கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: படிகள் 2009.03

Page 1


Page 2
DISTRIBUTERS OF
HOLCIT CETIETT.
BUIL-DING sTATERIALS
E. GUPPLIERS
Ε リ
قتل}}{{!}}|||||||||||||||||||||||||||||||||||||||||| 罹 3. STRE
NORTHAGENCY
16O, MARKET SITE, ANURADHAPURA
TELEPHONE - O25 2221772
Pacha - ISSN 1800 - 4598
 

நல்லன காணவும் நல்லலுற்றோடு
இனையவும் முயன்பவர்களின் Î Wỷ Î இTர்ஜிரித்த 路= சிறியதாக இருப்பினும் முயற்சியின்மையிலும் பார்க்க அது ேேலானது
g80hצע கிடைக்கும் இடங்கள்
பூபாலசிங்கம் புத்தக நிலையம் (கோழும்பு) சேமமடு பொத்தகசாலை (கொழும்பு) பாம்லீப் புத்தக நிலையம் (கொழும்பு) தமிழ்ச் சங்கம் (தென்கிழக்குப்பல்கலைக்கழகம்) ரெஸ் மார்ட் (அநுராதபுரம்) நெட் ஹவுஸ் (அநுராதபுரம்) ஹிமாஸ் புத்தக நிலையம் (இக்கிரிகொல்லப்ாவ)
so புதிய >
ШtillLШЦtititillblШШ,
GluDiff (UThlüGD6ITUILD blíUTÍfi fili TDITL
பழிகள் வெளியீட்டகத்திற்கென்
WWW.PKI di hall.blogspot. CafT STYLII இண்ையத்தாஃ ஒன்று:நாசி வருகின்றது. பழகள் இதழ்கண்ண் 53.58. Tegg Yin Ynglaharlingl
என்ற இணையத்திலும் பார்வேயிட:Tர்.
壁
CԱն28867r
இருசழ இலகி இதழ்
Dπήά - 2009
ISSN 1800 - 4598
WOLUME: 05. NO: O1
- வெண்படுநண்பர்கள் சேர்க்கியது:
ஆநாாதபுரம் நட்சத்திர நற்பணி மணிறம்.
தனிப் பிரதி - 30.00 தபால் மூலம் - 10.00 வருடச் சந்தா - 200.00 வெளிநாடு 28, 1 பவுன்
படிகள் இதழ்களைத் தொடர்ந்து பெற விரும்பும் இலக்கிய ஆர்வலர்கள். தங்களது சந்தாக்களை பதிவு செய்வதன் மூலம் இதழைப்
பெற்றுக்கொள்ளலாம்.
சகல தொடர்புகளுக்கும்
The Editor
"PACHAL" 78B, Jayanthi Mawatha Anuradhapura # 50000
+94 713,485OÉC) +9 || ۳ || 1 || 2 || || padi hal@yahoo.com www.pnd hal, blogspot.com

Page 3
Fெழத்து சிற்றிலக்கிய வரலாற்றில் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள், அதன் இயங்கு நிலை, இலக்கியச் செல்நெறி, வளர்ச்சிகள், கதையாடல் தளம், விமர்சனம், பதிவுகள் என்பவற்றின் யதார்த்தங்களை நமது இலக்கிய ஆர்வலர்கள் தமது கவனத்தில் கொள்ள வேண்டும்.
போராட்டமிக்க வாழ்க்கைச் சூழ்நிலைகளில் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுகளுடன் வெளிவருகின்ற இலக்கிய இதழ்களை நமது படைப்பாளிகளும், இலக்கிய ஆர்வலர்களும், விமர்சகர்களும் எவ்வளவு தூரம் மனங்கொள்கின்றனர் என்பது கேள்விக்குரியதாகும். பிரதேச அடையாளமாகவும், தேசிய இலட்சிய நோக்குடனும் பல்வேறு இதழ்கள் நமது இலக்கியப் பகைப் புலத்தில் மலர்ந்து, இறந்துள்ளன.
உண்மையில் நமது ஈழத்து இலக்கியப் பகைப்புலத்தில் பல்லாயிரக்கணக்கான இலக்கிய ஆர்வலர்களும், கலைஞர்களும் தமது ஆளுமைகளை நண்கு பயன்படுத்தி தமது நாமத்தை பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் என்ன, இலக்கியச் சிற்றேடுகள் தமது வாழ்வை மிகவும் குறுகிய கால வீச்சிலே மாய்த்துக் கொள்கின்றன.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியை நேசிப்பவர், தமது பிரதேச இலக்கிய வளர்ச்சியை ஆதரிப்பவர் என்ற சத்திய உணர்வுள்ளவர்கள், தமது ஆளுமைகளை புடம்போட எத்தனிப்பவர்கள், சிற்றிலக்கிய சஞ்சிகைகளுக்கு தமது பங்களிப்பைப் காட்டுவது இன்றியமையாதது. வெறுமனே தமது படைப்பு ஒன்று அல்லது இரண்டு பிரசுரம் பெறவேண்டும் என்ற குறுகிய இலட்சியத்தை நாம் மறந்து தொடர் சிற்றேடுகளுக்கு அதன் இலக்கிய நோக்கிற்கமைய ஆதரிப்பது ஒவ்வொரு கலைஞனினதும், படைப்பாளியினதும், இலக்கிய ஆர்வலனினதும் தலையாயக் கடமையாகிறது. கருத்து வேறுபாடுகள், அபிப்பிராய பேதங்கள் என்பன வாசிப்பின் மீது தாக்கம் செலுத்தும் ஒரு காரணியாக கருதுவது ஆத்ம எண்ணங் கொண்ட இலக்கிய ஆர்வலர்களின் அடையாளமாகாது. எனவே நாம் நமது இலக்கிய வெளியீடுகளுக்கு ஆதரவளிப்பதன் ஊடாக இலக்கிய வளர்ச்சியை நாடெங்கும் ஏற்படுத்தி நமது மண்ணில் முதுசமாக திகழ்வோம்.
- e.e. fflu TS - 21
எல். வஸிம் அக்ரம் உதவி ஆசிரியர் எம்.சீ நஜிமுதீன்
சஞ்சிகைக் குழு : ஞானச்சந்திரன் குருக்கள் நாச்சியாதீவு பர்வீன்
எம்.சி ரஸ்மின்
வெளியீட்டுக் குழு எஸ்.ஏ. சதாத் ஏ.எச்.எம். ஸ்ப்ராஸ் : எம்.ஜே.எம். ரிஸாதி
எம்.ஆர்.எம். பெரோஸ்
ஓவியம் ன்பு அமீன் ஸிஹற்னாஸ்
O2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சம்மாந்துறை இயால்
இன்றைய அறிவுத்துறைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக பின் நவீனத்துவம் விளங்குகின்றது. இக்கருத்தாக்கம் ஒரு கவர்ச்சிகரமான தத்துவமாக இன்று உலா வந்து கொண்டிருக்கிறது. பின் நவீனத்துவம் என்ற கருத்தாக்கம் இரண்டு விதமாக நோக்கப் படுகிறது. ஒரு புறம் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் பின்பான மேலை முதலாளிய நாடுகளின் பண்பாட்டுச் சூழலை இப்பதம் குறிக்கின்றது. மறுபுறம் கலை இலக்கியப் பார்வையில் கலைத்துவமான உடன்பாட்டையோ ஒருங்கிசைவையோ பின் நவீனத்துவம் நிராகரிக்கின்றது.
60 நவீனத்துவம் காத்திரமான எழுத்துகளுக்கும் ஜனரஞ்சக எழுத்துக்ககளுக்கும் இடையிலான இடைவெளியை இல்லாமல் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அதாவது அனைவருக்கும் ஒரு விடயத்தை நன்றாக விளங்கிக் கொள்ளும் படி எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. கலை எழுத்துக்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். கலையானது உவமை, உருவக, இரச்சிப் பொருள் போன்ற குறியீட்டு முறைமைகளையும், விசாலமான சித்தரிப்புக் களையும் கைவிட்டு, விடயங்களை மக்களுக்கு நேரடியாக விளங்கிக்கொள்ளும் வண்ணம் கலைகள் அமையப் பெற வேண்டும் என பின்நவீனத்துவம் சுட்டி நிற்கின்றது.
நவீன கண்டுபிடிப்புக்களான நவீன தொடர்பியற் சாதனங்கள் உலகம் தழுவிய தொடர்பியல் இணைப்புக்கள், கனணிகள் முதலான வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய விதமாக கலைகள் அமையப் பெறவேண்டும் என்பது பின் நவீனத்துவத்தின் இலட்சியமாகும். இன்றைய காலகட்டங்களில் மனிதர்கள்தான் விரும்பியோ விரும்பாமலோ நவீன சாதனங்களோடு ஒன்றித்தவர்களாகவே காணப்படுகின்றனர். மனித மனங்களில் காணப்படுபவற்றை வெகுவிரைவாக வெளிக்கொண்டு வரும் சாதனங்களாக புதிய தொடர்பாடல் சாதனங்கள் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் செலுத்தப்படுகின்றன. எவ்வித எதிர்ப்புமின்றி அக்கருத்துக்கள் மனித மனங்களில் புகுத்தப்படுகின்றன. இதனையே பின் நவீனத்துவம் எதிர்பார்க்கின்றது.
கலை மனித சமூகத்தை ஒன்றாக இணைக்கும் சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது. கால, தேச, இன வேறுபாடுகளெல்லாம் கடந்து அனைத்து நாட்டு மக்களுக்கும் உணர்ச்சியையும் இன்பத்தையும் அள்ளி வழங்குகின்றது. கலைகளில் பொதுவாக செயல், பயன், திறமை, அழகு, சுவை, ஆகிய அம்சங்கள் காணப்படுகின்றன. கலை கருத்தின் உறைவிடம், அழகின் பிறப்பிடம். இன்பமே இதன் பயன்.
O3 படிகள் - 21

Page 4
கலையானது கண்ணையும் கருத் தையும் கவர்ந்திருக்கும் அழகிய கட்டமாக காட்சியளிக்கலாம். ஒளியாக ஒளிரலாம். இன்னிசையாக இதயத்தை ஈர்க்கலாம். கவிதை, நாடகம், நடனம், எழுத்து போன் றனவாகவும் இருக்கலாம். பிறவாகவும் J960btDuU6ùITtô.
உணர்வுகளின் தேவைக்ளையோ மனிதனிடம் இயல்பாக உள்ள கலா இரச னையையோ பின்நவீனத்துவம் எதிர்க்க வில்லை. சூழல் வளர்ச்சிக்கு ஏற்ப அவை மாற வேண்டும். புதுவடிவம் பெற்றுத்திகழ வேண்டும். பழைய முறைமைகளை கையா ளுவதை விட்டு விட்டு புதுவடிவங்களை கலைகளில் பயன்படுத்த வேண்டும் என பின்நவீனத்துவம் மனிதனிடம் காணப்படும் உள்ளார்ந்த கலை உணர்வுகளை நசுக் கவோ மழுங்கடிக்கவோ செய்யாமல் அதனை பின்நவீனத்துவ எழுச்சிக்கு ஏற்ற வகையில் வழிப்படுத்திச் செல்கிறது. இசையும், ஆடலும், பாடலும், நடிப்பும் இணைந்ததான ஒரு புது வித கலை வடிவம் இன்றைய சமுதாயத்தில் வளர்ச்சியடையத் துவங்கியுள்ளது. வெளிப்படுத்தாதிருக்கும் ஆழ்ந்த உணர்வுகள் வெளிப்படுத்தலும் பேசாதிருக்கும் உணர்வுகளை பேச்சுக்கு அழைத்தலும் இன்றைய நவீன ஆடல்களில் காணப்படுகின்றன. இவை பின் நவீனத்தின் செல்வாக்கே ஆகும்.
பின் நவீனத்தில் தனிப்பட்ட கலைஞனின் பாணிகள், அவற்றுக்குத் தளமாக அமையும் புலப்பதிவுகள் முக்கிய மானவைகளாகக் கருதப்படுகின்றன. ஒரு கலைஞன் தனது புலப்பதிவினைக் கொண் டிருக்கிறானோ அதனை அடிப்படையாக வைத்தே அவனது படைப்பாற்றலும் வெளிப் படும். மேலும் கலைஞன் பல்வேறு நோக்
கங்களைக் கொண்டும் தனது படைப்புக் களை ஆக்கலாம். ஆனால் அதே பார்வையோடுதான் பார்வையாளன். அதனை நோக்க வேண்டும். என்பதை பின் நவீனத்துவம் எதிர்பார்க்கின்றது. பின் நவீனத்துவம் பார்வையாளன் ஒரு விடயத்தை அவனது நோக்கில்த்தான் பார்க்கவேண்டுமே தவிர, படைப்பாளன்
தனது நோக்கினை பார்வையாளர் களிடம் திணிக்கக் கூடாது என எடுத்துக் கூறுகின்றது.
பின் நவீனத்துவம் astrigsrupng எழுத்துகளுக் ஜனரஞ்சக எழுத்துக்ககளுக்கு
இடையிலான @ఖLQవా இல்லாமல் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
மேலும் u60Ltil என்பது, திட்டமிட்ட தொடர்ச்சியான ஒன்றுக் கொன்று தொடர்புடைய நிகழச்சிகளின் தொடர்ச்சி அல்ல. மாறாக அது தாறு மாறானதும் திட்டமிடப்படாததுமான ஒரு நிகழ்வு என்பதை பின்நவீனத்துவம் கூறு கின்றது. ஒரு படைப்பாளனின் உரு வாக்கம் என்பது எப்படியும் இருக்கலாம். எப்படிப்பட்ட உருவையும் மேற்கொள்ள லாம். இது வெறும் யதார்த்தமாகவும் இருக்கலாம். விமர்சன யதார்த்தமாகவும் இருக்கலாம். மொத்தத்தில் இது சமூக நோக்கோடு மனிதன்மேல் அன்பு வைத்து
வெளிவந்தவி2உை
வெளிவந்துவிட்டன.
எம்.சி. ரஸ்மின் சிங்களத்திலிருந்து தமிழிற்கு மொழி பெயர்த்த ஊரடங்குச் சட்டம் (சிறுகதை), நாளையும் மற்றொரு நாள் (கவிதைகள்), சின்னவனும் நண்பர்களும் (குறுநாவல்) ஆகிய மூன்று நூல்களும்
தொடர்புகளுக்கு. O773667530
எழுதப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொதுவான எதிர்பார்ப்பு.
O
தோரைன்னவளியீடு
Uasi - 21
 

சந்திப்பு - மானிக்கராசன்
“பிரதேச பேச்சு வழக்கை என்னால் இன்னும் arfumrasů பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே எண்பதில்தானி எண் கவலை இருக்கின்றது.”
திக்குவல்லை கமால்
கடந்த நாற்பது வருடகாலமாக அமைதியாக ஓயாது எழுதி வருகிறீர்கள். உங்களது ပဇာယံပ္ဖင်္ဂါ၊
தொடர்பான தகவல்களை எப்பழத்த்ெரிவிப்பீர்கள்?
1968 முதல் இன்று வரை நாற்பதாண்டு காலமாக தொடர்ச்சியாக எழுதி வருகிறேன். ஒரு மனிதன் என்ற வகையில் பல்வேறு பிரச்சினைகளை அவ்வப்போது எதிர்கொண்ட போதும், அவை எதுவுமே என் எழுத்து வாழ்க்கையில் குறுக்கிடவில்லை. இதுவரை இருபத்திரண்டு புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன்.
சிறுகதை, நாவல், நாடகம், கவிதை, சிறுவர் இலக்கியம் போன்ற இலக்கிய ഖpഖi്കങ് |படைப்புகளைத் தந்துள்ளீர்கள். அதிக நூல்களையும் வெளியிட்டுள்ளீர்கள். எண்ணிக்கை அளவில் படைப்ப்ாளியை மதிப்பிடுவது பற்றி எண்ணநினைக்கிறீர்கள்?
எழுத்தாளன் என்று வந்துவிட்டால், சமூக நல நோக்கோடும், தேவை கருதியும் எவ்வளவு எழுத முடியுமோ, அவ்வளவு எழுதுவதில் ஒன்றும் தவறில்லை. அதற்காக எண்ணிக்கையை வைத்துக் கொண்டு படைப்பாளியை மதிப்பிடுவது பொருத்தமானதல்ல. அதேநேரத்தில் குறைவாக எழுதுவோர் எல்லோரும் 'மெளனியாகிவிடவும் முடியாது. பிரபல்யம் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சிலர் அதிகமாக எழுதுவார்கள். எதற்காக எழுதுகிறோம்?, என்ன எழுதுகிறோம்?, என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு அக்கறையில்லை. ஒரே கதையை பல தலைப்புகளில் எழுதுவார்கள். ஒரு கருவை பல கோணங்களில் எழுதுவார்கள். அத்தகையவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்களே !
O5 UTS - 21

Page 5
6οιό, 7οιό தசாப்த காலங்களில் பாடசாலைகளும், இலக்கிய ஆர்வமுள்ள ஆசிரியர்களும் மாணவர்களை இனம்கண்டு இலக்கியத்துறையில் வழிகாட்டி ஊக்கப்படுத்தினார்கள். இன்று அந்நிலை அருகியுள்ளது என்பது உண்மையா?
இலக்கிய ஆர்வமுள்ள ஆசிரியர்கள் கடமையாற்றிய பாடசாலைகளில் இருந்து இலக்கிய வாதிகள் உருவாகியுள்ளார்கள். அங்கிருந்து கையெழுத்து, கல்லச்சு சஞ்சிகைகள் வெளியாகியுள்ளன. அங்கே இலக்கிய விழாக்கள், எழுத்தாளர் அமர்வுகள் நடைபெறுகின்றன. சமூக உணர்வின் ஒருவித செயற்பாடாக நாம் இதனைப் பார்க்கிறோம். 50, 60, 70களில் ஆசிரியர்களிடம் காணப்பட்ட நிலைப்பாடு இப்போதில்லை. ஆசிரியர்களிடம் சமூக நோக்கும், அர்ப்பணிப்பும் மிகவும் குறைந்து வருவதாக கல்வியாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே, இளம் எழுத்தாளர்களை இனம் காணல், வளர்த்தல், வாசிக்க வைத்தல், இலக்கிய
வருடாவருடம் தமிழ்மொழித்தினப் போட்டிகள் ப்ாடசாலை முதல், தேசிய மட்டம் வரை நடைபெறுகின்றன. அதில் கவிதை, சிறுகதை, நாடகம் என்று எழுத்துப் போட்டிகள் நடைபெறுகின்றன. மேலும் பல்வேறு திணைக்களங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இத்தகைய போட்டிகளை நடாத்துகின்றன. பாடசாலைகள் தோறும் நுாலகங்கள் காணப்படுகின்றன. நுால் கொள்வனவுக்கான வசதிகளை அரசாங்கம் செய்துள்ளது.
கணனிகள், புகைப்பட பிரதி இயந்திரம், டுப்லோ அச்சு முதலான சாதனங்களும் காணப்படுகின்றன. இவ்வாறாகப் பார்க்கும்போது இலக்கிய ஆர்வமும், இலக்கியவாதிகளும் உருவாகுவதற்கான சாத்தியம் நிறையவே இருக்கின்றன. இருந்தும் என்ன?, தங்கப் பதக்கங்களோடும், சான்றிதழ்களோடும் எல்லாம் சரி. பரீட்சைகளும், அதற்கான போட்டி மனப்பான்மையும் முதன்மை பெற்றிருக்கும் இந்நாளில், துணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு ஆசிரியர், அதிபர் மற்றும் பெற்றாரின் சாதகத்தன்மையும் குறைவாக உள்ளது. மாணவர்களுக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துவிட்டன. பாடசாலை களை நம்பியிராமல் அந்தந்த ஊர்ப்பிரதேசங்களை சேர்ந்த ஆர்வலர்கள் இணைந்து சில திட்டங்களை வகுத்துச் செயற்படுவதே சாத்தியமானது என்று நம்புகிறேன்.
எழுபதுகளில் வெளியான தங்களது “எலிக்கூடு” புதுக்கவிதை தொகுதி பற்றியும், அதன் பின்னர் புதுக்கவிதை எழுதாதது பற்றியும், சமகாலத்தில் உங்களோடு எழுதியவர்கள் பற்றியும் பகிர்ந்துகொள்வதாயின். :::::::::: V 鞘 翡橄
:::::::::::::
பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதை, உருவத்திலும், உள்ளடக்கத்திலும் பல மாற்றங்களைக் கண்டே வளர்ந்திருக்கின்றது. மகாகவியின் பாணியைக் குறிப்பிடத்தக்கதொரு கிளை வளர்ச்சியாக குறிப்பிடலாம். சி.அ.செல்லப்பாவின் 'எழுத்துவில் ஆங்கில புதக் கவிதையின் தாக்கத்திற்குட்பட்டு இருண்மை, விரக்தி, இயலாமை போன்ற உள்ளடக்கத்தோடு கவிதைகள் வெளிவந்தன. சி.மணி, தி.கோ.வேணுகோபாலன், ந.பிச்சமூர்த்தி போன்றோரின் கவிதைகள் அதிகம் வெளியாகின.
க. கைலாசபதி, நா.வானமாமலை போன்றவர்கள் அந்த உருவத்தை வரவேற்றும், அதே வேளை உள்ளடக்கம், சமூகப் பெறுமானமிக்கதாக அமைய வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர். எழுபதுக்கு முன்பே தருமு சிவராமு, தா.ராமலிங்கம், மு.பொன்னம்பலம் போன்றவர்கள் புதுக்கவிதைகள் எழுதியுள்ளனர். இவர்களது பார்வையும், பாதையும் எடுத்துரைக்கும் முறையும் ஒரே பாங்கானதல்ல. எழுபதுகளில் புதுக்கவிதை இயக்க வடிவம் பெற்றது. மானுடன் பாடும் வானம்பாடிகள் என்ற கோஷத்தோடு, தமிழ்நாட்டில் இருந்து “வானம்பாடி’ புதுக்கவிதை சஞ்சிகை வெளிவந்தது.
படிகள் - 21 O6
 
