கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நெஞ்சில் நிலைத்த சுற்றுலா

Page 1


Page 2


Page 3

பேராசிரியர் இஸ்லாமியத் தமிழிலக்கியத் 260 to 4AoğG76opr 7ഥpng Hல்கலைக்கழகம்
பதிப்பாசிரியர் t"4Ls. 9.g. விஜ்மல் கான் M.A., Ph.D., இஸ்லாமியத் தமிழிலக்கியத் gilop மதுரை காமராஜர் H(

Page 4
நெஞ்சில் நிலத்த சுற்றுலா பக்கங்கள் : 384--4 = 388
முதற்பதிப்பு : மே, 1982 (C) எல்லா உரிமைகளும் ஆசிரியர்க்கே
விலை : ரூ 25-00
ஆசிரியர் : டாக்டர் எம். எம். உவைஸ்
இஸ்லாமியத் தமிழ்த் துறைத் தலைவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
விற்பனை உரிமை
சர்வோதய இலக்கியப் பண்ணை ク 321 மேல வெளி வீதி
மதுரை 625 001

பொருளடக்கம்
தமிழாராய்ச்சி மாநாட்டுக் கலாச்சாரச் சுற்றுலா 2. காதிறு நாவலர் கண்டிருந்தால் s
. ஒர் திருக்கோயில் A
· அண்ணமலைக் கலைக் கழகம் . பிச்சாவரக் காயலிலே . வரவேற்பு உபசாரங்கள் . வெந்நீர் வழங்கிய அரிசி ஆலை
. பிறந்தவர் பிறவாப் பெரும்பதி
i நாகூர் ஆண்டகையின் நற்பதியில் . வான் நோக்கி வாழும் வாய்ப்பின்மை a 11. கீர்த்திமிகு தஞ்சை பெருவுடையார் கோவில் 12. கலைக்காட்சிக் கவின் கூடம்
13. தமிழ் வரவேற்பு
14. கிராமிய நடனங்கள்
15. தமிழகத்து மான்செஸ்டரி 8 d. 16. மகளிர் கல்லூரி 17. கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர்
18. சாந்தலிங்கம் அடிகளார் திருமடம் 19. கவி அரங்கு d 20. பூரீ அவிநாசிலிங்கம் கல்லூரி 21. சாரதாலயம் 22. விதவிதமான விருந்துணவு
23. தென்னிந்தியாவின் அதென்ஸ் நகரம் 24. புண்ணியம் புரி பூமி! de sosa 25. வைகை நதிக்கரையில் குதூகலம் is
28. காந்தி நிலையம் என் ருெரு சாந்தி நிலையம் . 27. தெப்பக்குளம் கண்டேன் 28. தொழில் வள நகர் 29. வலதுபாதம் தூக்கி ஆடும் நடராசரி 6 a 8 30. அறுபத்தைந்தாவது திருவிளையாடல்
1
5 11
7
24
30 37 43 49
57
64
7
77
84
93
100 106
1 13,
1 19
128 136 143 152
160 166
175 183
189 95 2O1

Page 5
31.
32.
33.
34. 35.
36. 37.
38.
39.
4 O
4.
42.
43.
44.
5.
4f).
47. 48.
49. 50.
51. 52.
அங்கயற்கண்ணி e.g. Gu Jib திான்காந் தமிழ்ச்சங்கமும் அதன்
நச்கீரரும் முஸ்லீம்களுக்கு முக்கியமான கோரிப்
Lளை பத் to பாண்டிநாட்டு நீங்கையின் மணிவயிறு 8 நெல்லைநகர் தந்த நல்வரவேற்பு 8 திருக்குறுங்குடி
நித்தம் திவம் செப் ps சுசீந்திரத்தின் தனிச்சிறப்பு a கல்லும் கனிந்து இசைபாடும் வங்கக் கடலில் விளரும் கதிரோ மூக்குத்திகாலித்த வைர ஒளி கிழக்கு நாட்டின் செய்ரே 8 யானையைக் கோழிவென்ற திருச்சிராப்
தாயும் ஆன செவ்வந்திநாதர் கோவில் see
56.fiji சிறப்புடன் திகழும் பூரீரங்கத்
திருத்தலம் es பூரீரங்கமும் திருவானைக்காவும் So so உழவுக்குப் பயனகும் உயர்ந்த கல்லணை . தென்னகத்தின் அலிகார் மஞ்சு விரட்டு இசைக்கோலம்
இருந்தமிழே *ன்னல் இருந்தேன்
207
214
223
23
240 250 258 267 276 284
292
299
307 314 32
328 336
544 34 36O
368 375

உலகத் தமிழா ராய்ச்சிக் கழகம் நிலவ நிறுவிய ஒருமுன் னேடி இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை இலங்க விளங்கிய பெரும்பே ராசிரியர் கலைபலவுந் தேர்ந்த எம்பே ராசான் கலாநிதி க கணபதிப் பிள்ளை அவர்க்கு மகிழ்ந்து முகமலர உள்ளம் வைத்தே சுகிர்த இச்சிறு நூலென் காணிக்கை

Page 6
முன்னுரை :
பத்தாண்டுகளுக்கு முன்னர் இ ல ங்  ைக வீரகேசரி வார இதழில் வெளிவந்தவையே இக் கட்டுரைகள்.
பேரறிஞர் அண்ணா தலைமையிலான அன்றைய தமிழக அரசு, இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மா நா ட் ைட ஒட்டி ஒழுங்கு செய்த தமிழகச் சுற்றுலா பற்றிய பல சிந்தனைச் சிதறல்களின் தெ (ா கு ப் பே இவை.
அ ன் று இ வ ற்  ைர த் தொடர்ச்சியாக ஒ ர (ா ண் டு காலம் தாம் ஆசிரியராக உள்ள வார ஏட்டில் பிரசுரித்த திரு. வாளர் பொன். இராஜகோ பால் அவர்களுக்கு எமது அக மிக நன்றி
பதிப்பாசிரியர் U- A 6. - (i. பீ. மு. அஜ்மல்கான் அ வ ர் - க ஞ க் கு ம் நல்ல முறையில் குறுகிய கால எல்லையுள் அ ச் சி ய ர் ரி த் த ந் த ப்ரியா அச்சகத்தாருக்கும் எமது உளங் கனிந்த நன்றி.
- ம முகம்மது உவைஸ்
1. S. 1982
odorf S56n“ வேறணமுல்லை பாணந்துறை இலங்கை,

தமிழாராய்ச்சி மாநாட்டுக் öQYTööITJö ö ÖDJGT
அன்று ஈகைத் திருநாள், ஈதுல் பிதர் நன்னுள் நோன்புப் பெருநாள். றம்ழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் கொண்டாடும் பொன்னன நாள். புத்தாடைகள் உடுத்தி, நறுமணம் பூசி, ஒருவருக்கொருவர் நல்லாசி கூறி சிறர்களுக்குப் பரிசில் வழங்கி, உள்ளம் பூரித்து மகிழும் புனித நாள். அத்தகைய நாளில் அதி காலையில் எல்லோரும் நித்திரையிலிருந்து எழுந்து விட்ட னர். தடயுடலாக ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தனர். பெருநாளோடு தொடர்புடைய முக்கியமான கடமைகளை நிறைவேற்றுவதில் ஈடுபட்டவர்களாக இருந்தனர். அங் நுனம் அனைவரும் சுறுசுறுப்பாக இருந்தமைக்குக் காரணம் இல்லாமலில்லை.
இரண்டாவது அனைத்துலக தமிழாராய்ச்சி மகாநாடு சென்னையில் 1968 ஜனவரி மூன்ரும் திகதி கோலாகலமாக ஆரம்பமாக இருந்தது. இம்மாநாட்டில் - கருத்தரங்கில் பங்குபற்ற அங்கு செல்ல வேண்டியிருந்தது. நோன்பு

Page 7
2 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
பெருநாளான இரண்டாம் திகதி புறப்பட வேண்டியிருந் தது. இரத்மலான விமான நிலையத்திலிருந்து காலை 7.30 மணிக்கு இலங்கை விமானம் எம்மைச் சுமந்து கொண்டு சென்றது. இரண்டு மணித்தியாலங்களில் சென்னை விமான நிலையத்தை அட்ைந்தது. மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இறங்கிய சில நிமிடங்களில் பரிசோதனைகள் எல்லாம் முடிந்து விட்டன. எல்லோரும் விமானநிலையக் கட்ட டத்துக்கு வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
அப்போது வெளியே ஒருவர் என்னுடைய பெயரைக் கூறி அழைத்தார். என் காதுகளை என்னுல் நம்ப முடிய வில்லை. மீனும்பாக்க விமான நிலையத்தில் என்னை அறிந்த எவராவது இருக்கிருர்களா என்று ஐயுற்றேன். மீண்டும் என் பெயர் உச்சரிக்கப்படுவதைக் கண்டேன். "மாநாடு நடைபெறும் காலங்களில் நீங்கள் தங்கும் வீட்டுச் சொந் தக்காரரான திருவாளர் வாசன் அவர்கள் வெளியே காத்துக்கொண்டிருக்கிருர்' என்று அந்தக் குரல் மீண்டும் ஒலித்தது. அவ்வாறு குரல் எழுப்பியவர் மாநாட்டு அலுவலர்களில் ஒருவர் என்பதைப் பின்னரே அறிந்து கொண்டேன்.
ஆம். திருவாளர் ஈ.கே. சீனிவாசன் அவர்கள் இரண்டு மோட்டார் வண்டிகளுடன் காத்துக் கொண்டிருந்தார். திருவாளர் சீனிவாசன் கட்டையானவர். பருமனன உடற் கட்டுடையவர். பார்ப்போரைக் கவரும் கவர்ச்சிமிக்கவர். இனியவையே பேசி இன்புறுத்தும் இயல்புடையவர். எப் பொழுதும் புன்முறுவல் பூத்தவராகவே காணப்படுவார்.
எம்மை ஏறச்செய்து எமது மூட்டை முடிச்சுக்களையும் இரண்டு மோட்டாரி வண்டிகளிலும் ஏற்றிய திருவாளர்

தமிழாராய்ச்சி மாநாட்டுக் கலாச்சாரச் சுற்றுலா 3.
சீனிவாசன் அவர்கள் அடையார் கிளப்'தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு எம்மை அழைத்துச் சென் ரு ர்.
அது ஒரு மாடி வீடு, அறைகளோ காற்று அமுக்கம் கட்டுப்படுத்தப் பட்டவை. நீரறைகளில் வெந்நீரும் தண் ணிரும் குழாய்கள் மூலம் பெறக்கூடிய வசதிகள் அமைக் கப்பட்டிருந்தன. நவீன சிற்பமுறையில் அமைக்கப்பட்டி ருந்த அந்த வீட்டில் எமக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஒர் அறையை எமது சொந்த வீட்டறை போன்று உபயோகிக்க அனுமதிக்கப்பட்டோம். இலங்கையில் எமது வீட்டில் இல்லாத வசதிகளைப் பெற ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததை இட்டுப் பெருமிதம் அடைந்தோம். தமிழக மக்க ளின் விருந்தோம்பல் பண்புக்கு முன்னுேடியாகத் திருவாளர் சீனிவாசன் அவர்கள் விளங்கினர் என்பதை அறிய அதிக நாட்கள் செல்லவில்லை. அவ்வீட்டு மகாலட்சுமியாகத் திகழ்ந்தார் திருவாட்டி சீனிவாசன். ஆம். அவர் தம் பெயர் கூட லக்சுமிசீனிவாசன். பத்தாவுக்கேற்றபதிவிரதை.
உத்தியோக பூர்வமான மாநாடு ஜனவரி 3 ஆந் தேதி ஆரம்பமாயிற்று. எனினும் அதற்கு முன்பிருந்தே சென்னை மாநகரம் விழாக்கோலம்பூண்டுவிட்டதென்பது புலஞயிற்று. 1967 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியிலிருந்து பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ் மாநாட்டுப் பிரதிநிதிகள் வரத் தலைப்பட்டுவிட்டனர். மாநாடு நடப்பதற்கு முன்னர் மரீனு கடற்கரை முக்கிய இடம் பெற்றது. உலகிலே மிகச் சிறந்த கடற்கரைகளுல் இரண்டானதாகத் திகழும் மரீனு கடற்கரை யில் தமிழறிஞர்களுக்குச் சிலை எழுப்பட்டன. பல்வேறு. துறைகளிலும் சிறந்து விளங்கியவர்கள் போற்றப்பட்டனர் ஆனல் ஈழத்திரு நாட்டிலும் தமிழகத்திலும் தமிழுக்கும் சைவ சமயத்திற்கும் அளப்பரிய தொண்டு புரிந்த ஆறு

Page 8
4 நெஞ்சில் ಫಿಶಿಖ ಶಣ್ಮಿ ೨೫
霉~ முகநாவலர் அவர்களுக்குச் சிலை எழுப்பாதது ஒரு பெருங் குறையாகவே காணப்பட்டது.
சிலை எழுப்புவது சம்பந்தமாக சிறப்பாகச் சென்னை மாநகர முஸ்லீம்களும் பொதுவாகத் தமிழக முஸ்லீம் களும் குறைகூறுபவர்களாக இருந்தார்கள். மரீன கடற் ரையில் சிலையெழுப்பும் பாணியில் முஸ்லீம் புலவர்கள் புறக்கணிக்கப் பட்டனர் என்ற குறை எங்கும் ஒலித்ததுக் உண்மையிலே சிலை எழுப்புவது இஸ்லாமிய ஏக கொள் கைக்கு முரணுனது. முஸ்லீம்கள் ஒரு போதும் எவருக்கும் சிலை எழுப்புவதில்லை. இவ்விஷயம் சம்பந்தமாகச் சென்னை மாநகர முஸ்லீம் பிரமுகர்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையே கருத்துப் பரிமாறப்பட்டது. அந்த உரையாடலில் தமிழ்த் தொண்டு புரிந்த முஸ்லீம் புலவருக்குச் சிலை எழுப்பப் போவதாக அதிகாரிகள் கூறினராம். உடனே முஸ்லீம் பிரமுகர்கள் அவ்வாறு முஸ்லீம் புலவர்களுக்குச் சிலை எழுப் பப்பட்டால் அவற்றை உடைத்தெறிவதாக மறுமொழி பகர்ந்தனராம் மரீனகடற்கரையில் முஸ்லீம் புலவகர்ளுக் கென ஒரு நினைவுச்சின்னம் எழுப்பி இருக்கலாம். கருத்து வேற்றுமை வலுடையவே இத்துறையில் எவ்வித நடவடிக் கையும் எடுக்கபடவில்லை. இனியாவது தமிழ் நாட்டு முஸ் லீம் புலவருக்கு ஒரு தனி நினைவுச் சின்னம் அமைப்பது தமிழக அரசின் நீங்காத கடமையாகும். ஏனெனில் தமிழ் வளர தமிழ் மரபைப் பேண தமிழக முஸ்லீம் புலவர்கள் ஆற்றிய தொண்டு கொஞ்சம் நஞ்சமலல்.

2 காதிறு நாவலர் கண்டிருந்தால்
உருமுறுமோ டுறழொலியி னிருபுறணு மிருப்புருளை நான்குருளக் கான்குழுமும் வா அய்கொள்ளிப் பே எயுயிர்ப்பி ஞெலித்துமிழுங் கலித்துமங் குழல்வாயிற் சுழல் கொள்ள மரவட்டைச் செலவொப்பச் செல்பாண்டில் பல்கோத்த நெடுந்தொட னிரை நீண்டு கடுங்காலிற் கழிவிசையி னெந்திர வூர்தி யிவர்ந்தனர் படர்மின். இடியின் சத்தத்தோடு மாறுபடுகின்ற சத்தம். இச் சத்தத்துடைய இரும்பு உருளைகள் நான்கு இரண்டு பக்கத் தும் உருளுகின்றன. அப்போது ஒரு காட்சி தோன்றுகின்றது. காட்டிலே கூடின கொள்ளிவாய்ப் பேய்கள் விடும் மூச்சுத் தான் அக்காட்சி. அத்தகைய மூச்சையொத்தது ஒலி உண் டாகின்றது. அவ்வாறு ஒலித்து எந்திரம் கக்குகின்ற மிக்க புகை குழலின் வாயில் சுழலுகின்றது. அங்கே பல வண் டில்கள் கோக்கப்பட்டிருக்கின்றன. நெடிய தொடரினை

Page 9
6 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
யுடையன. அவ்வண்டில்கள் மரவட்டையினது நடையைப் போன்று செல்கின்றன. நிரையாய் நீண்டு செல்லும் அவ் வண்டில்கள் வேகமாய் வீசுகின்ற காற்றைப் போல ஒடு கின்றன. அத்தகைய எந்திர ஊர்தியில் ஏறிச் சென் மின்.
ஆம். இது ஒரு புகைவண்டியைப்பற்றிய வருணனை. புலவராற்றுப் படை என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. இங்கே மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பரிசில் முதலியன பெற்ற புலவர் ஒருவர், பரிசில் முதலியன பெறவிரும்பும் மற்ருெரு புலவரை மதுரைச் தமிழ்ச்சங்கத்துப் புலவ ராற்றுப்படை என்னும் பெயர் பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் நாகூர் குலாம் காதிறு நாவலர். மதுரையில் நான்காம் சங்கம் நிறுவிய பாண்டித்துரைத் தேவரின் நண்பர். அச்சங்க உறுப்பினர். நான்காம் சங்க "நக்கீரர்" என்று புகழப்பட்டவர். இவ்வாற்றுப்படையின் சிறப்பியல்பு அங்கு இடம் பெற்றுள்ள புகைவண்டி பற்றிய வருணனை யேயாகும்.
அன்று 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ந் தேதி வியாழக்கிழமை. இரண்டாவது அனைத்துலகத் தமிழ் மாநாட்டின் இறுதி நாள். தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணு அவர்கள் ஆங்கிலத்தில் நிகழ்த்திய சிறப்புச் சொற்பொழிவுடன் ஆராய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகள் முடிவுற்றன. முதலமைச்சரின் இராப்போசன விருந்து அன்றிரவு நடைபெற்றது. சிறப்பாக அமைக்கப்பட்ட பந்தலில் தமிழ் மரபுக்கியைய உணவு பரிமாறப்பட்டது. தமிழ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுக்குப் பிரியாவிடைபோன்று அமைந்திருந்தது, அவ்விருந்து.
இரண்டாவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட் டுக்கு ஒழுங்கு செய்திருந்த அதே சமயம் தமிழ்நாட்டுக்

காதிறு நாவலர் கண்டிருந்தால் 7
கலாச்சாரச் சுற்றுலாவுக்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டி ருந்தன. தமிழ் நாட்டுக்குச் செல்லும் முன்னேரே பிரதி நிதிகள் இது பற்றி அறிவிக்கப்பட்டிருந்தனர். பிரதிநிதிகளின் விருப்பு, வெறுப்புக்களும் கோரப்பட்டிருந்தன. இதற் கிடையில் எதிர்பாராத சில சம்பவங்களும் நிகழ்ந்தன.
மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது கலாச்சாரச் சுற்றுலாவில் பங்குபற்றும் அருகதையுடை யோர் யாவர் என்பதுபற்றித் தீர்மானிக்கப்பட்டுள்ளதாய் ஒரு வதந்தி பரவியது. தமிழ் நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பை எளிதில் பெற முடியாதவர்களுக்கு மாத்திரமே கலாச்சாரச் சுற்றுலாவில் பங்கு பற்ற முடியும் என்றும் அந்த ஆதாரமற்ற செய்தி பறந்தது. தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரதி நிதிகள் கலாச்சாரச் சுற்றுலாவில் பங்குபற்றும் அருகதை இழந்தோர் என்றும் அச்செய்தி கூறியது. இறுதியாகத் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் மாத்திரமே கலாச்சாரச் சுற்றுலாவில் பங்குபற்றும் வாய்ப்பை இழந் ğ5607 nT.
ஏனையோர் அனைவருக்கும் கலாச்சாரச் சுற்றுலாவில் இடம் அளிக்கப்பட்டது. ஆனல் ஒரு நிபந்தனை விடுவிக்கப் பட்டது, மகா நாட்டில், பங்கு பற்றிய பிரநிதிகளும் பார்வையாளர்களும் மாத்திரமே எவ்வித கட்டணமும் இன்றிக் கலாச்சாரச் சுற்றுலாவில் பங்குபற்றும் பாக்கியத் தைப் பெற்றனர். பங்கு பற்ற விரும்பிய ஏனையோர் தலைக்கு நூற்றி ஐம்பது ரூபா செலுத்தவேண்டியவர் களாய் இருந்தனர். பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் அல்லாத அனைவரும் அத்தொகையைச் செலுத்திஞர்கள்.
அன்று இரவு 10 மணி இருக்கும். முதலமைச்சரின் பிரியாவிடை விருந்துபசாரம் முடிவடைந்தது, மகாநாட்டு

Page 10
8 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
நினைவுச் சின்னங்கள் அனைவருக்கும் பகிரப்பட்டன. சுற்று லாவில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றவர்களுக்கு அனு மதிச் சீட்டுக்கள் வழங்கப்பட்டன. சிறப்பாகத் தயாரிக்கப் பட்ட அனுமதிச் சீட்டுக்கள் சட்டசபை அங்கத்தவர் விடுதியிலேயே விநியோகிக்கப்பட்டன.
இக் கலாச்சாரச் சுற்றுலாவின் ஆரம்பம் ஆற்றுப்படை யையே நினைவூட்டுகிறது. பண்டைக்காலத்தில் சான்றேர் ஏனைய சான்ருேர்களால் ஆற்றுப்படுத்தப்பட்டனர். பாணர், கூத்தர், விறலியர் முதலியோர் அன்று ஆற்றுப்படுத்தப் பட்டனர். புரவலரிடமிருந்து எண்ணிறந்த பரிசில்களைப் பெற்ற புலவர் தாம் சந்திக்கும் புலவரை அக்கொடை வள்ளல்களிடம் அனுப்பவர். அவ்வாறு அனுப்பும் பொழுது அக்கொடைவள்ளல்களை அடையும் பாதையை வருணித்து ஆற்றுப்படுத்துவர். அன்று கால்நடையாகவே பெரும்பான். மையானேர் ஓரிடத்திலிருந்து வேருெரிடததுக்குச்சென்றனர் எனவே நடைபாதையின் இயல்புகளை வருணித்து அத்தகைய பாதைகளைப் பரிசில் விரும்புவோர் அறியச் செய்தனர். ஆனல் இன்ருே நிலைமை மாறிவிட்டது. மதுரையம் பகுதியில் அமைந்த நான்காம் சங்கத்தின் காலத்திலும் பண்டைய நிலை மாறிவிட்டது. போக்குவரத்துச் சாதனங் கள் தமிழ் நாட்டிலே புகுத்தப்பட்டன. விரைவாகச் செல் லும் புகையிரதம் போன்ற வாகனங்கள் நாட்டிலே இடம் பெறலாயின. எனவே தான் குலாம் காதிறு நாவலர் தமது புலவராற்றுப் படையில் புகைவண்டியைப் புகுத்தி யுள்ளார். "காலிற் செல்லின் நாளிற் செல்லும்? தாட்களாகும். எனவே புகைவண்டியில் செல்லுமாறு மற்ற புலவருக்குக் கூறுகிருர், "சூடியமாலை வாடா" முன்னர் செல்லும்படி வேண்டுகின்ருர்,
தமிழ் மாநாட்டுக் கலாச்சாரக் சுற்றுலாவும் 11 ஆந்

காதிறு நாவலர் கண்டிருந்தால் 9
தேதி முதல் 18 ஆந் தேதி வரை நடைபெற்றது. ஆனல் இக்குறுகிய கால எல்லையுள் தமிழ் நாட்டின் பிரதான நகரங்கள் அத்தனையையும் புனிதத் தலங்கள் பலவற்றை யும் பார்ப்பதென்ருல் விரைவாகத் தான் செல்ல வேண் டும். மகாநாட்டுக்கு வருகை தந்த பிரதிநிதிகளையும் பார் வையாளர்களேயும் தமிழ் நாட்டுக்கு "ஆற்றுப்படுத்தல்” என்பது எளிதான காரியமன்று. நூற்றைம்பதுக்கும் இருநூற்றுக்கும் இடைப்பட்ட தொகையினரே கலாச் சாரச் சுற்றுலாவில் கலந்து கொண்டனர். எனினும் அத் தனை பேரினதும் எல்லா வசதிகளையும் கவனித்தல் அவ்
வளவு சுலபமான காரியமன்று.
பதினுேராம் திகதி பத்தரை மணியிலிருந்து சுற்றுலாவில் கலந்து கொண்ட பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் அவர் களைச் சேர்ந்தோரும் சட்ட சபை அங்கத்தவர் விடுதி லிருந்து எழும்பூர் புகைவண்டி நிலையத்தை நோக்கிப் புறப் படலாயினர். முதலாம் வகுப்புப் பெட்டிகள் பூட்டப் பட்ட புகைவண்டி, அந்நிலையத்தில் எமக்காகக் காத்துக் கொண்டிருந்தது. அப்புகைவண்டியைக் கண்டதும் குலாம் காதிறு நாவலர் அவர்களைப் பற்றிய நினைவு எம் உள்ளத் தில் தோன்றியது. அவர் தம் புகைவண்டியைப் பற்றிய கருத்துக்கள் எமது சிந்தனை அலைகளில் மோதின. குலாம் காதிறு நாவலர் புகை வண்டி மூலம் போனல் மாத்திரமே விரைவாக மதுரைத் தமிழ்ச் சங்கத்தை அடையலாம் என்று கூறினர். இரண்டாவது அனைத்துலகத் தமிழா. ராய்ச்சி மாநாட்டைச் சென்னை மாநகரத்தில் ஒழுங்கு செய்தோர் "புகைவண்டி மூலம்போனல் தான் தமிழ் நாட்டின் பிரதான நகரங்களையும் முக்கிய திருத்தலங்க ளையும் பார்க்கலாம். அங்கே பரிசில்களையும் பெறலா மென்று நினைத்தனர் போலும். அவர்கள் இவ்வாண்டில் நினைத்தவற்றிற்கும் குலாம் காதிறு நாவலர் நூறு ஆண்டு

Page 11
10 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
களுக்கு முன்னர் நினைத்தவற்றிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டல்லவா?
குலாம் காதிறு நாவலர் புகைவண்டியின் வெளிப் புறத் தோற்றத்தை மாத்திரம் தமது புலவராற்றுப்படையில் வருணித்துப் போந்தார். ஆணுல் கலாச்சாரச் சுற்றுலாவில் உபயோகிக்கப்பட்ட புகைவண்டியைக் குலாம் காதிறு நாவ லர் கண்டிருந்தால் புகைவண்டியின் வெளிப்புறத் தோற்றத் தையும் உட்புறத்தில் அளிக்கப் பட்டிருந்த வசதிகள் பலவற் றையும் விதந்து எழுதியிருப்பார். முதலாம் வகுப்புப் பெட் டிகளின் ஒவ்வொரு அறையிலும் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறிகளையும் தூய வெண்மையான படுக்கை விரிப்புக் களையும் தலையணைகளையும் கம்பளிப் போர்வைகளையும் இன்னுேரன்ன பிறவற்றையும் நயம்படப் புனைந்துரைத் திருப்பார்.
பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிக்ளும் பார்வையாள ரும் புகை வண்டியில் தத்தமக்குரிய படுக்கை அறைகளுக்குச் சென்றனர். பல்வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டோரும், வெவ்வேறு சமயங்களைப் பின் பற்றுவோ ரும் பற்பல இனங்களைச் சேர்ந்தவர்களும் முரண்பட்ட நிறங்களையுடையோரும் தமிழில் ஆர்வம் உடையோராய் இக் கலாச்சாரச் சுற்றுலாவில் பங்குபற்றினர். இந் நிகழ்ச்சி உண்மையிலேயே மகாநாட்டின் உயரிய குறிக்கோளான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதற்குச் சிறந்த ஒர் எடுத்துக் காட்டாக அமைந்திருந்தது எனின் அது மிகை
யாகாது.

3 ஒர் திருக்கோயில்
அன்று வியாழக்கிழமை (11-6-68) இரவு 11 மணி 45 நிமிடம். எழும்பூரிலிருந்து புகைவண்டி புறப்பட்டது. எல் லோரும் தத்தம் படுக்கைகளுக்குச் சென்றுவிட்டனர்.
மறுநாட் காலை, நேரம் ஏழரை மணி இருக்கும் புகை வண்டி வந்து நின்றது. புகையிரத நிலையம் விமரிசையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கத்தில் பாண்டு வாத் தியம் முழங்கியது. மறுபக்கத்தில் நாதஸ்வர இசை ஒலித்தது. மக்கள் திரண்டு இருந்தனர். கலாச்சாரச் சுற்றுலாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் தறுவாய் அது. ஆம் சிவ தலங்களுள் ஒன்ருன சிதம்பரத்தை அடைந்து விட்டோம்.
சென்னை மாநகருக்கு 151 மைல் தெற்கே அமைந்துள் ளது. சிதம்பரம் என்னும் புனித நகரம். தென்ஆற்காடு மாவட்டத்தில் உள்ளது. 1871 ஆம் ஆண்டு முதல் நகர சபையாகத் திகழ்கிறது. 1961 ஆம் ஆண்டின் புள்ளி மதிப்பீட்டுக்கிணங்க அதன் ஜனத்தொகை 40,740 ஆகும். சிதம்பர நகர எல்லையின் பரப்பு 1,84 சதுர மைல்களாகும். கடல் மட்டத்திருந்து 46 அடி உயரத்தில் உள்ளது.

Page 12
12 W நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
மதுரைக்கும் சிறீரங்கத்துக்கும் அடுத்ததாகப் புனித யாத்திரை மேற் கொள்ளும் இடம் சிதம்பரமாகும் இலங்கையிலிருந்தும் யாத்திரீகர்கள் அங்கு செல்வர் கோயில்கள் நிறைந்த நகராகவே சிதம்பரம் திகழ்கிறது. கி. பி. 1570 இல் விஜயநகர மன்னர் ஒருவரின் கல்வெட் டொன்றுக்கிணங்க அழகிய சிற்றம்பலம் என்ற பெயரோடு அதில் விளங்கியது. முன்னர் பெரும்பற்றப்புலியூர் என்னும் தனியூர் என்றும் வழங்கப்பட்டு வந்தது. தில்லைச்செடிகள் பல அங்கு இருந்தமையால் தில்லை என்றும் அழைக்கப் பட்டது. புண்டரீகபுரம் என்ற பெயரும் அதற்கு உண்டு. தில்லை மாநகர், பொன்னம்பலம் என்பன அதன் பிற
பெயர்களாகும்.
"பகர் வரிய தில்லை மன்னுள் பார்தபோ தங்கு எம் மார்க்கமிருக்கு தெ லலாம் - வெளியேயென்ன எச்சம யத்தவர்களும் வந்திறைஞசா நிற்பர்’
எனத் தாயுமான சுவாமிகளால்புகழப் பெற்ற திருக் கோயிலும் அங்கு உண்டு நாயன்மார்களால் பாடப்பெற்ற பெருமை அதற்குண்டு. நடராசப் பெருமான் திருவாச கத்தை எழுதினர் என்பது "மாணிக்கவாசன் சொல்ல அழகிய திருச்சிற்றம் பலமுடையார் எழுதியது' என்ற கூற்றிலிருந்து புலனுகின்றது. அங்குள்ள கோயிலிலே உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிேக்கிழார் சுவாமிகளின் பெரிய புராணக் காப்பியம் அரங்கேற்றப்பட்டதென்றும் கூறுவர். "உலகெல்லாம்” என்று சேக்கிழார் சுவாமிகளுக்கு அடியெடுத்துக் கொடுத்தவரும் பரம்பொருளே என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த ஆயிரங்கால் மண்டபத்திலேதான் ஈழத்திரு நாட்டிலிருந்து சென்ற பெளத்தத் துக் குழுவுக்கும்

ஒர் திருக்கோயில் 13
மாணிக்கவாசசருக்கும் சொற்போர் மூண்டது. மாணிக்க வாசக சுவாமிகள் பெளத்த தூதுக் குழுவினரின் ஒவ்வொரு தர்க்கத்தையும் உடைத் தெரிந்தார்கள். பெளத்தர் திருப்தி அடையவில்லையாம். ஆகவே இவர்களை ஊமைக ளாக்க வேண்டும் என்று சிவபெருமானிடத்தில் வேண்ட முனைந்தார்கள். அப்பொழுது ஈழமன்னன் தனது வாய் பேசாத ஊமை மக்களைப் பேசச் செய்யுமாறு கோரினன். ஊமை மகளும் பேசினுள். பெளத்தர்களும் திருப்தி அடைந்தனர். இந்நிகழ்ச்சியே 'திருச்சாழல்" இன்னும் அவர் தம் பாடலிலே இடம் பெற்றுள்ளது. பெண்களின் விளையாட்டைச் "சாழல்" என்பர். முதலிரண்டு அடிகள் சிவபெருமானைப்பற்றியும் அடுத்த இரண்டு அடிகளும் விடையாகவும் திருச்சாழலில் உள்ள ஒவ்வொரு பாட் டிலும் அமைந்துள்ளன. பெளத்த குருவின் எதிர்ப்புக்கு விடையாகவே இலங்கை மன்னனின் இதுவரை ஊமையாக இருந்த புதல்வி பதிலளிக்கிருர். அத்தகைய ஒரு பாடலை,
பூசுவதும் வெண்ணிறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதுந் திருவாயான் மறைபோலுங்காண், ஏம் பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானன்-சாழலோ!
என அமைந்துள்ளது.
இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க சிதம்பரத்தை அடைந்து காலைக் கடன் முடித்துக் கொண்டு காலை உணவை உட்கொண்டோம். அப்பொழுது காலை 8.30 மணி. சாதா ரணமாக எமது கால அட்டவணைக்கிணங்க நாம் அனைவரும் காலை எட்டரை மணிககே எமது புகைவண்டியிலிருந்து புறப்படுதல் வேண்டும்.

Page 13
14 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
புகைவ்ண்டி நிலையத்திலோ மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். பிரதம அரசிறை ஆணையாளர் உட்பட நகரத்தின் பிரமுகர் அத்தனை பேரும் குழுமி இருந் தனர். ஆண் பெண் இருபாலாரும் நின்று கொண்டிருந்தனர். புகை வண்டியை விட்டு இறங்கும் பொழுது ஒவ்வொரு வருக்கும் மாலையிட்டனர். எனக்கிட்ட மாலையை நான் கையிலெடுத்துக் கொண்டு சென்றேன். இந்நிலைமையைக் கண்டு திருப்தியடையாது அங்கு நின்ற ஒருவர் மற்ருெரு மாலையை எனது கழுத்திலிட்டார். இவ்வாறு மாலை அணி தலுக்கு முடிவு காண்பது அரிதாக இருந்தது. காலையிலும் மாலை; நண்பகலிலும் மாலை; மாலையிலும் மாலை; அன்ற லர்ந்த மலர் மாலை, நறுமணம் கமழும் பூமால்.
இவ்வாறு மாலை அணிந்தவர்களாக கோயிலுக்குச் சென்ருேம், வழி நெடுகிலும் பிரமாண்டமான வரவேற்பு, "அனைத்துலகத் தமிழ் மகாநாட்டுப் பிரதிநிதிகளே வருக! வருக! வருக!' என்று பெரிய எழுத்துக்களில் பொறிக்கப் பட்ட கொடிகள் பாதைக்கு மேலாகத் தொங்கவிடப்பட் டிருந்தன. தோரணங்களும் ஆங்காங்கே எழுப்பப்பட்டி ருந்தன.
நகரத்தின் மத்தியிலே இம் மாபெரும் கோயில் அமைந் திருக்கிறது. கோயில் அமைந்துள்ள நகரம் 'கோயில்" என அழைக்கப்படுகிறது. இதனலேயே சைவ நாயன்மாரும் கோயில் பதிகம் என்றே பாடியுள்ளார்கள். *" குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல்
மேனியிற் பால் வெண்ணிறும்

ஒர் திருக்கோயில் 15
இனிதமுடைய எடுத்தா பொற்
பாதமுங் காணப் பெற்றல்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே'
இவ்வாறு அப்பர் சுவாமிகள் நடராஜப் பெருமானின் திரு நடனத்தைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
இனி, திருத்தலங்களுள் ஒன்ருன சிதம்பரத்தின் வர லாற்றை அறிதல் வேண்டும் அல்லவா? நடராஜப் பெரு மானின் திருக்கோயிலின் வரலாற்று ஆரம்பம் இரண்டாம் சிம்ஹவர்மன் (கி. பி. 550 - 575) காலத்தோடு தொடங் குகிறது. பல ஆக்கிரமிப்புக்களுக்குப் பின்னர் கையெழுத் துப் பிரதிகளில் தேவாரமும், திருவாசகமும் எழுதப்பட்டு அக்கோயிலின் ஓர் அறையிலே வைக்கப்பட்டன. நம்பி யாண்டார் நம்பி என்பார் இத் திருப்பதிகங்களைக் கண்டு பிடித்துத் தொண்டுபுரிந்தார். இவற்றை முதலாம் இராஜ இராஜ சோழன் (கி. பி. 985 - 1013) வெளியிட்டான். இந்த அறையை இன்றும் காணலாம்.
ஆதித்திய சோழனும், பராந்தக சோழனும் (கி. பி. 907 இல்) புனிதமானவற்றுக்கெல்லாம் மிகப் புனிதமான இடத்தை முதன் முதலில் தூய தங்கத்தால் மெருகிட் டனர். தெற்குப் பக்கமாகக் கற்பாறையில் செதுக்கப்பட்ட தேரின் உருவம் சிற்பக் கலைக்கான தலைசிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது.
வடக்கேயுள்ள கோபுரம் கிருஷ்ண தேவராய என்னும் விஜயநகர மன்னரால் (கி. பி. 1596 இல்) கட்டப்பட்டது.

Page 14
16 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
மேற்குக் கோபுரம் (கி.பி 1251 இல்) ஜேதவர்மன் சுந்தர பாண்டியன் என்னும் பாண்டிய மன்னரால் கட்டப்பட் டது. பச்சையப்பமுதலியாரின் குடும்பத்தினர் கிழக்குத் திசையிலுள்ள கோபுரத்தைப் புனர் நிர்மானஞ் செய் தனர். ஒவ்வொரு கோபுரமும் கொடிக்கம்பத்துக்குப் பக்கத்தில் உள்ள கற்தூண்களும் சிறப்புக்கலையின் அழியாச் சின்னங்களாகும் நாட்டியக் கலையின் எடுத்துக் காட்டுக் களாகவும் விளங்குகின்றன. நளச் சக்கரவர்த்தி, திப்பு சுல்தான் முதலிய பல மன்னர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட பண்டைய அணிகலன்கள் அங்கு இருப்பதை இன்றும் காணலாம்.
எல்லையைப் பாதுகாப்பதற்காக 12,000 கிராம்கள் எடையுள்ள தங்க நகைகளை அரசாங்கத்துக்கு சுயமாகவே இக் கோயில் வழங்கியமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.
சிதம்பரத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ஈழ நாட்டின் தவப் புலவர் ஒருவரின் பெயர் நினைவுக்கு வரு கிறது. அவர் வேறு யாரும் அல்லர். 19ஆம் நூற்றண்டிலே வாழ்ந்தவர். சைவத்துக்கும் தமிழுக்கும் சலி பாது உழைத் தவர். மறுமலர்ச்சிக்கு வழிகே லியவர். தலை சிறந்த அறி ஞராக விளங்கியவர் ஆம் அவர்தாம் யாழ்ப்பான šgs sep முக நாவலர் அவர்கள். சிதம்பரத்திலே சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவிய பெருமை நாவல் ரையே சாரும். சென்னையில் தாம் நிறுவிய நாவலர் வித்தியானுபாலன அச்சகத்திலிருந்து சைவப் போதனைகளும் இலக்கிய நய மும் மிக்க வெளியீடுகளைத் தூய தமிழில் வெளிக் கொணர்ந் தார்கள் நாவலர் அவர்கள். சைவ இலக்கியங்களையும் சைவ சமயத்தையும் பரப்ப பல டாடசாலைகள் நிறுவி அளப்பரிய பணி புரிந்தார்கள். அவருடைய நினைவாக

அண்ணுமலைக் கலைக் கழகம் 17
இன்னும் சிதம்பரத்தில் ஓர் உயர்நிலைப்பள்ளி திகழ்ந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய பெருமை மிக்க பழம்பெரும் கோயில் நகரம் சர்வதேச உல்லாசப் பிரயாணிகளினதும் புனிதயாத்திரி களினதும் நடு நிலையமாகவும் விளக்க வேண்டியது அவசி யத்திலும் அவசியம் என்பது வெள்ளிடை மலை.
4.
அண்ணுமலக் கலைக் கழகம்
சென்னை மாநகரிலே இரண்டாவது அனைத்துலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றபோது பிரதி நிதிகளினதும் பார்வையாளர்களினதும் உபயோகத்துக் காகப் பல பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன. மின்விசிறி முதலிய பல வசதிகளுடையன அந்தப் பேருந்துகள். கருத்தரங்கு நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழக நூற்ருண்டு மண்டபத்துக்குப் பிரதிநிதிகள் தங்கி இருந்த இடங்களிலிருந்து செல்லவும் மாநாடு நடைபெற்ற பொழுது மத்திய போசனம் அளிக்கப்பட்ட எம் . எல் .ஏ , விடுதிக்குச் செல்லவும் அங்கிருந்து மீண்டும் கருத்கரங்கு மண்டபத்து குப் போகவும் மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பற்றும் பிரதிநிதிகள் முதலானுேரை அழைத்துச் செல்லவும் இறுதியில் இராப் போசனம் நடைபெற்ற நகரத்தின் பல் வேறு இடங்கட்கு கூட்டிச் செல்லவும் இப்பேருந்துகள்

Page 15
18 நெஞ்சில நிலைத்த சு ர று பா
பயன் படுத்தபட்டன. இப்பேருந்து ரிலே பிரதிநிதி ரூம் பார்வையாளரும் மகாபலிபுரத்துக்கு ம சென்றனர். பெ ரும் பான்மையான பிரதிநிதிகளும் பார்வையாளரும் புதிதாகக் கட்டி எழுப்பப்பட்டிருந்த எம். எல். ஏ. விடுதியென்று அழைக்கப்படும் சட்டசபை அங்கத்தவர் விடுதியிலேயே தங்குவதற்கான ஒழுங்குகள் செப்யப்பட்டிருந்தன. கருதி தரங்கு நடைபெற்ற காலத்திலே தான் இந்திய ராஷ்டிரபத் மாண்புமிக்க கலாநிதி ஸாகிர் ஹ"ஸைன் அவர்கள் சம்பிர தாய முறைப்படி இப்புதுக் கட்டடத்தைத் திறந்து வைத் தார்கள். கருத்தரங்கின் போது பயன் படுத்தப்பட்ட அதே பேருந்துகள் எமக்காகச் சிதம்பரத்தில் காத்திருந் தன. நாம் "வசு வண்டி அல்லது "பஸ்" வண்டி என்பதையே "பேரூந்துகள்’ என தமிழ் நாட்டில் அழைப்பார். தமிழகப் போக்கு வரத்தும் பேரூந்து என்றே வழங்குகிறது. தமிழக அரசினரே பேரூந்து என்று முதன் முதலில் அழைக்கத் தலைப்பட்டனர்.
சிதம்பரத்தில் இறங்கி இப்பேரூந்துகளிலே சென்ருேம். ஒவ்வொரு பேரூந்திலும் இலக்கமிடப்பட்டிருந்தது இப் பேரூந்துகளின் இலக்கங்களை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது. சிதம்பரத்திலுள்ள கோயிலுக்குச் செல்வதற்கு முன் பாத ரட்சைகளை நாம் பேரூந்துகளில் வைத்துவிட்டுச் செல்ல வேண்டி இருந்தது. எனவே எமது பாதரட்சைகளைக் கண்டு பிடிப்பதற்காகவே நாம் வந்த அதே பேருந்துகளுக்குச் செல்ல வேண்டி இருந்தது. கோவிலிலிருந்து திரும்பியதும் பேருந்துகளில் ஏறிக்கொண்டோம். பல்கலைக் கழகளவவைச் சுற்றிப் பார்க்கவேண்டிய நேரம் காலை 11-15 என்று இருந்த போதிலும், நேர அட்டவணைக்கியைய ஒழுக முடியவில்லை.
அப்பொழுது நண்பகல், சூரியன் தனது கதிர்களைப் பரப்பிக் கொண்டிருந்தான். வேகாத வெயில், கோயிலுக்

அண்ணுமலைக் கலைக் கழகம் 19 குச் சென்று திரும்பிய அனைவரும் பேரூந்துகளில் ஏறி விட்டனர். உடனே அவை அண்ணுமலைப் பல்கலைக கழக வளவை நோக்கிப் புறப்பட்டன. பேருந்துகள் பல்கலைக் கழகம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றி வந்தன. இதன் பயணுக அனைவருக்கும் இப்பிராந்தியத்தைப் டார்க்கும் வாய்ப்புக்கிட்டியது. அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் ஒரு பாடம் நினைவுக்கு வருகிறது.
தில்லைப் பதியுடையான் சிற்றம் பலந்தன்னில் அல்லும் பகலுநின் முடுகிறன் - எல்லைக்கண் அண்ணுமலை மன் அமைந்த கலைக்கழகம் கண்ணுரக் கண்டு களித்து.
ஆம். கண்டவர்களைக் களிப்படையச் செய்யும் வகையில் அமைந்துள்ளது அண்ணுமலைப் பல்கலைக் கழகம். நடன மூர்த்தி நடராஜப் பெருமானின் கோவில் இடம் பெற் றுள்ள சிதம்பரத்துக்கு அளித்ததாக அமைந்துள்ளது இது. புண்ணிய பூமியில் இடம் பெற்றுள்ளது. புகை வண்டி நிலையத்துக்குக் கிழக்கே அண்ணுமலைப் பல்கலைக் கழகம் அமைந்துள்ள நிலப்பரப்பு உள்ளது. கான் சாகிப் வாய்க் கால் என்றும் அழைக்கப்படும் வீரனும் ஏரியின் வாய் * காலுக்கு மேலாக மேற்குப்புறத்தில் அமைந்துள்ள பலமான பாலம் அண்ணுமலை நகரை திருக்கோவிலுடன் சேர்க்கிறது. பல்கலைக் கழக நகர் என்னும் அண்ணுமலை நகர் எழில் பூத்துக் குலுங்கும் இயற்கை காட்சிகளைக் கொண்டது . விண்ணின எட்டிப் பிடிக்குமாப் போல் அமைந்துள்ள கல்விக்கூடங்களைக் கொண்டு திகழ்கின்றது. பேரெழில் மிக்க காட்சியை உடையது. ஏறக்குறைய 659 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
அரசர் அண்ணுமலைச் செட்டியார் அவ*கள் 1920இல் சிதம்பரத்தில் தம் தாயார் பெயரால் மீனட்சி கல்லூரியை

Page 16
20 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
நிறுவினர் 7ள். கல்விமான்களால் விடுக்கப்பட்டது ஒரு வேண்டுகோள். "தமிழருக்கு ஒரு தனிப் பல்கலைக்கழகம் வேண்டும். அது உடனுறை பல்கலைக்கழகமாக அமைதல் வேண்டும். அவ்வேண்டுகோளை நிறைவேற்ற முன் வந்தார் கள் கலாநிதி சர் அண்ணுமலைச் செட்டியார் அவர்கள். தமது பொருள்களை வாரி இறைத்து, 1929 ஆம் ஆண்டில் கல்லூரிகளை ஒன்று சேர்த்து அண்ணுமலைப் பல்கலைக் கழ கத்தை நிறுவினர்கள். திருவேட்கள நகரும் அணித்தாக உள்ளது. திருவேட்களம் சிதம்பரத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கே பசுபதேஸ் வரம் நல்லநாயகியும் எழுத்தருளியுள்ளனர். இது பாடல் பெற்றதிருத்தலம். திருநாவுக்கரசு நாயனரும், திருஞான சம்பந்த நாயனரும் அருணகிருநாதரும் பாடியுள்ளனர். சிவபெருமான் வேடனுக வந்து அருச்சுணனுக்கு அவன் தன் ஆற்றலையும் தவத்தையும் மெச்சி பாசுபதாஸ்திரத்தை அளித்தார். வேடனருறை வேட்களத்தை, அப்பர் சுவாமி கள் இவ்வாறு பாடிஞர்கள்.
நன்றும் நாடொறும் நம் வினை போயறும் என்றும் இன்பர் தளைக்க விருக்கலாம் சென்று திருவேட்களத் துள்ளுறை துன்று பொற் சடையான த தொழுமினே!
திருஞான சம்பந்த சுவாமிகள் :
திரைபுங்கு தென்கடறன் கழியோத தேனலங்கானலில் வண்டுமண் செய்ய விரையங்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன்னகரா ரே.
என்று பாடியுள்ளார்.

அண்ணுமலைக் கலைக் கழகம் 21
அண்ணுமலைப் பல்கலைக்கழக மூதவை (செனெற்று) மன்றத்திலே மதிய போசனம் ஒழுங்கு செய்யப்பட்டிருந் தது. நண்பகல் உணவை உட்கொள்ளுவதற்கு முன்னர் அனைவருக்கும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளையும் பார்ப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
பிரதிநிதிகளினதும் பார்வையாளர்களினதும் வசதியை முன்னிட்டு ஆறு சின்னஞ்சிறு சுற்றுலாக்கள் ஒழுங்கு செய் யப்பட்டன. கலைக்கழகத்திலே உள்ள கல்வித்துறைகள் ஆருகப்பிரிக்கப்பட்டிருந்தன. 1. விவசாயம், 2. பொறி யியல், 3. தமிழ் (கலை, கீழை நாட்டுவரலாறு, மொழி) 4. தமிழாரய்ச்சியும் கல்வியும் இசையும், 5. மொழியியல், 6. அறிவியல் என்பன அவ்வாறு பிரிவுகளுமாகும். இப் பிரிவுகளுக்கிணங்க ஆறு பேரூந்துகளும் அடையாளமிடப் பட்டிருந்தன. இவ் ஆறு பிரிவுகளையும் வெவ்வேருகப் பார்க்க விரும்புவோர் தாம் விரும்பும் பிரிவுக்குச் செல்லும் பேரூந்தில் ஏறுமாறு கேட்கப்பட்டனர். ஒவ்வொரு பிரி விலும் அவ்வப் பிரிவின் பணிபுரியும் விரிவுரையாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். பல்வேறு பிரிவுகளிலும் அவ்வப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் கை யெழுத்துப் பிரதிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை எல்லாம் பார்க்கபோவதற்குப் பேரூந்துகள் தயாராய் இருந்தன. நூல்நிலையத்துக்கு முன்னுல் இருந்த அண்ணுமலைப் பல்கலைக்கழக ஸ்தாபகரின் சிலையின் அருகில் கூடினர். அங்கிருந்துதான் எல்லோரும் பேரூந்துகளில் ஏறிப் பல்வேறு பிரிவுகளுக்கும் செல்லலாயினர். அரசர் அண்ணு மலே அவர்கள் பற்றி மகாவித்துவான் ராகவ அய்யங்கார் என்னும் கவிஞர் இவ்வாறு பாடியுள்ளார்.

Page 17
22 V நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
கார் வளர்ந்ததுன் கையிலே
பல்கலை வளர்ந்ததுன் கொடையிலே பார் வளர்ந்ததுன் அரனிலே
நல்பா வளர்ந்ததுன் பெயரிலே சீர் வளர்ந்ததுன் செயலிலே
மலர்த்திரு வளர்ந்ததுன் மனையிலே ஊர் வளர்ந்ததுன் அரசிலே
பெரிதுயரண்ணுமலை மகிபனே.
கண்காட்சிக்கு வைத்திருந்த ஏட்டு வடிவிலான ஆராய்ச்சி நூல்களுடன் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி புரிந்த பட்டதாரிகளாக வெளியேறிய பெரி யோரின் பட்டியல் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது அந்தப் பட்டியலிலே இலக்கியத்துக்கான முதுமானித்தேர்வுக்குத் தோற்றியவர்களின் பெயர்களும் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியும் அவற்றின் மேற்பார்வையாளரின் பெயர் களும் கொடுக்கப்பட்டிருந்தன. அங்கு யாம் அறிந்த இலங்கையர் சிலரின் பெயர்களைக் கண்டு மகிழ்ந்தோம்.
அண்ணுமலைப்பல்கலைக் கழகத்தையும் தமிழ் ஆராய்ச் சித்துறையையும் நினைக்கும் பொழுது எம்மால் மறக்க முடியாத ஒருவரின் பெயர் எம்முள்ளத்திலே தோன்றுகின் றது. அவர் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இப்பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பிரிவு 1629 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எனினும் 1931 ஆம் ஆண்டிலே முதன் முதலில் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் நியமிக்கப் பட்டார். அப்பதவியை ஏற்றவர் வேறு யாருமல்லர். எம் தாட்டைச் சேர்ந்த அருள் மிகு விபுலானந்த அடிகளே யாவார்கள். ஆங்கிலமும் அருந்தமிழும் பாங்குறப் பயின்

அண்ணமலைக் கலைக் கழகம் 23
றவர். துறவறம் பூணுவதற்கு முன்னர் பண்டித மயில் வாகணனராக விளங்கியவர். தமிழ் மொழி, அறிவியல் கலை, மெய்யியல் (தத்துவ ஞானம்) என்பவற்றில் ஆழ்ந்த அறிவுடையவர். ஆங்கிலச் செய்யுட்கள் பலவற்றைத் தமிழில் யாத்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் உள்ள நாடக இலக்கண அமைப்புகளை ஒப்பிட்டு மதங்கசூளாமணி என்னும் ஆராய்ச்சி நூலை எழுதியவர். அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரி யராகவும் தமிழ்த் துறைத் தலைவராகவும் இருந்த பொழுது இசைத் தமிழில் ஆராய்ச்சியை ஆரம்பித்தவர். பதினேழு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்ததன் பயணுக யாழ் நூலை வெளியிட்டவர். இக்கால எல்லையில் தான் முதன் முத லாகத் தமிழ்ச்சிறப்பு வகுப்பு அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் விளங்கிய காலத்திலே தான் எமக்கு இவ் வறிஞருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இத்தொடர்பு ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடிக்க வில்லை. அவரும் இறையடி சேர்ந்து விட்டார். இக்குறுகிய கால எல்லையுள் அவரிட மிருந்து கற்றறியும் பேற்றைப் பெற்றேன். தமிழ் மொழி யில் சிறப்புப் பட்டம் பெற வேண்டும் என்று என்னை ஊக்கியவர்களுள் விபுலானந்த அடிகளும் ஒருவராவர்.
ஒரு நாள் அடிகளாருடன் உரையாடிக் கொண்டிருந் தேன். தனித்தமிழ் பற்றி அவர் தம் கருத்தை தெரிவித் தார். 'சுவாமி என்பதைவிட அடிகள் என்று என்னை அழைக்க வேண்டும் என்பதைத் தமிழில் ஈடுபாடுடையோர் விரும்பு கின்றனர். எனினும் விபுலானந்த என்ற சொற்ருெடர் வடமொழி என்பதை மறந்து விடுகின்றனர்" என்று நகைச் சுவைத் ததும்ப அப்பொழுது குறிப்பிட்டார்.

Page 18
24 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
மகாகவி பாரதியாரின் கவிதையின் சிறப் பை யும் ஆங்குள்ள நயங்களையும் முதன்முதலில் உலகுக்கு எடுத்துக் காட்டிய பெருமை அப்பொழுது அண்ணுமலைப் பல்கலைக் கழகத்திலே பேராசிரியராகவும் தமிழ்த்துரைத் தலைவராக வும் இருந்த ஈழத்து விபுலானந்த அடிகளையே சாரும் என்பது குறிப்பிடத் தக்கது.
5
GöösT6JÖ ö MILJ6Ó GG)
அண்ணுமலைப் பல்கலைக்கழகச் செனற்று மண்ட பத்தில் மதிய போசனம் நடைபெற்றது. சென்னையிலே மகாநாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றபொழுது எவ்வாறு விருந்துபசாரம் இருந்ததோ அவ்வாறே இங்கும் நடை பெற்றது. சைவருக்கெனப் புறம்பான உணவு, சைவர் அல்லாதவர்களுக்கு இந்திய முறையிலும் மேனுட்டு முறை யிலும் உணவு பரிமாறப்பட்டது. சென்னையில் பகற் போச னம் அளித்த ஏழு பிரமுகர்களும், இராப்போசனமளிக்க எம். ஜி. இராமச்சந்திரன், பத்மபூரீ சிவாஜி கணேசன் உட் பட ஏழு பிரமுகர்களும் முன்வந்தனர், என்றும் இத்தகைய வாய்ப்பைப் பெற முயன்று தோல்வி அடைந்தோர் பலர் என்றும் தமிழகக் கல்வி அமைச்சர், மேதகு நெடுஞ் செழியன் ஒருமுறை என்னிடம் கூறினர். உண்மையிலேயே அவ்விருந்துகள் தமிழக மக்களின் விருந்தோம்பல் பண்புக்கு எடுத்துக்காட்டுக்களாகவே அமைந்தன.

பிச் சாவரக் காயலிலே 25
நண்பகல் விருந்து முடிவடைந்ததும் சிதம்பரத்திலுள்ள புகைவண்டி நிலையத்தில் இருந்து சிறப்புப் புகைவண்டிக்கு அனைவரும் திரும்பினர். அவரவர் அறைகளுக்குச் சென் றனர். சிறிது நேரம் ஒய்வு எடுத்தனர். மாலையில் பல கூட்டங்களுக்கும் செல்ல வேண்டிருந்தது. சங்கங்களின் பொதுச்சபை மாலை 4. 30 மணிக்குத் தேநீர் உபசாரத் துக்கு ஏற்பாடு செய்திருந்தது. மாலை 5.30 மணிக்குச் சாஸ்திரி மண்டபத்தில் சங்கங்களின் பொதுச்சபைக்
கூட்டம் நடைபெற்றது.
அப்பொழுது நேரம் 3மணி இருக்கும். பிரச்சாரம் செய்ய விரும்பவர்கள் இருப்பின் உடனடியாகப் பேரூந்து களுக்குச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது. பிச்சா வரம் என்ன என்பதோ எங்கு உள்ளது என்பதோ எமக் குத் தெரியாது. அது உல்லாசப் பிரயாணிகளின் பொழுது போக்கிற்கு ஏற்ற இடம் என்று மாத்திரம் கூறினர்.
எம்மைத் தாங்கிச் சென்ற பேரூந்துகள் சொற்ப நேரத்தில் பாதைகள் அற்ற ஒரு பிரதேசத்தின் ஊடாகச் செல்வதை உணர்ந்தோம். பல குக்கிராமங்களைத் தாண்டி அப் பேரூந்துகள் சென்று கொண்டிருந்தன. தார் இடப் பட்ட பாதைகள் அங்கு இல்லை. இறுதியில் ஆற்றங்கரை போன்ற ஓர் இடத்தை அடைந்தோம்.
அது ஒரு காயல், ஓடா நீர் நிலை, சிற்றலைகள் கூட அங்கு இருக்கவில்லை. நீலப் பட்டாடை விரித்தது போல் காட்சி அளித்தது அந்நீர்நிலை. எங்கும் அமைதி. மாலை நேரம், அந்நீர்நிலைக் கரையிலே பல தோணிகள் காணப் பட்டன. அணிவகுத்து நிற்பனபோன்று காட்சி அளித்தன. எமது ஆற்றங்கரையிலே மீன் பிடித்துறைகளிலே சாதா

Page 19
26 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா ரணமாகக் காணப்படும் தோணிகளைப் போன்ற இத் தோணிகளும் இருந்தன. கரையோரத்திலே குக்கிராமங்கள் பல இறந்தன. அத்தோணிகளில் ஏறுமாறு நாம் கேட்கப் பட்டோம். அதன் பின்னரே தோணிகளிலே உல்லாசப் பிரயாணம் மேற்கொள்ள வந்திருக்கிருேம் என்பதை உணர்ந்தோம். முதலில் தோணிகளில் ஏற நாம் தயங்கி னுேம். ஏனெனில் ஈழத்தில் உள்ள அத்தகைய தோணி களுக்குள் நீர் இருக்கும். அவற்றுள் நின்று கொண்டு செல்ல இயலாது. ஆனல் (Back-water) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் காயலின் கரையிலோ எனின் அவ்வா 1றன்று. அத்தோணிகளின் உள்ளே அமர்ந்து செல்லக் கூடிய வசதிகள் இருந்தன. சணலாலான பைகள் அங்கே இடப்பட்டிருந்தன. ஒவ்வொரு தோணியிலும் நந்நான்கு பேராக ஏறினுேம் ஏறி அபர்ந்து கொண்டோம், நீந்தத் தெரியாதே என்பதனுல் முதன் முதலில் தயக்கம் ஏற் . لكن ساسكالا
பல தோணிகள் புறப்பட்டுச் சென்றன. சிறப்பாக ஒழுங்கு செய்யப் பட்ட இருவர் தோணிகளைச் செலுத்தி னர். தோணிகள் பல போவதினுல் ஏற்பட்ட சஞ்சலம் காரணமாக சின்னஞ்சிறு மீன்கள் மேலே துள்ளி விழுந்தன. ஒரு வேளை பல தோணிகள் செல்வதால் அச்சமுற்ற மீன் கள் தப்பிப் பிழைப்பதற்கு வேண்டி மேலே பாய்ந்திருக் கலாம் இவ்வாறு துள்ளி மேலே எழுந்து தப்பி விடும் என்று ன்னின போலும் அம்மீன்கள். அம்மீன்சளுக்கு அத்தகைய ஈடேற்றம் இல்லை என்பது அவற்றிற்குக் தெரியாது. அறிந்து கொள்ளும் ஆற்றலும் அவற்றிற்கு இல்லை. காயலின் கரை களிலே உள்ள குக் கிராமங்களில் வாழும் மக்களின் பிரதான தொழில் மீன் பிடித்தலாகும். பிச்சாவரம் என்று அழைக்கப்படும் இக் காயலுக்கு அடுத்ததாக உள்ள ஒரு கிராமம் பிள்ளுமடை என்பதாகும். இங்கே

பிச்சாவரக் காயலிலே 27
தான் மீன்பிடி தொழிலைப் பிரதான தொழிலாகக் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். எனவே இவர்களிடமிருந்து மீன் களுக்கு மீட்சியே கிடையாது. பிச்சாவரக் காயலில் தோணி களில் சென்று கொண்டிருந்தோம். இருபத்தைந்துக்கும் அதிகமான தோணிகள் ஒரே திசையை நோக்கிக் சென்று கொண்டிருந்தமை ஒரு தனிச் சிறப்புடைய காட்சியாகத் தோன்றியது. ஒரு தோணியில் நகர்காவல் உத்தியோகத் தர்கள் குரல் ஊதியவண்ணம் தோணிகளை வழி நடத்திக் கொண்டு சென்றனர். மற்ருெரு தோணியில் இளநீர், மென்பானம் முதலியன கொண்டு செல்லப்பட்டன. இத் தோணி மற்றைய தோணிகள் ஒவ்வொன்றிலும் சென்று கொண்டிருந்தவர்களுக்கு அவற்றை வழங்கிக் கொண்டு சென்றது. பிச்சாவரத்தின் மறுகரையை அடைந்ததும் அங்கே அமோகமான வரவேற்பு எமக்கு அளிக்கப்பட்டது. அங்கும் இளநீர், மென்பானம், பிஸ்கட் முதலியன பகிரப் பட்டன. வங்காள விரிகுடாவையும் பிச்சாவரக்காயலையும் 30-40 அடிகளைக் கொண்ட நிலப்பரப்பு பிரித்துக்காட்டிக் கொண்டு இருந்தது. இங்கும் தமிழக மக்களின் விருந் தோம்பலைக் கொண்டு அகம் மிக மகிழ்ந்தோம்.
இக் கடற்கரைக்கு அன்மையிலே தான் கடல் சார்ந்த உயிரியல் ஆராய்ச்சி நிலையம் அமைந்திருந்தது. இவ் வாராய்ச்சி நிலையம் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தின் ஒரு தனிப் பிரிவாக அமைந்துள்ளது. கடலோடு சம்பந் தப்பட்ட ஆராய்ச்சியில் ஈடுபடும் முகமாகவே அவ்வாராய்ச்சி நிலையம் முதன் முதல் நிறுவப்பட்டது. 1951 ஆம் ஆண்டில் விலங்கியல் பேராசிரியர் ஆர். வி. சேஷையாவினல் இந் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. 7.26 தொன்கள் எடையுள்ள சமேதூசா" என்னும் ஓர் இயந்திரப் படகும் அங்கு உண்டு. வெள்ளாற்றிலும், காயலிலும், வங்காள விரிகுடாவிலும்

Page 20
28 நெஞசில் நிலைத்த சுற்றுலா
ஆராய்ச்சி புரிவதற்காகவே இவ்வியந்திரப்படகு பயன் படுத்தப் படுகின்றது. அறிவியற் துறையில் முதுமானிப் பட்டம் பெற விரும்புவோரின் செய்முறைப் பரீட்சைகள் மிதக்கும் ஆய்வு கூடத்திலேயே நடத்தப்படுகின்றன 1962 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கடல் சார்ந்த உயிரியல் துறையில் முதுமாணிக்கான பாடத்திட்டம் ஒன்று உரு வாக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கான பயிற்சித் திட்டம் இது. அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தின் புறம் பான ஒரு பிரிவாகக்கடல் சார்பான உயிரியல் துறை செயல்படுகின்றது. சர்வதேச ஆய்வுகூட நிலைக்கு இக்கடல் சார்பான உயிரியல் ஆய்வுகூடம் பர்ணமித்து விட்டது, எட்டு இலட்சத்து நாற்பத்தாருயிரம் ரூபாயை பல்கலைக் கழக நிதிக்குழு இவ்வாய்வு கூடத்திற்கு வழங்கியுள்ளது. இங்கு சருத்தரங்குகள் நடை பெறும். தலைசிறந்த விஞ் ஞானிகள் உரை நிகழ்த்த அனுமதிக்கப் படுவர். பல்கலைக் கழகத்திற்கு மாத்திரம் அல்லாது இந்திய நாட்டுக்கே நன்மை பயக்கக் கூடிய ஒரு நிலையம் என இக்கடல் சார் பான உரியல் ஆய்வுகூடம் புகழப்பட்டுள்ளது.
(Porto Novo) போட்டோ நோவோ என்னும் இடத் திற்குச் செல்லும் எவரையும் கவரக்கூடிய நிலையில் இவ் வாய்வு கூடம் சிறந்து விளங்குகிறது. இந் நகருக்குப் போட்டோ நோவோ என்ற பெயர் போர்த்துக்கேயர் களால் வழங்கப்பட்டிருக்கலாம். போர்த்துக்கேயருடனும் ஒல்லாந்தருடனும், டென்மார்க் மக்களுடனும் ஆங்கிலேய ருடனும் கொண்ட தொடர்பாலே இப்பட்டினம் இவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம். இதனலேயே தமிழில் இப் பட்டினம் பறங்கிப் பேட்டை என்று வழங்கப்படுகிறது . முஸ்லிம்களின் ஆட்சி நிலவிய காலத்தில் இப்பட்டினம் முஹமத் பந்தர் என அழைக்கப்பட்டது. தென் ஆர்க்
காடு மாவட்டத்திலே உள்ள பிரதான துறைமுகங்களுள்

பிச் சாவரக் காயலிலே 29
இதுவும் ஒன்ரு கும். நகரங்களைப் பொறுத்த வரையில் இம்மாவட்டத்தில் உள்ள நான்காவது பெரிய நகரமாக விளங்குகிறது. இன்னும் பழங்காலப் பட்டணமாகவேத் திகழ்கின்றது. அங்கே பஞ்சாயத்து ஆட்சி முறை நடை பெறுகிறது. 15, 081 மக்கள் வாழ்கின்றனர். குறிப்பிடத் தக்க தொகையினர் முஸ்லிம்களாவர். கடல் சார்ந்த உயிரியல் அய்வுக்கூடத்துடன் அந்நகரில் மாவட்ட உயர் நிலைப்பள்ளியும், துறைமுகமும் சுங்கப் பகுதியும் மீன் பிடி நிலை யமும் உள்ளது. p
16 ஆம் நூற்ருண்டின் இறுதியில் போர்த்துக்கேயரும் பின்னர் ஒல்லாந் தரும் இப்பகுதியில் ஆட்சி புரிந்தனர். ஒல்லாந்தர் தோட்டம் என்னும் இடம் இன்னும் அங்கு உள் ளது. டென்மார்க்கைச் சேர்ந்தவர்கள் இங்கே ஒரு தொழிற் சாலை நிறுவினர். இது பலமுறை வெள்ளத்தினுல் அழிக் கப்பட்டு புனர் நிர்மானம் செய்யப்பட்டது. பின்னர் ஆங்கிலேயரின் இருப்புத் தொழிற்சாலையாக இரு ந் த இந்தத் தொழிற்சாலையின் இப்போதைய உரிமையாளர் ஹாஜி முகம்மது மக்தூம் நாச்சியார் சீமாட்டியாவர்.
பறங்கிப் பேட்டை துறைமுகத்திலிருந்து ஐரோப் பாவுக்கு நிலக்கடலையும் இலங்கைக்கும் இந்து சீனுவுக்கும் ஜாவாவுக்கும் அரிசியும் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. 1942 ஆம் ஆண்டின் பின்னர் இவ்வியா பாரம் சீர்குலைந்தது.
பறங்கிப் பேட்டையில் பத்து மஸ்ஜித்கள் உள்ளன. அரைக்காசு நாச்சியார் என்பவரின் கல்லறையும் அங்கு உண்டு. பறங்கிப் பேட்டையைத் தாயகமாகக் கொண்ட பல முஸ்லிம் புலவர்கள் புகழ் பெற்றுள்ளனர். அவர்களுள் எட்டையபுரம் மகா வித்துவான் உமறுப்புலவர் குறிப்பிடத்

Page 21
30 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
தக்கவராவர். அங்கு வாழ்ந்த ஏனைய முஸ்லிம் புலவர் செய்யது அப்துல் காதிறு நயினர். காதிறு அஸன மரைக் காயர், ஹாஜிகாதிறு அலி மரைக்காயர், செய்குநைன மரைக்காயர் முதலியோர் ஆவர். இந்துக்களுள் குறிப்பி டத்தக்கோர் திருச்சிற்றம்பலம் உடையார், அடிமைமுத்து தண்டவராயபிள்ளையும் அவருடைய சகோதரர் கிருஷ்ண ஸ்வாமிப் பிள்ளையும் ஆவர்.
6
வரவேற்பு 2) JÖFAT JÄÄGT
காயலில் உல்லாசச் சுற்றுப் பிரயாணத்தை முடித்துக் கொண்டு தோணிகளில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். ஏற்றத்தாழ மூன்று மணித்தியாலங்கள் சென்று விட்டன. அப்பொழுது நேரம் மாலை ஆறுமணி. முழு நாளும் வேலைசெய்து விட்டுக் களைப்படைந்து சூரியன் ஒய்வு பெறும் முகமாக மேற்கே மறைந்து சுொண்டிருந்தான். இல்லை அவ்வாறு எமக்குத் தோன்றியது. சூரியனே பூமியோ களைப்படைவதில்லை. நாம் களைப்படைந்திருந்த மையால் அத்தகைய எண்ணம் எமக்குத் தோன்றியது அது தான் உண்மையுமாகும்.
பேரூந்துகளில் ஏறினுேம். அவை புகைவண்டி நிலை பத்தை நோக்கி விரைந்தன. மாலை ஆறரை மணிக்கு

வரவேற்பு உபசாரங்கள் 3.
சிதம்பரம் நகராண்மைக் கழக மண்டபத்துக்கும் செல்ல வேண்டி இருந்தது. கீழைத்தேயப் பூங்காவில் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்திலும் சாஸ்திரி மண்டபத்தில் நடந்த கூட்டத்துக்கும் போகும் வாய்ப்பு பிச்சாவரம் சென்றவர் களுக்குக் கிடைக்கவில்லை. எல்லோரும் புகைவண்டி நிலை யத்திலிருந்து பேரூந்துகளில் நகர மண்டபத்துக்குச் சென் ருேம். பொது வரவேற்பு எமக்காகக் காத்துக் கொண் டிருந்தது.
இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட் டில் பங்குபற்றியவர்களை வரவேற்க மக்கள் திரண்டிருந்த னர். ஆர்வம் மிக்கோராய்க் காணப்பட்டனர். தமிழ் உணர்ச்சி மிகுந்தவர்களாக நடந்தனர். பிரதிநிதிகளுக்குப் புறம்பான ஆசனவசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.
பொதுவாக ஓர் அரசாங்கம் ஒரு கூட்டத்தையோ ஒரு விழாவையோ ஒழுங்கு செய்யுமாயின் அவ்வரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்காதவர்கள் அத்தகைய கூட்டத்திலோ விழாவிலோ அக்கறை காட்டுவதில்லை. அத்தகையோர் முடியுமாயின் பகிஷ்கரிப்பர். இரண்டாவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டுக்குப் பூரண ஆதரவு நல்கி னர் தமிழக அரசினர். திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள் இம் மகாநாட்டினதும் கலாச்சாரச் சுற்றுலா வினதும் வெற்றிக்கு அரும்பாடுபட்டனர். தங்களாலான அ%னத்தையும் செய்தனர். வேருேர் அரசாங்கம் இருந் திருத்தால் இன்னும் நன்ரு கசெய்திருக்கும் என்ற நிலை u buller ADQu7D பணிபுரிந்தனர். தமிழ் கூறும் நல்லுலகம் தற்காலத் தமிழக அரசுக்கு இத்துறையில் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் அரசுக்கு நற்டெய

Page 22
32 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
ரைக் கொடுக்கக் கூடிய எத்தகைய நிகழ்ச்சியிலும எதிர்க் கட்சி பங்குபற்றது என்பதையே எவரும் எதிர்பார்ப்பர். இது எவரும் பெறும் அனுபவமும் ஆகும். இரண்டாவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டுப் பிரதிநிதிகள் பங்குபற்றிய கலாச்சாரச் சுற்றுலாவிலோ எதிர்பாராதது நடந்து விட்டது. அனைவரும் ஒத்துழைத்தனர்.
தென்னுற்காடு மாவட்டத்தில் உள்ளது சிதம்பரம் என்னும் திருத்தலம். சிதம்பரம் நகராண்மைக் கழகம் மகாநாட்டுப் பிரதிநிதிசளுக்குப் பொது வரவேற்பு அளிக்க ஒழுங்குகளைச் செய்திருந்தது. மாலை ஆறரை மணிக்கு நிகழ இருந்த பொதுவரவேற்புச் சற்றுத்தாமதமாய் ஆரம்ப மானது. ஒவ்வொரு நாட்டுப் பிரதி நிதிகளுக்கும் உரிய சான்றிதழ்களையும் நினைவுச் சின்னங்களையும் அவர்கள் சார்பில் பெற்றுக்கொள்ள ஒவ்வொரு நாட்டின் பிரபல்ய மானவர்கள் அழைக்கப்பட்டனர். இலங்கையைப் பொறுத்தவரையில் சிறிது கருத்து வேற்றுமையை ஏற் படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகியது. மாநாட்டில் இலங் ைசயின் பிரதிநிதிகளுக்கு தலைமை தாங்கி அவர் களுக்கான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பதில் சற்றும் தளராத நீதியரசர் கலாநிதி எச். டபிள்யு. தம்பையா கியூ.சி. அவர்கள் கலாச்சாரச் சுற்றுலாவில் பங்குபற்றவில்லை. தமிழ் மகாநாட்டு ஆரம்பக் கூட்டத் தில் கலந்துகொண்டு உரைநிகழ்த்திய உள்ளூராட்சி அமைச்சர் கெளரவ திருச்செல்வம் கியூ சி, அவர்களும் அங்கிருக்கவில்லை. மாநாட்டு இலங்கை உபசரணைக் குழுத் தலைவர் சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் திரு கு. பாலசிங்கம் அவர்களும் சுற்றுலா வில் கலந்து கொள்ளவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் திருவாளர் 8, n. GLIT இரத்தினம் எம். ஒ. எல். சென்றிருந்தார்’ வே சம்பந்தப்பட்டவர்களின் பெருந்தன்மை காரண

வரவேற்பு உபசாரங்கள் 33 தோன்ற இருந்த புயல் தென்றலாக மாறியது.
வரவேற்புபசாரக் கூட்டம் ஆரம்பமாக வரவேற்புப் பத்திரங்கள் வாசிக்கப்பட்டன. ஒன்றன்பின் ஒன்ருக வசிக்கப்பட்டுள்ளன. முதன்முதலில் சிதம்பரம், திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் சார்பில் ஓர்உபசாரப் பத்தி ரம் வாசிக்கப்பட்டது. அப் பத்திரத்தில் உதய சூரியனின் பெரியதொரு படம் பொறிக்கப்பட்டிருந்தது. மிகமிக சுருக்கமான உபசாரப் பத்திரமாகவே அது அமைந்திருந் தது. அப்பத்திரத்தின் வலது பக்க மேல் மூலையில் "சிதம் பர நகருக்கு 12. 1. 68 இல் வருகை தந்த தமிழ்ப் பேரறிஞர் குழுவினருக்கு உவந்தளித்த வரவேற்பு மடல்’ என இருந்தது. இடப்புறமாக மத்தியில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என எழுதப்பட்டிருந்தது உலக ஒற்றுமை நாடும் தமிழ் கற்ற நல்லறிஞர் பெருமக்களே, வருக! வருக!! திராவிட முன்னேற்றக் கழகம் சிதம்பரம்" என இருந்தது. கீழே வலது பக்க மூலையில் உதயசூரிய னின் படம் இருந்தது. அவ்வளவோடு முடிவடைந்தது தி. மு. க. உபசாரப் பத்திரம்.
இரண்டாவதாக வாசிக்கப்பட்டது. சிதம்பர நகர்ச் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற் புரை. அந்த வரவேற்புசாரப் பத்திரத்தின் நடுவே காலத் தூக்கி ஆடும் நடராஜப் பெருமானின் படம் இடம் பெற் றிருந்தது. மூன்று பந்திகளைக் கொண்ட வரவேற்புரை யின் முதலாம் பந்தி பின் வருமாறு அமைந்திருந்தது:
"உலகத் தமிழ் அறிஞரிகளே உலக மொழிகளுள் தமிழ் மொழி மிகவும் தொன்மையும் இனிமையும் சொல் வளமும் இலக்கிய வளமும் இலக்கண வரம்பும் உடைய மொழி என்பதனே உலகோர்க்குணரித்த இம் மகாதாடு TTTTLLL LLTLTLLTTLTTTLLLL LL LLLLLLLTLTL LTTTT TTTTTTL

Page 23
34 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
பூரிப்படைகின்ருேம். இம்மகாநாடு தமிழகத்தில் சிறப்றபு நடைபெறுவதற்குக் காரணமாயிருந்த முன்னுள் முதல மைச்சர் திரு. எம். பக்தவச்சலம் அவர்கட்கு நன்றி செலுத் தக் கடமைப் பட்டிருக்கிருேம்."
இங்கே அரசியல் கலந்திருப்பதோடு தங்குதடையின்றி எதிர்க்கட்சியின் கருத்துக்கள் தெரிவிக்க வாய்ப்பும் அளிக் கப்பட்டுள்ளமையைக் காணலாம்.
"எப்பொருள் எத் தன்மைத் தாயினும் , இப் பொருள், மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற குறளையும் அவ்வரவேற்புப் பத்திரம் தன்னகத்தே கொண்டிருந்தது.
மூன்ருவதாக வாசிக்கப்பட்டது ஆங்கிலத்தில் எழுதப் பட்ட வரவேற்பிதழ். சிதம்பரத்திலுள்ள சுதந்திரக் கட்சி யினல் வாசிக்கப்பட்ட வரவேற்பிதழ் அது. முதுபெரும் அறிஞரான ராஜாஜி அவர்களைத் தலைவராகக் கொண்ட சுதந்திரக் கட்சி வரவேற்பிதழை ஆங்கிலத்தில் வாசித்த தளித்ததில் வியப்பொன்றுமில்லை.
இராஜகோபாலச்சாரியார் அவர்கள் மூதறிஞர். புதுப் , புது உலமைகளைக் கூறுவதில் வல்லுநர். ஆழ்ந்த அணு பவம் மிக்கவர். ராஜாஜியின் உவமைகள் என்னும் பெயரை உடைய ஒரு நூலும் வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தை நீக்கி விட்டு நாட்டு மொழி ஒன்றை அதற்குப் பிரதியீடாக விதிப்பது பற்றிய சர்ச்சை ஒரு முறை எழுந்த போது அந்நிலைமையை நல்ல முறையில் வருணித் தார். ஆங்கில மொழியை முற்ருக நீக்கிவிட்டு வேருெரு மொழியைப் புகுத்த முயல்வது ஓடிக்கொண்டிருக்கும் புகை வண்டியைத் திருத்த முயல்வது போலாகும் என்று ராஜாஜி குறிப்ட்பிடார். தென்னகத்தில் சிறப்பாகத் தமிழகத்தில் ஆங்கிலம் தொடர்ந்து "தொடர்பு மொழி

வரவேற்பு உபசாரங்கள் 35
யாக" இருக்க வேணடும் என்ற கருத்து வலுப்பெற் றுள்ள இக்சாலத்தில் சுதந்திரக்கட்சி ஆங்கிலத்தில் வர வேற்புரையை வாசித்து அளித்தல் வியப்பொன்றும் இல்லை அல்லவா?
சுதந்திரக் கட்சி வரவேற்ப்பிதழில் வடமொழிச் சுலோகம் ஒன்றும் "குணித்த புருவமும்” என்று ஆராம் பிக்கும் அப்பரின் தேவாரத் திருப்படாலும் இடம் பெற் றுள்ளன. வடமொழிச் சுலோகத்தில் அப்பையா தீக்சிதர் என்பவர் நடராஜப் பெருமானையும் பூரீகோவிந்தராஜப் பெருமானையும் புகழ்ந்து பாடியுள்ளார்.
"சிதம்பரம் என்னும் இந்நகரிலேயே சைவமும் வைணவமும் இணைக்கப்பட்டுள்ளன" என்றும் இப்பத்தி ரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. М
அடுத்து ம. பொ. சி. அவர்களின் தலைமையில் இயங் கும் தமிழரசுக் கழகத்தின் சார்பில் ஒர் அன்பு மடல் வாசித்தளிக்கப்பட்டது. அவ் வரவேற்பு மடல் அரசியல் கருத்துக்களைப் பரப்புவதாக இருந்தது. அவ்வரவேற்பு மடலின் முதல்ாவது பந்தி இவ்வாறு அமைந்திருந்தது:
"தமிழகத்தில் தமிழரசு வேண்டி உழைத்து நின்றது தமிழரசுக் கழகம். அதன் ஒரே குரலாய் முழங்கி நிற் பவர் தலைவர் ம. பொ. சி. அவர்கள். அந்தத் தமிழரசுக் கனவாகிப் போகவில்லை. நினைவாகி, நிலைத்து, நீடித்து விட்டது. எமது துணையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்துள்ள தமிழக அரசு, நடத்திய உலகத் தமிழ் மகாநாடு உலகமே புகழ்ந்திடும் வகையில் அமைநி தது கண்டு அனைவரும் வியந்திருக்கின்றனர். பாராட்டு

Page 24
36 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
கின்றனர். தமிழ்வாழ, தமிழரசு செழிக்க, தமிழ் இனம் உயர தங்கள் பணி உதவும்"
தென்னுற்காடு மாவட்ட வரவேற்புக் குழுவின் தலை வரும் அங்கத்தினர்களும் ஒரு வரவேற்பிதழை வாசித்து அளித்தனர். அரசினர் அலுவலாளர் உட்பட அரசாங்க அலுவலர் முயன்று ஒழுங்கு செய்யப்பட்ட வரவேற்பு அதுவாதலால் அவர்களின் வரவேற்பிதழ் பொது அடிப் படையில் அமைந்திருந்தது. அந்த வரவேற்பிதழின் முதற் பந்தி,
'வரலாற்றுச் சிறப்பு மிகு விளங்கும் புனித நடராசரி ஆலயமும், கலைக் கோயிலாம் அண்ணுமலைப் பல்கலைக் கழ கமும் அமைந்து, சீரும் சிறப்புடனும் விளங்கிடும் இத் தில்லையம்பதியாம், சிதம்பரம், பழமைக்கும் புதுமைக்கும் ஒரு சான்று. இத்திருநகர், எங்கள் மாவட்டத்தின் தனிச் சிறப்பு. இப்புனிதநகரில் உங்களை வரவேற்று உபசரிப்பதில் தாங்கள் உள்ளம் பூரிக்கின்ருேம் என்று அமைந்துள்ளது
வரவேற்பிதழ்கள் வாசிக்கப்பட்ட பின்னர் இரண் டாவது உலகத் தமிழ் நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கும் நினைவுச் சின்னங்களைக் கொண்ட பெட்டிகள் வழங்கப்பட்டன. பெட்டிகளில் அப்பெட்டிகளுக்குரியவரின் பெயர்கள் பொறுக்கப்பட்டி ருந்தன, எனக்குக்கிடைத்த பெட்டியில் நான்கு நினைவுச் சின்னங்கள் இருந்தன. எனக்கு ஒன்றும், திருமதி உவை சுக்கு ஒன்றும் புதல்வன் அஉற்ஸனுக்கு ஒன்றும், புதல்வி நிலுபாவுக்கு ஒன்றுமாக நான்கு இருந்தன. பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. செப்புத் தட்டில் வெள்ளியினல் பொறிக்கப்பட்ட உருவங்கள் இருந்தன. ஒன்றில் மாத் திரம் நடராசப் பெருமானின் உருவம் பொறிக்கப்பட்டி

வெந்நீர் வழங்கிய அரிசி ஆலை 37
ருந்தது. பின்னர் பிரதிநிதிகள் பார்வையாளர் அவர் களோடு சென்றவர்கள் அத்தனை பேருக்கும் சான்றிதழ் கள் வழங்கப்பட்டன. சிதம்பர நகரக் கெளரவ குடிமகன் பட்டம் வழங்குவனவாக அச்சான்றிதழ்கள் அமைந்தி ருந்தன. 12. 1. 78 தில்லை மாநகருக்கு வருகை தந்த தங்களைத் மிகத் தொன்மையான எங்களது தெய்வீகத் திருநகரத்துக்கு கெளரவக் குடிமகனக ஏற்றுக் கொள்ள மெத்தப் பெருமை கொள்கிருேம். ஒவ்வொரு சான்றிதழி லும் அதற்குரியவரின் பெயரும் அவரின் நாடும் பொறிக் கப்பட்டிருந்தன. எனது சிறுமிக்கு வழங்கப்பட்ட சான்றி தழில் "சிலோன் நாட்டைச் சார்ந்த குழந்தை” எனப் பொறிக்கப்பட்டிருந்தன.
7
வெந்நீர் வழங்கிய அரிசி ஆலை
அடுத்த நாள் 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆந் தேதி சனிக்கிழமை. காலை நித்திரை விட்டு எழுந்தேன். இன்னும் சிதம்பரத்திலே இருப்பது போன்ற காட்சி. புகை வண்டியும் அசையாது ஆடாது நின்று கொண்டி ருந்தது. இன்னும் புகைவண்டி சிதம்பரத்திலிருந்து புறப் படவில்லையா? சிதம்பரத்திலே எந்த சூழ் நிலையில் புகை வண்டி ஏறினேமோ அதே சூழ்நிலையில் அன்று காலை

Page 25
38 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
இருந்தோம். எனவேதான் இந்த மயக்கம் தூக்க மயக் சத் தோடு கலந்த மயக்கம், அப்பொழுதுதான் புகை வண்டிப் பணியாளன் "நாம் திருவாரூருக்கு வந்து விட் டோம்" என்று கூறினன்.நான் உறக்கத்தில் மூழ்கி இருந்தேன். அதனலேயே புகைவண்டியின் செலவை உணரமுடியவில்லை’
வயிரு ர உண்டோம். செவியார இசையைச் சுவைத் தோம். புகைவண்டிக்குத் திரும்பினுேம். உறங்கிவிட்டோம். "அரை வயிறு நிறைய சாப்பிடு கால்வயிறுக்கு நீர் குடி, எஞ்சிய காற்பகுதியைச் சும்மா விடு" என்று முதிதோர் கூறுவர். இத்தகைய பயிற்சி உடல் நலத்துக்கு இன்றிய மையாதது என்பர். அவர் கூறுவதிலும் உண்மை உண்டு, இப்புத்திமதியை நாம் முற்ரு கப் பின்பற்றுவதில்லை எனினும் மகாநாடு நடைபெற்ற பொழுதும், கலாச்சாரச் சுற்றுலா வில் சென்றபொழுதும் இவ்வாலோசனைக்கு முக்கியத்துவம் அளித்தோம். சந்தர்ப்ப சூழ்நிலைகளும் இவ்வாறு செய்ய எம்மைத் தூண்டின. நோன்பின் அடிப்படைத் தத்துவங் களின் ஒன்றும் இங்கு பொதிந்துள்ளமையைக் காணலாம்.
ஒரு முறை ஒரு வைத்தியர் மக்கா நகருக்குச் சென் றிருந்தார். ஆனல் அவருக்கு அங்கே நோயாளர் தொகை யாக இருக்கவில்லை. அவரிடம் வைத்தியம் பெற வருவோ ரின் தொகையும் மிகமிகச் சொற்பமாகும். அவர் ஆற்றல் குறைந்தவரல்லர். அவர் அறவிடும் கட்டணம் அக் குறைவுக்குக் காரணமாகவும் இருக்கவில்லை. ஒரு நாள் வைத்தியர் ஒர் இடத்துக்குச் சென்ருர். அங்குள்ளவர்களி டம் விசாரித்தார். நோயாளர் குறைவாக இருப்பதன் காரணத்தை அறிய முயன்ருர், "நாம் உண்ண அமர்ந்ததும் பூரணமாகப் பசி ஆறுவதற்கு முன்னர் எழுந்துவிடுவோம். மிதமிஞ்சி நாம் சாப்பிடுவதில்லை. ஆகவே எம்மிடையே நோயாளரைக் காண்பது அரிது’ என்று மக்கள் கூறினர்

வெந்நீர் வழங்கிய அரிசி ஆலை 39
இவ்வாறு அளவுக்கு அதிகரிக்காமல் உணவு உட்கொண் டமையும் ஆழ்ந்த நித்திரைக்கு ஒரு காரணமாகும். காலை யில் எழுந்து காலைக்கடனை முடித்துக் கொண்டு 8-30 மணிக்குப் புகைவண்டியிலிருந்து புறப்படுதல் வேண்டும். காலை உணவு புகைவண்டியிலேயே பரிமாறப்பட்டது. ஒவ் வொரு பெட்டியிலும் இதற்கென இவ்விரண்டு பணியாளர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
சிறப்புப் புகைவண்டியின் ஒரு பெட்டியின் ஒரு பகுதி சுற்றுலா அலுவலகமாக மாறியது. சென்னையில் இரண் டாவது அனைத்துலகத் தமிழ் மகாநாட்டைக் கட்டியவர் களும் இப் புகைவண்டியிலே சென்றனர். சென்ற பிரயாணி களுக்கு வேண்டிய அத்தனையையும் செய்து கொடுத்தனர். அவர்களுள் ஒருவர் வி. எஸ். தியாகராஜ முதலியார், இவர் திருவாரூரைத் தாயகமாகக் கொண்டவர். இவர் அல்லது இவரின் பிரதிநிதி ஒருவர் ஒவ்வொரு நாளும் காலையில் புகைவண்டியின் ஒவ்வொரு பெட்டிக்கும் சென்று குசலம் விசாரிப்பார்.
புகைவண்டிப் பணியாளன் ஒருவன் வந்து "ஐயா வெந்நீர் வேண்டுமா?" என்று கேட்டான் "புகைவண்டியில் வெந்நீர் உண்டா? என்று கேட்டேன். இல்லை ஐயா. வெந்நீர் கிடைக்கக் கூடிய ஒழுங்குகளைச் சம்பந்தப்பட்ட வர்கள் மேற்கொண்டுள்ளனர், என்று பதிலிறுத்தான். உண்மையிலே எமது பெட்டிக்கு தேவைப்பட்ட வெந்நீர் எமக்கு அளிக்கப்பட்டது. திருவாரூர்ப் புகைவண்டி நிலையத் துக்குப் பக்கத்தே மாபெரும் அரிசி ஆலை ஒன்று உண்டு. அந்த ஆலையிலிருந்து விசேட குழாய்கள் மூலம் வெந்நீரி கிடைக்கக் கூடிய வழிவகைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொண்டிருந்தனர். இக் கலாச்சாரச் சுற்றுலாவில் பங்குபற்றிய அனைவருக்கும் வசதிகள் அத்தனையும் செய்து கொடுக்க அதனை ஒழுங்கு செய்தோர் சற்றும் தயங்சவில்லை.

Page 26
4 O நெஞசில் நிலைத்த சுற்றுலா
புகைவண்டிப் பெட்டியில் இயங்கிக் கொண்டிருந்த அலுவலகத்தில் தட்டச்சு, பிரதிபண்ணும் இயந்திரம் முதலியன இருந்தன. எழுவினைஞர் அதில் பணியாற்றினர். நாளுக்குநாள் வேளைக்கு வேளை சுற்று நிருபங்கள் அனை வருக்கும் அனுப்பப்பட்ட வண்ணம் இருந்தன.
காலை எட்டரை மணியானதும் எல்லோரும் புகை வண்டியிலிருந்து புறப்பட்டோம் நாம், சென்ற புகை வண்டி நிறுத்தப்பட்டிருந்த மேடையிலிருந்து புகைவண்டி யின் நுழை வாயிலை அடைந்து வெளியே செல்ல புகை வண்டி நிலையத்துக்கு மேலாக இடப்பட்டிருந்த பாலத்தைக் கடக்கவேண்டி இருந்தது. படிக்கட்டுக்களில் ஏறி பாலத் தில் சென்று மீண்டும் படிக்கட்டுக்களில் இறங்கி அடுத்த மேடையை அடைந்து வெளியே செல்ல வேண்டி இருந் தது. ஆணுல் இத்தகைய சிரமம் பிரதிநிதிகளுக்கும் பார் வையாளர்களுக்கும் ஏற்படவில்லை. எமக்கு அதிகம் சிரமம் அளிக்கக்கூடாது என்று கற்றுலாவை ஒழுங்கு செய்தோர் கருதி இருக்கலாம். படிக்கட்டுக்களில் ஏறி இறங்கிச் செல்லாமல் இருத்தற் பொருட்டு, ஒரு மேடையிலிருந்து மற்ற மேடைக்குச் செல்வதற்கு வாங்குகளாலான ஒரு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. புகைவண்டிகள் செல்லும் பொழுது அகற்றக்கூடியதும் பின்னர் அமைக்கக்கூடியது மான முறையில் அமைந்திருந்தது அந்தப் பாலம்.
திருவாரூர்ப் புகைவண்டி நிலையத்துக்கு மிக அன்மை யில் பிரமாண்டமான ஒரு கட்டடம். அக்கட்டடத்தைப் பார்க்கச் செல்வதே எமது அன்றைய முதல் நிகழ்ச்சியாக அமைந்தது. அந்தக் கட்டடத்திலே மிகப் பெரிய ஒர் அரிசி ஆலை அமைந்திருந்தது. அந்த அரிசி ஆலை தஞ்சாவூர்

வெந்நீர் வழங்கிய அரிசி ஆலை 4 1 கூட்டுறவு விற்பனை சம்மேளனத்துக்குத் தலைவராக திரு. வி. எஸ். தியாகராஜ முதலியார் அவர்கள் கடமையாற்றி ஞர்கள் கலாச்சாரச் சுற்றுலாவிலும் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாகக் கடமையாற்றியவரும் அவரே ஆவர். அவரே எங்சளை அழைத்துச் சென்று அரிசி ஆலையின் நுணுக்கங்களை ஒலி பெருக்கி ஒன்றின் மூலம் விளக்கிக் கொண்டிருந்தார்.
அது ஒரு நவீன அரிசி ஆலை. இந்தியாவில் உள்ள அரிசி ஆலேகளுள் மிகப் பெரியது. ஒரு மணித்தியாலத்துக்கு நான்கு தொன் நெல்லை அரிசியாக்கக்கூடிய ஆற்றல் அதற்கு உண்டு. மிகச் சிறந்த அரிசியை உற்பத்தி செய்யக்கூடியது அது, உமி போன்ற பிற பொருள் எதுவுமின்றி நல்ல தரமான அரிசியைத் தருகின்றது.
இவ்வரிசி ஆலைக்கான பொறித்தொகுதியும் எந்திரங் களும் மேற்கு ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பொருத்தப்பட்டன கொங்கி நீட்டினலான ஆறு பெரிய குதிர்கள் இடப் பக்கத்தில் உள்ளன. அங்கே நெல் வைக்கப்பட்டி ருக்கும் ஒவ்வொன்றும் ஆயிரம் தொன் கொள்ளக்கூடியன வாகும். அத்தகைய ஆறு சிறிய குதிர்கள் உண்டு. அவை ஒவ்வொன்றிலும் 200 தொன்களைப் பாதுகாத்து வைக்கலாம். இவ்வாறு 7, 200 தொன்கள் கொள்ளக் கூடியனவாக அவை அமைந்துள்ளன. ஆண்டொன்றுக்கு 28,000தொன் நெல்லை அரிசி ஆக்கக்கூடிய ஆற்றல் அதற்கு உண்டு. எனவே ஒர் ஆண்டுக்குரிய தொகையில் நான்கில் ஒரு பங்கை ஒரே முறையில் கொள்ளக்கூடியனவாக ஆறு பெரிய குதிர்களும் ஆறு சிறிய குதிர்களும் அமைந்துள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது. அவற்றிற்கு அணித்தாக மத்திய கட்டுப்பாட்டு நிலையம் உள்ளது. நெல் இடுவதும் நெல் குத்துவதும் பின்னர் அவ்விடங்களுக்கு அனுப்பப்படுவது

Page 27
42 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
மான எல்லாக் கருமங்களும் அம்மத்திய நிலையத்திலிருந்தே பொறியமைக்கப்பட்டுள்ளன. எந்திரமய மாக்கப்பட்டுள் ளன. நெல்லின் தரத்தைத் துணிவதற்கான ஒர் ஆய்வுக் கூடமும் அங்குண்டு அரிசி ஆலைகளை நவீனமயமாக்கும் இந்திய அரசாங்கத்தின் திட்டத்துக்கிணங்கவே திருவா ரூரிலே இம்மாபெரும் அரிசி ஆலை நிறுவப்பட்டுள்ளது. இத்திட்டத்தை இந்தியாவில் புகுத்துவதற்காகப் பொறுப் பாயிருந்தவர்கள் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த போர்ட் (FORD) நிறுவனமேயாகும். இத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு 38 இலட்சம் ரூபா செலவாகியது.
இந்த அரிசி ஆலையின் கிழக்குப் பக்கமாக விதை நெல் தரப்படுத்தும் ஒரு பகுதி அமைந்துள்ளது. இரசாயன முறையில் பதமாக்கப்பட்ட விதைநெல்லை இவ்விதை நெல் பதனிடும் பகுதியின் மூலம் விவசாயிகள் பெறக் கூடியவர் களாக இருக்கிருர்கள். இப்பகுதியை அமைக்க மூன்று இலட்சத்து அறுபதினுயிரம் ரூபா செலவாகியுள்ளது. இதுவும் போர்ட் நிறுவனத்தாரின் அன்பளிப்பேயாகும். தஞ்சாவூர் மக்களுக்கு அளிக்கப்பட்ட நன் கொடையாகும். ஆண்டொன்றுக்கு 1500 தொன் விதை நெல்லை தயாரிக் கும் ஆற்றல் இப்பகுதிக்கு உண்டு.
உணவு உற்பத்தி இயக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ள இந்திய நாட்டுக்கு இத்தகைய அரிசி ஆலைகள் இன்றியமை யாதனவாகும். திருவாரூரில் உள்ள இந்த மாபெரும் அரிசி ஆலையை திறம்பட நடாத்தும் பெருமை தியாகராஜ முதலியாரை\ய சேரும். திருவாரூரில் இவருக்குச் சொந்த மான கரும்புச் செய்கையும் சீனி ஆலையுமுண்டு,
ஒன்பதரை மணியளவில் அரிசி ஆலைகள் நிகழ்ச்சி முடிவெய்தியதும் அங்குள்ள கோயிலுக்குப் போவதற்கு

பிறந்தவர் பிற வாப் பெரும்பதி 43
ஏற்பாடாயிருந்தது. ஆம். திருவாரூர் சீரும் சிறப்பும் பெற்ற ஒரு திருத்தலம் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. திருவாரூர் பண்டு புகழுடன் விளங்கிய ஒரு புனிதத் தலம். சோழ மன்னர் காலத்தில் ஐந்து ஆட்சி பீடங்களுள் ஒன்ருகத் திகழ்ந்த பெருமை திருவாரூருக்கு உண்டு. மனு நீதி கண்ட சோழன் வாழ்ந்த இடம் திரு வாரூர். அவனுடைய நீதி முறைமை பிரசித்தி பெற்றது.
அவனுடைய மகன் ஒரு பசுவின் கன்றை கவலையீன மாகத் தேரைச் செலுத்திக் கொன்றது பற்றி பசு முறை யிட அவ்வழக்கை விசாரித்துத் தனது மகனையும் அவ்வாறே தேரினல் கொல்லும்படி கட்டளையிட்ட பெருமையை உடையவன் அம்மனு நீதி கண்ட சோழன். இந்நிகழ்ச் சிக்குச் சான்ருகத் திருவாரூரில் உள்ள கோயிலின் வட கிழக்கு வாயிலுக்குச் சமீபத்தில் வெளிப்புறமாக ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமாகக் கல்வெட்டுக்க ளும் உண்டு என்பர்.
8
பிறந்தவர் பிறவாப் பெரும்பதி
நிலமகட்கழ கர்ர திரு நீணிதல் திலக மொப்பது செம்பிய்ர் வாழ் பதி மலர்மகட்கு வண்டாமரை போன் மலர்ந்து அலகில் சீர்த்திரு வாரூர் விளங்குமால்
(மனு நீதி கண்ட புராணம் 12)
நிலமகளுக்கு அழகு செய்து கொண்டிருப்பது திருவா

Page 28
44 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
ரூர். சிறப்புப் பொருந்திய நீண்ட நெற்றியில் இடப்பட்ட திலகமாக அமைந்திருப்பது திருவாரூர். மலர்மகள் வீற் றிருப்பதற்கு இன்றியமையாத தாமரை மலர் போன்று இடம் பெற்றுள்ளது திருவாரூர். செம்பியர் வாழ்பதியாகப் புகழீட்டியுள்ளது திருவாரூர். செம்பியர் என்ருல் சோழர் பரம்பரையினர். சிபிச் சக்கரவர்த்தியின் வழித் தோன்றல் கள். சிபிச் சக்கரவர்த்தி வள்ளண்மையில் சிறப்புற்று விளங் கியவர். வேடனுல் துன்புற்ற ஒரு புரு, சிபிச் சக்கரவர்த் தியிடம் அடக்கலம் புகுந்தது. சரணடைந்தது. வேடனிட மிருந்து புருவைக் காப்பாற்றப் புருவின் எடையுள்ள தசையைத் தமது உடலிலிருந்து வழங்கியவர் சிபி. "சிபிஜாதக’ என்னும் கதை பெளத்த இலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளது. இத்தகைய அளவற்ற சீரும் சிறப் பும் பெற்று விளங்கி வந்துள்ளது திருவாரூர். இன்னும் விளங்கிக் கொண்டிருக்கிறது
இங்ங்ணம் தனிச்சிறப்புடன் புகழ் பரப்பிய திருவாரூரை அருண்மொழித்தேவர் என்னும் சேக்கிழார் சுவாமிகள் மேற்கண்டவாறு பாடியுள்ளார் தமது பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தில். சேக்கிழார் சுவாமிகளின் புகழ் ஓங்குவதற்கும் ஒருவாறு காரணமா யிருந்ததும் திருவாரூர் எனலாம். நம்பி பாண்டார் நம்பி என்பவர் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை இயற்றி இருக்காவிட்டால் பெரிய புராணம் தோன்றி இராது. சேக்கிழார் சுவாமிகளின் பக்திப் பெருமை புலப் பட்டிருக்காது. பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ள பக்திப் பெருமைக்குக் காரணமாக இருந்த சேக்கிழார் சுவாமிகளை "பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வல்ல' என்று சிறப்பிக்கும் வாய்ப்பை மகாவித்துவான் மீனட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பெற்றிருக்கவும் மாட் L.T fi”.

பிறந்தவர் பிறவாப் பெரும்மதி 45
அதே போன்று நம்பியாண்டார் நம்பிக்கும் தமது நூலை இயற்றுவதற்கு வழி வகுத்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளேயாவர். சுந்தரமூர்த்தி நாயனரின் தேவாரத் ருப்பதிகங்கள் ஏழாந் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளது. அத்தகைய பதிகங்களுள், பதினெரு திருப்பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் தொகையும் ஒன்று. அறுபத்து மூன்று நாயன்மாரின் பெயர்களை முதன் முதல் குறிப்பிட் டவர் சுந்தரமூர்த்தி நாயனுரே ஆவார்,
"சுந்தரர் சிவபெருமானின் திருவாணை வழித் திருவெள்ளி
மலையினின்று மாதவஞ் செய்து, தென்திசை வாழ்ந்திடத் தீதிலாத்திருத் தொண்டத் தொகை தரத் தமிழகத்துத் தோன்றியருளினர்’ என்பர். சிவபெருமான் "தில்லைவாழத் தணர்" என அடியெடுத்துக் கொடுத்தருள சுந்தரமூர்த்தி நாயனுர் இத்திருப்பதிகத்தைப் பாடி அருளினர்! இத்திருப் பதிகத்தில் உள்ள முதற் செய்யுள் இவ்வுண்மையை விளக்கு கின்றது.
தில்லைவா ழந்தணர்தம் அடியா rக்கும் அடியேன் திருநீல கண்டததுக் குயவனுர்க் கடியேன் இல்லையே என்னத இயற்பகைக்கும் அடியேன் இளையான் தன் குடிமாரன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவில்ல மெய்ப்பொருளுக்கடியேன் விரி பொழில் சூழ் கொன்றையார் விறல் மிண்டர் கடியேன் அல்லி மென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆருளில் அம்மானுக் காளே.
பதிஞெரு திருப்பாசுரங்களைக் கொண்ட இத்திருத் தொண்டத் தொகையே நம்பியாண்டார் நம்பிக்கு திருத் தொண்டர் திருவந்தாதிக்கு வித்தாய் அமைந்தது. எனவே திருவாரூர் என்னும் சிவதலத்தில் பாடப்பட்ட இருத்

Page 29
46 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
தொண்டத் தொகையே சேக்கிழாரின் தலை சிறந்த காவிய மான பெரிய புராணத்துக்கு மூல வித்தாய் அமைந்தது.
தேவாரம் பெற்ற சிவ தலமாகிய திருவாரூர் பஞ்ச பூதத்தலங்சளுள் "நிலத்தின்" பகுப்பாய் அமைந்துள்ளது. சுந்தரமூர்த்தி நாயனருடன் நெருங்கிய தொடர்புடையது திருவாரூர் எனினும் மூவராலும் பாடப்பெற்றது இத் திருத்தலம். இதற்குரிய திருப்பதிகங்கள் 34 ஆகும். அவற் றுள் திருஞான சம்பந்தநானனரால் பாடப்பெற்றவை இருபத்திமூன்று. சுந்தரமூர்த்தி நாயனரால் பாடப்பெற் றவை எட்டு. திருநாவுக்கரசு நாயனரால் பாடப்பெற்றவை எட்டு. திருவாசகத்திலும் இத்தலம் புழப்பட்டுள்ளது. திருவாரூருக்குச் செல்லும் எவருக்கும் இவற்றை மறகக
: (Մ)ւց Ամո Ֆ].
தேவாகள் 'ன்றயான் வடிவு கொண்டியற்றிய புற்றை இடமாகக்கொண்டு, பரமசிவன் சிவலிங்கம் பெருமானகத் தோன்றினமையின் இறைவன் வான்மீக நாதர் என்றும் திருவாரூர் வான்மீகபுரம் என்றும் வழங்கப்படலாயிற்று. இன்னும் பலவகையில் திருவாரூர் சிறப்புப்பெற்ற திருத் தலமாகும்.
நாயன்மார் மூவரின் திருப்பாடல்கள் முதலில் தில்லை கண்வைப்பாக இருந்தது. நம்பியாண்டார் நம்பி வாயி லாக அவற்றை வெளிப்படுத்தி, ஏழு திருமுறைகளாகத் தொகுப்பித்து, செப்பேடுசளில் எழுதிவித்து இத்திருவூரின் கண்வைப்பித்து, வழிபடுவித்தவன் அபயகுல சேகர என் னும் வேந்தன் ஆவன். சேக்கிழாரடிகளைக் கொண்டு பெரிய புராணம் பாடுவித்து, அதனைச் செப்பேடு சளில் எழுது வித்து, இத்திருவூரின் கண்வைப்பித்து வழிபடுவித்த வேந்தன் அனபாயனின் தலைநகரும் இதுவேயாகும்.

