கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்

Page 1


Page 2


Page 3

முப்பெரும் தலைநகரங்களில்
நாட்கள்
டொமினிக் ஜீவா
இ
ሀበNለ፴በOለõ[ዛLዘጻዕለቦም] 201 1/1, பூரீகதிரேசன் வீதி, கொழும்பு - 13. தொலைபேசி: 320721

Page 4
27-06-2001ல் ஆரம்பமாகும் டொமினிக் ஜீவாவின் பவளவிழா ஞாபகமாக.......
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு. முதற் பதிப்பு: 2001- ஜூன். (C) D. s.Susi
கணினி அச்சமைப்பு: எஸ். சித்திராங்கனி
விலை: ரூபா. 110/=
ISBN: 955-8250-07-4
அச்சிட்டோர்: யு. கே. பிரிண்டர்ஸ்
98 A விவேகானந்த மேடு,
கொழும்பு - 13 தொலைபேசி: 344046, 074-614153

பதிப்பூரை
நான் ஐரோப்பிய நாடொன்றில், குறிப்பாகப் பாரிஸ் மாநகரத்தில் நடைபெறப் போகும் இலக்கிய சம்மேளனத்தில் கலந்து கொள்ளப் போவதாக, இங்குள்ள முக்கியமான தினசரிப் பத்திரிகைகள், நான் புறப்படுவதற்குப் பல நாட்களுக்கு முன்னதாகவே செய்திகளைப் பிரசுரித்திருந்தன. முக்கியத்துவம் கொடுத்திருந்தன.
இந்த நாட்டு ஊடகங்கள் நமது நாட்டுப் படைப்பாளிகளுக்குக் கொடுத்துவரும் முக்கியத்துவம் இங்கு குறிப்பிடத்தக்கது. அவை எழுத்தாளர்களுக்கு அதிகளவு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டி வருவதை ஈழத்து ரஸிகள் உலகம் நன்கு அவதானித்துள்ளது. இந்த ஆரோக்கியமான அணுகுமுறையைப் பல மேடைகளில் இங்கும் வெளிநாடுகளிலும் நான் மனந்திறந்து பாராட்டியுள்ளேன்.
தமிழகத்திலோ ஊடகங்களின் சிறப்பான கவனிப்பைப் பெற்றுத் திகழ்பவர்கள் அரசியல்வாதிகள். அதனால்தான் ஊழல்கள் அங்கு தலை விரித்தாடுகின்றதோ, என்னமோ?
அடுத்தவர்கள் மார்க்கட் வலுவுள்ள சினிமா நடிகர்கள். இத்தகை யோர்களுக்குத்தான் தமிழக ஊடகங்கள் அதி விசேஷ முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாடிச் சிறப்பிக்கின்றன. ஆனால், இங்கு நிலைமை வேறு. மக்களால் அங்கீகரிக்கப் பெற்ற கலைஞர்கள் கொண்டா டப்படுகின்றனர். அதற்கு உந்து சக்தியாகத் திகழ்பவை நமது
மல்லிகைப் பந்தல் - 03

Page 5
ஊடகங்களேயாகும். இது இந்த நாட்டிலுள்ள சிறப்பம்சங்களில் ஒன்றாகும். எனது பாரிஸ் பயணம் பத்திரிகைகளினால் பிரபலப்படுத்தப்பட்ட பின்னர், நடந்து போகும் வழிதெருக்களில் எல்லாம் என்னைப் பார்த்தவர்கள் கைகுலுக்கி வரவேற்றுக் குதூகலித்து மகிழ்ந்தார்கள்.
பாரிஸ் இலக்கிய விழா பற்றிப் பலர் விவரமாக விசாரித்துத் தெரிந்து கொண்டனர். ‘எப்போ பயணம்?’ எனக் கேட்டனர். நேரில் சந்திக்க வசதிப்படாதவர்கள் எல்லாம் தொலைபேசியில் விசாரிக்கத் தொடங்கினர். கடிதம் எழுதிக் கேட்டனர். பல இலக்கிய நண்பர்கள் மல்லிகைக் கந்தோருக்கே வந்து வாழ்த்தி மகிழ்ந்தனர். அதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. ஆரம்பத்தில் இது சம்பந்தமாக நான் ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. இயல்பான, சாதாரண ஒரு *பிரயாண நிகழ்ச்சி என்றே கருதிக் கொண்டிருந்தேன். *
செய்தி தெரிந்த நண்பர்கள் இந்தச் சுற்றுப் பயணத்தை ஏதோ ஒரு சாதனை என நம்பிக் கொண்டு என்னைப் பாராட்டி வாழ்த்துவதைக் கண்டதும் எனக்குள்ளே கூட ஒரு மிதப்பான எண்ணம் ஆரம்பத்தில் தலைகாட்டியதை இந்தக் கட்டத்தில் நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
அந்த மனக் கொழுப்பு எண்ணத்தை உடனே நான் தட்டி அடக்கி விட்டேன். அநுபவமும் ஒரு காரணம். நானொரு மிகச் சாதாரணன் எழுத்தாளன். மல்லிகை ஆசிரியன். இதைத் தவிர, நானொரு ரிே சாதனையாளன் என்று சொல்லிக் கொள்ள இயலாதவன். : , , , is
இப்படியான சாதாரணன் ஒருவனை பாரிஸில் நட்ைபெறப் போகும் அகில ஐரோப்பிய புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் 27-வது இலக்கியச் சந்திப்பிற்குத் தமது செலவில் அழைத்துக் கெளரவிக்க விரும்புகிறார்களென்றால் அந்த அழைப்புக்குப் பின்னால் ஏதோ ஆழ்ந்த நோக்கமொன்று இருக்கத் தானே வேண்டும் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.
1987 ஆகஸ்டில் மாஸ்கோவுக்குப் போய் வந்தேன். அந்த அழைப்பு சோவியத் எழுத்தாளர்களது ஒன்றியத்தின் "அழைப்பு, உலகக் கருத்தொற்றுமையுள்ள எழுத்தாளர்களை வருஷா வருஷம் அழைப்பது அவர்களது வழக்கம்.
எனவே இயலபான ஓர் அழைப்பபே தவிர, இதில் அப்படியொன்றும்
மல்லிகைப் பந்தல் - 04

புதுமையில்லை.
அடுத்துச் சென்னையில் ஒரு கருத்தரங்கை C L. S. எனச் சொல்லப்படும் கிறிஸ்தவ லிட்டரி சொசைட்டி தமிழ் இலக்கியத்தில் சாதியமும் வறுமையும்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கை நடத்தியது.
அந்த இலக்கியச் சந்திப்பில் இது சம்பந்தமாகக் கட்டுரை படிக்கும்படி அதன் செயலாளர் பாக்கியமுத்து என்னைக் கேட்டுக் கொண்டார். அதன் தலைவரான தயானந்தன் பிரான்ஸிஸ் அவர்களும் கடிதம் எழுதியிருந்தார். பிரயாண ஏற்பாடுகளைச் செய்து தந்தனர். அந்த இலக்கியக் கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்டுரை படித்தேன்.
ஆனால் இந்தப் பாரிஸ் இலக்கியப் பயணம் இவைகளை விட வித்தியாசமானது. பாரிஸ் மாத்திரமல்ல, பெர்லின், லண்டன் போன்ற மாபெரும் தலை நகர்களில் கூட, இலக்கிய விழாக்களில் கலந்து கொண்ட ஓர் எழுத்தாளன் நான் தான் எனச் சொல்லுவது பெருமைக்காகவல்ல. ஒரு தகவலுக்காக இங்கு குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். விரிந்த, பரந்த இலக்கிய அநுபவம், இது.
ஏன் இந்த இலக்கிய விழாக்கள், சிறப்புள்ள கனதியான சந்திப்புகள் என்றால் ஐரோப்பிய நாடுகளில் நமது சகோதரங்களுடன் நமது இலக்கியம் பற்றி நமது பாஷையில் பேசியதுதான். இது என்னை மெய் சிலிர்க்க வைத்தது. என்னை எனது கருத்துக்களை வெகு துல்லியமாகத் தெரிந்து வைத்துக் கொண்டுதான் அவர்கள் இந்த இலக்கியச் சந்திப்புக்கு அழைத்திருந்தனர்.
அசாதாரண அறிவாற்றலும், அநுபவப் பாடங்களும், புலம் பெயர்ந்ததால் ஏற்பட்டுள்ள மன அவசங்களுக்கும்; உட்பட்ட, அதே சமயம் ஆரோக்கியமான தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மெய்யான ஆர்வமும் அக்கறையும் கொண்டுள்ள இந்த இளைஞர்களைச் சந்தித்த போது எனக்குப் புது நம்பிக்கை பிறந்து விட்டது.
'ஆரடா சொன்னது, தமிழ் இனி மெல்லச் சாகுமென்று? நிமிர்ந்து.நிமிர்ந்து.நிமிர்ந்து பார்! உலகம் பூராவும் ஐந்து கண்டங்களிலும் நம்மவன்! தமிழ்தான் அவன் சிந்தனை, அங்கு தமிழை விதைப்பதற்கு என்னைப் ேோன்றவங்களை அழைத்து விழா எடுக்கிறான்.
மல்லிகைப்பந்தல் -(05)

Page 6
தனது மூல ஆணி வேரான பண்பாடு, மொழி பற்றி அவனுக்கு எந்த விதமான மனத் தடுமாற்றமுமில்லை. அவனைக் கடந்து இருப்பவர்கள்தான் அவனுடைய பரம்பரையின் எதிர்காலம் பற்றி இங்கிருந்து கவலைப் படுகின்றனர்.
நான் கவலைப்படவேயில்லை.
எத்தனை வகையான இளைஞர்களை நான் நேரில் பார்த்தேன். அவர்களது தனித் திறமைகளை நேரில் தரிசித்திருக்கிறேன்.
இவர்களெல்லாம் ஏதோ வழிகளிளெல்லாம் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தக் காலம் கனியட்டும் எனக் காத்துக் கிடக்கின்றனர்.
எனவேதான் எனது ஐரோப்பியச் சுற்றுப் பயணத்தை எழுத்து வடிவில் ஆவணப் படுத்தி நூலுருவில் வெளியிட்டு வைக்கின்றேன். இந்த எழுத்துக் குவியல் இன்று பலருக்கு வெறும் எழுத்து வடிவமாகத் தென்படலாம்.
ஆனால், நாளை என்றொரு காலம் வரும். அன்று இந்த எழுத்துக்களுக்குப் பின்னாலுள்ள சத்தியம் விஸ்வ ரூபமெடுத்து நிமிரும். அப்பொழுது இந்த எழுத்தின் மகிமையும் அதன் நீண்ட கால தீர்க்க தரிசன மதிப்பீடும் புரியும்.
நான் பாரிஸிற்குப் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தினகரன் ஆசிரியரும் எனது நீண்ட நாளைய நண்பருமான ராஜ பூரீகாந்தன் என்னைச் சந்தித்தார்.
“உங்களது பிரயாணம் பற்றிச் சகல ஆவணங்களையும் தகவல்களையும் சேமித்து வாருங்கள். இங்கு வந்தவுடன் உங்களது அநுபவங்களைக் கட்டுரை வடிவில் தினகரனுக்குத் தொடர் கட்டுரையை எழுதுங்கள்" என முன்னரே கேட்டுக் கொண்டார். அந்தக் கோரிக்கையை நான் ஏற்றுக் கொண்டேன். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.
சுற்றப் பயணம் முடிந்து வந்ததும் தொடர் கட்டுரையை எழுதத் தொடங்கினேன். ஏராளமான தென்னிலங்கை இலக்கிய நண்பர்கள் அத் தொடரைத் தொடர்ந்து படித்து வந்தனர். படித்து வந்ததுடன் அது சம்பந்தமாகப் பலர் எனக்குக் கடிதமெழுதித் தமது அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
மல்லிகைப் பந்தல் ( 06

பாரிஸிலும் லண்டனிலும் நானோர் ஆச்சரியத்தைக் கண்டு அதிசயித்துப் போனேன். வாராவாரம் ஞாயிறு வார இதழ்கள் அன்றைய தினம இரவு எட்டு மணிக்கே வாசகர்களுக்குக் கிடைத்து விடுகின்றன. தினக்குரல், தினகரன், வீரகேசரி ஆகிய நமது வாரந்தரிகளை நானே விற்பனைக் கடையில் வரிசையில் நின்று வாங்கி வாசித்து நமது நாட்டின் தகவல்களை விளங்கிக் கொண்டேன். இலக்கியச் செய்திகளையும் அறிந்து கொண்டேன்.
நானறிந்தவரை யாழ்ப்பாணத்து வாசகர்கள் இத்தகைய வாராந்தரிகளை வாசித்து அறிவது அடுத்து அடுத்த நாட்களில் தான்! இந்த விற்பனைக் கடைகளில் வேறொரு காட்சியையும் கண்டு மனம் நொந்தேன். ஒரு காலத்தில் நம்மால் இந்த மண்ணுக்கு வரவே கூடாது என இயக்கம் நடத்தித் தடுத்திருந்த பல தரந் தாழ்ந்த இதழ்கள், சினிமாக்கள் விற்பனைச் சரக்காகக் காட்சி தந்தன. ஐரோப்பிய மார்க்கட்டில் புகுந்து விளையாடிக் கொண்டிருந்தன.
இந்தக் குப்பை கூளங்களைப் பெரும்பாலும் வாங்குபவர்கள் நம்ம பொடியன்களே. இரவென்றும் பகலென்றும் பாராமல் கடுங்குளிருக்குள் கட்டம் கட்டமாக இடம் மாறி உழைப்பை விற்று வரும் நம்மவர்களே பொழுது போக்கு என்ற போர்வையில் இவைகளையெல்லாம் வாங்கி வாசித்துத் தம்மைத் தாமே நச்சுப் படுத்திக் கொள்ளுகின்றனர்.
டாலரின், பவுண்டின், மார்க்கின், பிராங்கின் இந்திய ரூபாய்ப் பெறுமதியை நடைமுறையில் நன்கறிந்து சுவை கண்ட தமிழக கடதாசி, பெரியசின்னத்திரை வியாபாரிகள் ஐரோப்பிய நாடுகளில் இதனை ஈட்டித் தரும் நமது புலம் பெயர்ந்த படைப்பாளிகள் மீது திடீர்க் கரிசனை காட்டத் தொடங்கியுள்ளனர். இதே வியாபாரிகள் ஈழத்து மண்ணில் காலம் காலமாக எழுத்துப் பணி செய்து வருபவர்களைப் பற்றி எந்த விதமான அக்கறையும் காட்டமாட்டார்கள். தரமான படைப்புகளைக் கூடத் திரும்பிப் பார்க்கமாட்டார்கள்.
அப்படி ஈழத்தவர்களின் படைப்புகளை வெளியிடுவதாயிருந்தால் அத்தகைய எழுத்தாளர்கள் டாலர், பவுண்ட், மார்க், பிராங்க் புழங்கும் நாட்டில் புலம் பெயர்ந்து வசிப்பவர்களாகக்தான் கட்டாயம் இருந்தாக
வேண்டும்.
இதற்குப் பின்னால் பல பொருளாதார லாபங்கள் உண்டு. நாளை ஒரு நாள் ஐரோப்பா போக வசதி வந்தால் இந்த அரவண்ைபு மிகப்
மல்லிகைப் பந்தல் سیھخذسئیسیہہسپریس-- - O7

Page 7
பெரிய உதவியாக அமையலாம் அல்லவா? அத்துடன் விற்கும் பிரதிகளும் அந்நியச் செலவாணியைக் கொண்டு வருகின்றதே!
அங்கு வாழ்ந்து வரும் நம்மவர்கள் மீது தீவிரப் பாசம் பொழிந்து வருவதை நாம் கவனத்தில் கொள்ளாமலுமில்லை.
நமது கடூர அநுபவத்தில் இவர்கள் டாலர் பண்ணப் பார்க்கின்றனர்.
இந்த யதார்த்த உண்மையை நான் அங்கு பல கூட்டங்களில் விரிவாக விளங்கப்படுத்தினேன். மொழி கரண்டுபவனுக்கு ஒர் ஊடகமே தவிர, மொழி மீது, இனத்தின் மீது பாசம் என நாம் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
மிக மிக விழிப்பாக இருக்க வேண்டும் நம்மவர்கள். நாம் ஏமாற ஏமாற, நம்மீது குதிரை விடப் பழகிக் கொள்வான் யாவாரி'
இந்தக் கருத்துக்களையெல்லாம் அந்தக் கடுங்குளிருக்குள் நடுங்கிக் கொண்டு, பல நடைமுறைச் சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் நமது உடன் பிறப்புக்களுக்குச் சொல்லி வைக்க விரும்புகிறேன்.
இது எனது இலக்கியக் கடமையும் கூட.
உலகப் பெரும் பரப்பெல்லாம் நம்மவன் உயரே. உயரே பறக்கட்டும்! அதே சமயம் நமது மண்ணில் பதிந்துள்ள அவனது ஆணிவேரின் ஆழ நீளத்தை மறந்து போகாமல் இருக்கட்டும்!
அதுவே போதும்.
அழகான அட்டையை உருவாக்கி உதவிய நண்பர் திவாகரன் அவர்களுக்கும், அச்சுப் படிவத்தை சரிபார்த்துத் தந்த நண்பர் எம். பாலசிங்கம் அவர்களுக்கும் நன்றிகள் உரியவை. இந்த நூலை அழகாக அச்சிட்டு உதவிய யு. கே. அச்சகத்தினருக்கும் நன்றி.
- டொமினிக் ஜீவா
மல்லிகைப் பந்தல் - 08

ம் ஆண்டு டிசம்பர் 22ந் திகதி பாரிஸ் புறப்பட்டேன். லண்ட னிலிருந்து 2001 ஜனவரி 22இல் நாடு திரும்பினேன். இந்த ஒரு மாத இடைத் தங்கலில் எனது ஐரோப்பிய இலக்கியப் பயணம் நடைபெற்று முடிந்தது.
ஐரோப்பாவிலுள்ள பாரம்பரியப் பிரபலம் வாய்ந்த மூன்று தேசங்களினது தலை நகர்களுக்கும் போய் வந்தேன். பிரமிப்பு இன்னமும் நீங்கிய பாடில்லை.
பாரிஸ் - பேர்லின் - லண்டன்!
இந்த மேலை நாட்டுப் பிரயாணம் எனக்குள் ஏற்படுத்தியுள்ள பெரிய தாக்கத்தையும், பார்வை விரிவையும் இன்று எனக்குள் நானே உணர்ந்து கொள்ளுகின்றேன். இரை மீட்டுகிறேன்.
நான் போனதே பாரிஸ் நகரில் நடைபெற்ற புலம் பெயர்ந்த தமிழர்களினது 27வது இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்ளுவதற்குத்தான்.
இரண்டு முழு நாட்களும் இந்த இலச் ய லிழா நடைபெற்று முடிந்தது. ஆழமான கருத்துப் பரிமாறல்களும், இலக்கியக் கருத்து மோதல்களும், எதிர்காலத்தில் செய்யப்போகும் ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்களும் விவாதத்தில் இடம் பெற்றன.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல பேராளர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நான் கலந்து கொண்ட மிகக் காத்திரமான இலக்கிய விழாக்களில் இதுவுமொன்று.
என் நெஞ்சின் அடி ஆழத்தில் இதன் செழுமை வியாபித்து ப்ளது. பல திசைகளிலுமிருந்து வந்து இந்த இலக்கியச் சந்திப்பில் கலந்து
மல்லிகைப் பந்தல் 09 )

Page 8
கொண்ட பேராளர்களின் முகங்களைப் பார்த்துப் பார்த்து என் மனதில் அவர்களது முகங்களைப் பதிய வைத்துக் கொண்டேன். у
அவர்களையும் இந்தக் கட்டத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.
எத்தனை எத்தனை விதமான மனிதர்கள் இவர்கள்.!
இத்தனை இலக்கிய நெஞ்சங்களையும் நான் எனது சொந்த மண்ணில் கடந்த காலங்களில் சந்தித்திருப்பேனோ என்பது சந்தேகம்.
என் வாழ்க்கையில் எனக்கேற்பட்ட பெரும் பேறுகளில் இதுவுமொன்று என்றே கருதுகின்றேன்.
விழாவில் கலந்து கொண்டவர்கள் என் மீதும், மல்லிகை மீதும் காட்டிய பரிவு கலந்த பாசத்தை, கரிசனையைப் பார்த்து நான் உண்மையிலேயே பிரமித்துப் போய் விட்டேன்.
இவர்களில் பலர் தரமான சுவைஞர்கள். இன்னும் சிலர் ரசிகர்கள். பெரும்பாலோர் எழுத்தாளர்கள். ஈழத்து இலக்கியத்தை நெஞ்சார நேசிப்பவர்கள்.
சந்திப்புக்குப் பேராளர்களாக வந்திருந்தோர் இலக்கிய ஆர்வம் காரணமாகவும், உந்துதலின் வெளிப்படையாகவும் உணர்ச்சி பூர்வமாகவும், தத்தமது மனக் கருத்துக்களை வெளி வெளியாக வைத்து விவாதித்தனர்.
கேட்கக் கேட்கச் சந்தோஷமாகவிருந்தது.
ஐரோப்பாவிலுள்ள ஒரு பாரம்பரியத் தொன்மை மிக்க, இலக்கிய விசாலம் கொண்ட ஒரு நாட்டின் தலைப் பட்டினத்தில், தமிழ் இலக்கிய விழாவில் தமிழில் உரத்த குரலில் விவாதிக்கின்றனரே. என நினைத்த பொழுது எனது சர்வாங்கமுமே புளசிந்தது. மனசு பெருமையால் பூரித்தது.
புலம் பெயர்ந்த தமிழனின் சாதனைகளில் இதுவுமொன்று.
பலரும், ஏன் நான் உட்பட ஒரு கருத்துக் கொண்டிருந்தோம்.புலம் பெயர்ந்த நம்மவர்கள் காலப்போக்கில் தமது தாய்ப்பாஷையை இயல்பாகவே மறந்து, புகலிடம் தேடிய நாட்டினது மொழிகளுடன் கலந்து, தமது தனித்துவத்தையும் கலாச்சார விழுமியங்களையும் இழந்து போய் விடுவார்களோ என எண்ணியிருந்தோம்.
அந்த எண்ணமே தவறு என எதார்த்த நிகழ்ச்சிகள் நிரூபிக்கின்றன. மொழி மீதும் கலாசார பண்பாடுகள் மீதும் அவர்கள் வைத்திருக்கின்ற அபார பற்றையும், பாசத்தையும், விசுவாசத்தையும், பார்க்கும் போது
மல்லிகைப் பந்தல் 10( مسی)

நாம் தான் விணாகச் சந்தேகப்படுகின்றோமோ என எம் மீதே எமக்குச் சந்தேகம் ஏற்படுகின்றது.
சூழ்நிலையும், யுத்த நெருக்குவாரமும் எதிர்காலப் பயமும் அவர்களை இந்த நாட்டை விட்டுப் பிரிந்து போக வைத்திருக்கலாம். ஆனால், எத்தனை எத்தனை சமுத்திரங்களை, மலைகளைக் கடந்து போக வைத்திருந்த போதிலும் கூட இந்த மண்ணை, இந்த மண்ணின் வாசனையை, மொழியின் பாரம்பரியத் தொன்மையை மறக்கடிக்கச் செய்யவில்லை.
எனவே தான் பாரிஸில் தமிழுக்கு விழா எடுக்கிறார்கள். பெர்லினில் தமிழில் இலக்கிய விமர்சனம் நடத்துகிறார்கள். லண்டனில் தமிழில் தொலைக்காட்சிகளையும், வானொலி நிகழ்ச்சிகளையும், சிறு சஞ்சிகைகளையும் தொடங்கி இயக்கி வருகின்றனர். ass
மே  ைட களி ல இங்கு எழுத்தில் றேன். இதே கருத் களுக்கு முன்னர் சென் சொல்லியிருக்கிறேன். தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குக் குடும்
நான் அடிக் கடி :منتجعات சொல்லி வருவதை / -- பதித்து வைக்கின் து தைச் சில மாதங் னையிலும் நான் يؤمن
தமிழகத்துத் இ அல்லது அமெரிக்க ” } سبت يا பத்துடன் போனால தங்களது இருப்பை நிலை நாட்டிக் கொளர் வதற்காக மக்களுக்குப் பரத நாட்டியம் பழக்குவார்கள். அடுத்து, கூட்டம் குழுவாகச் சேர்ந்து முருகன் கோயிலொன்றைத் தமது இருப்பிடங்களுக்குச் சமீபமாக ஸ்தாபிப்பார்கள்.
நம்மவர்களோ இதில் வித்தியாசமாகச் செயல்படுவார்கள். புலம் பெயர்ந்துள்ள நம்மவர்களில் புத்திஜீவிகள் சிலர் ஒன்று கூடித் தமது இருப்பை நிலைநிறுத்துவதற்காக இலக்கியக் கழகம் ஒன்றை உருவாக்குவார்கள். சிறிது காலம் சென்ற பின்னர் இவர்களில் பலர் இணைந்து ஓர் இலக்கியச் சஞ்சிகையை வெளியிடுவார்கள். தொடக்கத்தில் நெருக்கம் இருக்கும். தொடர்ந்து முரண்பாடு தோன்றும். குறுங்குழுவாதம் தலை காட்டும். குழுக்குழுவாகப் பிரிவார்கள். கன்னை கட்டித் தங்களைத் தாங்களே திட்டித் தீர்ப்பார்கள்.
இவையனைத்தும் அங்குத்மிழில்தான் நடைபெறும். நமது தமிழர்கள் மத்தியில் தான் இடம் பெறும். நம்மவர்கள் தான் இதற்குத் தலைமை
ustvou) Al Libum ( 1 )

Page 9
தாங்குவார்கள்.
ஐரோப்பாவில் கூட்டுக் குழுக்களால் இப்படி ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் கருத்து மோதலால் பிரிந்து போன சிற்றிலக்கிய ஏட்டாளர்கள் பலரை எனது இந்த இலக்கியப் பயணத்தில் சந்தித்து உரையாடியுள்ளேன். அபிப்பிராயங்களைப் பரிமாறிக்கொண்டோம்:
ஒவ்வொருவரும் மனந் திறந்து என்னுடன் பேசினார்கள். இத்தனைக்கும் அவர்களது ஆத்ம சுத்தத்தில் எனக்குப் பரிபூரண நம்பிக்கையுடன். விசுவாசமுமுண்டு.
இந்த மூன்று ஐரோப்பிய மாநகரங்களில் இவர்களைத் தனித் தனியே சந்தித்த சமயம் இவர்கள் நேரில் சொன்ன சகல கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் திறந்த மனசுடன் கேட்டறிந்து கொண்டேன்.
புலம் பெயர்ந்த நம்மவர்களை அதிலும் இளைஞர்களைப் புரிந்து கொள்வதற்கு அவர்களது பிரச்சினைகளைத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். நமது பிரச்சினைகள் போன்றனவையல்ல. அவர்களது பிரச்சினைகள், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒவ்வொரு பிரச்சினை.
தொழில் நெருக்கடிகள், வாழ்க்கைச் சிக்கல்கள், வயது முதிர் கன்னியான அக்காவின் கலியாணத்திற்கு ஊருக்குக் காசு அனுப்ப r வேண்டிய அவசர தேவை, மற்றும் கொழும்பில் லாட்ஜில் வந்து மூன்று வருட காலமாகத் தங்கியுள்ள தாய்க்குச் செலவுக்குப் பணம் அனுட்ப வேண்டிய கட்டாயத் தேவை இப்படி எத்தனை எத்தனையோ..!
இத்தனைக்கும் அந்தக் குளிர் மண்டிய பனி கொட்டும் பிரதேசத்தில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டு தொடர்பு அறுந்து போகாமல் ஒன்று கூடி ஆண்டுக்கு ஆண்டு தமிழ் மொழியின் ஆக்க வளர்ச்சி பற்றி விவாதிக்கின்றனர் என்றால் அவர்களுக்குத் தமது மொழியின் மீதுள்ள ஆழ்ந்த பற்றும் பாசமும்தானே காரணமாக இருக்க முடியும். எத்தகைய ஆழ்ந்த அபிமானம் இது!
அடுத்த 28-வது இலக்கியச் சந்திப்புப் பனி போப்த்த நடன நோர்வேயில் நடைபெற இருக்கின்றது. காலமும் திகதியும் பின்னர் அறிவிக்கப்படுமாம்.
27-வது விழா முடிவில் பாரிஸ் விழாவில் வைத்தே வந்திருந்த பேராளர்களுக்கு இந்தத் தகவலைப் பகிரங்கமாக அறிவித்து விட்டார்கள்.
சென்ற தலைமுறைக்காரர்கள் நமது நாட்டில் மன மயக்கத்தில் ஆழநதிருபபதைப் போல, இவர்களில் சிலரும் இத்தகைய மன
千ー(12 )

மயக்கத்திற்கு ஆட்பட்டிருந்தவர்களே.
அதாவது பிரபல தமிழகத்து நட்சத்திர எழுத்தாளர்களை விரும்பி அழைத்து ‘ஷோ நடத்தச் சிலர் விரும்பியிருந்தனர். கோலாகலமாக நடத்தத்திட்டமிட்டிருந்தனராம்.
பல்வேறு வாழ்க்கை அநுபவங்களுக்கு உட்பட்டுப் பதப்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப்பட்டுள்ள இளந் தலைமுறையினர் இப்படியானவர்கள் அழைக்கப்படுவதை எதிர்த்து நம்மைப் போன்றவர்களைத்தான் எதிர்காலத்தில் அழைத்துச் சிறப்பிக்க வேண்டும் என வற்புறுத்திக் கூறி அதற்கான ஆயத்தங்களையும் செய்து கொடுத்தனர்.
இந்த மெய்யான ஆர்வலர்களின் வேண்டுகோளின் நெருக்குதல் காரணமாகத்தான் நான் பாரிஸ் ஒன்று கூடலுக்கு விசேஷ அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தேன்.
என்னை அழைத்ததில் பலருக்கு பெரும் மன நிறைவு. இதைப் போலத்தான் பெர்லினில் நான் கலந்து கொண்ட 'மல்லிகை மாலை ஒரு மாலை நேரத்து இலக்கியச் சந்திப்பு பூரண நிறைவுடன் நடந்தேறி முடிந்தது.
தங்களில் ஒருவரான, எந்த விதமான பந்தாவுமற்ற ஒருவனாக, மெய்யான இலக்கிய நெஞ்சம் கொண்ட நண்பனாக என்னை இனங் கண்டு பழகினர். நேசித்தனர். அன்பு செலுத்தி வரவேற்று உபசரித்தனர். எனது ஐரோப்பிய இலக்கியப் பயணத்தில் எனக்குக் கிடைத்த பெறுபேறே அங்கு நான் சந்தித்த நண்பர்கள்தான். இலக்கிய நெஞ்சங்கள் தான் - எனச் சொல்லவேண்டும்.
லண்டனோ மிகப் பிரமாண்டமான மாநகரம்.
மல்லிகையை ஆரம்ப காலத்தில் வாசித்துப் பழக்கப்பட்டவர்கள். மல்லிகையின் வளர்ச்சியில் அக்கறை காட்டிப் போஷித்து வந்தவர்கள், என்னுடைய கிட்டிய நண்பர்கள். உறவினர்கள் என ஒரு பெருங் கூட்டத்தினரே லண்டனில் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் எனதும் மல்லிகையினதும் பெயரை முன்னரே கேட்டுத் தெரிந்து வைத்திருப்பதுடன் என்னை இதுவரை நேரில் பார்த்தறியாதவர்கள் கூட, லண்டனில் தான் பெரும்பாலோர் இருந்தனர்.
ஐரோப்பாவில் நானிருந்த ஒரு மாத காலத்தில் இருபது நாட்களுக்கு மேல் நான் லண்டனில் தான் தங்கியிருந்தேன்.
அங்கு ஐந்து கூட்டங்களுக்கு மேல் இலக்கியச் சந்திப்புக்கள்
மில்லிகைப் பந்தல் 13 )