 
 
 

மு.மேத்தா, அக்கினிபுத்திரன், சக்திக்கனல், மீரா, தமிழன்பன், அப்துல் ரகுமான், ஞானக்கூத்தன் போன்றவர்கள் அதனுாடாக வெளிப்பட்டனர். இத்தாக்கத்தின் தொடர்ச்சியாக இலங்கையில் இருந்தும் பலர் புதுக்கவிதைகள் எழுத ஆரம்பித்தனர். மல்லிகை, சிரித்திரன், வீரகேசரி போன்றவை களமமைத்தன. அக்காலகட்டத்தில் என்னால் எழுதப்பட்ட புதுக்கவிதைகளின் குறுந்தொகுப்பே, எலிக்கூடு. எனது ஆரம்பகாலம், புதக்கவிதை களாகவும், அக்கால கட்டப் புதுக்கவிதைகள் ஆகவும் அதனை பார்க்கலாம். அதன் பின்னால், எனது புதுக்கவிதைகள் வெளிவரவில்லை என்பது உண்மைதான். ஆனால் எழுதவில்லை என்பது உண்மையல்ல.
எலிக்கூட்டைத் தொடர்ந்து பொறிகள், போலிகள், விடிவு, காவிகளும் ஒட்டுண்ணிகளும், சமுதாய வீதியிலே, நுான் கவிதைகள் இப்படியான குருந்தொகுப்புக்கள் வெளிவந்தன. கலை, விடி வெள்ளி, கா-வி-தை என புதுக்கவிதைச் சஞ்சிகைகள் ஆரம்பிக்கப்பட்டன. ராதேயன், அன்பு ஜவஹர்ஷா, சசிகிருஷ்ணமூர்த்தி, பாலகிரி, லோகேந்திரலிங்கம், பூனகர் மரியதாஸ், செந்திரன், பேனா மனோகரன், சுகந்தன், சுகுணசபேசன் போன்றோர் நிறையவே எழுதினர். ஒரு தசாப்தகால புதக் கவிதைச் செயற்பாடுகள் தொடர்பாக, கொழும்பில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடாத்திய கருத்தரங்கு ஒன்றில் அன்பு ஜவஹர்ஷா ஒரு ரை சமர்ப்பித்தார். அக்காலகட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக குரல் தர வல்லவராக அவரே காணப்பட்டார். அது ஒரு சிறு நுாலாக வெளிவந்திருக்க வேண்டும்.
அக்க " " , டப் புதுக்கவிதை சம்பந்தமான சஞ்சிகைகள், குறுந் தொகுப்புக்கள், பத்திரிகை நறுக்குகள், கவிஞர் பட்டியல், இந்திய புதுக்கவிதைச் சஞ்சிகைக்கான வானம்பாடி, வேள்வி, ஏன், எழுச்சி என்பன சமகால இந்திய புதுக்கவிதை நுால்கள, தொடர்பாடல் கடிதங்கள் என்பன அன்பு ஜவஹர்ஷாவின் சேகரிப்பில் இருந்தன. இருந்தும் என்ன?, 1990இல் நடைபெற்ற அவலம் காரணமாக அனைத்தையும் இழந்து விட்டு ஒரு சோகப் புதுக்கவிதையாக மன்னாரில் இருந்து அனுராதபுரத்திற்கு வந்து நின்றார்.
அக்கால கட்டத்தில் நானும், சக நண்பர்களும் எழுதியவை புதுக்கவிதைகளா?, என்று கேள்வி எழுப்பப்படுமாயின், “எல்லோரும் அடிபட்டுப் போய்விட்டார்கள்’ என்று கலாநிதி சே.யோகராசா பதில் சொல்கிறார். ஆனாலும் புதுக்கவிதையை முன்னெடுத்து, அடுத்த தசாப்தத்திற்கு கையளித்தவர்கள் என்ற வகையில் எழுபதுகளில் புதுக்கவிதை என்ற தலைப்பில் யாராவது ஆய்வு செய்வார்கள் ஆயின் நிறைய விடயங்களை வெளிக் கொண்டுவர முடியும் என்பது எனது நம்பிக்கை.
உங்கள் படைப்புக்களில் “திக்குவல்லை” பிரதேச மொழிவழக்கு தொடர்ந்து பயன் படுத்தப்பட்டு: வருகின்றது. இதுதகைய படைப்புகளுக்கு அகராதி தேவை என்ற கோஷமும் காலாவதியாகி விட்டது. படைப்பொன்றுக்கு மொழியும், வாசகனுக்கு புரிதலும் அத்தியவசியமானது. பிரதேச மொழி வழக்குகள், நீங்கள் வாசகர்களுக்கு சொல்ல விரும்பும் செய்தியை சரியாக கொண்டு சென்றிருக்கும் என்பதைநீங்கள் நம்புகிறீர்களா? لگا۔۔۔۔۔۔۔
ஆக்க இலக்கியப் படைப்பொன்றில் பேச்சு வழக்கின் முக்கியத்துவம் பற்றி இரண்டு கருத்துகள் கிடையாது. வாசகர் பரப்புக்கு புதிதாக ஒரு பேச்சு வழக்கு அறிமுகமாகும் போதுதான் “புரியவில்லையே” என்ற புலம்பல் எழுகின்றது. எழுபதுகளில் நான் எழுத ஆரம்பித்த போது, பொதுவான வழக்கில் எழுத வேண்டும். அடைப்புக்குள் விளக்கம்
O7 Uடிகள் - 21

Page 6
தேவை, அடிக்குறிப்பு எழுத வேண்டும். இப்படியெல்லாம் குரல் எழுந்ததுண்டு. எனக்கும், எனது பிரதேச வாசகர்களுக்கும் புதுமைப்பித்தனை, ராஜநாராயணனை, ஜெயகாந்தனை, டானியலைப் புரிகிறது. புரியாதபோது முயன்று புரிந்துக்கொள்கிறோம். அவர்கள் மாத்திரம் ஏன் அப்படிக் கொஞ்சம் முயற்சிக்கக்கூடாது.
ஒரு முறை எனது சிறு கதையொன்றுக்கு "பாரப்பட்ட பதனா' என்று தலைப்பிட்டேன். முருகபூபதிக்கு இது புரியவில்லை. உடனே அவர் நீர் கொழும்பில் இருந்து மினுவாங்கொடை சென்று நண்பர் மு.பசீரை சந்தித்து தெளிவு பெற்றுள்ளார். அவரிடம் தேடலிருந்தது. உண்மையான வாசகனிடம் அது இருக்கும். ஒரு முறை சு.சமுத்திரத்திடம் என்றுதான் ஞாபகம். அவரது நாவல்களில் இடம்பெறும் பேச்சு வழக்கு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. “ஒரு பிரதேசத்திற்கு என்றே காணப்படும் சொற்கள் 150-200 மேல் போகாது. ஒரு படைப்பில் இவையெல்லாமே பயன்படுத்தப்படுவதுமில்லை. வழக்கில் உள்ள சொற்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது இது மிகவும் சொற்பமே” என்று குறிப்பிட்டிருந்தார். இதைத்தான் நானும் சொல்ல வேண்டியிருக்கின்றது.
எழுத்தாளனுக்கு மொழியும், வாசகனுக்கு புரிதலும் முக்கியம், என்று அழகாகக் குறிப்பிட்டுள்ளிர்கள். படைப்பினுாடாக, கலைநயத்தோடும், கருத்துச் சொல்வது தான் எழுத்தாளனின் வெற்றி. கதாபாத்திரங்களின் இயக்கம், மொழிநடைக்கூடாக கருப்பொருளையும், தொனிப் பொருளையும் உள்வாங்கிக் கொள்ள, தேர்ந்த வாசகன் அக்கறை காட்டவேண்டும்.
“கிரியா’ அகராதி அடுத்தடுத்து வரும் பதிப்புகளில் எமது வாசகர்கள் பரப்பில் காணப்படும் சகல சொற்களையும் உள்வாங்கி வருகின்றது. நாம் பயன்படுத்தும் மையத்து, நிய்யத்து, ஹராம், ஹலால், போன்ற சொற்களையெல்லாம் இந்த அகராதியில் காணலாம். இது கூட வாசிப்பை இலகு படுத்தி புரிய வைக்கும் முயற்சி மாத்திரமன்றி, பேச்சு வழக்கிற்கான அங்கீகாரத்தோடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கின்றது. எனது சிறுகதை, நாவல்கள், தேசிய மட்டப் பரிசுகளை வென்றுள்ளன. இந்தியப் பதிப்புகளைக் கண்டுள்ளன. பிரதேச மொழி வழக்கின் ஊடாக நாம் சொல்ல நினைப்பதை சரியாகச் சொல்லியிருக்கிறேன் என்பதில் நான் அதிருப்தி அடையவில்லை.
பிரதேச பேச்சு வழக்கை என்னால் இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே என்பதில்தான் என் கவலை இருக்கின்றது. உண்மையில் ஒரு திருமண வீட்டில் வைத்து “தேனமல" என்ற சொல் என் காதில் விழுந்தபோது நான் அதிர்ந்து போனேன் அது எனக்கும் தெரிந்த சொல்தான். நாற்பது வருடமாக எழுதியும்., முன்னுாற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், பத்திற்கு மேற்பட்ட நாவல்களையும் எழுதியும் இந்த சொல்லை நான் எங்குமே பயன்படுத்தியதில்லை. இப்படி இன்னும் பல சொற்கள் இருக்கலாம். நூறுவீதப் பிரயோகத்தை நோக்கியே நான் நகரந்துக் கொண்டிருக்கின்றேன். படைப்புகள் சமுதாயத்தை மாற்றியமைக்கும் கருத்துக்களை முன்வைக்க வேண்டுமா? அல்லது பிரச்சினைகளை சொல்லி வைப்பதோடு நின்று விட வேண்டுமா? இதில் உங்களது படைப் எவ்வாறாகஅமைகின்றன? - - - - ::::::::::::::::::::::::::
US - 21 - O8
 
 
 

பிரச்சினைகளை எடுத்துக் காட்டினால் போதுமென்று உருவவாதிகள். கலைவாதிகள்., சொல்வார்கள். மக்கள் இலக்கியத்திலே நம்பிக்கைக் கொண்டவர்கள். பிரச்சினைகளை எடுத்தாள்வதோடு மாத்திரம் நின்றுவிட மாட்டார்கள். அழுகிச் சீழ் வடியும் சமுதாயத்திற்கு ஒட்டு போட முடியாது. முற்று முழுதாக மாற்றியமைக்க வேண்டும். உலக முற்போக்கு இலக்கியத்தின் தந்தை மாக்சிம் கோக்கி இதைத்தான் சொன்னார். “அம்மா’வில் இதைதான் எழுதினார். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் சமூகப் பொறுப்புண்டு. "ஒளி பரவுகிறது” என்ற நாவலில், தொழிலாளர்களிடையே முரண்பாடுகளை வளர்த்து, அவர்களது நியாய பூர்வமான உரிமைகளை மறுத்து நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஒன்று திரண்டு எவ்வாறு வெற்றி பெறுகிறார்கள் என்பதை காட்டியிருக்கிறேன்.
“நச்சு மரமும் நறுமலர்களும்" என்ற நாவலிலே பெரிய இடத்துச் சிறுமைகளை மறைக்க ஒத்துழைக்காத பள்ளிவாசல் ஊழியரைப் பழிவாங்க முனைந்த போது சாதாரண ஊர்மக்கள் திரண்டு எழுந்து தலைமைத்துவத்தை ஓரங்கட்டியதை பேசியிருக்கிறேன். சிறுகதைகளில் இவ்வாறாக நிறையவே உதாரணம் காட்டமுடியும்.
இன்றைய நவீ தொழி நுட்ப இலத்பத்திரனியல் ஊட ங்களினி ஆக்கிர ன் ஊடாகக்கூ நூற்றுக் கணக்கில் இலங்கையில் தமிழ் சிறுகதை, கவிதை, விமர்சனத் தொகுப்புக்க
களது சாதகமான பாதகமான கருத்துக்களை சொல்லுங்கள்
நவீன இலத்திரனியல் - தொழில்நுட்ப சாதனங்கள் ஊடாக இன்று நிறையவே நுால்கள் வெளிவருகின்றன. நிறைய நுால்கள் வெளிவருவதால் காலப்போக்கில் ஓரிரண்டு எழுத்தாளர்கள் தேறும் வாய்ப்புண்டு. கிராமப் புறங்களுக்கு இலக்கியச் செய்தி கொண்டு செல்லப்படுகின்றது. அதனால், வாசகர்கள் உருவாகலாம். இவ்வாறான சாதகத் தன்மைகள் காணப்படுகின்றன. இதனோடு ஒட்டி நிறையவே போலித் தன்மைகள் தலையெடுப்பதையும், தலை விரித்தாடுவதையும் காண முடிகிறது. எந்த விதமான முதிர்ச்சியும் தேவையில்லை. கொஞ்சம் பணம் இருந்தால் புத்தகம் போடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. பெரும்பாலான புத்தகங்களின் உள்ளடக்கம் தரமற்றுக் காணப்படுகின்றது. நுால் தயாரிப்பில் கூட ஒழுங்கு முறையில்லை. ISBN இலக்கம் என்று ஒன்று இருப்பது கூட பலருக்கு தெரியவில்லை. அணிந்துரை, சிறப்புரை என்று யாரிடம் பெறுவது என்ற தெளிவு கூட இல்லை. வெளியீட்டு விழாக்கள் என்ற பட்டியலாக வெறும் பணச்சடங்கையே அரங்கேற்று கிறார்கள். கிராமப்புறங்களில் மிகவும் அகோரமாக இத்தகைய விடயங்கள் நடந்தேறுகின்றன.
தானொரு எழுத்தாளன் என்று ஊருக்கு வெளிச்சம் போடுவதோடு ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கில் இலாபம் ஈட்டும் விடயமாக புத்தக வெளியீடு உருவாகி வருகின்றது. “வெளியீட்டு விழாக்களா? உடனே தொடர்பு கொள்ளுங்கள்?” என்று தொலைபேசி இலக்கங்களோடு விளம்பரம் போடாத குறையாக அதற்கென்றே சிலர் தயார்நிலையில் இருக்கிறார்கள்.
பொன்னாடைகள். பூமாலைகள். பட்டங்கள். இதெல்லாம் தண்ணிர் பட்டபாடு. சமூகமட்டத்தில் நிலவுகின்ற அரசியலை வளர்ப்பதற்கு, சம்மந்தப்பட்டவர்கள், இத்தகைய பிரகிருதிகளையும், பித்தலாட்டங்களையும் ஊக்கப்படுத்துகிறார்கள். இதன்மூலம் உண்மையான எழுத்தாளர்களை ஒரம் கட்ட முனைகிறார்கள். கூடவே அத்தகைய எழுத்தாளர்களை சமூக விரோதிகளாகவும் காட்டுகிறார்கள். இதுதான் நடந்து கொண்டு இருக்கிற மிகப்பெரிய பயங்கரம். ஆற்றலோடு வருகின்ற இளம் படைப்பாளிகள்கூட இத்தகைய நிலைப்பாடுகளுக்குள் விழுந்து, தலைகால் புரியாமல் நடந்து தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.
O9 படிகள் - 21

Page 7
சிங்கள், தமிழ் மொழியில் இடம்பெறுகின்ற மொழிபெயர்ப்புப் பணிகளை உண்மையில் இன ஐக்கியத்திற்கும் பரஸ்பர புரிந்துணர்விற்கும் பொருத்தமான வகையிலான படைப்புக்களை தெரிவு செய்து மொழிபெயர்த்து வருகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா..?
சிறந்த இலக்கியப்படைப்புக்களை சிங்கள, தமிழ் மொழிகளில் பரஸ்பரம் மொழிபெயர்ப்பது இன ஐக்கியத்திற்கும் புரிந்துணர்விற்கும் வழிவகுக்குமென்று இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஐம்பதுகளிலிருந்தே கூறிவருகின்றது. எண்பதுக்குப்பிறகு பரவலாக எல்லோராலுமே இது பேசப்படுகின்றது. t
இதற்காக அரச மட்டத்தில் உருப்படியான திட்டங்கள் எதுவும் வகுக்கப்பட வில்லை. தனியார் துறையின் கதையும் அதேதான். ஆனால் தனிப்பட்டவர்களின் ஆர்வத்தால் ஆங்காங்கே சிற்சில முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. மொழி பெயர்ப்பின் தேவை பரவலாக உணரப்பட்டுள்ளதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வோருமுளர். மாடீன் விக்ரமசிங்க, கே. ஜயதிலக, ரி.பி. இலங்கரத்ன, குணசேன விதான, கருணாசேன ஜயலத், சிட்னி மாகஸ் டயஸ் போன்ற சிங்கள எழுத்தாளர்களின் நூல்கள் தமிழிலும் டொமினிக் ஜீவா, சே. கணேசலிங்கன், சுதாராஜ், நீர்வை பொன்னையன், சே ராமேஸ்வரன், தில்லை நடராசா, போன்றோரின் நூல்கள் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தனிக்கவிதை சிறுகதைகளென்று ஏராளமாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் இன ஐக்கியத்தை அடிப்படைபயாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட படைப்புக்களென்று சொல்வதற்கில்லை. சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் அவ்வாறான நோக்கத்துடன் எழுதியவையுமல்ல. மொழிபெயர்ப்பாளர்கள் சரியாக சாதித்துள்ளார்களாவென்று ஒப்பீட்டு ரீதியாக கூறுவாரு மில்லை. இந்நிலைப்பாட்டிலே மொழிபெயர்ப்புப் பணி ஏதொ நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மொழிபெயர்ப்பினுாடாக விரும்பத்தகாத சில நடவடிக்கைகள் கூட இடம்பெற்று வருவதைச் சொல்லாதிருக்க முடியாது. சிலர் தங்களைப்பற்றி தாங்களே எழுதியும், தமது குழுவினரை மிகைப்படுத்தி எழுதியும் தங்களுக்கு வேண்டாதவர்களை அடியோடு மறைத்தும் மொழிபெயர்ப்பாளர்களை நூலாசிரியர்களாக மாற்றி நூல் வெளியிட்டு பெருமிதமடை கிறார்கள். இந்தியாவில் தேசிய விருது பெறும் நூல்களை சாகித்திய அகடமி ஏனைய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுகிறது. அவ்வாறாக சாகித்திய மண்டலப்பரிசு பெறும் நூல்களையாவது அரச மட்டத்தில் வெளியிட ஏற்பாடு செய்ய முடியுமாயின் எவ்வளவோ நல்லது. இன ஐக்கியத்திற்கும் சமாதானத்திற்கும் பங்களிப்பான நூல் மொழிபெயர்ப்புகளுக்கு தனியான பரிசுத்திட்டங்களை, வெளியீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது நல்ல அறுவடையைத்தரும். இவ்வாறான நடவடிக்கைகளைத் தூண்டுவதற்கு இலக்கிய அமைப்புகள் முயற்சிக்க வேண்டும்.
வாராந்தப் பத்திரிகைகளில் வெளியாகும் படைப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு விமர்சனம் செய்வதோ, பரிசில் வழங்குவதோ, மதிப்பீட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதோ பொருத்த மானதாக இருக்குலமன்று நினைக்கிறீர்களா?: : is is is is:
விமர்சனம், மதிப்பீடு, ஆய்வு, பரிசுத் தேர்வு என்று வரும்போது அது நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். தமது கைக்கெட்டும் ஆக்கங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு மதிப்பீடு செய்வதும், பரிசுப் பட்டியல் வெளியிடுவதும் கண்டிக்கத்தக்கதே. முன்னறிவித்தல், கால இடைவெளி, தெரிவு செய்யப்பட்ட பத்திரிகை சஞ்சிகை விபரம், படைப்பு பட்டியல், ஆய்வாளர், நடுவர் விபரம் இப்படியொரு திறந்த தன்மையும் அறிக்கைப் படுத்தலும் இருக்கவேண்டும்.
விசேடமாக இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறுசஞ்சிகைகள் கவனத்தில் எடுக்கப்படவேண்டும். சிறு சஞ்சிகைகள் குறித்த நோக்கத்தோடு, விளம்பர ஆதரவின்றி, இலட்சியத் தாகத்தோடு வெளிவருகின்றன. மிக நுணுக்கமாகவே அவை ஆக்கங்களைத் தெரிவு செய்கின்றன. அர்ப்பணிப்புடன் வெளிவரும் இத்தகைய சிறு சஞ்சிகைகளை எந்த சந்தர்ப்பத்திலும் இரண்டாம் பட்சமாக கருதுவது மன்னிக்க முடியாததாகும்.
UGI - 21 1O
 
