கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2009.05

Page 1
80-9009
 


Page 2
Bismo"2ạlỗ, 2ậIUp"28ẫ, &Mậộfại Ú30ỷổi
னே விரு ணகரத் தெரிந்தெடுத்திL
சுயதெரிவுமுறை முன்னோடி, சர்வதேச,சகலருக்குமான தங்கள் திருமண ஆற்றுப்படுத்துநர், தனிநபர் நிறுவுநர் குரும்பசிடியூர், மாயெழு வேல் அழுதவிடம் விசா ரணைக்கென ஒதுக்கப்பeட திங்கள், புதன், வெள்ளி மாலை வேளைகளில் மேலதிக விவரங்களை விசாரித்
கொழும்பு நேரடித் தொலைபேசி: 2360488, 23.60694, 4873929
சந்திப்புமுன்னேற்பாடீடு ஒழுங்கு முறையில் தாங்கள் நேரிலேயோ, தங்கள் பிரதிநிதியை அனுப்பியோ சந்திக்கலாம்
முகவரி: 8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராக, நிலப்பக்கம் 33 ஆம் ஒழுங்கை வழி) 55ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு- 06.
المG/004من يملأولى سعره فقاقيم الأولى onenاسلامية SA (၁၆ီainfinan၅) செரிவடிவுக்க்ே (sco SA. 黏s。 - சாவெழு வெல்முெெ
 
 
 
 
 

S9மல்லிகை
ܒ¬
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ான நிலை கண்டு துள்ளுவர்
இவக்கியச் சஞ்சிகை விதந்து பாராட்டப் பெற்ற பேதுருதி மிக்க சம்பவம் இடம் பெற்றுள்ளது அங்கு பாராட்டப்பட்ட சஞ்சிகை மகிவிகை து ஆதார நாடாளுமன்றப் பதிவேடா " grrநார்ட் ப்க். 7 2011 பதிவு செய்ததுடன்
படுத்தியுமுள்ாது
50 -வது ஆண்டை நோக்கி.
GO
560
o ZZz/%Azبر” ീgratio
|மல்ல - அது ஓர் ஆரோக்கியமான இலக்கிய இயக்க முமாகும் , 201/4, Sri Kathiresan St, Colombo - 13, Te: 232O721 | mallikaijeevagyahoo.com
உலகப் பாராளுமன்ற வரலாற்றிேேய, இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம் நான் ஓர் :
ஆர்ஆாரபூர் ரந்ததியினருக்காக ஆங்பே 影
ദർn/ @ർഗ്ഗd:be
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர
இன்றைக்கு இது ஓர் இலக்கிய இதழ்)- φτασιτβιυή இதோர்
இலக்கிய ஆவணம்
பெரும்பாலும் ஆரோக்கியமான, ஆழ மான நிகழ்வுகள் எதுவுமே அது நிகழ்ந்து கொண்டிருக்கும் கால கட்டங்களில் மிக மிகச் சாதாரனமானதொன்றாகவே கணி க்கப்பட்டு, ஒரளவு நிராகரிக்கப்பட்டதொன் றாகவே முடிவில் வந்தடையும்.
ஆழமான உணர்வும், நுண்ணிய பார் வையும் கொண்ட ஒரு சிலரால் மாத்திரமே அது ஆரம்பகால கட்டங்களில் புரிந்து கொண்டு, வரவேற்கப்படும்.
தொடர்ச்சியான அதன் வரலாறும் மதிப் பிட்டு விமரிசனங்களாலும் அது ஒரு வரலா ற்றுச் சாதனையாக மாறியதன் பின்னரே, பிற்காலத்தில் அதனது முக்கியத்துவமும், ஆளுமையும் ஒருசிலரால் கண்டறியப் பட்டுப் பதிவு செய்யப்பட்டுப் போற்றப்படும். இது அன்றிலிருந்து நேற்று வரை நட ந்து வரும் வரலாற்று நிகழ்ச்சிதான், இது மணிக்கொடியின் அன்றைய இலக் கிய ஆளுமை இப்படித்தான் கண்டறியப்
LI L-iii
அதன் பின்னர் வந்த எழுத்து, சரஸ் வதி, சுபமங்களா, போன்ற சிற்றேடுகளும் இலங்கையில் அந்தக் கால கட்டத்தில் வெளி வந்த பாரதி, மறுமலர்ச்சி, கலைச்செல்வி போன்ற இலக்கியச் சிற்றேடுகளின் அன் றைய வரவும் இதைத்தான் இன்று சுட்டிக் காட்டுகின்றன.
மல்விகையின் வரவையும், அதனது சமகால இலக்கியப் பங்களிப்பின் ஆழஅகலங்களையும் நான் வரலாற்றுத்

Page 3
தீர்ப்பின் கரங்களிலேயே ஒப்படைத்து
விடுகிறேன்.
மல்லிகை மாத இதழை நான் யாழ்ப் பாணத்தில் மிகமிகப் பொறுப்புணர்வுடன் ஆரம்பித்த காலத்தில், இவ்விதழ் நீண்ட காலத்திற்கு நின்று நிலைக்குமா?’ என என் காது படக் கேட்டவர்கள் பலர். அதில் எனது ஆத்ம நண்பர்கள் சிலரும் இருந்த னர். அதில் சிலர் இன்றும் மல்லிகையில் எழுதி வருகின்றனர்.
அதிலும், எனது குணாம்சங்களைத் தெளி வுறத் தெரிந்திருந்தவர்கள் கூட, வாயளவில் இச் சந்தேகத்தை நிரவல் செய்து, தம்மளவில் உள்ளுக்குள்ளேயே மகிழ்ந்து கொண்டனர்.
திட்டவட்டமான ஒரு நோக்கத்துடனும், மயக்கமுறாத மனத் திண்மையுடனும் தான் நான் மல்லிகையை ஆரம்பித்து, நடத்தி வந்தேன்.
மல்லிகையின் அட்டைப்படமாகத் தகுதி வாய்ந்தவர்கள், தகைமை பெற்ற வர்களின் உருவங்கள் தான் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என ஆரம்ப கால கட்டத்திலிருந்தே திடமான ஒரு முடிவெடு த்து, அதை நடைமுறையில் இன்றளவி லும் கைக் கொண்டு ஒழுகி வருகின்றேன். இந்தத் தேர்வில் ஜீவா வேறு. மல்லிகை ஆசிரியர் வேறு. எக்காரணம் கொண்டும் மல்லிகை ஆசிரியர் மீது வேறொருவரும் ஆதிக்கம் செலுத்துவதை ஆசிரியர் அறவே விரும்பமாட்டார்- இது திண்ணம்
ஜீவாவுக்கென்றொரு அடிப்படைத் தத்துவார்த்தப் பார்வை உண்டு. கருத்தும் உண்டு. நட்புறவுத் தொடர்பும் உண்டு. அதே சமயம், ஆசிரியர் என்ற ஹோதாவில் எக் காலகட்டத்திலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைச் சஞ்சிகையில் திணிக் கவோ, சிலரைத் திட்டுமிட்டு இருட்டடிப்புச் செய்யவோ மாட்டார். இது சர்வ நிச்சயம்!
இதுவரை அட்டைப்படத்தில் உருவம் பதித்தவர்களைக் கணக்கிட்டுப் பார்த்தாலே இது துல்லியமாக விளங்கும். புரியும்
மல்லிகையின் அட்டையில் உருவம் பதிப்பது ஏதோ ஒரு புகைப்படம் போடும் சங்கதியல்ல. அது ஒரு வரலாற்றுப் பதிவு. வருங்கால கட்டத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் அட்டைப் படங்கள் பதிப்பித்த மல்லிகை இதழ்களைத் தேடித் தேடி ஆய்வு செய்வான். இது சர்வ நிச்சயம். இந்த வரலாற்றுத் தெளிவுடன் தான் மல்லிகை இந்தப் பதிவுப் பணியைத் திறம்படச் செய்து வருகின்றது.
மல்லிகையின் இந்த நேர்மையான அணுகுமுறையைப் புரிந்து கொள்ளாத பலர், வெறுமனே "பந்தா காட்டி அலட்சியப் படுத்துகின்றனர். நமது நோக்கத்தைக் கொச்சைப்படுத்துகின்றனர்.
நாம் வரலாற்றுக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள். எனவே, தொடர்ந்தும் எமது ஆக்கப் பணியில் எவ்வித மனச் சுணக்கமு மின்றித் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். பலருக்குத் தாங்கள் சந்தேகத்துடன் நோக்கிய மல்லிகை இதழ் இத்தனை ஆண்டுக் காலங்களாகத் தொடர்ந்து வெளி வருகிறது என்பதே ஒர் ஆச்சரியம் கலந்த அதிசயம்தான்!
நமது தார்மீக உழைப்பை, அசலான இலக்கிய நேர்மையையும் ஆரம்ப காலங் களிலிருந்தே கொச்சைப்படுத்திப் பார்த்த வர்களுக்குத் தான் இது ஆச்சரியமாக இருக்கலாம்.
மற்றும்படி அப்படி ஒன்றும் இது சீன த்து வித்தையல்ல!
வரலாறு நாளை உண்மையைத் தான் உரைக்கும். இது சர்வ நிச்சயம்!
ہوتے جامعہ نمبر۶۶ہ سمہ ہم۔ --ک

உலகத் தமிழ் எழுத்தாளர் மகாநாடுநமது மண்ணில் தான் நடைபெற வேண்டும்!
நினைக்கவே மலைப்பாக இருக்கின்றது
இருந்தாலும், இதைச் சாதிக்கலாம் போலவும் தெரிகின்றது. பல நாடுகளில் இருந்தெல்லாம் இதைப் பற்றிய கருத்துக்கள் பரவலாகச் சொல்லப்பட்டு வருகின்றன. பணப் பிரச்சினையைப் பற்றிச் சிறிது கூடச் சலனப்பட வேண்டாம். நமக்கு, நமது தாய் மொழிக்கான சர்வதேச அங்கீகாரமே முக்கியம் என உறுதியான உத்தரவாதம் தரப்படுகின்றது. லண்டனில், பாரிஸில், ஜெர்மனியில், நோர்வேயில், கனடாவில், அவுஸ்திரேலி யாவில் ஆண்டாண்டுகளாகப் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் ஒன்று கூடல்கள் நம்மவர் களால் வெகு கோலாகலமாக வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இவை அனைத்தையும் ஒன்றிணைத்து, நமது மண்ணில் சகல புலம்பெயர்ந்த எழுத்தா ளர்களையும் ஒருங்கிணைத்து, ஒரு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை வெற்றிகரமாக இந்த மண்ணில் நடத்தியே ஆகவேண்டும் என நல்லெண்ணம் படைத்த படைப்பாளிகள் கூடிக் கூடி ஆலோசித்து வருகின்றனர். எழுதுகின்றனர்.
ஒரு காலத்தில் எமது சர்வதேசத் தொடர்பு மொழி ஆங்கிலமாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. எமது இலக்கியப் பயிலு மொழியாகவே அது இருந்து வந்துள்ளது. எனவே, ஆங்கிலத்தில் தான் நமது முன்னோடிகள் சிந்தித்தார்கள். அதுவே உலகத்தில் சிறந்த பாஷை எனத் தமக்குள் தாமே முடிவு கட்டிக் கொண்டு செயல்பட்டு வந்தார்கள்.
இன்றுதான் எமக்கு ஓர் உண்மை புரிகின்றது. நமது முன்னோர் பரம்பரையாகக் கற்பித்து வந்த ஆங்கில மொழியைக் கடந்தும் கூட, பல ஐரோப்பிய மொழிகள் மிகச் சிறந்த இலக்கியப் பொக்கிஷங்களை உள்ளடக்கிய மொழி களாகத் திகழுகின்றன என்ற உண்மையை இன்று நாம் புரிந்து கொண்டுள்ளோம்.
பிரெஞ்ச், டொச், நார்வேஜியன், இத்தாலி, ரஷ்யன் போன்ற சர்வதேசப் பாஷையில் இன்று நம்மவர்களில் பலர் நேரடியாகவே அந்த அந்த மொழிகளில் தலைசிறந்த ஆக்கங்களைப் படி த்து வருவதுடன், தாம் வாழும் அந்தந்த நாட்டு மொழிகளிலேயே தமது ஆக்கங்களை வெளி யிட்டு வருகின்றனர் என்ற எதார்த்த உண்மையையும் நாம் இன்று புரிந்து கொள்ள முடிகின்றது. எனவே, உண்மைகளை ஊன்றிக் கவனிக்கத் தொடங்கினால், இன்று தமிழைச் சர்வதேசத் தளத்திற்கு இட்டுச் சென்றவர்கள் நம்மவர்கள் தான் என்ற முடிவுக்கு எம்மால் வர முடிகின்றது. தமிழை உலகத் தரத்திற்கு உயர்த்தியிருப்பதுடன், எமது தாய் மொழியின் சிறப்பை உல கத்தில் பலரும் இன்று புரிந்து கொள்வதற்கு அயராது பாடுபட்டுழைப்பவர்களும் நம்மவர்களே என்ற காரணத்தால், உலகத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை நமது மண்ணிலே நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எமக்கு இன்று நியாயமாகவேபடுகின்றது.
கொஞ்சம் பொறுத்திருப்போம். பொருத்தமான சூழ்நிலையும், சுமுகமான நாட்டு நிலையும் ஏற்படும் சந்தர்ப்பத்தில் சும்மா ஜாம்ஜாமென்று நடத்தியே தீருவோம், உலகத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை

Page 4
அடிடை படம்
அLடையில் பதியப்பட இருந்தவர், இன்று அமராகி விட்டார்
- கண்டி இரா. அ. இராமன்
LDலையகத்தின் பெண் எழுத்தாளர்கள் மிக அரிதாகவே உள்ளனர். ஆரம்பத்தில் பல பெண் எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதினாலும், சிறந்த சிறுகதைகளைப் படைத்த வர்கள் என்ற அந்தஸ்தைப் பெறவில்லை. இவர்களுள் நல்ல, தரமான சிறுகதைகளைப் படைத்துச் சிறுகதை உலகில் பேசப்படும் மலையகப் பெண் எழுத்தாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள், இருவர். ஒருவர் மலையகத்தின் மூத்த பெண் எழுத்தாளர் நயிமா சித்திக், மற்றவர் புஸ்ஸல்லாவ இஸ்மாலிகா. இஸ்மாலிகாவின் சிறுகதை ஒன்று மலேசியப் பாட நூலில் இடம் பெற்றுள்ளது.
நயிமா சித்திக் இதுவரை இரண்டு சிறுகதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார். புஸ்ஸலாவ இஸ்மாலிகா பல தொகுதிகளைப் போடும் அளவில் சிறுகதைகள் இருந்தும், இதுவரை அவர் ஒரு தொகுதியாவது வெளியிடாதது கவலைக்குரிய விடயமாகும்.
அந்த வகையில், மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட மலையகத்தின் முன்னணிப் பெண் எழுத்தாளர் ரூபராணி ஜோசப் குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாளி ஆவார்.
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கண்டியில் வாழ்ந்து வரும் இவர் கலை, இலக்கிய, சமூக, கல்வி தொழிற்சங்கத்துறையில் சேவையாற்றியவர். நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், பல நாடகங்களை மேடையேற்றியும் உள்ளார்.
1956ம் ஆண்டு தொழில் நிமித்தமாக மலையகத்தின் தலைநகராம் கண்டி மண்ணில் கால் பதித்தார். கல்லூரி ஆசிரியராகக் கடமையாற்றிய இவர், பொதுப்பணிகளில் ஈடுபடத் துவங்கினார். பேச்சுத் துறையில் தனது கவனத்தைத் திருப்பிய இவர், பெருந்தோட்டப் பெண் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஊட்டுவதற்காகத் தோட்டங்கள் தோறும் வாசிகசாலைகளை அமைப்பதில் ஈடுபாடு காட்டினார்.
இவரின் சேவை உணர்வையும், மேடைப் பேச்சின் சிறப்பையும் கண்ட மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் தமது தொழிற்சங்கத்தில் ஒரு பேச்சாளராக நியமித்ததோடு, நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ராகலை தோட்ட ஜில்லாக் கமிட்டித் தலைவியாகவும்
மல்லிகை மே 2009 தீ 4

நியமித்தார். தொழிற் சங்கம் ஊடாகவும் தனது சேவையை விரிவுபடுத்திய இவர், மலையகத்தில் நடந்த பல போராட்டங்க ளில் கலந்து, அம்மக்களின் உரிமைகளுக் காகக் குரல் கொடுத்தவருமாவார்.
இவ்வாறு தான் வாழ்ந்த பிரதேசத்தில் கல்வி, சமூக, கலை, இலக்கியத் தொழிற் சங்கத்துறைகளில் எவ்வாறு அர்ப்பணிப் போடு சேவையாற்றினாரோ, அவ்வாறே தான் பிறந்த மண்ணான மட்டக்களப்பி
லும் அர்ப்பணிப்போடு சேவையாற்றியுள்ளார். "என் தாய்த் திருநாட்டின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மண்ணின் தங்கமகளை மலையகம் தத்தெடுத்துக் கொண்டது எமது மண்ணிற்கும், சமூகத் திற்கும் பேரிழப்பாகும். இருந்தும், எமது சகோதரப் பெருந்தோட்ட மக்களுக்கு அவ ரது சேவை சென்றடைந்தது மகிழ்ச்சிக் குரியதாகும்.
'சகோதரி ரூபராணி ஜோசப் மற்றவர் கள் சொல்லாத கருத்தைச் சொல்ல வேண் டும். எதிலும், புதுமை காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். புதியவை படைக்க வேண்டும் என்னும் ஒருவித வெறி அவரிடம் இளமைக் காலத்திலிரு ந்தே இருந்து வந்தது. பெண் என்னும் பெண்மைக்குள்ளும் அவர்களுக்கே உரிய வெட்கம், அச்சம் என்னும் பண்புகளுக்குள் ளும் அவை பளிச்சிட்டது. காலம் கனியும் போது அவை உருப்பெற்றன, உயிர் பெற் றன. பள்ளிப் பருவத்திலிருந்து எதையும் ஊடுருவிப் பார்க்கும் பழக்கம் உள்ளவர். சிலர் மலரைப் பார்த்து மயங்குவர். அவரோ மலரில் உள்ள மகரந்தத்தை ஆராய்வார். சிலர் மாடி வீட்டைப் பார்த்து மயங்கி நிற்பர்.
இவரோ அங்கு வாழும் மனிதர்களின் பழக்க வழக்கங்களை, பண்புகளைச் சல் லடை போட்டுப் போட்டுப் பார்ப்பார். ldsdot குடிசைகளைப் பார்த்து வறுமையில்
வாடும் குடும்பத்திற்காகச் சிலர் வருந்துவர்.
அவரோ கூழ் குடித்து வாழும் அவர்களின் உயர்ந்த மனிதநேயத்தைத் துருவித் துருவிப் பார்ப்பார்கள், தலை வணங்கு வார்கள். அவரது பார்வையே தனி, எழுத்து நடையும் தனி, எவருடைய எழுத்து நடை யும் அவர் பின்பற்றினார் இல்லை. ரூப ராணி அன்று மட்டுநகர் தந்தமகள். இன்று மலையகத் தங்கமகள். மட்டக்களப்பு முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொல் லின் செல்வர் செ. ராசதுரை, எழுத்தாளர் ரூபராணி ஜோசப்பின் இளமைக்கால அவரின் சமூக உணர்வுகளை நேரில் கண்டு வழங்கிய நற்சான்றிதழ் தான் மேற் காணும் பொன் எழுத்துக்கள்.
கலை இலக்கிய உலகில் 50 வருடங் கள் கடந்து இன்று நிமிர்ந்து நிற்கும் ரூப ராணி ஜோசப், தனது சகல பணிகளுக்கா கவும் பல கெளரவங்களையும், விருதுக ளையும், பட்டங்களையும் பெற்றுள்ள இவர், ஈழத்து இலக்கிய உலகில் பேசப்படும் மலையகப் பெண் எழுத்தாளர்களில் ஒரு வர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் குடும்பம் செல்வச் செழிப்பு மிக்க ஒரு குடும்பமாகும். அவ்வாறு இருந் தும், இளமைப் பருவத்திலேயே இவரிடம் சமூக உணர்வும், எழுத வேண்டும் என்ற துடிப்பும் காணப்பட்டதாக இவரின் பள்ளிக் கூட ஆசிரியையும், தற்போது திருகோண மலையில் வாழ்பவருமான ஒய்வு பெற்ற ஆசிரியை பராசக்தி இவரைப் பற்றிய ஒரு குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மல்லிகை மே 2009 & 5

Page 5
13 வயதில் மேடையேறிப் பேசும்
அளவிற்கு இவரின் திறமை வளர்ந்தது. அன்று வட கிழக்கில் பல அரசியல் போரா
ட்டங்கள், சத்தியாக்கிரகங்கள், மொழி உரிமைப் போராட்டங்கள் இவரின் கவன த்தை அந்த இளம் வயதிலேயே ஈர்த்தன. தனது 15 வயதில் தமிழரசுக்கட்சி மேடை களில் மொழி உரிமைக்காகக் குரல் கொடு த்து உரையாற்றித் தமிழரசுக்கட்சித் தலை வர்களிடையே பாராட்டைப் பெற்றதோடு, கட்சியின் பேச்சாளராகவும் இணைத்துக் கொண்டது மனங்கொள்ளத்தக்கது.
வாசிப்பிலும், மேடைப் பேச்சிலும் முத் திரை பதித்த இவர், தனது 16 வயதில் "எதிர்பாராத சந்திப்பு' எனும் சிறுகதையை வீரகேசரியில் எழுதியுள்ளார். அன்று மட்டு நகரில் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்த சொல்லின் செல்வர் செ. ராசதுரையோடு போட்டிப் போட்டுக் கொண்டு உரையாற்றி அவரால் சொல்லின் செல்வி எனும் பட்ட த்தைப் பெற்றார்.
இவரது சகல பணிகளுக்காகப் பல பட்டங்களைப் பெற்றுள்ளார். ரூபராணி ஜோசப் கலைப் பணிக்காகக் கலையரசி, இலக்கியப் *இலக்கியச் செல்வி', மேடைப் பேச்சுக்காகச் சொல்
பணிக்காக
லின் செல்வி, மற்றும் ‘கலாரூபி, நடிப் பரசி போன்ற பட்டங்கள் இவருக்கு வழங் கப்பட்டுள்ளன.
நாடகத்துறைக்கும் பெரும் பங்காற்றி யுள்ளார். ஏராளமான நாடகங்களை மேடை யேற்றியுள்ளார். கதை, வசனம், இயக்கம், நடிப்பு என்று நாடகத்துறையில் முத்திரை பதித்தவர்.
இவ்வாறு பல நல்ல பணிகளை ஆற்
றியுள்ள ரூபராணி ஜோசப்பின் இலக்கியப் பணிகளையும் பார்ப்போம்.
1996ம் ஆண்டு இவரது முதல் நூலாக ‘ஏணியும் தோணியும்' எனும் சிறுவர் நூல் வெளிவந்தது. இந்நூல் அவ்வாண்டுக்கான தேசிய சாகித்தியப் பரிசினைப் பெற்றது. 1997ம் ஆண்டு மறைந்த துரைவியார் இவ ரது ஒரு வித்தியாசமான விளம்பரம்' எனும் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டார். இந்நூல் அவ்வாண்டுக்கான மத்திய மாகா ணத் தமிழ் சாகித்தியப் பரிசினைப் பெற்றது. 1998ம் ஆண்டு இவரின் ‘இல்லை இல்லை' எனும் நாடக நூல் வெளிவந்தது. இந்நூல் வடகிழக்கு மாகாண தமிழ் சாகித் தியப் பரிசினைப் பெற்றது. 2001ம் ஆண்டு இவரது “ஒரு தாயின் மடியில் குறுநாவல் வெளிவந்தது. இந்நூல் அவ்வாண்டுக்கான மத்திய மாகாணத் தமிழ் சாகித்தியப் பரிசி னைப் பெற்றது.
2002ம் ஆண்டு நோர்வே தமிழ்ச்சங்கம் நடத்திய உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது இடப்பெயர்வு சிறுகதை முதல் இடத்தைப் பெற்றது. இச்சங்கம் வெளியிட்ட சிறப்பு மலரில் இச்சிறுகதை இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது சேவைகளுக்குச் சிகரம் வைத் தது போல, கடந்த ஆண்டு ‘கலாபூஷணம்’ விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
அண்மையில் 'அம்மாவின் ஆலோச னைகள்’ எனும் சிறுவர் இலக்கிய நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் அமரராகிவிட்ட ரூபரா ஜோசப் அம்மாவுக்கு மல்லிகையின் ஆழ்ந்த அநுதாபங்கள்.
மல்லிகை மே 2009 $ 6

புலிம்பெயர்ந்த மண்ணில் ஈழத்தமிழர்களுக்கானதொடு ஆவணக் காப்பகம்
~6Tశీ, కలామీళుOdged
திரியகத்திலும், புகலிடத்திலும் இன்று ஈழத்தமிழர்களின் வாழ்வு, விடுதலைப்
போராட்டம் தொடர்பாகவும், அங்கு நிகழும் எமது உடன் பிறப்புகள் எதிர்நோக்கும் போர் அவலம் தொடர்பாகவுமே சிரத்தையுடன் உற்று நோக்கப்படுகின்றது. அனைத்துலகின் பார்வையில் போரியல் சார்ந்த அக்கறையுடனேயே, கவன ஈர்ப்புக்களும், வாசிப்புக்களும், எழுத்துக்களும் ஈழத்தமிழர் சார்பில் விரவிக்கிடக்கின்றன. இந்நிலையில், போராட்டத்திற்கு அப்பால் கவனிக்கப்பட வேண்டிய பல முக்கிய விடயங்கள் அடிபட்டுப் போய்விட்டன. நீண்டகால நோக்கில் இது எமது ஈழத்தமிழ் இனத்தில் பாரிய பாதிப்பினை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதை எவரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
இன்று ஈழத்தமிழர்களின் வாழ்வியல், அரசியல், இலக்கியம் மற்றும் அறிவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வரும் தமிழாய்வாளர்களுக்கோ, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத தமிழியல் ஆய்வாளர்களுக்கோ இலங்கை மண்ணிற்கு அப்பால் உரிய வளங்களைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய அளவில் நாம் நிறுவனரீதியில் வளமாக இருக்கிறோமா? என்ற கேள்வியைப் புத்திஜீவிகளாகக் கருதிக் கொள்ளும் எம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். பிரித்தானியாவில் கூட, ஈழத்தமிழர்களின் பங்களிப்பின்றி தமிழரல்லாதோரினால் நிர்வகிக்கப்படும் SOAS, பிரித்தானிய நூலகம், கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் இந்தியப் பிரிவு போன்ற கல்விசார் நிறுவனங்களின் நூலகங்களிலுள்ள ஈழத்தமிழர் தொடர்பான சேகரிப்புக்களும், பயன்பாடுகளும் வரையறைக்குட்பட்டதாகவே உள்ளன. உலகின் தமிழியல் பல்கலைக்கழகங்களில் ஈழத்தமிழர் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ள முன்வரும் இளம் ஆய்வாளர்கள் அதற்கான போதிய தகவல் சாதனங்கள் இன்மையாலும், இலங்கையின் போர் நிலைமைகளால் அங்கு செல்ல முடியாததாலும் தமது ஆய்வைத் தமிழகத்தை நோக்கித் திசை திருப்பிக் கொண்ட பல செய்திகள் எம்மிடையே உள்ளன. இதனால், ஈழத்தமிழர் தம் வாழ்வியல் பற்றிய பல ஆய்வுகள் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலையிலேயே காணப்படுகின்றன.
புகலிடத்தில் எம்மத்தியில் கோவில்கள் வளர்ந்த அளவுக்கு, வர்த்தக நிலையங்கள் வளர்ந்த அளவுக்கு, கல்வி, கலைக்கழங்கள் உருவாகியுள்ள அளவுக்கு நூலகங்களும், ஆவணக் காப்பகங்களும், புத்தக விற்பனை நிலையங்களும் ஏன் வளரவில்லை என்பதை நாம் எமக்குள் கேட்டுக் கொண்டால், அங்கு ஒரே ஒரு பதில் தான் கிடைக்கும். நூலகங்க ளும், ஆவணக் காப்பகங்களும், புத்தக விற்பனை நிலையங்களும் ஒரு போதும் கொழுத்த
மல்லிகை மே 2009 & 7

Page 6
வருமானத்தைத் தேடித் தராதவை என்ற ஒரே ஒரு பதிலைத்தான் இதயசுத்தியுடன் உண்மையானதாக நான் கருதுவேன். இது மிகவும் கசப்பானது தான். இந்நிலை யில், இனிமேலாவது இந்நிலையில் மாற்றம் கொண்டுவர முடியாதா? என்ற ஆத்மார்த்த உணர்வுடன் அண்மையில் ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும், Eyi 6EEpub 6T6öILD QLu Lussio (European Tamil Documentation and Research CentreETDRC) ஒரு நூலக அமைப்பினை உரு வாக்கியிருக்கின்றோம். இது ஒரு சிறிய தடம் தான். ஆயினும், எதிர்காலத்தில் பாரிய நகர்வுகளையும், அதிர்வுகளையும், புலம்பெயர்ந்த தமிழரின் அறிவு சார்ந்த வாழ்வியலில் இதனால் ஏற்படுத்த முடியும். இதனைப் பிரித்தானிய அரசினால் பதிவு செய்ப்பட்ட தமிழியல் ஆய்வு நிறுவனமாக்
கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்
றோம். இந்நிலையில், அடுத்தகட்ட நடவடி க்கையாக, ஈழத் தமிழியல்துறையில் ஈடு பாடு காட்டும் தனிப்பட்டவர்களை இனம் கண்டு இந்த ஆய்வகத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையி லும், நூல்களையும், ஆவணங்களையும் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையிலும் இறங்கியிருக்கிறோம். இதுவரையில், நான் 5 தொகுதிகளில் 5000 நூல்களை நூல் தேட்டம் தொகுப்பின் வாயிலாகப் பதிவு செய்துள்ளேன். ஒவ்வொரு தொகுதியும் சுமார் 600 பக்கங்களைக் கொண்ட நூல் வடிவில் 2004 ம் ஆண்டு முதல் வெளிவரு கின்றது. 6வது நூல்தேட்டம் தொகுதியின் தொகுப்பு வேலைகள் தற்போது நடை பெற்று வருகின்றன. 2009 ஐப்பசியில் இத்தொகுப்பு வெளியிடத் திட்டமிடப்பட்டு ள்ளது. நூல்தேட்டம் பதிவிற்காக எனக்குக் கிடைக்கும் நூல்கள் அனைத்தையும் இவ் வாவணக் காப்பகத்தின் முன்னோடி வள மாக வழங்கியிருக்கிறேன். இந்தக் காப்ப
கம் வளர இந்த 3000 நூல்கள் மட்டும் போதாது. உலகெங்கினுமிருந்து எமக்குத் தமிழியல் சார்ந்ததும், ஈழத்தவர்களினதும், மலேசியா- சிங்கப்பூர் தமிழர்களினதும் நூல்கள் கிடைக்க வேண்டும். தனிப்பட்ட சேகரிப்புக்களைக் கொண்டிருப்பவர்கள் மனமுவந்து தங்கள் சேகரிப்பிலிருந்து சில நூல்களைப் பொதுப் பாவனைக்காக எம க்கு வழங்க முன் வரவேண்டும். இது புக லிட மண்ணில் ஈழத்தமிழர்களின் ஆவணக் காப்பகமாகவும், சிங்கப்பூர்- மலேசியத் தமிழ ர்களின் நூல்களின் காப்பகமாகவும் எதிர் காலத்தில் சிறப்புற விளங்கப் பலரும் இன்று பொது நோக்கம் கருதி உதவி வருகின் றார்கள். எமது ஆவணக் காப்பகத்திற்கு இன் னும் ஏராளமான நூல்கள் தேவைப்படு கின்றன. அவற்றைப் பெற்றுக் கொள்ளும் பணியில் தற்போது இயங்கி வருகின்றோம். உங்கள் வசமுள்ள ஈழத்துத் தமிழ் நூல்களையும், ஈழத்தவர்களால் எழுதப் பட்ட தமிழ் ஆங்கில நூல்களையும், ஈழம் மற்றும் இலங்கைத் தமிழர் பற்றிய பன்னா ட்டறிஞர்கள் எழுதியுள்ள நூல்களையும் இந்த அமைப்பில் பாதுகாத்து வைத்துப் பயனளிக்க உதவுவீர்கள் என்று எதிர் பார்த்து இக்கடிதத்தை எழுதியிருக்கின் றேன். எதிர்காலத்தில் ஐரோப்பிய நாடுக ளில் வாழும் தமிழியல் ஆய்வாளர்களுக் கும் எமது அடுத்த தலைமுறையினருக் கும் அவர்களது ஆய்வுத் தேவைகளுக் கும்- குறிப்பாக ஈழத்தமிழர் பற்றியும், புலம்பெயர்ந்த தமிழர் பற்றியுமான ஆய்வு களுக்குத் துணைபுரியும் பணியில் நீங்க ளும் இணையும் வாய்ப்பினை இத்திட்டம் வழங்கும் என்று நம்புகின்றேன்.
உங்கள் தொடர்பினை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.
LôlsöT6esbsso: selvan Gintlworld. com
மல்லிகை மே 2009 தீ 8

