கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: படிகள் 2009.05

Page 1

நேரிதான

Page 2
வெளிநாடு செல்வதற்கான S.F. Janabdeen
r - Managing Director 6iiDIror Lgă5L 6jof8)IIIrBI)
772AVe4S
LIL No: 2409
Foreign Employment & Air Ticketing Agents
LITLULUIHIL 上
* 眶 *、
枋 盟 * 鼎 ';}{#if::
Mimi|||||||||||||||||||| HATHIYA|| VIVIA MARTIN A "TITUITIN ■
213/4, Upstair, Mithiripala Senanayaka Mawatha Bank side, Anuradhapura, Sri Lanka Te | - 025 562OOO1/5620002/ 072 2232143/ 0255686436 Fox - O25 562OOO2 Mobile - O77 8807891 E Mail-sfazraneyahoo.com
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நண்பன் காண்ம்ை நல்வேற்றோடு இண்ையவும் ஆரமண்டவர்களிீர் எண்ணிக்கை சிறியதாக இருப்பரிதும் அது, முயற்சியினிரையிலும் !ያሰTrኾo፻፡ú(;
ேேபானது
படிகள் கிடைக்கும் இடங்கள்
பூபாலசிங்கம் புத்தக நிலையம் (கொழும்பு) சேமமடு பொத்தகசாலை (கொழும்பு) பாம்லீப் புத்தக நிலையம் (கொழும்பு) தமிழ்ச் சங்கம் (தென்கிழக்குப்பல்கலைக்கழகம்) ரெஸ் மார்ட் (அநுராதபுரம்) நெட் ஹவுஸ் (அநுராதபுரம்) ஹிமாஸ் புத்தக நிலையம் (இக்கிரிகோல்லாவ)
종 鼠
5
s
i
ޙރ (
புதிய >
ШТЛLШЦђђIJIШLD, filLDflifiJIflüt D6ILILD எதிர்பார்க்கிறோம்
பழகள் வெளியீட்டர்த்திற்கென www.pgdikal blogspot.corn iTai'r is: தன்ம் ஒன்று உருவாகி வருகின்றது. படிகள் தேழி: இப்ன்:ாழுது WWWW, 10 ilahları, nğıl எளிற இணையத்திலும் பார்வையிட3ாம்.
TYFFFF"
முதிர்
GUD - 2009
ISSN 18OO - 4598 WOLUME : O5 , NO: O2
- வெளியீடுநண்பர்கள் இலக்கிய குழு அநுராதபுரம் நட்சத்திர நற்பணி மன்றம்.
O.)
O. - 23, luବYଶର୍ମା
2.
வெளிநாடு
வருடச் சந்தா
படிகள் இதழ்களைத் தொடர்ந்து
பெற விரும்பும் இலக்கிய பூேர்வலர்கள், தங்களது சந்தாக்களை பதிவு செய்வதன் மூலம் சஞ்சிகையின் வருகைக்கும் வளர்ச்சிக்கும் உங்கள் பங்களிப்புகளை வழங்குங்கள்.
தோடர்புகளுக்கான
புதிய ரீழ்கவரி
"PAI-AL"
No. 519G/16 Jayanthi Mawat ha Anuradhapura # 50000 Sri Lark.
+947 1348 506O 44 1565 476ھ [9 + Padihalayahoo.com WWW.padikal blogspot.com

Page 3
உங்கள் பார்வைக்குT
saங்கள் கருத்து டத்
Trts asal.e.oarr
கடந்த ஆறு ஆண்டுகளாக அநுராதபுர மண்ணிலிருந்து ஒரு இலக்கியக்குரலாக பழகள் வலம் வந்து ஈழத்து இலக்கியச் செல்நெறிக்கு வளம் சேர்த்து வருவதை யாவரும் அறிவர்.
படிகள் வெறுமனே இலக்கிய இதழாக மட்டுமின்றி இப்பிரதேசத்தில் ஒரு இலக்கிய இயக்கமாக செயற்பட்டு நிரூபித்துள்ளது.
கடந்த காலங்களில் படிகள் அநுராதபுர மண்ணில் பல்வெறு கலை இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளது. அதில் கெகிராவ ஸ்ஹானாவின் “இன்றைய வண்ணாத்துப் பூச்சிகள்", எல். வளிம் அக்ரமின் “மண்ணில் துழாவும் மனது", எம்.சீரஸ்மினின் “மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள்" என நூல் வெளியீட்டு விழாக்களை மேற்கொண்டு இலக்கியச் செல்நெறிக்கு பங்களித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் பழகள் பதிப்கம் ஒன்றை நிறுவி, நூல்வெளியீட்டுத் திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. அனைத்துவகையான நூல் வெளியீட்டிலும் கவனம் செலுத்தும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். தரமான தாள்களில் சிறந்த தளக்கோலத்தில் மிகக்குறைந்த விலையில் செம்மையாக நூல்களை வெளிக்கொணர துணிகிறது.
ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், நிறுவனங்கள் தங்களின் வெளியீடுகளுக்காக படிகளுடன் தொடர்பு கொண்டு தங்களது பிரதியாக்க முயற்சிகளை இலகுபடுத்திக் கொள்ளலாம். அவ்வாறே வினியோக திட்டத்திற்கும் வழிகாட்டல்களை மேற்கொள்ளும்.
Uழகள் பதிப்பகத்தின் முதலாவது பதிப்Uாக “அநுராதபுர மாவட்ட தமிழ்க் கவிதைகள்" தொகுதி ஒன்று வெளிவருகிறது.
- efftau
முழுள்ே
இருமுத இலக்கிய இதழ்
(SLDs 2009
&btffluff
எல். வஸிம் அக்ரம்
gஆவி ஆசிரியர் எம்.சீ நஜிமுதீன்
சஞ்சிகைக் குழு ஞானச்சந்திரன் குருக்கள் நாச்சியாதீவு பர்வீன்
வெளியீட்டுக் குழு எஸ்.ஏ. சுதாத் யு.எம். ஹிமாஸ் ஏ.எச்.எம். ஸ்ப்ராஸ் எம்.ஜே.எம். ரிஸாதி எம்.ஆர்.எம். பெரோஸ்
ஓவியம்
அன்பு அமீன்
Vyasi /22
, st
 
 
 
 
 
 

நவீன தமிழச் சமுதாயத்தின் தேவைகளுக்கிணங்க
மொழி எளிமையாக்கப்பட வேண்டியதன் அவசியம்
asasaba
பேருவளை றபீக் மொஹிடீன்
தமிழ் மொழியானது காலத்திற்குக் காலம் பல மாற்றங்கள் பெற்று வந்துள்ளது. வாழும் மொழியானது பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகின்றது. அவ்வாறு பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட மொழியே வாழும் மொழியாகத் திகழ்கிறது. எனவே, காலம் காலமாகத் தமிழ் மொழியானது பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு இன்று நம் மத்தியில் வாழும் மொழியாகத் திகழ்கிறது. இவ்வாறு வாழும் மொழியாகத் திகழும் நம் தமிழ் மொழி நவீன தமிழ்ச் சமூதாயத்தின் தேவைகளுக்கு இணங்க எளிமையாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
பழந்தமிழ் எழுத்துக்களும், பழந்தமிழச் சொற்களும் காலப்போக்கில் தன் வடிவத்தை இழந்து வெவ்வேறு மாற்றங்களுக்கு ஆளாகி இன்று தமிழ் வடிவத்திற்கு மாற்றம் கண்டுள்ளன. தொல்காப்பியர் காலத்தில் அராமிய எழுத்துக்களாலேயே எழுதப்பட்டு வந்த தமிழ், தொல்காப்பியத்திற்கும், அராமிய மொழிக்கும் எவ்வித தொடர்பம் இல்லை எனும் அளவிற்கு மாற்றமடைந்தள்ளது. கி.பி 3ம் நூற்றாண்டில் ““ என்று எழுதப்பட்ட அகரம் கி.பி. 4ம் நூற்றாண்டில் '> ' என எழுதப்பட்டு அதன் வளர்ச்சியின் தொடராக இன்று 'அ' எழுதப்படுகிறது. இவ்வாறே ஆகாரத்தின் ஆரம்ப வடிவம் 'A' என இருந்தது. இது கி.மு 3ம் நூற்றாண்டு அசோகன் கல்வெட்டில் காணப்படுகிறது. கி.மு 1ம் நூற்றாண்டு ஆனைமலைக் கல்வெட்டில் '> அமைந் துள்ள ஆகாரம் கி.பி. 7ம்,8ம் நூற்றாண்டுகளில் ஒரு பெரும் மாற்றத்தினைச் சந்தித்து 'சி என்ற வடிவத்தைப் பெற்றது. இது கூரம் செப்பேடுகளிலும், திரு வதிகைக் கல்வெட்டிலும் காணப்படுகிறது. 7ம், 8ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட 'ஆ' என்ற வளர்ச்சி வடிவம் மென்மேலும் கி.பி. 10ம், 11ம் நூற்றாண்டுகளில் 'C' எனவும், கி.பி 13ம் நூற்றாண்டில் 'ஆ' எனவும் எழுதப்பட்டு இன்று தற்கால வடிவத்தினைப் பெற்றுள்ளது. இவ்வாறே உகரமும் '<- 2 ~2”2-- 2- “ உ என்ற வளர்ச்சிப் படிகளைத் தாண்டி இன்று தற்கால வரிவடிவத்தில் அமைந்துள்ளது. + - - - 5 - க' என இவ்வாறே ககரத்தின் வளர்ச்சிப்படிகளும் அமைந்து, தற்காலத் தமிழில் அதனுடைய வரிவடிவத்தினைப் பெற்று மிளிர்கிறது. தமிழ் மொழி எழுத்துக்கள் அனைத்துமே பலவித வளர்ச்சிப் படிகளைத் தாண்டியே இன்று நம் மத்தியில் எளிமையான முறையில் நிலவுகின்றன.
VSA / 22 o3

Page 4
தமிழ் மொழியின் எளிமை யாக்கத்தில் பிற நாட்டாரின் தொடர்பும் முக்கியமானதாகும். ஐரோப்பியர் காலத்தில் வீரமா முனிவரின் எழுத்துச் சீர்திருத்தப் பணி தமிழ் மொழியின் எளிமையாக்கத்தில் துணைநின்றது. ஏகாரத்தைக் குறிக்க எகரமும் எகரத் தைக் குறிக்க எகரத்தின் கீழ் ஒரு புள்ளியும் (ஒகர ஒகாரமும் அவ்வாறே) எழுதப்பட்டு வந்த வழக்கினை மாற்றிய மைத்தது மட்டுமன்றி மெய்யெழுத்திற்கு புள்ளியிடும் தன்மையினையும் அறிமுகப் படுத்தினார். அறபு எண் பாவனையும் இங்கிருந்தே அறிமுகப்படுத்தப்பட்டது. வீரமா முனிவருக்குப்பின் கடுமையான புணர்ச்சி விதிகளைத் தவிர்த்து அகப் புணர்ச்சி, புறப்புணர்ச்சி அம்சங்களை கருத்திற்கொண்டு சந்திபிரித்தெழுதும் முறையை ஆறுமுக நாவலர் தொடக்கி வைத்தார்.
இதன் மூலமும் தமிழ் மொழி எளிமையாக்கத்திற்குட்பட்டது. இல்லா விடில் கடின புணர்ச்சிகளைக் கொண்ட
வாக்கியத் தொடர்களை சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும். "அவனின்றி யணுவு
மசையாது, வஞ்சனைகள் செய்வாடீரா டிணங்க வேண்டாம்' எனும் தொடர்கள் 'அவனின்றி அணுவும் அசையாது, வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்' என வரின் சாதாரண மக்களால் இலகுவாகப் புரிந்து கொள்
(Iքգալth.
வாக்கிய அமைப்புக்களைப் பொறுத்தவரையில் சிறிய வாக்கியங் களை அமைத்தலும், நிறுத்தற் குறியீடு களை பயன்படுத்தவதும், மொழி எளிமையாக்கத்திற்கு முக்கிய அம்ச மாகும். மேலும் பல சொற்களில் காணப் படுகின்ற பல பொருள்களும் சொற் களஞ்சிய விருத்தியிலிருந்து அகற்றப்பட
வேண்டும். அவவாறு அகற்றப் படுமாயின், தமிழ் மொழி மேலும் எளிமை யாக்கப்படும். உதாரணமாக
சூரியனைக்குறிக்க ஞாயிறு, ஆதவன், எல்லி, கனவி, செங்கதிர், அருணன் போன்ற பல சொற்கள் தேவையில்லை. அது போலவே பாம்பு, சத்தம், சிலம்பு என்ற பொருள்களைக் குறிக்க அரவம் ஒரு சொல்லும் அவசியமில்லை. அவை யவை அவ்வச் சொற்களிலேயே பயன் படுத்தப்படுமாயின் தமிழ் மொழி மேலும் எளிமையாக்கபடும்.
தற்காலத்தில், தமிழ் மொழியின் எளிமையாக்கமானது மிக மிக அவசிய மானதாகும். பழங்காலத் தமிழில் பயன் படுத்தப்பட்டது போன்ற னகர, ணகர, நகர, லகர, ழகர, ளகர, ரகர, றகர வேறுபாடுகள் தற்காலத் தமிழில் பெரு மளவு பயன்படுத்தப்படுவது குறைவு மட்டுமின்றி ஏனைய மொழிகளை பேசு வோர்க்கு இவற்றைப் பயன்படுத்துவது கடினமாவும் உள்ளது. எனவே இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்து வோமாயின் தமிழ் மொழி எளிமை யாக்கப்படுவது மட்டுமின்றி தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்கள் குறை யவும் இடமளிக்கும். மேலும் பிறமொழிச் சொற்களை அதே சொற்களால் குறிப்பிடும் போதே அச்சொல்லின் பொருள் பூரணமாகப் புலப்படும். உதாரணமாக பாணை,வெதுப்பி என்றும் கேக்கை குதப்பி வெதுப்பி என்றும், கம்ப்யூட்டரை கணனி என்றும் குறிப்பிடும் போதும் அதன் பொருள் பூரணமாக புலப்படுவது குறைவாகவே இருக்கிறது. எனவே, பிற மொழிச் சொல்லாக்கத் திலும் தமிழ் மொழி எளிமையினையே பின்பற்ற வேண்டும். பென்சில், பென டோல், பிஸ்கட், சொக்லட், இன்னும் இது போன்ற சொற்கள் அந்தந்த மொழியிலேயே பயன்படுத்தப்படுமாயின் அது தமிழ் மொழியின் எளிமையினைப் பேண உதவும். மேற்கூறப்பட்ட பிற மொழிக்கான தமிழ்ச் சொற்களைத் தமிழில் யாரும் பயன்படுத்தப்படுவதா கவும் தெரியவில்லை.
மேலும், தமிழ் நெடுங்கணக் கிலுள்ள பயன்படாத எழுத்துக்கள் எனக்
Vyasáň / 22