 
 
 

வருடா வருடம் நடாத்தப்படும் தேசிய சாகித்திய விழாக்கள் தொடர்பாக சிங்கள மொழியில், ஊடகங்களில் நிறைய சர்ச்சைகள் நிகழ்ந்து வருகின்றன. தமிழில் நூல் பரிசளிப்போடு எல்லாம் வேனே s: :
சாகித்திய மண்டலப் பரிசென்று வரும்போது எல்லோரையும் எப்போதும் திருப்திப்படுத்திவிட முடியாது. சிங்கள இலக்கிய உலகில் சாகித்திய விருது தொடர்பாக நிறையவே பிரச்சினைகள் எழுகின்றன. பேசப்படுகின்றன. சிங்கள இலக்கியத்திற்கு பரிசு வழங்கப்படாமையும், பரிசு பெற்ற நாவலில் மொழிரிதியான குறைபாடுகள் மிகைத்துக் காணப் படுவதாகவும் பிரச்சினை எழுந்துள்ளது. பேராசிரியர் சுசரித்த கம்லத், குணசேன விதான போன்றவர்கள் கூட இதில் கருத்துத் தெரிவித்துள்ளனர். தமிழில் இவ்வாறான சிக்கல்கள் அண்மைக்காலத்தில் குறைவு. இம்முறை குறிஞ்சித் தென்னவன் கவிதைகளைத் தொகுத்த சாரல் நாடன் தொடர்பாக பிரச்சினை மேற்கிளம்பியுள்ளது. சிலபோது ஒரு துறைக்கு இரட்டைப் பரிசு வழங்கப்படுகிறது. இரண்டு நூல்களும் சம தரத்தில் இருப்பதாக கருதிக் கொள்கிறோம். ஒரு துறைக்கு பரிசு வழங்கப்படாவிட்டால் தரமான ஆக்கங்கள் வெளிவர வில்லையென்று நினைக்கிறோம்.
1960களில் டொமினிக் ஜீவாவின் “தண்ணிரும் கண்ணிரும்” பரிசு பெற்ற போது இழிசனர் இலக்கியத்திற்குப் பரிசு என்று புயல் கிளப்பினார்கள். இளங்கீரனின் “நீதியே நீ கேள்’ நாவலுக்குப் பரிசு கொடுக்கவிடாமல் சகல பித்தலாட்டங்களையும் செய்தனர். சாகித்திய விருது தொடர்பாக அவ்வப்போது சில சின்னத்தனங்கள் பதிவாகியே வந்துள்ளன. எந்தத் துறைசார்ந்த நூல் பரிசுத் தேர்வுக்கு வரவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு, அத்துறை சார் நூலை அவசர அவசரமாக அச்சிட்டு உள் நுழைத்துப் பரிசு பெற்றுள்ளார்கள். நாலைந்து பிரதிகள் டைப்செட் புகைப்படப் பிரதியெடுத்து அதற்கு நூல் வடிவம் கொடுத்து நூல் வெளியிடாமலே பரிசு பெற்றுள்ளார்கள். பிரஜா உரிமை பெற்று வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு, இங்குள்ள முகவரியோடு நூல் வெளியிட்டு உறவினர் மூலம் கொடுக்கப்பண்ணி, இலங்கை வாசகர் எவருக்கும் தெரியாத நூல்களே பரிசு பெற்றுள்ளன. பழைய நூல்களை புதிய திகதியிட்டு மீள்பிரசுரம் செய்து பரிசு பெற்றுள்ளார்கள்.
நாற்பது ஆணன்டுகள் சாகித்திய விருது தொடர்பாக நாம் வென்றெடுக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன. ஓயாத எழுத்து முன்பு தமிழ், சிங்கள சாகித்திய விழாக்கள் தனித் பல விருதுகள் ಜ್ಷಣ' o:ಆಳ್ವ ஒரே is .: மடையல எலலோருககும பரிசு கடைககனறது. நிறையப் பரிசுகள் முன்பு சிங்களத்தில் பரிசுத் தொகை இே அதிகப் படைப்புகள் தைந்தாக இருக்கும் போது, தமிழில் பத்தாகவே
II 1.- இருந்தது. இப்பொழுது எல்லோருக்கும் சமமாகவே ஆழமான வாசிப்பு 拳 வழங்கப்படுகின்றது. சிங்களத்தில் பதினைந்து பொய்மையற்ற வாழ்வு வரையான துறைக்கு பரிசு வழங்கப்படும்போது, அறுைபவக்கால் பக்கவம் தமிழில் ஆறேழு துறைகளோடு கதை முடிந்து
60 பதத B @ விடுகிறது. பாடல், இளைஞர் இலக்கியம், அறிவியல் அனைத்துடனும் இலக்கியம் இப்படிப் பல துறைகள் காணப் அடக்கி வாசிக்கும் படுகின்றன.
ஓர் படைப்பாளி ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று விழாக்கள் ఫే நடைபெறுகின்றன. மாவட்ட ரீதியாக போட்டிகள், பிரதேச கலைஞர் - UgaGT- கெளரவிப்பு, பல்துறை கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகள் SSSSSySSSSS0SSS இடம்பெறுகின்றன. புத்தகச்சந்தை நடைபெறுகிறது. வெளியீட்டு விழாக்கள், நூல் கொள்வனவு இடம்பெறுகிறது. இதில் தமிழுக்கு எந்தளவு இடம்? இதுதான் கேள்வி. எமது பங்கை நாம் வென்றெடுப்பது தொடர்பாக விவாதிப்பதும் செயற்படுவதும்
பயன்தரும்.
11 ust - 21

Page 8
f
தான் வாழும் பிரதேசம் தனது சமூக கலாசாரப் பின்னணி அண்டியதாக படைப்புக்கள் இருக்க வேண்டுமன்பதில் ஆழமான நம்பிக்கை வைத்துள்ள நீங்கள், இன்றைய இளைய தலைமுறையின்: ஆதான் வாழும் பிரதேசம் தனது சமூக கலாசாரப் பின்னணி அண்டியதாக படைப்புக்கள் இருக்கக்கங்களில் இதனைக் காணுகின்றீர்களா? அவர்களது செயற்பாடுகள் பற்றி உங்களது: கண்ணோட்டம் என்ன?
தான் வாழும் பிரதேசம், கலாசாரங்களுக்குள் காலூன்றும் அதேவேளை, உலகளாவிய மனிதத்துவத்தைப் பேசுவதாகவும் படைப்புக்கள் அமைய வேண்டுமென்பதில் அசையாத நம்பிக்கை கொண்டு இயங்கிவருகிறேன்.
இன்றைய இளைய தலைமுறை யுத்தத்திற்கும் உலக மயமாதலுக்கும் அதன் கலாசார சீரழிவுக்கும் பின் நவீனத்துவ முன்னெடுப்புகளுக்கும் மத்தியில் பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இந்தச் சிக்கல்களுக்குள்ளிருந்து தெளிவுபெற்று விடுவித்துக் கொண்டு வெளிவருவதென்பது பெரிய விஷயம்.
சிலர் தமிழ் தேசியம், முஸ்லிம் தேசியம் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் யுத்தக் கொடுமைகளையும் அவலங்களையும் எழுத்தில் கொட்டிவிட்டால் அதுதான் அற்புத இலக்கியமென்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர் அடுத்தவர்களின் கைதட்டலொன்றையோ நோக்கமாகக் கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மற்றும் சிலர் அற்புதமான கலைச் சிருஷ்டியை உருவாக்கி நூதனசாலையில் பார்வைக்கு வைக்கவே பிறப்பெடுத்திருக் கிறார்கள். இலக்கிய நோக்கு, சமூக யதார்த்தக் கண்ணோட்டம், பல்துறை வாசிப்பு, கலந் துரையாடல், எழுத்துப் பயிற்சி, கலைச் செழுமை, பன்முகத்தன்மை, மனித நேயம். இப்படியான விடயங்களைப் படித்துணர்ந்து, அநுபவப்பட்டு படிப்படியாகவே ஒரு நல்ல எழுத்தாளன் உருவாக முடியும் இது லேசான காரியமுமல்ல.
அதிகம் உழைக்காமல் இலக்கியவாதி உருவாக முடியாது. அதற்கு விரும்பாமையே இளந்தலைமுறையினரைப் பிடித்துள்ள மிகப்பெரிய வியாதியாகும். குறுகிய காலத்தில் அதிகம் எழுதி, எழுதியவற்றை நூலாக்கி பெரிதாக விழாவெடுத்து கழுத்தில் சால்வையுடன் கதாநாயகனாகவே அதிகம்பேர் விரும்புகின்றனர். புதிதாக எழுத வருகிறவர்களில் எண்பது விதமானவர்கள் கவிஞர்களாகவே இருக்கின்றனர். பொதுவாக கவிதைகளில் பிரதேச கலாசார கூறுகள் இடம்பெறுவது குறைவு. மிகக்குறைவானவர்களே சிறுகதை, நாவலென்று எழுதுகிறார்கள். அவர்களுக்குள்ளிருந்து பகைப்புலப் பண்பாட்டை பிரதிபலித்துக்கொண்டு சமூக யதார்த்தக் கண்ணோட்டத்துடன் கூடிய சில நல்ல அறுவடைகள் அவ்வப்போது காணக் கூடியதாகவுள்ளது.
f
70ம் ஆண்டு தொடக்கம் அநுராதபுரப்பிரதேச இலக்கிய முயற்சிகளே தொடர்புகொண்டு அவதானித்து வருகிறீர்கள். இப்பிரதேச தமிழ் இலக்கியத்திற்கான விசேடமான அடையாளப் : படுத்தல் ஒன்று இல்லாதபோதிலும் பழகளின் 20வது இதழ்வரை கடந்த 35 ஆண்டுகளில் த அவதானிப்பைச் சொல்லமுடியுமா?
1970 களில் அநுராதபுர இலக்கிய முயற்சிகளொடு தொடர்பு கொண்டபோது, அன்பு ஜவஹர்ஷா, பேனா மனோகரன் உள்ளிட்ட சிலர் எழுதிக்கொண்டிருந்தனர். கூடவே கலைச் சங்கத்தையும் இயக்கிக் கொண்டிருந்தனர். இரவில் நடைபெறும் இலக்கிய கூட்டத்திற்குக் கூட நூறு பேருக்கு மேல் வருகை தந்தனர். பெரும்பாலானவர்கள் அங்கு அரச ஊழியம் புரியும் வடபுலத்தவர்கள்.
இடைக்காலத்தில் பிரச்சினைகள் மலிந்த போதும் இலக்கியத் , தொடர்பு அறுபடவில்லை. வெளியீடுகள், பாடசாலை மட்ட நிகழ்வுகளென்று ஒரு தொடர்ச்சி காணப்பட்டது. இன்று அநுராதபுரம், அநுராதபுரப் பிரதேசம் என்று வரும்போது கெகிராவ சஹானா, நாச்சியாதீவு பர்வீன், சுலைஹா, வஸிம் அக்ரம், எம்.சி. ரஸ்மின், ஸப்ரினா,
படிகள் - 21 12
 
 
 
 
 
 
 
 
 

ஸமான், நஜிமுதீன், ரஹற்மதுல்லா, ஷர்மிலா, அபூ நுஹா என்று சொல்லிக் கொண்டு போக்கூடியதாகவுள்ளது.
படிகள், அநுராகம் என்று சஞ்சிகைகள் வெளிவருகின்றன. பல நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. “மல்லிகை” பிரதேச மலர் போடுமளவுக்கு இலக்கியம் செழுமை பெற்றுள்ளது. இதே போக்கில் தொடர்ந்து செல்லுமாயின் எதிர்காலத்தில் அநுராதபுரப் பிரதேசம் தமிழ் இலக்கியப் பரப்பில் பல சாதனைகளை நிலை நாட்டுமென்று நிச்சயமாக நம்பலாம். ഷpr
இன்றைய சமுதாய அமைப்பு அநீதி, சுரண்டல், மேலாதிக்கம், உரிமை மறுப்பு, ஊழல், லஞ்சம், வன்முறை, களவு, பொய், துஷ்பிரயோகம் முதலியவற்றால் நிரம்பி நாறிக்கிடக்கிறது. இப்படிப்பட்ட சமுதாயத்தில் சீர்திருத்தம் பேசியும் செய்தும் எவ்வித பிரயோசனமும் இல்லை. முற்றுமுழுதாக மாற்றியமைத்தாக வேண்டும்.
நீதி, நேர்மை, உண்மை, சகோதரத்துவம், அன்பு, அர்ப்பணிப்பு, சுதந்திரம், உழைப்பு, பகிர்வு நிரம்பியதொரு சமுதாயமாக மாற்றியமைக்கப்பட்டால் எவ்வளவு மகிழ்ச்சி. இதற்காகாப் பங்களிப்பு செய்யவேண்டியது ஒவ்வொருவரதும் கடமை. இதில் எழுத்தாளன் விதிவிலக்கல்ல.
நாற்பது வருடங்களாக இந்த நோக்கத்திற்காக எழுதி ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டால், நிச்சயமாக இல்லையென்பதுதான் பதில். சமுதாய மாற்றமென்பது அப்படி லோசாக வந்துவிடக்கூடியதல்ல. மெல்லிய அசைவியக்கத்தி னுாடாகவே நிகழ முடியும். சொத்துடைமையை முழுமைபப்டுத்திய தலைமைத்துவம் இன்னும் அதே வீச்சோடு செயற்படுகிறது.
மதம் உள்ளிட்ட அனைத்துமே இன்னும் கைகட்டி சேவகம் புரிகின்றன. எல்லோரும் ஒன்றுபட்டு மக்கள் எழுச்சியினூடாக சமூக மாற்றத்தை நோக்கி நகர வேண்டும். அது வரையில் சும்மா இருக்க முடியுமா என்ன? இன்னும் ஒரு நாற்பது வருடம் கிடைக்குமாயின் தொடர்ந்து இதே நோக்கத்தோடு எழுதிக் கொண்டிருப்பேன்.
f
'பழகள் பற்றி என்னநினைக்கிறீர்கள்?
ஈழத்து இலக்கியச் சஞ்சிகை வரிசையில் இடம் பிடிக்க முன்னேரிக் கொண்டிருக்கும் சஞ்சிகை. தொடர்ச்சியாகப் படித்து அவதானித்து வருகிறேன். அண்மைக்கால இதழ்களில் அட்டை மற்றும் அகப்பக்கங்களில் எளிமையான அமைப்பழகு வெளிப்படுகிறது.
பொருத்தமான பேட்டிகள், அயல் அதிகம் உமைக்காமல் மொழி 560)6) இலக்கிய விடயங்கள், தி சமகாலத்தில் முதன்மை பெறும் சர்ச்சைக்குரிய இலக்கியவாதி விடயக் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. உருவாக முடியாதர். சிறுகதைகள் உரிய தரத்தை எய்த வில்லை. அதற்கு விரும்பாமையே
சிறுசஞ்சிகைகள் எப்பொழுதும் இளந்தலைமுறையினரைப் தரத்தைப் பேணும் பிரதேச ஆக்கங்களுக்கு பிடித்ததுள்ள மிகப்பெரிய இடமளிக்க வேண்டிய O பொறுப்புணர்ச்சி, வியாதியாகும். தரத்தைப் பாதிக்கிறதுபோல் தெரிகிறது. மேலும் அவதானம் தேவை.
13: UG - 21

Page 9
அநராதபுர மாவட்ட தமிழ் இலக்கிய முயற்சிகள் ஓர் ஆய்வு -
அநுராதபுரீ O659 இலக்கியங்கிளின் உள்ளடக்கம்
(O3
முக்கிரியாவை எம். ரஸிம்
3:3 வாழ்வியல் முரண்பாடுகள்
நாட்டில் 1970 காலப்பகுதியில் தலை தூக்கிய இனப்பிரச்சினையும் அதனைத் தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில் நாட்டின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் ஏற்பட்ட போர்ச் சூழலும் மக்கள் மத்தியில் பெரும் பீதியை உண்டாக்கியதுடன் மட்டும் நின்று விடாது. அம்மக்கள் தம் பூர்வீகக் குடிகளை விட்டு, புலம்பெயர வேண்டிய ஆழ்நிலையையும் ஏற்படுத்தியது. இவ்வாறு புலம்பெயர்ந்து சென்ற மக்கள் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் குடியமர்ந்து கொண்டனர். இவ்வாறு இடம் பெற்ற குடியமர்வுகளுக்கு அநுராதபுரப் பிரதேச மண்ணும் தனது போர்வையைக் கொடுத்து உதவியது.
அத்தோடு, இன்றைய இளம் யுவதிகளுக்கு வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்து வருகின்றது. அதனால் தம்மிடமுள்ள பணத்தையெல்லாம் வாரி இறைத்து விட்டு இறுதியில் நடுத்தெருவில் நிற்கின்றனர். இது சகல பிரதேசங்களிலும் இன்று காணக்கூடிய காட்சியே.
இவ்வாறான யதார்த்தப் பின்னணியைப் பொருளாகக் கொண்டு கெக்கிராவ ஸஹானாவின் நாதன் உள்ளிருக்கையில்' என்ற கதை பின்னப்பட்டுள்ளது.
ஏ.எல். படித்துவிட்டு, வெளிநாடு செல்லும் ஆசையில் மண்விழ, இடையில் தலை தூக்கிய புதியதொரு பிரச்சினை நெட்டித்தள்ள, கெக்கிராவையில் உள்ள முஸ்லிம் ஸ்கூலுக்குத் தொண்டன் ஆசிரியனாக வந்து சேர்கிறான் கொக்குவிலைச் சேர்ந்த சரவணன்.
இவ்வாறு கொக்குவில் பிரதேசத்தின் 'இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அவனைத் தேடியதால் பாதுகாப்புத் தேடி வந்த சரவணனை கெக்கிராவப் பிரதேச மக்கள் அன்புடன் ஆதரிக்கின்றனர். என்றாலும், அவன் குடியிருந்த கோயில் குருக்களின் குடும்பத்தை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் எங்கு செல்வதென்று புரியாமல் தன்னுடைய ஸ"ட்கேஸ"டன் வெளியேறுகிறான்.
'அவன் கவலைப்படவில்லை. மானுடத்தின் பரப்பு வானம் போல் விசாலமானது. அதில் அவனுக்கென ஒரு வாசல் திறந்திருக்காதா என்ன..?’ என்ற நம்பிக்கையில்.
U-36 - 21 14
 