வாழும் நினைவுகள் -15
அநுராதபுரம் கலைச்சங்கம்
~திக்குவல்லை கமால்
எண்பதுகளுக்கு முன்பு அநுராதபுரம் கலைச் சங்கமென்றால் பரவலாக எவரும் அறிந்த அமைப்பாக இயங்கி வந்தது. அடிக்கடி பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
அவ்வேளை அங்குள்ள அரச அலுவலகங்களில் வடபகுதியைச் சேர்ந்த ஏராளமான தமிழர்கள் கடமையாற்றினர். வியாபாரத்துறையிலும் ஈடுபட்டனர். குடிபதியாய் வாழ்ந்தும் வந்தனர்.
இதனால், கலைச்சங்கம் நிகழ்ச்சிகளை தைரியமாக முன்னெடுக்கக் கூடியதாக விருந்தது. அவர்களது இலக்கியத் தேவையை அது நிறைவு செய்வதாகவுமிருந்தது.
எழுபதுகளில் இதன் செயலாளர்களாக அன்பு ஜவஹர்ஷாவும் பேனா மனோகரனும் இயங்கினர். மற்றும் ஆறுமுகம், சிவஞானம், இரா. நாகராசன், குமாரலிங்கம், சுகுண சபேசன், மாவை, தி. நித்தியானந்தன் போன்ற பலரும் துணை நின்றனர்.
ஒருமுறை "சிதைந்து போன சிறப்புக்கள்' என்ற தலைப்பில் என்னைத் தலைமைக் கவிஞராகக் கொண்டு கவியரங்கம்ொன்று நடைபெற்றது. பங்குகொண்டோர் உள்ளூர்க் கவிஞர்களே. இக்கவியரங்கின் சுருக்கத் தொகுப்பொன்று பின்னர் அச்சில் வெளிவந்தது. அது சிறிய முயற்சியாகவிருந்தாலும், அப்படியொரு தொகுப்பு அதற்கு முன்பு வெளிவர வில்லையென்று பலரும் சிலாகித்துப் பேசினர்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் கவிஞர் அண்ணல் மரபுக் கவிதை ஏன்?" என்ற தலைப் பிலும், நான் புதுக்கவிதை ஏன்? என்ற தலைப்பிலும் பேச அழைக்கப்பட்டிருந்தோம்.
அண்ணல் அதிபராக அநுராதபுரம் பிரதேசப் பாடசாலையொன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவர் அழகியல் சார் மரபுக் கவிதை யாப்பதில் வல்லவர். காதல்
கவிதைக்கோர் அண்ணல் என்று பாராட்டப்பட்டவர்.
"இளம்பிறை'யில் ஈழத்து முஸ்லிம் கவிஞர்களென்று அவர் ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு நான் மாற்றுக் கருத்தெழுதினேன். மீண்டும் அவர் புனைப்பெயரில் எனக்குப் பதிலடி கொடுத்தார். அவ்வேளை இந்த நினைவுகள் எனது மனதிலே வந்து போயின. எவ்வாறாயினும், அவரைச் சந்திக்க ஒரு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ந்து (3urt (360T6öT.
மல்லிகை மே 2009 率 9

Page 7
புதுக்கவிதை, மரபுக் கவிதைப் போராட்டம் சூடுபிடித்திருந்த காலம். நான் புதுக்கவிதையில் மிகுந்த ஈடுபாடு கொண் டிருந்ததால், என்கையில் நிறையவே விஷயதானமிருந்தது.
முதலில் மரபுக் கவிதை ஏன்? என்ற தலைப்பில் மிகக் கம்பீரமாக அண்ணல் பேசினார். யாப்பு, சந்தம், ஒசைநயம், மன னம் இப்படியே வழமையான விடயங் களைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர் முடித்ததும் நானும் விடயங் களை முன்வைத்து அவரை முடிந்தவரை வெட்டிப்பேச, தன்னை நியாயப்படுத்தி அவர் மீண்டும் உரையாற்ற, இடையில் சபை யோரும் அபிப்பிராயம் சொல்ல, விறுவிறுப் பானதொரு நிகழ்ச்சியை என்மனம் கற்பனை பண்ணிக் கொண்டிருந்தது.
என்ன ஆச்சரியம் அண்ணல் பேசி
முடிந்ததும் பஸ்ஸைத் தவறவிட்டால் தன் னால் போய்ச் சேர முடியாதென்று, தலை வரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார். உண்மையில் இத்தகைய கூட்டங்கள் அங்கு மாலை ஆறுமணிக்குப் பின்பே ஆரம்பிப்பது வழக்கமாகவிருந்தது.
இன்னொரு சந்தர்ப்பத்தில் விவேகா னந்தா வித்தியாலய மண்டபத்தில் கலைச் சங்க நிகழ்ச்சியொன்று- அதுவும் இரவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்கு டொமினிக் ஜீவா அழைக்கப்பட்டிருந்தார். தான் கொழும்பு போவதாகவும், வசதிப்பட் டால் வரமுயல்வதாகவும் கூறியிருந்தார். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஜிவா வந்துவிட்டார். மண்டபத்திலே ஒரு புத்துணர்ச்சி பரவியது.
அடுத்தநாள் டொமினிக் ஜீவாவுடன் நானும், அன்பு ஜவஹர்ஷாவும் மடு திரு விழாவுக்குச் சென்றதும், பேனா மனோகர னுடன் அவர் வீட்டில் சாப்பிட்டு இலக்கியம் பேசி மகிழ்ந்ததும், இலக்கிய ஆர்வலர் சுல்தானைக் கண்டு கதைத்ததும், எழுத் தாளனும் பத்திரிகையாளனுமான அன்பு தாஸன் பற்றி அவரது மனைவியான ஜவ ஹர்ஷாவின் உம்மா சொல்லக் கேட்டதும்,
‘கற்பகம்' ஆசிரியர் தம்பு சிவாவை அவர்
கடமையாற்றிய அலுவலகம் சென்று சந் தித்ததும் அநுராதபுரம் கலைச் சங்கம் ஏற்படுத்தித் தந்த உறவுகளென்றே சொல்ல வேண்டும்.
இடைக் காலத்தில் தவிர்க்க முடியாத தொரு மந்தநிலை காணப்பட்டபோதும், இன்று அந்த மண்ணில் இலக்கிய மலர் கள் பூக்கின்றன. மணம் வீசுகின்றன. இலக்கிய இதயங்கள் உலாவருகின்றன.
வாழும் நினைவுகள் -16
சிரித்திரன்நகைச்சுவைச் சஞ்சிகை
சிரித்திரன் என்றும் மறக்க முடியாத தொரு தனித்துவமான சஞ்சிகை. நகைச் சுவை சஞ்சிகையென்று ஒரே வார்த்தை யில் சொல்லிவிட முடியாது. நகைச்சுவை யினுாடாக அது வழங்கிய கருத்துப்பணி மகத்தானது.
தொகுப்பாக வெளிவந்துள்ள கார்ட்டூன், கேள்வி- பதில் நூல்களைப் பார்க்கும் போது, அதன் பெறுமதி துலங்கும்.
மல்லிகை மே 2009 தீ 10

முதலில் கொழும்பிலிருந்தும் பின்னர், யாழ்ப்பாணத்திலிருந்தும் சிரித்திரன் வெளிவந்தது.
அறிவியல், சமயம், இலக்கியமென்று சஞ்சிகைகள் நடாத்துவது பெரிய காரிய மல்ல. நகைச்சுவைச் சஞ்சிகையொன்றைக் கனதியாக நாற்பதாண்டுகள் நடாத்தியதெ ன்றால் அதைவிடப் பெரிய சாதனை என்ன இருக்கிறது
சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத் துடன் இரண்டாண்டுகள் அடிக்கடி சந்தித் துப் பழகியிருக்கிறேன். அவரது பல்வேறு ஆற்றல்களையும், கருத்துக்களையும் கேட்டறிந்திருக்கிறேன். கலந்துரையாடியி ருக்கிறேன். எந்தக் கார்ட்டுன் சஞ்சிகைக ளையும் தான் பார்ப்பதில்லையென்றும், அவ்வாறு பார்க்குமிடத்து அதிலுள்ள கருத்துக்களும், சிந்தனைகளும் தனக்குள் ஊடுருவக்கூடுமென்றும் சொல்வார்.
சிரித்திரனில் நிறைய எழுதியதோடு, சிரித்திரன் வெளியீடாகச் சிறுகதைத் தொகு ப்புக்களை வெளிக்கொணர்ந்த சுதாராஜ், சுந்தர் நினைவு இலக்கியம் பரிசுத் திட்ட மொன்று அறிவித்து நடாத்திக் காட்டினார்.
சிரித்திரன் பாணியில் சுவைத் திரள் என்ற சஞ்சிகை இப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்நாட்களில் சிரித்தி ரனில் நிறைய நகைச்சுவை விடயங்களை எழுதிச் சுந்தரின் அபிமானத்தைப் பெற்ற திக்கவயல் தர்மகுலசிங்கம் தான் அதனை நடாத்துகிறார்.
ஒரு சாதனையாளருக்குப் பின்னால், நிச்சயமாக ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். சுந்தரைப் பொறுத்தவரை யில் அது முற்று முழுதாக உண்மையே. அவரது மனைவி அவருக்குப் பெருந் துணையாக நின்றுதவினார். வந்து சேரும்
ஆக்கங்களிலிருந்து பொருத்தமானதைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பு அவருடையதே. குறிப்பாகச் சிறுகதைத் தேர்வில் அவர் வல்லவர். சிரித்திரனில் வெளிவந்த எனது சிறுகதைகளைப் பற்றியெல்லாம் கருத்து கூறுவார்.
சிரித்திரன் ஒரு நகைச்சுவை சஞ் சிகையாகவிருந்தாலும் கூட, அருமையான கதைகளை வெளியிட்டுச் சிறுகதை ஆக் கத்துறைக்கு நிலையான பங்களிப்புச் செய்துள்ளதென்றே கூறுவேன். வருடம் ஒரு சிறுகதைப் போட்டியை என்றாலும் அது நடத்தாமல் விட்டதில்லை. சிரித்திரன் எட்டாண்டு நிறைவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பரிசு பெற்றதன் மூலமே எனக்கும் சிரித்திரனு க்கும் தொடர்பு ஏற்பட்டது.
அண்மைக் காலத்தில் ஈழகேசரி, மறு மலர்ச்சி, மல்லிகை சிறுகதைத் தொகுப்பு க்கள் வெளிவந்துள்ளன. அந்தவகையில், சிரித்திரன் கதைகளையும் தொகுத்து வெளியிடும் பணியில் செங்கை ஆழியான் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. அது வெளிவரும் பட்சத்தில் அதன் கனதியை ஆய்வாளர்களே வெளிப்படுத்த முடியும்.
எழுபதுகளில் புதுக்கவிதைக்குக் கள மமைத்து, அதை முன்தள்ளும் பணியை யும் சிரித்திரன் சிறப்பாகக் கையாண்டது. இறுதியாக 1990ல் மல்லிகை வெள்ளி விழா மலர் வெளியீட்டுக்கு யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தேன். யுத்தக் கெடுபிடிக ளால் நொந்து போயிருந்தார். நோய்வாய்ப் பட்டுமிருந்தார்.
சுமார் நாற்பதாண்டு காலம் சிரித்தி ரணை நடாத்தி அதனை என்றும் வாழ வைத்துச் சென்றுள்ள சுந்தரும் கூடவே வாழ்வார்.
மல்லிகை மே 2009 * 11

Page 8
25mrjrúĎasáš (3asmruúb
இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் கிளைகளை வைத்து செயற்படுவது தான் பொருளாதாரச் சிக்கலை மேவுவதற்கு வழி என எங்கள் கொம்பனியும் முடிவெடுத்ததால் வேலையற்றோர் பட்டி யலில் நானும் சேர வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. வரவுடன் செலவைச் சமப்படுத்துவது என்பது இனி, தினமும் ஒரு போராட்டமாகப் போகிறது என்ற நிதர்சனத்தைத் என்னால் தாங்க முடியவில்லை.
என்ன செய்யலாம் என மூளையைக் குடைந்து கொண்டிருந்த போது கடை ஒன்றில் ஒலித்த தமிழ் வானொலியில் தற்செயலாய் கேட்ட விளம்பரம் மனதைக் கவர்ந்தது. ஆறு மாதப்பயிற்சியின் பின் வேலை வாய்ப்பும் தேடிக் கொடுக்கிறார்களாம் என்ற போது, ஏதோ கடவுள் தான் வழ காட்டி யிருக்கிறார் என நினைத்துக் கொண்டேன.
வீட்டுக்குப் போனதும் அதே வேலையாக அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன். "உங்களுடைய விளம்பரம் கேட்டேன். உங்களுடைய பயிற்சி நெறிகள் பற்றிக் கொஞ்சம சொல்ல முடியுமா?"
“உங்களுக்கு மென்பொருள் பயிற்சி நெறி பற்றித் தெரிய வேண்டுமா? அல்லது மின கணினி யின் பாகங்கள் அது தொழிற்படும் முறை என்பன பற்றிய பயிற்சி நெறி பற்றி அறியப போகிறீர்களா?" "நான் ஒரு கோல் சென்ரரில வேலை பார்த்தேன். அங்கு சாதரண மக்களுக்கு மின்கணினி சம்மந் தமாக வரும் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது மின்கணினி பற்றி அறிவுட்டுவது போன்றவற்றை செய்ததால், மின்கணினி பற்றிய அடிப்படை அறிவு எனக்குண்டு. எது எனக்குப் பொருத்தம் என நீங்கள் நினைக்கிறியள்?"
‘மின்கணினி பற்றிய ஆரம்ப அறிவு இருந்தால் எதையும் செய்யலாம். நேரில் வந்தீர்கள் என் றால் எங்கள் கவுன்சிலர் உடன் கதைத்து முடிவெடுக்கலாம். எப்போ வரப்போகிறீர்கள்?"
"நாளைக்கு காலை 11 மணியளவில் வந்தால் கவுன்சிலரரைச் சந்திக்க முடியுமா?" "ஒரு நிமிடம் பொறுங்கள். அவரிடம் கேட்டு விட்டுச் சொல்கிறேன் . சரி வாருங்கள். சந்திக்கலாம்"
"ஒகே. தாங்ஸ்"
இதயம் பலதடவைகள் அடித்துக் கொள்கிறது. நான் செய்வது சரியா? இது நன்மையில் முடியுமா? அல்லது எங்காவது ஒரு ஏஜென்சியுடன் சேர்ந்து வேலை தேடுவது நல்லமா? கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.
"இப்ப வீட்டிலையிருக்கிற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நான் போய் மின்கணினி படிக்கட்டா? ஏதாவது கொஞ்சம் படிச்சால் பிறகு வேலை எடுக்கிறது சுகமாயிருக்கும். பிள்ளைகள் பள்ளிக் கூடத்திலை இருக்கேக்கை நான் வகுப்புக்கு போட்டு வந்திட்டன் என்றால், பிள்ளைப் பராமரிப்புச் செலவும் இருக்காது என்ன சொல்லுறியள் ?" என கணவரைக் கேட்கிறேன்.
மல்லிகை மே 2009 * 12
 
 

"நீ படிக்கிற எண்டால் படி! ஆனால், செலவைக் கூட்டாமல் ஒரு வழி பாத்தியண்டால் சரி” என்கிறார்.
அடுத்த நாள் அங்கு போன போது சூழல் மிக அமைதியாய் இருந்தது. வரவேற்பாளர இருக் கச் சொல்லிவிட்டு, தொலைபேசியில் கதைத் துக் கொண்டு இருந்தார். சுற்றிப் பார்க்கிறேன. அடுத்த அறையில் சிலபேர் நிண்டு ஏதோ மின் கணினியில் செய்வது தெரிகிறது. தொலைபேசி மட்டும் அடிக்கொரு தடவை மணிச்சத்தம் ஒலிப் பித்துக் கொண்டேயிருந்தது. இருபது நிமிடங் களின் பின், கவுன்சிலர் வந்தார். வந்ததும “வாருங் கள்” என்று தன் அறைக்கு அழைத்துக கொண்டு போனார்.
"நீங்கள் கோல் சென்ரரில் வேலை செய்தீர் கள் என்று சொன்னார்கள். நாட்டின் இன்றைய பொருளாதார நிலையில் தொழிலதிபர்கள அதிக லாபம் பெற மலிவான வேலையாள் தேடி வெளியே போவது வழமையாகி விட்டது அதனால் தொழி லைத் தெரிவு செய்யும் போது, எப்போதும இந்த
நாட்டுக்குத் தேவையானதாகத் தெரிவு செய்து
அதில் பாண்டித்தியம் பெற்று விட்டால் தொழி லின் எதிர்காலத்துக்குப் பயப்படத் தேவையில்லை. நீங்கள் நல்ல முடிவு தான் எடுத்திருக்கிறியள். இங்கே எல்லோரும் அதிகமாய் மின்கணினி பாவி க்கினம். ஆனால், எல்லாருக்கும் அதைத் திருத் தத் தெரியாது. அதே போல் மின்கணினி இருக் கிற இடமெல்லாம் நெற்வேக் இருக்கிறது. அதை பராமரிக்க எப்படியும் ஒரு நெற்வேக் நிர்வாகி தேவை. இந்த இரண்டுக்கும் இங்கே பயிற்ச்சி நடக்கிறது. எது செய்ய யோசிக்கிறியள்?"
"அதுக்குத் தான் உங்களிடம் ஆலோசனை கேட்க வந்தேன். எது சுலபமாக முடிக்கலாம எது முடித்தால் ஒப்பீட்டளவில் தொழில் வாய்ட்பு அதிகம்"
“இரண்டுமே நல்லது தான். மின் கணினி யின் பாகங்கள். அது தொழிற்படும் முறை என் பன பற்றிப் படித்தால், அது சம்பந்தமான வேலை களில் அதிமாக இடத்துக்கு இடம் போக வேண் டிய தேவை இருக்கும். பொருள்களைக் காவ வேண்டி இருக்கும். பொம்பிளைகளுக்கு கொஞ் சம் கஷ்டமாயிருக்கும். மென்பொருள் படித்தால் அலுவலக வேலை. நெற்வேக் பராமரிக்கிறதும் அதில் வாற பிரச்சனைகளைத் தீர்க்கிறதும்
தான் வேலையாக இருக்கும். அதோடை படிக் கிற காலமும் செலவும் இரண்டுக்கும் வித்தி யாசம், மென்பொருள் படிப்பதற்கு இரு மடங்கு செலவு வரும்” என அவற்றினுடைய விபரங்க ளைக் காட்டினார்
"ம். யோசித்துப் போட்டுச் சொல்கிறேன்."
"சரி நீங்கள் வேலையில்லாதவர்களுக்கான காப்புறுதி (யுஐ) எடுக்கத்தானே போறியள். இங்கை படிக்க என்று நீங்கள் முடிவெடுத்தால் அந்தக் காசுக்கு நாங்கள் இரண்டையும் உங்க ளுக்கு படிப்பித்து விடலாம். நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்கத் தேவையில்லை கன பேர் எங்கள் மூலம் வேலை எடுத்திருக்கினம் வேலைக்கு பிரச்சனை இல்லை.”
"அப்ப வகுப்பு எந்த நேரம்?
“சனி ஞாயிறுகளிலும் இருக்கிறது இரவு களிலும் இருக்கிறது."
“எனக்கு அப்படி வர முடியாது வர நாடகளில் பகல் வகுப்புக்கள் என்றால் தான் வரலாம்."
"ஒ. அப்படி உங்களுக்கு வர முடியாதா?”
"ஒம் எனக்கு சின்னப் பிள்ளைகள் இரண்டு பேர் இருக்கினம் அவை பாடசாலையிலை இருக் கேக்கை தான் நானும் படிக்கலாம்."
"சரி. அது பிரச்சனையில்லை இரண்டு கிழமை யிலை பகல் வகுப்பும் தொடங்க இருக்கிறம்.”
வகுப்பு சொன்ன மாதிரி இரண்டு கிழமை யிலை தொடங்கவில்லை. ஆறு வேறு பட்ட பாடங்கள் இருந்ததால் வரவேற்பாளர் புதிதாகத் தொடங்கும் இரவு நேர வகுப்புகளைச் சொல்லி அழைத்துக் கொண்டேயிருந்தார். பகல் வகுப்பு என்றால் தான் நான் வர முடியும் என்று நான் உறுதியாய் சொல்லிவிட்டேன். கடைசியாக ஒரு மாதத்தின் பின் அழைப்பு வந்தது. நான்கு நாட்கள் தொடர்ந்து வகுப்புக்கள் நடந்த பின் ஐந்தாம் நாள் வகுப்புக்கு படிப்பிப்பவர் கோட்இ சூட் எல்லாம் அணிந்து வந்திருந்தார். வகுப்பு க்கு வந்தவர்க்ளின் எண்ணிக்கையும் குறிப்பிடத் தக்க அளவில் அதிகமாக இருந்தது
பக்கத்திலிருந்த பெண்ணிடம் இன்று தானா ஆரம்பித்திருக்கிறீர்கள? எனக் கேட்கிறேன்.
மல்லிகை மே 2009 ல் 13

Page 9
இல்லை. நான் சனி ஞாயிறு வாறனான். சின்னப் பிள்ளைகள் இருக்கினம். சனி ஞாயிறு அவர் நிற்கிறதாலை அவர் பாப்பார்" என்கிறார். பின்னு க்கு இருந்த ஆணிடம் "இதுவா முதல் பாடம்" என்கிறேன். "இல்லை புஜ அப்புறுங் பன்னி முதலே தொடங்கியிட்டன் பகலிலை வேறை வேலை செய்கிறதாலை இரவு தான் வாறனான்" என்றார். "வேலையா?" என நான் ஆச்சரியப்பட "முதல் கம்மா கையிலை காசு வாங்கிற வேலை" தான் என்றார்.
முன்னுக்கிருந்த பெண்ணிடம் "இனி பகல் வகுப் புக்கு வருவீர்களா" என்ற போது, "இல்லை இரவு வகுப்பென்றால் இவர் காரில் கொண்டு வந்து கூட்டிக் கொண்டு போவார் அது சகம் இன்றை க்கு யுஜ லிருந்து வருகினம் என்ற படியால் தான் வந்தனான்" என்கிறார்
றுப்போது தான் எனக்கு என்ன நடக்கிறது எனப் புரிந்தது. பு: விருந்து வந்தவர் எஸ்ாம் படித்திருக்கிறா, சொன்னபடி நடக்கிறார்களே என்ற போது, போய் சொல்வதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்ல்ை
அடுத்த கிழமையும் பகல் துெப்பு நடந்தது. ஆதன் பின் வகுப்புக்கு வந்த ஆசிரியர் "அத்ேத பாடம் செவ்வாய், வியாழன் இரவுகளில் நடக் சூழ்" என்ரர் "அப்போ எட்ப இனி பல வகுப் ןr என நான் கேட்டபோது தனக்குத் தெரியாது என்றும் அலுவலகத்தில் கேட்கும் படியும் சொன் ாைர் அலுவலகத்தில் இருந்தவர் பத்திரிகை வாசி த்துக் கொண்டிருந்தார். நான் போய் முன்னுக்கு நின்றதும் என்ன விடயம் என்றது போஸ் நிமிர் ந்து பார்த்தார்
"அடுத்த பாடத்திற்கான் பகல் வகுப்புக்கள் எப்ப ஆரம்பமாகின்றன"
'பகல் வகுப்புக்கு ஆட்கள் காணாது இரவு வரமுடியாவிடில் சவி ஞாயிறு பகல் நடக்கும் வகுப்புகளுக்கு வரலாம் தானே"
நான் முதலேயே தெளிவாகச் சொன்ன ாைன் எனக்கு வார நாட்களில் தான் பகல் வகுப்புக்கு வர முடியும் என்று பிள்ளைகளை lட்டில் விட்டு விட்டு வேறு நேர விதுப்புகளுக்க என்னால் வர முடியாது."
பூஜ்ஜிதே பே
“பொதுவாக இங்கே பகல் வகுப்புக்கள் நடக்கிறேல்லை எங்களுக்கு முழு நேர ஊழிய ரகளை வைத்திருக்க கட்டாது. சென்ற இரண்டு நிழபையும் அந்த ஆசிரியர் தன்னர வேலைக்க வீண்பு போட்டு வீட்டுத்தான் வந்தவர்."
எனக்கு அவர்களின் நடைமுறையில் மீது ந்த கோபம் வந்தது என்ன நம்ப வைத்து ஏமாற் ரீப் போட்டு ஆதற்கு எந்த விதத்திலும் வருத்தம் காட்டாமஸ் கதைத்ததைப் பார்க்க எரிச்சலாக இருந்தது.
"அது உங்கண்ட பிரச்சனை. ஆனா, நீங்கள் சொன்னதைச் சேய்ய வேணும். இப்படித் தெரிந் திருந்தால் நான் இங்கை படிக்க வந்திருக்க LITL Lil.
அந்த நேரம் வந்த கவுன்சிலர் என்ன பிரச் சனை என்று கேட்டுப்போட்டு. "சரி வாறகிழமை வாங்கோ பார்ப்பம் பகல் வகுப்பு நடக்க முயற்சி சேய்கிறம்" என்கிறார்.
"நான் முதலேயே என்னுடைய நிலைமை பற்றி உங்களுக்குச்சொன்னனான். தொடங்கி னதை நான் முடிக்கவேனும் நீங்கள சொன்ன படி செய்யவேனும்" என்று சொல்லிப்போட்டு வெளியே வர "நல்லாய் கதைத்தியள் நானும் பகஸ் வகுப்புத்தான் கேட்டனான்" என்றாள் கூட வகுப்பில் இருக்கும் ப
"பிள்ளைகளை வளர்க்கிறதிலை இருக்கிற எங்கணட பிரசனை அவைக்கேங்கை தெரியது? கம்மா காசு வங்கும் வரை எல்லாம் சரி என்று சொல்லுவினர். பிறது. எனக்கு சொல் லும் போது கண் கலங்கியது.
"இவை இப்படித் தான் சொல்லுற எல்லாம் பொய் வோன எடுத்துத் தாறது என்று சொல் லுறது கூடப் போய் தானாம் வேல்ை கேட்டுக் கேட்டு எல்லாரும் களைத்துப் போய் இயலTIள் கைவிட்டிரதாம்."
என்ன நாகழ்டபோ இப்படி இங்கே வந்து மாட்டுப்பட்டிருந்றேன், ஒவ்வொரு பாடத்துக்கம் ஒபடிப் போட முடியுமா? சொன்ன பல்ப் விதப்பு நடக்குமோ என்னனோ" என கவனப் பட்டுக் ஜார், டேட் ருேந்தில் ஏறிய போது பங்க தில் எந்தந்தான் மனோ
2009醉14

"அந்த மாதிரி வாதிட்டியள். உங்கடை புரு ஷன் பாவம், வீட்டிலை என்ன பாடு படுகிறாரோ என்று கதைக்கிறாங்கள்"
"என்ரை புருஷனுக்கும் இதுக்தம் என்ன தொடர்பு"
"இல்லை இப்படி இங்கே கதைக்கிறனியள். வீட்டில் எப்படி இருப்பியன் என்று தான்" எனக்கு இப்ப கோவமெஸ்ஜா மனோவின் மேல் திரும்பியது.
"என்ன கதை கதைக்கிறியள்? அவை செய்தது சர்போ' நான் என்ன நம்பிக் காசைக் கட்டிப்போட்டு கடைப்பட வேணுமோ?"
"இல்லை எங்கம்1 எப்போம் கவிதக்க
மனுசிமார் இப்படி LITT LI LạERJİLİ......... ՀյԼենIIT.
எங்களுக்கு உங்களைப் போல போர்பினை களைத் தான் பிடிக்கும்." இப்ப அவன் வழிந்தான்.
"ஒ உங்களுக்கு பிடிக்கும் என்று நான் என்ன புருஷனிலை அனுதாபப் பட்டனியளோ? இது தான் எங்கடை சமூகத்தின்னர பிரச்சனை. பொம்பிmளகளுக்கு கோபம் வரக்கூடாது. பதுமையாய் சொல்லுறதை எல்லாம் அனுசரித் துப் போகவேணும். இல்லாட்டில் நாங்கள் ஆணவம் கொண்டனாங்கள் அகங்காரிகள் என்று பெயர் வைச்சிடுவியள் என்ன"
மேலும் அவனுடன் கதைக்கப் பிடிக்காமல் ஒரு புத்தகத்தினுள் என்ளே நுண்புத்துக் கொள்கிறேன்.
acLccL0L0eLeHkeeeLeLeeL00L0kLLeLLeeLeLeLLLLLLLL0L0LL0L0kL0G0kT0kGLLLL0LLLLeTT
i *فہ
வாழ்த்துகின்றோம் ஆே
மல்லிகை வளாகத்துள் வசிக்கும் திரு. ELD). Shepherd Fernand (og Eufr +5 வின் புத்திரன் செல்வன் Saffr01 அவர்க ளுடைய முதலாவது பிறந்ததினம் 23.04.2009 அன்று கதிரேசன் வீதி, விஷ்வகர்ம சங்கத் t தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பலர் நேரில் வந்து வாழ்த்தினர். செல்வன் $affron அவர்களை மல்லிகையும் வாழ்த்துகிறது. மகிழ்கின்றது.
ELEELELLLLLLLLLLLLTLTLLTLLLLLTLLTLLLLLTHLLLLHLLk
- ஆசிரியர் | } } } } } } } }
மல்லிகை மே 2009 + 15

Page 10
രക്ഷേഭ
-i. சிவாரூர்
முந்தியெண்டால் எப்பவாவது ஒரு நாளைக்கு வந்து என்ர அமைதியைநிம்மதியைக் குலைச்சு விட்டுச் சென்று விடும் மனிதக் கூட்டம். இன்றெல்லாம். அடிக்கடி. அடிக்கடி. வந்து என்ரை அமைதிக் கடலில் கல்லெறிந்து விட்டுப் போய் விடுகின்றது. ஒருநாளைக்கு ஒன்டெண்டு இல்லாமல், சிலவேளைகளில் ரெண்டு மூண்டும் வந்து எனக்கு தொந்தரவைத் தந்துவிடுகினம். ஒரு பதினைஞ்சு இருவது வருசங்களுக்கு முந்தியெண்டா, கூன் விழுந்து படுக்கையில் கிடந்து பிராணனை விட்டதுகள் தான் எப்பவாவது வரும். ஆனா. இப்ப கிழடுகளைக் கானேலாது. குஞ்சு குருமன்கள், இளசுகள், குமருகள் எண்டு எத்தனையோ மனிசப் பிண்டங்களை விழுங்க வேண்டிக் கிடக்குது. முந்திக் கிழடுகளின்ர முத்திப் போன எலும்புத்துண்டுகளைத் தான் ஒரு மாதிரித் தின்ன வேணும். கொழுப்புப் பிடிப்பே இருக்காது. ஆனா, இப்ப இளம் உடல்கள் தான். எத்தினையெண்டு தின்னுறது.? பிரதேங்களைத் திண்டு திண்டு அலுத்துப் போச்கது. என்ர நிம்மதியும் போச்சுது. அமைதியான இடமெண்டு ஆறுதலாக் கூத்தாடித் திரியும் அந்தச் சுடலையாண்டி கூட, முந்தின மாதிரி இங்க வாறேல்லை. முந்தியெண்டா, மணிசர் வராத இடம் எண்டு இஞ்ச வாறவராக்கும். இப்ப மனிசங்கள் தினமும் இஞ்ச வாறதால அவங்களுக்குப் பயந்து வாறதையும் நிப்பாடிப் போட்டான் போலக் கிடக்குது. அவன் வந்தா, இதையொருக்காக் கேட்டுத் தெரிஞ்சு கொள்ளவேணும்.
நாட்டில் ஏதோ மாறித்தான் போச்சுது. நானும் முன்னுறு நானுாறு வருஷமாக இந்த இடத்தில தான் இருக்கிறன். அதே அளவில் சற்றும் பெருக்காமல். வாய்தான் பெருக்கவில்லையே தவிர, தின்னிற பினப் பிண்டம் ரொம்பக் கூடித்தான் போச்கது.
நான் நகருக்குள் வாறத்தில்லையெண்டு உங்களுக்குத் தெரியும் தானே. நீங்கள் தான் என்னை அடிக்கடி தேடி வருவீங்கள். வந்தாலும் என்ன?. எனக்கு நீங்கள் ஒண்டும் சொல்லுறதே இல்லையே. முந்தியெல்லாம் கூத்தாண்டியுடன் சேர்ந்து வரும் நிலாப் பிள்ளை ஏதாவது புதினம் சொல்லும். ஊரூராய் திரியுறதுதானே அதுக்கு வேலை. அந்தக் கூத்தாண்டி வராததால, இப்ப அந்த நிலாப்பிள்ளையும் வராமல் விட்டுட்டுது.
நாட்டில என்ன நடக்குது எண்டு நீங்கள் எனக்குச் சொல்லாட்டிக்கும், ஒன்று மட்டும் எனக்கு விளங்குது. நாடு முன் போல, இல்லை. அங்க ஏதோ நடக்குது. நாட்டை ஆள்கிற ஆட்களே இல்லை. ஆரோ தேன்கூட்டுக்குக் கல்லெறியினம். அதுக்குக் காவோலைப்
மல்லிகை மே 2009 தீ 16

