கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒன்றே உலகம்

Page 1

|( is.| ||. | ||│ │ │
si
– |- ( ). h
“|:||.
|- │ │ │
■

Page 2


Page 3

ஒன்றே உலகம்

Page 4

ஒன்றே உலகம்
தனிநாயக அடிகள்
LumTf naouib

Page 5
முதற் பதிப்பு : மார்ச்சு, 1966.
விலை ரூ. 7-00
அச் சிட்டோர் : ஜீவன் பிரஸ், சென்னை-5. (1077)

பதிப்புரை
ஈழத்தில் பிறந்து பாரதத்தில் பயின்று, மலாய் காட்டில் தமிழ்த்தொண்டாற்றிவரும் சுவாமி தனிநாயக அடிகள் தம்மைப் பிறர் பணிக்காகவே அர்ப்பணித்துக் கொண்ட பெருமகனர். இளமையில் யாழ்ப்பாணத்தில் உயர்நிலைக் கல்வி பெற்று, பின்னர் உரோமை மாங்கரில் திருமறைக் கல்வி பயின்று, வேத சாத்திரங் களில் டாக்டர் பட்டம் பெற்ருர்; தமிழகத்தில் அண்ணு மலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் எம். ஏ. பட்டமும், எம். லிட். பட்டமும் பெற்றர். இலண்டன் பல்கலைக் கழகத்தில் கல்வித்துறைப் பகுதியில் ஒப்பியற் கல்வி பயின்று, அதிலும் டாக்டர் பட்டம் பெற்ருர்,
இவர் அறிந்த மொழிகள் பல. ஆங்கில்ம், இத்தாலி யன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், இலத்தீன், கிரீக்கு முதலிய மொழிகளில் பயிற்சியுடைய பன்மொழிப் புலவர். வடமொழி, ரஷ்ய மொழி, போர்ச்சுகீஸ், சிங் களம், ஹிப்ரு என்னும் மொழிகளையும் இவர் ஓரளவு அறிவார்; உலகத்தின் பல பாகங்களுக்கும் சுற்றுச் செலவை மேற்கொண்டு அங்கெல்லாம் தமிழ் மணம் கமழச் செய்துள்ளார்.
அடிகளார் துறவு பூண்டிருப்பினும், தமிழ்ப் பற் றைத் துறக்கவில்லை; தாம் செல்லும் நாடுகளில் தமிழ்த் தூதராய் விளங்கித் தமிழின் மேன்மையையும் தொன் மையையும் பற்றிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும், கட்டுரைகள் வரைந்தும், வானுெலி வழியாகப் பேசியும், அவ்வங்காட்டு மக்களுக்குத் தமிழ் மொழியிடத்து அன்பும் அக்கறையும் ஏற்படச் செய்துள்ளார். உலக மெல்லாம் தமிழ் முழங்க (Tamil Culture) என்ற ஆங்கில முத்திங்கள் இதழ் ஒன்றைத் தோற்றுவித்து, இப்பொழுது அதன் ஆசிரியராய்ப் பணிபுரிகின்றர். வடமொழியின் பெருமையை மட்டும் அறிந்திருந்த

Page 6
vi
உலக அறிஞர் பலருக்குத் தமிழின் பெருமையை எடுத்துக்கூறி, அதன் அருமையை உணரும்படி செய் துள்ள அடிகளாரின் தொண்டு தமிழ் மக்களால் என்றும் கன்றி உணர்வோடு பாராட்டப்படுவதாகும். அடிகளாரின் புலமையை அறிந்த பல்கலைக் கழகங்கள் பல சிறப்புச்சொற்பொழிவுகள் நிகழ்த்துமாறு அழைப்பு விடுக்கின்றன. இவ்வகையில் சென்னை, அண்ணுமலைப் பல்கலைக் கழகங்களில் அடிகளார் நிகழ்த்திய பேராசிரி யர் சேதுப்பிள்ளை அவர்களால் நிறுவப்பட்ட சொர்ணும் பாள் சொற்பொழிவுகள் குறிப்பிடத்தக்கவை.
1952-ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகத் தின் கல்வித் துறையில் அடிகளார் விரிவுரையாள ராய்ப் பணி ஏற்றர் ; இப்பொழுது மலேசியாவில் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழித்துறைப் பேராசிரிய ராய்ப் பொறுப்பேற்றுள்ளார்.
தற்போது, இதுவரை யாரும் செய்திராத பெரிய அளவில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா முதலிய எல்லாக் கண்டங்களிலும் உள்ள தமிழ் மொழி அறிஞர் கள் அனைவரையும் ஒன்று கூட்டி, தமிழ் ஆராய்ச்சி அரங்கு ஒன்றை மலேசியாவில் கோலாலம்பூரில் ஏற் பாடு செய்துள்ளார். இம் மாாகாடு 17-4-66 முதல் 23-4-66 வரை ஏழு நாட்கள் நிகழவிருக்கின்றது இந்த அனைத்து உலகத் தமிழ் மாநாட்டின் நினைவாக “ஒன்றே உலகம்’ என்னும் அடிகளாரின் இந்நூலை எங்கள் நிலைய வாயிலாக காங்கள் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்ருேம்.
அடிகளார் பலமுறை உலகச் சுற்றுச் செலவினை நிகழ்த்தியுள்ளார். அவ்வாறு தாம் சென்ற காலையில் அங்கங்கே தாம் கண்டனவற்றையும் கேட்டனவற்றை யும், தமிழ் மணம் கமழக் கமழ இனிய கட்டுரைகளாக வரைந்தளித்துள்ளார். தாம் சென்ற நாடுகளில் கண்ட புதுமைகளோடு சிறப்பாகத் தமிழ், தமிழர் பற்றிய செய்திகள் அக்ாகாடுகளில் உளவா என்பதையும் அறிந்து, அவற்றையும் தவருது தம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக கோக்கின், இக்

vii
கட்டுரைகள் எல்லாம் காலத்திற்கேற்ப வேறுபடும் மனித குலத்தின் எண்ணங்களையும், பழக்க வழக்கங் களையும், சமூகப் பண்பாடுகளையும் விளக்குவதோடு உலக ஒருமைப்பாட்டையும் தெள்ளத்தெளிய விளக்கு கின்றமை புலணுகும். ஒன்றே உலகம்’ என்னும் இச் சீரிய நூல் ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் உயர் குறிக்கோளினை உயிர் நிலையாகக் கொண்டு திகழ்கிறது.
இக் கட்டுரைகள் எல்லாம் ஒரே சமயத்தில் எழுதி யவை அல்ல. பற்பல காலங்களில் பல தடவை அடி களார் சுற்றுச் செலவு செய்த காலையில் எழுதப்பட் டவை. எனவே, கால வேறுபாட்டின் காரணமாகச் செய்திகளில் ஒருசில மாற்றங்களும் இருக்கக்கூடும் என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளு கிருேம்.
அடிகளார் எம் நிலையத்தின்பால் மிகுந்த அன்பு கொண்டவர்கள். "ஒன்றே உலகம்’ என்னும் இந்தச் சிறந்த நூலை காங்கள் வெளியிட இசைவு தந்தனர். அவர்களுக்கு என்றும் எங்கள் நன்றியும் வணக்கமும் உரியனவாகுக.
சென்னை
பாரி நிலையத்தார் .66”ے 3۔--21

Page 7
உள்ளுறை
1. சுற்றுச் செலவுக் கலே
2. தாய்லாந்து
3. கம்போதியா 4. வியட்நாம்
3. பர்மா d = a = 32 6. இந்தோனீசியா
7. ஜப்பான் 44 8. ஐக்கிய அமெரிக்கா 岳岳 9. தென் அமெரிக்கா 77 10. சோவியத் ஒன்றகம் 7
11. இங்கிலாந்து 五*吊 12. பிரான்சு ..
13. ஜெர்மனி 교 3 7 14. ஆஸ்திரியா 直星位
15. இத்தாலி ... I d2 ர். வத்திக்கான் 15岳 16. கிரேக்க நாடு ... , 62 17. போர்த்துக்கல் I W ጁ 18. ஐரோப்பாவின் சிறு நாடுகள் 79
19. ஆப்பிரிக்கா
20. கிழக்கு ஆப்பிரிக்கா, 8 ዕ] 8
31. நடுகிழக்கு நாடுகள் 222
 

ரில் தமிழ்க் கஃப்கள் பற்றி ஆசிரியரின் விரிவுரை
TTü山 山T旧西
書

Page 8
யுடன்
தமிழர் திருநாளுக்குச் சென்றபொழுது திரு. கோ. சாரங்கபாணி
ஒளில் நண்பரின் வரவேற்பு
güLIT
 
 

1. சுற்றுச் செலவுக் கலை
து இடங்களுக்குச் செல்வதிலும், புது மக்களேக் காண் பதிலும், பழைய பண்பாடுகளின் கிலேக்களங்களோப் பார்வை பிடுவதிலும் அளவற்ற இன்பத்தைப் பெறுகின்றனர் சிலர்.
என் முதற் சுற்றுச் செலவுகள் நான் சிறுவனுக இருந்த காலத்திலேயே தொடங்கின. காற்பது ஆண்டுகளுக்குமுன் என் அன்னேயாருடன் ஊர்காவற்றுறையிலிருந்து* யாழ்ப்பா னம் சென்ற நினேவு மிகவும் தெளிவாக இன்றும் எனக்கு உளது. அக்காலத்தில் பொறி வண்டிகள் எங்கள் பகுதியில் இல்லே. எனவே யாழ்ப்பாணப்பட்டினத்திற்குச் செல்லும் மக்கள் சிறு படகில் (மச்சுவாயென்று சொல்வார்கள்) ஏறி, மூன்று மணிக்காலம் பிரயாணஞ் செய்து பாழ்ப்பாணத் துறைமுகத்தில் இறங்குவர். ஊர்காவற்றுறை அக்காலத்தில் பெரும் துறைமுகமாக விளங்கியது. வேற்று காடு செல்லும் மரக்கலங்கள் ஏறக்குறைய ஐயாயிரம், அத்துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. எண்ணிறக்த படகுகளும் கப்பல் களும் அவ்வழகிய கடற் பரப்பில் நங்கூரம் பாய்ச்சப்பட் டிருந்ததை நான் கண்டிருக்கின்றேன்.
அத்துறைமுகப் பக்கத்திற்குச் சென்ருல், பண்டங்களே இறக்குமதி செய்வோரின் ஆரவாரமும், மரக்கலங்களேப் பழுது டார்ப்போரால் பயன்படுத்தப்படும் சம்மட்டியின் ஒலியும், காய்ச்சப்படும் தாரின் எழுச்சி தரும் மணமும், புது மரக்கலங்களே இழைப்போரின் காட்சியும் புலன்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். மாலுமிகள் கூட்டங் கூட்டமாக நின்று தம் பிரயாணங்களேப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பர். துறைமுகத்தை அடுத்த தெருக்களில் வாழும் மக்கள் அனேவ ரும் கடல் வாணிகத்திலும் கப்பலோட்டுதலிலும் சிறந்தவர். எனவே சிறுவனுகவே பிற நாடுகளேப் பற்றிக் கேட்டும், வேற்று காடு செல்லுங் கலங்களேயும் மாலுமிகளேயும் கண்டும் கான் வளர்ந்துள்ளேன். கடற்கரை மணலில் எனது நண்ப ரோடு கான் சாய்ந்துகொண்டு முதிர்ந்த கரைத்த மாலுமி
" யாழ்ப்பானத்திற்கு அண்மையில் உள்ள துறைமுகத் தீவு: ஆங்கிலத்தில் Rayts எனப்படும்.
JI ) 7 7-II

Page 9
2 ஒன்றே உலகம்
யொருவர் தம் பிரயாண அனுபவங்களைக் கூறக் கேட்டுக் கொண்டிருப்பேன். பள்ளிக்கூட விடுமுறை சமயத்தில், யாழ்ப் பாணத்திலிருந்து வரும்பொழுது ஊர் காவற்றுறைக்கு அண்மையில் வந்ததும், கணக்கற்ற பாய்மரங்கள் காரை தீவிலுள்ள பனை மரங்களின் மேற் ருேன்றுவதைக் கண்டு என் மனம் புத்துணர்ச்சி பெறும். இன்று அறிவியலும் அரசிய லும் செய்த மாற்றங்களால் ஊர்காவற்றுறையில் மரக் கலங்களுமில்லை, மாலுமிகளுமில்லை. பண்ட ஏற்றுமதி இறக்குமதியின் ஆர்ப்பாட்டமுமில்லை.
எட்டு ஆண்டுச் சிறுவனக நான் கட்டுமரத்தில் முதல் முதல் ஊர்காவற்றுறையிலிருந்து நெடுந்தீவிற்குச் t சென் றேன், பன்னிரு ஆண்டுகள் படைத்தவனுக என் தந்தையா ருடனும் தம்பியுடனும் தென் இந்தியாவில் சுற்றுச் செலவு செய்தேன். என் இருபத்தோராவது ஆண்டில் ஐரோப்பா விற்கு நான் முதன் முதல் செல்ல நேரிட்டது. ஐந்து ஆண்டு கள் ஐரோப்பாவிலும், ஈராண்டுகள் இங்கிலாந்திலும், ஓராண்டு வட அமெரிக்கா, தென் அமெரிக்காவிலும் வாழ்ந்துள்ளேன். மேற்கூறிய பிரயாணங்களோடு, மத்திய ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா முதலிய காடுகளுக்கும் பன்முறை சென்றிருக்கின்றேன். பல காரணங்களின் பொருட்டு உலகின் பல காடுகளில் கல்வி பயின்றும் ஆராய்ச் சியில் ஈடுபட்டும், தமிழ்த் தூது நிகழ்த்தியும் வந்துள்ளேன். கான் கண்ட காடுகளைப் பற்றி எனக்குத் தோன்றும் கருத்துக் களையும், ஆங்காங்கே கான் கண்ட காட்சிகளையும் கான் பட்டறிந்த அனுபவங்களையும், ஒன்று சேர்த்து இந்நூலில் கட்டுரைகளாக ஆக்கியுள்ளேன். இன்னும் பல கருத்துக்களை யும் காட்சிகளையும் அனுபவங்களையும் பற்றிாகான் எழுதியிருத் தல் கூடும். ஆயினும் சுற்றுச் செலவைப் பற்றிய விரிந்த நூல்கள் மக்களுக்குச் சலிப்பை உண்டாக்குதல் கூடும் என அஞ்சி இந்நூலைச் சுருக்கியுள்ளேன். செலவு வாகனங்கள்
கம் முன்னேர் பயன்படுத்திய செலவு வாகனங்களுக்கும் நாம் பயன்படுத்தும் வாகனங்களுக்குமிடையே உள்ள வேற்றுமைகள் பல. பிற நாடுகளுக்குப் புகைவண்டியாலும் கப்பலாலும் வானவூர்தியாலும் கான் சென்றிருக்கின்றேன். வெவ்வேறு செலவு இயந்திரங்கள் வெவ்வேறு வசதிகளை
T Delt எனப்படுவது.

சுற்றுச் செலவுக் கலை 3
அளிக்கின்றன. முதன் முதல் ஒரு நாட்டை கன்ருகப் பார்க்க வேண்டுமாயின் மோட்டார் வண்டியிலும் புகைவண்டியிலும் செல்லுதல் வேண்டும். புகைவண்டிச் செலவால் ஐக்கிய அமெரிக்காவின் கோலருடொ அறிசோன நிலப்பரப்புகளையும் (Prairies of Colorado, Arizona), Stilágust b5), 355" சுவிட்சர்லாந்து, சாவகம் (Java) முதலிய நாடுகளின் இயற்கை யழகையும் கண்டின் புற்றுள்ளேன். இங்காடுகளில் சுற்றுச் செலவாளர்களுக்கென நாட்டைப் பார்ப்பதற்கேற்ற “ObserVation Cars’ வண்டிகளுண்டு. இவை மரப் பலகையைக் காட் டிலும் கண்ணுடியை அதிகமாகக் கொண்டு கட்டப்பட்டுள் ளன ; எனவே பிரயாணிகள் பரந்த கண்ணுடிச் சன்னல்கள் வழியாக வெளியே பார்த்தல் கூடும். ஒராயிரம், ஈராயிரம் கல் புகைவண்டியில் பிரயாணஞ் செய்யும்பொழுது நிலப்பரப் பின் அழகை நன்கு பார்த்தல் கூடும் என்பது தெளிவு. இவ் வாறே மோட்டார் வண்டியும் நாட்டின் அழகைக் காட்டுவ அதுடன் வேண்டிய இடத்தில் வண்டியை நிறுத்தி இடங்களைப் பார்க்க வாய்ப்பினை அளிக்கின்றது. மோட்டார் வண்டிகள் மிகுதியாக உள்ள நாடுகளில் மோட்டார்ப் பிரயாணிகள் தங்குவதற்கென மலிவான விடுதிகள் உள. இவ்விடுதிகளே ஆங்கிலத்தில் குறிக்கும் மோட்டார்-ஒட்டல்’ (Motor-hotel) எனும் சொற்ருெடரை மோட்டேல்’ (Motel) என்று அமெரிக் கர் சுருக்கியுள்ளனர்.
கடற் பிரயாணம் உடலுக்கும் உயிருக்கும் நலத்தைத் தருவதாகும். பல நாட்கள் தரையைக் காணுது அடிவானம் மட்டும் பரந்திருக்கும் நீரையே பார்த்துக்கொண்டிருப்பதால் கம் மனம் ஒருவாறு விரிவையும் அமைதியையும் அடைகின் றது. மேலும் மாபெரும் கடற்பரப்பில் செல்லும், கப்பல் மாளிகை போன்றதாயினும் சிறு துரும்புபோல் அலைகளால் வீசப்படுமென்று நினைக்கும்பொழுது, மனிதன் தன் தற் பெருமையை இழந்து தாழ்மை உணர்ச்சியைப் பெருக்கிக் கொள்கின்றன். இன்று மாபெரும் கண்டங்களின் துறை முகங்களை இணைக்கும் பிரயாணிக் கப்பல்கள் பெரும் மாளிகை களையும் கோட்டைகளையும் போன்றவை. எனவே பிரயாணி களுக்கு ஏற்ற வசதிகள் அனைத்தும் அவற்றில் உள. கேரப் போக்கிற்கென்று விளையாட்டுகளுக்கும், காட்டியத்திற்கும், திரைப்படங்களுக்கும், நீச்சல் குளங்களுக்கும் வேண்டிய ஏற்பாடுகள் இக்கப்பல்களிற் செய்யப்பெற்றிருக்கின்றன.

Page 10
4 ஒன்றே உலகம்
கடற் பிரயாணத்தில் பிற காட்டு மக்களுடன் கன்ருகப் பேசிப் பழக கேரமும் வாய்ப்பும் உண்டு. கடலையே பார்த்துக்கொண் டிருந்தால் சில வேளைகளில் திமிங்கிலங்கள் நீர்மேல் உந்திச் செல்வதையும், மீன் இனங்கள் கப்பலடிக்கட்டையை உரசிக் கொண்டு விளையாடுவதையும், பறவை மீன்கள் கடலின்மேல் ஆகாயத்தை ஊடுருவிச் செல்வதையும் காணுதல் கூடும். வேறு கப்பல்களைத் தூரத்தில் கண்டால் கப்பலிலிருக்கும் சிறுவர் செய்யும் ஆர்ப்பாட்டத்திற்கும் எல்லையில்லை. பிற கப்பல்களை இரவிற் காணும்பொழுது மிகவும் அழகான தீபாலங்காரத் தோற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியுறுதல் கூடும். w
கடற் பிரயாணத்தை இன்பமாகக் கழிப்பதற்கு கோயின்றி இருத்தல் வேண்டும். கடல் கோய் அனுபவிப்போர் துறை முகத்தை என்றுதான் அடைதல் கூடுமென்று எதிர் நோக்கிக் கொண்டேயிருப்பர். கடல் கோய் பிடித்தால் பிரயாணி கட்டி லில் படுத்துக்கொண்டு உணவையும் உயிரையும் வெறுத்துக் கொண்டேயிருக்க நேரிடும். கான் அனுபவித்த கோய்களுள் கடல் கோயே தாங்கற்கு மிக அரிது. பெரும்பாலும் கான் கடல் கோய்க்கு ஆளாவதில்லை. ஆணுல் அக்கோயால் பெரும் புயல் வேளையில் மும்முறை படுக்கையிற் கிடந்த நினைவு எனக்குண்டு. ஒரு சமயம் நடுநிலக்கோட்டைக் கடந்து சென்ற பொழுது கடுங்காற்றும் கொந்தளிப்பும் ஏற்பட்டன. பெரும் மாளிகை போன்ற “பியன்கமானுே’ (Biancamano) என்னும் இத்தாலியக் கப்பலை அலைகள் உயர்த்தியும் தாழ்த்தியும் பம்பரத்தைப் போல் சுழற்றின. வேருெரு தடவை, கடுநிலைக் கடலிலும் பசிபிக் பெருங் கடலிலும் மூன்று, கான்கு காட்க ளாகக் கடல் கோய் காரணமாகப் படுக்கையை விட்டு கான் எழுந்திருக்கவில்லை. கப்பலாட்டம் உள்ள நாட்களில் கப்பல் வாழ்க்கை மந்தமாகவேயிருக்கும். பிரயாணிகள் முகத்திலும் மாலுமிகள் முகத்திலும் புன்முறுவல்கூட அரும்புவது அரிது. எந்தப் புயலிலும் தயங்காது கடல் கோயின்றிச் செல்லும் அமெரிக்கர் ஒருவரைச் சந்தித்திருக்கின்றேன். அவர் தமது ஏழாவது வயதில் முதற் கப்பற் பயணம் செய்தாராம். அப்பிரயாணத்தில் பல காட்கள் கடல் கோயால் கடும் துன்ப மடைந்தாராம். அதன்பின் கடல் நோய் ஒரு நாளும் தம்மைத் தாக்கவில்லை என்று அவர் கூறினர்.

சுற்றுச் செலவுக் கலை 5
கடல் வழியாகச் செலவு நிகழ்த்தும்பொழுது, கான் கப்ப லின் எல்லாப் பகுதிகளுக்குஞ் சென்று எல்லா மக்களுடனும் பழகி வருவேன். மாலுமித் தலைவருடனும் மேற்பாலத்திற்குச் சென்று கப்பலோட்டும் முறையையும் மாலுமிகள் கையாளும் படங்களையும் கருவிகளையும் பார்வையிடுவேன். சில வேளை களில் கப்பலின் அடித்தளத்தில் பொறிகளை இயக்கும் தொழி லாளிகளுடன் உரையாடுவேன். கப்பலில் உள்ள தொழிலாள ரும் பணியாளரும் பெரும்பாலும் கப்பலின் அடிப்புறத்திலே வேலை செய்பவராதலால் அவர்கள் இவ்வாறு உரையாடுவதை மிகவும் விரும்புவர். கப்பலின் குருவாக (Chaplain) ஒரு முறை கான் பயணம் செய்திருக்கிறேன். அப்பதவியால் கானும் ஓர் உயர்ந்த கப்பல் ஊழியர் இடத்தைப் பெற்றேன். உயர்ந்த ஊழியர் வகுப்பினர்க்கு நல்ல ஒய்வு கேரமும் அமைதியும் வாய்ப்பதுண்டு. அவர்களுள் பலர், நூல்களை எழுதுவதிலும், படிப்பதிலும், ஒவியங்களை வரைவதிலும் நேரத்தைப் போக்கு வர். கப்பல் ஊழியர் ஒரு தனிப் படிப்பில் ஈடுபட்டால் அதனை கன்ருக ஆராய்வதற்கு ஆன்ற அமைதியும் வாய்ப்பும் அவருக் குக் கிடைக்கும்.
உலகை விரைவாகப் பார்க்க வேண்டுமாயின் வானவூர்தி களில் பிரயாணம் செய்யவேண்டும். பெரும் விமான நிலையங் களில் இரண்டு மூன்றுவினுடிகள் நின்று பார்த்தாலும் வான ஊர்திகள் அடிக்கடி அங்கு வருவதையும் செல்வதையும் காணலாம். இவற்றில் பல்வேறு மக்கள் வந்து இறங்கு கின்றனர். பெருநகரின் விமான நிலையங்களில் புகைவண்டி நிலையங்களைப்போல் மக்கள் நிரம்பி இருப்பதைக் காண்கின் ருேம். இன்று, நெடுஞ்செலவுக்கு வேண்டிய எல்லா வசதிகளும் விமான ஊர்திகளில் அமைந்திருக்கின்றன. அவை, உடலுக்கு இன்பமான தட்பவெப்ப நிலை, தூங்குவதற்கு ஏற்ற வசதிகள், சத்தம் இல்லாமல் படிப்பதற்கும் எழுதுவதற்கும் தக்க ஏற்பாடுகள், உரையாடுவதற்கு ஏற்ற சிறு அறைகள் ஆகியவையாம்.
கப்பல் வழியாகவும் புகைவண்டி வழியாகவும் கடலையும் நிலத்தையும் கடக்கும்பொழுது காம் பிரயாணஞ் செய்வதை ாகன்கு உணர்கிருேம். வான ஊர்தியில் செல்லும்பொழுதோ நீண்ட தூரச் செலவு செய்வதாகத் தோன்றுவது இல்லை. காலையில் சிங்கப்பூரில் உணவு அருந்திய கான், மாலைச் சிற்றுண்டி ஹாங்காங்கில் அருந்தினேன். மாலை ஹாங்காங்,

Page 11
ஒன்றே உலகம்
மறு காட் காலை தோக்கியோ நண்பகல் ஹோனலூலு, மாலை சான்பிரான்சிஸ்கோ; காலை தென் அமெரிக்கா, மாலை வட ஆப்பிரிக்கா; மாலை இலண்டன் மாாநகர், கால்ை நியூ யார்க்" அண்மையில் அமெரிக்காவிற்கு ஐரோப்பாவிலிருந்து பறந்து சென்றேன். மாலை ஹேக் என்னும் உலகப் பொது நீதி மன்றம் இருக்கும் நெதர்லன்ஸ் நகரில் பல நாடுகளிலிருந்து வந்த சட்ட அறிஞர்களுடன் இரவு உணவு அருந்திய பின்னர், ஆம்ஸ் டர்டாம் நகரில் விமான ஊர்தி ஏறினேன். துயில் கொள்வ தற்கு நல்ல வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன. எனவே கான் ாகன்ருக உறங்கினேன். காலை ஏழு மணிக்கு என்னை விமானப் பணியாளர் எழுப்பினுர். காலைக் கடன்களை முடித்ததும் காலை
உணவு உட்கொண்டேன். எட்டு மணி அளவில் வானவூர்தி
ஹட்சன் கதியைத் தழுவிப் பறந்தது; ஒன்பது மணிக்கு நியூ யார்க் விமான நிலையத்தில் இறங்கியது. ஐரோப்பாவிலி ருந்து அமெரிக்காவிற்கு இத்துணை விரைவாக வந்ததும் அமெரிக்கரின் வாழ்க்கை விதிகளையும் வழி முறைகளையும் தழுவ வேண்டியதாயிற்று. “இத்தகைய வேகத்தில் உடல் முன்னும் ஆவி பின்னும் தான் செல்லுதல் கூடும்”, என்று என் கண்பர் கூறி வழி அனுப்பியதைப் பற்றி நினைத்தேன். இவ்வாறெல்லாம் வேகமாகப் பறந்து செல்லுங்காலை, காம் செலவைத் தொடங்கிய காடுகளைப் பற்றிய அனுபவ உணர்ச்சியிருக்கும்பொழுதே பிறிதொரு நாட்டையும் பிறி தொரு பண்பாட்டையும் பிற மக்களையும் கண்டு மயங்குகின் ருேம். இன்று தொடங்கிய “ஜெட்’ காலத்திலும் "ஸ்பூட் னிக்’ காலத்திலும் நம் பின்னுேர் எத்துணையோ வேகத்தை அறியப் போகின்றனர்.
இயல்பாக மக்கள் வேகத்தையே விரும்புகின்றனர். புகை வண்டிவகையில் அதிவிசை வண்டியை விரும்புகின்ருேம்: வானவூர்தியில் செல்வோர்கூடத் தம் ஊர்தி இடையில் வேருேர் ஊரில் தங்காமற் செல்வதையே விரும்புகின்றனர். இன்று மணிக்கு அறுநூறு, எழுநூறு கல் வேகமாக ஊர்தி கள் செல்கின்றன. வானவழியாகப் பறப்பதில் பெரும் நேரத்தை காம் போக்குவதில்லை. நகரிலிருந்து வானவூர்தி நிலையத்தை அடைவதிலும், மற்ற இடத்தைச் சேர்ந்ததும் கிலையத்திலிருந்து நகரை அடைவதிலுமே பெரும் கேரம் செலவாகின்றது. எனவே எதிர்காலத்தில் உலகைச் சுற்றிப் பறக்க இரு மணியளவு வேண்டுமென்பர். ஒரு மணிக்காலம்

சுற்றுச் செலவுக் கலை 7
உலகைச் சுற்றிப் பறப்பதற்கும், மற்ருெரு மணி நேரம் ஊரி னின்று வானவூர்தி நிலையத்திற்குச் செல்வதற்குமாம்.
ஊர்தி வலவர்கள் வானில் பெரும் வழிகளை வகுப்பார்கள் என்று ஆங்கிலப் புலவர் தெனிசன் நூறு ஆண்டுகளுக்கு முன் கண்டார் போலும், தம் காட்சியில் உலக மாந்தர் கடலிற் கப்பற் படைகளைச் செலுத்துவதுபோல் வானவூர்திப் படை களைச் செலுத்துவதையும், போரில் ஈடுபடுவதையும், இறுதி யாக ஒரே ஆட்சியில் ஒன்றுபட்டு ஒன்றே குலமென வாழ்வ தையும் மிகவும் அழகாகக் கூறியுள்ளார். அவருடைய ஆங்கி லப் பாட்டுப் பயிலத்தக்கது :- “For dipped into the future, far as human eye can see, Saw the vision of the world, and all the wonder that would be, Saw the heavens fill with commerce, argosies of magic sails, Pilots of the purple twilight dropping down with costly bales... Heard the heavens filed with shouting, and there rained a ghastly dew From the Nation's airy navies grappling in the central blue... Far along the world wide whisper of the south wind rushing warm With the standards of the peoples plunging through the thunder storm Till the war drum throbbed no longer, and the battle flags were furled In the parliament of man, the federation of the world.
(TENNYSON-1841) இப்பெரும் வானவூர்திகளெல்லாம் நிலப்பரப்பிலிருந்து இருபதாயிரம் அல்லது முப்பதாயிரம் அடி உயரத்தில் வழக்க மாகப் பறந்து செல்கின்றன. முகில்களுக்குப் பல்லாயிரம் அடிகளுக்கு மேலாகவே நான் பறந்து சென்றதால் எனக்குத் தெனிசனுடைய நினைவு மட்டுமன்று, மற்றும் இரு புலவரின் நினைவும் வந்தது. காளிதாசர் எழுதிய "மேக தூதமும்’ ஆங்கிலப் புலவர் ஷெலி எழுதிய "The Cloud’ எனும் செய் யுளும் அடிக்கடி என் நினைவிற்கு வந்தன. அப்புலவர்கள் காணுத காட்சியும் முகில்களின் வியத்தகு வனப்பும் நிறங் களும் எனக்குத் தோன்றின. சில வேளைகளில் வேறு ஊர்தி கள் கீழே மீன்களைப் போல் விரைந்து பறப்பதைப் பார்ப்பேன். சில நேரங்களில் நான் செல்லும் வானவூர்தியின் நிழல், கடல் மேலும், முகில்மேலும், மலைமேலும் தொடர்ந்து செல் வதை உற்று நோக்குவேன். சிற்சில வேளைகளில் ஊர்தியின் கீழ்ப் பல்லாயிர அடிகள் தொலைவில் வான வில் வளைந்து மிளிர்வதைக் காண்பேன். வான வூர்தியில் அப்புலவர்

Page 12
8 ஒன்றே உலகம்
சென்றிருந்தால் தம் செய்யுட்களை வேறு பல முறைகளிலெல் லாம் அமைத்திருப்பார் என்று உன்னினேன்.
இதுகாறும் நான் இரண்டு இலட்சம் மைல்களுக்குமேல் விமான வழியாகச் சென்றிருக்கிறேன். ஆயினும் ஒரு நாளா வது விமான நோயால் (air sickness) நான் பீடிக்கப்படவில்லை. முகில்களுக்குமேல், விமானத்தில் பறந்து செல்லும்பொழுது என் மனம் வெயில் பரவிய வானத்தின் தூய வெளியில் ஈடுபட்டு எழுச்சி பெற்று இன்புற்றது. சில வேளைகளில் விமானத்தில் செய்தித் தாள்களைப் படிக்குங்கால் வேறு விமானங்களும் பிரயாணிகளும் ஆபத்தில் சிக்கியதுபற்றிப் படிக்க நேரிடும். அப்பொழுதெல்லாம் அவ்வாபத்து எனக் கும் நேரிடக்கூடுமென்று நினைப்பேன். மக்கள் புகைவண்டி, மோட்டார் வண்டி ஆபத்துகளில் இறப்பதால் அவ்வாகனங் களைப் பயன்படுத்தும் பிரயாணிகளின் தொகை குறைவ தில்லை. அவ்வாறே விமான ஆபத்துகள் நிகழ்வதால் விமா னத்தில் செல்வோரின் தொகையும் குறைவதில்லை. பிரயாணி களின் விழுக்காட்டைப் பார்க்கும்பொழுது விமான ஆபத்தில் மாண்டவர் தொகையே மற்றெல்லா வகையான பிரயாண ஆபத்திலும் மாண்டவர் தொகையைவிட மிகக் குறைந்தது என்று கணக்கிட்டிருக்கின்றனர். சிறு விமானமொன்றில் அமெரிக்கச் சிறு ககர்களிடையே நான் ஒரு முறை பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது, அவ்விமானம் 'பாட்மிண்டன்’ பந்தைப் போல் அங்கும் இங்கும் புயற்காற்ருல் வீசப்பெற் றது. மாலுமியின் திறமையால் ஆபத்தின்றித் தரையை அடைந்தோம்.
விமானச் செலவைப் பற்றி எனக்கு ஒரேயொரு முறை யீடு உண்டு. தனிக் கட்டணமின்றி உள்நாட்டுச் செலவிற் கும் வெளிகாட்டுச் செலவிற்கும் சுற்றுச் செலவாளி வகுப்பில் (Tourist Class) 44 இராத்தல் நிறையுள்ள பெட்டிகள்தாம் பிரயாணிகள் கொண்டு செல்லுதல் கூடும். முதல் வகுப்பார் 66 இராத்தலும் உலகம் சுற்றும் சீட்டுடையோர் (World round-rip ticket) 88 இராத்தலும் எடுத்துச் செல்லக்கூடும். *44-இராத்தல்’ விதியை மாற்றி விமானக் குழுவினர் இன்னும் மிகுதியான எடைக்கு இடம் கொடுத்தல் வேண்டும். எனினும் எதிர் காலத்தில் எளிதில் துவைக்கக்கூடிய “கைலோன்’, *தெரிலின்’ போன்ற உடைகளுடன் செல்வோர் சிறு எடைப் பெட்டிகளேயே கொண்டு செல்வர்.

சுற்றுச் செலவுக் கலை 9
இவ்வானவூர்தி காலத்தில் உலக மக்களின் வாழ்க்கை வேறுபட்டு வருவது வெளிப்படை. உலக நாடுகளுக்கும் மக்களுக்கும் இதனுல் அறிவும் உறவும் மேம்படும் என்பதும் திண்ணம். அத்தகைய எதிர்காலத்தில் காம் பிற நாடுகளைப் பற்றி அறிந்திருப்பது இன்றியமையாததாகும். இவ்விரு பதாம் நூற்றண்டில் இத்துணை நெருங்கிய தொடர்பும் அறி வும் இருப்பினும் ஒரு நாட்டவர் பிற காட்டைப் பற்றிக் கொண்டிருக்கும் அறியாமை பெரிதாயிருக்கின்றது. அமெ ரிக்கப் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் சொற் பொழிவு ஆற்றியபின், கேள்வி நேரத்தின்” பொழுது அங்குள்ளோர் கேட்ட வினக்களிலிருந்து வெளிகாட்டவர்களி டையே கன்ருய்க் கல்வி பயின்றவர்கூட நம் நாடுகளைப் பற்றிச் சிறிதே அறிந்திருக்கின்றனர் என்று உணர்ந்தேன். மக்களின் வேற்றுமைகளைப் பற்றியே நாம் அறிவதுபொருத்த மன்று. மக்கட் குலம் ஒரு குலம் என்னும் ஒற்றுமைக் குறிப்புகளை மக்கள் அனைவரும் அறியுமாறு பல துறைகளின் வழியாக காம் உழைக்க வேண்டும். ஒரு காட்டினரை அறிய வேண்டுமாயின் அவர்களுடைய சீர்குறைந்த பழக்க வழக்கங் களை அல்லது வேற்றுமை நிறைந்த வழக்குகளைக் கல்வியில் வற்புறுத்தாமல், அம்மக்களின் வரலாற்றையும் இலக்கியச் சிறப்புக்களையும் பண்பாட்டினையும், அம்மக்களின் பெரியார் வாழ்க்கையினையும் வற்புறுத்தலே கலமாகும். தமிழ்ப் பண்பாட்டின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் மனப் பான்மை எல்லா உலக ஒற்றுமைக் கல்விக்கும் அடிப்படைக் கொள்கையாக அமைய வேண்டும். மக்களிடையே தோன் றும் வேற்றுமைகள், புவியியல் வேறுபாடுகளால் தோன்றும் நிகழ்ச்சிகள் என்றும் வலியுறுத்தல் கலமாகும். காடு பார்க்கும் முறைகள்
இந்நூலில் கான் பிரயாணம் செய்ததாகக் குறிப்பிட்ட நாடுகளைவிட மற்றும் சில நாடுகளுக்கும் சென்றுள்ளேன். ஆயினும் நான் அங்காடுகளில் போதிய நாட்கள் தங்காததால், அவற்றை மீண்டும் கன்ருகப் பார்க்க வாய்ப்புப் பெறுவே ணுயின் அவற்றைப் பற்றி வேறு பதிப்பில் எதிர்காலத்தில் எழுத முயல்வேன். எந்த காட்டிற்குச் சென்ருலும், காம் அக் நாட்டின் தலைாககர்களை மட்டும் பார்த்துவிட்டு காட்டைப் பார்த்துவிட்டோம் என்று நினைப்பது தவறு. நமக்குப் போதிய நேரமும் பணமும் கிடைக்கப் பெருததால் பெரும்

Page 13
10 ஒன்றே உலகம்
பாலும் தலைநகர்களையும் துறைமுகங்களையும் பார்க்கின்ருேம். ஆணுல், பெரும் ககர்களும் துறைமுகங்களும் பல்வேறு இனத் தாரின் உறைவிடமாதலால் அவை காட்டின் தனிப் பண்பு களைக் காட்ட வல்லவை அல்ல. எனவே காட்டுப் புறத்தினை யும் தலைநகர்களினும் சிறிய நகர்களையும் சுற்றுச்செலவாளி பார்வையிடுதல் வேண்டும்; அவ்விடங்களில் அங்காட்டு மக்களுடன் உரையாடுதல் வேண்டும்; அவர்கள் பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் சின்னங்களையும் பார்த்து வருதல் வேண்டும்.
ஒரு காட்டவர் பிற காட்டவரைக் கண்டால் பெரும் பாலும் பிற காட்டவருடன் உரையாடவே விழைவார்கள். ஆதலால் காமும் அதற்கு இடம் கொடுத்தல் நல்ல இயல்பே யாம். இலண்டன் மாாககர் நிலம்புகு வண்டியில் ஆங்கிலேய அம்மையார் ஒருவர் என் கண்பரை இமைகொட்டாது பார்த் துக்கொண்டே யிருந்தார். என் நண்பரும், அவ்வம்மையார் தம்மோடு உரையாட விரும்பினுரென்று அறிந்து தாம் இந்தியாவிலிருந்து வந்ததாகச் சொன்னர். "இந்தியாவா? அப்படியென்ருல் நீங்கள் ஆகாக்கானை நிலாவெளிச்சத்தில் கண்டிருக்க வேண்டுமே” என்று வியந்தார். 'அம்மணி, நான் ஆகாக்கானே நிலா ஒளியில் காணும் பேற்றைப் பெற் றிலேன். ஆஞல் தாஜ்மஹாலை நிலா வெளிச்சத்தில் கண்டிருக் கிறேன்’ என்று என் நண்பர் கூறுயதும் அவ்வம்மையார் தாம் அச்சிற்பச் செல்வத்தின் பெயரை மறந்தே ஆகாக்கா னென்று சொல்லிவிட்டதாக மன்னிப்புக் கேட்டார்.
ஆங்கிலத்தை கன்ருகப் பேச அறிந்திருந்தால் எங்காட்டி லும் எளிதில் பிரயாணம் செய்தல் கூடும். ஆங்கிலம் இன்று எல்லா நாடுகளிலும் பல காரணங்களின் பொருட்டுப் பயிலப் பெற்று வருகின்றது. ஆயினும், வெளிகாட்டு மக்கள் தம் தாய்மொழியை, நம்மைப் போன்ற பிற நாட்டார் பேசக் கேட்கும்பொழுது அவர்களுக்கு உவகை பிறப்பது இயல்பே யாம். சில வேளைகளில் அவர்களுடைய மொழியை காம் அறிக்திருக்கக்கூடும் என்று நினையாமல் அவர்கள் நம்மைப் பற்றிக் குறிப்பிடும் கருத்துக்களை அறியவருகின்ருேம். என் நிறம், தலைமுடி, பற்கள் முதலியவை பற்றி ஐரோப்பிய மக்கள், எனக்குத் தம் மொழி புலனுகாது என்று நினைத்துத் தமக்குள் உரையாடிக்கொண்டதைக் கேட்டு நான் பன்முறை புன்முறுவல்கொண்டிருக்கின்றேன். சில வேளைகளில் அவர்கள்

சுற்றுச் செலவுக் கலை I
என்ஜனப் பற்றிப் பேசியபின் குறும்பிற்காக அவர்கள் மொழி யில் ஏதாவது ஒரு கேள்வியை அவர்களிடம் கேட்டுஅவர்களைத் திடுக்கிடச் செய்திருக்கிறேன். ஆக்ஸ்போர்டில் ஒரு காள் புத்தகக் கடையொன்றில் புத்தகங்களைப் பார்த்துக்கொண் டிருந்தேன். அங்கு வந்த இருவர் என்னைக் கண்டதும் கான் எக்ாகாட்டவராக இருக்கக்கூடுமென்று இத்தாலிய மொழியில் உரையாடத் தொடங்கினர். அவர்கள் இங்கிலாந்தைப் பார்க்க வந்த இத்தாலியர் என்பது எனக்கு விளங்கிற்று. என் உடலமைப்பு, முடி, மூக்கு, முதலியவற்றைப் பற்றிச் சுவை யாகவே தமக்குள் பேசிக்கொண்டனர். இறுதியில், நான் தெள்ளிய இத்தாலியத்தில், 'ஐயா, என்னை மன்னித்து இடங் கொடுங்கள்’ என்று சொல்லிவிட்டு அவர்களைத் தாண்டி வேருெரு பக்கத்திற்குச் சென்றேன். அப்பொழுது அவர்கள் திடுக்கிட்ட காட்சி எனக்கு நகைப்பைத் தந்தது. சிறிது கேரங் கழித்து அவர்கள் நின்ற பக்கத்தே நான் திரும்பிப் பார்த்த பொழுது அவர்கள் கதவைத் திறந்துகொண்டு புத்தகக் கடையை விட்டு விரைவாக வெளியே செல்வதைக் கண்டேன். ஒரு நாட்டில் கண்டோரை மீண்டும் எதிர்பாராது வேற்று காட்டில் காண்பது என் செலவுகளில் நான் அனுபவிக்கும் பிறிதோர் இன்பம். ஜப்பானில் சந்தித்த ஒருவரை இலண்ட னில் நிலம்புகு வண்டியில் எதிர்பாராது கண்டிருக்கிறேன். இத்தாலியில் உடன்மாணவராக இருந்தவரொருவரைச் சிங்கப் பூர்த் தெருவில் வாழ்த்தியுள்ளேன். ஹாலண்டில் இவ்வாறு கான் அறிந்த மூவரை ஒரே நாளில் சந்தித்துள்ளேன். இலெய்டன் பல்கலைக் கழகத்தை நான் பார்க்க விரும்பிக் கால் வாய் அருகில் நின்ற மூவரை அணுகிப் பல்கலைக் கழகத் திற்குச் செல்லும் வழியை வினவினேன். எனக்கு வழியைக் காட்டியவர் என் முகத்தை உற்றுப் பார்த்தார். கானும் அவ ரைப் பார்த்தேன். இந்தோனிசியாவில் இலங்கைத் தூதுவர் இல்லத்தில் நான் சந்தித்த டச்சுக்காரர் அவர். அன்று கண் பகல் பழம் பொருட்காட்சி சாலையொன்றைப் பார்க்கச் சென் றேன். போகும் பொழுது வீதியின் மறு பக்கத்தில் நான் அறிந்த பாக்கிஸ்தான் நண்பர் ஒருவர் செல்வதைக் கண் டேன். அவர் அன்று இலண்டன் மாாககர் போவதாகவும்: விமானச் செலவில் ஆம்ஸ்டர்டாம் தங்கியதால் காட்டைப் பார்க்க விரும்பியதாகவும் கூறினர். அன்று இரவு கான் நியூயார்க்குச் செல்ல ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில்

Page 14
12 ஒன்றே உலகம்
உலாவிக்கொண்டிருந்தேன். பக்கத்தில் இத்தாலிய மொழி யில் உரையாடிக்கொண்டிருந்த இருவரைப் பார்த்தபொழுது ஒருவரின் முகம் அறிந்த முகம்போல் தோன்றிற்று. என் நினைவிற்கு எட்டிய அளவு அவர் யாரென்று நினைக்க முயன் றேன். அவரை அணுகி, “நீங்கள் இசைக் குழுத் தலைவரல் லவா? காம் இருவரும் பணுமாவிற்கு ஒரே விமானத்தில் சென்ருேமல்லவா?’ என்று நான் கூற, அவர் “நீங்கள்தான?” என்று கையைப் பற்றினர். இவ்விசைக்குழு ஆசிரியரை ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நியூயார்க்கிலிருந்து, பனுமாவிற்குச் செல்லும்பொழுது சந்தித்தேன். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரே விமானத்தில் அவரும் நானும் ஐரோப்பாவி லிருந்து அமெரிக்கா சென்ருேம்.
பிற காட்டுக்குச் செல்பவர் அனைவரும் பெருஞ் செல்வர் என்று நினைப்பது தவருகும். நடுத்தரத்தில் ஊழியஞ் செய்யும் ஐரோப்பிய அமெரிக்க மக்கள் எத்தனையோ பேர் சுற்றுச்செலவு செய்துவருகின்றனர். ஒவ்வொரு திங்களும் ஒருசிறு தொகையைப் பிரயாணத்திற்கென்று ஒதுக்கி வைப்ப தால் கோடை விடுமுறை காலத்தில் பிரயாணஞ் செய்வதற்குப் போதிய பணத்தைத் திரட்டுகின்றனர். ஒருவர் தம் நாட்டி லேயே பிரயாணம் செய்வதுகூட அறிவை வளர்த்து விரி வடையச் செய்யும். எனவே, கல்விக் கழகங்களும் ஏனைய கழகங்களும் செலவுக் குழுக்களை ஏற்படுத்திப் பிரயாணப் பழக்கத்தை மக்களிடையே பரப்ப வேண்டும்.
பிரயாணஞ் செய்வது ஒரு கலை. சிறு பணத்தொகையுடன் பல இடங்களைக் காண்பது எப்படி, ஓர் இடத்திற்குச் சென்ருல் அங்கு எதனைப் பார்க்கவேண்டும், யாரைச் சக்திக்கவேண்டும், எத்தகைய விடுதியில் தங்கவேண்டும், என்பன போன்ற விவரங்களைப் பழகிய சுற்றுச் செலவுக்காரர்களிடமிருந்து அறிந்துகொள்வது கன்று. எத்துணையோ பேர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து இலண்டனுக்குப் பறந்து செல்கின்றனர். அவர்களில் பலர், இடையே உள்ள நகர்களாகிய பம்பாய், கராச்சி, பெய்ரூட், உரோமாபுரி, ஜெனீவா, பாரீஸ் போன்ற இடங்களில் ஒரே பிரயாணக் கட்டணத்திற்குப் பல நாட்கள் தங்கிச் செல்லக்கூடுமென்றும், ஒரு விமானக் கம்பெனியில் சீட்டு வாங்கினுல் வேறு விமானக் கம்பெனி ஊர்திகளிலும் செல்லுதல் கூடுமென்றும் அறியார். ஆதலால், தங்கக்கூடிய

சுற்றுச் செலவுக் கலை 3
இடங்களில் தங்காதும், பார்க்கக்கூடியவற்றைப் பார்க்காதும் செல்கின்றனர்.
வேற்று காட்டிற்குச் செல்வது என்பது, பண்டைக் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் இன்றைய உலகில் பல துறைகளிலும் பெரும் வருத்தத்தை அளிப்பதாயுள்ளது. 1934ஆம் ஆண்டு நான் ஐரோப்பாவிற்கு முதல் முறை சென்றபொழுது அச்செலவிற்கு இன்றியமையாத பாஸ் போர்ட் முதலிய கட்டளைகள் எளிதில் எனக்குக் கிடைத்தன பணம் முதலியவற்றை வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல் வது பற்றி அரசியலார் அப்பொழுது யாதொரு தடையும் விதித்திலர். பிற நாடுகள் கம்மை அன்புடன் வரவேற்றன. 1939 ஆம் ஆண்டு கான் ஐரோப்பிய காடுகளில் முதன் முதல் சுற்றுச் செலவு நிகழ்த்தியபொழுது ஜெர்மனி உட்பட எல்லா காட்டு அதிகாரிகளும் “வீசா’ முதலிய உடன்பாடுகளையும் எனக்கு எளிதில் தந்தனர். இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் பிற நாடுகள் செல்வது பெரும் தொந்தரவைக் கொடுக் கும் அலுவலாக இருக்கின்றது. பணத்துறைக் குழுவினர் வேற்று நாட்டிற்குப் பணத்தொகை கொண்டு செல்வதைப் பல முறைகளிலும் தடுக்கின்றனர். பற்பல நாடுகளுக்குத் தனித்தனி வீசா பெறவேண்டியதாய் இருக்கின்றது. இவ் வீசாக்களைப் பெறுவதிலேயே பல காட்கள் சென்று விடு கின்றன. வேற்று காடுகளுக்குச் செல்வது என்ருல் விமானத் திலேயோ கப்பலிலேயோ கணக்கற்ற பாரங்களை நிரப்பித் தரவேண்டியுள்ளது. மேலும் கீழ்த்திசை காடுகளில், அல்லது ஆப்பிரிக்க காடுகளில் பிரயாணம் செய்வது என்ருல் பல நோய்களைத் தடுப்பதற்கு வேண்டிய ஊசிகளையும் குத்திக் கொள்ள வேண்டி இருக்கின்றது. எனவே இன்று உலக ஒற்றுமையை நிலை நாட்ட ஐக்கிய நாட்டுப் பேரவை போன்ற அவைகள் ஒருபால் பெரும் முயற்சி செய்துவர, அதற்குமாருக மக்களைப் பிரிக்கும் பற்பல சட்டதிட்டங்கள் வெவ்வேறு காடு, களில் நிறைவு பெற்று வருகின்றன. தாம் கீழ்த்திசை காடு களில் பிரயாணம் செய்யும்பொழுது கணக்கற்ற பாரங்களை கிரப்பிக்கொடுக்க வேண்டி இருக்கின்றது என்று மேல்ாநாட்டுச் சுற்றுச் செலவாளர் முறையிடுகின்றனர். இங்காடுகளுக்குச் செல்லும்பொழுது இரண்டு மணி நேரம் விமானச் செலவு செய்தால் அந்த இரண்டு மணி நேரத்தில் ஓர் அரை மணி நேரமாவது பாரங்களை நிரப்புவதில் பிரயாணிகள் கழிக்கின்

Page 15
  

Page 16
6 ஒன்றே உலகம்
சமயத்தைத் தழுவிப் பிற்காலத்தில் புத்த மதத்தை மேற் கொண்ட காலத்திலும் தாய் மன்னர் இந்துப் பிராமணரைப் போற்றி அவர்களின் சடங்குகளுக்கும் தமிழ் மொழிப் பாடல் களுக்கும் தம் அரண்மனையில் இடங்கொடுத்திருத்தல் தமிழ்ப் பண்பாடும் செல்வாக்கும் அங்கு எத்துணை வேரூன்றியிருத் தல் வேண்டுமென்பதைக் காட்டுகின்றது.
மேலும் திருப்பாவை, திருவெம்பாவைப் பாக்களிலிருந்து இச் செய்யுள்களைத் தேர்ந்தெடுத்ததற்கு வேருெரு காரணமும் இருந்திருத்தல் கூடும். தாய்லாந்தில் பண்டுதொட்டுத் திருப் பாவை திருவெம்பாவை என்னும் திருகாளைத் தைத் திங்கள் தோறும் பேரூர்களிற் கொண்டாடி வந்தவர்களென்பதற்குச் சான்றுகள் பல உள. இத்திருநாள், ஊர்மக்கள் அனைவருக் குமே பெருந் திருகாளாக விளங்கியது. பேங்கோக் பேரூரின் பெரும்வீதியில் திருப்பாவைக் கொண்டாட்டச்சடங்கின்போது ஊஞ்சல் கட்டி ஆடிய பெரும் நி2லமரங்களை இன்றும் காண லாம். இன்று திருப்பாவை திவெம்பாவைத் திருநாள் மக்களால் கொண்டாடப்படாமல் இருப்பினும் தாய்லாந்தின் பிராமணர் பேங்கோக்கிலிருக்கும் சிவன் கோயிலிலும் திருமால் கோயிலிலும் திருப்பாவை திருவெம்பாவைத் திருகாளைக் கொண்டாடி வருகின்றனர். அக்கொண்டாட்டத்திற்கு லிகோர் எனும் தென்பகுதி நகரிலிருந்தும் பிராமணர் வந்து கலந்து கொள்கின்றனர்.
இப்பத்திப்பாடற் ருெடர்பினைத் தவிர வேறு இலக்கியத் தொடர்பும் தமிழ் காட்டிற்கும் தாய்லாந்திற்கும் உண்டு. மணிமேகலைத் தெய்வ வழிபாடு தாய் நாட்டிலும் பரவியிருந் தது. பீயா அனுமான் எனும் சிறந்த தாய் அறிஞர் என்னு டன் உரையாடும்போது தாய் மொழியில் இயற்றப்பெற் றுள்ள இராமாயணத்தின் ஒரு பெரும் பகுதி தமிழ்க் கம்ப ராமாயணத்தையே தழுவி யாக்கப்பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார். தங்கம் என்னும் சொல் தாய் மொழியிலிருந் தும் சீனத்திலிருந்தும் தமிழ் மொழிக்கு வந்திருத்தல் வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தமிழ்ச் சொற்கள் சில *தாய் மொழியில் இடம் பெற்றுள்ளன. 'ஐ', 'அம்', 'ஆய்” என்னும் விகுதிகள் பெற்ற சொற்கள் தாய் மொழியிற் பல உள்ளன. இவை பெரும்பாலும் தமிழைத் தழுவியே விகுதி பெற்றன என்றும் கூறினர். "தாய் இராமாயணத்தின் கதை மாந்தர் தமிழ்ப் பெயர் வழக்கையே தழுவிக் குபேரன்,

தாய்லாந்து 7
சுமந்தன், மாயன், தேவன், சீவன் என்று "அன் விகுதியுடன் பெயரிடப்பெற்றிருக்கின்றனர்.
தமிழர் பெருங் கப்பலோட்டிகளாக இருந்ததால் கப்பல் என்னுஞ் சொல் அங்காடுகளில் பரவி யிருக்கக்கூடுமென நினைத்து தாய் மொழியிற் கப்ப2ல எவ்வாறு குறிப்பிடுகின் றனரென்று நான் கேட்டபோது, கப்பலைக் கப்பால்” என்று தாய் மொழியினர் கூறுவதாக அறிந்தேன். இச்சொல் தென் கிழக்கு ஆசிய காடுகள் அனைத்திலும் இடம் பெற்றுள் Tெது.
கம்போதியாவிலும் தாய்லாந்திலுமுள்ள காட்டியக் கலை கள் பெரும்பாலும் தமிழ் காட்டுக் கலைகள் போன்றவை. ஆனல் இன்று அங்காடுகளில் நடனங்கள் பரதாகாட்டியத்தின் ஆற்றலையிழந்து பல அபிகயங்களற்றுச் சலிப்புண்டாகும் ஒரே பான்மையில் அமைகின்றன. தாய்லாந்தில் ஆக்கப் பெற்ற வெண்கலச் சிலைகளும் சோழர்கால வெண்கலச் சிலை களின் தொடர்பைத் தெளிவாகக் காட்டுகின்றன. புத்த சமயம் இக்காடுகளிற் பரவிய காலம் 10, 11 ஆம் நூற்ருண்டு களேயாகும். அதன்முன் பாமர மக்கள் புத்த மதத்தைத் தழுவியிருந்தாலும், அரசர்களும் அரசவையிலுள்ளோரும் பெரும்பாலும் இந்து சமயத்தையே தழுவியிருந்தனர். பல்ல வர், சோழர் காலத்தில் பல்லவர், சோழர், சிற்ப முறைகளும் கட்டட அமைப்புக்களும் இங்காடுகளில் பரவியிருந்தன. பல்லவர் முறையிலே செதுக்கப்பெற்ற திருமாலின் சி2லகள் பல இங்ாகாடுகளிற் காணப்படுகின்றன. பேங்கோக்கிலுள்ள பொருட்காட்சிச் சாலையில் அத்தகைய சிலைகள் சிலவற்றைக்
35 TGÖTG) TID, .
தாய்லாந்தில் “தமிழ்” என்ற சொல்லுக்குத் தாய் மக்கள் புதுப் பொருள் கொடுத்திருக்கின்றனர். தமிழ்’ எனும் சொல்2ல அவர்கள் தமின்’ என னகர, ஒலி கொடுத்து ஒலிக்கின்றனர். தமின்’ எனப்படுவது அவர்கள் மொழியில் “கொடியவன்’ என்ற பொருளைப் பெற்றிருக்கின்றது. பேங் கோக்கை விட்டுச் செல்லுமுன், வானூர்தி நிலையத்திலுள்ள ஊழியர் ஒருவரிடம் தமின்’ என்ற சொல்லின் பொருளைக் கேட்டேன். அதற்கவர், “தமின் என்றல் ஒரு கொடிய கறுத்த இந்தியன்’ என்று விடையிறுத்தார். சோழர், ஈழாகாட்டின்மீது படையெடுத்த காலத்தில் புத்த முனிவர்கள் பலர் ஈழத்தி லிருந்து தாய்லாந்திற்குக் கப்பலேறிச் சென்றனர். அவர்கள்
I 0.77-2 ፳

Page 17
E. ஒன்றே உலகம்
அங்குச் சென்றிருந்தபோது தமிழ் மக்கள் தங்கள்பால் இழைத்த கொடுமைகளேப் பற்றிப் பேசினர். இது காரணம் பற்றியே தாய்லாந்தில் அதுகாறும் சிறப்புப் பெற்று விளங் கிய 'தமிழ்" என்னும் சொல்லிற்குக் கொடுமையுடன் தொடர் புள்ள புதிய பொருளொன்று சேர்ந்தது. நாளடைவில் தமிழர் ஆதிக்கம் குன்றியதும் அப்பொருளே நிலைத்தது.
பேங்கோக் நகரானது பெரிய நகராயினும்கொழும்பையும் கோலாலம்பூரையும் போன்ற அழகிய நகரென்று சொல்வதற் கில்லே. கொழும்பு, கோலாலம்பூர் போன்றவற்றில் இளமரக் காவும் சோலேகளும் மரஞ்செடிகளும் இல்லத் தோட்டங் களும் நிறைந்திருப்பதால் அவற்றைத் தோட்டப்பேரூர்கள் என்றழைப்பர். ஆயினும் பேங்கோக்கில் அழகிய புத்த கோயில்களும், பண்டைத் தாய் மன்னரின் மாளிகைகளும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் புதிய மாளிகைகளும் உள. தாய் மன்னரும் பிரபுக்களும் பல மகளிரை மணம் செய்யும் வழக்கம் இருந்ததால் அரச குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் பலர் பேங்கோக்கில் உளர். "இளவரசர்", "இளவரசி" என்று பட்டம் பெற்ற பலர் ஆட்சித் துறையில் வேலே செய்து வருகின்றனர். அத்தகையோர் மூவர், நால்வரை கான் முன்னரே அறிந்திருந்ததால் அவர்கள் எனக்குத் துனேவர் களாகத் தம் ஊரின் பகுதிகளேயும் நிலையங்களேயும் காட்டி னர். தாய் மக்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியும் உல்லாசமும் உடையவர்களாகத் தோன்றினர். அவர்களுடைய தலோகர் இரவிலும் கன்ருக ஒளி அழகு படைத்து விளங்குகின்றது. தாய்லாந்தே தென் கிழக்கு ஆசிய காடுகளில் வேற்று அரசிற்கு உட்படாது தன்னுட்சி பெற்று என்றும் இன்புற்ற நன்னு டென்று தாய் காட்டார் பெருமிதம் கொள்கின்றனர்.
பேங்கோக்கில் வாழ வேண்டுமென்ருல், ஏனேய தென்னுசி பப் பேருர்களிலும் அதிகமாகப் பணம் செலவு செய்தல் வேண்டும். விடுதிகள் உயர்ந்த கட்டணத்தை விதிக்கின்றன.
*தாய் உணவுச் சாலேகளில் தண்ணிர் பருகுவதற்குப் பதிலாக மென்மையான தேைேரயும் வாழைப் பழத்தின் சாற்றையும் பருகுகின்றனர்.

རྐ
TOI Elb *幫
リー ܒ݂ ܊- ¬ -
.  ݂ ݂ ݂ܒܚ
காபோதியா-செதுக்கிய ຫຼິ | L I
=="
க்கம்-24) கம்போதியா - பாயோனின் வாயில் (பக்கம் :)

Page 18
தாய்லாந்தின் நாட்டியப் பெண்கள் தாய்லாந்தின் இராமாயண நாட்டியம் பக்கம் - 17 ) பக்கம் - 17
 

3. கம்போதியா
விரலாற்றியல் கன்ருகக் கற்றவருங்கூட அங்கோர் GJIT” (Angkor Wat) **-gy ÉIGH; Trī G5 Th” (Angkor Thom) என்ற பெயர்களேக் கேட்கும்பொழுது அவற்றைப்பற்றிஅறியா மல் தடுமாறுவதை நான் கண்டுள்ளேன். அங்கோர்வாட், அங் கோர் தொம் என்பவை கம்போதியாவில் உள்ள சிறந்த கட்டட மும், நகரும் என்று கற்றறிக்தோரும் அறியாதிருப்பதற்கு காம் கல்வித்துறையில் மேல்நாட்டு வரலாற்றையும் பண்பாட்டை பும் வலியுறுத்திக் கீழ்ாாட்டு வரலாற்றினேப் பொருட்படுத் தாததே காரணம். கம்போதியாவில் உள்ள இடிந்தழிந்த பெரும் ககர்களேப் போலவும் கோயில் மாளிகைகளோப் போல வும் இவ்வுலகில் வேறெந்த காட்டிலும் இடிந்த கட்டடப் பரப்பு இல்லே. இடிந்த நகர்களும் கோயில்களும் மாளிகை களும் செய்குன்றங்களும் கீர்கால் பாத்தலுக்குரிய ஏரிகளும் கால்வாய்களும் அங்குப் பரந்திருப்பதால், இன்கார் (Incas), அஸ்தேக்கர் (Azteus), மாயர் (Mayas) என்போர் தென் அமெரிக்காவில் நிறுவிய நகர்களும், கட்டடங்களும் கம்போதி யாவின் பழைய ாகர்களுடன் ஒப்பிடுங்கால் சிறியனவாகத் தோன்றுகின்றன. இலங்கையின் அனுராதபுரம் தொன்மை வாய்ந்ததாயினும் கம்போதியப் பழைய நகர்களேப் போல் சீரும் பல்துறைப் பண்பும் படைத்திருந்ததாகத் தெரியவில்லே. *அங்கோர் வாட்' எனும் கோயில் மாளிகையும் "அங்கோர் தொம்’ எனும் பெருநகரும் "கிமேரர்" (Khmers), எனும் இனத்தவர் கம்போதியாவில் பேரரசு ஒச்சிய காலத்தில் எழுப்பப்பெற்ற புகழ் பொருந்திய இடங்களாம்.
கிமேரர் என்பவர்கள், இற்றையக் கம்போதியாவின் தென் பாகத்தில் ஒருகால் அரசு புரிந்து வந்தவர்கள். இந்தியாவி லிருந்து சென்ற இளவரசனுெருவன் பெரும் தெய்வ காக மொன்றின் புதல்வியை மணஞ்செய்து அரச வரிசையைத் தோற்றுவித்ததாகக் கம்போதியாவின் பழங் கதைகள் கூறும். இக்கதையும் இன்னுேரன்ன பிற கதைகளும் கம்போதியா, இந்தியாவிலிருந்து சமயத்தையும், அரசியல், கலே, கல்வி முதலியவற்றையும் பெற்றதென்று புலப்படுத்துகின்றன.

Page 19
20 ஒன்றே உலகம்
அந்தக் காலத்தில் தென் கம்போதியாவும் தென் வியட்நாமும் இந்தோனிசியாவும், சிறப்பாகத் தென்னிந்தியாவுடன் நெருங் கிய கலைப் பண்பாட்டுத் தொடர்புகள் கொண்டிருந்தனவென் றும் பிற்காலத்தில்தான் சீனப் பண்பாட்டை ஏற்றனவென் றும் அறிய வருகின்ருேம்.
கம்போதியா உச்சநிலை அடைந்த காலம் கிமேரரெனும் இனத்தவர் பேரரசு நிறுவிய காலம்தான். இவர்கள் ஒன்பதாம் பத்தாம் நூற்றண்டுகளில் உயர்ந்த நிலையையடைந்து மேகொங் பேராற்றின் (Mekong River) பரப்பு நிலத்தில் அங்கோர்’ எனும் மாபெரும் நகரைக் கட்டினர். மேகொங் பேராற்றின் பெருக்கும் வெள்ளமும் வண்டலும் அங்குள்ள பரந்த வயல்களின் செழிப்புக்குக் காரணமாயிருந்தன. வேளாண்மையை நன்கு செய்வதற்கு இரு கல் நீளமும் ஒரு கல் அகலமும் படைத்த ஏரிகளைத் தோண்டி அவற்றிலிருந்து பல வாய்க்கால்கள் வழியாக நீர் பாய்ச்சி வந்தனர். கிமேர் இனத் தாரின் பேரரசு ஒரு காலத்தில் தென் இந்தோச் சீனுவிலிருந்து பர்மாவரையும் பரவியிருந்தது. இவ்வரசு புகழ்பெற்று விளங் கிய காலத்தில், பெரு நகர்களையும் கணக்கற்ற கோயில்களை யும் மாளிகைகளையும் அரசர் கட்டினர்.
கிமேரருடைய பண்பாட்டிற்கும் கலைகளுக்கும் இந்தியப் பண்பாடும் கலைகளுமே அடிப்படையாக இருந்தன. கிறித்துவ சகாப்தத்தின் முதல் நூற்றண்டிலேயே பொதுவாக இந்தியா வுடனும் சிறப்பாகத் தென்னிக்தியாவுடனும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் யாவும் தொடர்பு கொண்டிருந்தன. இந்திய மக்களுள் சிறப்பாகத் தமிழ் வணிகரும் கப்பலோட்டிகளும் இங்காடுகளுக்குச் சென்று பண்டமாற்று வாணிகம் செய்து வந்தனர். இவ்வணிகர், சென்ற துறைமுகங்களில் குடியேறித் தம்மில்லங்களையும் கோயில்களையும் நிறுவினர். இக்காடு களின் மாந்தரும் வெளிகாட்டுத் தொடர்பினை வரவேற்றனர். எனவே இந்தியாவின் சமயங்களாகிய சைவத்தையும் வைண வத்தையும் புத்த மதத்தையும் போதிக்கும் பெரியாரையும் வரவேற்றனர். இந்திய வானநூல், கணிதம், சிற்பம் இலக்கி யம் முதலிய கலைகளைக் கற்றறிந்தனர். அரசர் தம் மாளிகை களிலும் கோயில்களிலும் பிராமணரைக் குருக்களாகவும் அமைச்சராகவும் அமைத்தனர். இந்திய அரச குடும்பங்களில் கம்போதிய அரசர் பெண் கொண்டிருத்தலும் கூடும். வட மொழியை வழிபாட்டிற்கும் கல்வெட்டுகளுக்கும் கன்ருகப்

கம்போதியா 2.
பயன்படுத்தியும் வந்தனர். எனவே, இங்ாகாடுகள் அனைத்தை யும் பரந்த இந்தியா’ (Greater India) என்று கூறுவது ஒருவாறு பொருந்தும். ஆயினும் இக்காலத்தில் விடுதலை பெற்று இனப்பற்றும் காட்டுப் பற்றும் மிஞ்சிய இங்ாநாடு களின் மாந்தர் சிலர், இந்தியப் பண்டாடு தம் காட்டுப் பண் பாட்டிற்குத் துணையாக இருந்தது எனும் கருத்தை எளிதில் ஏற்பதில்லை. இந்தியாவிற்கோ வேறெந்த காட்டிற்கோ கடமைப்பட்டிருப்பது தம் புகழிற்கு ஒருவாறு இழுக்கென்று இவர்கள் கருதுதல் கூடும். நேரு முதலிய இக்தியர் இக்காடு களுக்குத் தூது சென்ற காலத்தில் பரந்த இந்தியக் கொள் கையை வலியுறுத்தியதைக் கம்போதியா, வியட்நாம் போன்ற காடுகளின் செய்தித்தாள்கள் பெரிதும் எதிர்த்தன. காட்டுப் பற்றும், அரசியல் வாதமும் வரம்பு கடந்து மிஞ்சினுல் உண்மையும் புறக்கணிக்கப்படும் என்பது வெளிப்படை,
ஒன்பதாம் நூற்ருண்டில் செழிப்புறத் தொடங்கிய கிமேர் அரசு பதினைந்து பதினரும் நூற்ருண்டில் ஆதிக்கம் ஒழிந்து அடிமையாயிற்று. இப்பேரரசு தாழ்வுநிலை அடைந்ததற்குப் பல காரணங்கள் உள. கிழக்கில் அன்னமீத்தரும் (Annamites) மேற்கில் தாயரும் (Thai) வடக்கில் சீனுவிலிருந்து இடம் பெயர்ந்து குடியேறும் முரட்டினத்தவரும், இவரைத் தாக்கின தால் கிமேரர் பண்பாடு ஒழிந்தது என்று கூறுவர். கிமேரர் தம் தலைாநகரைத் துறந்து கம்போதியாவின் கிழக்கு மாவட்டங் களில் குடியேறினர். அவர்கள் பண்பாட்டிற்கு அடிகோலிக ளாக விளங்கிய பிராமணரும் அரச குலத்தவரும் கைதிகளாக மற்ருெரு காட்டிற்கு அனுப்ப்ப்பட்டனர். எஞ்சியோர் ஒதுங்கி வாழ்ந்தனர். பத்து இலட்சம் மக்கள் வாழ்ந்த மாநகர் பாழ டைந்தது. அங்குள்ள உலோகச் செல்வங்கள் கள்வரால் கவரப்பட்டன. வானத்தை வருடும் மரங்கள் வளரும் அடர்ந்த இருண்ட காடு, மாளிகைகளையும் கோயில்களையும் மூடியது. மரங்களின் வேர்களும் விழுதுகளும் கொடிகளும் கட்டடங் களின் நீக்கல்கள் வழியாக ஊடுருவிச் சுவர்களை வெடிக்கச் செய்து கட்டடங்களின் கற்களைத் தரையெங்கும் சிதறப் பரப்பின. அங்கோரெனும் தலைநகர்ப் பெயரின் நினைவுதானும் இங்ாகாட்டு மக்களிடம்கூட மங்கிய ஒரு தூர நினைவாகவே யிருந்தது. மேல்நாட்டினரும் அதனைப் பற்றிய யாதொரு செய்தியையும் அறிந்திலர்.

Page 20
22 ஒன்றே உலகம்
பத்தொன்பதாம் நூற்ருண்டில் கம்போதியாவில் பிரயா ணம் செய்த இரு கத்தோலிக்க பிரெஞ்சுக் குருமார் இப் பாழாகிய பெரு நகர்களைக் கண்டு வியப்பெய்தினர். அதன் மாண்பையும் பரப்பையும் கண்ட அக்குருமார் அங்ககர் கிரேக்கப் பேரரசராகிய மகா அலெக்ஸாண்டரால் கட்டப் பெற்ற நகராக இருக்கவேண்டும் என்றும் கருதினர். அவர் களுக்குப் பின் தாவர இயல் வல்லுங்ர் ஹென்றி மூகோ (Henri Mouhot) என்பவர் மரஞ்செடி பற்றி ஆராயும் காலத்தில் காட் டில் உள்ள நகரைக் கண்டார். பிரெஞ்சு காட்டின் கீழ்த்திசை, ஆராய்ச்சிக் குழுவினர் கம்போதியாவின் இப்பழைய நகரையும் ஏனைய கட்டடங்களையும் காப்பாற்ற வேண்டுமென்று ஆற் றிய தொண்டு சான்றேர் அனைவராலும் போற்றப்பட்டு வரு கின்றது. தரைமட்டத்தில் இடிந்து சிதறிக் கிடந்த கற்களைக் கொண்டு அக்கட்டடங்களின் பண்டைய வடிவத்தின்படி பல கோயில்களையும் அரண்மனைகளையும் மீண்டும் எழுப்பியிருக் கின்றனர். பண்டைக் கம்போதிய கட்டடக் கலைகளை ஆராய்ந்து பயின்றதால் அச்சீரமைப்பு எளிதாயிற்று. அவர் களின் வியத்தகும் வேலையின் மாண்பை அறியவேண்டு மெனில் அங்குள்ள மீண்டும் கட்டிய கட்டடங்கள், அவ்வாறு கட்டுதற்குமுன் எங்ாநி2லயில் இருந்தனவென்று நிழற்படங்களி லிருந்து காணுதல் வேண்டும்.
இப்பழைய நகரைக் காண்டல் வேண்டுமென்று பல ஆண்டுகளாக கான் விரும்பிவந்தேன். பேங்கோக்கில் ஒரு முறை தங்கியபோது விமான வழியாக சியெம் ரீப்புக்குச் செல் லும் சுற்றுச் செலவினருடன் கானும் சேர்ந்தேன். பேங்கோக்கி லிருந்து ஒன்றரை மணி நேரத்தில் விமானத்தில் சியெம் ரீப்பை அடையக்கூடும். அப்போது முதன் முதலில் தாய் காட்டின் அழகிய வயல்களையும் நீர்பாயும் கால்வாய்களையும் விமானத்திலிருந்து பார்த்தேன். பெரிய கால்வாய்களில் உள்ள படகுகளைக் கால்வாய் ஓரத்தில் செல்லும் பணியாட் கள் இழுத்துச் சென்றனர். மீனும் சமவெளிக்குப்பின் தோன்றி யது ஒரு மலைத்தொடர். அது கழிந்ததும் "அங்கோர் வாட்' எனும் மாபெரும் கோவில்-அரண்மனையை வானத்திலிருந்து பார்வையிட எதிர்பார்த்தேன். அதனை நான் கண்டதும் அக் கட்டடத்தைப் பற்றிய நூல்கள் யாவும் குன்றக்கூறியன என் பதை உணர்ந்தேன். உலகில் நான் கண்ட தனிக் கட்டடம் எதுவேனும் அத்தகைய வியத்தகு காட்சியை எனக்களிக்கவே

கம்போதியா 23
யில்லை. எனது சிறு பருவம் தொடங்கியே, இலங்கையில் அபெயகிரி தாகோபாவின் மாட்சி, நிலா வெளிச்சத்தில் தோன்றுவதைக் காண இரவில் புகைவண்டிப் பிரயாணஞ் செய்யும் பொழுதெல்லாம் எதிர்பார்ப்பேன். உரோமாபுரி இராயப்பர் ஆலயத்தின் (St. Peter's Basilica) பெருமை அதனைச் சூழும் கட்டடங்களால் குறுகி விளங்குவதை அண் மையிலும் சேய்மையிலும் விமானத்திலிருந்து கவனித்திருக் கின்றேன். பெரு இருங்காட்டில், பச்சை ஆடைபோன்ற பரப் பின் நடுவில், மலைபோன்ற மாளிகை தோன்றுமென்ருல் அதன் காட்சி யார் கருத்தைத்தான் கவராது ? அங்கோர்வாட் டைச் சூழ்ந்த அகழி கார்காலத்தில் பரந்த காவேரி ஆற்றின் காட்சிபோல் இருந்தது. அம்மாளிகையின் ஐந்து கோபுரங் களும் ஏனைய கட்டடங்களும் கம்போதியாவில் எனக்குக் காத் திருந்த கலைவிருந்தை முன்னமே அறிவுறுத்தின.
வானவூர்தி நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்குச் சென் ருேம். அவ்விடுதி பிரெஞ்சுக்காரரின் மேற்பார்வையில் இருந்து வந்தது. அங்கு அமெரிக்கர், பிரெஞ்சுக்காரர், ஜப்பா னியர், அன்னமீத்தர் ஆகியோர் பலர் சுற்றுச் செலவினராக வந்திருந்தனர். மேல்நாட்டார் ஆசிய மக்களின் இம்மாபெருஞ் சின்னங்களைப் பார்வையிட்டறிவது உலகில் புத்துணர்வை யும் நட்பையும் கல்லெண்ணத்தையும் பயக்குமென்பது திண்ணம். அங்கோர் போன்ற நகர்களைப் பற்றி இன்னும் விளக்கமாக மேல்ாகாட்டினர் அறியவேண்டும். அங்கோர் நகர்கள்
கம்போதியாவின் கட்டடங்களில் முதன் முதல் அங்கோர் வாட்டையே பார்க்கச் சென்றேன். ‘அங்கோர்’ என்னுஞ் சொல் நகர்”, “நகரா’ என்னுஞ் சொல்லின் திரிபு. நகர்* என்பது வடமொழிச் சொல்லென்று பொதுவாகக் கருதப்படு கின்றது. ஆயினும் அச்சொல், வடமொழியொழிந்த ஏனைய இங்தோ - ஐரோப்பிய மொழிகளில் இல்லாமையாலும், திராவிடர் நகரங்களை அமைப்பதில் பண்டு சிறந்து விளங்கிய தாலும், “நகர் என்னும் சொல் திராவிட மொழிக்கே பண்டு தொட்டு உரியசொல் என்று கருதுவதற்கு ஆதாரங்கள் சில உள. அங்கோர்வாட்’ தனிக் கட்டடமாயிருந்தும் மலை நகரென்ற பெயரை அது பெற்றதற்கு அதன் பரப்பும் மாண் பும் காரணமாயிருந்திருக்க வேண்டும்.*
* வாட் என்பது “பார்வத்’ (பருவதம்) என்னும் சொல்லின் விகுதி.

Page 21
24 ஒன்றே உலகம்
நீண்ட அகழியைப் பாலம் வழியாகக் கடக்கும்பொழுது அக்கட்டடத்தின் மாண்பு தோன்றியது. வரிசை வரிசையாக எழும்பும் அரண்மனையின் பாகங்களும், அதன் சிகரத்தில் உள்ள ஐந்து கோபுரங்களும் மாட்சிமை தோன்றத் திறம்பட அமைக்கப் பெற்றிருக்கின்றன. கிமேரர் இவ்வாறு மாண்பு தோன்றக் கட்டடங்களை அமைப்பதில் கைதேர்ந்தவர்கள். உள்சென்று அங்குள்ள அறைகள், ஒலக்கங்கள், கோயிற் பகுதிகள், உள் முற்றங்கள் முதலியவற்றைப் பார்த்தேன். நீண்ட படிகள் வழியாக உச்ச அறைகளையும் கண்ணுற்றேன். கிமேரர் சுவர்களையும் தூண்களையும் வாளாவிடாது உருவங் கள், பூக்கும் செடிகள் முதலியவற்றைச் செதுக்கி அழகுபடுத்தி யுள்ளனர். கடிக்கும் பெண் உருவங்களும், அப்சரரும், சிரிக் கும் அழகிகளும், ஐம்பால் கூடங்தல் வகுத்தும், அணிகலன்கள் கூந்தலில் பொருத்தியும், பட்டாடை இடையிலே அணிந்தும் சுவர்கள் தோறும் செதுக்கப்பட்டிருப்பதால் கிமேரர் அழகிய லில் எங்ங்னம் ஆழ்ந்திருந்தனர் என்பதை காம் உணர்தல் கூடும். இவ்வுருவங்கள் யாவும் இன்முகம் காட்டிப் புன் முறுவல் பூத்து நிற்கின்றன.
மாளிகையின் பல பகுதிகளே இணைக்கும் நீண்ட கூடங் களின் சுவர்களில் இராமாயணம், பாரதம், விஷ்ணு புராணம் முதலிய இந்தியக் காப்பியங்களிலுள்ள கதைகள் செதுக்கப் பெற்றுள்ளன. திருமால் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்கும் கதையும், திருமாலின் வரலாறுகளும், இராமாயணப் பாரதப் போர்களின் காட்சிகளும், இரண்டாம் துரிய வர்மன் (கி. பி. 1113-1150) எனும் அரசனின் பெருமையைக் காட்டு வதற்காக, அங்கு வரையப்பட்டுள்ளன. அங்குச் செதுக்கப் பட்டிருக்கும் கதைகளும் வரலாற்றுச் செய்திகளும் சிறு கல்வெட்டுகளும் சூரிய வர்மன் போரில் பெற்ற வெற்றிகள் முதலியவற்றைக் கூறுவன. -
அங்கோர் வாட்டைப் பார்த்தபின் அங்கோர் தொம்’ (Angkor Thom) அல்லது “பெரும் நகர்” என்று பொருள் படும் பழைய நகரைப் பார்க்கச் சென்றேன். இதுவே கிமேரர் பேரரசிற்குப் பன்முறை தலைாககராக விளங்கிய நகர். இன்று அடர்ந்த காட்டு மரங்களால் தழப்பெற்ற மாளிகைகளும் வீதிகளும் அக்காலத்தில் பத்து இலட்சம் மக்களின் இல்லங் கள் தழ்ந்த இடங்களாக இருந்திருக்கவேண்டும். எங்குப் பார்த்தாலும் வழியோரத்தில் காவற் சிலைகளும் இடிந்து

கம்போதியா 25
உடைந்த தூண்களும் கிடந்தன. நகரின் நான்கு வாயிற் கோபுரங்களும் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்டிருந்தன. கோபுரங்களின் எல்லாப் பக்கங்களும் இவற்றைக் கட்டிய அரசர் ஒருவரின் முகவடிவங்களாகத் தோன்றுமாறு கற்கள் செதுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கோபுரமும் காற்றிசை யிலும் நான்கு முகங்கள் காட்டும் கோபுரமாக அமைந்துள் ளது. “பாயோன்’ (Bayon) எனும் குன்றம் போன்ற ஆலயம் மனமயக்கம் உண்டாக்கும் தன்மை படைத்தது. அது பல முக்கோபுரங்களும் பல சிறு வழிபாட்டு அறைகளும் கொண் டது. இதனைக் கட்டிய ஏழாவது சயவர்மனுடைய கல்லறை யும் அவன் நெருங்கிய சுற்றத்தார் கல்லறையும் பாயோனில் இருந்திருத்தல் வேண்டும். திருமறைக் கலைகள்
கிமேரருடைய கலைகள் அனைத்தும் திருமறைக்கலைகளா கவே அமைந்திருந்தன. ஒவ்வோர் அரசனும் தன் பத்தியைக் காட்டுவதற்குப் புதுக் கோயில்களைக் கட்டி வந்தான். அத் துடன் அரசரே திருமாலின் அவதாரமாகக் கருதப்பட்டதால் தம்முடைய தெய்விக அரசத்தன்மையைப் புகட்டுவதற்காக வும், தாம் இறந்தபின் தம்முடைய தெய்விகத் தன்மையும் புகழும் குடிகொள்வதற்காகவும், அரசர் பெரிய கோயில்களைக் கட்டினர். இவ்வாறுதான் அங்கோர் வாட், பாயோன் பண்தேய் சிறேய் போன்ற அழகிய கோயில்கள் நிறுவப் பெற்றன. மேலும் தெய்வ லோகங்களின் அமைப்பின்படி கோயில்கள் மேரும2லயைப் போன்றவையாக இருக்கவேண்டு மென்று அவற்றை உயரமாகக் கட்டினர். எனவே அவற்றின் கோபுரங்கள் இருநூற்றைம்பது அடி உயரமான சிகரங்களைக் கொண்டிருக்கின்றன. அரசத் தெய்வத்தன்மை தங்குவதற் காக மேருமலை போன்ற தோற்றமுடைய செய்குன்றங்களைக் கட்டி அவற்றின் உச்சியில் இலிங்கங்களை அமைத்து வழி பட்டு வந்தனர். மேருமலையின் கொள்கை கிமேரரின் கட்டடக் கலைக்கு அடிப்படைக் கொள்கையாக அமைந்தது.
கிமேரர் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சமயங்களைத் தழுவி வந்தனர். சைவமும் வைணவமும் அரச குடும்பங் களில் பலகாலமாகத் தழுவப்பெற்று வந்த சமயங்கள். பிற் காலத்தில் மகாயான புத்தமும் ஈனயான புத்தமும் அரச குடும்பத்திலும் பாமர மக்களிடமும் பரவி வந்தன. அரசர் ஒரு தனி மறையை வரையறுத்துத் தழுவவில்லை. அவர்களுடைய

Page 22
26 ஒன்றே உலகம்
மாளிகைகளில், பிராமணர் எப்பொழுதும் வழிபாடு செய்தே வந்தனர். இன்றும் கம்போதியாவின் தலைநகராகிய புனுேம் பென்னில் (Phnom Penb) அப்பிராமணரின் வழித்தோன்றல் கள் அரச அரண்மனையில் சில வேளைகளில் வழிபாடு செய்து வருகின்றனர்.
கம்போதியாவின் கட்டடச் சிற்பக் கலைகளின் சின்னங் களைப் பார்க்கும்பொழுது, அவை . தமிழ் நாட்டுக் கலைகளை எங்ங்ணம் தழுவியவையெனும் வினு எழுவது இயல்பு. அங் கோரின் பெருமையும் பல்லவர் சோழரின் பெருமையும் ஒரே காலத்தவை. அங்கோர் வாட்டின் கோபுரங்களையும் கட்டட அமைப்புகளையும், திருமாலின் உருவங்களையும் யானைப் பீடத் தையும் ஆராயும்பொழுது, மாமல்லபுரம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களிலுள்ள கட்டடச் சிற்பக் கலையைக் கிமேரர் அறிக் திருக்க வேண்டுமென்ற கம்பிக்கை உறுதியாக உண்டா கிறது. மேலும், இவ்வரசரின் 'அன்’ விகுதி பெற்ற பெயர்க ளாகிய சயவர்மன், இந்திர வர்மன், சூரியவர்மன் போன்ற பெயர்கள், பல்லவ மன்னவருடன் எத்தகைய தொடர்பைக் கொண்டவர்களென்ற கேள்வியை எழச்செய்யும். கம்போதிய அரண்மனை காட்டியங்கள் பரத நாட்டியத்துடன் தொடர் புள்ளவை. ஆயினும், இத்துறையில் ஆழ்ந்த ஆராய்ச்சி நிகழ்த்தாமலும் சீனம், கிமேர் போன்ற மொழிகளைப் பயின்று, தொடர்புள்ள நூல்கள் கல்வெட்டுகள் முதலியவற்றைப் பார்வையிடாமலும், முடிந்த துணிபைக் கூறுவது இயலாது. கம்போதியா, கிமேரரின் ஆதிக்கத்தின்பின், பல்வேறு அரசியல் மாற்றங்களடைந்து இன்று மீண்டும் தனியரசாக விளங்குகின்றது. அது, தாய் காடு, வியட்ாகாம், வியட்மின் ஆகிய நாடுகளுக்கு இடையிலே இருப்பதாலும், பண்டு இவ் விரு நாடுகளும் கம்போதியாவின் பகை நாடுகளாக இருந்த தாலும், இன்றும் கம்போதியா தம் அண்டை காட்டினருடன் நட்புப் பாராட்டுவதற்கு வரலாறு உதவவில்லை. “தாய் நாட்டி னர் அங்கோரைப் பன்முறை தாக்கியெறிந்து அங்குள்ள நூல் நிலையங்களை அழித்துச் செல்வங்களைத் தம் காட்டிற்குக் கொண்டு சென்றனர். அன்னமித்தரும் கம்போதியரை அடக்கியாள முயன்றவர்கள். எனவே, வேற்று காட்டுப் பகையின் காரணமாகக் கம்போதியாவின் தலைாககரைப் பன்முறை மாற்ற வேண்டியதாயிற்று. ஆயினும் கம்போதி யாவின் பெருமை 8 அங்கோர்” பண்பாடு விளங்கிய நூற்

கம்போதியா 27
ருண்டுகளில்தான் உச்சநிலை அடைந்திருந்தது. இன்றும் அங்கோர் காரணமாகவே உலகம் கம்போதியாவை கன் கறியும்.
அங்கோரை நிறுவிய கிமேரரின் வழித்தோன்றல்களைக் கண்டு பேசவேண்டுமென்று அவர்கள் வாழும் சில சிற்றுார் களுக்குச் சென்றேன். பிரெஞ்சு மொழி சிறிதறிந்த சிலருடன் உரையாடலானேன். ஆணுல் அவர்கள் தாராளமாகப் பேச வில்லை. தம்மொழியில் குதிரையை "மா"வென்றும், கப்ப2லக் *கப்பால்’ என்றும் கூறுவதாகத் தெரிவித்தனர். இன்று அவர்களுடைய நிலைக்கும், அங்கோர் காலத்தில் "அவர்கள் விளங்கிய நிலைக்கும் எவ்வளவு வேறுபாடு!
கிமேரர் பண்பாட்டைப் பற்றி எழுதியவர்கள் அவர் களுடைய பண்பாட்டின் ஆதிக்கம் பெரும் பயனைத் தரவில்லை யென்று குறிப்பிட்டிருக்கின்றனர். சிந்தனையிலும் மெய்யுணர் விலும் அவர்கள் பெயர் பெற்றவர்கள் அல்லர். ஆயினும் அவர்களைப்பற்றி ஆராய்ந்து கூறுவதற்குரிய பல சான்று கள், சிறப்பாக இலக்கியச் சான்றுகள், அழிந்தொழிந்து போயின. கிமேரர் இந்தியாவிலிருந்து சமயத்தையும் அரசியல் அறிவையும் கலைக் கொள்கைகளையும் பெற்றிருந்தாலும், தம்முடைய ஆக்கப் பண்பைக்கொண்டே தம் பண்பாட்டை ஒப்பற்ற முறையில் வளர்த்தனர். பிறரிடமிருந்த கலைகளைப் பெறுவது இழுக்கன்று. அவற்றை வளர்க்காதும் மாற்றதும் வாளாவிருப்பதே இழுக்கு.
இப்பக்கங்களை எழுதும்பொழுதுகூட அங்கோரை மீண்டும் பார்க்கவேண்டும் என்ற அவா என் உள்ளத்தில் பொங்குகின்றது. அங்கோரைப் பற்றிய பல செய்திகள் இன்னும் கமக்கு மறைந்தே இருக்கின்றன. அவற்றைக் கண்டு பிடிப்பது அறிஞரின் கடமை. அங்கோரின் ஒரு பக்கம் ஒலி அவிந்திருக்க, மறு பக்கம் ஓர் ஆறு மெதுவாகச் செல்வ தும், உழவர் ஆற்றின் கீரை உருளும் சில்லின் வழியாகப் பெறுவதும், அங்கு ஒருகால் விளங்கிய பேரரசைப் பற்றி அக்கறையின்றி மக்கள் வாழ்வதும், என் கண்முன் வரும் காட்சிகளாம்.

