கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சம்மாந்துறை முதல் அஸர்பைஜான் வரை

Page 1
i 4 - RUA--> یا حلقے Sl-PR


Page 2


Page 3

சம்மாந்துறை முதல் அஸர்பைஜான் வரை
அபூநஜாத்
பாதைபப்ளிகேஷன், 39, அல்பேர்ட் ப்ளேஸ், { தெஹிவளை.

Page 4
C) Sammanthurai Mudhal
Azarbyjan Varai
A Travelogue By Abu Najath
First Edition May 1990
Published by Pathai Publications 39, Albert Place,
Dehiwala.
Marketed by Baghdad Book Centre 81, Angappa Nayakan Street, Madras-600001.
Laser Typeset by Smt. Indira Gandhi Institute 64, II Floor, Thambaiah Reddy Road, West Mambalam, Madras-33.
Printed by
Soundari Offset Madras-600030
Price : 45.00
All these jobs executed by Pilot Agencies 101, Perambuur High Road, Madras-12.
 

ரசிப்பு
ஆதம் பாவா
நன
gól
குலாம் அஹ்மத் அஸ்கரி
ஹாஜா நஜிமுத்தீன்
கே.ஈ.பாஸ்கரன்
அப்துல் மஜீத்
யூசுப்
Dr. GFusir
svojouġ fl6oT

Page 5

இது என்னுரைக்கு முன்னுரை
இன்று 1990 பெப்ரவரி மூன்றாந்தேதி. தமிழகத் தலைநகருக்கு பெருமை சேர்க்கும் மரினா மணற் பரப்பில் நண்பருடன் நடக்கின்றேன். பாரதத் தலைவனுக்கு தமிழகத் தலைவர் தலைமையில் விழா. பார்க்கப் போன விடத்தில்
பல விடயங்கள் பற்றிக் கதைக்கின்றோம். பூலோகமே எங்கள் உரையாடலினுள் சங்கமித்து விட்டது. வெளிநாட்டுப் பயண அனுபவங்கள் -
பரஸ்பரப் பரிமாற்றம்.
இன்றையத் தினம் ஒரு முறை நான் உங்களை அழைத்துச் செல்லப் போகும் நாட்டில் இருந்தது பற்றி நான் கூறஅவரோ அதற்கு எதிரான ஒரு நாட்டில் இருந்தது பற்றிக் கூறினார்.
அங்கு ஒருவர் புத்தகம் விற்கிறார். அத்தனையும் தங்கத் தமிழ் கவிதைகள். நுனிப் புல் மேய்ந்ததில் பிடித்தது பல. பர்ஸ் கனம் பார்க்கையில் எடுத்ததோ இரண்டு,
ஒன்று அப்துல் ரஹ்மானின் “முட்டைவாசிகள்" மற்றது வைரமுத்துவின் "வடுகப்பட்டி முதல் வால்கா வரை'.
இரண்டாவது ஒரு பயணக்கதை. ரஷ்யப் பயணக்கதை. கவிதையா -வசனகவிதையா-கட்டுரையா-தீர்மானிக்க முடியவில்லை. -- - அது வைரமுத்துவின் வைரமான முத்து; எழுத்து. பொருளில் நான் வைரத்தை காணவுமில்லை;முத்தினைக் காணவுமில்லை.

Page 6
கவிஞர் பெருமானின் எழுத்தலங்காரம் பிடித்தது. கவிஞர் கொண்ட சித்தாந்தம் மனதை இடித்தது.
இடையில் நிறுத்தி முடிவைப் பார்த்தேன்.
"பொன்மணி என்னை ஒரு புது மனிதனாய் பார்த்தாள்.
மிகவும் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்” என்று மென்மையாய்க் கடிந்து கொண்டாள்.
"அப்படி ஒரு மாற்றம் இந்த மண்ணில் எப்போது வரும்' என்றாள்.
உணர்ச்சிகளை ஒதுக்கி விட்டு உணர்ந்து சொன்னேன்: ‘அங்கே அப்படி ஒரு மாற்றம் வருவதற்கு மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள்.
இங்கேமுழுக்கண் வைக்காமல் முடியாது பொன்மணி!"
அதாவதுஇங்கும் அந்த மாற்றம் வேண்டும் என்ற ஆதங்கம் இவர்களுக்கு இன்னும் உள்ளது.
ஏனெனில்
கவிஞரும், துணைவியரும் கடந்தமாத சோவியத் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
என்மனம் கேட்டது; இன்னும் கேட்கிறது: செத்துவிட்ட அல்லது செத்துக் கொண்டிருக்கின்ற அந்தத் தத்துவத்தால் இங்கு ஒரு விடியல் உருவாகுமா?
பாட்டாளி சர்வாதிகாரம் என்ற பெயரில் பாட்டாளிகளைச் சுரண்டகுழுச் சர்வாதிகாரத்தை உருவாக்க

3
உதவிய அந்த நிறம் இங்கும்
படிய வேண்டுமா?
ருமேனியாவில் - போலந்தில் புதைக்கப்பட்டுவிட்ட-அந்தச்
சவத்தை இவர்கள்
போஸ்மோட்டம் செய்வதற்கா அன்றி
பொன் மகுடத்தில் குடியேற்றி
பொற்பாதம் பணிந்திடவா
தோண்டியெடுக்கப் போகின்றனர்?
கவிஞர் வைரமுத்து தந்த உந்துதல். அவர் சென்று வந்த நாட்டிற்கும்அவர் மொண்டு வந்த நீருக்கும்
பதிலாகநான் கண்டு வந்தவற்றை எழுதலாம் என்று துணிந்து விட்டேன்.
பொருள் முதல் வாதத்தினையும், வர்க்க பேதத்தினையும் மட்டுமின்றி
மறுமை வாழ்வினையும் காட்டும் ஒரு தத்துவத்தின் அமுலாக்கலில் நான் கொண்டு வந்ததில் கொஞ்சத்தை உங்களுடன் பகிரவுள்ளேன்.
என் முயற்சியின் வெற்றி தோல்வி உங்கள் கைத் தராசுத் தட்டுகளில்.
என் இந்த எழுத்தினால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காய் ஏதாவது இருக்குமானால், கிடைக்குமானால் என் பிறவிப் பயனை நான் அடைந்து கொள்வேன்.
இது வெளிவரக் காரணமாயிருந்த மாகவி வைரமுத்துவிற்கு என் நன்றிகள்
அபூநஜாத்

Page 7
இது என்னுரை
வெளிநாடுகள் பலசென்று பழுத்த அனுபவம் எனக்கில்லை. நானொரு பெரிய கவிஞனோ எழுத்தாளனோ இல்லை. அறியாத காலத்தில் இன்று விலாசமில்லாமல் போய்விட்ட அரசியல்வாதிகளுக்காதரவாய் இரண்டொரு மேடைகளில் பேசியது தவிர நானொரு அரசியல்வாதியுமில்லை சொல்லப்போனால் நானொரு “பிரபலம்" இல்லை.
அப்படியெனில்
நான் இதனை ஏன் எழுதவேண்டும்? இச்சிரமத்தை வாசகர்கட்கு
நான் ஏன்தான் தரவேண்டும்? நான் பெறுமதியற்றவனாயினும் என் பயணம் பெறுமதியானது. கண்டவன் சின்னவன்தான் - கண்டவை பெரியவை. உண்டவன் சிறியவன்தான் - உணவோ சிறந்தது.
“பயணத்திற்குத் தயாராகவும்"- நண்பர் முகம்மதலி மூலம் தகவல் வந்தது. நான் வியப்படைந்தேன்.
ஏனெனில் - வெளிநாடு செல்ல வேண்டும். நிறைய உழைக்க வேண்டும். பணக்காரனாய்த் திரும்ப வேண்டும்" இப்படியான கனவுகள் இருந்தன ஒரு காலத்தில்.
வெளிநாடு செல்ல வேண்டும். நிறையப் படிக்கவேண்டும். கல்விமானாய்த் திரும்ப வேண்டும்". இப்படியான கனவுகள் இருந்தன ஒரு காலத்தில்.

A7
s
படிக்கப் போகும் நாட்டைஉழைக்கப் போகும் நாட்டை மனக் கண்ணால் படம்பிடித்து பிரதிபண்ணிகற்பனையில் மிதந்தது ஒரு காலம்.
அவையெல்லாம் கனவுகளாகவே அதுவும் பகல் கனவுகளாகவே போய் விட்டன.
அவையெல்லாம் நிஜமாகும் நம்பிக்கைகள் நீர்மேல் குமிழிகளாய்-சவர்க்கார நுரைகளாய்நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான்களாய் இல்லாமலே போய் விட்டன.
கற்பனையில் மிதக்கையில் தென்றல் வீசும். கலைந்து போகையில் சுழற்காற்று வீசும். காலம் கரைந்ததுதான் கண்டபலன். கற்பனைப் பயணங்களுக்காய் எடுத்த பாஸ்போட்டும் காலாவதியாக நெருங்கும் நேரம்“பயணத்திற்குத் தயாராகவும்'-
மணவாழ்வின் மூன்றாவது மாதம்அணிந்தவையே பழசு படவில்லை. அணைத்தது..? விட்டுப் பிரிந்தாலும் புதிய பாடங்கள் படிக்கலாம்.
“பயணத்திற்குத் தயாராகவும்" அழைப்பு மனதில் எதிரொலிக்கின்றது.
என்னென்ன பொருட்கள் வேண்டும்? போகுமுன் யாரை யாரைச் சந்திக்க வேண்டும்? போய் யாரை யாரைக் கண்டு பேச வேண்டும்?

Page 8
எப்படி..?எங்கு.?
எதுவுமே புரியவில்லை.
இன்னும் மூன்று நாட்கள்.
நண்பர்கட்குச் சொன்னேன். பாராட்டினர். வாழ்த்தினர்.
"அங்கு பனி கொட்டோவென்று கொட்டும் கோட் ஒன்று எடுத்துச் செல்” சென்ற வருடம் சென்று வந்த நண்பன் சொன்னான். என்னிடம் கோட்டுமில்லை, தைத்துக் கொள்ள அவகாசமுமில்லை.
"என்னிடம் ஒன்று உள்ளது எடுத்துச் செல்' என்றான் இன்னொரு நண்பன். பின்னர்
கொண்டு வந்தும் கொடுத்து விட்டான்.
இதோ. நான் கொழும்பு செல்லும் தனியார் பஸ்ஸில் இருக்கின்றேன். அம்பாரையிலிருந்து கொழும்பு நோக்கி பஸ் புறப்படுகின்றது. உகனை செக் பொயின்ற்றில் இறங்கி. மீண்டும் ஏறி. பஸ் விரைகின்றது. கண்களில் லேசான தூக்கம்.
அயர்ந்து விடுகின்றேன்.
பஸ் இடையில் நின்று விட்டதாக ஓர் உணர்வு. விழித்துப் பார்க்கிறேன். பயணிகள் அனைவரும் வெளியே பார்க்கின்றனர். நானும் பார்க்கின்றேன்.
வீதியின் ஒரத்தில் ஒரு மஞ்சள் நிற ஹொன்டா கார். விபத்தில் சிக்கி நசிபட்டிருந்தது. பாதை விட்டு விலகி பள்ளத்தில் மூன்று முறை உருண்டதாம்.

7
பயணிகள் தப்பியது தெய்வச் செயல். பேசிக் கொண்டனர்.
கண்டக்டர் "ரைட்' சொல்ல
பஸ் நகர்கின்றது. நான் மீண்டும் வெளியே பார்க்கின்றேன். அதோ.
அடிபட்ட காருக்கப்பால் மிக ஒரமாக அண்ணியும் அவரது மூத்த மகனும்,
ஒரு கணம்தான்மனதில் ஆயிரமாயிரம் மின்னல்கள். முழக்கங்கள்.
பஸ்ஸை நிற்பாட்டுங்கள்' என்னையறியாமலே கத்தி விட்டேன், பஸ் நின்றது. நான் பேக்குடன் இறங்கிக் கொண்டேன். பஸ் தன் பயணத்தைத் தொடங்குகின்றது.
எனது வெளிநாட்டுப் பயணம்.? ஊரிலிருந்து 35 மைல் தூர இடைவெளியில். அதாவது அந்தரத்தில். ノ அப்படியே நின்று விட்டது.
இறங்கியதும் ஓடிவந்தேன் அண்ணியிடம், “என்ன நடந்தது..? எங்கே அண்ணா..? எங்கே மற்ற பிள்ளைகள்..?” கேள்விகளாகக் கேட்டுக் குளறுகின்றேன். அச்சக் குறிகள் இன்னும் மறையவில்லை. எனினும்
அமைதியாய் பதில் சொன்னார்:

Page 9
'அல்ஹம்துலில்லாஹ் - ஒருவருக்கும் ஒன்றுமில்லை. இளையவன் அந்த வீட்டிலுள்ளான். இரண்டாமவனைக் கூட்டி வரவில்லை. அண்ணா பக்கத்து டவுனுக்குப் போயுள்ளார்."
என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
அண்ணனுக்கு ஏதாவது நடந்திருக்க வேண்டும். அன்றி இரண்டாமவனுக்கு ஏதாவது நடந்திருக்க வேண்டும். மனதில் கேள்விகள்.
மீண்டும் கேட்டேன். அவர் அதனையே திரும்பவும் கூறினார். ஒர் அரை மணி நேரம் நின்றோம். ஒரு வேன் வந்து நின்றது. அண்ணா வந்து விட்டார். அவருடன் சில சிங்கள சகோதரர்களும் வந்திருந்தனர். அண்ணா என்றால் நன்றாய்த்தான் உள்ளார். அவரிடம் கேட்டேன். "இரண்டாவது மகன் எங்கே?” "கூட்டி வரவில்லை" என்றார். மனம் இப்போதுதான் ஆறியது. வேனில் காரைக் கட்டினோம்.
மீண்டும் ஊர் நோக்கி
வந்த பாதையில் பயணம். விபரங்களை அவர் சொன்னார். விபத்து என்றால்- தப்பியது அல்லாஹ்வின் செயல்தான். யாருக்குமே ஒரு சிறிய காயமேனும் இல்லை.

9
நான் எனது பயணம் பற்றிச் சொன்னேன். அவர் சென்றவாரம் தான் கார் வாங்கினாராம். ஊர் வந்து ஒரு பத்து நாள் தங்க முடிவு செய்தாராம்.
இதோ அம்பாரையினை அடைந்து விட்டோம். ஒரு கராஜில் காரை ஒப்படைத்து விட்டு ஊர் நோக்கிச் செல்கின்றோம்.
இடையில் அண்ணா சொன்னார்: "ஒரு வேன் பிடித்து இன்றிரவே கொழும்பு திரும்புவோம். உன் பயணம் முடிந்து வந்தபின் மீண்டும் ஊர் வருவோம்."
அவசர அவசரமாக ஊர்வந்து அவசர அவசரமாக திரும்பும் முடிவு.
நான் மீண்டும் என் வீட்டிற்குச் சென்றேன். “என்ன நடந்தது.என்ன நடந்தது?’ மனைவி பரபரத்தாள். நடந்தவற்றைக் கூறி விட்டு மீண்டும் தயாராகின்றேன்.
எல்லாம் முடிந்து மீண்டும் பயணமாகையில் இரவு எட்டு மணி.
O. O. O
இன்று ஜனவரி 27ம் திகதி, காலை 6.30 மணிக்கு கொழும்பு வந்து சேர்கின்றோம்.
கொழும்பில் சில சகோதரர்களைச் சந்திக்கின்றேன். நாளை காலை 8.15க்கு விமானம்.

Page 10
()
எல்லாம் சரி. ஒன்றைத் தவிர. என்னிடம் கைச் செலவிற்குக் காசு இல்லை. அண்ணாவிடம் கூறினேன்.
"நீ உனது நண்பனின் அறையில் தங்கிக் கொள். நான் காசு ஏற்பாட்டுடன் விமான நிலையத்திற்குச் செல்ல டாக்ஸியுடன் வருகின்றேன். அது பயணத்திற்குச் சுலபம்' என்றார்.
நண்பனின் அறையில் நான். பதினொன்று.பன்னிரண்டு.பன்னிரண்டரை. நேரம் போய்க் கொண்டேயிருக்கின்றது. அண்ணாவைக் காணோம்.
வெளியே மழை, சோனா வாரி மழை. எதற்கும் அண்ணாவின் பணிமனைக்குப் போவோம் என்று
வெளியில் வந்து ஆட்டோ பிடித்து வந்து சேர இரவு 2.30 மணி.
அங்கு அண்ணா இல்லை.
தகவலும் இல்லை.
"கைச் செலவு வேண்டாம்” என்றால் மனம் கேட்பதாய் இல்லை. பயணச் செலவு அவர்களுடையதுதான் என்றாலும்-ஒரு பைசா கூட இல்லாமல் இத்தனை தூரம் செல்வதா?
3.30 மணிக்காவது புறப்பட்டால் தான் வேளைக்கு விமான நிலையத்தில் நிற்கலாம். அண்ணா வரவில்லை. கண்ணை மூடிக் கொண்டு கதிரையில் சாய்கின்றேன்.
அரவம் கேட்டு விழித்தால் அண்ணா. "லேட்டாகி விட்டது. உடனே புறப்படு' என்றார்.

11
தூக்கக் கலக்கம்முகம் கழுவி.உடுத்தி.டாக்ஸியில் ஏறி. இதோ விமான நிலையத்திற்கு வந்து விட்டோம். அண்ணா வங்கி வேலைகளை முடித்துத் தந்தார். "பதினைந்தாம் திகதி அழைத்துப் போக வந்து விடுவேன்’ என்று சொன்னார். அவரிடம் விடைபெற்றுக் கொண்டு உள்ளே நுழைகின்றேன். இதோ கஸ்டம்ஸ் . டிக்கட் சோதனை அனைத்தும் முடிந்து விட்டன. விமானத்தில் ஏற தயாராக நிற்கின்றேன். “கல்ப் எயார்' விமானம் வந்துதான் போகுமாம். காத்திருக்கின்றேன்.
ஒரு சகோதரர் வந்தார் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
பெயர் ஜலீல்.
என்னுடன் கூட வரும் ஒருவர். எங்கள் குழுவினர் அனைவரும் அங்கு சந்தித்துக் கொள்கின்றோம். நான், ஜலீல், நவாஸ் நானா, கரீம், ஸவாஹிர் மெளலானா, ஹஸன் இக்பால் - மொத்தம் அறுவர்.
நவாஸ் நானாவை எங்கள் குழுவின் தலைவராக்கிக் கொண்டோம்.

Page 11
காலை எட்டு மணிஇனிமையான குரலில் ஒரு கசப்பான அறிவித்தல். 'கல்ப் எயார் விமானம் வரத் தாமதமாகும்."
9 மணி, 10 மணி, 11 மணி, 12 மணி விமானம் வரவேயில்லை.
காலையிலும் சாப்பிடவில்லை. பசி வயிற்றைக் கிள்ளுகின்றது. விமான சர்வீஸ் சார்பில்
கன்டீனில் சிற்றுண்டி தந்தார்கள். யானைப் பசிக்கு சோளகப் பொரி. ஏதோ தின்றோம். குடித்தோம்.
விமானம் வருமா? வராதா? மனதினில் போராட்டம்.
என் முதல் வெளிநாட்டுப் பயணம் இத்தனை தடங்கல்களுடன்.
பகல் இரண்டு மணி.
விமானம் வந்துவிட்டது. “கல்ப் எயார் விமானப் பயணிகள் கவனத்திற்கு." அறிவித்தல் வந்தது பஸ்ஸில் ஏறுகின்றோம். விமானத்தில் ஏறுகின்றோம்.
"இவ்வளவு சொல்லி விட்டானே எங்கு போகிறான்? சொல்லவில்லையே!” உங்கள் முனுமுனுப்பு எனக்குக் கேட்கின்றது. அது சஸ்பென்ஸ் !

13
தயவு செய்து நாளை அதிகாலை 4.30 மணிவரை பொறுத்திருங்கள்.
நான் உங்களையும் அழைத்துச்செல்கின்றேன். உங்களை நான் என்னுடைய சகபிரயாணியாய் அழைத்துச் செல்கின்றேன். என்னினிய சக-பிரயாணியே! சற்றுப் பொறுமையாயிரு.

Page 12
"குட் ஆப்டர் நூன் . கப்டன் ஜோன்.”
கல்ப் எயார் ட்ரைஸ்டர் விமானம் கட்டுநாயக்கா விமான ஓடுபாதையில் மெல்ல நகர்கிறது. நத்தையாய்.ஆமையாய். முயலாய்.மானாய். புலியாய்.இதோ விமானமாய். மேல்நோக்கி...சரிவாக. மேற்கு நோக்கி.இறுதியாய் பாதையைச் சீர் செய்து பறக்கிறது.
அரபு நாடு போகும் விமானம் என்றாலே வீட்டுப் பணிப் பெண்களுக்கு குறைவில்லை என்பார்கள்.
துபாய்க்கு.அபுதாபிக்கு.குவைத்திற்கு.அரேபியாவிற்கு எங்கள் நாட்டின் முதுகெலும்பே இவர்கள்தான்
பொருள் தேடிச் செல்லும் இவர்களால் நிரம்பியுள்ளது விமானம்.
போய் வந்து - திரும்பப் போகும் பெண்கள் கலகலவென இருக்கின்றனர்
சிரித்தால் -
கண்ணாடி உடைகின்றது.
முதல் முறையாய் செல்பவர்கள் பேயறைந்த மாதிரி அல்லது பேதலித்த மாதிரி. வியப்புடன் அல்லது விசும்பலுடன். எனக்குப் பக்கத்திலிருந்த பெண் விசும்பிக் கொண்டே இருந்தாள்.

15
ஆங்காங்கே எங்கள் இருக்கைகள். கொக்பிட்-முதலாம் வகுப்பு
அடுத்து நாங்கள்.
விமானப் பணிப்பெண்கள் வந்தனர். வைரமுத்து பாணியில் சொல்வதானால் தேவதைகள்.
எனது பயணத்தின் நோக்கும் போக்கும் அவரினதை விட மாறுபட்டன; வேறுபட்டன; முரண்பட்டன. எனினும் -
அந்தத் "தேவதைகள்' பற்றியொரு சின்ன விவரணம் செய்யத்தான் போகின்றேன்.
56'க்கு குறையாத உயரம். அவுஸ்திரேலியக் குதிரைகள் போல்,
கட்டுக் குலையாத தேகம். கட்டழகிகள் என்பார்களே ! ஆசிய, ஐரோப்பிய, அரேபிய, இந்தோசீன. சர்வதேசியமே அங்கு அடக்கம்.
"தேவதைகள்தான்’.
உடை 65X 35 டெட்ரோன் X கொட்டன். ஷேர்ட் + லோங்க்ஸ்.
"தேவதைகளேதான்’.
தேவதைகளில் தெய்வீக தேவதைகள், சாத்தானிய மோகினிகள்' என்று இருவகை இருப்பதாக
இதிகாசங்கள் சொன்னால் இவர்கள் - ஒட்டுமொத்தமாக அனைவருமே இரண்டாம் வகையினர்தான்.
சாத்தானிய மோகினிகள்.
ஆயிரமாயிரம் அமெரிக்க டாளர் சம்பளத்து இளநகை - சுறுசுறுப்பு - இனிய உபசரிப்பு.

Page 13
16
"வுட் யூ லைக் ஹொட் ஒ கூல் வெஜிடேரியன் ஓ நொன் வெஜிடேரியன்'
ஒரு தள்ளுவண்டியில் உணவுப் பண்டங்கள். இன்னுமொன்றில் குளிர்பானம், டீ, கோப்பி இன்னுமொன்றில் சின்ன சின்ன போத்தல்கள், டின்கள்.
கேட்டவுடனேயே பதில் சொன்னேன். “வெஜிடேரியன், டீ,” என்று. ஆனால் நான் நொன் வெஜிடேரியன். கொழும்பு முஸ்லிம் ஹோட்டல்களில் மட்டும் மாமிசம் உண்டு பழக்கம் உண்டு.
'கல்ப் எயார்’ முஸ்லிம் நாட்டுடையதுதானே? ஹலால் தானே இருக்கும். என் மனம் சொல்லு முன்னமே என் கண்கள் போத்தல்களை உட்கொண்டு விட்டன. சுத்த சைவமாகி விட்டேன். இதே நிலைதான் என் குழுவினர் ஏனையோர்க்கும். ஒருவாறு சிற்றுண்டி ஆகிவிட்டது.
நவாஸ் நானா கேட்டார்
தொழுவதெப்படி? தொழுவதற்கான முயற்சியில் அவர் ஈடுபடுவது தெரிந்தது. இன்னும் சில சோதரர்களும் எழுந்தனர்.
பாத்ரூம் சென்று வுளு செய்து கொண்டேன். குழுவினரைத் தேடினால் காணவில்லை. அவர்கள் முதலாம் வகுப்புப் பகுதிக்குச் சென்று விட்டனர் போலும். நான் இடையில். ஒரு தேவதையிடம் அல்ல மோகினியிடம் கேட்டேன் "கென்யூ ஹெல்ப் மீ டு ப்றே?”

17
நளினமாக 'ஒப்கோர்ஸ்' என்றவர் பெட்டியைத் திறந்து விரிப்பொன்றை எடுத்தார். வாசற் கதவடியே விரித்தார்.
'ஆர் யூ எ முஸ்லிம்' மோகினி கேட்டார். ஆமென்றேன். 'அயாம் ஒல்சோ முஸ்லிம்” என்றார் அந்தக் குலுங்கிக் கதைக்கும் 'முஸ்லிம் மோகினி.
முஸ்லிம் நாட்டு விமானத்தில் மது இருக்கலாம் என்றால் ஒரு முஸ்லிம் மாது பர்தா அணியத்தான் வேண்டுமா என்ன? மனதில் எழுந்த வினாவிற்கு விடையும் கிடைத்தது.
சுதாகரித்துக் கொண்டு தொழத் தொடங்குகின்றேன். எந்தப் பக்கம் கிப்லா-?
எப்போதோ கேட்ட ஞாபகம் ஆகாயத்தில் கிப்லா பார்க்கத் தேவையில்லையாம். என்றாலும் விமானம் இலங்கைக்கு மேற்கில் தானே பறக்கின்றது. அரேபியாவும் மேற்கில் தானே? நான் மேற்கை நோக்கித் தொழுதேன்.
துபாய் சென்றடைய இருட்டி விட்டது.
துபாய் நகரம் பகல் போல் பிரகாசித்தது.
செல்வந்த நாடல்லவா?
இதோ.
துபாய் விமான நிலையம்.
கட்டுநாயக்காவை விட வெகு கவர்ச்சியாய்,
காதில் ரீங்காரமிடும் மேற்கத்திய இசை
ggi ABBA LffléeST. BONEY-M L6yéféST... கேள்விப்பட்டதுண்டு.

Page 14
18
துபாயில் நாங்கள் இன்னும் ஆறு மணிநேரம் தரிக்க வேண்டும். எங்களுக்கான அடுத்த விமானம் இரவு 2.45 மணிக்கு.
தொழுவதற்குத் தயாரானோம். எங்கே தொழுவது-கேட்டோம் மாடியில் என்றனர்- சென்றோம். அங்கும் இசைத் தூறல். எங்கு தொழுவது -கேட்டோம். காட்டினார்கள். ஒரு பக்கம் பார்.
மறுபக்கம் பாத்ரூம். இடையில் நான்கு ஐந்து சோபாக்கள் அதற்கிடையில் ஒரு பிய்ந்த பாய் முசல்லா. அங்கு தொழுதோம்.
அரேபிய உடையுடன் ஆட்கள் குடிக்கின்றனர். நீரல்ல. நீராக. பர்தா போட்ட பெண்களுடன் வரும் அரேபிய உடை ஆண்கள். சிவந்த கண்களுடன் - புகையும் விரல்களுடன்.
மீண்டும் கீழே வருகின்றோம்.
ஒரு சோதரர் தொழுவதற்காய்
தனது விரிப்பை விரித்து.
இதோ தொழத் தொடங்கி விட்டார். அங்கே பார்த்தால் ஒரு தடித்த கறுத்த பெண் போலிஸ் உடையில். மிக வேகமாக அவரை நோக்கி வந்தாள்.
அதற்குள் அவர் சுஜூது செய்யப் போய்விட்டார்.

19
"இங்கு தொழக் கூடாது' அரபியில் அவள் கர்ச்சித்தாள். அப்படியே அவரைப்பிடரியில் பிடித்து தூக்கி நிறுத்த. பாவம் மனிதர் வெலவெலத்து விட்டார். படியேறிச் செல்கின்றார்.
சோமாலியப் பெண்ணாம். எனக்கென்றால் பேய்மாதிரித்தான் தோன்றினாள்.
கீழ்மாடியில் ட்யூட்டி ப்ரீ ஷொப்நகைக் கடைகள், மதுபானக் கடைகள், சீலைக்கடைகள் ஆடம்பரப் பொருட்கள்அழகு சாதனப் பொருட்கள் விற்கும் கடைகள் அனைத்தும் உண்டு. குட்டைப் பாவாடையணிந்த குட்டையான குட்டிகள். இளம் சிட்டுகள். பிலிப்பைன்ஸ்ஸாம். சிரித்துச் சிரித்து ஆட்களை இடித்து இடித்துப் பொருட்களை விற்கின்றனர்.
நவாஸ் நானா
நகைக் கடைக்குச் சென்றார். மகளுக்கொரு செயின் வாங்க வேண்டுமாம். கடையுள் சல்வார் கமீஸுடன் ஓர் இளம் பெண் வட இந்திய வாடை.
இன்னுமொரு இளைஞன். இந்தியரா. இலங்கையரா? நவாஸ் நானா ஆங்கிலத்தில் பேசினார். எங்களுடன் தமிழில் கதைத்தார்.

Page 15
எங்களுடைய தமிழைக் கேட்டதுமே அவ்விளைஞர் தமிழில் பேசினார். மதராஸிக்காரர்.
"இங்குள்ள தங்கம் சரியில்லை. இரட்டிப்பு விலையும் கூட ஏன் கொழும்பில் நீங்கள் வாங்கக் கூடாது' என்றார். நவாஸ் நானா தப்பிக் கொண்டார். நல்லது செய்த தமிழே நீ வாழ்க!
N
இரண்டு இலங்கைப் பெண்களைக் கண்டோம். ஒருவர் முஸ்லிம் இளம் பெண். விசாரித்ததில் எனது நண்பர் ஒருவரின் மாணவி. மற்றவர் சிங்களம். வயது எப்படியும் நாற்பது இருக்கும்.
இங்கு வந்து மூன்று நாட்களாம். வந்ததிலிருந்து உண்ணா விரதமாம். விஸாவில் பிரச்சினை. துபாய்க்குள் போகவும் முடியாது. திரும்பிச் செல்ல டிக்கட்டும் கிடையாது. பட்டினியுடன் தவம். பிஸ்கட்டும், பட்டரும் வாங்கித் தந்தோம்.
இன்னுமொரு சிங்களப் பெண். எங்களுடனேயே ப்ளைட்டில் வந்தவர். வந்த விமானம் தாமதமானதால் செல்லவிருந்த குவைத் விமானம் சென்றுவிட்டது. நாளை மறுதினம் தான் அடுத்த சர்வீஸ்.