பிறந்தவர் பிறவாப் பெரும்பதி 47
சுந்தரமூர்த்தி நாயனர் திருத்தொண்டத் தொகை பாடி யருள வாயிலாகவுள்ள "தேவாசிரியன்" என்னும் ஆயிரங் கால் மண்டபமும் இங்குள்ளது. திருமுதுகுன்றுத்துச் சிவ பெருமானின் திருவாணைப்படி அவளிைத்தருளிய பொற் சட்டியினை ஆங்குள்ள மணிமுத்தாற்றில் இட்டு திருவா ரூரில் உள்ள கமலாலயம் என்னும் திருக்குளத்தில் சுந்தர மூர்த்தி நாயனுர் எடுத்தனர். சுந்தரமூர்த்தி நாயனுர் சங்கிலியாருக்கு அளித்த திருமணத் திரு ஆணையை மீறி ஞர். அதன் பயனக இரு கண்களையும் இழந்தார். காஞ்சி புரத்தில் திருப்பதிகம் பாடி இழந்த இடக் கண்ணைப் பெற்ருர், இத்திருவாரூரிலே மற்ருெரு திருப்பதிகம் பாடி வலக்கண்ணைப் பெற்றர். சிவபெருமான் சுந்தர மூர்த்தி நாயனர் பொருட்டு பரவையார் மாளிகைக்குத் தூது நடந்த இடம் திருவாரூராம்.
தேவாலயத்துக்கு வெளியேயுள்ள கமலாலயம் என்னும் திருக்குளம் ஏறக்குறைய 33 ஏக்கர் பரப்பை உடையது. அத்திருக்குளத்தின் நடுவே ஒரு தீவு உள்ளது. அத்தீவில் ஒரு மண்டபம் உண்டு, கங்கை நடுவிலே உள்ளன போன்று 64 புனிதத் தீர்த்தங்கள் அங்கு இருக்கின்றன.
அங்கே வாதாபி விநாயகர் என்னும் பெயருடைய விநாயகரின் உருவம் ஒன்று உள்ளது. பரஞ்சோதி என்னும் சிறுத்தொண்ட நாயனர் இதனை வாதாபியிலிருந்து கொண்டு வந்தார் என்பர். இதற்கு முன்னர் விநாயகரின்சிலை தமிழ்நாட்டில் இருக்கவில்லை என்றும் கூறுவர்.
"திருவாரூர் தேரழகு" என்பது முது மொழி. அத் தகைய அழகு மிக்கது அத்தேர். தமிழ் நாட்டிலே உள்ள மிகப் பெரிய தேரும் அதுவாகும். 1926 ஆம் ஆண்டு தற் செயலாக இத்தேர் தீயினுல் சேதப்படுத்தப்பட்டது. பின்

Page 30
48 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
னர் 60, 000 ரூபா செலவில் இது திருத்தி அமைக்கப் பட்டுள்ளது. இதன் மாதிரி உருவம் சென்னை நூதனப் பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இத்தேவாலயத்திலுள்ள கோபுரங்களுள் Gudhs உள்ளது. 101 அடிகளும், கிழக்கே உள்ள 118 அடிகளும் உயரமானவை. வாயில்கள் கண்ணைக் கவரும் வகையில்
அமைந்துள்ளன.
திருவாரூர் சங்கீதத் திரிமூர்த்திகளுடன் நெருங்கிய தொடர்புடையது. தியாகராஜர், முத்துசுவாமி தீச்சிதர், சியாமா சாஸ்திரி என்போரே அம் மூவருமாவர். அவர்க ளுக்கு நினைவுச் சின்னங்கள் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இம்முயற்சிகளுக்குப் பொறுப் பாயிருப்பவர் திருவருட்பதி மங்களம் தியாகராஜா முதலி யார் அவர்களேயாவர். இவரது பெருமுயற்சியினலேயே திருவாரூர்த் தேவாலயம் புதுப்பிக்கப்பட்டது. அண்மையில் கமலாலயம் என்னும் திருக்குளம் திருத்தி அமைக்கப்பட் டது. திருவாரூர் தேவாலயத்தின் நம்பிக்கைச் சொத்துப் பொறுப்பாளராக திரு. வி. எஸ். தியாகராஜ முதலியார் கடமையாற்றி வருகிருர், வாழையடி வாழையாக முதலி யார் குடும்பத்துக்கு வரும் இப்பதவி இப்பொழுது இவ் ரைச் சார்ந்துள்ளது.
திருவாரூரிலே பிறப்பது பெரும் பாக்கியம் எனக் கருதப்படுகிறது. பிறந்தவர் பிறவாப் பெரும்பதி இது என்பர். பிறந்தவர்களுக்கு திருவாரூர் முத்தி கொடுத்தலால் பிறக்க முத்தி தருவது திருவாரூர் எனப் புகழ்வர். அந்த கக்கவி வீரராகவ முதலியார் இயற்றிய "திருவாரூர் உலா போன்ற பல நூல்களுக்குப் பொருளாய் அமையும் பேற் றைப் பெற்றுள்ளது இத் திருவாரூர்.

9
BT36.Í 26ÖLGOőlí6Öt நற்பதியில்
பொன்னெடுங் குன்றிற் முேன்றிப் பொருனே யோடள விஞாங்கர் மின்னிவர் மணிகள் சிந்தி வையையை வெருவத் தாக் கிப் பன்னெடும் பொழில்கள் சூழ்ந்து காவிரிப் பழுவம் போந்து மன்னு நீர்வளத் தின் மே சூறகூ ரெனவாய்ந்ததொன்றே!
பொன் என்ருல் பொன் மலை என்பர். பொன் மலை என்பதை திருச்சிராப்பள்ளியிலுள்ள தாயுமானவர் மலை என்றும் கொள்வர். இத்தகைய பொன்மலை என்னும் நெடிய மலையிலிருந்து தோன்றுகிறது பொருனை நதி. பொருநை நதி என்றும் வழங்கப்படுகிறது. இப்பொருணை நதியோடு கலக்கின்றது மற்ருெரு நதி. அங்கிருந்து அந் நதி பாயும்பொழுது ஒளிவீசும் இரத்தினங்களை எல்லா இடங்களி லும் சிதறுகின்றது. பின்னர் வையை நதியை அச்சுறும்படி தாக்குகின்றது. மதுரை மாவட்டத்தில் உள்ளது வையை

Page 31
50 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
நதி. தொடர்ந்து பென்னம் பெரிய பூஞ்சோலை ஸ் பல வற்றினல் சூழப்பட்டுள்ள இடங்களினூடாகப் பாய்ந்து செல்லுகின்றது. காவேரி காடுகளின் ஊடாகச் செல்கின்றது. சென்று நிலை பெற்று நீர் வளத் ைக ஏற்படுத்துகின்றது. இத்தகைய நீர்வளத்தையுடைய நகரம் மேற்கே உள்ள நகரமாகும்.
ஆம். நாகூர் ஒரு புனித நகரமாகும். பாடல் பெற்ற திருத்தலம். முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும் புனித யாத்திரை மேற்கொள்ளும் புண்ணிய நகரம், திருவிழாக் காலங்களில் மாத்திரம் அல்லாது எப்பொழுதும் முஸ்லிம் யாத்திரீகர்களால் தரிசிக்கப்படக்கூடிய நடுநிலையமாக விளங்குகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்ல ஏனைய மதத்தவர் களும் நேர்த்திக்கடன் கொண்டு தரிசிக்கும் கேந்திர நிலைய மாகத் திகழ்கிறது நாகூர். முஸ்லிம் புலவர் பலருக்குப் பொருளாய் அமைந்து புகழப்பட்டுள்ளது. அத்தகைய சீரும் சிறப்பும் பொருந்திய திருநகராம் நாகூர்ப்பதியை மேலேயுள்ள பாடலில் சே குஞப் புலவர் என்னும் செய்கு அப்துல் காதிறு நாயினுர் லெப்பை ஆலிம் புலவர் தமது திருக்காரணப் புராணத்தில் பாடியுள்ளார்,
சென்னை மாநகரில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் பங்குபற்றப் புறப்படுவதற்கு முன்னர், எனது மனைவி நாகூரையும் தரி சிக்க வேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தார். மகா நாட்டுக் கலாச்சாரச் சுற்றுலாவிலோ நாகூர் இடம் பெற வில்லை. எனவே சுற்றுலா நிகழ்ச்சி நிரலை அலசி ஆராய்ந் தேன், நாகூருக்கு எவ்வாறு செல்லலாம் என்று சிந்திக்க லானேன். சுற்றுலாச் சென்ற சிறப்புப் புகைவண்டி தங்கும் ஒவ்வொரு நிலையதித்திலுமிருந்து நாகூர் எவ்வளவு தூரத், திலுள்ளது என அறிய முயன்றேன். சலாச்சாரச் சுற்று

நாகூர் ஆண்டகையின் நற்பதியில் 51
லாவுச் கிணங்க நாகூருக்குச் செல்லச் கூடிய பிரதானமான புகைவண்டி நிலையங்+ள் நான்கில் புகைவண்டி தங்குவ தாக இருந்தது. ஒன்று திருவாரூர், மற்றது தஞ்சாவூர், அடுத்தது மதுரை. நான்காவது திருச்சிராப்பள்ளி. நாகூ ருச்கு மிக அணித்தாக இருந்தது திருவாரூரேயாகும். திரு வாரூரிலிருந்து ஏறக்குறைய பதிஞறு மைல்கள் தூரத்திலே நாகூர் உள்ளது என்பதை அறிந்தேன்.
f
తాలు திரு. தியாகராஜ முதலியார் வழக்கம் போல குசலம் விசாரிக்க வந்தார். அப்பொழுது நாகூருக் குப் ப்ோக வேண்டிய எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவதாகக் கூறினர் சென்று விட்டார். மறுகணம் வந்தார். நாகூர் செல்வ தற்காக மோட்டார் வண்டி தயாராக இருபபதாகக் கூறி ஞர். அவர் அத்துடன் நின்று விடவில்லை. எமது வழித் துணைக்காக வழிகாட்டியாக அவருடைய சீனி ஆலையில் கடமையாற்றும் ஒரு பொறிஞரையும் ஒழுங்கு செய்திருந் தார். அரிசி ஆலைக்குச் சென்ருேம். காலை 9, 15 மணிக்கு அந்தப் பொறிஞர் வந்தார். அவர் வேறு யாருமல்லர்’ ஒரு முஸ்லிம் பொறிஞர். அவர் பெயர் ஜனப் ஜெய்லானி. அரிசி ஆலைக்கு வந்த ஜனுப் ஜெய்லானி உடனடியாக நாம் புறப்பட வேண்டும் என்று கூறினர். நானும் எனது மனைவியும் மகன் அற்ஸனும், மகள் பாத்திமா நிலூபரு மாகப் புறப்பட்டோம். இந்தோனேஷியாவிலிருந்து வந்து தமிழ் மாநாட்டில் பார்வையாளராகக் கலந்து கொண்ட
ஜனுப் சுல்தான் மரிக்காரும் எம்மோடு சேர்ந்து கொண் டார். இவர் சிதம்பரத்துக்கு அணித்தாய் உள்ள பறங் கிப் பேட்டையைச் சேர்ந்தவர். இந்தோனேஷியாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் கடமையாற்றுகிருர். மாநாட்
டுக்காகத் தாம் ஒரு கட்டுரை அனுப்பியதாகவும், கால

Page 32
52 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
தாமதம் காரணமாக அது நிகழ்ச்சி நிரலில் இடம் பெற வில்லை என்றும் கூறினர்.
தமிழ் பேசும் முஸ்லிம்கள் நால்வரே மாநாட்டில் பங்கு பற்றினர். மற்ற இருவருள் ஒருவர் ஜனுப் கே பி.எஸ். ஹமீது. அகில இந்திய வானெலியின் சென்னே நிலையத்தில் நிகழ்ச்சி நிர்வாக அதிகாரியாக கடமை யாற்றுகிருர். தமிழ் மொழியில் பாரம்பரியக் கதைகள் இரண்டின் அமைப்பு முறையைப் பற்றியது அவரது கட் டுரை. மற்றவர் திருச்சிராப்பள்ளி ஜெமால் முகம்மது கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் நயினுர் முகம்மது. "சீருப் புராணத்தில் காப்பியப் பண்புகள்" என்பது பற்றியது அவரது கட்டுரை. "தமிழ் இலக்கியத்தில் உள்ள முஸ்லிம் பிரபந்தங்கள்’ என்பது பற்றியது எனது கட்டுரை. இவ் வாறு தமிழ் நாட்டிலும் ஈழத்திலுமிருந்தும் நான்கு முஸ் லிம்களே பங்கு பற்றிய இம் மகாநாட்டில் மூன் கட்டுரைகளே வாசிக்கப்பட்டன. இரண்டு சிங்கள அறி ஞர்கள் மகாநாட்டில் பங்கு பற்றினர் என்பதும் ஈண்டு குறிப்பிடத் தக்கது.
நாகூர்வரை மோட்டார் வண்டியில் நாம் ஆற்றுப் படுத்தப்பட்டோம். ஜனுப் ஜீலானி வழியிலுள்ள முக்கிய மான இடங்களை விளக்கிக் கொண்டிருந்தார். ஏறக்குறைய ஒரு மனித்தியாலத்தில் நாகூர் தர்க்காவை அடைந்தோம்.
பாத அணிகளை அகற்றினுேம். உள்ளே புக முயன்ருேம். முக்கோண வடிவான சுருள்களைத் தாங்கிக் கொண்டு அங்கே சிலர் நின்றனர். நாகூர் ஆண்டகையின் பெயரால் அவர்கள் திருப்பணிபுரிய ஈடுபட்டுள்ளனர் என்றே நினைத் தோம், இரண்டு சுருள்களை எங்களிடம் தந்தனர் சுருள் கள் பெரியவையாகவே தோன்றின போதிலும் உள்ளே

நாகூர் ஆண்டகையின் நற்பதியில் 53
ஒரு சொற்ப அளவுச் சாம்பிராணியே இருந்தது. தணற் சட்டியில் இடுவதற்குத் தேவையானவற்றை நாம் உடன் கொண்டு சென்றிருந்தோம். எனினும், திருத் தொண்டர் களின் திருப்பணியைப் புறக்கணிக்கக்கூடாது 6T6i நினைத்து அவற்றைப் பெற்றுக் கொண்டோம். நன்றி கூறினுேம். அவ்வூழியர் அத்தகைய பெருந் தன்மை வாய்ந்த 'திருத்தொண்டர்’ அல்லர் என்பதை உணர அதிக நேரம் செல்லவில்லை. தர்க்காவிலிருந்து வெளியே வந்ததும் ஒவ்வொரு சுருளுக்கும் இவ்விரண்டு ரூபாய் தரும்படி கோரினர் அத்திருத் தொண்டரி. ஒருவாறு பேரம் பேசி ஒரு ரூபாவீதம் கொடுத்தோம். என்னே இவர்களின் "திருப்பணி!"
அற்புதங்கள் பல நிகழ்த்தியவர் சாஹ"0ல் ஹமீது ஆண்டவர். அவர்களுடைய கல்லறைக்குச் சமீபமாகச் சென்ருேம். 1947 ஆம் ஆண்டில் நான் ஒரு முறை அங்கு சென்றிருந்த போதிலும் குடும்பத்தவர்களுடன் போனமை இது தான் முதற் தடவையாகும். எனவே பயபக்தியுடன் உள்ளே சென்ருேம்.
ஸியாறத் என்னும் கல்லறை உள்ள இடம் பூட்டப் பட்டிருந்தது. முதற் கதவு மாத்திரம் திறந்திருந்தது. முதற்கதவின் வாயிலைக் கடக்க ஒருவர் ஒரு ரூபா வீதம் செலுத்த வேண்டும் என்று அங்குள்ளவர்கள் கூறினரி. உள்ளே சென்றதும் ஒருவர் வந்து 'பத்திஹா' பிரார்த்தனே ஓதலாமா என்று கேட்டார், அப்படிக் கேட்டவர் வயதிற் குறைந்த ஒரு வாலிபர் அவரின் உடைநடை அவர் செல் வக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதைப் புலப்படுத் நியது.
எனக்கும் பாத்திஹா ஓதிப்பிரார்த்தனை புரியத்தெரியும் என்று அவருக்கு நன்றி கூறி விட்டு ஓத முற்பட்டேன்.

Page 33
54 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
எனது ஓதல்களை முடித்து விட்டதும். அந்த வாலிபர் மீண் டும் என் அருகில் வந்தார். வந்து இந்த விளக்குக்களை எரிப்பதற்காக நாள்தோறும் ஏழு ரூபா செலவாகிறது என்றும் அதனைச் செலுத்தும்படியும் வலியுறுத்தும் பாணி யில் கூறிஞர். நாகை ஆண்டகையின் கல்லறையின் ஒளி மயமாக்குவதற்குக் கொடுக்கப்படும் பணம் நல்ல குறிக் கோளுக்காகவே செலவழிக்கப்படுகிறது என்று உணர்ந்து கொடுத்தேன். அவரும் மீண்டும் எமக்காகப் பிரார்த்தனை புரிந்தார். பெண்கள் அவ்வாயிலைக் கடக்கக்கூடாது என்று கூறவே ஒரு பக்கமாக அமர்ந்த எனது மனைவி யாஸின் ஸ்"ருவை ஓதிக்கொண்டிருந்தார். திருக் குர்ஆனில் உள்ள பிரதானமான பாடங்களில் ஒன்று யாஸின்ஸஉரு.
"ஸியாறம் உள்ள இடத்துக்குப் போகமுடியாதா என்று கேட்டேன். "இப்பொழுது போக முடியாது. ஸியாறம் மக்கள் பார்வைக்காக அதிகாலையிலும் மாலையி லும் மாத்திரமே திறக்கப்படும்" என்று கூறினர். இத்த கைய கட்டுப்பாடுகளின் அவசியத்தை என்னுல் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு வேளை இந்த ஏற்பாடு பிர யாணிகளை ஒரு நாள் அங்கே தங்கச் செல்வதற்காகவாயி ருக்கலாம் என்று ஒருவர் பின்னர் கூறியது சரியா பிழையா என்று நிச்சயிக்கவும் என்னுல் முடியவில்லை.
ஸியாரத்துள்ள இடத்துக்குப் புகும் முதலாம் வாயி லுக்கு அருகில் வயதில் மூத்த ஒருவர் அமர்ந்திருந்தார். 'இங்கும் பாத்திஹா ஒதுவோமே" என்ருர் அவர். "ஏற்கெ னவே இரண்டு தடவைகள் ஒதிவிட்டோம் என்று பதில் கூறி னேன், ஸியாறம் என்னும் திருத்தலத்தில் நான் எதிர் பாராதது நடந்து விட்டது. முதலில் எம்மிடம் பணம் வாங்கிய வாலிபருக்கும் பணம் பெறக் காத்துக்கொண்டிந்த மற்றவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி சண்டை நடந்திடுமோ என ஐயுற்றேன். மூத்தவர்

நாகூர் ஆண்ட கையின் நற்பதியில் 55
இளையவரை முதலாளித்துவ வகுப்பைச் சேர்ந்தவர் என் றும் தாம் போன்ற ஏழைகளுக்குப் பணம் பெறும் வாய்ப்பைப் பெற இடமளிப்பதில்லை என்றும் குற்றஞ் சாட்டினர். அரசியல் வகுப்பு வேற்றுமை அடிப்படையி லான இக்கருத்து மோதலைத் தீர்க்கக் கூடியவன் நான் என்பதை உணர்ந்தேன். "சரி நீங்சளும் பாத்திஹா ஒதுங் கிள்" என்று கூறினேன். சண்டையும் ஒய்ந்தது. சச்சரவும் தீர்ந்தது. மூத்தவர் பாத்திஹா ஓதத் தலைப்பட்டார். ஒதி முடிந்ததும் இரண்டு வெண் பொற்காசுகளைக் கையில் வைத்தேன். பணத்தாலாகாதது எதுவுமில்லை என்ற முடிவுக்கு வர வேண்டியதாயிற்று. சமயப் Gulfurtř மாபெரும் அறிஞர் ஆத்ம ஞானி சீர்திருத்தவாதி மத போதகர் சாகுல் ஹமீது ஆண்டகையின் திருத்தலத்திலுமா இத்தயை வஞ்சனைகளும் குரோதங்களும் நிகழ வேண்டும்? வறுமை தாண்டவம் ஆட வேண்டும்? பிச்சைக்காரரின் நீங்காத தொல்லை நிலவ வேண்டும்?
இத்தகைய நிலை நாகூரை அடையக்கூடாது எனக் கனவு கண்டார் ஒரு புலவர் நாகூரில் இத்தகைய நிலைமை மருந்துக்குக்கூட இல்லை என்று பாடிப் போந்தார்.
அவர் வேறுயாருமல்லர். நாகூரிலே பிறந்து நாகூரிலே வளர்ந்து நாகூரிலே தர்கா மகாவித்துவானுகத் திகழ்ந்து புகழீட்டியவர். குலாம் காதிறு நாவலர் அவர்களேயாவர். நான்காம் தமிழ்ச் சங்கத்தின் "நக்கீரர்" எனப் புகழப் பெற்ற அவர் தமது நாகூர்ப் புராணத்தில் பின்வருமாறு t. umr uquq6it 6Irmrrf.
பஞசமற்றது படர்பிணியற்றது பவஞ்செய்
வஞ்சமற்றது வறுமையற்றது வாழ்க்கை
யஞ்சமற்றது தீவினையற் றதன்ற கா
நஞ்சமற்றது நம்பெருமா னுரை நாகூர்,

Page 34
@5 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
நாகூரி குலாம் காதிறு நாவலர் அவர்களின் கூற்றுக் கிணங்க நாகூரில் பஞ்சத்தைக் காண முடியாது. பரவும் நோய்க்கு இடமில்லை. அங்குள்ளோர் வஞ்சனையில் ஈடுபட மாட்டார்கள். அங்குள்ளோரின் வாழ்க்கை வறுமை யற்றது. எவருக்கும் அஞ்சி அங்குள்ளோர் வாழ வேண்டிய தில்லை. தீமையான செயல் புரிவதில் நின்றும் விலகி ஒழுகுபவர்கள் நாகூரி வாசிகள். நாகூர் ஆண்டகை வாழ்ந்த நாகூரில் கூடாத எவையும் இருக்கா.
குலாம் காதிறு நாவலர் விரும்பும் நாகூர் இன்று இல்லை. எனவே அவர் வருணிக்கும் அத்தகைய நிலையை ஏற்படுத்தத் தமிழக முஸ்லிம்கள் முன்வந்து உழைத்தல் மிகமிக அவசியமாகும். பிரயாணிகளை எவ்விதத் தொல்ை களுக்கும் ஆளாக்காமல் இருத்தற் பொருட்டு ஏற்ற எழிவகைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். யாத்திரீ கர்கள் மிகுதியாக ஈர்க்கக் கூடிய எல்லா வசதிகளும் நாகூரில் செய்யப்படல் வேண்டும். இவை அனைத்தையும் விட நாகூர் ஆண்டகை ஸியாரத்தை கல்லறையை எவ்வித தடையுமின்றி எந்நேரத்திலும் கண்டு களிக்க மக்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.

10 வான்நோக்கி வாழும் GITÚÚú6Ö 600
நாகூரி தாக்காவில் நேர்த்திக்கடன் முதலியவற்றை முடித்துவிட்டு மோட்டார் வாகனத்துக்குத் திரும்பினுேம், வழியில், பிச்சைக்காரரின் தொல்லை சொல்லுந்தரமன்று ஒருவாறு அவர்களிடமிருந்து தப்பிப் பிழைத்து வந்தோம், மோட்டார் வண்டியில் ஏறியதும் நண்பர் சுல்தான் மரிக் கார் தாம் அறிந்த ஒருவர் நாகூரில் இருக்கிருர் என்றும் அவரைக் காண விரும்புவதாகவும் குறிப்பிட்டார். அவரி விரும்பிய இடத்துக்குச் சென்ருேம்.
அது பெரியவீடு. நாகூரில் செல்வாக்குள்ள ஒரு குடும் பத்தினருக்குச் சொந்தமான வீடு என ஊகித்துக் கொண் டேன். அங்கே இருந்தவர்களுடன் உரையாடினுேம் தடுத்தர வயதை உடைய ஒருவர் அந்தக் குடும்பத்தின் முக்கியமானவர் என்பது அவரின் உரையாடலிலிருந்து புலப் பட்டது. குளிர்ப்பாணம் வழங்கிஞர் அம்மனிதர். பின்னர் அவருடைய அறிமுக அட்டையை எமக்குத் தந்தார். அவருடைய அறிமுக அட்டை அலாதியானது ஒன்று"

Page 35
589 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
என்பது புலணுகியது. நான்கு பெயர்களைக் +ொண்ட அவரதுபெயர் ஒரு கோலத்துடன் என்னைக் கவர்ந்தது. அவருடைய பெயரின் நடுவே முஸ்லிம் அல்லாது பெயராக இருந்தது. "ஜோன்’ என்று இருந்தது அந்த நடுப்பெயர். அறிமுக அட்டையின் மற்றப் புறத்தைப் பார்த்தேன். அங்கோ கொட்டை எழுத்துக்களில் JHON எனப் பொறிக் கப்பட்டிருந்தது. ஜஹின் அல்லது ஜான் அல்லது ஜானி என்று இந்தியாவில் பொது வழக்கில் உள்ள பெயர்தான் இவ்வாறு மாறியிருக்கலாம் என்று நினைத்தேன். எனது சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் முகமாக அது பற்றி அவ ரிடம் கேட்டேன். "JHON என்ற பதம் எனது பெயரில் இடம் பெற்றுவிட்டது' என்ருர், அதற்குரிய காரணத்தை அவர் ஏன் கூற முடியவில்லை. அவர் ஏன் அவ்வாறு அழைப் பதில் பெருமை அடைகிருர் என்பது இன்னும் புதிராகவே உள்ளது.
சென்னையில் இருக்கும் பொழுதே நாகூருக்குப் போக வேண்டும் என்றும் குலாம் காதிறு நாவலரின் புதல்வர் ஆரிபு நாவலரைச் சந்திக்க வேண்டும் என்றும் திட்டமிட்டேன். பிரபல எழுத்தாளரான அல்லராஜ் மு. ற, மு. அப்துல் றஹீம் அவர்கள் தமது இல்லத்தில் எமக்களித்த மதிய போசன விருந்தின் போது எனது இவ்விருப்பத்தை அவரிடம் தெரி வித்தேன். ஆரிபுநாவலரின் முகவரியை ஹாஜி அப்துல் றஹீம் அவர்கள் என்னிடம் தந்தார்கள். ஆனல் இந்த முகவரி யைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான ஒரு காரியமாகத் தோன்றவில்லை. எனவே அங்கு செல்லும் வழியைக் காட்டு மாறு JHON என்று தம்மை அழைப்பதில் பெருமை கொள்ளும் அம்மனிதரிடம் கேட்டேன். அவரும் நாம் சென்ற மோட்டார் வண்டியிலே வந்து ஆரிபு நாவலரின் , Wah WA. Il'A) à 8ff Lo to (syst,

வான் நோக்கி வாழும் வாய்ப்பின்மை 59 பஞ்சம் தாண்டவமாடும் இல்லம் போன்று காட்சி யளித்தது அது. வீட்டைப் பார்த்தவுடன் வீட்டுச் சொந்தக் காரரின் நிலைமையைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானதொன் றன்று. கதவில் மெல்லத் தட்டினேன். ஓர் ஒல்லியான உருவமுடையவர் வெளியே வந்தார். கட்டையானவர். வயதில் முதிர்ந்தவர். வறுமையே உரு வெடுத்தது போன்ற அக்காட்சி. இதற்கு முன்னர் நான் அவரை ஒரு போதும் சந்தித்ததில்லை. ஆனல் இரண்டொரு தடவை அவருடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தேன். அவர் தாம் ஆரிபு நாவலர். இஸ்லாமிய அடிப்படையில் தமிழ் இலக்கியங்களை உருவாக்கி அளப்பரிய தமிழ்த் தொண்டாற்றிய பேரறிஞர் வா. குலாம் காதிறு நாவலர் அவர்களின் புதல்வர். நான் என்னை இன்னரென்று அவ ருக்கு அறிமுகம் செய்தேன். உடனே என்னைக் கட்டி அணைத்தார். குசலம் விசாரித்தார். முகமன் கூறி வரவேற் டூர், இலக்கியக் கருவூலங்கள் பல அவரது அறையில் குவிந்து இருந்தன. பழையன, புதியன எனப் பலவகையான நூல்கள் இருந்தன. அவரோ வறியவர். வறுமையில் வாடும் ஆரிபு நாவலர் போன்றவர்களுக்கு அந்நாட்டு அர சாங்கங்களும் ஏனையோரும் உதவி புரிவது தலையாய கடமை யாகும். இன்றியமையாக் கடமையுமாகும்.
நாகூரை விட்டு நீங்குமுன்னர் அந்நகரின் பெருமையை நாம் அறிதல் வேண்டும். முஸ்லிம்களுக்குப் புனிதமான நகரங்கள் உலகிலே பல உண்டு. எனினும் அவற்றுள் மிக்க சிறப்புடையன நான்கு நகரங்களேயாகும் என்பர்.
நானிலத்தின் நடுநகர் மக்கா என்பர். அத்தகைய மக்கமா நகரிலே முகம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்தார் கள். ஆனல் இஸ்லாத்தைப் பின்பற்ருத ம்க்கா வாசிகளோ அண்ணல் நபி (ஸல்) அவர்களை துன்புறுத்தலாயினர்.

Page 36
60 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
இம்சிக்கத் தலைப்பட்டனர். அந்த நகரத்திலிருந்து தப்பி யோடச்செய்து விட்டனர். நபிகள் பெருமானரை அன்போடு ஆதரவு அளித்து வரவேற்ருர்கள். மதின மாநகர மக்கள். உதவி புரிந்தோர் 'அன்ஸார்கள்' என்று புகழ்ப் பெயரை யும் பெற்றர்கள். அம்மதீனு மாநகரிலிருந்தே இஸ்லாத்தை உலகில் பரப்ப அடிகோலினர்கள் அண்ணல் நபிகள் அவர் கள். அப் பரிபாலனத்தை மேற்கொண்டார்கள். அவர்களு டைய புனித கல்லறையும் மதீனு மாநகரத்திலே தான் உண்டு. எனவே முஸ்லிம்களுக்கு முதன்மையான நகரமாகத் திகழ்வது மதீனு மாநகரமே என்பர்.
அடுத்தபடியாக புனிதத் தன்மை பெற்ற நகரம் மக்காவாகும். அங்குதான் முஸ்லிம் மக்கள், வாய்ப்பும் ஆற்றலுமுடையோராயின் தம் வாழ்நாளிலே ஒருமுறை யாவது ஹஜ் என்னும் புனித பிரயாணத்தை-கட்டாய மான கடமையை மேற்கொண்டு செல்லுதல் வேண்டும். சமயத் தலைநகராக விளங்கிய மக்கா மாநகர் ஒருபோதும் அரசியல் தலைநகராக இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்
* القيقة تقع
இந் வரிசையில் மூன்ருவது இடத்தைப் பெறுவது பகுதாது நகரமாகும். இது இருக்கின் தலைநகரமாகும். அது அப்பாசிய ஆட்சியின் கேந்திர நிலையமாக விளங்கியது லை கலாச்சாரம் முதலியவற்றிற்கு இருப்பிடமாகத் திகழ்த் தது. இஸ்லாத்துக்குப் புத்துயிரளித்த முகியத்தீன் ஆண்டகை சமயத் தெண்டாற்றிய ஒரு நகரமாகும் ஆண்டகையின் கல்லறையும் அங்கு உண்டு.
நாகூர் நான்காவது இடத்தைப் பெறுகின்றது. சாகுல் கமீது ஆண்டகையின் கல்லறை இருப்பதே அதற்குக் கார ணமாகும். இக் கருத்துக்களையே குலாம் காதிறு தாவலர்

6 வான் நோக்கி வாழும் வாய்ப்பின்மை தமது நாகூர் புராணத்தில் இவ்வாறு அமைந்துள்ளார்.
மங்களத் தொனி சேர் மதின வெழின் மக்கா தங்கு சீர் பகுதாதெனுமுப்பதி தவிர வெங்கிருக்குமற் றிணையிதற்கென் றுலகியம்பு நங்களுக்கொரு மேன்மை யினமைந் தது நாகூர்
(தலவிசேடப் படலம்-2)
பின்னர் விடைபெற்றுக் கொண்டு திருவாரூரை நோக் கிப் புறப்பட்டோம். நண்பகல் பன்னிரண்டு மணியளவில் திருவாரூரை அடைந்தோம். நேரே அரிசி ஆலையில் உள்ள மண்டபத்திற்குச் சென்ருேம். அரைமணி நேரத்தில் மற்ற வர்களும் அங்கு வந்துவிட்டனர். திரு. வி. எஸ். தியாக ராஜ முதலியார் நண்பகல் விருந்து உபசாரம் எமக்காகக் காத்துக்கொண்டிருந்தது. வழக்கம் போல சைவ உணவும் இந்திய முறையிலான சைவம் அல்லாத உணவும் மேனட் டுப் பாணியிலான சைவம் அல்லாத உணவும் பரிமாறப் பட்டன. அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். விருந்துபசாரம் முடிந்தது. அனைவரும் அண்மையிலுள்ள புகைவண்டி நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறப்புப் புகைவண்டிக்குச் சென்ருேம். பிற்பகல் 1, 45 மணிக்குப் புகைவண்டி திரு வாரூரிலிருந்து புறப்பட்டது.
எட்டு நாட்களாக நடைபெற்ற கலாச்சாரச் சுற்று லாவின் அன்று மாத்திரம் தான் பகற் பொழுது புகை வண்டியில் பிரயாணம் செய்தோம். ஏனைய நாட்களில் எமது புகைவண்டிப் பயணம் இரவு நேரத்தில்தான் நடைபெற்றது. எனவே பகலில் நடந்த புகைவண்டிப் பிர பாணத்தின் போதுதான் தமிழ் நாட்டின் இயற்கை காட்சிகளைக் காணக்கூடியதாக இருந்தது.

Page 37
52 நெஞசில் நிலைத்த சுற்றுல"
இயற்கைக் காட்சிகள் என்னும் பொழுது வயல் களே முதலில் தோன்றுகின்றன. கவிஞர் வயல்களை வர்ணிக்கும் பொழுது மிக அழகாக வர்ணிப்பர். கற்பனை நயத்துடன் விவரிப்பர். எடுத்துக் காட்டாக திருத்தக்க தேவரை நோக்குவோம். சமண சமய அடிப்படையில் தோன்றிய சீவகசிந்தாமணி என்னும் பெருங்காவியத்தின் ஆசிரியர் அவர். வயல்களை அவர் சிறப்பான ஒரு முறை யில் வருணிக்கிருர்.
உழவர் வயலை உழுகின்றனர். சேறு நிறைந்தன அவவயல்கள். அவ்வயல்களை உழுவதற்கு முன்னர் நில மகளைத் தொழுகின்றனர் உழுத பின்னர் நெல்லை விதைக் கின்றனர். உரிய பதத்திற்கு வளர்ந்த நாற்றுக்களைத் தெரி கின்றனர். அவற்றைச் சுபமூகூர்த்தத்தில் நடுகின்றனர். அவ்வாறு செய்வதற்குரிய பெண்களை அதற்கு முந்திய நாளிலே குறிப்பிட்டுவிடுகின்றனர். ஒவ்வொரு வயலிலும் எத்தனை எத்தனை பெண்கள் நெல் விதைக்க வேண்டும் என்று முன் கூட்டியே நிர்மாணித்து விடுகின்றனர். இவ்வாறு ஒழுங்கு முறையிலான ஒரு வயலை திருத்தக்க தேவர் இங்ங்ணம் வருணிக்கிருர்.
சேறமை செறுவினுட்
செந் நெல வான்முளே வீறெடு விளை கெனத்
தொழுது வித்துவார் நாறிது பதமெனப் பறித்து
நாட்செய்வார் கூறிய கடைசியர் குழாங் கொண்டே குவார்
(நாமகளிலம்பகம்- 16)

வான் நோக்கி வாழும் வா யப்பின்மை 63
செறு-வயல், வித்துவர்- விதைப்பவர், நாறு-நாற்று, (நாட்செய்வார்-முகூர்த்தத்தில் நடுவர்).
திருவாரூருக்கும் தஞ்சாவூருக்கும் இடைப்பட்ட புகை வண்டிப் பாதையின் இரு மருங்கிலும் உள்ள வயல்களைப் பற்றி இவ்வாறு கூற முடியாது. வான் நோக்கி வாழும் உலகு" என்று அடிப்படையில் திருத்தக்க தேவர் அன்று பாடியிருக்கலாம். எல்லா வயல்களும், அதன் பயனுக ஒரே தன்மையானவையாய் இருக்கலாம். ஒரே காலத்தில் எல்லா நெல் வயல்களும் சாகுபடி செய்யப்பட்டிருக்கலாம் . ஆனல் எமக்குத் தோற்றிய வயல்களோ அவ்வாறு இருக்க வில்லை.
சில வயல்கள் காய்ந்து வறண்டு இருந்தன. வேறு சில வயல்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தன. மற்றும் சிலவயல்களில் உழவர் உழுது கொண்டிருந்தனர். இன்னுஞ் சில வயல் களில் நெல் விதைப்பதற்குத் தகுதியுடையனவாய்க் காட்சி அளித்தன. உழவர் நெல் விதைத்துக் கொண்டிருந்தனர். வேறு சில வயல்களில் உழவர் நீர்ப்பாச்சிக் கொண்டிருந்த னர். மற்றுஞ் சில வயல்களில் நெற்பயிர்கள் நன்கு வளர்ந்திருந்தன. சற்றுத் தூரம் செல்ல அறுவடைக்குத் தயாராகியிருந்த வயல்களைக் காணக்கூடியதாகவிருந்தது* இவ்வாறு பல்வேறு பருவங்களை அடைந்திருந்த வயல்கள் புகைவண்டிப் பாதையின் இரு மருங்கிலும் அடுத்தடுத்து இருந்தன. வான் நோக்கி வாழும் வாய்ப்பு அவ்வுழவர் ஈளுக்கு இல்லாமையே அத்தகைய நிலைமைக்குக் காரண மாயிருக்கலாம். எளிதில் நீர் பெறக்கூடியனவாய் அவ் வயல்கள் அத்தனையும் ஏக காலத்தில் பயிர் செய்யக்கூடியன வாய் இருக்கவில்லை.

Page 38
64 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
இக் காட்சிகளைக் கண்டு அவை பற்றி ஆழ்ந்த சிந்தனை யில் மூழ்கி இருந்தமையால் கண் அயரவுமில்லை. வழக்க ாக நண்பகல் உணவு உண்டபின்னர் வேறு அலுவல்கள் இல்லாவிடின் கண் அயர்வர். பகல் நித்திரை ஆகாது ன்பர் சிலர். ஆகும் என்பர் சிலர், மதிய போசனத்தின் பின்னர் சற்று இளைப்பாறுதல் வேண்டும் என்பர் மற்ருெரு சாரார். இஸ்லாத்துக்கு இணங்க இரவில் உறங்கிப் பின் னர் விழித்துத் தஹஜ்ஜத்தொழுகை நிறைவேற்றுதல் வேண்டும். அவ்வாறு தொழுகையை நிறைவேற்றுபவர் களுக்கு உச்சிப் பொழுதில் சற்று நித்திரை கொள்வதற்கு இஸ்லாம் அவகாசம் அளிக்கிறது.
இஃது இவ்வாருயினும் அன்று எனக்குத் தூக்கம் வரவில்லை. உணவு உண்டு உடனே ஏதாவது ஒரு வாக ணத்தில் செல்லும் பொழுது தூக்கம் துரிதமாக ஏற்படும். காற்றடிக்கும் சூழ்நிலை ஏற்படும், இக் காட்சிகளிலே மூழ்கி இருந்தமையினலே கண்கள் தாங்க மறுத்தன.
1
கீர்த்திமிகு தஞ்சை GUÖ56)|GDLUEYİNİ GöFT Gilgi)
அன்று 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆந் தேதி மாலை நேரம். 3.30 மணி இருக்கும். சிறப்புப் புகை வண்டி தஞ்சாவூர் புகைவண்டி நிலையத்தை அடைந்தது. அங்கும் ஒரே கொண்டாட்டம். வாத்தியங்கள் முழங்கின. மக்கள் குழுமி நின்றனர். ஆரம்ப வரவேற்பு நடைபெற்றது.

கீர்த்தி மிகு பெருவுடையார் கோயில் 65
கழுத்துக்களில் மாலைகள் வந்துகுவிந்தன. அலங்கரிக்கப்பட்ட தஞ்சை மாநகரத்தெருக்களினூடாக அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தஞ்சாவூர் என்னும் சொற்ருெடர் தஞ்சை, ஊர் என்ற இரண்டு சொற்களாலானது. தஞ்சன் என்னும் ஒர் அரசன் அந்நாட்டிலே அரசு புரிந்தமையால் அந்நாட்' டின் தலைநகரம் தஞ்சாவூர் எனப் பெயர் பெற்றது என் பர். அந்நாட்டிலே இத்தகைய பாரம்பரியக் கதை ஒன்று வழக்கில் உள்ளது என்பதை இதற்கான சான்ருகச் சுட்டிக காட்டுவர் சிலர்.
மற்றையோர் தஞ்சாவூர் என்பது தமிழ்ச் சொற் களாலேயே ஆக்கப்பட்ட ஒரு சொற்ருெடர் என்பர். தஞ்சம் அடைந்த ஊர் தஞ்சாவூர் என்பதாயிற்று என்பர். சரணடைந்த நகரம் எனப் பெயர் பெற்றது என்பர். இன்று இந்நகர் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைநகராகத் திகழ்கின்றது.
காவேரிக்கரையில் அமைந்துள்ளது தஞ்சாவூரி. தொன் றுதொட்டு கலாச்சார தலைநகராத் திகழ்ந்து வந்துள்ளது. பத்தாம் நூற்ருண்டுக்கும் பதினன்காம் நூற்றண்டுக்கும் இடைப்பட்ட காலத்தின் பேராற்றல் மிக்க சோழப் பேரரசின் தலைநகராகப் பெயர் விளங்கியது. தஞ்சாவூர் என்ற நகரம் முதல் முதலில் விஜயாலயச் சோழ மன்னஞல் (கி. பி. 846-980) கைப்பற்றப்பட்டது. அவர் சோழப் பேரரசை அங்கு நிறுவினர். அது மூன்ரும் இராஜராஜ சோழன் காலத்திலும் தலைநகரமாக விளங்கியது. சிதம் பரம், திருவாரூர் போன்று தேவாரத் திருப்பதிகம் பெற்றதாகத் தஞ்சாவூர் அமையவில்லை. எனினும் தஞ்சா வூர் புகைவண்டி நிலையத்துக்கு அணித்தாக பலபாடல்

Page 39
66 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
பெற்ற திருத்தலங்கள் உள்ளன திருக்கோவிலே அன்றி அத்திருக்கோயிலைத் தன்னகத்தே கொண்டு திகழும் திரு வூருர் போற்றப்படுதல் வேண்டும். அரன் ஒன்றே தொழப் படுதலும் வேண்டும் என்பர். இவ்வாறு தேவாரம் பாடிய தாயன்மார் மூவரும் அளவிறந்த திருவூர்களைப் LufT Lஅருளி உள்ளனர். அத்தகைய திருவூர்களைப் Luntlguu நாயன்மார் ஒவ்வொரு திருப்பாடலிலும் பற்பல திருப் பதிகங்களை அமைத்துப் பாடி உள்ளனர். திருஞானசம்பந்த நாயனுர் திருவூர்க் கோவை என்னும் திருப்பதிகத்தில் பல திருத்தலங்களை, "ஆரூர் தில்லையம்பலம் வல்லந் நல்லம் வடகச்சியும்" என ஆரம்பித்துப் பாடியுள்ளார். திருநாவுக்கரசு நாயனுரும் திருக்கோவை என்னும் திருப்பதிகத்தில் பல திருத்தலங்களைக் குறிப்பிட்டுள்ளார். தஞ்சாவூரையும் குறிப்பிடுகிருர்.
உஞ்சே னை மாகாளம் ஊறல் ஒத்தூர் உருத்திர கோடி மரைக் காட்டுள்ளும் மஞ்சார் பொதியின் மலை தஞசை வழுவூர் வீரட்ட மாதானங் கோதாரத்தும் வெஞ்சம ரக் கூடன் மீயச்சூர் வைகா வேதிச்சுரம் விவசுரம் வெற்றியூருங் கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையுங் கயிலாய நாதனையே காணலாமே" .
என ஆருந் திருமுறையில் தஞ்சை உட்பட பல திருத்தலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. "காட்டூர் கடலே கடம்பூர் மலையே காணப் பேரூராய்' என்னும் முதலடியை யுடைய திருப்பாடலுடன் ஆரம்பிக்கும் ஊர்த்தொகை என்னும் திருப்பதிகத்தில் திருத்தலங்கள் பலவற்றைக் குறிப்பிடுகின்ருர் சுந்தரமூர்த்தி நாயனூர்,

கீர்த்தி மிகு பெருவுடையார் கோயில் 67
தஞ்சாவூரை அடைந்ததும் முதல் நிகழ்ச்சியாக அமைந் தது அங்குள்ள தேவாலயத்துக்குச் செல்வதாகும்; கோவில் வழியின் இரு மரங்கிலும் மக்கள் நின்று கொண்டிருந்தனர். பிரதான வாயிலுக்குச் சமீபமாக இரண்டு பக்கங்களிலும் மக்கள் வரிசையாகக் கூடி நின்று வாழ்த்தி அனைவரையும் வரவேற்ருர்கள்.
வாயிலிலே பிரமாண்டமான ஒரு கோபுரம் அமைந்தி ருந்தது. அதன் சிற்பத்திறமையைக் கண்டு வியந்தேத் தாதவர்கள் இல்லையென்றே கூறலாம். இந்த வாயிற் கோபுரம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இது கிருஷ்ணன் இராமன் என்று வழங்கும் மும்முடிச் சோழப் பிரம்மாராயன் என்பவரால் எடுப்பிக்கப்பட்டது. கிருஷ்ணன் இராமன் என்பவர் முதலாம் இராஜராஜசோழனின் சேனதிபதியா வார். கி. பி. 10 ஆம் நூற்ருண்டில் நிறுவப்பட்டது.
இப்பெருவாயிற் கோபுரம் அமைந்துள்ள கோயில் பெருவுடையார் கோயிலாகும், பிருகதீசுவரர் கோயில் என்றும் இது அழைக்கப்படுகிறது. தமிழ் நாட்டுச் சிறப்பு முறைக்கு எடுத்துக் காட்டாகத் திகழும் இக்கோயில் மூத லாம் இராஜராஜ சோழனுல் எழுப்பப்பட்டது. எனவே இக்கோயில் இராஜஇராஜேஸ்வரம் என்று வழங்கப்படு கின்றது. இராஜராஜ சோழனின் தலைசிறந்த சிற்ப வல்லுநர் இதனைக் கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் எடுத்தனர் என்பது கல்வெட்டுக்களிலிருந்து அறியக் கிடக்கின்றது. தென்னிந்தியாவுக்குச் செல்லும் எவரும் இக்கோயிலைத் தரிவிக்காமல் செல்வதில்லை எனக் கூறப்படுகிறது.
பாரிய அளவுகளை உடையது அக்கோயில். எளிமை யான அலங்காரங்களைக் கொண்டது. இன்றும் அழகுடைய

Page 40
68 நெஞ்சில் நிலைத்த சுறறுலா
தாய் விளங்குகிறது. எப்பொழுதும் மகிழ்வூட்டுவதாக அமைந்துள்ளது. சிற்ப முறையிலும் கலை அம்சங்களிலும் சிறந்து விளங்கிக்கொண்டிருக்கிறது கற்களிலிருந்து செதுக் கப்பட்ட விமானங்கள் அக்கோயிலுக்கு அணி செய்து கொண்டிருக்கின்றன. விமானங்களின் விளிம்புகளிலே தமிழ்க் கல்வெட்டுக்களைக் காணலாம். கற்களாலான கோபுரங்க ளும், திருச்சுற்று மாளிகையும் இடையிடையே சிறு விமா னங்களும் எட்டுத்திக்கு பாலகர்களுக்கும் உரிய இடங்கள் இங்கு உண்டு. மற்றைய கோயில்களை விடத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அது விளங்குகிறது. பலகதைகளையும் வர லாற்று நிகழ்ச்சிகளையும் வர்ணிக்கும் சுவர் ஓவியங்கள் பல அங்கு உள்ளன.
இத்தகைய பிரமாண்டமான ஒரு கோயிலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமும் மிகப்பெரிய தொன்முயினும் அழகு சற்றும் குறையாது அமைந்துள்ள விதமும் அதனை அமைக்க கருங்கற் பாறைகளை அங்கு கொண்டுவந்துள்ள உபாயமும் இராஜராஜசோழ மன்னனதும் அவனுடைய சிற்ப வல்லுநர்களினது புகழுக்கும் பெருமைக்கும் நுண் கலை ஆர்வத்துக்கும் தகுந்த எடுத்துக்காட்டாக அமைந் துள்ளன.
அகழியினுல் சூழப்பட்ட சிறு கோட்டையின் ஒரு பகுதி யில் இப்பெருவுடையார் கோயில் அமைந்துள்ளது. 800 அடி நீளமும் 400 அடி அகலமுமுடையது. அர்த்த மண்டபம், மகாமண்டபம்,தாபன மண்டபம் நர்த்தன மண்டபம், வாத் திய மண்டபம், என்பன அங்கு உள்ளன. அங்கே உள்ள சிவ லிங்கம் மிகப் பெரியது. அத்தகைய உருவில் பெரிய சிவலிங் கத்தை வேறு எங்கும் காணமுடியாது என்பர். நுழைவாயி வின் இருமருங்கிலும் 18 அடி உயரமும் 8 அடி அகளமும் வடைய இரண்டு பெரிய துவாரபாலகர் உள்ளனர்.

கீர்த்தி மிகு பெருவுடையார் கோயில் 69
அர்த்த மண்டபத்தின் உள்ளே சோழ காலத்துக்கு உரிய சுவர் ஓவியங்கள் காணக்கிடக்கின்றன. இவற்றை முதன் முதலில் கண்டுபிடித்தவர் அண்ணுமலைப் பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த திரு. எஸ். கே. கோவிந்தசாமி அவர்களே ஆவர் இக்கண்டுபிடிப்பு தென்னிந்தியா ஓவியக் கலை வரலாற்றிலே மிக்க முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச் சியாகும்.
சோழ மன்னரால் அமைக்கப்பட்ட சுவரோவியங்களைக் கண்டு பின்னர் வந்த நாயக்க அரசர் பொருமைப்பட்டிருக் கலாம். அதன் பயனக சோழர்காலத்தில் தீட்டப்பட்ட ஓவி யங்களுக்கு மேலாக நாயக்க அரசர் வேறு ஓவியங்களைத் தீட்டியுள்ளார். எஸ். கே. கோவிந்தசாமி அவர்கள் கண்டு பிடிக்கும் வரை அவை சோழர்கால ஓவியங்கள் என்பது தெரியாமல் மறைந்து இருந்தன.
சிறு சிறு குழுக்களாக எம்மை அழைத்துச் சென்று இந்த ஓவியங்கள் அனைத்தையும் விளக்கிக் காட்டினுர், நூற்றுக்கு நூறு சைவசமய அடிப்படையிலான ஒவி யங்களாகத் திகழ்கின்றன. கைலாயத்தில் சிவபெருமான், சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளுருைம், நடர்ாசப் பெருமானும், அடியார்களும், அமைச்சனும் அரசனும் முதலிய பல ஒவியங்கள் அங்கே அணி செய்து கொண் டிருக்கின்றன.
கர்ப்பக் கிரகத்துக்கு மேலாக உள்ள விமானம் திராவிட சிற்ப முறையின் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துகொண் டிருக்கிறது. இராஜராஜ சோழனின் பேராற்றலை எடுத்து இயம்பிக்கொண்டிருக்கிறது. கோபுரம் 216 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதைவிடப் பெரிய கோபுரம் வேறு இல்லை எனலாம். இக் கோபுரத்தைத் தாங்கிக்

Page 41
7 O நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
கொண்டிருக்கும் அதன் அடித் தளம் 96 அடிகளைக் கொண்ட சம சதுரமாகும், 25 அடி சம சதுரமான ஒரு தனிக் கல்லிலே அதன் சிகரம் (உச்சி) தங்கியுள்ளது. சாரப்பள்ளம் என்ற இடத்தில் இருந்து கோபுரத்தின் உச் சிக்கு அந்தக் கல் கொண்டுவரப்பட்டுள்ளது. அவ்வாறு மேலே ஏற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்டமையினலேயே நான்கு மைல் தூரத்திலுள்ள அவ்வூர் அப்பெயரைப் பெற்றுள்ளது.
மாலையிலோ காலையிலோ மிக உயர்ந்த அக் கோபுரத் தின் நிழல் நிலத்தில் விழுவதில்லை என்பரி. நாம் அங்கு சென்றது மாலைபொழுதில், அப்பொழுது கோபுரத்தின் நிழல் நிலத்தில் விழுவதை எங்களால் காணமுடியவில்லை
கோயிலின் பிரதான வாயிலிலே செல்லும் எவரும் காணக்கூடிய வகையில் அமைந்துள்ளது நந்தி. பெரிய இடபம். கற்பாறையிலே செதுக்கப்பட்டது. 12அடி உயரம், 19 அடி நீளம், 83 அடி அகலம். அதன் நிறை 25 தென் இந்தியாவில் உள்ளவற்றுள் பெரியது இது என்பர். நாயக்கர் மண்டபத்தில் உள்ளது. w
இம்மாபெரும் கோயிலை பேர்குசன் என்பவர் பின். வருமாறு விதந்தோதுகிருர்: "திராவிட சிற்ப முறையில் அமைக்கப்பட்ட பத்துக்கோயில்களை எடுத்துக் கொண்டால் அவற்றுள் ஒன்பது கோயில்கள் திட்டம் எதுவும் இன்றித் தற் செயலாக ஒன்று சேர்க்கப்பட்ட பல பகுதிகளைக் கொண்டனவாக இருக்கும். அவை நிறுவப்படும் பொழுது உடனுக்குடன் என்ன செய்யப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கூற் றும் விதி விலக்காக அமைந்துள்ளது தஞ்சாவூரில் எழுப் பப்பட்ட பெருவுடையார் கோயில். இக்கோயிலைப்

கீர்த்தி மிகு பெருவுடையார் கோயில் 72
பொறுத்தவரையில் தொ.க்கத்திலிருந்து முடியும் மட்டும் நன்கு வகுக்கப்பட்ட சிறந்த ஒரு திட்டத்தின் அடிப்படை யில் நிர்மாணம் மேற்கொள்ளப்பட்டது."
பிரித்தானிய கலைக் களஞ்சியம் பெருவுடையார் கோயிலை இந்தியாவிலுள்ள "மாபெரும் கோயில்’ என விவரிக்கிறது.
)
ö)ööTö
őGiGöt ő6.LÓ
தஞ்சாவூர் அரசபரம்பரையினர் பலருக்கு தஞ்சம் அளித்துள்ளது. பத்தாம் நூற்ருண்டில் ஆட்சியை ஆரம் பித்த சோழப் பேரரசர்கள் அங்கிருந்து செங்கோலோச்சி னர். பின்னர் வந்த நாயக்க மன்னரின் தலைநகராகத் தஞ்சாவூர் நிகழ்ந்தது. அடுத்தடுத்துத் தஞ்சாவூர் ஆட்சி பீடத்தில் அமைந்தவர்கள் மராட்டியமன்னர். பழைய மாளிகை முதன்முதலில் நாயக்கரால் நிறுவப்பட்டது என் பர். அங்கே உள்ள இரண்டு தர்பார் மண்டபங்களும் நாயக்கராலும் மராட்டியராலும் கட்டப்பட்டவை. எனவே, அவை அம்மன்னர்களின் பெயர்களால் நாயக்கர் தர்பார். மராட்டியர் தர்பார் என அழைக்கப்படுகிறது. நாயக்கர் மண்டபத்தில் சரபோஜி மன்னரின் அழகிய சிலை ஒன்று அமைந்துள்ளது. மராட்டியர் தர்பார் மண்

Page 42
72 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
டபத்தில் மராட்டிய மன்னர் அனைவரினதும் சிலைகள் இருக்கக் காணலாம்.
இராஜ சரபோஜி மன்னர் தலைசிறந்த அறிஞர். அவர் அரசபோகத்தை துறந்து தமது உடைமை பொருள் அனைத்தையும் ஒரு துறைப்டுத்தி ஓர் ஆராய்ச்சி நிலையத்தை அமைக்க வழிகோலினர். சரசுவதி மகால் நூல் நிலையத்தை அங்குரார்ப்பரணஞ் செய்து வைத்தார். விலை மதிக்க முடி யாத அரும் பெரும் நூல்கள் பல அங்கு இடம்பெற்றன. இலக்கியம், இசை, தத்துவஞானம், வைத்தியம் முதலிய பல துறைகளில் சிறந்து விளங்கினுர் மன்னர் சரபோஜி அவர்கள். வைத்தியத் துறையில் அவருக்கிருந்த அலாதி யான் அக்கறை தனவந்தரி மகால் என்னும் நிலையத்தை நிறுவ அவரைத் தூண்டியது. இங்கு பழைய, புதிய வைத் திய முறைகள் அனைத்தும் ஆராயப்பட்டு வருகின்றன.
பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக் கூடிய மருந்து வகைகளை இந் நிலையத்தின் மூலமாக சரபோஜிமன்னர் உலகுக்கு அளித்துள்ளார். அம்மருந்துகள் நன்கு பரீட்சிக் கப்பட்டவை. ஒப்புயர்வு அற்றவை. தனிச் சிறப்புப் பெற்றவை. இன்றும் சிற்சில துறைகளில் அவை தற்காலத் துக்குப் பொருத்தனமானவை என்று போற்றப்படுகின்றன. அம் மன்னரால் ஆரம்பிக்கப்பட்ட ஆராய்ச்சிகள் இன்று கூட சிற்சில துறைகளில் தலை சிறந்து விளங்குகின்றன. தற்காலக் கண்டுபிடிப்புக்கள் அவற்றை மிஞ்சிவிடவுமில்லை.
அம்மருந்துகள் நன்கு பரீட்சிக்கப்பட்டவை என்பதே அவற்றின் சிறப்பியல்பாகும். மருந்தூட்டுவதன் மூலமும் அவதானிப்பதன் மூலமும் பின்னர் பதியப்படுவதன் மூலமும் அம்மருந்துகளின் குணப்படுத்தும் தனித்தன்மை நிரூபிக்

கலைக் காட்சிகளின் கூடம் 73
கப்பட்டுள்ளது. சரபோஜியின் இத்தகைய மருந்துகளுக்கு அடிப்படையாக அமைந்த வைத்திய நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவதை சரசுவதி மகால் நூல் நிலையம் அதன் முதற்பணியாகக் கொண்டுள்ளது. ஏற்கெனவே தமிழ் மொழியில் இருபது இத்தகைய தொகுதிகள் வெளியிடப் பட்டுள்ளன இவ்வாறு சரபோஜி மன்னர் விட்டுச் சென் றவை மன்பதையின் துயர் போக்கப்பயன் படுத்தப்படு கின்றன.
நாயக்க மன்னரும் மராட்டிய மன்னரும் சேர்த்து வைத்து அரிய ஏட்டுப் பிரதிகள் பலவற்றை தன்னிடத்தே கொண்டுள்ளது சரசுவதி மகால் நூல் நிலையம். வட மொழி, மராட்டி, தமிழ், தெலுங்கு, முதலிய மொழி களிலே இவ்வேட்டுப் பிாதிகள் உள்ளது. பல பொருள் களைப் பற்றி எழுதியனவாக இந் நூல்கள் அமைந்துள்ள எான. அரசாங்கத்தினுல் நியமிக்கப்பட்ட ஒரு குழவி ைசி இந்நூலகத்தை ஒரு பொதுத் தர்மச் சொத்தாகப் பரிபா லிக்கின்றனர். 1928 ஆம் ஆண்டில், சரசுவதி மகால் ஒரு பொதுத் தர்மச் சொத்தாகியது.
சரபோஜி மன்னரின் தனிப்பெருந் தொண்டின் நினை வுச் சின்னமாக இந்நூலகம் விளங்குகிறது. அங்குள்ள நூல்களின் பெரும் பகுதி அவராலேயே ஒன்று சேர்க்கப் பட்டது. அத்துடன் அவர் திருப்தி அடையவில்லை. பல் வேறு நாடுகளுக்கு ஆட்களை அனுப்பிப் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டார். ஆங்கிலம், பிரெஞ்சுமொழி ஜெர்மன் மொழி ஆகியன அவர் அறிந்திருந்தமையால் அம்மொழி சளில் வெளியிடப் பட்ட பல நூல்களின் முதற்பதிப் புக்கள் அங்கே இருக்கக் காணலாம். பாரசீக மொழியில் உள்ள நூல்களும் அங்கு உண்டு. ஐம்பது ஆண்டுகளாக

Page 43
74 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருந்தும் நூலகத்தில் உள்ள பல இலக்கியக் கருவூலங்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட வேண்டியவனவாகவே இன்றும் இருக்கின்றன. முப் பதினுயிரத்துக்கான கையேட்டுப் பிரதிகளைக் கொண்ட தாக இந்நூல் நிலையம் விளங்குகிறது. அவை விலைமதிக்க முடியாதவை. அவற்றுள் சில "மோடி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. அவை மிக அரிதானவை. மோடி எழுத்துவகை தஞ்சாவூருக்கே சொந்தமான எழுத்து வகை யாகும். தஞ்சாவூரிலே வழங்கும் அத்தகையமோடி எழுத் துக்கள் மராட்டி எழுத்து வகையைச் சேர்ந்ததாகும். மராட்டிய மன்னர் தத்தம் மாளிகைக் கணக்குகளை எழுது வதற்கு அத்தகையமோடி எழுத்து முறையைப் பயன் படுத்தி உள்ளனர்.
இந்நூலசத்தில் விளக்க விவரப்பட்டியலைத் தயாரிக்கும் பணி பத்தொன்பதாம் நூற்றண்டின் பின் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளாக இக் கைங் கரியம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இன்று பட்டி பல்கள் பூரணமாக்கப்பட்டுள்ளன. ஆணுல் இன்னும் இத் துறையில் செய்ய வேண்டிய ஆராய்ச்சிகள் பல உண்டு. இந்த நூலகத்தில் உள்ள நூல்களில் பலவற்றில் சரபோஜி மன்னரின் வேத்தியல் முத்திரையும் கையொப்பமும் இடப்பட்டுள்ளன. அவர் ஒன்று சேர்த்த பல நூல்களை வாசித்தார் என்பதற்குச் சான்முக இது அமையும் அல்லவா? அம்மட்டன்று சில கையேட்டுப் பிரதிகளில் சரபோஜி மன்னரின் சொந்தக் கையெழுத்தில் ஒரக்குறிப்புக்கள் எழுதப்பட்டிருப்பதையும் காணலாம்.
அங்குள்ள தர்பார் மண்டபத்தில் தஞ்சாவூர் கலைக்
காட்சிக்கூடம் இடம் பெற்றுள்ளது. 17 ஆம் நூற்றண் டில் இறுதிவரை நாயக்க மன்னர் தமது கோலாகலமான

கலைக் காட்சிக் கவின் கூடம் 75
தர்பார்களை அங்கு நடத்தினர். பின்னர் அம்மண்டபங் கள் புறக்கணிக்கப்பட்டன. 1951 ஆம் ஆண்டு தி செம்பர் மாதம் 9 ஆந் தேதியன்று சென்னை முதல் அமைச்சர் மாண்புமிகு குமாரசுவாமி ராஜா அவர்கள் தலைமையில் பொதுப்பணி அமைச்சர் மேதகு எம். பக்தவத்சலம் அவர்கள் கலைக்காட்சிக் சுடத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார், அன்று முதல் கலை ஆர்வம் மிக்க பொது மக்கள் சாரிசாரியாக அங்கு செல்கின்றனர்
அங்கு 160 வகை மாதிரி உருவங்கள் உள்ளன. பித்த ளையிலும் கல்லிலும் செதுக்கப்பட்ட சிற்பங்களாக அவை திகழ்கின்றன. கலைக்கண்ணுேடு அவை ஒழுங்கு செய்யப் பட்டுள்ளன. அரசாங்கமும் கலைக்காட்சிக் கூடத்தை ஒரு பிராந்திய சாதனக் கண்காட்சி நிலையமாக அங்கீகரித் துள்ளது.
அங்கு இடம் பெற்றுள்ள கலைப்பொக்கிஷங்கள் ஒன்பதாம் நூற்ருண்டுக்கும் பதின்மூன்ரும் நூற்ருண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்தனவாகும். தஞ்சாவூர்க் கோயில்களிலிருந்தும், தஞ்சாவூர் மாவட்டத்தில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களிலிருந்தும் ஒன்று சேர்க்கப் பட்டவையாகும். ஆனல் அவை வரலாற்று முறைப்படி
ஒழுங்கு செய்யப்படவில்லை.
கலைக் காட்சிக் கூடத்தில் உள்ள க்லைச் செல்வங்களுள் 49 ஆம் இலக்கச் சிலை என் கவனத்தைச் சற்று அதிகமாக ஈர்ந்தது. அது புத்தர் தியான நிலையில் அமர்ந்திருக்கும் காட்சி. இப் புத்தர் சிலை முற்ருக வட இந்திய சிற்ப முறையில் அமையவில்லை என்பது புலணுகியது. சமண சமய சாயலுடையது. இலங்கையிலுள்ள புத்தருடைய சிலைகளு டன் நெருங்கிய தொடர்புடையதாக அச் சிலை காட்சி

Page 44
76 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
வழங்கியது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சிற்ப முறையே புத்தரின் இச்சிலையை வடிக்கவும் உபயோகிக் கப்பட்டிருக்கலாம் என்பது மாத்திரம் தெளிவாகியது. இச்சிலை எந்த ஆலயத்திலிருந்து எந்த இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டது என்பதற்கான விவரங்கள் பெற முடியாமல் இருக்கின்றன. பாபநாசம் தாலுகாவில் மடகரம் வயலிலே புத்த பெருமானின் இச் சிலை கண்டுபிடிக்கப் பட்டு சொண்டு வரப்பட்டது என்பர். நாக பட்டணத்தில் பெளத்த மடம் ஒன்றுக்கு முதலாவது இராஜராஜ சோழன் பெருமளவில் நன்கொடை வழங்கினன் என்று ஒல்லாந்தில் உள்ள லேய்டன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் செப்பேடுக ளில் குறிக்கப் பட்டுள்ளது.
1579 ஆம் ஆண்டுக்குரிய கும்பகோணத்தில் உள்ள ஒரு கல்வெட்டில் குரு விலந்துறையில் உள்ள ஒரு பெளத்த கோயில் குறிப்பிடப்படுகிறது. திருமலை ராஜபுரத்து மக்கள் புத்த கோயிலுக்குச் சொந்தமான ஒரு காணியி னுாடாக ஒரு வாயக்கால் வெட்டுவதற்காக அக்காணியைப் பெற்றுக் கொண்டு மற்ருேர் இடத்தில் இரண்டே முக்கால் வேலி நிலம் அதற்குப் பிரதியீடாக வழங்கினர்கள் என்று மற்ருெரு கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.
எனவே தஞ்சாவூர் கலைக் காட்சிக் கூடத்தில் உள்ள புத்தரின் சிலை அதே பகுதியிலிருந்த ஒரு புத்த கோயிலி லிருந்து பெறப்பட்ட தொன்ரு ய் இருக்கலாம். பத்தாம் நூற்ருண்டைச் சேர்ந்து நிற்கும் நாளந்த புத்தரின் பித் த3ளச் சிலை ஒன்றும் 13 என இலக்கமிடப்பட்டு, அங்கு உள்ளது. கலைக்காட்சிக் கூடத்தில் உள்ள மற்ருெரு பெள த்த சின்னம் 18 ஆம் இலக்க மிடப்பட்டுள்ளது. இது கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

13
தமிழ்
வரவேற்பு
சிவகங்கைப் பூங்காவில் தேநீர் விருந்து உபசாரம் இடைபெற்றது. அங்கிருந்து கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக் குச் சென்ருேம். இந் நூற்ருண்டின் முதற்பகுதியில் இச் சங்கம் நிறுவப்பெற்றது. தமிழின் உயர்வைப் பற்றிய உணர்வு தமிழகத்திலேயே குறைந்த காலமது. தமிழ் மொழியின் தனி நிலையைப் பாதுகாக்க வேண்டியதாயிற்று. அதற்கு உரிய நிலையில் அதை அமர்த்துவது அவசிய மாயிற்று. அதன் தொன்மையும் தனித் தன்மையையும் இயற்கை வளர்ச்சியையும் குறைவின்றி காலவளர்ச்சிக் கேற்ப வளரச் செய்வது இன்றியமையாததாயிற்று. அறிவுத் துறையிலும் கலைத் துறையிலும் இக்கால உலகப் பொது மொழிகளுக்கு ஒத்த நிலையில் ஓங்கி நிற்கச் செய்ய வேண்ய தாயிற்று. இக்குறிக்கோளுடன் தோன்றியது கரந்தைத் Aslágb Fatsub.

Page 45
アg நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
பாரத நாட்டுப் பண்பும் வரலாறும் கங்கைக் கரையில் தான் தோன்றியது என்று கருத்து நிலவியது அந்தக்காலத் தில். தமிழ்நாடும் மொழியும் ஓரளவு புறக்கணிக்கப்பட் டிருந்த பாரத நாட்டுப் பண்பாட்டின் ஆணி வேர் தமிழ கத்தில் தான் ஆழ ஊன்றியுள்ளது என்னும், வரலாற்றை யும் பண்பாட்டு ஆராய்ச்சியையும் காவிரிக் கரையில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்ற உண்மையைப் படிப்படியாக உணர்த்த வேண்டும் என்றும் கருத்து அப் பொழுது நிலவியது. இவற்றைச் செய்தாலன்றி தமிழ் மொழியை அதற்குரிய உயர் நிலையில் உலகம் கொள்ளும் முறையில் காணமுடியாது என்ற உணர்ச்சி நிலவியது. இவற்றை நன்குணர்ந்தார் காலஞ்சென்ற த. வே. உமா மகேஸ்வரம்பிள்ளை அவர்கள். இவர், தமிழ்வேள்“ என்றும் செந்தமிழ்ப் புலவர் என்றும் போற்றப்பட்டவர். தமிழ்ப் புலமையும் ஆராய்ச்சி வன்மையும் மிக் கவர். இவர் தலை மையிலே 56 ஆண்டுகளுக்கு முன்னர் கரந்தைத் தமிழ்ச் சங்க. தோன்றியது. ஆரவாரமின்றித் தொண்டு செய்த வர் இவர். இதன் பயனக பலர் தனித் தமிழ் வளர்ச்சி யில் ஈடுபட்டுள்ளனர். எந்த நன்முயற்சிக்கும் கல்வி இன்றியமையாததல்லவா? இவ்வுண்மையை நன்குணர்ந்து கரந்தைத் தமிழ் சங்கத்தைத் துவங்கும் போதே திட்டங் கள் வகுக்கப்பட்டன.
அதன் பெறுபேருக கரந்தைத் தமிழ்ச் சங்கம் அமைந் துள்ள அச்சிறு இடத்துள் ஆதாரக் கல்வியிலிருந்து பல் கலைக் சழகக் கல்விவரை 1852 மாணவர்கள் பயின்று வரு கிருர்கள் . ஒருமைப் பாட்டின் அடிப்படையில் எழுந்த தமிழ்ப் பண்பாட்டின் தனிக் கோயிலாக விளங்குவது இக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்று விதந்தோதப்பட்டுள்ளது. பாண்டித்துரைத் தேவரால் மதுரையில் நிறுவப்பட்ட

தமிழ் வரவேற்பு 79
நான்காம் தமிழ்ச் சங்கத்தை விடச் சிறந்த முறையில் கசந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழ்ப்பணி புரிந்துள்ளது என்பர் ஒரு சாரார். சுவாமி விபுலானந்தரின் யாழ்நூல் அரங் கேற்றமும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலே நடை பெற் றது என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
அங்கு சென்று தமிழ்ப் பிரதிநிதிகளையும் பார்வை யாளர்களையும் வரவேற்று அளிக்கப்பட்ட வரவேற்புரை யின் ஒரு பகுதி பின்வருமாறு அமைந்திருந்தது:-
மக்களையெல்லாம் இனிமையாக ஒன்றி வாழச் செய்
யும் தமிழ் மொழியின் தனி ஆற்றலை, அறிவாலும்
ஆராய்ச்சியாலும் இன்றி ஞானப் பார்வையாலும்,
நுண் உணர்ச்சியாலும் நன்கறிந்து உறுதி கொண்ட
காந்தியடிகள் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், தமி ழைப் படிக்கப் படிக்க இந்த மொழியிலுள்ள அழகு
அதிகமாகத் தெரிகிறது. அது நேர்த்தி யானதுமீ அமிர்தம் போன்றதுமான மொழி. நான் படிப்பதி
லிருந்து எனக்குத் தெரிவது என்னவெனில் தமிழர்
களின் மத்தியில் பூர்வ காலத்திலும் இப்போதும்
அனேக புத்தி மான்களும் ஞான வான்களும் இருந்
திருக்கிறர்கள். முடிவில் இந்தியா முழுமையும் ஒரே
ஜனுங்கமாக ஏற்பட வேண்டுமானல் சென்னை ராஜ
தாணிக்கு வெளியில் உள்ளவர்களும் தமிழ் மொழி
யைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
அவ்வரவேற்புரை நீண்ட தொன்ரு 6 அமைந்திருந்தது. பின்வரும் செய்யுள் அவ்வரவேற்புரையின் இறுதியில் அமைந்திருந்தது.

Page 46
O நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
**வையம் ஈன்ற தொன் மக்கள் உளத்தினைக் கையினல் உரை காலம் இருந்திடப் பைய நாவை அசைத்த பழந்தமிழ் ஐயை தாள் தலைக் கொண்டு பணிக்குவாம்.'
கரந்தைத் தமிழ்ச் சங்க வரவேற்புரை முடிந்ததும் பொதுக் கூட்டத்துக்கு விரைந்தோம். அங்கு பல வரவேற் புரைகள் வாசிக்கப்பட்டன. முதன்முதல் தஞ்சாவூர் தொல் காப்பியக் கழகத்தினரால் வரவேற்பு வாழ்த்து மடல் ஒன்று வழங்கப்பட்டது. தொல்காப்பியர் பெயரால் தோற்றம் பெற்ற இக் கழகம் 1960 ஆம் ஆண்டு கார்த் திகை மாதம் இருபதாம் தேதி துவக்கி வைக்கப்பெற்றது. தொடக்கி வைத்தவர் பண்டாரகர் அ. சிதம்பரநாதனுர்,
தொல்காப்பியர் கழகத்தின் நோக்கம் தமிழ் மொழி எல்லாத் துறைகளிலும் முதன்மை பெற வேண்டும். தமிழரின் பண்பாடுகள் பேணப்படுதல் வேண்டும். தமிழ ரின் வாழ்வியல் சிறந்துயர வேண்டும் என்பனவாகும்.
திருவள்ளுவர் ஈராயிரம் நிறைவு விழா மாநாடு இக் கழகத்தினரால் திரு. கி. ஆ. பெ. விஸ்வநாதம் அவர்களின் தலைமையில் நடத்தேறிது. அனைத்துத் தமிழ் நிறுவனங் களும் இணைந்து தொண்டாற்ற ஐம்பது நிறுவனங்களைக் கொண்ட 'தமிழ் இயக்க ஒன்றியம்' ஒன்றினை நிறுவு வதில் தொல் காப்பியர் கழகம் வெற்றியீட்டியுள்ளது.
தொல்காப்பியர் கழகத்தினரால் வழங்கப்பட்ட வர வேற்பு வாழ்த்துமடல் வாழ்த்துப் பாவாக அமைந்திருந்தது. அதன் ஒரு பகுதி : -
இரண்டாவதுமா நாட்டினைத் தமிழ்த் தாய்
பிறந்தகத் தியற்ற விருந்தாய் வருகென

தமிழ் வரவேற்பு 8
அன்புடன் எமதரசு அழைத்ததை ஏற்றிங்(கு) இன்டொடு போர்து நண்புடன் இணைந்து பார்மருள் வகையில் சீர்மா நாட்டினைத் சாறு பெற ஆற்றிய வீறு கமழ் சான்றீர்! வருக! நும் வாழ்வு வளர்ந்தொளி ஒங்குக! தூய் தமிழ் வன்மையும தொன்மையும் நுண்மையும் இததரை காணவும் புத்தம் புதிய பல் அறிவியற கலை தமிழ் நிறைவுற் றிலங்கவும் கடனுற் றுந்தொல் காப்பியா கழகத்தேம் மனங்கனிந்தேத்தி வாழ்த்துதும் வாழியே! விஞசைசூழ் தஞ்சையின் வியல்கலைக் கீர்த்தியைக் காணப் போந்த கல்விசால் செம்மல் காள்! வேற்றுமை யுள்ளமோர் ஒற்றுமை மிளிரப் பகுத் துண்டு பல்லுயிர் ஒம்பி ஒழுக்கத்தால் யாதும் ஊரே யாவரும் கேளிரென வாழ்முறை வகுத்த வண்டமிழ் தாய்க்கு வளரணி மணிபல வழங்கி மகிழ்கென வாழ்த்தும் நும்பனி போற்றதும் இவ்விழா அமிழ் தனச் சிறக்கத் தமிழக அரசு செய் நறும் பணி போற்றி நன்றி பாராட்டுதும்.' தமிழ்ப் புலவர் பண்ணையும் ஒரு வரவேற்புரை வழங்கியது
"உலகுக்குத் தமிழ் சொலலிப் பாடுவோம்-அது பலருக்கும் அமிழ் தென்று ஆடுவோம். ’’
என்று ஆரம்பிக்கும் அந்த வாழ்த்திதழ் பாடலாக அமைந்து பின்வரும் உரைநடைப் பகுதியைக் கொண்டு முடிகிறது.
தமிழகத் தலைநகரிலே நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் இந்நாள் ஒரு நந்நாள். எதிர்காலத் தமிழகத்தின் பொன் ஞள் , 37 ஆண்டுகளுக்கு முன்னுல் பாவேந்தன் பாரதி

Page 47
92 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
தாசன் இதைக் கனவில் கண்டார். தமிழக அரசு நினைவில் செயலில் நடத்தியது! வாழ்க தமிழக அரசு!
தஞ்சாவூர் நகராட்சி மன்றத்தார் வரவேற்புரை ஒன்று அளித்தனர்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்", என்ற கொள்கைக் கேற்ப உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஒர் உயா தனிச் சேம்மொழியாகிய தமிழ் மொழியின் மாண்பும் வளர்ச்சி யும் கருதி உலகத் தமிழ் மாநாட்டில் வீற்றிருந்து, சமிழா ராய்ந்த அன்புருவாகிய அறிஞர்களே! இவ்வாறு ஆரம்பிக் கும் இவ்வரவேற்புரையிலே இவ்வாறு அமைந்திருந்தது
'அளக்கலாகா அளவும் தளக்கலாகா நிலையும் கொண்டு, கலைப் பொருள் கண்டு, கண்டோர் வியக் கக் கவின் பெருவனப்பாய் பைந்தமிழ்ப் பண்பை பார் தொறும் பரப்பும் பெருவுடையார் கோயில் எங் களுரகத்தே. இதன் கண் விளங்கும் சிற்பச் சிறப்பும், சித்தரக்காட்சியும், ஆழ்ந்து நோக்கின் அரும் பொருள் காட்டும் கடவுள் பற்றும், கற்பனைத் திறனும், வண் ணச் சிறப்பும் நாட்டிய நுண்மையும் பண்பின் பெருமை யும், பொறியியல் ஆற்றலும் கருத்தின் ஆழமும், தமிழர் தம்மின் தனி நிலை செப்பும், சுவர்களில் பொறித்த செந்தமிழ்க் கல்வெட்டுக்கள், சோழன் மன்னர் படை கொண்டு தடை கடந்து பாராண்ட பண்பும், கடல் தாண்டிச் சென்று வாகை கொண்ட பெருமையும் விளங்கும்.'
தஞ்சை மறைமலை அடிகள் தமிழ் வளர்ச்சிக் சுழகத் தார் ஒரு வரவேற்புரை வழங்கினர். தூய தமிழில் அமைந் திருந்த அவ்வரவேற்புரையில் இரு பந்திகள் பின்வருமாறு இடம் பெற்றிருந்தன.

தமிழ் வரவேற்பு 83
'கடந்த பத்து நாட்களாக எங்கள் உடல்கள் தான் இங்கு நடமாடின; உள்ளங்களோ தமிழாராய்ந்து கொண்டிருந்த உங்கள் முன்னின்று - உங்களுக்குத் தொண்டு செய்வதற்குக் காத்துக் கொண்டிருந்தன. செய்தித் தாள்களிலே வந்த தங்கள் சொற்பொழிவுகட்டுரையின் சுருக்கங்களைக் கண்ணுற்ற பொழுது அறிவுப் பேரொளியிலே திளைத்திடும் தங்கள் இனிமை முகங்கள் எங்கள் மனக் கண்ணில தோன்றின’’
"தமிழ் என்ற லே இனிமை - அந்தத் தமிழை ஆராய்பவர்களின் முகம் இன்னும் எவ்வளவு இனி மையாக இருக்க வேண்டும் - அடடா ஒரு முறை அந்த அறிவுச் செம்மல்களைப் பார்த்திடும் வாய்ப்புக் கிடைக்காதா என்று கடந்த பத்து நாட்களாக ஏங் கிக் கொண்டிருந்தோம் -இதோ அந்த வாய்பபு கிட்டி விட்டது என்பதை எண்ணும் போது நாங்கள் அடை கின்ற மகிழ்ச்சி வெள்ளம் அதை விளக்க மூத்த தமிழிலேயே சொற்களில்லை."
இவ்வரவேற்புரையில் அரசியல் சார்புடையதாக ஒரு பந்தி அமைந்துள்ளது. அந்தப் பந்தி பின்வருமாறு :
"உங்களின் வருகையால் இஞ்சிசூழ் தஞ்சை இன்பத் தால் பூரிப்படைகின்றது. உங்களின் குரலால் இசை வளர்க்கும் தஞ்சை புதிய பண்ணை பெறுகின்றது. உங்கள் அன்புக் கரங்கலின் தீண்டலால் இந்தத் தஞ்சை மாநகரே மெய்சிலிர்க்கின்றது - அறிஞர்களே! அறிவுச்செம்மல்களே! அன்புள்ளங்களே! அவனியெங்கும் அண்ணுவின் தமிழை அழகுற அளிக்கப்போகும் ஆராய்ச்சியாளர்களே!’
இங்கே "அண்ணுவின் தமிழ் முதன்மையான இடத் தைப் பெற்றிருப்பதைக் காணலாம். தேவாரப் பாடல்

Page 48
84 நெஞசில் நிலைத்த சுற்றுலா
பெற்ற புனிதத் தலமான சிதம்பரத்தில் அரசியல் அடிப் படையிலான கட்சிகளே வாழ்த்துரைகள் வழங்கின. ஆனல் அரசியல் தலை நகரமாக விளங்கிய தஞ்சாவூரிலோ தமிழ் வளர்க்கும் கழகங்களாலே பெரும்பான்மையான வாழ்த்து மடல்கள் அளிக்கப்பட்டன. பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் முடிவுறுவதற்கு முன்னர் கலைச்சின்னங்கள் நினைவுச் சின்னங் கள் ஆக வழங்கப்பட்டன. நடராஜ மூர்த்தினதும் விநாய கப் பெருமானினதும் செப்புச் சிலைகள் வழங்கப்பட்டன.
4. ĠJAT ÖLJ JILGOT Élő56T
ஒய்வு இன்றியமையாதது. மனிதனின் வாழ்க்கைத் திட்டத்தில் ஒய்வு முக்கியமான ஒர் இடத்தைப் பெற்றுள் ளது. பகல் முழுவதும் சலியாது உழைக்கும் மனிதன் இராப்பொழுதில் நித்திரை கொள்கிருன், பகற் பொழுதில் நாம் செய்யும் வேலைகளின் பயனக எமது உறுப்புக்கள் ஒரளவு தேய்லடைகின்றன. ஆனல் இராக்காலத்தில் நாம் உறங்கும் பொழுது அவை மீண்டும் முன்னைய உருவத்துக்கு வளர்ந்து விடுகின்றன. உலகத்தின் படைப்புக்கள் அத்த *னயும் இதனலேயே ஓய்வை விரும்புகின்றன. இந்த அடிப்படையிலே நமது உடலில் உள்ள வெளியுறுப்புக்களைப் போன்று உட்புறமாக உள்ள உறுப்புக்களுக்கும் ஒரளவு ஓய்வு அவசியமாகிறது. எந்திரம் கூட ஒய்வு ஒழிச்சல் இன்றி செயற்படின் முறிந்து விடும் அல்லவா?

கிராமிய நடனங்கள் 85
திருவாரூர் முதலியாரின் பகற்போசன விருந்து சீரணிப் பதற்கு நெடுநேரம் ஆகும்போல் தோன்றியது. சமிபாட் டுக்கு இன்றியமையாத உடலின் உட்புறமாக உள்ள உறுப் புக்கள் வருந்தக் கூடாது என்று நினைத்தேன். எனவே சமிபாட்டு உறுப்புக்களுக்கு ஒய்வு அளிக்க எண்ணிணேன். இதன் பயணுகத் தஞ்சாவூரிலே சங்கீத மகாலில் நடைபெற்ற இராப் போசன விருந்து உபசாரத்தில் நாம் பங்குயற்ற வில்லை,
விருந்துஉபசாரத்தின் போது. தஞ்சாவூர்ப் பொம்மை கள் பகிரப்பட்டன என்று பின்னர் அறிந்தேன். எம்மை வழி அனுப்பப் புகைவண்டி நிலையத்திற்கு வந்தார் ஓரி அம்மையார். இராப்போசன விருந்துபசாரத்துக்கு ஏற் பாடு செய்தவர்களுள் அவ்வம்மையாரும் ஒருவர். எனது மனைவியுடன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது "தஞ், சாவூர்ப் பொம்மைகள் உங்களுக்குக் கிடைக்கவில்லையா? உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்குமாக இரண்டு பொம் மைகளைப் பச்சை நிறச்சேலை கட்டின ஓர் அம்மணியிடம் அனுப்பினேனே. உங்களுக்குக் கிடைக்கவில்லையா? என்று ஆச்சரியத்தோடு அவ்வம்மையார் கேட்டார். 'இல்லை’ என்றதும் தமது கையில் இருந்த ஒரு பொம்மையை எனது மனைவியிடம் கொடுத்தார். பச்சை நிறச்சேலை கட்டின அம்மணியை நாம் இன்றுவரை கண்டதில்லை. இச்சந்தர்ப் பத்தில்,
களவின் கண் கன்றிய காதல் விளைவின் கண்
வீயாவிழுமம் தரும். என்ற குறள் ஞாபகத்துக்கு வருகிறது "பிறர் பொருளே வஞ்சித்துக் கொள்ளுதலில் உள்ள ஆசை அப்பொழுது இனிது போல் தோன்றும். ஆனல் அது பயன் கொடுக்

Page 49
86 நெஞசில் நிலைத்த சுறறுலா
கும் பொழுது தொலையாத துன்பத்தைக் கொடுக்கும் என்பதே இங்கு பொதிந்துள்ள கருததாகும்.
தஞ்சாவூர்ப் பொம்மைகள் அலாதியானவை தனிச் சிறப்புப் பொருந்தியவை. மண்ணினல் ஆன ஒரு பொம் மையை நிலத்தில் வவத்துச் சற்றுத் தட்டி விட்டால் பல பக்கமும் திரும்பும், ஆடும், வளையும்; நிலத்தில் விழப் போவது போன்று ஆடி அசையும். ஆனல் நிலத்தில் விழாது. பொம்மையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள அலாதியான விதத்தினலேயே அது அவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கும். w
இனி கலை நிகழ்ச்சிகளுக்குச் செல்வோம். தமிழ்நாட் டின் கிராமிய கலை, இலக்கியம், ஆகிய இரண்டுடன் பிரிக்க Qpunta Lut- ஒன்றிய கிராமிய நடனங்கள். மக்கள் தத்தம் உள்ளங்களில் எழும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வழி களுள் முக்கியமானது நடனமாகும். தமிழ் நாட்டில் வழங்கி வரும் கிராமிய நடனங்களுக்குக் கணக்கே இல்லை. அவை வெறுமனே பொழுது போக்குச் சாதனமாக மட்டும் இருக்கவில்லை. கடவுள் பக்தி, நல்லொழுக்கம், அழகுணர்ச்சி என்பவற்றை மக்களுக்குப் புகட்டுவதற்காகவும் அமைந் துள்ளன. வாழ்க்கையைப் பயன்படுத்தும் சாதனங்களா கவும் வளர்ந்துள்ளன. எழுத, வாசிக்கத் தெரியாதவர் களுக்கு வேதம், புராணம் வரலாறு நாச ரீகம் முதலிய வற்றை புரிய வைப்பதற்காகவும் அக்கிராமியக் கல்கள் பயன் பட்டு வந்துள்ளன.
கிராமிய நடனங்சளை மூன்றுவகையாகப் பாகுபாடு செய்யலாம். கும்மி, கோலாட்டம் என்பன ஒரு பிரிவைச் சேர்ந்தன. அவை குறிப்பிட்ட சில விழாக்களிலே ஆடப் படுவனவாகும். மொம்மையாட்டம், பொய்க்கால் குதிரை

கிராமிய நடனங்கள் 87
ஆட்டம், கரகம் போன்றவை மற்ருெரு பிரிவில் அடங்கும் ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளோரே இத்தகைய ஆட்டங்களை மேற்கொள்வர். ஆங்காங்கே வாழ்ந்து வரும் மலைச் சாதியினருக்குரிய குரவைக்கூத்து, மயில் ஆட்டம் போன்றவை மூன்ரும் பிரிவைச் சாரும்,
இத்தகைய கிராமிய நடனங்கள் பற்பல சந்தர்ப்பங் களில் இரண்டாம் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட் டோடு தொடர்புடைய நிகழ்சிகளில் இடம் பெற்றன. தஞ்சாவூரிலே சிறப்பாக அமைந்துள்ளன அக்கிராமிய நடனங்கள். பிரபல படத் தயாரிப்பாளரான திரு நாகி ரெட்டி என்பவர் தமது கலைக்கூடத்தில் தமிழ் மாநாடு நடைபெற்ற சமயம் அளித்த இராப் பொசன விருந் துபசாரத்தின் போது வெகு சிறப்பாகக் கரகம் ஆடிக் காட்டப்பட்டது.
வர்ண அலங்காரங்கள் தீட்டப்பட்ட குடங்களை அல் லது செம்புகளைத் தலையில் வைத்து ஆடப் படுவது கரக ஆட்டமாகும். நாதசுவர இசை பக்கவாத்தியமாக அமை யும். இது தமிழ் நாட்டில் பிரபல்யமிக்க கிராமிய நடன மாகும். மழை தேடியும் தொற்று நோய்களை அகற்றவும் மாரியம்மாள் போன்ற தேவதைகளை வேண்டியும் ஆடப் படுகிறது.
முருகக் கடவுளின் பக்தர்கள் சிறப்பாக ஆடும் ஆட்டம் காவடி எனப்படும். பக்திப் பிரவாகத்தோடு ஆடப்படும் இந்நடனத்தில் கைதேர்ந்தவர்கள் பல சாகசச் செயல்களைச் செய்து காட்டுவர். காவடிச் சிந்தில் பல்வேறு இசைகளுக் கிணங்க காவடி ஆட்டம் நடைபெறும். இரண்டு நாத சுவரங்களையும் இரண்டு தவில்களையும் பம்பையையும் தமுக் கத்தையும் கொண்ட நையாண்டி மேளம் பக்க வாத்திய

Page 50
88 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
மாக அமையும். கரகம் ஆடும் போதும் பொய்க் கால் குதிரை ஆட்டத்தின் போதும் இந் நையாண்டி மேளம் இசை வழங்கும்.
புரவி ஆட்டம் என்னும் பொய்க்கால் குதிரை ஆட் டம் பெரும்பாலும் தஞ்சாவூருக்கே சிறப்பானதொன்ருகும். மூங்கில்களினல் ஆக்கப்பட்டுக் கனமான கடதாசியால் மூடப்பட்ட போலிக் குதிரைகள் உயர் சாதிக் குதிரை போன்று அலங்கரிக்கப்படும், போலிக்குதிரையின் பின்புற மாக உள்ள துவாரத்தினுல் மனிதனின் இடுப்பின் மேற் பாகம் தெரியும் வரை ஒருவன் குதிரையில் காட்சி அளிப் பான் கால்சளுக்கு மரக்கால்கள் பூட்டப்பட்டிருக்கும். குதிரையில் சவாரி செய்வது போன்று அவன் ஆட்டத்தில் ஈடுபடுவான். இந்நிலையில் பக்கவாத்தியத்துக்கு இணங்க சிறந்த முறையில் அவன் ஆடுவான்.
கைச்சிலம்பு இன்னெரு வகையான ஆட்டம். இசை யும் இசையோடு கலந்த சிலம்பொலியும் முழங்க இக்கதா காலேட்சபம் நடைபெறும். கூட்டு நடனமும் இடம் பெறும்.
ஒயிலாட்டம் மற்ருெரு வகையான கிராமிய நடனம். வாத்தியார் உட்பட 15 அல்லது 20 ஆண்கள் மாத்திரமே இவ்வாட்டத்தில் ஈடுபடுவர். மிருதங்கம் போன்றவை உப யோகிக்கப்படும். கிராமக் கோயில் விழாக்களிலே இது இடம் பெறும். −Y−
ஒரு தாடகத்தின் பாத்திரங்களைக் குறிப்பதற்கு அலங் கரிக்கப்பட்ட பொம்மைகளை உபயோகிக்கும் ஆட்டம் பொம்மலாட்டம் எனப்படும். குறுகிய திரை ஒன்றுக்குப் பின்னல் நிற்கும் கைவல்லமை உள்ள கைப்பணியாளன் பொம்மைகளோடு தொடர்புடைய ஒரு கறுப்பு நூலினை

கிராமிய நடனங்கள் 89
ஆட்டுவதன் மூலம் அப்பொம்மைகளை இயக்குவான். அரிச் சந்திரனின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் இவற்ருல் காண்பிக் கப்படும். பொம்மைகளின் ஆட்டம் மனிதப் பாத்திரங் களின் நடிப்புப் போன றே இருக்கும். அலாரிப்பு, ஐதீஸ்வரம், தில்லான போன்ற பரத நாட்டிய நடனங்களையும் அவற் றைக் கொண்டு ஆட்டுவித்துக் காண்ப்பிப்பர்.
புராணக் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் நாட்டிய நாடகங்களைத் தமிழ் நாட்டில் "தெருக்கூத்து" 6Tesö7 Lurf. ஆந்திரா தாட்டில் "விதி நாடகம்" என்று அழைப்பர். இயலும் இசையும் நாடகமும் தெருக்கூத்தில் அடங்கும். தெருக்கூத்துக்கள் இப்பொழுது அருகிக்கொண்டு போகின் றன
ஒரு நடனக்காரன் மயில் போன்று முகமூடியை அணிந்து அதன் இயல்புகளைக் கொண்டு இசைக்கு இணங்க ஆடும் ஆட்டத்தை மயில் ஆட்டம் என்பர். மயிலின் சாயல் இங்கே பிரதிபலிக்கப்படுவதைக் காணலாம்.
இத்தகைய கலை நிகழ்ச்சிகள் தஞ்சாவூரில் இடம் பெற்றன. இரண்டாவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடு நடைபெற்ற போது பலரால் விருந்துபசாரங் கள் நடத்தப்பட்டன. அவற்றுள் பல் கலை நிகழ்ச்சிகளுடன் விளங்கிய இராப்போசனம் விருந்துபசாரம் 10.1 68 இல் பத்ம பூரீ சிவாஜி கணேசனல் அளிக்கப்பட்டது. விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதும் அதற்கு முன்னரும பின்னரும் மேற்கூறிய சலை நிகழ்ச்சிகள். அங் கும் இடம் பெற்றதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
ஆம். கல்விப் பெருக்கால் அறிவு துலங்க வேண்டும்
கலைப்பெருக்கால் மனம் உயர வேண்டும். கல்வியும் கலை யும் வாழ்வின் இரண்டு கண்கள் இக் கருத்தினையே

Page 51
90 நெஞசில் நிலைத்த சுறறலா
வெள்ளம் போல் கலைப் பெருக்கும் கல்விப் பெருக்கு மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழி பெற்றுப் பதவி கொள்வார் தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார், என்று மகாகவி பாரதி கூறியுள்ளார். இரண்டு கடமை சளும் தமிழக அரசில் நிறைவேறிக் கொண்டு வரு கின்றனவென்பதும் ஈண்டு குறிப்பிடத் தக்கது சிறப்புப் புகைவண்டி தஞ்சாவூரிலிருந்து புறப்படி வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. புகைவண்டி புறப்படும் நேரம் ஒலி பெருக்கிகள் மூலம் பலமுறை அறிவிக்சப்பட்டது. புகைவண்டியிலுள்ள தத்தம் அறைகளுக்குச் செல்லுமாறு அனைவரும் வேண்டிக் கொள்ளப்பட்டனர். புகைவண்டி யும் புறப்பட்டது முந்தின தாளைப் போன்று அன்று இரவு உடனடியாக நான் நித்திரையில் மூழ்கி விட வில்லை. ஒருவேளை இராப்போசனம் உண்ணு த காரணத் தினுல் அத்தகைய நிலைமை உருவாகியிருக்கலாம். ஏனெனில் சிலருக்கு இராப்போசனம் உட்கொள்ளாவிட் டால் நித்திரை வராதாம். இச்சந்தர்ப்பத்தில் நபிகள் பெருமானுர் முகம்மது (ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது. இப்பொன்மொழியை அறிவிப்பவர் அனஸ்(றலி) அவர்கள். ஆதாரம். திர்மிதி 685 (பெருமானரின் பொன் மொழிப் பேழை. ஹாஜி மு. ற.மு. அப்துல் றஹிம்)
**இரவில் உணவு உண்டு வாருங்கள். (அது) ஒரு பிடி மட்டரகமான பேரீச்சம் பழமாயினும் சரியே. ஏனெனில் இரவில் உணவு உண்ணுவதை மனிதன் கைவி டில் அவன் இளைத்த விடுவான்' என்பதே அண்ணல் நபி (60 ல்) அவர் 4ளின் பொன் மொழியாகும்

கிராமிய நடனங்கள் 9
நித்திரையில் மூழ்சாத நான் சிந்தனையில் மூழ்கினேன். சிந்தனையில் மூழ்கிய ஒருவனின் மூளை செயல் பட்டுக் கொண்டிருக்கும். ஏதாவதொரு கட்டுரை எழுதிய பின் னரும் உடனடியாகத் தூக்கம் வராது என்பர். மூளைக்கும் ஒய்வு கொடுத்தால் தான் நித்திரை வரும்,
முதலாவது அனைத்துலகத் தமிழ் மகாநாடு இலங்கை யிலோ சென்னையிலோ ஏன் நடைபெறவில்லை? மலேசியா வின் தலைநகரான கோலாலம்பூரில் ஏன் நடைபெற்றது? இரண்டாவது அனைத்துலக மகாநாட்டில் பங்குபற்றிய தன் பயனகவே கலாச்சாரச் சுற்றுலாவின் பங்கு பற்ற முடிந்தது அல்லவா? இவ்வாறு சிந்திக்கலானேன். சென் னைக்கு வந்து எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றும் வாய்ப்பை எனக்கு நல்கிய எல்லாம் வல்ல அல்லாஉற்வுக்கு எல்லாப் புகழும் என்று கூறிவிட்டு இவ்விஞக்களுக்கு விடை காண முனைந்தேன்.
இலங்கையிலே அல்லது சென்னையில் நிரந்தரமாக வாழும் அல்லது உத்தியோகம் பார்க்கும்ஒருவர் இம்மாநாட் டுக்குமூலகாரணமாய் இருந்தால்இதுயாழ்ப்பாணத்தில் அல் லது சென்னையில் நடைபெற்று இருக்கும். எனவே முதல ாம் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு மூல. காரணமாய் இருந்தவர் யார்? அவர் வேறுயாருமல்லர். ஈழ நாட்டைத் தாயகமாகக் கொண்டவர் அவர். தமிழ் ஆர்வம் மிக்கவர். ஆராய்ச்சித் திறமை உடையவர். பல் வேறு கருத்து மோதல்களுக்காளாகி இருக்கும் வெவ்வேறு குழுவினரை ஒரே மேடையில் கருத்துரையாடச் செய்வதில் வெற்றி ஈட்டியவர். தமிழ் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட் டுள்ள பல்வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட வெவ்வேறு நாட்டினரை ஒன்று சேர்த்தவர். புது முை றயில் தமிழ் ஆராய்ச்சி நடைபெற வேண்டும் என்று

Page 52
92 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
அதற்கான வழிமுறைகளைக் கையாண்டவர். பல்வேறு நாடுகளுடனும் பல்வேறு நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டு பெருந்தொகையான பணத்தைச்சேர்த்து அதைக் கொண்டு தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டை வெற்றிக்கு மேல் வெற்றி பெறச் செய்தவர். அவருடைய சிந்தனையிலே தமிழாராய்ச்சி மகாநாடு என்னும் அலை மோதி இருக் கவில்லையானுல் அகில உலக அடிப்படையில் தமிழ் ஆர ாய்ச்சி மகாநாடு நடைபெற்றிரா என்று கூடத் தணிந்து கூறலாம. அவர் தாம் தனிப் பெரும் ஆராய்ச்சியாளர், தனிநாயக அடிகளார். மலேசியாப் பல்சலைக்கழக இந்திய மொழித்துறைத் தலைவர். பேராசிரியர் வண. பிதா சேவியர் தனிநாயகம் அவர்கள்.
இவ்வாறே எண்ணிக் கொண்டே போனல் எப்படித் தூக்கம் வரும்? செம்மறிகளை ஒன்று, இரண்டு. மூன்று என்று எண்ணிக் கொண்டு போஞல் தூக்கம் வரும் என் பர். ஆணுல் நான் வேறு முறையைக் கையாண்டேன். அல்லா உற்வின் புகழையும் அழகான பெயர்களையும் உச்சரித்தேன். உச்சரித்துக்கொண்டே இருந்தேன். இஸ் லாமிய பாணியில் இதனை 'திக்று' என்று அழைப்பர். "திக்று” என்ருல் மீண்டும் மீண்டும் உச்சரிப்பது என்று பொருள் படும். இடைவிடாது உச்சரித்துக் கொண்டிருந் தேன்.

15
தமிழகத்து OTGo Gif GDLF
அடுத்த நாள் 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆந் தேதி, தை மாதம் முதலாம் தேதி, தைப்பொங் கல் திருநாள் தமிழ் மக்கள் கொண்டாடும் திருநாள். பொங்கிமகிழும் பொன்னுள். 'பொங்கலோ பொங்கல்” என்று பொங்கலுக்கு முதலிடம் அளிக்கப்படும் பெருநாள் அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு சிறப்புப் புகை வண்டி கோயம்புத்துரை அடைந்தது. துயில் விட்டெழுந்து காலைக்கடன்களை முடித்துக் கொண்டோம். அன்று காலை பொங்கற் பெருநாட்பரிசுகள் பல எமக்கு வழங்கப்பட் டன. வியாபரா நிலையங்கள் தத்தம் பெயர்கள் பொறிக் கப்பட்ட கைக் குட்டைகளைப் பகிர்ந்து அளித்தன. புதினத் தாள் விற்பனையாளர் தாம் பிரநிதித்துவம் வகிக்கும் ஆங் கிலத் தமிழ்த் தினசரிகளைப் புகைவண்டியில் இருந்த ஒவ் வோர் அறையிலுமுள்ளவர்களுக்கும் இலவசமாக வழங்கி னர். இனமாக அளித்தனர். இனம் என்பது அறபுச் சொல் "இன் ஆம்’ என்ற அறபுச் சொல்லே இணு மாகத் திரிந்துள்ளது.

Page 53
94 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
கோவை என்றும் வழங்கப்படும் கோயம்புத்தூரிலே காலடி வைக்கும் முன்னமேயே எங்களை வரவேற்க ஆயத்த மாய் விட்டனர் அந்த ஊர் மக்கள். நாம் அங்கு செல்வ தற்கு ஒரிரண்டு நாட்களுக்கு முன்னர் மாணவர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். உயிர்ச்சேதங்கள் ஏற் பட்டன என்றும் புதினத்தாள் தள் பறைசாற்றின. ஆனல் இரண்டாம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் பங்குபற்றியவர்கள் கோவை மாநகருக்குச் சென்ற அன்று அங்கு எங்கும் அமைதி நிலவியது. மாணவர் ஆர்ப்பாட் டங்களுக்கு இலக்கான நகரம் போன்று தோன்ற வில்லை.
பழந்தமிழ் இலக்கியங்களிலே கொங்குநாடு என்று வழங்கப்பட்ட பிரதேசத்தின் ஒரு பகுதி கோயம்புத்தூர் மாவட்டமாகவும் பெயர் பெற்றுள்ளது. அகநானுறு போன்ற சங்கநூல்களிலும் சிலப்பதிகாரத்திலும் கொங்கு தேச ராஜாக்கள், கொங்கு மண்டலசதகம் போன்ற வர லாற்று நூல்களிலும் கல்வெட்டுகளிலும் தோண்டி எடுக்கப் பட்ட நாணயம் முதலியவற்றிலும் இப்பிரதேசத்தின் பண் டைக்கால வரலாற்றை அறியக்கூடிய குறிப்புக்கள் இருப்ப தைக் காணலாம். கொங்கு என்ருல் தேன், மகரந்தம், நறுமணம் எனப் பொருள்படும். சேர மன்னரைக் குறிப் பிடும்பொழுது தேனுக்குப் புகழ் பெற்ற கொங்கர் தம் மன்னர் என்ற கருத்துப்பட பதிற்றுப்பத்து. "நாரரி நறவிற் கொங்கர் கோவே' எனக் குறிப்பிடுகின்றது. சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள கொல்லிமலைப் பிரதேச மும் தேனுக்குப் புகழ் பெற்றது. இப்பிரதேசம் தற் போதைய சேலம் மாவட்டத்தில் உள்ளது. தேன் கொழிக்கும் மலைப்பிரதேசங்கள் உள்ளமையால் இப்பகுதி கொங்கு நாடு எனப் பெயர் பெற்றிருக்கலாம்.

