகளில் கவிஞர் இக்பால் ஈடுபடுவாராயின் சகலருக்கும் நல்லது.
ஜீவநதி - சிறுகதைத் சிறப்பிதழ்
- தி.கானா
நல்லதொரு பின்புலத்தோடு யாழ்ப் பானம் அல்வாயிலிருந்து வெளிவருகிறது "ஜீவநதி". இரு திங்கள் இலக்கிய ஏடு. குறுகிய காலத்திற்குள் காத்திரமானதொரு இலக்கிய சஞ்சிகையென்ற பெயரை நிலை நாட்டி வருகிறது.
இதன் பத்தாவது இதழ் சிறுகதைச் சிறப்பு மலராக ஆர்ப்பட்டமின்றி வெளிவந் துள்ளது.
ப. ஆப்டீன், யோகேஸ்வரி சிவப்பிர EESTFLÈ), தெணியான், க.சட்டநாதன், 5. EGGUT மணி, கெக்கிராவ ஸஹானா, ச.முருகா னந்தன், திக்குவல்லை கமால், தாட்
சாயணி, வசந்தி தயாபரன் ஆகியோரின்
ਸੰਤ : -
ញ5 T.
வித்தியாசமான சுவை, பின்புலம், கருப்பொருள் கொண்டதாக சிறுகதைகள் அமைந்துள்ளமை, வாசிக்கும் போது நல்ல தொரு தொகுதியைப் படிக்கும் உணர்வை ஏற்படுத்துகின்றது.
சிறு சஞ்சிகைகள் இவ்வாறான வித்தி யாசமான முயற்சிகளில் கவனம் செலுத்து வது வரவேற்கத்தக்கதாகும்.
ஆசிரியர் : க.பரரீைதரன். சி.விமலன்
முகவரி : கலை அகம்
ஆவடிப்பிள்ளையார் வீதி
LV
+ 1 =
LLL GUI
மாறு

Page 22
5ாலம் காலமாக சபிக்கப்பட்டவளாக - உரிமைகள் பறிக்கப்பட்டு வாய்மூடி
மெளனியாக வாழ்ந்து வந்த பெண் இன்று உயிர்த்துடிப்புள்ளவளாக மாறி, மறுக்கப்பட்ட
உரிமைகளை வென்றெடுக்கப் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான திருப்புமுனையாகும்.
பெண்ணுரிமை இயக்கங்களின் தோற்றமும், வளர்ச்சியும் பெண்களின் வாழ்வில் வசந்தகாலப் பூக்களைச் சொரிய ஆரம்பித்துள்ளன. இன்றைய பெரும்பாலான பெண்களின் நடவடிக்கைகள் - சமஉரிமை, சுதந்திர வாழ்வு, தாழ்வற்ற மதிப்பு என்பவற்றை நோக்கிப் பயணிக்கின்றன.
கல்வியில் பெண்கள் காட்டிய அக்கறையானது அவர்களிடம் விழிப்புணர்வையும், புரிதலையும், தெளிவினையும், தன்னம்பிக்கையையும், போராடும் இயல்பினையும் ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும், கல்வியில் மேலோங்கியதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெற்று பொருளாதாரத்திலும் மேம்பட வாய்ப்புக் கிட்டியிருக்கிறது.
- சந்திரகாந்தா முருகானந்தன்
பெண் சுதந்திரமாகச் சிந்தித்துச் செயற்பட ஆரம்பித்தபோது, ஆதரவு அலை ஒருபுறமும், வியப்பு இன்னொரு புறமும், எதிர்ப்பலை பிறிதொரு பக்கமுமாக எழ ஆரம்பித்தன. எது எப்படி எனினும் கல்வி, பொருளாதார மேம்பாடானது, சமூகத்தின் பார்வையில் முன்னரை விட பெண்ணின் மதிப்பையும், தரக் கணிப்பையும் உயர்த்திட வழிவகை செய்தது.
மகளிர் எந்தத் தொழிலையும் செய்யக் கூடியவர்கள் என்று நிரூபணமாகிய இன்றைய நிலையில், வீட்டுக்குள் முடங்கியிருந்த பெண்கள் வெளியுலகில் கால் பதித்து பலவித தொழில்களிலும் ஈடுபடலாயினர். பாரம்பரியமாக இருந்த ஆசிரிய, தாதிய தொழில்களை மட்டுமல்ல, வேறு பல நிறுவனத் தொழில்களையும், நிர்வாக சேவைகளையும், கடினமான உடல் உழைப்பிலான தொழில்களையும் செய்யும் நிலை உருவாகியுள்ளது.
கல்வியும், வேலை வாய்ப்பும் கொடுத்த தற்துணிவு, பெண்கள் அடிமை நிலையி லிருந்து விடுபட்டு, ஆணுக்கு நிகராக, ஆணுடன் சம உரிமையுடன் வாழக்கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறது. இந்த இலக்கு முற்றும் முழுதாக எட்டப்படாத
மல்லிகை மார்ச் 2009 ஜ் 40
 

போதிலும், எட்டக்கூடிய தூரத்தில்தான் இருக்கின்றமை கண்கூடு.
சீதனம் போன்ற சில கடின விலங்கு கள் உடைக்கப்படுவதில் சிரமங்கள் எதிர்கொள்ளப்படுகின்றமை என்னவோ உண்மைதான். எனினும், காதல் திரு மணங்கள் இவ்விலங்கை உடைத்து
விடுதலையை எட்டும் ஆரோக்கியமான
சூழ்நிலைக்கு வழியமைக்கின்றன.
பெண்ணுக்கு இறுக்கமான இன் னொரு விலங்கு, போலிக் கற்பு என்னும் மாயை ஆகும். இந்த விலங்கை பெண் களுக்கு இறுக மாட்டுவதில் ஆண்களை விட, ஆணாதிக்கச் சமூகப் பெண்களே ஒருபடி மேலாக நிற்பது வேதனைக்குரி யது. கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி போன்ற நல்லறங்களை நான் எதிர்க்க வில்லை. ஆனால், கற்பு என்பது பற்றிய தவறான விளக்கமும், அது ஆண்களுக்கு அவசிய
மில்லாத ஒன்று என்ற விதண்டா வாதமும்
தான் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
கற்பு என்பது வெறும் உடல் சார்ந்தது
அல்ல என்பதும், அது முக்கியமாக 2 6f 6TD சார்ந்தது என்பதும் உணரப்பட வேண்டும். இதைப் புரிய வைப்பதில் பெண்ணியவாதிகள் வெற்றி பெற்றே ஆக
வேண்டும். --
யுத்த சூழ்நிலையில் ஏற்படுகின்ற வல்லுறவுகளும், இதனால் பாலியல் ரீதியில் பாதிக்கப்படுகின்ற பெண்களும் இன்று பெருகியுள்ள வேளையில், இளம் விதவைகளும் எண்ணிக்கையில் அதிக
மாக உள்ளனர். இவர்களது நிலை சரியாக
உணரப்பட வேண்டும்.
இன்று எமது சமூகத்தில் நடக்கின்ற விதவைத் திருமணங்கள் போலிக் கற்பெனும் மாயையைப் புறம் தள்ளி நிற்கின்றன. இதுவும் பெண்ணடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெறும் ஓர் அம்சமே.
பெண்கள் இயல்பாக ஆண்களைப் போல வாழ அனுமதிக்கப்பட்டால் அவர்
களின் மேல் சபிக்கப்பட்டுள்ள சாபங்கள்
விடைபெறும்,
இப்படியான ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும் போது பெண், அழுத்தங்களின்றிச் செயற்படும் வாய்ப்பு ஏற்படும். பெண்களைப் போகப் பொருளா கப் பார்க்கின்ற ஆண்களின் பார்வை யானது மாற்றம் காண வேண்டும். இதனால், சமூகத்தில் வியக்கத்தக்க நன் மாற்றங்கள் ஏற்படலாம்.
இன்றைய பெண்கள் அகன்ற அறிவையும் வெளியுலகத் தொடர்பு களையும் போதியளவு பெற்றிருக்கின்றனர். சமுதாயத்தின் எறி கணைகளால் முன்னரைப் போல துவண்டு போவ தில்லை. உறுதியோடு எதையும் தாங்கி எதிர்நீச்சல் போட்டு முன்னேறக் கூடிய வர்களாக இருக் கிறார்கள்.
அரசியலிலும், விஞ்ஞானத்திலும், மெய்ஞ்ஞானத்திலும், கல்வி, வேலை வாய்ப்பிலும் தமது ஆளுமைகளை விரிக்க
ஆரம்பித்துள்ளார்கள். எனவே, சபிக்கப்
பட்டவர்களல்ல பெண்கள்! சாதனைப் படைக்கப் பிறந்தவர்கள், அவர்கள்
மல்லிகை மார்ச் 2009 ஜ் 41

Page 23
修 "மியாவ். மியாவ். py - Lomt. - LumT6Ivgoleslags Ló
حممه "C X 9ال ۱۶۱کی
கேற்றடியில் நிற்கும் பொன்ன
ரியம் எழுப்பும் சத்தம் கோதைய
னின் காதில் விழுகின்றது. அதைக் கேட்கும் போதெல்லாம் தனக்குச் சற்றுத் தள்ளி இருந்து செத்தல் மிளகாய் கிழித்துக்
கொண்டிருக்கம் தன் அம்மாவைப் பார்க்கிறான்.
sed مخيم
'மியாவ். மியாவ். பொன்னரியம் விடாமல் அவலக் குரல் எழுப்புகின்றது. அவ னும் தாயையே வினயமாகப் பார்க்கிறான். ஆனால், தாயின் கண்ணும் கருத்தும் சுளகுக்குள் கிடக்கும் செத்தல் மிளகாயிலேயே பதிந்திருக்கின்றது. கோதையனின் பார்வை பல தகவல்களை அம்மாவுக்குச் சொல்லும் பாங்கில் அம்மாவை மொய்க்கின்றது. இருந்தும், அம்மா அசைவதாக இல்லை. மலர்ச் சரம் கோர்ப்பவனின் கரத்தைப் போல் அம்மாவின் கரம் மிகத் துரிதமாக இயங்குகின்றது. மில்லுக்குக் கொடுத்துவிட்டு செத்தல் மிளகாயைப் பொரிமாத் தூளாக்க வேண்டும். தாய்க்கு அந்த அந்தரம்.
'மியாவ். மியாவ். குட்டிகளைத் தொலைத்துவிட்ட தாய்ப் பூனையைப் போல் பொன்னரியம் தொடர்ந்து கத்துகிறது. கோதையனின் மனதில் ஜீவகாருண்யம் பெருக் கெடுக்கிறது. அவன் செய்வதென்னவெனத் தெரியாது மலைச்சு நிற்கிறான். அவனது மதிய போசன நேரமிது. பொன்னரியத்துக்கும் தெரியும். பசியைப் பொறுக்க முடியாமல் சத்தம் எழுப்புகின்றது.
செத்தல் மிளகாய்க் குவியலிருந்து அம்மா கையையோ பார்வையையோ எடுப்பதாக
இல்லை. தூசியும் காரமும் நாசிக்கு ஏறியதால் 'நச்சு, நச்சு' என்று சூழலில் சளி சிந்தத் தும் முகிறாள். இப்படியான நேரத்தில் விசேடமாகப் பொன்னரியத்தின் பிரச்சினையை எடுத்தால் வாங்கிக் கட்ட வேண்டி வரும் என்பது கோதையனுக்கு அநுபவத்தில் கிடைத்த பாடம். எனவே தாய் எழும்பி நினைத்ததைச் செய்யட்டுமென அமைதி காக்கிறான். ஆனால், அவன் மனதிலிருந்து சிலிர்க்கும் வேண்டுகோள்கள் பார்வை வழியாக அம்மாவைச் சென்றடையத் துடிக்கின்றன.
பொன்னரியமும் கோதையன் வீட்டுக்கு எடுபட்டு வந்த வந்தான் வரத்துத்தான். வரும் போது சின்னஞ்சிறு பராயம். அதன் பாலியம் சொட்டிய அழகு வீட்டுப் பெரியவர்களைச்
கண்டி அழைத்துக் கொண்டது. பரவசப்பட்டுவிட்டனர். பொன்னரியத்தின் உடலை அளைந்து விளையாடத் தொடங்கினர். தன்வாலை நிமிர்த்தி அது ஒவ்வொருவர் தேகத்திலும் உரஞ்சிச் சேஷ்டை புரியும், அதைப் பொருட்படுத்தி எவருமே “சீ.. ਲ6u6 அங்கால போ...' என உதையவுமில்லை, கலைத்ததுமில்லை. பாசத்தோடு தூக்கி
மல்லிகை மார்ச் 2009 & 42
 

அனைத்துக் கொள்வதுமுண்டு. தூக்கி மல்லாத்தும் கோதையனின் முகத்தை அது கால்களால் வறுகும் பற்களால் அவன் விரல்களைக் கடிக்கும், 'பல்லுக் கடுக் குதோ. இறைச்சியா கேக்கிற?" என அவன் அதன் வாயிலும் கால்களிலும் செல்லமா கத் தட்டுவான். சாப்பாடு கொடுப்பதற்குக் கடும் போட்டி, அம்மாவும் பிள்ளைகளும் நான் முந்தி நீ முந்தி எனப் ப்ோட்டிக்கு நிற்பர். இறைச்சி, மீன் சதைகள், முள்ளுக ளைச் சூப்பி நிலத்தில் எறியும் பொழுது காலை உயர்த்தித் தடுத்து விழ வைத்து வாயால் கெளவிக் கொள்ளும். வயறு முட்டத்தின்று போட்டு பொன்னரியம் கால் களைச் சீமெந்துத் தரையில் பரத்தியபடி நித்திரை கொள்வது ஒர்தனி அழகு பெயர் வைப்பதில் குடும்பத்தில் ஏதடை இடை யிட்ட கறுப்பும் பொன் மஞ்சள் வர்ணமும் உடல் ஏகலும் வெள்ளையும் தான் அதன் நிறம், எங்கே பொறுக்கினானோ- கோதை யன் தான்- 'பொன்னரியம்’ என்ற நாமத் தைச் சூட்டினான். ஏகமனதாக முழுக் குடும்பமும் ஏற்றுக் கொண்டது.
வேளைக்கு வேளை சாப்பாடு வீட்டா ரின் பரிவு, பாசம் குறைவில்லாததால் பொன் னரியம் நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாக வளர்ந்தது. பொன்னரியத்
தின் "மியாவ். மியாவ்' குரல் அடிக்கடி வீட்டுக்குள் தொலைக்காட்சியின் குரல் போல் ஒலித்துக் கொண்டிருந்ததால் எலிக ளின் தர்பார் ஒடுங்கியது. பதுங்கிப் பதுங்கி எலிச் சத்தம் எங்கிருந்து வருகின்றதெனப் பொன்னரியம் துப்பறியும், ஊசாட்டத்தைக் கண்டு விட்டால் தாவிப் பாய்ந்து கெளவிக்கு கொள்ளும். கெளல்வப்பட்ட எலி கத்தக் கத்த வீட்டுக்கு வெளியே கொண்டு ஒடும்.
தான் வேட்டையாடியதைக் காகங்களிடி மிருந்து காப்பாற்ற அது காகங்களோடு சமரிடுவதுமுண்டு. தோற்பதுமுண்டு பொன் னரியத்தின் வருகைக்குப் பின்னர் எலிப் பொறி தேடுவாரற்றதாகிவிட்டது. எலி கொல்லி மருந்துகளின் வருகையும் அருகி tilgj. குடு, குடு' என ஒடும் கரப்பொத்தான் பூச்சிகளைக் கெளவி விழுங்கி ஓங்காளித் துக் கக்கும். அம்மா கண்டுவிட்டால் தும்புத் தடியை எடுத்து வெளியே கலைப்பா. நன்மொழி கூறும் பல்லிகளைக் கூட வீட்டில் அனுமதிக்காது. பல்லியைச் சுவரில் கண்டுவிட்டால் மின்னல் வேகத்தில் அதன் மேல் பாய்ந்து இரையாக்கி விடும். பொன்னரியத்தின் மதாளிப்பான உடல் வாகு கடுவன்களுக்கு வலை விரித்தது. சுற்றுப் புறக் கடுவன்களெல்லாம் அதைச் "சுழட்டத் தொடங்கின. தனக்கென ஒன் றைத் தெரிவதற்குப் பொன்னரியத்துக்குச் கயம்பரம் வைக்க வேண்டிய நிர்ப்பந்தமாக இருந்தது. அம்மாவோடு சேர்ந்து அப்பாவும் அதன் மீது கடும் கோபம் கொண்டார். இதுவெல்லாம் கோதையனுக்குப் பெரும் முஸ்பாத்தியாக இருந்தது!
பொன்னரியத்தின் கழுத்துச் சுருங்கிமுகம் சிறுத்து- வயிறு ஊதத் தொடங்கி விட்டது. அது கர்ப்பிணி குட்டித்தாச்சி! அம்மா அப்பாவின் பாசம் வற்றத் தொடங் கியது. சாப்பாடு கொடுப்பதும் குறைந்தது. தன் பங்கைக் கோதையன் கொடுத்தான். 'கோதை. இனி உதை நாங்கள் வைச் சிருக்கக் கூடாது. குட்டித்தாச்சியாகீட் அம்மா கடுமை காட்டி அவனு " . . . . . . لویی2یا டைய பாசத்தையும் பரிவையும் ஒடுக்க
முயன்றாள். பொன்னரியத்துக்குக் கதவ
டைப்பையும் அரங்கேற்றினாள். கோதை யனின் மனம் கணக்கத் தொடங்கியது!
மல்லிகை மார்ச் 2009 ஜ் 43