21
சாதாரணமாக இப்படி ஏற்பட்டால் தாமதமான விமான சேவையினர் பயணிக்கு தங்குமிட, உணவு வசதி செய்ய வேண்டும்.
இவர் போய் கேட்டார்.
அவர்கள் மறுத்து விட்டனர். அவர் ஏற்கனவே குவைத்தில் இரண்டு வருடம் இருந்தவர். அரபி சரளமாகப் பேசுகின்றார். ஆங்கிலமும் இயலும். எங்களிடம் முறையிட்டார்.
நண்பர் கரீம் சென்று கவுண்டரில் கேட்டார். இருந்த அதிகாரி ஒரு சிடுமூஞ்சி.
எரிந்து விழுகின்றார்.
கரீமும் விட்டாரில்லை.
கடுமையான வாக்குவாதம். கடைசியில் அதிகாரி பணிந்தார். கார் வந்தது. அப்பெண் ஏறிச் சென்றார் ஹோட்டலிற்கு. இதிலேயே இரண்டு மணித்தியாலம் கழிந்து விட்டது.
இதோ எங்கள் விமானம் வந்துவிட்டது. நாங்கள் ஏறுகின்றோம்.

Page 16
ஈரான் எயார் விமானம் இதோ தயாராய் நிற்கின்றது. ஏறுகின்றோம். இன்னும் ஒரு மணியும் நாற்பத்தைந்து நிமிடங்களும் நாம் பறக்க வேண்டும்.
ஏதோ நீங்கள் யூகித்துக் கொண்டீர்கள்போலும்,
சரி.சரி...சற்றுப் பொறுங்கள்.
இன்னும் ஒரு மணி நாற்பத்தைந்து நிமிட நேரம். சஸ்பென்ஸ் உடைந்து விடும். யூகமும் உறுதிப்படுத்தப்படும். இருக்கைகளில் அமர்ந்து.பெல்டுகளை இறுக்கி. அறிவிப்பு ஒலிப்பதற்கான அடையாளங்கள். "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் கப்டன் நஸ்ருத்தீன். அஸ்ஸலாமு அலைக்கும். மே அல்லாஹ் ப்ளஸ் யூ ஆல். என் மனம் வேகமாய் அடித்துக் கொள்கின்றது. உங்கள் மனம்.?
இதோ ஒரு விமானப் பணிப்பெண் வருகின்றார் ஒரு 'ஹைக்கூ’ பிறக்கின்றது.
"நிலவினை யார்
கறுப்பால் மறைத்தது.
பர்தாப் பெண்.” என்மனம் இன்னும் வேகமாய் அடித்துக் கொள்கின்றது. உங்கள் மனம்.?

23
விமானம் ஊர்கிறது. விமானம் பறக்கத் தொடங்கி விட்டது.
இதோ சிற்றுண்டி வண்டி. இதோ குளிர்பான, டீ, கோப்பி வண்டி.
மூன்றாவது வண்டி வரவேயில்லை.
என்மனம் இன்னும். இன்னும் வேகமாய் அடித்துக் கொள்கின்றது. உங்கள் மனம்.?
"வுட்யூ லைக் கூல் ஒஹோட் டி ஒகோப்பி வெஜிடேரியன் ஓர் நொன் வெஜிடேரியன்.”
சாதாரணமாகச் சொன்னேன் "நொன் வெஜிடேரியன், டீ" என்று.
கல்ப் எயார்-ஈரான் எயார் துபாய் - ஈரான் குட் ஈவினிங் - அஸ்ஸலாமு அலைக்கும். சாத்தானிய மோகினி - பர்தாப் பெண் மதுபானம் - மதுபானம் இல்லை முஸ்லிம் நாடு - முஸ்லிம் நாடு. என் மனம் இப்போது அடங்கிவிட்டது. உங்கள் மனம்.?
o O O.
"இன்னும் ஐந்து நிமிடங்களில் நாம்
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் மெஹ்ராபாத் விமான நிலையத்தில் இறங்கப் போகின்றோம்.

Page 17
24
உங்கள் இருக்கைப் பட்டிகளை இறுக்கிக் கொள்ளுங்கள்.” அறிவிப்பு வருகின்றது. சஸ்பென்ஸ்தான் உடைந்து விட்டதே ! மணிக்கூட்டைத் திருப்பி வைத்துக் கொள்கின்றோம். அதிகாலை 4.30 மணி.
விமான நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே விமானம் நிறுத்தப்பட்டது. பஸ்ஸுக்காக காத்திராமல் இறங்கி நடக்கின்றோம். என்ன மலர் தூவி வரவேற்கின்றார்களா? இல்லை பணி.
கரீம் மட்டும் நின்று கொண்டு சுற்றி சுற்றிப் பார்க்கின்றார். "என்ன பிரதர் பார்க்கிறீர்கள்'. "ஷாவின் காலத்தில் முன்பொரு முறை ட்ரான்ஸிஸ்டிற்காய் வந்துள்ளேன். அப்போதெல்லாம் அமெரிக்க யுத்த விமானங்கள் நிறைந்திருக்கும் அவற்றைத் தேடுகிறேன்’என்றார்.
“அவையெல்லாம் சவூதியில் இருக்கும்." அர்த்தத்துடன் கூறினேன்.
நடக்க ஆரம்பித்தோம். நடுங்குகின்றது உடல், கால்கள் விறைக்கின்றன. கைகளைத் தேய்த்து கன்னங்களில் ஒத்திக் கொள்கின்றேன். விமான நிலைய வாயிலில் ஒரு பானர்.
வாசித்தேன்.

25
Oh... Guests Welcome to the land of Martyrs.
ஒ - விருந்தினரே! உயிர்த்தியாகிகளின் மண்ணிற்கு உங்களை வரவேற்கின்றோம். வாசகங்களை மனது எழுதிக் கொண்டது.
மெஹ்ராபாத் விமான நிலையம். உள்ளே வந்தோம். குளிர் குறைவுதான். எனினும் உடல் நடுங்கிக் கொண்டே இருக்கின்றது. கரீம் மீண்டும். மீண்டும் சுவர்களைப் பார்க்கின்றார். நானும் பார்க்கின்றேன். அல்குர்ஆன் வசனங்கள் எழுத்தணிகளாக அழகாகக் காட்சியளிக்கின்றன. அவரிடம் கேட்டேன். "இங்கிருந்த படங்கள் எல்லாம் எங்கே?" என்று தேடுகின்றேன் என்றார். ஒருகணம் அந்தப்படங்களை மனத்திரைக்குக் கொண்டு வந்தேன். “ஈரான் உண்மையில் மாறி விட்டது" என்றார். கரீம். இலங்கையின் பெரும் பத்திரிகையாளர்களில் ஒருவர். அப்போது அவர் டெய்லி மிரர் உதவி ஆசிரியர். இப்போது ஒப்சேவரில் பணிபுரிகின்றார். கிழக்கு ஜெர்மனியில் ஜெர்னலிசம் படித்தவர்.
எங்களை வரவேற்க பல ஈரானிய சோதரர்கள் வந்திருந்தனர். இன்னும் குளிர் என்னை வாட்டுகின்றது. ஜலிலும் நடுங்கிக் கொண்டிருந்தார்.

Page 18
6
மற்றவர்கள் தங்கள் கோட்களை கையில் கொண்டு வந்திருந்தனர். எங்கள் இருவரின் கோட்டுகளும் பெட்டியில்,
ஈரான் சோதரர் ஒருவர் தனது ஓவர் கோட்டை ஜலீலுக்குத் தந்தார். தனது புஷ்கோட்டை என்னிடம் தந்தார். அவர் குளிருக்குப் பழகியவர்.
அடுத்த அறைக்கு வருகின்றோம். அதோ எங்கள் பெட்டிகள் பெல்டுகளில்,
பாய்ந்தோடி பெட்டியை எடுத்து-திறந்து கோட்டை எடுத்து. புஷ்கோட்டை நண்பருக்குத் திருப்பித் தருகின்றேன்.
ஜலீலின் பெட்டி வரவில்லை. துபாயில் தங்கியதோ கொழும்பில் தங்கியதோ! தவறிய உடமை தேடல் பாரம் நிரப்பிக் கொடுத்தார்.
எங்களது பெட்டிகளை அவர்களே தூக்கினர். எனது பெட்டி புஷ்கோட் சோதரரிடம். அவரது பெயரைக் கேட்க அவகாசம் கிடைக்கவில்லை.
சோதனைகள் முடிந்து வெளியே வந்தோம். பஸ் ஒன்று தயாராக நின்றது. ஏறினோம் நாங்கள் ஆறுபேர், வந்தவர்கள் ஆறுபேர்.
ஹோட்டலை நோக்கி பஸ் பறந்தது. வெளியில் ஒன்றுமே அவதானிக்க முடியவில்லை. இருட்டு - குளிர்.
இதோ ஹோட்டல் இஸ்திக்லால். ஐந்து நட்சத்திர ஹோட்டல்.
அந்த புஷ்கோட் சோதரர் சொன்னார். "புரட்சிக்கு முன் இது றோயல் ஹில்டன். இப்போது இஸ்திக்லால் - உறுதி.

27
தெஹ்ரானின் முதலாவது ஐந்து நட்சத்திர ஹோட்டல். புரட்சிக்குப் பின் அந்நியப் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டு விட்டன." பெயர்கள் மட்டுமா. எல்லாமேதான் மாறிவிட்டன. நினைத்துக் கொண்டேன். சொல்லவில்லை.
பன்னிரண்டாவது மாடிக்கு அழைத்துச் சென்றனர். இருவருக்கு ஓர் அறை. கரீமும் நானும் ஒன்றில், போனவுடனேயே வெந்நீரில் குளித்தோம். தொழுதோம். மெல்ல மெல்ல இரவு தன் போர்வையைத் திறக்கின்றது. தெஹ்ரான் வெண்பளிங்காய் காட்சி தருகிறது. அசதியாய் இருந்தும் அயரவேயில்லை. அதிகாலைத் தரிசன ஏக்கம். பகலவன் கதிர்கள் பனிப்படலம் மேலே, பளபள வென்ற பளிங்குத் தோற்றம். ஜன்னலைத் திறந்தால் குளிரோகுளிர். மூடிவிட்டேன். சாளரத்தினூடே தலைநகர் தரிசனம். மரங்கள் - கட்டிடங்கள் சாலைகள் - வாகனங்கள் அனைத்துமே வெண்பஞ்சினால் போர்த்திக் கொண்டுள்ளன.
ஈரானிய இஸ்லாமியப் புரட்சியின் ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் இலங்கைப் பிரதிநிதிகள் நாங்கள் அறுவரும்.

Page 19
28
புரட்சி தினக் கொண்டாட்டங்களின் பெயரே புதுமையானது. புரட்சிகரமானது. "பத்து சுப்ஹுகள் - அதிகாலைகள் தினங்கள்."
பதினைந்து வருடகால அஞ்ஞா வாசத்தின் பின் பெப்ரவரி முதலாம் திகதி இமாம் கொமய்னி நாடுதிரும்பினார்.
பெப்ரவரி பத்தாம் திகதி இஸ்லாமியக் குடியரசினை பிரகடனம் செய்தார்.
பத்து நாட்களும் பத்து அதிகாலைகள். பதினோராம் திகதி ஈரான் குடியரசாய் மலர்ந்தது. அந்தத் தினம் உதய தினம். பத்து சுப்ஹராகள் - அதிகாலைகள் தினங்கள் எங்களுக்கு அதிகாலையுடனேயே ஆரம்பம். என்ன பொருத்தம் இந்தப் பொருத்தம்.
தெஹ்ரான் மண்ணே! ஷாஹதாக்களின் உறைவிடமே! அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் தாய் வீடே!
இந்த நூற்றாண்டின் இணையற்ற மனிதப் புனிதரைச் சுமந்திருக்கும் புனித மண்ணே!
உந்தனுக்கு என் வாழ்த்துக்கள்! உன்மீது சாந்தியும், சமாதானமும் பரவுவதாக!
ஒளிபிறந்தது. இருள் மறைந்தது. சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது.

29
வழிபிறந்தது. தடை அகன்றது. நித்தியம் உன்புகழ் நிலத்தினில் தரித்திடும். உன்னுடலில் இருந்த கறைகளை உன் மைந்தர் குருதியினாற் கழுவினராம் நீ சிவந்தாயாம்! படித்திருக்கின்றேன். பரவசப் பட்டிருக்கின்றேன். உன்னைத் தரிசிக்க வந்துள்ளேன் தாயே! உந்தனுக்கு எந்தன் உளவீட்டின் அடித்தளத்து வீர வாழ்த்துக்கள்!
வாழ்க! வாழ்க!

Page 20
ஜனவரி - 29 ஆம் திகதிஹோட்டல் அறையிலேயே இருக்கின்றோம். காலைச் சாப்பாட்டுக்கு தொலைபேசியில் ஆடர் கொடுத்தோம். கொண்டு வந்தனர். சாப்பிட்டோம்.
செய்திப் பத்திரிகையைப் புரட்டினேன். பத்து அதிகாலைகள் தினங்களில் கலந்து கொள்ளும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வந்து கொண்டிருக்கும் செய்திஇலங்கைப் பிரதிநிதிகள் வந்து விட்டனர். இன்று இந்திய, ஸாம்பிய, பஹாமாஸ் பிரதிநிதிகள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
காலை 10 மணிக்கு அறைக்
கதவு தட்டப்படுகின்றது. திறந்தேன். "அஸ்ஸலாமு அலைக்கும்’ என்றபடியே இருசோதரர்கள். "வ அலைக்கு முஸ் ஸலாம். ப்ளீஸ் கம் இன்’-நான். அறிமுகப்படலம் நடக்கின்றது. ஒருவர் சகோதரர் ஜலால். எங்களின் வரவேற்பு மற்றும் மகா நாட்டு ஒருங்கமைப்பாளர்.
"இவர் சகோதரர் அப்துல் ஹமீத் உங்கள் மொழி பெயர்ப்பாளர் + வழிகாட்டி'-சொன்னார் ஜலால். ஏனைய சகோதரர்கள் அழைக்கப்படுகின்றனர். ஒரு சின்னக் கலந்துரையாடல் இடம் பெறுகின்றது. சகோதரர் ஜலால் விடைபெற்றுக் கொள்ளுமுன்
"உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய
எந்த நேரமும் காத்திருக்கின்றேன். எந்தன் சேவையை நீங்கள் கட்டாயம் பெறவேண்டும்" என்றார்.

31
பேச்சில் கனிவு மட்டுமின்றி கடமையுணர்வும் தொனித்தது. "நிச்சயமாக” என்ற படியே விடை கொடுத்தோம்.
அப்துல் ஹமீத், இலங்கை வானொலி அப்துல் ஹமீத் போல் குரல்.
எனினும் குழந்தைத் தனம். இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சில் வேலை. தெஹ்ரான் பல்கலைக் கழக ஆங்கில டிப்ளோமா மாணவர். என்னைப் போன்றே மணமுடித்து மூன்று மாதம் இன்னும்.இன்னும்.விபரங்கள்
எடுத்த எடுப்பிலேயே ஓர் இணக்கம்- சொந்தம் அவருடன் அவ்வளவுக்கு இனிமையானவர்.
O O. O.
பகல் உணவு உண்டோம். உண்டபின் வரும் மயக்கம் இப்போது வந்து விட்டது. ஒரு குட்டித் தூக்கம்.
S.U. 5.30 Deof.
ஹமீத் சொன்னார். யுத்தமுனையில் ஷஹீதான சகோதரர் இருவரின் வீட்டிற்குச் செல்ல ஏற்பாடு உள்ளதென்று. சம்மதம் கேட்டார். சரியென்றோம். மாலைத் தொழுகையின் பின் அந்த வீட்டிற்குப்பயணம். பஸ் ஒன்று தயாராக இருந்தது. எங்களுடன் கொரியாவைச் சேர்ந்த சோதரர் கோருவும் இன்னும் சில ஆப்ரிக்க சகோதரர்களும். பஸ் - ஈரான் நேஷன். டொயோடோ அல்ல. லேலண்ட் அல்ல.

Page 21
3
2
பென்ஸ் அல்ல. பேர்ர்ட் அல்ல. ஈரான் நேஷன்,
புரட்சிக்குப் பின் வெளிநாட்டு நிபுணர்கள் வெளியேறி விட்டனர். அல்லது வெளியேற்றப் பட்டுவிட்டனர்.
அதன் பிறகு உள்ளூர் நிபுணர்கள் வடிவமைத்துத் தயாரித்த பஸ்.
பஸ். இல. 3. ஆங்கிலம். பஸ்ஸின் வின்ட்ஸ்கிரீனில் ஒர் அட்டை. பஸ்ஸில் ஏறுகின்றோம்.
இதோ ஈரான் நேஷன் புறப்பட நகர்கின்றது. இதோ ஓர் இளைஞர் ஓடி வந்து பஸ்ஸில் தொற்றிக் கொள்கின்றார். பழக்கமான முகமாயுள்ளதே! ஆம் அந்த
புஷ்கோட் இளைஞர்.
பஸ் தெஹ்ரான் சாலைகளில் ஊர்கின்றது.
"அஸ்ஸலாமு அலைக்கும் எவ்ரிபொடி'- புஷ்கோட் சோதரர் கம்பியில் தொங்கியவாறே. அவர் மெது.மெதுவாக முன்னே நின்று கொண்டு பேசத் தொடங்குகின்றார்.
"1872ம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் 'புகையிலைச் சட்டத்தினை” அமுலாக்கிய போது புரட்சி ஆரம்பித்தது. அப்போதைய ஆலிம்கள் பிரிட்டீஷாரின் இந்த சுரண்டல் கொள்கையை எதிர்க்கத் தொடங்கினர். இதிலிருந்து ஆரம்பித்ததே இப்புரட்சி” என்று ஆரம்பித்த அவர் இஸ்லாமியப் புரட்சியின் ஒவ்வொரு திருப்புமுனைகளையும் பற்றிச் சுருக்கமாக ஆனால் தெளிவாக விளக்கினார். -

33
புகையிலைச் சட்டத்தில் இருந்து தொடங்கி புரட்சிக் காவலர்களான இந்த உயிர்த்தியாகிகள் வரை விளக்கிய விதம் உள்ளத்தைத் தொட்டது. உரோமங்கள் சில்லிட்டன.
இஸ்லாமியப் புரட்சி பற்றி பலமுறை படித்துள்ளேன். இந்த இருபதாம் நூற்றாண்டிற்கும் இது பொருந்துமா என்ற
வினாவிற்கான விடையினை இவர் பேச்சில் கண்டு கொள்கிறேன்.
உதட்டிலிருந்து அல்ல உள்ளத்திலிருந்து தோன்றின அவர் வார்த்தைகள்.
அதனால்என் காதுகளில் அல்ல அவற்றினை என் மனத்திலேயே பதிந்து கொண்டேன். புரட்சியின் மொத்தமுமே அந்த 45 நிமிட உரையினுள் புதைந்து கிடந்தது. உள்ளத்தை நெகிழவைத்த அந்த உரையின் சொந்தக்காரர். பெயரே தெரியாத ஓர் இளைஞர். "புஷ் கோட்' தந்தவர்.
அவரின் உரையின் ஓரிடத்தில் "நாங்கள் வனங்களில் வாழ்ந்த விலங்குகளாக நடத்தப்பட்டோம்.

Page 22
34
தெஹ்ரானில் ஒரு சிங்கம்
ஆட்சி செய்தது. ஷாவின் சின்னமே சிங்கம் தானே? என்று கூறியது இன்றும் என்மனதில் மெளனமாய் ஒலிக்கின்றது. என்றுமே அது அழிந்து போகாது.
நோக்கி வந்த வீட்டை அடைந்து விட்டோம். ஒரு தொடர் மாடிக்கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஒரு சிறிய வீடு.
அன்புடன் வரவேற்றனர்.
அந்தக் குடும்பத்தில் மூவர். தந்தை - தாய் - மகன் வயது பத்தொன்பது. பாரசீக விரிப்பின் மேல் தரையில் அமர்ந்து கொண்டோம்.
அந்தத் தந்தையார் எம்மிடம் குசலம் விசாரித்தார். சகோதரர் ஹமீத் மொழிபெயர்த்தார். எங்களுக்கு பாரசீகத்து ஆப்பிழும், தோடையும் பண்டங்களும் பரிமாறினர்.
இறுதியாக - தந்தையார் தனது குடும்பநிலையை விளக்கினார். அவருக்கு மூன்று மகன்களாம். முதலாமவர் ரீஸா அலி. -

35
இரண்டாமவர் ஹஸன்.
மூன்றாமவர் ஹுசைன்.
முதல் இருவருமே அடுத்தடுத்து யுத்தத்தில் வீரமரணம் எய்தி விட்டனராம். தன் மூத்த மகன்கள் இறந்து போன கதையைக் கண்ணிர் மல்கக் கூறிய அத்
தந்தையார் தன் மூன்றாவது மகனையும் "ஷஹீது”-உயிர்த்தியாகி அந்தஸ்தில் காண முடியாமல் போய் விட்டதைக் குறிப்பிடுகையில்தான் உண்மையில் கதறியழுதார்.
என்னே வீரம், திடம்.
தன் மைந்தர்களைத் தாரைவார்க்கத் துடிக்கும் மனோபலத்தை என்னவென்பது? எப்படி விவரிப்பது?
இரு மகன்களினதும் படங்களைக் காட்டுகின்றார்.
மூத்த மகனின் கையெழுத்திலான இறுதி சாஸனத்தை வாசித்துக் காட்டினார். அதன் போட்டோ பிரதிகளை எமக்குக் கொடுத்தார். அது இன்றும் என்னிடம் உள்ளது.
அந்த இறுதி சாஸனத்தின் உள்ளடக்கம் இதோ -
அல்லாஹ்வின் திருப்பெயரால் - என்னருமைப் பெற்றோருக்கு
இனிமையுடன்
அஸ்ஸலாமு அலைக்கும்.

Page 23
36
இஸ்லாத்தின் விரோதிகளால் எம்மீது திணிக்கப்பட்ட யுத்தத்தின் முனையிலிருந்து இதனை எழுதுகின்றேன். அடக்கு முறை, சுரண்டல், காலனித்துவம், ஒடுக்கு முறை, ஒழுங்கீனம், சர்வாதிகாரம் இத்தியாதிகளிலிருந்தும் இப்போதுதான் விடுதலை பெற்ற எங்கள் மீது இவர்கள் யுத்தம் தொடுத்துள்ளனர். எங்களின் ஆயிரமாயிரம் கிராமங்கள் நகரங்கள் தரைகளாயின. எங்களின் இலட்சம் பேரின் உயிர் பறித்தனர். எங்களின் இலட்சக் கணக்கானோர் அகதிகளாய் முகாம்களில்அங்கவீனர்களாய் ஆஸ்பத்திரிகளில், எங்கள் மண்ணை ஆக்கிரமித்தனர். தத்தித் தவழும் புரட்சிக் குழந்தையை தணலில் போட்டு எரிக்க முயல்கின்றனர். எனவே
இவர்களை எதிர்த்துப் போராடுதல் எங்களின் கடமையே! வல்ல இறையினால் - வள்ளல் நபிகள் மூலம் அருளப்பட்ட எங்கள் தீனைக் காப்பது எங்களின் கடமையே!
தூய இமாம்களின் நேய வழிகாட்டலும் - இமாம் ரூஹுல்லாஹ்வின் சீரிய தலைமையும்
எங்களிடம் உண்டு.

37
எனவே நான் இங்கு எதிரிகட்காய் காத்திருக்கின்றேன்.
அன்னவர் எதிர்பட்டால் என்கையின் மெஷின் கன் தன் கண் திறக்கும்
அல்லதுஎதிரியின் எந்திரத் துப்பாக்கி வேட்டுகள்
என்னுடலைத் துளைக்கும் என்னுயிரைப் பறிக்கும்.
இம்மடல் உங்கள் இனிய கரங்களில் கிடைக்கையில் எதிரிகளால் நான் கொல்லப்படலாம். பட்டால்
என் உயிரற்ற வெற்றுடல் கண்டு பிடிக்கப்
பட்டால் அது தெஹ்ரானுக்குக் கொண்டு வரப்படலாம். பட்டால் "பெஹஸ்தி ஸஹ்ராவில்” நீங்கள் அதனை அடக்கலாம்.
அல்லாவிடின்-அதாவது எனது வெற்றுடலாவது கிடைக்காவிடின் நீங்கள் என்னைக் காணாமல் அழுது புலம்ப வேண்டாம்.
என்னைக் காண விரும்பின் நீங்கள் பெஹஸ்தி- அஸ்-ஸஹ்ரா விற்குப் போங்கள்.
அங்கு நானிருப்பேன். என்னை நீவிர் காண்பீர்.
எங்ங்ணம்?

Page 24
38
அங்கு அடக்கப்பட்டிருக்கும் ஆயிரமாயிரம் உயிர்த் தியாகிகள் அனைவரும் என் சோதரர்! ஆகவே அன்னவர் உங்கள் புத்திரர். அவர்களைப் பாருங்கள். அவர்களிடையே நானிருப்பேன். அவர்களாக நான். நானாக அவர்கள். உங்கள் மகனாக,
அழாதீர்கள் ஒப்பாரி வைக்காதீர்கள்!
ஏனெனில்
நான் இறக்கவே மாட்டேன். நான் உயிரோடே இருப்பேன்.
ஏனெனில் -
"ஷாஹதாக்கள் மரணிப்பதில்லை. அவர்களை மரணித்தோர் என்று எண்ணி விடாதீர்கள். அவர்கள் உயிருடனேயே உள்ளனர். அல்லாஹ்வின் பொருட்டால் அன்னவர்க்கு ஆகாரமும் அளிக்கப்படுகின்றது' எனும் இறைமறை வசனத்தை எண்ணிப் பாருங்கள்.
இப்போரில்நான் இவ்வுலகில் இருந்தும் பிரிந்து போனால் எந்தன் அணிமணிகளை தேவையுள்ளோர்க்குக் கொடுத்து விடுங்கள்.

39
எந்தன் புத்தகங்களை ஏழை மாணவர்க்குக் கொடுங்கள். வங்கியில் உள்ள எந்தன் சேமிப்பை யுத்த நிதிக்கு வழங்கி விடுங்கள். அழாதீர்கள்! ஒப்பாரி வைக்காதீர்கள்!
நான் இப்போரில் ஷஹீதாகிவிடின் என் தம்பியினை தற்காப்புப் போருக்கு அனுப்பிவிடுங்கள். அவரும் ஷஹீதாகிவிடின் இளையவனை அனுப்புங்கள். அவர்களிருவரும் ஷஹீதானால் அவர்களின் வெற்றுடல்கள் கொணரப்பட்டால் பெஹஸ்தி-அஸ்-ஸஹ்ராவில் அடக்குங்கள். அல்லது
பெஹஸ்தி-அஸ்-ஸஹ்ராவிற்குச் செல்லுங்கள். அங்கு நாமிருப்போம்.
அழாதீர்கள்! புலம்பாதீர்கள்!
தொழுகையை கைவிடாதீர்கள்.
எங்களுக்கு விடுதலை பெற்றுத்தந்த இமாம் கொமய்னிக்கு உறுதுணையாய் இருங்கள்!
அடக்குமுறையாளர் மீதான அடக்கப்பட்டோரின் வெற்றி இறுதியானது!
இன்ஷா அல்லாஹ் மறுமையில் சந்திப்போம்.

Page 25
4()
இமாமுக்கு எனது இதயத்து அடித்தளத்தின் வீர வாழ்த்துக்கள்!
வஸ்ஸலாம்.
C) O. O
இருபதாம் நூற்றாண்டில் கூட
நபிகளாரின் காலம்.
நபிகளார் தோழர் வாழ்வில் நடந்தவை என் கண் முன்னே! இப்படியான தியாகியின் வீட்டில் இருப்பதையிட்டு நான் பெரு மகிழ்வு கொள்கின்றேன்.
அந்த வீரப் பெற்றோர் மூத்த மகன் ஷஹீதாகிய செய்தி கேட்டதுமே இளையவனை அனுப்பி விட்டனர். அவரும் போரில் இறந்து விடவே மூன்றாவது மகனை அனுப்பினார்.
மூத்த இருவரினதும் வெற்றுடல்கள் கிடைக்கவேயில்லை.
அவர்களோ
பெஹஸ்தி-அஸ்-ஸஹ்ராவிற்குச் சென்று தம் மகன்களைக் 'காண்கின்றார்கள்” தானாம். மூன்றாவது மகனை போரிலிருந்து திருப்பி அனுப்பி விட்டனராம்.
ஏனெனில்

l
ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கு மேல் ஷஹீதாக விடமாட்டார்களாம். எனினும் அவர் தெஹ்ரானில் காவல் பணிகளில் புரட்சிக் காவலர்களுடன் பணி செய்கின்றார்.
அந்தத் தகப்பனார் சொன்னார். "இச் செய்தியினை உங்கள் மக்களுக்கும் சொல்லுங்கள். எங்களுக்கு இழைக்கப்பட்ட
எங்கள் இமாமின் சீரிய தலைமைபற்றி உங்கள் மக்களுக்கு அறிவியுங்கள்.”
சொல்லுங்கள் என்றார். சொல்லுகின்றேன்.
அந்த விட்டிலிருந்து புறப்படுவது அவ்வளவு எளிதாகத் தோன்றவில்லை எங்களுக்கு.
உள்ளமோ உணர்ச்சிகளால் - நிரம்பித் தவித்தது.
இன்று இச்சம்பவத்தினை சற்று இரை மீட்டி அசை போடுகின்றேன்.
எங்கள் நாட்டில் எங்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் - அவற்றை எதிர்த்துப் போராட் எழுந்து போன வீரர்கள் (?)- அவர்களை வழிநடத்திய

Page 26
இஸ்லாமியத் தலைவர்கள் (?)- ஆகியோர் பற்றிச் சற்று நினைக்கின்றேன்.
தீர்க்கதரிசனம் அற்ற முடிவுகளால் நாம
திசைகெட்டுப் போனோமே. ஆர்ப்பரிப்பும் ஆராவாரமும் தான் கண்ட பலன்.
ஐயகோ
இஸ்லாமியத் தலைமை பற்றி இவர்கள் இன்னும். இன்னும். இமாமிடம் படிக்க வேண்டும். நாடு விட்டுச் சென்றும் நம்பிய மக்களை நேர்பாதையில் நடத்திய இமாம் எங்கே? இவர்கள் எங்கே?

இரவு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்ததுமே நிகழ்ச்சிநிரல் கையளிக்கப்பட்டது. அதன்படி முதல் நிகழ்ச்சி நாளை தொடங்குகின்றது.
lڑ9
ஜனவரி 29,30,31ம் திகதிகளில் சர்வதேச 'இஸ்லாமிய சிந்தனை மகாநாடு.”
காலை 8.30 தொடக்கம் பகல் 12.30 வரை - நிகழ்ச்சிகள் பகல் 12.30 தொடக்கம் மாலை 6.30 வரை - இடைவேளை. மாலை 6.30 தொடக்கம் இரவு 10.30 வரை - நிகழ்ச்சிகள்.
இரவு ஹோட்டலில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.
அதில் மனதில் பட்டவர்கள் அமெரிக்காவின் சாகிர்பஹாமாஸ் செய்யித் சயீத்தென் கொரியா கோருஇந்திய டாக்டர் அரோராஈராக்கிய "அப்துல் ரஹ்மான்’ (மறைத்த பெயர்)- சவூதி அரேபிய "அப்துல் காதிர்" (மறைத்த பெயர்)- ஸாம்பிய மாலிக் பெல்லோஇன்னும்.இன்னும். பலர்.
வெளிநாட்டினரைச் சந்திக்கையில்அன்னவருடன் உரையாடுகையில்அனுபவங்களைப் பகிர்கையில்அவர் மொழி கேட்கையில்

Page 27
44
ஏற்படுகின்ற ஆனந்தமோ அலாதியானது. மக்கள் பிரச்சினைகளைக் கேட்கையில்வரலாறுகளை அசை போடுகையில்அப்பப்பா அனுபவித்தால் தான் புரியும்.
இந்த இரவு விடியவே கூடாது என்ற ஆதங்கம் மனதில் நிறைந்தது.