தமிழகத்து மான் செஸ்டர் 95
கொங்கு நாட்டைப்பற்றியும் அங்கு வாழும் மக்களைப் பற்றியும் மதுரை காஞ்சி என்ற நூலும் குறிப்பிடுகிறது. பொன்முடியார், பெருந் தலைச் சாத்தனர் முதலிய சான் ருேரும் கொங்கு நாட்டைச் சேர்ந்தோராவர். சோழர் ஆட்சியின் போது கொங்கு நாட்டில் உள்ள நொய்யல் ஆற்றிலே மாத்திரம் பதினறு அணை கள் கட்டப்பட்டன. இக்கால எல்லையில் கொங்கு நாட்டில் தலைசிறந்த அறிஞர் தோன்றி உள்ளனர். நன்னுரல் ஆசிரியர் பவணந்தி முனி வர் கொங்கு நாட்டை ச் சேர்ந்தவர். உரையாசிரியர்களான இளம் பூரணர், நச்சினர்க்கினியார், பரிமேழகர் கொங்கு நாட்டிலே வாழ்ந்து உரையாசிரியர்களின் பொற்காலத் தைத் தோற்றுவித்தனர். பெரும் காப்பியமான பெருங் காதையின் ஆசிரியரும் கொங்குவேள் என்னும் சமண சம யத்தவர் என்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. சைவ, வைணவ மறுமலர்ச்சியும் இங்கு ஏற்பட்டது. பல மடால யங்கள் கொங்கு நாட்டில் தோன்றின, என்று கல்வெட்டுக் கள் கூறிக்கொண்டிருக்கின்றன.
வள்ளல்கள் வாழ்ந்த நாடு கொங்கு நாடு. கடையொழு வள்ளல்களுள் குமணன், அதிகமான், ஓரி முதலியோர் கொங்குநாட்டை ஆட்சி புரிந்துள்ளனர். அவர்களுள் வல்வில் ஒரியின் அம்புவிடும் ஆற்றல் புறநானுரற்றில்(152) சிறப்பிடம் பெற்றுள்ளது.
பதினேழாம் நூற்றண்டின் இறுதியில் கொங்கு நாட்டை ஆட்சி செய்தோர் மைசூர் உடையார் ஆவார். 1971 ஆம் ஆண்டில் கொங்கு நாடு முஸ்லிம் ஆட்சியாள ரான ஹைதர் அலியன் பரிபாலனத்துக்குள்ளாகியது. பின் திப்பு சுல்தான் ஆட்சியில் இருந்தது. நாற்பது ஆண்டுகளாக நடைபெற்ற அவ்விருவரின் ஆட்சியின் போது பிரித்தானி யருடன் போர் செய்ய வேண்டி இருந்தது. கொங்கு

Page 54
96 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
நாட்டில் நான்கு போர்கள் நடைபெற்றன. 1799 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் போர் புரிந்து கொண்டே இறை வனடி எய்த கொங்கு நாட்டில் பிரித்தானியர் ஆட்சி காலூன்றியது.
1809 ஆம் ஆண்டில் கொங்கு நாட்டின் ஒரு பகுதி கோயம்புத்தூர் மாவட்டமாக அமைக்கப்பட்டது. தலைமை நிலையம் கோயம்புத்தூராக இருந்தது. கொங்கு நாட் டைச் சேர்ந்த தர்மபுரிப் பிராந்தியமும் தர்மபுரி மாவட் டமாக மாற்றப்பட்டது. சங்க காலத்தில் தகடூர் எனப் பட்ட பிராந்தியமே இன்று தர்மபுரி மாவட்டமாகத் திகழ்கிறது. அக்காலத்தில் அதியமான் பரம்பரையினரின் தலைமைப் பீடமாக தகடூர் விளங்கியது. பழங்காலக் கோட்டையின் பாழடைந்த நிலையை இன்றும் காணலாம். அதமான் கோட்டை என அது பெயர் பெற்றுள்ளது. அதியமான் கோட்டை என்பதிலிருந்து இப் பெயர் மருவி உள்ளது. சுருங்கக் கூறின் கொங்குச் சோழரின் ஆட்சிக் காலம் கொங்கு நாட்டு வரலாற்றிலே பொற்காலம் என
6) П. LD.
இனி, கோயம்புத்தூர் என்ற பெயர் எவ்வாறு ஏற் பட்டது என்பதைப் பார்ப்பேர்ம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் "இருளர்' என்ற மக்கள் கூட்டத்தினர் நெய்யல் நதிப் பள்ளத்தாக்கில் குடியேறினர், இக் கூட்டத்தினர் தலைவன் டெயர் கோவன். இவனும் இவனது கூட்டத் தவரும் இருந்த பகுதி “கோவன் பட்டி’ எனப்பட்டது. இதி லிருந்தே கோயன் புத்தூர் என்று இந்நகர் பெயர் பெற்றது என்பர்.
சோழர் ஆட்சிக்குட்பட்ட பிராந்தியத்துக்கும் சேரர் ஆட்சிக்குட்பட்ட பிராந்தியத்துக்கும் இடைப்பட்ட பகுதி

தமிழகத்து மான்செஸ்டர் 97
பண்டைக் காலத்தில் அடர்ந்த காடாக இருந்தது. அக் காலத்தில் மத போதனையில் பலர் ஈடுபட்டனர். அவர்க ளுள் ஒருவருக்குச் சேரமான் பெருமாள் என்பவரின் தொடர்பு கிட்டியது. இப் பகுதியில் புனித யாத்திரையில் ஈடுபட்ட சேரமான் பெருமாளையும், மத போதனையில் ஈடுபட்ட மத போதகரையும் சோழ மன்னரான கரிகாற் சோழன் மனமுவந்து வரவேற்ருன் . பேரூர் என்ற இடத் தில் உள்ள பட்டிப் பெருமாளை வணங்க அவர்கள் கோவன் பட்டியைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. சேர நாட்டுக்கும் சோழநாட்டுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை ஓர் அழகிய நகரமாக ஆக்கவேண்டும் என்று கூறிஞன் கரிகாற் சோழன். பல வீடுகள் தோன்றின. இதன் பய ணுக கோவன் பட்டி என்பது கோவன் புத்தூர் என மாறி யது. பின்னர் கோயமுத்தூர் எனத்திரிந்து கோயம்புத்தூர் என மருவி இருக்கலாம். இப் பிராந்தியத்தில் உள்ள வயல்களின் விளை பொருள்கள் மூத்துப் போன்று இருந்தன என்பதை இத்தகைய பெயர் மாற்றத்துக்கான காரண மாகக் காட்டுவர். தற்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இக்கூற்றை உறுதிப் படுத்துவனவாக அமைந்துள்ளன. "
பேரூர் கோயிலில் ஒரு கல்வெட்டில் இந்நகரம் கோவன் புத்தூர் அல்லது வீரகோள நல்லூர் எனக் குறிப்பிடப்
பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் 8024 சதுர மைல்கள் பரப்புடையது. அங்கு 38 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களுள் 95 சத வீதத்தினர் இந்துக்களாவர். முஸ் லிம்கள் 2, 5 சத விகிதத்தினராவர். கிறிஸ்தவர் 2 சத வீதத்தினர். மொழி அடிப்படையில் பார்க்கும் பொழுது 72 வீதமாஞேர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட

Page 55
S8 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
வர் ஆவர். தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டோர் நூற்றுக்கு 15 வீதமானேர் ஆவர். நூற்றுக்கு ஆறு வீதமானேர் கன்னட மொழியைத் தாய் மொழி யாகக் கொண்டவர் ஆவர்.
கோயம்புத்தூர் நகரம் தென்னிந்தியாவின் மான்செஸ் படர் என்ற புகழ்ப் பெயரைப் பெற்றுள்ளது. நெசவாலை கள் பல அங்கு இருப்பதே அதற்கான காரணமாகும். கைத்தொழில்கள் அங்கு பல்கிப்பெருகி உள்ளன. மக்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
காவேரி நதியின் கிளையாக அமைந்துள்ளது நெய்யல் நதி. அந் நதியின் வலது கரையில் கோயம்புத்தூர் உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்துக்கான நீர் வளத்தை காவேரி, பாவணி, அமராவதி, நெய்யல், அலியார் முதலிய ஆறு களும், மழையினுல் பயன் படும் குளங்களும் அளிக் கின்றன. பரம்பிக்குளம் அலியார் பல நோக்குத்திட்டம் இரண்டு இலட்சத்திற்கு அதிகமான ஏக்கர் நிலப்பரப்பை சாகுபடி செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல நெசவாலைகள் கோயம்புத்தூரில் தோன்றியதன் காரணமாகப் IG) பிரச்சனைகளும் தோன்றியுள்ளன. இவற்றைத் தீர்க்கும் முகமாக 1951 ஆம் ஆண்டில் தென் னிந்தியாவில் நெசவாலை ஆராய்ச்சி நிலையம் ஒன்று நிறுவப் பட்டது தென்னிந்தியாவில் உள்ள நெசவாலைகள் இந் நிலையத்துக்கான செலவுகளைப் பொறுப்பேற்கும்.
பொறியியல் துறையிலும் கோயம்புத்தூர் துரித முன் னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவின் "டிற்ருெயிட்” நகரம் என்றும் புகழப்படுகிறது. எந்திர கருவிகளும் மின் சாதனங்களும் இன்னும் பல பொறியியற் கருவிகளும்

தமிழகத்து மான்செஸ்டர் 99
இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழ் நாட்டின் ஏனேய பகுதிகளில் விவசாயம் அல்லாத தொழில் துறை களில் ஈடுபட்டுள்ளோரின் நூற்றுவீதம் 25 ஆக இருக்கக் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நூற்றுக்கு 40 வீதமானேர் அத்தகைய தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.
கல்வித்துறைகளிலும் கோயம்புத்தூர் பெருமளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. உயர் கல்வியைப் பொறுத்த வரையில் தனிப்பட்டோரின் தொண்டு மிகப்பெரியது.
நூல் நிலையங்களைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது இம்மாவட்டம். 1650 ஆம் ஆண்டில் உள்ளூர் நூல் நிலைய அதிகார சபை ஒன்று நிறுவப்பட்டது. முதல் ஐந்துஆண்டுகளில் 110 நூல் நிலையங்கள் கோயம்புத்தூரில் நிறுவப்பட்டன. இரண்டா வது திட்டத்தில் நூல் நிலையங்கள் 134 ஆக அதிகரித்தது. பின் 5000ம் மக்கள் வாழும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூல்நிலையங்கள் நிறுவப்பட்டன. ஆயிரத்துக்கதிகமாக வாழும் கிராமங்களில் விநியோகநிலையங்கள் அமைக்கப் பட்டன.
இயங்கும் நூல் நிலையங்களாகப் பத்து மோட்டார் வண்டிகள் உள்ளன. மகளிருக்கு உதவும் பொருட்டு வீடுகளுக்கு கொண்டுசென்று விநியோகிக்கும் புதிய முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 185 நூல் நிலையங்களையும் நடத் துவதற்கு மாவட்டத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அரைநேர நூலகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Page 56
6
D56ft கல்லூரி
கோயம்புத்தூர் புகைவண்டி வாசலில் அனைவரையும் நாட்டு மக்கள் வரவேற்றனர். பன்னீர் தெளித்தனர். போட்டுமிட்டனர். மலர் மாலைகள் சூடினர். பேரூந்துகள் எமக்காகக் காத்துக் கொண்டிருந்தன. சென்னையிலும் ஏனைய இடங்களிலும் உபயோகிக்கப்பட்ட பேரூந்துகள் அல்லஅவை. தமிழக அரசு சென்னை மாநகரில் உள்ள போக்குவரத்து சாத னங்களைத் தேசிய மயமாக்கியிருந்தது. ஆளுல் கோயம்புத்துர ரிலோ பேரூந்துகள் தனிப்பட்டவர்களின் உடமைகளாகவே இருந்தன. அத்தகைய தனிப்பட்டோரின் பேரூந்துகளே எம்மைத் தாங்கிச் செல்லத் தயாராயிருந்தன. அனைவரும் பேரூந்துகளில் ஏறியதும், பேரூந்துகள் நகரத் தொடங் கின. நகர்காவலர் வண்டிகள் வழிகாட்டிகளாக முன்னே சென்றன. எம்மைத் தாங்கிச் சென்ற பேரூந்துகள் தங்கு தடையின்றிச் செல்வதறகாக ஏனைய வாகனங்கள் தடை செய்யப்பட்டன. மகளிர்களுக்கான பி. எஸ். ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தோம்.

மகளிர் கல்லூரி 101 கைத்தொழில் துறையில் தமிழ் நாட்டின் ஏனைய மாநகரங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோயம்புத் தூர் கல்வி வளர்ச்சிக்கும் சிறந்த முன் மாதிரியாகவே விளங்கிற்று. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் நடை முறையாக்கப்பட்ட பின் கல்லூரிகளின் எண்ணிக்கை துரி தமாக அதிகரித்தது. 1956 ஆம் ஆண்டில் 1325 ஆரம்பப் பள்ளிகளே கோயம்புத்தூரில் இருந்தன. 1966ஆம் ஆண் டில் இவ்வெண்ணிக்கை 3126 ஆக அதிகரித்தது. 1,59,000 ஆக இருந்த மாணவர்களின் தொகை 8,00,000 ஆக அதிகரித்தது. பாடசாலைகளைச் சீர் திருத்தும் பணியில் அதிகம் ஊக்கம் காட்டினர். பெரிதும் ஈடுபட்டனர். பாடசாலைகளை அமைப்பதற்கு ஆன பணமும் பொருளும் நிலமும் நன்கொடையாக வழங்கப்பட்டன.
1955 ஆம் ஆண்டில் 88 ஆக இருந்த ஆண்பிள்ளை களுக்கான நடுத்தரப் பள்ளிகளின் எண்ணிக்கை 1966 ஆம் ஆண்டில் 1216 ஆக அதிகரித்தது. அத்தகைய பாட சாலைகளின் மாணவர்களின் எண்ணிக்கை 41,321 இல் இருந்து 1,83,820 ஆகக் கூடியது. பாடசாலைகள் அதி கரிக்கவே பயிற்றப்பட்ட ஆசிரியர் தேவையும் கூடியது. 1956 ஆம் ஆண்டு 4 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் 900 பயிற்சி மாணவர்கள் இருந்தனர். பத்து ஆண்டுகளில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் எண்ணிக்கை பதினென் ருகவும் மாணவர்களின் எண்ணிக்கை 1923 ஆகவும் கூடின. உயர்தரக் கல்வியைப் பொறுத்தவரையில் கோயம்புத்தூர் மாவட்டம் பெருமளவு முன்னேறியுள்ளது. இருபது ஆண்டு களுக்கு முன்னர் உயர்கல்வித் துறையில் எவ்வித முன்னேற் றமும் இன்றித்தேங்கிக்கிடந்தது கோயம்புத்தூர் மாவட்டம். அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஒரு நடுதரக் கல்லூரியும், ஒரு விவசாயக் கல்லூரியுமே அங்கிருந்தன. இன்று கோயம் புத்தூர் மாவட்டத்தில் ஆண்களுக்கான 7 கலைக் கல்லூ

Page 57
1 O2 நெஞசில் நிலைத்த சுற்றுலா
ரிகளும் பெண்சளுக்கான 3 சலைக் கல்லூரிகளும் இருக்கின் றன. 3 பொறியியற் கல்லூரிகளும் எல்லாச் சாதனங்களை யுமுடைய விவசாயக் கல்லூரியும் காடுசம்மந்தமான ஓர் ஆராய்ச்சிக் கழகமும், உடல் நலக் கல்விக்கான ஒர் கல் லூரியும் 3 தொழில் நுட்பக் கல்லூரிகளும் அங்கு உண்டு. தமிழ் ஆராய்ச்சிக்கான கல்லூரியும் பேரூரில் இயங்கி வருகின்றது. தனிப்பட்ட நன்கொடையாளர்களின் வரை யாது வழங்கும் வள்ளன்மையினுல் 1966 ஆம் ஆண்டில் ஒரு வைத்தியக் கல்லூரியும் நிறுவப்பட்டது. சட்டக் கல் லூரி ஒன்றுக்கே அங்கு குறையுள்ளது. ஒரு பல்கலைக்கழ கத்திற்கான கோயம்புத்தூரின் கோரிக்கை இனியும் புறக் கணிக்க முடியாததாகிவிட்டது.
பூரீ, பீ. ஏஸ். கோவிந்தசுவாமி நாயுடு அவர்களின் நான்கு புதல்வர்களும் கொடையை தமது ஐந்தாவது சகோதரனுகச் சேர்த்துக் கொண்டார். கொடை அவர் களின் சுவீகரிக்கப்பட்ட, சகோதரணுக மாறியது. எனவே அவர்கள் தமது சொத்தில் ஒரு பகுதியை தமது சுவீகரச் சகோதரணுகிய கொடைக்கு ஒதுக்கினர். பொதுக் கல்வியையும் தொழில் நுட்பக் கல்வியையும் வளர்க்கும் முகமாக 1926 ஆம் ஆண்டில் நம்பிக்கைச் சொத்து நிலை யமென்று நிறுவப்பட்டது. இதன் சொத்துக்கள் பல்கிப் பெருகியுள்ளன. இதன் பயனுக பல்வேறு துறைகளிலே வெவ்வேறு உயர்தரக் கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன
பி. எஸ். ஜி. நம்பிக்கைச் சொத்தைப் பின்பற்றி நன் கொடையாளர் பலர் நம்பிக்கைச் சொத்துக்களை நிறுவலா பினர். பெரும்பாலான நம்பிக்கைச் சொத்துக்கள் கல்வி நிலையங்களின் அபிவிருத்தியையே குறிக்கோளாகக் கொண் டுள்ளன. பி. எஸ். ஜி. ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி இதே அடிப்படையில் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது. இந்தக்

மகளிர் கல்லூரி 1 O3
கல்லூரிக்கே நாம் சென்று கொண்டிருந்தோம். பெண்களுக் கான கிருஷ்ணம்மாள் கல்லூரியில் வாயிலை அடைந்ததும் பிரமாண்டமான ஒரு வரவேற்பு எமது வருகையை காத் துக் கொண்டிருப்பது புலனயிற்று.
ஒரே நிறத்தில் ஒரே விதமான ஆடை அணிந்திருந்த சல்லூரி மாணவிகள் இரு மருங்கிலும் அணிவகுத்து நின் றனர். அவர்கள் தம் கையிலே விளக்குக்களை ஏந்திய வண்ணம் நின்றனர். விளக்குகள் மண்ணுலானவை. விளக்குக்களில் தேங்காய் எண்ணெய் வளர்க்கப்பட்டுத் திரிகள் எரிந்து கொண்டிருந்தன. "பொலம்பாலிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்" (1:45) என்று குறிப்பிடும் மணிமேகலையை நினைவூட்டும் பாவை விளக்குகள் போன்று இருந்தது அக்காட்சி. சிறப்பான உடையை அணிந்திருந்த கல்லூரி மாணவிகளினுலான பாண்ட் வாத் தியக் கோஷ்டியொன்று முன்னே சென்றது. பாண்டு வாத்தியத்தைத் தொடர்ந்து நாங்கள் உட்சென்ருேம். அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது. அங்கே ஒரு சிறு பொது கூட்டத்துக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந் தன. சிறப்பாக அழைக்கப்பட்டிருந்தவர்களும் இரண்டாம் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் பங்குபற்றிய பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் கல்லூரி மாணவர் களும் அக் கூட்டத்தில் பங்குபற்றினர்கள். தமிழ் தாய் வணக்கத்தைத் தொடர்ந்து கல்லூரி அதிபர் அனைவரையும் வரவேற்ருர், அக்கூட்டத்துக்கு நாச்சிமுத்து கவுண்டர் கல்விப் பொதுச் சொத்தின் தலைவரான திரு. இயக்குநர் திரு. டி. எஸ். அவினசிலிங்கம் செட்டியார் 'கொங்கு நாடு, என்ற பிரசுரத்தை வெளியிட்டார். கோயம்புத்தூரின் சுருக்கமான வரலாற்றைக் குறிப்பிடுகிறது கொங்கு நாடு என்ற வெளியீடு, கல்லூரி முதல்வரின் நன்றியுடன் கூட்

Page 58
104 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
டம் முடிவடைந்தது. தமிழ் மாநாட்டுப் பிரமுகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வெள்ளியாலான, உருவத்தில் சிறிய குத்து விளக்குக்கள் வழங்கப்பட்டன. தரத்தினவாயும் கண் ணேக்கவரும் அழகினவாயும் அமைந்திருந்தன அந்தக் குத்து விளக்குகள்.
அக் கூட்டத்தில் தலைமை வகித்த தலைவருக்குப் பின் புறமாகச் சுவரிலே இரண்டு படங்கள் தொங்கிக் கொண் டிருந்தன. அவற்றை ஊன்றிக் கவனித்தேன். உண்மை யிலேயே அப்படங்கள் பார்ப்போரை அனைவரையும் Friš கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை உணர்ந்தேன். ஒரு படத்தில் மரத்தின் வேர்ப்பகுதியில் திராவிடம் தமிழ் என்ற சொற்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு முதலிய மொழிகளின் பெயர் கள் அம்மரத்தின் சிலைகளுக்கு பெயர்களாக இடப் பட்டிருந்தன.
தமிழ் மொழியிலிருந்தே ஏனைய மொழிகள் கிளை மொழிகளாய்த் தோன்றின என்பதையே இப்படம் விளக் கிக் கொண்டிருந்தது. இப் படத்தைப் பார்த்த பின்னர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய மனுேன்மணியம் என்னும் நாடகம் பற்றிய காவியம் என் கண் முன் தோன்றியது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தமிழ்த் தெய்வ வணக்கம் கூறும் பொழுது பாடிய செய்யுள் ஒன்றை நினைவு படுத்தினேன்.
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம் பொருள் முன் னிேருந்தபடி யிருப்பது போற் என்னடமும் களிதெலுங்குங்

மகளிர் கல்லூரி O5
கவின் மலையாள முந்துளுவும் உன்னுதரத் துதித் தெழுந்தே யொன்று பல வாயிடினும் ஆரியம் போ லுலக வழக்கொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயன் மறந்து வாழ்த்துதுமே
மற்றப்படம் யாதும் ஊரே யாவரும் G36fri என்றதன் கருத்தை தெளிவாக விளக்குவது போன்று அமைந்திருந்தது. அந்தப் படம் இரு கூறுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. ஒரு பக்கத்தில் உலகத்தில் பெருவழக்கி லுள்ள மதங்களின் பெயர்கள் குறிக்கப்பட்டிருந்தன, சைவம், வைணவம், பெளத்தம், சமணம், இஸ்லாம். கிருஸ்த்வம் என்று மதங்களின் பெயர்கள் ஒன்றன் பின் ஒன்ருகக் குறிக்கப்பட்டிருந்தன. அம்மதங்கள் ஒவ்வொன் றினதும் பெயர்களுக்கெதிராக மறு பக்கத்தில் வலது புறமாக அவ்வம்மதங்களின் கொள்கைகளை அடிப்படை யாக வைத்துத் தோன்றிய தலை சிறந்த காப்பியங்களின் பெயர்கள் குறிக்கப்பட்டிருந்தன. பெரிய புராணம், இரா மாயணம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சீருப்புராணம். தேம்பாவணி, என்பன அங்கே குறிக்கப்பட்டிருந்தன. எல் லாச் சமயத்தவர்கள்-இந்துக்களும், பெளத்தர்களும், சம ணரும், முஸ்லிம்களும் கிருஸ்தவர்கள் சரிநிகர் சமானமா கத் தமிழ் மொழி வளர தமிழ் இலக்கிய வளம் பெருக அவரவர் சமயக் கொள்கைகள் முக்கியத்துவம் பெற்றி ருக்க கலாச்சாரம் பெதுவான அடிப்படையில் போற்றிப் பேண அருந் தொண்டு புரிந்துள்ளனர் எனத் துணிந்து கூறின் அது மிகையாகாதல்லவா?

Page 59
17
GlőTÉlőj காஞ்சிவாய்ப் பேரூர்
மக்கள்தமை முதலளித்த மாண்புடைய தமிழ், நாட்டில் மன்னுநாடு மிக்க மலை புனல் வளமும் வேளாளர் மெய்வளமும் மேவு நாடு! எக்கலையும் உடைநாடென்றிசைப் புலவர் திருக் கூட்ட மெய்த நாடு! குக குடத்தான் கோயிலொடு м குழைக்கா தன் கோயில் கொளுங் கொங்கு நாடே
இனிமையும் எளிமையும் உள்ள ஒரு தெளிவான நடையில் கவிபாடிய திரு. வி. கலியாணசுந்தர முதலியா ரின் பாடலிது. கொங்கு நாட்டிலுள்ள கோயில்களைப் பற் றியும் பாடப்பட்ட செய்யுள் இது. பட்டிப் பெருமான் திரு ஆலயம் திருப்பேரூர் என்ற திருப்பதியில் உள்ளது. இது தொய்மையும் பழமையும் வாய்ந்த சிவாலயம். இத் திருத்தலம், கோயம்புத்தாரிலிருந்து மேற்கே ஆறு மைல் தூரத்தில் உள்ளது. இது மேலைச் சிதம்பரம் என்றும்

1 O7 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
அழைக்கப் படுகிறது. அரசவனம், பிறவாநெறி, காஞ்சி
வாய்ப்பேரூர், தவசித்திபுரம் முதலிய திருப்பெயர்களால்
வழங்கப்படுகிறது. இதனைப் பொருளாய்க் கொண்ட தல புராணம், வேறு பிரபந்தங்களும் உண்டு. இப்பதி காஞ்சிமா
நதி யென்னும் நொய்யல் நதியின் கரையில் அமைந்திருக்
கின்றது. இதஞலேயே சுந்தரமூர்த்தி நாயஞரால்,
'பாருரும் அரவல் குல் உமை நங்கை
அவள் பங்கன் பைங்கண் ஏற்றன் ஊரூரன் தருமனர் தமர் செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான் ஆரூரன் தம்பிரான் ஆரூரன்
மீகொங்கில் அணி காஞ்சிவாய்ப் பேருரர் பெருமானைப் புலியூர்ச்சிற்
றம்பலத்தே பெற்ற மன்றே
என்று புகழ் பெற்றது இப்பேரூர்.
சேக்கிழார் பெருமானரும் தமது பெரிய புராணத்தில்
(ஏயர் கோன் கலிகாம நாயனர் புராணம் 88) திருப்பேரூ
ரைப் பற்றி இவ்வாறு பாடியுள்வார்,
'உலகெலாமுய்ய வுறுதீயாம் பதிக
முறைத்து மெய்யுணர்வரு வொரு மை நிலவிய சிந்தையுடன் றிரு வருவாளானிங்குவார்
பாங்குநற் பதிகள் பலவுமுன் பணிந்து பரமர்தாள் போற்றிப் போதுதன்
U 600fiup6U ff tÜ Uu — Ü 60) U குலவு மக் கொங்கிற் காஞசிவாய் பேரூர்
குறுகினர் முறுகுமா தரவால்!
திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர்

Page 60
கொங்கிற் காஞசிவாய்ப் பேரூர் O8 மூவரும் பாடியருளிய தலங்களுள் தனிப்பட்ட பதிகம் பெற்ற தலங்கள் "பாடல் பெற்ற தலங்கள்" எனப்படும் அவ்வாறன்றிப் பிற தலங்கள் பற்றிப் பாடிய பதிகங்களுள் வைத்துப் பாடப்பட்டவை - வைப்புத் தலங்கள்’ என்று அழைக்கப்படும். இம்மூவர் பாடல் வைத்துப் பாடிய தலங்களுக்கே இச் சிறப்புப் பெயர் உரியது. இத்தகைய வைப்புத் தலங்களுள் கொங்குநாட்டுக்குரியவற்றுள் தலை சிறந்தது திருப்பேரூர் என்னும் திருத்தலமாகும். பிரம தீர்த்தம்,சக்கரத்தீர்த்தம் முதலிய தீர்த்தங்கள் அங்குள்ளன. காஞ்சி மா நதியிலுள்ள துறைக்கு சோழந்துறையென்று பெயர். இந்நதி பதிற்றுப்பத்தில் "தீம்புனலாயமாடும் காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே' (5.8) என்ற தொடரிலும் கூறப்படுகின்றது. பிரம தீர்த்தத்தில் ரேடியம் என்ற உலோகச் சத்து கலந்துள்ளது என்பர். இதில் மூழ்கினல் மலடு, பைத்தியம் என்பன நீங்கும் என்பர்.
இத்தலத்தைத் திருநாவுக்கரசர் தமது திருவூர்க் கோவைத் திருத்தாண்டகத்தில்,
'ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும்
ஆக்கூரில் தான்றேன்றி மாடமாவூர் பேருர் பிரமபுரம் பேராவூரும்
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங் கூரார் 'குறுக்கை வீரட்டான முங்
கேட்பூர் குடமுக்குக் கோழம் பமுங் காரார் கழுக்குன்றங் கானப் பேருங்
கயிலாய நாதனையே காண லாமே?
எனக் குறிப்பிட்டுள்ளார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது ஊர்த் தொகை என்னும் பதிகத்தில்,

கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர் O9
ஆரூர் அத்தா ஐயாற்றமுதே அளப்பூர் அம்மானே காரூர் பொழில்கள் புடைசூழ்புற விற்
கருகாவூரானே. பேருரை வாயப் பட்டிப் பெருமான்
பிறவா நெறியானே' பாரூர் பலரும் பரவப் பாவாய்
பாசூரம் மானே .
என்று பாடியுள்ளார்.
மாதவச் சிவயோகிகளின் மாணவர் கச்சியப்ப முனிவர் பேரூர் தலபுராணம் பாடியுள்ளார். புனித யாத்திரை மேற்கொள்ளும் சிறப்பான திருத்தலங்களுள் இதுவும் ஒன்று, கேளரத்திலிருந்து பெருந்தொகையான யாத்திரீ கர் இங்கு வருவர்.
கோபுரவாயிலை அடைந்ததும் பூரண கும்ப வரவேற் பும் மாலை அணிவித்தலும் நடைபெற்றன. பின்னர் கண்க சபைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். கணகசபையில் கோமுனி, பட்டிமுனி இருவருக்காக ஆடிய பாதத்தோடு விளங்கும் நடராஜர் வடிவம் மிக மிக அழகானது. இக் கனகசபையில் சிற்பக்கலையின் அழகு சிறிக்கின்றது. சைவ சமயச் சார்புள்ள இறை வடிவங்களில் எழில்மிகு வேலைப் பாடுகள் சிந்தையைக் கவர்வதாகஅமைந்துள்ளன. விதானம் நம்மை வியப்பில் ஆழ்த்தும் தரத்தது. அவ்விதானத்திலே வடிக்கப்பட்ட தாமரை மலர்கள் இருந்தன. தனிக்கல்லி லிருந்து குடைந்து செய்யப்பட்ட சங்கிலிகள் தொங்கின. சின்னஞ்சிறு தூண்களிலும் புராணக் கதைகள் சிற்பிகளின் உளியினுல் தீட்டப்பட்டிருந்தன. சிற்ப வேலைகளில்லாத தூண்கள் இல்லையெனலாம்.

Page 61
1 1 O நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
பழமை மிக்க இக்கோவிலின் கற்பக்கிருகத்தை கரி கால்சோழன் அமைத்ததாகக் கூறுவர். எட்டாம் நூற் ருண்டில் ஒரு பாண்டிய மன்னன் வைணவ ஆலயமொன் றை அங்குநிறுவினன் எனறு கூறப்படுகிறது. இங்கே உள்ள அர்த்தமண்டபத்தையும் மகாமண்டபத்தையும் கொங்குச் சோழர்கள் கட்டினர். 14 ஆம் 15 ஆம் நூற்ருண்டுகளில் ஹொய்சாளர்களும் விஜயநகர மன்னர்களும் இவ்வாலயப் பரிபாலனத்துக்கு மானியங்கள் வழங்கியுள்ளார். புகழ் வாய்ந்த கனகசபை மதுரை அலகாத்திரி நாயக்கனுல் 17 ஆம் நூற்ருண்டில் கட்டப்பட்டது. இங்கு எல்லாமாக ஆறு கோபுரங்கள் உள்ளன.
நடராஜப் பெருமானுக்குத் தமிழில் அர்ச்சனை செய் பப்பட்டது.
சரித்திரத்தைப் புரட்டிப் பார்க்கும் பொழுது ரோமானியர் காலத்தில் கொங்கு நாடு ரோமானியர் பேரரசுடன் தொடர்பு கொண்டிருந்ததென்பதை இங்கு சண்டு பிடிக்கப்பட்ட அக்காலத்திய நாணயங்களிலிருந்து அறியக் கூடியதாக இருக்சிறது. இங்குள்ள தெப்பக் குளம் மிகவும் அழகானது. பதினறு வளைவுகளையுடையது. சிறிய தும், பெரியதுமான ஐந்து இரதங்கள் இங்கு உள்ளன. இவை அழகிய வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டவைகளாக உள்ளன. இவற்றுள் மிகப் பெரிய இரதம் இரண்டாண்டு களுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டது. டிசம்பர் சனவரி மாதங்களில் ஆரூதரா தரிசனம் கொண்டாடப்படுகிறது" இன்விழாவின் ஒன்பதாம் நாள் நடைபெறும் இந்திர விமா தெப்பத்திருவிழா கண் கொள்ளாக் காட்சியாக அமைகிறது என்பர்.
இங்கு மாண்டோருக்கு மறுபிறப்பு இல்லையென்று

கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர் 1
பொது நம்பிக்கை நிலவுகிறது. இறந்தவர்களுக்கான சடங்குகள் இங்குள்ள காஞ்சி மாநதியின் சோழன் துறை யில் நடைபெறுகின்றது. இறந்தவர்களின் எலும்புகளை இந்நதியில் போடுவர். போட்ட மூன்று மண்டலங்களில் அவ்வெலும்புகள் வெண்கற்களாக மாறிவிடுகின்றன என் பர். நாற்பது, நாற்பத்து ஒன்று அல்லது நாற்பத்தைந்து நாட்கள் கொண்ட ஒரு கால எல்லையை ஒரு மண்டலம் என்பர். உண்மையிலே அந்த எலும்புக்குரியவர்களின் ஆத்மா சாந்தி பெற்றுவிட்டது என்பதற்கான அறிகுறி யென மக்கள் இதனை நம்புகிருர்கள். இங்கு இறப்பவர்கள் தமது வலது கையை மேலே வைத்து உயிர் விடுகின்ருர் கள் என்பர். இப்பகுதியில் சாணத்தில் புழுக்கள் உண் டாகாமல் இருப்பது இத்தலத்தின் புனிதத் தன்மைக்கு எடுத்துக்காட்டு என்றும் கூறுவர்.
இங்குள்ள முருகப் பெருமான்தண்டாயுத பாணி யென்று அழைக்கப்படுகிருர், இப்பொழுது தண்டாயுத பாணிக்கோவில் திருப்பணி ஆரம்பித்துள்ளது. சிற்பிகள் கல்லைக் குடைந்து கணியாக்கும் நாதம் திருப்புகழ் சத்தம் போல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இத்திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவன் சுயம்பு மூர்த்தி. சுயமாக ஏற்பட்டது என்பது பொருள். இந்த லிங்கத்தை மக்கள் தற்செயலாகக் கண்டு பிடித்தனர். இது ஒரு பட்டியில் இருந்தது. பட்டியென்ருல் மாட்டுத் தொழுவம் என்பது பொருள். பட்டியிலே கண்டுபிடிக்கப் பட்டமையால் பட்டீஸ்வரர் என்றும் பட்டிப் பெருமான் என்றும் வழங்கலாயிற்று. திருப்பேரூர்த் திருக்கோயிலிலே பட்டிப் பிள்ளையாரையும் பட்டி முருகனையும் பட்டித் திரு மாலையும் பச்சை நாயகி அம்மாளையும் காணலாம்.

Page 62
112 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
திருப்பேரூர்க் கோயில் வளவிலே புனிதத் தன்மை வாய்ந்த இரண்டு மரங்கள் உள்ளன. ஒன்று இரவாப் பன. இப்பனை ஒரு போதும் சாவதில்லை யாதலால் அப்பெயர் பெற்றது. மற்றது பிறவாப் புளி. இம்மரம் பிறக்க வில்லை என்பர். பிறப்பு, இறப்பு அற்ற தன்மையை இவ் விரண்டு மரங்களும் எடுத்துக் காட்டுகின்றன, என்பது பொது நம்பிக்கை, கச்சியப்ப முனிவர் இத்திருப்பேரூரைப் பாடும் போது பின்வருமாறு வாழ்த்துகிறர்.
மாமரை முனிவர் வாழ்க!
மரகத வல்லியாடும் பாமலி புலவர் போற்றும்
பட்டி நாயனா வாழ்க! காமரு வெள்ளி மணறில்
கண்ணு தனடனம் வாழ்க! கோமனு நீ வாழ்க!
குவலய முழுதும் வாழ்க!
இத்திருவாலயம் சிற்பக்கலையைப் பொறுத்தவரையில் தென்னிந்திய கோவில்களுள்ளே மிகச் சிறந்ததொன்முக விளங்குகின்றது.

18 CFT5566i5. 99.5GTTT திருமடம்
அறம் பொருள் இன்பம் வீ(டு) ஆயவோர் நான்கில் சிறந்த பயன் வீடு என் (று) உந்தீபற தேரின் வீடே எலாம் உந்திபர
இப்பாடல் "அவிரோத உந்தியார்" என்ற நூலில் உள்ளது. வீரசைவரான தவத்திரு சாந்தலிங்க அடிகள் அவர்கள் பாடியது. அவிரோத மென்ருல் கட்சிப்பற்று இல்லாமை. விரோத நிலைமையைக் கண்டு மனம் புழுங் கிய அடிகளார் அவிரோத நெறியை உலகிற்குக் காட்டுகின் ருர். அந்த அவிரோத நிலையை விளக்க உந்திப்பாடல்களை மேற்கொண்டுள்ளார். உந்திப்பாடல் என்பது ஒருவகை நாடோடிப் பாடல். அந்தப் பாடலின் சந்தத்தில் இற் நூலிலுள்ள பாடல்கள் பாடப்பட்டுள்ளன. தன்னுடைய அனுபவம் கற்றவர்களுக்கு மட்டுமன்றிப் பெண் குழந்தை களுக்கும் கூட விளங்க வேண்டுமென்று அடிகளார் இப்

Page 63
14 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
பாடல்களைப் பாடியுள்ளார். விரோதம் தலை விரித்தாடிய நிலையில் சமரச சன்மார்க்கம் என்ற உடன்பாட்டு நிலையை அவிரோதம் என்று எதிர்மறைத்து சொற்ருெடர்களால் சாந்தலிங்க அடிகளார் விளக்கியுள்ளார். பெண்குழந்தை கள் குதித்து விளையாடிப் பாடும் ஒரு வகைப் பாடலையே உந்திப் பாடல் என்பர் ஆங்கில முறைப்படி இறகுப்பந்து மட்டை முதலியவற்றைக் கொண்டு விளையாடும் விளை யாட்டுக்குச் சமமானதாய் இந்திய மகளிர் விளையாடும் விளையாட்டை இப்பெயரால் அழைப்பர். உந்தி விளை போட்டு என்பதையே "உந்திபற’ என்ற சொற்ருெடர் குறிபபிடுகின்றது
சாந்தலிங்க அடிகளார் துறவு மேற்கொண்டு பல தலங்களையும வழிபட்டார். பின்பு கொங்கு நாட்டின் பேரூரில் ஒரு மடம் அமைத்தார். அதுகு தங்கித் தவம் செய்தார். இவருடைய சமாதி பேரூர் பட்டிப் பெருமான் ஆலயத்துக்குக் கிழக்கே நொய்யல் ஆற்றங்கரையிலுள்ளது. மடம் செய்துவரும் சமயப்பணியோடு தமிழ்ப் பணி செய்ய வேண்டும் எனற நோக்கத்துடன் முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. ஏனைய தமிழ் மாவட்டங்களில் உள்ளன போன்று கொங்கு நாட்டிலும் ஒரு தனித் தமிழ்க் கல்லூரி நிறுவப்படத் தமிழ்ப் பெரியார்கள் முன் வந்தனர். அக் கல்லூரி, மடத்தின் சார்பில் அமைய வேண்டுமென்றும் உணர்ந்தனர். 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி ஒரு கழகம் ஆரம்பிக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் இசைவுடன் 1953 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆந் தேதி தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி மயிலம் சிவஞான பாலிய சுவாமிகள் தலைமையில்
gd på Stig- அடிகளாரால் தொடங்கப் பெற்றது.
மாணவர்களை வித்துவாள் தேர்வுக்குப் பயிற்றுதல்,

சாந்த லிங்கம் அடிகளார் திருமடம் 115
சமய உணர்வை ஊட்டுதல், என்பன கல்லூரியின் நோக் கங்களாக அமைந்தன. மாணவர்களுக்கு பல்வேறு வசதி கள் செய்து கொடுக்கப்பட்டன. பின்னர் பல பெற்றேரின் வேண்டுகோட்படி பெண்களும் சேர்த்துக் கொள்ளப்பட் டனர். இப்பொழுது மாணவர் தொகையில் சரி பாதியினர் பெண்கள். 1953 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இக் கல்லூரி இப்பொழுது வித்துவான் முதலாண்டில் 17 மாணவர்கள் இருந்தனர். இப்பொழுது இவ்வெண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது.
இதுவரை இக்கல்லூரியிலிருந்து 250 மாணவர்கள் வித் துவான் பட்டம் பெற்றுள்ளனர். இங்கு ஒர் உயர் நிலைப் பள்ளியும், ஆரம்ப2உயர்நிலைப் பள்ளியும்இயங்கி வருகின்றன. பட்டிப் பெருமான் கோயிலில் இருந்து வழியனுப்பப்பட்ட நாம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரிக்கு அழ்ைத்துச் செல்லப்பட்டோம். கல்லூரி வளவிலே அழகிய தோப்பு ஒன்று உண்டு. இங்கு வாழை முதலியன பயிர் செய்யப்படுகின்றன. மாணவர்களும் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றனர். உடற் பயிற்சிக்கென விளையாட்டிடமும் கருவிகளும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. அங்குதான் பகற் போசன விருந்தளிக்கப்பட்டது. தனிச்சைவ முறையி லேயே இவ்விருந்து அமைந்திருந்தது. விருந்துக்குச் செல்வ தற்கு முன்னர் தமிழ்க்கல்லுரியின் உயர்மாடிக்கு அழைத் துச் செல்லப்பட்டோம். உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் கருத்தோவியங்களும் சாந்தலிங்க அடிகளார் திருமட வெளி யீடுகளும் மற்றும் பிறவும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டி ருந்தன. ஒவ்வொன்றையும் விளக்குவதற்குக் கல்லூரி ஆசிரி யர்கள் அங்கே நின்றுகொண்டிருந்தனர். கருத்தோவியங்கள் பல சங்ககாலச் செய்யுட்சளை அடிப்படையாகக்கொண்டு அமைந்திருந்தன.சிறப்பாக சங்ககாலத்தில் தோன்றிய அகப் பொருட்பாக்களிலே பொதிந்திருந்த கருத்துக்கள் சித்திரங்க

Page 64
116 w நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
ளாகவும் காட்சிப் பொருட்களாகவும் தீட்டப்பட்டிருந் தன. பல ஓவியங்கள் கொங்கு நாட்டைப்பற்றிய பாடல் களையே அடிப்படையாகக் கொண்டிருந்தன அந்த ஓவி யங்களுள் ஒன்று என்னைச் சங்க காலத்துக்கு அழைத்துச் சென்றது.
தோழியர் இருவர் விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். ஒருத்தி ஒளி பொருந்திய வளையினை உடையவள். அவர்கள் இருவரும் ஒரு நாள் மணலில் சிறு வீடு கட்டினர். அப் பொழுது அவர்கள் தெருவிலே விளையாடிக் கொண்டிருந் தனர். விளையாட்டாக உணவுகளைத் தயாரித்துக் கொண் டிருந்தனர். அப்பொழுது அங்கே ஒருவன் வந்தான். வந்து, அவர்கள் இருவரும் கட்டிய மணல் வீட்டைக் காலால் அடித்து அழித்தான். கூந்தலை அணி செய்த மாலையையும் பறித்து விட்டான். வரியினையுடைய பந்தையும் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். இத்தகைய வருத்தத்தை உண் டாக்கும் செயலைச் செய்பவன் அச் சிறுவன். காவல் இல்லாதவன். பட்டி மகன். இதைப்பற்றி அவர்கள் இரு வரும் உரையாடிக் கொண்டிருக்கையில் ஒரு சம்பவத்தைக் கூறினுள் தலைவி. முன் பொருநாள் நடந்த நிகழ்ச்சி தலைவி மனத்தில் தோன்றியது. ஒரு நாள் தாயும் மகளும் வீட் டிலே இருந்தனர். அப்பொழுது ஒருவன் அங்கே வந்து தண்ணிர் குடிக்கத் தனக்குள்ள விருப்பத்தைத் தெரிவித் தான். தாயும் தனது மகளுக்குத் தண்ணிர் கொடுக்கு மாறு உத்தரவிட்டாள். "தகட்டுப் பொன்னல் செய்த பாத்திரத்திலே நீரை வார்த்து உண்ணப்பண்ணுவித்து வா" என்று சொன்னுள். அவன் பட்டி மகன் என்று அறியாது தலைவியும் அக்கட்டளையை மேற்கொண்டு சென்ருள். குடிநீர் கொடுத்தாள். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி செய்யத்தகாததைச் செய்யத் துணிந்தான்

சாந்தலிங்கம் அடிகளார் திருமடம் y 117
அவன். நீரைப் பெற்றுக் கொண்ட உடனே எதிர் பாரா தது நடந்து விட்டது. அவளுடைய வளையணிந்த முன் கையைப் பிடித்து நெரித்தான். அவளோ ஒன்றும் அறி யாதவள் போல் கூச்சலிட்டாள். "அம்மா இவனெருத்தன் செய்த செயலைப் பார்’ என்று கூக்குரலிட்டாள். தாயும் அச்சத்தத்தைக் கேட்டு அவ்விடத்துக்கு விரைந்தாள். அப் பொழுதுதான் தலைவி தான் தவறு செய்து விட்டதாக உணர்ந்தாள். தாய் கேட்ட கேள்விக்கு விடையளிக்க முடியாமல் தத்தளித்தாள். ஆனல் மறு கணம் நிலைமை யைப் புரிந்து கொண்டாள். அந்நிலையைச் சமாளிக்கும் ஆற்றல் அவளிடத்து உதித்தது. அவள் ஓர் உத்தியை மேற் கொண்டாள். "இல்லை அம்மா! நீர் குடிக்கும் பொழுது விக்கினுன். விக்கி வருந்தினன். அதனுற் தான் சத்தமிட்டேன்' என்ருள் தலைவி. இவ்வாறு ஒரு பொய் யைத் திரித்துக் கூறினள். தாயும் அதை நம்பி விட்டாள். விக்கினவன் முதுகைத் தாய் பல முறையும் தடவினுள். அவ்வாறு தடவும் போது தாய் காணுமலே அவன் அவளைப் பார்த்தான். கடைக்கண்ணலே கொல்வான் போல் பார்த் தான். அக்கள்வனகிய மகன் தன் மன மகிழ்ச்சி தரும் புன்முறுவல் பூத்தான். இவ்வாறு தோழியர் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். W
தமிழ்க் கல்லூரியிலிருந்த ஒரு படம் இப்பாடலைப் பின்னணியாகக் கொண்டிருந்தது. இப்பாடல் கலித் தொகையில் இடம் பெற்றுள்ளது.
கற்றிருந்தார் ஏத்தும் கலித் தொகையில் குறிஞ்சிக் கலியில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. குறிஞ்சிக் கலியி லுள்ள செய்யுள்களே இயற்றியவர் கபிலர். குறிஞ்சிக் கலியில் பதினைந்தாவது பாடலாக அமைந்துள்ளது, அப்

Page 65
18 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
பாடல். தலைவி தோழிக்குக் கூறியதாக இப் பாடல்
அமைந்துள்ளது. இது தான் அப்பாடல்:
சுடர்த்தொடீஇ கேளாய்’ தெருவில்நாம் ஆடும் மணற்சிற்றில காலிற் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிபந்து கொண்டோடி நோதக்க செய்யுஞ் சிறுபட்டி மேலோர் நாள் அன்னையும் யானும் இருந்தோமே இல்லிலே உண்ணுநீர் வேட்டேன் என வந்தார் கன்னை அடர் பொற் சிரகத்தால் வாங்கச் சுடரிழாய் உண்ணுநீ ருட்டிவா என்ரு ளெனயானுந் தன்னை யறியாது சென்றேனமற் றென்னை வளை முன் கை பற்றி நலியத் தெருமந்திட் டன்னு யிவனுெருவன் செய்த கா ணென்றேனு அன்னை யலறிப் படர்தரத் தன்னையான் உண்ணுநீர் விக்கின னென்றேன அன்னையுந் தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக் கடைக் கண்ணுற் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டஞ் செய்தானக் கள்வன் மகன்.

19
ö566 அரங்கு
நேரம் 1.30 மணி இருக்கும். சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி வளவில் நடந்த பகற்போசன விருந்து பசாரம் முடிவுற்றது. பேருந்துகளில் ஏறி அனைவரும் புகை வண்டிக்குச் சென்ருேம். அங்குதான் எமது நிகழ்ச்சி நிரலில் பகற் பொழுது ஓய்வுக்காக ஒன்றரை மணி நேரம் ஒதுக் கப்பட்டிருந்தது. சென்னை மாநகரில் மாநாடு நடை பெற்றபோதிலோ க லா ச் சா ர ச் சுற்று லா விலோ பகற் பொழுதில் இத்தகைய ஓய்வு வேறு எப்பொழுதும் கிடைக்கவில்லை. சற்று ஆறி இருந்தோம்.
மூன்று மணிக்கு அடுத்த நிகழ்ச்சியில் பங்குபற்றுப் புறப்பட வேண்டி இருந்தது. கட்டாயம் பங்குபற்ற வேண்டிய நிகழ்ச்சியாக அது அமைந்திருந்தது. சித்திரா அவைக் களத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற ஏற்பாடாகி இருந்தது. "சித்திரா" என்ற சொல்லே அலாதியான கருத் தொன்றைத் தருவதாக தோன்றியது. தென் இந்திய நெசவு ஆராய்ச்சிச் சங்கம் என்று பொருள்படும் SOUTH

Page 66
2O நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
N D A N TEXT LE RESEARCH ASSOCATION என்ற சொற்ருெடரிலுள்ள ஐந்து சொற்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு அமைந்தது ‘சித்திரா என்ற அச்சொல். ஆம். அங்கு கவியரங்கம் நடைபெற்றது: மாண்புமிகு தமிழக உணவு அமைச்சர் திரு.கே ஏ. LD5 யழகன் தலைமை தாங்க அழ்ைக்கப்பட்டிருந்தார். ஆணுல் சற்றுத் தாமதித்தே அவர் அங்கு வந்தார். கோவைக்கு எழுந்தருளும் இரண்டாம் உலகத் தமிழ்க் கருத்தரங்கில் வெளிநாட்டுப் பேராளர்களைச் சிறப்பிப்பதற்காக அக்கவி அரங்கம் நடைபெற்றது. என்று அழைப்பிதழில் கூறப் பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் கவியரங்கம் ஆரம் பமாயிற்று. ஒரு பெண்மணி உட்பட ஆறு கவிஞர்கள் கவியரங்கேற்றினர்.
பண்டைக் காலத்து நூல்களை அரங்கேற்றுவதையே சிறப் பான குறிக்கோளாகக் கொண்ட சங்கம் பண்டு இருந்தது. சங்கத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நூல்கள் சிறந்த தரத்தை உடையன என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ହ୯୭ கவிதையில் ஆசிரியர் தமது படைப்புக்களை புலவர் முன்னிலையில் பாடிக் காட்ட வேண்டும். விளக்கம்வேண்டிய இடத்து கேள்விகள் கேட்கப்படும். அவற்றிற்காக திருப்தி கரமான விடைகளை அறிஞர் அளித்தல் வேண்டும். ஏக மானதாக ஏற்றுக் கொண்டால் மாத்திரமே சிறந்த கவிதை என்று புகழப்படும். ஒருவர் பிழை கண்டால் கூட அந் நூல் சிறந்ததெனக் கொள்ளப்படமாட்டாது. கோவையில் நடைபெற்ற கவியரங்கம் பண்டு நடைபெற்ற அரங்கேற்றம் போல் அமையவில்லை என்ருலும் தற்காலத் துக்கியைய pupil (5 செய்யப்பட்டிருந்தது. கவிதை இயற்றும் ஆற்றலை வளர்ப்பதே அதன் பிரதான நோக்கமாக இருந்தது. புதுப் புது கவிதா உருவங்களை எவ்வாறு புகுத்தலாம் என்பதைக்

கவி அரங்கு 12
பரிசோதிக்கவுமே அக்கவியரங்கு இருந்தது என்றும் கொள் 6n GlyT to
சென்னை மாநகரிலே அமைக்கப்பட்டிருந்த பூம்புகாரி லும் தமிழ் மகாநாடு நடைபெற்ற பொழுது ஒரு கவியரசி கம் நடத்தப்பட்டது பல கவிஞர்கள் அதில் பங்குபற்றினர். தமிழக முதலமைச்சர் மாண்புமிகு அறிஞர் அண்ணுவின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் கவியரங்கில் ஆராயப் பட்டது. அங்கு போல் கோவையிலும் கவிதை மழை பொழியலாயிற்று
படைகுடி கூழ் அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு .
என்ற குறளே கோவைக் கவியரங்கில் பொருளாக அமைந் திருந்தது. அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்பதே முறையாயினும் பொய்யாமொழி வள்ளு வனர் செய்யுள் நோக்கி இவ்வாறு அமைத்துள்ளார். ஒன்றும் குறையாமல் இவ் "ஆறும் ஒருங்கே இருந்தால் மட்டுமே அரசன் நீதி செல்லும். இதனையே வடமொழி வல்லுநர் "அங்கம" என்பர். வள்ளுவர் கூறிய முறைமையி லேயே கோவைக் கவியரங்கிலும் இவ் "ஆறும் தனித் தனி பொருளாய் அமைந்தன.
"வள்ளுவர் கண்ட படை' என்ற பொருளில் புலவர் திரு புவியரசு தமது கவிதா வன்மையைக் காட்ட முற்பட்டார். இவர் ஒரு வித்துவான், கவிஞர், நாவலர், ஓவியர், எழுத்தாளர். "தேனி" என்னும் கவிதைத் திங்கள் ஏட்டின் ஆசிரியர். காலஞ் சென்ற ஜனதிபதி கென்னடி பற்றியும் கவிதைத் தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
"கன்னித் தமிழ்நாட்டைக் காணுகின்ற காதலினல் உன்னிப் படையெடுத்த உலகத் தறிஞருக்கும்"

Page 67
122 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
வணக்கம் கூறிப் புலவர் புவியரசு அவையடிக்கம் கறும் பொழுது தம்மைப் பருந்துடன் பறக்க முயற்ச்சிக் கும் சிறுகுருவியாகவும், முல்லை மணத்தோடு சம நிலையில் இருக்கவிருப்பும் கள்ளி மலருக்கும், இனிமையாகப் பாடும் குயிலை வெல்லக் கருதும் காக்கைக்கும் ஒப்பிட்டுத் தமது கவிதையை ஆரம்பிக்கிருர்,
பருந்துயரம் தானெழுந்த பரக்கமுடி யாமையினல வருந்திச் சிறு குருவி பறக்காமல் இருப்பதில்லை! முல்லை மனம் பரப்பி முகிழ்கின்ற காரணத்தால் கள்ளி மலராமற் கிடப்பதில்லை; இனிமையுடன் பாடும் குயிலபோலப் பாடமுடி யாமையினல் வாடிக் கருங்காக்கை வாயதர வா திருப்பதிலலை ஆதலினல் இந்த அவையேறயான் துணிந்தேன் மேதகைய பெரும்புலவீர்! மெலிவுடையேன் சொற் பொறுப்பீர்!
கவிஞர் புவியரசு பல கோணங்களிலிருந்து படையை விவரிக்கிருர், கீழ்நாட்டு மேல்நாட்டு வரலாற்று நிகழ்ச்சி களை எடுத்துக் காட்டுகிருர், கடும் போரில் வெற்றி காண் பதுவே நல்ல படை என்பதை வலியுறுத்த நெப்போலிய *னயும் , ஹிட்லரையும் தமது கவிதையில் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறர்.
அகில உலகெல்லாம் ஆளுகின்ற பேராசை மிகவே நெப்போலியனும் மாஸ்கோ நகர்நோக்கி எடுத்த பெரும் படையும் எவ்வாறு பனிப்புயலில் மடிந்த தென்ற கதை மறந்தான் பெரும் இட்லர் வளரூ வஞா சொன்ன வழிச் செலவுப் பேராற்றல் உள்ள த என்பதனை உணராத் தாலவனும் தோரநூறுச் சிதைந்த கதை நாமறிவோம்.

கவி அரங்கு 123
பல குறள் பாக்களைத் தமது கவிதையில் எடுத்துக் காட்டாகக் கூறுகிருர்.
வள்ளுவர் சண்ட குடி பற்றி புலவர் திரு. இளங் கோவன் பாடிஞர். "பொன்னி" என்ற ஏட்டின் துணை ஆசிரியராக இருந்த இவர் பல நாடசங்கள் உட்பட அறு பதுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். முன்பு கூறிய குறளில் குடி என்பது அதனை உடைய நாட்டினைக் குறிப்பதாக தமிழக முதலமைச்சருக்குத் தமது கவிதை யில் முகல் இடம் அளித்திருககிருர்,
பொய்யில புலவன் புகன்ற குடியியல்பை வையகம் பெற்று வழிநடந்து வாழ்வுபெற தாய்நாடு கண்ட தலைவன் தமிழ் வாழ ஒயா துழைக்கும் உரவோன்; எளியோர் உளக் கோயில் வீற்றே உயர்ந்தோன் அரசு நிலைநாட்ட நாகரிகம் தேர்ந்தோன், தமிழகப் பேரரசு கண்டவொரு பேரறிஞன், பெட்பினுல் பாரெலா மாளு மொரு பக்குவத்தோன்; எங்களுளர் தென்னுட்டுக் காந்தியெனத் தேர்ந்த வொரு தலைவன் அண்ணு வெனுமபேர் அறிஞன், அரசியலில் தெளளத் தெளிந்த திறனுடையான் நின்றனக்குக் கொள்ளத் தருமாறு கூறுவதைக் கேட்டறிக!
அறிஞர் அண்ணு அவர்களுக்கு தமிழகத்திலுள்ள நன் மதிப்பும் அவர் தம் செல்வாக்கும் இங்கு பிரதிபலிப்பதைக் காணலாம் .
தமிழன்பன் என்று அழைக்கப்படும் புலவர் திரு ந செகதீசன் வள்ளுவர் கண்ட கூழ் என்ற பொருள் பற்றிப் பாடினுர். இவர் ஒரு வித்துவான். ஈரோடு மதுரசா இஸ்லாமிய உயர் நிலைப் பள்ளித் தமிழ்த்துறைத்

Page 68
124 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
தஜலவர். 'சனித்தோட்டம்" என்ற பாடல்களை இயற்றி யுள்ளார். ஒரு நாட்டுக்கு ஏதுவாகிய பொருளின் இன்றி பமையாமையைப் பின்வருமாறு எடுத்தோது கிருர் .
திருவோடு வாழ்ந்தாலும் மேலும் நல்ல
திறனேடு பொருள் செய்ய வேண்டும்; இன்றேல் திருவோடு கையேந்தி உலக நாட்டின்
தெருவோடு திரிந்தோடு நிலைமை தோன்றும்! ஒரு பொருளுக் காகாத ஆளை நாட்டை
ஒரு பொருளாய் அத்திருவே மாற்றும் செல வ இருப்பு நிலைக் கணக்குகடுத்தே ஆளின் நாட்டின்
இருப்பு,நிலை இவையெல்லாம் அறிவார் சான்றேர் !.
புலவர் திரு. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதைக்கு வள்ளுவர் கண்ட "அமைச்சு” பொருளாய் அமைந்திருந்தது.
நல்ல முத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர். "நிலவுப் பூவு’ முதலிய கவிதைத் தொகுதி களின் ஆசிரியர். வள்ளுவர் கண்ட அமைச்சு பற்றி அவர் தமது கவிதையை இவ்வாறு ஆரம்பிக்கிறர்.
பாவைமார் கழிநிரம்பிப் பணிமுகத்தைப் பூத்திடுநாள் கோவைப் பழநகரில் கூடும் பசுங்கிளிகாள்! அன்னை குமரி முதல் அழகன் தணிகைவரை என்னருமைத்தாய் நாட்டின் எழில் காணும் ஆவலினல்1 மேலைத் தமிழகத்தின் மான்செஸ்டர் எனப்புகழும் ஆலை நகர் வந்த அனைத்துலகத் தமிழர்களே! மனைவிளங்கப் பொங்கலிட்டு மாக்கோல மிடும் நாளில் நி3னவெல்லாந் தித்திக்க நெஞ்சார வாழ்த்துரைத் தேன். வள்ளுவனின் உள்ளமெனும் வாரிதியில் போய்மூழ்கி

கவி அரங்கு 125:
அள்ளும் "பொருட்பாலில்" அமைச்சை விளம்பென்றர்
கலைசிறந்த அரசியல் ஞானிகளான பிளேட்டோவையும் மாக்கிய வலியையும் சாணக்கியனையும் மிஞ்சிவிட்டார் வள்ளுவனுர் என்பதை இவ்வாறு கூறுகிருர்,
ஞானியர் கள நாடான நாவலித்த பிளேட்டோவும்
ஈன அரசியலே இசைத்தமாக் கிய வலியும்
கால வருணக் கதைவரித்த நமது சாணக்கியனும் காலமேலே கால பதித்துக் கம்பீரமாயநிமிர்ந்து
விந்தை அரசியலில மேதையென வீற்றிருக்க
எந்தை திரு வள்ளுவனை ஏனே மறநதார்கள்
வள்ளுவர் கண்ட நட்பு என்ற பொருளில் கவிபாட முன்வந்தார் புலவர் திருவாட்டி ஆறு கமலாவதி, நட் பைப் பற்றிய ஆராய்ச்சியாக இருந்தது அவரது கவிதை, நட்பு என்றென்றும் நிலைக்க வேண்டும் என்பதை வலி யுறுத்துகிருர் சுந்தாருக்கும் சிவபெருமானுக்கும் குகனுக் கும் இராமனுக்கும பிசிராந்தையாருக்கும் கோப்பெருஞ் சோழனுக்கும் கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் விழுமிய நட்புப் போன்று எல்லோரிடத்தும் நட்பும் இருத்தல் வேண் டும் என இவ்வாறு பாடுகிறர்.
ஆல முண்ட கண்டத்தார்க் காருர் நம்பி
அயோத்தி வள்ளலுக்கோர் ஏழை வேடன் சில மிகு சோழனுக்கோ உணர்ச்சி ஒத்த
தென்பாண்டிப் பிசிராந்தை சிறந்த நண்பர் கோலமுடன் ஆடவரக் கொடியனுக்குக்
கொடைவள்ளல் கர்ணன் மிக இனிய நண்பன் நீலநெடு வான் போல உயர்ந்த நட்பு
நிலவுலகில் என்றென்றும் நிலைத்து வாழும்.

Page 69
126 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
புலவர் திரு. இ. இளமுருகு "வள்ளுவர் கண்ட அரண்” பற்றி கவிதை மாரி பொழிந்தார். சிற்சில இடங்களில் இருவருக்கிடையே நடைபெற்ற அரண்பற்றிய கருத்துரை பாடலாக இக்கவிதை அமைந்திருந்தது. அரண் அவசிய மில்லை, என்று தன்னேடு உரையாடியவன் கூறுவது போல இக்கவிதைப் பகுதி அமைந்துள்ளது.
விண்வெளியில் மானிடர்கள் விளையாடுங் காலமிது வண்ணநிலவில மனிதன் கால் ஊன்றுகிறன் எண்ணம் புதுக்கிக் கொள் இன்னும் நீ முன்னேறு விண்ணுக்கும் மண்ணுககும் விரைவாகப் பாலமமை என்று மனிதன் இயம்பிப்பின் வானத்தை வென்று சிறைப்பிடித்தான் வெள்ளியையும் மாரினரில் சென்றன் சிறைப்பிடித்தான் செவ்வாய் உலகினையும் இன்று விழிப்போ இருபதாம் நூற்றண்டில் இறப்பில் விழித் திருத்தல் எதிர்நிகழ்வில் கொட்டாவி சிறப்பில்லை நண்பா நீ! சிந்தி’ என்றன்
ஆறு கவிஞர்களும் த த் தம் கவிமழையைப் பொழிந்த பின்னர் சபைபோரின் கருத்தைக் கோரினர் அவைத் தலை வர். அப்பொழுது மதியழகனர் தலைமை வகித்தார். ஈழத்திலிருந்து சென்றவர்களுள் கவிபுனையும் ஆற்றல் மிக் கோரும் சென்றிருந்தனர். பேர் குறித்து அழைக்கப்படாமை யால் குறிப்புரையைக் கவிதையில் வழங்க அவர்கள் முன் வரவில்லை. கவியரங்கத்தை ஒழுங்கு செய்தோர் விட்ட பிழை அது. அவர்கள் முன் கூட்டியே ஆலோசித்து கவிதா வன்மை உடையவர்களின் பெயர்களை அறிந்து அவர்களை அழைத்திருந்தால் கவியரங்கம் இன்னும் சிறப் பாக இருந்திருக்கும். இஃது இவ்வாறு இருந்தும் கூட கவி யரங்க இறுதிக் சட்டத்தில் குறிப்புரை வழங்க முன்வந் தார் ஓர் இலங்கையர் விஞ்ஞான போதகராக இருக்கும்

கவி அரங்கு 27
அவர் வட இலங்கையைச் சேர்ந்தவர். விஞ்ஞானத்தில் அதிய ஈடுபாடு உடையவர். தான் இன்னுரென்றும் அறி முகப்படுத்திய அவர் தம்மை "ஈழத்தின் வடபாங்கிலிருந் திங்கேவந்திருக்குமிப் பொடியன்" என்று கூறியதும் அங் கிருந்தோர் அனைவரும் "கொல்” என்று சிரித்தனர். நகைச் சுவை ததும்ப அவர் பாடிய கவிதை சிறப்பாக அமைந்தது. அவருடைய பெயர் இ. சிவானந்தன் கவிதை புனையும் ஆற்றல் உள்ள இளைஞன். அவர் பாடிய கவிதை சுவை மிக்கதாய் பின்வருமாறு அமைந்திருந்தது.
நல்லைநகரா றுமுக நாவலர் பிறந்திரல்லே சொல்லுதமிழெங்கே, சுருதியெங்கே? எல்லவரும் ஏற்றுபுரா ஞகமங்கள் எங்கே? என்று லகம் போற்றுகிற யாழ்ப்பாணம், ஈழத்தின் வடபாங்கி லிருந்திங்கே வந்திருக்குமிப் பொடியன் தமிழிலே விஞ்ஞானக் கல்வியினை விருத்திசெயும் நிறுவகத்தில் சார்பினயை இங்கு வந்தோன் யாழ்ப்பாணக் கலலூரிப் பெளதிக ஆசிரியன் ஈனச் சிவானந்தன் இவனுடைய பெயராகும். கோவையிலே கவிக்கோலம் கொண்டுதந்தீர்வள்ளு
வத்தை ஆசையிலே அகமகிந்து செவியுற்றேன் ஆனலொன்று
அறிவியலைத் தமிழினிலே ஆள்பவராய் எம்மோரெல் sunup
வள்ளுவத்தை வழிநடத்தல் வேண்டுமென்ப தென்
விருப்பம். தமிழிலே புத்தகங்கள் தாய்மொழி தெரிந்தாய்போதும் வீட்டிலேவேலையின்றி விருந்தையிற் தூங்கும் தாய்தன் பாட்டிலே கிடக்கும் நூலைப் படித்திடல் கூடுமப்போ ஏட்டிலே "இங்கிலீசில் இதுவரை இருந்தவுண்மை
வீட்டிலே பரவல்கூடும் விளைந்திடும் நன்மை அன்று

Page 70
128 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
நாட்டிலே அறிவுப் பஞ்சம் அகன்றிட வழிகள்
தோன்றும் என்பதை உணர்ந்து நாமும் அறிவொளி பரப்புவோ மேல் சிந்தனை சிறக்கும் வாழ்வு வளமுறும் நாடுமுய்யும் படை, குடி , கூழ் அமைச்சு முதல் நல்ல நட்பு அரண் எல்லாம் எடுத்துரைத்தார் கவிவல்லார்கள் மடைதிறந்த அருவியெனப் புரண்டெழுந்த அவ்வலையின் மாண்புமிகு வள்ளுவத்தை மனுக்கு லமே ஏற்றிடின்றே ,
20
நீ அவிநாசிலிங்கம் கல்லூரி
மக்களுக்கு உணவு இன்றியமையாதது. போசனை உடையதாகச் சத்து உடையதாக உணவு அமைதல் வேண் டும். போதிய அளவு சத்து உடையதாக இருந்தால் மாத் திரமே உணவு உட்கொள்வதில் பயன் உண்டு. மக்களுக் குப்போதிய அளவு சத்து உள்ள போசனை உடைய உணவு வகைகள் கிடைக்கக் கூடிய வழிவகைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை இன்றுள்ள விஞ்ஞானி களும் பரிபாலர்களும் மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின் ருர்கள். இதனை உணர்ந்தே இந்திய அரசியல் சட்டத்தின் 41ஆம் பிரிவு இவ்வாறு கூறுகிறது.
*"மக்கள் போசனை அளவையும் வாழ்க்கைத் தரத்
தையும் உயர்த்துவதையும் அவற்றின் மூலம் பொது

பூரீ அவின சிலிங்கம் கல்லூரி 129
உடல் நலத்தைச் சீராக்குவதையும் அரசு அதன் அடிப்படைக் குறிக்கோள்களுள் பிரதானமானவை யாகக் கொள்ளுதல் வேண்டும்"
பாரதப் பிரதமர் பூரீமதி இந்திராகாந்தி அண்மையில் நிகழ்த்திய வானுெலிப் பேச்சொன்றில் எங்கள் சிருரிகளுக் கான யோசனைச் சாசனம் ஒன்று அமைய வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்திக் கூறினுர், மக்கள் உணவுகளின் போசனை அளவைக் கூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டிய சூழ்நிலையையும் வாய்ப்பையும் இத் தகைய கூற்றுக்கள் ஏற்படுத்தி உள்ளன. உணவு வகை களின் போசனை அளவை அதிகரிப்பது பற்றிய வேலைகளின் நடுநிலையாக ஹைதராபாத்தில் உள்ள போசனை ஆராய்ச்சி ஆய்வுக் கூடம் திகழ்கிறது.
இந்த வகையிலான ஆராய்ச்சி நிலையம் ஒன்று கோயம் புத்தூரில் உள்ளது. பூரீஅவிஞசிலிங்கம்மனையியல் கல்லூரியில் அமைந்துள்ளது. பெண்களுக்கான இக்கல்லூரி 1957 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆந் தேதியன்று அப்பொழுது இந்தியக் குடியரசின் ஜனதிபதியாக இருந்த கலாநிதி சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மகளிர் கல்லூரிக்கான பூறி அவினுசிலிங்கம் செட்டியார் தர்மச் சொத்து 1951 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அன்று விஜய தசமி நாள். புனித நாள். முதன்முறையாகப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி முதற்பாடம் கற்பிக்கும் நன்னள். நன்மையான காரியங் கள் மேற்கொள்ளப்படும் பொன்னுள். காளிதேவி தீமை யான சின்னமாக மஹிசாசுரனை வென்ற சுப நாள்.
. . Y i .
ழரீ அவிஞசிலிங்கம் மனையியல் கல்லூரியில் பாலருக் கான குழந்தைப் பள்ளியும் ஆண்பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்குமான ஆரம்பப் பள்ளியும் உயர்நிலைப் பள்ளி

Page 71
30 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
யும் உண்டு. அப்பள்ளிகளிலே கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை முறையே 36ம், 300ம், 700 ம் ஆகும் இப் பொதுச் சொத்தின் ஆதரவில் பட்டம் பெற்ற மாணவர் சளுக்கான மேற்படிப்புத் துறையும் முக்கிய சேவிகா பயிற்சி நிலையமும் நடைபெறுகின்றன. மனையியல் கல்லூரி யில் மாத்திரம் 800 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். பாலர் வகுப்பு முதல் பட்டதாரி மேற்படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான எல்லா வசதிகளும் அங்கு உண்டு. சென்னை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 15 ஏக்கர் நிலப்பரப்பில் இக் கல்லூரி அமைந்துள்ளது. 100 மாண வருடன் ஆரம்பித்த அக்கல்லூரியில் இப்பொழுது நூற்றுக் கதிகமான ஆசிரியர்களும் 1836க்கும் அதிகமான மாணவர் களும் உள்ளனர்.
"சித்திரா அவைக்களத்திலே கவி அரங்கு முடிவுற்றதும் நாம் இக்கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அக்கல்லூரி வளவுக்குள் சென்றதும் வெற்றிகரமாகச் சிறந்த முறையில் நடைபெறும் மகளிருக்கான அக்கல்வி நிலையம் எம்மைக் கவர்ந்தது.
அங்கு நாம் சென்றதும் மலர் மாலை அணியப் பெற்று
வரவேற்கப் பட்டோம். அங்கு அணியப்பட்ட மாலைகளைப் போன்றவற்றைச் சுற்றுலாவின் போது வேறெங்கும் நாம்  ாணவில்லை. அவை அலாதியானவை. தனிச்சிறப்புப் பெற் றவை. சுதந்திரத்திற்காகப் போராடிய மகாத்மா காந்தி யையே அம்மாலைகள் நினைவுறுத்துவனவாக அமைந்திருந் தன. மலர்கள் இல்லாத மாலைகள் அவை. ஆம். நூலா லானவை. கையிராட்டின நூலாலானவை. சுதேசப் பொருள்களுக்கு முதலிடம் கொடுக்கும் பான்மையை அம் மாலைகள் அனைத்துலகுக்கும் எடுத்துக் காட்டுவனவாக அமைந்திருந்தன.

பூரீ அவினகிலிங்கம் கல்லுரரி 13
அடுத்துப் பொதுக் கூட்டம் கல்லூரி மண்டபத்திலே நடைபெற்றது. கல்லூரி அதிபர் வரவேற்புரையை வாசித் தார்.முன்னைநாள் கல்வி அமைச்சர் பூரீஎஸ். அவினுசிலிங்கம் தலைமை வகித்தார். வரவேற்புரையில் கல்லூரியின் பல் வேறு சாதனைகளை எடுத்துக்காட்டிய அதிபர் முன்னை நாள் கல்வி அமைச்சரின் சேவைகளையும் விவரித்தார். சிறுவர் கலைக் களஞ்சியம் ஒன்றைத் தயாரிப்பதற்கு வழி காட்டியமையும் சென்னை மாநிலத்தில் உள்ள உயர் நிலைப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் திருக்குறள் பற்றிக் கல்விமுறைப்படி கற்பிக்கும் முறையைப் புகுத்தியமையும் சுவாமி விவேகானந்தரின் ஞாபகார்த்தமாக ஆயிரம் பக்கங் களில் திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளி யிட்டமையும் கல்வி அமைச்சராக இருக்கும்பொழுது உயரி நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழைப் போதனு மொழியாகப் புகுத்தியமையும் "காந்தி சம்ரக் நிதி" என்னும் காந்திஜியின் நூல்களை வெளியிடும் குழுவின் தலைவராகப் பணிபுரிந்து பதினறு தொகுதிகளில் மகாத் மாகாந்திஜியின் நூல்களைத் தமிழில் வெளியிட ஆவண செய்தமையும் அவிஞசிலிங்கம் அவர்களின் சிறப்பான சாதனைகள் என வருணிக்கப்பட்டது.
இம் மனையியல் கல்லூரியிலே மாலாவி, எதியோப்பியா பிரேஸில் மொரிஷியஸ், சிங்கப்பூரி, மலேசியா முதலியவெளி நாடுகளிலிருந்து மாணவிகள் வந்து பயிற்சி பெறுகின்றனர். இலங்கையிலிருந்தும் பயிற்சி பெறுவதற்காக மாணவிகள் அங்கு சென்றுள்ளனர். உலகத் தமிழாராய்ச்சி மாநாட் டுப் பேராளர்கள் அங்கு வருகை தந்துள்ளமையால் தமிழிலும் தமிழர் பண்பாட்டிலும் ஈடுபாடுடைய வேறு பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் அங்கு வரக்கூடும் என் றிருந்தும் அவ்வாறு வருவதஞல் அந்நாடுகளுக்கும் இந்தி

Page 72
132 நெஞ்சில் நிலைதத சுற்றுலா
யாவுக்கும் உள்ள நட்புறவு வலியுறும் என்ற நம்பிக்கை யும் அவ்வரவேற்புரையில் தெரிவிக்கப்பட்டது.
பூரீ அவினுசிலிங்கம் மனையியல் கல்லூரியில் அறிவியல் துறையில் முதுமானிப்பட்டமும் கலாநிதிப் பட்டமும் பெறக்கூடிய அங்கீகாரத்தைச் சென்னைப் பல்கலைக்கழகம் அளித்துள்ளது. முன்னேறிவரும் அறிவு வளர்ச்சிக்கேற்ப புதுப்பின்னணியில் இல்லம் நிறுவுவதற்கு இன்றியமையாத மனித உளப்பாங்கினையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டு வருகின்றது. குழந்தைகளை வளர்த்தலில் பெண் களுக்குப் பிரதான ஒரு பங்கு உண்டு. இத்துறையில் பயிற்சியளிக்கும் முகமாகவே திருப்பாணியில் மனையியலும் பனபற்றிய பொருளியலும் புகட்டப்படுகின்றன. இல் லத்துக்கும் குடும்பத்துக்கும் அவசியமான அத்தனையும் மனையியலில் அடங்கியுள்ளன உணவையும் போசனையை யும் பற்றிய பாடத்திட்டங்களும். உடையையும் சலவை முறையையும் மனையையும் மனை பரிபாலனத்தையும் உட னலம் வீட்டில் நோயாளரைப் பேணல் என்பவற்றையும் குழந்தையின் வளர்ச்சியையும் தாய்மையின் பணிகளையும் மனித உறவு சம்பந்தமான விஞ்ஞானத்தையும் கலையை யும் பற்றிய பாடத்திட்டங்களும் அங்கு முதலிடம் பெற்றுள்ளன. பெளதீக சமூகவியல், மனித இயல் உள வியல், இலக்கியம், நுண்கலை முதலியவற்றினுலான உறுதி யான அடிப்படைப் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பெரும் நாடான இந்தியாவில் விவசாயமும் மனையியல் விருத்தியும் மனையியலின் முக்கிய பகுதிகளாகும்.
பல்கலைக்கழகத்துக்குச் செல்வதற்கு முற்பட்ட மாண வர்களேத் தயாரிக்கும் முகமாக அம்மனையியற் கல்லூரி பெளதீகம், இரசாயனம், இயற்கை விஞ்ஞானம், கணிதம்து

பூரீ அவினசிலிங்கம் கல்லூரி 133
வீட்டுப்பணி, இந்திய இசை, உளவியல், முதலிய துறை களிலும் தமிழ், ஆங்கிலம், இந்தி முதலிய மொழிகள் விரி வான முறையிலும் புகட்டப்படுகின்றன. கணிதத்தோடு பெளதீகத்தையும் இரசாயனத்தையும் கற்கும் மாணவர் கள் பொறியியல் துறையில் பட்டம் பெறக்கூடிய வாய்ப் புக்களைப் பெறுகின்றனர். உணவும் போசனையும் என்ற பகுதியில் முதுமாணிப்பட்டமும் கலாநிதிப்பட்டமும் பெறும் வாய்ப்பும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலே கூறப்பட்ட துறைகள் அனைத்துக்கும் பயன் படக்கூடிய ஆய்வு கூடமும் 15,000 தொகுதிகளுக்கு அதிக மான நூல்களைக் கொண்ட நூல் நிலையமும் அங்கு உண்டு. மனையியல் பற்றிய சிறந்த பல நூல்கள் அங்கு இருப்பதைக் காணலாம். முந்நூற்றுக்கு அதிகமான சஞ்சிகைகளுக்கும் கலை ஏடுகளுக்கும் சந்தா செலுத்தப்படுகின்றது. இத் துறையில் இவற்றை அபிவிருத்தி செய்யும் முகமாக இந் நிலையமும் (ருெக்பெலர்) நிறுவனமும் பேருதவி புரிற் துள்ளன. எல்லா வாய்ப்புக்களையும் கொண்ட ஒர் அவைக் களமும் நவீன வசதிகளைக் கொண்ட ஓர் விடுதி நிலையமும் அங்குள்ளன. சுவாமி விவேகானந்த மணி மண்டபம் என அழைக்கப்படும் அவைக்களம் பிரதமராவதற்கு முன்னர் பூரீமதி இந்திராகாந்தி அவர்களால் திறந்து வைக்கப்படி ه این سا
கலைமகள் விடுதி நிலையத்தை கலாநிதி ஸார்ே ஹ"ஸைன் உப ராஷ்டிரபதியாக இருந்த பொழுது திறந்து வைத்தார், என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. சென்னைப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி ஏ.எல் முதலியார் அவர்கள் திருமகன் விடுதி நிலையத்தைத் திறந்து வைத்
தார்கள்.

Page 73
134 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
மகளிருக்குப் பயிற்சி அளிப்பதற்காக நிறுவப்பட்டுள்ள, பதினுெரு பயிற்சி நிலையங்களுள் அக் கல்லூரியில் உள்ள முக்கிய சேவிகா பயிற்சி நிலையமும் ஒன் ருகும். இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இந் நிலையம் இயங்குகிறது. சென்னை, ஆந்திரா, மைசூர், கேரளம் முதலிய தென்னகப் பிரதேசங்களிலிருந்து வந்துள்ள முக்கிய சேவிகா மகளிருக்கு அந்நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பத் தரை மாதங்களுக்கான தொழிற்று ரைப் பயிற்சியும் இரண்டு முதல் மூன்று மாதகால எல்லைக் கான பயிற்சியும் அங்கு அளிக்கப்படுகின்றன. காலத்துக் குக் காலம் அப்பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. "லொக் கார்ய பசுஷ் தர” என்னும் மக்கள் பணி மன் றம் பாரத சேவக சமாஜத்தின் கிளையாக அக் கல்லூரி யில் இயங்கிவருகிறது. மக்களுக்காக மக்களினல் மக்களி லிருந்து நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. அரசாங்கத் தின் பணிகள் அம்மன்றம் மூலம் மக்களுக்கு விளக்கப்படு கின்றன. பொறுக்கி எடுக்கப்பட்ட கிராம அடிப்படையில் வாய்க்கல் குழிகளையும், இளைஞர் மன்றங்களையும் இன் ஞேரன்ன பிற பிறவற்றையும் ஒழுங்கு செய்வதில் முன் னேடியாக அமையும் அம்மன்றத்தின் அலுவலாளர் சங்க யோகி’ என்றும் *உப சகயோகி’ என்றும் வழங்கப்படு கின்றனர்.
பாலர் வகுப்புக் குழந்தைகளின் உணவுப் போசனையை உயர்த்துவதற்குமனையியல் கல்லூரி மதியஉணவு வேலைத்திட் டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. சென்னை மாநில மத்திய உணவுத் திட்டத்தில் ஒரு குழந்தைக்கு ஒரு வேளைக்கான நண்பகல் உணவுக்குப் பத்துப் பைசா செலவிடப்படுகிறது* அரசாங்கம் ஆறு பைசாக்களை அளிக்க சுவேச்சா நிலையங் கள் மீதியைச் செலுத்துகின்றன. இவ்வுணவு சோறு,

பூரீ அவினசசிலிங்கம் கல்லூரி 135
சாம்பார் அல்லது தயிர், மரக்கறி ஒரு கிண்ணம் பால் என்பவற்றைக் கொண்டது. ஒவ்வொரு கிழமைக்கும் உரிய உணவுப் பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்படுகிறது. இவ்வுணவை அளிக்கும் போதே பிள்ளைகளுக்குப் போசனை பற்றிய விஷயங்களும் போதிக்கப்படுகின்றன. இதற்காகப் படங்சளும் சுவரொட்டிசளும் சபைகளும் பயன்படுத்தப்படு கின்றன.
பல்வேறு கோணங்களிலிருந்து பிள்ளைகளுக்காய இவ் வுணவின் விளைவுகள் ஆராயப்படுகின்றன. இவ்வுணவு அளித் தலின் பயனுக பிள்ளைகளின் வரவும் அவர்களின் திறமையும் அதிகரித்தள்ளன. குடும்ப உணவு முறையிலும் இதன் பயணுக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாராய்ச்சிகளைக் கொண்ட பள்ளிக்கூட பகல் உணவுத்திட்டம் என்ற ஒரு கையேட்டினை வெளியிட இந்தியக் கல்வி அமைச்சு முன் வந்துள்ளது.
காலை 10 மணிக்குப் பின்னர் பட்டம் பெற்ற கற்கும் மாணவர்கள் உணவு சமைக்க ஆயத்தமாவர். போசனைத் துறையில் ஆற்றல் மிக்க பேராசிரியரும் அங்கு இருப்பார். உணவு நுண்ணிய முறையில் தயாரிக்கப்படும். நண்பகல் 12 மணிக்கு ஆசிரியைகள் முன்னே வர மாணவர் பின்னே வருவர். கைகழுவிவரும் மாணவர் மண்டபத்துக்குள் வர முன்னர் பாத அணிகளை அகற்றி விடுவர். மேசையிலுள்ள தாழி’ ஒவ்வொன்றுக்கு எதிரே உட்காருவர். எங்கும் அமைதி. ஆசிரியையின் சமிக்ஞை கிடைத்ததும் கை கூப்பி கண்மூடி தலைகுனிந்து இறைவனைத் துதிப்பர். ஒரே பாணி யில் இனிய குரலில் ஒரே நேரத்தில் தமிழில் இவ்வாறு பாடுவர்.
அன்பின் வடிவாம் ஆண்டவனே
அன்பர் மனதில் தாண்டவனே

Page 74
36 நெஞ்சில் நிலைத்தசுறறுலா
இன்பந துருவாய் எழிலோனே
எங்கும் நிறைந்த தொழிலோனே
பண்பின் திலகம் பாதமருள் வாய் மடமை ஒழிய நீ அருள்வாய்.
பின்னர் அனைவரும் உணவருந்துவர். மேலதிகமாக உணவு தேவைப் படுவோர் கையை உயர்த்துவர். அவர் கள் வேண்டுகோள் நிறைவேற்றப்படுகிறது. சென்னை மாநிலத்தின் ஏனைய மத்திய நிலையங்களிலும் அம் மனையியல் “கல்லூரியில் நடைபெறுவது போல் சமய, இன வேறு பாடோ, வறியவர், செல்வந்தர் வேறிபாடோ இன்றி எல்லா மாணவர்களும் இத்திட்டத்தினல் பயனடைகின் றனர். இது உண்மையிலே தேசிய ஒருமைப்பாட்டு உணர்ச் கிக்கான சிறந்த ஓர் எடுத்துக்காட்டல்லவா?. 8
21
Ở TUTTGAVLJÓ
கோயம்புத்தூர் நடுப்பகுதியில் "சாரதாலயம் அமைந் துள்ளது. பெண்களுக்கான பூரீஅவினுசிலிங்கம் மனையியற் கல்லூரியையும் அதன் சூழலையும் சுற்ருடலையும் கொண்ட பகுதியே அவ்வாறு அழைக்கப்பட்டது. "சாரதாலயம்” என்பது சாரதாமணியின் கோயில் என்று பொருள்படும். மதச் சார்பற்ற கோட்பாட்டுக்கு எடுத்துக்காட்டாகவும் பழமையையும் புத்தம் புதிய அறிவியற்றுறைகளையும் ஒரு முகப்படுத்தும் பணியின் முன்மாதிரியாகவும் அது அமைந் துள்ளது.

சாரதாலயம் 137
சாரதாமணி, பூரி ராமகிருஷ்ணரின் பதிவிரதை, இறை வனைப் பற்றிய. உண்மையைப் பல்வேறு மதக்கட்டுப்பாடு களின் மூலம் உணர்ந்த பின்னர் தமது மனைவியை அகில உலகத் தெய்வீகத் தாயின் தனிப் பெரும்சின்னமாக மதித்து வணங்கத் தலைப்பட்டார். தமது முன்னைய ஆத்மீக அனு பவங்களின் பெறுபேறுகளை அவர் தம் பாதங்களில் அர்ப் பணித்தார். கணவன் மனைவிக்கு உள்ள சாதாரண உறவு இல்லற வாழ்க்கையின் அடிப்படையாகும். அது நீங்கவே ஒருவன் தனது மனைவியிடம் தெய்வீக ஆற்றல் இருப் பதை உணருகிருன். பின்னர் உலகெங்கிலும் கடவுளைக் காண்கின்றன் . ஆன்மீக வாழ்க்கையின் முடிவு அதுவாகும் என்பர். எனவே "சாரதாலயம்" என்ற பெயரை விடச் சிறந்தவேருேர் பெயரை பூரீ அவிநாசிலிங்கம் அவர்கள் கல்லூரிக்கும் சூழலுக்கும் இட்டிருக்க முடியாது. சாரதா மணியை பிரதிபலிக்கக் கூடிய வகையில் இந்தியாவின் இலட்சிய மகளிர் தோன்றுவதற்கு சிறந்த முன்மாதிரியாக எதிர்காலப் பெண்கள் சந்ததியை உருவாக்கும் பொறுப்பு *சாரதாலயத்தைச் சார்ந்ததாகும் எனின் அது மிகை
ut és Tgy.
அந்நிலையம் உள்ள எல்லா பகுதிகளிலுமிருந்து காணக் கூடிய வகையில் ஓர் ஆலயம் அங்கு உண்டு. பிரதான வாயிலை எதிரி நோக்கிய வண்ணம் அது அமைந்துள்ளது" உணர்ச்சியூட்டும் வகையில் உருப்பெற்றுள்ளது, அவ்வால யத்தின் முற்பகுதிமுற்றவெளியாக அமைந்துள்ளது. மற்றப் பக்கங்களில் கல்லூரியின் கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன. சிமெந்துக் கலவை (கொங்ஹீட்) யினலான உயர்ந்த பெரிய ஒரு மேடையில் அவ்வாலயம் கட்டப்பட்டுள்ளது. அவ் வாலயத்தின் வாயிலை அடைய பதினேழு படிக்கட்டுக்களைக் கடந்து செல்லுதல் வேண்டும். மூன்று வட்ட மான "ரங் கோலி'களினல் ஆலயத்தின் வாயிலுக்கு வெளியே உள்ள

Page 75
138 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
தரை அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நிற முள்ள பொடியினல் பூக்கள் போன்று வாயிலை அலங்கரிப் பதை 'ரங்கோ லி’ என்பர், அது தென்னிந்தியாவுக்கே புரிய சமய சார்பான அலங்கார வகையாகும். வாயிலுக் கும் நடுவே சாரதாதேவியின் அழகு மிக்க ஒரு படம் இடம் பெற்றுள்ளது. அப்படத்தை ஒரு முறை பார்த்தால் போதுமானது. மாணவரையும் ஆசிரியர்களையும் ஏனையோ ரையும் நல்ல சருமங்களில் ஈடுபடுமாறு சைகை காட்டுவது போன்று தோற்றப் பொலிவோடு அவ்வுருவம் சாட்சி அளிக்கும். தூய்மையாகவும் கட்டுப்பாடுடனும் முன்மாதி ரியான வாழ்க்கை நடத்துமாறு இந்திய மகளிரை அறை கூறுவது போல் உள்ளது அவ்வுருவம். உண்மையிலேயே அக்குறிக்கோள்களின் அடிப்படையிலேயே சாரதாலயச் சூழலில் உள்ள மாணவிகளின் வாழ்க்கை செயற்படுகின் Ք5 •
வெளியிலே இருந்து பார்க்கும் பொழுது வாயிலின் இரண்டு பக்கத்திலும் அணிகிளர் பலகைகள் இரண்டு உண்டு. அவை உண்மையான கூற்றுக்களைக் கொண்ட தாக அமைந்துள்ளன இடது பக்கத்திலே உள்ள பலகை யில் தமிழ்க் கூற்றுக்கள் இடம் பெற்றுள்ளன. அவை தமிழ் நாட்டிலே தோன்றிய தலை சிறந்த அறிஞரின் பொன் மொழிகளாகத் திகழ்கின்றன. திருவள்ளுவரின் குறட்பாக்களும் அப்பர் சுவாமிகளின் தேவாரப் பாடல் களும் நம்மாழ்வாரின் பாசுரங்களும், திருமூலரின் மந்திரங் களும் கம்பனின் கவிதைகளும் ஒளவையாரின் அறிவுரை களும் தாயுமானவரின் பக்திப் பாடல்களும் அந்த அணி கிளர் பலகையை அணிசெய்து கொண்டிருக்கின்றன.
வலது கைப்பக்கத்தில் இருந்த மற்றப் பலகையில் பல வேறு சமயங்களைச் சேர்ந்த மணி மொழிகள் இடம்

சாரதாலயம் 139
பெற்றிருந்தன. இந்து மதக்குரவரினதும் முஸ்லிம் ஞானி களினதும் கிறிஸ்தவக் குருமாரினதும் புத்தமத அறி ஞரினதும் கூற்றுக்கள் அமைந்திருந்தன. உபநிடதம், பகவத் கீதை, திரிபிடகம், விவிலிய நூல், குர்ஆன் முதலிய சமய கிரந்தங்களிலிருந்து பொல் மொழிகள் அழகுறத் தீட்டப்பட்டிருந்தன. பூgராமகிருஷ்ணர், விவேகானந்தர், மகாத்மா காந்தி முதலியோரின் தலைசிறந்த கருத்துக்கள் அங்கே முக்கியமான ஓர் இடத்தை வகித்துக் கொண்டி ருந்தன.
*தீமையிலிருந்து நன்மைக்கு வழிகாட்டு இருளிலிருந்து ஒளிக்கு வழிகாட்டு இறப்பிலிருந்து இறவாத் தன்மைக்கு வழிகாட்டு என்ற கருத்துத் தொனிக்க அமைந்துள்ள உபநிடதத்திலி ருந்து மூன்று அடிகள் வடமொழியில் பொறிக்கப்பட்டி ருந்தன
* உனது உரிமை பணிபுரிவதே ஆணுல் உன்னுடையதன்று அதன்பலாபலன்" என்று பகவத் கீதையின் விழுமிய கருத்தும் நாகரி எழுத் துக்களிலே ஒரடியில் தீட்டப்பட்டிருந்தது.
புத்த பெருமானின் போதனைகளிலிருந்து பின்வரும் கூற்று அங்கு எடுத்தாளப்பட்டது. メ
"தியானத்திலிருந்தே ஞானம் ஊற்றெடுக்கிறது தியானமில்றேல் ஞானந் தேய்ந்தொழியும்"
இனிக்கிறிஸ்தவக் கருத்துக்களை நோக்குவோம். இங்கே இரண்டு பொன்மொழிகள் இடம் பெற்றுள்ளன. இயேசு நாதரின் "கடவுளின் இராச்சியம் உன்னிடமே உள்ளது? என்ற பொன்மொழியும்

Page 76
140 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
"முழு உலகத்தைப் பெற்றிடினும் ஒரு மனிதன் பெற்ற நன்மையாது அவன் தனது ஆத்மாவை இழந்திடின்? என்ற நற்கூற்றும் அப்பலகைகை அலங்கரித்துக் கொண்டி குந்தன.
புண்படுத்தித் தானம் வழங்குவதை விட மேலானது அன்பாகப் பேசி மன்னிப்பளித்தல்"
என்ற திருக்குர் ஆனின் திருவாக்கும் அங்கே வரையப் பட்டிருந்தது.
"நம்பிக்கையுடையான் எல்லாம் உடையான் நம்பிக்கையின்றேல் ஒன்றுமில்லை”
என்ற இராமகிருஷ்ண பரமஹம்சரின் திருமொழியும் வடமொழி எழுத்துக்களிலே பொறிக்கப்பட்டிருந்தது.
எழுக! விழித்தெழுக!! குறிக்கோள் நிறைவேற்றும் வரை நிறுத்தற்க"
என்று உணர்ச்சி உண்டாக்கும் பாணியில் அமைந்த சுவாமி விவேகானந்தர் அவர்களின் நன்மொழியும் அங்கு இடம் பெறத் தவறவில்லை. எமது காலத்தில் வாழ்ந்து சத்தி
யாக்கிரகங்களில் ஈடுபட்டு, எளிமையான வாழ்க்கைக்கு
முன்மாதிரியாக இருந்து வாழ்ந்து காட்டிய மகாத்மா காந்தி அவர்களின் செம்மொழிக்கும் அங்கு ஒர் இடம் அளிக்கப்பட்டிருந்தது.
"அகிம்சை, உண்மை, கள்ளாமை, தன்னடக்கம் பதுக் காமை, மனித உழைப்பு, நாவடக்கம், அச்சமின்மை, எல்லாச்சமயங்களுக்கும் காட்டும் சகிப்புத்தன்மை, சுதேசி ஈடுபாடு, தீண்டாமையைக் கடைப்பிடியாமை,

ծ Ո Մsn 6Նայth 14
இப்பதினென்றும் எமது சூளுரையாக அமைவதாக" என்ற மகாத்மா காந்தியின் செம்மொழிகள் பொறிக்கப் பட்டிருந்தன.
தமிழில் பொறிக்கப்பட்ட கூற்றுக்களைக் கொண்ட அணி கிளர் பலகைக்கு மேலாக "கூப்பும் கரங்கள்" என்று அழைக் கப்படும் மரச்சின்னம் ஒன்று இருக்கிறது. அம்மனையியற் கல்லூரியை ஆரம்பித்த பொழுது ஒஹியோ மாகாணப் பல்கலைக்கழக மனையியற் பொருளியல் முதல்வரான கலா நிதி டொருெஸ் கொட் என்பவரால் கல்லூரி அதிபருக்கு அளிக்கப்பட்டது அம்மரச்சின்னம். உடற் குறையுடைய குருட்டுக் கலைஞன் ஒருவன் செதுக்கிய அச்சின்னத்தை அவனிடமிருந்து கலாநிதி ஸ்கொட் பெற்ருர், என்று கூறப் படுகிறது. "கூப்புங்கரங்கள்’ என்ற அச்சின்னத்தின் மேற்புறமாக இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளது.
"ஆத்மாவின் சாளரங்களாகக் கண்களும், கதவுகளா கக் கைகளும் இருப்பின் எவ்வளவு துரிதமாகவும், சரியாகவும் ஆழத்திலே பொதிந்து கிடப்பனவற்றுக் கான பாதையை எமது கைகள் திறக்கும் வரவேற் கக் கைகளை நீட்டும். எதிர்ப்புக்கிடையே அவற்றை மேலே தூக்கும். கீழ்ப்படியு முகமாக அவற்றைக் குவி க்கும். தேவையானவர்க்ளுக்கு நீட்டும், அல்லது வணக் கத்திலே ஒன்று சேர்க்கும். கூப்புங்கரங்கள் வேலைசெய்யும் கைகளாகும்."
இவ்வாறு கைகளின் தன்மையை இன்னும் பல சொற் களால் கூறிக்கொண்டு சென்று இறுதியில் இவ்வாறு அமைந் திருந்தது.
"இறைவனுடைய புனிதத் தவத்திலே நிற்பவர் யார்?

Page 77
142 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
சுத்தமான கைகளையுடையவனும் தூய்மையான இரு தயத்தையுடையவனுமேயாம்.'
ஆலயத்தின் உள்ளே சென்றதும் "புனித தலம்’ உள்ள பகுதி முதன் முதலில் தென்படுகிறது. இங்கே பூனி இராம திருஷ்ணரின் கண்ணைக் கவரும் ஓவியப் படமும் தமது சுவாமியின் பாதங்களுக்குக் கீழாக சாரதாதேவியின் புகைப்படமும் க்ாணப்படுகின்றன. மதத்தலைவர்களின் படங்கள் பெரிய அச்சாலையை அழகாக்குகின்றன.
கல்லூரியைச் சேர்ந்த அன்வரும் அங்கு நாள்தோறும் வழிபடுவர். காலையும் மாலையும் வழிபாடு நடக்கும். அனை வரையும் அழைத்தற்காக அமைக்கப்பட்டுள்ள மணி எல் லோரும் வந்து சேரும் வரை ஒலிக்கும் அனைவரும் கை கூப்பி, தலைகுனிந்து, கண்மூடிப் பிராத்தனையில் ஈடு பட்டுக்கொண்டிருப்பர். எல்லோரும் தமிழில் இவ்வாறு இசைப்பர்.
பல்லவி
"ஜய பூரீராமகிருஷ்ண தேவா ஜய ஜய சத்குரு நாதா ஜயg.
9469J uல்லவி
மையலால் மிடியுண்டு வாடும் குவலயம் தயவால் உயிர்த்தோங்கத் தோன்றிய முகிலே (ஜயபூg)
JJ siste
சாந்தம் வடியுமுன் சந்நிதி வந்ததும் சந்தேகம் சஞ்சலம் சாம்பலாய்ப் போகுமே சாந்தி சுடர்விடும் கருணரூபனே கைகொடுத்தெங்களைக் கரையேற்றுமையனே?

& Torst suuub 43
பின்னர் ஆங்கிலத்திலும் (ஜயபூரீ) பிரார்த்தனை நடக்கும். அதைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தாய்நாடு சம்பந்தமாக உள்ள கடமை உணர்த்தப்படும் . அதனை உணர்த்தி அவ்வுணர்ச்சியை அவர்களிடம் நிலைக்கச் செய்யும் முகமாக ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் புனித ஆலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது பின்வருமாறு தேசிய வாக்குறுதி எடுக்கப்படும்.
இந்தியா எனது நாடு. எல்லா இந்தியரும் எனது சகோதர, சகோதரிகள். எனது நாட்டை நான் நேசிக்கிறேன் அதன் மிகுந்த, பல்வேறுவகையான முதுசத்தையிட்டுப் பெருமை கொள்கிறேன். அதற்குத் தகுதி உடையவனப் இருக்க முயல்வேன். எனது பெற் ருேருக்கும், ஆசிரியருக்கும், முதியவருக்கும் மரியாதை செலுத்தி எல்லோரையும் கண்ணியமாக நடத்துவேன். எனது நாட்டுக்கும் எனது மக்களுக்கும் எனது பற் றுடமையை உறுதிப் படுத்துகிறேன். அவர்களின் நலத்திலும் வளத்திலுமே எனது மகிழ்ச்சி தங்கி உள்ளது.
22
விதவிதமான விருந்துணவு
சாரதாலயத்தின் அமைதியான சூழல் அது. நேரம் பிற்பகல் 5.30 மணி இருக்கும். ராமகிருஷ்ண ஆலயத்தில் முற்றவெளியில் தேநீர்" விருந்துபசாரத்திற்கு ஏற்பாடுகள்

Page 78
44 நெஞசில் நிலைத்த சுற்றுலா
செய்யப்பட்டிருந்தன. ஆலயத்திலிருந்து வந்ததும் தேநீர் பரிமாறப்பட்டது. சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. ஆறு மணியளவில் சாரதாலயத்துச் சூழலை விட்டு நீங்கவேண்டி இருந்தது. சாரதா லயம் உண்மையிலே இக்காலத்துக் கேற்ற ஒரு கோயில். ஒரு தனிப்பட்ட ஆலயம். சாதகமான மாற்றங்களைப் பரப்பிக் கொண்டிருக்கும் கலைக்கூடம். விஞ்ஞான அடிப்படையில் சிறந்த வீடுகள் அமைய வேண் டும் என்ற உணர்ச்சியைப் பெண்கள் பெறும் முறையில் அமைந்திருந்த உண்மையான கோயில். சிறந்த ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்ட ஆல யம். மக்கள் வர்க்கத்தின் நன்மைக்கே அர்ப்பணிக்கப்பட்ட ஆய்வுக்கூட ம், சமயமும் விஞ்ஞானமும் கலந்து உறவாடு வதை அங்கே காணலாம். இத்தகைய எண்ணங்கள் தோன் றியவண்ணம் அங்கிருந்து பிரியாவிடை பெற்ருேம்.
அடுத்த நிகழ்ச்சி சிதம்பரம் பிள்ளைப் பூங்காவில் நடை பெற ஏற்பாடாகி இருந்தது. பொதுக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நகரப்பொது வரவேற்பும் இடம்பெற வழிவகை செய்யப்பட்டிருந்தது. முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசவநாதம், சிலம்புச் செல்வர் மா. பொ. சிவஞான கிராமணியார் முதலியோர் அங்கு சமூகம் அளித்திருந்தனர். சுற்றுலாவில் இவர்கள் இருவரும் பங்கு பற்றினர். சுற்றுலா வின்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இவர்கள் இருவரும் பிரயோசனமான பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினர். இடைக்கிடையே தமிழக அரசுக்கும் புகழ் மாலை சூட்டத் தவறவில்லை. பாரதியாரும், பாரதிதாசனும் தமிழ்மொழி பற்றியும் தமிழகத்தில் ஆட்சி புரியவேண்டிய வர்கள் பற்றியும் கூறியவற்றை இவர்கள் எடுத்துக்கூற மறக்கவில்லை.
பொதுக் கூட்டத்துக்குச் சென்ற எனக்கு என் கண் களையே நம்ப முடியவில்லை. திரளாக மக்கள் வந்து சிதம்

விதவிதமான விருந்துணவு 145
பரப்பிள்ளை பூங்காவில் கூடியிருந்தமையைக் கண்டு வியப் படைந்தேன். இருபதிஞயிரத்துக்கும் இருபத்தையாயிரத் துக்கும் இடைப்படட எண்ணிக்கையிலான மக்கள் அச் கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர் என்பதே அனைவரினதும் முடிவு. பூங்காவின் ஒரு பக்கத்தில் சிறப்பாக அழைக்கப் பட்டவர்களுக்காக விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட ஆசனங்கள் இருந்தன. அதை அடுத்துப் பெண்களுக்கென பிரத்தியேகமான இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. சாதாரண மக்களுக்கு தரையே ஆசனமாக அமைந்திருந்தது. எமது நாட்டில் ஆசனங்கள் அமைந்திருந்தாலும் ஆயிரம் பேரை யாவது காணுவது அருமையாயிருக்கும். இருபத்தையாயி ரம் மக்கள் வந்து தரையில் குந்தி இருந்து காது தாழ்த்திக் கூட்ட நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டிருந்தமை வியப் பாகத் தான் இருந்தது. வசதிகள் எதுவுமின்றி ஆர்வம் மிக்கவர்களாய் அவர்கள் அங்கு வந்திருந்தனர். தமிழ் மீது அவர்களுக்கிருந்த அளப்பரிய பற்றே அவர்களை அங்கு வரச் செய்தது எனின் அது மிகையாகாது.
ஆங்கிலேயரின் ஆட்சி இந்தியாவிலே நிலவியபோது வாழ்ந்தவர் குலாம் காதிறு நாவலர். அவர் வாழ்ந்த காலத் தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருந்தது. அதனையே அவர் தம் புலவராற்றுப்படையில்
"அரையரும் தமிழரல்லர்'
என ஆட்சி புரிபவர்கள் தமிழராய் இல்லையே என்று அன்று மனம் நொந்து பாடினர். இன்ருே பாரதிதாசன் கனவு நிறைவேறித் தமிழர், தமிழருக்காக தமிழ்நாட்டில் தமிழ் பற்றுடன் ஆட்சி புரிகின்றனர். தமிழ் மக்களிடையே தமிழ்ப் பற்றிய உணர்ச்சி கரை புரண்டோடுகிற காலம் இது.