குறிக்கப்படுகின்ற எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கிலிருந்து நீக்கப்பட வேண்டும் 'ங்' தவிர்ந்த ங்ா,ாB,ாB முதலிய ங்கர வரிசையில் வருகின்ற முதலான எழுத்துக்களையும் ஞகர வரி சையில் வருகின்ற பயன்படுத்தப் படாத சில எழுத்துக்களையும் தமிழ் நெடுங் கணக்கிலிருந்து நீக்கிவிட வேண்டும். ஏனெனில், அவை பயன்படாத எழுத்
துக்கள் பயன்படாத எழுத்துக்களை வைத்திருப்பதில் பயனில்லை. அவ் வாறே ' எனப்படும் ஆய்த எழுத்தும்
தற்காலத்தில் பெரிதும் பயன்படுத்தப் படுவதில்லை.
தமிழ் வரி வடிவமானது காலத் துக்கு காலம் பல மாற்றங்களைச் சந்தித்து தற்போது ஒரு வடிவத்தினைப் பெற்றுள்ளது. இவ்வரிவடிவமும் சீரிய, சிறப்பான வரிவடிவம் எனக் கூற முடியாதுள்ளது. சுமார் பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு தமிழ் மொழியிலுள்ள பதிமூன்று எழுத்துக்கள் எழுத்துச் சீர் திருத்திற்கு உட்பட்டது யாவரும் அறிந்ததே. குளுற2னஅன2ல9ள முதலான எழுத் துக்கள் கணனியின் வருகையினால் னா,ணா,றா,னை,லை,ளை என எழுத் துச் சீர்திருத்தத்திற்கு உட்பட்டன. இவ் வெழுத்துக்கள் இவ்வாறு குறுகிய கால த்திற்கு முன்புதான் மேலுள்ள புதிய வரிவடித்தினைப் பெற்றுள்ளன.
இதன் போது இன்னும் சில எழுத்துக்களும் சீர்திருத்தம் செய்யப் பட்டிருப்பின் சிறப்பானதாக அமைந் திருக்கும். 'கா,மா,பா, முதலான எழுத் துக்கள் எழுதப்படுவதைப் போலவே குளுற முதலான எழுத்துக்கள் 'னா,ணா,றா, என மாற்றப்பட்டன. "கை, தை,மை,பை முதலான எழுத்துக்கள் எழுதப் படுவதைப் போல ‘உன.உல,2ள முதலான எழுத்துக்கள் 'னை,லை,ளை, என மாற்றப்பட்டன. அவ்வாறே 'கா,சா, தா,மா, பா,நா,னா, என எழுதப்
Vழதல்/22
படுவதைப் போல ஆகாரமும் (ஆ) 'அா' என ஏன் மாற்றப் பட்டிருக்க கூடாது. (இனியும் ஏன் மாறக் கூடாது) இவ்வாறு அகர வரிசை எழுத்துக்கள் உயிர் மெய் எழுத்துக்கள் போல மாற்றப்படுமாயின் அவை அ,அா(ஆ),அT(இ),அf(ஈ),அா (உ),ஆ(ஊ),அெ(எ),அே(ஏ),அை(ஐ), அொ(ஒ),அோ(ஓ),ளெஅ(ஒள) என்றே அமைய வேண்டும். இங்கு 'ஆ' என்ற வடிவத்தில் அமைந்துள்ள எழுத்து 'ஊ' ஆகும். ஆனால், தற்போது நாம் பயன் படுத்தும் 'ஆ' எனப்படும் எழுத்தானது. ஒரு சிறிய குறைபாட்டைக் கொண் டுள்ளது. 'அ,ப' ஆகிய இவ்விரண்டு எழுத்துக்கள் மூலமே இப்பிரச்சினை தோன்றுகிறது. 'ப'கரத்தைக் குறிக்க 'ப' பயன்படுவது போல் 'அ'கரத்தைக் குறிக்க 'அ' பயன்படுகிறது. அவ்வாறே 'பா' வைக் குறிக்க 'ா' எனும் துணைக் குறி இட்டு 'பா' பயன்படுவது போல்
'ஆ'வைக் குறிக்க ஏன் 'ா' எனும் துணைக் குறியோடு 'அா' பயன்படக் கூடாது.
மேலும் தற்பொழுது நாம் பயன்படுத்தும் 'அ'வானது "ஆகாரத்
தைக் குறிக்குமாயின் 'பா'வைக்குறிக்க 'பூ' என்ற எழுத்தே பயன்படுத்தப்பட வேண்டும். அ,ஆ இவ்வாறிருப்பின் ப,பா என நாம் எழுதும் எழுத்துக்கள் ப,பூ என்றே எழுதப்படவேண்டும். ஏனெனில் 'அ' வினதும் 'ப' வினதும் ஆகாரத்தைக் குறிக்கும் துணைக் குறிகள் இரண்டும் ஒன்றாகவே (1) இருக்க வேண்டும். இது விடயத்தில் நவீன மொழியியலாளர்கள் தம் கவனத்தைத் திருப்ப வேண்டும்.
இவ்வாறு நவின தமிழ்ச் சமூதா யத்தின் தேவைகளுக்கிணங்க தமிழ் மொழி எளிமையாக்கப்படுவது மிகமிக இன்றியமையாதது என்பது இதிலிருந்து உணரப்படுகிறது.

Page 5
அநராதபுர மாவட்ட மண்ணிலிருந்து ஒரு காத்திரமான இலக்கிய நகர்வுகளுக்கு நாம் தொடர்ந்து முயற்சிக்கிறோம். அதில் படிகள் சஞ்சிகையின் தொடர் வருகை முக்கியமான தடமாகவும் அடையாள வரைபடமாகவும் அமைகிறது. அத்துடன் இப்பிரதேச படைப்பாளிகளது படைப்புக்களை நூலுருவில் கொண்டு வருவது இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க பணியாக அமைகிறது.
படிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக இப்பிரதேச இலக்கிய வளர்ச்சியை அடிப்படையாகவும் தேசிய இலக்கிய வளர்ச்சிக்கு புதிய பரிணாமமாகவும் தொடர் இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இச்செயற்பாடுகளின் இன்னொரு கட்டமாக படிகள் “அநுராதபுர மாவட்ட தமிழ்க் கவிதைகள் தொகுதி - ஒன்று’ (வேலிகளைத் தாண்டும் வேர்கள்) என்ற கவிதை நூல் ஒன்றை வெளியிட துணிந்து செயற்படுகிறது. இவ்வெளியீட்டின் ஊடாக படிகள் தனது வெளியீட்டுத் தளத்தை பதிப்பகமாக தடம்பதிக்கிறது.
தொகுதி - ஒன்று
ബര്ത്തുസ്ട്ര ക്രത്നക്രമ Gബ്
92ጀgሏላØUሏ
என் வளிம் அக்ரம்
அநுராதபுர தமிழ்க் கவிதைப் பகைப்புலம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த பரப்பில் பலரது படைப்புகளும், நூல்களும் பங்களித்துள்ளன. இதில் அன்பு ஜவஹர்ஷாவின் பிரசுரமான கவிதைகள் “காவிகளும் ஒட்டுண்ணிகளும்" என்ற தொகுப்பாகவும், இவர் தொகுத்த 44 ஈழத்துப் புதுக்கவிதையாளர்களின் கவிதைகள் "பொறிகள்" என்ற பெயரிலும் கவியரங்குக் கவிதைகள் "புத்துலகம் படைப்போம், சிதைந்து போகும் சிறப்புகள்’ என்ற வகையிலும் தொகுப்புகளாக்கபட்டுள்ளன. அவ்வாறே பேனா மனோகரனின் “சுமைகள்’ கெகிராவ ஸஹானாவின் “இன்றைய வண்ணாத்துப் பூச்சிகள்’, நாச்சியதீவு பர்வீனின் “சிரட்டையும் மண்ணும்’ எம்.சீ. ரஸ்மினின் “நாளையும் மற்றொரு நாள்” (சிங்கள இனத்து மொழி பெயர்ப்புக் கவிதைகள்) எல். வஸிம் அக்ரமின் ‘மண்ணில் துழாவும் மனது” என்பன முக்கியமானவை. வேலிகளைத் தாண்டும் வேர்கள் என்ற தொகுதியில் அன்பு ஜவஹர்ஷா, பேனா மனோகரன், கெகிராவ ஸஹானா, நாச்சியாதீவு பர்வீன், கெகிராவ ஸலைஹா, எம்.சீ. ரஸ்மின், அநுராதபுரம் றஹற்மதுல்லாஹற், எல். வஸிம் அக்ரம், அநுராதபுரம் சமான் ஆகிய பழைய புதிய தலைமுறையினரது கவிதைகள் தொகுக்கப்படுகின்றன. விரைவில் வெளிவரும் இத்தொகுதி அநுராதபுர மாவட்ட இலக்கிய நகர்வுகளுக்கு மேலும் தூண்டலாக அல்லது பின்னூட்டலாக அமையும் என்பதுடன் ஈழத்து கவிதைத் துறைக்கு ஒரு காத்திரமான பங்களிப்பை செலுத்தும் என நம்பலாம்.
ᎤᎵ Vyasi /22
 
 
 
 
 
 
 

துகல் துகல்களாக நீர்த்துளிகள் வானத்தின் ஓட்டைகளுக்கூடாக பூமியில் விழுந்து பூமியைக் கொறித்துப் போட்டது
சுயமிழந்த பூமி அங்கங்கள் தோறும் காயங்கள் சுமந்து கொண்டே மெளனம் காத்தது.
ஒரு முழு நாளில் பூமியின் மர்மப் பிரதேசங்கள் மரணவலியில் துடித்தன
பிறகு தம்மைத் தாமே சமாதானம் செய்து கொண்டது பூமி
இரத்தம் தோய்ந்த கரங்கள் சண்டைபோடும் மனிதர்கள் யுத்தம் வெடிகுண்டு இத்தியாதிகளினால் எத்தனை வக்கிரங்கள் என்மீது
இயற்கையே நீயுமா?
இன்னொரு மழை ஆரம்பமாகியது பூமியின் கண்ணிர் மழை நீரில் கலந்து அடையாளமிழந்து கொண்டிருந்தது
மழை பூமியின் வேறொரு பகுதியை
கொறித்துக் கொண்டிருந்த e
றித்து ாணடிருநதது நாச்சியாதீவு பர்வின்
/ழதல்/22

Page 6
படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையிலான இடைவெளியை திறனாய்வு செய்யும் "பத்தி" எழுத்தாளர்கள் நிரப்பி வருகிறார்கள் என நினைக்கிறேன்.
- கே.எஸ். சிவகுமாரன்
உங்களது ஆரம்பகாலம் முதல் இன்று வரையான படைப்பாக்க முயற்சிகள் தொடர்பான விபரங்களை ஒர் பதிவுக்காக சுருக்கமாகக் குறிப்பிடுங்கள்.
படைப்பாக்க முயற்சிகள் என்னும்பொழுது, எனது ஆரம்பகாலச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ஒன்று "இருமை" என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. தமிழிலும், ஆங்கிலத்திலும் சில கவிதைகளை எழுதியிருக்கிறேன். நூலாக இன்னும் வெளிவரவில்லை. சில பிறமொழிக் கவிதைகளை ஆங்கிலம் வாயிலாகக் கற்று அவற்றைத் தமிழில் தந்திருக்கிறேன். சில பிறமொழிக் கதைகளை தமிழில் தந்திருக்கிறேன். அவை எனது "பிறமொழிக் கதைகள் சில” என்ற நூலில் இடம்பெற்றுள்ளன.
vipes/22
 