Page 24
கோதையன் வீட்டுக்கு வெளியே வந்தால் அவன் காலை விறாண்டியது. "மியாவ். மியாவ்.' எனச் சத்தமிட்டது. போக விடாது சுற்றிச் சுற்றி வட்டம் போட்டு ஓடி யது. வீட்டுக்காரரின் முகத்தில் ஒட்டுமொத் தமாக ஏற்பட்ட மாற்றத்தால்- உபசரிப்பின் ஒடுக்கத்தால் பொன்னரியத்தில் காணப் பட்ட செழிப்பும் கருகியது. முகத்தில் வாட்டம் சடைத்தது. மியாவ். மியாவ்.' கேற்றடியில் இன்னமும் பொன்னரியம், தான் நிற்பதை அறிவித்தபடிதான் நிற் கிறது. அதைத் தேடிவந்த கடுவன்களை அது உறுமித் துரத்துவதையும் கோதை யன் உணர்கிறான். போட்டி போட்டுக் கொண்டு வந்த கடுவன்களுக்கிடையிலும் மோதல்கள் நடக்கின்றன. பார்வை அம் மாவிலிருக்க அவன் செவிப் புலன் முற்று முழுதாகக் கேற்றடியில்தான் "மியாவ். மியாவ்.' போவதும் வருவதுமாகப் பொன்னரியம் கத்திக் கொண்டு திரிகிறது. “குப்பைத் தொட்டிக்கயும் தின்னக் கிடைக்க இல்லையாக்கும்.' பொன்னரிய மும் அகதியாகிவிட்டதைக் கோதையன் எண்ணி உருகுகிறான்.
"இந்தச் சனியன் என்னத்துக்கு நடு வாசலுக்க நிண்டு கத்திது.” மிளகாய்ச் சுளகை முன்னுக்குத் தள்ளி அரக்கி விட்டு அம்மா சூ. சூ எனப் பொன்னரியத்தைச் சத்தம் எழுப்பிக் கலைத்தபடி எழுந்து கேற் றடியை நோக்கி நடந்தான். பொன்னரியத் தின் சத்தம் நின்று விட்டது. அதற்கு அம்மா
கலைப்பது கேட்டுவிட்டதெனக் கோதை
யன் நினைத்துக் கொண்டான். எழுந்து தாயைப் பின்தொடர்ந்த அவன்.
'urt suoLD6007........ " தன் இரக்கத்தை வெளிக்காட்டினான். "இப்படித் திரத்தினாத்
தான் கோதை அது இன்னொரு வீட்டைத் தேடுமடா..." சொல்லிச் சொல்லி அம்மா நடந்தாள். 'ஒ. அதை வீடா தேடச் சொல் லிற. நாங்கள் ஊறாத்துறை கேம் றோட் வீட்டை விட்டிட்டு வந்த புறகு நீ எத்தினை வீட்டைக் கழுவித் துடைச்சிருப்ப. உன்ர மனம் அடங்கிச்சா. அப்புடி இருந்தும் உந்த வாயில்லாப் பிராணியைக் கலைக்கி றியே." கோதையன் கெஞ்சுவது போல் தாயோட வாதாடினான். 'அது குட்டித் தாச்சியடா. குட்டி போட்டா உத்தரிக் கிறது நீயா? எல்லா அறையஞக்கையும் கொண்டு திரியும், பறுவமும் கிட்டுது. குட்டி போடும். அந்தக் கரச்சல் நமக்கேன் போகட்டும். (5 . . . . . . (Së . . . . . . '' getidLost சூடாகத்தான் சொன்னாள்.
'அதுக்கென்னண- நீ பத்தியம் அரைச்சுக் குடுக்க வேணுமெண்டா இப் புடித் துள்ளிற. அமெரிக்க ஜனாதிபதியி ன்ர வெள்ளை மாளிகையிலும் பூனை வளக்கீனமாம். தெரியுமா?" கோதையன் அர்த் தத்தோடு- தமாவடிாகச் சொன்னான். அம் மாவின் முகத்தில் கோபம் கொப்பளித்தது. நின்று முறைத்து மகனைப் பார்த்தாள்.
"கோதை உனக்கு ஆசையெண்டா நீ அதுகுட்டி போட்டாப் புறகு ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு லந்து வள,' அம்மாவின் குரல் சற்றுத் தணிந்து ஒலித்தது.
"ஏன்? அதுகும் குட்டித்தாச்சி ஆனா
கலைப்பதானே. இனிச் சரிவராது. எனக்
கிது நல்ல பாடம். நீ இனி எலியை வள.' துக்கம் தொண்டையைக் கட்டக் கோதை யன் சொல்லித் திரும்பி அறைக்கு நடந்தான்.
"சூ.கு. ஒடு. இனி இஞ்ச வராத." கேற்றுக்கருகே சென்று அம்மா கட்டளை பிறப்பிப்பது போல் உரத்துக் கலைத்தாள்.
மல்லிகை மார்ச் 2009 & 44

"என்னடி பொட்டை? ஏன் இப்புடிக் கத்திக் கலைக்கிற.” தனக்கு ஆதரவாக இருந்த குரலைக் கேட்டுக் கோதையன் மீண்டும் தாய் நின்ற இடத்துக்கு வரு கிறான். வேலாசி ஆச்சி அம்மாவுக்குக் குஞ்சி- மெல்ல மெல்லமாக நடந்து கோதையன் வீட்டுக்கு வருகிறார்.
‘ஆ. வேலாசிக் குஞ்சியோ 66, ss, எப்ப இஞ்சால...' அம்மா புளுகத்தோடு வரவேற்றாள். வேலா சிக் குஞ்சியின் பின் கோதையன் வரஅம்மா குஞ்சியை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.
"முந்த நாள் மோனை வந்தனான். இந்த ரெண்டு காலும் ஒரே உளைவு." சீமெந்துத் தரையில் இருந்து, கால்களைச் சமாந்தரமாக நீட்டி, உடுத்த சீலையை முளங்கால் வரை சிரைத்தபடி குஞ்சி கைகளால் உருவினார்.
"கதிரையில் இரன் குஞ்சி. இந்தப் போக்குவரத்துப் பிரச்சினேக்க எப்படியென வந்த நீ." பக்கத்தில் தானும் இருந்து கொண்டு அம்மா கேட்டாள். கோதையன் விநோதமாகப் பார்ததபடி நின்றான்.
"அந்தக் குத்தியன்கள் விட்டாத்
தானே. தங்களுக்கு இஞ்ச வந்தாப் பிரச்சினையாம். என்னனச் சீமைக்கு வரட்டாம். என்னைப் பார்த்தா தேப்ப
னைப் பாத்த மாதிரி இருக்குமாம்."
வேலாசிக் குஞ்சியின் இரண்டு பேரன் களும் ஒரு பேர்த்தியும் லண்டனில் இருப்பது அம்மாவுக்குத் தெரியும். பிள்ளைகளின் சீர் சிறப்புகளைப் பார்க்காது அந்நிய காலத் தில் பெற்றோர்கள் அகால மரணமடைய அவர்களை வளர்த்தெடுத்து லண்டனுக்கு அனுப்பினது குஞ்சிதான். பேர்த்தியையும் கல்யாணம் கட்டி வைத்ததும் குஞ்சிதான். இந்த விஷயங்கள் அம்மாவுக்கும் தெரியும்,
“என்னடி பொட்டை யோசிக்கிற.அது கள் ஆசைப்படுகுது. உவங்கள் விட்டாப் போவன். இந்தக் கட்டை எங்க விழுந் தாலும் விழட்டும். ' ஆச்சி உசாராகத் தான் வந்த கதையைச் சொன்னார்.
'இதென்னடி செத்தலே கிழிக்கிற.' வேலாசிக் குஞ்சி மிளகாய்ச் சுள்கைத் தன்னருகாக்கினாள்.
“ஓம் குஞ்சி. கிழிச்சு வறுத்துக் குடு த்து உவனை மில்லுக்கு அனுப்பவேணும். அதுக்குள்ள உந்த அறுந்த பூனை கத்திக் கொண்டு நிண்டுது. அதைத் தான் கலை க்க வந்தனான்."
"இவன் உன்ர மோன் தானே. இஞ்சவா குஞ்சு. உன்னைக் கொஞ்ச.” ஏறிட்டுக் கோதையனைப் பார்த்தபடி வேலாசிக் குஞ்சி கூப்பிட்டார். நட்ட கட்டை மாதிரி கோதையன் நின்றான். பற்களற்ற வேலாசிக் குஞ்சியின் பொக்கு வாய்க்குள் இருந்து வந்த சொற்கள் அவனுக்கு வேடிக்
கையாக இருந்தது.
"கிட்டப் போ கோதை. உன்னைப் பெத்த வீட்டுக்க எனக்குக் குஞ்சியும் சரக்கரைச்சுப் பரியரிச்சவ. அம்மா சொன்னார். "இஞ்ச வா மோனை. ஆம்புளையெல்லே என்னத்துக்கு வெக் asb...... ?' மெல்ல நடந்து கோதையன் வேலாசிக் குஞ்சிக்கு அருகே வர- அவன் கழுத்தைப் பிடித்துச் சரித்து ஆச்சி கண் வெட்டாமல் பார்த்தார். அப்படி எதைப் பார்க்கிறாரென்ற வியப்புக் கோதை யனுக்கும் தாய்க்கும் ஏற்பட்டது.
‘இதென்ன இமையில கக்கட்டியா..? பெரிய பருவொண்டு. y;
"என்னவோ தெரியாது குஞ்சி. ஒரு கிழமையா உவன்ர இமையில உது கிடக் குது. ஒருக்கால் டொக்டரிட்டக் காட்ட வேணும்."
மல்லிகை மார்ச் 2009 ஜ் 45

Page 25
“சீ... என்னத்துக்கடி.." அம்மா சொல்லி முடிப்பதுக்குள் வேலாசிக் குஞ்சி குறுக் கிட்டார்.
'உது கக்கட்டி மோனை. கண்டது நிண்டது சொல்லாதே கண்ணில கக்கட்டி வாங்காதே எண்டெல்லே அப்ப சொல்லி fé06) ... . . . . ."
"ஐயோ குஞ்சி என்ர கோதை ஒருத் தரைப் பற்றியும் பொல்லாப்புச் சொல்லாது." அம்மா மகனைத் தூக்கிப் பிடித்தார்.
"அது கிடக்கட்டும் மோனை. பருப் போட்டு வீங்கி இருக்கிற இடத்தில உந்தப் பூனையின்ர வாலால ஒரு அஞ்சாறு தட்வை தடவி விடு காலமையும் பின்னேரமும். கக்கட்டி போறன் போற்னென்டு வத்திப் போகும்." கோதையனும் தாயும் காட் சிக்கு வைக்கப்பட்ட பொம்மையைப் பார்ப்பது போல் வியப்போடு குஞ்சியைப் பார்த்தனர்.
"அவனுக்குக் கொதிக்குதாம் குஞ்சி.' வயதுக்கு மூத்த குஞ்சி சொன்னதைத்
தட்ட முடியாது அம்மா தாழ்மையாகச்
ਸ666.
"அது கொதிக்குந் தான் மோனை.
இப்ப நான் சொன்னது எங்கட அந்த நாளய
கை மருந்து. அப்ப நாங்கள் ஒட ஆஸ் பத்திரியா இருந்திது. உதுகளை செய்து தானே வருத்தக்காரரை எழுப்பினம்."
'eb'. மெய்யே குஞ்சி."
'பிறகென்ன. எடுத்து வைச்சே சொல்லிறன். சின்னதுகளுக்கு கழுத்து, நெஞ்சைச் சுத்தி அவியும். அப்ப உதை அக்கி எண்டு சொல்லுவம். எங்கட குயிலர் அம்மான் வருவேர். ஒரு சாதி சிவத் தக் காவியை செவ்விளநியில கரைச்சு, சின்னதின்ர நெஞ்சில முதுகில சிங்கம் கீறி விடுவேர். அப்புடி ஒரு மூண்டு நாளைக்குச் செய்ய அவியலெல்லாம் கொட்டுண்டு
ßuTub..... உண்ணாக்கு வளந்து நாங்கள் விடாம இருமினா குயிலர் அம்மான் வாய் பேசாம தெருக்கானில வளந்த ஏதோ பூண் டைப் புடுங்கிக் கொண்டு வந்து இருமிற ஆளின்ர தலையில வைச்சுச் சூடு பறியத் தேச்சு ரெண்டு மூண்டு தலை மயிரையும் ஒத்தி இழுத்துப் புடுங்குவேர். இருமல் பக்கெண்டு நிண்டிடும். குழந்தையஞக்கு வயித்தோட்டமென்டா, அதுகளின்ர வகுத் தில திருநீத்தைப் பூசிப் பூசி, எதையோ சொல்லிச் சொல்லி அம்மான் வகுத்தை உருவி உருவி தொங்கலுக்குப் பார்ப்பேர். வகுத்தோட்டம் போயிடும். அப்பியெடி பொட்டை எங்களுக்குக் குயிலர் அம்மான் தான் அப்ப சீமை டாக்குத்தர்."
அந்தக் காலத்து வீட்டு வைத்தியங் களைச் சொல்வதை நிறுத்தி வேலாசிக் குஞ்சி எப்பொழுது தன் பூனை விவகாரத்தை எடுத்துக் கொள்வா என்பதில் கோதைய னின் மனம் துருதுருத்தது.
"உதை ஒருக்கால் செய்து பார் மோனை, பகிடி எண்டு எடுக்காத, பூனை வாலால அவன்ர கக்கட்டியைத் தடவி விடு.'
வேலாசிக் குஞ்சி மிளகாய்ச் சுளகை இழுத்து மிளகாயைக் கிழிக்கத் தொடங் கினா, கோதையனுக்குக் குஞ்சி மீது பாசம் பெருகியது. “பூஸ் வரட்டும் கோதை. கேற்றைத் துறந்து விடு. குஞ்சி இருங்க ஏதும் குடிக்கக் கொண்டு வாறன்.' எழுந்த படி அம்மா சொன்னது கோதையனுக்குத் தேனாகத் தித்தித்தது. வேலாசிக் குஞ்சி யைக் கட்டிக் கொஞ்ச வேண்டும் போலி ருந்தது.
"இப்புடியான கிழடுகளும் வீடுகளில இருக்கிறது எல்லாத்துக்கும் நல்லது தான்."
என மனதுள் நினைத்தபடி ஆருயிர்
பொன்னரியத்துக்குக் கேற்றைத் திறந்து விட்டு- வீட்டுக்குள் வர விட துள்ளி ஒடிச் சென்றான் கோதையன்,
மல்லிகை மார்ச் 2009 ஜ் 46