ஜனவரி 29ம் திகதி, இன்று இஸ்லாமிய சிந்தனை மகாநாடு ஆரம்ப நாள்.
மகாநாட்டு நிகழ்ச்சிகளை ஈரானிய உயர்நீதிபதி ஆயதொல்லாஹ் அர்தபெல்லி அவர்கள்
ஈரானின் நீதிபதிகள் ரோமன் - டச்சு - ஆங்கில சட்டங்களை மட்டும் கற்ற சட்டப் பட்டதாரிகள் அல்ல.
அவர்கள் இவற்றுடன் இஸ்லாமிய சட்டங்களையும் கற்றறிந்த மேதைகள்.
ஈரானிய அரசியலமைப்பின் படி அங்கு இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களே அமுலாக்கப்படுகின்றன.
ஈரானிய அரசியலமைப்பின் படி அதி உயர் பதவிகளில் இமாம், ஜனாதிபதி, சபாநாயகர் என்போருக்கு அடுத்தது உயர் நீதிபதி பதவி.
இங்கைய நீதிமன்றங்களில் குருட்டுத் தேவதையின் கைத் தராசினை விடவும்
மறுமை விசாரணை பற்றிய பயம் நிறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Page 28
46
எகிப்திய அறிஞர் அவ்தா (ரஹ்) எழுதிய 'மனித நீதியும், இறை நீதியும்" எனும் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்களை இங்கு அவதானிக்க முடிந்தது நான் செய்த டாக்கியமே!
மகாநாட்டு நிகழ்ச்சிகள் ஹோட்டல் மண்டபத்திலேயே நடைபெற்றன.
பாரசீகம், அரபு, உர்து, ஆங்கிலம் பிரஞ்சு, ஜேர்மனி, துருக்கிய மொழிகளில் சமகால மொழிபெயர்ப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஒலிவாங்கிகள் மேசைகளில் இருக்கும். ஒவ்வொரு சனலிலும் ஒவ்வொரு மொழி. ஆறாவது சனல் ஆங்கிலம்.
மகாநாட்டின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உரை இடம் பெறு முன்பே இந்த மொழிகளில் தந்து விடுவர். கட்டுரைகளை வாசிக்கவும்வினாக்களுக்காகவும்கலந்துரையாடல்களுக்காகவும் போதியளவு கால அவகாசம் தரப்பட்டிருந்தது.
உலகின் தலைசிறந்த உலமாக்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம் பெற்றன.

47
அரசியல், அறவாழ்வு பொருளாதாரம், புறக்கிருத்தியங்கள், அந்நியத் தொடர்புகள், இயக்க நடவடிக்கைகள், இலக்கியம், இதிகாசம் தற்காப்பு யுத்தம், சண்டாளரின் சதிகள்
இத்தியாதி.இத்தியாதி.
தலைப்புகளில் எண்ணற்ற உரைகள்.
எல்லாவற்றிலும் ஓர் இஸ்லாமியப் பார்வை தெரிந்தது. ஓர் இஸ்லாமியத் தீர்வு நிலை தொனித்தது.
1400 வருடங்கள் பழமையானதென ஒதுக்கி வைக்கப்பட்ட அந்தப் புனித மறை
இன்றுஅடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கீதமாக ஒலிப்பதனை காதாரக் கேட்டேன்.
அந்தப் புனித மறை
இன்றுமக்களின் வாழ்வுப் பாதையின் அனைத்து சந்திகளிலும் பரிணமிக்கும் காட்சியினைக் கண்ணாரக் கண்டேன்.
அந்தப் புனித மறை
இன்று
எங்கும், எதிலும், எவர்க்கும் ஓர் அளவு கோலாக உபயோகப் படுவதினை உளமார உணர்ந்தேன்.
இவையாவும் அந்தப் புனித மண்ணில் சாத்தியமாக காரணம் தான் என்ன? சீரிய தலைமைசிறப்பான மக்களின் தியாகம்.

Page 29
48
தலைமையும், தியாகமுமின்றிவழிகாட்டலும், அர்ப்பணமுமின்றி
விமோசனம் பிறக்க மாட்டா.
இந்த மூன்று நாட்களுமே முப்பது வருட ஞானத்தை இந்தச் சின்னவனுக்கு வழங்கின.
அதன் சிறப்பு, இதன் சிறப்பு என்று எதையாவது படித்து விட்டு மார்க்கம் போதிக்கும் ஆலிம்களும்அந்நிய மதத்தவரைத் தாக்குவதே புண்ணிய ஜிஹாத் என்னும் போலி முஜாஹித்களும்அல்குர்ஆன், ஹதீஸ் என்று மேடைதோறும் பேசி வாக்குப் பெற்று மக்களை காட்டிக் கொடுத்து விட்டு ஒடியொழியும் தலைவர்களும் மலிந்து விட்ட காலமிது. இன்று இந்த மகாநாட்டைப் பற்றியும் இந்த மகாநாட்டை நடத்திய நாட்டைப் பற்றியும் சற்று சிந்திக்கின்றேன்.
மானுட விடுதலை தேடி உலகின் பாதிக்கு காபனீரொட்சைட்டை வழங்கிய கிரம்ளின் மாளிகையையும்,

49
மறுபாதிக்கு ஐதரசன் சல்பைட்டை வழங்கிய வெள்ளை மாளிகையையும் தங்கள் கோயில்களாகக் கொள்ளும் கவியரசுகளையும், புத்திஜீவிகளையும் எண்ணி வியக்கின்றேன்.
யதார்த்தம் என்று இவர்கள் எதைத்தான் கருதுகின்றனரோ? uLunT60Tg6]0öuLu6öT uJmTug(3LD!
"இஸம்"களைக் கற்றவர்கள் சற்று இஸ்லாத்தைப் படித்தால் நன்று.
எங்கிருந்து, எப்படி ஆரம்பிப்பது என்பதறியாமல் தீர்வுகள் கூறும் இவர்கள் இஸ்லாமியப் புரட்சியின் உள்ளார்த்தத்தைப் புரிய வேண்டும்.
என் அளவிற்கு இம் மகாநாடு மிக அதிகமானது.
ஆனாலும் அங்கு நான் அதிகம் படித்துக் கொண்டேன் எதுவுமே நான் படிக்கவில்லை என்பதை.
உலகின் சிவப்பாயிருந்த பாதி இன்று நிறம் மங்கிப் போவதன் காரணமே

Page 30
S()
இந்த எழுச்சிதான் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்வார்களாக
நாளை பெப்ரவரி முதலாம் திகதி, இஸ்லாமியப் புரட்சியின் ஸ்தாபகரும், இஸ்லாமியக் குடியரசின் தலைவருமான இமாம் கொமய்னி அவர்கள் பதினைந்து வருட அஞ்ஞா வாசத்தின் பின் நாடு திரும்பிய தினம்
பத்து உதய தினங்கள் தொடரின் முதலாவது உதய தினம்,
நாள்ைஇமாமவர்கள் பாரிஸிலிருந்து தெஹ்ரான் திரும்பி நேராக ஒரு மயானத்திற்குச் சென்று உரையாற்றிய தினம். அந்த மயானம்வீர ஷாஹதாக்களின் வசிப்பிடம். பெஹஸ்தி-அஸ்-ஸஹ்ரா,
எப்போது விடியும் இந்த இரவு. எப்போது தோன்றும் அந்த உதயம்.

விடியாத இரவு விடிந்தே விட்டது. தோன்றாத அந்த உதயம் வந்தே விட்டது.
"சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. நிச்சயம் அசத்தியம் அழியக் கூடியதே' இது அல்லாஹ்வின் வாக்கு.
இதுவே இந்தத் தினத்தின் பிரதான சுலோகம்.
பெப்ரவரி முதலாம் திகதி. 1979ம் ஆண்டின் இதே தினம் ஷாவின் பொம்மைப் பிரதமர் "பக்தியாரினால் மூடப்பட்டிருந்த
தெஹ்ரான் விமான நிலையத்தில் இமாமைச் சுமந்து வரும் எயர் பிரான்ஸ் விமானம் இறங்குகின்றது.
தெஹ்ரான் வீதியெங்கும்கட்டிடக் கூரைகளில் வாகன முகடுகளில், மரங்களில் எங்கும், எதிலும். மக்கள் வெள்ளம்,
இது பொங்கி வருகின்ற புதுவெள்ளம் தங்கு தடையின்றி இது செல்லும்.
மக்களின் ஆரவாரம். மகிழ்ச்சிக் களியாட்டம். ஆத்மீகத்தையும், அரசியலையும்

Page 31
5
2
ஒன்றாக்கி. மக்கள் விடுதலை பெற்றுத் தந்த அந்த மகத்தான தலைவன் M தன் மக்களைச் சந்திக்க வந்து சேர்ந்த திருநாள்-பெருநாள். அந்த வீரமைந்தனிடம் விசேடமான தன்மைகள் இருந்தன. அதனாலோ என்னவோ. தன்னை நம்பிய மக்களுக்கான உரையினை ஆற்றவென, தன்னைப் பின்பற்றியதனால் கொடுங்கோலரினால் கொல்லப்பட்டு வீரமரணம் எய்தியோர் அடக்கப்பட்டிருக்கும் இந்த இடத்தைத் தெரிவு செய்தார். பெஹஸ்தி-அஸ்-ஸஹ்ரா
இதோ நாங்கள் காலையிலேயே பெஹஸ்தி-அஸ்- ஸஹ்ராவினை சென்றடைந்து விட்டோம்.
பெஹஸ்தி-அஸ்-ஸஹ்ரா. இது அடக்கத் தலமா அன்றி புரட்சியின் பிறப்பிடமா? இது உயிர்த்தியாகிகளின் புதைகுழியா அன்றி அடக்கு முறையாளரின்
புதைகுழியா?
இங்கு என்ன பிணங்களைப் புதைக்கின்றார்களா அன்றி ஜீவன்களை உயிர்ப்பிக்கின்றார்களா?

53
உண்மையில் உயிர்த் தியாகிகள் இங்கே உயிரோடே உள்ளனர். அலி ரேஸாக்கள் ஆயிரமாயிரம் பேரை அங்கு நான் கண்டேன். சொந்தம் கொண்டேன்.
ஹெலிகாப்டரிலிருந்து எம்மீது மலர் தூவினர். என்ன மலர்? எங்கோ கண்டமாதிரி. ஆம். . ஈரானியப் போராளிகளின் துப்பாக்கி முனைகளில். கவச வாகனங்களில். படங்களில் பார்க்கையில் தெரியுமே! அதே பூ. புரட்சிப் பூ.
தியாகப் பூ.
இமாமவர்கள் அமர்ந்து உரையாற்றிய இடத்தில் ஓர் மேடை அமைத்துள்ளனர். அதில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உலமாக்கள் புரட்சி பற்றி
விளக்கினர்.
புரட்சிக் காவலர்கள்
வீர கீதங்களைப் பாடினர்.
மயான அமைதி. மயானக் கிலி என்றெல்லாம் தமிழ்வாணனும், நாஞ்சில் பி.டி. சாமியும்

Page 32
என்னைப் பயமுறுத்திய காலம் இன்றோடு போய் விட்டது. இது கல்லறை அல்ல. புரட்சியின் கருவறை. இது சுடுகாடு அல்ல. விடுதலையின் வெளிச்ச வீடு,
இன்று அந்த இடத்தினை
பிடிக்கின்றேன். இதோ படப் பிரதி.
அன்று அது தாரகைகள் மட்டும் மின்னிய வானம். இன்று அது
முழு நிலவினையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஆம். இன்று அங்கு ` இமாமவர்களும் துயில் கொள்கின்றார்கள் .
அந்த இமாம் மறைந்த அன்று எத்தனையோ சோக கீதங்கள் ஈரானில் ஒலித்ததாம், அத்தனையிலிருந்தும் என் மனதில் பதிந்த ஒரு பாடல், பெஹஸ்தி-அஸ்-ஸஹ்ரா வாசிகள் பாடுகின்றனர்:
அன்று
எங்களிடம் ஜனாதிபதி պ6ծT(6). எங்களிடம் பிரதமர் உண்டு.

5
s
எங்களிடம் மந்திரிகள் உண்டு. எங்களிடம் மஜ்லிஸ் பிரதிநிதிகள் உண்டு. எங்களிடம் உயர்நீதிபதி உண்டு. எங்களிடம் உலமாக்கள் உண்டு. எங்களிடம் அறிஞர்கள் உண்டு. எங்களிடம் போராளிகள் உண்டு. எங்களிடம் சிற்பிகள் உண்டு. எங்களிடம் விவசாயிகள் உண்டு. எங்களிடம் அனைவருமே உண்டு. எங்களிடம் இமாம் மட்டும் இல்லை.
இன்றுஎங்களிடம் இமாம் கூட உண்டு. நாங்கள் இன்று முழுமை பெற்றுக் கொண்டோம்.
ஒவ்வொரு கப்ரிலும் அங்கு அடக்கப்பட்டவர் பற்றிய விபரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான வற்றில் அடக்கப்பட்டவரின் சாதாரண படமொன்றும் அவரின் ஜனாஸாவின் படமொன்றும் மாட்டப் பட்டுள்ளன.
இரண்டையும் பார்க்கையில்இந்தப் பாவமற்ற முகத்திற்கு இப்படி யொரு அகோர முடிவா என்று எண்ணத் தோன்றுகின்றது.
அழகான போராளியின் முகம். அகோரமாகிய அவர் ஜனாஸாவின் முகம். இதற்குக் காரணமான ஆட்சியாளர் மீது-யுத்தம் தொடுத்த சண்டாளர் மீது

Page 33
56
கோபம் வருகின்றது. இவர்கள் ஹிட்லரை விடவும் கொடியவர்கள்.
ஒவ்வொரு கப்ரினடியிலும் உறவினர்கள் நின்று கொண்டு அல் குர்ஆன் ஒதுகின்றனர். பிரார்த்தனை புரிகின்றனர். எங்களுக்கு அவர்கள் இனிப்புகள் தந்தனர். இறைஞ்சுமாறு கோரினர்.
இதோ
ஒரு கப்ரினடியில் ஓர் இளம்பெண் அழுது கொண்டிருந்தார்கள் பக்கத்தில் ஒரு சிறுவன். தம்பியாக இருக்க வேண்டும். முக்கால் வாசி முகம் மூடிய பர்தாவினூடே அழுது சிவந்த கண்கள். என்னைக் கண்டதும் அவர் என்னிடம் ஏதோ கூறுகின்றார். பாஷை புரியாமல் நான் விழிக்கின்றேன். நான் வழிகாட்டியை கண்களால் துளாவித் தேடுகின்றேன். அந்தப் பெண் ஒசை பாதி சைகை பாதியாய் ஏதேதோ பேசுகின்றார். கப்ரில் இருந்த போட்டோவைக் காட்டுகின்றார். சைகை மொழி சற்றுப் புரிய ஆரம்பிக்கின்றது. உலகப் பொது மொழியல்லவா அது. இன்னொரு கப்ரிற்கு அழைத்துச் செல்கின்றார். போட்டோவைக் காட்டுகின்றார்.

57
சைகை மொழி
எனக்கு உணர்த்தியது இவை:
"அவர்கள் இருவரும் அந்தப் பெண்ணின் மூத்த சகோதரர்கள். ஒருவர் பின்னொருவராக யுத்தத்தில் உயிர்த்தியாகம் புரிந்து விட்டனர்.
இந்தச் சின்னவன் தவிர வேறு சோதரர் இல்லை. தன்னை அனுமதித்தால் யுத்தமுனைக்குச் சென்று எதிரிகளைப் பழிவாங்குவேன். இமாமின் கட்டளைக்கு கீழ்ப்படிவேன். இவற்றை உங்கள் மக்களிற்குக் கூறுங்கள். எங்களுக்காகப் பிரார்த்தியுங்கள்."
அந்தச் சோதரிக்கான எனது ஓசை பாதி, சைகை பாதிப் பதில்:
"நான் சிறீலங்காவைச் சார்ந்தவன். உங்கள் வீரத்தைக் கண்டு மெச்சுகின்றேன். உங்கள் தியாகத்தை மதிக்கின்றேன். அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவான்."
எனது மொழி அவருக்கு விளங்கியதோ நானறியேன்.
ஆனால்அவர் முகத்தில் இப்போது அழுகையில்லை. புன்னகைத்தார்.
நாங்கள் திரும்பிச் செல்ல வேண்டிய நேரம், நான் விடைபெற்று பஸ்ஸை நோக்கி நடந்தேன். அந்தச் சோதரியும், சிறிய சோதரனும் என்னைத் தொடர்ந்து வந்தனர்.

Page 34
5
8
இதோ பஸ். நான் ஏறிக் கொள்கின்றேன். பஸ் நகர்கின்றது. நான் அந்தச் சோதரிக்கு கையசைத்து விடைபெறுகின்றேன்.
அவர்கள் இருவரும் கையசைத்து விடைதகுகின்றனர். என் கண்களிலிருந்து சிறிது. சிறிதாய் அவர்கள் மறைந்து விட்டனர். என் மனத்தினில் இன்றும் வாழ்கின்றனர்.
O O O
கவிஞர் வைரமுத்துவின் கூற்றுப்படி ரஷ்யாவின் மயானங்கள் பெக்டரிகள் போன்றன. ரஷ்யாவின் மயானப் பெக்டரி எங்கே? ஈரானின் மயானப் பெக்டரி எங்கே!
அந்தப் பெக்டரி மனிதரைச் சுட்டெரித்து சுவடழிக்கும் இடம். இதுவும் ஒரு பெக்டரிதான்.
மனிதரைப் புதைத்து
ஜீவனை புதுமையுடன் உற்பத்தி செய்யும் பெக்டரி.
O O. O.
ரஷ்ய மயானம் பற்றி மாகவி வைரமுத்து : "கிடத்தப்பட்ட பிணம் பூமிக்கு அடியே போய் விடும்
சற்று நேரத்தில் - வேறொரு வழியாக

59
அவ்வளவுதான். அடுத்த பிணம் அழைக்கப்படும்.
அமெரிக்கக் கோழிப் பண்ணைகளும் இப்படித்தானாம். படித்துள்ளேன். நோயுற்ற கோழிகள் ஓர் சிறிய அறையுள் தள்ளப்படும்.
பொத்தானை அமுக்குவர் கீழே கோழி வீழ்ந்து மின்சார நெருப்பில் தீய்ந்து போகும்.
எல்லாமே இயந்திர மயம். உயிரினங்களை மதிப்பதில் கம்யூனிசமும், முதலாளித்துவமும் தோளோடு தோள் சேர்கின்றன. என்னே ஒற்றுமை.
அமெரிக்கா வியட்நாமை ஆக்கிரமித்தால் ரஷ்யா பிழை என்கும். ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தால் அமெரிக்கா பிழை என்கும்.
ஆக்கிரமிப்பில் ஒற்றுமை
இன்று அடிபடுவதிலும் ஒற்றுமைதான். ஈரானை யாராவது ஆக்கிரமித்தால் இருவருமே சரியென்பர்.

Page 35
6) ஆளாள் தெரியாமல் உதவுவர்.
இதுவே நிதர்ஸனம்.
இதுவே சரித்திரம்.


Page 36
62
பாட போதனைகள் நடக்கின்றன. அல்குர்ஆன் விளக்கவுரைகள் இடம் பெறுகின்றன.
தையல் பயிற்சி
ஆடை தயாரிப்புமரவேலை, மேசன் பயிற்சிமோட்டார் மெக்கானிஸம், வயரிங் பயிற்சிஅடேயப்பா!
அங்கு ஒரு ப்ெரிய மண்டபம் உள்ளது. பெரிய தியேட்டர் போல். மண்டபத்தில் சில நிகழ்ச்சிகள் நடந்தன. சிறைக் கைதிகள்-அல்ல - மாணவர்கள் சில நிகழ்ச்சிகள் நடாத்தினர்.
சிறை சூப்பிரண்டு சில விபரங்களைக் குறித்து உரையாற்றினார்.
அப்புறம் -
நாங்கள் கைதிகளுடன் கட்டுப்பாடுகள் இன்றி அளவளாவினோம். அங்கு ஏறத்தாழ ஆயிரம் பேராவது நாம் கண்டிருப்போம். எமது நாட்டுக் கைதிகளின் அரைக் காற் சட்டையும் பனியனும் ஞாபகத்திற்கு வந்தன. இவர்களோ சாதாரணமாகவே உடை உடுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் கைதிகளின் உறவினர்கள் உள்ளே வர அனுமதிக்கப்படுகின்றனர். உணவு சமைக்கவும், கொண்டு வரும் உணவை உண்ணவும் அனுமதி கிடைக்கிறதாம்.

63
இவர்களின் சந்திப்புக் கென்று விசேட அறைகள் உள்ளன. குடும்பமே நடத்துகின்றனர்.
பல கைதிகளைச் சந்தித்தோம். மனதில் நிற்கும் சிலரில் ஒருவர் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளட்டுமா?
அலி அஸ்கர்.
30 வயது. திருமணமானவர். ஒரு குழந்தைக்குத் தந்தையிவர்.
முஜாஹிதீன் கல்க் ஒர்கனைசேஷன் (M. K. O) எனும் கம்யூனிச இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்.
முஜாஹிதீன் என்றால் போராளி எனப் பொருள்படும். முஜாஹிதீன் கல்க் ஒர்கனைசேசனை ஈரானிய மக்கள் முனாபிகின் கல்க் ஒர்கனைசேசன் என்றே அழைக்கின்றனர். முனாபிகின் என்றால் நயவஞ்சகன் எனப்படும்.
இவர்கள் ரஷ்ய சார்புடையோர். இவர்களை ரஷ்யக் கூலிகள் என்றே பெரும்பாலான மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அலி அஸ்கர் ஒரு தீவிரவாதியாய் இருந்தவர். புரட்சிக்குப் பின்னரும் பல குண்டு வெடிப்புகளை தெஹ்ரானில் நடத்தியவர். அமெரிக்காவில் படித்த என்ஜினியர்.

Page 37
64
தான் கைது செய்யப்பட்டமை பற்றி அவர் குறிப்பிடுகையில் அது அல்லாஹ் என்மீது கொண்ட கருணையினால் நிகழ்ந்ததாகும் என்றார்.
"தான் கைது செய்யப்பட்டு இங்கு கொண்டு வரப்படாவிடின் எனக்கு உண்மை இஸ்லாம் விளங்க வாய்ப்பிருக்காது' என்றார். தான் செய்த குற்றங்களுக்காக மனம் வருந்துவதாகக் குறிப்பிட்ட அவர் தனக்காக பிரார்த்திக்குமாறும் வேண்டினார்.
அவர் நடிக்கிறாரா என்று பார்த்தேன். அவர் அழுது புலம்புவது என் எண்ணத்தை மாற்றியது. நடிப்பிற்கும், நிசத்திற்கும் என் அறிவுக்கெட்டிய வகையில் அவரிடம் வேறுபாடு தெரிந்தது.
"தான் விடுதலை செய்யப்பட்டால் நேரே யுத்தமுனை சென்று கம்யூனிஸ - சோஸலிஷப் படையினருடன் போரிட்டு உயிர் துறப்பேன்’ என்று அவர் கூறிய அந்தக் காட்சி இன்றும் என்மனதில் திரைப்படமாய் ஓடுகின்றது. "கம்யூனிசம் ஒரு பொய் சித்தாந்தம். 93. Of Ostbou. அதனால் மக்களுக்கு இலாபம் இருப்பதாய்த் தோன்றினும் கூட உண்மையில் ஒரு இலாபமும் கிடையாது. இம்மையிலோ மறுமையிலோ

65
ஈடேற்றம் பெற கம்யூனிஸம்
வழிகாட்டாது. கம்யூனிஸம் இன்று செத்துக் கொண்டிருக்கின்றது." என்றார் அவர்.
அன்று அவர் கூறியவற்றை இன்று மீட்டிப் பார்க்கின்றேன். இன்றைய கம்யூனிஸ உலகில் இடம்பெறுவனவற்றை ஒப்பீடு செய்கின்றேன்.
“கம்யூனிஸம் செத்துக் கொண்டிருக்கின்றது” ஆனால் -
நடப்பவற்றை நோக்கின் அது செத்துவிட்டதாகவே புரிகின்றது.
இன்று - போலந்தில், ருமேனியாவில் கிழக்கு ஜெர்மனியில் நடப்பவற்றை சற்று திரும்பிப் பார்க்கின்றேன். இங்கெல்லாம் மட்டுமா? செங்கோட்டைக்குள்ளேயே குத்து வெட்டு. லிதுவேனியா சுதந்திரப் பிரகடனம். அஸர்பைஜானியப் போராட்டம்.
கம்யூனிஸம் செத்தே விட்டது. கம்யூனிஸம் இன்று முதலாளித்துவத்தை நோக்கி வீறுநடை போடுகின்றது.
ஏன்.?

Page 38
66
கம்யூனிஸமும், முதலாளித்துவமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை ஒத்தவையே! ஒரே குட்டையில் ஊறிய
இரு மட்டைகள்.
உலகாயதமே அவற்றின் *உன்னத” குறிக்கோள். பொருளாதாரம் மட்டுமே அவற்றின் "பெருமை மிக்க' இலக்கு. ஹாட்டின் கிராமத்தில் நின்று மாகவி வைரமுத்து அணு ஆயுதங்களிற் கெதிராக இப்படி எழுதினாராம் !
"சமாதானப் பறவையே
நட்சத்திரங்களைத் துளைக்கும் அணு ஆயுதக் கதிர்கள்
තු_6)T
ஈரச் சிறகில் பட்டால் இறந்து விடுகின்றன. சமாதானப் பறவையே!”
எந்தச் சமாதானப் பறவையின் ஈரச் சிறகென்று அவர் குறிப்பிடவில்லை.
ஆப்கானிஸ்தானில் பின்வாங்கிய ரஷ்யப் பூதம் முட்டி மோதிய அந்த ஈரச் சிறகா..?
அல்லது -
பயணக் கைதிகளை மீட்க வென்று வந்து ஈரானிய

67
தபாஸ் பாலைவனத்தில்
முட்டி மோதாமலே சிதைந்து போன
அமெரிக்கா கண்ட அந்த ஈரச் சிறகா..?
எது..?
இன்றுள்ள ஈரச் சிறகு இஸ்லாமன்றி வேறெதுவோ?
இன்னும் அவர்
இப்படியும் கூறுகின்றார்.
"அணுகுண்டு முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருக்கும் கழுகுகளிடமிருந்து இந்த உலக உருண்டையை உடைந்து விடாமல் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகக் கவிதை புனைகிறோம்"
என்று ரஷ்ய எழுத்தாளர் சொன்னதாகச் சொல்கின்றார்.
அணுகுண்டு முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருக்கும் கழுகுகள் அமெரிக்காவையும், ரஷ்யாவையும் விட்டால் எவை எவை?
அமெரிக்க முகாமில் பிரிட்டன், பிரான்ஸ். ரஷ்யச் சிவப்பில் சீனா.
யார் எதைச் சொல்வது என்ற விவஸ்தையே கெட்டு விட்டது இவ்வுலகில், நான் சிரிக்கின்றேன் .
நீங்கள்.
நல்ல ஜோக்,

Page 39
68
இன்னுமோர் இடத்தில் மாகவிஞர் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட இடத்தைப் பற்றி கூறுகையில்
“உலக உருண்டையின் கணிசமான பகுதி இன்று சிவந்திருப்பதற்குக் காரணமான அந்தச் சின்ன இடம் என்னைச் சிலிர்க்க வைத்தது' என்கின்றார்.
சிவந்த அந்தக் கணிசமான பகுதி இன்று வெளிறிப் போவதின் காரணத்தை கவிஞர் அறிவாரோ? ஏனைய பகுதிகளைத் தான் விடுங்கள். கம்யூனிஸம் தோன்றிய ரஷ்யாவின் அஸர்பைஜான் வெளிறிப்போன காரணத்தை யாவது.
அதற்கொரு பயணம் போய். அதற்கொரு புத்தகம் போட்டால் கூறுவாராக்கும் மனதுள் சிரிக்கின்றேன்.
இந்த இடத்தில் இமாம் கொமய்னி அவர்கள் ரஷ்யத் தலைவர் கோர்பசேவ் அவர்கட்கு அனுப்பிய கடிதத்தினை ஞாபகம் செய்கின்றேன்.
த.வத் பணியில் மார்க்கத் தலைவரின் பணி எப்படியானது? இதனை விளக்குவதாய் அமைகின்றது இமாமவர்களின் கடிதம்.
இதோ - அக்கடிதத்தின் முழு வடிவம்.

அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால். சோவியத் சோஷலிஸக் குடியரசுகளின் ஒன்றிய ஆட்சிமன்றத் தலைவர் மாண்புமிகு திரு. கொர்பச்சேவ் அவர்களுக்கு, தாங்களும் சோவியத் நாட்டு மக்களும் நலமுற வாழ்த்துகிறேன்.
நீங்கள் பதவி ஏற்றது முதற்கொண்டு, பொதுவாக உலக அரசியல் நிகழ்வுகளையும், குறிப்பாக சோவியத் யூனியன் சம்பந்தப்பட்ட விடயங்களையும் பரிசீலனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டி ருக்கின்றீர்கள். அவ்வழியில் நீங்கள் மறுமதிப்பீடு, தர்க்கம், மாறுதல் என்பவற்றைக் கொண்ட புதியதோர் யுகத்துள் உங்களை ஆட்படுத்தி யிருப்பதாகக் கருதப்படுகின்றது. மேலும், உலக யதார்த்தங்களைக் கையாள்வதில் நீங்கள் காட்டும் துணிவும் துடிப்பும், உலகம் முழுவதையும் ஆட்கொண்டிருக்கும் நலன்களின் சமநிலை"யைக் குலைத்துவிடக் கூடுமாதலினால், பின்குறிப்பிடப்படும் விடயங்களின் பால் உங்கள் கவனத்தைக் கோருவது அவசியமெனக் காண்கிறேன்.
உங்களுடைய புதிய தீர்மானங்களும் போக்குகளும் உங்களுடைய கட்சிக்குள் நிலவும் சச்சரவுகளுக்கும் சோவியத் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தாலும்கூட, உலகின் புரட்சிகர இளைஞர்களை நீண்ட பல ஆண்டுகளாக இரும்புத் திரைக்குள் சிறைப்படுத்தி வைத்திருந்த சிந்தனைப்போக்கொன்றை மீளாய்வு செய்வதில் நீங்கள் கொண்டுள்ள துணிவு மெச்சத்தக்கதாகும்.
ஆனால், நீங்கள் உங்களுடையநோக்கத்தின் வரையறைக்கு அப்பாலும் செல்ல எண்ணுகின்றீர்களேயாயின் அதில் நீங்கள் வெற்றி யடைவதற்கு நிச்சயமாக உதவக்கூடிய முதன்மையான விடயம்

Page 40
70
ஒன்றுண்டு. அதுதான் நாத்திகத்தையும் அவமார்க்கத்தையும் வளர்ப்பதில் உங்களுக்கு முன்னிருந்தவர்கள் கொண்டிருந்த கொள்கை களை மீளாய்வு செய்தலாகும். சந்தேகமின்றி, சோவியத் மக்களை மிக நாசகரமான முறையில் தாக்கியது அந்தக் கொள்கைகள்தாம். உலகப் பிரச்சினைகளை யதார்த்தப் பூர்வமாக அணுகுவதற்குரிய மார்க்கம் இதுவொன்றே என்பதை மனதிற் கொள்ளுங்கள்.
முன்னைய கம்யூனிசத் தலைவர்கள் சோவியத் யூனியனின் பொருளாதாரம் தொடர்பாகக் கடைப்பிடித்த தவறான கொள்கைகளும் நடைமுறைகளும் கூட மேற்குலகு கூடிய கவர்ச்சியுடையதாகத் தோன்றுவதற்கு உதவியிருக்கலாம். எனினும், உண்மை அதுவல்ல. சோஷலிசத்தினதும், கம்யூனிசத்தினதும். பொருளாதாரச் சிக்கல்களை, மேற்கத்திய முதலாளித்துவத்தை நாடுவதன்மூலம் துடைத்தெறிய நீங்கள் முற்பட்டால், சோவியத் சமுதாயத்தின் துன்பங்களை உங்களால் தணிக்க முடியாமற் போவது மட்டுமின்றி, நீங்கள் செய்யும் தவறுகளைத் திருத்தவேண்டிய நிலைக்கு மற்றவர்களை ஆளாக்கியும் விடுவீர்கள். ஏனெனில், அதன் பொருளாதார, சமூக அம்சங்களைப் பொறுத்தவரையில், மார்க்ஸ்வாதம் ஸ்தம்பித நிலையை அடைந்திருக்கின்றதென்றால், மேற்கத்தியமும் கூட இதே பிரச்சினைகளிலும் இன்னும் பிற பிரச்சினைகளிலும் சிக்கித் தவிக்கின்றது. ஆனால், அவற்றின் தோற்றம்தான் வேறுபடுகின்றது. மாண்புமிகு திரு. கொர்பச்சேவ் அவர்களே,
நாம் உண்மைக்கு அடிபணிய வேண்டும். உங்கள் நாட்டின் அடிப்படையான பிரச்சினை, சொத்துரிமை, பொருளாதாரம் அல்லது சுதந்திரம் போன்ற விடயங்களிலிருந்து தோன்றுவதன்று. இறைவன் மீது உண்மையான விசுவாசம் இல்லாமையினால்தான் உண்மையிலேயே உங்கள் பிரச்சினை உருவாகின்றது. இதே பிரச்சினைதான் மேற்குலகையும் சீரழிவிற்கும் தேக்கநிலைக்கும் இழுத்துச் சென்றுள்ளது. ஜீவனதும் சிருஷ்டியினதும் உண்மை மூலமாகிய இறைவனுக்கெதிரான விடாப்பிடியான, வீணான போராட்டத்தினாலேயே உங்களுடைய பெரும் பிரச்சினை உருவாகின்றது.

71
மாண்புமிகு கொர்பச்சேவ் அவர்களே,
இதன் பிறகு எவரும் கம்யூனிசத்தைப் பார்க்கவேண்டுமாகில், அதனை, அரசியல் வரலாற்று அரும்பொருட்காட்சிசாலைகளில் தான் தேடவேண்டும் என்பது எல்லோருக்கும் தெட்டத் தெளிவாகிவிட்டது. ஏனெனில், மார்க்ஸ்வாதத்தினால் மனிதப் பிறவிகளின் தேவைகள் எதனையுமே பூர்த்திசெய்ய முடியாது. அதுவோர் உலகாயத சிந்தனைப் போக்காகும். ஆன்மீகத்தில் விசுவாசமற்ற தன்மையினால் விளையும் பிரச்சினையிலிருந்து மனித இனத்தைக் காப்பாற்ற உலகாயத பலத்தினால் முடியாது. ஆன்மீகத்தில் நம்பிக்கையின்மைதான், கிழக்கத்திய, மேற்கத்திய மனித சமூகங்களிரண்டிலும் கோரத் தாண்டவமாடும் மிகப்பெரும் துன்பமாகும்.
ஒருசில அம்சங்களில் நீங்கள் மார்க்ஸிசத்தை உண்மையாகவே கைவிடாதிருக்கக் கூடும். எதிர்காலத்தில் எப்போதாவது நீங்கள் மார்க்ஸிசத்தின்மீதான உங்களுடைய மனப்பூர்வமான விசுவாசத்தைப் பகிரங்கமாகவே வெளிப்படுத்தவும் கூடும். எனினும், உண்மையிலேயே நிலைமை வேறுபட்டது என்பதை நீங்களே நன்கு அறிந்திருப்பீர்கள். கம்யூனிசத்திற்கு முதல் அடியைக் கொடுத்தார் சீனத் தலைவர். நீங்களோ, இரண்டாவதும், வெளிப்படையாகவே கடைசியானதுமான அடியைக் கொடுத்துள்ளீர்கள். இன்று நாம் உலகில் பல மாதிரிகளிலான கம்யூனிசத்தைக் காண்கிறோம். மார்க்ஸிச இலட்சியவாதத்தின் இரும்புத்திரையை உடைத்தெறியும் அதே வேளை, மேற்கினதும், பெரிய ஷைத்தானினதும் வெஞ்சிறையில் அகப்பட்டுக் கொள்ள வேண்டாம் என, இதயசுத்தியுடன் நான் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். உலக கம்யூனிசத்தின் எழுபது வருடகாலப் புரட்டலின் எச்சசொச்சங்களை வரலாற்றினதும் உங்கள் தாய்நாட்டினதும் அத்தியாயங்களிலிருந்து துடைத்தெறியும் பெருமையை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். பொதுவாக உங்களுடைய நேச அரசுகள் எனக் கருதப்படும் அரசாங்கங்கள் பல இருக்கின்றன. அவை தமது மக்களினதும் தாய்நாட்டினதும் நலன்களைப் பாதுகாக்க அவாக் கொண்டுள்ளன.

Page 41
72
அவையும் கூட, தத்தமது நாடுகளின் நிலத்துக் கடியிலும் நிலத்துக்கு மேலும் உள்ள வளங்கள் சுரண்டப்படுவதனையும், கம்யூனிசத்தின் நாணயத்தையும், நியாயப்படுத்துமாறு தம்மையோ அல்லது தத்தமது நாடுகளையோ வழிப்படுத்த முடியாத நிலையில் இன்று உள்ளன. கம்யூனிசத்தின் சாவுக்கான பறையொலி அதன் முன்னோடிகளின் செவிகளில் ஏற்கெனவே விழுந்துகொண்டிருக்கின்றது.
மாண்புமிகு கொர்பச்சேவ் அவர்களே,
அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன் -என்று தொடங்கும் தொழுகைக்கான அழைப்பும், இறைதூதர்களிலெல்லாம் இறுதித்தூதர் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்துக்கு சாட்சி பகரும் வார்த்தையும் சில சோவியத் குடியரசுகளிலுள்ள மஸ்ஜித்களின் மினாரா(கோபுரங்களிலிருந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலித்ததைக் கேட்டு முஹம்மத் (ஸல்) அவர்களின் உண்மை இஸ்லாத்தைப் பின்பற்றுவோரின் கண்களில் ஆனந்தக் கண்ணிர் துளிர்த்தது. பொருளாயத, ஆன்மீகக் கருத்துக்களை மீண்டுமொருமுறை நீங்கள் மீள்பரிசீலனை செய்வீர்கள் என்பதற்காக, இந்த விடயத்தை உங்களுக்குக் குறிப்பிட்டுக் கூறுவது அவசியமென நான் கருதினேன்.
உலகாயதவாதிகள் புலனையே அத்தாட்சி அளவுகோலாகக் கொள்கின்றனர். புலனுக்கு அப்பாற்பட்ட எதுவும் அறிவுக்குப் புறம்பானது என்றும் கருதுகின்றனர். அகப்பொருள், சடத்துவ ஜீவனத்துக்குச் சமமானது என்பதும் அவர்களுடைய கருத்தாகும். எனவே, சடத்துவமற்ற எதுவும் ஜீவனம் அற்றது என அவர்களால் கருதப்படுகின்றது. இயல்பாகவே, கனதிமிக்க வல்ல இறைவன், தெய்வீக வெளிப்பாடு, தூதுத்துவப் பணி, இறுதிநாள் யாவுமே முழுமுற்றாக மூடநம்பிக்கைகள் என அவர்கள் துணிகின்றனர். அறிவு என்பது உணரப்பட முடியாததொன்றாயினும், அறிவு என்ற வரையறைக்கு உட்பட்ட வகையில், அது புலனையும் உள்ளடக்கியதாகும் என்பதே தெய்வீக உலக நோக்கில் அறிவைப்பற்றிய அடிப்படைக் கருத்தாகும்.

73
உலகாயத நோக்குகளின் அடிப்படைகளில் பிழைகாணும் குர்ஆன், 'இறைவன் என்றொருவன் இல்லை, அப்படியிருந்தால் அவன் கண்ணுக்குப் புலனாவான்' என்ற கருத்துடையோரையும் பின்வருமாறு விமர்சிக்கின்றது :
". நாங்கள் அல்லாஹ்வைப் பிரத்தியட்சமாகக் காணும்வரையில் உம்மை நாம் விசுவாசிக்க மாட்டோம்.” (2:55)
எவருடைய பார்வையும் அவனை அடையாது; அவனோ யாவற்றையும் பார்க்கிறான். அவன் (எவரின் பார்வைக்கும் அகப்படாத) நுட்பமும் தெளிவும் ஆனவன்; (யாவரையும்) அறிந்தவன்.
(6:103)
உங்களுடைய கருத்தில் விவாதத்துக்குரிய வெறும் விடயங்கள் எனக் கொள்ளப்படும் தெய்வீக வெளிப்பாடு, தூதுத்துவப் பணி, இறுதிநாள் என்பவை சம்பந்தமாக குர்ஆன் முன்வைக்கும் தர்க்கங்களை இப்போதைக்கு விட்டுவிடுவோம். தத்துவஞானிகளின், குறிப்பாக இஸ்லாமிய தத்துவஞானிகளின் நுணுக்கங்களில் உங்களைச் சிக்கவைக்கவேண்டும் என்பது என்னுடைய நோக்கமன்று. அரசியல்வாதிகளும்கூட பயன் பெறக்கூடிய எளிய, பரிச்சயமான, இயற்கை உதாரணங்கள் சிலவற்றை உங்களுக்குத் தருவது போதுமானதாகும்.
சடப்பொருளும் சடமும், அவை எவையாயிருந்தாலும், அவற்றைப் பற்றிய அறிவு அவற்றுக்கில்லை என்பது தெட்டத் தெளிவான விடயம். ஒரு கற்சிலையொன்றின் அல்லது சடவுருவொன்றின் ஒருபக்கத்திற்கு அதன் மற்ற பக்கத்தைப் பற்றித் தெரியாது. இதே வேளை, மனிதனும் விலங்கும் தத்தமது சூழல்களைப் பற்றி நன்கு அறிந்தனவாயுள்ளன என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. தாம் எங்கிருக்கிறோம் என்பது அவற்றுக்குத் தெரியும். தம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது, உலகில் என்ன பரபரப்பு நிலவுகின்றது என்பன பற்றியெல்லாம் அவை கிரகிக்கின்றன. எனவே, சடத்துக்கு அப்பாற்பட்ட ஏதோவொன்று

Page 42
74
இருக்கின்றது. அது சடத்திலிருந்து தனியானது. அது மரணிப்பதில்லை. சடம் இறந்த பிறகும் அது ஜீவிக்கின்றது.
தனது இயல்பூக்கத்தின் தூண்டுதலுக்கு இசைவாக, மனிதன் பூரணத்துவத்தை அதன் முழுமையான வடிவில் அடைய ஆசைப்படுகின்றான். உலகில் சர்வசக்தனாக வேண்டுமென்ற ஆவல் மனிதனுக்கு உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அவன், பூரணத்துவமற்ற எந்த சக்தியிலும் அக்கறை கொள்வதில்லை. முழுப்பிரபஞ்சத்தின்மீதும் அவனுக்கு அதிகாரம் இருந்தாலும் கூட, இன்னொரு உலகம் உள்ளது என்று அவனுக்குக் கூறப்பட்டால், அவன் இயல்பாகவே, அதன்மீதும் தான் அதிகாரம் கொள்ளவேண்டும்; அதனைத் தன் கட்டுப்பாட்டுக்குட்படுத்த வேண்டும் என்று விரும்புகிறான்.
மனிதன், எவ்வளவுதான் கற்றவனாயிருந்தாலும், வேறு கலைகளைப் பற்றி கேள்வியுறும் போது, அவற்றினையும் கற்க வேண்டுமென்று இயல்பிலேயே ஆவல்கொள்கிறான். எனவே அவன் இயல்பாகவே சர்வசக்தியிலும் சர்வஞானத்திலும் அக்கறை காண்பிக்கிறான். இப்பண்புகள் இரண்டும் வல்ல இறைவனுக்குரியனவாகும். நாம் அனைவரும் அறிந்தோ அறியாமலோ அவன்பால் கவரப்பட்டவர்கள். அதைப்பற்றி நாம் அறியாதிருக்கக் கூடும். மனிதன் இறுதியாக ஏகத்தை அடைந்து அதில் ஒன்றித்துவிட வேணவா கொண்டவனாகின்றான். அடிப்படையில், நித்திய வாழ்வைப் பற்றி எந்தவொரு நபரிலும் இயல்பாகவே நிலவும் அதீத ஆர்வம், நித்திய உலகொன்றும், அமரத்துவமும் உண்டென்பதற்கும் அடையாளமாகும்.
இந்த விடயங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள நீங்கள் விரும்புவீர்களேயானால், மேற்கத்திய தத்துவஞானிகளின் நூல்களுக்குப் புறம்பாக, அபாராபி, அவிசென்னா (றஹ்) ஆகியோர் தத்துவஞானம் பற்றி எழுதிவைத்துள்ள நூல்களையும் உசாவுமாறு அறிஞர்களை நீங்கள் பணிக்கலாம். ஏனெனில், எந்த அறிவியலுக்கும் அடிப்படையாக அமைந்துள்ள காரண-காரிய விதி (Law of Causality) பகுத்தறிவோடு இசைந்ததேயன்றி, புலனுக்குரியதொன்றன்று என்பதை அந்த ஆய்வுகள் நிரூபிக்கும்.

75
எத்தகைய தர்க்கங்களுக்கும் அடிப்படையாகக் கொள்ளப்படும் பிரபஞ்ச 6siassir (Universal Terms) Lofgh Gung fiascir (Generai Laws) என்பவற்றை கிரகித்துக்கொள்வதும்கூட பகுத்தறிவோடி ணைந்ததேயன்றி புலனுக்கு எட்டுவதொன்றல்ல,
இது சம்பந்தமாக, அல்-சுஹ்ரவர்தி (றஹ்) அவர்களின் மெய்ஞ்ஞான gjëgjonuTijģguh (Philosophy of Illumination) Lubpólu 2.6örsorgs கிரந்தங்களையும் படிக்கலாம். சடப்பொருளும், சடப்பொருளினால் ஆன வஸ்துகள் அனைத்தும், புலன்கள் யாவற்றையும் கடந்த மெய்யொளியை நிச்சயமாக வேண்டிநிற்கின்றன. தனது மூலத்தைப் பற்றிய மனிதனின் அக அறிவானது நிச்சயமாக புலனுணர்வுக்கு அப்பாற்பட்டது என்ற உண்மையை அவர் திறம்பட எடுத்து விளக்கியுள்ளார்.
மெய்விளக்கக் கோட்பாட்டியல் (Transcendental Phility) துறையில் சத்ருல் முதஅல்லிஹின் (றஹ்) அவர்களுடைய கீர்த்திபெற்ற எழுத்தாக்கங்களைக் கற்குமாறும் உங்களுடைய அறிஞர்களை நீங்கள் கோரலாம். அறிவின் யதார்த்தமானது சடப்பொருளினின்றும் தனியானது; எத்தகைய எண்ணமும் சடப்பொருளிலிருந்து வேறுபடுத்தப்பட்டதாகையினால், அது சடத்துவ விதி (Laws of Matter)களின் ஆட்சிக்கு அப்பாற்பட்டது என்ற தெளிவை இதன்மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். நுட்பமான விபரங்களைக் கூறி நான் உங்களுக்கு அலுப்புதட்டச் செய்ய விரும்பவில்லையாதலால், விசேஷமாக முகையத்தீன் இப்னு அரபி போன்ற பெரும் சிந்தனையாளர்களின் நூல்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. இந்தப் பேரறிஞர் விட்டுச் சென்றுள்ள அறிவுநூட்பங்களை நீங்கள் ஆராய நாடினால், இத்தகைய விடயங்களில் ஈடுபடத் தயாராகவுள்ள சோவியத் யூனியனின் அதிமதிநுட்பம் வாய்ந்த நிபுணர்கள் சிலரை கும் நகருக்கு அனுப்பி வையுங்கள். அல்லாஹ்வின் கிருபையால் ஒருசில வருடங்களில் அவர்கள் இந்த அறிவுநூட்பங்களைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ள இயலும். இந்தப் பிரயாணத்தை மேற்கொள்ளாமல் இத்தகைய விழிப்புணர்வைப் பெற்றுக்கொள்வது சாத்தியமாகாது.

Page 43
76
மாண்புமிகு திரு. கொர்பச்சேவ் அவர்களே,
இந்தக் குறிப்புகளையும் ஆரம்ப விளக்கங்களையும் சொல்லிய பிறகு, இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே ஆராயவேண்டுமென இப்போது நான் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். இஸ்லாத்தின் உன்னதமான, சர்வவியாபகமான பெறுமானங்களால்தான் சாந்தியைத் தரமுடியும்; எல்லாச் சமுதாயங்களையும் காப்பாற்ற முடியும்; மனித இனத்தினை எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளையும் அதனால் தீர்த்து வைக்கமுடியும் என்ற காரணத்தினால் நான் உங்களை இவ்வாறு கேட்கின்றேனே ஒழிய, உங்களுடைய ஆராய்ச்சி இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் தேவைப்படுகின்றது என்பதற்காக அல்ல.
இஸ்லாத்தைப் பற்றிய நுணுக்கமான விசாரணை, ஆஃப்கானிஸ்தான் விவகாரத்திலிருந்தும் மற்றும் அதுபோன்ற ஏனைய பிரச்சினைகளிலிருந்தும் உங்களை விடுவிக்கும். உலகம் பூராவிலுமுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் ஈரானிய முஸ்லிம்களை கவனிப்பது போன்றே நாம் கவனிக்கின்றோம். மேலும் நாம் பொதுக் குறிக்கோளையும் கொண்டிருக்கின்றோம். சில சோவியத் குடியரசுகளுக்கு ஓரளவு மதச் சுதந்திரத்தை வழங்கியிருப்பதன் மூலம் நீங்கள், 'வல்லரசுகளுக்கு எதிராக வீம்பு கொண்ட மலையொன்றைப் போன்று ஈரானிய மக்களை ஆக்கியுள்ள மதம் மக்களுக்கு அபினியாகும்' என தொடர்ந்தும் நினைக்கவில்லை என்பதை செயலில் காட்டியுள்ளீர்கள். :
உலகில் நீதி நிலைநிறுத்தப்படுவதையும், உலகாயத, ஆன்மீக விலங்குகளிலிருந்து மனிதனின் விடுதலையையும் வேண்டிநிற்கும் மார்க்கம் சமுதாயத்திற்கு அபினியா? இஸ்லாமிய நாடுகளினதும், இஸ்லாமல்லாத ஏனைய நாடுகளினதும் பொருளாயத, ஆன்மீக மூலவளங்களை வல்லரசுகளுக்கும் மற்றும் சக்திகளுக்கும் தாரைவார்த்துக் கொடுப்பதோடு, தன்னைப் பின்பற்றுபவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டாமென்றும் கட்டளையிடும் மார்க்கம் உண்மையிலேயே சமுதாயத்திற்கு அபினிதான். அது உண்மையான மார்க்கமல்ல. அதனை ஈரானியர்கள் "அமெரிக்க பாணி மார்க்கம்’

77
என்று கூறுகின்றனர். இறுதியாக, உங்களுடைய அமைப்பு முறையில் நிலவும் ஆன்மீக சூனியத்தை நிரப்பக்கூடியது, இஸ்லாமிய உலகின் பாரிய, சக்திமிக்க தளமாகிய ஈரான் இஸ்லாமியக் குடியரசே என நான் பகிரங்கமாக அறிவிக்கின்றேன். முன்னரைப் போன்றே இப்போதும் ஈரான், நல்ல அயலுறவையும் இருதரப்பு உறவுகளையும் மதிப்பதோடு, அவற்றில் நம்பிக்கையும் கொண்டுள்ளது. சத்தியத்தை நாடுவோர்க்கு சாந்தியும் அருளும் கிட்டுவதாக,
ரூஹுல்லாஹ் அல் மூசவி அல் கொமெய்னி,

Page 44
É ~
È TÈ=Ɔŋsgïgos@ượ?—咖欄
„No,%錢鞑–s_ : ★
* s;4%g过y心丁)
···&ow@TITỰngstog
gïgîţuoo oɖđặt? ¿?,
-i gruotsmagoogoo - N o
· æožít:73% ợuggou||2. osunoqooyová sấ7@7
grgggsg
 
 
 
 

பெப்ரவரி மாதம் 03ம் திகதி. வெள்ளிக் கிழமை.
இன்று நாம் ஈரானின் தலைவிதியையே மாற்றிய ஓர் இடத்திற்குப் போகின்றோம்.
ஈரானின் மட்டுமல்லஉலகினை உலுப்பியது அந்த இடம்.
கொம் நகரம். தெஹ்ரானிலிருந்து 110 கிலோ மீட்டர் துரம்.
எங்கே அந்தப் புனித மண்? எங்கே அந்தப் புரட்சி மண்? எங்கே..?
இந்த இருபதாம் நூற்றாண்டின் இரும்பு மனிதரைஇணயயற்ற வீரரைஅஞ்சா நெஞ்சினரை
பகலில் பாயும் புலியாகவும்இரவில் இறை சந்திப்பில் சாதுவான பசுவாகவும் இருந்த அந்த மனிதரைமாபெரிய தலைவரைஇமாமினைஉருவாக்கித் தந்த அந்த மண் எங்கே?
அறுபத்தைந்து வருடங்களாக நடுநிசித் தொழுகையை தவறாது

Page 45
79
நிறைவேற்றியபலநூல்களை எழுதி வெளியிட்டஅறிவுக்கடல், ஞானவூற்றுநபிவழிப் பேரர், அலிபுலியின் சீடர் இமாம் கொமய்னியை உருவாக்கிய அந்த மண்
எங்கே?
இத்தனை உயிர்த் தியாகிகளைஎண்ணற்ற வீர உலமாக்களைஅறிஞர்களை-மேதைகளை அவர் செப்பனிட்டு உருவாக்கிய அந்த மண் எங்கே?
இதோ நாம் கொம் நகரை அடைந்து விட்டோம்.
இது
பாப்பாண்டவரின் வத்திக்கான் அல்ல. காஞ்சிகாமகோடியின் காஞ்சிபுரம் அல்ல. புத்தபிரானின் புத்தகாயா அல்ல. அயோத்தியோ, அமிர்தஸரசோ அனுராதபுரமோ அல்ல. கொம்ராட்டின் கிரம்ளினோ மாஸேதுங்கின் பீகிங்கோ அல்லஅல்லது
இதுஇமாம் கொமய்னியின் கொம்மோ அல்ல.
மாறாக இதுஉலகின்

80
நசுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரம். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிப்பேழை. அடக்கப்பட்ட மக்களின் அற்புத விளக்கு.
அந்த மண்ணில் காலடி வைக்கும் பாக்கியம் கிடைத்ததற்காய் ஆனந்தப் படுகின்றேன். அல்லாஹ்வைப் புகழ்கின்றேன். பார்க்குமிடமெல்லாம் ஆலிம்கள், மாணவர்கள். எங்கும் எவரும் கற்கின்றனர் அல்லது கற்பிக்கின்றனர்.
உலகிற்கு எண்ணற்ற பெஹஸ்திகளை, முதஹ்ஹரிகளை, மிஷ்கீனிகளை உருவாக்கித் தந்தது
இந்த ஊர்.
மக்கட் தொகை இரண்டு இலட்சம். மாணவர் தொகையே அறுபதாயிரம்.
அரசாங்க மானியமின்றி
அரபு நாட்டு உதவிகளின்றி மத்ரஸாக்கள் இயங்குகின்றன. எம்நாட்டுக் குக்கிராம குர்ஆன் மத்ரசாக்களுக்கே சவூதிக் காசை எதிர்பார்த்து நிற்கும் கனவான்கள் எங்கேசொந்தக் காலில் நின்று கொண்டே இந்த உலகையே உசுப்பி விட்ட இந்த மக்கள் எங்கே!
இங்குள்ள மத்ரஸாக்களில் மேற்கத்திய பந்தாக்கள் இல்லை.

Page 46
81
நபிகள் நாயகத்தின் காலத்தையநபித் தோழர் காலத்தையஇமாம்களின் காலத்தைய அதே முறையில் கற்பிக்கின்றனர்.
கொம் - சின்ன நகரம். கனகச்சிதமாக இருக்கிறது. அழகாக பைன்ட் செய்யப்பட்ட புத்தகம் போல்.
ஆம்-புத்தகமே தான். மக்களுக்கு விடுதலை பெறும் மார்க்கத்தைக் காட்டித் தந்த புத்தகம்.
காலையிலேயே ஆயதொல்லாஹ் முதஹ்ஹரியினதும் ஆயதொல்லாஹ் மிஷ்கீனியினதும் வீடுகளுக்குச் சென்று அவர்களைச் சந்தித்தோம். பெரிய ஆலிம்கள்.
சிறிய வீடுகள்,
எமது நாட்டில் உள்ள சின்ன மனிதர்களின் பெரிய மாளிகைகள் மனதுக்குள்.
அங்கேயே ஜும்ஆவிற்குச் சென்றோம். ஜும்ஆ என்றால் ஈரானில்தான்

然2
ஜும்ஆஉண்டு
என்ற நிலை. எம்நாட்டு ஜும்ஆக்கள் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அந்தரத்தில் தொங்கி நிற்பவை. அது இம்மையையும் தொடா அது மறுமையிலும் படா. பக்கத்திலிருப்பவர் தட்டியெழுப்பும் வை எமது தூக்கமும் கெடா.
கொம் நகரில் நாம் கண்டவற்றில் எனக்கு பிரமிப்பூட்டியது இன்னொன்று. அங்குள்ள ஒரு பள்ளிவாசல். அது ஒரு காம்பிளெக்ஸ்.
வாசக சாலை, தங்குமிடங்கள் பணிமனைகள், கேட்போர்கூடம் பூங்கா, நீர்த் தடாகம், உள்ளே வீதிகள், உட்காரும் பெஞ்சுகள் நிழல் தரும் மரங்கள் உள்ளே ஒரு பள்ளிவாசல்
பக்கத்தே கடை விதிசுற்றிவர பிரதான வீதிகள் அடேங்கப்பா
ஒவ்வொரு பள்ளிவாசலும் இப்படியே உள்ளன என்று நான் சொல்ல வரவில்லை.
பிரதானமானவை இப்படியுள்ளன.

Page 47
83
எம்நாட்டிலும் ஊருக்கொன்று அல்லது மாவட்டத்திற்கொன்று ஏன்
முழு நாட்டிற்குமே ஒன்றேயொன்று எப்போது உருவாகும்.
சென்னை ஆயிரம் விளக்குப் பள்ளிவாசல் இப்படியானதொரு காம்பிளக்ஸ்தான்.
இந்தியாவில் என்றால் இன்னும் இப்படியானவை இருக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன் பார்த்ததில்லை.
இஸ்லாமியபாரசீக கட்டிடக் கலையின் பரிணாமம் ஈரானில் எங்குமே காட்சியளிக்கின்றது.
இஸ்லாமியபாரசீக கட்டிடக் கலையின் பிரஸ்தாபங்கள் இந்தியாவிலும் பல விடங்களில் உள்ளனவாம்.
O O O
பிற்பகலில் வீதிவலம். நெருக்கமான ஒரு குடியிருப்புப் பகுதியில் ஓரிடத்தைக் காட்டினார்கள். இமாம் கொமய்னி அவர்கள் வாழ்ந்த இடமாம்.

84
காலணிகளைக் கழற்றி விட்டு அம்மண்ணில் நடந்தேன். இந்நூற்றாண்டின் இணையற்ற மாமனிதனின் பொற்பாதங்கள் பட்ட மண்ணல்லவா.
இமாமிடம் இருந்த ஒரு சொத்து, இப்போது அவ்விடத்தில் ஒரு பாடசாலை எழுகின்றது. இருந்ததை வழங்கி விட்டாராம். இந்த இடத்தில் இமாமவர்களின் உத்தியோக பூர்வமான சொத்துப் பிரகடன அறிக்கை ஞாபகத்திற்கு வருகின்றது.
ஈரானிய அரசியலமைப்பின் 142ம் பிரிவின்படி ஈரானிய உயர்தலைவர்கள் உயரதிகாரிகள் யாவரும் தம் சொத்துக்கள் பற்றி பகிரங்கப் பிரகடனம் செய்ய வேண்டும்.
இதோ இமாமின் பிரகடனம் :
அல்லாஹ்வின் திருநாமத்தால்.
பெயர் ரூஹுல்லாஹ்.
வேறுபெயர் கொமய்னி என்று அழைக்கப்படும் மொஸ்தபாவி. அறிமுக அட்டை : 2744
வழங்கிய இடம் : கொமய்ன்
தொழில் மார்க்கவாதி.
1) அசையாத சொத்துக்கள் (விபரங்களுடன்) 1) கொம் நகரின் பாகே-காலேஹ் பிரிவில் உள்ள ஒரு வீடு.

Page 48
I) தந்தை வழியில் கிடைத்த ஒரு காணித்துண்டு. இதன் உரிமையாளர்கள் என்னுடன், எனது மறைந்த சோதரர் உயர்திரு ஹிந்தி அவர்களும், உயர்திரு சாந்திதே அவர்களுமாவர். சோதரரின் படி. எனது பங்கிற்கான வருட வருமானம் 4,000 ஈரானிய ரியால்கள் (54 டொலர்) இதுவரை கிடைக்கவில்லை.
2) அசையும் சொத்துக்கள்.
தெஹ்ரானில் தனிப்பட்ட ரீதியில் கிடைத்த அன்பளிப்புப் பணம் கொஞ்சம்.
II என்னிடம் தளபாடங்கள் கிடையாது. இருக்கும் சில என் மனைவியினுடையவை. என்னிடம் நேர்ச்சைக்காகக் கொடுக்கப்பட்ட இரண்டு கம்பளங்கள் உண்டு. அவை எனக்கோ எனது சந்ததியினர்க்கோ சொந்தமானவையல்ல. அவை ரஸலிலுல்லாஹ் (ஸல்) அவர்களின் சந்ததியினரில் தேவையுள்ளவர்க்குக் கொடுக்கப்பட வேண்டியவை.
என்னிடம் பல நூல்கள் உள்ளன. அவற்றில் பல ஷாவின் பாதுகாப்புப் படையினர் என்னிடமிருந்து என்வீட்டை முற்றுகையிட்டபோது பறித்துக் கொண்டவை. ஏனையவை பல்வேறு எழுத்தாளர்களால் அன்பளிப்பாக அளிக்கப்பட்டவை. அவற்றின் பெறுமதி எனக்குத் தெரியாது. ஆனால் அவை அதிகமானவை அலல.
நான் வாழும் வீட்டில் உள்ள தளபாடங்கள் அந்த வீட்டுச்
சொந்தக்காரருடையவை. (எனது மகன்) அஹ்மத் (இவைபற்றி)
அறிவார்.
11. இவைதவிர எனது வீட்டிலோ, அல்லது வங்கிகளிலோ
உள்ள பணம் யாவும் மக்களால் வழங்கப்பட்டவை. இவை பற்றி எனது சகோதரர் சாந்திதே அறிவார். இவை எனக்கோ எனது சந்ததியினர்க்கோ சொந்தமானதன்று. எனது உயிலில் அவை பற்றி நான் குறிப்பிட்டுள்ளேன்.