ஈழத்துச் சிறுகதையாசிரியர்கள் சிலரின் கதைகளைத் தமிழில் தந்துள்ளேன். 3)16.1303 f6) "A Lankan Mosaic”, “Crossing Bridges' 616ölps stild56)5 தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.
இவை வெற்றிகரமாக வாசிக்கப்பட்டனவா என்பதைச் சொல்ல முடியாதிருக்கிறது.
நீங்கள் ஒரு படைப்பாளியாக, விமர்சகராக, மொழிபெயர்ப்பாளராக, ஆய்வாளராக என்று பல்பரிமாணம் கொண்டவர். சமூக நிலவரத்திற்கு ஏற்ப உங்களது எந்த ஆக்க முயற்சி இதுவரை அதிகளவுவெற்றியடைந்துள்ளது?
எனது திறனாய்வு முயற்சிகள் சமூகத்திற்குப் பயன்படுகின்றனவா என்றால், பொதுப்படையாக இல்லை என்றும், குறிப்பாக "ஆம்" என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. இது ஏனெனில், உயர்வகுப்பு / பல்கலைக்கழக மாணவர் களுக்கும், ஆய்வாளர்களுக்கும், இலக்கியத்தில் ஈடுபட்டவர்களுக்கும் நிறையத் தகவல்களையும் நடைமுறைத் திறனாய்வு (Practical Criticism) அடிப்படையிலான மதிப்பீடுகளை எனது நூல்கள் தந்துள்ளன என்று சொல்லத் தோன்றுகிறது.
சினமாவை எவ்வாறு நுகர வேண்டும் என்பதற்கான திரைப்படத் திறனாய்வு தொடர்பான "அசையும் படிமங்கள்" என்ற நூலும், பிறமொழிப்படங்கள் பற்றிய எனது இரசனை / தகவல் குறிப்புக்கள் அடங்கிய "சினமா, சினமா - ஓர் உலக வலம்" என்ற நூலும் பயனளித்திருக்குமென நம்புகிறேன். நூலாக வெளிவராத நிலையில் நாடகத்துறை பற்றிய எனது கட்டுரைகள் "பத்தி” எழுத்தாக முன்னர் வெளிவந்த பொழுது, அவையும் பயனளித்திருக்குமென நினைக்கிறேன்.
ஆரம்ப காலங்களில் (1960, 1970) படைப்பாக்க முயற்சியோடு விமரிசன முயற்சியும் சமாந்திரமாக வளர்ந்து வந்தது, ஆனால், இன்று விமரிசனத்துறையில் ஒர் தேய்வு ஏற்பட்டுள்ளதாக கதையாடல்செய்யப்படுவதுபற்றி .
நான் "விமர்சனம்" செய்பவன் அல்லன். எனது முயற்சிகள் "திறனாய்"வாகவே அமைகின்றன. விமர்சனத்துறையில் "தேய்வு ஏற்பட்டுள்ளதா என்பைதச் சொல்ல முடியாதிருக்கிறது. ஏனெனில், கண்டனமே "விமர்சனம்" என்று மருண்டு எழுதுபவர்களின் விமர்சனங்களை நான் படிப்பதில்லை.
அதேவேளையில், "திறனாய்வு" என்று வரும்பொழுது, அவ்விதமான முயற்சிகளில் தேய்வு ஏற்படவில்லை என்றும் மாறாக, வளர்ச்சியை அவ்விதமான ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் கூறக்கூடியதாய் இருக்கிறது. பல்கலைக்கழக ஆசிரியர்களும், செங்கை ஆழியான், செ.யோகநாதன், மதுசூதனன் க.சண்முகலிங்கன், கோபாலகிருஷ்ணன், கோகிலா மகேந்திரன், தெளிவத்தை ஜோசப், புலோலியூர் இரத்தினவேலோன், வசந்தி தயாபரன் மற்றும் தென்கிழக்கில் உள்ள புதியவர்கள் இடையிடையே நல்ல திறனாய்வுகளைச் செய்வதாக எனக்குத் தோன்றுகின்றது.
vipes/22

Page 7
இன்று நாடு தழுவிய ரீதியில் வாராந்தம் ஆகக்குந்ைதது ஒரு நூல் வெளிவருகிறது. ஆனால், இவ்வெளியீடுகள் படைப்பாளிக்கும், விமர்சகனுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பியதாகக் கருதலாமா..?
புதிதாக வெளிவரும் நூல்கள் படைப்பாளிக்கும், விமர்சகனுக்கும் இடைவெளியை நிரப்புகின்றது என்ற கூற்றை என்னால் சரிவரப் புரிந்துகொள்ள முடியவில்லை. மன்னிக்கவும்.
ஆயினும், படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையிலான இடைவெளியை திறனாய்வு செய்யும் "பத்தி" எழுத்தாளர்கள் நிரப்பி வருகிறார்கள் என நினைக்கிறேன். அத்துடன், பல்கலைக்கழக மட்ட (Academics) ஆய்வாளர் களுக்கும், இலக்கியவாதிகள், தரமான வாசகள்களுக்குமிடையிலான இடைவெளியை இந்த "பத்தி" எழுத்தாளர்களே நிரப்பி வருகின்றனர் என்று தீவிரமாக நான் நம்புகின்றேன்.
ஆரம்ப காலங்களில் குழு நிலை வாத இலக்கிய முயற்சிகளில் அதிகளவு முனைப்புக் காட்டப்பட்டது. ஆனால், இன்று புதிய தலைமுறைப் படைப்பாளிகளை வழிநடத்தத்தக்க எந்த ஒரு காத்திரமான முனைப்பும் தெரியத்தக்கதாக இல்லை. இது ஏற்கத்தக்க கருத்தா..?
புதிய தலைமுறைப் படைப்பாளிகளை வழிநடத்தத்தக்க காத்திரமான முனைப்பு இப்பொழுது இல்லை என்றால், அதற்குக் காரணம், புதிய படைப்பாளிகளின் பயன் மதிப்புகள் மாற்றத்திற்குள்ளாகியுள்ள, புதிய தொடர்புசாதனங்கள் பாவனைக்கு வந்துள்ளன. உலகமயமாதல் நிதர்சனமாகியுள்ளது. அறிவுப்பெருக்கம் ஏற்பட்டிருப் பதனால், குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் போதாமையாய் இருப்பதை விழிப்படைந்த புதிய படைப்பாளிகள் உணர்ந்துள்ளனர் என்றுதான் என்னால் ஊகிக்க முடிகிறது.
ஈழத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர் கவிதை, சிறுகதை, பத்தி, ... :::: திறனாய்வு, சினிமா, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபட்டுவருபவர்
சாதுவானவர், நேர்மையானவர், இங்கிதமானவர், அடக்கமானவர், ஆழமானவர், எளிமையானவர்.
*گنجeں۔
vyas M22
 
 
 
 
 

தொழினுட்பத்தின் வளர்ச்சி ஏற்பட்ட இக்காலகட்டத்தில் புதிய தலைமுறையினரது அல்லது இளைய தலைமுறையினரது இலக்கிய ஈடுபாடு எத்தகைய பொருத்தப் பாடுடையது..?
புதிய எழுத்தாளர்கள் தொழில்நுட்ப சாதனங்களை உரிய முறையில் பயன்படுத்துவதாக இல்லை. இணையத்தளங்கள் போன்றவை குழு மனப்பான்மை யுடனும், பெரும்பாலும் பக்கச்சார்புடையவையாக இருப்பதுடன், இந்தியச் சிந்தனைகளை அப்படியே முழுங்கி அவையே சரியென நம்புகின்றன. மேனாட்டு "இஸம்"களைத் தமிழ்நாட்டுச் சிற்றேடுகள் பொருள்கொண்டு தெரிவிப்பவை அரைவேக் காடானவை. அதையே இலங்கையிலும் உச்சரிப்பு தொடக்கம் சிந்தனைப் பிறழ்வு வரை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது வருத்தம் தருகிறது.
இளைய தலைமுறையினர் வாசிப்பில் நாட்டம் கொள்வதில்லை. தேடல் முயற்சிகளும் இல்லை. மேற்கோள்களும், அடிக்குறிப்புகளும் கொண்ட "வழவழா" வியாக்கியானங்கள் ஆழமான ஆய்வுகள் எனப் பறைசாற்றப்படுகின்றன.
இருந்த போதிலும், ஆங்காங்கே நல்ல முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதை நாம் மறக்கக்கூடாது.
நவீனத்துவம், பின்நவீனத்துவம், அமைப்பியல்வாதம், பின்னமைப்பியல் வாதம், சர்ரியலிசம், பண்மைத்துவம். என்ற படைப்பாக்க விமர்சனத்துறை வளர்ந்துவிட்ட காலகட்டத்தில் நீங்கள் படைப்பை விமர்சனத்திற்காக நோக்கும் போது, படைப்பினை எந்தத் தேவைகருதி நோக்குவீர்கள் ?
நீங்கள் குறிப்பிடுபவை வளர்ந்துவிட்டதாகக் கூறுகிறீர்கள். ஆனால், நான் அறிந்த மட்டில் இவை எழுந்த நாடுகளிலேயே செல்லாக்காசாகிவிட்டன. அந்நாடுகளின் பல்கலைக்கழகங்களில் பட்டதாரிப் படிப்புக்காக மாத்திரம் இந்த "இஸம்கள்" சம்பந்தமான கேள்விகளும் கேட்கப்படுவதால், அவற்றைப் பற்றிப் படிப்பது மாணவர்களுக்கு அங்கு தேவையாய் உள்ளது.
தமிழ்நாட்டில் காலந்தாழ்ந்து வந்து அறிமுகமான இந்த "இஸங்கள்" தமிழ்நாட்டுச் சிற்றேடுகளுக்குத் தீனி போட்டன. இங்குள்ளவர்களும் அந்தச் சிற்றேடுகள் அறிமுகஞ்செய்யும் அந்த அரைகுறை வியாக்கியானங்களை தலைமேல் கொண்டு கூத்தடிக்கின்றனர்.
படைப்புக்களை எந்தத் தேவைக்காக நான் நோக்குகின்றேன் என்று கேட்டால், நான் சமூகப் பார்வையும், அழகியல் அம்சங்களும், கலை நுட்பங்களும் இருக்கின்றனவா என்றே சம்பிரதாயமான Practical Criticisms பாங்கில் எனது திறனாய்வு சார்ந்த பத்தி எழுத்துகள் அமைகின்றன. அவற்றை ஏற்பதும், தள்ளுவதும் சம்பந்தப்பட்டவர்களின் முழு உரிமை. நான் பிரதிபலனை எதிர்பாராது, எனக்குத் தெரிந்த சிற்றறிவுடன் பாரபட்சமின்றி எதனையும் நோக்குகிறேன்.
V9asáň / 22 11

Page 8
சினிமாத்துறை சார்ந்த ஈடுபாடு கொண்ட நீங்கள் இன்றைய சர்வதேசிய சினிமா காலத்தின் தேவைகளை எவ்வெவ் வகையில் பூர்த்தி செய்கின்றது. அது அப்பழப் பூர்த்திசெய்வதாகக் கருதின் அதற்குள் தமிழ் சினிமாவைவைத்துநோக்கலாமா..?
நான் முன்னர் தமிழ் சினமா, ஈழத்துத் தமிழ் சினமா என்பவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தேன். பின்னர் உலக சினமாக்களைப் பார்த்தபின், தமிழ்ப் படங்களை எனது அக்கறைக்கு எடுத்துக்கொள்வதில்லை. உலக சினமாவின் வியப்புமிகு படங்கள் என்னைக் கவருகின்றன. அவைபற்றி ஆங்கிலத்தில் எழுதி வருகின்றேன். ஈழத்துத் தமிழ் ஏடுகள் உலக சினமா பற்றி எழுதுவதை அநேகமாக வரவேற்பதில்லை. தமிழ்நாட்டுச் சிற்றேடுகள், இணையத்தளங்கள். ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வெளிவருவதைத் தழுவி இங்குள்ள சிலர் தமிழ் சினமா பற்றியும், எழுதி வருகிறார்கள். அது, அவர்களின் சுதந்திரம். ஆனால் பாவம், திரைப்படத் துறையில் உண்மையாகவே ஈடுபாடுடையவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
தமிழ் சினமாவை, உலக சினமாவின் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டியே உள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ்ப் படங்களே ஜனரஞ்சக மாகவும், கலைத்துவத்துடனும் வெளியாகின்றன.
இப்பொழுது சிறு சஞ்சிகைகள் வடமத்திய, கிழக்கு, தென்கிழக்கு, மலைநாடு, கொழும்பு போன்ற இடங்களில் வெளிவருவதனால், அப்பிரதேசப் படைப்புக்களையும், ஆற்றல்களையும் நாம் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.
தமிழகத்திலிருந்து வெளிவருகின்ற வெளியீடுகளுக்குக் கிடைக்கின்ற அங்கீகாரம், நமது நாட்டுப் படைப்புகளுக்கு, நமது நூலகங்களிலும், வாசகர்களிடமும் கிடைப் பதில்லை என்ற வாதப் பிரதிவாதத்தினை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா ? அப்படியாயின், அதற்கான காரணங்கள் பற்றிக்கூறுங்கள்.
ஆம், நான் ஏற்றுக்கொள்கிறேன். நூலகங்கள், வாசகர்கள் மாத்திரமல்ல, நூல் விற்பனையாளர்களும்கூட ஈழத்துப் படைப்புக்களை உதாசீனம் செய்கின்றனர். இதற்கான காரணங்கள் பல. அவற்றுள் சில (1) நமது ஊடகங்கள் பிரக்ஞை பூர்வமாக ஈழத்தில் கலை இலக்கியங்கள் பற்றிக் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இதற்கான காரணம் அவ்வூடகங்களில் பணிபுரியும் இளசுகளுக்கு, ஈழத்து எழுத்தாளர்கள் பற்றி ஒன்றுமே தெரிவதில்லை. அவர்களுக்குத் தமிழ்நாட்டு ஊடகங்களும், இணையத்தளங்களும், சஞ்சிகைகளும் இருக்கின்றன ஆர்வம் காட்டுவதற்காக (2) மாணவர்களின் பாடத்திட்டங்களில் இலங்கைப் படைப்புக்கள் பற்றிய பாடங்கள் அதிகம் இல்லை. (3) முட்டாள்தனமான தமிழ் சினமாப் படங்கள், பாடல்கள் Fusion Music என்ற பெயரில் தரப்படும் தரங்குறைந்த இசைப்பாடல்கள்
12 Vடிதல்/22
 