நீரேதசரீதிருபfசெல்லத்துரை
- டொமினிக் ஜீவா
நான் நண்பர் செல்லத்துரையைச் சந்தித்துச் சுமார் அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் அதிகமான காலமாகும்.
அவர் அப்பொழுது சுன்னாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘ஈழகேசரி’ வார இதழுக்கு வாரா வாரம் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த காலம்.
அச்சுவேலிதான் அவரது பிறப்பிடம். அங்குதான் கல்வியை முடித்துக் கொண்டு, சும்மா ஒரு வேலையில்லாமல், பத்திரிகைகளுக்குச் சிறுசிறு செய்திகளை எழுதிக் கொண்டிருந்த காலத்தில்தான், அவருக்கு ஈழகேசரியுடன் தொடர்பு ஏற்பட்டிருந்தது.
ஈழகேசரியின் அதிபர் பொன்னையா. இவரைக் குறிப்பிடும் போது ரஸிகமணி கனக. செந்திநாதன் பொன்னையாக் கமக்காரன்" என்றே சொல்லிச் சொல்லி ரஸிப்பார். அதன் ஆசிரியராக அப்போது கடமையாற்றியவர் ராஜ அரியரத்தினம் என்பவர்.
ஈழகேசரி அதிபரை நான் யாழ்ப்பாணத்தில் முறிலங்கா புத்தகசாலையில் அடிக்கடி கண்டிருக்கிறேன். இரண்டொரு தடவைகள் கதைத்துமிருப்பதாக ஞாபகம்.
நிருபர் செல்லத்துரை எழுத்தில் தனது பெயரைச் செல்வத்துரை எனப் பதிய வைத்தே, கையெழுத்திடுவார்.
அச்சுவேலியிலிருந்து புறப்பட்டு, நேரே சுன்னாகம் சென்று, அங்கு ஈழகேசரிக்குக் குறுங்குறுத் தகவல்களை எழுதிக் கொடுத்துவிட்டு, யாழ்ப்பாண நகரை வந்தடைவார்.
அப்பொழுது நான் கஸ்தூரியார் வீதியிலுள்ள 60-ம் எண் கடையில் தொழில் செய்து கொண்டிருந்த காலம்.
முன் கடைக்குப் பின்னால், விஸ்தீரணமான இடம் இருந்தது.
அங்கு ஒரு மூலையில் குந்திக் கொண்டிருந்து கொழும்புத் தினசரிகளுக்குச் செய்திகளை அவசர அவசரமாக எழுதிக் கொண்டிருப்பார்.
எந்த நேரமும் அவரை கிண்டலடித்துக் கொண்டிருப்பதுதான் எனது பழக்கம்!
ஆனால், அவரது சுறுசுறுப்பின் மீதும், எழுத்து ஆளுமையின் மீது எனக்கொரு ஆர்வம் அப்பொழுது, அதில் கடைசி வரையும் குறைவேற்படவில்லை!
மெல்ல மெல்ல வீரகேசரியுடன் செய்தித் தொடர்பு ஏற்பட்டது, அவருக்கு, கட்டம்
వ్యష్టి
மல்லிகை மார்ச் 2009 ஜ் 47

Page 26
கட்டமாக யாழ்ப்பாண மாவட்ட முக்கியமான
செய்தியாளர்களில் ஒருவராக அவர் தன்னைத் தானே நிறுவிக் கொண்டார்.
அவர் செய்தித்துறையில் வளர வளர, நானும் எழுத்துத் துறையில் மெல்ல மெல்ல வளர்த்துக் கொண்டிருந்தேன்.
என் மீதும் தோழர் டானியல் மீதும் தனிப் பற்றும் பாசமும் வைத்திருந்தவர், அவர். "உங்களுக்கு இந்தச் சாதி வெறியர் களின் வெப்பிசாரம் முற்று முழு சாகத் தெரியாது. நம்மைப் போன்றவர்களுக்குக் குழிபறிப்பதில் மன்னர்கள் இவர்கள். காத்திருந்து கழுத்தறுப்புச் செய்வார்கள் கவனம் கவனம்" என்பார்.
இவருக்கெதிராகப் பல முறைப்பாடு கள் மேலிடத்திற்கு அடிக்கடி போனது ண்டு. மேலிடம் இவையொன்றையுமே கணக்கில் எடுத்துக் கொண்டதேயில்லை.
தனது யாழ்ப்பாண நிருபரின் நேர்மையின் மீதும் துணிச்சலின் மீதும் அத்தனை நம்பிக்கை கொண்டிருந்தது, அன்றைய கொழும்புத் தலைமைப் பீடம்.
காரணம், இவருமொரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, அதனால் பல கஷ்ட நிஷ்டுரங்களைக் கண்டு தெளிந்து, தனது இடைவிடா ஆற்றலாலும், திறமையாலும் கட்டம் கட்டமாக முன்னேறி, பத்திரிகை உலகில் தனக்கென்றொரு இடத்தை அன்று வரை தக்க வைத்துக் கொண்டு வந்தவர்.
வீரகேசரி யாழ். கிளைக் காரியாலயம் புகையிரத முன் வீதியில் அந்தக் காலகட்டத்தில் ஸ்தாபிதமானது.
அதன் աnփ செய்திப் பொறுப்பாளராக இயல்பாகவே செல்லத்துரை முன் நிலைப்படுத்தப்பட்டார். s
எனது இல்லம் புகையிரத நிலையத் திற்குச் சமீபமாக இருந்தது. நான் வீடு செல்லும் நேரங்களில் அப்படியே வீரகேசரி யைச் சும்மா ஒருதடவை எட்டிப் பார்ப்பது வழக்கம். -
அப்படியான நேரங்களில் தபால் களை, கொழும்புப் புகையிரதத்தில், சேர்ப் பிப்பதற்காக அவசர அவசரமாக இயங்கிக் கொண்டிருப்பார்.
இரவுப் புகையிரதம் சரியாக மாலை 7.40க்குத் தான் நிலையத்தை விட்டுப் புறப்படும்.
சில சமயம் இரண்டொரு நிமிடங்கள் தாமதித்துப் புறப்பட்ட சம்பவங்களும் நடந்ததுண்டு.
நிலையத்திற்குள் செல்லத்துரையின் தலைக் கறுப்பை கண்டதன் பின்னர்தான், நிலைய அதிபர் ரெயிலுக்குப் பச்சைக் கொடி காட்டிப் போக அனுமதி கொடுப்பார். ஒரிரு நிமிஷங்கள் தாமதித்தால் இன்ன மும் நிருபரின் தலைக் கறுப்புத் தெரிய வில்லை என்பதுதான் அதற்கு மறைமுக மான அர்த்தமாக விளங்கும்.
நான் நிருபரிடம் பழகியதில் ஏராள மான அநுபவங்களையும், அறிவுரைகளை யும் பெற்றிருக்கின்றேன். பல புதிய புதிய முகங்களின் நட்புறவையும் கண்டடைந் திருக்கின்றேன்.
எனது கட்டம் கட்டமான பிரபலத் திற்கு எத்தனையோ வழிகளில் நிருபர் வழி சமைத்துத் தந்திருக்கிறார்.
நான் முதன் முதலில் முறிலங்கா சாஹித்திய மண்டலப் பரிசைப் படைப் பிலக்கியத்திற்காகப் பெற்றுக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பிய காட்சியை மிக விரிவாக ஞாயிறு வீரகேசரி இதழில் விவரித்திருந்தார்.
மல்லிகை மார்ச் 2009 ஜ் 48

பரிசு பெற்றுத் திரும்பிய டொமினிக் ஜீவாவை வரவேற்க யாழ்ப்பாண நகரமே புகையிரத நிலையத்தில் திரண்டிருந்தது! என அச்செய்திக்கு அவர் அன்று தலைப் புக் கொடுத்திருந்தார். யாழ் மேயரின் பல பிரமுகர்கள் வரவேற்பில் கலந்து கொண்
6.
எழுத்தாளர்கள் மீது அத்தனை கரிசனை அவருக்கு.
கட்டம் கட்டமாக அவர் வளர்ந்தார். நாம் வளர்ந்தோம். அதே கட்டம் கட்டமாக நாம் வளர்ந்தோம். அவரும் வளர்ந்தார்.
அவரது காலகட்டத்தில்தான் தமிழர சுக் கட்சி தமிழ் மண்ணெங்கும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது.
தமிழ் அரசியல் கட்சிக்காரர்களிடம்
தனிப் பெரும் மதிப்பு அவருக்கு இருந்தது, அக் காலகட்டதில்.
இருந்தும், யாருக்குமே அவர் விலை
போனதில்லை. அவரது செய்தித் துணுக்கு களில் நேர்மையும் நடுநிலையும் மிளிர்ந் திருப்பதைக் காணலாம்.
இருந்தும், பத்திரிகைத்துறையினரு க்கு இந்தக் காலத்தில் மட்டுமல்ல, அந்தக் காலத்திலுமே பயமுறுத்தல்கள் இருந்து வந்துள்ளன. எனவே, அவர் வீடு திரும்ப பஸ் ஏறுவதற்காக, பஸ் நிலையம் வருவ தற்குப் பல பாதைகளையும் அடிக்கடி மாற்றி மாற்றிப் பயன்படுத்தி வந்தார்.
ஆங்கில அறிவு போதாமை. இருந்
தும், பல ஆங்கிலப் பத்திரிகை நிருபர்கள்
நண்பர் செல்லத்துரையை நாடித்தான் தமது தகவல்களின் குறைபாடுகளை அடிக்கடி திருத்திக் கொள்வார்கள்.
பல பிரபல பத்திரிகை நிறுவனங்கள்
அந்தக் காலத்திலேயே தமது நிறுவன சேவைக்கு அவரைக் கவர்ந்து கொள்ளப் பல வழிகளிலும் மேலும் மேலும் முயற்சி செய்ததை நான் அறிந்திருந்தேன்.
இவரது பணியை பின்புலமாக வைத்து 60-களில் ‘செய்தி வேட்டை என்றொரு சிறுகதையை எழுதியதாக ஞாபகம்.
அந்த ஆலோசனைகளையும் ஆசை வார்த்தைகளையும் நிருபர் தனது கவனத்திற்கே எடுத்துக் கொள்ளவில்லை. அவற்றை முற்றாகவே அவர் நிராகரித்து வந்தார்.
தான் செய்தித்துறையில் ஈடுபட்டுள்ள அதே சமயம், தனக்கு நெருக்கமான பிரதேச எழுத்தாளர்களை நட்பு வட்டத்திற் குள் இணைத்துப் பிணைத்ததுடன், ஈழகேசரியில் ஒருவர் மாறி ஒருவர் கூட்டாக நெடுங்கதைகளை எழுதி வெளியிட ஊக்கமூட்டியவர்.
அதில் ஒன்றுதான் ஐவர் எழுதிய மத்தாப்பு" என்ற தொடர் நாவல்.
கடைசியாக அவரை நான் கொழும்பு வைத்தியசாலையில்தான் சந்தித்தேன். பேச முடியாத நிலை. நினைவாற்றல் சீராக
இருந்தது. எனது வலது கரத்தைப் பொத்தி
யெடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார். என்னுடன் நண்பர் ருரீதரசிங்கும் உடன் வந்திருந்தார். அச்சுவேலியில் நடந்த அவரது இறுதிச் சடங்கிலும் நாமிருவரும் கலந்து கொண்டோம்.
யாழ்ப்பாணத்தைப் பற்றி ஒருவன் நேர்மையாகவும், ஆழமாகவும் சிந்திப்பா னேயானால், அவனது ஞாபகத்தில் வீர கேசரி நிருபர் செல்லத்துரையின் நாமம் நிச் சயம் தட்டுப்படாமல் போகவே, போகாது
மல்லிகை மார்ச் 2009 ஜ் 49

Page 27
பல்லிகை மார்ச் 2009 宰 50
 

இ
-- پہلیت
?-൬u ?eഗസ്റ്റ്ലർ ഗുസ്ക്രി/മ
கசாதி திர திரவர் ரன்
மார்க்ஸிய கோட்பாட்டின் எழுச்சி காரணமாகவே சாதியத்துக்கு எதிரான, குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியதாகத் தெரிவிக்கும் தர்ஹா நகர் தேசிய
மல்லிகை மார்ச் 2009 率