Page 10
இடம் பெற்றிருந்தன. தனிப்பட்ட சந்திப்புகள் இடையிடையே நிகழ்ந்தன. வரவேற்பு உபசாரங்கள் நடைபெற்றன.
என்னுடைய நீண்ட காலத் தோழர்களான, மிக நெருக்கழான நண்பர்களான ரீ கங்காதரன். ரெங்கன் தேவராஜன், சிவலிங்கம் போன்ற முக்கியமான மூவர்தான் என்னை லண்டனுக்கு அழைக்க முன்னின்று உழைத்தவர்கள். விசேட கவனம் செலுத்தியவர்கள்.
பாரிஸ் விழா முடிந்ததும் அப்படியே நாடு திரும்பத்தான் முதலில் முடிவெடுத்திருந்தேன். அதற்கமைய பிரெஞ் விசா கூட எனக்கு எட்டே எட்டு நாட்களுக்குத்தான் தந்திருந்தனர். எனவே சந்திப்பு முடிந்ததன் பின்னர் திரும்புவதுதான் எனது முன்னைய திட்டம். இவர்கள் மூவரும் ஏதோ காரியங்கள் எல்லாம் செய்து விசா ஏற்பாடுகளைச் செய்து தந்தனர்.
இந்த மூவரின் அன்பாதரவும், ஒத்துழைப்பும் இல்லையென்றால், நான் லண்டன் பயணத்தையே எண்ணிக் கூடப் பாாத்திருக்க மாட்டேன், அந்த மண்ணில் காலடி பதிந்திருக்காது.
பல பழைய இலக்கிய நண்பர்களை அங்கு சந்தித்துக் கலந்துரையாடியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்றாகும். எவ்வளவு பெரிய உறவு!
பத்மநாப ஐயர், மு. புஸ்பராஜன், ஓவியர் கிருஷ்ணராஜா, நேமிநாதன், இளவாலை அமுது போன்றோரை அங்கு சந்தித்தது மறக்கமுடியாதது. நாடகக் கலைஞர் தம்பதியினரான பாலேந்திரா, ஆனந்தராணி போன்றோர் தமது இல்லத்துக்கு என்னை அழைத்துக் கெளரவித்தனர். அங்கு நடந்த சந்திப்பில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அடுத்து, பொங்கல் தினத்தில் புதிதாக ஒரு மன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதில் நான் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டேன்.
நான் லண்டனுக்கு வந்திருப்பதை நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்த பழைய நண்பர் பாமா இராஜகோபால் தனது பத்திரிகையான புதினம் என்ற இதழில் "லண்டனில் டொமினிக் ஜீவா என இரண்டு கலம் தலைப்பில் எனது வருகையைப் பாராட்டியிருந்தார்.
‘தீபம்’ என்ற தொலைக்காட்சி எனது ஒரு மணிநேரப் பேட்டியை இரண்டு நாட்களாகப் பிரித்து ஒளிபரப்புச் செய்தது. என்னை அதற்காகப் பேட்டி கண்டவர் இந்த மண்ணைச் சேர்ந்த வளர்ந்து வரும் கலைஞர்
மல்லிகைப் பந்தல் 14 - - سی

இளைய அப்துல்லாஹற். இந்தப் பேட்டி அகில ஐரோப்பாவையும் சென்றடையக் கூடியது. இதைப் பார்த்த பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.
நட்ட நடுச் சாமத்தில் கூட, தொலைபேசி என்னுடன் உரையாடக் காத்திருந்தது.
ஜனவரி 20ந் திகதி அதாவது நான் நாடு திரும்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் எனக்கொரு பாராட்டு விழா நடைபெற்றது.
அது எனக்கொரு பிரியாவிடை விழாவாகவும் அமைந்தது.
"ஈழத்தின் மூத்த தமிழ் எழுத்தாளர் மல்லிகை டொமினிக் ஜீவாவின் , மிக நீண்ட தமிழ்ப் பணியையும் 36 ஆண்டுகளாகத் தொடர்ந்து மல்லிகை இதழை வெளியிட்டு வருவதையும் பாராட்டி பிரித்தானியா வாழ் தமிழ் பேசும் மக்களின் சார்பாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மண்ணில் வாழ்ந்து வருகின்ற ஜீவாவின் இலக்கிய நண்பர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்” என அழைப்பிதழ் கூறியது. பாராட்டுவிழா மலரொன்றும் வெளியிட்டிருந்தனர்.
பல நிறுவனங்களைச் சேர்ந்தோர் பாராட்டிப் பேசினர். முடிவில் "ஜீவாவின் இலக்கியம்” பற்றி திரு. மு. நித்தியானந்தனும், 'மல்லிகையும் சிற்றிலக்கிய ஏடுகளும்' என்பது பற்றி திரு. மு. புஸ்பராஜனும், "ஜீவாவின் அரசியல்” பற்றி திரு. வி. சிவலிங்கமும் சிறப்புரையாற்றினர்.
முடிவில் எனது சிறப்புரை இடம் பெற்றது. அங்கு உணர்வு பூர்வமாக உரையாற்றினேன். சபையோர்களிடமிருந்தும் லணி டண் மாநகரத்திடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டேன்.
மல்லிகைப் பந்தல் (15 )

Page 11
ஜெர்மனியிலிருந்து வந்த பேராளர்கள்.
Ilமிகை பதம்
 

ஓர் இலக்கியவாதியின்
பாரீஸ் பயணம்
ப்போவோ ஒருநாள் பல மாதங்களுக்கு முன்னர் பாரிஸிலிருந்து ஒரு கடிதம் என் கைக்குக் கிடைத்தது. புலம் பெயர்ந்த தமிழர்களது 27வது இலக்கியச் சந்திப்பு ஆண்டுக் கடைசியில் பாரிஸ் மா நகரத்தில் நடைபெற இருப்பதாகவும் என்னால் அவ்விழாவில் கலந்து கொள்ள இயலுமா? எனவும் கேட்டிருந்தார் அவர்.
நான் பதில் எழுதினேன். தகுந்த ஏற்பாடுகளைச் செய்து ஒப்பேற்றித் தந்தால் நான் பாரிஸ் வரச் சம்மதிப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
பின்னர் நானதை மறந்தே போனேன்.
திடீரெனத் தொலைபேசியில் புளயராஜா என்பவள் என்னுடன் தொடர்பு கொனன் விரிவாக உரையாடினார். தான் பாரிளிலிருந்து கதைப்பதாகவும் பிரயானத்திற்குரிய ஆயத்தங்களைத் துரிதகதியில் செய்து முடிக்க வோர்டுமெனவும் அவர் தொலைபேசி ஊடாக என்னைக் கேட்டுக்
li JITGħI iiiILIT II,
மய்விசைப் பந்தம் { 17

Page 12
சாத்தியப்பாடான ஆவணங்கள் அனைத்தும் இரண்டொரு தினங்களில் எனது கைக்குக் கிடைத்ததும் மல்லிகைக் காரியாலயத்திற்கு முன்பாக வசிக்கும் உதயகுமார் என்பவரை அணுகி அவரது ஒத்துழைப்பைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். காரணம் அவள் வியாபார நிமித்தம் மேலைநாடுகளுக்கு அடிக்கடி சென்று வருபவர். நல்லவர். உதவுவதில் வல்லவர்.
அவரது ஒத்தாசையுடன் பிரெஞ்சு தூதரகத்துக்குச் சென்று வந்தேன். சரிவர ஆவணங்களைப் பூர்த்தி செய்து கொடுத்த பின்னரும் அவர்கள் என்னை அடிக்கடி அலைக்கழித்தனர்! வேண்டாம் இந்த இலக்கியப் பிரயாணம்' என முடிவெடுத்த பின்னர் கடைசி முயற்சியாக ஒருநாள் மத்தியானம் அந்த விசாக் காரியாலயத்திற்குச் சென்றேன்.
“எயிற்டேய்ஸ். ஒன்லி எயிற்டேய்ஸ்" என்ற அறிவிப்புடன் விசா அதிகாரி என்னுடைய கடவுச் சீட்டை ஜன்னல் மூலம் என்னிடம் நீட்டினார். முகமே தெரியாத கறுப்புக் கண்ணாடி மறைப்புக்குள் இருந்து கொண்டு அவர் தந்த அந்தப் கடவுச் சீட்டை விரித்துப் பார்த்தேன். எட்டு நாட்கள் எண்ணி எட்டே நாள். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போய்த் திரும்புவதற்குக் கூட, இந்த எட்டு நாட்கள் இப்போது போதாது. அப்படியிருக்க ஐரோப்பிய நாடொன்றுக்குப் போய்த் திரும்ப அத்தனை சுகம்! அத்தனை சொகுசு! அத்தனை செளகரியம் சுவை சுவையான உணவுவகைகள். நான் பாரிஸ் போனதும் இதே ரீலங்கன் விமானத்தில்தான். திரும்பி லண்டனிலிருந்து கொழும்பு வந்ததும் இதே விமானத்தில்தான்.
உபசரிப்பு, அனுசரணை, கவனிப்பு அற்புதம்! எத்தனை தரம் புகழ்ந்தாலும் அது தகும்.
பேனா பிடிப்பவன் என்ற முறையில் மனந்திறந்து பாராட்டுகிறேன். விமானப் பணிப்பெண்கள் பிரயாணிகளிடம் காட்டும் நளினமான இங்கிதம், பணிவு, பரிவு என் மனதைத் தொட்டது.
மயில்தான் அதன் சின்னம். அவர்களும் விமானத்திற்குள் மயில்களைப் போலவே நடமாடினார்கள். அனுசரித்து நடந்து கொண்டார்கள். எந்நேரமும் சிரித்தபடி இருந்தார்கள்.
இதைப் படிப்பவர்கள் யாருக்காவது இலக்கிய ரசனை உண்டென்றால் சந்தர்ப்பம் கிடைக்கும் வேளையில் இதை அவர்களுக்கு மொழி பெயர்த்துச் சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன். இ ஒரு தமிழ் எழுத்தாளனது உள் மனவேட்கை.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு விமானத்தில் சென்று திரும்பினேன்.
மல்லிகைப் பந்தல் rw 18

இந்த ஐரோப்பியப் பிரயாணத்தில் கூடப் பாரிஸிலிருந்து பெர்லினுக்கும் பின்னர் பிராங்பெட்டிலிந்து பாரிஸ"க்கும் விமானத்தில் தான் பிரயாணம் செய்தேன்.
சும்மா சொல்லக் கூடாது. அநுபவ ரீதியாக உணர்ந்து சொல்லுகின்றேன். ரீலங்கன் விமானப் பயணம் ஓர் அற்புத அநுபவம். பத்து மணித்தியாலங்களும் இன்னும் சில மணித்துளிகளும் தான் பிரயாண நேரம் பிரயாணம் தந்த சொகுசில் இன்னும் சில மணிநேரம் இப்படியே பறந்து கொண்டிருக்கக் கூடாதா? என மனசு ஏங்கியது. கொண்டு சென்ற சஞ்சிகைகளைக் கண்களால் மேய்ந்து விட்டு நிமிர்ந்தேன்.
பக்கத்தே நம்மவர். சிரிப்புடன் என்னைக் குசலம் விசாரித்தார். பாரிஸ்காரர். புலம் பெயர்ந்து வந்து பல ஆண்டுகளாகிவிட்டன. என்னைத் தெரியாது. பெயர் கேள்விப்பட்டிருந்தார். தாயாரை அழைத்துப் போகிறார். பிறந்த ஊர் சரவணை, சின்னமடு மாதா கோயிலடி. என் சுய வரலாறு படித்திருப்பவர் போலும். எனது தாயாரின் பிறந்த ஊரும் சரவணை. அந்த அபிமானம். என்ன அதிசயம் பாருங்கள். மேலே போகப் போக கிழே இறங்கிக் குதூகலிக்கிறான்.
பாரிஸில் இருந்த போது பேப்பரில் நான் பாரிஸ் வரும் தகவல் தனக்குத் தெரிந்திருந்ததாகக் கூறிய அவர் ‘'இப்படி வான் பரப்பில் உங்களைச் சந்திப்பேன் என நான் கனவில் கூட நினைக்கவில்லை.” எனச் சொல்லி என்னைக் கட்டித்தழுவினார் அந்த இளைஞர்.
சாடையாகத் தேகம் குளிர்ந்து நடுங்கத் தொடங்கியது. புதுவிதமான அநுபவம் எனக்கு அது. கைப்பையில் வைத்திருந்த கம்பளிச் சட்டையை எடுத்து அணிந்து கொண்டேன். எப்படி இந்த ஒரு வாரமும் ஒரு நாளும் போதும்! எனக்கு எரிச்சலாக இருந்தது. நான் அலைந்து திரிந்தது இந்த எட்டு நாளை விட அதிகம்.
ஒரு வேளை இன்னும் ஒரு வாரம் கூடுதலாகத் தந்து விட்டால் அவர்களது நாட்டின் தலைப் பட்டினத்தை அப்படியே கடத்திக் கொண்டு கொழும்பிற்குத் திரும்பி விடுவேனோ? எனப் பயந்துவிட்டார்களோ என்னவோ!
அவர்கள் இப்படி நல்லவர்களைக் கூடச் சந்தேகப்பட்டுப் பார்ப்பதில் ஒருவகை நியாயம் கூட இருக்கின்றது. நம்மவர்களில் ஒரு சிலர் ஐரோப்பிய நாடுகளில் செய்து வரும் சுத்து மாத்து வேலைகளைப் பார்க்கும் போது அவர்கள் இப்படிக் கண்டிப்புடன் இயங்கி வருவது நியாயமாகக் கூட, எனது இலக்கிய நெஞ்சத்திற்குச் சற்றுப் புரியத்தான் செய்தது.
மல்லிகைப் பந்தம் 一 19 )

Page 13
பிரித்தானிய விசா அநுபவம் இதற்கு நேர் மாறானது. நண்பர் யூரீதரசிங் வாசல்வரை கூட்டிப் போனார். தொடர்ந்து உள்ளே யாருமே அனுமதிக்கப் படவில்லை.
முன் அநுபவம் நெஞ்சில் ‘பக் பக்கென்று தாளம் போட்டது. ஆறுதலாகச் சுற்று முற்றும் வேடிக்கை பார்த்தவண்ணம் நேரத்தைப் போக்கினேன். பயம் கொஞ்சம் தெளிந்தது.
என்னுடைய ஆவணங்களைப் பெண் அதிகாரி ஒருவர் பார்த்தார். லண்டனிலிருந்து எனக்கு ஸ்பொன்ஸர் கடிதம் தந்தவர் ரெங்கன் தேவராஜ் என்பவர். ஒரு சட்டத்தரணி. அங்கு வெகு பிரசித்தமானவர். நான் அவரைப் பார்த்து 18 வருஷங்கள்! பாரம்பரிய இடது சாரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். தனது 12வது வயதில் மாணவப் பருவத்தில் மல்லிகைக் காரியாலயம் இருந்த கஸ்தூரியார் வீதிக் கடைக்கு வந்தார். அன்று தொடங்கிய நட்புத்தான். இவரது அக்கா ராஜம் சிறந்த எழுத்தாளராக மலர்ந்திருக்க வேண்டியவர். இலக்கிய ஆளுமை உள்ளவர். இன்று அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறார். இரண்டு குழந்தைகள். குடும்பமே ஓர் இலக்கியக் குடும்பம். தகப்பனார் அந்தக் காலத்துத் திடமான இடதுசாரி.
நண்பர் ரெங்கன் தேவராஜனுடைய ஆவணங்களை விசா ஆபீஸர் மேலும் கீழும் பார்த்து விட்டு ‘நீங்கள் உண்மையாகவே எழுத்தாளர் தானா?” எனக் கேட்டுவிட்டு ஊடுருவிப் பார்த்தார்.
கைவசம் வைத்திருந்த எனது படைப்பு நூல்களை மேசை மீது பரப்பி வைத்தேன்.
“மன்னிக்கவும் உங்கள் பாஷை எனக்குப் புரியாது!" எனத் தனது தாய்மொழியில் புன்னகை பூக்கச் சொன்னார்.
அதே புன்முறுவல் மாறாமல் லண்டனில் எதை எதையெல்லாம் பார்க்க விரும்புகிறீர்கள்?’ எனத் தொடர்ந்து கேட்டார்.
“நீண்ட நெடுங்காலக் கனவு கார்ல் மார்க்ஸினுடைய சமாதியைப் பார்க்க வேண்டும் என்பது. அத்துடன் ஷேக்ஸ்பியர் வீட்டையும் பார்க்க வேண்டும்!” உடைந்த ஆங்கிலத்தில் இத்தனையையும் செல்லி முடித்தேன்.
"குட் குட் வெரிகுட் ஷேக்ஸ்பியருடைய வீட்டுக்கு பக்கமாகத்தான் என்னுடைய பாட்டியினுடைய ஊர். அவரையும் ஒரு தடவை பார்த்து வாருங்கள். அவருக்கு இப்போது 92 வயது. சந்தோசப்படுவார்.”
மல்மிகம் பந்தம்- 20 - ۔۔۔۔۔۔۔ )

இத்தனைக்கும் இருபது நிமிஷங்கள் சென்றிருக்கும்.
கறுப்புக் கண்ணாடி அடைத்து முகம் தெரியாத விசாரிப்புகளின்றிப் பரஸ்பரம் முகம் பார்த்துப் பேசிக்கொண்டோம்.
“மூன்று மணிக்கு வந்து பாஸ்போட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.”
இரண்டரை மணிக்கே ஆட்டோவில் சென்றுவிட்டேன். மூன்று மணிபோல் கடவுச் சீட்டுக் கிடைத்தது. விரித்துப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். ஆறுமாதங்களுக்கான மல்டி விஸா’ இருந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது.
ஒருவாறாக டிசம்பர் 22ந் திகதி பாரிஸ் புறப்பட ஆயத்தமானேன். நண்பர்கள் வந்து வாழ்த்திச் சென்றனர். பலர் பாராட்டினர். எனவே கூட்டிக் கொண்டு போன அவர் வாசல்வாரை வந்து நின்றுவிட்டார். டிசம்பர் மாதக் குளிருக்குள் ஏன் பிராயணத்தைத் தொடங்குகிறீர்கள்? ஏன் அவங்களுக்கு இந்த மாதம்தான் கிடைத்ததா?’ என மகன் திலீபன் என்னைக் கேட்டான். பிரயாணத்திற்கு இரண்டொரு நாள் இருக்கும்போது.
‘டிசம்பர் மாதம் அவர்களுக்குப் பொது விடுமுறை அதிகம். ஐரோப்பாவிலிருந்து பலர் வந்து கலந்து கொள்ளும் மகாநாடு இது. எனவே இந்த மாதம் அவர்களுக்கு ரொம்பவும் வசதியாக இருக்கலாம்” என நான் சமாதானம் சொன்னேன்.
உளளுர எனக்குக் கூட நடுக்கம்தான். பயந்தேன்.
‘கவனம். ஐரோப்பியக் குளிர் சும்மா லேசுபட்டதில்லை. இந்த வயசிலை கவனம் குளிருக்கை வெளியே அடிக்கடி போக வேண்டாம். யாரையாவது சந்திக்க விரும்பினால் அவர்கள் உங்களை வந்து சந்திக் கட்டும். கவனமாகப் போய் வாருங்கள்!” என அவுஸ்திரேலியாவிலிருந்து முருகபூபதி எச்சரித்தார். தொலைபேசி ஊடாக.
“கவனம்.கவனம்” ஐரோப்பியக் குளிரைப் பற்றித்தான் குறிப்பாக டிசம்பர் மாதக் குளிரைப் பற்றித்தான் பலரும் எச்சரித்தனர்.
எனக்குக் கொழும்பிலேயே குளிரத் தொடங்கிவிட்டது. எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற மனக் கிலேசம் வேறு.
எனக்கு ஆறுதல் சொன்னவர்கள் இருவர். ஒருவர் கம்பவாரிதி ஜெயராஜ் மற்றவர் யூரீதரசிங்.
“பயப்படாதையுங்கோ. 87ல் மாஸ்கோ போனனிங்கள்தானே? அதை விடக் கொஞ்சம் குளிரும். பரவாயில்லை. மனசிருந்தால் எல்லாத்தையும்
மல்லிகைப் பந்தல்- - 21

Page 14
சமாளிச்சுப் போடலாம். பயப்படும் படியாக ஒன்றும் நடவாது?” என்றனர்.
ஜெயராஜ் தொடர்ந்து சொன்னார். “உங்கட உருவத்தை மாத்திரம் அங்கை மாத்திப் போடாதையுங்கோ. உங்கட எழுத்தாளன் உருவம் அங்கையும் அப்பிடியே இருக்கப் பாருங்கோ. அதை மட்டும் விட்டுவிடவேண்டாம்.”
22ந் திகதி வெள்ளிக்கிழமை 6.05க்கு பாரிஸரக்கு விமானம் புறப்படும் நேரம். அதிகாலையே நானும் மேமன் கவியும் விமான நிலையம் நோக்கி மகனுடைய வாகனத்தில் புறப்பட்டோம். இங்கேயே குளிரத் தொடங்கிவிட்டது.
வாகனத்தில் வழியனுப்ப வாசல்வரை வந்த மகன் திலீபனுடைய துணைவியார் வாசுகி என்னுடைய பிரயாண உடையான வேட்டி, நஷனல் சட்டையைப் பார்த்துவிட்டு ஏதோ அதிசயத்தைப் பார்ப்பது போல வியந்து போனார். மகன்தான் என்னுடைய மாஸ்கோ பயணத்தைத் தெரிவித்தவராச்சே. எனவே அதிசயப்படவில்லை.
இப்படியாகத்தான் தன்னந்தனியாக ஓர் எழுத்தாளன் தனது ஐரோப்பிய இலக்கியப் பிரயாணத்தைத் தொடர ஆரம்பித்தான்.
‘என்னுடைய உடையை மேலும் கீழும் பார்த்து அதிசயித்த விமான நிலைய அதிகாரி. எனது பாரிஸ் விமானச் சீட்டைப் பார்த்துவிட்டு” ஆர் யூ கொயிங் ரூ பாரிஸ்?” என நக்கலாகக் கேட்டுவிட்டுச் சொண்டுக்குள் சிரித்துக் கொண்டார்.
வேட்டியும் சட்டையுமாக - இந்தக் கோலத்தில் பாரிஸ் போகிறாரே இந்த மனிதர் எனக் கருதி அவர் சிரித்து வைத்திருக்க வேண்டும்.
1956ம் ஆண்டு இந்த வேட்டியும் நெஷனலும் தான் பண்டாரநாயக்க மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அரசோச்சியதை அவர் மறந்திருக்கலாம்.
நானதை மறக்கவில்லை. “யெஸ். ஐ ஆம் ஏ டமில்ரைட்டர். ஐ ஆம் கொயிங் ரு பாரிஸ்” என அவருக்குப் பதில் சொன்னேன்.
எனது குரலில் இறுமாப்புக் கலந்திருந்தது. விமானப் பிரயாணம் செய்பவர்கள் நமது ரீலங்கன் விமானத்தில் ஒரு தடவை பிரயாணம் செய்து பார்க்க வேண்டும். அது ஒரு அதிசயிக்கத்தக்க சுக அநுபவமாகும்!
மல்லிகைப் பந்தல் 22 { سی

மிரட்டப் பட்டிருந்த நான், மல்லிகையின் நீண்ட நாள் அபிமானி திருமதி. ஜெயந்தி வினோதனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டேன்.
L லரும் ஐரோப்பிய மார்கழிக் குளிர் பற்றித் தந்த தகவல்களால்
'ஒன்றுக்குமே பயப்பட வேண்டாம். குளிருக்குப் பயப்படாமலிருக்கக் காது, நெஞ்சு, கால் பாதம் இம்மூன்றையும் எப்பவுமே வெதுவெதுப்பாக வைத்திருக்கப் பாருங்கள். குளிர் உங்களை ஒன்றுமே செய்துவிட மாட்டாது. அங்கு வாழுகின்றவர்கள் எங்களைப் போல மனிதர்கள் தானே?’ எனச் சொல்லி உற்சாக மூட்டினார் ஜெயந்தி.
காலைப் பார்த்தேன். கனத்த சப்பாத்துக்குள் கால் மூடுண்டு சரணாகதியடைதிருந்தது. நெஞ்சைப் புதுக் கம்பளிச் சட்டை கவ்விப் பிடித்திருந்தது. அப்புறம் காது - நண்பர் கம்பவாரிதி தனக்கு ஒரு நண்பர் லண்டனில் அன்பளிப்பாகத் தந்துதவிய குளிர் காக்கும் தொப்பியை பிரயாணத்திற்கு முதல் நாளே தனது நண்பரொருவரிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அதையும் தலை கணக்க அணிந்து கொண்டேன். தெளகரியமாக இருந்தது.
விமானத்திற்குள் சற்றுப் பரபரப்பு நிலவியது. விமானம் தரையிறங்கும் நேரம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறிகள், மெல்ல மெல்லத் தோன்றத் தொடங்கின.
அப்பாடா!
மல்லிகைப் பந்தல் 23

Page 15
அறிவாலயம் புத்தக நிலையத்தின் உரிமையானர் சிவதாஸ், புளப்பராசா ஆகியோருடன்
மlவிாக பதம்
 

விமானம் பாரிஸ் மாநகரின் விமான ஓடு தளத்தில் தனது டயர்க் கால்களைப் பதித்து ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒடிச் சென்று நின்றது. பிரயாணிகள் ஒவ்வொருவராக இறங்கி வர முற்பட்டனர். நான் அவசரப்படவில்லை. வெகு சாவதானமாகக் கடைசியில் இறங்கினேன். பிரயாணிகளைப் புன் முறுவலுடன் வழியனுப்பி வைத்துக் கொண்டிருந்த விமானப் பணிப்பெண்களுக்கு "வணக்கம்' எனச் சொல்லி அவர்களிடமிருந்து விடை பெற்று பாரிஸ் மாநகர மண்ணில் எனது பாதங்களைத் தடம் பதித்தேன்.
அந்த மாபெரும் தேசத்தின் மண்ணில் எனது கால் பட்டதும் குனிந்து அந்த மண்ணைத் தொட்டுக் கும்பிட்டேன். அந்தப் பூமியை வனங்கினேன்.
எனக்கு மிகப் பெரிய திருப்தி
"சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்ற மூன்று தாரக மந்திரங்களை உலகத்திற்கு நல்கிய பூமி அது. "பிரெஞ்சுப் புரட்சி என்ற உலக மகா புரட்சியை நடத்திக் காட்டி உலகளாவிய உழைக்கும் மக்களுக்கு விடிவைக் காட்டிய மகா தியாகம் செய்த மக்கள் வாழ்ந்த மனன் அது. அதையும் தவிர, என் அறிவை, இலக்கியப் புலமைைையச் செழுமைப்படுத்திய மகத்தான படைப்பாளிகளைப் பெற்றெடுத்த பூமியே பிரான்ஸ். அவர்களது காவியச் சிருஷ்டிகளை மொழி பெயர்ப்பில் படித்துத் தெரிந்து கொண்ட எனது இளமைக் கால நினைவுகள் பசுமையாக என் நெஞ்சில் நிழலாடின.
பாரிஸ் விமான நிலையம் பிரமிப்பு ஊட்டுவதாகப் பிரமான்டமாகக் காட்சி தந்தது. உலகின் பிரமாண்டமான விமான நிலையங்களில் இதுவும் ஒன்று என என்னை விமானத்திற்குள் சந்தித்த இலங்கை நண்பர் என்னிடம் சொன்னார். பத்து நிமிடங்களுக்கு ஒரு தடவை ஒரு விமானம் இங்கு தரை இறங்குவதாகவும் அதே போல இங்கிருந்து உலகத்தின் சகல திசைகளுக்கும் பறப்பதாகவும் சொன்னார். அது கிறிஸ்மஸ் விடுமுறைக் காலமாதலால் விமான நிலையத்தில் ஒரே சனத்திரள். விசாரணைகள் முடிவடைந்து பிரயானப் பொதியைப் பெற்றுக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தேன். குளிர் உறைக்கத் தொடங்கியது.
வாசலில் நண்பர்கள் என்னை வரவேற்கக் காவல் நின்றனர். ஒருவர் என்னை நெருங்கி "நான்தான் புஸ்பராசன்"எனத் தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொண்டார்.
அடிக்கடி தொலைபேசியில் என்னுடன் உரையாடிய இலக்கிய
Iமிகப் பந்தம் 25 )

Page 16
ஆர்வலர் இவர். எப்படியும் இந்தப் பாரிஸ் 27வது இலக்கியச் சந்திப்பிற்கு என்னை அழைத்துவிட வேண்டும் என அதிக ஆர்வம் காட்டி மற்றவர்களையும் சம்மதிக்க வைத்தவர். பல ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத் தெருக்களில் நான் மல்லிகை விற்றுக் கொண்டிருந்ததை சில தடவை நேரில் பார்த்திருந்ததாகவும் ஒரு தடவை கன்னாதிட்டியில் என்னிடம் ஐம்பது சதம் தந்து மல்லிகை இதழைப் பெற்றுக் கொண்டதாகவும் வாயூற, மனநெகிழ்ச்சியுடன் தொலைபேசியில் என்னிடம் பேசிய புஸ்பராசனை இப்பொழுதுதான் நேருக்கு நேராகப் பார்க்கிறேன்.
அவருடன் மற்றுமிருவர் என்னை அழைத்துப் போகவந்திருந்தனர். இருவரையும் யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே சந்தித்திருக்கின்றேன். பரராஜசிங்கம் என்பவர் தொழிற் சங்கத் துறையில் தன்னை ஈடுபடுத்தி உழைத்து வந்தவர். இன்று ஜெர்மனியில் வாழ்ந்து வருபவர். மற்றவர் சந்தூஸ் என்பவர். இவரது மகன், தமிழிலிருந்து ஜெர்மன் மொழிக்கு மொழி பெயர்க்கும் வேலையைச் செய்து வருபவர்.
என்னைப் பிரஞ்சு மண்ணில் நேரில் கண்டதும் தலை கொள்ளாத புளுகம் இவர்கள் மூவருக்கும் என்னைக் கட்டி அணைத்துக்கொண்டனர்.
விமான நிலையத்திலிருந்து காரில் பாரிஸின் ஒரு பகுதியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றோம்.
முதலில் நாங்கள் வந்தடைந்தது லா செப்பல் என்ற இடத்திற்குத்தான். இதைச் சின்ன யாழ்ப்பாணத்தின் கடைத்தெரு எனச் சொன்னார்கள். தெருச் சந்திகளில் நம்ம பையன்கள் தான். கூட்டம் கூட்டமாக நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். கடைப் பெயர்கள் எல்லாம் தமிழில் எழுதப்பட்டிருந்தன. இறைச்சிக் கடை, சலூன்கள், நகைக் கடைகள், துணிக் கடைகள், பல்வேறு உணவுச் சாமான்கள் விற்கும் கடைகள் எல்லாம் யாழ்ப்பாணத் தமிழர்களினால் நடத்தப்பட்டு வருகின்றன. காரிலிருந்து இறங்கி அந்த வீதியில் நடந்து சென்று மகிழ்ந்தேன். என் இதயம் பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தது.
யாழ்ப்பாணத் தெருக்களில் அது கஸ்தூரியார் வீதியாக இருந்தால் என்ன - ஆஸ்பத்திரி வீதியாக இருந்தால் என்ன - காங்கேசந்துறை றோட்டாக இருந்தால் என்ன, மானிப்பாய் வீதியாக இருந்தால் என்ன - பொடி நடையாக மத்தியான உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் 30 சதத்திற்கு மல்லிகையை விற்றுத் திரிந்து இலக்கியப் பணி செய்த அந்த மல்லிகை ஆசிரியர் ஜிவா, இன்று உலக கலை இலக்கியத்தின் உச்சப் பூமியின் தலை நகரத்துத் தெருக்களில் காலடிபட நடந்து சென்று கொண்டிருக்கிறான் என்பதை யோசிக்கும் வேளையில் என் உணர்வுகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
மம்மிாகப் பந்தம் 26 )