Page 79
146 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
இதனை எதிர்பார்த்தே அன்று பாரதிதாசன் இவ்வாறு
untig (69ri.
"என் தமிழ் நாடு தன்னுட்சி பெற்றுத் துலங்கிடுதல் காண்பேன்; தமிழர் நலங் காண்பேன் நான் நானில மதிலே’
இதை ஞாபகப்படுத்திக் கொண்ட பின்னர் குலாம் காதிறு நாவலரின் அன்றைய கூற்றுக்கு எதிர்மாரு க இச் சுற்றுலாவின் போது நாம் கண்ட காட்சிகளையும் பாரதி தாசனின் கவிதைகளாலே வர்ணிக்கலாம்.
தமிழ் என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலோ தமிழ் நாட்டில் எந்நாளும் இருந்ததில்லை”
இக்கருத்துக்களை எடுத்துக் காட்டாக அன்று கோயம்புத் தூரில் உள்ள சிதம்பரப் பிள்ளை பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் அமைந்திருந்தது எனின் அது மிகைபடக் கூறும் குற்றம் ஆகாது.
மாவட்ட ஆளுநரின் தலைமையில் வரவேற்புக்கூட்டம் ஆரம்பமாகியது கோவை நகர மன்றத்தார் அதனை ஒழுங்கு செய்திருந்தனர். "உலகத் தமிழ் மகாநாட்டுக் குப் பேராளராய் வந்திருக்கும் பன்னட்டு அறிஞர் களுக்கு கோவை நகர் மன்றத்தார் உவந்தளிக்கும் வர வேற்பிதழ்" வாசிக்கப்பட்டது. அவ்வரவேற்பிதழின் இரண் ண்டாம் பந்தி இவ்வாறு அமைந்திருந்தது.
"இனம் மொழி பண்பாடு என்பவற்றல் வேறுபட் டுள்ள நாம் அனைவரும் தமிழ் உணர்வால் ஒன்றுபட் டொம். "யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்பதை உல

வித விதமான விருந்துணவு 147
கறிந்த உண்மையாக்கினுேம். உங்களின் இன்றைய வருகை அதனை உலகுக்குப் பறை சாற்றி விட்டது.
அவ் வரவேற்பிதழில் "உயர் தனிச் செம்மொழி தமிழ். உலப் பொது மொழி தமிழ். உலகோடு தோன்றிய தமிழ். கன்னித் தன்மையுடையது தமிழ். பழமையும் புது மையும் பயின்றது தமிழ் என்று தமிழின் பெருமை புகழப் பட்டிருந்தது. வரவேற்புரையின் பெரும்பகுதி கொங்கு நாட்டின் புகழ் பாடுவதாக அமைந்திருந்தது.
"எங்கள் கொங்கு நாடு வள்ளல்கள் பலர் வாழ்ந்த நாடு. புலவர்களைப் போற்றும் புரவலர்கள் வாழ்ந்த நாடு. தமிழுக்குத் தலைகொடுக்க வந்த தலைவனைப் பெற்ற நாடு, ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்து அனைத்துலகும் பயனெய்தச் செய்த அதிய மான் தோன்றிய நாடு இத்தகு கொங்கு மண்டலத்தில் தலை சிறந்த நகரமாகும் இக் கோவை நகர். பெரிய புராணத்திற்கு விரிவுரை ஆற்றிய பேரறிஞரைப் பெற் றது இந்நகர். நாட்டுப்புற இலக்கியங்களை நல்ல தமி ழில் ப ைத்த தலைவரைப் பெற்றது இந்நகர். தமிழி சைச்சங்கம் தலைசிறந்து ஓங்க அடிகோலியாக வாழ்ந் தது இந்நகர். தமிழ்க்கல்லூரியை அமைத்துத் தமிழை வளர்த்து வருவது இந்நகர். உலகத்தின் இரண்டாவது நன்னீர் எனச் சிறப்புப் பெற்ற சிறுவாணி நீரால் செழிப்புப் பெற்றது இந்நகர்.கல்வியிலும் தொழிலிலும் வணிகத்திலும் சிறந்து விளங்குகின்றது."
கோவை நகரமன்றத் தலைவரும் துணைத் தலைவரும் உறுப்பினர்களும் அளித்த இவ்வரவேற்பிதழின் அட்டை கோவை நகர சபையின் சின்னத்தைக் கொண்டு திகழ் கிறது. அச் சின்னம் கோவை மாநகரின் பல்வேறு அம்

Page 80
148 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
சங்களைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. நடுவிலே கோவை நகர் மன்றத்தின் குறிக்கோள் தமிழில் பொறிக் கப்பட்டுள்ளது. "பணி செய்து மகிழ்வோம்" என்று தீட் டப்பட்டுள்ளது. பணி செய்து மகிழ்வடைதல் உண்மை யில் ஓர் உயரிய குறிக்கோளாகும். எமது உள்ளூராட்சி மன்றங்கள் மாத்திரமன்றி நாமும் எமது நாளாந்த வாழ்க் கையில் குறிக்கோளாகக் கொண்டு அதனை நடை முறைப் படுத்த வேண்டிய சிறந்த ஒரு குறிக்கோளாகப் "பணி செய்து மகிழ்வோம்" என்பது அமைந்திருக்கிறது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் பங்குபற்றி யவர்களுக்கு அப்பொழுது வரவேற்புக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தமிழ் ஆராய்ச்சி யில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு அறிஞர் பலருக்குத் தமி ழில் சரியாகப் பேசத் தெரியாது, பேசும் ஆற்றல் இருக்க வில்லை. எனினும் அத்தகைய கூட்டங்களில் அத்தகையோர் உரை நிகழ்த்தாமலிருக்கவுமில்லை. அவ்வாறு குறிப்பிடத் தக்கவர்களில் ஒருவர் சுவிட்சர்லாந்திலிருந்து வந்தவர். திருமுருகாற்றுபடையை பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த் தவர் பேராசிரியர் கெல்லர் என்பவர். பிற நாட்டவர் தமிழில் உரை நிகழ்த்தப்போவதை அறிந்ததும் எல்லோரும் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தனர். தமிழில் உரை யாற்றும் வல்லமை இல்லாத போதிலும் ஏதோ சில சொற்களால் தமிழில் தமது கருத்தை வெளியிட அவர் கள் மேற் கொண்ட முயற்சியை எல்லோரும் வியந்தனர். பாராட்டினர். சிலருக்கு அத்தகைய பேச்சுப் பொழுது போக்காகவும் அமைந்தது.
* பொது வரவேற்புக் கூட்டம் முடிவடைந்ததும் இராப் போசன விருந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். பீள

விதவிதமான விருந்துணவு 149
மேடு என்னும் இடத்தில் உள்ள 'பயனீர் ஹவுஸ்" உசி குக் கூட்டிக்கொண்டு செல்லப்பட்டோம். இராப்போசன விருந்து சிறப்பாக அமைந்திருந்தது. இராப்போசன விருந்து நடைபெற்ற சாலைக்குச் செல்லும் ஒவ்வொரு வருச்கும் ஒவ்வோர் அட்டை கொடுக்கப்பட்டது. அது பல நிறங்சளில் அச்சிடப்பட்ட அட்டையாக இருந்தது P. S. G. என்று வழங்கும் நிலையத்துக்குரிய வெவ்வேறு. சின்னங்கள் அந்த அட்டையில் பொறிக்கப்பட்டிருந்தன, அந்த அட்டை உணவுவகைப்பட்டியலாக (Menu) அமைத் திருந்தது. உணவு வகைப்பட்டியலும் இரண்டு பிரிவாக வகுக்கப்பட்டிருந்தது. வலது பக்கத்திலே மாமிசம் உண் போருக்கான பட்டியல் இடம் பெற்றிருந்தது. மாமிசம் உண்ணுத மற்றவர்களுக்கு இடப் பக்கத்தில் பட்டியல் உணவு வகைகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தது. 1ாமிசத்தோடு சம்பந்தப்பட்ட பட்டியலில் 25 உணவு வகைகளும் மாமிசம் உண்ணுதவர்களுக்கான பட்டியலில் 27 உணவு வகைகளும் இடம் பெற்றிருந்தன. இவை அனைத்டி தையும் சுவை பார்த்தோர், அறு சுவைகளையும் உணர்ந்வு திருப்பர்.
இனி அவ்விரு உணவுவகைப் பட்டியல்களிலும் உணவுவகைசளுக்கு அளிக்கப்பட்டுள்ள பெயர்களை ஆரா யப்புகின் சொல்லாராய்ச்சி மொழி ஆராய்ச்சி முதலியவற்றி லிடுபடலாம் போல் தோன்றியது. ஆங்கிலத்திலே இவ்வுணவு வகைப்பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த சொற்கள் அங்கு இடம் பெற். றிருந்தன.
"சுப்" என்பதுடன் பட்டியல் ஆரம்பமாகிறது. சுப் என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் கருத்துக் கூறுவ

Page 81
150 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
தாயின் "வடிசாறு" என்றே கூறுதல் வேண்டும். இரண்டு பட்டியல்களிலும் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது "ஜிலேபி’ இது இந்து ஸ்தானிச் சொல். உளுந்து, மா, நெய்; சர்க்கரை முதலியவற்ருலான (பண்ணிக்காரவகையை) இப் பெயரால் அழைப்பர். அடுத்து உள்ளது ஆட்டிறைச்சிப் பிரியாணியும் மரக்கறிப் பிரியாணியும். மாமிசம், அரிசி, நெய், வாசனைத் திரவியங்களுடன் தயாரிப்பதை பிரியாணி என்பர். "ஊன்சோற்றுமலை’ (புறநாநூறு 38) என்ற சொற் ருெடரோடு இதனை ஒப்பிடலாம். ஆணுல் மரக்கறிப் பிரி யாணி என்று எவ்வாறு பெயர் பெற்றது புதிராகவே
உள்ளது. அதை அடுத்துள்ள ஆட்டிறைச்சிக்குறுமாவும், மரக்கறிக் குறுமாவும் என்ற சொற்கள் உருதுமொழியைச் சேர்ந்ததென்பர். பொதுவாகப் பல உருது மொழிச் சொற் களின் அடிப்படைகளை அறபு பாரசீக மொழிகளில் காண லாம். எனவே இதுவும், ஓர் அறபு அடியாகப் பிறந்த சொல்லாக இருக்சலாம். ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி முதலியவற்றை ஒருவிதச் சுவையேற்படத் தயாரிப்பதே குறுமா என்பர். குழம்புணவின் ஒருவகை என்றும் கூறுவர்.
இறைச்சியோடே சம்பந்தப்பட்ட சொல் மரக்கறிகளுடன் சேர்ந்து மரக்கறிக்குறுமா என்றும் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. வெங்காயப் பச்சடி அதை அடுத்துள்ளது.
புளிப்பான ஒரு வகைக் கறியை பச்சடி என்பர். பசுமை என்பதை அடியாகக் கொண்ட இச் சொல் கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளிலும் அதே விதமாக உப யோகிக்கப்பட்டுள்ளது. எண்ணெய்யில் வாட்டப்பட்ட கோழி இறைச்சியும் கொதிநீரில் வேகவைத்த முட்டையும் மாமிசம் உண்போருக்கான பட்டியலில் இடம் பெற்றிருந் தன. இவை இரண்டும் ஆங்கிலச் சொற்களாலேயே வழங்
கப்பட்டிருந்தன. அடுத்த உருப்படி இட்லி. அதைத் தொடர்ந்து சட்னி என்னும் துவையல் வகை இடம்

விதவிதமான விருந்துணவு 151
பெற்றது. சட்னி என்பது உருதுச் சொல் என்பர். பட்டி யலில் இடம்பெற்றவை கொத்தமல்லி சட்னியும், புதினச் சட்னியுமாகும். இரண்டு பட்டியல்களிலும் தமிழ்ப் பெய ரால் வழங்கப்பட்ட உணவு வகைகளான தயிர் வடை, தயிர் உப்புமா, விசேட வடை, பப்படம் முதலியன வாகும். எனினும் தயிர் போன்ற சொற்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. கிழங்கு, கடலை, பூக் கோசு, கத்திரி முதலியவற்ருலான கறிவகைகளும் பரி
மாறப்பட்டன.
இரண்டு பட்டியல்களிலும் ஊறுகாயும் இடம்பெற்றி ருந்தது. மற்றென்று அரிசிவாடம். சூடான பாதாம்கீர் வழங்கப்பட்டது. வாழைப்பழம் இடம் பெற்றது. பட்டி யலில் கடைசியாக இடம் பெற்றது பீடா. இது தாம் பூலம் என்று தமிழில் வழங்கும் சொல்லுக்குப் பதிலாக உபயோகிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆறு சுவைகளும் நிரம்பப் பெற்ற வெவ்வேறு உணவு வகைகள் பரிமாறப் பட்டன. அவ்விராப்போசனவிருந்து ஜி. சந்திரகாந்தி என் பவராலும், ஜி. ஆர். கோவிந்த ராஜ"லு என்பவராலும் அளிக்கப்பட்டது.
கோவை மாநகரை விட்டு நீங்கு முன்னர் அங்குள்ள மற்ருேர் இடம் எம்மைக் கவர வல்லதாய் அமைந் துள்ளது. பொள்ளாச்சிமலை உள்ள நாச்சிமுத்து தொழில் நுட்பக் கல்லூரிஅமைந்துள்ள இடம்.அதுவிவேகானந்தமணி மண்டபம். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மணிமண்டபம். எழில் மிகு மணி மண்டபம். அது ஒரு கலைக்கோயிலாகவே திகழ்கின்றது. விவேகானந்தர் நூற்ருண்டு விழாவின் போது இராமகிருஷ்ணர் தபோவனத் தலைவர் தவத்திரு சித்பவாநந்த அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இது அண்மைக்காலச் சிற்பம் எனினும் கலைச்சிறப்பு வாய்ந்தது,

Page 82
152 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
மேடைத் தளத்தின் மீது எட்டு யானைகள் செதுக் கப்பட்டிருக்கின்றன. எட்டு யானைகளுக்கு மேலாக எட்டு சிங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எட்டு சிங்கங் களும் எட்டுத் தூண்களைத் தாங்கி நிற்கின்றன. எட்டுத் தூண்களின் மீதும் வட்டமான ஒரு தளம். அத்தளத்துக்கு மேலாக நான்கு சிங்கங்களும் அசோகச் சக்கரமும் பொறிக் கப்பட்டிருக்கின்றன. வட்டமான தளத்திலிருந்து சங்கி லித் தொடர் தொங்கிக் கொண்டிருக்கின்றது. பேரூர் கோயிலிலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சங்கிலித் தொடர்கள் இருந்தமையும் ஈண்டு நோக்கற்பாலது இவை அனைத்  ைத யும் ஒரே கல்லிலிருந்து வடிக்கப்பட்டுள்ளன என்பதை நினைக்கும் போது சிற்ப வல்லுநர்களின் கைத் திறனை வியந்து போற்ற மல் இருக்க முடியாது.
23
தென்னிந்தியாவின் அதென்ஸ் நகரம்
சுற்றுலாவின் நான்காம் நாள். பொங்கலன்று மறுநாள் பொங்கல் விழாக்கள் தொடர்ந்து நடைபெறும் புனித நாள். ஜனவரி மாதம் பதினைந்தாம் நாள். திங்கட்கிழமை, எங்கும் விழாக்கோலம். நான் பிறந்த நன்னுள் என்பதை பும் நினைவுபடுத்திக்கொண்டேன். கோயம்புத்தூரிலிருந்து 14 ஆந் தேதி இரவு பதினெரு மணிக்குப் புறப்பட்ட

தென னிந் ஆதியாவின அதென்ஸ் நகரம் 153
சிறப்புப்புகைவண்டி மறுநாள் காலை ஆறரை மணி அளவில் மதுரை மாநகரை அடைந்தது.
மதுரை என்ருல் இனிமை என்பது பொருள். இந்நக. ரில் தணியா அன்பு கொண்ட சிவபெருமான் அமிர்தம் என்னும் மதுவைத் தெளித்ததனுல் மதுரை என்னும் பெயர் பெற்றது என்பது பாரம்பரியக் கதை ஒன்றின் விளக்கம்.
தமிழ் நாட்டிலே புகழ் பெற்ற நகர் தமிழர் பண்பாட்டின் மிகப்பழைய நடுநிலையம். மதுரை என்ற இடச் திலே முதன் முதல் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது என்பர். முதற் சங்கம் வீற்றிருந்த இடமான தென் மதுரை கடல்கோளுக்கு இலக்காகவே இரண்டாம் சங்கம் கபாட புரத்தில் அமைந்திருந்தது என்றும் அப்பகுதியும் கடல் கோளுக்கு ஆளாகவே பாண்டிய மன்னர் தமது தலைநகரை மதுரையில் அமைத்தனர் என்றும் அங்கேதான் மூன்ரும் தமிழ்ச்சங்கம் வீற்றிருந்தது என்றும் கூறுவர். தூய அறிஞரினலும் புனித மன்னராலும் இச்சங்கங்கள் அமைக்கப்பட்டன என்பர். இச்சங்க நிகழ்ச்சிகளில் சிவ பெருமான் பங்கு பற்றினர் என்றும் சிறந்த கவிதையின் தரத்தை நிலை நிறுத்தினர் என்றும் கூறுவர். சிவபெருமான் அறுபத்திநான்கு திருவிளையாடல்கள் புரிந்தருளிய பெரு. நகர். மதுரையின் வரலாறு பாண்டியனின் வரலாருகவே உள்ளது.
வடமொழி மகாபாரதம், இராமாயணம், இலங்கை மகா வம்சம், அசோக மன்னனின் கல்வெட்டுக்கள் (கி.மு. 269) மெகஸ்தனிஸ் என்ற கிரேக்கரினதும் (கி.பி.மூன்ரும் நூற்றுண்டு) பிளினி (கி.பி. 79) யினதும் அறிக்கைகள் முதலியவற்றில் மதுரை பற்றிய குறிப்புக்கள் இடம்

Page 83
54 நெஞ்சில் நிலைதத சுற்றுலா
பெற்றுள்ளன. தற்கால மதுரை நிறுவப்பட்ட வரலாறு பற்றிய குறிப்புகள் உள்ளன.
இரண்டாம் சங்கம் வீற்றிருந்த கபாடபுரம் கடல் கோளுக்கு இரையாகியதும், பாண்டியன் முடத்திருமாற னும் அவனது குடிமக்களும் சான்ருேரும் கடல்கோளுக்கு ஆளாகாமல் தப்பிப்பிழைத்தனர். மணவூர் என்ற இடத் திலே பாசறை கட்டினர். அக் கிராமம் மதுரையிலிருந்து 7 மைல் தூரத்தில் உள்ளது. அம்மன்னனே அவனைத் தொடர்ந்து ஆட்சி புரிந்தவர்களோ மதுரை நச ரை அமைத்து அங்கிருந்து ஆட்சி புரிந்து வந்தனர். அதனைத் தலைநகராகக் கொண்டனர். அந்நிகழ்ச்சி எப்பொழுது நடைபெற்றது என்பதை நிச்சயமாகக் கூறுவதற்குப் போதிய சாட்சிகள் இல்லை.
சங்க கால இலக்கியங்களிலே மதுரையைப் பற்றிய பல குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. "மாடமதுரையும் தருகுவன்' என்கிறது புறணுநூறு (32) "பெரிய நான் மாடத்தாலே மலிந்த புகழைக்கூடுதலை உடைய மதுரை என்று மதுரைக்காஞ்சியில் (429) மதுரை வருணிக்கப்பட் டுள்ளது. நான்கு மாடம் கூடலின் "நான் மாடக்கூடம் என்ற பெயரைப்பெற்றுள்ளது. நான்கு மாடங்களாவன: திருவாலவாய், திருநள்ளாறு, திருமடங்கை, திருநடுவூர் என்பனவாம். கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என்பன அந்நான்கு மாடங்கள் என்றும் கூறுவர். "நான் மாடக் கூடன் மகளிரு மைந்தரும்’ என்கின்றது, கலித்தொகை (92-65) "மாடங்கள் மிக்க ஏனைத்தெருக்களையும் உடைய மதுரை” என்று திருமுருகாற்றுப்படை (71) மதுரையை வருணிக்சிறது. பரிபாடல் (120 - 104) மதுரையை "மாடக்கூடல்' என்று விவரிக்கிறது, "கங்கையாகிய அழகிய பெரியயாறு ஆயிரமுகமாகக் கடலிலே சென் முற்போல்

தென்னிந்தியாவின் அதென்ஸ் நகரம் 155
அளந்து முடிவறியா மதுரை” என்றும், "வளப்பம் பொருந்தின அரும் பண்டங்களோடு தேவருலகம் வந்து" காணுதலுண்டாகத்தான் அழகைப்பெற்று மிகுத்துப் புகழைப் பெற்ற பெரும் பொருளையுடைய மதுரை என்றும் மதுரைக் காஞ்சி மதுரையை இவ்வாறு புகழ்கிறது.
கங்கையம் பேரியாறு கடற்படர்ந் தா அங் கள ந்து கடையறியா வழங்கெழு தாரமெடு புத்தேளுலகங் கவினிக் காண்வர மிக்குப்புகழெய்திய பெரும் பெயர் மதுரை.(696-699)
கி பி. மூன்றும் நூற்ருண்டோடு சங்க காலம் முடிவுற் றது என்பர் பாண்டிய நாட்டை வடக்கிலிருந்து வந்த களப் பிரர் ஆக்கிரமித்துக் கொண்டனர் சமணமும் பெளத்தமும் தலை தூக்கின. பரப்பப்பட்டன மதுரையை ஆண்ட மன்னர் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள் ளன. சிலப்பதிகாரம் மாடமதுரை எனப் புகழ்வதோடமை யாது மதுரைக் காண்டம் என்ற ஒரு பகுதியையே கொண் டுள்ளது.
ஆபுத்திரன் என்பவன் முதலிற் பல நாளிலிருந்து அறஞ்செய்தது இந்நகரத்தே தான் என்று மணிமேகலை’ கூறுகிறது. பாண்டியனது பெரிய ஊராகிய மதுரை என்ற பொருளில் கரவலன் பேரூர் (5254) என்றும் தென்றிசைக் கண் உள்ள மதுரை என்ற பொருளில் "தக்கண மதுரை" (13-105) (22-106) என்றும் தென்தமிழ் மதுரை (25-139) என்றும் "வெம்மையின் மதுரை' (26-12) என்றும் செழு நகர் (28-94) என்றும் மதுரைக் கூலவாணிகன் சீத்தலேச் சாத்தனர் தமது மணிமேகலையில் மதுரையை விதத் தோதி யுள்ளார். திருக்குறள் அரங்கேற்றப்பட்டதும் மதுரையிலே மூன்ரும் தமிழ் சங்கத்திலேயே என்று கூறுவாரும் உளர்.

Page 84
56 நெஞசில் நிலைத்த சுற்றுலா
கடுங்கோணின் வெற்றியுடன் மதுரையில் மீண்டும் பாண்டியர் ஆட்சி ஏற்பட்டது. அது நிகழ்ந்தது கி.பி. 575 இல். கி. பி. 640 இல் மதுரையில் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த கூன் பாண்டியன், தமிழக சம்ய வரலாற் றைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானவராகக் கருதப் படுகிருன். அம்மன்னன் சமணசமயத்தைப் பின்பற்றிய
மையினல் சைவ சமயம் வலுக்குன்றியது.
மதுரையில் சம்பந்தப் பெருமானுர் தங்கியிருந்தருளிய திருமடத்தில் சமணர் நள்ளிரவில் தீ வைத்தனர். இதனை உணர்ந்த சம்பந்தப் பெருமானுர் பையவே சென்று பாண் டியற்காகவே' என்று பணிதருளினர். பாண்டியன் வெப்பு நோயால் அல்லலுற்றன்.
இதை அறிந்த மணிமுடிச்சோழனின் மகளான இராணி மங்கையர்க்கரசியும் அமைச்சர் குலச்சிறை நாயனுருழ் பால்யவயதினரான திருஞான சம்பந்த நாயனர் உதவியை நாடினர். சம்பந்தப் பெருமாஞர் பல அற்புதங்களை நிகழ்த்தியும், சமணருடன் வாதாடியும் அவர்களைத் தோற் கடித்தார். மன்னரையும் மக்களையும் சைவ சமயத்தைப் பின்பற்றச் செய்தார். திருஞான சம்பந்த நாயனர் திரு வெண்ணிற்றுத் திருப்பதிகம் பாடிப் பாண்டியனின் நோயைப் போக்கி அருளினர்.
இத்திருப்பதிகத்தின் முதல் திருவிருத்தம் இவ்வாறு அமைந்துள்ளது.
மந்திரம் ஆவது நிறு
வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு
துதிக்கப்படுவது நீறு

தென்னிந்தியாவின் அதென்ஸ் நகரம் 157
தந்திரம் ஆவது நீறு
சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திரு ஆலவாயான் திருநீரே.
இவ்வாறு திரு நீற்றின் பெருமை பல திருவித்தங் களில் பாடப்பட்டுள்ளது. மதுரைக்குத் திருவாலவாய் என்ற பெயரும் உண்டு.
கி.பி. 788-815 காலத்தில் ஆட்சி புரிந்த வரகுண பாண்டியன் பண்டிநாட்டின் எல்லையைப் பெருக்கினன். ஒரு பேரரசாகப் பாண்டி நாட்டை மாற்றினன். அவன் சிவ பக்தன். அம்மன்னனுடைய புதல்வனின் புதல்வனன வரகுணவர்மன் காலத்திலே மாணிக்கவாசக சுவாமிகள் வாழ்ந்தார் என்று கூறுவர்.
கி. பி. 900 ஆம் ஆண்டளவில் பாண்டி நாட்டைச் சோழர் வெற்றி கொண்டனர். மதுரையிலிருந்து சோழப் பெருமன்னர் கி. பி. 1216 வரை ஆட்சி புரிந்தனர். பின் னர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிபீடத்தில் அமர்ந் தான். சத்தியவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டியப் பேரரசை விரிவாக்கினன், மாறவர்மன் குலசேகர பாண்டியன் சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வந்தான். இத்தாலியத் தேசச்சஞ்சாரியான மார்க்கோபோலோ என் பவரும் வரலாற்ருசிரியர் வஸ்பு என்பவரும் அவனது ஆட் சியை வானளவாப் புகழ்ந்து உள்ளனர். ஆணுல் அவனுடைய புதல்வர் இருவரும் வீரபாண்டியனும் சுந்தர பாண்டியனும் தம்மிடையே போர் புரிந்தனர். இதன் பயணுக சுந்தர பாண்டியன் முஸ்லிம்களின் உதவியை நாடினன்.
தில்லிசுல்தான் அலாவுத்தீன் கில்ஜியின் சேனதிபதியான மாலிக்கபூர் மதுரைக்கு வந்து நிலைமையை தனக்குச் சாதக

Page 85
58 நெஞசில நிலைத்த சுற்றுலா
மாகப் பயன்படுத்தத் தவறவில்லை. 1323 இல் தில்லிசுல் தான் மஹ்முத்பின் துக்லக்கினுல் அனுப்பப்பட்ட ஜலா லுத்தீன் அஸன் ஷா மது  ைர  ைய க கைப்பற்றினன. மதுரையை தனிப்பட்ட முஸ்லிம் ஆட்சியில் கொண்டு வந்தான். மதுரை சுல்தான் என்று தன்னைப் பிரகடனம் செய்து கொண்டான். இக்கால முஸ்லிம் ஆட்சி 48 ஆண்டு கள் நீடித்தது. இக்கால எல்லையில் ஏழு முஸ்லிம் சுல்தான் கள் ஒருவர் பின் ஒருவராக மதுரையிலிருந்து ஆண்டு வந்தனர். முஸ்லிம் தேச சஞ்சாரியும் வரலாற்ருசிரியரு மான மொரொக்கோ நாட்டைச் சேர்ந்த இப்னு பத்தூத் தா தமது கீழை நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தை மேற் கொண்டு மதுரையில் தங்கினுர். இலங்கைக்கும் வந்தார்.
மதுரையில் முஸ்லிம் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத் தவன் குமார கம்பண்ண என்னும் விஜயநகர மன்னஞ வான். இதைத் தொடர்ந்து நாயக்கர் ஆட்சி மதுரையில் நிலவியது, இராணி மங்கம்மாவின் ஆட்சியும் குறிப்பிடத் தக்கதொன்ருகும். அவள் மாமன்னன் அவுரங்கஜிப்புடன் உடன்படிக்கை செய்து கொண்டாள். சிலகாலம் செல்ல ஆர்காட் நவாபின் ஆட்சி இடம் பெற்றது. பின்னர் மகாராஷ்டிர முஸ்லிம் போர் மூண்டது. இதனுல் தமிழக மே சீர்குலைந்தது. இச் சந்தர்ப்பத்தை ஆங்கிலேயரும் பிரன்சியரும் நிலைமையைப் பயன்படுத்தி உள்நாட்டுக் கல வரத்தில் ஈடுபட்டனர். சந்தா சாகிப்புக்கும் முஹம்மத லிக்கும் போர் மூண்டது. அப்பொழுது பிரன்சுக்காரர் சந்தாசகிப்புக்கு உதவி செய்தனர். ஆங்கிலேயர் முஹம் மதலிக்கு ஆதரவு நல்கினர். தொடக்கத்தில் சாந்தாசகிப்பு வெற்றி பெற்ற போதிலும் ஆங்கிலேயரின் ஆதரவுடன் முஹம்மது யூசுப் கான் என்பவன் மதுரையைக் கைப்பற் றிஞன். 1759 முதல் 1763 வரை மதுரையை ஆண்ட

தென்னிந்தியாவின் அதென்ஸ் நகரம் 159
யூசுப்கான் ஆண்டு தோறும் ஆங்கிலேயருக்கு ஐந்து இலட்சம் ரூபா செலுத்தி வந்தான். 1780க்குப் பின்னர் தமிழ் நாட்டிலே ஆங்கிலேயர் ஆட்சி 1947 வரை நீடித்தது. தமிழ் நாட்டிலே உள்ள இரண்டாவது பிரதானமான நகரம் மதுரையாகும் இந்தியாவில் உள்ள ஏனைய பண் டைய நகரங்களைப் போலல்லாது மதுரை பல சோதனை களுக்குள்ளாயது. பல்வேறு ஆபத்துக்களிலிருந்து தப்பிப் பிழைத்துள்ளது. திராவிடப் பண்பாட்டிற்கும், நாகரீகத் துக்கும் தனிப்பெரும் நடுநிலையமாக கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகத் திகழ்ந்து வந்துள்ளது. ஐரோப்பிய அறி ஞர் மதுரையை "தென்னிந்தியாவின் அதென்ஸ் நகரம் எனப்பாராட்டி உள்ளனர் கிரேக்க நாட்டின் தலைநகர் அதென்ஸ் அரசியல் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், வாணிபத் துறையிலும், கல்வி கலாச்சாரத் துறையிலும், நாகரீக அபிவிருத்தியிலும் உலகுக்கே முன் மாதிரியாக அதென்ஸ் நகரம் ஒரு காலத்தில் திகழ்ந்தது. தலை சிறந்த தத்துவ ஞானிகளை உலகுக்கு அளித்தது அதென்ஸ் நகரம். ஒரு காலத்தில் உலக நாகரீகத்தின் உச்ச நிலையில் இருந்தது அதென்ஸ் நகரம்.
பபிலன், கிறீஸ், மிஸ்று (எகிப்து) முதலிய நாடுகளு டன் மதுரை வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததென வரலாறு சான்று பகர்கின்றது. சந்திர குப்தமவுர மன்ன னின் கொலுமண்டபத்தில் கிரேக்கத் தூதுவராக வீற்றி ருந்த மெகஸ்தனிஸ் (கி. பி. 320 இல்) மதுரையில் ஒரு பாண்டிய இளவரசி ஆட்சி புரிந்து வந்தாள், என்று குறிப்பிடுகிருர் .
தாலமி என்பவர் தென் இந்தியாவில் உள்ள பாண்டியப் பேரரசின் ஆட்சிப் பீடமாக மதுரை திகழ்ந் தது என்றும் மத்தியதரைக்கடலைச் சார்ந்த நாடுகளின்

Page 86
160 நெஞ்சில நிலைத்த சுற்றுலா
பண்டப் பெருநிலையமாகவும் வணிகமையமாகவும் மதுரை திகழ்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். கவுதி ல்யரின் அர்த்த சாஸ்திரத்திலும் மதுரை இடம் பெற்றுள்ளது.
24
Gior GofyJo qf , !
வன்றிறல் வருணன் விட்ட மாரியை விலக்க வீசன் மின்றிதழ் சடையினின்று நீங்கிய மேக நான்குங்
குன்று போனி வந்து நான்கு கூடமாக் கூடலாலே அன்று நான் மாடக் கூடலானதான மதுரை மூதூர்,
சோமசுந்தரக் கடவுளின் ஆற்றலை வருணன் மதிக்க வில்லை. மதிக்காமல் மதுரையை அழிக்க முனைந்தான் வருணன். அளவிறந்த மழையைப் பொழிந்து அழிக்க நினைத்தான். அதற்காக ஏழு மேகங்களையும் வருணன் ஏவினன். இதனைத் தடுத்து, வருணனின் கொட்டத்தை அட க்கக் கடவுள் விரும்பினர். இறைவனின் சடையிலிருந்து நீங் கிய நான்கு முகில்களும் மலைபோல உயர்ந்து வந்தன. வந்து நான்கு மாடங்களாகக்கூடின. கூடிலருணனின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கின. நான்கு மாடங்கள் போல மேகங்கள் கூடியதனுல் ‘கூடல்' என மதுரை அழைக்கப்பட்டது. அதன் பின்னர் "நான் மாடக் கூடல்' என்றும் மதுரை வழங்கப் பட்டது.
இது பரஞ்சோதி முனிவரின் கூற்று, திருவிளையாடற் புராணத்தில் கூடற்காண்டத்தில் நான் மாடக்கூடலான

புண்ணியம் புரி பூமி 161 படலத்தில் (21) இடம் பெற்ற செய்யுள் இது.
குமரகுருபர அடிகள் தமது மதுரைக் கலம்பகத்தில் மதுரையைத் "தமிழ்க் கூடற்றிரு நகரம்’ என வருணித்துள் ளார், இவ்வாறு பல்வேறு காலங்களில் வாழ்ந்த வெவ் வேறு புலவர்களால் சிறப்பாகப் பாடப்பெற்ற தலம் மதுரை. முகம்மது இபுருகீம் என்னும் இயற் பெயரைக் கொண்ட மதுரை மீசல் வண்ணக் களஞ்சியப்புலவரும் தமது குத்பு நாயகம் என்னும் முகயித்தீன் புராணத்தில் மதுரை யைக் கூடல் (1.33) என்றும் தீன் விளக்கம் என்னும் காப்பி யத்தில் "கமலத்தடஞ் சூழ் கடல்’ (1-38) என்றும் வருணித் துளளார்.
கதுமென வெழுஉச்சினை கொள் புது மலர் வண்டுந் தேனு முண்டன் களிப்ப நரவிருந் தளிக்கும் புறவுறழ் சோலை வளனற வறியா மல்லலம் முதுநகர்
என்று விரைந்தெழுந்து, கொம்புகள் தம்மிடத்துக் கொண்ட புதிய பூக்கள் ஆண் வண்டும் பெண் வண்டும் உண்டு களிப்படைய, தேனை விருந்தாகக் கொடுக்கின்ற காட்டோடு மாறுபட்ட சோலைகளை உடைய செல்வம் ஆறுதலை அறி யாத வளமுள்ள அந்த மதுரை என்கிற முதிய பட்டணம்" என குலாம் காதிறு நாவலரி தமது புவராற்றுப் படையில் வருணித்துள்ளார்.
இத்தகைய சீரும் சிறப்பும் பெற்ற மதுரையைப் பற் றிய விவரங்களையும் நாம் அறிய வேண்டுமல்லவா? மதுரை நகரின் பரப்பு 8.56 சதுர மைல்களாகும். 1871 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி மதுரையில் 51,987 மக்களே வாழ்ந்தனர். 1961 இல் 4,24,810 மக்கள் வாழ்ந்தனரென்று அறியக்கிடக்கிறது. மதுரை மாநகரசபை

Page 87
162 நெஞ்சில் நிலைத்த சுறநூறுலா
எல்லைக்குள் 128 மைல் நீளமான தெருக்கள் உள்ளன. இவற்றை மாநகரசபையே பரிபாலித்து வருகின்றது
மதுரையில் ஐந்து கலைக் கல்லூரிகள் உள்ளன. அவற் றுள் இரண்டு பெண்பாலார்க்காகவே நிறுவப்யட்டுள்ளன. பொறியியற் கல்லூரியும் அங்கு உண்டு. அங்கு இயங்கி வரும் 31 உயர்நிலைப் பள்ளிகளில் பதினென்று, மாணவி களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 143 ஆரம்பப் பாலர் பள்ளி களும் இருக்கின்றன. அங்கு உள்ள மூன்று ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுள் இரண்டு பெண்களைப் பயிற்றுவதற் காகவே அமைந்துள்ளன. தொழில் நுட்பக் கல்லூரிகள் இரண்டும் தமிழ் கீழ் நாட்டுக் கல்லூரி ஒன்றும் கருநாடக இசைக்கான ஒரு பயிற்சி நிலையமும் அங்கு இயங்கி வரு கின்றன. மதுரைப் பல்கலைக் கழகமும் அண்மையில் நிறுவப் பட்டது. எல்லா வசதிகளைக் கொண்ட ஒரு மருத்துவ மனையும் வைத்தியக் கல்லூரியும் இயங்கி வருகின்றன.
தற்கால மதுரையின் வரலாற்றிலே பல முக்கியமான நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன, கி. பி. 1606 இல் நொபிலி என்ற இத்தாலிப் பாதிரியார் மதுரையில் குடியேறினர். சென்னை அரசாங்கம் 1790 இல் ஒரு பிரகடனத்தின் மூலம் மதுரையைக் கைப்பற்றியது. 1816 இல் மாவட்ட முன் சீப்கள் நியமிக்கப் பட்டனர். 1873 இல் மாவட்ட நீதி மன்றங்கள் நிறுவப்பட்டன. 1899 இல் சூரிய அவதான நிலையம் அமைக்கப்பட்டது.
மதுரைக்குத் தென்மேற்கே நான்கு மைல் தூரத்தில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. அது கடல் மட்டத்தி லிருந்து 1048 அடி உயரத்தில் இருக்கிறது. அங்குள்ள மிகச்சிறந்த கருங்கற்கள் மதுரைக் கோயிலை அமைக்கப் பயன்படுதப்பட்டன என்பர். பக்கீர் சிக்கந்தரின் கல்லறை அக்குன்றின் உச்சியில் இடம் பெற்றுள்ளது என்பர்.

புண்ணியம் புரி பூமி 163
உலகம் அறஞ்செய்யுமிடம். அவ்வாறு அறஞ் செய்வ தஞல்விளையும் பயனைப்பெற்று இன்பத்தை அடையும் இடமா யமைந்துள்ளது வானுலகம் விண்ணுலகம்பற்றி இவ்வாறு பழைய நூல்களை ஆராய்ந்தோர் கூறுவர். ஆனல் மதுரை நகரமோ இக்கூற்றுக்கு விதிவிலக்காக அமைந்துள்ளது. ஏனெனில் மதுரை எப்பொழுதும் அறஞ்செய்யும் இடமா சகி காட்சியளிக்கிறது. அம்மட்டன்று. அவ்வாறு செய்த அறத்தின் பயனக விளையும் பயனைப் பெற்றுப் போகத்தைப் பொருந்தி இன்பத்தை அடைவதற்கு இட மாயும் மதுரை அமைந்துள்ளது. இந்நகரச் சிறப்பைக்கூற வந்த பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற் புராணத்தில் இவ்வாறு ஒரு பாடலில் குறிப்பிடுகிருர், இது தான் அப்பாடல்
புண்ணிய ம்புரி பூமிபா ரதில் வரு போகம் நண்ணி யின்புறு பூமிவா னடென்ப நாளும் புண்ணி யம்புரி பூமியு மதில்வரு போகம் நண்ணி யின்புறு பூமியு மதுரை மா நகரம் (103)
இத்தகைய புண்ணிய பூமியில் கால்வைத்ததும் வழக்கம்போல் வரவேற்பு நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. பூரண கும்பங்கள் நிறைந்திருந்தன. எல்லா இடங்களும் அலங் கரிக்கப்பட்டிருந்தன. தோரணங்கள் கொட்டை எழுத்துக் கள் பொறிக்கப்பட்ட் வரவேற்புச் சுலோகங்களைக் கொண்ட பாதகைகள் பாதைகளை அலங்கரித்துக் கொண்டிருந்தன. புகைவண்டி நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் எல்லோரும் மாலைகள் அணிவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் ஒரு புயல் வீசத் தலைப்பட்டது. சுற்றுலாவின் முதல் மூன்று நாள் நிகழ்ச்சிகளும் சுற்றுலாவில் பங்குபற்றியவர்களுக்கு ஓய்வு அளிக்கவில்லை. சிறப்பாக

Page 88
164 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
மூன்று நாட்களிலும் நடைபெற்ற பொதுக் கூட்டங்களும் இரவு ஒன்பது பத்துமணி வரை நீடித்தன சிலர் இதனைச் சசிக்க முடியாத தொல்லை என உணர்ந்தனர். மேனுட்ட றிஞர் சிலர் இதை இட்டு சுற்றுலாவை ஒழுங்கு செய்தோ ருக்கு முறையிட்டனர். அவர்களும் இம் முறையீட்டை ஏற்றனர். நடவடிக்கையும் எடுத்தனர் அம்முறையீட்டின் பெறுபேருக ஒரு சுற்று நிருபம் வெளிவந்தது. சிறப்புப் புகைவண்டியில் அமைந்திருந்த அலுவலகத்திலிருந்து அனுப் பப்பட்டது. திரு. ஏ. சுப்பையா அவர்களே அதில் கையொப்பமிட்டிருந்தார்கள்.
ஒவ்வொரு நாளும் சுற்றுலாவில் பங்கு பற்றுபவர் களுக்குப் பல நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டிய நிர்ப் பந்தம் ஏற்படுகிறது. சிறப்பாகப் பொதுக்கூட்டங்கள் அளவுக்கு அதிகமாக இழுத்துச் செல்லப்படுகின்றன எனவே பொதுக்கூட்டங்களில் பங்கு பற்ற விரும்பாதோர் புகை வண்டியிலேயே தங்கி விடலாம் என்னும் கருத்தைக் கொண்டதாக அச்சுற்று நிருபம் அமைந்திருந்தது. முத் தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் போன்றேர் இச்சுற்று நிருபத்தை அங்கீகரிக்க வில்லையாயினும் வெளிப் படையாக எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
மதுரையில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளைக்கொண்டு அச்சாகி இருந்த நிகழ்ச்சி நிரல் அட்டை மதுரைப் புகை வண்டி நிலையத்திலே வைத்து அனைவருக்கும் பகிரப்பட்டது. முதல்மூன்று நாட்களைப் போன்று நிகழ்ச்சிகள் அங்கும் இடம் பெற்றதாகத் தோன்றவில்லை. பொதுக்கூட்டத்துக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கவில்லை இந்தத்தவறுகாரணமா கவே அங்கு கருத்து மோதல் ஏற்பட்டது.
முத்தமிழ்க் காவலர் கி. ஆ பெ. விசுவநாதம் நிகழ்ச்சி நிரலை அங்கீகரிக்கத் தயாராக இருக்கவில்லை. சுற்றுலாவின்

புண்ணியம்புரி பூமி 165
போது தமிழக அரசின் பிரதிநிதிகளுள் ஒருவராகவே அவர் சென்றிருந்தார். ஒவ்வோர் இடத்திலும் பொதுக் கூட்டம் இன்றியமையாதது என்பதை அவர் வலியுறுத்திக் கொண்டிருந்தார். முத்தமிழ்க் காவலர் மதுரை மாவட்ட ஆளுநருடன் இது பற்றி உரையாடிக் கொண்டிருந்தார். ஆளுநருக்கோ என்ன விடை கூறுவதெனப் புரியவில்லை. முத்தமிழ்க் காவலர் கருத்தை அறிந்தபின்னர் தாம் தவறு செய்துவிட்டதாக ஒருவேளை மாவட்ட ஆளுநர் உணர்ந் திருக்கலாம்.
இவ்வாறு கருத்துப் பரிமாறிக் கொண்டிருக்கும் பொழுது திரு, ஏ. சுப்பையா அவ்விடத்துக்கு வந்தார். வந்து உரையாடலில் குறுக்கிட்டார். பொதுக்கூட்டம் அவசியமில்லை என்றும் பொதுக்கூட்டம் காரணமாகப் பிரதிநிதிகள் கஷ்டப்படுகின்றனர் என்றும் வாதாடினர். இந்தச் சந்தர்ப்பத்திலேதான் முத்தமிழ்க் காவலர் முன்பு குறிப்பிட்ட சுற்று நிருபத்துக்குத் தமது எதிர்ப்பைத் தெரி வித்தார். முத்தமிழ்க் காவலரும் சுப்பையாவும் கருத்து மோதலில் ஈடுபட்டிருக்கும் பொழுது ஆளுநர் திகைத்தார். தமிழக அரசின் பிரதிநிதியாக வந்த முத்தமிழ்க் காவலரின் கருத்தை ஆதரிப்பதா இரண்டாவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் நெருங்கிய தொடர்பு கொண்ட சுப்பையா அவர்களின் கருத்தை ஆதரிப்பதா என்ற இக்கட்டான நிலையில் இருக்கிருர் போல் முன்பு தோன்றி யது. பின்னர் அவரின் உரையாடல் அவரின் குறிக்கோளை அவர்தம் பணிபுரியும் ஆற்றலை எடுத்துக் காட்டியது.
தமிழக அரசு எங்களுக்குச் சில கட்டளைகளைப் பிறப் பித்துள்ளது. அவற்றிற்கிணங்க நாம் பணி புரிதல் வேண் டும. மிஸ்டர் சுப்பையாவின் கட்டளைக்கிணங்க நாம் பணி புரிய வேண்டுமென நாம் ஆணையிடப்படவில்லை என்று

Page 89
66 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
ஆளுநர் உறுதியாகக் கூறிஞர், பின்னர் பொதுக்கூட்டத் துக்கு ஏற்பாடாகியது. புயலும் ஓய்ந்தது. எந்தக்கட்சி ஆட்சிபீடத்திலமர்ந்திருந்தாலும் அரசாங்க உத்தியோகத் தர் அவ்வரசாங்கத்தின் கட்டளைகளை மேற்கொண்டு தமது கடமைகளைச் செவ்வனே செய்தல் வேண்டும் என்பதை மதுரை மாவட்ட ஆளுநரின் அன்றைய நடவடிக்கை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது அல்லவா?
25
GO) GUGDCh bjö 5GDJIÓ6) (5566)0
வைகை நதிக்கரையிலே மதுரை அமைந்துள்ளது. வைகையின் மறு கரையிலே ஒரு கட்டடம் உண்டு. அதன் பெயர் 'தம்கும் அக்கட்டடம் மதுரை மாவட்ட ஆளுநரின் உறைவிடமாக உள்ளது. தம்கும் என்ற சொல் தமக மு என்ற சொல்லிலிருந்து மருவி வந்துள்ளது. "தமகமு” என்ற தெலுங்குச் சொல்லின் பொருள் கோடைகால உறைவிடம் என்பதாகும். அது திருமலை நாயக்கரினுல் கட்டப்பட்டது. அக்கட்டடத்தின் சிறப்பியல்பு அங்குள்ள தாமரை மண்டபமாகும். அம் மண்டபத்துக்கு மேலாக தாமரைப்பூ கீழ்மேலான உருவில் மேற்தளம் அமைந்திருப் ப்தேயாம்.
ஆளுநரின் உறைவிடத்துக்கு அணித்தாக உள்ள பூங்கா தமுக்கம் பூங்கா" என அழைக்கப்படுகிறது. அங்கு தமுக்

வைகை நதிக்கரையில் குதூகலம் 167
கம் திறந்த வெளி அரங்கம் ஒன்று உண்டு. அப்பகுதிக் குப் பெயரி தல்லாகுளம், மதுரைக்குச் சென்றதும் அன் றைய முதல் நிகழ்ச்சி தமுக்கம் திறந்த வெளி அரங்கத் தில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது.
அன்று திங்கட்கிழமை காலை 9-30 மணி. சென்னை யில் நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மகாநாட்டின் பிரதிகளை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுரை நகர எல்லைக்குள் வாழும் பள்ளிக் குழந்தைகளின் ஆடல்பாடல்களும் இடம்பெற ஒழுங்குகள் செய்யப்பட் டிருந்தன.
திறந்த வெளி அாங்கிலே ஒரு மேடை அமைந்திருந் தது. மேடைக்கு எதிரே பரந்த வெளியில் பள்ளிக்குழந் தைகள் குழுமி இருந்தனர். வரிசையாக நின்றனர். பல் வேறு பிரிவுகளாக குழந்தைகள் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வோர் ஆசிரியை தலைமை தாகி கினர். பல்வேறு பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு நடைபெற்ற ஆடல் பாடல்களில் பங்குபற்றினர். மிகவும் கட்டுப்பாடுடையோராய் ஒழுகினர். Unreu மாணவர் இனத்துக்கு முன்மாதிரியாக நடந்துகாட்டினர்.
பள்ளிச்சிருர்களுக்கும் மேடைக்கும் இடைப்பட்ட பகுதியில் மேடைக்கு அணித்தாக ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. மதுரை மாவட்ட ஆளுநரும் தாய்லாந்தைச் சேர்ந்த தமிழ் மகாநாட்டுப் பிரதிநிதியும் அம்மேடையில் நின்றனர். ஒவ்வோர் ஆசிரியையும் முன்னே செல்ல அவர்களுக்குப் பின்னலே மாணவர்களும் அணி வகுத்துச் சென்றனர். அணிவகுப்பு மரியாதையை முன்பு கூறிய இருவரும் ஏற்றனர். கவர்ச்சிகரமாக இருந்த அந்த அணி வகுப்பில் ஆசிரியைகள் நடந்து சென்ற முறைமை எல்லோருடைய கவனத்தையும் ஈரித்தது. அனை

Page 90
168 நெஞசில் நிலைத்த சுற்றுலா
வரும் வீறு நடை போட்டனர். நடைகீதத்தையும் இசைத் துக்கொண்டே சென்றனர் அவர்களின் நடைகீதத்தின் ஒரு பகுதி இவ்வாறு அமைந்திருந்தது.
மாணவப் படையிது மதுரை நகரில் கூடுது தமிழர் இனத்தில கூடிவந்த மாணவர் படையிது பண்டையத் தமிழகத்தை பசுமையாகச் செய்து மே சுருங்கச் சொலலி விளக்கவைக்கும் முறையிலும் நமக்குள்ளே உலகத் தமிழர் ஒன்று கூடி உய்ய வழிவகுத்ததுமே உற்ற வழி வள்ளுவர் வழி என்று முடிவு காண்போமே
இவ்வாறு வேறு ஏட்டுச் சரணங்களைக் கொண்டு அந்த நடைகீதம் அமைந்திருந்தது. கண்ணகியின் கற்பு, கம்பனின் சிறப்பு, சுதந்திரத்தின் இன்றியமையாமை, பாரதியின் சீர் திருத்தம், ஒளவையாரின் பெருமை, சிதம்பரஞரின் உழைப்பு, புது முயற்சியின் முக்கியத்துவம், மேனட்டுப் பேரறிஞர் தமிழ் நாட்டில் புரிந்த தொண்டு என்பன நடைகீதத்துக்குப் பொருளாய் அமைந்திருந்தன. நடை கீதமும் மாணவர் அணிவகுப்பும் எடுப்பாகவே காட்சி அளித்தன. நூற்றுக்கணக்கில் அங்கு கூடியிருந்த பள்ளிச் கிருர்கள் நடந்து கொண்டதன்மை எல்லோரையும் ஆச்ச ரியத்தில் ஆழ்த்தியது. நன்கு பயிற்றப்பட்டவர்களாய்க் காட்சியளித்தனர். ஆசிரியர்களுக்கும் கீழ்ப்படிவு உள்ள வர்களாக நடந்து கொண்டனர். அணிவகுப்பு முடிந்ததும் தத் தமக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களுக்குச் சாரி சாரி பாய் சென்று அமர்ந்து கொண்டனர்.
அடுத்த பொது வரவேற்பு ஆரம்பமானது. மதுரை
மாவட்ட ஆளுநர் தலைமை வகிக்க வரவேற்புக் கூட்டம் ஆரம்பமானது. வழக்கம் போல் வரவேற்பிதழ்கள் வாசிக்கப்

வைகை நதிக் கரையில் குதூகலம் 169
பட்டன. முதலில் மதுரை நகர மன்றத்தாரின் வரவேற் பிதழ் வாசிக்கப்பட்டது. அவ்வரவேற்பிதழில் மதுரை நகர சபையின் சின்னம் பொறிக ப்பட்டிருந்தது. "சேவையே இன் பம்’ என்ற சொற்ருெடர் அச்சின்னத்திற்கு அழகு செய்து கொணடிருந் கது சேவை செய்து இன்பம் அடை வதே மதுரை நகர சபையின் குறிக்கோள் என்பது அதிலி ருந்து புலனுகிறது.
சென்னையில் நடந்த உலகத் தமிழ் மகாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் 1968 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் நாளன்று மதுரை வந்த போது மதுரை நகர மன்றக் தார் வாசித்தளித்த வரவேற் பிதழில் பிரதிநிதிகள் ‘தமிழ் வளத்தைக்காக்கும் காவலர் கள் என்றும் "செந் தமிழ் நாட்டின் சீர்போற்றும் செம்மல் காள்’ என்றும் 'தண்டமிழின் புகழ்பரப்பும் தவப்புதல் வர்கள்" என்றும் "அன்னத்து நாட்டு அருந் தமிழ் சான்ருேர் கள்' என்றும் பலவாறு அழைக்கப்பட்டனர்.
"பாவலரும் நாவலரும் வளர்த்ததோடமையாது பாண் டிக் காவலரும் காத்து நின்றனர் நமதரு மைத் தமிழை சீரிளமைத் திறங்கொண்ட செந்தமிழைச்செப்பின் நாமணக் கும். கற்பின் உளங்கணிக்கும். ஏற்றமிகு இன்றமிழை எண்திசைப் பரப்பி ஏந்தலெனத் திகழும் காவலர்காள் நுங்கள் வரவு நல்வரவாகுக!.
தானுெரு புலவனுய் சங்கத்தில் வீற்றிருந்து இன்புறு கவி தைகளை இயற்றியளித்த இறைவனும், இங்குளான் தமிழின் சுவையுணர்ந்த ஞானசம்பந்தனும் இன்னிசையால் தமிழ் பரப்பி இன்புற்ருன். மலையிற்ருேன்றி மதுரைப் பொற்ரு மரைக் கயத்தில் அரங்கேறிய ஈரடிக்குறளுக்கு நேருண்டோ. இன்னும் எத்தனையோ உண்டு. அத்தனைக்கும் இந்நகரம் சான்று.

Page 91
f7 O நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
? யாமறிந்த மொழிசளிலே தமிழ்போல் இனிதாவ தெங்கும் காணுேம், எனப்பாடிய பாட்டுக்கொருபுலவன் பாரதியின் எண்ணத்தை உலகமெல்லாம் பரப்பப்பாடுபட்டு வையை மணலினும் பலவாய் ஆண்டுகள் வாழ எல்லாம் வல்ல அங்கயற்கண் அம்மையையும் ஐயனையும் இறைஞ்சு கின்ருேம்." என்று முடிவடைகிறது அவவரவேற்பிதழ்.
மதுரை நகர்ப் பள்ளி மாணவ மாணவியர் மற்ருெரு வரவேற்பிதழை வாசித்தளித்தனர். அவ்வரவேற்பிதழ் பாவாகவே அமைந்திருந்தது. அதன் முற்பகுதி இவ்வாறு அமைந்திருந்தது.
உலகெலா முணர்ந்து ஒதற் கரிதாய் நிலையிலா உலகில் நின்று நிலை பதாய அகல சுடராய், அம்பல ஒளியாய், மலரால் சிலம்பும், மகிழ்வால் கலையும், சிந்தா மணியும், சீருடை கேசியும் , தந்த வளையா தண்மைப் பதியும் குறளும், தொகையும், குணமாய் பாட்டும் அறமுடைப் பாவும், அழகுடைப் பரணியும், தன்னகம் கொண்ட தளிர்மை மொழியாய் தென்றலில் தோன்றி, தென்னவன் மடியில் தவழ்ந்து, தளிர்நடை காட்டி, தங்கக் கர மதில் வீணையும், கவின் மிகு ஏடும பெருமை பெறவே பெற்ர பேதை, மதுரை நகரில் மாண்புற வீற்று, மதுரத் தீந்தமிழ், மகர யாழிசை இனிய நாடகம், ஏழிசைக் கூத்துடன் தனியே நின்றவள் தன் பெரு வழியே, தெலுங்கும், துளுவும். தென்மொழி பிறவும், நலுங்கு பாடி நன்கே ஈன்றவள் சங்கம் கொண்ட தாக மதுரை.

வைகை நதிக்கரையில் குதூகலம் 7
வரவேற்பிதழில் பண்டைக்காலத்தில் தமிழிலே தோன் றிய சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, நீலகேசி, வளையாபதி, திருக்குறள், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு முதலியன குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். வர வேற்பிதழின் இறுதியில் "பள்ளிச்சிருர்கள்’ என்றே குறிப் பிடப்பட்டுள்ளது.
வரவேற்பிதழ்கள் வாசித்தளிக்கப்பட்ட பின்னர் சிருர் களின் ஆடல் பாடல்கள் ஆரம்பமாயின. ஆட்டங்களுக் கிணங்க பாடல்கள் பாடப்பட்டன. மாணவர்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு பிரிவுக்கும் அணித்தாக அவர்களின் ஆட்டங்களுக்கு இன்றியமையாத உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஆட்டத் துக்கும் உரிய உபகரணங்களை ஒரே முறையில் அனைவரும் எடுத்தனர். எடுத்து ஆடினர்.
வளையம் என்னும் ஆட்டம் முதலில் இடம் பெற்றது. வளையங்களை எடுத்துத் தாளத்துக்கியை பாட்டுப் Luntஆடினர். ஆசிரியைகள் தாளம் போட்டனர்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றலும் ஆதவன் மறை வதில்லே ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஒய்வ திலலை.
என்ற பல்லவியுடன் ஆரம்பித்து,
gtg6) st ερις 62υιτ eg 62) f ஆளப்பிறந்தவரைப்
M u Tluq 6 U T- e5u5gp தேடித் தந்தோரைப் போற்றிவா (ஆடி வா) என்ற சரணத்துடன் மற்றும் நான்கு சரணங்
சளைக் கொண்ட தாய் வளையம் ஆட்டத்தின் Linr.-d அமைந்திருந்தது.

Page 92
72 நெஞசில் நிலைத்த சுற்றுலா
மகிழ்வோம் மகிழ்வோமே உலகத் தமிழர் தினம் மகிழ்வோமே பாலர்கள் ஒன்ருய்க் கூடிடுவோம் பாங்குடன் ஆடிப் பண் பாடுவோம்
என்பது போன்ற ஐந்து பகுதிகளைக் கொண்டு கஞ்சரா ஆட்டத்துக்கான பாடல் இடம் பெற்றது.
அடுத்தக் கம்பு ஆட்டம் நடைபெற்றது. கம்பு என்னும் கழிகளைக் கொண்டு ஆடும் ஆட்டத்தின் போது,
அன்பு கொண்ட தமிழர்கள் நாம் ஆசை உள்ளம் கொண்டவர் நாம் பண்பு நெறியில் வாழ்பவர் நாம்
பாரதத்தின் புதல்வர்களாம்
என்று ஆரம்பிக்கும் பாடல் பாடப்பட்டது.
அடுத்த ஆட்டம் "லெசிம்" என்னும் ஆட்டம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனல் "லெசிம்’ என்ற சொல் தமிழ்ச் சொல்லாய் இருக்க முடியாது. ஏனெனில் லகரம் தமிழில் சொல்லுக்கு முதல் எழுத்தாய் வராது. லெசிம் ஆட்டத் துக்குரிய பாடல் இவ்வாறு அமைந்திருந்தது.
பாலர் நாம் பாங்குடனே பாடி ஆடுடிவோம் பார்புகழும் தமிழின் பெருமை என்று கூறியே தமிழகத்து நான்கு கோடிமக்களின் தனிச்சிறப்பு பெற்று வந்த தமிழினை அன்னியரும் வியக்கும் அளவு வளர்ந்த தமிழினை அனைவருமே ஆடிப்பாடி நாமும் போற்றுவோம்.
கோலாட்டம் அடுத்து இடம் பெற்றது. கோலாட்டத்

வைகை நதிக்கரையில் குதூகலம் 73
திலே பாடப்பட்ட பாடல் பல சந்தர்ப்பங்களில் பாடப் பட்ட பாடலாக அது அமைந்திருந்தது. படப்பட்டாக ஒலித்த அப்பாடல்,
ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லே என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமேயில்லே என்று ஆரம்பித்து அப்பாடல் அங்கு கூடியிருந்த அனை வரும் பாடக்கூடிய பாடலாக அமைந்திருந்தது.
"செந் தமிழ் நாடென்னும்.என்ற பாரதியாரின் பாடல் பாடப்படும் மெட்டுக்கிணங்க பாடக்கூடிய பாட லாக அடுத்து இடம் பெற்ற பாடல் அமைந்திருந்தது. அப்பாடல் கு" மி ஆட்டத்தில் பாடப்பட்டது! அப்பாடல் உள்ள முசல் சரணம்,
தமிழர் அனைவரும் கொண்டாடும் பொங்கல் தாரணியிலே தைப் பொங்கல் ஒன்றே சமய ஜாதி வேறுபாடு அணுகாத சங்கராந்தியும் நிலையத்த தன்றே.
பின்னர் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் பொருட்டு மதுரை ஆளுநர் முதலியோர் நின்று கொண் டிருந்த சிறிய மேடையிலே நடன நிகழ்ச்சிகளும் கரக ஆட்டங்களும் நடைபெற்றன. மதுரை வடசரக தனி யார் பள்ளி*ள் குழுப்பயிற்சியினரால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் "ஒளி படைத்த கண்ணினுய்" என்ற பாரதியார் பாடலின் மெட்டுக்கிணங்க ஒரு பாடல் அமைந் திருந்தது.
இப்பாடலில் உள்ள ஒரு சிறப் மிசம் என்னவெனில் அங்கு தமிழக அமைச்சர்கள் அனைவரினதும் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தமையேயாகும். இவ்வாறு அமைச்சரி

Page 93
174 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
களின் பெயர்கள் இப்பாடல்களின் கடைசிப் பகுதியில் இட ம் பெற்றிருந்தன,
அதிமதுரத் தமிழ்ச்சுவையை ஊட்டி வளர்த்த அறிஞர் அண்ணு முதல்வரையும் பார் பார் பார். மதியழகன் நெடுஞ்செழியன் கருளுநிதி மங்கை சத்தியவாணி முத்தைப் பார் பார் பார். எதிலும் அஞ்சா மாதவன் கோவிந்தசாமி இனிய முத்துச் சாமி சாதிக் பார் பார் பார். புதிய பேரறிஞரோடு புலவர்கள் வாரார் புவனம் அறிய வாழ்த்துரைத்துப் பார் பார் பார்.
இந்நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் பிரதிநிதிகளுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. மேசையில் சாதா ரணமாக வைக்கப்பட்டுள்ள தாள் பறக்காமல் மேல் வைக்கப்படும் பளுவுடைய பொருளாக - தாட்கட்டையாக வைக்கக் கூடிய சங்குகள் வழங்கப்பட்டன. அச்சங்கு களிலே "குழந்தைகள் விளையாட்டு விழா, மதுரை! தமிழ் நாடு’ என்ற எழுத்துக்களும் மதுரைக் கோவிலின் உருவ மும் 15 - 1 = 68 என்ற திகதியும் பொறிக்கப்பட்டிருந்தன
இறுதியாக ஊக்க ஒலிகள் எழுப்பப்பட்டன. ஆசிரியர் ஒன்று கூற மாணவர் மற்றென்றைக் கூறும் பாணியில் அமைந்திருந்தன. அங்கு எழுப்பப்பட்ட ஊக்க ஒலிகள்.
ஆசிரியர் தமிழன்னையை மாணவர் ; போற்றிடுவோம் ஆசிரியர் : புலவர்களை மாணவர் ; புகழ்ந்திடுவோம் ஆசிரியரி ; எல்லா வகுப்பும் மாணவர் : இங்கொன்றே ஆசிரியர் : ஜாதிக் கொடுமைகள்

காநதிநிலையம் என்ருெரு சாந்தி நிலையம் 175
மாணவர் : இங்கில்லை
ஆசிரியர் : உயர்வு தாழ்வு
மாணவர் : கிடையாது ஆசிரியர் : ஆயிரம் மாண்புற மாணவர் : தொழில் செய்வோம் ஆசிரியர் இந்திய நாட்டை மாணவர் : உயர்த்திடுவோம்.
இந்த ஊக்க ஒலிகளில் எத்தனையோ உண்மைகள் பொதிந்திருக்கக் காணலாம். இன்றைய சூழ்நிலையில் நாம் பின்பற்ற வேண்டியனவாயும் அவை அமைந்துள்ளன. கடைசியாக தேசீய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் பிரதி நிதிகளுக்கு தேநீர் விருந்துபசாரம் நடைபெற்றது.
26
5T55 52auth என்ருெரு GN Šjautö
**தனக்குத் தானே பணி புரிய வேண்டும் தனது குடும்பத்துக்குப் பணி புரிதல் வேண்டும். தனது நாட்டுக்குப் பணிபுரிதல் வேண்டும். உலகத்துக்கே பணிபுரிதல் வேண்டும். இவை தனித்தவை அல்ல. ஒன்று மற்றதில் தங்கி உள்ளது. முன்னது இன்றேல் பின்னது

Page 94
176 நெஞசில் நிலைத்த சுற்றுலா
இல்லை. தன்னையோ, தனது குடும்பத்தையோ புண்படுத்து கின்றவன் உலகுக்கு நம்மை செய்யமாட்டான். அதே போன்று உலகத்தை துன்புறுத்துபவனல் நாட்டுக்கு நன்மை ஏற்படாது."
"தனிப்பட்டவன் என்ற முறையில் ஒருவன் தனது குடும்பத்துக்காகத் தன்னை தியாகஞ் செய்கிருன், அத் தியாகம் முதலில் குடும்பத்துக்கு நன்மை - விளைக் கிறது. குடும்பத்தின் தியாகம் சிராமத்துக்கு நன்மையாக அமைகிறது. கிராமத்தின் தியாகம் மாவட்டத்துக்கு நன்மை அளிக்கிறது. மாவட்டத்தின் தியாகம் மாகா , ணத்துக்கும் மாகாணத்தின் தியாகம் நாட்டுக்கும் உறுதுணை யாக அமைகின்றன. சுதந்திரம் அடைந்திருந்தால் ஒரு நாட்டின் தியாகம் அத்தகையதே ஆகும். நாட்டின் தியாகத்தினுல் உலகம் நன்மை அடைகிறது. ஒரு நாட்டின் அத்தகைய தியாகம் அந்நாட்டுக்குப் புகழைத் தேடிக் கொடுக்கிறது.*
"இறுதிப்பாகு பாட்டைநோக்கும் பொழுது நாம் செய்யும் தியாகம் நமது குடும்பத்தை வாழச் செய்யும், குடும்பம் தியாகம் செய்தால் மாத்திரமே நாடு செழிப். புறும். சீர்பெற்ருேங்கும். நாட்டின் தியாகத்திலேயே உலகத் தின் வளம் தங்கி இருக்கின்றது. உலகம் மேம்பாடடை யும். ஆனல் ஒன்று தூய்மையானவற்றை மாத்திரமே தியாகஞ் செய்யலாம். எனவே ஒருவன் தன்னைத்தானே தூய்மைப்படுத்திக் கொண்டால் மாத்திரமே அவனுடைய தியாகம் சிறப்புற்றதாய் விளங்கும். இருதயம் புனிதமடை யின் தமது நடவடிக்கைகள ஆாய்மையானவையாகும், எனவே நாம் உளத் தூய்மை உடையோராய் இருத்தல் வேண்டும்."

காந்தி நிலையம் என ருெரு சாந்தி நிலையம் 177
'ஒருவன் முதலில் தேசிய வாதியாய் இருந்தாக மாத்திரமே அகில உலக அடிப்படையில் சிறந்து விளங்க 6) frth. முன்னது இல்லையேல் பின்னதை ஈட்டிக் கொள்ள முடியாது. நாட்டுப் பற்றுடைய நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு முகப்பட்டு, ஒரே மனத்தினராய்ச் செயற்பட முடியுமாயின் அகில அடிப்படையில் ஒன்று படுதல் எளிதாகும். தீமைபயப்பது நாட்டுப்பற்று அன்று. குறுகிய நோக்கம், பொருமையும் ஒதுங்கி வாழும் விருப்பமுமே unrg5ub."
• உலகின் சிறந்த தலைவர்கள் இன்று விரும்புவது ஒன் ருேடொன்று போர் புரிந்து கொண்டிருக்கும் பூரண சுதந்திர நாடுகளை அன்று சிநேகித அடிப்படையில் ஒன்று சேர்க்கப் பட்ட சுதந்திரநாடுகளையேயாம்."
"இங்கிலாந்தை அழித்து விடவோ, ஆங்கிலேயரை இல்லாமற் செய்யவோ வழிவகுப்பின் இந்தியா சுதந்திர மடைவதை நான் விரும்ப மாட்டேன். எனது சுதந்திர நாட்டிலிருந்த ஏனைய நாடுகள் படிக்கக்கூடியவகையிலும் எனது நாட்டின் வளங்களை மனித வருக்கத்தின் நன்மைக் காகப் பயன்படுத்தக் கூடியவகையிலுமே எனது நாடு சுதற் திரம் அடையவேண்டும் என விரும்புவேன்.”
இவற்றைக் கூறியவர் தாம் வாழ்ந்த காலத்தில் மா பெரும் மனிதர், எனக் கணிக்கப்பட்டவர். பெரும்பதவி வகித்தவரி அல்லர் அவர். ஆட்சி பீடத்தில் அமர்ந்தவரும் அல்லர். அத்தகையோரைவிடப் புகழ் பெற்றவர். ஆத் மீகத்துறையில் சிறப்படைந்தவர். தமது செல்வாக்கிலும் பெற்ற தலையிமைலும் அகில உலகம் மீதும் உள்ள அன் பிலும் மனிதவருக்கத்தின் மீதுள்ள நம்பிக்கையிலும் சிறந்து விளங்கியவர். தம்மை தமது நாட்டின் சாதாரண ஒரு

Page 95
178 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
தொண்டனகக் கருதியவர். தமது மதம் புவியியல் எல்
லைகளை அறியாதது என்று பெருமை கொண்டவர். ஒரே
உலகம் உலக அமைதி என்ற கொள்கைகளைத் தமது
வாழ்க்கைத் தத்துவங்களாகக் கொண்டவர் அகிம்சா மூர்
த்திய கப் புகழ்பெற்ற அவர் வேறுயாரும் அல்லர். இந்
தியரவின் தவப்புதல்வர்களுள் சிறந்து விளங்கிய மகாத்மா
ந்தியே ஆவர்.
காந்திமகான் பிறந்த காலத்தில் இந்தி பாவினதும் கீழ்
நாடுகளினதும் எதிர் காலம் இருளடைந்திருந்தது. பண் டைய பெருமையை மீண்டும் நிலைநிறுத்த முயன்ற முக லாயரின் ஆட்சி தோற்கடிக்கப்பட்ட காலம் அது. மத்திய ஒழக்கில் துருக்கியின் வலி குன்றிருந்தது. சீனப் பெருஞ்சுமை களைத் தாங்கி இருந்தது. ஐரோப்பாவின் புது ஏகாதி பத்திய ஆட்சி எங்கும் பரவிக் கொண்டிருந்தது. ஆசியாவின் பண்டைய பெருமை மறந்தனர் மக்கள். ஆனல் மகாத்மா காத்தி மறையும் போது நிலைமை மாறி இருந்தது.
இந்திபா மக்களின் தன்மானத்தைக் காப்பாற்றியவரி ஆவர். அத்தகை பொரியார் கூட ஒருவரின் குண்டுக்கு இரையானர். மகாத்மாவின் பிரிவைக் கேட்ட கவிமணி தேசகவிநாயகம் பிள்ளை இவ்வாறு மெய்ம்மறந்து பாடினுர்,
திடம் படைத்த கல்நெஞ்சும் திடுக்கிட்டு
நடுநடுங்கிச் சிதறிப் போக மடம் படைத்த மாபாவி வஞசனை யால் காந்திமகான் மடியச் சுட்டான் உடம்பனைத்தும் வாயாக அழுதாலும்
உறுதுயரம் ஒழிந்திடாதால் இடம் படைத்த உலகாளும் இரையே நீ எங்கொழிந்தாய் இந்நாள் ஐயா

காந்தி நிலையம் என்றெரு சாந்தி நிலையம் 179,
1948 ஆம் ஆண்டு காந்திஜி மறைந்ததும் காந்திஜி யின் ஞாபகார்த்தமாக ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப் பொது மக்களிடமிருந்து நன்கொடைகள் கோரப்பட்டன. செல் வந்தர் வறியவர் அனைவரும் போட்டியிட்டுக் கொண்டு தங்சளால் இயன்றவற்றை அளிக்க முன் வந்தனர். அதன் பயணுக காந்திசம்ரக் நிதி-காந்தி நினைவு நிதி உருவாகியது
மகாத்மா காந்திஜீயின் வாழ்க்கையோடு நெருங்கியம் தொடர்புடைய ஏழு இடங்களில் காந்தி ஞாபகார்த்தப் பொருட்காட்சிச் சாலைகள் நிறுவ ஏற்பாடாயது. அதற் கென அந்நிதியிலிருந்து ஒரு கோடி ரூபா ஒதுக்கப்பட்டது.
காந்தி சம்ரக் நிதி மதுரையில் அத்தகைய ஒரு பொருட் காட்சிச்சாலையை நிறுவியது காந்திஜியின் வாழ்கை யோடு தொடர்புடைய பல முக்கிய இடங்கள் தென் இந்தியாவில் உள்ளன. ஆனல் அத்தகைய இடங்கள் அனைத்தையும் விட மதுரை மாநகரம் அதன் உரிமையை எடுத்துக் காட்டியது. உலகெங்கிலும் "அரை நிர் வாணம் பக்கிரி" என்ற பெயரைப் பெறுவதற்குக் காரணமான "அரைத் தணியை" அணியும் பழக்கத்தை முதன் முதலில் 1921 இல் மதுரையில் காந்திஜி மேற்கொண்டார். மது  ைரயிலேதான் முதல் முதலில் மாபெரும் மீனுட்சி கோயிலின் கதவுகள் ஹரி ஜனங்களுக்காகத் திறந்து வைக்கப்பட்ட ன. "தீண்டாமைக்கு எதிரான மாபெரும் போராட்டத்தில்வெற் றியும் முதன் முதல் ஈட்டப்பட்டது மதுரையிலேயாகும். இந் நிகழ்ச்சிகள் மதுரையிலே மகாத்மா காந்தி ஞாபகார்த்த பொருட்காட்சிசாலை நிறுவும் வாய்ப்பை ஏற்படுத்தின.
அப்பொருட்காட்சிச் சாலை தமுக்கம்மாளிகையில் இடம் பெற்றுள்ளது. நாயக்க பரம்பரையைச் சேர்ந்த இராணி மங்கம் மாளினல் அம்மாளிகை 1670 ஆம் ஆண்டில்

Page 96
8O நெஞ்சில் நிலைத்த சுற்றுலா கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக ஆளுநரின் உத்தியோக உறைவிடமாக இருந்தது. காந்தி ஞாபகார்த்தப் பொருட் காட்சிச்சாலையை நிறுவும் பொருட்டு 1954 ஆம் ஆண்டில் அம்மாளிகையையும் பதின்மூன்று ஏக்கர் நிலப்பரப்பையும் காந்திஜி சம்ரக் நிதிக்கு சென்னை அரசாங்கம் நன்கொடையாகக் கொடுத்தது. மாளிகை புதுப்பிக்கப்பட்டது. திறந்த வெளி வட்டரங்க்ம் ஒன்று அமைக்கப்பட்டது. இவ்வேலைகளுக்காக காந்தி சம்ரக் நிதி 14 இலட்சம் ரூபாவைச் செலவழித்தது.
மதுரைப் பள்ளி மாணவரின் விளையாட்டு விழாவைக் கண்டு களித்த எம்மை காந்தி சம்ரக் சங்கிராலயவுக்கு அழைத்துச் சென்றனர். அதைக் காணச் செல்பவர்களுக்கு உணர்ச்சி ஊட்டக்கூடியதாக அந்நிலையம் அமைந்துள்ளது. காந்திஜியின் வாழ்க்கையையும் சாதனைகளையும் போத னேகளையும் இளைஞருக்கு எடுத்துக் காட்டுவனவாக அது அமைந்துள்ளது. மகாத்மா காந்தியின் மனக்காட்சிக்குரிய வாழ்க்கை வரலாறு போன்று காட்சி அளிக்கிறது, காந்தி மகானின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடைய ஓவியங்களையும் சிற்பங்களையும் கையேடுகளையும் மனி மொழிகளையும் விலை மதிக்க முடியாத காட்சிப் பொருள்களையும் கொண்டு விளங்குகிறது பொருட்காட்சிச் afmā. vo
தாம் அங்கு பார்த்தவற்றை கண்டுகளித்தவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். "தமிழ் நாட்டில் காந்திஜி என்ற காட்சியை நாம் முதன் முதலில் கானக்கூடியதாக இருக்கிறது. தமிழ் நாட்டுக்கு மகாத்மா சிாந்திஜி பதின்னுன்கு முறை வந்துள்ளார். அடுத்துக் கேலிச் சிந்திரங்களில் மகாத்மாகாந்தியின் பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள வாழ்க்கை சித்திரிக்கப்பட்டுள்ளன.

காந்தி நிலையம் என்றெரு சாந்திநிலையம் 18
தமிழ் நாடு, மைசூர், ஆந்திரா, கேரளம் முதலிய பிர தேசங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பொறுக்கி எடுக்கப்பட்ட கைப்பணிப் பொருள்களின் மாதிரி உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து சென்றல் படக்களரியைப் பார்க்கலாம். புகைப்படங்கள், மணி மொழிகள், ஒவியங்கள் மூலம் மகாத்மாவின் வாழ்க்கை சித்திரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மகாத்மாவின் தெளிவுசெய்யப்பட்ட சில கடிதங்களின் புகைப்படங்களின் பிரதிகள் அங்கு உள்ளன.
அங்கிருந்து ஒரு சாலைக்கு அழைத்துச் செல்லப்பட் டோம். அச்சாலையில் மகாத்மா காந்தியின் சென்ற காலத்தை நினைவூட்டும் பழம் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. உண்மையாகக் காந்திஜி உபயோகித்த பொருள் களும் உபயோகித்த ஏனைய பொருள்களுக்குரிய உருவங் களும் பாதுகாக்கப்பட்டிருந்தன. அதனை "நினைவுச்சின்னச் Fmrðav” GT6 orøvrir : b. -
நிலத் தளத்தில் கடைசியாகக் காணக்கூடியது காதி, குடிசைக் கைத் தொழில் பகுதியாகும். மகாத்மா காந்தி புத்துயிரூட்டிய குடிசைக் கைத்தொழில்களை அங்கு கான oWfT Lb. عير
அக்கட்டத்துக்குத் தெற்குத் திசையில் 800 பேரைக் கொள்ளக்கூடிய பெரிய ஒரு திறந்த வெளி அரங்கு இருக் கின்றது. கலாச்சார நிகழ்ச்சிகளும் வாராந்தப் பேசும் படக் காட்சிகளும், சிறப்பான சந்தர்ப்பங்களில் பெரு மளவிலான பொதுக் கூட்டங்களும் அந்த அரங்கில் இடம் பெறுகின்றன.
அக்கட்டிடத்தின் வடபகுதியில் நூல்நிலையம் அமைத்

Page 97
182 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
துள்ளது. இந்தியாவின் கலாச்சாரப் பின்னணியை எடுத் துக்காட்டும் நூல்களும் காந்திஜியைப் பற்றிய நூல் களும், காந்திஜியின் வாழ்க்கைகளோடும் போதனை களோடும் தொடர்புடைய நூல்களும் அங்கு உள்ளன ஏறத்தாழ 14,000 தொகுதிகள் நூல்நிலையத்தை அலங் கரித்துக் கொண்டிருக்கின்றன. 27,000 கடிதங்களில் புகைப் படப் பிரதிகளும் நுண் படத்தகடுகளும் நூல் நிலயத்தின் சிறப்பம்சமாக விளங்குகின்றன.
பிரதான கட்டடத்தின் முன்புறமாகச் சற்றுத் தெற்குத் திசையில் "காந்தி குடில்’ இருக்கக் காணலாம். சேவா கிராமில் உள்ள காந்திஜியின் குடிசையின் முழு அளன தான மாதிரி உருவாக அக்காந்திக்குடில் அமைந்துள்ளது.
மகாத்மா காந்தி ஞாபகார்த்தமாக நிறுவப்பட்ட பொருட்காட்சிச் சாலைகளுள் முதன் முதலில் நிறுவப்பட் டது மதுரையிலேயாகும்.
அது 1959 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 15 ஆந் தேதியன்று இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவினல் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
காந்திஜியின் இலக்கியல் நிறைவுகளைப் பரப்புவதற் குரிய பணியை அந்நிலையம் மேற்கொண்டுள்ளது. கருத் தரங்கு, ஆராய்ச்சிவட்டம் குழு ஆய்வு மாணவருக்கான கோடைகால பாசறை இங்கே ஒழுங்கு செய்யப்படுகின்றன.
1969 ஆம் ஆண்டு ஒத்தேபர் மாதம் 2 ஆந் தேதி பில் எழும் காந்தி நூற்றண்டு விழாவை முன்னிட்டுக் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக மதுரை நகர உயர் நிலைப்பள்ளி மாணவருக்கான கல்வி நிகழ்ச்சி நிரல் ஒன் றைப் பொருட்காட்சிச் சாலை ஆரம்பித்துள்ளது. அவர்கள்

தெப்பக் குளம் கண்டேன் 183
முறைப்படியான ஆறுமணி நேரத்தைக் கொண்ட ஒரு நாட் பயிற்சியை பெறுவர். காந்தி அறிவுக்காட்சிக்சாலை என்று அது அழைக்கப்படுகிறது. சிறப்பாகத் தயாரிக்கப் பட்ட பாடப்புத்தகங்களைக் கொண்டு அத்திட்டம் செயல் முறைப்படுத்தப்படுகிறது. பேசும்படக்காட்சிகளும் இடம் பெறும். அக்கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் அதற் கென ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொருட்காட்சிச் சாலையின் கல்வி நிகழ்ச்சித் திட்டம் 1967 ஆம் ஆண்டு மார்சு மாதம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதுவரை 6000 மாணவர்கள் பயிற்றப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் பொருட்காட்சி சாலையைப் பார்ப்பதற்காக ஏறத்தாழ 350 பேர் வருகின் றனர். தினசரி நூல் நிலையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 150 ஆகும்.
தெப்பக்குளம்
ő6ÖTELGT
காந்தி சம்ரக் சங்கிராலயத்திலிருந்த மதுரையில் அமைந்திருக்கும் மாளிகைக்குச் சென்ருேம். அம் மாளி கைக்குச் சென்றதும் அதன் நிலைமையை உணரக்கூடியதாக
இருந்தது. முன்பு அது எவ்வாறு இருந்தது என்பதைக் கற்பளை செயயக்கூடியதாக இருந்தது. இன்று இருக்கும்

Page 98
184 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
மாளிகை முன்பு இருந்த மாளிகையின் ஒரு பகுதி என்பதை எளிதில் உணர முடிந்தது. ஒரு சிறுபகுதியாகவே காணப் படுகின்றது.
அது நாயக்க மன்னர் காலத்தில் நிறுவப்பட்டது. நாயக்கர் ஆட்சி கி பி. 1559 இல் ஆரம்பிக்கப்பட்டது. விஸ்வநாதன் என்பவனே நாயக்கர் ஆட்சியை ஆரம்பித்து வைத்தான், மதுரையில் நாயக்கர் ஆட்சி ஏறக்குறைய இரு நூற்ருண்டுகள் நடைபெற்றது. நாயக்கர் தம் ஆட்சியில் மதுரை நகர் வளம் கொழிக்கும் நகரமாக விளங்கியது. நாயக்கர் மன்னர் நிர்மாண வேலைகளில் சிறந்து விளங்கி ஞர். கோட்டை, கொத்தளங்கள், அணைக்கட்டுக்கள். கட்டு வாய்க்கால்கள் முதலியன அமைத்தனர். நாயக்க மன் னருள் கி. பி. 1623 முதல் 1629 வரை ஆட்சி செய்த திருபலை நாயக்கன் தலைசிறந்தவனக விளங்கினன். இப்போ தைய மதுரையிலுள்ள பல கட்டடங்கள் அவனது ஆற் றலையும் கலையில் அவனுக்கிருந்த ஈடுபாட்டையும் எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன. தெப்பக்குளம், புதுமண் டபம் ராயகோபுரம் தமுக்கம் என்பனவற்றுள் சிலவர்கும்.
அம் மாளிகையைக் கட்டி எழுப்பியவனும் திருமலை நாயக்கனே ஆவான். அது அப்பொழுது பெரிய மாளி கையாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் தமிழ் நாட்டுக்கு வந்த ஐரோப்பிய எழுத்தாளர் அம்மாளிகையை தீப்ஸ் நகரின் பண்டைய நினைவுச் சின்னங்களுடன் ஒப்பிடுகின் றனர். கோவில்கள் நிறைந்த தீப்ஸ் நகர் எகிட்ைதச் சார்ந்த இடம், திருமலை நாயக்கர் கட்டி எழுப்பிய மாளிகையை அவனுடைய மகனின் மகஞன சொக்கநாத நாயக்கன் அழித்தான். சொக்கநாதன் நாயக்கன் கி.பி. 1662 முதல் 1682 வரை ஆட்சி புரிந்தான். அவன் தனது தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினுன். அவன்

தெப்பக்குளம் s 608T CL6d 85 செய்வது மூடத்தனமான செயல் என்பதை அவன் உணரத் தவறி விட்டான். அவன் அம்மாளிகையை அழித்தமைக் குக் காரணம் அம்மாளிகையின் பகுதிகளைத் தனது புதிய தலைநகருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கமே
யாகும்.
மாளிகையில் இன்று எஞ்சியுள்ள பகுதி நீள்சதுர வடிவிலான இரண்டு கட்டடங்களாகும். அவை கிழக்கு மேற்காக அமைந்துள்ளன. ஒரு மூலையில் ஒன்றே டொன்று பொருத்தி உள்ளன. அம்மாளிகையில் இப்பொழுது நீதி மன்றங்கிள் இயங்கி வருகின்றன. மதுரையையும் இராம நாதபுரத்தையும் சார்ந்த சிவில் கிறிமினல் நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன.
இரண்டு கட்டடங்களுல் மிகப்பெரியது 252 அடி நீள மும் 151 அடி அகலமும் உடைய திறந்த ஒரு முற்றமாகும். அழகு மிக்க வில் வளைவு விதானம் அப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ளது. 40 அடி உயரமான சுற்றுாண்கள் அவ்வி தானத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. பளிங்குபோன்று காட்சி அளிக்கும் சுண்ணும்பு மென் சலவைச் சாந்தினல் உருவாக்கப்பட்ட திராவிடக்கலை அம்சங்கள் செங்கற் களினலான மேல் வளைவுகளை அலங்கரித்துக் கொண்
டிருந்தன.
வில் வளவு விதானங்களுக்குப் பின்புறமாக அழகுடைய அலங்காரங்கள் இடம் பெற்றுள்ள ஒதுக்கிடம் அமைந்துள் ளது. இப்பகுதி இப்பொழுது பிரிக்கப்பட்ட நீதிமன்ற சிறிைகளாக மாற்றப்பட்டுள்ளன. அம் மாளிகையில் பல கவிதை மாடங்கள் உள்ளன. அக் கவிதை மாடங்களுள் மிகப் பெரியது அக்கட்டடத்தின் நடுவில் உள்ளது. வீதின் விட்டம் 60 அடிகளாகும். நிலத்திலிருந்து 73 அடி

Page 99
露66 நெஞசில் நிலைத்த சுற்றுலா
கள் மேலாக அது அமைந்துள்ளது. "சுவர்க்க விலாஸ்’ என்று அழைக்கப்படும் அச்சாலை தர்பார் மண்டபமாக உபயோகிக்கப்படுகின்றது. குடிமக்களையும் பிற நாடுகளி லிருந்து வந்தவர்களையும் உபசரிக்கும் நாண் மகிழிருக்கை யாக நாளோலக்கமாக அது பயன்பட்டது.
மாளிகையின் எஞ்சியுள்ள இரண்டாவது கட்டடம் 135 அடி நீளமும் 67 அடிகள் அகலமும் 70 அடிகள் உயரமும் உடையது. பெர்குசன என்பவர் தம் கருத்துக்கிணங்க அக் கட்டடம் "கொதிக்' (GOTHI) சிற்ப முறையை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. கிழக்கு ஜெர்மனிய இனத்தவரின் இடைக்காலக் கூர்மா டச் சிற்பப்பாணியைக் "கொதிக்’ சிற்ப முறை என்பர்.
அதன் கூரை கூரான் வளைவாக அமைந்திருந்தது. தூண்களில் மேலான வளைவுகள் அதனைத் தாங்கிக் கொண் டிருந்தன. அவ்வளைகளுக்குப் பின்புறமாக அறைகூடம் இருந்தது. அது திருமலை நாயக்கனின் சயன அறையாக இருந்தது. அம் மாளிகையின் கூரையிலிருந்து பார்த்தால் மதுரை முழுவதையும் பார்க்கலாம் என்பர்.
ஆங்கிலேயர். தமிழ் நாட்டுக்கு வந்து மதுரையைக் கைப்பற்றும் பொழுது அம்மாளிகை அழிந்த நிலையில் இருந்தது. பாழடைந்து இருந்தது. அப்பொழுது சென்னை யில் நாபியார் பிரபு தேசாதிபதியாகக் கடமையாற்றினர். அவரது சொந்த முயற்சியினுல் 1868 இல் அம்மாளிகையின் புனர் நிர்மாணத்துக்காக அரசாங்கம் ஐந்து இலட்சம் ரூபாவை செலவழித்தது. மாளிகையும் திருத்தப்பட்டது. அதன் பயனுகவே மாளிகை இன்றைய நிலையைப் பெற் றுள்ளது.
மதுரைக்குச் செல்வோரைக் கவரக்கூடிய மற்ருேர்

தெப்பக் குளம் கண்டேன் 87
இடம் தெப்பக் குளமாகும். அது மாரியம்மன் கோயிலுக்கு அணித்தாக உள்ளமையினுலேயே தெப்பக்குளம் அவ்வாறு அழைக்கப்பட்டது. திருமலை நாயக்கணுல் அமைக்கப்பட்ட செயற்கைக் குளம் அது. திருமலை நாயக்கன் தனது மாளி கையை நிறுவுவதற்கு வேண்டிய செங்கற்களைப் பெற்றுக் கொண்ட இடத்திலேயே தெப்பக்குளம் அமைந்துள்ளது செங்கற்கள் தோண்டி எடுக்கப்பட்ட பொழுது யானை முகன் பிள்ளையாரின் பெரிய ஒரு கற்சிலை நிலத்தின் கீழ் புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பூரீமீனுட்சி கோவிலில் பிள்ளையார் உருவம் வைககப்பட்டது. இப் பொழுது அக் கோயில் முக்குருணி அரிசிப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறது. செங்கற்கள் பெறப்பட்ட இடம் திருமலை நாயக்கனல் குளமாக்கப்பட்டது.
அத்தெப்பக்குளம் ஏறக்குறைய சதுரவடிவில் அமைந் துள்ளது. அதன் நீளம் 1000 அடிகளாகும். அகலம் 950 அடிகளாகும். தென் இந்தியாவிலே மிகப் பெரிய அள வில் அமைக்கப்பட்ட குளம் அது எனலாம். குளத்தின் நடுவே ஒரு சிறுதீவு உண்டு. அது சதுர வடிவானது. பச்சைப்பசேலென்ற தாவரங்களும் பூஞ்செடிகளும் அங்கு இருப்பதைக் காணலாம். நான்கு பக்கங்களையும் நோக்கும் கோபுரங்களைக் கொண்ட ஒரு சிறு கோயில் அங்கு உள் ளது. அத்தீவின் நான்கு மூலைகளிலும் அழகிய சிறு மண் டபங்கள் நான்கு உண்டு, கண்ணைக் கவருவனவாக அவை ஏற்ற அளவில் அமைந்துள்ளன.
தெப்பத்திருவிழா நனடபெறும் தடாகம் தெப்பக் குளம் என அழைக்கப்படும் இக்கருத்தே திருக்குற்ருலக் குறவஞ்சியில்
"தெப்பக் குளங் கட்டி
தேர் மண்டபங் கட்டி" (92, 4)

Page 100
88 w நெஞ்சில் நிலைதத சுற்றுலா
என்று ஆளப்பட்டுள்ளது. தடாகத்தில் கோயில் மூர்த்தி யைத் தெப்பத்தின் மீது எழுந்தருளப் பண்ணிக் கொண் டாடும் திருவிழா தெடபத் திருவிழா எனப்படும்.
மதுரைத் தெப்பக்குளத்திலும் திருவிழா நடைபெற் றது. ஒவ்வொரு வருடமும் தை மாத உலா மதி - முழு நிலாவின் போதும் (ஜனவரி-பெப்ரவரியில்) திருவிழா கொண்டாடப்படுகிறது. மூங்கில்களால் அமைந்ததும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டதுமான தெப்பம் ஒன்றில் அத்தடாகத்தில் பூரீமீனட்சியினதும் சுந்தரரினதும திரு உருக்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன பல்லாயிரக் கணக்கான எண்ணெய் விளக்குகள் தடாகத்தையும் தடா கத்தின் சுற்ருடலையும் ஒளிமயமாக்கிக் கொண்டிருக்கும்.
அத்தெப்பத் திருவிழாவை ஆரம்பித்து வைத்தவர் வேறு யாரும் அல்லர். திருபலை நாயக்கனே யாவர். திருமலை நாயக்கனின் பிறந்த தினத்தைக் கொண்டாடவே முதன் முதலில் தெப்பத்திருவிழா ஒழுங்கு செய்யப்பட்டது. பின்னர் திருமலை நாயக்கனின் ஒவ்வொரு பிறந்த தினத் தன்றும் விழா மேற்கொள்ளப்பட்டது.
அக்காட்சிகள் எமது கண்களைக்குளிரச் செய்தது. அப் பொழுது நேரமும் பகல் 12 மணியைத் தாண்டிச் சென்று விட்டது. கண்கள் குளிர்ந்தால் மாத்திரம் போதுமா? வயிறும் ஆற வேண்டும் அல்லவா? ஆம், பசி ஆறுவதற் காக நாம் அழைத்துச் செல்லப்பட்டோம்.
அன்று பகற்போசன விருந்து அளித்தவர் டி. வி. சுந்தரம் ஐயங்கார் கம்பெனியின் சொந்தக்காரர். அவரின் தலைமை அலுவலகத்தில் விருந்து நடைபெற்றது மதுரை யையும் மதுரையைச் சூழ்வரவுள்ள ஏனைய நகரங்களையும் விருத்தி அடையச் செய்வதையே கண்ணும் கருத்துமாகக்

தொழில் வள நகர் 89 கொண்ட டி.வி. சுந்தரம் ஐயங்கார் அன்ட் ஸன்ஸ் 6)5 stu னத்தார் கைத்தொழில் வியாபாரம் போக்குவரத்து முதலிய பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
28
st5ff) als நகர்
இந்நூற்ருண்டின் ஆரம்ப காலம் அது. அப்பொழுது சுதந்தரம் ஐயங்கார் என்பவர் இளைஞராக இருந்தார். முதன் முதலாக மோட்டார் வண்டிகள் வரத் தலைப்பட்ட காலம் அது. இந்தியாவுக்கு தருவிக்கப்பட்ட சில மோட் டார் வண்டிகளைக் காணும் வாய்ப்பைப் பெற்ருர் சுந்
தரம் ஐயங்கார் என்பவர்.
"இப்பொழுது நாம் மாட்டு வண்டியில் செல்கிருேம். விரைவாகச் செல்லும் மோட்டார் வண்டிகளை எமது பிரயாணத்தில் உபயோகித்தால் எவ்வளவு நன்முக இருக் கும். மெல்லச் செல்லும் மாட்டுவண்டிகளை விடப் பயனு டையதாக இருக்கும். அவ்வாறு மோட்டார் வண்டிகளை உபயோகித்தால் பிரயாணிகளை மாத்திரம் அல்லாது பொருள்களையும் கொண்டு செல்லாம்.’’ இவ்வாறு தனக் குள்ளேயே சிந்திக்கலாயினர், அப்பொழுது இளைஞராக இருந்த சுந்தரம் ஐயங்கார் அவர்கள். அச்சிந்தனைகளைச் செயல் முறைப்படுத்தும் நோக்கத்துடன் பிரயாணிகளைக்

Page 101
190 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
கொண்டு செல்லும் பேருந்து (வசு) சேவை ஒன்றை1912 ஆம் ஆண்டு ஆரம்பித்தார்.
அத்தகைய ஒரு சேவையை அக்காலத்தில் ஆரம்பிக்கும் ஒருவருக்கு கடுமையான உழைப்பு அவசியமாயிற்று. பேரூந்து (வசு) என்னும் பயங்கரமான வாகனமொன்றில் மக்களை ஏற்றிச் செல்ல அவர்களைத் தூண்ட வேண்டியதாயிற்று. நாட்டுப்புறச் சூழலின் அமைதியைக் குலைக்கும் தன் மையது அது, தமது மோட்டார் வண்டிகளில் செல்பவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு உணவுப் பண்டங்கள் பிரயாணத்தின் போது வழங்கப்பட்டன. அத் தோடு வாகனங்கள் உபயோகிக்கும் பாதைகளைச் சீாப் படுத்தும் பொறுப்பையும் ஏற்கவேண்டி இருந்தது.
தமது முயற்சியில் வெற்றியடைய அரும்பாடு பட்டார் சுந்தரம் ஐயங்கார் அவர்கள். தமது அனுபவங்களின் மூலம் இரண்டு உண்மைகளை உணர்ந்தார். கண்ணியம், திறமை, காலந்தாழ்த்தாமை, வெற்றிக்கு இன்றியமை யாதன. திறமை வாய்ந்த பேரூந்துச் சேவை மாத்திரம் போதியதன்று, மோட்டா" உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் கைத்தொழிலின் இன்றியமையாமையையும் உணர்ந்தார்.
சுந்தரம் ஐயங்காரின் எண்ணங்கள் நிறைவேறின. பல சாதனைகளை அவர் சாதித்தார். ஐம்பது ஆண்டுகள் ஆவதற்குள் பெரிய தொழிற்சாலைகள் பலவற்றைக் கொண்ட ஒர் அமையத்தை அமைப்பதில் தனிப்பெரும் வெற்றி ஈட்டினர். தென்னகத்தில் உள்ள தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, மைசூர் என்ற நான்கு மகாணங் களிலும் அலுவலகங்களை நிறுவினர். 10,000க்கும் அதிக மான தொழிலாளாகளைக் கொண்ட நிலையமாக அவை

தொழில் வள நகர் 9. திகழ்கின்றன. இப்பொழுது அந்நிலையம் அதன் கிளைகள் நாட்டின் இயற்கைக் காட்சிகளின் அம்சங்களாகத் திகழ் கின்றன
1912 இல் பேருந்து சேவையை ஆரம்பித்த சுந்தரம் ஐயங்கார் மதுரைக்கும் தேவகோட்டைக்கும் இடையே முதன் முதலில் அச்சேவையை அங்குரார்ப் பணம் செய்து வைத் தரர். கடுமையான போட்டி காரணமாக அச்சேவை நிறுத்தப்பட்டது. 1921 இல் மதுரையில் மோட்டார் உதிரிபாகங்களின் விற்பனை நிலையம் ஒன்றை அமைத்தார். பின்னர் மோட்டார் வண்டிகள் விற்பனைப் பிரதிநிதியாகக் கடமையாற்றிஞர். டி. வி. எஸ். சுந்தரம் ஜயங்கார் அன்ட் சன்ஸ் என்னும் வரையறுக்கப்பட்ட கம்பெனி ஒன்று 1929 இல் நிறுவப்பட்டது. இக் கம்பெனியுடன் தொடர் புள்ள பல நிலையங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையில் ஈடுபட்டு வருகின்றது.
இந்தியாவிலே முதன் முதல் பேரூந்து என்னும் வசு வண்டி மதுரையிலே தான் உடயோகிக்கப்பட்டது என்பர். அக்காலத்தில் ஏகபோக உரிமையுள்ள பாதைகள் இருக்க வில்லே. உத்தரவுப் பத்திரம் பெற வேண்டிய அவசியம் இருக்கவில்லை. பத்திரங்கள் நிரப்பவேண்டிய தேவை ஏற் பட வில்லை. நகர் காவலரின் துண்டுப் பத்திரம் ஒன்று போதுமானது: ஒரு மைல் தூரத்தைக் கடக்க ஓர் அணு மாத்திரம் அறவிடப்பட்டது.
1939 இல் போட்டி காரணமாக ஒரு மைல் தூரத்தைத் தாண்ட ஒரு பைசா அறவிடப்பட்டது. எனினும் 1966 இல் டி. வி. எஸ். போக்குவரத்துக் கம்பெனியில் பேருந்துகளின் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்காகக் கூடியது. போக்குவரத்துச் சேவையின் ஒவ்வோர் அம்சமும்

Page 102
92 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
மிக நுணுக்கமாகப் பரிபாவிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வண்டியும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போக்குவரத்துத் தகுதியுடையதா என்று பரிசோதிக்கப்பட்டு அத்தா ட்சிப் பத்திரம் வழங்கப்படுகிறது. பத்து ஆண்டுகளுக் கதிகமாகப் பணிபுரிந்த ஊழியருக்கு பெருமதியுடைய கைக்கடிகாரம் வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் சேவை புரிந்தோரின் சிறுவர்களுக்கு பாடசாலைக் கட்டணமும், புத்தகங்களின் பெறுமதியும் வழங்கப்படுகின்றன. உதவிப் பணம் பெற்று இயங்கும் ஓர் உண்டிச் சாலையும் ஊழியருக்காக அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.
நவீன வசதிகளைக் கொண்ட பேரூந்துகள் அங்கு தயாரிக் கப்படுகின்றன. நாளொன்றுக்கு மூன்று வீதம் அமைக்கப்படு கின்றன சொகுசான ஆசனங்கள் அவற்றில் பொருத்தப்பட் ( ஸ்ளன. மோட்டார் வண்டிகளுக்கான பல்வேறு உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையும் மது ரையில் அமைந்துள்ளது. பயிற்சி உடைய தொழில் நுட்ப வல்லுநரினல் உயர்ந்த தாத்தனவாய் அவ்வுதிரிப் பாகங் கள் தயார் செய்யப்படுகின்றன.
மோட்டார் வண்டிக்குப் பயன்படும் இரப்பர் உதிரிப் பாகங்களைத் தயார் செய்யுமுகமாக இரப்பர் பொருள் உற்பத்திச்சாலை ஒன்று மதுரையில் உண்டு. தொழில் நுட்ப வல்லுநரின் மேற்பார்வையில் அவை உற்பத்தி செய்யப்படு கின்றன. சர்வதேச தரத்துக்கு ஏற்றனவாய் இவை தயாரிக்கப்படுகின்றன.
டி. வி. எஸ். நகரில் சுந்தரம் ஐயங்கார் உயர்நிலைப் பள்ளியும் ஆரம்பப்பள்ளியும் இயங்கி வருகின்றன. பல வசதிகளையும் கொண்ட tg. வி. எஸ். நகர், சுந்தரம் ஐயங் காரால் நிறுவப்பட்டது, ஆரம்பப்பள்ளி, 1962ல் ஆரம்பிக்

தொழில் வள நகர் 193
கப்பட் து. அப்பொழுது 62 மாணவர்களும் இரு ஆசிரி யர்களும் இருந்தனர். இப்பொழுது மாணவரின் எண் ணிக்கை 450 ஆகும். பதினெரு பிரிவுகளுக்குப் பொறுப் பாக 11 ஆசிரியர்கள் அங்கு பணி புரிகின்றனர்.
அரசாங்கத்தின் உத்தரவைப் பெற்று அங்கு 1980 இல் ஓர் உயர்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. உயர் நிலைப்பள்ளியில் இப்பொழுது 350 மாணவர்களும் 306 மாணவிகளும் கல்வி பயில்கின்றனர். 9 ஆசிரியைகளும் அங்கு பணிபுரிகின்றனர். சிறப்புக் கட்டணம் அங்கு அறவிடப்படுவதில்லை, அப்பிரதேசத்தில் உள்ள அத்தகைய உயர் நிலைப்பள்ளிகளில் ஏழினுள் அதுவும் ஒன்ருகும் பெண்கள் புறம்பாகவே படிக்கின்றனர். ஆங்கிலமும் அங்கு போதனுமொழியாக அமைந்துள்ளது. 12 இலட்சம் ரூபா செலவில் இப்பொழுது வகுப்பறைகள், ஆய்வுகூடங்கள் கைப்பணி அறைகள் முதலியன கட்டப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 11 ஏக்கர் நிலப்பரப்பில் அவை அமைநீ துள்ளன. இந்த ஏக்கர் நிலப்பரப்பு விளையாட்டுத்திடலா உபயோகிக்கப்பட்டு வருகின்றது.
பல்வேறு புத்தூக்க வகுப்புக்களில் அவ்வாசிரியர்கள் பகிகு பற்றுகின்றனர். விவாதங்களில் பங்குபற்றுகின்றனர். மேடைப் பேச்சில் மாணவருக்குப் பயிற்சி அளிக்கின்றனர். தெருக்களில் எவ்வாறு ஒழுகுதல் வேண்டும், பாதைகளைக் கடக்கும் போது எவ்வாறு நடத்தல் வேண்டும் என்பன வற்றை மாணவருக்குச் சிறு பிராயத்திலே புகட்டுவது சிறந்த ஒரு கைங்கரியமாகும். ஏனெனில் போக்குவரத்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. பாதைகளை உபயோகிப்போர் பிழையான முறையில் நடப்பதிஞலேயே விபத்துக்கள் ஏற்படுகின்றன. "சாலைச் செவ்வுணர்வு" இல்லாமையே பிரதான காரணமாகும். கட்டுப்பாட்டை அடிப்படையாகக்

Page 103
194 நெஞ்சில் நிலைத்த சுற்றுலர்
கொண்டே சாலைச் செவ்வுணர்வு” மாணவரிடையே புகுத் தப்படுகின்றது.
சென்னையிலேயுள்ள செல்ஸ் பூங்காவைப்போன்று நிறுவருக்கான போக்கு வரத்துப் பயிற்சிப் பூங்கா ஒன்று ஐம்பதிஞயிரம் ரூபா செலவில் மதுரையில் டி. வி. எஸ். உயர் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.
அப்பூங்காவிலே நாற்சந்திகள், முச்சந்திகள், வளைவுகள் முதலியன அமைக்கப்பட்டிருக்கின்றன. கடவைகள், ஒரு வழிப்பாதைகள், தாமாகவே இயங்கும் விளக்குச் சைகை கள் முதலியன அங்கு நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் இயக்கத்துக்கிணங்கி மாணவர் நடக்க வேண்டிய முறை அவர்களுக்குப் பயிற்றப்படுகிறது. aärut (8” போலவே அவர்கள் பழக்கப்படுகின்றனர். சின்னஞ்சிறு மிதி கார்கள், ஈருளிகள் (மிதிவண்டிகள்) பாதசாரிகள் அப்பயிற்சியின் போது இடம் பெறத் தவறுவதில்லை. அவற்றின் பயணுக தெருக்களைச் சிறந்த முறையில் உப யோகிக்கும் பயிற்சியை மாணவர் பெறுகின்றனர்.

29
வலதுபாதம்
தாக்கிஆடும் JLJTfÍ
தேவர்க்கு அதிபதி இந்திரன், ஒரு முறை இந்திரனுக் கும் அசுரஞன விருதரனுக்கும் போர் மூண்டது. கடுமை யாகப் போர் நடைபெற்றது. இறுதியில் விருதரன் ஓடி விட்டான். போர் முனையில் இருந்து ஓடிச் சென்றவன் குன் ருென்றின் உச்சியில் மறைந்து இருந்தான். இந்திரன் விருதரனைப் பின்தொடர்ந்தான். விருதரன் இருந்த இடத் தையே அடைந்து விட்டான். அங்கே விருதரன் தவம் புரிந்து கொண்டு இருந்தான். விருதரனைக் கொல்வதற்கான தகுந்த தருணம் அது எனக் கண்ட இந்திரன் விருதரனைக் கொன்ருன். தவம் புரிந்து கொண்டிருக்கும் ஒருவனை கொல்வது தகாது. பேரொழுக்கமுமன்று. அதனை உணர்ந்த இந்திரன் தான் முன்பு செய்த சடுதியான செய்கையை நினைந்து வருந்தினன். அது இந்திரனின் உள்ளத்தை உறுத்தியது. அப்பெரும்பழியை அவன் சுமக்க வேண்டி

Page 104
96 நிெஞசில் நிலைத்த சுற்றுலா
ஏற்பட்டது. அப்பழியோ தன்னுல் தாங்க முடியாததொன்று என்பதை உணர்ந்தான். தனது இராச்சியத்தில் அவன் அமைதி காணமுடியாமல் போய் விட்டது,
உடனே மானிட உலகத்துக்கு வந்தான், பல தீர்த் தங்களில் நீராடினுன், புண்ணிய தீர்த்தங்களில் நீராடியா வது தன் மீது சுமத்தப்பட்டுள்ள பழியைத் தீர்த்துக் கொள்ள விரும்பினுன், பாண்டி நாட்டிலேயுள்ள கதம்ப மரங்கள் நிறைந்த ஒரு காட்டினுரடாகச் சென்று கொண் டிருந் தான். அவ்வாறு செல்லும் பொழுது தான் சுமந்து சென்ற ஒரு பளு உடனடியாகக் குறைந்தது போல் இந் திரன் உணர்ந்தான். அங்ங்ணம் தனது நிலைமையை மாற் றக்கூடிய பொருள் எதுவாயிருக்கலாம் என்று எண்ணினுன் . இறுதியில் நிலைமையை ஆராய்ந்து வருமாறு தனது ஏவலா ளரைப் பணித்தான். அத்தகைய பொருள் ஏதேனும் இருப்பின் அதை அறிந்து தன்னிடம் கூறுமாறு கட்டளை இட்டான். ஏவலாளரும் அத்தகைய பரிசோதனையில் ஈடுபட்
டனர்.
அங்கே ஒரு குளம் இருந்தது, குளக் கரையில் கதம்ப மரங்கள் வளர்ந்து இருந்தன. ஒரு புரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அக் காட்சியைக் கண்ட ஏவலாளர் இந்திரனிடம் வந்து தாம் கண்டவற்றைக் கூறினர். சிவ பெருமானின் அருளாலே தனது பாவங்கள் தீர்ந்து விட்டன என்ற முடிவுக்கு வந்தான் இந்திரன். உடனே அந்த இடத்துக்கு விரைந்தான். அச் சிவலிங்கத்தை வணங் கினன். துதித் தான் பூசித்தான். அச் சிவலிங்கத்துக்கு மேலாக ஒரு விமானத்தைக் கட்டி எழுப்பினன். அதே லிங்கம் மதுரையில் உள்ள கோயிலில் எழுந்தருளியுள்ளது என நம்பப்படுகிறது.