Page 28
கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி. ந. இரவீந்திரன் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவன் சமூகத்தில் உச்ச நிலையை அடைந்த போதிலும், அவரைத் தாழ்த்தப்பட்டவனாகவே பார்க்கின்ற நிலைமை இன்னமும் முடிவுக்கு வந்ததாகக் காணமுடிய வில்லை எனவும் சுட்டிக் காட்டினார்.
இலக்கிய உலகில் ‘துரைவி' என அழைக்கப்பட்ட அமரர் துரைவிஸ்வ நாதனின் 78 ஆவது பிறந்ததினத்தை யொட்டி கலை இலக்கிய நண்பர்களால் கொழும்பு ஐந்துலாம்புச்சந்தியில் உள்ள பழைய நகர மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடாத்தப்பட்ட நினைவுப் பேருரை நிகழ்வில் 'சாதியச் சமூகத்தில் மார்க்ஸியம்’ எனும் பொருளில் நினைவுப் பேருரையை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்
பிட்டார்.
எழுத்தாளர் தெளிவத்தை ஜோச! தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியின் போது, துரைவியின் மகன் பீ. வி. ராஜ் பிரசாத் வரவேற்புரையை நிகழ்த்தினார். விரிவுரையாளர் இரவீந்தி ரன் தமதுரையில் தொடர்ந்து கூறிய தாவது;
"சாதியச் சமூகத்தில் அர்க்ஸியம்’
இத்தலைப்பு தொடர்பிலான புத்தக மொன்றை வெளியிடுவதற்காகத்
தீர்மானித்துள்ளேன். இது தொடர்பில் பேசுவதற்கு உனக்கென்ன தகுதி இருக்கிறதென்று யாராவது கேட்டால் எனக்குத் தகுதியில்லை என்பது உண்மை. ஆனால், அரசன் நிர்வான மாகப் போகும் போது அதைச் சொல்லும் தைரியம் யாருக்குமில்லாத வேளை யில், ஒரு சிறுவன் சொன்னானே. அந்தச் சிறுவனுக்குள்ள தைரியம் எனக்
குள்ளது.
ஏற்கனவே சாதியமும் மும் தொடர்பான நூல்கள் சிலவற்றை உருவாக்கியுள்ளேன். அவை சர்ச்சை களை உருவாக்கியுள்ளன. இது தொடர் பில் பல விமர்சனங்களும் எழுந்துள் 66.
சாதியம் தற்போது அதிகளவில் பேசப்படுகின்ற ஒரு விடயமாகும். இச்சாதியம் தொடர்பான பாகுபாடுகள் நீண்ட காலமாக நமது சமூகத்தில்
காலனப்பட்டாலும் 1990களில் ‘தலித்
சமூகம் பற்றிப் பேசப்படத் தொடங்கப் பட்டது. இது தொடர்பில் கோ, கேசவன், நா. முத்துக் கோபன் ஆகியோர் ஆய்வுகள் செய்து நூல்கள் வெளி யிட்டுள்ளனர்.
பிறப்பு அடிப்படையிலேயே ஒருவ னின் அடையாளம் தீர்மானிக்கப் படுகின்றது. தலித்தாகப் பிறந்த ஒருவன் அதி உயர் பதவியில் அமர்ந்தால் கூட, அவர் அமர்ந்த ஆசனம் கழுவி
மல்லிகை மார்ச் 2009 & 52

தூய்மைப்படுத்தப்படும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த ஒருவன் சமூகத்தில் உச்ச நிலையை அடைந்தாலும், அவன் தாழ்த்தப்பட்டவனாகவே கருதப்படுகின் றான்.
இந்தச் சாதியச் சமூகத்தில் மார்க்ஸியம்' எனும் உரைக்கு நானிட்ட உப தலைப்பு 'தமிழர் வாழ்வியல் பார்வை. ஏனெனில், இத்தலைப்பைப் பேசும் போது தமிழர் வாழ்வியல் பற்றியும் பேச வேண்டி ஏற்படுகிறது.
நிலவுடமை சமூகத்துக்கான கருத் துடைமையே சாதியம். சாதியம் என் றால் தீண்டாமை. 80களுக்கு முன் காணப்பட்ட நிலவுடைமை சமூகத்தி னுடைய எச்ச சொச்சமே சாதியம். சாதியம் பல்வேறு சமூக முறைக்கேற்பத்
தன்னை மாற்றிக் கொண்டு வாழக்
கூடியது எனச் சாதியம் பற்றி ஆய்வு மேற் கொண்ட அறிஞர் ஒருவர் குறிப் பிட்டுள்ளார்.
இந்திய தேசியத் தோற்றம் பிரா மன தேசியமாகவே ஆரம்பிக்கின்றது. அதன் நலனைய்ே முன்னெடுக்கும் காந்தி, நேரு போன்றவர்களால் கூட, அதை முற்றாகத் தவிர்க்க முடியாது போனது. அவர்கள் கூட தாராளவாத அரைப்
வகையிலுள்ளது.
பிராமணத் தேசியக் கொள்கையையே முன்னெடுத்தார்கள்.
கண்டே பெரியார்
அம்பேத்கரே இதற்கு எதிர்த் தேசிய மாகத் தனித் தேசியத்தை முன்னெடுத் தார். கல்வி கற்றோர் உயர் பதவி வகிப்போர் பிராமணராக இருப்பதைக் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டார்.
இலங்கையில் உருவான தமிழ்த் தேசியம் வேளாளர் தேசியமாகவே அமைந்தது. இங்கு எதிர் தேசியமாக எதுவும் அமையவில்லை. இலங்கை யில் கம்யூனிஸ்ட்கள் எதிர் தேசியத்தை இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட் டம், மற்றையது பண்ணை முதலாளித் துவ எதிர்ப்பு. இதனால், இங்கு எதிர் தேசியம் உருவாகப்படவில்லை
முன்னெடுக்கா மைக்கு
என்றார்.
இந் நிகழ்வில் ஜனாதிபதி ஆலோச கர் ஏ. எச். எம். அஸ்வர், மல்லிகை" ஆசிரியர் டொமினிக் ஜீவா, எழுத்தாளர் கே. எஸ். சிவகுமாரன், தினக்குரல் ஆசிரியர் வீ. தனபாலசிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கவிஞர் மேமன் கவி நன்றியுரை வழங்கினார்.
நன்றி: தினக்குரல் 3.3.2009.
மல்லிகை மார்ச் 2009 & 53

Page 29
கனவின் வர்ணங்கள் துண்டிக்கப்படிட கரே ஒலி காதில் கேடிகிறது. -- مسس سس------------ سے سس۔ سے سست۔ -- سستے سس۔ --س۔ -- سسست - سیست
е புன்னகையின் மொழி எல், வளிம் அக்ரறின்
en nore infor 22ாடறுத்துப் பாய்ந்கு
குரல் நாதி நொருக்கப்படீடு
உயிர் கசிகிறது. * nnnnn aman niini
போர் புல்லாங்குழsால் வாசிக்க கொலைகள் நர்த்குனமாடின.
சமாகுானம் எழுதிய சொற்களில் மsர் வளையங்கள் விழங்குன.
குருதி விழுந்கு கறைகளில் அSங்களுமிழந்குன மலர்களும் மனிதர்களும்.
குேசம் கிழிந்கு புகைப்படங்களைத் குேடிப்பித்து கோர்வையாக்கியதில் ஒளியிழந்து விடிந்கு வீதியின் திசைகளில் ஆயுகும் சூடிய பிம்பங்கள் காடீசியளித்குன.
இருப்பிடம் குே? மூலைகிறது மனது,
எனது குடியிருப்பு இருந்கு வீதியில் குண்டுகள் நிரம்பிவழிந்குன. அதிகாலையுைத் குொழ வீதியில் நுழைந்குேன். புகையிருளில் என்னை வழியனுப்ப முகிழ் கிழித்துக் காத்திருக்கிறது சூரியன்.
மல்லிகை மார்ச் 2009 ஜ் 54
 
 

எனது கிராமத்தின்
65
நனைந்கு வண்னம் புரிகுலும் நேசமும் முறிந்துழன்றன.
வீடின் எல்லையில் போர்வீரன்குயருாகிறான் முற்றத்தின் நடுவில் விளையாடும் குழந்குையின் புன்னகையில் அவனது இலக்குப் புறப்படுகிறது.
சுடுகாயங்களுடன் வீழ்ந்து நாறிய பினங்களை குருதிச் சேலை அணிந்து 85usafi DLAule LEO.
நாளை பெருநாள் கொண்டாடிடம்.
போருக்காக
ஆயுகு அணிவகுப்பு முறுக்கேறியது.
இறந்குவர்களைப் புகுைப்புகுற்குக் குழிகள் குோண்டப்படீடன.
இருள் படர்ந்கு மேகக் ககுவை அதிகாலையில் அடையாளம் குெரியாகு ஒருவன் பு:டிவிடுப் போனான்.
யோரும் பெருநாளும் ஒன்றாயிருந்குன.
குொலைந்துபோன இன்புத்தின் வர்ணிப்பைப் பிந்திப் போன காலம் குேற்றுகிறது.
சொந்கு மண்ணின் கனவை நடீசத்திரங்களின் மூலங்கருங்களைப் பேச வேண்டிய வார்த்குைகளின் குவிப்பை ஆரம் கசிந்கு மனஜர்மம் புசிக்கிறது. tDCCOiểồ up5uagể
கூரை மின்னி உப்புக்கரிக்கும் படினியில் 6umUprosiš Gobieg விஜயலின் வீதி மூடப்படிருக்கிறது.
ஏமாற்றப்படிட வரலாற்றின் குரல் கொடிடை எழுத்துக்களில் துயரக் ககுைகளுடன் புத்திரிகையில் பிரசுரமாயின.
புதினெடீடையும் குாண்டியது
வயது.
சிறு புள்ளியும் மாறாது வெடி மறைக்கப்படீடு மேலும் கரைந்குது
பூர்வீகப் பயனம்.
மல்லிகை மார்ச் 2009 & 55

Page 30
- பிரகலாத ஆனந்த்
நிரந்தரத் தீப்பற்றி எரியும் காடு போலாகி, கருகிக் கொண்டிருக்கிறது எங்கள் தேசம். பாயும் குருதியும், உடையும் எலும்புகளும், சிதறும் தசைகளுமாக நாறிப் போகின்றனர் தேசத்தின் மக்கள். தேசத்தின் மக்களுடனா போர் நடக்கின்றது என்ற கேள்வி மனதை அரிக்கிறது. அமைதி சமாதானம் ஏற்படும் என்று நினைத்திருந்த நெகிழ்வுக் கதவுகளும் மூடப்பட்டு விட்டன. வெற்றி மாயைக்குள்ளே முகம் புதைத்த தீக்கோழியாக வைக்கப்பட்டிருக்கும் பெரும்பான்மைச் சகோதரர்களுக்கு, தேசத்தின் இன்னொரு புறம் நிகழ்ந்து கொண்டிருக்கும் நரபலி பற்றி பெரிதாக எதுவும் தெரியாதிருக்கிறது. ஆழிப் பேரலையாய்த் துரத்தி மக்களை ஓட ஓட விரட்டி ஒரு குறுகிய பிரதேசத்தினுள் முற்று மிழந்து வந்து அடுத்த நேர உணவுக்காகவும், உறையுளுக்காகவும் தவிக்கையில் தினமும் விமானக் குண்டுகளும், ஷெல்லும் வந்து வீழ்ந்து வெடித்து ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என உயிர்களைக் கால கொண்டபடி இருக்கிறது யுத்தம்! அங்கவீனர்களாய் கையிழந்து, காலிழந்து, கண்ணிழந்து, வடுப்பட்ட புண்ணும் உரிய சிகிச்சையின்றி புழுப் பட்டு மக்கள் படும் அவலம் கொஞ்ச நஞ்சமல்ல. சர்வதேசத்திற்குப் புரிகின்ற உண்1ை0
நிலை, பெரும்பான்மை இன சகோதரர்களுக்குப் புரியாதிருக்கிறது. அ3ஃைேட நாட்டில்
இரத்த உறவுகள் கொதித்தெழுந்து தீயில் சங்கமமாகி கருகி வெடித்த போதும் கண்டு
கொள்ளாதிருக்கிறது, அகிம்சையை அரை விலைக்கு விற்றுவிட்டு காந்தியையும் மறந்து விட்ட நாடு. வேரோடு பிய்த்தெறியும் ஆழிக்காற்றாய் யுத்தம் சாமான்யர்களையும் காவு கொள்ளும் போதும், மக்களை விடுவிக்க என போர்முரசு ஒலிக்கிறது ஓங்காரமாய். மக்களால் தரித்திருக்கவும் வழியில்லை. நினைத்தபடி ஒடவும் வழியில்லை. அகதிகளாக வந்தவர்களும் கைதிகள் போல் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இளசுகளுக்கோ சோதனையும் வேதனையுமாக விசாரணைகள். மரணமோ தினமும் துரத்தியபடி
ஆடி முடிக்கும் ஆக்ரோஷங்களின் வெறியாட்டத்தின் தொடர் வதையில் சுடுகாடாய் போயுள்ளது எமது தேசத்தின் ஒரு பகுதி. யார், யாரோடு போராடுகிறார்கள்? ஏன் வெறித்தனமாக குரூரமாக வெறியாட்டம் ஆடுகிறார்கள்? என்பதை எள்ளளவேனும்
மல்லிகை மார்ச் 2009 ஜ் 56

சிந்தித்தால் இந்த யுத்தம் அர்த்தமற்றது என அசோகச் சக்கரவர்த்தி போல உணர
முடியும். குரல்வளை திருகி குருதி
உறிஞ்சியதான வெறித்தனமான திருப்தியா வெற்றித் திருப்தி? பயங்கர வாதத்தை பயங்கரவாதத்தால் அழித்த வரலாறு கிடையாது. உரிய அணுகுமுறை யும், குறைகளுக்கான தீர்வுமே யுத்தத்தில் வெற்றி கொள்ள வைக்கும். மக்களினதும், தேசத்தினதும் எதிர்கால சுபீட்சத்தை கேள்விக் குறியாக்கி, அமிழ்ந்து கொண்டி ருக்கும் கப்பல் போலான தேசத்தை இன்று மீட்டெடுப்பது எங்ஙனம்? நீதி செத்த உலகில் மனத நேயத்தை மீட்டெடுப்பது எங்ங்ணம்? இந்த அபாக்கிய நிலையில் வெறும் எழுத்துக்களாலும், இலக்கியத் தினாலும் செய்வதற்கு எதுவுமில்லை - வெறும் பதிவு ஒன்றைத் தவிர.
மிகத் துல்லியமாகத் தாக்குவதாகச் சொல்லப்படும் ஏவுகணைகளும், விமானக் குண்டுகளும் தாக்கியழிப்பது என்னவோ
பெரும்பாலும் பொதுமக்களைத் தான்.
இன்று நடைபெறும் போரில் புலிகளையும், இராணுவத்தினரையும் விட பொது மக்களின் எண்ணிக்கையே பெரிதாக இருக்கிறது. இலக்கைத் தாக்குவதாகச் சொல்லப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொல்லப்பட்ட அல்லது காயப்பட்டவர் களில் பெரும்பான்மையினர் பொதுமக்கள் தான் என்ற உண்மை மூடி மறைக்கப்படு வதனால், சகோதர இன மக்கள் இன்ன மும் வெற்றிப் பட்டாசுகளைக் கொழுத்து வதிலும், ஜெயவேவா கோஷம் எழுப்புவ திலும் திருப்தி காண்கிறார்கள், தமது
வாழ்க்கைச் செலவு மலை போல உயர்ந்து
செல்வதையும் மறந்து
இங்கே யுத்தத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் உள்நாட்டுப் போர் என்ற எல்லையைத் தாண்டி, உக்கிரமானவை யாக இருப்பது கண்கூடு. ஆயுத வியாபார நாடுகள் தொட்டிலையும் ஆட்டி, பிள்ளை யையும் கிள்ளுகின்றன. தமது சுய ஆதிக் கத்தை நிலைநாட்ட அண்டை நாடுகள் ஆயுதங்களையும், ஆளணிகளையும் தாரை வார்க்கின்றன. அகிம்சையை மறந்த காந்தி தேசம், அவலப்படும் மக்களைக் கண்டுகொள்ளாமல் பூனை கண்களை மூடிக்கொள்வதாய் நடிக்கிறது. இங்கே போரை நடாத்திக் கொண்டிருப்பது அயல்நாடுகள்தானா என்ற கேள்வி ஆழ் மனதில் ஒலிக்கிறது.
பயங்கரவாதத்திற்கும், இன்று நடத் தப்படுகின்ற ஆக்கிரமிப்புப் போருக்கும் என்ன வித்தியாசம்? எது பயங்கரவாதம்? இன்றைய போரில் சிக்கண்டவர்களுக்கு சுதந்திரம் கிடையாது. தமது இருப்பிடங் களை விட்டு வெளியேற்றப்படுவதா cg
W விப்பு? ஆயுதங்களால் ஏவப்பட்டு விரட்டப்
படுவது ஒரு புறமும், எது வந்தாலும் அசை யாதே என்பது மறுபுறமுமாய் மக்கள் மத்தளமாய் அடிபடுகின்றனர். இதனால் சிதறு தேங்காயாகிப் போன மக்களின் குருதி இளநீர் போல் தெறிக்கிறது, எமது கால வரலாற்றில் துரதிஷ்டமும், துன்ப
மும், ஆயுதப் பரிகரணமும் இந்த அள
விற்கு விளையாடிய காலம் வேறெதுவு மில்லை. இத்தனைக்கும் இடையே
நடக்கும் யுத்தம் மனிதாபிமான யுத்தமாம்!
மல்லிகை மார்ச் 2009 辜 57