பந்தம் பிடிக்கினம். தேன் குடிக்கிறது ஆரெண்டு எனக்குத் தெரியாது தான். ஆனா, பிடிக்கிற காவோலைப் பந்தத்தில புலுண்டிச் சாகிறதுகள் எத்தனை எண்டு எனக்கு மட்டும் தானே சரியாத் தெரியும். உங்களுக்குத் தெரியுமோ..?
நாட்டில ஏதோ குழப்பம் நடந்திருக் குது எண்டு மட்டும் எனக்கு விளங்குது. எனக்கு நீங்கள் எதையுமே மறைக்க ஏலாது. 85ம் ஆண்டு தேப்பனுக்குக் கொள்ளி போட இஞ்ச வந்த கந்தையன் அப்பவே தவண்டு தவண்டு தான் வந்தவன். இப்ப. முப்பது வருசமாகுது. அவன் இன்னும் என்னட்டை வரவில்லை. அவன் உவ்வளவு வரிசம் சாகா மல் இருப்பானோ? ஆனா, இஞ்ச வரேல் லையே!. எனக்குத் தான் போட்டியி ல்லை. நிச்சயமாக என்னட்டைத்தான் வரோனும், அப்ப கந்தையாவுக்கு என்ன நடந்தது? ஆள் உள்நாட்டில் இல் லையோ. இல்லை எனக்குத் தெரியாமல் மண்ணுக்குக் குடுத்திட்டாங்களோ?
முந்தி ஊருக்குள்ள- பல இடங்களில ஒரு தாய்க்குப் பிறக்குறதுகள் எண்டா கூட, கடைசியில என்னட்டைத்தான் ஐக்கியமா குங்கள். இப்ப அப்படியோ? பரம்பரை பரம்பரையா எத்தனை சந்ததியள் இந்த மேட்டில சாம்பலாப் போயிருக்குங்கள். இப்ப என்ரை பக்கம் கொண்டாறதே குறைவு. ஒருவேளை மக்கள் நாட்டில இல்லையோ..?
முந்தியெல்லாம் சுடலை சுடலை எண்டு ஒருத்தனும் தனியா இந்தப் பக்கம் எட்டியும் பார்க்கமாட்டாங்கள். இப்ப
அப்படியோ? உள்ள பத்தையஞக்கை
குமரனும் குமரியுமாய் கட்டிப் புரளுதுகள். இஞ்சதான் ஆட்கள் தொல்லையில்லை யாம். உங்களுக்குத் தெரியாது, செத்த பிணம் தான் இஞ்ச வரும் எண்டு நீங்கள் நினைப்பீங்கள். சிலவேளைகளில், சாகாத துகள் கூட வருங்கள். இரவிரவாய் பெத்துப் போட்டுப் பொலித்தீன் பைக்குள்ள வைத்துக் கொண்டு வந்து இஞ்ச எறிஞ்சு போட்டு ஒடுங்கள்.
ஏதோ ஆமிமாராம். சிங்களவங் களாம். பச்சையில உடுப்புப் போட்ட வங்கள். அவங்கள் தான் இஞ்ச இரவு பகலாய் நிற்கிறாங்கள். அவங்களுக்கு என்னைப் பற்றித் தெரியாதாக்கும். நீங்கள் அவங்களுக்குச் சொல்லுறேல்லையோ, உங்க பேய் பிசாசுகள் எல்லாம் நிக்கு மெண்டு.
ஆனாலும், பாருங்கோ மனிசன் மாறவே இல்லை. நான் பிறந்த நாளில இருந்து கேள்விப்பட்டனான். மனிசனுக்குச் சுடலைக்கு வந்தால் சுடலை ஞானம் எண்டு ஒண்டு வருமாம் எண்டு. அது என் னெண்டால், ஒருவன் செத்தபிறகு சுடலை யில் எரிப்பதைப் பாக்கிறவன், நினைப் பான். பார். எந்தப் பெரிய ஆள். எவ்வ ளவு பட்டம் பதவி. பணக்காரன் இப்படிச் செத்து மல்லாந்து கிடக்கிறானே. uSOOTib 6T6öT60T” u Lub GT6öT60°. கடைசியில ஆர் என்னத்தைக் கண்டது? எண்டு சுடலை ஞானம் பெற்றவங்கள் பல பேர். கொஞ்ச நாளைக்குப் பிறகு, இஞ்ச வரு வாங்கள் வேலிச் சண்டையில சாக்காட்டிப்
போட்டாங்களெண்டு.
தம்பி கடைசியா நான் அவதானித்த
அல்லிகை மே 2009 率 17

Page 11
ஒரு விசயம், சில காலங்களில் மக்கள் ஊரை விட்டு எங்கேயோ போறாங்கள் போலக் கிடக்குது. ஏன் கேக்கிறன் எண்டா, சிலவேளைகளில், வருசக்கணக்கில் இந்தப் பக்கம் ஆட்களையே கானக் கிடைக்காது. எப்பவாவது இருந்திட்டு, இந்தப் பக்கம் வாற நாய்கள் கூட வராதுகள்
. . . . . . . மனிசனுக்குப் பின்னால தானே நாயும் போறது. அவன் ஒடேக்குள்ள நாயும் சேர்ந்து போறதாக்கும்.
போன வருசமெல்லாம் இந்தப் பக்கம் ஆட்களே இல்லை. ஊரில காடு முளைச் சுப் பரவி என்ர நிலத்தையும் ஆக்கிரமிக் கத் தொடங்கிவிட்டுது. நான் பயந்து போனன். எங்க எனக்கும் இடமில்லாமல் போகப் போகுதோ எண்டு. பிறகு கொஞ்சக்
காலத்துக்குப் பிறகு தான் கண்ணிவெடி அகற்றுறவங்களாம். சிவப்புச் சட்டை போட்டவங்கள் வந்து பத்தை வெட்டி என் னையும் ஊரில இருந்து வந்து ஆக்கிரமிச்ச புதர்ப் பத்தையளையும் பிரித்து விட்டவங் கள். அவங்கள் வந்திருக்காவிட்டால்.
ஒண்டு மட்டும் தெரியுது. நாட்டில ஏதோ ஒண்டு நடக்குது. அமுசடக்காகவும் நடக்கிறது தெரியுது
இப்ப நானிருக்கிறதிலை வேலையே இல்லை. கண்ட கண்ட இடங்களிலை யெல்லாம் தான் குட்டிக் குட்டிப் புதைகுழி கள் தோன்றிக் கொண்டிருக்கிதே, அப்ப ஒரே இடத்திலை நானேன் குந்திக் கொண்டு இருக்க வேணும்?
Z=
a
மல்லிகை ஆண்டுச் சந்த சேருபவர்கள்
ஓராண்டுச் சந்தாவுக்குக் குறைந்தது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வங்கித் தொடர்புகளுக்கு:
LLCaL LSLSE 00Laa0S LLLLLL LLLL LLLaLS LltL LLLLLLLLSLLLLLS S 44வது ஆண்டு மலர் தரமான தயாரிப்பு விரும்பியோர் தொடர்பு கொள்ளவும்,காசோலை அனுப்புபவர்கள் 100minie Jeeva எனக் குறிப் பிடவும். காசுக்கட்டளை அனுப்புபவர்கள் 100minie Jeeva. Rotahena, P.0. எனக் குறிப்பிட்டு அனுப்பவும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
201/4, முரு கதிரேசன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி 2320721 ル
மல்லிகை மே 2009 * 18
 

இநீண்டு சிங்ருனச் சிலுருஇது இருஇேடுகுநர்குேதி
இதிரிஞ்g35
انیلہ، 5صکرو۔
தோதென்ன வெளியீட்டு நிறுவனம், இலங்கையின் இருமொழிகளிலும் வெளிவரும் இலக்கியங்களைப் பரஸ்பரம் மொழி பெயர்த்து வெளியிடும்
இத்திட்டத்தில் ஏன் கால் பதித்தோமென்பதை இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளனர்.
"நாம் அநுபவிக்கும் மோசமான யுத்தத்தின் பங்காளியாகவும், துன்பப்படுவோராகவும் மாறியுள்ளோம். இந்த யுத்த நிலைமையை எவ்விதமாகத் தவிர்த்துக் கொள்ளப் பார்த்தா லும், உண்மையான சமாதானத்தை நிலைநாட்ட வேண்டுமாயின், இந்த நாட்டில் வாழும் இனங்களிடையே புரிந்துணர்வு, கெளரவம், அங்கீகாரம், பொறுமை உள்ளிட்ட நற்குனங்கள் கட்டாயமாக விருத்தி படைய வேண்டிய சாதகமான அம்சங்களாகும். வெவ்வேறு இனத்தவர் களின் இலக்கிய வெளிப்பாடுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவ தற்கு நாமெடுக்கும் இம்முயற்சி அதற்கான பகைப்புலத்தை வழங்கு மென நாம் உறுதியாக நம்புகிறோம்."
அயலவர் இலக்கிய வரிசையில் இரண்டு சிறுகதைத் தொகுப்புக் களை வெளிக்கொணர்ந்துள்ளனர். ஒவ்வொன்றும் சுமார் 250 பக்கங் களைக் கொண்டுள்ளது. சிறுகதைகளைத் திக்குவல்லை கமால், எம். எச். எம். பாக்சுத், எஸ். ஏ. ஸி. எம். கராமத் ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர்.
1. கலங்கரை விளக்கமும் ஏனைய கதைகளும்:
பழைய பரம்பரையைச் சேர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களை அறிமுகப்படுத்து வதாக இத்தொகுதி அமைந்துள்ளது.
ரஞ்சித் தர்மகீர்த்தி, கே. ஜயதிலக, சய்மன் நவகத்தேகம, தயாசேன முனசிங்ஹ, சோமவீர சேனாநாயக ஏ. வீ. சுரவீர, லீல் குணசேகர, குணசேன விதான, சோமரத்ன பாலசூரிய, எரெவ்வல நந்திமித்ர முதலான பத்து எழுத்தாளர்களின் பதினெட்டுக் கதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.
2. ராஜினி வந்து சென்றாள்!
இத்தொகுப்பு புதிய பரம்பரையைச் சேர்ந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள்ை உள்ளடக்கியது.
கீர்த்தி வெலிசரகே, கமல் பெரேரா, நிஸ் எங்க விஜேமான்ன, ஆனமடுவே விஜேஸிங்ஹ, அனுலா விஜேரத்ன மெனிகே, சிட்னி மாகஸ் டயஸ், எரிக் அமரகீர்த்தி, சரத் விஜேசூரிய, ஆகிய பத்து எழுத்தாளர்களின் இருபது கதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.
மல்லிகை மே 2009 : 19

Page 12
இரு தொகுப்புக்களிலும் சம்பந்தப்பட்டு ள்ள எழுத்தாளர்கள் பற்றிய விபரக்குறிப்புக் கள் இடம்பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கது.
இருவேறு தலைமுறையினரின் கண் ணோட்டத்தையும், கதைப் போக்கையும் அவதானிக்க இக்கதைகள் பெரிதும் உதவு கின்றன. வெவ்வேறு கோணங்களில் எவ் வாறெல்லாம் படைப்பாளிகள் தம் கவனத்
உட்பக்கங்களில் கவனம் செலுத்திய அள வுக்கு அட்டையில் கவனம் செலுத்தப்பட வில்லைப் போல் தெரிகிறது.
மிகப் பெறுமதியான கதைகளைத் தகுதி வாய்ந்ததொரு குழு தெரிவு செய்துள் எதையும், மொழிபெயர்ப்பாளர்கள் சிரத்தை யுடன் தமது பணியை நிறைவு செய்துள்ள மையும் அவதானிக்க முடிகிறது.
தைச் செலுத்தியுள்ளார்களென்பதையும் அவதானிக்க முடிகிறது.
எழுத்துப் பிழைகளும் சில குழறுபடி களையும் ஆங்காங்கே காண முடிகிறது.
மொத்தத்தில் இவ்விரு தொகுப்புக்க ளும் எமக்கு நல்வரவாகும்.
சிங்களச் சகோதர எழுத்தாளர்களுக்கு ஒரு குறிப்பு
—6ILATLÖ)sJñö5 sé5amr
பDல்லிகை தோன்றிய காலத்திலிருந்தே இந்த மண்ணின் இலக்கியங்களை இரு கூறாகவே நாம் கருதி உழைத்து வந்தோம். ஒன்று சிங்களம். இன்னொன்று தமிழ்.
இந்த இரு இணைப்புக் கொண்ட நமக்கானதுமான தேசிய இலக்கிய வளர்ச்சியும், புரிந்துணர்வும், ஒருமைப்பாடும்தான் இந்த மண்ணைக் கலாசார ரீதியாகச் செழுமைப்படுத் தும் என மெய்யாகவே புரிந்து கொண்டு, கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கலை இலக்கியத்தில் தேசிய ஒருமைப்பாடு என்ற நோக்கத்தில் மல்லிகை செயல்பட்டு வந்துள்ளது.
இது மல்லிகையின் இலக்கியத் தாரக மந்திரமல்ல. மல்லிகை இலக்கிய இதழ் தோன்று வதற்கான பின்னணி விதையாக இருந்து வந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அடிப் படை நோக்கமுமாகவே இந்தத் தாரக மந்திரம் நீண்ட நெடுங்காலமாக மிளிர்ந்து வந்ததும் கூட
ஆரம்ப காலங்களில் சகோதரச் சிங்கள எழுத்தாளர்களின் உருவங்களை மல்லிகை அட்டையில் பதிவு செய்த காரணத்திற்காக, மல்லிகை ஆசிரியர் பொது இடங்களில் திட்ட மிட்டு அவமானம் செய்யப்பட்ட வரலாறும் இவற்றுள் அடங்கும். இருந்தும், இந்த அவமானங் களை நாம் பொருட்படுத்தவேயில்லை. தொடர்ந்தும் நமது தேசிய ஒருமைப்பாட்டுப் பாதையிலேயே நடைபோட்டு வந்திருக்கின்றோம். சிங்கள- தமிழ்- முஸ்லிம் சகோதரத் தோழமையின் மீதுதான் ஒரு நவ இலங்கையைச் சிருஷ்டிக்க முடியும் எனத் தீர்க்கமாக நாம் நம்புகின்றோம். இன்றும் இறுக்கமாகவே நம்பிச் செயல்படுகின்றோம்.
சகோதரச் சிங்கள எழுத்தாளர்களின் உருவங்களை அட்டையில் பதிப்பித்து வெளி யிட்டது மாத்திரமல்ல, அவர்களினது தரமான சிறுகதைகளைத் தொடர்ந்து பிரசுரித்து வந் துள்ளோம். அவைகளைத் தொகுத்து நூல்களாக மல்லிகைப் பந்தல் வெளியீடாகவும்
மல்லிகை மே 2009 3 20

வெளிக் கொணர்ந்திருக்கின்றோம். இங்கு மாத்திரமல்ல, சென்னைப் பதிப்பகத்தைக் கொண்டும் வெளியிட்டுள்ளோம்.
அதையும் விட முக்கியம், முன்னொரு காலத்தில், இனப் பிரச்சினை இறுக்கமடை யாத காலத்தில் பல சிங்கள எழுத்தாளர் களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து, யாழ்ப் பாண மேயர் துரையப்பா தலைமையில் மிகப் பிரமாண்டமான வரவேற்பு உபசார மொன்றையும் உள்ளத் தூய்மையுடன் நட த்தி வைத்தோம்.
இவையனைத்தையும் நாம் முன்நின்று கையெடுத்துச் செய்தது, சிங்கள எழுத்தா ளர்கள் பெரும்பான்மை இனத்தவர் என்ற மனமருட்சி காரணத்தாலல்ல.
இந்த மண்ணை நேசிப்பவர்கள், தமிழ் என்ற காரணத்தால் தமிழகத்தை நாம் என் றுமே கும்பிட்டு வாழ இனிமேலும் தயாராக வில்லை என்ற அருட்டுணர்வுடனேயே நாம் தொடர்ந்து இதனைச் செய்து வந்தோம். முடிவாகப் பார்த்தால், இந்த நாட்டுப் பேரின வாத அரசியல்வாதிகள் சகோதரத் தமிழர்க ளைக் கணித்து நடத்துவது போல, நீங்க ளும்- சிங்கள எழுத்தாளர்களும்- எங்களது நல்லெண்ண உழைப்பைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளிர்களோ என்ற நியாய மான அச்சம், நமது நெஞ்சங்களில் இன்று மெல்ல மெல்ல அரும்பிக் கொண்டு வரு வதை இன்று நாம் துலாம்பரமாக உணரத் தலைப்பட்டுள்ளோம்.
ஒன்றை நாம் தெளிவாகப் பதிவு செய்ய விரும்புகின்றோம். அரசியலில் சிங்கள மக்கள் இந்த மண்ணில் பெரும்பான்மை யினர் என்ற மிதப்பில் அணுகுவதைப் போல, இலக்கியத்துறையில் தமிழ்ப் படைப்பாளிக ளைத் தயவு செய்து அணுகாதீர்கள். இந்த நாட்டுக்குள்ளே சிங்களம் பெரும்பான்மை யோர் மொழி உண்மை. இந்த நாட்டைக் கடந்து சிந்தித்தால் இன்று தமிழ்- சர்வ தேசத்துப் பாஷை.
இந்த மண்ணில் பிறந்த தமிழ் எழுத்தா என் இன்று புலம் பெயர்ந்து சர்வதேச எழுத்தாளனாகத் தன்னைத் தானே உரு வாக்கிக் கொண்டு வருகின்றான்.
இலங்கையில் வெளிவரும் தமிழ் நூல் கள் இன்று கனடா, அமெரிக்கா, அவுஸ்தி ரேலியா, லண்டன், பிரான்ஸ், டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளுக்குள் பிரவேசித் துக் கொண்டிருக்கின்றன.
என்னதான் வானுயரப் பறந்து கொக்கரி த்தாலும், இந்த மண் எங்கள் சொந்த மண். சிங்கள எழுத்தாளர்கள் எங்களது சொந்த மண் னைச் சேர்ந்த சகோதரக் கலைஞர்கள். அவர் கள் எங்கள் உணர்வுகளைத் தெரிந்து கொண் டும், நாம் அவர்களினது உணர்வுகளைப் புரி ந்து கொண்டும் பரஸ்பரம் விட்டுக் கொடுத் தால்தான், எதிர்காலத்தில் ஒரு நவ இலங் கையை உருவாக்கலாம். உருவாக்குவோம். பெரும்பான்மை இனத்துப் படைப்பாளி கள் என்ற ஒரேயொரு காரணத்தை முன் வைத்தே, அரசாங்கங்களிடம் பல சலுகை களை நீங்கள் பெற்றுக் கொள்வதை நாமறி வோம். இதை மனசாரவே வரவேற்கின்றோம். அதே சமயம் தமிழ்ப் படைப்பாளிகளும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே? ஏன் நமக்காகவும் குரல் கொடுக்கக் கூடாது? அல்லது அணுகும் வழிமுறைகளைச் சொல் லித் தரக் கூடாது?
உண்மைக் கலைஞனுக்கு எந்த மொழி பேசினாலும், எள்ளளவு கூட இனத்துவேஷம் வரக் கூடாது. அந்த மனப்பான்மையே உண் மைப் படைப்பாளிக்குச் சத்துரு
இத்தனை தேசிய இன நெருக்கடிக ளுக்கு மத்தியிலும், நாம் இதைத் தெளிவா கப் புரிந்து வைத்துள்ளோம்!
அதனால் தான் கடந்த அரை நூற்றா ண்டுகளுக்கு முன் காலமாக மல்லிகை என்ற இச் சிற்றேட்டைப் புலம்பெயர்ந்தும் கூட, பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கூடத் தொடர்ந்து நடத்திவர முடிகின்றது.
மல்லிகை மே 2009 & 21

Page 13
C ബം சாரங்கன் 8ിജ്ഞ
Asடுக்களில் து தெரு"ேேேதுவம்
தனிழை நிறைந்த
இரவுகளை இனிமையாக்கிய
தேவதையே!
பருவம் பார்த்து என் மனதில் பதிந்து போன முதல் மழையே.
கர்வமில்லா புன்னகையால் எந்தன் கவலை நீக்கும்
பெண்- நிலவே.
நான் நொருங்கி அழும் போதுகளில் நெருங்கித் தேற்றும்
பூ- விதையே.
சோகம் என்னைத் தொட்டால் போதும் சொக்கத் தங்கம் நீயும் அழுவாய்.
என்னை எனக்கே
தெரிய வைத்தாய் எனக்குள் உன்னை பதியம் வைத்தாய்
இரவும் பகலும் உன் நினைவால் அலைந்து திரியும் அவலம் தந்தாய்.
உறக்கம் தொலைத்த என் இரவுகளை உன் இரக்கம் கொண்டு நிரப்பி வைத்தாய்.
தேவதை எந்தன் தேவைகளைத் தேடித் தேடிச் செய்கின்றாய்.
இதனால்
என்றும் எனது தெருக்களிலே அன்பே உனது arsió ofensió.
மல்லிகை மே 2009 * 22

ரது ஆக்னூ//%
உயிருக்குள் வாழும்
ன்ெ உயிரே
உன் வரவுக்காய் ைெது தெருக்கள் விழித்துக் கிடக்கிறது.
உன் தாயின் வயிற்றுக்குள் நீ யோரும் விளையாடீடுக்களை இப்uேnதுகளில்
நானும் உன் தhயுமnய் ரசீத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
நீ மகnை? மகளா? துெ uந்நிய கவலையும்
மெக்கில்லை
என்ன பிள்ளையென்றாலும் நீலம் பிள்ளை.
உனக்காக த்ெதனையோ உறவுகள் காத்துக் கிடக்கின்றன இங்கே.
நீ எப்uேnது வருவாய்? உன்னைத் தூக்கிக் கொஞ்சும்
அவnவில் உன் தாய்
உறக்கம் தொலைத்து அலஸ்தைப்படும் நிஜம் 6–9św. Dnuunil
வெறும் தொடுகை
உரிைவிnைல் உன்னை ஸ்ரீவித்து
சந்தோசம் அடையும் னெக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது, உன்னைப் UMக்க
உனக்காக நாங்கள் காத்திருக்கின்றோம். கரு உலக உறவுகளிடம்
விடை uெற்று
துரிதமாய் வறப்Unர்.
உன்னைத் தூக்கிக் கொஞ்ச் ஆசையாக இருக்கிறது.
மல்லிகை மே 2009 & 23

Page 14
வாரணம் ஆயிரம்' திரைப்படம் வாழ்வின் அநுபவங்களை இரைமீட்கிறது.
-பிரகலாத ஆனந்த்
கெளதம் மேனனின் 'வாரனம் ஆயிரம்" திரைப்படம் ஒர் இனிய அநுபவமாக
மனதில் பயணிக்கிறது. கலை அம்சமும், படைப்பாற்றலும் அதீதமாக மிதக்கின்ற இப்படத் தில் நடிப்பும், இசையும் கூடச் சிறப்பாக அமைந்துள்ளதனால், ரசிகர்களின் மனதை ஈர்ப்பதுடன், சிறந்த ஒரு திரைப்படமாகவும் மிளிர்கிறது.
இரண்டு இனிய காதல் கதைகள், தந்தை மகன் உறவு என மூன்று கதைகளடங்கிய ஒரு குடும்பத் திரைப்படத்தில், சில மசாலாத் தனங்களை நீங்கியிருப்பின் இத்திரைப்படம் சர்வதேசப் போட்டிகளில் கவனிப்பைப் பெற்றிருக்கக் கூடிய திரைப்படமாக அமைந்தி ருக்கும்.
மிக மோசமான திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்ச் சினிமாவில் அவ்வப்போது, சில குறிப்பிடத்தக்க திரைப்படங்களும் வரத்தான் செய்கின்றன. அந்த வகையில், கடந்த வருடத்தில் 'அஞ்சாதே", "ராமன் தேடிய சீதை', 'வெள்ளித்திரை", "சுப்பிரமணியபுரம்", "அபியும் நானும், தசாவதாரம்', 'வாரணம் ஆயிரம் போன்ற சில திரைப்படங்கள் ஒரளவு தேறுகின்றன. இவற்றில் வாரணம் ஆயிரமும், 'சுப்பிரமணியபுர மும் சற்று மேலோங்கி இருக்கின்றன.
*வாரணம் ஆயிரம் படத்தின் நாயகன் சூர்யாவுக்குத் தந்தை மகன் என்று இரு வேடங்கள். இரண்டையுமே வெகு சிறப்பாகச் செய்துள்ளார், சூர்யா. மகனின் காதல் கதையூடே மகனுக்குச் சொல்லப்படும் தந்தையின் காதல் கதை. மகன் சூர்யா - மேக்னாவுக்கிடையிலான காதல் கதையின் சுவாரசியம், அப்பா சூர்யா- சிம்ரன் காதல் கதையில் இல்லாமல் போனதற்கு சிம்ரனின் உருவப் பொருத்தமின்மை மட்டும் காரண மல்ல. மகனின் காதலில் இருக்கின்ற புதிய அணுகுமுறையும், நடிப்பும் அப்பகுதியை
மேன்மையுற வைத்துவிடுகிறது.
சூர்யா ஒரு நடுத்தர வர்த்தகக் கல்லூரி மாணவன். படிப்பை விட இசையிலே ஆர்வம். கிற்றாரும், இசையுமாக வாழ்பவன். வகுப்பில் பின்நிலை மாணவன் (படிப்பில் மட்டும்). விடுமுறையில் செல்லும் போது, ரயிலில் மேக்னாவைக் கண்டதுமே காதல். அவளோ பணக்காரி, படிப்பில் முதல் நிலை மாணவி, அழகி, தனது காதலை சூர்யா அவளிடம்
மல்லிகை மே 2009 & 24
 
 

தெரிவிக்கும் விதமும், அதன் தொடர்ச்சி யாக அவர்களுடைய சந்திப்புக்களும், இன்றைய இளைஞர் யுவதிகளின் கால
கட்டத்தையும், வாழ்வு முறையையும் " வெகு நேர்த்தியாகக் காட்டுகிறது. பேசிப்
பழகாமல் கண்டதும் காதல் எனப் பிதற் றும் அவனிடம், உனக்கு ஏற்பட்டிருக்கும் உணர்வு காதலல்ல, காமம் என அவனை நிராகரிக்கிறாள்.
அவளது கூற்றை மறுக்கும் சூர்யா, தனது காதல் தூய்மையானது என்றும்,
நிச்சயம் அவளை மறுபடி சந்திப்பதாகவும்
கூறிச் செல்கிறான். சொன்னது போலவே, ஒரு வாரத்துக்குள் அவள் வீட்டின் முன் வந்து நின்ற போது, அவள் திணறிப் போகி ன்றாள். அவளோடு பழக விரும்பும் அவனது எண்ணம் நிறைவேற முடியாமல், அவள் அடுத்த வாரமே மேற்படிப்புக்காக அமெரி க்கா சென்று விடுகிறாள்.
இத்திரைப்படத்தில் அப்பா மகன் உறவு இரு நண்பர்களைப் போன்று வெகு இயல்பான, பாசப்பிணைப்பாக இருக்கின் றது. அப்பா, மகன் பாசப்பிணைப்பே இன் னொரு கதையாக மிளிர்கின்றது. ஏற் கனவே தந்தை மகன் உறவு பற்றிச் சில தமிழ்ப் படங்களில் காணக் கிடைத்தது. சிவாஜியின் "தெய்வமகன்', 'தங்கப் பதக்கம்' கமல் சிவாஜி உறவில் "தேவர் மகன், சரத்குமாரின் சூரியவம்சம் இவற் றில் எல்லாம் இவ்வுறவுகளைத் தரிசித் தோம். இவற்றிலிருந்து மாறுபட்டு வெறும் கீற்றுப் போல் அன்றி, இவ்வுறவு ஆதார சுருதியோடு ஒரு பிரதான கதையாக மிளிர் கிறது. சிறுபருவம் முதல் தந்தையைத் தனது ஆதர்ச மனிதனாக, ஆளுமையை
உருவாக்குபவனாகப் பார்க்கின்ற மகன்தந்தை உறவு அற்புதமாக இத்திரைப் படத்தில் அமைந்திருக்கிறது.
பின்னர், தனது காதலியைத் தேடி அமெரிக்கா செல்ல தந்தையின் அனுசர ணையுடன் செல்லும் மகன் அங்கு காதலி யைச் சந்தித்த போது, அவளுக்கு வியப்பு ஏற்படுகிறது அங்கு அவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்குகிறார்கள்- வெறும் நண்பர்களாக மட்டும் பழகுகிறார்கள். நாய கன் தனது காதலில் இன்னமும் உறுதி யாக இருப்பதை உணரும் அவளும், அவ னது காதலை ஏற்றுக் கொள்கிறாள். இதற் குப் பின்னர் அவளுடன் ஒரே அறையில் தங்கத் தயங்கும் அவனது மனநிலை யதார்த்தமாக இருக்கிறது. காதல் வயப் பட்ட இருவரும் காதலராகப் பழக முன் னரே, விதி சதி செய்து விடுகிறது. அமெரிக் காவின் பென்ரகன் கட்டடத் தாக்குதலில் அவள் உயிரிழக்கிறாள். அருமையான ஒரு காதல் கதையின் முடிவுடன் இடை வேளை வருகிறது. ஆனாலும், படம் முடிந்துவிட்ட மனநிலையில் மனது அத னோடு ஒன்றிப் போகிறோம்.
இடைவேளைக்குப் பின் வரும் கதையோடு மனது ஒன்ற முடியாமல், மனது முன்னைய கதையோடு ஒன்றிப் போயிருக்கிறது.
காதலியின் பிரிவோடு தாய்நாடு திரும்பும் நாயகன் துயரில் போதை வஸ்துக்கு அடிமையாகின்றான். மீண்டும் தந்தையின் நட்பான உறவால் அதிலி ருந்து விடுபடுகின்றான். தந்தை, மகன் என இருபாத்திரங்களிலும், சூர்யா பிரமாதமாக ஜொலித்து மனதை ஈர்க்கின்றார்.
மல்லிகை மே 2009 & 25

Page 15
இராணுவத்தில் இணையும் மகன் சூர்யா, அவனைக் காதலிக்கும் உறவுப் பெண் என புதிய கதை மசாலாத்தனமா னது. எனினும், படப்பிடிப்பு பிரம்மாதம்.
குழந்தையைக் கடத்தல், சூர்யா தனிமனிதனாகப் போய் மீட்டல், சண்டைக் காட்சிகள் என்பன எல்லாம் வழக்கமான தமிழ்ச் சினிமா ரகம், சாதாரண ரசிகர்க ளைக் கவர இம் மசாலாக்கள். எனினும், இது இப்படத்தின் உயர் மதிப்பினைத் தாழ் வுற வைக்கின்றது. பயங்கரவாதம் என் றால், புலிகள் என்று எமது நாட்டில் சொல் லப்படுவது போலவே, எதற்கெடுத்தாலும், இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் குறை சொல்வது இந்திய வழக்கம். கெளதமனும் இதற்கு விதிவிலக்கில்லாமல் குழந்தை யைக் கடத்துபவர்களை முஸ்லிம்களாகக் காட்டியுள்ளமை நெருடுகிறது.
இறுதியில் தனது காதலில் வெற்றி காண்கின்ற இரண்டாவது நாயகியும் நடிப்பில் சோடை போகவில்லை. சூர்யா வின் மனமாற்றமும் இயல்பாக வடிவ மைக்கப்பட்டுள்ளது.
கடைசியில் தந்தையின் மரணச் சடங்கிற்கு வரும் மகன்- மனம் சோகமாய் மனதை அழுத்திட நாமும் திரையரங்கை விட்டு வெளியேறுகிறோம். மனம் சில கண நேரங்கள் அங்கேயே நிற்கிறது.
படத்தின் இசை, பாடல்கள், தாயாக சிம்ரனின் நடிப்பு, ஒலி, ஒளிப் பதிவுகள், எடிட்டிங், கமரா என்று எல்லாம் குறை யின்றி நிறைவைத் தருகிறது.
தமிழில், எனது கணிப்பீட்டில் கடந்த வருடத்தின் சிறந்த படம் "வாரணம் ஆயிரம்', சிறந்த நடிகன் சூர்யா, சிறந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்
மல்லிகை மே 2009 தீ 26
 

நானும் எங்கடை அப்பப்பாவும்
6இ) o தலைவாசல் திண்ணையில இருந்திட்டம்.
29 அவர் உரலுக்கை பாக்கு இடிச்சார்.
வாற கிழமை மயிலப்பூதர் படை
一因。 வினோதர60 யல் பெரிய ebLo.
மெழுகிக் கொண்டிருந்தா. மயிலப்பூதர் கதையை அப்பப்பாட்டையிருந்து நான் 'விடுப்புப் புடுங்கிக் கொண்டிருந்தன்.
அந்த நேரம் பார்த்து 'அது' எங்கடை ஒழுங்கையில இறங்கிற்று. தலையில ஒரு
துண்டு கிடக்குது. இல்லையில்ல மூண்டு வருசமா அதைத்தான் வச்சிருக்குது. கையில
வாழப்பழம், தேசிக்காய், வெத்திலை எல்லாம் கொண்டுதான் வந்து கொண்டிருக்குது.
'அது' எங்களிட்ட வந்தாலும் எண்டதால, அப்பப்பா வேறபக்கம் முகத்தைத் திருப்பினார்.
வெளியில சொன்னாலும் வெக்கம். 'அது' எங்களுக்குச் சொந்தமாம். இரத்த உறவில்லை.
saw as "لالي ......... لالقة" ........ a a a 'மூதேவி . மூதேவி".
a a 'சிவம் . சிவம் .' என்று சொல்லிக் கொண்டே வருகுது.
"இதின்ரை கலியாணம் நிலபாவாடை விரிச்சு வலு பெரிசாச் செய்ததாம். இப்ட மூதேவி வாலாயமாம். தன்ரை மனிசியிலதான் முதன்முதல்லை பழகினதாம். பத்துட பிள்ளையஞம் பிறந்ததோட மனிசி செத்துப் போச்சுது. பத்தில மூத்ததும் கடைசியும் இரணை, தாயத்தின்னிப் பிள்ளையளா இருந்து, வயது வர ஒவ்வொண்டும் ஒவ்வொரு பக்கத்தால போட்டுதுகள்.
இப்ப இது மட்டுந்தான். வீட்டுக்கு முன்னுக்கு உள்ள தென்னங்காணிக்கை ஒரு கொட்டில். அதுக்கை தனியத்தான் இருக்குது. சொந்தக்காரர் ஆரும் தலை நீட்டுறதில்லை. ஆனா, பக்கத்து ஊர்களிலயிருந்து செய்விக்க' 'இதிட்ட ஆக்கள் வாறதுகள். 'அது' எங்கடை வீட்டையும் அடிக்கடி வரும். "ஒருவாய் வெத்திலை தா!' எண்டும் கேட்கும்.
வெத்திலை இல்லாட்டிலும், அதுக்காக வாங்கி வைக்கிறதை அப்பா வழமையாகக் கொண்டிருந்தார். அவருக்குப் பயம். சித்தப்பாவுக்கு 'அது' செய்த வேலை எங்களுக்கும் செய்திட்டால்...? வெத்திலை இருப்பத்தைஞ்சு சதம் வித்த காலத்திலையும் அதுக்காக ஒரு கீறு எண்டாலும், வாழைத்தடலுக்கை ஒழிச்சு வைக்கிறதை நான் கண்டிருக்கிறன். இல்லாட்டில், "ராசா ஒரு பத்துரூபா தா!" எண்டு விடியக் காலமையே வந்து நிக்கும்.
வீட்டுக்குப் பின்னால நாவல் கேணிக் குளத்தில மீன் பிடிக்கக் கரப்புக் குத்தும். ரண்டு மூண்டு மீன் ஆப்பிட்டாலே கொண்டு போய் பொரிச்சு மணக்கும். போன கிழமை வத்துத் தண்ணிக்கை செத்துக் கிடந்த விராலையும் தூக்கிக் கொண்டு போனதாக அப்பப்பா சொன்னவர். தூரத்தில ஆற்றையோ வீட்டுக் கரையால பாம்பு போன அடி கிடந்த
மல்லிகை மே 2009 & 27