வலது பாதம் தூக்கி ஆடும் நடராசர் 1g7
அப்பொழுது பாண்டியர் மனவூரிலே இருந்தனர். மதுரை நகருக்கு ஏழு மைல் தூரத்தில் உள்ளது மன்வூரி என்னும் கிராமம் எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தைச் சேர்ந்த தனஞ்சயன் என்னும் ஒரு வணிகன் ஊர்சுற்றி வந்தான். வரும்பொழுது தனக்குத் தங்கி இருக்கக்கூடிய ஓர் இடத்தைத் தேடி அலைந்து கொண்டிருந் தான். அங்ங்ணம் அலையும்பொழுது இந்திரன் எழுப்பிய அவ் விமானம் அவன்கண்ணில் பட்டது. இரவு வேளை ஆன தும் அவன் அங்கே உறங்கி விட்டான்.
மறு நாட்காலை விழித்து எழுந்தான் தனஞ்சயன். அப் பொழுது அவன் கண்ட காட்சியை அவனுல் நம்பமுடியவில்லை பெரிதும் வியப்படைந்தான் அங்கே யாரோ வந்து பூசித்து விட்டுச் செனறிருப்பதை அறிந்தான். அது தேவர்களால் நடந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். அங்ங்ணம் முடிவு கட்டிய தனஞ்சயன் அந்த விவரங்களே மணவூரில் வாழ்ந்த குலசேகர பாண்டியனுக்கு அறிவித்தான். அதே சமயத்தில் குலசேகர பாண்டியனுக்குச் சிவபெருமான் கனவில் கோன்றி தனஞ்சயன் காட்டிய இடத்தில் ஒர் ஆலயமும் ஒரு நகிரும் அமைக்குமாறு பணித்தார்.
அரசனும் அவ்விடத்துக்கு விரைந்தான். வணங்கினன், துதித் தான் பூசித்தான். பின்னர் அதே இடத்தில் ஒரு கோயிலைக் கட்டி எழுப்பினன். குலசேகரனினதும் தனஞ் சயனினதும் சிற்ப உருவங்களைப் பொற்ருமரைக் குளத்தின் வடக்கில் அமைந்த நடைகூடத்தில் காணலாம்.
அடுத்து ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த மலையத்துவசனும் அவனது மனைவி காஞ்சனமாலையும் குழந்தை வேண்டி யாகஞ் செய்தனர். யாகத் தீயிலிருந்து பார்வதி தேவியே பெண் குழந்தையாகத் தோற்றினர் தடாதகை எனப் பெயருஞ் சூட்டப்பட்டது. கன்னியாகிய தடாதகைப்

Page 105
198 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
பிராட்டியினுல் ஆட்சி செய்யப்பட்டமையாலே பாண்டி நாடு, கன்னி நாடு எனப் பெயர் பெற்றது என்பர் சோம சுந்தரக் கடவுளுக்கும் தடாதகை பிராட்டிக்கும் திருக் கல்யாணம் நடைபெற்றது இத்திருக்கல்யாணம் சிற்பி களினதும் ஓவியர்களினதும் கற்பனைக்கு விருந் தாய் அமைந் 5 gil -
அத் திருக் கலியாணத்தின் போது சிவபெருமான் பல திருவிளையாடல்களைச் செய்து காட்டி அருளினர்.
தளபதி என்னும் செல்வந் தன் பிள்ளைகளற்றவன். தனது சகோதரியின் புதல்வனை வளர்த்து வந்தான். அவனும் அவனது மனைவியும் ஒரு முறை புனித யாத்திரை யில் ஈடுபட்டனர். சொத்துக்களை சுவீகாரப் புதல்வனிடம் ஒப்படைத்தனர். அந்தக் காலத்தில் அத்தகைய யாத்திரை பில் வடக்கே செல்பவர்கள் மீண்டு வருவதில்லை. மீண்டு வருவதாயினும் பல ஆண்டுகள் செல்லும் இதை அறிந்த ஏனைய உறவினர் இளைஞனை விரட்டி விட்டுச் சொத்துக் களை அபகரித்தனர். இளைஞனுே இறைவனிடம் முறையிட் டான் இறைவன் பாண்டிய மன்னனிடம் செல்லுமாறு பணித்தார். சிவபெருமான் அங்கே தளபதி போல் காட்சி அளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். அதன் பயனுக இளைஞன் தனது சொத்துக்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டான்.
விக்கிரம பாண் டியன் சிவபதம் அடைய அவன் மகன் இராசசேகர பாண்டியன் முடிசூடினன். அறுபத்து மூன்று கலைகளையும் கற்றுச் செங்கோலோச்சி வந்தான். பரதநாட் டியத்தில் அவன் பயிற்சி பெறவில்லை. அதற்கு மாருக சோழநாட்டை ஆண்டு வந்த கரிகாற்சோழன் அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத் தேர்ந்திருந் தான் அவனுடைய அரண்மனைப் புலவர் ஒருவர் பாண்டி தாட்டுக்கு வந்து

வலது பாதம் தூக்கி ஆடும் நடராசர் 199
'மாமன்ன எங்களுடைய கரிகாற் சோழனுக்கு ஆறுபத்து நான்கு கலைகளும் வரும். உனக்குப் பரத நூல் வராது" என்ருர், அதன் பயனக மனம் நொந்த இராசசேகரபாண் டியன் பரத நாட்டியத்தைக் கசடறப் பயின்ருன்.
பாண்டியன் அக்கூத்துப் பயிலும் பொழுது நோயுற் முன். அவனுடைய கால்கள் வலித்தன. சிவ பெருமான் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி எவ்வாறு சதா ஆடுகிருர் என வியப்புற்முன் பாண்டியன் 2ume சேகரன். அவருடைய கால் வலிக்காதோ என்று எண்ண லானன். அவ்வாறு சிந்தித்து வருத்தமுற்றன். சிவராத்திரி அன்று திருக்கோயிலை அடைந்தான். விசேட பூசை செய் வித்தான். கண்ணீர் சொரிந்தான். கைகூப்பி நின்று இவ் வாறு வேண்டினன்.
"எம்பெருமானே! நின்ற திருவடியை எடுத்து வீசி எடுத்த திருவடியை கீழே யூன்றி, இன்றைக்கு அடியேன் காணும்படி மாறியாடி, தமியேனுடைய வருத்தம் முழு வதையுந் தீர்த்தருளு. அங்ங்ணம் செய்யாவிடின் அடி யேன் இறந்து விடுவேன்’.
அத்தகைய விண்ணப்பஞ் செய்து கொண்டு சிவபெரு மான் எதிரே தன் உடைவாளை நீட்டினன் இராசசேகர பாண்டியன். அதன் மேலே குப்புறவிழப் புகுந்தான். ஆனல் அவ்வாறு விழும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டவில்ல. அதற்கு முன்னரே சிவபெருமான் தமது இடப்பாதத்தை ஊன்றி வலப்பாதத்தை எடுத்து வீசிமாறி ஆடிக்காட்டி ஞர். பாண்டியனுடைய மனக் கவலையையும் மும்மலத்தை யும் அகற்றினர். பெரியார் "சரணஞ் சிறியாய் சரணம் எனப்பாடி ஆடித் துதிக்கலானுன் பாண்டியன்.

Page 106
2OO நெஞ்சில நிலைதத சுறநூறுலா
இக் கருத்துக்களையே பரஞ்சோதி முனிவர் அறுபத்தி நான்கு திருவிளையாடல்களை விவரிக்கும தமது திருவி%ள யாடற் புராணத்தில் கூடற்காண்டத்தில் உள்ள கால் மாறியாடின படலத்தில் மேற்குறிப்பிட்ட திருவிளையாடலை விரிவாக விவரிக்கிறர். அங்ங்ணம் சிவபெரு மான கால் மாறியாடின நிகழ்ச்சியை இங்ங்ணம் விளக்குகிருர் பரஞ் சோதி முனிவர்.
நாட்டினன் குறித்துப் பாய நண்ணுமுன்னிடத் தாளுன்றி நீட்டினன் வலத்தாள் வீசி நிரு மலன் மாறியாடிக் காட்டினன் கன்னி நாடன் கவலையும் பாச மூன்றம் வீட்டிஞன் பரமானந்த வேலையுள் வீட்டினனே (21)
இங்கே வீழ்த்தினன் என்பது வீட்டிஞன் என மருவி வந் துள்ளது.
இராசசேகர பாண்டியன் துதித்து வணங்கி இந்தத் திருநடனம் யாவரும் தரிசிக்கும்படி எக்காலத்தும் இப் படியே நின்றே வ வேண்டும். அடியேன் லேண் 9ம் வரம் இது” என்று விண்ணப்பஞ் செய்தான். சிவபெருமானும் அன்று தொடங்கி இன்று வரையும் அம்மாறி ஆடும் திருக் கோலத்தினராயே நின்றருளுகின்ருர்,
வலது பாதத்திை தூக்கி பாடும் சிவபெருமானின் காட்சியை மதுரையில் மாத்திரமே காணக் கூடியதாய் இருக்கிறது. அத்தகைய நடராஜர் சிலையை வேறு எங்கும் காண முடியாது. வலது பாதத்தை ஊன்றி இடது பாதத் தைத் தூக்கி ஆடும் காட்சியை ஏனைய கோயில்களில் காண ாைம். எனவே வலது பாதத்தைத் தூக்கியாடும் சிவனைக் காண விரும்பின் மதுரை மீனட்சி அம்மன் கோவிலிலுள்ள வெள்ளியம்பலத்துக்குச் சென்று அக்காட்சியைப் பார்த்தல் வேண்டும்.

30
அறபத்தைந்தாவது 5,562TUTL6)
அப்பொழுது மாலை வேளை, நேரம் மூன்று மணி இருக்கும். கடுமையான வெப்பக் கதிர்சளைப் பரப்பிக் கொண்டிருந்த கதிரவனும் தனது ஒளியைச் சற்றுத் தளர்த் திக் கொண்டிருந்தான். தனது ஒளிக் கதிர்களைச் சுருட்டிக் கொண்டு மேற்குத் திசையை நோக்கி ஓடுகிறவன் போல காணப்பட்டான். உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் கருத்தரங்கில் பங்கு பற்றியவர்களைக் கடுமையாகத் தாக்கி விடக்கூடாது என்று கருதினன் போலும். படுவானுக்கு விரைந்து செல்பவன் போலக் காட்சியளித்தான் சூரியன். நண்பகல் நல்விருந்தினைத் தொடர்ந்து புகைவண்டியில் சற்று ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தோம். பின்னர் பேரூந் துகள் எம்மைத் தாங்கிக் கொண்டு மதுரை மீனுட்சி அம் மன் கோயிலுக்கு விரைந்தன.
கோவிலுக்குள் செல்லும் இருமருங்கிலும் மக்கள் கூட் டம் கூட்ட மாய் நின்றனர். வாயிலிலும் மக்கள் திரண்டு இருந்தனர். அனைவரும் உள்ளே அழைத்துச் செல்லப் பட்ட

Page 107
202 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
னரி. உள்ளே பிரதான வாயிலிலே பாரம்பரிய முறையில்வர வேற்பு நிகழ்ந்தது. மலர் மாலைகள் சூட்டப்பட்டன. உள்ளே அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கோவிலுக்குச் செல்லும் முக்கியமான பிரமுகர்களுக்குச் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்படும். ஏறற முறையில் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படும். அவர் கள் கெளரவிக்கப்படுகின்றனர், கண்ணியப்படுத்தப்படுகின் றனர். அங்கு செல்வோர்களில் முக்கியமான பிரமுகர்களுக் குப் பரிவட்டம் சூட்டப்படும். பொட்டு அணியப்படும். பெறுமதியான பட்டுச்சால்வையைப் பரிவட்டம் சூட்டு வதில் கோயில் அதிகாரிகள் உபயோகிப்பர். பெண்களுக் குத் துணிமணிகள் கையுறைகளாக வழங்கப்படும். இப் பழக்கம் மதுரையில் உள்ள கோவிலைப் பொறுத்த வரை யில் சிறப்பாக அமைந்துள்ளது
மதுரைக் கோவிலுக்கு அன்று சென்றிருந்த இரண்டா வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் பார்வையாளருக்கும் அத்தகைய வரவேற்பு அளிக்கப்பட் டது. ஆண்களுக்கு ஒவ்வொருவராகப் பரிவட்டம் சூட்டப் பட்டது.
அங்ங்ணம் பரிவட்டம் சூட்டப்படும் பொழுது நான் சல்று விலகி நின்றேன். ஆலய நிருவாகிகள் எனக்கு விதி விலக்கு அளிக்க உடன்படவில்லை. அத்தகைய சிறப்பான கெளரவத்துக்கு நானும் ஆளாகத் தான் வேண்டும் என்று அவர்கள் உறுதியாகக் கூறினர். உரோமபுரிக்குச் சென்ருல் உரோமானியணுக மாறுதல் வேண்டும் என்று ஆங்கிலத்தில் கூறுவர். அக்கூற்று என் நினைவுக்கு வந்ததும் கோயில் நிர் வாகிகளின் விருப்பத்துக்கு இணங்கினேன்.
தமிழ் ஆர்வம் படைத்தமேனட்டு நல்லறிஞர் பலர் தம் தம் வாழ்க்கைத் துணைவியருடன் கலாச்சாரச் சுற்றுலாவில்

அறுபத்தைந்தாவது திருவிளையாடல் 2O3
பங்கு பற்றினர். அத்தகைய கெளரவப் பட்டமளிப்புக்கு அம்மேனுட்டாரும் ஆளாயினர். இரண்டாவது தமிழா ராய்ச்சி மாநாட்டுக் சருத்தரங்கில் பங்கு பற்றியவர்களுள் பேராசிரியர் கலாநிதி அலெக்ஸ்ஸாண்டர் பொஸானி என் பவரும் ஒருவராவர். கருத்தரங்கிலே தமிழ் மொழியில் உள்ள பாரசீகச் சொற்கள் பற்றிய ஒரு கட்டுரையை வாசித்தார் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். அறபு பாரசீக மொழிகளில் சிறந்த பாண்டித்தியும் பெற்றவர். இஸ்லாம் பற்றிய அறிவிலும் சிறந்து விளங்குகிறவர். இத் தாலியைச் சேர்ந்த நேபில்ஸ் பல்கலைக் கழகத்தில் கீழ் நாட்டு ஆராய்ச்சி நிலையத்தின் தலைவராகவும் பேராசிரி யராகவும் கடமையாற்றுகிறவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வந்திருந்த சமயம் இஸ்லாம் சம்பந்த மான சிறப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி ஈழத்து முஸ் லிம்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர். திருக்குர் ஆனையும், மொழி பெயர்த்தவர்.
பெண்களுக்குத் துணி மணிகள் கையுறையாக வழங்கி, ஆண் *ளுக்குப் பரிவட்டம் சூட்டப்பட்ட பின்னர் கோவிலில் பூசை நடைபெற்றது. பிறகு கோயிலைச் சுற்றிப் பார்க்கச் சென் ருேம். அவ்வாறு செல்லும் பொழுது எனக்குச் சூட் டப்பட்ட பரிவட்டத்தை நான் அகற்ருமலே இருந்தேன். ' மீண்டும் அதனை அணிவதென்ருல் அது முடியாத காரிய மாகும். அங்ங்ணம் கோயிலில் வரும்பொழுது பேராசிரியர் பெளஸானி அவர்களைச் சந்தித்தேன். சற்று உரையாடலில் ஈடுபட்டோம். "பேராசிரியர் அவர்களே! நான் ஓர் இந்து போன்று தோன்றுகின்றேன?" என்று அவரிடம் கேட்டேன்.
பேராசிரியர் பெளஸ் பனி அவர்கள் அளித்த பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்பதிலைக் கேட்டுக் கொண்டு இருந்தவர்களும் வியப்படைந்தனர். உண்மை

Page 108
204 நெஞ்சில நிலைத்த சுற்றுலா
யிலே அவர் அவ்வாறு பதிலளிப்பார் என்று ஒரு போதும் தான் எதிர் பார்க்கவில்லை. எனது காதுகளையே எனக்கு நம்பமுடியவில்லை, ஒரு முஸ்லிம் அறிஞர் கூறும் கூற்றுப் போன்றிருந்தது அவருடைய பதில் "நஊது பில்லாஹி மின்ஹா' என்றே பேராசிரியர் பெளஸானி அவர்கள் கூறி ஞர். இது ஒர் அறபுச் சொற்ருெடர். "ஆண்டவனே இந் நிலைமையிலிருந்து எம்மைக் காப்பற்றுவாயாக" என்று கூறுவதாக அமைந்திருந்தது இவ்வறபுச் சொற்ருெடர் ,
பொதுவாக ஒரு முஸ்லீம் இஸ்லாத்துக்கு முரணுனது எனக் கருதப்படும் ஒன்றில் ஈடுபடும் போது இவ்வறபுச் சொற்ருெடரைக் கூறுவதும் உண்டு. அத்தகைய நிலைமை ஈண்டு எழவில்லை. இஸ்லாத்துக்கு முரணுன எதையும் ஒரு முஸ்லிம் இங்கு செய்யவில்லை. நான் முஸ்லிம் என்பது பேராசிரியர் பெளஸானிக்குத் தெரியும். எனவே நகைச் சுவை ததும்பவே பேராசிரியர் பெளஸானி அவர்கள் அவ்வாறு கூறினர். சுற்றுலாவின் போது நான் பேராசிரியர் பெளஸாணியைச் சந்தித்த ஒவ்வொரு தடவையும் ஏதாவ தோர் அறபுச் சொல்லையோ அறபுச் சொற்ருெடரையோ குறிப்பிட அவர் தவறவில்லை.
ஒரு பானை சோற்றுக்கு ஒருமணிய தம் என்பர். அது
போன்று சொன்ன சொல் த வருது நடந்த புகைப்படக் கலைஞர் ஒருவரைப் பற்றி நான் குறிப்பிடுதல் அவசியம் பரிவட்டம் சூட்டப்பட்டவணுகி ஒரு படம் எடுக்குமாறு ஒரு படம் பிடிப்பாளரைக் கேட்டேன். அவரும் இணங்கி ஞர். படமும் எடுக்கப்பட்டது. படத்தை அனுப்பி வைக்கப் பணம் தேவை என்ருர், பணமும் கொடுத்தேன். அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு எப்போது ஏற்படும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் இலங்கைக்கு வந்த பின்னர் அப்படத்தை அப் புகைப்படக் கலைஞர் எனக்கு

அறுபததை நதாவது திரு விளையாடல் 205
அனுப்பி வைத்தார் நான் வைத்த நம்பிக்கையை நிறை வேற்றி விட்டார் சொன்ன சொல் தவருமைக்கும் நேர் மைக்கும் கண்ணியத்துக்கும் எடுத்துக் காட்டாக ஏருஜா என்னும் அப்புகைப்படக் கலைஞர் நடந்து கொண்டார் என்பதை நினைக்க உள்ளம் பூரிப்படைகிறது. அக் கலைஞர் விரும்பி இருப்பின் புகைப்படத்தை அனுப்பாது என்னை ஏமாற்றி இருக்கலாம் அல்லவா? .
மாலை ஐந் தரைமணிக்கும் ஆலயத்தில் இருந்தோம். எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தோம். கலைப்பொக் கிஷங்களைக் கண்டு களித்தோம். ஆங்காங்கே அறிஞர் நின்று அவை அனைத்தையும் நுணுக்கமாகவும் விரிவாகவும் எமக்கு விளக்கிக்கொண்டிருந்தனர்.மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட பொன்னிஞலான ஒரு சோடி சுவடுகள் அங்கே இருந்தன. மீனுட்சி அம்மையின் உருவம் குதிரை மீது ஊர்வலமாகனடுத் துச் செல்லப்படும் போது அணிவதற்காக அன்பளிக்கப்பட் டவை அவை அன்பளித்தவர் ருே ஸ் பீற்றர் (Rose Peter) என்னும் ஆங்கிலேயர். 1812 ஆம் ஆண்டில் மதுரை ஆளுந ராகக் கடமை யாற்றியவர். ஒவ்வொருநாளும் வழக்கமான அலுவல்களைக் கவனிப்பதற்கு முன்னர் அவர் குதிரைமீது ஏறி கோவிலை வலம் வந்தார். அதன் பயணுக மக்களால் பெரி தும் நியக்கப்பட்டவராக இருந்தார். மக்கள் அவர் மீது எவ் வளவு அன்பு காட்டி வந்தனர் என்ருல் அவரை அவர்கள் பீற்றர் பாண்டியன் என்று அழைத்தனர்.
ஒருநாள் இரவு அவர் படுத்துறங்கிக் கொண்டிருந்தார். சோளுவாரியாக மழை பெய்து கொண்டிருந்தது. ஓயாது இடிமுழக்கம், அடிக்கடி மின்னல் அப்பொழுது ஒரு சிறுமி அவருடைய அறைக்கு வந்தார். அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பினள். வெளியே வந்து விடுமாறு கேட்டாள். அவ ரும் உடனே எழுந்து வெளியே வந்தார். வந்த சணமே

Page 109
206 நெஞசில் நிலைத்த சுற்றுலா
மின்னலுடன் கூடிய ஒரு பேரிடி அவருடைய அறையைத் தாக்கியது அது அழிந்துவிட்டது. உடனே சிறுமியும் மறைந்து விட்டாள். அங்கயற் கண்ணி மீனுட்சி அம்மை பின் கருணையினலேயே தாம் தப்பிப் பிழைத்ததாக அந்த ஆங்கிலேயர் ருேஸ் பீற்றர் கூறலானர். அதனை நினைவு கூருமுகமாகவே மேற்கூறிய அன்பளிப்பை அளித்தார் என்று கூறப்படுகிறது.
அன்ருெரு நாள் திரு. ஆர். நமசிவாயம் பிரக்கிராசியார் அவர்களைச் சந்தித்தேன். அவரோடு உரையாடும்போது மதுரை பற்றியும் மதுரையில் நிகழ்ந்திருந்த திருவிளை யாடல் பற்றியும் குறிப்பிட்டார். அப்பொழுது மேற்குறிப் பிட்ட நிகழ்ச்சியும் ஒரு திருவிளையாடல் போன்றது என் ரூர். அதனை அறுபத்தைந்தாவது 69 aíðanruunt Laonrasi குறிப்பிடுதல் சாலப் பொருத்தமுடையது என்றும் அபிப் பிராயப்பட்டார்.
உரோமாபுரி ஒரு நாளிலே கட்டி எழுப்பப்பட்டதன்று என்பர். அதே போன்று மீனுட்சி கோவிலும் ஒரு நாளில் கட்டி முடிக்கப்பட்டதொன் றன்று. அதனை முதன்முதலில் கட்ட ஆரம்பித்தவன் குலசேகர பாண்டியன் என்பர். ஆனல் இன்று பெரும்பகுதி 12 ஆம் நூற்ருண்டுக்கும் 18 ஆம் நூற்றண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலே கட் டப்பட்டது என்பர்.
பல்வேறு அளவினதான பன்னிரண்டு கோபுரங்க ளும் இரண்டு விமானங்களும் கண்கவர் குளம் ஒன்றும் கலை அம்சம் பொருந்திய தூண்களைக் கொண்ட பல்வேறு மண்டபங்களும் கல்லிலே செதுக்கப்பட்ட சிற்பங்களும் இங்கு உண்டு.
மதுரையிலே உள்ளது போன்ற கோயில் இனத்தைச்

அங் கையற்கண்ணி ஆலயம் 207
சேர்ந்த கோயில்கள் பலவற்றைக் காணலாம். அவற்றுள் பிரதானமானவை பூரீரங்கத்திலும் திருவாரூரிலும், இரா மேஸ்வரத்திலும், சிதம்பரத்திலும் பூரீ வல்லிபுத்தூரிலும் அமைந்துள்ளன. இவை அனைத்துக்கும் மாதிரி உருவாய் அமைந்துள்ளது மதுரையில் உள்ள அங்கையற்கண்ணி மீனுட்சி அம்மை கோயிலாகும்.
8
அங்கயற்கண்ணி ஆலயம்
மதுரையின் கேந்திர நிலையம் அங்கயற்கண்ணி மீனுட்சி அம்மன் கோவிலாகும். அதனைச் சுற்றியே மதுரை அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர மக்கள் வாழ்க் கையும் அக்கோயிலைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது. 830 அடி நீளமும் 730 அடி அகலமும் கொண்ட ஒரு பகுதியிலே கோவிற்கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன: ஓர் இணைகர வடிவில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டுப் பாடலில் மதுரை ஒரு தாமரை மலருக்கு ஒப்பிடப்பட்டுள் ளது. கோவிலுக்குப் பூவின் நடுப்பகுதியும் நகரில் உள்ள தெருக்களுக்கு இதழ்களும் ஒப்பிடப்பட்டுள்ளன.
சோமசுந்தரக் கடவுள் எழுந்தருளி இருக்கும் கோவில் சுவாமி கோவில் என்றும் மீனுட்சி அம்மை எழுந்தருளி இருக்கும் கோவில் அம்மன் கோவில் என்றும் அழைக்கப் படுகின்றன. சுவாமி கோவில் மிகப் பழமையானது "

Page 110
208 நெஞசில் நிலைத்த சுற்றுலா
லாற்றுக் காலத்துக்கு அப்பாற்பட்டது இன்றுள்ள அக் கோவில் ஏறக்குறைய பன்னிரண்டாம் நூற்ருண்டில் அல் லது அதற்குச் சற்று முன்னர் அமைக்கப்பட்டதாய் இருத் தல் வேண்டும். மண்டபத்தில் இரண்டு பிரகாரங்கள் உண்டு. அதனைச் சுற்றி வர வெளிப்புற மதில் இருக்கிறது நான்கு மதில்களிலும் ஐந்து அடுக்குக் கோபுரங்கள் நான்கு இருக கின்றன. கிழக்குப் பக்கத்தே உட்புற மதிலில் மூன்று அடுக்குக் கோபுரம் ஒன்று உண்டு.
சுவாமி கோவிலின் தெற்கே அம்மன் கோவில் உள்ளது. 12 ஆம், 13 ஆம் நூற்ருண்டுகளில் அமைக்கப்பட்டு 15ஆம் நூற்ருண்டில் புணர்நிர்மாணஞ் செய்யப்பட்டது. அம்மன் கோவிலின் கிழக்கே உள்ள வாயலில் மூன்று அடுக்குக் கோபுரம் ஒன்று உள்ளது. மேற்கில் சற்றுப் பழமையான ஐந்து அடுக்குக் கோபுரம் ஒன்றும் உண்டு. அம்மன் கோவிலுக்குக் கிழக்கே பொற்ருமரைக்குளம் அமைந்துள் ளது. அதன் நீளம 165 அடியாகும். அகலம் 120 அடியாகும். அக்குளம் மிகப்புனிதமானது என்று இந்துக்கள் கொள்வர். தேவாரத்திலும் அப்பொற்ருமரைக்குளம், 'தலைச்சதி பொற்ருமரை” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. அப் பொற் ரு மரைக் குளத்தைச் சுற்றி உள்ள பிரகாரங்களின் மதில்க ளில் திருவிளையாடல்களை விவரிக்கும் சுவரோவியங்கள் பலவற்றைக் காணலாம். தருமிக்குப் பொற்கிழியளித்த படலத்தில் பொற்ற மரைக் குளத்தைப் பரஞ்சோதி முனி வர் "பொற்பங்கயத் தடம்" (107) என்றும் கீரனைக்கரை யேற்றிய படலத்தில் "செம்பொனளினப்பூந்தடம் (11) என்றும் வருணித்துள்ளார். V
இரண்டு கோவில்களையும் பொற்ருமரைக் குளத்தை
யும் எல்லா விமானங்களையும் உள்ளடக்கி நான்கு திறந்த தெருக்களைக் கொண்ட ஒரு பொதுப் பிரகாரம் அமைந்

அங்கயற கண்ணி ஆலயம 209
துள்ளது அடிவீதிகள்" என அவை அழைக்கப்படுகின் நன. அவற்றிற்கு வெளிப்புறமாக மதில்கள் உளளன. நான்கு திசைகளிலிருந்தும் உள்ளே செல்லக் கூடிய வாயில்கள் உள்ளன, ஒன்பது அடுக்குத் தூபிகள் நகுை வாயில களில் அமைந்துள்ளன. அவை கோவிலின் பெரு 6 மக்கும் பழமைக்கும் புனிதத் தன்மைக்கும் மெருகூட்டிக் கொண்டிருக்கின்றன.
வெளிப்புற மதில்களுக்கு வெளிப்புறமாக ஒவ்வொன் றும் நான்கு தெருக்களைக் கொண்ட பொது மையம் உள் ளனவாக நான்கு தெருக்கள் வடக்கிலும் தெற்கிலும் 8 ழக்கிலும் மேற்கிலும் அமைந்துள்ளன. அவை சித்திரை வீதி, ஆவணி வீதி, மாசிவீதி, வெளிவீதி என அழைக்கப் படுகின்றன, மதுரை நகரின் பெரும்பகுதியாக அவை அமைந்துள்ளன மதுரையில் இடம் பெற்ற விழாக்களைப் பற்றிவிரிவாக விவரிக்கின்றது பத்துப்பாட்டுக்களில் ஒன்ருன மதுரைக் காஞ்சி. இன்றும் "விழா நகர்” என மதுரை புகழப் படுகின்றது. நாளங்காடி (பகற் பொழுதில் கூடும் சந்தை) அல்ல்ங்காடி (இராப் பொழுதில் கூடும் சந்தை) என்பன பற்றியும் மதுரைக் காஞ்சி குறிப்பிடுகின்றது. இன்றும் மதுரையில் இராப்பொழுதானதும் வியாபாரச் சந்தைகள் இயங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
பண்டைய தமிழ் நூல்கள் பலவற்றில் அக்கோவில் கள் பற்றிய பல குறிப்புக்களைக் காணலாம். எனினும் அவை பற்றிய நுணுக்கமான விவரங்களை அவற்றிலிருந்து பெற் றுக் கொள்ள முடியாது. கோவில் பற்றிய ஒரளவு திட்ட வட்டமான குறிப்புக்களைத் திருஞானசம்பந்தரின் தேவா ரத் திருப்பதிகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அக் கோவிலின் மதிலை கபாலி மதில்" என்று திருஞானசம் பந்தர் குறிப்பிடுகிருர், திருஞானசம்பந்தர் சமணரை

Page 111
210 நெஞசில் நிலைத்த சுற்றுலா
வாதில் வென்று தேவி மங்கையர்க் கரசியாரும், பாண்டி யனும் அமைச்சரும் சூழவர முதற்கண் திருக்கோவில் சென்று பாடியருளிய தேவாரத்திருப்பதிகத்தின் முதல் திருப் பாடலில் அதனை இவ்வாறு குறிப்பிடுகிறர்.
வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல் usru6untsu 6).jstu96ustuu uo 6)j j6ötp U6oruG60T காடலால வாயிலாய் கபால நீள் கடிம்மதில் கூடலால வாயிலாய குலாய தென்ன கொள்கையே.
t
உட்புற மதில் இப்பொழுது இவ்வாறே அழைக்கப் படுகிறது. கற்களை உபயோகித்த பல்லவமன்னர் கோவில் களைக் கட்ட ஆரம்பித்த காலம் அது எனவே அக்காலத் துக்கு முன்னர் கோவிற் கட்டடங்கள் மரத்தினலாக்கப் பட்டனவாய் இருந்திருத்தல் வேண்டும்.
கி. பி. 745 இல் ராஜசிம்ஹ பாண்டியன் மதுரைக் கோவிலை புனர் நிர்மாணஞ் செய்தான் என்று வேள், விக் குடி செப்புப்பட்டயம் குறிப்பிடுகிறது. வேறு விவரங்கள் அங்கு கொடுக்கப்படவில்லை. பாண்டித்துரைத் தேவரினல் நிறுவப்பட்ட நான்காந் தமிழ்ச் சங்கத்தினல் வெளியிடப் பட்ட "திருவாலவாயுடையார் திருப்பணி மாலையும் திருப் பணி விவரமும்" மதுரைக் கோவிலைப் பற்றிய பல செய்தி களைக் கொண்டுள்ளன.
- குலசேகர பாண்டியன் கட்டியதாகக் கூறப்படும் கட் டடங்கள் பிற்காலத்தில் மாற்றப்பட்டிருக்கலாம். இலிங்க உருவில் சோமசுந்தரக்கடவுள் எழுந்தருளி உள்ள இந்திர விமானம் சிறந்த ஒரு கலைப் பொக்கிஷமாகத் திகழ்கிறது. அதன் அடித்தளத்தை எட்டு யானைகளும் முப்பத்திரண்டு இங்கங்களும் அறுபத்து நான்கு பூதகணங்களும் தாங்கிக்

அங்கயற் கண்ணி ஆலயம் 21
கொண்டிருக்கின்றன. கோபுரந் தாங்கிகளும் கண்வருவன வாய் அமைந்துள்ளன
அடுத்து கி. பி. 1216-1238 வரை ஆட்சி புரிந்த பாறவர்மன் சுந்தர பாண்டியன் புகழ்மிக்க தனது ஆட்சிக் காலத்தில் சுவாமி கோவிலைப் பெருப்பித்தான். அவன் கட்டி எழுப்பிய மதில் இப்பொழுது சுந்தரமாறன் மதில் என அழைக்கப்படுகிறது. அவன் கோவிலில் வெளிப்புற மதில்களையும் அவன் நிர்மானித்தான். அவனுல் கட்டி எழுப்பப்பட்ட சமாதி மண்டபம் சுந்தர பாண்டிய மண் டபம் என அழைக்கப்படுகிறது. அவன் ஆற்றிய சிறந்த தொண்டு பிரதான கிழக்குத் தூபி அமைத்தமையாகும். அங்கு பல கல்வெட்டுக்கள் இருக்கக் காணலாம். அம்மன் கோவில் நுழைவாயிலுக்கு மேலாக உள்ள மூன்றடுக்குக் கோபுரத்தை ஆனந்த தாண்டவ நம்பி என்பவர் கட்டு வித்தார். அவர் வேம்பத்தூரைச் சேர்ந்தவராதலால் அக் கோபுரம் வேம்பத்தூர்கோபுரம் என அழைக்கப்படுகின்றது.
மதுரையிலே ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் கோவிலைப் பொறுத்தவரையிலும் பிரதிபலிக்கலாயின. வட நாட்டி லிருந்து வந்த முஸ்லீம்களின் காலத்தில் ஆக்கவேலைகள் பாதிக்கப்பட்டன என்று சிலர் கூறுவர். ஆணுல் மாலிக்க பூரின் படையெடுப்புக்குச் சற்றுப் பின்னரும் 1314 ஆம் ஆண்டில் கோவில் புனரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 1323 இல் பராக்கிரம பாண்டியன் பிரதான மான ஒரு வேலையாக ஒரு தூபியை கோவிலின் மேற்குப் பகுதியில் நிறுவினன், சுவாமி கோவிலின் மேற்கு ஐந்து அடுக்குக் கோபுரங்கள் மல்லப்பன் என்பவனல் 1374 இல் நிறுவப்பட்டது. 1378 இல் தான் முஸ்லீம்களின் மதுரை ஆட்சி முடிவுற்றது.

Page 112
212 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
15 ஆம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் மேலும் பல புனர் நிர்மாண வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. பள் ரி அறை, அம்மன் கோவில் பிராகாரம் முதலிய கட்டப்பட் டன. 16 ஆம் நூற்ருண்டானதும் நாயக்கர் ஆட்சி தோன் றலாயிற்று. புனர்நிர்மாண வேலைகள் துரிதமடைந்தன. 1599 இல் மிக உயர்ந்த தூபியைத் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த செவ்வந்திமூர்த்திச் செட்டியார் தெற்குப் பக்கத் திலே கட்டி எழுப்பினுர், அங்கு அழகு மிக்க 1511 சிற் பங்கள் அமைந்துள்ளன.
நாயக்க மன்னர்களுள் மிக்க பிரசித்தி பெற்ற திருமலை நாயக்கன் மதுரைக் கோவிலின் புனர் அமைப்புப் பணிகளைப் பெருமளவில் மேற்கொண்டான். அவனுடைய ஆக்க வேலைகளுக்கு அக்கோவில் இருந்த இடம் போதுவதாக அமையவில்லை. எனவே கிழக்குப் பகுதியில் உள்ள தூபிக்கு எதிர்புறமாகப் புகழ் பெற்ற புது மண்டபத்தை அமைத் தான். 335 அடி நீளமும் 105 அடி அகலமும் 25 அடி உயரமும் உடையது அந்தப் புது மண்டபம். 124 தூண்கள் அமைந்துள்ளன. சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இடம் அது. கலியாண மண்டபத்தைக் கட்டி எழுப்பியவர் விஜயரங்க சொக்கநாத நாயக்கன் ஆவர். இங்ங்ணம் புனரமைப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன.
தலவை ஜயநாத முதலி பார் முதலாவது நாயக்க மன்னனன விஸ்வநாத நாயக்கனுக்கு அமைச்சராக அமர்ந் தாசி, அதனைத் தொடர்ந்து மூன்று நாயக்க மன்னருக்கு அமைச்சராகக் கடமை ஆற்றினர். சிறந்த பரிபாலகராகத் திகழ்ந்த அவர் ஆயிரங்கால் மண்டபத்தை அமைத்தார், மதுரைக் கோவிலின் சிறப்பமிசங்களில் ஒன்ருகத் திகழ்கிறது அந்த ஆயிரங்கால் மண்டபம்.

அங்கயற் கண்ணி ஆலயம் 213
அம்மண்டபத்தில் அமைந்துள்ள தூண்கள் அலாதி யானவை. ஒரு புது முறையிலே அவை ஒழுங்காக அமைக்கப்பட்டிருந்த போதிலும் அங்கு 985 தூண்களே உள்ளன. 15 தூண்கள் இருக்க வேண்டிய இடப்பரப்பில் நடராஜர் சிலை இடம் பெற்றுள்ளது. எந்தக் கோண்தி திலிருந்து பார்த்தாலும் அத்தூண்கள் ஒரே நேர் கோட் டில் இருப்பன போன்று காட்சி அளிக்கும். பொறியியல் ஆற்றலின் உயர் சின்னமாக ஆயிரங்கால் மண்டபம் அமைந் துள்ளது எனின் அது மிகையாகாது. ஒவ்வொரு தூணிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அச்சிற் பங்கள் உயிருள்ள ஒவியங்கள் போன்று காட்சி வழங்கு கின்றன. கலை ஆர்வம் மிக்கவர்கள் மணித்தியாலக் கணக் கில் அவற்றைச் சுற்றிப் பார்ப்பார்.
இந்தியச் சிற்பக்கலை பற்றிய தலைசிறந்த வரலாற்று ஆசிரியரான பெர்குஸன் என்பர் கூறுவது போன்று "அங் குள்ளவற்றுள் மிக்க அதிசயமான ஒன்று ஆயிரங்கால் மண் டபமாகும். தாம் இத்துறையில் கண்ட அனைத்தையும் விட ஆயிரங்கால் மண்டபம் தலைசிறந்து விளங்குகிறது, என்று வருணிக்கிருர் பெர்குஸன் அவர்கள்.
விலைமதிக்க முடியாத நகைநட்டுக்கள் நிறைய உள்ள இடம் எனப் புகழப்பெற்றது மதுரைக் கோவில் பல. நூற்ருண்டுகளுக்கு முன்னர் ஒன்று சேர்க்கப்பட்டவை அவ்வாபரணங்கள்.
திருமலை நாயக்கனல் அன்பளிக்கப்பட்ட முத்துக்கள் நிறையப் பதிக்கப் பெற்ற தலையணியும் (உச்சிக் கொண் டை) விலை மதிக்கமுடியாத தொன்ருகும். 108 தங்கக் காசுளைகக் கொண்ட சங்கிலி போன்று அமைந்த ஒரு மாலையச்ை கிழக்கிந்திய கம்பெனி அன்பளிப்புச் செய்தது.

Page 113
214 நெஞ்சில் நிலத்த சுரறுலா
அதனையும் அங்கே காணலாம். பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலுடன் சம்பந்தப்பட்ட மண்வெட்டியையும் கூடையையும் அப்போதைய பாண்டி மன்னனின் முடியை யும் அங்கு காணலாம்.
பாதுகாப்பான ஓர் அறையில் அவ்வாபரணங்கள் கவனமாகக் காக்கப்பட்டு வருகின்றன. ஆறு வெவ்வேறு பூட்டுக்கிளால் அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பூட்டின் திறப்பும் வெவ்வேறு ஆறு பூசாரி கிளி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கோவிலின் வடககுப் பகுதியில் பிராகாரத்தின் உட் புறமாக உள்ள தூபியின் அடியில் ஒரு தூண் இருக்கிறது. ஒரு தனிக் கற்பாறையிலிருந்து அடிக்கப்பட்டது அத்தூண். அது இசை அமைக்கும் தூணுக அமைந்துள்ளது. அக் கற்றுாணில் சற்றுத் தட்டினுல் அது ஓசை எழுப்பும் ஆற் றலாக உள்ளது. சப்த சுவரங்கள் என்னும் ஏழுவகையான இசைக்குறிப்புக்களை எழுப்பவல்லது கல்லாலான அத்தூண்.
23
STGÖTÖSTÖ தமிழ்ச் சங்கமும் அதன் நக்கீரரும்
மதுரை என்றதும் ஒருவருடைய நினைவுக்கு வரும் முக்கியமான மற்முெரு அம்சம் தமிழ்ச் சங்கமாகும். தமிழ்

நான்காம் தமிழ்ச் சங்கமும் அதன் நக்கீரரும் 2罩5 நாட்டிலே தமிழ் வளர பண்டைத் தமிழ் மக்கள் சங்கம் அமைத்துப் பணி புரிந்தனர். எனப் பொதுவாகக் கருதப் படுகிறது. சேர, சோழ பாண்டிய மன்னர் தமிழ் நாட் டைப் பண்டு ஆண்டு வந்தனர் எனினும் பாண்டி மன்னர்களே தமிழ்ச் சங்கம் அமைப்பதில் முன்னேடியாகக் கடமையாற்றினர் என்பர். மூவேந்தர்களும் அச்சங்கததை இலக்கியத்துறையிலும் பண்பாட்டுத் துறையிலும் மிகச் சிறந்தது எனக் கொண்டனர். பாண்டியரின் முதல் தலைநகராக அமைந்தது தென் மதுரை. பல நூற்றண் டுகளாக முதற் சங்கம் அங்கு தான் நிலைத்திருந்தது அது கடல் கோளுக்கு இரையானது. பாண்டியரின் இரண்டாவது தலைநகராய் அமைந்தது கபாடபுரம், அங்கு தான் இரண்டாவது சங்கம் நிறுவப்பட்டது. கபாட ւյց (1pւն அழிந்து விட்டது. பாண்டியரின் தலைநகர் இன்றைய மதுரைக்குக் கொண்டு போகப்பட்டது. மூன்ரும் சங்கம் அங்கு அமைந்து தமிழை வளர்த்தது என்பர். கி. பி. grain lirth நூற்ருண்டுக்கு முற்பட்ட கால எல்லையிலே மூன்று சங்கங்களும் வீற்றிருந்தன என்பர். எட்டுத்தொகைகு பத்துப்பாட்டு, என்னும் நூல்களில் தொகுக்கப்பட்டுள்ள செய்யுட்கள் யாவுமே சங்ககாலச் செய்யுட்கள் எனக் கரு தப்படுகின்றன. அக்காலத்தில் வாழ்ந்த முடியுடை வேந் தர்கள், குறுநில மன்ன்ர்கள் கடையெழுவள்ளல்கள் முதலானுேருடைய சரித்திரங்களை நாம் அறிந்து கொள்ளு தற்கும் அந்நூற் செய்யுட்கள் பயன்படுகின்றன. அச்செய் யுட்களிலே வெற்றுச் சொற்கள் இல்லை என்றே கூறிவிட லாம்.
மூன்ரும் சங்கம் வழக்கற்றுப் போன பின்னரும்
முடியுடைய வேந்தரும் குறுநில மன்னரும் தமிழ் வளர்க்கும் பணியில் ஈடுபட்டுவந்தனர். தமிழ் மரபு பேணப்பட்டு

Page 114
26 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
வந்தது. பதினன்காம் நூற்ருண்டின் இறுதிப் பகுதியில் தோன்றிய மடங்கள் சைவசமயத்தைப் பேணுவதற்காகவே தோன்றின எனினும் தமிழ் வளர்ச்சிக்கும் அவை பெரிதும் eu fusior Ull607.
தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் வளர்ப்பதில் சமண சமயத்தவரினதும் பெளத்த சமயத்தவரினதும் தொண்டுமறக்குந் தரமன்று. சைவ நாயன்மாரும் வைணவ ஆழ்வார்களும் முறையே தேவாரத்திருப்பதிகங்களையும் திவ்யப்பிரபந்தப் பாசுரங்களையும் பாடி சைவ வைணவ சமயங்களுக்குப் புத்துயிரளித்தனர். அதன் பயனகத் தமிழ் இலக்கியம் வளர்ந்தோங்கியது. வளம் பெற்றது. கிறித்த வர்களும்; முஸ்லீம்களும் தமிழ் மொழியும் இலக்கியமும் வளர ஆற்றிய தொண்டு கொஞ்ச நஞ்சமன்று.
மேஞட்டாரின் தமிழ் நாட்டுவருகையினுல் தமிழ் அதன் முக்கியத்துவத்தை இழந்தது. மேனுட்டு ஆட்சியா * எரின் மொழியைப் பேசுவது பண்பாடான செய்கை எனச் சிலர் கருதிய காலம் தோன்றலாயிற்று. தமிழ் மொழியும் இலக்கியமும் உரிய பாதுகாப்பைப் பெறவில்லை. தமிழின் செல்வாக்குக் குன்றியது. தமிழரின் ஆதிக்கம் சுருங்கியது.
அப்பொழுது சேதுபதி பரம்பரையினர் இராமநாத பிராந்தியத்தை ஆண்டு வந்தனர். அப்பரம்பரை பல் லாண்டு காலமாக ஆங்கு ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தது. அந்த அரச பரம்பரையில் தோன்றியவர் பாண்டித்துரைத் தேவர். அவர் தமிழின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்டார். தமிழை வளர்த்துப் போற்றிப் பாதுகாக்க ஒரு சங்கத்தை, 1901 - ஆம் ஆண்டில் அமைப்பதில் வெற்றி ஈட்டிஞர் மக்கள் தமது ஆதரவை அளித்தனர். பெருமக்களும் அணித்தனர். பிராந்திய ஆட்சியாளரும் உறுதுணை புரிந்த

நான்காம் தமிழ்ச் சங்கமும் அதன் நக்கீரரும் 2】7
னர். புதுக்கோட்டை ராஜா. திருவாங்கூர் மகாராஜா, கொச்சின் மகாராஜா, பரோடா மகாராஜா, மைசூர் மகாராஜா, துர்பங்க மகாராஜா முதலியோர் இச்சங்கத் தின் புரவலராகப் பணி புரிவதில் பெருமை கொண்டிருந் தனர். இச்சங்கம் நான்காம் தமிழ்ச் சங்கம் என அழைக்
கப்படலாயிற்று.
அச்சங்கத்தின் முக்கியமான குறிக்கோள் தமிழ் மொழியை வளர்ப்பதாகும். அக்குறிக்கோளை அடையும் நோக்கத்துட்ன் அச்சங்கத்தினல் ஒரு பாடசாலை ஆரம் பிக்கப்பட்டது. செந்தமிழ் இலக்கியங்களைப் பயிலும் மாண வர்களுக்கு அங்கேயே தங்கும் வசதிகளும் செய்து கொடுக் கப்பட்டன. பரீட்சைகள் நடத்தப்பட்டன. பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாக வைத்துப் பட்டங்கள் சூட்டப்பட்டன. பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டன. கீழ் நாட்டு மொழிகளிலே பயிற்சித்துறைகளைச் சென்னைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கும் முன்னர் தமிழ் நாட்டிலும் ஈழ நாட்டிலும் தேவைப்பட்ட பண்டிதர்களுக்குப் பயிற்சி அளித்தது அந்நான்காம் சங்கமேயாகும். பிரயோசனமுள்ள பண்டைய ஏட்டுச் சுவடிகளைத் தேடிப்பிடித்து அவற்றை ஒன்று சேர்த்து வெளியிட்ட பெருமையும் அந்நான்காம் தமிழ்ச்சங்கத்தையே சாரும். தற்காலத்துக்கு ஏற்ற முறை யில் பண்டைய தமிழ் இலக்கியக் கருவூலங்களைப் பயின்று பதிப்பித்து வெளியிடத் தலைசிறந்த அறிஞர்களைக் கொண்ட ஒர் ஆராய்ச்சிப் பகுதி அங்கு நிறுவப்பட்டது. அந்நான் காம் சங்கத்துக்கென ஒர் அச்சு இயந்திரசாலை உண்டு. செந்தமிழ் என்ற பெயரில் மாதாந்தச் சஞ்சிகை ஒன்று வெளியிடப்பட்டது. இப்பொழுது செந்தமிழ் என்னும் அச்சஞ்சிகை காலாட்டை (மூன்றுமாதத்துக்கொருமுறை வெளிவரும்) இதழாகப் பிரசுரிக்கப்பட்டு வருகிறது. அங்கு

Page 115
218 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
பெரிய ஒரு நூலகம் உண்டு முன்பு அங்கே விலைமதிக்க முடியாத நூல்களும் ஏட்டுச் சுவடிகளும் பெருந்தொகை யாக இருந்தன. ஆனல் துர் அதிஷ்டவசமாக 1920 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீயின் பயனக அற்றுள் பல அழிந் தொழிந்துவிட்டன பாண்டித்துரைத்தேவரின் மரணத்தோடு சங்கத்தின் துரித வளர்ச்சியும் தடைப்பட்டது. அவருடைய மறைவினைப் பொறுக்க முடியாத பல புலவர்கள் கையறு நிலையில் பல பாடல்களை இயற்றி உள்ளனர். பாண்டித் துரைத் தேவரின் மரணத்தின் பின்னர் தமிழ், எடுத்தார் கைப்பிள்ளை போலாயிற்று, என்ற இவ்வாறு வருணிக்கிருரர் புலவர் எம். கே. எம். அப்துல் காதிறு ராவுத்தர் அவர்கள்
அடுத்தாரை யுயர்த்து பெருங்
குணப்பாண்டித்துரையே நின்னருமை வாக்கால் தொடுத்தார்வ முறக் கம்பன் கவிப்
பொருளைக் குறட் பொருளைச் சொல்லி
வாழ்ந்தாய் படுத்தாலுமிருந்தாலு நடந்தாலும்
தமிழ்ச்சிறப்பே பகர்வாய் அந்தோ எடுத்தார் கைப் பிள்ளையெனத் தமிழை விட்டு
விண்புகுந்தா யென்னே யென்னே.
தலைவனேனும் தலைவியேனும் இறந்தமைக்கு அவர் ஆயத் தார் முதலாயினுேர் செயலற்று மிகவருந்தியமை கூறும் ஒரு புறத்துறை கையறுநிலை எனப்படும்.
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் பிராந்திய மொழிகள் புத்துணர்வு பெற்றன. தமிழ் வளர்ச்சியும் துரிதமடைந்தது. அதன் பயனுக 1956 ஆம் ஆண்டில் நான்காம் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா வெகு விமரிசையாகக் கொண் டாடப்பட்டது. அச்சங்கத்தை நிறுவிய பாண்டித்துரைத்

நான்காம் தமிழ்ச் சங்கமும் அதன் நக்கீரரும் 29 தேவரின் ஞாபகார்த்தமாக அச கொண்டாட்டங்கள் அமைந்தன. அன்னருக்குச் செலுத்தும். நன்றி பாராட்டு தலாக அவை அமைந்தன. அண்மைக் காலத்திலிருந்து இந்தியக் குடியரசின் ஜனதிபதிகள் அச்சங்கத்தின் புரவலர் பெருமக்களாக பணி புரிந்தனர். இன்றும் பணி புரிந்து வருகின்றனர்.
நான்காம் தமிழ்ச் சங்கத்தின் எதிர்காலத்துக்காக ஒரு பெருந்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கையாகத் தமிழ்ப் பயிற்சிக்கென கீழ் நாட்டு மொழிக்கல்லூரி ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள் ளது. அக்கல்லூரி செந் தமிழ்க்கல்லூரி என அழைக்கப்படு கிறது. அது மதுரைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இப்பொழுது அங்கு பயிலும் 150 மாணவர் களுள் மாணவிகளின் தொகை 100 ஆகும். நான் காண்டுப் பயிற்சியின் பின்னர் நடைபெறும் பரீட்சையில் சித்தி அடைவோருக்கு வித்துவான் பட்டம் வழங்கப்படும், கல்வி இலவசமாகவே அளிக்கப்படுகிறது. புலவர் பட்டம் வழங் குவதற்காகவும் தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் பரீட்சைகளைச் சங்கம் நடத்துகிறது. தேர்வில் சித்தி எய்து வோருக்குச் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. உயர் நிலப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காகத் தமிழக அரசின் கல்வித் திணைக்களம் அத்தகைய சான்றிதழ்களை அங்கீகரித்துள்ளது. ஆண்டுதோறும் 200 பேர் இப் பரீட் சைக்குத் தோற்றுகின்றனர். தமிழகத்திலுள்ள உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்கும் மாணவர்களுக்காகப் பொதுத் தேர்வு அடிப்படையில் தமிழ்ப் பரீட்சைகளைச் சங்கம் நடத்துகிறது. 30,000 மாணவர் 500 மத்திய நிலையங்களில் அப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். தகைமை பெறுவோருக்குச் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படுகின்றன.

Page 116
220 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
மதுரைக் கோவில் நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும் நாம் அனைவரும் தமிழ்ச் சங்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட் டோம். நூலகத்தையும் அங்குள்ள நூல்களையும் ஏட்டுச் சுவடிகளையும் , பார்வையிட்டோம். அவற்றைப் பார்வை யிடும்பொழுது அச்சங்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஒருபுலவரையும் அவர் இயற்றிய நூல் ஒன் றையும் பற்றிய எண்ணம் தோன்றியது உடனே நூலகரிடம் அது பற்றி விசாரித்தேன். மதுரைத் தமிழ்ச் சங்சத்தை பற்றியது அந்நூல். நான்காம் தமிழ்ச் சங்கத்தில் சிறந்து விளங்கிய ஒரு புலவரால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தையே சிறப்பாகக் கொண்டு பாடப்பட்டது அந்நூல், ஆம். மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை என்பது அந்நூல். அந்நூலோ அது பற்றிய எவ்வித விவரங்களை அங்கு இல்லை. அங்கு உள்ளோர் அது பற்றிய விவரங்களை அறியாமலே இருந்தனர். இது பற்றி நான் விசாரித்த பொழுது அத்தகைய ஒரு நூல் பற்றித் தாங்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை என அவர்கள் கூறினர் ஒருவேளை 1920 இல் ஏற்பட்ட தீ விபத்தினுல் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவராற்றுப்படையும் நெருப்புக்கு இரையாகி இருக்கலாம்.
பாண்டித்துரைத் தேவரோடு தோளோடு தோள் இணைந்து கருமமாற்றினவரி குலாம் காதிறு நாவலர் அவர்கள். நான்காம் தமிழ்ச் சங்கத்து "நக்கீரர்" எனப் புகழப்பட்டவர் நாவலர் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றவர். குலாம் காதிறு நாவலரின் கவிதைகள் சங்க காலச் சான்ருேரின் படைப்புக்களை நினைவூட்ட வல்லன. மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப் படையில் சங்க காலக் கவிமரபுகளையே குலாம் காதிறு நாவலர் பயன் படுத்தி உள்ளார். தமிழ் மொழியைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது "தனிமையென் பெயர்த்தாயினிமையென்

நான்காம் தமிழ்ச் சங்கமும் அதன் நக்கீரரும் 22 l
பொருட்டாய்" என்று தமிழ் தனிமையை இனிமையை வியப் தோது கிருர், "அழகிய சிறகுகளே உடைய வண்டுகள் அவை மொட்டுக்களில் தங்கி ஊதுவதனல் பூக்கள் மலர்கின்றன. அப்பூக்கள் வீழ்ந்திருப்பதால் அங்கு வண்ணக் கம்பளம் விரித்தது போல் காட்சி தென்படுகிறது. அத்தகைய காட்சிகளை இரண்டு கரைகளிலும் கொண்டது வையையாறு. வையையாற்றினுல் வளம் பெற்றது பாண்டிநாடு. பாண்டி நாட்டின் செல்வம் மிக்க பழைய நகராகத் திகழ்கிறது முதுாரான மதுரை மாநகரம். இக் கருத்துக்களையே குலாம் காதிறு நாவலர்.
அஞ்சிறைத் தும்பி துஞ்சியூத பிணியவிழ் பலர்ந்து கழல்காம் பணிமலர் வண்ணக் கம்பளம் விரித்தாங் கன்ன தரைபடர்ந்திமைக்கும் விரை கெழு பூம்பொழில் இரு மருங்கொழுகி பெருருகரை வையைச் செந்தமிழ் நாட்டுத்திருத்தழுதுTர்.
எனத் தமது புலவராற்றுப் படையில் அமைத்துப் பாடியுள்ளார்.
மதுரைத் தமிழ்ச் சங்கத்துள் நிறுவப்பட்டிருக்கும் அச்சங்கம் எவ்வாறு இயங்குகிறது என்பதும் புலவாற்றுப் படையில் வருணிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துக்களுடன் ஆங்கில எழுத்துக்களும் அச்சகத்தில் உள்ளன. அவ்வச் செழுத்துக்களின் கீழ்க் கட்டையைத் தமக்காதாரமாகக் கொள்ளும்படி வார்த்து, பகுதி வேருகச் செய்து, ஒரு பிரதி பல பிரதிகளாக அமையும் பொருட்டுச் செம்மையாகப் பதிப்பிக்கும் அச்சுக்கூடம் அமைந்துள்ளது. இக் கருத்துக்கள் புலவராற்றுப் படையில் இவ்வாறு அமைந்துள்ளது.
தென்மொழி யெழுத்தோடு வடமொழி யெழுத்து மிங்கு நனி பாய வாங்கிலாக் கரமும்

Page 117
222 நெஞசில நிலைத்த சுற்றுலா
கால்கொள் வாக்குபு வால்வேறு படுத்தி யொன்றுபல வாகிச் சென்றுறப் பதிக்கு மச்சுச் சாலையும.
இனி, மனிதரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப் படை அச்சங்கத்தால் அளிக்கப்படும் பட்டங்களை விவரிக் கின்றது. வாயரும்புலவன், பெருங்கவிராயன், பாலவன். வித்துவான், இயறெரி நாவலன் என்பன அத்தகைய பட் டங்களாகும். பொன்னுற்செய்த மோதிரத்தையும பொன் னுலான பொழுதை அறிதற்குக் காரணமான கருவியையும் யும் (கடிகாரத்தையும்) காசுமிரப் போர்வையையும், காசு களையும் பரிசில்களாகச் சங்க மண்டபத்தை அடைந்த புலவர் பெறுவர் என்பதைக் குலாம் காதிறு நாவலர் அவர்கள் பின்வருமாறு வருணிக்கிருர்.
வானிற வயிர மின்செய் தொளிரும் பொன்செய் աո ցմամ), பொலந் தகடு குழித்துப் பொற்புர வமைத்த வலந்த பொற்றெடரின் மாண்பிற் றகிப் பழுதறச் சுமைத்த பொழுதரி கருவியும் நோய்ம்மயிராய்ந்து தூய்யென நெய்த மின்னிவர்ந்த தென்ன பொன்னிழை நுழைத்த மாசு கெடச் சிறந்த காசு மீரமும் விழுத்தலை யமைந்த கமுத்தள வரையன் பணயம் பலவும்
அங்கே திரு. பி. டி. ராஜன் அவர்களால் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரைத் தமிழ்ச் சங்க மண்டப முற்றத்தில் வரவேற்புக் கூட்டம் நடை பெற்றது அவ்வரவேற்பின் போது வரவேற்பிதழ் வாசித்

முஸ்லீம்களுக்கு Qypës suuupmt6or César sfüuar &mt uulub 223
தளிக்கப்பட்டது. பட்டுச்சீலையில் அச்சிடப்பட்ட அவ்வர வேற்பிதழ்கள் விருந்தினரிடையே பகிரப்பட்டன. வரவேற் புக் கூட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைப்பாறிய நீதியரசர், வி. கே. கந்தசாமி அவர்கள் நன்றி உரை நிகழ்த்திஞர். இரண்டாம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் பங்குபற்றிவிட்டுக் கலாச்சாரச் சுற்றுலா வில் ஈடுபட்ட அனைவருக்கும் திரு. கருமுத்துத்தியாகராஜா செட்டியார் இராப்போசன விருந்தளித்து உபசரித்தார்.
33
முஸ்லிகளுக்கு முக்கியமான Góis (fLT26Tub
ஒரு நாட்டின் வரலாற்றில் அரை நூற்ருண்டுக் காலம் ஒரு குறுகிய கால கட்டமாகும். அத்தகைய குறுகிய கால எல்லையில் இலக்கியத் துறையிலோ கலாச்சாரத்துறையிலோ ஈட்டக்கூடிய சாதனைகள் அதிகம் இரா. ஒர் அரசை நிறுவி மக்கள் மனதைக்க வர, மக்களால் நயக்கப்பட பல்லாண்டு கள் செல்லும். அவ்வாறு பல்லாண்டுகள் சென்ற பின்னர் தான் அத்தகைய ஆட்சியாளரின் செல்வாக்கைக் காண லாம். சாதனையை அலசி ஆராயலாம், மதிப்பிடலாம். ஆனல் முஸ்லிம்களின் ஆட்சி மதுரையில் 43 ஆண்டுகளே நிலைபெற்றது. கி. பி. 1835 முதல் கி. பி. 1378 வரை முஸ்லிம் சுல்தான்கள் மதுரையில் தனி ஆட்சி நடத்தினர்.

Page 118
224 நெஞசில றிலைத்த சுற்றுலா
எனினும் பல நூற்ருண்டுகளுக்கு முன்னரே முஸ்லிம் கள் இந்தியாவுக்கு வந்து விட்டனர். இஸ்லாம் உலகில் பரவுவதற்கு முன்னரே அரு பியர் தமிழ்நாட்டுடன் வியா பாரத் தொடர்பு கொண்டிருந்தனர் என வரலாறு கூறு கின்றது. பாரசீகக் குடாவிலே உள்ள தீவு கிஸ். அங்கு வாழ்ந்தார் ஓர் அறபுக் குறுநில மன்னர், மலகுல இஸ்லாம் ஜெமாலுத்தீன் என்பது அவரது பெயர். அவர் தக்றுத்தீன் அப்துல்றஹமான் என்பவரின் தலைமையில் ஒரு வியாபார நிலையைத்தைக் காயற்பட்டணத்தில் ஏற் படுத்தினுர், முஸ்லிம்சளுக்கும் தென்னக மக்களுக்கும் இருந்த வர்த்தகத் தொடர்பு மிகப் பழமையானது வியாபார நோக்கமாக பல முஸ்லிம் குடியேற்றங்கள் இந்தியக் கடற்கரைப் பிரதேசங்களில் ஏற்பட்டன. இந்து மன்னரும் முஸ்லிம்களின் வியாபாரத்தைப் பெரிதும் ஊக் குவிக்கலாயினர். வட இந்தியாவிலிருந்து மாலிக்கபூர் தமிழகத்தில் படையெடுத்து வருவதற்கு முன்னரேயே தமிழகத்தில் முஸ்லிம் மக்கள் குடியேறியிருந்தனர். மாலிக் கபூரின் படைகளுடன் தமிழக மக்கள் போர் புரிந்த பொழுது இந்து மக்களோடு சேர்ந்து தோளோடுதோள் நின்று போர் புரிந்தனர் தமிழக முஸ்லிம் மக்கள். ஒரு கால எல்லையில் பாண்டிய நாட்டின் பிரதம சேனதிபதியாக எகிப்திய வழிவந்த ஒரு முஸ்லிம் கடமையாற்றிஞர் என்றும் பாண்டிய நாட்டின் சேனதிபதி ஒரு முஸ்லிம் என்று அறிந்ததும் மாலிக்கபூர் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார் என்றும் அச் சேனதிபதியைத் தம்பக்கம் திருப்பிக் கொள்ள மாலிக்கபூர் மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை என்றும் ஹாபிஸ் எம். கே. செய்யிது அகமது அலர்கள் தமது "முஸ்லிம் தமிழ்ப் பாரம்பரியம்’ என்னும் நூலிலே குறிப் பிடுகின்ருர், மாலிக் கபூரின் முயற்சியை அறிந்த பாண்டியச் சேனதிபதியான முஸ்லிம் பெருந்தகை, "நான் என் நாட்

முஸ்லிம்களுக்கு முக்கியமான கோரிப்பாளையம் 225
டுக்குத் துரோகம் செய்ய மாட்டேன்; வாருங்கள் போர்க்கலத்தில் சந்திப் போம். வெற்றி அல்லது வீச மரணம்" என்று முழங்கினுர் என்பர்.
வீரபாண்டியனும் சுந்தர பாண்டியனும் குலசேகர் பாண்டியனின் புதல்வர்கள், அரசுரிமையைப் பெறுவது சம் பந்தமாக இரண்டு சகோதரர்களுக்கும் இடையே பகைமை ஏற்பட்டது. அக்கருத்து வேறுபா' உள்நாட்டுப் போருக்கு வழிகோலியது. வீரபாண்டியன் வெற்றி பெறவே சுந் தர பாண்டியன் முஸ்லிம்சளின் ஆதரவை நாடினன். பராக்கிரம பாண்டியன் ஆட்சியின் பொழுது பாண்டிநாடு முஸ்லிம் 6 சமாயிற்று. தில்லி சுல்தானின் ஆட்சிக்குக் கீழ் பாண்டிநாடு அமைக்ப்பட்டது. தில்லி சுல்தானின் பிரதி நிதியாக மதுரையை ஆண்டுவந்த ஜெமாலுத்தீன் அஸன்ஷா தம்மை மதுரையின் சுதந்திர சுல்தானுகப் பிரகடனப்படுத்தி ஞர்.அந்நிகழ்ச்சி கி. பி. 1335 அளவில் நிகழ்ந்தது. தமிழ் நாடு முழுவதும் மதுரை சுல்தானின் ஆட்சிக்கு உட்படுத்தபி பட்டது. அவரது ஆட்சிக்காலத்திலேயே பிரபல வடஆபிரிக்க முஸ்லிம் தேச சஞ்சாரி, இபனு பதுதா தென்னிந்தியா இலங்கை முதலிய நாடுகளில் சுற்றுப் பிரயாணத்தை மேற் கொண்டார். சுல்தானின் மகளை இப்னு பதுதா திருமணம் புரிந்தார். கி.பி. 1378 இல் மதுரை சுல்தானின் ஆட்சி
முடிவுற்றது.
நடுநிலைமையுடன் ஆட்சி நடத்திய நாயக்க மன்னர்க ளுள் முதன்மையானவர் வீரப்ப நாயக்கன். தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ்ந்தனர். திருமலை நாயக்கன் ஹனுமந்த குடியில் உள்ள தனது இறுதிக்கல் வெட்டில் முஸ்லிம்களுக்கு மானியமாகக் காணி வழங்கி உள்ளார். இராணி மங்கம்மாள் திருச்சிராப்பள்ளிக்கு அணித்தாயுள்ள ஒரு தர்காவுக்கு சில கிராமங்களை மாணிய

Page 119
226 நெஞசில் நிலைத்த சுற்றுலா
மாக வழங்கினர். கிழவன் சேதுபதி என அழைக்கப்பட்ட
விஜயரகுநாதத்தேவர் கிாலத்திலே புகழ் பெற்றதமிழகக் கொடைவள்ளல் சீதக்காதி அவர்கள் வாழ்ந்துவந்தார். இராணி மீனுட்சி ஆட்சிக் காலத்தில் மீண்டும் முஸ்லிம்
ஆட்சி மதுரையில் ஏற்பட்டது. ஆனல் அதிக காலம் அவ் வாட்சி நீடிக்கவில்லை. வெளிநாட்டார் தலையீடே அதற்
கான காரணம்.
மதுரைக்குச் செல்லும் ஒரு முஸ்லிம் தனது மூதாதை யர் அங்கு ஆட்சிபுரிந்த முறையை அறிய முயல்வது இயற் கையே. ஏறக்குறைய அறை நூற்ருண்டுக் காலத்தில் முஸ் லிம்கள் மதுரையில் ஆட்சிபுரிந்தபொழுது அவர்கள் ஈட்டிய சாதனைகள், அவர்கள் புரிந்த தொண்டுகள், முஸ்லிம்களுக் கும் முஸ்லிம் அல்லாதோருக்கும் இடையே நிகழ்ந்த உறவு, சகிப்புத் தன்மை, முதலியவற்றை அறிதல் அவசியமாகும். அவற்றை விரிவாக ஆராயப்புகின் விரிவடையும். எனவே மதுரையிலே கோரிப்பாளையத்திலே அமைந்துள்ள கல்ல றையை மாத்திரம் நோக்குவோம். தமுக்கத்துக்கு மேற்கே வைகைக்கரையிலே அமைந்துள்ளது கோரிப்பாளையம். முஸ் லிம் பெரியார் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைக் கும்மட்டம், "கோரி" என அழைக்கப்படுகிறது. வீருர்ந்த கல்லறை மாடம், சமாதி என்ற பொருள்களையும் கோரி என்னும் சொல் குறிக்கும். "கோர்" என்னும் உறுது சொல் லடியாகவே, "கோரி” என்னும் சொல் தோன்றியது. பொற்றை சூழ்ந்த கிராமத்தைப் பாளையம் என்பர். சிறு மலை அல்லது சிறுதூறு பொற்றை எனப்படும். எனவே சிறுமலைகளால் குழப்பட்டு முஸ்லிம் பெரியார்களின் கல்ல றைகளைக் கொண்டு திகழ்வதை கோரிப்பாளையம் என்று அழைக்கலாயினர்.
கோரிப்பாளையப் பிராந்தியம் ஆறு ஊர்களைக் கொண் டது. சேரிக்குடி, சொக்கிகுளம், பீவிக்குளம், கண்ணேறம்

முஸ்லிம்களுக்கு முக்கியமான கோரிப்பாளையம் 227
பால், சிறுநீர், திருப்படை என்பன அந்த ஆறு ஊர்களு மாகும். முஸ்லிம்களின் புனிதத்தலமாகத் திகழ்கிறது கோரிப்பாளையம், அங்கே இரண்டு கல்லறைகள் உண்டு. அதன் பயணுகவே அவ்விடம் திருத்தலமாகத் திகழ்கிறது. அங்கே ஹளறத் ஹாஜா செய்யத் சுல்தான் அலாவுதீன் அவர்களினதும் ஹளறத் ஹாஜா செய்யச் சுல்தான் சம் சுத்தீன் அவர்களினதும் கல்லறைகள் அமைந்துள்ளன. அன்ருெரு நாள் பேராசிரியர் சி. நெய்னர் முகம்மது அவரி களுடன் உரையாடிக் கொண்டிருந்தோம். மேற் குறிப்பிட்ட அவுலியாக்கள் இருவரினதும் விவரங்களை அவர் விளக்கினர். திருச்சியிலுள்ள ஜெமால் முகம்மது கல்லூரியில் அவர் தமிழ்த் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றுகிறர். எம். ஏ. என்னும் முதுமாணிப் பட்டதாரி அவர்.
அவுலியாக்கள் என்னும் இவ்விரு ஞானியரினதும் கல்லறைகள் அமைந்துள்ள கோரிப்பாளையம் மதுரையில் உள்ள முஸ்லிம்களின் புனிதத்தலங்களுள் சிறப்புடைய தாகும். மிகப்பெரியதும் அதுவாகும். மதுரை மாநகரில் மட்டுமன்றி தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் முக்கிய மானதும் மிகப்பெரியதுமான திருத்தலங்களில் ஒன்ருகும் சிற்பத்துறையிலும் கோரிப்பாளையம் தர்கா முக்கியத்துவம் பெற்றது. பாரசீக மொழியில் "தர்கா" என்னும் சொல் வேத்தியற் கூடத்தை-அரசக்கொலு மண்டபத்தைக் குறிக் கிறது. பிரசித்தி பெற்ற மிக்க பரிசுத்தமான புனிதர் ஒருவரின் வீருர்ந்த கல்லறை மாடத்தை இந்தியாவில் தர்கா என வழங்குவர். இலங்கையிலும் அவ்வாறே வழங்கப்படுகிறது. அத்தகைய திருத்தலங்களுக்கு முஸ்லிம்கள் புனித யாத்தி ரையை மேற்கொள்வதுமுண்டு. கல்லறை வெளியும் விசால மானது. பராமரிப்பு நிலையமும் ஏனைய கட்டடங்களும் பிரமாண்டமானவை.

Page 120
228 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
கல்லறைகளில் அடக்கஞ் செய்யப்பட்டிருக்கும் முஸ்லிம் ஞானிகளின் வரலாறு பற்றி அறிவதற்கு அதிக வாய்ப் பில்லை. எனினும் அவர்களிருவரும் ஹளறத்தாஜுத்தீன் அவுலியர் அவர்களின் வழித்தோன்றல்கள் என்று மாத் திரம் அறியக்கிடக்கிறது. ஹளறத் தாஜுத்தின் அவுலியசி என்பவர் ஜமாலுத்தீன் என்பவரின் மூத்த புதல்வராவர். ஹளறத் ஜமாலுத்தீன் ஒரு முப்தியாவார். பத்வா? என்னும் இஸ்லாமியச் சட்ட முடிவுகளை வழங்குபவர் முப்தி என அழைக்கப்பட்டார். முப்தி என்ற தோரணை யிலேயே இந்தியாவின் தென்னகத்துக்கு விஜயஞ் செய்தார். எகிப்தின் மன்னர் மாலிகுஸ்ஸகீர் என்பவரின் பிரதிநிதி யாகவே அங்கு வந்தார். மலபார் என்று வழங்கப்பட்ட இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம் வணிகரின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டே அங்கு முப்தி ஜமால்தீன் அனுப் பப்பட்டார். முஸ்லிம் வணிகர்களுள் மிகப்பெரும்பாலானேரி அறபு நாட்டைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். சுந்தர பாண்டியன் ஆட்சி புரிந்த கி. பி 1251 முதல் 1293 வரை உள்ள காலப் பகுதியில் முப்தி ஹளறத் ஜமாலுத்தீன் அவர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளார். ஹிஜ்றி ஆண்டு 692 ஆம் ஆண்டு றஜப் மாதம் 15 ஆம் நாள் ஹளறத் தாஜுத்தீன் அவுலியா இறைவனடி அடைந்தார்கள். அவருடைய உடல்கோவில் ஒன்றில் உள்ள ஒருமண்டபத்தில் நல்லடக்கஞ் செய்யப்பட்டது என்று கூறுவர். அவ்வாறு நல்லடக்கஞ் செய்வதற்கு அக்காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமயத்தைச் சேர்ந்த மன்னர் அனுமதி வழங்கினர் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் நாட்டில் முஸ்லிம் பெரியார்கள் பலரின் கல் லறைகள் உண்டு. ஆனல் அத்தகைய கல்லறைகளுள் சிறந்த முறையில் பரிபாலிக்கப்பட்டுவரும் கல்லறை கோரிப்

முஸ்லிம்களுக்கு முக்கியமான கோரிப்பாளையம் 229
பாளையத்தில் உள்ள கல்லறையே எனலாம். சிற்பத்துறையில் நோக்கும் பொழுது கோரிப்பாளையம் கல்லறை ஏனையவற்றி லிருந்து வேறுபடுகின்றது. கட்டடங்கள் மாத்திரம் அல்லாது "மஸார்களும் (கல்லறை) வேறுபடுகின்றன. உயர்த்தப் பட்ட மேடையில் இரண்டு “மஸார்’களும் அமைக்கப்பட்டுள் ளன. கோயம்புத்தூர் போன்ற இடங்களில்ஒரே கல்லிலிருந்து செய்யப்பட்ட சிற்பங்களைக் காணக் கூடியதாக இருக்கின்றது. கோரிப்பாளையத்திலும் கட்டட அமைப்பு முறை அவ்விதத் திலேயே உருவாகியுள்ள்ளது. 22 அடி அகலமும் 69 அடி நீளமும் உடைய அக் கட்டடம் ஒரே கற்பாறை லிருந்து உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. சிற்பத் துறையில் அது ஒரு சிறந்த சாதனையாகவே அமைந்து விளங்குகிறது. கல்லறைகளில் அடங்கப்பட்டிருப்பவர்கள். பேரில் ஆண்டு தோறும் கந்தூரி விழா என்னும் "உர்ஸ் விழா நடைபெறுகிறது. ஒவ்வோர் ஆண்டிலும் சவ்வால் மாதம் 16 ஆந் திகதியன்று நடைபெறுகிறது. நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் மாதத்தை முஸ்லிம்கள் சவ்வால் மாதம் என்று அழைக்கின்றனர்.
கோரிப்பாளைய கல்லறையின் பராமரிப்புக்காகப் பல மானியங்கள் வழங்கப்பட்டன. அவற்றுள் ஒன்று கூல் பாண்டியனல் வழங்கப்பட்டது. மேலே குறிப்பிடப்பட்ட கோரிப்பாளையத்தைச் சேர்ந்த ஊர்களில் உள்ள நிலங்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டன. அவற்றின் விலை14,000 பொற்காசுகள் என மதிப்பிடப்பட்டது. ஓர் அடி ஒரு பொற்காசு பெறுமானம் உடையது எனக் கணிக்கப்கட் டது. நன்கொடை அளிக்கப்பட்ட நிலங்களுக்கு எல்ை வகுக்கப்பட்டது. எல்லையைச் சுற்றிக் கற்கள் நிறுவப்பட் டன. ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு வில்லின் அடையாளம் பொறிக்கப்பட்டிருக்கிறது. கூன்பாண்டியன் தில்லி சுல்தானின் மசூதிக்கு வழங்கியது அந்த மானியம்.

Page 121
230 நெஞ்சில நிலைதத சுற்றுலா
வைகை நதிக்கு வடக்கே மதுரை வளநாட்டிலே அமைந் துள்ளது கோரிப்பாளையம்.
1573 ஆம் ஆண்டில் மதுரையில் பெரிய வீரப்ப நாயக்க கர் மன்னரின் ஆட்சி நடந்தது. அவரின் ஆட்சி காலத் தில் ராஜாக்களுக்கும் மலபாரியர் என்று அன்று அழைக் கப்பட்ட முஸ்லிம்களுக்கும் கோரிப்பாளைய மானியம் பற் றிக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிக்கலான ஒரு பிரச் சனை தோன்றியது. இப்பிரச்சன் யைத் தீர்த்துவைக்க முற்பட்டார் வீரப்ப நாயக்க மன்னர். பாரபட்சமற்ற ஒரு விசாரணையை நடத்தினர், நன்கு ஆலோசனை புரிந்தார். முஸ்லிம்களின் முறையீட்டில் உண்மை இருக்கின்றது என உணர்ந்தார். முஸ்லிம்களில் உரிமையை வலியுறுத்தி அதனை நிலை நிறுத்தினர். இது பற்றிய ஒரு குறிப்பு மதுரை நாட் டின் அரசியல் வரலாறு என்ற வரலாற்று நூலில் உள்ளது. அந்நூலின் 68 ஆம் பக்கத்தில் அது பற்றி இவ்வாறு குறிப் பிடப்பட்டுள்ளது.
வீரப்ப நாயக்கணுகிய யாம் நியாயமான ஒரு விசாரணை நடத்தினுேம். அந்த விசாரணையின் போது கிராமங்களின் விலையைப் பாண்டியன் நிர்ணயித்து மசூதி (மஸ்ஜித்து)க்கு அவற்றை விற்றது நிரூபிக்கப்பட்டது. எனவே சாலிவாகன சகாப்தம் 1495 பவ ஆண்டில் (கி. பி. 1578 இல்) தை மாதம் 11 ஆந் தேதி சுபயோககரணத்தில் இந்நாளன்று மசூதி இவ்வன்பளிப்பைத் தொடர்ந்து பயன்படுத்தும் உரிமையைப் பெறும் என்றும் இதுகாறும் நிர்ணயிக்கப் பட்ட எல்லையைப் பெற்று அது இருக்கும் என்றும் பாண்டியஞல் நிறுவப்பட்ட கற்களே அப்பகுதிக்கு எல்லை பாகத் தொடர்ந்து இருக்கும் என்றும் தீர்ப்புக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகின்ருேம், இடையீடெதுவும் இன்றி எப் பொழுதும் சூரியசந்திரர் இருக்கும் வரைக்கும் இந்து ஆறு

பாண்டியநாட்டு நங்கையின் மணிவயிறு 23
சிராமங்களின் மொத்த வருவாயையும் உபயோகிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும்".
இன்றுவரை கோரிப்பாளைய தர்கா அந்த வருவாயைப் பெற்று இயங்கி வருகிறது.
மதுரையிலே ஒரு காலத்தில் செய்யத் தாஜுத்தீன் சாகிப் என்ற ஒரு பிரபல முஸ்லிம் வாழ்ந்து வந்தாரி மதுரையின் முதல் காதியார் பதவியை வகித்தவர் அவ ராவர். காதிக்குலம் என்னும் ஒரு குலத்தையே நிறுவுவதில் வெற்றியும் பெற்ருர். இன்றும் மதுரையிலே *sur 50u DITrf வீதி" என்று ஒரு தெரு உண்டு. அத்தெருவில் வாழ்பவரி கள் அனைவரும் மேலே குறிப்பிட்ட காதியாரின் வழித் தோன்றல்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.
34
LIT Görig jTL6 jšGnälsi OGdald)
உலகம் ஒரு பெண். உலகத்தைச் சூழ உள்ள கடல் அப் பெண் அணிந்திருக்கும் ஆடை. இவ்வாறு கூறுவது கவி மரபு. சான்ருேரும் அவ்வாறு வருணித்துப் போந்தனர்.அவரி களுக்குப் பின் வந்தோரும் அவ்வாறே பாடிவிட்டுச் சென்ற னர். இன்று வாழும் கவிஞர்களும் அவ்வாறே பாடுகின்ற னர். எதிர் காலத்திலும் அம்முறையே பின்பற்றப்படும் என்று உறுதியாகக் கூறலாம். பரஞ்சோதி முனிவரும்

Page 122
232 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
தமது திருவிளையாடற் புராணத்தில் அத்தகைய மரபைசி சற்றுத் திருத்திக் கூறுவர்.
திருநசரச் சிறப்பினைக் கூற வந்த பரஞ்சோதி முனிவரி மதுரையை விரிவாக விவரிப்பர். அவர் பாண்டி நாட்டை ஒரு நங்கைக்கு ஒப்பிடுகிருர், திருநகரச் சிறப்பு முதலாம் பாடலில் மதுரையை அத்தகைய நங்கையின் பெருமை பொருந்திய முகமாக வருணிக்கிருர் பரஞ்சோதி மு னிவர். அந்நங்கையின், கொப்பூழ், வயிறு, செங்கை, மேனி, தோள் முதலியன வருணிக்கப்பட்டுள்ளன திருப்பரங்குன்றமும் திருக்கொடுங்குன்றமும் அந்நங்கைக்குக் கொங்கைகளாகும். திருப்பரங்குன்றம் மதுரைக்குத் தென்மேற்கில் நான்கு கல் தொலைவில் உள்ளது. நக்கீரர் வாழ்ந்த திருவூர் முருகப் பெருமான் படைவீடுகளில் ஆறில் ஒன்று திருக்கொடுங் குன்றம் பிரான்மலை என்றும் வழங்கப்படுகிறது. இதனைப் பாரியின் பறம்பு நாடு என்றும் கூறுவர். உந்தியாகிய உறுப்பு திருச்சுழியல் என்னும் தலமாகும். "பார்வதி அம் மையார்’ சிவபெருமான் தம்மைத் திருமணம புரிந்து கொள்ளுதல் வேண்டி வழிபட்ட திருவூர் அழகிய வயிறு திருக்குற்ருலம் என்னுந்திலமாகும். அங்கே ஐவகை மன்ற ங் களுள் 'ஓவிய மன்றம் அமைந்துள்ளது மிகச் சிறந்த மலைவீழருவி உள்ளது.
குத்தாலம் என்பது குற்ருலம் எனத் திரிந்துள்ளது. கு என்பது பாவம். தாலம் என்பது (தீயின்) நாக்கு. எனவே குத்தாலம் என்பது பாவத்தைப் போக்குவதற்குத் தீயின் நாக்குப் போல்வது என்ற பொருள்படும் என்பர். சிவந்த கை திருவேடகம் என்னுந் தலமாகும் வைகை ஆற்றின் வடகரையில் உள்ளது. திருஞானசம்பந்தர் சமணரை வெல்லத் திருப்பர்சுரம் பாடிய திருத்தலம். திருஞான சம்பந்தர் வைகை யாற்றிலிட்ட ஏடு எதிரேறிச் சென்று அணைந்த இடமாதலால் இப்பெயர் சிறப்பாக வழங்கி

பாண்டிய நாட்டு மங்கையின் மணி வயிறு 233
லாயிற்று. உடல் திருப்பூவணம் என்னும் தலமாகும். மதுரைக்கு கிழக்கே பன்னிரண்டு கல் தொலைவிலிருக்கிறது. நான்முகன் வழிபட்ட திருவூர். அங்கு ஓர் அடியார் சிறப் பாக நந்தவனம் வைத்து இறைவனை வழிபட்டமையால் "பூவணம்" எனப் பெயர் பெற்றது என்பர். அது காசிக்குச் சமமான தலமாகும். திரண்ட தோள்கள் சோலைகள் குழ்ந்த வேணுவணம் என்னுந் தலமாகும். அழகிய முகம் மதுரையாகிய நகரமாகும். இக்கருத்துக்களை உள்ளடக்கி திருநகரச் சிறப்பில் உள்ள இரண்டாவது பாடலில் பரஞ் சோதி முனிவர் இவ்வாறு பாடியுள்ளார்.
கொங்கை யேபரங் குன்றமுங் கொடுங் குன்றுங்
கொப்பூழ் அங்க மேதிருச் சுழியல் வயிற்றுக் குற்றலஞ செங்கை யேடக மேனியே பூவனந் திரடோள் பொங்கர் வேய்வனந் திருமுக மதுரையப் புரமே.
பரஞ்சோதி முனிவர் திருநெல்வேலியையே வேய்வனம் (வேணுவனம் என) மேலே குறிப்பிட்ட பாடலில் வருணித் துள்ளார். பாண்டி நாடு என்னும் நங்கைக்குத் திருநெல் வேலி திரண்ட தோள்களாக அமைந்துள்ளது. கோயில் மரம் மூங்கிலாகும். அங்கு மொத்தம் முப்பத்திரண்டு தீர்த்தங்கள் உள்ளன. பொற்ருமரை, கருமாறி, வைரவ, சருவ தீர்த்தங்கள் அவற்றுள் சிறந்தவையாகும். அகத்தி யர், அயன், அரி முதலியோர் வழிபட்ட திருவூர். சிவபெரு மானின் திருவமுதுக்காக வேதசர்மா என்னும் அந்தணர் நெல் உலர வைத்தார்.
அப்பொழுது மழை பெய்தது. மழை வெள்ளம் நெல்லை அடித்துக்கொண்டு போகுமோ என்று அந்தணர் ஐயுற்ருர் ஆளுல் அந்த நெல்லை மழை வெள்ளம் அடித்துக்கொண்டு போகாவண்ணம் சிவபெருமான் வேலி கட்டிக் காத்தருளி

Page 123
234 நெஞ்சில் நிலைத்த சுறநூறுலா
ஞர். அதன் காரணமாகவே திருநெல்வேலி அப்பெயர் பெற்றது, இன்றும் திருநெல்வேலியைச் சுற்றி நெல் வயல் கள் வேலியாக அமைந்துள்ளன. அவ்வரலாறு காரண மாகவே அத்திருத்தலத்துக்கு இறைவனை "நெல்லுக்கு வேலி யிட்ட நெல்லியப்பர்” என வழங்குவர். அங்கு இறைவன் மூங்கிலடியில் முளைத்து வெளிப்பட்ட காரணத்தால் அத் திருத்தலம் "வேணுவனம்’ எனவும் பெயர் பெறலாயிற்று. இறைவன் "வேய் முத்தநாதர்" என வழங்கப்படுகிருர்.
திருநெல்வேலி பாடல் பெற்ற ஒரு திருத்தலம். திரு ஞானசம்பந்தப் பெருமான் திருநெல்வேலியில் எழுந்தருளி யிருக்கும் இறைவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். மூன்ருந் திருமுறையில் இடம் பெற்றுள்ளது அத்திருப்பாசுரம். இத் தேவாரப் பதிகத்தின் முதற்பாசுரம் இவ்வாறு அமைந் துள்ளது.
மருந்தவை மந்திரம் மறுமை நன்னெறியவை
மற்று மெல்லாம் அருந்துயர் கெடுமவா நாமமே சிந்தை செய்
நன்னெஞ்சமே பொருந்துதண் புற வினிற் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம் பூஞ் செருந்திசெம் பொன் மலா திருநெல்வே லியுரை
செல்வர் தாமே.
தமிாழராய்ச்சி மகாநாட்டுக் கலாச்சாரச் சுற்றுலாவை ஓர் ஆற்றுப்படை என்றே வருணிக்கலாம். மாநாட்டில் பங்கு பற்றியவர்களுள் ஒரு பகுதியினர் ஆற்றுப்படுத்தப் பட்டனர். குமரிமுனை வரை ஆற்றுப்படுத்தப்பட்டனர் கலாச்சாரச் சுற்றுலா வில் பங்குபற்றியவர்களுள் பலர். ஆற்றுப்படுத்தப்பட்டவர்களுள் பலர் தமிழகத்தைக் கண்டு கழிக்கும் வாய்ப்பை முதன்முதல் பெற்றவர்களாவர். அப்

பாண்டிய நாட்டு நங்கையின் மணி வயிறு 235
பகுதிகளுக்குச் சென்று பழக்கம் உள்ளவர்கள் கலாச்சாரச் சுற்றுலாவில் வழிகாட்டிகளாகக் கடமை ஆற்றினர். எனவே கலாச்சாரச் சுற்றுலாவை ஆற்றுப்படை என வருணிப்பது சாலவும் பொருத்தமுடையதாகும். கலாசாரச் சுற்றுலா வைக் குமரி ஆற்றுப்படை என்று கூறிவிடலாம்.
குமரி ஆற்றுப்படையின் கலாசாரச் சுற்றுலாவின் ஐந் தாம் நாள். 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதினருந் தேதி, செவ்வாய்க்கிழமை. அதிகாலை. சிறப்புப் புகை வண்டி திருநெல்வேலி புகைவண்டி நிலையத்தை வந்தடைற் தது. முன்னர் செய்த ஒழுங்குகளை மாற்றியமைக்க வேண்டி ஏற்பட்டதினலேயே அதிகாலை திருநெல்வேலியை அடைந் தோம். முன்னைய ஏற்பாட்டிற்கிணங்க சிறப்புப் புகைவண்டி தென்காசியை அதிகாலை அடைந்திருக்க வேண்டும். தென் காசியிலிருந்து எட்டரை மணிக்கும் ஒன்பதரை மணிக்கும் இடைப்பட்ட கால எல்லையுள் திருக்குற்ருலத்துக்குச் சுற்றுலாக் குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டிருத்தல் வேண்டும். புனித தீர்த்தமான திருக்குற்ருலத்தில் வரட்சி ஏற்பட்டதன் காரணமாக அங்கு செல்லும் எமது திட்டம் கைவிடப்பட்டது. சுத்தர் கோயில் என்றும் அழகிய பழங் கோயில் என்றும் குற்ருலம் அழைக்கப்படுகிறது. அதன் அண்மையில் கூத்தர் கோயில் உள்ளது என்றும் கூறுவர். குற்ருலத்துக்கு இரண்டு கல் தொலைவில் தேனருவி அமைந் துள்ளது. நாம் குற்ருலத்துக்குச் செல்ல இருந்தது தை மாதமாகும். ஆனல் ஆணித் திங்கள் முதல் புரட்டாசித் திங்கள் வரை "சாரல் பருவும் நிலவும், மாலையில் மேகக் கட்டிப் பெய்யுந் தூற்றல் "சாரல்’ எனப்படும். எனவே திருக்குற்ற லத்தில் நீர் மிகுதியாக உள்ள கால எல்லையையே "சாரல் பருவம்” என்பர். இதன் பயணுகவே குற்ருலத்தில் சாரல் எப்போது ஆரம்பிக்கும்" என்று கேட்கும் கேள்வி வழக்காருகி உள்ளது. 'ஆனி மாதம் சாரல் கட்டுகிற

Page 124
236 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
காலம்" என்று கூறும் வழக்கம் இன்றும் திருநெல்வேலியில் நிலவுகிறது.
திருஞானசம்பந்தர் தமது முதலாம் இரண்டாம் திரு முறைகளில் திருக்குற்ருலத்தைப் பாடல் பெற்ற தலமாக அமைத்துப் பாடியுள்ளார். அவ்வாறு பாடும் பொழுது குற்ருலம் இயற்கை எழில் நலம் மிக்க திருத்தலமாகவே அமைத்துப் பாடியுள்ளார். அவ்வாறு இயற்கை வளம் வருணிக்கப்பட்ட ஒரு தேவாரப் பாசுரம் இவ்வாறு அமைந் துள்ளது.
பக்கம் வாழைப் பாய்கனியோடு பலவின்தேன் கொக்கின்கோட்டுப் பைங்கனி தூங்குங் குற்ற லம் அக்கும்பாம்பும் ஆமையும் பூண்டோர் அனலேந்துழி நக்கன் மேய நன்னகர் போலுந் நமரங்காள். (கொக்கின் கோட்டு - மா மரச் கிளைகளில், தூங்கும்-தொங் கும், நமரங்காள்- தம்மவர்களே)
திருக்குறும்பலா, குற்ருல நீர் வீழ்ச்சியினை அடுத்து வட கரையில் உள்ளது. இதனைக் குற்ருலம் என்றும் கூறுவர். குறும்பலா அங்குள்ளமையின் அப்பெயர் பெற்றது என்பர். பலாவின் ஒரு வகை 'குறும்பலா’ எனப்படும். முன்னர் அக்கோயில் "திருமுற்றம்" என்ற பெயருடைய திருமால் கோயிலாக இருந்தது பின்னர் அகத்திய முனிவர் அங் குள்ள திருமால் வடிவினைச் சிவலிங்க வடிவாக ஆக்கினர், அதுமுதல் அக்கோயில் சிவாலயமாகியது. மற்ருெருதேவா ரப் பாசுரத்தில் இயற்கைநலம் இவ்வாறு அமைந்துள்ளது. தலைவாண் மதியங் கதிர் விரியத் தண் புனலைத் தாங்கித் தேவி முலைபாகங் காதலித்த மூர்த்தியிடம் போலும் முதுவேய் சூழ்ந்த மலைவாய சும்புபசும் பொன் கொழித்திழியும் மல்குசாரல்

பாண்டியநாட்டு மங்கையின் மணி வயிறு 237
குலைவாழைத் தீங்கனியும் மாங்கனியுந் தேன் பிலிற்றுங் குறும்பலாவே,
(அசும்பு - நீர் ஊற்று)
திருநெல்வேலி பழமை மிக்க நகரம். திராவிட நாக ரீகத்தின் பண்டை இருப்பிடமாகத் திகழ்ந்த பெருமை அந் நகருக்கு உண்டு. அடிச் நல்லூரிலும் சிரிவைகுண்டத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ள புதைபொருள்களிலிருந்து திருநெல் வேலியின் பழமை புலப்படுகிறது. வரலாற்றுக் காலத்துக்கு (முற்பட்ட ஆர்வத்தைத் தூண்டக்கூடிய பல வகைப் பொருள்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. பண்டைக் கால உரோமன் நாணயங்களும், வெனிஸ் நகரச் சார் புடைய பண்டைய ஐரோப்பிய பொன் நாணயங்களும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி வெளிநாடு களுடன் சுொண்டிருந்த வியாபாரத் தொடர்புகளுக்கு அவை தகுந்த சான்றுகளாக அமைந்துள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெரியனவும் சிறியனவு மான பல கோவில்கள் உள்ளன. காலத்தால் பழையனவும் பிற்க்ாலத் தனவுமான பல கோவில்கள் இருக்கின்றன. அவற்றை நகரங்களில் காணலாம். கிராமங்களில் காண லாம். காடுகளில் காணலாம். மலைகளில் அமைந்திருப்ப தைப் பார்க்கலாம். ஆற்றங்கரைகளில் தோன்றுவதைக் காணலாம். ஏறக்குறைய ஈராயிரம் அத்தகைய கோவில் கள் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கின்றன என கணிக் கபபட்டுள்ளது. அவற்றுள் பல மிகப் பழமையுடையன என நம்பப்பபடுகிறது. அவற்றுள் பெரும் பாலானவை மதுரை யிலிருந்து ஆட்சிபுரிந்த பாண்டிய மன்னர்களாலே கட்டி எழுப்பப்பட்டன என்றும் கருதப்படுகின்றது. தாமிரபருணி ஆற்றங்கரையிலே திருநெல்வேலி அமைந்துள்ளது. தாமிர பருணி ஆற்றின் இடதுகரையில் பூரீசலீ வதீசுவரர் கோவில்

Page 125
238 நெஞசில் நிலைத்த சுற்றுலா
அமைந்துள்ளது. அது புகழ் பெற்ற ஒரு கோயில், தமிழகத் தில் உள்ள மிகப் பெரிய கோவில்களுள் அது ஒன்று எனக் கருதப்படுகிறது. அக்கோவில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதன் கோபுரம் கி.பி. 1606 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது என்பர். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் 1628 இல் காந்திமதி
யம்மை கோவில் அமைக்கப்பட்டது.
செங்கல்லினலும் சுண்ணச்சாந்தினலும் ஆன பெரிய நந்தி ஒன்று அங்கே உள்ளது. அதன் உருவத்தை இராமே சுவரத்தில் உள்ள பெரிய நந்தியுடன் ஒப்பிடலாம். வெண் மையான அந்த நந்தி கண்கவர் வனப்புடன் அங்கு விளங்குகிறது. கி.பி. ஏழாம் நூற்ருண்டில் கட்டி எழுப் பப்பட்ட பிரதான மண்டபம் ஒன்று அங்கு உண்டு. அந்த மணிமண்டபத்தில் பல தூண்கள் அமைந்துள்ளன. நடுவில் உள்ள பெரிய தூண், அதனைச் சுற்றி உருவிலும் உயரத் திலும் வேறுபட்ட நாற்பத்தெட்டுச் சிறு தூண்களைக் காணலாம். அவை ஒவ்வொன்றும் தனித்தனிக் குரல் எழுப்பும் தன்மையன. ஒவ்வொன்றும் வெவ்வேறு சுரங் களை உண்டாக்கும் ஆற்றல் உடையன. இசை எழுப்பும் தூண்களாக அவை அமைந்துள்ளன.
இசைக்கருவிகளோடு கூடிய பல நடனக் காட்சிகள் அங்குள்ளன. மணிமண்டபத்துக்குப் புறம்பாக அங்கு வேறு பல மண்டபங்கள் உள்ளன. சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமா வார மண்டபம், ஊஞ்சல் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் எனப் பல மண்டபங்கள் உள்ளன. அவற்றின் அமைப்புத் தனித் தமிழக நாகரீகச் சிறப்புடை யனவாகும். சோமவார மண்டபத்தில் வில்லுக்கோட்டு இயக்கும் ஒருவரின் அலாதியான ஒரு தோற்றத்தைக் காணலாம். 'புருடா மிருக பாண்டவர் எனப்படும் யாளி

பாண்டிய நாட்டு மங்கையின் மணி வயிறு 239
களினதும் அனுமானினதும் சிற்பங்கள் பலவற்றை அங்கு காணலாம். அவற்றின் நுண்ணியம் ஈண்டு குறிப்பிடத் தக்கது
நடராஜப் பெருமான் திருநடனம் புரிந்த பஞ்ச சபை கள் உண்டு. அவற்றுள் ஒன்ருன தாமிர சபை அங்குள் ளது. அதனையே ஐவகை மன்றங்களுள் ஒன்ருன செம்பு மன்றம் என்பர், கோவிலின் உட்புறத்திலே மரத்திலே செதுக்கப்பட்ட பல சிற்பங்களைக் காணலாம். வெளிப் புறமாக உள்ள மேல் பக்கம் செப்புத் தகடுகளால் மறைக் கப்பட்டுள்ளது. ஊஞ்சல் மண்டபத்தில் 96 தூண்கள் உள்ளன. வீரரினதும் இசை வல்லுநரினதும் ஏனையோரி னதும் சிற்பங்களைக் காணலாம்.
திருநெல்வேலியையும் பாளையங் கோட்டையையும் இணைக்கும் பாலம் தாமிரபருணி ஆற்றுக்கு மேலாக அமைக் கப்பட்டுள்ளது. அப்பா லம் சுலோன முதலியாரின் அன்பளிப்பு. அம்மாவட்ட ஆளுநரின் அலுவலகத்தில் நாயிப்செரிஸ்த்தார் என்னும் பதவியை வகித்தனர். திரு நெல்வேலியின் உயிர்குடிப் பிரசை, பாலத்தின் திட்டம் கப்ரின் பேபர் (Captarin Faber) என்பவரினுல் தீட்டப்பட் டது. லெப்டினன்ற் ஹேர்ஸ்லி என்பவர் அதனைக் கட்டி வைத்தார். அரைஇலட்சம் ரூபாவுக்குச் சற்றுக் கூடுதலான தொகையே அதன் நிர்மானத்துக்காகச் செய்யப்பட்டது. 1843 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டி முடிக்கப்பட்ட அப்பாலம் ஆடம்பரமாகத் திறந்து வைக்கப்பட்டது. நீள் வட்டமான பதினுெரு வளைவுக் கட்டுக்கோப்புக்கள் பாலத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. கோடிக்குக் கோடியான அவை ஒவ்வொன்றிலும் இடை நீளம் அறுபது அடிகளாகும். அப்பாலத்தின் அமைப்பு இங்கிலாந்தில்

Page 126
240 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
தேம்ஸ் நதிக்குமேலாக இடப்பட்டுள்ள வாடெர்லு (Watereo) பாலத்தைப் பெரிதும் ஒத்திருக்கிறது.
மதுரையில் உள்ள ஏடுகளுக்கிணங்க திருநெல்வேலி என்னும் தற்கால நகரம் ஆரியநாத முதலியார் என்பவ சால் அமைக்கப்பட்டது. அவர் 1559 முதல் 1565 என்று ஆட்சி புரிந்த விஸ்வநாத நாயக்கமன்னரின் அமைச்சராவர்.
35 நெல்லநகர் தந்த நல்வரவேற்பு
குற்றலாச்சாரல் பழங் கொட்டுளு சேலை
குதித்திழியும் நீர் வெள்ளிப் பிழம்பாய் நிற்கும் கற்றை முடி பொன் மேனி தழுவ மாதர் கணவரொடு
நீராடக் கவிகள் ஏங்கும் கற்ற உங்கள் மனம்போலத் தெளிந்த நீரால்
கரையெல்லாம் நெல்வளத்தை ஆள்ளிவரும் வற்றத பொருணைவளத்திரு நெல்வேலி
மக்களதுநகர் மன்றவரவேற் பேற்பீர்.
திருநெல்வேலியை அடைந்த எம்மை மக்கள் கூடி நின்று மலர்மாலை அணிந்து வரவேற்றனர். நாம் புகை வண்டி நிலையத்திலிருந்து ஊர்வலமாக அழைத்துச் செல் லப்பட்டோம், மேலே குறிப்பிட்டுள்ள பாடலில் இடம் பெற்ற வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்றைய நாளின்

நெல்லை நகர் தந்த நல்வரவேற்பு 24፥]
முதல் நிகழ்ச்சியாக நகரமன்ற வரவேற்பு விழா அமை திருந்தது. வரவேற்பு உபசாரம் நடைபெற்ற வ. உ. சிதம் பரம் மணி மண்டபத்தில் மக்கள் பெருந்தொகையாகக் கூடி இருந்தனர். வரவேற்பிதழ்கள் பல வாசித்து அளிக்கப் பட்டன. பல இயக்கங்கள் அதில் பங்குபற்றின. அவ்வர வேற்பின்போது மறக்கமுடியாத, மறக்கக்கூடாத ஏனைய வர்களுக்கும் முன்மாதிரியாக அமையக்கூடிய பல நிகழ்ச் சிகள் இடம்பெற்றன. மக்கள் உள்ளங்களில் எப்பொழுதும் பதியக்கூடிய முறையில் அந்த நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.
திருநெல்வேலி நெல்லை என்றும் அழைக்கப்படுகிறது. முதலில் நெல்லை நகர ஆட்சி மன்றத்தினர் சார்பில் வர வேற்பிதழ் வாசித்து அளிக்கப்பட்டது. நெல்லை நகர ஆட்சி மன்ற எல்லையுள் வாழும் மக்களுள் பெரும்பாலானுேரி தமிழ் மக்களாவர். இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் அங்கு வாழும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். அத்தகைய நிலைமை காரணமாக நெல்லை நகர ஆட்சிமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப் பட்டு அங்கம் வகிக்கும் உறுபினர்களுள் ஒருவரே முல் லிமாவார். ஏனையோர் இந்து மதத்தைச் சாாந்தவர்களா வர். நகரமன்ற உறுப்பினர்களுள் மிகப் பெரும்பாலானேர் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அரசியல் கட்சி யைச் சேர்ந்தோராவர். தி. மு. க. பரிபாலனமே நெல்லை நகர ஆட்சி மன்றத்தில் நடைபெறுகின்றது. நெல்லை நகர ஆட்சி மன்றத்தின் சிறப்பம்சமாக அமைந்த தன்மை அதன் தலைவர் ஒரு முஸ்லிமாக இருந்தமையேயாகும். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவரான ஒரு முஸ்லிம் தி மு. க. பரிபாலனத்தில் உள்ள ஒரு நகராட்சி மன்றத்தின் தலைவராகத் தெரிவுப்செய்யப்பட்டுள்ளமை மிக முக்கிக மான ஒரு நிகழ்ச்சி அல்லவா? சிறந்த முறையில் அவரி அங்கு பாலனஞ் செய்து கொண்டிருந்தார். Gpépap

Page 127
242 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
நகராட்சி மன்றத்தின் வரவேற்பிதழ் வாசித்தளிக்கப்பட்ட பின்னரே மன்றத்தலைவர் ஒரு முஸ்லிம் என்பது புலன கியது. தலைவர் அவ்வரவேற்பிதழில் மு. அப்துல்மசீது என்றே தமது கையொப்பத்தை இட்டிருந்தார். அதுவும் சிறப்பாகக் குறிப்பிடவேண்டிய தொன்ருகும்.
நெல்லை நகரிலே வாழும் பல்வேறு சமூகங்கள் அன்னி யோன்னியமாக வாழுகின்றன என்பதற்கு ஆதாரமாக இது அமைந்துள்ளது. பல்வேறுபட்ட சமூகங்களுக்கிடையே நிலவும் சகிப்புத்தன்மையையும் நல்லுறவையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் உலகிற்குப் பாறைசாற்றிக் கொண்டுடிருக்கும் ஓர் எடுத்துக் காட்டாக அது நிகழ்கின் றதல்லவா? தமிழகத்திலே ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகக் கட்சி விரும்பி இருந்தால், அதன் பெரும்பான்மையைப் பயன்படுத்தி முஸ்லிம் அல் லாத அதன் உறுப்பினர் ஒருவரை நகராட்சி மன்றத்தல் வராகத் தெரிந்துதெடுத்திருக்கலாம் அல்லவா? அவ்வா றின்றி சிறுபான்மை இனத்தவரான ஒரு முஸ்லிமைத் தலைவராகத் தெரிந்தெடுத்திருப்பது அக்கட்சியின் பரந்த நோக்கத்தைப் பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையெனக் கூறின் அது மிகையாகாது.
சென்னையில் நடந்த உலகத் தமிழ் மகாநாட்டில் கலந்து கொண்டு நெல்லை நகருக்கு வருகைதந்த வெளிநாட்டு அறி ஞர்களுக்கு நெல்லை நகராட்சிமன்றம் வாசித்தளித்த வர வேற்பிதழ் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்தது. தமிழில் இருந்த வரவேற்பிதழ் கவிதையாகவே அமைந்திருந்தது. அத்தகைய ஒரு பாடல் இதன் தொடக்கத்தில் கொடுக் கப்பட்டுள்ளது. ஆறு செய்யுட்களைக் கொண்டு அமைந் திருந்தது அவ்வரவேற்பிதழ். அக்கவிதைகளை இயற்றியவர் ஜனப். கே. பீர்முகம்மது என்பவர் ஆவார். அவர் ஓர்

நெல்லை நகர் தந்த நல்வரவேற்பு 243. அறிவியல் பட்டதாரி. இப்பொழுது அவர் நெல்லை நகர ஆணையாளாராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிருர், ஒரு செய்யுளில் தமிழ் ஆர்வம் படைத்த வெளிநாட்டு அறிஞ ருக்கும் பிறநாட்டு மொழியில் தேர்ச்சியைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்ளும் எந்தத் தமிழருக்கும் உள்ள வேறுபாடு இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
வந்துற்றிர் தமிழகத்தின் அழைப்பை ஏற்று
மாநாட்டில தீந்தமிழைச் சுவைத்தீர்-மற்றும் தந்துர்ரீர் அரியபல கருத்தை எங்கள்
தாய்மொழியை ஆராய்ந்தே அதிசயித்தோம்! எந்தமிழர் பிறநாட்டு மொழியிற் றேறி
எல்லோரும் வியக்கும் விதம் பேசும்போது செந்தமிழ்த்தாய் மெய் சிலிர்த்துப் பூரித்தாற்போல் திளைக்கின்ருள் நும்தாய் யாம் புகழக்கேட்டு. தமிழன்னை பிறந்த அகத்தியன் பொதிகை அங்குள்ளது. மகாகவி பாரதியார், உமறுப் புலவர், கட்டப்பொம்மன், வ.உ. சிதம்பரஞர் பிறந்த தாயகம் திருநெல்வேலி மாவட் டம் என்று குறிப்பிடப்பட்டது. அக்கருத்துக்களைக் கொண்ட பாடல் இவ்வாறு அமைந்திருந்தது.
அமிழ்தனையத் தமிழன்னை பிறந்தாள் இங்கு அகத்தியரின் பொதிகையிலே! அதையும் காண்மின் தமிழருக்கு வீரத்தைக் கவியால் ஊட்டித் தழையினிக்கச் சுதந்திரததுத் தணலை மூட்டும் எமது கவி பாரதியார், உமறு 'இந்நாட்டில் ஏன் உனக்குக்கப்பம்’ என்று அயலார் ஆட்சி மமதை கெட முழக்கமிட்ட கட்டபொம்மன். மனஉரத்துச் சிதம்பரம் இம்மாவட்டம் தான்.
அடுத்துப் பாளையங்கோட்டை நகர்மன்றம் ஒரு வர வேற்பிதழை வாசித்தளித்தது. "ஏறத்தாழ நாற்பதுக்கு

Page 128
244 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
மேற்பட்ட பிறநாடுகளிருலிந்து தமிழ்நாடு வந்து உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு பேருரைகள் பல ஆற்றிய பேரறிஞர் பெருமக்கட்கு வழங்கப்படும் வரவேற்பிதழ்" என அதன் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது
"தமிழ் மனத்தினை உலகெலாம் பரப்பிய பெரியோர் கள்" என்று தமிழ்க் கலைப்புகழை உண்மையாக உணர்ந்த உத்தமர்களென்றும் உயர்ந்த உள்ளத்தால் எங்களோடு குடும்ப உறவு பூண்ட ஆன்ருேர்களே' என்று அங்கு சென்ற வர் 4ள் அழைக்கப்பட்டனர். மூன்று பந்திகளைக் கொண்ட அவ்வரவேற்பிதழில் இரண்டாம் பந்தி இவ்வாறு அமைந் திருந்தது
"தமிழின் தொன்மையிஆனயும், வன்மையினையும், மென் மையினையும் ஆழ்ந்தெடுதது அறிவிக்க வந்துள்ள தங்க ளுடைய பெருமித உள்ளத்தினையும் பெருந்தன்மைப் பண்பினையும் நாங்கள் உளமார அறிகின்ருேம். மொழியியல், ஒலியியல் ஆகிய முறைகளில் தமிழ் மொழியின் தனித்தன்மையினை முதலில் வெளியிட்ட பெருமை வெளிநாட்டுப் பேரறிஞர்களாகிய உங்க ளையேசாரும். இவைகளுக்கு நாங்கள் கரம் கூப்பிச் சிரம்தாழ்த்தி நன்றி சொல்கிருேம்.
மூன்ருவது வரவேற்பிதழை மேலப்பாளையம் நகர் மன்றத்தார் மனமுலந்து வாசித்தளித்தனர் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் நகர் மேலப்பாளை பம். "கதிரவனைக்கண்ட கமலம் போலும், மழை கண்ட மாநிலம் போலும், தாய்முகம் கண்ட சேய் போலும் தாம் மனம் மகிழ்வதாக மேலப்பாளைய நகர் மன்றத்தினர். தமது வரவேற்பிதழில் குறிப்பிட்டனர். "அவ்வரவேற்பித ழில் தமிழ் தளைக்க வந்த பெருமக்களே' என்றும் *காசினி போற்றும் கலைவள்ளல்கவோ" என்றும் "மக்கள் நலம் பேணும்

நெல்லை நகர் தந்த நல்வரவேற்பு 245 மாண்புடையீர்களே” என்றும் "உலகத் தகைமைசால் சான் ருேர்களே' என்றும் அங்கு சென்றவர்கள் பாராட்டப் பட்டனர். அவ்வரவேற்பிதழில் ஒரு பகுதி இவ்வாறு அமைந்திருந்தது.
"தித்திக்கும் தெள்ளமுதாய் தெள்ளமுதின் மேலான் முத்திக்னிெயே என் முத்தமிழே’ என தமிழ் விடுதூது ஆசிரியர் சுவைத்து மகிழ்ந்தும், கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ யெனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந்தா” என ஒளவை பிராட்டியார் ஆர்வத்துடன் விழைந்ததுமான தமிழ் மொழியின் பாரறிந்த பெருமையினை நாமறிந்தவாறு எடுத்து இயம்பினிர்கள்.
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்று புரட்சிக் கவிஞர் தமிழ் முரசு கொட்டினர். தமிழர் தாம் வாழ்வோடும் வளர்ச்சியோடும் ஒன்றிக் கலந்து விட்ட தமிழ் இன்று உலக அரங்கில் போற்றப்படும் சிறப்பெய்தியுள்ளது. முந்தை நறுந் தமிழை தமிழர் மூச்சென்று கொள்ளாரோ என்று சிந்தை குளிரத் தக்க விதத்தில் தரணியறியத் தமிழ் விழாக் கொண்டா டினுேம், ஆதி இறைவன் அருள் வலியாலும் இன்று சார்ந்த உலகத் தமிழறிஞர்கள் தவ வலியாலும் தமிழ் புகழ் ஏறிப் புவியமிசை என்றென்றும் வாழ எழுச்சி பெற்றுவிட்டது.
வெளியுலகில் சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள எவற்றிற்கும் பெயர்களெல்லாம் கண்டு தெளிவுறுத்தும் டடங்களொடு சுவடியெலாம் செய்து செந்தமிழைச் செழுந் தமிழாய்செய்வதுவும் வேண்டும் என்ற கனவும், பிறநாட்டு தமிழறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் என்ற கனவும் நுங்கனை

Page 129
246 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
வரினதும் நுண்ணறிவிஞலும் திறமையினலும் முயற்சி யிஞலும் கூடிய சீக்கிரம் நனவாகி விடும் என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு. தாங்கள் எல்லோரும், எல்லா நலமும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்து தமிழின் புகழையும் சிறப் பையும் தரணியெலாம் பரப்ப எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாளுக,
நான்காவது வரவேற்பிதழும் கவிதையாகவே அமைந் திருந்தது. வரவேற்பிதழ் பாராட்டு இதழ் எனப்பெயர் சூட்டப்பட்டிருந்தது. நெல்லைக் கலை இலக்கிய மன்றத்தின் சார்பில் அப்பாராட்டு இதழ் வாசித்தளிக்கப்பட்டது. அப் பாராட்டு இதழில் மொழிகள் பூக்களுக்கும் அறிஞர்கள் அவற்றை நாடிச் செல்லும் வண்டுகளுக்கும் உவமித்து நயம்படக்கூறப்பட்டுள்ளது. இக்கருத்துக்களைக்கொண்ட முதற் செய்யுள் இவ்வாறு அமைந்திருந்தது.
உலகிலுள்ள மொழிகளெனும் பூக்கள் தம்மில்
உறைந்திருந்து மதுவுண்ணும் ஊக்கம் கொண்டே பல தொலைவு சுற்றிப்பின் பங்கா யெந்தம்
பைந்தமிழாம் அமுதுண்டே ரீங்காரங்கள் பலசெய்தே எம்மிடையே பூங்கா வண்டாய்ப்
பறந்து வந்து அழகுறவே வீற்றிருக்கும் உலகத்துப் புலவோரே! உங்களுக்கே எங்கள்
உளங்கனிந்த நன்றிபல உரித்தே ஆகும்!
நான்காவதாக அமைந்துள்ள இறுதிப் பாட்டில் அங்கு சென்றவர்கள் வாழ்த்தப்பட்டனர்.
சின்சூறளே நீரிருந்தீர் சிறப்பில் மிக்கீர்!
சிறந்ததுவே எமது புகழ் தினங்கள் தோறும்! எந்நாளும் இதயத்தே ஏந்தி நிற்போம்
இவண்வந்து நீர்செய்த இணக்கம் தன்னை!