Page 31
நியாயபூர்வமான கோரிக்கைகளுக் கான தீவிரவாதம், பயங்கரவாதமா என்ற கேள்வி உலகெங்கும் நடக்கும் யுத்தங் களின் போதும் எழும் உரத்த கேள்வியாக இருக்கிறது. இது இலங்கைத் தீவுக்கும் பொருத்தமானதே. எனினும் போரிடும் இரு தரப்பினரும் மக்களை மறந்து விடுகிறார் கள். யாருக்காகப் போராடுவதாகக் கூறப் படுகிறதோ, அவர்கள் பாதிப்புக்கு உள்ளா கின்றார்கள். தமிழ்ச் சிறுபான்மையினர் இராணுவத் தரப்பாலும், போராடும் குழுக் களாலும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெரும்பான்மை இனத்தவரில் இராணுவப் படையணியில் பல இளைஞர்கள் உயிர் துறக்கிறார்கள். அவ்வப்போது பொது மக்களும் பலியாகின்றார்கள், யுத்தம் அனைத்து மக்களையும் பயப்பிராந்திக் குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளியுள் ளது. மரண பயம் சிறு குழந்தைகளையும் பற்றிக்கொண்டுள்ளது.
போரின் முடிவு வெற்றி, தோல்லி என்று வரையறுக்கப்பட்டாலும், அழிவு
தான் மிச்சமாக இருக்கும். பயங்கரவாதத்
திற்கு எதிரான போர் புதிய புதிய தீவிர வாதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும். இதுவே பயங்கரவாதத்தை உற்பத்தி செய்துகொண்டிருக்கும். பயங்கரவாத தடைச் சட்டங்கள் அப்பாவிகளைச் சிறை களில் தள்ளி வதைத்து பயங்கரவாதி களை உருவாக்க வழி வகுக்கிறது. பயங் கரவாதத்தை போர் மூலம் அழித்தொழிக்க
முடியாது. மாறி மாறி மன்னர்கள் படை
திரட்டிப் போரிட்ட பழைய வரலாறுகளே
இதற்குச் சான்று பகர்கின்றன. இந்து சமுத் திரத்தின் முத்து வெற்றுச் சிப்பியாகிறது.
இன்று எத்தனையோ போராளிகள் தம்மைத் தற்கொலைப் படையினராக அர்ப்பணிக்கும் நிலையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இந்த நிலை ஏன் உரு வானது? தனி ஒருவனுக்கு உணவில்லை எனின் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. இன்று உணவுக்கு மக்கள் படும் அவலம் அச்சுறுத்தலாக உள்ளது. ஒருபகு வேளை உணவுக்கு ஏங்கி நிற்கின்றனர்.
மக்கள் அடுத்த
மழையிலும். பனியிலுமாக குழந்தை களும், முதியவர்களும் வாடுகின்றனர். இயற்கை உபாதைகளைப் போக்கிட இடமின்றி மரங்களுக்குப் பின்னால் ஒதுங்குகின்ற முற்காலம் மீண்டும் தரிசன மாகிறது. பெண்கள் படும் சங்கடம் சொல் லத் தேவையில்லை. பாம்பும், தொற்று நோய்களும் மனிதனை சிறிது சிறிதாக விழுங்குகின்றன. இதற்கு என்னதான் முடிவு?
ஸ் த மண் வில் வாழ் போல் அகதி முகாம் வாழ்வு ஆகிவிடுமா என்ன? வலிகாமம் உட்பட மக்களின் வாழிடங்கள் பல தசாப்தங்களாக பாதுகாப்பு வலயங்களாக ஆக்கிரமிக்கப்பட் டுள்ளன. மக்கள் இடம்பெயர்ந்தால் வன்னி நிலப்பரப்பிலும் இந்நிலை தோன்றுமா?
இன்று தேவை அமைதி, சமாதானம், நிம்மதியான வாழ்வுதான். இதற்கு ஒரே வழி உடனடியாக பிரச்சினைகளுக்கான
தீர்வினை முன்வைப்பதுதான்.
மல்லிகை மார்ச் 2009 辜 58

மல்லிகையின் 44வது ஆண்டு மலர் கிட்டியது. கடந்த 35 வருடங்களுக்கு மேலாக மல்லிகையின் வாசகனாக இருந்துவரும் எனக்கு அதன் வளர்ச்சியும், கவர்ச்சியும் மனநிறைவைத் தருகிறது. ஆரம்பகால ஆண்டு மலர் ஒன்றில் எதிர்காலத்தில் மல்லிகை உலக வரலாறு படைக்கும் என்று நீங்கள் எழுதி இருந்ததைப் பார்த்துநானும் டாக்டர் தம்பிராஜாவும் - சண்முகதாசன் பெறா மகளை முடித்தவர் எனக்கு மல்லிகையை அறிமுகப்படுத்தியவர் - சிரித்தது நினைவுக்கு வருகிறது. ஆனால் இன்று சிற்றேடுகளின் வரலாற்றில் புதுமை படைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.
சிற்றேடுகள் இடையில் நின்று விடுவது தொடர்பாக எழுதி இருந்தீர்கள். அதன் காரணங்களை ஆராய வேண்டியது அவசியமே. குறிப்பிட்ட ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் சிற்றேடுகளைத் தொடங்குவதும், அவர்களோடு தொடர்புள்ளவர்கள் தமது ஆக்கங்களை அளிப்பதும் முதற் கட்டமாக அமைகிறது. சூழலும் வயதும் காரணமாக இவர்கள் ஒய்ந்துவிடும் போது சிற்றேடு உயிரை விட்டு விடுகிறது. விற்பனையும் ஒரு பிரச்சினையே. இன்னும் பல உண்டு. ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் வரலாறு பொதிந் திருப்பது உண்மையே. ஆனால் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அதனைப் பதிந்து வைப்பதில்லை. இலங்கை வானொலியில் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இதயத்தில் வாழ்வோர் என்ற நிகழ்ச்சியை நான் நடத்திய காலத்தில் தகவல் சேர்ப்பது எவ்வளவு சிரமமானது என்பதை நேரடியாகவே உணர்ந்தவன் நான். புகழ் பெற்றவர்களின் பிள்ளைகள் கூடத் தமது தந்தையைப் பற்றிய தகவல்களை வைத்திருப்பதில்லை.
தற்காலத்தில் மறக்கடிக்கப்பட்டிருக்கும் சிறுவர் இலக்கியங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறார், அன்புமணி. கம்பவாரிதி நடப்பு
விவகாரங்களைத் தமக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் தந்திருக்கிறார்.
சிறுகதைகளுள் மரண அறிவித்தல் மனதைத் தொட்டது. கட்டுரைகளும், கவிதைகளும் மலருக்கு மணம் சேர்க்கின்றன.
பொல்கஹவெல அ.லெ.மு.ராசீக்
மல்லிகை மார்ச் 2009 ஜ் 59

Page 32
ஆரம்ப காலத்திலிருந்தே நான் மல்லிகையின் தொடர் அபிமான வாசகன். அதன் மாதாந்த இதழ்கள் ஒவ்வொன்றையும் பக்கமெண்ணிப் படித்து வருபவன்.
நானும் உங்களைப் போலவே, ஊரை விட்டு வந்து கனகாலமாகி விட்டது. அங்குள்ள இலக்கிய ரசிகர் களின் மனப்பான்மையே வேறு. இங் குள்ளவர்களின் மனப்போக்கு வேறு. இது பட்டினம். நாட்டினது தலை நகரமும் கூட!
இங்கு பல்வேறு வகைப்பட்ட சுவைஞர்கள் இருக்கின்றனர். பல பல இருந்து வந்தேறி யுள்ளவர்கள் இவர்கள். இவர்கள் ஒவ் வொருவரையும் திருப்திப்படுத்துவது என்பதே பொல்லாத ஒரு வேலை.
பிரதேசங்களில்
உங்களைப் பற்றிய பல்வேறு விமர்
சனங்களைக் கூர்ந்து அவதானித்து வரு பவன், நான். நீண்ட நெடுங்காலமா கவே உங்களை எனக்கு உங்களது எழுத்தில் தெரியும். என்னை உங்களுக் குக் கெரிந்திருக்க நியாயமில்லை. :று தேவையில்லை என்பதே எனது கருத்து. ஆரம்பகால கட்டங்களில் நான் மல்லிகையின் தொடர் வருகை யைப் பற்றி மனதிற்குள் பயந்ததுண்டு. அப்பொழுது நான் உங்களைப் பற்றி பரிபூரணமாக அறியாத காலம்.
சிற்றே டொன்றை இத்தனை
ஆண்டுக் காலங்களாகத் தொடர்ந்து
இடைவிடாது நடத்தி வருவது என் பதே மிகப்பெரிய ஆற்றல்தான். ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு புதுப் புதுப் பிரச்சினைகள் தோன்றி மறையக்
கூடும். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்காக நீங்கள் கொடுத்துவரும் விலை அளப் பரியது. பிரமிக்க வைக்கக் கூடியது.
எல்லா முகாம்களிலிருந்தும் பல பல கோணங்களில் விமர்சனங்கள் வர லாம். தாங்கிக் கொள்ள தனியான ஒரு மனத்துணிவு வேண்டும். எனக்குத் தெளிவாகவே தெரியும். உங்களுக்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தனி யான ஒருவகை மனத்திடம் உண்டு என்பதைப் பல கட்டங்களில் நிரூபித் துக் கொண்டு வருகிறீர்கள். எவர்தான் என்ன குற்றச்சாட்டுகளை உங்களுக் கெதிராக வைத்துள்ள போதிலும், என்னைப் போன்றவர்கள் ஈழத்து இலக்கிய உலகில் உங்களை உங்களது இடைவிடாத உழைப்பை என்றுமே மதித்துக் கெளரவித்து வந்துள்ளோம். அதற்கு அத்தாட்சியாகவே இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன்.
ஆரம்ப காலகட்டங்களில் மல்லி கைக்காக நீங்கள் எப்படி எப்படிப் பாடுபட்டு உழைத்து வந்தீர்களோ, அதிலிருந்து பின்வாங்காமல் மேலும் மேலும் எங்களது கூட்cப் பலத்தையும் உள்வாங்கிக் கொண்டு செயற்பட்டு வாருங்கள். நமது இலக்கிய வட்டாரத் தில் ஒரு பெருங் குணமுண்டு. அர்ப்பணித்து உழைப்பவன் மீது "சொட்டை சொல்லிக் கிண்டலடிப் பார்கள். அதேசமயம் தாங்களாக முன் வந்து உருப்படியாக ஒன்றையுமே செய்யமாட்டார்கள். எனக்குத் தெளி வாகத் தெரியும். நீங்கள் மல்லிகையின் தனித்துவத்தை இன்னுமின்னும் மேலெடுத்துச் செல்வீர்களென்று!
வத்தளை. எம்.தேவநேசன்
மல்லிகை மார்ச் 2009 & 60

2009 பெப்பரவரி மாத மல்லிகை இதழ் அட்டையில் எனது புகைப் படத்தை பிரசுரித்தமைக்காகவும், வாழ்க்கை - இலக்கியக் குறிப்புகளை வெளியிட்டமைக்காகவும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரி
எனது
வித்துக் கொள்கின்றேன்.
மல்லிகை அட்டையில் எனது புகைப்படம் வெளியிடப்படுவது இது இரண்டாவது தடவையாகும். தின கரன் - துரைவி இணைந்து நடாத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற 15 பேரின் புகைப்படங்கள் 1999 ஆண்டு மலரில் வெளியிடப்பட்டது. அதில் எனது புகைப்படமும் இடம் பெற்றது இன்னமும் மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாக இருக்கின்றது.
இலக்கியப் படைப்பாற்றலில் வல்லபம் கொண்டிருந்த பிரமுகர்
களின் படங்கள் முன்முகப்பில் வெளி
யிடப்பட்டு வருகின்ற ஒரு நிகழ்ச்சித் தொடரில் என்போன்றவர்களின் உருவமும் வெளியிடப்படுவது ஒரு
புதிய தோற்று' ஆகும்.
சாமான்யர்களிலும் மறைந்திருக் கும் சிறியளவிலான இலக்கிய ஆர்வங் களையும் கண்டறிந்து அவர்களை முதுகில் தட்டி ஆர்வமூட்டும் நிகழ்ச் சித் திட்டத்தின் ஆரம்பமாகவே நான் இதனைக் கருதுகின்றேன்.
எனது இலக்கியக் குறிப்புகளை அழகாகத் தொகுத்தளித்த நண்பர் திக்குவல்லை கமால் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகிறது. மூதூரில் இடம்பெற்ற இனவாத மற்றும்
உள்ளூர் மோதல்களால் ஏற்பட்ட வாழ்க்கை மாற்றங்களை நாவலாகத் தரவேண்டும் என்ற அவரது கோரிக் கையை கூடிய விரைவில் நிறைவேற் றும் ஆவலும் மனதில் சூல் கொண்டு ள்ளது.
மூதூர். எம்.எஸ்.அமானுல்லா
மல்லிகை 44வது ஆண்டு மலர் கிடைக்கப் பெற்றது. ஆக்கங்கள் யாவும் நன்றாக இருந்தன. சுயவரலாறு
பற்றிய தங்கள் கட்டுரை வரவேற்கத்
தக்கது. எழுத்தாளர்கள் சுயசரிதை எழுதுவதால் அது தற்பெருமை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், வரும் பின் சந்ததி அவர்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாக வைத்து பயனடைய வழிவகுக்கும். மலரில் வந்த கதைகள் எல்லாம் நன்றாக இருந்தன. கம்பவாரிதி அவர்களின்
ஆடிக்கொண்டார் பகுதி மிகவும்
நன்றாக இருந்ததுடன், பலருக்கு ஒரு படிப்பினையாகவும் இருக்கும்.
செங்கை ஆழியான் அவர்களின் எனது இலக்கியத் தொகுப்புக்கள் பற்றி அறிந்ததுடன், அவற்றில் சில எங்கள் வெளியீடுகளாக என்னிடம் இருப்பதுடன், மேலும் சிலவற்றைப் பெறுவதற்கு வழிகாட்டியாக விளங்கி L5).
சொல்லப் போனால், மலர் பய னுள்ளதாக இருந்தது.
திருகோணமலை. எஸ். கனகரட்ணம்.
மல்லிகை மார்ச் 2009 ஜ் 61