வெகுஜன இரசனையாக மாறிவிட்டன. கலைத்துறையைவிட வணிக / விஞ்ஞானத் துறைகளில் மாணவர்கள் அதிக நாட்டம் காட்டுவதனால், அவர்களுக்குத் தமிழ் இலக்கியத்தில் பரிச்சயமில்லாது போய்விட்டது. எனவே, ஊக்குவிப்போர் இல்லாததனால், நமது வெளியீடுகளுக்கு அங்கீகாரம் இல்லாமற்போய்விட்டது.
நெருக்கழயான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இனிறு ஈழத்தினி பல்வேறு பிரதேசங்களில் இருந்து சிறு சஞ்சிகைகள் வெளிவருகின்றன. இவை எமது இலக்கியத் தேவைகளைப்பூர்த்திசெய்கின்றதா..?
வெவ்வேறு பிரதேச இலக்கியங்களைப் புறக்கணித்து, வடபகுதிப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதனால், பல தசாப்தங்களாக இந்த நிலைமை இருந்து வருகிறது. இப்பொழுது சிறு சஞ்சிகைகள் வடமத்திய, கிழக்கு, தென்கிழக்கு, மலைநாடு, கொழும்பு போன்ற இடங்களில் வெளிவருவதனால், அப்பிரதேசப் படைப்புக்களையும், ஆற்றல்களையும் நாம் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இது வரவேற்கத்தக்கதொன்று. முழு இலங்கையும் கவனத்திற் கொள்ளப்படல் அவசியம். அந்த விதத்தில் ஈழத்துத் தமிழ் இலக்கியம் ஓரளவு பூரணத்துவத்திற்கு நெருங்கி வருகிறது எனலாம்.
உங்கள் வீட்டுப்பாவனைப்பொருட்கள் அனைத்தையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள,
NASEER STORs
BAZAR STRCCT, NACHCHADUWA.
XX.XX.XX.X il NURDDU
:::::::::::::::::::::::: TIL — 0:0 22Q0Q Q
"~
Vigas /22

Page 9
இலக்கியத்துறை வளர்ச்சியில் கவிதைகளின் பங்களிப்பு அதிகமானதும் இன்றியமையாததுமாகும். ஆதிகாலம் தொட்டு பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேசும் ஊடகமாக கவிதைகள் இருந்து வந்துள்ளன. உரோம பாரசீகக் காலங்கள் மற்றும் இஸ்லாத்திற்கு முந்திய அரேபிய காலங்களில் இலக்கியத்துறை வளர்ச்சியில் கவிதைகள் செல்வாக்கு செலுத்தியுள்ளன. இது இன்று நவீன காலத்தின் மாற்றங் களுக்கு இசைவாக பல்வேறு பரிமாணங்களைக் கண்டுள்ளது.
கவிதைகளின் மொழி, உட்பொருள், கட்டமைப்பு என்பன இன்று அதன் வளர்ச்சிக்கான அல்லது மாற்றங்களுக்கான அடையாளமாகக் குறிப்பிடலாம். கவிதையின் பேசுபொருள் காலத்திற்கேற்ப பல்வேறு துறைசார்ந்த அடைவுகளை எட்டி உலக மாற்றங்களில் இணைந்துள்ளது. உதாரணமாக பலஸ்தீன, ஆபிரிக்கக் கவிதைகள் பூர்வீகம், இருப்பு போன்ற பிரக்ஞைகளுடன் அமைந்துள்ளதை சுட்டலாம். இன்னும் நமது சூழலிலும் கவிதைகள் இவ்வாறு இருப்பதுடன் காதல், போர், இருப்பு, அகதி வாழ்வு, பெண்ணியம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளை உரையாடுகின்றன.
இந்த வகையில் சிறகுநுனி வெளியீடாக வந்துள்ள பெண்ணியாவின் இது நதியின் நாள் என்ற கவிதை நூல் பற்றி சில கருத்துக்களை இங்கு உரையாடுகிறேன்.
நுரைச்சோலை சுல்பி தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
பெண்ணியாவின் முதலாவது கவிதைத் தொகுதிக்கும் (என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை) இரண்டாவது கவிதைத் தொகுதிக்கும் (இது நதியின் நாள்) இடையில் பாரிய இடைவெளியும் வீச்சும் தெரிகிறது. இது நதியின் நாள் - பெண்ணியாவின் கவிதைகள் இன்றைய போர்ச் சூழல் பற்றியோ அல்லது அதன் விளைவுகள் பற்றியோ என்ற நமது அண்மைய கவிதா மரபிலிருந்து உடைந்து பெண் உணர்வு சார்ந்த உலவியலை பேசியும் பல செய்திகளை பகிர்ந்தும் நிற்கிறன. இத் தொகுதியில் உள்ள பெரும்பான்மையான கவிதைகள் காதல், காமம், ஏக்கம், பெண்ணியம், இயலாமை, இன்பம், இயற்கை போன்ற கருத்தியல்களுடன் நமது வாசிப்பை தூண்டுகிறது.
பெண்ணியாவின் கவிதைகளின் கருத்துக்கள் அல்லது பிரச்சினைகள் அனாரின் கவிதைகளுக்கு சமாந்திரமாக இருப்பது கண்கூடாகும். இவ்விரண்டு படைப்பாளிகளின் கவிதை அரசியல் விமர்சனத்துக்குரியதாகப் படுகிறது. ஆனால் அனாரின் கவிதை மொழியும் பெண்ணியாவின் கவிதை மொழியும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டு நின்கின்றது.
பெண்ணியாவின் கவிதைகளில் இரண்டு விடயங்கள் முக்கியமானது ஒன்று பெண்ணியம் மற்றையது காதல். இவ்விரண்டையும் பல கவிதைகள் பேசுகின்றன.
1. Vyasi /22
 
 
 
 

பெண்ணியம் -
ஆணிவேரின் மரபணுக்கள் என்ற கவிதை பின்வருமாறு அமைகிறது.
வன்முறை நிகழ்த்தப்படும் போது அது நிகழ்த்தப்படுகிற பக்கம் நீளமான கூந்தல்கள் அலங்கோலமாய் கலைக்கப்படுகின்றன
ஆணிவேரினர் மரபணுக்களைக் கொண்ட வாரிசுகளை ஒருபோதும் தானர் என்ற சுய கர்வத்திலிருந்து கட்டுடைக்க இயலாது.
இக்கவிதையின் மொத்தமும் ஆணின் மிலேச்சத் தனத்தின் குறியீடுகள் படிமங்க ளாகின்றன. எந்த இன்பமுமற்ற வன்முறை நிகழ்த்தப் படுவதாக கலவியை கவிதாயினி ஒப்பிடுகிறார். அவ்வாறே இரவு நேரத் தொழிலாளி என்ற கவிதையும் பெண் ஒரு நிரந்தர தொழிலாளி என்ற கருத்தில் அமைகிறது. காலை முதல் இரவு வரை தன்னைத் தவிர (கணவன், குழந்தை இன்னும்) அனைவருக்கும் ஊதியமற்று பணி செய்வதாக குறிப்பிடுகிறது.
காதல் -
காற்றில் ஈரலிக்கும் காதல் என்ற கவிதை பின்வருமாறு உரையாடுகிறது.
உயர்ந்த மலைகளுக்கப்பால் மெல்லிய நீல இருளில் அவளினதும் அவனினதும் கரைக்கமுடியாத சிரிப்பொலிகள் கேட்டபடியேதான் இருக்கிறது
அவ்வாறே காதல் நீலமான இரவு என்ற கவிதையின் படிமமும் பின்வருமாறு காதலினதும் வேட்கையினதும் குறியீடு களைக் கொண்டுள்ளது.
காற்றசைவில். மரங்களின் சரசரப்பையும் மூங்கில்களின் ஊதுகுழல் ஓசைகளையும் அவனினர்
காதல் கவிதை ஒன்றினையும் கேட்டு மெல்லமயங்குகிறேன்.
Vyasi / 22
இவ்விரண்டு கவிதைகளும் காதல் உணர்வை உணர்த்துகின்றன. பெண் ணியாவின் கவிதைத் தொகுப்பில் சிறகு நுனி குறிப்பிடுவது போன்று “தனது கவிதைகளை தன்னிலிருந்தும் சுற்றியுள்ள வற்றிலிருந்தும் எடுத்துக் கொள்கின்றார்” என்ற கூற்று முக்கியமானது. படைப்பாளி யின் அகப்புறச் சூழலே படைப்பைத் தீர் மாணிக்கிறது. உண்மையில் ஒரு பெண் னின் பல்வேறு பரிமாணங்களையும் நேர்மையையும் கவிதைகளில் காண பெண்ணியா போன்றவர்களது கவிதைப் பிரதிகள் இன்றியமையாததாகும்.
பெண்ணியாவின் இன்னொரு கவிதை இவ்வாறு அமைந்து, பல்வேறு கேள்விகள் உதிக்கிறது.
அவசரக்குறிப்பு
உண்மைகளை எல்லாம் அழுக்குத் துணிகளுக்கடியில் ஒளித்து வைத்துள்ளேனர்.
நான்
இறக்கவைக்கப்பட்டால்
6T60
அந்தரங்க சிநேகியிடம் இடத்தை அறிந்து கொள்ளுங்கள்.
இறுதியாக பெண்ணியாவின் கவிதை களில் இரவு என்ற சொல் முக்கியமான இடங்களை உரையாடுகிறது. அச்சொல் லும் அதன் உண்மையும், யதார்த்தமும் கவிதையின் உணர்வை அல்லது வாசிப் பின் பொருள்கோடலை பல்வேறு அர்த் தங்களுக்கு எடுத்துச்செல்லுகிறது. கவி ஞர் தனது கருத்தியலையும், அழகிய லையும் சமூகத் தேவைக்கேற்ப நகர்த்து வது நல்லது.
பெண்ணியா ஒரு எதிர்ப்பியலாளராக கவிதையின் அனேக இடங்களில் உலா வருகிறார். இந்த அரசியல் பயங்கர மானது. பெண்ணியாவின் கவிதைகள் நிச்சயம் ஒரு பரிமாணத்தின் புள்ளி களை வரையும், வரைகிறது.
ஒரு இரவுக்காக

Page 10
அந்தக் குரல்
அந்தக் குரல் இந்தப் பூமியை அழகுபடுத்துகிறது மேலிருந்து ஒலிக்கும் அந்தக் குரல் இருள் முகிழ்களுக்கிடையே மறுபடி மறுபடி ஒலிக்கும் இடியின் குரல் இந்தப் பூமியை அழகுபடுத்துகிறது
அந்தக் குரல் இந்தப் பூமியை அழகுபடுத்துகிறது கீழிருந்து ஒலிக்கும் அந்தக்குரல் புல்வெளிகளுக்கும், பூக்களுக்குமிடையே மறுபடி மறுபடி ஒலிக்கும் வெட்டுக் கிளியின் குரல் அழகுபடுத்துகிறது
இந்தப் பூமியை !
&sigsbgigs - Navoja Indian
கெக்கிரவ எரலைஹா மொழிபெயர்ப்புக்கவிதைகள்
டுஇ
Wடிதஃ/22
 

Losongy paslšsšššů Llařve: Těř LANynäs šumo சூரியனுக்கானதோர் பாடல்
அந்த நெருப்பு இருளுட்ட ളേl| ിഖിധീഴ്ച கருமை படர்கிறது திச்சுவாலை ைேனய துரதிஷ்டம் சூழ்ந்து கொள்கிறது எம்மை சூர்யனைத் தேடுகிற கடவுளின் பயணம் ஆரம்பமாகிறது வானவில் சுவர்க்கத்து வேட்டைக்காரனின் வில்லென்றான அவன் கரங்களில் ஒளிர்ந்து மின்னுகிறது தன் சிசுக்களினது துயர அழகுரல்களை அவன் கேட்டிருக்கிறான் வான வீதி வழிநடந்து நட்சத்திரங்களை அவன் சேகரிக்கிறான் அவசரமாய் அவற்றைத் தன் கூடைக்குளிட்டு குவிக்கிறான் தன் வேகமான கரங்களால் பல்லிகளைப் பொறுக்கி கூடை பல்லிகளால் நிரம்பி வழியும் வரை குவிக்கும் அந்தப் பெனன்னைப் போல. ஒளியால் தன் சுடடை நிரம்பி வழியும் வரை அவன் அவற்றை நிரப்புகிறான்
p6AJLb - Primitive African (Hottentot) ஆங்கிலத்தில; -Ul Beier

Page 11
இரண்டு
பெண்கவிதைகளின்
உழித்துயரம்
- தீபச்செல்வன்
ஒற்றைச் சொல்லில் பெரிந்திருக்கிற வலி விரிந்து செல்லுகிற பொருள் இந்த இரண்டு கவிதைகளுக்கும் இருக்கிறது. இருவேறு தன்மையிலான இந்த கவிதைகளை மட்டும் கொண்டு இந்தக் கவிஞர்களை பற்றிய வாசிப்பை உணர முடிகிறது. பெண் வழியில் அனுபவித்துச் சுமக்கிற இருவிதமான துயரங்கள் குறித்து பேசுகின்றன. பொதுவான பெண்ணுலக கவிதைகளின் பண்புகளை தரிசிக்க ஈழத்தின் புலம்பெயர்ந்த கவிஞர்களான மாதுமை றஞ்சனி என்ற இரணடு கவிதைகளை வாசிப்போம்.
அம்மாக்கள் சுமக்கிற தயரங்கள்: மாதுமை கவிதை
காலம் மற்றும் சனங்களின் நெருக்கடிகளை பிரிதிபலிக்கும் பல கடிதங்களை வாசிக்க முடிகிறது. எனது அம்மா எனக்கு எழுதுகிற கடிதங்களிலும் கூட நான் பெரிய துயரங்களை கண்டேன். மிகவும் கசங்கிய ஒரு கொப்பித்தாளின் ஒரு பக்கத்தில் முடிகிற அந்தக் கடிதத்தில் அம்மா எழுதாத துயரங்கள் பெருகுவதை என்னால் உணரமுடிகிறது. அதைப்போலவே என்னோடு படிக்கும் நண்பன் ஒருவனுக்கு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவில் இருந்து அவனது அம்மா அப்பா தங்கைகள் தம்பி எழுதிய கடிதங்கள் மிகவும் காலதாமதமாக கிடைக்கப் பெற்றிருந்தது. அவன் அழுதுகொண்டே இருந்தான். அதில் வலிகளாலான பெருவாழ்வை வாசித்து அழத்தான் முடிந்தது.
மாதுமைக்கு அவரது அம்மா எழுதிய கடிதமும் பெருவலி சுமந்து அவருக்கு வந்திருக்கிறது.
“உனது எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனை தினமும் வேண்டுகின்றேன்’ இந்த வரி சாதாரணமாக கடிதங்களில் இருந்தாலும் அதனைத் தொடர்ந்து வருகிற “இன்று ஏனோ தெரியவில்லை மனம் ஒரே கவலையாக இருக்கிறது. உன்னைப்பார்க்க வேண்டும்போல் மனதில் ஒர் இனம்புரியாத ஆசை” என்ற வரிகள் உண்மையில் ஒரு தாயின் மனதிற்குள்ளிருந்து எழும்புகின்ற குரல்களாக உள்ளன. அதன் கனதி முழுக்கடிதத்தையும் கவனப்படுத்துகின்றது.
18 wyes /22
 