நெல்லை நகர் தந்த நல்வரவேற்பு 247
இந்நாடு தனைமுறையாய்க் காட்சி கொள்ள
எழுந்தருளி வலம் வந்தீர்! எழுச்சிவேண்டாம்
பொன்னளென் றிதையுணர்வோம் போற்றிசொல்லி புகழ்ந்திடுவோம் உமது பணி வாழ்க! வெல்க!
திருநெல்வேலியைச் சேர்ந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தினர் மற்ருெரு வகையில் சிறப்பான ஒரு வரவேற்பிதழை வாசித்தளித்தனர். அதனை அவர்கள் வாழ்த்து மடல் என அழைத்தனர். பல்வேறு நிறத்தனி வான பட்டுத் துணியில் கறுத்த எழுத்தில் அச்சிடப்பட்ட வாழ்த்து மடல்களாக அவை அமைந்திருந்தன. மூன்றே பாக்களைக் கொண்ட அவ்வாழ்த்து மடலின் இரண்டாம் பாடல் இவ்வாறு அமைந்திருந்தது.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் பாங்கில் யாமறிந்த பெரும்புலவர் பெருமையால் இங்கிணைந்தீர் யாதும் ஊரே யாவரும் கேளிர்என்ற சீர்மிகு மாதராம் தமிழன்னை மக்களாய் உமைப் பெற்ருள்.
வரவேற்பிதழ்களும், பாராட்டுக்களும், வாழ்த்து மடல் களும் வாசித்து அளிக்கப்பட்டபின்னர் நன்றி உரை வழங் கப்பட்டது. 'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடை யோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பிக்கி றேன் என்று நன்றியுரை ஆரம்பமாகியது. சற்றுத் தயங்கி னேன். எனது காதுகளையே நம்பமுடியவில்லை. நன்றியுரை வழங்கியவர் ஒரு முஸ்லிம் என்பதை பின்னர் தான் நான் உணர்ந்துகொண்டேன். அவர் வேறுயாருமல்லர். தமிழ கச்சட்ட சபையின் உறுப்பினருள் ஒருவர். முஸ்லிம் லீக் கைச் சேர்ந்தவர். மாவட்ட முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர். திருநெல்வேலி மாவட்டத்தின் இராவன

Page 130
248 நெஞசில் நிலைத்த சுற்றுலா
சமுத்திரம் என்ற முகவரியை உடையவர். அவர் பெயரி ஹாஜி στιb. στιb. பீர் முகம்மது. இஸ்லாமியத் தத்துவ ஞானத்தில் பெரிதும் ஈடுபாடுடையவர். அறிவும் ஆற்றலும் அனுபவமும் மிக்கவர். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் அதிக ஆர்வம் காட்டுபவர். நான் அவரை அறிந்து கொண்ட பின்னர் எனது குழந்தைகளுக்கு நிறைய அன் பளிப்புச் செய்து அவர்களை மகிழ்வடையச் செய்தார். ஒரு முஸ்லிம் எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஆரம்பிப்பதற்கு முன்னர் அல்லாஹ்வின் பெயரைக் கூறியே அதனைத் தொடங்குவது வழக்கம். உணவு அருந்துவதற்கு முன்ன ராயினும் சரி, வேறு எந்த ஒரு சின்னஞ்சிறிய வேலையா யினுந் தொடங்குவதற்கு முன்னராயினுஞ் சரி அல்லாஹ் வின் திருநாமத்தைக் கூறியே ஆரம்பித்தல் வேண்டும். இந்த முறைமையைப் பின்பற்றியே அன்று ஹாஜி பீர் முஹம்மது அவர்கள் அவ்வாறு தமது நன்றி உரையை ஆரம்பித்தார்.
பொது வரவேற்புக் கூட்டத்தின் இறுதி நிக்ழ்ச்சியாகப் பரிசில்கள் வழங்கப்பட்டன. கம்பராமாயண சாரம் என்ற நூலின் இரண்டு தொகுதிகள் அன்பளிப்புச் செய்யப்பட் உன, முதலாம் தொகுதியில் பால, அயோத்திய காண்டங் களும் இரண்டாந் தொகுதியில் ஆரணிய, கிஷ்கிந்த, சுந்தர காண்டங்களும் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்தெடுத்த இனிய கவிகளும் விளக்க வுரையும், கதைத் தொடர்ச்சியும் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத் தலைநகர் சென்னையிலே வள்ளுவர் ஆண்டு 1999 மார்கழியில் நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மகா நாட்டின் கருத்தரங்கிலே கலந்து கொண்டு திருநெல்வேலி வந்திருந்த அயல் அகத் தமிழ் அறிஞர்க்கு, திருநெல்வேலி மதுரைத் திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி ஆசி ரியர்களும் மாணவர்களும் மனமுவந்து வழங்கிய அன்

நெலலை நகர் தந்த நல்வரவேற்பு 249
பளிப்பு என அங்கு பொறிக்கப்பட்டிருந்தன. ஈழத்தின் தவப்பெரும் புதல்வர் விபுலானந்த அடிகள முதலாந் தொகுதிக்கு ஆங்கிலத்தில் ஓர் அணிந்துரை வழங்கி உள் ளார். பின்னர் பத்தமடை என்ற இடத்தில் தயாரிக்கப் படும் ஒருவகை சிறிய பாய்கள் அன்பளிப்பாக வழங்கப் பட்டன. மிகு நுண்ணிதாக அவை நெய்யப்பட்டிருந்தன. பத்தமடை என்ற இடம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. அங்கு சிறப்புக் கலையாக அமைந்துள்ளது அவ் வாறு நெய்யப்படும் பத்தமடைப் பாய்களேயாகும். இத துறையில் முஸ்லிம் மக்களே ஆற்றல் மிக்கோராக விளங்கு கின்றனர். ஒவ்வொருவருக்கும் மும் மூன்று வீதம் பத்த மடை ப் பாய்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அவை பத்தமடை என்றே அழைக்கப்படுகின்றன. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிஸபெத் அவர்களின் இந்திய விஜயத்தின் போதும் அத்தகைய பத்தமடைப் பாய்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன என்பதும் ஈண்டு குறிப் பிடத்தக்கது,
இவ்வாறு சிறந்த முறையில் வரவேற்பளித்த நெல்லை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் நகர மன்றங்களையும் ஏனைய நிலையங்களையும் நாமும் வாழ்ந்துதல் வேண்டும். கூட்ட நிகழ்ச்சிகள் முடிவுற்ற சமயம் தேசிக விநாயகம் பிள்ளை நெல்லை நகர சபையை வாழ்த்திய பாடலே எமது நினைவுக்கு வந்தது. அப்பாடல் இவ்வாறு அமைந்திருந்தது.
சொலலற்கரிய கலைவளரத் தொழில்கள் வளர ப் பொருள் வளர தொல்லை தருநோய் அற நீங்கிச் சுகமாய் மக்கள் 62.u srp is g7 62 UT நல்ல நல்ல நெறிகண்டெர் நாளும் போற்றிப் பணி யாற்றி நெல்லை நகர சபை யுலகில் நீடு வாழ்க! வாழ்கவே.

Page 131
36
திருக்குறுங்குடி
உன்னையும் ஒக்கலையில் கொண்டுத மில்மருவி
உன்னெடு தங்கள் கருத்தாயின செய்துவரும் கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக்
கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்கருளி மன்னுகுறுங் குடியார் வெள்ளறையாய்!
மதிழ் சூழ்சோலை மலைக் கரசே! கண்ணபுரத் தமுதே! ான் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை
ஏழுலகும் உடையாய் ஆடுக ஆடுகவே.
இது பெரியாழ்வார் திருமொழியில் உள்ள ஒரு பாசு ரம். முதற்பத்தில் இடம் பெற்றுள்ளது. ஐந்தாம் திரு மொழியில் எட்டாம் பாசுரமாக இடம்பெற்றுள்ளது. விஷ்ணுவைச் செங்கீரைப் பருவத்தில் வைத்துப் பாடப் பட்டது. பிள்ளைத் தமிழ்ப் பருவம் பத்தினுள் செங்கீரை என்பது ஒன்று குழந்தை பிறந்த ஐந்தாம் மாதத்தில் தன் தலையை நிமிர்ந்து இங்கும் அங்கும் அசைந்தாடு வதைச் சிறப்பாகக் கூறும் பகுதியைச் செங்கீரை 6rsis turi. இங்கு ஒக்கலையில் என்பது பந்துவாக என்ற பொருளிலும்

திருக்குறுகுங்டி 251
அவலம என்பது துன்பம் என்ற பொருளிலும் உபயோகிக் கப்பட்டுள்ளது. மதிழ்களால் சூழப்பட்ட சோலைகளை உடைய மலையின் அரசனன விஷ்ணுவைப் பற்றியது. இப்பாசுரம், மலையின் அரசனே மன்னு குறுங்குடியாய் என அழைக்கப்பட்டுள்ளது. திருக்குறுங்குடியே இங்கு குறிப் பிடப்பட்டுள்ள திருத்தலமாகும்.
அது பழமை மிக்க வைஷ்ணவஷேத்திரமாகும். அது வாமன ஷேத்திரம் என்றும் வழங்கப்படும். "குறியவன் குடி' என்றும் அழைக்கப்படுகிறது. வாமனம் என்னும் வடமொழிச் சொல்லுக்குக் குறள்வடிவு என்பது பொருள் தசாவதாரத்துள் குறள் வடிவாய் அவதரித்த திருமால், வாமனன் என அழைக்கப்பட்டலாயினர். நம்மாழ்வாரின் தான்காம் பத்தின் நான்காம் திருவாய் மொழியின் முதல டியில் "மண்ணை யிருந்து துழாவி வாமனன் மண்ணினது வென்னும்" என்று வாமனப்பற்றிய குறிப்பு இடம்பெற் றுள்ளது. ,
நெல்லை நகர வரவேற்பு முடிந்ததும் சென்னை மாநக ரிலே தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் நடவடிக்கைகளுக் காக உபயோகிக்கப்பட்ட பேரூந்துகள் அங்கு எமக்காகக் காத்திருந்தன திருநெல்வேலிக்குத் தெற்கே புகைவண்டிப் பிரயாணம் இடம்பெறவில்லை. திருநெல்வேலிக்கும் கன்னியா குமரிக்கும் இடைப்பட்ட தூரத்தைப் பேரூந்துகளிலே கடத்தல் வேண்டும். நீண்ட பிரயாணம் ஆதலால் பிரதி நிதிகளை ஏற்றிக்கொண்டு பேரூந்துகள் புறப்பட்டன. விரைவாகச் சென்று கொண்டிருந்தன. நாம் ஒன்று நினைக் கத் தெய்வம் ஒன்று செய்கிறது அல்லவா? நாம் விரை வாகச் செல்லத் திட்டமிட்ட பிரயாணம் பல நிமிடங் களால் தாமதித்தது. திருநெல்வேலியிலிருந்து நீங்குவதற்கு முன்னர் புகையிரதப் பாதை ஒன்றைக் கடக்கவேண்டி

Page 132
252 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
இருந்தது. அப்பொழுது திருநெல்வேலிக்கு வரும் ஒரு புகை வண்டிக்காக அப்புகையிரதக் கடவை மூடப்பட்டிருந்தது. அக்குறுகிய கால எல்லையைப் பயன்படுத்திய பிரதிநிதிகள்
அதற்கு அண்மையில் அமைந்திருந்த கைத்தறி நிலையத்துக் குச் சென்று சிற்சில பொருள்களை வாங்கிக்கொண்டனர்.
பின்னர் பேரூந்துகன் விரைவாகச் செல்லத் தலைப் பட்டன. பச்சைப்பசேல் என்ற காட்சிகள் தோன்றி மறைந்தன. வயல் வெளிகள் எமக்கு எதிரே சென்று கொண்டிருந்தன. வீடுகள் குடிசைகள் முதலியன அங்கும் இங்கும் ஆகத் தோன்றின. அவை அனைத்தையும் விட்டு விட்டுப் பேரூந்துகள் விரைவாகச் சென்று கொண்டிருந் தன. அடுத்த நிகழ்ச்சியை நிறைவேற்றுமுகமாக நாம் சென்று கொண்டிருந்தோம். சற்றுக் குறைவான கால எல்லையுள் பல நிகழ்ச்சிகளை முடிக்க வேண்டிய நிர்ப் பந்தம் அன்று எமக்கு ஏற்பட்டது.
அன்றைய தினம் இரண்டாம் நிகழ்ச்சியாக அமைந் தது திருக்குறுங்குடிக்குச் சென்றதாகும். திருக்குறுங் குடி வைணவ திருத்தலத்துக்குச் சென்ருேம். வழக்கம் போல் வரவேற்பு நிசழ்ந்தது. இளநீர் வழங்கப்பட்டது. திருக் குறுங்குடித்தவாலயத்தைப் பார்க்கச் சென்ருேம். அத்திருத்தலம் எக்காலத்தில் கட்டப்பட்டது என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது. எனினும் கி. பி. ஐந் фтио நூற்ருண்டில் கட்டப்பட்டது என்று நிச்சய மாகக் கூறலாம் என்றும் கூறுவர். ஐந்தாம் நூற் ருண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் எனக் கருதப் படும் திருமாழிசை ஆழ்வார் திருக்குறுங்குடியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதை இதற்கு ஆதாரமாகக் காட்டுவர். முதலைகள் வாழும் பொய்கைகள்" வானளவிய பெரும் பனையின் பெரிய பழங்கள் அங்கு விழுகின்றன. அவற்றின்

திருக்குறுங்குடி 253
சத்தத்தைக் கேட்ட பொய்கைகள் உள் இருக்கும் வாளை சள் அங்கும் இங்கும் பாய்கின்றன. அத்தகையது திருக்குறுங்குன்றம். அங்கே எழுந்தருளி உள்ளவர் திருமால். இரணியனை இரண்டாகப் பிளந்தவர். சிங்கம் போன்றவர் இவ்வாறு இயற்கை வருணனையைக் கொண்டதாகத் திரு மாழிசை ஆழ்வாரின் பாசுரம் ஒன்று அமைந்துள்ளது. நூற்றிருபது திருச்சந்தவிருதப் பாசுரங்களைக் கொண்ட பகுதியில் அறுபத்திரண்டாவது பாசுரமாக அமைந்துள்ள திருவிருத்தம் மேற்குறிப்பிட்ட கருத்துக்களை இவ்வாறு
குறிப்பிடுகிறது
கரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும் பழம் புரண்டு வீழ வாளை பாய குறுங்குடி நெடுந்த காய் திரண்ட தோளி ரணியன் சினங்கொ ளாக மொன் ரையும் இரண்டு கூறு செய் துகந்த சிங்க மென்பதுன்னையே.
திருக்குறுங்குடித் திருத்தலம் அழகிய நம்பி கோயில்
என்றும் அழைக்கப்படுகின்றது. அக்கோவில் சிற்ப வேலைகள்
சிறந்தனவாகக் காட்சி அளிக்கின்றன. அங்குள்ள ஒரு கோபுரம் சித்திரக்கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. அச்சித்திரக் கோபுரத்தைச் சுற்றி வெளிப்புற மதில் ஒன்று அமைந்துள்ளது. கட்டிமுடிக்கப்படாத இராஜகோபுரத் கின் எஞ்சிய பகுதிகளைக் கொண்ட கிழக்குப் பக்கத்திலே பிரதான வாயில் அமைந்துள்ளது. மிகப்பெரிய கற்றுரண் களே அங்கு காணக்கூடியனவாக இருக்கின்றன. கொல்லம் ஆண்டு 235 (கி. பி. 1132) இல் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு இராஜகோபுரத்தின் கட்டட வேலைகள் ஆரம் பிக்கப்பட்டதைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. கோவிலில் புகும் ஒருவர் முதலில் காண்பது மட்டையடி மண்டபம் சுவாமிக்கும் அம்பாளுக்கும் உள்ள பிரணயகலகத்தைக்

Page 133
254 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா குறிக்கோளாய்க் கொண்டு தேவரடியாரும் கோவிற் சிப் பந்திகளும் அவ்விருவருக்கும் முறையே பிரதிநிதிகளாகநின்று நடத்தும் கோயில் திருவிழா மட்டையடி’ என வழங்கப் படுகிறது என்பர். அதன் மேற்கே இரதிமண்டபம் அமைந் துள்ளது. இரண்டு மண்டபங்களும் நாயக்க சிற்ப அமைப் பைச் சார்ந்தன. இரதி மண்டபத்தில் ரதியினதும் மன் மதனினதும் அருச்சுனனினதும் திரெளபதியினதும் தாட கையினதும் கருடனினதும் சிலைகளைக் காணலாம்.
அழகிய நம்பியின் அழகில் சொக்கிப்போன நம்மாழ் வார் பத்துப் பாசுரங்களைப் பாடியுள்ளார். அவ்வாறு பாடும்பொழுது நம்மாழ்வார் தம்மை நாயகியாகக் கொண்டு பாடியுள்ளார். அத்தகைய பாடல்கள் திருவாய் மொழியில் இடம்பெற்றுள்ளன. இலங்கைப் பல்கலைக்கழகப் GBurrâfiuri திரு.வி. செல்வநாயகம் அவர்கள் தமது "தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் கூறியுள்ளது போன்று "நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி” என்னும் பிரபந்தம் தமிழிலுள்ள மிகச் சிறந்த செய்யுளிலக்கியங்க ளுள் ஒன்ருக வைத்து எண்ணப்படும் சிறப்பு வாய்ந்தது. தம்மை நாயகியாகக் கொண்டு நம்மாழ்வார் பாடி ய பாடல் இவ்வாறு அமைந்துள்ளது.
திருவுடை மன் ன ரைக் காணில் திருமாலேக் கண் டேன் யென்னும் உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தானென்று துள்ளும் கருவுடைத் தேவில களெல்லாம் கடல்வண்ணன் கோயிலே யென்னும் வெருவிலம் வீழ்வில மோவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.
(நான்காம் பத்து - நான்காம் திருவாய்மொழி -8)
நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, மலமேல்

திருக்குறுங்குடி 255
நம்பி, திருப்பால்கடல் நம்பி என்ற ஐந்து உருவங்களில் தோற்றமளிக்கிருர் திருமால். அவற்றுள் இரண்டு உருவங்க ளான மலைமேல் நம்பியும் திருப்பாடல்கடல் நம்பியும் கோவிலுக்கு வெளியே தோற்றமளிக்கின்றன. அங்கே சிறு ஷேத்திரம் ஒன்றும் இருப்பதைக் காணலாம். மகேந்திர கிரீஸ்வர என்று சிவபெருமான் அழைக்கப்படுகிருர், "பக்கம் நின்ருர்’ என்றும் வழங்கப்படுகிருர். இது பற்றிப் பின்வரும் பரம்பரைக் கதை வழங்குகிறது. "பிரமனின் ஒரு தலையைக்கொய்ததினுல் தாம் பெற்ற பிரமகத்தி சாபத்தினுல் தமது அடியார்கள் தம்மை இழிவாக நோக்கு வர்” என சிவபெருமான் முறையிட்டாராம். 'நீர்’ என் னுடனே நிற்பீராக. நான் உமக்குச் சம அந்தஸ்து தருகி றேன். அப்பொழுது மக்கள் குறைவாகக் காணமாட்டார் கள். என்று அங்கு எழுந்தருளி இருக்கும் சிவபெருமான் கூறினராம். சிவபெருமானுக்கும் அங்கு தினசரி பூசை செய்யப்படுகிறது என்றும் ஒவ்வோர் இரவிலும் திருமால் தோன்றி சிவன்கோவில் பூசாரியிடம் சிவனுக்கு எவ்வித குறைவுமின்றிப் பூசை செய்யப்பட்டதா என்று கேட்பாரி என்றும், பூசாரி ஆம் என்று கூறுவார் என்றும் கூறப்படு கிறது. திருமங்கை ஆழ்வார் இதுபற்றித் தமது பரசுரம் ஒன்றில் "உமதுபக்கத்திலே சிவபெருமானுக்கு இடமளித்த பெருந்தன்மை படைத்த பெருமானே’ என்ற பொருளில் குறிப்பிட்டுள்ளார். '
ஏனைய கோவில்களில் உள்ளது போன்று துவஜஸ் தம்பத்தையும் சந்நிதி கருடனையும் கோவிலின் நடுவில் காணமுடியாது. ஆணுல், அவை சற்று வடக்கே அமையப் பெற்றுள்ளன. கோவில் வளவுக்குள் புகமுடியாத பஞ்சமகு லத்துதித்த விஷ்ணுபக்தன் ஒருவஞன நம்பாடுவான் எல் பவறுக்குக் காட்சி வழங்கவே அவை அவ்வாறு அமையப் பெற்றன என்பர். குரு பரம்பரைக்கு இணங்க மகாசாரி

Page 134
256 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
பரான யதிராசன் என்னும் முனிவர் தலைவனுள், இராமனுஜர் அக் கோவிலுக்குச் சென்றிருந்தார்.
பெருமான் பகவத் கதையையே வெளியிடுவதற்கு இயலாதிருக்கும் பொழுது இராமானுஜர் எவ்வாறு பலவற் றைத் திருத்தமுடிந்தது என்று வினவினராம். திருமாலின் மந்திரங்கள் சிலவற்றை விளக்குவதன் மூலமே அவ்வாறு செய்யமுடிந்தது என இராமனுஜர் பதிலிறுத்தாராம். அதனைத்தானும் கேட்கமுடியுமா என்று திருமால் கேட்டா ராம். மாணவர்போன்று வந்து கேட்டால் விளக்க முடி யும் என இராமானுஜர் விடையளித்தாராம். திருமால் மாணவனுக வந்து அதன் விளக்கத்தைக் கேட்டாராம். இவ்வாறு குரு பரம்பரை கூறுகிறது. இராமானுஜர் மாணவனுக்கு விளக்குவதற்காக அமர அமைக்கப்பட்ட பீடத்தை அக்கோவிலிலே இன்றுங் காணலாம்.
சித்திரக் கோபுரத்தின் அடித் தளம் கல்லாலானது. நான்கு பக்கங்களிலும் அழகி ப சித்திர வேலைப்பாடுகளைக் காணலாம். அத்தகைய நுணுக்கமான முறையில் செதுக் கப்பட்டு மெருகு ஊட்டப்பட்ட கற்சித்திரங்கள் அனைவரை யும் கவரத்தக்கனவாய் அமைந்துள்ளன.
கிழக்கு முகத்தின் வடபக்கத்திலே கார்த்திகேயனின் தும் (குமரக் கடவுள்) இந்திரனினதும் உருவங்கள் உள்ளன. அங்குள்ள வாகனங்களான மயிலினலும் ஜராவதத்தினு லும் அவர்கள் இன்ஞரெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கார்த்திகேயன் ஆறு கரங்களை உடையவராக அமைக்கப் பட்டுள்ளார். அடுத்து, புருஸ்மிருகனையும், வூமனையும் காணமுடியும், அதற்குச் சமீபமாக அசுரனை மிதித்துக் கொண்டிருக்கும் சிவபிரானை அகோர வீரபத்திர உருவத் தில் காணலாம். கிருஷ்ணனிதும் கோபி மசளிரினதும் கதையை அடுத்ததாகக் காணலாம். யமுனை நதியில் தீராடு

திருக்குறுங்குடி 257
வதும் குருந்த மரத்தில் ஆடைகளைத் தொங்கவிடப்பட்டிருப் பதும் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளன. தமது ஆடைகளை கோரும் பாணியில் கோபி மகளிர் அரை அளவு நீரில் இருப்பதுபோன்று சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளனர். இவ் வாறே வருணித்துக் கொண்டே போகக்கூடிய பல சித்திரங் கள் அங்கு இடம் பெற்றுள்ளன.
கிருஷ்ண லீலைகள் அக்கோவிலில் இடம் பெற்றுள்ளன. பூதனை என்பது ஒர் அரக்கி. அவ்வரக்கி ஒரு பெனை உருவில் வந்து கிருஷ்ணபிரான கொல்ல நினைத்தாள். தன் நச்சுப் பாலை ஊட்டி கண்ணபிரானைக்கொல்ல வந்தாள் அவ்வரக்கி. அவளுடைய முலை உலரும் வரை பாலைக் குடித்தார் கண்ணபிரான். அதன்பயணுக அவள் இறந்து விட்டாள். இச்சம்பவத்தை குலசேகர ஆழ்வார் தமது பெருமாள் திருமொழியில் எட்டாம் திருமொழியில் உள்ள பத்தாவது பாடலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வஞ்சமேவிய நெஞசு டைப் பேய்ச்சி வரண்டுநார்நரம் பெழ கரிந்துக்க நஞ்சமார் தருசுழி முலைஅந்தோ சுவைத்து நீஅருள் செய்து வளர்ந்தாய் களுசன்நாள் கவர்கருமுகி லெந்தாய் கடைப்பட்டேன் வறிதே (урӑа) சுமந்து தஞசமே லொன்றிலேன் உய்ந்திருந்தன் தக்கதே நல்லதாயைப் பெற்ற யே.
பெரியாழ்வாரும் திருமாழிசை யாழ்வாரும் நம்மாழ் வாரும் திருமங்கையாழ்வாரும் திருக்குறுங்குடியைப் பற்றி நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் உள்ள திருப்பாசுரங்கள் பலவற்றில் பாடியுள்ளனர்.

Page 135
37
நித்தம் தவம் செய் குமரி
மூன்று கடல்கள் இணையும் இடம் இவ்வுலகில் இங்கே பன்றி வேறு எங்கேயும் இல்லை. புனித நீரான குமரித் துறையைச் சூழ்ந்திருக்கும் கடல் நீரும் குமரியம்மனைப் போன்றே கன்னிப் பெண்ணுகவே இருககிறது. ஏன் எனின், இது கப்பல் வரும் துறைமுகம் அன்று.
இவ்வாறு கூறியவர் மகாத்மா காந்தி அவர்கள், 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் நாளில் குமரியில் ஆடி, குமரியம்மனையும் வழிபட்டு விட்டு இவ்வாறு குறிப்பிட்டார். இந்தியா வெங்குமுள்ள இந்துக்கள் நீராடு வதற்குப் புனிதமாகக் கருதும் ஐந்து திருத்தலங்களுள் கன்னியாகுமரியும் ஒன்ருகும். குமரியில் நீராடுவது கங்கை பில் நீராடிய சிறப்புக்கு நிகரானது என்று பல நூற்ருண்டு களாகக் கோடிக்கணக்கான இந்து மக்கள் நம்பி வருகின் தனர், இதனைக் கருத்தில் கொண்டே திருநாவுக்கரசரும்,
கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென் கொங்கு தண்கும ரித்துறை ஆடிலென்

ரித்தம் தவம் செய் குமரி 259
ஒங்கும் மாகடல் ஒதநீர் ஆடிலென் எங்கும் ஈசனென் னுதவர்க்கில் லையே.
எனத் தமது ஐந்தாம் திருமுறையில் 213 ஆம் பதிகத்தில் 2 ஆம் திருவிருத்தத்தில் குறிப்பிட்டுள்ளார்,
தமிழகத்துக்கு எல்லை கூற வந்த தொல்காப்பியர் "வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லு லகம்’ என்று குறிப்பிடும் சொற்ருெடரிலிருந்தே பண்டு தொட்டு தமிழர் உள்ளங்களில் கன்னியாகுமரி சிறப்பிடம் பெற்று விட்டமை புலனுகிறது. சிலப்பதிகாரம், "நெடி யோன் குன்றமும் தொடியொன் பவளமும் தமிழ் வரம் பறுத்த தண்புனல் நாடு” என்று கூறுகிறது. "நெடியோன் பவளம்’ என்பது குமரிக்கடலோரமாகும். வட இந்தியாவி லிருந்து புனித யாத்திரை மேற்கொண்டு வருபவர்கள் கன்னியாகுமரியில் நீராடிச் சென்றுள்ளனர். இது பற்றிய ஒரு குறிப்பு மணிமேகலையில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது, "குரங்கு செங்கடற் குமரியும் பெருந்துறை" (5:37) இக் குறிப்பை ஆதாரமாகக்கொண்டு, சீதையை மீட்பதற்காக இலங்கைக்குச் சென்ற இராமரின் படைகள் மேற்கொண் டது இவ்வழியே என்று ஒரு வரலாறு கூறுகின்றது.
திருக்குறுங்குடியில் உள்ள அழகிய நம்பி கோவிலிருந்து புறப்படும்பொழுது நன்பகல் தாண்டிய நேரமாகும். பேரூந்துகள் எம்மைத் தாங்கிக்கொண்டு குமரிமுனையை நோக்கி விரைந்தன. திருநெல்வேலி மாவட்டத்தை நீங்கி குமரி மாவட்டத்தினூடாகச் சென்று கொண்டிருந்தோம். இடைக்கிடையே பசுந்தரைகள் அங்குமிங்குமாகக் காட்சி அளிக்கும் பாலைவனம் போன்ற பிரதேசத்திலே சென்று கொண்டிருந்தோம். வளர்ந்தோங்கிய பனைமரங்களையும் தாவர வருக்கத்தைச் சேர்ந்த வேறு பல தாவரங்களையும்

Page 136
260 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
நாம் காணக்கூடியதாக இருந்தது. பாதையின் இரு மருங் கிலும் இங்குமங்குமாகச் சிறு வீடுகள் இருக்கின்றன.
தமிழகத்திலுள்ள மாவட்டங்களுள் பரப்பால் மிகச் சிறியது குமரி மாவட்டமாகும். குமரித்துறை இருப்பதும் தமிழ்நாட்டின் மாத்திரமல்லாது) இந்தியாவின் தென் எல்லையாகவும் குமரிமுனை அமைந்துள்ளமையும் கன்னியா குமரியின் பெருமைக்குரிய சிறப்பியல்புகளில் தலையானவை எனலாம், அதன் மற்ருெரு சிறப்பு இயற்கையின் எல்ல களை உடைமையாகும். வடக்கே மலைகள், கிழக்கே கண்வாய், தெற்கே கடல், மேற்கே பெரும்பகுதிக் கடல் இவ்வாறு தெளிவானதும் ஒழுங்கானதுமான எல்லைகளைக் கொண்ட இயற்கைஅரண்களை உடையதாய் அமைந்துள்ளது குமரி மாவட்டம். 42 மைல்கள் நீளமுள்ள கடற் கரையைக் கொண்டது குமரி மாவட்டம்.
குமரி மாவட்டத்தின் அகத்தீசுவரம், தோவாளை எல் னும் வட்டங்களை நாஞ்சில் நாடு என்பர். முன்பு தென் திருவிதாங்கூரின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்தது நாஞ்சில் நீர்டு. இப்பொழுது அது தென் தமிழகத்தின் நெற் களஞ் சியமாக விளங்குகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் பலவகை நிலங்களும் நாஞ்சில் நாட்டில உள்ளன. குமரி மாவட்டம் பழவருக்கங்களுக்கும் உலோகம் கனி வகைகளுக்கும் மலைபடு பொருள்களுக்கும் பேர் பெற்ற பகுதியாகும். a
அண்மைக்காலம் வரை குமரி மாவட்டம் வேற்று ஆட்சியில் இருந்து வந்தமையால் தமிழ் மக்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத பகுதியாக அம் மாவட்டம் அமைந் திருந்தது. தமிழ் மக்கள் அம் மாவட்டத்திற்குச் சென்ருல் பல்விதமான மாறுதல்களைக் காண்பர். வாழையடி வாழை

ரித்தம் தவம் செய் குமரி 261
யாகப் பின்பற்றுப் பட்டுவரும் பல தலைமுறைப் பழக்கத் தால் குமரி மாவட்டத்தில் வாழும் மக்களின் தமிழ்ப் பேச்சு வழக்கில் மலையாளம் ஒலிப்பதைக் காணலாம், கேட்கலாம். எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்னும் பொருளில் "யாது ஊர்' என்று குமரி மாவட்டத் தமிழ் மக்கள் கேட்கும் போதும், "எங்கே தாமசிக்கிறீர்கள்" என்று வினவும் போதும் அங்கே புதியதொரு சூழ்நிலை நிலவுவதைக் காண்கிருேம், சுருங்கக் கூறின் தமிழ் நாட்டு மக்கள் குமரி மாவட்டத்தை மலையாளம் என்று குறிப்பிட்டு வந்தனர். அதே போன்று குமரி மாவட்டத்தினர் தமிழ் நாடு பிரிட்டிஷ் ஆட்சிபில் இருந்தது என்று பொருள்பட பிரிட்டிஷ் நாடு என்று அழைத்து வந்தனர். கொல்லம் ஆண்டுக் கணக்கு முறையே குமரி மாவட்டத்தில் நிலவி வந்தது. போக்கு வரத்துத் துறையில் இணைப்புகள் ஏற்பட்ட பின்னர் அம்மாவட்டம் பெருமளவு பொருளாதார முன் னேற்றம் அடைந்துள்ளது. எனினும் புகைவண்டிப் போக்கு வரத்து வசதிகள் இல்லாத ஒரே ஒரு மாவட்டம் தமிழ கத்தில் இருப்பின் அது குமரிமாவட்டமாகும். முன்பு திருவிதாங்கூர் நாணயங்களே வழக்கத்தில் இருந்தன.
அப்பொழுது திருவிதாங்கூர் நாணயம் இந்திய நாணயத் தினின்றும் மதிப்புக் குறைந்ததாக இருந்தது. 16 காசு கொண்டது ஒரு திருவிதாங்கூர் சக்கரம் என்பர். ஆணுல்
இப்பொழுது திருவிதாங்கூர்ச் சக்கரம் வழக்கொழிந்து
விட்டது. கொல்லம் ஆண்டுக் கணக்கீட்டு முறையும் மறைந்து வருகிறது. வீடு கட்டுவதற்குப் பிற மாவட்டங் களைப் போலச் சுடு செங்கற்களைப் பயன்படுத்தாது, குமரி மாவட்டத்தினர் பச்சைக் கல்லையே உபயோகிக்கின்றனர். கல்வித்துறையிலும் குமரி மாவட்டம் துரித முன்னேற்றம் அடைந்துள்ளது. மருமக்கள் தாய்முறையைக் கடைப்பிடிக் கும் சில சமூகங்கள் கும்ரி மாவட்டத்தில் வாழ்கின்றனர்.

Page 137
262 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் நூற்றுக்கு மூன்று வீதமானுேரே குமரி மாவட்டத்தில் வாழ்கின்றனர். ஏறத் தாழ பத்துலட்சம் மக்கள் அங்கு வாழ்கின்றனர். பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்து மதத்தவருக்கு அம்மாவட்டம் முக்கியமாக இருப்பது போன்று பிற மதத்தினரும் அங்கு வாழ்ந்து வருகின்றனர். எல்லா மாவட்டங்களிலும் வாழ்ந்துவருவது போன்று குமரி மாவட் டத்தின் கடற்கரையோரப் பிராந்தியங்களில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். ஆளுர், திட்டுவிளை, தற்கலை, திருவிதாங் கோடு, குளச்சல், தேங்காய்ப் பட்டினம், இடலாக்குடி முதலிய நகரங்களில் முஸ்லிம்கள் பெருபான்மையாக வாழ்கின்றனர். ஞானப்பாக்கள் பெருமளவில் பாடிய பீர் முகம்மது சாகிப்புப் புலவருடன் நெருங்கிய தொடர் புடையது தற்கலை. முஸ்லிம் மக்கள் வாழும் ஊர்களிலெல் லாம் பள்ளி வாசல்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட் டத்து முஸ்லிம்களுக்குப் பெருமைதேடித்தந்தவர் எண் ணற்ற கவிதைகளும் உரை நூல்களும் ஆக்க நூல்களும் ஆக்கியவரான கலைக்கடல் தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சி பம் மகாமதி சதாவதானி கா. ப. செய்குத்தம்பிப் பாவலர் ஆவார். குமரி மாவட்டத்தில் ஏறத்தாழ 40,000 முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களுள் ஒருபகுதியினர் கடல் கடந்த நாடுகளுடன் வியாபாரத் தொடர்புகொண்டு வாழ்கின்றனர். ஏனையோர் பாய் முடைந்தும் மெழுகு வர்த்தி செய்தும் பிற சிறு கைத்தொழில்களில் ஈடுபட்டும் வாழ்கின்றனர். பெளத்த சமயம் ஒரு காலத்தில் அங்கே பரவிஇருத்தல் கூடும். அதற்குச் சான்ரு க அங்கே பழைய கல்வெட்டுக்களையும், பெளத்த விக்கிரகங்களையும் காணக் கூடியதாக இருக்கின்றது. சமணரும் அங்கு வாழ்ந்து வந் துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
கிறிஸ்தவம் முதலில் பரவிய இடங்களுள் குமரி மாவட்

நித்தம் தவம செய் குமரி 263
டமும் ஒன்ருகும். கிறித்தவப் பெருமக்களால் அங்கு கல்வி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மூனறு இலட்சத்துக்கு அதிகமான கத்தோலிக்கரும் கிறித்தவ சமூகத்தினரும் வாழ்கின்றனர். அர்ச் சவேரியார் அங்கு பெருமதிப்பும் மிக்க கன்னியமும் உள்ளவராக மதிக்கப்பட்டு வருகிருர்,
கேரளத்துடன் தொடர்புடையதாக குமரி மாவட்டம் இருந்தமையால் கல்வித் துறையில் முன்னேறியது. 1951 ஆம் ஆண்டின் புள்ளிவிவர மதிப்பீட்டின் பிரகாரம் குமரி மாவட்டத்தில் நூற்றுக்கு 85 பேர் எழுதப்படிக்கத் தெரிந்தவராய் இருந்தனர். குமரி மாவட்டத்து உயர்நிலைப் பள்ளிகளை அரசாங்கம் நடத்தும் உயர்நிலைப்பள்ளி என்றும் கிறித்தவ மிஷனரிமார் நடத்தும் உயர்நிலைப் பள்ளிகள் என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். தனிப்பட்ட வர்களின் நன்கொடையால் அமைந்த உயர்நிலைப்பள்ளி களின் எண்ணிக்கை மிக்க் குறைவானதாகும். 1960 ஆம் ஆண்டில் ஏறக்குறைய 500 ஆரம்பப் பாடசாலைகளும் 122 உயர்நிலைப் பள்ளிகளும் குமரி மாவட்டத்தில் இருந் தன. வேறு எந்த மாவட்டத்தையும் விடக் கூடுதலாகக் குமரி மாவட்டத்தில் பல நூல்நிலையங்கள் உள்ளன. அத் தகைய 150 நூல்நிலையங்கள் அரசாங்க மானியத்துடன் தனிப்பட்டவர்களால் நடத்தப் பெற்றுவருகின்றன.
பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தமது மனேன்மணியத்தில் குமரி மாவட்டத்தின் நிரம்பிய நீர் வளத்தையும் நில வளத்தையும் ஏனைய பகுதிகளைக் கொண்ட நஞ்சில் நாட் டின் வளமிக்க தன்மையையும் பின்வருமாறு வருணிக்கிறர்
வஞ்சி நாடதனில் நன்செய் நாடெனச் செந்தமிழ் வழங்குந் தேயமொன்று உளது அதன் அத்த மில பெருவளம் அறியார் யாரோ மருதமும் நெய்தலும்மயங்கி அங்கெங்கும்

Page 138
264 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
புரையறு செல்வம் நிறைபெற வளரும் மழலை வண்டானம் புலர் மீன் கவர.
பண்டு கலப்பை நாஞ்சில் என வழங்கப்பட்டது குறுங் கோழியூர் கிழாரும் தமது பாடல் ஒன்றில் ஒரு நாட டு ஆடவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அந்நாட்டு ஆட வர் கலப்பை தவிர வேறு போர்க் கருவி ஒன்றையும் அறியார் என்று கூறுகிறர். வேளாண்மையில் சிறந்த காலம் அது, எனவேதான் நாஞ்சில் நாடும் கைத்தொழில் சிறந்திருந்தமையால் அப்பெயரைப் பெற்றிருக்கலாம். கைத்தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய கனி வளங்களாகிய உலோகங்களையும் உடல் வளர்ச்சிக்கு அவசியமான பழ வருக்கங்களையும் ஒருங்கே பெற்றுத் திகழ்கிறது குமரி மாவட்டம். ஏற்றம் பழம், மட்டிப் பழம், தேன் கதலி முதலிய வாழைப் பழ வகைகள் குமரி மாவட்டத்துக்கே உரியனவாகும். மணிகட்டிப் பொட்டல் பலாப்பழம் குரங்குடி மாம்பழமும் அம்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வையாகும் அரசாங்கப் பழ ஆராய்ச்சி நிலையம் குமரி முனையிலிருந்து ஒன்றரைக்கிலோ மீட்டர் தொலையில் உள்ள பஞ்சலிங்கபுரத்தில் அமைந்துள்ளது இலங்கை அம்மாவட் டத்திலிருந்து மீன் இறக்குமதி செய்கிறது.
குமரி மாவட்டம் தொன்மை வாய்ந்தது. நாஞ்சில் வள்ளுவர் என்னும் பெருமைபற்றி புறநானூறு கூறுகிறது. (137-140-380) இவன் நாஞ்சில் மலையை உடையவன். சேரனிடத்து அன்புற்று அவனுக்குப் படைத்தனையாய் நின்றவன். பாசிலர்க்கு வேண்டியவற்றைக் கொடுப்போன் ஒளவையார் முதலியோர் அவனைப் பாடியுள்ளனர், அதிகன் ஊராண அழகிய பாண்டியபுரம் என்று ஒரு நகர் இருப் பதும் அப்பகுதியில் கோவில் கட்டப்பட்டதும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதிகமான் நெடுமான் அஞ்சிக்குக்

நித்தம தவம செய் குமரி − 265
குமரி மாவட்டத்துடன் இருந்த தொடர்பைக் காட்டுகின் றன. சோழரும் அம் மாவட்டத்தின் சில பகுதிகளை ஆட்சி செய்து வந்துள்ளனர். சோழ அரசனின் அமைச்சர் ஒருவர் கன்னியாகுமரியில் தண்ணீர்ப் பந்தல் அமைத்த செய்தி ஒரு கல்வெட்டிலிருந்து புலப்படுகிறது. இப்பொழுது இடிந்து கிடக்கும் குருநாதசுவாமி கோவிலிலே இக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது, அச்சாசனச் செய்யுள் பின்வரு மாறு அமைந்துள்ளது.
தெண்டிநீரைத் தென்குமரி மானகர்த் தண்ணிர்ப்பந்தல் எண்டிசையும் ஏத்த லினிதமைத் தான்-விண்டி வரும் ஐந்தெரியலான் அய்யனமபி அடல் வளவன் மந்திரி தென்மங் கலக்கால மின்.
18 ஆம் நூற்றண்டில் ஆர்க்காட்டு நவாப் கன்னியா குமரிப் பகுதியை வேனட்டு மன்னனுக்கு அன்பளிப்புச் செய்தான். திப்பு சுல்தானின் படையெடுப்புக் காரண மாகத் திருவிதாங்கூர் அரசர்களுக்கும் பிரிட்டிஷ் கிழக் கிந்தியக் கம்பனியாருக்கும் ஏற்பட்ட உடன்பாட்டிற் கிணங்க 1947 வரை திருவிதாங்கூர் அரசர்கள் ஆண்டு தோறும் எட்டு இலட்சம் ரூபாய் வெள்ளைக்காரர்களுக்குக் கப்பம் கட்டி வந்தனர். பின்னர் அமைதி நிலவிற்று. வளம் பெருகிற்று. கல்விசிறந்தது.
குமரி மாவட்ட மக்களின் கருத்திற்கிணங்க செந்தமிழ் என்பது கொடு மலையாளமாகும். இப்பகுதியில் அரிய தமிழ் சொற்கள் வழங்கிவருகின்றன. அம்மாவட்ட மக்கள் திசையை, "படி ஞாயிறு’ என்பர். மிதித்தலை "சமட்டுதல” என்பர். சோர்வடைந்தேன் என்ற கருத்தில் * முசிந்துச் சேன்" என்பர் அருணகிரி நாதரும் தமது கந்தர் அலங் காரத்தில் "முசியாமல் துதிக்கின்றிலை" எனக் குறிப்பிட்டுள் ளார். இதை ஆசிரியர்கட்கு அண்ணுவி என்ற பட்டப் பெயர்

Page 139
255 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
உண்டு. சிக்கனமாய் வாழ்பவனைச் 'சுக்குச் செட்டி” என்று அம்மாவட்டத்தினர் அழைப்பர். எளிதில் ஏமாந்துவிடுப வனை "தெம்மாடி" என்பர். இலங்கையிலும் சில பாகங் களில் இச்சொல் இதே கருத்தில் வழங்கப்படுகிறது.
அதங்கோட்டாசானின் ஊரான அதங்கோடு இப் பொழுது திருவிதாங்கோடு எ வழங்கப்படுகிறது என் பதும் தொல்காப்பியர் வாழ்ந்த பகுதியும் அப்பகுதியே யென்பது பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் சுருத்தாகும்.
கந்தபுராணக் கீர்த்தனை பாடிய நீலகண்ட ஆச்சாரியும் சீருப்புராணத்துக்குக் கீர்த்தனை பாடிய செய்து அப்துல் காதரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பர். அண்மைக்காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த அறிஞர்களுள் பிரதானமானவராகக் கருதக்கூடியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களேயாவார்.
அன்று மாலை இரண்டு மணி அளவில் குமரி முனையை அடைந்தோம். இந்தியா சிமென்ட் கம்பெனியார் மதிய போசன்ம் தயார் செய்தனர். அந்த இடத்துக்கு நேரே சென்ருேம், சென்ற சற்று நேரத்தில் உணவு பரிமாறப் பட்டது. திருநெல்வேலியிலிருந்து 50மைல் தொலைவி லுள்ளது கன்னியாகுமாரி முனே. எனவே அதிக களைப்புக் காரணமாகச் சற்று ஆறி இருந்தோம். வயிற்றுப் பசியை ஆற்றியதோடு உடற் களைப்பையும் தீர்த்துக் கொண்டோம்.

38
சுசீந்திரத்தின் 560fii fiptu
ஆற்றங்கரையுண்டு, அழகான சோலையுண்டு நந்த வனமுண்டு, நன்செய்கள் சூழவுண்டு சத்திரங்கள் உண்டு தமிழ்க்கல் விச்சாலையுண்டு தெப்பக் குளமுண்டு தேரோடும் வீதியுண்டு மாளிகைகள் உண்டு மடங்கள் பல உண்டு நான்கும் மதில்கள் உண்டு நடுவிலொரு கோவிலுண்டு கோபுர வாசலுண்டு கொடி மரம் இரண்டு உண்டு சித்தி ரையும் மார்கழியும் திருவிழாக்காட்சி உண்டு பார்த்திடக் கண்கள் பத்தாயிரம் வேண்டும் தொன்னகரமான சுசீந்திரத் தின் சிறப்பெல்லாம் என்னுெரு நாவால் எடுத்துரைக்க ஏலாதே.
ஆம் உண்மையான கூற்று. நாஞ்சில் நாட்டுக் கவி மணியின் சிறப்பான கூற்று. கவிமணி தேசிககவி நாயகம் பிள்ளையின் பொருத்தமான கருத்து. குமரிக் கவிஞரின் உணர்ச்சி மிக்க வருணனை. சுசீந்திரம் கோவிலினைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை. குமரி முனையில் அவசரம் அவசரமாக நண்பகல் போசனத்தை முடித்துக் கொண்டு

Page 140
268 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
சுசீந்திரக் கோவிலுக்கு விரைந்தோம், பொழுதுபடுவதற்கு முன்னர் குமரி முனைக்குத் திரும்பிவிட வேண்டும் என்பதே எமது திட்டம். குமரிமுனையில் சூரியன் மறையும் கண் கொள்ளாக் காட்சியைக் கண்டு சளிக்க வேண்டும் என்பதே எமது தலையாய விருப்பம், கன்னியா குமரியின் வடக்கே ஏழு மைல் தூரத்தில் அமைந்துள்ளது சுசீந்திரம். நாகர் கோவில் குமரிமுனைப்பாதையில் நாகாகோவிலுக்கு மூன்று மைல் கிழக்கே அமைந்துள்ளது. அக்கிராமத்தின் நடுநிலைய மாக விளங்குவது சுசீந்திரம்கோவில். திருத்தலம் ஒன்றின் பேரினலும் புகழினலும் சிறப்பினைப் பெற்ற ஒரு கிராமத் துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது சுசீந்திரம் என்னும் கிராமம். எனவே சுசீந்திரம் என்னும் திருத்தலத்தைப் பார்த்து விட்டு விரைவாகத் திரும்பிவிடும் நோக்கத்தோடு அங்கு சென் ருேம். அங்கு சென்றதும் கவி மணி தேசீக விநாயகப்பிள்ளை அவர்களின் மேற்குறிப்பிட்ட கவிதையேளனது ஞாபகத் துக்கு வந்தது. அக் கவிதை எவ் வளவு பொருத்தமாக அமைந்திருந்தது என்பதை உணர்ந்து அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன்.
மதுரையை அடைவதற்கு முன்னரே எமக்கு ஒரு சுற்று நிருபம் அனுப்பப்பட்டது. நாகர்கோவிலை ஆளுநரின் தந்தி ஒன்றினை அடிப்படையாக வைத்தே அச்சுற்றுநிருபம் அனுப்பப்பட்டது. சுசீந்திரத்தில் உள்ள கோவிலுக்குச் செல்வோர் (ஆண்கள்) மேலங்கி அணிந்து செல்வதை சுசீந்திரக் கோவில் விதிகள் தடைசெய்கின்றன என்ற அத் தந்தியின் சாராம்சத்தைக் குறிப்பிட்டிருந்தது அச்சுற்று நிருபம். அத்தோடு "தோத்தி’ அணிந்தவர்களே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. "தோத்தி இல்லாதவர்களுக்குச் சுற்று

சுசீந்திரததின் தனிச் சிறப்பு 269
லாவை ஒழுங்குசெய்தவர்கள் அவற்றை அளிக்கவும் முன் வந்தனர். மலையாளத்தின் செல்வாக்கை இச்சுற்று நிருபம் தெளிவாக எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. மலை யாளத்தில் நிலவும் பழக்கத்தையே அச்சுற்று நிருபம் மறைமுகமாகச் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தது. தமிழிலே உள்ள விளம்பரப் பலகைகளிலேயும் மலையாளத்தின் ஆதிக் கத்தைக் காணக்கூடியதாக இருந்தது. 'உள்ளே பிரவேச னம் கூடாது" என்ற சொற்ருெடர் எனது கவனத்தை ஈர்த்தது. அங்கே உள்ளே செல்லுதல் என்ற பொருளில் *பிரவேசனம்" என்னும் மலையாளச் சொல் உபயோகிக்கப் பட்டிருந்தமையை அவதாணிக்க முடிந்தது.
சுசீந்திரம் கோவிலின் வாயிலின் நின்ற ஒரு முதிய வருக்கும் சென்னை மாநகர சட்ட மன்ற உறுப்பினர் ஒரு வருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையில் முடியுமாப் போல் தோற்றியது. அம்முதியவர் தாம் யாருடன் பேசிக் கொண்டிருப்பது என்பதை உணராது "இந்தியாவின் உத்தியோக மொழி மலையாளமாக இருத்தல் வேண்டும், ஏனெனில் அத்தகைய தகுதி அந்த ஒரு மொழிக்கே உண்டு' என்று கூறினுர். இதன் பயஞகவே வாக்குவாதம் ஏற் பட்டது. அவ்வாறு கருத்துத்தெரிவித்தவர் ஒரு முதியவர் ஆகையால் நாம் அதனைப் பொருட்படுத்தக்கூடாது என்று சமாதானம் கூறப்பட்ட பின்னரே அந்த வாக்குவாதம் சிறுத்தப்பட்டது.
சைவ வைணவ மக்களுக்குப் பொதுவாக அமைந்துள்ள தென்னிேந்தியா கோவில்கள் சிலவற்றுள் சுசீந்திரக் கோவில் ஒன்ருகும். அங்கே சிவனும் விஷ்ணுவும் ஒருங்கே வழி பாட்டுத் தெய்வங்களாகக் கருதப்படுகின்றனர். அங்கே ஸ்தானுநாதர் என்று சிவனும் திருவேங்கடப்பெருமாள் ன்று விஷ்ணுவும் அழைக்கப்படுகின்றனர். இந்திரன்

Page 141
27 Ο நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
அகலிகை காரணமாகக் கெளதமரால் சாபம் பெற்று வியாழ பகவானுல் ஒரளவு சாபவிமோசனம்பெற்ற பின்னர் அதுவும் போதாமையால் சுசீந்திரத்திலுள்ள இறைவனை வணங்க அவர் கட்டளைப்படி கன்னியாகுமரி சென்று கடுந் தவங்கிடந்து முற்ருக சாபவிமோசனம் பெற்றன் என்று கூறுவர். இந்திரன் நன்னிலை அடைந்த இடம் அதுவாதலால் அவ்விடம் அப்பெயர் பெற்றது என்பர். இந்திரன் வழிபாட்டுக் காலத்தில் சுசீந்திரத்தில் கோவில் கொண்டுள்ள இறைவர் உருவச்சிலைக்கு நன்னீராட்டுங்கால் ஊற்றப்படும் நெய்யும் பாலும் நீரும் நிலத்தினடியே உள்ள ஒரு மறை வழியாகச் சென்று கன்னியாகுமரிக் கடலில் கலக்கின்றது என்ற நம்பிக்கை இன்றும் அங்குநிலவி வருகிறது. அவ்வாறு கடலில் கலக்கும் இடம் தாணு தீர்த் தம் என அழைக்கப்படுகிறது. இதனையே உப்பு நீரருகே நன்னீர் உண்டு என்று கொள்வர்.
ஒன்பதாம் நூற்றண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் சுசீந்திரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. Lunt GTg-uuriř, சோழர், வேனுட்டு மன்னர், விஜயநகர அரசர், தாயக்க மன்னர் முதலியோர் அக்கோவில் இன்றைய உருவில் இருப்பதற்குப் பல வழிகளிலும் தொண்டாற்றி உள்ளனர்.
முன்னுெரு காலத்தில் பெரு முனிவர் அத்தியும் கற் புக்கரசியாகிய அனுசூயாவும் ஞானரண்யம் என்னும் பழம் பெயர் பெற்ற சுசீந்திரத்தில் ஓர் ஆச்சிரமத்தில் இருந்து தவஞ் செய்து வந்தனர். ஒரு நாள் அத்தி முனிவர் இமயஞ் சென்றிருந்தார். அப்பொழுது அயன், அரி, அரன் pavOutub அனுசூயாவின் கற்பைக் கருதி அறிவதற்கு எண்ணினர். எண்ணி அந்தனர் உருக்கொண்டு அந்த ஆசிரமம்சென்று அன்னம் கேட்டனர். அனுகு யாவும் வந்திருந்த விருத்தின குக்கு உணவு படைக்கப் புறப்பட்டாள். மூவரும்.உணவு

சிந்திரத்தின் தனிச் சிறப்பு 27.
உண்ணஇருந்தனர். ஆடையணிந்த ஒருவரால் உணவு பரிமா றப்படுமாயின் உணவு உண்ணலாகாது எனும் நோன்புறுதி கொண்டுள்ளோம் என்று அம்மூவரும் கூறினர். அனுகு யா தேவி தம் கற்பில் முழு நம்பிக்கை கொண்டவளாய்த் தம் சணவன் திருவடி கழுவிய நீரை அம்மூவர் மீதும் தெளித் தாள், உடனே அம் மூவரும் பால் மணம் மாரு பச்சிளங் குழந்தைளாக மாறினர். பின்னர் அவர்களுக்கு உணவு ஊட்டினள். சிறிது காலஞ்செல்லவே நாரதர் தூண்டுதலால் அம்மூவர்தேவியரும் தத்தம் கணவரைத்தேடிஅந்த ஆசிரமம் அடைந்தனர். அடையவே அனுசூயா அம் மூவருக்கும் பழைய உருவைக் கொடுத்தாள். திரும்பி வந்த அத்தி முனிவரும் அகம்மிக மகிழ்ந்தவராய் மும் மூர்த்திகளினதும் காட்சியைப் பெற்ருர், அந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரன் கட்டுப்பட்டு முப்பெருங்கடவுளரும் alfull பட்டு வருகின்றனர் என்பர்.
பழையாற்றுக்கு அணித்தாக கிழக்கு நோக்கிய வண் ணம் காட்சி அளிக்கிறது ஸ்தாணுமாலயப் பெருமாள் கோவில், அக்கோவிலின் கோபுரம் வெகு தூரத்திலிருந்து காணக்கூடியதாக 134 அடி 8 அங் உயர்ந்து இருக்கிறது: கோவிலின் பிரதான வாயிலில் நாடகசாலை அமைந்துள்
匾_ ளது. நாடகசாலையின் மேற்கே 24 அடி உயரமுளள பெரிய ஒரு கதவு உள்ளது.
அது கோபுர வாசல் என்றழைக்கப்படுகிறது. கோபுர வாசலிலிருந்து மேற்கே செல்லும்பொழுது ஊஞ்சல் மண்பத்தைக் காணலாம். அங்கே மன்மதனினதும் ரதியின தும் அருச்சுனனினதும் கர்ணனினதும் கண்கவரி இலைகளைக் ாணலாம். தென் பக்கமாசத் திரும்பினுல் இரிபலிபுரம் உள்ள கிழக்குப் பக்கமாகப் போகலாம். தச்சின மூர்த்தி பின் பழைய சில ஒன்றின் அதன் வாசலில் காணலாம்.

Page 142
272 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
உயிர்த்துடிப்புள்ளவை போன்று காட்சியளிக்கும் நன்கு செதுக்கப்பட்ட ஓவியங்களைக் கொண்ட தூண்கள் இரண்டு நீண்ட வரிசைகளில் சிரிபலிபுரத்தின் இருமருங்கிலும் உள்ளன. அதற்கு மேற்குப் புறத்தே உள்ள வசந்த மண்ட பம் மிகச் சிறந்த முறையில் அமைந்திருக்கக் காணலாம். பிரதான கோவிலின் தென் பக்கத்தே உள்ள தென் சிரிபலிபுரத்தின் வடக்கே அமைந்துள்ள வெளிப்புற முற்றத் தில் நீலகண்ட விநாயகரினதும் கங்கால நாதரினதும் கைலாசத்து மகாதேவரினதும் சிலைகளைக் காணலாம்.
நீலகண்ட விநாயகர் சிலைக்கு மேற்கே திருமடப்பள்ளி அமைந்துள்ளது. மேற்குச் சிரிப்டலிபுரத்துக்குக் கிழக்கே வாகனப்புரம் இடம்பெற்றுள்ளது. மேற்கு சிரிபலிபுரத்தின் வடக்கே ராமசுவாமி கோவில் அமைந்துள்ளது. வடக்கு சிரிபலிபுரத்தின் தென் பாகத்தில் அமைந்துள்ளது சுப்பிர மணியசுவாமி கோவில். அக்கோவிலுக்கு எதிர்த் திசையில் உதயமார்த்தாண்ட மண்டபம் உள்ளது. இரண்டு பெருந் தூண்கள் அதனைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. அத் தூண்களிலே பல ஒவியங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பஞ்ச பாண்டவர் கோவில் எனப் பெருவழக்கில் அழைக்கப்படும் ஜயந்தீஸ்வர கோவில் சுப்பிரமணிய கோவிலின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ளது. அங்கே உள்ள அலங் கார மண்டபத்தில் பெரிய அளவினதான இசை எழும்பும் தூண்கள் இடம் பெற்றுள்ளன. கலைத்திறன் மிக்கனவாய் அவை விளங்கிக் கொண்டிருக்கின்றன. இசைத்தூண்களின் மற்ருெரு தொகுதியை குலசேகர மண்டபத்தில் காணலாம்" அந்தத் தூண்களிலே வேணுட்டு மன்னர் இருவரின் தலை சிறந்த சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. குலசேகர மண்ட பத்துக்குக் கிழக்கே அறம் வளர்த்தமமன் கோவில் காட்சி அளிக்கிறது அலங்கார மண்டபத்தின் கிழக்குப்பக்கத்திலே

சுசீந்திரத்தின் தனிச் சிறப்பு 27剑 சித்திர சபைக்குச் சமீபமாக 16 அடி 4 அங்குல உயரமான ஆஞ்சனேயனின் பெரியசில் ஒன்று உள்ளது. ஆஞ்சனேயன் என்பது அனுமானக் குறிக்கின்றது. அஞ்சனேயின் மகன் அனுமான், மெருகூட்டப்பட்ட கல்லிலே மிகச்சிறந்த முறை யில் செதுக்கப்பட்டுள்ளது அனுமானின் அந்த அழகியசில் சிற்பக்கலையின் சிறப்புக்குச் சிறந்த ஒர் எடுத்துக்காட்டாக அது திகழ்கின்றது. இந்தியாவில் உள்ள பெரிய அலு மானின் சிலைகளும் சுசீந்திரத்தில் உள்ள சிலையும் ஒன்ருகும்
சித்திரசபைக்குக் கிழக்கே தேவேந்திர விநாயகர் கோ வில் அமைந்துள்ளது. தென் பக்க மதிலோடு அமைந்துள்ள வெள்ளி வாகன புரத்தில் மிகப் பெரிய நந்தி உள்ளது. செங்கற்களினலும் சாந்தினலும் உருவாக்கப்பட்டது அது. சிவ கோவிலை நோக்கிய வண்ணம் அது காட்சி வழங்கு கிறது. அங்கே உள்ள கொண்டையடி நாதர் கோவில் சுயம்பு லிங்கம் அமைந்துள்ளது. அத்தி முனிவரினதும் அவரது பாரியார் அனுசூயாவினதும் வேண்டுகோட்படி மும்மூர்த்தி களும் லிங்க உருவில் காட்சி வழங்கினர் என்ற பரம் பரைக் கதை கூறுவதைத் தலபுராணம் உறுதிப்படுத்து கிறது. கொண்டையடி நாதர் கோவிலுக்கு நேர் தெற்கு திசையில் விஷ்ணுகோவிலை எதிர் நோக்கியவண்ணம் கரு டாழ்வாரின் சிலை அமைந்துள்ளது. அக்கோவிலின் உயர் வாக அமைக்கப்பட்ட மேடையின் நான்கு மூலைகளிலும் சிறப்பான முறையில் செதுக்கப்பட்ட சிற்பங்களையும் காண லாம். துவஜஸ்தம்ப மண்டபம் என்று வழங்கும் ஆதித்திய மண்டபத்தையும் அங்கு காணலாம். ஸ்தானுநாத சுவாமி களுக்கு ஒன்றும் தெக்கடம் பெருமாளுக்கு ஒன்றுமர்ச அவ்விரண்டு துவஜஸ்தம்பத்துக்கு அணித்தாக அமைந் துள்ளன. வடக்கடம் துவஜஸ்தம்பத்துக்கு அணித்தாக இரண்டு துவாரபாலகர்களின் உருவங்கள் உள்ளன. ஆட் கொண்டார் என்றும் உய்யக்கொண்டார் என்றும் அவ்விரு

Page 143
274 • நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
துவாரப் பாலகர்களும் அழைக்கப்பட்டனர். ஆதித்திய மண்டபத்துக்கு மேற்கே செம்பகற் பெருமாள் மண்டபம் இடம் பெற்றுள்ளது. தலைசிறந்த சிற்பங்களை அங்கு காண லாம். அந்த மண்டபத்துக்கு மேலே திருவிளையாடற் புரா ணமும் தீட்டப்பட்டுள்ளன. 110 அடி நீளமும் 85 அடி அகலமும் 32 அடி உயரமும் கொண்டது இம்மண்டபம். ஒவ்வொரு வரிசையிலும் 16 தூண்கள் வீதம் இரண்டு வரிசைகளில் தூண்கள் அமைந்திருக்கின்றன. சென்பகப் பெருமாள் மண்டபத்துக்கு நேர் மேற்கில் வீரபாண்டியன் மணி மண்டபம் என்னும் ஒரு சிறு கட்டடம் அமைந் துள்ளது. வீரபாண்டிய மணி மண்டபத்திலிருந்து உதய மார்த்தாண்ட மண்டபத்தினுடாகச் சுசீந்திரம் கோவிலின் வடக்கடம் பகுதிக்குச் செல்லுதல் வேண்டும். வடக்கடம் மண்டபத்துக்குப் புகும்பொழுது ரிஷப் மண்டபத்தைக் காணலாம். ஸ்தானு மூர்த்திக்கு முன்பாக உள்ள கல்லா லான நந்தியைச் சுற்றிவர எல்லாப்பாகங்களிலும் குத்து விளக்குகள் பல அமைக்கப்பட்டுள்ளன. நந்திக்கு வடமேற்கே சபாபதி சிலை இருக்கிறது. தெக் கடத்திலே விஷ்ணு எழுந் தருளி உள்ளார். பள்ளி கொண்ட பெருமாள், சுசீந்தரம் பெருமாள், துர்க்கை, முது கணபதி, சங்கரநாராயணன் முதலியோரின் சிலைகள் பராகிரத்தின் உள்ளே அமைந் திருக்கக் காணலாம். கச்சிதமான முறையில் அமைந் துள்ளது சுசீந்திரம் கோவில். அது அதன் சிறப்பியல்பாகக் காட்சி அளிக்கிறது. கோவில் பிராந்தியத்தின் மொத்தப் 'பரப்பு 93,900 சதுர அடிகளாகும். சுசீந்திரம் கோவிலின் வட்க்குப் பத்கத்தே உள்ள வெளிப்புறமதிலின் நீளம் 402 அடி 10 அங்குலமாகும். மேற்குப் பக்கத்தில் வெளிப்புற மதிலின் நீளம் 233 அடி 4 அங்குலமாகும்.
சுசீந்திரம் கோவிலின் உயர்ந்த ஏழு நிலைக் கோபுரத்

சுசீந்திரத்தின் தனிச் சிறப்பு 275
தின் முகப்பினை நாஞ்சில் நாட்டின் பல பாகங்களில் நின்றும் பார்க்கலாம். அதே போன்று சுசீந்திரம் கோவி லின் கோபுர உச்சியிலிருந்து பார்த்தால் நாஞ்சில் நாட் டின் பெரும் பகுதியையும் கன்னியாகுமரிக் கடற்கரையினை யும் கண்குளிரக் காணலாம். அங்கு நடைபெறும் மார் கழித் தேர்த்திருவிழாவும் சித்திரைத் தெப்பத் திருவிழா வும் பெருவாரியான மக்களைக் கவரும் இயல்புடையன.
சுசீந்திரம் கோவிலில் உள்ளவை போன்று குமரி மாவட்டத்தில் உள்ள பல ஆலயங்களில் சைவ வைணவக் கோவில்களில் சேர்ந்தே இருக்கின்றன. வழிபாட்டுக்கு வரும் பொது மக்கள் நீராடி, தூய ஆடை அணிந்து, இடுப்புக்கு மேல் சட்டைகள் அணியாமல் சமயச்சின்னங் களைக் கூசாமல் அணிந்து கொண்டு செல்கின்றனர். எக் காரணத்தைக் கொண்டும் குமரிமாவட்டத்தின் கோவில் சந்திகளில் மின்சார விளக்குகள் இடம்பெறுவதில்லை. பொதுவாகக் கூறின் மலையாளப் பகுதியில் உள்ள இந்து சமயக்கோவில்களில் நிலவும் பழக்கவழக்கங்களே குமரி மாவட்டத்திலும் நிலவுகின்றன. அவற்றிற்கே முக்கியமான ஓர் இடம் அளிக்கப்படுகிறது

Page 144
39
கல்லும் கனிந்து 9605 UTG)
வெந்தழல் நீராகும். வெள்ளெலும்பு பொண்ணுகும். வந்தமத வேழம் வணங்கிடுமே - சந்தமெழப் பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு நீடுலகில் உண்டோ நிகர்,
நாஞ்சில் நாட்டுக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் கூற்று இது, இசை இனிமையானது. ஆனல் தமிழிசையோ நிகரற்ற இனிமை உடையது. ஈடுபாடுடை யோரை அதன் பக்கம் ஈர்க்க வல்லது இசை. பாடுவோ ரைப் பரவசப்படுத்தும் தரத்தது. கேட்போரை மகிழ்விக் கும் இயல்புடையது. மக்களை மாத்திரமன்றி மாக்களையும் கவரும் ஆற்றல் வாய்ந்தது. கொடிய மிருகங்களின் கொட்டத்தை அடக்கும் இயல்பைப் பெற்றது. நஞ்சைக் கக்கும் நாக பம்பையும் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் வாய்ப்பைப் பெற்றது. பறப்பன, ஊர்வன, நீந்து வன முதலிய அனைத்தையும் பிணிக்கக்கூடிய தன்மையது. சுருங்கக்கூறின் எல்லாவற்றையும் மயங்க வைக்கும் மாண்

கல்லும் கனிந்து இசைபாடும் 277 புடையது. இசை எனின் அது மிகையாகாது.
நம்முன்னேர் தமிழ் மொழியை "முத்தமிழ்” எனத்
தனிப்பெருஞ் சிறப்புடன் போற்றி வந்தனர். முத்தமிழில் முன்னிற்கும் இயலுக்கும் பின்னிற்கும் நாடகத்துக்கும் இடையில் நின்று இரண்டோடும் இணங்கி இயங்குவது இசை, குறிப்பாற்றலும ஓசை நயமும் இசையில் முதன் மையாக அமைந்துள்ளது இரண்டாவதாக அங்கு காரண காரியத் தொடர்பு உண்டு. பொருளினை உணர்த்தும் ஆற்றலும் உடையது. இயல் இசை, நாடகம் என்னும் முக்கூறுகளும் தமிழ் என்னும் அடி மரத்திலிருந்து கிளைத் துள்ளன. உலகில் இன்றுவரை உள்ளனவும் இல்லாதனவு மான பிறமொழிக்குச் சிறப்பு அமையவில்லை.
மனிதரையன்றி விலங்குகளையும் இசை தம்வயப்படுத் தியுள்ளது. இதற்கு இலக்கியச் சான்றுகள் பல உண்டு.
காழ்வரை நில்லாக் கடுங்களிற் ருெருத்தல் யாழ்வரை தாங்கி யாங்கு”
sustahué as a 1)
என்று யானை இசைக்கு வசப்பட்டமையை குறிப்பிடுகிறது. கலித்தொகை. பாலைநிலத்து வாழும் கொடிய பண்பினே உடைய ஆறலைக்கும் வழிப்பறிக் கள்வர்கள் கூட இசையின் பத்தில் மூழ்கித் தம்மை மறந்து விடுகின்றனர். தமது தொழிலை மேற்கொள்வதையே மறந்து விடுகின்றனர்.
1ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை” (20-21)
என்று கூறுகிறது. பொருநராற்றுப்படை, இங்கு "பாலே" என்றது பாலை யாழை. பண்டு தொட்டு மன்னரும் அறி

Page 145
278 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
ஞரும் இசையை வளர்த்து வந்தனர். இதனுல் பழந்தமிழ் இசையின் தொன்மையும் சிறப்பும் புலனுகின்றன
மயில் ஆடுவதை நடனம் என்று கூறுவது போல் குயில் கூவுவதைப் பாட்டு என்கிருேம். வண்டுகளின் ரீங் காரத்தையும் அதே முறையில் காண்கிருேம். அசுணம் என்னும் பறவை இசையை அறியும். இனிமையான இசை யிலே அதற்குப் பெரிதும் ஈடுபாடு உண்டு முரசொன்றில் பேரொலியைக் கேட்ட மாத்திரத்து அது உயிர் நீத்து விடுகின்றது. இசையைக் கேட்டுப் பயிர்களும் புத்துயிர் பெறுகின்றனவாம். சில சந்தர்ப்பங்களில் இசையைக் கேட்பதனுல் பயிரின் விளைச்சல் அதிகரித்து அறுவடை பெருகுமாம். ஈழத்திருநாட்டினிலே மட்டு நகரான மட்டக் களப்பில் பாடும் மீன்கள் உள்ளன. இவை எம்மை வியப் படையச் செய்யலாம். உயிருள்ளவை எழுப்பும் இசையைக் கிேட்டு வியப்படையும் நாம் உயிரற்றவையான கல்லா லானவையான கல்லில் செதுக்கப்பட்ட செயற்கைப் பொரு ள்கள் இசை எழுப்பும் என்று கூறினுல் அது வியப்பிலும் வியப்பாக இருக்கும் அல்லவா?
ஆம் வியப்பூட்டக்கூடியதுதான். கல்லினுலான தூன் ஒன்றில் சற்றுத் தட்டினல் அது இசை எழுப்பும் என்று கூறிஞல் அதிசயம் அடையாது இருப்போர் யாவர்? சத் தத்தை எழுப்புவதனுல் வியப்புண்டாவதேயில்லை. அதனைச் சர்வசாராதனமாக எதிர்பார்க்கலாம், என்று கூறுவாரும் உளர். ஆனல் அத்தகைய கல்தூண்கள் சப்த சுவரங்களை யும் முறையே ஒன்றன்பின் ஒன்முக எழுப்புமெனின் அதனைப் பற்றி நாம் சற்று அறிய வேண்டும் அல்லவா? சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும் அல்லவா?
தமிழகத்திலே பல கோவில்கள் உள்ளன. அக்கோவில் களிலே எண்ணற்ற தூண்களைக் காணலாம். நுணுக்கமாகச்

கலனும் கனிந்து இசைபாடும் 279 செதுக்கப்பட்டவை அத்தூண்கள். தமிழகச் சிற்பமுறைக்கு, எடுத்துக்காட்டாகத் தி ஈழ்கின்றன அத்தூண்கள். பல தூண் கள் தனிக்கற்பாறையிலிருந்து செதுக்கப்பட்டுள்ளன. அவை இசை எழுப்பக்கூடியனவாய் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் மகாநாட்டுக் கலாச்சாரக் சுற்றுலாவில் பங்கு பற்றிய நாம் இசை எழுப்பும் அத்தகைய கற் தூண்களைத் தமிழ்க் கோவில்கள் பலவற்றில் காணும் வாய்ப்பைப் பெற்ருேம் அவை எழுப்பும் இசையைக் கேட்கும் பேற்றைப் பெற்ருேம். மதுரையிலும் சுசீந்திரத்திலும் உள்ள அத்தகைய இசை எழுப்பும் சுற்றுரண்களைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். '
இசைத் தூண்கள் என்று அழைக்கக் கூடிய அக் கற் றுரண்கள் ஆராய்ச்சிக் குரியனவாகத் திகழ்கின்றன. இத் துறையில் பலர்ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் சிறப்பியல்புகள் விவ ரிக்கப்பட்டுள்ளன. திரு. பி. சாம்பமூத்தி என்பவர். தமது "இந்திய இசையின் வரலாறு" என்னும் நூலில் இசை எழுப்பும் கற்றுரண்கள் பற்றிக் குறிப்பிடுகிருர், இசை எழுப்பும் கல்லாலான தூண்கள் தமிழ் நாட்டுக் கோவில் களுக்கு மெருகூட்டிக்கொண்டிருக்கின்றன என்றும் அவற் றைப் போன்றவை வேறெந்த நாட்டிலும் காண முடியாது என்றும் கூறுகிருர். இசை எழுப்பும் கற்றுாண்கள் உண்மையி லேயே அற்புதமானவை. அத்தகைய தூண்களை வட இந் தியாவிலும் காணமுடியாது. மேற்கு நாடுகளிலும் இல்லை. அத்தகைய கல்லாலான தூண்களைக் கட்டி எழுப்பியமை உண்மையிலேயே சிற்ப வல்லுநரின் நுண்கலைத்திறனை உல குக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டுச் சிற்பிகள் ஒலியலை எதிர்வுடைய ஒர் இனக் கல்லைக் கண்டு பிடித்திருக்கலாம். எதிரொலிக்கின்ற தன்மை அத்தகைய கருங்கற் பாறைகளில் இருந்திருக்கலாம். அதனைத் தமது

Page 146
280 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
தேவ்ைக்குச் சிறப்பாகத் தமிழகச் சிற்பிகள் பயன்படுத்தி இருக்கலாம். அவற்றில் தமது கை வல்லமையைக் காட்டி இருக்கலாம். சிறந்த சிற்பங்களைத் தீட்ட அவற்றைப் பயன் படுத்தி இருக்கலாம்.
எதிரொலிக்கின்ற தன்மையுடைய கல்லிலே மெல்லிய ஒரு மென்தகடு போன்ற சவ்வு உள்ளது. அத்திகிைய மென் தகட்டைப் பூதக் கண்ணுடி கொண்டு பரீட்சித்துப் பார்க்கும் பொழுது அதில் உள்ள பல சிறப்பியல்புகள் எமக்குத் தென்படுகின்றன. அவை எம்மைக் கவரத்தக்கன வாகும். இசை எழுப்பும் கற்றுாண்களை எழுப்புவதற்கு அத்தகைய கருங்கற்களே உபயோகிக்கப்பட்டு வந்துள்ளன. அதே கற்கள் பல உருவங்களைச் செதுக்கவும் பயன் படுத்தப் பட்டுள்ளன. அத்தகைய சிலைகளின் உறுப்புக்களும் விட்டு விட்டு அடிக்கடி நிகழும் தன்மையுடைய இசைச் சுரங்களை எழுப்பிக் கொண்டிருக்கும் ஆற்றல் வாய்ந்தனவாகும்.
கும்பகோணத்துக்கு அணித்தாயுள்ள தாராசுரம் கோவி லில் உள்ள பலிபீடத்தின் தென் பகுதியில் இருக்கும் கற் படிகள் பல்வேறு தொணிகளான இசைச் சுரங்களை எழுப் புகின்றன. திருக்கழுங்குன்றத்தில் உள்ள சஞ்சீவி குன்றில் இருக்கும் கற்பாளத்திலிருந்தும் இசைச்சுரங்சள் எழுகின்றன. தென்னகத் சிற்பிகளில் இயல்பாயமைந்த தனிச்சிறப்புக்குச் சான்று பகர்வனவாக அக்கோவில்களில் உள்ள இசைத் தூண்கள் அமைந்துள்ளன. தூண்களின் தொகுதி ஒற்றை கருங்கற்பாளத்திலிருந்து செதுக்கப்பட்டனவாய்க் காட்சி அளிக்கின்றன. சிறந்த முறையில் அமையப்பெற்ற இசை எழுப்பும் கற்றூண்களை திருப்பதி, தடிகொம்பு, மதுரை, அழகர் கோவில், திருநெல்வேலி, ஆழ்வார் திருநகரி, கலக் காடு, தென்காசி, குற்ருலம், சுசீந்திரம், திருவானந்தபுரம், முதலிய இடங்களில் உள்ள கோவில்களில் காணலாம்.

கல்லும் கனிந்து இசை பாடும் 28 அவற்றுள் சில தூண்கள் எழுப்பும் இசைத்தொனியும் ஈரமும் மந்த ஓசையை உடையனவாய் இருக்கின்றன. ஏனையயை ஓசை நயம் மிக்கனவாய் அமைந்துள்ளன.
அத்தகைய கல்லாலான இசைத் தூண்கள் எழுப்பும் சுரங்களின் ஒலிப்பண்பினை. ஜலதரங்கம் என்ற இசைக் கருவி உண்டாக்கும் சுரங்கமுடன் ஒப்பிடலாம். ஜலதரங் கம் அல்லது சலதரங்கம் என்பது பல கிண்ணங்களில் பல அளவில் நீர்வார்த்துச் சுருதியமைத்துக்கொண்டு சிறு கழியால் தட்டி வாசிக்கும் ஒரு வகை வாத்தியமாகும். மற்றும் சில தூண்களில் இசைச் சுரங்கள் தெளிவாகவும் மிக்க ஓசை உடையனவாகும் இருக்கின்றன. அச்சுரங்களை உலோகத்தினுலான சண்டாமணி எழுப்பும் சத்தத்துடன் ஒப்பிடலாம். பெங்களுரில் sploit 6T சமராஜாபேட்டில் இருக்கும் பூரீநிவாசப் பெருமாள் கோவிலிலும் இசைச்சுரங் களை எழுப்பும் கல்லாலான தூண்கள் உண்டு. அத்தூண்கள் உயரம் குறைந்தனவாய் இருப்பதிஞல் அவை எழுப்பும் சுரங்கள் போதிய ஓசை அற்றனவாகவே உள்ளன.
அத்தூண்கள் பல்வேறு உருவினவாய்க் காட்சி அளிக் கின்றன. அவற்றுள் சில நீள் உருளை வடிவானவை. மற் றும் சில செங்குத்தான வரிப்பாளங்களினல் ஒப்பனை செய் யப்பட்டவை. வேறு சில திருகு சுருள் வடிவில் அமைந் துள்ளன. இன்னுஞ் சில சதுர வடிவிலும் அறு கோண வடிவிலும் எண்கோண வடிவிலும் உருவாக்கப்பட்டுள்ளன. அத்தகைய தூண்களின் உயரம் மூன்று அடியிலிருந்து ஆறு அடி வரை வேறுபடுகின்றது. பெரிய ஒரு சல வைக் கல்லிலே மறைந்து கிடக்கும் ஒரு சிலையை ஒரு சிற்பி கண்டு பிடிக்கின்றன். அதே போன்று இசைக்கல் சிற்பியும் பெரிய ஒரு கருங்கற்பாளத்திலிருந்து தேவை யற்ற பகுதிகளைப் படிப்படியாகக் குத் துளியால் செதுக்கி

Page 147
282 நெருசில் நிலைத்த சுற்றுலா
இசை எழுப்பும் தூண்களைக் கண்டு பிடிக்கின்றன். ஆழ் வார் திருநகரில் உள்ள ஒரு தூண் மற்றவற்றிலிருந்து வேருக்கக் கூடியதாக அமைந்துள்ளது. அதனை வேருக்கி ஆராய்ச்சி மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது.
அலங்கரிக்கப்பட்ட அடித்தளத்தையும் மலர்களால் ஒப் பனை செய்யப்பட்ட உச்சியையும் கொண்டவனவாக அமைந்துள்ளன அத்தூண்கள். ஏனைய சாதாரண தூண் களைப் போன்று இசை எழுப்பும் தூண்களும் கூரையைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. கோவில்களின் கலைச் செல் வத்துக்கு அணி செய்கின்றன அத்தூண்கள். பெரும்பாலும் அத்தகைய தூண்களைக் கோவிலோடு சேர்ந்த முற்றத்தி லும் கோவில் சாலைகளின் பக்கங்களிலும் காணலாம்.
ஒரு மரத்துண்டினல் அல்லது சிறிய கல்லினல் அல் லது கழியினுல் இசை எழுப்பும் ஒரு கல் தூணில் சற்றுத் தட்டினல் அது எழுப்பும் சுரத்தினை நாம் கேட்கக் கூடிய தாக இருக்கும். அப்பொழுது அத்தூணைப் பிடித்துப் பார்த் தால் அதில் ஒரு வித அதிர்வு ஏற்பட்டுக் கொண்டிருப் பதை உணரலாம். பெரிய அளவிலான ஏனைய தூண்கள் இசை எழுப்பும் தூண்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளன. அவை இசை எழுப்புவதில்லை. அவை பருமனுக இருப்பதே அதற்குக் காரணம். மற்றுஞ் சில தூண்களின் அடிப்பகுதி யும் நடுப்பகுதியும் உச்சிப் பகுதியும் தட்டும் பொழுது வெவ் வேறு இசைச்சுரங்களை எழுப்பும். அச்சுரங்கள் வெவ்வேறு அதிர்வுகளை உடையதாயிருக்கும். பெரும்பாலும் இசை அலை எழுப்பும் கல் தூண்கள் புறப்பரப்பில் அல்லது விளிம்பில் அமைக்கப்பட்டிருக்கும். ஆழ்வார் திருநகிரி, சுசீந்திரம் போன்ற கோவில்களில் இரண்டாவது வரிசையில் இடம் பெற்றுள்ள இசை எழுப்பும் கல் தூண்களும் உள்ளன. அவை முதல் வரிசைக்கு உட்புறமாக அமைந்திருக்கும்.

கல்லும் கனிந்து இசைபாடும் 283
அத்தகைய தனிச் சிறப்பு வாய்ந்த கல்லாலான இசைச் சுரம் எழுப்பும் தூண்களைப் பார்த்துவிட்டு குமரிமுனைக்கு சூரியன் மறையும் முன்னர் செல்லவேண்டும் என்பதே எமது திட்டமாக இருந்தது. குமரி முனையில் சூரியன் மறையும் கண்கொள்ளாக் காட்சியை நாம் தவற விடக் கூடாது என்பது எமக்கு விதிக்கப்பட்ட கண்டிப்பான உத்தர வாகும். எனவே சுசீந்திரத்தில் எமது நிகழ்ச்சிகளை முடித் துக் கொண்டு குமரிமுன்னக்கு விரைந்தோம். சுசீந்திரத்தி லிருந்து பிரியும்பொழுது கவிமணி தேசிகலிநாயகம் பிள்ளை அவர்கள் இயற்றிய ஒரு பாடல் தான் ஞாபகத்துக்கு வந்தது. அச்செய்யுளில் உள்ள குறிப்பிற்கிணங்க சுசீந்தி ரத்தில் எழுந்தருளியுள்ள சுவாமி பின் திருநாமம் தானு மாலயன் என்பதாகும். தானு -சிவம், மால்-விஷ்ணு அயன்-பிரமா மூவரும் சேர்ந்த மூர்த்தி. இக்கருத்தினை அமைத்தே கவிமணி அவர்கள் இயற்றி இவ்வாறு பாடி (air 67 Tit. w
திங்களுன் கருணை காட்டும்! திக் கணுன் வெகுளி காட்டும்! கங்கையுன் பெருமை காட்டும்! கடுவுமுன் ஆண்மை காட்டும்! சிங்கம் நுன் இடையை காட்டச் சிறையனம் நடையைக் காட்டும்! uprij60) as Gunt i urtas t! தானு மாலயா சுசீந்தை வாழ்வே.

Page 148
40
GÄöö öL666) வளரும் கதிரோன்
நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் வெண் தலைப் புணரி குட கற் குளிக்கும் யாணர் வைப்பின் நன்னட்டுப் பொருந
இது புறநாநூற்றுப் பாடல் ஒன்றிலிருந்து எடுக்சப் பட்ட மூன்று அடிகள். இரண்டாவது பாடலில் உள்ளவை. பாடியவர் முரஞ்சியூர் முடி நாகராயர். பாடப்பட்டவர் சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதீன். "நிதுை கடலின் கண் தோன்றிய சூரியன் பின்னும் நினது வெளிய தல பொருந்திய திரைனயயுடைய மேல் கடலின் கண்ணே மூழ்கும். அத்தகைய வளமுள்ள நாடு. புது வருவாய் இடையூருத ஊர்களை உடையது அந்நாடு. அங்ங்னம் சிறப்புப் பெற்ற நல்ல நாட்டிற்கு வேந்தே" என்று கருத் துப்பட புறநானுற்று உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். குமரி முனையை அடைந்ததும் மேற்குறிப்பிட்ட வரிகளை நினைவுப் படுத்தினேன். குமரித்துறையிலே சூரியன் எழுவ

வங்கக் கடலில் வளரும் கதிரோன் 28S
தையும் மறைவதையும் அது குறிக்கின்றது எனக் கொள் வது ஏற்புடையதல்லவா?
உலகில் கன்னியாகுமரி காண்போருடைய மனதில் என்றும் மாருது பதிந்திருக்கும். அது இயற்கை அழகு மிக்க ஓர் இடமாகும். ஒரு சிறந்த தீர்த்தத்தையுடைய புண்ணிய கடற்கரையாகும். காலைக் கதிரவன் கனிந்த ஒளியோடு வங்காள விரிகுடாவில் தோன்றுவதையும் மாலைக் கதிரவன் மங்கிய ஒளியோடு அறபுக் கடலில் மறைவதையும் ஒரே இடத்தில் நின்றுக் காணக்கூடிய வாய்ப்பைக் குமரிமுனை அளிக்கிறது. இலங்கை போன்ற ஒரு நாட்டில் கொழும்பிலுள்ள காலிமுகம் போன்ற ஓரிடத் திலிருந்து சூரியன் மறைவதை மத்திரமே காணலாம். அதே விதத்தில் கல்முனை போன்ற இடத்திலிருந்து சூரியன் தோன்றுவதை மாத்திரமே காணலாம், தமிழ் நாட் டில் உள்ள சென்னையில்கூட சூரியன் தோன்றும் காட்சி யை மாத்திரமே அழகு மிக்க காட்சியாகக் காணக் கூடிய வாய்ப்பு இருக்கும். எனவே சென்னை போன்ற பிரதேசங்களில் உள்ளவர்களுக்குக் குமரிமுனைக் காட்சிகள் கண்கொள்ளாக் காட்சிகளாகவே இருக்கும். கதிரவனின் காலைத் தோற்றமும் மால்ை மறைவும் முறையே மக்கள் வாழ்வின் கவர்ச்சி உடைய குழந்தைப் பருவத்தையும் மனங்கலங்க மாய்ந்து மறையும் முதுமைப் பருவத்தையும் ஒருங்கே சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கும் என்றும் அவை அவ்வாறு மனிதரைக் கருத வைக்கும் என்றும் கூறுவர்.
குமரி முனையின் கிழக்கே வங்காள விரிகுடா அமைத் துள்ளது. தெற்கே அமைந்துள்ளது இந்து மகா சமுத்திரம். மேற்கே உள்ளது அறபுக் கடல். எனவே மூன்று கடலும் கூடும் துறையாக அமைந்துள்ளது. குமரிமுனைக்குத் தெற் கில் பரந்திருக்கும் நீர் பரப்பைச் சற்று உற்றுநோக்

Page 149
286 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
கினல் முப்பெரும் கடல்களினதும் எல்லைகளை ஒருவாறு உய்த்துணரலாம். இன்ன இடத்தில் தான் இந்து மகா சமுத்திரம் ஆரம்பிக்கிறது. இன்ன இடத்தில் தான் இந்து சமுத்திரத்தின் எல்லைக்கோடு அமைந்திருக்கிறது, இன்ன இடத்தில் தான் வங்காள விரிகுடாவின் நீர்ப்பரப்பு ஆரம் பமாகிறது என்று வரையுறுத்துக் கூறக்கூடிய நிலைமை ஏற்படும். அம்மூன்று கடலும் கூடி அலைகள் மோதுவதும். அழகிய காட்சியாகவே இருக்கிறது. கடலிலே உள்ள கற் குன்றுகளில் நீரலைகள் மோதுகின்றன, அதே போன்று கடற்கரையில் உள்ள மணற் குன்றுகளில் காற்றலைகள் மோதுகின்றன. அவை மக்களின் வாழ்க்கையையும் அதன் மீது மோதும் துன்ப அலைகளையும் குறிக்கின்றன என்றும் அத்தகைய துன்ப அலைகளைப் போக்குவதற்குரிய சிறந்த இடம் குமரிமுனை என்றும் கருத்து வெளியிட்டுள்ளனர். பல நிற மணலும் பல வகையான கடல்படும் திரவியங் களும் கொண்ட கடற்கரை, அதன் அலைக் கையால் வா வா என்று அழைப்பது போன்று உரக்கக் கூ விவரும் இயல்
60-gi.
பழைய திருவிதாங்கூர் மாநிலத்தின் தென்பகுதியாகிய நாஞ்சில் நாட்டின் தென்கோடியாக அமைந்துள்ளது குமரி முனை. திருமாலின் ஆருவது அவதாரமாகிய பரசுராமர் இன்றுள்ள கேரள மாநிலம் உட்படக் கோவா முதல் குமரி வரையுள்ள நிலப்பகுதியை உண்டாக்கினர் என்றும் அதற்கு முன்னர் அப்பகுதி கடலாக இருந்தது என்றும் புராணக் கதைகள் கூறுகின்றன. அந்த ஊருக்குநிலம் உதவ விரும்பி னர் பரசுராமர். எனவே கடல் தெய்வமாகிய வருண னிடத்தில் தமது மழுப்படையைக் கடல் நீரில் வீசவிடை அருளுமாறு வேண்டினர். அனுமதிகிடைத்ததும் கோவாவி லிருந்து மழுப்படை எறியப்பட்டது. அம் மழுப்படை

வங்கக் கடலில் வளரும் கதிரோன் 287
குமரியிலே வந்து வீழ்ந்தது. உடனே கடல் நீர் இப்பொழு துள்ள கேரள மாநிலத்தை விட்டு நீங்கியது. இது தான் JAy&&g Googs .
வேருெரு சிறந்த நில நூலாசிரியரின் குறிப்புக்கு இணங்க இன்று காணும் குமரித்துறைக்குத் தெற்கே ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது என்றும் அதனைப் பிற் காலத்தில் கடல் விழுங்கி விட்டது என்றும் அறியக்கிடக் கின்றது. அந் நிலப்பரப்பைக் குமரிக்கண்டம் என்பர். "இலெமூரியாக்கண்டம்" என்பர் மற்றுஞ் சிலர். சிலப்பதி காரம் போன்ற பழங்கால இலக்கியங்களும் இது பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆழ்கடல் சென்று வலைவீசுவோரும் கட்டடங்கள் இருந்ததற்கு அறிகுறிகள் தென்படுகின்றன என்றும் கூறுவர். இத்தகைய குறிப்புகள் வரலாற்ருசிரி யர்கள் பொருட்படுத்தும் கூற்றுக்களாக அமையவில்லை.
குமரிமுனை, கன்னியாகுமரி எனவும் அழைக்கப்படு கிறது. கன்னி, குமரி என்ற இரு சொற்களாலாயது அச் சொற்ருெடர். கன்னி, குமரி என்ற இரு சொற்களும் ஏறத்தாழ ஒரே கருத்துடையன என்பது உண்மையே. எனினும் அவ்விரண்டு சொற்களுக்கும் நுண்ணிய வேறு பாடு உண்டு. குமரி என்பது பருவப் பெயர். கன்னி என்பது மணமாகாத தன்மையைக் குறிக்கும் சொல். அவ்வாறே வழங்கி வருகின்றன. "கன்னியா குமரி" என இரண்டு சொற்களும் சேர்ந்திருக்கலாம். பின்னர் புணர்ச்சியில் விகாரப்பட்டு கன்னியாகுமரி என்று ஏற்பட்டிருக்கலாம். சேரமான் பெருமாள் என்னும் அரசன் இலக்கினங்களின் (இராசிகள்) அடிப்ப ை- பிலே தமது ஆட்சி பில் சில ஊர்களை அமைத்ததாகக் கூறுவர். அவ்வாறு அமைக்கப்பட்ட வர்களுள் ஒன்றே கன்னி. இலக்கணத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஊர்களுள் ஒன்றே கன்னி பாகுமரி என்பர்

Page 150
288 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
சிம்ம இராசியினை அடிப்படையாக வைத்து சிங்கவனம் அமைக்கப்பட்டு அது இப்பொழுது திருவிதாங்கூர் என அழைக்கப்படுகின்றது என்பதை இக்கூற்றுக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுவர் இத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த கன்னியாகுமரி இந்திய நாட்டு மக்கள் அனைவரையும் கவர்ந் திருப்பது போலவே வெளிநாட்டினர் பலரையும்-பெருமக் களையும் பொது மக்களையும்-அதன்பால் ஈர்த்திருக்கிறது.
மேலே நாட்டிலிருந்து வந்த யவனரும் இப்னுபதுத் தா போன்ற தேச சஞ்ச ச ரிகளும் பாராட்டும் தொன்மை கன்னியாகுமரிக்கு உண்டு, பெரிப்புளுசு என்பவர் குமரி முனையைக் "கொமரி' என்று குறிப்பிட்டுள்ளார். தொலமி யும் அதனை "கொமரியா’ என்று அழைத்துள்ளார். மார்க் கோபோலோ இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவர். ஒரு தேச சஞ்சாரி. உலகத்தில் உள்ள பல நாடுகளுக்குச் சென்றவர். அவற்றை ஆற அமரக் கண்டவர். அவர் கி. பி 1293 இல் குமரி முனைக்கு வந்தார், கிழக்கு இந்திய தீவுகள் என வழங்கப்பட்ட இந்தோனேசியா வுக்குச் சென்றுவிட்டுச் சாவகத்திலிருந்து LHADülu - டார். சாவகத்தை விட்டு நீங்கியதும் அவருக்கு வழி தவறியது. துருவ நட்சத்திரத்தைக் காணமுடியாது தவித் தார். பின்னர் குமரிமுனையை அடைந்த பின்னரே துருவ நட்சத்திரத்தை மீண்டும் கண்டார். இவ்வாறு அவர் தம் பிரயாணக் குறிப்புக்களில், குறிப்பிட்டுள்ளார். வரலாற் றில் இடம் பெறத்தக்க பேரறிஞர்களைப் போலவே உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும்பொதுமக்கள் குமரிமுனையின் இயற்கை எழில் நல்னைக் கண்டு களிக்க அங்கு வருவது உண்டு. சோமலே என்பவர் கூறுவது போன்று ஒருவன் 24 மணி நேரத்தைக் குமரிமுனையில் கழித்தால் இந்திய நாட்டு மொழிகள் அனைத்தையும் உலக மொழிகள் சில

வங்கக் கடலில் வளரும் கதிரோன் 289
வற்றையும் பேசும் மக்கள் கூட்டத்தைக் கண்டும் கேட்டும் இன்புறலாம்.
வடக்கில் இமயமலை பாப்பா-தெற்கில் வாழுங் குமரி முனை பாப்பா
என்று பாடியுள்ளார் சுப்பிரமணிய பாரதியார். குமரி முனைக்கு சிறப்பான ஓர் அடைமொழியை அவரி உபயோகித்ததேன்? "வாழும்" என்று அடை கொடுத்ததன் காரணம் என்ன? தமிழகத்தின் தென்பாலில் அமைந்துள்ள எல்லை முன்பொருகால் கடல்கோளால் அழிந்து குறுகிவந்த நில வரலாற்றை சுப்பிரமணிய பாரதி அறிவார். இப் பொழுதுள்ா குமரிமுனை இனியும் அழியக்கூடாது. சிறப் புற்று வாழ வேண்டும், என்பது பாரதியாரின் நீங்காத ஆசை. அந்த ஆசையைப் பிரதிபலிக்கும் முகமாகவே குமரி முனைக்கு வாழும் என்ற அடை கொடுத்துள்ளார்.
நீலத் திரைக் கடல் ஒரத்திலே
நின்று நித்தம் தவஞ் செய் குமரி
என்று மற்ருெரு பாடலில் அமைந்துள்ளது. தவஞ் செய்யும் குமரி கடலோரத்தில் ஏன் நிற்க வேண்டும்? தவம் ஏன் புரிய வேண்டும்? அதிலும் நித்தம் தவம் புரிய வேண்டியதன் அவசியம் என்ன? இத்தகைய கேள்விகள் இப்பாடலைப் படிப்போர் எண்ணத்தில் எழுதல் இயல்பே. விடை காண வேண்டியன இவ்வினுக்கள். ஈழ நன்னட்டைச் சேர்ந்த உயர்திரு விபுலானந்த அடிகள் இவ்வினுக்களுக் கான விடையை நயம்படக் கூறியுள்ளார். இக்கடலோரத் தோடு கடல் நின்றுவிட வேண்டும். மேலும் முன்னேறி வரக்கூடாது. நாட்டை விழுங்கி விடக்கூடாது. இவை தாம் குமரியின் தவத்தின் நோக்கங்கள் என்று படிப்போரி உள்ளத்தைக் கவரும் முறையில் விடை கண்டுள்ளார்.