86
ரூஹுல்லாஹ் மூஸவி அல் கொமய்னி. 7, ரபியல் அவ்வல் 1401 14 ஜனவரி 1981.
எமது தலைவர் வீட்டு வேலைக்காரனின் சொத்துக்களை விடவும் குறைந்தவை. இந்த மனிதர் தான் வெள்ளை மாளிகைக்கும், கிரம்ளின் மாளிகைக்கும் சிம்ம சொப்பனமாக வாழ்ந்தவர்.
கொம் நகர் கடை விதி.
நூற்றுக் கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகளைக் கண்டோம். ரஷ்ய செங்கரடியின் கோபாவேசத்தால் எல்லை கடந்து இங்கு வந்த இருபது இலட்சம் பேரில் சிலர்.
அவர்கள் அங்கு சுயமாக வியாபாரம் செய்கின்றனர். ஈரானில் உள்ள ஆப்கன் அகதிகள் முகாம்களில் அடைபட்டு இருக்கவில்லை. ஈரானின் அனைத்து மாவட்டங்களிலும் சுயமாகச் சீவனம் புரிகின்றனர். அகதிகட்கான உதவிகள் அவர்களின் கல்வி, வீடமைப்பு, மீளக்குடியேறல்

Page 49
87
போன்ற நிரந்தர அபிவிருத்திகட்குப் பயன்படுகின்றன.
கொம் நகரில்
எங்கு பார்க்கினும் கறுப்பு வெள்ளைத் தலைப் பாகைகள். உலமாக்கள் நிறைந்த ஊர்.
நூறு ஹதீஸ்களைப் பாடம் செய்தவர்கள் உலமாக்களாகப் பவனிவரும் எமது நாடு எங்கே? அறிவுக் கடல்களின் பவனி எங்கே?
கொம் நகரப் பயணம் முடிந்து தெஹ்ரானிற்கு இரவு திரும்பினோம்.

10
பெப்ரவரி மாதம் 4ம் திகதி.
இன்று தெஹ்ரானிலுள்ள ஆஸ்பத்திரி ஒன்றிற்குச் செல்கின்றோம். "முஸ்தபா கொமய்னி ஆஸ்பத்திரி.”
முஸ்தபா கொமய்னி இமாம் கொமய்னி அவர்களின் மூத்த புதல்வர். இஸ்லாமியப் புரட்சியின் வித்துக்களில் ஒன்று. பல போராட்டங்களில் கலந்து பல முறை சிறை சென்றவர். இமாமவர்கள் நாடுகடத்தப்பட்டு ஈராக்கில் வாழ்ந்த போது இமாமுடன் இருந்தவர். ஈராக்கிய ஏஜெண்டுகளின் உதவியுடன் ஈரானிய ஷாவின் சவாக் படையினரால் நஞ்சூட்டிக் கொலை செய்யப்பட்டவர்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்
இமாம் கொமய்னி மீது வீண்பழி சுமத்துபவர்கள் அன்னார் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களை மதிப்பதில்லை என்கின்றனர்.

Page 50
89
இமாமிற்கு இரண்டு மகன்கள். ஒருவர் முஸ்தபா.
மற்றவர் அஹ்மத். ரஸஜூலுல்லாஹ்வின் திருப் பெயர்கள்.
O O. O.
அந்த ஆஸ்பத்திரியில் யுத்த முனைகளில் காயமடைந்த பல பாதி உயிர்த் தியாகி களையும்அங்கங்களை தியாகம் செய்தவர்களையும் சந்தித்தோம். கையிழந்தவர்-காலிழந்தவர் பார்வையிழந்தவர் கையிருந்தும், காலிருந்தும் புலனிழந்தவர். காணவே கண்கள் பனிக்கின்றன. நெஞ்சு படபடக்கின்றது.
ஒரு சகோதரர்
மூன்றாவது முறையாக இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு முறை சுகமாகி போர் சென்று மீண்டும். அவருடைய அங்கங்களில் குறையேதுமில்லை கால்களில் உணர்வில்லை என்பது தவிர. ஒரு குழந்தைக்குத் தந்தை. தனக்கு விரைவில் குணமாக பிரார்த்திக்குமாறும்தன் நாட்டில் நடப்பவற்றை

9)
உலகமெங்கும் கூறுமாறும் வேண்டிக் கொண்டார்.
ஒவ்வொரு புதன் கிழமையும் மனைவியும், மகனும் வருவாராம்.
"குணமாகி வீடு திரும்புவீர்களா?” எனக் கேட்டேன்.
"என் வீட்டிற்குப் போனால் உலகாசை வந்து விடும். நேரே யுத்த முனைக்குச் சென்று ஷஹீதாகும் வரை ஒயமாட்டேன்’ என்றார்.
என் உரோமங்கள் குத்திட்டன.
இன்னொரு சகோதரர். வயிற்றில் குண்டடிபட்டு படுத்த படுக்கையாய் உள்ளார். அவருடன் பேச்சுக் கொடுத்தோம். இரண்டாவது தடவை இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளாராம். தன் கதையை விடவும் அவர் ஈரான் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் சம்ரானின் கதையையே அதிகம் கூறினார்.
டாக்டர் சம்ரான். அமெரிக்காவில் 22 வருடங்கள் கற்று மின்னியலிலும், எலக்ட்ரானிக் துறையிலும் இரு முறை டாக்டர் பட்டம் பெற்றவர்.
அமெரிக்காவிலிருந்து ஷாவின் காலத்தில் தெஹ்ரான் வர அனுமதி

Page 51
91
மறுக்கப்பட்டதால் லெபனான் சென்றவர்.
லெபனானின் அமல் இயக்க ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர். லெபனான் போராட்டத்தின் நெளிவு சுழிவுகளை அறிந்தவர். லெபனானிலிருந்துஇமாமவர்கள் பாரீஸ் வந்து சேர்ந்ததும் பாரீசிற்கு வந்து இமாமுடன் தங்கியவர். இமாமவர்கள்பாரீஸிலிருந்து ஈரான் திரும்புகையில் கூடவே வந்து பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றவர்.
யுத்த முனைகளில் இரண்டு முறை குண்டடிபட்டு, குணமாகி மூன்றாம் முறையும் போர் சென்று குண்டடிபட்டு ஒரு குக்கிராமத்தில் ஷஹிதானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
சாதாரணமாக எங்களிற்கான மொழிபெயர்ப்பு வேலைகளை எங்களின் வழிகாட்டி ஹமீதே கவனிப்பார். இன்று ஒரு மாற்றம்.
எங்களுடன் வந்த ஒரு தென் கொரிய சோதரர்
சோதரர் கோரு மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபட்டார்.

92
அவரும் நானும் ஆஸ்பத்திரியில் பல நோயாளிகளுடன் அளவளாவினோம்.
கோருவுக்கு துருக்கியப் பாஷை தெரியும். கொரிய யுத்தத்தின் போது கொரியாவில் அமைதிகாக்க வந்த துருக்கியப் படையினர்தான் கொரியாவுக்கு இஸ்லாத்தையும் கொணர்ந்தனராம். கொரியாவில் உள்ள முஸ்லிம்கள் துருக்கிய மொழி பேசுவராம்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போராளிகளில் ஒரு துருக்கி மொழி பேசுபவர் இருந்தார். அவருக்கு துருக்கி, பாரசீகம் தெரியும். நான் ஆங்கிலத்தில் வினவகோரு அதனை துருக்கி மொழியில் சோதரரிடம் மொழிமாற்றஅவர் பாரசீகத்தில் ஏனையோரிடம் கேட்டு பதில் கூற. மீண்டும் வந்த பாதையிலேயே. பாரசீகம் - துருக்கி
துருக்கி- ஆங்கிலம்.
இவ்வனுபவங்களை இலங்கைச் சோதரர்களுடன் தமிழில் அல்லது சிங்களத்தில் பகிர்வோம். ஆஸ்பத்திரி அனுபவங்கள் ஏராளம், ஏராளம். விரிவஞ்சித் தவிர்க்கின்றேன்.

Page 52
93
மாலை 6.30 மணி. மஃரிப் தொழுகையின் பின்னர்ஒரு வீட்டிற்குச் செல்கின்றோம்.
ஒரே குடும்பத்து இரு உயிர்த்தியாகிகளின் வீடு.
எங்கள் குழுவில் இலங்கைப் பிரதிநிதிகளுடன் தென் கொரிய சோதரர் கோருவும் சேர்ந்து கொள்கின்றார். காரில் பயணம்.
இவ்வாறே ஏனைய பிரதிநிதிகளும் பல பல குழுக்களாக பல பல வீடுகட்குச் சென்றனர்.
தெஹ்ரானின் மத்தியில் நடுத்தரமான ஒரு குடியிருப்புப் பகுதி. நடுத்தரமான ஒரு வீடு. தொடர்மாடி யொன்றில்,
இந்தக் குடும்பத்தில் இரு சோதரர்கள் யுத்தத்தில் உயிர்த்தியாகிகளாகி விட்டனர்.
அவர்களின் கடைசித் தம்பி குறுகுறுப்பானவன்.
வயது நாலிருக்கும். எங்களுக்கு குளிர்பானம் கொண்டு வருவதும் எங்களை போட்டோ எடுப்பதும்கட்டிப்பிடிப்பதும்
முத்தமிடுவதும்சிரிப்பதும், ஓடுவதுமாக ஒரே ரகளை. இப்படியாக இருக்கையில்
அந்த வீட்டிற்கு

9
அந்தத் தொகுதியின் நாடாளுமன்றப் பிரதிநிதியான ஓர் ஆலிம் வந்தார். அனைவரும் ஸலவாத் சொல்லி, எழுந்து வரவேற்றனர்.
அந்த எம்பி எங்களுடன் அன்னியோன்யமாய்ப் பழகினார். எங்கள் நாட்டைப் பற்றி வினவினார். தனது நாட்டின் புரட்சியினை விபரித்தார்.
பின்னர்
அந்தக் குட்டிப்பயலிடம்
ஏதோ வினவினார்.
அந்தச் சிறுவனும் அபிநயத்துடன் ஒரு சம்பவத்தை நடித்துக் காட்டினார். சுவாரஸ்யமான சம்பவத்தின் சாரமிது :
சாதாரணமாக யுத்தத்தில் ஷஹீதானவர்களின் குடும்பத்தினரை இமாமவர்கள்
சந்திப்பது வழக்கமாம். ஒரு முறை இந்தக் குடும்பத்தினரும் அவரைச் சந்திக்க சென்றுள்ளனர். இமாம் இவர்களுடன் அளவளாவியுள்ளார். இவர்கட்காய் பிரார்த்தனை செய்துள்ளார்.
விடைபெறுகையில் ஆண்கள் ஒவ்வொருவராக இமாமின் கைகளைப் பிடித்து முத்தமிட்டனராம்.
சின்னவரின் முறை வந்தது. இதோ இமாமவர்கள் குனிந்து இவரிடம் தனது கைகளை நீட்டுகின்றார். சின்னவரும் நீட்டுகின்றார்.

Page 53
95
திடீரென
இமாமின் கைகளை இவர் ஓங்கித் தட்டிவிடுகின்றார். எல்லோர் முகத்திலும் பரபரப்பு.
ஏன்.? கோபம் என்றே சொல்ல வேண்டும். இமாமின் முகத்தில் இன்னுமே புன்முறுவல். சரித்திரத்தில்இமாமிடம் இவ்வாறு நடந்து கொண்ட முதலாமவர் இவர்தான்.
இமாமவர்கள் தனது அதே சாந்தத்துடன் இவரிடம் காரணம் கேட்கின்றார். இவரோ கோபத்துடன் "கையுறைகளைக் கழட்டுங்கள்' என்கின்றார். இமாமின் முகத்தில் இன்னும் புன்முறுவல். இதோ இமாம் தனது கையுறைகளைக் கழட்ட. அப்படியே சின்னவர் இமாமின் கைகளைப் பற்றிகட்டிப்பிடித்துமுத்தமிட்டுஇமாம் இவரை அப்படியே அலக்காகத் தூக்கிக் கொள்கின்றார். முகத்தில், தாடியில் முதுகில், பிடரியில் முத்த மழை. எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணிர்.
இச்சம்பவமே அந்தச் சின்னவர் அபிநயத்த அந்தச் சம்பவம்.

f
பெப்ரவரி 5ம் திகதி இன்றை நிகழ்ச்சிகள் :
காலை - நாங்கள் Carpet museum - கம்பள நூதனசாலை
பார்க்கப் போகின்றோம். பிற்பகல் - இமாம் ரீஸா (ரஹ்) வின்
சகோதரி அடங்கியுள்ள இடத்திற்குச் செல்கின்றோம்.
வாருங்கள். முதலில் மியூஸியம் பார்ப்போம் - சொல்வார்களே. புத்தாப் புதியது என்று புத்தம் புதிய கட்டிடம்
எனினும் - பழமை பட்டுத் தெறித்தது. கலை நுணுக்கத்தோடு கட்டியிருந்தார்கள். குகையினுள் செல்லும் உணர்வு. பாரசீகக் கம்பளங்கள் பார் முழுதும் புகழ் பெற்றவை. காஷ்மீரத்து கம்பளங்கள் போல் நூறு மடங்கென்ன ஆயிரம் மடங்கு பெறுமதியானவை.
13ம்,14ம்,15ம்,16ம்,.20ம் நூற்றாண்டுகளின் கம்பளங்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.

Page 54
97
கலை நுணுக்கம் - காட்சியழகு மனதைக் கொள்ளை கொள்கின்றன.
அரபு எழுத்தணி - இயற்கைக் காட்சிகள் - பறவைகள் - சித்திர வேலைப் பாடுகள்.
அப்பப்பா. என்ன அற்புதமான கலை!
கைகளினால் நெய்யப்பட்டவை. இயந்திரங்களினால் நெய்யப்பட்டவை.
சில கம்பளங்களை பத்துப் பதினைந்து பேர் சேர்ந்து பின்னி முடிக்க ஐந்து பத்து வருடங்கள் பிடிக்குமாம். ஓர் அமெரிக்க சோதரர் அங்கிருந்த உத்தியோகத்தரான பெண்ணிடம் "நூறு மில்லியன் டாலர் பெறுமதியான கம்பளம் ஒன்று ஈரானில் இருப்பதாக கேள்விப் பட்டேன். உண்மையா?”
என்று கேட்டார்.
அப் பெண் அமைதியாகப் பதிலுரைத்தார். "அதனை விடவும் பெறுமதியான ஒன்றைக் காட்டுகின்றேன்.” சிறிது நேரத்தில் ஒரு கம்பளத்தைச் சுட்டிக் காட்டி “1980ல் இதன் பெறுமதி 1100 மில்லியன் டாலர்" என்றார்.

98
ஒ. வாயடைத்துப் போனேன். இல்லை. காதடைத்துப் போனேன்.
இலங்கை ரூபாய்க்கு இதனை மாற்றிக் கணக்கிட என்னால் முடியாமலுள்ளது. நான் கணக்கில் மக்கு. முயற்சி பண்ணுங்களேன்.
இதனை விற்றால் எமது பட்ஜட்டில் விழும் துண்டை சரிக்கட்டி விடலாம்.
பிற்பகல் 2.30 மணி. இப்போது நாம் ஸியாரத்திற்குச் செல்கின்றோம்.
இமாம் ரீஸாவின் சகோதரி அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம். இஸ்லாமியக் கட்டிடக் கலையின் வண்ணம் பரிணமிக்கின்றது.
சின்னக் கட்டிடம் தான். மனதைக் கொள்ளை கொள்கின்றது.
உள்ளே சென்றால்இலட்சக் கணக்கில் நான் நிற்கின்றேன். கேத்திரகணித முறையிலான முகம்பார்க்கும் கண்ணாடித் துண்ட வேலைப் பாடுகள்.
எத்தனை காலம் சென்றிருக்கும் இத்தனை கண்ணாடி

Page 55
ஒட்டு வேலைக்கு. வியந்து கொண்டேன்.
இங்கு நான் கண்டவைஇங்கு ஸியாரத் செய்பவர்கள் அதிகமாக குர்ஆன் ஒதுகின்றனர். அதிகமாக பிரார்த்தனை புரிகின்றனர். அதிகமாக தொழுகின்றனர்.
இங்கு இந்துமதத் தனங்கள் கிடையாது. காசுக்காக யாசீன் ggab "பூசாரித்தனங்கள் இல்லை. ஆண்களும் பெண்களும்
ஒன்றாகச் செல்லும் நாகூர்த் தனங்களோ அன்றி கல்முனைக் கடற்கரைப் பள்ாரித் தனங்களோ இல்லை.
எதற்கெடுத்தாலும் வியாக்களைக் குற்றஞ் சாட்டும்
சவூதி ஆலிம்கள் இதனைக் கவனிப்பார்களாக தர்காக்கள் கோயில்கள் போல் மாறியதற்கு வீயாக்கள் அல்ல காரணம்
ஷிர்க் பற்றிய அறிவு இல்லாமையே!
O O. O.
இரவு 7.30 மணி,
தெஹ்ரான் நகரின் பின்தங்கிய பகுதியொன்றிற்கு சென்றோம்.

100
தெஹ்ரான் தென் பகுதி. தொழிலாளர்கள் அதிகம் வாழ்கின்றனர்.
ஷாவின் காலத்தில் ஈரானின் கிராமியப் பொருளாதாரம்
கெட்டழிந்தது.
இறக்குமதிப் பொருட்கள்
மலிவு விலைக்கு விற்பனையாக உள்ளூர் உற்பத்திகள் யானை விலை குதிரை விலைக்கு.
விளைவு
கிராமங்கள் பாலைகளாக நகரங்களை நோக்கி மக்கள் பெயர்ந்தனர்.
இந்த மக்களை அதிகம் கொண்டது தென் தெஹ்ரான்,
வீதிகளுக்கு மின்சாரம் கிடையாது. "பெற்றோமெக்ஸ்' வெளிச்சத்தில் நாம் சென்றோம்.
ஒரு சிறிய பள்ளிவாசல். அங்கு ஒரு நிகழ்ச்சி இடம்பெற்றது. ஒர் அமைதியான
அதேவேளை ஆரோக்கியமான ஓர் வரவேற்பு.
பள்ளிவாசல் கதீப் தமது பிரதேசம் பற்றி விளக்கினார். அவர் பிரதேசத்து ஷஹதாக்களின் பட்டியலை வெளியிட்டார்.
தற்போது நடக்கின்ற அபிவிருத்தி பற்றி விளக்கினார்.

Page 56
()
விடைபெறல் படலததின் போதுஒவ்வொருவராகஸலாம் கூறி-கட்டிப்பிடித்து விடை பெறுகையில்
அங்கு ஒருவர்.
அச்சொட்டாக நான் நான்கு வயதாய் இருக்கையில் மறைந்து போன என் தந்தையார் போல். நான் அழுதே விட்டேன்.

12
பெப்ரவரி 6ம் திகதி. வெள்ளிக் கிழமை,
i தொழுகை-காலை 8.30-1.30 வரை. இது தரப்பட்ட நிகழ்ச்சி நிரலில் உள்ளது. எமது நாட்டில் என்றால் ஜும்ஆ 12.30-1.15 வரைதான் இது என்ன காலையிலேயே செல்ல வேண்டியுள்ளது?
இதோ பஸ் தயாராக உள்ளது. ஏறுகின்றோம். எங்களுக்கு அதே பஸ்.இல.3. ஆங்கிலம்.
தெஹ்ரானில் ஜும்ஆ தெஹ்ரான் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறுகின்றது.
உலகின் மிகப் பெரிய ஜும்ஆ இதுதான். ஆகக்குறைந்தது பத்து இலட்சம் பேர் கூடுகின்றனர்.
கிராமங்களிலிருந்து வருபவர்கள் வியாழன் இரவே வந்துசேர்ந்து இடம் பிடித்து விடுவார்களாம். தெஹ்ரான் பல்கலைக்கழகை நோக்கியுள்ள அனைத்துச் சாலைகளிலும் மக்கள் தொழுகின்றனர்.
இதோ எங்கள் பஸ் அண்மித்து விட்டது. இறங்கி உள்ளே நுழைகி")ாம். மக்கள் கூட்டமா இல்லை சமுத்திரமா? இது சனசமுத்திரம். பசிபிக் போல். இந்து மாக்கடல்போல்,
மைதானத்தினுள் நுழையும் போது காலை 9.45 ஒருவர் பேசிக் கொண்டிருக்கின்றார். பழக்கமான முகமாய்த் தெரிந்தது. எனக்கு மட்டுமல்ல பத்திரிகை வாசிக்கும்

Page 57
103
அனைவர்க்குமே பழக்கமான முகம். டாக்டர் அலி அக்பர் விலாயத்தி. ஈரானிய வெளிநாட்டமைச்சர்,
என்ன பேசுகின்றார் என்று புரியவில்லை. மொழிபெயர்ப்பாளர் குசுகுசுவென்று ஆங்கிலத்தில் பெயர்த்தார். அண்மையில் அவர்செய்த அயல்நாட்டுப்பயணங்கள்பற்றி மக்களுக்கு விளக்குகின்றார். . ஈரானின் ஜும்ஆ உண்மையில் பிரயோசனமானதுதான். ஈரானிய அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் ஈரானிய மக்களுக்கு நேரடியாகப் பதில் சொல்ல வேண்டியவர்களே!
தெஹ்ரான் ஜும்ஆ தொழுகையின் பிரதம கதீப் ஆயதொல்லாஹ் அலி காமேனி. ஈரானின் அப்போதைய ஜனாதிபதி. இன்றையத் தலைவர். தற்காலிக கதீப் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ரப்சன் ஜானி. அப்போதைய சபாநாயகர். இன்றைய ஜனாதிபதி. இவர்கள் இருவருமே இமாம் கொமய்னி அவர்களின் இரு கண்கள்.
இன்னுமொரு கதீப் ஆயதொல்லா அர்த பெல்லி - உயர்நீதிபதி. இன்னுமொரு கதீப் ஆயதொல்லா யஸ்தி - தற்போதைய உயர்நீதிபதி. வெள்ளிக்கிழமை என்றால் ஈரானில் பெருநாள்தான். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் வந்து கூடுகின்றனர். இது வெறும் சடங்கன்று.
மாறாக

()4
மக்கள் நிருவாகத்தில் பங்கு பெறும் மக்கள் மன்றம்.
விலாயத்தி அவர்களின் உரை காலை 11.30 மணிக்கு முடிந்தது. அடுத்து மேடைக்கு வந்தவர் சுலோகங்கள் அமைச்சர். உண்மையில் இவர் அமைச்சரல்லர். செல்லமாக மக்கள் அமைச்சரென அழைப்பர்.
சொந்தமாக பணிமனை வைத்திருக்கும் இவர் உலக நடப்புகட்கேற்ப ஒவ்வொரு வாரமும் சுலோகங்களை இயற்றி ஜும்ஆவில் அரங்கேற்றம் செய்வார்.
சுலோகங்களை அவர் சொல்ல மக்கள் திரும்பச் சொல்கின்றனர். இவரென்ன இளையராஜாவா? விஸ்வனாதனா? இசையமைப்பாளர் போல் நின்று கொண்டு நெறிப்படுத்து கின்றாரே!
முதலில் -
“லா இலாஹ இல்லல்லாஹ்”- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வன்றி யாருமில்லைஎன்று மக்களின் ஒரு பகுதியினர் கோஷமிட
"முஹம்ம துர் ரசூலுல்லாஹ்'- முஹம்மது அல்லாஹ்வின் தூதர்என்று மறுபகுதியினர் கோஷமிடுகின்றனர். அடுத்து தக்பீர்
"அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹ0 அக்பர்"- அல்லாஹ்பெரியவன், அல்லாஹ் பெரியவன், அல்லாஹ் பெரியவன்

Page 58
105
கைகளை உயர்த்தி. உயர்த்தி பகுதி பகுதியாக கோஷம் ஒலிக்கையில். அலை வீசும் கடலாய்எதிரொலி ஒலிக்கும் மலைத் தொடராய். குரலுக்குள் குரல்கள்எதிரொலிக்குள் எதிரொலிகள். குரலுக்குள் எதிரொலிகள். எதிரொலிக்குள் குரல்கள்.
அப்பப்பா.
"லா ஷர்கிய்யா! லா கர்பிய்யா ! இஸ்லாமிய்யா! இஸ்லாமிய்யா!' கிழக்கும் இல்லை! மேற்கும் இல்லை! இஸ்லாமே! இஸ்லாமே! v
கோஷங்களில் ஈரானின் இஸ்லாமியக் கொள்கைகள் பிரதிபலிக்கின்றன.
"யா அய்யுஹல் முஸ்லிமூன்! இத்தUதூ! இத்தஹறிது!’ உலக முஸ்லிம்களே! ஒன்று படுவீர்! ஒன்று படுவீர்! வெறுங் கோஷங்களில் புரட்சி செய்யும் காகிதப் புலிகள் அல்லர் அவர்கள்! பத்திரிகை அறிக்கைகளால் கட்சி வளர்த்தவர்கள் அல்லர் அவர்கள்.
விதையாய். நாற்றாய். மரமாய் விஞ்ஞான ரீதியில் வளர்ந்த பெரு விருட்சம் ஈரான்.
சீரிய தலைமை - உயிர்த்தியாகம்கொள்கைப் பிடிப்பு - தன்னலமின்மை இவை - ஈரான் நாட்டை ஒரு வல்லரசாக்கிக் கொண்டிருக்கின்றன.

106
ஆயுதமில்லாமல் யுத்தப் பயிற்சிகள் இல்லாமல் ஆனானப்பட்ட ஷாவையே விரட்டியவர்கள்
இந்த மக்கள்!
எப்படி?
இவர்களிடம் இஸ்லாம் மேடைக் கோஷமாகஅறிக்கைத் தலைப்பாக இல்லாமல் வாழ்க்கையாக இருந்தது.
இரவில் பசுக்களாக இறையிடம் கெஞ்சும் இவர்கள் பகலில் புலிகளாக எதிரியைச் சின்னாபின்னப் படுத்துபவர்கள்.
தியாகம் - சகிப்புத் தன்மை - விடாமுயற்சி ஈரானின் வெற்றியின் அடித்தளங்கள். பொருளாதாரத் தடையினை அமெரிக்கா அறிவித்தபோது"நோன்பிருங்கள்’ என்றறிவித்த தலைவர்சுயதேவைப் பூர்த்தியில் வேகமாக முன்னேறும் நாடு.
"இன்கிலாப்-அஸாதி-ஜும்ஹாரிய்யா”
* -விடுதலை - குடியரசு இதுவே ஈரானின் வெற்றிக் கோஷம்.
அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட - நலிந்துவிட்ட அமெரிக்காவின் அடிமையாய்க் கிடத்தப்பட்டரஷ்யாவின் சேவகராய் அமர்த்தப்பட்டஇஸ்ரேலின் சதியின் களமாக்கப்பட்டஇந்த ஈரானிய மக்கள் இன்று

Page 59
107
சுயாதீனம், சுதந்திரக் காற்றினைச் சுவாசிப்பதென்றால்.
அதற்கவர்க்கு ஒரு "தெய்வீக கரம்" உதவியிருக்க வேண்டும்.
வெறும் சுலோகங்களை எழுப்பாமல் வெற்றிச் சுலோகங்களை எழுப்பி அமெரிக்கக் காதுகளை செவிடாக்குகின்றனர். ரஷ்யக் கண்களைக் குருடாக்குகின்றனர். பிரிட்டிஷ் கால்களை முடமாக்குகின்றனர் இம்மக்கள்.
"மாக்பார் அம்ரிக்கா! - அமெரிக்கா ஒழிக! மாக்பார் சூரவி! ரஷ்யா ஒழிக! மாக்பார் இஸ்ரேல்! இஸ்ரேல் ஒழிக! மாக்பார் முனாபிக்கீன்! நயவஞ்சகர் ஒழிக! என்று உரக்கக் கூறுகின்றனர்.
சனசமுத்திரத்தில் அலைகள் பொங்குகின்றன. ஆம்
மக்கள் கைகளை அசைக்கின்றனர்.
O OO
12.35 அதான் - பாங்கு ஒலிக்கின்றது. இதோ கதீப் மிம்பருக்கு-மேடைக்கு வந்துவிட்டார். இதோ ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹாஷிமீரப்ஸன்ஜானி, பளிச்சென்ற முகம் - தாடிகிடையாது. கம்பீர நடை
தீட்சண்யமான கண்கள்.
ஈரானின் உலமாக்கள் அனைவருமே தாடியுடன், ரப்சன்ஜானி மட்டும் மழுங்க வழித்த முகத்துடன். 6J sir?
ஷாவின் காலத்தில் கைது செய்யப்பட்டு

108
சிறையில் சித்திரவதைப் பட்டபோது அவரின் தாடி உரோமங்களையெல்லாம் பிடுங்கி விட்டார்களாம்.
இவர் மட்டுமல்ல எண்ணற்ற உலமாக்கள் பலவிதங்களில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். ரப்சன்ஜானி அவர்களின் பிரசங்கம் கேட்கக் கேட்க ஆவலைத் தூண்டும். பொருள் விளங்காவிட்டாலும் மக்களின் பிரதிபலிப்பு கண்ணாடியாகின்றது. ரப்சன்ஜான் "பிஸ்தாசியா" பருப்பு சுவையில் உலகப் புகழ் பெற்றது. எங்களின் முந்திரிபோல் அல்லது முந்திரியை விட, ரப்சன்ஜானியும் பிஸ்டாச்சி போல் ரம்மியமாகவும் பேசுகின்றார். பீரங்கிபோலும் வெடிக்கின்றார்.
பிரசங்கம் முடிந்து
தொழுகைதொழுகை முடிந்து வெளியில் வந்ததுதான் தாமதம் மக்கள் எம்மை அன்பினால் பிய்க்கத் தொடங்கிவிட்டனர். கேள்வி கேட்பதும்
கைலாகு கொடுப்பதும்
கட்டிப் பிடிப்பதும்
கோஷமிடுவதும்அமர்க்களப்படுத்தி விட்டனர் போங்கள். இப்படியொரு அன்பு மழையில் நான் குளித்ததில்லை. இப்படியொரு அன்புக் கடலில் நான் நீந்தியதுமில்லை.
அன்புத் தொல்லையிலிருந்து விடுபட்டு பஸ் ஏறி ஹோட்டல் வந்து சேர பிற்பகல் 3.30 ஆகிவிட்டது.