போர் எல்லோரையும் துரத்திக் கொண்டிருக்கிறது. உயிரை காத்துக் கொள்ள எல்லோருமே எங்காவது போய்விட முயலுகிறோம். அதுதான் அதிகாரம் மற்றும் ஆக்கிரமிப்பு கொள்கிற வெற்றியாக நிகழ்கிறது.
“நீ எங்கிருந்தாலும் நல்ல படியாக வாழவேண்டும் என்று விரும்புகிறேன்’
இங்கிருக்கிற அனேக அம்மாக்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள். பிள்ளை களுடன் சேர்ந்திருப்பதைவிட அவர்கள் எங்காவது மிஞ்சியிருக்கட்டும் என்றே நெருக்கடிப்படுகிறார்கள். அந்த நெருக்க டியிலிருந்து நிமிடத்துக்கு நிமிடம் அவர்கள் வலிகளை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
போர் மற்றும் அதன் அதிகாரத் திடம் காலம் தொடர்ந்து நசிபடுகிறது. தப்ப முடியாமல் சனங்களை வதைக்கிறது. எதிர்பார்ப்புக்களை தின்று அவலங்களை புதுப்பிக்கிற அதன் கோரப் பசியால் வாழ்வு பற்றிய ஆசை யாருக்குமில்லை.
“நாட்டு நிலமையை யோசித்தால் அது வேறு கவலை நீங்கள் எல்லாம் வந்து போகக்கூடிய நிலமை எப்போ வரும் என்ற ஏக்கம்’
இந்த தீராத பசியிடம் நல்ல பதில்கள் வர மாட்டாது. வரமுடியாது. என்ற நம்பிக் கையற்ற தன்மை வெளிப்படுகிறது. எல் லாருமே போய்க்கொண்டிருக்க யாரால் திரும்பிவர முடியும். அல்லது திரும்பி வருவது பற்றி யோசிக்க முடியும். மண்ணைப் பிரிந்த மாதுமையின் வலி அம்மாவின் கடிதத்தில் முழுவதும் வதைபடுகிறது.
தமிழ் நதி இங்கு வரத்துடித்துக் கூறினார். சனங்கள் அனுபவிக்கிற யுத்த த்தை தானும் அனுபவிக்கத் துணிவதை
Vடிதல்/22
நான் உணர்ந்தேன். நிவேதா எழுதிய கடிதத்தில்,
“அங்கு வாழ்வுக்கான போராட்டம் எனிறால் இங்கு இருப்புக்கான
போராட்டம்.” என்று எழுதியிருந்தார். றஞ்சனி ஜெயபாலன் எல்லோருமே மண்ணை
பிரிந்த ஏக்கத்தையும் இங்கே உறவுகள் அனுபவிக்கிற பெருந்துயரைக் கண்டு கொதித்துத் துடிப்பதையும் கேட்டிருக் கிறேன். அப்படியான வலி மாதுமையிட மும் காணப்படுகிறது.
அம்மாவின் கடிதத்தை மையப் படுத்திய மாதுமையின் பதினொரு வரி களான இந்தக் கவிதை மிகவும் இறுக்க மாகவும் இயல்பாகவும் விரிந்த கனதி யுடனும் அமைகிறது. கடிதத்தை மேலே குறிப்பிட்டு விட்டு கீழே அதன் தாக்கமாக அல்லது வாசிப்பின் பிறகான கவிதை யாக மாதுமை கவிதை இடம் பெறுகிறது. இந்த சிறிய கவிதை பரந்த ஆய்வுக்குரிய உட்பரப்பைக் கொண்டிருக்கிறது.
“இலங்கை அம்மாவிற்கு எதுவிதத்திலும் சளைக்காமல் கண்ணிர் சிந்திக்கொண்டிருந்தாள் பாலஸ்தீன அம்மா சிதைக்கப்பட்டிருந்தால் திபெத்திய அம்மா சிதிலமடைந்திருந்தாள் சிற்பாபே அம்மா நடையினமாயிருந்தாள் ஈராக்கிய அம்மா நிர்வாணப்பட்டிருந்தார் டாபுர் அம்மா கைவிடப்பட்டிருந்தாள் அமெரிக்கா அம்மா.
அம்மாக்கள் மட்டும் ஒற்றமையாக
இருந்தனர் உலக துயரங்களை சுமக்க”

Page 12
உலக அதிகாரங்கள் அம்மாக் களை வதைக்கிறது என்ற பொதுவான ஏக்கம் கவிதையில் இருக்கிறது. ஆம் மாக்கள் எல்லாவித்திலும் பாதிக்கப் படுவதை மாதுமை கவிதை பேசுகிறது.
போர், அரசியல், பொருளாதாரம், கொலை, தந்திரம், ஆணாதிக்கம், பாலி யல் வன்முறை. எல்லாமே சேர்ந்து அம்மாக்களை வதைகிறது. அதிகாரங் களின் நகர்வுகளிலும் அதன் செயற் பாடுகளிலும் தொடர்புகளிலும் ஈடுபாடு
களிலும் வருகின்றபலன் அல்லது அழிவுகளை அம்மாக்களே சுமக்க நேரிடுகிறது.
இந்த நெருக்கடிகளின் பொழுது அம்மாக்களிடம் கோடிக்கணக்கான அணு பவங்களும் கதைகளும் கண்ணிரும் உருவாகின்றன. இந்த அனுபவமும் வலி யும் எழுதிமுடிக்க முடியாதவை. எல்லோ ருடைய வினைகளையும் உலகம் எங்கி லும் அம்மாக்களே சுமப்பதாக மாதுமை கவிதை கூறுகிறது. குறிப்பிடப்படுகிற நாடுகளின் அம்மாக்கள் அந்தந்த நாடு களின் மீது அதிகாரம் வைத்திருக்கிற குறிகளையும் அல்லது நலன்களையும் வெளிப்படுத்துகின்றன. அதன் பலன்
களை அம்மாக்கள் சுமக்கும் விதத்தை எடுத்துப் பேசுகிறது.
மாதுமை எழுதிய இந்தக் கவிதை இன்றைய உலக வாழ்வுச் சூழலை பேசுகிறது. அதிகாரம் மற்றும் ஆக்கிர மிப்பு மற்றும் அழிவு என்பவற்றின் போக்கை உலகளவில் நின்று கோபப் படுகிற அவருடைய பார்வை, மிகவும் பரந்ததும் முக்கியமானதுமானதாகப் படுகிறது.
யுகமாயினி அக்டோபர் இதழில் இந்த மாதுமைகவிதை இடம்பெறுகிறது.
"புரிதலின் அவலம்' றஞ்சனி கவிதை வெளியில் அலையும் சொற்கள்
றஞ்சனியின் கவிதை சிலவற் றிற்கு வார்ப்பு இணையதளத்தில் பின் னுாட்டம் எழுதியிருந்தேன். முதல் வாசிப் பினடிப்படையில் மதிப்பிடப்பட்ட அந்தக் கருத்துக்களை நானே மீறுகிற வகையில் அவரின் புரிதலின் அவலம் என்ற கவிதை என்னை பாதிக்கிறது. பிழைத்துப்போன புரிதலிலிருந்து வெளியில் அலைகின்ற சொற்களை சில அடிகளில் இணைக் கின்ற பாங்கை றஞ்சனியிடம் காண முடிகிறது. அந்தத் தன்மை ஒருங் கிணைந்து இந்தக் கவிதையில் துண் டாடப்பட்ட ஒரு இரவில் அல்லது ஒரு பகலில் கிடந்து உருள்கிற குருதியின் சொற்கள் கிளம்புகின்றன.
றஞ்சனியின் அடையாளத்தை "புரிதலின் அவலம்” என்ற ஒரு கவிதை ஊடாக காணமுடிகிறது. அது நீண்டி வாழ்வின் ஒரு நாளை பிழைத்துப் போன நிமிடத்தின் ஒரு துளியை பேசுகிறது. மாறிமாறி மாறிவிடுகிற இணைவுக்குள் ளும் பிரிவுக்குள்ளும் அறுந்து, வெளி யில் வந்துவிடுகிற புழுவாகத் துடிப் பையும் காற்றையும் பிரதிபலிக்கிறது.
Vya/22
 

"முத்தங்களாகி கலியில் மயங்கி இறுக அனைத்து வியர்வையில் ஒட்டி கரைந்துபோகும் அடுத்த நிமிடமே நீஆணாகிவிடுகிறாய்.”
இது வெளியின் சொற்களை காண்பிக்கிறது. கலவியில் குறையில் விட்டு எழுந்து செல்கையில் இருட்டில் படுக்கையில் கிடக்கிற தெரியாத முகத் தையும் கேட்காத சொற்களையும் எழுது கிறது. குறையில் விட்டுச் செல்கிற அந் தப்படுக்கையிலிருந்து இருட்டிலிருந்து மூடுண்ட புள்பற்றையிலிருந்து எழுந்து செல்கிறதை எழுதுகிறது.
"நான் காணவேண்டிய நீ முழுமையாகக் காணாது ஆணாக விஸ்வரூபம் எடுக்கிறாய்”
பிழைத்துப்போன நிமிடத்தை வெறுக்கிற உணர்வை எழுதியது இந்த அடிகள் கவிதையை வெளியில் இடு கிறது. குறையாய் கிடைக்கையில் ஆண் உருவம் வெளி எழும்புகிற அதன் அவல த்தை எழுதுகிற போது விட்டெழும்புகிற வேகமும் வெறுப்பையும் சட்டென வெளியே சொல்லுகிறது.
"ஒரு நாள் மறந்துவிடலாம் இரு நாள் மன்னித்து விடலாம் ஒவ்வொரு நாளும் பைத்தியமாகிறது உறவு"
பகலின் இடைவெளியில் முகமி ழந்து துடிக்கிற மொழியினையும் மறைந்து கிடக்கிற குறியின் முகத்தை யும் சரிசெய்ய முடியாத கலவியையும் கேள்விக்குள்ளாக்கின்றன. பைத்திய மான அல்லது குழப்பமான பொழுது களை நிறைத்துவிடுகிற உறவாய் நாள் அமைந்து விடுகின்றதை வெளிப் படுத்துகிறது.
Vyay 22
"நீஎழுதுகிறாய் பேசுகிறாய் இதில் பெண்ணுரிமை வேறு எதையுமே ரீபுரிந்ததில்லை எப்படி முடிகிறது உங்களால்”
வீட்டுக்குளிலிருந்து வெளியில் வந்து கேள்விகளாய் முகத்தில் அறைகின்றன இந்தச் சொற்கள். எதையுமே புரியாத நீ என்பதில் புரிந்துகொள்ளப்படாது தள்ளிப் போன நிலையையும் உடைந்த முகத் தையும் கொண்டிருக்கிறது. எப்படி முடி கிறது என்பதில் தனி ஒரு கேள்வி பெரி தாய் விரிந்து எழுவதை காணமுடிகிறது.
“என்னால் முடியவில்லை விட்டுவிடு ஏல்லாத்தையுமே”
கவிதையின் கடைசியில் இருக் கின்ற இந்த வரிகளுடன் இரவும் படுக் கையும் கலவியும் பகல்களும் முடிந்து விடுகின்றன. அதன் கடைசி அடியில் இருந்து வெளி புறப்படுகின்றது அல்லது உருவாகிறது. சொற்கள் அலையத் தொடங்குகின்றன. காற்றையறிகின்ற ஒளியை அறிகின்ற கடைசி அடிக்குப் பிற கான வெளியில் புரிந்து கொள்ள முடி யாத எப்போதுமே புரிந்து கொள்ள முடியாதுபோன உணர்வு தொடர்ந்து துடித்துக்கொண்டிருக்கிறது.
W
W
* அம்மாக்களை வதைக்கிறது
என்ற பொதுவான ஏக்கம்
V» A*
aSqLLAA A S AAAAASAS
re---------------ar
கடைசி அடியின் பிறகான வெளியில் துடிக்கின்ற வெளியில் புரிவதற்கன அவலமும் வெளியும்
இருக்கிறது. இந்தப்போதாமையினையும் இடைவெளியினையும் புரிதலின் அவலத் தில் றஞ்சனி நிரப்பியுள்ளார். இந்தக் குறை நிலையினை வெளியில் வந்து பேசுவது றஞ்சனியின் மொழியின் சிறப்