Page 33
- என்.எஸ்.மாதவன் (மலையாள மூலம்)
நான் குதுப்தீன் அன்சாரி, வயது 29, ஒரு தையல்காரன். என்னுடைய அம்மா, மனைவி மற்றும் மகளோடு நான் வசிக்கிறது அஹமதாபாத்தில் பப்பு நகர் கொலனியில் நல்ல காத்து வீசின இந்தத் தை மாசத்தில முழு அஹமதாபாத்திலேயும் என்னுடைய பட்டம்தான் சரியான உயரத்தில் பறந்தது. ஒவ்வொரு நாளும் பின்னே ரத்தில் வேலை முடிந்ததும் நான் கடையைப் பூட்டுவேன். என்னிடம் காசிருந்தால் வீட்டுக்குப் போகிற வழியில நான் என்னுடைய மகளுக்கு விருப்பமான வாதிலால் பட்டர்ஸ்கொட்ச் ஐஸ்கிறீம் வாங்குவேன். சிலவேளைகளில எதையாவது பற்றி யோசிக்க வேண்டியிருந்தால் தண்ணி இருக்கிறதோ இல்லையோ, சuள்மதி ஆற்றைப் பார்த்துக் கொண்டு எலிஸ் பாலத்தில் நடப்பேன். நான் பார்க்க என் கண்களின் முன் வளர்ந்த பப்பு நகரத்து இளம் பெண்கள் தங்கள். திருமண உடையைத் தைக்க வருகிற சமயங்களில் நான் உணர்ச்சிவசப்படுவதும் உண்டு. பிறகு நான் ரிலீஃப் வீதியில் இருக்கிற வியாபாரிகளிடம் சிவப்புக் கண்ணாடி வளையல்கள் வாங்குவேன். எங்களுடைய ஒற்றை நுளம்பு வலைக்குள் கிடைக்கிற தனிமையில் நான் அவற்றை என் மனைவிக்குக் கொடுப்பேன். வாடகைத் தவணை முறையில் நாங்கள் 14 இஞ்சி டீவி ஒன்று வாங்கின நேரம் நான் ஏலக்காய் போட்ட தேத்தண்ணி எப்படி வைப்பது என்று பழகினேன். என்னுடைய அம்மாவும் மனைவியும் க்யோங்கி gTomb BT5 UT3.3 g560)u Juf (Kyonki SaaS Bhi Kabhi Bahu Thi), (86). GST606lds காட்சி நாடகங்களையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது நான் தேநீர் போடுவேன். நாடகங்களிலேயே அவர்கள் கண்ணாக இருப்பதால் ஒரு நன்றி கூடச் சொல்லாமலே தேநீரை வாங்குவார்கள். அது என்னைச் சிரிக்க வைக்கும்.
அம்மா சினிமாவுக்குப் போவதைக் காட்டிலும் வெளியில் போய்ச் சாப்பிடுவதையே
விரும்பினா. தீன் தர்விாசாக்குக் கிட்ட இருக்கிற பாதியார் காலியின் நடைபாதைக்
கடைகளில் வாட்டின இறைச்சி, ஆட்டுக் குருமா மற்றும் பொரிச்ச மீன் நல்ல
விருப்பம். அல்லது சங்கல்ப சாப்பாட்டுக் கடையில் என்னுடைய மகள் கை தட்டி
வரவேற்கும் விருந்தான பத்தடி நீளத் தோசை அல்லது கோபி உணவகத்தில்
தயிரில் செய்த காடி மற்றும் ஊந்தியா. சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கத்தரிக் மல்லிகை மார்ச் 2009 & 62
 

காய், உருளைக்கிழங்கு எல்லாத்தோடும் வைஷணவ குஜராத்திகளின் சமையல் சேர்வைகளும் சேர்ந்த பதார்த்தத்தை அம்மா ருசித்துச் சாப்பிடுவா. ஆகக் குறைந்தது மாசத்தில் ஒரு தரமாவது அம்மாவை வெளியே கூட்டிக் கொண்டு போய் சாப்பிடும் வழக்கத்தை வைத் திருந்தோம். அவர்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நாடகங்கள் ஒளிபரப்பா காத ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து முச் சக்கர வண்டியில் போவோம். ஆனால் குதுப்தீன் அன்சாரியான நான் வெகு சீக்கிரமாகவே ஒரு குறியீடாக மாறி விட்டேன்.
டெல்லியில் இந்தியா கேட் இருக்கு, ஜெய்ப்பூரில் ஹாவாமஹால், கல்கத்தா வில் ஹௌரா பாலம் மற்றும் பம்பாயில் இந்தியா வாசல். ஆனால், அஹமதாபாத் தில் அந்த மாதிரி உடனடியாக நினை வில் வருகிற மாதிரி ஒரு குறியீடும் இல்லை. குறியீடு இல்லாத நகரம் முக மில்லாதது மாதிரி. அது அடையாளம் அற்றதாகி விடுகிறது. காந்திஜியின் சபர்மதி ஆச்சிரமம் அஹமதாபாத்தின் குறியீடாக இருக்க முடியாது - அது அவ்வளவு எளிதில் மனதில் பதிகிறதாக இல்லை. சித்தி சையது பள்ளிவாசலில் உள்ள, நுணுக்கமாகச் செதுக்கிய பின் னிப் பிணைந்த கிளைகள் இருக்கிற கல்லு யன்னல் இந்திய முகாமைத்துவ நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டு விட்டது. நான் அந்த இடைவெளியை நிரப்பும் வரை அஹமதாபாத்தில் அதற்கென்று தனித்துவமான ஒரு குறியீடும் இருக்க வில்லை.
2002ம் ஆண்டு வழக்கத்தை விட அதிகமாகக் காற்று வீசியது. வடதிசைக் காற்று என்னுடைய வீட்டுக்குக் கிட்ட இருக்கிற கொடிகளுக்கூடாக கடுமை யாக வீசிய போது இந்த வருஷம் பட்டப் பிரியர்களுக்கு விசேஷமானதாக இருக்கு மென்று எண்ணிக் கொண்டேன். ரயில் வேயில் வேலை செய்த என்னுடைய பள்ளி நண்பன் பாய் சந்தை சந்திக்கச் சென்றேன். உள்ளூரில் அவனுடைய பட்டங்களே சரியான உயரத்தில் பறந் தன. நான், “பாய், இந்த மகர சங்கிராந்தி அன்று நான் உன்னை வெல்லுவேன்” என்று சொன்னேன். பாய் சந் என்னுடைய முதுகில் குத்தி சிரித்துக் கொண்டே ‘gரி” என்றான்.
அந்தச் சிரிப்பில் இருந்த நம்பிக்கை என்னுடைய ஆவலைக் கொஞ்சமும் குறைக்கவில்லை. அன்றைக்கே நான் தீன் தர்வாசாவில் இருக்கிற அயூப் பட் டங்வாலாவில் மூங்கில் சட்டம் போட்ட மூன்று பட்டங்களும் ஒரு நூல் பந்தும் வாங்கினேன். மிச்ச சொச்சம் விக்கற ஒரு கடையில பழைய கண்ணாடிப் போத்தல்களும் கொஞ்சம் வாங்கினேன். போத்தல்களை உடைச்சு அம்மாவிடம் கொடுக்க அவவின் வேலை தொடங்கி
யது. நான் தைத்துக் கொடுத்த தடிச்ச
கையுறைகளைப் போட்டுக் கொண்டு கண்ணாடித் துண்டுகளை அவ பாக்கு உடைக்கப் பாவிக்கும் சின்னக் கல்லில் அரைக்கத் தொடங்கினா. நான் அரைச்ச கண்ணாடித் துண்டுகளையும் பசையை யும் நல்லாக் கலந்து நுாலில் பூசிக் காய வைத்தேன்.
மல்லிகை மார்ச் 2009 ஜ் 63

Page 34
மகர சங்கிராந்தி அன்று வானம் பல வண்ணப் பொட்டுக்களால் நிறைந் திருந்தது. நிறையப் பட்டங்களால் வானத்தில் இடமே இல்லாத மாதிரி இருந்தது. புறா வளர்க்கிற என்னுடைய பக்கத்து வீட்டுக்காரன் கப்தர்பாஸ் ஹசன் ஷேக் வழக்கம் போல அன்று
பறவைகளைப் பறக்க விடக் கூடதென்று
தீர்மானித்துக் கொண்டான். மற்றவர்களி லிருந்து என்னை வித்தியாசமாகக் காட்டிய என்னுடைய இளம் பச்சை நிறக் கண்கள், பார்க்க முடியாதபடி எகிறும் காற்றின் விசையை ஆகாயத்தில் தேடின. திடீரென்று நான் ஒரு அடர்த்தி யான பொட்டைக் கண்டேன். அது காற் றில் மிதந்து கொண்டிருந்த ஒரு கழுகு. இரண்டு இழுவையோடு என்னுடைய பட்டம் பறவையை தாங்கிக் கொண்டி
ருந்த நூலுக்குள் புகுந்தது. இப்ப பட்டம்
தன்பாட்டில் பறந்தது. என்னுடைய உதவி அதற்குத் தேவைப்படவில்லை. என்னுடைய மனம் ஒரு விதமான ଗ1ଙit ணங்களும் இல்லாமல் Gol6B60)LDųIT யிருக்க, நான் அடைந்த மயக்கம் வர வைக்கும் உயரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் கொஞ்ச நேரத்தில் என் மனம் அதனுடைய பாது காப்பை நினைத்துப் பயந்தது. கயிற் றைத் தளர்த்தி விட்டுக் கொடுப்பதை நிறுத்தினேன்.
அன்றைக்கு என்னுடைய பட்டமே
உயரப் பறந்தது. பாய் சந் என்னைத் தழுவினான். அவன் எப்பவுமே அப்படித் தான். கொஞ்சங் கூடப் பொறாமையின் சாயல் இல்லாமல் மற்றவரின் வெற்றி யைப் பகிர்ந்து கொள்வான்.
நான் என்னுடைய பட்டத்தைக் கீழே இழுக்கத் தொடங்கினேன். தாக்குவதற்கு இதுதான் தருணம். முதலாவதாக நான் வெட்டினது பாய் சந்தின் பட்டம். என் னுடைய பட்டத்தின் நூல் சூரியக் கதிர் கள் பட்டு வாள் போல மின்னியது. எவ்வளவு பட்டங்களை வெட்ட முடி யுமோ அவ்வளவையும் வெட்டியபடி நான் மைதானம் முழுக்க ஓடினேன். பிறகு என்னுடைய சேட்டை யாரோ இழுக்கிற மாதிரி உணர்ந்தேன். “தர்சி சாச்சா, தயவு செய்து என்னுடைய பட் டத்தை வெட்டாதீங்க” என்று சொன்னாள் பிந்தியா. நான் பிந்தியாவின் நப்கின் துண்டுகளைத் தைத்திருக்கிறேன் - அவ ளின் சின்ன இடுப்பில் போட்டு பெரிய ஊசியால் குத்தி விட்ட துண்டுகள் - பிறகு சிறு உடைகள், சட்டைகள் இப்ப பாவாடை சட்டைகள். அவள் என் னுடைய குறிப்புப் புத்தகத்தின் பக்கங் களில் குறித்து வைத்த அளவுகளி னுாடாக வளர்ந்தாள். இப்ப அவளுக்குப் பன்னிரண்டு வயது.
"நான் வெட்டுவேன். அது விளை
யாட்டில ஒரு பகுதி. உனக்குப் பட்டம்
வெட்டுப்படும் என்று பயம் என்றால் ஏன் வந்தாய்?”
அப்ப பிந்தியா எனக்குப் பட்டம் பற்றின கதையைச் சொன்னாள். ஒரு பெண்ணுக்குப் பட்டம் அவளுடைய காதலன். ஆணுக்கு அது காதலி. நூல் அவர்களுடைய காதல். அறுந்த நூல் உடைந்த உறவு போல. பட்டம் தொலை
யாமல் இருப்பது முக்கியம். ஒருவருக்கு
அவரது பட்டம் திரும்பக் கிடைத்தால் மட்டுமே இணைதல் சாத்தியம்
மல்லிகை மார்ச் 2009 ஜ் 64

"அதனால் தர்சி சாச்சா, நீங்கள் ஒரு போதும் நூாலை வெட்டக் கூடாது’ என்று சொல்லி முடித்தாள் பிந்தியா.
என்னுடைய சிரிப்பில் பிந்தியாவும் இணைந்து கொண்டாள். அவளுடைய கன்னக் குழிகள் இன்னும் அழகாகி யிருக்கக் கண்டேன். அன்றைக்கு வீட்டுக்குப் போகும் வழியில், மகர நட்சத் திரம் தென்பட்ட நேரம், பல காதல் கதைகள் என்னைச் சுற்றிப் பின்னக் கண்டேன் - காதல், பிரிதல், இணைதல்,
என்னுடைய பக்கத்து வீட்டுக்காரன் கப்தர்பாஸ் ஹசன் ஷேக் தன்னுடைய கட்டடத்தின் விறாந்தையில் இருந்த புறாக் கூண்டுகள் சூழ்ந்த ஒரு அறை யில் வசித்து வந்தான். கீழ்வீட்டு அறை களை அவன் வாடகைக்கு விட்டிருந் தான். வாடகைக் காசில் அவன் தன் பறவைகளுக்குத் தேவையான தினையை வாங்கினான். சிக்கந்தரி, காபூலி மாதிரி உயர்ந்த இனப் பறவை கள் வாங்க அவன் எப்பவாவது ஆக்ரா வுக்கோ அல்லது டெல் லிக்கோ போவான். அவன் கை தட்டுகிற போது
பறவைகள் எல்லாம் விறாந்தையி
லிருந்து வெளியில் வானத்துக்குப் பறந்து பிறகு இன்னுந் தூரப் பறந்து போகும். பிறகு அவை எல்லாம் விமானம் போலச் சுழன்று திரும்பி மீள ஒரு வட்ட் மடித்து விறாந்தையில் வந்து இறங்கும். கீழே இறங்கு முன் நிகழும் அழகான நளினமான திரும்பல் எனக்கு ஒரு நடன மாதின் உடையின் சுருங்கி விரியும் மடிப்புகளை ஞாபகமூட்டின. சிறகடிப்பு கள், கூவல்கள், வீடு திரும்பும் மகிழ்வை வெளிப்படுத்தும் மணிக் கண்கள்
எல்லாத்தையும் என் மகள் கைகளைத் தட்டினபடி சந்தோஷத்தில் கூச்சலிட்டுக் கொண்டு பார்ப்பாள். தன்னைத் தவிர ஹசன் ஷேக் தன்னுடைய பறவை களுக்கு உணவுட்ட அனுமதித்த இன்னொரு ஆள் அவள் மட்டுமே.
மாசி மாத ஆரம்பத்தில் புறாக்கள், பின்னாளில் எப்பவோ வரப் போகும் ஒரு பேராபத்தைப் பற்றி எச்சரித்தன. ஹசன் ஷேக் "எவ்வளவுதான் கை தட்டினாலும் பறவைகள் பறக்குதில்லை. ஏதோ கெட்டது நடக்கப் போகுது” என்றான். அன்றைக்கு நான் சந்தைக்குப் போய் ஆட்டாமா, பருப்பு, உருளைக்கிழங்கு, பெசன் எல்லாம் முன் கூட்டியே வாங்கி வைத்தேன். எரிவாயு ஏற்கனவே தட்டுப் பாடாக இருந்ததால் என்னால் அதை வாங்க முடியவில்லை. அம்மா எரிச்ச லோடு "உனக்கு என்ன நடந்தது? கால நேரஞ் சரியில்லை என்று எனக்குத் தெரி யும். ஆனா, ஏன் இந்தப் பைத்தியகார வேலை? அம்தாவாடிகளும், குஜராத்தி களும் நல்ல சைவர்கள், பப்புவில் இருக் கிற ஜைனர்கள் தலைகுனிந்து நடப்ப வர்கள். ஒரு எறும்புக்குக் கூடத் தீங்கு செய்ய நினைக்காதவர்கள். அவர் களுக்கு விருப்பமான கடவுள் யார்? பஹ வான் ரஞ்சோத் - பாரதப் போரில் பங் கெடுக்காத பூரீ கிருஷணன். அந்தப் பறவைப் பிரியனான விசர் பிரம்மச்சாரி சொல்லுவதைக் கேட்காதே’ என்றாள்.
நாட்கள் செல்ல கடைசியில் அம்மா சொன்னது சரிதான் என்று நினைத்தேன் நான். பிறகு ஒரு இரவு யாரோ
"குதுப்தீன்" என்று கூப்பீட்டுக் கதவைத்
தட்டினார்கள்.
மல்லிகை மார்ச் 2009 ஜ் 65