நான் பேராசிரியரல்ல, பெருத்த கல்விமானுமல்ல. என்னை அழைத்தவர்கள் கூட மெத்தப் படித்த மகா பண்டிதர்களல்ல, வெகு சாதாரணர்கள். ஹோட்டலில் கோப்பை கழுவுபவர்கள். மேசை துடைப்பவர்கள். நமது ஊரில் ‘கூலி என அழைக்கப்படும் வேலைகளை ஜீவனோபாயத் தொழிலாகச் செய்பவர்கள். ஆனால் குறையா ஆர்வமும் முயற்சியும் கொண்டவர்கள். இலக்கியப் பற்றும் அதன் மீது தேவ விசுவாசமும் கொண்டவர்கள். இந்த இளைஞர்கள் தான் பின்னணியில் நின்று என்னை இந்த விழாவுக்கு அழைக்க முன்முயற்சி எடுத்தவர்கள்.
நான் முதன் முதலில் போன இடம் பாரிஸிலுள்ள பிரதானமான தமிழ்ப் புத்தகக் கடை விளம்பரப் பலகையில் ‘அறிவாலயம் புத்தகக் கடை” எனத் தமிழில் எழுதப்பட்டிருந்தது. அந்தப் புத்தக நிலையமெங்கும் தமிழ் நூல்கள்.அதிலும் ஈழத்து எழுத்தாளர்களது புத்தகங்கள், தனி வரிசையில் அடுக்கப்பட்டிருந்தன. நமது எழுத்தாளர் அத்தனை பேர்களுடைய புத்தகங்களும் அங்கிருந்தன.
பிரமிப்புடன் ஒவ்வொரு புத்தகமாக எடுத்து விரித்துப் பார்த்தேன்.
சில ஈழத்து எழுத்தாளர்களது புத்தகங்கள். கொழும்பில் எமது பார்வைக்குக் கிட்டாதவை. கனடா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து சமீபத்தில் வெளியிடப் பெற்றவை. அட்டை அச்சமைப்பு நேர்த்தியாக வடிவமைக்கப்பெற்ற புத்தகங்கள். அந்தப் புத்தகக் கடை அதிபரை எனக்கு அறிமுகப்படுத்தினர்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பட்டதாரி இளைஞர். சிவதாஸ் என்பது அவரது பெயர். குடும்பத்துடன் பாரிஸில் நீண்ட காலம் வசிப்பதாகச் சொன்னார். அந்தக் கட்டடத்தையே சொந்தமாக விலைக்கு வாங்கிப் புத்தகக் கடை, அதுவும் தமிழ்ப் புத்தகக் கடை நடத்துவதாகச் சொன்ன போது எனக்குப் பாரதியின் தீர்க்க தரிசனம் நினைவுக்கு வந்தது.
‘நம்ம நாட்டு எழுத்தாளருடைய புத்தகங்களை நிறையப் பேர் கேட்கிறார்கள். எனக்கு இங்கு மட்டுமிருந்தல்ல, ஐரோப்பா, கனடாவிலிருந்தெல்லாம் ஒடர்கள் வருகின்றன. ஆனால் சுடச் சுட எங்கடை ஆட்களுடைய புத்தகங்களைக் கொடுக்கத்தான் எனக்கு நேரகாலத்தோட புத்தகங்கள் கிடைப்பதில்லை!” எனக் குறைபட்டுக் கொண்டார் சிவதாஸ்.
வெறும் இலங்கை ரூபாயில் விற்பனை செய்யப் பட்டு வந்த நமது ஈழத்து எழுத்தாளர்களது படைப்புகள் இன்று டொலரில் விற்கப்படுகின்றன. மார்க்கில், பவுண்டில், ப்ராங்கில் விற்கப்படுகின்றன. எத்தனை பெரிய
மல்லிகைப் பந்தம் { 27 )

Page 17
மாற்றம் இது நம்பமுடியுமா இதை?
எங்களது மூத்த தலைமுறைப் படைப்பாளிகள் இதைக் கற்பனை செய்து பார்த்திருப்பார்களா, என்ன? இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இலட்சக் கணக்கான ரூபா செலவில் நாம் தமிழகத்திலிருந்து தமிழை இறக்குமதி செய்து வந்துள்ளோம். இன்னும் செய்து வருகின்றோம்.
ஆனால் இன்றுவரை ஒரு சில ரூபாவுக்குக் கூட தமிழகம் நமது நூல்கள் கொள்வனவு செய்ததாக இல்லை. வரலாறும் கிடையாது.
இங்கிருந்து தமிழில் வெளிவரும் எதுவுமே வர்த்தக ரீதியாகச் சட்டப்படி தடுக்கப்பட்டுள்ளதை நாம் நினைவில் கொண்டிருப்பது நமது எதிர்காலச் சந்ததிக்கு மிகவும் நல்லது. தமிழுக்கு மிகவும் நல்லது.
அந்தப் புத்தகக் கடைக்குள் நின்று எமது எழுத்தாளர்களது படைப்புக்களுடன், தமிழகத்து எழுத்தாளர்களது நூல்களையும் வரிசைக் கிரமமாகப் பார்த்த சமயம் எனக்கு இப்படியான சிந்தனைகள்தான் மனதில் நிழலாடியது.
‘ஈழத்து இலக்கிய வரலாற்றில் நிச்சயமாக உங்களுக்கும் ஒர் இடமுண்டு !” எனச் சொல்லி அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.
விடை பெறுவதற்கு முன்னர் ‘ஈழத்து எழுத்தாளர் எனது புத்தக நிலையத்திற்கு வந்து போனதற்கு ஓர் அடையாளமாக நமது எழுத்தாளர்களது புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும் வரிசையைப் பின்புலமாகக் கொண்டு நாங்கள் இருவரும் புகைப்படமொன்று எடுத்துக்கொள்ள வேண்டும்!’ என சிவதாஸ் ஆசைப்பட்டார். பலகோணங்களில் பலரும் படமெடுத்துக் கொண்டோம்.
மணி, நேரம், பசி போன்றவை மாறுபட்டிருப்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன்.
உணர்வு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இன்னமும் நான் கொழும்பில்தான் வாழ்ந்துகொண்டிருந்தேன். குளிர் மாத்திரம் தான் ஐரோப்பிய நாட்டை எனக்கு ஞாபகமூட்டியது.
நாங்கள் சாப்பிட முடிவெடுத்தோம்.
மRாக Iந்த { 28

புலம் பெயர் தமிழர்கள்
க்ஸில்' என்றொரு தமிழ்ச் சஞ்சிகை பாரிஸிலிருந்து வெளி வந்து கொண்டிருக்கிறது. அச் சஞ்சிகையை ஏற்கனவே நான் படித்திருக்கிறேன். அந்தச சஞ்சிகையில் கனங் காத்திரமான விஷயங்கள் இடம் பெற்று வருவது எனக்குத் தெரியும். அதில் வெளிவரும் ஆசிரியக் கடிதங்கள் ரொம்பவும் ஆழமானவை. அதில் அடிக்கடி எழுதி வரும் ஷோபா சக்தி, கற்சுறா ஆகியோரைப் பற்றியெல்லாம் இங்கு இலக்கிய நண்பர்களுடன் உரையாடியுள்ளேன். “எக்ஸிலை வெளியிடும் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர் ஓர் உணவு விடுதி நடத்தி வருகிறார். அங்கு வித்தியாசமான சாப்பாடு சாப்பிடலாம். வாருங்கள் அங்கு போய்ச் சாப்பிடுவோம்!” என எங்களையெல்லாம் அழைத்தார் புஸ்பராசா. எல்லாரும் சாப்பாட்டு விடுதியை நோக்கிச் சென்றோம்.
என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார்கள். அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். மல்லிகையை முன்னரே கேள்விப்பட்டிருந்தார். என்னை நேரில் பார்ப்பது இதுதான் முதற் தடவை.
எல்லாரும் உணவருந்தினோம். முதல் நாளுக்கு முதல் நாள் கொழும்பில் மத்தியானச் சாப்பாடு. அடுத்த நாள் விமானத்தில் மதிய உணவு. இன்று பாரிஸில் எக்ஸில் நண்பரின் கைப் பரிமாறலின் சுவை சேர்ந்த உணவு மூன்றும் மூன்று விதமான சுவை நிரம்பிய உணவுகள். அழைத்து வந்தவர்கள் கூறிக் கொண்டது போலத் தனிச் சுவை நிரம்பிய உணவு வகைகளாகத்தான் அவை திகழ்ந்தன. அந்தப் பாரிஸ் உணவைச் சுவைத்து உண்டோம்.
நான் தங்கியிருந்த இல்லம் யாழ்ப்பாணத்தில் முன்னர் பூபாலசிங்கம்
மல்லிகைப் பந்தல் ( 29

Page 18
புத்தகசாலையில், தினசரிப் பேப்பர்களின் விற்பனைக்குப் பொறுப்பாக இருந்த ராஜன் என்பவருக்குச் சொந்தமானது. சொந்த விடு. சென்ற வருடம் லண்டனுக்குப் போய் வந்த எழுத்தாளர் செங்கை ஆழியான் இவரைப் பற்றி வியந்து பேசினது எனது ஞாபகத்துக்கு வந்தது. இவரை அவசியம் சந்திக்கும்படி நான் வெளிநாடு போவதற்கு ஆயத்தம் செய்யும் வேளையில் அவர் ஞாபகப்படுத்தியதுண்டு. நல்ல சூழ்நிலை, அவரது வீட்டிலேயே என்னைத் தங்கும் வண்ணம் ஏற்பாடு செய்து விட்டனர்.
இரவு என்னைத் தூங்க விடவில்லை. அறை நண்பர்கள். நேர மாறுபாட்டால் தூக்கம் வரவில்லை. ஒரே கதையளப்புத்தான். பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த பேராளர்கள் பலர் எனது பேச்சைத்தான் செவிமடுக்க ஆசைப்பட்டனர்.
இவர்களில் கிருஷ்ணா என்ற நண்பர் வெகு சுவாரஸ்யமானவர். பல அநுபவங்களைச் சுமந்து கொண்டு ஐரோப்பா எங்கும் சுற்றி வரும் ஒரு தனிப் பிறவி. இவர் ஒரு காலத்தில் இலக்கிய உலகில் விதந்து பேசப்பட்ட சிறுகதை எழுத்தாளர் ரீதரன் என்பவருடைய சொந்தச் சகோதரன். அன்பாலேயே உருவாக்கப்பட்டுவிட்ட ஓர் உருவம் ரீதரன் மல்லிகை எழுத்தாளன். இப்பொழுது அமெரிக்காவில் இஞ்சினியராகக் கடமை புரிகிறார். நானவரை நேரில் பார்த்து இருபது வருடங்கள் இருக்கலாம். நான் மதிக்கும் அந்த ரீதரனைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்து தந்தவர் இந்தக் கிருஷ்ணா என்ற நண்பரே.
எனக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி, ஆளை நேரில் பார்க்காது போனாலும் அன்னாரது குரலைக் கேட்டதில் அலாதியான மகிழ்ச்சி.
"உங்களது எழுத்துத்துறை எப்படி இருக்கிறது? உங்களது சிறுகதைத் தொகுதி ஏதாவது தயாராகவுள்ளதா?" எனக் கேட்டேன் அவரிடம்,
ஒரு சில வருடங்களுக்கு முன்னரே சிறுகதைத் தொகுதியொன்றைத் தயாரித்து முடித்து விட்டதாகவும் லண்டனிலுள்ள பத்மநாப ஐயர் அதை வெளியிட்டு வைக்க ஆவன செய்து வருவதாகவும் ரீதரன் சொன்னார்.
"ஈழத்து இலக்கிய உலகம் இன்னமும் உங்களை மறந்துவிடவில்லை. ஞாபகத்தில் வைத்துள்ளது. நமது நாட்டுப் பத்திரிகைகளுக்கு அவசியம் எழுதுங்கள்" என அவரிடம் கேட்டு வைத்தேன். அந்த அறையில் நான் தங்கியிருந்த காலத்தில் எனக்குச் சகல உதவிகளையும் செய்து உதவியவர் இந்தக் கிருஷ்ணா என்ற
HGSTLINT.
மன்மிகைப் பந்தள் 30 )

இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்ட
ஜெர்மானியப் பேராளர்கள்
மல்லிகைப் பந்தம் 士──古+-

Page 19
காலையில் 8.30க்கு விழாவின் முதல் அமர்வு ஆரம்பித்தது. விழாவுக்குரிய களை காலையிலேயே கட்டி விட்டது.
மண்டபம் நிறையக் கூட்டம் நிறையத் தொடங்கிவிட்டது. முன்னர் முன் பின் பார்த்திராதவர்களைத் தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
'எனக்கு மற்றவர்களின் முகங்களைப் பார்ப்பதிலேயே தனி ஆசை. ஒவ்வொருவரையும் மனக் கமராவினால் படம் பிடித்து நெஞ்சில் பதிய வைத்துக் கொண்டேன். எத்தனை எத்தனை விதமான முகங்கள்முகங்கள்! முதன் முதலில் சிறு சஞ்சிகை விமர்சனங்கள் இடம் பெற்றன. ‘அம்மா’ சந்தூஸ், ஜெர்மனியிலிருந்து வந்திருந்தவர் - இளைஞர். இவர் தனது விமர்சனத்தைச் சபை முன் வைத்தார்.
அடுத்து ’எக்ஸில் அரவிந்த் அப்பாத்துரை பிரான்ஸிலுள்ளவர். அவர் இந்தச் சஞ்சிகை பற்றித் தனது கருத்துக்களைச் சொன்னார்.
இங்கிலாந்திலிருந்து வரவிருந்த வி. சிவலிங்கம் என்பவர் ‘உயிர் நிழல்' பற்றி விமர்சிக்க இருந்தார். அவர் விழாவுக்கு வரவில்லை. பின்னர் துளிர்' சஞ்சிகை பற்றிப் பிரான்ஸைச் சேர்ந்த கு. உதயகுமார் கருத்துரையாற்றினார். இவர்களது கருத்துக்களை வெட்டியும் ஒட்டியும் பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. விவாதங்கள் ஒவ்வொன்றும் கருத்தாழம் நிரம்பியவைகளாகத் திகழ்ந்தன.
இந்தத் தமிழ் உரைகள் யாழ்ப்பாணத்திலோ அல்லது கொழும்பிலோ, தமிழகத்தின் எந்த ஊரிலுமோ நடைபெறவில்லை. ஐரோப்பிய நாடொன்றின் தலை நகரில் - பாரிஸில் நடைபெறுவதைக் கண்டு என் தேகம் புல்லரித்தது.
‘புலம் பெயர்ந்தவர்கள் என்ன செய்து கிழித்து விட்டார்கள்?,” எனக் கேட்கும் நக்கல் தொனி எனக்குத் தெரியாததல்ல. இருபத்திரண்டு தடவைகள் ஜெர்மனிய மண்ணிலும் மூன்று தடவைகள் பிரான்ஸிலும் ஒரு தடவை இங்கிலாந்திலும் ஒரு தடவை கனடாவிலும் இலக்கிய மேடையமைத்துத் தமிழில் பேச வைத்தவர்களது சாதனைக்கு நிகருண்டோ என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கட்டும்!
சும்மா வாய்ச்சவடால் அடிக்கலாம். சாதனை செய்வது கடினத்திலும் கடினம். இதைத் தொடர்ந்து ‘உலக மயமாக்கலும் மனித சுதந்திரமும் என்ற தலைப்பில் டாக்டர் என். சண்முகரத்தினம் (சமுத்திரன்) என்பவர் உரையாற்றினார். ஆழமான கல்விப் புலமையும் ஆய்வுப் பார்வையும் கொண்ட அவரது உரை முதல்நாள் விழாவுக்குச் சிறப்பாக அமைந்தது
மல்லிகைப் பந்தல் コ{32

பாராட்டத்தக்கது. ”
பிற்பகல் அமர்வு இரண்டு மணிக்கு ஆரம்பமாகியது. ‘மூன்றாம் உலக நாடுகளும் அவற்றின் மீதான ஏகாதிபத்தியத் தலையீடும் என்ற தலைப்பில் தி. உமாகாந்தன் என்பவர் உரை நிகழ்த்தினார்.
அடுத்து "டொமினிக் ஜீவாவின் பிரதிகளின் மீதான ஒரு வாசிப்பு, என்ற கலைச் செல்வனின் உரை நேரமின்மையால் இரண்டாம் நாள் கூட்டத் தொடரில் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஜெர்மனியைச் சேர்ந்த பரராஜசிங்கம் என்பவர் ‘போரும் சமாதானமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். முடிவாகத் தமிழகத்திலிருந்து வந்துள்ள எழுத்தாளர் சாரு நிவேதித்தா எதிர் இலக்கியம்' பற்றித் தனது கருத்துக்களைச் சபை முன் வைத்தார். இவரது கருத்துக்கள் பற்றிப் பல கருத்துக்கள் காரசாரமாக விவாதிக்கப்பட்டன.
முதல் நாள் இலக்கியச் சந்திப்பு முடிந்ததன் பின்னர் நடுச்சாமம் வரை மண்டபத்தில் குழுமியிருந்த எழுத்தாளர்களும், சுவைஞர்களும் பரஸ்பரம் தங்களைத் தாங்களே அறிமுகம் செய்து கொள்ளுவதிலும், சுகநலம் விசாரிப்பதிலும், கருத்துப் பரிமாறல் செய்து கொள்வதிலும் அதிக நேரத்தைச் செலவு செய்தனர். முதல் நாள் பரபரப்பு அடுத்த நாள் இலக்கியச் சந்திப்பை இன்னும் விறுவிறுப்பாக அமைக்க உதவி செய்தது.
இந்த இரண்டு நாள் இலக்கியச் சந்திப்பை ஒழுங்கு செய்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கப் பொறுப்பேற்று ஏற்பாட்டாளர்களாக இடையறாது உழைத்து ஒப்பேற்றி முடித்தவர்கள் நால்வர். சி. புஸ்பராசா, கலைச்செல்வன், அசோக், லக்ஷமி என்பவர்களே இந்த நால்வருமாவர். இலக்கியச் சந்திப்பு 27வது தொடருக்கு ஒரு நிகழ்ச்சி நிரல் அடங்கிய அழகிய கை நூலொன்றையும் விழாக் குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் எனது சிறுகதைத் தொகுதியில் வெளிவந்துள்ள பாதுகை என்ற சிறுகதையைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரம் செய்திருந்தனர்.
மல்லிகைப் பந்தல் { 33 )

Page 20
என்னைப் பாரிஸிற்கு அழைத்த முக்கியான ஒருவர் f. LmüLIJNFM, அவருடனும் அவருடைய குடும்பத்தினருடனும்
Iர்வாகப் பந்தம் - 34)
 

ரண்டாம் நாள் கருத்தரங்கு ஆரம்பமாகியது. முதல் நாளைப் போல ஆரம்பப் பரபரப்புச் சற்று அடங்கி, பேராளர்கள் ஆழமான கருத்துக்களைச் சபை முன் வைத்து வாதிட்பார்கள்
அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். அத்துடன் வெளியே கடுங்குளிர் மட்டுப்பட்டிருந்தது. சீதோஷ்ண நிலை வெகு ரம்யமாக இருந்தது. எனவே சுவைஞர்களும் பேராளர்களும் மண்டபம் நிறையத் திரண்டிருந்தனர். எனக்குப் பெரு வியப்பு. ஐரோப்பிய நாடொன்றின் தலை நகரில் தமிழுக்கு இப்படியான விழாவொன்று தமிழில் நடைபெறுவதைக் காண எனக்குப் பெருமித உணர்வு ஏற்பட்டது.
'நீட்சேயின் மூலங்கள் - ஒரு மார்க்ளிய விவரணை என்ற தலைப்பில் ஜெர்மனியில் வாழும் தமிழரசன் என்பவர் கட்டுரை படித்தார்.
"இன்றைக்கான நீட்சே தேசியமும் - தேசிய மறுப்பும் என்ற தலைப்பில் பிரான்ஸில் வாழும் வின்செட் போல் கட்டுரையில் தமது கருத்துக்களை முன் வைத்தார்.
மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் 'நீட்சேயும் நீட்சேயும் என்பது பற்றித் தனது கருத்துக்களைக் கட்டுரை வடிவில் பார்வையாளர் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இம் மூன்று கருத்துக்கள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. சூடாகவும் சுவையாகவும் இவ்விவாதங்கள் தொடர்ந்து சென்றன.
கணிசமான பேராளர்கள் இவ்விவாதத்தில் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை முன் வைத்தனர். மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் கூட்டம் தொடர்ந்தது.
மஸ்ஜிாகப் பந்தம் 35

Page 21
உணவு இடைவேளை என்பதை விட, பல பிரதேசங்களிலும் இருந்து வந்த இலக்கியச் சுவைஞர்கள் கலந்து, விசாரித்து, அளவளாவி, புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதற்காக ஒதுக்கப்பட்ட முக்கிய நேரம் என இதைச் சொல்லலாம்.
இப்படியான இலக்கியக் கருத்தரங்கு நடத்துபவர்கள் இந்த ஓய்வு நேரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இடை ஓய்வு நேரங்கள் மிகப் பயனுள்ளவை. பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கனன்டு கதைத்துப் புரிந்து கொள்வதற்கு இந்த நேரம் ஒத்தாசையாக இருக்கும். இக் கருத்தரங்கில் இப்படியான ஓய்வு நேரத்தின் அத்தியாவசியத்தை வெகுவாகப் புரிந்து கொண்டேன்.
முன் பின் பழக்கமில்லாதவர்களில் அநேகர் என்னை நெருங்கித் தம்மைத்தாமே அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். பலர் எனது பெயரையும் மல்லிகையின் நாமத்தையும் ஏற்கெனவே நன்கு தெரிந்து வைத்திருந்தனர். நமது நகர்களில் என்னைச் சந்திக்கவில்லை. கடல் கடந்து தூரத் தொலைவிலுள்ள அந்நிய தேசத்தில் தான் எமது சந்திப்பு நிகழ்கிறது என மனச் சங்கடத்துடன் மனம் விட்டு என்னுடன் உரையாடிக் களித்தனர்.
உனவு இடைவேளைக்குப் பின்னர் என்னுடைய உரை தொடங்கியது.
"ஈழத்து இலக்கியத்தில் சிற்றேடுகளின் பங்களிப்பு' என்ற தலைப்புத்தான் எனக்குத் தரப்பட்டிருந்தது. நான் இத்தலைப்பை மாற்றி "இலக்கிய உலகில் நானும் எனது அநுபவங்களும்" என்ற தலைப்பில் எனது உரையை ஆரம்பித்தேன்.
பல நேரடி அநுபவங்கள், சம்பவங்கள், தகவல்கள் அத்தனையையும் ஒருங்கு சேர்த்து, மொழியைக் குழைத்து ஒரு மணிநேரம் பத்து நிமிடங்கள் நெடிய உரையை நிகழ்த்தினேன்.
என் மனசில் நிறைந்த உற்சாகம் பிறிட்டுப் பாய்ந்து விகச்த்தது. கருத்துக்கள் வரிசைக் கிரமமாக எனது நாவிலிருந்து வெளிப்பட்டன. வரிசையாக உட் கார் ந் திருந்தவர்கள் கண்கள் நிறைய நம்பிக்கைகளுடனும் நெஞ்சு நிறைந்த பூரிப்புடனும் எனது உரையைச் செவிமடுத்தனர்.
எனக்கோ படு உற்சாகம், புது உத்வேகம்,
உரை நிகழ்த்தி முடிந்ததும் சபையோர் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்து சிறப்பித்தனர். தொடர்ந்து உரை நிகழ்த்தும்
மய்ரிாகப் பந்தம் B

வன்னம் கேட்டுக்கொன்டனர். மீண்டும் அதே உற்சாகம் குன்றாமல் நாற்பது நிமிஷங்கள் பேசினேன்.
பேச்சு முடிவில் தேநீர் இடைவேளை, பலர் என்னை மொய்க்கத் தொடங்கினர். சிலர் கட்டிப் பிடித்து என்னைக் கொஞ்சினர்.
"மனநிறைவான சொற்பொழிவு ஒன்றைக் கேட்டோம், நாங்கள் இதுவரை இந்த விழா சம்பந்தமாகப் பட்டபாடுகளுக்கு இந்தப் பேச்சு ஒன்றே போதும்” என வாயார , மனமாரப் புகழ்ந்து பாராட்டினர்.
நோர்வேயிலிருந்து ஒர் இளம் கவிஞர் என் முன்னால் கனன் கலங்கி நின்ற வண்ணம் எனது கரங்களைப் பற்றியபடி சொன்னார்.
"உங்களுடைய பேச்சு என்னுடைய சின்ன வயசை நினைவூட்டியது. நானொரு மீனவ சமூகத்தவன். என் அப்பா ஒரு மீன்பிடிகாரன். நாவாந்துறை எனது ஊர். உங்களது பேச்சைக் கேட்டபோது
நானப் பிடியே அழுதிட்டேன். எ வ' வ ள வ உணர்ச்சிகரமா கப் பேசினீர்கள். ஐயோ.. } (E ш т ! " " என்றார்.
என்னுடைய கச் சிதமான , சொற்செட்டான,
மன உணர்வைத் தூண்டி விடத் தக்கதான உரைகளை நேரில் கேட்பவர்கள் பலர், அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். "ரொம்பவும் உணர்ச்சிகரமாகப் பேசினிகள். எங்களை மாத்திரமல்ல, உங்களையும் உணர்ச்சிக்கு ஆட்படுத்திவிட்டீர்கள்!” என்பார்கள்.
அவர்களுக்குச் சொன்னதையே உங்களுக்கும் இங்கு சொல்லுகிறேன். நான் மேடைகளில் உரையாற்றும் பொழுது எந்தச் சந்தர்ப்பத்திலுமே உணர்ச்சிவசப்படுவதில்லை.
ஒரு மேடைப் பேச்சாளன் கேட்போரை உணர்ச்சி வசப்படுத்த வேண்டுமே தவிர, அவன் உணர்ச்சி வசப்படக் கூடாது.
பள்ளிகைப் பந்தம் ー{ 37

Page 22
மேடையில் பேசும்போது தரமான பேச்சாளன் உணர்ச்சி வசப்படுவானேயானால், வார்த்தைகள் இடறும். பேச்சுக்கொன்னை தட்டும். தொடர் சிந்தனை அறுந்துவிடும். பேச்சுத் தடைபடும். இன்னும் எத்தனை எத்தனையோ சங்கடங்கள் இடையிடையே தலைகாட்டும்.
கேட்பவர்களை உணர்ச்சி வசப்படுத்துவதற்காக நான் உணர்ச்சி கொண்டவன் போல உரையாற்றுகின்றேனே தவிர, நான் உணர்ச்சிக்கு ஆட்படுவதில்லை.
பாரிஸில், பெர்லினில், லண்டன் மாநகள்களில் எல்லாம் என்னுடைய பேச்சுக்கள் எல்லாமே வெகு, வெகு சிறப்பாக அமைந்தன என்பதில் அவர்களை விட நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
தேநீர் இடைவேளைக்குப் பின்னர் நூல்களின் அறிமுக அரங்கம் இடம் பெற்றது. யமுனா ராஜேந்திரன் மொழி பெயர்த்த 'எனக்குள் பெய்யும் மழை என்ற நூலை பிரான்சைச் சேர்ந்த அருந்ததி என்பவர் விமர்சித்துக் கருத்துச் சொன்னார். தொடர்ந்து அ. தேவதாஸன் ‘சமதரும போதினி” என்ற சுகன், ஷோபா ஷக்தி ஆகியோர் தொகுத்த நூலை விமர்சனத்திற்கு உட்படுத்தினார். மூன்றாவதாக யமுனா ராஜேந்திரன் தொகுத்த ‘புலம் பெயர் சினிமா நூலை வசந்த ரூபன் விமர்சனத்திற்கு எடுத்துக் கொண்டார். அடுத்து கவிஞர் சேரனின் கவிதைத் தொகுதியான ‘'நீ இப்பொழுது இறங்கும் ஆறு' நூலை, என்னை அழைப்பதற்கு முன்னோடியாக நின்று சகலதும் செய்துதவிய சி. புஸ்பராஜா விமர்சனத்திற்கு எடுத்துக் கொண்டு ஆய்வு செய்தார். இறுதியாக ஜெர்மனியிலிருந்து வந்திருந்த பேராளர்களில் ஒருவரான ந. சுசீந்திரன், திருமாவளவன் எழுதிய கவிதை நூலான 'பனி வயல் உழவு என்ற புதிய வெளியீட்டைப் பற்றித் தனது கருத்துக்களைச் சபையோர் முன் வைத்தார்.
விமர்சகர்கள் சபையோர் முன் வைத்த கருத்துக்கள் பற்றிச் சாதக பாதகமான அபிப்பிராயங்கள் பின்னர் தொடர்ந்து விவாதிக்கப்பட்டன.
அலுப்புச் சலிப்பில்லாமல் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடந்த இந்த 27வது இலக்கியச் சந்திப்பு அடுத்த 28வது இலக்கியச் சந்திப்பை நோர்வே நாட்டில் நடத்துவதென்ற இறுதி முடிவுடன் முற்றுப் பெற்றது.
மல்லிகைப் பந்தல் G8)

ரண்டு நாட்களாக வெகு சிறப்பாகவும் காரசாரமாகவும நடைபெற்ற ஐரோப்பியப் புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தா ளர்களின் 27வது சந்திப்பு நிறைவு பெற்ற பின்னர் பிரியாவிடை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மண்டபத்தில் தேநீர் அருந்திய வண்ணம் ஒருவரை ஒருவர் அணைத்து விடைபெற்றனர். பலர் ஐரோப்பாவின் பல தேசங்களிலிருந்து வந்திருந்த பல பேராளர்கள், பிரான்ஸிலிருந்து பல பிரதேசங்களின் பிரதிநிதியாக மகாநாட்டில் கலந்து கொண்ட பலர், ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றனர். ஜெர்மனியில் வசிக்கும் எழுத்தாளர் கருணாகரமூர்த்தி என்னை கட்டிப்பிடித்தார். இவர் கடந்த வருடம் இலங்கை வந்திருந்த போது மல்லிகைக் காரியாலயத்திற்கும் வந்திருந்தார்.
‘பாஸ்போட்டை ஒழுங்குபடுத்தி வைத்திருங்கள். கூடிய சீக்கிரம் உங்களை ஜெர்மனிக்கு அழைக்க விரும்புகிறோம்" எனப் பயணத்துக்கு கொடி காட்டி விட்டுச் சென்றார். ‘எங்களை விடப் பாரிஸ்காரர் புத்திசாலிகள். அவர்கள் முந்தி விட்டார்கள்!” என்றார்.
பாரிஸிலிருந்து வெளிவரும் ’எக்ஸில்' என்ற இலக்கிய சஞ்சிகையில் எழுதி வரும் ஷோபாசக்தி, கற்சுறா என்ற இரண்டு இளைஞர்களும் மண்டபத்திலேயே பலரை அணுகி மல்லிகைக்காகக் கொஞ்சம் பிரான்ஸ் பிராங் சேகரித்து அன்பளிப்பாகத் தந்துதவிய பின்னர் விடை பெற்றனர். நான் எடுத்துச் சென்ற எனது புத்தகங்களை என்னுடைய கையெழுத்துடன் வாங்க ஒரு கூட்டம் முண்டியடித்தது. நான் கொழும்பிலிருந்து பாரிஸ் புறப்படும் முன்பே தமக்குப் புத்தகங்கள் தேவை எனப் பல இலக்கிய நெஞ்சங்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
ஆனால் விமானத்தில் இருபது கிலோ மாத்திரமே அனுமதிப்பார்கள்.
மல்லிகைப் பந்தல் { 39