Page 16
தாம். அதுகள் "இதோட நல்ல மாதிரி. இதைக் கூப்பிட்டுக் காட்ட. அந்த அடி மண்ணை அள்ளிக் கொண்டு வந்து ஏதோ செய்ததாம். அடுத்த நாள் பாம்பு அந்த இடத் திலேயே செத்துக் கிடந்ததாம். அதோட இப்ப "துப். துப்.” வேலை கூடிப் போச்சு.
காலம வெள்ளன கொக்கத்தடியோட தாவித் தாவித் திரியும். நரம்புகூடக் கறுக் காத முட்டுக்காயளைப் புடுங்கி உரிக்கும். பொச்சும் ஒழுங்கா வராது. இடுங்குப்படும். பத்துப் பதினைஞ்சு புடுங்கினால் அதுக் குப் பரம திருப்தி. கொண்டு போய்க் கடை யில குடுத்திடும். இரவு நல்ல ஏத்தத்திலை வரும். இரவிரவா ஏசிக் கேட்கும். அல்லது பாட்டுப் பாடிக் கேட்கும்.
இது எங்கினையோ மருதங்குளத் தில தான் பழகினதாம். ஆரோ சாமிதான் இதின்ரை குரு. அங்கையும் சாமியை ஒரு தரும் எதிர்க்கிறதில்லை. ஏதேனும் திருப் பிக் கதைச்சாலே வாய்க்கட்டுத்தான். இப்ப இதுக்கும் மருதங்குளத்துக்கும் பன்னி ரண்டில வியாழன். மருதங்குளம் ஆரு க்கோ ஏவிவிட, இதுதான் மருந்து விழுத் தினதாம். அண்டையிலிருந்து ரண்டுக்கும் சரிவாறத்தில்ல. மருதங்குளத்துக்கு ஏவத் தான் தெரியும். "இதுக்கு ஏவவும் தெரியும். எடுக்கவும் தெரியும்.
வாத்தியாற்றை காணிக்கை ஆரோ.
தேங்காய் புடுங்கினவங்களாம். இது எங்கேயோ போகேக்கை கண்டிட்டுது. உடனை இறங்காதபடி கட்டிப் போட்டுப் போட்டுதாம். விடிய வந்துதான் அவிட்டு விட, அவன் "ஐயா” எண்டு காலிலை விழு ந்தானாம். தெய்வமக்கான்ரை பெடியன்
முருகன் கோயில் குளத்திலை குளிச்சு, சாரத்தைக் காய போட்டிட்டு, முருகனை கும்பிட்டிட்டு வந்து பார்க்கச் சாரத்தை காணேல்லையாம். பிறகு பார்த்தா இதுன்ர அரையில சுருண்டு கிடந்ததாம்.
இது திருநீறும் போடும். ஆனா, இதை யாரும் கூப்பிடுறதில்லை. ஆருக்கும் ஏதேனும் வருத்தமெண்டால் உடனே போய்த் திருநீறு போடும். விருப்பமில்லா ட்டிலும் எவரும் தடுக்கிறதில்லை. வருத் தம் கூடுறதுக்குப் போடுதோ? குறையுறது க்குப் போடுதோ? ஆருக்குத்தான் தெரியும்?
சித்தப்பா எந்தளவுக்கு நல்லா இருந் தவர். காலமை நாலுக்குத் தோட்டத்துப் போனா இரவு தான் வருவாராம். ஒரு பனை ஒலையைத் தனியக் கொண்டு வந்து, தனியக் கிளிச்சு. 985-9........ ഞഖ8 சிட்டு. பயத்தங்காய் புடிகட்டத் தொடங் கினாக் கோழி கூவுமாம். அவ்வளவு பிர யாசி. அண்டும் சித்தப்பா தோட்டத்துக்கை நிண்டவராம். இது பின் ஒழுங்கையால வந்து, கேட்டுக் கேள்வி இல்லாம நிறையத் தேசிக்காய் ஆய்ஞ்சு போட்டுதாம். சித்தப்பா அறம்புறமாப் பேசிப் போட்டாராம்.
- அந்தளவுந்தான்
ஊரிலை "இதைக் கண்டிட்டு ஒரு நாயஞம் குரைக்கிறதில்லை. எங்கடை வீமன் கூட, கண்டால் காணும் ஒடிப் போய் வாங்குக்குக் கீழை படுத்திடும். இரவில இறுமாணத்தோடதான் நிக்கிறதாம். ஏனெண்டா, அந்தக் கோலத்தில செய்தா நல்லாப் பலிக்குமாம். ஊருக்குள்ள ஆருஞ் செத்தால் உடனை காடாத்திப் போடோ ணும். இல்லாட்டி, முழுச் சாம்பலையும் அள்ளிக் கொண்டு போடுமாம். ஊரிலை
மல்லிகை மே 2009 & 28

சிலர் செத்ததுக்கு இது தான் காரணமாம்.
அதுக்குள்ள சித்தப்பாவும் உள்ளடக்கம்.
'சிவம். சிவம். y
"சின்ராயா இல்லையே?. சின்ராயா."
அப்பப்பாவுக்குப் பக்கதில வந்திட்டுது.
'இல்லை! ஏன்?
"கிழவனே நிக்கிறாய்; மடிக்கை கிடந்தாப் பத்துரூவா தாவன்.”
"இல்லையே!”
"கிடக்கும். பாரன்."
'இல்லையெண்டு சொல்லுறன்."
"வெத்திலைத் தட்டையாவது எடுத்து வாவன்.”
"இஞ்சை உனக்கு ஒண்டுமில்லை. இனிமே இந்த முத்தம் மிதிக்கவும் வேண் டாம். நீ செய்யிறதைத் செய்!”
சித்தப்பான்ரை ஆவேசத்திலை கத் திக் கலைச்சுப் போட்டார். இனிச் சில வேளை அப்பா அப்பப்பாவுக்குப் பேசுவார்.
இதுக்குப் பழங்கதையள் நல்லாத் தெரியும். அதோட, ஊருக்க நடக்கிற ஒவ் வொரு விசயத்துக்கும் ஒவ்வொரு துப். துப். காரணம் சொல்லும். சனங்களுக்கு இருக்கிற குறையளால தான் சமாதியடிப் பத்தைக் கூடல் வடலியள் சாமத்தில எரி யிறதாய்ச் சொல்லும். நரி ஊளையிட்டா லும், அதுக்கும் என்னென்னவோ விளக் கம் கொடுக்கும். மதவடி வாய்க்காலுக்கால சாமத்தில தீப்பந்தம் போறதாயும் சொல் லும். தான் நினைச்சா ஒரு சுண்டில எல் லாத்தையும் நிப்பாட்டிப் போடுமாம். எங்கட சனங்களை அது தன்ரை கட்டளை
யளுக்கை வைச்சிருந்திச்சு. இதின்ரை
சொல்லைக் கேட்டுக் காய்ச்சல் வருத்தம் எது வந்தாலும், மருந்துக்குப் போக முதல், மதவடிக் கல்லுக்கும், சமாதியடிக்கும் கற் பூரத்துக்கு நேருவினம்.
அந்த வருசம் ஊருக்கை சரியான மழை. மழை வெள்ளத்தோட வேற ஊருக ளில இருந்து நிறையப் பிசாசுகள் எடுபட்டு வந்திச்சு. இரவில ஒழுங்கையளுக்கை இறங்கி நடமாடும். அங்கை கடையடி, பூக் கிணத்தடி, மதவடி மூன்று இடத்தில்யும் தான் அதுகள் கணக்க இருக்குதுகள். இர விரவாய் நாயஸ் சரியாய்க் குலைக்கும். மாடுகள் வெருண்டு கத்தும், ஒருதரும் வெளிய எட்டிப் பாக்கிறது இல்லை. பிசாசுகள் தங் கட மொழியில பேசிக் கொள்ளும். எங்க ளுக்கு எதுவும் விளங்காது. விடிய எழும்பிப் பாத்தா அடியொண்டையும் காணேலாது. காத்தடிச்சு மண்ணில மூடுண்டு போம். பேயஞக்குக் கால் இல்லை எண்டதை வன்மையாக நாங்கள் நம்புவோம்.
பூக்கினத்தடிப் பிசாசுகள் பட்டப் பக லிலையும் பொம்பிளையளைத் தனியப் போய் வர விடாதாம். பிடிச்சு இழுக்குமாம். அமுதாக்காவையும் பிசாசுகள் இழுத்ததாய் கதை கசிஞ்சது. வெளியில ஒருதரும் கதைக்கேல்லை. கொஞ்ச நாளையால அவவை எங்கேயோ அனுப்பிப் போட்டி னம். ஆம்பிளையள் தலைப்பா கட்டிக் கொண்டு போனாக் கூடப் பிடிக்காதாம். கழற்றிக் உதறுமாம். சிலவேளை அடியும் விழுமாம். மதவுக்குக் கீழை கூட்டிக் கொண்டு போய் நிர்வாணப்படுத்திக் கூடப் பாக்குங்களாம். சிலபேரைத் திசை மாத் திக் கூட்டிக் கொண்டு போனால், திரும்பி வாறதே இல்லையாம்.
திசை மாறிக் கூட்டிக் கொண்டு போற
ஆட்களைக் கண்டல் காட்டுக்குத்
மல்லிகை மே 2009 29

Page 17
கொண்டு போறதுகளாம். மதவடி வாய்க் காலுக்கை இறக்கி விட்டுதுகள் எண்டா, கண்டல் காட்டுக் களிக்குப் போய்ச் சேர லாம். அங்கதான் சிலபேருக்கு நினைவு திரும்புமாம். நினைவு திரும்பினாலும், அந்தக் களி வெளிக்கால திரும்பி வரவே ஏலாதாம். களிச் சேத்துக்கை மாண்டு சாக வேண்டியது தான். முந்தி எப்பவோ, நாகர்கோயில் மீன்காரன்ரை சையிக்கி ளும் எலும்புக் கூடும் எடுத்ததாகச் சொல் லிக் கொண்டவை.
திசைமாறிக் கூட்டிக் கொண்டு போன ஆட்களுக்குப் பிறகால சங்கு சல்லாரி ஊதிக் கொண்டு போனா, ஆளை மீட்கலா மாம். எங்கட ஊருக்கை சங்கு சல்லாரி ஊதத் தெரிஞ்சவை இருந்தும், பயத்தில ஒருதரும் வெளிக்கிடுறதில்லை. திசை மாறிக் கூட்டிக் கொண்டு போனாப் போனது தான். பிசாசுகள் பள்ளிக்கூடத்தால போற பிள்ளையளையும் விடுறதில்லை. ஒவ் வொரு நாளைக்கும் ஒவ்வொரு பிள்ளை யாய்ப் பிடிச்சு அளைஞ்சு போட்டுத்தான் விடுறதுகளாம்.
கடையடில நிக்கிற பிசாசுகளைக் கலைக்க ஆரோ முனைஞ்சிருக்கினம். புதிசா ஆரோ வெளியில இருந்து பேய் பிடி காரர் வந்தவங்களாம். அதால பூக்கிணத் தடிப்பிசாசுகளுக்குச் சரியான கோபம். வயல் வரம்பு வெட்டப் போன பொடியளை மதவுக்குக் கீழை பிடிச்சு இருத்திப் போட்டு, விடிய விடிய அசைய விடாமல் பார்த்துக் கொண்டு இருந்ததுகளாம். உடம்பெல்லாம் கொள்ளி எறும்பு கடிச்ச, வீக்கத்தோட விடியக் கலைச்சு விட்டுதுகள்.
வழமையாச் சித்திரைப் பறுவத்தில வீரபத்திரன் கோயில் பொங்கல் வரும். இம்முறை தீக்குளிப்பும் நடக்குது. பழங்கள் வெட்டி, மடை பரவிக் கிடக்குது. கற்பூரம் பெரிய சுவாலையாய் எரியுது. பறை மேளம்
ஓங்கி ஒலிக்குது. தீமேடை கனன்று கொண் டிருக்குது. ஒவ்வொரு பக்கச் சனமும் ஒவ்வொரு நேத்தியோட நிற்குதுகள்.
பூக்கினத்தடிச் சனங்கள் அமுதாக் காவை பிடிச்ச பிசாசுகள் அகல வேணும் எண்டு, குடும்பம் குடும்பமாய்த் தீக்குள்ள இறங்கீனம், திசை மாறித் திரும்பி வராத பொடியளுக்காகக் காரைக்காட்டுச் சன மெல்லாம் அதுக்குப் பின்னால நிக்கிது கள். பள்ளிக்கூடப் பிள்ளைகள் கூடப் புத்தகங்களோட வருகுதுகள். கடையடிச் சனங்கள் பிசாசு பிடிச்சுச் செத்தவர்களின் ஆத்மசாந்தியே அதுகளின் நேர்த்தியாய் இருந்தது. எங்கட நாவற்கேணிப் பக்கத் தார், பிசாசுகளின்ர தொல்லை இனிமேலா வது அகல வேணும் எண்டு, வரிசையில நிக்கினம். ஊர்ச்சனம் சின்னனில இருந்து பெரிசு வரை கோயிலுக்கை நிக்குதுகள். சத்தியமாய் அந்தப் பக்கம் "துப். துப்.'ன்ரை தலைக்கறுப்பை மட்டும் கானேல்ல.
தீப் பயத்தில எடுபட்டு வந்த பிசாசுக ளோட துப் துப்பும் சேர்ந்து நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு எங்கள் எல் லாரையும் பிடிச்சு விழுங்கிறதுக்கு ஆத்திர த்தில அலைஞ்சு திரியுதுகளாம்.
G ܪܶ: 8l ܦ ܐܸܘܼ̈ܐܹ܃ ܃ ܢܸܗܦܸܟ݂
* 曾關語廳。
* : క్ష ] =
缀 A 'a
its 诺 倭 影
ཀྱི་བཀའ། 引 • G 6)
s f 影 5 -8 5)
மல்லிகை மே 2009 * 30
 

செக்கோஸ்லாவகியா சிறுகதை
தனுஷ் ஆn
-papõ: GuarůDITT GLOGUESITGIFT gusspå): GILÓ. GILõ. Lochauff
言エリー●
தனுஷ்கா இன்று பாடசாலைக்கு வரவில்லை. அவள் சுகயினமாக இருக்கின் றாளோ? எவருக்கும் தெரியாது. ஷோர்கா அமர்ந்திருந்த ஆசனத்துக்கு அடுத்த இருக்கை காலியாக இருக்கிறது.
"தனுஷ்காவின் பாட்டி ஆஸ்பத்திரியில். அவள் இறந்து விட்டாளோ, என்னவோ? யார் அறிவார். அவள் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறாளாம்.” ஷோர்கா உரக்கக் கூறினாள்.
'அவளுக்குச் சுகமில்லையா? எனக்குத் தெரியாதே - எவரும் என்னிடம் சொல்லவில்லையே! இப்பொழுது தனுஷ்காவைப் பார்த்துக் கொள்வது யார்?” ஆசிரியை ஆர்வத்துடன் வினவினாள்.
'தனுஷ்காவின் அப்பா."
"அவளுக்கு அம்மா இல்லை. அப்பா அவளை விவாகரத்துச் செய்திருக்கிறார்."
“எனக்குத் தெரியும். நான் அறிந்திருக்கிறேன்.” எனப் பதிலளித்த ஆசிரியை, பலத்த கற்பனையுடன் வகுப்பறையை ஒருகணம் நோட்டமிடுகிறாள். பிள்ளைகள் அவளை வியப்புடன் பார்த்துக் கொண்டு நின்றனர்.
"ஷோர்கா, நீதனுஷ்காவின் கூட்டாளிதானே? ஆடையை மாற்றிக் கொண்டு போய் என்ன நடந்தது என்று அறிந்து கொண்டு வாயேன்."
ஷோர்கா இருமனதுடன் ஆடையை அணிந்து கொண்டாள். அவளுக்குள் ஏதோ ஒரு சந்தேகம்.
"நீயும் அவளுடன் போய்வா!” சிறிய, ஆனாலும், பருமனான உடலமைப்பைக் கொண்ட பெட்காவை வேண்டினாள் ஆசிரியை,
姿姿深姿
வானத்தில் கருமேகக் கூட்டம் திரண்டிருந்தது. செங்கோடுகள் வரைவது போல, அடிக்கடி மின்னல் ரேகைகள் பளிச்சிட்டன. குளிருடன் கூடிய காற்று வீசியது. பெட்கா சத்தமிட்டுச் சிரித்தாள்.
மல்லிகை மே 2009 தீ 31

Page 18
'பனித்துளிகள் மோதும் போது, உடம்புக்கு வலி தெரிகிறது, இல்லையா?"
"அது பனிக்காற்றல்ல. இன்று எனது அப்பா யன்னலில் பொருத்தப்பட்டிருக்கும் உஷ்ணமானியைப் பார்த்து விட்டு, உஷ்ண நிலை 5 F° ஐந்து பரன்ஹைட் என்று சொன்னார்."
ஷோர்கா அவ்வாறு பதிலளித்தாள் எனினும், அவளது உள்ளத்தில் வேறு ஏதோ ஒன்று உறுத்தியது.
அவள் தனுஷ்காவைப் பற்றிச் சிந்தித் தாள். தனுஷ்காவுக்கு என்ன நேர்ந்திருக் கும்? அவள் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். அண்மைக் காலங்களில் அவளுடன் நட்புப் பாராட்டாமையையிட்டுத் தனக்குத் தானே நொந்து கொண்டாள்.
'இன்று மாலை பணிச்சறுக்கு விளை யாட்டுப் பயிற்சிக்குப் போவதில்லையா? என்னையும் அனுப்புவதாக அம்மா சொன் னாள். அது மிகவும் அழகாக இருக்கு மாமே? நானும் போய்ப் பழக வேண்டும்.”
சிறுமி பெட்கா சொல்லிக் கொண்டே யிருந்தாள். ஷோர்கா அவளது கதைக்குச் செவி சாய்க்காததை அறியாமல் பெட்கா
சொல்லிக் கொண்டேயிருந்தாள்.
கேட்டுக்கு முன்னால் நின்று கொண்டு தயங்கினாள், பெட்கா. "அவளிடம் நாய் ஒன்று இருப்பதை நான் கேள்விப்பட்டி ருக்கிறேன்."
உண்மையில் அவர்கள் முற்றத்து க்கு வந்து நின்றதும், பெட்காவை முறைத் துப் பார்த்த வண்ணம் மோப்பமிட்டபடியே லஜாஜ் வந்து நின்றது. ஷோர்கா அதனு
மல்லிகை மே
டன் செல்லமாகக் கொஞ்சத் தொடங்கி யதும், அது வாலை ஆட்டத் தொடங்கியது.
*தனுஷ்கா எங்கே? தனுஷ்காவுக்கு என்ன நடந்தது?"
லஜாஜ் முன் கதவுக்கருகில் போய் விட்டுத் திரும்பி வந்தது. பெட்காவும், ஷோர் காவும் அந்தப் பக்கமாகச் சென்ற போது, அது பலமுறை கதவருகே சென்றுவிட்டுத் திரும்பி வந்தது.
"கதவு மூடிக்கிடக்கிறதே?”
அவர்கள் அழைப்புமணியை அழுத்தி னர். மீண்டும் அழுத்தினர். எவரும் கதவைத் திறக்க வரவில்லை. அவர்கள் மீண்டும் மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினர்.
நீண்ட நேரமாகப் பொத்தானை அழுத் திப் பிடித்துக் கொண்டிருந்தபடியால் விரல் கள் வலியெடுக்கவே, மற்ற விரலை மாற்றி அழுத்தம் கொடுத்தனர். லஜாஜ் மூடிய கத வைப் பார்த்துப் பார்த்து அங்கும் இங்கும் துள்ளிக் குதித்தது.
ஷோர்காவும், பெட்காவும் மாறி மாறி அழைப்பு மணியை ஒலிக்கச் செய்வது கண்டு, பக்கத்து வீட்டு மொனிக்கா மாமி அவர்களின் பின்னால் வந்து சத்தமிட்டாள்.
"உங்களுக்கு விளையாட வேறு ஒன் றும் கிடைக்கவில்லையா?”
சிறுமியர் இருவரும் அழைப்பு மணியி லிருந்து கைகளை எடுத்தனர். "நாங்கள் தனுஷ்காவைப் பார்க்க வந்தோம். ஒருவ ரும் பதில் அளிக்கவில்லை." என்று ஷோர்கா விபரித்தாள்.
"தனுஷ்கா. 2 gigueit unt LaFIT606)85 குப் போயிருப்பாள்.”
2009奉32

'அவள் பாடசாலையில் இல்லை. பாடசாலைக்கு வரவில்லை."
“பாடசாலைக்கு வரவில்லையா..?" மொனிக்கா மாமியின் சிறிய கண்கள், அகல விரிந்து கொண்டன.
"பொய் சொல்லாதீர்கள். தனுஷ்கா பாடசாலைக்குத் தான் போயிருப்பாள்."
சிறுமியர் இருவரும் இல்லை’ என்ப தற்கு அடையாளமாகத் தமது தலையை அங்கும் இங்கும் அசைத்தனர்.
தனது தேய்ந்த பழைய செருப்பை அணி ந்த வண்ணம் அவசர அவசரமாக ஒடிச் சென்றவள், திறப்பை எடுத்துக் கொண்டு வந்து கதவைத் திறந்தாள், மொனிக்கா மாமி.
லஜாஜ் முந்திக் கொண்டு வீட்டினு ள்ளே நுழைந்தது. மொனிக்கா மாமியின் அழைப்பையும் பொருட்படுத்தாமல், ஒவ் வொரு அறையையும் தாண்டிக் குசினிக் குள் நுழைந்த வண்ணம் குரைக்கத் தொடங்கியது. எனினும், வீடு காலியாகத் தான் இருந்தது. ஷோர்காவும், பெட்காவும் வராந்தைக்கு வந்து, மொனிக்கா மாமி என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
*தனுஷ்கா பாடசாலைக்கு வரவில்லை என்றுதானே பிள்ளைகள் நீங்கள் சொல்லு கிறீர்கள்?
'இல்லை, அவள் வரவில்லை."
'அப்படியானால், அரை நேரத்தில் தனுஷ்கா ஆஸ்பத்திரியில் அவளது பாட்டி யைப் பார்க்கப் போயிருப்பாள்.' மொனிக்கா மாமி அதிசயமாக வேடிார்காவைப் பார்த்
தாள்.
'அவள் இந்த நேரத்தில் அங்கு என்ன செய்கிறாள்? குறித்த நேரத்துக் கல்லாமல் நோயாளியைப் பார்க்கவிட மாட்டார்களே மற்றது அது அவள் பாட்டி.” அவள் சிறிது நேரம் சிந்தித்தாள்.
"ஒருவேளை தனுஷ்காவின் அப்பா அவளைத் தொழிற்சாலைக்கு அழைத்துப் போயிருப்பாரோ? அவர் தனுஷ்காவைத் தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்திருந்தாராம்."
“எனினும், எமக்குப் பாடம் நடக்கிறது. சிறுமியர் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
"நான் போய் தனுஷ்காவின் அப்பாவு க்கு டெலிபோன் பண்ணிக் கேட்கிறேன், நீங்கள் இருவரும் போய்க் குசினியில் அமர் ந்து கொண்டிருங்கள். இருவரது கால்க ளும் நோவெடுத்திருக்கும்."
சிறுமியர் இருவரும் சமையலறையில் மேசைக்கு முன்னால் போய் அமர்ந்து Gasiteco IL6OTir.
பெட்கா குழப்பத்துடன் காணப்பட் டாள். அவளது கண்கள் எல்லாத் திசை களையும் நோட்டம் விட்டன. பயிற்சிப் புத்தகத்தின் பக்கம் ஒன்று அவளது கண் னில் பட்டது.
அந்தப் பக்கத்தைக் கையில் எடுத்த அவள், அதில் எழுதப்பட்டிருந்த வாசக த்தை உரக்க வாசித்தாள்.
'எனக்குப் புதிய அம்மா ஒருத்தி வேண்டாம்."
அது என்ன? ஒருவேளை இலக்க
ணப் பாடத்தில் ஒரு பகுதியாக இருக் குமோ? எனினும், அது போன்றது ஒரு
மல்லிகை மே 2009 தீ 33

Page 19
வாக்கியத்தைத் தனுஷ்கா நினைத்தது ஏன்?
மொனிக்கா மாமி திரும்பி வருவது கண்டு, அவள் அந்தப் பயிற்சிப் புத்தகத் தாளை உடனே ஒழித்துக் கொண்டாள்.
'எனக்கு ஒன்றும் விளங்குதில்லை. சிறிது நேரம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
‘என்ன அந்தக் கொப்பித்தாள்?" மொனிக்கா மாமி விசனத்துடன் கேட்டாள்.
சமையல் அறையில் இருட்டாக இருந்ததால், அதனைக் கண்களுக்கு அருகே கொண்டு வந்து வாசித்தாள்.
"ஆ. எமது ஏழைச் சிறுமி” ஒரேய டியாகச் சொன்னவள், சிறுமியர் இருவரை யும் வியப்புடன் நோக்கினாள்.
"அவள் பாடசாலையில் பயிற்சி ஒன் றும் செய்திருக்கிறாள்.” தனது நாடியைத் தடவியவாறு, குழம்பிய மனத்துடன் யோச னையில் ஆழ்ந்திருந்த மொனிக்கா மாமியை நோக்கியவாறு சொன்னாள்,
பெட்கா.
"நான் உடனே அவளது அப்பாவுக்கு டெலிபோன் பண்ணுகிறேன். அட கடவுளே! இந்தச் சிறுமிக்கு என்ன கேடு வந்து விட்டது?”
மொனிக்கா மாமி சொல்வது எதுவும் பெட்காவுக்கோ, ஷோர்காவுக்கோ புலப் படவில்லை. தனுஷ்கா அங்கு இல்லை எனினும், அவள் சுகuபீனமாக இருக்கமாட் டாள். அப்படியானால், அவளுக்கு என்ன நேர்ந்தது?
"அவர்கள் ஆசிரியைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? ஒருவேளை
அவள் தனது அப்பாவுடன் தொழிற் சாலையில் இருக்க முடியும். பாவம் ஏழைச் சிறுமி. அவள் பாடசாலைக்குப் போக வில்லை. வகுப்புக்குப் போகாமல் வழி விட்டிருக்கிறாள். அப்படியானால், அவள் எப்படிச் சிறுமியாக இருக்க முடியும்?
மொனிக்கா மாமி தொலைபேசி இலக் கத்தைச் சுழற்றுவதற்காக ரிஸிவரைக்
கையில் எடுத்துவிட்டுச் சிறிது தாமதித்து
மீண்டும் சுழற்றினாள்.
அவளது குழப்பம் கோபமாக மாறி
t-5).
'நீங்கள் இருவரும் பாடசாலைக்குப் போங்கள். நான் என்ன ஏது என்று தேடிப் பார்த்து ஆசிரியையிடம் வந்து சொல் கிறேன்.”
அவர்கள் இருவரும் பாடசாலைக்குச் சென்ற போது, "ஸ்லோவக் மொழிப் பாடம் கற்பிக்கத் தயாராக இருந்தது.
ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு, ஆசிரியையிடம் விடயத்தை விளக்கினர். புதுமையாகப் பெட்கா தனது தாய் மொழியான பிரெஞ்சு மொழியிலும் விஷ யத்தைச் சொன்னாள்.
எனினும், ஆசிரியைக்கு எதுவும் விளங்கவில்லை. திடீரென எழுந்து நின்ற சிறுமி ஒருத்தி தனது கரங்களை உயர்த் திச் சொன்னாள்.
'தனுஷ்கா காணாமல் போயிருக் கிறாள்."
இறுதியாக ஆசிரியை விளங்கிக்
கொண்டார்.
மல்லிகை மே 2009 * 34

"தனுஷ்கா பாடசாலையைத் தாண் டிச் சென்றாளா?’ பிடோ கேட்டாள்.
'தாண்டிச் சென்றாள்."
"தனுஷ்கா பாடசாலையைத் தாண் டிச் செல்வதை யாராவது கண்டீர்களா?”
"அமைதியாக இருங்கள், பிள்ளை களே!" ஆசிரியை மேசையில் தட்டி ஆணை யிட்டாள்.
வகுப்பறையில் அமைதியின்மையும், ஒரே இரைச்சலும், கூச்சலும் காணப் பட்டது. இரைச்சல் எவ்வாறு எனின், கத வில் தட்டிய சத்தம் கூடக் கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் உரக்கக் கதவில் தட்டவும் தான், அந்தச் சத்தம் கேட்டது.
ஆசிரியை கதவைத் திறந்தாள்.
கலவரம் நிரம்பிய முகத்துடன் மொனிக்கா மாமி நின்று கொண்டிருந்தாள்.
"அவள் தொழிற்சாலைக்குப் போக வில்லை. இன்று காலை பாடசாலைக்குப் போக ஆயத்தமாக இருந்தாள்.”
வகுப்பறை முழுவதும் அமைதி இழந்து காணப்பட்டது. ஷோர்காவின் கண்களில் பயம் நிரம்பி வழிந்தது. பதற்றத் தில் பெட்காவின் கண்களில் கண்ணிர் நிரம்பியிருந்தது. ஆ.வென்று வாயைப் பிளந்த வண்ணம் அதிசயமாகப் பார்த்துக்
கொண்டிருந்த பிடோவின் வாய் புளியைத்
தின்றது போலக் காணப்பட்டது.
*தனுஷ்கா எங்கு போயிருப்பாள்? யாராவது தெரிந்தவர் எவரையேனும்
பார்க்கப் போயிருப்பாளோ?”
'யார்? அவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள எவருடனும் நல்லுறவு பேணுவ தில்லையே."
disbbit sld buff all LefebalsT2
புதிய ஆண்டு தொடங்கி விட்டது. தயவு செய்து தமது சந்தாக்களைப் புதுப் பித்துக் கொள்ளவும்.
மனந் திறந்து மல்லிகையுடன் ஒத்து ழையுங்கள். ஏனெனில் மல்லிகை உங் கள் ஒவ்வொருவரினதும் இலக்கியக் குரலாகும்.
அசட்டை செய்வோருக்கு முன்னறி
இதழ் நிறுத்தப்படும்.
மொனிக்கா மாமி தனது தொனியைத் தாழ்த்தி ஆசிரியையின் காதுகளில் ஏதோ குசுகுசுத்தாள். அதைக் கேட்ட ஆசிரியை யின் முகத்தில் ஒளி துளிர்த்துவிட்டது.
மொனிக்கா மாமி சென்ற பிறகு, வகுப்பறையில் அமைதி நீடித்தது. ஒவ்வொ ருவரும் தனுஷ்காவைப் பற்றியே சிந்தித்த படி மனக் கவலையுடன் காணப்பட்டனர்.
தனுஷ்காவுக்கு இனிமேல் யாரும் எதுவும் சொல்வதில்லை என ஒவ்வொரு சிறுமியும் பிரக்ஞை எடுத்துக் கொண்டனர். அவள் கூடிய விரைவில் திரும்பி வர வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண் டார்கள். அவள் காணாமல் போனது ஆண்பிள்ளைகளுக்கு அதிசயமாகவும், கேள்விக்குறியாகவும் இருந்தது.
பிள்ளைகள் அன்று அமைதியற்றுக் கவலையுடன் காணப்பட்டது போல, வேறு ஒரு நாளும் அப்படி இருக்கவில்லை. பிடோ வும் கூட, தனது சிவப்புநிறக் குறிப்புப் புத்த கத்தில் ஒரு சொல்லையேனும் எழுத வில்லை.
மல்லிகை மே 2009 $ 35