Page 13
பாகவும் அடையாளமாகவும் படுகிறது. புரிதலின் குழப்பம் பற்றி இவர் நிறையக் கவிதைகள் எழுதியபோதும் எப்பொழு தும் கொதித்துக் கொண்டிருக்கும் நிமி டத்துளியையும் குருதியையும் இரவை யும் இந்தக் கவிதை சிறப்பாக போர் வையிலிருந்து வெளியிலெடுத்துக் காட்டுகிறது. காத்திருத்தலை உடைத்து வெளியில் அலையும் எண்ணற்ற சொற் களும் இருக்கின்றன. உண்மையில்
நினைவுக்கு வரும்பொழுதெல்லாம் இந்தக் கவிதை முகத்தில் அறைந்து கொண்டிருக்கிறது.
("பெயல் மணக்கும் பொழு துகள்" என்ற ஈழப்பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுதியில் றஞ்சனியின் புரிதலின் அவலம் கவிதை இடம் பெறுகிறது)
முட்களின் சரிதம் தினம் முதுகில் சுமந்து இறுதியாகிப் போயின சுவாசங்கள்
வாலிபம் கோழையாகி கனவுகளுக்குள் கற்பனைகளுக்குள் நாளை ஒரு போதம் எனக்கென விடிய நிஜமில்லை
கண்ணிரின் ரகசியங்கள் விழிகளுக்குள் கனமாகி முட்களின் தீவில் சுகமான வார்த்தைகள் வானமாகும்
ஆழியின் வயிற்றினில் மரணமாகி சோகமே நெஞ்சினிலே இரணமாகி வாழ்வில் தடம் புரண்டு இனியும்.
பூபாளங்கள் தொலைந்து போன எம் தேசத்தில் அலைக்கழிவுகள் மட்டும் நாளாந்தம் மேடையேறும்
ஏறாவூர் இர்ஸாத் ஹாபிஸ்
வதனம் தொலைந்தது சிதைவாகிப் போன உறவுகள் சஞ்சரிக்கும் அவலத்தில். உடைந்து போன கனவுகளை சேகரிக்கும் நிலைமையின் அடைவுகளாகின்றன.
நேற்றுதான் துயில் களைந்து இன்று மரணித்து நாளை..?
Vyreså. /22
 

வவுனியாவிலிருந்து கொழும்பு செல்லும் காலைக் கடுதகிப் புகையிரதம், மூச்சிறைத்து ஓடி வந்ததும் பத்து நிமிடம் தாமதித்து விட்டோமே, எப்போது நேரத்திற்கு இயங்கும் காலம் வருமோ என்று ஏங்கிப் பெருமூச்சு விடுவதைப் போல் இரண்டாம் மேடைக்கருகே அநுராதபுர புகையிரத
நிலையத்தில் “ஸ் ஸ்” என்று தரித்திருந்தது.
தனக்குரிய வகுப்புப் பெட்டியைப் பார்த்து ஏறி ஆசனத்தில் அமர்ந்தான் அப்புஹாமி. பக்கத்தில் தனது வயதை ஒத்த ஒரு வயோதிபர் நெற்றியில் திருநீருடன் அப்புஹாமியை கூர்ந்து பார்த்தவாறு இருந்தார். இருவருக்குமே பரஸ்பரம் பழக்க மான முகங்கள் போன்று தோன்றி சில கணங்களில் ஞாபகச்சுவடுகள் படிக்கப்பட்டு ஒருவரை ஒருவர் இனங்கண்டு ஆழலை மறந்து கட்டிப்பிடித்துக் கொண்டனர்.
நாச்சியாதீவு அபு நுஹ7
கால் நூற்றாண்டுகளுக்கு முன், இன மேலாண்மை உணர்வுகள், அதிகார பசிகள் என்பவற்றின் அழுத்தங்களால் நாடே அல்லோகல்லோலப்பட்ட காலம் அப்புஹாமி யாழ்நகரில் வெதுப்பகம் (பேக்கரி) ஒன்றை நடாத்திவந்தார். மனைவி, பிள்ளைகளும் அவருடனேயே இருந்தனர். பக்கத்தில் வெண்கலக்கடை நண்பர் கந்தப்பு உடையது.
வியாபார அலுவல்கள் ஒயும் போதெலாம் இருவரும் கதைப்பதிலேயே காலத்தை ஒட்டுவர். மாதத்தில் எல்லா நாட்களுமே வேலை நாளாக இருந்தாலும் ஒரு நாளைக்கு கட்டாய விடுமுறையாக்கி அன்று கீரிமலை சென்று குளித்து வினோதமாகக்காலத்தைக் கழிப்பர். கூடவே தையல் கடை அப்பாஸம், அப்பாஸின் அதிரடி நகைச் சுவைகள், தைரியமான நடத்தைகள் என்பன அப்புஹாமிக்கும், கந்தப்புவுக்கும் பிடித்துப் போன விடயங்கள்.
இப்படி இனிமையாய்க் கழிந்த காலங்கள் திடீரெனத் திசை மாறத் தொடங்கின. அரசியலும், ஆதிக்க உணர்வுகளும் நாசகாரிகளாய் உருவெடுத்ததால், இணைந்த மனங்களுக்கிடையில் விரிசல்கள் அதிகமாயின. பிரித்தாளும் மேல் நாட்டுச் சக்திகள் குடாநாட்டில் இனமேலாண்மைக்குத் தூபமிட, தெற்கில் இனப் பேரின வாதம் வெறியாக மாறின. அப்புஹாமி இனி வடக்கில் பாதுகாப்பில்லையென குடும்பத்துடன் வெளியேறினார்.
அசையாச் சொத்துக்கள் அநாதியாய் விடப்பட்ட நிலையில் புதிய சூழலில் குடியேறி புதிதாய்த் தொழிலை ஆரம்பிப்பது மிகச் சிரமமாயிற்று, உழைப்பது வாழ்வுக்குப் போதாத நிலையில் வருடங்கள் செல்ல வயதுக்கு வந்த மகன் இலகுவாய்க் கிடைக்கும் இராணுவ வேலையில் சேர்ந்து காலத்தை ஒட்ட இங்கே அப்புஹாமியும் மனைவியும் வயிற்றில் நெருப்போடு காத்திருக்க திடீரென ஒரு நாள்
Vமுதல்/22

Page 14
அவர்களது மகன் மூடப்பட்ட பெட்டியில் சிதிலமாய் வந்தான். இறந்தும் வழங் கினான் என்பது போல் கிடைத்த நஷ்ட ஈட்டில் தொழிலையும் விருத்தி செய்து கொண்டு இளைய மகளையும், மகனையும் படிக்கவைத்து ஆசிரியையாகவும், பொறி யியலாளனாகவும் ஆக்கினாலும், இறந்து போன மகனின் நினைவுகளின் ரணங்கள் மட்டும் மறைவதாக இல்லை.
வடக்கில் காவலர் தரப்பு வெறி யாட்டங்கள் அதிகமாகி நகரம் சின்னா பின்னமானது. "டியூசன்’ வகுப்பு சென்ற கந்தப்புவின் மூத்த மகள் ஒரு நாள் வீடு திரும்பவேயில்லை. இரு தினங்களுக்குப் பின் ஒரு பாழடைந்த கிணற்றில் பிணமாய் மிதந்தாள். சகோதரியின் அவலத்துக்குக் காரணம் யார் என்று அறிந்து கொண்ட சகோதரன் படிப்பை விட்டு விட்டுப் போரா ளியானான். போருக்கு ஏது பந்தபாசம், அவனும் பிந்திய நாள்களில் மாவீரனாய் விதைக்கப்பட்டான்.
அடுக் கடுக்கான சோதனைகள், துயரங்கள் கந்தப்புவை தள்ளாட வைத் தாலும், எஞ்சியிருக்கும் இளைய மகன் வாழ வேண்டுமே என இதயம் துடிக்க உள்ளதையெல்லாம் சேர்த்து கனடா வுக்கு அகதியாய் அனுப்பிவைத்தார். பிறந்தமண் பிணமாய் ஆக்க முயன்றாலும் புகுந்த மண் அவனை மனிதனாக்கியது. வாழ்வு வசதிகளைப் பெருக்கிக் கொண்டு தனது தாயையும் அங்கு அழைத்துக் கொண்டான். கந்தப்புவுக்கும் விரைவில் கனடா வாசம் கிடைக்கவிருக்கிறது அதற்கான அலுவலின் நிமித்தம் தான் அந்தக் கொழும்புப் பயணம்.
நண்பர்களிருவரும் தம் கதைகளைப் பங்கிட்டுக் கொண்டாலும் இப்படியே தன் நண்பன் அப்பாஸையும் சந்தித்து விட மாட்டோமா என ஏங்கினர். வண்டி என்ன வோ கடுகதி தான் ஆனால் முக்கி முணகி, சமிக்ஞைக்காகக் காத்திருந்து ஒருவாறு குருநாகல் புகையிரத நிலை யத்தை அடைந்தது.
அங்கும் அவசர அவசரமாய் சில பயணிகள் ஏறினர். ஆசன இலக்கம் குறிக்காத பயணச்சீட்டு என்பதால் இடைவெளியிருக்கும் ஆசனங்களைத் தேடி அமரலாயினர். மூவருக்கான ஆசனத்தில் அப்புஹாமி, கந்தப்பு இருவரும் மட்டும் இருந்ததால் எஞ்சிய இடத்தில் ஒரு பயணி தன்னைச் சொரு கிக்கொண்டார். நீண்ட நாளைய சந்திப்பில் அரிதாய்க் கிடைத்த அளவலாவலில் குறுக்கீடு வந்து விட்டதே என முகம் சுளித்து, வேறொரு இடம் பார்க்குமாறு அந்தப்பயணிக்குச் சொல்ல, இப்படி இடம் பார்த்து பேரம் பேசி, அதிகாரம் காட்டித் தான் இலங்கை அகதி முகாமாயிற்று என்று முணு முணுத்தவாறு அந்தப்பயணி எழ நண்பர்களிருவருக்கும் சிரிப்பு வந்தது. எழ முயன்றவரைக் கையைப் பிடித்து அமர வைத்தனர்.
மெல்ல மெல்ல நண்பர்களிருவரின் கதைக்கிடையில் மூன்றாம் பயணியின் பேச்சும் சேரலாயிற்று. அவர் “ஹசன்’ பூர்வீகம் “யாழ்’ நகராம். எண்பதுகளில் புகைந்து புகைந்திருந்த சமாச்சாரம்தன் கோரமுகத்தைக் காட்டி “இனப் போலிகள்’ வடக்கிலிருந்து வேளியேறவேண்டும் என்று மேலாண்மை, சொத்துக்களைச் சூறையாடி அவர் சமூகத்தினரை அகதியாக்கி, பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள், பொட்டலங்கள் என நகரத் தொடங்கி பசி, தாகம் வாட்ட, வாடி, வதங்கி, இடையில் சிலர் மரணித்து இன்னும் சிலர் நடைப் பிணமாகி இளம் சமுதாயம் கல்வி இழந்து கண்ணியம் இழந்து விலாசமில்லாதோராகி வந்தான் வரத்தான் அகதி என்ற புதிய பெயர்களில் உலாவரும் கதையைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தப் பிரச்சினை எப்படி? ஊரு வாயிற்று? ஒரே கேள்வி ஆனால் மூன்று விதமான பதில்கள் கிடைத்தன. அதில் எது உண்மையான பதில்? அதில் ஒன்றா? இல்லை, இரண்டா? இல்லை மூன்றுமா இல்லை மூன்றுமே இல்லை வேறொன்றா? இந்தக் கேள்விகள் அந்த மூவர் மனதிலும் இருந்தது. நகரும் அந்தப் புகையிர தத்தின்
Vyasi / 22

ஓசை கூட வேரொன்றா? வேரொன்றா? என்பது போல் இருந்தது.
யதார்த்தங்கள் தூங்கிக் கிடப்பதாகவும், காலம் பயங்கரமான தொரு படுகுழியில் வீழ்த்தப் பட்டிருப்பதா கவும் மனது உணர்வுகளுடன் போராடியது. புதிய யுகம் ஒன்றுக்கான அவா மூவர் முகத்திரையிலும் நிழலாடியது. மனிதப் பேரவலம் எப்போது நிறுத்தப்படும் என உணர்வுகள் பிரார்த்தனை செய்தன.
பள்ளி முடிந்து வரும்போதும் • • ܫ - ܫ ܀ • 3- - ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܫ ܀ கடைக்குப் போகையிலும் வேகமாக ஓடிச்செல்வான் சிறு
நான்கு சுவர்களுக்குள்ளும் ::: அவன் ஹெட்ரிக் எடுப்பதுண்டு. சிக்சர்கள் பெளண்டரிகள் அடிப்பதுண்டு
ைேசக்கிள் எடுத்தாலே மூச்சுவாங்க ஓடுவான்
வெளியில் பாய்ந்து
கைகள் விரித்து முகத்தை மேல்நீட்டி ஒழத்திரிய அவளுக்கு ஆை
இனிமேல் நடந்தே போ
லகைகள் பொறுக்கி கறல் ஆணிகள் வளைத்து கல்லெடுத்துத் தட்டி அடுக்குமாடி செய்வான்
வேண்டாம் ஜலதோசம் வந்துவிடும்
அவனுக்குள் இருந்த ஒட்டவீரனும் விளையாட்டு வீரனும் பொறியியலாளனும் * ຄອນຫmuາໄມຸb எப்போதோ இறந்து விட்டார்கள்.
இப்போது அவனுக்கு உயிரோடு இருப்பவர்கள் :
ஒரு திருடனும் மற்றும் சில திருடர்களுந்தான்.
ゴーゴーゴーに கல்லை வீசு கையில் பட்டுவிடும்
விதைப்புப் பார்க்க
அறுவடையை ரசிக்க பசளை தெளிப்பதைப் பழக் பல முறை முயற்சிப்பான்:
அவளுக்குள் இருந்த தடிப்பான பெண் இறந்துவிட்டாள். s இப்போது அவளுக்குள் இருப்பது
ஒரு சராசரிச் சோபை,
/ழதல்/22