Page 23
இரண்டொரு கிலோ - கூட ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் நண்பர்களின் வேண்டுகோளை ஏற்றால் நானொரு புத்தகக் கடையைத் தான் அங்கு இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும்.
எனவே பாரிஸிற்கென்று ஒரு பகுதி, பெர்லினுக்கென்று ஒரு பார்சல், லண்டனுக்கென ஒரு செற் எனப் புத்தகங்களை ஒதுக்கிக் கொண்டே இங்கிருந்து புறப்பட்டேன்.
பெர்லின், லண்டன் போன்ற அங்கங்கே வசிக்கும் இலக்கியச் சுவைஞர்களல்ல, பாரிஸிற்கு பல பிரதேசங்களிலுமிருந்து மட்டுமல்ல, பல ஐரோப்பிய நாடுகளிலுமிருந்தும் பேராளர்களாக இலக்கிய விழாவிற்கு வந்திருந்தனர். எனவே பாரிஸிற்கு வந்திருக்கும் சுவைஞர்களுக்கு இதில் சலுகை காட்ட வேண்டும் எனச் சிலர் வாதாடினர்.
ஏராளமானவர்கள், நான் சற்றும் எதிர்பார்க்காத அளவில் என்னுடைய நூல்களை டாலர், பிராங்க், மார்க், பவுன்ட் எனத் தந்து வாங்கினர். இன்னும் இன்னும் கேட்டனர். குறிப்பாகச் சுயசரிதை நூலைத் தேடி வாங்கினர். வெறும் முப்பது சதத்திற்கு யாழ்ப்பாணத் தெருக்களிலும் பஸ் நிலையத்திலும் கொழும்பில் செட்டித் தெரு, செக்கட்டித் தெரு, ஆட்டுப் பட்டித் தெரு, ஆண்டிவால் முடுக்கெல்லாம் திரிந்து மல்லிகையைக் கடந்த காலத்தில் விற்று வந்தவன் தான் இந்த மல்லிகை ஆசிரியர்.
இப்படி விற்று வரும் வேளைகளில் ஒரு நாள் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள ஓர் இரும்புக் கடைக்குச் சென்று மேசையில் இருந்தவரிடம் மல்லிகையை நீட்டினேன். வீதிக் கடைத் தெருவில் இயல்பாக நான் செய்யும் வேலைகளில் இதுவும் ஒன்று. மேசையில் இருந்தவர் கழுத்தைத் திருப்பி “இந்தாப்பா இண்டைக்கென்ன கிழமை?” என உரத்த குரலில் கேட்டார்.
எனக் கொஞ்சம்
ty
‘'இண்டைக்கோ. இண்டைக்கோ. யோசித்துவிட்டு அந்தப் பணியாளன் ‘இண்டைக்குப் புதன்கிழமை என்றான் உள்ளிருந்து.
“ஒ.! நானிண்டைக்கு வெள்ளிக்கிழமை?” என அவர் கேட்ட போதே எனக்கு அவர் கேட்டதன் உட்சூத்திரம் விளங்கிவிட்டது. வெள்ளிக்கிழமை பிச்சைக்காரர்களுக்குப் பிச்சையிடும் தினம்.
“இண்டைக்கு வாங்கேலாது. போயிட்டு வேறு நாளைக்கு வாருங்கோ பாப்பம்!” என்றார் கடை முதலாளி.
இத்தகைய கசப்பான அநுபவங்களை மல்லிகை விற்பனவு மூலம்
மல்லிகைப் பந்தல் 40 ܗܝ

பெற்றுக் கொண்டு, எனது மனதைப் பண்படுத்தி வந்தவன் நான். எனது நேர்மையான உழைப்பு அன்று எனது புத்தகங்களுக்கு இலங்கை ரூபாயிலல்ல, ஐரோப்பிய, அமெரிக்க பண நோட்டுகளை வாங்கித் தரும் அளவுக்கு என்னை உயர்த்தியதை அநுபவ பூர்வமாக உணர்ந்தேன். மனசு விம்மியது.
அடுத்த நாள் கிறிஸ்மஸ்.
கிறிஸ்மஸ் தினத்தில் நான் ஜெர்மனியத் தலை நகரில் இருக்க வேண்டும். நாளை மறுநாள் பெர்லினில் நடைபெறவுள்ள 'மல்லிகை மாலை இலக்கியச் சந்தியபில் கலந்து கொள்வதாக விளம்பரப் படுத்தியிருந்தனர் ஈழத்துத் தமிழர் நலன்புரிக் கழகத்தினர். நான் கொழும்பிலிருந்து பாரிஸ் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே எனது மகள் (பிரேமா) பெர்லினிலிருந்து என்னுடன் தொடர்பு கொண்டிருந்தாள். மருமகன் ராஜகுலேந்திரன் பெர்லினில் ஒரு பேப்பர் கம்பனியில் வேலை பார்த்தார். 1982ல் ஜெர்மனி போனவர்கள். விநோத், வினித் என இரண்டு பேரன் பேத்திமார்கள் இருக்கிறார்கள்.
இந்தப் பேரனையும் பேத்தியையும் அவசியம் பார்க்க வரவேண்டுமென மகள் பிரேமா தொலைபேசியில் வற்புறுத்திச் சொல்லியிருந்தாள். குடும்ப விவகாரமல்ல, எனது ஐரோப்பியச் சுற்றுப் பிரயாணம். இது இலக்கியச் சுற்றுலா. அதிலும் இலக்கிய அன்பர்கள் தமது உழைப்பையும் பணத்தையும் செலவழித்து என்னை அழைத்திருக்கிறார்கள். நான் அப்பன் - மகள் உறவு கொண்டாட அங்கு வரவில்லை என பெர்லின் உறவு சாத்தியப்படாது எனப் பதிலளித்திருந்தேன். ‘முடியுமானால் என்னை அழைத்திருக்கும் புஸ்பராஜா அவர்களுடன் தொடர்பு கொண்டு பாருங்கள்’ என ஆலோசனையும் கூறியிருந்தேன்.
மகள் பிரேமா பெர்லினிலிருந்து இவ்விழாவுக்குப் பேராளராகவும் விழாவுக்கு உறுதுணையாகச் செயல் பட்டவர்களில் ஒருவருமான சுசீந்திரனுடன் தொடர்பு கொண்டு, பெர்லினில் “மரிய பிரைடன்மண்டபத்தில் இலக்கியச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டாள். விமான டிக்கட்டும் அனுப்பிவைத்திருந்தாள்.
இந்தச் சுசீந்திரனைப் பற்றி நானறிந்த தகவல்களைச் சொல்வது நல்லது என்றே நினைக்கின்றேன்.
ஜெர்மனியிலும் உலகின் எந்த மூலையில் எந்தவொரு தமிழ் இலக்கிய நிகழ்ச்சி நடந்தாலும் முன்நின்று பாடுபடுபவர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொழும்பு வந்திருந்த சமயம் மல்லிகைக்
மல்லிகைப் பந்தல் 41 J 41

Page 24
காரியாலத்திற்கு வந்திருந்தார்.
அவர் ஒரே தமாவடி பேர்வழி. சென்ற ஆண்டு செப்டம்பரில் சென்னையில் மூன்று நாட்கள் நடைபெற்ற 'தமிழ் இனி. 2000' இலக்கிய விழாவுக்குப் பேராளராக வந்திருந்தார். ‘கூடிய சீக்கிரம் உங்களைப் பாரிஸில் சந்திப்பேன்’ என் முன்னரே எனக்கு அறிவுறுத்திச் சென்றிருந்தார்.
எனவே நிகழ்ச்சி முடிந்த அன்றிரவே நான் பெர்லின் பிரயாணத்திற்கு ஆயத்தமானேன். நான் பிரயாணத்திற்குத் தயாரானேன், என்பதை விட, சுசீந்திரன் என்னைத் தயார்படுத்திவிட்டார். அன்று இரவு முழுவதும் ஒரே இலக்கிய சம்வாதம்தான். நண்பர்கள் இரவு என்னைத் தூங்கவிடவில்லை.
விடிந்தால் கிறிஸ்மஸ்.பெரிலினுக்குப் போகவேண்டும். பாரிஸிலிருந்து ஒன்றரை மணிநேர விமானப் பயணம். விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரப் பயணம் மகள் வீட்டுக்கு. இந்தக் கிறிஸ்மஸ் தினத்தில் மகள், மருமகன், பேரப்பிள்ளைகளுடன் சேர்ந்திருக்கப் போகின்றேன் என்ற மனக்களிப்பு வேறு.
நானும் சராசரி மனிதன் தானே! எனக்கும் அடிமன ஆசைகள் இருக்காதா என்ன? சுசீந்திரன் வழிகாட்ட பெர்லின் விமான நிலையத்தில் வந்து இறங்கினேன். எங்கும். எங்கும் பணி பெய்து கொண்டிருந்தது. விமானம் ஒடுபாதையில் நின்றதும், நிலையத்திற்குச் சற்றுத் தூரம் நடந்து செல்ல வேண்டும். பாதைக் கரையெங்கும் பணி பெய்து கொண்டிருந்தது. பாதைக் கரையெங்கும் பணி வெள்ளைப் பஞ்சுப் பொதியாகத் திரண்டு காட்சி தந்தது. நான் பணியை சினிமாவில் பார்த்திருக்கிறேன். படித்திருக்கிறேன். ஆனால் நேரில் பார்ப்பது இதுதான் முதற் தடவை. நான் பள்ளிச் சிறுவனைப் போல அந்தப் பஞ்சுப் பனியை அள்ளி முகம் முழுவதும் அப்பிக்கொண்டேன். பின்னால் வந்த பிரயாணிகள் என்னை விசித்திரமாகப் பார்த்துச் சிரித்தார்கள்.
மல்லிகைப் பந்தல்- 42 ).

யுத்தகால நினைவுகளுடன்
பெர்லின் இல் பாராளுமன்றத்தில்
ர்லின் விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்தோம், G நானும் சுசீந்திரனும் வெளியே மகள் பிரேமாவுடன் கணவரும்
பேரன் வினோத்தும் வந்கிருந்தனர். சுசீந்திரனின் மனைவியும் அவர்களுடன் வந்திருந்தார். அன்று கிறிஸ்மஸ் தினம். தன்னைத் தேடித் தனது அழைப்பை ஏற்று பெர்லின் நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்ததில் மகளுக்கும் மருமகனுக்கும் பெரிய புளுகம் என்னைக் கண்டதும் மகள் கட்டிப் பிடித்துக் கொண்டார். கண்” கலங்கினாள். நீண்ட இடைவெளிக்கு அப்டறம் சந்திக்கிறோம். பேரன் வளர்ந்திருந்தான். என்னை விசித்திரமாக ஓர் அந்நியனைப் போலப் பார்த்தான்.
அவனது தோளின் மீது கைகளைப் போட்டு அணைத்த வண்ணம்
காரில் வீடு நோக்கிப் புறப்பட்டேன். இறங்கும் போது ‘தம்பி.! தாத்தா கவனம் வழியில் பனி சறுக்கும். விழுந்து போகாமல் இறுக்கிப் பிடிச்சுக் கொண்டு வா’ என மகனிடம் சொன்னாள் என் மகள்.
யாழ்ப்பாணத்திலிருந்து நான் கொழும்பிற்குக் குடி பெயர்ந்ததும் எனது இன்னொரு மகள் தொலைபேசியில் மகன் திலீபனுக்குச் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. ‘தம்பி அப்பா கவனம் கொழும்பிலை அவரைக் கவனமாகப் பார்த்துக் கொள். கவனம்.கவனம்.!” என ஐந்து வருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் மகனுக்குச் சொன்னதை நினைத்துக் கொண்டேன்.
அன்று கிறிஸ்மஸ் தினமானபடியாலும், நான் இன்று விட்டிற்கு வர
மல்லிகைப் பந்தல் M3 )

Page 25
இருப்பதை முன்னரே அறிந்து வைத்திருந்த காரணத்தாலும், இன சனசன சொந்தக் காரர்களும் மற்றும் என்னை முன்னரே கேள்விப்பட்டிருந்த இலக்கிய அபிமானிகளும் மகள் வீட்டில் வந்து குழுமியிருந்தனர். எல்லோரையும் சுகநலம் விசாரித்துத் தெரிந்து கொண்டேன். எனக்கோ தொடர் பிரயாண அலுப்பு. ஆனால் மகள் தூங்கக் கூட விடவில்லை. ஒரே கதைதான்.
“உங்களைப் பற்றி அந்தக் காலத்திலை எங்கட சொந்தக்காரர்களைப் போல ரொம்பக் குறைவாகத்தான் நினைச்சிக் கொண்டிருந்தேன். ஆனா உங்களுக்கு இப்ப இப்படிப் புகழ் என்றதைப் பார்க்கிற போது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. எல்லோருமே உங்களைப் பற்றித்தான் விசாரிச்ச வண்ணம் இருக்கினம். ஜீவாவின் மகள் நீங்கள் தான் எண்டு ஏன் எங்களுக்கு முன்னமே சொல்லி வைக்கேல்லை? இந்த நாட்டிலை இருந்தல்ல, சுவீஸ், நோர்வே, டென்மார்க்கிலை இருந்தெல்லாம் டெலிபோன் போட்டுக் கேட்ட வண்ணமே இருக்கினம். சுவீசிலை இருந்து ரஞ்சி என்பவர் எப்படியாகிலும் உங்களை சுவீசுக்கு எடுத்துவிட வேண்டுமெனக் கேட்ட வண்ணமே இருக்கிறார்: இங்கையெல்லாம் உங்களுக்கு இப்படிப்பட்ட புகழ் இருக்குதெண்டு நான் கனவிலை கூட நினைச்சுப் பார்த்ததில்லை!" என ஒரே புராணமாக இருந்தது, இரவு நெடுநேரம் வரை.
அடுத்த நாள் சாயங்காலம் தான் கூட்டம். மல்லிகை மாலை என்ற பெயரில் அந்த இலக்கியச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலையில் காரில் மகள் குடும்பத்தினருடன் பெர்லின் மாநகரைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டேன். ஒரே பணி, மூடு பணி, வீதியெங்கும் பணி படர்ந்திருந்தது. தெருவில் பணியை அப்புறப்படுத்தும் இயந்திரங்கள் பனியை அகற்றப் பாதைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தன. முதலில் பெர்லின் சுவரைப் பார்க்கப் புறப்பட்டோம். அந்தப் பிரபலம் வாய்ந்த சுவர் இடிக்கப்பட்டு அகற்றப்பட்டிருந்தாலும் அதன் எச்சங்களைப் பார்க்க முடிந்தது. அதன் ஞாபகார்த்தமாக நானும் எனது பேரனும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பெர்லின் மாநகர் ரஷ்ய, அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசாங்கங்களுக்கு ஆட்பட்டிருந்ததைச் சாட்சியம் கூறும் சில காட்சிகளையும் அவதானித்து மனதில் பதிய வைத்துக் கொண்டேன் o
ஒரே குளிர் நடுநடுங்க வைத்தது. அப்படியே பாராளுமன்றத்திற்குப் போனோம். கிறிஸ்மஸ் காலமானபடியால் பார்வையாளர்களால் நிரம்மி வழிந்தது மண்டபம், இரண்டாம் யுத்த காலத்தை நினைத்துப் பார்த்தேன்.
மல்லிகைப் பந்தல் 44 صمي

ஹிட்லர் என்ற பெயரைக் கேட்டதும் உலகமே பயத்தால் நடுங்கியதை ஞாபகப்படுத்திக் கொண்டேன். பாராளுமன்றத்திற்கு வெளியே பரந்த உயர்ந்த கருங்கல் மேடையிருந்தது. அந்த மேடையில் நின்று தான் ஜெர்மனியச் சர்வாதிகாரி ஹிட்லர் தனது படைகளின் அணிவகுப்பைப் பார்வையிடுவானாம். கொயபல்ஸ் கொயலிங், ரோமல் என்ற பெயர்கள் என் நினைவில் வந்து போயின. V1-V2 என்ற யுத்த விமானங்களின் இரைச்சல் என் காதுகளில் கேட்பதும் மாதிரியான ஓசையை உணர்ந்தேன்.
ஹிட்லர் அன்று படையினருக்குச் சலூட் அடித்த அந்தக் கல் மேடையில் அதே இடத்தில் நின்று நான் புகைப்படமெடுத்துக் கொண்டேன். இப்படி இந்தப் பெர்லின் மாநகருக்கு வந்து ஹிட்லர் நிறை அதே இடத்தில் நின்று படமெடுத்துக் கொள்வேன் என யாராவது சோதிடம் சொல்லியிருந்தால் கூட நான் நம்பியிருக்க மாட்டேன்.
சொண்டுக்குள் சிரித்து வைத்திருந்தேன். வழியில் ஒரு மாதா கோயிலைப் பார்த்தோம்.அக்கோயில் யுத்த காலத்தில் எதிரிகளின் விமானத்தாக்குதல்களால் கோபுரம் பாதிக்கப்பட்ட நிலையில் இன்னும் "Tட்சி தந்தபடி இருக்கிறது.
இரண்டாவது யுத்த ஞாபகச் சின்னமாக அதைப் புதுப்பிக்காமல் அப்படியே வைத்துள்ளனர். அந்தக் கோயிலின் மாதிரிச் சின்னத்தை பக்கத்தேயுள்ள வியாபாரக் கடையில் விற்பனைக்கு வைத்திருந்தனர். தான் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக் கொண்டு எனது பேத்தி ^ பிந் அந்தப் பொருளைத் தனது ஞாபகமாகப் பேரம் பேசி வாங்கித் தந்தாள்.
இப்படியான எமது புதுத் தலைமுறையினர் தாங்கள் வாழும் நாட்டின் மொழியை வெகு சரளமாகப் பேசுவதைக் கண்டபோது எனக்குப் பெருவியப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பெர்லின் மாநகரை வலம் வந்தோம். ஐரோப்பாவின் நட்டஈடு மையம் என்றொரு இடம் குறிக்கப்பட்டிருக்கிறது. அங்கே நீரினால் இயங்கும் ஒரு சர்வதேச மணிக்கூடு வைக்கப்பட்டுள்ளது. பல ஐரோப்பியச் சுற்றுலாப் பிரயாணிகள் சுற்றி வரக் குழுமியிருந்து கடைகளில் வாங்கி வைத்திருந்த உணவுப் பொருட்களை மெல்ல மெல்லச் சுவைத்துக் கொண்டிருந்தனர். பல வகை உடைகள். பலவகை முகங்கள். பல வகையான உருவ அமைப்புக்கள் கொண்ட மனிதர்கள். எனக்கு மக்களின் முகங்களைப் பார்ப்பதிலேயே அலாதியான ஆசை. பார்த்து ரசித்தேன்.
மல்லிகைப் பந்தல் { 45

Page 26
"உயிர் நிழஸ் லார்மியுடன், லண்டனுக்குப் போகும் கப்பலில்,
பாராளுமன்றத்திற்கு அண்மையில் மிகப் பிரமாண்டமான மியூசியம் பே: 4:சிர்யர்: இருந்தது. ஹிட்லர் காலத்து மிக முக்கியமான நிகழ்ச்சிகளின் புri - :ள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அக்காட்சிச்சாலையிலுள்ள புகைப்படங்களைப் பார்த்து முடிக்கவே நீண்ட நேரமெடுத்தது.
சாயங்காலம் இலக்கியச் சந்திப்பு வேறு இருந்தது. எனவே மதிய உணவின் பின் ஒப்வெடுத்தால் தான் பின்னேரக் கூட்டத்தில் பரபரப்பில்லாமல் சுயமாக உரை நிகழ்த்தலாமென்ற முன் யோசனையுடன் நாங்கள் அனைவவரும் வீட்டை நோக்கிப LuJGJILCTCËGJITLi)
மல்விசைப் பந்தல் H46
 

களுடைய வீட்டுக்கு அண்மையில் தான் கூட்டம் நடக்கும்
மண்டபம் அமைந்திருந்தது. நடந்து போதும் தூரம் மாதா
கோயிலுக்குச் சொந்தமான அந்த அழகான மண்டபம் சகல வசதிகளுடனும் விளங்கியது. மாதா கோயில் தருவானவர் இலக்கிய ஆர்வமிக்கவர். அதிலும் தமிழர்களின் தொன்மையான கலாசார பண்பாடுகளை மதிப்பவள். கெளரவித்துப் போற்றுபவர்.
இந்த இலக்கியமானலப் பொழுது நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வதாக வாக்குக் கொடுத்திருந்தார். இறுதி நேரத்தில் ஏற்பட்ட அவசர வேலை காரணமாக அவர் இவ் விழாவில் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டது.
இந்த இலக்கிய மாலை விழாவின் போது மண்டபம் பார்வையாளர்களினால் நிறைந்து காணப்பட்டது. பெர்லினிலிருந்து தமிழ் ஆர்வலர்கள், கலைஞர்கள் இவ்விழாவில் பங்கு கொள்ள வந்திருந்தனர்.
என்னைப் பாரிஸிலிருந்து அழைத்து வந்த நண்பர் சுசீந்திரன் தான் இந்தக் கூட்டத்திற்குத் தலைமைதாங்கினார். பாரிஸில் நடந்த 27வது இலக்கியச் சந்திப்பில் நடந்த சுவையான இலக்கியத் தகவல்களை நகைச்சுவை கலந்து பேசிச் சபையோரை உற்சாகப்படுத்தினார் சுசீந்திரன். "ஈழத்து இலக்கிய வரலாற்றில் எனது அநுபவங்கள் என்ற தலைப்பில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள்
Iர்ரிகர் பந்தம் 47

Page 27
நான் உரையாற்றினேன். மாலை சுமார் 4 மணிக்கு ஆரம்பித்த இந்த மல்லிகை மாலை இலக்கியக் கூட்டம் முடிவடையும் போது இரவு எட்டரை மணியாகி விட்டது.
வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிறந்த மூன்று மாசப் பச்சிளம் குழந்தையைத் தோளில் அணைத்துப் பிடித்த வண்ணம் ஒரு தமிழ்ச் சகோதரி எனது பேச்சை வெகு உன்னிப்பாக அவதானித்துக் கிரகித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சகோதரி பாரம்பரிய இலக்கியக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, படித்துப் பின்னர் ஜெர்மனியில் வாழ்க்கைப்பட்டவர் எனப் பின்னர் விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.
பாரிஸ் இலக்கியச் சந்திப்பில் நிகழ்ந்தது போலவே, இங்கும் என்னுடைய நூல்களை வாங்கப் பலர் போட்டி போட்டு முன்வந்தனர். இப்படிப் போட்டி போட்டுப் புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தவர்களில் சிலர் என்னிடம் ஈழத்து இலக்கியங்களின் இன்றைய போக்குகள் பற்றியும் விரிவாக விசாரித்து அறிந்து கொண்டனர்.
அடுத்த நாள் ‘பிராங்பெட் நகரத்தில் நடைபெறும் கூட்டத்திற்த்ச் செல்ல வேண்டும். இதுவும் ஜெர்மனியில் பிரபலம் பெற்ற நகரங்களில் ஒன்று. அந்தப் பிராங்பெட் நகரத்திலிருந்து தான் திரும்பவும் பரிஸ் செல்ல வேண்டும். விமான டிக்கட் பிராங்பெட் - பாரிஸ் என எடுத்திருந்தனர். சூழ்நிலையும் பனிப் பொழிவும் பிராங்பெட் கூட்டத்தில் கலந்து கொள்ள என்னை அனுமதிக்கவில்லை. எனவே தொலைபேசி மூலம் பிராங்பெட் இலக்கியச் சந்திப்பை ரத்துச் செய்துவிட் நண்பர் சுசீந்திரனுக்கு ஆலோசனை கூறினேன். அவரும் அப்படியே செய்தார்.
பாரிஸிலிருந்து என்னைப் பெர்லினுக்கு அழைத்து வந்து சிறப்பான ஓர் இலக்கியக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த நண்பர் சுசீந்திரனின் பெருமையை நான் அந்த நகரத்தில் வசிக்கும் தமிழ் மக்களினது வாய் வார்த்தைகளில் கேட்டறிந்து பெருமைப்பட்டேன்.
“இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஒரு கிழமைகூட என்னோட தங்காமல் இப்பிடிக் கெதியாய்ப் போகிறீங்களே!” என மகள் பிரேமா ஆதங்கப்பட்டாள். பலர் வீட்டுக்கு அழைத்தார்கள். பலர் 'உங்களுடன் ஆறுதலாகக் கதைக்க வேண்டும்’ எனச் சொன்னார்கள். நான் தொடர்ந்து பிரயாணம் செய்து கொண்டேயிருந்தேன். காரணம் எனக்குப் பிரான்ஸில் தங்கியிருக்கத் தந்த விசா எட்டே எட்டு நாட்கள். எனவே திரும்பிப் பாரிஸ் சென்று அங்கிருந்து அடுத்த நாள் நான் லண்டன் மாநகருக்குச் சென்றுவிட வேண்டும்.
மல்லிகைப் பந்தல் 48 - می )
 

லண்டனில் தங்கியிருக்க எனக்கு ஆறு மாத விசா இருந்தது. அன்று இரவுக் கூட்டம் முடிந்ததும் நான் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டேன். சிலரிடம் எனது இயலாமையையும் விளங்கப்படுத்திச் சொன்னேன்.
அடுத்த நாள் காலை பெர்லினில் இருந்து ரயிலில் பிரயாணப்பட்டுப் பிராங்பெட் நகர் வந்து சேர்ந்தேன். அந்த ரயில் நிலையத்தில் பாரிஸில் இலக்கிய விழாவில் சந்தித்த நண்பர்களான கிருஷ்ணாவும் பாரதியும் வந்திருந்தனர். இந்தப் பாரதி என்பவர் கவிஞர் ஜெயபாலனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெயில் நிலையத்தில் என்னைச் சந்தித்த இந்த இரண்டு நண்பர்களும் விமான நிலையத்திற்கு நேரே போகும் ரெயிலைப் பிடித்து என்னை பிராங்பெட் விமான நிலையத்திற்கு அழைத்து வந்து விமானமேற்றி விட்டனர்.
ஒரு வழியாக மறுபடியும் பாரிஸ் விமான நிலையத்தை வந்தடைந்தேன். வெளியே இலக்கிய ஆர்வலர் அசோக்கும் நண்பர் புஸ்பராஜனும் என் வருகைக்கெனக் காத்திருந்தனர். என்னை வரவேற்க வந்த இந்த அசோக் என்பவர் தான் - ஆரம்பகாலத்தில் என்னை இவ் விழாவுக்கு வருவதற்கு முதன் முதலில் கடிதம் எழுதி என்னை அங்கு வருவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர். ஆழமான இலக்கிய அரசியல் அறிவு வாய்க்கப் பெற்றவர். நல்ல இதயம் படைத்தவர்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இவருடன் பேசுவதே ஓர் ஆரோக்கியமான அநுபவமாகும். நிறையப் படிப்பவர். ‘செல்வி என்றொரு புரட்சிகரப் பெண் கவிஞரைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். இடைநடுவில் இம் மண்ணிலிருந்து திடீரெனக் காணாமல் போய் விட்டாரே அந்த அற்புதமான கவிஞையினுடைய கணவன், துணைவன். இவர் ஒரு ஹோட்டலிலே வேலை செய்கிறார். ‘துடைப்பான் என்ற பெயரில் எழுதி வருபவர். பின் நவீனத்துவம் சம்பந்தமாகப் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள்ார். அது சம்பந்தமாக இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்.
பழையபடியும் சிவதாஸினுடைய புத்தகக் கடையான அறிவாலயத்திற்கு வந்து சேர்ந்தோம். பாரிஸிலுள்ள இலக்கிய அறிவாளர்கள், சுவைஞர்கள், அபிமானிகளில் அநேகர் தினசரி இங்கு வந்து கூடுவார்கள். நான் மீண்டும் பாரிஸ் வந்து விட்டேன் எனத் தெரிந்ததும் ஒன்று கூடலுக்கு வர இயலாத பலர் அங்கு வந்திருந்தனர். பலர் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு கதைத்தனர். கொழும்பில் அந்தக் காலத்தில் இருந்த யேசுரத்தினம் என்பவர்
மல்லிகைப் பந்தல் -G49)

Page 28
அற்புதமான நாடக நடிகர். வானொலிகளில் பெயர் பதித்தவர். இளவாலையைச் சேர்ந்தவர். கொழும்பிலிருந்து பாரிஸ் செல்வது என்ற முடிவெடுத்தவுடனேயே பாரிஸில் நண்பர் யேசுரத்தினத்தைச் சந்திக்க வேண்டுமென விரும்பியிருந்தேன்.
இவரைப் பாரிஸில் நேரடியாகச் சந்திக்க இயலவில்லை. தொலைபேசியில் தான் தொடர்பு கொண்டு என்னுடன் நீண்டநேரம் கதைத்தார். இன்றும் நாளையும் தான் பாரிஸில் தங்கியிருக்கும் கடைசி நாட்கள். இந்த இரு நாட்களுக்குள் 'ஐபில் கோபுரத்தை ஒரு தடவை என் கண்களால் பார்த்துவிட வேண்டும் என ஆசைப்பட்டேன்.
பாரிஸிற்கு வந்துவிட்டு ஐபில் கோபுரத்தைப் பார்க்காமல் திரும்புவதென்பது டில்லிக்குச் சென்றுவிட்டுத் தாஜ்மஹாலைத் தரிசிக்காமல் போவது மாதிரி என்றே சொல்ல வேண்டும். எனவே ஐபில் கோபுரத்தை எப்படியும் இன்றே பார்த்துவிட வேண்டும் என நான் புஸ்பராசனிடம் வற்புறுத்திக் கூறினேன். நண்பர்களிடமெல்லாம் விடை பெற்றுக் கொண்டு நானும் புஸ்பராசனும் ஐபில் கோபுரத்தைப் பார்க்கப் புறப்பட்டுச் சென்றோம். ممير
ஐரோப்பாவில் கிறிஸ்மஸ் காலம் பெரும் விடுமுறைக் காலமாகும். உலகத்தின் நாலா திசைகளிலிருந்தெல்லாம் உல்லாசப் பயணிகள் ஐரோப்பாவைப் பார்க்கப் படையெடுத்து வருவார்கள். அதிலும் இப்படியான உலக அதிசயங்களைப் பார்ப்பதற்கென்றே காலம் காலமாகக் காத்திருந்து விடுமுறைக் காலங்களைப் பயன்படுத்தி உல்லாசப் பயணங்கள் செய்வார்கள்.
நாங்கள் சென்ற சமயம் சீதோஷ்ண நிலை சீராக இருந்தது. சுவாத்தியமும் மனசுக்கு ரொம்பவும் ரம்மியமாக அமைந்திருந்தது. தூரத்தில் இருந்தே அதன் கம்பீரமும் நெருங்கக் கண்களுக்குப் புலப்பட்டன. நெருங்க நெருங்க என் நெஞ்சு துடித்தது. மனசு மெல்ல மெல்லப் பதற்றப்பட்டது.
அந்த மகத்தான கலைப்படைப்பைக் கிட்டே நெருங்கிப் பார்த்த அந்தக் கணமே நான் அழுது விடுவேனோ எனப் பயப்பட்டேன். மனுக்குலச் சாதனைகளில் ஒன்றை - அதன் கிட்டே நின்று பார்த்து மகிழ்கிறேன், என்ற நினைப்பே எனது தேகத்தைச் சிலிர்க்க வைத்தது.
மல்லிகைப் பந்தல் 50 )

மானுட உழைப்புச் சிருஷ்டியான ஐபில் கோபுரத்தைப் D பார்த்துக் களித்த மனநிறைவுடனும் திருப்தியுடனும் நடை
பாதைக்கு வந்த நானும் நண்பர் புஸ்பராசனும் அந்த ஐபில் கோபுரத்தைப் பின்னணியாகக் கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
அதே நடைபாதையில் கடை விரித்திருந்த ஓர் ஆபிரிக்கச் சகோதரரிடம் பேரம் பேசி ஐபில் கோபுர சிறு சின்னத்தை ஞாபகார்த்தமாக வாங்கித் தந்தார் நண்பர் புஸ்பராஜன்.
மற்றப் பக்கம் பார்த்தால் இந்தப் பிரமாண்டமான உலகப் பிரசித்தி பெற்ற கோபுரத்தை வடிவமைப்புச் செய்த மிஸ்டர் ஐபிளின் பெரிய மார்பளவுச் சிலை செயற்கை வெளிச்சத்தில் புன்முறுவல் பூத்தபடி இருந்தது. சிலையின் கீழ் விரிவாகத் தகவல்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
கோபுரத்தைப் பார்க்க வரும் உல்லாசப் பிரயாணிகளில் பலர் அந்த உருவச் சிலைக்கு முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதைக் கண்டேன். நானும் அந்தச் சிலைக்கு முன்னால் நின்று படமெடுத்துக் கொண்டேன்.
அந்தச் சமயத்தில் எனது மனதில் ஏற்பட்ட நீண்ட நாளைய
மல்லிகைப் பந்தல் - 51.