Page 23
4. வியட்நாம்
தென்கிழக்கு ஆசிய காடுகள் சுதந்திரம் பெற்றதும் அக் காட்டவர் புத்தெழுச்சி மனப்பான்மையுடன் தம்முடைய முன்னேற்றத்தைக் கருதி உழைத்துவருகின்றனர். இம்மனப் பான்மை இங்தோனிசியாவிலும் வியட்நாமிலும் சிறப்பாகத் தோன்றியது. இந்தோனிசியாவில் டச்சு ஆட்சியை வெறுப் பதுபோல், வியட்நாமிலும் பிரெஞ்சு ஆட்சியை மக்கள் பலர் வெறுப்பதாக கான் உணர்ந்தேன். சைகோன் பல்கலைக் கழகத்தில் பாடங்கள் அனைத்தையும் வியட்நாம் மொழியி லேயே கற்பிக்க வேண்டுமென்னும் முயற்சி தலைதூக்கி இருக் கிறது. ஆயினும் இந்தோனிசியாவில் டச்சு மொழியைப் புறக்கணிக்கும் அளவுக்கு வியட்நாம் மக்கள் பிரெஞ்சு மொழி யைப் புறக்கணித்திலர். ஏனெனில் பிரெஞ்சு மொழி உலகில் சிறந்த இலக்கிய மொழியாக விளங்குவதனுலும், பிரெஞ்சு மொழியை அறிவதால் தம்முடைய கல்வி முறைகள் சீர் திருத்தம் பெறுதல் கூடும் என்று கருதுவதனலுமாம்.
வியட்நாமின் தலைநகரான சைகோன் மிகவும் அழகிய ககரமாகத் தோன்றிற்று. சைகோனில் உள்ள தமிழர் ஒருவ ரிடம் கான் அங்ககரின் தெருக்களின் ஒழுங்கையும் அழகையும் பற்றிக் குறிப்பிட்டபொழுது, முதுமொழி ஒன்றைக் கூறினர்: **ஆங்கிலேயருடைய நீதி அழகு. பிரெஞ்சுக்காரருடைய வீதி அழகு’ ஐரோப்பிய நாடுகளே மிகவும் , இயற்கையழகு வாய்ந்த காடுகள் என்றும், அழகின் உறைவிடங்கள் பெரும் பாலும் மேலை காடுகளிலே உள்ளன என்றும் நினைத்து வரு கின்ருேம். ஆணுல், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அழகிய இடங்களில் கடற்கரைக் குடாக்களும் மலைவளம் பெற்ற மாவட்டங்களும் உலக மக்களுடைய கவனத்தைக் கவர்வன. இந்தோசீனுவின் குடாவைக் காண்பதற்கு மக்கள் எத்திசையி லிருந்து வந்தாலும் அச்செலவு பயனுள்ளதாகவே முடியும். வியட்நாமில் உள்ள துரான் முதலிய கடல் வளம் மிகுந்த இடங்களையும், பச்சைத் தளிர் போன்ற மலைவளம் உள்ள இடங்களையும், வயல் வளம் கொண்ட வெளிகளையும் பார்த்த பொழுது இத்துணை இயற்கை வனப்பு உள்ள எத் துணைக்

வியட்நாம் 29
கீழ்த்திசை காடுகளைப்பற்றி ஆராயாது இருக்கின்ருேம் என்று வருந்தினேன்.
சைகோன் மாநகரினுள் தமிழ் மக்களின் தொகையைக் கண்டு நான் வியந்தேன். பிரெஞ்சுக்காரர் புதுவையில் ஒரு காலத்தில் ஆட்சி புரிந்து வந்ததால் வியட்ாகாமில் தென் இந்தியத் தமிழர் பலர் பிரெஞ்சு ஆட்சித் தொடர்பின் பயணுக ஆட்சித் துறையிலும் வணிகத் துறையிலும் உயர்ந்த பதவி களிலிருந்து வந்தனர். எதிர்காலத்தில் அவர்களுக்கு இதே வாய்ப்புக்கள் கிடைக்கப் போவது இல்லை. முஸ்லிம் மக்கள் பலரும், செட்டி காட்டு வணிகர் பலரும், புதுவைத் தொடர் புள்ள தமிழ்க் கத்தோலிக்கர் பலரும், சைகோனில் கான் சென்ற காலத்தில் வசித்து வந்தனர். தமிழ் பேசும் கத்தோ லிக்கர்க்கெனத் தனிக் கோயிலும் சைகோனில் இருக்கின்றது. யான் சென்றபொழுது அக்கோயிலில் தமிழ் அறிந்த பிரெஞ் சுக் குருக்கள் ஒருவர் திருப்பணி ஆற்றி வந்தார். அங்குள்ள தமிழ்க் கழகத்தின் சார்பில் ககரத்தார் எழுப்பிய கோயில் மண்டபம் ஒன்றில் தமிழர் வேற்று நாட்டில் பரப்பிய பண் பாட்டு இயல்புகளைப் பற்றி உரை நிகழ்த்தினேன். கான் சைகோனில் தங்கிய நாட்களில் அங்குள்ள தமிழ் காட்டு முஸ்லிம் வணிகர் ஒருவரின் விருந்தினராகவே இருந்தேன். சைகோனில் தமிழ்த் திரைப் படங்களை சினிமாக் கொட்டகை களிற் காட்டி வருகின்றனர் என்றும் அறிக்தேன்.
ஏனைய கீழ்த்திசை காடுகளை விட, இன்று வியட்நாம் என்று அழைக்கப்படும் நாடு, தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ்க் கலைகளையும் பண்டு மிகுதியாக வரவேற்றது. தாக்கூவப்பா என்னும் இடை நீர்நிலைப்பரப்பின் வழியாகத்தான் தென்னிக் திய மாலுமிகள்0இங்தோ சீனக் கடலைக் கடந்து, சம்பா என்று அழைக்கப்பெறும் வியட்நாமின் பகுதிக்குச் சென்றனர். அங்கு, ஒன்பது, பத்தாம் நூற்றண்டுகளில் வாழ்ந்த மக்கள் தமிழ் மக்கள் வருகையால் மகிழ்ந்து, தமிழ் மக்களின் கட்ட டக் கலை, சிற்பக் கலைகளில் ஈடுபட்டனர். இன்று போநகர் என்று அழைக்கப்படும் குன்றின்மேல் உள்ள கட்டடங்களைப் பார்த்தால் அவை மாமல்லபுரத்தின் சிற்பக்கலை வழியாகத் தோன்றிய கட்டடங்கள் என்பது நன்கு புலனுகும். மீஷான் எனப்படும் இடத்திலிருக்கும் இடிந்த கட்டடங்களைப் பார்த்தா லும் அவை பல்லவ மன்னர் காலத்தில் இழைத்த கோயில் களின் பான்மையைக் காட்டுகின்றன. காத்திராங், சைகோன்,

Page 24
30 ஒன்றே உலகம்
துரான் போன்ற இடங்களிலுள்ள பழம் பொருட்காட்சிச் சாலை களை ஆராய்ந்தால் அங்கிருக்கும் சிலைகளிலிருந்து இந்திய நடனக்கலை, சமயம், சிற்பம், கட்டடம் ஆகியவை எத்துணை அளவிற்கு இவ்விடத்தில் பரவியிருந்தன என்பதை ஒருவாறு மதிப்பிட முடியும்.
தமிழர்களுடைய கலைகளுடன் தொடர்புள்ள வியட்ாநாமின் இடங்களுக்கெல்லாம் சென்றேன். இடிந்த கட்டடங்கள் பல, மரம் செடிகளால் மூடப்பெற்றும், செடியும் கொடியும் அவற் றின்மீது வளரப்பெற்றும் இருப்பதைக் கண்டேன். இப்பழைய கட்டடங்களைக் காப்பாற்றுவதற்கு வியட்ாகாம் அரசு இன்று பொருள்வளம் அற்று இருக்கின்றது. தென்னுட்டி னுடைய கலைத் தொடர்பைக் காட்டும் கெடுங் கட்டடங்கள் இந்து சமயத்தையும் புத்த சமயத்தையும் சார்ந்தவை. வியட் காமின் கிழக்குப் பகுதிக்குச் சென்ருல் அங்குள்ள பெரு வீதியின் ஒரத்தில் சாம்பர் கட்டிய பல தனிக் கோபுரங்கள் தோற்றமளிக்கும். இக்கோபுரங்கள் பெரும்பாலும் மாமல்ல புரக் கோபுர மரபில் கட்டப்பட்டவை. ஆயினும் இவை கல்லில் கட்டப் பெருமல் செங்கல்லால் அமைக்கப்பெற்றவை. இத்தனிக் கோபுரக் கோயில்களில் முகலிங்கம் நிறுவப் பெற்றிருக்கின்றது.
தமிழ்ப் பண்பையறிந்த சாம்பர் (Champa) இப்பகுதியில் பேரரசை ஒரு காலத்தில் நிறுவி இருந்தனர். அவர்களுடைய அரசு வியட்நாமிலும் கம்போதியாவிலும் பர்மாவிலும் பரவி உள்ளது என்றும் நூலாசிரியர் கூறுகின்றனர். அவர் களுடைய ஆதிக்கம் சிறந்த காலத்தில் பல்லவர்களுடைய கலைகளைக் கற்றிருக்க வேண்டும். பதின்மூன்று பதின்ைகாம் நூற்றண்டுகளில் வட பகுதியிலிருந்து சீன மேரபைச் சார்ந்த வகுப்பினர் தென் பகுதியின்மேல் படை எடுத்தபோது சம்பாக் காரருடைய ஆட்சி சீர்குலைந்தது. இன்று அவர்கள் பெரும் தொகுதியினராக இல்லை. பண்பாடு குறைந்த மக்கள்போல் ஒரு சில கிராமங்களில்தாம் சாம்பர் இன்று வாழ்ந்து வருகின் றனர். சாம்பரைப் பார்க்க வேண்டுமென்றே நான் சில சிற்றுார்களுக்குச் சென்றேன். அவர் தோற்றம் அன்னமீத்த ருடைய தோற்றம்போன்றதன்று. இன்று அவர் தழுவும் சமயம் இந்து சமயம் அன்று. சாம்பரின் பிராமண மரபினர் சிலர் இருக்கின்றனர்; ஆயினும் அவர்களில் பெரும்பான்மை யோர் இஸ்லாமிய மதத்தைத் தழுவிவருகின்றனர்.

வியட்நாம் 31
வியட்ாகாமில் உள்ள காட்டுப்புறம் மிகவும் அமைதியாக இருக்கின்றது. மக்கள் பெரும்பாலும் உழவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்வளம் மிகுதியாக இருப்பதால் அவர்களுடைய தொழில் எளிதாய் இருக்கின்றது. இக் காட்டுப்புறத்தில் உள்ள பெண்பாலார் பலருடைய பற்கள் கரிய நிறமாக இருப்பதைக் கண்டேன். அவர்கள் தம் பற் களுக்குக் கறுப்பு மைதீட்டி வெண்பல்லைக் கரும்பல்லாக்குவது தான் அழகென்று கருதுகின்றனராம்.

Page 25
5. LuñriDIT
மலாயா, இந்தோனிசியா போன்ற கீழ்த்திசை நாடுகளுக்கு மூன்று நான்கு முறை சென்றிருந்தேனுயினும் பர்மா காட்டினை அண்மையில்தான் பார்க்க முடிந்தது. வானவூர்தி வழிகள் தென்னிந்தியாவிலும் இலங்கையிலுமிருந்து நேரே மலாயா விற்கு அப்பால் உள்ள காடுகளுக்கும் செல்வதால், இரங்கூன் வழியாகச் செல்வதற்குப் பணமும் காலமும் சிறப்பாகத் தேவைப்படும். எனவே ஒரு முறை கல்கத்தாவிலிருந்து மலாயாவிற்குச் செல்லுங்கால், இரங்கூனில் அமைதியாகத் தங்கிப் பர்மா காட்டினைப் பார்த்துவிட்டு யாரும் அறியாமல் மீளுதல் கூடுமென்று உன்னி இரங்கூனில் இறங்கினேன். அன்று மாலை இலங்கைத் தூதுவர் நிலையத்திலிருந்த நண்ப ரொருவரை அழைத்து, யாருக்கும் என் வரவைப் பற்றிக் கூறலாகாது என்றும், பர்மாவின் நிலையைப்பற்றி அறியச் சிலருடன் உரையாட விரும்புகின்றேன் என்றும் அவரிடம் கூறினேன். அவர் தமிழ்ச் செய்தித்தாள் ஆசிரியர் ஒருவ ரிடம் என்னை அழைத்துச் சென்ருர். அவருடன் உரையாடிய பின் விடைபெற்றுக்கொண்டு சென்றேன். அடுத்த நாள் அச் செய்தித் தாளில் பெரும் எழுத்துக்களில் கான் பர்மாவுக்கு வங்திருப்பதைப் பற்றி வெளியிடப்பட்டிருந்தது. அதன் பின் பர்மாவை அமைதியாகப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆயினும் அச்செய்தியின் வழியாகப் புது கண்பர் பலரை அறியவும் தமிழ் மக்கள் பலருடன் அளவளாவவும் கேர்ந்தது. இரங்கூனிலிருக்கும் தமிழ்க் கத்தோலிக்கருக்குரிய திருத் தொண்டர் அங்தோனியார் கோயிற் குருக்களும் கான் தங்கிய சில நாட்களில் பர்மாவைப் பார்க்கப் பல வாய்ப்புக்களை அளித்தனர். V
பர்மாவில் இத்துணைத் தமிழர்கள் வாழ்வர் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு அறிந்திருந்தால் சில ஆண்டு களுக்கு முன்னமேயே அங்கே சென்றிருப்பேன். இரண்டா வது ஞாலப் போருக்கு முன் இரங்கூன் நகரிலும் ஏனைய நகர் களிலும் தமிழ் மொழி பேசும் இனத்தார் பல்லாயிரவர் இருந்த தாகக் கூறினர்கள். இன்றும் தமிழர் பலர் உழவுத் தொழில்

பர்மா 33"
செய்து தம் சொந்த நிலங்களைப் பர்மாவில் பண்படுத்தி வருவதாகக் கூறினர்.
இரங்கூனில் இரு பெரும் கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்றினேன்; தமிழ்ப் புத்தகக் கடைகளைக் கண்டேன்; தமிழ் பேசும் இனத்தார்க்குரிய பல்வேறு சமயக் கோயில்களையும் பார்த்தேன். தமிழில் அச்சிடப்பெற்ற இரு காட் செய்தித் தாள்களைப் படித்தேன். பல்வேறு நி2லகளைச் சார்ந்த தமிழ் மக்களுடன் உரையாடினேன். அங்குள்ள தமிழ் மக்களுடைய இறந்தகால மாண்பையும், இக்கால நி2லமையையும் எதிர்கால அச்சத்தையும் பற்றி அறிக்தேன். இவற்றின் பயணுக ஒரு கருத்து என் உள்ளத்தில் தோன்றியது. பண்டுதொட்டு இங்காடுகளுக்கு வந்த தமிழர் தம் இலக்கியங்களையும் பண் பாட்டையும் வரலாற்றையும் கலைகளையும் குடியேறிய நாடு களின் மொழிகள் வாயிலாகப் புலப்படுத்தியிருந்தால், இன்று சில கீழ்த்திசை நாடுகளில் விரும்பப்படாத குடிகளாக உரிமை யற்று வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்றெண்ணி
பர்மிய மக்கள் தாராள குணமுள்ளவர்களாக எனக்குத் தோன்றினுர்கள். நான் இலங்கையரென்றதும் என்னுடன் ாகன்ருகப் பழகினர்கள். அவர்களுடைய பயபக்தியும் சமயப் பற்றும் எங்கும் தோன்றின. காட்டின் எல்லாப் பாகங்களிலும் கணக்கற்ற புத்த தூபிகள் நிறுவப்பெற்றிருக்கின்றன. இரங் கூனில் ஒரு புறத்தில் இருக்கும் சுவேதகான் (Shwe Dagon) எனும் பொற்றுாபியைச் சென்று பார்த்தால், அங்கு காட்டின் பல பாகங்களிலிருந்து வரும் மக்கள் எத்துணைப் பயபக்தி யுடன் புத்த வழிபாடு செய்து வருகின்றனரென்பது காண்டல் கூடும். அம்மக்கள் வழிபாட்டிலீடுபட்டிருப்பதைக் காணும் பொழுது அவர்களுடைய வாழ்க்கையில் சமயப்பற்று எங்ங்னம் ஊறி இருக்கின்றதென்பதை எளிதில் அறிய முடியும்.
பர்மிய மக்களும் மலர்களைத் தம்முடைய வாழ்க்கையில் அழகுறப் பயன்படுத்திக்கொள்கின்றனர். நகர்களிலும் நாட் டுப்புறங்களிலும் பெண்கள் கொண்டையில் மாலைகளனிந்து செல்வதைக் கண்டேன். புத்த வழிபாட்டில் இயற்கை மலர் களை மிகுதியாகப் பயன்படுத்தினர். மந்தலையின் (Mandalay) அங்காடி உணவுச்சாலைகளில் இடியப்பம் போன்ற உணவுப் பொருள்களுக்குமேல் பூமாலைகள் சாத்தியிருப்பதைக் கண்
0 77-3

Page 26
34 ஒன்றே உலகம்
டேன். முல்லை மலர் அவர்கள் பெரிதும் விரும்பும் மலர் போலும். கிறிஸ்து காதரின் சிலுவை உருவச் சிலையொன்று முல்லை மலர்களால் மூடப்பட்டு வழிபடப்படுவதை அங்குள்ள கோயிலொன்றில் பார்த்தேன்.
பர்மிய காடு பரந்த காடு. இரண்டு கோடி மக்கள் அங்கு வாழ்ந்தாலும் பரப்பிலும் செல்வத்திலும் இன்னும் பல கோடி மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நாடு. மண்ணெண்ணெயும் கல் லெண்ணெயும் அங்கு ஏராளமாக உண்டு இரத்தினங்களும் பொன்னும் மிகுதியாக உள்ள காடு. எனவே மக்களினுடைய செல்வாக்கு இன்னும் வளாங்தோங்குவதற்கு வழிகள் உள.
பர்மிய மக்கள் துப்புரவிலும், கலையுணர்ச்சியுடன் இல்லங் களை அழகுபடுத்துவதிலும் அக்கறை உள்ளவர்களாகத் தென்பட்டனர். அவர்களுடைய இல்லங்களின் தட்டிகள் கூட மிகவும் அழகாக வேயப் பெற்றிருந்தன. இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் தென்னையோலைகளையும் பனையோலை களையும் தட்டியாகப் பின்னும்பொழுதும், அவற்றைக் கூரை களுக்கும் வேலிகளுக்கும் வேயும்பொழுதும் பர்மியரைப் போல் திருத்தமாக அழகுடன் முடிப்பதில்லை. மூங்கில் இக் காட்டில் மிகுதியாக இருப்பதால் இல்லங்களுக்கு மூங்கில்களை யும் பயன்படுத்திக்கொள்கின்றனர். இன்றும் பர்மா காட்டி லிருந்தே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏனைய தென்கிழக் காசிய நாடுகளுக்கும் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இவ்வாணிகத்தில் ஒரு காலம் காட்டுக்கோட்டைச் செட்டி மார் சிறப்பாக ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வட்டித்தொழில் வழியாகப் பர்மாவின் உழவு நிலங்கள் பலவற்றிற்கு உரிமை யாளராகவும் ஒரு காலம் இருந்தார்கள். வடபாகச் சிறப்பு
இரங்கூனிலிருந்து வடபாகத்தின் மலைகளையும் மக்களை யும் நகர்களையும் காண வேண்டுமென்று வானவூர்தி வழி யாகச் சென்றேன். மந்தலை பழைய பர்மாவின் தலைநகர். அங்குள்ள பழைய கோட்டைகளும் புத்த தூபிகளும் மிகச் சிறப்பானவை. எங்குப் பார்த்தாலும் தூபிகளின் கூரிய கோபுரங்கள் தோன்றின. வேறெந்த நாட்டிலும் இப்பெருங் தொகையான சமயக் கட்டடங்களை நான் கண்டதில்லை. பர்மா நாட்டில் புத்த குருக்கள் பெருங்தொகையாகக் காணப் படுகின்றனர். சிறுவர்கள்கூட ஏழு, எட்டு வயதில் துறவி மடங்களைச் சேர்ந்து ஒழுகுகின்றனர்.

ufÎL DIT 35
மந்தலையின் வட பாகத்தில் இருக்கும் மலைகளின் வளம் பெரிது. மாய்மியோ போன்ற மலைநகர்களும் அதன் அண் மையில் உள்ள அமராபுரம் போன்ற இடங்களும் அழகு படைத்தவை. வடகிழக்குப் பாகத்தில் உள்ள சான் (Shan) மக்கள் வாழும் நிலப்பரப்பு அழகு வாய்ந்தது. தவுஞ்சி எனும் இடத்திலிருந்து இன்லே எனும் மாபெரும் ஏரிக்குச் சென்றேன். அங்குச் செல்வதற்காக அமெரிக்காவிலிருந்து சுற்றுச் செலவு செய்யும் குழுவுடன் கானும் விமானத்திலும், பின் மோட்டார் வண்டியிலும் செல்ல கேர்ந்தது. அக்குழுவில் இருந்த அமெரிக்கர் அனைவரும் முதியோர். அக்குழு பெரும்பாலும் பெண்களையே உறுப்பினராகக் கொண்டது. குழுவின் வழி காட்டியாக இருந்தவர் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை ஆசிரியராக இருந்து ஒய்வுபெற்று, சுற்றுச் செலவு வணிகக் கம்பெனியை ஏற்படுத்தி கடத்தி வந்தார். இவர் வரலாற்று ஆசிரியராக முன்பு இருந்ததால், வழிகாட்டித் தொழிலைத் திறம்பட நடத்தி வந்தார். இச்சுற்றுச் செலவுக் குழுவினர் பெரும் வானவூர்தி வழிகளில் செல்வோர் காணுத இடங்களைக் காணும் கோக்கத்துடனே வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரு முறையேனும் உலகச் சுற்றுச் செலவை செய்தவர்கள். பலர் இரண்டாவது முறை அல்லது மூன்ருவது முறை உலகச் சுற்றுச் செலவில் ஈடுபட்டவர்கள். பெரும் நகர்களை யெல்லாம் அவர்கள் முன்னரே பார்த்திருந்ததால் இம்முறை, சுற்றுச் செலவாளர் எளிதில் பார்க்காத இடங்களைப் பார்ப்ப தற்காகவே வந்ததாகக் கூறினர். அரிய இடங்களைப் பார்ப் பதற்கென்று செல்லுவதால் இவர்கள் அனுபவிக்கின்ற துன் பங்கள் பல. சில வேளைகளில் வசதியில்லாத விடுதிகளில் கொசுவுக்கும் மூட்டைப்பூச்சிக்கும் இரையாக இவர்கள் இர வைக் கழிக்க வேண்டியதாயிற்று. இவர்களுக்கேற்ற அமெ ரிக்க உணவோ பல இடங்களில் கிடைக்கவில்லை. கடிலக் (Cadillac) மோட்டார் வண்டிகளில் செல்பவர்கள் மாட்டு வண்டிகளிலும் குதிரை வண்டிகளிலும் ஏறி இறங்க கேரிட் டது. ஆயினும் இவர்கள் தம் ஓய்வுக்காலத்தில் புதுக்காட்சி களைக் காண வேண்டுமென்ற விருப்பாலும், ஒய்வுநேரத்தை வேறு எவவாறு கழிப்பதென்று அறியாததாலும், உலகம் சுற்றுவதில் ஈடுபட்டனர். இத்தகையோர்தாம் வான வெளி யில் புது உலகங்களுக்கு ஊர்திகள் செல்லுங்கால் முதற் பிர யாணிகளாக இருப்பார்கள். வானவூர்தியில் என் பக்கத்தி

Page 27
36 ஒன்றே உலகம்
லிருந்த அம்மையார், தாம் இத்துணைத் துன்பங்களை அனுப விப்பதற்குக் காரணம் பிற்காலத்தில் இக்காடுகளைப் பற்றிய நூல்களைப் படிக்கும்பொழுது இன்பம் பெறுவதற்கே என்று கூறினர்.
இன்லேயில் மிகவும் பரந்த ஏரி உளது. அவ் ஏரியைப் பார்ப்பதற்காக வள்ளங்களில் மோட்டாரை அமைத்து அதன் வழியாக விரைவாக வள்ளங்களை ஒட்டினர். இன்லே ஏரியில் காணப்பெறும் சில காட்சிகள் அந்த ஏரிக்கே சிறப்புத் தரு, பவை. அவ் ஏரியையும் ஒரு புறம் சூழ்ந்த மலைகளையும் பார்த்தபொழுது காஷ்மீரின் நினைவு எனக்கு வந்தது. அவ் ஏரியில் மிதக்கும் தீவுகளும் துளங்கும் தீவுகளும் பல இருக் கின்றன. அம் மிதக்கும் தீவுகளின்மேல் இல்லங்களையும் கட்டியிருக்கின்றனர்; மலர்ச்செடிகளையும் காய்கறித் தோட் டங்களையும் அமைத்துப் பண்படுத்தி வருகின்றனர். இத்தீவு கள் எனக்குப் புதிய காட்சியாகவே தோன்றின. அவ் ஏரிக்கு கடுவிலிருக்கும் ஒரு பெரும் புத்த கோயிலுக்குச் சென்ருேம். அது பர்மிய மக்கள் போற்றும் பெரும் கோயிலாக விளங் கியது. பல வகுப்பினர் அங்கு வழிபடுவதற்காக வந்திருந்த னர். அவர்களுடைய வழிபாட்டின் அறிகுறியாக பொன்னு லாய இ2லயைக் கொடையாகக் கோயிலுக்குக் கொடுத்தனர். புத்த குருக்கள் அப்பொன் இலைகளை வாங்கிப் புத்த சிலைக்கு மேல் பதித்தார்கள். இவ்வாறு பொன்னிலைகளால் மூடப் பெற்ற சிலைகளின் உருவங்கள் தெளிவாக இருக்கவில்லை. அத் திருக்கோயிலின் அண்மையில் வேறு பல தீவுகள் உள்ளன. அத்தீவுகளைச் சூழ்ந்து ஆம்பல் மலர்களும் குவளை மலர்களும் மிகுதியாக வளர்ந்திருந்தன. வள்ளம் அங்ர்ேச் செடிகளையெல் லாம் கிழித்துக் கொண்டு சென்றது.
மக்கள் வள்ளங்களில் வந்து கடைகளில் தமக்கு வேண் டிய பொருள்களை வாங்கிச் சென்றனர். இத்தகைய வாழ்க்கை வெனிஸ் நகரின் கினைவை எனக்கு உண்டாக்கியது. மற்று மொரு மறக்க முடியாத காட்சி என்னவெனில், இன்லே ஏரி யில் துடுப்பால் படகு தள்ளுபவர்கள், கையால் தள்ளாது காலால் தள்ளுவதாகும். உலகின் வேருேர் இடத்திலும் காணப் பெருத காட்சி இது. படகின்மேல் ஒரு காலை ஊன்றி நின்று கொண்டு மற்றக் காலால் கையிலுள்ள நீண்ட துடுப் பினை வளைத்துவளைத்துத் தள்ளுவது அவர்களின் பயிற்சி யைக் காட்டுகிறது. மக்களுக்குப் பயிற்சியே வலிமையைக்

a uri ont 37
கொடுக்கின்றது. அவர்களுடைய மீன் பிடிக்கும் படகுகளையும் வள்ளங்களையும் பார்க்கும்பொழுது அவை ஒற்றைக் காலா லும் ஒற்றைக் கையாலும் தள்ளும் முறைக்கேற்ப அமைந்தன என்பது புலனுகின்றது. ஒவ்வொரு வள்ளத்திலும் ஒவ்வொரு வரிருந்து காலால் துடுப்பினை வலித்து மீன் பிடித்து வரு வதைக் கண்டேன். பெண்கள் சிலர் படகில் உட்கார்ந்து கொண்டே காலால் தண்டு வலிப்பதையும் பார்த்தேன். சுற் றுச் செலவு செய்வோரின் காட்சிக்காக இருவர் மூவர் சேர்ந்து ஒரே வள்ளத்தை மிகவும் விரைவாகக் காலால் தள்ளிச் செலுத்துவதையும் பார்த்திருக்கின்றேன்.
பர்மாவில் நிகழ்வுறும் விழா ஒன்று அங்காட்டு மக்களு டைய மனப்பான்மையைக் காட்டுகின்றது. தண்ணிர்த் திரு காள் எனும் விழாவைச் சித்திரைத் திங்களில் மூன்று காட்கள் கொண்டாடுகின்றர்கள். இத்திரு காளில் தண்ணிரை வண்டி களிலும் லாரிகளிலும் குழாய்களிலும், வேறு நீர் பரப்பும் கருவி களிலும், வீதி வீதியாகக் கொண்டுசென்று மக்கள் ஒருவர் மீது ஒருவர் இறைக்கின்றனர். வழியில் வரும் சிறுவர் முதி யோர், நண்பர் பகைவர் ஆகியோரைப் பேரெழுச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் நீரில் தோயச் செய்கின்றனர். இது வங்கத் தில் கடக்கும் கோலித் திருகா8ளப் போன்றதாயினும் அத் துணை வண்ணங்களும் மாவும் கரைக்கப்படாததால், நீரால் கனையப்பெறும் மக்கள் தாம் அடையும் சிறு துன்பத்தைப் பொருட்படுத்துவதில்லை. இத்திருகாள் நிகழ்ந்த மூன்றவது நாள் கான் பர்மாவுக்குச் சென்றேன். அங்குள்ளவர் அனை வரும் இத்திருநாளைப் பற்றியே என்னிடம் கூறிக்கொண்டி ருந்தனர். அவர்கள் ஆர்வத்துடன் கூறிய முறையிலிருந்து இத்திருநாள் நாடு முழுவதும் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் கல்லுறவையும் வளர்க்கும் விழா என்று அறியவங்தேன்.

Page 28
6. இந்தோனீசியா
மலாயாவைச் சூழ்ந்திருக்கும் மலாக்கா என்னும் பெரும் கடலில் கணக்கற்ற தீவுகள் உள. ஜாகர்த்தாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு முறை கப்பல் வழியாகச் சென்றபொழுது இருமருங்கும் தென்னந்தோப்புகள் நிறைந்த தீவுக்கரைகளைக் கண்டேன். நம் தமிழ்ப்புலவர்கள் கடலைப் பற்றி எழுதும் பொழுது ‘கருங்கடல் அல்லது இருங்கடல்’ என்று பண்டு கூறிவந்தனர். ஹோமர் என்னும் கிரேக்க புலவர் கடலைப் பற்றி எழுதும்பொழுதெல்லாம் கொடி முந்திரிகைச் சாற்றி னைப் போன்ற இருங்கடல் (wine dark sea) என்று கூறு வது மரபு. ஷேக்ஸ்பியர் சில இடங்களில் கட2லப் பச்சை நிறக் கடல் (green Sea) என்று வருணிக்கின்ருர், கடல் பச்சை நிறமாக இருப்பதை ஜாவா, பாலி போன்ற இடங்களிலே கண் டுள்ளேன். மிகவும் ஆழமான இரு கடல்கள் பொருந்தும் சுண்டா இணைப்பில், கடல் தெள்ளிய பச்சை நிறமாகத் தோன்றுகின்றது.
இங்தோனிசியக் குடியரசு மூவாயிரம் தீவுகளைக் கொண் டது. சுமத்திரா போன்ற தீவு இங்கிலாந்தினும் பெரிது. ஆனல் மூவாயிரம் தீவுகளில். பல சிறு தீவுகளாக இருக்கின் றன. இம்மூவாயிரம் தீவுகளும் ஒரு முனையில் இருந்து மற் ருெரு முனைவரை மூவாயிரம் கல் தொலை பரவி உள்ளன. இத் தீவுகளில் வாழும் மக்கள் வெவ்வேறு பண்பாடு உடையவர் கள்; வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்கள்; வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களை ஒற்றுமைப்படுத்தும் செயல் அருஞ்செயலாகவே இருந்துவருகின்றது. எனவே இந்தோனிசியக் குடியரசின் குறிக்கோள் வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதேயாம். தீவுகளை எல்லாம் ஒற்றுமைப் படுத்துவதற்காக ஒரே மொழியை அரசியல் மொழியாக நிறுவ வும் முயன்று உள்ளனர். போஹாசா இந்தோனீசியா’ எனப் படும் இம்மொழி மலாய் மொழியை அடிப்படையாகக் கொண்டு விளங்குவதோடு அதன் வரி வடிவு உரோமானிய எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது.

இந்தோனீசியா 3 9
இந்தோனீசியாவின் பெரும் பகுதியை அண்மைக்காலம் வரை டச்சுக்காரர் ஆண்டு வந்தனர். டச்சுக்காரர் அங்கு ஆட்சி செலுத்தியதால், வேற்று மொழிகளில் டச்சு மொழிக்கு இந்தோனிசியர் முதன்மை கொடுத்திருக்கக்கூடும் என்று நினைத்தேன். ஆணுல் இந்தோனீசியாவில் பிற மொழிகளில் ஆங்கிலத்திற்கே முதன்மை அளித்திருக்கின்றனர். தாய் லாந்திலும் மலாயாவிலும் போல் இந்தோனிசியாவிலும் சீன இனத்தார் சிறுபான்மைத் தொகையினராக வாழ்ந்து வருகின் றனர். அவர்கள் பெரு முயற்சி உள்ளவர்கள். உள்நாட்டின் நகரங்களில் கூட அவர்களுடைய கடைகளையும் உணவு விடுதிகளையும் கண்டேன். அவர்கள் பெரும்பான்மையரோடு எங்ங்ணம் கலந்து வாழ்கின்றனர் என்பதை கான் அறிய முயல வில்லை. ஆயினும் இந்தோனிசிய மக்களுடன் ஒரு மனப் பான்மையாகச் சேர வேண்டுமென்பது அவர்களுடைய தலை வர்களின் எண்ணமாகும்.
சீனர் பெருவேட்கையுடன் பல்கலைக்கழகங்களிலும் உயர் நி2லப் பள்ளிகளிலும் ஆங்கிலம் கற்று வருகின்றனர். இந்தோனீசிய மொழியை அறியாததால் இக்தோனிசியாவில் சுற்றுச் செலவு நிகழ்த்துவது எனக்குச் சிரமமாக இருத்தல் கூடும் என்று நினைத்திருந்தேன். ஆயினும் ஆங்கிலத்தை கன்ருகக் கற்றவர்கள் பல இடங்களிலும் வசித்து வந்ததால் எனக்குச் சலிப்புத் தோன்றவில்லை. இந்திய நாட்டில் ஆங்கி லேயர் ஆட்சி புரிந்த காலத்திலும் அவர்கள் மொழியையோ பண்பாட்டையோ இந்திய மக்கள் வெறுக்கவில்2ல. ஆனல் டச்சுக்காரர் அரசாண்ட இந்தோனிசியாவில் டச்சு மொழி யைப் பெரிதும் வெறுக்கின்றனர். இதற்குக் காரணம் என்ன வெனில் டச்சு ஆட்சி இந்தோனிசியாவுடைய முன்னேற்றத் தைக் குறித்துச் சிறிதேனும் அமையவில்லை என்று இக்தோ னிசியர் கருதியதேயாகும். டச்சு மக்கள் தம் செல்வாக்குக் காகவே குடியேற்ற காடுகளை ஆண்டு வந்தனர் என்றும், ஹாலான்டின் செல்வத்தின் ஆறில் ஒரு பங்கினை டச்சுக்காரர் இந்தோனிசிய நாடுகளில் இருந்தே பெற்றனர் என்றும், இந்தோனீசியர் கூறுகின்றனர். இன்று டச்சு நாட்டிற்குத் திரும்ப இயலாத டச்சுக்காரர்களின் வழித்தோன்றல்களும் கலப்பு மணங்களின் விளைவாகத் தோன்றிய கலப்பு இனத் தாரும் இந்தோனிசியாவில் மகிழ்ச்சியுடன் வாழ்வதாகத் தெரிய 66%ు.

Page 29
ஒன்றே உலகம் 40۔
டச்சு ஆட்சி இந்தோனிசியாவின் முன்னேற்றத்தைக் கருதி இயங்கவில்லை. ஆட்சியாளருக்கு வேண்டிய அரசாங்கப் பணியாளரை உருவாக்குவதே அங்காட்டுக் கல்வியின் நோக்க மாக இருந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு பல்கலைக் கழகம்கூடத் திருத்தமாகவும் பொலிவாகவும் நடைபெற வில்லை. ஆணுல் விடுதலை பெற்றதும் இந்தோனிசியாவில் ஐந்து பல்கலைக் கழகங்கள் தோன்றி இருக்கின்றன. இக்தோ னிசியாவினுடைய விடுதலைக்கும், விடுதலை பெற்றபின் தன் ஞட்சிக்கும், காரணமாக இருப்பவர் பலர் உச்சு காட்டிலே கல்வி கற்றவர். இந்திய நாட்டின் புரட்சிக்குக் காரணமாக இருந் தவர் பலர் எவ்வாறு ஆங்கில காட்டில் கல்வி கற்றிருந்தனரோ அவ்வாறே இங்தோனிசியாவின் விடுதலைக்குக் காரணமாக இருந்த தலைவர்கள் பலர் டச்சு காட்டிலேயே கல்வி கற்றிருந் தனர். தமிழ்ச் சொற்கள்
இந்தோனீசியத் தீவுகளிலே முதன்மை பெற்றது சாவ கம் (ஜாவா). இத்தீவையே பண்டை இந்திய நூல்கள் 'சுவர்ணபூமி’ அல்லது “செம்பொன்காடு” என்று அழைத் துள்ளன என்று கூறுப. இந்தோனிசியாவின் பண்டை வர லாற்றுச் சின்னங்களும் கோயில்களும் கோபுரங்களும் பெரும் பாலும் சாவகத்திலேயே உள. மிகவும் பழைமையான சின் னங்கள் நடுச் சாவகத்திலும் இடைக்காலச் சின்னங்கள் கிழக் குச் சாவகத்திலும் காணப்படுகின்றன. மிகப் பழைய காலங் தொடங்கி இத்தீவுகள் இக்தியப் பண்பாட்டுத் தொடர்பைப் பெற்றிருந்தன. கி.பி. முதல் இரண்டாம் நூற்றண்டுகளிலே தமிழ் காட்டில் இருந்து கப்பலோட்டிகளும் வணிகரும் அங் குச் சென்று இருக்கவேண்டுமென்பது ஆராய்ச்சியாளரின் துணிபு இவர்கள் சிறு குடியிருப்புக்களைச் சுமத்திராவிலும் ஜாவாவிலும் களிமந்தானிலும் நிறுவி இருந்தனர். மணிமேக. 2லக் காப்பியத்திலிருந்தும் இந்தோனிசியாவில் காணப்பெறும் வடமொழி-தமிழ்க் கல்வெட்டுக்களில் இருந்தும், இக்குடி யேற்றம் பற்றி அறிகின்ருேம். சுமத்திராவில் வாழும் காரோ பட்டக் (Karobatak) என்னும் இனத்தவர் தம் இனத்தாரின் உட்பிரிவுகளுக்குச் சேரர், சோழர், பாண்டியர், கலிங்கர், மலை யாளியர் என்ற பெயர்களை வழங்கி வருகின்றனர். இன்று பேசப்படும் இந்தோனிசிய மொழியில் தமிழ்ச் சொற்கள் சில உள. பணத்தைத் துணை' என்றும், காப்பாளரைக் காவலர்

இந்தோனீசியா v − 41
என்றும், கவியைத் தோழன்’ என்றும், மதிப்பை நிலை" என்றும், சுங்க வரியைச் சுங்கே’ என்றும், கொடியைத்தாலி என்றும் கூறுகின்றனர். இடம், வட்டில், பண்டம், கலம், கடலை, கண்டு என்னும் சொற்களும் உள்ளன. இத் தமிழ்ச் சொற்கள் சில பண்டைச் சாவகக் கவிதையிலே உள.
பாலித் தீவின் தலைநகரின் பெயர் தென்பாசார். தென்பா சாரின் அண்மையில் சிறு கிராமம் உண்டு. அக்கிராமத்திற்குப் பெயர் கப்பால். இவ்விடத்தில் முன்னுெரு காலத்தில் மரக்கலம் ஒன்று மோதுண்டு கரை சேர்ந்ததாகக் கூறுகின்றனர். இக் தியப் பண்பாட்டுத் தொடர்பை வடமொழி, தமிழ் மொழிச் சொற்கள் காட்டுவதுடன் இந்தோனீசியாவின் கட்டடக் கலை யும் சமயமும் இன்னும் விரிவாக அத்தொடர்பினைக் காட்டு கின்றன. எட்டு, ஒன்பதாம் நூற்ருண்டுகளில் சைலேந்திர ருடைய காலத்தில் எழுப்பப்பெற்ற பெரும் கோயில்களே இத் தொடர்பிற்குத் தக்க அடையாளங்கள். முதலில் இந்து சமயமும் அதன் பின் பெளத்தமும் மக்களால் பலகாலம் தழு வப்பெற்ற சமயங்கள்; அரசரும் மக்களும் சில வேளைகளில் இந்து சமயத்திற்கும் சில வேளைகளில் பெளத்தத்திற்கும் ஆத ரவு அளித்து வந்தனர். எனவே அச்சமயக் கட்டடக்கலை இந்தியாவில் முதலில் தோன்றியதாயினும் சாவகத்தில்தான் அழியாச் சிறப்பையும் உயர்வையும் அடைந்தது என்பதை மாபெரும் புத்தர் தூபியாகிய போரபுதூரும் (Borabudur). சைவக் கோவிலாகிய பிரம்பானனும் (Prembanan) காட்டுவன. *புத்தர் பலர்’ என்பதே போரபுதூர் என்னும் பெயருக்குப் பொருளாகும். ஈடு இணையற்ற இப்புத்தர் தூபி, குன்றின் மேல் நிறுவப்பெற்றுளது; நூற்றுப்பதினறு அடி உயரமுள் ளது. அதன் சதுர வடிவமான அடியின் பக்கம் ஒன்று ஐந்நூறு அடி நீளம் உள்ளது. இப்பெரும் தூபியை ஒட்டி வேறு பல சிறு தூபி வடிவங்களும், ஒவ்வொரு சிறு தூபியுள் ளும் புத்தர் சிலை ஒன்றும் உள்ளன. இத்துாபியைச் சூழ்ந்த சுவர்கள் மீது ஆயிரத்து முந்நூறு சிற்பக் காட்சிகளைச் செதுக்கி இருக்கின்றனர். இவ்வாலயத்தை நிறுவுவதற்கு ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகள் ஆயின. உயர்விலும் அழகிலும் பொலிவிலும் உலகில் இருக்கும் புத்த தூபிகளுள் இதுவே மிகச் சிறந்தது எனக் கருதப்படுகின்றது.
போரபுதுரருக்கு இணையாக விளங்கும் இந்து ஆலயம் பிரம்பானுன் எனப்படுவது. அங்குச் சிறு சிறு ஆலயங்களாக

Page 30
42 ஒன்றே உலகம்
நூற்றைம்பது ஆலயங்கள் ஒரு பெரும் கோபுரத்தைச் சூழ்ந்து அமைக்கபெற்றிருக்கின்றன. சிறு சிறு ஆலயங்களைக் கட்டி யவர் அவற்றை முடித்தாரிலர். அங்கிருக்கும்" செதுக்கிய சிற்பங்களும் மிகவும் சிறந்தவை. இராமாயண மகாபாரதக் கதைகளை அவை சிற்ப வடிவிற் காட்டுவன. அங்குச் செதுக் கப் பெற்ற தலைவரின் முகங்களைப் பார்த்தால் இந்திய உயர் குலத்து மக்களைப் போலவும், பணி செய்கின்றவர் சாயலைப் பார்த்தால் சாவக காட்டைப் போன்றவர் போலவும் இருக் கின்றன.
இன்னும், "கடுச் சாவகத்தின் தியெங் பீடபூமியில் பல இடிந்த கோயில்கள் உள்ளன. இவற்றில் சிலவற்றைப் பீமா கோயில், அர்ஜுனன் கோயில் என்று அழைக்கின்றனர். ஆணுல் பண்டைக் காலத்தில் அவையாவும் திருமாலின் கோயில்களாகவும் சிவன் கோயில்களாவும் இருந்தன. "கடுச் சாவகத்திலும் கிழக்குச் சாவகத்திலும் உள்ள பொருட்காட்சி நிலையங்களில் கணக்கற்ற கந்திச் சிலைகளும் சிவபெருமான் சிலைகளும் அகத்தியர் சிலைகளும் காணப்படுகின்றன. தமிழ் காட்டுடன் இங்தோனிசியர் வைத்த தொடர்பு மிகவும் அழுத்த மான தொடர்பு என்பதற்கு அங்குள்ள பல்லவ முறைச் சிற் பங்களும் கோயில்களும் சான்றளிக்கின்றன.
பதினைந்தாம் நூற்ருண்டில் இஸ்லாமியர் இத்தீவுகளில் குடியேறி ஆட்சி செலுத்தியபொழுது அங்குள்ள மக்கள் பெரும் பாலும் இஸ்லாமிய சமயத்தைத் தழுவத் தொடங்கினர்.
அங்கு நான் கண்ட சிலைகளுள் அகத்தியரும் சிவபெரு மானும் ஏடுகளுடன் குருக்கள் வடிவில் காட்சியளிக்கும் சிலை கள் என் கருத்தைக் கவர்ந்தன. இந்தியத் தொடர்பு அற்ற வேறு அழகிய சிற்பங்களும் கட்டடங்களும் சாவகத்தில் உள. அவற்றில் “சண்டி சாரி” அல்லது ‘அழகிய கோயில்' என் னும் கட்டடத்தையும் அங்குச் செதுக்கப் பெற்ற தாமரை இ2ல, செடி, கொடி, முதலியவற்றின் அழகையும் எளிதில் நான் மறக்க முடியாது.
சாவகத்தை அடுத்தது பாலித் தீவு. அத்தீவைப் பற்றி டச்சுக்காரரும் அமெரிக்கரும் விளம்பரம் செய்ததால் ஒய்விற் கும் விடுமுறைக்கும் உல்லாசப் பிரயாணத்திற்கும் தகுந்த ஓர் இடம் பாலியென்று கருதப்படுகின்றது. இந்தோனிசியாவின் ஏனைய தீவுகள் பெரும்பாலும் இஸ்லாமைத் தழுவியிருக்கும் போது பாலி இந்து சமயத்தைத் தழுவுவது வரலாற்றில் தனி

இந்தோனீசியா 43
எடுத்துக்காட்டாக இருக்கின்றது. இஸ்லாமியர் சாவகத்தைக் கைப்பற்றிய காலத்தில் அங்குள்ள அரச குடும்பங்கள் பாலிக் குச் சென்று, அங்கு அனைவரும் இந்து சமயத்தை உறுதியு டன் காப்பாற்றிவந்தனர் என்பது வரலாற்று உண்மை. பாலிக்கு நான் விமானத்தில் சென்றபொழுது அங்குள்ள செய் குன்றக் கோயில்களை (ziggeraut) வானவூர்தியிலிருந்தே பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. இச்செய் குன்றங்கள் பண்டைக் காலத்து மக்களால் உலகின் பல பாகங்களில் அமைக்கப் பெற்று இருப்பதைக் காண்கிருேம். நடு அமெரிக்காவிலும் பாபிலோனியாவிலும் பாலியிலும் இத்தைகைய செய்குன்றங் கள் சிறப்பாக உள்ளன.
பாலித் தீவு ஓய்விற்கு நல்லதோர் இடமாகவே தோன்று கின்றது. பண்டைக் கால மக்களின் சமயத்தையும் பண் பாட்டையும் அறியவிரும்புபவர்கள் பாலிக்குச் சென்று அவற் றைப் படித்து வருகின்றனர். பாலி இசை, பண்டைக்காலத்து இந்தோனிசிய இசை என்றும், நடனங்கள் இந்துக்களின் செல்வாக்குப் பெற்ற நடனங்கள் என்றும் கருதப்படுகின்றன. பாலி சிறு தீவு. பதினைந்து இலட்சம் மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். ஆணுல் அங்குள்ள காய்களின் தொகை 25 இலட்சம் என்பர். பாலியில் கோயிலைக் கூேயில்” என்று அழைக்கின்றனர். பாலியின் ஒரு மருங்கிலிருந்து மற்ருெரு மருங்கிற்குச் செல்லும் பொழுது மலைகள் மேல் இருக்கும் அழகிய சிந்தாமணியெனும் சிறு ககரைப் பார்வை யிட்டுச் செல்லுதல் கூடும். அங்குத் தங்கியபோது பாலியில் குடியேறிய மேல்நாட்டு ஓவியக்காரர் சிலரைக் கண்டேன் மேல் காட்டின் பரபரப்பை விலக்கி அமைதியாக வாழ விரும்பியதால் அவ் ஓவியர் பாலியில் குடியேறிப் பாலிப் பெண்களை மணம் செய்து கொண்டனர் என்று கான் அறிந் தேன்.

Page 31
7. ஜப்பான்
நாள் முழுவதும் ஹாங்காங்கிலிருந்து பறந்து பறந்து சென்ற கடல் வானவூர்தி (Flying Boat) யொக்கோஹாமா -வின் அகன்ற நீர்ப்பரப்பில் கடற்பறவைபோல் களைப்புற்று வந்து அமர்ந்தது. விண்ணில் அது தனக்கு வகுத்த பெரு வழி பார்மோசாத் தீவிற்கும் இன்னும் நூற்றுக்கணக்கான தீவுகளுக்கும் கேர் மேலே சென்றது. மலையுச்சிகளில் மிகவும் சிறந்ததெனப் போற்றப்படும் பியூஜியாமாவின் கொடுமுடி யைப் பறக்கும்பொழுதே பார்க்க வேண்டுமென்று உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். செருக்கோடு திரையிட்டிருந்த முகில்கள் ஒரு சிறுபொழுது மட்டும் திரையை நீக்கிப் பணி மூடிய எரிமலை விளிம்பைக் காட்டின. அந்த அற்புதக் காட் சியை நினைத்துக்கொண்டே பொறி வள்ளத்தில் இறங்கிக் கரையை அடைந்தேன். கரையில் என் கண்பர் ஒருவர் எனக் காகக் காத்திருந்தார். அவர் என்னுடன் உரோமை மாநகரில் திருமறைக் கல்வி பயின்றவர். இருவரும் தோக்கியோவை நோக்கி ஜிப்பிற் சென்ருேம்
ஜப்பானே நான் பார்க்க வேண்டுமெனப் பலகாலம் விரும்பி வந்தேன். மேலை நாடுகள் எல்லாம் ஏறக்குறைய ஒரே வகையான பண்பாட்டினையே காட்டுவன. ஆங்குப் பல்லாண்டுகள் தங்கிய நான் அவற்றினின்று வேறுபட்ட நாடுகளைக் காண விழைந்தேன். மேலும் ஜப்பானின் வரலாறு இளமைப் பருவத்திலேயே என் கருத்தைக் கவர்ந்திருந்தது. ஐம்பது ஆண்டுகளில் இத்துணை முன்னேற்றமும் எழுத்தறி வும் கல்வியும் அடைந்த மக்களை அவர்தம் சூழ்நிலையிற் காண விரும்பினேன்.
ஒரு மணி நேரம் ஜீப் வண்டியிற் சென்ருேம். தெருக்கள் கரடு முரடாய் இருந்தன. போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் கழிந்தும் தெருக்களில் குண்டு வீழ்ந்த குழிகள் பெரும் புண்கள்போல் வாய் திறந்து நின்றன. அன்று சனிக்கிழமை மாலை. அப்பொழுது ஒய்வுடைய பிற்பகலாதலின், தெருக் களில் மக்கள் போக்கு வரவு அத்துணை மிகுதியாய் இருக்க வில்லை. ஆயினும், அங்கு நான் கண்ட மக்கள் அனைவரும்

ஜப்பான் 45s
எளிய ஆடைகள் அணிந்தோராய், தலை குனிந்து, தம் உண்மை உணர்ச்சிகளை மறைப்பவர்போல் நடந்து சென் றனர். அங்காடு போரால் இத்து2ணச் சீரழிவு அடைந் திருக்கும் என்று கான் அதுகாறும் உணர்ந்திலேன். மரத்தாலும் காகிதத்தாலும் இயற்றப்பெற்ற அவர்தம் இல்லங்கள் இரவு தோறும் அமெரிக்கர் இறைத்த தீக்குண்டு களுக்கு இரையாயின. யொக்கோஹாமாவிலிருந்து தோக்" கியோ மட்டும் பெரிய வெட்ட வெளிபோல் பரந்து தோன்றி யது. பேரொலியுடன் மின் வண்டிகள் சென்றன. புகை வண்டிகளிலும் மின் வண்டிகளிலும் மக்கள் கெருக்கமாய் நிறைந்திருந்தனர். அவர்களின் வாடிய முகங்களையும், இடிந்து அழிந்த பெரு நகரின் தோற்றத்தையும் கண்டு இரக்க முற்றேன். என் கண்பரும் தம் காட்டின் செல்வச் சிறப்பற்ற நிலைமையைக் குறித்துக் காப்புரை கூறுவார்போல் கடந்து கொண்டார். கான் செல்வக்காலை வாராது அல்லற்கா8ல வந்துள்ளேனே என அன்று மனம் குழைந்தேன். ஆணுல் சென்ற பத்து ஆண்டுகளில் ஜப்பான் தன் பண்டை நிலை யிலும் முன்னேறியுள்ளது. என் கண்பர் இனிமேல் “மன்னிக்க வேண்டும்’ எனும் மனப்பான்மையைக் கைவிட்டு விடுவார்.
அன்று மாலை என் கண்பர் தமது மனையகத்தே எனக்கு விருந்தளித்தார். அந்த முதல் கோளே ஜப்பானிய இல்லத்தின் அழகையும், அவர்களின் சீரிய பழக்க வழக்கங்களையும் அறிந்துகொண்டேன். உறைவிடம் அடைந்ததும், சப்பாத் தைக் கழற்றி ஒருபுறம் வைத்துவிட்டு, உள்ளே மெல்லிய தொடுதோலுடன் நடந்து செல்கின்றனர். உட்புறம் தடித்த பாய்கள் விரிக்கப் பெற்றுள்ளன. எங்குப் பார்த்தாலும் ஓவியக் கலைஞனின் வனப்பு வண்ணங்களே தோன்று கின்றன; இல்லத்தின் தூய்மைக்கு எல்லையில்லை; அவர்கள் விருந்தினரை வரவேற்குங்கால், இடை கொசியப் பன்முறை தாழ்ந்து குனிந்து வணங்குகின்றனர். கானும் அவர்களைப் போல் வணங்க முயன்றேன். இரண்டு மூன்று காட்களுக்குப் பின்பு, எனக்கு அறிமுகப்படுத்தியவரை எல்லாம் அங்ங்னம் பன்முறை பணிந்து குனிந்து வணங்கி வாழ்த்தியதால், 1னக்கு இடுப்புவலி தொடங்கிவிட்டது. அதன் பின் அங்கன் மக்கள் என்னே மெய் குனிந்து வணங்கும் பொழுதெல்லாம்.
நான் அவரைக் கைகூப்பி வணங்கலானேன்.

Page 32
ஒன்றே உலகம் . 46۔
ஜப்பானியர் வரலாறு
ஜப்பானியர் ஆதியில் சீனர் வகுப்பினைச் சேர்ந்தோர் ஆவர்; அவர்தம் பண்பாடும், கலைகளும், பண்டைக் காலத் தில், சீனர் பண்பாட்டினையும் கலைகளையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. கி. பி. ஆறு, ஏழாம் நூற்ருண்டுகளின் பின்னர், ஜப்பான் தனி காடாக முன்னேற்றம் அடையத் தொடங்கியது. பெரு நிலக்கிழவர் பலர் தம் சிற்றட்சிகளை நாடெங்கும் நிகழ்த்தி வந்தனர். பதினரும் நூற்றண்டில் ஐரோப்பியர் முதன் முதல் அங்காட்டிற்குச் சென்றனர். கிறித்தவத் திருத்தொண்டரும் தம் திருமறையைப் பரப்பு வதற்காக அந் நூற்றண்டிலேயே அங்குச் சென்றிருந்தனர். அவருள் தலைசிறந்தவர் தூய சவேரியார் ஆவர். சவேரியார் ஜப்பானுக்கு முதன் முதற் சென்றபொழுது, தமிழ் காட்டு இளைஞன் ஒருவன் அவருடன் சென்றனன் எனக் கூறப் பெற்று வருகின்றது. அங்காள் முதல் ஜப்பானியர் பிற நாட்டுத் தொடர்பினை விரும்பினராயினும், பிறநாட்டாரால் தம் ஆட்சிக்குத் தீமை வரக்கூடுமென அஞ்சினர். ஆதலால் கிறித்துவ மக்களைத் துன்புறுத்தியும் வேற்று காட்டுத் தொடர்பை வெறுத்தும் வந்தனர்.
பத்தொன்பதாம் நூற்றண்டில் கொமடோர் பெரி (Commodore Perry) எனும் அமெரிக்கர், ஜப்பான் தம் காட் டுடன் வாணிகம் செய்தல் வேண்டும், இன்றேல் போர் தொடுப்போம் என அச்சுறுத்தினர். அதனுல் அமைதியை முன்னிட்டு அவர் விரும்பிய வண்ணம் பிற நாடுகளுடன் தொடர்பு பாராட்டத் தொடங்கினர். விரைவில் ஐரோப்பா, அமெரிக்கா காடுகளுக்குத் தம் மக்களை அனுப்பி, அவர்தம் கலைகளையும், வாணிக முறைகளையும், கைத்தொழில் திறன் களையும், பொறித் தொழில் மாண்புகளையும் கற்றனர். தம் காட்டில் எழுத்தறியாத மக்கட்கெல்லாம் எழுத்தறிவை ஊட்டினர்; மேல்நாட்டு காகரிகத்தில் வெளித் தோற்றப் பொலிவுகளைக் கையாண்டு, பெரு மரக்கலங்களையும், சிறு ாகாவாய்களையும் திரட்டவும் தலைப்பட்டனர். ரஷ்யா மீது படையெடுத்து (1904-1905) வெற்றியும் பெற்றது. இது காறும் ஞாலத்தின் ஒரு மூலையில் மறைந்து கிடந்த ஜப்பான், இந்நூற்ருண்டின் தொடக்கத்தில் பெரும் வல்லரசாக விளங்கத் தொடங்கியது.

ஜப்பான் 47
ஜப்பானியர் சீன காட்டிலிருந்து தம் பண்பாட்டினைப் பெற்றுளரேனும், தம் தனி முயற்சியால் அதனைப் பிற்காலத் துத் தமக்கேயுரிய சிறப்புப் பண்பாடாக ஆக்கிக்கொண் டனர். அவருடன் தொடர்புடைய மேல் காட்டினர் அனே வரும், அம் மக்களின் கல்வி வேட்கையையும் விழிப்புத் தன்மையையும் குறித்திருக்கின்றனர். மேல் காட்டினர் தொடர்புற்ற காலம் தொட்டுச் சென்ற அறுபது ஆண்டு களாக, எழுத்தறிவை காடெங்கும் பரப்ப வேண்டுமென்று ஜப்பானியர் உழைத்து வந்தனர். அதன் பயணுக, மற்றெல்லா காடுகளையும்விட ஜப்பான் காடே எழுத்தறிவில் முதன்மை பெற்று, நூற்றுக்குத் தொண்ணுாற்றெட்டுப் பேர் எழுத்தறி வுடையோர் உள்ள காடாக விளங்குகின்றது. ஜப்பானிய நாட்செய்தித் தாள்களாகிய அசாகி", "மைனிச்சி’ என்பவை ாநாள்தோறும் முப்பது, காற்பது இலட்சம் படிகள் அச்சா கின்றன. வேற்று மொழியில் வெளியாகும் இலக்கிய நூல் களே எல்லாம் தம்மொழியில் மொழிபெயர்த்து வருகின்றனர்.
ஜப்பானிய மொழியில் அச்சிடப்பெற்ற நூலின் பக்கங் கள், கம் தமிழ் நூலிற்கு கேர் மாருக, கடைப்பக்கத்திலிருந்து தொடங்கிச் செல்கின்றன. மேலும், வலப் பக்கத்தில் தொடங்கி மேலிருந்து கீழ் வரியாகச் சொற்கள் செல்கின்றன. அவர்தம் புத்தக விற்பனை நிலையங்களுக்குச் சென்றபொழுது, அங்கு ஐரோப்பிய, அமெரிக்க நூல்கள் அனைத்தும் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, அச்சிட்டு விற்பனைக்கு வந்திருப்பதைக் கண்டேன். அங்குப் புத்தக விற்பனைக் கடைகளில் கான் கண்ட கல்லூரி மாணவரின் தொகையை வேறு எங்கும் கண்டிலேன். அம்மாணவர் உண்மையில் முன்னேற்றத்தை விரும்புபவராகக் காணப் பட்டனர். எண்பது ஆண்டுகளுக்கு முன் ஜப்பானியர் ஐரோப்பிய நூ ல் க 2ள மொழிபெயர்க்கத் தொடங்கிய பொழுது, சாமுவேல் சிமைல்ஸ் (Samuel Smiles) என்பவரின் *தானே தனக்குத் துணை' (Self-Help) எனும் நூலினையே முதலில் மொழிபெயர்த்தனர். சென்ற நூற்றண்டில் ஐரோப் பியப் பழக்க வழக்கங்களை மாந்தர் கடைப்பிடிக்க வேண்டு மென்று பலவாறு முயற்சி செய்தனர். செய்தித் தாள்கள் வழியாக ஐரோப்பியர் விரும்பும் ஒழுக்க முறைகளையெல்லாம் தம் மக்கட்குக் கற்பித்தனர்.

Page 33
4& ஒன்றே உலகம்
ஜப்பானியப் பேரூர்கள் மிகவும் அகன்று பரந்துள்ளன. நில நடுக்கத்திற்கு அஞ்சி, அவர் பெரும்பாலும் மாட மாளிகை கள் எடுப்பார் அல்லர். தோக்கியோ நகர் உலகில் மூன்ற வது மாபெரும் நகராகவும் ஒரு கோடி மக்கட்கு உறைவிட மாகவும் விளங்குகின்றது. கியோத்தோ (Kyoto) எனும் நகர் பண்டைக் காலத்தில் தலைாககராக விளங்கியது. ஜப்பானின் பழம் பெரும் பண்பாட்டினை ஆராய்வோர் அங்ாககரினைச் சென்று காணுதல் வேண்டும். நாரா (Nara) எனும் நகர் கியோத்தோவிற்கு முன்னர்ச் சிறப்புற்றிருந்த கோாநகர் என்பர். ஒசாக்கா, நாகோயா போன்றவை பெரும் பொறித் தொழில் நிலையங்கள் பல உள்ள நகர்களாகும்.
ஜப்பானில் மூன்று பெருஞ் சமயங்கள் நிலவுகின்றன. பலர் தொன்றுதொட்டு வழிந்தோ (Shinto) எனும் மறையைத் தழுவியுள்ளனர். ஆரும் நூற்றண்டில் கொரியாவின் வழி யாகப் புத்த சமயம் ஆங்கு இடம் பெறுவதாயிற்று. பதி னரும் நூற்றண்டு தொட்டுக் கிறித்துவ சமயமும் தழுவப் பெற்று வருகின்றது. ஷிங்தோ மறை இயற்கைப் பொருட் களையும், தென்புலத்தாரையும் வழிபடுகின்ற ஒரு மறை யாகும். ஆகலின், அம்மறையோர் கடல், ஆறு, ம2ல, கெருப்பு, காற்று முதலியவற்றையும், பேரரசர் மரபினைச் சேர்ந்த பெரு வீரரையும், வணங்கி வருகின்றனர். புத்த சமயத்தைத் தழுவி வளர்த்த பற்பல கோட்பாடுகள் ஆங்கு வழங்குகின்றன. இங்ங்னம் பண்டை வரலாற்று முறையில் ஜப்பானிய மக்கள் சிறப்புற்றவரேனும், அவர்கள் உலகிற் பெயர்பெற்ற பெரியார் எவரையும் பயந்திலர் என்பது எழுத். தாளர் சிலரின் கருத்தாகும். கன்பூசியஸ் (Confucius), லவோசே (Lao t se) போன்றேர் எவரும் ஜப்பானில் தோன் றிலர்.
உழுதுண்ணும் மக்களும் வாழும் நாடு ஜப்பானே. ஆங்கு உழு நிலம் சாலக் குறைவாய் இருப்பினும், கெல்லும் வேறு சில தானியங்களும் பயிரிடப்படுகின்றன. உழவுத் தொழி லுக்கு அடுத்த முக்கியமான தொழில் பட்டுக் கைத்தொழி லாகும். ஜப்பானியரது பச்சைத் தேயிலை கறுப்புத் தேயிலை யினும் உயிர்ச்சத்து மிக்குடையது என்பர். மலை நாட்டிலுள்ள காடுகளில் பல வகை மரங்கள் வளர்கின்றன. ஜப்பானைச் தழ்ந்துள்ள கடல்கள் மீன் வளம் மிக்கவை; குடாக்களோ கடற் பொருள் உணவு கல்குகின்ற பெருங் களஞ்சி

ஜப்பான் 49°
யங்கள். அவர் நகர்கள், பொறித் தொழில்களின் கெடு நிலையங்கள். பழக்க வழக்கங்கள்
ஜப்பானியர் வடிவில் சிறிதான பொருட்களை விரும்புவர். அவர்கள் பெரும்பாலும் உயரமாக வளர்ந்தவர் அல்லர். அங்குத் தங்கியுள்ள நாட்களில் நான் மிக்க வளர்ச்சியுடை யேன்போல் எனக்குத் தோன்றியது. ஜப்பானியர்க்கென அமைக்கப்பட்டிருந்த ஏற்ற இறக்க முடியாத ஒலிவாங்கி (Microphone) உள்ள இடங்களிலெல்லாம் நான் சிறிது குனிந்து கொண்டே பேச வேண்டியதாயிற்று. சிறு இல்லங் களில் சிறு மலர்ச் செப்புக்களில், சின் மலர்களை வைத்து அணி செய்வர். தரையில் சிறு பஞ்ச2ணகள் மேல் அமர்ந்து சிறு மேசைகள் மீது, சின்னஞ் சிறு கலங்களில் சிறு கட்டிகளாக உணவைப் படைத்து வைப்பர். அவை பாவை மணத்தில் ாகம் சிறுவர் கையாளும் சிறு கலங்களைப் போல் இருக்கும்.
சோறு வழங்கும் பொழுதும், அதனைச் சிறு சிறு உருண்டைகளாக அமைத்துப் புகையி2ல போன்ற கடல் தாழையின் மெல்லிய இலைகளில் சுற்றி வைப்பர். அச்சோற்று உருண்டைகளை இரு சிறு மூங்கில் குச்சுகளால் எடுத்துக் கடற்ருழைச் சாற்றில் தோய்த்து உண்பர். கடற்ருழை உண் பதற்குரிய சீரிய உணவுப் பொருள் என்பது அவர் கருத்து. மூங்கிற் குச்சுகள் இரண்டினையும் இரு கைகளாலும் பிடிப்பார் அல்லர். இரு குச்சுகளையும் வலக்கை ஒன்றினுலேயே பற்றிக் கொண்டு, உணவை எடுத்தெடுத்து உண்பர். அவர் கஞ்சியை அக்குச்சுகளைக் கொண்டே அடித்தடித்து எழுப்பிப் பருகிய அருஞ்செயல் எனக்குப் பெரு வியப்பாயிற்று. எனக்கென்று கரண்டிகளும் முட்களும் கொணர்ந்து வைத்தனர். ஆனல், கானும் அவர்களைப்போல் உண்ண வேண்டுமென்று கருதி, குச்சுகளைக் கையில் எடுத்தேன். அவர்களுக்கு நான் உண்ட காட்சி, நகைப்பாய் இருந்தது.
அங்காட்டினர், கெற் சோற்றிலிருந்து குடிவகை ஒன்று உண்டுபண்ணி, கன்ருகக் குடிக்கின்றனர். அதன் பெயர் "சாக்கி’ (Sake). அதனைச் சிறு குப்பிகளில் வார்த்து வைத்து, சிறு சிப்பி அளவான கலத்திற் பெய்து பருகுகின்றனர். தமிழ் மக்கள் பண்டைக் காலத்தில் கெல்லிலிருந்து குடிவகை ஒன்று செய்தனர் என்றும், அதற்குத் தோப்பி’ எனப் பெயர் இட் டனர் என்றும், சங்கச் செய்யுட்கள் சாற்றுகின்றன. சோயாப்
4-سسس-77 0 I

Page 34
50 ஒன்றே உலகம்
பருப்பைக் கொண்டு அவர்கள் செய்யும் உணவுப் பொருட் களும், தின்பண்டங்களும், மிக்க சுவையுடையன. விருந்துண் போர், உணவு வகைகளின் கலத்தினை உற்று நுகர்ந்து, அங் நுகர்ச்சியின்பத்தை இதழினுலும், நாவினுலும் தோன்றும் ஒலிக் குறிப்புக்களால் புலப்படுத்துதல், ஜப்பானியரின் உயர்ந்த ஒழுக்கம். எனவே, ஹா', 'ஹோ”, “உஸ்’ எனும் ஒலிகளை விருந்தினர் அடிக்கடி உண்ணும்பொழுது எழுப்பு வது வழக்கம். நம்மவர் சிலர் உண்ணும்பொழுது ஏப்பம் விடுவதற்கும் வயிற்றினைத் தடவுவதற்கும் இஃது ஒப் பாகும.
தேரீர்ச் சடங்கு என்பது ஜப்பானியரால் சிறப்பாகப் பயன் படுத்தப்பெற்ற பெரும் பழக்க முறை. தேநீரை வழங்குவதற் குத் தங்கள் பெண்டிர்க்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கின்றனர். தேர்ே விருந்து கடத்துவதற்கெனத் தனி அறைகளும், தனித் தோட்டங்களும் அமைக்கப்பெற்றுள்ளன. விருந்தினரை எங்ங்னம் வரவேற்றல் வேண்டும், பச்சைத் தேயிலையை எவ் வண்ணம் பசையாக்கி அளித்தல் வேண்டும், என்பவை போன்ற பற்பல கோட்பாடுகள் உள்ளன. தேநீர் விருந்து கடத்துவதற்கு மூன்று, கான்கு மணி கேரம் செலவிடுவர். தேயிலையுடன் பாலோ சர்க்கரையோ கலந்து பருக மாட் டார். &&ബ്
அவரது ஓவியக் கலை மிகவும் சிறப்புடையது. தம் மொழி யின் எழுத்து வடிவங்கள் சிறந்த ஓவியங்கள் என மதித்து, எழுத்து ஒவியங்களைச் சீனரைப் போல, தம் இல்லங்களில் பேணுகின்றனர். கைதேர்ந்த ஒவியர் துகிலிகை கொண்டு தீட்டும் கெடுங்கணக்கின் தனியெழுத்தொன்று ஒப்பற்ற ஒவியம் எனக் கருதுவதற்குத் தகுதியாதலும் கூடும். மேல் ாகாட்டினருடன் தொடர்பு கொள்ளு முன்னரே, சிறந்த இலக் கியப் ப்னுவல்களையும், செய்யுட் கோவைகளையும், மறை நூல் களையும் ஜப்பானியர் யாத்திருந்தனர். இம் மறை நூல்களுள் பல இந்தியாவிலிருந்து சீனுவின் வழியாக ஜப்பானுக்கு வங் திருத்தல் வேண்டும்.
ஜப்பானியரின் இசையும் நாட்டியமும், நம் இசையையும் காட்டியத்தையும் போல வளமுற்றன என்று சொல்வதற் கில்லை. அவர்களுக்கு யாழ், வீணை போன்ற நரம்புக் கருவிகள் உள. ஈகோட்டோ’, சோமிசன்? என்பன அவற்றின் பெயர்

ஜப்பான் 5.
களாகும். அவர்களுடைய நாடகங்களில், கோ’ நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. அவற்றில், முதல் நடிகர் மட்டும் வெவ் வேறு முக மூடிகள் அணிந்து, பல பாத்திரங்களாக வங் து நடிப்பார். பிறநாட்டார் இந்த ஈகோ’ நாடகங்களின் சுவையை நுகர்வது எளிதன்று.
ஜப்பானில் யான் கழித்த முதல் இரவில், என் வழிச் செல வின் களைப்பாலும், நீடிய விருந்தின் காரணமாகவும், கன்ருக உறங்கினேன். கட்டிலில்தலை சாய்ந்ததுதான் எனக்கு நினைவு மறுநாள் காலையில் விழிப்புற்ற பொழுது, திடீரெனக் கட்டி லும், சாளரமும், கதவும், கண்ணுடியும் கடுமையாய்க் கிடுகிடுத்து ஆடுவதை உணர்ந்தேன். பெரும் நில நடுக்கம் தொடங்கி விட்டது என்பது புலணுகியது. எனினும் கான் உற்ற களைப்பு அத்துணைப் பெரிதாக இருந்ததால் நில நடுக் கத்தில் இறப்பதெனின் கட்டிலில் இறப்பதே மேல் எனக் கருதி, மறுபக்கம் திரும்பிப் படுத்துத் தூங்கி விட்டேன். அங் காட்டில் இங்ங்ணம் எதிர்பாராத கேரங்களில் நிலம் நடுங்கும். ஜப்பானில் ஒர் ஆண்டில் ஏறக்குறைய மூவாயிரத்துக்கு மேல் நில நடுக்கங்கள் நிழ்கின்றன எனக் கணக்கிட்டிருக்கின்றனர். அவர்கள் பழமொழி ஒன்று யார் யார்க்கு ஒருவர் அஞ்சுதல் வேண்டும் என்பதை வரிசைப்படுத்திக் குறிப்பிடுகின்றது. அவ் வரிசையில் குறிக்கப்பட்டிருப்பவையாவன, நிலநடுக்கம், இடி முழக்கம், தீ, தங்தை இங்ாநிரலில் நில நடுக்கம் முதல் இடம் பெற்றது அது விளைக்கும் தீமை பற்றியேயாகும். அங்குள்ள வீடுகளில் எளிதில் தீப் பற்றிவிடும். அவர் நகர்களில் தீத் துன்ப மணியோசை கான் கேளாத நாள் இல்2ல.
ஜப்பானியர் வெந்நீரில் குளிக்கவும் முழுகவும் பெரிதும் விரும்புகின்றனர். அவரது வெந்நீர்த் தொட்டி மூன்றடிச் சதுர வடிவமுடையது. அதில் ஏறக்குறைய நூற்றுப் பத்துப் பாகை (110 degrees Fahrenheit) வெம்மையுள்ள நீர் நிரம்பி யிருக்கும். இல்லத்தில் உறுப்பினர் அனைவரும் ஒருவர் பின் ஒருவராய் அதில் முழுகிக் குளிப்பர். வெளியே நின்று உடம்பினைத் தூய்மை செய்துவிட்டே தொட்டியில் இறங்க வேண்டும். முதன்முதல் கான் வெங்ர்ேத் தொட்டியில் இறங்கி யதும் வெப்பம் தாங்க இயலாது வெளியே குதித்து ஏறி விட் டேன். நாளடைவில் பழகப் பழக வெங்கீரின் அரிய குணங்களை அறியத் தொடங்கினேன். கான் முதல்முதல் நீராடி வெளியே வந்ததும் வீடெல்லாம் கலகலவென ஒரே சிரிப்பாய் இருந்தது.

Page 35
52 ஒன்றே உலகம்
என்னைப்பற்றித்தான் சிரிக்கிறர்கள் என உணர்ந்து காரணம் வினவினேன். கான் குளித்து முடிந்ததும் தொட்டியில் இருந்த நீரைத் திறந்து விட்டுவிட்டேன். ஆதலால், ஏனையோர் நீராட இயலாது போயிற்று என்று சிரித்தனர்.
ஜப்பானின் இயற்கையழகு மிகவும் பெயர்போனது. பணி மூடிய மலையுச்சிகளும், கோயில்கள் அமைந்த குன்றங்களும், அலரி மலர்ந்து பரவியிருக்கும் வெளியிடங்களும், மரமும் செடியும் கொடியும் அடர்ந்து படர்ந்து மலர்ந்து விளங்கும் பூங்காக்களும், நாடெங்கும் வேனிற் கோடைக் காலங்களில் இன்பம் பயக்கின்றன.
அங்கு யான் மிகுதியாய் விரும்பிய காட்சி யாதென்ருல், அங்காட்டவர் தம் மனைகளுடன் அமைத்துள்ள அழகிய நிலக் காட்சித் தோட்டங்களேயாகும் (Landscape Gardens). இல்லத் தின் அண்மையில் சிறு இடம் எதுவும் இருப்பின், அதில் ஒரு சிறு குளமும், பாலமும், சிறு செய்குன்றமும், விளக்குத் தூனும் அமைத்து தம் தோட்டக் கலையின் பெரும் வன்மை யையும், தம் எழிற் சுவைத் திறத்தையும் காட்டுகின்றனர். பெரு மரங்களையும், சிறு குள்ள வடிவினவாக வளர்ப்பதில் ஜப்பானியர் சிறப்பான ஆராய்ச்சி செய்திருக்கின்றனர்.
அவர்தம் நிலக்காட்சித் தோட்டங்களில் பல்வேறு இயற்கை நிலைகளைக் காட்டுவர். அத் தோட்டங்களை அமைப் பதே பெருங்கலை. இல்லங்களில் மலர்களைச் செப்புக்களில் ஒழுங்குபடுத்தி வைப்பது பிறிதோர் அருங்கலை. சில வேளை ஒரு தனி மலரையே மூங்கிற் செப்பொன்றில் வைத்துத் தம் கவின்கலை நுகர்ச்சித் திறனைக் காட்டுவர். மலர்களை ஒழுங்கு படுத்தும் இக் கவின் க2லயில் வெவ்வேறு கோட்பாடுகளை அடிப்படையாகக் (oast Goot L J, p85 sil&oir (Schools of Flower Arrangement) உள்ளன. இல்லங்கள்தோறும் சென்று பூக் களைச் செப்புக்களில் ஒழுங்குபடுத்தும் வகையில் பயிற்சி அளிக்கும் மலராசிரியர் அக்காட்டில் பெரிதும் போற்றப்படு கின்றனர். மலர்களுக்கெனக் கொண்டாட்டம் நிகழ்த்தும் வழக்கம் ஜப்பானியருடையதே; செரிமலர்த் திருநாள் (Cherry Blosson Festival), வேனில் பருவத்தின் சிறந்த கொண்டாட்ட மாகும்.
நான் சென்ற இடமெல்லாம் ஜப்பானியரின் பெரு முயற் சிக்குப் பலவகைச் சான்றுகளைக் கண்டேன். அவர்களின் மக்கள் தொகைக்குப் போதிய உழவு நிலம் இல்லை. ஓர் ஏக்கர்

ஜப்பான் 53
உழவு நிலத்தைச் சார்ந்து மூவாயிரம் மக்கள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலகிலேயே ஜப்பானிய மக்கட் தொகை கெருக்கம்தான் மிகவும் பெரிது. நிலப்பரப்புக் குறைக் துள்ளதேனும், முயற்சியிலும், உழைப்பிலும் நிகரற்று விளங்குகின்றனர் ஜப்பானியர். காவேரிக் கரையின் கழனி களைக் கண்ட கண்களால், ஐந்து ஆறு சதுர அடி கொண்ட சிறு பரப்பிற்கூட ஜப்பானில் கெற்பயிர் செய்யப்படுவது கண்டு பெரு வியப்டடைந்தேன். அது, அவருடைய பெரு முயற்சிக்கும் அம்மக்களின் பெரும் நெருக்கத்திற்கும், சான்ற வதை உணர்ந்தேன்.
சில இடங்களில், காகிதத்தினுலும், துணியினுலும் செய்த பெரிய கயல் மீன் வடிவம் போன்ற கொடிகள் கூரைகள்மீது கட்டிப் பறக்கக் கண்டேன். அவற்றைப்பற்றி வினவிய பொழுது, அது இளைஞர் விழாவின் சின்னம் என்றனர். அங் காட்டில் ஆண் குழங்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும், தனித்தனி விழாக்களை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின் றனர். கயல்மீன் நீரோட்டத்தை எதிர்த்துச் செல்லுதல் போல் இளைஞர் வாழ்க்கையின் இன்னல்களை எதிர்த்துச் செல்லுதல் வேண்டும் என்னும் நீதியைக் கயற்கொடிகள் அவர்களுக்கு உணர்த்துகின்றன.
ஜப்பானில் ஹிரோஷிமாவும், காகசாக்கியும் குறிப்பிடத் தக்க இடங்கள். அணுக்குண்டினுல் அழிக்கப்பட்ட இம் மாபெரு நகர்களைக் கண்ட பொழுதுதான் அக்குண்டின் கொடுமையை ஒரு சிறிதளவேனும் உணர்ந்தேன். நூருயிரக் கணக்கான குற்றமற்ற உயிர்கள் ஒரு கொடிப் பொழுதில் மாய்ந்து மறைவது என்ருல், அக்குண்டு வீழ்ச்சியைக் குறித்து யார்தான் வருந்தார் ? அணு நோயால் (Atomic disease) துன்பப்படும் இருவரை நான் அங்கு கண்டு, அவருடன் உரை யாட நேர்ந்தது. அவர்களுள் ஒருவர் மருத்துவர். அணு கோயி ணுல் தாம் படுகின்ற துன்பத்தையெல்லாம் பற்றி விரிவாகப் பல நூல்களில் வரைந்துள்ளார்.
நாகசாக்கி, ஹிரோஷிமா போன்ற இடங்களில், ஜப்பானி யர் சமாதான விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர். எதிர் காலத்தில் போரை விலக்கி அரசியல் நடத்த வேண்டுமென்று பல முயற்சிகள் செய்து வருகின்றனர். அத்தகைய அமைதி விழா ஒன்று தோக்கியோவில் நிகழ்ந்த பொழுது, அவ்விழா வில் கான் உரையாற்ற வேண்டுமென்று என்னைக் கேட்டுக்

Page 36
54 ஒன்றே உலகம்
கொண்டனர். ஆங்கிலத்தில் சிறிது கேரம் பேசியபின் ஜப்பான் மொழியில் எழுதிய ஒரு செய்தியைப் படித்தேன். நான் ஜப்பான் மொழியை அறிந்தவன் அல்லன். ஆயினும் நண்பர் ஒருவர் என் கருத்தை ஜப்பான் மொழியில் மொழி பெயர்த்ததைத் தமிழ் எழுத்துக்களில் எழுதி, அதையே படித் தேன். அவர்கள் கான் ஜப்பான் மொழியை கன்கு கற்றவன் என்று எண்ணி ஒரு சிறுமி வழியாக எனக்குப் பூங்கொத்து ஒன்றை மேடைக்கு அனுப்பி வைத்தனர்.

8. ஐக்கிய அமெரிக்கா
அமெரிக்கா என்று சொல்லும் பொழுது பல்வேறு திறத் தாரிடம் பல்வேறு உணர்ச்சிகள் தோன்றுகின்றன. பொது வாக அமெரிக்கா என்று இரு கண்டங்களை நாம் அழைத்து வருகிருேம். ஆணுல் சிறப்பாக ஐக்கிய அமெரிக்க காட்டை *அமெரிக்கா’ என அழைக்கும் பொழுது கனடா நாட்டவரும் தென்னமெரிக்கா நாட்டவரும் வெறுப்பதை நான் கண்டிருக் கின்றேன். வட அமெரிக்காவும், தென் அமெரிக்காவும் ஏறக் குறைய முப்பது தனித்தனி அரசுகள் அடங்கிய பெரிய கண்டங்களாக இருக்கும் பொழுது, ஐக்கிய அமெரிக்க நாடு களுக்கு மட்டுமே சிறப்பாக "அமெரிக்கா’ என்னும் பெயர் கொடுத்து அழைப்பது பொருத்தமாகுமோ எனக் கேட்கின் றனர் தென் . அமெரிக்கர். அது பொருத்தமன்றுதான். அதனுல் ஐக்கிய அமெரிக்க காடுகளை "United States of America" என்று சொல்வதே பொருத்தமாகும். இனி ஆங்கி லேயர், ஜப்பானியர் என்பது போல் அங்குள்ள மக்களையும் *ஐக்கிய அமெரிக்கர்’ என்று எப்பொழுதும் சொல்லியே திர வேண்டும். ஆயினும் அவ்வாறு சொல்வது எனக்கும் எளிதில் வருவதில்லை. ,
அமெரிக்கா என்ருல், முதலாளிகள் முதன்மை பெற்ற காடு என்று நினைக்கின்றனர் சிலர். விஞ்ஞானப் பொறிகட்கு மக்கள் அடிமைகளாக வாழும் நாடு என்று கருதுகின்றனர் சிலர்; ரஷ்யாவின் பகைவர் என்று கருதுகின்றனர் சிலர். மக்கள் அனைவரும் எவ்வகை வறுமையும் இன்றி இன்புற்று வாழும் இந்திர உலகம் என்று எண்ணுகின்றனர் வேறு சிலர். அமெரிக்காவிற்குச் செல்லும் வேட்கை உடைய இளைஞர் பலர் ஆசிய காடுகளெங்கும் உளர். அமெரிக்காவைக் குறித்து நம் மக்கள் கொண்டுள்ள கருத்து வேற்றுமை, உலகில் வேறு எந்த நாட்டினைக் குறித்தும் அவர் கொண்டிலர் என்பது உண்மை.
ஐக்கிய அமெரிக்காவில் வானவூர்தி வசதிகள் பல உள. ஆதலின், அங்ாாட்டின் பற்பல பாகங்களுக்கும் பன்முறை சென்றுள்ளேன். அதன் இயற்கை அழகையும் செயற்கை

Page 37
お6 ஒன்றே உலகம்
அழகையும் பன்னெடுகாள் நுகர்ந்திருக்கின்றேன். அங்குள்ள பல்வேறு வகுப்பினருடன் பலகாலும் பழகியுள்ளேன். அமெரிக்கராகப் பிறந்து வளர்ந்த பலரினும் ஐக்கிய அமெரிக்க காட்டையும் அங்காட்டவரையும் பற்றி அறிய மிகுதியான வாய்ப்புக்கள் பெற்றேன். கருமமே கட்டளைக் கல்
அமெரிக்காவிற்கு முதல் முதல் செல்லுமுன்னரே, அந் காட்டின் வரலாறு என் கருத்தைக் கவர்ந்திருந்தது. சிலர் கினைப்பது போல் அமெரிக்கர் என்ருல் ஹாலிவுட்டில் வாழும் வெள்ளித்திரை நடிகர் என்று மட்டும் நான் நினைக்கவில்லை. அல்லது சிகாக்கோ போன்ற நகர்களில் கொள்ளையடிக்கும் கள்வர் வதியும் காடு என்றும் கான் கருதவில்லை. அக்காட் டினர் பிறப்புரிமை பெற்ற முறையையும், அவர் புதிய அரசு நிறுவிய திறனையும், ஆபிரகாம் இலிங்கன், ஜெபர்சன், ஜேம்ஸ் மடிசன் போன்ருேர் குடியரசுபற்றி நிகழ்த்திய பேருரைகளையும் படித்து, அங்ாகாட்டின் பெருமையை உணர்ந் தேன். பிற காட்டினர் நம்மைப்பற்றி நன்கு அறிதல் வேண்டு மெனின் முதன்முதல் நம் வரலாற்றையும், நம் பண்பாட்டுச் சிறப்பையும், கம் இலக்கியத்தின் உயர்வையும், கம் கலைக ளின் வகையையும் அவர் கன்கு உணர வேண்டும். அவ் வாறே பிறகாட்டினரை காம் அறிய முயலுமிடத்து, அவர்களு டைய உயர்ந்த படைப்பு கலன்கள் கொண்டே அறிதல் வேண் டும்-பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும், தத்தம் கருமமே கட்டளைக் கல்".
அமெரிக்காவைப்பற்றி நம் காட்டில் தவருண எண்ணங் ணங்கள் நிலவுதலைப்போல, ஆசிய நாடுகளைக் குறித்தும் அக்காட்டினரிடையே தவருன கருத்துக்கள் பரவி உள்ளன. இந்தியர், இலங்கையர், மலாயர் அனைவரும் பண்பாடு என்பது சிறிதும் இல்லாதவர் என்பது அங்குள்ள அறியா தார் சிலரின் கருத்து. இங்குள்ளார் வறியர் இரவலர் என்பது சிலர் எண்ணம். நம் காட்டிலிருந்து அங்காட்டிற் குச் செல்வோர் சிற்றரசர், பேரரசர், இளவரசர் என்பது அங் குள்ளார் பலர் கொண்டுள்ள பேதைமை. அப்பேதமைக்கேற்ப இந்திய, இலங்கை நாட்டிலிருந்து செல்வோர் சிலர், அரசர் போல் ஐந்து, பத்து ஆண்டுகளுக்கு முன் கடித்து வந்தனர்.
ஒரு முறை நான் செயிண்ட் லூயிஸ் எனும் பெரு நகர்க் குச் செல்லும் வழியில், டெக்கோரு (Decorah) எனும் சிற்றுா

ஐக்கிய அமெரிக்கா 57
ரில் தங்கினேன். அங்கு நார்வீஜியன் பொருட்காட்சி நிலையம் இருப்பது தெரிந்து, அதனைப் பார்க்கச் சென்றேன். அங்குள்ள செயலாளர் என் நாட்டினைப் பற்றி வினவினுர். *ாகான் இலங்கை வாழ்வோன், ஈழ காட்டினன்’ எனக் கூறிய தும், ஈழ காட்டின் இளவரசி அங்கு வந்திருந்தனர் என இயம்பினர். ஈழ நாட்டின் இளவரசி என அவர் கூறக் கேட்ட தும் எனக்கு ஐயம் தோன்றியது. ஆயினும் ஐயத்தைப் புலப் படுத்தாமல், அவ்விளவரசி பற்றிய செய்திகளை விரிவாகக் கேட்டேன். அவர் பேசி முடித்த பின்னர், அவ்வூரின் பழைய செய்தித் தாள்கள் சிலவற்றைக்கொண்டு வந்தார். அவற்றுள் படம் ஒன்றில், 8இலங்கை இளவரசி’ ஐரோப்பியர் போல் முழங்கால் அங்கி பூண்டு, இந்திய ஆடவர் போல் தலைப் பாகை அணிந்து, தம்மை வணங்கியோர்க்கு எதிர் வணக்கம் செய்யும் முறையில் இரு கைகளையும் கூப்பி நின்ருள். அச் செய்தித்தாள்களைப் படித்துப் பார்த்தேன். அவள் “இலங்கை மன்னன் மகள்’ என்றும், நியூயார்க் ககரில் மருத்துவக் கலை
பயில்கின்ருள் என்றும், பயிற்சி முடிந்த பின்னர் மருத்துவக்
கலையினைத் தன் காட்டினர்க்குக் கற்பிக்கக் கருதி இருக்கின் ருள் என்றும் கூறப்பெற்றிருந்தது. இலங்கை இளவரசி’ ஒரு போலி நடிகை என்பதை உணர்ந்தேன். கல்லுள்ளம் படைத்த அமெரிக்க மக்கள் பலரை அங்குச் செல்லும் கீழ்த் திசையாளர் சிலர் இங்ாவனம் ஏமாற்றி வருகின்றனர்.
கீழ்த்திசை காடுகளிலிருந்து வருபவர் சோதிடத்தில் கைதேர்ந்தவர் என அமெரிக்கர் சிலர் நினைக்கின்றனர். கூட்ட மொன்றில் விரிவுரை நிகழ்த்திய பின்னர், அங்கிருந்தவர் ஒரு வர், கான் கயிற்று வித்தை (Rope-trick) செய்து காட்ட வல்லேணு என்று என்னைக் கேட்டார். அவ்வகை வித்தை செய்து காட்டுவதற்குரிய கயிறு இந்தியாவில் மட்டுமே கிடைக்கும் என்றும் அங்கு அவ்வித்தையை நிகழ்த்துதல் கூடும் என்றும் விடையிறுத்தேன். வேருேர் இடத்தில் சிற்றுண்டி விருந்து நிகழ்ந்த பொழுது, அங்கு வந்திருந்த கங்கையர் ஒருவர் என்னை அணுகி, நீங்கள் இந்தியாவி லிருந்து வந்திருக்கிறீர்கள்; என் உள்ளங்கை வரிகளைப் பார்த்து, எதிர்கால நன்மை தீமை நிகழ்ச்சிகளைச் சொல்லக் கூடுமோ” என்று சொல்லிக்கொண்டே தம் கையை நீட்டினுர். தமிழ் ஆடை அணிந்த தமிழ்ப் பெண்மணி ஒருவர் தெக்சஸ் (Texas) எனும் மாநிலத்தில் பஸ் வண்டியில் சென்றபொழுது

Page 38
58 ஒன்றே உலகம்
அவர் ஆங்கிலத்தில் பேசுவது கேட்ட அமெரிக்க மகளிர் ஒருவர், “ஆண்டவனே அது பேசுகின்றது (My God it speaks)" என வியப்பெய்திக் கூறினுர்.
“இந்தியர்” என்ருல், அமெரிக்கர் சிவப்பு இந்தியரைப் பற்றியே நினைப்பர். அமெரிக்காவின் பழங்குடிகளாகிய சிவப்பு இந்தியர்களில் ஒரு சிலரே இக்காலத்தில் வாழ்ந்து வருகின்ற னர். அவர் முற்றிலும் அழிந்தொழிந்து போகாவண்ணம் காடுகள் தழந்த மாவட்டங்களில் அமெரிக்க அரசு அவரைக் காப்பாற்றி வருகின்றது. அவர், "கம் கிழக்கு இந்தியருடன் தொடர்புடையவர் அல்லர். அவர் மங்கோலிய வகுப்பினர் எனவும், பெயரிங் கடல் இணைப்பு வழியாக அமெரிக்காவை அடைந்தனர் எனவும் கூறுவர். அவர், மொழி, பண்பாடு ஆகிய எவற்ருலும் இந்திய நாட்டுடன் தொடர்புடையவரல் லர். அவர் தம் சூழ்ாநிலையில் பெரும் வில் வீரராக எப்பொழு தும் விளங்கியுள்ளனர். உலகில் முதன் முதல் புகையிலையைப் பயிர் செய்து வளர்த்துப் பயன்படுத்தியவர் அவரே. அவர் தம் தலையில் பல நிற இறகுகளை விரித்துக் கட்டிக்கொண்டு கடனம் ஆடும் காட்சி மிகவும் அழகிய கண்காட்சியே.
கான் அமெரிக்காவில் இருக்கும்பொழுது, என்னை அறி முகப்படுத்தியவர், என்னை இந்தியர் என்று சொல்லியே அறி முகப்படுத்தினர். ஈழத்தவரென்று பத்தாண்டுகளுக்கு முன் கூறியிருந்தால் அத்துணை மக்கள் அறிந்திருக்கமாட் டார். அமெரிக்கச் சிறுவர்க்காக எழுதப்படும் பல கதைகள் சிவப்பு இந்தியரைப் பற்றியவை. அச்சிறுவர் தாம் சிவப்பு இந்தியராக நடித்து வில்லும் அம்பும் வைத்து விளை யாடுவர். சிவப்பு இந்தியர் என்று சொன்னுல் குழந்தைகளுக்கு அச்சம் உண்டாகும். நான் பார்க்கச் சென்ற ஒரு வீட்டில் ஐந்து ஆண்டுகள் படைத்த சிறுவன் இந்தியர் ஒருவர் வந்த தாகக் கேள்வியுற்றதும், சிவப்பு இந்தியரென நினைத்து, ஒளிந்துவிட்டான். அவன் தந்தை என்னைப் பார்க்கும்படி வற்புறுத்தியும் அவன் வரவில்லை. தொடக்க நிலைப் பள்ளி யொன்றில் என்னை இந்தியரென ஆசிரியர் அறிமுகப்படுத்தி ணுர். உடனே இளைஞன் ஒருவன், "இவர் இந்தியரென்ருல் இவருடைய தலையின் இறகுகள் எங்கே? என்று வினவினுன் ஈழ நாட்டைப் பற்றி அங்குள்ள மக்கள் பொதுவாக அறியார். நான் சென்ற உயர்நிலைப் பள்ளிகளில் ஈழத்தைப் பற்றியும், அதன் தலைநகரைப் பற்றியும் வினவினேன். மிகச் சிலரே

ஐக்கிய அமெரிக்கா 59
விடை இறுத்தனர். நியூயார்க் உயர் நிலைப்பள்ளி ஒன்றில் வினவிய விடத்து, மாணுக்கன் ஒருவன் திருத்தமாக இலங் கையைப் பற்றி விடை அளித்தான். அவன் திறமையைப் பாராட்டி, அவனுக்குப் பரிசில் வழங்க விரும்பினேன். அப் பொழுது அவன், தன் புத்தகத்தை அங்கேரத்தில் புரட்டிப் பார்த்தே அவ்விடைகளைப் பகர்ந்ததாக உண்மையை உரைத்தான். W வாழ்க்கை கில
ஐரோப்பாவில் கான் கல்வி பயின்று வந்த காலை, ஐரோப் பாவைக் கண்டவர் அமெரிக்காவைக் காண வேண்டுவதில்லை என எண்ணினேன். எனினும், ஐக்கிய அமெரிக்க காடுகளை எல்லாம் கண்ட பின்பு, அமெரிக்கா புது உலகம் என்றும், அதனைக் காணுர் உலகில் சிறந்த பகுதி யொன்றை அறியார் என்றும் துணிவு கொண்டிருக்கின்றேன்.
வேற்று நாடுகளிலிருந்து அமெரிக்கா செல்பவர் அனைவ ரும், அமெரிக்காவின் பெருஞ் செல்வத்தையும், அங்காட்டுக் குடிமக்களின் உயர்ந்த வாழ்க்கை நிலையையும் குறிப்பிடாமல் இருக்கமாட்டார். மினசோட்டோ எனும் மாகாணத்திற்குச் சென்றிருந்த வேளை, கத்தோலிக்கக் குரு ஒருவர் நான் தம்மு டன் வந்து ஓர் எளிய குடும்பத்தைக் காண வேண்டுமென்று அழைத்தார். அந்த மாவட்டம் மிகுதியான உழவு நிலங்களை யும் பத்தாயிரம் ஏரிகளையும் கொண்டுள்ளது. அந்த எளிய குடும்பத்திற்கு நூற்றைம்பது ஏக்கர் நிலத்திற்கு மேல் இருக்கின்றது! அக்குடும்பத்தினர் தம் இல்லத்தில் ஒரு மோட்டார் வண்டியும் ஒருலாரிவண்டியும் வைத்திருக்கின்றனர். அவர் கட்கு ஆடுமாடுகளும், கோழிப்பண்ணையும் உண்டென அறிக் தேன். இதுதான் மினசோட்டாவில் உள்ள வறுமை! மேலும், ஒக்லோகோமா எனும் மாகாணத்தில் வறியவரை அறிய வேண்டுமென்ருல் சொந்தக் கடிலாக் மோட்டார் வண்டிகளைத் தாமே கழுவுவோரைத் தேடிப் பிடிக்க வேண்டுமென்பர். எனி னும், உண்மையிலேயே எளியவரும், இரவலர்தாமும் அங்கு சிலர் உளர். அச்சியிலும் உண்டு பிச்சைக்காரர், அளகா புரியி லும் உண்டு விறகுத் தலையர்’ எனும் நம் பழமொழி உலகின் உண்மை நிலை கூறும் மொழியாகும்.
சென்ற ஆண்டுகளில் செய்துள்ள ஆராய்ச்சியில், உல கின்கண் ஸ்காண்டினேவிய நாடுகள் தவிர, மற்றைய நாடுகள் அனைத்தினும் ஐக்கிய அமெரிக்க நாடு மிகவும் உயர்ந்த

Page 39
60 ஒன்றே உலகம்
வாழ்க்கை நிலையுடையது என்பது பெறப்பட்டது. ஆங்கு மாந்தர் குறையற உண்டு உடுத்து வாழ்கின்றனர். இந்தியர் ஏறக்குறைய காற்பது ஆண்டு உயிர் வாழ்கின்றனர் எனின், அமெரிக்கர் எழுபது ஆண்டு உயிர் வாழ்கின்றனர். அமெ ரிக்கா புத்தம் புதிய நாடு. அதன் செல்வம் அனைத்தும், நிலத் திலும் மலையிலும் மறைந்து கிடக்கின்றது. இன்னும் பல் லாண்டுகட்கு அச்செல்வம் சுரந்து பெருகி வளர்ந்து வரும் என்பது திண்ணம். மேலும் அத்தகைய உயர்ந்த வாழ்க்கை நிலைக்கு மற்ருெரு காரணம், அங்காட்டில் மக்கள் தொகை குறைவாக இருப்பதேயாம். அமெரிக்கா இந்தியாவை விட இரு மடங்கு பெரிதாயிருந்தும் அங்காட்டின் மக்கள் தொகை இந்தியாவின் தொகையிலும் இரண்டரை மடங்கு குறைவாக இருக்கின்றது.
அவர் வாழ்க்கை நிலையும் செல்வமும் உயர்ந்திருப்பதற்கு பிறிதொரு காரணம் அவர்தம் உழைப்பும் விடாமுயற்சியு மாம். ஜப்பானைத் தவிர உலகின் மற்றெந்த காட்டிலும் மக்கள் அமெரிக்கர் போல் உழைக்கக் கண்டிலேன். ஐரோப்பாவி லிருந்து ஐக்கிய அமெரிக்காவில் அண்மையில் குடியேறிய மக்கள் அமெரிக்கரைப்போல் உழைக்க இயலாமல் இருக் கின்றனர். அமெரிக்காவில் மக்கள் வாழ்க்கை மிகவும் கலம் பயப்பது என்றும், சிறிது முயற்சியில் பெரும் பொருள் ஈட்டி கலமுற வாழலாம் என்றும் நினைத்து வந்தவர், அமெரிக்கரின் உழைப்பு அவர் வெற்றிக்கு எத்துணை உதவிபயக்கிறது எனக் கண்டுவருகின்றனர். தொழிலுக்கு அமெரிக்காவில் தனி மதிப்பு உளது. தொழில் செய்வதற்கு எவரும் பின் வாங்கார்; அஞ்சார். பெருஞ் செல்வந்தர் தாமும், தத்தம் இல்லங்களில் எத்தகைய சிறு தொழிலையும் செய்யச் சிறிதும் கூசார். ஒருவன் தொழிலாளி என்றும், அவன் நிலை தாழ்ந்தது என்றும் அவனை வெறுப்பார் எவரும் இலர். முதலாளியும் தொழிலாளியும் ஒருங்கே வாழ்கின்றனர். மனிதன் என்று தலை நிமிர்ந்து கடக்கும் ஆற்றல் படைத்தவர் அமெரிக்கத் தொழிலாளி. தொழிலாளர் பலர் தம் சொந்த மோட்டார் வண்டியில் தத்தம் தொழில்களைச் செய்யப் புறப்பட்டுப் போகின்றனர். கம் காட்டுத் தொழிலாளர் பலர் தம் சொந்த முதலாளிகள் முன்னர் அஞ்சி ஒடுங்கி நடப்பதுபோல், அவர் கடவார். “எல்லாரும் ஓர் இனம் எல்லாரும் ஒரு குலம்’ எனும் உளப்பான்மையுடன் வாழ்ந்து வருகின்றனர் அம்மக்கள்.