Page 20
-6ിLIfിഞ്ഞി, ജബ്
நTன் நண்பர் விஜயபாஸ்கரனைத் தொடர்பு
கொண்டது "சரஸ்வதி சஞ்சிகையின் மூலம் தான்.
அந்தக் காலத்தில் எனது இரு இளம் நண்பர்கள் பல்கலைக்கழக மாணவர்களாக இந்தியாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர். ஒருவர் பெயர் தேவதாஸன், மற்றவர் திருச்செல்வம். தேவதாளபன் சென்னையிலும், திருச்செல்வம் கல்கத்தாவிலும் உயர்கல்வி பயின்று கொண்டிருந்தனர்.
திரு. வ.விஜயபாஸ்கரன்
இந்த இரு நண்பர்களும் இந்தியாவில் நீண்டகால
மாக வசித்து வந்ததால், எனக்குத் தமிழ்நாட்டுத் தொடர்புகள் நெருக்கமாக இருந்தன.
இந்த இரு மாணவநண்பர்களுக்கும் விஜயபாஸ்கரனைத் தெரிந்திருந்தது. இவர்கள் இருவரும் அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து போவதால், தமிழக இலக்கிய நண்பர்களுக்கும் எனக்கும் நிறையத் தொடர்புகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்தன.
சரஸ்வதியில் நான் தொடராகச் சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்தேன். எப்படியும் மாதம் ஒரு தடவையாவது விஜயபாஸ்கரன் எனக்குக் கடிதம் எழுதுவார். நானும் தொடர்ந்து அவருக்குக் கடிதம் எழுதி வருவேன். இப்படியான கடிதத் தொடர்புகளில் ಕ್ಲೌ கடிதத்தில் நண்பர் ஜெயகாந்தன் என்னை விசாரித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கால கட்டத்தில் நண்பர் ஜெயகாந்தனும், சுந்தர ராமசாமியும் சரஸ்வதியில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்தனர்.
ஜெயகாந்தன் என்னை விசாரித்தார் என்பதை விஜயபாஸ்கரனது கடித வரிகளின் மூலம் தெரிந்து கொண்ட பின்னர், நானும் நேரடியாகவே அவருடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முற்பட்டேன்.
இதற்கு எனக்கு வசதியாக அமைந்தவர்கள் நான் மேலே குறிப்பிட்ட எனது மாணவ நண்பர்கள் தான்.
மல்லிகை மே 2009 : 35
 
 

அவர்கள் சென்னை செல்லும் சம பங்களில் எல்லாம் எனது கடிதங்களைச் சுமந்து சென்று நேரடியாக ஜெயகாந்தனி டம் சேர்ப்பித்து வந்தனர்.
சரஸ்வதி முதலாவது ஆண்டு மலரை வெளியிட்ட சமயம், அச்சஞ்சிகையை இலங் கையில் இலக்கிய அறிவுஜீவிகள் மத்தி யில் சேர்ப்பிக்க வேண்டும் என விஜய பாஸ்கரன் ரொம்பவும் விரும்பினார். அந்த ஆண்டு மலரின் விலை ரூபா, ஒன்று. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் 'தமிழ்ப் பண்ணை" என்றொரு புத்தகக் GGTTL LLLLLLLTLL La TMLSCLLMLLLM TTTTT TTTT ராமசாமி. திராவிடக் கழகத்தைச் சேர்ந்த வர், இவர்.
இவரிடம் நேரடியாகப் பேசி, மலரில் நூறு பிரதிகளைப் பெற்று, இங்கு அதை விநியோகிக்க ஆவன செய்து வந்தேன்.
சரஸ்வதியின் பிரபலம் மெல்ல மெல்ல இங்கு பரவலாகப் பேசப்பட்டு வந்தது.
தமிழ் தட்டச்சின் தந்தை' என்றொரு கட்டுரையை நான் சரஸ்வதிக்கு நேரடி யாகவே அனுப்பியிருந்தேன். அக் கட்டுரை மத்திய கல்லூரி நூலகர் கா. மாணிக்க வாசகர் அவர்கள் எழுதியது. யாழ்ப்பாணம் கண்டிக்குளியில் வாழ்ந்த ஆர். முத்தையா என்பவரே தமிழில் தட்டச்சை முதலில் உருவாக்கியவர். அவரது அட்டைப் படத் துடன் மே-1959ல் இக்கட்டுரை விரிவாகச் சரஸ்வதியில் வெளிவந்தது. அறிவுசார் கட்டுரை அது.
இந்தக் கால கட்டத்தில் சரஸ்வதி ஆசிரியர் இலங்கைக்கு வருகை தரப் பெரி தும் விரும்பினார்.
திருச்சி
அப்பொழுது பலாவி=
விமானம் மூலம் யாழ்ப்பானத்திற்கு வந்து போகக் கூடிய சுமுகமான கால கட்டம்.
அவர் திருச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வர விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளை யும் செய்திருந்தார்.
முதலில் அறிவித்த தினத்தன்று நானும் எழுத்தாளர் இ. மகாதேவா அவர்க குரும் பலாலி விமான நிலையம் சென்று, ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம்.
இரண்டாவது தடவை ஏமாற்றம் இல்லாமலேயே இங்கு வந்து சேர்ந்தார். நண்பர் மகாதேவா அப்பொழுது யாழ், இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமை
"யாற்றிக் கொண்டிருந்தார்.
அவர் தனது காரிலேயே விஜயபாஸ் கரனை யாழ்ப்பாண நகரத்திற்கு அழைத்து வர உதவி புரிந்தார்.
சரஸ்வதி ஆசிரியரை வரவேற்க யாழ்ப் பானத்தில் மிகப் பெரிய அளவில் ஓர் இலக்கியக் கூட்டத்தை ஒழுங்கு செய் தேன். யாழ்ப்பான மத்திய கல்லூரி மண்ட பத்தில் அந்த வரவேற்பு விழா வெகு கோலா கலமாக நடந்தேறி முடிந்தது.
ஒரு வார காலம் அவர் யாழ்ப்பாணத் தில் தங்கியிருந்தார். பல இலக்கிய நண் பர்களை, கல்விமான்களைச் சந்தித்து
அடிக்கடி உரையாடி வந்தார்.
அந்த மாதம் நடுப்பகுதியில் எழுத் தாள நண்பர் கணேசலிங்களின் திரு மணம் கொழும்பில் நடைபெற இருந்தது. நான் தான் பகல் யாழ்தேவியில் விஜய பாஸ்கரனைக் கொழும்பிற்குக் சுட்டி வரு வதாகவும் முன்னரே ஏற்பாடாகி இருந்தது.
இந்தக் கால கட்டத்தில் நண்பன்
மல்லிகை மே 2009 ஃ 37

Page 21
கணேசலிங்கனது முன் ஏற்பாட்டின் படி, எனது சிறுகதைத் தொகுப்பிற்கான கை யெழுத்துப் பிரதிகளை விஜயபாஸ்கரனி டம் ஒப்படைந்திருந்தேன். சரஸ்வதியின் முதல் பதிப்பக வெளியீடாக எனது முதல் சிறுகதைத் தொகுதியாகத் தண்ணிரும் கண்ணிரும் தொகுதியையே சென்னை யில் வெளியிடுவதாக முன் கூட்டியே திட்ட மிட்டிருந்தோம். அதன் முதல்கட்ட வேலை யாக நான் கையெழுத்துப் பிரதிகளை யாழ்ப்பாணத்தில் வைத்து அவரிடம் கையளித்தேன்.
நாமிருவரும் கொழும்பு சென்ற ஒரு வாரத்திற்கிடையே நண்பர் கணேசலிங்க னின் திருமணம் இனிதே நிறைவெய்தி யது. பிரபல எழுத்தாளரும் கணேசலிங்க னின் நீண்ட கால நண்பரும் நாவலாசிரிய ருமான திரு. மு. வரதராஜன் அந்தத் திரு மணத்திற்குத் தலைமை தாங்குவதாக முன்னரே ஏற்பாடாகி இருந்தது. திரு. மு. வ. வராததால் சரஸ்வதி ஆசிரியரே அந்தத் திருமணத்திற்குத் தலைமை தாங்கி, சிறப்புற நடத்தி வைத்தார்.
விஜயபாஸ்கரன் கொழும்பில் தங்கியி ருந்த காலத்தில்தான் பகீரதன் என்றொரு சென்னை எழுத்தாளரும் இங்கு வந்திருந் தார். அவர் "கங்கை' என்ற சஞ்சிகையின் ஆசிரியருமாகும்.
அவர் ஒர் இலக்கிய விழாவில் கருத் துச் சொல்லும் வேளையில், "இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் தமிழகப் படைப்பாளி களை விடப் பத்து ஆண்டுகள் பின் தங்கிப் போயுள்ளனர்!’ என்றொரு கருத்தையும் பகிரங்கமாக வெளியிட்டார்.
பகீரதனின் இந்தக் கருத்து இங்கு இலக்கியப் புயலையே கிளப்பி விட்டது.
பல இலக்கிய மேடைகளில் பகீரதனின் இந்தக் கருத்து கடும் விமரிசனத்திற்கும் உட்படுத்தப்பட்டது.
இக்கருத்தின் சாரம் தமிழகத்திலும் எதிரொலித்தது.
சரஸ்வதி ஆசிரியர் நமது நாட்டில் சுமார் ஐம்பது நாட்கள் தங்கியிருந்து, பல இலக்கியக் கூட்டங்களில் பங்கு பற்றிச் சிறப்பித்தது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு தகவலாகும். சில மாதங்களுக்குப் பின்னர், எனது சிறுகதைத் தொகுப்பு 'தண்ணிரும் கண்ணிரும் சரஸ்வதிப் பதிப்பக முதல் வெளியீடாகச் சென்னையில் வெளிவந்தது.
1960ம் ஆண்டிற்கான படைப்பிலக்கி யத்திற்கு முதன் முதலில் சாஹித்திய மண்டலப் பரிசிற்கு இச் சிறுகதைத் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை முதலில் தகவல் மூலம் நண்பர் விஜய பாஸ்கரனுக்கே தெரியப்படுத்தினேன்.
1961ம் ஆண்டு நவம்பர் மாதம்
மன்னார். ராமேஸ்வரம் கப்பல் மூலம் முதல்முதலாக நான் தமிழ்நாடு சென்றேன். தங்கியிருந்த நாட்களில் சென்னையில் நான் விஜயபாஸ்கரனின் விருந்தினனா கவே தங்கியிருந்தேன். சென்னை சென்ற இரண்டாம் நாள் நண்பர் ஜெயகாந்தனைச் சந்திக்கப் பெரிதும் விரும்பினேன்.
அப்பொழுது அவர் எழும்பூரில் வசித்து வந்தார்.
என்னை அழைத்துச் சென்ற நண்பர் விஜயபாஸ்கரன், நண்பர் ஜெயகாந்தனை அவரது இல்லத்திலேயே முதன் முதலில் சந்திக்க வைத்தார்.
மல்லிகை மே 2009 * 38

பல நாட்கள் பழகிய நண்பர்களைப் போல, நாங்கள் இருவரும் தொடர்ந்து பேசிக் கொண்டோம். இந்த அறிமுக நட்பிற் குப் பின்னால் நான் பல தடவைகள் தமிழ் நாடு சென்று வந்த போதிலும் கூட, நண்பர் ஜெயகாந்தனைச் சந்திப்பதில் நான் வெகு அக்கறை காட்டி வந்தேன். ‘வாழ்வின் தரிசனங்கள் என்ற எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை வழங்கியவர், ஜெயகாந்தன் அவர்களே.
நான் தமிழ்நாட்டுக்கு முதன் முதலில் வந்ததைப் பாராட்டும் முகமாகக் கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பாக அதன் தலைவர் என்ற முறையில் தோழர் ஜீவானந்தம் ஒரு வரவேற்புக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்.
அந்த வரவேற்புக் கூட்டத்தில் நான் தெளிவாக என்னுடைய கருத்துக்களை யும் முன்வைத்தேன். 'மக்கள் மத்தியில் இலக்கியச் செல்வாக்குடன் மெல்ல மெல் லத் துளிர்த்து வரும் சரஸ்வதி சஞ்சிகை க்கு மாற்றாகத் தாமரை என்றொரு மாத இலக்கிய ஏட்டை உருவாக்கி உலவ விட்டு வருவது அத்தனை ஆரோக்கிய மான செயலல்ல என்பது எனது ஆழமான கருத்தாகும்" என்று நான் பகிரங்கமாகச் சொன்னேன்.
கடைசியாகச் சென்னைக்குச் சென்றி ருந்த சமயம் ஜெயகாந்தனின் ஒரே புதல் வன் ஜெயசிம்மனது திருமண வரவேற்பு விழாவிலும் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.
என்னைத் தனது சரஸ்வதி சஞ்சிகை யின் மூலம் தமிழகத்திற்கு நன்கு அறிமுக ப்படுத்தியவரான நண்பர் விஜயபாஸ்கரனை
நான் நீண்ட காலமாகச் சந்திக்க முடிய
வில்லை. அவர் சென்னையிலிருந்து நீண்ட தூரங்களுக்கப்பால் கோயம்புத்தூரில் வசிப்பதால் எங்களது தொடர்புகளுக்கு அத் தொலைதூரம் உகந்ததாக இருக்க வில்லை.
கடைசியாகத் தானே தொகுத்த, கலைஞன் பதிப்பக வெளியீடான சரஸ் வதி களஞ்சியம் என்றொரு கொழுத்த நூலை 25.10.2005 திகதி தானே கையெ ழுத்திட்டு, கோயம்புத்தூரில் இருந்து எனது கொழும்பு முகவரிக்கு அனுப்பியிருந்தார். நீண்ட கடிதமொன்றும் வரைந்திருந்தார்.
சரஸ்வதி காலத்து நட்புத் தொடர்பு இன்றுவரை நீடித்துக் கொண்டே வரு கின்றது.
கடைசியாகக் கொழும்பில் மல்லி கைக் காரியாலயத்தின் மேல் மாடியில் மிக மிக ஆறுதலாக இருந்து கொண்டு, கடந்த அரை நூற்றாண்டு காலங்களுக்கு மேற் பட்ட எனது இலக்கியப் போராட்ட வாழ்க் கைக் காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
இந்தக் கால கட்டங்களில் சரஸ்வதி கால கட்டம், எனது எழுத்து வாழ்க்கையி லும், இலக்கியப் போராட்ட வாழ்விலும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கால கட்டங் களாகும். என்னைப் பரவலாக வெளிப் படுத்த உதவிய காலகட்டங்களாகும். தமிழகத்து எழுத்தாளர்களில் பலரை நட்புக்குரியவர்களாக நெருங்கி வரச் செய்த பெரும் பங்கு சரஸ்வதிக்கே உரியதாகும். பிரதானமாக நண்பர் ஜெயகாந்தனை நெஞ்சுக்கு நெருக்கமானவராக உருவாக் கித் தந்ததே, விஜயபாஸ்கரனது உழைப்பி னால் மலர்ந்த சரஸ்வதி சஞ்சிகையின் தொடர்புதான் என்பதை நெஞ்சார ஒப்புக் கொள்ளுகின்றேன், இன்று.
மல்லிகை மே 2009 * 39

Page 22
தமிழக எழுத்தாளர் கோரியுடன் ஓர் இலக்கியச் சங்கதிப்பு
- ஏ. எஸ். எம். நவாஸ்
தமிழக எழுத்தாளரான ஏ. ஏ. எச். கே. கோரி அண்மையில்
இலங்கைப் பயணத்தை மேற்கொண்ட சமயம் "மல்லிகை"
ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் அலுவலக வாசலையும் தட்டத் எழுத்தாளர் தவறவில்லை. இவ்வாறான இனிய சந்திப்புகளை இலக்கியக் ஏ. ஏ. எச். கே. கோரி குழுச் 伊曲目 圈
திப்பாக மாற்: றுவதில் "மல்லிகை" ஆசிரியர் தீவிரம்
காட்டுபவர் என்பதில் கருத்து மாற்றம் இருக்கமுடியாது. மல்லிகைப் பந்தல் ஊடாக ஓர் இனிய சந்திப்பு நிகழ்வை 'கலாசுரபி' முன்றலில் ஒன்று கூட்டக் கலை இலக்கியவாதிகள் அதில் கூடினர்.: கடந்த 25.04.2009 கொழும்பு மாகாணே சபைத் தேர்தல் தினத்தன்று மாலையில் இவ்வைபவம் இடம்பெற்றது.
டொமினிக் ஜீவா விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
உருதைத் தாய்மொழியாகவும், தனது படைப்பு முயற்சிகளைத் தமிழ் மொழியாகவும் கொண்ட எழுத்தாளர் ஏ. ஏ. எச். கே. கோரியை டொமினிக் ஜீவா " வரவேற்றுப் பேசிய போது, "தமிழ்நாட்டுக் காரராக இவர் இருப்பினும், இலங்கை பின் தலைநகரமான கொழும்பில் திருமணம் செய்து கொண்டவர். இலங் கைப் பயணத்தில் ஆர்வம் காட்டும் இவர், ! இலக்கியத்துறை மீதான ஆர்வ மும் -
மல்லிகை மே 2009 : 40
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டவர். "குமுதம்" என்ற பெரும் இதழிலும், சிற்றிலக்கிய ஏடுகளிலும் தனது சிறுகதைகளை அவர் எழுதி வருகிறார். இது ஒரு இலக்கியப் பரிமாற் றமே தவிர, வேறொன்றில்லை. நமது எழுத் தாளர்கள் பற்றிய அக்கறை தமிழக எழுத் தாளர்களுக்கோ, தமிழக இதழ்களுக்கோ இருக்கிறதா என்றால் துளியும் இல்லை. நடிகைகளின் தொப்புளுக்கே முதலிடம் கொடுக்கிறது அங்குள்ள சஞ்சிகைகள். "யுகமாயினி" என்ற தரமான தமிழ் ஏட்டில் தனது சிறுகதைகேைள எழுதும் எழுத் தாளர் கோரியைப் பாராட்டி வரவேற்கி றோம். தமிழை ஒருவன் எழுதி வளர்க்கி றான் என்றால், நாம் வரவேற்கவே வேண் டும். தமிழர்கள் இடம்பெயர்ந்து உலகெல் லாம் வியாபித்து 32க்கு மேற்பட்ட இலக் கிய இதழ்களை நடத்தி வருகின்றனர். 25 லட்சங்கள் வாங்கிய ஒரு நடிகன் 2 கோடி கேட்டு வாங்குகின்றானென்றால், அது நமது புலம் பெயர்ந்த தமிழர்களுடைய பனமல்லவா?" என்று பேசியதையடுத்து, கலாவிமர்சகர் கே. எஸ். சிவகுமாரன்"தமிழக ஏடுகளில் நமது படைப்பாளிக குளுடைய எழுத்துக்கள் வருவதில்லையே என்று டொமினிக் ஜீவா குறைபட்டார். குமுதம்" வெளியிடும் தீராநதியில் நமது எழுத் தாளர்கள் பற்றியும் வந்திருக்கிறது. ஜனரஞ்சக இதழ்களில் எழுதுவது ஒன்றும் தவறல்ல. ஜனரஞ்சகமாக எழுதுகின்ற வர்கள் தாழ்ந்த பளடப்பாளிகளுமல்ல, இலக்கியப் படைப்புக்களைப் படிப்பவர்கள் குறிப்பிட்ட சிலரே உள்ளனர். சினிமா என்று சொல்லும் போது, அது பிரதானம் பெறுகிறது. உலகச் சினிமாக்களைச் சுற்றி வந்தால் இது புரியும், அதை ரசிப்பவர்கள்
தான் அதிகம் பேர் உள்ளனர். அது தவறும் அல்ல." என்று பேசி முடித்தார்.
பதுளை சேனாதிராஜாவும் தனது கருத்தை முன் வைத்து, ஈழத்து இலக்கி யம் புலம்பெயர் இலக்கியம் பற்றியும் இங்கு உரைத்து "யுகமாயினி" என்ற தமிழகத்து இலக்கிய இதழில் நம்மவர் படைப்புக்களை ஏற்க வேண்டும் என்றார். எனினும், யுகமா யினி' இதழை ஏற்கனவே "மல்லிகை" அலுவலகத்தில் வைத்துப் புரட்டிப் பார்த்த போது, நமது எழுத்தாளரான செங்கை ஆழியான் அவர்களது தொடர் கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டு வருவது தெரிய வந் தது. எல்லாவற்றுக்கும் நமது எழுத்தாளர் களும் முயற்சிக்க வேண்டும்.
தமிழகத்தில் "கணையாழி" இன்னும் வந்து கொண்டிருப்பதாக எழுத்தாளர் கோரி மூலம் அறியக் கிடைத்தது. "கோரி பிறந்த இடம் தமிழகமாக இருப்பினும், அவ ரது மனைவி வழியால் புகுந்த வீடு இலங்கை தானே." என்று நகைச்சுவையாகக் கூறிய வர் மேமன்கவி. இவ் ஒன்று கூடலில் கே. எஸ். சிவகுமாரன் பல கேள்விகளைக் கோரி யிடம் தொடுத்ததும் குறிப்பிடத்தக்க ஒன்று.
கோரியின் பதில்களில் பல தகவல் களை அறிய முடிந்தது. அவர் பேசியதா வது- "1978இல் இலங்கைப் பயணத்தின் போதே, மல்லிகை ஜீவா, சாந்தன், மேமன்கவி போன்றவர்களைச் சந்திக்க முடிந்தது. சாந்தபின் யாழ்ப்பானத்தவர். 1978 இல் அவர் ஏற்பாடு செய்த ஒரு இலக் கியக் கூட்டத்திலேயே நான் முதன் முதலா கக் கலந்து கொண்டேன். இலங்கை எழுத்தாளர்கள் பற்றித் தமிழக எழுத்தா ளர்களுக்கு அக்கறையில்லை என்று
மல்லிகை மே 2009 : 41

Page 23
டொமினிக் ஜீவா ஆனால், நாங்கள் அவ்வாறு எண்ண வில்லை. "யுகமாயினி'யில் இலங்கையின் செங்கை ஆழியான் கூட எழுதுகிறார். இலங்கை எழுத்தாளர்களின் படைப்புத் தரத்தைக் குறைவாக மதிப்பிட முடியாது. "குமுதம்" சஞ்சிகையே எனது சிறு கதையை முதன் முதலில் பிரசுரித்தது. எஸ். ஏ. பி. அண்ணாமலை "குமுத' த்தை நடத்திக் கொண்டிருந்த காலம். அப் போதைய குமுதம்" வேறு. இப்போதைய குமுதம்' வேறு. தமிழ் சினிமாவின் ஆளு கைக்குள் அடங்கிவிட்ட ஒரு இதழாக அது மாறிவிட்டது." என்றவர்- "கணையாழி',
ஆதங்கப்பட்டார்.
"ஆனந்த விகடன்', 'வசந்த வாசல்", "யுக மாயினி" என்பவற்றில் தான் எழுதிவருவ தாகவும் குறிப்பிட்டார். வியாபார எழுத்து, சிற்றிலக்கிய எழுத்து என்பவற்றில் வேறு பாடுகளையும் எழுத்தாளர் கோரி தொடத் தவறவில்லை. தமிழகத்து நியு புக் லேண்ட்"
டில் மல்லிகை இதழ் தனக்குக் கிடைப்ப தாகவும், அதிலிருந்து தான் ஈழத்து எழுத்தாளர்கள் விடயங்களை அறிந்து கொள்வதாகவும் இந்நிகழ்வில் கூறினார்.
இரு தேசங்களிடையே உள்ள தமிழ் எழுத்தாளர்களின் தொடர்பாடல் அவசிய மாகிறது. அதற்கு யுகமாயினி பாலமாகத் திகழ வேண்டும் என ஏனைய எழுத்தாளர் கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த இனிய நிகழ்வில் இலக்கிய வாதிகள், இலக்கியச் சுவைஞர்களுடன் 'சிலோன் யுனைட்டட் ஆர்ட் ஸ்டேஜ்" நாடகக் கலைஞர்களான கே. செல்வராஜன், எஸ். கந்தையா போன்றோரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
திருமறைக் கலாமன்றத்தின் "கலா சுரபி' இது போன்ற நிகழ்வுகளுக்கு இடம் தந்தமைக்கு மல்லிகை ஆசிரியர் நன்றி கூறினார்.
A. R. R. HAIR DRESSERS
89, Church Road, Mattakuliya,
Colombo - 15. Te|: 0 1 12527219
முற்றிலும் குளிருட்டப் பெற்ற சலூன்
L Disiurilaxxa us GLI 2))
孪42
 

1. சின்னக் கடை அமுதனின் பக்கங்கள்
http:www.amuthan wordpress.com/
LL
இன்றைய தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கு தங்கள் கருத்தை பிறர் அறிய வேண்டும் எனும் ஆவல் அதிகமாகவே இருக்கிறது நல்ல விடயம்தான். அதுவும் எழுத்தில் சொல்லவேண்டும் எனும் போக்கும் இன்று பரவலாக இருக்கிறது அதற்கான வசதிகளை இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி ரோம்பவும் அவர்களுக்கு துணை புரிகிறது. அத்தகைய ஒரு தொழில் நுட்பவழிகள்தான் கணணியும் இணையமும் திகழ்கின்றன. இன்று பல்லாயிரக் கணக்கான தமிழ் பேசும் சூழலைச் சார்ந்த இராஞர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய இணையத்தை ஆக்கபூர்வமான ஊடகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் இன்று அதிகரித்து வரும் வலைப்பதிவுகளின் தொகை அந்த கூற்றை நிரூபிக்கின்றன. அந்த வகையில் இலங்கை மண்ணாரைச் சேர்ந்த "சின்னகடை அமுதன்' எனும் இஞைரும் தனக்கான வலைப்பதிவை வைத்திருக்கிறார். கவிதைத்துறையில் ஆர்வமிக்க இவர் விரைவில் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிடும் ஆர்வத்தில் உழைக்கிறார். அவரது 'அமுதனின் பக்கங்கள்" எனும் அவரது பதிவில் பதித்திருக்கும் ஒரு கவி:த உங்கள் பார்வைக்கு.
ஒரு உதிரள் ாேதம் பூ தன் மத்த போது.தற்காய் அனுபவித்த கீர்த்தையும், பின் சேர்ந்து உதிரும் போது ம்ே துண்பத்தையும் கூறுவதாக கீதை அமைந்துள்ளேன். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்
விண் கீருக்கவேண்டும். எங்ணே வாழ்க்கையானால்."
மல்லிகை மே 2009 : 43

Page 24
அஞ்சு வயசுல அமச்சிக் கரையில அம்சவள்ளி கூட அரை நிஜாரோட
ஆத்தங்கரையில ஒரு கூத்து.
பத்து வயசுல பாறையில பள்ளந்தோண்டி, பக்கத்துவிட்டுப் பத்மாவோட ஓர் ஆட்டம் V ஆமாம், பாண்டி ஆட்டம்
மணலைக் கயிறாக்கி, வானத்தை வில்லாக்கும் பருவமது பருவக்கிளர்ச்சியினால் - அவளின் எழுச்சியினால், மூவைந்தில் முகத்தில் ஒட்டிக்கொண்டவை. பருக்கள்
ஓடும் பாம்பைக் குறுக்கில் மிதிக்கும்பயமறியா வயது. இருபது புதியதாய் முளைத்தவள் முத்தம்மாள்
மூவைந்தே கொண்ட முத்தம்மாள் - என்னை முத்தத்தால் நனைத்தாள் இல்லாத என் மூளையைக் குலைத்தாள்
விவேகமற்ற வீரத்தில் வாழ்க்கை கொடுத்தேன் - அன்றே வாழ்வைத் தொலைத்தேன் ஈருடல் ஒருயிர் ஆனது - புதியதாய்ச் சில உயிர் கருவானது
ஐந்தாறு வருடத்தில் 96.60)6O785 6600TLT6IT ஆசை கொண்டாள், அறிவை இழந்தாள் அவளின் மோகத்தீயினில் நான் விட்டிலாகினேன்
மல்லிகை மே
இல்லாத எதையோ தேடி இருக்குமெனை அன்றே மறந்தாள்
ஆண்டுகள் பல ஆயின அறுபதும் தேடி வந்தது இளமையில் கல்வி இல்லாமையால் முதுமையில் வறுமை என்றுணர்ந்த கல்லுடைத்துப் படிக்க வைத்தேன் என் செல்வங்களை கண்ணிமைக்குள் பொத்தி வழர்த்தேன் முத்துக்களை அவர்களும் ஆளாயினர் - அறிவற்ற என்னை ஆளவுமாயினர்
என் குடிசை மாளிகையானது மாளிகையருகிலொரு குடிசை உருவானது என் செல்வங்கள் எனக்களித்த மாளிகை, அவர்கள் வீட்டு எருமைகள் மடம், எவருமில்லை என்னருகில் ஒருக்களித்துப் படுத்துக்கொள்கிறேன் கண்ணில் நீர் பெருக, உதிரும் பூ அழுகிறது, மலரும் பூக்கள் மீண்டும். அமச்சிக்கரையில் ஆடுவதைக் கண்டு.
"ஊடறு”
www.oodaru.com/
2.
ஊடறு பெண்ணிய சிந்தனையில் செயற்படும் இணையத்தளம்.
புதிய மாதவி அதில் அடிக்கடி எழு தும் தமிழகத்தைச் சார்ந்த பெண்ணிய
LIGODL in IIIref.
2009率44

அவர் ஆங்கிலத்தில் எழுதும இந்திய பெண்கவிஞர்களில்ஒருவரான prathibha Nandakumar asafaosaseoor anorg பெயர்த்து ஊடறு இணையத்தளத்தில் தந்ததை உங்கள் கவனத்திற்கு இடறு க்கு நன்றி.
காணவில்லை
உனக்கு
எல்லாம் தெரியும்
என்னை
என் முதுகிலிருக்கும் மச்சத்தை இடது காதில் மறைவாக இருக்கும் தழும்பை பெருவிரலில் நைந்துப்போன நகக்கணுவை. அடர்ந்த இருளிலும் உன்னால் அடையாளம் காணமுடியும் என் பட்டுப்போன்ற மேனியின் ஒவ்வொரு வளைவுகளையும். ஆனால் நீ அறிந்திருக்கவில்லை அந்த ஏழு கடல்களைத் தாண்டிய போது என் பெருமூச்சில் எரிந்துபோன ஆகாயத்தை உன் அணைப்பில் புதைந்து இதழ் நனைத்த முத்தத்தில் சரிந்து விழுந்த நான் காணாமல் போனதை
ஆபிஸில் மதிய உணவு நேரம்
அவன் நிறுத்தாமல்
பேசிக்கொண்டே இருந்தான். திறந்திருந்தது அவன் பெரிய டிபன் கேரியர்
அறுசுவை உணவு வகைகள் அவியல், பொறியல் சட்னி, சாம்பார் சாதம், தயிர்ச்சாதம், அப்பளம் தொட்டுக்கொள்ள ஊறுகாய் இத்துடன்
தித்திக்கும் இனிப்பில் இரண்டொரு மாங்கனித் துண்டுகளின் poOTb.
சாப்பிட்டுக்கொண்டே
அவன்
அவன் மனைவியைப் பற்றிக் குறைபட்டுக்கொள்கிறான். அவள் - அறிவிலியாம். சோம்பேறியாம்
குண்டாம்
பார்க்க சகிக்கலையாம்
முட்டாளம் நடனங்கள் கண்டதில்லையாம் சங்கீதக்கச்சேரி கேட்டதில்லையாம் ஏன்.
மாசாலா டீ ன்னா கூட என்னவென்று தெரியாதாம் அவளுடன் வாழும் வாழ்க்கை வெறுத்துவிட்டதாம் ஆனாலும் ஆனாலும் என்ன செய்வது
குழந்தைகளுக்காக குடும்ப கவுரவத்திற்காக. என்றவன்.
என்னைப் பார்த்து
சொன்னான்.
நான் புத்திசாலியாம்
அறிவுஜீவியாம்
மல்லிகை மே 2009 & 45

Page 25
ஆபிஸ் வேலை
வீட்டு வேலை இரண்டிலும் கெட்டிக்காரியாம் சம்பாதிக்கிறேனாம் கவிதை கூட எழுதுகிறேனாம் என் கணவர் ரொம்பவே கொடுத்து வைத்தவராம். நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன். அன்றுமாலை என் கணவருக்குப் பிடித்தமானதை சமைத்துக் கொண்டிருக்கும்போது அவர் ஆபிஸ் பையன் கழுவப்படாத டியன் பாக்ஸை என்னிடம் நீட்டிவிட்டு சொல்லிச்சென்றான் ‘பாஸ் இன்று லேட்டாக வருவார் என்று
கதை சொல்லு
எனக்கொரு கதை சொல்லு. உன் கதையில். ஏழு கடல்கள் 919 U-6 ön-lgu LFUáð தீ கக்கும் டிராகன் இவர்களுடன் இருக்கட்டும் அரக்கனைப் பரிகாசம் செய்யும் ஒரு சின்னப் பச்சைக்கிளி முத்துக்களைக் கொறித்துக்கொண்டு. இருக்கட்டும் முடிவில்லாத சிக்கலான பாதை
வெளிவரமுடியாமல் ஒவ்வொரு படியிலும் தடைக்கற்கள்
பயப்படவில்லை. இந்த மாதிரிக் கதைகளை எனக்குத் தெரியும். எல்லா கதைகளிலும்
எப்போதும்
கடைசியில் இனிமையாக வாழ்ந்ததாக 5|LJLDT35 (pLQu„Ď 6IGörg. கதைச் சொல்லு
எனக்கு. மூச்சுத் திணறும் அணைப்பில் வேப்பமரத்தடியில் அவன் கனவுகள் விழித்தெழுந்ததை. கதைச் சொல்லு எனக்கு. உன் கதைக் கேட்டு அடிப்பட்ட மான் போல துடிதுடித்து அழவேண்டும். கதை முடிவில் தொலைந்து போன குழந்தைகள் சந்தர்ப்பவசத்தால் ஒருவரை ஒருவர் சந்திக்கட்டும். கதைச் சொல்லு எனக்கு. ஒரே ஒரு ஊரில் ஓர் இளவரசியாம் அவளைக் காதலித்தானாம் துணிகளை வெளுக்கும் அவன்.
இந்தக் கதையில் கற்பனை இருக்காதே. கதை சொல்லு எனக்கு. கதை சொல்லு.
மல்லிகை மே 2009 & 46