Page 29
ஆதங்கத்தையும் இந்த இடத்தில் பதிவு செய்வது நல்லது என்றே கருதுகின்றேன்.
பல தடவைகள் நான் தமிழ் நாட்டுக்குச் சென்று வந்திருக்கின்றேன். பொதுவாகத் தமிழ் நாடு பூராவுமே சுற்றிப் பார்த்திருக்கிறேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சைப் பெரும்கோயில், மகாபலிபுரம் என அழைக்கப்படும் மாமல்லபுரம் போன்ற சரித்திரச் சான்று பகரும் ஸ்தலங்களுக்கெல்லாம் சென்று பார்த்து வியந்திருக்கின்றேன்.
மனிதன்தானா, அதுவும் நம்ம தமிழ் மகன்தானா, இந்தச் சாதனைகளை எல்லாம் நிகழ்த்தி முடித்திருக்கிறான்? கருங்கற்களைக் குடைந்து கலைச் சிற்பங்களை எல்லாம் ஆக்கியிருக்கின்றான்? செதுக்கியிருக்கின்றான்?
தஞ்சைப்பெருங்கோயில் கோபுர உச்சிக்கு மேலே அந்த முத்தாய்ப்புப் பாறாங்கல்லை எப்படி ஏற்றிவைத்துப் பொருத்தினான்? நவீன விஞ்ஞான சாதனங்களற்ற அந்தக் காலத்திலேயே இப்படியான அசுர சாதனைகளை எந்த அணுகு முறைகொண்டு நிறைவேற்றி முடித்தான்? இவையெல்லாம் எப்படிச் சாத்தியமாயிற்று?
மாமல்லபுரத்துக் கருங்கல் சிற்பங்கள் கதைகள் பல கூறுகின்றனவே! இவையனைத்தையும் செய்து முடித்தவர்கள் நமது மூதாதையினரா? நம்ப முடியவில்லையே! சேலம் நகரத்துக்கு அண்மையிலுள்ள தாராபுரம் என்ற ஊரிலுள்ள ஆலயத்தில் ரதிமன்மதன் சிலையை ஒரு கல் ஓவியன் கருங்கல்லொன்றில் குடைந்திருக்கிறானே? இதற்கு ஈடு இணை ஏது? என வியப்புற்று நெஞ்சு வியந்திருக்கிறேன்.
இதில் துரதிர்ஷ்டமான சோகம் என்னவென்றால் இத்தனை மாபெரிய சாதனைகளைக் காலங் கடந்தும் நிலை நிறுத்திய அந்த மகத்தான கலைஞர்களின் நாமம் ஒரு இடத்தில் கூடச் செதுக்கப்பட்டிருக்கவில்லை - அவர்களது பெயர்கள் ஒன்று கூடப் பதியப்பட்டிருக்கவில்லை.
எத்தகைய வரலாற்று இழப்பு இது பொதுவாகப் பண்டைக் காலம் தொட்டு இன்று வரை தமிழர்களிடம் மிகப் பெரிய ஒதுங்கல் மனப்பான்மை நிலவி வருகின்றது. படைப்பதுதான் கலைஞன் வேலை. படைப்பதைப் பறை சாற்றிப் பதிய வைப்பது அவன் தொழிலல்ல, என்றொரு மனப்பான்மை நீண்ட நெடுங்காலமாகவே தமிழ் மக்களிடம் நிலவி வந்துள்ளது. எல்லாமே ஈஸ்வர அர்ப்பணம் என்றொரு மத நம்பிக்கை கலைஞர்கள் மத்தியில் வேரோடி வந்துள்ளது. இதனால் தான் மகத்தான் மானுடக் கலைஞர்களான பல தமிழ்க் கலைஞர்கள் உங்களது படைப்புகளுக்குத் தாங்களே சொந்தங் கொண்டாடாமல் விட்டு விட்டனர்.
மம்மிகப் பந்தம் H (52 )

ஐபில் ஞாபகச் சிலைக்கு முன்பாக
மல்லிகைப் பந்தல் -G53)

Page 30
இதில் பெரிய துரதிர்ஷ்டம் என்னவென்றால் வரலாற்றுத் தொல்லியல் சான்றாதாரங்கள் அத்தனையுமே இவர்களது எளிமையான மன அடக்கத்தினாலும் பாரம்பரிய நம்பிக்கைகளினாலும் மறக்கப்பட்டுவிட்டன. சிலரால் திரிக்கப்பட்டு விட்டன என்பதுதான்.
வரலாற்றில் நமது அரும்பெரும் சாதனைகள் கலைஞனின் கருப்பொருட்கள் கண் முன்னே காணப்பட்டாலும் அவை பற்றிய சரியான சரித்திர ஆவணங்கள் நம்மிடையே காணக்கிடைக்கவில்லை. மேலை நாட்டவர்களிடம் நான் விரும்பும் அம்சமே அவர்கள் தமது எந்தவொரு சாதனைகளுக்குமே சரித்திர ஆதாரங்களை ஆவணப்படுத்தி வைத்து விட்டுச் சென்றிருப்பதுதான்.
அவர்கள் தமது மொழிக்கும், இனத்திற்கும், நாட்டுக்கும் செய்துவிட்டுச் சென்றுள்ள இந்தச் சிறப்பான அம்சத்தை நான் அந்தப் பாரிஸ் மாநகரத்து ஐபில் கோபுர வாசலில் நின்று கொண்டு சிந்தித்துப் பார்த்தேன்.
ஒரு மக்களின், ஒரு மொழியினரின், ஒரு தேசத்தவர்களின் சாதனையல்ல, இது. ஒட்டுமொத்தமாக மனுக்குலத்தின் அபார நவீன சாதனைகளில் இதுவுமொன்று என நினைத்துக் கொண்டேன். இந்தக் கோபுரத்தைப் பார்த்ததன் மூலம் என் வாழ்க்கையில் சிறு வயது முதற்கொண்டே இருந்து வந்த பாரிய ஆசைகளில் ஒன்று நிறைவேறிவிட்டது என அகமகிழ்ந்து போனேன். அடுத்த நாள் லண்டன் மாநகருக்குப் புறப்பட்டுப் போக வேண்டும்.
பாரிஸிலிருந்து லண்டனுக்குப் போக எனக்கு விமான டிக்கட் கைவசம் இருந்தது. எனது விமானப் பாதையே கொழும்பு-பாரிஸ்லண்டன்-கொழும்பு என முன்னரே ஏற்பாடாகி இருந்தது. பயணச் சீட்டும் அதன்படியே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனக்கு விமானத்தில் லண்டன் போக விருப்பமில்லை. சும்மா மா நகரங்களைப் பார்த்து வைப்பது அந்த நாட்டின் ஆத்மாவைப் பார்த்தது போல இருக்காது என்ற உணர்வுள்ளவன் நான்.
சுரங்க ரயில் மூலம் இங்கிலீஸ் கால்வாயைக் கடந்து மூன்று மணிநேரத்தில் லண்டனை அடைந்து விடலாம் எனச் சில நண்பர்கள் கூறினார்கள். இதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. வெறும் குகை வழி மூலம் அந்தப் பெரிய நாட்டுக்குள் நுழைய நான் விரும்பவில்லை.
எனவே முடிவில் புஸ்பராஜா தனது காரின் மூலம் என்னை லண்டனுக்கு அழைத்துச் செல்லுவதாக ஒப்புக் கொண்டார். ஒரு புலம்பெயர்ந்த யாழ்ப்பாணத்துத் தமிழனிடம் அதுவும் ஓர்
மல்லிகைப் பந்தல் 54 - ۔۔۔۔۔۔۔۔۔

எழுத்தாளனிடம் சகல செளகரியமும் கொண்ட ‘பென்ஸ்' கார் இருக்கலாம் என நான் ஆரம்பத்தில் எண்ணிப் பார்த்துக் கூட இருக்கவில்லை.
1987-ல் அரசாங்க விருந்தினராக நான் மாஸ்கோவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். மிகப் பிரமாண்டமான ஹோட்டலில் ஒரு மாதம் தங்க வைக்கப்பட்டிருந்தேன். அந்த நாட்களில் ரஷ்ய அரசாங்கத்தின் அரச விருந்தினனான எ6ாக்கு எனது போக்குவரத்திற்கென ஒரு பென்ஸ் கார் தரப்பட்டிருந்தது.
அடுத்து 1981ல் மதுரையில் தமிழாராய்ச்சி மகாநாடு தமிழக முதலமைச்சராக இருந்த திரு. எம். ஜி. ஆரால் நடத்தப் பட்டது. மாநாட்டின் பேராளராகக் கலந்து கொண்ட எம்மை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் தங்குமிடத்தில் தங்கவைத்திருந்தனர்.
அங்கும் காரல்ல, வசதியான பேருந்துகளை எமது பாவனைக்குத் தந்து கெளரவித்தது தமிழக அரசு. இவை அத்தனையும் அரசு நிறுவனங்கள் செய்த ஏற்பாடுகள். ஆகவே புலம் பெயர்ந்த தமிழனான புஸ்பராஜன் சகல வசதிகளும் நிரம்பிய பென்ஸ் காரில் என்னை அழைத்துச் சென்ற போது நான் பேருவகை கொண்டதற்கு காரணம் இருக்கிறது.
பழையபடி சிவதாஸினுடைய அறிவாலயம் புத்தக சாலையிலேயே அனைவரையும் சந்தித்தேன். தேநீர் அருந்திப் பிரியாவிடை பெற்றுக் கொண்டேன். விழாவிற்குச் சமூகம் தராத இலக்கியச் சுவைஞர்களில் அநேகர் கேள்விப்பட்டுக் கேள்விபட்டுக் குழுக் குழுவாக வரத் தொடங்கினர். அதுவே ஓர் இலக்கியச் சிறு கூட்டமாக அமைந்தது.
வந்தது சில தினங்கள்தான். தங்கினது சொற்ப நாட்கள் தான். நெருங்கிப் பழகியது சில மணி நேரங்கள்தான். ஆனால் அதில்தான் எத்தனை நெஞ்சு நெருக்கம்! எத்தனை மன ஈடுபாடு! இலக்கிய நேசிப்புக்குத்தான் இத்தனை வலிமை உண்டு. இத்தனை இறுக்கமுண்டு. பாரிஸ் மண்ணில் கால் பதித்த உடனேயே அந்த மண்ணைத் தொட்டு வணங்கினேன். இப்பொழுது அந்த மண்ணில் புலம் பெயர்ந்து வாழும் நம்மவர்களைத் தோள் தொட்டு நெருங்கி அவர்கள் அனைவரிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டேன்.
இனி எப்போது இந்த மண்ணுக்கு வரப்போகிறேன்?
மல்லிகைப் பந்தல் ( 55

Page 31
பட்டினத்திற்கு காரில் போவதே ஒரு புதிய அநுபவமாக
இருந்தது. எம்முடன் ‘உயிர் நிழல்' ஆசிரியர் குழுவைச் சேர்ந்த லக்ஷமியும் உடன் வந்தார். கார் ராஜவீதியில் ஓடிக் கொண்டிருந்தது. நான் சென்ற நாடுகளின் விதிகளையும் அவைகளின் நேர்த்தியையும், ஒழுங்குகளையும் அவதானிக்கத் தவறவில்லை.
g ரு தேசத்தின் தலைநகரிலிருந்து இன்னொரு நாட்டின் தலைப்
ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தையும் அதன் செழுமைப்பாட்டையும், அந்த நாட்டின் வளர்ச்சியையும் ஓர் அந்நிய நாட்டான் உடனடியாகப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அந்த நாட்டின் வீதிகளைக் கவனித்துத் தெரிந்து கொண்டாலே புரிந்து கொள்ள முடியும்.
இந்த ஐரோப்பிய வீதிகளின் நேர்த்தியையும், சீர்சிறப்புக்களையும் பார்த்துத் தெளிந்த நான் எங்களது நாட்டின் தலைநகராகவிருக்கும் கொழும்புத் தெருக்களையும் ஒரு கணம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டேன்.
ஒரு தேசத்தின் தலைநகராகக் கொழும்பு இருக்கிறது. இங்கே வீதிகள் வீதிகளாகவா காட்சி தருகின்றன? ஒரு பகுதியினர் கூட்டுக் குழுவாக வாகனங்களில் வந்து இறங்குவார்கள். ஒரு பக்கப் பாதைகளை வழிமறித்து வேலையைத் தொடங்குவார்கள். தெருவோரம் சிறு சிறு கிடங்குகளைத் தோண்டுவார்கள். வேலை தொடர்ந்து வாரக் கணக்காக நடைபெறும். இன்னொரு சாரார் வருவார்கள். கிளறப்பட்ட வீதியைச் செப்பனிடுவதை விட வேறொரு மூலையிலிருந்து திருத்தும் வேலை ஆரம்பிக்கப்படும். இதற்குள் மழை வேறு பெய்திருக்கும்.
மல்லிகைப் பந்தல் 56 - =ع )
 

தோண்டப்பட்ட தெருக் கிடங்குகளில் மழைநீர் தேங்கி, வாகனங்களை அலைக்கழிக்கும். பாதையில் முன்னரே பரவப்பட்ட கருங்கற்கள் நாலா திசையிலும் சிதறி வீதியே அலங்கோலமாகக் காட்சி தரும்.
இத்தகைய காட்சிகளைக் கடந்த காலங்களில் கொழும்பிலுள்ள பிரதான வீதிகளில் பார்த்துப் பார்த்துச் சலிப்படைந்து போயிருந்த எனக்கு, இந்தப் பெருவீதிகளின் ஒழுங்கையும் - துப்பரவையும், தூய்மையையும் பார்க்க மலைப்பாகவும் - ஒருவகையில் வியப்பாகவும் இருந்தது.
இப்பெரு வீதிகளின் இடைவழிகளில் பெற்றோல் போடும் சில இடங்களில் நாங்கள் தரித்து நின்று சிரம பரிகாரம் செய்து கொண்டோம்.
இந்த வீதியோரத் தரிப்பிடங்கள் கூட, எவ்வளவு அழகாகக் காட்சி தந்தன. மனசுக்கு ரம்மியமாக இருந்தது. சுற்றிவரப் பூந்தோட்டம். நடுவே அழகழகான சிறிய சிறிய ஒய்வெடுக்கும் மண்டபங்கள். சிற்றுண்டிச் சாலை, பரிசுப் பொருட்களின் விற்பனை நிலையம், தூய்மையான சுற்றாடல்.
அங்கேயே இருந்துவிடலாம் போலத் தோன்றியது. நேரம் போவதற்காக ஒவ்வொருவரும் தமது சுய அநுபவங்களைச் சுவை ததும்பச் சொல்லத் தொடங்கினோம். காரில் வீதியில் பயணிப்பது விமானம் பறந்து செல்வதைப் போன்ற மன மயக்கப்படுத்தியது. மற்றவர்களை விட, எனது கடந்த கால அநுபவங்களைக் கேட்டு ரசிப்பதிலேயே, கூடவந்தவர்கள் அதிகம் அக்கறை காட்டி உற்சாகப்படுத்தினர்.
மாஸ்கோவுக்கு அந்த நாட்டின் அரச அழைப்பின் பேரில் சென்று வந்ததாக முன்னர் ஓர் இடத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். எங்களுடைய பிரத்தியேகமான வாகனத்தைக் கண்டதும் மாஸ்கோ தெரு வீதிகளில் கடமையாற்றிக் கொண்டு நிற்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிமிர்ந்து விறைப்பாக நின்று "சலூட்’ அடிப்பார்கள். எனக்கோ பெரு வியப்பு.
யாழ்ப்பாணத்துத் தெரு ஒழுங்கைக்குள்ளால் பட்டப் பகல் வெயிலையும் பாராது ஒரு பழைய ரலி சைக்கிளில் ஓடி வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு யாழ்ப்பாணிக்கு - ஓர் எழுத்தாளனுக்கு - மாஸ்கோவில் இத்தனை பெரிய கெளரவமா?
ஆரம்பத்தில் இதன் சூட்சுமம் எனக்குப் புதிராகவே இருந்தது.
தங்கியிருந்த ஹோட்டலில் வந்து விசாரித்த போது தான் இந்த நிகழ்ச்சிகளின் மர்மம் துலங்கியது.
மல்லிகைப் பந்தல் - 57

Page 32
நாம் பிரயாணம் செய்த காரின் மகிமைதான் அது. இப்படியான பிரத்தியேகமான கார்கள் வீதியில் மிகச் சொற்பமாகத் தென்படும். காரணம் இப்படியான வாகனங்களில் பயணிப்பவர்கள் ரஷ்ய அரசாங்கத்தின் அதிவிசேஷ தகைமைமிக்க விருந்தினர்களாம். எனலே அவர்களுக்கு இந்தச் சலூட் மரியாதை.
சொல்லப் போனால் மனசுக்குள் எனக்கும் பெருமையாக இருந்தது. தமிழ் எழுத்தாளர் சார்பில் இந்த அரச மரியாதையை மெளனமாக அங்கீகரித்து ஏற்றுக் கொண்டேன்.
புஸ்பராசன் காரை ஓட்டிக் கொண்டே கதை கேட்கும் ஆவலில் என்னை உற்சாகப்படுத்தி வந்தார். லசஷமி அவர்கள் இடையிடையே குறுக்குக் கேள்வி கேட்டு எனது ஆர்வத்தையும் ஞாபகத்தையும் அதிகப்படுத்தினார்.
நானும் என்னுடன் சேர்ந்து வந்த சிங்கள எழுத்தாளரும் நாற்பத்தைந்து நாட்கள் மாஸ்கோவில் அரச விருந்தாளிகளாகத் தங்கியிருந்தோம்.
அந்த நாட்டுச் சாப்பாடுகள் தரமானவைதான். ஆனால் நமது பழக்கப்பட்ட நாவுக்குச் சுவையானவையாகத் தெரியவில்லை. எனவே சாப்பாட்டு நேரங்களில் மேசையில் அமர்ந்திருக்கும் போது நாமிருவரும் நெளிந்து வளைவோம். சாப்பிட்டு முடிப்பதே எமக்கொரு தண்டனை போலத் தோன்றியது. தவிர்க்க முனைந்தாலும் பசிக்குமே!
மானாமதுரையைச் சேர்ந்த முகம்மது ஷெரீப் என்பவர் மாஸ்கோவில் புத்தகப் பதிப்பகமொன்றில் மொழி பெயர்ப்பாளராகக் கடமை புரிந்து வந்தார். எனது நண்பர். எழுத்தாளர். இவரது தொலைபேசி எண்ணைச் சுழற்றி இவருடன் தொடர்பு கொண்டேன்.
ஆள் அகப்பட்டார். ஞாயிறு காலை வரச் சொன்னார். நான் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாகச் சொல்லி மழுப்பிவிட்டேன். இரவு வர முடியுமா? எனக் கேட்டார். அதற்கும் ஏதோ சமாதானம் சொல்லித் தட்டிக் கழித்து விட்டேன்.
* அப்போ ஞாயிறு மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருகிறீர்களா?” எனக் கேட்டார். இப்படியான ஒரு மத்தியானச் சாப்பாடுதானே, எமது நோக்கம் உடனே ஒட்புக் கொண்டேன். என்னுடன் ஒரு சிங்களச் சகோதரரும் உடன் வருவார் என்ற தகவலையும் சொன்னேன்.
ஞாயிறு மத்தியானம் நண்பர் முகம்மது ஷெரீப் வீட்டுக்கு
மல்லிகைப் பந்தல்- -G58)

விருந்தினராக நானும் நண்பரும் சென்றோம். அவர் வசித்தது அடுக்கு மாடிக் கட்டடத்தில் மூன்றாவது மாடி. எமது கார் அக்கட்டட வாகன நிறுத்துமிடத்தில் தரித்ததும் பல குழந்தைகள் கண்களில் வியப்பு மிதக்க எங்களை வியப்புக் கலந்த ஆர்வத்துடன் பார்த்தனர். முகம்மது ஷெரீப்புக்கு ஒரே சந்தோஷம். அன்றைய உணவின் சுவை இன்றும் எனது அடிநாக்கில் சுரந்து நிற்கிறது.
ஒரு வாரம் சென்றிருக்கும். முகம்மது ஷெரீப்பும் அவரது துணைவியாரும் எங்கள் இருவரையும் தேடி நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஒரு நாள் இரவு வந்தனர்.
முகம்மது ஷெரீப் என்னைக் கட்டியணைத்தார். அவருக்கு மெத்தப் புளுகம். ‘நீங்கள் எங்களது வீட்டுக்கு விருந்தினராக வந்ததினால் எங்களது அந்தஸ்தும் கெளரவமும் இந்த ஏரியாவில் ஏறிப்போய் விட்டது. எங்களை அவர்கள் இப்போ பலவிதமாகப் பார்க்கிறார்கள்." என்றார் முகம்மது ஷெரீப்.
என்ன காரணம் என எனக்கு ஆரம்பத்தில் புரியவில்லை. விவரமாகச் சொல்லும்படி கேட்டேன். 'இப்படியான பென்ஸ் கார்கள் எங்களது பிரதேசத்துக்குள் எந்தக் காலத்திலுமே வருவதில்லை. இந்தக் காரில் வருபவர்கள் அரசாங்கத்தின் அதி உயர் சிரேஷ்ட விருந்தினர் தான். அதிலும் வெளி நாட்டவர் - இப்படியான காரில் நீங்கள் எங்கள் வீட்டுக்குச் சாப்பிட வந்ததைப் பார்த்த அயலவர்கள் இப்போ எங்களையும் கெளரவமாகப் பார்க்கின்றனர்.” என்றார்.
இந்தத் தகவல் எனக்குப் பெரு வியப்பைத் தந்தது. இப்படியே சுவையாகப் பேசிப் பேசிக் கலந்துரையாடிய வண்ணம் இங்கிலாந்தையும் பிரான்ஸையும் கடலால் பிரிக்கும் இங்கிலிஸ் கால்வாய் பிரதேசத்திற்குள் நுழைந்தோம்.
மல்லிகைப் பந்தல் ( 59

Page 33
ங்கிலிஸ் கால்வாய் எனப் பிரான்ஸையும் இங்கிலாந்தையும் பிரிக்கும் கடலுக்குப் பெயர் வழங்கி வந்த போதிலும் கூட, அது பெரிய கடலாகவே எனக்குத் தென்பட்டது. பாரிய கப்பல்கள், பிரயாணிகளையும் அவர் தம் உடைமைகளையும் இக்கரைக்கும் அக்கரைக்கும் ஏற்றி இறக்குவதில் அடிக்கடி ஈடுபட்டு வந்தன.
தனுஷ்கோடி இறங்குதுறை, புயலால் கடல் கொள்ளப்பட்ட காலத்திற்கு முற்பட்ட காலங்களில் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கும், அதன் பின்னர் தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரத்திற்கும் அடிக்கடி கடற் பிரயாணம் செய்து தமிழகம் போய் வந்துள்ளேன்.
அது ஓர் அநுபவம். இது இன்னுமோர் அநுபவம். காரிலிருந்த வண்ணமே பாஸ்போர்ட் சோதனைகளை முடித்துக் கொண்டோம்.
நாங்கள் பயணித்து வந்த காரை அங்கு கரையில் நிலை கொண்டிருந்த கப்பல் தளத்திற்குக் கொண்டு சென்றோம். இப்படியாகப் பலவகையான வாகனங்கள் அங்கு முன்னரே வரிசையிடப்பட்டிருந்தன.
கப்பலிலுள்ள கன்ரீனுக்கு அருகாமையில் இருக்கையில் நாம் அமர்ந்து கொண்டோம்.
கடற் காட்சிகள் ரொம்பவும் ரம்மியமாகவிருந்தன. பிரயாணிகள்
மல்லிகைப் பந்தல் ـ G60)

அப்பிரயாணத்தை ரசித்து வந்ததற்கு அடையாளமாக ஒவ்வொருவருடைய கையிலும் ஐஸ்கிறீம் கப்கள் காட்சி தந்தன.
இதைப் பார்த்ததும் எனது நாவிலும் நீர் சுரக்கத் தொடங்கியது. புஸ்பராசாவிடம் எனது ஆசையை வெளியிட்டேன். அவர் எல்லாருக்குமாகச் சேர்த்து ஐஸ்கிறீம் கப்களை வாங்கித் தந்தார்.
அந்தக் கப்பலில் ஒரு குட்டி ஐரோப்பாவே பயணம் செய்தது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த உல்லாசப் பயணிகள் அங்கு குழுமியிருந்தனர். பார்ப்பதற்குச் சந்தோஷமாக இருந்தது.
இங்கிலாந்து மண்ணைத் தொட்டது . நாம் வந்த கப்பல். எந்த விதமான அவசரமுமில்லாமல் நாம் தொடர்ந்து காரில் லண்டனை நோக்கிப் பயணப் பட்டோம்.
பயணச் சோர்வு தெரியவில்லை. புது நாடு. புதுச் சூழ்நிலை, புதிய புதிய முகங்கள். எனக்கு எல்லாமே ஆச்சரியம் கலந்த வியப்பாகவே இருந்தது. நீண்ட காலமாகக் கற்பனை உலகமாக இருந்த லண்டன் மாநகரைத் தரிசிக்கப் போகிறேன் என்ற ஆவலில் நான் விழிப்பாகக் காத்திருந்தேன். கடைசியாக லண்டன் மாநகரை வந்தடைந்தபோது முன்னேற்பாட்டின்படி நண்பர் ரங்கன் தேவராஜன் வீட்டை வந்தடைந்தோம்.
அன்று ஆயிரமாம் புத்தாண்டின் கடைசி நாள். டிசம்பர் 31ம் திகதி, என்னை லண்டனுக்கு அழைக்க முன் முனைந்தவர்கள் மூவர். ஒருவர் ரங்கன், மற்றவர் ரீகங்காதரன், அடுத்தவர் சிவலிங்கம் என்பவர். இவர்கள் முன் முயற்சி எடுத்து அழைக்காது போயிருந்தால் நான் லண்டனுக்கே வந்திருக்க மாட்டேன்.
அடுத்த நாள் புத்தாண்டு. ஆங்கில புதுவருடப் பிறப்பு. நான் லண்டனுக்கு வந்து சேர்ந்து விட்டதைத் தகவல்கள் மூலம் தெரிந்து கொண்ட பல நண்பர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தனர். விசாரித்துத் தெரிந்து கொண்டனர்.
புத்தாண்டுக்கு அடுத்த நாள் எனது நீண்ட நாள் தோழர் ரீகங்காதரன் காரெடுத்துக் கொண்டு வந்திருந்தார். தனது விட்டுக்கு அழைத்துச் சென்றார்.
என்னுடைய வசதிக்காகத் தான் வேலையிலிருந்து லிவு எடுத்திருப்பதாகவும் நான் ஊர் திரும்பும் வரை என்னுடன் இருந்து ஒத்துழைப்பதாகவும் உறுதி கூறினார். ஐரோப்பிய நாடொன்றில் மனைவியும் வேலை செய்தால்தான் வாழ்க்கையைச் சுமூகமாகக்
மல்லிகைப் பந்தல்- - (61)

Page 34
கொண்டு செல்ல இயலும். இல்லாது போனால் குடும்பம் பொருளாதாரக் கஷ்டங்களுக்குள் தள்ளப்பட்டு விடும். மீள முடியாது.
இது எனக்குத் தெரியும். இருந்தும் ஒரு சகோதர எழுத்தாளனுக்கு துணையாகத் தொடர்ந்து லிவு போட்டு உதவுவதென்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று என்றே நான் கருதுகிறேன்.
முதலில் நான் லண்டனில் விரும்பியது நமது சகோதர எழுத்தாளர்களை முகம் பார்த்துப் பேச வேணடும் என்பதுதான்.
இதன் அடிப்படையில் அங்கு வாழும் பத்மநாப ஐயரைப் பார்க்கவேண்டும் என விரும்பினேன். பத்மநாப ஐயரிடம் அழைத்துச் சென்றார் ரீகங்காதரன். அவருடன் நீண்டநேரம் உரையாடினேன். நாட்டிலுள்ள சகல எழுத்தாளர்களின் சுக சேமங்களையெல்லாம்; கேட்டறிந்தார், அவர். அடுத்த நாள் வயது முதிர்ந்த பெண்களின் மன ஆறுதல் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொண்டார். நானும் சம்மதித்தேன்.
அங்கே ஐம்பது அறுபது பெண்கள் குழுமியிருந்தனர். எல்லாம் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்களது முகங்களைப் பார்ப்பதே எனக்கு மன ஆறுதலாக இருந்தது. அவர்களுக்கும் அப்படியே “நீங்கள் ஒரு புதிய பனிமண்ணில் இன்று வாழுகிறீர்கள். ஒரு மண்ணிலிருந்து பிடுங்கி வேறொரு மண்ணில் நடப்பட்டுள்ளிர்கள். இருந்தும் உங்களது மனம் உங்களது சொந்த மண்ணில்தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் புலம் பெயர்ந்து வந்துள்ள வாழ்க்கை முறையை, சூழ்நிலையை விரும்பாது போனாலும் கூட, அதற்கிணைந்து வாழப் பழகிக் கொள்வது தான் சரியானதாகும். இல்லாது போனால் நீங்கள் வாழும் வீட்டுக்குள்ளேயே தனித் தீவாக உங்களது பிள்ளைகளால் ஒரம் கட்டப்பட்டு விடும் துரதிர்ஷ்ட நிலைக்கு ஆளாகுவீர்கள்.” என ஒரு சிற்றுரையில் குறிப்பிட்டுப் பேசினேன்.
அடுத்துச் சிவன் நிலைய மண்டபத்தில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன். புதியதொரு தமிழர் அமைப்பு இவ்விழாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. நிறைய இலக்கியச் சுவைஞர்கள் வந்திருந்தனர். எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் இவ்விழாவில் பங்கு பற்றிச் சிறப்பித்தார்.
இரண்டொரு நாட்கள் சென்ற பின்னர் அவைக் காற்று நாடகக் கலைஞர் பாலேந்திரா அவர்களும் அவரது துணைவியாரும் தமது இல்லத்தில் ஓர் இலக்கியச் சந்திப்புக்கு ஒழுங்கு செய்திருந்தனர். அங்குதான் எனது நீண்ட நாளைய நண்பர் மு. புஷ்பராஜனைச்
மல்லிகைப் பந்தல் =(62)