ஐக்கிய அமெரிக்கா 6互
மாணவர் பலர், விடுமுறை காட்களில் தொழில் செய்து, தமது கல்விப் பயிற்சிக்கு வேண்டும் பணத்தை ஈட்டிக் கொள் வர். உணவு விடுதிகளில் கலங் கழுவித் தூய்மை ஆக்கும் தொழிலும் செய்வர். டென்வர் எனும் ஊரில் வாடகை மோட் டார் வண்டியில் சென்றேன். அதனை ஒட்டிச் சென்றவர் ஒரு மாணவர். அவர் இளைஞர். தாம் கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயில்கின்றவர் எனவும், கோடை விடுமுறை காலத்தில் அவ்வாறு வண்டி ஒட்டிப் பல்கலைக் கழகத்தில் தம் செலவிற்குப் போதுமான தொகை ஈட்டிக்கொள்வது தம் கோடை முயற்சி எனவும் இயம்பினர். வேருெரு முறை சிகாக்கோ வானவூர்தி நிலையத்தில் சிறுவன் ஒருவன் என்னை அணுகி, எனக்குச் சப்பாத்துத் தூய்மை செய்து தர விரும்பி ஞன். அவன் தான் ஒரு தொடக்கங்2லப் பள்ளி மாணுக்கன் எனவும், கோடைக் காலத்தில் அவ்வாறு தொழில் செய்து, காள் ஒன்றுக்கு முப்பத்தைந்து காற்பது வெள்ளி சேர்த்துத் தன் அன்னையிடம் கொடுத்து வைத்து, தன் எதிர்காலக் கல்விப் பயிற்சிக்கு வழி தேடுவது தன் கடமை எனவும்
கைத்தொழில் செய்வதில் அமெரிக்கர் சிறப்பாகப் பெருமை கொள்கின்றனர். என் கைகளின் பயன் இன்னதென அமெரிக்காவில்தான் முற்றிலும் அறிந்தேன்.அங்குள்ள மோட் டார் வண்டிகளுக்குக் கணக்கே இல்லை. பள்ளியில் பயிலும் மாணவரும் மோட்டார் வண்டி ஒட்டுவர். உயர்2லப் பள்ளி இளைஞர் என்னை மோட்டார் வண்டியில் அழைத்துச் செல்லும் பொழுது, “உங்களுக்கு மோட்டார் வண்டி ஓட்டத் தெரியுமா?’ என்று அடிக்கடி என்னைக் கேட்கலாயினர். பன்முறை இல்2ல என்று சொல்வதற்கு காணமுற்று, கலிபோர்னியாவில் ஒரு மோட்டார்ப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, அமெரிக்கர் தமக்கு இன்றியமையாததெனக் கருதும் அக்கலையினைக் கற்றுக் கொண்டேன். இளைஞர் பலர் மோட்டார் வண்டி ஒட்டுவதால் பேரிடர் கேர்தலும் உண்டு. எனவே, உயர்நி2லப் பள்ளிகளில் மோட்டார் வண்டி ஒட்டும் பயிற்சியைத் தனிப்பாடமாக நிறுவி மாளுக்கர்க்குப் பயிற்சி அளிக்கின்றனர்.
ஐக்கிய அமெரிக்காவில் ஒரு தொழுகோய் மருத்துவசாலை உளது. லூயிசியானு மாவட்டத்தின் கார்வில் எனும் சிற்றுாரில் ஏறக்குறைய நானுாறு தொழுகோயாளர் உளர். இந்த இடத் தில் அரசியலார் இவர்களை அன்புடன் கடத்துகின்றனர்.

Page 40
62 ஒன்றே உலகம்
இவர்களுக்கு வேண்டியன யாவற்றையும் கொடுப்பதுடன், ஒவ்வொரு கிழமையும் முப்பது வெள்ளியும் கன்கொடையாகக் கொடுத்து வருகின்றனர். கார்விலில் ஒர் இந்தியரும் கோயுற்று இருபது ஆண்டுகளாக அங்கு இருந்தார். அவர் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர். அவர் என்னைக் கண்டதும் பெரு மகிழ்ச்சி அடைந்தார். அமெரிக்காவில், சென்ற நூற்ருண்டில் குடியேறிய பஞ்சாபியரும் அவர் மரபினரும் அமெரிக்காவின் பல இடங்களில் இருக்கின்றனர்.
இவ்வாறு கோயுற்றவர்களையும் போக்கற்றவர்களையும் குருடர் செவிடர் முடவர்களையும் அமெரிக்கர் பேரன்பு காட்டிப் பேணி வருகின்றனர். அவர்களுக்கு இரக்கம் என்பது இயல் பாக அமைந்த ஒரு பண்பு. விலங்குகளே எத்துணை அன்புடன் வளர்க்கின்றனர்; விலங்குகள் இறந்தால் அவை பற்றிச் செய் தித் தாள்களில் கையறுநி2ல விளம்பரங்களைப் பதிப்பித்துக் கல்லறைக் கட்டடங்களும் அமைக்கின்றனர். மக்கள்மீது இல்லாத பற்று விலங்குகள் மீது சிலர்க்கு உண்டு. குழந்தை கள் வேண்டாம் என்று வாழும் பெண்டிர் சிலர் காய்களை விரும்பி வளர்த்து வருகின்றனர். இறைவனுல் இயற்கையாய் அமைக்கப்பெற்ற தாய்மை அன்பு மாற்றம் அடைவதும் உண்டு. அமெரிக்காவில் கான் இருந்தபொழுது ஒக்லொஹாமா வெனும் விலங்குக் காட்சி நிலையத்தில் இந்தியப் புலி ஒன்று தன் கூட்டிலிருந்து பாய்ந்து ஓடிவிட்டது. அங்ாககர் மக்கள் அனைவரும் அச்சத்தில் வாழ்ந்தனர். புலியோ அகப்படவில்லை. தன் குகைக்கு அது மீண்டும் வரும் எனும் கம்பிக்கையுடன் அதனைப் பிடிப்பதற்காக இறைச்சித் துண்டுகளை மயக்கும் மருந்தில் தோய்த்துக், குகை அண்டையில் வைத்தார்கள். புலி இரவில் வந்தது; ஊனைத் தின்றது; ஆணுல் மயக்கும் 'மருந்து மிகுதியாய் இறைச்சியில் கலந்திருந்ததால் புலி இறக் தது. அப்புலியின் மறைவைக் குறித்து இரங்காத அமெரிக்கர் இல்லை. செய்தித் தாள்கள் அனைத்தும் மக்களின் துயரத்தை எடுத்துக் காட்டின.
அமெரிக்கர் பெருந்தன்மையும், தாராள குணமும் படைத் தவர்கள்; பிறகாட்டவரும் தம்மைப்போல் செல்வம் படைத்த வர்களாய் இருக்க வேண்டும் என்று உண்மையில் உழைத்து வருபவர். அமெரிக்கா, ஐரோப்பாவிற்கும் மற்றும் காடுகளுக் கும் கைம்மாறு கருதாமல் அண்மையில் கல்கிய உணவும் பணமும் எத்துணை; முன்னுெரு காலம் அவர்கள் பிற காடு

ஐக்கிய அமெரிக்கா 63
களைப் பற்றி நினையாது இருந்திருந்தாலும், இற்றை உலகில் அவர்கள் தனித்து இருத்தல் கூடாததென்றும் கன்கு உணர் கின்றனர். இயற்கைக் காட்சிகள்
அமெரிக்கா மாபெரும் காடு; பசிபிக் பெருங்கடல் முதல் அட்லாண்டிக் பெருங்கடல் வரை ஏறக்குறைய மூவாயிரம் கல் தொலைவு உள்ளது. ஆறுகள் பெரிய ஏரிகள்போல் பரவிக் கிடக்கின்றன. அங்குள்ள பெருங்கர்கள் அறுபது அல்லது எழுபது இலட்சம் மக்கள் தொகை கொண்டவை. 18 பேரூர்கள் ஐம்பது இலட்சம் மக்கள் தொகைக்கு மேற்பட்டவை. அவற் றில் உள்ள கட்டடங்கள் வானத்தை அளாவி நிற்றலால் அவற்றினை ‘வானவருடிகள்” (Sky-scrapers) என்பர். நியூ யார்க்கில் இருக்கும் “எம்பயர் ஸ்டேட் பில்டிங்’ (Empire State Building) எனும் மாபெரும் கட்டடம் நூற்று முப்பது மாடிகள் உடையதாய் முகில்களால் சூழப்பெற்று விளங்குகின்றது. பொறி ஏணியில் அந்த மாடிக்குச் செல்லும்பொழுது வானவூர்தியில் செல்வது போன்று உண்டாகும் மாறுபாட் டால் காது அடைக்கும். அந்தக் கட்டடத்தின் உச்சியில் நின்று பார்த்தால் நியூயார்க் நகரின் பெரும் பரப்பும் பேரழகும் கண்ணுக்கினிய பெருங் காட்சியளிக்கும். சிகாக்கோ நகரில் *இஸ்டீவன்ஸ்’ விடுதிமாளிகைக்குச் சென்றேன். அங்கு ஐயாயிரம் அறைகள் இருக்கின்றன.
இயற்கைக் காட்சிக்குப் பெயர் பெற்ற பல இடங்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ளன. கிராண்ட் கன்யன் (Grand Canyan) எனும் கணவாய் மிகவும் ஆழமானது. இமயமலை யின் உயரத்தைக் காட்டிலும் அக்கணவாயின் ஆழம் மிகுதி யாக உள்ளது. கொலராடோ (Colorado) எனப்படும் பேராறு பல நூற்றண்டுகளாக அரித்து அரித்து அங்குள்ள மண்ணை யும் கல்லையும் பற்பல வடிவங்களாகச் செதுக்கியுள்ளது. சில வடிவங்கள் கோயில்கள் போல் அமைந்துள்ளன. அவற்றிற்கு உலகின் பல பகுதிகளிலும் உள்ள வெவ்வேறு கோயில்களின் பெயரை வழங்கியிருக்கின்றனர். ஒரு வடிவத்திற்கு விஷ்ணு கோயில் என்று பெயர். கயகரா வீழ்ச்சியைப் (Niagara Falls) பார்த்தபொழுது என்னையறியாமலே கூச்சலிட்டேன். நீர்வீழ்ச்சியின் விரைவும், அழகும், இரைச்சலும், அத்துணை அச்சமும் வியப்பும் பயப்பன. அன்றிரவு கானடாவின் பக்கம் சென்றேன். அப்பக்கத்திலிருந்து அந்நீர்வீழ்ச்சியின்மேல்

Page 41
64 ஒன்றே உலகம்
பற்பல நிறமுள்ள ஒளிகளை வீசுகின்றனர். அக்காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்.
ஐக்கிய அமெரிக்காவின் தென் பாகத்தில் பாலைநிலம் மிகுதியாய் உள்ளது. அங்குள்ள “ஓவியப் பாலைநிலம்" (Painted Desert) பல நிறங்களைக் கொண்டது. ஞாயிறு சாயும் பொழுது வானில் எத்துணை நிறங்கள் தோன்றுகின்றனவோ அத்துணை நிறங்களும் அப்பாலைவனத்தில் தோன்றுகின்றன. தென் பகுதியின் நிலங்களில் வகைவகையான அழகிய கற்றழைகள் வளர்கின்றன. அங்ாநிலப்பரப்பு பயிரிடுவதற்கு உதவாது; ஆயினும் மண்ணெண்ணெய் ஊற்றுக்குப் பெயர் பெற்றது. அங்கிருந்து அமெரிக்கர் பெருஞ் செல்வம் சேர்க் கின்றனர். அமெரிக்காவில் கல்லெண்ணெய் (petrol) கலன் (galon) எழுபத்தைந்து காசே, மோட்டார் வண்டிகளும் கீழை நாட்டில் விற்கப்படும் விலையில் பாதி விலைக்கே அங்கு விற்கப் படுகின்றன.
அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களில் கீழ்த்திசை யார் நன்கு அறியும் மாகாணங்கள் இரண்டு: நியூயார்க் மாகாணம் ஒன்று; கலிபோர்னியா மாகாணம் மற்றென்று. கலிபோர்னியா மா கா ண த்  ைத கம்மவர் நன்கு அறி வதற்குப் பேசும் படக் கலையின் தலைநகராக விளங்கும். ஹாலிவுட் ஒரு காரணம். கலிபோர்னியா அமெரிக்காவின் பழத்தோட்டம். அங்கு ங்பம்மவர் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற தட்ப வெப்ப நிலையுண்டு. பல பாகங்களில் குளிராய் இருக்குங் கால் அமெரிக்காவின் செல்வமுடைய மக்கள் இங்கு வந்து கூதிர்க்காலத்தைக் கழிப்பார்கள். கலிபோர்னியாவின் தென் பக்கத்தில் ஆரஞ்சுத் தோட்டங்களும், முந்திரிகைத் தோட்டங் களும் உள்ளன. அவ்விடங்களில், குளிர் மிகுந்த வேளைகளில் ஆரஞ்சுச் செடிகளுக்குக் கீழே பொறி அடுப்புக்களை வைத்து, அச்செடிகளும், பழங்களும், அரும்புகளும் கெடாதவாறு வெப்ப நீராவியைக் காட்டுவர். கலிபோர்னியாவில் எண்ணெய் மிகுதியாய்க் கிடைப்பதால் அவர்கள் இவ்வாறு பெரும் செலவு செய்து அச்செடிகளை வளர்க்க இயல்கிறது. கலிபோர்ணி யாவின் தென் பாகத்தில் *ஈந்து' இன மரங்கள் பல இருக்கின்றன. அவை இங்கிலப்பரப்பை அழகு செய் கின்றன. லாஸ் ஆஞ்சலிஸ்’, ‘ஹாலிவுட் போன்ற இடங்களில் தமிழ்நாட்டுப் பனை இனத்தைச் சேர்ந்த பல பனை மரங்க2ளக் கண்டேன். அவற்றை அமெரிக்கர் அரசப்பனை (Royol Palm)

ஐக்கிய அமெரிக்கா - 65
என்று அழைக்கின்றனர். ஹாலிவுட், லாஸ் ஆஞ்சலிஸிலிருந்து ஏறக்குறைய ஐந்து அல்லது ஆறு கல் தொலைவிலிருக் கின்றது. இங்குப் பேசும்படம் பிடிக்கும் நிலையங்கள் பல இருக்கின்றன. ஹாலிவுட்டுக்குப் பக்கத்திலிருக்கும் “பெவர்லி ஹில்ஸ்’ (Beverly hills) எனும் நகரில் வெள்ளித்திரை நடிகர் தம் அழகிய மாளிகைகளை அமைத்திருக்கின்றனர். அவ்விடங் களிலுள்ள பெயர் பெற்ற உணவுச் சாலைகளில் உணவருந்த விரும்புவோர் ஒரு வேளை உணவுக்குப் பெருங்தொகை கட்ட வேண்டுமென்ருல் நடிகர் உலகின் பணச் செல்வா2ெல எத்துணை உயர்ந்தது என்பது விளங்கும்.
இங்கு இருக்கும் வானுெலி நிலையத்திற்கும் தொலைக்காட்சி நிலையத்திற்கும் பன்முறை சென்றேன். நான் கண்ட நடிகர் 5656h I îlăé(nGiolo., LTL (39).pni (Bing Crosby, Bob Hope) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். லியோ மக்கேரி (Leo Mccarey), (olóFéfoto (og5 Lólcio (Cecil de Mille) 9b,5uuG) si கள் பட இயக்குகர் ஆவர். இவர்கள் இந்தியா - அமெரிக்கா உறவைப் பற்றியும் தமிழ்நாட்டின் கலைகளை எவ்வாறு அமெரிக்கருக்கு உணர்த்தலாமென்பது பற்றியும் எனக்கு அரிய அறிவுரைகள் கூறினர். கான் செசில் தெ மில் எடுத்த *சாம்ஸனும் டிலைலாவும்’ என்ற படத்தைப் பார்த்தேன். அப் படத்தின் கதைத் தலைவர் மணம் செய்து கொண்டபொழுது கைகளில் மலர் தூவி உறுதிமொழி அளித்த சடங்கைக் குறித்து வைத்திருக்தேன். அப்பழக்கம் எனக்குத் தமிழ்நாட் டுப் பழக்கத்தைச் சார்ந்ததாய்த் தெரிந்தது. நான் அவரிடம் அக்தச் சடங்கை அப்படத்தில் புகுத்துவதற்குச் சான்றுகள் எவை என்று கேட்டபொழுது, அவர் “பாலஸ்தீன்’ மக்களிட மிருந்து அச்சடங்கைத் தழுவவில்லையென்றும் தாமே தமிழ்ப் பழக்க வழக்கங்களிலிருந்து இதனைத் தேர்ந்து அமைத்ததாக வும் கூறினுர். வானளாவிய சோலைகள்
கலிபோர்னியாவின் வடபாகத்தில் வானளாவும் மரங் களைக் கொண்ட பெருஞ்சோலைகளிருக்கின்றன. அங்குள்ள சோலைகளுள் “முயிர் மரக்கா (Muir Woods) என்பது ஒன்று. இச்சோலையின் ஒரு பாகத்துக்குத் த2லக்கோயில் பொழில்’ (Cathedral Grove) என்று பெயர். ஐக்கிய அமெரிக்க நாட்டுப் பேரவையின் ஒரு கூட்டம் இச்சோலையில் ரூஸ்வெல்டின் நினை வாக நிகழ்ந்தது. அங்கு இருக்கும் மரங்கள் இயற்கையின்
1077-5

Page 42
66 ஒன்றே உலகம்
பெருமையை உணர்த்துகின்றன. அமெரிக்கப் புலவர் ஜொய்ஸ் கில்மர் (Joyce Kilmer) என்பவர் மரங்கள்’ என்னும் தலைப் பில் ஓர் அழகிய ஆங்கிலச் செய்யுளை இயற்றியுள்ளார். அவர் தமது செய்யுளில் ஒரு மரத்தைப் போன்ற அழகு வாய்ந்த செய்யுளைத் தான் யாண்டும் கண்டதில்லையென்றும், செய் யுளை இயற்றுபவர் தம்மைப் போன்ற பேதையரே என்றும், இறைவன் ஒருவனே மரத்தை உண்டாக்கக்கூடும் என்றும் செப்புகின்றர்." அவருடைய நினைவாக அமெரிக்காவின் மூன்று நான்கு இடங்களில் வானளாவிய மரங்கள் செழித் தோங்கும் பெரும் சோலைகளை அவர் பெயரால் அழைத்து அவர் இயற்றிய செய்யுளின் சிறப்பையும் சுவையையும் நினை வூட்டி வருகின்றனர்.
அமெரிக்காவுக்குச் சென்றதும் அவர்கள் இரும்பை எவ் வளவு பயன்படுத்துகின்றனர் என்று கண்டேன். அவர்களு டைய பெரும் பாலங்கள், இரும்புப் பாதைகள், கட்டட அமைப்புக்கள் ஆகிய இவையெல்லாம் அங்காட்டில் இரும்பு மிகுதியாக உண்டு என்பதைக் காட்டுகின்றன. பிட்ஸ்பெர்க், நியூ ஜேர்சி போன்ற இடங்களுக்குச் சென்ருல் இரும்புத் தொழில் எவ்வளவு மேம்பாடு அடைந்துள்ளது என்பதை அங்குள்ள சாலைகளிலிருந்து உணரலாம்.
அமெரிக்காவின் வீதிகளில் மோட்டார் வண்டிகள் செல் லும் தன்மையை, கேரில் காண்போரே உணர்வர். கலிபோர்ணி யாவில் ஒவ்வோர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டு மோட் டார் வண்டிகள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கின்றனர். பழைய மோட்டார் வண்டிகள் வாங்குவதற்கு அங்குப் பற்பல சிறப்பு நிலையங்கள் உள்ளன. அவற்றில் பல்லாயிரக்கணக் கான மோட்டார் வண்டிகள் விற்பனைக்கு உள. அங்குத் தொழிலாளர்கூடச் சொந்த மோட்டார் வண்டிகளை வைத்திருக் கின்றனர். உயர்நிலைப்பள்ளிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக் கும் மாணவர் பலர் தம் சொந்த வண்டிகளில் செல்கின்றனர். மோட்டார் வண்டிகளில் இருந்துகொண்டே பல கடமைகளை நிறைவேற்றுகின்றனர். சிலர் வங்கிகளுக்குச் சென்று மோட் டார்களில் இருந்து கொண்டே பணத்தைப் பெற்றும் கொடுத் தும் வருகின்றனர். மோட்டார் வண்டியில் அமர்ந்து
* “Poems are made by fools like me But only God can make a tree."
-Joyce Kilmer-Trees.

ஐக்கிய அமெரிக்கா 67
கொண்டே உணவு உண்பதற்கெனச் சிறப்பான உணவு விடுதிகள் (Drive inns) உள. மோட்டார் வண்டியில் இருந்து கொண்டு பேசும்படங்க2ளக் காண்பதற்கு என வெளிகளில் அமைக்கப்பட்டிருக்கும் படக்காட்சி நிலையங்கள் (Drive InnTheatres) உள. அங்கு வரும் ஒவ்வொரு வண்டிக்கும் ஓர் ஒலிபெருக்கியைக் கொடுக்கின்றனர். அந்த ஒலிபெருக்கி வழி யாகப் படத்தின் பாட்டையும் உரையையும் கேட்கின்றனர். படத்திரை நூற்றுக்கணக்கான மோட்டார் வண்டிகளில் இருந்து பார்க்கக்கூடிய ஓர் உயர்ந்த இடத்தில் வைக்கப் பட்டிருக்கின்றது. அமெரிக்காவில் சேலம்’ சிலோன்”
அமெரிக்காவின் வீதிகள் உலகில் சிறந்தவை. அமெரிக் காவின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு மோட்டார் வண்டிகளில் விடுமுறையின் போது அமெரிக்கர் செல்வது வழக்கம். அவர்களுடைய வண்டிகள் பொதுவாகப் பெரி தாய் இருப்பதால், தாய் தந்தையரும் குழந்தைகளும் ஒருங்கு செல்வதற்கு ஏதுவாயிருக்கின்றன. பொருட் செல்வமுடைய வர், சிறு இல்லம்போல் எல்லா வசதிகளும் அமைத்து இருவர் தூங்கவும் கூடிய தொடர் வண்டி ஒன்றையும் (trailer) மோட்டார் வண்டியுடன் சேர்த்துக் கொள்வர். இவ்வீதி களில் பொதுவாக அறுபது அல்லது எழுபது கல் வேகத்தில் செல்வர். சில பெரு வீதிகளில் காற்பத்தைந்து அல்லது அறுபது கல் வேகத்துக்குக் குறைவான வேகத்தில் செல்வது குற்றமாகும்.
வீதிகளில் செல்லும்போது இரு மருங்கும் பல்வேறு பொருள்களின் விளம்பரங்களைக் காணலாம். விளம்பர வாயி லாய் வாணிபம் செய்வதில் உயர்ந்த தேர்ச்சி பெற்றவர் அமெரிக்கர். இப்பெரும் தெருக்களின் வழியாகச் செல்லும் பொழுது நான் கண்ட சில சிற்றுார்களின் பெயர்கள் எனக்கு மிக்க வியப்பை அளித்தன. அமெரிக்காவில் சேலம் என்ற ஓர் ஊர் உளது. இரண்டு மூன்று மாகாணங்களில் டெல்லி என்று ஊர்களுக்குப் பெயரிட்டிருக்கின்றனர். மினசோட்டா மாகாணத்தில் 'சிலோன்’ எனப்படும் சிற்றுாருக்கு என்ஜூன அழைத்துச் சென்று அங்கே கான் பிறந்தேனென வேடிக்கை யாகக் கூறி, என்னை அறிமுகப்படுத்தினர். அமெரிக்கா புது காடு. ஆதலால் மற்றெல்லா காடுகளிலும் உள்ள பெயர் களைக் கொண்டு தம்முடைய ஊர்களுக்குப் பெயரிட்டிருக்

Page 43
68 ஒன்றே உலகம்,
கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன், அவர்கள் புதிய ஊர்களை நிறுவிக் கொண்டிருந்த காலத்தில், சீட்டு முதலிய பந்தய விளையாட்டுகளில் வெற்றி பெற்றவரே அப்புதிய ஊர் களுக்குப் பெயரிடுவராம்.
*அமெரிக்கர் பொருள் ஈட்டுவதிலேயே ஈடுபடுவர்; கடவுள் பற்று அற்றவர் ; உயர்ந்த சிந்தனைகள் இல்லாதவர்” என் னும் தவருண எண்ணங்கள் கம் மக்களில் பெரும்பான்மை யோருக்கு ஏற்பட்டுள்ளன. ஆனல் அங்குச் சமயங்களை அனுசரித்து வருபவர் மிகவும் பக்தியுடையவர்களாக இருக் கின்றனர். கான் அங்கே தங்கிய காலத்தில் பல கத்தோலிக் கக் கோயில்களில் மறை பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்தி யிருக்கின்றேன். அவர்களுடைய கூட்டங்களிலும் மாநாடு களிலும் கலந்துள்ளேன். கத்தோலிக்கத் திருமறையைப் பொறுத்தவரை அங்குள்ள கத்தோலிக்க மக்கள் தம்முடைய திருமறைப் பற்றிலும் வழிபாட்டு முறைகளைத் தழுவுவதிலும் வேறு எந்த காட்டவர்க்கும் குறைந்தவர் அல்லர் என்பதை அறிக்தேன். பருவ வனப்பு
அமெரிக்காவின் இயற்கை வனப்பில் மகிழ்வுடன் ஈடுபட் டிருக்கின்றேன். அங்கு இலையுதிர்காலம் மிகவும் சிறந்த காலமாகும். அப்பொழுது பெரு மரங்களின் பச்சை இலை களெல்லாம் மஞ்சளும் சிவப்புமாக மாறிப் பல நிறங்களாய்க் காட்சியளிக்கின்றன. பல நாட்கள் இப்பெரும் பொழுதின் எழிலை நுகரக்கூடும். இலையுதிர் பருவத்தின் கடுவில் ஏற் படும் “இந்தியக் கோடை’ (Indian Summer) என அழைக்கப் படும் சிறு பருவம், உடலுக்கு உவந்த வெப்பத்தையளிக்கும் ஒரு பருவமாகும். இதன்பின் வருவது பனியுறை பருவம் , அமெரிக்காவிலுள்ள கூதிரின் குளிரைத் தாங்குவது அரி தனறு; ஏனெனில் அங்கு இல்லங்கள், கோயில்கள், புகை வண்டிகள், மோட்டார் வண்டிகள் ஆகிய மக்கள் செல்லும் எல்லா இடங்களிலும் தகுந்த வெப்ப நிலை உண்டாக்கும் பொறிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மார்கழித் திங் களின் மதி நிறைந்த நன்னுளில் ஊரெல்லாம் பனியென்னும் வெள்ளாடையால் போர்த்தப்பட்டுத், திங்களின் வெண்கதிர் களால் இல்லமும் மரமும் செடியும் இலங்கும் காட்சி மிகவும் இனியதொரு காட்சியாகும். வீதிகளில் உறைபனியிருந்தால் அதன் மேல் வண்டிகள் வழுக்காது செல்வதற்காக அவ்

ஐக்கிய அமெரிக்கா 69
வீதியில் உப்பும் கரியும் பரப்பி வைப்பர். ஒரு நாள் நான் தங் கிய ஒர் ஊரில் காற்பத்தெட்டாயிரம் படி உப்பு இவ்வகையாகப் பயன்படுத்தப்பட்டது. வேனிற் காலத்தில் மற்ற நாடுகளைப் போல் அமெரிக்காவிலும் அழகிய மலர்கள் மலர்கின்றன. வேனில் விரைவில் கோடைக்காலமாக மாறிவிடும். கோடை யில் சிலகாட்கள் மட்டும் தாங்கொணு வெப்பமுடைய காட் களாக இருக்கும். இந்த நாட்களில் வெப்பத்தைத் தாங்க முடியாத முதியோர் சிலர் ஒவ்வோர் ஆண்டிலும் இறக்கவும் கேரிடுகின்றது.
அமெரிக்க மக்கள் விடா முயற்சியுடன் காள்தோறும் உழைப்பதால் அவர்கள் விடுமுறைகளில் ஒய்வாகப் பல இடங் களுக்குச் செல்லுதலைப் பெரிதும் விரும்புகின்றனர். கடற் கரை, ஆற்றங்கரை, ஏரிக்கரை இவற்றில் கோடை இல்லங் கள் நிறுவி அங்கு ஒய்வும், உடல் நலனும் பெற முயல்கின்ற னர். வேறு பலர் பருவத்திற்கு ஏற்ற விளையாட்டுக்களில் ஈடுபடுவர். பகலில் அவர்களுக்கு விளையாட நேரமின்மை யால் இரவில் மின்சார ஒளியின் துணைகொண்டு பந்து விளை யாட்டுக்களில் ஈடுபடுவர். பேஸ் பால்” (Base-ball) முதலிய பந்து விளையாட்டுக்கள்கூட இரவில் நிகழ்கின்றன. அங்குப் பெண்களின் பெருங் கூட்டம் இப்பந்து விளையாட்டுக்களைப் பார்த்துச் சுவைக்கும் முறை மிகவும் வியக்கத்தக்கது. ஆட வர்களைப் போலவே அவர்கள் கூச்சலிட்டும், கை தட்டியும், ஆவேசம் கொண்டும் பந்து விளையாட்டுக்களைப் பார்த்து வருகின்றனர்.
செயின்ட் லூயிஸ் என்னும் பெருங்கரில் கல்வி பயிலும் பலரை ஒரு காள் என்னுடன் உணவருந்தும்படி அழைத்திருந் தேன். அங்கு இரு தமிழ் இளைஞர்களும் வந்திருந்தார்கள். அமெரிக்காவைப்பற்றி உரையாடும்பொழுது அவர்கள் அனை வரும் அமெரிக்க மக்கள் பிறாாட்டினர்மீது அன்பு பாராட்டி ஒழுகுகின்றவர்கள் என்றும், இந்தியர் அமெரிக்கரை இவ்வ ளவு அன்போடு இந்தியாவில் வரவேற்கமாட்டார் என்றும் கூறினர். இந்தியர் பலரைச் சந்திக்க வேறு பல வாய்ப்புக் களும் கிடைத்தன. உதய சங்கரும் அவருடைய காட்டியக் குழுவும் நியூயார்க்கிற்கு வந்தபோது அவர்கள் கடத்திய முதற் காட்சிக்கு அமெரிக்க கண்பர் சிலரையும் அழைத்துச் சென்றேன். உதய சங்கரின் மனைவியாரும் பரதங்ாட்டியம் ஆடினர். ஆனல் எக்காரணம் பற்றியோ அன்று அவரது

Page 44
70 ஒன்றே உலகம்
ாகாட்டியம் அத்துணைச் சிறப்பாக இருக்கவில்லை. அங்கு வந்திருந்த அமெரிக்கர் தாம் கைகொட்டியபொழுது உதய சங்கர் கைகூப்பி நன்றி செலுத்திய பான்மையைப் பெரிதும் விரும்பினர்.
சென்ற பெரும்போர் நிகழ்ந்தபொழுது அமெரிக்கப் படை யினர் பலர் இந்தியாவின் பல பாகங்களில் தங்கியிருந்தனர். இவர்கள் அமெரிக்காவுக்குத் திரும்பிய பின்னும் இந்தியாவின் கண்பராக இருக்கின்றனர். இத்தகைய பலரை எதிர்பாராத இடங்களில் கான் சந்தித்தேன். என் சொற்பொழிவுகளும் மறையுரைகளும் முடிந்தபின் இவர்கள் இந்தியாவின் இக் கால நிலையைப்பற்றி என்னிடம் கேட்டனர். ஒரு சிலர் இந்தி யாவின் வறுமையையும் தூய்மையின்மையையும் இகழ்ந்த னர். ஆணுல் பெரும்பான்மையோர் இந்தியாவின் பண் பாட்டையும் அரசியல் முன்னேற்றத்தையும் அன்புடன் பாராட்டினர். V,
இந்தியத் தலைமை அமைச்சர் நேரு நியூயார்க்கிற்கு வங் திருந்த பொழுது வோல்டோர்ப் அஸ்டோரியா” (Waldorf Astoria) எனும் முதன்மை வாய்ந்த விடுதி மாளிகையில் அவ ருக்குப் பல கழகங்கள் கூடி விருந்தளித்தன. அப்பொழுது நியூயார்க்கிலுள்ள இந்தியர் பலரைச் சந்தித்தேன். மலையாள காட்டிலிருந்து தமிழ் பேசக்கூடிய பலர் அங்கு வந்திருந்த னர். வஞ்சிக் கரையிலிருந்து அமெரிக்காவுக்கு இருபது ஆண்டுகளுக்கு முன், பெற்றேர் அறியாமல் ஓடிச்சென்ற தோமா' என்பவர் ஒருவர் இன்று அங்கு பெரு வணிகராக விளங்குகிருர், வேருெரு தமிழர் சேலத்திலிருந்து மலாயா வழியாக அமெரிக்காவை அடைந்து, அங்கேயே மணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றர். புகை வண்டி
அண்மையிலிருக்கும் ஊர்களுக்குச் செல்ல வேண்டு மென்ருல் சில வேளைகளில் புகைவண்டியிற் செல்வேன். செயின்ட் பால் பெருநகரிலிருந்து புறப்படும் தென்றல் காற்று' எனப் பெயர்பெற்ற வண்டி மிகவும் அழகானது. அதனு டைய மேற்கூரையெல்லாம் கண்ணுடியால் செய்யப்பட்டிருக் கிறது. ஆதலால் வானத்தில் இயற்கையழகையும் இருமருங் கும் இருக்கும் நிலக்காட்சியையும் நன்ருகப் பார்த்துக் கொண்டே செல்லலாம். ஒரு முறை நியூயார்க்கிலிருந்து ‘ஹார்ட்பர்ட் (Hartford) எனும் நகருக்குப் புகைவண்டியில்

ஐக்கிய அமெரிக்கா 7 Ι
செல்லும்போது கான் என் இரு பெட்டிகளையும் புகைவண்டி யில் வைத்துவிட்டு, அதே புகைவண்டியிலிருந்த உணவுச் சாலைக்குச் சென்றிருந்தேன். அங்கு என்னெதிரே அமர்ந்து உணவு அருந்தியவருடன் ஒரு மணி நேரம் உரையாடியபின் வண்டியில் என் இடத்திற்குத் திரும்பினேன். அங்கு என் பெட்டிகளைக் காணுமல் திகைப்புற்றேன். பக்கத்திலிருந்த வர்களைக் கேட்டேன். ஆனல் அவர்கள் அதைக் கவனிக்க வில்லை என்றனர். ஒருவர் மட்டும் ஓரிளைஞன் இரண்டு பெட்டிகளுடன் வழியிலிருந்த நிலையமொன்றில் இறங்கிய தாகச் சொன்னர். அன்று மாலை 8 மணிக்குப் பேசும் படங் களுடன் விரிவுரை நிகழ்த்த வேண்டியிருந்ததால், என் செய் வது எனக் கலக்கமுற்றேன். ஹார்ட்பர்ட் புகைவண்டி நிலையத்தில் இறங்கியதும் அங்குப் போலிசாரிடம் தெரிவித் தேன். காணுமற்போன பொருள்களைத் தேடிக் கண்டு பிடிக்கும் தூய அந்தோனியாரின் துணையையும் இறைஞ்சி னேன். போலிசாரிடம் அறிவித்தபின் உரை நிகழ்த்த வேண் டிய கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அங்கு அனைவரும் எனக்கு கேர்ந்த துன்பத்தைக் கேட்டு வருந்தினர். மாலை ஆறு மணியளவில் அப்பெட்டிகளைக் கண்டு பிடித்ததாகத் தொலைபேசி வழியாகக் கூறினர். போலிசார் ஏழு மணிக்கு அப்பெட்டிகளைக் கொண்டு வந்தனர். அப்பெட்டிகளை எடுத்த கள்வன் பெட்டியைத் திறந்து பார்த்துக் குருவின் ஆடை களைக் கண்டதும் அவை தனக்குப் பயனில்லையெனக் கருதி இடையிலிருக்கும் புகை வண்டி நி2லயமொன்றின் மூலையில் வைத்துவிட்டுச் சென்றிருத்தல் வேண்டும். அப்பெட்டிகளைக் கொண்டு வந்த போலிசார், அப்புகை வண்டிப் பாதையில் களவு மிகுதியென்றும், அங்குக் களவு செய்யும் ஏறக்குறைய கானூறு பேருடைய புகைப்படங்கள் தம்மிடம் இருப்பதாக வும் கூறினுர். இதுவே என் உலகச் செலவில் நிகழ்ந்த ஒரே யொரு களவு. அமெரிக்காவிலுள்ள நீக்கிரோவர்
அமெரிக்காவுக்குச் செல்லும் இக்தியர் அனைவரிடமும் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் வகுப்பு வேற்றுமை உள்ளமை பற்றி வியப்போடு அமெரிக்கர் கேட்பர். அவ்வாறே இந்தியாவுக்கு வரும் அமெரிக்கரிடம், அமெரிக்காவிலிருக்கும் வகுப்பு வேற்றுமையைப் பற்றி இந்தியர் கேட்பது இயல்பு. ஐக்கிய அமெரிக்காவில் நீக்கிரோவர் “மெக்ஸிகர்", "யூதர்'

Page 45
72 ஒன்றே உலகம்
போன்ற வகுப்புகளுக்கு எதிராக இயக்கங்களிருப்பது உண்மை. அமெரிக்காவில் நூற்றைம்பதிலட்சம் நீக்கிரோ -வர் இருக்கின்றனர். இவர்களுள் பெரும்பான்மையோர் அமெரிக்காவின் தெற்குப் பகுதியிலேயே வாழ்ந்து வருகின்ற னர். இவர்கள் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்குமுன் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட வர் ஆவர். ஐக்கிய அமெரிக்காவின் வட பாகத்தில் நீக்கிரோ வர் வெள்ளையருடன் ஏறக்குறையச் சமமாக வாழ்கின்றனர். தென் பாகத்தில் வெள்ளையருடன் கல்வி பயிலவோ, உண் ணவோ, செலவு செய்யவோ அவர்களுக்கு உரிமையில்2ல.* அவர்களுக்கெனத் தனிப்பள்ளிக் கூடங்கள், தனி மருத்துவச் சாலைகள், தனி உணவுச்சாலைகள் ஆகியவை உள்ளன. அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர் சில வேளைகளில் நீக்கி ரோவர் எனக் கருதப்பட்டு அமெரிக்காவின் விலக்கு விதிகளால் துன்பப்படுவதும் உண்டு. காகபுரியிலிருந்து வெளிவரும் செய்தித் தாளின் ஆசிரியரொருவர் அமெரிக்காவின் தென் பகுதியிலுள்ள ஓர் ஊருக்குச் சென்றிருந்தபொழுது, அவரை நீக்கிரோவர் என்றெண்ணி, அவருக்கு ஒர் உணவுச் சாலையில் உணவு பரிமாற மறுத்துவிட்டனர். அப்பொழுது அவர் ஆங்கிலம் அறியாதவர்போல் அவர்களுடன் தமிழில் பேசத் தொடங்கினர். அவ்வாறு தமிழில் பேசியதால் அவர் வேற்று காட்டவரென உணர்ந்து அவருக்கு உணவு பரிமாற முன்வந்தனர். நீக்கிரோவர் பலர் தோற்றத்தில் இந்தியரைப் போல் இருப்பர். அவர்களுடைய தலைமுடி மட்டும் மிகவும் சுருண்டிருக்கும். ஆதலால் தலையில் தொப்பி அணிந்திருக் கும்பொழுது இவர் இந்தியர், இவர் நீக்கிரோவர் என்று வரை யறுத்துச் சொல்வது எளிதன்று. நானே பன்முறை நீக்கிரோ ஆடவரின் முகத்தைப் பார்த்ததும், நீங்கள் இந்தியாவின் எந்தப் பகுதியில் உள்ளவர்கள் என்று கேட்டபொழுது, “கான் இந்தியன் அல்லன்; கான் அமெரிக்கன்’ என்று நீக்கிரோவர் கூறியிருக்கின்றனர். இன்று தம்முடைய சுருண்ட முடியினை நீளமாக்குமாறு பல சாந்து வகைகளைப் பூசி வருகின்றனர் நீக்கிரோவர்.
நியூ ஆர்லியன்சு என்னும் நகரில் இங்ாநிற வேற்றுமை களைக் கணக்கற்ற இடங்களில் கண்டேன். டாக்சியை ஒட்
* இன்று நிலை சிறிது மாறி வருகின்றது.

ஐக்கிய அமெரிக்கா 73
டும் வெள்ளை மனிதன் கறுப்பு நிறத்தவர் டாக்சியை நிறுத்தி ஞல் நிறுத்தவே மாட்டான். பொது அரசியல் நிலையங்களில் கூட நீக்கிரோவர் செல்வதற்கெனச் சிறப்பு வாயில்கள் உள. சில நி2லயங்களிலுள்ள கால் கழுவும் இடங்களில் கறுப்பர்’ *வெள்ளையர்" என வெவ்வேறு கால் கழுவும் அறைகளை விளம் பரப் பலகைகள் வழியாகச் சுட்டிக் காட்டுகின்றனர்; நியூ ஆர்லியன்சில் இருக்கும் பொது நூல் நிலையத்திலும் இவ் வேற்றுமையைக் கண்டேன். இச் சந்தர்ப்பங்களில் எந்த இடத்திற்குச் செல்வதென்று என்னைப் போன்ற பிற காட்டு நிறத்தவர் இடர்ப்படுவது இயல்பு. இவ்வேற்றுமைகளை முடி வெட்டுவோரும் உணவுச்சாலையினரும் சிறப்பாகப் பின்பற்று கின்றனர். எசின்சிகாட்டி" (Cincinatti) எனும் பேரூரில் முடி வெட்டிக்கொள்வதற்கு அமெரிக்க நண்பர் ஒருவருடன் சென் றேன். முடிவெட்டுபவர் என்னைப் பார்த்ததும் “வெள்ளை மனிதர்க்கு மட்டுமே முடிவெட்ட எனக்கு உத்தரவுண்டு” (“I am allowed to cut the hair only of white men') GTGörpi கூறினர். இவ்வாறு பல இடங்களில் நிறத்தின் பொருடடு இந்தியரும் ஈழத்தாரும் துன்பங்களுக்கு உள்ளாகின்றனர்.
நீக்கிரோவர்மீது விலக்கு விதிகளிருந்தாலும் அமெரிக்கா வில் எத்தனையோ வெள்ளையர் இச்சட்டங்களை நீக்கவேண்டு மென்று உழைத்து வருகின்றனர். இவ்வேற்றுமைகளைப் பற்றி என்னுடன் உரையாடிய அமெரிக்க வெள்ளையர் இச் சட்டங்களின் நீதியற்ற முறை பற்றி உணர்ச்சி ததும்பப் பேசினர். பல்லாயிர மக்கள் நிறவேற்றுமைகளை வேரறுக்க முனைந்து உழைப்பது பெரும் சிறப்பேய்ாகும்.
பசிபிக் காடுகளைப் பற்றியும் பழக்க வழக்கங்களைப் பற்றி யும் சந்தியாகோ (San Diego) என்னும் துறைமுகத்தில் பல செய்திகளை அறியலானேன். இத்துறைமுகத்தில் பசிபிக் பெருங்கடலில் செல்லும் பல படகுகள் தங்குகின்றன. சிலர் தம் ஒய்வு நாட்களில் இந்தப் படகுகளில் பல்லாயிரக் கல் தொலைவு செல்வர். கணவனும் மனைவியுமாகிய இருவர் இவ் வாறு படகில் பிரயாணம் செய்வதை அங்குக் கண்டேன். இவர்களுடைய படகின் பெயர் வெப்பமண்டலப் பறவை (Tropic Bird) என்பதாகும். இவர்களிருவரும் தம் படகில் தமியராய்ப் பல இடங்களுக்குச் சென்று வந்திருந்தனர் இவர்கள் எனக்குப் பசிபிக் தீவுகளில் வழங்கும் சில பழக்க வழக்கங்கள் தமிழ்ாகாட்டுப் பழக்க வழக்கங்களைப் போலத்

Page 46
74 ஒன்றே உலகம்
தோன்றின என்று அறிவித்தனர். இலங்கை காட்டிலிருந்து தமக்குப் படகு செய்வதற்குத் தேக்குமரம் அனுப்பும்படி என் னிடம் இவர்கள் கேட்டனர். தமிழ்நாட்டுத் தேக்கின் புகழ் உலகெங்கும் பரந்த செய்தி. வாழ்க்கைக்குத் துணைக்கருவிகள்
ஐக்கிய அமெரிக்க காடுகளில் விஞ்ஞானப் பொறிகளையும் கருவிகளையும் தம் வாழ்க்கைக்குப் பெரும் துணையாகக் கொண்டுள்ளனர். அக்காடுகளுக்கும் பிற காடுகளுக்கும் இது ஒரு பெரும் வேற்றுமை. அமெரிக்க இல்லமொன்றுக் குச் செல்லும்போது கதவு தானுகவே திறந்து மூடுகின்றது. அவர் சமைக்குமிடத்தைச் சென்று பார்க்கின்றபொழுது, அது கூடத்தைப்போல் தூய்மையாகவும் துப்புரவாகவும் விளங்கு கின்றது. மின்சார உதவிகொண்டு சமையல் செய்கின்றனர். கிழங்குகளின் தோலை நீக்குவதற்கும், காய்கறிகளை வெட்டு வதற்கும் சிறு பொறிகள் உள்ளன. உணவு முடிந்தவுடன் உணவுக் கலங்கள் எல்லாவற்றையும் ஒரு பெட்டியிலிட்டுப் பொத்தானை அழுத்துகின்றனர். அவை கன்ருகக் கழுவப் பட்டுத் தூய்மையுற்றதும், வேருெரு பொத்தானை அழுத்து கின்றனர். அதனுல் வெப்பமுள்ள காற்று அப்பாத்திரங் களில் படிந்துள்ள நீரை உலர்த்திவிடுகின்றது. பின்னர் அவற்றை எடுத்துத் தூய அலமாரிகளில் வைக்கின்றனர். அலுவலகங்களில் பெரும் தொகையான காணயங்களையும் காசுகளையும் எண்ணுவதற்கும் கடிதங்களைத் திறப்பதற்கும் மூடுவதற்கும் சிறப்புக் கருவிகள் உள்ளன. கடைகளில் மக் கள் மிகுதியாய் வாங்கும் பொருள்களைத், தாமாகவே வழங்கும் பொறிகளைக் கொண்டு விற்கின்றனர். சிற்றுண்டி வேண்டு வோர் இருபத்தைந்து காசு ஒரு புழையுள் இடின், ஒரு தட்டில் சிற்றுண்டிப் பொருள்களும் கிண்ணத்தில் காப்பியும் பாலும் கிடைக்கும். இல்லங்களில் துணி துவைப்பவருக்கு வேலை யில்லை. பொறிகளைக்கொண்டே இல்லங்களில் துணிகளையும் ஆடைகளையும் சட்டைகளையும் வெளுத்து உலர்த்தி மடித்து வைக்கின்றனர். வயல் முதலான விளைநிலங்களில் உழுதற்கும், விதைத்தற்கும், கடுதற்கும், கீர்கால் யாத்தற்கும், களையெடுத் தற்கும், கதிர் அறுத்தற்கும், போர் அடித்தற்கும், தானியத் தையும் வைக்கோலையும் வேறு பிரித்தற்கும், வைக்கோலைக் கட்டுதற்கும், கட்டுகளை அடுக்குதற்கும், தானியத்தை அளப் பதற்கும் கொண்டு செல்வதற்கும் பொறிகளே உதவுகின்றன.

ஐக்கிய அமெரிக்கா 75.
இவ்வாறு பொறிகளின் துணையினுல் நூற்றைம்பது ஏக்கர் நிலத்தினை இருவர் கண்காணிக்கக்கூடிய நிலையில் உழவுத் தொழில் நடைபெறுகின்றது. பசுவின் பாலைக் கறப்பதற்கும், கோழிகள் எளிதாய் முட்டையிடுவதற்கும் சிறப்புப் பொறிகள் உள்ளன. ஐக்கிய அமெரிக்காவில் மக்கள் தொகை குறை வாக இருப்பதால் பெரும் தொழில் பண்ணைகளுக்கும் உழவு நிலங்களுக்கும் பொறிகளைப் பயன்படுத்தி அங்குள்ளவர் மேம் பாடு அடைகின்றனர்.
பிற காடுகளில் வாழும் தொழிலாளர் பெருத வசதிகள் பலவற்றை அமெரிக்கத் தொழிலாளர் பெற்று வருகின்றனர். ஐக்கிய அமெரிக்கா வேகம், விரைவு, சுறுசுறுப்பு என்னும் கலங்களில் பெயர் பெற்றது. அங்கு அனைவரும் விரை வாகவே கடப்பர். வண்டிகள் வேகமாகவே ஓடும். செய்தி களை மிகவும் சுறுசுறுப்பாகவே அனுப்புவர். முதன் முறை அங்குச் சென்றபோது அவர்களுடைய வேகத்தையும் விரை வையும் பார்த்து அவர்களைப்போல் பிறகாட்டார் வாழ முடி யாது என எண்ணினேன். ஆயினும் அங்குச் சில திங்கள் தங்கியபின் அவர்களைப்போல வேகமுடையேன் ஆயினேன். பின்பு அங்கிருந்து தென்னமெரிக்கா சென்றவுடன், அங்கு வேகம் குறைந்திருப்பதால் வேற்றுலகம் சென்றதுபோல் கலங்கிலேன். இங்ங்ணம் வேகத்தைப் பெரிதும் விரும்புவ தால் அமெரிக்கரின் வாழ்க்கை பேரிடர்க்கும் அபாயத்துக்கும் உட்பட்டுள்ளது. காட்டின் சிறப்புத் திருங்ாட்களில் மக் கள் அனைவரும் விடுமுறை கொண்டாடும் பொழுது ஒரே காளில் எழுநூறு அல்லது எண்ணுாறு பேர் ஆபத்தால் உயிரிழப்பர், கிறிஸ்து பிறப்பு விழாக் காலத்திலும் கன்றி செலுத்தும் திருநாளிலும் பிற பெருநாட்களிலும் அவ்வாறு உயிர்ச் சேதம் நேர்ந்து வருகின்றது. அமெரிக்கம்
அமெரிக்கர் பேசும் ஆங்கிலம், அவர் எழுதும் ஆங்கிலம், அவர் ஒலிக்கும் முறை, அவர் ஆக்கும் புதிய சொற்கள், அனைத்தும் காம் அறிந்த ஆங்கிலத்தினின்றும் வேறுபடு வன. அவர் தம் மொழியை ஆங்கிலம் என்று கூறமாட்டார். அமெரிக்கம் என்பர். நீங்கள் அமெரிக்க மொழியை எங்குப் பயின்றிர்கள்’ என்று இளைஞர் பலர் என்னைப் பன்முறை கேட்டிருக்கின்றனர். அவர் புதிய சொற்கள் ஆக்குதலில் வல்லுங்ர் ஆவர். இளைஞர் புதிய சொற்களை ஆக்கிக்கொண்டே

Page 47
76 ஒன்றே உலகம்
வருகின்றனர். இளேஞராக்கும் புதிய சொற்களின் பொருள் கள் முதியோர்க்கு விளங்காது. புதிய காட்டின் மொழியும் புதியதாகவே வருகின்றது. ஆங்கிலேயர் பேசும் ஆங்கில மும் அவர் பேச்சு முறையும் அவர் ஒலி முறையும் அமெரிக்க மக்கட்குச் சிறிதும் பிடிப்பனவல்ல; ஆங்கிலேயரைப்போல் பேசி அவர்களின் பேச்சை நகைப்பதை அமெரிக்க வானுெலி யில் பன்முறை கேட்டுள்ளேன்.
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடியரசு வரலாற்றுடன் தொடர்புடைய பல இடங்களுக்குச் சென்றிருந்தேன். வாஷிங் டன் தலோநகரில் லிங்கன் கினேவு மாளிகை உள்ளது. அது ஒரு பெரிய கட்டடம். அங்கு அமெரிக்க ஒற்றுமைக்கும் குடியரசுக்கும் தங்தையாகிய ஆபிரகாம் லிங்கனின் பெரிய சலவைக் கற்சிலேயும், அவர் செயல்களேயும் அமெரிக்க ஒற்று மையையும் போற்றும் சிறப்புப் பொருள்களும் உள்ளன. கேட்டிஸ்பர்க் (Gettysberg) என்னும் போர்க்களத்தில் அப் பெரியார் நிகழ்த்திய அரிய சிற்றுரை அங்குச் சலவைக் கல் வில் பொறிக்கப்பட்டுள்ளது. குடியரசு எனின் மக்களுடைய ஆட்சி, மக்களால் இயங்கும் ஆட்சி, மக்களுக்கென இயங்கும் ஆட்சி, என உலகெங்கும் போற்றும் உயரிய கருத்தை அவரே வெளியிட்டார்.

嘉
曇
*
晝
பிங்க்ருஸ்பியுடன் ஆசிரியர் { பக்கம் - 65 )
f
| S S

Page 48
தென் அமெரிக்க இந்தியர் - குழந்தை
பக்கம் - 80)
தென் அமெரிக்க இந்தியர் பக்கம் -30
தென் அமெரிக்கா - கலப்பு இந்தியர் தென் அமெரிக்கா -
(பக்கம் - 80) கற்களால் கட்டிய Tiflists
(பக்கம் - 81)
 
 

9. தென் அமெரிக்கா
ஐக்கிய அமெரிக்காவும் கனடாவும் வட அமெரிக்கா அல்லது "ஆங்கில-அமெரிக்க" காடுகள் எனக் கூறப்படு கின்றன. ஏனேய நாடுகள் அமைந்த அமெரிக்கப் பகுதியை "இலத்தீன் அமெரிக்கா” என அழைப்பது வழக்கம். ஏனெனில் இக்காடுகளில் குடியேறியவர்கள் பெரும்பாலும் இலத்தீன் வகுப்பைச் சேர்ந்த போர்த்துக்கீசியரும் இஸ்பானியரும் ஆவர். அவர் பேசும் மொழிகளும் இலத்தீன் மொழியினத் தைச் சேர்ந்தவை.
இலத்தீன் அமெரிக்காவின் வட எல்லேயில் இருப்பது மெக்சிகோ; அதன் தென் எல்லேயில் இருப்பது பத்தகோனியா எனும் மாவட்டம். இவற்றினிடையில் ஏறக்குறைய இருபது g. பரசு காடுகளும், பதினேக்து குடியேற்ற நாடுகளும் இருக் கின்றன; பிரசில், அர்ஜென்டீனு, பெரு, சிலி போன்றவை பெருங் குடியரசு நாடுகள். திரினிதாட், பிரஞ்சு-கையணு, பிரிட்டிஷ்-கையணு போன்றவை சிறிய குடியேற்ற நாடுகள். இலத்தீன் அமெரிக்கா நாடுகள் சில, இலங்கை போலச் சிறியவை; வேறு சில இந்தியா போன்று அகன்றவை. அவற்றின் நிலப்பரப்புப் பெரிதெனினும், அவற்றின் குடித் தொகை சிறிதே. இந்தியாவின் குடித்தொகை முப்பத்தேழு கோடியெனின், பிரசிலின் குடித்தொகை இரண்டு கோடி தான்.
கொலம்பஸ் இந்தியாவிற்குப் புது வழி கண்டு பிடிக்க வேண்டுமென்று முயன்றதன் பயனுக இக்காடுகளில் போர்த்துக்கீசியரும் இஸ்பானியரும் குடியேறினர். இங்ாாடு களில் இருந்த பண்டைய மக்கள்மீது அவர்கள் படையெடுத்து வென்றனர். இக்காடுகள் பெரும்பாலும் இஸ்பானிய மன்னனின் குடியேற்ற நாடுகளாயின. சென்ற நூறு ஆண்டு கட்கு முன்னே இக்குடியேற்ற நாடுகள் விடுதலே வேட்கை யால் குடியரசுக் கொடியை நிலோாட்டித் தனியரசுகளாய்ப் பிரிந்தன.
இக்காடுகளில் வாழும் குடிகளே மூன்று வகுப்பினராகப் பிரிக்கலாம். இஸ்பானிய மரபினராய்க் கலப்பின்றிக் குலப்

Page 49
ግ8 ஒன்றே உலகம்
பெருமை கொண்ட வகுப்பினர் ஒரு வகுப்பு. இஸ்பானியர் அமெரிக்காவில் இந்தியரை மணம் செய்ததன் பயணுகத் தோன்றிய மெஸ்டிஸோ (Mestizo) என்னும் கலப்பு வகுப்புப் பிறிதொரு வகுப்பு. மூன்ரும் வகுப்பு அமெரிக்காவின் பழங் குடிகளாகிய இந்தியர்”. நில நடுக்கோடு
இலத்தின் அமெரிக்காவின் எல்லாக் குடியரசு நாடுகளுக் கும் கான் சென்றேன் அல்லேன். ஆங்குள்ள முதன்மை பெற்ற குடியரசு நாடுகளுக்கே சென்றேன். நியூயார்க்கி லிருந்து பனமாவிற்குப் பறந்து சென்றேன். அங்கிருந்து எகுவதோரின் (Ecuador) தலைாநகராகிய கீத்தோவைப் (Quito) பார்த்தேன். அங்குள்ள அரசியற் கலைச்சாலையில் எனது சொற்பொழிவு முடிந்ததும் ஒருவர் ஓடி வந்து, தமிழில் விவிலிய நூலைக் காட்டி, "உங்கள் பண்பாட்டைப் பற்றிக் கேள்வியுற்றே இந்நூலை வருவித்தேன்; இனிமேல் தமிழ் பயின்று, இந்நூலைத் தமிழில் படிக்கப் போகின்றேன்’ என்ருர். அதன்பின் பெரு (Peru) காட்டையும், சிலி (Chile) காட்டையும் சுற்றிப் பார்த்தேன். அன்டீஸ் மலைத் தொடரைக் கடந்து தென் அமெரிக்காவின் முதல் நாடாகிய அர்ஜென்டீன வுக்குச் சென்றேன். உருக்குவேயையும் பிரசிலையும் பார்த்த பின், ரியோடிஜெனெய்ரோவிலிருந்து ஆப்பிரிக்காவுக்குச் செல்லும் வானவூர்தி ஏறினேன். தென் அமெரிக்காவின் சுற்றுச் செலவு ஏறக்குறைய இரு திங்கள் ஆகியது. பல்லா யிரக் கல் தொலை செலவு நிகழ்ந்தது. வானவூர்தியில் நான் சென்றமையால்தான் இத்துணை காடுகளை இரு திங்களில் கன்ருகப் பார்க்க முடிந்தது.
மையாமி (Miami) வானவூர்தி நிலையத்திலிருந்து கீத்தோ விற்குச் (Quito) செல்லும் பொழுது, பனமாக் கால்வாயைக் கடந்து சென்றேன். பனமாக் கால்வாயை வெட்டியதால் மரக் கலங்கட்குப் பல வசதிகள் கேர்ந்தன. எகுவதோர் (Ecuador) என்னும் நாடு ஈக்குவேட்டர் (Equator) அல்லது நில நடுக் கோடு தன் நடுவண் செல்வதால், எக்குவடோர் (Ecuador) என்னும் இஸ்பானியப் பெயரைப் பெற்றது. அதன் தலைநகர் ஏறக்குறைய ஒன்பதாயிரம் அடி உயரத்தில் அமைக்கப் பெற்றுள்ளது. அங்குள்ள எரிமலை ஒன்று பெயர் பெற்றது, அதற்குக் கோத்தோபாக்சி (Cotopaxi) என்பது பெயர். நில நடுக்கோட்டினைத் தன்னகத்தே கொண்டதால் அங்காடு மிகவும்

தென் அமெரிக்கா 79
வெப்பமுடையதாய் இருக்குமென்று எண்ணி; இருந்தேன். ஆனல் மலை உச்சிகள் பனியால் மூடப்பெற்றிருந்தன. கீத்தோ ஏறக்குறைய இலங்கையின் நுவரேலியா, தென்னிந்தியாவின் உதகமண்டலம், மலாயாவின் கேமரூன் மலை போல் தட்ப வெப்ப நிலை படைத்துள்ளது. கான் வானவூர்தி நிலையத்தி லிருந்து நகருக்குச் செல்லும் மோட்டார் வண்டியை கோக்கிப் போகும்பொழுது, அங்குள்ள சிவப்பு இந்தியப் பெண்மணி ஒருத்தி புதுமைப் பொருள் (Curios) விற்பனை செய்பவள், ஒர் இறந்த ஆடவனின் சிறு தலை ஒன்றை விற்பனைக்கு நீட்டினுள். அங்குள்ள இந்தியரில் ஒரு வகுப்பினர் இறந்த மாந்தரின் தலை களைச் சுருக்கிச் சிறியனவாகச் செய்வதில் கை தேர்ந்தவர். அவர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்திருந்த காலத்தில், தம் பகைவரின் தலைகளைக் கொய்து, இவ்வாறு சிறிதாக்கி வைத்திருப்பார்களாம். எட்டு அல்லது ஒன்பது அங்குல நீளமும் அகலமும் உள்ள தலைகளை மூன்று கான்கு அங்குல மாகச் சுருக்கிவிடுகின்ருர்கள். இதனைச் செய்யும் முறை அவ் இனத்தினரே அறியும் மறைபொருள். இன்றும் அவர்களு டைய ஊர்களுக்குச் செல்லும் பிற நாட்டார் திரும்பி வருவது அரிதென்று சொல்லுகின்றனர்.
எகுவதோர் அரசியற் பண்பாட்டுக் கழகத் தலைவர் என்னை வரவேற்க வந்திருந்தார். அங்குத் தமிழைப் பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்தவும் பல ஏற்பாடுகள் செய்திருந் தார். அங்காட்டில் தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி அறிய அத் துணை ஆர்வம் இருக்குமென நான் கனவிலும் நினைத்திலேன். சொற்பொழிவுகளைக் கேட்க வங்தோரின் தொகை பெரிதாய் இருந்தது. h
தம் நாட்டின் பண்பாட்டுச் சிறப்புக்களை நான் காண வேண்டுமென்று பல இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்றனர். தென் அமெரிக்காவில் அமைக்கப்பெற்றிருக்கும் கத்தோலிக்கக் கோயில்கள் மிகவும் சிறந்தவை. அக்காலத்தில் இஸ்பானியர் புதிய உலகின் செல்வங்களைத் தம் கோயில்களை அணி செய்வதற்கே கொடுத்தனர். பொன்னும் மாணிக்கமும் மிகுதியாய்க் கோயில்களுக்கு அளிக்கப்பெற்றன. குஸ்கோ (Cusco) என்னும் நகரில் எனக்கு ஒர் ஆசீர்வாதப் பாத்திரத் தைக் காட்டினர். அப்பாத்திரத்தில் அறுநூறு முத்துக்களும் ஆயிரத்தைந்நூறு சிறு மாணிக்கக் கற்களும் பதிக்கப்பெற்

Page 50
80 ஒன்றே உலகம்
றிருந்தன. அப்பாத்திரத்தின் விலை இர ண் டு மிலியன்
டாலர்” எனக் கூறினர்.
நில கடுக்கோடு செல்லும் இடத்தில், அதனைக் குறித்த புவிஇயல் வல்லுநர்க்கென ஒரு தனி நிலைத் தூண் காட்டப் பெற்றுள்ளது. அதனைப் பார்க்கப் போகும்பொழுது பல சிவப்பு இந்தியரின் சிற்றுார்கள் வழியாகச் சென்ருேம். ஒரிடத் தில் இந்தியர்” இருவர் சண்டையிடுவதையும் பலர் அதனைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டேன். எங்கள் மோட் டார் வண்டியைக் கண்டதும் சண்டையிட்டவர் ஒருவர், தாம் உயிர் துறக்க வேண்டுமென்று எங்கள் வண்டி செல்லும் வழி யில் படுத்துவிட்டார். இறுதியில் அவரைப் பலர் சேர்ந்து தூக்கிச் சென்ற பிறகே காங்கள் ககர முடிந்தது.
தென் அமெரிக்காவில் வாழும் சிவப்பு இந்தியர்” பண் டைக் காலத்தில் எத்துணைச் சீரும் சிறப்பும் அடைந்திருக் தாலும், இக்காலத்தில் பெரும்பான்மையோர் கல்வியும் முன்னேற்றமும் அற்றே வாழ்ந்து வருகின்றனர். இவர் களுக்குக் கல்வி பயிற்றிச் சீர்திருத்துவது அங்காட்டு அரசு களின் பெருங் கடமையாகும். இவர்கள் பனையோலை போன்ற ஒலைகள் கொண்டு செய்யும் பாய்களும், தொப்பிகளும் பெரி தும் வியப்பைத் தருவன. சில தொப்பிகள், சுருட்டிக், கணை யாழிகளின் வழியாக இழுக்கத்தக்க மென்மைத் தன்மை யுடையன. பழைய பண்பாடு
அமெரிக்கக்கண்டங்களில் போர்த்துக்கீசியரும் இஸ்பானி யரும் வந்தபொழுதும் அவர் வருமுன்னும் மிகவும் சிறந்த பண்பாடு படைத்த மக்கள் அங்கு வாழ்க் து வந்தனர். அவர் இந்தியசீனப் பண்பாடுகள் போல் இலக்கியங்களை உண்டாக்க வில்லையெனினும், வேறு துறைகளில் நிகரற்ற தேர்ச்சி பெற்றிருந்தனர். மெக்சிகோ என்னும் காட்டில் "அஸ்தெக் கரும் (Aztecs), குவத்தமாலா யுக்கட்டான் காடுகளில் "மாயரும்’ (Mayas), தம் ஆட்சியை நிறுவினர். "இன்காகர்’ (Incas) என்பவர்கள் பெரு என்னும் காட்டிலிருந்து தம் பேரர சைச் செலுத்தினர். அவர்கள் எடுத்த கோயில்கள், கட்டிய மாளிகைகள், கல்லாலும், மரத்தாலும் செதுக்கிய உருவங்கள், அவர்கள் வாழ்ந்த பேரூர்கள் அனைத்தும் இன்றும் காணப்படு கின்றன. அவர்கள் பண்பாட்டிற்கும் இந்தியர் பண்பாட்டிற் கும் உள்ள ஒற்றுமைப்பாட்டைக் கண்ட ஆசிரியர் ஒருவர்

தென் அமெரிக்கா 8.
இந்து அமெரிக்கா’ (Hindu America)என்னும் நூலொன்றை எழுதியிருக்கின்றர். ஆயினும் அமெரிக்க இந்தியர், இந்திய இந்தியரைத் தழுவியவர் என்பதை நிலைாகாட்டுதல் அரிது.
நான் பெருவில் தங்கிய காலை இன்காகருடைய சில பழைய நகர்களைப் பார்க்கச் சென்றேன். குஸ்கோ’, ‘மாச்சுப் பிச்சு? என்பன அவற்றின் பெயர். இன்காகர், தமது நகர் களைப் பெரும் மலை உச்சிகளில் அமைத்திருந்தனர். அவர்கள் கற்களால் கட்டிய மாளிகைகள் இன்னும் சிற்ப வல்லுங்ர்க்குப் பெரும் வியப்பை உண்டாக்குகின்றன. பெருங் கற்களை அவர்கள் செதுக்கி இருக்கும் முறையும், அக்கற்களை மிருது வாக ஒருங்கே ஒட்டி வைத்திருக்கும் முறையும், திராவிட மக்கள் கற்கோயில்களின் திறனைங்னைவூட்டுகின்றன. மூன்று தொன், இரண்டு தொன் பாரமான கற்களை அவர்கள் எவ் வாறு செதுக்கினர் ? எவ்வாறு அவ்வுயர்ந்த இடங்களுக்குக் கொண்டு சென்றனர் ? எவ்வாறு கட்டடத்தில் சுண்ணும்பு, சிமந்து இன்றி அவற்றை வரிசை வரிசையாக அமைத்தனர்? இவ்வினுக்களுக்கு விடையிறுப்பது அரிது.
இன்காகர், மாளிகைகள் எழுப்புவதுடன் பெரும் தெருக் களையும் அமைத்தனர். காட்டுக் கொடிகளை முறுக்கிப் பெரும் கயிற்றுப் பாலங்களைச் செய்தனர். இன்காப் பெண்களின் கெசவு வேலையும், குயவரின் பானைக் குடங்களும், இன்றும் வியக்கத்தக்கன. அவர்கள் மலை உச்சிகளிலும், மலைச் சாரல் களிலும் வாழ்ந்ததால் உழவிற்கும் நீர்கால் யாத்தலுக்கும் பல வழிகளைக் கண்டிருந்தனர். சோளம்முதலிய விளைபொருள்களை மலைச்சாரலில் கன்ருய் அமைக்கப்பெற்ற பாத்திகளில் பயிர் செய்தனர்.
அவர்கள் வழிபட்ட முதன்மையான தெய்வம் ஞாயிறு. இயற்கையாகக் குளிர்ந்த இடத்தில் அவர்கள் வாழ்ந்ததனுல், வெப்பமும் உயிரும் அளிக்கும் ஞாயிற்றை அவர்கள் வழி பட்டார்கள் என்பதில் வியப்பில்லை. அம் மக்களின் பேர ரசற்கே "இன்கா’ என்னும் பெயர் சிறப்பாகக் கொடுக்கப் பெற்றது. அப்பேரரசன் ஞாயிற்றின் புதல்வனென்றும், அவனுக்கு உலகெங்கும் அரசுரிமை உளது என்றும் அம் மக்கள் நம்பி ஒழுகினர். ஞாயிற்றுக்கு அவர்கள் எழுப்பிய கோயில் உலகில் மிகச் செல்வம் படைத்ததெனக் கூறுகின்ற னர். அக்கோயிலில் செம்பொன்னுல் ஞாயிற்றின் பெரும் வடி
10 77-6

Page 51
82 ஒன்றே உலகம்
வத்தைச் செய்து வைத்திருந்தனர். காலையில் ஞாயிற்றின் ஒளி அவ்வடிவத்தின்மேல் வீசியதும் தகதக வென்று கோயில் ஒளிப் பிழம்பாய்த் திகழ்ந்தது. மேலும் அக்கோயி லில் திங்களுக்கும் வெள்ளிக்கும் சிறப்பாகச் சிறு பகுதிகள் அமைக்கப் பெற்றிருந்தன. இஸ்பானியப் படை வீரர் இக் கோயிலை இடித்து இதன் செல்வங்களைக் கொள்ளையடித்த 6.
இன்காகருடைய ஆட்சி முறையும் உலக வரலாற்றில் புது முறையாகவே தோன்றுகின்றது. ஏறக்குறைய பன்னி ரண்டாம் நூற்ருண்டில் செல்வாக்குப் பெறத் தொடங்கிய இன்காகா பதினரும் நூற்ருண்டில் பெரும் பேரரசுக்குத் தலை வராய் இருந்தனர். அவர் ஆட்சி முறையில், குடிகள் உரிமை
களின்றி அரசனுக்கு அடிமைகளாகவே வாழ்ந்தனர். காட்டில்
உள்ள செல்வம், மக்கள், அனைத்தும் அரசனுடையவை. குடிகளுக்கு உணவும் உறையுளும் கிடைத்தன; அவர்கள் செய்யவேண்டிய வேலையும் குறிக்கப்பட்டிருந்தது. குடிமக்கள் அரசு விரும்பியவாறே தொழில்களைச் செய்து வந்தனர். அரசன் இறந்தபொழுது, அவனுடைய செல்வத்தை அவன் மாளிகைகளில் திரட்டி, மாளிகைகளைப் பூட்டி விடுவர். புது அரசன் புதுமாளிகைகளைக் கட்டிப் புதுச் செல்வத்தை ஈட்ட வேண்டும் என்பது அவர்கள் கோட்பாடு.
இன்காகர் பேசிய சிவப்பு இந்தியர் மொழிக்கு எகிச்சுவா? என்று பெயர். அவர்கள் அம்மொழியை வரி வடிவில் எழுதி னர் அல்லர். அவர்கள் செய்திகளையும், கணக்குக்களையும் பல கிற நூலின்ழகளில் இட்ட முடிச்சுக்கள் வழியாகக் குறித்து வைத்திருந்தனர். அம்மக்கள் எழுத்தில் இலக்கியம் இயற்றிய தாகத் தெரியவில்லை.
இன்காகருடைய செல்வமும் அவர் வாழ்ந்து வந்த முறையும், அவர்கள் அமைத்த பெரும் தெருக்களும், பொது மக்களையும் அவர் உயிரையும் மதிக்காமல் உழைக்கச் செய்த னர் என்று காட்டுவனவாக வரலாற்று ஆசிரியர் நினைக்கின்ற னர். தம்முடைய பேரரசை இணைப்பதற்காக ஈராயிரம் கல் நீளத்திற்கு வீதிகளே அமைத்திருந்தனர். பசிபிக் கடலிலகப் பட்ட மீனே நூற்றைம்பது கல் அப்பால் வாழ்ந்த இன்கா மன்னர் அதே நாளில் மாறி மாறி ஒடும் பணியாளர் (Relay Runners) வழியாகப் பெற்று உண்டாரெனக் கூறப்படு கின்றது.

தென் அமெரிக்கா 83
பெருவிலும் சிலியிலும் உள்ள நகர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நகர்களைப் போல்தான் காணப்படுகின்றன. இவற்றின் கட்டட அமைப்புக்கும் ஐக்கிய அமெரிக்காககர்களின் கட்டட அமைப்புக்கும் பல வேற்றுமைகள் உண்டு. இம் மக்களினுடைய வாழ்க்கையும் ஐரோப்பிய மக்களின் வாழ்க் கையைப்போல்தான் தோன்றுகின்றது. புதிய இளம் நாடுகள் ·
அர்ஜென்டீனு புதிய நாடு. ஏனைய தென்னமெரிக்கக் குடி யரசு காடுகளுக்குப் பின்தான் ஒருவாறு வளர்ந்த நாடு. அதன் வரலாறு அண்மையில் தோன்றியதாயினும், இக்காலத்தில் அங்ாகாடு தென் அமெரிக்காவில் முதன்மை பெற்று விளங்கு கின்றது. சிலியிலிருந்து அங்குச் செல்வதற்கு வானவூர்தி அன்டிஸ் மலைத் தொடரைக் கடந்து பறந்தது. அன்டிஸ் மலைத்தொடரின் மேல் இருக்கும் கிறிஸ்துவின் பெரும் சிலை ஒன்று பெயர்பெற்றது. அர்ஜென்டீனுவும் சிலியும் தமக்குள் போர் நிகழ்த்தாமல், உலகிற்குச் சமாதானத்தை அருளிய கிறிஸ்துவின் திருப்பெயரைக் கொண்டு ஒற்றுமையைக் காப் பாற்ற வேண்டுமென்று அம்மலை உச்சிமேல் அச்சிலையை நிறுவினர். வானவூர்தியிற் செல்லும் பொழுது முகில்கள் இல்லாவிடின் அச்சிலையைக்காண முடியும். நான் சென்ற காளோ மலைகள் எல்லாம் மஞ்சுதழ்ந்திருந்ததால் கிறிஸ்துவின் சிலையை நான் காணவில்லை. போனஸ் அய்ரஸின் (Buenos Aires) வானவூர்தி நிலையத்தை அடைந்ததும் அக் காட்டின் முன்னேற்ற எழுச்சி தெளிவாயிற்று. அந் நிலையமே உலகில் உள்ள பல வானவூர்தி நிலையங்களிலும் மிகவும் சிறந்ததாக அமைக்கப் பெற்றுள்ளது.
அர்ஜென்டீனுவின் வரலாறு சென்ற நூறு ஆண்டுகளில் அடங்குவது. அங்கு ஐரோப்பாவின் பல பாகங்களிலிருந்து மக்கள் குடியேறினர்கள். சிவப்பு இந்தியர் ஒரு சிலரே அங்கு வாழ்கின்றனர். அங்குக் குடியேறியவர்கள் கோதுமை வயல் களிலும் ஆடு, மாடு மக்தைகளிலும் வேலைக்கு அமர்ந்து அக் காட்டின் செல்வத்திற்குக் காரணமாயினர். கோதுமை, இறைச்சி முதலிய உணவுப் பொருள்கள் மிகுதியாய் போனஸ் அய்ரஸிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதன் துறைமுகமும் ஏற்றுமதிப் பொறிகளும் பல கல் தூரம் கரை யோரத்தில் பரவிக் கிடக்கின்றன. போனஸ் அய்ரஸ் அழகிய ககர். உலகில் மிகவும் அகன்ற வீதி அங்ாககரில்தான் உள்

Page 52
84 ஒன்றே உலகம்
ளது. அங்கு ஏறக்குறையப் பத்து இலங்கையரும் வாழ் கின்றனர். கான் அங்ாநகரில் தங்கியிருப்பதுபற்றி அவர்கள் செய்தித் தாள்கள் வழியாகக் கேள்வியுற்று என்னைக் காண வந்தனர். இலங்கையரை அத்தொலைவிலுள்ள காட்டிற் கண்டது பற்றி கான் பெரும் மகிழ்ச்சியை அடைந்தேன்.
அங்குச் சோறும் கறியும் உண்ண வேண்டுமென்று என் கண்பர் ஒருவர் விரும்பினுர், நான் தங்கிய பெரும் விடுதியில் (Hotel Gloria) வினவியபொழுது இந்திய முறையில் சோறு கறியாக்கும் சமையல்காரர் உளர் என்று கூறினர். இருபது ஆண்டுகளுக்கு முன் கப்புத்தாலா மகாராஜா அங்குத் தம் பரிவாரங்களுடன் சென்றிருந்தனர். அவருடைய சமையல் காரர் சமையல் செய்வதைப் பார்த்து, விடுதியில் உள்ளவர் களும் இந்திய உணவு சமைக்கும் முறைகளைக் கற்றுக் கொண்டனர். கான் தங்கிய விடுதியில் நிகழ்ந்த செய்தி யொன்றை நான் மறக்க முடியாது. அங்குள்ள மின்சார் ஏணிப் பொறியில் செல்லும்பொழுது அப்பொறியை இயக்கும் இளைஞன், கான் எஸ்பெருன்தோ’ (Esperanto) என்னும் உலகச் செயற்கைப் பொது மொழியைப் பயிலும்படி தூண்டி ஞன். நீங்கள் பல மொழிகள் பேசுகின்றீர்கள், ஆதலால் *எஸ்பெருன்தோ’ மொழியைக் கற்று உலக ஒற்றுமைக்கு வழிகாட்டுங்கள்” என்று கூறியதுடன், எனக்கு “எஸ்பெருன் தோ’ இலக்கணநூல் ஒன்றையும் கொடுத்தான். அவன் தொழி லாளி; அத்துணைக் கல்வியறிவு படைத்தவனும் அல்லன். அவனுக்கு இருந்த உலக ஒற்றுமைப் பற்றும் ஆர்வமும் அறி ஞர்க்கும் எடுத்துக் காட்டாகும்.
அர்ஜென்டீனு மக்கள் பெரு முயற்சியும் முன்னேற்ற வேட்கையும் உடையவர். ஆதலால் அவர் காடு முதன்மை பெற்றிருக்கின்றது. அவர்கள் ஐக்கிய அமெரிக்கர் போல் கல் வாழ்வும் செல்வமும் படைத்தவர்களாய் இருக்க வேண்டு மென்று உழைத்து வருகின்றனர். அவர்கள் கல்வித் துறை களில் பெருமுன்னேற்றம் அடைந்துள்ளனர். அவர்களுடைய புத்தகக் கடைகளில் பிற மொழிகளிலிருந்துமொழி பெயர்க்கப் பட்ட பல அரிய நூல்களைக் கண்டேன்.
போனஸ் அய்ரஸில் என் நண்பரொருவர் என்னிடமிருந்த பரதநாட்டியத்தைப் பற்றிய திரைப்படத்தைப் பார்த்த பின்னர், தாம் உறுப்பினராக இருக்த காட்டியக் கழகம் ஒன்றுக்கு என்னை அழைத்துச் சென்றர். அன்று அங்கு ஏறக்

தென் அமெரிக்கா 85
குறைய முந்நூறு ஆடவரும் பெண்டிரும் கூடியிருந்தனர். அவர்கள் அர்ஜென்டீனுவுக்கு உரிய கடனங்களை கடித்துக் காட்டினர். அங்கடனங்கள் பெரும்பாலும் பொது மக்கள் தம் விழாக்களில் கடிக்கும் பொது கடனங்களாக அமைந்திருந்தன. இலங்கையில் "பைலா’ என்று கூறப்படும் காட்டியத்தை இலங்கை மக்கள் போர்த்துக்கீசியரிடமிருந்தே கற்றனர். பைலாவுக்கும் அர்ஜென்டீனு காட்டியத்திற்கும் கெருங்கிய தொடர்பு உண்டு. பைலா’ என்ருல் ரகடனம் என்பது பொருள். -
தென்னமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதுக் குழுவினர் போனஸ் அய்ரஸிலும் ரியோடிஜெனெய்ரோவிலும் எனக்கு வேண்டிய உதவிகளை யெல்லாம் செய்ய முன்வந்தனர். அங் நாடுகளை நான் பார்க்கவும் பல வசதிகளைச் செய்தனர். காந்தி யடிகளின் பிறந்த நாளன்று நான் ரியோடிஜெனெய்ரோவில் தங்க கேரிட்டது. அங்கு அன்று கடைபெற்ற விருந்துக்கு ஏறக்குறைய எழுபதின்மர் வந்திருந்தனர். அவர்களுட் பலர் இந்தியாவிலிருந்து பிரசிலில் குடியேறிய இந்தியர். அவர்கள் இன்னும் இந்தியாவைத் தம் சொந்த நாடாகவே கருதி வரு கின்றனர்.
ரியோடிஜெனெய்ரோவும் மிகவும் அழகான பேரூர்தான்; ஒருவாறு போனஸ் அய்ரஸைவிட அழகு வாய்ந்தது. அதன் தட்ப வெப்ப நிலை ஆண்டின் எல்லாப் பருவங்களிலும் உடல் கலத்தைப் பேணுவது. அதன் துறைமுகமும் அதனைச் சூழ்ந் திருக்கும் குன்றுகளும் மிகவும் எழில் வாய்ந்தவை. மேலும் அங்ாககர்க்கு உலகின் எல்லாத் திசைகளிலிருந்தும் மக்கள் வரு கின்றனர். ரியோ (Rio) மகிழ்ச்சியின் நகர் என்று சொல்வது வழக்கம். அங்கு வாழும் மக்கள் மகிழ்ச்சியாகவே வாழ் கின்றனர்; மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்று விரும்பும் மக்களும் அங்ககருக்குத் தம் விடுமுறைக் காலத்தில் செல் கின்றனர். பிரசில் மக்கள் பல இனங்களையும், நிறங்களையும் சேர்ந்தவர்களாயினும், இன, நிற வேற்றுமைகளின்றிக் குடி யாட்சியை நிறைவேற்றி வருகின்றனர்.
தென் அமெரிக்காவில் வாழும் மக்களில் பெரும்பான்மை யோர் பெரும் நகர்களிலே வாழ விரும்புகின்றனர். அவர்கள் அங்ாககர்களில் கவலையின்றி மகிழ்ச்சியாகவே இருக்க முயல் கின்றனர். ஆடல் பாடல்களைப் பெரிதும் விரும்புகின்றனர்.

Page 53
86 ஒன்றே உலகம்
*தங்கோ’ (Tango) “ரும்பா’ (Rumba) போன்ற ஆடல் முறை களும் இசைப்பாடல்களும் அங்குத் தோன்றியவை.
ரியோ பிரசிலின் தலைநகர். செள பாலோ (Sao Paolo)
என்பது ஒரு பெரு நகர். அங்ககர்ப் பக்கத்தில் காப்பித் தோட் டங்கள் மிகுதியாய் இருக்கின்றன. அங்குப் போம்பு மங்தை, கள்’ (Snake-farms) உள. இந்த மந்தைகளில் பாம்புகளை வளர்க்கின்றர்கள். அவற்றின் கஞ்சு (Serum) மருந்தாகப் பயன்படுகின்றது.
வட அமெரிக்காவில் மக்கள் பிற காட்டுக் கலைகளைக் கற்று அறியப் பெரிதும் அவாவுடையவராய் இருந்தனர். தென் அமெரிக்காவிலோ பண்டையப் பண்பாடு படைத்த, வரும் பழங்குடிகளுமான இலத்தீன் வழித்தோன்றல்கள் இந்தியாவின் பெருமையை கன்ருய் அறிந்திருப்பதாகத் தெரிந்தது.