Page 151
29O நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
பாராதியாரின் பாடல்களில் உள்ள நயங்களை மக்கள் அறியுமுகமாகப் பாரதியாரை முதன்முதல் அறிமுகப் படுத் தியவர் விபுலானந்த அடிகள் அல்லவா?
கன்னியாகுமரிக் கோவிலைச் சூழ்ந்த கடல் பல நீராடுங் கட்டங்களைக் கொண்டது. கட்டம் என்பதே நீராடுதுறை மூன்று கடலும் கூடுமிடத்தில் உள்ள நீராடும் கட்டமும் 16 தூண்களை உடைய மண்டபமும் மிகச் சிறப்பினை உலடை பன. அந்நீராடு கட்டத்தில் ஒருமுறை நீராடினுல் உடல் மட்டுமன்றி "உள்ளமும் கழுவித் தூய்மை செய்யப்பட்டன வாகிவிடும்" என்று கூறுவர். மங்கையொருத்தி தன் கற் பிழந்தமையால் தன் தீவினை நீங்கக் காசியிலிருந்து கன்னி யாகுமரிக்கு நீராடவந்தாள்" என்று மணிமேகலை குறிப் பிடுகின்றது. மகாபாரதம் வனபருவத்தில் "ஒருவன் கடல் துறையாகிய கன்னி என்னுந் தீர்த்தத்தில் நீராடல் வேண் டும்" என்று கூறுகின்றது. "அங்கு நீராடலால் ஒருவன் தன் தீவினைகளை எல்லாம் போக்குகின்றன்" என்றும் *நோன்பிருந்த உணவோடு பணிந்த மனமும் கொண்டு கன்னியாகுமரிக்குச் செல்லுதல் என்பது மநுவின் உலகிற்குச் செல்லுதலாகும்’ என்றும் "கன்னியாகு மரியில் எவ் வகை ஈ கை யைச் செய்யினும் அது நிலை பேறுடையது' என்றும் குறிப் பிடப்படும் பெருமையினை உடையது குமரிமுனை.
சுசீந்திரத்திலிருந்து புறப்பட்ட நாம் விரைந்த பிர யாணத்தின் பின்னர் கன்னியாகுமரியை அடைந்தோம். அப்பொழுது நேரம் ஐந்தரை மணி இருக்கும். சூரிய அஸ்தமனத்தைக் காணும் வாய்ப்பைப் பெற்ருேம். குமரி முனையிலிருந்த மாடிவீட்டின் மேல்மாடத்தை அடைந்த நாம் அங்கிருந்தே சூரியன் மறைவதைக் கண்டு களித்தோம், ஆம், ஓர் அலாதியான கிாட்சியாகவேயிருந்தது. கண்ணைக் கவரும் அழகுக் காட்சியாகவே விளங்கியது. காலையில்

வங்கக கடலில் வளரும் கதிரோன் 291
சூரியன் காரிக்குங் காட்சியையும் மாலையில் சூரியன் மறை யும் காட்சியையும் காண்பதற்காகவே உல்லாசப் பிரயாணி கள் அங்கு செல்வர். ஆணுல் அவ்விரு காட்சிகளையும் விடச் சிறப்புடைய ஒரு காட்சியையும் அங்கு ஒரு குறிப்பிட்ட நாளில் காணககூடியதாக உள்ளது. சித்திரைப் பெளர்ணமி அன்று அத்தகைய சாட்சியை கண்ணுரக்கண்டு களிக்கலாம். அக்காட்சியை 'இயற்கையின் விந்தை" என்றே வியந்து புகழலாம். ஏப்ரல் மாதத்தில் வரும் சித்திரைப் பெளர்ணமி அன்று மாலைக் கதிரவன் அறபுக் கடலில் மறைவதையும் மாலைத் தண் மதி வங்கக் கடலில் கிளர்ந்து எழுவதையும் ஒரே நேரத்தில் காணக்கூடியதாக இருக்கும். அன்று சூரிய அஸ்தமனமும் சந்திரோதயமும் ஒரே நேரத்தில் நிகழும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அன்று கண்ட சூரிய அஸ்தமனக் காட்சியை வருணிக் கப் புகழேந்திப் புலவரின் உதவியைத் தான் நாடுதல் வேண் டும். உலகம் பகலை இழந்தது. வானம் வெளிச்சத்தை இழந்தது. பொய்கையும் கழியும் பறவைகளை இழந்தன. அன்றில் பறவைகள் தம் துணைகளை இழந்தன. சூரியனும் மறைந்துவிட்டான். (நளவெண்பா = 104) சூரியனைக் கூத் தாடியாக உருவகஞ் செய்து அவன் செயல்களை எல்லாம் கூத்தரங்கில் நிகழும் நிகழ்ச்சியாக்கி நளவெண்பாவில் புகழேந்திப்புலவர் இவ்வாறு பாடியுள்ளார் (105)
மாயிரு ஞாலத்துயிர் காண வானரங்கில் பாயிருள் என்னும் படாம் வாங்கிச்-சேய் நின்று அறைந்தாரணம்பாட ஆடிப்போய் வெய்யோன் மறைந்தான் குடபால் வரை. (படாம் - திரைச்சேலை, ஆரணம் - வேதப்பாடல்)
இவ்வாறே கம்பநாடரும் இறை சிவபெருமானின் திருக்கத்

Page 152
292 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
துக்கு சூரியன் மறைவதை ஒப்புமையாகக் காட்டியுள்ளார். அதனேடு தொடர்பு படுத்திச் சூரியனின் தோற்றத்தைக் குறிப்பிட்டுள்ளார் கம்பநாடர். கம்பராமாயணம் மிதிலைக் காட்சிப் படலத்தில் உள்ள ஒரு பாடல் (153) இவ்வாறு
அமைந்துள்ளது.
எண்ணியிய மறையனெடு கின்னரர்கள் இசைபாட உலகம் ஏத்த விண்ணவரும் முனிவர்களும் வேதியருங் கரங்குவிப்ப வேலை என்னும்
மண்ணுமணி முழவதிர வானரங்கில் நடம்புரிவாளிர வியான
கண்ணுதல்வா னவன் கனகர் சடைவிரித்தாலென விரிந்த கதிர்களெல்லாம்.
41
மூக்குத்திகாலித்த 80IJ gif
இந்திய உப கண்டத்தின் மறு பெயர் பரத கண்டம் என்பதாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பேரரசன் ஆண்டுவந்தான். புராணக் கதைகளில் அவன் குறிப்பிடப்பட்டுள்ளான். அவன் பெயர் பரதன். இந்தியா பரத கண்டம் என்ற பெயரைப் பெற்றது. அவனுக்கு மக்கள் ஒன்பது பேரி இருந்தனர். அவர்களுள் எண்மர் ஆண்மக்கள். பெண் ஒருத்தி. பரதன் என்னும் பேரரசன்

மூக்குத்தி காலித்த வைர ஒலி 293 முதுமைப்பருவத்தை அடைந்ததும் ஓய்வுஎடுக்கக் கருதின' எனவே தன் நாட்டை ஒன்பது பங்குகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவையும் ஒவ்வொருவர் பெறுமாறு செய்தான் பரத கண்டத்தின் தென் கோடிப்பகுதி குமரி என்னும் மகளுக்கு உரியதாயது. ஆதலினலேயே அப்பகுதி அச் காலந்தொட்டு குமரி என்னும் பெயரைப் பெறலாயிற்று என்பர். அவ்விடத்துக்குப் பராசக்தி தவமிருக்க வந்தவள் என்றும் பரசுராமர் குமரி தெய்வ உருவை அவ்விடத்தில் அமைத்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. ஆனல் அங்குள்ள கல்வெட்டுகட்கு இணங்கக் குமரிமுனைக் கோவில் பிற்காலத்துப் பாண்டி மன்னர்களால் கட்டப்பட்டதென் வும் கூறுவர்.
முன்னெரு காலத்தில் தேவர்களை அசுரரி அடக்கி யாண்டனர். அறம் குன்றியது. மறம் தலைதூக்கியது. தீமை பெருகின. பாவம் அதிகரித்தது. அறியாமையும் அநீதியும் தாண்டவமாடின. பெண்குலத்தின் கற்புச் குறை யாடப்பட்டது. அசுரர்க்கு அரசனுகிய பாணசுரன் மூவு லகுக்கும் முடிவு தேடினன். தூயோர்க்கும் முனிவருக்கும் தொல்லை கொடுத்து வந்தான். உலகினை இருள் மயமாக் கும் தீய திறனை ஒழிப்பதற்கு நிலமகளாகிய தாய் திருமாலை வேண்டி நின்ருள். தீத்திறங்கொண்ட பாணுசுரனைப் பராசக்தியால் மாத்திரம் கொல்ல முடியும் என்றும் எனவே தேவர்கள் அதற்காகப் பராசக்தியைப் பரவல் வேண்டும் என்றும் திருமால் கூறிஞர். அதற்கிணங்க தேவர்கள் பராசக்தியை வேண்டிக் கொள்வதற்காக ஒரு பெரு வேள்வி செய்தனர். வேள்வி முடிவில் சக்தி தேவி வெளிப் பட்டு பாணசுரன் தலைமையில் நிகழும் தீய திறங்களை ஒழித்து ஒழுங்கும் அறமும் உலகில் நிலைபெறச் செய் வதாக உறுதி கூறினள். அன்றுமுதல் ஒரு கன்னி அல்லது குமரியாகக் கன்னியாகுமரிக்கு வந்து கடுந்தவம் புரியல

Page 153
294 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
னுள். நாட்கள் ஓடி மறைந்தன. கன்னி தேவி குமரிப் பருவம் என்னும் மணப்பருவத்தை அடைந்தாள், சுசீந் திரம் என்னும் திருப்பதியில் உள்ள கடவுள் சிவபெரு மான் அக்குமரி மீது காதல் கொண்டார். அவருக்கு அக்குமரியைத் திருமணம் முடிப்பதற்கு வேண்டிய ஏற் பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அசுரர் தலைவன் ஒரு கன்னியால்தான் கொல்லப்படுவான் என்று பிரமதேவனுல் விதிக்கப்பட்டிருந்தது . எனவே இத்திருமணம் நிகழ்ந்தால் பாணுசுரனின் அழிவுக்குரிய வாய்ப்பு நீங்கி விடும். இதனை உணர்ந்த தேவமுனி நாரதர், இத்திரு மணம் நிகழாதிருப்பதற்கு வேண்டிய வழிவகைகளைக் கருதலானுர்,
அது குறித்து குமரி பராசக்தியையும் பரமசிவத்தையும் நாரதர் நேரில் சென்று கண்டார். கண்டு இத்திருமணம் குறித்துத் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். குறிப்பிட்ட ஒரு நாளில் நள்ளிரவில் ஒரு சுப முகூர்த்தத்தில திருமணம் நிகழ வேண்டும் என்றும் அதற்காக ஆயத்தமாக இருக் கும்படியும் இவரிடம் நாரதர் கூறினர். அவ்வாறே குறித்த இரவில் சிவபெருமானும் மனமிக மகிழ்ந்தவராய் திருமணத் திற்குப் புறப்பட்டார். குறித்த சுபமுகூர்த்தம் தவறக் கூடாது எனக்சருதிக் கொண்டு கன்னியாகுமரிக்குப் புறப் பட்டார். இறைவர் சுசீந்திரத்திலிருந்து கன்னியாகுமரிக்குப் போய்க்கொண்டிருந்தார். போகும் வழியில் தெற்கே ஒரு கல் தொலைவில் உள்ள வழுக்கம்பாறை என்ற இடத்தை அடைந்தார். அப்பொழுது நாரதர் ஒரு சேவல் உருக் கொண்டு உரக்கக்கூவிப் பொழுது புலர்ந்துவிட்டது எனத் தவறுதலாகப் புரிந்து கொள்ளுமாறு செய்தார். அதன் பயனுகத் திருமணத்திற்கெனக் குறிப்பிடப்பட்ட சுப முகூர்த்தம் கழிந்துவிட்டதாகக் கருதிய சிவபெருமான்

மூக்குத்தி காலித்த வைர ஒலி 295
தமது இருப்பிடமாகிய சுசீந்திரத்துக்குத் திரும்பினர். வருத் தத்துடன் திரும்பினர். கன்னிதேவியும் அன்று முதல் என்றும் கன்னியாகவே இருப்பதாகத்துணிவுகொண்டாள். திருமணத்திற்கெனச் செய்யப்பட்ட வகை வகையான உணவுப் பொருள்கள் யாவும் வகை வகையான மணலாக மாறின என்பர். இன்றும் அதன் சான்முக குமரிக்கடல் துறையில் சோற்றுப்பருக்கைபோன்ற வெண்சிறு மணலும் வேறு வகையான பல வண்ண மணலும் மிகுதியாகச் காணப்படுகின்றன.
மற்ருெரு புராணக்கதைக்கு இணங்க பார்வதிதேவி சிவபெருமானுக்காகத் தவமியற்றிக்கொண்டிருந்ததாகவும் சிவபெருமான் திருமணப் பரிசுகள் கொண்டு வந்தபொழுது சிவபெருமானின் ஏவலாளரிடம் "கண்" இல்லாத தேங் காயும் சணு இல்லாத கரும்பும் காம்பு இல்லாத மாங் காயும் கொண்டு வரப்பட்டனவா என்று பார்வதி கேட்டாள். இகளுல் கோபம் அடைந்த சிவபெருமான், பார்வதி எப்பொழுதும் கன்னியாகவே இருக்க வேண்டும் என்று சபித்தார். தாம் கொண்டு வந்த பொருள்கள் அத்தனையும் மணலாகவேண்டும் என்றும் சபித்தார்.
கன்னிதேவி கடுந்தவமிருக்கவே ஒரு நாள் பாணுகரன் கன்னிதேவியின் அழகைக் கூறக்கேட்டு அவள் மீது ஒரு தலைக் காமம் கொண்டான். அவளை மணந்துகொள்ள வேண்டினுன். கன்னி தேவியோ அவனை வெறுத்தாள். அசுரன் அவளை உடல் வலிமையால் கவர்ந்து கொள்ள எண்ணினன். தன் உடைவாளை உருவினன். இத்தகைய சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த கன்னிதேவி தன் போர்வாளை வீசினுள் . நெடுநேரக் கடும்போரின் பின்னர் தேவி தனது சக்கரப்படையால் பாணுசுரனைக் கொன்முெழித்தாள். தேவர் யாவரும் தேவிக்கு நன்றி

Page 154
296 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
செலுத்தினர். தேவியும் அவர்களை வாழ்த்தி அனுப்பினள். பின்னர் தேவி தவமேற்றுக்கொள்ளத் தொடங்கினள். கன்னி தேவியின் கோவில் கன்னியாகுமரியில் உள்ளது. இது காரணமாக இந்துக்கள் அங்கு புனித யாத்திரையை மேற்கொள்வர். மலையாளத்தில் நிலவும் பழமைமிக்க வழக்கத்துக்கியைய அங்கு செல்வோர் ஆண்களாயிருப்பின் மேலங்கி அணியக்கூடாது என்ற பழக்கம் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தோத்தி மாத்திரமே அணிதல் வேண்டும். வேறு உடைகள் அணியக்கூடாது, என்ற கட்டளை அங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. கன்னியா குமரிக்கோவிலைப்பற்றிப் பல்வேறுவகையான கதைகள் வழங்கப்படுகின்றன.
கோவிலிலே எழுந்தருளியுள்ள கன்னிதேவியின் வைரக் காதணிகளிலிருந்தும் மூக்கணியிலிருந்தும் பரப்பப்பட்ட ஒளியை வங்காள விரிகுடாவில் பல மைல்களுக்குக் காணக் கூடியதாக இருந்தது. தேவியின் சிலை கிழக்கு வாயிலை நோக்கி இருப்பதனுல் அக்கோவிலின் கிழக்கு வாயிலிருந்தே அப்பிரகாசமான ஒளி வெளியாகியது. அவ்வெளிச்சததைக் கலங்கரை விளக்கின் வெளிச்சமெனப் பிழையாகக் கொண்ட கப்பல்கள் அண்மையில் உள்ள கற்பாறையில் மோதின என்பர். இதை அறிந்ததும் அதிகாரிகள் கிழக்குவாயிலை மூடிவிட்டனர்! இப்பொழுது அக்கோவிலுக்குச் செல்ல விரும்புவோர் வடக்கு வாயிலாலேயே செல்லுதல் வேண் டும். பல தலைமுறைகளாக கன்னியாகுமரியில் உள்ள அக்கோவில் புகழ்பெற்றிருக்கிறது. இந்தியாவிலுள்ள மிகப் பழமையான கோவில்களில் ஒன்று அது. மகாபாரதத்திலும் உப நிடதத்திலும் அக்கோவில் இடம்பெற்றுள்ளது, அக் கோவிலில் பல மண்டபங்கள் அழகிய உருவங்கள் உள்ளன. குமரியம்மனின் வடிவம் மிகச் சிறந்த கலைப் பொருளாகக் காட்சி அளிக்கின்றது. கண்டோர் வியந்து பரவசப்படும்

மூக்குத்தி காலித்த வைர ஒலி 297
அமைப்பும் பொலிவும் நிரம்பப் பெற்றதாக விளங்குகிறது. கன்னியாகுமரி கிழக்கே நோக்கி நிற்கிறது ஒரு கையிலே செபமாலை உள்ளது. மற்றக் கை "கடக நிலையில் உள்ளது" பெருவிரலும் சுட்டுவிரலும் வளைந்து ஒன்ருே டொன்று உகிர் கவ்வ மற்றை மூன்று விரல் சளும் நிமிர்ந்து நிற்கும் இணையா வினைக்கையைக் கடகம் என்பர். இப்பொழுது அங்கு ஆண்டு தோறும் புரட்டாசித் திங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. பாணுசுரனேப் பராசக்தி கொன் ருெழித்ததை நினைவு படுத்துவதாக அவ்விழா அமைந்துள்ளது. அவ்விழாவின் பத்தாவதுநாள் தேவியின் உருவம் கன்னியாகுமரிக் கோவிலிலிருந்து இரண்டு கரி தொலைவில் உள்ள மகாதானபுரம் என்னும் ஊருக்கு ஊரி வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்விடத்தில் ஒரு பக்கத்தில் பராசக்திக்கும் பாணுசுரனுக்கும் நடந்த போரி பூசாரிகளால் நடித்துக் காட்டப்படுகிறது என்பர். அது இன்று "பரிவேட்டை" என்று அழைக்கப்படுகிறது. மக்கள் உள்ளங்களில் எப்போதும் நிலவும் தீய உணர்வுக்கும் நல்லுணர்வுக்கும் உள்ள போரைப் பிரதிபலிப்பதாகும் அது எனக் கூறுவர்.
கல்வெட்டுக்களில் கன்னியாகுமரியில் எழுந்தருளியிருக் கும் தேவி "ராஜராஜப் பாண்டி நாட்டு உத்தம சோழவள நாட்டுப் புறத்தாய் நாட்டுக்குமரி கன்னியா பகவதியார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அக்குமரிமுனைக்குக் "கங்கை கொண்ட சோழபுரம்" எனவும் ஒரு பெயர் வழங்குகிறது. குமரிக்கோவிலில் கொடி மரத்தின் பீடத்தைச்சுற்றி விஜய நகர வேந்தருடைய கிரந்த லிபியில் வடமொழிச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. அங்கு தெலுங்குச் சாசனம் ஒல் றும் இருந்தது என்பர். பராந்தக மன்னனுடைய கல்வெட்டு கன்னியாகுமரி கோவிலைத் தவிர்ந்த ஏனைய இடங்களில் இல்லை என்று கூறுவர். பாண்டிய மன்னருக்குக் 'குமரிசி

Page 155
298 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
சேர்ப்பன்" என்று ஒரு பெயர் இருந்தது என சேந்தன் திவாகரச் சூத்திரம் ஒன்று பின்வருமாறு குறிப்பிடுகின்றது. பொதியப் பொருப்பன் புனல் வைத்தியத் துறைவன், குமரிச் சேர்ப்பன் கோப்பாண்டியனே" என்கிறது அச் சூத்திரம்.
குமரிக் கடற்கரையில் பதினறு கல் மண்டபத்துக்கு அருகே மக்கள் புண்ணிய நீராடும் படித்துறை உள்ளது. அண்மைக்காலத்தில் அனைவரும் அச்சமின்றி நீந்துவதற்கு அமைக்கப்பட்ட குளமும் அங்கு உள்ளது. இவற்றிற்கருகே 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆந் தேதி காந்தி அடிகளின் ஆஸ்தி கடலில் கரைக்கப்பட்டது. கடலில் இடுவதற்கு முன்னர் இறுதிச் சாம்பல் வைக்கப்பட்ட பாத்திரம் ஒரு பீடத்தில் வைக்கப்பட்டது. புனிதத் தன் மைபெற்ற அந்த இடத்தில் எழுப்பப்பட்டிருக்கும் கவினுாறு கட்டடமே காந்தி மண்டபம் என அழைக்கப்படுகிறது.
காந்தி மண்டபம் கடல் மட்டத்திலிருந்து 8 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நான்கு மண்டபங்களையும் ஒரு பிரார்த்தனைக் கூடத்தையும் மூன்று கோபுரங்களையும் கொண்டு வட இந்திய சிற்ப முறையில் காந்தி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. காந்தியடிகள் பிறந்தது அக்டோபர் இரண்டாந் தேதியாகும். ஆண்டுதோறும் இந்நாளில் குரியனின் ஒளி காந்தி அடிகளின் இறுதிச் சம்பலடங்கிய சமாதிமீது படுமாறு அச்சமாதிக்கு நேர் உயரத்தில் ஒரு துவாரம் இடப்பட்டு மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரிக் கடற்கரைக்கு அணித்தாக கடலில் இரட்டைக் கற்பாறைகள் உள்ளன. இந்து சமயப் பெருத் துறவி சுவாமி விவேகானந்தாரின் பெயரால் அக்கற்பாறை பெரும் புகழடைந்துள்ளது. விவேகானந்த அடிகளார் 1892

கிழக்கு நாட்டின் கெய்ரோ 29s
ஆம் ஆண்டில் தாம் மேற்கொண்ட இந்தியச் சுற்றுப் பிரயாணத்தின்போது கன்னியாகுமரிக்கு வந்தார். சிக்கா கோவில் நடைபெற்ற சமயங்களைப் பற்றிய உலக மகா தாட்டில் பங்குபற்றுவதற்கு முன்னரே அடிகளார் கன்னியா குமரிக்கு விஜயஞ் செய்தார். கன்னியா குமரியில் கோவில் கொண்டுள்ள தேவியின் திருமுன் தம்மை மறந்த நிலையில் நிலத்தில் படிந்து வணங்கினர். அதன் பின்னர் கடலில் இருந்து இரட்டைப் பாறைகளைக் கண்டதும் அவற்றை அடைய நீந்திச் சென்ருர், அங்கும் தவங் கிடந்தார். வேதாந்தக் கருத்துக்களை உலகெலாம் பரப்ப வேண்டும் என்ற உறுதி அப்பாறையில் தவங்கிடந்த பொழுது விவேகானந்தருக்கு ஏற்பட்டதாகக் கூறுவர். அப்பாறை இப்பொழுது விவேகானந்த பாறை என அழைக்கப்படுகிறது.
குமரி முனையை விட்டுப் பிரியு முன்னர் மெழுகிஞலான குமரி அம்மன் சிலையும் சங்கு முதலிய கடலில் கிடைக்கும் பொருள்களும் அன்பளிப்பாக அனைவருக்கும் வழங்கப்
... 6.
42
கிழக்குநாட்டின்
53JA
திரிவுறுமெழுத்தி னுட்ப்குத் செவ்விய வுரையினுட்பம்
பொருளின்டப் பயின்ற நுட்பம் பேர்ற்றிய செய்யு glub

Page 156
300 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
விரிவுறுமணியினுட்பமேவிய நெறியினுட்பங் கரு தருங் கணித நுட்பங் கண்டவர் கொழுமூரே.
இது காயற்பட்டணத்தை வருணிக்கும் ஒரு பாடல். பாடியவர் செய்கு அப்குல் காதிறு நெயினர் லெப்பை ஆலிம் புலவர். காயற்பட்டணத்து வாழும் மக்களின் புகழ் இங்கு பாடப்பட்டுள்ளது. எல்லா விதமான நுட்பங்களிலும் சிறந்து விளங்குபவர்கள் காயற்பட்டணத்து மக்கள் என்ற கருத்து இங்கு பாடப்பட்டுள்ளது. திருக்காரணப் புராணத் தில் காயற்பட்டணம் புக்கபடலத்திலே இடம் பெற்றுள்ள பாடல் இது. காயல் என்ருல் என்ன என்பது பற்றிய விளக்கம் ‘பிச்சாவரக் காயல்" பற்றிய கட்டுரைகள் இடம்
பெற்றுள்ளது.
காயற் பட்டணம் பழமை மிக்கது. தாமிரவருணி நதியின் முகத்துவாரத்தில் மேற்கே இரண்டு மைல் தூரத் தில் அமைந்துள்ளது. அப்பொழுது அந்நகரம் சிறந்த ஒரு வியாபார நிலையமாகத் திகழ்ந்தது. ஹோர்முஜ், ஏடன்" பாரசீக வளைகுடாப் பிரதேசங்கள், சீனம் முதலிய பல இடங்களிலிருந்தும் வியாபார பண்டங்கள் அங்கு வந்து குவிந்தவண்ணமாய் இருந்தன. பல தேசங்களிலிருந்தும் வியாபாரிகள் அங்கு திரள் திரளாக வந்தனர். வரலாற்று ஆசிரியர் வசாப் அவர்களின் கூற்றுக்கு இணங்க மேற் குறிப்பிட்ட நாடுகளிலிருந்தும் இராக், குராசான், உரோ மாபுரி ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பெறக்கூடிய சிறந்த கண்கவர் பண்டங்கள் காயல் பட்டணத்தில் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.
முன்பு கடற்கரை ஓரத்திலிருந்த காயல் இப்பொழுது
கடலிலிருந்து ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது கடலுக்கும் காயற் பட்டணத்துக்கும் இடையே உள்ள

கிழக்கு நாட்டின் கெய்ரோ 3 O
பகுதி இப்பொழுது ஒரே மணற் பிரதேசமாகக் காணப் படுகிறது. மார்க்கோபோலோ என்னும் தேசசஞ்சாரி கண்ட பழம் பெரும் காயல் இப்பொழுது இருக்கும் காயற் பட்டணம் அன்று என்பர். காயற்பட்டணத்துக்கு வடக்கே கடற்கரையோரமாக இரண்டு மூன்று மைல் தாரம் சென்ருல் கொத்தளங்களினதும் தூர்ந்து போன கிணறுகளினதும் புதைபொருள்களைக் காணலாம். உடைந்து போன ஒட்டுத்துண்டுகளும் சீனதேசத்திற் செய்யப்பட்ட பீங்கானின் துண்டுகளும் பிறநாட்டு நாணயங்களும் ஆங் காங்கே புதைந்து கிடப்பதைக் கண்டு கொள்ளக் கூடியதாக இருந்தது.
இஸ்லாம் உலகில் பரவுவதற்கு முன் பிருந்தே அறபு மக்கள் சிறுசிறு தொகையினராக வந்து தென் இந்தியாவின் கடற்கரைப் பிரதேசங்களிலே குடியேறினர். இஸ்லாம் உலகில் பரவத் தலைப்பட்டதும் அத்தகைய குடியேற்றங்கள் படிப்படியாக அதிகரித்தன. எட்டாம் நூற்ருண்டுக்குப் பின்னர் அவ்வாறு குடியேறிய முஸ்லிம்களின் தொகை திடீரெனப் பெருகத் தொடங்கியது. அவ்வாறு முஸ்லிம்கள் குடியேறிய தென் இந்தியா நகரங்களுள் காயற்பட்டணமே சிறந்து விளங்கியது. அவ்வாறு குடியேறிய முஸ்லிம்களை இரண்டு பெரும் பிரிவினராய் பிரிக்கலாம். ஒரு பிரிவினர் வணிகர்கள், மற்றக்கூட்டத்தினர் தெய்வபக்தியும் நல் லொழுக்கமும் மிக்கவர்கள்.
காயற்பட்டணம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந் துள்ளது. திருநெல்வேலி மாவட்டக் கருப்பொருட்களஞ்சியத் தில் அதன் வரலாறு பின்வருமாறு கூறப்பட்டுள்ளது" "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அறபு நாட்டிலிருந்து முஸ்லிம்கள் தென் இந்தியாவுக்கு வந்தனர். பாண்டிய மன்னரின் அன்பைப் பெற்றனர். பாண்டிபன் னனிடமிருந்து

Page 157
3O2 நெஞசில் நிலை தத சுரறுலா
நான்கு மைல் நீளமும் ஒன்றரை மைல் அகலமுமுள்ள ஓர் இடத்தைப் பெற்றனர். அங்கே முஸ்லிம்கள் குடியேறினர். அப்பொழுது அந்த நகரம் சோனகப் பட்டணம் என்றும் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் ஒரு காலத்தில் அங்கு குடியேறிய மக்கள் வேறு இடங்களுக்குச் சென்று குடியேற லாயினர். பின்னர் மதுரையில் திருமலை நாயக்கன் அரசு புரிந்து கொண்டிருக்கும் காலத்தில் காயல் பட்டண மக்கள் அங்கும் இங்கும் சென்று குடியேறியுள்ளனர் என்பதை அறிந் தான். அறிந்து அந்த நகரின் தலைமைக் காரரை அழைத்து கலந்து போன மக்களை மீண்டும் கூடும்படி கட்டளை இட் டான். அவர்களுக்கு அங்கு வாழும்படி பணித்துச் செப்பேடு ஒன்றும் வழங்கினன்.
இவற்றை எல்லாம் நன்கு ஆராய்ந்தவர் மர்ஹ"ம் எஸ். முகம்மது உசையின் நயிஞர் என்பவர். இவர் பழநி யைச் சேர்ந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசி ரியராகக் கடமையாற்றியவர். காயல் பட்டணம் பற்றிய இவரது சிறந்த ஆராய்ச்சியின் பெறுபேறுகள் "சீதக்காதி வள்ளல்" என்று நூலில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். சீதக்காதி திருமண வாழ்த்தும் சீதக்காதி நொண்டி நாடக மும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன.
அந்தக் காலத்தில் பாண்டிய மன்னர்களுக்கு குதிரை இன்றியமையாத ஒரு செல்வமாக மாறியது. வெடிமருந்துகள் இaலாத காலத்தில் போர்களில் வெற்றி பெறுவதற்குக் குதிரைகளை வைத்திருப்பது மன்னர்களுக்கு அவசியமாயிற்று அவற்றை அறபு நாட்டிலிருந்தே கொண்டு வரவேண்டி ஏற்பட்டது. அறபு நாட்டுக் குதிரைகள் தலை சிறந்தனவாக விளக கின. அதற்காகப் பாண்டி நாட்டின் பணம் பெரு மளவு செலவாயிற்று. அப்பொழுது குதிரை வணிகம் முஸ் லிம்களின் ஏகபோக உரிமையாகவே இருந்தது. அதன்

கிழக்கு நாட்டின் கெய்ரோ 3O3 பயணுக முஸ்லிம்கள் பெரும் அளவு பணம் ஈட்டக் கூடிய வர்களாய் இருந்தனர். முஸ்லிம்களின் செல்வாக்கும் பாண்டி நாடு முழுவதிலும் பரவியது. மார்க்கோபோலோ தமிழ் நாட்டுக்கு வந்த பொழுது மதுரையில் ஆட்சி புரிந்த ஒரு மன்னன் ஒரு குதிரையின் விலையாக இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியதாகக் குறிப்பிடுகிருர். சாதாரணமாக பாண்டிய மன்னர் ஒருவர் இரண்டாயிரத்துககு அதிகமான குதிரைகளை வாங்குவார் என்றும் இது போலவே ஏனைய மன்னர்களும் வாங்கி வருவது வழக்கம் என்றும் கூறுகிரு ர். இரண்டாயிரம் குதிரைகள் வாங்கப்பட்ட போதிலும் வருட இறுதியில் இருநூறுகுதிரைகள் எஞ்சியிருக்கும் என்று கூறு வர். ஏனெனில் பாண்டி நாட்டில் அப்போது குதிரை களைப் பராமரிக்கவும் வைத்தியம் செய்யவும் பிற இன்ஞேரன்ன வேலைகளுக்கும் ஒருவரும் கிடைக்கவில்லை. அறபு நாட்டி லிருந்து வந்த குதிரைகள் காயற் துறைமுகத்தில் இறக்கப் tut't-607ourt th.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவாகும் அது அறபு மொழி யில் காஹிரு என்று அழைக்கப்படுகிறது. முஸ்லிம்கள் தமிழ் நாட்டில் குடியேறிய நகரங்களே அறபுப் பெயர் கொண்டு அழைப்பது வழக்காருக இருந்தது இன்றும் ஈழத்திரு நாட் டில் உள்ள வேர்விலை அறபு மொழியில் பர்பலி என்று அழைக் கப்படுகிறது. இலங்கையில் உள்ள வேர்விலை என்று அறபு மொழியில் குறிப்பிடும்பொழுது பர்பலியுஸ்ஸை லானி என்று அழைப்பர். சோமாலி லாந்தின் துறைமுகங்களில் ஒன்று இன்றும் பர்பரீன் என்று அழைக்கப்படுவதும் ஈண்டு குறிப் பிடத் தக்கது. அது போன்றே காயல் டட்டணமும் கா ஹிரு என்று அழைக்கப்படலாயிற்று. இஸ்லாமிய அறிவுக்கு எகிப் தில் உள்ள காஹிரு புகழ் பெற்றது

Page 158
3O4 நெஞசில் நிலைத்த சுற்றுலா
அதே போன்று தென் இந்தியாவில் இஸ்லாம் பற்றிய உயர்ந்த அறிவைப் பெறக்கூடிய இடம் காயல்பட்டண மாகும். எனவே தான் காயல் பட்டணம் கிழக்கு நாட் டின் காஹிரு அல்லது கெய்ரோ என அழைக்கப்பட லாயிற்று. இஸ்லாமிய அறிவிற்கும் இஸ்லாமிய பற்றுக்கும் சிறந்த இடம் காயல் பட்டணம், என்பதைக் கருதிப் போலும் நூறு நாமாவின் ஆசிரியரான அகமது மரைக் காயர் அவர்கள் தமது நூலில் "காகிறு நாட்டு வளம்" என்ற ஒரு பகுதியைச் சேர்த்துள்ளார். மார்க்க பக்தியில் சிறந்தது காயல்பட்டணம் என்பதைப் பல பாடல்களில் விளக்கி உள்ளார்.
மஸ்ஜித் என்று வழங்கப்படும் பள்ளிவாசல்களிலே எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பணிந்து மக்கள் அவ னைப் புசழ்வர். ஆண்டவனைத் தொழும் பொழுது அறபு மொழியில் ஒதுவர். அவ்வாறு ஒதப்படும் வேத வாக்கியங்களை கிளிகள் கேட்டுக் கொண்டிருக்கும். எந் நேரமும் கேட்டுக் கொண்டிருப்பதால் அவை அவற்றை அவ்வாறே கூறும் ஆற்றலைப் பெற்றுவிடுகிறது. அங்ங்ணம் கிளிப்பிள்ளைகள் உச்சரிக்கும் வேத வாக்கியங்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் தங்கணங்கள் கூட அவற்றை அவ்வண்ணமே திரும்பக்கூறும் ஆற்றலைப் பெற்று விடுகின் றன. எனவே மனிதர்சளும் கிளிகளும் நங்கணங்களும் எப்பொழுதும் வேத வாக்கியங்களை உச்சரித்துக் கொண் டிருப்ப கஞல் அங்கே எவ்வித முஸிபத்தும் தங்கிடாது என்று கூறுகிருர் அப்புலவர், வறுமை தங்கிடாது. சோம் பல் இருக்காது. எவ்வித குறைகளும் ஏற்படாது. இக் கருத்துக்களையே கா கிறு நாட்டு வளத்தில் உள்ள ஒரு பாடல் இவ்வாறு கொண்டுள்ளது.
பள்ளி தெ றினுநமமிரை யோனைப பணிந்து மாந்தர் படித்த நல் வேதத்தைக்

கிழககு நாட்டின் கெய்ரோ 305
கிள்ளை கேட்டுப் படித்திடுஞ் சொல்லைக் கேட்டு நங்கணமே கிளர்ந தோரிடும் தள்ளொணுச் சொலலிதென்று முசீபத்துத் தங்கிடா தகன்றே விரைந்தோடிடும் வள்ள லான சமாலு முகம்மது வாழுங் காயல் வகுதை நன்னடே.
இஸ்லாமிய அடிப்படையில் தமிழ்க் காப்பியங்கள் முதல் பல்வேறு நூல்களை இயற்றிய தலைசிறந்த புலவர் களை உற்பத்திசெய்த பெருமையும் காயல் பட்டணத்தை யே சார்ந்தது.
குமரி முனையில் இடம் பெற்ற சுற்றுலா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம் . அப் பொழுது நேரம் இரவு 7 மணி இருக்கும். பேரூந்துகள் விரைந்து சென்று கொண்டிருந்தன. அங்கே கண்ட காட்சிகள் அனைத்தும் எம்மனக் கண்களுக்கு முன்னே தோன்றி மறைந்து கொண்டிருந்தன. குமரிமுனையை விட்டு நீங்கிய நாம் இரவு 7 மணிக்கே சங்கர் நகருக்கு வந்த விடவேண்டும் என்றே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் எட்டரை மணி அளவில்தான் நாம் அங்கு வந்து சேர்ந்தோம். தளையுது என்ற இடத்தில் அமைற் திருந்தது சங்கர் நகர். இந்தியன் சிமென்ட் லிமிட்டெட் நிலையத்தாருக்குச் சொந்தமானது சங்கர் நகர், எல்லா வசதிகளையும் கொண்டு திகழ்ந்தது. சங்கர் நகர். கண் கவர் தோட்டத்தையும் தோட்டத்தைச் சுற்றிவரப் பாதைகளையும் கொண்டு அந்த மாளிகை விளங்கியது.
சங்கர் நகரின் வாயிலை அடைந்ததும் நாம் தமிழகச் சம்பிரதாய முறைப்படி வரவேற்கப்பட்டோம். இந்திய சிமெண்டு நிறுவனத்தாரின் விருந்தினர் இல்லத்துக்கு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். அதற்கென வழிகாட்டிகள்

Page 159
306 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
நியமிக்கப்பட்டிருந்தனர். முதலில் அனைவருக்கும் மென் குளிர் பானங்கள் வழங்கப்பட்டன, கைகால் முகங் கழுவு வதற்கு அங்கு நவீன முறையில் அமைக்கப்பட்டிருந்த நீரறைகள் பயன்படுத்தப்பட்டன. ஏதாவது விவரங்கள் அல்லது புதினங்கள் அறிய விரும்புவோருக்கு உதவும் முறை பில் ஓர் அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது அங்கு சற்று இளைப்பாறினுேம். பின்னர் நாம் சங்கர் நகர் கல்யாண மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே இராப்போசன விருந்து தயாராகி இருந்தது. தென் இந்திய முறையிலான சைவ உணவும், சைவம் அல்லாத உணவும் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வரும் அவரவருக்கு வேண்டிய உணவுகளை தாமாகவே பகிர்ந்து பரிமாறிக்கொள்ளும் முறையில் அவை தயாரிக் சப்பட்டிருந்தன.
இராப்போசன விருந்து முடிவடைந்ததும் இடவசதி கள் நிறைந்த முற்றத்தில் அமர்ந்தோம். இன்பப் பூம்பொழி லாக அது காட்சி அளித்தது. அங்கே காப்பி பரிமாறப் பட்டது. சங்கர் நகரை நாம் அடைந்த நேரத்திலிருந்து அங்கிருந்து செல்லும்வரை இன்னிசை விருந்து அளிக்கப் பட்டது. சங்கரி நகரை விட்டு நீங்கிய நாம் ஐந்து நிமி டங்களில் தளையுது புகைவண்டி நிலையத்தை அடைந் தோம். விசேட புகைவண்டி எமக்காக அங்கு காத்திருந் தது. நாமும் புகைவண்டியில் ஏறிக்கொண்டோம். வழ* கமான இராப் பிரயாணம் ஆரம்பமானது. பல நிகழ்ச்சி களில் பங்குபற்றிய களைப்பினுல் நித்திரையில் மூழ்கினுேம்.

43
UrāTOuš கோழிவென்ற 65ëêy TüUSir Grf
அன்று ஜனவரி மாதம் பதினேழாம் திகதி. புதன்கிழமை தமிழாராய்ச்சி மாநாட்டுக் கலாச்சாரச் சுற்றுலாவின் ஆரும் நாள். அச் சுற்றுலாவின் இறுதிநாள். தலையுந்து புகைவண்டி நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறப்புப் புகைவண்டி , அன்று காலை ஏழரை மணிக்கே திருச்சிராப்பள்ளியை அடைந்து விட்டது. ஒரு மணி நேரத்தின் பின்னர் பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் புகைவண்டியை விட்டிறங்கினர். ஏனைய இடங்களைப் போலல்லாது, திருச்சிராப்பள்ளி புகைவண்டி நிலையத்திலிருந்து வெளியே போவதற்குச் சிறியதொருவாயில் இருந்தது. அவ்வாயிலிலிருந்து வெளியே செல்லும்போது நின்று கொண்டிருந்த நங்கையர் மாலை அணிந்தனர். பொட் டும் இட்டனர். பொட்டிடப்படுவதை விரும்பாதவருக்கும் பொட்டிப்பட்டது. எல்லோரும் பேரூந்துகளில் ஏறிவிட்ட னர். அவையும் புறப்பட்டுவிட்டன. திருச்சிராப்பள்ளியில் உள்ள சிறப்பான இடங்களைப் பார்த்து மகிழ்வதற்காகவே

Page 160
3O8 நெஞ்சில நிலைத்த சுற்றுலா
அனைவரும் சென்று கொண்டிருந்தோம் அப்போது திருச்சி ராப்பள்ளியின் பழைமையையும் பெருமையையும் பற்றிச்
சிந்திக்கலானேன்.
முன்பு ஒரு காலத்தில் திருக்கைலாயகிரியில் வீற்றிருக் கும் சிவபெருமானை வணங்குவதற்காகத் தேவர் முதலிய யாவரும் அங்கு வந்திருந்தனர். அப்பொழுது ஆதிசேடன் அங்கு வந்தான். அவனை எல்லோரும் புகழ்ந்து கொண் டிருந்தனர். இந்நிலைமையைக் கண்டான் வாயுதேவன். பொருமை கொண்டான். ஆதி சேடனை இகழப்பேசலானுன் இருவருக்குமிடையே மனக் கசப்பு ஏற்பட்டது. இருவரும் தத்தம் பெருமைகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தனர். தத்தம் ஆற்றலையும் சோதிக்க இருவரும் முற்பட்டனர். தனக்கே சிறப்பாக உரிய வல்லமையைக் காட்டும் முகமாக ஆதிசேட ன் தனது உடலால் கைலை மலையை இறுகப் பிணித் துக் கொண்டான், வாயுதேவன் அதற்குச் சளைக்கவில்லை. தனது பேராற்றலைக் காட்ட முற்பட்டான். தனது பலத்தைக் கொண்டு எவ்வளவு கடுமையாகக் காற்றை வீசமுடியுமோ அவ்வளவு வேகமாக வீசத் தொடங்கினன். அதன் பயனுக உலகமெல்லாம் அதிரத் தொடங்கியது. அத்தகைய அதிர்ச்சி வின் காரணமாக கைலை மலையிலிருந்து மூன்று தண்டுகள் கிளம்பின. அவை ஒன்றன் பின்ஒன் ருக மூன்று இடங்களில் விழுந்தன. ஒரு துண்டு திருக்காளத்தியிலும் மற்ருெ ன்று திரி சிரா மலையிலும் மூன்ருவது துண்டு இலங்கையிலுள்ளதிருக் கோண மலையிலும் விழுந்தன. திருக்கைலே மலையின் துண்டு *ள் விழப்பெற்றமையால் அம் மூன்று இடங்களும் தென் கைலாயம் எனப் பெயர்பெற்றன. அவற்றுள் திருக்காளத் திக்கும் திருகோணமலைக்கும் நடுநாயகமாக உள்ளது திருச்சி ராப்பள்ளி. எனவே திருச்சிராப்பள்ளிக்கு அதிக மகிமை உண்டென்பரி.

யாஃன பைக் கோழி வெனற திருச்சிராப்பள்ளி 309
திருச்சிராப்பள்ளியின் பழமைக்குச் சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன சங்ககாலச் செய்யுட்கள். பண்டைக் காலச் செய்யுட்களிலே கோழி என்றும் உறையூர் என்றும் உறந்தை என்றும் திருச்சிராப்பள்ளி வழங்கப்படுகிறது. கோப் பெருஞ்சோழனைப் பாடிய பிசி ராத்தையார் கோழி பற்றிக் குறிப்பிடுகிறர். புறநானூற்றின் அறுபத்தேழாம் பாடலில் அது இடம்பெற்றுள்ளது. அப்பாட்டில் அன்னச் சேவலைத் தூது விடுகின் ருர் பிசிராந்தையார் குமரியாற்றின் பெருந் துறைக்கண்ணே அயிரை மீனை மேய்ந்து வடதிசைக்கண்ணே \eபாகின்றது அன்னச் சேவல். குமரியாற்றுக்கும் வடமலைக் கும் இடைப்பட்ட நல்ல நாடாக அமைந்துள்ளது சோழ நாடு. அந்நாட்டில் உள்ளது கோழி என்னும் ஊர். உறை யூர் என்னும் ஊர். அங்கே உயர்ந்த நிலையை உடைய மாடம் உண்டு அங்கு தங்கினுல் நலல அணிகலன் கிடைக்கு மென் கிழுர், இக்கருத்துக்களே இவ்வாறு புறநானூற்றில் அமைந்துள்ளது.
குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயி னிடையது சோழநன் னுட்டுப் படினே கோழி உயர்நிலை மாடத்து.
மற்ருெரு புறநானூற்றுப் பாடலில் (212) கோப் பெருஞ்சோழனைக் கோழியோனே கோப்பெருஞ் சோழன்' என்று பிசிராந்தையார் பாடியுள்ளார்.
பண்டைக் காலத்தில் திரிச்சிராப்பள்ளியிலிருந்த ஒரு கோழி யானையோடு போர்புரிந்து வெற்றி பெற்றமையால் அது அப்பெயரைப் பெற்றுள்ளது. யானையை வென்ற கோழி தோன்றின இடம் வலியுடைத்தாகையால் அங்கு sf அமைக்கப்பட்டு அப்பெயர் பெறலாயிற்று என்பர்.கவும்

Page 161
31 O நெஞ்சில நிலைத்த சுற்றுலா
தியடிகளும் கண்ணகியும் கோவலனும் அத்தகைய கோழி என்னும் நகரை அடைந்தனர் என்று இளங்கோவடிகள் இவ்வாறு கூறுகிருர்,
காவுந்தி யையையும் தேவியுங் கணவனும்
முறஞ்செவி வாரணம் முன் சம முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக் கனர் புரிந்தென்
( 10: 246-243)
(முறஞ்செவி வாரணம் - யானை, புறஞ்சிறை வாரணம்கோழி, முருக்கிய-அழித்து).
திரிச்சிராப்பள்ளியை உறைந்தை என்றும் உறையூர் என்றும் புகழ்ந்து பாடப்பட்ட செய்யுட்கள் பல சங் 5 கால இலக்கியங்களில் காணப்படுகின்றன "பிறங்கு நிலை மாடத் துறந்தையோனே" என்கிறது புறநானுTற்றுப்
un Lao (69).
"உறந்தையும் வறிதே' என்று சிறுபாணுற்றுப்படையில் (83) இடம் பெற்றுள்ளது. உறையூர் என்பதை அடை மொழியாகக் கொண்ட பல சான்றேர் பாடிய பாடல்கள் புறநானூற் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளன சங்க காலம் தொட்டு ஏறக்குறைய ஒன்பதாம் நூற்ருண்டு வரை சோழ மன்னரின் தலைநகராக விளங்கிய பெருமை திரிச்சிராப்பள்ளிக்கு உண்டு.
தமிழ் நாட்டிலே சைவத் திருத்தலங்கள் 274 உள்ளன. அவற்றுள் பள்ளி என்ற முடிபைக் கொண்டவை மிகப் பல. அத்தகைய திருத்தலங்களுள் ஒன்று திரிச்சிராப்பள்ளி. பள்ளி சமணரோடு தொடர்புடைய ஒரு சொல். திரிசிரன் என்னும் அரக்கன் அரசாண்டு இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றதால் இப்பெயர் உண்டாயிற்று என்று புராணங்

யானையைக் கோழி வென்ற திருச்சிராப்பள்ளி 31
கள் கூறும். அங்குள்ள மலையில் சுவாமி, அம்மன், உச்சிப் பிள்ளையார் என்னும் மூன்று சிகரங்கள் உள்ளமையால் திரிசி ரம் என்ற பெயரைப் பெற்றது என்பர் பார்வைக்கு ரிஷபம் போல் தோன்றுவதால் ரிஷபா சலம் என்றும் அந்நகருக்கு ஒரு பெயர் உண்( சிலையில், கல்லில் குடைந்த பள்ளி என் னும் பொருளில் சிலைப்பள்ளி, சிலாப்பள்ளி, சிராப்பள்ளி என்னும் பெயர்கள் அமைந்ததாக ஆராய்ச்சியாளர் கூறு வர், "மூன்று தலைகளையுடைய அசுரனின் நகர்” என்ற பொருளில் அந்நகரம் திரிச்சிராப்பள்ளி என்ற பெயரைப் பெற்றுள்ளது என்று கால்டுவெல் பாதிரியார் தமது ஒப் பிலக்கணத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் பள்ளி என்ற சொல்லை நகரம் என்ற பொருளில் உபயோகிக்கப்படும் (POLIS) என்ற கிரேக்கச் செல்லோடு ஒப்பிடுகிருர்,
காவேரி நதியின் கரையில் அமைந்துள்ளது திரிச்சிராப் பள்ளி. 273 அடி உயரமானது திருச்சியின் மலைக் கோட்டை அக்கோட்டையும் மிகப் பழமையானது. திருச்சி நகரின் பெரும்பகுதியும் கோட்டையும் மதுரையின் நாயக்கராலே கட்டப்பட்டன என்று நம்பப்படுகிறது. பதினரும் நூற் ருண்டின் நடுப்பகுதியிலிருந்து நாயக்கரே அங்கிருந்து ஆட்சிபுரிந்து வந்தனர். தொடக்கத்தில் திருச்சிக் கோட்டை எவராலும் வெற்றிகொள்ளமுடியாத ஒன்று எனக் கருதப் பட்டு வந்தது. நிஸா மின் படைவீரர் 1743 இல் திருச்கி யை ஆக்கிரமித்து அங்கிருந்து மராட்டியரை விரட்டி நகரைக் கைப்பற்றினர். மராட்டியர்கூட அங்கு சொற்ப காலமே ஆட்சி புரிந்தனர், அன்று முதல் ஆங்கிலேயரி திருச்சியில் தமது ஆட்சியை நிறுவும் வரை முஸ்லிம்களே ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தார்கள்.
1749 முதல் 1771 வரைநடைபெற்ற கருநாடகப் போர் சளின்போதும் அதற்குப் பின்னர் ஆங்கிலேயருக்கும்

Page 162
3 12 நெஞசில் நிலைத்த சுற்றுலா
பிரெஞ்சுக்காரருக்கும் நடைபெற்ற போர்களின்போதும் திருச்சியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கடுமையான போர் நடைபெற்றது. போர் நடைபெற்ற காலங்களில் திருச்சி மிக முக்கியமான ஒரு கோட்டையாக விளங்கியது. அந்நசர் பல தடவைகள் முற்றுகையிடப்பட்டது. முகம் மது அலியும் சந்தசாகியும் ஆங்கிலோ பிரெஞ்சு ஆதிக்கத் தினரின் பகடைக் காய்களாக மாறினர். திருச்சியில் முகம் மது அலி அபயம் தேடிச் சென்றபொழுது அவரை அடக்கி நகரைக் கைப்பற்று முகமாக பிரெஞ்சுப்படை ஒன்று அங்கு அனுப்பப்பட்டது. அதனை அறிந்த ஆங்கிலேயர் திருச்சி யிலிருந்து முகம்மது அலிக்கு உதவி அளித்தனர். ஆர்க் கோட்டில் கிளைவ் என்பவர் ஈட்டிய வெற்றி காரணமாகத் திருச்சியை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த பிரெஞ்சுப் படைசளின் உறுதி குலைந்தது. அதன் பயணுகப் பிரெஞ்சக் காரர் அபயம் தேடி பூணூரீரங்கம் என்னும் தீவில் நுழைந் தனர். கிளைவ் என்னும் ஆங்கில சேனதிபதியின் உத்தரவுக்கு இனங்க ஆங்கிலேயர் பூரீரங்கத்தை முற்றுகையிட்டனர். அங்கிருந்து பிரெஞ்சு படைகள் சரணடைய வேண்டிய தாயிற்று. சந்தாசாகிபின் தலை துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் திருச்சி ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டது. அன்று தொட்டு திருச்சி முக்கியமான இராணுவ கேந்திர நிலைய மாக மாறியது. இருபதாம் றூற்றண் டின் ஆரம்வம் வரை அந்நகர் அவ்வாறு சிறந்து விளங்கியது.
திருச்சியில் ஏறக்குறைய மூன்று இலட்சம் மக்கள் வாழ்கின்றனரி எனக் கணிக்கப்பட்டுள்ளது. 1866 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட நகராட்சி மன்றம் ஒன்று அங்குள்ளது. "எங்கள் பணி தங்களுக்கே" என்பது நகராட்சி மன்றத்தின் குறிக்கோள் ஆக அமைந்துள்ளது. 33 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்

யானையைக் கோழி வென்ற திருச்சிராப்பள்ளி 3 3
டுள்ள அந்நகராட்சி மன்றத்தில் 36 உறும்பினர் சள் அங் கம் வகிக்கிரு ர்கள். அதன் ஆண்டு வருமானம் 85 இலட் சம் ரூபாவாகும். அவ்வரூபமானத்தைக் கொண்டு அந்தகர மக்களுக்குத் தேவையான வசதிகள் பலவற்றை நகராட்சி மன்றம் அளிக்கிறது. குடிநீர் வசதி, பள்ளிகள், பூங் சாக் கள், சந்தைகள், மருத்துவமனைகள், மகப்பேறு இல்லங்கள் முதலிய பல வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
தமிழ் நாட்டின் நடுநிலையமாக விளங்கும் திருச்சி கல்வித் துறையிலும் மத்திய நிலையமாகச் சிறப்புப் பெற்றுள்ளது. அங்கே பல கல்வி நிலையங்கள் உள்ளன. ஒன்பது ஆண் கள் கல்லூரிகளும் இரண்டு பெண்கள் கல்லூரிகளும் ஒரு பிராந்தியப் பொறியியல் கல்லூரியும் பல தொழில் நுட் பப் பள்ளிகளும் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளன. ஒரு மருத்துவக் கல்லூரியை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேரூந்துகளில் சென்று கொண்டிருந்த நாம் முதலில் தென் சென்னை மின் விநியோகக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். காலைக்குரிய சிற்றுண்டி அங்கே எமக்காகக் காத் திருந் தி து அந்தக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வேறு யாரும் அல் லர். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அவரே திாம் முத்தமிழ் காவலர் கி , ஆ . பெ. விசுவநாதம் அவர் களே தாம். கலாச்சாரச் சுற்றுலாவில் பங்கு பற்றிய அவர் திமது சொந்த ஊருக்குச் சென்றதும் தமது தலைமையில் இயங்கிவரும் திருச்சி மின் விநியோகக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் சிற்றுண்டி விருந்தளித்தமை அவர் தம் விருந்தோம்பல் பண்பினை எடுத்துக் காட் தி கின்றதல்லா ? காலைச் சிற்றுண்டி விருந்து முடிவடைந்தது ) திருச்சியின் பல்வேறு பகுதிகளுக்கு அந்நகரின் தனிச் சிறப்புக்களைப் பார்க்கப்புறப்பட்டோம்.

Page 163
44
தாயும் ஆன செவ்வந்திநாதர் கோயில்
நன்று டையானைத் தீயதில்லாணைநரை வெள்ளே முென்று டையான யுமையொருபாக முடையானைச் சென்ற டையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் குன்று டை யானைக் கூறவென்னுள்ளங் குளிருமே.
கிருஞானசம்பந்தசுவாமி ஸ் அருளிய தேவாரப் பதிகம் ஒன்றில் இடம் பெற்றுள்ள ஒரு திரு விருத்தம் இது. இத் திருவிருந்த த்தில் திருச்சிராப்பள்ளி என்னும் இடம் சிராப் பள்ளி என்றே அழைக்கப்படுகிறது. பதினேராம் நூற்ருண் டுக்குரிய பல்லவரின் கல்வெட்டுக்களிலும அவ்வாறே வழங் கப்பட்டுள்ள து திருச்சிராப்பள்ளியில் உள்ள மலைக்கோட் டையே தேவாரப் பாடலில் சிராப்பள்ளிக் குன்று என வழங்கப்பட்டுள்ளது சிவபெரு மானே இங்கு குன்றுடை ய,  ைஎன்று புழப்பட்டுள்ளார். மலைக் கோட்டையில் உள்ள கோவில் தாயு மானவர் கோவில் என வழங்கப் பட்டு வருகிறது. மாத்ருபூதேசுவர என்று அங்கு எழுந்தருளி இருக்கும இறைவன் அழைக்கப்படுவதுண்டு. இறைவன்

தாயும் ஆன செவ்வந்திநாதர் கோவில் 315
தாயுமானவர் என அழைக்கப்படுவதற்கு வழிவகுத்த ஒரு வாலாறு உண்டு.
சோழ நாட்டிலே காவிரிநதி கடலோடு சேரும் இடம் காவிரிப்பூம் பட்டினமாகும் அது புகார் என்றும் வழங்கப் பெறும் பல்வளங்களும் நிறைந்து விளங்கியது அந்நகர். சோழ மன்னர் சளின் தலைநகராகச் சிறப்புப் பெற்றது. இயற்பகை நாயனரும் பட்டினத் தடிகளும் தோன்றிய நகர். அங்கே இரத்தினகுப்தன் என்பவன் வாழ்ந்து வந் தான். அங்கே வணிகர் குலத்தில் பெருங்குடியிற் பிறந்தவன் அவன் தன் கற்புடைய மனைவியோடு இல்லறம் நடாத்தி வரும் பொழுது புத்திரப் பேறின்றி வருந்தினர். புத்திரப் பேற்றினை நாடி இறைவனை அவர்களிருவரும் வழிபட்டு வந்தனர். இறைவன் திருவருளால் அவர்களுக்கு ஒரு புதல்வியைப் பெற்றெடுக்கும் வாய்ப்புக் கிட்டியது. அப் புதல் விக்கு இரத்தினவதி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். இரத்தினவதி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்து வந்தாள். மணப்பருவத்தை அடைந் தாள். அப்பொழுது திருசிரா மலையில் தனகுப்தன் என்னும் வணிகன் வாழ்ந்து வந்தான். இரத்தின குப்தனுக்கு தனது புதல்வியைத் தனகுப்தனுக்குத் தனது இல்லத்திலேயே திருமணம் செய்து கொடுத்தான். பல சீர் வரிசைகளுடன் புதுமணத் தம்பதிகளைத் திருசிராப்பள்ளிக்கு அனுப்பி வைத்தான். திருசிரா மலைக்கு வந்தது முதல் இரத்தினுவதி நாள் தோறும் திருசிராமலைச் செவ்வந்திநாதரைத் தவருமல் அன்புடன் வழிபட்டு வந்தாள்.
நாளடைவில் சிராமலைப் பெருமான் அருளினுல் இரத்தினவதி கருப்பமுற்ருள் பேறு காலமும் எய்தியது. இச்செய்தி காவிரிப்பூம் பட்டினத்தில் உள்ள தாயாருக்கு அறிவிக்கப்பட்டது. மகளுக்கு வேண்டிய மருத்து எண்ணெய்

Page 164
316 நெஞ்சில நிலை தத சுறநூறுலா
மூ கலியவை களுடன் தாயாரும் காவிரிப்பூம் பட்டினத் திலிருந்து புறப்பட்டாள். வரும் பொழுது காவிரி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு மிகுதி யாகவே தாயாரின் வருகை தடைப்பட்டது. மகளோ தாயார் இன்று வருவாள் நாளை வருவாள் தமக்கு வேண்டிய பொருள்களைக் கொண்டு வருவாள் என்று எண்ணிக்கொண்டி ருந்தாள். பிரசவ நேரம் நெருங்கியும் தாயார் வரவில்லை. அச் சந்தர்ப்பத்தில் இரத்தினவதி தான் வழிபட்டு வந்த சிரா (, லைச் செவ்வந்தி நாதரை வேண்டினள்.
சங்கரன் சிவன் சதாசிவ னிசன் சானன் புங் த வன் றிரி புராந்தகன் புராதன ன் புராணன்
கங்கை நாயகன் கறைமிடற் றிறைநுதற் கண்ணுன் எங் கனுப கனரிராமன் சிராம லைபிறை வன்
சிவபெருமானுர் இரத்தினுவதி பின் தாய்வேடங்கொண்டு பிரசவ வேதனையால் வருந்திக் கொண்டிருந்த இரத்தினு வதியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். இரத்தினவதியும் அங்கு வந்த வளத் தாய் எனவே எண்ணி மகிழ்ந்தாள் • தாயும் ஆனவரும் வேண்டிய சிகிச்சைகளைச் செய்தார்" இரத்தினவதி சுகமாய் பிரசவித்தாள். அழகிய ஓர் ஆண் குழந்தை பிறந்தது. தாயாகவந்தவர் சில நாள் அங்கே தங்கி இருந்தார். குழந்தையையும், தாயையும் பாது 5 த்து வந்தார். இஃது இவ்வாறிருக்க காவிரி நதி யின் வெள்ளமும் வடிந்துவிட்டது. உண்மைத் தாய் நதியைக் கடந்து இரத்தினவதியின் இல்லத்துக்கு வந்தாள், இரத்தி ணு வதிபும் தனது தாயார் வருவதைக் கண்டாள். திடுக் கிட் டாள். தி கைத் தாள். இரண்டு தாயாருள் எவர் உண் மைத் தாய் என்று உற்று கவனித்தாள். தாயாக வந்தவர் உடனே மறைந்து விட்டார். பின்னர் ஆகாயத்தில் இடப வாசனராய்க் காட்சி வழங்கினர். எல்லோரும் தரிசித்து

தாயம் ஆன செவ்வந்திநாதர் கோவில் 317
இன் புற்மூர்கள். இன்று முதல் அக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் செல்வந்திநாதருக்கு தாயுமானவர் என்னும் பெயரும் உண்டாயிற்று. இரத்தினவதியும் தாயுமான வரை வழிபட்டு வந்தமையால் அடியாருள் ஒருவராக இன்று விளங்குகிருள். ஐந்தாம் நாள் திருவிழாவின் டோ து இவ்வரலாற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது இச் சம்பவத்தைக் குறிக்கும் சித்திரங்கள் மேல் மண்டபச் சுவரில் தீட்டப்பட்டுள்ளன.
தலையைத் தூக்கிக் கொண்டிருக்கும் மாபெரும் இட பம் ஒன்று போல் காட்சி அளிக்கிற து அக்கோட்டை 373 அடி உயரமுடையது. மலை உச்சியை அடைவதற்கு பல படிகளைக் கடந்து செல்லுதல் வேண்டும் அத்தகைய படி கள் 417 அங்கு உள்ளன. தென்புறமாக அமைந்துள்ளன அப்படிகள். படிகளுக்கு மேலாக உள்ள பெரும்பகுதி கற் பாறைகளினுல் ஆன கூரையைக் கொண்டு விளங்குகின்றது. தற்காலத்தைப் போன்று எந்திர சாதனங்கள் இல்லாத அந்தக் காலத்தில் அத்தகைய கோவிலும் கோவில் இடம் பெற்றுள்ள மலைக்கோட்டையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை சிற்பத்துறையில் பெருஞ் சாதனை என்றே கூறலாம் மலைக் கோட்டையின் உச்சியை அடைந்து பார்த்தால் திருச்சிராப் பள்ளி நகரம் முழுவதும் ஒரே பார்வையில் தென்படும். அந்நகருக்கு உண்மையிலேயே பெருமையளித்துக்கொண்டி ருப்பவை அங்குள்ள மலைக்கோட்டையும் அம்மலைக்கோட் டையில் அமைந்துள்ள கோவிலும் எனின் அது மிகையா காது. அப்பர் சுவாமிகளும் திருச்சிராப்பள்ளியைத் திருத் தலமாகக் கொண்டு தேவாரத் திருவிருத்தங்கள் பாடிய ருளியுள்ளார். 199ஆம் திருப்பதிகமாக அமைந்துள்ள அப் பதிகத்தில் நான்கு திருவிருத்தங்கள் உள்ளன மு 5 ல் மூன்று திரு விருத்தங்களும் பத் தாம் திருவிந்த மு 3ம அத்

Page 165
38 நெஞசில் நிலைத்த சுரறுலா
திருப்பதிகத்தில் இடம் பெற்றுள்ளன. ஏனையவை அழிந் தொழிந்திருத்தல் வேண்டும். பத்தாம் திருவிருத்தம் இவ் வாறு அமைந்துள்ளது.
தாயுமா யெனக் கேதலை கண்ணுமாய் பேய னேனையு மாண்ட பெருந்தகை தேய நாதன் சிராப்பள்ளி மேவிய நாயனரென ந ம வினை நாசமே,
சாரமா முனிவர் சிராமலைப் பெருமானுக்கென்று ஒரு நந்தவனத்தை ஏற்படுத்தினர். அங்கே நாகலோகத்திலிருந்து கொண்டு வந்த செவ்வந்தி மலரைப் பயிரிட்டு நாள் தோறும் அம்மலரைக் கொண்டு பெருமானைப் பூசித்து வந்தார். பராந்தகச் சோழன் என்பவன் கோழியூர் என் னும் திருச்சிராப்பள்ளியில் ஆட்சி புரிந்து வந்த பொழுது, பூப்பறித்து வியாபாரஞ் செய்யும் ஒருவன் முனிவருடைய தந்தவனத்தில் புகுந்து, செவ்வந்தி மலர்களைக் கவர்ந்து சென்று அரசிக்குக் கொடுத்து வந்தான். முனிவர் ஒரு தான் கையும் களவுமாக அவனைப் பிடித்து விட்டார். அரசனிடம் முறை பிட்டார். அரசன் பூ வாணிகனைக் கண்டிக்கவில்லை. முனிவர் இறைவனிடம் முறையிட்டார். சிரா மலை இறைவர் கிழக்கிலிருந்து மேற்கு முகந் திரும்பினர்" பல மேகங்களைக் கொண்டு அங்கு மண்மாரி பொழியச் செய்தார். அரசனும் கற்ப முற்ற அரசி பும் வெளியே ஏகி னர். அத் நகர் மண் மாரியால் அழிந்தது. மண்மாரியும் அரசனப் பின்பற் றிச் சென்ற து இறுதியில் அரசனும் மாண்டான். காவிரியில் தவறி விழுந் தாள் அரசி. புவன மாதேவி என்னும் அவ்வரசி பிராமணன் ஒருவனுல் காப் பாற்றப்பட்டான். பின்னர் அவள் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். அக் குழந்தையே பிற்காலத்தில் கரி காற்சோழன் என விளங்கியது என்பர் ,

தாயும் ஆன செவ்வந்திநாதர் கோவில் 319
தொடக்கத்தில் 417 படிக் கட்டுக்களில் ஏறி இறங்கு வது சற்றுச் சிரமமாகவே தோன்றியது. ஆனல் எல்லோரும் மேலே ஏறும் போது நாம் மாத்திரம் அங்கு செல்லாமல் இருப்பதா என்ற மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு மனைவி மக்களோடு ஏறலானேன். மலை உச்சியையே அடைந்து விட்டோம். அங்கு சென்ற எமக்கு வழக்கமான கோவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்களுக்கு அங்கும் பரிவட்டம் சூட்டப்பட்டது. அங்கிருந்து சுற்றுப்புறமும் பார்த்தால் அது கண்கொள்ளாக் காட்சியாகவே தோன் றியது. நகர் முழுவதையும் எட்டிப் பிடித்து விடலாம் போல் தோன்றியது.
மலைக் கோவிலின் உச்சியில் ஒரு சிறிய பிள்ளை யார் கோவில் உண்டு. அது உச்சிப் பிள்ளையார் கோவில் என வழங்கப்படுகிறது. அதைக் குறித்து ஒரு க ைக வழங்கப் படுகிறது. விபீஷணன் இராமரிடம் விடைபெற்றுத் கெற் கே வரும் பொழுது உடன்கொண்டு வந்த அரங் சநாதரின் சிைைய பிராமண உருவங்கொண்டு நின்ற விநாயசரிடம் கொடுத்து வெளியே சென்ருன். விநாயகர் சிறிது நேரம் வைத்திருந்து அவ்விக்கிரக த்தைப் பூமி பில் வைத்து விட்டு ஓடிவந்து மலை மேல் அமர்ந்தார். விபீஷணன் விக்கிரகத் தை எடுக்க முடியாமற் போகவே பிரமாணச் சிறுவனத் துரத்திக்கொண்டு சென்று பார்க்க ஒரு வரையுங் காணு மல் விநாயகர் தலையில் ஓங்கிக் குட்டியதாகவும் அரங்கநாதன் திருவரங்கத்தில் தங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. விபீஷணன் பெருமானை எடுத்து வந்ததைக் காட்டும் சிலை பதிஞறு கல் மண்டபத்தில் இருக்கும் ஒரு தூணில் செதுக் கப்பட்டுள்ளது. கரிகாற் சோழனுல் கட்டப்பட்டது உச்சிப் u9airakaragumoriřo GBasmtaâdio, 6 Tecão urřo.

Page 166
32O நெஞ்சில் நிலைதத சுறநூறுலா
உச்சிமலைக்குப் போகும் வழியில் வலப்பக்கத்தில் பதி ஞறு கல் மண்டபம் உள்ளது. அது களவாய் முதலியா ரால் 1630 ஆம் ஆண்டு அளவில் கட்டப்பட்டது. அவ் விடத்தில் வசந்தோற்சவம் நடைபெறும். அங்கே கோடைக் காலத்தில் இனிய தென்றல் வீசும் என்பர். ஆயிரங்கால் மண்டபம், வாகன மண்டபம், சகஸ்திரலிங்க LD6iofluib, சித்திர மண்டபம், மணி மண்டபம் என்பன ஏனைய மண்டபங்களாகும். ஆயிரங்கால் மண்டபம் இருந்த இடத் தில் தற்போது வியாபாரக் கடைகள் உள்ளன. வாகன மண்டபத்தில் கோவிலுக்குரிய பல வாகனங்கள் உள்ளன.
கோவிலுக்குச் செல்லும் வழியில் இடது பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. அங்கு தேவஸ்தான அலுவலகம் அமைந்துள்ளது. மலைமேல் கோவிலில் சுவாமி சந்நதிக்கும் போகும் வழியில் சித்திர மண்டபம் அமைந் துள்ளது. அது மாடிக் கட்டடமாக அமைக்கப்பட்டுள்ளது. புராணத்தைத் தழுவிய பல நிகழ்ச்சிகளும், சிவபெருமா னுடைய பலவடிவில் வேறுருவங்களும், வேறுபல சித்திரங் சளும் பல வர்ணங்களில் அழகுடன் வரையப்பட்டுள்ளன. கற்சிற்பங்களும் கல் வளையங்களும் அங்கு இருப்பதைக்
கான லாம்.
அக்கோவிலில் மலை யைக் குடைந்து அமைக்கப்பட்ட இரண்டு குகைக் கோயில் சள் உள்ளன. ஒன்று மலையின் மேலும் மற்றது அடி வாரத்திலும் அமைந்துள்ளன. மலை மேல் உள்ள குகைக்கோவில் ஆருவது நூற்ருண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னஞன குணபரன் என்னும் மகேந்திர வர்மனுல் கட்டப்பட்டது என்று முடிவு கொள்ளப் போதிய சான்றுகள் உள்ளன. மேலே உள்ள குகையில் பல கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவை வட மொழி யிலும் தமிழ் மொழியிலும் எழுதப்பட்டுள்ளன.

32
அங் கிங் கெருதபடி எங்கும் பிரசாசமாய்
104 செய்யுட்களைக் கொண்ட கலித்துறை யந்தாதி மலைமேல் உள்ள குகைக்கோவிலில் கல்லில் செதுக்கப்பட் டுள்ளது வேம்பையர்கோன் நாராயணன் என்பவரால் இயற்றப்பட்டது அது. அவற்றுள் ஒரு செய்யுள் இவ்வாறு அமைந்துள்ளது.
பொய்வினைப் பேசிப் பொருளினைத்தேடிப் புகழ்
பொதிந்த
மெய்யினைக் காத்து வெறுத் தொழிந் தேன் வியன் பொன்மலைமேல் ஐயனைத் தேவர் தங் கோனையெம் மானையம் மான்றி Cyrff
கையனைக் காலனைக் காய்ந்த பிரானைக்கழல் பணிந்தே
45
அங்கிங்கெளுதபடி GTÉlőíj (JőTőIONÉl
கறங்கிசை விழவின் உறந்தைக் குணுது நெடும் பெருங்குன்றத் தமன்ற காந்தட் போதவிழ் அலரின் நாறும்.
அகநானூற்றில் உள்ள ஒரு பாட்டின் பகுதி இது. களிற்றியானநிரையில் நான்காவது பாட்டாக இடம் பெற்றுள்ளது, முல்லைப் பாட்டாகிய இதனைப் பாடியவர் குறுங்குடி மருதனர். விழவினை பகுதியாக ASDU

Page 167
322 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
உறையூர் என்னும் திருச்சிராப்பள்ளி, அவை ஆரவாரிக் கும் ஒலி பொருந்திய விழாக்கள் அத்தகைய சிறப்புப் பொருந்திய திருச்சிக்குக் கிழக்குப் பக்கமாக அமைந்துள் ளது நீண்ட பெரிய மலை. இங்கே அம்மலை நெடும் பெருங் குன்றம் எனவருணிக்கப்பட்டுளளது. தாயுமானவர் கோயில் அமைந்துள்ள மலைக்கோட்டையே அவ்வாறு வருணிக்கப் பட்டுள்ளது. அம் மலையிலே நெருக்கமாக மலர்ந்துள்ளன காந்தளின் பூக்கள். அத்தகைய மணம் கமழ்கின்ற வளாய் விளங்கிளுள் இப்பாட்டுடைத் தலைவி என்று கூறவே அவ்வாறு வருணித்துள்ளார் குறுங்குடி மருகனுரி. இங்கே குறிப்பிடப்பட்ட நெடுப் பெரும் குன்றம் தெய்வ மலையா கும். எனவே தெய்வ மலையில் மலரும் பூக்கள் தெய்வப் பூக்களாகும். இத்தகைய கெய்வப் பூக்களைப் போன்றது தலைவியது அழகு என்பது இங்கே விவரிக்கப்பட்டுள்ளது. நற்றிணையிலும் அறம் சிறந்து விளங்கிய நகர் உறந்தை என்று இவ்வாறு வருணிக்கப்பட்டுள்ளது.
மறங்கெழு சோழர் உறந்தை அவையதது அறங்கெடல் அறியாது. (400)
மருதத்திணையில் ஆலங்குடி வங்களுர் பாடிய பாட்டின் ஒரு பகுதி இது.
திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே அரை மைல் தூரத்தில் காவிரி நதி ஓடுகின்றது. முற்காலத்தில் காவிரி மலைக்கரு கில் ஒடியதாகக் கொள்ளமுடியும். அதற்குச் சான்ருகத் திருப்புகழில் பின்வரும் வரி அமைந்துள்ளது.
"குடக காவிரி நீளலைகுடிய திரிசிராமலை மேலுறை வீரகுறிஞ்சிவாழும்" அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களிலும் தெய்வத் தன்மை பொருந்திய அம்மலையும் அங்கே கோவி

அங்கிங்கென தபடி எங்கும் பிரகாசமாய் 323
லில் எழுந்தருளியிருக்கும் இறைவனும் போற்றப்பட்டுள் ைெம ஈண்டு நோக்கற்பாலது. புகழ் பெற்ற பல புலவரி களும் ஞானிகளும் வாழ்ந்த பெருமை திருச்சிராப்பள்ளிக்கு உண்டு எனறு நினைவு படுத்திக் கொண்டேன். அத்தகை யோரில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர் பல பசதிப் பாடல்களைப் பாடியுள்ளார்.
சோழ நாட்டிலே வேதாரண்யம் என்னும் ஒர் ஊரி உண்டு. அது திருமறைக்காடு என்றும் வழங்கபேடும். இன்றைக்குச் சுமார் முன்னுரறு ஆண்டுகளுக்கு முன்னர் கேடிலியப்பபிள்ளை என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் வேளாளர் மரபினைச் சேர்ந்தவர். அந்நாட்களில் விஜய ரெகுநாத சொக்கலிங்க நாயக்கர் திருச்சிராப்பள்ளியில் அரசு புரிந்து வந்தார். கேடிலியப்பபிள்ளையின் நற்குணங் களைக் கேள்வியுற்றர் நாயக்கமன்னன். அவரை வரவழைத் தார். கேடிலியப்பபிள்ளையும் திரிசிராபுரத்தில் வேலை பார்த்துவந்தார். அப்போது தமக்கிருந்த சிவசிதம்பரம் என்ற புதல்வனைத் தமது தமையனுருக்குச் சுவீகாரம் செய்து கொடுத்துவிட்டார்
ஆதலினல் தமக்குச் சந்ததி இல்லையே என்று வருந் தலானுர் எனவே தமக்குச் சந்ததி உண்டாகும் படி அத்திரிசிராமலையில் கோவில் கொண்டிருக்கும் தாயுமானப் பெருமானை தினந்தோறும் அன்புடன் வழிபட்டு வந்தார். பொருமான் அருளால் ஓர் ஆண்குழந்தைக்கு அவரி தந்தையானர். தாயுமானவர் என்னும் பெருமான் பெயரையே அக்குழந்தைக்கும் வைத்தார் கேடிலியப்ப பிள்ளை,
தாயுமானவர் இள வயதிலேயே கற்க வேண்டியவை அனைத்தையும் கற்ருர், கேட்க வேண்டிய அனைத்தையும்

Page 168
324 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
கேட்க வேண்டியவர்களிடமிருந்து Gal G அறிந்து கொண்டார். பலரும் புகழும் நிலையில் வளர்ந்து வந்தார். அப்போது தாயுமானவரின் தந்தையார் கேடி லியப்ப பிள்ளையும் காலஞ்சென்றுவிட்டார். தந்தையின் மறைவக்குப் பின்னர் தனயனன தாயுமானவர் அரசனுல் அழைக் சப் பட்டார். தந்தையாரின் கொழில் அவரிடம் ஒப்படைக் கப்பட்டது. அவரும் அத்தொழிலை ஏற்றுக் கணக்கர் வேலை பார்த்துவந்தார். ஆனல் தாயுமானவரோ அத் தொழிலில் அவ்வளவு ஈடுபாடோ ஆர்வமோ காட்ட வில்லை. அவருடைய மனம் ஞானுசிரியனை நாடியது. நல்லுபதேசம் பெற விரும்பியது. அவற்றைப் பெற்றுப் பிறவிப்பிணியை நீக்கிக் கொள்ள வேண்டும் என்ற தீவிர எண்ணத்தில் அவர் மூழ்கலானுர் . எனவே அவர் நாள் தோறும் பூரீதாயுமானப் பொருமானை எண்ணலா ஞர். தனக்கு ஈடேற்றம் அளிக்குமாறு அப்பெருமானைக் காதலாகிக் கசிந்து உருகி வழிபட்டு வந்தார். அப்போது ஒரு நாள் திருமூல நாயனர் மரபில் தோன்றிய மெளனகுரு சுவாமிகள் தல யாத்திரை செய்து கொண்டு வரும் போது அக்கோவிலிலுள்ள தஷிணுமூர்த்தி சந்நிதியில் நிஷ்டையில் இருந்தார். தாயுமான வரும் வழக்கம்போல் சுவாமி தரிசன்ம் செய்ய அங்கு வந்தார். வந்ததும் காந் கத்தினுல் இழுக்கப்பட்ட இரும்பு போல் நிஷ்டையில் இருந்த மெளன குருவின் பாதத்தில் விழுந்தார். இறைஞ்சிநின் ருர், தாயுமான வரின் மன பக்குவநிலையை உணர்ந்தமெளனகுரு தாயுமான வருக்கு ஞானுேபதேசம் செய்தார். உடனே தாயுமான வரும் சிவ மனுபூதிச் செல்வராய் விளங்கினுர், விளங்கி "அங்கிங் கென தபடி எங்கும பிரகாசமாய் ஆனந்தபூர்த்தியாகி அருளோடு நிறைந்தது” என்னும் பாடலைப்பாடினர். வேதாந்த சித்தாந்த சமரசக் கருத்துக்கள் அடங்கியதும் யாவராலும் புகழப்படுவதுமான அநேக அருட் பாக்களையும்

அங்கிங்கெனதபடி எங்கும் பிரகாசமாய் 325
உலகிற்குத் தாயுமானவர் தந்தருளினர். அதன் பயணுகவே அவருக்குத் தாயுமான அடிகள் என்னும் பெயர் வழங்கலா யிற்று, அவர் தம் பாடல்களில் அக் கோவிலில் திருமேனி கொண்டிருக்கும் தஷிணுமூர்த்தியின் பேரிலும் தம்மை ஆட்கொண்ட மெளனகுருவின் பேரிலும் பூரீதாயுமானப் பெருமான் பேரிலும் பாடிய திருப்பாடல்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றை மாத்திரம் ஈண்டு நோக்குவோம். தாயுமான அடிகளாரும் திருச்சிராப்பள்ளியிலுள்ள மலையை *சிரகிரி என்றும் பெருமானைச் "சிரகிரிப் பெருமான்? என்றும் "சிரகிரித் தாயுமான தயாபரமூர்த்தி’ என்றும் அமைத்துத் தமது பாடல்களிலே மிக்க சிறப்புடையதாகப் பாடியுள்ளார். தாயுமான அடிகள் பாடிய அருட் பாக் களுள் ஒன்று இவ்வாறு கருத்தாழம் உடைய திருப்பாட லாக அமைந்துள்ளது.
தந்தைதாயுநி யென்னுயிர்த் துணையு நீ சஞ்சலம் தீர்க்க வந்த தேசிக வடிவு நீ யுனையலால் மற்றெரு துணை காணேன் அந்தமாதியு மாளப்பெருஞ் சோதியே ஆதியே யடி யார்தம் சிந்தைமேவிய தாயுமானவனெனும் சிரகிரிப் பெருமானே
பல புலவர்களால் பாடல் பெற்ற நகரி திரிச்சிராப்பள்ளி, அதன் மலைக் கோட்டைக் கோவிலும் அவ்வாறே பாடல் பெற்று விளங்குகிறது. மாணிக்க வாசக சுவாமிகளும் திருச்சிராப்பள்ளியைக் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய ஒரு திருவிருத்தம் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளது. திருச் கோத்தும்பி என்ற திருப்பதிகித்தில் அமைந்துள்ளது. அப் பாடல் "கோத்தும்பீ’ என்ற தொடரைப் பாட்டின் ஈறு தொறுங் கொண்ட திருவாசகப் பதிகம் திருக்கோத்தும்பி என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய கோத்தும்பீ என்ற

Page 169
ぶ。26 நெஞசில் நிலைத்த சுற்றுலா
தொடரை இறுதியிலே கொண்ட ஒரு பாடலில் திரிச்சிராப் பள்ளி இடம் பெற்றுள்ளது. அப்பாடல் வருமாறு:-
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் பேயேனதுள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனைச் சியேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளுந் தாயான ஈசற்கே சென்று தாய்கோத்தும்பீ.
மூவரம்மானை என்னும் நூலிலும் திரிச்சிராப்பள்ளி மலைக்கோட்டைக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் இறை வனைப் பற்றிய செய்யுட்கள் இடம் பெற்றுள்ளன. அம் மானை என்ற தொடரை ஈற்றில் கொண்டுள்ள பாடல்கள் பொதுவாக அம்மானைப் பாடல்கள் என வழங்கப்படுகின் றன. மூவரம்மானையில் உள்ள ஒரு பாடல் இவ்வாறு அமைந் துள்ளது:-
சிரிபுர மாவீசர் செட்டி மகட் காவேடம்
தரித்து மருத்துவஞ செய் தாயாளுரம்மானை
தரித்து மருத்துவஞ்செய் தாயான ராமாயின்
மருத்தெண்ணெய்ச்சிக்கன்றி மணி மிவர்க் கேதம்மானை
மட்டுவார் கழலிருக்க மணமரிதோ வம்மானை.
திருச்சிராப்பள்ளி மலையைப் பற்றிய பல பாடல்கள் இடம் பெற்ற மற்ருெரு நூல் செவ்வந்திப் புராணம். அது திரிசிராமலைப் புராணம் என்றும் வழங்கப்படுகிறது. சைவ எல்லப்ப நாவலரால் இயற்றப்பட்டது அந்நூல். 11 சருக்கங்களையும் 500 பாடல்களையும் கொண்டது அந் நூல். ஆசிரியரின் பெயர் குறிப்பிடப்படாத மற்ருெரு நூல் சிரா மலைக் கோவை. அந்நூலிலும் அம்மலைக் கோட் டைக்கோவிலில் இடம் பெற்றுள்ளது. அந்நூலை மகாம கோபாத்தியாய கலாநிதி உ.வெ சாமிநாதையர் அவர்கள்

அங்கிகெனதபடி எங்கும் பிரகாசமாய் 327
பதிப்பித்துள்ளார். தாயும் ஆனவரான இறைவனின்
பெருமை அந் நூலுக்குப் பொருளாய் அமைந்துள்ளது. ஒரு
செய்யுள்,
தாயாகி வந்தொரு பேதையைக் காத்த தனிமுதலோன் வேயான தோளுமை பாகன் சிராமலை மேவிவளர் பாயாத வேங்கை பயிலும் புனத்துப்பவளவுரு வாயாரும் வேங்கையைக் கண்டேன் வண்டேன் முரல்
வார் குழலே.
என்று இறைவன் தாயுமான நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றது.
சிரகிரி உலா என்பது மற்ருெரு நூல். அந்நூலிலும் மலைக்கோட்டைக் கோவில் இடம் பெற்றுள்ளது. அந்நூல் யாரால் எப்பொழுது இயற்றப்பட்டது என்பனபோன்ற விவரங்கள் கிடைக்கவில்லை. சிராமலைக்கோவையிலே இடம் பெற்றுள்ள சில கண்ணிகள் மட்டுமே அத்தகைய நூல் ஒன்று இருந்தமைக்குச் சான்று பகருகின்றன. அத்தகைய மேற்கோள் ஒன்று சிராமலைக் கோவையில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
அத்தனு மாவதன்றி மன்னயுந்தா னயபிரான் சித்த மகிழ் தென் சிரகிரியுபன்-சுத்த நிலாவும் பகீரதியு நீண்ட சடைமேல் உலாவவே போந்தானுலா.
திரிசிரபுரம் மகா வித்துவான் மீனுட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் திருச்சி பற்றிய மக அந்தாதி ஒன்றை இயற் றியுள்ளார். யமகத்தோடுவரும் அந்தாதி யமக அந்தாதி எனப்படும். ஒரு பாட்டின் ஆதி அடுத்தபாட்டின் முத லாக வருவதே அந்தாதி எனப்படும். வந்த எழுத்துக் கள் பொருள் வேறுபடச் செய்யுளின் சீர் அல்லது அடி

Page 170
328 நெஞசில் நிலைத்த சுற்றுலா
களிற் பின்னும் வருவதாகிய மடக்கு என்னும் அணியே யமகம் என அழைக்கப்படுகிறது. அந்தாதி பற்றிக் குறிப் பிடும் பொழுது இலக்கணக் கடல் என்று வருணிக்கப் பட்ட திரிசிரபுரம் ஆ. கா. பிச்சையிபுருகீதம் புலவரால் இயற்றப்பட்ட திருமதீனத்தாந்தாதி நினைவுக்கு வருகிறது. அஜபு நாட்டில் உள்ள மதீனமாநகரத்தை வைத்துப் பாடப்பட்ட அரவ்வந்தாதிக்கு நாகூர் குலாம் காதிறு நாவலர் உரை எழுதி உள்ளார். அந்நூலுக்கு குலாம் காதிறு நாவலர் எழுதியுள்ள சிறப்புப்பாயிரத்தில் திரிசிர புரம் பின்வருமாறு வருணிக்கப்பட்டுள்ளது.
புல்லிதழ்க் குவளையு மல்லி யாம்பலும் தேன்வரக் கடைவாயக் குதட்டிக் கான்வரச் செங்கட் கடிவரால் வெருட்டு மங்க ணுவிருபுறஞ செறி மருத வேலி யுரமுறு திரிசிர புரமர்ந் தோனே.
46
5Gofiċi f'pLJLJLG 55 Qlib
நீரங்கத் திருத்தலம் மலைக்கோட்டையையும் அங்குள்ள கோவிலையும் பார்த்து விட்டு அடுத்த நிகழ்ச்சியில் பங்கு பற்றப் புறப்பட்டோம். சீரங்கத்துக்குச் செல்வது அடுத்து இடம் பெற்றது. தனித்
தமிழில் சீரங்கம் என்று அழைக்கப்படும் இடம் பூரீரங்கம் என்றும் வழங்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளிக்கு அணித்

தனிச் சிறப்புடன் திகழும் பூரீரங்கத் திருத்தலம் 329
தாயுள்ளது பூரீரங்கம். பூரீ என்பதையும் அரங்கம் என்ப தையும் கொண்டு அமைந்தது பூரீரங்கம் என்னும் சொற் ருெடர். பூg என்ருல் மகிமை அல்லது பாக்கியம் என்பது பொருள். அரங்கம் என்பது திவ்ய மேடை என்பதைக் குறிக்கும். சிலப்பதிகாரத்தில் பூரீரங்கம் திருவரங்கம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்திலரங்கத் தகன் பொழி லகவயில் (காடு காண் காதை-6)
அரங்கம் என்பதை திருவரங்கம் என்று பொருள்படக் கூறுவோர் அதனை ஆற்றிடைக் குறையாகவும் குறிப்பீடு வர். அதே காதையில்
விரி திரைக் காவிரி வியன் பெருந் துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் (40-41)
என்று திரை விரியும் காவிரியாற்றிடைக் குறையிலே திரு பகள் பொருந்திய திருமார்பை உடையோன் கிடந்த கோலத்தைக் குறிப்பிடுகிருர் இளங்கோவடிகள். ஆற்றிடைக் குறையை ஆங்கிலத்தில் AT என்று கூறுவர். அவ்வாங்கி லச் சொல்லுக்கு சிறு தீவு என்றும் ஆற்றின் சிறு துருத்தி என்றும் பொருள் கூறுவர். பூரீரங்கமும் ஒரு சிறு தீவாகவே காட்சி அளிக்கிறது. காவேரி, கொள்ளிடம் ஆறுகளினலே குழப்பட்ட தீவாகவே காட்சி அளிக்கிறது. பூஜீரங்கத்துக்கு மாலை அணிவது போன்று அவ்விருநதிகளும் அமைந்துள்ளன. அங்கு கோவில் கொண்ட திருமால், பூறிரங்கநாதர் என் அழைக்கப்படுகிறர். இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றுவிளங் கும் கோவிலாக அமைந்துள்ளது பூரீரங்கத்துக் கோவில். இந்தியாவில் பல பகுதிகளிலிருந்தும் பல்லாண்டு காலமாக மக்கள் புனித யாத்திரை மேற் கொள்ளும் சிறப்பிடமாக அது திகழ்ந்து வருகிறது. பூரீரங்கநாதர் என்பது திருச்சி

Page 171
33O நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
ராப்பள்ளிக்கே உரிய உபயோகம் எனச் சென்னை மாநிலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. தமிழ் நாவலர் வரலாற் றில்(203) பூரீரங்கம் என்னும் தீவு சீரங்கம் என்று குறிப் பிடப்படுள்ளது.
வைஷ்ணவ பக்தர்சளுக்குச் சிறப்பாக விளங்கும் புனி தத் தலங்கள் 108 இந்தியாவில் உண்டு என்பர். அவற்றுள் தனிச் சிறப்புடன் விளங்குவது பூரீ ரங்கத்துப் புனிதத் தலம் என்பர். தென் இந்தியாவில் உள்ள கோவில்களுள் மிகப் பெரியதாகவும் அது விளங்குகிறது. பன்னிரண்டு வைஷ்ணவ ஆழ்வார்களுள் பதினெருவர் பூரீரங்கம் என்னும் திருத்தலத்தைப் புசழ்ந்து பாடியுள்ளனர். பெரியாழ்வார் தமது இரண்டாம் பத்தில் உள்ள ஏழா ந் திருமொழியில் பூரீ ரங்கநாதரை பின்வருமாறு புகழ்ந்துள்ளார்.
கருவுடை மேகங்கண்ட ல உன்னைக் கண்டால் ஒக்குங் கண்கள் உருவுடையாய் உலகேழும உண்டாக வந்து பிறந்தாய் திருவுடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் மருவிமணங் கமழ்கின்ற மல்லிகைப் பூச்சூட்ட வாராய்.
(2)
பெரியாழ்வாரின் திருமொழியில் உள்ள நான்காம் பத்தில் இடம் பெற்ற எட்டாம் திருமொழியிலும் ஒன்பதாம் திரு மொழியிலும் இடம்பெற்ற பாசுரங்கள் அனேத்தும் பூரீரங்க நாதர் புகழ்பாடுவனவாக அமைந்துள்ளன
ஆண்டாளும் திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்” என்ற தலைப்பில் பூரீரங்கத்து நாதரைப் புகழ்ந்து பத்துப் பாசுரங்களைப் பாடியுள்ளார். நாச்சியார் திருமொழியில் பதினேராம் திருமொழியில் உள்ள ஒரு பாசுரத்தில் ஐந்து படமுள்ள நாகபாம்பின் மீது உறங்கும் திருமாலைப்

தனிச் சிறப்புடன் திகழும் பூரீரங்கத் திருத்தலம் 33 1
பாடுகிருர், திருவரங்கத்திலும் அத்தகைய உருவத்தில்
பூரீரங்கநாதரைக் காணலாம். ஆண்டாளின் அப்பாசுரம்
இவ்வாறு அமைந்துள்ளது :-
தாமுகக்கும் தம் கையில் சங்கமே போலவோ யாமுகக்கும் எங்கையில் சங்கமும ஏந்திழையீர் திமுகத்து நாகனைமேல் சேரும் திருவரங்கர் ஆ முகத்தை நோக்காரால் அம்மனே! அம்மனே! (1)
பூரீரங்கம் ஆண்டாளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது பாவைப்பாட்டு நினைவுக்கு வருகிறது. நான்கு அடியின் மிக்குவருஞ் செய்யுள் வகை பாவைப்பாட்டு எனப்படும். பாவைப்பாட்டு இருவகைப்படும். ஒன்று மாணிக்க வாசக சுவாமிகளால் பாடப்பட்ட திருவெம்பாவை. இவை திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளன. மற்றது திருப் பாவை. பூரீஆண்டாளினல் பாடப்பட்டவை. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் இடம் பெற்ற திருப்பாவைப் பாடல்களும் திருவெம்பாவைப் பாடல்களும் "எம்பாவாங்' என்ற சொற்முெடரை இறுதியில் கொண்டு முடிகின்றன. இத் திருப்பாட்டுக்கள் கோயில்களில் மார்கழித் திங்கள் முற் றும் சிறப்பாக ஒதப்படுகின்றன. திருவெம்பாவை சிவபெரு மானைப் புகழ்ந்து பாடப்பட்டது. திருப்பாவை திருமாலைப் போற்றிப் பாடப்பட்டது. மார்கழி நோன்புடனும் மார்கழி நீராடலுடனும் நெருங்கிய தொடர்புடையன திருப்பா வைத் திருப்பாடல்கள். "எம்பாவாய்" என்ற சொற்ருெடரி "எமது நோன்பு முடிகிறது" என்பதைக் குறிப்பிடுகிறது என்று கூறுவர். ஆண்டாள் பாடிய திருப்பாவை இரண் டாம் திருப்பாடலில் 'பாவை’ என்ற சொல் "நோன்பு" என்ற பொருளில் உபயோகிக்கப்பட்டிருப்பதைக் காண லாம். முப்பது திருப்பாடல்களைக் கொண்ட திருப்பாவை யில் ஒரு திருப்பாடல் இவ்வாறு அமைந்துள்ளது.

Page 172
332 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி சென்று அங்குத் தென்னிலங்கை சென்ற ய் திறல் போற்றி பொன்றச் சகடம் உதைத் தாய் புகழ் போற்றி கன்று குணிலா எறிந்தாய் கழல போற்றி குன்று குடையாப் எடுத்தாய் குணம் போற்றி வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்றெனறு உன் சேவக மே ஏத்திப் பறை கொள
6 to இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய் (24)
(செற்ருய்-அழித்தாய், குணில்-குறுந்தடி, சேவகம் -பராக்கிரமம், ஏல் ஓர் தகுந்த ஒப்பற்ற).
சேரநாட்டு மன்னராக வா ழ்ந்த குலசேகர ஆழ்வாரும் பூரீரங்கநாதரைப் புசழ்ந்து பாடியுள்ளார். இவருடைய திருப்பாசுரங்கள் பெருமாள் திருமொழி என வழங்சப் படுகின்றன. பூரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெரு மான்த் தாம் என்று காணப்போவதாக எண்ணியெண்ணி வருந்திப் பாடியுள்ளவை அத்திருப்பாடல்கள். கண்டுகளிப்பது எப்போது? வாழ்த்துவது எப்போது? அணுகுவது எப் போது? வணங்குவது எப்போது ? என்று திருவரங்க நாதரை விளித்துப் பாடுகிருர் குலசேகர ஆழ்வார். அவருடைய ஒரு திருப்பாடல் இவ்வாறு அமைந்துள்ளது.
இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத் தி யணிபணம் ஆயிரங்க ளார்ந்த அர வரசப் பெருஞசோதி அனநதனென்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை யணையை மேவி திருவரங்கப் பெருநகருள் தெண்ணிா ப் பொன்னித்

தனிச் சிறப்புடன் திகழும் பூரீரங்கத் திருத்தலம் 333
திருக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டேன் கண்ணிணைகள் என்று கொலோ களிக்கும் நாளே (1)
திருமழிசை ஆழ்வாரும் தமது திருச்சந்தவிருத்தத்தில் "அப் தண் நீர் அரங்கம்” (49) என்றும், "பொன்னி சூழ ரங்கபேய புண்டரீசனல்லையே" (56) என்றும் பூணூரீரங்க தா தரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
கொண்டரடிப் பொடியாழ்வார் தமது திருமாலையில் 'அரங்கமா நகருளானே’ என்று பூணூரீரங்கப் பெருமானைப் பலவாறு புகழ்ந்து பாடியுள்ளார். இவ்வாறு பாடப்பட்ட திருப்பாடல்களின் எண்ணிக்கை நாற்பத்தைந்தாகும். அவர் பாடிய திருப்பள்ளியெழுச்சியில் உள்ள திருப்பாசு ரங்சள் பூரீரங்கநாதனைத் துயிலுணர்த்துவதாக அமைந்துள் ளன. சூரியன் கிழக்கே தோன்றி விட்டான். இருள் அகன்று விட்டது. காலைப் பொழுதாய் விட்டது. பூக்கள் எல்லாம் மலர்ந்த விட்டன. அவற்றிலிருந்து தேன் ஒழுகின. வான வரசர்களும் வந்து கூடி விட்டனர். எதிர்ப்பக்கத்திலே நிறைந்து விட்டனர். இவர்களோடு யானைகளும் வந்து விட்டன. முரசமும் முழங்கியது. இச்சத்தம் அலைகடல் எழுப்பும் பேரொலிபோல் முழங்கியது. எங்கும் உள்ளது அம்முழக்கம். எனவே எழுந் தருளுக! என்று பூரீரங்க நாதரை துயிலுணர்த்துகிருர் தொண்டரடிப்பொடியாழ் வார். அத்தகைய பாடல் இவ்வாறு அமைந்துள்ளது:-
கதிரவன் குணதிசைச் சிகரம் வந் தனந்தான் கனையிரு ளகன்றது காலையம் பொழுதாய் மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவ தண்டி எதிர்திசை நின்றனர் இவரொடும் புகுந்த இருங்களிற் கூட்டமும்

Page 173
334 நெஞசில நிலைத்த சுற்றுலா
பிடியொடு முரசமும் அதிர்தலில் அலைகடல் போன்றுளதெங்கும் அரங்கத்தம்மா பள்ளியெழுந தருளா யே? (1) திருப்பாணுழிவார் உறையூரைச் சேர்ந்தவர். பத்துப் பாசுரங்களைக் கொண்ட ஒரேயொரு பதிகம் பாடியவர் இவர். அமலனுதிபிரான் என்று ஆரம்பிக்கிறது அத் திருப்பதிகம் , அழகிய மணவாளனது திருமேனி அழகில் பாதாதி கேசாந்தமாக ஈடுபடும் விதத்தில் அமைந்துள்ளன அப் பத்துத் திருப் பாடல்கள். பாதத்தையும் அரையை யும் உந்தியையும் வயிற்றையும் மார்பையும் கண்டத்தை யும் வாயையும் கண்களையும் முடியுறுப்புக்களையும் முறையே அமைத்துப் பாடல்களில் பாடியுள்ளார் திருப்பானழவார். இவை அனைத்தையும் கொண்ட மேனியைக் காண்பதில் தமது நெஞ்சு நிறை கொண்டதெனப் பாடுகிமுர், அவற்றுள் முதல் திருப்பாடல் இவ்வாறு அமைந்துள்ள து:
அமல சூறதிபிரான் அடியார்க்கு என்னையாட்படுத்த விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்க
(6).J 607 நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி லரங்கத தான் திருக கமலபா தம் வந்துளன் கண்ணி னுள்ளன. வொக்கின் ரதே
திருமங்கையாழ்வார் இயற்றிய பாசுரங்கள் மிகப்பல. திருவாய் மொழியாகிய தமிழ்மறையின் ஆறங்கங்களாகிப் புகழ் பாடப்பட்டுள்ளது. இரண்டாவது ஆயிரமாக அ!ை ந் துள்ளது திருமங்கையாழ்வாரின் திருப்பாசுரங்களில் திரு வரங்கத்தில் எழுந்தருளியுள்ள திருமாலின் புகழ் பாடப் பட்டுள்ளது. பொய்கையாழ்வார் இயற்றிய இயற்பாவில் இடம் பெற்றுள்ள முதல் திருவந்தாதியில் உள்ள ஒரு

தனிச் சிறபபடன் திகழும் பூரீரங்கத் திருத்தலம் 335
திருப்பாடலில் (6) திருவரங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாழ்வார்கள் இயற்றிய பாசுரங்கள் இயற்பா என அழைக்கப்படுகிறது பூதத் தாழ்வாரின் இரண்டாம் திரு வந் காதியில் நினைப்பரிய நீளரங்கத்துள்ளான் (28) என்றும் "பயின்றது அரங்கம்” (46) என்றும் "தலையரங்கம்" (70) என்றும் முறையே பூரீரங்கநாதரும் திருவரங்கமும் பாடப் பெற்றுள்ளன. பூஜீரங்கத்தைத் "தேனுர் திருவரங்கம்" என்று (62) தமது முன்றந் திருவந்தாதியில் பேயாழ்வார் UT ug u 67 GMT nrrif.
திருவரங்கத்தையும் பூரீரங்கநாதரையும் புகழ்ந்து பாடிய மற்ருெரு ஆழ்வார் நம்மாழ்வார் ஆவார். ஆழ்வாருள் நம்மாழ்வார் சிறந்தவர், என்பது வைணவர் தம் கருத்தாகும். அவ்வாறு அவர் புகழ்ந்து பாடிய பாடல்கள் பல. ஏழாம் பத்தில் இரண்டாம் திருவாய் மொழியில் திருவரங்கப் பொருமான் புகழப்பட்டுள்ளார். திருமாலை அழைத்த ஆழ்வார் காமத்தால் மயங்கி இருக்க திருத்தா யார் பெரிய பெருமாளைக் குறித்து இந்நாயகி பற்றி ஏது உறுதி செய்து கொண்டிருக்கிறீர் என்று கேட் பதாக அருளப்பட்டுள்ளன ஏழாம் பத்தில் இரண்டாம் திருவாய்மொழியில் உள்ள பாசுரங்கள். அவற்றுள் ஒன்று
வருமாறு -
கங்குலும் பகலும் கண்துயி லறியாள் கண்ண நீர்கை களால் இறைக்கும் சங்கு சக்கரிகள் என்றுகை கூப்பும் தாமரைக் கண்ணென் ரே தளரும் எங்ங்னே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும் இருநிலம் கைதுழா விருக்கும் செங்கயல் பாய்நீர்த் திருவரங் காத்தாய் இவள் திறத்து என் செய்கின்றயோ (IJ
வைணவ ஆசாரியார் பலர் வாழ்ந்த இடம் திருவரங்

Page 174
336 ர்ெ ருசிய நிலைத்த சுற்றுலா
கம். பூரீஇராமானுஜர், அவர்களுள் தலை சிறந்து விளங்கு பவர். கி. பி. 1017-1137 வரை வாழ்ந்தவர் இராமனு ஜர், அவரை "திக்குற்ற கீர்த்தி இராம்ானுஜன்" என்று இராமானுஜரின் காலத்தவரான திருவரங்கத்து அமுத னர் குறிப்பிட்டுள்ளார். தம் காலத்திலுள்ள சமயக் கொள்கை களையும் தத்துவக் கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து இராமானுஜர், பூரீவைஷ்ணவ விசிஷ்டாத்வைத சித்தாந் தத்தை உருவாக்கியுள்ளார்.
47
நீரங்கமும் 6567860.65s Go
சீரங்கத்துக் கோவில் கட்டப்பட்ட காலம் பற்றிய விவரங்கள் கிடைத்தலரிது. வால்மீகி ராமாயணத்தில் அக்கோவில் பற்றி முதன் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீரங்கக் கோவிலோடு அமைந்துள்ளது அப்பெயரையுடைய நகர். அங்கே ஏழு காப்பரண்கள் உண்டு. ஒவ்வொரு காப்பரண்களிலும் ஒவ்வொரு வேலியடைப்பு உள்ளது. அத்தகைய வேலியடைப்புக்கள் ஒவ்வொன்றும் 160 ஏக்கர் பரட் புடையது. அங்குள்ள எல்லாச் சுவர்களினதும் மொத்த நீளம் 3, 200 அடிகளாகும். இது ஏறக்குறைய ஏழு மைல்களுக்குச் சமமாகும்.
பூனிரங்க விமானத்திலே பூரீரங்கநாதர் எழுந்தருளி இருக்கிறர். பிரமன், சூரியன், மனு, பேரரசர் இகவாகு,

பூநீரங்கமும் திருவாணைக்காவும் 337 தசரதன், இராமன் முதலியோர் ஒருவர் பின் ஒருவராக அங்கே எழுந்தருளி இருக்கும் திருமாலை வணங்கி வந்துள் ளனர். சந்திரா புஷ்கரணி என்னும் புனிதகுளம் அங்கு காலப்போக்கில் அவர்களால் நிறுவப்பட்டது. அதனைச் சுற்றிவரவே இப்போதைய கோவில் உருவாகியுள்ளது. இராமர் சீதா பிராட்டியாருடன் வழிபட்ட இடம் அது.
பல்வேறு உயரங்களை உடைய இருபத்தொரு கோபு ரங்கள் அங்கே இருக்கின்றன. அவை கண் கவருவனவாய் அமைந்துள்ளன. அக்கோபுரங்களில் பல்வேறு வகை யான சிற்ப உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவை உயிர்த் துடிப்பு உள்ளன போன்று காட்சி வழங்குகின் றன. அக்கோவிலில் ஐம்பத்தொரு சிறு கல்லறைகளைக் காணலாம். நூற்றெட்டு மண்டபங்கள் அங்கு இடம் பெற்றுள்ளன. மண்டபங்களும் அவற்றில் அமைந்துள்ள தூண்களும் நுண்கலைக்கு எடுத்துக்காட்டுக்களாக விளங்கு கின்றன. சிறு கல்லறைகளில் இடம் பெற்றுள்ள சிலைகள் உணர்ச்சியூட்டத் தக்கனவாய் அமைந்துள்ளன. அச்சிலை கள் நுண்ணியதாகச் செதுக்கப்பட்டனவாய் அமைந்துள் ளன. பதின்மர் பாடும் பெருமாள் என்றும் பூரீரங்கநாதரி அழைக்கப்படுகிருர், ஆழ்வார்கள் இவ்வளவு தொகையின் ரால் புகழ்ந்து பாடப்பட்ட பெருமை பூரிரங்கப் பெருமானை யே சாரும். இராவணனின் சகோதரனன விபீஷணனுல் திருமாலின் சில அங்கு நிறுவப்பட்டது என்று ஒரு கதை வழங்குகிறது.
வேணுகோபால் (கிருஷ்ணபகவான்) கோவில் ஹொஸ் யால சிற்பமுறையில் அமைக்கப்பட்டுள்ளது. ரங்கவிலாஸ் மண்டபம், குதிரைக்காட்சிச் சாலை உள்ள ஷேசராய மண்டபம், மிக உயரமான வெள்ளைக் கோபுரம், ஆயிரங்

Page 175
338 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
கால் மண்டபம், கருடமண்டபம் முதலியன அங்கே உள் ளனவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கனவாகும். வெள்ளை கோபுரம் கோவிலின் கிழக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது 165 அடி உயரமானது அவ்வெள்ளைக் கோபுரம், ஒன்பது அடுக்குகளைக் கொண்டது அக்கோபுரம். ஒவ்வொரு அடுக் கும் தோற்றத்தில் சிறிதாகிக் கூம்பி ஒரு முனைப்படுகிறது. ஓங்கார வடிவில் அமைந்துள்ள பூரீரங்க விமானம் பொன் முலாம் பூசப்பட்டது. பூரீரங்க நாதர் கனவில் கூறிய வற்றை அடிப்படையாக வைத்தே தரும வருமன் என் னும் சோழ அரசன் அதனை அமைத்தார் என்று கூறப் படுகிறது.
கோவிலிலே ஒரு நூல் நிலையம் உண்டு. தத்துவ ஞானம், சமயம் முதலியன பற்றிய அரிய கையேட்டுப் பிரதிகள் அந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கே ஒரு தொல்பொருள் காட்சிச் சாலையும் இருக்கின்றது. தந்தத்திலே செதுக்கப்பட்ட சிற்பங்கள், நாயக்கர் காலத் தைச் சேர்ந்த போர்ச்சின்னங்கள், பித்தளையில் செதுக்கப் பட்ட உருவங்கள், பழங்கால நாணயங்கள், சித்திர வேலைப்பாடுகள், சங்கீதத்தைப் பற்றிய செப்பேடுகள் முதலியன தொல்பொருள் நிலையத்தை அலங்கரித்துக் கொண்டு இருக்கின்றன. சேர, சோழ, பாண்டிய மன்னர் களும் ஹெஸ்யால அரசர்களும் விஜயநகர பரம்பரையின ரும் மதுரையில் ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களும் நெடுங்காலமாக நடை பெற்ற கோவில் அமைப்புத் திருப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஒன்பதாம் நூற்ருண்டு முதல் பதினரும் நூற்றண்டு வரை இங்கு வந்த அடி பாரிகள் காலத்துக்குக் காலம் ஏற்படும் குறைகளை நிரப்பி வந்ததுள்னர், புனரமைப்பு வேலைகளும் மேற் கொள்ளப் பட்டுள்ளன. தென் இந்தியாவில் உள்ள ஏனைய கோவில்

பூநீரங்கமும் திருவாணைக்காவும் 339 களைப் போன்று பூரீரங்கநாதர் கோவில் ஒரு திட்டத்துக் கியைய கட்டப்பட்ட தொன்றன்று. பல அரச பரம்பரை யினர் அதன் அமைப்பில் ஈடுபட்டுன்ளனரி என்பது புலனு
கின்றது.
அங்குள்ள கோபுரங்களும் மண்டபங்களும் பல்வேறு மன்னரால் பல்வேறு காலங்களில் பதினெரு நூற்ருண்டு களாகக் கட்டப்பட்டன. அவை பல்வேறு சிற்ப முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டன. வெவ்வேறு காலத்துக்குரிய சித்திர வேலைப்பாடுகளும், ஒவியங்களும் அங்கு இடம் பெறலாயின. ஆனல், அவை ஒருவருக்கு உணர்ச்சியூட்டத் தவறுவதில்லை. அவை அத்தனையும் ஒரு முன் மாதிரியாகவே அமைந்துள்ளன. அவற்றின் இசைவிணைவுத் தன்மை நன்கு புலனுகின்றது அவற்றிற்கிடையே முரண்பாட்டைக் கான முடியாது. அவை அத்தனையும் பொருத்தமானவையாகவே காட்சியளிக்கின்றன. பொதுவாக நோக்கின் அவை அனைத் தும் மிக மேம்பட்டதாகவும் பெருமிதப் போக்குடையன வாகவும் காட்சியளிக்கின்றன. இயற்கை வனப்புமிக்கதாக அக்கோவில் விளங்குகிறது.
உலகப் புகழ் பெற்ற ஒரு பிரித்தானிய நிபுணர் யுனெஸ்கோவின் ஆதரவுடன் புனரமைப்பு வேலைகளுக்கு முன்னேடியாக ஆரம்ப ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். மேற்கொள்ள வேண்டிய புனரமைப்பு வேலைகள் பற்றி அவர் ஆலோசனைகள் அடங்கிய ஒர் அறிக்கையை யுனெஸ் கோ ஸ்தாபனத்துக்கு அளித்துள்ளார். பண்டு தொட்டு தமிழகத்தின் சிற்பச் சிறப்புக்கும் ஓவியக்கலையின் மேன் மைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் இக் கோவிலின் சிறப்பம்சங்கள் பேணப்படல் வேண்டும் என்று யுனெஸ் கோ ஸ்தாபனம் மிச்சு அக்கறை காட்டி வருகின்றது.