இவர், தனக்கு அந்நியோன்னி என்டு மனசு பாரமா இருக் கையில, சின்ன யமான வாழ்க்கைச் சூழலின் பகைப் விஷயத்துக்குக் கூட நாங்கள் எரிச்சல் புலனில் பாத்திரங்களை உலவ விட்டு, படுறோம். சண்டை போடுறோம். இந்த மையக்கருவுக்கு வலுவூட்டும் வகையில் சத்தமும் சண்டையும் தான் எங்கட தமது கதை நிகழ்வுகளைச் சித்தரித் வறுமையிட அடையாளம்.”
துள்ளார். LLS SS S S L S LSL S SLS
இக்கூற்றிலிருந்து ஓர் அடி அநுராதபுரத்தைப் பொறுத்த மட்டக் குடும்பத்தின் பொருளாதாரப் வரையில் அங்கு வாழும் பெரும் பிரச்சினைகளையும், அதனால் ஏற்படும் பான்மையான மக்கள் விவசாயத்தினைத் மன அவலங்களையும் ஆசிரியர் மிகவும் தொழிலாகக் கொண்டவர்கள். இங்கு தெளிவாக விளக்கி யிருக்கின்றார். வாழும் மக்களைப் பொருளாதார ரீதியாகப்
பார்க்குமிடத்து நடுத்தர மக்கள் என்றும், மேலும், குடும்பத்தில் கணவன் அடிநிலை மக்கள் என்றும் இரு வகையாகப் மனைவிக்கிடையிலான நிஜக் கருதது பார்க்க முடிகின்றது. நிலைகளும், அதனால் ஏற்படும்
பிரச்சினைகளும் நாட்டின் பல பாகங் நடுத்தர மக்கள் என்று பார்க்கும் களிலும் காணக்கூடிய ஒரு விடயமாகும். போது, அவர்கள் பொருளாதார ரீதியாகத் அதாவது, சில குடும் பங்களில் கணவன் தன்னிறைவு பெற்றிருப்பர். இவர்கள் தமது மார், தமது மனைவியருக்கு உயரிய - பொழுது போக்கைத் தொலைக் காட்சி உரிய சுதந்திரத்தைக் கொடுப்பதில்லை. பார்ப்பதிலும், வானொலி கேட்பதிலும் எப்போதும், அவர்கள் தங்களுடைய ஏனைய விளையாட்டுக் களிலும் கழிப்பர். வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்ட பேசா ஆனால், அடிமட்ட மக்களைப் பொறுத்த மடந்தைகளாக இருக்க வேண்டும் என்று வரையில் அன்றாட உணவுக்கே வழி எதிர்பார்க்கின்றனர். யில்லாமல் அல்லற் பட்டுக்கொண்டிருப்பர். Kr இத்தகு மக்கள் மத்தியில் சண்டையும் ஆணகள எததனை பெண் சச்சரவுகளும் நிறைந்து காணப்படும். களோடும் கதைககலாம, உறவாடலாம இம்மக்கள் தமது வறுமையின் வெளிப் ஆனால், பெண் என்று வரும்போது பாடாக சண்ட்ைகளிலும், வீண் பேச்சுக் அதற்குத்தடை விதிக்கின்றனர். பெண்கள் களிலும் பொழுதைப் போக்குகின்றனர். ஆண்களுடன் அந்நியொன்னியமாகப் இந்நிலையினை இன்றும் இம்மாவட்டத் பழகுவதை அவர்கள் வெறுக்கின்றனர்; தின் சில கிராமங்களில் காணக் கூடியதாக சந்தேகிக்கின்றனர். இது எல்லாப் பிர இருக்கின்றது. தேசத்திற்கும் பொதுவான ஒரு பிரச்சி 606US இருப்பினும், அதனையும இத்தகைய சமுதாயப் பின்னணி தன்னுடைய கதைக்குக் கருவாக அமைத் யைக் கருவாகக் கொண்டும் இலக்கியம் திருக்கின்றார், ஸஹானா. படைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். இதற்கு ஸஹானாவின் இருவேறு பார் வைகள்' என்ற கதை எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
'சந்தேகக் கோடு' என்ற கதை யானது மேற்கூறப்பட்ட கருத்தியலின் அடியாகப் பிறந்திருப்பதைக் காணலாம். முரண்பட்ட சுபாவங்கள் காரணமாக
“ஒங்களுக்கெல்லாம் கஷ்ட கணவன் மனைவிக் கிடையே உண்டாகும் மாத்தான் இருக்கும். எரிச்சலாத்தான் மனச்சிக்கலை இக்கதை சித்திரிக்கின்றது. இருக்கும். நீங்க வசதியுள்ளவங்க. அத அனுபவிக்க அமைதியத் தேடுறீங்க. G66 Tuu TL6ô, டி.வி. பார்க்கவும் o அமைதியைத் தேடுறீங்க. நாங்க இன்னம் தீ? காயங்கள், ஒவ்வொரு சநதாபு அடிமட்டத்துலயே இருக்கோம். அன்டக்கி" பத்திலும் அவளைப் புண்படுத்துவதி திங்க ஒரு வயித்துச் சோறு கெடக்குமா லேயே அதிக சுகமகாணும ச. பாஹிரின் என்டு தான் எங்கட் கவலை. வாழ்க்கைல பி', 9'*'. மனைவியின் இப்புடி கஷடப்பட வேண்டி இருக்குதே கோணத்திலிருந்து அலசப்படுகின்றது.
நிஹாராவின் மனதில் தான்
15 US - 21

Page 10
மன ஊனம் படைத்தவனோடு அமைதி காப்பதற்காக மெளனத்தில் உறையும் நிஹாரா, ஸஹானாவின் கதை மாந்தர்களில் வித்தியாசமானதோர் வார்ப்பு
தொட்டதற்கெல்லாம் சந்தேகப் படுவதே சஃபாஹிரின் குணம். என்றாலும், ஒரு மனைவி என்ற வகையில் நிஹாரா எதனையும் கணவனிடம் மறைக்காது, பகிர்ந்து கொள்வாள். ஆனால், அதுவே இறுதியில் அவளுக்கு வினையாகி விடும்.
“...எல்லாவற்றையும் 6).jp60) D போல் சொல்ல வேண்டுமென அவளுக்குத் தோன்றவில்லை. சொல்வது பெரிதல்ல, சொன்ன பிறகு ஏதாவது, அவன் மீண்டும் கேட்டான் யாராவது வந்தாங்களாண்டு கேட்டேன். அவள் ‘இல்லை' என்றபடி உள்ளே போனாள்”
பெண் படைப்பாளி என்ற வகையில் இவரால் உள்வாங்கப்பட்டுள்ள பெண்ணிலைவாதக் கருத்துககளின் வார்ப் புக்களாக மட்டும் இவரது படைப்புக்கள் அமையாது, இன்றைய யதார்த்த வாழ்வில் பெண்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளைப் பதிவு செய்கின்ற அதேவேளை, அந்த யதார்த்த நிகழ்வினூடாகத் தனது கதை களுக்கான உள்ளடக்கத்தினையும் வடி வமைத்துள்ளார்.
கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை இழிவாகக் கருதுகின்ற நிலை தொன்று தொட்டு இருந்து வருகின்ற ஒரு வழக்கமாகி விட்டது. ஆனால் மனைவியை இழந்த ஓர் ஆண் அடுத்த வினாடியே மறுமணம் செய்து கொள்ளலாம். அது அவனுக்குப் பெருமையாகவும் பொதுவாக கருதப்படு கின்றது. ஆனால், பெண்கள் கணவனை இழந்து விட்டால், குழந்தை குட்டி என்று தமது வாழ்க்கையைத் தனியாகக் கழிக்க வேண்டிய ஆழ்நிலை சமுதாயத்தில் நிலை பெற்றிருந்தது. அவர்களை வளர்த்து ஆளாக்கிய பின்னர், அவர்களும் தமது வாழ்க்கையைத் தேடிச் சென்ற பின்னர் இப்பெண்கள் கவனிப் பாரற்றுத் தனிமைப் படுத்தப்படுகின்றனர். சில வேளைகளில் அவர்களை 'முதியோர்' இல்லங்களில் சேர்த்து விடுகின்ற நிலையும் காணப் படுகின்றது.
UG - 21
இத்தகையதொரு பின்னணியில், பெண்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், சமுதாய மாற்றத்தினைப் புலப்படுத்தும் வகை யிலும் எழுந்த ஒரு கதையாகப் புதியதோர் சாந்தி பிறந்ததடி' என்ற கதையைக் கொள்ளலாம்.
இருபது வயது இளந்தாரி மகன் வெளிநாட்டில். மகள் நர்கீஸ் அட்வான்ஸ் லெவல் ஸயன்ஸ் படிக்கிறாள். இளை யவன் ஓ.எல். வகுப்பு. குழந்தைகள் சின்னவர்களாக இருக்கையில் மறுமணத் துக்குச் சம்மதிக்காத விதவைத் தாய்
மெஹரூன். பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவள் தனிமை யுணர்ச்சியால் தளம்புகிறாள். மனப் போராட்டம், அவளுக்காக ஒன்பது
வருடங்களாகக் காத்திருக்கிறது. அவளே போன்று தனிமரமான இன்னொரு ஜீவன். பிரச்சினை பல கோணங்களில் அதன் அடி ஆழம் வரை அலசல் பெற்றுத் தெளிவு பிறக்கிறது. “வீட்டுக்குள் நுழைந்த நர்கீஸ் மேஜை மேலிருந்த தேனீர்க் கோப்பையைப் பார்த்து விட்டு யாரும்மா வந்தாங்க" என்று கேட்க, மிகுந்த சிரமத்துடன் முயற்சித்து 'ஒன்னோட சாச்சா வந்துட்டுப் போனார்.' என்றாள்.”
இக்கூற்றிலிருந்து மெஹரூன் மறுமணத்திற்குத் தயாராகி விட்ட விடயம் ஆட்சுமமாகக் நமக்கு காட்டப்படுவதைக் காணலாம்.
இவ்வாறு நோக்குகின்ற போது, வாழ்வியல் முரண்பாடுகள், ஒவ்வொரு மனிதருக்கும் இயல்பானதாகும். இக் கருத்தினைப் பிரதிபலிக்கும் வகையில் அநுராதபுரப் பிரதேசத்தில் எழுந்த இலக் கியங்களில் கெக்கிராவ ஸஹானாவின் கதைகளில் மட்டுமே பெரிதும் முனைப்புப் பெற்றிருப்பதைக் காணலாம். இவர் தமது கதைகளில் வாழ்வியல் முரண்பாடு களைப் பல்வேறு கோணங்களில் சித்தி ரித்திருப்பதைக் காணலாம்.
ஆய்வு தொடரும்.
16

ஆள்களற்ற நகரத்திலிருந்த
ஒரே ஒரு தொலைபேசியில் இலக்கங்களை அழுத்தி களைத்திருக்கிறாய் கூரை கழற்றப்பட்ட
மண்சுவரிலிருந்த நாட்காட்டியும் கடிகாரமும் புதைந்து கிடக்கிறது.
பூ வரச மரத்தின் கீழ் உனது கடைசி நம்பிக்கை
தீர்ந்து கொண்டிருக்கிறது.
எடுத்துச் செல்லமுடியாத பொருட்களிலும் கைவிடப்பட்ட படலைகளிலும்
மீண்டும் வரும் நாட்களை கணக்கிடுகிறாய்.
உனது துயர்மிகுந்த ஒரு வார்த்தையேனும் கேட்க முடியவில்லை ஐநாவில் தமிழ் உரையில் உனது மொழி நசிபட்டுக்கொண்டிருந்தது அழுகையின் பல ஒலிகளும் அலைச்சலின் பல நடைபாதைகளும் சிரிப்பாக மொழிபெயர்க்கப்பட தலைகள் அசைந்து கொண்டிருந்தன.
கைவிட்டுச்சென்ற கோழியும் குஞ்சுகளும் இறந்துகிடக்க வெறும் தடிகளில் தலைகீழாய் தூங்கும் வெளவால்கள் அழுதபடியிருந்தன.
நேற்றோடு எல்லோரும் நகரத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.
ஐநாவின் உணவு வண்டியை துரத்திச் சென்ற சிறுவனின் பசி ஓமந்தை சோதனைச்சாவடியில் தடுத்து வைக்கப்படுகையில் குண்டைபதுக்கிய அமெரிக்கன்மாப்பையில் உனது தீராத பசி எழுதப்பட்டிருக்கிறது.
வானம் உன்னை ஏமாற்றிட்டதுபோல பார்த்துக்கொண்டிருக்கிறாய் இன்று நள்ளிரவோடு வாழ்வதற்கான அவகாசம் முடிந்துவிட்டதாய் அறிவிக்கப்படுகையில் மீண்டும் தொடரப்படும் படைநடவடிக்கைக்கு நாள் குறிக்கப்பட்டிருக்கிறது.
01:102008 இரவு 8.00
Uடிகள் - 21

Page 11
அக்ஷயா நான்கைந்து ஆண்டுகளாக ஊடகங்களுக்கு பல்வேறுபட்ட ஆக்கங்களை எழுதி வந்தாள். இவ்வாறு ஆக்கங்கள் எழதிவருவதன் காரணமாக, அவளுக்கு அவ்வப்போது கடிதங்கள் தபாலில் வருவதுண்டு. அவளுக்கு பல இலக்கிய நண்பர்களுமிருந்தனர்.
அந்த வகையில் அக்ஷயாவிற்குக் கிடைத்த ஆத்ம நண்பிதான், நிர்மலா. அவள் தற்போது கனடாவில் வசிக்கிறாள்.
அன்றைய தினம் அவளுக்கு கனடாவிலிருந்து இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. அதில் ஒன்று கனடாவில் வேலை பார்க்கும் கணவன் ரமேஷின் கடிதமும், மற்றையது அவள் நண்பி நிர்மலாவின் கடிதமும் ஆகும்.
இவ்விரண்டு கடிதங்களையும் மிகவும் ஆர்வ வேட்கையுடன் கூர்ந்து படித்தாள். மகிழ்ச்சி ததும்ப அம்மாவிடம் சென்று, கடிதங்களைப் பற்றி பிரஸ்தாபித்தாள். அக்கடிதங்களில் இரண்டு பேரும் இலங்கை வருவதாக குறிப்பிட்டதை படித்துக்காட்டி இன்ப உணர்வுகளில் உழன்றாள்.
இக்கிரிகொள்ளாவ லரீபா அபூபக்கர்
அக்ஷயாவுக்கு நிர்மலாவை நேரடியாகவோ புகைப்பட வாயிலாகவோ தெரியாது. அவளுடன் கடிதங்கள் வாயிலாகவும், தெலைபேசிவாயிலாகவுமே இற்றைவரை அன்பைப் பரிமாறியுள்ளாள். அவளைக் காணவேண்டும் என்ற பேரவா அவளுக்குள் நீண்ட நாட்களாக இருந்தும் அது இற்றைவரை நிறைவேறாத கனவாக இருந்தது கவலையாக இருப்பினும், அது இன்று நனவாக மாறுகிறது. அத்துடன் தனது கணவனின் வருகையும் அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
நிர்மலா இற்றைவரை தனக்கு ஒரு போட்டோ கூட அனுப்பவில்லை என்ற மனக் குறை அக்ஷயாவுக்கு இன்றோடு நிறைவேறுகிறது. இருப்பினும் கணவனின் வருகைக்காக எயாபோர்ட் சென்றாலும் நிர்மலாவை எவ்வாறு இனம் காண்பது என்பது அக்ஷயாவுக்கு மனப் போராட்டத்தைக் கிளப்பியது.
கடிதங்கள் வந்து இரண்டு நாள் கழிந்தது. காலை புலர்ந்து, நேரம் 10.00 மணி என்பதை கடிகாரம் சுட்டியது. இன்று 4.30 மணிக்கு கனடா பிளேட் வரும் என்பதை ரமேஷ் தொலைபேசியில் குறிப்பிட்டது, அவளது மன ஆவலை தூண்டிய வண்ணமிருந்தது. தமது வேலைகளை மிக வேகமாக முடித்துக்கொண்டு, தனது மாமாவின் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு, அக்ஷயாவும் அம்மாவும் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டனர்.
18
 

அரைமணி நேரத்தில் விமானம் வந்து சேர்ந்துவிடும் என்று நிலையத்தில் அறிவிக்கப்பட்டது.
சற்று நேரத்தில் விமானம் தரையிறங்கி பயணிகள் தங்களது உறவுகளை கண்டு ஆசுவாசித்த வண்ணமிருந்தனர். அதில் தனது கணவன் ரமேஷ் வந்து கொண்டிருந்தான். அவனது வருகை, அக்ஷயாவுக்கு பேரதிர்ச்சியைத் தந்தது. ரமேஷடன் ஒரு பெண் உரையாடிய வண்ணம் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். இருவரும் மிக அந்நியொன்னியமாக பேசிக் கொண்டு வந்தனர். இக்காட்சியைக் கண்டது அக்ஷயாவுக்கு ஏமாற்ற உணர்வைத் தந்தது. தலைகால் சுற்றுவதான பிரம்மை ஏற்பட்டது.
தலைசுற்றிக் கீழே விழுந்தாள், அக்ஷயா. அக்கம் பக்கத்தில் நின்றவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் அவ்விடத்தே வந்து குவிந்தனர்.
அக்கஷயாவின் அம்மாவும், மாமாவும் அவளைத் தண்ணிர் தெளித்து தூக்கினர். அருகே வந்த ரமேஷ் பதற்றத்துடன் என்ன என்று விசாரித்தான். எந்த ஆக்கபூர்வமான பதிலும் கிடைக்கவில்லை. அக்ஷயாவின் அம்மா “சே.” என்று முகத்தை சுழித்தாள். மாமாவும் ஒன்றும் பேசாது மெளனித்தார். அக்ஷயா மயக்கத்திலிந்து எழுந்து பிரம்மித்துப் போய்க்கிடந்தாள்.
ரமேஷ் ஆவேசத்துடனும், ஆக்ரோசத்துடனும் “என்ன அக்ஷயா..? என்ன இங்க நடக்குது. என்ன பிக்கப்பண்ண வந்த நீங்கள், ஏன் இப்படி நடக்கிரியள்? என்று வினவினான். அருகில் நின்ற அக்ஷயாவின் மாமா: “என்ன ரமேஷ் மனசில நினைச்சிட்டு இருக்கீங்க? இங்க ஒன்டு, அங்க ஒன்டு அப்படித்தானே. உங்களையும் நாங்க நம்பினோமே ! என்றார்.
உடனே குறுக்கிட்ட ரமேஷ் “எதையும் சரியாக விளங்கிக் கொள்ளாம, விசாரிக்காம நீங்க உங்க பாட்டுக்கு முடிவெடுத்தா அதற்கு நான் என்ன செய்யலாம்.? இப்ப என்ன நடந்திட்டு?’ என்றான்.
“இந்தப் பொண்ணு யாரு?’ அக்ஷயாவின் அம்மா விசாரணை செய்தாள்.
“இந்தப் பொண்ண பிளேன்ள மீட் பண்ணினேன். நம்ம வீட்டு எட்ரஸ் தந்து இங்க உள்ள கீதாவ காட்டச் சொன்னாள். நான் நம்ம வீட்டு எட்ரஸ் என்றதால அச்சப்படாம கூட்டி வந்தேன். கீதா இவள் பிரண்டாம்.”
அப்போதுதான், அக்ஷயா தலை நிமிர்ந்து பார்த்தாள். “நீதான் நிர்மலாவா? நான்தான் அக்ஷயா. நான்தான் கீதான்ட புனைப் பெயர்ல ஆக்கங்கள எழுதினேன். என்ன மன்னிச்சிடு. சொரி” என்று கூறி கணவனின் அருகில் சென்று கரங்களைப் பற்றினாள், அக்ஷயா.
சந்தோச அலை மெல்ல அனைவர் முகத்திலும் வீசத் தொடங்கி, ஆனந்தம் பொழிந்தது.
19 UG - 21

Page 12
?
------------_. 一、
:
புகழப்பட்ட இரவே
சின்னச்சின்ன கனவுகளில் ' என் கண்கள் எரிகிறது
முகத்தில் நீ அழுகிறாய் :I பசி என்னைத் தவிர்த்துவிட்டு
வாழ்வின் இன்ப ஒடங்களளெல்லாம் சென்றுவிட்டன ஏகாந்தங்கள்
தடுக்கப்பட்டதாகவே | எனக்குப் பசிக்கிறது
என் நிறங்களில் புதையல் மங்களான நாட்களில் தான் கடத்தயாராகும் துப்பாக்கியாய் இ என் பாதைகளின் முடிவு குறித்து
எனக்கே தெரியாமல் நான் போதல் பற்றிய
மிகப் பெரிய சந்தேகங்களில்
நம்பிக்கையிழப்பு விழுகிறது.
மீதியானவையெல்லாம் தி பரந்த வெளியொன்றில்
தேய்ந்த பாதை அடிச்சுவடுகளில் என் ஜீவிதத்தின் தேடல்களில்
சில சந்தோசிப்புக்களாவது இருந்திருந்திருந்தால்.
ஆனால் 繼琳 நோன் காய்கிறேன்
மிகக் கொடுமையாக பசிக்கிறது
திரும்பத்திரும்ப வரும் வாழ்வின் மீதான துறவு
ஃ இன்னும்.
அறபியில் - பர்ஹான் அல் ஆயித்
*鹰
- 罰
.
 