10. சோவியத் ஒன்றகம்
ரஷ்ய காட்டைப் பற்றி எழுதுவதென்றல், அங்ாகாட்டை நன்கு அறிந்தவரும், சிறிது தயங்குவது இயல்பு. “ரஷ்ய காட்டைப் பற்றிப் பிற காட்டார் அறிந்ததில்லை-வெவ்வேறு தரப்பட்ட அறியாமையே உண்டு’ என்று சர்ச்சில் ஒரு முறை கூறினர். காடு பெரிதாயிருப்பதாலும், இரும்புத் திரை’ போன்ற திரைகள்' இடப்பட்டிருந்ததாலும் அவர் அவ்வாறு கூறினுர்,
ரஷ்ய காட்டை கேரில் பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்குப் பல்லாண்டுகளாக இருந்துவந்தது. கத்தோலிக்க குருக்களுக்கு வீசா’ முதலிய உடன்பாட்டுச் சீட்டுக்கள் எளிதிற் கிடைக்குமோ என்பது ஐயமாக இருந்தது. பலரும் பலவாறு ரஷ்ய நாட்டைப் பற்றிக் கருத்து வேற்றுமை கள் கூறிவந்ததால், யாவர் கூற்றுத்தான் உண்மையென்று அறியாது அல்லற்பட்டேன். ஒரு புறம் ரஷ்ய நாடு தேனும் பாலும் கொழிக்கும் செல்வ காடென்றவர்களும், மறுபுறம் அங்காட்டிற்குச் செல்வதே பாவமென்று கருதியவர்களும், ரஷ்யாகாட்டைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். இங்ாநிலையில் உண்மையை வேற்று காட்டிலிருந்து கொண்டு அறிந்து கொள்வது எளிதாகத்தோன்றவில்லை. எனவே,கேரில் சென்று உண்ஓம அறிய விரும்பினேன்.
மேலும், இக்காலத்தில் ஐக்கிய அமெரிக்காவும், ஐக்கிய சோவியத் காடுமே இருபெரும் காடுகளாவன. இவற்றுள் ஒன்றைப்பற்றி கன்கு அறிந்தும் பிறிதொன்றைப்பற்றி அறி யாதும் இருப்பது உலகின் நிலையை மதிப்பிடுவோர்க்குப் பொருந்தாது என்பதையும் உணர்ந்தேன். இவ்வாறு எண்ணிக் கொண்டிருந்த எனக்குக் கீழ்த் திசைக் கலைகளின் மாகாடு மாஸ்கோ மாககரில் நடைபெறுவதாகவும், அங்குச் சென்று ஆய்வுக்கட்டுரை படிக்குமாறும் அழைப்பிதழ் வந்தது. கான் அங்குச்செல்வதாக அறியவந்த கண்பர் சிலரின் முகங்கள் கோனின. வேறுசிலர் நீங்கள் மீண்டும் திரும்பி வருவீர்களா என்றும் வினவினர். பழங்காலத்தில் புது காடுகளைக் கண்டு பிடிக்கவேண்டுமென்று எழுச்சி பெற்றவர்கள் பலர். இக்காலத்

Page 54
88 ஒன்றே உலசும்
தில் அவ்வெழுச்சியைப் பெற வேண்டுமென்றல் தடுக்கப் பட்ட நாடுகளுக்கும் விலக்கப்பட்ட காடுகளுக்கும், "திரை யிடப்பட்ட காடுகளுக்கும் செல்வதாலேயே அடைய முடியும். காட்டை அடைதல்
எனக்கோ இவ்வழைப்பு வந்தும் ரஷ்ய வீேசா? கிடைக்குமோ வென்று ஐயுற்றேன். ஆயினும், ஐக்கிய அமெரிக்க நாட்டிற்கு முதற் செல்ல வேண்டியதாக இருந்த தால், அங்கிருந்த 'அண்டச் செலவுக் குழுவினர்’ (Cosmos Travel Agency) எனும் செலவுக் கம்பெனியார் வழியாக நுழை வுச்சீட்டைப் பெற்று, அங்கேயே ரஷ்ய நாட்டில் கான் செய்ய வேண்டிய செலவுத் திட்டங்களுக்கும் ஏற்பாடு செய்தேன். ரஷ்ய காட்டிற்குச் செல்வது என்ருல் அது பிற நாடுகளுக்குச் செல்வது போன்றதன்று. அங்குத் தங்கவிருக்கும் காட்கள், பிரயாணம் செய்யவிருக்கும் வழிகள், நகர்கள், இவற்றைப் பற்றியெல்லாம் முன்னரே திட்டமிட்டு “இன்டுரிஸ்டு” (Intourist) எனும் ரஷ்ய செலவுக் கம்பெனியார்க்கு அறிவித்தல் வேண்டும். இத்திட்டங்களை ரஷ்யா சென்ற பின்னர் மாற்றுவ தும் அரிது. ரஷ்யச் செலவுக் கம்பெனியாரே எவ்விடுதியில் இருத்தல் கூடும் என்று விதித்திடுவர். செலவிற்கு வேண்டிய பணத்தொகையையும் ரஷ்ய காட்டிற்குச் செல்லு முன்னதா கவே இறுத்தல் வேண்டும். சுற்றுச் செலவாளராக அங்குச் செல்ல வேண்டுமாயின், விடுதி, உணவு உள்ளிட்ட அனைத் திற்கும் ஒவ்வொரு கோளுக்கும் 54 (மலாய) வெள்ளி கட்ட வேண்டும். இத்தொகை, பெரிதும் மிகுதியான தொகை என்ப தைப் படிப்பவர்கள் கன்ருக உணர்வர். ஆயினும் ரஷ்ய காட்டை நேரே சென்று பார்க்க வேண்டும் என்ற அவாவினுல் எத்தொகையையும் கட்டிப் பார்க்க விரும்பினேன்.
ரஷ்யாவிற்குச் செல்லும் வாய்ப்புக் கிடைக்காத நிலையில், எனக்குப் பல்லாயிரம் வெள்ளி கொடுத்து ரஷ்ய மொழியைப் பயிலுமாறு கூறியிருந்தாலும் கான் பயின்றிருக்கமாட்டேன். ஏனெனில், ரஷ்ய மொழியில் வரி வடிவு கிரேக்க மொழியின் வரிவடிவை அறிந்த எனக்கும் சலிப்பை உண்டாக்கியது. ஆணுல், ரஷ்யாவிற்குச் செல்வேன் என்ற கம்பிக்கை தோன்றி யதும், அங்குள்ள மக்களுடன் ஒரு சிறிதேனும் உரையாட வேண்டுமென்ற கருத்துடன் அம்மொழியைப் பயிலத் தொடங்கினேன். ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்த ரஷ்யர் ஒருவர் என் விடுதி அறைக்கு வந்து முதற் பாடங்களைக்

சோவியத் ஒன்றகம் 89
கற்பித்தார். அத்துடன் ரஷ்ய மொழி பயிற்றும் இசைத் தட்டுக்களைப் பெற்று, ஒய்வு நேரத்தில் அம்மொழியைப் பயின்று வந்தேன். ஒரு மொழியைக் கற்கும் தொடக்கத்தில் அறிந்த மொழிகளுடன் உள்ள தொடர்புகள் கமக்குத் தென் படுகின்றன. ரஷ்ய மொழி, இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஒரு கிளையைச் சார்ந்தது. கிரேக்க மொழி, இலத்தீன் மொழி வடமொழிபோன்ற மொழிகளுடன் ரஷ்ய மொழிகளில் வரும் சொற்கள் பல ஒலி வடிவில் தொடர்பு காட்டுவன. எடுத்துக் காட்டாக, கதவை த்வார்’ என்றும், தாயை "மியாத் என்றும், உடன்பிறந்தாரை பிறத்" என்றும், மூன்றைத்த்றியென்றும் இரண்டை த்வா’ என்றுஞ் சொல்வர்.
பின்லாந்திலிருந்தே ரஷ்யாவிற்குப் பறந்து சென்றேன். அன்று பிற்பகல் எட்டு மணிக்கு வரவேண்டிய ரஷ்ய விமா னம் ஹெல்சிங்கிக்குப் பத்தரை மணிக்கு வந்து சேர்ந்தது. ரஷ்ய விமானப் போக்குவரவு பிறகாடுகளைப் போன்று படாடோபம் படைத்தது அன்று. பஸ்வண்டியில் ஏறுவது போன்றே விமானங்களில் ரஷ்ய மக்கள் ஏறிச் செல்வார்கள். ரஷ்ய விமான நிலையங்களும் அவ்வாறே ஏனைய நாடுகளின் விமான நி2லயங்களைப்போல் மிகுதியாக அழகு செய்யப் படாதே காட்சி அளித்தன. விமானத்திலிருக்கும் பணியாள ரும் ஏனைய காடுகளிற்போல் அழகுசெய்துகொண்டு, விமானச் செலவு செய்கின்றவர்கள் ஏதோ மேலுலக மக்கள் எனும் மனப்பான்மையுடன் கடப்பவரல்லர். ஓர் இடத்தைச் சேர வேண்டுமாயின் அதற்கு விமானம் இன்றியமையாது பயன் படும் கருவி யென்பதே அவர்கள் மனப்பான்மை.
இரவு இரண்டு மணிக்கு மாஸ்கோ விமான நிலையத்தை அடைந்தோம். பரம இரகசியம் எனக் கருதப்படும் ரஷ்ய நாடு கள்ளிரவில் இன்னும் பெரிய இரகசியமாகத் தோன்றிற்று. விமான நிஜலயத்தில் உள்ளவர்கள் அனைவரும் பெரும் அன்பு டனும், பணிவுடனும் நடந்துகொண்டனர். சென்றபொழுதும் மீண்டபொழுதும் என் பெட்டிகளே ரஷ்ய சுங்கத்தவர் திறக்தி லர். கானே இவர்கள் எத்தகைய மக்கள், இவர்கள் ரஷ்யர்கள் தாமா என்ற ஏமாற்றத்துடன் சிந்தித்துக் கொண்டிருந்தேன். பழைய மோட்டார் வண்டியொன்று என்னை 'உக்ரேயினு’ (Ukraina) விடுதிக்குக் கொண்டு சேர்த்தது. காலை நான்கு மணிக்கு அழகிய அறை யொன்றில் உறங்கச் சென்றேன். துயில் நீக்கி விழித்தெழுந்ததும் ஒரு கைப்பெட்டியை விடுதி

Page 55
90 ஒன்றே உலகம்
யின் பொதுச்சாலையில் மறந்து வைத்துவிட்டதாக நினைவுற் றேன். விரைவில் அங்குச் சென்றதும் நான் வைத்த இடத்தி லேயே பெட்டியிருப்பதைக் கண்டேன். ரஷ்ய நாட்டில் களவு என்பது மிகக் குறைவு என்று கூறுவார்கள். ஒரு செய்தித் தாளையேனும் வண்டியில் மறந்து வைத்துவிட்டு வந்தால், மறந்தவரைத் தேடிப்பிடித்து அப்பொருளைக் கொடுப்பர் என்று ரஷ்யாவைப் பற்றி எழுதிய பிற காட்டார் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுச் செலவாளர் செல்லக்கூடிய ரஷ்ய ககர்களிலெல் லாம் ஐரோப்பியர், அமெரிக்கர் பலரைக் கண்டேன். 1962ஆம் ஆண்டில் கோடைப் பருவத்தில் முப்பதாயிரம் அமெரிக்கர் ரஷ்ய நாட்டில் சுற்றுச் செலவு செய்ததாகக் கணக்கிட்டிருக் கின்றனர். ஆணுல், ரஷ்யர் பிற காடுகளுக்குச் சிறு தொகையி லேனும் சுற்றுச் செலவு செய்வதாகத் தெரியவில்லை. ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய ரஷ்யாவும் பல்வேறு துறைகளில் தூதுக்குழுவினரை அனுப்பியும் வரவேற்றும் வருகின்றனர். அரசியலார் போட்டியிட்டுத் தூற்றிக்கொண்டு இருக்கும் காலத்திலும் தூதுக் குழுவினர் இரு காடுகளுக்கும் சென்று வருவது வியப்பை உண்டாக்கினுலும், தூதுக்குழுக்களை அனுப்பி வைத்தலானது உலக அமைதியை நிலைநாட்டும் ஒரு வழியாகும். பிற காட்டு மக்கள் ஒரு காட்டில் சுற்றுச் செலவு செய்வதும், தூதுக் குழுவினரைப் பரிமாறிக் கொள்வதும் உலக கட்பை வளர்ப்பதற்குச் சிறந்த முறையாகும்.
ரஷ்ய காட்டிற்குச் சென்றதால் கானடைந்த கன்மைகள் பல. அங்ாகாட்டைப் பற்றி கான் கொண்டிருந்த பிழையான கருத்துக்கள் சிலவற்றைத் திருத்திக்கொண்டேன். மேலும், எனக்கு ஒருபுதிய உலகத்தைப்போல் ரஷ்யா காட்சியளித்தது. இப்புதிய உலகம், சிந்தனைத் துறையிலும் கலைத்துறையிலும் கல்வித்துறையிலும் அரசியற்றுறையிலும் புது மனப்பான் மையையும் புதுக் கருத்துக்களையும், புதுத் திட்டங்களையும் காட்டியது. இப்புதிய உலகின் பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லையாயினும், இக்கருத்துக்களை அறிவதால் தான் உலகக் கருத்துக்களைப் பற்றிய அறிவு தெளிவுறு கின்றது.
கீழ்த்திசைக் கலைகளின் இருபத்தைந்தாவது மாநாடு மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்றது. அங்கு வந்திருந்த அறிஞர்கள் பலரை நான் அவர்களின் நூல்களின்

சோவியத் ஒன்றகம் 9.
மூலம் அறிந்திருந்தேன். ஆயினும், பலருடன் நேரில் தமிழ் ஆராய்ச்சித்துறைகளைப்பற்றி உரையாட அம்மாகாடு வாய்ப்பு அளித்தது. கிழக்கு ஜெர்மனியிலிருந்து அங்கு வந்திருந்த டாக்டர் லேமான் (Lehmann) என்பவர் தென்னிந்தியாவி லுள்ள சீர்காழியில் ஏழாண்டுகள் வாழ்ந்தவர். இன்று மார்ட் டின் லூதர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பாடம் கடத்துகின்றர். தாயுமானவரின் பாடல்களையும் தேவாரங்களையும் வேறு பல தமிழ்ச் செய்யுட்களையும் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்த வர், தென்னிந்தியாவிலுள்ள தரங்கம்பாடி கிறிஸ்துவக் குழுவி னரின் வரலாற்றைப் பற்றிப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியிருக்கின்றர். இவருடைய தமிழ்த் தொண்டைப்பற்றி மாஸ்கோவில்தான் முதன்முதல் கேள்வியுற்றேன். வருங் காலத்தில் காங்கள் இருவரும் தமிழ்த்துறையில் ஒத்துழைப்ப தென்று ஒப்பந்தம்செய்தோம்.
ரஷ்யாவில் தமிழாராய்ச்சி செய்யும் தமிழறிஞர் கால்வரை கேரில் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். கண்ணன் எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் கிளாசோ (Glasso) என்பவர் திருக் குறளையும் சிலப்பதிகாரத்தையும் ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்துள்ளார். அந்துரோகோவ் என்பவர் தென்னிந்தியா வின் சென்னை மாநிலத்திலும் ஓராண்டு வாழந்தவர்; தமிழிலக் கண நூலொன்றை ரஷ்ய மொழியில் எழுதியிருக்கின்றர். பியாதிகோர்ஸ்கி என்பவர் தேவாரம் திருவாய்மொழி ஆகிய இலக்கியங்களில் ஆய்வு செய்து, பத்தி, சித்தாந்தம் ஆகிய வற்றைப்பற்றி எழுதிக் கொண்டு வருகின்றர். லெனின் கிராடு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் சிறந்து விளங்குபவர் செம்பியன் (Rudin) என்பவர். இவர் பன்மொழிப் புலவர். இவர் தமிழரைப்போல் தமிழ் பேசுவதைக் கேட்பதே தனி மகிழ்ச்சியை நமக்கு அளிக்கும். நான் லெனின்கிராட்டில் தங்கிய இரு நாட்களும் என்னைப் பலவிடங்கட்கு அழைத்துச் சென்று காட்டினர். இடை விடாது தூய செந்தமிழிலேயே என்னுடன் உரையாடினர். தமிழை எத்துணைச் சிறப்பாகக் கற்றிருக்கின்றரோ, அத்துணைச் சிறப்பாக இந்தி மொழியை யும் உருது மொழியையும் கற்றிருக்கின்றர். இத்துடன் ஐரோப்பிய மொழிகள் பலவற்றையும் கன்ருக அறிந்தவர். இவர் வருங்காலத்தில் சிறந்த தமிழாராய்ச்சி செய்வார் என்பது திண்ணம். கீழ்த்திசை மாகாட்டுக்குத் தமிழ்க் கலை களைப் பற்றி அறிய விரும்பிய வேறு அறிஞர்கள் பலரும்

Page 56
92 ஒன்றே உலகம்
வந்திருந்தனர். தமிழ் நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக் களையும், தமிழைப்பற்றிய ஆங்கில முத்திங்கள் வெளியீட்டை யும் பெற விரும்பினர். மக்களின் மனப்பான்மை
மாஸ்கோ ஐந்து கோடி மக்களைக் கொண்ட மாபெரும் ககர். வளர்ந்துகொண்டே வருகின்றது. உலகிற்கே தலைநக ராக இருத்தல் வேண்டும் என்ற முயற்சி அதன் அமைப்பில் வெளிப்படையாகத் தோன்றுகின்றது. அங்குள்ள சில வீதி கள் அகலத்தில் உலகிலேயே சிறந்தவை. பல புதிய கட்டடங் கள் இன்று தோன்றுகின்றன. அவை ஏனைய நகர்களின் கட்டடங்களைப் போல் அணிசெய்யப் பட்டவை அல்ல. மாஸ்கோ ககரிலும் ஏனைய ரஷ்ய நகர்களிலும் மக்கள் வாழ்வ தற்கெனச் சீரிய இல்லங்களையும், இல்லக அறைத் தொகை (Flats)கொண்ட கட்டடங்களையும் விரைவில் அமைப்பதே ரஷ்யாவின் மாபெரும் திட்டம். ஏனெனில், மக்கட்டொகையின் நெருக்கடி இங்ககர்களிலெல்லாம் தோன்றுகின்றது. இவற்றை விரைவில் அமைப்பதற்காக இரவும் பகலும் கட்டடத் தொழி லாளர்கள் வேலை செய்து வருவதை நான் கண்டேன். GJ 250ru I ஐரோப்பிய நகர்களிலுள்ள அணி செய்யும் முறைகளும் மாஸ்கோவில் இல்2ல. அத்து2ண வெளிச்சமும் இல்லை; கடை வீதிகளில் வனப்புமில்2ல. மக்கள் அத்துணைச் சிறப்பாக ஆடைகளை அணியவுமில்லை. அவர்களின் ஆடையும் கடைத் தெருக்களும் பெரும் செல்வ நிஜலயைக் காட்டவுமில்லை. எனி னும், ரஷ்ய மக்கள் தாம் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நிலையினும் எத்துணையோ உயர்ந்த நிலையை அடைந்துள்ளதாகப் பெருமிதம் காட்டினர்.
கான் சென்ற வாடகை மோட்டார் வண்டிகளில் வலவர் பக்கத்தில் உட்கார்ந்து அவர்களுடன் உரையாடினேன். அவர்களுள் பலர் ரஷ்ய நாட்டின் ஒப்பற்ற பெருமையைப் பற்றியும், செல்வத்தைப் பற்றியும் கூறினர். பலர் காத்திக ராகவே தோன்றினர். “விண்ணுலகில் கடவுள் இல்லை; செயற் கைத் திங்களே உண்டு’ என்றும் சிலர் கூறினர். வாழ்க்கை ரஷ்ய நாட்டில் கடிதென்றும், திட்டங்களை இடைவிடாது வகுக்கின்றனர் என்றும், ஆயினும் முன்னேறுவதாகத் தோன்றவில்லையென்றும் ஒருவரே முறையிட்டார். மாஸ்கோ மாநகரின் மக்கள் பிற நாட்டாருடன் அவ்வளவு எளிதாகப் பழகுவதில்லை. ஆயினும் இதர நகர்களில் பெரு மகிழ்ச்சியுட

சோவியத் ஒன்றகம் 93
னும், எளிமையுடனும் நட்புப் பாராட்டிவருகின்றனர். இதனை நான் லெனின்கிராடில் ரஷ்யர் ஒருவருக்குக் கூறியபொழுது, மாஸ்கோவின் பேரூரார் ஏனைய ரஷ்ய மக்களுக்கும் அவ்வாறே தோன்றுவதாகவும், அரசியற் பாரத்தைத் தாமே சுமப்பது போன்ற உணர்ச்சி கொண்டவரென்றும் விளம்பினர்.
ரஷ்ய இளைஞர் பெரும்பாலும் ஆங்கிலத்தைப் பயின்று வருகின்றனர். ஆதலால் பிற காட்டாருடன் உரையாடுவது அவர்களுக்கு எளிது; முதியோர்களில் பலர் ஜெர்மன் மொழியை நன்ருக அறிந்திருக்கின்றனர். எனவே, ரஷ்ய மொழியை அறியாதவரும் ரஷ்ய மக்கள் பலருடைய கருத்துக் களை அறிவது கடினமன்று. என்னுடன் பேசிய ரஷ்ய பாமர மக்கள் பலர் தம் காட்டில் தாம் நிற வேற்றுமை காட்டுவ தில்லை என்று வற்புறுத்திக் கூறினர். ‘அமெரிக்க மக்கள் கறுப்பு நிற மக்களை விரும்புவதில்லை. என்ன கொடுமை. காங்களோ அவர்களை அரவணைக்கின்ருேம்” என்று ஜெர்மன் மொழியில் லித்துவேனியாவிலிருந்து வந்த ரஷ்யர் ஒருவர் கிரேம்லினிற்கு அண்மையிலிருக்கும் செஞ்சதுக்கத்தில் (Red Square) என்னை நிறுத்திக் குறிப்பிட்டார்.
பிற காட்டாருடன் அன்பாகப் பழக வேண்டுமென்று சோவியத் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். பிற காட்டுச் சின்னங்களைச் சேகரிப்பதில் சோவியத் மக்களுக்குச் சிறப் பான விருப்பமுண்டு. கான் தங்கியிருந்த விடுதியில் பணி யாற்றும் அம்மையார் ஒருவர் என்னிடம் ஈழத்து காணயங் கள் உளவோ என்று வினவினர். பிற காட்டு காணயங்கள், மெடல் போன்ற சின்னங்கள் ஆகியவற்றைச் சோவியத் மக்கள், சிறுவர் உட்பட, அனைவரும் பேணிவருகின்றனர். நான் அணிந்திருந்த மாநாட்டின் சின்னங்களை வேறு சின்னங் களுக்காக அவருடன் மாற்ற விரும்பவில்லை என்றதும், சிறு வர் தாம் வைத்திருந்த சின்னங்களை நன்கொடையாக எனக் குக் கொடுத்தனர். அச்சிறுவர் கட்புக் கொண்டாடலைப் பெரிதும் விரும்பினர். சிறுவர் பலர் இவ்வாறு பிற காட்டா ரின் நாணயங்களையும் சின்னங்களையும் செஞ் சதுக்கத்தில் (Red Square) தேடிவருவதைக் கண்டேன்.
மாஸ்கோவிலிருந்து லெனின் கிராடுக்குச் சென்ருல் அங்கு மக்கள் பிற காட்டாரை இன்னும் மகிழ்ச்சியுடன் வரவேற்ப தைக் காணுதல் கூடும். ஜார்ஜியா, உஸ்பேக்கிஸ்தான் போன்ற அரசுகளில் பிற காட்டாருடன் பழகும் மனப்பான்

Page 57
94 ஒன்றே உலகம்
மையும், மகிழ்ச்சியும் மாஸ்கோவைவிட இன்னும் பன்மடங்கு விரிந்து இருக்கின்றது. கான் பிற நாட்டினர் ஒருவர் எனக் கருதி டிராம் வண்டியிலும், பஸ் வண்டியிலும், மக்கள் எழுந்து என்னை உட்காரச் சொல்லியது ரஷ்ய காடொன்றில்தான்.
ரஷ்ய காட்டினுடைய அரசியல் இயக்கங்களைப் பற்றி யும், பொருளியல் இயக்கங்களைப் பற்றியும், ஆராய்வதற்கு அத்துணை வாய்ப்புக்களை கான் பெறவுமில்லை; ஆராய விரும் பவுமில்லை. ஒரு காட்டின் அரசியல் இயக்கங்களை ஆராய்ந்து முடிவு கூறுவதென்றல் அங்காட்டுடனும், அங்ாகாட்டின் மக் களுடனும் பல காலம் பழக வேண்டும். பொதுவாகப், பொரு ளியல் துறையில் அங்கு வாழும் பெரும்பான்மையோர் மன அமைதியுடனே வாழ்கின்றனர் என்று எனக்குப் பட்டது. தம் காடு இன்னும் முன்னேற வேண்டுமென்றும், எதிர்காலத் தில் இன்னும் பல கலங்களையும், முன்னேற்றகளையும் அடை யப் போகின்றது என்றும் ரஷ்ய மக்கள் முழு நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இவ்வுணர்ச்சியுடன் அனைவரும் பணி யாற்றி வருகின்றனர். எங்கள் நாடு பெரிய நாடு’ எங்கள் நாடு அழகிய நாடு’, ‘நீங்கள் எங்கள் கலைக்கூடங்களைப் பார்க்க வேண்டும்', 'எங்கள் நூற்கூடங்களைப் பார்க்க வேண்டும்,” எங்கள் புத்தக நிலையங்களைப் பார்க்க வேண் டும்,? எங்கள் கல்விக் கழகங்களைப் பார்க்க வேண்டும்’ என்று பலர் நான் பார்க்க வேண்டிய இடங்களையும், காட்சிகளையும், நிலையங்களையும் குறிப்பிட்டனர். கலைக்கூடங்கள்
நான் மாஸ்கோவில் அனுபவித்த இடங்களுள் கலைக் கூடங்களும், காடகக் கூத்து அரங்கங்களுமே சிறந்தவை. மாஸ்கோவில் இருக்கும் புஷ்கின் கலைக்கூடமும் ரெத்திய கோவிக் கலைக் கூடமும் அளவில்லா மகிழ்ச்சியை எனக்குத் தந்தன. ரெத்தியகோவிக் கலைக்கூடத்தில் மாபெரும் ரஷ்ய ஓவியரின் ஒவியங்களைக் கண்டு மகிழ்ந்தேன். அங்கு வழிஸ்கின் எழுதியுள்ள இயற்கை வனப்பைக் காட்டும் படங்கள் என் கருத்தைக் கவர்ந்தன. மூன்று கரடிக் குட்டிகள் ஞாயிற் றின் இளம் வெயிலில் மரத்தின்மேல் விளையாடிக் கொண்டி ருக்கும் காட்சி இன்னும் என் கண் முன் தோன்றுகிறது. புஷ் கின் கலைக்கூடத்தில் பிரஞ்சு ஓவியர் பலரின் ஓவியங்கள் இருக்கின்றன. செசான் (Cezanne), மனே (Manet), மொனே (Monet), G35Ta5sTGöt (Gauguin), L9lö5stGofit (Picasso) (8ustGörp

சோவியத் ஒன்றகம் 95
ஓவியரின் முதற் படங்கள் (Originals) இந்நூற்றண்டின் முற் பகுதியில் சகோதரர் இருவரால் விலைக்கு வாங்கப்பெற்று இக்கூடங்களிற் பேணப்பட்டு வருகின்றன. கோகான் (Gauguin) என்பவர் எழுதிய படம் ஒன்று பசிபிக் தீவுகளில் மக்கள் வழிபடும் உருவம் ஒன்றைக் காட்டி அதில் *வைரமதி’ என்ற பெயரும் எழுதியிருப்பதைக் கண்டேன். அதன் கீழ் ரஷ்ய மொழியில் “இதை வைரமதி என்றழைப்பர்’ என்றும் குறிப்பிட்டிருந்தது. இப்படத்திலிருந்து பசிபிக் தீவுகளில் இந்துத் தெய்வங்களின் வழிபாடு இருத்தல் கூடுமென்று எண்ணுகின்றேன்.
லெனின்கிராடில் இருக்கும் ஹேர்மிடாஜ் (Hermitage) என்னும் கலைக்கூடம் பாரிஸ், லண்டன், பிளாரன்ஸ் போன்ற இடங்களில் இருக்கும் கலைக்கூடங்களைப் போல் சிறந்தது. அங்கிருக்கும் சிறந்த ஒவியங்கள் கணக்கற்றவை. பல காட்டு ஒவியரின் இணையற்ற ஒவியங்களை எல்லாம் அங்குத் திரட்டி வைத்திருக்கின்றனர். இவ் ஒவியக் கூடங்களில் இருக்கும் ஒவியங்கள் பல கிறிஸ்துவ சமயக் கொள்கைகளைப் பற்றி யவை ; பண்டை ரஷ்ய மக்களால் போற்றப் பெற்ற சமய ஒவியங்களும் இங்குப் பல உள. சமயத்தை வெறுத்த காலத்தி லும் இவ்வோவியங்களைக் கலையின் சின்னங்கள் என்றும், தம் வரலாற்றின் சின்னங்கள் என்றும், ரஷ்ய அரசு காப்பாற்றியது பெரிதும் போற்றத்தக்கது. இக்கலைக் கூடங்களுக்குப் பொது மக்களும்,பள்ளிக்கூட மாணவரும், காள்தோறும் சென்று கொண்டே இருக்கின்றனர். ஒவியங்களையும், சிற்பங்களையும். ஏனைய கலைச் சின்னங்களையும் கன்ருக அறிந்த ஆசிரியர் அவற்றின் அழகை மாணவர்க்குப் புகட்டி வருகின்றனர்.
லெனின்கிராடில் கான் கண்ட மற்ருெரு நுண்பொருட் காட்சிச் சாலை அத்துணைச் சிறந்ததாக எனக்குத் தோன்ற வில்லை. சமயங்களின் நுண்பொருள் கூடம் என்று அழைக் கப் பெறும் அவ்விடம் பண்டு ஒரு கோயிலாக இருந்தது. அங்குச் சமயங்களைத் தூற்றுமாறும், ஏளனம் செய்யுமாறும் பல பொருள்களையும் ஒவியங்களையும், செய்திகளையும் திரட்டி வைத்திருக்கின்றனர். சமயங்கள் என்ருல் மக்களின் சீர் திருத்தத்தை நிறுத்தும் கருவிகள் என்றும், முதலாளிகளின் செல்வாக்கைப் பெருக்கும் கருவிகளென்றும் கூறும் பான்மை யில் சமயங்களின் குறைகளையும், குருக்களின் குற்றங்களை யுமே காட்டுவதற்கு அந்த நுண் பொருட்கூடம் அமைந்

Page 58
96 ஒன்றே உலகம்
துள்ளது. பிற நூற்கூடங்கள் ரஷ்யாவின் பண்பு நி2லயைக் காட்டுமெனின் இந்த நுண்பொருட்கூடம் பொதுவுடைமை வாதிகளின் சமய வெறுப்பைப் பண்பற்ற முறையில் காட்டு கின்றது. இப்பொருட்கூடத்தை மூடுவாரெனின் ரஷ்ய நாடு அடையும் தீங்கு ஒன்றுமே இல்லை. இங்கு வரும் மாணவர்க் குச் சமயத்தின் குறைகளைக் கூறி காத்திகத்தைப் பரப்ப ஆசிரியர் முயல்கின்றனர்.
கலையில் சிறந்த கோவில்களையெல்லாம் அரசியற்றுறை கலையின் சின்னங்களெனக் காப்பாற்ற முயல்கின்றது; அங்கிருக்கும் ஓவியங்களையும், சிற்பங்களையும் பழுது பார்த் தும் வருகின்றது. புரட்சிக் காலத்தில் முறித்தெறிந்த சிலுவை கள் மீண்டும் கோபுரங்கள் மேல் தோன்றுகின்றன. இம்மன மாற்றத்திற்குக் காரணம் சமயப்பற்றின்றிக் கலைப்பற்றே யாகும். மக்களுக்கு வேண்டிய உயர்ந்த உணர்ச்சிகளை ரஷ்ய காடு கலைகளின் வழியாக உண்டாக்க முயல்வதாக எனக்குத் தோன்றியது. சமயத்தால் ஏனைய நாடுகளில் தோன்றும் சில உணர்ச்சிகளைக் கலைகளின் வழியாகப் பெற ரஷ்ய அரசு முயல்கின்றது.
ரஷ்ய மக்கள் பெரிதாக விரும்பும் கலை கூத்துக் கலை (Ballet), ரஷ்ய காடு இக்கலையில் பல நூற்ருண்டுகளாகச் சிறந்து விளங்கியுள்ளது. ரஷ்யக் கூத்தரும், விறலியரும் வெளிகாடுகளிலும் பெரும் பெயரும் புகழும் பெற்றிருக்கின்ற னர். விறலி உலகோவா (Ulanova) போன்றவர்களை ரஷ்ய மக்கள் வழிபட்டே வருகின்றனர். கூத்திற்கும், நாடகத் திற்கும் என்று மாஸ்கோவில் அமைந்திருக்கும் அரங்கிற்குப் பெயர் 'பால்ஷாய்’ (Bolshot). பால்ஷாய் அரங்கு பொன்னு லும் செங்கிறத்தாலும் மிகவும் அழகாக அணி செய்யப்பெற்ற, உலகில் முதன்மைபெற்ற கூத்தரங்கு அங்குக் கூத்துக்கள் ாகாடகங்கள், கூடல் இசையரங்குகள் நடைபெறும். அங்ாகி2ல யத்தில் நாடகங்களுக்காகப் பல்வேறு துறைகளில் தொழி லாற்றுபவர் ஏறக்குறைய ஐயாயிரம் மக்கள். ரஷ்ய நாடக ஆசிரியர் ஷேக்கோவ், கோகோல் போன்றவரின் நாடகங்களும் புரோக்கோபியவ் சைக்காவ்ஸ்கி பேன்றவரின் கூத்துக்களும் அங்கு நடைபெற்றதைக் கண்டேன். இக்கவின் கலைக2ள விரும்புபவர் அனைவரும் கூத்திற்கு இவ்விடமே உலகில் சிறந்தது எனக் கூறுவர். ரஷ்ய நாடெங்கும் கூத்தும் நாடக மும் வளம்பெற்று விளங்குகின்றன. கூத்திற்கென முந்நூறு

சோவியத் ஒன்றகம் 97
குழுக்கள் ரஷ்ய ககர்களில் இருப்பதாகவும், நாடகத்திற்கென மூன்றரை இலட்சம் குழுக்கள் இருப்பதாகவும், நூலாசிரியர் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்ருர், இசைமேல் ரஷ்யர் பைத்தி யம் கொண்டவர்கள் என்று வெளிகாட்டார் சொல்லி வருவர் இசைவல்லுங்கர் பலர் சென்ற நூற்ருண்டில் பெரும் இசைக. காப்பியங்களை யாத்திருக்கின்றனர். ரஷ்யாவில் அனே வரும் இசையில் ஈடுபட்டு வருவதைச் சிறு கேரமேனும் அவர் களுடன் உரையாடுவோர்க்குத் தெரியவரும். எனவே இசைத் தட்டுகள் விற்கும் கடைகளுக்குச் சென்ருல் அங்குச் சிறுவரும் முதியோரும் எங்கேரமும் குழுமியிருப்பதைக் காணுதல் கூடும். இசைத் தட்டுகளும் ரஷ்ய காட்டில் குறைந்த விலைக்கு விற் பனை ஆகின்றன. வெளிகாடுகளில் 15 வெள்ளி, 20 வெள்ளி பெறும் இசைத்தட்டுகளே ரஷ்ய நாட்டில் இரண்டு வெள்ளி மூன்று வெள்ளிக்கு வாங்குதல் கூடும்.
இசைத் தட்டுக் கடைகளைச் சிறுவரும் இளைஞரும் எங்ங் னம் விரும்புகின்றனரோ அவ்வாறே புத்தகக் கடைகளையும சிறுவரும் இளைஞரும் விரும்புகின்றனர். ரஷ்யாவில் இருக் கும் புத்தகக் கடைகள் பெரும் புத்தகக் களஞ்சியங்களாகவே தோன்றுகின்றன. புத்தகங்களைக் குறைந்த விலைக்கு விற்று அவற்றின் வாயிலாக அறிவினை எங்கும் பரப்ப விழைகின்ற னர். எல்லாப் பொருள்களைப் பற்றியும் புத்தகங்கள் உண்டு மேலும், அரிய விஞ்ஞான தத்துவங்களைப் பற்றியும் பொறி க2ளப் பற்றியும் எளிதில் மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய பொதுமக்கள் இலக்கியம் ரஷ்ய காட்டில் கன்ருக வளர்ந்து வருகின்றது. அங்குச் சிறுவர்க்கென எழுதப்படும் நூல்கள் அழகிய நிறப்படங்களையும் கொண்டு சிறுவரின் ஆற்றலை யும் உணர்ச்சியையும் கவரக்கூடிய தன்மையில் எழுதப்பெற் றிருக்கின்றன.
கலைக்கூடங்களுக்கும் நுண்பொருட் கூடங்களுக்கும் ரஷ்ய நாட்டில் குறைவில்லை. பெரியார் வாழ்ந்த இல்லங் களையும், அவர்கள் தோன்றிய வீடுகளையும், அவர்களின் பெயரால் கலைக்கூடங்களாக அமைத்திருக்கின்றனர். அத் தகைய கலைக்கூடமொன்று டால்ஸ்டாயின் பெயரால் மாஸ் கோவில் அமைக்கப்பெற்றுள்ளது. பதினைந்து ஆண்டு இளைஞ ணுக இருந்த பொழுது, "மறு உயிர்த்தல்” (Resurrection) எனும் அவருடைய நூலே கான் படித்ததால்தான் என் வாழ்க்கை சமயச் சேவையிலும் கல்விச் சேவையிலும் உருவாகியது
10 77-7

Page 59
98 ஒன்றே உலகம்
என்று நம்புகின்றேன். எனவே, டால்ஸ்டாயின் சின்னங்களைப் பார்ப்பதில் எனக்குச் சிறந்த ஈடுபாடு இருந்தது.
எல்லாக் க2லக்கூடங்களிலும் நுண்பொருட் கூடங் களிலும் சிறந்ததாக அமைந்தது கிரேம்லின் அரண்மனை (Kremlin) என்று சொல்லக் கூடும். அங்கிருக்கும் கோயில் களும், சார் (Czar) மன்னரின் மாளிகைகளின் அறைகளும் அரிய ஒவியங்களையும் பொருட்களையும் வரலாற்றுச் சின்னங் களையும் கொண்டவை. கிரேம்லின் ஒரு சிறு குன்றின்மேல் அமைந்திருப்பதால் பொலிவும் தோற்றமும் படைத்திருக் கின்றது. அதனைச் சுற்றி எழும்பும் கோட்டைச் சுவர்களும் கோபுரங்களும் செங்ாகிறமாக இருப்பதுடன் இரவில் அக்கோ புரங்கள்மேல் இருக்கும் விண்மீன் வடிவங்கள் காற்றில் சுழன்று ஒளி வீசிக்கொண்டே இருக்கின்றன. கிரேம்லினைப் பார்த்ததும் எனக்கு வத்திக்கானுடைய (Vatican City) நினைவு தோன்றியது.
கிரேம்லினில் பொதுவாக மக்கள் பார்க்கப்பெருத இடங் களே மாநாட்டுக்குச் சென்ற உறுப்பினர் அனைவரும் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. ஜார்ஜ் கூடம் என அழைக்கப்பெறும் கூடத்தில்தான் சோவியத் பிரதிநிதிகள் கூட்டம் கூடுவர். அக்கூடத்தின் அழகை உலகில் உள்ள பெயர்பெற்ற அரண்மனைக் கூடங்களுடன் ஒப்பிடுதல் கூடும். அக்கூடத் தில் மாகாட்டிற்கு வந்தவர்க்கென மாபெரும் சிற்றுண்டி விருந்து நடைபெற்றது. அச்சிற்றுண்டிக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் விருந்தினர் அழைக்கப்பெற்றிருந்தனர். ஜார்ஜ் கூடத்தை அடுத்திருக்கும் ஏனைய கூடங்களுக்கும் சிறு கோயில்களுக்கும் செல்ல அனுமதி அளித்தனர். சார் மன்னரும் அவர் மனைவி மக்களும் அக்கூடங்களில் ஒரு காலத்தில் வாழ்ந்தனர். இக்கூடங்களின் எழில்படைத்த சுவர் ஒவியங்கள் விவிலிய வரலாறுகள் பலவற்றைக் கூறுபவை.
கிரேம்லினுடைய வேறு சில கூடங்களில் சார் மன்னரு டைய விலையுயர்ந்த முடிகளும், அவர்களுக்குப் பிறகாட்டு மன்னர் கொடுத்த கன்கொடைகளும் காட்சியில் உள்ளன. கோயில் வழிபாட்டிற்குக் கையாளப் பெறும் கலங்களும் நூல் களும் வேருெரு கூடத்தில்வைக்கப்பெற்றிருக்கின்றன. அவற் றைப் போல் வி2லயுயர்ந்தவற்றை நான் வேறெங்கும் கண்டிலேன். சார் மன்னர் முடிசூட்டப்பெற்ற கோயிலும்,

சோவியத் ஒன்றகம் 99
அவரின் ஈமச் சடங்குகள் நிறைவேற்றப்பெற்ற கோயிலும் கிரேம்லினுக்குள்ளே இருக்கின்றன. அவை தொன்மையும் அழகும் வாய்ந்தவை. மக்கள் பெருந்தொகையாகச் சென்று அக்கோயில்களைப் பார்த்து வருகின்றனர். ஸ்டாலின் இறந்த பின்னரே கிரேம்லினின் அக்கூடங்கள் பொதுமக்களும் சுற்றுச் செலவாளரும் காண்பதற்குத் திறக்கப்பட்டன. சோவியத் நாடுகளின் பல பாகங்களிலிருந்து வரும் மக்கள் கிரேம்லினைக் கண்டு தம் காட்டின் பெருமையை உணர்ந்து வருகின்றனர். தொலைவில் நின்று கிரேம்லினைப் பார்த்தால் அதன் அழகிய பொன்னிறக் கோபுரங்களும் சிலுவைகளும் வீெளியே தோன்றும். மாஸ்கோவில் உள்ள கோயில்களின் கோபுரங்களைக் காணும்பொழுது ரஷ்ய காட்டின் அடிப்படைக் கொள்கை காத்திகம் என்று கம்புவது எளிதன்று. é} tDu ! ፬8ኳo
காத்திகமும் உலோகாயதமுமே சோவியத் காடுகளின் அடிப்படைக் கொள்கை, கல்விக்கும் ஆசிரியப் பயிற்சிக்கும் இக் கொள்கையும் தத்துவங்களுமே அடிப்படை வழிபாடு, தனி மக்களைப் பொறுத்தது என்றும், வழிபாட்டுச் சுதந்தரம் சோவியத் காடுகளில் உண்டு என்றும் சோவியத் எழுத்தாளர் வற்புறுத்தி வருகின்றனர். சென்ற சில ஆண்டுகளாகச் சமயச் சுதந்தரம் ஒருவாறு விரிவடைந்துள்ளது என்பது உண்மை. ரஷ்யாவில் இன்றும் காற்பதாயிரம் ரஷ்ய திருச் சபைக் குருக்கள் பணியாற்றுவதாகப்பிற காட்டு எழுத்தாளர் பலர் குறிப்பிட்டிருக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு கிழமை லெனின்கிராட்டிலும் ஒரு கிழமை மாஸ்கோவிலும் ரஷ்ய திருச்சபைக் கோயில்களைப் பார்ப்பதற்குச் சென்றி ருந்தேன். எல்லாக் கோயில்களிலும் ஆடவரும் பெண்டிரும் நிறைந்திருந்தனர். வழிபாடும் சிறப்பாக நடைபெற்றது. ஆயினும் கோயில்களிலிருந்த பெரும்பாலோர் முப்பது, ாகாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றே சொல்ல வேண்டும். மாஸ்கோவிலிருந்து காற்பது மைல் தூரத்தில் இருக்கும் சாகார்க்ஸ் (Sagorsk) எனும் சிறு நகரில் பெயர் பெற்று விளங்கும் ரஷ்ய திருச்சபைத் துறவி மடத்தையும் அங்குள்ள திருத் தொண்டரின் கல்லறையையும் பார்க்கச் சென்றேன். அத்திருக் கோயிலுக்கு ரஷ்யாவின் பல பாகங் களிலிருந்து திருயாத்திரையாக மக்கள் இரவும் பகலும் வந்து கொண்டே இருக்கின்றனர். அங்கு வழிபாட்டிற்கென்று வரும்

Page 60
1 00 ஒன்றே உலகம்
மக்களின் இறையன்பு முகத்தில் தோன்றுவதைக் கண்டேன். வழிபாடும் மனத்தைக் கவரும் முறையில் நடைபெற்றது. இசை, பாட்டு, அமைதி, பத்தி, இவை யாவும் என் உள்ளத் தைக் கவர்ந்தன. ரஷ்யக் கோயில்களின் சுவர்களில் ஒவியங் கள் நிறைய இருப்பதைக் கண்டேன்.
வழிபாட்டிற்கென ரஷ்ய அரசு அனுமதித்த கோயில் களின் தொகை குறைவேயென்று யாருக்கும் புலணுகும். ரஷ்ய திருச்சபைக்கென்று 1920ஆம் ஆண்டில் மாஸ்கோவில் ஐந் நூறு கோயில்கள் இருந்தன என்றும், இன்று ஐம்பது கோயில் களே உளவென்றும் கூறுகின்றனர். யூதருக்கும், இஸ்லாமி யருக்கும் என மாஸ்கோவில் அனுமதிக்கப்பெற்ற கோயில்கள் தொழுவோரினுடைய தொகைக்கு மிகவும் குறைந்தவை என்றே பலர் முறையிட்டு இருக்கின்றனர். ஆறு, ஏழு கத்தோலிக்கக் கோயில்கள் இருந்த மாஸ்கோவிலும் லெனின் கிராடிலும் இன்று ஒவ்வொரு கோயிலே உளது. இவ்விரு கோயில்களிலும் கான் வழிபடுவதற்குச் சென்றேன். பல காட்டின் சுற்றுச் செலவாளர் அங்குப் பூசைக் கடனைத் தீர்க்க வந்திருந்தனர்.அங்குள்ள கத்தோலிக்கர் ஈழத்திலிருந்து வந்த குருக்கள் ஒருவரை என்றும் கண்டிலராதலால் என்னைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். லெனின்கிராடில் அன்று ஞாயிற்றுக்கிழமை கான் நிறைவேற்றிய பூசை என் நினைவில் என்றும் இருக்கும். மக்கள் இடைவிடாது ஆர்கன் வாசித்துக் கொண்டும் திருப்பாடல்களைப் பாடிக்கொண்டுமேயிருந்தனர். சிறுவர் சிலர் கோயில்களில் தொண்டு புரிந்தனர். மலர் களும், செடிகளும் கோவிலின் எல்லாப் பாகங்களிலும் நிறைங் திருந்தன.
கோயிலில் சமய உரைகளை நிகழ்த்தக் கூடுமாயினும் வெளியே சமயப் பிரசாரம் செய்வதற்கு ரஷ்யாவில் உடன் பாடில்லை. பெற்ருேர் சமயப் பற்று உடையவராயின் தம் பிள்ளைகளையும் சமயப் பற்று உடையவர் ஆக்குவர். ஆணுல், பிற நாடுகளில் உள்ளவை போல் சோவியத் காடுகளில் சமய வளர்ச்சிக்கு வாய்ப்புக்கள் இல்லை.
சோவியத் குடியரசுகளில் ஒன்றைப் பார்க்க வேண்டு மென்று உஸ்பெக்கிஸ்தானுக்குச் சென்றேன். அங்குத்தாம் தாஷ்கென்ட், சாமர்க்கென்ட் என்னுமிடங்களில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதைக் கண்டேன். அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் இஸ்லாமைத் தழுவியவர்கள். தாஷ்கென்ட்

சோவியத் ஒன்றகம் 0.
என்னும் நகர் உஸ்பெக்கிஸ்தானுக்குத் தலைநகர். தாஷ்கென்ட் பல்கலைக் கழகத்தில் இந்திய, பாகிஸ்தான் கலைகளைச் சிறப் பாகப் பயின்று வருகின்றனர். புதிய கட்டடங்கள் எங்கும் தோன்றுகின்றன. அங்கிருக்கும் ஆட்சிச்சபையின்தலைவர் ஒரு பெண்மணி என்று எங்கள் ரஷ்ய வழிகாட்டி வற்புறுத்திக் கொண்டிருந்தார். தாஷ்கென்டில் புதியாககரை விட்டுப் பழைய ககரைப் பார்க்க நாங்கள் மூவர் விரும்பினுேம். காங்கள் அங்குச் செல்வதை ரஷ்ய வழிகாட்டிகள் விரும்பவில்லை. ஆயினும் காங்கள் வற்புறுத்தியதால், எங்களை அங்கு அழைத்துச் சென்றனர். அங்கிருக்கும் இல்லங்களும், மரங் களும் சுவர்களின் அமைப்பும் பாரசீக நகர்களின் அமைப்பைப் போல் இருந்தன. கடைத்தெருவில் மக்கள் எங்களைச் சூழ்ந்து பல கேள்விகள் கேட்டனர். பெண்களும் ஆடவரும் கல்வரவு கூறி எங்களை வாழ்த்தினர். சந்தையில் காட்டுப் புறங்களி லிருந்து வந்த பழவகைகள், ஆரஞ்சு, மாதுளம்பழம், கொடி முந்திரிப் பழம், குவியல்குவியலாகக் குவிக்கப்பெற்றிருந்தன. இம்மாவட்டம் பழங்களுக்கும் காய் கனிகளுக்கும் பண்டு தொட்டுப் பெயர் பெற்றது. சந்தையும் கடைத்தெருக்களும் தூய்மையாகவே இருந்தன. ஒருவன் ஒரு துண்டுக் கடுதா சியை நிலத்தில் எறிந்ததும் வேருெருவன் அவனைக் கண்டித்து அவ்வாறு செய்வது தவறு என்று சுட்டிக்காட்டுவதைப் பார்த்தேன். இங்ங்னம், சிலர் சட்டங்களை மீறும் பொழுது பிறர் கண்டித்து அவர்கள் சட்டங்களை அனுசரிக்குமாறு செய்வது இக்கால ரஷ்யாவில் ஒரு மரபாக இருக்கின்றது. உஸ்பெக்கிஸ்தான் ககர்களிலும் புதிய கட்டடங்கள் எழும்பு வதைக் கண்டேன். அத்தகைய கட்டடங்களைப் பார்க்கச் சென்றபொழுது சிறுவர் பலர் தழ்ந்து வந்தனர். அவர்கள் பள்ளிக்கூடங்களில் ஆங்கில மொழியைப் பயின்றுவருவதால் என்னுடன் ஆங்கிலம் பேசிப் பழக முயன்றனர்.
ஓய்வு நேரத்தைச் சிறப்பாகப் பிற்பகல் நேரத்தைப் போக்குவதற்குப் பண்பாட்டு அரண்மனைகளையும், இளமரக் காக்களையும் அமைத்து வருகின்றனர். சோவியத் நகர்களில் பண்பாட்டுக் கழகங்களுக்கு மக்கள் சென்று ஆடல் பாடல் களிலும் இதர கலைகளிலும் ஈடுபடவும் வாய்ப்புக்களை அளித்து வருகின்றனர். பண்பாட்டு அரண்மனைகள் சில பெரும் மாளி கைகளாகவே தோன்றுகின்றன. அம்மாளிகைகளில் நூற் கூடங்கள் திரைப்படச்சாலைகள், காடக காட்டிய அரங்குகள்

Page 61
02 ஒன்றே உலகம்
முதலியவை உள. தொழிலாளர் செதுக்கிய சிலைகள் சிலவற் றையும் எழுதிய ஒவியங்கள் சிலவற்றையும் நான் கண்டு பெரு வியப்படைக்தேன். பண்பையும், கலைகளையும் பொது மக்களிடம் பரப்புவதற்கு ரஷ்ய நாடுகள் செய்யும் முயற்சி போல் பிறநாடுகள் செய்வதாக நான் அறிந்திலேன். தாஷ் கென்டில் உள்ள ஸ்டாலின் இளமரக்காவிற்குச் சென்ற பொழுது அங்கு ஒரு பெரும் வனத்தில் செயற்கை ஏரிகளையும் விளையாட்டு அரங்குகளையும் ஏனைய பண்பாட்டுக் களரிகளை யும் கண்டேன். பெரும் தொகையான மக்கள் அங்குப் பிற் பகல் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதையும் பார்த்தேன். இல்ல வசதி கள் அருகியிருப்பதால் மக்கள் ஓய்வு நேரங்களில் இப்பொது இடங்களை காடுகின்றனர்.
பல துறைகளில் ரஷ்ய மக்கள் பெரு முன்னேற்றங்களை அடைந்திருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. கல்வித் துறையில் அவர்கள் அடைந்த முன்னேற்றத்திற்கும் எல்லையில்2ல. பொறியியல் வன்மையிலும், பிறமொழிப் பயிற்சியிலும், ஆராய்ச்சியிலும், பிற காடுகளினும் செம்மை யான திட்டங்களை வகுத்துவருகின்றனர்.ஆயிரத்துத் தொளா யிரத்திருபதாம் ஆண்டில் நூற்றுக்கு இருபது பேரே எழுத் தறிந்தவர்களாக ரஷ்யாவில் இருந்தனர். இன்று நூற்றுக்குத் தொண்ணுாற்ருென்பது பேர் எழுத்தறிந்தவர்களாக இருக் கின்றனர். வயதில் முதிர்ந்த ஒருசிலரும் காட்டுப்புறத்தின் மூலை முடுக்குக்களில் தப்பித் தவறி இருக்கும் ஒரு சிலருமே எழுத்தறியாதவர்களாக இன்று இருத்தல் கூடும். பிற காடு களைப் பற்றி ரஷ்ய மக்கள் கன்ருகப் பயின்று வருகின்றனர். *சிலோன்’ என்றதும் இலங்கையின் அரசியல் அமைப்பையும் மாற்றங்களையும் தாம் அறிந்திருப்பதாகக் கூறினர். செய்தித் தாள்களே பொது மக்களின் கல்விக் கழகம். அனைவரும் செய்தித் தாள்களைப் படிக்குமாறு ககர்களின் சிறப்பான இடங் களில் விளம்பரங்களைப் போல் செய்தித் தாள்களை விளம்பரப் பலகைகள் மீது ஒட்டியிருக்கக் கண்டேன்.
விஞ்ஞானத் துறையில் எத்துணை முன்னேற்றங்களை அடைந்திருக்கின்றனர் என்று கணிப்பது எளிதன்று, பிற நாடுகளில் பதிப்பிக்கப் பெறும் நூல்களைப் பற்றி அவர்களின் நூற்கூடங்கள் வழியாகவும், வெளியீடுகளின் வழியாகவும் நன்கு அறிந்து வருகின்றனர். பிற காட்டு அறிஞரோ பெரும்பாலும் ரஷ்ய மொழியை அறியாததால் ரஷ்யாவினு

சோவியத் ஒன்றகம் 10.
டைய முன்னேற்றங்களைப் பற்றியும் விஞ்ஞானத் துறை வளர்ச்சியைப் பற்றியும் ஆராயாது இருக்கின்றனர். சில பள்ளிக்கூடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர்க்குப் பிற மொழிகளின் மூலமாகவே ஆரம்பக் கல்வியையும் உயர் நிலைக் கல்வியையும் அளித்து வருகின்றனர். உலகில் இருக்கும் ஒவ் வொரு மொழியையும் நன்கு அறிந்த அறிஞரும், ஒவ்வொரு காட்டைப் பற்றியும் நன்கு பயின்ற வல்லுருரும், சோவியத் நாடுகளில் இருக்க வேண்டுமென்று அவர்கள் வகுக்கும் திட்டங்கள் பல.
ரஷ்யாவில் பெண்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபடு வதைக் கண்டேன். பால் வேற்றுமை ரஷ்யாவில் இல்லை யென்பது உண்மைதான். உயர்ந்த விஞ்ஞானிகளாகவும், தெருக்களைப் பெருக்குகின்றவர்களாகவும், லாரிவண்டி, டிராம் வண்டி, மோட்டார் வண்டி ஒட்டுகின்றவர்களாவும் பெண்கள் வேலை செய்கின்றனர். லெனின்கிராடுக்கு நான் சென்ற புகை வண்டி அமெரிக்கப் புகைவண்டிகளினும் தூய்மை படைத்த தாக இருந்தது. அவ்வண்டிகளின் தூய்மையையும், அழகை யும் அமெரிக்கரே போற்றினர். புகைவண்டிகளில் பணியாற் றியவர் அனைவரும் பெண்கள். இத்தகைய கடின வேலையை யும் திறமையுடன் ரஷ்யப் பெண்மணிகள் செய்து வருகின்ற னர். அரசியல் ஆட்சிக் குழுக்களிலும் பெண்கள் பலர் அமைக் திருக்கின்றனர்.
விஞ்ஞானப் பொறிகளில் ரஷ்ய இளைஞர்க்குப் பெரும் ஈடுபாடு உண்டு. இத்தகைய ஈடுபாட்டினை தான் ஜெர்மானிய காட்டிலும் கண்டிருக்கின்றேன். இரு நாடுகளிலும் பொறி யியல் காட்சிச்சாலைகளின் வழியாக இளைஞருடைய விஞ்ஞான ஆர்வத்தை வளர்க்க முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. புது மோட்டார் வண்டிகள் அல்லது அமெரிக்க மோட்டார் வண்டிகள் வீதிகளின் ஒரத்தில் நிறுத்தப்பெற்றிருந்தால் அங்கு இளைஞரும் தொழிலாளரும் குழுமிவிடுவர். மோட்டார் வண்டியின் பல பாகங்களையும் ஆராய்வர். அமெரிக்கர் எத்துறையிலும் தம்மை வெல்ல இடம் கொடுத்தல் ஆகாது என்பது இவர்களினுடைய ஆர்வம். இவ்வாறே அமெரிக்க இளைஞரும் ரஷ்யாவை எத்துறையிலும் தம்மினும் முன்னேற இடம் கொடுத்தல் ஆகாது என்ற ஆர்வம் கொண்டவர்.
ஏனைய நாடுகளில் காணப்படும் சிற்றின்ப விளம்பரங்களை ரஷ்ய காட்டில் கான் காணவில்லை. ரஷ்ய காட்டில் கள்ளுண்

Page 62
1 04 ஒன்றே உலகம்
ணுதல் மிகுதியாக நடைபெற்று வருகின்றது என்றும், அது அரசியலால் அடக்கப்பெற்றவர்களுக்கு ஆறுதலாகக் கருதப் படுகின்றது என்றும் எழுத்தாளர் சிலர் எண்ணி வருகின்ற னர். ரஷ்ய நாட்டின் சிறப்பான கள்ளிற்குப் பெயர் வொட்கா’ என்பதாகும். இதனைப் பருகுவோர் ஏனைய கள் வகைகளால் வரும் மயக்கத்தினும் பெரும் மயக்கத்தை அடைவர். ரஷ் யரோ வொட்காவை நம்மவர் சாராயம் குடிப்பதுபோல் ஒரே கொடிப் பொழுதில் குடித்துவிடுகின்றனர். வொட்காவைப் பருகும் எந்த மக்களும் அதன்பின் தங்கு தடையின்றி உரை யாடுவார்கள். கள்ளுண்ட வேளை உண்மை விளம்புகின்ற வர்கள் பலர் உளர். எனவே, அனுபவ அறிவில் கள்ளினை *உண்மை விளம்பி’ என்று தமிழர் கூறினர். இப்பெயர் வொட்காவிற்கும் செம்மையாகப் பொருந்தும்.
ரஷ்ய காட்டையும் ஐக்கிய அமெரிக்காவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது தனி மக்களின் சுதந்தரங்கள் ஐக்கிய அமெரிக்காவில் காப்பாற்றப்பெற்று வருவதாகவும் ரஷ்யாவில் தடுக்கப்பெற்று வருவதாகவும் எனக்குத் தோன்றுகின்றது. ரஷ்ய ஆட்சியில் செய்தித்தாள்களும், வானெலியும், கல்வியும், இன்னும் பல துறைகளும், அரசின் தனியாட்சிக்கே அடங்கி அரசினுடைய எண்ணங்களையும், கோக்கங்களையுமே பரப்பி வருகின்றன. பொதுவுடைமை அரசின் தத்துவத்தின் வண் ணம் இக்கருவிகள் அனைத்தும் அரசினுடைய சட்டங்களுக்கு ஒத்து இயங்க வேண்டும். பிற கொள்கைகளுக்கும் பிற கருத்துக்களுக்கும் போதிய இடமில்லை. ரஷ்யாவின் நூற் கூடங்களில் பொதுவுடைமையை ஆதரிக்கும் நூல்களைத் தவிர ஏனைய அரசியற்கொள்கைகளை ஆதரிக்கும் நூல்களை கான் கண்டிலேன். செய்தித் தாள்கள் விற்பனை ஆகும் இடங்களில் பொதுவுடைமைச் செய்தித் தாள்களைத் தவிர ஏனைய செய்தித் தாள்களைக் கண்டிலேன்.

11. இங்கிலாந்து
ஆங்கில காடு தன் பண்டைச் சிறப்பினைச் சிறிது இழந்து கொண்டே வருகின்றது. இரண்டாவது உலகப் பெரும் போர் (1939-45) நிகழ்ந்தபின் ஆங்கில நாடு அடைந்த சமூக மாற்றங்களைக் கண்டவர்கள் அங்ாநாட்டின் உலகச் செல்வாக் குக் குறைந்துகொண்டு போகும் தன்மையை உணர்வர். ஆயினும் ஏனைய காடுகளை விட ஆங்கில காட்டிற்கே ஆப்பி ரிக்க ஆசிய மாணவர் உயர் நிலைக் கல்வியைப் பெற இன் னுஞ் செல்கின்றனர். இந்தியாவிலிருந்து நான்காயிரத்திற்கு மேற்பட்ட மாணவரும், இலங்கையிலிருந்து ஓராயிரத்திற்கு மேற்பட்ட மாணவரும், மலாயா மாணவர் பலரும் அங்கு உயர்ாநிலைப் பல்கலைக் கழகக் கல்வியினைப் பெற்று வருகின்ற னர். ஆங்கில ஆதிக்கம் கம் காடுகளில் ஒரு காலத்தில் நிறு வப்பெற்று இருந்ததாலும், ஆங்கில மொழியை நாம் இன்னும் துணைமொழியாகக் கற்று வருவதாலும், ஏனைய மேலை (காடு களைவிட ஆங்கில நாட்டைப் பற்றி கம் மாணவர் இன்றும் விரிவாகப் படித்துவருகின்றனர். பருவ கிலை
ஆங்கில காட்டைப் பற்றி ஆங்கிலேயரும் ஏனையோரும் இடைவிடாது உரையாடும் பொருள், ஆங்கில காட்டின் பருவநிலையும் கால நிலையுமாம். அதன் கால நிலை வரை யறுத்துக்கூறுதல் முடியாத ஒரு செய்தி. எப்பருவத்திலும் காலையில் வெயிற் காய்ந்தாலும், மாலையில் பணி பெய்தல் கூடும். கோடையில் கல்ல வெயி2ல எதிர்பார்த்திருப்பவர் குளிர் காற்றையும் மழையையும் புய2லயும் அனுபவிக்க கேரி டும். எதிர் பாராத நேரங்களில் மழை பெய்தல் கூடும். ஆங்கி லேயர் ஏனையோரைவிட ஞாயிற்றின் ஒளியை ஒரு சிறிது காண்பினும் “எத்துணை அழகான காள்’ என்று எதிர்வரு வோருக்குக் கூறுவர். என் ஏவற் பணியாளன் ஒவ்வொரு விடியற்காலையும் என்னை எழுப்ப வரும்பொழுது, சாளரங் களின் திரையை நீக்கிவிட்டு, மப்பாயிருக்கும் காட்களிலும், “S9 paśulu 15TGir, gulu T.” (Beautiful day, Sir) GTGőT Mpu GJITypësu வான். என்றும் சிரித்த நீலவானத்தைக் காணும் காடுகளில்

Page 63
06 ஒன்றே உலகம்
வசிக்கும் கமக்கு ‘அழகிய நாள்” என்று இங்கிலாந்தில் குறிப்பிடும் இவ்வழக்கம் ககைப்பை உண்டாக்குவது இயல்பு. எனக்கு ஆங்கில காட்டின் மப்பும் மழையும் கிறைந்த வானம் எழுச்சியைத் தரவில்லை. அங்குத் தங்கியபோது ஆண்டில் இரு முறை அல்லது மும்முறை நீல வானம் உள்ள இத்தாலிய காட்டிற்கு அல்லது நீலக் கடற்கரை எனும் பிரான் சின் தென்பாகத்திற்குச் சென்று வெயிற்காய்ந்தும், அங்கு நூல்நிலையங்களில் படித்தும் இங்கிலாந்திற்குத் திரும்புவேன். ஆனல், வேனிற் பருவத்திலும் கோடையிலும் வெயில் எறிக்கும் காட்களில் இங்கிலாந்தின் காட்டுப்புறத்தைப்போல் அழகு படைத்த நிலங்களையும் வயல்களையும் காண்பது அரிது. இக்காட்டுப் புறத்தின் அழகை முந்நூறு, கானுாறு ஆண்டுகளாக ஆங்கிலேயர் காப்பாற்றி வந்திருக்கின்றனர். அவர்கள் காட்டில் பொறியியற் புரட்சி பெரும் பொறிநிலைய ஊர்களை உண்டாக்கியிருப்பினும், காட்டுப்புறம் இயற்கை யழகை இழக்கவில்லை. வயல்களைச் சூழ்ந்த தோப்புகளும் சோலைகளும், இடையிடையே பெருங்காடுகளும், இளமரக்காக் களும், கால்வாய்களும், ஓடைகளும், இயற்கையழகையும் விலங்குகளையும் பறவைகளையும் காப்பாற்றி வருகின்றன. இவர்களுடைய பெருங்காடுகளும் சிறுகாடுகளும், மக்கள் அடர்ந்த ககர்களிலிருந்து அடிக்கடி சென்று கற்காற்றையும் சோலையையும் அனுபவிக்கப் பயன்படுகின்றன. வின்ட்சர் காடு ஏறக்குறைய 5,000 ஏக்கர் பரவிய மரங்களை உடையது. அதைப்போன்ற பல காடுகளுக்கு மக்கள் சென்று இயற்கை யழகை நுகர்வர். ஆங்கில காடு போன்ற காடுகளுக்கும் வெப்பமண்டல காடுகளுக்கும், அங்காடுகளில் செய்யக் கூடிய உல்லாசப் பிரயாணங்களைப் பொறுத்தவரை பெரியதொரு வேற்றுமை உண்டு. அங்குச் சோலைகள் முதலிய இடங்களில் பாம்பு, தேள் முதலிய கொடிய உயிர்களுக்கு அஞ்சாது கடக்க வும் இருக்கவும் கூடும். புற்றரைகளில், பாசறை அமைத்து வாழுதல் கூடும். ஞாயிற்றின் வெப்பமும் கோடைக்காலத் தில் கொடுரமாக இல்லாததால் மக்கள் பல இடங்களுக்குச் செல்லுதல் கூடும். ஆணுல் ஆங்கில காட்டில் மழை எதிர் பாராத நேரத்தில் பெய்தல் வழக்கம்.
ஆங்கில காடு குளிர் காடு ; ஆங்கில மக்களும் உறைபனி போன்ற குளிர் மனப்பான்மை உடையவர்கள் என்பது உல கின் பொதுத் தீர்ப்பு. ஏனைய மக்களினும் ஆங்கில மக்கள்

இங்கிலாந்து O7
குளிர் போன்ற பான்மையுடையவர்களே. அறியாதவருடன் விரைவில் பேசமாட்டார் ; வெளிப்படையாகத் தம் எண்ணங் களைக் காட்டவும் மாட்டார். அவர் அண்மையில் வாழும் வேல்ஸ் மக்களும் ஸ்காத்லாந்து மக்களும் காட்டும் வெளிப் படையான தாராள குணம் தென் ஆங்கில மக்களிடம் தோன்றுவதில்லை. அடுத்த வீட்டில் இருப்பவர்களுடன்கூட அத்துணைப் பழகமாட்டார். உணவுச்சாலைகளில் அமைதி யாக இருந்து உண்பர். தாழ்ந்த குரலில் உரையாடுவர்" புகைவண்டி, பஸ்வண்டி, நிலம்புகு வண்டி முதலிய வண்டி களில் மக்கள் ஏனேய நாடுகளில் உரையாடுவதுபோல் உரை யா டா து, புத்தகங்களையும் ஏனைய வெளியீடுகளையும் படித்துக்கொண்டே இருப்பர். ஒரு முறை புகை வண்டியிற் செல்லும்பொழுது மேற்கட்டியிலிருந்த என்னுடைய பெட்டி ழே கழுவி விழுந்தது. அங்குள்ள ஆங்கிலேயர்களின் முகத்தில் யாதொரு வியப்புக் குறியும் தோன்றவில்லை. தொடர்ந்து செய்தித்தாள்களைப் படித்துக்கொண்டேயிருந் தனர். பல நூற்றண்டுகளாக ஆதிக்கம் படைத்தவர்களாகக் குடியேற்ற காடுகளிலிருந்து அருஞ் செல்வங்களைப் பெற் றிருந்ததால், படாடோபத்துடனும் சடங்குடனும் தம் வாழ்க் கையை நடத்தி வந்தனர். அச்சடங்கும் ஆசாரமும் இன்னும் ஆங்கில காட்டில் உள்ளன. அவர்களோடு கன்ருகப் பழகி அவர்களுடைய பனிமூடி போன்ற முகமூடியை அகற்றினுல் அவர்களைப் போன்ற சிறந்த கண்பர் இல்லை.
இலண்டன் மாநகரில் ஏனைய பெரும் நகர்களைவிடப் பல நாட்டவரை மிகுதியாகக் காணுதல் கூடும். தமிழர் பலர் இங்கு எப்பொழுதும் இருப்பதால் “தமிழ்ச் சங்கம்’ ஒன்று இடையிடையே தொண்டினை ஆற்றி வருகின்றது. இலண்டன் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் உலகின் பல நாடுகளிலிருந்து வரும் தமிழராவர். தென் இந்தியா, இலங்கை, மலாயா, பிஜி, போர்னியோ, தென்னுப்பிரிக்கா, டிரினிடாட் (Trinidad) போன்ற மேற்குத் திசை இந்தியத் தீவுகள் முதலிய இடங்களிலிருந்து வரும் தமிழ் பேசும் மக்களை இலண்டனில் கண்டிருக்கின்றேன். இடையிடையே இலண்டன் தமிழ்ச் சங்கத்தினர் தாம் கொண்டாடும் திரு. நாட்களில் தமிழ் விரிவுரைகளையும் தமிழ்க் கலை நிகழ்ச்சி களையும் நிகழ்த்திவருகின்றனர்.

Page 64
108 ஒன்றே உலகம்
நியூயார்க், ஐக்கிய அமெரிக்காவும் அன்று இலண்டன் இங்கிலாந்தும் அன்று. எனவே இலண்டன் மாங்கரைப் பார்த்ததும் இங்கிலாந்தைப் பார்த்துவிட்டோம என்று கருது வது தவறு. இங்கிலாந்தின் வனப்பை அறிதல் வேண்டு மாயின் காட்டுப்புறத்திற்குச் செல்லுதல் வேண்டும் ஆக்ஸ் போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக் கழக நகர்களைக் காண்டல் வேண்டும் ; காண்டர்பெறியெனும் (Canterbury) கோயில் நகரைப் பார்த்தல் வேண்டும் ; ஷேக்ஸ்பியர் தோன் றிய மாவட்டத்திலும், இயற்கைப் புலவர் வோர்ட்ஸ்வொர்த் பாடிய கம்பர்லன்ட் மாவட்டத்திலும் சுற்றுச் செலவு செய்தல் வேண்டும். அதன் பின் ஸ்காத்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து போன்ற நாடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபின் ஆங்கில காட் டைப் பற்றியும் ஆங்கில மக்களைப் பற்றியும் பேசவும் எழுதவும் கூடும். மாணவர் வாழ்க்கை
இலண்டனுக்குச் செல்லும் இந்தியரும் இலங்கையரும் போதியவாறு ஆங்கில மக்களுடன் பழக முயல்வதில்லை. இலண்டனுக்கு முதன் முறையாகச் சென்றதும், இந்திய மாணவர் இந்தியர் பலரைச் சந்திக்கின்றனர். இந்திய உணவு உண்பதற்காக அடிக்கடி இந்திய விடுதிகளுக்கும் இந்திய உணவுச்சாலைகளுக்குமே செல்கின்றனர். கல்விபயில்வதற்காக இலண்டனுக்குச் செல்வதால் தம் கல்வியை விரைவில் முடித்துக்கொண்டு தாய்காடு திரும்ப முயல்கின்றனர். எனவே, தம் கல்விக் குரிய தேர்வுத் துறையைத் தவிர்த்த ஏனைய கல்வித்துறைகளிலும் சமூக நட்பிலும் பங்குபற்று வதற்குத் தகுந்த மேற்பார்வையாளர் இன்றேல், இம்மாணவர் அத்துறைகளில் ஈடுபடுவதில்லை. இலண்டனை விட்டு வேறு நகர்களில் கல்வி பயிலும் இந்தியர் ஒவ்வோர் ஊரிலும் சிறு தொகையினராதலால், ஆங்கிலேயரைச் சங்திக்கப் பல வாய்ப் புக்கள் பெறுகின்றனர்.
ஆங்கில அரசியற் பண்பாட்டுச் சமூகத்தார், தம் காட் டிற்கு வரும் வேற்று காட்டு மாணவரும் ஆசிரியரும், ஆங்கி லேயரையும் அவர் வாழ்க்கை முறைகளையும் அறியாது தம் காடு திரும்புகின்றனர் என்பதை உணர்ந்து, பல கழகங்களின் வழியாக ஆசிய, ஆப்பிரிக்க மாணவர்க்கு, ஆங்கிலக் கலைகளை யும் ஆங்கில மக்களின் வாழ்க்கை முறைகளையும் அறியுமாறு ஆங்கில மக்களின் இல்லங்களில் வார முடிவையோ விடு

இங்கிலாந்து I 09
முறை நாட்களையோ கழிப்பதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்தில் கல்வி பயிலும் வேற்று காட்டு மாணவர்க்கெனப் பிரிட்டிஷ் கெளன்சில் (British Council) எனும் குழு பல கலைக்கூடங்களைச் சிறந்த இடங்களில் ஏற் பாடு செய்து உயர்ந்த ஆசிரியர் வழியாக ஆங்கிலக் கலைகளைப் பற்றி விரிவுரைகள் நிகழ்த்தி வருகின்றது. ஈரோட்டரி" (Rotary), “digpég-GSLDffgs (bljósgsp'' (East-West Friendship League) முதலிய கழகங்களும் தம்மால் இயன்றவாறு பிறகாட்டு மாணவர்க்கு ஆங்கில காட்டில் போதிய சமூகத் தொடர்பு வாய்ப்புக்களை அளித்து வருகின்றன.
இவர்களால் கடத்தப்பெறும் கோடைக் கல்விக்கழகங் களுக்கும், விரிவுரைகளுக்கும், சிற்றுண்டி பெருஞ்சோற்று விருந்துகளுக்கும், அவற்றை கடத்தும் பான்மையை அறி வதற்காக நானும் பன்முறை சென்றிருக்கின்றேன். வெளி காட்டு மாணவரை உபசரிக்கும் குடும்பங்களையும், அத்தகைய உபசரிப்பை ஏற்பாடு செய்யும் செயலாளரையும் கண்டு அவர் களுடன் கல்விபயிலும் வேற்று காட்டு மாணவர் செய்திகள் பற்றிக் கலந்து ஆலோசித்து வந்திருக்கின்றேன். பிற காட்டு மாணவர் தம் காட்டில் அனுபவிக்கும் தனிமையை எவ்வாறு அகற்ற முடியுமென்றே அவர் அனைவரும் என்னிடம் வினவி னர். கம் மாணவர் சிலர் வேற்று காட்டிற்குச் செல்லும் பொழுது அம்மக்களைப் பற்றிப் படிக்காமலும் மற்றும் பரந்த மனப்பான்மையை வளர்க்காமலும் செல்கின்றனர். வேறு சிலர் பிறகாட்டு மக்களின் நன்மதிப்பையும் அன்பையும் பெறும் ஒழுக்கத்தையும் முறைகளையும் தம் பழக்கத்தில் காட்டுவ தில்லை. ஒருசிலர் வறுமையின் காரணமாக மூலைமுடுக்கு களில் வாழ்ந்துவருகின்றனர். பிறாநாடு செல்லும் மாணவர் எவ்வளவிற்கு அங்காட்டு மக்களையும், மொழியையும் கலைகளே யும் அறிக் து தம் காடு திரும்புகின்றனரோ, அவ்வளவிற்குத் தம் கல்வியைச் சிறப்பிப்பதுடன் தம் காட்டிற்கும் பயன் தரு வர். எனவே மாணவர் தம் ஆளுமையை (Personality) வளர்ப் பதற்குக் கணக்கற்ற வழிகள் ஆங்கில காட்டில் உள. கலை ஈடுபாடு
இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் பொருட்காட்சிசாலை பல துறைகளில் முதன்மைபெற்றது.பல நாடுகளிலிருந்துகொண்டு வந்த பழம் பொருள்களை அங்கே காண்டல் கூடும். கிரேக்க நாட்டில் இல்லாத கிரேக்கப் பழம் பொருள்கள் இச்சாலையில்

Page 65
110 ஒன்றே உலகம்
உள. இன்று இந்திய நாட்டில் இல்லாத சில இந்திய சிற்ப வடிவங்கள் இச்சாலையில் இருக்கின்றன. ஒவிய சிற்பக் கலை களே அறிவதற்கு இலண்டனில் உள்ள கஷனல் கேலரியும் (National Gallery) Gill' (83, Gurful b (Tate Gallery) Gls,Girdri. டன் மியூசியமும் (Kensington Museum) உலகில் சிறந்தவை. பிற காடுகளில் உள்ள உயர்ந்த ஓவியங்களையும் சிற்பங்களை யும் விலைக்கு வாங்கித் தம் நாட்டிற் காப்பாற்ற வேண்டு மென்று ஆங்கிலேயரிடையே செல்வமுடையோரும் பொது மக்களும் கணக்கற்ற பொருளை நல்கியிருக்கின்றனர். ஓர் ஒவியத்தைப் பல்லாயிரம் பவுன் விலைக்கு வாங்கித் தம் ஒவியச் சாலைகளில் வைக்கின்றனர். இப்பொதுச் சாலைகளின் செலவுக்குப் பொதுமக்களிடமிருந்து சிறு தொகைகளைத் திரட்டிப் பெரு நிதியாக்குகின்றனர்.
ஆங்கில ஒவிய வல்லுகரின் படங்கள் சிறப்பாக நிலப் பரப்புகளை (Landscape) அழகாகக் காட்டுவன. தேருங்ச் (Turner), கன்ஸ்டபிள் (Constable), போன்றேர் ஆங்கில காட்டின் இயற்கை வனப்பைத் திறமையுடனும் மாட்சியுட னும் காட்டியுள்ளனர். கன்ஸ்டபிள் (Constable) என்பவர் நிலப்பரப்பைத் தீட்ட விரும்பும் ஒவியரைப்பற்றிக் கூறிய கூற்றென்று என் நினைவிற்கு வருகின்றது. *நிலப்பரப்பு ஒவியன், வயல்களில் பணிவான மனத்துடன் செல்ல வேண் டும். தற்பெருமையுள்ள மனிதன் எவனுக்கும் இயற்கையின் முற்றிய அழகு தென்பட்டதில்லை’.
மானுக்கன் இசைக்கலையில் ஈடுபட விரும்பின், அவ் ஈடு பாட்டிற்கு ஏற்ற இசையரங்குகள் இலண்டனில் கிழமை தோறும் பன்முறை நடைபெறுவதை உணர்வான். “பெஸ்டி வல் ஹால்' (Festival Hall) அல்லது ஆல்பெர்ட் ஹால்” (Albert Hall)6T6örgy fl-55 spg)5 doll lig (Luria, Gibb(Orchestras) வாய்ப்பாட்டு வல்லுங்ளும், பாடுகர் தொகைகளும் (choirs) இசைக்கூத்து (opera) வல்லுங்ளும், உலகின் எல்லாப் பாகங் களிலுமிருந்து வருகின்றனர். ஆங்கில மக்கள் ஐரோப்பிய ரைப் போல் பண்டுதொட்டு இசையில் ஈடுபட்டு அதனைச் சுவைத்து வந்தவர்கள் அல்லர். ஆனல் சென்ற கால் நூற் ருண்டில் மக்கள் அனைவரும் இசையில் ஈடுபட்டு இசையின் இன்பங்களை நுகர வேண்டுமென்றும், அந்நுகர்ச்சியின் பயணுகப் போரால் நிகழும் மனச்சலிப்பையும் பொறிக்கால வாழ்க்கையின் துன்பங்களையும் வெல்ல வேண்டுமென்றும்

இங்கிலாந்து II
கருதி, இசை நுகரும் பயிற்சியை முறையாகவே வானுெலி இசையரங்குகள் வாயிலாக மக்களுக்குப் பயிற்றினர். சிறுவர் இசையில் ஈடுபடுவதற்காகச் சிறுவர் இசையரங்குகளை இசை விளக்கத்துடன் நிகழ்த்தினர்; நிகழ்த்தியும் வருகின்றனர். சிறுவர்க்கான இவ் இசை அரங்குகளில் வல்லார் ஒருவர், வாசிக்கப்படும் இசைக் கட்டுரைகளைச் (Musical compositions) சிறுவர்க்கு விளக்கி இசையாசிரியர் காலத்தையும் அவர் கட்டுரையின் கருத்துக்களையும் பற்றிக் கூறுகின்றர். கெடு கேரம் இயங்கும் இசைத் தட்டுகள் நீண்ட அரங்குகளையும் பதிவுசெய்து ஒலிப்பதால் தம் இல்லங்களிலும் இசை நுகரும் பயிற்சியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கின்றது. மேல் காட்டு இசை, பாட்டு, கடனம் ாகாடகம் முதலிய துறைகளில் ஈடுபாடுள்ள பிறாகாட்டு மான வர்க்கு ஆங்கில காடு நல்ல வாய்ப்புக்களை அளிக்கின்றது, நான் இலண்டனில் தங்கியபோது உருசியர், இத்தாலியர், பிரான்சியர், ஜப்பானியர், சீனர், ஸ்பானியர், இராம் கோபா லின் இந்தியக் குழு இன்னுேரன்ன பல்வேறு காட்டினரின் கலை அரங்குகளுக்குச் சென்றிருக்கின்றேன்.
ஷேக்ஸ்பியருக்கு முற்பட்ட காலம் தொடங்கி ஆங்கி லேயர் நாடகங்களை விரும்பி வந்திருக்கின்றனர். இலண்டனில் காற்பதிற்கு மேற்பட்ட நாடக அரங்குகள் உண்டு. சில, ஷேக்ஸ்பியரின் காலத்தில் இருந்த அரங்குகள் அமைந்த இடங்களிலேயே இருக்கின்றன. இக்காடக அரங்குகள் ஒவ் வொரு நாளும் இரு முறை அல்லது மும்முறை நாடகங்களை அரங்கேற்றுகின்றன. இத்துணை நாடக அரங்குகள் காளிற் குப் பன்முறை காடகங்களே கடித்தும் ஒவ்வொரு காட்சிக்கும் மக்கள் கொட்டகை நிறையச் செல்கின்றனர். சிறந்த நாடகங் களுக்குப் பல காட்களுக்கு முன்னமே இடம் ஒதுக்குதல் வேண்டும். ஷேக்ஸ்பியருடைய நாடகங்களை ஷேக்ஸ்பியர் நாடகக் குழுவினர் 'குளோப் தியேட்டர்’ என்னும் அரங்கில், வாரத்தில் ஆறு நாட்கள் நடித்து வருகின்றனர். இங்கு இடம் ஒதுக்கம் செய்யாது சீட்டு வாங்குவது அரிதாக இருக் கும். ஷேக்ஸ்பியரின் நாடக நூல்களை மாணவர் தம்முடன் கொண்டு வந்து நாடகம் கடக்குமுன்னும் இடைவேளைகளி லும் அவற்றைப் படித்துக்கொண்டிருப்பர். மாணவர் பலர் மிகவும் குறைந்த விலைச் சீட்டுகளை வாங்கி அடிக்கடி காடகங் களைப் பார்ப்பர், அல்லது நின்றுகொண்டே பார்ப்பவர்களுக்

Page 66
I 12 ஒன்றே உலகம்
கென்று சில குறைந்த கட்டண இடங்கள் இருந்தால் நின்று கொண்டே காடகங்களைப் பார்ப்பர். இலக்கிய நாடகங்களின் மீது பொதுமக்களும் மாணவரும் பற்றுடையவராய் இருப் பது அவர்களுடைய உயர்ந்த நலனுய்வுச் சுவையைக் காட்டு கின்றது. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை ஷேக்ஸ்பியர் பிறந்த ஊராகிய, ஸ்டேர்ட்போர்டு-அன்-அவொன் (Stratford-onAvon) என்னுமிடத்தில் பார்க்கவும் கூடும். அவர் பிறந்த மாவட்டம் இயற்கையழகு பொலிந்த மாவட்டம். அங்குக் கோடைக்காலத்தில் இலண்டனிலிருந்து சென்று ஒரே நாளில் காட்டையும் காடகமொன்றையும் பார்த்துவிட்டு இலண்ட னுக்குத் திரும்புதல் கூடும். ஷேக்ஸ்பியரை ஆங்கில காடு ஈன்றது ஆங்கில காட்டின் இணையற்ற சிறப்பு. ஆங்கிலத் தின் அரசியற் செல்வாக்குக் குன்றினும் ஷேக்ஸ்பியரின் புகழ் குறித்து ஆங்கிலக் கொடி உலகெங்கும் பறக்கும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை நன்ருக ஆங்கில மொழியில் பயில்பவர் எல்லையற்ற இலக்கிய இன்பத்தை அடைவர் இலக்கியச் சுவையும், காடகப் பண்பும், உளநூல் திறனும், உலக வாழ்க்கையும் ஒருங்கே திரண்டு ஷேக்ஸ்பியரின் காட கங்களில் பொதிந்து கிடக்கின்றன.
ஆங்கில நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்ருலும், கோட்டைகளையும் கொத்தளங்களையும், பண்டை வரலாற்றுப் பொருள்களையும் காணுதல் கூடும். அந்தந்த வட்டாரத்தின் வரலாற்றைக் காட்டும் பொருட்சாலைகள் ஒவ்வொரு பேரூரி லும் உண்டு. வட்டார வரலாற்றைப் படித்தும் பயிற்றியும் வரும் வழக்கம் ஆங்கில நாட்டில் உண்டு. பழங்காலக் கோட்டைகளை அழகாகச் சீர்ப்படுத்திப் பழைய முறையில் திருத்திக் காப்பாற்றி வருகின்றனர். எனவே, ஆங்கில காட் L9.6i (3560ti (Danes) sbsti LDGör60Ti(Normans), Goj6ü6noi(Welsh), ஸ்கோத்தர் (Scots) ஆகியோர் பின்பற்றிய கட்டட முறை களைப் பல இடங்களிற் காணுதல் கூடும். ஆங்கில காட்டின் கோயில்கள் ஆங்கில கொத்திக் (Gothic) கட்டட முறையைப் பின்பற்றியவை. அப்பெரும் ஆசனக் கோயில்கள், கன்றற் பெரி (Canterbury), லின்கன், வெஸ்ட்மினிஸ்டர், யார்க் போன்ற இடங்களில் பேராற்றலுடன் தோன்றுகின்றன. அவற்றின் வேலைப்பாடும், மரத்தில் செதுக்கிய இருக்கை களும், கல்லறைச் சிலைகளும், நிலமான்ய காலத்துக் (Feudalperiod) கேடயச் சின்னங்களும், அக் கட்டடங்களின் வளைவு

இங்கிலாந்து 13
களும், நீண்ட சாளரங்கள் வழியாக ஞாயிற்றின் ஒளி உள் இருட்டை நீக்கும் பான்மையும், ஆங்கிலக் கோயில்களுக்குத் தனிச் சிறப்பை அளிப்பன. ஆங்கிலக் கட்டட முறையை இலண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் ஆசனக் கோவிலிலும் (Westminister Abbey), 9,5GroGusti (6), (8.5lb Gifl"g Lugia,2uds. கழகங்களிலும் காணுதல் கூடும். பல்கலைக் கழகங்கள்
ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களும் சில உயர்நிலைப் பள்ளிக்கூடங்களும் பண்டை ஆங்கில காட்டின் கல்விக்கு இணையற்ற இடங்களாக விளங்கின. செல்வருடைய மக்களும், செல்வருடைய ஆதரவு அல்லது சமய முதல்வரு டைய ஆதரவு பெற்ற வறிய மாணவரும் இங்குச் சென்று இவை தோன்றிய காலம் தொடங்கிக் கல்வி பயில்கின்றனர். ாகம் காடுகளிலிருந்தும் செல்வர் சிலர் தம் புதல்வரை இப்பல் கலைக் கழகங்களுக்கு அனுப்பி வக்தனர்; இன்னும் அனுப்பி வருகின்றனர். இரு பல்கலைக் கழகங்களுக்கும் ஏனைய கழகங் களுக்கும் இல்லாத சிறப்பு அவற்றின் பண்டை வரலாற்ருல் உண்டு. இப்பல்கலைக் கழகங்களில் கான் அனுபவித்த பெரும் பயனுவது விரிவுரையாற்றிய ஆசிரியரின் ஆழ்ந்த புலமையாகும். அவர்கள் பெரும்பாலும் பல மொழிகளைக் கற்றுத் தம் துறைகளில் ஆழ்ந்து செறிந்த அறிவு படைத்த வர்களாக விளங்குகின்றனர். தம்முடைய அறிவுத்துறைக்கே தம் வாழ்க்கையைச் செலவிட்டு வாழ்கின்றனர். கீழ்த்திசை மொழிகளிலும் இலக்கியங்களிலும் வரலாற்றிலும் ஏனைய துறைகளிலும், கீழ்த்திசையில் உள்ளோரினும் மேற்றிசை நாடுகளில் மேம்பட்டோர் உள்ளோரெனின், அவர்களுடைய புலமை போற்றத்தக்கதல்லவா ? இவ்விரு பல்கலைக் கழகங் களில் முற்றும் பயின்ற மாணவர் விரிந்த அறிவும், *பாடறிந்து ஒழுகும்” பண்பும் படைத்தவர் ஆகின்றனர். இவர்கள் பயில்வன இரண்டு மூன்று பாடநூல்கள் மட்டுமல்ல. இவர்கள் பல நூல்களைக் கற்கின்றனர். உடல், ஆற்றல்கள், உணர்ச்சிகள் அனைத்தையும் வளர்க்க முயல்கின்றனர். கள் அருந்தினும் அதனைப் பண்புடைய மனிதன் அருந்தும் பான் மையில் அருந்தி வருகின்றனர். உணவு அருந்துவதென்ருல், அதனைப் பண்புடன் அருந்தப் பழகுகின்றனர். இக்கல்விக் கழ கங்களில் உணவருந்துவோர் உணவின்மேல் தம் முழுக் கருத் தையும் செலுத்தி அதனைக் கவளம் கவளமாக விரைவில்
0 77-8

Page 67
114 − ஒன்றே உலகம்
விழுங்கமாட்டார். தம் நண்பருடன் பல அரிய பொருள்களைப் பற்றி உரையாடியே உணவு உட்கொள்வர். 260DTU TIL லுடன் உண்பதும் பருகுவதும் செவிக்கும் வயிற்றிற்கும் ஒருங்கே உணவையும் பானத்தையும் கொடுக்கின்றன. பாராளுமன்றம்
ஆங்கில வாழ்க்கை மரபில், கலந்து உரையாடலும் சொல் லாடலும் நன்கு அமைந்திருக்கின்றன. அதற்கு அவர்களு டைய பல்கலைக் கழக மரபும், பண்டைக் கிரேக்கர் உரையாட்டு விவாத மரபும் காரணங்களாக இருக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும் எதிர் கருத்துக்களை வழங்குவோர்க்குச் செவி சாய்த்து அவர்களுடைய கருத்துக்களுக்கும் போதிய மதிப்புக் கொடுப்பது ஆங்கிலேயர் கன்ருகப் போற்றும் மரபு. இவ் வியல்பிற்குச் சான்ருயிருப்பன அவர்களுடைய பாராளு மன்றப் பேரவைகள். ஆங்கிலப் பாராளுமன்றத்தைப் *பாராளுமன்றங்களின் அன்னை” யென்று அழைப்பர். ஏனெ னில் அங்கிருந்தே பாராளுமன்ற ஆட்சியும், கட்சி மூலமான குடியாட்சியும் உலகமெங்கும் பரவியுள்ளன. பாராளு மன்றத்தை கடத்தும் முறைகளைக் கற்பவர் அங்கு சென்றே கற்பர். பாராளுமன்றத்திற்குச் சென்று அங்குள்ள பெரும் மேடைக் கலை வல்லுங்ர் பேசுவதைக் கேட்பது சிறந்த அனு பவமாகும். :வினு நேரத்தில்’ உறுப்பினர் அமைச்சரிடம் கேள்வி கேட்பதும், அவர் விடை இறுப்பதும், எதிர்க்கட்சி யினர் குறுக்கிட்டு எதிர்விடை கூறுவதும், கலவரம் செய் வதும், அமளியில் சட்டசபைத் தலைவர் அசையாது அமைதி யாகக் கூட்டத்தைக் கொண்டு கடத்துவதும், குடியாட்சி முறைகளைப் பேணுவோர்க்கு மகிழ்ச்சி அளிக்கும். கான் பல பாராளுமன்றங்களுக்கு அவை கடைபெறும் பொழுது சென் றிருக்கின்றேன். இத்தாலியப் பாராளுமன்றமும் தென் அமெ ரிக்கப் பாராளுமன்றங்களும் ஜப்பானியப் பாராளுமன்ற மும் கலவரப் போட்டியில் பெயர் பெற்றவை. அங்குச் சில வேளைகளில் கைகலந்து சண்டையும் இடுவர். இலத்தீன் இன மக்கள் கொதிகொதிப்புடன் பேசுவர். ஆங்கிலேயரிடமோ பேச்சு முறையிலும் அடக்கமும் அமைதியும் எப்பொழுதும் தோன்றும்.
ஆங்கிலப் பாராளுமன்றம் அமைந்திருக்கும் வெஸ்ட் மின்ஸ்டர் பகுதி இலண்டன் மாநகரின் அழகிய பகுதிகளி லொன்று. அப்பகுதியின் அழகைக் காண்பதற்குத் தேம்ஸ்

இங்கிலாந்து 115
ஆற்றைக் கடக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் நின்று இலண்டனைப் பார்த்தல் வேண்டும். ஒரு புறம் சென்ட் பால் பேராலயமும் அதன் வட்டக் கோபுரமும் தோன்றும். இரு மருங்கும் அழகிய கட்டடங்களும் அலுவலகங்களும் காணப் படுகின்றன. மறு புறத்தில் பாராளுமன்றத்துக் கட்டடங் களும் வெஸ்ட் மின்ஸ்டர் பேராலயமும், எபிக்பென்’ (Big Ben) எனும் கடிகாரக் கூண்டும் அமைந்துள்ளன. இவை எப்பொழு தும் அழகு வாய்ந்த காட்சி அளிப்பன; ஆனல் மப்புள்ள காலையில் கூதிர்ப்பருவத்து இளஞாயிற்றின் கதிரொளியில் மிகவும் அழகாகத் தோன்றுவன.
இலண்டனில் மப்பும் மூடுபனியும் அடிக்கடி நிகழும். சில வேளைகளில் மூடுபனி காரணமாகத் தெருவில் இரண்டடி மூன்றடிக்கு அப்பால் பார்த்தல் இயலாது. வெளிச்சக் கம்பங் களோடு நடப்போர் மோதவும் வண்டிகள் ஒன்ருேடொன்று மோதவும் கூடும். இங்கேரங்களில் வண்டிகள் ஒட்டுவதை நிறுத்தி விடுவர். இலண்டன் மப்புடன் சில வேளைகளில் நஞ்சு கலந்த வாயு, காற்றில் மிதந்து வருவதுண்டு. அதனை உட் கொள்வோர் சிலர் இறந்துபடுகின்றனர். தம்மைக் காப்பாற் றிக் கொள்வதற்காக நச்சாகாயத்திலிருந்து பாதுகாக்கும் மூடி யொன்றை முகத்தில் மக்கள் அணிந்து செல்வர்.
வண்டியில் காட்டுப்புறங்களில் பனிக்காலத்தில் செல்வது ஆபத்தை விளைப்பதாகும். வண்டிகள் பனி ஈரத்தில் அகப் பட்டு வழுக்குதலால் தெருவை விட்டுப் பக்கத்து மரங்களுடன் மோதக்கூடும். பனியால் மூடியிருக்கப்பெறும் வயல்களில் புயற்காற்றுக் கடுமையாக வீசினுல் உருண்டு திரளும் பணி (Snow-Drifd) ஆடு, மாடுகளையும் சேர்த்து மலையோரங்களிற் புரட்டிப் பள்ளத்தாக்குக்களில் அவற்றை வீழ்த்திவிடும். மேயும் ஆடு மாடுகளைக் காப்பாற்றுவதே பனிப்புயல் நிகழும் பொழுது இடையரின் சிறப்புத் தொழிலாகும்.
இலண்டனும், இலண்டனுக்கு அண்மையில் இருக்கும் ஊர்களும் நிலக்கரி கொண்டு பொறித் தொழில்கள் இயங்கும் மாவட்டத்தில் இருக்கின்றன. எனவே, ஆகாயத்தில் கண் ணிற்கு எட்டாத கரித்துரள் பறந்து கொண்டே இருக்கின்றது. இலண்டனின் எந்தப் பாகத்திலும் சன்னலைத் திறந்து வைத் தால் அறைக்குள் கரித்துரள் ஒரு சில மணி நேரத்திற்குள் ஏராளமாகப் படியும். வெள்ளைக் காகிதத்தை அல்லது புத்த கத்தை என் மேசைமேல் காலையில் திறந்து வைத்துவிட்டுச்

Page 68
1 6 ஒன்றே உலகம்
சென்றிருக்கின்றேன். நினைவு மறதியால் சன்னலை அடைக்கா விடின், மாலையில் திரும்பும் பொழுது அவற்றின் மேல் கரித் தூள் நன்கு படிந்திருப்பதைக் கண்டிருக்கின்றேன். இலண் டனில் வாழ்ந்த மக்களின் சுவாசப் பைகளை அவர்கள் இறக்த பின் மருத்துவர் பிரித்துப் பார்த்த பொழுது அப்பைகள் முற்றும் கறுப்பு நிறமாக இருப்பதைக் கண்டனர் நாள் தோறும் கரித் தூசியுள்ள காற்றைச் சுவாசிப்பதால அம்மக் களின் சுவாசப் பைகள் கருங்றமாக மாறுகின்றன. கேரப் போக்கு
பெருங்கர்களில் கற்காற்றும் நல்லுறைவிடமும் இல்லாத மக்களின் உடலமைப்பும் உடல் கலமும் சீர்குலைந்து போவது வழக்கம். இலண்டன் மாநகரின் சேரி மக்கள் வாழும் தழ்ாநிலை ாகம் சேரி மக்கள் நிலையிலும் கீழ்ப்பட்டது. அவர்கள் தீக்காயும் வாய்ப்பில்லாததால் குளிர் காலத்தில் தாங்கொணுத் துன்பத் திற்கு ஆளாகின்றனர். அங்குள்ள குழந்தைகளின் உடல் நிலையையும் கலத்தையும் சீர்திருத்துவதற்காக நகராண்மைக் கழகங்கள், பால் பருகவும் மலிவான கல் உணவு அருந்தவும் பள்ளிக்கூடங்களிலேயே குழந்தைகளுக்கு வசதிகளையளித்து வருகின்றன. அவர்களும் அவர்கள் பெற்றேரும், கடற்காற் றையும் காட்டுப்புறத்துக் காற்றையும் உட்கொள்ள வேண்டு மென்று, புகை வண்டியாலும் பஸ் வண்டியாலும் நகரைவிட்டு விடுமுறை நாட்களிற் செல்வதற்குப் பல வசதிகளை ஆட்சி யாளர் அளிக்கின்றனர். இச்சிறுவர் நகரை விட்டுச் செல்வ தால் தம் அறிவையும் வளர்க்கின்றனர். அவர்களுட் பலர் இவ்வாய்ப்புக்களைப் பெருவிடின் ஆடுமாடுகளையோ, காட் டையோ, கடலையோ தம் இளம் பருவத்தில் காணுர்.
பொது விடுமுறை காட்களில் பல்லாயிரம் மக்கள் கடற் கரை ககர்களுக்கும் காட்டுப்புறத்திற்கும் இலண்டன் மாநகரி லிருந்து செல்கின்றனர். ஞாயிறு தோன்றும் நாட்களில் அங் கிருக்கும் பூங்காவனங்களுக்குப் பல்லாயிரம் மக்கள் செல்வர். கியூ? Gig (Tillb (Kew Gardens), “féLDITGoot ” தோட்டம் (Richmond Gardens) போன்ற வனங்களில், நடப்பதற்கும் இடமின்றி, மக்கள் குழுமியிருப்பர். பலர் வள்ளங்களை வன ஏரிகளில் செலுத்துவர். பலர் சாயும் நாற்காலிகள் மீது வெயி லில் உட்கார்ந்து புத்தகங்களைப் படிப்பர். ஆங்கிலேயர் எங்கும் புத்தகங்களையும் செய்தித் தாட்களையும் படித்துக கொண்டிருப்பர். உணவுச் சாலைகளிலும், வண்டிகளிலும்,

இங்கிலாந்து - 117
வாகனங்களிலும் நின்று கொண்டும் கடந்து கொண்டும் உட் கார்ந்து கொண்டும் புத்தகங்களைப் படித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் கம் மக்களைவிடப் பன்மடங்கு நூல் களைப் படிக்கின்றனர். கம்மவர்கள் உரையாடவும் வீணே உட்கார்ந்து இருக்கவும் எவ்வளவிற்கு விரும்புகின்றனரோ அவ்வளவிற்கு ஆங்கில மக்கள் நூல்களைப் படிக்க விரும்பு கின்றனர். உலகில் நூற் பதிப்புத் தொகையில் முதன்மை பெற்ற இடம் ஆங்கில நாடு. ஏனைய நாடுகளைவிட ஆங்கில காட்டில் பல நூல்களைப் பதிப்பிக்கின்றனர். ஆணுல் இவர்கள் படிக்கும் நூல்கள் அனைத்தும் உயர்ந்த நூல்கள் என்று சொல்வதற்கில்லை. இந்நி2லயைத் திருத்துவதற்கும் உயரிய வாசகச் சுவையைப் பரப்புவதற்கும் சில கழகங்கள் முயல் d565 sp60T. Liggs53. 35 p5lb (The Book League) GTGötlug. 3Gu6dor டனில் ஒரு பெரும் கிளப்’ போன்றது. இக்கழகம் கல்ல புத்தகங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவதுடன் புத்தகக் காட்சிகளையும் கடத்தி வருகின்றது. அங்கு நல்ல நூற்கூட மொன்றுண்டு. உறுப்பினரும் அவர்கள் விருந்தினரும் உணவு அருந்துவதற்கும் உரையாடுவதற்கும் சாலைகளுள.
*கிளப்' வாழ்க்கை நகர்களின் கூட்டுறவு வாழ்க்கைக்கு இன்றியமையாதது. இலண்டனில் விருந்தாக நான் சென்ற * கிளப்புகள்’ பல. அரசியல் கட்சிகள் தமக்குரிய கிளப்பு க2ளச் சீரிய முறையில் நடத்தி வருகின்றன. மொழிகளில் பற்றுடையோர் மொழிக் கிளப்புகளுக்குச் செல்கின்றனர். *கடல் கடந்த மக்கள் கிளப்' (Overseas Club) என்பது காமன் வெல்த் நாட்டவர்க்கென அமைந்த கிளப். “அத்தனியம் கிளப்' (Athenaeum Club) என்பது சிறந்த அரசியலாரும் அறிஞரும் ஏனைய பெரியோரும் செல்லும் உயர்ந்த கிளப். இந்தக் கிளப்பு களில் பானம் அருந்தவும், உணவு உட்கொள்ளவும், படிக்க வும், உறுப்பினர் சில நாட்களோ பல நாட்களோ தங்கவும், வசதிகள் உள. மேலும், இலண்டனில் வாழும் பிறகாட்டு மக்கள் தத்தம் காட்டவர்க்குரிய கிளப்புகளையும் கலைக்கழகங் களையும் நடத்துகின்றனர்; இவற்றின் மூலம் தம் காட்டிற் குரிய பண்பாட்டைப் பரப்புகின்றனர்.
ஆங்கிலேயர் விரும்பும் போட்டி விளையாட்டுக்களில் *கிரிக்கட்” முதல் இடம் பெறும். சிறு வயதிலிருந்தே பள்ளிக் கூடங்களில் 'கிரிக்கட்” நன்ருக விளையாடும் மாணவரைத் தெரிந்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றனர். ஆங்கில

Page 69
18 ஒன்றே உலகம்
நாடு ஏஜனய காமன்வெல்த் நாடுகளுடன் “கிரிக்கட்” ஆடும் பொழுது நாடெங்கும் பெரும் ஆரவாரமுண்டு. விளையாட்டு கடக்கும் மைதானத்திற்குச் செல்லாதவர்கள் வானுெலி, தொலைக்காட்சி, ஆகியவற்றின் வழியாக வி2ளயாட்டைப் பற்றி அறிந்து கொண்டிருப்பர். ஆங்கிலேயர் விளையாட்டு வழியாக விளையும் பண்பை மக்கள் உள்ளத்தில் வளர்த்து வருகின்றனர். ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் (Oxford, Cambridge) வள்ளப்போட்டி, டார்பி (Derby) குதிரைப் பந்தய ஓட்டம் முதலிய விளையாட்டுக்கள் அவர்களுடைய நாட்டு வாழ்க்கையில் பெயர் பெற்ற நிகழ்ச்சிகள். எகிரிக்கட்” போன்ற விளையாட்டால் நடுநிலைமை, நேர்மை, பெருந்தன்மை போன்ற பண்புகளை வளர்க்கின்றனர். “அது கிரிக்கட் அன்று’ (It is not cricket) எனும் வழக்குத் தொடரால், "அது நேர்மை அற்றது” என்னும் பொருளை வெளிப்படுத்து கின்றனர்.
ஆங்கிலேயருடைய இன வாழ்க்கையில் முடியரசு இது காறும் பேரிடம் பெற்றுள்ளது. உலகில் இன்று ஒரு சில நாடுகளில்தாம் அரசின் அடையாளமாகவேனும் மன்னர் இருக்கின்றனர். ஆங்கில நாட்டில் பெரும்பகுதியினர் அரச குடும்பத்தையும் அரசியையும் அன்போடு வாழ்த்தி வருகின் றனர். அரசி பாராளுமன்றத்தைத் திறந்து வைக்கும் பொருட்டுக் குதிரைமீது பவனிவருதல் மிகவும் அழகிய காட்சி. அதே முறையில் அமைந்தது ஆங்கில அரசரின் முடிதட்டு விழாச் சடங்கு அர சியே காட்டுப்பற்றிற்கு அடையாளமாக அமைகின்றர்.