Page 60
()9
இன்று இரவு 7.30 மணிக்கு 'ஆப்கானிஸ்தான் இரவு' நிகழ்ச்சி.
தொழுது - இரவுச் சாப்பாடு முடிந்து இதோ நாங்கள் மண்டபத்தை அடைகின்றோம்.
ஒரு சோதரர் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கின்றார் என்னே லயிப்பு, என்னே குரல்.
ஒதி முடிந்து அவர் தனது மெஷின்கன்னை தோளில் மாட்டிக் கொண்டு காவலுக்கு வருகின்றார். புரட்சிக் காவலர் படையினைச சேர்ந்தவர்.
நிகழ்ச்சி ஆரம்பம். ஆப்கான் முஜாஹிதீன் அமைப்புகளின் பிரதிநிதிகள் நால்வர் மேடையில்.
அதோ அங்கு மூன்றாவதாய் அமர்ந்திருப்பவரை நான் முன்பே கண்டுள்ளேனே!
நேற்றிரவு பள்ளிவாசல் புரோகிராமிற்கு எங்களுடன் வந்தவர். பேசக்கிடைக்க வில்லையே! கைசேதப் பட்டுக் கொண்டேன்.
ரஷ்யப் படையெடுப்பால் அழிந்த கிராமங்களின் கதையைஅகதிகளான மக்களின் எண்ணிக்கையைஉயிர் நீத்தவர்களின் தொகையைகொள்ளை, கற்பழிப்பு, தீவைப்பு போன்ற பாதகங்களை அவர்கள்
ஒருவர் பின்னால் ஒருவர் கூறுகையில் ரஷ்யச் செங்கரடியை வேட்டையாடிவிட வேண்டுமென்ற வீராய்ப்பு மனதுள்.

110
இத்தனை அநியாயம் செய்பவர்கள் ஏழைகளின் காவலர்களாய்ஒடுக்கப்பட்டோரின் உறைவிடமாய் மதிக்கப்படுதல் எங்கனம்? மனது ஒப்புக் கொள்ள மறுக்கின்றது.
செக்கோஸ்லவேக்கியாவில் டுப்செக் தலைமையில்
சீர்திருத்தம் நடந்த போது - தமது
கொம்ரேட்டுகளைக் கொன்று குவித்தவர்கள்தாம்
இவர்கள்
இன்று
அசர்பைஜானியர் அந்நியத்திற்கெதிராய்ப்
போராடுகின்ற போது
சொந்த சோதரரான இவரையே
கொன்றொழித்தவர்தான் இவர்கள்.
என்னே கொடுமை!
பதினைந்து இலட்சம் ஆப்கானிய மக்கள் கொலை, ஐம்பத்தியிரண்டு இலட்சம் ஆப்கானியர் அகதிகளாயினர். ஆயிரக்கணக்கான கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. அங்கங்களை யிழந்தோர் . இலட்சோபலட்சம்.
இவற்றிற்குக் காரணமானவர்களின் கொள்கை
எமை விடுவிக்குமாம்? சிரிக்கின்றேன். எதிலிருந்து? ஆப்கானிஸ்தான் போராளிகள்
பிரதிநிதிகள் அமெரிக்காவின் சதிபற்றியும் எச்சரித்தனர். ரஷ்யாவினை அமெரிக்காவினைக் கொண்டு மாற்றீடு செய்வதை நிராகரித்தனர்.

Page 61
111
பாகிஸ்தானுடாக அமெரிக்க ஏஜெண்டுகள் ஆப்கான் மண்ணில் ஊடுருவியுள்ளதை நான் மறுக்கவில்லை.
அமெரிக்காவின் பொம்மைகளாக சவூதி உள்ளது. பாகிஸ்தான் உள்ளது. இவற்றின் உதவிபெறும் "போராளிகள்' இல்லாமல் இல்லை. இவர்களால் அங்கு விடுதலை கிடைக்குமா? இஸ்லாம் தான் தழைக்குமா?
O O O
ஆப்கானை விட்டும் ரஷ்யப்படை வெளியேறி விட்டது. இன்று ஆப்கானில் அந்நியப்படை இல்லை. ஆனாலும். ஜலலாபாத் கைப்பற்றப்படவில்லை. இதற்கென்ன காரணம்?
கிழக்கை விட்டு மேற்கைப் பிடித்ததே! என்றாவது ஒருநாள் கிழக்குமற்ற, மேற்குமற்ற தூய்மையான இஸ்லாம் அங்கு கொலுவேறும்போது தான் அவர்கட்கு விடியல் பிறக்கும்.
இமாமின்
கொர்பச்சே விற்கான கடிதம் கம்யூனிஸ்டுகட்கு மட்டுமன்றி அனைவர்க்கும் பொருந்தும். ஆப்கான் போராளிகட்கும் பொருந்தும், உள்ளூர்த் தலைவர்கட்கும் பொருந்தும். மக்களுக்கும் பொருந்தும்.

13
பெப்ரவரி 7ம் திகதி, நாங்கள் இன்று பார்க்கப் போகுமிடம்ஈராக்கிய போர்க் கைதிகளின் முகாம்.
இதோ பஸ் ஏறுகின்றோம். இலக்கம் 3 ஆங்கிலம். புஷ் கோட் சகோதரரும் ஏறினார் ஆளைப் பிடித்துக் கொண்டேன். கேள்விகளாய் கேட்டுத் துளைத்தேன்.
இறுதியில் சொன்னார்பெயர்: ரீஸா பர்வீஸ், இங்கிலாந்தில் படித்தவர். தெஹ்ரான் பல்கலைக் கழகத்தில் கணிதத்துறை விரிவுரையாளர்.
இத்தனை படித்த இவரிடம்
எத்தனை பெரிய மனமிருக்கு. கொஞ்சமாய்ப் படித்த நாங்களெல்லாம் கூச்சப்படும் வேலையெல்லாம் செய்கின்றார். பேச்சுக்குப் பேச்சு அல்குர்ஆன் போதனை-மூச்சுக்கு மூச்சு இஸ்லாமியச் சிந்தனைதியாக உணர்வு; அர்ப்பண உள்ளம். ஈரான் உண்மையில் மாறியே விட்டது.
O O. O.
பாதையில் பஸ் பவ்யமாய் செல்கின்றது. நாங்கள் பக்கத்துக் காட்சிகளை - பார்த்தபடியே செல்கின்றோம்.
இதோ ஒரு வீதியில் கிறிஸ்தவ சேர்ச். அமெரிக்க சோதரர் ஸாகிர்

Page 62
அமர்க்களமாய்க் கூவுகின்றார் சேர்ச். சேர்ச். அமெரிக்காவில் சொல்கின்றார்களேதேவாலயங்கள் யாவும் தரைமட்டமாகி விட்டதாய். இன்னுமொரு சேர்ச். இன்னும் அவர் கூவுகின்றார். கமராவில் அதனைப் பதித்துக் கொள்கின்றார். இதோ இன்னுமொரு சேர்ச். ஸாகிர் ஒரு முன்னாள் கிறிஸ்தவர்.
பஸ் செல்கின்றது.
பர்விஸ் சொல்கின்றார். இது ஷாவின் தாயாரின் ஸியாரம். ஷாவின் தாயாருக்கு சிலை கூட வைத்தாராம் ஷா, வீதி சந்திகளில்
ஷாவின் சிலை,
ஷாவின் தந்தையின் சிலை. ஷாவின் தாயின் சிலை. இவற்றைக் கடக்கும் மக்கள் சிரம் தாழ்த்த வேண்டுமாம் அப்போது. சிரம் தாழ்த்தாமல் செல்பவர் சித்திரவதைக் குள்ளாவார்கள். சிலை வணக்கத்தை உடைத்தெறிய வந்த சிறப்புமிக்க மறை சிறையிலடைக்கப்பட்டது. ஷிர்க்.பித்அத் பற்றி இன்று மாநாடு போடும் ஆலிம்கள்ஷியாக்களை எதிர்த்து புத்தகங்கள் வெளியிடும் நாதாக்கள்

114
1979க்கு முன்னர் ஷாபற்றி ஒரு வார்த்தைதானும் பேசியதில்லை. இன்று இஸ்லாத்தின் பாதுகாவலர்களாய் சியாரங்களை உடைக்க இந்தியாவிலும், இலங்கையிலும் போராட்டம் செய்கின்றனர். சவூதி ரியால்களை தாராளமாய்ச் செலவு செய்கின்றனர்.
இதே இவர்கள்
பாக்தாத்தில்-பஸ்ராவில் இருக்கும் சியாரங்களை-ஷிர்க்குகளைக் கண்டு கொள்வதேயில்லை.
காரணம். சத்தாம் பஹ்தின் கூட்டாளி. பஹத் இவர்களின் தலைவர். விந்தை மனிதர்கள்.
இதோ நாங்கள் முகாமை அடைந்து விட்டோம். உள்ளே செல்கின்றோம்.
பல முகாம்கள். ஏறத்தாழ எட்டாயிரம் கைதிகள் உள்ளனர். அவர்களுடன் பேசினோம். அவர்கள் எதுவித குறைகளுமின்றி இருப்பதாகக் கூறினர்.
சிலவேளைபயத்தினால் கூடக் கூறியிருக்கலாம். வெளியில் ஒரு மேடை மைதானத்தில். அங்கு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது.

Page 63
ஈராக்கிய கைதிகளின் நிகழ்ச்சி அது. புரட்சிகர- இஸ்லாமியப் பாடல்களை அவர்கள் குழுவினராக இசைத்தனர்.
சிலர் பேசினர். இஸ்லாமியப் புரட்சியைப் புகழ்ந்தனர். சத்தாமின் சண்டாளங்களை இகழ்ந்தனர்.
ஏனைய கைதிகள் கோஷமிட்டனர். முடிவில் என்னுள் ஒரு (փւթ. հւլ.
இங்குள்ளவர்களில் ஆகக் குறைந்தது இருபத்தைந்து வீதத்தினர் மாறிவிட்டனர், பாத் சோஷலிஸ்க் கொள்கையினை விட்டு இஸ்லாத்தின் பால் திரும்பிவிட்டனர் என்பதே அது.
போர் முடிந்து பயணக்கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று முடிந்தால் இவர்கள் ஈராக்கில் புரட்சி செய்தேயாகுவர். எண்ணிக் கொண்டேன்.
சில கைதிகள் இயல்பாகவே கோஷமிடுவதையும் சில கைதிகள் செயற்கையாக கோஷமிடுவதையும் நான் அவதானித்தேன். ஒருவர் அடுத்தடுத்து - சங்கிலியாய்ப் புகைத்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் வெறுப்பு தாண்டவமாடியது.

14
பெப்ரவரி 8ம் திகதி. நாங்கள் யுத்தப் பகுதிகளைப் பார்வையிடச் செல்ல விருக்கின்றோம்.
இதோ பஸ். இலக்கம் 3 ஆங்கிலம். பஸ்ஸில் ஏறி மெஹ்ராபாத் விமான நிலையத்தை அடைகின்றோம்.
அவசரமாக நடக்கையில் பணியில் சறுக்கி நான் வீழ்ந்து விடுகின்றேன். காலில் பலமான அடி. எனினும் சமாளித்து - நொண்டி நொண்டி நடக்கின்றேன். ஈரான் எயார் விமானம் தயாராக நிற்கின்றது.
ஏறுகின்றோம். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் கப்டன். அஸ்ஸலாமு அலைக்கும். இதோ விமானம் புறப்படவுள்ளது. நான் பிரார்த்தித்துக் கொள்கின்றேன். யுத்தமுனை செல்கின்றோம். ஏதுவித அபாயமும் ஏற்படக் கூடாதென்று
தெஹ்ரானிலிருந்து ஹாவைஸியா நோக்கிய விமானப் பயணம். 1 மணி 40 நிமிட தூரம். தெற்கு நோக்கி,
ஈரானின் தெற்கு, மேற்கு பகுதிகளில் குசெஸ்தான், ஈலம், குர்திஷ்தான் மாகாணங்கள் உள்ளன.
இம்மூன்று மாகாணங்களுமே ஈராக்கியர் வசமிருந்ததாகவும் பெரும்பாலான பகுதிகளை 161 நாட்களின் பின்னர் பதிலடி கொடுத்து மீளக் கைப்பற்றியதாகவும் கூறினர்.

Page 64
117
இதோ ஹசவைசா விமானத் தளத்தில் எங்கள் விமானம் இறங்குகின்றது.
நாங்கள் அனைவரும் வெளியே இறங்குகின்றோம். எங்களுக்கு விமானப்படையின் பேன்ட் வாத்தியத்துடனான இனிய வரவேற்பு.
உலமாக்கள், இராணுவ, விமானப்படைகளின் உயரதிகாரிகள் எம்மை வரவேற்கின்றனர்.
நான் என்னை மறக்கின்றேன். எனக்கு இப்படியொரு வரவேற்பா? ஈரானியப் புரட்சியின் இலக்கே வேறுதான். உலகின் சம்பிரதாயக் கட்டுகளையுமல்லவா இப்புரட்சி தகர்த்து விட்டது?
நாட்டுத் தலைவர்கட்கு, உயரதிகாரிகட்கு கிடைக்கும் கெளரவம் இந்த ஏழைக்கும்! அங்கிருந்து நாங்கள் கொரம்ஷார் நகருக்கு பஸ்ஸில் போகின்றோம். கொரம்ஷார் நெடுஞ்சாலை.
ஏறக்குறைய 100-150 கிலோமீட்டர் தூரத்திற்கு குடியிருப்புகளே கிடையாது
மேற்குத் திசையில் எங்கள் பயணம்.
உலகப்படத்தை உங்கள் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். ஈராக்கிற்கும் ஈரானுக்குமிடையில் பாரசீகக் குடா.
பாரசீகக் குடாவினை அப்படியே துருக்கி நோக்கிப் பாருங்கள்.

118
அதாவது மேலே. இன்னும் கொஞ்சம் மேலே.
இதோ ஷாட் அல் அரபில் ஈராக்-துருக்கி-ஈரான் மூன்று நாடுகளிலிருந்தும் பாய்ந்து வரும் மூன்று நதிகளும் பாரசீகக் குடாவில் சங்கமிக்கும் இடம்,
கொரம்ஷார்.
கொஞ்ச நேரம் யுத்த மேக மழையில் நனைவோம் போர்க் கடலில் குளிப்போம்.
1979 செப்டம்பர் 23ம் திகதி இரவு மணி 2.00 ஏனைய நகரங்களைப் போல் கொரம்ஷாரும் துயிலில். எங்குமே எம்மூர் மயான அமைதி.
திடீரென விண்ணையே பிளக்கும் வெடிகள்.
விமானங்களின் பேரிரைச்சல் மக்கள் வீரிட்டெழுகின்றனர். என்ன செய்வதென்றே புரியவில்லை. கொரம்ஷார் குண்டுகளால் குளிக்கின்றது. கொரம்ஷார் இரத்தத்தால் சிவக்கின்றது.
எங்குமே கூச்சல் - கூக்குரல் விமானங்களின் பேரொலி அடங்கியதுமே தப்பியவர்கள் பட்டவர்களை மீட்க முயல்கின்றனர். மீண்டும் பேரிரைச்சல்.
டாங்கிப் பட்டாளம் கொரம்ஷாரைத் துளைத்தெடுக்கின்றது.

Page 65
19
மீண்டும் கூக்குரல். இப்போது கூக்குரல் மிகவும் நலிந்து விட்டது.
இரண்டு இலட்சம் பேர் வாழ்ந்த அந்நகரில் மிஞ்சியவர் இருபதோ, முப்பதோ ஆயிரங்கள் தானாம்.
கொரம்ஷார்ஈரானின் பிரபலமான துறைமுகம்அழகான நகர்மண்குவியலாகி விடுகின்றது.
அன்றும் அடுத்தடுத்த சில நாட்களிலும் மண்குவியலான கிராமங்கள், பட்டினங்கள், நகர்களின் எண்ணிக்கை மட்டும் மூவாயிரத்தைத் தாண்டிவிட்டதாம்.
இறந்தவர் பலலட்சம். அங்கங்கள் இழந்தோர் பலலட்சம். அகதிகளானோர் பல லட்சம்.
தென்றல் புயலானது. அமைதி இல்லாமல் போனது.
இப்போதுதான் தோன்றிய புரட்சிபிறந்து பத்துமாதம் கூட ஆகவில்லை. தத்தித் தத்தி நடைபயில்வதென்ன..? தவழவே தொடங்கவில்லை. இத்தனை கொடுரம் அதன் மீது.

120
யுத்தத்தைத் தொடங்கிய
சத்தாம் என்ன
ஹிட்லரின் நண்பரா ஸ்டாலினின் உடன்பிறப்பா? வெறுப்பு அன்றி வேறெது தோன்றும் அவர்மீது?
O O Go
நலிவுற்றிருந்த
எதிர்பார்க்காமலிருந்த ஈரானிய இராணுவம் பின்வாங்கி விட்டது.
ஈராக்கிய தேசப்படத்தில் ஈலமும், குசெஸ்தானும் குர்திஷ்தானும் இடம்பெற்று விட்டன.
பாரசீக நாமங்கள் அரபு நாமங்களாகி விட்டன.
இத்தனை அநீதமும் நடந்து விட்டது. ஈரான் இதுபற்றி எங்கெல்லாமோ முறையிட்டது. அத்தனையும் செவிடன் காதுச் சங்காகவிழலுக்கிரைத்த நீராக.
அமெரிக்காவின் ஜனநாயகமும்சோவியத்தின் கம்யூனிசமும் இந்த அநியாயங்களைக் கண்டு கொள்ளவேயில்லை.
மன்னர் ‘பஹ்தின்’ வyறஹாபிய மார்க்கமும் மன்னர் ஹுசைனின், ஹஸனின் மனித உரிமைகளும். வாய்பொத்தி நின்றன.
ஐ.நா. சபை அன்று செத்தே விட்டது.

Page 66
யாரிடம் முறையிடுவது? எங்குதான் நீதி கேட்பது?
அபதானின் எண்ணை சுத்திகரிப்பு ஆலை. உலகிலேயே மிகப் பெரியது. அழித்து விட்டார்கள். ஈரானின் எண்ணை ஏற்றுமதி அப்படியே நின்று விட்டது.
கூட்டுச் சேர்ந்தும் கூட்டுச் சேராத நாடுகள் கூண்டுகளில் அடைபட்டுவிட்டன.
சில நாடுகளும்.
சில இயக்கங்களும். பலகோடி மக்களும் ஈரானின் பக்கமிருந்தனர். அல்லல்பட்ட உலக மக்களின் ஆத்மீக ஆதரவு ஈரான் பக்கமிருந்தது. புரட்சி மூலம்
விடிவு பெறலாம் என்ற மக்கள் அமாவாசையை அணைத்துக் கொள்ள
தயாராகவில்லை. விளைவு.?
O O O
இமாம் கொமய்னி அவர்கள் மக்களைப் போருக்குத் தயாராகுமாறு அறைகூவல் விடுத்தார். இதோ புறப்பட்டுவிட்டோம் கொமய்னியே என்று இலட்சக் கணக்கானோர் தயாராகினர்.

22
குறுகிய கால யுத்தப்பயிற்சி இரகசியமாகத் தரப்பட்டது.
எல்லா முனைகளிலும் ஈராக்குப்படையினர் கனரக ஆயுதங்களுடன் அரணமைத்துள்ளனர். விமானங்கள் இருபத்து நாலு மணிநேரமும் வேவுபார்த்துக் கொண்டிருக்கின்றன.
ஈரானின் கையில் இருக்கும் கனரக ஆயுதங்களை நகர்த்த முடியாத நிலை. பெரிய வாகனங்கள், டாங்கிகள் நகர்த்தப்பட்டால் எதிரி உஷாரா கி விடுவான்.
இஸ்லாமியப் போராளிகள் பழமைக்குத் திரும்பினர். இருபது இருபத்தைந்து பேர் கொண்ட குழுவினர். கைகளில் சாதாரண துப்பாக்கிகள், ரொக்கெட் லோஞ்சர்கள். மண்வெட்டிகள்.
டெஸ்புல்-கொரம்ஷார் நெடுஞ்சாலைகொரம்ஷார் நோக்கிய பயணத்தில் வலப்பக்கம் அல்லது தேசப்படத்தில் வடக்குப் பக்கம் ஈராக்கியப் படை. ஒவ்வொரு 100-150 யாருக்கும் ஒரு ரஷ்ய டாங்கி. ஈரானை நோக்கி 100 கிலோமீட்டருக்கு குறையாது. இதோ கொரம்ஷார் மீட்பில் ஈரானியர் இலட்சம் பேர் தயார் நிலையில். நாற்பதாயிரம் முன்னனணியில் அறுபதாயிரம் பேர் ரிசர்வில்.

Page 67
123
20-25 பேர் கொண்ட குழுவினராய் பிரிந்தனர். ஒருவர் தலைவர். அவர் கையில் வாக்கி டோக்கி. இரவு தொடங்கி விட்டது. இதோ அவர்கள் நடக்கத் தொடங்கி விட்டனர்.
அதிகாலை வரை நடப்பர். மண்வெட்டிகளால் ஒவ்வொருவரும் ஒரு குழி தோண்டுவர். விடிவதற்குள் குழிக்குள் புகுந்து கொள்வர்.
காலை - ஒருவரும் இல்லை. ஈராக்கியர் நிம்மதியாய் இருப்பர்.
இரவு தொடங்கினால் இவர்கள் நடப்பர். குழி தோண்டுவர். தம்மை மறைப்பர். பகலில் ஒன்றுமே இல்லை.
இடையிடையே உணவு சப்ளை இரவிலேயே நடக்கும்.
வாக்கி டோக்கிகள் மூலம் தூரத்தை குழுக்கள் சரிசெய்து கொள்ளும்.
இவ்வாறு 5இரவுகள், 5 பகல்கள். இதோ கொரம்ஷார் நெடுஞ்சாலை அண்மித்து விட்டது. இரவும் வந்துவிட்டது. உத்தரவும் கிடைத்து விட்டது.
இவர்களின் மெஷின் கன்களும், லோஞ்சர்களும் தீப்பொறிகளைத் துப்ப -
எதிரியின் டாங்கிகள்
தீப்பிழம்பைக் கக்க -
மின்னாமல் முழங்காமல் போர்மழை பெய்கின்றது -
ஒவ்வொரு டாங்கியை நோக்கியும் டாங்கிக் குழாயிற்குத் தப்பி உருளும் இருபது இருபத்தைந்து பேர்.

124
டாங்கிகளடியில் ஆகக் கூடியது ஐவர் - அறுவர்.
இலக்குகள் தவறினால் டாங்கி இவர்கட்கு. இலக்கு தவறாவிடின் டாங்கிகள் நெருப்பிற்கு.
தப்பிய டாங்கிகள் ஈராக்கியத் துருப்பினரை நோக்கிச் சுட -
முகாமில் தூங்கிய ஈராக்கியர் ஒடஇவர்கள் துரத்த.
இரவு விடிந்து விட்டது.
கொரம்ஷார் வீதியில் மட்டும் முன்னுற்றி எண்பது டாங்கிகள் கைப்பற்றப்பட்டன. அன்றைய அதிரடித் தாக்குதலில் பதினையாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
யுத்தம் இப்போதுதான் ஆரம்பம். நூற்றி அறுபத்தோரோவது நாளிலிருந்து.
O o O
துயில் கொண்ட உலகம் விழித்துக் கொண்டது. செத்துப்போன ஐ.நா.சபை உயிர்த்தெழுந்து விட்டது கூட்டுச் சேர்ந்த நாடுகள் கூட்டுகளை உடைத்து சிலிர்த்தெழுந்து கொள்கின்றன.
இப்போதுதான் யுத்தம் ஆரம்பித்தது இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்
விமானங்கள் நியூயார்க்கிலிருந்து தெஹ்ரான் நோக்கிப் பறக்கின்றன. சமாதானப் புறாக்கள் இவ்வளவு நாள் எங்கிருந்தனவோ?

Page 68
உண்மையில் இவை புறாக்களல்ல. பிணந்தின்னும் கழுகுகள் புறாச் செட்டைக்குள் கழுகு, பசுத் தோலில் புலி.
FFJmsir உஷாராகிவிட்டது. வேஷதாரிகளின் கபடநாடகம் முடிந்து விட்டது.
இதோ நாங்கள் கொரம்ஷாரை நெருங்கி வந்து கொண்டிருக்கிறோம். இது ஒரு நகரா, இங்கு மக்கள் வாழ்ந்தார்களா? மண்குவியல்களும் இடிபாடுகளும்தான் மிச்சம் எங்களையும், ஆங்காங்கே செல்லும் இராணுவ ட்ரக்களையும் தவிர. காக்கைக்குக் கூட கொரம்ஷாரில்
கடும் பஞ்சம்.
சுற்றிப் பார்க்கின்றோம். வீதிகளை மட்டு புல்டோசர்களால் வெளிசாக்கியுள்ளனர்
மீதமாயிருந்த-அல்லது ஓரளவுக்கு தப்பியிருந்த கட்டிடங்கள் - மூன்று.
ஒன்று ஒரு பள்ளி வாசல் - அரைவாசிதப்பியிருந்தது. இன்னும் இரு கட்டிடங்களில் இரண்டு மண்டப அறைகள்.
பள்ளியில் தொழுதோம். தப்பியிருந்த கட்டிடத்தில் சாப்பிட்டோம்.

26
கொரம்ஷாரின் இடிபாடுகளிடையே ஏதாவது ஞாபகப் பொருள் கிடைக்குமா? தேடினோம்.
ஜலீல் ஒரு குர்ஆன் பிரதியைக் கண்டெடுத்தார். நானொரு பிளாஸ்டிக் பூங்கொத்தை எடுத்துக் கொண்டேன். ஆனால் குண்டுகளின் கோதுகள், இரும்புத் துண்டங்கள் எடுப்பதானால் அள்ளிக் கொண்டு வரலாம்.
கொரம்ஷார் நகர் கைப்பற்றப் பட்டபோது இவ்வளவிற்கு அழிந்திருக்க வில்லையாம். அவர்கள் தோல்வியடைந்து ஒடும்போது ஒரேடியாக அழித்து விட்டார்களாம்.
அடுத்து அபதான் -
அபதான் என்றதுமே
பெட்ரோல் மணக்கும். அபதான் ஆலை உலகில் மிகப் பெரியது அது அப்படியே சுக்குநூறாகி விட்டது. (கடந்த வருடம் அது ஈரானிய நிபுணர்களால் செப்பனிடப்பட்டு உற்பத்தியைத் தொடங்கி விட்டதாம் அல்ஹம்துலில்லாஹ்.)
நான்கு இலட்சம் பேர் வாழும்
நகர் அபதான். w நாங்கள் போகையில் 25 ஆயிரம் பேர் மட்டில் மீளக் குடியேறியுள்ளனர். சிதைவுகளைச் சரிசெய்து வாழத் தொடங்குகின்றனர்.

Page 69
127
இத்தனைக்கும் நாம் நிற்குமிடம் எல்லைக்கு 5 கி.மீட்டர் தூரம்தான் என்று கூறியதுமே பகீரென்றது. என்றாலும் ஒரு தைரியம். இத்தனை இலட்சம் பேர் மாண்டொழிந்த நகரில் நாம் மரித்தால் தான் என்ன?
அபதானிலிருந்து சுலைமானியா நோக்கி அப்புறம் பயணமானோம். பார்க்குமிடமெல்லாம் யுத்த அழிவுகள். நோக்குமிடமெல்லாம் மண் குவியல்கள். முற்றாக அழிந்து போனபாதி சேதப்பட்ட
விடுகள், கட்டிடங்கள்.
சுலைமானியாவிலிருந்து டெஸ்புல் நகருக்குச் செல்கின்றோம். மாலையாகி விட்டது. டெஸ்புல் நகரம் குசெஸ்தான் மாகாண தலைநகரம்.
அங்கேயே இரவு தங்க ஏற்பாடு. ஒரு மண்டபத்தில் அனைவரும்.
தெஹ்ரானில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்டெஸ்புல்லில் மண்டபம்,

15
பெப்ரவரி 9ம் திகதி.
காலையிலேயே டெஸ்புல் நகர பெரிய பள்ளிவாசலுக்குச் செல்கின்றோம். அங்கு ஒரு நிகழ்ச்சி நடக்கின்றது.
டெஸ்புல் நகர கதீப் யுத்த அனர்த்தங்கள் பற்றி விவரிக்கின்றார். யுத்தத்தில் ஷஹீதான டெஸ்புல் வாசிகள்அரசாங்க உதவிகள், புனருத்தாரண நடவடிக்கைகள் அனைத்தைப் பற்றியும்
அறிக்கை தந்தார்.
அரசாங்க நிருவாக இயந்திரத்தில் ஆலிம்களின் பங்களிப்பை அறிந்து ஆச்சரியமடைகின்றோம்.
அடுத்து
டெஸ்புல் நகர மயானம். இது இன்னுமொரு, சின்ன
பெஹஸ்தி-அஸ்-ஸஹரா
மயானத்தைச் சுற்றிப் பார்க்கின்றோம். பெஹஸ்தி- அஸ்-ஸஹரா போல் அதே உயிர்த் துடிப்புஇங்கு உணர்வுகளை ஜனனிக்கின்றனர்.

Page 70
129
எங்களுடன் வந்த ஒரு சோதரர் அழுகின்றார். தேம்பித் தேம்பி அழுகின்றார். டென்மார்க்கைச் சேர்ந்தவர். டாக்டர்; மதத்தால் கிறிஸ்தவர். அவரால் அழுகையினைக் கட்டுப் படுத்த முடியவேயில்லை.
ஒவ்வொரு கல்லறையையும் அதிலுள்ள படங்களையும்கூர்மையாகப் பார்க்கின்றார். அழுது புலம்புகின்றார்.
அவரையே பார்த்துக் கொண்டிருந்த என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. நான் அப்படியே பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டேன். தூங்கினேனா - மயங்கிப் போனேனா? பஸ் புறப்பட்டபோது தான்விழித்தேன்.
டெஸ்புல் நகர இராணுவ முகாமொன்றில் பகல் சாப்பாடு. அந்த இராணுவ முகாம் வாசலில் ஈராக்கினால் வீசப்பட்ட குண்டுகளின், ராக்கெட்டுகளின் சிதைந்த துண்டங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.
டெஸ்புல் நகரில் மட்டுமின்றி சென்ற இடமெல்லாம்ஒரு பக்கம் யுத்தத்தினால் அழிந்த பகுதிகளையும் மறு புறத்தில் புனருத்தாரண நடவடிக்கைகளையும் கண்டோம்.

130
பிற்பகல் மீண்டும் நாங்கள் விமானமேறி தெஹ்ரான் வந்து சேர்ந்தோம்.
இரவு 8 மணிக்கு ஒரு நிகழ்ச்சி இருந்தது.
“њЈпä இரவு' ".
“ஈராக் இஸ்லாமியப் புரட்சிக்கான உயர் கவுன்ஸில்’ எனும் அமைப்பு இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தது.
இதன் தலைவரும் ஈராக்கின் பிரபல மார்க்க அறிஞருமான ஹஜ்ஜதுல் இஸ்லாம் பாகிருல் ஹகீமி சிறப்பு விருந்தினர்.
ஈராக்கில் ஹகீமி குடும்பம் பிரபல்யமானது. ஹுஜ்ஜதுல் இஸ்லாம் பாகிருல் ஹகீமியின் தந்தை ஆயதொல்லாஹ் மொக்ஸினுல் ஹகீம். இவரே ஈராக்கிய இஸ்லாமியப் போராட்டத் தலைவர். இவர் சத்தாம் ஹுசைன் அரசினால் கொல்லப்பட்டார்.
இவருக்குப் பிறகு இவரது மூத்த புதல்வர் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் மெஹ்தி ஹகீமி புரட்சித் தலைவரானார். இவரும் பாத் சோஷலிஸக் கொள்கையுடைய ஈராக்கிய அரசினால் கொல்லப்பட இரண்டாவது புதல்வர் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் யூசுப் ஹகீமி தலைவரானார். இவரும் சிறிது காலத்துள் கொல்லப்பட்டார்.