Page 35
வெளியே பாய் சந் நின்று கொண்டி ருந்தான். அவன் மூச்சு வாங்கிக் கொண் டிருந்தான். “ரயில்வே ஸ்டேசனிலிருந்து நேராக இங்கேதான் வருகிறேன். அயோத்தியாவிலிருந்து வந்த ரயிலின் ஒரு முழுப் பெட்டியை உங்களுடைய ஆட்கள் - பரோடாக்குக் கிட்ட கோத்ரா ஸ்டேசனின் வெளிப் பக்க கைகாட்டிக்கு அருகால் வசிக்கும் முஸ்லிம்கள் கொளுத்தி விட்டார்கள். எங்களோடு பள்ளிக்கூடத்தில் படித்த, கணக்கில நிறையப் புள்ளிகள் எடுக்கிற ஹ்ாந்தி
பெனை ஞாபகமிருக்கா? கணவன்,
குழந்தைகளோடு அவள் கொல்லப்பட்டு விட்டாள். அயோத்தியாவிலிருந்து திரும் பிக் கொண்டிருந்த பல யாத்திரீகர்கள் கூட கொல்லப்பட்டு விட்டார்கள். நகரம் எங்கும் ஒலிபெருக்கிகள் கட்டியாச்சு. எனக்குப் பயமாக இருக்கு. ஹசன் ஷேக் கின் புறாக்கள் சொன்னது சரி. இங்கே வரும் வழியில் நான் ஆஷாவையும் பிள்ளைகளையும் ஜெய்ப்பூரில் இருக்கிற என்னுடைய மூத்த சகோதரன் வீட்டுக்கு நாளைக்கு கூட்டிக் கொண்டு போக வீரென் ஷாவின் டாட்டா சுமோக்குச் சொல்லி வச்சிருக்கிறேன். குதுப்தீன் கவனமாயிரு. இந்த இடத்தை விட்டுப் போ. உனக்கு இதைச் சொல்லத்தான் வந்தேன்” என்றான்.
கனகாலத்துக்குப் பிறகு என்னு டைய அம்மாவின் முகத்தில் பயம் குடி கொண்டது. அன்றிரவு என்னுடைய மகளைத் தவிர வேறு யாரும் நித்திரை கொள்ளவில்லை. விடிஞ்ச பிறகும் கூட நான் கதவுகள் யன்னல்கள் எல்லாத்தை
யும் பூட்டி வைத்திருந்தேன். கடைசியா மகளுக்கு அலுப்படிக்கத் தொடங்க நான் வீட்டின் பின் முற்றத்துக்குப் போகும் கதவைத் திறந்து விட்டேன். அவள் விளையாடத் தொடங்கினாள். திடீரென்று எனக்கு ஏதோ விழுந்த சத்தம் கேட்டது. நான் எச்சரிக்கையாக எழும்ப, மகள் ஹசன் ஷேக்கின் புறா ஒன்றைத்
துாக்கிக் கொண்டு வந்தாள். "வடிவான
புறா" என்றபடியே அவள் அதை என் னிடம் தந்தாள். கழுத்து முறிந்து அது செத்துப் போயிருந்தது. நான் முற்றத் துக்குப் போனேன். அப்ப ஹசன் ஷேக் “என்னுடைய பறவைகள், என்னுடைய பறவைகள்” என்று கத்தியதைக் கேட
டேன். அடுத்ததாக நான் பார்த்தது ஏரிகிற
அவனுடைய உடலை. கலகக்காரர்கள் அவனைப் பெற்றோலில் குளிப்பாட்டி யிருந்தர்கள்.
பிறகு அவர்கள் எங்களிடம் வந்தார் கள். வீடு முழுக்க மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பு மூட்டினார்கள். கடை களிலிருந்து மாயமாக மறைந்த எரி வாயுக் கலங்கள் எல்லாம் இப்ப முகம் காட்டின. பல எங்கள் வீட்டை நோக்கிப் எறியப்பட்டன. எரிவாயுக் கலம் வெடிச்ச போது வந்த வெளிச்சத்தில் நான் காற் றில் மிதந்த என்னுடைய அம்மா, மனைவி, மற்றும் மகளுடைய உடல் களைக் கண்டேன். முற்றத்துக்கு வெளிப் பக்கம் இருந்த கதவைத் திறந்து கொண்டு வெளியே ஒடிப்போனதும், சுற்றிவர வாள்கள், உடைந்த போத்தல் கள், பெற்றோல் குவளைகள் எல்லாம் வைத்திருந்த ஆட்களைக் கண்டேன்.
மல்லிகை மார்ச் 2009 ஜ் 66

எங்களைப் போல ஆட்கள். அவர் களுடைய இடுப்பு அளவு என்னுடைய குறிப்புப் புத்தகத்தினுாடாகவே வளர்ந்து கொண்டு போனது. பெண்கள். நான் அவர்களுக்குத் தைத்த உடைகளை அணிந்திருந்தார்கள். என்னுடைய மனைவியோடு கியோங்கி சாஸ் பி காபி பாஹ? தி பற்றி ஆர்வமாகக் கதைத்த அதே பெண்கள். என்னால் மட்டுக்கட்ட முடியாத வேறு ஆட்களும் வாள்கள், திரிசூலங்களோடும், 'முஸ்லிம் கடை களைப் பகிஷகரிப்போம் என்று எழுதிய சுலோக அட்டைகளோடும் அங்கிருந்தார் கள். அவர்களின் நடுவே நான் பிந்தியா வையும் கண்டேன். அவள் ஒரு கல் லோடு என்னுடைய பச்சைக் கண் களுக்கு நடுவேயுள்ள பொட்டைக் குறி பார்த்துக் கொண்டு நின்றாள். அவளுக் குப் பக்கத்தில் அவளது தாய் கையில் ஒரு கசாப்புக் கத்தியோடு நின்று கொண் டிருந்தாள். பக்கத்திலே நின்ற துரித நடவடிக்கைப் படையை நோக்கி நான் திரும்பினேன். என்னைக் காப்பாற்றும்படி நான் அவர்களைக் கெஞ்சினேன். பயத் தில் பின் பக்கமாக நகர்ந்தேன். பிறகு படம் எடுப்பதற்காக யாரோ தங்கள் கமராவைத் தட்டிய சத்தம் எனக்குக் கேட்டது. என்னுடைய பயத்தைப் படம் பிடித்த பொன்னிறத் தலை முடியுள்ள ஒரு ரொய்ட்டர் செய்தியாளரைக் கண்டேன்.
பிறகு என்ன நடந்தது என்பதை நீங்கள் செய்தித் தாள்களில் படித்திருப் பீர்கள். குதுப்தின் அன்சாரியும் குடும்பமும் கலகக்காரர்களால் எப்படித் தாக்கப்பட்
டார்கள். தன்னைக் காப்பாற்றும்படி பொலிசிடமும், நடவடிக்கைப் படையிட மும் அவன் எப்படி அழுது கெஞ்சின்ான் என்றும், பாதுகாப்புப் படையினர் வந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததும், அவனது ஆறு மணித்தியாலப் போராட்டம் எப்படி முடிவுக்கு வந்தது என்றும். அவர்கள் எனது குடும்பத்தை எங்கள் வீட்டுக்குப் பின்னாலிருந்த சாக்கடைக்குள் கண்டு பிடித்தார்கள்.
அடுத்த நாள் செய்தித் தாள்கள் ரொய்ட்டர் புகைப்படக் கலைஞர் எடுத்த என்னுடைய படத்தை வெளியிட்டி ருந்தது. கண்ணித் துளிகளும் அழுகை யும் செய்தித் தாளின் உறைந்த பக்கங் களில் நிரந்தரமாகவே பதிந்திருந்தது. கூப்பிய எனது கைகள் நிகழப் போகிற மரணத்தை எதிர்வு கூறுவது போலி ருந்தது. நானோ இப்ப அஹமதாபாத்தின் குறியீடாக.
எந்த நகரத்தின் குறியீடாக நான் ஆனேனோ, அந்த அஹமதாபாத்தின் தெருக்கள் முழுவதும் இறந்த உடல்கள் இறைந்து கிடந்தன. எரிகிற கட்டடங் களினின்றும் கிளம்பிய புகையால்
வானம் முழுவதும் கறுப்பாகியிருந்தது.
புகையினுாடு நான் கழுகுகள் பறப் பதைக் கண்டேன். அவற்றை நான் முன் னொரு போதும் கண்டதேயில்லை.
பள்ளிக்கூட மாணவியின் சீருடை யின் ஒரு பகுதியாக இருந்த அரைவாசி எரிந்த சிவப்பு ரிபன்கள், இரத்தக் கறை படிந்த பெண்களின் உள்ளாடைகள்,
மல்லிகை மார்ச் 2009 ஜ் 67

Page 36
கிழிந்த பள்ளிக்கூடப் புத்தகங்கள், உடைந்த காப்புகள், பாதி எரிந்த குடும்ப அல்பங்கள் எல்லாம் நடைபாதையில் கிடந்தன. பூப்பூக்கும் மரங்களில் எல்லாம் முஸ்லிம் கடைகளைப் புறக்கணிக்கும் படி ஆணையிடும் பலகைகள் முகிழ்த் திருந்தன. தலைகளற்ற பாவைப் பிள்ளைகள், உடைந்த யன்னல்களோடு அரைவாசி எரிந்த கார்கள், இன்னமும் புகைந்து கொண்டிருந்த சைக்கிள் ரிக்ஷாக்கள், குடல் வெளியே வந்தது போல இழுபட்டுக் கிடந்த அனு மாலிக், பங்கஜ் உதாஸ் ஒலிப்பதிவு நாடாக்கள். குறைந்த புள்ளிகளோடு, உரியவருக்குக் கொஞ்ச அடிகளையேனும் வாங்கிக் கொடுத்திருக்கக் கூடிய ஒரு தேர்ச்சி அறிக்கை, மற்றும் பட்டங்கள் - கிழிந்த, கசங்கிய, நுால்கள் வெட்டுப்பட்ட பட் டங்கள். இனி எந்த ஒரு பட்டத்தையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்று ஒரு சபதம் எடுத்திருந்தேன். இருந்தும் அவையே எங்கும் நிறைந்திருந்தன.
அம்மா "நீ ஒரு நெசவாளன் அன்சாரி, மொமீன். உனது கைகள் நுாலை வெட்டுவதற்கு ஒரு போதும் பொறுப்பாகக் கூடாது" என்று சொல்லு வது ஞாபகத்துக்கு வந்தது. ரொய்ட்டர் புகைப்படக்காரரோ என்னை இழை அறுந்த ஒரு நகரத்தின் குறியீடாக்கி விட்டிருந்தார்.
முகாமில், பெண்கள் தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர். அதனால் என்னு டைய உறவினர்களை நான் காண வில்லை. நான் பகலும் இரவும் தெருக்
களில் அலைந்தேன். ஒருநாள் துாசுக் குள்ளே மினுங்கிக் கொண்டிருந்த பொட்டு ஒட்டியிருந்த உடைந்த கண்ணா டித் துண்டு ஒன்றைக் கண்டேன்.
நான் கொஞ்ச நாட்களாக என்னு டைய முகத்தைப் பார்க்கவில்லை. g5Tl.9 வளர்ந்து முகத்தின் கீழ்ப்பகுதியை கறுப் பாக்கியிருந்ததைக் கண்ணாடியில் தெரிந்த எனது விம்பத்தில் பார்த்தேன். கண்களில் பயம் மிதந்து கொண்டி ருந்தது. கனநாளாக நான் செய்ய மறந்த ஒன்றைச் செய்ய எண்ணினேன் - சிரிக்க முயன்றேன். எவ்வளவு முயற்சித்தும் என் னால் முடியவில்லை. அங்கங்களின் செயற்பாடுகளற்றுப் போன ஒரு பக்க வாத நோயாளியின் உடல் மீது வேலை செய்யும் தாதி செய்வது போல் சிரிக்க உதவும் எனது தசைகளைப் பிடித்து விடத் தொடங்கினேன். கன்னங்களையும் வாயைச் சுற்றியுள்ள தசைகளையும் அழுத்திப் பிடித்து விட்டேன். விம்பமோ சிரிக்கவில்லை. சிரிப்புத் தசைகள் இறுகிப் போய் அசைவற்றிருந்தன.
மலையாள மூலம்: என் எளில் மாதவன்
நிலவிழி’ (2002)
ஆங்கிலத்தில்: கத்ரீன் தங்கம்மா
ஆங்கிலத்திலிருந்து தமிழில: வினோதினி
நன்றி: த லிட்டில் மகஸின் (The Little Magazine)
மல்லிகை மார்ச் 2009 ஜ் 68