Page 15
எனதான எட்டுக்கள் ஒவ்வொன்றும்
தராசில்தான் தெறித்து விழுகின்றன. ഞ, முதி07 - sessT600TsiolorTootsmui ம்மாந்கை நிறுக்கப்படுகின்றன. சமமாந்துறை
தப்பும் தவறமான அளவீடுகள் கண்களை இறுக P2
660s நேராக்குகின்றது 6T6OT5Teo 85 Glsing
அது என்னுள் மாத்திரம் அலட்சியமைனும்
அத்திபரம்
பிரவகிக்கும்
பிடரி துளைத்து கதிர்ப்புக்களை அள்ளியெறிந்து நேர் கோட்டில் - எனை இழத்துச் செல்லும்
அதன் இழுவையின் வீச்சில் சுயமிழந்து அழுத்துச் செல்லப்படும் சருகாகிப் போனேன்
&პდb இறக்கைகளிலும் முட்டி இழத்துச் செல்லும் குப்பைகளின் தாக்குதல் எனக்கு வலிக்க வில்லை
சித்தனை வேகம் திணிவின் அலட்சியம் எனதான பட்சி சரியாகத்தான் சிறகடிக்கிறது என் சொல்லின் உச்சரிப்புக்கள் - எனை விணழப்பதில்லை.
வான் நோக்கிப் பாயும் நதிகள் நிலத்துள்
கிளைக்க முனையும் இருண்ட விருட்சங்கள் ஓர் இளக்கார முறுவலில் கருத்தை எட்டா புருவச் சுழிப்பில்
6T6tr Glste
U6T6OLDurras விளைகிறது 9lso fugld அத்திபாரமாகிற்று
- VozM/22
9aesAñ /
 

ஈழத்து சிறு சஞ்சிகைகள் எதிர் நோக்கும் பிரைச்சினைகளில் பிரதான தேவை படிகள் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது படிகள் உட்பட ஏனைய இதழ்களுக்கு வலுச் சேர்க்கும் என நம்புகிறேன். ஈழத்து இதழியல்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், சவால்கள், தீர்வுகள் என்பன தொடர்பாக பெரிய கட்டுரை ஒன்றை அண்மையில் வாசிக்க கிட்டியது. அக்கட்டுரை 1972ல் கொழும்பில் நடைபெற்ற ஈழத்து தமிழ் சஞ்சிகைகளினது ஆசிரியர்கள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையாகும். கட்டுரையாசிரியர் பிரேம்ஜி சிறப்பான அணுகு முறைகள் பலவற்றைக் குறிப்பிடுகிறார். உண்ைையில் கட்டுரையில் குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப் படுத்தியிருப்பின் அது ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமானதாக இருந்திருக்கும். படிகள் 21ல் ஆசிரியர் குறிப்பிட்ட விடயத்திற்கு ஏற்பவும் வேறு பல்வேறு விடயங்களையும் இணைத்தும் நானும் சில குறிப்புக்களை எழுதுகிறேன். ஈழத்து சிற்றி தழ்களது வருகை தொடர்பான காத்திரமான கலந்துரையாடல்கள் நடைபெறுவது இன்றியமையாத ஒன்றாகும். அது காலத்தின் தேவையுமாகும்.
சுதேசி, வவுனியா.
சென்ற மாத படிகள் கரம் கிட்டியது. திக்குவல்லைக் கமாலின் முகப்புப் படத்தோடு படிகள் தனது கனதியை வெளிக்காட்டியது. அவரது சிறுகதைகளுக்குச் சளைக்காத எளிய வசனங்களுடன் கூடிய செவ்வி மனதைத் தொட்டது. இன்னும் பேச்சு வழக்கை எழுதி முடிக்கவில்லை என்ற வாசகம் மனதைத் சுண்டியது. ஊர் பேச்சு வழக் குகள் இரம்மியமானவை. தனித்துவமான அழகு கொண்டவை. அறுபது கதை களுக்குள் எழுதியுள்ள எனக்கும் ஒரு சில பேச்சு வழக்குச் சொற்களை மாத்திரமே பயன் படுத்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. பல நுாறு கதைகளில் உருண்டு புரண்ட திக்குவல்லைக் கமால் ஆசிரியரால் பேச்சுவழக்குத் தமிழ் இன்னும் வளம் பெறும் என்பது உண்மை. புராண இலக்கணத்துடன் பேசுவார் அல்லது நடைமுறை யதார்த்த பேச்சுநடையே இலக்கியத்தில் செங்கோலோச்ச வேண்டுமென்பதில் என்ன தவறு? படிகளின் கவிகளும் கதைகளும் இன்னும் என் கண்களுக்கு இரையாக வில்லை. றபீக் மொஹிடீனின் மகா கவியின் தேரும் திங்களும் நல்லதொரு நோக்கு. முன்னரும் அவ்வப்போது இடையிடையே படிகள் வாசித்ததுண்டு. கொழும்புப் பயணங்களின் போது கண்ணில் பட்டால் மட்டுமே சந்தர்ப்பம் கிடைக்கும். மற்றும்படி தொடராக வாசிக்கக் கிடைக்காமை குறையே. எழுத்துப்பிழைகளை நீங்கள் குறைத்துக் கொள்ளலாம் என நினைக்கின்றேன். மீண்டும் தொடர்வேன்.
- வறிதாயத்துல்லாவுற், – ) SSS S SLSSL S S SS அட்டுளுகம, பண்டாரகம. படிகள சஞ்சிகையின் வளர்ச்சியென்பது யாராலும மறுக்க முடியாததாகும். படிகள் 21வது இதழ் முன்னர் வெளிவந்த இதழ்களைவிட அமைப்பு, உள்ளடக்க ரீதியாக நன்றாக அமைந்துள்ளது. எந்த ஒரு வெளியீடும் நுகர்வோரின் வரவேற்பைப்பெற வடிவமைப்பு முக்கிய மானதாகும். உங்கள் பார்வைக்கு எங்கள் கருத்துப் பகுதியில் இலக்கியச் சிற்றேடுகள் தமது குறுகிய கால வீச்சிலே மாய்த்துக் கொள்கின்றமை தொடர்பாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ஆசிரியர் கருத்து உண்மை யானதும், நடைமுறையில் நிகழ்வதுமாகும். எந்த எழுத்தாளனோ, சமூக சேவையாளனோ தமது செயற் பாடுகளை நடு வழியில் முடக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தமது முன்னெடுப்புகளை மேற்கொள்வதில்லை. அதற்கு எத்தனையோ காரணங் கள் பங்குகொள்கின்றன. (ஒரு நீண்ட கடிதத்தின் ஒரு பகுதி)
எண்ணங்தள் - அநுராதபுரம் சமான்
Vaes /22 27

Page 16
காக்கா நீ கறுப்பு அதுவே உன் சிறப்பு படைப்பினங்களின் மச்சம் நீ நிழல் கறுப்பு
நீயும் கறுப்பு பறக்கும் நிழலா நீ இருள்தான் உன் தாய் மடியா இரவு உன் தாயா?
தாய் பிரிந்த வேதனையில் கரைந்து அழுகிறாய்
அதிகாலையில் அதுதான் உனது ஒப்பாரியா? உனது அலறல் இயற்கை எமக்களித்த அலாமல்லவா?
வெள்ளையர்களால் கறுப்பர்களுக்கு அநீதி இது மனிதர்களில் மட்டும்தான் பார்த்தாயா? ஒற்றுமையின் உருவான உன்னை மறந்து வெண்புறாவையல்லவா சமாதானத்தின் சின்னமாக்கியுள்ளார்கள் அந்த கோபத்தில்தானா உன் கழிவை மட்டும் வெண்ணிறத்தில் வீழத்துகிறாய்
போதாக்குறைக்கு காக்கா
நரிக்கதைகள் புனைந்து உன்மேல் கரி
பூசியிருக்கிறார்கள்
இருந்த போதும் காக்கையே எதற்கும் வருந்தாதே நிஜத்திலும் நிழலிலும் உனக்கு ஒரே நிறம் இரண்டு நிறம் கொண்ட நிறம் மாறும் மனித ஒந்திகளை விட மெய்யாகவே நீயே மேல்
5ಿತ್ರೆ
EQUIU
ஸாஜித் ஸல்மான்
களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி
ирлей/22
 

அருராதபுர மாவட்ட தமிழ் இலக்கிய முயற்சிகள் ஓர் ஆய்வு -
óLIMIGIUJ DUOMOZILL
இவக்கியங்களின் உள்ளடக்கர் 04) முக்கிரியாவை எம். ரஸிம்
3.4 மன அவலங்கள்
மன அவலங்கள் எனும் போது, அது மனிதர்களின் உணர்வு நிலை சார்ந்த விடயமாகக் கருதப்படுகின்றது. இது தனி மனிதர்களிடத்திலும், சமுதாயத்திலும் பல்வேறு பிரச்சினைகளினால் ஏற்படும் ஓர் உணர்வு நிலை சார்ந்த விடயமாகக் காணப்படுகின்றது. இவ்வாறான மன அவலங்கள் தனி மனிதனிடத்தும், சமுதாயத்திலும் எவ்வெக்காரணங்களினால் ஏற்படுகின்றன என்ற உண்மையை அநு.வை. நாகராஜனும், கெக்கிராவ ஸஹானாவும் தமது கதைகளினூடாக வெவ்வேறு கோணங்களில் அலசுவதைக் காணலாம்.
அந்த வகையில் குறிப்பிடத் தக்க கதைகளாக அநு.வை. நாகராஜனின் 'ஒரு காலத்துச் சிறுகதைகள்' என்ற சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள அபலையின் கடிதம்', 'ஒருபிடிமண்', 'ஒரு புல்லாங்குழல் ஊமையாகிவிட்டது, சுரண்டலின் நிழல்கள்', 'இளையாள்', 'அதுவும் ஒரு பிறவி ஆகிய கதைகளைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். அதே போன்று 'ஒரு தேவதைக் கனவு', 'ஒரு பொற்கனவின் முடிவில்' ஆகிய கெக்கிராவ ஸஹானாவின் கதைகளும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.
தெருவோர மாதுவுக்குப் பிறந்த ஓர் இளம் யுவதியின் மன அவலங்களைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் அமைந்த கதையாக 'அபலையின் கடிதம்' அமைந்துள்ளது. விபச்சாரிக்குப் பிறந்த பிள்ளையைச் சமுதாயம் வேறொரு கண் கொண்டே நோக்குகின்றது. இது அந்தப் பிள்ளை செய்த தவறல்ல. அந்தப் பிள்ளையைப் பெற்ற தாய் செய்த தவறு. தாய் செய்த தவறுக்காகப் பிள்ளையும் அவ்வாறுதான் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. யதார்த்தமும் அதுவே. இக்கருத்தினைப் புலப்படுத்தும் வகையில் 'அபலையின் கடிதம்' கதையின் ஆசிரியர் கூற்று பின்வருமாறு அமைந்துள்ளது.
“உலகில் எந்தப் பெண்ணும் அறியாத்தனமாகவோ அல்லது, சிறுபிள்ளைத் தனமாகவோ இருக்கலாம். ஆனால், தன்னை மீறி எவனாகிலும் அவளைச் சூறையாட முற்படுவானானால் அவள் தன்னுயிர் இருக்கும் வரை போராடியே தீருவாள். அந்த வகையில் நான் பிச்சைக்காரி என்பதற்காக, நான் பட்டும் என்ன தகைமை குறைந்தவளா?”
Vடிதல்/22

Page 17
இக்கூற்றிலிருந்து விபச்சாரிக்கு மகளாகப் பிறந்து வாழ்க்கையின் கோரப்பிடி யால் ‘பிச்சைக் காரியான ஒரு பெண், வாழ்க் கைப் பயணத்தில் தன் கற்பைப் பறிகொடுத்த அவலத்தை ஆசிரியர் காட்டுகின்றார். இவருடைய 'ஒரு பிடி மண்' என்ற கதை ஒரு விபச்சாரியின் மன அவலங்களைச் சித்த ரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அன்றாட வாழ்க்கைப் பிழைப்புக்காக உடலை விற்றுப் பிழைக்கும் விலை மாதுகள் இன்று சமுதாயத்தில் பெருகி விட்டனர். பெண்கள், கணவனை தெய்வ மாக மதித்து வாழும் சூழ்நிலையில் இவ்வாறான பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். இது அவர்களுடைய தவறு மட்டுமல்ல. அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் சமுதாயத்தினுடைய குற்றமும் தான். இவ்வாறு உடலை விற்றுச் சீவியம் நடத்தும் பெண்கள் மன நிறைவுடன் அத்தொழிலைச் செய்வதில்லை. அவர்கள் மனத்திலும் பல விதமான அவலங்கள் புரை யோடிப் போய் இருக்கின்றன என்ற உண்மையினை ஆசிரியரின் பின்வரும் கூற்று புலப்படுத்துகின்றது.
“நான் தான். அந்தக் குழந்தையைப் பெற்றேன். இதற்கு முன் பிறந்த குழந்தை களை வந்த விலைக்கு விற்று விட்டேன். இதையும் விற்கத்தான் இருந்தேன். அதற்குள் இது என்னை ஏமாற்றி விட்டது. சனியன்! போய் விட்டது!..ம்.குப்பை மேடு,
அதை விட என்னால் இலகுவாகத் தோண்டக் கூடிய இடம் எங்கே இருக்கப் போகிறது, எனக்கு? அது போக, இந்த
மனிதக் குப்பையினால் தோன்றியதுதானே, அது. இப்போது குப்பைக்கே போய் விட்டது. அது முன்பு பிறந்த குழந்தைகளுக்கு என் உடலில் இருந்து பாலாக ஊறிய என் உயிரற்ற இரத்தத்தைக் கொடுத்தேன். ஆனால், இந்தப் பாவக் குழந்தைக்கு இரத்தம் கூடக் கொடுக்க முடியாமல் போய் விட்டது.”
அத்தோடு, அவர் இறுதியாகத் தொடுக்கும் கேள்வி அனைரையும் சிந்திக்கத் தூண்டுவதாக அமைந்துள் ளதைக் காணலாம். “தெருவோரத்தையும் உண்டாக்கி, தெருவோர வாசிகளையும்
s
உண்டாக்குபவர்கள் யார்?. மேலும், இன்றைய இளம் யுவதிகள் காதல் என்ற போர்வையில் பெற்றோரை ፴9® பொருட்டாக மதியாது, தாம் நினைத்தவாறு நடந்து கொள்கின்றனர். இதனால், 'காதலனே கண்கண்ட தெய்வம்' என்று கருதி, இறுதியில் கற்பை இழந்து அவதிப்படுகின்ற ஆழ்நிலை யைக் காணக்கூடியதாக இருக் கின்றது. இத்தகையதொரு பின்னணி யைப் பொருளாகக் கொண்டு “ஒரு புல்லாங்குழல் ஊமையாகி விட்டது” எனும் கதை அமைந்துள்ளது. இக்கதை கலாவினுடைய மன அவலங்களைக் கூறும் வகையில் அமைந்துள்ளது.
கலா ஏ.எல். படிக்கும் காலப் பகுதியில் பாலனின் காதல் வலையில் சிக்குகின்றாள். பாலனது குண நலங்கள், நடத்தை என்பவற் றைச் சரிவரப் புரிந்துகொள்ளாத கலா, ஒரு நாள் சந்தர்ப்ப வசமாகத் தனது கற்பை பாலனிடம் பறிகொடு த்து விடுகின்றாள். இந்நிலை யிலேயே அவனுடைய நடத்தைகள் பற்றி அவ ளால் அறிந்து கொள்ள முடிகின்றது.
“பாலன் கலாவைச் சந்திக்க முன்னே, சாந்திய ஏமாத்திப் போட்டு 'மிடில் ஈஸ்டுக்கு போய் வந்தவன். சாந்திக்கு இப்ப ஒரு குழந்தையும் ஐஞ்சு வயசில இருக்கு அவள் துணிச்சல்காரி தன்ரை தவறை உணர்ந்து, வேளைக்கே அவனைக் கைகளுவிப் போட்டாள்.”
கலாவை அனுபவித்து விட்டு பாலன் அவளை விட்டு விலகிக் கொள்கின்றான். இந்த இடைவெளி யில் கலா இரண்டு மாதமாக முழு
காமல் இருப்பது அவளுக்குத் தெரிய வருகின்றது. தானே ஏற்படுத்திக் கொண்ட வாழ்வு, தனக்கே வினையாகி விட்டதை உணர்கிறாள்.
Vyaáň / 22