 
 
 
 

தொலைந்துபோ(፲j' ̇ இன்பத்தின் வர்ணிப்பை
பிந்திப் 5 удft;" காவம் தேற்றுகிறது
சொந்த மண்ணின் கண்றுை நட்சத்திரங்களின் அலங்காரங்களை பேசவேண்டிய வார்த்தைகளின் தவிப்பை ஈரம் கசிந்த மனஓர்மம் புசிக்கிறது
மEல் முகட்டில் சுடறை பிண்ணி |
உப்புக்கரிக்கும் பட்டினில் :
பொழுதைப் ருேட்டி
யூர்ே விதி மூடியிரு க்கிறது 枋 تلط
萎
ஏமாற்றப்பட்ட வரலாற்றின் குரல்
கொட்டை எழுத்துக்களில் 邯撃、 துயரக் கதைகளுடன் | 攏擱 பத்திரிகையில் பிரசுரமாகின்றன
ஐசம் சேர்ந்து ' நறைத்தது வயது :
*
சிறு புள்ளியும் மாறாது
வெட்டி மறைக்கப்பட்டு !
மேலும் கரைந்தது
ஆர்வீகப் பயணம்
丽丽邸吓 們"T
鼬
羈邯豎
畿 體 髓
蚤
ܐܸܠܔܼ
蚤鬣 鬣臺巒量 壬
EHRHEIGHTT.
撒 閭
था कि

Page 13
தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் ஏ.எப்.எம். அஷ்ரஃப் தன்னுடைய கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து "அறுவடைக் காலமும் கனவும்” எனும் பெயரில் தந்துள்ளார். திருமலை அஷர..பின் மேற்படி நூல் பெருவெளி பதிப்பகத்தாரால் வெளியிடப் பட்டுள்ளது. புத்தக ஆக்கம் தொடர்பாக நேர்த்தியான முறையில் ஆக்கப்பட்டுள்ள இத் தொகுதியில் 64 பக்கங்களைக்கொண்ட 21 கவிதைககள் கோர்க்கப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் தென்கிழக்குப் பல்கலைக்கழக அவைக்காற்றும் (ஆ.மு. ஷரிபுதீன்) அரங்கில் அப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தினால் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தத்துவ நிலை:
கடந்த 40 ஆண்டுகளாக மேற்கைரோப்பிய சமூகத்தின் அரசியல், பொருளாதார, கலாசாரத் தளங்களில் குறிப்பிடத்தக்க பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றங்களைப் பற்றி விவாதிப்பபவர்கள் குறித்த இக்காலகட்டத்தையும் நவீனத்துவ (Modernism) காலக்க கட்டமாகவே கருதுகின்றனர். நவீனத்துவமானது முதலாளித்துவ மற்றும் பொருள் முதல்வாத கருத்தாக்கங்களின் பிரசவமே என்று ஒரு பரவலான கருத்துநிலை உள்ளது. முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பில் கைத்தொழிலின் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சி தொழிலில் அந்நியமாதல் (labor Alienation) என்ற புதிய கருத்துருவாக்கத்தையும் ஐரோப்பிய மெய்யியலிற் தோற்றுவித்தது. அதனால் வீடுகள் முதலிய பல்வேறு இடங்களில் உற்பத்தியாகும் பொருட்கள்கூட ஒரு பல்தேசியக் கம்பெனியின் வர்த்தகப் பெயரில் சந்தைக்கு வரத்தொடங்கின.
அத்துடன், சந்தைத் தேவையை அடிப்படையாகக்கொண்டு உற்பத்தி செய்வதற்குப் பதிலாக உற்பத்தியாளனை மையமாகக்கொண்டு உற்பத்தி நடைபெறத்தொடங்கிற்று. அதாவது உற்பத்தியாளனே நுகர்வோனின் தேவையைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தொழிற்படத் தொடங்கினான். ஆக நுகர்வோனின் விருப்பமும் அவனது உளநிலைமைக்கும் நுகர்வுச் சக்திக்கும் ஏற்றவாறில்லாமல் ஒருவகைத் தெரிவுத்திணிப்பு அவனை அறியாமலே அவனுக்ககுள் நிகழ வைக்கப்படுகின்றது. இதனால் நுகர்வோன் அவன் தன் சுயதெரிவுச் சுதந்திரத்திலிருந்து பூரணமாக அந்நியப்படுத்தப்பட்டான்.
உலகமயமாதல் (Globalization) எனும் எண்ணக்ககரு கருக்கட்டத் தொடங்கியதன் பின்னர் அதன் இன்னொரு தத்துவார்த்த பக்கவிவைாக பின்னவீனத்துவம் (Post Modernism) பேசப்படத் தொடங்கிற்று. உற்பத்திப் பொருளாதாரத்திலும் நுகர்வுப் பொருளாதாரத்திலும் ஏற்பட்ட இந்த மறை மாற்றமானது அரசியலிலும் ஒரு சமாந்தரமான செல்வாக்கைச் செலுத்த ஆரம்பித்தது. இப்போக்கின் வளர்ச்சியானது தனிநபர் ஆராதனையை மீண்டும் சமூகத்தில் வலோத்காரமாக வழக்கத்திற்குக் கொண்டுவந்தது.
இதனால் முன்னர் நவீனத்துவம் சமுதாய வாழ்க்கையில் ஏற்படுத்திய போலியான ஜனநாயக கலாசாரத்தில் கூட ஒரு தீவிர பின்னடைவு ஏற்படத் தொடங்கிற்று. இது தனிநபரின் பெருமைகளை கதாநாயக வழிபாட்டுடன் பிரலாபித்துப் பேசும் ஒரு துறையாக அரசியலை மாற்றியது. அத்துடன் நவீனத்துவம் தோற்றுவித்த ஜனநாயக கலாசாரத்திற்கு மாற்றீடாக புலக்காட்சிக்குத் துலங்காத ஒரு புதிய சர்வாதிகாரம் தோற்றுவிக்கப்பட்டது. புதுப்புது, சிறுசிறு
Utah - 21 22
 

வர்த்தகக் கம்பெனிகள் அரசியற் கட்சிகள் என்ற போர்வையில் தோற்றம் பெற்றன. அரசியலானது சந்தைப் பொருளாதாரத்தின் விற்பனைச் சரக்காக மாற்றம் பெற்றது. என்றபோதிலும் கூட இனக் குழும ஜனநாயகம், Ethnicity, இனவிடுதலைப் போராட்டம், பெண்ணியம் என்றெல்லாம் நல்ல பல புதிய புதிய கருத்தாக்கங்களும் நேரத்திற்கு நேரம் இப்போக்கினால் வெளிக்கிளம்பிற்று.
பிணி நவீனத்துவம்:
இந்த மாற்றங்களின் பின்னணியில் பின்னவீனத்துவம் பற்றி நாம் பேசலாம். g86ůG6J60ö6007áša5(56ílsi L6a5 se Jubu a5T6uáša5ůL55636)(3uu (Early Stage) Fredric Jensan jd J Post Modernism என்ற கட்டுரையில் மிக ஆடம்பரமாக இம்மாற்றங்களைக் கூறுவதற்கு மேற்பார்த்த சமூக அரசியல் நிலைமையே காரணம் எனக்கருதப்படுகின்றது.
*பின்நவீனத்துவமானது பிரதியீடுகளின் (Substitute) அபரிதமான பெருக்கங்களுக்கும் மேல்தட்டு வர்க்க ஆடம்பரங்களினதும் கேளிக்கைகளினதும் பித்தலாட்டங்களுக்கும் கலாசார வடிவத்தையும் அழகியல் பெறுமானத்தையும் சிலவேளைகளில் வழங்கிவிட்டனவா என்ற விமர்சனமும் இன்று எழத் தொடங்கிற்று". வியாபார சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற பல்தேசியக் கம்பெனிகளினது விளையாட்டு மைதானங்களாக இன்றைய உலகம் ஆகி விட்டமையின் பிரத்தியட்சம் பல்வேறு சமயங்களிற் தோற்றங்காட்டி நிற்பதுவே இத்தகைய யதார்த்தமான விமர்சனங்களுக்கான காரணம் எனக்கொள்ளவும் இடமுள்ளது.
எனினும் நவீனத்துவததின் துவத்துக்கு முந்திய காப்பிய காலப் பிரிவிலும் மற்றும் தத்துவச் சார்பும் வித்துவச் செருக்கும் சிற்றிலக்கியப் பெருக்கம் என்பனவும் கலை, இலக்கியப் பண்புகளாகக் காணப்பட்ட காலப்பிரிவிலும் இலக்கிய வடிவங்களிலும் இலக்கியப் பாடு பொருளிலும் தவிர்க்க முடியாதவாறு நவீனத்துவக்கால கலை - இலக்கிய வடிவங்கள் - இவற்றுக்கான பிற்கால மறுதலிப்புகளை நாகரீகமாக்கின. இதனால்தான் பின்நவீனத்துவமானது நவீனத்துவத்தின் தோழில் ஏறி நின்று தன் உயரத்தை நவீனத்துவத்திலும் பார்க்க உயர்த்திக் காட்டுகின்றது என்ற விமர்சனத்தை பொருளியல் மற்றும் அரசியல் வரலாற்றினூடாக நோக்குபவர்கள் புரிந்துகொள்ள முடியும்.
என்றபோதிலும், நவீனத்துவம் பெருமளவுக்கு சிரத்தைக்கு எடுத்த பாட்டாளிவர்க்க சர்வாதிகாரப் போர்ப் பிரகடனங்களுக்கும் தேசியவாத ஆக்ரோஷங்களுக்கும் நேராகவும் கிடையாகவும் இன்னும் சொன்னால் அதைவிடவும் அபரிமிதமான அளவுக்கும் இன்றய இலக்கியங்களிலும் அழகியலிலும் இனத்துவப் போர்க்குரலும் சிறு தேசியங்களின் அபலைக் (அவலக்) குரலும் கருத்தியல் ரீதியாக செல்வாக்குப்பெறத் தொடங்கிவிட்டது. அதற்குத் தேவையான கோட்பாட்டு ரீதியான அடைக்கலத்தை பின்னவீனத்துவ அழகியல் வழங்கிவருகின்றது பிரத்தியட்சமான அம்சம்ாகும். அதனால்தான் இலக்கியத்தில் பின்னவீனத்துவத்துவப் போக்கிற்கு எதிரான காத்திமான மெர்சனங்களைக்கூடத் துடைத்தெறிய மேற்பார்த்த சமூக அரசியல் மற்றும் கருத்தியல் சூழல் துணை புரிகின்றது.
இனத்துவ இலக்கியம்:
இந்த அடிப்படையில்தான் போர்க்காலப் பாடல்களை நாம் அறிந்துகொள்ள முடியும். பின் நவீனத்துவ பொருளாதாச் சூழலும் அரசியல் சூழலும் இனத்துவ அரசியலையும் இன விடுதலைப் போராட்டங்களையும் அதன் அடிப்படை நியாயங்களுடன் புரிந்துகொள்ளும் மனோநிலைக்கு இலக்கியத்தின் தீவிர வாசகர்களை வளர்த்து விட்டுள்ளது. பின் நவீனத்துவ அரசியற் சூழலால் இனத்துவ அரசியலின் கள நியாயம் வலியுறுத்தப்பட்டு அது இன விடுதலைப் போராட்டத்தின் பின் புலங்கள் உச்ச அளவில் புரிந்துகொள்ளப்பட வழி சமைத்தது. இதனால் மரபுமுறை யுத்தம் புறந்தள்ளப்பட்டு புதிய புதிய போர்த் தந்திரங்களும் உத்திகளும் உருவாயிற்று. பாரம்பரியமாக மிகப்பாரிய அளவில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒரு வல்லரசின் அல்லது ஒரு நாட்டின் அல்லது ஒரு பேரினவாத ஒடுக்குமுறை அரசின் இராணுவ பலத்தை ஒற்றை மனிதன் தன்னந் தனியே நின்று தாக்கியழிக்கும் போர்த்திறனை உருவாக்கிய கருத்துநிலை யதார்த்தம் பின்னவீனத்துவ கலாசாரமாயிற்று. இது இனத்துவ அரசியலின் - இனவிடுதலைப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத புதிய பிரகடனம் என ஆயிற்று.
23 List - 21

Page 14
இதன் பக்க விளைவாக தனிநபர் பயங்கர வாதமும் ஆயுத பேரமும் அந்த ஆயுத பேரத்தின் கேள்விச் சமநிலைக்காக எவ்வழியிலும் பணத்தைத் தேடிக் கொள்ளல் ஹலால்' (ஆகுமாக்கப்பட்டது) என்கின்ற மனோபாவமும் நம்மத்தியில் தவிர்க்க முடியாமல் ஏற்படுத்தப் பட்டுவிட்டது. அத்துடன் பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிரான இன விடுதலைப் போராட்டம் ஹலாலாக்கி விட்ட நிர்ப்பந்தங்களில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்ற கருத்து நிலை கூர்மையான அறிவு நிலை வாதிகளிடம் கூட தோற்றுப் போகும் நிலைமை இன்று ஏற்பட்டு விட்டது என்பதே இன்றய புற நிலை யதார்த்தமாகும். இதனால்தால் புவிசார் அரசியலினதும் (Geopolitics) பூகோள மயமாக்கலினதும் (Globalization) அமெரிக்க ஒற்றை முகாம் மேலாண்மையினதும் போர்த் தந்திரோபாயவியல் இனப் போராட்டத்தை ஒட்டுமொத்தப் பயங்கரவாதமாக மறுதலித்த போதிலும் மறைந்த ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லாஹற் கொமெய்னி தலைமைதாங்கிய சர்வாதிகாரி ஷாவுக்கு எதிரான போராட்டத்தையும் அதன் பின்னணியிலான அரசியலையும் கூட பின்நவீனத்துவ அரசியலாக சமகால ஐரோப்பிய மெய்யியல் பார்க்கப் பழகிக்கொண்டது.
ஆக, இனத்துவ அரசியலின் தவிர்க்கமுடியாத ஒரு நிலைப்பாட்டை ஈழத்து தமிழ்க் கவிதைகளும் இலக்கியமும் எடுத்துள்ளன. அந்த புத்தம் புதிய இலக்கியக் கோட்பாட்டுச் செல் நெறிச் சூழலின் மற்றுமோர் புதிய பரிமாணமாகத்தான் திருமலை அஷரஃப் எழுதிய அறுவடைக் காலமும் கனவும் பார்க்கப்படத் தக்கதாகத் தெரிகின்றது.
பொருள்கொள்ளியல்:
இலக்கிய விமர்சன மெய்யியலாளர் கலாநிதி சோ. கிருஷ்ணராஜா இலக்கியத்தின் பொருள் கொள்ளியலின் நோக்கங்களை பின்வருமாறு நிரற்படுத்துகின்றார்.
01. படைப்பினூடாக கலைஞனையும் அவர்ைசார்புநிலையையும் புரிந்துகொள்ளல் 02. ஸ்தூலமானதும் வரலாற்றுரீதியானதுமானநிலைமைகளை மனதிற்கொண்டு கருத்துக்களைப்
புரிந்துகொள்ளல் 03. படைப்பிலக்கியங்களின் பிறப்பியல்பு முறையைக் கையாண்டு விளக்குதல் 04. வழவம், மொழிநடை, கலைஞனதும் அவனது காலப் பிரிவினதும் ஆண்மீக உணர்வுகள்
என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கலை இலக்கியங்களை விளங்குதல்
அவரின் வகைமாதிரியை ஒரு முறையியல் நோக்காகக் கொண்டு திருமலை அஷ்ரஃபின் “அறுவடைக் காலமும் கனவும்” கவிதைத் தொகுதியை இனத்துவ அரசியலின் இன்னொரு பக்கப் பார்வையின் பின்நவீனத்துவ சார்புநிலைப் பாடல்களாக நாம் பார்க்க முடியும்.
கலாநிதி யோகராஜா தனது முன்னுரையிலே சொல்வதுபோல அகதிமுகாம் வாழ்க்கை, செக் பொயின்ற், பேரினவாதத்தின் திட்டமிட்ட செயற்பாடுகள்' என்பன போர்க்காலப் பாடல்களின் பிந்திய பொருள்கொள்ளியல் வெளிப்பாடுகளுக்கு நல்ல உதாரணங்களாக சராசரி வாசகர் களாலும்கூட பார்க்கப்படலாம்.
கவிதை வாசிப்பில் தீவிர ஆர்வமுள்ள வாசகனாக நின்று பார்க்கும்போதும் பின்நவீனத்துவ அம்சங்களைப் புரிந்துகொள்ள ஆவலுள்ள இலக்கிய - மெய்யியல் முாணவனாகப் பார்க்கின்றபோதும் இனத்துவ அரசியல் ஆயுதப் போராட்டத்தினிடையே வலோத்காரமாக இழுத்து விடப்பட்ட, ஆனால் பங்காளிகளாக மட்டுமே இணைக்கப்பட்டு, அதிலே தன் முகவரியைப் பரிதாபகரமாகத் தொலைத்த துரதிஷ்டமான ஒரு சமுகத்தின் பிரதிநிதியாக நின்று பார்க்கின்ற போதும் அறுவடைக் காலமும் கனவும் என்பது இத்தொகுதியின் முத்திரைக் கவிதையாக அமைந்திருப்பதை அறிவும் உணர்ச்சியும் ஒருங்கே இணைந்து ஒத்துக் கொள்ளுகின்றது. இதனால்தான் போலும் கவிஞர் திருமலை அஷரஃப் இந்தக் கவிதைத் தொகுதிக்கு இத்தலைப்பையே நாமமாக சூட்டியுள்ளார்.
வரம்புகளால் எல்லை வகுத்து இனவாத நீர்பாய்ச்சி துப்பாக்கிகளால் உழுது தவிர்க்க முடியாமல் விதைக்கப்பட்டபோர் எதிர்ப்புக்களை'களை'பிடுங்கி
US - 21 24

காவல் அரணமைத்து விளைத்த வேளாண்மையாய்
இப்போது அழிவுகள் அறுவடை செய்யப்படுகின்றன.
முரணிதொடை அனுபவங்கள்:
இனத்துவ விடுதலைப் போராட்டத்தின் முரண்தொடை அனுபவங்களுள் பிரதானமானது தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மற்றுமொரு இனக் குழுமம் இப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் தவிர்க்கப்பட முடியாத அந்தரங்கப் பங்காளியாக இருந்தபோதும் பரிதாபகரமாக இப்போராட்டத்தின் மூத்த பங்காளிகளிடமிருந்து எதிர்மறைப் பக்க விளைவுகளுக்கு முகங் கொடுத்தமையாகும். இந்தத் தளத்தில் நின்று பலர் இலங்கையில் அற்புதமான கவிதைகளைப் படைத்துள்ளனர். உணரப்படுவதற்கு கடினமான மற்றும் கசப்பான இந்தத் தளத்தில் நின்று கவிதை யாத்தவர்களுள் அபாபீல்கள் கவிதா வட்டத்தினர், ஒட்டமாவடி அரபாத், அஷ்ரஃப் சிஹாபுத்தீன் முதலியோர் மற்றும் பெருவெளிக் கவிஞர் கூட்டம், இடம்பெயர்க்கப்பட்ட குடாநாட்டு முஸ்லிம் இளங்கவிஞர்கள் சிலர். இப்படிப் பல்வேறு தரப்பினர் இந்த எதிர் விளைவுகளில் பிரகாசமான கவிதைகளை யாத்துள்ளனர். இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான ஒரு புதிய படைப்பாளிக்கான தகுதியை இத்தொகுதி திருமலை அஷ்ரஃபிற்கு வழங்கியுள்ளது.
அதுபோல "மே புதுங்கே தேசயய்' என்ற கவிதையையும் இனத்துவ இலக்கியப் படைப்புக்களின் மற்றுமொரு தீர்க்கமான இலக்காக நாம் இனங்காட்ட முடியும். ஏனெனில் பின்னவீனத்துவப் பகைப்புலத்தில் நின்று பேசப்படத்தக்க சில வெளிப்படையான யதார்த்தங்களை தைரியமாக அதேவேளை அப்பட்டமான பிரச்சாரப் பண்புக்குப் பதிலாக, ஆனால் பொருத்தமான படிமங்களைக் கொண்டதான கவித்துவ வீச்சுக்களாலான அழகிய தொடர்களை திருமலை அஷ்ரஃப் நிர்மானித்துள்ளார்.
துறவைத்துறக்கும் சொகுகு வாழ்க்கையிலும் "கொன்றுகுவியுங்கள் 'கொளுத்தி எறியுங்கள்" என்பதை தாரகமந்திரமாய் தர்ம போதனையாய் சொல்லும் முற்றும் துறந்த துறவிகள் எனத் தொடங்கி കെTങ്ങബub 6ണഖ, കങ്ങബUTക്സി மாதுடன் மதுவும் மருவும் அறமாகி uைாய்யும் புரட்டும் கோலோச்ச பஞ்சசீலங்களைத் தொலைத்துநிற்கும் (அ) தர்மராஜ்ஜியமாய் நாடு
எனவரும்போது பேரினவாதத்தின் குறியீடாக மனத்தளவில் பஞ்சசீலத்தின் குறியீடான துறவைத் துறந்த அங்கிதாரிகள் சித்திரிக்கப் படுகின்றனர். நவீனத்துவ இலக்கியத்தின் பொருள் கொள்ளியல் அம்சமான சமூக யதார்த்த வாதம் பின்நவீனத்துவச் சிந்தனைப் பாங்கான கவிதைகளில் இழையோடி வருவது தவிர்க்க முடியாதது என்ற ஜேம்சனின் எடுத்துக் காட்டுக்கு இக்கவிதை நல்லதோர் உதாரணம்.
அதேபோல ஜெயவேவா என்ற கவிதையிலும்கூட இத்தகைய இழையோட்டத்தை நாம் காண முடியும். சந்தர்ப்பவாத சூனிய முடிச்சுக்களும் அமைச்சுக் கதிரைகளுக்காகப் பேரம் பேசப்படும் ஊடகங்களாக இனத்துவ அரசியலைக் மிகக் கச்சிதமாகக் கையாளும் வியாபார நுட்பமும் தெரிந்த இக்கால நமது அரசியலின் யார்த்தம் இங்கே அழகுற சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
uðზodiტuà uóõodff(ჩuბ விவாகஞ் செய்வதாய்
அடிக்கடி விபச்சாரம் செய்யும் நமதுஅரசியல்வாதிகள் என வந்து
25 படிகள் - 21