சந்தித்து உரையாடினேன். ஒவியர் கிருஷ்ணராசாவும் வந்திருந்தார். பலரும் அங்கு சந்தித்துக் கொண்டோம்.
பாரிஸிற்கு வந்தும் பாதாள ரெயிலில் பிரயாணம் செய்ய முடியவில்லையே என்ற கவலையை லண்டன் நண்பர்களுக்கு ஒரு சம்பாஷணையில் சொல்லியிருந்தேன். நண்பன் சிவலிங்கம் என்னை அழைத்துக் கொண்டு லண்டன் பாதாள ரெயிலில் லண்டன் மாநகரை வலம் வரச் செய்து விட்டார். காமன்ஸ் சபை, பிரபுக்கள் சபை, பிரதமரின் உத்தியோக வாசஸ்தலம், பிக்பென் மணிக்கூண்டு எனப் பல பிரபலமான இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று காட்டினார்.
பிரிட்டிஷ் பிரதமரின் இல்லத்திற்கு முன்னால் நடைபாதை ஓரத்தில் ஏதோ ஓர் ஆபிரிக்க நாட்டில் நடந்து வரும் அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சத்தியாக்கிரகப் போராளி பொலித்தீன் உறைகளினால் கூடு கட்டி, எதிர்ப்புச் சுலோகங்களை முன்னால் எழுதிவைத்த வண்ணம், தனிமனிதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்ததைக் கவனித்ததும் நான் ஆச்சரியத்தினால் பிரமித்துப் போய்விட்டேன்.
'இது நமது நாட்டில் நடைமுறைச் சாத்தியமா?’ என என்னை நானே கேட்டுக் கொண்டேன். எனது வியப்பைப் புரிந்து கொண்ட தோழர் சிவலிங்கம் 'இதுதான் கிரேட் பிரிட்டன்!” என்றார்.
பல எழுத்தாளர்கள் ஒருங்கு சேர்ந்து இலக்கியச் சந்திப்பொன்றை ஒழுங்கு செய்திருந்தனர்.
மிகப் பொறுப்பாகவும் கச்சிதமாகவும் அமைந்திருந்தது, இந்தச் சந்திப்பு. மிகப் பெறுமதி வாய்ந்த சந்திப்பாகவும் இது திகழ்ந்தது.
நான் சந்திக்க விரும்பிய பல எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். நான் லண்டனில் சந்திக்க விரும்பிய பலர் வந்திருந்தனர். மு. நித்தியானந்தன், இளைய அப்துல்லாஹற், புஷ்பராஜன், இளவாலை அமுது, பாலேந்திரா, விமல் குழந்தைவேல், பூரீகங்காதரன், சிவலிங்கம், நேமிநாதன் இன்னும் பல இளம் எழுத்தாளர்கள். இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு இச் சந்திப்பைச் சிறப்பித்தனர்.
லண்டனில் இயங்கும் இரண்டு வானொலிச் சேவைகளும் எனது பேட்டியை ஒலிபரப்பின. வானொலியில் எனது குரலைச் செவி மடுத்த எழுத்தாளர்கள் தமிழ்ப் பிரியாவும், சந்திரா தியாகராஜாவும் நீண்ட வருடங்களுக்குப் பின்னர் தொலைபேசி மூலம் எனது பேட்டியில் பங்கு கொண்டனர்.
‘தீபம்’ தொலைக்காட்சி ஒரு மணி நேரம் பேட்டி கண்டது. யேட்டி
மல்லிகைப் பந்தல் ( 63 }

Page 35
பாரிஸில் யாழ்ப்பாணத்தாரின் சலூன் ஒன்றில்
Iள்விகைப் பந்தள்
 

கண்டவர் எனது நீண்ட நாளைய நண்பர் கவிஞர் இளைய அப்துல்லாஹ். இந்த ஒளிபரப்பு இரண்டு நாட்கள் இடம் பெற்றன. கடைசியாக ஐரோப்பிய புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து விடைபெறும் நாள் சமீபித்தது.
இதற்குள் டென்மார்க், நோர்வே, இத்தாலி, சுவிஸ், சுவீடன், பிரான்ஸ், போன்ற நாடுகளிலிருந்தெல்லாம் இலக்கிய நண்பர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர்.
நட்ட நடுச் சாமம். இத்தாலியிலிருந்து ஒரு நண்பர் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார். வானொலியில் மல்லிகை ஆரம்பித்த காலத்தில் எனக்கு நடந்த சுவையான சம்பவம் ஒன்றை விவரித்துக் கூறினேன்.
யாழ்ப்பானம் முற்றவெளியில் அமைந்துள்ள மணிக் கூண்டுக் கோபுரத்தின் முன்னால், என்னிடம் காசு தந்து மல்லிகை வாங்கிய இளம் நண்பர் ஒருவர், வாங்கிய மல்லிகையை இரண்டாகக் கிழித்து என் முகத்தில் அடித்தார் என்ற முப்பது வருடங்களுக்கு முன்னர் எனக்கு நடந்த சம்பவம் ஒன்றை விபரித்தேன். இதைச் செவிமடுத்த அந்த இத்தாலிய நண்பர் "ஐயோ, ஐயா! அந்த ஆள் நான்தான். ஐயா! அப்பொழுது நான் விடலைப் பருவத்தினன். வயகக் கோளாறு, இப்ப, இந்த நேரம் உங்களிட்டை மன்னிப்புக் கேட்கிறேன்! என்றார்.
இது லண்டனில் எனக்குக் கிடைத்த புது அநுபவம். விடைபெறும் நாள் வந்தது. நான் நாட்டுக்குத் திரும்புவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக எனக்கொரு பாராட்டு விழா நடைபெற்றது.
சிவன் நிலைய மண்டபத்தில் 2001-2001 சனிக்கிழமை பி. ப. 6.50க்கு அவ்விழா ஆரம்பித்தது. பத்மநாப ஐயர் வரவேற்புரை, நிகழ்த்தினார். திருவாளர்கள் எஸ். ரீரங்கன், பாமா ராஜகோபால், இளைய அப்துல்லாஹ், மு. நேமிநாதன், திருமதி. ஆனந்தராணி பாலேந்திரா, ஆகியோர் பாராட்டுரை நிகழ்த்தினார்கள்.
ஜீவாவின் இலக்கியம்
- மு. நித்தியானந்தன் மல்லிகையும் சிற்றிலக்கிய ஏடுகளும்
- மு. புஷ்பராஜன் ஜீவாவின் அரசியல்
- வி. சிவவிங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
பர்ரிகைப் பந்தம்

Page 36
நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தவர்
- பூரீகங்காதரன்
கடைசியாக என் பிரியாவிடை உரை நடைபெற்றது.
“மூன்று ஐரோப்பியத் தலை நகரங்களில் முப்பது நாட்கள்”, என்ற தலைப்பில் எனது அநுபவங்களைத் தொகுத்துச் சொன்னேன். இந்த முப்பது நாட்களில் நான் கண்ட பல்வேறு தகவல்கள், சம்பவங்களை விவரித்துக் கூறினேன். ஐரோப்பாவின் மூன்று தலை நகர்களுக்கும், முப்பது நாட்களுக்குள் சென்று - பல இலக்கிய நெஞ்சங்களை நெருங்கி - அன்பு செலுத்திய - அன்பு செலுத்தப்பட்ட - ஒரேயொரு எழுத்தாளன் நான்தான் என்பதைச் சம்பவங்கள் நிரூபித்துக் காட்டிவிட்டன என்பதையும் கூறினேன். மிக மிகச் சாதாரண ஒர்எழுத்தாளனுக்கு இத்தனை பெரிய மரியாதை கலந்த வரவேற்பை எனக்குத் தந்ததாக நான் கருதவில்லை. என் மண்ணைச் சேர்ந்த பல படைப்பாளிகளுக்கும் தந்த கெளரவமாகவே கருதி இதை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி சகலரிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டேன்.
மல்லிகையின் வளர்ச்சிக்காக ஒரு இலட்சம் ரூபா தந்துதவுவதாக ரீகங்காதரன் பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் மேடையில் வைத்தே அறிவித்தார். பாராட்டு விழா முடிந்தது. வலு சிறப்பாக நடந்தேறியது.
நேரம் நள்ளிரவை அண்மித்துவிட்டது. என்மீது அன்பு கொண்டவர்கள் கலைந்து செல்வதாகத் தெரியவில்லை.
பலர் மேடையேறி வந்து வாழ்த்தினர் - விடை தந்தனர். புத்தகங்களை ஆவலுடன் வாங்கிச் சென்றனர். என்னுடைய பழைய நண்பர்களான நேமிநாதன், ஜோசப், உரும்பராய் நடராஜா போன்றோரை இந்த விழாவில் சந்தித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. லண்டனுக்கு வந்த நாள் தொட்டு பல்வேறு சொந்தச் சிரமங்களுக்கு மத்தியிலும் தனது இல்லத்தில் வைத்துக் கனம் பண்ணியதுடன் பராமரித்து, போகின்ற இடமெல்லாம் தனது காரில் அழைத்துச் சென்று காத்திருந்து, வலு பக்குவமாக அழைத்து வந்து உபசரித்து, திரும்பும் போது விமான நிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்த எனது நீண்ட நாளையத் தோழர் நாக. ரீகங்காதரனிடமும், அன்னாரது குடும்பத்தினரிடமும் விடை பெற்றுக் கொண்டு திரும்பவும் கொழும்பு மாநகரம் வந்து சேர்ந்தேன், வலு ஆரோக்கியமாக.
மல்லிகைப் பந்தல் 66

இலக்கில்லாப் பயணத்தை நடத்தி வந்திருந்தாலும், அது தன் பாதையைச் செப்பனிட்டு அகலித்து வருகிறது. புகலிடத்தில் சமகால இலக்கியம் அமைப்பவர்களில் ஒரு சிலர் தம் புகழ் விளங்கப் பொய்களை எவ்வளவுதான் இப்பாதையில் விதைத்தாலும் இலக்கியச் சந்திப்பு என்னவோ அவற்றை இலகுவாகக் கடந்து விடும் வளமும் பலமும் பெற்று வருகிது.
இறுதியாக, பிரான்ஸில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்புச் செய்த மிக முக்கியமான விடயம், ஈழத்து இலக்கியத்தின் ஒரு பாதையாகத் திகழும் டொமினிக் ஜீவா அவர்களை அழைத்து புகலிட இலக்கியப் பரிவர்த்தனையோடு பகிர்ந்து கொண்டதுதான்.
ug: வருடங்களுக்கும் மேலாக ஓர் இலக்கியச் சந்திப்பு ஓர்
தலித்தியவாதியும், மார்க்சியவாதியுமான டொமினிக் ஜீவா அவர்களை இலக்கியச் சந்திப்பு அழைத்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இலக்கியச் சந்திப்பு அதன் ஆரம்பம் முதலே அனைத்து ஒடுக்கு முறைக்கும் எதிராக மனித உரிமைகள் சார்ந்து செயற்பட்டு வருகிறது.
டொமினிக் ஜீவா, 50 ஆண்டுகளுக்கு மேலான இடது சாரிச் சிந்தனைகளினூடு சிறுகதைப் புனைவிலக்கியத்திற்குள் புகுந்தவர். இன்னும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு அங்கத்தவராகக் கடமையாற்றுபவர். பிறப்பாலும் இவர் ஒரு தலித். ஆகையால் சைவ, வேளாள, யாழ்ப்பான மேலாதிக்க எதிர்ப்புகளை எதிர்க்கொண்டு செயற்பட வேண்டியவராக இருந்தார்.
வெறுமனே பத்திரிகைகள், சஞ்சிகைகளில் தனியே எழுதிக் கொண்டிருப்பதை விடுத்து, தாம் கொண்ட கருத்து நிலைகளில் இருந்து
மல்லிகைப் பந்தல் 67 { ”ܐ )

Page 37
தாம் சார்ந்த வர்க்கச் சக்திகளை ஒழுங்கமைக்கவும், நெறிப்படுத்தவும் வேண்டும் என்பதற்கும், அப்பால் தலித்துக்களாகவும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தவர்களாகிய நாம் நமது எழுத்துக்களுக்கு அடுத்தவர் தயவை வேண்டாத ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என எண்ணினார். உருவாக்கினார்.
'மல்லிகை மாத இதழ் 1966ம் ஆண்டு ஆகஸ்டில் உருவாகியது. இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கும் "மல்லிகையில் தொடர்ந்து ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் செயற்பட்டு வரும் டொமினிக் ஜீவா அவர்கள் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுப் போராடினார். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட எழுத்தாளர்களுக்கும் தொழிலாள, விவசாய வர்க்கத்தினர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து 'மல்லிகையை இன்றளவும் நடத்தி வருகிறார். அவர் என்றும் கட்சி பேதம்
மஸ்வினகப் பந்தய்
-68)
 
 

பாராட்டியவரல்ல. எவள் எங்கிருந்தாலும் மனித சமூக விடுதலையின்டால் உண்மையாக ஊழியம் செய்வோரை இனம் கண்டு அவர்கட்டு உரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பவர்.
மல்லிகை சஞ்சிகைக்கூடாக சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு, வர்க்க ஒடுக்குமுறை எதிர்ப்பு, நச்சு இலக்கிய எதிர்ப்பு எனப் போராடி வந்த இவர், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர். அதற்கூடாக சிங்கள-தமிழ் இலக்கிய புத்திஜீவிகளுக்கிடையில் இனைப்பு. ஈழ - இந்திய முற்போக்கு இலக்கியப் பரிவர்த்தனை என இந்திய, இலங்கை சார்ந்த சமூக எழுத்து இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்து உழைத்து வருபவர்.
தற்போது புலம் பெயர்ந்த ஈழத்தவர்களின் வாழ்வு, இலக்கிய முயற்சிகள் என்பவற்றோடு அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் டொமினிச் ஜீவா அவர்களை இலக்கியச் சந்திப்புக்கு அழைத்து அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது. இலக்கியச் சந்திப்பு வரலாற்றில் மிகவும் முக்கியமான விடயம்.
இலக்கியச் சந்திப்பில் டொமினிக் ஜீவாவின் உரை மிகளியும் சிறப்பாக இருந்தது. ஒன்றரை மணி நேரங்களாக உரையாற்றிய அவர் தமது பல்வேறுபட்ட அநுபவங்களையும் அவை ஒவ்வொன்றையும் எப்படிக் கடக்க நேர்ந்தது என்பதையும் அவற்றிற்குரிய உணர்வுகளோடு உயிரோட்டமாகவும் தந்தார்.
100 பேர் வரையில் கலந்து கொண்டிருந்த, அனைவர் கண்களிலும் அவர் உரை கண்ணிரை வரவழைத்ததை வேறு எங்கும் பார்த்தல் அரிது. அவர் உரை முடிந்தபோது பங்கு பற்றிய அனைவரும் எழுந்து நின்று 10 நிமிடங்களுக்கும் மேலாக கரகோஷம் செய்து அவரைக் கெளரவித்தார்கள்.
இலக்கியச் சந்திப்பிற்கு பிரான்எல் வந்திருந்த டொமினிக் ஜீவா அவர்கள் பெர்லினிலும் (ஜேர்மனி), லண்டன் நகரிலும் பல அரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
டொமினிக் ஜீவாவை ஐரோப்பாவிற்கு அழைப்பதற்கு பலர் உதவி புரிந்து இருந்தாலும் பல இன்னல்களுக்கும் மத்தியில் அவரை அழைத்தே தீரவேண்டும் என முயற்சிகளை மேற்கொண்ட இலக்கியச் சந்திப்பு செயற்குழுவினர்களான புஸ்பராஜா. அசோக், லக்ஷ்மி, கலைச் செல்வன் ஆகியோர் முக்கியமானவர்கள். தொடர்ந்தும் இலக்கியச் சந்திப்புத் தனது பாதையை ஆகளித்து செப்பனிடும் என எதிர்பார்க்கலாம்
நன்றி : "உயிர்நிழல்.
மய்மிகைப் பந்தல் -C69)

Page 38
டொமினிக் ஜீவாவுடனி
gpui Géril Gî
எனக்கே இது பெரிய ஆச்சரியம் தான். என்னை விட, அற்புதமான மக்கள் செல்வாக்குப் பெற்ற வெகுசனப் பிரபல்யமான எழுத்தாளர்களான ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், ரகுநாதன், விந்தன், க. நா. சு போன்றவர்களே குறிப்பிடப்பட்ட காலத்திற்கு மேலே இலக்கிய ஏடுகளைக் கொண்டு நடத்த இயலவில்லை.
இது கவனத்தில் கொள்ளத் தக்கது. இப்படியாக இடை நடுவில் மரணித்துப் போவதுதான் சிற்றேடுகளின் மரபு.
மல்லிகைப் பந்தல்- 700
 
 
 

இது காலம் காலமாக நடந்தேறி வருவது. அதாவது சிற்றிலக்கிய ஏடென்றால் 5 வருடம். இது எப்படி என்னாலை அந்த 5வருடத்தையும் தாண்டி 35 வருடத்திற்குக் கொண்டு வர முடிந்தது என்று நானும் ஆழமாக யோசிக்கிறனான் தான். இதற்கு என்ன காரணம்? நான் நினைக்கிறேன் நான், இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டேன் எனறு.
ஏன், என்னத்துக்கு ஒரு பத்திரிகை தோல்வி அடையுது? பொருளாதாரமா? நானும் அவ்வளவு பெரிய வசதி படைச்சவனோ, அல்லது இலக்கியத்துக்குப் பணத்தைச் செலவளிக்க வேணுமெண்ட அந்த நோக்கமோ எனக்கு இல்லை. அப்ப இதற்கு என்ன காரணம்? அப்படியெண்டு நான் யோசித்தால், நான் ஆரம்பத்திலேயே இரண்டு பேரை முன்னுதாரணமாகக் கொண்டனான். ஒன்று எஸ். எஸ். வாசன். இன்னொன்று பெரியார். எஸ். எஸ். வாசன். அப்ப ஒன்றரை அணா. அதாவது ஒன்றரைச் சதம். அது தான் அவரின்ரை, அந்தச் சஞ்சிகையின் விலை. அப்ப அவர் அங்கை ஒரு ஆய்வு செய்து. சும்மா இருக்கிற பெண்களில் குறிப்பாக மயிலாப்பூரைச் சுத்தி இருக்கிற பிராமணப் பெண்கள் படிப்பில்லாமல் பொழுது போகாமல் இருக்கிறவர்களை நோக்கத்தில் கொண்டு மயிலாப்பூரை மையமாக வைத்துத்தான் முதற் பத்திரிகைகளைக் கொண்டு வந்தார். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அது வேரூன்றத் தொடங்கிவிட்டது. சூழ்நிலை, அரசியல் பின்னணி, சுதந்திரப் போராட்டம் அப்படியாக பெரியார் மிக வலிமையாகத் தன்னுடைய குடியரசை நடத்தினதால் அதற்குச் சரியான எதிர்ப்பு இருந்தது. அப்ப அவர் என்ன செய்தார் என்றால் தமிழ் நாட்டில் இருக்கிற சலூன் கடைகள் எல்லாத்தையும் ‘கவர்' பண்ணினார். நம்ம புள்ளையஸ், "நம்ம புள்ளையளி’ எண்டு, அதில இரண்டு டெக்னிக் இருக்கு. சலூனில இருக்கிற வசதி என்றால். எல்லோரும் பத்திரிகையைப் பார்ப்பான். ஒரு நாளைக்கு முப்பது பேர் வந்தால் குறைஞ்சது இருபது பேரின்ர கண்ணிலையாவது படும். அப்ப இவர் மெதுவாகத் தன்னுடைய போராட்டங்கள், குடியரசு, விடுதலை, இதுகளை வைச்சு கொஞ்சம் பரவல்படுத்தி வர அவருக்கு ஒரு தளமாகப் போச்சு இந்தச் சலூன்கள்.
பெரியார் சலூனைத் தளமாக வைச்சிருந்தார். அப்ப எனக்கு படார் எண்டு ஒரு யோசனை வந்தது. அட! அவர் சலுானை வைச்சு யோசிக்கிறார். நான் அந்த அபிமானத்தை வைச்சு யோசிச்சால் என்ன எண்டு. இதற்காக வேண்டி நான் கொழும்பு, மலை நாடு அங்கை இங்கையெல்லாமாச் சலூன்கள் உள்ள முகவரிகளை எடுத்து ஆரம்பத்திலை சஞ்சிகையை அனுப்பிறது. அப்ப மல்லிகை முப்பது சதம். ஆனால். காசு வருகுதோ வரவில்லையோ அனுப்பி விடுவேன்.
மல்லிகைப் பந்தல் { 71. )

Page 39
அதிலையும் நான் கொழும்புக்கு ஒரு மாசத்தில ஒருக்கால் போவன். அப்ப போனால் கொண்டு போய்க் குடுக்கிறது. பாவம் இவன் வந்து ஏதோ செய்யிறான் எண்டு காசு ஒருவேளை தருவார்கள். அல்லது இரண்டு மாதத்துக்கு ஒருக்காப் போனா ஏதாவது தருவார்கள். ஆனால் எனக்கு காசல்ல. பிரசாரம் தான் முக்கியம். அப்பிடி, அப்படிக் கொண்டுவர மல்லிகை கொஞ்சம் சின்னப் பத்திரிகை தான். ஆனால் அந்தப் பேர் எழும்பிற்றுது. மல்லிகையின்ர வெற்றிக்குக் காரணம் என்னெண்டா
ஆந் திர, மராட்டியத் தலித்துக்களும் நாங்களும் ஒன்றல்ல. அதேமாதிரி இங்குள்ள*
பிராமணன் அங்குள்ள பிராமணன் அல்ல. இங்கே ஆதிக்க சக்திகள் யார் என்றால் சைவ வேளாளர். எனவே அவர்களுக்கு எதிராக வைக்கப்பட வேணுமே தவிர கம்மா இங்கே
இருக்கிற அப்பாவிப் பிராமண னுக்கு
iš: எதிராக வைக்கிறதிலை :
மல்லிகை வித்ததல்ல. மல்லிகையின்ர பேர். அதனுடைய பிரபல்யம்.
இப்ப ஒரு வரலாறு எழுதிக் கொண்டிருக்கிறன். கொஞ்சம் கொஞ்சமா பெயர் வந்தவுடனை இரண்டு விசயத்தை நான் கையாண்டன். ஒன்று படிச்சவனுக்கு பத்திரிகை நடத்திறது எண்டால், யாழ்ப்பாணத்துக்குள்ள தான் நடத்தலாம். யாழ்ப்பாணத்தான் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டான். சாதி பாப்பான். நான் என்னத்தைத்தான் அற்புதமாக நடத்தினாலும் அவன் இதை ஒரு பத்திரிகை எண்டு சொல்ல மாட்டான். அப்ப இதுக்கு மாற்று வழி என்ன? யாழ்ப்பாணத்தான் அல்லாத வர்களிடையிலும் போக வேணும். அப்ப முஸ்லிம்களை ‘கவர்' பண்ணினனான். அப்ப என்னென்றால் பதியுதீன் முகம்மத்தின் அரசியல். அந்த நேரம் அவர் கல்வி அமைச்சராக இருந்ததால ஒரு புதிய சமூகம் வெடிச்சுக் கொண்டு வந்தது. அப்ப நான் அதை விளங்கிக் கொண்டன். வெறும் வர்த்தகச் சமூகமாக இருக்கிற ஒரு சமூகம் ஒரு புதிய கல்விச் சமூகமாகப் பாய்ச்சல் பாயப் போகுது என்று நினைச்சன்.
மல்லிகைப் பந்தல் 72 )
 
 
 
 

அப்ப நான் அதை சிக்காராகப் பிடிச்சன். எல்லாப் பகுதிகளிலையும் இருந்து மல்லிகைக்கு முஸ்லிம்கள் பலர் எழுதுகிறார்கள். மற்றது யாழ்ப்பாண அகம்பாவம் என்ற அந்தத் திமிர் அவனின்ர ஒவ்வொரு படைப்பிலையும் இருக்கும். அது நாவல் எழுதினாலும் சரி, சிறுகதை எழுதினாலும் சரி. சிறு பத்திரிகையில் எழுதினாலும் சரி அப்ப நான் முதல் முதலாக யோசிச்சது, இது யாழ்ப்பாணப் பத்திரிகை அல்ல. யாழ்ப்பாணத்தில் இருந்து வரும். ஆனால், யாழ்ப்பாணத்தானின் சஞ்சிகை அல்ல. அதால என்ன நடந்தது? கனபேர் என்னை நம்பினார்கள். இவன் சொல்லுறது சரி. நிச்சயமாக அந்த மலட்டுத் தனமான குணங்கள் இல்லாமல் இவன் நம்பகத் தன்மை உடையவன் என்று. எனக்கு அந்த நம்பகத் தன்மை கிடைச்சது, ஒரு பெரிய பெறுபேறாய் போச்சு. மூணாவது நான் பத்திரிகை அச்சடிச்சு, அச்சடிச்ச பின்னரே வீதி வீதியாகக் கொண்டு போய் விற்கத் தொடங்கினன். இது உலக வரலாற்றிலை எந்தப் பத்திரிகைக்காரனும் செய்ததில்லை. அது சோசலிச நாடாய் இருக்கட்டும். ஓர் ஆசிரியனே அச்சடிச்சுப் போட்டு தெருத்தெருவா வித்தது நான் தான், வரலாற்றிலை முதன் முதல் செய்த காரியம், இது 'கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவேண்டிய சங்கதி.
நான் ஒரு சமூக விஞ்ஞானியாக அப்ப இலக்கியத்தைப் பார்த்தன். மாஸ் சைக்கோஜி (Mass Psycology) அதைத்தான் பார்த்தன். இந்த மக்கள் என்ன எதிர் பார்க்கிறார்கள்? சமூகம் எங்கே மாறிக் கொண்டிருக்கு? இந்த சமூகத்துக்கு என்ன தேவை? இந்தச் சமூகம் இதை விரும்புமா? யாழ்ப்பாணத்தான் இல்லை என்கிறதும் யாழ்ப்பாணத்தானின்ர கல்வித் தகைமையை ஏற்றுக் கொண்டதும் அதே நேரத்திலை நான் அதிகம் படிக்காதவன் என்கிறதும் எனக்கொரு வாய்ப்பாகப் போச்சு. படிச்சிருந்தால் எனக்கும் யாழ்ப்பாணத்தான்ர அத்தனை ஆதிக்கக் குணங்களும் இருந்திருக்கும்.
நானும் இந்தச் சம்பவங்களை வைச்சு வைச்சு வர, கொஞ்சம் கொஞ்சமாக மல்லிகையிலை எழுதுகிறது ஒரு மதிப்பெண்டு வந்திட்டுது. பேராசிரியர்கள் அவை இவையெல்லாம் மல்லிகைக்கு எழுத வேண்டிய தேவை வந்திட்டுது. இவ்வளவுக்கும் ஒரு சமூகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனாங்கள்.
உலக வரலாற்றிலை இன்னுமொன்று பாருங்கோ. பெரிய அதிசயம் என்னென்றால் இதை என்னுடைய மரணத்திற்குப் பின் தான் இந்தத் தகவலை எல்லாம் சொல்ல வேணும். சலூனுக்குள்ளை தொழில் செய்து கொண்டு அதுக்குப் பின்னாலேயே ஒரு பதிப்பகம் வைச்சு
மல்லிகைப் பந்தல் کنفسھنظہ.........فے حصص۔--حصہ G3)

Page 40
சி. புலப்பராசனுடன்
தி
74
id=
மம்மிங்க ப
 

அதுக்குள்ளை அச்சடிச்சு 60 - களப்தூரியார் வீதி, யாழ்ப்பானம் என்று அந்த ஜோசப் சலூனின்ர பெயரைப் போட்டு, அந்த மல்லிகையில பேராசிரியர்கள் அல்லது "வைனம் சான் சிலர்" (Wice Chancellor) வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, முருகையன் போன்றவர்களை எழுத வைச்சேன்.இதெல்லாம் உலக வரலாற்றிலை நிகர் இல்லை. அது ஜப்பானாக இருக்கட்டும் முன்னேறிய நாடுகளாக இருக்கட்டும் அமெரிக்காவாக இருக்கட்டும் அல்லது இந்தியாவாக இருக்கட்டும், இப்படியொரு வரலாறு யாழ்ப்பாணத்திலை மாத்திரம் தான் நடந்திருக்கு. இதுதான் யாழ்ப்பாணத்தின் பெருமை!
இல்லை. இதில் ஒரு சங்கடம் இருக்கு. தமிழ் மக்கள் அரசியல் நீதியாக அப்போது தமிழரசுக் கட்சியையே ஆதரித்தனர். அதனால் பாராளுமன்றத்தில் 13 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தனர். ஆனபடியால் அரசியல் காரணம் எனச் சொல்ல மாட்டேன். இடதுசாரிகள் தமிழரிடையே பலமற்றவர்கள். அப்படியானால் அவர்களது இலக்கியச் சஞ்சிகைதானே நின்று நிலைத்திருக்க வேணும்? இல்லையே. எங்களையும் எங்களது கருத்துக்களையும் அரசியல் ரீதியாக எதிர்ப் பவர் கள இலக் கரியத் தல எங்களை அரவணைத்தார்கள், இது எங்களுக்குக்
கிடைச்ச வாய்ப்பு இலக்கிய
கூ உலகில் ஈர் ஒன
]]:5 !Eነ )1 ܩ ፱፻፺፰፥” ვიჩშ’’ ჩელს. ஒதுக்கினார்கள் , :எங்களை ஆதரிச்  ܼ ܼ ܼ ܼ ܼ ܼ
if IE சோர் களர் , தனது همياFil * Woo. 'அரசியலி நம்பி s" أكو s கை கொன ட
''ேஆலி' எழுத்தாளர்களைப் 'பார்த்து "உன்னி !"
லை வேலை இல்லை என்றார்கள். எங்களைப் பார்த்து "நீ எழுதடாப்பா' என்றார்கள்.
மல்வியகப் பந்தல் 75 )