12. பிரான்சு
ஐரோப்பாக் கண்டத்தில் கலையிலும் பண்பாட்டிலும் இலக்கியச் சிறப்பிலும் பல நூற்ருண்டுகளாகப் பெயர்பெற்று விளங்கும் காடு பிரான்சு நாடு. இந்த காட்டினுடைய வர லாற்றை ஆராயும்பொழுது பல வகுப்பினர், பல இனத்தவர் எவ்வாறு ஒரு காட்டவராக அமையக்கூடும் என்பது கன்ரு கப் புலப்படுகின்றது. பிரான்சு நாடு என்றும் ஒரே காடாக விளங்கிய நாடு அன்று. பல அரசுகளாகப் பிரிந்திருந்த நாடு பிற்காலத்திலேயே ஒற்றுமைப்பட்டு ஓர் அரசாகியது.
பிரான்சு நாடு என்றதும் மக்கள் பெரும்பாலும் பாரீஸ் மாககரைப் பற்றியே நினைப்பார்கள். ஐரோப்பாவில் இருக்கும் பல தலை நகரங்களுள் பாரீஸ் நகருக்குச் சிறப்பான அழகும் பெருமையும் உண்டு. பாரீஸ் நகர் பிரான்சு காட்டின் அரசாங் கத் தலைநகர் மட்டுமன்றிப் பல்வேறு துறைகளுக்கும் தலை நகராக விளங்குகின்றது. ஆயிரக்கணக்கான அமெரிக்க ரும், ஐரோப்பியரும் ஏனைய நாட்டவரும் அங்கு ஆண்டு தோறும் செல்கின்றனர். கல்வியில் சிறந்தோர் அதனைத் தலை நகராகக் கருதுகின்றனர். கலைகளை விரும்புவோரும் அதனைத் தலைாநகராகக் கருதி வருகின்றனர்; பொழுது போக்கைத் தேடுவோரும் அதனையே தலைாககராகக் கருதி வருகின்றனர்.
இலண்டன் மாாககரிலிருந்து பாரீஸ் நகருக்கு வந்து இறங் கியதும் ஆங்கில மக்களுக்கும் பிரான்சு மக்களுக்குமிடையே யுள்ள வேற்றுமைகள், வானவூர்தி நிலையத்திலேயே தெளி வாகின்றன. ஆங்கில மக்கள் அமைதியாகவும் கட்டுப்பாடா கவும் கடந்துகொள்கின்றனர். பிரான்சு மக்களோ தாராள குணத்துடனும் ஆற்றலுடனும் கடந்துகொள்கின்றனர். இவ்விரு காட்டவருக்கும் உள்ள வேற்றுமைகள் பல என்பதை இவ்விரு நாடுகளிலும் நீண்ட காலம் தங்கியவர்கள் கன்கு உணர்வர்.
ஒவ்வோராண்டும் பல்லாயிரம் மக்கள் பிரான்சு நாட்டுக் குச் செல்வதற்குக் காரணம் அங்குள்ள கலைச் செல்வங்களும் வரலாற்றுச் சின்னங்களுமாகும். தோட்ட வனப்புக்களை விரும்

Page 70
120 ஒன்றே உலகம்
புவோர் “வேர்ஸ்ஸை" (Versailles) என்னுமிடத்தில் உள்ள தோட்டத்தைக் கண்டுகளிப்பர். மரம் செடிகளின் அழகில் ஈடுபட்டு இன்புற விரும்புவோர் பொன்ரையின்புளோ? இளமரக்காவின் சோலைகளில் தங்கி ஓய்வு பெறுவர். பிரான்சு மக்களின் சீரிய வாழ்க்கை முறைகளை ஆராய்வோர் பதினுன்காம் லூயி மன்னர் கட்டிய பெரும் அரண்மனைகளை ஆராய்ந்து பார்ப்பர். ஒவியக் கலைகளைச் சுவைக்கும் மக்கள் லூவ்ர் (Louvre) என்னும் பொருட்காட்சிச்சாலைக்குச் சென்று அங்கு ஒவியங்களைக் கண்டு மெய்ம்மறந்து நிற்பர். மோட்டார் வண்டிகள் மாபெரும் முற்றவெளியில் சுற்றிச் செல்வதைக் காண விரும்புவோர் "கொங்கோர்ட்” (Place de la Concorde) அரண்மனை முன் இருக்கும் வீதி முற்றத்தைப் பார்த்துக் கொண்டிருப்பர். இசை நாடகத்தை விரும்புவோர் இசைாகாடக மாளிகைக்குச் (opera house) செல்வர். அமைதி விரும்புவோர் செயின் (Sene) ஆற்றங்கரையில் உலாவுவர். வீரத்தையும் போரையும் விரும்பும் மக்கள் நெப்போலிய மன்னருடைய சின் னங்களைக்கண்டு களிப்பர். பாரீஸின் வீதிகள், வீதிகளின் இரு மருங்கும் வளரும் மரங்கள், இரவில் வீதிகள் காட்டும் ஒளி வனப்பு, மக்களின் மகிழ்ச்சி உலா, இவை அனைத்தும் பாரீஸ் பட்டினத்திற்குப் பெயரையும் புகழையும் தருகின்றன.
பல உணவுச்சாலைகளும், குடிவகையிடங்களும் பாரீஸ் மாநகரில் உள. அவற்றுள் சிறந்ததாகிய எய்பெல் (Eiffel) உணவுச்சாலை இரும்புக் கோபுரத்தின் மாடி ஒன்றில் அமைக் கப்பட்டுள்ளது. அங்கு உணவு அருந்திக்கொண்டே பாரீஸ் மாககரின் முழுப் பரப்பையும் கன்ருகப் பார்த்தல் கூடும். எய்பெல் இரும்புக் கோபுரம் 3000 அடி உயரம் உள்ளது. அக்கோபுரத்தை இரும்பினுடைய வல்லமையையும் பயனை யும் காட்டுவதற்காக அமைத்தனர். அதனை நிறுவிய காலத் தில் உலகின் உயர்ந்த கட்டடமாக விளங்கியது எய்பெல் கோபுரமே. எய்பெல் கோபுரத்தின் உச்சிக்குப் பொறியேணி கள் வழியாகச் செல்லுதல் கூடும்."பாரீஸ் மாநகருக்கு வருபவர் கள் அனைவரும் இக்கோபுரத்தின் மாடிகளுக்குச் சென்று கக ரின் காட்சியைப் பார்ப்பர். எய்பெல் கோபுரம் பாரீஸ் மாநக ருக்குச் சின்னம்போல் அமைந்துள்ளது. இரண்டு மூன்று முறை கான் அம்மாடிகளுக்குச் சென்றபொழுது மழை பெய்த தால் பாரீஸ் நகரின் காட்சியைப் பார்க்க முடியவில்லை. ஆயி னும் ஒரு முறை கோடைகாலத் தெளிவில் அவ்வழகிய ஊர்ப்

பிரான்சு s 12
பரப்பைப் பார்த்து வியந்தேன். வெளியிலிருந்து பார்ப்போர் எய்பெல் கோபுரத்திற்குள் பலநிலையங்கள் இருப்பதாக அறிய மாட்டார்கள். ஆயினும் அங்கு உணவுச் சாலையும், வானுெலி நிலையமும், பல கடைகளும், பணியாளர் இல்லங்களும் அமைந்திருக்கின்றன.
பிரெஞ்சு காட்டின் அழகைப் பார்க்க வேண்டுமென்றல் அக்காட்டின் தோட்டங்களும் கோதுமை விளை நிலங்களும் உள்ள மாவட்டங்களுக்குச் செல்லுதல் வேண்டும். இத்தாலிய நாட்டைப் போல் கொடி முந்திரிகை, நில முந்திரிகை ஆகிய வற்றைப் பயிர் செய்வதில் பிரெஞ்சுக்காரர் கைதேர்ந்தவர். பிரெஞ்சு காட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள் களுள் மதுபானம் முதன்மை பெற்ற ஒரு பொருளாகும். முந்திரிகை ரசம், பிராந்தி ஆகியவை போன்ற வேறு கடும் குடி வகைகளும் பிரெஞ்சு நாட்டில் உண்டாக்கப்படுகின்றன. மதுபானம் பிரெஞ்சுகாட்டிற்குத் தீங்குஇழைக்கும் ஒருபொருள் என அண்மையில் கருதப்பட்டு வருகின்றது. எனவே சிலர் பால் பருகுவதை மக்களுக்குக் கற்பிக்க வேண்டுமென்று பெரு விருந்துகளிலும் மது அருந்தாமல் பாலைப் பருகிவருகின்றனர்.
பிரெஞ்சு காட்டு மக்களும் பிறகாட்டு மக்களும் கலந்து உறவாடும் ஓர் இடம் பிரெஞ்சு காட்டின் தென் பக்கக் கரை யோரம். அங்குத் தட்ப வெப்பங்லை கன்ருய் இருப்பதாலும், கெடு நிலக்கடலின் அக்கரையோரம் பல வசதிகளை அளிப்ப தாலும், கோடைக்காலத்திலும் கூதிர்க்காலத்திலும் பெரும் திரளான மக்கள் விடுமுறைக்கென அக்கரையோரத்தில் இருக்கும் நகர்களுக்குச் செல்கின்றனர். அக்கரையோரத்தி லிருக்கும் கீஸ், கான், மன்டேகார்லோ போன்ற துறைமுகங் களில் பலர் சிறு வள்ளங்களையும், மோட்டார் வள்ளங் களையும், நங்கூரம் இட்டிருப்பதைக் காணலாம். உள் காட்டு நகர்களில் இருப்பவர்கள் கடற்கரை வாழ்க்கை சிறிது காலத்திற்கேனும் இன்பமும் சுகமும் அளிக்கக் கூடும் என்னும் கோக்குடன் அங்ாககர்களுக்குச் செல் கின்றனர். ஐரோப்பிய வட பகுதியில் உள்ளவர்கள் குளிர் காலத்தில் அங்குச் செல்கின்றனர். ஐரோப்பிய எழுத்தாளர் சிலர் அங்கே தம்முடைய இல்லங்களை நிறுவி நூல்களை எழுதி வருகின்றனர். இப்பக்கத்தில் வாழ்ந்து வருபவர்களுள் சிறந்தவர் சமர்செட் மாம் (Somerset Maugham) என்னும் காவல் ஆசிரியர்.

Page 71
122 ஒன்றே உலகம்
மான்டேகார்லோ என்னும் சிற்றரசு சூதாடுவதில் உலகில் மிகச் சிறந்ததோர் இடமாகும். அங்குச் சூதாடும் பெரும் மாளிகை ஒரு கோயில்போல் கட்டப்பட்டுள்ளது. அதற்குள் ளாகச் சென்ருல் ததாடுபவர் மெய்ம்மறந்து தம் தொழிலில் ஈடுபட்டு இருப்பதைக் காணலாம். கல வளம்
ஆயினும் பிரெஞ்சு காட்டிற்குச் செல்பவர்கள் பாரீஸ் மாங்கரின் முதன்மையை உணர்ந்து பெரும்பாலும் பாரீஸ் நகரிலேயே தங்கிச் செல்வர். ஆங்கில காட்டிற்குச் செல்லும் போதும் திரும்பும்போதும் சில நாட்களேனும் நான் பர்ரீஸ் மாநகரில் தங்குவது வழக்கம். அங்குச் சிறிது கேரம் ஒய்வு பெற்ருலும் லூவ்ர் (Louvre) எனும் ஓவியச்சாலைக்குச் சென்று மிலோவின் வீனஸ் சிற்பத்தையும், லேயோனுடோதெவிஞ்சி யின் மோன லிசா என்னும் ஒவியத்தையும் பார்ப்பேன். வீன ஸ"டைய முக அழகையும் பெருமிதம் படைத்த பார்வையையும் மோனலிசாவின் புன்முறுவலையும் பார்ப்பது கலை உணர்வை நிரப்பும் காட்சியாகும். மேலும் பாரீஸ் மாநகரிலுள் கிமே (Guimet) பொருட்காட்சி நிலையம் கீழ்த்திசை நாடுகளின் அருஞ் சின்னங்களின் களஞ்சியமாக இருக்கின்றது. மத்திய கிழக்கு காடுகளிலிருந்தும் கீழ்த்திசை காடுகளிலிருந்தும் அரிய வரலாற்றுச் சின்னங்களைக் கொணர்ந்து இங்குச் சேர்த்திருக் கின்றனர். இப்பொருட்காட்சி நிலையத்தாரால் சிறப்பாக வெளியிடப்படும் ஆராய்ச்சி நூல்கள் பல கீழ்த்திசை காடு களின் கலை ஆராய்ச்சிக்கு இன்றியமையாத வெளியீடுகளாகத் திகழ்கின்றன. -
யுனஸ்கோவினுடைய தலைமைக் கட்டடம் பாரீஸ் மாநகரிலே நிறுவப்பெற்றுள்ளது. பல கலைகளையும் வளர்த்த பாரீஸ் மாாககரில் உலகத்தைக் கல்வியாலும் கலையாலும் விஞ்ஞானத்தாலும் இணைக்க முயலும் இக்கழகத்தின் தலை மைக் கட்டடம் இருப்பது பாரீஸ் மாாககருக்குப் பொருத்தமும் பெருமிதமுமாகும்.
மால்மேசோன் எனும் இடத்தில் நெப்போலியனுடைய மனைவி ஜோசப்பின் தங்கிய அரண்மனை இருக்கிறது. இவ் வரண்மனையில் இன்றும் கெப்போலியன் நூல் நிலையத்தி லிருந்த சில நூல்களைக் காப்பாற்றி வருகின்றனர். அந்நூல் களுள் பல சீன காட்டையும் இந்திய காட்டையும் பற்றியவை. கெப்போலியன், தம் ஆட்சி ஆசிய காடுகளிலும் பரவ வேண்

பிரான்சு 卫2密”
டும் என்று ஆசிய காடுகளைப் பற்றிய நூல்களைப் படித்து வந்தார் என்பதற்கு இவை சான்றக இருக்கின்றன. மேலும் இவ்வரண்மனையில் சிறந்த ரோசா மலர்த் தோட்டம் ஒன்று இருக்கிறது. ஜோசப்பின் அரசி ரோசா மலர்களில் பெரிதும் ஈடுபட்டாரென்றும் அதற்கென இத்தோட்டத்தை நிறுவிவங் தனர் என்றும் கூறுவர்.
பாரீஸ் மாநகரில் சிறந்த ஓர் இடம் மோன்மாதிர் எனும் குன்றின்மேல் அமைந்த புறநகர். இப்பகுதியில்தான் பண்டைக்காலம் தொட்டு எழுத்தாளரும் ஒவியரும் ஒழுக்க மற்ற மக்களும் வாழ்ந்து வந்தனர். ஒவியர் எழுத்தாளர் பலர் வறுமையில் தம் கலைச் செல்வங்களைத் தீட்டிய அறை களும் இங்குத்தான் உள்ளன.
பிரான்சு நாடு பல புரட்சிகளுக்கு இருப்பிடமாக வரலாற் றில் விளங்கியுள்ளது. இத்தாலிய நாட்டைப்போல அத்துணைக் கலைப்பண்பு படைத்த நாடாக வரலாற்றில் விளங்காவிடி னும், இத்தாலிய நாட்டில் தோன்றிய பல கலை இயக்கங்கள் பிரான்சு நாட்டில் பெரும் வளர்ச்சியை அடைந்தன. கட்டடக் கலையிலும், சிற்பத்திலும், ஒவியத்திலும் பிரான்சின் உயர்வை அங்கிருக்கும் கலைக்கூடங்கள் காட்டுகின்றன. இன்றும் இலக்கியத்திலும், தத்துவத்திலும், வாழ்க்கையின் முறைகளி லும், புதிய புதிய இயக்கங்களையெல்லாம் உண்டாக்கும் பெருமை பிரான்சு நாட்டிற்கே உரியதாகும். தமிழ்க் கலை
பிரான்சு நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்கும் பல நூற்றண்டு களாகத் தொடர்புண்டு. பிரான்சு நாட்டார் இந்தியாவிற்கு வந்திறங்கியபின், புதுவையைத் தம்முடைய தலைங்கர்ாக நிறு வினர். அங்ாகாள் தொடங்கி இந்தியாவுக்கு வந்த பிரான்சு காட்டார் பலர் தமிழ் மொழியைக் கற்று வந்திருக்கின்றனர். மேலும், தமிழ் மொழியைப் பிரான்சு காட்டில் கற்பதற்கு வழிகளும் கண்டிருக்கின்றனர். சென்ற நூற்றண்டில் பிரான்சு அறிஞர் பலர் தமிழ் நூல்களை மொழிபெயர்த்தனர்; தமிழ் நூல்களைப் பாரீஸ் நகரின் நூற்கூடங்களில் சேர்த்து வைக்கவும் முயன்றிருக்கின்றனர். பூர்னுேப் (Bournot), ஆரியேல் (Ariel), என்னும் இருவரும் சென்ற நூற்றண்டில் தமிழுக்கு அரும் பணியாற்றிய பிரான்சு அறிஞராவர். வான் சோன், பிலொக், பீலியோசா, மெல் போன்றவர்கள் இந்த நூற்றண்டின் தமிழறிஞர் ஆவர்.

Page 72
24 ۔۔۔۔ ஒன்றே உலகம்
ாகான் பாரீஸ் பட்டினத்தில் தங்கும்பொழுதெல்லாம் தமிழ் நூல்களும், ஏடுகளும் உள்ள நூற்கூடங்களில் படித்து வருவேன். கீழ்த்திசை மக்களைப் பயிற்றுவிப்பதற்காகச் சிறப்பான கல்விக்கழகம் ஒன்று அங்கு உண்டு. அக்கல்விக் கழகத்தின் நூற்கூடத்தில் பல பழைய தமிழ் நூல்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் இருக்கின்றன. தேசிய நூற் ởiod-L-ößGü (Bibliotheque Nationale) GJImpể5(5GODmpul u sąbiu9Tb பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள. இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடு களுமாம். பண்டைக் காலத்தில் முதல் முதல் ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் இந்நூற் கூடத்தில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் நன்ருக ஆராய்ந்து படித்து, அச்சிடுவது அறிஞர்களுடைய பெரும் கடமையாகும். அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்தபொழுது தற்காலம் அச்சிடப்பெருத நூல்கள் சில வற்றின் தலைப்பைக் கண்டேன். மாணிக்க வாசகர் பிள்ளைத் தமிழ்’, ‘சர்ளிப் புத்தகம்’, 'புதுச்சேரி அம்மன் பிள்ளைத் தமிழ்” போன்ற நூல்கள் அங்கு உள.
ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் பரவும் வகை பெரும் வியப்பை உண்டாக்குகின்றது. எதிர்பாராத இடங் களிலும் நூற்கூடங்களிலும் தமிழ் ஏடுகளைக் கண்டுள்ளேன்" சில ஆண்டுகளுக்கு முன் பாரீஸ் மாாநகரில் ஒரு ஐரோப்பியப் பெண்மணி தமிழ் ஏடுகள் சிலவற்றை விலைக்கு விற்க முயன்ற தாக அறிந்தேன் மேலும் நெப்போலிய மன்னர் தம்முடைய நூற்கூடத்தில் கம்பராமாயண ஏடு ஒன்றை வைத்திருந்த தாகவும், அஃது இப்பொழுது “பொன்ரையின்புளோ’ நூற் கூடத்தில் இருத்தல் வேண்டும் என்றும் பிரான்சு அறிஞர் ஒருவர் எனக்குக் கூறினர். கெப்போலிய மன்னர் நூற்கூடத் தில் அத்தகைய ஒர் ஏடு இருப்பின் அச்செய்தி வியப்பை உண்டாக்கத் தேவையில்லை. ஏனெனில் அவர் கீழ்த்திசை காடுகளுடைய இலக்கியங்களை அறிவதற்குப் பெரிதும் முயன்றவர். அவருடைய நூற்கூட நூல்களை பொன்ரையின் புளோவில் கான் பார்வையிட்டபொழுது இந்திய காட்டின் மரங்கள், பறவைகள் பற்றிய நூல்களையும் அங்குக் கண்டேன்.
கல்வியின் வரலாற்றை ஆராயும்பொழுது, பிரான்சு காட்டவர் தம்முடைய “சொற்பொன்’ (Sorbonne) பல்கலைக்

பிரான்சு 25
கழகத்தினரைக் கொண்டு பல நூற்றண்டுகளாகக் கல்வியை யும் ஆராய்ச்சியையும் வளர்த்திருக்கின்றனர் என்பதைஉணர் கின்ருேம். பண்டைப் பல்கலைக் கழகங்களினுடைய வரலாறு மிகவும் சிறந்த வரலாறு. மாணவரும் ஆசிரியரும் பெரும் இன்னல்களுக்கும், வசதிக் குறைவுகளுக்கும் ஆளாகி இருக் தனர். பதினன்கு, பதினைந்தாம் நூற்றண்டுகளில் "சொற் பொன்’ பல்கலைக் கழக மாணவர் தரையிலேயே உட்கார்ந்து விரிவுரைகளைக் கேட்டு வந்தனர். அவர்கள் உறங்கும் இடங் கள் சிறிதாகவும் வசதி குறைந்தவையாகவும் இருந்தன. அவர் உட்கொண்டு வந்த உணவும் எளிய உணவாகவே இருந்தது. விரிவுரையாளர் தம்முடைய உரையை வேகமாகக் கூறுங்கால் சில வேளைகளில் கற்களை எறிந்து அவர் வேக மாக உரையாற்றவிடாது மாணவர் நிறுத்தி வந்தனராம் தம்முடைய விரிவுரைகளை மாணவர் எழுதிப் படிகளை விற் பதைத் தடுப்பதற்காகவே விரிவுரையாளரும் விரைவாக விரிவுரை மன்றத்தில் பாடங்களை நடாத்தினர். சொற் பொன்’ பல்கலைக் கழகம் ஆங்கில ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களின் அமைப்பிற்கு எடுத்துக்காட்டாக அமைக் துள்ளது.
பிரான்சு நாட்டவர் சிந்தனையில் சிறந்தவர். பல இயக் கங்கள் பிரான்சு காட்டில் தோன்றி உலகெங்கும் பரவியுள் ளன. குடியரசு இயக்கமும் பிரான்சு காட்டில் பிறந்த ஓர் இயக்கமாகும். தனி மக்களின் மானம் உயர வேண்டும், அரச ருடைய தனி ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்ற கருத்துக்கள் பிராஞ்சிய சிந்தனையாளர் உள்ளத்தில் தோன்றிப் பிரான்சு காட்டில் பெரும் புரட்சி நிகழ்ந்தது. பிரான்சு நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு இந்தக் கொள்கைகள் பரவியதும் அமெரிக்கா விடுதலைப் போரில் ஈடுபட்டது.
பிரான்சு நாட்டின் பெயரைக் கேட்டதும் மக்கள் கெப் போலிய மன்னரைப் பற்றி நினைப்பது வழக்கம். கெப்போலிய மன்னர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவராயினும், தம்முடைய வலிமையாலும் பேராற்றலாலும், பிரான்சுக்கு ஒரு பேரரசை நிறுவிப் புகழுடன் சில ஆண்டுகள் அதனைக் காப்பாற்றி வந்தார். போரியலை கன்ருக அறிந்தவர்களுள் கெப்போலிய மன்னர் உலகில் சிறந்தவர் என்பது திண்ணம். எனவே, இன்றும் பிரான்சு காட்டவர் s9HG) u(b660)L—U u புகழைப் ப்ோற்றி, அவருடைய சின்னங்களையும், அவர் நினைவுக்காக

Page 73
126 ஒன்றே உலகம்
எழுந்த கட்டடங்களையும், சிற்பங்களையும், காப்பாற்றி வரு கின்றனர்.
பிரான்சு நாடு சிந்தனையில் சிறந்ததுபோல் இறை வழி பாட்டிலும் சிறந்த காடு. 'லூர்ட்ஸ்’ (Lourdes) ககர் எனும் பேர்பெற்ற திருப்பதிக்குப் பல ஆயிரம் மக்கள் உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் செல்கின்றனர். வட பிரான்ஸில் * லிஸியோ’ எனும் வேருேர் ஊர் உண்டு. அங்குக் கத்தோலிக்கர் பலர் திருச்செலவு சென்று வருவது வழக்கம். பிரான்சு காட் டின் கலைகள் வளருவதற்குச் சில நூற்ருண்டுகளில் பெருங் துணை புரிந்தது சமயம். பிரான்சு காட்டின் சிற்பக்கலையைச் சிறப்பாக கோதிக்” (Gothic) சிற்ப முறையென்று கூறுவர். இந்தச் சிற்ப முறையால் அமைந்த கோயில்கள் அங்குள்ள பெருங்கர்களில் விளங்குகின்றன. இக்கோயில்கள் மிகவும் உயரமாகக் கட்டப்பட்டு வெளிச்சமும் காற்றேட்டமும் கன்ருக அழகைப் பெருக்கும் வழியில் அமைந்துள்ளன. அக்கோயில் கள் எவ்வாறு அழகாக இருக்கின்றனவோ, அவ்வளவுக்குக் குறுநில மன்னர் நிறுவிய மாளிகைகளும் அழகாக இருக் கின்றன. பிரான்சு காட்டுக்குச் செல்பவர் அனைவரும் இந்த மாளிகைகளைக் (Chateaux) கண்டின்புறுவர்.
பிரான்சு காட்டினர் கன்ருக வாழ்ந்து, வாழ்க்கையில் மனிதன் காண வேண்டிய இன்பங்களை நுகர்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். பிரான்சுக்காரருடைய உணவுக் கலையும் கள் பருகும் கலையும் தனிக் கலைகளாகவே கருதப்பட்டு வருகின்றன. ஐரோப்பாவில் நல்ல உணவை விரும்புகின்றவர்கள் பாரீஸ் மாநகர உணவுச் சாலைகளுக்கே செல்வர்.பாரீஸ் பட்டினத்தில் மக்கள் அவசரமின்றி ஓய்வு பெற்றவர்களைப் போல் உட் கார்ந்து பசியூட்டும் மதுபானம் அருந்துவதை அவர்களுடைய வீதி வழியில் உள்ள உணவுச் சாலைகள் தோறும் காணலாம். பெரும்பாலும்இளைஞர் சிலருடைய வாழ்க்கை ரெஸ்டோறன்ஸ் (Restaurants) எனப்படும் உணவுச் சாலைகளில் நிகழ்வது போல் தோன்றும். பல்கலைக் கழக மாணவர் இவ்வாறு "ரூ செயின்ட் ஜெர்மெயின்’ (Rue St. Germaine) போன்ற வீதிகள் தோறும் உட்கார்ந்து இன்புறுவதையும் உரையாடுவதையும் காணும் பொழுது உணவு உட்கொள்ளுவது உயர்ந்த பண் பினைக்காட்டக் கூடியது எங்ங்ணம் என்பது புலணுகும்.

13. ஜெர்மனி
முதல் முதல் நான் ஜெர்மனிக்குச் சென்றது 1932 ஆம் ஆண்டில்; ஹிட்லர் ஆண்ட காலம் அது. பெரும் போர் மூள் வதற்கு ஒரு திங்கள் முன்பு அங்குச் சென்றதால் படைகளின் திரளையும், இளைஞர்களின் காட்டு வெறியையும் இன வெறி யையும் கண்டேன். ஹிட்லரை ஆதரிக்காத மக்கள் பலருடனும் உரையாடினேன். ஆரம்பத்தில், பெரும்பான்மை யோர் ஹிட்லரினுடைய இனக் கொள்கைகளையும் பேரரசுக் கொள்கைகளையும் ஆதரித்திலராயினும் படிப்படியாக காசித் (Nazi) தலைவர்கள் செய்தபிரச்சினையின் பயணுக மக்கள் பலர் அக் கட்சியை ஆதரிக்க ஆரம்பித்தனர். ஜெர்மனியில் அக் காலத்தில் வாழ்ந்த பலர், காசித் தலைவர்களும் அவர்களின் பணியாளரும் இழைத்த கொடுமைகளை அறியாமல் இருந்தனர் என்றும் கருத இடமுண்டு. மக்கள் அச்சத்தில் வாழ்ந்த காலம் அது. ஆயினும் வெளித் தோற்றத்திற்கு நான் கண்ட ஜெர்மன் மக்கள் அனைவரும் பண்பும் கற்குணங்களும் ஒழுக் கமும் உடையவர்களாகவே தோன்றினர்.
மயின்ஸ் (Mainz) என்னும் நகரிலிருந்து கொலோன் (Cologae) என்னும் மாங்கருக்கு ரைன் (Rhine) ஆற்றின் வழிச் சென்ற படகு ஒன்றில், ஆங்கில அறிஞர் ஒருவருடன் கானும் சென்றேன். தாம் சென்ற இடங்களில் ஜெர்மன் மக்கள் விருந் தோம்பலும், கட்பும் காட்டினரென்றும், இரு இனத்தாரும் ஒருவர் மற்றவரின் காட்டில் செலவு செய்தால் போரே நிகழ் வதற்கு வாய்ப்புத் தோன்ருது என்றும் கூறினுர். காடுகள் இடையே பகையும் போரும் தோன்றுவது எத்துணைச் செயற் கைச் செயல்களால் என்பதை உணர்ந்தேன். இயற்கையாக மக்கள் கட்பினையும் ஒற்றுமையையுமே விரும்புகின்றர்கள், அரசியலார் தம் பெருமையையும் ஆணவத்தையும் வளர்ப் பதற்காகவே போரினை ஆரம்பிக்கும் வெட்சித் துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஒரு காட்டின் பெருக் தொகையினர் ஆதரவு கொடுக்காவிடினும் கல்லோர் ஒதுங்கி இருப்பதால் தீயோர் திரண்டு அரசியலை இயக்கு

Page 74
128 ஒன்றே உலகம்
கின்றனர் என்னும் உண்மை எனக்கு ஜெர்மனியில் தெளி வாகத் தோன்றியது.
ரைன் ஆற்றில் நாங்கள் செல்லும் பொழுது அதே படகில் சென்ற ஜெர்மன் மக்களிடமிருந்து தம் காட்டைப் பற்றிய பல செய்திகளைக் கற்றுக் கொண்டோம். ரைன் ஆற்றின் இயற்கை அழகும் செயற்கை அழகும் படைத்த இனிய பகுதி மயின்ஸிலிருந்து கொலோன் மட்டும் உள்ளது. கரையின் இரு பக்கங்களிலும் எழுந்த மலைச்சாரல்களில் முந்திரிகைத் தோட்டங்களும் பழைய கோட்டைகளும் மாளி கைகளும் தோன்றின. படகில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆணுல் இரு கிழமைகளுக்குப்பின் இரண்டாவது பெரும் போர் ஆரம்பித்தது.
இரண்ட்ாவது உலகப் பெரும் போர் முடிவு பெற்றதும், ஜெர்மனிய நாட்டுக் கொலோன் நகரை மீண்டும் பார்க்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. கொலோன் நகரின் பல சேரிகள் இடிந்து, எரிக்கு இரையாக வீழ்ந்து பாழுண்டு கிடக்கும் காட்சி கவலைக்குப் பொருளாயிற்று. ஆயினும் மீண்டும் சில ஆண்டுகளுக்குப் பின் அங்குச் சென்ற பொழுது படிப்படியாக ஜெர்மன் மக்கள் தம் முயற்சியால் தம் நாட்டினை உருவாக்கி வரும் பெரும் ஆற்றலைக் கண்டேன்.
மீண்டும் அண்மையில் ஜெர்மனிக்குச் சென்றபொழுது கட்டடங்கள் சில நகர்களின் புறஞ்சேரிகளில் இன்றும் இடிந்து தோன்றினவாயினும், மக்கள் பண்டு கொண்டுள்ள சீரையும் சிறப்பையும் கண்டேன். போர் முடிவு பெற்றதும், அமெரிக்க அரசு ஜெர்மனிக்கு ஆற்றிய பொருளுதவியின் வி2ளவாக ஜெர்மன் மக்கள் விரைவில் தம் நாட்டினைச் சீர் திருத்திக்கொண்டார்கள். இன்று ஜெர்மன் நாட்டின் பொருள் நிலையும் முன்னேற்றமும் மாபெரும் வேகத்தை அடைந்துள்ளது. ஆதலால்தான் ஒரு நாடு முன்னேற வேண்டுமாயின் போரைத் தொடங்கித் தோல்வி அடைய வேண்டுமென்று பிற காட்டவர் நகையாகக் கூறிவருகின்ற னர். அண்மையில் மேற்கு ஜெர்மனிக்குச் சென்ற பொழுது, வெள்ளித்திரைப்படக் கூடங்களில் ஹிட்லருடைய படமோ பெயரோ எது காரணம்பற்றியும் தோன்றினுல் அங்குள்ள இளைஞர் இகழ்ச்சிக் குறியாகக் கூச்சலிடுவதைக் குறிப்பாகக் கண்டேன்.

ஜெர்மனி 29
சென்ற பெரும் போரில் ஏறக்குறைய இருபது லட்சம் ஜெர்மன் ஆடவர் உயிரை இழந்தனர் என்று கூறப்படுகின் றது. ஆதலால் கடுநிலை வயதில் இருப்பவர்களின் தொகை ஜெர்மன் காட்டில் குறைவாகவும், இளைஞர் தொகையும் முதி யோர்தொகையும் பெரிதாக இருப்பதாகவும் தோன்றுகின்றது. முதியோர் இன்று பெரும்பாலும் பிரான்சு நாட்டினுடைய கட்பையும் ஆங்கில காட்டின் கட்பையுமே விரும்பிவருகின்ற னர். இளைஞரோ ஐக்கிய அமெரிக்காவின் கட்பை விரும்பு வதுடன் ஐக்கிய அமெரிக்கரின் இக்காலப் பண்பாட்டுத் துறைகளிலும் அடையாளங்களிலேயும் ஈடுபட்டு வளர் கின்றனர். இத்தகைய காட்டம் சிறப்பாக அமெரிக்கப் படையினர் போருக்குப்பின் மேற்பார்வையாளராக ஜெர்மனி யில் பாசறை அமைத்த மாவட்டங்களில் மிகுதியாகத் தோன்றுகின்றது. ஆனல் பொதுவாகப் பல்கலைக்கழகங் களும், எழுத்தாளரும், அறிஞரும், ஜெர்மனியின் அமைப் பிற்குக் காரணமாக இருக்கும் பெரியோரும், பண்டை ஜெர் மன் பண்பாட்டின் முறைகளையே போற்றித் தழுவி வரு கின்றனர். ஜெர்மனியில் இன்றும் அதன் தனிப் பண்பையும் ஒழுக்க முறைகளையும் மக்களின் அடக்கத்தின் செறிவையும் ாகாம் காணுதல் கூடும்.
பிராங்பெர்ட்டில் இருக்கும் பெரும் வான ஊர்தி நிலை யத்தை அடைந்ததும் அதனுடைய மாபெரும் பரப்பு எனக் குத் தோன்றிற்று. ஜெர்மானிய வான ஊர்தி நிலையங்களுக் கும் இதர ஐரோப்பிய அமெரிக்க வான ஊர்தி நிலையங்களுக் கும் இடையே குறிக்கத்தகும் வேறுபாடு ஒன்றனை உணர்க் தேன். வான ஊர்தி நிலையங்களின் செயலகங்களும், செலவு செய்யும் மக்களும் அமைதியாகச் செயலாற்றிக் கொண்டிருந் தனர். அமெரிக்காவில் வான ஊர்தி நி2லயமென்ருல் சந்தைக் குரிய அமளியுடன் மக்கள் கடமாடுவார்கள். இங்குப் பெரும் அமளியில்லாமல் செலவு செய்வோரும் செயலகத்தாரும் தம் வேலைகளில் ஈடுபடுவதை ஒருவர் குறிக்காமலிருக்க முடி til UTģ5Je
பொறி இயல் துறைகளில் ஜெர்மனியர் எப்பொழுதுமே சிறந்தவர்கள். தொழிற் கல்வியிலும், பொறி இயல் கல்வி யிலும் திறமையான முறைகளைக் கடைப்பிடிப்பதை ரஷ்யா வினிலும் ஜெர்மனியிலேயே கண்டேன். ஜெர்மனியரினுடைய பொறிஇயல் துறைத் திறமையைக் கண்டுதான், ஜெர்மன்
077-9

Page 75
30 ஒன்றே உலகம்
மக்கள் ஒரு பெரும் காடாக இருப்பதைத் தடுத்து, சென்ற பெரும் போருக்குப்பின் வெற்றி பெற்றேர் மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி என இரு பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றனர் போலும். மேற்கு ஜெர்மனியில் இருக்கும் மக்களும் கிழக்கு ஜெர்மனியில் இருக்கம் பலரும் இப் பிரிவினை இயற்கைக்கு மாறன பிரிவென்றும், இவ்விரு பிரிவுகளையும் ஒன்ருக்குவதே ஜெர்மன் மக்களைப் பொறுத்த மாபெரும் பிரச்சினை என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். இப் பிரிவு மேற்கு ஜெர்மானிய மக்களின் வாழ்க்கையையும் அரசியல் அமைப்பினையும் எவ் வாறு பாதிக்கிறது என்பதை மேற்கு ஜெர்மனியின் தலைாகக ராகிய பெர்லின் கிழக்கு ஜெர்மனியால் குழ்ந்திருப்பதே காட் டும். ஜெர்மன் மக்கள் பெர்லினே (Berlin) தம் தலைநகராக இருத் தல் வேண்டும் என்றும், ஜெர்மனி ஒரு காடாக மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்றும் வாதாடுகின்றனர். கிழக்கு ஜெர்மனியிலிருக்கும் அரசியல் ஆட்சி சோவியத் அரசுடன் தொடர்புள்ளதாதலால் மேற்கு காடுகளோடு கட்பு வளர்க்கும் மேற்கு ஜெர்மனியுடன் ஒன்றுபட விரும்பாது இயங்கி வருகின்றது.
பெர்லின் நகரின் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்ட மேற்கு பெர்லினையும், கிழக்கு பெர்லினையும் சுற்றிப் பார்த்தேன். பெர்லின் ககர் போருக்கு முன்பே ஐரோப்பாவின் மிகவும் அழகிய தலைநகராகவே இருந்திருத்தல்வேண்டும். அவ்வள விற்கு அகலமான அழகான இராச வீதிகளும், மாளிகை களும், இல்லங்களும் அங்கு இருந்தன. நகரின் திட்ட அமைப்பும் மாபெரும் எதிர்கால கோக்கினைக் காட்டியது. பத்தொன்பதாம் நூற்ருண்டில் இக்கால முறைகளைப் பின் பற்றியே அமைக்கப்பட்ட ககராதலால் ஏனைய பழைய ஐரோப்பியத் தலைநகர்களினும் சிறந்த வசதிகளைக் கொண்டது பெர்லின் ககர். மேற்கு பெர்லினைக் கிழக்கு பெர்லினிலிருந்து பிரிப்பதற்காக கிழக்கு ஜெர்மன் அரசு ஒரு சிறு சுவரையும் எழுப்பிக் கிழக்கு ஜெர்மனியில் இருக்கும் இல்லங்களின் ஜன்னல்களைக்கூட செங்கற்களால் மறைத்துள்ளது. சென்னை மாககரை மவுண்ரோட்டை நடுக் கோடாகக்கொண்டு இரு ககர்களாகப் பிரிப்பது போல்தான் பெர்லினையும் பிரித்திருக் கின்றனர். மேற்கு பெர்லினில் உள்ள பெர்லின்வாசிகள் கிழக்கு பெர்லினுக்கோ கிழக்கு ஜெர்மனிக்கோ குறிப்பிட்ட, காட்களில் மட்டுமே செல்லுதல் கூடும். அவர்களினுடைய

ஜெர்மனி N 131
உறவினர் அதே ககரின் கீழ்ப் பாகத்திலோ தம்மைச் சூழ்ந் திருக்கும் கிழக்கு ஜெர்மனியிலோ வாழ்ந்து வந்தாலும், அவர்களைப் பார்ப்பதற்கு வாய்ப்பின்றித் தவிக்கின்றனர். ஆதலால் மேற்கு பெர்லினை மகிழ்ச்சிக்குரிய இடமாக வெவ் வேறு வகைகளில் இன்பமூட்டி அவர்களின் சோக நிலையைக் குறைக்கப் பார்க்கின்றது மேற்கு பெர்லின் அரசு. மேற்கு பெர்லினில் பழைய ஜெர்மன் பாராளுமன்ற மாளிகை உள் ளது. அந்தக் கட்டடம் மேற்கு ஜெர்மன் எல்லையிலிருந்து பல கல் தொலையில் இருந்தாலும் ஆண்டின் பாராளுமன்றத் திறப்பு விழாவிற்குப் பிரதிநிதிகள் அனைவரும் அங்கேயே வானவழியாகச் செல்கின்றனர். இந்தியத் துறை w
பொன் (Bonn) நகர்தான், மேற்கு ஜெர்மனியின் தற்காலி கத் தலைாககரமாகக் கருதப்பட்டு வருகின்றது. போருக்குமுன் ஒரு சிறு நகராக இருந்த பொன் நகர் இன்று அரசியல் அலுவலகங்களின் நகராக வளர்ந்துகொண்டே வருகின்றது. *பொன்? வரலாற்றில் சில சிறப்புக்களைப் பெற்ற நகர். பேதோ வன் என்னும் மாபெரும் இசை வாணர் வாழ்ந்த நகர் பொன் நகர். இந்தியப் பகுதி முதல்முதல் ஜெர்மனியப் பல்கலைக் கழகத்தில் தோன்றியது பொன் ககரில். பிரடிரிக் வழிலேகல் (Fredrick Schlegel fl. 1818) என்பவர் பாரிஸ் நகரில் போரின் காரணமாகத் தங்கியதால் அங்கு அதே காலத்தில் வாழ்ந்த (Alexander Hamilton) அலெக்ஸாண்டர் ஹெமில்டன் என் னும் ஆங்லேயரிடமிருந்து வடமொழியைக் கற்றர்.
போர் முடிந்ததும் பிரடிரிக் வழிலேகல் இந்திய மொழியும் ஞானமும் பற்றிய நூலொன்றினை எழுதி வெளியிட்டார். அவர் தமையனுர், வில்லியம் ஷிலேகல் என்பவர் வடமொழியை நன்கு கற்று பொன்ாநகரில் நிறுவப்பட்ட புதுப் பல்கலைக் கழகத்தில் இந்தியத்துறைப் பேராசிரியராக அமர்ந்தார். ஜெர் மனியில் முதலில் நிறுவப்பட்ட இந்தியத் துறைப் பேராசிரியர் கட்டில் பொன் பல்கலைக் கழகத்ததே.
அக்காலம் தொடங்கி ஜெர்மன் பல்கலைக் கழகங்கள் வட மொழிப் பயிற்சியிலும், திபெத்திய மொழிப் பயிற்சியிலும் பாலி மொழிப் பயிற்சியிலும், புத்தம் சமணம் போன்ற சமயங் களின் ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்கின. அதே நூற்றண்டில் வாழ்ந்த பிரடிரிக் ரூக்கர்ட் (Friedrich Ruckert) என்னும் பெரும் புலவரைப் பற்றிய செய்தி தமிழ் நாட்

Page 76
1. 32 ஒன்றே உலகம்
டினர்க்கே பெரும் வியப்பினைத் தருதல் கூடும். இவர் ஜெர் மனிய காட்டின் பெரும் புலவராகக் கருதப்படுகின்றர். சுவை யான செய்யுட்களை இயற்றியதுடன் பல மொழிகளையும் கற்றிருந்தார். வடமொழியிலும் வல்லுங்ர். தமிழ்ை அறிய வேண்டிய நிகழ்ச்சி ஒன்று கேரிட்டதால் கான்கு மாதத்தில் தமிழைக் கற்று மிகவும் பயனுள்ள இலக்கணத்தையும் அகராதியையும் யாத்தார். இவரது வியத்தகு வன்மையைப் பற்றியும் புலமையைப் பற்றியும் ஜெர்மனியில் பேராசிரியர் பலர் என்னிடம் கூறினர். . . . .
ஆணுல் ஜெர்மன் மக்கள் முதல் முதல் இந்திய மொழி களுடன் தொடர்பு கொண்டது தமிழ் நாட்டிலேயே. தரங்கம் பாடிக்கு வந்த ஜெர்மன் போதகர் தமிழ் மொழியின் அமைப் பையும் தமிழ் இலக்கியங்களேயும் பயின்ருர், சீகன்பால்க் (Ziegambalg,B.) இவர்களுள் தலைசிறந்தவர். இவர் தமிழ் நாட்டி லிருந்து எழுதிய கடிதங்கள் நூல் வடிவமாக 1710ஆம் ஆண்டில் அச்சேறின.பின், ஐரோப்பாவில் தென் இந்தியா வைப் பற்றிய பெரும் விருப்பையும், வியப்பையும் உண்டாக்கி யது. இவருடைய சமயத் தொண்டிற்கு ஆதரவாக இருந்த பல்கலைக் கழகம், இன்று கிழக்கு ஜெர்மனியில் இருக்கும் ஹல்லே (Hale) என்னும் நகரில் உண்டு. அங்கு 1716ஆம் ஆண்டிலேயே, அக்காலத்தில் ஐரோப்பாவின் பொது மொழி யாக இருந்த இலத்தீன் மொழியில், தமிழ் இலக்கண நூல் ஒன்றினை அச்சிட்டனர். அக்காலம் தொட்டு இன்றுவரை ஹல்லே என்னும் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய வர லாறும், மொழிப் பயிற்சியும் சிறப்புத் துறைகளாக விளங்கு கின்றன. இன்றும், சீர்காழியில் ஏழு ஆண்டுகளாகச் சமயத் தொண்டு புரிந்த ஆர்னுே லெமன் (Arno Lehmann) என்னும் அறிஞர் தமிழ்த் துறைக்குத் தலைவராகப் பணியாற்றுகின்றர். அங்கிருந்து பல தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களும், ஆராய்ச்சி நூல்களும் கட்டுரைகளும் கம் வரலாற்றிற்கு அடிப்படையான கடிதங்கள் முதலியவையும் வெளிவந்துள்ளன.
வடமொழிப் பயிற்சிக்கும், ஆராய்ச்சிக்கும் ஜெர்மன் காடு இதுகாறும் சிறந்து விளங்கியது. திராவிடப் பண்பாட்டினைப் பறறி நான் உரை நிகழ்த்திய ஹம்பேர்க் (Hamburg) பல்கலைக் கழகத்தில், சமண சமய ஆராய்ச்சியில் பல்லாண்டுகளாக ஈடு பட்டு வந்துள்ளனர். அங்கு உள்ள துபிரிங் (Schubring), அல்ஸ் டோவ் (Alsdorf) போன்ற அறிஞர் பழைய இந்திய ஏடுகளை

ஜெர்மனி − 33 .
யும் அச்சில் பதிப்பித்துள்ளனர். தமிழ்ப் பாடமும் நடைபெறு கின்றது; ஆணுல் வடமொழியும் வடகாட்டுக் கலைகளுமே சிறப்பாக ஆங்குப் போதிக்கப்பட்டு வருகின்றன. முன்ஸ்டர் (Munster) என்னும் நகரிலும் விரிவுரை ஒன்று நிகழ்த்தினேன். முன்ஸ்டர் என்னும் ககர் மிகவும் அமைதியான நகர். அங்கு உள்ள பல்கலைக் கழகத்தில் ஏறக்குறைய பத்தாயிரம் மாண வர்கள் பயின்று வருகின்றனர். தாமஸ் ஹாக்கர் (Thomas Hacker) என்னும் பெயருடைய பேராசிரியர் இந்தியத் தத்து வத்தில் பெயர் பெற்றவர். இந்தியாவையும் கன்கு அறிந்தவர். இன்னும் ஒருசில ஆண்டுகளில் தமிழ்மொழி கற்பிக்க விரிவுரையாளர் ஒருவரை அமைப்பதாக என்னிடம் கூறினுர், ஜெர்மானிய காட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் பெருங் தொகை மாணவரைக் கொண்டவை. மியூனிக் (Munich) பல் கலைக் கழகத்தில் காற்பதாயிரம் மாணவர் பயின்று வருகிருர் கள். ஹைடல்பெர்க் (Heidelberg) பல்கலைக் கழகம் அதன் தழ்நிலை காரணமாகவும், வரலாற்றின் காரணமாகவும் சிறப் புற்று விளங்குகிறது. அங்குத்தான் கீழ்த்திசைக் கலை ஆராய்ச்சிப் பகுதி ஒன்றினை அண்மையில் ஆரம்பித்துள் ளார்கள். பொதுவாக ஜெர்மன் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவரின் வாழ்க்கை, இன்பமும், மகிழ்ச்சியும் உள்ள வாழ்க்கை என்றே கூறுதல் வேண்டும். உறுதியான படிப் புடன், ஆடலும் பாடலும் அவர்கள் வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை ஊட்டி வருகின்றன. ஒரு பல்கலைக் கழகத்தில் பயிலும் மாண வர் ஓர் ஆண்டு அல்லது சில ஆண்டுகள் ஆங்குப் பயின்ற பின்னர், வேறு ஓர் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் சேர்ந்து அதே துறைகளில் தொடர்ந்து பயில்தல் கூடும். பல பல்கலைக் கழகங்களுக்குச் சென்று இவ்வாறு தமது பயிற்சியைத் தொடர்ந்து நடத்துவதால் மாணவர் சிறந்த பேராசிரியர் பல ரிடம் பாடம் கேட்பதோடு தம் பட்டறிவையும் பெருக்கிக் கொள்கின்றனர்.
ஜெர்மன் பல்கலைக் கழகங்கள் பெரும்பாலும் பெரும் நகர் களிலேயே நிறுவப்பட்டுள்ளன. அத்தகைய நகர் ஹம்பேர்க் என்னும் வடபாகத்தில் உள்ள துறைமுக நகர். நான் ஹம்பேர்க்கில் தங்கிய காலத்து இத் துறைமுகத்தின் எண்ணுாருவது ஆரம்ப விழாவைக் கொண்டாடினுர்கள். அங் நகரின் மாந்தர், அப்பரந்த துறைமுகத்தின் எல்லாப் பகுதி களிலும் கப்பல்களிலும், கொடிகளும் ஒளி அணியும் செய்திருக்

Page 77
134 ஒன்றே உலகம்
தார்கள். ஹம்பேர்க் மக்கள் தம் துறைமுகத்தைப் பற்றிப் பல்லாண்டுகளாக வளர்த்த பெருமையை அவ்விழாக்காலத்தில் மிகுதியாகக் காட்டினர்கள். பண்டை வரலாற்றில் ஹம்பேர்க் நகர் ஒரு தனி ஆட்சி நகராகவே விளங்கி, வேறு அரசிற்கு உட்படாது, தனது சுதந்திரத்தைக் காப்பாற்றி வந்த நகர். துறைமுக நீர்ப்பரப்புடன் அழகிய ஏரிப் பரப்பும் ஹம்பேர்க் குக்கு உண்டு. அவ்வேரியில் நல்ல வெயில் எறிக்கும் காட் களில் பல்லாயிர வெள்ளைப் பாய் விரித்த வள்ளங்களை விளை யாட்டாக ஒட்டும் காட்சியைக் காணலாம்.
ஜெர்மனியில் உள்ள பெரும் நகர்களின் கடைகள் அனைத் தும், ஜெர்மனியின் செல்வத்தையும், பொறி இயல், மற்றும் தொழில்களின் வளர்ச்சியையும் தெளிவாகக் காட்டுகின்றன. அக்கடை வீதிகளைப் பார்க்கும் பொழுது அம்மக்களின் செல்வ வாழ்க்கை புலப்படுகின்றது. ஹம்பேர்க்கில் ஜப்பானியப் பொருட்களைக் கடைகளில் கண்டேன். ஜப்பானில் செய்யப் படும் வானுெலிப் பெட்டிகளும், இதர பொருள்களும் ஜெர்மானிய காட்டில் ஜெர்மன் பொருள்களைவிட மலிவாக இருப்பதால், அங்கு மிகுதியாக விற்கப்படுகின்றன.
ஜெர்மனியில் பிரயாணம் செய்வதற்குப் புகை வண்டிகள் மிகவும் சீரிய முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் வேகமாகச் செல்லும் முதல் வகுப்பு மட்டுமே உள்ள ரெயில் வண்டிகள் சில, ஜெர்மனியின் பெரும் ககர்களுக்குச் செல் கின்றன. அத்தகைய புகைவண்டியிலே கான் பெற்ற வசதி யொன்றினைக் குறிப்பிடவேண்டும். அதாவது கடிதங்களையும் ஏனைய கட்டுரைகளையும் வரைவதற்கு எனச் சுருக்கெழுத்துச் செயலாளர் ஒருவரின் உதவியை ஒவ்வொரு புகைவண்டி யிலும் அடைதல் கூடும். இச் சுருக்கெழுத்தாளருக்கு எனத் தனிப் புகைவண்டிப் பெட்டி இருக்கின்றது. அங்குச் சென்று: கான் எழுத வேண்டிய கடிதங்களை உரைத்தேன். அங்குள்ள சுருக்கெழுத்தாளர் ஆகிய அம்மையார் கான் உரைத்த கடிதங் களை விரைவில் தட்டச்சிட்டுக் கையொப்பம் இடத் தந்தார்கள். இத்தகைய வசதியை வேறு நாடுகளில், தங்கும் விடுதிகளில் மட்டுமே பெற்றிருக்கின்றேன். ஆணுல் வேறு எந்த காட்டிலும் புகைவண்டியில் சுருக்கெழுத்தாளர் வசதியை நான் பெற் றிலேன். இத்தகைய வசதிகள் செலவு செய்வோர்க்குப் பெரும் துணை கல்கக் கூடியன. வான ஊர்திகளிலேயே சுருக்கெழுத் துச் செயலாளரும், முடிவெட்டும் தொழிலாளரும் இருப்பின்

ஜெர்மனி I 35
செலவு செய்வோரிடமிருந்து அவர்களுக்குப் போதிய வேலை கிடைக்கும்.
ஜெர்மனியின் சில பாகங்களில் உடல் கலத்திற்கேற்ற உப்புக்களைக் கொண்ட நீர்ச் சுனைகளும், ஊற்றுக்களும் பல உள. இவற்றை நீராடும் இடங்கள் எனப் பொதுவாகக் குறிப் பிடுவார்கள். இவ்வூர்களின் பெயரும் பாட் (Bad-Bath) எனும் விகுதி அல்லது பகுதி பெற்று இருக்கின்றன. எனவே பாட் GlasfTL-6ío Gll fi 5 (Bad Godesberg, Bad Reichenhall) L (TL-T6ör பாடான் (Baden Baden) போன்ற பெயர்களை ஜெர்மனியின் படத்தில் பார்க்கலாம். இங்குச் சிறப்பாகக் கோடைக் காலத்தில் மக்கள் பெரும் திரளாக கன்னிரில் நீராடியும் உடல் கலம் தரும் குடிநீர்களைப் பருகியும் குணம் பெற்று வரு கின்றனர்.
பாட் றயிஷென்கால் எனும் சிற்றுாரொன்றில் ஒரு திங்கள் காலம் கான் தங்கியிருந்தேன். வயது போன மக்கள் பலர் அங்கு வந்து, அங்குள்ள மருத்துவரைக் கண்டு நீராடும் திட்டங்களைக் கடைப்பிடித்துக் குணம் பெற்று வந்தனர். அங்குள்ள சுனைகளின் கன்னிரின் மனத்தை முகப்பதே நலம் தருமாதலால், சுனைநீரைக் குழாய்கள் வழியாக மேலே கொணர்ந்து மக்கள் முகப்பதற்குப் பல வாய்ப்புக்களை அளித் திருந்தார்கள். இக் குழாய்கள் ஒரு பூந்தோட்டத்தில் அமைக் கப் பட்டிருந்தன. பூந்தோட்டத்தில் உள்ள மலர்ச் செடிகளின் அழகினைத் தீட்டிக் காட்டுவது எளிதன்று. ஆயினும் ஒரு காள் பத்து நிமிடங்களாகப் பனிக் கல் மழை (ballstorm) பொழிந்தது. பனிக் கற்கள் சன்னல்களையும் கூரைகளையும் உடைத்தன. அப் புயலை அடுத்து ஒரு மலரோ செடியோ அந்தப் பூங்காவில் காணப்படவிலலை. அத்துணை சேதமும், சிதைவும் அடைந்தது அத் தோட்டம். அத்தகைய ஒரு பனிக் கற்பெயலை என் அனுபவத்தில் நான் கண்டதே இல்லை. கலைகள்
ஜெர்மானிய காடு பொறி இயல் துறையில் மட்டுமன்றி பல்வேறு கலை இலக்கியத் துறைகளிலும் பல நூற்ருண்டு களாக முன்னுேடியாக இருந்து வருவதை நாம் கண்டு வருகின்ருேம். ஐரோப்பாவின் தத்துவத் துறையில் சிறப்பு அடைந்த தத்துவ ஞானிகள் அங்கு வாழ்ந்து வந்திருக்கிருர் கள். ஷோப்பன்னவர் (Schopenhaver) நீட்சே (Netsche,

Page 78
136 ஒன்றே உலகம்
1844-1900), ஹெகல் போன்றவர்கள் ஜெர்மன் நாட்டிலேயே தோன்றியவர்கள். அவர்கள் எழுதிய நூல்களில் இந்திய சமயங்களும் மெய்யுணர்வும் அவர்களைக் கவர்ந்த அள தோன்றுகின்றது.
சென்ற நூற்ருண்டில் தாம் ஆரிய மக்கள் என்றும் ஏனை யோரினும் சிறந்தவர்கள் என்றும், ஏனையோரை அடக்கி அரசாளப் பிறந்தவர்கள் என்றும் கூறும் தவருண கொள்கை கள், ஜெர்மானிய எழுத்தாளர் சிலரால் பரப்பப்பட்டு வந்தன. இந்தக் கொள்கைகளை வைத்தே ஹிட்லருடைய காலத்தில், இன்னும் தீவிரமான இனவெறிக் கொள்கைகள் பரவி யுளளன.
ஜெர்மன் இலக்கியத்தில் விளங்கும் பெரும் புலவர்கள் உலக இலக்கியத்திலேயே சிறந்த இடம் பெற்றுள்ளனர்; கேத்தே (1749-1832), ஷிலர், போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். ஜெர்மன் இலக்கியத்தில், சென்ற நூற்றண்டில், செயற்கை வாதம் இயற்கை வாதம் போன்ற, தத்துவங்கள் இடம் பெற்றுள்ளன. கேத்தே எனும் மாபெரும் புலவர்தாம் சாகுந்தலை நாடகத்தை ஜெர்மன் வழி நூலில் பயின்ற பின், *சாகுந்தலா உன் பெயரில் விண்ணும் மண்ணும் தரும் இன்பங்கள் அனைத்தும் அடங்குகின்றன’ என்று பொருள்பட விருத்தமொன்றைப் பாடியுள்ளார்.
ஜெர்மனியில் தங்கிய காலத்தில் இசை நிகழ்ச்சிகள் பலவற்றிற்கும் இசைக் கூத்துக்கள் (opera) பலவற்றிற்கும் சென்றிருந்தேன். வாக்னரின் (Wagner) இசைக் கூத்துக் களில் எனக்கு ஈடுபாடு உண்டு. வாக்னர் பழைய வழிபாட்டு முறைகளையும், கிருத்துவக் கொள்கைகளையும் இணைத்து அமைக்கும் நாடக இயல்பு ஆராய்தற்குரியது. பேத்தோவன் (1770-1827) போன்ற இசை வல்லுநர் ஜெர்மனியில் தோன்றி யவர்கள். பேத்தோவன் இயற்றிய இசை, மகிழ்ச்சியையும் உள்ள நிறைவையும் அமைதியையும் தரும் இசை. ஆணுல் இவர்தம் சொந்த இசையைக் கேட்டு மகிழ்வதற்கு தம் முதுமையில் வாய்ப்புப் பெற்றிருந்தார் அல்லர், அவர் செவிடா யிருந்ததால். இக் குறைபாடிருந்தும், அழகின் தன்மையை கன்கு உணர்ந்த அவர், அருவான கருத்துக்களை களங்கமற்ற இசையில் அமைத்திருப்பது அவருடைய ஒப்பற்ற இசை ஞானத்திற்குச் சான்றகும். w

ஜெர்மனி 137
ஐரோப்பாவின் இடைக்காலத்தில் சிற்பத்திலும் கட்டடக் க2லயிலும் சிறந்து விளங்கியவர்கள் பலர் ஜெர்மானியகாட் டில் வாழ்ந்தார்கள். மூனிக், பெர்லின், கொலோன் போன்ற பெரும் நகர்களில் இருக்கும் மாளிகைகளும் கோயில்களும் அவர்களுடைய கலைத் திறனைக் காட்டுகின்றன. கோதிக் முறையில் கட்டப்பட்ட பல பழைய கட்டடங்கள் இன்றும் விளங்கினும், இக்காலத்து ஜெர்மன் சிற்பிகள் புதிய முறை களிலும் முன்னுேடிகளாக இருக்கின்றர்கள். சென்ற போருக் குப்பின் கட்டப்பட்ட புதுக் கோயில்களையும், இசைக் கூடங் களையும், மாளிகைகளையும் பார்க்கும் பொழுது, இருபதாம் நூற்றண்டின் ஐரோப்பிய மக்களின் புதிய மனப்பான்மை எத்தகைய முறைகளில் மாற்றமடைந்து வருகின்றது என்பது விளங்குகின்றது. இத்தகைய புதிய கட்டடங்களின் கடையை ஐரோப்பாவில் இருக்கும் பலரே விரும்பமாட்டார்கள். இவற் றைச் சுவைப்பதற்கு தனிச்சுவைப் பயிற்சி வேண்டும். ஜெர்மனியில்உள்ள ஓவியக் கூடங்களில் மூனிக் ஓவியக்கூடம் மதிப்பிற்குரிய செல்வங்களைக் கொண்டது. டுறர் (Durer 1471-1528), கிருணுக் (Cranach) போன்றவர்களினுடைய ஓவியங்களும் பதினுன்காம், பதினைந்தாம் நூற்ருண்டுகளில் வாழ்ந்த ஒவியரின் படங்களும் ஜெர்மன் மக்களுக்கே சிறப்பாக உரிய சில கலைப் பண்புகளையும் இயற்கை வனப்பையும் காட்டுகின்றன. A
ஜெர்மனியின் பல பாகங்களில் ம2லயுச்சிக் கோட்டை களும் நீரால் தழப்பட்ட பல ஏரிக் கோட்டை மாளிகைகளும் உள. இவை யாவும் சிறுசிறு காடுகளாக ஜெர்மனி பிரிந்திருந்த காலத்தில் அரசற்கும் பெருங்லக் கிழாரினருக்கும் உரியவை. கியம்சி மாளிகையின் வனப்பு பெரும் வனப்பேயாம்.
கான் பார்த்த பொருள் கூடங்களில் மிகவும் செல்வம் நிறைந்தவை பெர்லின் நகரிலேயே உள்ளன. மேற்கு பெர்லி னிலும் கிழக்கு பெர்லினிலும் உலகில் சிறந்த பொருள்கள் பல
சேர்க்கப்பட்டிருக்கின்றன. மேற்கு பெர்லினில் உள்ள பொருட்
சாலை ஒன்றில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சை கல்லூர் என்னும் இடத்தில் கண்டு எடுக்கப்பட்டவையும் தொன்மை வாய்ந்தவையுமான பொற்கலங்களும், மட்கலங் களும், வேறு எகிப்திய காட்டிலிருந்து கொணர்ந்த கோபிறத் தெத்தே (Notretete) என்னும் எகிப்திய அரசியின் சிலையும்

Page 79
38 ஒன்றே உலகம்
(தலை) அங்கு இருந்தன. பல்லாயிரம் நூற்ருண்டுகளுக்கு முன் செதுக்கப்பெற்ற இவ்வுருவத்தை முதல் முறை நேரே பார்த்து மகிழ்ந்தேன். கிழக்கு பெர்லினில் உள்ள பொருட்சாலையில் கிரேக்க காட்டில் இருந்து வந்த சிற்பங்களையும், பெர்காமன் (Pergamon) தொகையெனப்படும் சிலைகளையும், பாபிலோனி லிருந்து வந்த பண்டை வெண்கல் ஓவியங்களையும், ஒடுகளை யும் காண்போர் மெய்ம்மறந்து நிற்பது இயல்பாம்.
கான் எளிதில் ஜெர்மனியின் பல பாகங்களையும், துறை களையும் ஆராய்வதற்குத் துணை புரிந்தவர்கள் பலர். பல்வேறு பேராசிரியர்களும், ஜெர்மன் கழகச் செயலாளர்களும் துணை புரிந்தனர். சென்ற பெரும் போருக்குப் பின் உலகின் எல்லா காடுகளில் இருந்தும் ஜெர்மன் காட்டைப் பார்வையிடுவதற் கும் ஜெர்மன் பண்பாட்டினை கன்கு உணர்தற்கும் அறிஞர் பலரை ஒவ்வோர் ஆண்டும் மேற்கு ஜெர்மன் அரசு ஜெர்ம னிக்கு விருந்தாக அழைக்கின்றது. ஜெர்மன் மொழியையும், பண்பாட்டையும் உலகெங்கும் அறிவுறுத்துவதற்கென கேத்தே கழகம் என்ற கழகங்களை உலகின் பெரிய நகர்களில் நிறுவியுள்ளனர். ஜெர்மனியில் ஏறக்குறைய இருபதாயிரத் திற்கு மேற்பட்ட வெளிகாட்டு மாணவர் வெவ்வேறு துறை களில் பயிற்சிபெற்று வருகின்றனர். மேலும் தொழிற் திட்டங் கள் பல இயங்குவதாலும் தொழிலாளர் தொகை குறைந்திருப் பதாலும் அராபிய காடுகள் இலத்தீன் காடுகள் முதலியவற்றி லிருந்து ஏறக்குறைய இருபது லட்சம் தொழிலாளர் ஜெர்மனி யில் வேலை பார்த்து வருகின்றனர்.
பல்வேறு நண்பர்களுடன் சாயுங்காலங்களில் சிறு குழுக் களில் உரையாடி விருந்து அயர்ந்து வந்தேன். தென் இந்தியர் கோயில்களின் படங்களையும் மகாபலிபுரத்தின் படங்களையும் விருந்தின் பின் அவர்களுக்குக் காட்டித் திராவிடப் பண்பாட் டின் சிறப்பு இயல்புகள் சிலவற்றை அவர்களுக்குக் கூறி னேன். ஒருவர் இல்லத்தில் கான் விருந்தாடிய பொழுது, அவர் தாம் தென்னிந்திய காட்டிற்குச் சென்றிருந்ததாகவும், ஜி. டி. காயுடு என்னும் பொருள் இயல் வல்லுநரின் விருந்தினராக அவர் இல்லத்தில் தங்கியதாகவும், நாயுடு அவர்களும் ஜெர் மனிக்கு வந்த காலத்தில் தம் இல்லத்திற்கு வந்திருந்ததாகவும் கூறினர்.
ஜெர்மனியின் தெற்கில் உள்ள ஓர் ஊரின் அஞ்சலகத் திற்கு நான் சென்ற பொழுது அங்குச் சில படங்களை விளம்பர

ஜெர்மனி 1 39
மாக ஒட்டியிருப்பதைக் கண்டேன். அவை ஜெர்மனியின் ம8லச்சாரல்களில் அரிதாகக் கிடைக்கும் மலர்களின் படங்கள். மக்கள் இயற்கையைப் பேணுமாறும், அம் மலர்களை மலைச் சாரல்களில் பலர் கண்டு இன்புறுமாறும், அப் படங்களுக்குக் கீழ் இவ்வாறு அச்சிட்டிருந்தது : “அருள் கூர்ந்து எங்களைப் பறிக்க வேண்டாம்."

Page 80
14. ஆஸ்திரியா
ஜெர்மனியின் தென் பாகத்தில் உள்ள அல்ப்ஸ் ம8லத் தொடரைத் தாண்டிச் சென்றதும் ஜெர்மன் மொழியையே அரசியல் மொழியாகக் கொண்ட ஆஸ்திரியா நாட்டை அடை கின்ருேம். மொழியைப் பொறுத்தவரை ஆஸ்திரிய மக்கள் ஜெர்மன் மக்களுடன் இணைக்கப்பட்டிருந்தாலும் தாம் பிற இனத்தவரென்றே கருதுகின்றனர். ஜெர்மன் மக்கள் ஆஸ்திரி யாவை ஜெர்மனியுடன் இணைத்து ஒரு நாடாக்க விரும்பினும், ஆஸ்திரிய மக்களோ பண்டுபோல் தனியாக இயங்கித் தனியர சாக இருக்கவே விரும்புகின்றனர்.
ஆஸ்திரியாவின் மலைத் தொடர்கள் பேரழகு வாய்ந்தவை. திரோல் எனப்படும் பகுதியில் நீலமலைத் தொடர்களும் பச்சை ஆடை போர்த்தது போன்ற இள மரச் சோலைகளும், நீலமணி ஏரிகளும் உள்ளன. வெயில் எறிக்கும் பொழுது இம் மலை களின் தோற்றமும், சோலைகளின் வனப்பும் இத்தன்மையன என்று கூறுவது எளிதன்று. இம் மலைச் சாரல்களை இளம் வெய்யிலில் காணும் பொழுது மக்கள் தம் அழகியல் உணர்ச்சி விரிவடைவதை உணர்வார்கள். ஆஸ்திரியாவின் திரோல் மாவட்டம் ஐரோப்பாவின் இயற்கை அழகு வாய்ந்த மாவட் டங்களில் மிகவும் சிறந்ததென்றே கருதுகின்றேன். பல்லாயிர ஐரோப்பியர் கோடைப் பருவத்தில் அங்கு விடுமுறை காட் களைக் கழிப்பதற்காகச் சென்று வருகின்றனர். சுற்றுச் செல வின் காரணமாகவே ஆஸ்திரியாவின் பொருளியல் கன்கு இயங்கி வருகிறது என்று கூறுவார்கள்.
சால்ஸ்பூர்க் (Salzburg) என்னும் சிறு நகர், இன்னும் தன் பழமைன்யக் காப்பாற்றி வருகிறது. அங்குள்ள தெருக்களும், அரண்மனைகளும், தோட்டங்களும் இன்னும் தம் பண்டை நிலையைக் காட்டுகின்றன. இத்தாலியில் இருப்பதுபோல செயற்கைச் சுனைகளும் ஊற்றுகளும் நீர் சொரியும் கருவி களும் உள்ள சோலையொன்றை இங்கும் கண்டு மகிழ்ந்தேன். மொசாட் (Mozart) என்னும் இசை வல்லுநர் இங்கே பிறக் தவர். பெதோவன் சிறந்தவரா, மொசாட் சிறந்தவரா என்று முடிவு செய்வது எளிதன்று. இருவரும் மாபெரும் இசை

ஆஸ்திரியா 丑4五”
வாணர்களாக இருந்த போதிலும் மொசாட்டின் இசையில் மகிழ்ச்சிச் சுவை ஒருவாறு மிகுதியாகக் காணப்படுகிறது. மொசாட் இளமையிலேயே, அதாவது ஐந்து ஆண்டுகள் படைத்த சிறுவனுகவே, தம் இசைப் புலமையில் சிறந்து வளர்ந்தார்.
ஆஸ்திரியாவின் தலைாககர் வியன்னு. இங்ாககர், முன்னுெரு காலம் ஐரோப்பாவிற்கே தலைநகராக விளங்கியது. இங்குதான் தூய உரோமய பேரரசரின் தலைாககர் இருந்தது. எனவே இன்றும், பெரும் மாளிகைகளும், அகன்ற வீதிகளும் இங்குக் காணப்படுகின்றன. பழைய சடங்கு முறைகளும், ஆசாரத்தை ஒம்பும் ஒழுக்கங்களும் இங்குக் கடைப்பிடிக்கப்பட்டு வரு கின்றன. இங்கிருக்கும் மாதா கோயில் உலகில் இருக்கும் கோயில்களில் சிறந்ததொன்ருகும்.
தென் ஐரோப்பாவின் பண்பாட்டிற்கு ஒரு காரணமாக இருந்து இலக்கியத்திலும் இசையிலும் சிறப்புப் பெற்ற டான்யூப் என்னும் ஆற்றினைப் பார்க்கச் சென்றேன். பொறி களும் படகுகளும் இருபதாம் நூற்ருண்டின் பொறி இயல் சின்னங்களும் அங்கு இல்லாத காலத்தில், இப்பேராற்றின் வனப்புப் பெரிதாகவே இருந்திருத்தல் வேண்டும்.
ஆஸ்திரியாவிலும், தென் ஜெர்மனியிலும் பீேர் கார்ட்டன்’ என்னும் பீர் பருகும் பல விடுதிகளும், தோட்டங்களும் இருக் கின்றன. இந்ாகி2லயங்களிலே மக்கள் நீண்ட நேரம் அமைதி யாக அமர்ந்திருந்து குடியுடன் உரையாடலில் ஈடுபடுவார்கள். ஜெர்மன் மக்கள் இத்துணை பேரளவில் பீரைப் பருகுவது பெரும் வியப்பாகவே இருக்கிறது. இவ்வளவு பீருக்கு வயிற். றில் இடமிருப்பதே வியப்பு

Page 81
15. இத்தாலி
இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளை ஐரோப்பாவின் இலத்தின் நாடுகள்’ என்று பெயரிடுவது வழக்கம், அவை ஐரோப்பாவின் தென் பாகத்தில் இருப்ப துடன் அவற்றின் மக்களும் இலத்தீன் இனத்தைச் சேர்ந்த வர்கள்; அவருடைய மொழிகளும் இலத்தீன் மொழிப் பிரி வைச் சேர்ந்தவை; அவர்கள் பெரும்பாலும் மேற்கொள்ளும் சமயமும் உரோமை மாாககரைத் த2லாககராகக் கொண்ட கத்தோலிக்கச் சமயம். இங்ாகாடுகளுக்கு அடிப்படையான பொது வரலாறும் பண்பாடும் இருப்பதால் இக்காடுகளைச் சில துறைகளில் ஒன்ருகச் சேர்த்து ஆராய்வதும் பொருந்தும்.
உரோமைப் பேரரசின் காலத்தில் இலத்தீன் மொழி, இத் தாலியிலும் ஐரோப்பாவின் பல நாடுகளிலும் பரவிற்று. பண் டைத் திராவிட மொழியொன்றிலிருந்து தமிழும் கன்னடமும் தெலுங்கும், மலையாளமும், துளுவும் திரிந்ததுபோல பிரெஞ்சு மொழியும், இஸ்பானியமும் போர்த்துக்கீசிய மொழியும், இத் தாலிய மொழியும், இலத்தின் மொழியின் திரிபுகளாவன. பொதுமக்கள் உரையாடி வந்த கொடும் இலத்தீனிலிருந்து கி. பி. ஒன்பது, பத்தாம் நூற்ருண்டுகளில், இத்தாலிய மொழியும் அதன் உறவு மொழிகளும் தோன்றின. பதின் மூன்றம் நூற்றண்டில் இத்தாலிய மொழி இலக்கிய மொழி யாகச் செய்யுளில் பயன்படுத்தப்பட்டு, நல்லிசைப் புலவர் தாங்தே (Dante) போன்றவர்களாலும், உரைாகடையாசிரியர் மன்சோனி (Manzoni), போன்றவர்களாலும் சீர்படுத்தப் பட்டுச் சிறப்புற்ற இக்கால ஐரோப்யிய மொழிகளுள் சிறந்த தோர் மொழியாக விளங்குகின்றது. ஏனைய ஐரோப்பிய மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குங்கால், இத்தாலியப் பெயர்ச்சொற்களிலும், வினைச்சொற்களிலும், விகுதிகளிலும், மிகுதியாய் வரும் நெடில் எழுத்துக்களின் காரணமாகவும், *ல” “ன” எழுத்துக்களின் காரணமாகவும், இன்னெலியும் மென்மையும் படைத்துக் காதலின் மொழியெனப் போற்றப் படுகிறது. இத்தாலியர் தம் மொழியில் உரையாடும் பொழுது,

இத்தாலி 143
அவர் உரையாடல் இசைப் பாடல்போல் இனிக்கும். அம் மொழியினை அறியாதவர்க்கும் அம்மொழியின் ஓசை இன்பம் பயக்கும்.
சில ஆண்டுகட்கு முன் தென்னிந்தியாவில் புதுச்சேரி யின் அருகில் இருக்கும் அரிக்கமேடு எனுமிடத்தில் பழம் பொருள் ஆராய்ச்சியாளர் பழைய உரோமருடைய கட்டடங் களைக் கண்டுபிடித்தனர். அங்கு அவர்கள் ஆராய்ந்த பொழுது உரோமருடைய காணயங்களும் இன்னும் பல பொருள்களும் அகப்பட்டன. அங்குள்ள பெருக் தாழிகளின் உடைந்த ஒடுகளை ஆராய்ந்தபொழுது அவ்வோடுகளில் முக்தி ரிகைச் சாற்றின் வண்டல் காய்ந்து படிந்திருந்தது. அவ் வண்டலால் அச்சாறு இத்தாலிய காட்டின் தென்பாகத்தி லிருந்து கி. பி. முதலாம், இரண்டாம் நூற்றண்டுகளில் தமிழ் ாகாட்டிற்கு வந்திருக்க வேண்டுமென முடிவு கொண்டனர் இவ்வாறு உரோமருடைய பழம் பொருள்கள்-சிறப்பாக அவர் நாணயங்கள் - தமிழ் காட்டின் பல பாகங்களிற் காணப்படுகின்றன. யவனர் பலர் சங்ககாலத்தில் தமிழ் காட்டில் குடியேறியிருந்ததற்குச் சிலப்பதிகாரமும் பத்துப் பாட்டும் பதிற்றுப்பத்தும் சான்ருகின்றன. முற்காலத்தில் யவனப் போர்வீரர் பலர் தமிழ் வேந்தரின் மெய்காப்பாளரா கவும், ஊர்காப்பாளராகவும் பணியாற்றி வந்தனர்.
தென் இந்தியாவைப் பற்றி முதன் முதல் எழுதியுள்ள மேல்காட்டாருள், இத்தாலிய நாட்டாராகிய பிளினியும் (Pliny) ஒருவர். இடைக் காலத்தில் தமிழ் நாட்டைப் பற்றி எழுதியுள்ள மார்க்கோ போலோவும் (Marco Polo) இத்தாலி யரே. பிற்காலத்தில் தமிழ் இலக்கிய இலக்கணத்துறைகளில் தலை சிறந்த வீரமாமுனிவரும் இத்தாலியரேயாவர். தான் பிறந்த பொன்னுட்டுடன் இத்தாலிய கன் காட்டையும் கல்வி மான் ஒவ்வொருவனும் தன் தாய்ாநாடாகக் கொள்ள வேண் டும்’ என்பது சென்கிவிச் (Sienkiewitz) என்னும் போலந்து நூலாசிரியரின் கூற்ருகும். இத்தாலிய காட்டிற்கும், அங் காட்டின் சிறப்பிற்கும் காரணமாயுள்ள இத்தாலிய மக்களுக் கும் மேலே காடுகள் அனைத்தும் கடமைப்பட்டுள்ளன என் பதே அவரது கூற்றின் பொருள். பொதுவாக உலகிற்கும், சிறப்பாக ஐரோப்பாவிற்கும், பற்பல கலங்களையும் கல்கியது இத்தாலிய காடு, உரோமரின் சட்ட திட்டங்கள், மேல் காட்டுப் பண்பாட்டைத் தழுவும் கா டு கள் எங்கும்

Page 82
44 ஒன்றே உலகம்
அமைந்த சட்டத்துறைக்கு அடிப்படையாக விளங்குகின்றன. அவர் கட்டிய மாளிகைகளும், அவர் கல்லில் இழைத்த கோயில்களும், அவர் வகுத்த வாய்க்கால் வரம்புகளும், அவர் புகழை இன்றும் கூறும். உரோமை காட்டுப் பேரரசும் வணிக அரசும் உலகின் பல பகுதிகளில் பரவியுள்ளன. உரோமர் கிரேக்கரைப் போலப் பெரும் மெய்யுணர்வு வல்லுங்ராக விளங்கவில்லை ; அவர் உலகியல் பண்பிலேயே தம் பெரும் ஆற்றலைக் காட்டியிருக்கின்றனர். அவர் காட்டில் தோன்றிய புலவரே பிற்கால ஐரோப்பிய அமெரிக்கப் புலவர் அனைவர்க் கும் மேல்வரிச் சட்டமாகப் போற்றப்பட்டு வந்தனர். இத் தாலிய காட்டிற்குச் செல்லும் பிரெஞ்சுக்காரரும், ஆங்கிலேய ரும், அமெரிக்கரும் பிற காட்டில் வாழ்வதாக எண்ணுவார் அல்லர். இத்தாலிய நாட்டிற்கு ஒவ்வோராண்டிலும் இயற் கையையும் செயற்கையையும் காணவும் திருமறைச்சார்பாக வும் செல்லும் அத்துணைப் பெருந்தொகையினர் வேறெந்த காட்டிற்கும் செல்வார் அல்லர். ஐரோப்பிய புலவர் பலரும் ஓவியரும் அறிஞர்களும், தம் வாழ்ாகாளின் பெரும் பகுதியை இத்தாலியில் கழித்திருக்கின்றனர். இயற்கை வளம்
இத்தாலிய மக்கள் தம் காடாகப் பெற்ற கிலப் பரப்பு இயற்கை வளமும் வனப்பும் வாய்ந்தது. வடக்கேயிருந்து தெற்கே சிசிலித் தீவுக்கு வான வூர்தியில் ஒருவர் சென்ருல், கண்குளிர இத்தாலியின் கவினுறு செல்வத்தைக் காண்பர். எப்பொழுதும் பனியுறையும் வெண்மலைச் சிகரங்களைக் கொண்ட ஆல்ப்ஸ் தொடர் இமயத்தைப் போல் இயற்கை அரஞய் விளங்குகின்றது. இத்தாலிக்குச் செ ல் லும் பொழுது பன்முறை வெண்சிகரத்தைச் (Mount Blanc) சுற்றி விமானத்தில் பறந்திருக்கின்றேன். அதனுடைய வீரத், தோற்றத்தை எளிதில் மறக்க முடியாது. அன்றே பெய்த பனியால் மூடப்பெற்று ஞாயிற்றின் ஒளியில் வெண்சர்க் கரையால் ஆக்கப்பட்ட சிகரம்போல் மிளிரும். வடக்கி லிருந்து வரும் பகைவர்களையும் பனிக்காற்றையும் தடுத்து வருவதுடன், இத்தாலிய நாட்டிற்குக் குளிர் குறையவும், மும் மாரி பெருகவும் காரணமாக ஆல்ப்ஸ் மலைத்தொடர் அமைக் துள்ளது. வடக்கிலிருந்து தெற்கே செல்லும் அப்பினைன் மலைத்தொடரை இத்தாலியின் முதுகெலும்பு என அழைப் பர். அதன் இருமருங்கும் காட்டிற்கு நீர்வளம் அளிக்கும்