γι αυση ζη. Ο
-ി.േ ജപa
ex- உங்களது சுயசரிதையான "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' என்ற நூலை எழுதுவதற்கு அடிப்படைக் காரணம் என்ன வென்று சொல்ல முடியுமா?
வவுனியா. எஸ்.தவசீலன்
பெரிதாக ஒன்றுமில்லை. நான் இளமைக் கர்லத்தில் பல பெரியோர்களின் சுய வரலாறுகளைப் படித்துப் படித்தே, என்னைச் செம்மைப்படுத்திக் கொண்டவன். அதென்ன, ஐரோப்பியனும், அமெரிக்கனும் தானா தத்தமது சுயவரலாறுகளை ஆங்கிலத்தில் எழுதி, வெளியிட வேண்டும்? ஏன் சாதாரண தமிழன் ஒருவன் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களை நூலுருவில் எழுதி வெளியிட்டால் என்ன? என்ற எனது அடி நெஞ்சத்துக் கேள்விதான் இறுதியில் நூலுருப் பெற்றுள்ளது. சும்மா சும்மா அமெரிக்காவைப் பார் ஐரோப்பாவைப் பார் எனப் பந்தா காட்டி, மாணவ வட்டாரத்தைப் பயமுறுத்தாமல்; இதோ, இந்த மண்ணைக் கொஞ்சம் குனிந்து பார்! என நமது பல்கலைக்கழகக் கல்விமான்களுக்குச் சொல்லாமல் சொல்வதற்காகவே, நான் அந்த நூலை எழுதினேன்.
«Х• இத்தனை ஆண்டுக் காலமாக மல்லிகையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றீர்களே, இதில் லாபமா? - நஷ்டமா?
சுன்னாகம். க.அரியேந்திரன்
ஒரு துறையில் நம்மை ஒப்புக்கொடுத்து உழைக்க முற்பட்டு விட்டால், அது லாபமா - நஷ்டமா? என யோசிக்கக் கூடாது. நமது அர்ப்பணிப்பு உழைப்பு வெறும் வியாபாரமல்ல. அது தொண்டு. லாபமா? - நஷ்டமா? என இடையிடையே வர்த்தகர்களைப் போல, வரவு செலவுக் கணக்குப் பார்க்க முயலுவோமானால், அது முடிவில் எமது அர்ப்பணிப்பு உழைப்பையே கொச்சைப்படுத்தி விடும். பொது மக்களிடமிருந்து எம்மைத் தனிமைப் படுத்திவிடும். -
psio66 sodas I LoTňrš 2009 奉 69

Page 37
இதழ் கிழக்கு மாகாணத்தில் எந்தப் புத்தகக் கடைகளிலும் கிடைப்பதில்லை.
* மல்லிகை
மல்லிகை என்னைப் போன்ற இளம் வாசகர் வட்டத்திற்கு ஒழுங்காகக் கிடைப்பதற்கு சுலப மான வழியென்ன?
A - A h a5augpapaor. எம். முகமது கலீல்
* மல்லிகை தமக்கு ஒழுங்காகக் கிடைப்பதில்லை. அது மாதா மாதம் கிடைப்பதற்கு வழியென்ன? எனப் பல இளம் இலக்கியத் தோழர்கள் அடிக்கடி எமக்கு எழுதுகின்றனர். அதற்கு ஒரே யொரு வழிதான் உண்டு. அது சுலப மானதும் கூட மல்லிகைக்குச் சந்தா செலுத்தி, சந்தாதாரராகுங்கள். மாதா
மாதம் மல்லிகை உங்களது முகவரியைத்
தேடி வரும்.
ex- 44-வது ஆண்டு மலரைப் பார்த்தேன். இன்னமும் முற்றா கப் படிக்க முடியவில்லை. இம் மலரைத் தயாரிப்பதற்கு, இந்த யுத்த காலச் சூழ்நிலையில் அதி கம் கஷ்டப்பட்டிருப்பீர்களே!
நுவரெலியா. எம். வாமதேவன்
* இந்த மலரைத் தயாரிப்பதற்கு மாத் திரமல்ல, ஆண்டு மலர் ஒவ்வொன்றைத் தயாரிப்பதற்கும் நான் பிரசவ வேதனைப் பட்டு விடுவதுண்டு. அந்த வேதனையின் சிரமத்தை வெறும் வார்த்தைகளில் மாத் திரம் வடித்துவிட முடியாது. அதை அனுப வித்தால்தான் அந்த வேதனையே புரியும்.
8 இந்த ஆண்டு வெளியிட்டுள்ள
மல்லிகைக் கலண்டரை ஒரு சில இலக்கியவாதிகள் இல்லங்களில் பார்த்தேன். சென்ற ஆண்டு கூட, மல்லிகை ஆண்டுக் கலண்டரை வெளியிட்டிருந்தது. மொரு மல்லிகைக் கலண்டர் தேவை. எதிர்காலத்திற்காகப் பாதுகாத்திருக்க விரும்புகின்றேன். கிடைக்க வழி செய்வீர்களா?
எனக்கு
வெள்ளவத்தை ஆர்.முத்துலிங்கம்
* காலம் பிந்திப்போய்
அத்தனை கலண்டர்களும் அத்தனை
விட்டது.
மல்லிகை நண்பர்களுக்கும் விநியோகித்து விட்டோம். அத்துடன் அதைத் தபாலில் அனுப்ப இயலாது. நேரில் பெற்றுக்கொள் வதுதான் சுலபமான வழி. உங்களது பெயரை ஞாபகத்தில் வைத்துள்ளோம். அடுத்த ஆண்டில் வெளிவரும் முதல் கலண்டர் உங்களுக்கேதான்!
* பல இலக்கியச் சஞ்சிகை களில் கேள்வி-பதில் பகுதி வெளி வந்து கொண்டிருக்கின்றதே, அதில் யாருடைய கேள்வி பதில் உங்களைக் கவர்ந்துள்ளது?
நீர்கொழும்பு. ஆர்.கணேசன்
குமுதம் உட்பட சகல இலக்கியச் சஞ்சிகைகளிலும் வரும் கேள்வி பதில் களைக் கருத்தூன்றிப் படித்து வருபவன், நான். "வார்த்தை' என்ற சென்னைச் சஞ்சி கையில் வெளிவரும் ஜெயகாந்தனது கேள்வி - பதில்களைத்தான் நான் மெச்சு கின்றேன்.
மல்லிகை மார்ச் 2009 季 70

* 44-வது ஆண்டு மலரில் நீங்கள் எழுதியுள்ள இரு கட்டுரை களையும் நெஞ்ச நிறைவுடன் எழுத்தெண்ணிப் படித்துப் பார்த் தேன். எனக்கு ரொம்ப ரொம்பத் திருப்தியாக இருந்தது. இந்த வேலை நெருக்கடியிலும் இப்படி
ஆழமாகச் சிந்தித்து எழுத முடி
கிறதா, உங்களால்?
புத்தளம். எம்.குமரகுருபரன் * இந்தக் கேள்விக்குப் பதில் சொல் வதைத் தவிர்க்கலாம் என எண்ணினேன். காரணம் தூண்டிலுக்கு வரும் பெரும் பாலான கேள்விகள் ஆசிரியரைத் தூக்கிப் புகழ்வதாகவே இருக்கின்றன. தயவுசெய்து கேள்வி கேட்பவர்கள் தனிமனிதனைப் புகழ்வதைத் தவிர்க்கவும்.
8X நீங்கள் தினசரி படிக்கும் பழக்கம் உண்டா?
தெஹிவளை. ஏ.சிவதாசன்
ஒரு சஞ்சிகை ஆசிரியர் விடாமல் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும். படிப்பது மாத்திரமல்ல, அந்தச் சஞ்சிகையைப் படித்து ரசிக்கும் ரஸிக னாக அறிவுத் தேவையையும் அவனது தொடர் வாசிப்புப் பூர்த்தி செய்யும். அவனை அவனே வளர்த்தெடுத்துச் செழுமைப் படுத்தவும் அது பின்புலமாக உதவும்.
* உலகத்தில்
அதிகரித்துள்ளனர் எனது எண்ணம்.
முட்டாள்கள் என்பது உங்களது
கருத்து என்ன?
G385&6frabad. డా.arజీcar
* உங்களைப் போன்ற புத்திசாலிகள் உலகில் குறைவாக இருப்பதுதான் காரண மாக இருக்கலாம்.
(X நான் தூண்டில் பகுதியில் கேள்விகள் கேட்க விரும்புகின் றேன். நான் அதற்காக என்ன செய்ய வேண்டும்?
புத்தளம். எம்.மதியூகன்
நீங்கள் மனசாரக் கேட்க விரும்பும் கேள்விகளை அஞ்சலட்டையில் எழுத வேண்டும். மல்லிகையைப் புகழ்ந்தோ அல்லது ஆசிரியரைப் பாராட்டியோ எழுதும் எந்தக் கேள்விகளுக்கும் கண்டிப் பாக பதிலளிக்கப்படமாட்டாது. இதைக் கவனத்தில் கொண்டு கேள்விகளை எழுதி அனுப்புங்கள். “ሙጌ
ox இந்தப் பணவீக்கக் காலகட் டத்திலும் மல்லிகையின் விலை 30 ரூபாவாக விலைப்படுத்துகின்றீர் களே, இந்த விலைக்கு விற்க, உங் களுக்குக் கட்டுப்படியாகின்றதா?
a-6GO. எஸ்.செபஸ்ரியன்
சிரமப்படும் மக்களை இலக்கியத்தின் பெயரால் இன்னும் சிரமப்படுத்த விரும்பு கின்றீர்களா? சில இலக்கிய நெஞ்சங்கள் மாதா மாதம் ஏதோ தம்மாலியன்ற வரை உதவுகின்றன. அந்த அன்பளிப்புகளை நான் பொது மக்களுக்கே கொடுத்துவிடு கின்றேன்.
மல்லிகை மார்ச் 2009 ஜ் 71

Page 38
மல்லிகை மார்ச் 2009 * 72
t உலகத் தமிழ் எழுத்தாளர் அனைவரும் ஒருங்கு சேர்ந்து ஒரு சர்வ தேசத் தமிழ் எழுத்தாளர் மகா நாட்டைக் கொழும்பில்
நடத் தினால், என்ன?
கல்கிசை, ஆர்.சிவநேசன்
* நல்லதொரு எண்ணம். இன்று தமிழ் மொழி ஒரு சர்வதேச நிலைக்கு உயர்த்தப் பட்டுள்ளது. இதை நடைமுறையில் சாதித் தவர்கள், நம்மவர்கள். அதாவது ஈழத்துப் படைப்பாளிகள். இன்றைய யுத்த அவலச் சூழ்நிலையில் இது அப்படியொன்றும் சாத் தியமானதாகத் தெரியவில்லை. நாளை என்றொரு நாள் நிச்சயம் வரும். அந்தக் காலகட்டத்தில் இப்படியானதொரு சர்வ தேசத் தமிழ் எழுத்தாளர்களின் ஒன்று சுடலை நடத்தி வைப்போம். இது சர்வ
நிச்சயம்
یه
* நான் எனது முகவரிக்குச்
சென்ற ஆண்டுக்கான மல்லிகைச் சந்தாவைச் செலுத்தியிருந்தேன். ஆனால், மல்லிகை ஆண்டு மலர் இன்னமும் எனக்கு வந்து சேரவில்லை. என்ன காரணம்?
4-வது
* ରାକ୍ଷ୍ମଣ୍ଯାful:T. ஆர்.பாந்தேனி
ஃ நிறையப் பேர் இந்த மலர் விவகாரத் தில் குழம்பிப் போயுள்ளனர், நாங்கள் மல்லிகையில் மிகத் தெளிவாகக் குறிப் பிட்டிருந்தோம். மல்லிகை ஆண்டுச் சந்தா 450-', மலரின் விலை தணி. அதன் விலை 200-' ரூபா, தபாற் செலவு 80 ரூபா,
இதைப் பலர் தெரிந்து வைத்திருக்க வில்லை. அதனால் ஏற்பட்ட குழறுபடிதான் இது. எனவே ஒன்றைச் சந்தாதாரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்டுச் சந்தா வேறு. மலர் விலை வேறு. தபாற் செலவும் வேறு.
* உலகப் புகழ்பெற்ற ஆங்கிலச் சஞ்சிகையான "ரீடர் டைஜஸ்ட் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். விவரம் தெரியாது. அது பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?
கண்டி L ਹੈ।
* இந்தப் பிரபல சஞ்சிகை 1922இல் ஆரம்பிக்கப்பட்டது. டேவிட் வேலஸ் என்ப வர்தான் இதை முதன் முதலில் ஆரம் பித்து வைத்தவர். இன்று மூன்று கோடிப் பிரதிகள் வெளிவருகின்றன. 30 வகைப் பதிப்புக்கள் இடம்பெறுகின்றன. இந்த இதழ் 100 நாடுகளுக்குப் போகின்றது. இந்த ஆங்கில இதழ், இந்தியாவில் 1954இல் வெளியிடப்பட்டது. 40,000 பிரதிகளுடன் ஆரம்பமான இந்த ஆங்கில இதழ், இன்று இலட்சக் கணக்காக விற்பனையாகின்றது.
* நீங்கள் பாட்டுப் பாடி ரசிப்பதுண்டா?
பதுளை. எம்.ராமதாஸ்
宵 ஓ! தாராளமாக நான் பாட்டுப் பாடி ரசித்துச் சுவைப்பதுண்டு, குளிக்கும் அறைக்குள்.
2014, பூ, கதிரேசன் வீதி, கோழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், பாகை ஆசிரியரும், ேேரியீட்டாளருமான் டாமினிக் ஜீவா நபர்களுக்காக, கோழும்பு ேேவகாEந்த மேடு 13° இலக்கத்திலுள்ள illi Prilli:T5 நர்சகத்தி நிச்சிட்டு வெளியிடப் பேர்":ந.

உமாதேவி ஒலிவலரிஸ்
மல்விகையரின் இலக்கிய வளர்ச்சி
எதிர்காலத்திலும் மகத்தான வெற்றி பெற இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
எம். ஏகாம்பரம்
274, செடியார் வீதி
65HgIÖII – II.
கிதாலைபேசி 23350/7

Page 39
ಸ್ಟ ရွီး 觀
PLA&T. C.P.D5, 5 IRATICH CAREC%, M.A.ST
OUR PRODUCT
İ)A', B",%F 'IIXTIX G.I:RÜII: E*, ', A", LJi. (Kl::TXi '[', 'N MELYN. '|','|}','','|| IX" TAI LAN LÁRIOS, F'R BETREF 3.L.EUX
-- ILMNK)ING(ARIS.TERTIFICATES. ECKSPSI IKYX SFYRENY SIIHEET, PLASTI" ARIS. ŠIE
(OHAppy DIGITA
Digital Colour Lab &
M : TYYork oumandard Maugກໍ່ມ, ໃນກໍບໍ່ຢູ່
ırk tı'lılç, kağlgıları:'r-ry'in 4-r.
 
 

ERA35, MEMSERSHIP.A.R. (FFICEICENTITY ARE
'E','%{Il"',':%||:'». :3:.1[1k, ','|', R5,'%,,. &#{'Îl|}}|Îlệ ịỷ!||! " |', ', 1]. KF |}}
()', EE. ':','',''K|3, , ', kMEENT" IS. ER. IL-J MIMEK ] | ', KI 3 % || EW: ',' },
L CENTRE(Pvt) Ltd.
Digital offset Press
- 2. r. + 4 7 7 33FF3, 3 JF7955 til: hardigilalaritledgyahap, row