Page 15
ஐந்தை ஐம்பதாக்கி
இன்னும் அத்துடன் ஐம்பதைக்கூட்டி U60601st ஐம்பது கழிவுகொடுத்து ஐம்பதைக் களவுங்கொடுத்து ஐந்தையும் நஷ்டங்காணும் அரசு
என்ற பாடல் மேற்சொன்ன சமூக யதார்த்த வாதத்தின் பொருள்கொள்ளியலை உள் வாங்கிய பின்னவீனத்துவக் கவிதைகளாக இனங் காணத்தக்கன.
அமைப்பியல் நியமம்:
பொருள்கொள்ளியலின் அடிப்படையில் இத்தொகுதியை நாம் பார்க்கின்றபோதும் மேற்பார்த்த கவிதைகள் ஏன் உரத்துச் சொல்லப்படுகின்றதெனில் பின்னவீனத்துவ முகங் காட்டுவதற்காக மட்டுமல்லாமல், படைப்புக்களின் அமைப்பியல்வாத அடிப்படையிலும் படைப்பியலின் முழுமைவாத அடிப்படையிலும் அவை முதலிலே கவிதைகளாக இனங்காணப் படுவதினாலேயாகும்.
ஒரு கவிதையைப் பொறுத்த வரையில் அது எப்படியிருப்பினும் எந்த அரசியல், பொருளியல், மொழியியல், மெய்யியல், பொருள்கொள்ளியல் அடிப்படையில் பார்க்கப்படினும் படைப்பியல் ஒழுங்கமைப்பிலும் அழகியல் பரிமாணத்திலும் முதலில் அது கவிதையாகக் காணப்பட்டிருக்க வேண்டும். கவிதையென்பது எல்லாவற்றுக்கும் முதலில் ஒரு கலைப் படைப்பாகும் என்ற கருத்து நினைவில் உரத்த சத்தத்துடன் ஜெபிக்கப்ட வேண்டியது அவசியமாகும். சிறுகதையைவிடவும், நாவலைவிடவும் மிகுந்த அழகியல் கரிசனையுடன் மொழி கொண்டு தீட்டப்படும் இன்னொரு வகை நுட்பமான ஒவியம்தான் கவிதை. ஆகவே, அழகியல் அடிப்படையிலும் அமைப்பியல் அடிப்படையிலும் நாம் அவதானிக்கின்றபோது ஒரு கலைப் படைப்பிற்கான அமைப்பியல் முழுமையும் அழகியல் நிர்மாணமும் அதில் செப்பனுறக் காணப்படவில்லை என்றால் முதலில் அது ஒரு கவிதை என எந்த ஒரு ஆய்வாளனும் அங்கீகரிக்கமாட்டான். எனவே, முதலில் கவிதைதானா என்ற அம்சத்தை முன்னிறுத்தி அந்தத்தராசின் அங்கீகரிக்கப்பட்ட உயர்ந்த நியமங்களினூடாக இந்தத் தொகுதியை பார்க்கின்றபோது இதில் மேற்பார்த்த அம்சங்களின் அருந்தல் தன்மை மிகமிகக் குறைவு எனக் குறிப்பிடலாம்.
ஆரம்பத்தில் தொகுக்கப்பட்ட சில கவிதைகள் மேற்போந்த நமது நியமங்களுக்குள்ளே பிடிபடாமற்போனாலும் கூட போகப்போக அந்த நிலைமை காணாமற் போய் விடுகின்றது. குறிப்பாகச் சொன்னால் இத்தொகுதியில் தொடர்ந்து இன்னுமின்னும் மேலே போகப்போக கடலின் ஆழத்திலேதான் முத்துக்கள் அகப்படுவதுபோல பல அற்புதமான கவிதைகளை நாம் சுழியோடுவதன் மூலம் பெறுதல் சாத்தியப்படுகின்றது. மேலே போகப்போக சிறந்த அழகியல் கட்டுமானப் படிமுறையும் நுட்பமுங் கொண்ட கவிதைகளை நாம் தொட்டுக் காட்ட முடியும். உதாரணத்துக்காக எல்லை கடத்தல், ஏ. ஆக்கிரமிப்பாளர்களே, மீண்டும் ஒருமுறை முதவியனவற்றைச் சிறந்த பதச்சோறுகளாக எடுத்துக் காட்ட முடியும். இனத்துவ அரசியலின் மிகப் பிந்திய படிமங்களை, அழகிய கவிதைக் கட்டமைப்பை, அழகியல் கவர்ச்சியில் பூப்படைந்த மொழிக் கையாழுகையை இதன்மூலம் நாம் காணமுடியும்.
முடிவுரை:
நாம் முதலில் குறிப்பிட்டமைபோல ஆரம்பத்தில் வைத்துக் கோர்க்கப்பட்ட ஓரிரு படைப்புக்கள் இந்தத் தொகுதியிலிருந்து தவிர்க்கப் பட்டிருப்பின் இதன் அமைப்பு ரீதியான, அழகியல் ரீதியான, படைப்பியல் நிர்மாண ரீதியான இன்னும் உச்சமான தர அளவை இத்தொகுதி பெற்றிருக்க முடியும். ஆனால் ஒரு படைப்பாளியின் முலாமிடப்படாத வளர்ச்சியை அறிந்துகொள்ள அத்தகு கவிதைகளும் சேர்க்கப்ட்டிருத்தலே சிறப்பானது என்று வாதிடப்படும்போது அந்தப் பிரகாசமான யதார்த்தத்தின் முன்னால் எமது விமர்சனம் மெளனம் சாதிக்க வேண்டிவரும், அவை முதலில் கவிதைகளாக இருப்பின்.
ty - 21 26

இக்பால் உலகம் போற்றும் சர்வதேசக் கவிஞர். தூங்கிக் கிடந்த மனித உள்ளங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்பி பேனா முனையில் செயலூக்கம் கொடுத்த அவரின் படைப்புகள் காலத்தால் அழியாதவை. மனிதத்தின் நோக்கம் அறியாதிருந்த சமூகத்தை ஓர் இலட்சியவாத சமூகமாகக் கட்டமைக்க அரும்பாடுபட்டவர்தான் கவிஞர் அல்லாமா இக்பால். . . . v.
(முன்னைய இந்தியாவில்) தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் ஸியால்கோட் நகரில் 1877ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம் திகதி இக்பால் இப்பூவுலகின் தென்றல் காற்றைச் சுவாசிக்கலானார். சிறுபராயத்திலே அல்குர்ஆனையும் இஸ்லாமியப் போதனைகளையும் அரபு மற்றும் பாரசீகம் போன்ற மொழிகளையும் கற்றுக்கொண்டார். “கவிஞன் என்பான் பிறப்பவன், உண்டாக்கப் படுபவனல்லன்” என்ற கூற்றை முழுமையாக நிரூபித்துக் காட்டினார். இக்பால் பள்ளிப் பருவத்திலேயே கவி புனைவதிலும் கவி பாடுவதிலும் அதிக திறமைகாட்டினார். குறுகிய காலத்திலேயே அவரது மொழிப்புலமையையும் சொல் வீச்சையும் கண்ட பிரபல கவிஞர் மிர்சா தாக் “இக்பாலின் கவிதைகள் திருத்தத்தையோ, மீள் பரிசீலனையையோ வேண்டாதவை” என்றார். : :
τταυγόήταυτό
- இன்னொரு வnசிப்பு -
எல்லலமுல்ல ஆலிப் அலி
இஸ்லாஹிய்யாஹற் வளாகம்
27
US - 21

Page 16
சேர் தோமஸ் ஆனல்டின் வழி காட்டலின்கீழ் இக்பால் மேலைத்தேய கலாசார நாகரிகங்கள் பற்றியும் தத்துவ சாஸ்திரம் பற்றியும் கற்றுத் தேர்ந்தார். 1894 ஆம் ஆண்டுகளில் இக்பால் தனது M.A. பட்டப்படிப்பின் பின்பு லாகூரில் ஒன்றன் பின் ஒன்றாக இரு அரச கல்லூரிகளில் பேராசிரியராகக் கடமை யாற்றினார். இக்காலம் 'பொருளாதாரக் கல்வி' என்றொரு நூலையும் எழுதினார். இதனைத் தொடர்ந்து கவிஞர் அவர் களுக்கு தமது மேற்படிப்பைத் தொடர் வதற்கு மேல்நாடு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் இங்கிலாந்து சென்று அங்கு பரிஸ்டர் படிப்பிலும் தத்துவஞான ஆய்வுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பிற்பாடு கேம்பிரிட்ஜ் டிரின்டி கல்லூரியில் இணைந்து இரண்டு வருடங் களில் கலாநிதிப் பட்டமும் பெற்றார்.
இக்பால் ஆரம்பத்திலேயே மார்க்க அறிவைப் பெற்றிருந்ததால் மார்க்க உணர்வும் ஆன்மிக ஈடுபாடும் அவருள் அடர்த்தியாகவே வேர் விட்டிருந்தன. இதனால்தான் அவர் ஐரோப்பாவின் கேம்பிரிட்ஜ், மியுனிச் பல்கலைக்கழகங்களில் கற்றுத் தேரி னாலும் மேலைத்தேயம் என்ற இயந்தி ரத்தில் பல வெளிநாட்டு மூளைசாலிகள் சலவை செய்யப்பட்ட போதும் மார்க்க அடித்தளத்திலிருந்து அவரால் சற்றும் பிசகாதிருக்க முடிந்தது. அதனை அவர் இவ்வாறு கூறுகின்றார்.
*அறிவு எண்தலையில் சிலைகள்கொண்ட ஒரு கோயிலைக் கட்டியெழுப்பியது ஆனால் இப்றாஹீமை ஒத்த அன்பு அச்சிலைகளின் வீட்டை ஒரு க..Uாவாக மாற்றியது”
ஐரோப்பாவில் இருந்துகொண்டு ஆசியாவைப் பார்த்த இக்பாலுக்கு அங்கு அப்பிக்கிடந்த இருள் நன்கு
Uடிகள் - 21
புலனுட் பட்டது. அதனை அகற்றி ஒரு தீப்பந்தம் ஏற்றவேண்டியதன் அவசி யத்தை தனது பேனா முனையால் வார்த்தெடுத்தார். மேற்கின் அறிவியலும் விஞ்ஞான முன்னேற்றமும் ஆன்மிகமும் ஒருசேர எழுச்சிபெறவேண்டும் என்பதில் அவர் அவாவி நின்றார். கிழக்கில் இருள் படிந்துள்ளது பற்றி அவர் தனது நண்பர் அப்துல் காதிருக்கு எழுதியதொரு கவிமடலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
*எழுங்கள், கிழக்கின் அடிவானில் இருள் கப்பிக்கொண்டுள்ளது. நம் நெருப்பெழும் குரலால் (தூங்கும்) அவையில் விளக்கேற்றுவோம்”
மேல்நாட்டுப் படிப்பின் பிற்பாடு 1908ஆம் ஆண்டு இக்பால் இந்தியா திரும்பி சிறிதுகாலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இதன்போது தன் ஆன் மிகத்தை உரமூட்டவும் மக்களைத் தட்டி யெழுப்பிப் புத்துணர்வூட்டவும் 'அன்ஜ" மானே ஹிமாயத்' என்ற இஸ்லாமிய புத்தி ஜீவிகளின் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பல சேவைகளில் ஈடுபட்டார். 1919ம் ஆண்டு அதன் பொதுச் செயலாளராகவும் தெரிவானார்.
விரிந்த இலக்கிய உலகில் தனது கவித்துவப் படைப்பாற்றலால் முழு உலகையுமே அதிரவைத்தவர்தாம் கவிஞர் அல்ல்ாமா இக்பால். சமூகத்தின் எழுச்சிப் பிரளயமாகவே இவரது கவி வீச்சுக்கள் அமைந்துள்ளன. கருத்தாழ முள்ள, தத்துவார்த்தமான பல கவித் தொகுப்புக்களையும் ஆய்வு முடிவு களையும் இவ்வுலகுக்கு யாத்துத் தந்துள்ளார்.
இக்பால் 1903இல் முதன் முதலாக 'இல் முல் இக்திஸாத்' பொருளாதாரக் கல்வி என்ற உருது மொழியிலான நூலை எழுதினார். அவர் தனது முதலாவது கவிதைத்
28

தொகுப்பான "அஸ்ராரே குதி (இதயப் புதையல்) என்ற கவிதைத் தொகுப்பை 1915ஆம் ஆண்டில் பிரசவித்தார். அதன்பின் 'ருமூஸே பிகுதி (உள்ளத்தை இழப்பதன் இரகசியம்)' என்ற நூலை 1917இலும் 1923இல் 'பயாமே மஷரிக் (கிழக்கின் செய்தி) என்ற நூலையும் 'ஸபூரே அஜம் (கிழக்கின் செய்தி) என்ற நூலை 1927இலும் 'ஜாவித் நாமா (இக்பாலின் இளைய மகனின் பெயர். பாரஸிகத்தில் நித்தியத்துவம்' என்று பொருள்) என்ற நூலை 1932இலும் பஸ்சாய்-பாயத்-கர்த் அக்வாமே ஷர்க்' என்ற நூலை 1936இலும் மற்றும் 'அர்முகானே ஹிஜாஸ்' என்ற தொகுப்பை 1938இலும் எழுதி வெளியிட்டார். இவை பாரஸிக மொழியிலான கவி நூற்களாகும்.
முதலாவது உருது மொழிக் கவிதையான 'பாங்கே தாரா (பாலைவன மணியோசை)ஐ 1924ஆம் ஆண்டு வெளி யிட்டார். இது உலகப் பிரசித்திபெற்ற ஒரு கவிதை. அதனைத் தொடர்ந்து 1935இல் பாலே ஜிப்ரீல்", 1936இல் 'ஸர்மே கலின்' போன்ற நூற்களையும் எழுதினார்.
இக்பால் பல மொழிகளிலும் விற்பன்னராக முகிழ்ந்தார். அரபு, பாரஸிக மொழிகளைக் கற்றுத்
தேர்ந்தவாறே பின்பு ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழிகளிலும் புலமை பெற்றார். தனது தாய் மொழியில் மாத்திரம் அவரது சொல்லாட்சி நயக்க வில்லை. ஆங்கிலத்திலும் புலமை கண்ட விற்பன் னராகத் திகழ்ந்தார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய இரு நூற்கள் அம் மொழியிலான அவரது புலமையைக் காட்டுகின்றன.
ஆரம்பமாகவே பாரஸிக மொழி யில் புலமைபெற்ற இக்பால் அத்துறை யிலும் கவிதை எழுத முனைந்தார். பாரஸிக மொழி பல பெரிய கவிஞர்
29
களால் வளப்படுத்தப்பட்ட மொழி. அது மெருகேற்றப்பட்ட வார்த்தைகள் சேர்ந்த மொழி. தனது தத்து வார்த்தக் கருத்துக் களை அழகு ததும்ப மொழிய மிகப்
பொருத்தமான மொழி அதுதான் என்பதை நன்கு உணர்ந்து பல கவிதைத் தொகுப்புகளை அப்பாரஸிக மொழி
யிலேயே எழுதி யுள்ளார். ஈரானியர்கள் அல்லமா இக்பாலைத் தமது மொழிக்கு வளம் சேர்த்து உரமூட்டிய புலவராகக் கருதுகின்றனர்.
இக்பால் தேசியத்துக்குள் சுருங்கிய, ஒரு துறையோடு மாத்திரம் ஒதுங்கிய கவிஞரல்லர். அவர் உலகு அறிந்த சர்வதேசியக் கவிஞர். பலராலும் மெச்சப்படும் அறிஞர். மாபெரும் அறிஞர்களாக மதிக்கப்படும் மெள லானா மெளதுாதி, மெளலானா அபுல் ஹஸன் அலி நத்வி, மெளலானா அமீன் அஹற்ஸன் இஸ்லாஹி, முப்தி முஹம்மத் ஷபீ", அல்லாமா பின்னூரி மற்றும் ஷஹித் ஸெய்யித் குதுப் என பல அறிஞர்களாலும் ஆகர்சிக்கப்பட்டவர் தாம் கவிக்கோ அல்லாமா இக்பால் அவர்கள். “உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற குறிப்பாய்க் கூறத்தக்க ஒரு கவிஞர்தான் இக்பால்” என முஹம்மத் அலி ஜின்னாஹற் அவர்கள் இக்பாலைப் பாராட்டியுள்ளார்கள். அஸ்ராரே குதி கவித்ை நூலின் ஆங்கில மொழி யாக்கத்தைப் படித்த மேநாட்டு கவித்தலைகள் “இக்பால் கீழ் நாட்டின் இணையற்ற தத்துவ சாஸ்திரக் கவிஞர்’ என்று பாராட்டினர்.
படிகள் - 21

Page 17
மானிட சமூகத்தின் அடித் தளத்தின் இயக்கவியல் அசைவு பற்றி அல்லாமா இக்பால் அவர்கள் பெரிதும் சிந்தித்துள்ளார்கள். ஒரு கவிப்புரட்சியின் மூலம் மக்களைச் செயலாற்றுவதின்பால் தீவிரப்படுத்தினார்கள். இக்கொள்கை அவரது கவிதைகளில் பெரிதும் இழை யோடியிருப்பதைக் காணலாம்.
“செயலாற்றுவோர் முன்னேறுகின்றனர் ஒரு கணமாவது ஒய்பவர்கள் சதா சுழன்றுகொண்டே இருக்கும் காலச் சக்கரத்தில் சிக்கி நசுக்குண்டு விடுகின்றனர்.”
மானிட சுயம் சார்ந்த தத்து வார்த்தக் கருத்துக்களின் மூலம் தனிமனித சுதந்திரம், தனிமனித அபிவிருத்தி, ஆன்மிக வளர்ச்சி, இலட்சிய மனிதன் போன்ற கோட்பாடு களைத் தனது கவிதையின் அடி நாதமாய்க்கொண்டு செயலாற்றும் சமூகத்துக்கு அடித்தள மிட்டார். ஆது மட்டுமன்றி இவர் சமூக ஒருமைப்பாடு பற்றியும் எடுத்தியம்பினார்.
*தனிமனிதன் ஒரு சமூகத்தின் அங்கமாகவே இருக்கின்றான் தனித்த நிலையில் அவன் ஒன்றுமே இல்லை அலைகள் சமுத்திரத்தில்தான் அலை மோதுகின்றன
சமுத்திரத்திற்கு வெளியில் அது வெறுமையே!”
சமூகக் கட்டுப்பாடு, மனித
நேயம், சமூக ஒழுங்கு, ஜனநாயகம், சர்வாதிகாரம், பொதுநலவாயக் கோட் பாடுகள், தேசிய வாதம், பெண்களுக் குள்ள உயர் உரிமைகள், கல்வியின் முக்கியத்துவம், நவீனம், கலை, இலக்கியம் என சமூக, பொருளாதார,
Uடிகர் - 21
சமய, கலாசாரம் பற்றிய பல அம்சங்களை மனித சமூகத்துக்கு விட்டுச்சென்றுள்ளார்.
அல்லாமா இக்பால் அவர்கள் தமது அந்திம காலத்தில் மரணப் படுக்கையில் இருந்தவாறு மரணம் பற்றி இவ்வாறு கூறினார்.
“உண்மை விசுவாசியினர் அடையாளத்தை
நான் சொல்கிறேன் மரணம் வரும் காலையில் அவன் வதனம் மலர்ச்சியுற்றிருக்கும்”
என்றார்.
அந்நாள் 1938ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உலகம் போற்றும் சர்வதேசியக் கவிஞர் கலாநிதி இக்பால் அவர்கள் தனது 65ஆம் வயதில் லாகூரில் உயிர் நீத்தார். எளிமையாகவும் பணிவாகவும் வாழ்ந்தவர். தன்னை பக்கீர் (ஏழை) என்றே அழைத்துக் கொண்டார். கவிஞன் என்று தன்னைப் பிரஸ்தாபிப் பதை அவர் விரும்பவில்லை. அவரது கவிதைகள் இன்றும் தூங்கிக்கிடக்கும் உள்ளங்களை உசுப்பி விடுபனவாய் உள்ளன.
இக்பால் மறைந்துவிட்டார். எனினும் அவரது ஜனனக் கவிதை களால் இன்றும் ஜீவிக்கின்றார். அவரது கவிதைகளில் ஊறும் இன்ப நாதத் திலும் பொருள் வேகத்திலும் அற்புத
நர்த்தனம் புரிகின்றார். ஒவ்வொரு முறையும் தம் கவிதைகளால் புதிதாய் ஜனனிக்கிறார் அந்த மகாகவி அல்லாமா இக்பால்.
3O