பிரான்சு 145
ஆறுகளும், அவற்றை இணைக்கும் ஓடைகளும், வாய்க்கால் களும் பாய்கின்றன. ஆற்று வளம் பெற்ற அங்காட்டிற்கு ஏரி வளமும் குறைவில்லை. இத்தாலியின் எப்பகுதியிலும் பரந்த ஏரிகள் உள. அவற்றின் நீர் உழவிற்குப் பெரிதும் பயன்படுகின்றது. ஏரிகளையும், காயல்களையும், கழிகளையும், சேற்று நிலங்களையும் அணைகட்டி இறைத்ததால் கணக்கற்ற வயல்களும் விளைநிலங்களும் தோன்றியிருக்கின்றன. பொன் டைன் (Pontine) சேற்று நிலப்பரப்பை முசொலீனி காலத்தில் உழவிற்குப் பயன்படுத்தியது பலரும் அறிந்த செய்தியே. மலேரியா வென்னும் காய்ச்சல் இக்காட்டில் "பரவுவதற்கு, இத்தாலி தன்னகத்தே கொண்ட நீர் நிலைகளே காரணமா யிருந்தன. மலேரியா இங்கு இழைத்த தீமையைக் குறிப் பிட்டு, பண்டை உரோமைப் பேரரசு அழிவதற்கும் அந்நோய் துணைக்கருவியாயிருந்தது என்பர் மருத்துவ ஆராய்ச்சி வல்லுகர். இத்தாலியில் மாரிகாலத்தில் குளிர் தாங்க முடி யாது; ஆணுல், கோடைகாலத்தில் வெப்பமோ, கம்மவர்க்கும் கொடியதாகத் தோன்றக்கூடும். - கல் வளம்
இத்தாலிய மாகாணங்களில், ஆங்காங்குப் பல திசை மொழிகளுண்டு. தெற்கிலிருப்போர்க்கும் வடக்கிலிருப்போர்க் கும் பிலோரன்ஸ் (Florence) மாகாணத்தின் திசை மொழியே இலக்கிய மொழியாயிற்று. செம்மையாய் இத்தாலியம் பேசுபவர் தஸ்கானி மொழியை உரோமையரின் ஒலியமைப்பு டன் பேச வேண்டுமென்பது பழமொழி (La lingua tosama மella bocca romana). இத்தாலிய மக்கள் தம் நாட்டவருட னும் பிறருடனும் கன்ருய்ப் பழகுவர். பல சைகைகளுடன் மிக்க உவப்பாகப் பேசுவர்; விருந்தோம்பி இன்புறுவர். அவர் முகப்பொலிவும், பண்பும், இத்தாலிய காட்டின் வெயில் காயும் நீல வானத்திற்கு ஒப்பிடப்படும்; அத்துணை இனிய முகமும் குணமும் உள்ளவர். அவர் பொருட்செல்வம் மிகுதியாய்ப் பெற்றவர் அல்லராயினும், அருட் செல்வம் படைத்தவர். இத் தாலிய நாட்டுப்புறங்களில் இருக்கும் குடிகள், பெரும்பாலும் வறுமையுற்ற குடிகள். சென்ற இரண்டு மாபெரும் ஐரோப் பியப்போர்களின் விளைவாய் அங்கு வறுமை பெருகியே வந் தது. ஆயினும், அங்கு காட்டுப்புறங்களின் ஆடலையும் பாடலை யும், மக்களின் இனிய வாழ்க்கையையும் காணலாம். இக் காலத்து இத்தாலிய மக்கள் போருக் கெனப் படைத்த மக்கள்
07 7-0

Page 83
146 ஒன்றே உலகம்
அல்லர். இவர்கள் இசைக் கருவிகளையும் கலைப் படை களையும் கையாண்டு அடையும் வெற்றியே இவர் வெற்றி.
இத்தாலிய மக்கள் பல துறைகளில் பெயரும் புகழும் எய்தியுள்ளனர். தாந்தே, தாசோ போன்ற கல்லிசைப் புல வரையும், கொலும்பஸ், வெஸ்புச்சி போன்ற தொல்லிசை மாலுமிகளையும், அக்குவினுே, உரொஸ்மீனி போன்ற தத்துவ நூல் வல்லுங்ரையும், உவோல்ரா, மார்க்கோனி போன்ற விஞ் ஞான அறிஞரையும், இலெயனுர்டோ டீ விஞ்சி, மைக்கே லாஞ் சலோ, இருபைல் போன்ற ஒப்புயர்வற்ற ஓவியப் புலவரையும், தூய பிரான்சியார் போன்ற அரும் பெருங் திருத்தொண்டரை யும், இன்னுேரன்ன மற்றும் வெவ்வேறு துறைகளில் வெவ் வேறு பெரியாரையும் பெற்ற காடு இத்தாலிய நாடு.
பிலோரன்ஸ் நகர்க்குச் சென்றிருந்தபொழுது கான் கண்ட ஓவியமொன்று, இத்தாலிய இலக்கிய வரலாற்றைக் குறிப்பாக விளக்குகின்றது. ஒவியத்தின் கீழ்ப்பகுதியில் பிலோரன்ஸ் நகர் தீட்டப்பெற்றிருக்கின்றது. அதன் மேற் பகுதியில் இத்தாலியப் புலவரேறு தாங்தே தோன்றி, தாம் எழுதிய “திருக்காட்சி” (Divina Commedia) எனும் ஒப்பற்ற காப்பியத்தை விரித்துப் படிப்பதுபோல் வரையப்பட்டுள்ளது. அந்நூலிலிருந்து ஒளிக் கதிர்கள் கீழே சென்று, அக்ாககரை ஒளியில் மிளிரச் செய்கின்றன. பிலோரன்ஸ் நகரும் இத்தாலிய ாகாடும் உலகில் இலங்குவதற்கு இலக்கியவுலகில் ஞாயிற்றைப் போல் விளங்கும் தாங்தேயின் நூலே காரணமாகும் என்பதே இவ்வோவியத்தின் கருத்து.
இத்தாலிய இலக்கியத்தில் தாங்தேயின் பெருமை, ஆங் கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியரின் பெருமையுடன் ஒப்பிடத் தக்கது. அவர் இயற்றிய காப்பியம் காம் காணுத உலகுகளை ஆராய்ந்து ஞானச்சுவையும் நாடகச் சுவையும் ததும்பி நிற் கின்றது. அவருக்கு முற்பட்ட புலவர் அனைவரும், அவர் தோன்றிய காலத்தினைப் பண்படுத்தி ஆயத்தம் பண்ணிய முன்னுேடிகள் ஆவார். அவர் காலத்திற்குப் பிற்பட்டவர் அனைவரும் அவருக்கு மாணுக்கர் எனவே கூறுதல் வேண்டும். அவர் பதின்மூன்ரும் நூற்றண்டில் வாழ்ந்தவர். அவருக்குப் பின்வந்த புலவராகிய தாசோ, பெற்றிராக், மோண்டி, GSGSu TLT si 9., (Tasso, Petrarch, Monti, Leopardi) (pg56uT னுேர், அவரையே தமக்கு ஆசிரியர் என உச்சிமேற்கொண்டு போற்றி ஒழுகினர். ஆயினும், அவர் வாழ்ாகாளில் புலவர்

பிரான்சு I. 4 R.
பிணியாகிய வறுமை அவரை வாட்டியது. தம்மவரால் காடு கடத்தப்பட்டார். அவர் உயிர் துறந்த பின்னரே, அவரது பெருமையை உணர்ந்தனர். இன்று இரிமினி (Rimini) எனும் ககரில் அவர் கல்லறையில், வெள்ளி விளக்கு இரவும் பகலும் சுடர்விட்டு எரிகின்றது. அவரே இத்தாலிய மக்களின் கலங் கரை விளக்கம்.
இத்தாலியில் ஆங்கில இலக்கிய மணமும் கமழ்கின்றது இரஸ்கின், பிரவுனிங், பைரன் போன்ற ஆங்கிலப் புலவர் கள், தம் ஆங்கில இலக்கியங்களை இத்தாலி காட்டிலிருந்து இயற்றலாயினர். ஷெல்லி, கீத்ஸ், ஆர்தர் கிலெளவ், ஈ. பி. பிர வுனிங் போன்ற ஆங்கிலப் புலவர்கள் இத்தாலி காட்டில் உயிர் துறந்தனர். அவர்களின் கல்லறைகளும் அங்கேதான் í 2-6'T6IT6ð .
ஐரோப்பாவில் உள்ள மக்களில் இத்தாலியரைப்போல இசையை விரும்புவார் எவரும் இலர். நாட்டுப்புறங்களில் வாழும் குடிகளும் யாதேனும் ஓர் இசைக் கருவியைக் கையாளப் பயின்றிருப்பர். வெளியே உலாவச் செல்லு மிடத்து, பல்வகைப் பழத்தோட்டங்களில் வேலை செய்யும் எளிய மக்களின் இன்னிசைப் பாட்டு காற்றினில் தவழ்ந்து வருவதைக் கேட்கலாம். இத்தாலிய ஆடவர் தம் உளம் கவர்ந்த மகளிரை மணம் செய்யுமுன், அவர் உறையும் இல்லத்தின் மருங்கே நின்று பாடி, தம் காதலைப் புலப்படுத் தும் வழக்கம் தொன்று தொட்டுள்ளது. ஆயினும், இக்காலத் தில் சிற்றுார்களிலேதான் அப்பழக்கத்தைக் காணலாம். அப் பாட்டுகளை மா?ல இன்னிசை (Serenata) என்பர். வெண்ணிலா வையும், தெளிந்த வானையும், நீலக் கடலையும், தென்றற் காற்றையும் முன்னிலைப் படுத்திப். புனைந்து பாடும் அப்பாட் டுக்கள் பெருஞ் சுவை உடையன. அவற்றினைப் பிற காட்டின ரும் மொழி பெயர்த்துப் பாடி வருகின்றனர். இத்தாலியத் தோணித் தொழிலாளர் பாட்டுக்களில் கடலின் அசைவினை யும் ஒலியினையும் கேட்கலாம். கலை நுகர்ச்சி
இத்தாலிய இசைவாணர், கூடத்தின் இசை (chamber music), goall-gi) 3605 (Symphony Orchestra) (pg565ull 360& யின் பல பிரிவுகளில் பெயரும் புகழும் பெற்றுள்ளதோடு, இசை நாடகம் (Opera) என்ற பிரிவில், வேர்டி (Verdi) முதலி யோர் வழியாகப் பல புது முறைகளையும் முன்னேற்றங்களை

Page 84
覆48 ஒன்றே உலகம்
யும் அடைந்துள்ளார். இசை நாடகம் என்பது, இலக்கிய காடகம் ஒன்றினை எடுத்து, அதற்கு இசை வகுத்துப் பக்க இசைக் கருவிகளுடன் பாடி கடித்தல். கடிப்பவரின் உரை யாடல் பாட்டாகவே இருக்கும். ஷேக்ஸ்பியர் இயற்றிய ஒதெல்லோ” (Othello) எனும் இலக்கிய நாடகத்திற்கு, வெர்டி என்பவர் இசை வகுத்துள்ளார். இத்தாலிய காட்டில் ாகான் சென்ற இசை அரங்குகளில் நூறு, இருநூறு இசைக் கருவிகள் ஒருங்கு சேர்ந்து கூட்டியம் நிகழ்த்தக் கேட்டுள் ளேன.
இத்தாலிய ஓவியரும், சிற்பிகளும் தம் கலையறிவின் பயனைத் தம் காட்டிற்கு மட்டுமே அன்றிப் பிற காடுகளுக்கும் ஈந்துள்ளனர். இந்திய காட்டிலுள்ள தாஜ்மஹாலும், தமிழ் காட்டிலுள்ள திருமலை நாயக்கர் மஹால் முதலான கட்டடங் களும், இத்தாலிய சிற்பக் கைத்திறன் என்று கூறுகின்றனர்" பிற நாடுகளைக் காட்டிலும் இத்தாலிய நாட்டில் ஓவியக் கூடங் கள் மிகுதியாக உள்ளன. அக்கூடங்களில் அறைகள் வகுத்து, அவ்வறைகளின் சுவர்களில் ஒவயங்களைத் தொங்க விட்டிருப்பர். கோயில்களின் சுவர்களிலும், பீடங்கள் மீதும், ஒவியங்களைக் காணலாம். ஒவியக் கூடங்களுக்குச் செல் வோர், ஒவ்வோர் ஓவியத்தையும் கெடுகேரம் பார்த்துப் படித்து இன்புற்று, அவற்றின் அழகுடன் இரண்டறக் கலந்து நிற்பர். அங்ங்னம் அவற்றில் ஈடுபடுவதற்குத் துணையாக ஆங்காங்கு அவர் அமர்ந்திருப்பதற்கு காற்காலிகள் வைக்கப்பட்டிருக் கின்றன. ஒவியங்களை உற்று கோக்கி அக்கலையினை ஆராய் வோர், காள் முழுதும் ஓவியக் கூடத்தில் கழிக்க கேரிடின் உரொட்டி, சொக்லட் முதலிய உணவுப் பொருட்களைத் தம் முடன் கொண்டு போய்ப் பசி தோன்றுமிடத்து உண்பர். இவ் வாறு, ஓவியக் கலையின் பொருட்டு ஓவியப் புலவரும், பல்கலைக் கழக மாணவரும் வருவதுடன், பொது மக்களும் பலர் வரு வார். பொது மக்களின் அறிவும் பண்பும், வளர வேண்டு மாயின், அவரும் ஒவிய சிற்பக் கலைகளை ஒரளவு பயில்வதும், முதல் ஒவியங்களை (Original Pantings) கேரிற் கண்டு இன் புற்று அறிவதும் வேண்டும்.
இத்தாலிய ஓவியப் புலவர்களில், இராபைல் (Raphael) மைக்கேலாஞ்சலோ (Michaelangelo) இலியோனுர்டோ டீ வின்சி (Leonardo de Vinci) இம்மூவர் படங்களுக்கும் உலகம் வாடாத புகழ்மாலை சூட்டுகின்றது. இவருள் இராபைல் நீண்ட

பிரான்சு 卫49
காலம் வாழவில்லை. ஆயினும், மறையுமுன் "அம்மையார்’ (Madonnas) படங்கள் பல தம் கையினுல் தீட்டியருளினுர். இலியோனுர்டோ டீ வின்சி அறிஞருள் அறிஞர் ஆவார். அவர் விளையாட்டுச் சிறுவர் டோல் சுவரில் தம் ஒவியங்களை வரை வாராம். ஒன்றையும் விரைவில் செய்து முடிக்க முயலாது தம் மனம் போனவாறு பல கலைகளிலும் ஈடுபடுவார். அக்காலத்தி லேயே அவர் வானூர்தியையும் வெடிகுண்டையும், நீர்மூழ்கிக் கலத்தையும் பற்றி ஆய்ந்து அவற்றைப் படைத்தல் கூடும் என்று உணர்ந்தவர் என்பர். அவர் எழுதிய மோன லீசா’ (Mona Lisa) எனும் மங்கையின் முகத்தில் புன்னகை சிறிது அரும்புகின்றது. அப்புன்னகை எதனைக் குறிக்கும் ? இகழ்ச்சி யையோ, ஐயத்தையோ, விருப்பையோ, வெறுப்பையோ என்று அறியாது இன்றும் அப்படத்தின் முன் வியந்து நிற்கின்ருேம்.*
மேலே எடுத்துக் காட்டிய மூவரும் மணம் செய்துகொள்ள மனம் கொள்ளாது, தன்னந்தனியராகவே வாழ்ந்து வந்தனர். அவருள் மைக்கேலாஞ்சலோ பெயர் பெற்ற ஒவியப் புலவ ரேனும், ஒவியத்தினும் பார்க்கச் சிற்பமே அவர் கருத்தினைப் பெரிதும் கவரலாயிற்று. தம் புகழ் என்றும் அழியாதபடி அரும் பெரும் ஒவியங்களைச் சுவர்களில் தீட்டியுள்ளார். மாபெருஞ் சிலைகளைக் கல்லில் செதுக்கியிருக்கின்றர். உயர்ந்த கோபுரங்களையும், மண்டபங்களையும், மாளிகைகளையும், கல்லில் இழைத்து வைத்துள்ளார். பதினுன்கு அடிகளையுடைய தனிப் பாடல்கள் (Sonnets) எனும் இலக்கியச் செய்யுட்களும் இயற்றித் தாம் பாட்டுப் புலவர் என்பதையும் காட்டியுள்ளார். அவர் செதுக்கிய சிலைகளுள், தாவீது, மோசே, பியற்ற (Pieta) எனுஞ் சிலைகள் தலைசிறந்தவை. மோசேயின் சிலையைக் குறித்து மக்கள் கூறும் செய்தியொன்று இங்குக் குறிக்கற் பாலது. அப்பெரியாரின் உருவைச் செதுக்கிய பின், இருபது அடித் தொலைவிலிருந்து மைக்கேலாஞ்சலோ அச்சிலையினைப் பார்வையிட்டார். திடீரென்று தம் கையில் இருந்த உளியை மெய்ம்மறந்து அச்சிலைமேல் வீசி, “நீ ஏன் வாய் திறந்து பேசாமல் நிற்கின்ருய் ? என வெகுளியுடன் வினவினுராம். அத்துணை உயிருள்ள ஆடவர்போல் தோன்றியது அச்சி2ல.
* இவ்வோவியம் பாரிஸ் பட்டினத்தின் லூவிர் பொருட் காட்சிச் சாலையில் உளது. -

Page 85
50 ஒன்றே உலகம்
இன்றும், அவ்வுளி சிலையிற் பட்ட இடத்தைச் சுட்டிக் காட்டு கின்றனர். இத்தாலிய நகர்கள்
இத்தாலிய நகர்களை கான் பார்த்து வரும் பொழுது ஒரு நகருக்குப் போகுமுன் அங்ாககரைப் பற்றிய நூல்களையும் படங் களையும் வாங்கிப் படிப்பேன். ஒரு நகருக்குச் சென்றதும், அங் நகரில் மிகவும் உயர்ந்த கோபுரத்தில் ஏறி, நகர் அமைப்பு முழுவதையும் உற்று கோக்குவேன். அப்பொழுது அங்ாககரின் படம் என் கையில் இருக்கும். அவ்வாறு இயற்கைச் செயற்கை அமைப்புக்களை உணரலாம். ஆறுகளைப் போல் பிரிந்திருக்கும் பெருங் தெருக்களையும் பெரிய மாளிகைகளையும், பூந்தோட்டங் களையும் காணலாம். பின்பு பெயர் பெற்ற இடங்கட்கு கேரில் சென்று அவற்றைப் பார்த்து வருவேன்.
உரோமை நகரை இவ்வாறு பார்க்க வேண்டுமாயின், ஜனிக்குலம் (Janiculum) எனும் குன்றிலிருந்து அதனைப் பார்க்க வேண்டும். அங்ாககர் ஏழு சிறு குன்றுகளின் மீது பண்டு பரவியிருந்தது. இன்று இன்னும் விரிவாகி விட்டது. உரோமின் ஒருபுறத்தைச் சுற்றித் தீபர் ஆறு, வையை ஆறு தென்னிந்தியாவில் மதுரை நகரின் ஒரு புறத்தில் அகழியாக அமைந்து வளைந்து செல்வதுபோல் செல்லுகின்றது. அங்ாககர் கி. மு. 754 ஆம் ஆண்டு நிறுவப்பெற்றது. சென்ற 27 நூற் ருண்டுகளில் அங்ககர் கண்ட வரலாற்றை அறிவோர் அதனை வாழ்த்தாமல் இரார். உரேமுலஸ், உரோமியஸ் (Romulus, Remus) எனும் அரசிளஞ் சேயர் இருவர் பகைவரால் தீபர் ஆற்றில் எறியப்பட்டனர் என்றும், அவர்கட்கு ஓநாய் ஒன்று பால் ஊட்டியது என்றும், ஆயர் குலத்தினரால் அவர் வளர்க் கப்பட்டனர் என்றும், அவர்களில் உரோமுலஸ் என்பவர் பிற் காலத்தில் உரோமை நகரை நிறுவினர் என்றும், கதை வழக்கு உண்டு. ஒரு சிற்றுார் முடியரசாகி, பிற இத்தாலிய அரசுகளை எல்லாம் மேற்கொண்டு குடியரசாகி, அதன் பின் இத்தாலி யைச் சூழ்ந்த நாடுகள் அனைத்தையும் வென்று பேரரசாகியது. அங்ாககரே விடுதலை உணர்ச்சிக்கும், முதலாளி தொழிலாளி எனும் இரு வகுப்பினர் போராட்டத்திற்கும் பிறப்பிட மாயிற்று
உரோமை நகரில் முதன் முதல் கண்ணுக்கு எட்டுபவை கணக்கற்ற கோயில்களும், பண்டை உரோமரின் இடிந்த மன்றங்களுமாம். கொலோசியம் (Coloseum) எனும் மாபெரும்

பிரான்சு 5
மற்போர்க்களம் நகரின் நடுவில் உள்ளது. இங்கேதான் நகர மக்கள் ஒய்வு நேரங்களில் அடிமைகள் விலங்குகளுடன் போராடும் காட்சியைக் கண்டுகளித்து வந்தனர். கப்பித்தோல் (Capitol) எனுமிடத்தில், இன்னும் இரண்டு ஒகாய்களைக் கூண்டில் அடைத்து வைத்திருப்பது, ககரின் பிறப்பு வர லாற்றை மக்கட்கு நினைவூட்டுவதற்குப் போலும். பண்டை உரோமையரது பொது வாழ்க்கை போரம் (Forum) எனும் நாளங்காடியிலே நிகழ்ந்து வந்தது. மக்கள் கேரப் போக்கிற் காகக் கோடிட்டு வட்டாடிய இடங்களில், அக் கோடுகளை இன்றும் காணலாம்.
வெனிஸ் நகர் உலகிலுள்ள மற்றை நகர்களைப் போன்ற தன்று. அதன் தெருக்கள் நீர்த்தெருக்கள், வாய்க்கால்கள்; மோட்டார் வண்டியின் இடத்தில் மோட்டார் வள்ளம் உண்டு செல்வர், மோட்டார்த் தோணியை வைத்திருப்பர். குதிரை வண்டிக்குப் பதில் “கொண்டோலா" (Gondola) எனும் சிறு வள்ளத்தினைக் கையாள்வர். இங்ாககர் இவ்வாறு அமைதற்குக் காரணம், அது குடாக்கடல் ஒன்றில் இயற்கையாக எழும்பி யுள்ள பல.தீவுகளின் மீது நிலைபெற்றிருப்பதே. இப்பொழுது சில செயற்கைத் தீவுகளும் சேர்ந்துள்ளன. அடுத்தடுத்து நிற்கும் 117 தீவுகளுன் மேல் அங்ாககர் நிலைபெற்றுள்ளது. நானுாறு பாலங்கள் அத்தீவுகளை இணைக்கின்றன.
வெனிஸ் இயற்கைத் துறைமுகம். அங்ாககர மாந்தர் மரக் கலம் ஒட்டுவதிலும் திரைகடலோடித் திரவியம் தேடுவதிலும் மேம்பாடு அடைந்தவர். ஒரு காலத்தில் வெனிஸ் தனியரசாக விளங்கியது. வாணிகத்தினுலும், கடற்படை வீரத்தினுலும், செல்வத்தின் உச்ச நிலையை அடைந்தது. கடலே அதன் செல் வத்திற்கும் செல்வாக்கிற்கும் காரணமெனக் காட்டுவதற்கு, வெனிஸ் ககர மக்கள் ஆண்டுதோறும் சடங்கு ஒன்றினை கடத் தினர். நகராட்சி மன்றத் தலைவரும், அமைச்சரும், கடலில் சிறிது தூரம் சென்ற பின்னர், நகராட்சித் தலைவர் கணையாழி ஒன்றினைக் கடலில் இடுவர். அச்சடங்கிற்குக் கடலின் திருமணம் என்று பெயர். வெனிஸ் நகர் எனும் தலைவி ஆதிரி யாற்றிக் கடல் எனும் தலைவனை மணந்து கொண்டாள் என்பது அச்சடங்கின் கருத்து. இன்றும் அங்ாநகர மாந்தர் அந்த மண விழாவைக் கொண்டாடி வள்ளப் பந்தய விளை யாட்டுக்களால் அங்ாகாளினைச் சிறப்பித்து வருகின்றனர்.

Page 86
I 52 ஒன்றே உலகம்
அக்ாகர்க்கு கான் சென்ற பொழுது, முதன் முதல் ஒரு விடுதிக்குச் சென்றேன். அதன் வாயில் நிலைமேல் பொறித் துள்ள பின்வரும் சொற்ருெடரைக் கண்டேன். இவ் இல்லத் தில் ஜோன் இரஸ்கின் (John Ruskin) தங்கினர்.” அவ்வாசிரி யரே அங்ககரின் பெருமையைக் குறித்துப் பல நூல்கள் ஆங் கிலத்தில் எழுதியிருக்கின்றர். வெனிஸ் நகர மக்கள் இன் னிசையைப் பெரிதும் விரும்புவர். மாலைப் பொழுதிலும், மதி நிறைந்த கன்னுட்களிலும் இன்னிசை முழங்க வள்ளங்களில் உலா வருவர். பல வள்ளங்கள் ஒருங்கே கூடியதும், நீரின் மேல் இசையரங்கு நிகழ்த்துவர்.
கான் அங்ாககரில் தங்கிய நாட்களில் கொசுக்களுக்கு இரை யானேன். அக்ாககரில் உள்ள கொசுப் படைக்கு எல்லையில்லை. கடல்நீர் ஏற்றம் இறக்கம் உள்ள வேளைகளில் அங்குள்ள சில வாய்க்கால்களில் நீர் செல்லாமையும், நீர் ஓர் இடத்தில் கட்டி நிற்பதுமே கொசுக்களின் பெருக்கத்திற்குக் காரணம்.
பிலோரன்ஸ் (Florence) நகர் தஸ்கனி மாகாணத்தின் தலைங்கர், தஸ்கனி மாகாணம் இயற்கை கலங்கள் மல்கியது; நீல மலைகள் தழ்ந்தது; பார்க்கும் இடமெங்கும் பசுமை நிறைந் தது; மலர்கள் மிகுதியாய்ப் பூத்து மலர்ந்து மணம் கமழ்வது. இத்தாலிய நகர்கள் ஆங்கில நகர்களைப் போலும், ஜெர்மானிய நகர்களைப் போலும், தூய்மை உள்ளவை அல்ல. ஆயினும் அவற்றுள் பிலோரன்ஸ் தூய்மை மிக்கது. பண்டைக் காலத் தில் உரோமை நகர் சிறந்து விளங்கியதெனின் இடைக்காலத் தில் பிலோரன்ஸ் நகர் பெயர் பெற்றது அங்ாககர் கலைகளுக்கெல் லாம் களஞ்சியம். மாபெரும் இத்தாலியக் கலைஞர் பலர் ஆங்குத் தோன்றினர். அப்பெரியாரின் கல்லறைகள் அமைக்கப் பெற் றிருக்கும் சிலுவைக் கோயில் அழகு படைத்தது.
ஜெனுேவா, வெனிஸ் நகர் போன்று இயற்கைத் துறை முகம். முற்காலத்தில் வெனிஸ் போல் தனியரசாக விளங் கியது. நேப்பில்ஸ் (Naples) நகரினைத் தென் இத்தாலியின் அரசி எனப் போற்றுவர். அதன் துறைமுகம் மிகவும் பரங் ததும் அழகு வாய்ந்ததுமாகும். ஆங்கு இரவலர் தொகை பெரிது. இத்தாலிய நாட்டின் வறுமையை அக்ாககர்ப் புறஞ் சேரி எடுத்துக் காட்டும். அழகிய கட்டடங்கள்
இத்தாலிய நகர்களில் சுற்றிப் பார்ப்போரின் கண்ணை முதலில் கவர்வன கோயில்களும் நூற்கூடங்களும் பொருட் காட்சிச் சாலைகளும் செயற்கை ஊற்றுக்களுமாகும். உரோமா

பிரான்சு 53
புரியிலேயே முந்நூற்றுக்கு மேற்பட்ட கோயில்கள் உள. அவற்றின் வட்டக் கோபுரங்கள் ஏனைய கட்டடங்களுக்குமேல் கீல வானில் தோன்றும். பிலோரன்ஸ், மிலான் போன்ற தலைக் கோயில்கள் சிற்பச் செல்வங்கள்; அவற்றைப் பார்த்து அவற் றைப் பற்றி கன்ருகப் படிப்பதற்கே பல காட்கள் செல்லும். சில கோயில்கள் அறவோரின் மடங்களுடன் சேர்த்துக் கட்டப் பெற்றிருக்கின்றன. அறவோர் மடங்களும் பண்டைக் காலத் தில் பெரும் ஒவியராலும் சிற்பிகளாலும் அழகுபடச் செய்யப் பெற்றதால், அவை இன்று ஒவியக் கூடங்களாகவும் சிற்பக் கூடங்களாகவும் கருதப்படுகின்றன. சன்மார்க்கோ எனும் பிலோரன்சில் உள்ள அறவோர் மடத்தில் 15 ஆம் நூற்ருண் டில் வாழ்ந்த அஞ்செலிக்கோ (Angelico) எனும் அடிகள் சிறந்த ஒவியர். அவர் ஓவியங்களை மடத்தின் பல சுவர்களில் எழுதி யுள்ளார். இன்று அம்மடமே ஒரு ஓவியக்கூடமாக விளங்கு கின்றது.
இத்தாலிய நகர்களில் சிறப்பாக உரோமாபுரியில் செயற்கை ஊற்றுக்கள் பல உள. அவை நீரைச் சொரிந்து கொண்டும், உமிழந்து கொண்டும், மேலே எறிந்து கொண்டும் இருப்பன. பண்டைப் புராணக் கதை மாந்தர், கடற்றெப்வம், நீர்த்தெய்வம் போன்ருேரின் வடிவங்களால் அவை அணி செய்யப்பட்டிருக்கின்றன. வெம்மையான நாட்களில் இச் செயற்கை ஊற்றுக்களின் அண்மையில் மக்கள் உட்கார்க் திருப்பர். உரோமைமாககரில் உள்ள திரேவி (Trevi) செயற்கை ஊற்று அழகான ஒரு சிற்ப அமைப்பு. அவ்வூற்றில் காணயங் களை எறிவோர் உரோமாபுரிக்கு மீண்டும் திரும்புவர் என்பது ஒரு பொது கம்பிக்கை. எனவே உரோமாபுரிக்குச் செல்லும் மாந்தர் அவ்வூற்றில் பன காணயங்களை எறிவது பெரும் வழக்கம்.
இச்செயற்கை ஊற்றுக்கள் குளிர்காலத்தில் தம் அழகைக் காட்டுகின்றன. பனி பெய்யும் பொழுது அவற்றைப் பார்ப்பது இன்பத்தைப் பயக்கும். இத்தாலிய காட்டிலேதான் முதன் முதல் பனி பெய்வதைக் கண்டேன். பனி பெய்யும் காட்சியைக் காணுதவர் அதன் அழகை உணர்தல் எளிதன்று. அப்பணி வானிலிருந்து பஞ்சு போல் காற்றில் அசைந்து கீழே இறங் கும். வெண்மையான சிறு பஞ்சு உருண்டைகள் விழுவது போல் பணி பெய்யும். அதன் தூய்மைக்கு எல்லையில்லை. முதன் முதல் பனியைக் கண்டவுடனே கான் அதைப் பன்முறை

Page 87
ஒன்றே உலகம்
தொட்டுப் பார்த்தேன். பனியில் நடந்து சென்றேன். பனி பெய்யுங் காட்சி கம் நாடுகளில் காணப்பெருமை மிகவும் வருங்தத்தக்கதே.
பதினேழாம் பதினெட்டாம் நூற்றுண்டுகளில் தத்துவப் போதகர், வீரமாமுனிவர் போன்ற தமிழ் அறிஞரைப் பயந்த இத்தாலிய நாடு இன்று அத்துனேத் தமிழ்த் தொடர்பின்றி இருக்கின்றது. உரோமில் உள்ள மத்திய கீழ்த்திசை நாட்டுக் கழகத்தில் நான் விரிவுரையொன்றை இத்தாலிய மொழியில் நிகழ்த்தினேன். அங்குள்ளோருடன் திராவிடக் கலேகளேப் பற்றி உரையாடினேன். அக்கழகத்தின் ஆசிரியர் ஒருவரேனும் தமிழை ஒரு சிறிது பயின்று தமிழ்த் தொடர்பை மீண்டும் நிலோகாட்ட வேண்டுமென்று தாம் விரும்பியதாகக் கழகத் தலேவர் என்னிடம் கூறினூர்,
 

தென் அமெரிக்கா விஃப் உயர்ந்த ஆசீர்வாதப் பாத்திரம் பக்கம் - 73

Page 88
பெண்மரணி
லி - நாட்டுப்புறத்துப்
145)
(பக்கம் -
த்தா
କ୍ଷୁଃ
144)
ம் பக்கம் -
நறம்
இத்தாலி- வெண்சிகரத்தின் வீரத்தோ
 

15. வத்திக்கான் நகர்
இத்தாலிய காட்டிலுள்ள வத்திக்கான் நகரென்பது நூற்றெட்டு ஏக்கர் அடங்கியதும் ஈராயிரம் குடிமக்கள் வாழ் வதுமான சிறு நிலப்பரப்பாயினும், அது ஒரு தனி அரசர் பார்வைக்கு அஃது உரோமாபுரியுடன் சேர்ந்தேயிருக்கின்றது; ஆயினும் அதன் வரலாற்றுச் சிறப்பும் சட்ட உரிமைகளும் தனியாட்சியும் அதனே ஒரு தனியரசாக ஆக்கியுள. கத்தோலிக்கத் திருச்சபையின் த8லவராகிய போப் ஆண்டவர் அங்கு வாழ்வதுடன் உலகின் மாபெரும் கோயிலும், கணக் கற்ற கலேச் செல்வங்கள் நிறைந்த அரண்மனேயும், சிறந்த நூற்கூடமும் அங்குள. நிலப்பரப்பில் சிறிதாயினும், தனியர சிற்குரிய போக்கு வரவு ங்லேயங்கள், தபாற் றுறை, சிங்கம், தனி நாணயங்கள், வானுெலி கிலேயம், செய்தித்தாள், காவற் படைகள் முதலிய அனேத்தும் அங்குள வத்திக்கான் அரண்மனே, வத்திக்கான் நூற்கூடம், வத்திக்கான் கலேப் பொருட்சாலே ஆகிய கிலேயங்கள் அனேத்தும் உலகில் பெயர் பெற்றவை.
இன்றைய உரோமாபுரியின் நடுவே வ8ளர்து செல்லும் திபெர் ஆறு, அப்பேருரை இரு கூறுகளாகப் பிரிக்கின்றது. திபெரின் பாலங்களேக் கடக்கும் பொழுது எதிரே மாபெரும் விதியும், அதன் முடிவில் மாபெரும் கோயிலும் தோன்று கின்றன. மாலேப் பொழுதில், ஞாயிறு மறையும் வேளேயில் வத்திக்கான் கோயிலுடைய வட்டக் கோபுரத்தின் அமைதி கிறைந்த தோற்றத்தின் அழகை இன்னதென்று வரைவது பெரும் ஓவியர்க்கும் எளிதன்று. இராயப்பரின் ஆலயத்தை (St. Peter's Basilica) கட்டியெழுப்ப நூருண்டுகள் எடுத்தது. மைக்கேல் ஆஞ்சலோ எனும் சிற்பி வட்டக் கோபுரத்தை எழுப் பினர். பெருகினி (Bernini) என்பவர் இதனேயொட்டிய கற்று எண் மண்டபங்களே நிறுவினுர், இம்மண்டபங்களின் ாடுவே அமையும் முற்றவெளியைப் பத்தொன்பது நூற்ருண்டு களாகக் கோடிக்கணக்கான கத்தோலிக்கரும் ஏனேயோரும் திருமறை காரணமாகவும் கலேப்பொருட் காரணமாகவும் கடந்து சென்றிருக்கின்றனர் என்று நினைக்கும் பொழுது, அப்பரப்பின் வரலாற்றுச் சிறப்பு கம் கண்முன் தோன்றும்.

Page 89
156 ஒன்றே உலகம்
இராயப்பரின் பேராலயம் உலகிலுள்ள கோயில்களில் மிகவும் பெரியது. அதன் பொலிவையும் தோற்றத்தையும் உணர வேண்டுமாயின் அதனைச் சேய்மையிலிருந்துபார்த்தல் வேண்டும். அதனுடைய அளவமைப்பு அத்துணை நுணுக்க மாக அமைக்கப் பெற்றிருப்பதால், அதன். உயரத்தையும் அகலத்தையும், அங்குள்ள சிலைகள் ஒவியங்களின் அளவை யும், காண்போர் எளிதிற் கணித்தல் இயலாது. அங்கு மறை நூலாசிரியர் ஒருவரின் மணிக்கல்லோவியம் (mosaic) உண்டு. அவர் கையிலுள்ள எழுதுகோலே பன்னிரண்டடி நீளமுள்ளது எனின் அவர் உயரம் எத்துணை அடி இருத்தல் வேண்டும்? ஆனல், அவ்வோவியத்தைப் பார்ப்போருக்கு அது ஒரு சிறு எழுதுகோல் போலே தோன்றுவது, அத்துணை உயரத்தில் அமைந்திருப்பதாலும், அத்துணை அளவமைப்பு படைத்திருப் பதாலும். அங்குள்ள சிலைகளும், பீடமும், கல்லறைச் சிற்பங் களும், ஒவியங்களும், உள்ளத்தில் இறையன்பையும் பத்தி யையும் பயக்கும் கருவிகளாகின்றன. கோயிலின் கடுவி லிருப்பது பீடம். இக்கோயிலும் ஐம்பதாயிரம் மக்கள் ஒன்று கூடி வழிபாடு செய்தல் கூடும். போப்பாண்டவர் பெருங் திரு காட்களில் வழிபாடு செய்யும்போது, ஒளி அணிகளும் மக்களின் கூட்டு வழிபாடும் பத்தியை ஊட்டும் சூழ்ாநிலையை ஏற்படுத்துகின்றன. மக்கள் நிறைந்திருக்கும் பொழுது அவர் களின் உடல் வெப்பத்தால் இவ்வாலயத்தின் வெப்ப நிலை ஐந்து பாகை (degrees) கூடுகின்றது என்பர்.
இராயப்பர் பேராலய வட்டக் கோபுரத்தின் மேலுச்சியில் உள்ள வெண்கலப் பேழை, பன்னிருவர் ஒரே கேரத்தில் உள்ளே நிற்கக்கூடிய அகலம் உடையது. கான் குரு மடத்து மாணவனுக உரோமாபுரியில் கல்வி பயின்றுவந்த காலத்தில், இப்பேழைக்குள் புகுந்து அதன் காற்புறமும் உள்ள சிறு சாளரங்களின் வழியாக, வெளியே தோன்றும் நிலப் பரப்புக் காட்சியைப் பார்த்திருக்கின்றேன். அப்பேழைக்குள் மக்கள் செல்வதை இன்று நிறுத்திவிடடார்கள். இப்பேராலயத்தைப் பழுது பார்த்து வருவதற்கே பரம்பரையாகப் பணி செய்யும் வேலையாட்கள் இருக்கின்றனர். அவர்கள் அன்புடன் ஆலயத் தைப் பேணி வருகின்றனர். பெரும் விழாக் காலங்களில் ஆலயத்தின் வெளியே தீப அலங்காரம் செய்வார்கள். மாலைப் பொழுதிற் குறித்த மணி அடித்ததும் ஒரு கொடிப் பொழுதில் கயிற்றேணிகள் வழியாகச் சென்று விளக்கேற்றிவிடு

வத்திக்கான் நகர் - 157
கின்றனர். இவ்வாறு ஒளியணி செய்யப்பெற்ற கோயிலின் அழகினை விவரிப்பது எளிதன்று. அக்காட்சி, வீரமா முனிவர் தம்மை ஈன்ற இத்தாலிய காட்டைப் பற்றிப் பாடி யுள்ள செய்யுளொன்றை எனக்கு நினைவூட்டியது.
“ஓங்கியதோர் உடல்முகமோ முகக்கண்ணுே கண்மணியே
ஒளிசெய் மார்பிற் தூங்கியதோர் பூண்கலனே சுடர்முடியோ முடிமணியோ
சொல்லுந் தன்மை நீங்கியதோர் வனப்பிவ்வில் நிலத்தெல்லை நிகரில்லா
நேமி தன்னில் வீங்கியதோர் பேரின்ப வீடதுவே, மேல்வீட்டு
வாயில:தே"
இராயப்பர் பேராலயத்தின் முற்றவெளி மக்களால்நிறைந் திருப்பதே பிறிதொரு காட்சி. பன்னிரண்டாம் பத்திகாதர் போப் ஆண்டவராக முடிசூட்டப்பெற்ற விழாவன்று அங்கு நான் கண்ட மக்கள் கடல் மணலிலும் பலரே! ஒர் எள்ளு விழு தற்கும் இடமில்லாமலிருந்தது. அன்று என் மேற்பார்வையில் இந்திய இலங்கை காடுகளுக்கு வானுெலி உரைகள் நிகழ்த்தப் பெற்றன. தமிழிலும் உரைகள் நிகழ்த்தினுேம். வெளிகாட்டு வானுெலி நிலையங்களில் தமிழுக்கு இடங்கொடுத்த முதல் நிலையம் வத்திக்கான் வானுெலி நிலையமே. பாரதியாரின் அவா-தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவ வேண்டு மென்ற அவா-விஞ்ஞானக் கருவியின் வழியாய் நிறை வேற்றப்பட்டதை எண்ணி என் மனம் உவகையுற்றது. வத்திக்கான் நூறகூடம்
போப்பரசர்கள் கலைவாணருக்கும், புல வருக்கும், அறிஞருக்கும் புரவலராக என்றும் விளங்கியிருக்கின்றனர். அவ் வள்ளற்றன்மையால் அவர்கள் அரண்மனையும் நூற் கூடங்களும் சிற்றலயங்களும் கணக்கற்ற கலைச்செல்வங் களுக்குக் கோயில்களாக இன்றும் அமைந்து இலங்குகின்றன. வத்திக்கான் நூற்கூடத்தில் அரிய நூல்கள் உள. அந்நூற் கூடத்திலுள்ள புத்தகங்கள் மறைத்துறையைச் சார்ந்தன மட்டு மன்றி ஏனைய துறைகளையும் சார்ந்தவை. பழைய ஏடு கள், கையெழுத்துப் படிகள் முதலியவற்றை போப்பாண்டவர் கள் பெரும் விலை கொடுத்துப் பெற்றுத் தம் நூற்கூடங்களில் வைத்திருந்தனர். கெப்போலியன் உரோமாபுரியைக் கொள்ளை யடித்த காலத்தில் போப்புமாரின் பல ஏட்டுப் பிரதிகளையும்

Page 90
158 ஒன்றே உலகம்
கெப்போலியன் பிரான்சிற்குக் கொண்டு சென்றதாகக் கூறுவர். ره
எந்த மொழிக்கும் உரிய அரிய நூல்களை இந்நூற் கூடத் தில் இன்றும் காணுதல் கூடும். வத்திக்கான் நூற்கூடத் திற்குப் பன்முறை சென்றிருக்கின்றேன். அப்பொழுதெல்லாம், முயற்சிக்கு ஏற்ற உவகையைப் பெற்றுள்ளேன். இந்திய மொழிகளில் அச்சுக் கண்ட முதல் மொழி தமிழ்மொழி. பதினரும் நூற்ருண்டின் பிற்பகுதியில் கத்தோலிக்கக் குருக் கள், தமிழ் அச்சகங்களை தென்னிந்தியாவில் கொச்சிக்கு அண்மையிலுள்ள அம்பலக் காட்டிலும், கொல்லத்திலும், புன்னைக்காயலிலும் நிறுவினர். பல அச்சகங்களை நிறு வினரோ, ஒரே அச்சகத்தின் இடத்தை மாற்றினரோ அறியோம். பதினரும் நூற்ருண்டில் மூன்று நூல்களாயினும் அச்சிடப்பட்டதாக அறிக்தேன். அவற்றுள் இரு நூல்களைப் பற்றியே தமிழ் ஆராய்ச்சியாளர் சிலர் அறிந்திருந்தனர். *திருத்தொண்டர் திருமலர்” (Flos Sanctorum) எனும் மூன்ரு வது நூலைப் பற்றிச் செய்திகள் அறிந்திருந்தும் அதனை எவரும் கண்டிலர். வத்திக்கான் நூற்கூடத்திலுள்ள பண்டை இந்திய நூல்கள் யாவற்றையும் ஆராய்ந்து செல்லும்பொழுது இஸ்பானிய முகவுரையுள்ளதும் 666 பக்கங்கள் கொண்டது மாகிய பெரிய நூல் ஒன்றையும் ஆராய்ந்தேன். இதுவே அறிஞர் பல ஆண்டுகளாகத் தேடிய “FlosSanctroum’ எனப் படும் திருத்தொண்டர் திருமலர் என்னும் நூலென்று அகச் சான்றுகள் பலவற்றிலிருந்து துணிந்தேன். நான் ஐரோப்பா வுக்குப் பன்முறை சென்றதால் ஏற்பட்ட பொருட் செலவிற் கும், எடுத்த முயற்சிக்கும், இந்நூலொன்றைக் கண்டு கொண்டதே போதிய கைம்மாருகும் என்று கருதுகின்றேன். அப்பொழுது கான் அடைந்த மகிழ்ச்சியை ஆராய்ச்சியில் ஈடுபடுவோரே அறிவர். அதே வேளையில் இன்னுமொரு அரிய நூலையும் கண்டேன். பதினேழாம் நூற்ருண்டில் அச்சிடப்பெற்ற தமிழ்-போர்த்துக்கீசிய அகராதியொன்றை எவரும் கண்டிலர் என்று தமிழ்ச்சொல் விளக்க (Tamil Lexicon) ஆசிரியர் கூறியிருந்தார். அந்த அகராதியின் அச்சுப் பிரதியை வத்திக்கான் நூற்கூடத்திலேயே கண்டி ருக்கின்றேன். வத்திக்கான் நூற்கூடத்திலும் ஏனைய ஐரோப்பிய நூற்கூடங்களிலும் காம் அறியாத சில அரிய நூல்கள் இருத்தல் வேண்டும். அவற்றைத் தேடிப் பதிப்பிப் பது தமிழ் அறிஞர்க்குரிய சிறந்தவொரு தொண்டாகும்.

வத்திக்கான் நகர் 59
வத்திக்கான் நூற்கூடத்திற்கு அண்மையில் உள்ளது வத்திக்கான் நுண் பொருட்சாலை. அங்குள்ள பல அறைகளில் பெயர்பெற்ற சிலைகளும் ஒவியங்களும் பழம் பொருள்களும் உள. பண்டை எகிப்தியர், கிரேக்கர், உரோமருடைய சிலை கள் பல அப் பொருட்காட்சி சாலையிலுள. அங்குள்ள சி2ல களில் மக்கள் கவனத்தைக் கவரும் இரு சிலைகள் குறிப்பிடத் தக்கவை. அவற்றுள் ஒன்று “பெல்வதேரி அப்பொல்லோ? (Apollo del Belvedere) என்பதாகும். அப்பொல்லோ என்பது கிரேக்கர், உரோமர் ஆகிய இருவரும் முழு முதற் கடவுளுக்கு அளித்த பெயர். அவர் கட்டழகுடைய உடலமைப்பும்,எல்2ல யற்ற அழகு ஒழுகும் முகமும் உடையவர் என்று மக்கள் அவரைப் போற்றி வந்தனர். அக்கடவுளின் முருகு அமைந்த தோற்றத்தைச் சலவைக் கல்லில் இழைத்த சிற்பியின் திறம் அச்சிலையால் பளிங்கு போலக் காட்டப்பெற்றிருக்கின்றது. மக்கள் இனத்தினது ஆக்கப் பண்பின் உயர்வை, இணையற்ற முறையில் அச்சிலை காட்டுகின்றது.
ம ற் ருெ ரு சிலை வருத்தத்தையும் வேதனையையும் காட்டும். இலாவக்கூன் (Laocoon) எனும் கிரேக்கர், ஜுனே வெனும் தேவதையின் சதியொன்றை எதிர்த்துப் பேசியதால் ஜூனுேவின் வெகுளிக்கு ஆளாயினுர். கடலிலிருந்து இருபாம்பு கள் வந்து அவரையும் அவருடைய இரு சிறு புதல்வரையும் தம் உடல்களாற் சுற்றியும் தம் கஞ்சால் மயக்கியும் கொன் றன வென்று புராணக் கதை கூறும். தந்தையும் மக்களும் பாம்புகளின் தளைகளில் அகப்பட்டுப் படும் வேதனைகளையும்; தளைகளிலிருந்து தப்ப முயல்வதையும், த க்  ைத யி ன் வேதனையை மகன் பார்த்து வருந்தும் துயரத்தையும் பத்தி யையும், கல்லும் கவி சொல்லுமாறு சிற்பி செதுக்கியுள்ளார்.
வத்திக்கானிலுள்ள ஓவியக்கூடங்கள் பல. போப்புமார் வாழ்ந்த அறைகள் பல, பெரும் ஒவியர் தீட்டிய படங்களைக் கொண்ட ஓவியக் கூடங்களாக இருப்பதால், மக்கள் அவற்றைப் பார்க்க வருகின்றனர். இராபைலின் அறைக ளென்று அழைக்கப்படுவன அவ்வோவியரால் மறை வரலாற் றுத் தொடர்புள்ள பெரும் நிகழ்ச்சிகள் தீட்டப்பெற்ற அறை களாம். போப்புமார் சில வேளைகளில் வழிபாடு நிறை (3G) si mpyuð áfő5GňoGDL - Gö7 fṁ (orgGoululið (Sixtine Chapel) GOLDä. கேல் ஆஞ்சலோவின் சுவர் ஒவியங்களால் அணி செய்யப் பெற்றுள்ளது. அதன் முகட்டின் உட்புறத்தில் தீட்டிய

Page 91
160 ܚ ஒன்றே உலகம்
ஒவியங்களை அண்ணுந்து பார்ப்பதில் கழுத்து வலி உண்டா கும். மைக்கேல் ஆஞ்சலோ, மனித உடலை அருந்திறமையு டன் தீட்டியிருக்கின்றர். பல்வேறு வரலாறுகளை இணைத்து இயேசுவின் பெருமையைப் புகட்டியுள்ளார். ஆதாம் ஏவா ளெனும் முதல் ஆணையும் பெண்ணையும் அவரவர் இயல்புகள் புலப்படுமாறு ஒவியங்களில் காட்டியுள்ளார். மைக்கேல் ஆஞ்ச லோவின் இறுதித் தீர்ப்பு” (Last Judgment) எனும் சுவர் ஒவியம் (Fresco) உலக முடிவில் கல்லோருக்கு விண்ணுலகை யும் தியோருக்கு (கரக உலகையும் இயேசுபெருமான் அளிக்கும் காட்சியைக் காட்டுகின்றது. அங்குள்ள சுவர் ஓவியங்கள் ாகாளடைவில் சிறிது மங்கிப் போவதையும் சுவர்கள் வெடிப்பதையும் தவிர்க்க, வல்லுநர் விடாது முயன்று வருகின்றனர்.
வெளிப்பார்வைக்கு, வத்திக்கானின் பழைமையைக் காட் டிலும் புதுமையும் பல்வேறு இடங்களில் தோன்றுகின்றது. வத்திக்கானிலுள்ள வானுெலி நிலையம் பேராற்றல் வாய்ந் தது. அங்ாநிலையம் போப்புமாரின் ஒசையும் ஒலியும் உலகெங் கும் பரவ வேண்டுமெனும் நோக்கத்துடன் நிறுவப்பெற்றது. அங்ங்லையத்திலிருந்து வெளிவரும் அறிக்கைளும், அறிவுரை களும் மக்கள் வாழ்க்கையின் எதிர்கால கன்னிலையை அடிப் படைக் கருத்தாக அமைத்துப் புதுப் பொருளாய் ஒலிக்கின் றன. வானெலி நிலையம் வத்திக்கான் பூந்தோட்டத்தில் நிறுவப்பெற்றிருக்கின்றது. மாலை வேளையில் அப்பூந்தோட் பத்தில் போப்பரசர் தனியே கடப்பதையும், கடந்துகொண்டு நூல்களைப் படிப்பதையும் நான் பல முறை கண்டிருக் கின்றேன்.
பலநிற ஆடைகளையும் தொப்பிகளையும் அணிந்த படை வீரரையும் ஊர் காவலர்களையும் வத்திக்கான் நகரிற் காணலாம். சுவிஸ்காப்பாளர் படை (Swiss Guards) பொது வாகக் கதவுகளையும் படியேணிகளையும் காக்கும். சுவிட்சர் லாங்திலிருந்து வரும் இவர்கள், தாம் காப்பாளராக இருக்கும் வரை மணஞ்செய்துகொள்ளாது இருக்கின்றனர். பலாநிறக் கோடிட்ட உடையணிந்தும், வேலினைத் தாங்கியும், இவர்கள் நடமாடும் காட்சி அழகுடையது. சுவிஸ்காப்பாளர் தம் உயி ரைக் கொடுத்தும் தாம் காக்கும் மன்னரைக் காப்பாற்றி வரு வர் எனும் கம்பிக்கை வரலாற்றில் வலியுறுத்தப்பெற் றுள்ளது. போப்புமாரின் மெய்காப்பாளராக அவர் கூடங்

வத்திக்கான் நகர் 6
களில் பணி செய்பவர், பிரபு காப்பாளர்” (Noble Guards) என்னும் படையினர். இவர்கள் பண்டை இத்தாலியப பிரபு நிலைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சென்ற உலகப் பெரும் போர் நிகழ்ந்தபொழுது, அமைதி நிலை உடன்படிக்கையைப் பற்றிச் சூழ்வதற்கு போப் ஆண்டவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று சர்ச்சில் (Churchit) ஸ்டாலினுக்குக் கூறினராம். ஸ்டாலின், அவ்வாலோசனையை மறுத்து போப் ஆண்டவர் எத்துணைப் பட்டாளங்களைப் போரில் இறக்குவார்’ என்று வினவினராம். போப் ஆண்டவரின் படை ஈராயிர வீரர்களைக்கொண்ட வெறும் சடங்குப் படை போப் ஆண்டவரின் அரசு மறத்தின் அரசன்று; அறத்தின் அரசு. எனவே, அவ்வரசு வலிமையால் நிலைகாட்டப்பெருது உரிமையால் காப்பாற்றப் பெற்று வருகின்றது. தனி மனித னின் சுதந்திரத்திற்கும் அரசின் சுதந்திரத்திற்கும் வலிமை யன்றி உரிமையே அடிப்படை.
வத்திக்கான் நகருக்கு வெளியேயிருந்தும், அவ்வரசுக்கே உரிமையான கல்லூரி ஒன்றிலே நான் குருவிற்குரிய கல்வியை ஐந்தாண்டுகளாகப் பயின்று வந்தேன். கிழக்கு காடுகளை ஐரோப்பியர் கண்டுபிடித்த காலத்தில் அங்காடுகளிலிருந்து வரும் மாணவர்க்கென அக்கல்லூரியைப் போப் ஆண்டவர் ஒருவர் நானூறு ஆண்டுகளுக்கு முன் நிறுவினர். அங்கே ஏறக்குறைய 43 காடுகளைச் சேர்ந்த 250 மாணவர் என்னுடன் குருமடத்திற் பயிற்சி பெற்றுவந்தனர். அவர்கள் வெவ்வேறு நிறத்தோற்றமுடையவர்கள் ; வெவ்வேறு மொழிகளைப் பேசு பவர்கள்; வெவ்வேறு பண்பாட்டைக் கொண்டவர்கள். சீனர், ஜப்பானியர், அமெரிக்கர், தேனியர், ஆப்பிரிக்கர், இந்தியர் ஆகிய அனைவரும் அன்புடன் வாழ்ந்து வந்தோம். வெவ் வேறு காடுகளைப் பற்றியும், இலக்கியங்களைப் பற்றியும் அறிவதற்கு, அக்கல்லூரி எனக்கு அரிய வாய்ப்பை அளித்தது.
077 . . .

Page 92
16. கிரேக்க நாடு
நீலத்திரைக் கடல் என்றுபுலவர் கூறினரே-அங்லே நிறம் தமிழ் காட்டைச் சூழ்ந்த கடலில் உண்டு; ஹாவாயைச் சூழ்ந்த கடலில் சில வேளைகளிலுண்டு. ஆணுல், நடு நிலக் கடலின் நீலம் நீலத்துள் நீலம். அத்தகைய நீலத்தை வேறெந்தக் கடலிலும் கண்டிலேன். எனவே, அக்கடலை ஐரோப்பிய நூலா சிரியர் நீல நடுநிலக் கடல் (Blue Mediteranean) GTGOT 9 GOɔypů
Jogj51 LDUU.
கடு நிலக்கடல், வரலாற்றில் சிறந்த கடல். அதனை உடுத் திய நாடுகள் என்றும் உயர்ந்த நிலையடைந்து விளங்கி யுள்ளன. எகிப்து, கிரீஸ், இத்தாலி, சிரியா, லெபனன், இஸ்றயேல், இன்னுேரன்ன நாடுகளின் வரலாறு, பண்பாட் டின் வரலாற்றில் புதிய புதிய காலங்களைக் குறிப்பதாகும். தமிழ் காட்டின் செல்வங்களாகிய முத்தும், பவளமும், பட்டும், மிளகும் எகிப்திற்கு யவனரால் கொண்டுவரப் பெற்று, அங் கிருந்து கடுநிலக் கடலின் வழியாக ஐரோப்பாவிற்கு ஏற்று மதி செய்யப்பெற்றன. நடுநிலக் கடலின் நாடுகளே பழங் தமிழருக்குக் குடியிடமாக இருந்தனவென்றும், தமிழ் மக்கள் நடுநிலக் கடல் மக்களினத்தைச் சார்ந்தவரென்றும் மக்களின வியல் நூலோர் (Anthropologist) சிலர் கூறிவருகின்றனர். இக்காலத்து வரலாற்றிலும் நடுநிலக் கடல் சிறந்து விளங்கு கின்றது.
அமெரிக்காவின் மாட்சியும் வானவழிச் செலவின் வழக் குமே இக் கடலின் பெருமையைச் சிறிது குறைத்துள்ளன. ஒரு மூலையில் ஜிப்பிருல்ட்ரும் மற்ருெரு மூலையில் தயஸ் கால்வாயும் இக்கடலைக் காப்பாற்றும் இரு அரண்கள். வான வூர்தியின் காலம் இவ்விரு அரண்களின் பயனைக் குறைத் திருப்பினும், இன்னும் காப்புத்துறையில் இவற்றின் சிறப்பை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இவ்விரு இடங்களிலும் இவற்றையடுத்த கடல்களிலும் பல்வேறு நாட்டவருடைய கப்பல்கள் செல்வதையும் வருவதையும் காணலாம். கப்பலில் செல்பவர் இன்னுமொரு கப்பலை அண்மையில் காணும் பொழுது உவகை கொள்கின்றனர். மறு கப்பலில் உள்ள

கிரேக்க நாடு 63
மாந்தரைக் கைகாட்டி வாழ்த்துகின்றனர். கப்பல்களின் மாலுமிகளும் வானுெலியின் வழியாகத் தம் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
நடுநிலக் கடலில் பன்முறை கப்பல் வழியாகச் செலவு செய்திருக்கின்றேன். நடுநிலக் கடல், பகலில் காட்டும் நீலத் தையும் இரவில் காட்டும் மீன்பூத்த வானத்தையும் கான் எளி தில் மறவேன். கப்பற் செலவு அமைதியும் அழகும் கலந்து கல்குவது. பல நாட்களாக நிலம் காணுது இருத்தல், அடி வானம் மட்டும் செல்லும் அலை மோதும் நீர்ப்பரப்பைப் பார்த் தல், ஞாயிற்றின் தோற்றத்தையும் மறைவையும் கண்டு மகிழ்தல் ஆகிய இவை, கடற் செலவு தரும் சீரிய இன்பங் கள். நீர்ப்பரப்பின் அலைகளையும், விண்பூக்கும் மீன்களையும் மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டே இருத்தல் கூடும். அவ்வாறு பார்க்கும்பொழுது கம் உள்ளம் தூய்மையடைந்து இறைவனின் மாட்சியில் தோய்கின்றது.
ஐரோப்பாவின் மேற்குக் கரை நாடுகளுக்குக் கப்பலில் செல்பவர்கள் பிஸ்கேயெனும் குடாவைக் கடப்பதற்கு அஞ்சுவர். கடுங்காற்றும் கீரோட்டங்களும் மிகுதியாக அக் குடாவில் கலப்பதால் கடற்பெருக்கும் ஆட்டமும் புயலும் அங்கு நாள்தோறும் தோன்றும் நிகழ்ச்சிகள். மேலும் இங்கு மூடுபனி உள்ள நாடுகளில் கப்பலோட்டும் மாலுமிகள் இரேடாரின் (Radar) மூலமாகவே கப்ப2ல ஒட்ட இயலும்.
நடுநிலக் கடலில் சில தீவுகள் உள. இவை யாவும் பண்டு தொட்டுப் புகழ் பெற்றவை. மால்தா, கிரீட் சைப்பிரஸ், சிசிலி, கோர்சிக்கா, சார்தீனியா, ஆகிய திவுகளை ஐரோப்பியர் பல காரணங்களின் பொருட்டு விரும்புவர். கிரேக்க நாட்டைச் தழுங் கடலில் ஏறக்குறைய ஈராயிரம் தீவுகள் உள. அவற்றுள் சில வெறும் கற்பாறைகள்; வேறு சில உரோட்ஸ் (Rhodes) போன்ற பெரிய தீவுகள். எரிமலைகள்
இத்தீவுகளில் கோர்சிக்கா என்பது பேரரசன் நெப்போலி யனின் பிறப்பிடமெனப் பெயர் பெற்றுள்ளது; மால்தா போர்க் காலங்களில் விளம்பரம் பெற்று வருவது. மால்தா கடுநிலக் கடலின் நடுவில் இருப்பதால் அதன் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்குப் போர்க் காலத்தில் அது பயன்பட்டுள்ளது. சிசிலி வனப்பு வாய்ந்த பெருங் தீவு. தோடை, கொடி முந்திரிகை, ஆப்பிள், பீச் முதலிய பழ வகைத் தோட்டங்கள் மிகுதியாக

Page 93
1 64 ஒன்றே உலகம்
உள்ள நாடு. எத்ன (Etna) எனப்படும் எரிமலை சிசிலித் தீவில் என்றும் புகைந்துகொண்டே இருக்கின்றது. சில வேளை களில் பொங்கிக் கீழே பல கல் தூரம் அதன் லாவா வடிவ துண்டு. இந்த வட்டாரத்தில் பெயர் பெற்றவேறு இரு எரிமலை கள் உள. அவை ஸ்ருெம்பொலியும் வெதுவியஸ7மாகும். ஸ்ருெம்பொலி ஒரு தனித் தீவு. வெதவியஸோ கேப்பிள்ஸ் ாககருக்கு அண்மையில் உள்ளது. இவ் வட்டாரத்தின் நில கடுக்கம் சில வேளைகளில் பெருஞ் சேதத்துடன் நிகழ்ந்து வரு கிறது. வெதுவியஸின் உச்சிமேற் சென்று அஃது அனல் கக்காத நாட்களில், அதன் உச்சி விளிம்பைக் (Crater) காணு தல் கூடும். R
இல்லங்கள் எரிமலைகளின் அண்மையில் இருப்பதை காம் பெரும்பாலும் பெரும் ஆபத்தெனவே கருதுவோம். ஆனல் எத்ணு, வெதுவியஸ் போன்ற எரிமலைகளின் அடியில் வாழ்ந்து வரும் மக்கள் அவ்வாறு கருதுவார். அல்லர். அவ்வெரிமலை களைத் தம் மாவட்டத்தின் அணிகளாகக் கருதி வருகின்றனர் அம்மாந்தர். மேலும் எரிமலைகளிலிருந்து சில ஆண்டுகளில் பொங்கி வடியும் தீக்குழம்பு அவ்வட்டாரத்தின் நிலச் செழிப் பிற்குத் துணையாகின்றது. தோட்ட வேளாண்மைக்கு வேண்டிய பல பச2ளப் பொருள்கள் அக் குழம்பில் உள்ளன. எத்ணுவெனும் எரிமலையை கான் இலை உதிர் காலத்தில் பார்க்கச் சென்றேன். அப்பொழுது தோடம்பழத் தோட்டங் கள் மஞ்சட் கனி நிறைந்து தோன்றின. கொடி முந்திரிகைப் பழங்கள் பெரும் கொத்துக்களாகக் கொடிகளில் தொங்கின. அங்கு உள்ள சில பயிற்சித் தோட்டங்களுக்கும் நான் சென்றேன். பச2ள உரம் முதலியவற்றைக் கொண்டு பெரிய முந்திரிகைப் பழங்களே உண்டாக்கினர். ஒவ்வொரு பழமும் கோழி முட்டை அளவுள்ள பெரும் பழக் கொத்துக்களை எனக்குக் காட்டினர். இத்தாலிய நாட்டில் ஏறக்குறைய கானூறு கொடி முந்திரிகைச் செடி வகைகள் இருப்பதாக அறிக்தேன். மாங்கனிகளிலே ஏறக் குறைய நூறு வகை யுண்டெனில், முந்திரிகையில் கானூறு வகையிருப்பதில்வியப் பில்லை. சிசிலித் தீவின் சைரக்கூஸ் (Syracuse) எனும் நகரில் தியோனிசியுஸ் கொடுங்கோலன் செவி (Ear of Dionysius the Tyrant) எனப்படும் ஒரு குகையைக் கண்டேன். இக்குகையில் தோன்றும் எதிரொலி கான் கேட்டவற்றுள் தலைசிறந்தது. முன்னெரு காலம் தியோனிசியஸ் எனுங் கொடுங்கோல்

கிரேக்க நாடு 65
மன்னன் தன் அரசியல் மாற்ருரை அக்குகையில் சிறையிட்ட தாகவும், மாற்றர் தமக்குள் மறைவாக மென் குரலில் தழ்வதை யெல்லாம் அக்குகையின் மேல் நின்று கொடுங்கோலன் எதிரொலியின் வழியாகக் கேட்டதாகவும், அக்குகையைப் பற்றிக் கூறிவருகின்றனர். கான் அக்குகையின் வாயிலில் கின்று ஒரு துண்டுத் தாளினைக் கிழித்தேன். அவ்வாறு கிழித்ததால் தோன்றிய சிற்ருெலி துப்பாக்கியின் வெடி போல் எதிரொலி மூலம் கேட்டது. அங்குள்ள கதவொன்றைத் தட்டினேன்; அதன் எதிரொலி பீரங்கி வெடி போல் முழங் கியது.
சிசிலித் தீவில் உள்ள மெசிணுவுக்கும் இத்தாலியக் கரையி லிருக்கும் ரெஜியோகலாபிரியாவுக்கும் ஏறக்குறைய கான்கு கல் தூரமுள்ள கடலுண்டு. மறு கரையிலுள்ள நகர்களுக்குச் செல்வோரின் வசதிக்காகப் புகை வண்டிகள், அவற்றைத் தாங்கிச் செல்லும் பாதைக்கப்பல்களில் (Train Ferries), மறு கரைக்குச் சேர்க்கப்படுகின்றன. புகைவண்டி நேரே கப்பலுக் குள் சென்றது. மறுகரையைக் கப்பல் அடைந்ததும், நிலத் தின்மேல் தொடர்ந்து ஓடுகின்றது. அவ்விடத்தில் அடிக்கடி பாதைக் கப்பல்கள் போய் வருவதைக் காணலாம். இரவு காலத்தில் அப்பாதைக் கப்பல்களில் செல்லும்பொழுது இரு கரைகளிலும் ஏற்றிய ஆயிரக்கணக்கான விளக்குகள் ஒளிரும் தன்மை, கார்த்திகைத் திருகாள் போல் தோன்றும். மேலும் இங்கிருக்கும் கலங்கரை விளக்கொன்று கன்னிமரி அம்மை யாரின் வடிவில் உள்ளது. பகலில் சிலையாகக் காட்சியளிக் கும் அக்கலங்கரை விளக்கம், இரவில் ஒளிப்பிழம்பாக மாறு கின்றது. தொன்மைவாய்ந்த அரண்மனை
நான் கண்ட மற்ருெரு தீவு தழிழருடன் தொடர்புடைய தாகக் கருதப்படுகின்றது. அதுவே கிரீட் (Crete) எனும் நீண்ட தீவு. ஐரோப்பியக் கண்டத்தில் தோன்றிய முதற் பண் பாட்டின் நிலைக்களமாக விளங்கியது இத்திவேயாம். சிலர் கிரீட் பண்பாட்டை ஐரோப்பியப் பண்பாடாகக் கருதுவர் அல்லர்; ஏனென்ருல் அப்பண்பாடு ஆசிய கண்டத்துடன் அத்துணைத் தொடர்புடையது. ஆயினும், ஐரோப்பாக் கண்டத்தின் தாய் காடாகப் போற்றப்படும் கிரேக்க காடு தன் பண்பாட்டைக் கிரீட் காட்டிலிருந்தே பெற்றுள்ளது. கிரீட் பண்பாட்டிற்கு ஈஜியன் (Aegean) பண்பாடென்றும்

Page 94
66 ஒன்றே உலகம்
பெயருண்டு. மொகெஞ்சோ-தரோ பண்பாட்டைப் பிற் காலத்து ஈஜியன் பண்பாடென்பர். ஏறக்குறைய கி. மு. மூவா யிரத்திற்கும் கி.மு. ஆயிரத்துக்கும் இடையே இத்தீவு புகழ் பெற்று விளங்கிற்று. இக்ாகாட்டவர் கடற்படையில் சிறந்த வர்களென்றும், கிரேக்க காட்டிலும் அதனைச் சூழ்ந்த தீவுகளி லும் வாழ்ந்தவர்களை ஒரு காலம் ஆண்டு வந்தவர்களென்றும், இறுதியாகப் பழங் கிரேக்கரால் இவர்களும் இவர் நகர்களும் அழிக்கப்பட்டன என்றும் வரலாற்றிலிருந்து அறியக்கிடக் கின்றது. கிரீட்டர் காலாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய அரண்மனையைப் பார்க்கவே மக்கள் எல்லா காடுகளிலுமிருந்து கிரீட்டுக்குச் செல்வர். மினுெசின் அரண்மனை (The Palace of Minos) ஐந்து மாடிகள் கொண்ட மாளிகையாக இருந்திருத்தல் வேண்டும், அது பல கூடங்களும் சாலைகளும் நில அறை களும் உள்ள மாபெரும் கட்டடம். ஒரு சிறு நகரின் அமைப் பைப் போல் இருந்தது அரண்மனையின் அமைப்பு. நிலஅறை களில் உள்ள மாபெரும் தாழிகளில் கூலமும், முந்திரிகைச் சாறும், ஒலிவ் எண்ணெயும் காப்பாற்றப்பெற்று வந்தன. அரசனின் ஒலக்கத்தில் கல்லில் செதுக்கப்பட்ட அரச கட்டிலும் அமைச்சர் இருக்கைகளும் இருந்தன. மிகவும் அழ கான ஒவியங்கள் சுவர்களில் வரையப்பெற்றிருந்தன. அம் மக்கள் வாழ்க்கை முறைகளில் அடைந்த மேம்பாட்டை அவ் வரண்மனையின் அமைப்பும் அங்குள்ள கவின் கலைகளின் வேலைப்பாடுகளும் திறம்படக் காட்டுகின்றன.
திடீரென கிரீட் வலிமையை இழந்தது. கிரேக்க காட்டு லிருந்து வந்த மாற்ருர், மினுெசின் அரண்மனையை எரித்தனர். இன்றும் தீப்பற்றிய தூண்களையும் பலகைகளையும் அங்குக் காணக்கூடும். அரண்மனை எரியப்பெற்றதும் கிரீட் மக்களும் சிதறி அழிந்தனர். மினுேசின் அரண்மனையும் ஏனைய கட்டடங்களும் மண்ணுல் மூடப்பெற்று ஏறக்குறைய முப்பத்தைந்து நூற்ருண்டுகளாக மறைந்து கிடந்தன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் புதை பொருள் வல்லுங்ர் F6) TGšTG) (Sir Arthur Evans) ßGlGodflgāT 9TGTdēT6Ouš தேடிக்கண்டு அதனை ஒருவாறு பண்டை நிலையொப்ப அமைக்க முயன்ருர், அகழ்தலின் விளைவாக கிரீட்டின் பண் பாட்டுச் சின்னங்களாகிய ஓவியங்கள், மனையகப் பொருள்கள், மட்கலங்கள் முதலியவற்றைக் கண்டெடுத்தனர். இவ்வரண் மனைச் சுவரில் எழுதப்பெற்ற ஓவியங்களின் அழகைக் கண்டு

கிரேக்க நாடு Y 6 வியப்படையாத அறிஞர் இல்லை. “கலந்தாங்கி’ (Cup-bearer) எனப்படும் ஒவியம், தோற்றமும் அழகும் வாய்ந்த கொடுக்குக் கட்டிய இளைஞன் ஒருவனைக் காட்டுகின்றது. பெண்பாலா ரைக் காட்டும் சில ஒவியங்கள் இற்றைய கண்ட உடைகளைக் காட்டும் பாரீஸ் மாநகர்ப் பெண்களைப்போல் இருப்பதாக மக்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். அக்காலத்து கிரீட் மக்கள் அடைந்திருந்த உயர்ந்த நிலையை அவர்களின் மனையகப் பொருட்களும் கலைகளும் காட்டுகின்றன.
போட்டி விளையாட்டுக்களில் முல்லைங்லத் தமிழரைப்போல் ஒரு வகையான ஏறு தழுவுதலில் கிரீட்டர் ஈடுபட்டதாக அவர் களுடைய பல் கலைப் பொருட்களிலிருந்து அறியக் கிடக் கின்றது. இப்போட்டி விளையாட்டில் ஆடவரும் பெண்டிரும் ஒருங்கே கலந்துகொண்டனர். கொஸ்ஸொஸின் (Knossos) பழம் பொருட்சாலையில் உள்ள வெண்கலம் படிவமொன்று ஆடவர் ஒருவர் ஏருென்றின்மேல் தாவிப் பாய்ந்து குட்டிக் கரணமிட்டு, ஒரு பெண்மணியின் கைகளில் வந்து விழாநிற்கும் காட்சியினைக் காட்டுகின்றது. அதே பழம் பொருட்சாலையில் உள்ள மட்குடங்களும் பாத்திரங்களும் களிப்புணர்ச்சிமிகுந்த கடையில் நிறம் ஊட்டப்பெற்ற வேலைப்பாடுகள் உடை யவை. அப்பண்பாட்டவர் எருதினைச் சிறப்பாகப் போற்றி வந்தனர் என்பதற்குக் கிரீட்டில் பெருக்தொகையாகக் கண்டெடுக்கப்பெற்ற சிலைகளும் உருவங்களும் அச்சுகளுமே சான்ருகின்றன. மேலும் கிரீட்டில் அக்காலத்து எழுத்தால் அணி செய்யப்பட்ட பல பொருள்கள் உள. அவ்வெழுத்தைப் படிக்கும் முறையை அறிஞர் இதுகாறும் கண்டுபிடித்திலர். அவ்வெழுத்தை வாசிக்கும் காலத்தில் கிரீட்டின் வரலாற்றுச் சான்றுகள் இன்னும் மிகுதியாகக் கிடைக்கும்.
கிரீட் பண்பாடு அழிந்ததும் அதன் தொடர்ச்சி கிரேக்க நாட்டில் தோன்றியது. கிரீட்டை அறிந்த பழங் கிரேக்கர் அங்குள்ள கலைவல்லுகரைத் தம் காட்டிற்குக்கொண்டுசென்று அங்கு அவர் கலை முறைகளைப் பின்பற்றியிருக்கக்கூடும். இவ்வகையில் தான் மிசினே (Mycenae), திரின்ஸ் (Tyrins) போன்ற கிரேக்க காட்டின் இடங்களில் பெருங் கட்டடங் களும் மனையகப் பொருட்களும் தோன்றியிருத்தல் வேண்டும்.
மினேசின் அரண்மனையை மாலைப்பொழுதில் பார்த்து விட்டு வெளியே வந்ததும், காலஞ் சென்ற பழம்-பொருள்

Page 95
68 ஒன்றே உலகம்
வல்லுங்ர் ஈவன்ஸின் சிலையைக் கண்டு அப்பெரியாரை வாழ்த் தினேன். இத்தகைய ஐரோப்பிய அறிஞர் எத்துணை ஆற்றலுடன் தம் வாழ்க்கையையும் பொருளையும் பழம் பொருள் க2லகளுக்காக கொடுக்கின்றனர். கிரேக்க நாட்டின தலைநகர்
கிரேக்க நாடு ஐரோப்பியப் பண்பாட்டிற்குத் தாய் காடு. ஐரோப்பிய இலக்கியங்கள், ஐரோப்பியக் க2லகள், ஐரோப் பியச் சிந்தனை, ஐரோப்பிய அரசியல் அமைப்பு முறைகள் ஆகிய இவை யாவும், கிரேக்க காட்டை அடிப்படைக் கள மாகக் கொண்டவை. இத்தகைய சிறு காடும் தொகையிற் குறைந்த மக்களும் மற்றெல்லா மக்களுக்கும் வழிகாட்டி களாக விளங்கிய பெருமையைக் கணிப்பதும் விளக்குவதும் அறிவுச் செறிவு படைத்த ஆசிரியருக்குக்கூட எளிதாகாது. இந்திய வரலாற்றில் திராவிடப் பண்பாடு அடிப்படையாக இருப்பது போல், கிரேக்க காட்டிலும், அங்குப் பின்வந்து சேர்ந்த ஆரியர்க்கு முற்பட்டவர்களே, கிரேக்கப் பண்பாட்டிற் கும் அடிப்படைக் காரணமாக இருந்தனர் என்பது ஆராய்ச் சித் துறையில் சிறந்தவரின் துணிபு. கிரேக்க காட்டிற்கும், கி. மு. ஆயிரத்திற்குப் பின் தான் வட ஆரியர் எனப்படுபவர் வந்து சேர்ந்தனர். அப்பொழுது அங்கு வாழ்ந்தவரும் கிரேக் கப் பண்பாட்டிற்கு மூல காரணமாக இருந்தவர்களும் இந்தி யத் திராவிட மக்களின் இனத்தவர் என்பது நூலாசிரியர் சிலரின் கருத்து.
கிரேக்க காட்டின் பல ககர்களையும் இயற்கையழகையும் பார்த்த பின் அதென்ஸ் (Athens) பேரூரின் குன்றத்து மேலுள்ள அக்ருெப்பொலிஸ் (குன்றத்துார்) என்னும் பழைய ஊரின் இடிந்த கட்டடங்களைப் பார்க்கச் சென்றேன். அங்கு அத்தேனு கன்னிக் கடவுளுக்குக் கிரேக்கர் எடுத்த கோவிலின் (Parthenon) உட்புறத்தில் உள்ள கற்றுாண்களின் எழிலில் மெய்ம்மறந்து அமர்ந்திருந்தேன். அக் கோவிலின் சிலைகள் பலவற்றை ஆங்கிலேயர் இலண்டன் மாங்கருக்கு எடுத்துச் சென்றிருப்பினும், அதன் பல பகுதிகள் இடிந்திருந்தும், அதன் பண்டை நிலை மாறியிருந்தும், அக்கட்டடத்தின் அழகு இற்றைய நிலையிலும் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் வனப்பு வாய்க்ததாகவே இருந்தது. அங்கு அமர்ந்திருந்தே கிரேக்க நாட்டின் பெருமையைப் பற்றிச் சிந்தித்தேன்.

கிரேக்க நாடு 169
gyGốoT GOLDu Goio, luGổoT GOdl-uLu FBTGMT sňu5T Lạ. (Forum or Agora) இருந்த இடம் தோன்றியது. அங்குத்தான் சொக்ருத்திஸ் (Socrates), பிலேத்தோ (Plato) போன்ற விழுமிய மெய்யுணர்' வாளர் தம் கொள்கைகளைப் பரப்பினர். வேருெரு பக்கத்தில் பண்டை நாடக அரங்கு தோன்றியது. அங்குத்தான் ஈயுறிப் பிடீஸ் (Euripides), சொபோக்கிளிஸ் (Sophocles) போன்ருே ருடைய காடகங்கள் கடிக்கப்பெற்றன; இன்னும் சிறு தூரத் திற்கு அப்பால் தோன்றியது “ஒலிம்பியாட்ஸ்" (Olympiads) எனப்படும் போட்டி விளையாட்டுக்களம். அங்கு விளையாட் டில் வெற்றி பெற்றவர்களுக்குப் பொன்னையும், பொருளையும் கொடுக்காது, இலைகளால் ஆக்கப்பெற்ற முடிகளையே பரிசாக வழங்கினர். கிரேக்கர் நல்ல தோற்றமும் வலிமையும் படைத்த உடல்களை விரும்பி, அவற்றைப் பெறுவதற்கு உடற்பயிற்சியில் கருத்துச் செலுத்தி வந்தனர். எனவே, இவர்கள் சலவைக் கல்லில் செதுக்கிய மக்கள் உருவங்களின் தோற்றமும் அமைப்பும் சொல்லொணு அழகு வாய்ந்தவை. ஒவ்வொரு காட்டின் வரலாற்றிலும் பெரும்பாலும் ஒரு செம் பொறகாலமுண்டு. கிரேக்கர் குடியரசை நிலைாகாட்டிப் பெரிக் கிளிசைத் (Pericles) தம் தலைவராகக்கொண்ட காலமே (கி. மு. ஐந்தாம் நூற்ருண்டு) கிரேக்க காட்டின் பொற்கால மாகும. கிரேக்கரும் கடலும்
அக்குருேப்பொலிஸ் குன்றின்மேல் நின்று கடலைப் பார்த் தேன். கிரேக்கர் எக்காலத்திலும் கப்பலோட்டிகளாக விளங்கி யிருக்கின்றனர். இன்றும் அவர்களுடைய வணிகக் கப்பற் படை சிறந்தது. அக்காலத்தில் தம் சுதந்தரத்தைக் காப் பாற்றப் பன்முறை கடற் போரில் கலந்து வெற்றிகொண்ட னர்; முனைகளும் குடாக்களும் தீவுகளும் நிறைந்த நாட்டில் கிரேகக மக்கள் கடலோடு பிறந்து வாழ்ந்து வந்தனர். இவர் களைப் பற்றிய சிறு வரலாறென்று அறியற்பாலது. பாரசீ கத்தின் மீது படையெடுத்துச் சென்ற கிரேக்கர் பல காட் களாகக் கடலைக் காணுது வருந்தினர். இறுதியாக வழிகாட்டி ஒருவன் ஐந்து நாட்களுக்குள் கடலைக் காட்டுவதாகக் கூறி, அவரை அழைத்துச் சென்றனன். ஐந்தாம் நாள் ஒரு குன்றின் மேல் ஏறுங்கால் முன்னணிப் படைவீரர் ஆர்ப்பரிப்பதைக் கேட்டுப் பின்னணிப் படைவீரர் எதிரிகள் போர் தொடுக்க வந்தனரோ என அஞ்சினர். ஆணுல், படைவீரர் கெடுகாளா

Page 96
I 70 ஒன்றே உலகம்
கக் காணுத கடலைக் கண்டதே அந்த ஆர்ப்பாட்டத்தின் காரணம்; "கடல், கடல்’ என்று கூவிய படைவீரர் தம் தோழரையும் படைத் தலைவர்களையும் கண்களில் நீர் அரும்பக் கட்டியணைத்துத் தழுவினராம்.
நாட்டின் இயற்கை அமைப்பு அங்காட்டவரின் அறிவிற் கும் ஆற்றலுக்கும் அடிப்படையாதலால் நீலக் கடலும், தெள் ளிய நீல வானும், தூய ஆகாயமும், உவந்த தட்ப வெப்ப நிலையும், கிரேக்கர் அடைந்த பெருமைக்கு ஒருவாறு காரணங் களாம் எனப் பலர் கூறுவர்.
கிரேக்க காட்டில் சுற்றுச் செலவு செய்த நாட்களில் பண் டைக் கிரேக்கரைப்போலத் தோன்றும் மக்கள் இன்னும் இருக் கின்றனரோ வென்று தேடினேன். சில வேளைகளில் ஒரு சில இடங்களில் கிரேக்கச் சிலைகள் காட்டும் முகங்கள் போன்ற வற்றைக் கண்டு மகிழ்ந்தேன். கிரேக்க நாடு இன்று கல்குர வுற்று இருக்கின்றது. பண்டுள்ள புகழெல்லாம் மங்கி மறைந்துவிட்டது. அடிக்கடி நிலநடுக்கமும் மக்களின் துன் பத்தைக் கூட்டுகின்றது. மேலும் இக்கால கிரேக்கருக்கும் அக் கால கிரேக்கருக்கும் பெருவேற்றுமையுண்டு. பண்டைக்காலப் பண்பு எங்கே மறைந்துள்ளது? நானுாறு ஆண்டுகளாகத் துருக்கியரின் ஆட்சிக் குட்பட்டு இருந்ததால் கிரேக்கர் தம் சொந்த இயல்புகளை இழந்தனர் போலும் உரையாடலிலும் பொழுதுபோக்குவதிலும் மட்டுமே இக்கால கிரேக்கர் அக்கால கிரேக்கர்களைப் போல வாழ்க்கை கடத்திவருகின்றனர். கிரேக்க காட்டில் எங்குச் சென்ருலும் கிரேக்கர் காப்பிக் கடைகளில் உட்கார்ந்து காப்பி பருகிப் பருகிச் சீட்டுப் போடுவதையும் சொக்கட்டான் விளையாடுவதையும் காணலாம். சிறப்பாக இரவு உணவு உட்கொண்டபின் காலை இரண்டு மூன்று மணி வரையில் பூங்காவிலுள்ள உணவுச்சாலைகளிலும், காப்பிக் கடைகளிலும் உரையாடிக்கொண்டேயிருப்பர். உரையாட லில் கிரேக்கருக்குப் பண்டுதொட்டு எல்2லயற்ற ஈடுபாடு உண்டு. அங்குள்ள உணவுச் சாலைகளில் நான் சோறு கேட்ட பொழுது கொடி முந்திரிகை இலைகளில் சுருட்டி வேகவைத்த சிறு சிறு சோற்றுக் கட்டிகளைக் கொணர்ந்தனர். அச்சோறு சுவைமிக்கது.
கிரேக்க காட்டின் வரலாற்றிலிருந்து தமிழ் மக்கள் பாடம் ஒன்றினை கன்ருகக் கற்க வேண்டும்; பண்டைப் புகழ் ஒரு காட்டில் எத்துணை மண்டிக்கிடந்தாலும், அங்ாட்டின் இக்

கிரேக்க நாடு 7 I
காலத்து மக்கள் கன் முயற்சியால் தம் முன்னேர் பூட்கை களைப் பொன்னே போற் போற்றி மேற்கொண்டாலன்றி, அங் காடு வீசும் பண்பாட்டு ஒளி மங்கி மறைந்தேவிடும்.
கிரேக்க காட்டின் பண்பினை ஆராய்ந்து பயின்றவர் கிரேக்கர் அல்லர்; ஏனைய நாட்டவரே ஆவர். ஜெர்மானியர் பிரெஞ்சுக்காரர், இத்தாலியர், இன்றைய அமெரிக்கர் ஆகி யோர் கிரேக்க நாட்டையும் தம் தாய்ாகாடாகக் கருதியதால், அங்கு ஆராய்ச்சிக் கழகங்கள் நிறுவி ஆராய்ச்சி நிகழ்த்தி வருகின்றனர். இவ்வாறு ஆராய்ச்சி நிகழ்த்தும் சிலருடன் தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி உரையாடினேன். பண்டைய கிரேக்கரோடு ஏறக்குறைய ஒரே காலத்தவரான பண்டைய தமிழர் கடைப்பிடித்த நெறியைவிளக்கினேன். கிரேக்கருக்கும் தமிழருக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் பலவற்றைச் சுட்டிக்காட்டினேன். அவர்கள் வியந்து ஒப்பியல் பண்புத் துறையில் இன்னும் விரிந்த ஆராய்ச்சி வேண்டும் என்று, உடன்பட்டனர். ஐரோப்பியப் பண்பாட்டுத் துறைகளில் ஈடுபடுவோர் பலர் ஐரோப்பாவை மட்டும் எல்லையாக வைத்து உழைத்து வருகின்றனர். தமிழரைப்போன்ற அக்காலத்து மக்கள் எவ்வாறு வாழ்ந்து வந்தனர் என்று அறிந்து ஒப்பிடு வது அவர் கடமையாகுமன்ருே ?
கிரேக்க காட்டிலிருந்து விடைபெற்றுக் கொண்டபொழுது என் உள்ளம் வருந்தியது. அங்குத் தங்கியபொழுது உலகில் சிறந்த மக்களின் காட்டைக் கண்டு இன்புற்றேன். பண்டைக் கிரேக்கர் கல்வாழ்வின் கல்லியல்புகளில் துறைபோகிய அறி ஞர்; இலக்கியத்தில் வழிகாட்டியவர்; அரசியல் மானத்தைக் காப்பாற்றியவர்; கலைகளில் இன்பம் துய்த்தவர்; வீரத்தைத் தலைமேற் கொண்டவர்; சிந்தனையில் சிறந்தவர். அதென்ஸ் நகர் உலகப் பண்பின் தலைநகரென இன்னும் பலகாலம் போற்றப்பெற்று வரும்.