Page 71
131
இவருக்குப் பிறகு ஆயத்தொல்லாஹ் பாகிர் சத்ர் எனும் உலகப் பிரசித்தி பெற்ற ஆலிம் தலைவரானார். இவர் இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வல்லவர். - இவரின் மிகப் பிரபலமான நூலாகிய "இக்திஸாதுனா" பல்வேறு பல்கலைக் கழகங்களில் பாட நூலாய் உள்ளது. மதினாப் பல்கலைக் கழகம் உட்பட.
இவரையும், இவரின் அருமைத் தங்கையார் பிந்துல் ஹாதாவையும் ஈராக்கிய அரசு கைது செய்தது. மர்மமாக அவர்களைக் கொலை செய்தது.
ஹகீமி குடும்பத்தில் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். பாகிர் சத்ரின் குடும்பத்தினர் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
அதன் பிறகுதலைவரின்றித் தத்தளித்த இயக்கத்தை ஹஜ்ஜதுல் இஸ்லாம் பாகிருல் ஹகீமி அவர்கள் தலைமையேற்று வழிநடத்துகின்றார். இவர் ஈராக்கிலிருந்து தப்பி இன்று ஈரானில் வாழ்கின்றார். ஈரானில் ஈராக்கிய இஸ்லாமியப் புரட்சிக்காய் போராடியவர்களும்அவர்களை ஆதரித்தவர்களுமானமக்கள் - அகதிகளாக வாழ்கின்றனர். ஈராக்கிய அகதிகள் தொகை பத்து இலட்சத்தையும் தாண்டி விட்டது. ஹஜ்ஜதுல் இஸ்லாம் ஹகீமி தனது நாட்டில் நடக்கின்ற கொடுமைகளையும்,

132
இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளையும் பட்டியல் போட்டுக் காட்டினார்.
அங்கு ஒரு புகைப்படக் கண்காட்சி கூட இடம் பெற்றது. “ஈராகிய சத்தாம் ஹாசைன் ஈரானிய மக்களுக்குச் செய்த கொடுமைகளை விட - தனது சொந்த ஈராக்கிய மக்களுக்குச் செய்த கொடுமைகள் குறைந்ததல்ல" எனும் இமாம் கொமய்னி அவர்களின் இறுதி சாஸன வரிகளை இன்று நான் இரை மீட்டிக் கொள்கின்றேன்.
நிகழ்ச்சி முடிந்து வர இரவு 2.30 ஆகிவிட்டது. ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அவர்களும் , இதே ஹோட்டலில் தான் தங்கியிருந்தார். லிப்டில் அவருடன் ஒன்றாகச் சென்றேன். அவருடன் அளவளாவவும், கைலாகு கொடுக்கவும் கிடைத்த பாக்கியம் என் வாழ்வில் மறக்க முடியாதது.

Page 72
16
பெப்ரவரி 10ம் தேதி, பத்து உதயங்களின் இறுதி நாள்.
அறையிலிருந்து ஹோட்டலின் முன் மண்டபத்திற்கு வந்தேன். பரபரப்பாக ஒரு செய்தி
"கடந்த இரவு டெஸ்புல் நகரம் ஈராக்கிய விமானப் படையினரால் தாக்கப்பட்டது. வங்கிக் கட்டிடம் உட்பட பல கட்டிடங்கள் சேதமாயின. இருபது பேர் ஷஹீதாகினர்.” இதுதான் செய்தி.
நாங்கள் மதிய போசனம் அருந்திய இராணுவ முகாமிற்கே இலக்குஅதன் எதிர்ப்புறத்தே உள்ளது சிதைந்த வங்கிக் கட்டிடம்.
என்னென்ன உணர்ச்சிகள் என் மனதில் தோன்றியிருக்கும்? ஈராக்கிய விமானங்களின் குறி தப்பினாலும் பிரச்சாரக் குறி தப்பவில்லை. இது வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கான பிரச்சார யுக்தியே என்று ஈரானிய நிபுணர்கள் கூறின்ர்.

34
இன்றைய நிகழ்ச்சிஈரானிய பாராளுமன்றத்திற்குச் செல்லல், "இஸ்லாமிய ஆலோசனைச் சபை' அல்லது மஜ்லிஸ் என்று அழைக்கப்படும் பாராளுமன்றத்தை நோக்கி எங்கள் பஸ் நகர்கின்றது.
தெஹ்ரான் சாலைகளுடே பஸ் ஊர்கின்றது. எங்களின் வழிகாட்டி இடங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். 965IT "Spy Den” – 2-stroyé Gsos, அமெரிக்காவின் தூதுவராலயம். அமெரிக்கத் தூதுவராலயத்தை ஈரானிய மக்கள் உளவுக்குகை என்றே அழைக்கின்றனர்.
இந்தத் தூதுவராலயம் உலகப் பிரசித்தி பெற்றது. தூதுவராலய ஊழியர்களை பணயமாகப் பிடித்த இமாமின் வழியைப் பின்பற்றும் மாணவர்களின் போராட்டம்இறுதியில், அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த கார்ட்டரின் தோல்வி. இவை பற்றிச் சற்று மீட்டுக் கொள்கின்றேன். இது "உயிர்த்தியாகிகள் சதுக்கம்." ஈரானிய விடுதலைப் போராட்ட காலங்களில் இவ்விடத்தில் வைத்து ஒரே நாளில் 15,000 பேர் ஷாவினால் கொல்லப்பட்டனர்.
இதோ ஒரு சந்தியில் ஒரு சிலையுள்ளது. முகத்தை நான் சுழித்துக் கொள்கின்றேன். இது என்ன?

Page 73
R
S
இஸ்லாமியப் புரட்சி நடந்த நாட்டில் இன்னும் சிலையுள்ளது? நான் வழிகாட்டியைக் கேட்டேன் அவர் விளக்கமளித்தார்.
"இது மறைந்த தத்துவக் கவிஞர் மெளலானா ரூமியுனுடையது. ஷாவின் காலத்தில் நிறுவப்பட்டது. ஷா தன் குடும்பத்தினரையன்றி யாராவது தலைவர்களை அவரது ஜாஹிலிய்யச் சிந்தனைப் போக்கில் மதித்துக் கெளரவித்ததென்றால் - " - ل&llگه
மெளலானா ரூமியைத்தான் இதைக் கூறவே நாம் சிலையை விட்டு வைத்துள்ளோம். விரைவில் உடைத்து விடுவோம்.”
இதோ பஸ் பாராளுமன்றத்தை அடைந்து விட்டது.
உள்ளே செல்கின்றோம். பார்வையாளர் காலரியில் உட்கார்கின்றோம்.
ரப்சன்ஜானி சபாநாயகர் ஆசனத்தில் இருக்கின்றார். அல்குர் ஆன் ஓதப்படுகின்றது. ஒரு பிரேரணை விவாதத்திற்கெடுத்துக் கொள்ளப்படுகின்றது.
உறுப்பினர்கள் பேசுகின்றனர். விளக்கம் கோருகின்றனர். ரப்சன்ஜானி அமைதியாகப் பதில் கூறுகின்றார்.

36
ஓர் உறுப்பினருக்கும் அவருக்கும் ஒரு பெரிய விவாதமே நடக்கின்றது.
அரசியலமைப்புச் சாஸனத்தைப் புரட்டுகின்றனர்.
அல்குர் ஆனைப் புரட்டுகின்றனர். இறுதியில் உறுப்பினர் ஏற்றுக் கொள்கின்றார். வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. பிரேரணை நிறைவேறுகின்றது.
முழு நிகழ்ச்சியுமே வீடியோ பண்ணப்பட்டு நாட்டு மக்களுக்கு ஒளிபரப்பாகின்றது. இது ஈரானிய அரசியலமைப்பின் 69வது விதந்துரைக்கு அமைவானது.
எங்கள் சார்பில் நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு சோதரர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
பாராளுமன்றத்தில் எங்களுக்கு சிற்றுண்டி கிடைத்தது. அங்கேயே தொழுதோம். ரப்ஸன்ஜானி தொழுகையை நடத்தினார்.
இரவு 8 மணி. இன்று பத்து உதயங்கள் தினங்களின் முடிவு நிகழ்ச்சி. ஆயதொல்லாஹ் அலி காமெய்னி-அப்போதைய ஜனாதிபதி

Page 74
இப்போதைய தலைவர் கலந்து கொண்டார்.
ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் தோற்றம்புரட்சிகரப் போராட்டங்கள்தலைமைத்துவம்-வெளிநாட்டு உள்நாட்டு சதிகள்அபிவிருத்தி-பாதுகாப்புஇவை பற்றி அவர் விரிவாக எடுத்துக் கூறினார்.
இறுதியில் "தமது நாட்டின் அழைப்பையேற்று வந்திருக்கும் அனைத்து விருந்தினர்கட்கும் தமதும், நாட்டினதும் சார்பில் நன்றிகள் உரித்தாகட்டும்’ என்றார்.
நிகழ்ச்சிகள் முடியுந் தறுவாய்க்கு வரும்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது
ஒரு சகோதரர்-எங்களுடன் வந்திருந்த விருந்தாளிகளில் ஒருவர் தமது இருக்கையிலிருந்தெழுந்து நேரடியாக மேடைக்குச் சென்றார். ஆயத்தொல்லாஹ் காமேனியிடம் ஏதேதோ பேசினார். இதோ மேடையிலிருந்து ஓர் அறிவிப்பு வருகின்றது. "இந்த டென்மார்க் சகோதரர் இஸ்லாத்தைத் தழுவ விரும்புகின்றார். இவர். அறிவிப்பு முடியவில்லை. அல்லாஹு அக்பர் கோஷம் வானையே பிளந்து விட்டது. அது நிச்சயம் டென்மார்க் வீதிகளில் எதிரொலிக்கும். டெஸ்புல் நகரமயானத்தில் அழுது கொண்டுஎன்னையும் அழவைத்த அதே கிறிஸ்தவ சோதரர். "லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ். '

122
குறுகிய கால யுத்தப்பயிற்சி இரகசியமாகத் தரப்பட்டது.
எல்லா முனைகளிலும் ஈராக்குப்படையினர் கனரக ஆயுதங்களுடன் அரணமைத்துள்ளனர். விமானங்கள் இருபத்து நாலு மணிநேரமும் வேவுபார்த்துக் கொண்டிருக்கின்றன.
ஈரானின் கையில் இருக்கும் கனரக ஆயுதங்களை நகர்த்த முடியாத நிலை, பெரிய வாகனங்கள், டாங்கிகள் நகர்த்தப்பட்டால் எதிரி உஷாரா கி விடுவான்.
இஸ்லாமியப் போராளிகள் பழமைக்குத் திரும்பினர். இருபது இருபத்தைந்து பேர் கொண்ட குழுவினர். கைகளில் சாதாரண துப்பாக்கிகள், ரொக்கெட் லோஞ்சர்கள். மண்வெட்டிகள். டெஸ்புல்-கொரம்ஷார் நெடுஞ்சாலைகொரம்ஷார் நோக்கிய பயணத்தில் வலப்பக்கம் அல்லது தேசப்படத்தில் வடக்குப் பக்கம் ஈராக்கியப் படை.
ஒவ்வொரு 100-150 யாருக்கும் ஒரு ரஷ்ய டாங்கி. ஈரானை நோக்கி 100 கிலோமீட்டருக்கு குறையாது.
இதோ கொரம்ஷார் மீட்பில் ஈரானியர் இலட்சம் பேர் தயார் நிலையில். நாற்பதாயிரம் முன்னனணியில் அறுபதாயிரம் பேர் ரிசர்வில்.

Page 75
123
20-25 பேர் கொண்ட குழுவினராய் பிரிந்தனர். ஒருவர் தலைவர். அவர் கையில் வாக்கி டோக்கி. இரவு தொடங்கி விட்டது. இதோ அவர்கள் நடக்கத் தொடங்கி விட்டனர்.
அதிகாலை வரை நடப்பர். மண்வெட்டிகளால் ஒவ்வொருவரும் ஒரு குழி தோண்டுவர். விடிவதற்குள் குழிக்குள் புகுந்து கொள்வர். காலை - ஒருவரும் இல்லை. ஈராக்கியர் நிம்மதியாய் இருப்பர்.
இரவு தொடங்கினால் இவர்கள் நடப்பர். குழி தோண்டுவர். தம்மை மறைப்பர். பகலில் ஒன்றுமே இல்லை.
இடையிடையே உணவு சப்ளை இரவிலேயே நடக்கும்.
வாக்கி டோக்கிகள் மூலம் தூரத்தை குழுக்கள் சரிசெய்து கொள்ளும். இவ்வாறு 5இரவுகள், 5 பகல்கள். இதோ கொரம்ஷார் நெடுஞ்சாலை அண்மித்து விட்டது. இரவும் வந்துவிட்டது. உத்தரவும் கிடைத்து விட்டது.
இவர்களின் மெஷின் கன்களும், லோஞ்சர்களும் தீப்பொறிகளைத் துப்ப -
எதிரியின் டாங்கிகள்
தீப்பிழம்பைக் கக்க -
மின்னாமல் முழங்காமல் போர்மழை பெய்கின்றது - ஒவ்வொரு டாங்கியை நோக்கியும் டாங்கிக் குழாயிற்குத் தப்பி உருளும் இருபது இருபத்தைந்து பேர். "

124
டாங்கிகளடியில் ஆகக் கூடியது ஐவர் - அறுவர். .
இலக்குகள் தவறினால் டாங்கி இவர்கட்கு. இலக்கு தவறாவிடின் டாங்கிகள் நெருப்பிற்கு.
தப்பிய டாங்கிகள் ஈராக்கியத் துருப்பினரை நோக்கிச் சுட - முகாமில் தூங்கிய ஈராக்கியர் ஒடஇவர்கள் துரத்த.
இரவு விடிந்து விட்டது.
கொரம்ஷார் வீதியில் மட்டும் முன்னூற்றி எண்பது டாங்கிகள் கைப்பற்றப்பட்டன. அன்றைய அதிரடித் தாக்குதலில் பதினையாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
யுத்தம் இப்போதுதான் ஆரம்பம். நூற்றி அறுபத்தோரோவது நாளிலிருந்து.
துயில் கொண்ட உலகம் விழித்துக் கொண்டது. செத்துப்போன ஐ.நா.சபை உயிர்த்தெழுந்து விட்டது கூட்டுச் சேர்ந்த நாடுகள் கூட்டுகளை உடைத்து சிலிர்த்தெழுந்து கொள்கின்றன.
இப்போதுதான் யுத்தம் ஆரம்பித்தது இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்
விமானங்கள் நியூயார்க்கிலிருந்து தெஹ்ரான் நோக்கிப் பறக்கின்றன. சமாதானப் புறாக்கள் இவ்வளவு நாள் எங்கிருந்தனவோ?

Page 76
உண்மையில் இவை புறாக்களல்ல. பிணந்தின்னும் கழுகுகள் புறாச் செட்டைக்குள் கழுகு, பசுத் தோலில் புலி.
ஈரான் உஷாராகிவிட்டது. வேஷதாரிகளின் கபடநாடகம் முடிந்து விட்டது.
இதோ நாங்கள் கொரம்ஷாரை நெருங்கி வந்து கொண்டிருக்கிறோம். இது ஒரு நகரா, இங்கு மக்கள் வாழ்ந்தார்களா? மண்குவியல்களும் இடிபாடுகளும்தான் மிச்சம் எங்களையும், ஆங்காங்கே செல்லும் இராணுவ ட்ரக்களையும் தவிர. காக்கைக்குக் கூட கொரம்ஷாரில் கடும் பஞ்சம்.
சுற்றிப் பார்க்கின்றோம். வீதிகளை மட்டு புல்டோசர்களால் வெளிசாக்கியுள்ளனர்
மீதமாயிருந்த-அல்லது ஓரளவுக்கு தப்பியிருந்த கட்டிடங்கள் - மூன்று.
ஒன்று ஒரு பள்ளி வாசல் - அரைவாசி தப்பியிருந்தது. இன்னும் இரு கட்டிடங்களில் இரண்டு மண்டப அறைகள்.
பள்ளியில் தொழுதோம். தப்பியிருந்த கட்டிடத்தில் சாப்பிட்டோம்.

126
கொரம்ஷாரின் இடிபாடுகளிடையே ஏதாவது ஞாபகப் பொருள் கிடைக்குமா? தேடினோம்.
ஜலீல் ஒரு குர்ஆன் பிரதியைக் கண்டெடுத்தார். நானொரு பிளாஸ்டிக் பூங்கொத்தை எடுத்துக் கொண்டேன். ஆனால் குண்டுகளின் கோதுகள், இரும்புத் துண்டங்கள் எடுப்பதானால் அள்ளிக் கொண்டு வரலாம்.
கொரம்ஷார் நகர் கைப்பற்றப் பட்டபோது இவ்வளவிற்கு அழிந்திருக்க வில்லையாம். அவர்கள் தோல்வியடைந்து ஒடும்போது ஒரேடியாக அழித்து விட்டார்களாம்.
அடுத்து அபதான் -
அபதான் என்றதுமே
பெட்ரோல் மணக்கும். அபதான் ஆலை உலகில் மிகப் பெரியது அது அப்படியே சுக்குநூறாகி விட்டது. (கடந்த வருடம் அது ஈரானிய நிபுணர்களால் செப்பனிடப்பட்டு உற்பத்தியைத் தொடங்கி விட்டதாம் அல்ஹம்துலில்லாஹ்.
நான்கு இலட்சம் பேர் வாழும்
நகர் அபதான். நாங்கள் போகையில் 25 ஆயிரம் பேர் மட்டில் மீளக் குடியேறியுள்ளனர். சிதைவுகளைச் சரிசெய்து வாழத் தொடங்குகின்றனர்.

Page 77
127
இத்தனைக்கும் நாம் நிற்குமிடம் எல்லைக்கு 5 கி.மீட்டர் தூரம்தான் என்று கூறியதுமே பகீரென்றது. என்றாலும் ஒரு தைரியம். இத்தனை இலட்சம் பேர் மாண்டொழிந்த நகரில் நாம் மரித்தால் தான் என்ன?
அபதானிலிருந்து சுலைமானியா நோக்கி அப்புறம் பயணமானோம். பார்க்குமிடமெல்லாம் யுத்த அழிவுகள். நோக்குமிடமெல்லாம் மண் குவியல்கள். முற்றாக அழிந்து போனபாதி சேதப்பட்ட
வீடுகள், கட்டிடங்கள்.
சீலைமானியாவிலிருந்து டெஸ்புல் நகருக்குச் செல்கின்றோம். மாலையாகி விட்டது. டெஸ்புல் நகரம் குசெஸ்தான் மாகாண தலைநகரம்.
அங்கேயே இரவு தங்க ஏற்பாடு. ஒரு மண்டபத்தில் அனைவரும்.
தெஹ்ரானில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்டெஸ்புல்லில் மண்டபம்,

15
பெப்ரவரி 9ம் திகதி. .
காலையிலேயே டெஸ்புல் நகர பெரிய பள்ளிவாசலுக்குச் செல்கின்றோம். அங்கு ஒரு நிகழ்ச்சி நடக்கின்றது.
டெஸ்புல் நகர கதீப் யுத்த அனர்த்தங்கள் பற்றி விவரிக்கின்றார். யுத்தத்தில் ஷஹீதான டெஸ்புல் வாசிகள்அரசாங்க உதவிகள், புனருத்தாரண நடவடிக்கைகள் அனைத்தைப் பற்றியும்
அறிக்கை தந்தார்.
அரசாங்க நிருவாக இயந்திரத்தில் ஆலிம்களின் பங்களிப்பை அறிந்து ஆச்சரியமடைகின்றோம்.
அடுத்துடெஸ்புல் நகர மயானம். இது இன்னுமொரு, சின்ன பெஹஸ்தி-அஸ்-ஸஹரா
மயானத்தைச் சுற்றிப் பார்க்கின்றோம். பெஹஸ்தி- அஸ்-ஸஹரா போல் அதே உயிர்த் துடிப்புஇங்கு உணர்வுகளை ஜனனிக்கின்றனர்.

Page 78
129
எங்களுடன் வந்த ஒரு சோதரர் அழுகின்றார். தேம்பித் தேம்பி அழுகின்றார். டென்மார்க்கைச் சேர்ந்தவர். டாக்டர்; மதத்தால் கிறிஸ்தவர். அவரால் அழுகையினைக் கட்டுப் படுத்த முடியவேயில்லை.
ஒவ்வொரு கல்லறையையும் அதிலுள்ள படங்களையும்கூர்மையாகப் பார்க்கின்றார். அழுது புலம்புகின்றார்.
அவரையே பார்த்துக் கொண்டிருந்த என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. நான் அப்படியே பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டேன். தூங்கினேனா - மயங்கிப் போனேனா? பஸ் புறப்பட்டபோது தான் விழித்தேன்.
டெஸ்புல் நகர இராணுப முகாமொன்றில் பகல் சாப்பாடு. அந்த இராணுவ முகாம் வாசலில் ஈராக்கினால் வீசப்பட்ட குண்டுகளின், ராக்கெட்டுகளின் சிதைந்த துண்டங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.
டெஸ்புல் நகரில் மட்டுமின்றி சென்ற இடமெல்லாம்ஒரு பக்கம் யுத்தத்தினால் அழிந்த பகுதிகளையும் மறு புறத்தில் புனருத்தாரண நடவடிக்கைகளையும் கண்டோம்.

130
பிற்பகல் மீண்டும் நாங்கள் விமானமேறி தெஹ்ரான் வந்து சேர்ந்தோம்.
இரவு 8 மணிக்கு ஒரு நிகழ்ச்சி இருந்தது.
“RFJmés இரவு'.
“ஈராக் இஸ்லாமியப் புரட்சிக்கான உயர் கவுன்ஸில்" எனும் அமைப்பு இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தது.
இதன் தலைவரும் ஈராக்கின் பிரபல மார்க்க அறிஞருமான ஹுஜ்ஜதுல் இஸ்லாம் பாகிருல் ஹகீமி சிறப்பு விருந்தினர்.
ஈராக்கில் ஹகீமி குடும்பம் பிரபல்யமானது. ஹாஜ்ஜதுல் இஸ்லாம் பாகிருல் ஹகீமியின் தந்தை ஆயதொல்லாஹ் மொக்ஸினுல் ஹகீம். இவரே ஈராக்கிய இஸ்லாமியப் போராட்டத் தலைவர். இவர் சத்தாம் ஹாசைன் அரசினால் கொல்லப்பட்டார்.
இவருக்குப் பிறகு இவரது மூத்த புதல்வர் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் மெஹ்தி ஹகீமி புரட்சித் தலைவரானார். இவரும் பாத் சோஷலிஸக் கொள்கையுடைய ஈராக்கிய அரசினால் கொல்லப்பட இரண்டாவது புதல்வர் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் யூசுப் ஹகீமி தலைவரானார். இவரும் சிறிது காலத்துள் கொல்லப்பட்டார்.

Page 79
131
இவருக்குப் பிறகு ஆயத்தொல்லாஹ் பாகிர் சத்ர் எனும் உலகப் பிரசித்தி பெற்ற ஆலிம் தலைவரானார். இவர் இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வல்லவர். இவரின் மிகப் பிரபலமான நூலாகிய "இக்திஸாதுனா" பல்வேறு பல்கலைக் கழகங்களில் பாட நூலாய் உள்ளது. மதினாப் பல்கலைக் கழகம் உட்பட.
இவரையும், இவரின் அருமைத் தங்கையார் பிந்துல் ஹரதாவையும் ஈராக்கிய அரசு கைது செய்தது. மர்மமாக அவர்களைக் கொலை செய்தது.
ஹகீமி குடும்பத்தில் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். பாகிர் சத்ரின் குடும்பத்தினர் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
அதன் பிறகுதலைவரின்றித் தத்தளித்த இயக்கத்தை ஹஜ்ஜதுல் இஸ்லாம் பாகிருல் ஹகீமி அவர்கள் தலைமையேற்று வழிநடத்துகின்றார். இவர் ஈராக்கிலிருந்து தப்பி இன்று ஈரானில் வாழ்கின்றார். ஈரானில் ஈராக்கிய இஸ்லாமியப் புரட்சிக்காய் போராடியவர்களும்அவர்களை ஆதரித்தவர்களுமானமக்கள் - அகதிகளாக வாழ்கின்றனர். ஈராக்கிய அகதிகள் தொகை பத்து இலட்சத்தையும் தாண்டி விட்டது.
ஹஜ்ஜதுல் இஸ்லாம் ஹகீமி . தனது நாட்டில் நடக்கின்ற கொடுமைகளையும்,

132
இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளையும் பட்டியல் போட்டுக் காட்டினார்.
அங்கு ஒரு புகைப்படக் கண்காட்சி கூட இடம் பெற்றது. "ஈராகிய சத்தாம் ஹாசைன் ஈரானிய மக்களுக்குச் செய்த கொடுமைகளை விட - தனது சொந்த ஈராக்கிய மக்களுக்குச் செய்த கொடுமைகள் குறைந்ததல்ல” எனும் இமாம் கொமய்னி அவர்களின் இறுதி சாஸன வரிகளை இன்று நான் இரை மீட்டிக் கொள்கின்றேன்.
நிகழ்ச்சி முடிந்து வர இரவு 2.30 ஆகிவிட்டது. ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அவர்களும் இதே ஹோட்டலில் தான் தங்கியிருந்தார். லிப்டில் அவருடன் ஒன்றாகச் சென்றேன். அவருடன் அளவளாவவும், கைலாகு கொடுக்கவும் கிடைத்த பாக்கியம் என் வாழ்வில் மறக்க முடியாதது.

Page 80
16
பெப்ரவரி 10ம் தேதி. பத்து உதயங்களின் இறுதி நாள்.
அறையிலிருந்து ஹோட்டலின் முன் மண்டபத்திற்கு வந்தேன். பரபரப்பாக ஒரு செய்தி
"கடந்த இரவு டெஸ்புல் நகரம் ஈராக்கிய விமானப் படையினரால் தாக்கப்பட்டது. வங்கிக் கட்டிடம் உட்பட பல கட்டிடங்கள் சேதமாயின. இருபது பேர் ஷஹீதாகினர்." இதுதான் செய்தி.
நாங்கள் மதிய போசனம் அருந்திய இராணுவ முகாமிற்கே இலக்குஅதன் எதிர்ப்புறத்தே உள்ளது சிதைந்த வங்கிக் கட்டிடம்.
என்னென்ன உணர்ச்சிகள் என் மனதில் தோன்றியிருக்கும்? ஈராக்கிய விமானங்களின் குறி தப்பினாலும் பிரச்சாரக் குறி தப்பவில்லை. இது வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கான பிரச்சார யுக்தியே என்று ஈரானிய நிபுணர்கள் கூறினர்.

134
இன்றைய நிகழ்ச்சிஈரானிய பாராளுமன்றத்திற்குச் செல்லல், "இஸ்லாமிய ஆலோசனைச் சபை' அல்லது மஜ்லிஸ் என்று அழைக்கப்படும்
பாராளுமன்றத்தை நோக்கி எங்கள் பஸ் நகர்கின்றது.
தெஹ்ரான் சாலைகளூடே பஸ் ஊர்கின்றது. எங்களின் வழிகாட்டி இடங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். இதோ "Spy Den” - உளவுக் குசை, அமெரிக்காவின் தூதுவராலயம். அமெரிக்கத் தூதுவராலயத்தை ஈரானிய மக்கள் உளவுக்குகை என்றே அழைக்கின்றனர்.
இந்தத் தூதுவராலயம் உலகப் பிரசித்தி பெற்றது. தூதுவராலய ஊழியர்களை பண்யமாகப் பிடித்த இமாமின் வழியைப் பின்பற்றும் மாணவர்களின் போராட்டம்இறுதியில், அமெரிக்க ஜனாதிபதியாய் இருந்த கார்ட்டரின் தோல்வி. இவை பற்றிச் சற்று மீட்டுக் கொள்கின்றேன். இது "உயிர்த்தியாகிகள் சதுக்கம்.” ஈரானிய விடுதலைப் போராட்ட காலங்களில் இவ்விடத்தில் வைத்து ஒரே நாளில் 15,000 பேர் ஷாவினால் கொல்லப்பட்டனர்.
இதோ ஒரு சந்தியில் ஒரு சிலையுள்ளது. முகத்தை நான் சுழித்துக் கொள்கின்றேன். இது என்ன?

Page 81
R
S
இஸ்லாமியப் புரட்சி நடந்த நாட்டில் இன்னும் சிலையுள்ளது? நான் வழிகாட்டியைக் கேட்டேன் அவர் விளக்கமளித்தார்.
"இது மறைந்த தத்துவக் கவிஞர் மெளலானா ரூமியுனுடையது. ஷாவின் காலத்தில் நிறுவப்பட்டது. ஷா தன் குடும்பத்தினரையன்றி யாராவது தலைவர்களை அவரது ஜாஹிலிய்யச் சிந்தனைப் போக்கில் மதித்துக் கெளரவித்ததென்றால் - அது
மெளலானா ரூமியைத்தான் இதைக் கூறவே நாம் சிலையை விட்டு வைத்துள்ளோம். விரைவில் உடைத்து விடுவோம்.'
இதோ பஸ் பாராளுமன்றத்தை அடைந்து விட்டது. ” உள்ளே செல்கின்றோம். பார்வையாளர் காலரியில் உட்கார்கின்றோம்.
ரப்சன்ஜானி சபாநாயகர் ஆசனத்தில் இருக்கின்றார். அல்குர்ஆன் ஓதப்படுகின்றது. ஒரு பிரேரணை விவாதத்திற்கெடுத்துக் கொள்ளப்படுகின்றது.
உறுப்பினர்கள் பேசுகின்றனர். விளக்கம் கோருகின்றனர். ரப்சன்ஜானி அமைதியாகப் பதில் கூறுகின்றார்.