றஸ்னா அழகிய நான்கு வயது நிரம்பிய குழந்தை. வர்ணத்தில் மின்னுகின்ற தங்கப் பதுமை. நூர் ஜூவலரியின் ஏக புத்திரி. நூற்றுக்கணக்கான சொத்துகளுக்கு ஒரே வாரிசு. மாளிகை வீட்டின் மகாராணி. காவலுக்கும், ஏவலுக்கும் எத்தனை பேர்? சாகிரின் வாழ்வும், இலட்சியமும் அவள்தான்.
கொம்பியுட்டரில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தாள், றஸ்னா. எல்லாமே நேரகுசிப் படியான இயக்கங்கள்தான். திடிரென பின்னாலிருந்து நீண்ட கைகள் அவளை கெட்டியாக அமர்த்திப்பிடிக்க றஸ்னா அசையாமலிருந்தாள். “றச்சூ குட்டி. இங்க வாயெண்டா.’ அவளை வாரியிழுக்கிறாள் தாய். அவளது ஆடைகள் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. கூந்தல் கலைந்து முகத்திலே பரவிக்கிடக்கின்றது. கடைவாயில் உமிழ்நீர் ஒழுகிக் கொண்டிருக்கின்றது.
Sigfússyntøysyid 67Ü. 67Ü. 6řÜrf?ao7nr
றஸ்னா கைகளால் கதிரையை இறுகப் பிடித்துக் கொண்டாள். தாயின் கைகளில் கோபம் கீற்றாக எழுந்தது. “வாடி. வந்து என்ட மடியில உக்காரு...” கையை இழுத்து மடியில் வைத்து உமிழ் நீர் வடிய வடிய கொடுத்த முத்தத்தால் அருவெறுத்தது குழந்தை. ஆயா அவசரமாக எங்கேனும் வெளிச் சென்றிருக்க வேண்டும். அதான் றஸ்னாவின் தாய் அறுத்துக் கொண்டு வெளியே வந்திருக்கிறாள். அழுத்திப் பிடித்து மடியில் உட்கார்த்தினாள். குழந்தைக்கு அழுகை வெடித்துக் கிளம்ப ஆயத்தமானது.
றஸ்னா பிறந்த நாள் தொட்டே ஆயாவிடந்தான் வளர்ந்து வருகிறாள். நேரத்துக்கு பாலூட்டி, நீராட்டி, உணவூட்டி, உறங்க வைக்கும் ஆயாதான் றஸ்னாவின் முழுப்பாதுகாவலர். தந்தை வருவதற்காக சில நாட்களில் அவள் விழித்துக்காத்ததுண்டு. ஆனால் அனேகமான பொழுதுகளில் அவள் உறங்கிவிடுவாள். பிரபலமான அந்த நகையகத்தை மூடிவிட்டு வர சாகிருக்கு இரவு எட்டு மணியையும் தாண்டி விடும். இரவில் கடைக்கதவை மூடிவிடும் பொழுது குழந்தை முகம் அவனின் மனத்திரையில் நிழலாடும். பெரும்பாலும் குழந்தை உறங்கியிருப்பாள்.
அவனது விரைவான பயணம் பல நேரம் ஏமாற்றத்தில் முடியும். பால் வடியும் அந்த பூமுகத்தில் முத்தங்களை செலுத்திவிட்டு, அவளை அள்ளியெடுத்துக்கொண்டு
அவனது அறைக்குப் போவான்.
31 படிகள் : 21

Page 18
போகின்ற வழியில்தான் மனை வியின் அறையில் மங்கலாக விளக்கு எரிந்து கொண்டிருக்கும். சில வேளை விழித்திருப்பாள். கோரமாய்ச் சிரிப்பாள். கோபமாய் முறைப்பாள். ஏ.சி செய்யப்பட்ட அந்த மாளிகையில் அவர்களிருவரும் வெவ்வேறு துரு வங்களாய்.
இனி, அந்த இரவுகள் விடியாத பொழுதுகளாய். சோகங்களின் கணம்
தாளாது அழுத்தமாய் நீண்டு செல்லும்.
2
சாகீர் குடும்பத்தின் மூத்தவன். அவனுக்குப் பின்னால், நான்கு அழகிய
தங்கைகள். அழகைத் தாராளமாய்க் கொடுத்த இறைவன் வாழ்வின் இன்பங் களைச் சுமப்பதற்காக பணத்தைக்
கண்ணிலும் காட்ட வில்லை. வாப்பாவின் கூலி வேலை சாகீரை க.பொ.த (உயர் தரத்தை) தாண்ட விடவில்லை. உயர் தரத்தில் சித்திபெற்றும், மேலதிக படிப்பை அல்லது உயர் படிப்பை கனவிலும் காட்ட வில்லை. ஒடியோடி வேலை தேடியதில் நூர் ஜூவலரியின் கடைச் சிப்பந்தியாக சேர்ந்து கொண்டான். நம்பிக்கை, நாணயம், வாக்கு, வசீகரம், ஆளுமை என்பன அவனில் தாக்கம் செலுத்தின.
அவனது குடும்பத்தில் பாசத் துக்குப் பஞ்சமே இல்லை. நானா நானா என்று உயிரை விடும் தங்கைகள். சீ என்று கூட சினந்திடாத தாய். வீட்டின் ஒரே
ஆண்பிள்ளை என்பதால், வீட்டின் அரசனாய் வீற்றிருந்தான்.
சாகீர் சிறுவனாய் இருந்த காலங்களில், இரவு தூங்கும் வேளையில் தலையைக் கோதி, ஏதாவது பழைய யுத்தங்களைக் கதை கதையாச் சொல்வார். இனிப்புக்களை வழங்கி மகிழ்வார், சாகீரின் தந்தை. அவன் திருமணம் செய்யும் நாளுக்கு முந்திய நாள் வரை தந்தையும் அவனும் ஒரே
Uடிகள் - 21
அறையில் தான் உறங்குவர். உம்மாவின் கண்களிலே சதா கருணை வழியும். என்றுமே அவர்களிடம் குடும்ப அன்பில்
சேதம் நிகழ்ந்த வரலாறு இல்லை. உம்மாவின் அன்பு, அமைதி, பக்குவம் எல்லாவற்றையும் ஒருங்கிய மனைவி
தான் தனக்கு மனைவியாக வேண்டும் என்று சாகீர், தனது இளமைக் கால மனதில் எண்ணங்களை விதைப் பான். உம்மாவும் வாப்பாவும் அவனறிந்த வரையில் ஒரு காதல் சோடியாகத்தான் இற்றை வரை வாழ்ந்து மகிழ்ந்துள்ளனர். இது வரையும் தனியாக உண்டதும், பயணித்ததும் கிடையாது. அதனால் அவனது கனவுகள் மேலும் விருட்சமாய் மாறின.
தன் மனைவி, குழந்தைகள் நிறைய அன்பு என்று அவனது அபிலாசைகள், உணர்வுகள் எல்லாம்
திருமணத்தில் தஞ்சமடைந்தன. அவனது உம்மாவைப் போல மனைவி வர வேண்டும். அவனை எப்போதும் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று தனக்குள்ளே கனவுகளை வளர்த்தான்.
3
நூர் முதலாளிக்குப் பிடித்துப் போய்விட்டது, சாகீரை. ஜூவலரி, மாளிகை வீடு, கார், எட்டு இலட்சம் ரொக்கம்.
ஒரே வாரத்துக்குள் அவனது திருமணம் சீதனத்தால் தீர்மானிக் கப்பட்டது. பொண்ணு பார்க்கப் போனார்கள். ஹா. அண்ணார்ந்து
பார்க்கின்ற மாளிகை தங்க விக்ரகமாய் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நசூஹா. யாருக்குத் தான் பிடிக்காமற் போகும்? சாகிருக்கு லாட்டரிச் சீட்டு விழுந்தாற் போல திருமணம் கூடி வந்ததென ஊரே பேசிற்று.
ஒரே வாரத்துள் ஊர் புகழக் கல்யாணம்.
32

வாப்பா உம்மா தங்கைகள் எல்லோருமே நெஞ்சு கொள்ளாச்
சந்தோசத்தில்.
திருமணம் நடந்த முதலி வாரத்திலே சாகீருக்கு உண்மைகள் துலங்கிவிட்டன. அவனது வாலிப வாழ்வு தலைகீழாகியது. அதுதான் நசூஹா குடும்ப வாழ்வு வாழ்வதற்கு தகுதியற்ற நோயாளி என்பதாகும். அவள் சாதுவான நடத்தை கொண்டவள். சொன்னதை மட்டும் திருப்பிச் செல்லும் அளவுக்கு புத்தி வளமற்றவள். ஆனால் அது திருமணம் நடப்பதற்கான முதல் நாள் வரை யாராலும் வெளிப்பட வில்லை. நல்லது நடந்தால் சரி. என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் அதனை மறைத்து விட்டனர்.
வாழ்தல் பற்றிய கனவுகள், அதன் புனிதம், அந்த வேட்கை, ஒரே பொழுதில் காட்டுத்தியில் கருகிவிட.
நடந்ததை நடப்பதை என்ன வென்று சொல்லத் திராணியற்றவனாய். 9FIাdéf.
"
மெல்ல ஐந்து வருடங்கள் கடந்தன.
இவனது தருமணத தரினி விளைவாக அவனது தங்கைகளின் திருமணம் இனிதே ஒன்றன் பின் ஒன்றாக ஒப்பேரியது. குடும்பமும் வளம்பெற்றது.
நூர் ஜூவலரியின் முதலா னியாக சாகீர் சமூகத்தில் வலம் வந்தான். பணத்தின் செழுமை அவனது சமூக வாழ்வில் பெரிதும் பிரதிபலித்து காட்சியளித்தது.
4
றஸ்னா தோளிலே பூவாய்க் கிடந்தாள். அவன் மனைவியின் அறையைக் கடந்து போய்க் கொண் டிருந்தான். பிள்ளைப் பேற்றுக்குப் பிறகு நசூஹாவின் நோய் பெரிதும் விகாரம் பெற்று மீளமுடியாத நோயாளியாகி விட்டாள்.
காலில் கட்டப்பட்ட சங்கிலி களை கையால் கோதி ஏதோ நசூஹா செய்து கொண்டிருந்தாள்.
சாகீர் குழந்தை றஸ்னா உடன் தூங்கச் சென்றான். அவனது வாழ்வில் ஒவ்வொரு இரவுகளும் இப்போது
விடிவதில்லை
Qiylik
உட்பட்டவர்களுக்கான நடனப் போட்டி,
2009 Lorrfräi 14 6u6oT SMS ஏற்றுக்கொள்ளப்படும் : உங்கள் அண்பான வாக்குகள் மூலம் .
í DL 14 To SMS 9900
SHOIB HAMEED இளம் ஜனரஞ்சக நட்சத்திரமாக தெரிவு செய்வோம்.
33
படிகள் - 21

Page 19
போர் காலத்து வேப்பமரம் ஒன்றின் மீது
ஒரு சிறகு பகலாய் ஒரு சிறகு இரவாய். அழகாய் குந்தியிருந்தது அந்த வண்ணாத்திப்பூச்சி
அதன் சிறகு மீதுதான் எத்தனை எத்தனை வண்ண வண்ண புள்ளிக் கிராமங்கள்
இந்தக்கிராமங்கள் நீர் பருக அந்த மலர் மண்ணில் எவ்வளவு அழகான பனிக்குளம்
கொஞ்சமாய் தன் சிறகுகளை விரிக்கிறது வண்ணாத்தி (3-5mG (35TLITui மின்சார வேலிகள் தப்பாக்கி குண்டாய் அதன் ഫേഞ്ഞി
எவ்வளவு அக்கறை தன்புள்ளிக்கிராமத்தின் மீது இந்த வண்ணாத்திப் பூச்சிக்கு.
குண்டுகள் விழுந்தால்
பாவம்
இந்தக்கிராமங்களும் வண்ணாத்திப் பூச்சியும்.
Use - 2
எம்எம்எம்க
34
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இனத்துவ இல்க்கியப் பிரதிகள்
நாளையும் மற்றொரு நாள் : சில குறிப்புகள்
எல். வலிம் அத்ரம்
தனது இனத்தின் இயக்க நிலையை ஆவணப்படுத்தல் என்பது படைப்பாளிகளின் இன்றியமையாத ஒர் உணர்வுக் கூறாக இருந்துள்ளதனை இரலாற்றில் காண்கிறோம். படைப்பாளி தனது இனத்துவ சார்பை ஓர் படைப் பாயுதமார கொள்கிற காலம் அதிகரித்துள்ளது. அரசியல் ஆக்கிரமிப்பு போராட்டச் சூழல், காழ்ப்புணர்வு. அதிகார கெடுபிடிகள் உள்ளிட்ட பல்வேறு காரண காரியங்களின் நேரடி விளைவுகளில், இனத்துவ சார்பிலக்கியங்களை நாம் வாசிப்புச் செய்யலாம். ::.
நமது அன்றாட சூழலிலும், தேசிய மற்றும் சர்வதேச நடைமுறையிலும் இந்த இலக்கிய முயற்சியின் பிரதிகள் இன்று அதிகளவு பேசப்படுவதாக உணரலாம். இந்த இனத்துவ அல்லது சார்பிலக்கிய படைப்புகளில் கவிதைகள் தனியிடம் பெறுகின்றன. இந்தப் படைப்புகள் ஈழத்து தேசிய இனப்பிரச்சினையின் ஓர் கட்டத்தை நம்முன் அவாவி நிற்பதுடன் அது பல்வேறு கேள்விகளையும் உய்வித்துள்ளதை நாம் குறிப்பிடவேண்டும்
தோதென்ன வெளியீடாக அண்மையில் வெளிவந்த எம்.சீ. ரஸ்மினின் “நாளையும் மற்றொரு நாள்” என்ற சிங்கள இனத்துவப் பாடல்களின் மொழிபெயர்ப்பு நூலானது, ஈழத்து இன முரண்பாட்டு சூழலில் சிங்கள மக்களது உணர்வுகளின் யதார்த்த பிம்பங்பகளை கதையாடல் செய்யத்தக்க ஒர் நூலாகக் கணிக்கத்தக்கதாகும். ஈழத்து இனப்பிரச்சினைக் காலத்தில் சிங்கள மக்களது உணர்வுகளை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ள பாடல்களானது இனப்பிரச்சினை தொடர்பான அபிப்பிராய பேதத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தியிருப்பது கண்கூடு. இக்கவிதைப் பிரதியை ஒரு வாசகனாக நின்று வாசிப்புச் செய்யும் போது, இப்பிரதியானது நமது இலக்கிய இயங்குதளங்களில் அதிகளவு பேசப்படாத ஒரு செய்தி மிகவும் குறிப்பிட்ட அடையாளங்களுடன் பேசி நிற்பதை விதந்து குறிப்பிட வேண்டும்.
உண்மையில், இனப்பிரச்சினை என்பது நமது நாட்டில் இலக்கிய ரீதியாக ஒரு காத்திரமான வெளியீடுகளுக்கு களம் அமைத்திருப்பினும், அது அதன் நியாயங்களை, யதார்த்தங்களை தனித்துவமாக காட்டவில்லை என்பது இனத்துவ இலக்கியங்களில் அதிகமானவையாக உள்ளன. இந்த விடயம் தமிழிலும் சரி சிங்களத்திலும் சரி ஓரளவு நியாயத்தை நிறுவும் போது, நிச்சயமாக இனவுறவு சாத்தியமாக இடமுண்டு.
இவ்வாறான கருத்தியல்களை ஒரளவு நிரப்பும் வண்ணம் ரஸ்மினுடைய பிரதி முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக இத்தொகுப்பில் ரஸ்மின் “சிறுபான்மையினர் மீதான வாஞ்சையுணர்வு, பல்லின சமூகயிருப்பின் மீதான பற்று, மாற்று அடையாளங்கள் மீதான கனிவு, சிங்கள முதன்மைவாதம், இலங்கை சிங்களவர்களுக்கான நிலம்’ போன்ற விடயங்கள் தொடர்பாக தாக்கம் செலுத்துகின்ற கவிதைப்பாடல்களை மொழி பெயர்த்துள்ளார். சிங்கள இலக்கியங்கள் மீது ஆழமான பரிச்சயம் நமக்கு இல்லாத
35 படிகள் - 21

Page 20
போதும், அவ்வப்போது நமது வாழ்வுடன் அம்மொழி கொண்டுள்ள ஊடாட்டத்திற்கு அமைய இக்கவிதைகளை வாசித்துள் ளிர்ப்பது ஓரளவு இலகுவானதாகவும் மொழிபெயர்ப்பு துல்லியமாகவும் அமை வதைக் காண முடிகிறது.
இக்கவிதைப்பிரதியில் உள்ள கவிதைகள் தாய் மொழியில் பாடல்களாக இருப்பதன் காரணமாக, அது சாதாரண மக்களிடத்தில் பாரிய வீச்சுடன் சென்றிருப் பதை நாம் உய்த்தறியலாம். இருப்பினும் தமிழில் இப்பிரதிகள் மொழிபெயர்க்கப் படுகின்ற போது பாடல் வடிவத்தில் அதனை மொழிபெயர்த்து நூலாக்குவது மிகவும் சிறப்பானதோர் தெரிவாக கொள்ள முடியாது என்ற நியதிக்கேற்ப, சகோதரர் ரஸ்மின் இப் பாடல்களை கவிதா நிலை யில் எமக்குத் தருகிறார். இது சிறப்பான அணுகுமுறையாகக் கொள்ள முடியும்.
எனினும் மொழிபெயர்ப்பில் தமிழ்ச் செருக்கு அல்லது மிகவும் அதீத கற்பனையும், அதனுடனான மொழி வீச்சும் சில கவிதைகளில் அதிகளவில் கலந் திருப்பது கவிதைப்பாடல்களை வாசிப்பதற் கன்றி மிகவும் தரமான கவிதைகளை வாசிப்பதான உணர்வைத் தருகிறது. இது மொழிபெயர்ப்பின் சாதக பாதகங்களை கொண்டிருப்பதாகக் கூறலாம்.
இத் தொகுப்பில் இனவுறவு தொடர்பான கவிதைப் பாடல்களும், (பிரேம கீர்த்தி அல்விஸ் - குண்டுமணி,
ரத்னணறி விஜேசிங்க நிறபேதம் எதற்கு, சுனில் ஆரியரத்ண நீல வானத்தில் வெண் புறாக்கள்.) சிங்கள முதன்மை வாதக் கவிதைகளும் (அல்லே குணவங்ச தேரர் - பெளத்த நாடு, பியசேன ரத்து விதான - வீரம், தீபால் சில்வா - உள்ளே வெளியே) இடம்பெறுகின்றன. இம் மொழிபெயர்ப்புக்காக ரஸ்மின் மிகவும் கடின அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி யிருப்பதை அவரது அடிக்குறிப்புகள் பறை சாற்றுகின்றன. குறிப்பாக இப்பாடல்களின் மூலவடிவத்தை அவர் ஒலித்தட்டுக்களில் இருந்து கைப்பற்றியுள்ளார். அது மட்டு மின்றி, சில பாடல்களுக்கான பின்னணி
Utah - a
மற்றும் அதன் இசை வடிவம், ஒலித்தட்டுக் குறியீடு என்பனவற்றை நூலில் ஆவணப் படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்க விடயம்.
இனத்துவ முரண்பாட்டுச் சூழல் மூலம் நாம் பலஸ்தீன, வியட்னாமிய, ஆபிரிக்க உள்ளிட்ட கவிதைகளை வாசிப்புச் செய்த அநுபவங்களுடன் இக் கவிதைப்பிரதியும் இணைவதான ஒர் சந்தர்ப்பமாக விமர்சகர்கள் கருத இட முண்டு. அதேவேளையில் பேராசிரியர் சிவத்தம்பி, கலாநிதி மகேஸ்வரன் உள்ளிட்ட சிலர் சிங்கள கவிதைகளின் மொழிபெயர்ப்பு தொடர்பாக குறிப்பிடும் போது: அது அயல் இனத்தின் வாழ்க்கை, அவர்களது கருத்து வேறுபாடு, அன்பு, மனோநிலை, இலட்சியம், பண்பாட்டு விழு மியம் என்பனவற்றின் வெளிப்பாடுகளை நமக்கு அறியத்தருகிறது என்கின்றனர், என்பதுவும் கவனிக்கத்தக்க விடயம்.
நாமறிந்தளவில் ரஸ்மின் சிங்கள மொழி இலக்கியங்கள் மீது அதிகப்படி யான ஈடுபாடு கொண்டவர் என்ற அடிப்
படையில், இவரது முயற்சி ஈழத்து இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பதிவுகளைத் தருகிறது. உண்மையில்
மிகவும் குறைவான சிங்கள இலக்கியப் பிரதிகள் மீதான ஆய்வும், மொழி பெயர்ப்பும், அது தொடர்பான கதை யாடல்களும் தமிழில் இடம் பெறுகின்ற சூழலில், அபிவிருத்தி ஏற்பட வேண்டும்
என்பதுடன். அதேபோன்று தமிழில் கையாளப்படுகின்ற இனத்துவ இலக்கியப் பிரதிகள், சார்பிலக்கியப் பிரதிகள் போன்றன தொடர்பான விவாதங்கள், மொழி பெயர்ப்புகள், ஆய்வுகள் சிங்களம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்குட்
படுத்தப்பட வேண்டும். இவை இன்றைய அரசியல், பொருளாதார சூழலில் அதிகப் படியான தாக்கங்களைச் செலுத்தும் என்பது திண்ணம். அது மட்டுமன்றி இது காலத்தின் தேவையுமாகும்.
இந்நிலையில் எம்.சி.ரஸ்மினின் முயற்சிகள் இவ்வாறான தாக்கங்களைச் செலுத்தும் என்ற வகையில், எதிர்காலங் களில் அவர் ஈழத்து இலக்கியப் பரப்புக்கு அணி சேர்க்க வாழ்த்துக்கள்.
36