CINEIST XH opisypasib
- மேமன்கவி
ஐவா அவர்கள் cineist இலங்கையிலிருந்து வெளிவரும் சினிமா சம்பந்தமான சஞ்சிகை என கொடுத்த பொழுது, அதனை புரட்டிப் பார்த்த வேளை, தமிழகத்திலிருந்து வெளிவந்த வெளி வந்து கொண்டிருக்கும் சினிமா சம்பந்தமான பேசும் படம், பொம்மை, வண்ணத்திரை போன்ற சஞ்சிகைள் எனக்கு நினைவில் வரவில்லை. மாறாக, நினைவுக்கு வந்தவை தமிழகத்திலிருந்து சீரியஸ் சினிமா சம்பந்தமாக வெளிவந்த இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் சலனம், நிழல் எனும் சினிமா சம்பந்தமான சஞ்சிகைகள்தான எனக்கு நினைவுக்கு வந்தன. CINEIST சஞ்சிகையை வெளியிடும் COLOMBOFILM CIRCLE அமைப்பை பற்றி கேள்விபட்டிருந்த நிலையில், அவ்வமைப்பின் வெளியீடான CINEIST சஞ்சிகையின் வருகை மகிழ்ச்சியினை அளித்தது. அத்தோடு இன்னுமொரு மகிழ்ச்சி தரும் விடயம் இச்சஞ்சிகையில் மும்மொழிகளிலும் மட்டுல்லாது பிரஞ்சு மொழியிலும்(பிரஞ்சு மொழி என்றுதான் நினைக்கிறேன்) உலக மற்றும் தமிழ், சிங்கள சினிமா சம்பந்தமான கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இத்தகைய முயற்சி (அதாவது மும்மொழி களிலும் உலகின் பிற மொழிகளிலும் கட்டுரைகளை வெளியிடுதல் என்பது) நல்லதொரு முயற்சி என்றே எனக்குப்பட்டது. ஆனாலும், அக்கட்டுரைகளை அச்சஞ்சிகையில் வெளியிட்டிருக்கும முறைமை என்பது, அக்கட்டுரைகளை வாசித்தல் முயற்சியில் இடர்வான ஒரு நிலையை ஏற்படுத்துகிறது. அதாவது அச்சஞ்சிகையின் அமைப்பை இரண்டு COLUNகளக பிரித்து ஒரு கொலத் தில் ஒரு மொழி கட்டுரையையும் இரண்டாவது கொலத்தில் இன்னொரு மொழி கட்டுரையை யும் வெளியிட்டுள்ளார்கள். தொடர்ச்சியாக அவ்விரு கட்டுரைகளும் இரு கொலங்களில் தொடர்கின்றன. இது அக்கட்டுரைகளை வாசிப்பதில் மேற்படி குறிப்பட்டது போல இடர்வை ஏற்படுத்துகின்றன.ஒவ்வொரு மொழி கட்டுரைகளையும் தனித்தனியாக வெளியிட்டு இருக்கலாம்.
இச்சஞ்சிகை குறிப்பிட்ட-எதுவிதமான கோட்பாட்டினையோ உலக தத்துவத்தினையோ வாசகர்கள் முன் நிறுத்த முனையவில்லை’ எனும் பிரகடனத்தை, உலக சினிமா கோட் பாடுகளுடனும், சிந்தனைகளுடனும் பரிச்சயமிக்க ஒரு குழவினரால் வெளியிடப்படும இச் சஞ்சிகையின் ஆரம்பத்தில் இவர்கள் வைத்திருக்கிறார்கள். இத்தகைய ஒரு பிரகடனத்தை முன் வைத்தமைக்கான நோக்கம் என்ன? என்பதை அவர்கள் அச்சஞ்சிகையில் தெளிப் படுத்தவில்லை. அத்தோடு இச்சஞ்சிகையினை வெளியிடுவதற்கான நோக்கம் என்ன?
மல்லிகை மே 2009 & 47

Page 26
என்பதையும் இச்சஞ்சிகையில் இவர்கள் தெளிப்படுத்தவில்லை. இதுதான் முதல் இதழா? அல்லது இதற்கு முன்பு வெளி வந்துள்ளதா என்பதையும் நம்மால் அறிந்து கொள்ளமுடியவில்லை. அட்டைப்படத்தில் 2009ஆம் ஆண்டுக்கான முதல் காலாண் டுக்கான இதழ் என்று மட்டும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் இதுதான் முதல் இதழ் 66önug, COLOMBO FILM CIRCLE us, உத்தியோகபூர்வமான இணைத்தளத்தில் (www.colombofilm.com) (636) 6fgp பற்றி இடம் பெற்றிருக்கும் குறிப்பு மூலம் அனுமானிக்க முடிகிறது. அத்தோடு, இத்த கைய சஞ்சிகை ஒன்றினை அவர்கள வெளி யிடுவதற்கான நோக்கத்தையும் அக்குறிப் பில் அறிந்துக் கொள்ளமுடிகிறது. அக்குறிப் பில், இன்று நமது பத்திரிகைகள் சினிமா விமர்சனத்திற்கு ஒதுக்கும் இடமானது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலே இருக்கிறது என்றும், அவ்வாறு ஒதுக்கப்படும் இடம கூட, திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படும் படங்களின் விநியோகஸ்தருக்கு அப்படங் களின் சந்தை விஸ்திரப்படுத்தி, பணம பண்ண உதவும் கைகாரியங்களாக அமைகின்றன என்றும், அத்தகைய சூழலில், அக்கைகாரி யங்களே சினிமா பார்வையாளனின் சினிமா சம்பந்தமான ரசனை கட்டமைகின்றன. ஆனால் ஆரோக்கிய சினிமா சம்பந்தமான விமர்சனத்திற்கான ஒரு தளம் தேவை எனும் தொனியில் வெளிப்பட்டிருக்கும் அக்குறிப்பு CINEST சஞ்சிகை வருகைக்கான தேவை நமக்கு புலப்படுத்துகிறது.
இனி இவ்விதழில் இடம்பபெற்றுள்ள ஆக்கங்களை பற்றி பார்ப்போம்.
முன்பு குறிப்பிட்டது போல் மும்மொழி களிலும் (ஆங்கிலம், சிங்களம்,தமிழ்) மற் றும் பிரஞ்சு மொழியிலும்,உலக, மற்றும் தமிழ், சிங்கள திரைப்படங்கள் பற்றி ஆழ
மல்லிகை மே
மான பல கட்டுரைகள் இடம் பெற்றியிருப்ப துடன், சிங்கள மொழியில், இலங்கையின் சிறந்த ஓர் இயக்குனரான தர்மசேன பதி ராஜா அவர்களுடான ஓர் உரையாடலும் இடம் பிடித்துள்ளது. தமிழ் கட்டுரைகளை பொறுத்தவரை, இம்முறை ஒஸ்கார் விருதை பெற்றுக் கொண்ட ஹாலிவுட் திரைப்படமான “NO COUNTRY OLD MAN 6lgud gaoji Ujs6ODg5 Lubý JUDE RATNAMEĐ6Jffa5 ளால் எழுதப்பட்டுள்ளது.
‘அமெரிக்க வாழ்க்கை முறை மற்றும வன் முறை குறித்த ஒரு சினிமாத் தேடல்’ என்றும் எழுதப்பட்டுள்ளது. (இக்கட்டுரை ஆங்கிலத் திலும் இடம்பெற்றுள்ளது.) இக்கட்டுரை நம்ம வர்கள் மத்தியில் ஹாலிவுட் திரைப்படங் கள் பற்றிய பார்வையை மாற்றவும் அமைந் துள்ளது. இக்கட்டுரையில் இறுதியில், இல ங்கை திரையங்குகளில் இத்திரைப்படம ஏன் காண்பிக்கப்படவில்லை என்னும் கேள்வி யினை எழுப்பி அதற்கு. அவர் சொல்லும் விளக்கம்
*அநேகமாக ஒஸ்கார் விருதினை பெறும்
திரைப்படங்கள் திரையிடும் எமது தியேட்டர்
சொந்தக்காரர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் இந்தத் திரைப்படத்தைத் திரையிடவில்லை. இதற்கு காரணமென்னவென நான் கருதுவது இத்திரைப்படம் சாதாரண ஹாலிவுட் திரைப்படங்களிலிருந்து வேறுபட்டதாக காணப்படுகிறது. ஹாலிவுட் திரைப்படங்களை படைக்கும் விதத்தினை மாற்றிக் கொண்டாலும் அல்லது அமெரிக்க பார்வையாளர்கள் தங்கள் ரசனையை மாற்றிக் கொண்டாலும் அமெரிக்கர்களை விடவும் அமெரிக்கத்தன்மை கொண்ட எமது தியேட்டர் சொந்தக்காரர்கள் சாதா ராண ஹாலிவுட் திரைப்படங்களிலும் வேறுப்பட்ட பார்வையாளர்களை சிந்திக்கத் தூண்டுகின்ற எந்த வொரு திரைப்படத்தையும் திரையிடுவதற்கு இன்னும் பல வருடங்கள் செல்லும் என நான் நினைக்கிறேன்.”
JUDE RATNAM E96Jf8b6ff6öT gebaknibgp எமது கவனத்தைச் சிறப்பாகக் கவர்கிறது.
2009奉48

அடுத்து இவ்விதழில் இடம் பெற்றுள்ள தமிழ் கட்டுரை ர.ஈழவசந்தன் அவர்களின் இலங்கை சினிமா எங்கே போகிறது?’ எனும் கட்டுரை (இதே சிந்தனை பற்றி பேசுகின்ற JUDERATNAM sorteB6fast Is the SriLankan cinema taking a wrong turn? 6Tgjub 85 (6 ரையும் இதே பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு ஒரு சந்தேகம் எனக்கு எழுகிறது. J.Fp63 bg56óî6ÖT a5ÜGGODU JUDE RATNAM அவர்களின் கட்டுரையின் சுருக்கிய மொழி பெயர்ப்பா? அல்லது ஈழவசந்தனின் சுய படைப்பா? ஆனால், ஈழவசந்தனின் கட்டுரை படிக்கும் பொழுது UDERATNAM அவர்க ளின் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு என்று தோன்றினாலும், தமிழ் கட்டுரையின் கீழ் மொழிபெயர்ப்பு ஈழவசந்தன் என்று இல்லாமல் ஆக்கம் எனக் காணப்படுவதால் ஈழவசந்தனால் எழுதப்பட்ட கட்டுரை என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.) இவ்விரு கட்டுரைகளும் ‘அபா’ எனும் சிங்களப் படத்தை முன் வைத்து பேசுகிறது. அபா எனும் அத் திரைப் படம் பேசுகின்ற 6360TLDuJ6)JT g5 (Ethnocentric) So, Jefflu J60)6no அடையாளப்படுத்தி முற்போக்குக் கொண்டு வந்த இலங்கை சினிமாவின் வளர்ச்சிக்கு இத்தகைய போக்கு ஆரோக்கியமானது அல்ல என்பதை இவ்விரு கட்டுரைகள் அழுத்தி சொல்லியிருப்பதன் மூலம் இக்கட்டுரையும் நமது கவனத்தை கவர்வதில் பின்நிற்க 6l6ù6O6o 676076oTub. SÐBĝBg5 CAMIL0 RATNAM Film Asa Medium' 6tgub syskisu g5606) ப்பிலும், "திரைப்படத்தின் தாக்கம்’ எனும் தமிழ் தலைப்பிலும் எழுதியுள்ள கட்டுரை. இக்கட்டுரை தென்னந்திய தமிழ்த் திரைப் படங்களின் போக்கினை குறித்து எழுதப்
பட்ட கட்டுரை எனலாம். தென்னந்தியாவில்
திரைப்படத்தை தமது பிரசார ஊடகமாக கொண்டு அரசியலுக்கு வந்தவர்களை பற்றி பேசுவதோடு, அமெரிக்காவில் சினிமா விலிருந்து அரசியலுக்கு வந்தவர்களை பற்றி யெல்லாம் பேசுகிறது. உண்மையில் விரி
வாக எழுதப்பட்டிருக்க வேண்டிய கட்டுரை இது. ஏனெனில் இக்கட்டுரை முன் வைத்தி ருக்கும் கருத்துக்கள் விரிவான தளத்தில் வைத்து பேசவேண்டிய, விவாதிக்க வேண்டி யவை. அந்த வகையில் இக்கட்டுரை முழுமை பெற்றிருக்காத போதும் ஆரம்ப முயற்சி என்ற வகையில் அவதானிக்க வேண் டிய ஒரு கட்டுரை எனலாம்.
இவ்வாறான பல அவதானத்திற்குரிய பல ஆக்கங்களை தந்திருக்கும் இச்சஞ்சி கையுடன் தொடர்பு கொள்வதற்கான வழி முறைகளை பற்றி இக்குழுவினர் அக்கறை கொள்ளவில்லை போல் தெரிகிறது. இச் சஞ்சிகையின் எந்தவொரு பக்கத்திலும அக் குழவினர்களுடன் தொடர்புக் கொள்வதற் கான முறைகள் காணப்படவில்லை (சஞ் சிகை வெளியிடப்படும் முகவரியோ, மின் னஞ்சல் முகவரியோ கொடுக்கப்படவில்லை) என்பது ஒரு குறையாகும். (அச்சஞ்சிகை யினை வெளியீடும் அமைப்பின் இணையத் தள முகவரியைத் தவிர)
இவ்வாறான சிற்சில குறைகள் இருப்பி னும், அவர்கள் என்னதான் இச்சஞ்சிகை குறிப்பிட்ட எந்தவித கோட்பாட்டினையோ, தத்துவத்தையோ வாசகர் முன்நிறுத்த முனைய வில்லை என்று சொன்னாலும், ஆரோக்கி யச் சினிமா சம்பந்தமான ஒரு சஞ்சிகை (ஆங்கிலத்திலும் சரி சிங்களத்திலும் சரி, தமிழிலும் சரி) வெளிவராத சூழலில், அக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில், இவர் களின் CINEST எனும் இச்சஞ்சிகை முய ற்சி உலக தரமான சினிமா கோட்பாடுகளி னதும், அவை சார்ந்த தத்துவங்களினதும் ஊடாக, இலங்கை சினிமா பார்வையளர் கள் மத்தியில் ஆரோக்கியமான கனதியான சினிமா சம்பந்தமான ஒரு பிரக்ஞையை உரு வாக்க முனையும் ஒரு முயற்சி என்ற வகை யில் பாராட்ட வேண்டிய வரவேற்கத்தக்க வேண்டிய ஒரு பணி என்றே சொல்ல வேண்டும்.
மல்லிகை மே 2009 & 49

Page 27
O பார்வதிருரு சிவம்
அந்தவளை ஓசை அவனியிலே இன்றைக்கும் சிந்தையிலே நின்றின்பம் செய்யும் வளை ஓசை, அன்று மணவறையில் நம் செவிக்கு நல்லமுதைத் தந்து மகிழ்வித்த தார்மீக நல்லோசை வெளிச் சென்று வீடு திரும்பும் பொழுதெல்லாம் பளிச்சென்றுமின்னி மகிழ்வித்த நல்லோசை எத்தனையோ ஓசை செவிக்கின்பம் செய்தாலும் அத்தனைக்கும் மேலாப் அமைந்த வளை ஓசை தேநீர் தரும்போதும் தேடிச்சமைத்ததுவாம் ஆறுசுவை விளங்கும் அமுதுதரும் போதும் காது குளிர ஒலித்த மணி ஓசை இன்று வளைக்கரங்கள் இல்லையே- ஆனாலும் நின்று செவிக்கின்பம் செய்யும் வளை ஓசை பாசம் எனும் சொல் பாரில் உளவரையும் நேசம் விளைக்கும் நிலை கொண்ட நல்லோசை இப்பிறவி நீங்கி இன்னும் பிறவிகள் நான் எப்பொழுது கொண்டாலும் அந்தப் பிறவினலாம் என்னைத் தொடர இருக்கும் வளை ஓசை இன்னல் தவிர்க்க எழுந்த வளை ஓசை
(மனைவியை இழந்த துயருடன் எழுதியதே "அந்த வளை ஓசை" என்ற கவிதை)
மல்லிகை மே 2009 & 50
 

blæbrugtbų LOTUSESífli........
- ஏ. ஏ. ஹெச். கே. கோரி
சென்னையின் அசுர நெரிசலிலிருந்து விலகி வந்த பிறகு, இந்தக் கொழும்பு நகர
வீதிகளிலே, இடிபாடுகளில்லாத ஜனநடமாட்டம். பாதையைக் கடக்கிற மக்களுக்கு மரியாதை தந்து வேகந் தணிகிற வாகனங்கள், பாமன்கட வீதியின் அமைதியைச் சுகமாய் அசைத்துப் பார்க்கிற மாதிரி மாமரங்களின் உச்சியிலிருந்து அவ்வப்போது இசைக்கிற இனிமையான குயிலோசை எல்லாமே மனசைப் பரவசப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நெடுகப் பயணித்து, கழனியச் சந்திப்பில் கொழு ம்புக்குள்ளே நுழைகிற போது, எங்களுடைய ராக்ஸி வழிமறிக்கப்பட்டு, ஆமிக்காரனால் பரிசோதனை செய்யப்பட்டதும், என்னுடைய கடவுச் சீட்டு சரிபார்க்கப்பட்டு, எனக்குப் புரி யாத சிங்களத்தில் அவனும், அவனுக்குப்புரியாத ஆங்கிலத்தில் நானும் கதைத்துக் கொண்ட அந்த ஐந்து நிமிட வேகத்தடை மட்டும் இன்னும் மனசை நெருடிக் கொண்டேயிருக்கிறது.
நான் கல்யாணமாகிப் புதுமாப்பிள்ளையாய்க் கொழும்புக்கு வந்த காலத்திலெல்லாம் இந்தப் பரிசோதனை நிலையங்கள் இருக்கவில்லை. பொலிஸ் மற்றும் ராணுவக் கெடுபிடிகள் இருக்கவில்லை. ஒரு இந்தியனின் பார்வையில், இந்த இலங்கைத்தீவின் செழிப்பையும், வேகமான வளர்ச்சியையும் கண்டு நான் பெருமை கொண்டிருந்த நாட்கள் அவை. இதே வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்தால், இந்த நாடு சிங்கப்பூரை முந்தி விடும் என்று ஆச்சர்யமடைந்திருந்தேன், அப்போது. ஆசியாக் கண்டம் முழுவதுமே அண் ணாந்து பார்த்துக் கொண்டிருக்க, இலங்கை மேலே மேலே எழும்பிக் கொண்டிரு ந்ததெல்லாம் இப்போது பழங்கதையாகிப் போய் விட்டதே!
இன்றைய யுத்த சூழ்நிலையின் மத்தியிலும் கூட, சென்னையில் காணக் கிடைக்காத ஒர் அமைதி கொழும்பில் இப்போது எனக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது, சுயநலம் கலந்த ஒரு நிம்மதியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த அமைதிக்கு ஒரு விசேஷமான காரணத்தைச் ச்ொன்னார்கள். சிங்கள, தமிழ்ப் புத்தாண்டையொட்டி அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், கடைகள் எல்லாம் ஒரு பத்து நாட்களுக்கு மூடிக்கிடக்குமாம். புத்தாண்டைக் கொண்டாட நகரத்து மக்கள் கனபேர் கிராமங்களுக்குப் போயிருப்பினமாம். ஆகையினால், நகரத்துக்குள்ளே நெரிசல் இல்லை. வாகன ஓட்டம் அதிகமில்லை. மூச்சுத் திணறல் இல்லை. கடைகளெல்லாம் பெரும்பாலும் மூடித்தான் கிடக்கின்றன. வெள்ளவத்தையின் ஹெம்டன் ஒழுங்கையில் வைன் ஷொப் மட்டும் திறந்திருக்கிறது. சிங்கள, தமிழ்க் குடிமக்களின் நலன் கருதித் திறந்து வைத்திருக்கினமாம்.
மல்லிகை மே 2009 & 51

Page 28
சிங்களப் புதுவருஷமும், தமிழ்ப் புதுவருஷமும் சேர்ந்து வருவதும், இல ங்கை மக்கள் தங்கள் புதுவருவடிங்களை இணைந்து கொண்டாடுவதும், அதுவும் ஒரு பத்துநாள் விழா எடுப்பதும் ரொம்ப நல்ல விஷயங்கள். எங்கள் தமிழ்நாட்டில் தான் அரசாங்க ஆணை போட்டுப் புது வரு வடித்தைப் புரட்டிப் போட்டு விட்டார்களே. தன் பங்குக்கு, கொடூரமான வெயிலும் இப் போது சென்னையைப் புரட்டியெடுத்துக் கொண்டிருக்கிறது. மெரினா கடற்கரையின் ஜனத்தொகை கூடிக் கொண்டேயிருக்கிறது. கொழும்பில், காலிமுகக் கடற்கரையில் முன்னொரு காலத்தில் இருந்தது மாதிரி.
அப்போதெல்லாம் கொழும்புக்கு வருகிறபோது, மூன்று நாளைக்கொருதர மாவது மாலை நேரங்களில் காலிமுகக் கடற்கரைக்குப் போக வேண்டும். பாறைக ளில் மோதிச் சிதறுகிற அலைகளை ரசிப் பதற்காகவும், கடற் காற்றைச் சுவாசித்தபடி காலாற நடப்பதற்காகவும் மட்டுமல்ல, சுடச்சுட இறால் வடையை மென்று, குளிரக் குளிரக் கொக்கக் கோலா குடிப்பதற்கும், எலிஃபென்ற் ஹவுஸ் ஐஸ்கிறீமை ஆனந்த மாய்ச் சுவைப்பதற்கும் கூடத்தான்.
‘எங்களின்ர எலிஃபென்ற் ஹவுஸ் ஐஸ்கிறீமைப் போலை உலகத்திலை எங் கையுமே கிடையாது” என்று என் மனைவி பெருமையாய்ச் சொல்லுவா.
இப்போது காலிமுகக் கடற்கரையை இழுத்து மூடிச் சீல் வைத்து விட்டார்கள் என்கிற சோகமான சங்கதியையும் அவ தான் சொன்னா. அதற்கு மாற்றாக, 'வெள்ள வத்தைக் கடற்கரையை இப்போ டெவலப் செய்திருக்கினம். ஜனம் எல்லாம் அங்கை தான் வருவினம். நாங்களும் போகலாம்" என்றும் சொன்னா.
Curr(360TTub.
கடலுக்கும் ரயில் தண்டவாளங்களுக் குமிடையே குறுகலான கடற்கரை கண் ணுக்கெட்டிய தொலைவு வரை நீண்டு கிடந்தது.
நீலக் கடலுக்கு இணையாய் ஓடிய நீல நிற ரயில் பெட்டிகளில் ஒன்றில் தொங் கியபடி, கடலை ரசித்தவாறே பயணம் போக வேண்டும் போலிருந்தது. அப்படி, ரயிலில் தொங்கியபடியே பயணித்த ஒரு சந்தர்ப்ப த்தில் தான் தன்னுடைய செருப்பொன் றைத் தவற விட்டு விட்டு, மற்றச் செருப் பையும் அதே திக்கில் வீசியெறிந்த மனித நேயத்தை ஒரு சிறுகதையில் சாந்தன் எழுதியிருந்தார்.
எழுபதுகளின் இறுதியில் கொழும்பு க்கு வந்திருந்த போது தான், சாந்தனை நேரில் சந்திக்க வாய்த்தது. கணையாழி யில் சாந்தனுடைய சிறுகதையொன்றை வாசித்துப் பரவசமடைந்திருந்த எனக்கு அவரை நேரில் சந்தித்தபோது, பரவசம் 6) மடங்காகியது.
அப்போதுதான் இலக்கிய உலகத் தில் பிரவேசித்திருந்த இந்த இளம் எழு த்தாளனுக்குக் கொழும்பில் ஒரு இலக் கியச் சந்திப்பை ஒழுங்கு செய்து தந்தவர் சாந்தன். மேமன்கவி, மு. கனகராசன், காவலூர் ஜெகன்நாதன் முதலிய நண்பர் களின் அறிமுகம் கிட்டியது.
அதன் பிறகு யாழ்தேவியில் யாழ்ப் பாணப் பயணம். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களுடைய அறிமுகம் கிடைத்தது அப்போதுதான். ஜீவா அவர் களின் முயற்சியில், யாழ்ப்பாணத்தில் ஓர் இலக்கியச் சந்திப்பு. எம். ஏ. நுஃமான், சி. மெளனகுரு முதலியோரோடு அறிமுகம்.
மல்லிகை மே 2009 & 52

83க் கலவரத்துக்குப் பின்னால், ஒரு பத்து வருடங்களுக்குக் கொழும்புப் பக்கம்
வந்து போகச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
தொண்ணுாறுகளிலும் ரெண்டாயிரத்திலும் பலமுறை கொழும்புக்கு வந்து போயிருந் தாலும், இங்கேயிருக்கிற இலக்கியவாதி களைச் சந்தித்துக் கதைக்க ஏன் நான் முயற்சிக்கவில்லை என்று சொல்லத் தெரி யவில்லை. ஒரு குற்றவுணர்ச்சி மட்டும் மனதுக்குள் கிடந்து குறுகுறுத்தது.
அந்தக் குற்றவுணர்ச்சியை மேலும் மேலும் என்னை உறுத்திக் கொண்டிருக்க அனுமதிக்காமல், 2009 ஏப்ரலில் இலங்கை வந்தபோது, ஜீவா அவர்களோடு தொலை பேசியில் கதைத்தேன். கோரி என்று சொன் னதும் என்ன குதூகலம், அவருக்கு. இந்த அற்புதமான இலக்கியப் போராளியை இத்தனை காலம் விட்டு வைத்திருந்த வரு த்தத்தோடு, கதிரேசன் வீதியில் மல்லிகை அலுவலகத்துக்கு வந்தபோது, ஜிவா பல இன்ப அதிர்ச்சிகளை எனக்காக வைத்தி ருந்தார். இரண்டு கைகளிலும் கொள்ளாத அளவு புத்தகங்கள், அடுத்த சனிக்கிழமை மல்லிகைப் பந்தலின் கீழ் எழுத்தாளர் கலந்துரையாடல், தொடர்ந்து தினக்குரல் G&L ULL?.........
இலங்கை இலக்கியவாதிகளின்
அறிமுகம் மல்லிகைப் பந்தல் கலந்துரை யாடல் மூலம் எனக்குக் கிட்டியதற்கு ஜீவா வுக்கும், மேமன்கவிக்கும் என் நன்றிகள்.
மல்லிகைப் பந்தல் இலக்கியச் சந்திப் பின் இனிய நினைவுகளில் நான் ஆழ்ந்தி ருந்தபோது, “கோல்ஃபேஸ் கடற்கரைக்குப் போக வெளிக்கிடுவோமா?’ என்று மனைவி
கேட்கவும், "கோல்ஃபேஸைச் சீல் வைத்து
விட்டினம் என்று கதைச்சீர்?" என்று நான்
சந்தேகத்துடன் கேட்டேன்.
'இப்போ கொஞ்சம் திறந்திருக்கின மாம்.” என்கின்ற வலு சந்தோஷமான தக வலைச் சொன்னா.
காலிமுகக் கடற்கரைக்கு வந்தோம். ஹை செக்யூரிட்டி ஸோன் என்றாலும், கடற்கரைக்குத் தடையேதும் இருக்க வில்லை. கடற்கரையையொட்டிய மைதா னம் காலியாய்க் கிடந்தது. ஜனங்கள் கிடக்கிற uொபைல் சாப்பாட்டுக் கடைகளைக் காண
வழக்கமாய் மொய்த்துக்
வில்லை. நடைபாதை மட்டும் அப்பழுக் கில்லாமல் நீண்டு கிடந்தது. இறால் வடை கிடைத்தது. அதை மென்றபடியே நடை பாதையில் நடந்தேன், கடற்காற்றை ஆழ மாய் உள்ளிழுத்தபடி. கடலுக்குள்ளே ஒரு நூறு மீற்றர் போகிற மாதிரி ஒரு நடை மேடை புதிதாய் முளைத்திருந்ததைப் பார் க்க வலு சந்தோஷமாய் இருந்தது.
நடைமேடையிலே மெல்ல நடந்து அதன் முனையில் போய் நின்றேன். கட லைப் பார்த்தபடி நின்றேன். அலைக ளுக்கு மேலாய் நின்றேன். நம்பிக்கை யோடு நின்றேன். காலிமுகக் கடற்கரை திறக்கப்பட்டது மாதிரி இந்த நாட்டின் சாத் தியிருக்கிற எல்லாக் கதவுகளும் விரை வில் திறக்கப்படும் என்கிற நம்பிக்கையோடு பரந்து விரிந்த கடலைப் பார்த்தபடி நின் றேன். பாரதியார் பாடிய சிங்களத்தீவு மீண் டும் பொலிவு பெற வேண்டும் என்று வேண் டிக் கொண்டேன். அடுத்தமுறை நான் இல ங்கைக்கு வருகிறபோது, இன்ஷா அல் லாவற் யாழ்ப்பாணத்துக்குப் போய் வருகிற சுமுகமான சூழ்நிலை மலர வேண்டும் என்று மனமாரப் பிரார்த்தித்துக் கொண் டேன்.
மல்லிகை மே 2009 தீ 53

Page 29
அவுஸ்திரேலிய எழுத்தாளர் விழா 2009
விமர்சன அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை மல்லிகை 44 ஆம் ஆண்டு மலர்
-எஸ். கிருஷ்ணமூர்த்தி
இந்த எழுத்தாளர் விழாவில் மல்லிகை 44 ஆம் ஆண்டு மலரை அறிமுகம் செய்யும்படி வேண்டப்பட்டேன். மல்லிகைக்கு அறிமுகம் தேவையில்லைத்தான். 44 ஆம் ஆண்டுமலர் இங்கே, இப்போது விற்பனைக்கு இருப்பதால், அதுபற்றி எனது கருத்தைப் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
'வீட்டைக் கட்டிப் பார், கலியானத்தை நடத்திப் பார்" என்று எமது கிராமங்களில் சொல்வார்கள். இவற்றைச் செய்வதில் உள்ள சிரமங்கள் அப்போது தான் தெரியும். அதுபோல இலக்கியவாதிகளிடம் ஒரு இலக்கியச் சஞ்சிகையை நடத்திப் பார் என்று கேட்கலாம். ஏனெனில், இலக்கியச் சஞ்சிகைகள் அற்ப ஆயுள் கொண்டவை என்பது பலரது அபிப்பிராயம். இது ஆறு கோடிக்கு மேலே தமிழரைக் கொண்ட இந்தியாவிற்கும் பொருந்தும். அரைக் கோடிக்குக் கீழே தமிழரைக் கொண்ட இலங்கைக்கும் பொருந்தும். ஆனால், இவற்றிலிருந்து விலக்காக மல்லிகை இருக்கிறது. இது எப்படிச் சாத்தியமாச்சு?
யாழ்ப்பாணச் சமூக அமைப்பைப் புரிந்து கொண்டவர்களுக்கு மல்லிகையின் தோற்றமும், அதன் வளர்ச்சியும் மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கும். பண்டிதர்களாலும், பல்கலைக்கழகப் பட்டதாரிகளாலும் முடியாததை எப்படிச் சமுதாயத்தின் ஒரு அடித்தட்டு மனிதனால் முடிந்தது? இவரைப் போன்றவர்கள் சாதாரண பாலர் பாடசாலை ஆசிரியராக வருவதைக் கூட அங்கீகரிக்க மறுக்கும் எமது சமுதாயத்தில் எப்படி இந்தச் சாதனை நிகழ்ந்தது? இந்தக் கேள்விகளுடன் இந்த ஆண்டு மலரைத் திறந்தேன். ஆசிரியரும் தனது தலையங்கத்தில் இலக்கியச் சிற்றேடுகளின் அவல மரணத்தைப் பற்றி ஆதங்கப்படுகிறார். எங்கேயோ ஒரு தவறு நடந்து விட்டது. அதைக் கூர்ந்து அவதானித்துக் கண்டு பிடித்தேயாக வேண்டும் என்கிறார், டொமினிக் ஜீவா.
மல்லிகை நாற்பத்திநான்காம் ஆண்டு மலரைப் பற்றிக் குறிப்பிட முன்பு, மல்லிகையின் முதலாவது இதழ் எப்படி இருந்தது என மேலோட்டமாகப் பார்ப்போம். நூலகம் டொட் நெற் (noolaham.net) என்ற இணையத்தளத்தில் இதைப் பெற்றுக்
மல்லிகை மே 2009 * 54