Page 41
இது வலு நுணுக்கமான ஓர் ஆய்வு. அதை வடிவாகச் சொன்னால் தான் அந்த நோக்கம் விளங்கும். இவ்வளவுக்கும் சத்தியாக்கிரகம் நடந்த பின்னணியிலை தான். அதை விவரிக்க வேண்டும். 60ம் ஆண்டு சத்தியாக்கிரகம் நடந்தது. அந்த 60ம் ஆண்டுக்குரிய சாகித்திய மண்டலப் பரிசை நான் தான் முதல் முதலிலை பெறுகிறேன். அந்த சத்தியாக்கிரகம் நடந்தபோது தமிழரசுக் கட்சிக்குப் பாராளுமன்றத்தில் 13 தொகுதிகளிலிருந்த காலத்திலை, நான் தான் ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்திறன். அப்ப அரசியலில அவங்களுக்குப் பின்னாலேயும் இலக்கியத்தில எங்களுக்குப் பின்னாலேயும் ஓர் அணி சேர்ந்தது. இந்த அணி சேர்றதுக்கு என்ன காரணம்? என்ன பின்னணி என்பதை நான் கவனத்தில எடுத்துக் கொண்டன். மற்றது நான் இடதுசாரியாக இருந்தாலும் நான் இதை யார் மேலேயும் திணிக்கேல்லை.
கருத்துக்களைத் திணிக்கவோ அல்லது நான் சொல்வதுதான் சரி என்று வாதிக்கவோ அல்லது நீ சொல்வதை நான் போட மாட்டேன் என்று மறுக்கிறதோ இல்லை. உனக்கு ஒரு கருத்திருந்தால் நீ அதை வை. எனக்கொரு கருத்து இருந்ததென்றால் நான் அதை வைக்கிறன். அதை வாசகன் தீர்மானிக்கட்டும். ஒரு பரந்த தளத்தை உருவாக்கிறேன். அதனாலை மலி லி கை கீ கு எழுது கரிற வன எ ல லாமி கொம்யூனிஸ்ட்டுகளுடைய அல்லது என்னுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுகிறவனோ அல்ல. இதை இந்தப் பின்னணியில வைச்சுப் பார்க்கேக்க தான். நான் நினைக்கிறன். என்னுடைய அளவீடு தான் வெற்றி பெற்றது என்று.
முதலாவது, என்னுடைய கருத்துக் கணிப்பு, இரண்டாவது என்னுடைய அர்ப்பணிப்பு. இப்படி ஒருவனும் அர்ப்பணிச்சு உழைக்க மாட்டான். மூணாவது, நான் தெருத் தெருவாக மல்லிகை கொண்டு திரிஞ்சு வித்ததால சமூகத்தில என்னுடைய படிமானம்,
இவன் வெட்கம், ரோஷம், மானம் ஒண்டும் இல்லாமல் தமிழுக்கு ஏதாவது செய்யக் கூடியவன். இவன் செய்வான். எஞ்சினை இயக்கிறத்துக்குத் தான் சக்தி தேவை. எஞ்சின் இயங்கத் தொடங்கிட்டா அது தானா இழுத்துக் கொண்டு போகும். ஒரு குறிப்பிட்ட காலத்திலை மட்டும் தான் நான் கஸ்டப்பட்டது. அதுக்குப் பிறகு எனக்குப் பிரச்சினையே இல்லை.
கயின் பங்களிப்பு எப்படி இருந்தது இரண்டு தான் எனக்கு முக்கியமானது. ஒன்று இடதுசாரி
மல்லிகைப் பந்தல் (76
 
 
 

இயக்கத்தின்ர இளைஞர் தலைமுறையை இலக்கிய பூர்வமாகக் கட்டிக் காக்கிறது. இரண்டாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தினுடைய உயிராக மல்லிகை இயங்கினது. சிறுபான்மைத் தமிழர் மகாசபை, மாவிட்ட புரப் போராட்டம். அதெல்லாம் கொடி கட்டிப் பறந்த நேரம். அப்ப அவனுக்கு ரசனை இருக்கோ இல்லையோ, எங்கட ஜீவாவின்ர புத்தகம் வாங்கிறனென்டு வாங்கு வாங்கள். அந்த நேரத்தில தாழ்த்தப்பட்ட மக்கள் அவ்வளவு படிக்கக் கூட இல்லை. ஆனா என்கிட்ட வாங்க வேனும், ஏனென்றால் அவன் எங்கட பெடியன் என்று. இதிலை இரண்டு மூன்று அம்சங்களை நாங்கள் இணைத்துக் கொண்டு போனபடியாகத்தான் இப்ப நீண்ட காலத்துக்குப் பிறகு சிந்திக்கேக்கை நான் அதை கணக்கில் எடுத்து இருக்கிறன் என்று தெரியுது. இவ்வுளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலை சமூகமாற்றத்திலை ஏற்படக்கூடிய ஒவ்வொரு சம்பவத்தையும் நான் இலக்கியமாக்கி இருக்கிறன். இந்த இலக்கியம் ஆக்க ஆக்க அது மல்லிகைக்குப் பசளையாக வந்திருக்கு. இப்படிப் பசளையாக வரத்தான் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அடே! நான் இவ்வளவு காலம் இதுகளை எல்லாம் எப்படி செய்து இருக்கிறன். ஆனால் செய்யேக்கை எனக்கு அந்த அறிவு இல்லை. செய்யேக்கை செயல் மாத்திரம் தான். பின்னுக்குத்தான் நான் அதைப் பொருத்திப் பார்க்கேக்கை எனக்கு இப்பிடி ஒரு எண்ணம் வருகுது. 35 வருடம் என்பது ஒரு பொடியன் பிறந்து வளர்ந்து கலியாணம் கட்டி அந்தப் பொடியனுக்கும் 15 வயது அல்லது 14 வயது வரக்கூடியளவுக்கு செய்திருக்கிறன். அது ஒரு நிச்சயமாக சிற்றிலக்கிய ஏட்டினுடைய வரலாறு அல்ல.
யாழ்ப்பாணத்தின் ஒடுக்கப்பட்ட சமுகத்தின் மத்தியில் இடதுசாரி கட்சி அரசியலைக் கொண்டு சென்றதில் மல்லிகைக்கு ஒரு யங் இருக்குத்தானே?
அதுதான், அதுதான். அது என்ன பிரச்சினை என்றால் அவங்களையே “இலக்கியத்துக்கு இடது சாரிகள்’ என்று சொல்ல வைச்ச பெருமை மல்லிகைக்கு வழங்கப்பட்டிருக்கு. அது ஒரு முக்கியமான காரணம்.
*क्ष्%8४.४१%, ११
* : 1్యళ$ళ్లగల్లగళ్ల
மற்றும் உதாரணமாக இப்போது தலித்தியம் என்ற போக் இந்தியாவில் இயல்பாக வளர்ந்து கொண்டு வருகிறது. இ யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழ் பேசுகிறவர்கள் என் கருதப்படுகின்ற ஒடுக்கப்பட்டவர்களுக்கான தலித்தி
மல்லிகைப் பந்தல் (77)

Page 42
சூழலுக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
எங்களுடைய தலித்தியம், வார்த்தைத் தலித்தியமே தவிர, அடக்கு முறைத் தலித்தியம் அல்ல. அதாவது நாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்று சொல்கிறோமே தவிர இன்றைக்கு அதைச் சரியான வரைவிலக்கணம் சொல்லிச் சொல்ல இயலாது. அதாவது எந்த வழியில் ஒடுக்கப் படுகிறோம். என்ன மாதிரியாக ஒடுக்கப்படுகிறோம் என்று.
சில வரையறைதான் எங்களுக்கு இருக்கு. அதாவது முந்திக் கோவிலுக்குப் போகேக்கை இருந்த பிரச்சினை. தேநீர் போராட்டத்துக்கு முந்தி இருந்த பிரச்சினை இவைகளெல்லாம் இன்றைக்கு வேறை உருவம் எடுத்திட்டுது. ஆனால், ஒட்டுமொத்தமாகச் சமூக நிலையில நின்று தான் நாங்கள் தலித தரிய ம என று சொல்கிறோமே தவிர, ஆனால் உண்மையிலேயே தலித்திய த்தின் ர அந்த நச்சு வேர் இல்லை. ஆனால், இந்தியா பயங்கரம் . அதனாலதான் இநீ தியா விலை கணி டவ னெல் லாம் அதைக் கையாளு கிறான். தலித் என்று சொல்லி ஆரோக்கியமாக யோசிக்கிறவன் கூட, எங்க ாேய் முடியிறாங்கள் எண்டால் மற்றவனோட தேர்தலுக்கும் அதுக்கும் இதுக்கும் பேரம் பேசுகிறவனாக. பெரியார். ஒருவர் தாது
பேசாதவர்.
ஆனால் பெரிசரைப் பற்றியும் எனக்கு also விமர்சனங்கள் இருககு மேரியார் கூட தலித்துகளைப் பற்றி கஞ்த்து சொன்னாரே தவிர, தலித்துகளை வளர்க்கவில்லை. இடைப்பட்ட சாதியை வளர்த்தாரே தவிர ஒடுக்கப்பட்ட சாதியையோ, தலைவர்களையோ வளர்க்கவில்லை. இதை ரொம்பப் புத்திசாலித்தனமாக செய்திருக்கிறார். போராட்டம் பிராமணனுக்கு எதிராக என்று சொல்லிக் கொண்டே ஒரு புதிய சாதியை உருவாக்கி இருக்கிறார். பெரியாரின் நேர்மையில எனக்கு சந்தேகம் இல்லை. இதை அவர் வேணும் என்று செய்தார் என்று நான் சொல்லெல்லை. ஆனால் அந்தப் பாதை அப்படித்தான் போயிருக்கு. அதனாலை தான் அப்பீல் வழங்கப்பட்ட கருணாநிதி இன்றைக்குப் போய் பி. ஜே. பி. யோடு சமரசம் பேசிக் கொண்டு தான்
மல்லிகை பந்தல் { 78
 
 
 
 
 
 

சரி என்று வாதிக்கவோ அல்லது நீ சொல்வதை நான் போட மாட்டேன் என்று மறுக்கிறதோ இல்லை. உன
த்தான் சறுகும். இந்த நிலையிலை பார்க்கேக்க எங்கட தலித்தியம் இடதுசாரி இயக்கங்களாலை கிட்டத்தட்ட 60, 70 வருஷம் தலைமை தாங்கப்பட்டது. இந்திய தலித்தியம் அம்பேத்கராலை தலைமை தாங்கப் பட்டாலும் காலத்திற்கு காலம் பல்வேறு விதமான தலைவர்கள் வந்து எல்லாரும் ஒவ்வொரு ஆளும் கட்சிகளின்ர சமரசப் பேச்சாளராக இருந்தினமே தவிர அந்த முழுச் சக்தியையும் திரட்டி நிமிர்ந்து நிற்கிறத்தில வந்து, மராட்டியத்தில வந்த தலித்தியமோ அல்லது கர்நாடகத்தில இருந்த தலித்தியமோ தமிழ் நாட்டுத் தலித்தியம் இல்லை. தலித்தியம் எண்டு சொல்லிக் கொண்டு ஆட்சிக்கு வருகிற கட்சிகளோட பேரம் பேசித் தலைவர்கள் பதவிக்கு வாறது அதுதான் கிருஷ்ணசாமி போன்றவர்கள். அது அப்படித்தான் வரும்.
ஏனென்றால், ஒடுக்கப்பட்ட மக்களின்ர வர்க்கக் குணாம்சங்களைப் பார்க்காமல், ஒடுக்கப்பட்ட மக்களின்ர சாதிக் குணாம்சங்களைப் பார்த்து வந்தால் அந்தப் போராட்டம் அப்படித்தான் வரும். அவனவன் சாதியைச் சொல்லிக் கொண்டு பேரம் பேசிக் கொண்டு காலத்திற்குக் காலம் ஓடுவான். வர்க்கக் குணாம்சம் உள்ளவன் தலித்தியம் பேசினாலும் அவனுக்கு வர்க்க விடுதலைதான் முக்கியமே தவிர, சாதி விடுதலை அவனுக்குப் பிரச்சினை அல்ல. வர்க்க விடுதலையிலை சாதி இணையுது. ஆனால், சாதிப் போராட்டத்திலை வர்க்கம் இருக்கு. அவன் மூலம் வர்க்கப் போராட்டமே தவிர இந்தச் சாதிகள் அது இது என்று போராடி சாதிகளுக்குப் பிரச்சினை தீர்க்கிறது அல்ல. ஏனென்றால் அவன் அப்பிடிச் சொன்னான் என்றால் அவனும் தென்னிந்தியத் தலித்துகளாகத்தான் மாறிவிடுவான்
எங்களுக்கு அப்பிடி ஒரு வரலாறு இல்லை. ஆனபடியால்தான் நானோ, டானியலோ முழு மக்களாலேயும் அங்கீகரிக்கப்பட்டனாங்கள். நாங்கள் தலித்துக்களாக இருந்தாலும், மற்ற வளமாகப் பாருங்கோ. தலித் ஒருவன் அதாவது யாழ்ப்பாணத்துத் தலித் ஒருவன் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் போராட்டம். தேநீர்க்கடை போராட்டம், சாதிப் போராட்டம் நடக்கேக்கை மல்லிகை ஆசிரியராக இருக்கிறான். மல்லிகையை யாழ்ப்பாணத்தான் வாங்கிறான். வித்தியானந்தன்,
மல்லிகைப் பந்தல் { 79 )

Page 43
கைலாசபதி, எழுதிறார்கள். பார்த்தீங்களா அந்த முரண்பாடு என்ன என்று? நாங்கள் சமூகப் போராட்டம் நடத்திக் கொண்டு நானும் என்னுடைய முகத்தைக் காட்டிக் கொண்டு நானும் அதிலை ஓர் அங்கம் என்று சொல்லிக் கொண்டு நானும் அந்தப் போராட்டத்தில் இருந்து கொண்டு மல்லிகை நடத்திறன். என்னை எதிர்க்கிறான். மல்லிகையை ஏற்றுக் கொள்கிறான். இது ஒரு விசித்திரமாக இல்லையா? இதுதான் யாழ்ப்பாணத்தான்.
கொழும்பில நான் நடத்தியிருந்தா அது ஒரு பெரிய அதிசயம். எழுதுறார்கள். என்ன சொன்னானோ அவன் சொன்ன அத்தனை பேரும் எழுதுறார்கள். இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை. அது என்னென்றால் நான் தலித் போராட்டம் நடத்தேல்லை. சாதிப்போராட்டம் நடத்தேல்லை. நான் சாதிப் போராட்டத்தை ஒரு வர்க்க விடுதலையில இருந்து பார்த்தேனே தவிர இந்தச் சாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இந்தச் சாதியெல்லாம் ஒன்று சேரவேண்டும் என்று நான் சொல்லேல்லை. இது ஆய்வு ரீதியாகப் பார்க்க வேண்டிய விஷயங்கள். அதை நான் சொல்லேலாது. சொல்லக்கூடாது. அது பற்றிய சரியான மதிப்பீடும் எனக்குத் தெரியாது. வேறு ஒருவன் பார்க்க வேணும். ஓர் ஆய்வு மாணவன் அல்லது பல்கலைக் கழக மாணவன் நோக்க வேண்டிய விஷயம். இந்த வரலாறு 35 வருஷமாக நடந்த இந்த சாதியப் போராட்டங்கள். யாழ்ப்பாணத்திலை இருந்து இப்படி ஒரு பத்திரிகை வந்தது. அந்தப் பத்திரிகையில இன்ன இன்னார் எழுதிச்சினம். இந்தச் சமூக முரண்பாட்டுக்குள்ள மல்லிகை எப்படித் தாக்குப் பிடிச்சுது? ஏன் தாக்குப் பிடிச்சுது? இவ்வளவு காலமும் வந்ததின்ர பின்னணி என்ன? என்று என்னைவிட ஒரு வெகுதூரத்திலை நின்று அல்லது வேறை கோணத்திலை நின்று பார்க்கிறவனாலைதான் தெளிவாகச் சொல்ல முடியம். நான் சிந்திக்கிறேன். நான் அதை இப்படித்தான் இருக்கும் எண்டு சிந்திக்கிறேனே தவிர, நான் தெளிவாகச் சொல்ல மாட்டேன்.
இந்த யாழ்ப்பாணச் சமுகத்தைப் பொறுத்தவரை இடதுசாரிகள் என்று சொல்லப்பட்ட முழுப்பேருமே வேளாள சமுகத்தில் இருந்து வந்த தலைவர்கள் தான் வழிநடத்தி இருக்கிறார்கள். ஆக, அந்த கொம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த முக்கிய தலைவர்கள் தலித் என்று சொல்லப்படுகின்ற ஒடுக்கப்பட்ட சமுகத்தில் இருந்து வந்திருந்தால் இன்றைக்கு ஓரளவு மாற்றம் கண்டிருக்க முடியும் தானே இந்த ஒடுக்கப்பட்ட சமுகம்?
இப்ப வரலாற்றிலை, யாழ்ப்பாண வரலாற்றிலை எம். சி.
மல்லிகைப் பந்தல் 80 ܫܣ
 

சுப்பிரமணியம் என்ற ஒருவர் பாராளுமன்றத்தின்ரை பிரதிநிதியாகச் சேர்ந்தார். இது கொம்யூனிஸ்ட் கட்சி செய்த பெரிய வேலை என்று நான் நினைக்கின்ற்ேன். மற்றது யார் போராடினார்கள் என்கிறது அல்ல, முக்கியம் என்ன வெற்றி பெற்றார்கள் என்பது தான் அங்கு முக்கியம் இப்ப மற்ற வளமாகப் பார்ப்போம். தாழ்த்தப்பட்டவன் தலைவனாக இருந்து கொண்டு எங்களைக் காட்டியும் குடுக்கலாம் தானே?
இப்ப நாங்கள் இடதுசாரி இயக்கம். இவ்வளவு சாதிவெறி, இவ்வளவு சாதிக் கொடுமை இவைகளைக் கைநீட்டி அடிச்சு நொருக்கிற நாங்கள், அந்த நேரத்திலை பொன். கந்தையா, தர்மகுலசிங்கம், கார்த்திகேசன், வைத்தியலிங்கம், என்று சொல்லுகிறமே அவங்களும் அவங்கள் தானே. ஏன் அவங்களுக்கு எங்களை உருவாக்க வேண்டிய இந்தத் தேவை வந்தது? தங்கடை ஆக்களை உருவாக்கியிருக்கலாம் இல்லையா? நாங்கள் சொல்கிற இந்த வேளாளத் தலைவர்கள் செயலை வைத்துத்தான் அவனின்ர தன்மையைப் பார்க்க வேணுமே தவிர, வெள்ளாளனாக இருக்கிறான் என்கிறதுக்காக நாங்கள் பார்க்க முடியாது. அவன்ர செயல் என்ன? யாருக்காகச் உழைத்தான்? எந்த மக்களுக்காக வேண்டிப் பாடுபட்டான்? எந்த மக்களின்ர கருத்துக்காக வேண்டிப் போராடினான் என்பதையே பார்க்க வேண்டும். அந்தப் போராட்டம் இல்லையென்றால் நாங்கள் வெற்றி பெற்றிருக்க மாட்டோம் அவர்களின் ஒத்துழைப்பும் பார்வையும் அந்நிய மென்றால் நாங்கள் வெற்றி பெற்றிருக்க மாட்டோம் தலைவர்மார் வந்திருப்பாங்கள். எல்லாம் சந்தர்ப்பவாத தலைவர்களாக இருந்திருப்பாங்கள்.
இனி ஒன்றைப் பார்த்தால் தெரியும். இந்த 30 வருஷத்துக்குள் எக்கச்சக்கமான ஆசிரியர்களை உருவாக்கி இருக்கிறோம். வெறும் சாதியைச் சொல்லிக் கொண்டு நாங்கள் இருக்கேல்லை. சாதியின்ர நச்சுவேர்களை அறுக்கிறதுக்கு என்னென்ன பொருளாதாரத் திட்டம், என்னென்ன உத்தியோகத் திட்டம் எல்லாம் செய்யவேணுமோ அதுகளைச் செய்திருக்கிறோம். இண்டைக்கு ஒடுக்கப்பட்டவர் பிள்ளைகளெல்லாம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு உயந்திட்டுதுகள். ஆனால் இதில துரதிர்ஷ்டம் என்ன சொல்லுங்கோ பார்ப்பம். யாருக்குப் போராடின்மோ அவன் சொல்லுறான் இல்லை. இந்தப் போராட்டமில்லாமல் எப்படி இவைகள் வந்திருக்க முடியும்? ஆனால் எப்பவும் அதை சொல்லுறத்துக்கு முடியாமல் இருக்கிறான். ஏன் என்றால் அவற்றை பார்வை . அவற்ரை கண்ணோட்டம், அவற்ரை சமூகத்தின்ர தன்மைகள் எல்லாம் அப்படிச் சொன்னால் தனக்குக் கேவலம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு இருக்கு. இது ஓர் உதாரணம்.
எங்கடை போராட்டத்தாலை வெளிவந்த பதவியை அனுபவிச்சு
மல்லிகைப் பந்தல் G81)

Page 44
சமூக அந்தஸ்து பெற்றவனெல்லாம் இன்றைக்கு மெளனியாக இருக்கிறான். காரணம் என்னென்றால், சொன்னால் தன்ரை சாதி தெரிஞ்சு போயிடு மெண்டு. ஏனென்றால், எந்த அறிவு நிலைக்கு நாங்கள் பாடுபட்டோமோ அந்த அறிவு நிலையே எங்கடை சமுதாயத்தைக் காட்டிக் கொடுக்குது.
இப்ப நான் கேட்கிறேனே என்னையும் டானியலையும் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தினது நாங்களா? அவங்கள்தானே? படிப்பில்லாத, ஒரு விதமான தகைமையும் இல்லாத என்னையும் டானியலையும் தூக்கமுடியும் என்றால் பட்டதாரியான எஸ். பொ. வைத் தூக்கிறதுக்கு அவங்களுக்கு என்ன இருக்கு. இது என்னென்றால், தான் செய்யிற தகிடுதத்தங்களுக்கெல்லாம் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி எதிரிகளைத் தாக்கிறது. சரி, ஒரு வருஷம் தாக்கட்டும், இரண்டு வருஷம் தாக்கட்டும். போற இடமெல்லாம் இந்த 35 வருஷமாகத் தாக்கினால், இதிலை என்ன அர்த்தம்? நீ கெட்டிக்காரனென்றால் நீ ஒரு பி. எச். டி. யாக வந்து அல்லது ஒரு கலாநிதியாக வந்து இந்தா வந்திட்டன் என்று சொல்லலாம். அல்லது இதுகள் ஒன்றும் வேண்டாம் என்று வேறு ஏதாவது ஒரு சாதனை செய்யலாம். சும்மா திட்டி என்னப்பா பிரயோசனம்? திட்டிறதால என்னத்தைச் சாதிக்கிற? இந்தா நான் இருக்கிறன். சிந்த எதிரியும் வரட்டுக்கும். நான் ஒன்று கேட்கிறன் 35 வருஷம் மல்லிகை நடத்தினன். உன்னாலை நடத்த ஏலுமா? செய்து காட்டு.
மல்லிகைப் பந்தல் 一{ 82
 
 

கருத்துச் சொல்லுகிறது வேறை, தாக்கிறது வேறை. இவர் என்ன நினைக்கிறார் என்றால் கைலாசபதி, சிவத்தம்பிக்கு எதிரான ஒரு கோஷ்டி இருக்கு. பல்வேறு மட்டங்களிலை - கல்வி மட்டங்களிலை, பேராசிரியர் மட்டங்களிலை இப்படி இதில் இந்தியப் பிராமணியம் முக்கியமான பங்களிப்புச் செய்யுது. இவர் அப்பிடித் தாக்கிறதாலை என்ன செய்கிறார் என்றால் அவையின்ர எடுபிடிகளாய் மாறுகிறார். “அவ்ை என்ன செய்யினம் எண்டால் கை தட்டி 'ஆஹா ஒஹோ' என்று சொல்லுகினம். இவருக்கு அது தேவையாக இருக்குது. ஏனென்றால் அவங்களை விடத் தான் உயர்வு என்று காட்டிறத்துக்கு.
இங்கு எங்களுக்கு எதிரி யார்? யாழ்ப்பாணத்திலை பிராமணர்கள்
கூட யாழ்ப்பாணச் சமூகத்திற்கு ஒரு சமூகத் தேவையாளனே தவிர அவன் ஒரு ஆதிக்கச் சக்தி அல்ல. அவர் களர் கோயில்களுக்குப் பூசை வைக் கிறதுக்கு, கலியாணம் வந்தால் தாலி கட்டுவதற்கு என்று. அவரும் ஒரு உழைப்பாளிதான். ஐஞ்சு குடிமக்களோடை ஆறாவதாக. அப்ப வந்து உண்மையான எங்கடை வர்க்க எதிரி யார்? யாழ்ப்பாணச் சூழலில் உன்மையாய் எங்களுக்கு எதிர் முகாமிலை உள்ளவன் ஆரெண்டு பார்க்க வேணும். தவிர பிராமணன் என்று சொல்லிவிட்டுப் போகக் கூடாது. அவன் எங்கடை நேச சக்தியெல்லே. அவன் பிராமணன் என்று சொல்லலாம். ஆனால் அந்த வர்க்க நிலையில் அவன் அந்தப் பிராமணனாகவா இருக்கிறான்? ஆதிக்கச் சக்தியாகவா இருக்கிறான்? அது பாருங்கோ அதை எப்படிச் சொல்லலா மென்றால் இந்தத் தென் னிந்தியக் கருத்து, தென்னிந்தியத் தாக்கம் என்று தான். அப்பிடிச் சொலுறதாலைதான் தாங்கள் தலித்துக்கள் என்று மறைமுகமான ஒன்றைக் கொண்டு வரப்பார்க்கினம். ஆனால் தமிழ் நாட்டு அல்லது கேரள அல்லது ஆந்திர, மராட்டியத் தலித்துக்களும் நாங்களும் ஒன்றல்ல. அதே மாதிரி இங்குள்ள பிராமணன் அங்குள்ள பிராமணன்
மல்லிகைப் பந்தல் 83 )
nigg IIITt Guarum garrafafrif swaalfdf/gif அன்ல முச்சிuM. எனின வெர்ரி பெற்றார்கவர் என்பது தானி ஆதர்கு முச்சியம்,

Page 45
அல்ல. இங்கே ஆதிக்க சக்திகள் யார் என்றால் சைவ வேளாளர். எனவே எங்கடை கோஷம் சைவ வேளாளனுக்கு எதிராக வைக்கப்பட வேணுமே தவிர சும்மா இங்கே இருக்கிற அப்பாவிப் பிராமணனுக்கெதிராக வைக்கிறதிலை இல்லை. வேணும் என்றால் திருப்திப்படலாம், இப்படிச் சொல்கிறோம், என்பதிலை சந்தோஷப்படலாம். அது ஒரு சரியான பார்வை அல்ல. நாங்கள் ஆதிக்க சக்தி எது என்று தெரிந்து கொள்ள வேணும். அப்பதான் எதிரியை இனம் கண்டு பிடிக்கலாம். சும்மா இருட்டோடை நின்று சண்டை பிடிச்சுக் கொண்டிருக்க முடியாது.
இந்தக் கூட்டங்களுக்கு வந்தாப் பிறகு எனக்கு ஒன்று தெரியுது. அங்கை இருந்து அனுபவிக்காத, பெறாத அல்லது அங்கை இருந்து ஒடுக்கப்பட்ட ஏதோ ஒரு குழுவினர் தத்துவார்த்த ரீதியாக சும்மா வெறும் சாதிரீதியாக அல்ல. நாங்கள் ஒடுக்கப்பட்டனாங்கள் இங்கை நிமிர்ந்து நிற்கிறம் என்ற குரல் பரவலாய் இருக்கு. நான் இப்ப் கொஞ்சக் காலமாய் யோசிச்சன். என்னடா இப்பிடி ஒரு குரல் வருகுது. இப்பிடி ஒரு வீச்சு வருகுது என்று என்ன காரணம் என்று பார்த்தால் அவன் வாயை மூடிட்டான்.இஞ்சை வந்தவன் ஏன் நிமிர்கிறான் என்றால். அதைச்சொன்னால் என்ன. அவனுக்குச் சமூக நெருக்குவாரம் இல்லை. ஊரல்ல இங்கு. மற்றவர்களிடம் தங்கி இருக்கிறோம் என்ற மேம்பாட்டு உணர்வுதான் இந்தக் கருத்தை வைக்குதோ என்றுகூட நான் யோசிக்கிறன். இப்பதான். எனக்குத் தெரியுது. முந்தி நசுக்கிடாமல் நெளிஞ்சு மெல்லமாகச் சொல்லிக் கொண்டிருந்தவை எல்லாம் இப்ப துணிஞ்சு தைரியமாகத் தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள். அது ஒரு பெரிய விஷயம் தான்.
கிருஷ்ணப் பறையனார் என்று சொல்லி ஒருத்தரைச் சந்தித்தன் மட்றாஸிலை. அப்ப நான் அவரைக் கேட்டேன். ஏன் இப்படி பெயர் வைத்திருக்கிறார் என்று. அவர் சொன்னார். ஜயர் தன்பெயருக்குப் பின்னால் ஐயர் என்று போட்டால் நான் ஏன் பறையன் என்று போடக்கூடாது என்று. இந்த மாற்றுச் சிந்தனை எப்படி வருகுது, பார்த்தீங்களா? அது என்னென்றால் நீ என்னை எளியவன் என்று சொல்ல நான் உன்னை விடப் பெரியவன் பாரடா ன்னறு சொல்கிற ஒரு தன்மைதான். அது புலம் பெயர்ந்த சூழலிலை ஞாயமாகத் தெரியது.
. . .
•'ኳ
மல்லிகைப் பந்தல் { 84
 

தலித்தியம் என்பது சாதியை மாத்திரம் குறிப்பதல்ல. அதையும் விட ஆழமானது. அகலமானது. அந்தச் சாதியிலை பிறந்தவர்கள் தான் பேச வேண்டும் என்பதல்ல. முற்று முழுமையாக ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்டவர்களின்ரை இரத்த உருத்தானவனும் தெளிவான வர்க்கப் பார்வை கொண்டவனும் தான் அதன் மூல வேரைக் கண்டு கொல்ல முடியும். தெளிவாகச் சொல்ல முடியும். சும்மா பேச்சுக்குத் தான் சாதிபாக்கிறதில்லை எண்ட பம்மாத்துக் காட்டுறவன் சொல்லிப் போட்டுக் காணாமலே போய் விடுவான். அவனுக்கு இந்த எழுத்துப் பொழுது போக்கு. நமக்கோ இது வாழ்க்கை. உதிரி ஒரு கருத்தாள முள்ளவனாகவோ ஆளுமை உள்ளவனாகவோ மலர மாட்டான். வேறு வாய்ப்புகள் வந்தால் நழுவி விடுவான்.
நாங்களோ நாப்பது வருஷமாப் போராடி வாறம், நாங்கள் ஆரம்பத்தில் குதறப்பட்டது என்னமோ உண்மைதான். ஆனா நாங்க தினசரி எங்களது மக்களிடையே வேர் பாய்ச்சி வளர்கிறோமே தவிர உதிரிக்காரர்களைப் போல காணவத்துப் போயிடவில்லை. எமக்கென்றொரு தத்துவம் உண்டு. பார்வை உண்டு. நம்ம மக்களுக்கு இதனால் விடிவு உண்டு எண்டு நம்புறம். தன்னை நெஞ்சாரத் தாரைவாக்கிற உணர்வு இருக்க வேண்டும். அப்பிடி அர்ப்பணிக்கிறம். இதிலை ஒரு ஆத்ம திருப்தி உண்டு.
இப்ப எங்களுக்குத் தெரிஞ்ச இந்தத் தத்துவங்கள் பிரெஞ்சிலைதானே ஆரம்பத்திலை இருந்து வந்தது. இதன் மூலம் எல்லாம் எங்களுக்குச் சொந்தம் அல்ல. வேறை வேறை சிந்தனைகளும் இப்ப லத்தின் அமெரிக்க நாடுகளாலையும் வருகுது. ஆனால், என்ன தத்துவம் என்றாலும், அது மக்களிட்டை வேர் விடாட்டி அந்தத் தத்துவம் எத்தனை நாளைக்கு உயிர் வாழப் போகுது? தத்துவ விசாரங்கள் எல்லாம் வரட்டும். இதுகள் எல்லாம் தேவை. ஒரு வளருகிற இலக்கியத்திற்கு வளர்கிற மொழிக்கு தத்துவச் சண்டைகள் தேவை. ஆனால் தத்துவச்
மல்லிகைப் பந்தல்- { 85 )