IDகாகவி து. உருத்திர மூர்த்தியின் “தேரும் திங்களும்” எனும் கவிதையானது இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க பதிவாகவும், கவிஞனின் உள்ளக்கிடைக்கையின் வெளிப்பாடாகவும் அமைகிறது. பழைமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்து கவிதைகள் படைத்த மகாகவி இக்கவிதையிலும் பழைமையோடு புதுமையை இணைத் திருப்பது நயக்கத்தக்கது. மேலும் இக்கவிதையானது மனிதவாழ்வின் அவலத்தை மிகத்துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. தமிழ்ச் சமூதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதீ.யச் செருக்கை கண்டித்த மகாகவி அதனை எதிர்த்து கவிதையாக யாத்திருக்கும் திறன் போற்றத்தக்கது. கடந்த நூற்றாண்டின் ஆரம்பகாலங்களில் தமிழ்ச் சமுதாயத்தில் சாதிய வேறுபாடு பெரிதும் முனைப்புப் பெற்றுக்காணப்பட்டது. இதன் விளைவுகள் சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவித்து வந்தது. அந்த வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஒரு படைப்புப் பிரதியாக நாம் இக்கவிதையைக் குறிப்பிடலாம்.
ஆரம்பகால சமுதாயத்தில் ஒர் நோயே “தீண்டாமை” எனப்படும் சாதீ.யம் ஆகும். பிராமண குலம் சூத்திர குலத்தையும், சூத்திர குலம் பிராமண குலத்தையும் தீண்டுவது தகாது என்றும் இவ்வாறு பிராமண குலத்தையும் தீண்டுவது தகாது என்றும் இவ்வாறு பிராமண சூத்திர குலத்திற்கு இடையே எத்தகைய கொடுக்கல் வாங்கல்களும் இடம்பெறாமல் பிராமண குலத்தின் உயர்வை நிலைநாட்டுவதே சாதியக் கோட்பாடாகும். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை சீர்குலைத்து, உயர் சாதியினர் மாத்திரமே இறை சந்நிதியில் முன்நிற்கத் தகுதி யானவர்கள் என்றும் தாழ்ந்த சாதியினர் அதற்கு அருகதை அற்றவர்கள் என்றும் நிலை பெற்றிருந்த கருத்து நிலைக்கு மாற்றமாகவே கவிஞர் தன் கவிதையினை சாதியச் சமுதாயத்திற்கு எதிராக மோத விட்டிருக்கிறார் என்று கூறத் தோன்றுகிறது.
சாதியச் சமுதாயத்தினால் கொலையுண்ட ஒரு வாலிபன் மூலம் மகாகவி தாழ்த்தப்பட்ட தொரு சமுதாயத்திற்காக உரிமைக் குரல் கொடுப்பதை இக்கவிதையில் அவதானிக்க முடிகிறது. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கோட்பாட்டை வைத்துக் கொண்டிருக்கும் சமுதாயத்தைக் கவிஞர் படம்பிடித்துக் காட்டும் திறன் சிறப்பானது. உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட இனங்களுள் சிறந்த இனம் மனித இனமே. அதே மனித இனத்தைச் சேர்ந்த மனிதன், அதே மதத்தைச் சார்ந்த மனிதன் தேரின் வடம்பிடிக்க வந்தான். இதனைக் கவிதையின் முதல் பகுதி குறிப்பிடுகிறது.
ിന്തു (I'Li
பேருவணைறபீக் மொஹிeன்
37 US - 21

Page 21
“..உலகத்தாய் நொந்து சுமந்து இங்கு நூற்றாண்டு வாழ்வதற்காய் பெற்றமகனே அவனும்.”
எனக் குறிப்பிடுவதிலிருந்து மனித
னின் பிறப்பின் மூலம் எத்தகைய வேறுபாடும் கிடையாது. அனைவரையும் தாய் வயிற்றிலிருந்தே இறைவன் பிறப்பித் தான் என்ற உண்மையைத் தெட்டத் தெளிவாக விளக்குவதோடு, இத்தகைய மனிதனுக்குள் எத்தகைய வேறுபாடுகளும் காட்ட வேண்டிய அவசியமில்லை. எனவும் உணர்த்துகிறார். மேலும் மனிதனது பொது வான உடலமைப்பு எப்படியோ அத்தகைய உடலமைப்பும், இளமையும், துடிப்பும் உடைய மனிதன்தான் தேர் இழுக்க வந்தவன் என்றும், இதைவிடுத்து வேறு எத்தகைய பலவீனத்தையோ, வேறு பாட்டையோ கொண்ட மனிதனில்லை அவன் என்றும் சூசகமாகக் குறிப்பிடுவது சிந்திக்கத் தூண்டுகிறது. அதேவேளை உடலமைப்பை கவிதையில் விளக்குவது அவசியமற்றது. ஆனால் அதையும் மீறி கவிஞர்,
“... பெருந்தோளும்
கைகளும் கண்ணில் ஒளியும் கவலையிடை
உய்ய விழையும் உளமும்
உடையவன்தான்.”
எனக் கவிஞர் குறிப்பிடுவதில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும் என அறிய முடிகிறது. அது மனித இனத்தின் தனித்தன்மையினை உணர்த்துவதாகவும், வடம் பிடிக்க வந்த மனிதன் வடம் பிடிப்பதற் குரியதுமான தோளும் கை வலிமையும், இளமையும், உறுதியான உள்ளமும் உடையவனாக இருந்தான் என்பதனை விளக்குவதாகவும் இருக்கிறது எனக் குறிப்பிடலம்.
மேலும், மனிதனது தனித்து வத்தை விளக்கிக்காட்டுவது அவனது சிந்தனையாகும். அத்தகைய சிந்தனா சக்தியுடைய இளைஞன் வடம் பிடிக்க வந்தான். அவன் வேறு யாருமல்ல. சந்திரனில் காலடி வைத்தவனுடைய தம்பி என்று அவனைச் சகோதரனாக்கி இரு குலத்தையும் 'சிந்தனை' என்ற கருத்து
- 21
வட்டத்தை உருவாக்கி சகோதரத் துவத்தால் பிணைந்த கவிஞர் சாதீயத்தை தகர்த்தெறிவதைக் காணலாம். ஆனால், சாதி வெறியர்களோ வடம்பிடிக்க வந்த வனை மனிதன் என்றோ, தம்பி என்றோ, உழைப்பாளி என்றோ ஒரு கணமும் எண்ணாது அவனைக் கொன்றொழித்து விடுகின்றனர். இதன் மூலம் கவிஞர், சாதிக் கொடுமையின் தீவிரத்தை உணர்த்துகிறார்.
தேரும் திங்களும்' என்ற இக்கவிதையின் மூலம் சமூதாயத்தின் சாதிப்பாகுபாட்டை படம் பிடித்துக் காட்டிய கவிஞர், கவிதையின் எந்தவொரு இடத் திலும் 'சாதி என்ற சொல்லைக் கையாள வில்லை. தேரையும் திங்களையும் குறியீடாக்கி மகாகவி இக்கவிதையைப் படைத்திருக்கிறார். தேரின் வடம் பிடிக்க வந்தவன் நிலவின் காலடி வைத்தவன் மனிதன் என்பதனை உணர்த்தவே கவிஞர் கவிதைக்கு இத்தலைப்பை சூட்டியிருக் கிறார் என ஊகிக்கலாம்.
மகாகவி தேரும் திங்களும் சிறப்பாய்ப் படைத்திருப்பினும் இக்கவிதை யில் எத்தகைய அணிநயங்களும் பயன் படுத்தப்படாமல் இருப்பது ஒரு குறை பாடாகத் தெரிகிறது. உணர்வோடு கூடிய ஓசை நயம் சற்று இருப்பதால் இக்குறை பாடு தீர்க்கப்படுவதாகக் குறிப்பிடலாம். வடம் பிடிக்க வந்தவனை சாதி வெறியர்கள் வடம் பிடிக்க விடாது தடுத்த முறையினை அதற்கேயுரிய மெய்ப்பாட் டுணர்வோடும், ஓசை நயத்தோடும் குறிப்பிடுகிறார். “நில், நிறுத்து, புல், புலை, கொல், கொழுத்து’ என்ற சொற் பிரயோகங்களும், வன்மையைக் குறிப்பிட
அதற்குரிய ஒலியமைப்புக்களும் இக் கவிதைக்கு அழகு சேர்க்கிறது.
அதனை “கல்லொன்று வீழ்ந்து, கழுத்
தொன்று வெட்டுண்டு, பல்லோடு உதடு பறந்து சிதறுண்டு, சில்லென்று செந்நீர் தெறித்து, நிலம் சிவந்து, மல்லென்று நேர்ந்து, மணிசர் கொலையுண்டார்” எனும்
பகுதி குறிப்பிடுகிறார்.
38

கவிதையின் இறுதிப் பகுதியை
நகைச்சுவையாகக் குறிப்பிடு கின்றார். “ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர், வேர் கொண்டது போல் வெடுக்கென்று நின்றுவிடப் பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையே..! ஊட்கார்ந்திருந்துவிட்டாள் ஊமையாய் தான்பெற்ற மக்களுடைய மதத்தினைக் 3560iiLuig...”
கவிஞர்
என்று ஊர் கூடியிழுத்த தேர் பாதியிலே நின்றதை கேலியும் கிண்டலு மாய்க் குறிப்பிடுகிறார். அத்தோடு, “முந்த நாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு
வந்தவனை சுற்றமும் அதே மண்ணில் புரள்கிறது” என உயர் சாதியினரை பரிகாசமாகப் பாடுகிறார், கவிஞர்.
கவிதையின் கடைசிப்பகுதியில் இக்கூற்றைக் குறிப்பிடுவதாவது, இரு குலத்தினரும் நிலவைத்தொட்டவனின் சகோதரர்கள்தான் என்ற மனித ஒருமைப் பாட்டை மிகத்துல்லியமாக புலப்படுத்தி
--سم
சில பெருத்த தலைகளின் மலட்டு ஆவல்களினால்
என் எதிர்காலமெனும் குழந்தை இன்னும் ஜனணிக்கவேயில்லை!
காலுடைந்த கிழட்டுப் புலியின் ஏக்கம் போலவே இன்னும் அடைய முடியவில்லை என் இலக்குப் பட்சியை
சருகாய் போன சானத்தக்கிருக்கும் மதிப்பு கூட துளியும் இன்றி என் வானம் இருட்டாகத் தான் எப்போதம்
சதாவும் ஆழ்மனசிலே எரிமலையின் குமுறல்கள். பூகம்பம் ஒய்வெடுத்துக் கொண்டு என் மூளையை சுற்ற விட்டு வேடிக்கை பார்ப்பதாய் ஓர் பிரமை.
தேர்தல் கால அரசியல் வாதியாய் தோன்றி மறையும் சில சந்தோஷங்கள்
சாதியத்தை ஒழித்துவிட முனைந் துள்ளார், மகாகவி. சாதிய எதிர்ப்பின் அடி நாதமாகவே மகாகவியின் தேரும் திங்களும் முகிழ்கிறது.
བོད༽
உலகமே எனக்கெதிராய் சதி செய்து விட்டு. பலியை விதிமேல் இட்ட உணர்வொன்று!
என் பூமியை இப்போதெல்லாம் . ஓர் பூதம் விழுங்கிய படியே! எனினும். எதிலோ ஆர்வம் கொண்டு என் ஆன்மா இன்னும் வாழ்வதற்கு பூஜித்துக் கொண்டே.!
- ófuuốø56sonraos 6vớř. 67Ů. Mýlosiodomar
[ ഗ്രൈസ്ത്ര ശ്രീ ഗ്രീ-)
39

Page 22
நீண்ட இலக்கியப் பாரம்பரியமிக்க நமது ஈழத்து இலக்கிய வரலாற்றில் படிகள் சஞ்சிகையும் அதன் தளத்தை உருவாக்கியுள்ளதை அறியமுடிந்தது. குறிப்பாக நமது நாட்டின் சிற்றிலக்கிய ஏடுகள் என்ற கணிப்பில் அண்மய சில காலமாக சில ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டும் வருகின்றது. இந்தக் கணிப்புகளில் படிகள் இதழின் தொடர்வரவும் குறிப்பிடத்தக்கதாக கட்டப்பட்டுள்ளது. அதாவது, செங்கதிர் இதழில் சிவ சுப்ரமணியம் அவர்களது கட்டுரையிலும், ஞானம் 100வது இதழில் பேராதெனிய பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் ஒருவரது கட்டுரையிலும் படிகள் இதழின் இலக்கிப் பங்களிப்பு கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது. இதன் பிறகு படிகள் இதழ்களைப் படிக்கும் அவா என்னுள் எழுந்தது. புதிய தலைமுறைப் படைப்பாளிகளின் கனதியான பங்களிப்புகள் படிகளில் மிளிர்வதே வெற்றி படிகள் இதழ்களில் சில குறைகள் இருப்பினும் பல்வேறு நிறைகள் இருக்கின்றன. உங்கள் முயற்சி வெற்றியளித்துவருவது மகிழ்ச்சி.
மு. மகாலிங்கம், கொழும்பு 06
படிகள் 20வது இதழானது காலத்தின் தேவைகருதிய வகையில் இரண்டு முக்கிய இலக்கிய சிருஷ்டிகளை அட்டையில் தாங்கி வந்துள்ளது. உண்மையில் நிலார் என் காசிம் என்பவர் பற்றி இதுவரை நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை. அவரை படிகள் புடம் போட்டது பாராட்டத்தக்க ஒன்று. அவ்வாறே மஹ்மூட் தர்வீஷ் அவர்களது மறைவுக்குப் பின் அவரது பூர்வீகக்கனவை மீள் வாசிப்பு செய்ய எத்தனித்தமை சிறப்பானதே. ஷிப்லியினுடைய கருத்துக்களில் எம்மால் முழுமையாக உடன்பட இயலாது. ஆனால் அவரது மன ஆதங்கம் ஓரளவு நியாயம் பொருந்தியது. தவிர கவிதைகள் சிறப்பானதாக அமைந்தன. ஆனால் கதைகளும் நினைவுக் குறிப்பும் மிகச் சிறப்பான தெரிவு என்று சொல்ல முடியாது. படிகள் இதழ்களில் தொடர்ந்து குறிப்பிட்ட சிலரது படைப்புகளே இடம்பெறுவதனையும் கவனத்திற் கொள்க. படிகள் தனது பரப்பை அதிகரிப்பதன் மூலம் பல்வேறு படைப்பாளிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எம்.எஸ். நறவுப், காத்தான்குடி
படைப்பாளிகள் தமது அடையாளத்தை நிரூபிக்க དེ།།
எத்தனிப்பது என்பது ஒரு புதிய விடயமாக கொள்ள முடியாது. କ୍ଷି ஆனால், இன்றைய இளம் தலைமுறையினரிடையே இந்த "w விடயத்தில் தீவிரத்தன்மை இருப்பதனை பல்வேறு •S S. சந்தர்ப்பங்களில் கண்டுள்ளேன். அதிலும் குறிப்பாக இளம் S. •S தலைமுறையினரால் நடாத்தப்பட்டு வருகின்ற இலக்கிய R, S, முயற்சிகளில் அதிகம் உண்டு. படிகள் இதழ்களிலும் இந்த s தன்மையைக் காணமுடிகிறது. உதாரனமாக லரிபாவின் கட்டுரையைக் குறிப்பிட முடியும், இவ்வாறான விடயங்களை 等 9SN படிகள் ஆசிரிய பீடம் கருத்திற் கொள்ள வேண்டும். நல்ல t ቅ¢S படைப்பாளிகள் மேற்சொன்ன விடயங்களால் FlDF) 舒
கடிதத்தின் ஒரு பகுதி)
அளில்வர் அவுறமட், மாவனெல்லை ད།།
வெளிவந்துவிட்டது
மல்லி óØ)5 Malika
2014, Sri Kathircsan Stricel
Colombo - 13 44வது ஆண்டு மலர் 1.2012]
படைப்பாளுமையயை இழ்ந்துவிட இடமுண்டு. (நின்ைட (S s
LLLLLLLLSS 0 LSLLL LLLLLL TtTL SSEL tLtttLL tT LLS rTTL TLaCS 40

OL, AL தகமைகளுடன் வின்ைனப்பம் # இலகுவான விசா முறைமை # பொருத்தமான தங்குமிட வசதி # தரமான பல்கலைக்கழகம்
# தரமான கற்கை நெறிகள்
முற்போக்கான கல்விப் பாதையில் காலழவையுங்கள்
# மலிவான விமானச்சீட்டு
كي * f ృళ్లల్లో மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா كلي په " ఖ్యలో #?
’’شملہ
மற்றும் UK ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி தொடர.
Islamic Banking and Finance
இஸ்லாமிய வங்கியும் நிதி முறைமையும் கற்று உலகிற்கு சத்தியத்தை நினைவூட்ட,
அன்றாடவாழ்வில் வட்டி முறை வங்கித் தொழிலில் இருந்து விலகி இஸ்லாமிய வங்கி முறைகளைக் கற்று கெளரவாமாக வாழ.
தொலைக் கல்வி Distance Education
முறையில் தபால் மூலம் நடாத்தப்படும்
69 ībā 38, Moor Road,
.3392663 Tel - O114872O15, O71 نقطنقشتقاقیقی
Web WWW. airm.lk. E-mail info©aim.lk

Page 23
FOREIGN E
AIR TICKETI
விெனித\றே வேலை/வ
AL HAJ ARN. THAR
f/2A, MA AWGRADARAP 7et - 0.25 45,80622,02.
 
 
 
 
 
 

9. |ISSN BOO - 4598
LNO 215s
"RAVEUS
wówy; hwnnw ўrw...
MPLOYMENT & NG AGENTS
w முதவிதிலைwல்
IK JP (PROPRIETOR) WRK27 S77e,
RA, SR37 AWWKA 5 ööffፉ188,0?? 80ፉቨó89