Page 97
17. போர்த்துக்கல்
இக்கால வரலாற்றில் தமிழ் காட்டுடன் முதல் தொடர்பு கொண்டவர் போர்த்துக்கீசியர் ஆவர். இவர்கள் தம் கடற் படை ஆற்றலையும் ஆதிக்கத்தையும் கொண்டு இந்தியா விற்குக் கடற்பாதை கண்டுபிடித்ததன் பயணுகக் கள்ளிக் கோட்டையிலும் தமிழ் காட்டின் கடற்கரைப் பட்டினங் களிலும் மலாயாவிலும் தம் கோட்டைகளை நிறுவி, வணிகம் கடாத்தியும் அரசு செலுத்தியும் வந்தனர். போர்த்துக்கல்லி லிருந்து தமிழ்நாடு வந்த குருக்களும் பிரபுக்களும் தமிழைக் கற்க முயன்றனர். இக்குருக்களே முதன்முதல் தமிழ் நூல் களே அச்சிடுவதற்குத் தமிழ் அச்சுப் பொறிகளை இயற்றிப் பதினரும் நூற்றண்டிலேயே தமிழ் நூல்கள் சிலவற்றை அச்சிட்டனர். இவர்கள் வழியாக மேல் நாட்டுக் கல்வி முறை களைத் தழுவும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் நிறுவப்பெற்றன. போர்த்துக்கீசிய மொழியி லுள்ள பல சொற்களும் தமிழ் மொழியின் திசைச் சொற் களாக அமையத் தொடங்கின. ஏனைய மேலைாகாடுகளிலுள்ள மக்கள் அறியாத அளவு, போர்த்துக்கல்லில் இலங்கையையும் தென்னிந்தியாவையும்பற்றி மக்கள் அறிந்திருக்கின்றனர். அவர்கள் குடியேற்ற காட்டு வரலாற்றில் கோவாமாககர் (Goa), கொச்சின், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னர், மலாக்கா என்பன பெற்ற சிறப்பால் போர்த்துக்கீசியர் சிறு வயது தொடங்கியே நம் நாடுகளைப் பற்றிக் கற்றுவருகின்றனர்.
போர்த்துக்கீசியர் பொதுவாக இன நிறவேற்றுமைகளைப் பொருட்படுத்தாது வாழும் மக்கள். இவர்கள் சென்ற நாடு களில் அங்காட்டவருடன் திருமணம் செய்து கொண்டு வேற்றுமை காட்டாது பழகி வந்தனர். இன்றும் இவர்களு டைய குடியரசு நாடுகளில் வேறு வேற்றுமைகள் உளவெனிலும் இன வேற்றுமை இல்லை. குடிகளனைவரும் போர்த்துக்கீசியக் குடியுரிமை பெறுகின்றனர். போர்த்துக்கல் சின்னஞ் சிறு காடாக இருந்தும்,உலகெங்கும் வணிகத்தையும் ஆதிக்கத்தையும் பரப்பியுள்ளது. இன்றும் இச்சிறிய காட்டிற்குச் சேர்ந்த பெரும் குடியேற்ற நாடுகளுள

போர்த்துக்கல் Y 173
தம் காடு இருமருங்கு கடலாற் தழப்பெற்றும், ஏனைய இரு மருங்கும் வல்லரசால் தடுக்கப்பெற்றும் வந்ததால்,போர்த்துக் கீசியர் கடலைக் கடந்து செல்வத்தைத் தேட முயன்றனர். இன்றும் அவர்கள் சிறந்த மாலுமிகளாகக் கருதப்படு கின்றனர். அவர்கள் தம் சிறிய பொறிப் படகுகளில்சென்று அட்லாண்டிக் பெருங்கடலில் மீன் பி டி க் கின்றனர். அட்லாண்டிக் கடலின் கொந்தளிப்பிலும், புயற்காற்றிலும் அஞ்சாது மீன் பிடிக்கும் அவர் திறம் பெரிதும் போற்றத் தக்கது.
பண்டு உரோமர் ஒருவர், 'காங்கள் வாழ்வதன்று தலை யானது, நாங்கள் கப்பலோட்டுவதே தலையானது” என்று கூறி உரோமருக்குக் கடற்படையாதிக்கம் எத்துணை இன்றி யமையாதது எனக் காட்டினர். போர்த்துக்கீசியருக்குக் கடற் படையும் கப்பற்றெழிலும் உரோமரைவிட இன்னும் இன்றி யமையாதனவாக இருந்தன. எனவே, கப்பலோட்டும் திறமே தமக்கு அடையாளமாகவிருத்தல் வேண்டுமென்று கருதிக் கோரவெல்’ (Caravel) எனும் போர்த்துக்கல் கப்பலின் வடி வைத் தம் காட்டின் அடையாளமாகக் கொண்டனர். கான் செல்லும் நாடுகளில், அந்தந்த காடுகளுக்குச் சிறப்பாகவுரிய ஓர் அடையாளப் பொருளை நினைவிற்காக வாங்குவதுண்டு. அத்தகைய அடையாளப் பொருள்கள் என் நூற்கூடத்தின் தட்டுகளே அழகு செய்கின்றன. ஹாலந்தின் நினைவிற்காகக் காற்ருடியும், இத்தாலியின் நினைவிற்காக இராயப்பர்பேராலய வடிவமும், கிரேக்க காட்டின் கினைவிற்காகச் சில செப்புகளும் என் கூடத்தில் உள. போர்த்துக்கல்லின் நினைவிற்காக லிஸ்பனிலிருந்து கொண்டுவந்த பித்தளைக் கப்பல் வடிவமொன் றையும் வைத்திருக்கின்றேன்.
கப்பலோட்டும் திறமே தம் செல்வாக்குக்கும் வாழ்க்கைக் கும் அடிப்படையாயிருந்ததால், கப்பல் துறையிலிருந்து பல பொருள்களின் வடிவங்களைக் கட்டடக் கலை முறைகளில் கை யாண்டு வந்தனர். ’ எனவே, சிறந்த கட்டடமாகிய சன் ஜெரோனிமோ, (San Geronimo) எனும் கோயிலிலும், துறவியர் மடத்திலும் உள்ள தூண்களில்,மாலுமிகளுடைய கருவிகளின் வடிவங்களும், வேற்று காட்டுச் செடி, இலை முதலியவற்றின் வடிவங்களும் அணி செய்கின்றன. மனுவேல்"(Manuel Style) எனும் கவின் கலை முறை சிறந்தது. இது போர்த்துக்கல் சிறப்புற்று விளங்கிய மனுவேல் அரசனின் காலத்தில்

Page 98
174 ஒன்றே உலகம்
(16ஆம் நூற்ருண்டில்) சீர்திருத்தப்பெற்றது. தேகஸ் கதி யின் கரையிலுள்ள பெலெம் (Belem) எனும் இடத்தில் பழைய வொரு கோபுரம் உண்டு. அக்கோட்டைக் கோபுரம்,முற்காலத் தில் போர்த்துக்கீசிய மாலுமிகள் எங்கிருந்து தம் கப்பற் செலவுகளை ஆரம்பித்தார்கள் என்பதை இன்றும் காட்டு கின்றது. வாஸ்கோடகாமா அவ்விடத்திலிருந்தே இந்தியா வைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டார்.
லிஸ்பன் ஐரோப்பாவின் அரசிபோல் ஒருகால் விளங் கியது. செல்வந்தர் பெரும் மாளிகைகளில் வாழ்ந்து வக்தனர். துறவிகள் பெரும் மடங்களை எழுப்பினர்; பெரும் கோயில் களைக் கட்டினர். பேரரசுக் காலத்தில் ஒரு காட்டில் பெரும் கோயில்களை எழுப்புவது வழக்கமாக இருந்திருக்கிறது.
போர்த்துக்கல் காட்டில் கான் சிறப்பாகத் தேடிய பொருள்கள் பண்டைத் தமிழ் நூல்களும், ஏடுகளுமாம். கடிதங் களும், அரசியல் அறிக்கைகளும் தமிழரைப் பற்றி ஏனைய குறிப்புக்களும் லிஸ்பன், ஒபோர்ட்டோ (Oporto), கூயிம்பூரு (Coimbra) போன்ற நகர்களின் நூற்கூடங்களில் பலவுள. அங்குப் பண்டு போர்த்துக்கீசிய அரசியலார் குடியேற்ற காடுகளுடன் கடத்திய கடவடிக்கைகள், ஆட்சி முறை கள் பற்றிய முடங்கல்களும் அறிக்கைகளும், பதிவேடு களும் காப்பாற்றப் பெற்று வருகின்றன. 16, 17ஆம் நூற்றண்டுகளின் இந்திய இலங்கை வரலாற்றினை எழுது பவர் அங்குச் சென்று அவற்றைப் படித்தும் படியெடுத்துமே வரலாற்று நூல்களை எழுதுகின்றனர். வரலாற்று ஆராய்ச்சி யில் ஈடுபடுபவர் எத்துணை ஆர்வத்துடன் இந்நூற்கூடங் களுக்குச் சென்று பழுத்த காகிதத்தில் எழுதிய பழைய அறிக் கைகளைப் பார்வையிட்டு, பண்டு வெவ்வேறு காலங்களில் மக்கள் எங்ங்ணம் தம் அரசைச் செலுத்தினர் என்று ஆராய் கின்றனர். இத்தகைய நூற்கூடங்களில் படிக்கும் ஆராய்ச்சி யாளரைப் பார்ப்பதே நமக்கும் கல்வியின்பால் புதுப் பற்றினை யும் விருப்பத்தையும் எழுச்சியையும் உண்டாக்குகின்றது. லிஸ்பன் நூற்கூடங்களில் ஒன்றன போர்த்துக்கல் பாராளு மன்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளடோரிடாஸ் டொம்போஸ்” (Torre dos Tombos) எனும் கோபுர நூற்கூடம் பலபண்டைக் கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டது. குடியேற்ற காடு களைப் பற்றிய நூற்கூடம் ஒன்று வெளிகாட்டு அமைச்சிற் குரியதாய் அமைக்கப்பெற்றுள்ளது.இங்கு இலங்கை இந்தியத்

போர்த்துக்கல் 175
தமிழ் நாடுகளைப் பற்றி இதுகாறும் படிக்கப் படாத கையெழுத்துப் பிரதிகள் பல உள. இவற்றைத் தமிழ்நாட்டு வரலாற்று வல்லுநராக விளங்க விரும்பும் தமிழ் இளைஞர் சிலரேனும் போர்த்துக்கல் சென்று ஆராயவேண்டும். பழைய நூல்கள்
போர்த்துக்கல்லில் தங்கியபொழுது தமிழ் காட்டைப் பற்றிய சில பழைய அறிக்கைகளைப் படித்ததுடன் இரு பண் டைத் தமிழ் நூல்களையும் பார்வையிட்டேன். ஒரு நூல் பதி ஞரும் நூற்ருண்டில் கத்தோலிக்கக் குரு ஒருவர் இயற்றிய தமிழ் இலக்கணக் கையெழுத்துப் பிரதி. இதுவே, காம் அறிய ஐரோப்பியர் ஒருவரால் யாக்கப் பெற்ற முதல் இலக் கண நூல். இந்நூலில் அடங்கிய எடுத்துக்காட்டுக்கள் சில வற்றிலிருந்து இந்நூல் தமிழ்ாகாட்டில் பண்டைக் கொற்கை யிருந்த இடத்திற்கு அண்மையிலுள்ள புன்னைக் காயலில் கத் தோலிக்கக் குருவால் போர்த்துக்கீசிய மொழியில் யாக்கப் பெற்ற தமிழ் இலக்கண நூல் என்று துணியக் கிடக்கின் றது. பிறிதொரு நூல் * Museu Etnologico’ எனும் பொருட் காட்சி நிலையத்தில் உள்ள நூல். இதுவே தமிழில் அச்சுக் கண்ட முதல் நூல். இதனை லிஸ்டனில் 1554-ஆம் ஆண்டில் அச்சிட்டனர். இந்நூலில் தமிழ் எழுத்துக்கள் கையாளப் படாமல் உரோமருடைய எழுத்துக்கள் தமிழ் ஒலிகளைக் குறிப் பதற்குக் கையாளப்பெற்றிருக்கின்றன. இப்பிரதியொன்றே இப்பொழுது உலகில் உள்ளதாகத் தெரிகின்றது. மிக அழ காக உயர்ந்த காகிதத்தில் அச்சிடப்பெற்ற இப்பிரதி, போர்த் துக்கல் காட்டில் அச்சிடப்பெற்ற நூல்களில் அச்சு முறை யிலும் சிறந்த தொன்ருகக் கருதப்படுகின்றது. இந்நூலின் பக்கங்கள் முப்பத்தாறு. இதில் அடங்கியிருப்பன கத்தோ லிக்க சமயத்தின் வழிபாட்டு முறைகளும் செபங்களுமாகும். தமிழ் வசனங்களை உரோம எழுத்துக்களில் அச்சிட்டு அவற். றின் உச்சரிப்பையும் பொருளையும் போர்த்துக்கீசிய மொழி யில் ஒவ்வொரு வரிக்கும் இடையே அச்சிட்டிருக்கின்றனர். இந்திய மொழிகளுக்குள்ளும் கிழக்கு ஆசிய மொழிகளுக்குள் ளும் அச்சுக் கண்ட முதல் மொழி தமிழ் மொழி. இந்நூலினை இயற்றுவதற்கு போர்த்துக்கல்லில் அக்காலத்திலிருந்த தமிழ் பேசும் இந்தியர் மூவர் துணைசெய்தனரென்றும், இந்நூலினை மேற்பார்த்துத் திருத்தியவர், இலங்கையில் கத்தோலிக்க மறையைப் போதித்த ஜோவாம் விலா கொண்டே (Joam de

Page 99
76 ஒன்றே உலகம்
vila Conde) என்பவர் என்றும் நூலின் முகவுரையில் கூறப் பட்டுள்ளது. இந்நூலைப் பார்வையிடுவதற்காகவே நான் சில நாட்கள் லிஸ்பனில் தங்கியிருக்க வேண்டியதாயிற்று. இதனைப் பார்வையிடுவதற்காகவே கான் ஒரு முறை போர்த் துக்கல்லுக்குப் போனேன் என்று கூறினும் மிகையாகாது. இந்நூல் ஏதோவொரு காரணத்தால் பாதுகாக்கப் பெற்ற நூற்கூடத்திலிருந்து தவறிப் பிறிதொரு பொருட் காட்சி நிலையத் தலைவரின் கையில் சேர்ந்தது. எனவே, இன்று பொருட் காட்சி நிலையத்தின் இருப்புப் பெட்டியில் காப்பாற் றப்பெற்று வருகின்றது. இந்நூலின் சில பக்கங்களைப் படம் பிடிப்பதற்காக ஒரு முறைதான் இதனைக் கட்டடத்தின் வெளியே எடுத்துச் சென்றனர். லிஸ்பன் நகர்
லிஸ்பன் மாநகர் தாகுஸ் (Tagus) ஆற்றங்கரையிலுள்ள குன்றுகளுக்கு மேல் அமைக்கப்பெற்ற அழகிய நகர். மற் றெல்லா ஐரோப்பிய நகர்களையும்போல இங்ககரையும் பழைய நகர், புதிய நகர் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். பழைய நகர் பெரும்பாலும் ககரின் நடுவிலுள்ளது. பழைய வரலாறு மண்டிக் கிடக்கும் வீதிகளும், முற்ற வெளிகளும் அரசியல் அலுவலகங்களும் ஆங்கு உள்ளன.
புதிய நகரின் பகுதிகளில் புதிய மாளிகைகள் போன்ற விடுதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆணுல், பழைய நகர்ப் பகுதிகளின் மூலை முடுக்குக்களில் பரம்பரையாகச் சிறப்புற்ற உணவுச் சாலைகள் உள. இவ்வுணவுச் சாலைகளில் காட்டிற் குச் சிறப்பாகவுரிய உணவையும் குடிவகைகளையும் பரிமாறு வர். அஃதுடன் காட்டிற்குரிய இசையையும் பாடலையும் ஆட 2லயும் உணவுண்போரின் மகிழ்ச்சிக்காக நிகழ்த்துவர்.
செறேனுத்தா ’ எனும் மாலைக் காதல் இன்னிசை இத் தாலிய நாட்டில் வழங்குவதுபோல், போர்த்துக்கல் காட்டில் * பாடோ ? எனும் காதற் பாட்டுச் சிறப்பான பாட்டாகக் கரு தப்படுகிறது. * பாடோ " என்பது அவலச் சுவை மிகுந்த ஒலமிடும் ஒரு பாட்டு. காதலியால் துறக்கப்பெற்ற காளை, தான் இழந்த காதலி பற்றியும், காதலியை இழந்ததால் தன் எதிர்கால வாழ்க்கையின் பயனின்மை பற்றியும் பாடும் பாட்டு * பாடோ என்பதாகும். உணவுச்சாலைகளில் இரவு தோறும் ஆடவரும் மகளிரும் இப்பாடல்களை உண்போரின் கலைச்சுவைக்காகப் பாடுவர். நடுநிலக் கடல் காடுகளைப்

போர்த்துக்கல் 177
போல போர்த்துக்கல் நாடும் முந்திரிகை இரச வகைகளிற் சிறந்தது. இவ்வுணவுச் சாலைகளில் தீண்ணிர்த் தாகத்துக் காகப் பருகும் முந்திரிகைப் பழச்சாறு மிகவும் பெயர் பெற்றது.
லிஸ்பன் நகரில் இரு பெரும் மக்கட் குழுவினர் வாழ்வதா கப் புலப்படுகிறது. செல்வரும் வறியோரும் அங்கு உளர். போர்த்துக்கல்லின் பிற மாவட்டங்களுக்குச் சென்றல் வறுமை எங்ங்ணம் அங்குப் பரந்துள்ளது என்பதைக் காண் போம். மிதியடியின்றி எளிய ஆடைகளை அணிந்து செல்லும் மக்களைப் பல இடங்களிற் காணலாம். இவ்வறுமைக்கு ஒரு காரணம் கல்வியின்மை. கட்டாயக் கல்விச் சட்டம் அண் மையில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றும் போர்த் துக்கல் காட்டின் மக்கள் தொகையின் ஒரு பகுதியினர்தாம் எழுத்தறிவுள்ளவர்.
லிஸ்பனில் நான் தங்கியபொழுது நிகழ்ந்த இரு நிகழ்ச்சி கள் குறிப்பிடத்தக்கவை. ஓரிடத்தில் 18 Book Fair’ எனும் புத்தகக் காட்சியையும் விற்பனையையும் நிகழ்த்தினர். ஒவ் வொரு புத்தக வணிகரும் பெரும் புத்தகக் கடையை நிறுவிப் புத்தகங்களைக் காட்சிக்கும் விலைக்கும் காட்டினர். குறைந்த விலைக்குப் பல புத்தகங்களை அச்சிட்டும் விற்றனர். பெற் ருேர் தம் சிறுவருடன் வந்து அவர் விரும்பிய சிறு நூல்களே வாங்கிக் கொடுத்தனர். மாலையில் ஆறு, ஏழு மணி அளவில் இக்காட்சி தொடங்கி நடு இரவு மட்டும் இரு கிழ மைகளாக நீடித்தது. தீப அலங்காரங்களுடன் அழகு படுத் திய அவ்விளமரக்காவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி அழகாக இருந்தது. பிறிதொரு நிகழ்ச்சி உரோசா மலர்க் காட்சி. போர்த்துக்கல்லின் எல்லா மாவட்டங்களிலிருந்தும் கொண்டு வந்த சிறந்த உரோசா மலர்களை அவற்றின் பெயருடன் தனித் தனி மலர்களாகச் சில சாஜலகளில் மேசைகள் மேல் பரப்பியிருந்தனர். வெண்மை சிவப்பு மஞ்சள் ஆகிய நிறங்க ளுள்ள மலர்களும், அங்ாநிறங்களில் கலப்பு வேறுபாடுற்ற மலர்களும் இன்பந்தரும் காட்சியளித்தன. இவ்வாறு மலர்த் தோட்டங்களை நிறுவியும் சிறப்பாக உரோசாச் செடிகளைப் பயிர் செய்தும் வருவதற்குத் தோட்ட வளர்ச்சிக் கழகங்கள் ஏனைய நாடுகளிற் போல் போர்த்துக்கல்லிலும் துணை செய் கின்றன. கன்னிமரியன்னை மூன்று சிறுவர்க்குக் காட்சி யளித்த பாத்திமா எனும் இடத்திற்கு கான் சென்றபொழுது
10 77-12

Page 100
78 ஒன்றே உலகம்
வழியில் அழகிய உரோசா மலர்த் தோட்டங்களைக் கண் டேன்.
போர்த்துக்கல் கப்பலோட்டும் க2லயிலும் பூவியற் படக் கலேயிலும் (cartography) ஒரு காலத்தில் சிறந்து விளங்கிற்று. கவின் க2லகளிலே ஏஜனய ஐரோப்பிய நாடுகளைப்போல் பெரும் ஓவியர்களையும் சிற்பிகளையும் உலகிற்கு அளிக்க வில்லை. ஆயினும் இலக்கியத் துறையில் பெருங் காப்பிய ஆசிரியர் கமோவின்ஸ் என்பாரைப் பயந்தது. கமோவின்ஸ் எழுதிய காப்பியம், போர்த்துக்கீசியர் இந்தியா, இலங்கை முதலிய காடுகளைக் கண்டு பிடித்துத் தம் பேரரசை நிறுவிய அரும் செயல்களைப் பற்றிப் பாடும் காப்பியமாகும். கமோ வின்ஸ் இளமையில் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆண்டுகளி லும் சிறந்த செய்யுள்களை இயற்றி வந்தார். பிற்காலத்தில் போர்த்துக்கீசிய-இந்தியாவிலும், போர்த்துக்கீசியச்.சீனுவிலும் போர் வீரராகவும் புலவராகவும் பெயர் பெற்ருர், வறுமை யும் பகைமையும் அவரை எங்கும் பின்தொடர்ந்து சென்றன. ஆயினும், இந்தியா, சீனு முதலிய இடங்களில் அரசியற் பணி யாற்றும் பொழுதே ஊஸ் லூசியடஸ்” (Os Lusiades) எனும் தம் பெருங் காப்பியத்தினைப் பாடினர். தென்னிந்தி யாவிலுள்ள கோவையில் வாழ்ந்த காலத்தில் அங்குள்ள அர சியலாரின் குறைகளைக் கவிபாடிக் கண்டித்தார். ஒரு முறை தம் கண்பர் அனைவரையும் விருந்துக்கு அழைத்து உண்ணும் இடத்தில் ஒவ்வொரு விருந்தினர்க்கும் தாம் இயற்றிய தனிப் பாடல் ஒன்றை வழங்கினுராம். ஆயினும் இறுதியில் வயிற் றிற்கும் கல்விருந்தளித்தார். மக்காவோவிலிருந்து (Macao) கப்பலில் இந்தியாவிற்கு வரும்போது, கப்பல் கடலில் ஆழ்ந்த தால் தம் காப்பியத்தின் எழுத்துப் பிரதியை ஒரு கையால் உயர்த்திப் பற்றிக்கொண்டு மறு கையால் நீந்திக் கரை சேர்க் தாரென்பர். கமோவின்ஸ் வாழும் வரையில் அவர் காட்டவர், அவர் பெருமையையும் அவர் இயற்றிய காப்பியத்தின் பெரு மையையும் உணரவில்லை. அவர் இறந்து, ஆண்டுகள் செல் லச் செல்ல அவர் புகழ் வளர்ந்துகொண்டே வந்தது.

18. ஐரோப்பாவின் சிறு நாடுகள்
ஸ்கண்டிகேவிய காடுகள்
டென்மார்க், நார்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடு களை ஸ்கண்டிகேவிய காடுகள்’ என்று அழைப்பது மரபு. ஆயினும் இங்காடுகள் ஒரே பண்பாட்டைக் காட்டுவன அல்ல. பின்லாந்தின் மொழி, நார்வே, சுவீடன் மொழிகளைப் போன்ற தன்று. தேனிஷ், நார்வே, சுவீடிஷ் மொழிகளோ ஏறக்குறைய ஒரே வகுப்பைச் சேர்ந்தவை. இம்மொழிகளுக்கும் ஜெர் மானிய, ஆங்கில மொழிகளுக்கும் கெருங்கிய தொடர்பு உண்டு. விகுதிகள் மாறுபடுவதாலும் எழுத்துக்கள் திரிவ தாலும் அத்தொடர்பு ஆங்கிலம் அறிக்தோர்க்கு எளிதில் தோன்றுவதில்லை.
இங்காடுகளின் பண்டைவரலாற்றை இன்னும் முற்றிலும் அறிஞர் அறிந்திலர். வட ஐரோப்பாவின் பண்டை மாலுமி கள் இவர்களென்றும் காம் கூறுதல் கூடும். எட்டு ஒன்பதாம் நூற்ருண்டுகளில் சில வள்ளங்களில் பெரும் கடல்களைத் தாண்டிச் சென்ற மக்கள் இவர்கள். ஒரு காலத்தில் இவர்கள் பாய்களின்றியே தம் வள்ளங்களை ஒட்டினர் என்பர் ஆராய்ச்சி யாளர். டென்மார்க்கில் உள்ள பழைய வள்ளங்களின் வடிவங்கள் இவர்கள் ஒரு காலம் பாய்களின்றியே கப்பல்களைச் செலுத்தினர் என்று காட்டுகின்றன. உரோமரும் கிரேக்கரும் பண்டைக்காலம் தொடங்கிப் பாய்களைப் பயன்படுத்தியிருக் தாலும், வட ஐரோப்பிய ஸ்கண்டிகேவி மக்கள் பாய்களின்றித் தண்டுகளை வலித்து மரக்கலங்களைச் செலுத்தினர் என்று ஆரும் நூற்ருண்டின் நூலாசிரியர் ஒருவர் கூறுகின்ருர், மக்கள் தொகை மிகுதியாலோ உள்நாட்டுக் கலகங்களின் காரணத்தாலோ வைக்கிங்’ (Vikings) எனப்படும் இம்மக்கள் தென் ஐரோப்பா மீதும் ஆங்கில காடுகள் மீதும் படை யெடுத்துக் குடியேறினர். போரில் வெற்றிபெற வேண்டு மென்றும், போரால் புகழை நிலைநாட்ட வேண்டுமென்றும் இவர்களுக்கு எல்லையற்ற வேட்கை இருந்தது. இவர்களின் வீரமும் திண்மையும் ஐரோப்பாவில் பெயர் பெற்றவை.

Page 101
80 ஒன்றே உலகம்
எனவே, இவர்கள் பத்து, பதினுேராம் நூற்ருண்டுகளில் ஆங்கில காட்டிலும் அட்லாண்டிக் கடற்கரை காடுகளிலும் பெரும் தொகையினராகக் குடியேறினர்.
இவர்களுடைய இலக்கியங்களும் போரையும் கடற் கொள்ளையையும் பெரும் பண்புகளாகக் கூறுகின்றன. வைக்கிங் என்ற சொல்லே கடற்கொள்ளைக்காரர் எனப் பொருள்படும். இவர்கள் அக்காலத்திலேயே அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாக இவர்களின் நூல்கள் கூறுகின்றன. நார் வேயில் இருக்கும் குடாக்கடல்களில் கடற்கொள்ளை செய்வது மிகவும் எளிது. மேலும், கடலின் அழகையும் பெரும் பரப் பையும் கண்ட இந்த மக்கள் கடலுலகை ஆராய முற்பட்டதில் வியப்பில்லை. இவர்கள் பயன்படுத்திய வள்ளங்கள் சில வற்றை இன்னும் பழம் பொருட்காட்சிச்சாலைகளில் காணுதல் கூடும். இன்றும் நார்வே மக்கள் கடலாராய்ச்சியில் முன்னேற்றம் அடைந்தவர்கள். உலகின் கடல் சூழ்ந்த அரிய இடங்களுக்குச் செல்லும் குழுக்களின் தலைவர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் நார்வே காட்டினர். "தோர் ஹைடர்தால்’ எனும் கார்வேயினரே பசிபிக் பெருங்கடலில் கட்டுமரம் மீது ‘காண்டிகி’ எனும் தீவிற்குச் சென்ற குழுவினர்க்குத் தலைவராயிருந்தார். திமிங்கிலங்களைப் பிடிக் கும் கப்பல்களையும் நார்வே மக்களே பெரும்பாலும் கையாளு வார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் கூட அந் நாடுகளைச் சூழ்ந்த கடல்களில் திமிங்கிலங்களைப் பிடிப்பதற்கு கார்வே மக்களின் உதவியை நாடுவர். இத்தகைய திமிங்கிலம் பிடிக்கும் சிலருடன் ஒரு முறை புகைக் கப்பலில் கான் சென்ற பொழுது தென்னிந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சூழ்ந்த கடல்களில் சிறு திமிங்கிலங்கள் கிடைக்கும் என்றும், அவற்றின் ஈரலிலிருந்து எடுக்கப்பெறும் எண்ணெய் அங் காடுகளின் வருவாயைப் பெருக்கக்கூடுமென்றும் என்னிடம் கூறினர்.
ஸ்கண்டிகேவியமக்கள் பெரும்பாலும் தோற்றத்தில் உயர்ந்தவர்களாகவும், பொன்னிறம் கொண்ட முடியுள்ளவர் களாகவும் இருப்பர், அவர்கள் இந்தியரைப் போன்ற கறுப்பு நிற மக்களை அடிக்கடி காணுததால், நம்மைக் கண்டதும் நம் முடன் பழகவும் நம்மை உபசரிக்கவும் விரும்புவர். இந்நாடு களில் ஆங்கில அறிவும் கன்ருகப் பரவியிருக்கிறது. இக்காடு களின் மக்கள் தொகை சிறிதாக இருப்பதால் ஆங்கிலம்,

ஐரோப்பாவின் சிறு நாடுகள் 8 .
ஜெர்மன் முதலிய மொழிகளைப் பயில்வதாலேயே தம் உலகத் தொடர்பை வளர்த்து வருகின்றனர். பள்ளிக்கூடத்தின் இரண்டாம் மூன்ரும் வகுப்பிலேயே சிறுவர் பிற மொழிகளைக் கற்கத் தொடங்குகின்றனர். பள்ளிக்கூடங்களில் குறைந்தது வேறு இரு மொழிகளேனும் கற்கின்றனர். தம் பள்ளிக்கூடச் சிருர், மொழிகள் கற்பதிலேயே தம் நாட்களைக் கழிக்கின்றன ரென்று கல்வியாளர் ஒருவர் எனக்கு சுவீடனில் கூறினர். ஸ்கண்டிகேவிய நாடுகள் சிறிய காடுகளாக இருப்பதால் தம் முள் ஒப்பந்தங்கள் செய்து, கூட்டுறவு முறைகளில் வணிகத் தையும் பொருளியலையும் கடத்தி வருகின்றன. கள்ளிரவு ஞாயிறு
இங்ாகாடுகளில் ஆண்டின் பெரும் பகுதி ஞாயிற்றின் தோற்றமும் வெயிலும் இன்றியே அமையும். கோடைக் காலத்திலேதான் இக்காடுகளின் வட பாகங்களில் ஞாயிற்றின் ஒளியை இருபத்து கான்கு மணி யளவும்கூடக் காண்பர். கள்ளிரவு ஞாயிற்றைக் (Midnight Sun) காண்பதற்கென இக் காடுகளுக்குச் சுற்றுச் செலவாளர் செல்வார்கள். ஆனி, ஆடித் திங்கள்களில் இக்காடுகளின் தெற்கிலிருந்து நள்ளிரவு ஞாயிற் றைக் காண வடக்கே சிறப்புக் கடற் கப்பல்களும் விமானங் களும் செல்லும். கள்ளிரவு ஞாயிற்றைக் காண விரும்பி கானும் ஹெல்சிங்கியிலிருந்து வடமுனையிலுள்ள கிரேனியா விற்குப் பறந்து சென்றேன். அன்று மழை மிகுதியாக இருந்த தால் கள்ளிரவு ஞாயிற்றைக் கண்டிலேன். உலகின் வட காடு களில் வாழ்பவர் கோடைக்காலத்தின் இரவுவேளையில் வடக்கே ஒளி தோன்றுவதைக் காண்பர். இதுவே கள்ளிரவு ஞாயிற்றின் ஒளியாகும். இதனை ‘வடக்கு ஒளி' (Northern Lights) என்பது வழக்கம்.
இக்ாநாடுகளில் பகல் கேரம் குறுகியிருப்பதால் மக்களி னுடைய மனப்பான்மையும் சிறிது வேறுபட்டுள்ளதாகத் தோன்றுகின்றது. தம் இல்லங்களைச் சிறிய இல்லங்களாகவே அமைக்கின்றனர் இம் மக்கள். இல்லங்களில் ஒளி வீசும் அழகிய நிறங்கள் படைத்த ஒளிப் போர்வைகளையும் விரும்பு கின்றனர். ஆதலால், அவ்வில்லங்களில் மின்வலி விளக்கு கள் பல நிறங்க9ளக் கொண்ட ஒளியை வீசும். பல திங்கள் களாக உறை பனியும் மூடுபனியும் படிந்திருப்பதால் மக்கள் அப்பருவங்களில் தம் இல்லங்களிலேயே தங்கியிருப்பர். எனவே இப்பருவங்களில் மக்கள் நூல்களைப் படிக்க வேண்டு

Page 102
五82 ஒன்றே உலகம்
மென்று அரசியலும், சமூகக் கழகங்களும் பெரு முயற்சி செய்து வருகின்றன. மோட்டார் வண்டி வழியாகவும், படகுகள் வழியாகவும், புத்தகங்களை காட்டின் எல்லாப் பாகங் களுக்கும் அனுப்பி வருகின்றனர். ஆர்க்டிக் வட்டத்தின் அண்மையில் இருக்கும் மக்களும், எளிதில் நகர்களுக்கு வர முடியாத மக்களும் நூல்களைப் பெறுமாறு பெரு முயற்சி செய்து வருகின்றனர். மேலும் மக்கள் குளிர்ப் பருவக் காலத் திலும் கூட்டங்கள் கூடுவதற்கும் பல துறைகளில் அறிவைப் பெருக்கி ஓய்வு நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புக்கள் பல உள. இங்காடுகளைப் போல் வளர்ந்தோர் களுடைய கல்வி வளம் பெற்ற வேறு நாடுகள் இல்லை. இங்கு ஏறக்குறைய நூற்றுக்கு நூறு பேர் எழுத்தறிவு உள்ளவராய் விளங்குகின்றனர். இருபது பேர் சேர்ந்து, கல்விக் கழகங்களை ஏற்படுத்த விரும்புவாராயின் அவர்களுக்கு அரசியலின் பொருளுதவி கிடைக்கும். −
இம் மக்கள் தம் வாழ்க்கையைப் பெரும்பாலும் இருளும் மப்பும் நிறைந்த தழ்ாநிலையில் கழிப்பதால், சோர்வு மனப் பான்மை இவர்களுக்கு ஏற்படுவது இயல்பு. அச்சோர்வு மனப்பான்மையைத் தவிர்ப்பதற்குக் கள் உண்பதில் பெரும் பாலும் ஈடுபடுகின்றனர், ஸ்கண்டிகேவிய மக்கள் என்பர். அவர் நகர்களில் முற்பகலில் கூட மக்கள் சிலர் நன்றகக் குடித்து மயக்க நிலையில் இருப்பதைக் கண்டேன். அத்தகைய சிலர் வீதிகளில் என்னை நிறுத்தி என் கையைக் குலுக்க விரும்பினர். தம் காட்டை எங்ங்ணம் விரும்பினேன் என்றும் வினவினர். இத்தகையோருடன் வீதிகளில் உரையாடுவது பெரும் சங்கடமாகிவிட்டது. இவர்களைச் சாமாளித்துச் செல் வதே ஒரு கலை. டென்மார்க்
டென்மார்க் சிறிய காடாக இருப்பினும் பல துறைகளில் முன்னேறிய நாடு. சிறப்பாகக் கூட்டுறவுச் சங்கங்கள் நிறுவிய முறையிலும் குடியாட்சி இயங்கும் முறையிலும் பெயர் பெற்ற காடு. கூட்டுறவு ஒத்துழைப்பால் இம்மக்கள் அடைந்த கலன்கள் பல. எனவே கூட்டுறவு முறைகளைப் பயில்வதற்கு உலகின் இதர நாடுகளிலிருந்து மக்கள் டென் மார்க்கிற்கும் இதர ஸ்கண்டிநேவிய காடுகளுக்கும் செல்வர். குற்றவாளிகளையும் தீயோரையும் திருத்துவதற்கும் ஸ்கண்டி நேவிய நாடுகள் புது முறைகளைக் கையாண்டு வருகின்றன.

ஐரோப்பாவின் சிறு நாடுகள் 183
தீயோரும் குற்றவாளிகளும் திருந்திப் புது வாழ்க்கையில் ஈடு பட வேண்டுமென்பது இத்திட்டங்களின் நோக்கமாகும். நீதித் துறையில் அமைந்துள்ள நீதி மன்றமொன்று சிறந்தது அங்கிலையத்திற்குப் பெயர் ஒம்புட்சன். அரசியலால் அல்லது நீதித் துறையால் அநீதி அனுபவித்த மக்களனைவரும் இங் நிலையத்திற்கு விண்ணப்பம் செய்துகொள்ளலாம். அவ்வாறு முறையிட்டால் எல்லா நீதித்துறைக்கும் மேலாக இருக்கும் இந்நிலையம், கன்ருக ஆய்ந்து முடிவு கூறும்.
டென்மார்க், கோடைக் காலத்தில் பெரும் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் நாடென்று கூறிவருகின்றனர். கோடைக் காலத்தில் கணக்கற்ற ஐரோப்பிய மக்கள் அங்குச் செல் கின்றனர். ‘திவோளி (Tivoli) என்னும் பூஞ்சோலை இருக்கு மிடத்தில் கோடைக்கால நேரப்போக்கிற்கு ஏற்ற எண்ணிறந்த நிலையங்கள் உண்டு. டென்மார்க்கிற்குச் செல்லும் மாந்தர் அனைவரும் திவோளிப் பூஞ்சோலையில் நிகழும் ஆடல் பாடல் இசை கூத்து முதலிய நிகழ்ச்சிகளைக் காணச் செல்வர்.
கோப்பன்ஹாகனில் இருக்கும் அரசியல் நூற்கூடம் தமிழ் நூல்கள் பலவற்றைக் கொண்டது. தேனியர் (Danes) தரங்கம்பாடி முதலிய தென்னிந்தியத் துறைமுகங்களில் இருந்த காலத்தில் அந்நூல்களை டென்மார்க்கிற்கு அனுப்பி யிருந்தார்கள். குடந்தையில் அச்சிடப்பெற்ற கண்டி ராசன் கொண்டிச்சிந்து' என்ற நூலொன்றைக் கோப்பன்ஹாகனிலே முதன் முதற் கண்டேன்.
டென்மார்க்கிலும் மற்றைய ஸ்கண்டிநேவிய நாடுகளிலும் அரசரும் அரச குடும்பங்களைச் சார்ந்தவரும் சடங்குகளின்றித் தமியராக கடந்து செல்வதும், பொது மக்களைப் போல் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவதும் வழக்கம். தேனிய அரசர் சைக்கிள் வண்டியில் செல்வது ஆண்டில் பன் முறை காணக்கூடிய காட்சி. ஸ்வீடனில் அரசியல்வாதி களுக்கு அத்துணைச் சிறப்பான இடமில்லை. செய்தித் தாள் களும் அவர்களுக்கு முதன்மையைக் கொடுப்பதில்லை. *
சுவீடனுக்கு கான் சென்றபோது உரோமாபுரியில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடன் கல்வி பயின்ற குருக்கள் இருவரைக் கண்டு மகிழ்ந்தேன். அவர் கள் சுவீடனின் இயற்கை செயற்கை அழகுகளை எனக்குக்

Page 103
184 h ஒன்றே உலகம்
காட்டினர். உலகின் வடக்கே இருக்கும் காடுகளுக்குச் செல்லச் செல்ல உணவின் தித்திப்பு உயர்ந்து கொண்டு வரு ஒவதை நுகர்ந்துள்ளேன். நம் காடுகளில் காரச்சுவையை மிகுதியாகப் பயன்படுத்துகின்ருேம். ஐரோப்பாவின் தென் பாகத்தில் காரச்சுவை குறைந்தேயிருக்கின்றது. ஆங்கிலேய ரின் உணவு உப்புப் புளிப்புமற்றது. வட ஜெர்மானியர், ஸ்கண்டிநேவிய மக்களின் உணவு தித்திப்பு உள்ளது. அவர் கள் செய்யும் அச்சாறுக்கும் கம்மவர் செய்யும் அச்சாறுக்கும் எவ்வளவோ காரசார வேற்றுமையுண்டு. நம்மவர் ஊறுகாய் செய்வதுபோல் ஸ்வீடிஷ் மக்கள் ஊறு மீன் செய்து வரு கின்றனர்.
சுவீடன், கார்வே, பின்லாந்து முதலிய நாடுகளின் இயற் கையழகும் நிலப் பரப்பழகும், நடு ஐரோப்பிய நாடுகளின் அழகிலிருந்து வேறுபட்டன. உயர்ந்த முக்கோண வடிவ மான மரஞ்செடிகளையும் நீல ஏரிகளையும் எங்கும் காணக் கூடும். கோடைக்காலத்தில் அவ்வேரிகளும் குடாக்களும் தெள்ளிய நீல நிறத்தைக் காட்டுவன. சுவீடனின் சுன்ட்ஸ் வால்’ எனும் துறைமுகத்திற்குப் பறந்து சென்றேன். , அத் துறை முகத்தின் இயற்கையழகு கோடைக்கால வெயிலில் எடுப்பாகத் தோன்றியது. இங்காடுகளின் முக்கிய தொழி லொன்று மரத்தொழில். இங்கிருக்கும் மரக்காடுகளை வெட்டி ஆறுகளின் வழியாகத் துறைமுகங்களுக்கு மிதந்துசெல்ல விடுகின்றனர். துறைமுகங்களிலிருக்கும் பொறிச் சாலைகளில் மரக்கட்டைகளைப் பலகைகளாக அறுத்து உலகின் பல பாகங்களுக்கும் அனுப்புகின்றனர். இங்ாகாடுகளின் நீர் நிலை களுக்குமேல் பறக்கும்பொழுது வெட்டிய மரங்கள் பெரும் தொகையாக மிதப்ப்தைக் காணலாம். இங்ாகாடுகள் மரப் பொருள்களுக்குப் பெயர் பெற்றவை. புதுப் புது முறைகளி லும் வடிவங்களிலும் மேசை, நாற்காலி, அலமாரி போன்ற வற்றைச் செய்து வருவதால் மரப்பொருள்களுக்கு எடுத்துக் காட்டாக இக்காடுகள் விளங்குகின்றன. கூதிர்ப்பருவம் இங்கு நீடிப்பதாலும் மக்கள் தம் இல்லங்களில் நீண்டகாலம் வாழ்வதாலும், இங்காட்டு மக்கள் தம் இல்லங்களை அழகுபடுத் தும் கலைகளில் சிறப்பாக ஈடுபடுகின்றனர். பளிங்கிலும் கண்ணுடியிலும் இவர் செய்துவரும் பொருள்களும் கவர்ச்சி புடையவை.

ஐரோப்பாவின் சிறு நாடுகள் I 85
பின்லாந்து
பின்லாந்தின் வரலாறு சிறந்தது. தனது சுதந்திரத் தைச் சென்ற இரு உலகப் பெரும் போர்களில் காப்பாற்ற முயன்று, அது பல துன்பங்களுக்கு ஆளாகியது. பின் லாந்து காட்டு மக்கள் அவர்களுடைய தலைநகராகிய ஹெல் சிங்கியில் புதுக் கட்டட முறைகளைத் தழுவி வருகின்றனர். அங்குள்ள புகைவண்டி நிலையமும் இசையரங்கு நிலையமும் இக்காலக் கட்டட முறையின் எடுத்துக்காட்டுகள்.
பின்லாந்துக்குச் செல்பவர் அனைவரும் “சவூணு’ எனும் நீராடல் முறையை அனுபவிக்க வேண்டும். சவூன என்பது வெக்ரோடுதல். பெரிய இல்லங்களிலும் விடுதிகளிலும் இவ் வெங்கீராடுதலுக்கு ஏற்ற வசதிகளும் அறைகளுமுள இங் நீராடலால் மக்களின் உடல் கலம் சீரடைகின்றது என்பர். குறைந்தது இரு மணி நேரமேனும் ஈடுபட வேண்டும். வெங் கீரில் தோய்ந்த பிறகு வெப்ப ஆவி நிறைந்த அறையொன் றில் பலகைக் கட்டிலில் படுத்திருத்தல் வேண்டும். அக்கட்டி லும் அறையும் தாங்கமுடியாத வெப்ப நிலையையடை கின்றன. வெப்பம் உடல் முழுதும் பரவி நகங்களில்கூட ஊடுருவிச் செல்கின்றது. அவ்வறையிலிருந்து வெளியேறவே மனம் வரும். படுக்கையில் வெப்ப ஆவி ஆடியபின் குளிர்ந்த நீரில் குளித்தல்வேண்டும். அதன்பின்சில மருந்துச் செடி தழைகளைக் கொண்டு உடல் மீது அடித்தல் வேண்டும். இவ்வாறு மாறி மாறிக் குளிர்ந்த நீரிலும் வெப்ப ஆவியிலும் கிராடியபின் மக்கள் ஐந்து பத்து இருத்தலளவு எடையில் குறைந்து வெளியேறுவர். நரகவெம்மையை இவ்வுலகில் ஒருவாறு அனுபவிக்க வேண்டுமாயின் சவூன எனும் நீராட லால் அனுபவித்தல் கூடும்.
ஹெல்சிங்கியில் நான் கண்ட ஸ்டாக்மன்’ எனும் பெரும் புத்தக விற்பனை நிலையத்தைப் போல் உலகில் வேறெங்கும் கண்டிலேன். அங்கு ஆறு, ஏழு ஐரோப்பிய மொழிகளில் உள்ள சிறந்த நூல்களையெல்லாம் விற்பனைக்கு வைத்திருந்த னர். பன்மொழிப் புத்தக விற்பனை நிலையங்களில் ஸ்விட்சர் லாந்து தான் சிறந்தது என்று நினைத்திருந்தேன். ஆணுல் ஹெல்சிங்கி நிலையத்தைக் கண்டபின் உலகின் வடபாகத்தி லும் புத்தகங்கள் விலைக்கு வாங்குவதற்கு இத்துணைச் சிறந்த வாய்ப்புக்கிடைத்தது என்று மகிழ்ந்தேன். ரஷிய

Page 104
186 ஒன்றே உலகம் ெேமாழி, இத்தாலிய மொழி, பிரஞ்சு மொழி, ஜெர்மன் மொழி, ஸ்வீடிஷ் மொழி, பினிஷ் மொழி, ஆங்கில மொழி முதலியவை களிலெல்லாம் அண்மையில் பதிப்பிக்கப்பெற்ற சிறந்த நூல் கள் வைக்கப்பட்டிருந்தன. அப்புத்தக விற்பனை நிலையத்தில் இருநூறு விற்பனையாளர் பணியாற்றி வருகின்றனர் என் றும், இருபதாயிரம் அடி நீளமுள்ள புத்தகம் நிறைந்த தட்டு கள் உண்டென்றும் கூறினர் பணியாளர். அத்துடன் பின் லாந்துக்குரிய சின்னங்கள் அனைத்தையும் அக்கடையில் வாங்குதல் கூடும். அங்ாநாட்டின் அடையாளச் சின்னமாக லாப்லாந்து மக்களின் வாகனங்களை இழுக்கும் கலைமானின் தோலாற் செய்த பையொன்றை வாங்கினேன். பெல்ஜியம்
ஐரோப்பாவிலுள்ள சிறு காடுகள் சில, பெரும் புகழைப் பெற்றிருக்கின்றன. பெல்ஜியம், ஹாலந்து, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் வெவ்வேறு துறைகளில் மக்கள் முயற்சிக் கும் அரசியலமைப்பிற்கும் மேல்வரிச் சட்டமாக விளங்கு கின்றன. பெல்ஜியமும் ஹாலந்தும் குடியேற்ற காடுகளின் முன்னேற்றத்தைக் கருதி ஆட்சி புரியாததால் உலகின் கன் மதிப்பை ஒருவாறு இழந்துள்ளன. ஆயினும் சிறு நாடுகளாக இருந்தகாலத்தில்பெரும் குடியேற்ற அரசுகளை நிறுவிகடாத்தி யது அம்மக்களின் முயற்சிக்கு அறிகுறியாகும். பெல்ஜியத் தில் இருமொழிகள் சமநிலை பெற்று ஆட்சி மொழிகளாகவும் அரசியல் மொழிகளாகவும் இயங்குகின்றன. அங்கு வாழும் ஒரு வகுப்பினர் பிரெஞ்சு மொழியைப் பேசுபவர்; மற்ருெரு வகுப்பினர் பிளெமிஷ் (Flemish) மொழியைத் தாய் மொழி யாகக் கொண்டவர். இவ்விரு மொழிகளையும் ஆட்சி மொழி களாக இயக்குவது அத்துணை எளிதாக இராவிடினும் மக்கள் அவ்வாறு இயங்கவேண்டுமென்று உடன்பட்டு உழைக் கின்றனர்.
ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையிலிருப்பதால் பெல் ஜிய நாடு பெரும் போர்கள் நிகழ்ந்த காலத்தில் வல்லரசுகளின் போர்க்களமாக மாறியுள்ளது. ஆயினும் போர்கள் முடிந்த தும் முன்னைய நிலையை அடைய பெல்ஜிய மக்கள் கன்ருக உழைத்திருக்கின்றனர். சென்ற ஐம்பது ஆண்டுகளாகக் காங்கோ காடே பெல்ஜிய மக்களின் செல்வாக்கின் காரணமா யிருந்தது. காங்கோவில் செல்வத்தைப் பெற்றுத் தம் காட்

ஐரோப்பாவின் சிறு நாடுகள் 187
டின் முன்னேற்றத்தைப் பெல்ஜிய மக்கள் திறம்பட நிறு வினர். ஹாலந்து
ஹாலந்து காட்டு, மக்களும், முயற்சியில் சிறந்தவர்கள். சிறுங்ாடாக இருந்த ஹாலந்து கப்பற்படையின் வலிமையால் மேற்றிசையிலும் கீழ்த்திசையிலும் பல குடியேற்ற காடுகளை நிறுவி வளமுள்ள வணிகத்தை ஆற்றியது வரலாற்றிலேயே பெரும் வியப்பாகத் தோன்றுகின்றது. இந்தியாவிலும் இலங்கையிலும் டச்சுக்காரர் சில மாவட்டங்களில் ஆட்சி புரிந்து வந்தனர். டச்சுமொழிச் சொற்கள் பல தமிழ் மொழி யில் திசைச் சொற்களாக அமைந்தன. டச்சுக்காரர் தம் ஊர் களின் பெயர்களை ஈழாகாட்டின் பல இடங்களுக்குக் கொடுத்த னர். இவ்வாறே இலங்கையிலுள்ள நெடுந்தீவை "டெல்ப்ட்” (Delft) என்றும், ஊர்காவற்றுறையைக் கொண்டதீவை *லெய்டன்’ (Leyden) என்றும் அழைத்தனர். இவ்விடங் களில் அழகிய கோட்டைகளையும் கட்டினர். இலங்கையி லுள்ள மன்னுர், யாழ்ப்பாணம், ஊர்க்காவற்றுறை போன்ற இடங்களில் கட்டப்பட்ட முன்னுள் டச்சுக் கோட்டைகள் இன்றும் நல்ல நி2லயில் இருக்கின்றன.
ஹாலந்து நாடு தட்டை நிலப்பரப்பையுடையது. பல வாய்க்கால்களை வெட்டி அவற்றின் வழியாகப் படகுகளில் மக்கள் பண்டமாற்றம் செய்து வந்தனர். விமானத்தில் பறக்கும்பொழுது இவ்வாய்க்கால்கள் எல்லாப் பக்கமும் செல்வதைக் காணலாம். மக்களும் மிதிவண்டிகளைப் பெரும் பாலும் பயன்படுத்திக்கொள்ளுகின்றனர். ஹாலந்தின் சின் னம் காற்ருடி. ஏனெனில் மின்வலி காலத்திற்கு முன் காற்ரு டிகளை நீர் நிலைகளின் அண்மையில் அமைத்திருந்தனர். சில பொறிகள் காற்ருடியின் வலியால் இயங்கின. ஹாலந்துக்கு கான் சென்றபோது ஈழத்திலுள்ள டச்சுப் பெயர்களைக் கொண்ட முதல் நகர்களைப் பார்க்கச் சென்றேன். சிறப்பாக லெய்டன் (Leyden) எனும் நகரின் பல்கலைக் கழகத்தைப் பார்த்தேன். டச்சு மக்கள் தூய்மையைப் பெரிதும் கடைப் பிடிக்கின்றனர். ககர்களும் இல்லங்களும் பெரும் தூய்மை யுடையனவாய்த் தோன்றின. டச் சுப் பெண்கள் தம் இல்லங்களின் தரைகளைப் ப ன் முறை நாள்தோறும் கழுவுவர் என்பர். ۔۔۔۔ -

Page 105
188 ஒன்றே உலகம்
டச்சு மக்கள் தம்முடைய குடியேற்ற காடுகள் பல வற்றை இழந்தும் தம் முயற்சியைக் கைவிடவில்லை. தம் நிலம் உழவிற்குப் பயன் படாததாலும், உலோகப் பொருள் கள் தம் நாட்டில் இல்லாததாலும், வேறு பல ஆக்கத்துறை களில் முயற்சியைக் காட்டுகின்றனர். வானுெலிப் பெட்டி களையும் இதர சிறு மின்பொறிகளையும் செய்கின்றனர். கூதிர்காலத்திலும் கண்ணுடி வீடுகளில் வெப்பநிலையுண்டாக் கித் தூலிப்' (Tulp) மலர்களை ஏராளமாக வளர்த்து மேல் காடுகளுக்கு விமானங்களில் அனுப்பி விற்றுவருகின்றனர். வணிகக் கப்பல்களையும் பிரயாணக் கப்பல்களையும் ஒட்டு வதில் டச்சு மக்கள் வல்லுகராவர். பிரயாணம் செய்பவர் பலர் டச்சுக் கடற் கப்பல்களையும், ஆகாயக் கப்பல்களையும் விரும்புவர். பிரயாணிகளை கன்ருக உபசரிப்பவர் டச்சுக் காரர். -
டச்சுக்காரர் ஈழத்திலும் தென்னிந்தியாவிலுமிருந்த காலத்தில் தமிழ் காட்டைப் பற்றிய பல குறிப்புகளைத் தம் காட்டிற்கு அனுப்பினர். அவ்வேடுகளைத் தம்நூல் நிலையங் களில் காப்பாற்றி வருகின்றனர். ஈழநாட்டில் டச்சு அதிபராக இருந்தவரொருவர் முதன் முதல் ஈழ காட்டிற்குச் சென்ற போது கொழும்புத் துறைமுகத்தில் இறங்கியதும் அவருடைய ஒரு கண் துணியால் கட்டியிருப்பதை மக்கள் கண்டனர். ஒரு கண் கட்டியிருப்பதற்குரிய காரணத்தை அவரிடம் வினவிய போது சிறிய நாடாகிய இலங்கையை ஆள்வதற்கு ஒரு கண்ணே போதுமென்று விடையிறுத்தாராம் அவ்வதிபர். டச்சு மக்கள் தற்பெருமை கொண்டவர்களென்று ஏனையோர் பண்டைக் காலத்தில் குறிப்பிட்டிருக்கின்றனர். டச்சுமக்கள் சிறிய காட்டினைச் சேர்ந்தவரானுலும் கவின் கலைகளிலும்இலக் கியத்திலும் பெரும் ஆக்கப்பண்பு காட்டியிருக்கின்றனர். இறெம்பிருண்ட் (Rembrandt) எனும் ஒவியர் டச்சு மக்களேயும் டச்சு வாழ்க்கையையும் இணையற்ற முறையில் தீட்டியிருக் கின்றர்.
தி ஹேக் (The Hague) எனுமிடத்தில் உலகப் பொது நீதி மன்றமுள்ளது. இங்குள்ள நீதி மன்றத்திற்குத் தனி அரசுகள் தம் வழக்குகளைக் கொண்டு செல்லும், அங்திேமன்றத்தின் நடுவரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இத்தகைய நீதி மன்றமிருப்பதால் பொது நாட்டுச் சட்டம் (International

ஐரோப்பாவின் சிறு நாடுகள் 189'
Law) என்ற சட்டத்துறை உருவாகி வருகின்றது. இந்தியா, கோவாவைப் பற்றிய வழக்கைப் போர்த்துக்கல்மீது இம் மன்றத்திலேலேயே தொடுத்தது. ஸ்விட்சர்லாந்து
ஐரோப்பாவின் நடுவிலிருக்கும் இச்சிறு நாடு பல்வேறு துறைகளில் சிறந்திருக்கின்றது. சிறுவனுக இருந்த காலத் திலேயே வில்லியம் டெல் (William Tel) என்பவருடைய வரலாறு என் கருத்தைக் கவர்ந்தது. எனவே வீரம் படைத்த அப்பெருமகஞரின் தாயகத்தைக் காண என்இளமை தொடங்கி விரும்பிவந்தேன். என் வாழ்க்கையில் ஸ்விட்சர்லாந்து காட் டைப் பன்முறை சுற்றிப் பார்க்க வாய்ப்புகள் பெற்றுள்ளேன். ஸ்விட்சர்லாந்தைக் கடந்து செல்ல நேரிடும்பொழுதெல்லாம் அங்குத் தங்கி விமானம் மாற்றிச் செல்வேன். ஸ்விட்சர்லாங் தின் மலைவளமும் ஏரிவளமும் அங்குள்ள ‘மலைச்சாரல்களில் காணப்பெறும் மரத்தாலாக்கிய இல்லங்களும், பசுக்களின் கழுத்தில் கட்டிய மணிகள் ஒலிக்கும் பான்மையும், ஏனைய முல்லை நில, குறிஞ்சி நிலக்காட்சிகளும் ஆன்மாவிற்குத் தனிச் சாந்தியை அளிப்பன. இவ்வுலகின் இன்னல்களையும், சிக்கல் களையும் மறந்து வாழ வேண்டுமாயின் ஆல்ப்ஸ் மலைத் தொடரின் சிற்றுாரொன்றில் ஒதுங்கிச் சில காலம் வாழ்க். தால், மீண்டும் புத்துணர்ச்சியுடன் உலகிற்குத் திரும்புதல் கூடும்.
ஸ்விட்சர்லாந்தின் உயர்ந்த நிலத்தின் காற்றும்,வளியின் தூய்மையும் உடலுக்குப் புதுத் தெம்பினை கல்குகின்றன. கோடைக்காலத்தில் பெரும் வனப்புடன் தோன்றும் இக்காடு பனிக்காலத்தில் வெள்ளாடை போர்த்த தூயங்லம் போல் தோன்றுகின்றது. பனியால் மூடப்பெற்ற சில பகுதிகளில் புகைவண்டியில் சென்றேன். புகைவண்டியுள் செயற்கை வெப்பம் நிலவியது. மக்கள் நிலப்பரப்புக் காட்சியைக் கண்டு இன்புறுவதற்குப் பெரும்பாலும் கண்ணுடிகளால் இரு பக்கமும் அமைக்கப்பட்டது அவ்வண்டி அங்கிருந்து கொண்டு வெளியே பனியால் மூடப்பெற்று ஞாயிற்றின் ஒளி யால் கதகதவென்று திகழும் மலைகளையும் பள்ளத்தாக்கு களையும் பார்க்கும்பொழுது கம் உள்ளம் தனியாற்ற2லப் பெறுவது இயற்கையே. மலைாகாடுகளில் வாழும் மக்கள் தனி வாழ்க்கையையும் சுதந்தரத்தையும் மிகுதியாக விரும்புவர்.

Page 106
90 ஒன்றே உலகம்
ஸ்விட்சர்லாந்து காட்டின் மக்கள் தனி நாடாகத் தம் காடு என்றும் நிலைபெற வேண்டுமென்றும், சார்புகளின்றி ஐரோப்பிய அரசியலில் கொதுமற் றன்மையையே என்றும் பாராட்ட வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகின்றனர். எனவே ஐரோப்பாவில் பெரும் போர்கள் நிகழும் பொழுதெல் லாம் ஸ்விஸ் காடு, கொதுமலாகவிருந்து, போரிடும் இரு பக்கத்தாருக்கும் இயன்ற கலங்களைச் செய்தும்தூது நிகழ்த்தி யும் வந்துள்ளது. கொதுமற்றன்மையைக் கடைப்பிடிக்கும்இவ் வரசு சொந்தப் படைகளையும் நிறுவியுள்ளது. தம் சொந்தப் படைகளால் தம் காட்டின் கடுங்லைமையைக் காப்பாற்ற வேண்டுமென்பதே இம்மக்களின் ஆசை.
சுவிஸ்ாகாட்டின் நகர்கள் அழகு வாய்ந்தவை. அவற்றுள் ஜெனிவா மாாககரையே பெரும்பாலும் வெளிகாட்டார் விரும்புவர். ஐக்கிய காட்டுச் சங்கத்தின் (League of Nations) தலைமையகம் ஜெனிவா நகரிலிருந்ததால் அக்காலக்தொட்டு அங்ங்கரே உலகத் தலைவரின் பொதுக் கூட்டங்கள் பலசமயங் களில் கூடும் இடமாகியுள்ளது. எனவே அங்குள்ள விடுதிகள் உணவுச்சாலைகள் பல்வேறு கடைகள், கள் வழங்கு மிடங்கள் இவையெல்லாம் ஐக்கிய நாடுகளின் பெயரைக் கொண்டவை. உலகின் பல காடுகளிலிருந்து மக்கள் இங்கு வருவர். ஜெனிவா சிறு நகராக இருப்பதால் அவர்களைத் தெருக்களில் காண்பது எளிது. ஜெனிவா லேமன்’ ஏரிக்கரையில் கட்டப்பெற்ற அழகிய நகரம். இவ்வேரியின் கரையில் அழகிய கட்டடங்களை அமைத்திருக்கின்றனர். உலகின் பல்வேறு காடுகளிலிருந்து வரும் மக்களுக்கு இடவசதியளிக்கக் கணக்கற்ற விடுதிகள் உள்ளன. சுற்றுச் செலவாளரை உபசரிக்கும் முறைகளிலும் விடுதிகளை கடத்தும் முறைகளிலும் ஸ்விஸ் மக்களே உலகில் பெயர் பெற்றவர். ஸ்விட்சர்லாந்திற்கு சுற்றுச்செலவாளர் எக்காலமும் செல்வதால் அம்மக்கள் இப்பட்டறிவினை வளர்த் திருக்கின்றனர். பிற நாடுகளில் விடுதிகள் அமைப்பவரும் அவ்விடுதிகளுக்கு ஸ்விஸ்ஸரை நியமிப்பது வழக்கம். தென் அமெரிக்காவிலும் இலங்கையிலும் கூட ஸ்விஸ் காட்டினர் விடுதித் தலைவர்களாக அமைந்திருப்பதை அறிந்திருக்கிறேன். ஸ்விட்சர்லாந்தின் நீல ஏரிகள் மீது கப்பல்களில் செல்லக் கூடிய வாய்ப்புக்களும் பல. சில வேளைகளில் ஏரிக்கரையி லுள்ள விடுதி அறையிலிருந்து கொண்டு அவ்வேரியின் வனப் பினையும் அதற்கப்பால் தோன்றும் மலைகளின் வனப்பினையும்

ஐரோப்பாவின் சிறு நாடுகள் l 91
மணிக்கணக்காகப் பார்த்து அவற்றில் ஈடுபட்டுக்கொண்டே இருத்தல் கூடும்.
ஜெனிவா நகருக்குச் செல்பவர்கள் கடியாரக் கடைகளைப் பார்த்து இன்புறுவர். ஸ்விட்சர்லாந்தினுடைய fჩვlourb உழவிற்கு அத்துணைப் பயன்படாததாலும் பெ ரும் பொறியியற்ருெழிற்சாலைகளுக்கு இடமில்லாததாலும், ஸ்விஸ் மக்கள் சிறு தொழில்களிலேயே ஈடுபட்டு வருகின்றனர். கடியாரங்களைச் செய்வது அவர்களுடைய தனித்தொழில். கடியாரங்களே ஆக்குவதற்கு மூவாயிரம் தொழில் நிலையங் களிருப்பதாகவும், அத்தொழில் நிலையங்கள் கடியாரங்களுக்கு வேண்டிய பல்வேறு உறுப்புக்களையும் குடிசைத் தொழில் மூலம் சிற்றுார்களில் செய்து பெறுவதாகவும் அறிக்தேன். உலகிலுள்ள கடியாரங்களுள் ஸ்விஸ் கடியாரமே சிறந்தது. வீதிகள் தோறும் உள்ள கடியாரக் கடைகளின் கண்ணுடிச் சன்னல்கள் தோறும் பார்ப்பதில் பிற காட்டார் பெரும் நேரத் தைக் கழிப்பர். வெவ்வேறு வடிவங்களில் ஆடவருக்கும், பெண்டிருக்கும், இளையோருக்கும், முதியோருக்கும் என ஆக்கப்பெற்ற கைக்கடியாரங்களும், பைக்கடியாரங்களும், மோதிரக் கடியாரங்களும், அணிகலக் கடியாரங்களும், மேசைக்கடியாரங்களும்,சுவர்க் கடியாரங்களும், மணிதோறும் குயில் கூவும் கடியாரங்களும், இசைபாடும் கடியாரங் களும், ‘டிக் டிக்கென்று ஒலிக்க அவற்றின் கைகள் வலம் வந்து கொண்டிருப்பதைக் காண்பதே மகிழ்ச்சி தரும். ஜெனி வாவில் இத்துணைக் கடியாரக் கடைகளிலிருந்தும் எல்லாக் கடைகளிலும் வியாபாரம் நடப்பதால், உலகிலே கடியாரத் தொழிலுக்கு ஸ்விட்சர்லாந்தே முதன்மை பெற்ற காடு என்பது விளங்கும். V
ஜெனிவா ககர் பெரும்பாலும் பிரெஞ்சுப் பண்பாட்டைத் தழுவும் மாவட்டங்களின் தலைநகர். இம்மாவட்டங்களில் வழங்கும் மொழி பிரெஞ்சு மொழி. இவ்வாறேஜெர்மன் மொழி யைப் பேசும் ஸ்விஸ் மாவட்டங்களில்பெரும் ககர்கள் பெர்னும் தறிக்கும் (Berne, Zurich). இத்தாலியம் வழங்கும் மாவட்ட மொன்று முண்டு. அதற்குப் பெயர் திச்சீனுே. மொத்தமாக ஸ்விட்சர்லாந்தில் இருபத்தைந்து மாவட்டங்கள் உள. ஜெர்மன், பிரெஞ்சு, இத் தாலிய ம் ஆகிய மூன்று மொ ழி கள் ஆட்சி மொழிகளாக விளங்குகின்றன. அவற்றுடன் ஆங்கிலம் சிறந்த மொழியாகப் பயிலப்படு

Page 107
192 ஒன்றே உலகம்
கின்றது. விளம்பரங்களெல்லாம் பொதுவாக இங்ாகான்கு மொழிகளிலும் வெளியிடப்படுகின்றன. ஸ்விஸ் மக்கள் வெவ்வேறு இனத்தவர்; வெவ்வேறு சமயத்தவர். ஆயினும் ஒற்றுமையுடன் தம் இணைப்பு அரசையியக்க வேண்டு மெனும் கருத்துடன் ஸ்விட்சர்லாந்தில் வாழும் பல்வேறு வகுப்பினரும், சமயச் சுதந்தரம், மொழிச் சுதந்தரம், இனச் சுதந்தரம், மாவட்டச் சுதந்தரம் ஆகிய அனைத்தையும் ஏற்று இவ்வனைத்துக்கும் உரிய உரிமைகளை வழங்கியிருக்கின்றனர். எனவே, ஸ்விஸ் மக்களின் காட்டுப் பற்றே எல்லை கடந்த நாட்டுப் பற்று. சிறுபான்மையோரின் பண்பாட்டினையும் சிறப்பியல்புகளையும் எவ்வளவிற்கு அரசியல் மதித்துக் காப் பாற்றி வருகின்றதோ, அவ்வளவிற்கு அக்குடிகள், நாட்டுப் பற்றையும் அரசப்பற்றையும் வளர்த்து வருவர்.
மேலும், ஸ்விஸ் காட்டின் குடியாட்சி பல துறைகளில் ஏஜனய குடியாட்சி காடுகளுக்குப் பல பாடங்களைக் கற்பித்து வருகின்றது. பெரும் பிரச்சினைகளைப் பற்றிக் குடிகள் தம் கருத்தைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பினையளிக்கின்றது. சில மாவட்டங்களில் குடிகள் சேர்ந்து பிரச்சினைகளைக் கலந்து ஆராய்கின்றனர். இத்தகைய கூட்டங்களால் ஒவ்வொரு தனி மகனும் குடியாட்சியில் ஈடுபடுவதற்கு வாய்ப்புக்களைப் பெறுகின்றன். ஆனல் ஸ்விட்சர்லாந்தின் அரசியலமைப்பில் பெண்களுக்கு வாக்குரிமையில்லை. மற்றெல்லா நாடுகளிலும் பெண்களின் உரிமைகள் வளர்ந்துவரக் குடியாட்சியின் இருப் பிடம் எனப்படும் ஸ்விட்ஸர்லாக்தில் பெண்களுக்கு வாக் குரிமையில்லாதது வியப்பேயாம். பெண்களும் எதிர்காலத் தில் தம்முரிமைகளைப் பெறுமாறு இயக்கங்களைத் தொடங்கிய தாகத் தெரியவில்லை.
ஸ்விட்சர்லாந்தை ஐரோப்பாவின் விளையாட்டுக்களம் என்றழைப்பது மரபு. மலையேறுவோர், உறைபனிமீது வழுக்கி விளையாடுவோர், அல்பைன் செடிமலர்களைத் தேடு வோர் மலைகளின் அமைதியை விரும்புவோர், அஜனவரும் ஸ்விட்சர் லாந்துக்குச் செல்வர். ஸ்விட்சர்லாந்தின் அழகைக் காணவேண்டுமாயின் நகர்களைவிட்டு மலைப்புறங்களுக்குச் செல்லவேண்டும். அங்கு மெய்க்காப்பாளர் போலுயர்ந்து நிற்கும் பைன் மரங்களும், அப்பைன் மரங்களிலிருந்து வீசும் கறுங்காற்றும் நறுமணமும் மரக்கட்டைகளால் ஆக்கப் பெற்ற சிறு மனையும் கோடையில் தடித்துப் பச்சையாகத்

ஐரோப்பாவின் சிறு நாடுகள் 193
தோன்றும் புற்றரையும், அப்புற்றரைக்கு அப்பால் ஞாயிற் றின் வெயிலில் மிளிரும் பனி மூடிய சிகரங்களும், பக்கத்தில் காட்சியளிக்கும் நீல ஏரிகளும், ஆங்காங்குப் புல் மேய்ந்து மணிகளையிரட்டும் பசுக்களும், நிலக்காட்சியும் ஆன்மாவிற்கு அமைதியைப் பயக்கும் இன்பக் காட்சிகளாம்.
077-13

Page 108
19. ஆப்பிரிக்கா
பிரசீலில் உள்ள 7 ரியோ? என்னும் தலோககளின் வான ஆர்தி நிலையத்தில் கிளிகள் சிலவற்றைக் கூடுகளில் வைத்து வளர்க்கின்றனர். நாங்கள் வானவூர்திக்குச் செல்லும்போது அக்கிளிகள் திரும்பி இங்கு வாருங்கள்" என்று போர்த்துக் கீசிய மொழியில் கூச்சலிடத் தொடங்கின.
ஒருமுறை அமெரிக்காக் கண்டத்தில் விடைபெற்றுக் கொண்டு அட்லாண்டிக் பெருங் கடலேக் கடந்து ஆப்பிரிக்கா வுக்குச் சென்றேன். யான் நேரே டாக்கார்" (Dakar) எனும் மேற்கு ஆப்பிரிக்க நகரில் வானவூர்தி மாற்றிப் பெல்ஜியம் காங்கோ செல்வதாகத் திட்டம் வகுத்திருந்தேன். அட்லாண் டிக் பெருங்கடலேக் கடந்த என் வானவூர்தி காலம் பிந்திச் சென்றதால், மேற்கு ஆப்பிரிக்காவில் ஐந்து நாட்கள், வேறு வூர்தி கிடைக்கும்வரை நான் தங்கியிருக்க வேண்டியதாயிற்று. அங்குச் சில நாட்கள் தங்கியதால் மேற்கு ஆப்பிரிக்காவின் பழக்கவழக்கங்களே ப்பற்றி யறியச் சிறிது நேரங் கிடைத்தது. ஆப்பிரிக்காவை இருட்கண்டம் (Dark Continent) என்று முன்பு கூறுவது வழக்கமாயிற்று. ஆணுல், சென்ற பத்து, இருபது ஆண்டுகளில் அங்காடு பெரிதும் முன்னேற்றமடைந் துள்ளது. அங்கு ஏறக்குறைய 20 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆசியாக் கண்டம் எவ்வாறு பல வகுப்பி னர்க்கு இருப்பிடமாய் இருக்கின்றதோ அவ்வாறே ஆப்பிரிக் காவும் பல வகுப்பினர்க்கு இருப்பிடமாய் இருக்கின்றது. வட ஆப்பிரிக்காவில் பல வகுப்பினர்-ஐரோப்பியர் உட்படக் குடி யேறி இருக்கின்றனர். தென்னுப்பிரிக்காவிலும் அவ்வாறே ஐரோப்பிய மரபினர் பலர் உளர். நடு ஆப்பிரிக்காவில் ஆப் பிரிக்காவின் பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இருணட கண்டமா?
ஆப்பிரிக்காவை இருட்கண்டம் அல்லது கறுப்புக் கண் டம் எனக் கூறுவது தவருகும். ஏனெனில் எல்லா நாடுகளி லும் வரலாற்றளவில் முதன் முதலாக நாகரிகம் பெற்ற ாாடாக விளங்கும் எகிப்தியருடைய நாடு ஆப்பிரிக்காவில்

ஆப்பிரிக்கா ருவண்டா உருண்டி நாட்டியம் பக்கம் - 1931
ஆப்பிரிக்கா காங்கோவில் லீடுகள்
| பக்கம் - 198}

Page 109
i-fi si) நாப்பாளர் ப-ை
(190 - فاكثر )
 

ஆப்பிரிக்கா 1 քն է:
தான் இருக்கிறது. பண்டைக்காலத்தில் நாகரிகத்தில் திகழ்ந்த மக்கள் ஆப்பிரிக்காவின் வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வந்திருக்கின்றனர். பண்பாடற்ற பல கறுப்பு வகுப்பினர் அங்கு வாழ்வதால் அதனேக் கறுப்புக் கண்டம் என்று கூறுவாரும் உளர். ஆணுல் ஆப்பிரிக்காவிலும் புது உணர்ச்சி தோன்றி உள்ளது. ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், பெல்ஜியர் போன்றேருடைய குடையின்கீழ் வாழ்ந்த ஆப்பி ரிக்க மக்கள் விடுதலே பெற்றுத் தம் தனியாட்சிகளே கிறுவ வேண்டும் என்று துணிந்துவிட்டனர். ஐம்பது ஆண்டுக ளுக்கு முன் மக்களின் ஊனேத் தின்று வந்த மக்கள் வழிவங் தோர், கல்வி பயின்று விடுதலே அடைய வேண்டுமென்று உழைத்துள்ளனர். 1950ஆம் ஆண்டில் நான் பெல்ஜியம் காங்கோவிற்குச் சென்றிருந்தபோது இளேஞர் பலர் ான்?னப் பார்க்க வந்தனர். அவர்களிடம் பெல்ஜியம் ஆட்சியைப் பற்றி வினவினேன். பெல்ஜியம் அவர்களுக்குப் பல நன்மை களேச் செய்ததாக ஒப்புக்கொண்டனர்; ஆயினும் அவர்கள் விடுதலே வேட்கை நிரம்பப் பெற்றிருந்தனர். அவர்கள் காட் டுக்கு விடுதலே விரைவில் கிடைக்கும் என்று கான் கூறிய போது ஒர் இளேஞர், "இந்த நாட்டில் இருக்கும் செல்வங்களே யெல்லாம் ஐரோப்பியர் கொண்டு சென்ற பின்பு விடுதலே பெற்றும் பாம் எங்ங்னம் வாழ்வது ?" என்று குறிப்பிட்டார். ஆப்பிரிக்காவில் நான் தங்கிய நாட்களில் மக்களாய்ப் பிறக் தோர்க்கு விடுதலே வேட்கை எவ்வளவு இயல்பாகத் தோன்று கின்றது என்பதை எளிதில் உணர்ந்தேன்.
டாக்கார் என்னும் மேற்கு ஆப்பிரிக்க நகருக்கு நள்ளிரவில் போய்ச் சேர்ந்தேன். அடுத்த நாட் காலே, நகரைப் பார்க்கச் சென்றபோது அக்கண்டத்தின் ககருக்கும், பிற இடங்களில் கண்ட நகரங்களுக்கும் எத்துனேயோ வேற்றுமைகள் இருப்
பதை உணர்ந்தேன். அங்குள்ள மக்கள் அளவிலும், வடிவி
லும் கம்மைப்போன்றவர் அல்லர். அவர்களுடைய முகங்கள் தட்டையாகவும், மூக்கு மிகவும் அகன்றும், உதடுகள் தடித் தும், த2லமயிர் சுருண்டும் இருந்தன. ஆப்பிரிக்க மக்களில் வெவ்வேறு வகுப்பினர் உளர். சகாரா பாலேவனத்தில் இருப் பவர் பெதுவினர் (Bedouins) என்று அழைக்கப்படுவர் ; அவர்கள் அராபிய மக்களுடன் கலப்புள்ளவர், நடு ஆப்பிரிக்காவில் வதிபவர் பெரும்பாலும் பந்து (Bantu) மொழிகளேப் பேசும் வகுப்பினர். தென்னுப்பிரிக்காவில் வாழ்பவர் சூலு (Zபய)

Page 110
96 h ஒன்றே உலகம்
வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் வெவ்வேறு வகுப்பினர் வெவ்வேறு நாகரிக நிலையை அடைந்திருக்கினறனர். இன்னும் நாகரிக மற்றவர்களாய், பிறருடன் தொடர்பின்றிக் காடுகளில் வேட்டையாடித் தம் உணவைப் பெற்றுக் காட்டிலே வாழ்ந்து வருகின்றனர். ஆப்பிரிக்காவில் நான்கு அடி முதல் ஆறு அடி வரை வளர்ச்சி உடைய மக்களைக் கண்டேன். டாக்கார் நகரிலும் அதைச் சுற்றியிருக்கும் காடுகளிலும் மக்கள் எப்பொழுதும் மரக்குச்சிகளை வாயில் வைத்துப் பற்க2ள விளக்கிக் கொண்டு சென்றனர். அனைவரும் தங்கள் முகங்களில் பச்சை குத்தியிருந்தார்கள். முகங்களில் பச்சை குத்தியிருக்கும் அடையாளங்களிலிருந்து அவர்கள் எந்த வகுப்பினரைச் சார்ந்தவர்கள் என்று அறியக் கூடும்.
ஆப்பிரிக்காவின் பல பாகங்களில் ஐரோப்பியர் வாழ்ந்து வருகின்றனர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை விட்டுச் சென்ற ஆங்கிலேயரிற் பெரும்பாலோர் ஆப்பிரிக்காவின் குடியேற்ற நாடுகளில் குடியேறியிருக்கின்றனர். ஆங்கிலே யர்க்கு அங்குக் குடியேற்ற நாடுகள் இருப்பதுபோல் பிரஞ்சுக்காரருக்கும், பெல்ஜியத்தாருக்கும் இன்னும் பல ஐரோப்பிய நாட்டினர்க்கும் குடியேற்ற காடுகள் உள. குடியேற்ற காடுகளை அங்குக் கொண்டிருப்பதால் ஐரோப்பியர் குப் பெருஞ்செல்வத்தையும் ஈட்டிக் கொண்டுவருகின்றனர். ஆனல் ஐரோப்பியர் ஆப்பிரிக்காவில் இருப்பதால் அங்குள்ள பிற்ப்ோக்குடைய மக்களும், கல்வியிலும் கேள்வியிலும் முன்னேறி வருகின்றனர் என்பதும் உண்மை. இக்குடியேற்ற ாகாடுகளில் உயர்ந்த பதவிகளில் வழக்கறிஞராகவும், மருத்து வராகவும், அரசியல் ஆட்சியாளராகவும் உள்ாகாட்டினர் பலர் இருக்கின்றனர். அங்குப் பெருங் W கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் நிறுவப்பட்டிருக்கின்றன. இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் விடுதலையும் முன்னேற்றமும் அடைந்த தைப்போல் தாமும் அடைய வேண்டும் என்று அங்காட்டவர் உழைத்து வருகின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நாகரிகம் அற்ற மரபினராயிருந்தவர் இன்று சமயத் தலைவ ராகவும் அரசியல் ஆட்சியாளராகவும் இருப்பதென்றல் அது ஐரோப்பிய அரசியலார்க்குப் பெரும் புகழ் தாராது இருப்பது
எங்ங்னம் ?

ஆப்பிரிக்கா 197
வகுப்பு நிறப் பிரிவினையைப் பெல்ஜியம் காங்கோவிலும் ஒருவாறு நடைமுறையில் கண்டேன். பெல்ஜியம் காங்கோ வில் வெள்ளையர்க்கும் கறுப்பருக்கும் தனித்தனி நகர்கள் நிறுவப்பட்டிருந்தன. புகைவண்டி நிலையங்களிலும் வண்டி களிலும் வெள்ளையர், கறுப்பர் என்று தனித்தனியாக வண்டி களேப் பிரித்திருப்பதைக் கண்டேன். அங்கு வெள்ளையரும், கறுப்பரும் ஒரே வண்டியில் செல்லுதல் சட்டத்தால் விலக்கப் பட்டிருந்தது.
மாலை ஆறு மணிக்குப் பின் வெள்ளையர் நகரில் கறுப் பரும் கறுப்பர் நகரில் வெள்ளையரும் செல்லுதல் கூடாது. வெள்ளையர் நகரில் பணியாற்றும் கறுப்பு வேலையாட்கள் பொழுதுபடுமுன் தமக்கு உரிய கறுப்பர் நகருக்குச் சென்று விடல் வேண்டும். இவ்வாறெல்லாம் பிரித்து வைத்திருந்ததால் ஆப்பிரிக்காவின் உள்நாட்டு மக்களைப் படிப்படியாக உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருதல் கூடும் என்று கருதினர் பெல்ஜிய ஆட்சியாளர். ஆயினும் அவர்களுடன் உரையாடும்பொழுது அந்த மக்களைக் “கறுப்பர்”, “கறுப்பர்” (Les noirs) என்றே அழைத்தது என் செவிக்குக் கைப்பாயிருந்தது. அண்மையில் காங்கோவில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கும் காங்கோவின் விடுதலைக்கும் இனவேற்றுமை ஒரு காரணமாக இருந்தது.
கான் பெல்ஜியம் காங்கோவில் சென்ற இடங்களுக்கு என்னை வெள்ளையரே அழைத்துச் சென்றனர். யான் வெள்ளையர் நகரில் சில நாட்கள் தங்கினேன். என்னைப் பார்த்த பெல்ஜியம் காங்கோவைச் சேர்ந்த சுதேசிகள் எதற்காக என்னை வேறு முறையில் கடத்தவேண்டும் என்றும், எனக்கும் அவர்களுக்கும் வேற்றுமை யாதென்றும் தம் ஐரோப்பிய முதலாளிகளிடம் கேட்கத் தொடங்கினர்கள். அவ் விணுவிற்கு விடையாக இந்தியாவும் இலங்கையும் தொன்று தொட்டு நாகரிகமுள்ள காடுகளென்றும், இந்திய மக்களும் ஐரோப்பியரும் ஒரே நிலையினரும் வகுப்பினரும் என்றும், என்னுடன் சென்ற பெல்ஜியத்தார் கூறினர். "லெயோ போல்டுவில்’ (Leopoldville) என்னும் பெருநகரில் பலஸ் ஹோட்டல்” என்னும் இடத்துக்கு என்னை ஐரோப்பியர் சிலர் அழைத்துச் சென்றனர். அங்குக் கறுப்பர் வேலை செய்வதற்கு மட்டுமே செல்லலாம். வெள்ளையரன்றி வேறு எவரும் அங்கு உணவருந்தவோ, தங்கவோ செல்லுதல் தடுக்கப்பட்டிருந்தது. அங்கு கான் சென்றதும் உணவருந்திக் கொண்டிருந்த ஐரோப்

Page 111
198 ஒன்றே உலகம் பியர் அனைவரும் வியப்புடன் என்னைப் பார்த்தனர். கலகம் ஏற்பட்டு விடுமோ என்று நான் ஐயுற்றேன். அவ்வாறு ஒன்றும் நிகழவில்லை. ஏனெனில் என் தலை முடியைப் பார்த்து நான் ஆப்பிரிக்கச் சுதேசி அல்லேன் என்று அறிந்து கொண்டனர்.
ஆப்பிரிக்காவில்இருக்கும் சுதேசிகள் அனைவரும் மிகவும் கறுப்பு நிறமுடையவர்கள் என்று காம் நினைப்பது தவறு. பெல்ஜியம் காங்கோவில்கூட, இலங்கையரினும்செங்ாநிறமுள்ள மக்கள் பலரைக் கண்டேன். பெல்ஜியம் காங்கோவின் வட பாகத்தில் “ருவாண்டோ உருண்டி’ எனும் ஒரு காடு உள்ளது. அங்குள்ள மக்கள் பண்டைக் காலந்தொட்டுச் சிறந்த நாகரிகம் படைத்தவர்களாக இருக்கின்றர்கள். அவர்கள் எகிப்து காட்டிலிருந்து குடிய்ேறியவர்கள் எனக் கூறுகின்றனர். அவர் கள் ஆறு அடி உயரமுள்ளவர்கள்; உடற்பொலிவு படைத்த வர்கள் அழகான தோற்றமுடையவர்கள். ஆப்பிரிக்காவின் பல இன மக்கள்
ஆப்பிரிக்காவில் உள்ள மக்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு ஆடைகளை அணிந்து வருகின்றனர். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெண்களும், ஆண்களும் நீண்ட அங்கிகளை அணிகின்றனர். பெல்ஜியம் காங்கோவிலுள்ள பெண்கள் கூட இலங்கையில் ஆடவர் அணிவதுபோல் சட்டை யும் சாரமும் (sarong) அணிந்து வருகின்றனர். ஆப்பிரிக்கா வில் பெண்கள் தம் தலை முடியைப் பல முறை கோதி முடிக் கின்றனர். அவர்களுடைய தலைமுடி முடிப்பிலிருந்தும் அவர் கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறுதல் எளிது. மேற்கு ஆப்பிரிக்காவில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண் கள் பர்தா' முறையின்படி முகத்தை மூடுவாரல்லர். ஆனல் வட ஆப்பிரிக்காவில் அவ்வாறு முடிச் செல்வதை கான் பார்த் திருக்கின்றேன்.
ஆப்பிரிக்காவில் இருக்கும் பிக்மியர் வகுப்பினரைப்பற்றி காம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கின்ருேம். ஹோமர் (Homer), ஹெரோடொடஸ் (Herodotus) போன்ற பண்டைக் கால மேனட்டு நூலாசிரியர்கூட பிக்மியர்கள் ஆப்பிரிக்காவில் வாழ்ந்ததாக எழுதியிருக்கின்றனர். அவர்கள் ஏறக்குறைய நான்கடி உயரமுள்ளவர்கள்; நீக்கிரோ வகுப்பினரைச் சேர்ந் தவர்களல்லர். அவர்கள் நடு ஆப்பிரிக்காவின் காடுகளில் சிறு ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். வேட்டை ஒன்றே அவர்

ஆப்பிரிக்கா 199
களுடைய தொழில். இலங்கையிலுள்ள வேடருடனும் இந்தி யாவில் உள்ள பிற்பட்ட வகுப்பினருடனும் தொடர்புடையவர். என நூலாசிரியர்கள் கூறுகின்றனர். இவர்களைப் போன்றேர் ஆப்பிரிக்காவின் முதன் மக்கள் என நம்புவதற்கு இடமுண்டு. ஆப்பிரிக்காவின் சுதேச இனத்தார் அனைவர்க்கும் அவர்களுக் குச் சொந்தமான நடனக் கலையுண்டு. பிக்மியர் தம்முடைய இடையில் மட்டும் வைக்கோலால் செய்த சிறு ஆடையைக் கட்டிக்கொண்டு நடனமாடுவர். ருவாண்டா உருண்டியில் இருப்பவர்களுடைய நடனக் கலை மிகவும் சிறந்தது. அவர்கள் கையில் சிலம்புக் கழியை வைத்துப் போர்க்கோலம் பூண்டு ஆடும் நடனம் மிகவும் பெயர் பெற்றது.
ஆப்பிரிக்காவின் பழங்குடிகள் பல மூட நம்பிக்கைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். அவர்களுடைய முன்னேற்றத்திற்கு இம்மூட நம்பிக்கைகளும், ஆடவர் ஒருவர் பெண்டிர் பலரை மணம் செய்து கொள்ளும் வழக்கமும், தடைகளாய் இருக் கின்றன. மேலும் காடுகளில் வசிக்கும் மக்களிடையில் மலேரி யாக் காய்ச்சல்", "மஞ்சள் காய்ச்சல்', 'துயிற் காய்ச்சல்' போன்ற நோய்கள் பரவியிருக்கின்றன. ஆப்பிரிக்காவிற்குள் செல்லுமுன் பல கோய்களைத் தடுப்பதற்காகப் பல ஊசிகள் குத்திக் கொண்டேன். நடு ஆப்பிரிக்காவில் தங்கிய ஒவ்வொரு நாளும் மலேரியாத் தடை மருந்தும் சாப்பிட்டு வந்தேன்.
கான் நடு ஆப்பிரிக்காவிலிருந்து வட ஆப்பிரிக்காவிற்குப் போவதற்குச் சகாரா பாலைவனத்தைக் கடந்து செல்ல வேண்டியதாயிற்று. வானவூர்தி காங்கோப் பேராற்றைக் கடந்து பெருங் காடுகளுக்கு மேல் பறந்தது. அதன் பின் நான் கண்டது சகாரா பாலைவனம். தொடக்கத்தில் சிறு ம2லக2ள யும் மரம் செடிகள் இல்லாத சமவெளியையும் கண்டேன். அதன்பின் தோன்றியது பெரும் மணல் நிறைந்த சமவெளி. பிற்பகல் ஐந்து மணிக்கு சகாரா பாலைவனத்திலிருக்கும் சிற்றுாரில் தங்கினுேம். வானவூர்தியை விட்டிறங்கியதும் பெரும் கெருப்புக் குழியில் இறங்கியதுபோல் வெப்ப மயமா யிருந்தது. அங்கு அவர்கள் மழை பெறுவது அரிது. ஆயினும் அங்குக்கூட மக்கள் குடியேறித் தொழில் செய்து வருகின் றனர். ஊற்று நீரைக் கொண்டே வாழ்ந்து வருகின்றனர். சகாராவின் மேலே போகப்போக மணல் வெளி எங்கும் பரவி யிருப்பதைக் கண் டே ன். வட ஆப்பிரிக்காவிலுள்ள அல்ஜியர்ஸ் நகரை (Algiers) அடையுமுன் இரண்டு, மூன்று

Page 112
200 ஒன்றே உலகம்
*ஒயஸிஸ் (Oasis) எனும் பாலைவனச் சோலைகளைக் கண்டேன். அப்பொழுதுதான் இப்பாலைவனச் சோலைகளின் அருமையை உணர்ந்தேன். வட ஆப்பிரிக்கா
வட ஆப்பிரிக்காவுக்கும் நடு ஆப்பிரிக்காவுக்கும் எத்துணை வேற்றுமை ! நடுநிலக் கட2ல அடுத்திருக்கும் அல்ஜிரியா, துனிசியா போன்ற நாடுகள் மிகவும் செழிப்பாக இருக் கின்றன. அங்கிருக்கும் ஐரோப்பிய மரபினருக்கும் அராபிய மரபினருக்கும் எத்துணை வேற்றுமை ? அராபிய மரபினர் பெரும்பாலும் எளிய ஆடைகளை அணிவதால் வறுமையுற்ற வர் போலத் தோன்றுகின்றனர். "துனிஷ், அல்ஜியர்ஸ்’ போன்ற இடங்களில் அராபியர் வாழும் சேரிக்கு கெஸ்பா' (Kesbah) என்று பெயர். அச்சேரிக்குச் சென்றேன். ஆணுல் அதன் ஒடுங்கிய வழிகளையும் தூய்மை குறைந்த இடங்களை யும் கண்டதும், உள்ளே செல்லாது விரைவில் திரும்பி விட் டேன். வட ஆப்பிரிக்காவுக்கு நான் சென்ற இடங்களில் *கிப்போ’ (Hippo) என்னும் இடம் குறிக்கற்பாலது. இங்குத் தான் உலக வரலாற்றில் சிறந்த நூலாசிரியரான "அகுஸ்தீன்' அடிகள் வாழ்ந்து வந்தார். அவர் எழுதிய புகழுரை நூல் (Confessions) இலக்கிய நூல்களுள் சிறந்ததொன்று. வட ஆப்பிரிக்காவில் பண்டை க் கால உரோமையர்களுடைய பழைய கட்டடங்கள் பல இருக்கின்றன. அவர்கள் கோடைக் காலத்தில் வாழ்வதற்காக நிலத்திற்குக் கீழ் அகழ்ந்து அழகிய அறைகளைக் கட்டியிருக்கின்றனர்.
எகிப்தில் அரும்பொருள் வணிகர், பிரயாணிகளை எப் பொழுதும் தொடர்ந்தே செல்வர். நான் இலங்கையன் என்றறிந்ததும் அங்குள்ள இரண்டு மூன்று இலங்கையருக்கு இவ்வணிகர் என்னைப்பற்றி அறிவித்தனர். மஹம்மத் அப்துல்லா என்பவர் பெருவலா’ என்னும் ஊரைச் சேர்ந்தவர். அவர் என்னைக் கெய்ரோ நகருக்கு அழைத்துச் சென்று அங் ாககரை எனக்குக் காட்டினர். எகிப்தில் புழுதிக்கும் தூசிக்கும் குறைவில்லை. அங்கு மழை பெய்வது மிகவும் அற்புதச் செய லாகக் கருதப்படும். கைல் கதியின் கரையில் கெல்லும் கோது மையும் மிகவும் செழிப்பாக வளர்வதற்கு கைல் கதியின் தண் -ணிரும் வண்டலுமே காரணம்.
கான் கெய்ரோவை அடைந்த நாள் வெள்ளிக்கிழமை. நண்பகலில் மக்கள், கூட்டங் கூட்டமாகச் சில கட்டடங்களி

ஆப்பிரிக்கா 201
லிருந்து வெளியே வருவதைக் கண்டேன். அங்கு வாழ்பவர் களுள் பெரும்பான்மையோர் இஸ்லாமியராதலால் அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களுக்குப் பெரும் திர ளாகச் சென்று திரும்பினர். எகிப்தில் எங்குச் சென்ருலும் *பக்ஷிஸ் என்று பணம் கேட்கும் வழக்கம் உண்டு. பொருட் காட்சிச் சாலைக்குச் சென்ருல் அங்கு ஒருவன் தானுக ஓடிவந்து மோட்டார் வண்டிக் கதவைத் திறக்கின்றன். அவன் ‘பக்ஷிஸ்’ கேட்கிருன். பிரமிட்டைப் பார்க்கச் சென்ருல் அங்குப் பத்து பேரேனும் வந்து வெவ்வேறு காரணங்களைக் கூறிப் பக்ஷிஸ் கேட்கின்றனர். பேக்ஷிஸ் பொருட்டுப் பிரயாணிகளைத் துன் புறுத்தும் காடு எகிப்து. இந்தத் தொந்தரவுகளினுல் யான் அங்குப் பல நாட்கள் தங்க விரும்பவில்லை. ஆணுல், இன்று காசர் ஆட்சிக் காலத்தில், இச்சீர்கேடு சிறிது திருத்தப்பட்டு வருகின்றது.
கெய்ரோவில் பொருட்காட்சிச் சாலையும் பிரமிட்களும் “ஸ்பிங்சும் (Sphinx) குறிப்பிடத்தக்கவை. பிரமிட்கள் என்பன கெய்ரோவின் அருகில் நைல் ஆற்றின் இடக்கரையில் அமைக்கப்பெற்றிருக்கும் முக்கோண வடிவமுள்ள பெருங் கல்லறைக் கட்டடங்கள். இவற்றின் உள்ளறைகளும் சுரங்க வாயில்களும் கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. இவை ஏறக்குறைய 500 அடி உயரமும் அடிப்பாகத்தில் 800 அடி அகலமும் உள்ளவை. இவற்றை நூருயிரம் பேர் சேர்ந்து 20 ஆண்டுகளாகக் கட்டினர் என்பர். கற்களைக், கெய்ரோவிலி ருந்து பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் நிலவறைகளில் அகழ்ந்து கொண்டு வந்தனர். பிரமிட்களைப் பார்க்க வேண்டு மெனில் ஒட்டகத்தின்மீது ஏறியே செல்ல வேண்டும். இப் பிரமிட்களுக்கு இடையே ஸ்பிங்சு என்னும் மனித வடிவ முள்ள கட்டடமும் உளது. அது மனிதனின் தலையையும், சிங்கத்தின் உடலையும் காலையும் போன்றது. இந்த ஸ்பிங்சின் நீளம் 170 அடி உயரம் 56 அடி.
எகிப்தின் பெருமையை உணர வேண்டுமாயின் மெம்பிஸ், லுக்சோர் போன்ற இடங்களுக்குச் சென்று அங்கிருக்கும் அரண்மனைகளையும் கோயில்களையும் காண வேண்டும். அங் கிருக்கும் அரண்மனைகளும் கோயில்களும் மிக்க அழகுணர் வும் அச்சமும் பயக்குமளவு அமைக்கப்பெற்றிருக்கின்றன. எகிப்தியரது பெரிய கட்டட அமைப்பினைப்போல அவருடைய சிறிய கைத்தொழில் அமைப்புக்களும் பெரிதும் வியப்பிற்

Page 113
202 ஒன்றே உலகம்
குரியன. பழம்பொருள் ஆராய்ச்சியாளர் துத்தன்காமன்' என்னும் எகிப்து மன்னர் கல்லறையைத் திறந்து சில அரிய பொருள்களைக் கண்டு பிடித்தனர். அக்கல்லறையிலிருந்து கண்டெடுத்த பொருள்களை கெய்ரோ பொருட்காட்சிச் சாலை யில் வைத்திருக்கின்றனர். பொன்னிலுைம் மரத்தினுலும் அமைக்கப்பட்ட கட்டில்கள், நாற்காலிகள், உணவு பரிமாறும் தட்டுகள், கிண்ணங்கள் முதலியவை எகிப்தியர் அக்காலத் தில் பெற்றிருந்த கலைத் திறமையைக் காட்டுகின்றன.
இறந்துபோன தம் பெரியோர் உடம்புக்குப் பலவகை நறுமணப் பொருள்களிட்டுப் பக்குவம் செய்து "மம்மி" (Mummy) ஆக்கி வைப்பது எகிப்தியரின் வழக்கம். ஆதலால் அந்தக் கல்லறைகளைப் பிற்காலத்தில் திறந்த பொழுது அம் மன்னர் உடம்பு அழியாமலிருந்தது. எகிப்தியர் மறுமை வாழ்க்கையில் கம்பிக்கையுடையவர்களா யிருந்தமையால் காலஞ்சென்ற உயிர்க்கு வேண்டப்படுவன இவை இவை என்றெண்ணிப் பல வகைத் தின்பண்டங்களை யெல்லாம் உடன் வைத்து வந்தனர்.
எகிப்தியருடைய பண்பாடு, சிற்ப முறை, மெய்யுணர்வு எல்லாம் கிரேக்கர் நாகரிகத்துக்கும் கல்விக்கும் அடிப்படையா யிருந்தன. எகிப்தியர் பண்டைக் காலத்திலேயே எழுத்துக்களை உண்டாக்கி "பப்பைரஸ்’ எனும் ஒருவகைக் கரும்பு போன்ற புல்லின் பட்டையினை ஏடுகளாகக் கொண்டு அவற்றின்மேல் எழுதினர். இது கம் மக்கள் பனையோலைகளில் எழுதிவந்த
ஐரோப்பிய எழுத்துக்கள் பிறந்தன. அவர்களின் எழுத்துக் கள் படங்களின் வடிவாயிருந்தன. சென்ற நூற்றண்டில் ‘சாம்பிலியன்’ என்பார் முப்பது ஆண்டுகளாக எகிப்தியர் ஏடு களைப் படித்துப் பொருள் கண்டார். அதன் பின் எகிப்தின் பற்பல இடங்களில் மறைந்து கிடந்த பழைய சுவடிகளை எடுத் துப் படித்து எகிப்தின் பழைய வரலாற்றினை அறிஞர் எழுதி யிருக்கின்றனர். எகிப்தின் பழம் பொருள்களும் பண்டை நகர் களும் அமைந்த இடங்கள் இன்று மணற் காடுகளாகவும் பாலை நிலமாகவும் மாறிக் கிடக்கின்றன.