கொண்டேன். 1966ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ந் திகதியிடப்பட்டு வெளிவந்து ள்ளது. முப்பது சதம் என விலை குறிப் பிடப்பட்டிருந்தது. இதற்கு இதயம், கமலம், மலர், செந்தாரகை ஆகிய பெயர்கள் பரி சீலனையில் இருந்து, கடைசியாகக் கலை ஞன் என்பது தெரிவாகி அதுவும் நிராகரிக் கப்பட்டு, இறுதியாக மல்லிகை எனப் பெயரிட்டதாக முதலாவது இதழிலேயே ஆசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனி இந்த 44ஆம் ஆண்டுமலருக்கு வருவோம். இந்த மலர் உருவத்தில் கனதியானது மட்டுமல்ல, உள்ளடக்கத் திலும் கனதியானது. நன்கு அறியப்பட்ட பல எழுத்தாளர்களது படைப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ந. இரவீந்திர னது ஏன் எழுத வேண்டும்?' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையுள்ளது. இது அவரது நூலுக்குத் தமிழக மார்க்சிச வட்டத்திலிருந்து வந்த எதிர்வினையை யும், ஆரோக்கியமான விவாதத்தையும் ஆழ மாக அலசுகிறது. வீரகேசரியில் நீண்ட கால மாக ஆசிரியராக இருந்த ரஜனி என்ற பெய ரில் விறுவிறுப்பான நாவல்கள் எழுதிய கே. வி. எஸ். வாஸ் அவர்களைப் பற்றிய சுவாரசியமான விடயங்களைக் குறிப்பிடுகி றார், அன்னலட்சுமி இராசதுரை. “எனது இலக்கியத் தொகுப்புக்கள்' என்ற தலைப் பில் செங்கை ஆழியான் தனது இலக்கி யப் பங்களிப்புப் பற்றிச் சிலவற்றைக் குறிப் பிடுகிறார். பேராசிரியர் வித்தியானந்தனின் கலை இலக்கியப் பணிகள் பற்றிப் பால கிருஷ்ணன் சிவாகரன் எழுதியுள்ளார். "தொலைபேசி மான்மியம்" என்ற தலை
ப்பில் முருகபூபதி ஒரு கட்டுரை வரை
ந்துள்ளார். சிலவேளைகளில் தொலை
பேசி தனக்குத் தொல்லை பேசியாகவும் மாறியுள்ளதைக் குறிப்பிட்டதுடன், தனது புலம் பெயர்ந்த எழுத்தாளர்களது தொடர்பு கள் பற்றியும் சொல்கிறார். செ. யோகராசா ‘மலையகத்தில் மக்கள் இலக்கியம்" என்ற தலைப்பில் கவிதையை அடிப்படை யாகக் கொண்ட சில அவதானிப்புக்களைப் பற்றி எழுதியுள்ளார். அன்புமணி 'சிறுவர் இலக்கியத்தில் சிறப்பு நூல்கள்' என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரை வடித்து ள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியில் நாட்டுக் கூத்துகளும் போக்குக ளும் பற்றி பா. இரகுவரனது கட்டுரையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. எஸ். எச். எம். ஜமீல், "கிழக்கிலங்கைக் கிராமியம்’ என்ற தலைப்பில் ஒர் ஆய்வு செய்துள்ளார். உடப்பூர் வீரசொக்கன் உடப்பு நாடக வளர்ச்சியைப் பற்றியும் சில அவதானிப்பு கள் பற்றியும் கட்டுரை வடித்துள்ளார். இந்த உடப்பைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும். பதினாறு ஆண்டுகளு க்கு முன்பு உடப்புச் சென்றேன். புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய தமிழ்க் கிராமம். சிங்கள, முஸ்லீம் கிராமங்களால் சூழப்பட்ட தனித்துவமான கிராமம். அவர் களது பேச்சுத் தமிழில் சிங்களத் தொனி இருக்கும். எனக்கு முதலில் விளங்கிக் கொள் வது கடினமாக இருந்தது. ஆனால், அவர் கள் கலாசாரத்தைப் பேணுவதிலும், இந்து சமயத்தை அனுசரிப்பதிலும் அதிக அக் கறையுடன் இருந்தார்கள். இந்தக் கட்டு ரையாளர் வீரசொக்கன் அங்குள்ள திரெள பதியம்மன் ஆலயத்தில் சமயப் பிரசங்கம் செய்வதை அவதானித்திருக்கிறேன்.
மேலே குறிப்பிட்டவை கட்டுரைகளுக் குள் வருகின்றன. இனிச் சிறுகதைகளைப்
மல்லிகை மே 2009 & 55

Page 30
பார்த்தால், சுதாராஜ், பத்மா சோமகாந் தன், வசந்தி தயாபரன், கெக்கிறாவ ஸ்ஹானா, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், மு: பவர்ர், ஆனந்தி, முநீரஞ்சனி, தெணியான், ப. ஆப்டீன், கே. எஸ். சுதாகர், தெளிவத்தை ஜோசப் ஆகி யோரது மொத்தம் பன்னிரண்டு சிறு கதைகள் இடம் பிடித்துள்ளன. இவற்று டன் சிங்களச் சிறுகதையின் மொழிபெயர் ப்பான செல்லம்மாக்கள் என்ற சிறுகதை யும் இடம் பெறுகிறது.
எல்லாச் சிறுகதைகள் மீதும் எனது பார்வையைச் செலுத்த நேரம் இடம் தராது என்பதால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அடிப்படையில் இரு சிறுகதைகளைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். கே. எஸ். சுதாகரின் போதிகை என்ற மல்லிகை யில் வெளியான சிறுகதை பற்றிக் குறிப் பிடுவதை விட, அவரது அண்மைக் காலச் சிறுகதைகளைத் தொடர்ந்து அவதானித் தவன் என்ற அடிப்படையில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். சென்ற எழுத்தாளர் விழா வில் வெளியிடப்பட்ட இவரது "எங்கே போகிறோம்" என்ற சிறுகதைத் தொகுதிக் குப் பின்னர், இவரது சிறுகதைகளில் ஒரு வளர்ச்சி, ஒரு ஏற்றம் தென்படுகிறது. அவு ஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் எழுத்தா ளர்களில் இவரது சிறுகதைகள் கவனிப்பு க்குள்ளாகியுள்ளது என்பதில் எதுவித சந் தேகமும் இல்லை. அதற்குப் போதிகையை ஒரு சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக, தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘சாம்பல்' என்ற சிறுகதையை
மல்லிகை மே
எடுத்துக் கொண்டால், முதிர்ந்த எழுத்தாள ரான இவர், கதை சொல்வதில் வல்லவரா கக் காணப்படுகிறார். தொடக்கத்தில் கதையை அங்கை இங்கை என்று அலை க்கழிக்குது, மனிசன் மாறாட்டக்காரனோ என எண்ணினால், நாட்டு நடப்புக்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினது போல நாசூக்காகக் குத்திவைக்கிறார். கதைக ளில் சில விடயங்களை நேரடியாகச் சொல் லாமல் தமது கருத்தை நாசூக்காகச் சொல்லலாம் என்பதற்கு இவரது இந்தச் சிறுகதையை நல்ல முன்மாதிரியாகக் Qas TsiTsTT6NoTb.
இவைகளுடன் சிலகவிதைகளும், மேமன்கவியுடைய நவீன பத்துப் பாட்டு 'ம் காணப்படுகின்றது. கதை, கட்டுரை, கவிதை
என்று எதிலும் அடக்க முடியாத ஒரு
படைப்பு வந்துள்ளது, கம்பவாரிதி இ. ஜெயராஜ் எழுதியது. இவரது எழுத்து நடை மட்டுமல்ல, இவரது கருத்துக்களும் எந்த வரைமுறைகளுக்குள்ளும் அடக்க முடியாதது. நாட்டிய அரங்கேற்றம் பற்றி ஒரு வருத்தக் குறிப்பு எனக் குறிப்பிடுகிறார். நாட்டிய அரங்கேற்றம் செய்பவர்களை வறுத்தெடுத்துள்ளார்.
மல்லிகை, பிரதேசம், மதம், இனம், என்ற எல்லைகளுக்கு அப்பால் நின்று செயலாற்றுகிறது. இந்த ஆண்டு மலரில் உள்ள ஆக்கங்களும், அதைப் படைத்த வர்களையும் உற்று நோக்கினால், இந்த உண்மை புரியும். இதே போன்று, இந்த மல்லிகை மலரும் குறுகிய வட்டத்துக்குள் நிற்காமல் பரந்து நின்று மனம் பரப்பு கின்றது. 2009 56

OnంటGSJ శిల్కి ఏసిడిపిఓఓ 2ణానికి 9/J29 ழுெத்தMர் கிடி/2009 பவளவிழா நாயகன் தெளிவத்தை ஜோசப்
இலங்கையில் மலைமுகடுகள் சூழப்பட்ட பசுமையும், குளிர்மையும் படர்ந்த குறிஞ்சி மண்ணில் 1934 ஆம் ஆண்டு பிறந்த ஜோசப் என்ற குழந்தை இந்த ஆண்டு (2009) தனது எழுபத்தியைந்து வயதை எட்டிப் பிடித்துள்ளது.
தனது ஊரின் பெயரையும், தனது இயற்பெயருடன் இணைத்துக் கொண்டு தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த கவனத்தைப் பெற்ற அந்தக் குழந்தைதான் இன்றைய பவளவிழா நாயகன் தெளிவத்தை ஜோசப்.
1960களில் சிறுகதை எழுத்தாளராக இலக்கிய உலகில் அறிமுகமான தெளிவத்தை ஜோசப், ஏறக்குறைய அரைநூற்றாண்டு காலமாக அயராமல் எழுத்தூழியத்தில் ஈடுபடும் படைப்பாளி.
இலங்கைக்கு அறுபது சதவீதமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மலையக மக்களின் கடின உழைப்பையும், கண்ணிரையும் சொல்லொணாத் துயரங்களையும் அவர்களின் ஆசாபாசங்கள், கனவுகளை தமது படைப்புக்களில் சித்திரித்த பல ஈழத்து மலையக எழுத்தாளர்களின் வரிசையில் முன்னோடியாகவிருக்கும் தெளிவத்தை ஜோசப், ஈழத்து இலக்கிய உலகில் ஆவணக் களஞ்சியமாகத் திகழ்பவர்.
சிறுகதை, நாவல், குறுநாவல், விமர்சனம், ஆய்வு, பத்தி எழுத்துக்கள், திரைப் பட வசனம், தொலைக்காட்சி- வானொலி நாடகம் எனப் பல துறைகளிலும் இயங்கியவர். 'காலங்கள் சாவதில்லை', 'குடைநிழல்', "நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்" முதலான நாவல்களையும் "நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதி, 'பாலாயி" குறுநாவல் தொகுதி, "மலையகச் சிறுகதை வரலாறு', 'மலையக நாவல் வரலாறும் வளர்ச்சியும்', 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இதழியல் முதலான ஆய்வுகளையும் எழுதியிருக்கிறார்.
இலங்கைக் கலாசார அமைச்சின் சாகித்திய விருதை இரண்டு தடவைகள் பெற் றுள்ள தெளிவத்தை ஜோசப், இலங்கையில் இலக்கிய முன்னோடி சம்பந்தன் ஞாப கார்த்த விருதும், கலாபூஷணம் விருதும் பெற்றவர்.
மலையக மக்களின் வாழ்வைப் பிரதிபலித்த "புதிய காற்று' என்னும் திரைப்படம் இவரது வசனத்தில் வெளியாகியது.
மல்லிகை மே 2009 & 57

Page 31
முப்பதிற்கும் அதிகமான மலையகச் சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதைக ளைத் தொகுத்து மலையகச் சிறுகதை கள்' வெளியிட்ட தெளிவத்தை ஜோசப், மேலும் ஒரு தொகுப்பை "உழைக்கப் பிறந்தவர்கள்' என்ற தலைப்பில் இலக் கிய உலகிற்கு வரவாக்கினார். இந்த இரண்டு தொகுப்புகளும் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் மிகுந்த அவதானிப்பைப் பெற் றவை, தெளிவத்தை ஜோசப்பின் இனிய நண்பர் துரை. விஸ்வநாதன் தமது துரைவி பதிப்பகத்தினால், இந்நூல் களைப் பதிப்பித்தார்.
தமிழில் சிறுகதை இலக்கிய மூலவர் வ. வே. சு. ஐயர் முதல் பல இலங்கைதமிழக முத்த தலைமுறைப் படைப்பா விகளின் ஆரம்பகாலச் சிறுகதைகளை மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் தேடிப் பெற்று, படைப்பாளிகளின் வாழ்க்கைக் குறிப்புகளுடன் தொடர்ச்சியாகத் தினகரன் வார மஞ்சரியில் பிரசுரித்து, இளம் தலை
களை மல்லிகை மனமார வாழ்த்து
முறையினருக்கு அறிமுகப்படுத்தியவர் தெளிவத்தை ஜோசப் அவர்கள்.
மலை நாட்டு எழுத்தாளர் மன்றத்தில் அங்கம் வகிக்கும் இவர், பல மலையக எழுத்தாளர்களின் நூல்களுக்கும் முன்னு ரைகள் எழுதியிருக்கிறார்.
இவரது மகத்தான இலக்கியப் பணி களைப் பாராட்டும் முகமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் அழைத்துக் கெளரவித் திருக்கிறது. தமிழ்நாட்டில் நடந்த தமிழ் இனி மகாநாட்டிலும், கனடா, இங்கிலாந் தில் நடந்த இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருக்கும் தெளிவத்தை ஜோசப் அவர்களின் அயராத இலக்கிய உழைப்பைப் பாராட்டும் முகமாக எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியுக் கலைச் சங்கம் தனது ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் விருது வழங்கிக் கெளரவிக் கின்றது.
மெல்பன்- விக்ரோரியாஅவுஸ்திரேலியா- 11.04.2009
"ஞானம்" சஞ்சிகையின் புதிய
ճնյ ճվեճiIITEՃl LUIT 5 JT-LIDgËJTIT LD&ECTL
கின்றது.
மல்லிகை மே 2009 : 58
 

காங்காரு நாட்டுக் காகிதம் - 1
வெந்து தணிந்த காடுகளும் வெந்தும் தணியாத மனங்களும்
-լքլnյքուկք
இந்த ஆண்டு கோடைகாலம், பாரதியாரின் அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்.
பாடலை எனக்கு அடிக்கடி நினைவூட்டியது. எதிர்பாராதவிதமாக நாம் வாழும் விக்ரோரியா மாநிலத்தில் சில பிரதேசங்களை காட்டுத்தி பதம் பாரத்துவிட்டது.
முழு உல்கமுமே அவுஸ்திரேலியா கண்டத்தை தொலைக்காட்சிகள் ஜிடாக பார்த்து பதறிய காட்டுத்தி சுமார் இருநுாறுக்கும் அதிகமான மனித உயிர்களை எரித்து சாகடித்துவிட்டு ஓய்ந்துவிட்டது.
எமது மாநிலத்துக்குள் மEத உயிர்கள் மட்டுமன்றி காட்டுப்புதர்களில் மரங்களில் வாழும் ஆபிரக்கணக்கான ஜீவராசிகளையும் சாம்பராக்கிவிட்டது.
2004 டிசம்பரில் கண்ாமி ஆழிப்பேரலை அவலம் வருமுன்பே தளர்வன உட்பட நாய்கள் அனைத்தும் உயிர்களை பாதுகாத்துக்கொண்டன. அந்த அழிவில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியெடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு சுனாமி வரப்போகிறது என்ற அறிகுறி தென்படவில்லை.
ஆனால் தரையில் ஊறும் எறும்புக்கும் பூமிக்கு அடியில் நிகழப்போகும் மாற்றம் தெரிந்திருந்தது. அவுஸ்திரேலியா காடுகளுக்குள் வாழ்ந்த கங்காரு கோலா உட்பட பலதரப்பட்ட காட்டு விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் காட்டுத்தியின் வருகையின் அறிகுறி தென்படவில்லை,
நீ நிளிர் காற்று - தி - ஆகாயம் என்பன பஞ்சபூதங்கள் என்பார்கள்.
இவற்றிஸ் ஜீவராசிகளை ஏமாற்றியது தீ நீரில்-நிலத்தில்-காற்றில்-ஆகாயத்தில் தோன்றப்போதும் மாற்றங்களை ஜீவராசிகள் முற்சுட்டியே அறிந்துகொள்கின்றன. ஆனால் தி விளைவிக்கப்போதும் அழிவை அவை உணரும் சக்தி பற்றவையாக படைக்கப்பட்டுவிட்டன.
மல்லிகை மே 2009 * 59

Page 32
விக்ரோரியா மாநிலத்தில் காட்டுத்தி பரவியதற்கு ஒருசில ஆறறிவுபடைத்த மனிதர்களும் காரணம் என்று காவல் துறை கண்டுபிடித்திருக்கிறது. கோடை காலத்தில் 40-42 பாகைக்கும் அதிகமாக வெப்பம் ஏறும்பொழுது இங்குள்ளவர் களின் அன்றாட வாழ்க்கையே மாறி விடும். வேலைக்குச்செல்பவர்களின உடை கள் மாறும். குளிர்பானங்களின் விற்பனை அதிகரிக்கும். மின்சாரம் எச்சமயமும தடைப் LJ(Bub. JubLDM60öLLDT60 Shoping Center களில் பச்சிளம் குழந்தைகளுடன தாய்மார் முற்றுகையிட்டு விடுவர். அங்கே முழு மையாக குளிரூட்டப் பட்டிருக்கும் வேலைத் தலங்களில் காலை ஆறு மணிக்கு வேலை ஆரம்பிக்கப்பட்டு பிற் பகல் இரண்டு மணிக்கெல்லாம் தொழிலா ளர் வீட்டுக்கு அனுப்பப்படுவர். பெரும்பா லானவர்கள் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொள்வர். வீதிகளில் வாகனப்போக்கு வரத்தைக் கட்டுப்படுத்தும் சிக்னல் லைற்றுகள் கோடை வெப்பத்தினால் செயலிழந்து போய்விடுவதனால் பொலி சார் துரிதமாக இயங்கி போக்குவரத்தை சீர்படுத்துவர். பெரிய தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வெப்பம் தாங்காமல் ஒரு வருக்கு ஒருவர் தண்ணிர் ஊற்றி அட்ட காசம் செய்துகொள்வர். ஆனால் அவர்க ளது அதிகாரிகள் தரத்தில் உள்ள மேலா ளர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் ஐஸ் கோப்பியோ ஐஸ்கிறீமோ அருந்துவர்.
நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்து இருபத்தியிரண்டு ஆண்டுகளாகிவிட்டன. கடந்துபோன ஆண்டுகளில் முதல் தட வையாகத்தான் இம்முறை காட்டுத்தீயின் கொடுமையை உணர்ந்தேன். ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் கோடை வெப்பத்
தையும் அனுபவித்து எங்கேயாவது காட்டுத்தீயின் அபாயத்தையும் தகவலாக அறிந்தும் காலத்தை ஒட்டிக்கொண்டிரு ந்த எனக்கு இந்த ஆண்டின் (2009) கோடைகாலம் மிகுந்த அயர்ச்சியையும், துாக்கமின்மையையும் தந்துவிட்டது. நடுநிசியிலும் துாரதேசங்களிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புகள் துாக்கத்தை குழப்பின. இதில் ஆச்சரியம் என்னவென்றால் யாழ்ப்பாணத்திலிருந்து நண்பர் செங்கை ஆழியானும் தொலை பேசி ஊடாக காட்டுத்தீ பற்றி விசாரித்து நான் சேமமாக இருக்கிறேனா என்பதை அறிந்தார். அதற்கு முதல் நாள் எனது குரலை அவர் லண்டன் பிபிஸி ஒலிபரப் பில் கேட்டதாகவும் சொன்னார். லண்டன் பிபிஸியில் பணியாற்றும் எனது நண்பர் ஒருவர் தொடர்புகொண்டு காட்டுத்தீ அபாயம் குறித்து கேட்டிருந்தார். எங்கள் ஊரிலிருந்து சுமார் முப்பது கிலோமீற்றர் தொலைவில்தான் அநர்த்தம் நிகழ்ந்தது. அந்தப்பிரதேசத்துக்கு பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் நாம் வேடிக்கை பார்க்கவும் செல்லமுடியாது.
தொலைக்காட்சி-வானொலி-பத்திரிகை ஊடகச் செய்திகளை மாத தரம் தெரிந்துவைத்துக் கொண்டு, லண்டன் பி.பி.ஸி.க்கு ஒரு நாள் நடுஇரவில் துாக் கக் கலக்கத்துடன் நான் வழங்கிய செவ் வியை ஒலிபரப்பில் கேட்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. இணையத் தளத்தில் கேட்டிருக்கலாம். அதற்கான வழிமுறையும் எனக்குத் தெரியாது. ஆனால், எனது குரலை யாழ்ப்பாணத்தி லிருந்து செங்கை ஆழியான் கேட்டுவிட்டு தொடர்புகொள்ளும் வரையில் எனது குரல் வான் அலையில் பரவிய தகவல்
தெரியாது.
மல்லிகை மே 2009 & 60

கனடா - இங்கிலாந்து-இந்தியாசிங்கப்பூர்-சவூதி அரேபியா- துபாய்இலங்கை- பிரான்ஸ்-நோர்வே-முதலான நாடுகளில் வசிக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் இந்த காட்டுத்தீ உசுப் பிவிட்டது. மின்னஞ்சல்-தொலைபேசிக ளுக்கெல்லாம் நேரம் காலம் தெரியாமல் ப்தில் சொல்லிக்கொண்டிருக்க நேர்ந்தது.
இவ்வளவு அமளிகளுக்கும் மத்தியில் காலை ஆறுமணிக்கு எழுந்து ஒழுங்காக நாள் தவறாமல் வேலைக்கும் போய வந் தேன். நான் வேலைக்குப் போனால்தான் சம்பளம். நிரந்தர ஊழியர்கள் கடும் வெப் பத்தைக் காரணம் காட்டி தமது மருத் துவ லீவையோ, வருடாந்த லீவையோ எடுக்கமுடியும். ஆனால், எனது நிலை அப்படியல்ல. தற்காலிக வேலையில் இரு க்கும் நான், கோடை வெப்பத்தை காரண மாகச் சொல்லி வீட்டில் தரிக்க முடியாது.
நான் வேலைக்குப் புறப்பட்ட மறு கணம் மனைவி தனக்குத் தேவையான காலை-மதிய உணவு மற்றும் தண்ணிர்குளிர்பானம் சகிதம் புறப்பட்டுவிடுவா. வேலைக்கு என்றா நினைக்கிறீர்கள்?
அதுதான் இல்லை.
வீட்டிலே குளிரூட்டி வசதி இல்லாத
தாய்மார், முற்றிலும் முழுமையாக குளி
(bL Lio, LuL. L. LilJLibLDIT600ILLDIT60l Shoping Centerகளுக்கு தங்கள் குழந்தைகளு டன் செல்வார்கள் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அவர்க ளைப் போன்று எனது மனைவியும் அங்கே போய்விடுவா. அங்கு கோடை வெப்பத்தின் சுவடே இருக்காது.
கடைத் தொகுதிகளை ரஸித்துக் கொண்டிருந்துவிட்டு வெளியே வெய்யில் சற்று தணிந்த பின்னர் வீட்டுக்குத திரும்பி விடுவா. இச்சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு நகைச்சுவைத் துணுக்கு நினைவுக்கு வருகிறது.
ஒரு கணவர், வெளியே சென்ற மனைவிக் காக வீட்டு வாசலில் கவலையோடு காத்தி ருந்தார். அயல் விட்டுக்காரர், “என்ன யோசித் துக்கொண்டிருக்கிறீர்கள்?’ எனக்கேட்கிறார். அதற்கு அவர், “மனைவி வெளியே சென்றார். மழை வரப்போகிறது, குடையும் எடுத்துச் செல்லவில்லை. அதுதான் யோசிக்கின்றேன்” என்றார். “மழைக்காகவா யோசிக்கிறீர்கள்? குடை இல்லாவிட்டால் என்ன? ஏதும் கடைப்பக்கம் ஒதுங்கி நின்று மழை விட்டதும் வருவார்தானே” என்றார் அயல்வீட்டுக்காரர். உடனே, கணவர் “அதுதான் யோசிக்கின்றேன்” என்றாராம்.
என் மனைவியுடன் நான் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளேன். திருமண வீடு. பிறந்தநாள் கொண்டாட்டம், கோவில், சாமத்தியச்சடங்கு, செத்தவீடு, குடும்ப நண்பர் வீட்டுக்கான - பிள்ளைகளின் வீட்டுக்கான விளலிட்டிங்...துாரப் பயண ங்கள் இப்படியாக எங்கே வேண்டுமா னாலும் மனைவியுடன் வருவதாக ஒப்பந் தம். ஆனால் கடைத் தொகுதிக்கு மட்டும்
உடன் வரமாட்டேன்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் எழுதப்படாத சட்டம் எமது இல்லறத்தில், கோடைகாலத்தில்- காட்டுத்தி அயலில் பரவியிருந்த வேளையில் இந்த கடைத் தொகுதி விஜயம் அன்றாட நிகழ்வாகி விட்டது மனைவிக்கு. தினமும் நான்
மல்லிகை மே 2009 * 61

Page 33
வேலையால் மாலையில் திரும்பும்
பொழுது ஊர்ப் புதினங்களும் கொண்டு வருவா. மின் விசிறியின் தயவில் எஞ்சிய பொழுது போகும். தினமும் ஊர்ப் புதினங் களுடன் வந்த மனைவி ஒரு நாள் ஒரு தமிழ் முதியவரையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டா. அவரும் ஈழ மண்ணிலிருந்து இந்த கங்காரு நாட்டுக்கு பிள்ளைகளினால் ஸ்பொன்ஸர் செய்து அழைக்கப்பட்டவர். கடைத்தொகுதியில் மனைவியின் நெற்றி குங்குமப்பொட்டு அவரை அவவுடன் உரையாடவும், வீடு வரையும் அழைத்து வந்து உபசரிக்கவும் வைத்துவிட்டது. வந்தவருடன் நானும் ஊர்ப் புதினங்கள் பேசினேன்.
ஈழமண்ணில் தொடரும் யுத்தம் முதல்
அவுஸ்திரேலியா கோடை வெப்பம் வரை யில் அவரும் பலதும், பத்தும் பேசினார். உரையாடல் எனது பிள்ளைகளைப் பற்றி யும் வந்துவிட்டது. அதற்குக் காரணமும் இருந்தது. எனது பிள்ளைகளின் திருமணப் படங்கள் வீட்டின் முன் ஹோலில் சுவர்களில் அலங்கரித்திருந் தன. அந்தச் சமயம் பார்த்து துார தேச த்து தொலைபேசி அழைப்பொன்று வந் தது. ஒரு திருமணப் பேச்சுவார்த்தை குறித்து உரையாடல் அமைந்தது. வீட்டு க்கு வந்திருந்த பெரியவருக்கும் அந்த உரையாடல் கேட்டிருக்க வேண்டும். தொலைபேசி உரையாடல் முடிந்ததும், அவர் என்னிடம் கேட்டார்,
“தம்பி நீரும் கலியானங்கள் பேசி ஒழுங்கு செய்து கொடுக்கிறனிரோ? நல்ல காரியம், புண்ணியம் கிடைக்கும். இந்தக் காலத்தில் மாப்பிள்ளைகளுக்கு சரியான தட்டுப்பாடு.”
நான் எனது குடும்பத்தில்- உறவினர் மத்தியில் பேசி முற்றாக்கிச் செய்து வைத்த திருமணங்களைப் பற்றி பிரமாதமாகச் சொன்னேன். ..عو
உடனே அவர், ஆச்சரியமாக என்னை ஏறிட்டு பார்த்துவிட்டு, “சரி தம்பி. நீர் சாதி ஒன்றும் விசாரிப்பதில்லையா?” என்று கேட்டார்.
“சாதி என்றால் என்ன ஐயா ?” என்று வேண்டுமென்றே கேட்டேன்.
அவர் செருமினார். இயல்பாக வந்த செருமல் அல்ல. அவருக்கு எனது பதில் சற்று கோபமூட்டியிருக்கவேண்டும்.
“நீர் தம்பி இந்த நாட்டுக்கு வந்து எல்லாத்தையும் மறந்து போனிர். எங்களு க்கு சாதி ஒரு அடையாளம் ஐஸே. அது பார்க்காமல் என்ன கலியாணம்.”
நான் பதட் டப்படாமல், “ஐயா ஈழத்தில் சாதி அடிப்படையிலா களத்தில் நின்று இளம் தலைமுறை, தமிழ் ஈழத்துக் காக போராடி மடிந்தது.?”
எனது இந்தக் கேள்வி அவரை துணுக்குறச்செய்திருக்கலாம். மின் விசிறி சுழன்ற போதிலும் அவருக்கு வியர்த்தது. குளிர்பானம் அருந்திவிட்டு விடைபெற்றார்.
கோடை சில மாதங்களுக்குத்தான். பின்னர் இலையுதிர்காலம், குளிர்காலம், வசந்தகாலம் வரும். பருவகாலங்கள் மாறிக்கொண்டுதான் இருக்கும். மனித மனங்கள்..?
மல்லிகை மே 2009 $ 62

GHHgsfð 68-lg
- LIII6DIT. affigfriefre)6II
"ஏன்டா நாசமாப் போனவனே! கஷ்டப்பட்டு அஞ்சு பத்தைச் சேர்த்து வச்சி, அவசர
ஆத்திரத்துக்குக் குடுத்தா, அசலையும் தராம, வட்டியையும் தராம மறைஞ்சி வேற ரோட்ல போறியா? கஷ்டப்படுறப்போ மட்டும் கைகட்டி, வாய் பொத்தி கெஞ்சிக்கிட்டு, இப்போ என்னன்னா கண்டும் காணாம போறியோ? எதுக்குடா உனக்கு வெள்ளைவேட்டி, சட்டையெல்லாம்?. ரெண்டு நாள் அவகாசம் தாரேன் அதுக்குள்ள வாங்கினதைக் கொண்டு வந்து குடுத்துடு. இல்லன்னா மானத்தை வாங்கிப்பிடுவேன். அது சரி உனக்கு
மானம் மரியாதை இருந்தாத்தானே.
சுப்புக் கிழவி- கொழுந்து மடுவத்தில் வைத்துச் சத்தம் போடவே, கந்தசாமிக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது. இரண்டாவது மகளின் சடங்குச் செலவுக்காகக் கிழவியிடம் கைநீட்டிக் கடன் வாங்கியது உண்மைதான். ஒரே மாதத்தில் கொடுத்து விடுவதாகச் சொல்லித் தான் கடன் வாங்கினான். ஆனால், அடுத்தடுத்துச் செலவுகள் வந்து கழுத்தைப் பிடித்த போது, அவனால் கத்தக் கூட முடியவில்லை. கடன் வாங்கும் போதே நிறையப் பேர் சொன்னார்கள். 'போயும் போயும் அந்தக் கிழவியிடமா கடன் வாங்கப் போறே? அது பணத்தாசை பிடிச்ச கிழவியாச்சே, வட்டிமேல் வட்டி வாங்கி ஏழை எளியவர்களான நம்மை நரகத்தில் தள்ளிவிடும். சொந்த மகன் பேரனுக்கே வட்டி வாங்கிக் கொண்டுதான் பணம் கொடுக்கும். ஈரமில்லாத பாட்டி" என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், அப்படிச் சொன்ன வர்கள் பலரே அவசர தேவைகளுக்கு அந்தக் கிழவியைத் தான் தேடி ஒடுவார்கள்.
சுப்பம்மாள்- மறைந்து போன மாசிலாமணி கங்காணியின் மனைவி. மாசிலாமணி வாயில்லாப் பூச்சி. சுப்பம்மாள் அந்தத் தோட்டத்திலேயே ஒரு மகாராணி போல, வாழ்ந்தவள். கோழி, ஆடு, மாடு, பன்றி என்று அவள் செய்யாத பண்ணையில்லை. போதா தற்கு மரக்கறித் தோட்டம் வேறு. விதவிதமான பழவகைகள். சுப்பம்மாள் கையில் எப்போ தும் பணம் இருந்து கொண்டேதானிருக்கும்.
கங்காணி சாகும் போது, அவளுக்கு வயது ஐம்பது. இப்போது, வயது எழுபதாக இரு ந்தாலும், அந்தக் காலச் சாப்பாடு, மற்றும் உழைப்பு அவளை இன்னமும் சுறுசுறுப்பாகவே வைத்திருந்தது. ஏற்கனவே சம்பாதித்த பணத்தை இப்போது வட்டிக்கு விட்டுக் கொண்டி ருக்கிறாள். பன விஷயத்தில் கிழவி மிகவும் கண்டிப்பானவள். பெற்ற மகனாயிருந்தாலும், மகன் வயிற்றுப் பேரனாக இருந்தாலும், கனக்கில் கறாராக இருப்பாள். எனவே, அவளு க்கு வில்லங்கம் பிடித்த கிழவியென்ற பெயரும் இருக்கிறது. கடவுளாக இருந்தாலும்,
மல்லிகை மே 2009 * 63