Page 176
34 O நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
நிபுணத்துவ ஆலோசனைகள் வழங்குவதுடன் நின்று விடாது பண உதவி செய்யவும் அந்த ஸ்தாபனம் முன் வந்துள்ளது
பூரீரங்கநாதர் கோவிலின் புனித்தன்மையையும் அதன் பண்டைய பெருமையையும் கேள்வியுற்ற ஏழாம் GTLخلالهة ت மன்னர் தாம் வேல்ஸ் குமாரராக இருந்த பொழுது இந்தியாவுக்கு வந்திருந்த சமயம் அக்கோவிலுக்கு விஜயம் செய்தார். அப்பொழுது அவர் பொன்னலான ஒரு த கட் டைக் கோவிலுக்கு அன்பளிப்பாக வழங்கினர். இந்தத் தகடு இன்றும் கோவில் கருவூல த்தில் இருக்கின்றது. தென் இந்தியாவில் உள்ள ஏஜணய கோவில்களே விட பூரீரங்க நாதர் விேலில் விலை மதிக்க முடி!" ஆபரணங்கள் இருக்கின்றன. அக்கோவில் ானிக்கங்கள் சம்பந்தமாகி ஒரு கதை வழங்குகிறது. ஜே டி- ருேஸ் என்பவர் தமது இந்தியா சஞ்சாரம் Tours of India) 679th நூலில் அக்கதையைக் குறிப்பிடுகிருர் (oleft" என்ற ஒரு வைரக் கல் இருந்தது. வில் மதிக்க முடியாதி வைரக்கல் அது பேரரசன் ஸார் என்பவரின் செங்கோலை ஒரு காலத்தில் அலங்கரிக்கும் தலையாய சின்னமாக அந்த வைரக்கல் விளங்கியது. சேனையைக் கைவிட்டோடிய ஒரு பிரெஞ்சுச் சிப்பாயினுல் திருடப்பட்டது அந்த வைரக்கல். அப்பிரெஞ் சுக்காரன் அந்த வைரக்கல்லை பூரீரங்கத்திலிருந்தே திருடினுன், பிரெஞ்சு சிப்பாயிடமிருந்து இளவரசன் ஒர் லெப் (oleft) என்பவரால் மீண்டும் திருடப்பட்டது என்பர் திருடப்படுவதற்கு முன்னர் அந்த வைரக்கல் திருவரங்க நாதரின் கண்மணியாக விளங்கியது என்று கூறுவர்.
1960 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 22 ஆந் திகதி யன்று திருவரங்க நாதர் எழுந்தருளி இருக்கும் புனித இடத்தில் தற்செயலாக தீ விபத்து ஏற்பட்டது. அத்

பூநீரங்கமும் திருவாணைக்காவும் 341,
தீவிபத்கினல் பூரீரங்கநாதருக்கு எவ்வித இடையூரும் ஏற் படவில்லை. அந்த நெருப்புக் காரணமாக பெருமானின் திருவுருவம் புதுமெருகைப் பெற்றது. முன்னிலும் பார்க்க அழகுடன் விளக்கத் தலைப்பட்டது. பல முறை பூசப்பப் டிருந்த தைலம் காாணமாக மறைந்திருந்த திருவரங்க நாதரின் அழகு மென்மேலும் சோபித்துப் பிரகாசிக்கத் தலைப்பட்டது. அண்மையில் அங்கு மகாசம்புரோட்சணம் நடைபெற்றது. சுத்திக்காகக் கோவில்களில் செய்யும் சடங்கு சம்பரோட்சணம் என்று அழைக்கப்படுகிலது.
திருச்சி நகருக்கு வடக்கே இரண்டு மைல் தூரத் தில் பிரசித்தி பெற்ற திருவானைக் கோவில் உள்ளது. சைவத் திருத்தலமாகிய திருவானைக் கோவில் சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கு கிறது. அத்திருத்தலம் ஜம்பு கேசுவரம் என்றும் அழைக் கப்படுகிறது. நாவல் பழத்துக்குரிய வடமொழிச் சொல் லான "ஜம்பு" என்பதிலிருந்தே அத்தலம் இப்பெயரைப் பெற்றுள்ளது. பல நூற்றண்டுகள் பழைமையான கிவ பெருமானின் திருவுருவம் ஜம்பு மரத்துக்குக் கீழ் இருப் பதால், அத்தலம் அப்பெயர் பெற்றது என்பரி. தென்னிந் தியா முழுவதிலும் புனிதமானது எனக் கருதப்படும் பஞ்ச பூத லிம்கங்களுள் ஒன்றன அப்புலிங்கம் அங்கு இடம் பெற்றுள்ளது. ஐம்பூதத் திருவூர்களிலே திருவாண்கோ நீரின் பகுதியாகும். திருவாரூரும் திருவண்ணுமலையும் திருச் காளத்தியும் திருத்தில்லையும் முறையே நிலத்தினதும் காற்றினதும் ஆகாயத்தினதும் பகுதிகளாகும். திருவாகிாம் கோவில் என்பது திரு-ஆனைக்-கா என்பதிலிருந்து மருவி வந்தது என்பர். புனித யானைகள் திரியும் பூஞ் சோலையென்பது அதன் பொருளாகும். யானைகள் திரியும் பூஞ்சோலையாக பண்டு அத்தலம் விளங்கியது என்பரி.

Page 177
342 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
வெள்ளானையும் சிலந்தியும் மேலைத் தொடர்பால் வழிபட்ட திருவூர் திருவானைக்காவாகும். வெள்ளானை நீரும் பூவும் கொண்டுவந்து நாள்தோறும் பூசனை செங்தது. சிலந்தி சருகு விழா திருத்தற்பொருட்டு தன் வாயின் நூலால் பந்தர் அமைத்தது. வெள்ளான அப்பந்தரை எச்சில் என்று அழித்தது. அறியாது தேர்ந்த பிழை எனக் கருதிய சிலந்தி மறுநாளும் பந்தர் இழைத்தது. யானை அதனையும் வெகுண்டு அதழித்தது. சிலந்தி யானையின் தும்பிக் கையில் நுழைந்து கடித்தது. யானை வலி பொறுக்க முடி யாமல் தன் கையினை ஓங்கி நிலத்தில் அறைந்தது. இரண் டும் உயிர் நீத்தன. யானை செய்த திருத்தொண்டு "நோன்பு" (கிரியை) ஆகும். சிவபெருமான் அதற்கேற்ற நல்வரத்தை கொடுத்தருளினர். சிலந்தி செய்த திருத்தெண் டு "?ab* (சரியை) ஆகும். அச்சிலந்தியினைச் சோழர் குலத்து வேந் தராய்ப் பிறப்பித்தருளினர். அவரே " 4ே1 ச்செங்கட் சோழராவர். அவர் முன் நினைவுடன் திருவானைக்காவில் திருக்கோவில் திருப்பணிபுரிவித்தார். அவர் எடுப்பித்த எழு பது மாடக்கோவிலும் யானைபுகா எழிலொடு அமைந்துள் னது. யானை வழிபட்டமையால் * அத்தலம் அப்பெயர் பெற்றது, என்று கூறுவர். சிவபெருமானை உமை ம்மை யார் வழிபட்ட மெய்மை புலப்பட இந்நாளிலும் அம்மன் திருக்கோவில் குருக்கள் அம்மனுகவே பெண்கோலம் பூண்டு நாள் தோறும் உச்சிக்காலத்தில் சிவன் கோவிலுக்கு வந்து மளர் தூவிப் போற்றி வழிபடுகின்றனர்,
இறைவன் யானைக்கு அருள் புரிந்தமையின் அப்பெயர் பெறலாயிற்று. நாயன்மாரால் பாடப்பெற்ற திருத்தலம் திருவானைக்கா, திருஞானசம்பந்த சுவாமிகள் பாடிய திருப்பதிகம் செவிலித்தாய்இரங்கிக் கூறுங்கூற்ருக அமைந் துள்ளது. மன்மதன அழித்தவர் என்றும் , யானைக்கு

பூரீரங்கமும் திருவாணைக்காவும் 343
அருள் புரிந்தவர் என்றும் அழைத்துப் பாடப் பெற்ற அத்தகைய திருவிருத்தம் ஒன்று இவ்வாறு அமைந்துள்ளது.
சுறவக்கொடி கொண்டவன் நீறதுவாய் உறநெற் றிவிழித் தாம் உத்தமனே விறல்மிக் ககரிக் கருள் செய் தவனே அறமிக் கதுவென் னு மென் ஆ யிழையே இங்கு சுறவக் கொடி கொண்டவன் மன்மதன். இப் பதிகத்தின் ஏழாம் திருவிருத்தம் சிதைந்து போயிற்று எது பர். திருநாவுக்கரசரும், சுந்தரரும் திருவானைக் காவைப் பாடியுள்ளனர். திருக்கோவில் மூலதானத்தில் எப்பொழுதும் நீர் ஊறிக் கொண்டேயிருக்கும். திருமூலதானத்தைக் கட் டியவர் கோச்செங்கண்ணன் என்னும் சோழ மன்னர் என்று பெரிய புராணம் கூறுகிறது.
திருச்சிமாநகருக்கு மேற்கே நாதரி ஷா மஸ்ஜித் அமைத் துள்ளது. அங்கு நவாப் முகம்மது அலியினதும் தெைகாய் யப்பட்ட சந்தாசாஹியினதும் கல்லறைகள் உள்ளன. அங்கு முஸ்லிம்கள் சிறப்பாகப் புனிதயாத்திரை மேற்கொள்வர். ஏனெனில் அங்கு புகழ்பெற்ற மெய்ஞானி சுல்தான் செப் யத் பாபய்யா நாதிர் ஷா அவர்களின் கல்லறை இடம் பெற்றுள்ளது.
திருவரங்கக் கோவிலிலே திருவரங்க நகராட்சியினராம் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிற்றிடை உணவு (Shack) வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு பொட்டலம் வழங்கப்பட்டது. மென்பானம் பகிரப்பட்டது. திருச்சி லயன்ஸ் சமாஜத்தினரால் அவை வழங்கப்பட்டன.

Page 178
48
உழவுக்குப் பயணுகும் உயர்ந்த கல்லணை
உணவு உற்பத்தியில் உற்சாகம் காட்டும் காலம் இது. மக்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைப் பெருக்க வழிவகைகளுக்கு முக்கியமான ஓர் இடம் அளிக்கப்படு கிறது. அதற்காக இயற்கை வளம் பயன்படுத்தப்படுகிறது நிலவளமும் நீர்வளமும் உபயோகிக்கப்படுகிறது. பண்டும் இதே நிலைமை நிலவியது. இன்று போல் அன்றும் மக்கள் திடசங்கற்பம் செய்து நாட்டைச் செழிப்புற அமைப்ப தற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். மலையிலிருந்து அாற்றெடுக்கும் ஆற்றின் ஒவ்வொரு துளி நீரையும் அன்று பயன்படுத்தி வெற்றி ஈட்டினர். ஈழத்தில் அன்று வாழ்ந்த மன்னர் தமது நாட்டில் உள்ள ஆறுகளில் உள்ள நீர் நாட்டுக்குப் பயன் பட்ட பின்னரே கடலில் சேர வேண்டும் என்று கருதிவந்தனர். அவ்வாறு செய்வதற்குச் சபதம் பூண்டு கருமமாற்றினரி, ஈற்றில் வெற்றியும் சட்டினர்.
இஸ்லாத்தை எடுத்துக் கொள்வோம். இஸ்லாத்தில் விதிக்கப்பட்ட கட்டாய கொடை ஸக்காத் என வழங்கப்படு

உழவுக்குப் பயனகும் உயர்ந்த கல்லணை 345 கிறது. பொதுவாக நூற்றுக்கு இரண்டரை வீதம் ஸக்காத் வழங்குவது பணம் படைக் த முஸ்லிம்களின் மீது கடமை யாக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு பொருள்களுக்கு வெல் வேறு வீதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தானியக்  ைத", பற்றிக் குறிப்பிடும்பொழுது மழையால் விளைந்த தானியங் களுக்கு ஓர் அளவும், பணச் செலவுக்கு வழிவகுக்கும் நீர் பாய்ச்சல் மூலம் விளைந்த தானியத்துக்கு பிறிதோர் அள வும் விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய கோட்பாடுகட் கிணங்க மழையினுல் விளைந்த தானியங்களுக்கு நூற்றுக்கு ஐந்து வீதமும் ஸ்க்காத் கடமையாக்கப்பட்டுள்ளது. இதி லிருந்தும் நீரின் இன்றியாமையும் பாசன முறையின் முக் கியத்துவமும் குறிப்பிடப்பட்டுள்ளமை எமக்குப் புலஞகிறது அல்லவா? இயற்கை வளம் குன்றிய நாடுகளில் நீர்ப்பாய்ச்சி மேற்கொள்ளப்படும் கமச் செய்கைக்கு முதலிடம் அளிக்கப் படுகிறது. வான் நோக்கி வாழும் வாய்ப்பு அற்ற பல பகுதிகள் தமிழ் நாட்டில் உள்ளன. அத்தகைய பிராந்தி யங்களுக்கு பாசன முறை பெரிதும் பயன்படுகிறது. பாசன முறைக்கு ஊற்ருக அமைந்துள்ள ஓர் இடம் திருச்சியில் உள்ளது
பூரீரங்கநாத கோவில் நிகழ்ச்சிகள் முடிவடையும் பொழுது நண்பகலாகி விட்டது. எமது திட்டத்திற்கு இணங்க பகல் பதினுெரு மணிக்கே அக்கோவிலிலிருந்து நாம் புறப்பட்டிருத்தல் வேண்டும். எனினும் எம்மைத் தாங்கிக் கொண்டு பேரூந்துகள் விரைந்தன திருச்சிக் கல்லணையை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. அப்பேரூந்துகளிலே அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் மூலம் கல்லனைகளைப் பற்றிய விவரங்களைப் பெண் குரல்கள் மாறிமாறி ஒலித் துக் கொண்டிருந்தன. இனிய குரலில் அதனிலும் இனிய தமிழில் கல்லணையையும் அதன் விபரங்களையும் இளம் பெண்டிர் எடுத்துக் கூறிக்கொண்டிருந்தனர். மிக்க பது

Page 179
346 நெஞசில் நிலைத்த சுற்றுலா னுடையனவாய் அமைந்தன அம்மணிகளின் அக்கருத்துக்கள்.
தமிழ் நாட்டை வளம் படுத்தும் நதி காவேரி நதி யாகும். கொள்ளிடம் என்னும் ஆறு காவிரியின் ஒரு கிளை நதியாகும். காவேரியிலிருந்து கொள்ளிடம் பிரிந்து இரண்டும் சமாந்தரமாக ஓடுகின்றன. இரண்டு நதிசளுக் கும் உள்ள இடைவெளி இரண்டு மைல்களாகும். திருச் சிராப்பள்ளிக்கு பன்னிரண்டு மைல் கிழக்கே கல்லணை உள் ளது. இப்பொழுது கல்லணை இருக்கும் இடத்தில் காவேரி யும் கொள்ளிடமும் பிரிந்து பாய்வதினல் காவேரி நதியிலே சில சமயங்களில் தண்ணிர் தட்டுப்பாடு ஏற்படுவதுண்டு கரிகாற் சோழன் அத்தகைய இடைஞ்சலைத் தீர்க்க முற் பட்டான். அவன் உள்ளாற்றிலேயே ஓர் அணைக்கட்டைக் கட்டி எழுப்பினன். கி பி. இரண்டாம் நூற்ருண்டுக் காலத் தில் அமைக்கப்பட்டது அக் கல்லணை என்பர். காவேரி ஆற் றல் பாசனத்திற்குத் தேவைப்படும் தண்ணீர் போக எஞ்சி யுள்ள தண்ணிரைக் கொள்ளிடம் ஆற்றில் வடிய விடுவதே கல்லணை கட்டப்பட்டதன் நோக்கமாகும்.
அணைக் கட்டு கற்பாறைகளினல் ஆனதாகும். அதன் நீளம் 1 800 அடிகளாகும். அகலம் 40 அடியிலிருந்து 60 அடி இருக்கும். 15 அடியிலிருத்து 18 அடி உயரத்திற்கு அக்கல் லணை கட்டப்பட்டுள்ளது. கல்லணையிலிருந்து கற்பாறைகள் சற்றும் அசையாது 1600 ஆண்டுகள் இருந்தன. அக்கால எல்லையில் ஏற்பட்ட எல்லா வித வெள்ளங்களையும் தடுத்து நிற்கும் ஆற்றல் அக்கல்லணைக்கு இருந்தது. மராட்டியரின் ஆதிக்கத்தில் இருந்த தஞ்சாவூரை ஆங்கிலேயர் 1800 ஆம் ஆண்டு அளவில் கைப்பற்றினர். அப்பொழுதுநீர்ப்பாசன வாய்க்கால்கள் சீரழிந்து உருக்குலைந்து காட்சி அளித்தன. கப்ரன் கோல்ட்வெல் என்பவர் 1805 இல் கல்லணைப் புனரமைப்புப் பணியை மேற்கொண்டார். நீர் குன்றியிருந்த

உழவுக்குப் பயனுகும் உயர்ந்த கல்லணை 347
காவேரி நதிக்கு அதிகமாக நீர் வர வழிவகைகளை மேற் கொண்டார். கற்களை அக்கல்லணையில் குவித்தார். அத் தோடு காவேரி நதிக்கரையையும் உயர்த்திஞர். மேலதிக மாக நீர்பாய்ந்தோட வழிவகைகளைச் செய்தார்.
கால்வாய் நீரோட்ட வேகத்தின் துப்புரவுத் திmன ஏற்படுத்துவதற்காகப் பத்து மதகுகள் 1830 இல் கட்டப் பட்டன. அவை அணைக்கட்டில் ஏற்படும் சேற்றுப்படிவங் களை அகற்றுவதற்குப் பெரிதும் பயன்பட்டன. அம் மதகுகள் 4 அடி உயரத்திலும் 3 அடி அகலத்திலும் கட்டப்பட்டன. 1840 இல் கல்லணையில் உள்ள அடித்தளத்தை உபயோகித்து அதன் மேலாக ஒரு பாலம் நிறுவப்பட்டது. அந்தப் பாலத் தின் நீளம் 735 அடிகளாகும். 1886 இல் கல்லணை பின் கற்கள் நீக்கப்பட்டு 2 அடி 10 அங்குல உயரத்தில் தான கவே இயங்கும் பலகை (Falin ) Shutter) பொருத்தப் பட்டன. 1889 இல் தானகவே இயங்கும் பல கைகள் நீக் கப்பட்டன. அவற்றிற்குப் பதிலாகித் தூக்குப் பல கைகள் (Lift Shutters) பொருத்தப்பட்டன. அத்தகைய தூக்குப் பலகைகளின் மாதிரி உருவைக் கல்னல் ஸ்மாற்ஸ் என்பவர் வகுத்தார். அவை சென்னையில் தாயாரிக்கப்பட்டன. 1909 இல் நீரோட்ட வேகத்தினல் மூன்று வளைவுகள் கரைந்து இழுத்துக்கொண்டு செல்லப்பட்டன. நீரோட்ட மதகுகளை அகற்றி வளைவுகள் திருத்தப்பட்டன. ஐந்து புதிய ஓட்டைகள் அமைக்கப்பட்டன. அக்கல்லணையில் ஒழுங்கியக்கி உண்டு. ஒரு முக்கிய கருமத்தைச் செய்வதற் காகவே அந்த ஒழுங்கியக்கி அமைக்கப்பட்டிருந்தது. U rů) தோடும் நீரை ஒழுங்கு படுத்துவதற்காகவே அந்த ஒழும் கியக்கி அக்கல்லணையில் பொருத்தப்பட்டிருந்தது.
மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும். அவ்வாறு வரும் அதிக வெள்ளத்தை உள்ளாறு வழியாக கொள்ளிடம் ஆற்

Page 180
348 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
றுக்கு அனுப்புவது அந்த ஒழுங்கியக்கியின் வேலையாகும். பாசனத்துக்கு வேண்டிய நீரைக் காவேரி ஆற்றின் கிளை ததிகளில் விடுவதற்கும் ஒழுங்கியக்கி பயன்படும். நீர்ப் பாசனக் காலங்களில் கொள்ளிடம் ஆற்றின் கீழ் அணைக்குத் தேவையான நீரை காலத்துக்குக் காலம் அந்த ஒழுங்கி யக்கி வழங்க வழி வகுக்கும். அண்மைக் காலத்தில் கல் லணையில் எத்தகைய புனரமைப்பு வேலையும் மேற்கொள் ளப்படவில்லை. மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. ஆண்டுதோறும் நடைபெறும் திருத்த வேலைகளே மேற் கொள்ளப்பட்டன. ஒழுங்கியக்கியைப் பேணிப் பாதுகாப் பதே பிரதானமான கடமையாக ஆண்டு தோறும் மேற் கொள்ளப்பட்டது. இந்த ஒழுங்கியக்கியும் பழைய அணைக் கட்டும் நல்ல முறையிலே இன்றும் இருக்கின்றன. அவை பண்டைக் காலப் பொறியியல், அறிவின் தல சிறந்த தன் மையை உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன எனக் கூறின் அது மிகையாகாது.
கல்லணையைச் சுற்றிப் பார்த்துவிட்டு அடுத்த நிகழ்ச் சிக்கு ஆயத்தமானேம். அப்பொழுது நேரம் பன்னிரண் டரை மணி இருக்கும் பேரூந்துகள் திருச்சி நகர் நோக்கிப் புறப்பட்டன. எமது களேப்பைத் தீர்க்கவும் பசியை ஆற்ற வும் அமைந்திருந்தது அடுத்த நிசழ்ச்சி. மதிய உணவுக்காக நாம் சென்று கொண்டிருந்தோம். அன்று நண்பகல் விருந்து பசாரம் புனித சூசையப்பர் கல்லூரியில் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. புனித சூசையப்பர் கல்லூரியை அடையும் பொழுது பிற்பகல் ஒரு மணி இருக்கும். சுற்றுலாவின் ஏனைய நாட்களில் நடைபெற்ற விருந்துகளைப் போன்று அன்றும் எல்லாம் சிறப்பாக அமைந்திருந்தன என்று அதில் பங்கு பற்றினேர் சுறினர். புனித சூசையப்பர் கல்லூரியில் நடை பெற்ற விருந்தில் நாம் கலந்து கொள்ளவில்லை. நானும் மனைவி மக்களும் இந்தோனேசியாவிலிருந்து வந்திருந்த ஜனுப்

உழவுக்குப் பயணுகும் உயர்ந்த கல்லணை 349 சுல்தான் மரிக்காரும் ஜமால் முகம்மது கல்லூரியில் நடை பெற்ற பகற்போசன விருந்தில் கலந்து கொண்டோம். ஜமால் முகம்மது கல்லூரி அதிபரால் அளிக்கப்பட்ட அவ் விருந்தில் அக்கல்லூரி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அவ் விருந்தில் கலந்து கொள்ளுமாறு எமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை எம்மால் எவ்விதத்திலும் நிராகரிக்க முடிய வில்லை. பேராசிரியர் சி நெய்னர் முகம்மது அவர்களின் விடா முயற்சியே அதற்குக் காரணமாகும். s
கல்வியைப் பரப்புவதற்காகப் பாரெங்கும் பரவியுள்ள வர்கள் யேசு சபைத் துறவியர்கள். அவர்களால் பல்வேறு பகுதிகளில் பாடசாலைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய கல்லூரிகளுள் ஒன்று திருச்சியில் உள்ள புனித சூசையப்பர் கல்லூரி. முதன் முதலில் கல்லூரி பழங்கலை களைப் போதிக்கும் பள்ளிக்கூடமாக 1844 ஆம் ஆண்டில் நாகபட்டினத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அப்பள்ளிக் கூடம் கல்லூரியாக மாறியது 1866 ஆம் ஆண்டில் பூர ணத்துவம் பெற்ற ஒரு கல்லூரியாக சென்னைப் பல்கலைக் கழகத்துடள் இணைக்கப்பட்டது சில ஆண்டுகளுக்குப் பின் னர் தமிழகத்தின் நடுநிலையமாக விளங்கும் திருச்சிராப் பள்ளிக்கு அக்கல்லூரி மாற்றப்பட்டது. இப்பொழுது புனித சூசையப்பர் கல்லூரி 120 ஆண்டு வரலாற்றைக் கொண்டு இந்தியாவிலே உள்ள பழம்பெருங் கல்லூரிகளுள் ஒன்ரு கத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
கிறிஸ்தவ சமூகத்தினரின் நன்மைக்காக அமைக்கப் பட்ட தெனினும் புனித சூசையப்பர் கல்லூரி எப்பொழு தும் தேசீய அபிலாஷைகளை நிறைவேற்றும் கலைக்கோவி லாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. பல்வேறு சமூகங்களைக் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் புனித சூசையப் பர் கல்லூரியில் படித்துப் பயன் அடைந்துள்ளனர். அ4

Page 181
35O நெஞ்சில் நிலைத்த சுறறலா
கல்லூரியில் கற்றுத் தேர்ந்தவர்கள் பலர் இன்று பல்வேறு துறைகளிலே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தாய் நாட் டுக்காகப் பணிபுரிந்து வருகின்றனர். அத்தகையோருள் தமிழகத்துக்குப் புகழ் தேடித் தந்த காலஞ் சென்ற எல். டி. சுவாமிக் கண்ணுப்பிள்ளை அவர்களைக் குறிப்பிடலாம். அவர் மொழியியல் துறையிலும் பரிபாலனத்துறையிலும் ஒருங்கே சிறந்து விளங்கியவராவார்.
தமிழகத்திலே சென்னைக்கு அடுத்ததா புனித சூசை யப்பர் கல்லூரி மாத்திரமே கடந்த 50 ஆண்டுகளாக மாணவர்கள் பல துறைகளில் முதுகலைப்பட்டம் பெறும் வாய்ப்பை அளித்து வந்துள்ளது. கல்லூரி இயங்கும் நாளில் அங்கு செல்வோருக்கு ஆரம்பப் பள்ளியிலும் உயர்தரப் பள்ளியிலும் 2000 மாணவர்கள் கற்பதையும் பல்கலைக்கழகி வகுப்புக்சளில் 2000 பட்டதாரி மாணவர்கள் பயில்வதை யும் காணக் கூடியதாக இருக்கும். அங்கே விடுதி ിa யங்கள் மூன்று உண்டு. அம்மூன்று விடுதி நிலையங்களிலும் 1500 மாணவர்கள் தங்கி இருக்கின்றனர். புனித சூசை யப்பர் கல்லூரியின் விளையாட்டுத் திடல் மிக விசால மானது. பல்லாயிரக்கணகான தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய நூல்நிலையம் ஒன்றும் அங்கு உண்டு. அக்கல் லூரியில் அவைக்களம் ஏறக்குறைய 2000 பேர் அமரக் கூடிய வசதிகளைக் கொண்டு விளங்குகிறது. அங்குள்ள பழம்பொருள் காட்சி நிலையம் மக்களைக் கவரும் ஆற்றல் உடையதாகத் திகழ்கிறது. அரும்பெரும் பொருள்கள் பல அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
புனித சூசையப்பர் கல்லூரியில் பாற் பண்ணை ஒன்றும் உள்ளது. அரசாங்கக் கமத்தொழில் பிரிவினரால் விதந் தோதப்பட்ட ஒரு பண்ணையாக அது விளங்குகிறது. கொதிச் சிற்ப முறைக்குச் சிறந்தோர் எடுத்துக் 8Sn L.L— fT

தென்னகத்தின் அலிகார் 35
கக் கல்லூரி கோவில் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அக் கத் தோலிக்க கோவிலைக் கட்டி எழுப்புவதில் பெரிதும் பங்கு கொண்ட சிற்பி தமிழ் நாட்டையே தாயகமாகக் கொண்டி வராவர். காலஞ்சென்ற சவரிமுத்துப்பிள்ளை அவர்களே அத்தசைய பெருமைக்கும், புசழுக்கும் உரிய சிற்ப மேதை a 'Teifr.
49
656ÖT GOTööjar 9665Tf
"ஒரு பல்கலைக்கழகத்தின் நோக்கம் பட்டதாரிகளை உற்பத்தி செய்வது மாத்திர மன்று. ஆற்றல் அற்ற பல பட்டதாரிகளை உலகுக்கு அளிப்பது தான் முக்கியமான தாகும். பல்சலைக்கழகக் கல்வியை விரும்பும் அனைவருக்கும் அத்தகைய கல்வி எளிதாகப் பெறக் கூடியதாக இருத்தல் வேண்டும். எனினும் ஒரு பல்கலைக் கழகம் அதன் பெரு மையை நிலைநாட்டுவதையே விரும்பின் சிறந்த பட்ட தாரிகளைத் தோற்றுவிப்பதையே பிரதானமான குறிக்கோ ளாகக் கொள்ளுதல் வேண்டும்?? 1967 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 13ஆந் திகதியில் இக்கூற்றை வெளியிட்டவர் வேறு யாருமல்லர் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பத்ம விபூஷண சர். எ லக்ஷ்மண சுவாமி முதலியார் அவர்களே யாவர். அப்பொழுது அவர் திருச்சிராப்பன் ளிக்கு வந்திருந்தார். திருச்சியில் அமைந்துள்ள ஜமால் முகம்மது கல்லூரியில் பதிஞருவது ஆண்டு நிறைவு விழா

Page 182
352 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
வில் கலந்து கொள்வதற்காகவே அங்கு வந்திருந்தார் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்புரைக்குப் பதிலளிக்கும் பொழுது சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மேற் கூறியவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தம் கருத்தைச் செயல்படுத்தும் முகமாகத் தமிழ் நாட்டில் உருவாக்கப் பட்டுள்ள கல்வி நிலையங்களுள் ஒன்று திருச்சிராப்பள்ளி ஜமால் முகம்மது கல்லூரி.
"இறைவா, எங்களுக்கு நேரான பாதையைக் காட்டு வாயாக" என்பதைக் குறிக்கோளாகக் கொள்ள, இயங்க அமைக்கப்பட்டது ஜமால் முகம்மது கல்லூரி. இதற்குச் சமமான "இஹ்தி நஸ்ஸிருத்தல் முஸ்தத்கீம்" என்னும் அறபுச் சொற்ருேடர் பாத்திஹா சூரு என்னும் முதலாம் அத்தியாயத்திலே திருக்குர் ஆனிலே இடம் பெற்றுள்ளது. இந்த அறபுச் சொற்குெடர் இடம் பெறறுள்ள அம்ஹம்து சூருவைத் தொழுகையை நிறைவேற்றும் ஒவ்வொரு முஸ்லிமும் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு பதினேழு முறையாவது ஒதுவர் பொருள் கனிந்த இத்தகைய இனிய சொற்ருெடரையே ஜமால் முகம்மது கல்லூரி அதன் உயரிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது. பல்லாயிரக் கணக்கான வழி தடுமாறும் இளைஞர்சளுக்கு அறிவு ஒளி நல்கி நல்வழி காட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ் கின்றது ஜமால் முகம்மது கல்லூரி.
இன்றைய ஜமால் முகம்மது கல்லூரி ஆரம்பமாகிப் பதினேழு ஆண்டுகளே சென்றுள்ளன. எனினும் அதன் வரலாறு அதனைவிடச் சற்றுப் பழமையானது. 1918 ஆம் ஆண்டளவில் சென்னையில் ஜமாலியா அறபிக் கல்லூரி இயங்கி வந்தது. அப்பொழுது அதன் முதல்வராக அல் ஹாஜ் மெளலவி முகம்மத் மதார் சாகிப் அவர்கள் கட மையாற்றி வந்தார். அவரும் ஏனைய மார்க்க மேதைகளும்

தென்னகத்தின் அலிகார் 353
கூடி இஸ்லாமியக் கலையையும் பண்பாட்டையும் வளர்க்கும் பொருட்டு ஓர் இயக்கத்தினை தோற்றுவிக்க முற்பட்டனர். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வாரி வழங்கும் பெருந்தன்மை படைத்த வள்ளல்கள் இம் முயற் சிக்கு ஆக்கம் அளித்து ஊக்கம் ஊட்டினர்.
திருச்சியின் கொடை வள்ளலான ஜஞப் நா. முகம் மது மியான் ருவுத்தர் அவர்கள் அதற்கென 120 ஏக்கர் பரப்புடைய நிலப்பரப்பை வழங்கினர்கள், சீதாக்காதியின் வழித்தோன்றலான, இல்லையெனது வழங்கும் அல்ஹாஜ் ஜமால் முகையதின் சாகிப் அவர்கள் அழகியதொரு கட்டடத்தைக் கட்டிக் கொடுத்தார்கள். கதியற்ற அணு தைகளுக்கு உணவும் உடையும் உறையுளும் கொடுத்து அறிவும் நல்கும் அனுதை இல்லமும் ஆரம்பப் பள்ளியும் அமைக்கப்பட்டன. மத அறிவும் போதிக்கப்பட்டு வந்தது. இவை அனைத்தும் அன்று மஜ்லிசுல் உலமா இயக்கம் திருச்சியில் குறைவற நிறைவேற்றி வந்தது. ஆரம்பப்பள் ளியை முடித்து வெளியேறும் மாணவர்கள் மேற்படிப்புக்கு வழியற்றுத் திண்டாடினர். அன்று நிலம் வழங்கிய அதே பிரமுகர் கல்லூரி ஒன்றன் இன்றியமையாமையை மஜ்லிசுல் உலமாக் குழுவினருக்கு வற்புறுத்தினர். இளைஞர் தம் கல்விக்கே முக்கியத்துவம் அளித்த அல்ஹாஜ் ஜமால் முகம் மது சாகிப் அவர்கள் இதனை வரவேற்ருர், yist ap எல்லையில் தமிழகக் கல்வி நிபுணர் டாக்டர் அப்துல் ஹக் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றது. அன்று புனித ரம்ழான் மாதத்து லைலத்துல்கத்ர் உடைய நாள் அப்புனித நாளன்று நண்பகல் 1951 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆந் திகதி அன்று டாக்ட்ரி அப்துல் ஹக் அவர்களால் கல்லூரி ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆளுல் வள்ளல் ஜமால் முகம்மது அவர்கள் அதற்கு முன்னம்

Page 183
354 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
இறையடி சேர்ந்துவிட்டார். எனவே வள்ளல் ஜமால் முகம்மது அவர்களின் பெயராலேயே அக்கல்லூரி வழங்கப் படல் வேண்டும் என்று அனைவரும் விரும்பிஞர்கள். அன்று நடைபெற்ற அங்குரார்ப் பண விழாவுக்கு சென்னை மாநில முன்னை நாள் ஆளுநர் பவதி கீர் மகாராஜா அவர்கள் தலைமை தாங்கினர். அப்போதைய முதல் அமைச்சர் மாண்புமிகு குமாரசாமிராஜா அவர்கள் கல்லூரியைச் சம்பிரதாய முறைப்படி திறந்து வைத்தார்கள் .
ஆரம்பத்தில் 240 மாணவர்களே அங்கு சேர்ந்து பயின்றனர். இவரிகளுக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தோர் பேருதவி புரிந்து வந்தனர். அப்பொழுது இடைநிலை வகுப் பான எல்லாப் பாடங்களும் கலைமாணி (B. A.) வகுப்பில் பொருளியலிலும் வரலாறும் போதிக்கப்படலாயின. பேரன் புடையோனும் பொருளாளனுமான அல்லாஹ்வின் கருணை யால் ஜமால் முகம்மது கல்லூரி நாளொரு மேணியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வந்தது. இப்பொழுது கலைகள் நிரம்பிய முழுமதியாகத் திகழ்கின்றது. முதுமாணி (M. A.) வகுப்புக்களும் இப்பொழுது நடைபெற்று வரு கின்றன. ஆங்கிலம், தமிழ் அறபு, உருது. இந்தி பிரெஞ்சு முதலிய மொழிகள் பயிற்றப்படுகின்றன. முதுமாணி வகுப் புக்களுக்குரிய பாடத் திட்டங்களில் ஆங்கிலம், கணிதம் பெளதிகம் முதலிய பாடங்கள் இடம் பெற்றுள்ளன. 18 ஆண்டுகளுக்கு முன்னர் 240 மாணவர்களுடன் ஆரம் பிக்கப்பட்ட ஜமால் முகம்மது கல்லூரி இன்று 2700 மாணவர்களைக் கொண்டு விளங்குகிறது. தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவரிகளும், ஆப்பிரிக்கா இலங்கை, மலாயா, சிங்கப்பூரி, பிஜி முதலிய வெளிநாடு கண்ச் சேர்ந்த மாணவரிகளும் இங்கு கல்வி பயின்று வரு

தென்னகத்தின் அலிகார் 355
கின்றனர். பல்வேறு துறைகளில் வெவ்வேறு நாடுகளில் தனிச் சிறப்புடன் விளங்குகிருர்கள், இக்கல்லூரியில் பாண் டித்தியம் பெற்றவர்கள். புலமையும் தகுதியும் பெற்றுப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 107 போதஞ ஆசிரியர்கள் அங்கு அறிவுத் தொண்டில் ஈடுபட்டு வரு கின்றனர். மாணவர் வேறு ஆசிரியரி வேறு என்னும் மனப் பான்மைக்கு அங்கு இடம் அளிக்கப்படுவதில்லை அறிவோடு அன்பும் ஊட்டப் பெற்று வருகிறது. ஆசிரியர் மாணவரிடம் அன்பும் ஆதரவும் பரிவும் பாசமும் காட்டிப் பழகும் பால் குக்கே அங்கு முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது என்பதும் சண்டுக் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலே முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்கு அரும் பாடு பட்டவர் சர். செய்யது அகமத் கான் அவர்கள் அம் மறுமலர்ச்சிக்கு முன்னுேடியாகத் திகழ்ந்தவர்களுல் முதன்மையானவர் அவர். வட இந்தியாவிலே அலிகாரி பல்கலைக்கழகத்தை நிறுவி இந்திய முஸ்லிம்களின் கல்விக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர். வட இந்தியாவில் எவ் வாறு அலிகார்பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறதோ அவ் வாறே தமிழகத்தில் ஜமால் முகம்மது கல்லூரி அமைற் துள்ளது எனலாம். தென்னகத்தின் அலிகார் என்பதனைக் கூறினும் அது பொருந்தும், வடக்கே வாழ்ந்த சர். செய் யது அகமத்கானைப் போன்று தெற்கே ஜமால் முகம்மது கல்லூரியை உருவாக்கி வளர்த்து வருபவரி அல்ஹாஜ் எம்.ஜே. முகம்மத்சயீத் M.A.L.T. அவர்களாவார். அக்கல் அலுரரி தோன்றிய காலத்திலிருந்து அதன் முதல்வராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிருர். அருந்தொண்டு புரிந்து வருகின்றர். அவர் அறிவிற்சிறந்தவர். ஆற்றல் மிக்கவர். உறுதியும் ஓயாது உழைக்கும் திறமையும் உடையவர். உவமையிலா ஒருவளிடத்தில் திடமாக நம்பிக்கை கொண்ட

Page 184
356 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
வர். உலகியல் அறிவும் சமய ஞானமும் ஒருங்கே அமையப் பெற்றவர். மத அனுஷ்டசனங்களைத் தவழுது நிறைவேற்றி வருபவர். மத நம்பிக்கையும் மார்க்க அறிவும் மாண வருக்கு இன்றியமையாதன என்ற கொள்கையை உடைய வர். மாணவர் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு இஸ் லாமியச் சின்னங்களாகத் திகழ வேண்டுமென எண்ணங் கொண்டவர். இதற்கென குர்ஆன் மஜ்லிஸ் என ஒரு மன் றம் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அம் மன்றத்தில் மாண வர் பங்கு பற்ற வேண்டிய வழிவகைகள் செய்யப்பட் டுள்ளன. வியாழக்கிழமைகள் தோறும் திருக்குர் ஆன் மஜ்லிஸ் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அவ்வப்போது அறிஞர்கள் அங்கு சொற்பொழிவுகள் நிகழ்த்துவர் அவை மாணவருக்கு பயனுடையனவாய் அமைந்துள்ளன. ஞாயிற் றுக்கிழமைகளில் தப்லீக் இஜ்தீமா என்னும் மார்க்க போது னைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அத்திருக்குர் ஆன் மன்றம் இஸ்லாமியக் கொள்கைகளை விளக்கும் பொருட்டு சிறு பிரசுரங்களை அவ்வப்போது வெளியிட்டு இலவசமாக அளித்து வருகிறது. அத்தகைய பிரசுரங்கள் மாண வருக்கு மட்டும் அல்லாது ஏனையோருக்கும் பயனுடையனவாக அமைந்துள்ளன.
முஸ்லீம் மாணவரி தமது மத அனுஷ்டானங்களைச் செவ்வனே நிறைவேற்றும் முகமாக ஜமால் முகமது கல் லூரி வளவில் அழகியதொரு மஸ்ஜித் (பள்ளி வாசல்) கட் டப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த மார்க்க அறிஞர் மான வருக்கு அங்கு மதபோதனை செய்து வருகின்றனர். ஓய்வு நேரங்களில் மாணவர் அறபு மொழியைக் கற்கும் வாய்ப்பும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொழுகை நோன்பு போன்ற கடமைகளில் மாணவர் கலந்து கொள்ளும் காட் மகிழ்ச்சி ஊட்டுவதாய் அமைந்துள்ளது என்பர். தேசிய

தென்னகத்தின் அலிகார் 357
மாணவர் படையில் ஜமால்முகமது கல்லூரி சிறந்து விளங்கு கிறது. அங்கு பயிற்சி பெற்ற பலர் உயர்ந்த பதவிகளில் அமர்ந்துள்ளனர். இந்தியக் குடியரசின் ராஷ்டிராபதியின் மெய்க்காப்பாளராக பணிபுரிபவரும் ஜமால் முகமது கல் லூரியில் பயிற்றப் பெற்றவரேயாவார். விளையாட்டுத் துறையிலும் ஜமால் முகம்மது கல்லூரி சிறந்து விளங்கு கிறது. என் கடன் பணி செய்து கிடப்பதே என்னும் இலட்சியத்தைக் கொண்ட தொண்டர் படை யொன்றும் அங்கு இயங்கி வருகின்றது. எல்லோரும் பாராட்டும் வகை யில் அத்தொண்டர் படை பணிபுரிந்து வருகிறது.
மாணவரிடையே அமைந்துள்ள கலை நுட்பங்களை வளர்க் கும் பொருட்டுநுண்கலைக் கழகம் ஒன்றும் அமைக்கப்பட் டுள்ளது. நற்பணி புரிந்து வரும் அக்கழகத்தில் பயிற்சி பெற்றேர் இசை அமுதை வாரி வழங்கும் ஆற்றல் உண்ட போராய்த் திகழ்கின்றனர். மாணவர்களின் உடல் நலத் தைப் பேணும் பொருட்டு ஜமால் முகம்மது கல்லூரியில் மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆறு படுக்கை களைக் கொண்டு உள்ளது அம் மருத்துவமனை. அதற்குப் பொறுப்பாக தகுதி வாய்ந்த ஒரு டாக்டர் பணிபுரிந்து வருகிருர், தமிழகத்தில் உள்ள முஸ்லிம் கல்லூரிகளுள் முது மாணி போன்ற வகுப்புக்களை நடாத்தும் ஒரே ஒரு கல்லூரி ஜமால் முகம்மது கல்லூரியேயாகும். தமிழகத்திலே மால் நேர வகுப்புக்களை முதன் மூதலில் ஆரம்பித்த தனியாரி கல்லூரியும் அதுவாகும்.
அமெரிக்க நிறுவணமான டன்போர்த் பவுண்டேஷன் (E30anfort foundation) ga553) auŭ G3Luprnr6ĥiĥuuriřasĉamT அமெரிக் காவில் பயிற்சி பெறச்செய்கிறது அத்தகைய பேராசிரியர் களைத் தெரிவு செய்வதற்காக இந்தியாவில் உள்ள 30

Page 185
358 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்தது. அவற்றுள் ஜமால் முகம் மது கல்லூரியும் ஒன்ருக இடம் பெற்றது. முப்பது கல் லூரிகளிலிருந்து பத்துப் பேராசிரியர்கள் தெரிவு செய்யப் பட்டனர். தொடர்ந்து மூன்ருண்டுகளாக பேராசிரியர் மூவரை பயிற்சிக்காக அமெரிக்காவுக்கு அனுப்பும் பாக்கியத் தைப் பெற்றது ஜமால் முகம்மது கல்லூரி, தென்னிந்தி யாவில் உள்ள இரண்டு கல்லூரிகளைப் போட் பவுண்டேஷன் என்னும் நிறுவனம் (Ford Foundation) தெரிந்தெடுத்தது. அவற்றிற்கு விலை உயர்ந்த நூல்களை அன்பளிப்பாக வழங்கி யது. அத்தகைய நூல்களை அன்பளிப்பாகப் பெறும் இரண்டு கல்லூரிகளில் ஒன்று ஜமால் முகம்மது கல்லூரியாகும்.
ஆரம்பத்திலிருந்தே ஆங்கிலத்தில் கல்வி பெற முற் படும் முஸ்லிம் சிறுவர்கள் அதனை இஸ்லாமியச் சூழ்நிலை யில் பெறுவது இன்றியமையாதது. அத்தகைய நல்ல நோக்கத்தோடு அத்தகைய கல்வியை அளிக்க ஜமால் முகம் மது கல்லூரி ஆங்கிலத்தில் Nursery என்னும் குழந்தை கள் ஆரம்பப் பள்ளி ஒன்றும் 1968 இல் ஆரம்பிக்கப்பட் டது. அது சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. கண்ணைக் கவரும் பழம் பொருட்காட்சிச்சாலை (Museum) ஒன்றும் அங்கு உள்ளது. அக்காட்சிச்சாலையைப் போய் பார் வையிட்டபொழுது எனது உள்ளத்தைப் பறிகொடுத்து விட் டவன் போல் ஆனேன். உயிரியல் ஆராய்ச்சிக்காக அமைந் திருந்தது அக் காட்சிச்சாலை. உயிரற்று உயிரினங்கள் உயி ருள்ளன போல் அமைக்கப்பட்டிருந்த காட்சி உள்ளத்தை கொள்ளை கொள்ளும் ஆற்றல் உடையதாய் விளங்குகிறது. தேர்ச்சி பெற்ற கலைஞர் தம் கைவண்ணம் எம்மை வியப்பில் ஆழ்த்தி விட்டது.
வட இந்தியாவிலே தோன்றிய அலிகார் பல்கலைக் கழ கம் இஸ்லாமிய ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தது. ஆனல்

மஞ்சு விரட்டு 359
இன்று அது சற்று மங்கிவிடுமோ என்று சிலரிடையே ஐயம் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய ஒளியைப் பரப்பும் பணியில் இப்பொழுது "தென்னுட்டின் அலிகார்’ என அழைக்கப்படும் ஜமால் முகம்மது கல்லூரி முன்னணியில் நிற்கிறது எனக் கூறின் அது மிகையாகாது. இன்னும் பல சாதனைகளைச் சாதித்து ஜமால் முகம்மது கல்லூரி வளர்ந்தோங்க எல் லாம் வல்ல அல்லாகுத்தஆலா பேரருள் புரிவானுக.

Page 186
50 மஞ்சு விரட்டு
மனிதனுக்கு ஒப்வு இன்றி பமையாதது. எனினும் இத் தகைய ஓய்வு பயனுடையதாய் இருத்தல் அவசியம. அவ் வாறு ஓய்வு நேரத்தைப் பயனுடையதாய் அமைத்துக் கொள்வதற்கு பலரும் பல முறைகளை மேற்கொள்வர். பற் பல விதத்தில் பொழுதுபோக்குவர். ஒய்வுநேரத்தை கழிக்கச் சிலர் உலாப் போதலை மேற்கொள்வர். /உலாத்தச் செல்வ தளுல் உடல் உறுதியும் வலுவும் மடையும். வேறு சிலர் தமக்குப் பெரிதும் ஈடுபாடுள்ள புத் தகங்களை வாசிப்பதில் ஈடுபடுவர். அதனுல் அத்தகையோரின் அறிவுப்பசி அகன்று விடும். மற்றுஞ் சிலர் பறவைகளை அவதானிப்பதில் தமது ஓய்வு நேரத்தைக் கழிப்பர். அது அவர்தம் இயற்கையில் உள்ள ஈடுபாட்டை வளர்ச்சியுறச் செய்யும். இன்னுஞ் சிலர் நுண்கலைகளில் அக்கறை காட்டுவர். இசையில் திளைத்திருப் பர், சித்திரந் தீட்டுவதில் முனைந்திருப்பர். நடன நிகழ்ச்சி களில் தம்மை பறிகொடுத்திருப்பர், நாடகங்களைப் பார்த்து மகிழ்வதில் சொக்கிப்போயிருப்பர். பேசும் படம் காண்பதில் ஆர்வம் காட்டி உள்ளம் பூரிப்படைவர். பொழுது போக்குக் கான ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களாய் இருப்பர். ஒய்வு நேரத்திலும் கூட சும்மா இருக்க விரும்புவ தில்லை. வாளாகாலத்தைக் கழிக்க விரும்புவதில்லை. ஒவ் வொருவரும் ஏதோ ஒன்றில் தத்தம் உள்ளங்களைச் செலுத்

மஞசு விரட்டு 36
திக்கொண்டிருப்பது சர்வசாதாரணமாக நிகழ்வதாகும். தொன்று தொட்டு யாவராலும் பின்பற்றப்பட்டு வரும் ஒரு பழக்கம் இது எனின் அது மிகையாகாது.
அத்தசைய பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் விளையாட் டுக்களை அடக்கலாம். சிலர் விளையாட்டுக்களில் ஈடுபடுவர்" வேறு சிலர் அத்தகைய வி%ளயாட்டுக்களைக் - ண்டுகளிப்பதில் தம் ஒய்வு நேரத்தைக் கழிப்பர். பொதுவாக பக்கள் ஈடு படும் விளையாட்டுக்களாகவே அவை அமையும். ஆனல் சில சமயங்களில் விலங்கு க%ள ஈடு படுத்தி அவற்றை அடக்கி வெற்றி ஈட்டும் நிகழ்ச்சிகளாகவும் விளையாட்டுக்கள் ஒழுங்கு செய்யப்படும் அத்தகைய விளையாட்டுக்களுள் ஒன்று "சல்லி கட்டு' என்று அழைக்கப்படுகிறது; கிரந்த எழுத்தை உபயோகித்து அவ்விளையாட்டு ஜல்லிக் கட்டு என்று அழைக் கப்படுவதும் உண்டு தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டுக் கலாச் சாரச் சுற்றுலாவின் இறுதிநாளான 1968 ஆம் ஆண்டு சனவரி மாதம் 17 ஆந் திகதியன்று திருச்சி மாநகருக்கு விஜயம் செய்த மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் பார்வை யாளர்களுக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி காண்பிக்கப்பட்டது புனித சூசையப்பர் கல்லூரியில் நடைபெற்ற பகற்போசன விருந்தின் பின்னரே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சியிலே உள்ள காஜாமலை என்னும் இடத்தில் ஜல்லிக் கட்டு நிகழ்ச்சி இடம் பெற்றது. அன்று மாலை மூன்று மணி முதல் நான்கு மணி வரை நிகழுவதாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியைக் கண்டு களிப்பதற்காகப் பல்லாயிரக் கணக்கான மக்கள் அங்கு குழுமி இருந்தனர்.
ஜல்லிக் கட்டு என்றதும் எமது மனக்கண் முன் தோன்றுவது கமலாம்பாள் சரித்திரமாகும். இதன் ஆசிரி பரி பி. ஆரி. ராஜமையார் ஆவார். இது ஒரு நாவல்.

Page 187
962 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
மேலைநாட்டுத் தொடர்பால் தமிழில் வளர்ச்சியுற்றது இது, மேல் நாட்டில் பல்லாண்டு காலமாக வளாந்து வந்த நாவல் இலக்கியம். தமிழ் மொழியிலே அதன் வளர்ச்சி பத்தொன்பதாம் நூற்ருண்டில் ஆரம்பமாகி உள்ளது. நாவல் இலக்கியம் எனத் தாம் கருதியவற்றை அடிப்படை யாக வைத்து மாயூரம் வேதநாயகம் பிள்ளை இரண்டு கதை கள் எழுதினரெனினும் அவை நாவல் இலக்கியத்துக்கான எடுத்துக்காட்டுக்களாகத் திகழவில்லை என்பர். மேட்ைடு மொழிகளில் எழுந்த நாவல்களுடன் ஒப்பிடும் பொழுது வேதநாயகம்பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திர மும் , சுகுணசுந்தரி சரித்திரமும் நாவலின் சிறப்பியல்புகளை இழந்து விடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது என்பர்.
ஆணுல் மேனுட்டில் முதன் முதலில் தோன்றிய நாவல் களோடு ஒப்பிடும் பொழுது பிரதாப முதலியார் சரித் திரத்தைத் தரத்தில் குறைந்தது என்று கூறிவிடமுடியாது. வேதநாயகம் பிள்ளைக்கும் பின்னர் வாழ்ந்தவர் ராஜமையர். எனவே ராஜமையர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் தமி ழில் முதன் முதலில் தோன்றிய நாவல் என்று கூறுவர் ராஜமையர் தமது கமலாம்பாள் சரித்திரத்தில் அந்நாவல் தோன்றிய காலத்து வாழ்ந்த மக்சளின் வாழ்க்கை முறை 8 ளை நன்கு சித்திரித்திருப்பதைக் காணலாம். மனிதவாழ் வும் தத்துவமும் இந்நாவலில் பின்னிப் பிணைந்திருப்பதை யும் காணக்கூடியதாக இருக்கிறது.
இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரும்
பேராசிரியருமான வி. செல்வநாயகம் அவர்கள் தமது தமிழ்
இலக்கிய வரலாற்றில் ராஜ மையரைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிருர் , **வேட்ஸ் வத், ஷெல்லி முதலிய ஆங்கி லப் புலவர்களிடத்தில் ராஜமையருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர்களைப் போலவே ராஜமையரும் சிறந்த

மஞசு விரட்டு 363
கற்பணுசக்தி படைத் தவர் என்பதை அவர் நூல்களிலிருந்தும் அறியலாம். அவருடைய ஆழ்ந்த சிந்தனையையும் கற்பனைச் சிறப்பையும் அவருடைய நாவல் இலக்கியம் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. அது இற்றைக்கு எழுபது ஆண்டு களுக்கு முன் வெளிவந்த போதும் அதற்குப்பின் தமிழில் வெளிவந்த நாவல்கள் எல்லாவற்றிலும் அதுவே சிறந்த நாவல் என மதிக்கப்படுகிறது ."
இத்தகைய நாவலான கமலாம்பாள் சரித்திரத்தில் ஜல்லிக்கட்டு பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. "அந் தப்புர ரகசியங்களும் நிச்சிய தார்த்தமும்’ என்ற பகுதியில் இடம் பெற்றுள்ளது. அப்பகுதியில் சுந்தரம் என்பவன் முத்து ஸ்வாமி ஐயரை ஒரு மாட்டுத்தும்பால் கழுத்தில் கட்டித் தூணில் இழுத்து மாட்டி விட்டான். "அட விட்டு விட டா’ என்ருர் முத்து ஸ்வாமி ஐயர். அகப்பட்டுக்கொண் டாரே என்று பாடத்தொடங்கினுள் கமலாம்பாள். அதற் குள் சுந்தரம் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு "பை, பை டுர்ர்ரி, டுர்ர்ரி, நின்று குத்திக்காளை டுர்ர்ரி’ என்ருன், "நின்று குத்திக்காளை" என்பதையும் டுர்ர்ரி’ என்பதையும் விளக் கவே ராஜமையர் தமது கமலாம்பாள் சரித்திரத்தில் ஜல் லிக்கட்டுப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இவ்விரு சொற் ருெடர்களையும் விளக்க வந்த ராஜமையர் ஜல்லிக்கட்டு என் னும் விளையாட்டையே தமது நாவலில் விளக்கிக் கூறி உள் ளார். அவ்வாறு அவர் அதனை விளக்கி இருக்காவிட்டால் அந்தச் சொற்ருெடர்கள் இரண்டும் அவற்றைப் படிப்போரி பலருக்கு விளங்காமல் போயிருக்கும். வாசிப்போர் உள்ளங் களிலே மயக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். வாசிப்போர் உள்ளங்களில் மயக்கத்தை ஏற்படாதவாறு எழுதுவது நூலா சிரியர் தம் சிறப்பியல்பல்லவா?

Page 188
364 நெஞசில நிலைத்த சுற்றுலா
ஜல்லிக்கட்டு என்பதை மஞ்சு விரட்டு என்றும் கூறுவர். அதனைச் சல்லிக்கட்டு, மஞ்சுவெருட்டு, மஞ்சிவிரட்டு எனப் பலவாருக வழங்குவர். அது ஒரு வீர விளையாட்டாகக் கணிக்கப்படுகின்றது. மஞ்சிவிரட்டு என்பதற்கு "பசுக் கவர் கை’ என்ற பொருளும் உண்டு தமிழகத்தில் நீண்ட நாளாக அவ்விளையாட்டு வழங்கி வருகிறது. பண்டைய "ஏறு தழுவல்" என்னும் பழக்கத்தை ஒட்டி வந்துள்ளது. அத்தகைய ஜல்லிக்கட்டு விழாக்கள் திருச்சிராப்பள்ளி தஞ் சாவூர், இராமநாதபுரம், திருநெல்வேலி முதலிய மாவட் டங்களில் இன்றும் நடைபெறுகின்றன. தெற்கு மாவட்டங் களில் பெரும்பாலும் ஜல்லிக்கட்டு விழாவை மாட்டுப் பொங்கலின் ஓர் அம்சமாகக் கருதிப் பூசை செய்து மக்கள் கொண்டாடுவர்.
புளியநாரை முறுக்கி வளைத்து அதைப்பல நிறச் சாயங் களில் நனைத்துக் காயவைப்பர். பின்னர் அதில் தேங்காய் முடி, பழம், பவுண் அல்லது வெள்ளி மோதிரம் முதலிய வற்றைக் கோத்து, காளையின் கழுத்திலே கட்டி விடுவார் கள். இந்தப் புளியநார் வளையமே சல்லி அல்லது ஜல்லி என அழைக்கப்படுகிறது. காளையின் கொம்புகளைச் சீவிச் கூர்மைப்படுத்திச் சாயம் பூசி விடுவார்கள். நாவல் என்ப தற்கு மஞ்சு என்று மற்ருெரு பெயரும் உண்டு. அதனு லேயே ஜல்லிக் கட்டு மஞ்சு விரட்டு எனவும் அழைக்கப் படுகிறது. மஞ்சுவினுல் (நாரினல்) கழுத்துக் தொங்கல் கட்டப்பட்ட காளைகளை விரட்டுவதால் இவ்விளையாட்டு மஞ்சு விரட்டு எனப் பெயர் பெறலாயிற்று.
சல்லிக் கட்டுத் திருவிழா பெரும்பாலும் மாட்டுப் பொங்கல் அன்றே நடைபெறும் நாம் திருச்சி மாநகருக் குச் சென்றிருந்தது தைத்திருநாட்களிலே என்பதும் ஈண்டு

மஞசு விரட்டு 365
குறிப்பிடத்தக்கது. கிராமப் புறங்களில் உள்ள வீடுகளில் சல்லிக் கட்டு விளையாட்டுக்கென முரட்டு காளைகளை விவ சாயிகள் வளர்ப்பார்கள். சல்லிக்கட்டு விழா நடைபெறு வதற்கு முன்னர் இவ்விழா நடைபெறப் போகிறது என்று ஊர் முழுவதும் பறையயைந்து அறிவிக்கப்படும். காளை களுக்குப் பூசை போடுவதும் உண்டு. அவற்றை அவிழ்த்து விடும்போது பறையறைந்து பலமான ஓசை எழுப்பிக் காளை மாடுகளை வெருண்டோடும் படி செய்வார்கள் அக்காளை மாடுகளைப் பிடிப்பதற்கு வாலிப வீரர்கள் அவற் றின் மீது பாய்வார்கள். பாய்ந்து காளைமாடுகளின் கொம்பு களைப் பிடிப் பார்கள். பிடித்து அக் காளை மாடுகளின் கழுத் தில் கட்டப்பட்டுள்ள சல்லியை (ஜல்லியை) அவிழ்ப்பார் கள். அவ்வாறு எவனுெருவன் ஜல்லியை அவிழ்க்கிருணுே அவனே வெற்றி பெற்றவன் என பிரகடனப்படுத்தப்படு வான். அந்தச் சல்லி வளையத்திலுள்ள பரிசுகள் அனைத் தும் அவனுக்கே உரியனவாகும். அவ்வாறு பிடிபடாது ஒட்டம் பிடிக்கும் முரட்டு மாடுகளும் உண்டு. அத்தகைய முரட்டு மாட்டை அடக்கியவன் இத்துறையில் மிக்க புக ழுடையவன் எனக் கருதப்படுவான். அத்தகைய சிறப்பைப் பெற்றவனுக்கு பிடிபடாத முரட்டு மாட்டை அடக்கியவ னுக்குத் தலை சிறந்த ஒரு பரிசு காத்திருக்கும். ஊர்த்தல் வணின் மகளைத் திருமணம் புரியும் பாக்கியத்தை அத்த கையவன் பெறுவான். இந்தப் பழக்கம் தமிழ் நாட்டுக் கிராமங்களில் முற்காலத்தில் இருந்து வந்தது. இன்று அத்தகைய பழக்கம் நடைமுறையில் இல்ல. ஜல்லிக்கட்டு வி%ள பாட்டு இப்பொழுது சல்லிப் பரிசோடு முடிவடைகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜா ம ைநாவல் பட்டு, கூத்தப்பார், புதுக்கோட்டைக் கோட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள் முதலிய இடங்களில் சல்லிக் கட்டு விழா ஆண்டு

Page 189
・366 கிநஞசில் நிலைத்த சுற்றுலா
தோறும் நடைபெறுகின்றது. மிகுந்த கோலாகலத்தோடு நடைபெற்று வருகிறது. பட்டிக்காட்டு மக்களுக்கு ஒரு பெரிய திருவிழாவாகக் காட்சி அளிக்கும் ஆதலால் ஜல்லிக் கட்டு விளையாட்டுப் பார்ப்பதற்கு ஆபிரக்கணக்கில் மக்கள் வந்து கூடுவர். என்ன வேலையிருந்தாலும் அவற்றை எல் லாம் விட்டுவிட்டு அங்கு வந்துவிடுவார்கள். அங்ங்ணம் அங்கு வந்து கூடும் மக்கள் கூட்டத்தைப் பற்றி நகைச் சுவை ததும்ப ராஜமையர் தமது கமலாம்பாள் சரித்திரத் தில் வருணித்துள்ளார். அவருடைய வருணனையை அவர் வாயிலாகவே கேட்போம்
*சந்தனப் பூச்சுக்களென்ன, மருக்கொழுந்து மலைக ளென்ன, சிவப்பு உருமால்களென்ன (உருமால்-தலைப்பாகை) கோடி வேஷ்டிகளென்ன, இவ்வித சம்பிரமங்களுடன் விரல் களிளெல்லாம் வெள்ளி மோதிரங்களை அணிந்து கொண்டு கையில் சோட்டாத் தடிகளுடன் திரள் திரளாகப் புறப் பட்டு வந்து மரக் கொம்புகள் வண்டிக்கூடுகள், வீட்டுக் கூரைகள், மதிற்புறங்கள், ரஸ்தாப் பாதைகள், எங்கும் ஏராளமாய் நிறைந்து விடுவார்கள். புருஷர்களுக்குத் தான் இந்த உற்சாகம் என்று நினைக்க வேண்டாது. ஸ்தீரீகளும் கூர்மையான மூக்குள்ள மனிதர்களைக் கூப்பிடு தூரத்திற் கப்பால் துரத்தத்தக்க மஞ்சளெண்ணெய், வேப்பெண் ணெய் முதலிய வாசனைத் தைலங்களைத் தடவிக் கொண்டு செவ்வந்தி மாலை, புதுப்புடவை, பாசிமணி, பட்டோலே முதலிய சர்வாபரண பூஷிதராய் புருஷருடன் வேற்றுமை தெரியாது வந்து நெருங்கி விடுவார்கள்".
அத்தகைய மாடுகளுள் கூட்டத்தைக் கண்டு வெருண்டு ஓடாமல் நின்று பாயும் மாட்டிற்கு "நின்று குத்திக் காளை" என்று சொல்லுவது வழக்கம். விசேட சந்தோஷத்தை

மஞ்சு விரட்டு 67
உண்டு பண்ணக்கூடிய நின்று குத்திப் பாயும் மாடு ஒன்று வந்து விட்டால் மூலைக்கொருவராய் அதை டுர்ர்ரி, டுர்ர்ரி கூவிக் கோபமூட்டி வேடிக்கை செய்வார்கள். கமலாம்பாள் சரித்திரத்தில் சுந்தரம் என்பவன் கூறிய சொற்களை விளக் கவே ஜல்லிக் கட்டு விளையாட்டை ராஜமையர் விளக்கி புள்ளார். தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் கலாச்சாரச் சுற் றுலாவின்போது காட்டப்பட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டை யும் கண்டு களிக்கப் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு வந்து கூடினரி. ஆனல் அன்றைய ஜல்லிக் கட்டு விளை பாட்டு அவ்வளவாகச் சோபிக்கவில்லை என்றே கூறலாம்.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாகரீகம் அடைத் திருந்தது கிரீட் தீவு. மத்தி பச ரைக் கடலில் உள்ள அந்தத் தீவில் மிகப் பண்டைய காலத்தைப் பிரதிபலிக்கும் ஓவி யங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கே ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இளம் ஆண்களும் பெண்களும் *ாக்ளமாட்டுப் போரில் கலந்து கொண்டனர் என்று அந்த ஓவியங்கள் குறிப்பிடுகின்றன ஸ்பெயின், போர்த்துக்கல், மெக்சிக்கோ முதலிய நாடுகளில் காளை மாட்டை அடக்கும் போர் முக்கியமான ஒரு தேசீய விளையாட்டாகவும் பொழுது Gu Très fosib * a Lu T s Tayub ) ir pyb 5 20-G u hp av i u F0 s iš காணலாம்.

Page 190
51 இசைக் கோலம்
சங்ககாலப் பகுதியில் நடனமும் இசையும் மிக்க வளர்ச்சியுற்றிருந்தன. மக்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் ஆடல் விரவி இருந்தது, பழைய தமிழக மக்களில் வாழ்க்கையுடன் இசை இரண்டறக் கலந்திருந்தது. இசை, என்னும் செல்லிற்கு, 'இசை விப்பது "வசப்படுத் துவது' எனப் பொருள் கொள்ளலாம். மரம், செடி. கொடி முதலிய ஓரறிவு உயிர்கள் முதலாக மக்கள் என்னும் ஆறறிவு உயிர்கள் வரையுள்ள எல்லா உயிர்களையும் இசை வசப்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். உயிரில் லாத கல், மண், காற்று, நீர் முதலிய பொருள்களையும் பாடுவோரின் கருத்தோடு இசைத்து இயங்கச் செய்யும் ஆற்றல் இசைக்கு உண்டு என்பதையும் தமிழர் உணர்ந் திருந்தனர்". இசை பற்றிய இக்கருத்துக்களை வெளியிட் டுள்ளவர் வேறுயாருமல்லர். பேராதனை இலங்கைப் பல் கலைக் கழகத் தமிழ்த் துறைத் துணைப் பேராசிரியர் கலா நிதி க. வித்தியானந்தன் அவர்களேயாவர். தமது தமிழர் சால்பு என்னும் நூலில் "கல்வியும் கலைகளும்’ என்னும் அத்தியாயத்தில் இசைபற்றி குறிப்பிடுகையில் அவர் அவ்

இசைக் கோலம் 369
வாறு குறிப்பிட்டுள்ளார். உயிருள்ளனவும், உயிரற்றனவு
மான அனைத்தும் இசையில் எவ்வாறு மயங்கி விடுகின்றன என்பதைச் சங்ககாலப் பாக்களை எடுத்துக் காட்டித் தமது நூலில் விளக்குகிருர் கலாநிதி வித்தியானந்தன் அவர்கள்
குறிஞ்சி நில மகள் ஒருத்தி தழைத்து நீண்ட கூந் தலைப் பெற்றிருந்தாள். அத்தகைய தனது கூந்தலைக் கையாற் பெயர்த்துக் கோதினுள். கோதிக் கொண்டு பெரிய மலையின் பக்கத்தே சென்ருள். சென்று குறிஞ்சிப் பண்ணைப் பாடிக்கொண்டு நின்ருள். அப்பொழுது திணைப்புலத்துக்கு யானை ஒன்று வந்திருந்தது. அங்குள்ள கதிரினை அந்த யானை மேய்ந்து கொண்டிருந்தது. குறிஞ்சிப் பாட்டைக் கேட்ட தும் அந்த யானை அந்தப் பாட்டில் மயங்கி விட்டது. தான் கொண்ட தினைக் கதிரினையும் உட்கொள்ளாது நின் றது. நின்ற நிலையில் நின்றும் அகலாது நின்றது. தூக்கம் வரப்பெருத அந்த யானையின் கண்கள் துயிலைப் பெற்றன. விரைவாக உறங்கியது. இக்கருத்துக்கள் அகநானூற்றிலே இடம் பெற்றுள்ளது.
ஒலியல் வார்மயிர் உளரினண் கொடிச்சி பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக் குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது படா அப்பைங்கண் பாடுபெற்முெய்யென மறம்புகல் மழகளிறுறங்கும்.
1967 ஆம் ஆண்டு திசம்பரி மாதம் 21 ஆந் திகதி சென்னை ராஜா அண்ணுமலை மன்றத்தில் தமிழிசை வெள்ளி விழா நடைபெற்றது. அப்பொழுது இந்தியாவின் மகா தேசாதிபதியாகக் கடமையாற்றிய பூரீ.சி.இராஜகோபாலாச் சாரியார் அவர்கள் தொடக்கவுரை வழங்கினர். அவர்

Page 191
370 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
தமது தொடக்கவுரையில் இசைக்கு அடிப்படை பக்தியா கும். ஏணி எவ்வளவு தான் மேலே சாய்ந்திருந்தாலும் அதன் அடிக்கால் தரையில் நன்ருய் ஊன்றி இருக்க வேண் டும். பக்தியில்லாத இசை கோயிலில் கர்ப்பக் கிரகத்தில் லயிக்காமல் கட்டட நேரித்தியில் நிற்பதை ஒக்கும்’ என்று இசையின் மூலாதாரத்தை விளக்கியுள்ளார். அன்று தலை மையுரை வழங்கியவர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு அறிஞர் அண்ணு அவர்களாவார்.
அண்ணு தமது தலைமையுரையில், "ராஜாஜி அவர்கள் கடவுள் பக்தி இருந்தால் தான் சங்கீதம் வரும் என்கிருர் கள் . சாதாரண மனிதர்களோடு தொடர்பு கொள்வதி லேயே பெருமைப்படும்போது இறைவனிடத்தில் தொடர்பு கொள்ள யாருக்கும் விருப்பம் இருக்காதா?" என்ற விஞவை எழுப்பினர்கள். தமிழகக் கல்வி, தொழில் துறை அமைச் சரி மாண்மிகு திரு. இரா. நெடுஞ்செழியன் அவர்கள் அன்று வெள்ளி விழா மலரிண் வெளியிட்டுச் சிறப்புரை வழங்கினர் • அப்போது அவர் இசையின் இலக்கணத்தை வகுத்துக் காட்டிஞர். "செவி வழி புகுந்து இதய நாடிகளைத் தடவி மக்களை இசைய வைககின்ற பொழுது தான் இசை என்று பெயர் பெறும். செவியளவு மட்டுமேயென்ருல் அதற்குப் பெயர் ஒசையாகுமே தவிர இசையாகாது. இசை என்பது உள்ளத்தைத் தொடவேண்டும். உள்ளத்தைத் தொட வேண்டுமானல் தாய்மொழிதான் உள்ளத்தைத்தொடும் வேறு எந்த மொழியும் தொடாது. இசை அவரவர் தாய் மொழியில் அமைந்து, மிகச்சிறப்பாக, செம்மைப் பாங்குடன் திகழ்ந்தால் அது மக்கள் மனதில் மகிழ்ச்சியினைத் தோற்று விக்கமுடியும்" என்று விளக்கினுர்.
அன்றைய நாள் N. சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்தது "இசைப் பேரறிஞர் என்னும் பட்டம் வழங்கப்பட்டமை

இசைக்கோலம் 37
யேயாகும். வழங்கப்பட்டவர் திருமுருக கிருபானந்தவாரி யார் அவர்களாவார். சென்னைத் தமிழ் இசைச் சங்கத்தா' ரால் அப்பட்டம் வழங்கப்பட்டது. திருமுருக கிருபாணந்த வாரியார் அவர்கள் அன்று ராஜா அண்ணமலை மன்றத்தில் ஆற்றிய நன்றியுரையில் தமிழின் மும்மைச் சிறப்பைத் தெளிவாக விளக்கிக் காட்டினர்கள். "தமிழ்’ என்ற சொல் மூன்று எழுத்துக்களைக் கொண்டது. முதல்எழுத்து "த" வல்லி னம்' இடையில் உள்ள “மி” மெல்லினம்; இறுதியிலுள்ள "ழ்" இடையினமாகும், இவ்வாறு எழுத்துக்களை இனம்பிரித்துக் கண்டவனே தமிழன்தான். வல்லினம் வலிமை மிக்க ஆண்களையும் மெல்லினம் மென்மைமிக்க பெண்களையும் இடையினம் இவ்விருவர் இடைப்பட்ட குழந்தைகளையும் குறிப்பதாகும். சத்து வல்லினம், சித்து மெல்லினம் ஆனந்தம் இடையினம். சத்து இறைவன், சித்து இறைவி" ஆனந்தம் குமரன். சத்து இயல், சித்து இசை, ஆனந்தம் நாடகமாகும். என்று கூறுகிருர்கள்.
இங்ங்ணம் பல்லோராலும் பல்வேறு விதமாகப் புகழப் படுவது இசை. இத்தகைய இசையை மாணவர்களுக்குப் பயன்படும் முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தைச் சிலம்புச் செல்வர் திரு. ம. பொ. சிவஞான கிராமணியார் 21, 12. 67 இல் சென்னைத் தமிழ் இசைச் சங்கத்தின் பண் ஆராய்ச்சியின் பதினெட்டாவது கூட்டத் தில் தெரிவித்தார். அவர் அன்று கூறியதாவது, "மாணவர் உலகில் அமைதியின்மை அதிகரித்து வரக்காண்கிருேம் இதற்கு நியாயமான காரணங்கள் இருப்பினும் அந்தக் காரணங்கள் கூடி அவர்களை. நாட்டின் எதிர்காலச் செல் வங்களை-அராஜகத்தில் கொண்டு செல்லக் கூடாது என்பது எனது கொள்கை. ஆகவே மாணவர்கள் உள்ளங்களைப் பண்படுத்தப் பண்ணுேடிசைந்த பாடல்களைப் பாடும் பயிற்

Page 192
372 இசைக் сстав
சியை அவர்களுக்கு அளித்தால் அது பயன் தரும் என்று நம்புகிறேன். உயர்நிலைப் பள்ளிகளிலும் உடற்பயிற்சி ஒரு பாடமாக இருப்பதுபோல், உளப்பயிற்சிக்கும் பயன்படும் இசையும் ஒரு பாடமாக்கப்படல் வேண்டும்.
மாணவர்களிலேயே ஒவ்வொருவரும் அவர்கள் கல்வி முடியும் காலத்தில் இசையில் ஆரம்பப் பயிற்சியேனும் பெற்றிருக்க வேண்டும். ஆம் உண்மையிலேயே மாணவர் நலனில் அக்கறை கொள்ள வேண்டியவை ம.பொ.சி. அவர் களின் கருத்துக்கள். 1968 ஆம் ஆண்டு சனவரி மாதம் 17 ஆந் தேதி அன்று திருச்சிக்கு விஜயம் செய்தவர்களுக் கென ஒழுங்கு செய்யப்பட்ட மாலை நிகழ்ச்சி என்னை இவ் வாறு சிந்திக்கச் செய்தது.
அன்று மாலை நாலரை மணிக்கு திருச்சி வானெலி நில் யத்தைப் பார்க்கச் செல்வதற்காக ஒழுங்கு செய்யப்பட் டது. அங்கு சென்றதும் எமக்கென சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருந்தது. இசை நிகழ்ச்சி ஒன்று எமது வரவை எதிர் பார்த்திருந்தது. திருச்சிராப்பள்ளிக்கு வானெலி மன் றத்தினர் இசைக்கோலம்’ என்னும் நிகழ்ச்சியைத் தாயரித் தளித்தனர். அந்நிகழ்ச்சி அப்பொழுது ஒலிப்பதிவு செய்யப் பட்டது. கோலம் என்பதை அலங்காரம் என்பர். இசைக் கோலத்தை இசையலங்காரம் என்று கொள்ளலாம்.
தமிழ் நாட்டின் சங்கீத பரம்பரையில் லயத்தின் முக் கியத்துவத்தை விளக்கும் ஒரு தனிச் சங்கீத நிகழ்ச்சியாக இசைக்கோலம் ஏற்பாடாயிருந்தது. தாள அறுதியைலயம் என்பர். தமிழ் இலக்கண மரபுக்கியைய லயம் என்னும் சொல் இலயம் என எழுதப்படுகின்றது. "ஆக்கிய விலய நீங்கிற்று" என்று குறிப்பிடுகின்றது சீவகசிந்தாமணி(1258). இனி திருச்சிராப்பள்ளி வானுெலி நிலையத்துத் திறந்த வெளி

இசைக்கோலம் 373
யரங்கில் நடைபெற்ற இசைக்கோலம் என்னும் நிகழ்ச்சியை நோக்குவோம்.
அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு
இக் குறளினை ஒருவர் முதலில் பண்ணுேடு பாடினர். இரண்டுமுறை பாடினர். பின்னர் இசைக்கருவிகள் ஒவ் வொன்றும் படிப்படியாக அப்காட்டை வாசித்தன. முதன் முதல் ஜலதரங்கம் இசையெழுப்பியது. பல கிண்ணங்களில் பல அளவுகளில் நீர் வார்த்துக் கொண்டு சிறு கழியால் தட்டி வாசிக்கும் ஒரு வாத்தியம் ஜலதரங்கம் எனப்படும் அடுத்து அவ்விசையை வீணை எழுப்பியது. பின்னர் ஆங் கிலத்தில் பிடில் என வழங்கப்படும் நரம்புக் கருவி வகை யால் அந்து இசை எழுப்பப்பட்டது. தொடர்ந்து புல்லாங் குழல் அப்பாட்டை வாசித்தது. அதையடுத்து கிளாரினட் டும் பயன்படுத்தப்பட்டது. கிளாரினட்டைத் தொடர்ந்து நாதஸ்வர இசை. அப்பால் கோர்ட்டு வாத்தியம் முழங்கி யது. தந்தியுள்ள ஒருவகையான விசேட வாத்தியமே கோர்ட்டு வாத்தியம் என அழைக்கப்பட்டது.
இங்ங்ணம் இவற்றைக் கொண்டு அக்குறட்பா பாடப் ப்ட்ட இசை தனித்தனியே வாசிக்கப்பட்டது. பின்னர் அவை அனைத்தும் கூட்டாக அவ்விசையை வாசித்தன. அதன் பின் தவில் கச்சேரி நடைபெற்றது. மிருதங்கம், கடம் கஞ்சிரா, மோர்சிங்கு, கொன்னக்கோல், தபேலா கெத்து முதலிய வாத்தியங்கள் இசை முழக்கம் செய்தன.
யதிகளில் ஒன்று மிருதங்கம். தாளப் பிரமாணம் பத்தனுள் அங்கம் பலவற்றை ஒழுங்கு செய்வது யதி எனப் படும். காலம், மார்க்கம், கிரியை, அங்கம், கிரகம், சாதி

Page 193
374 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
களை,இலயை, யதி, பித்தாரம் என்றதாளத்திற்குரியஉறுப்புக் கள் பத்தையும் தாளப்பிரமாணம் என்பர். குடமுழவு கடம் எனப்படும், கஞ்சிரா என்பது கஞ்ஜன் என்ற உருதுச் சொல்லிலிருந்து மருவியுள்ளது. சிறு கைப் பறைவகை கஞ்சிரா எனப்படும். முகசங்கா’ என்பதே மொர்சிங்கு என அழைக்கப்படுகிறது. இது கன்னடச் சொல்லிலிருந்து தோன்றியதாயிருக்கலாம். வாயிற் பிடித்துக்கொண்டு கையால் தட்டி வாசிக்கும் வாத்திய வகை மோர்சிங்கு எனப்படும். தபல் என்று அறபு மொழியில் வழங்கும் ஒரு வகை மத்தளம் தமிழில் தபேலா என்று வழங்கப்படுகிறது. தவில் என்பதும் ஒருவகை மேள வகையாகும். தவில் என்ற சொல்லும் உருதுச் சொல்லின் திரிபு என்பர்.

59
இருந்தமிழே உன்னுல் இருந்தேன்
அப்பொழுது நேரம் மாலை ஆறரை மணி இருக்கும். இசைக்கோலம் நிகழ்ச்சி முடிவடைந்ததும் திருச்சி வானுெலி நிலையத்தை விட்டுப் புறப்பட்டோம். பொது வரவேற்புக் கூட்டம் நடைபெற இருந்த இடத்தை, மதுரம் பூங்காவை அடைந்தோம். அங்கே நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒருமேsை அமைக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டவர் அனைவரும் அங்கு

Page 194
376 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
அமர்ந்தனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் அங்கு குழுமி இருந்தனர். ஏனைய இடங்களில் சுற்றுலா வின் போது நடை பெற்ற கூட்டங்களைப் போன்று அங்கும் எல்லா ஒழுங்கு களும் பிரமாதமாகத் தயார் செய்யப்பட்டிருந்தன. வர வேற்பு நிகழ்ச்சி முதலில் இடம் பெற்றது.
திருச்சிராப்பள்ளி 8, மேலரண்சாலை என்னும் இடத்தில் நிறுவப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தினர் முதன் முதலில் வரவேற்பு மடல் ஒன்றினை வாசித்து அளித் தனர். இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் வெளி நாட்டுப் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பாக அது அமைந்திருந்தது. முத்தமிழை வளர்க்கும் பணியை மேற் கொள்வதே அதன் குறிக்கோளாக அமைந்திருந்தது. அதன் அடையாளச் சின்னத்திலும் "முத் தமிழ் ஓங்கு க" என்பது பொறிக்கப்பட்டிருந்தது. அதன் குறிக்கோள் எனக் கருதக் கூடிய பின்வரும் இரண்டு அடிகள் சங்கத்தின் வர வேற்பு மடலில் இடம் பெற்றிருந்தது.
இருந்தமிழே உன்னல் இருந்தேன் தேவர் விருந்தமிழ்தம் என்றலும் வேண்டேன்
இவ்விரண்டு அடிகளும் தமிழ்விடுதூது என்னும் நூலி லிருந்து மேற்கோளாகக் கொடுக்கப்பட்டிருந்தன. மொழி இலக்கியம், கலை, பண்பாடு, விஞ்ஞானம் போன்றவற்றைப் பற்றிய அறிவினை மக்களிடையே பரப்பும் பணியில் கமிழ்ச் சங்கம் ஈடுபட்டுள்ளமை ஈண்டு குறிப்பிடத் தக்கது. தென் னகத்தின் நெஞ்சத் தாமரையாகிய திருச்சிராப்பள்ளியில் பல்லாண்டுகளாகத் தமிழ்ச் சங்கம் பணி புரிந்து வருகிறது. பல்கலைகளுக்கு இருப்பிடமாகவே திகழ்கின்றது. அங்கு நடை பெறும் மாபெருங்கூட்டங்கள் தெய்வத் தமிழுக்கு மக்கள் செய்கின்ற இலக்கிய வழிபாடுகளாக விளங்குகின்றன. தமிழ்

இருந்தமிழே உன்னல இருந்தேன் 377 அன்னையின் பெருமையையும் அருள் வாக்கினையும் அனைத் துலகமும் பரப்புவதற்கென அமைக்கப்பட்டது அத் தமிழ்ச் சங்கம் எனக் குறிபிடப்பட்டுள்ளது. ‘அன்பர்களே? கலைக் காவலர்களே, ஆய்வுத்திறஞ் சான்ற அறிஞர்களே” என மூன்று வெவ்வேறு பந்திகளைக் கொண்டு ஆரம்பிக்கும் அவ் வரவேற்பு மடல் அதன் மூன்ரும் பந்தியில் வெளிநாட்ட வரை இவ்வாறு போற்றுகிறது.
"தாங்கள் தெள்ளுற்ற தமிழமுதால் ஈர்க்கப் பெற்ற திருவுடையவர்கள். தமிழ்த் தாய்க்குப் புத்தணிகள் புனைந்து பூரிக்கும் பெற்றியவர்கள். திறமான புலமையெனில் வெளி நாட்டார் தமிழை வணங்குதல் வேண்டுமெனக் கூறிய பாரதி யின் தீர்க்க நோக்க திருவாக்குத் தங்கள் போன்றவர்களா லேயே செயலாகின்றது. தங்கள் திருத்தொண்டு தழைத் தோங்குக. தங்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றியையும் அன்பையும் உரிமைப்படுத்துகிருேம். ‘மூன்று ஒற்றைகளாக மடிக்கக்கூடிய முறையில் அமைந்திருந்த அந்த வரவேற்பு மடலில் கடைசிப் பக்கத்தில் திருச்சிராப்பள்ளியிலே பிறந்து வாழ்ந்து புகழீட்டிய புலவர் பெருமக்கள் சிலரின் பெயர் கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மகாவித்துவான் மீனுட்சி சுந்தரம்பிள்ளை, வ.வே.சு. ஐயர், ந.மு. வேங்கடசாமி நாட் டார், பிச்சை இபுரு கிம் புலவர், கருவூர் ஈழத் தடிகள் முதலிய தமிழ் பெருமக்களின் பெயர்கள் அந்தப் பட்டி ய லில் இடம் பெற்றிருந்தன.
மலைக்கோட்டையை மையமாக் கொண்ட நகரத்தின் தோற்றத்தின் படத்தைத் தலைப்பு அம்சமாகப் பெற்று அமைந்திருந்த திருச்சிராப்பள்ளி நகராட்சி மன்றத்தினரால் அளிக்கப்பட்ட வரவேற்பிதழ் "எங்கள் பணி தங்களுக்கே" என்ற குறிக்கோளைக் கொண்டு செயல் புரிகின்றது திருச்சி நகராட்சி மன்றம். அவ்வரவேற்பிதழின் முதற் பந்தி இவ்

Page 195
378 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
வாறு அமைந்திருந்தது. "மேன்மை, தொன்மை, நன்மை முதலிய உயர்ந்த பண்புகளைப் பெற்றுள்ளது தமிழ். இத் தமிழ் மதி நலம் படைத்த பெரியோர்களால் பலவாருகப் பாராட்டப் பெறுகிறது. இக்காலத்தில் இதன் புகழ் உலகத் தமிழாய் உலவி வருவதாகும். இதன்த் தங்களைப் போன்ற மேதைகளைக் கொண்டு நாங்கள் கண்டு களிப்படைகிருேம் பிரதிநிதிகளாய் வந்துள்ள தங்களிடம் எங்கள் இன்பத் தமிழின் இனிய ஒளி மிகவும் நல்ல முறையில் பிரதிபலிக் கின்றது. தங்களைக் காண்பதும் தங்கள் நல்லுரைகளை கேட்பதும் எங்கள் பெரும் பேருகும். தமிழ்த்தாயின் கலைச்செல்வர்களாகிய தங்களை உள்ளம் உவந்து வரவேற் கிருேம். அன்பு, அறிவு, ஆற்றல் நிரம்பிய சான்ருேர்களாக் கிய உங்கள் வரவினல் பொங்கி எழும் உணர்ச்சிப் பெருக் குடன் வருக, வருக என வரவேற்கின்ருேம்.’’
அடுத்துப் பொதுக் கூட்ட நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின அப்பொழுது தமிழ் நாட்டு முதலமைச்சராகக் கடமை யாற்றிய பேரறிஞர் அண்ணுவின் புகழும் அவர்தம் தம்பி யரின் பண்பும் அவர்களைக் கொண்ட தமிழ் நாட்டு அரசின் ஒப்பற்ற சேவையும் விதந்தோதப்பட்டன. முத்தமிழ்க் காவலர், சிலம்புச் செவ்வர், சுற்றுலாவில் பங்குபற்றிய தமிழறிஞர்கள் முதலிய பலர் சொற்பெருக்காற்றினர். பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து வான வேடிக்கை இடம் பெற்றது. அந்த வானவேடிக்கை திருச்சிராப் பள்ளிக்கே உரிய சிறப்பமிசமாக அமைந்திருந்தது. கலாச் சாரச் சுற்றுலாவின் போது வானவேடிக்கைகள் திருச்சிராப் பள்ளியில் மாத்திரமே இடம்பெற்றன. இது கண்கொள்ளாக் காட்சியாகவே அமைந்திருந்தது. அன்றைய கடைசி நிகழ்ச்சியாகவும் சுற்றுலாவின் இறுதி நிகழ்ச்சியாகவும் அமைந்தது இராப்போசனவிருந்தாகும். தால்மியா (பாரத்)

இருந்தமிழே உன்னல் இருந்தேன் 379
லிமிடெட் கம்பனியாரால் ஒழுங்கு செய்யப்பட்டது. அவ்விருந்து. தல்மியா சிமெந்துத் தொழிற்சாலை தல்மியா புரத்தில் அமைந்துள்ளது. அந்தக் கம்பனியின் நிர்வாகக் குழுத் தலைவரான விஷ்ணு ஹரி தல்மியா அவர்களால் அவ்விருந்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திருச்சி யிலுள்ள அரிஸ்டோ ஹோட்டலின் முற்றவெளியில் வெகு 6LDialog unts இராவிருந்து உபசாரம் நடந்தேறியது. விருந்துபசாரத்தில் பங்குபற்றிய அனைவருக்கும பரிசில் கள் வழங்கப்பட்டன. இரண்டாவது உலகத் தமிழ் கருத் தரங்கு மகா நாட்டின் சின்னத்தை ஒரு பக்கத்திலும் தல் மியா சிமெந்துத் தொழிற்சாலையின் படத்தை மறுபக்கத் திலும் கொண்ட பதக்கம் பொருத்தப்பட்ட சாவிச் சங்கிலி ஒவ்வொன்று ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டன அனைத் தையும் முடித்துக் கொண்டு திருச்சிராப்பள்ளிப் புகை வண்டிச் சந்திப்புக்கு விரைந்தோம்.
அங்கே சிறப்புப் புகைவண்டி புறப்படுவதற்கு ஆயத்த மாயிருந்தது. சுற்றுலா நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவுற்றன இனித் தலைநகர் நோக்கிப் புறப்படுவோம், உடனடியாகப் புகைவண்டிக்கு விரைந்து வாரீர் எனக் கூறுமாப்போன்று புகைவண்டி ஒலி எமுப்பிக் கொண்டிருந்தது. புகைவண்டி யும் குழல்வாயிற் சுழல் கொண்டது. நகரத் தலைப்பட்டது. கடுகதியிற் சென்று கொண்டிருந்தது. அன்று நடுநிசியாகியும் தூக்கம் வரவில்லை. சுற்றுலா பற்றிய நிகழ்ச்சிகளே நினை வுக்கு வந்தவண்ணமிருந்தன.
இராண்டாவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மகா நாட்டில் பங்கு பற்றியிருக்காவிட்டால் கலாச்சாரச் சுற்றுலா வில் பங்குபற்றும் வாய்ப்பு கிட்டியிருக்குமா? தமிழக அரசின் ஒத்துழைப்பின்றி கலாச்சாரச் சுற்றுலா சிறப்பாக அமைத் திருக்குமா? திருவாரூரின் முடிகுடா மன்னனன தியாகராஜ

Page 196
380 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
முதலியாரின் பேராதரவு இருந்திராவிட்டால் கலாச்சார சுற்றுலா எதிர்பார்த்த அளவு வெற்றியளித்திருக்குமா? சுற்றுலாவின் போது சென்ற இடங்களிலெல்லாம் அந்தந்த இடத்து மக்களும் பிரமுகர்களும் பேராதரவு காட்டியிருக் காவிட்டால் சுற்றுலா பயனுடைய ஒன்ருக அமைந்திருக் குமா? நாம் பங்குபற்றுவதற்கு எமக்கு வாய்ப்புக்கிட்டிய கலாச்சாரச்சுற்றுலா சிறப்பாகவும் எதிர்பார்த்தஅளவைவிட அதிகமாக வெற்றியளித்ததாகவும்பயனுடையது ஒன்ருகவும் அமைந்ததெனக் கூறின் அது மிகையாகாது. கலாச்சார சுற்றுலாவின்போது நாம் பார்த்தும் கேட்டும் அறிந்தவற் றைப் பற்றி நினைக்கும் பொழுது நாம் எம்மை பாக்கிய சாலிகள் என்றே கருதுதல் வேண்டும், கலாச்சாரச் சுற்றுலா அமைந்திருந்த முறைபற்றி கேள்வியுற்ற ஒரு பிரமுகர் இத்தகைய சுற்றுலா நூற்ருண்டுக்கு ஒருமுறை இடம் பெறுவதும் அருமையிலும் அருமை என்று தமது வியப்பைத் தெரிவித்தார்.
சாதாரணமாக ஊர்சுற்றிப் பார்க்கச் செல்லும் ஒருவன் முதன் முதலில் ஓர் ஊருக்குச் சென்ருல் தமது உடைமைகளை வைப்பதற்கும் தங்குவதற்கும் ஏற்ற வசதியுள்ள இடத்தைத் தேர்ந்தெடுப்பது இன்றியமையாததாகின்றது. உடைமைகளை பாதுகாப்பான ஒர் இடத்தில் வைத்துவிட்டே ஊர் சுற்றிப் பார்க்க முடிகிறது. சில சமயங்களில் இவ்வாறு இடம் பிடித்தல் பெரியதொரு சங்கடமான கருமமாகவும் அமைந்து விடுகிறது. இத்தகைய சங்கடமான நிலைமை எதனையும் எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை சுற்றுலாவின் பங்குபற்றிய எவருக்கும் ஏற்படவில்லை. புகைவண்டிப் பெட்டிகளே எல்லா வசதியுமுள்ள அறைகளாக அமைந்துவிட்டன எமது உடமைகளைப் பாதுகாக்கும் அறைகளாக பரிணமித்தன. OTLD5 Ft. Gov அறைகளாக மாறின. காலை உணவுக்கான

இருந்தமிழே உன்னல் இருந்தேன் 381 சிற்றுண்டிச்சாலைகளாக உருப்பெற்றன. பல வசதிகளையும் கொண்டு திகழ்ந்தன. எனவே தான் சுற்றுலாவில் பங்கு பற்றிய நாம் அனைவரும் சுற்றுலாவை ஒழுங்கு செய்து செவ்வனே நடத்திய அனைவருக்கும் பெரிதும் கடமைப் பட்டுள்ளோம். இத்தகைய ஒரு சுற்றுலாவில் பங்கு பற்றும் வாய்ப்பு எமக்கு எதிர்காலத்தில் கிடைக்குமெனின் நாம் பெரும் பேறு பெற்றவர்களாவோம் இத்தகைய வாய்ப்பை எமக்கு அளித்த எல்லாம் வல்ல ஆண்டவனுக்கு எல்லாப் புசழும் உரியனவாகும்.
இரவு 11 மணியளவில் திருச்சியிலிருந்து புறப்பட்ட சிறப்புப் புகைவண்டி 18ந் திகதியாகிய மறுநாட்காலை ஏழு மணியளவில் சென்னை மாநகரிலுள்ள கடற்கரை புக யிரத நிலையத்தை அடைந்தது அப்புகைவண்டி நிலையத்தி லும் நாம் வரும்வரை அதே பேரூந்துகள் காத்திருந்தன. எமது மூட்டைமுடிச்சுகள் அனைத்தும் அப்பேருந்துகளில் ஏற்றப்பட்டன. பேருந்துகளும் விரைந்து சென்றன. சட்ட சபை அங்கத்தவர்களுக்காக கட்டப்பட்டிருந்த விடுதியில் (எம், எல். ஏ. ஹாஸ்ட்டலில்) அனைவருக்கும் இடவசதி செய்து கொடுக்கப்பட்டது. 20ந் திகதி வரை முன்பு போல் பகற்போசன விருந்தும் இராப்போசன விருந்தும் வழங்கப் பட்டன. ஜனுப் ஏ. எம். புஹாரி அவர்கள் தமது ஹோட்டல் இம்பீரியலில் பகற்போசன விருந்து ஒன்றை அளித்தாரி. வரவேற்புக் குழுவினர் ஒருநாள் பகற் போசன விருந்தும் அளித்தனர். 20ந் திகதியன்று. தியாகராஜ முதலியார் அவர்கள் இறுதியான இராப்போசன விருந்து அளித்தாரி அது பிரியாவிடைக் கட்டமாகவும் அமைந்தது. பிரியாவிடை சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன.
தமிழ் நாட்டில் முன்பு பொதுப்பணி அமைச்சராக விருந்து பேரறிஞர் அண்ணுவின் அமரத்துவத்தின் பின்னர்

Page 197
38.2 நெஞ்சில் நிலைத்த சுற்றுலா
முதலமைச்சருமாகப் பணியாற்றி வருபவருமான மாண்பு மிகு மு. கருணுநிதி எழுதிய ஒரு நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. சிலப்பதிகாரத்தை நாடக உருவில் மு. கருணுநிதி அவர்கள் இயற்றியுள்ளார். பூம்புகார் என் னும் அந்நூலில் தமிழ்ப் பிரதியும் ஆங்கில மொழி பெயர்ப்பும் அங்கு வழங்கப்பட்டன. தமிழ்ப் பிரதிகளைச் சிலர் பெற்றுக் கொண்டனர். ஏனையோருக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது.
அன்று அதே இடத்தில் மற்ருெரு நிகழ்ச்சியும் நடை பெற்றது. சுற்றுலாவின் பின்னர் சென்னையில் எஞ்சியிருந்த இலங்கைப் பிரதிநிதிகளிடமிருந்து பார்வையாளர்கள் இடமிருந்தும் சேகரிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. ஈழத்துத் தூதுக்குழுவினர் சார்பில் வழங்கப்பட்ட அந்நினைவுச் சின்னங்களை பூரீ. ஏ. சுப்பையா அவர்களும் பூரீ. தியாகராஜ முதலியார் அவர்களும் பெற்றுக் கொண்டனர். இலங்கை மாத்திரம் அத்தகைய நினைவுச் சின்னங்களை வழங்கியது. தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டுடனும் கலாசாரச் சுற்றுலா வுடனும் தொடர்புடைய உத்தியோகபூர்வமான நிகழ்ச்சிகள் அனைத்தும் ஜனவரி மாதம் 20 ந் திகதியோடு முடிவடைந்த தெனினும் நாம் 22 ந் திகதி வரை அங்கேயே தங்கியிருந் தோம் . 21ந் திகதியன்று அங்குராப்பணஞ் செய்து வைக்கப்பட்ட கைத்தொழில் பொருட்காட்சியையும் பார்த்து விட்டு ஈழநாடு நோக்கிப் புறப்படுவதற்காகவே அவ்வாறு தங்கினுேம். அவ்விரண்டு நாட்களிலும் தனிப் பட்ட முறையில் எமக்கு விருந்தளிக்கப்பட்டது. பாராளு மன்ற உறுப்பினரான ஆலி ஜனுப் அப்துஸ்ஸமது M A. அவர்கள் தமது இல்லத்தில் ஒரு நாள் இராப்போசன விருந்து அளித்தார். மற்ற நாள் ஆலி ஜனப் எம். எஸ் பசிர் அவர்கள் இராப்போசன விருந்தளித்தார்.

இருந்தமிழே உன்னல் இருந்தேன் 383
நல்லவை எல்லாம் என்ருே ஒரு நாள் முற்றுப்பெறும் அல்லவா ? அதே போன்று கலாசாரச் சுற்றுலாவும் முடி வடைந்தது. தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டுடன் தொடரி புள்ள எல்லா நிகழ்ச்சிகளும் முடிவுற்றன. நாமும் சென்னைக்கு பிரியா விடை கூறிவிட்டு ஈழநாடாம் தாய் நாடு நோக்கிப் பறந்தோம்.

Page 198
ஆசிரியரின் பிற வெளியீடுகள் :
l.
0.
1.
2.
பதிப்பு:
3.
4.
5.
6,
Muslim i Contribution to Tami
Literature
இஸ்லாமியத் தென்றல்
நம்பிக்கை
ஞானவள்ளல் குணங்குடியார் நீதியும் நியாயமும் இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம்.
இஸ்லாமும் இன்பத் தமிழும் . மக்காப் பயணம்
வாய்மையின் வெற்றி Muslim Epics in Tamil Literature முஸ்லிம் ஜோன் ஒப் ஆர்க் அரபு-தமிழ்ச் சொல்லகராதி
புலவராற்றுப் படை
புதுகுஷ்ஷாம் ஆசாரக் கோவை
புகுகுஷ்ஷாம் தொகுதிகள் 1-7
★ ★


Page 199
-
 

குன்றிலிட்ட
T
நிப்பாசிரியர்
-
துளிர7,