20. கிழக்கு ஆப்பிரிக்கா
எகிப்தின் தென்பாகத்தில் எகிப்தியப் பண்பாட்டின் சின்னங்கள் பல, ாைகலின் ஆற்றங்கரையிலும், இடையே இருக் கும் ஆற்றிடைக் குறைகளிலும் உள்ளன. தெற்கே உள்ள அத்தகைய ஒரு நகர் லுக்சோர். லுக்சோர் நகர் பண்டைக் காலத்தில் தீப்ஸ் என்னும் பெயரைப் பெற்று மெம்பிஸ் என்ற ககருக்குப்பின் தலைாககராக விளங்கியது. இங்கு துத்தன் காமன் என்ற அரசரின் கல்லறையும், ஏனைய பலருடைய கல்லறைகளையும் கண்டெடுத்தனர். அரசரின் பள்ளத்தாக்கு, அரசிகளின் பள்ளத்தாக்கு, கோமக்களின் பள்ளத்தாக்கு என்ற மூன்று இடங்களில் கனியறைகளையும் கல்லறைகளை யும் காணலாம். எகிப்திய அரசரின் கல்லறைகளுள் பொன்னு லாகிய பொருள்களையும் வேறு விலை உயர்ந்த கன்கலங்களை யும் சடலங்களுடன் புதைத்துவரும் வழக்கிருந்ததால், கல்ல. றைகளைக் கள்ளர் திருடுவார்கள் என்று நினைத்து மறைவான இடங்களிலேயே சுரங்கக் கூடங்களை அமைத்துக் கல்லறைப் பெட்டிகளைப் புதைத்தார்கள். அரசர்களினுடைய பள்ளத் தாக்கு என்னுமிடத்தில் கல்லறைச் சுரங்கங்கள் பல இருக் கின்றன. கைல் ஆற்றங்கரையிலிருந்து மேற்கே இருபது கல் தொலையில் இருக்கும் இச் சுரங்கங்களின் வாயில்கள் வெளியே நின்று பார்ப்பவர்களுக்கு மறைந்தே அமைந்துள்ளன.
பண்டை எகிப்திய நூல்களைப் படித்தும், அங்குள்ள மக் களின் பரம்பரை வரலாறுகளை அறிந்தும் அறிஞர் இங்குப் புதைபொருள் ஆராய்ச்சி நிகழ்த்தினர். எதிர்பாராத முறை யில் ஒருங்ாள் சுரங்க வழியைக் கண்டு பிடித்து அங்குச் சென்றதும் துத்தன்காமனுடைய கல்லறையையும், அங் குள்ள பல பொருள்களையும் கண்டு பிடித்து எல்2லயற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பின் வேறு பல கல்லறை களைக் கண்டு பிடிப்பது எளிதாயிற்று. லுக்சோருக்குச் செல் லாத மக்கள் கைரோப் பழம் பொருட்சாலையில் இருக்கும் பொருள்களின் மாண்பையும் பண்டைய எகிப்தியரினுடைய கல்லறை வழக்கங்களையும் கன்கு உணர்வது அரிது. கல் லறைச் சுரங்கங்கள் அனைத்தின் சுவர்களிலும் இறந்தோரு

Page 114
204 ஒன்றே உலகம்
டைய நூலிலிருந்து (Book of the Dead) பல காட்சிகளையும், கூற்றுக்களையும் ஓவிய எழுத்தில் எழுதியிருக்கிருர்கள். அவ் வோவிய எழுத்துக்களின் வர்ணங்கள் இன்றும் மிக்க அழகு டன் காட்சியளிக்கின்றன.
ாைகலின் கிழக்குக் கரையில் இருப்பது லுக்சோர் கோவில். அதற்கு அண்மையில் இருப்பது கர்ணுக் கோவில். இந்த இரு கோவில்களின் தூண்களும் சிலைகளும் மிகப் பெரியன. இவற்றைக் கொண்டு அக் காலத்தில் எகிப்திய அரசர் எத் துணை செல்வாக்குடன் வாழ்ந்திருத்தல் வேண்டுமென்று ஊகித்தல் கூடும். இக்கோவில்களின் முற்றங்களிலும், உள் ளறைகள் இருந்த இடங்களிலும், தெப்பக்குளம் தோன்றும் பக்கத்திலும், கடந்து செல்லும்பொழுது, காம் இருபதாம் நூற் ருண்டவர் என்று பெருமைகொள்ளும் செருக்கை இப்பண்டைக் காட்சிகள் குறைக்கின்றன. இவ்வாறே ராம்சேஸ் என்னும் அரசர் பெயரால் உள்ள ராம்சேயும் என்னும் கோயி2லப் பார்க் கும்பொழுது, ஹோமர் என்னும் கிரேக்கப் புலவர், இந் நகரை *நூறு வாயில்கள் உள்ள தீப்ஸ் மாநகர்’ என்று அந்தக் காலத்திலேயே போற்றிய காரணம் விளங்கும். கி. மு. 12ஆம், 13 ஆம் 14ஆம் நூற்றண்டுகளிலேயே மிகச் சிறப்பு வாய்ந்த ககராக இருந்தது லுக்சோர் நகர். கொலொசஸ் எனப் படும் மாபெரும் உருவச்சிலைகள் அங்குப் பல இடங்களில் இருக் கின்றன. உலகில் முதன்முதல் வரலாற்றின் பெயர்பெற்ற அரசி இங்கு அரசாண்டு வந்தார். ஹாட்செபுஸ்ட் (Hotsheshput, கி.மு. 1501-1447) என்னும் அரசி எகிப்திய வரலாற்றில் சிறப்புப் பெற்று விளங்கியவர். பல சிறப்புக் களை அடைந்தும், அண்மையில் உள்ள காடுகளுக்குத் தூத னுப்பியும், தீப்ஸ் என்னும் நகரை ஒப்பற்ற நகராக ஆக்கி யிருந்தார்
லுக்சோரில் கான் தங்கிய போது, ாைகலின் பெருமையை ஒருவாறு உணர்ந்தேன். ாைகலே உலகின் மிகவும் நீளமான ஆறு. அதனுடைய நீளம் 4160 கல். கைலின் பெரும் தூரத் திற்குப் படகுகளும், கப்பல்களும் சென்று வருகின்றன பாய் விரித்த படகுகளும், ஒடங்களும் கைலின் மீது மெல்லிய காற் ருல் இயக்கப்பட்டு நீரைக் கிழித்துக் கொண்டு சென்றன. ாைகல் நதியினுடைய தண்ணிரைக் கொண்டு இந்த இடங்களில் மரங்களை வளர்க்கிருர்கள். இத்தகைய வெப்பத்தை உடைய இடத்தில் தண்ணிரால் உண்டாகிய குளிர்ச்சியும், பாலை

கிழக்கு ஆப்பிரிக்கா 205
வனத்திலிருந்து வரும் வெப்பக் காற்று நைல் தண்ணிரால் அடையும் தண்மையும் வெப்பத்தால் வருந்துவோர்க்குச் சிறு ஆறுதலையேனும் அளித்து வரும்.
இங்குத் தங்கிய பொழுதும், பின்பு காட்டுமுக்குச் சென்ற பொழுதும் நைல் ஆறு தரும் பயனையும் கண்டேன். பண்டை ஆசிரியர் ஒருவர், எகிப்து நாடு கைல் நதியின் கன்கொடை” என்று கூறினர். தமிழ்ப் புலவரும் “மகவுாய் வளர்க்கும் தாயாகி’ என்று ஆற்றைப் பற்றிக்கூறிய உண்மை காவேரியி னும் ாைகலிற்கே பன்மடங்கு பொருந்தும் என்று நினைத்தேன். காட்டுமுக்குச் செல்லும் வழியில் அஸ்வான் என்னும் அணைக்கட்டின் மாவட்டம்மேல் பறந்து சென்ருேம். இந்த இடத்தில் பல பழைய கோவில்களும், மடங்களும் இருக் கின்றன. எகிப்து கட்டி வரும் புதிய அணைக்கட்டின் காரண மாக இங்கிருக்கும் பழைய கட்டடங்கள் தண்ணிரால் மூழ்கப் படாமல் காப்பாற்றுமாறு, உலகில் உள்ள அறிஞர் பலர் முயற்சி எடுத்தனர். பாறையைச் செதுக்கி அமைத்த அபு சிம்பெல் போன்ற கோவில்களை ஒருவாறு நீர்மட்டத்திற்கு மேல் நிலைத்திருக்கும்படி செய்ய முயல்கின்றனர் அறிஞர். கலப்ஷா என்னும் கிரேக்க ரோமைய பழைய கோயிலை மேற்கு
மல் பிரித்தெடுத்து முப்பத்தைந்து கல்லுக்கப்பால் ஓர் இடத் தில், மீண்டும் கட்டியிருக்கின்றனர். 15,000 கற்களாக இருந்த இக்கோயிலை இவ்வாறு பிரித்தெடுத்து மீண்டும் அமைத் துள்ளனர். எகிப்தின் சின்னங்களைக் காப்பாற்ற வேண்டு மென்று அத்துணை ஆர்வம் கொண்டிருக்கின்றனர் ஐரோப் பியர் பலரும் அமெரிக்கர் பலரும்.
எகிப்தினுடைய கோயில்களில் உள்ள சுவர் ஒவியங் களும், கல்வெட்டுக்களும், செதுக்கப்பட்ட வரலாறுகளும், எகிப்தின் பெருமைய்ை உலகிற்கு எடுத்துக் கூறிக்கொண்டே வருகின்றன. இக்கலைகளின் பொருளே இலக்கியங்களும் வற்புறுத்துகின்றன. அக்கெனத்தொன் என்னும் அரசன் தரியனே வாழ்த்திப் பாடிய பதிகம் இலக்கியச் சுவையும், பண்பும் வாய்ந்தது.
“கீழ் உலகில் நைல் ஆற்றினை உண்டாக்குகின்ருய் இறைவா
அதனை நீ விரும்பியவாறே மேலே கொண்டு வருகின்ருய் அதனுல் எகிப்திய மக்களின் உயிரைப் புரக்கின்ருய்.”

Page 115
206 ஒன்றே உலகம்
or LifiT
கைரோவிலிருந்து காட்டுமுக்குப் பறந்து சென்றேன். ஈழத்து நண்பர் என்னை வரவேற்க வானவூர்தி நிலையத்திற்கு வந்திருக்தனர். காட்டுமுக்குப் பறந்து செல்லும் பொழுது ாைகல் ஆற்றின் கரைகளில் எவ்வளவிற்கு வேளாண்மை செய்து வந்தார்கள் என்பதையும் பார்த்தேன். ாைகல் பேராறு பெருக்கெடுக்கும் காலத்தில் பரப்பும் வண்டல், உலகிலுள்ள பயன்தரும் தரைகளில் மிகவும் சிறந்தவையாக ஆக்குகிறது, நைல் ஆற்றின் கரைகளை இரண்டு மூன்று கல் தொலைவிற்கு ாைல் பெருக்கெடுக்கும் பொழுது இருபது முப்பது அடிக்கு நீரின் மட்டம் உயர்கின்றது.
காட்டும், சுடானின் தலைாககர். சுடான் உண்மையில் தடா னது. பாலை வனத்தின் கடுவில் இருப்பதால் அங்கு மழை மூன்றுங்ான்கு முறைதான் ஆண்டில் பெய்யும். என்னுடைய நல்ல காலத்திற்கு, கான் சென்ற மாலை, மழைபெய்ததும் சுடா னின் வெப்பம் ஒருவாறு தணிந்தது. இப் பாலைவனத்தின் கடு வில் ஈழத்தாரையும், தென் இந்தியரையும் கண்டது என் உள்ளத்தில் அமைதியான உவகையை உண்டாக்கியது.
அன்று ஈழத்து நண்பர் ஒருவர் இல்லத்தில் விருந்து நடைபெற்றது. அவ்விருந்திற்கு வேண்டிய தேங்காயை ாைரோ பியிலிருந்து விமான மூலம் பெற்றிருந்தார். காட்டும் போன்ற இடங்களில் வாழ்கின்றவர்களுக்குப் பாலைவனத்தின் பெருமையும், அதன் மாண்பும் தோன்றுகின்றது. பாலை வனத்தின் வானில் தோன்றும் விண்மீன்கள் அதன் மாண்பை இன்னும் சிறப்பாகக் காட்டுகின்றன. ஆணுல் இவ்வுணர்ச்சி யைப் பாலைவனத்துடன் பயிற்சி கொள்ளாதவர்கள் உணர் தல் அரிது.
சுடான் மக்கள் மானமுடையவர்கள்தூன்றும், விசுவாசம் உள்ள நண்பர்கள் என்றும் என் கண்பர் குறிப்பிட்டார். காட்டுமில் வாழும் மக்கள் பெரும்பாலும் அராபியக் கலப் புடையவர்கள்; சுடானின் தென்பாகத்தில் வாழ்பவர் நீகிரோ வர். சுடானிலும் ஒரு வடக்குத் தெற்குப் பிரச்சினை உண்டு. தெற்கில் இருப்பவர்கள் வடவரின் ஆட்சியை விரும்புவதில்லை. எனவே இடைவிடாது கலகங்கள் தெற்கில் நிகழ்ந்து வருகின்றன,
சுடான் இனத்தவரின் முகங்களில் இருக்கும் குறிகளைக் கொண்டு அவர்கள் எந்த இனம் அல்லது குடியைச் சார்ந்தவர்

கிழக்கு ஆப்பிரிக்கா 207
கள் என்று அறிந்திடலாம். காய்களைப் போல் தோன்றும் பான்மையில், கெற்றியில் தீயால் சுட்டு விதைகள் அல்லது சிறு பரற் கற்கள் போன்ற காய்களைத் தோற்றுவித்திருக் கின்றனர்.
வெப்பம் மிகுதியான இப்பாலைவனத் த2லாநகரில் எதிர் பாராதகாலத்தில் ‘ஹபூப்’ (Haboob) என்னும் மணற்புயல் வீசும். அக்காலங்களில் வானம் அச்சம் பயக்கும் இருள் மய மாக மாறும். விருந்துகள் போன்ற நிகழ்ச்சிகள் இக்காலத்தில் நிகழ இருந்தாலும் “ஹபூபை”க் கண்டதும் செய்தி பெருமலே அவை நடைபெரு என்பதை நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப் பட்டவர்கள் அறிந்துகொள்வார்கள்.
காட்டும் மாநகரில் வீதிகளின் பெயர்கள் கிரேக்க மொழியி லும் எழுதியிருப்பதைக் கண்டேன். இத்தகைய நகர்களில் வணிகம் செய்பவர், பெரும்பாலும் கிரேக்கரும் ஆர்மேனிய ரும். இந் நகரில் கிரேக்கர் பலர் இருந்ததால் அவர்களுடைய மொழிக்கும் செல்வாக்கு அளித்திருந்தார்கள் முற்காலத்து ஆங்கில ஆட்சியாளர். காட்டுமில் பார்க்க வேண்டிய இடங் களை என் கண்பருடன் பார்க்கச் சென்றேன். காட்டும் தலை நகர் உள்ள இடத்தில்தான் நீல ாைகலும், வெள்ளே ாைகலும் கலக்கின்றன. வெள்ளை நைல் வெள்ளையாகவும் இல்லை; நீல நைல் நீலமாகவும் இல்லை. இவ்வாறுகளின் செலவையும் இவை தோன்றும் இடங்களையும் கண்டுபிடிக்கச் சென்ற நூற்றண்டில் முயன்றவர்கள், வரலாற்றிலேயே மங்காப் புகழைப் பெற்றுள்ளனர். எதியோப்பியா
எதியோப்பியாவிற்குப் பறக்கும் பொழுது, நீல ாைகலின் கரைகளைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். வேளாண்மை செய்வதற்கு மக்களிைேநல் நதியின் தண்ணீரை வாய்க்கால் கள் மூலம் பாலைவனத்தில் பயன்படுத்தும் முயற்சி தெளி வாகத் தோன்றியது.
அடுத்து, மலை மாநிலங்கள் தோன்றின. கப்பல் அடிஸ் அபேபாவின் மேல் வந்ததும், தெளிவாக இருந்த வானம் முகில்களால் மூடப்பட்டிருப்பதைக் கண்டோம். அடிஸ் அபேபாவை வானிலிருந்து பார்க்கும் பொழுது, இலங்கையில் உள்ள நுவரேலியாவின் நினைவு எனக்கு வந்தது. மூன்று முறை விமானத்தின் வலவர் அடிஸ் அபேபா நிலையத்தில் இறங்க முயன்றர். ஆணுல் ஒவ்வொரு முறையும் முகில்களால்

Page 116
208 ஒன்றே உலகம்
இறங்குமிடம் மூடப்பட்டிருந்ததால் தடுக்கப்பட்டார். நிலத்தி லிருந்து நிலையத்தாரும், இறங்குதல் ஆபத்து என்று செய்தி அனுப்பினர்.
எனவே, முந்நூறு நானுாறு மைல்களுக்கப்பால் உள்ள ஏடன் துறைமுக நிலையத்திற்குப் பறந்து சென்ருேம். நான் அதைப் பொருட்படுத்தவில்லை. ஏடனை இருபத்தைந்து ஆண்டு களுக்கு முன்தான் பார்த்திருந்தேன். ஆதலால் அதனுடைய வளர்ச்சியைப் பார்ப்பதற்கு எதிர்பாராத முறையில் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஏடனில் இன்று பெரிய பெரிய வணிக நிலையங்களும் விடுதிகளும் தோன்றி இருக்கின்றன. விமான நிலையத்தையும் பெரிதாக்கி இருக்கின்றனர். ஏடனில் மூன்று மணியளவு தங்கியபின் அடிஸ் அபேபாவைக் காலையில் தழ்ந் திருந்த முகில்கள் அகன்றதாகச் செய்தி கிடைத்ததும், மீண்டும் அடிஸ் அபேபாவிற்குச் சென்று இறங்கினுேம்,
அடிஸ் அபேபாவின் வானவூர்தி நிலையம் புதிய நிலைய மானதால் நல்ல அமைப்பினையும் தோற்றத்தையும் அளித் தது. ஆனல் நாடோ மற்றைய ஆப்பிரிக்க நாடுகளைவிட பொருட் துறையில் பிற்போக்கான நாடாகவே காட்சி அளித் தது. பெரும்பாலான மக்கள், தொழிலாளிகளாகவும், நல்ல ஆடை அணிகளின்றிச் செல்வதையும் கண்டேன். வீடுகளும், கடைகளும், இல்லங்களும், ஏனைய தலைநகர்கள் காட்டும் அழகையும், செல்வத்தையும் அது காட்டவில்லை.
இங்காட்டைப் பற்றி கான் முதலில் கொண்ட கருத்துக்கள் பின்பு மக்களுடன் உரையாடிய பொழுதும், எதியோப்பியா வைப் பற்றிய நூல்களைப் படித்த பொழுதும், அழுத்தமாகின வொழிய, அவற்றை நீக்குவதற்குத் தேவையே இருக்கவில்லை. நில உரிமை, பேரரசருக்கும் உயர் குடிகளுக்குமே பெரும் பாலும் உண்டு. காட்டின் ஆட்சியும், தCரி ஆட்சி முறையி லேயே இயங்குகின்றது; குடியாட்சிக்கு இன்னும் போதிய வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.
புதியதொரு பல்கலைக் கழகத்தையும் அடிஸில் கட்டியுள்ள னர். எதியோப்பியத் துறைப் பகுதி என்ற ஒரு சிறப்புப் பகுதி பேரரசரின் பழைய அரண்மனையிலேயே அமைக்கப்பட்டிருந் தது. எதியோப்பியப் பகுதிப் பேராசிரியர் ஒர் ஐரோப்பியர்; இவர் பன்மொழிப் புலவரும் ஆவார். என்னுடன் உரையாடும் பொழுது இந்திய மக்களே, கொண்டார் என்னும் இடத்தில் உள்ள அரண்மனையைக் கட்டியிருக்க வேண்டும் என்ருர்,

கிழக்கு ஆப்பிரிக்கா 2 09
பெரும் கற்பாறைகளைச் செதுக்கி அமைத்த கோயில்கள் மாமல்லபுரத்தில் இருப்பதுபோல லலிபெல்லா என்னும் இடத்திலும் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார். மாரிக் காலமாக இருந்ததால் நான் அங்குச் செல்வதற்கு வசதிகள் பெறவில்லை.
எதியோப்பியப் பேரரசர் பண்டுதொட்டு கிருத்துவக் குடும் பத்தைச் சார்ந்தவர். அவருடைய பட்டங்களில் "யூதாவின் அரிமா” என்பது ஒன்று. எனவே, எதியோப்பிய மன்னர் தம்முடைய சின்னமாக, அரண்மனையில் தாம் வீற்றிருக்கும் பொழுதும், வெளியே செல்லும் பொழுதும், சிங்கங்கள் சில தம்மைச் சூழ்ந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின் றனர். அடிஸ் அபேபாவில் கான் தங்கிய நாட்களில், கனடா காட்டின் குருக்கள் இல்லத்திலேயே தங்கினேன். அவர்களின் இல்லத்திலிருக்கும் பக்கத்துத் தோட்டத்தில்தான் சிங்கங் களின் கூண்டுகள் இருந்தன. கள்ளிரவில் அவை இடைவிடாது கர்ச்சித்துக் கொண்டே இருந்தன. சில வேளைகளில் அச் சிங்கங்கள் பாய்ந்து வெளியே சென்று விட்டன போலவும் கர்ச்சித்தல் தோன்றியது. w
பண்டைக் காலத்தில் புவிஇயல் அறிவு பரவுமுன் நூல் களை எழுதிய சிலர் எதியோப்பியர், இந்தியாவின் ஒரு பகுதி என்றே கருதினர். இந்தியாவிற்கு உரிய செய்திகளை எதியோப்பியாவின் மீது ஏற்றியதால் பண்டைச் செய்திகளில் சில குழப்பங்கள் ஏற்பட்டன.
அடிஸ் அபேபா என்னும் பெயரின் பொருள் புதிய மலர். மலை வளமும் மழை வளமும் சிறப்பாக எதியோப்பியாவில் இருப்பினும் அங்காட்டின் பிற்போக்கைப் பார்க்கும் பொழுது அதுயரமே உண்டாகும். அரசிற்கும், சமயத்திற்கும் எதியோப்பி யாவில் நெருங்கிய தொடர்பு உண்டு. எதியோப்பியாவில் இருக்கும் கொட் கிருத்துவச் சபையும் அத்துணை முற்போக்கு உடையதாகத் தோன்றவில்லை. கொப்டிக் சபை எனப்படும் சபையின் குருக்களின் கல்விநிலை தாழ்ந்ததாகவே இருப்பதைக் கண்டேன். சமுதாயத்தின் தலைவர்களாக இருப் பவர்களின் கல்விநி2ல தாழ்ந்திருக்குமாயின் காட்டினுடைய முன்னேற்றத்தை எதிர்பார்ப்பது எங்ங்ணம்? கிழக்கு ஆப்பிரிக்கா
கிழக்கு ஆப்பிரிக்கா என்னும் பொழுது, மக்கள் பெரும் பாலும், யுகாண்டா, கெனியா, தங்காணிக்கா ஆகிய நாடு
1077-14

Page 117
2 1 0 ஒன்றே உலகம்
க2ளயே சிறப்பாக எண்ணுகின்றனர். இக்காடுகளே ஒரே பிரி வாகக் கருதுவதற்குக் காரணம், இவை முன்பு ஆங்கில ஆட் சிக்கு உட்பட்டிருந்ததே. இவற்றின் தலைநகர்களைப் பார்த்த பொழுதே, இங்காடுகள் விரைவாக முன்னேறி வருகின்ற உண்மை புலப்படும். அங்குள்ள இந்தியரின் தொகையைப் பார்க்கும் பொழுதும் அவர்களினுடைய வரலாற்றை ஆராயும் பொழும், இந்திய இனத்தவர் இங்காடுகளின் முன்னேற்றத் திற்கும், பண்பாட்டிற்கும் சென்ற நூறு ஆண்டுகளாக எவ் வளவு உழைத்திருக்கின்றனர் என்பதும் தோன்றும்.
தென் காட்டவர் மொம்பாசாவில் இருந்து நைரோபிக்குச் செல்லும் புகைவண்டிப் பாதை அமைப்பதில் பெரும் தொண்டு புரிந்துள்ளார்கள். வட காட்டார் பலரும் தொழிலாளராகவே கிழக்கு ஆப்பிரிக்காவில் குடியேறினர். இன்று வடங்ாட்டார் பலர் இக்காடுகளில் பெரும் செல்வாக்குடன் வாழ்ந்து வருகின் றர்கள். அவர்களே வணிகத்தின் பயணுக ஆப்பிரிக்கரை விடப் பொருளுடையவராகவும், கல்வி உடையவராகவும் விளங்கு கின்றனர். கடைகளுக்குச் சென்ருல், அங்கு கொடுப்போர் பெரும்பாலும் இந்தியராகவும் கொள்வோர் அனைவரும் ஆப்பிரிக்கராகவுமே இருப்பதைக் காண்கின்ருேம்.
நைரோபி என்னும் நகரில் “பட்டேல் கிளப்" எனப் பெயர் பெற்ற இரு “கிளப்புகள்’ உள்ளன. கம்பாலாவில், யுகாண்டா காட்டின் தொலைபேசிப் பெயர்ப் பட்டிய8லப் புரட்டிப் பார்த் தேன். அந்நூலில் 300க்கு மேலான பட்டேல் என்னும் பெய ருள்ளவர்களின் முகவரிகள் தரப்பட்டிருந்தன. சாயுங்காலத் தில் கம்பாலா மாநகரின் வீதிகளில் சே2ல அணிந்து உலாவச் செல்லும் பெண்டிரின் தொகையையும் முகங்களையும் பார்த் தால், இந்ாநகர் உண்மையில் ஆப்பிரிக்க நகரா என்ற ஐயமும் தோன்றும்.
இலங்கையிலும், கேரளத்திலுமிருந்இ வந்து ஆசிரியப் பணியாற்றும் ஆடவர் சிலரைக் கண்டேன்; முப்பது, காற்பது ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வரும் இந்தியர் சிலருடன் உரையாடினேன். முப்பது ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்க மக்களை நகர்ப் பக்கங்களில் காண்பது அரிதாக இருந்தது. அக்காலத்தில் காட்டுப்புறங்களுக்கு மோட்டார் வண்டியில் சென்று அம் மக்களை வருமாறு இந்தியர்கள் அழைத்தாலும் அவர்கள் பயத்தால் ஒட்டம் பிடித்து விடுவார்கள் என்றும் என்னிடம் இந்தியர் சிலர் கூறினர்கள்.

கிழக்கு ஆப்பிரிக்கா 2 II
இக்காடுகள் விடுதலை அடைந்ததும் ஐரோப்பியருடைய நிலையும், இந்தியர் நிலையும் எவ்வளவோ மாறிவிட்டது. ஆங்கி லேயர் இங்ாகாடுகளில் குடியேறிய பொழுது, இந்த காடுகளை விட்டுத் தாம் அகல வேண்டிய காலம் வரும் என்று அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தம்முடைய ஆட்சியால் பெரும் சேவைகளை எல்லாம் இங்குச் செய்திருந்தார்கள்; அழகிய வீதிகள், புகைவண்டிப் பாதைகள், பொலிவும் திட்பமும் உள்ள ககர்கள், மாபெரும் தோட்டங்கள் ஆகியவை தோன்றி
யுள்ளன. பல்கலைக் கழக நிலையில் உள்ள கல்லூரிகளும் உள.
ஆணுல், இத்துணை விரைவாக விடுதலை அடைந்த இங்ாாடு களில், பிறநாட்டு மக்கள் தம் காட்டில் செல்வாக்குடன் வாழ் வதைச் சுதேசிகள் பொறுக்க மாட்டார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அங்குக் குடியேறிய ஐரோப்பியர் பலர் தம்முடைய பெரும் நிலங்களை விற்றுவிட்டு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர். இந்தியரோ மீண்டும் இந்தியா விற்குச் செல்வதை விரும்புகின்றனர் அல்லர். இங்ாகாடுகளின் பொருளியல் நிலையைக் காப்பாற்ற வேண்டுமென்ருல், இந்தி யர்கள் தொடர்ந்து இங்ாாடுகளில் வாழ்ந்தே வருதல் வேண்டும். s
ஆப்பிரிக்க மக்கள் விரைவில் முன்னேற்றம் அடைய மாட்டார்கள் என்று கினைப்பது பெரும் தவருகும். கான் சென்ற ஆப்பிரிக்க காடுகளில் எல்லாம் உயர்ந்த பண்பும், அறிவும் படைத்த இளைஞர் பலரைக் கண்டிருக்கின்றேன். மிக விரைவாக எல்லாத் துறைகளிலும் தலைமையும் ஆட்சி யும் புரியக்கூடிய ஆப்பிரிக்கர் இன்று எங்கும் பயிற்சிபெற்று வருகின்றனர்.
ஆரம்பப் பள்ளிக்கூடங்களும், பல்கலைக் கழக நிலைக் கல்லூரிகளும் ஒருாேறு வளம் பெற்றிருப்பினும் உயர்நிலைப் பள்ளிக் கழகங்கள் இல்லாத குறையும் ஆசிரியர் இன்மைக் குறையும் கல்வித் துறையில் பெரும் குறைகளாக இருக் கின்றன. இக்குறையை நீக்குவதற்கென, அமெரிக்காவில் இருந்தும், ஆங்கில நாட்டிலிருந்தும் ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்ற விரும்புவோர் செல்கின்றனர். இத் திட்டத்தால் முன்னேறும் கிழக்கு ஆப்பிரிக்க ாகாடு களுக்கு முன்னேறிய காடுகள் கல்ல தொண்டு செய்து வரு கின்றன.

Page 118
212 ஒன்றே உலகம்
பல்கலைக் கழகங்களுக்கு மாணவர் வருமாறு தூண்டு வதற்கு, அரசியல் அவர்களுக்கு உதவிச் சம்பளம் கொடுப்ப துடன் (Pocket money' என்னும், செல்லச் செலவுப் பணத் தையும் அவர்களுக்குக் கொடுக்கின்றனர். பல்கலைக் கழக விடுதிகளில் மாணவரே தம்முடைய ஆடைகளைக் கழுவுமாறு *வண்ணுன் அறை” எனச் சில அறைகளை அமைத்திருப் பதைக் கண்டேன்.
கிழக்காப்பிரிக்கப் பல்கலைக் கழகங்களில் இக்காலத்திற் குரிய வசதிகள் பல உள. கம்பாலாவில் உள்ள மக்கரெரெக் கல்லூரி, கைரோபியிலிருக்கும் பல்கலைக் கழகக் கல்லூரி போன்றவை மிகவும் அழகிய கட்டடங்களைக் கொண்டவை. அவற்றின் நூற்கூடங்கள் இக்காலத்திற்குரிய முறையில் பெரும் தொகை நூல்களைக் கொண்டவை. நைரோபிப் பல்கலைக் கழகக் கல்லூரி நூற்கூடத்தில் காந்தி அடிகளின் செப்பு உருவச் சிலை ஒன்று உள்ளது. கிழக்கு ஆப்பிரிக்கா வின் பல்கலைக் கழகத்தை அமைத்த பொழுது அங்குள்ள மகாத்மா காக்திக் கல்லூரியையும் இணைத்து அமைத்தனர். இந்திய முதலாளிகள் பல கன்கொடைகளைக் கொடுத்துதவி னர். அடிஸ் அபேபாவிலும் இந்திய மக்கள் சேர்ந்து காந்தியடி களின் பெயரால் மருத்துவ மனையொன்றினை கடத்தி வருகின்றனர்.
நைரோபி, மொம்பாசா, கம்பாலா ஆகிய ககர்கள் எவ்வளவோ அழகும் வனப்பும் வாய்ந்தவை. புதிய ககர்கள் ஆதலால், புதிய நகரமைப்புத் திட்டங்களைத் தழுவி வருங் காலத்திற்கும் வேண்டிய வளர்ச்சிக்கும் இடம் தந்துள்ளனர் அமைப்பாளர். கம்பாலா நகர், மலைச் சாரல்களில் அமைந்திருப் பதால் மலை வளத்தின் வனப்பனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நைரோபி நகர் பீடபூமியில் 5000 அடி உயரத் தில் இருப்பதால் நல்ல சமவெளியில் தோற்றத்தைத் தருகின்றது. Rock gardens’ என்னும் கற்பாறைத் தோட் டங்களை நைரோபியில் பார்த்ததுபோல வேறு எந்த நகரிலும் ாகான் பார்த்ததில்லை. நான் சென்றிருந்த பொழுது வீதிகள் தோறும் குறுகிய செடிகளின் மலர்களும், கற்பாறைத் தோட்டங்களுக்குரிய கற்றழை முதலிய செடிகொடிப் புற் களும் எங்கும் பூத்திருந்தன. நைரோபியில் அதிபரின் இல்லத் திற்கு கான் சென்றபொழுது அவர் எனக்குத் தம் மாளிகை யின் தோட்டங்கள் எல்லாவற்றையும் காட்டி, இத் தோட்டங்

கிழக்கு ஆப்பிரிக்கா 213
களில் ஆண்டின் எல்லாப் பருவத்திலும் மலர்கள் எங்கும் பூத்தே இருக்கும் என்று குறிப்பிட்டார்.
ஆப்பிரிக்கா இத்துணை விரைவில் முன்னேறியதற்குப் பெரும் காரணமாக இருந்தவர், ஐரோப்பாவிலிருந்தும், அமெ ரிக்காவிலிருந்தும் சமயம் போதிக்கவந்த குருக்களேயாவர், கல்வியேயின்றி வாழ்ந்துவந்த சமுதாயத்தில் கல்விக் கழகங் களை நிறுவி மேன்மையுறச் செய்தனர். இன்று பெரும் தலைவர் களாக விளங்கும் ஆப்பிரிக்கர் கத்தோலிக்கருடைய பள்ளிக் கூடங்களிலும், புரொட்டஸ்டண்ட் பள்ளிக்கூடங்களிலும் கல்வி பெற்று முன்னேறியவர்களே. இக்காடுகளின் முன் னேற்றத்திற்கு இரு தடைகள் பெரியனவாகத் தோன்று கின்றன. ஒன்று கிளைப் பிரிவுகள் (tribalioni); மற்றென்று மூட கம்பிக்கைள். வெவ்வேறு கிளைகளாக மக்கள் பிரிக் திருப்பதால் இம் மக்கள் தம்முடைய கிளையின் முன்னேற்றத் தையும் ஆட்சியையுமே விரும்புகின்றனர். பண்டுபோல் கிளைகளிடையே பொருமையுள்ளதால், குடியாட்சியில் பிற ரோடு இணைந்து உழைப்பதற்கு கிளைப்பற்று இடையூருக இருக்கின்றது. மேலும் மூட நம்பிக்கைள் அங்குள்ள “Witch doctors’ எனப்படும் மந்திரவாதிகளால் புரக்கப்பட்டு வரு கின்றன. நோய்வாய்ப்பட்டிருக்கும் காலங்களிலும், வரும் நிகழ்ச்சிகளை அறிவதற்கும் இக்கூளிகளிடமே செல்கின்ருர் கள் கல்வியற்ற மக்கள். இத்தகைய மூட நம்பிகைகள் எல்லா காடுகளிலும் உள. ஆனல், ஆப்பிரிக்க காட்டில் மந்திர வாதிகள் பொருளற்ற முறைகளில் மக்களைக் கண்டித்தும், ஒழித்தும் வருகின்றனர். நான் நைரோபியில் தங்கிய பொழுது அங்குள்ள செய்தித்தாளின் ஞாயிறு மலர், கெனியா வின் சில இடங்களில் இக் கூளிகள், ஒருவன் குற்றவாளியா நற்றவாளியா என்று அறிவதற்கு அவன் நாவில் தவளை ஒன்றை வைத்து, அத்தவளை வாயை விட்டு வெளியே பாய்க் தால் அவன் குற்றவாளி அல்லன் என்றும், வாயின் உள்ளே பாய்ந்தால் அவன் குற்றவாளியென்றும் புலப்படுத்தும் முறையைக் கையாண்டு வந்தனரென எழுதியுள்ளது. ஆவே சத்தைப் புரக்கும் இயக்கங்கள் பல ஆப்பிரிக்க நாடுகளில் வளர்ந்து வருதையும் காண்கின்ருேம்.
ஆப்பிரிக்க நாடுகளில் முன்னேறுவதற்குக் கல்வியே அடிப்படையாகும். பெரும்பான்மையோர் இக்காலத்திற்கு ஏற்ற கல்வி அற்றவர்களாக இருப்பினும் அன்னுரின் முன்

Page 119
24 ஒன்றே உலகம்
னேர் வெவ்வேறு காலங்களில் பண்பாடும் கலைகளும் கொண்ட வர்களாக இருந்திருக்கின்றனர். தென் ரொடிசியாவில் உள்ள சிம்பாப்வே எனும் பழைய நகரின் அழிந்துபட்ட கட்டடங் களைப் பார்க்கும் பொழுதும், பல இடங்களில் இருக்கும் ஒவியங்களையும் குகைகளையும் ஆராயும்பொழுதும், இன்னும் அவர்களுடைய கைத்தொழிற் பொருள்கள், வண்ண அமைப் புக்கள், கோடிட்ட வடிவங்கள் போன்றவற்றைப் பார்க்கும் பொழுதும், இயற்கையாகவே அவர்களுக்கு முன்னேறும் ஆற்றலுண்டு என்பதை அறியக் கூடும். ஆப்பிரிக்க மக்கள் குடியாட்சியில் இறங்கி வெற்றி பெற்று வரும் பான்மை, மக் களினத்திடம் இயல்பாகவே உள்ள ஆற்றலுக்குச் சான்ருகும். ஆப்பிரிக்கருடைய இசையும் காட்டியமுமே மேல்காட் டினருடைய ஜாஸ் என்னும் இசை வகைக்கும் டிவிஸ்ட் (twist) போன்ற காட்டியங்களுக்கும் அடிப்படை. அவர்கள் பேரிகை கொட்டும் கலையில் சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளனர். பேரிகை ஒலியின் வழியாகவே வெகு தொலைவிலிருக்கும் தம் இனத்தாரோடு செய்திகள் பரிமாறிக் கொள்கின்றனர்.
ஆப்பிரிக்காவின் இயற்கையழகு கிழக்கு ஆப்பிரிக்காவி லும் நன்கு தோன்றுகின்றது. மாபெரும் கண்டமாக இருப்ப துடன் ஆப்பிரிக்காவில் பெரும் மலைகள், ஏரிகள் முதலியவை உண்டு. விக்டோரியா ஏரிக்கு மேல் பறந்து சென்ற பொழுது அதனுடைய பெருமையை உணர்ந்தேன். ஈஜியன் கடலைப் போல் விக்டோரியா ஏரிப் பரப்பிலும் கணக்கற்ற சிறு தீவுகள் நீலப் போர்வையின் மேல் மரகத மணிகளை வைத்தது போலத் தோன்றின. கெனியா (17,000 அடி உயரம்) மலைக்கு மேல் பறந்து சென்றபொழுது கீழே முகில்கள் எல்லாம் பரந் திருக்க உச்சி மட்டும் பனியால் மூடப்பட்டிருப்பதைக் கண் டேன். பிளந்த பள்ளத்தாக்கு என்னும் பள்ளத்தாக்கு வடக்கே கைல் பள்ளத்தாக்கில் ஆரம்பித்துத் தெற்கே மொசாம்பிக் கடலில் மறைகின்றது. இப் பள்ளத்தின் அகலம் சில இடங்களில் 100 கற்களுக்கு மேற்பட்டது. உலகில் காண வேண்டிய காட்சிகளில் ஒன்று இது.
ஆப்பிரிக்காவிற்குச் செல்லும் பொழுது மக்கள் வன விலங்குகளை அவற்றின் சொந்தச் சூழ்நிலையில் காண்பதற் காக முயல்வர். செல்வம் படைத்தவர்களும் வேட்டையாடு வதில் விருப்பம் கொண்டவர்களும் இதற்கென உள்ள வழிகாட்டிகளுடனும் உழைச்சுற்றளர்களுடனும் பெரும் பணத்

கிழக்கு ஆப்பிரிக்கா 2 I 5. தொகைகளைக் கொடுத்து வேட்டையாடச் செல்வார்கள். சிங்கம், புலி அல்லது யானை ஒன்றைக் கொன்று அதன் தோலை ஐரோப்பாவிற்கு அல்லது அமெரிக்காவிற்குக் கொண்டு செல்வார்கள். தம் வேட்டையாடும் மாண்பிற்கு எப்பொழுதும் அடையாளிமாக ஒரு சிலர் தாம் சுட்டதாக விலைக்குப் பெற்ற தோல்களைக் கொண்டு செல்வதும் உண்டு. இத்தகைய வேட்டையாடும் பயணத்தை சவாரி (safari) என்ற ஆப்பிரிக் கப் பெயராலே ஆங்கிலத்திலும் குறிப்பிடுவார்கள். சாரிக் கும், சவாரிக்கும் ஒலி வடிவில் வேற்றுமை அறியாத அமெரிக் கப் பெண் ஒருத்தி, தான் இந்திய மங்கை ஒருத்தியிடமிருந்து எவ்வாறு சவாரியைக் கட்டப் பழகினுள் என்பதை என்னிடம் வனவிலங்குகளைத் தம் தழ்நிலையில் காண்பதற்கு மற்ற காடுகளில் இருப்பதுபோல தேசிய இளமரச்சோலைகள் (Nationalparks) ஆப்பிரிக்காகாடுகள் எல்லாவற்றிலும் உள. அண்மை யில் இருக்கின்ற தேசிய இளமரச்சோலை250 சதுரமைல் சுற்ற ளவு உள்ளது. நல்ல வீதிகளை உடையது. மோட்டார் வண்டியில் செல்லும் பொழுதே பெண் சிங்கங்கள் தம் குட்டிக ளோடு விளையாடுவதைக் கண்டிருக்கிறேன். இரவில் நீர் பருக வரும் விலங்குகளைக் காண்பதற்காக நியேரி என்னும் ஊருக்குப் பக்கத்தில் (Tree tops’ விடுதி மரங்களுக்கு மேல் கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் வன விலங்குகளைப் பார்ப்பதற்கு எலிசபெத் இளவரசி தங்கியபோது, அன்றிரவு தம் தந்தையாராகிய ஜார்ஜ் மன்னர் இறந்தாரென்றும் தாம் பட்டத்திற்கு வந்ததாகவும் அறிந்தார். வசதியான நாட்களில் இவ்விடுதியை மேற்பார்ப்போர் 20, 30 சுற்றுச் செலவாளர் களே அங்கு அழைத்துச் செல்கின்றனர். நானும் ஓர் இரவு அங்குத் தங்கி விலங்குகளைப் பார்க்க வேண்டுமென்று விழித் திருந்தேன். குளிர்ந்த வாடைக் காற்று விரைந்து வீசியது. விடுதி முன் இருந்த சிறு குளத்தையும் அந்நிலப் பரப்பில் உள்ள உப்புவகைகளையும் நுகர்வதற்காகப் பல மிருகங்கள் வந்தன. குரங்குகளோ அவ்விடுதிமேல் ஏறுவதும் இறங்கு வதுமாக இருந்தன. இரு பெரும் யானைகள் வந்து மண்டி யிட்டுத் தம் கொம்புகளால் மண்ணைத் தோண்டி மண்ணி லிருக்கும் உப்புப் பகுதியை மென்றுகொண்டு இருந்தன. நடு இரவில் காண்டா மிருகம் ஒன்று வந்தது. அத்துணை அண்மையில் நான் காண்டா மிருகத்தை முன்பு கண்டதில்லை.

Page 120
21 6 ஒன்றே உலகம்
அதன் மூக்குக் கொம்பின் வடிவம் அது வேருெரு உலகத்தை யும் காலத்தையும் சார்ந்ததாகக் காட்டியது. பல்வேறு வகை யான மானினங்கள் அங்கு வந்தன. இத்தகைய மிருகங்களை ாகான் முன்னமே பார்த்திருந்ததால் எனக்கு அக்காட்சி அத் துணை வியப்பைத் தரவில்லை. ஆணுல் அங்கு வந்திருந்த ஆங்கிலேயரும், அமெரிக்கரும் பெரும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். மொரிசியஸ் தீவு
நைரோபி வானவூர்தித் துறைமுகத்தில் மொரிசியசுக்குப் பறக்கும் வி. சி. 10 என்னும் கப்பலை எதிர்பார்த்துக் கொண் டிருந்தேன். நைரோபி துறைமுகம் ஆப்பிரிக்காவின் வான வூர்திச் செலவிற்கு நடுநகராக விளங்குகின்றது. ஆப்பிரிக் காவின் எல்லாப் பாகங்களிலுமிருந்து விமானங்கள் அங்கு வந்து இறங்குகின்றன. நான் அங்குத் தங்கிய காலத்தில் தென் ஆப்பிரிக்க விமானங்கள், தென் ஆப்பிரிக்காவின் இனக் கொள்கை காரணமாக, அங்கு இறங்குவற்குத் தடுக் கப்பட்டிருந்தன.
மொரிசியசுக்குச் செல்லும் வி. சி. 10 வந்து இறங்கியதும் விமானத்தில் உள்ளவர்கள் கீழே இறங்கிவந்தார்கள். மொரிசி யசுக்குச் செல்லும் மக்களின் தோற்றமும் பேச்சும் தனிப்பட்ட பாணியிலேயே அமைந்திருந்தன. முன்னேற்ற கடையில் ஆடைகளை அணிந்திருந்தனர். தூய பிரஞ்சு மொழியில் பேசினர்; பொதுவாக வாழ்க்கையின் நல்ல நிலைகளில் இருப்ப வர்களாகத் தோற்றம் அளித்தனர்.
இதுவே நான் முதன் முறை வி. சி. பத்தில் செலவு செய் தது. போயிங் 707 ஐ விட கல்ல வசதிகள் அமைந்ததாகத் தோன்றியது அக் கப்பல். அத்துணை அதிர்ச்சி இல்லாத தோடு, கால்களை நீட்டி உட்காருவதற்கும் போதிய இடவசதி இருந்தது. அதிர்ச்சியும் ஒலியும் குறைவாக இருந்ததால் பயணத்தின் களைப்பே தோன்றவில்லை. பறந்து செல்லும் பொழுது கிளிமஞ்சாரோ என்னும் மலை உச்சியின் அருகிற் சென்ருேம். கிளிமஞ்சாரோவின் தோற்றம் சிறப்புடையது. அதனுடைய பனிமூடிய உச்சி (19,340 அடி) வெள்ளே வட்டில். அப்பத்தின் வடிவம் உடையது. பூஜியாமா ஜப்பானுக்கு அடையாளச் சின்னமாக இருப்பது போல் கிளிமஞ்சாரோவின் வடிவம் கெனியா ஆப்பிரிக்காவின் சின்னமாக விளங்கு digit sp5). (oppl fri(So GT66T LIG) if “The shows of Kilimanjaro'

கிழக்கு ஆப்பிரிக்கா 21 7
என்னும் நூலை எழுதியதால் இம்மலை மேலும் அறியப்பட்டு வாந்துளளது.
கேரம். ஹவாய்த் தீவின் அழைகையும், ஒளி மாற்றங்களை யும், நிறங்களையும் நினைவூட்டின மொரிசியஸின் பல் பகுதி கள். அங்குள்ள ம8லகளும் அவற்றின் வடிவமும் நிறமும் வால்ட் டிஸ்னியின் படங்களில் காணப்படும் அருவத்தன்மை கொண்டு விளங்கின. மொரிசியஸில் என்னை மாலைகளுடன் வரவேற்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனல் தமிழ் ஆர்வமுள்ள பலர் அங்கு வாழ்ந்து வருகின்றனர் என் பதை அங்குக் கூடியிருந்த கல்வி அமைச்சரும், குருக்களும், ஏனைய பெரியோரும், பொது மக்களும் நன்கு காட்டிவிட்ட னர். பத்து நாட்கள் மொரிசியஸ் தீவில் தங்கினேன். ஆனல் அந்தப் பத்து காட்களும், நிகழ்ச்சிகளும் விருந்துகளும் நிறைந்த நாட்களாக ஆக்கிவிட்டார் என் நண்பர் அடைக்கலம் அடிகள்.
6ծ (ԼՔ இலட்சம் மக்களைக் கொண்ட மொரிசியஸ் தீவில் ஏறக்குறைய ஐந்து இலட்சம் மக்களைக் கொண்ட இந்திய வகுப்பினரும், அவ்வைந்து இலட்சத்தில் ஒரு இலட்சம் தமிழ் பேசும் பகுதியினரும் இருப்பார்கள் என்று நான் முன்பு அறிக் திருக்கவில்லை. மேலும், இவ்வளவு ஆர்வத்துடன் தமிழில் பேசுவார்கள், உரையாடுவார்கள் என்றும் நான் எதிர்பார்க்க
மொரிசியஸில் உள்ள மக்கள் நல்ல பண்புடையவர். பிரஞ்சுப் பண்பும் ஆங்கிலப் பண்பும் தமிழ்ப் பண்பும் கலங் தால், அக்கலப்பின் சிறப்பைக் கூறவும் வேண்டுமா? இரு மொழிகள், மும்மொழிகள் வெற்றியாக ஒருவரிடம் இயங்கும் தன்மையையும் மொரிசியஸ் தீவில் கான் கண்டதுபோல வேறெந்த காட்டிலும் கண்டிலேன். பிரஞ்சு மொழியைச் சிறப் பாகப் பேசுகின்றனர் அம் மக்கள். அத்துடன் ஆங்கிலத்தை யும் கன்ருக உரைக்கின்றனர். ஆணுல் அவர்களின் ஆங்கில உச்சரிப்பில் சில பிரஞ்சு ஒலிக் குறிப்புக்கள் தோன்று கின்றன.
தமிழ் இனத்தவரும் பிரஞ்சு மொழியையே தம்முடைய வீட்டு மொழியாகக் கையாண்டு வருகின்றனர். கடற்கரை யோரத்தில் அழகிய இல்லங்களைப் பலர் கட்டியிருக்கின்றனர். வணிகர் ஒருவரின் வெண்ணிலா முற்றத்தில் அயர்ந்த

Page 121
28 , ஒன்றே உலகம்
விருந்தும், அவ்விடத்தில் கண்ட அழகும், கேட்ட தமிழ் மழலை யும், இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆங்குக் காப்பாற்றி வரும் பண்பாடும், தமிழ் அன்பன் ஒருவனுக்கு கம்பிக்கையும் ஆறுதலும் அளித்தன.
இங்கு ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன் குடி யேறிய தமிழ் மக்கள் புதுவையிலிருந்தும், தஞ்சாவூரிலிருந் தும் குடியேறியவர்கள். பிரஞ்சு மக்கள் ஆட்சி புரிந்த காலத்தில் அவர்கள் வணிகராகவும் தச்சர், கொத்தராகவும் கைத்திறம் படைத்த வேலையாட்களாகவும் மொரிசியஸ் தீவிற் குச் சென்றர்கள். பலர் செல்வம் படைத்த வணிகராவும் கரும்புத் தோட்டங்களுக்கு உரிமையாளர்களாகவும் தலைவர் களாகவும் இருந்தார்கள். தஞ்சாவூர் வீதி, திருச்சினுப்பள்ளி வீதி, என்று போர்ட் லூயிசிலிருக்கும் வீதிகளில் ஒரு காலத் தில் தமிழ் பேசும் மக்களே வாழ்ந்து வந்தனர். ஆனல் இன்று தமிழர் பலர் அந்த இடங்களை இழந்து விட்டனர்.
1810 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் மொரிசியஸ் தீவினைக் கைப்பற்றியதும் மொரிசியஸ் குடிமக்கள் கையொப்பமிட்ட விசுவாசப் பத்திரத்தில், சவிரிமுத்து, சின்னத்தம்பி, துரைச் சாமி என்று பலர் தமிழிலேயே கையொப்பமிட்டிருப்பதைக் கண்டேன். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பீகார், பஞ்சாப் மாவட்டங்களிலிருந்தும் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கெனக் குடியேறினர். மொரிசியஸ் தீவில் தமிழ் மக்கள் தம்முடைய பண்டை நிலையையும் செல்வாக்கையும் ஒருவாறு இழந்துவிட்டனர் என்றே கூறுதல் வேண்டும். வட இந்தியரை மலாயாவில் "வங்காளி’ என்று அழைப்பது போல, மொரிசியஸில் கல்குத்தர்” என்று அவர்களை அழைக்கின்றனர்.
மொரிசியஸ் தீவிற்கு அண்மையில் இருக்கும் ரியூனியன் தீவுகளில் பெரும் தொகைத் தமிழர் இருப்பதாகவும், அவர் கள் தமிழை மறந்திருப்பினும் தமிழ் மரபுகளை மீண்டும் கடைப்பிடிக்க விரும்புகின்றனர் என்றும் அங்கு என்னைச் செல்லுமாறு அழைத்தார்கள். நேரக் குறைவின் காரணமாக கான் அங்குச் செல்ல முடியவில்லை.
இந்திய நாடு விடுதலை அடைந்ததும், மொரிசியஸ், பீஜி போன்ற இந்திய மரபினர் வாழும் நாடுகளிலும், கலையிலும், பண்பாட்டிலும் மறுமலர்ச்சி தோன்றி, அம் மறுமலர்ச்சி அரசியல் தொடர்பு அற்றதேயாயினும், பண்பாட்டு முறை

கிழக்கு ஆப்பிரிக்கா 219
யில் முன்னேரின் பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து கடைப் பிடிக்க வேண்டும் என்ற மனப்பான்மையை வளர்த்துள்ளது. சென்ற சில ஆண்டுகளாக, சட்டைஅணிந்து வந்தபெண்மணி கள் பலர் சேலை அணிய ஆரம்பித்துள்ளனர் என ஒருவர் குறிப்பிட்டார்.
பல இனத்தவரும் சமயத்தவரும் மொரிசியஸ் தீவில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். ஆனல் அரசியல் துறையில் பல கட்சிகள் உள; பல செய்தித்தாள்களும் உள. ஆங்கிலத்தில் நான் நிகழ்த்திய விரிவுரைகளைச் சினிமா கொட் டகைகளில், ஒருவேளை படத்தை நிறுத்தி அதனிடத்தில், உரை நிகழ்த்துமாறு கேட்டுக்கொண்டார்கள். ஐரோப்பிய மரபி னர், வட இந்திய மரபினர் ஆகியோர் பலர் அங்கு வந்திருந்த னர். உயர்ந்த பண்பும் கல்வியும் படைத்த இம்மக்களுக்கு உரை நிகழ்த்துவது இன்பத்தைத் தந்தது. ஒரு முறை இங் தியப் பண்பாட்டின் சிறப்பு என்னும் பொருள் பற்றியும், இன்னு மொரு வேளை மக்களின் உடன் பிறப்பாளர் தன்மை’ பற்றியும், வேருெரு வேளை கல்வியின் நோக்கங்கள்” என்னும் பொருள் பற்றியும் பேசினேன். தமிழில் நிகழ்த்திய உரைகள் அனைத்தும் தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும் பற்றியவையே. அக் கூட்டங்களுக்கு வந்திருந்த தமிழ் முகங்களைப்பார்த்ததும் இத்தகைய பெருக்தொகைத் தமிழ் மக்கள் இருக்கும். இடத்திற்கு இதுகாறும் வங்திலேனே என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
மொரிசியஸ் தீவின் இயற்கை வனப்பு அங்குச் செல்வோர் உள்ளத்தைக் கவர்வது. நீல மலைகள், பச்சை மரங் கொடிகள், தெள்ளிய திம்புனல் அருவிகள், வெண் பவள நிறம் போன்ற கடற்கரை. மொரிசியஸில் நிலப்பரப்பு சிறிதாக இருப்பதா லும் மக்களின் தொகை பெருகிக்கொண்டே வருதலாலும் இல்லங்களும், இல்லங்களின் முற்றங்களும் சிறிதாகவே இருக்கின்றன. சில ஆண்டுகளில் புயற்காற்று இழைக்கும் தீங்கோபெரிது. அதை முன்னிட்டே கோயில்களின் உயரத்தை யும், இல்லங்களின் உயரத்தையும் மட்டமாக்கிக் கட்டியிருக் கின்றனர். ஆணுல் நிலநெருக்கத்தால் உயர்ந்த கட்டடங் களும் கட்டப்பட்டு வருகின்றன. −
அங்குள்ள கத்தோலிக்க குருக்களும் என்வரவை மகிழ்ச்சி யுடையதாக்கப் பல்வேறு வழிகளில் முயன்றனர். என்னு டன் உரோமாபுரியில் ஒருசா8ல மாணவராகிய சிலர் அங்கிருக்

Page 122
220 ஒன்றே உலகம்
தனர். வேறு சிலர் ஈழத்தின் கண்டி மாநகரில் குருமடக் கல்வி பயின்றவர். ஆணுல், எல்லா நிகழ்ச்சிகளுக்கும், என் மகிழ்சிக்கும் சூத்திரதாரணுகவிருந்து இயக்கியவர் மதுரை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து இன்று மொரிசியஸ் தமிழ் மரபினரிடம் சமயத் தொண்டு புரியும் அடைக்கல அடிகள், இவர் இயேசு சபையைச் சார்ந்தவர். மொரிசியஸில் நான் இயேசு சபைக் குருக்கள் இல்லத்தில் தங்கியிருந்தேன். அவர் கள் பல்வேறு முறைகளில் கான் கழித்த நாட்கள் இன்பமும் பயனும் பயக்குமாறு செய்தனர்.
மொரிசியஸ் தீவில் தமிழரிடையே இரு பெரும் கட்சிகள் இருப்பதை உணர்ந்தேன். இந்த இரு கட்சிகளையும் தமிழ் காட்டிலிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் திராவிடக்கழகக் கட்சிக் கும் ஒருவாறு ஒப்பிடுதல் கூடும். மொரிசியஸ் மக்களிடம் பிரஞ்சு-ஆங்கிலம் கலந்த திசைமொழி ஒன்று வழங்கி வரு கிறது. இதனேக் கிரையோல் (Creole) என்று கூறுவர். இத்தகைய மொழி அட்லாண்டிக் தீவுகளில் இருக்கும் திசை மொழியுடனும் ஒப்பிடத் தக்கது. இக்கலப்பு மொழியில் பீர்க்கங்காய், முருங்கை, கருவேப்பிலை, கொத்தமல்லி, தோழன், கேள்வி போன்ற தமிழ்ச் சொற்களும் இடம் பெற்றுள்ளன.
மொரிசியஸின் பழைய வரலாற்றையும் ஆராய்வதில் கான் சில மணி கேரத்தைக் கழித்தேன். 1861 ஆம் ஆண்டில் அங்கு வெளியிட்ட பிரஞ்சு செய்தித் தாள்களில் தமிழ் அச்சுக்களைக் கொண்ட தமிழ் விளம்பரங்களைப் பதிப்பித்துள்ளனர். 1868 ஆம் ஆண்டில் ஒரு தமிழ்ச் செய்தித் தாளை இத்தீவில் பதிப்பித்தார்கள். ஆணுல் அதன் படிகள் இன்று எவரிடமும் இல்லை.
விஞ்ஞான உலகில் மொரிசியஸை அறிவதற்கு “டோடோ' என்னும் பறவை காரணமாக இருந்தது. இந்தத் தாரா போன்ற பறவை இன்று உலகிலேயே இல்லை. ஆணுல் சென்ற நூற்றண்டில் வெளியிட்ட அதன் படங்களைக் கொண்டே அதன் உருவைப்பற்றி அறிகின்ருேம். பதினேழாம் நூற் ருண்டில் மொரிசியஸ் தீவிற்குச் சென்ற டச்சுக்காரர் டோடோப் பறவைகள் அனைத்தையும் ஒன்றையும் விடாமல் பிடித்து உண்டுவிட்டனராம். அப்பறவையும் தாரா போல் பறக்க இயலாமல் இருந்ததால் அவர்கள் கையில் எளிதாக

கிழக்கு ஆப்பிரிக்கா 22
அகப்பட்டது. எனவே இன்றும் ஆங்கிலத்தில் "as dead as a dodo” என்னும் உவமை இடம் பெற்றுள்ளது.
நான் மொரிசியஸிலிருந்து திரும்பு முன் இளைஞர் பலர் என்னைப் பார்க்க வந்திருந்தனர். மொரிசியஸில் தமிழ சமுதா யத்திடம் சாதி வேற்றுமை இருப்பது பற்றிக் கவலை உற் றிருந்தனர். வெளிநாடுகளில் குடியேறிய தமிழர் சிலர், புதிய நாடுகளில் தம் செல்வாக்கை வலியுறுத்துவதற்காக, சாதி வேற்றுமையைப் பாராட்டுவதை கான் மலாயாவிலும் கண்டிருக்கிறேன். இன்னுமொரு இளைஞன் உயர்ந்த பதவி யில் இருப்பவன், பிரஞ்சு முறைகளே கன்கு தழுவுபவன், தான் தமிழில் ஈடுபடுவதற்காக இந்தியாவில் அல்லது இலங்கை யில் தமிழ்ப் பெண் ஒருத்தியை மணம் செய்ய விரும்புவதாக வும் கூறினுன். எனக்கு இதனைப் பற்றிக் கடிதம் அனுப்பி ஞல் தக்க பெற்றேரிடம் அதனைக் காட்டுவதாக விடையிறுத் தேன். இதுகாறும் அவன் எனக்கு எழுதவில்லை.

Page 123
21. நடுகிழக்கு நாடுகள்
ஐரோப்பாவிற்கு ஆசியாவிலிருந்து செல்பவரும் ஆசியா விற்கு ஐரோப்பாவிலிருந்து வருபவரும், கடுகிழக்கு காடுகளைக் கடந்து செல்வதால் அங்ாகாடுகளில் தங்கி அவற்றைப் பார்ப் பதற்குப் பல வர்ய்ப்புக்களைப் பெறுகின்றனர். இவ்வாறு ஐரோப்பாவுக்கு வான் வழியாகச் செல்லும் போதும் அங்கிருந்து திரும்பும்போதும் ஒரிரு நடுகிழக்கு காடுகளில் தங்கி வருவது என் வழக்கம். இவ்வாறே ஈரானிலும் ஈராக் கிலும் லெபனனிலும் துருக்கியிலும் ஒரு சில நாட்கள் தங்கி அங்குள்ள தலைநகர்களையும் வரலாற்றிற் சிறந்த பிற இடங் களையும் பார்த்துள்ளேன். துருக்கி
இன்றைய துருக்கியில், பண்டைய கிரேக்க காட்டவர் களில் உயர்ந்த கலைகளின் சின்னங்கள் உள்ளன. ஹோமர் எனும் பெரும் காப்பியப் புலவர் பாடும் 'இலியம்’ அல்லது *டிராய்” (Troy) எனப்படும் பேரூர் இங்ாகிலப்பரப்பில் தான் உள்ளது. பழம் பொருளாராய்ச்சியாளர் இங்குப் பண்டைக் காலப் பண்பாட்டுச் சின்னங்களையும் கிறித்துவத் திருச்சபை யின் தொன்மை வாய்ந்த கட்டடங்களையும் பல இடங்களில் கண்டிருக்கின்றனர். 'யவனர்” என்ற பெயர் இங்கிலப்பரப் பின் பண்டைப் பெயரின் அடியாகவே பிறந்தது.
கமால் பாஷாவிற்குப் பிறகு துருக்கி அடைந்த முன்னேற்றத்தைத் துருக்கியில் சென்ற இடமெல்லாம் கண்டேன். இன்றைய துருக்கி காட்டுப் பெண்கள் பண்டைக் காலப் பெண்டிரைப் போல் தம் முகங்களை மறைக்காமல்,மேல் காட்டு முறைகளில் ஆடைகளை அணிந்து செல்கின்றனர். துருக்கி மொழியைப் பண்டுபோல் அராபி எழுத்தைக் கொண்டு எழுதாது, உரோமிய எழுத்தைக் கொண்டு எழுது வதால் மக்களின் எழுத்தறிவு எங்கும் பரந்துள்ளது. கலைச் சொற்கள் உரோமிய எழுத்திலிருந்ததால் என்னைப் போன்ற வர்கள்கூட வங்கி, ஹோட்டல், பள்ளிக்கூடம் போன்ற நிலை யங்கள் இருக்கும் இடங்களை விளம்பரப் பலகைகளினுல் அறிந்துகொள்ள முடிந்தது.

நடுகிழக்கு நாடுகள் 223
துருக்கி மொழிக்கும் தமிழ் மொழிக்கும் ஒற்றுமைகள் சில உள என்று கால்டுவெல் காலங் தொட்டு அறிஞர் சிலர் கூறி வருகின்றனர். வேற்றுமை உருபுகள் ஒருமைக்கும் பன்மைக் கும் ஒரே விகுதியைப் பெறுவது அவ்வொற்றுமைகளுள் ஒன்ருகும். திராவிட மொழிகளைத் துருக்கி மொழி, ஆஸ்டிரி யாவிலிருக்கும் மட்கியார் (Magyar) மொழி, பின்லந்திலுள்ள பின்னிஷ் மொழி ஆகியவற்றுடன் ஒப்பிட்டு ஒற்றுமைகளை அறிஞர் சிலர் எடுத்துக் காட்டி வருகின்றனர்.
இஸ்தான்புல் எனும் தலைாககரில் நூற்றுக்கணக்கான நிழற்படம் பிடிக்கும் நிலையங்களைக் கண்டேன். அவற்றின் பெருந்தொகைக்குக் காரணம் யாது என்று வினவியபொழுது மனித உருவத்தைப் படம் பிடிப்பது துருக்கியச் சிந்தனைக்கு முரணுன ஒரு செயலாக முற்காலத்தில் கருதப்பெற்று வந்த தென்றும், கமால் பாஷாவின் சீர்திருத்தத்தின் பயணுக அவ் வாறு கருதப்பெறவில்லை என்றும் அறிந்தேன். எனவே, ஆடவரும், முகத்திரை நீக்கிய பெண்டிரும், நிழற்படம் பிடிப்பதில் பேரார்வம் கொண்டிருக்கின்றனர் என்று
இஸ்தான்புல் இரு பெரும் ககர்களாகத் தோன்றுகிறது.
புதிய நகர், மிகவும் அழகான நகராக, மற்றைய ஐரோப்பிய ககர்களைப்போல் அமைந்திருக்கின்றது. பழைய நகர் வரலாற்றில் சிறந்த நகர், பிசாந்தீன் (Byzantine) பேரரசிற்குத் தலைாககராக விளங்கிய நகர்; பண்டு கிறித்தவத் திருச்சபைத் தலைவர் கூட்டங்கள் கூடிய திருநகர். துருக்கியர் இக்காட் டைக் கைப்பற்றிய பின் கிறித்துவக் கோயில்கள் பள்ளி வாசல்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அத்தகைய மாபெரும் கோவிலே செயின்ட் சொபியா” (St. Sophia)எனும் கோயில், அஃது இன்று பள்ளிவாசலாக மாற்றப்பட்டிருக் கின்றது. அங்குச் சென்று அங்குள்ள பண்டைக்காலக் கட்டட முறைகளைப் பார்த்தேன். இஸ்தான்புல் நகரை கி.பி. 1453ஆம் ஆண் டி ல் துருக்கியர் கைப்பற்றியதையும் ஐரோப்பாவின் வரலாறு அதனுல் மாறிய பான்மையையும் ஐரோப்பிய வரலாற்றைப் படிப்பவர் தெளிவாக உணர்வர்.
ஷேக்ஸ்பியருடைய காடகங்களில் யான் விரும்பும் அடி களுள் பின் வருவன சில :
Like to the Pontic Sea, Whose icy current, and compulsive course,

Page 124
224 ஒன்றே உலகம்
Ne'er feels retiring ebb, but keeps due on To the Propontic and the Hellespont.
(Othello, ! ! l., 3).
ஆதலால் பாஸ்பரஸைக் காண வேண்டுமென்று அக்கடலில் செல்லும் படகொன்றில் சென்றேன். கடற்பரப்புக் காட்சி மிகவும் அழகாகத்தான் இருந்தது. ஆணுல் ஷேக்ஸ்பியரின் அடிகள் இலக்கியச்சுவை நிறைந்தனவாயினும், உண்மையில் அங்கு நீரோட்டங்கள் இல்லை என்று உணர்ந்தேன். இஸ்தான் புல்லின் பன்ழய நகரைப் பார்த்தபொழுது அங்குத் தூய்மை யின்மையையும் புழுதியின் மிகுதியையும் கண்டேன். பொது மக்களின் வாழ்க்கை நிலை, துருக்கியில் இன்னும் உயர்த்தப் படவேண்டியதாகத்தான் இருக்கின்றது. பொருளாதார நி2லயில் துருக்கி இன்னும் உறுதியான நிலையை அடைய வில்லை என்பதற்கு அங்குப் பணத்துறையில் கறுப்பு அங்காடிப் பணமாற்றமே அடையாளமாக இருந்தது. நான் என் ஹோட்டல் அறைக்குச் சென்று ஐந்து நிமிடங்கள்கூட ஆகவில்லை. ஆயினும் அங்குள்ள தலைமைப் பணியாளர் ஒருவர் வந்து வெளிநாட்டுப் பணத்திற்கு அரசியல் வீதத்தை விட ஐந்து மடங்கு தருவதாகக் கூறினுர். அரசியல் சட்டங் கள் இத்துறையில் கடுமையாக இருந்தும், கறுப்பு அங்காடித் துறையில் மக்கள் பலர் ஈடுபடுவதை அறிந்தேன். இந்தோனிசி யாவும் துருக்கியும் நானறிக்த நாடுகளுள் கறுப்புப் பண மாற்றத்தில் பெயர் பெற்றவை. ஆதலால் தான் இவ்விரு காடுகளிலும் அண்மையில் இக்குற்றத்திற்காக உயர்ந்த பதவி யிலுள்ளோர் பலர் தண்டிக்கப்பட்டனர். லெபனன்
லெபனன் நிலப்பரப்பில் சிறிய நாடு. அதனுடைய நீளம் எழுபது மைலும், அகலம் ஏறக்குறைய காற்பது மைலும் ஆகும். ஆயினும் அதனுடைய வரலாறே மிகப் பழைமை உடையது. பொனிஷியர் (Phoenicians) என்ற எழுத்தைக் கண்டுபிடித்த பெரும் வணிக இனத்தினர் இக்கடற்கரை ஒர காட்டிலேயே வாழ்க் து வந்தனர்.இவர்கள்தாம் வட ஆப்பிரிக் காவிலும் குடியேறிப் பொனிஷியப் பண்பாட்டை அக்கண்டத் திலும் கிறிஸ்துவுக்குமுன் நிலைநாட்டினர். இவர்கள் பெரும் கப்பலோட்டிகளாக இருந்தனரென்றும் இவர்களேமுதன்முதல் நடுநிலைக் கடலின் மேற்கு முனையைக் கடந்து அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலோட்டினரென்றுங் கூறுவர்.

நடுகிழக்கு நாடுகள் 225
லெபனனின் தலைநகராகிய பெய்ரூட், ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் நடுவிலிருக்கும் பெருநகராதலால், அங்ாநாடு களுக்குச் செல்வோர் வழியில் தங்குமிடமாக விளங்குகின்றது. பெய்ரூட் மிகவும் அழகிய நகர். நான் அங்குச் செல்லும்பொழு தெல்லாம் அக்ககர் வளர்ந்து கொண்டு வருவதைக் காணு கின்றேன். ஒவ்வொரு முறையும் புது விடுதிகளையும் அழகாக அமைந்த கடலோரக் கட்டடங்களையும் கண்டு வரு கின்றேன். நீலமணிக்கடலின் அண்மையிலிருப்பதால், மலைச் சாரல்களிலெல்லாம் புதிய புதிய முறைகளில் இல்லங்களை அமைத்து வருகின்றனர். அவ்வில்லங்கள் தட்பமும் வெப்ப மும் கலந்துள்ள நாடுகளுக்கு ஏற்ற கட்டடங்களாகக் கட்டடக் கலையில் சிறந்தனவாக விளங்குகின்றன. கம்மவர் அழகிய கட்டடங்களை நம் தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு அமைத்தல் வேண்டுமாயின், பெய்ரூட்டினுடைய கட்டடக் கலையை ஆராய்வது கலமாகும்.
பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கப் பல்கலைக் கழகம் அராபிய நாட்டினர்க்கும் கீழ்த்திசை காட்டினர்க்கும் ஏற்ற பொதுக் கழகமாக விளங்குகின்றது. அங்குப் பாகிஸ்தானி லிருந்து வந்த மாணவர் பலரைக் கண்டு அவர்களுடைய பல் க2லக் கழகப் பயிற்சியைப் பற்றி வினவினேன். அவர்களுள் பலர் அமெரிக்காவிற்குச் சென்று இன்னும் பயில வேண்டும் என்ற விருப்பம் உடையவர்களாகத் தோற்றினர்; அங்குச் செல்வதற்கு உதவிச் சம்பளம் பெறுவது எங்ங்ணம் என்று வினவினர்.
லெபனனில் அரபு மொழி பொது மொழியாக இருப் பினும், அங்குள்ள அராபியர் பலர் கிறித்தவர்கள். ஆதலால் லெபனனினுடைய அரசியலமைப்பில் லெபனன் குடியாட்சி யின் தலைவர் இஸ்லாமிய சமயத்தவராகவும்,துணைத் தலைவர் கிறிஸ்தவராகவும் இருத்தல் வேண்டுமென்று விதிக்கப் பெற்றிருக்கின்றது.
பெய்ரூட் கடலோரத்தில் இருந்தாலும், அங்கிருந்து ஒரு சில மைல்கள் சென்ருல் பனி மூடிய ம2லகளை அடைதல் கூடும். இம்ம2லகளில் பெயர் போன சீடர்’ என்னும் மாபெரும் மரங்கள் வளர்வதைக் காண்டல் கூடும். இம்மரங் கள் விவிலிய நூலில் இணையற்ற வானளாவும் மரங்களாகக் கூறப் பெற்றிருக்கின்றன. பெய்ரூட்டிலிருந்து இம்மலைகளைக் கடந்தால் போல்பெக்” எனும் உரோமருடைய பழைய பாழ்
10 77-15

Page 125
226 ஒன்றே உலகம்
பட்ட நகரை அடையலாம். இத்தாலிய காட்டில் கான் காணுத உயர்ந்த உரோமியத் தூண்களையும் பொதுமன்றங் களையும் கோயில்களையும் இதர கட்டடங்களையும் பால்பெக்கில் கண்டேன். உரோமர் தம்முடைய பேரரசின் தலைநகராகிய உரோமாபுரியின் பெருங் கட்டடங்களைப் போன்ற கட்டடங் களையே, தாம் குடியேறிய நாடுகளிலும் அமைப்பது வழக்கம். அவ்வழக்கின் பயணுகவே “பால்பெக்” எனும் சிறந்த ககர் எழுந்தது.
பால்பெக்கில் உள்ள பெரு நிலையங்களுள் ஒன்று உரோமர் வழிபட்ட ஜுபிட்டர் எனும் முதற்கடவுளின் கோயில். அக்கோயிலினுடைய பெருமையைக் காட்டும் ஆறு கற்றுாண்கள் இன்றும் அங்குள. ஒவ்வொரு கற்றுாணும் அறு பத்திரண்டடி உயரமும் ஏழரை அடி குறுக்களவும் உடையது. இக்கற்றுரண்களைப் பார்க்கும்பொழுது மனத்தில் பெரும் எழுச்சி தோன்றுகின்றது. ஆதலால்தான் இக்காலத்துப் பிரெஞ்சு அறிஞர் ஒருவர், “இக்கற்றுாண்கள் எப்பொழுதேனும் இடிந்துபோனல் உலகில் அழகும் குறையும்; லெபனனின் நீலவானின் எழிலும் குன்றும் என்று எழுதியுள்ளார். ஈராக்
இன்றைய ஈராக் எனும் காட்டின் நிலப்பரப்பில் எத் துணையோ பழைய ககர்களும் பண்பாட்டுச் சின்னங்களும் புதைந்து கிடக்கின்றன. அசீரியா (ASSyra) சுமேரியா (Sumeria)எனும் காடுகள் இங்குத்தான் இருந்தன. யூபரிட்டிஸ் (Euphrates) தைகிரிஸ் (Tigris) எனும் பேராறுகள் இப்பண் பாடுகளுக்குத் துணைக்காரணமாக இருந்தன. ஏனெனில் இவற் றின் கரையோரங்களில் எழுந்த நிம்ரூட், சுமேர், அக்காட், எனும் ககர்களே கிறிஸ்துவுக்கு மூவாயிரம் காலாயிரம் ஆண்டு கள் முற்பட்ட வரலாற்றை உடையன. இங்ாகாடுகளே சிந்து கதிப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையவையாகக் கருதப்படுகின்றன. சிந்து கதியின் பண்பாட்டில் நாம் காணும் சின்னங்களும் எழுத்து முறைகளும் இங்ாகாடுகளுடன் தொடர் புள்ளனவாகக் கூறப்படுகின்றன. தமிழர் இங்ாநாடுகளுடன் பண்டுதொட்டுத் தொடர்புடையரெனக் கூறுப. காகத்தையும் தோகையையும் யானைக் கொம்பையும் இங்ாநாடுகளுக்கு முதல் முதல் திராவிட மக்களே கொண்டு வந்ததாகக் கூறுவாருளர். மேலும் 'ஊர்” என்ற நகரின் பெயர் மாபெரும் கல்தேயருடைய ஊரைக் குறிக்கின்றது. அவர்களுடைய பெருங் கடவுளுக்கு

நடுகிழக்கு நாடுகள் 227
*ஆண்” என்ற பெயர் உண்டு. அவர்களின் கோயில்களிலும், தமிழ்க் கோயில்களில் பணி செய்யப் பெண்களை நியமித்திருந் ததுபோல் கோயிற் பணிக்கென்று பெண்களை நியமித்திருந்த னர். இவர்களுடைய வரலாற்றைத் தமிழை கன்ருகக் கற்ற வர்கள் இதுகாறும் ஆராய்ந்ததில்லை.
தென் ஈராக்கிற்கு மிகவும் வெப்பமான காலத்தில் நான் சென்றிருந்தேன். பாக்டாட் (Bagdad) என்னும் தலைநகரில் ஒரு நாள் சாயுங்காலம் விமானத்திலிருந்து இறங்கினேன். அங்கு உள்ள இல்லங்கள் அராபிய மக்களின் கட்டட முறை களை ஒட்டிய தட்டையான மண் கூரைகளுள்ள இல்லங்கள். மழையின்மையாலும் புழுதியின் மிகுதியாலும் அங்குள்ள பேரீந்து மரங்களின் ஒலைகள் மஞ்சள் நிறமாக இருந்தன. பாக்டாட் ககரிலுள்ள அமெரிக்கக் குருக்கள் நிறுவிய கல்லூரி யில் தங்கியிருந்தேன். அவர்கள் அமெரிக்காவின் மிகவும் குளிரான மாவட்டம் ஒன்றிலிருந்து வந்தவர்கள். இவர்கள் எங்ங்ணம் இவ்வெப்பமான தழ்நி2லயில் வாழ்கின்றனர் என் பது புதிராகவேயுள்ளது. இவர்களுடைய கல்லூரியைச் சூழ்ந்து உயர்ந்த மதில்கள் இருக்கின்றன, ஆதலால் உள்ளே நல்ல பச்சைப் பசுங் தரையைக் காப்பாற்றி வருகின்றனர். புழு தியின் மஞ்ச2ள வெளியே எங்கும் கண்ட கான் இப்பசுந்தரை யைப் பார்த்து மகிழ்ச்சியுற்றேன். ஆனல் ஈராக் காட்டின் தென் பாகம் எப்பொழுதும் இத்தகைய மணற் பரப்பாக இருக்கவில்லை. சுமேரியாவினுடைய உச்சங்லையில் இப்பகுதி களிலெல்லாம் பச்சைக் கழனிகள் அடிவானம் மட்டும் பரவிக் கிடந்தன. இங்காட்டினர் யூபரட்டிஸ், தைகிரிஸ் நீரினைக் கால்யாத்துப் பயிர்களை வளர்த்து வந்தனர்.
பாக்டாட்டிலிருந்து தென்மேற்கிலுள்ள பாபிலோன் எனும் பண்டைச் சுமேர் நகரினைப் பார்க்கச் சென்றேன். வழியில் டெசிபோன் (Ctesiphon) என்ற ஒரு பெரு நகர் இருந்த இடத்தில் மாபெரும் வளைவுக் (Arch) கட்டடத்தைப் பார்த்தேன். கான் பாபிலோனுக்குச் சென்ற மோட்டார் வண்டி யின் கண்ணுடிகள் முடியிருப்பினும், உள்ளே வந்த தூசிக்கு அளவே இல்லை. சென்ற வழியில் கரும்பும் மற்றும் புல்வகை களும் வளர்வதைக் கண்டேன். பாபிலோனை அடைந்ததும் என் உள்ளம் பெரிதும் உவகைக்கு இடமாயிற்று. காலாயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் உயர்ந்த பண்பாட்டினை நிறுவிய இடம் அது என்பதை உணர்ந்தேன்.

Page 126
228 ஒன்றே உலகம்
பல நூற்றண்டுகளாக அழிந்துபட்டுக்கிடந்த இங்ாககரினை ஜெர்மானிய அறிஞர் சிலர் அங்குச் சென்று தேடினர். சிறு குன்றக இருந்த இடத்தைத் தோண்டி அங்குள்ள பழைய நகரின் பகுதிகளை வெளிப்படுத்தினர். அதர் பனிபாலுடைய அரண்மனையின் தொங்கும் தோட்டங்களையும் சீராக்கியவர் இவர்களே. “தொங்கும் தோட்டம்’ என்று சொல்லப்படும் (Hanging Gardens of Babylon) Gr6ör LIGo6) 2–6ööTGOLDu86ö வானத்தில் தொங்கவில்லை. ஆணுல் கட்டடங்களுக்கு மேல் அமைக்கப்பட்ட செய்குன்றங்களில் வரிசை வரிசையாகப் பூஞ்செடிகளை வளர்த்தனர். இவற்றைத்தாம் அக்காலத்தில் உலகின் ஏழு வியத்தகு காட்சிகளில் ஒன்ருகக் கூறினர்.
இவ்வரண்மனைகளில் உள்ள உருவங்களும் பீங்கானில் செய்யப் பெற்ற வடிவங்களும் இம்மக்களின் கலைஞானத்தைக் காட்டுகின்றன. இறைவனை வழிபடுவதற்குச் செய்குன்றங் கள் அமைப்பதில் இம்மக்களுக்கு அளவிறந்த ஆசை இருந் தது. “சிகராட்” என்னும் செய்குன்றங்கள் பல இவ்விடத்தில் இடிந்து, கிடக்கின்றன.
இக்காட்டில் பழம் பொருள்களை ஆராய்ந்தவர்கள், அசீரியா, சுமேரியா மன்னர் ஐயாயிரம், ஆருயிரம் ஆண்டு களுக்கு முன் நிறுவிய நூற்கூடங்களையும் கண்டுபிடித்தனர். இந்நூற்கூடங்களிலுள்ள நூல்கள் நம் நூல்களைப்போல் ஒலை களில் எழுதப்பெருமல், மண்ணுல் ஆக்கப் பெற்ற தட்டை வடிவமான களிமண் ஒடுகளில் எழுதப்பட்டிருக்கின்றன. மண் பச்சையாக இருக்கும்போதே இவற்றில் அச்சைக் கொண்டு அழுத்தி, எழுத்து அடையாளங்கள் பொறிக்கப் பட்டன. இவ்வடையாளங்களுள்ள களிமண் ஒடுகளைப் பின் னர் சூளையில் வெப்பம் ஊட்டிச் சுட்டதால், எப்பொழுதும் இவ்வெழுத்துக்கள் நிலைபெற்றுள்ளன.
இக்களிமண் ஒடுகளின் பெருங்தொகையினை அறிஞர் ஆ ரா ய் ங் த பொழுது ஒரு பெருங் காப்பிய நூலும் தோன்றியது. இக்காப்பியத்திற்குப் பெயர் 'கில்காமிஷ்.” இக்காப்பியத்தால் பண்டைக்கால மக்கள் மாபெரும் ஊழி ஒன்றனை அனுபவித்ததாகவும், அவர்கள் அறிந்த உலகம் பெரும் வெள்ளத்தால் அழிக்கப்பட்டதாகவும், அறியவருகின் ருேம். பெரு வெள்ளத்தால் உலகம் அழிவுற்றது பற்றிப் பல இனத்தாரின் பண்டைக்கால இலக்கியங்கள் கூறுகின்றன.

நடுகிழக்கு நாடுகள் 229
ஈரான்
ஈரான் என்று அழைக்கப்படும் பாரசீகத்தில் பல நாட்கள் தங்குவதற்கு ஒரு முறையேனும் எனக்கு வாய்ப்புக் கிடைக்க வில்லை. அங்கு உள்ள இலக்கிய மணம் கமழும் ஈஸ்பகான், வழிராஸ் போன்ற நகர்களையும், பண்டு வரலாற்றில் சிறந்த பேர்சேபோலிஸ் எனும் நகரின் சின்னங்களையும் பார்க்க விருப்புடையேன். பாரசீகப் புலவரொருவர், சிராஸ், நகருக்கு ஈடாகச் சமர்கான், புக்காரா போன்ற இடங்களைத் தாம் கொடுப்பதாகப் பாடியிருக்கின்றர்.
பேர்சேபோலிசினுடைய சிற்பமும் கட்டடக் கலையும் உருவக் கலையும் மெளரியர்களுடைய கலைகளுக்கு மூலகாரண மாக இருந்தவையென்று கூறுவாருமுளர். பாரசீகப் பண்பாட் டின் சின்னங்கள் பலவற்றை டெகரானில் மூன்று நாட்கள் தங்கியபொழுது பார்வையிடும் வாய்ப்பினைப் பெற்றேன். சிறகுகளுடைய சிங்கங்களையும் எருதுகளையும் தம்முடைய சின்னங்களாகக் கொண்டனர் பண்டைக்காலப் பாரசீக மக் கள். மேலும் பாரசீக அரசர் தம்முடைய வெற்றிகளையும் புகழுரைகளையும் பாறைகள்மீது பொறித்து விளம்பரம் செய்தனர். இந்திய நாட்டு அசோகர் இவ்வழக்கத்தையே தழுவினர் என்று அறிஞர் கூறி வருகின்றனர்.
ஈரானின் மொழியும் வரலாறும் பண்டு இந்திய நாட்டுக்கு வந்த ஆரியர்களுடன் தொடர்புள்ளன. இந்தியாவிலிருக்கும் (Parsees) என்பவர் ஈரானிலிருந்து இஸ்லாமியர் ஈரான்மீது படை எடுத்தபோது இந்தியாவிற்கு வந்தவர்கள்.
பாரசீகப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோதும் அங்குப் பாரசீக மொழியின் வழியாகவே வைத்தியக் கல்வியைப் புகட்டுவதை அறிக்தேன். பாரசீக மக்கள் தாம் ஈரானியரென் றும் தாம் அராபியர் அல்லரென்றும் தம் உரையாடல்களில் வற்புறுத்துவதை உணர்ந்தேன். அவர்கள் இஸ்லாமிய சம யத்தையே பெரும்பாலும் தழுவியுள்ளனர். மக்கள் பல இடங் களில் செபமாலையைத் தம் கைகளில் ஏந்திச் செல்வதைக் கண்டேன். சுங்க அலுவலர்கள்கூட வழிச்செலவு செய்வோ ரின் பெட்டிகளைத் திறந்து ஆய்வு செய்யும்பொழுதும் கையில் செபமாலையை வைத்துக்கொண்டே இருந்தனர்.
பாரசீகத்தில் நான் மிகுதியாக விரும்பியது அவர்களு டைய தோட்ட அமைப்பு. அரச மாளிகைகளும் பெரும் இல்

Page 127
230 ஒன்றே உலகம்
லங்களும் சுற்றி வர உயர்ந்த மதில் சுவர்களை உடையன வாக இருந்தன. அச்சுவர்களின் பக்கத்தில் நீண்ட, உயர்ந்த, ஒல்லியான மரங்கள் வளர்ந்திருந்தன. பாத்தி பாத்தியாக மலர்ச்செடிகள் அடர்ந்து செழித்திருந்தன. கடுவே அழகிய செயற்கைப் பொய்கை காட்சியளித்தது.
大


Page 128


Page 129


Page 130
SLLLLLSLLLLLLLL L LLLLL LLLZLLLLSSSLLLSLLLLLSLLLLLLLS ke Port Ltd i
LLLLSSSLSLLLLSSSLLLLSSSLLLSLLLSLSLLLLLSLLLLLSLLLLLSSLS
i i
( 謹一丁{ s
- |-
அறிஞர் தனிநாய
செலவு மேற்கொண்டு துள்ளார். அங்கெல்ல அவர்களுக்கும் நமக் சாரத் தொடர்பை ஒ
தாம் சென்ற நாடு கேட்டனவற்றையும் இனிய கட்டுரைகளா
இந்நூலில், தாய்ல் பர்மா, இந்தோனீசியா தென் அமெரிக்கா, சே பிரான்சு, ஜெர்மனி, விபத்திக்கான் நகர், ச் ஐரோப்பாவின் சிறு ந ஆப்பிரிக்கா நடு கிழக் களில் பல சுவையா விளக்கப்படுகின்றன .
 
 

is ". . . . . .
.
- །མ། ། ாக அடிகள் பன்முறை உலகச் பல நாடுகளேச் சுற்றிப் பார்த் ாம் தமிழ்த் தூதுவராய் விளங்கி ༈ ག குமிடையே ஓர் இனிய கலாச் -1 ாற்படுத்தித் தந்துள்ளார்.
களில் தாம் கண்டனவற்றையும் மிகவும் சுவைபட அழகு தமிழில் க வடித்துத் தந்துள்ளார். i 轟。
ாந்து, கம்போதியா, வியட்நாம், i - التي ", ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா, ாவியத் ஒன்றகம், இங்கிலாந்து, i
ஆஸ்திரேலியா, இத்தாலி, ' " கிரேக்க நாடு, போர்த்துக்கல், i " ாடுகள், ஆப்பிரிக்கா, கிழக்கு i கு நாடுகள் - என்ற த&லப்பு ன செய்திகளும் காட்சிகளும்
i أسسسسسسسسسس.-.--- lt hilo Art Pr dra
彗
l
:ि