Page 46
சண்டைகள் ஒரு ஆரோக்கியமான இலக்கியத்தை வளர்த்தெடுத்தது என்பதை வரலாற்றிலை காணேல்லை. அது நடைமுறைச் சாத்தியமில்லை. ஆனால் சண்டை பிடிப்பாங்கள்.
தனக்குக் கூடத் தெரியும் என்கிற ஒரு வகையான இலக்கிய மிரட்டல். உன்னை விட எனக்குத் தெரியும் என்று சொல்கிறதிலை ஒரு அகம்பாவம். எத்தனை தத்துவங்கள் வந்தன? எத்தனை ஆயிரம் கருத்துக்கள் வந்தன? ஆனால், மனிதன் மனிதனாய் இருக்கிறது என்கிற தத்துவம் தான் உலகத்தில் ஆகச் சிறந்தது. மனிதன் மனிதனாய். மனிதப் பண்போடும் , மனித நேசத்தோடும் பக்கத்திலுள்ளவனுடன் அன்பு செலுத்துகிறதுடன் அவனுடைய நல்வாழ்வுக்காகத் தன்னுடைய வாழ்வில் ஒரு பகுதியை ஒப்படைக்கிறதோடு இருக்கவேணும். என்னதான் ஆயிரம் தத்துவத்தைச் சொல்லி என்ன? இந்த ஒரு நாலைஞ்சு வரிக்குள்ளைதான் இவ்வளவு தத்துவங்களும் அடங்குது.
நன்றி. 'உயிர் நிழல
மல்லிகைப் பந்தல் x- (86)

கலிட இலக்கிய ஆர்வலர்களினால் தொடர்ந்து நடாத்தப்பட்டு L வரும் இலக்கியச் சந்திப்பின் 27வது தொடர் கடந்த 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 23-24ம் திகதிகளில் பிரான்ஸ் கார்ஜ் லே கொனெஸ் என்னும் இடத்தில் நடைபெற்றது. இந்த இலக்கியச் சந்திப்பின் முதல் நிகழ்வானது 1988ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் திகதி ஜெர்மனியிலுள்ள கேர்னே என்னும் நகரில் தொடங்கி பிரான்ஸ், நெதர்லாந்து, சுவிற்ஸ்சிலாந்து, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் நடைபெற்றுள்ளது. 26வது இலக்கியச் சந்திப்பு ஜெர்மனியிலுள்ள ஸ்ருட்கார்ட் என்னும் நகரில் நடைபெற்றது.
“இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் வாழ்வில் யுத்தம் கவிந்த சூழல், யுத்தத்தை முதன்மைப்படுத்திய சிந்தனைகள், கருத்துக்கள், செயற்பாடுகள் என எங்கும் வியாபித்துக் கிடக்கிறது உலகம். யுத்தம் தவிர்ந்த சிந்தனைகள், வாழ்வியல் பிரச்சனைகள், அர்த்தப்பாடுகள் தெளிவுகள் எதுவும் தற்காலத்திற்கு அவசியம் அற்றவை என மிகக் கட்டிறுக்கமாகத் தீர்மானித்து விட்ட மக்கள், இவை எல்லாவற்றையும் மீறி மாற்றுச் சிந்தனைக் கட்கும், யுத்தத்தை உள்ளிட்ட கருத்துப் பகிர்வுக்கும் இடமளிக்கின்ற ஒரு தொடர் நிகழ்வாக இலங்கையிலும் புகலிட நாடுகளிலும் இருக்கிற ஒரே ஒரு தன்னியல்பியக்கம் இந்த இலக்கியச் சந்திப்பு ஒன்றே தான். எதுவும் எப்போதும் தொடங்கலாம். தொடங்கி முடிய முன்னே மடியலாம். அல்லது உடைந்து
மல்லிகைப் பந்தல் 87 )

Page 47
அடாவிடித் தாமும் குறுக்கீடுகளும் குழிபறிப்பும் கொண்
இன்றைய தமிழ் இயக்கரிச் சூழலப் பேச்சுச் சுதந்தரம், ரீசிப்புத் தீர்மை, கட்டுக் கொடுத்தப் மற்றுஜர்களின் விருதீவிற் திேப்புக் கிெரீத்துக் கிேட்தும் தீர்விைனைக் கொண்ட ஒரு சனநாயக தண்ணியல்Uயக்கம் இந்த ஐரோப்பரிய இலக்கியச் சந்திப்பு бfffof ffis_ду8угтд
காணாமலேயே போகலாம் எனும் நிலைமையே யதார்த்தமாக காணப்படும் சூழலில் இவ் இலக்கியச் சந்திப்புத் தொடர் 11வருடங்களைப் பூர்த்தியாக்குகிறது. இத் தொடரின் 27வது சந்திப்பு இன்று நடைபெறுகிறது என்பது ஆச்சரியம் கொண்ட நிதர்சனம் தான். இச் சந்திப்பு பிரான்சில் மூன்றாவது தடவையாக நிகழ்வதில் மகிழ்ச்சியடைகிறோம்" என 27வது இலக்கியச் சந்திப்பு சார்பில் வெளியிடப்பட்ட சிறிய கையடக்கமான நிகழ்ச்சி நிரல் மலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
23ம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற அமர்வில் அம்மா, எக்ஸில், உயிர் நிழல், துளிர் போன்ற சிறு சஞ்சிகைகள் மீதான விமர்சனம் நடைபெற்றது. "உலகமய மாக்கலும் மனித சுதந்திரமும்" என்ற தலைப்பில் என். சண்முகரட்னம் (சமுத்திரன் நோர்வே) அவர்களால் நிகழ்த் தப்பட்ட உரை கனதியானதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது.
எதிர் இலக்கியம் பற்றிப் பேச வந்த சாரு நிவேதிதா (தமிழ் நாடு) தலைப்பை விடுத்து எங்கோ தாவித் தாவி இறுதியில் பார்வையாளர்களிடம் பதில் சொல்ல முடியாத அளவுக்கு செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டார். அவரது சாம்பார் வடை எழுத்தாளர்கள் 'அய்யோ சாரு சொதப்பிவிட்டாரே" என மண்டபத்தில் புலம்பித் திரிந்ததைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது.
அடுத்து "போரும் சமாதானமும்" என்ற தலைப்பில் பேசிய பரராஜசிங்கம் (ஜெர்மனி) இலங்கையில் நடைபெறும் போராட்டத்தில் போரும் சமாதானமும் சம்மந்தமாக இலங்கை அரசின் வடிவத்தையும் விடுதலைப் புலிகளின் வடிவத்தையும் சீர்தூக்கிச் சார்பில்லாது முன் வைத்தார்.
முதல் நாள் அமர்வை சி. புஷ்பராஜா (ப்ரான்ஸ்) தலைமை தாங்கி ஒழுங்கமைத்தார்.
24ம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற அமர்வில் நீட்சே
மம்மிகைப் பந்தர் - 88

"Timmung mmt圖書ummu&T여
용gan(義道事 불m院事道民國 國ma-23
《 &)
89
யம்விகைப் பந்தம்

Page 48
தலைப்பில் சார்பு எதிர்ப்பு வாதங்கள் மிகவும் ஆழமானதாக இருந்தன. தமிழரசன் (ஜெர்மனி) மார்க்ஸிய கண்ணோட்டத்தில் நீட்சேயின் மூலங்களை விசாரணை செய்யும் சிந்தனை மிக்க உரை நிகழ்த்தினார்.
27வது இலக்கியச் சந்திப்புக்கென இலங்கையிலிருந்து விசேடமாக அழைக்கப்பட்டிருந்தார் மல்லிகை சஞ்சிகை ஆசிரியரும், தலித் போராளியும், இடது சாரி போராளியுமான டொமினிக் ஜீவா அவர்கள். மல்லிகை சஞ்சிகை கடந்த 35 ஆண்டுகளாக இலங்கையில் பல இடர்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு முற்போக்கு இலக்கிய சஞ்சிகை ஆகும் டொமினிக் ஜீவாவின் சுமார் ஒன்றரை மணிநேரப் பேச்சில் அவர் தனது அரசியல் - இலக்கிய - சமுதாய அனுபவங்களைப் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டபோது அதில துயரம், நகைச்சுவை, ஆச்சரியம் நிரம்பியிருந்தது. அவரது உரை முடிந்த பொழுது சபையினர் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது அவரின் இலக்கிய, அரசியல், சமுதாய சேவையைப் பாராட்டி அவரைக் கெளரவித்தது போலாகும்.
நூல் அறிமுக நிகழ்வில் யமுனா ராஜேந்திரன் தொகுத்த “எனக்குள் பெய்யும் மழை' (கவிதை), சுகன் - ஷோபா சக்தி தொகுத்த "சனதரும் போதினி” (ஒரநிலை தொகுப்பு), அருந்ததி. யமுனா ராஜேந்திரன் தொகுத்த ‘புலம் பெயர் சினிமா” (கட்டுரைகள்), சேரனின் “நீ இப்பொழுது இறங்கும் ஆறு' (கவிதை), ஆகிய நூல்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
டொமினிக் ஜீவாவின் பிரதிகள் மீதான ஒரு வாசிப்பு என்னும் தலைப்பில் கலைச் செல்வனும் மூன்றாம் உலக நாடுகளும் அவற்றின் மீதான ஏகாதிபத்திய தலையிடும் என்னும் தலைப்பில் தி உமாகாந்தனும் உரை நிகழ்த்தினார்கள். t இரண்டாம் நாள் அமர்வை லட்சுமி (பிரான்ஸ்) தலைம்ை தாங்கி ஒருங்கமைத்தார்.
27வது இலக்கியச் சந்திப்பை சி. புஸ்பராஜா, கலைச் செல்வன், அசோக், லட்சுமி ஆகியோர் முன்னின்று ஏற்பாடு செய்தார்கள்.
28வது இலக்கியச் சந்திப்பு நோர்வே நாட்டில் நடைபெறும்,
-செங்கட்டுவன் நன்றி: காலச்சுவடு
மல்லிகைப் பந்தல் { 90

விடாமினிக் ஜீவா
பல நூறு விதை முகிழ்த்த பெருமரம்
வி. சிவலிங்கம்.
இலக்கியம் என்பது மனித வாழ்க்கையின் பிரதி விம்பமாகவே அமைகிறது. மனித வாழ்வின் சுகங்கள், அவலங்கள் என்பவற்றை அதற்கே உரித்தான உணர்வுகளோடு எடுத்தியம்புகிறது. மனித இனத்தின் உணர்வுகளை, அதன் ஊடாட்டங்களை இலக்கிய கர்த்தாவினால் தான் அச்சொட்டாக உணர முடிகிறது. அதனால்தான் சமூக உறவாடல்களைத் தன் கதைகளில் பாத்திரங்களாக நடமாட விடுவதால் அவன் சிருஷ்டிகர்த்தா என அழைக்கப்படுகிறான். முதலாளித்துவ சமூக அமைப்பில் வாழ்ந்துவரும் நாம் பொருளாதார ரீதியாக நலிந்த வகுப்பினராக வாழ்ந்து வருகிறோம். சமூகத்தில் நிலம், மூலதனம், உற்பத்திச் சாதனங்கள் என்பவற்றின் உடமையாளராக உள்ள வலிமை மிகுந்த வகுப்பினரின் ஒடுக்கு முறைக்கு அதிகளவில் முகம் கொடுக்கிறோம்.
இலங்கையில் உள்ள சமூக அமைப்பில் குறிப்பாக தமிழ்ச் சமூக அமைப்பில் சாதி என்பதும் ஓர் ஒடுக்குமுறைச் சாதனமாக அமைந்துள்ளது. பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படும் மக்கள் அவ் ஒடுக்கு முறையிலிருந்து விடுவிக்கப்படாத வரை சமூக முன்னேற்றம் என்பது ஏற்படப்போவது இல்லை. பொருளாதார மாற்றம், வர்க்கச்
மல்லிகைப் பந்தல் 91

Page 49
சார்பான ஆட்சிப் பொறிமுறையும் மாற்றப்படாத பட்சத்தில் மனித சமத்துவம் ஏற்படப் போவதில்லை. சமூக ஒடுக்கு முறையும், ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வும் ஊள்வினைப் பயன், அது எமது தலை எழுத்து, படைத்தவன் படி அளப்பான் என எண்ணி மனித ஆற்றலை மலினப்படுத்தி எவன் ஒருவன் சிந்திக்கிறானோ அவன் தன்னையே தான் நிராகரிக்கிறான். அவன் தன்னிலும் மற்றைய மனிதனிலும் நம்பிக்கையற்று வாழ்கிறான்.
இவ்வாறான தன்னம்பிக்கை அற்ற ஒரு மனிதனால் சமூகத்தில் வாழும் ஏனைய மனிதர்களின் ஆற்றலை அறிந்து கொள்ள முடியாது. சமூகத்தில் ஏற்பட்டு வரும் முரண்பாடுகளினுடாக அச் சமூகம் முன்னேறி வருவதை அவனால் அவதானிக்கவும் முடியாது. சமூகமானது முரண்பாடுகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்து வருகிறது. அம் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுப் புதிய முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன. இருப்பினும் அவை முன்னையதை விட முன்னேற்றகரமானதாக அமைகின்றன.
ஒரு செடியின் விதையானது பொருத்தமான மண்ணைச் சேர்ந்து சரியான அளவில் வெப்பமும் நீரும் கிடைத்ததும் அது ஒரு செடியாகிறது. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட வெப்பத்தினையும் நீரையும் பெற்று செடியாக முளைப்பது அச் செடியின் (Negation) முரண்பாடாகும். அச் செடி தற்போது வளர்ந்து பூக்களையும், பின்னர் பல நூறு விதைகளையும் தருகிறது. ஒரு விதையின் செடியின் முரண்பாடுகளின் Qpj60iTurt(656m T6) (Negation of Negation) U6) 6ffu(p6iron Suu விதைகள் மேலும் கிடைக்கின்றன. முதலாவது விதையினால் பெறப்பட்ட செடி திட்டமிடப்பட்ட வகையில் வளர்க்கப்பட்டால் மாத்திரமே அதிலிருந்து வீரியமுள்ள விதைகளைப் பெற முடியும். முரண்பாடு என்பது ஒன்றை அழிப்பது அல்ல. முதலாவது முரண்பாட்டினை திட்டமிட்ட வகையில் ஒழுங்கு செய்தால் இரண்டாவது முரண்பாடு இயல்பானதாகவும், சிறந்த வெளிப்பாட்டையும் கொண்டு வரும்.
செடியின் விதையை மூலமாக வைத்து சமூக மாற்றத்திற்கான கருவை ஏங்கல்ஸ் என்ற சமூக விஞ்ஞானி இவ்வாறு தந்தார். ஒரு சமூக மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் முரண்பாடுகள் எவ்வாறு உறுதுணையாக உள்ளன என்பதை ஏங்கல்ஸ் குறிப்பிட்டவற்றையே டொமினிக் ஜீவா என்ற இலக்கிய கர்த்தாவின் வாழ்க்கையிலும் காண்கிறேன். ஒன்றுக்கொன்று முரண்பாடான தன்மையுள்ள வெப்பமும், நீரும் எவ்வாறு ஒரு விதையின் வளர்ச்சிக்கு அவசியமாக இருந்ததோ, அதே போன்று தான் சாதிக் கொடுமைகள் புரையோடி, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதியினரை ஒடுக்கிக்
மல்லிகைப் பந்தல் 92 )

கொண்டிருந்த அந்த ஜீவா என்ற விதை முளை விடுகிறது.
விதை நன்கு முளை விடுவதற்கு பொருத்தமான நிலமும், நீரும், வெப்பமும் தேவை என ஏங்கல்ஸ் குறிப்பிட்டார். ஆம். ஜீவா என்ற விதை கம்யூனிஸ்ட் கட்சி என்ற பொருத்தமான நிலத்திலே விழுந்தது. ஏங்கல்ஸ் குறிப்பிட்டது போல ஜிவா என்ற விதையிலிருந்து முகிழ்ந்து வரும் செடி திட்டமிட்ட அடிப்படையில் முரண்பாடுகளுக்கூடாக வளர்க்கப்பட்டமையால் தான் அந்த ஒரு செடி பலநூறு சிறந்த விதைகளை நமக்கு அளித்திருக்கிறது.
ஜீவாவின் இலக்கியப் பயணம் 50 ஆண்டுகால வரலாற்றினைக் கொண்டது. கடந்த 50 ஆண்டுகளாக இத் துறையில் இவரால் எவ்வாறு நிலைக்க முடிகிறது.
தூரவாக இருந்து கிராமத்து வாழ்க்கையை சற்று மேலோட்டமாகப் பார்த்து, கிராமத்து மனிதர்கள் சிலருடன் பேசி, கிராமத்தையே முற்றாக அறிந்து கொண்டதாக எண்ணி எழுதும் வல்லுனன் போல கதை பண்ணும் இக் காலத்தில் பிறந்த மண்ணையும், மக்களையும் தன் உயிர்போல நேசித்து அவர்களுடன் உண்டு. உறவாடி அவர்களின் இதயத்து எண்ணச் சுமைகளை உள்வாங்கி அதிலிருந்து உயிரோட்டமான பாத்திரங்களை உருவாக்கும் பிரமா இவர். .
சுதந்திரம், சமாதானம், சமத்துவம், மனித நேயம், விடுதலை என்பவற்றைத் தனது இலட்சியங்களாக ஏற்றுத் தொழிலாள, விவசாய மக்களின் தலைமையில் உருவாகும் ஓர் உன்னத சமதர்ம சமுதாயத்தைக் காணவேண்டுமென எண்ணித் தன்னை ஒரு சர்வதேச சமூகத்தில் இணைத்துக் கொண்டதால்தான்இம் மனிதனால் இன்று வரை இலக்கியப் பயணத்தைத் தொடர முடிகிறது.
பத்திரிகையோ, சஞ்சிகையோ ஆரம்பிக்கும் ஒருவர் அது சந்தைப்படுத்த முடியுமா? தாக்குப் பிடிக்க முடியுமா? என்ற கேள்வியோடு தான் ஆரம்பிக்கிறார். யாழ்ப்பாணத்து மண்ணிலே தமிழ்த் துறையில் பண்டிதர்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த அந்த நாட்களில் சாதாரண சவரத் தொழிலாளியான, பண்டிதத் தமிழ் தெரியாத ஜீவாவினால் பத்திரிகை ஆரம்பிக்கலாம் என்ற துணிவு எங்கிருந்து பிறந்தது?
நிச்சயமாக இலட்சிய வேட்கையைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. சமூகத்தில் நிலவிய முரண்பாடுகளின் கூர்மையே ஓர் இலட்சியவாதியை பெற்றெடுத்திருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியே தனது பாடசாலை என அடிக்கடி தெரிவித்து வரும் ஜீவா அதன் மூலம் தான் சமூகத்தில் புரையோடியுள்ள அழுக்குகளைத் தன்னால்
மல்லிகைப் பந்தல் { 93

Page 50
காண முடிந்தது எனக் கூறுகிறார்.
சமூக மாற்றத்திற்கான தனது பணியாகப் பேனாவைத் தேர்ந்தெடுத்துள்ள ஜீவாவின் அரசியல் சகலரும் அறிந்ததே. தான் வாழும் சமூகத்தோடு இணைந்து அச் சமூகத்தின் மாற்றத்திற்கான தூண்டுகோலாகத் தன்னையும் இணைத்து, அதன் மூலம் அச் சமூகத்தைப் படித்து, தான் படித்தவற்றை தன் கதையின் பாத்திரங்களாக வடித்து, தூங்கிக் கிடக்கும் மனிதனின் ஆளுமையை அருட்டி விடும் ஆற்றல் அவர் பேனாவுக்கு உண்டு.
யாழ்ப்பாணத்து மண்ணிலே நன்கு வேரூன்றிக் கி ை ரப்பி வாழும் யாழ். மக்கள் பேருழி காலம் வந்ததே! என அங்கலாயத்து அங்கொருவர், இங்கொருவராகத் திக்கெட்டும் சென்று பிறந்த மண்ணிலேயும் அகதிகளாக மாறிய வேளையில், தனது உடுத்த உடுப்புக்களுடன் கொழும்பு வந்த போதும் மல்லிகையை மீளவும் கொண்டு வந்திருப்பது அவரது அபார துணிச்சலையும், மன வலிமையையும் காட்டுகிறது
தான் பிறந்த மண்ணையும், மக்களையும் நேசித்து அந்த மக்களின் விடியலுக்காக, தன் உயிரிலும் மேலாக நேசிக்கும் தமிழ் மொழிக்காக நூற்றுக் கணக்கான எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கும் ஜீவாவின் மேல் இன்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் தேசியவாதத்தை நேசிக்கும் சிலர் விசனம் கொள்வதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
சிங்கள பேரினவாதமும், பெளத்த மத மேலாதிக்கமும் பாசிச தோற்றத்தினைப் பெற்று வரும் காரணத்தால் தமிழ்த் தேசிய வாதம் அதன் அதி தீவிரத் தன்மைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இவ் இரண்டு போக்குகளும் மனித முன்னேற்றத்திற்கு மிகவும் ஆபத்தானவை. இந்த இரண்டு தன்மைகளுடனும் சமரசம் செய்ய முடியாது. வர்க்க ஒற்றுமையை நேசிக்கும் சக்திகளின் கைகள் கட்டுப்பட்டுள்ளன. எந்த வர்க்கத்தினால் சமூக மாற்றத்தினைக் கொண்டு வர முடியுமென அவர் எதிர் பார்த்தாரோ, அந்த வர்க்கம் பேரின வாதம். அதி தீவிர வாதம் என்ற விஷயங்களை விழுங்கி உள்ளது.
இந்த ஆபத்தான போக்கினை எதிர்த்து நேச சக்திகளை ஒன்றிணைப்பது என்பது மிகவும் வில்லங்கமான அலுவலாக மாறியுள்ள இச் சூழ்நிலையில், தமது கருத்துக்களைத் தாமே சுய தணிக்கை செய்ய வேண்டிய நிலைமைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தனது மனதில் உள்ள ஏக்கங்களை, உணர்வு அலைகளை, தனது பேனா
மல்லிகைப் பந்தல் - 94

முனைக்குக் கொண்டு வர முடியாத சூழ்நிலையில் ஏதோ விதமாக எழுதி, ஏதோ விதமாகச் சொல்ல முயற்சிக்கின்றனர்.
சமூக மாற்றத்தை எனது வாழ்நாளில் கண்டுவிட வேண்டுமென்ற கற்பனை வாழ்வில் நான் என்றும் சஞ்சரிக்கவில்லை. அச் சமூக மாற்றத்தை ஆகர்சித்து நிற்கும் ஆயிரமாயிரம் எழுத்தாளர்கள் தோன்ற நானும் எனது பங்களிப்பைச் செய்கிறேன் என மிக அடக்கமாகத் தெரிவித்து வருகிறார். நாம் பிறந்த தேசத்தின் 9N 6] 60 நிலை குறித்து அவரது மன வேதனையை அவருடன் (8 Lu 8 LD'
வினாடியும் உணர்கிறேன்.
மதம், மொழி, நிறம் என்பவற்றிற்கு அப்பால் நின்று மனிதனை நேசிக்கும் ஒவ்வொரு இலட்சியவாதியும் இப்படியான நிலைக்குச் செல்வது ஒரு தவிர்க்க முடியாத நியதியாகி வருகிறது.இதனையிட்டு சிலர் விசனப்படுவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. பொங்கல் செய்யும் போது, பொங்கல் பொங்கிவிட்டால் கொள்ளியை சற்றுப் பின்னோக்கி இழுத்து விடுவது போல சற்று அமைதியாக இருப்பது பொருத்தமாக இருக்கலாம். ஒடுக்கு முறை, சுரண்டல், என்பவற்றிற்கு எதிராக ஓர் இலட்சியப் பயணத்தை நடத்தி
மல்லிகைப் பந்தல்- ( 95 )

Page 51
வரும் ஜீவாவின் நோக்கங்கள் சிங்கள பேரினவாத பெளத்த மத மேலாதிக்க சக்திகளின் நோக்கங்களுடன் சமரசம் செய்யப்பட முடியாதவை. அவரது கடந்த கால தனிப்பட்ட வாழ்க்கையும், இலட்சியமும், எழுத்துகளும் முரண்பாடுகளினூடாக வீரியத்துடன் எழுந்து வரும் புதிய சந்ததியை உருவாக்கும் சக்தி வாய்ந்தவை
இவ்வாறான குணாதிசயங்கள் கொண்ட மக்கள் போற்றும் எழுத்தாளனுடன் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருந்த காலங்கள் மறக்க முடியாதவை. மல்லிகை என்றால் ஜீவா, ஜீவா என்றால் மல்லிகை எனப் பிரிக்க முடியாத வரலாறு ஆகிவிட்ட பொமினிக் ஜீவா அவர்களின் காலத்தில் நாம் என்பதும், அவ் இனிய மனிதனுடன் இணைந்து செயற்பட்டோம் என்பதை எண்ணும் போது மிகவும் பெருமையாக உள்ளது.
தனது மரணத்தின் பின்னர் ஜீவாவின் உண்மைகள் பதியப்படும் என அடிக்கடி தெரிவித்து வரும் ஜிவா இன்று தாயகத்தில் இடம்பெற்று வரும் நிகழ்வுகள் குறித்து மனம் வருந்துவதை என்னால் உணர
முடிகிறது
மனித நேயத்தைத் தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு மல்லிகை சஞ்சிகை மூலம் தமிழ்த் தொண்டு புரியும் அவரின் பணிகள் மேலும் தொடர வேண்டுமென வாழ்த்துகிறேன்.
(-லண்டனில் வெளியிடப்பட்ட பாராட்டு விழா மலரிலிருந்து
20-01 a 200
மல்மிகப் பந்தம் 一@

*மல்லிகை"
டொமினிக் ஜீவா
CUTrfari)
மான டொமினிக் ஜீவா அவர்கள் பிரான்சில் நடைபெறவுள்ள லக்கியச் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ளார்.
回苍 மூத்த எழுத்தாளரும் மல்லிகை சஞ்சிகையின் ஆசிரிய
மல்லிகை சஞ்சிகையைக் கடந்த 1968ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வரும் டொமினிக் ஜீவா, ஈழத்து இலக்கிய உலகில் அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப் படுபவர். யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை சஞ்சிகையைப் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து வெளியிட்டு வந்த டொமினிக் ஜீவா, தற்போது கொழும்பில் வாழி நீ து C வருகின்ற போதிலும் சஞ்சிகையைத் தொடர் ந து
வெளியிட்டு வருகி ன்றார். மல்லி கைப் பந்தல் என்ற நிறுவ னத்தை ஆரம்பித்து அதன் மூலம் இது ଶu 60) ] 40 நூல்களை வெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்
தககது.
எதிர்வரும் 23, 24ஆம் திகதிகளில் பிரான்சில் நடைபெறவுள்ள இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகப் பாரிஸ் வரும் டொமினிக் ஜீவா, ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் இலக்கியச் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
15-21 - 12-00 ஈழ நாடு - பாரிஸ்
மல்லிகைப் பந்தல்- 97 )

Page 52
Ilவிாக பதவி
 

டொமினிக் ஜீவா
ம் ஆண்டில் இருந்து ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் செய லாற்றி வருபவர். கிட்டத்தட்ட 80 சிறுகதைகளுக்கு மேல் எழுதிய சிறுகதை ஆசிரியர். 1966ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 35 ஆண்டுகளாக மல்லிகை எனும் மாசிகையை வெளிக் கொணர்பவர்.
இதன் நிறுவகர் - பிரசுரகர்த்தா - ஆசிரியர், இவரது சிறுகதைத் தொகுப்புகளாக வெளிவந்தவை, தண்ணிரும் கண்ணிரும், பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள்.
இவரது தண்ணிரும் கண்ணிரும் சிறுகதைத் தொகுதி இலங்கையின் முதலாவது சாகித்ய மண்டலப் பரிசைப் பெற்றது. மற்றும் அனுபவ முத்திரைகள், ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல், எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் (சுயசரிதம்) இவருடைய நூற்களிற் சில. இதனைத் தவிர இவரது முன்னுரைகள் - பதிப்புரைகள், தூண்டில் (கேள்வி-பதில்) தலைப்பூக்கள் (கட்டுரைகள்) என்பனவும் நூலுருவிற் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அண்ைமையில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற 27வது இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்வதற்கென டொமினிக் ஜீவா அவர்கள் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்தார். தொடர்ந்து ஐரோப்பாவில் பெர்லின், லண்டன் ஆகிய நகரங்களில் இடம்பெற்ற இலக்கியக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மஸ்விகைப் பந்தல் -G99)

Page 53
எமது ரிபிசி வானொலி நேயர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதோடு அனைவரது மனதையும் கொள்ளைகொண்டுவிட்டார். யாழ் யுத்தம் தொடர்ந்த நிலையிலும் எதிர்ப்பட்ட தடைகளை உடைத்தெறிந்து 'மல்லிகை மனம் பரப்பிக் கொண்டிருக்கிறது. எமது நாட்டு முற்போக்கு இலக்கியவாதி டொமினிக் ஜீவா அவர்கட்கு நன்றி தெரிவித்து, பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிப் பெரும் வரவேற்பைப் பெற்ற "பாதுகை என்ற சிறுகதை ஒன்றையும் எமது வாசகர்களுக்காக இங்கே பிரசுரித்து அவரைக் கெளரவிக்கிறோம்.
நன்றி - வான் முரசு 01 ஜனவரி 5350i Lair,
மல்லிகை தய் 1OO
 

லணர்டனிவி புதிய நிறுவனம் முத்த எழுத்தாளர்
சிறப்புரை.
யிசம் தமிழர் நிறுவனம் அங்குரார்ப்பணமும் - பொங்கல்
விழாவும் எதிர்வரும் 14-01-2001 ஞாயிறு மாலை 4.30
மணிக்கு லூயிசம் இலண்டன் சிவன் கோயிலில் அமைந்த சிவன் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது. சிறப்பு விருந்தினராக ஈழத்தின் முத்த எழுத்தாளரும் - 36 ஆண்டுகளாக 'மல்லிகை என்ற இலக்கிய சஞ்சிகை ஆசிரியராக இருந்து வெளியிட்டு வருபவரான டொமினிக் ஜீவா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
லூயிசம் நகரினையும் - அதனைச் சுற்றியும் இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் நீண்ட காலமாக வசித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் இணைந்ததான ஓர் அமைப்பு அவசியம் என உணரப்பட்டாலும் அதுவரை சாத்தியமாகாணமயைக் கவனத்தில் கொண்டு - லூயிசம் தமிழர் நிறுவனம் என்ற அரசியல் சார்பற்ற இந்த அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது நடனம் - பேச்சு - கிராமிய நடனம் - நாடகம் என்பன போன்ற நிகழ்ச்சிகளும இடம் பெறுகின்றன.
- புதினம் லண்டன், 2001 - ஜனவரி 31
பய்விற்கப் பந்தம் 11

Page 54


Page 55