Page 34
அவளுக்குக் கணக்குச் சரியாக இருக்க வேண்டும். எப்படிப்பட்ட முட்டாளும் பணத் தைச் சம்பாதித்து விடலாம். ஆனால், ஒரு புத்திசாலியால் தான் காப்பாற்ற முடியும் என்பது கிழவியைப் பொறுத்தவரை உண்மையாகும்.
அன்று ஒரு சனிக்கிழமை. முடிந்த வெள்ளியன்றுதான் தோட்டத்தில் சம்பளம் போடப்பட்டிருந்தது. ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள். பணக்காரர்கள் பசியைத் தேடுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய உண்மை. உடல் நோக உழைப்பவன் ஒரு வாய் சோற்றை ஒழுங்காக உண்ணமுடிய வில்லை. ஆனால், அவன் உழைப்பை அட்டை மாதிரி உறிஞ்சுபவன், பசிக்காக மாத்திரைகளை விழுங்குகிறான். களைப் புத் தீரக் கஷ்டங்களை மறக்க மதுவை நாடினாலோ அது எட்டாத உயரத்தில்.
சுப்புக் கிழவி- வரவு செலவையெல் லாம் பார்த்துவிட்டு, அன்று லாபமாகக் கிடைத்த பணத்தைப் பழைய ட்ரங்க் பெட்டியில் பத்திரமாக வைத்துவிட்டுத் துTங்குவதற்கு ஆயத்தமானாள். அப்போது எதிர் லயத்தில் ஒரே கூச்சலும் குழப்பமு மாக இருந்தது. கிழவி பேரனை எழுப்ப நினைத்தாள். அவன் அடித்துப் போட்ட மாதிரி தூங்கிக் கொண்டிருந்தான். கிழவி யாரையும் தொந்தரவு செய்யாமல் காம்ப றாக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். ஒரே கூட்டமாக இருந்தது. பெண்கள் சிலர் அழுது கொண்டிருந் தார்கள். கிழவி- அந்த இடத்தை நோக்கி நடந்தாள். அங்கே லயத்துக்குப் பின் புறமாக இருந்த மாட்டுக் கொட்டகையில் சில தொழிலாளர்கள் விழுந்து கிடந்தார் கள். சில கண்ணாடிக் கிளாசுகளும், போத் தல்களும் கீழே கிடந்தன. பெண்கள் சத் தம் போட்டு அழுதார்கள். கிழவி மெதுவாக
அங்கிருந்தவனிடம் விசாரித்தாள். 'வழ மையா ஒறிஜினல் சாராயத்தை வாங்கித் தான் குடிப்பாங்க. கையில் காசு பத்தலை, அதுனால அவங்க ஆறேழு பேர் ஒண்ணா சேர்ந்து விலை ரொம்பக் குறைவா கிடைக் குதுன்னு கசிப்பை வாங்கி அடிச்சானுங்க. கொஞ்ச நேரத்துல நெஞ்சைப் பிடிச்சிக் கிட்டுச் சத்தம் போட்டுக் கீழே விழுந்து துடி க்க ஆரம்பிச்சிட்டாங்க. மேல் கணக்கு கனகுக் கிட்டத்தான் வேன் இருக்கு. நாங்க குடுக்கிற ஹயர் காசுல வேனுக்குக் கடன் கட்டுறான். அவசரத்துக்குக் கூப் பிட்டா ஹயர் காசு இல்லாட்டி வர ஏலாதுன் னுறான். பணமும் அதிகமாக் கேட்கிறான். உடனடியா இவங்களை ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போகாட்டி நிலமை ரொம்ப மோசமாயிடும் போல இருக்குது..."
கிழவி சட்டெனத் தன் காம்பறாவை நோக்கி ஓடினாள். மறுபடியும் திரும்பி வந்த போது, அவள் கையில் கணிசமான பணம் இருந்தது.
"எலே பெருமாளு!. இந்தா இந்தப் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய்க் கனகுவை வேனோட வரச் சொல்லு சீக்கி ரமாக இவங்களை ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போ!. டவுண்ல என்னோட தம்பி மவன் ராசா இருக்கான். அவனையும் கூட்டிக்க. அவனுக்கு ஆசுப்பத்திரியில எல்லாரையும் நல்லாத் தெரியும். DSF மசன்னு நிற்காத ஒடு. சீக்கிரமா ஒடு.”
காரியம் வேகமாக நடந்தது. இவ்வ ளவு நாளும் கிழவியை வெறும் பணம் சம்பாதிக்கும் மனுவழியாகப் பார்த்தவர்கள், முதல் முறையாக அவளிடத்திலிருந்த மனிதத் தன்மையைப் பார்த்தார்கள். விரல் களை முன்னால் காயப்படுத்தும் ரோஜாச் செடியில் தானே இத்தனை அழகான ரோஜா மலர்கள் பூக்கின்றன.
மல்லிகை மே 2009 & 64

൧൧൧മr
ஏப்ரல் மாத மல்லிகை இதழ் கிடைத்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மல்லிகை வாசித்து வந்ததில், என்னுள் பெருமாற்றம் நிகழ்ந்துள்ளதை அநுபவிக்க முடிகிறது. எனது படைப்புகளுக்கும், எமது அநுராதபுரப் படைப்புக்களுக்கும் "மல்லிகை" இடம் வழங்கி கெளரவிப்பது இன்னும் இன்னும் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.
அநுராதபுர மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் குறிப்பிடத்தக்க இலக்கிய முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் 'மல்லிகை’ அநுராதபுரச் சிறப்பிதழும் முக்கிய மானது. அநுராதபுரப் பிரதேச இலக்கிய வளர்ச்சிக்கு "மல்லிகை" காட்டிவரும் தூண்டல்க ளுக்கு நன்றிகளைக் கூறுகிறேன்.
ஏப்ரல் மாத இதழை மிகவும் கவனம் கூர்ந்து படித்தேன். பல புதிய தலைமுறைப் படைப்பாளிகளது படைப்புக்கள் மின்னுகின்றன. கடந்த இதழ்களை விட, இவ்விதழில் கதைகள் குறைந்தும் கவிதைகள் அதிகரித்தும் இருந்தன. மாதாந்தம் புதியவர்கள் எழுதத் துணிவதை அவதானிக்கிறேன். நாமும் புதியவர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்வுறு கிறோம். நிறையப் பல்கலைக்கழக நண்பர்கள் 'மல்லிகை'யை மாதாந்தம் தொடராகப் படிக்க ஆவலாக உள்ளதை இங்கு குறிப்பிடுகிறேன். எனினும், அநேகரால் ஒட்டு மொத்தச் சந்தாவைப் பதிவு செய்ய முடியாமல் பின்நிற்கிறார்கள். ஆனால், இது எதிர்காலத்தில் மாற்றமடையும் என நம்புகிறேன்.
அநுராதபுர மண்ணில் காத்திரமான இலக்கிய நகர்வுகளுக்குப் படிகள் பதிப்பகம் ஊடாக அடிக்கோடிட்டு வருகிறோம். அன்பு ஜவஹர்ஷா இதில் மிகவும் அவதானமாகச் செயற்பட்டு, எம்மோடு ஒத்துழைத்து வருகிறார். எதிர்வரும் காலங்களில் அநுராதபுர மண் னிலிருந்து இன்னும் பல வெளியீடுகள் வர இருப்பதனை இங்கு குறிப்பிடுகிறேன். "மல்லிகை’ எப்போதும் இம்மண்ணோடு இருக்கும் என நம்புகிறோம். நாச்சியாதீவு பர்வீனின் 'பேனாவால் பேசுகிறேன்" (பத்தி) மல்லிகைப் பந்தல் வெளியீடாக வருவதில் எனக்கும் எமது பிரதேசத்துக்கும் மகிழ்ச்சி. நாச்சியாதீவு பர்வீனின் கட்டுரைகளில் பல்வேறு இலக்கியத்தரவுகள் பொதிந்துள்ளன. அதேவேளை, இன்னும் சில இலக்கியத்தரவுகளை அவற்றில் இணைத்திருக்க அவர் எத்தனித்திருக்க வேண்டும்.
மல்லிகை தனது இலக்கியப் பயணத்தில் மேலும் பல பரிமாணமடைய வேண்டும். வாழ்த்துக்கள்
அநுராதபுரம். எல். வளம்ே அக்ரம்,
மல்லிகை மே 2009 * 65

Page 35
LOTர்ச் 09 இதழின் அட்டைப் படத்”
தில் நமது அ. முத்துலிங்கம் அவர்களி னது உருவத்தை பதித்து வெளியிட்ட தைக் கண்டு, மெய்யாகவே உளம் மகிழ்ந்து போனேன்.
நமது மண்ணில் பிறந்து, இன்று நமது தமிழைச் சர்வதேச மட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் வல்லவர், இவர்.
மாதா மாதம்- ஆண்டு மலர்களைத் தவிர்த்து, ஒவ்வொரு இதழிலும் இந்த மண் ணைச் சேர்ந்த ஒருவரது உருவத்தைக் கடந்த பல ஆண்டுகளாக அட்டையில் பதி ந்து, இந்த மண்ணுக்கும் மொழிக்கும் அறி முகப்படுத்தி வருவது சும்மா இலேசுபட்ட 656 guLD66).
இன்று இதன் தாக்கம் உடனடியாகப் பலருக்கு, ஏன் அட்டைப் படமாகப் பதிவு
செய்யப்பட்டவர்களுக்குக் கூட, உடன்
LýlulusTLDsio CBUFTa56oTLb.
ஆனால், நாளை என்றொரு நாள் வரும். அது அடுத்த பத்தாண்டுகளுக்குப் முன் பின்னாக இருக்கலாம், அல்லது கால் நூற்றாண்டு காலங்களுக்குப் பின்னால் கூட இருக்கலாம். உயர்கல்வி பயிலும் மாணவன் ஒருவன், அல்லது ஈழத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்ய முனையும் பேராசிரியர் ஒருவர் பழைய மல்லிகை இதழ்களைத் தேடித்தேடி அலை வார் என்பது திண்ணம். அட்டைப் படங்களை நூல் வடிவமாக்கிய நான்கு தொகுதிகளை யும் நான் பாதுகாப்பாக இன்றுவரையும் சேமித்து வைத்துள்ளேன். இடைக்கி டையே அந்தப் புத்தகங்களைத் தட்டிப் பார் ப்பது எனது பொழுது போக்குகளில் ஒன்று.
அப்பப்பா எத்தனை எத்தனை வகை யான படைப்பாளிகள்- எழுத்தாளர்கள்சிந்தனையாளர்கள்- புத்திஜீவிகள்
மல்லிகையின் மிகப்பெரிய சாதனையே அதுதான்! தொடர்ந்து இந்தப் பாதையில் முன்னேறுங்கள். நாங்களும் தொடர்ந்து மல்லிகையின் பக்கம் பக்கமாக நின்று உதவி செய்வோம்.
கொக்குவில். புவனச்சந்திரன்.
உங்களைப் பாராட்டுவதற்காக மாத்திரம் இதைக் கூறவில்லை. ஒரு தனி மனிதன் தன்னந்தனியாக இத்தனை ஆண்டுக் காலங்களாக, இத்தகைய உள் நாட்டுக் குழப்பங்களுக்கு மத்தியிலும் ஒரு மாசிகையைத் தொடர்ந்து நடத்தி வருவ தென்றால், அது ஒர் அசுர சாதனைதான்!- சந்தேகமேயில்லை.
மல்லிகையையும் உங்களையும் பற்றிச் சிலர் புறங்கூறி வருவதையும் நான் கூறித்தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சங்கதியல்ல!
எனக்கோர் அடிப்படை உண்மை விளங்குகின்றது. பலரது பொச்சரிப்புகளுக் குக் காரணமே, தங்களது உருவப் படங்கள் மல்லிகையின் அட்டைய்ை இதுவரை அல ங்கரிக்கவில்லை என்றதொரு மன வெப்பி சாரம்தான். நுட்பமாக அவர்களது மன நிலையைப் புரிந்து கொண்டால், உங்க ளைப் பற்றிய விமர்சனத்திற்குப் பின்னால், இந்த மனக்குறை ஊடாடி வருவதை நாம் வெகு சுலபமாகவே கண்டு கொள்ள லாம். இது வெறும் மனப் பொச்சரிப்புத்தான்!
ஒரு தொடர் சஞ்சிகையாளனுக்கு
மல்லிகை மே 2009 * 66

இடையிடையே ஏற்படக் கூடிய எதார்த்த சங்கடங்கள் என் போன்றோர்களுக்கு ஏற்கனவே விளங்காமலுமில்லை.
கடந்த காலகட்டங்களில் இதைப் போன்ற சங்கடங்களை நீங்கள் சந்தித் திருப்பீர்கள். இதைப் பற்றியொன்றுமே நீங்கள் கவலைப்படக் கூடாது. இப்படியான சின்னச் சின்ன மனப் பொச்சரிப்புக்களைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டால், அப் புறம் எந்தவொரு வேலையுமே ஒழுங்காகச் செய்து வர இயலாது.
நீங்கள் இத்தனை காலமும் செய்து கொண்டுவரும் இலக்கிய வேலைகளை ஒழுங்கு தவறாமல் செய்து கொண்டே வாருங்கள். அதுவே போதும்
எங்களைப் போன்ற இளசுகளை விட, நீங்கள் அநுபவப் பரப்பில் எத்தனையோ கஷ்ட நஷ்டங்களைத் தெரிந்து தெளிவு பட்டவர்கள். உங்களுக்கு நாங்கள் சொல் லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை!
மல்லிகையின் அடுத்த கால கட்டத் தைப் பற்றி, இப்போதே அடித்தளமிட்டு விடுங்கள்.
எனக்கு எப்போதுமே ஒர் ஆச்சரியம் மனசைக் குடைந்து கொண்டிருப்பதுண்டு. மாதா மாதம் மல்லிகையை வெளியிட்டு வருவது சரிதான். ஆனால், 'மல்லிகைப் பந்தல்" வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் அடிக்கடி புதுப் புது நூல்களை வெளியிட்டு வருகின்றீர்களே, அது எப்படி உங்களால் சாத்தியமாகின்றது?
ஒர் உண்மையையும் இங்கு பதிவு செய்து வைப்பது எனது கடமையாகும்.
மல்லிகைக்காக உருகுகின்றோம் என மல்லிகையின் உழைப்பைப் பயன்படுத்தி தம்மை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தி வருபவர்கள் அத்தனை பேருமே நம்பகத் தன்மை கொண்டவர்களா? என்பதை ஒரு தடவை கணக்கெடுத்துப் பாருங்கள்.
கொட்டாஞ்சேனை. எஸ். ஞானதேவன்
ஆண்டுமலர் பற்றி இப்போது எழுது வது காலங்கடந்தது போலத் தோன்று கிறது. ஆனாலும், யாழ்ப்பாணத்திற்குத் தபாலில் மலர் வந்து சேர்ந்தாகிவிட்டதே. மாசி மாத மல்லிகை வந்ததும் எனக்கு மலர் அனுப்பப்படவில்லையோ என்றொரு சந்தேகத்தில் தொலைபேசி மூலம் விசாரி த்தேன். அதன் பின்பும் நமது அவசரம் புரி யாமல் ஆற அமரத்தான் வந்து சேர்ந்தது. எனது சிறுகதை அதில் வந்தது மகிழ்ச் சியைத் தந்தது.
அழகாகவும், தரமாகவும் மலர்ந்திருக் கிறது. அன்புமணி அவர்களது கட்டுரை யில் கூறப்பட்ட கருத்துக்களை நாம் சிந்தி க்க வேண்டும். ஆசிரியர் தலையங்கத்தில் கூடத் தமிழ்மொழியின் சிறப்புப் பற்றி எழுதியிருந்தார். ஆனால், எங்களுக்குள் ஒரு தாழ்வுணர்ச்சி இருந்து எமது திற மையை உணரவிடாமற் செய்கிறது. நம் மவரின் கருத்துக்கள் சிறந்தவையாகவிருந் தாலும், அவற்றை விட்டு விட்டு மேற்குல கம் கூறுவது தான் சிறந்ததெனக் கருதி, அவற்றைப் பின்பற்றும் மனோபாவம் எம் முள் இருக்கிறது. அதை நாம் இல்லா தொழிக்க வேண்டும்.
கம்பவாரிதி இடையிடையே ஒவ்
மல்லிகை மே 2009 தீ 67

Page 36
வொரு குளமாகப் பார்த்துக் கல்லெறிந்து அதிலெழும் பிரதிபலிப்புகளை இரசிக்கிறார். போலிருக்கிறது.
முருகபூபதி அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள லாமென்றால் எனது தொலைபேசி இன்று
வரை சீராகவில்லை.
அவுஸ்திரேலிய மகாநாட்டில் மலர்
அறிமுகப்படுத்தப்பட்டதாக அறிந்தேன். மகிழ்ச்சியாகவிருந்தது.
தாமதமாகிவிட்டதென்றாலும், இவ்வளவு அற்புதமாக மலர்ந்த மலர் பற்றி எழுதாமலிருக்கக் கூடாது என்று தோன்றி யதனால், இதனை எழுதுகின்றேன். இப்பொழுது நீங்கள் அடுத்த மலருக்கான ஆயத்தங்களிலீடுபட்டிருப்பீர்களே. அது இதை விஞ்சியதாகவிருக்கும் என்பது தெரிந்ததுதானே.
(snruri. é. 3um(3assos.
பDல்லிகை வர வர முன்னேறுகி
ன்றது.
இந்தச் சஞ்சிகை வெளியீட்டு அநுப வம் என்பது உங்களுக்கு நீண்ட கால விடா முயற்சி. இந்த இடைக்காலங்களில் நீங்கள் எத்தனை எத்தனையோ மனிதர் களைக் கண்டிருப்பீர்கள். பழகியிருப்பீர் கள். இந்த அநுபவங்களையெல்லாம் 66 ரும் மல்லிகைச் செடிக்குப் பசளையாகத் தானே பயன்படப் போகின்றது
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மல்லிகைக்கும், இன்று கொழும்பில்
இருந்து வெளிவரும் மல்லிகைக்கும் நிறைய நிறைய வேறுபாடுகளைக் காணக் கூடியதாகவுள்ளது. முன்னர், மல்லிகை என்னதான் சொன்னாலும், ஒருவட பிரதே சச் சஞ்சிகை. இன்றோ அது ஒரு அகில இலங்கை மாசிகை.
அதற்கேற்ற வகையில் திட்டம் தீட்டிச் செயற்படுங்கள். இந்தப் பெரிய தேசிய நெருக்கடிக்களைக் கடந்து வந்துவிட்டீர் கள். யுத்த இடை நாசங்களை ஒரளவு சமா ளித்துக் கொண்டு, இத்தனை ஆண்டுக் காலங்களாகச் சமாளித்து, கால்களை நன்றாக ஊன்றிக் கொண்டுவிட்டீர்கள். உங்களது சாதனைகளில் இது ஒரு மிகப்
பெரிய சாதனை என்றே குறிப்பிடத்
தோன்றுகின்றது.
ஒரு கால கட்டத்தில் உண்மையா கவே நான் மனப் பயமடைந்ததுண்டு. நீங்கள் யாழ்ப்பாண மண்ணை விட்டு அகன்று, கொழும்பு மாநகரைத் தஞ்ச மடைந்த சமயம் உங்களின் எதிர்கால த்தை விட, மல்லிகையின் வருங்காலம் எப்படி ஆகுமோ என நான் மனச் சந்தேக மடைந்ததுண்டு.
ஆனால், காலம் போகப் போக, மல்லிகையின் தொடர் வருகையை அவதானித்துப் பார்த்த பொழுது, எனது மனப் பீதி நீங்கிவிட்டது.
எந்த நெருப்பெரியும் காட்டிற்குள்ளிருந் தும் இனிமேல் மல்லிகை வெளிவரும் என மன ஆறுதல் பட்டேன்.
நல்லூர். ரீ. நவநீதன்.
மல்லிகை மே 2009 $ 68

) இந்த இலக்கியத்துறைக்கு ஏன் வந்தோம்!" என எந்தக் கட்டத்தி லாவது நீங்கள் மனச் சலிப்பு அடைந்ததுண்டா?
சுன்னாகம். sesff. affleon:GBarForg8
d) psorisoidsou மனந்திறந்து சொல்லுகின்றேன். எந்தச் சந்தர்ப்பத்திலும், எந்தக்
கட்டத்திலும் நான் இலக்கியத் துறைக்கு வந்ததை எண்ணிச் சலிப்படைந்ததேயில்லை மாறாக ஆக்கபூர்வமான உற்சாகமும், தன்னம்பிக்கையும் அடைந்திருக்கின்றேன்.
\,..." ޗެ - ۔":& .": ఃఖభళ్ల
> உங்களுக்குக் கடிதம் எழுதினால் பதில் போடுவீர்களா?
பதுளை. ஆர். நவதேன்
3. ப்ட்டவர்களுக்குப் பதில் கடிதம் எழுத எனக்கு நேரமிருக்காது. அத்து இப்படியான ஒரு பழக்கத்தை ஊக்குவிக்கவும் நான் தயாராகவில்லை! 3.
'.်::ဒွိဂ်တွိမ္ပိဒွိ%ွှန္တိ
கனவு காணும் பழக்கம் உண்டா, உங்களுக்கு?
(3asriћшпић. எஸ். ரவீந்திரன்
> எழுத்தாளன் என்றாலே அடிக்கடி கனவுலகில் சஞ்சரித்தேயாக வேண்டும். ஆச்சரியம் நான் இரவில் மாத்திரமல்ல, பகலிலும் கனவு காண்பவன். . ܠ ܐܝܕܐ ܪܘܚ ܀
> மல்லிகைப் பந்தல் இதுவரையும் வெளியிட்ட நூல்களை மொத்த மாக வாங்கிவிட வேண்டும் என்பது எனது மன ஆசை. அதற்கான சரியான வழியொன்றைச் சொல்லுங்கள்.
(385&SEGD6D. ஆர். ஜெயதேவி
மல்லிகை மே 2009 $ 69

Page 37
9 அதற்குச் சுலபமான வழி, நீங்களோ, அல்லது கொழும்பிற்கு வரும் உங்களது நண்பரோ"மல்லிகைப் பந்தல்" வெளியீட்டு நிறுவனத்திற்கு நேரில் ஒருநாள் வர வேண் டும். அங்கு நேரில் வந்தால், நீங்கள் விரும் பும் நூல்களைத் தெரிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். அதற்காக நீங்கள் கொஞ்சம் சிரமமெடுப்பீர்களானால், வெளியீடுகளைப் பெற்றுக் கொள்வது வசதியாக இருக்கும்
> மல்லிகையின் தொடர் வாச கர்களுக்கு என்ன சொல்ல விரும் புகிறீர்கள்? உரும்பிராய். ஏ. பி. தவஞானம்
·) ஆண்டாண்டாக "மல்லிகையை வாங்கிப் படித்து வரும் வாசகர்கள் பலரை ள் மக்கு ஏற்கனவே நன்கு தெரியும், அவர்களுக்கு நாம் சொல்லும் புத்திமதி இதுதான். நீங்கள் படித்து விட்டு, சும்மா ஒதுக்கமாகப் போட்டு வைக்கும் மல்லிகை இதழ்களை ஒழுங்காகப் பாதுகாத்து வையுங்கள். அதிலும், ஆண்டு மலர்கள்ை வெகு அக்கறையுடன் சேமித்து வைக்கப் பழகுங்கள். அது பிற்காலத்தில் உங்களது பிற் சந்ததியினருக்குப் பெரிதும் உதவக்
> நான் நல்லதொரு எழுத்தாள
னாக எதிர்காலத்தில் வரவேண்டும்
என விரும்புகின்றேன். அதற்காக
நான் என்ன செய்ய வேண்டும்?
65gasarabar. எஸ். கணேஷ்வரன்
X) எழுத வேண்டும். விடாது தொடராக எழுதிப் பழக வேண்டும். உங்களது உள்ளத்துக்குள்ளேயே சதா ஒரு நெருப்பு எரிந்து கொண்டிருக்க வேண்டும். அது
உங்களை இடைவிடாது தகித்துக் கொண்டிருக்க வேண்டும். இதற்கெல்லாம் ஈடு கொடுத்து, நிமிர்ந்து நிற்க நீங்கள்
சம்மதமென்றால், இந்த எழுத்துலகிற்குத்
Ᏹ8
தாராளமாக வரலாம். ః
> நான் ஒரளவு படித்துப் பின் னர், உயர் அதிகாரி வேலை பார்ப் பவன். ஆனால், சிறு அவமானங் களைக் கூட, தாங்க முடியாமல் மன அவஸ்தைப் படுபவன். கடும் உழைப்பிற்குப் பின் நிற்காத நான், இப்படிச் சிறு சிறு அவமானங் கள் இடையிடையே ஏற்படும் போது, அப்படியே இடிந்து போய் விடுகின்றேன். அவமானங் கள் எல்லாம் வெறும் துரசு எனப் போராடி வெற்றி பெற்ற உங்க ளைப் பார்க்கப், படிக்கப் பெரி தும் ஆச்சரியப்படுகின்றேன். என க்கு நீங்கள் சொல்லும் புத்திமதி என்ன?
வெள்ளவத்தை. ωΙα σταδότ'
>> இந்த மத்திய தர் வர்க்கத்தின் கோழைத்தனமே இதுதான். கொஞ்சம் அவமானம் என்றதும் அட்டைப் பூச்சி தன்னைத் தானே சுருட்டிக் கொள்வது போல, மனசைச் சுருட்டிக் கொண்டு உட்குமைந்து மருகுவது. மனசைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். யாருக்குமே பயப்படாதீர்கள். என்னதான் அவமானம் நடந்தாலும் அதைச் சட்டை செய்யாதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். என்னைப் போன்றவர்களைச் சொன்னது போல, சாதி சொல்லிச் சொட்டை சொல்லவில்லையே அதுவே போதும். மனசுக்குள் அவன் என் நண்பன் என அடிக்கடி சொல்லிக் கொள் ளுங்கள். அப்புறம் நடப்பதைப் பாருங்கள்.
க்
மல்லிகை மே 2009 * 70
 
 
 
 

> இன்றைக்கு நாடு பூராகவுமி ருந்து புதுப் புது எழுத்தாளர்கள் பலர் முளைக்கிறார்களே, அவர் கள் இலக்கிய உலகில் நிலைத்தி ருக்கிறார்கள் இல்லையே, என்ன காரணம்?
எல். தேவதாசன் 幾 > ஆர்வம் மிகுதியால் இந்தத் துறைக்கு வரும் இளம் எழுத்தாளர்கள், இந்தத் துறை யில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்காற்று வதில்லை. தம்மை எழுத்து உலகத்திற்கு ஒப்புக் கொடுப்பதுமில்லை. அதன் காரண மாக வந்த சுவடே தெரியாமல், பலர் கானா மலே போய் கின்றனர்.
ಫ್ಲಿಫ಼: : , భళ్ల
> நான் ஒரு வளரும் எழுத்தாளன்.
எனது படைப்புக்களை நூலுருவில்
புத்தகமாகக் கொண்டு வர விரும்
புகின்றேன். எனது படைப்புக்களை
நூலுருவில் கொண்டு வர, நானெ ன்ன செய்ய வேண்டும்?
க. தவசீலன்
IDLIrബr.
வட்டுக்கோட்டை.
9 முதலில் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது. வளரும் எழுத்தாளன் ஒருவர் அவசரப்பட்டு எழுந்தமானத்திற்குத் தனது சிருஷ்டிகளை நூல் வடிவில் கொண்டு வர முனையக் கூடாது. பல சஞ்சி கைகளுக்கு, ஞாயிறு இதழ்களுக்கு எழுதி எழுதித் தன்னையும், தனது எழுத்தையும் செழுமைப்படுத்திக் கொண்ட பின்னர் தான், தனது ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து நூலு ருவாக்க முயற்சிக்க வேண்டும். இந்த அவ சரம் வளரும் எழுத்தாளனுக்கு நல்ல எதிர் காலத்தை உருவாக்கித் தராது. இதையும் மீறி, உமது ஆக்கங்கள் மீது அபரிமித மான நம்பிக்கை கொண்டிருந்தால், நல்ல தொரு அச்சகத்தைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
> அமெரிக்கா, ஐரோப்பிய, அவுஸ்திரேலியா நாடுகளில் இரு ந்து தமிழ் மொழியில் இலக்கியச் சிற்றேடுகள் வருகின்றனவா?
திருகோணமலை. ஆர். அன்புநேசன்
}) ஏராளமான சஞ்சிகைகள் அங்கிருந்து தமிழ்மொழியில் LUGU EEST6NoLDTES வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெறும் ஆர்வத்தையே மூலதனமாகக் கொண்டு வெளிவந்து கொண் டிருப்பவை அவை. நேற்றுக் கூட, ஜெர்மனி யில் இருந்து மண் என்றொரு சஞ்சிகை இதழ்கள் இரண்டு நமது பார்வைக்கு வந் துள்ளன. భ
இது தவிர, இணையத்தளப் பத்திரி கைகள் என ஏராளமானவை கணினி மூலம் வெளிவந்து கொண்டேயிருக்கின் றன. கடந்த நாற்பதாண்டுக் காலத்திற்கு அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கும் மல்லிகை இதழ்களைக் கூட மயப்படுத்தியுள்ளோம்:
எழுத்தாளர் அ.ந.கந்தசாமியை நேரில் கண்டு, கதைத்திருக்கிறீர்களா? எஸ். முகுந்தன்
> எனது வளரிளம் பருவத்தில் அவர்
சங்கானை.
பல மாதங்கள் கையில் ஏற்பட்ட சிரங்கு நோய்க்கு வைத்தியம் ச்ெய்ய யாழ்ப்பாண நகரில் தங்கியிருந்தார். அந்தக் காலகடி பத்தில் அவரைப் us) தடவைகள் சந்தித்து உரையாடியிருக்கின்றேன். ܀܂
> இன்றைய ஈழத்துத் தமிழ் இல க்கிய வளர்ச்சி பற்றி மன நிறைவு கொள்ளுகின்றீர்களா?
நெல்லியடி. Grûd. Sast. prarassmr
)) மனநிறைவு கொள்ளுவது மாத்திர மல்ல, மனம் நிறைந்த மகிழ்ச்சியுமடைகி
மல்லிகை மே 2009 $ 71

Page 38
சிங்களவர்களால் சூழப்பட் EIT pet Sg8 ஆக்கபூர்வமான தமிழ்ப் வந்து கொண்டிருக்கின்றன:
■
இலங்கையின் நாலா பிரதே சங்களுக்கும் நீங்கள் இதுவரையும் பல தடவைகள் சென்று வந்திருப் பீர்கள். இன்று வரை நீங்கள் போய் வராத பிரதேசம் என்ன?
ஆர். தேவகாந்தன் »). Esgìl T&G|Tu Ch'i பிரதேசம். இந்
EITT),
உங்களது தினசரிக் கடமை
கள் என்ன- என்ன?
IDr:Bsfist. எஸ்.ஆர். சிங்கன்
... .........shai, X)> 57 587i 5 வாழ்க்கையின் இன்றைய iமுற்றுமுழு
பெரும் தி சரிக்கடமைகள்மு தாகமல்லிகைக்காக
鹉、臀
"மல்லிகைப் பந்தல்" வெளியீடு களை அடிக்கடி வெளியிட்டு வருகிறீ ார்களே, இதில் லாபமா?- நஷ்டமா?
கொழும்பு-6. எம்.றுநீரங்கன்
»). சில அர்ப்பணிப்புக் கடமைகளில் எந் தக் கட்டத்திலுமேல்ாப நஷ்ட்க்கணக்குப் பார்க்கக் கூடாது. லாபமா-நஷ்டமா? என்பதை வரலாறு தான் தீர்மானிக்க வேண்டும். அதுவரையும் பொறுத்திருப்போமே. இந்தப் பரந்த உலகில் நுளம்பு இல்லாத நாடு எது?
மல்விகையின் வர விவிருந்து
தான் நாம் இந்த நாட்டின் பல் வேறு பிரதேசங்களில் வாழும் பல எழுத்தாளர்களின் ஆளுமைகளைத் தரிசிக்கின்றோம். இந்த ஆக்கபூர்வ மான திட்டம் உங்களது நெஞ்சில் எப்படி முளைவிட்டது?
நீர்கொழும்பு. இ. கருனாதாஸ்
晶 Diği ரமல் ல. ங்கிக்கொண்டு இருக்கும் ஒர் இல க்கியவாதியும் சுட்! எனவே, தேடிக் கொண்டே இருப்பேன். விசாரித்த வண்ண மிருப்பேன்.எனது கவனத்திற்கு வரும்: பிரதேசத்துப்படைப்பாளிகளுடன் L டியோ தொடர்பை ஏற்படுத்திக்கொள் வேன்.அதைத் தொடர்ந்து பேணிக்காத்து வருவேன்.எனது தேடலின் பெறுபேறுக ளைக் காத்துவருவேன்.மல்லிகைப்புக் கங்களில் பதிந்துகொள்வேன். இதுதா எனது தொழில்நுட்பச் சூட்சுமம், 鹭
* நீங்கள் உங்களது பள்ளி வாழ்க் கையில் ஏதாவது குறும்புத்தனம் செய்து மாட்டிக் கொண்டதுண்டா?
எம். தனச்வி
ண்டா, சொல்லிமாய்வத 'வயசில் நான் பெரிய துடியா வரம்.ஆனால் படிப்பில் மகாசூரன்.எந்த வகுப்பிலும் நான்தான் முதல் மாணவன். இந்தச்சலுகையை வைத்துக் கொண்டு, நான் சக மாணவரிடையே புகுந்து விள்ை பாடி விடுவேன், எக்காரனத்தைக் கொண் டும், அவர்களைப் புண்படுத்தமாட்டன். இந்த வகையில் நான் மகாகவனம் அதன் காரண மாகச் சக மாணவர்கள் அத்தனை பேரும் என்னிடம் அன்பு பாராட்டிப்பழகி வந்தனர்.
கொக்குவில் .
பதுளை . ஜீ. ருமணன் அந்தக் காலத்தை நினைத்து அடிக்கடி
மனமகிழ்ச்சியடைவதுமுண்டு.' }} (TBT. prerum
2014, ரு கதிரேசன் நீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியிட்டாளருமான டோமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விஜேகானந்த மே.ே |IIIA இலக்கத்திலுள்ள 1:1kslாl PrinIET3 அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(2. மல்லிகைப் பந்தல் நான்கு புதிய
வெளியீடுகள் پایالتقایق
காற்றைக் கானமாக்கிய புல்லாங்குழல் இணுவையூர் சக்திதாசன் (டென்மார்க்)
IOGT: 150/=
முன்முகங்கள் (53 தகைமையாளரின் அட்டைப்படக் கட்டுரை) ଘLIf୍li, j ]]]
நினைவழியா நாடிகள்
"III"
57),5}}5vi: 15()/=
eoகளில் மல்கிகைச் சிறுகளுகுகள் மல்லிகாதேவிநாராயணன் Hign:l: 125/=
தொடர்புகளுக்கு: Dominic Jeewa
“Maikaio
Colombo - 13. TE II - 232.072
பல்கலைக்கழகங்கள், நூலகங்களுக்குத் தேவையானவை,
W
201/4, Sri Kathires an St,
ལྡི་

Page 39
iš Mallikai
羲
:
is a
ترأس