“கலாவால் தாங்க முடிய இல்ல. தனக் குள்ளேயே எல்லாத்தையும் மூடி மறைச்சுப் போட்டாள்! இப்ப கடைசியில. தன்னையே அழிச்சுக் கொண்டாள்!”
வெறும் ஒசையால், நன்மை தீமை பற்றி அறிவித்துக் கொண்டிருக்கும் ஒன்றை, கதை சொல்ல வைத்து, புதுமை செய்கிறார் ஆசிரியர். அடிக்கடி இக்கதையில் பயன் படுத்தப்படும் சொல்லான 'கலாபாவம்' என்பது, கலாவுக்காக அடிக்கடி தெரிவிக்கப் படும் அனுதாபம் மட்டுமல்ல, இந்தக் காலத்து இளம் பெண்களுக்கு விடுக்கப் படும் எச்சரிக்கையாகவும் அமைந்து, அனைவரையும் சிந்திக்கத் தூண்டுகின்றது.
காடுகெடுத்து நாடாக்கி, கமத் தொழில் செய்து கண்ணியமாக வாழ விரும்பும் ஏழை மக்களின் - குடியேற்றத் திட்ட வாசிகளின் - வாழ்க்கைப் போக்கை, அவர்கள் எதிர் கொள்ளும் அவலங்களை “சுரண்டலின் நிழல்கள்’ விளக்குகின்றது. இக்கதையின் கதாநாயகனான மாரிமுத்து ஒரு சாதாரண ஏழை விவசாயியாகப் படைக்கப்பட்டிருக் கின்றார். அனுராதபுர மாவட்டத்தை கதைக் களமாகக் கொண்டு இக்கதை புனையப் பட்டுள்ளது.
மாரிமுத்து தனது அன்றாட வாழ்க்கைத் தேவைக்கான சாமான்களையும், வயல் விளைவின் போது கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் கடனுக்குப் பெற்றுக் கொள் ளும் ஓர் அடிமட்ட விவசாயியாக இக்கதை சித்திரிக்கின்றது.
“சாமான்களையும் அவர்கள் அவ்வப்
போது அரனோளிஸ் கடையில் பண்ட மாற்று கணக்கில் பற்று வரவு செய்து கொள்வார்கள். கையில் தானியங்கள்
இல்லாத போது, கடன் சொல்லி நெல் அறு வடை காலத்திற் கணக்குகளை அடைத்துக் கொள்வார்கள்.”
இவ்வாறு மாரிமுத்து பெற்ற சிறு சிறு கடன்களும் இறுதியில், வட்டியும் முதலுமாக வந்து நிற்கின்றன. உடலை வருத்தி வயலில் உழைக்கும் மாரிமுத்து, உளப் பூரிப்புடன் அறுவடை செய்த நெல்லை, தவிச்ச முயல் அடிக்கும் பணக்கார
Vaes /22
முதலாளிகளின் இரக்கமற்ற சிந்தனை களால் தன்வீட்டுக்குக் கொண்டு செல்ல முடியாதிருக்கும் ஏமாற்றத் தையும், ஏக்கத்தையும், மன அவலத் தையும் இக்கதை நமக்கு நன்கு உணர்த்துகின்றது.
“களத்தில் அவருக்காக பதரும் கந்து களத்துச் சப்பிகளும் அவரைப் பார்த்து புன்னகை பூத்தன.’ என்ற வரிகள் மாரிமுத்தின் ஏமாற்றத் தையும், அதனால் விளைந்த மன அவலத்தையும் புலப்படுத்துகின்றது. மனைவியை இழந்த கணவன்மார், மூத்த மனைவி மூலம் கிடைத்த குழந்தைகளின் துணைக்காகவும், தமது வேலைகளைக் கவனிக்கவும் என்று மனைவி மரணித்த ஓரிரு நாட்களிலே வேறொரு துணையை நாடுகின்றனர். இவ்வாறு இரண்டாந் தாரமாகக் கைப்பிடிக்கும் இளை யாளை அவர்கள் தரக்குறைவாகவே பார்க்கும் ஆழ்நிலையும் இன்று சமுதாயத்தில் சாதாரணமாக நடக் கும் நிகழ்வுகளாகவே மாறிவிட்டன. இவர்களுடைய இத்தகைய செயற் பாடுகளின் மூலம் இளையாள் படும் வேதனைகளை அவர்கள் அறி வதில்லை. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு, இறுதியில் விவாகரத்தில் அல்லது மரணத்தில் (3ւյrru] முடிவதை சமுதாயத்தில் அதிகம் காணக்கூடிய தாக இருக்கின்றது.
சர்வசாதாரணமாகச் சமுதாயத் தில் நடக்கும் இப்பிரச்சினையைக் கருவாகக் கொண்டு “இளையாள்” கதையைப் படைத்திருக்கின்றார் அநு.வை.நாகராஜன். “அன்பரே, நான் மாணவியாய் இருந்த காலத்தில், மாற்றாந்தாய்மாரின் கொடுமை களையும் இளையாள்கள் புரியும் இன்னல்களையும் பற்றிய 6) கதைகள் பலர் சொல்லக் கேட்டும் இருந்தேன். நானும் முதல் தரத்தில், குழநதை உளள ஒருவருககு வாழக கைப்பட வேண்டும் என்றும் அப்படி நேர்ந்தால் மாற்றாந்தாய், இளையாள்

Page 18
வர்க்கத்திற்கே ஒரு முன் மாதிரியாக விளங்க வேண்டும் என்றும் கனவு கண்டேன். ஆனால், என் கனவு நனவாகப் பிற்பகுதி இடந்தராமல் போய் விட்டது. நீங்கள் என்னை அறிந்து கொள்ள முடியவில்லை."
திருமணமாக இருந்த சமயத்திலே உண்டான குறைபாட்டை மற்றையோர் அறியாது மறைப்பதற்காகப் பல்வேறு சம்ப வங்களையும் தகவல்களையும் சோடித்துச் சொல்லும் ஞானப்பிரகாசத்தின் |D5յլ அவலங்களை வெளிப்படுத்துவதாக "அதுவும் ஒரு பிறவி" என்ற கதை அமைந் துள்ளது.
இக்கதையின் நாயகன் ஞானப் பிரகாசம் திருகோணமலையில் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அரைகுறையாக வாலிபன் ஆகியவன். துரதிஷ்டவசமாக தனக்குத் திருமணமாக இருந்த சமயந்தான் அவனுக்கு ஒரு வகையான கோளாறு தொடங்கியது. அதனைச் சகிக்க முடியாமல் அவன் இருபது வருடங்களுக்கு முன் வீடு, ஊர், உற்றார் உறவினர் ஆகியவற்றை விட்டுக் கிளம்பிச் சென்றான்.
இவ்வாறு சொந்த ஊரை விட்டுக் கிளம்பிச் சென்ற ஞானப்பிரகாசத்தை, அவன் புகுந்த ஊரிலுள்ள சிறியவர் முதல் முதியவர் வரை 'அன்னை' என்றே அழைத்தனர். அங்கு அவன் ஊரிலுள்ள அனைவரது வீட்டிலும் வேலை செய்யக் கூடியவனாக இருந்தான்.
"அவன் எங்கள் வீட்டு வேலைக்காரன் அல்ல, யார் விட்டு வேலையாளும் இல்லை. ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் அவன் பணியாள், இன்று எங்கள் வீட்டில்
படிகள் இதழ்கள் பற்றி விமரிசனங்களை எழுதிய இலக்கிய ஆர்வலர்களுக்கும் பிரசுரித்த ஊடகங்களுக்கும்,
- 32
tT llllLSLCLS TTMLLlL S tLL LLL S STT SELGLTTTLS OTTTTTTTTTS
இருப்பான். நாளைக்கு அடுத்த வீடு
அதற்கடுத்த நாள் இன்னொரு வீடு இப்படி வீடெல்லாம் அவன் போவான். ஊரெல்லாம் திரிவான். அவனை நான் நடமாடும் வேலையாள்" என்றுதான் சொல்வேன்." இப்படியான ஞானப் பிரகாசம், ஞாபகம் வரும்போ தெல்லாம், ஏதாவது பொய்களைச் சொல்லி தன்னைப் பெரிய பணக் காரன் என்பதாகக் காட்டிக் கொள் வதுண்டு. இதுபற்றி ஆசிரியர் கூறு மிடத்து, “ஞானப்பிரகாசத்திற்கு சித்தப் பிரமையோ, புழுகுத் தன்மையோ, பொய் சொல்லும் லாவண்யமோ அல்லது வேறு ஏதாவது ஒரு வித் தையோ உண்டு என்று சொல்வதற்கு இல்லை. ஆனால், ஏதோ தெரியாது, அவன் இப்படிப் பேசுகிறான். அதில் பொருள் உண்டு - மற்றவர்கள் அவனைப் பற்றி என்ன நினைப் பார்கள் - தன் மதிப்பு எப்படியாகும் என்று அவனுக்குத் தெரியுமோ என்னவோ? சமயா சமயங்களில் இப்படித்தான் பிதற்றிக் கொள்கிறான்.”
இவ்வாறு நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல குணநலன்களை உடைய ஞானப்பிரகாசம், தனக்குத் திருமணமாக இருந்த சமயத்தில் ஏற் பட்ட கோளாரினால் இவ்வாறான நிலைக்கு ஆளானான். இவ்வாறான சூழலுக்குள் ஆட்பட்ட அவனைச் சமூகம் தாழ்த்திவிடக் கூடாது என்பதற்காக வேண்டி அவன் செய்யும் நடவடிக்கைகள் யாவும் அவனது மன அவலத்தின் பிரதி பலிப்புக்களாக ஆசிரியரால் காட்டப் பட்டிருக்கின்றன.
ஆய்வு தொடரும்.
-ா
படிகள் இதழ் 21 பற்றிய அறிமுகமும், படிகள் இதழ்களில் வெளிவருகின்ற சிங்கள இலக்கியங்கள் பற்றிய அறிமுகமும் அண்மையில் DALYNEWS பத்திரிகையில் இரண்டு கட்டுரைகள் வெளியாகியிருந்தன. படிகளின் தொடர் வருகைக்கும் இலக்கிய பங்களிப்புகளுக்கும் ஆங்கில மொழியில் நன்றிகள். ஆஜர் கிடைத்துள்ள இவ்வங்கீகாரம் மகிழ்ச்சிக்குரியது.
22 / (بیزاW

ஆன்ைகள், பெனன்கள், சிறுவர்கள் உட்பட அனைவருக்குமான சகல ஆடைத் தெரிவுகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள், மின் உபகரணங்கள், காடிகாரங்கள், பேக் வகைகள், காகிதாதிகள் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ள நாடவேண்டிய இடம்
SIMA
-SA ave fashian
17, Market Place, Anuradhapura Tel-0252224313, O718416275

Page 19
Pada - 222
FOREGIN E
AIR TICKET
ARM T.
(2)fA αάταγό - yao. . .
Οωάλογω ως Goeso.
AL HAJ ARM THA
፲፭/2,A , AM; AWUMIRADAVAP Tél - 025 4580ó22, 0
 
 
 
 
 
 
 
 
 
 
 

2009 SSN EBO - 4:
MPLOYMENT &
ING AGENTS
RAVELS
العpac) خلیM
RIK JP (PROPRIETOR) ARAce S776,
MRA, SRJ EAM KA
ሄ5 ööffፋff88,0?? 80ፉቨÖ89
dikal blogspot.Com