36
ஓர் உறுப்பினருக்கும் அவருககும் ஒரு பெரிய விவாதமே நடக்கின்றது. அரசியலமைப்புச் சாஸனத்தைப் புரட்டுகின்றனர்.
அல்குர் ஆனைப் புரட்டுகின்றனர். இறுதியில் உறுப்பினர் ஏற்றுக் கொள்கின்றார். வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. பிரேரணை நிறைவேறுகின்றது. முழு நிகழ்ச்சியுமே வீடியோ பண்ணப்பட்டு நாட்டு மக்களுக்கு ஒளிபரப்பாகின்றது. இது ஈரானிய அரசியலமைப்பின் 69வது விதந்துரைக்கு அமைவானது.
எங்கள் சார்பில் நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு சோதரர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
பாராளுமன்றத்தில் எங்களுக்கு சிற்றுண்டி கிடைத்தது. அங்கேயே தொழுதோம். ரப்ஸன்ஜானி தொழுகையை நடத்தினார்.
இரவு 8 மணி. இன்று பத்து உதயங்கள் தினங்களின் முடிவு நிகழ்ச்சி. ஆயதொல்லாஹ் அலி காமெய்னி-அப்போதைய ஜனாதிபதி

Page 82
37
இப்போதைய தலைவர் கலந்து கொண்டார்.
ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் தோற்றம்புரட்சிகரப் போராட்டங்கள்தலைமைத்துவம்-வெளிநாட்டு உள்நாட்டு சதிகள்அபிவிருத்தி-பாதுகாப்புஇவை பற்றி அவர் விரிவாக எடுத்துக் கூறினார்.
இறுதியில் "தமது நாட்டின் அழைப்பையேற்று வந்திருக்கும் அனைத்து விருந்தினர்கட்கும் தமதும், நாட்டினதும் சார்பில் நன்றிகள் உரித்தாகட்டும்’ என்றார்.
நிகழ்ச்சிகள் முடியுந் தறுவாய்க்கு வரும்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்ததுஒரு சகோதரர்-எங்களுடன் வந்திருந்த விருந்தாளிகளில் ஒருவர் தமது இருக்கையிலிருந்தெழுந்து நேரடியாக மேடைக்குச் சென்றார். ஆயத்தொல்லாஹ் காமேனியிடம் ஏதேதோ பேசினார். இதோ மேடையிலிருந்து
ஓர் அறிவிப்பு வருகின்றது. "இந்த டென்மார்க் சகோதரர் இஸ்லாத்தைத் தழுவ விரும்புகின்றார். இவர். அறிவிப்பு முடியவில்லை. அல்லாஹு அக்பர் கோஷம் வானையே பிளந்து விட்டது. அது நிச்சயம் டென்மார்க் வீதிகளில் எதிரொலிக்கும்.
டெஸ்புல் நகர
மயானத்தில் அழுது கொண்டுஎன்னையும் அழவைத்த அதே கிறிஸ்தவ சோதரர். "லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ். '

138 வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் திருத்தூதர். ஆயத்தொல்லாஹ் காமெய்னி அவர்கள் இந்த ஏகத்துவ விசுவாச பிரகடனத்தைச் சொல்லிக் கொடுக்க அவர் திரும்பிக் கூறுகின்றார். தக்பீர் ஒலி. அதிர்கின்றது. காமனி அவர்கள் அச்சோதரரை கட்டியணைக்கின்றார். இந்தக் காட்சி அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சிகரம் வைத்தாற் போன்றாகி விட்டது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!

Page 83
7ן
இன்று 11ம் திகதிபத்து உதயங்களின் பின்பைய விடியல்-குடியரசுதினம். இஸ்லாமியக் குடியரசு தினம். "இன்கிலாப்-அஸாதி-ஜும்ஹஜிரியா” தொடரின் வெற்றி நாள்.
இதோ நாங்கள் "அஸ்ாதி சதுக்கத்தை’- சுதந்திர சதுக்கத்தை நோக்கி பயணம் செல்கின்றோம். அஸாதி சதுக்கம். (அட்டையில் உள்ளது) அங்குதான் என்வாழ்வில் நான் கண்டஅங்கன்றி எங்குமே காணமுடியாதமக்கள் கடலை - இந்துமாக்கடலா - பசிபிக்கா அத்திலாந்திக்கா - வடகடலா - தென்கடலா அனைத்துமே ஒரு கடலாய். சனசமுத்திரம். உலகில் எங்குமே காணமுடியாத சனசமுத்திரம். 's
எங்களுக்கென விசேடமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் V− அமர்ந்திருந்த நாங்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அங்கு ஒரு மேடை. பைத்துல் முகத்திஸ் போல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கேஹஜ்ஜதுல் இஸ்லாம் அஹ்மத் கொமய்னி இமாமின் மகன் - நின்று கொண்டு இமாம் கொமய்னி அவர்களின் மக்களுக்கான

140
செய்தியை வாசிக்கின்றார். இரண்டரை மணிநேரம் செய்தி வாசிக்கப்பட்டது. மக்கள் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இடையிடையே தக்பீர் சொன்னார்கள். ஸலவாத் கூறினார்கள். கோஷங்களிட்டார்கள். அழுதார்கள். சிரித்தார்கள்.
அந்த இமாமின் செய்தியை வாசிக்கும் போதே இவ்வளவு உணர்ச்சிப் பிரவாகம் பொங்கினால்அவரே நேரடியாகப் பேசினால். ஒ. நினைக்கவே நெஞ்சு படபடக்கின்றது.
அடுத்து
சுலோகங்கள் அமைச்சர். கூடியிருந்த மக்கள் தெறபற்க ஆகாய விமானப் படை5 கணக்கெடுப்பின் படி 25 இலட்சம்பேர். அம்மாடியோவ். சுலோகங்கள் கோஷிக்கையில். கோஷம். எதிரொலி. கோஷம். எதிரொலி. இந்த உலகே அதிரும். அதன் பின்னால் விமானங்களின் வீரசாகச விளையாட்டுக்கள்பாரசூட் வீரர்களின் ஆகாயக் குதிப்புஇராணுவத்தினரின் அணிநடை. இவையாவும் முடிந்த பின் "பாஸிஜ்" எனப்படும் மக்கள் தொண்டர் படையினரின் அணிவகுப்பு இடம்பெற்றது. இந்த அணிவகுப்பில் உலக சம்பிரதாயங்கள் இருக்கவில்லை. பதினைந்து வயது முதல் எண்பது வயது வரைகு “ளமானவர் - உயரமானவர்

Page 84
41
குனிந்தவர்-நிமிர்ந்தவர் அனைவருமே கலந்து சென்றனர்.
இராணுவ அணிவகுப்பென்றால் இயந்திரமயமாகவே இருக்கும். இது ஒரு வித்தியாசமான அணிவகுப்பாய் இருந்தது.
இமாம் கொமய்னி அவர்கள் பைத்துல் முகத்தஸ் மீட்பினை முன்னிறுத்தி அமைத்த
இருநூறு லட்சம்பேர் படையினரே பாஸிஜ் தொண்டர்கள்.
உலகின் மேற்கத்திய - கிழக்கத்திய சம்பிரதாயங்களையெல்லாம் நிராகரித்த மாபெரும் தலைவரின் தொண்டர்கள்.
இவர்களே எம்மை அதிகம் கவர்ந்தவர்கள்.

18
இன்று 12ம் திகதி பெப்ரவரி மாதம். பத்து உதயங்களையும்அந்த விடியலையும் கண்டு விட்டோம். உத்தியோக பூர்வ நிகழ்ச்சிகள் யாவும் முடிந்து விட்டன.
இனி சுயாதீனமாக நகர்வலம் போக தீர்மானித்துள்ளோம்.
காலை - ஈரான் மத்திய வங்கிக்குச் சென்றோம். வங்கியாளரான நவாஸ்நானா இஸ்லாமிய வங்கி முறைபற்றி அறிய வேண்டும் என்றார். அதுபற்றி விபரங்களை எடுத்துக் கொண்டு ஹோட்டல் திரும்பினோம்.
மீண்டும்-பின்னேரம் எங்களது வழிகாட்டி ஹமீதின் வீட்டிற்குச் சென்றோம். ஹமீதின் வீடு ஒரு அபார்ட்மென்டில் உள்ளது. சின்ன வீடு.
அவர் திருமணம் முடித்து நான்காவது மாதம். என்னைப் போலவே,
அவருக்கு மாதம் 45,000 ரியால் சம்பளம. வீட்டுவாடகைக்கு 22,000 ரியால் போய்விடும். மீதியில் எளிமையான ஒரு வாழ்க்கை.

Page 85
143
அவரது மனைவி எங்களிடம் யுத்த அனுபவங்கள் பற்றிக் கேட்டார்.
யுத்தப் பிரதேசங்களில் மிகப் பரிச்சயப்பட்டவர் போல் பேசினார்.
அவர் யுத்த முனையில் ஆறுமாதங்கள் முதலுதவித் தொண்டராகப் பணியாற்றினாராம்.
விடைபெற்று வெளியே வரும்போது காணாத என் மனைவிக்குத் தன் கனிவான பரிசாய் கைவேலைப்பாடு ஒன்றைத் தந்தார்.
இரவுஹோட்டலின் கிழக்கு டவரிலுள்ள புரட்சிக் காவல் படையினரைச் சந்திக்கச் சென்றேன் சகோதரர் ஜலீலுடன்,
அது ஒரு வினோதமான அனுபவம். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நாம் தங்கியதோ விசாலமான அறைகளில்,
அவர்கள் சின்னச் சின்ன அறைகளில் பத்துப் பதினைந்து பேர் தங்குகின்றனர். பெரும்பாலானோர் யுத்த முனைகளில் இருந்து திரும்பியவர்கள். புரட்சிக் காலங்களில்
போராடியவர்கள்.
S9y.
"உங்களின் தலைவர் யார்” என நான் கேட்டேன்.

144
நான்தான் தலைவர் - ஒருவர் நான்தான் தலைவர் - இன்னொருவர்.
அவர்கள் சொன்னார்கள். எங்களில் தலைவர் என்றொருவரும் கிடையாதுஇமாமின் ஆணை எதுவோ அதனை நிறைவேற்றுகின்றோம்.
“ஏனெனில் இமாமின் ஆணை என்றுமே இஸ்லாத்திற்கெதிராய் இருந்ததில்லை. இமாமின் சீரிய தலைமை மட்டும் இல்லாதிருப்பின் நாங்கள் சீரழிந்துவிடுவோம்.”
என்றார் ஒருவர். முஜாஹிதீன் கல்க் ஒர்கனைசேஷன் எனும் கம்யூனிஸ் இயக்கம் புரட்சிக் காவலர்களுக்கெதிராய் செய்த காட்டு மிராண்டித்தனங்களை விபரித்தனர்.
இது சம்பந்தமான வீடியோ படம் ஒன்றையும் போட்டுக் காட்டினர்.
புரட்சிக்குப் பின்பு தெஹ்ரான் மற்றும் ஏனைய நகரங்களில் குண்டுகள் வெடிப்பதும்புரட்சிக் காவலர் படையினர் காணாமல் போவதும் சாதாரண நிகழ்ச்சிகள். முனாபிசீன்கள் - நயவஞ்சகர்கள் என ஈரானிய மக்களால் "செல்லமாய்” அழைக்கப்படும் MKO இயக்கத்தினர் தான்

Page 86
இதன் சூத்திரதாரிகள் என்பதை அறிந்து கொண்ட கதை மிகவும் சுவாரசியமானது.
முனாபிகின்களை மக்களே பிடித்து காவலர்களிடம் ஒப்படைப்பது வழக்கம்.
ஒருநாள் ஒரு புரட்சிக் காவலர்-சிவிலில் வீதியில் நடந்து கொண்டிருக்கின்றார்.
அவ்வழியே ஒரு ஜீப் வருகின்றது. அதில் சில புரட்சிக் காவலர்கள் வருகின்றனர்.
நடந்து வருபவரை அவர்கள் கண்டதுமே "முனாபிகின்-முனாபிகின்' என்று கூச்சலிடுகின்றனர்.
இவர் நடக்க விருக்கும் காட்சியைக் கற்பனை பண்ணியபடி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒடுகின்றார்.
பொதுமக்கள் இவரைப் பிடித்துக் கொள்கின்றனர். வருகின்ற காவலர்களிடம் ஒப்படைக்கத் தயாராகுகையில் "என்னை இவர்களிடம் நேரடியாக ஒப்படைக்காதீர்கள். புரட்சிக் காவலர் படை பணிமனையில் ஒப்படையுங்கள்அல்லாஹ்வுக்காக" என்று அவர் கெஞ்சுகின்றார்.
பொதுமக்களும் அதனை ஏற்றுக்கொண்டு வந்த காவலர்களை பணிமனைக்குப் போக அழைத்தனர். வந்தவர்களோ கம்பி நீட்டி விட எத்தனிக்க

146 அவர்களையும் மக்கள் பிடித்துக் கொள்கின்றனர். அனைவரையும் பணிமனையில்
ஒப்படைத்த போதுதான் "குட்டு' வெளியானது.
காவலர்களாய் ஜிப்பில் வந்தவர்கள் காவலர்களல்லர் - நயவஞ்சகர்கள்.
அவர்களை விசாரித்தால் எல்லாச் சதியுமே அம்பலமானது.
gūUiguras முனாபிகின்கள் ஆயிரக்கணக்கான நிஜக் காவலர்களைக் கொன்ற கதையும்கொல்லவுள்ள திட்டமும் அம்பலமாகின்றன.
இன்னுமொரு நாள்ஒரு விவசாயி தனது வயலினுள் வேலை செய்து கொண்டிருக்கிறார். நேரம் மாலை. இருட்டிக் கொண்டிருக்கின்றது. திடீரென ஒரு ஜீப் அவ்விடத்திற்கு வருகின்றது. அதிலிருந்து நான்கு புரட்சிக் காவலர்கள் இறங்குகின்றனர். இந்த விவசாயி வரம்பிற்குள் ஒளிந்து கொள்கின்றார். நடப்பவற்றைப் பார்க்கின்றார். இதோ பொலித்தீன் பைகளில் இருந்த மூன்று பிணங்களை அவர்கள் இறக்கி குழி தோண்டிப் புதைத்தனர். ஜீப் உறுமிக் கொண்டு சென்று விட்டது. இந்த விவசாயியால் பொறுக்க முடியவில்லை. இஸ்லாமியப் புரட்சிக் காவல் படையினர்

Page 87
147
இப்படிச் செய்தால்.
என்ன அர்த்தம்.? குற்றவாளியைத் தண்டிக்கும் முறை இதுதானா..? இஸ்லாமியப் புரட்சி இதற்கு உடன்பட்டால் அதனுடன் நான் முரண்படவேண்டும்.
இதே சிந்தனையுடன் அவர் புரட்சிக் காவலர் படைப் பணிமனைக்குப் போய் ரகளை செய்தார். கூக்குரலிட்டார்.
அங்கிருந்தவர்களோ தமக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது என்று கை விரித்தனர். இவரையும் கூட்டிக் கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைகின்றனர்.
தேடுகின்றனர். அந்தோ . மூன்று இஸ்லாமியப் புரட்சிக் காவல் படையினர். விசாரணை தொடர்கின்றது
ஒரு நாள்விடிவதற்குள்ளாக முனாபிகின்கள் கைது செய்யப்படுகின்றனர்.
O O O
கம்யூனிஸம் விடுதலை பெற்றுத் தருமாம். கம்யூனிஸ்டுகள் . கொலைகள் செய்வார்களாம்.
இது. மார்க்ஸிஸமா. ? லெனினிஸமா..? கம்யூனிஸமா..?
பாட்டாளி சர்வாதிகாரம் தனிமனிதச் சர்வாதிகாரமானது. கம்யூனிஸம் என்றும் தனிமனிதப் பழிவாங்கலையே தூய

148
போராட்டம் எனக் கொள்கின்றது. அன்றியும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கைத்தர ஒம்பலுக்கோ அன்றி சமூகநீதியின் மேம்பாட்டிற்கோ உழைக்க வில்லை.
அதனால்தான் அது
செத்து விட்டது அல்லது செத்துக் கொண்டிருக்கின்றது.

Page 88
19
பெப்ரவரி - 13,14.
தெஹ்ரான் நகர வீதிகளில்தெஹ்ரான் நகரச் சிறு சேரிகளில்நெரிசலான குடியிருப்புகளில்சுற்றிப் பொழுது போக்கினோம்.
தெஹ்ரான். 1978 வரை. பூலோகச் சொர்க்கம்இன்னுமொரு பாரீஸ்,
மது-மங்கை-குது.
கிளப்டான்ஸ்.
போதைப் பொருட்கள், சங்கீதம் சீரழிக்கும் சினிமா
செக்ஸ் புத்தகங்கள்இன்று அது மாறியே விட்டது. எங்குபார்க்கினும் முழுப் பர்தாவுடன் பெண்கள். பர்தா பெண்களின் அடிமைத் தனத்தின் சின்னம் என்று பிதற்றுபவர்கள் ஒருமுறை தெஹ்ரானுக்குச் சென்று வந்தால்அது பெண்விடுதலையின் - பெண்ணுரிமையின் சின்னமாக இருப்பதை அறிந்து கொள்வார்கள்.
டாக்டராக - என்ஜினீயராகஆசிரியையாக - விஞ்ஞானியாகதொழிலாளியாக - விவசாயியாகஎம்பியாக - தொழிற்சங்கவாதியாகபோராளியாக - வங்கியாளராக 7

150
பெண்கள் கருமமாற்றுவதை அங்கு காணலாம். அங்கங்களைக் காட்டிகாம உணர்ச்சியைத் தூண்டுவதுதான் பெண்ணுரிமை என்றால்அது எங்களுக்கு வேண்டாம் என்கின்றது ஈரானியப் பெண் சமூகம்.
தெஹ்ரானின் தெற்குப் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி. அங்கு சென்றால் வாழ்பவர்களில் அனேகம் பேர் கூலித் தொழிலாளிகள். விசாரித்துப் பார்க்கின்றோம்.
அவர்களில் பெரும்பான்மையினர் கிராமப் புறங்களைச் சார்ந்தோர்.
ஷாவின் காலத்தில் அமெரிக்க உணவுப் பொருட்கள் தாராளமாக இறக்குமதி செய்யப்பட்டன. விவசாய அபிவிருத்திக்கு கவனம் செலுத்தப்படவில்லை. -- உற்பத்திச் செலவோ அதிகம் உள்ளூர் விளைபொருட்கள் சந்தையில் விலை அதிகம். வெளிநாட்டுச் சரக்கு மிக இலாபம்.
விவசாயத்தைக் கைவிட்டு விட்டு நகரத்தை நோக்கி வந்துவிட்டார்களாம்.
இப்போது அரசு கிராமப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகின்றது.
கடன் வழங்குகின்றது. நீர்ப்பாசனத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. எனவே மீண்டும் நாங்கள்

Page 89
கிராமங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றோம் என்று விளக்கினார்ஒரு பெரியவர்.
ஈரான் வந்து பதினெட்டு நாட்களாகி விட்டன. ஊரை விட்டுக் கிளம்பி இருபது நாட்களாகி விட்டன. ஆனால். இன்னும் அந்த "வீட்டுநோய்’ பிடிக்கவில்லை. ஒரேயொரு விடயம் பாக்கிஅதையும் பார்த்து விட்டால் பயணம் நிறைவுறும்.
9Jے
இந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மாமனிதர்அடக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிக்கீற்று பழமைவாய்ந்த இஸ்லாத்தினால் இந்தயுகத்திலும் புரட்சி செய்யமுடியும் என்று பறைசாற்றிய அந்தத் தலைவர் இமாம் கொமய்னி அவர்களின் சந்திப்பு.
இத்தனை நாள் ஈரான் அனுபவத்தின் எல்லையற்ற மகிழ்ச்சி-ஆதங்கம்-எதிர்பார்ப்புபடிப்பினை அனைத்துமே இந்த மாமனிதரைக் காணாதுவிடின் பூரணமடையா. இது என் கருத்து.
“டெஸ்புல்" நகரம் தாக்கப்பட்டது முதல் யுத்தம் உக்கிரமடைந்து விட்டது. இமாமவர்கள் யுத்த விடயங்களைக் கவனிக்கின்றார். இமாமுடனான உங்கள் சந்திப்பை ஏற்பாடுசெய்ய இயலாமையில் உள்ளதற்காக வருந்துகின்றோம். எங்களை மன்னிப்பீர்களாக!”

152
இந்த அறிவிப்பு வரும் என்று நாம் எதிர்பார்க்கவேயில்லை. இடிந்து போய் விட்டேன். அன்றிரவு எனக்கு விடியாமலே போய் விட்டது.
இம்முறை போகட்டும்
இமாமவர்களின் முகத்தை வாழ்வில் என்றாவதொரு முறை கண்டேயாக வேண்டும் என்று மனதில் கறுவிக் கொண்டு தூங்கச் செல்கின்றேன்.

Page 90
20
இன்று 15ம் திகதி. நாங்கள் ஈரானில் இருந்து புறப்பட வேண்டிய நாள்.
இதோ விடைபெறல் படலம்
தொடங்குகின்றது. மனதில் ஒரு சுமையுடன். நிறைவென்ற சுமையுடன் விடை பெறுகின்றேன்.
புனித கொம் நகரமே!- இமாமின் பொற்பாதங்கள் பதிந்த புனித மண்ணே! போய் வருகின்றேன்.
கொரம் ஷார் நகரமே! - தற்காப்பு போரின் உறைவிடமே போய் வருகின்றேன் சம்மாந்துறையான் விடைகொடு!
டெஸ்புல் நகரே
டெஸ்புல் நகர மயானமே! இஸ்லாமியரின் எண்ணிக்கையை ஒன்றினால் கூட்டிய இனிய மண்ணே!
விடை கொடு
போய் வருகின்றேன்.
அடக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியான அசாதி சதுக்கமே! தியாகத்தின் பிறப்பிடமான ஷாஹதாக்கள் சதுக்கமே!

154
பெஹஸ்தி அஸ் ஸஹராவே விடை கொடுங்கள். போய் வருகின்றேன்.
இந்துமாக் கடலின் தென்கோடித் தீவின் தென்பகுதிக் கிராம இளைஞன்கேட்டறிந்தவற்றுடன்
வந்தான்கண்டறிந்து போகின்றான். விடை கொடுங்கள்!
போய் வர!
எங்கோ இருக்கும் சம்மாந்துறைக் கிராமத்தின் இந்தச் சின்னமனிதனுக்குஇத்தனை கவுரவம் தந்த ஈரானிய மக்களே! என்னினிய சோதரர்களே! விடைகொடுங்கள்.
ஆசைப்பட்டும் பேச பாஷை புரியாமல் தவித்த அந்த பெஹஸ்தி அஸ் ஸஹ்ராவின் வீரச் சோதரியே! உன்னை நான் மறக்கமாட்டேன்! மானசீகமாய் விடைகேட்கின்றேன் விடைகொடு அம்மா!
ஈரான் தேசத்து மரங்களே!
கொடிகளே! செடிகளே! மலர்களே! மலைகளே!நதிகளே! ஏனைய நகர்களே! பெப்ரவரி மாதப் பணியே!
கார்களே! ரெயில்களே!
உங்களை யெல்லாம் நான்

Page 91
காதலிப்பவன் தான்காதலின் வெளிப்பாட்டைக் காட்டவில்லை இங்கு.
காரணம்நீங்கள் வாழும் நாட்டையும், இம்மண்ணின் மைந்தர்கள் பற்றியும் சொல்வதற்கு இவ்வுலகில் ஆட்பஞ்சம்.
காதலை இயற்கைக் காட்சிகளை நிறைத்துக் கவிபுனையும் கவிஞர்கள்மோதலை, மோகத்தை இறைத்துக் கதையெழுதும் எழுத்தாளர்கள் நிறைந்து விட்ட இப்பூவுலகில்நானும் உங்களைப் பற்றி எழுதவேண்டுமா? என எண்ணி விட்டேன்.
மாமனிதன் வாழும் நாட்டில் நீங்கள் இருப்பதே பெருமைதான். மன்னித்து விடைகொடுங்கள்.
காணாத என்மனைவிக்கு நினைவுப் பரிசு தந்த ஹமீதின் மனைவியே! என்னைச் சோதரனாய் எண்ணிப் பணிவிடை செய்த பர்விஸே! ஒட்டி ஒட்டி உதவிகள் செய்த வழிகாட்டி ஹமீதே போய் வருகின்றேன்.
காணாமலே போய் விட்ட இமாமே! போய் வருகின்றேன் நீர்வாழும் புனித மண்ணிற்கு! ஆசி கொடுத்து மானசீகமாய் வழி அனுப்புவாயாக!

56
பாரசீகமே! வரலாற்றுக்கால வல்லரசே! வல்லரசாய் வரலாறு எழுதுபவளே!
பாரசீகத்து மாகாணங்களே!
தெஹ்ரான் மாகாணமே மத்திய மாகாணமே மசந்த ரான். கிலான். பக்தாரான். குசெஸ்தான். ஈலம் கொரஷான். இஸ்பஹான்.ஹமதான். கெர்மான். பார்ஸ் - சிஸ்தான். பலுசிஸ்தான். ஸன்ஜான். செம்னான். ஹொர்மொஸ்கான். யஸ்த். கொஹிலுயா. புஷஹ்ர். லொரஸ்தான். சஹர்மஹால். கொர்திஷ்டான் மாகாணங்களே! பக்கத்துச் செங்கோட்டைக்கு பார்புகழும் இஸ்லாமியச் செய்தியனுப்பும் அஸர்பைஜானே! w சென்று வருகின்றேன். விடை கொடுங்கள்!
இருபதாம் நூற்றாண்டின் இஸ்லாமிய சாம்ராஜ்யமே! இருபத்தொன்றில் எங்குமே நீ வியாபித்திருக்க வேண்டுகின்றேன். மனம் நிறைந்து போகின்றேன். விடைகொடு அம்மா!
மாலை 5 மணி மெஹ்ரபாத் விமான நிலையம். இதோ "ஈரான் எயார்” விமானம்.

Page 92
157
"பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்” விமானம் பறக்கின்றது.
ஈரான் கண்களை விட்டும் மறைகின்றது. மனதை விட்டும் மறையவே மறையாது!

158
புரட்சியில் அஸர்பைஜான் பங்களிப்பு
ஈரானிய இஸ்லாமியப் புரட்சிப் போராட்ட காலங்களில்பற்பல அடக்கு முறைகள் நடந்தன. துப்பாக்கிச் சூடுகள், தடியடிகள். கைதுகள், சிறையிடல், நாடுகடத்தல். எல்லாவற்றிற்கும் சிகரமாய் இமாம் கொமய்னி அவர்கள் ஈரானிய மன்னர் ஷாவின் படையினரால் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
இமாமின் கைதைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யக்கோரியும் ஆயிரக்கணக்கான கடிதங்கள், தந்திகள் ஈரானிலிருந்தும், உலகிலிருந்தும் ஈரானிய உயர் பீடத்திற்கு அனுப்பப்பட்டன.
அவற்றில் வரலாற்று முக்கியத்துவமிக்க அஸர்பைஜான் மாகாண புத்திஜீவிகள் 74 பேர் ஒப்பமிட்டு அப்போதைய பிரதமர் ஹுவைதாவிற்கு அனுப்பிய கடிதமும் அடங்கும்.
ه • •لI
"அல்லாஹ்வின் திருநாமத்தால்,
உயர்திரு ஹராவைதா அவர்கள் ஈரானியப் பிரதம மந்திரி.
எமது அன்பிற்குரிய இஸ்லாத்தின் உயிரோட்டமான போதனைகள், கற்றறிந்த உலமாக்களின் அர்ப்பணமிக்க சேவை என்பவற்றிற்கு எமது நாடு கடப்பாடுடையது என்பதற்கும் எமது சுயாதிபத்தியம் உயர்வு

Page 93
159
என்பவற்றிற்கும் ஈரானிய வரலாற்றின் பக்கங்கள் தகுந்த சாட்சியமாக உள்ளன. எமது நாட்டின் அரசியல் அமைப்பு விதிகள் பல்லாயிரம் அறிவாளிகள், தீரமிக்க போராளிகள் ஆகியோரின் இரத்தத்தினால் ஆக்கப்பட்டது. அது மார்க்க அதிகாரமிக்கவர்கட்கு ‘ஓர் பாதுகாப்பை வழங்குகின்றது. இவர்கள் சிக்கலான கால
கட்டங்களில் அரசாங்கத்தை எச்சரித்தும், இஸ்லாமிய விரோத சட்டங்களுடனான உடன்பாடுகளை பரிசீலனை செய்யுமாறும் கோரியுமுள்ளனர். அண்மைக்கால உலமாக்களின் தலைமையுடனான இயக்கம் முன்பைய அரசாங்கங்களினால் அமானுட ரீதியில் நடத்தப் பட்டது. எனினும் இந்த இயக்கத்திற்கு நாட்டின் சுதந்திரத்தையும் இஸ்லாமிய சட்டங்களையும் பாதுகாப்பதைத் தவிர வேறு இலக்கு எதுவும் கிடையாது. ஆயத்தொல்லாஹ் கொமய்னி அவர்கள் கூட இஸ்லாமிய சட்டத்தையும், மக்களின் சட்ட ரீதியான உரிமைகளையும், நாட்டின் கெளரவத்தையும் பாதுகாப்பதற்காக உழைத்தார். அன்றியும் அவர் வேறு எவ்வித குற்றங்களையும் செய்யவில்லை.
உயர்திரு ஹராவைதா அவர்களே!
மார்க்க, தேசிய உணர்வுகளைத் திருப்தி செய்ய உங்கள் அரசுக்குள்ள ஒரே வழி நீங்கள் நிறைவேற்றியுள்ள இஸ்லாமிய விரோத சட்டங்களை இரத்துச் செய்துவிட்டு, கைது செய்யப்பட்டுள்ள ஆயத்தொல்லாஹ் கொமய்னி அவர்களை மீண்டும் கொம் மார்க்க கல்விக்கூடத்திற்கு அழைத்து வருவதுடன், கைது செய்யப்பட்டுள்ள ஏனைய உலமாக்களையும், அப்பாவி சிறைக் கைதிகளையும் விடுவித்து, மக்களின் கருத்திற்கு மரியாதை கொடுத்து, முன்பைய அரசாங்கங்களினால் சிதைக்கப்பட்ட கெளரவத்தை மீளக் கட்டியெழுப்புவதுமேயாகும்.
இங்ங்ணம் அஸர்பைஜானின் புத்திஜீவிகள்!”
என்று கூறுகின்றது.

16)
புரட்சி காலத்தில் இருந்த அதே உணர்வு புரட்சியின் வெற்றியின் பின்பும் இருக்கின்றது அங்கே.
அஸர்பைஜானிய மக்களின் இன்றைய உணர்வலைகள் அன்றைய உணர்வலைகளை விடவும் குறைந்ததல்ல. இதனையே செங்கோட்டையின் அஸர்பைஜானிய எழுச்சி எமக்குப் போதிக்கின்றது.
. . . ஈரானிய அஸர்பைஜானிலிருந்தே ரஷ்ய அஸர்பைஜானிற்கு ஆக்சிஜன் செல்கின்றது.

Page 94
முடிவுரையாக
ஈரான் நாட்டில்
நான் கண்டிராத, கேட்டிராத ஒன்றையுமே இங்கு எழுதவில்லை.
கண்டவை, கேட்டவை அனைத்தையுமே இங்கே எழுதவுமில்லை. விரிவஞ்சி, பொருளாதார ரீதியாக-முன்னுரிமை அடிப்படையில் பொறுக்கி எழுதியுள்ளேன்.
இஸ்லாமிய ஷரிஆ ஆட்சி ஈரானில் நூற்றுக்கு நூறு வீதம் பின்பற்றப்படுவதாகவும் நான் கருதவில்லை. ஆனால்.
நூற்றுக்கு நூறு வீதம் என்பதனை நோக்கி முன்னேறுவதாகவே காண்கின்றேன்.
அங்குவெளிநாட்டினர்க்கு மட்டும் லைசென்சுஅல்லது
"குடி குடியைக் கெடுக்கும் குடிப் பழக்கம் உடல்நலத்தைக் கெடுக்கும்" என்றெழுதப்பட்ட வைன் ஸ்டோர்கள் போன்ற முரண்பாடுகள் இல்லை.
மேலும்
சாலைச் சந்திகளில் "பைதுல் முகத்தஸ்" பள்ளியின் மாதிரி உருவை பல இடங்களில் அமைத்து வைத்துள்ளனர். பாலஸ்தீனிய மக்களுடனான திமது

162
ஒருமைப்பாட்டை அவர்கள் இவ்விதமாக ஞாபகப்படுத்துகின்றனர்.
விதிகளில் செல்லும் பெண்கள் யாரும் பர்தா அணிந்தே செல்கின்றனர். இப்படியான சில காட்சிகள் ஈரானுக்கே சொந்தமானவை.
இஸ்லாம் என்பது மானுட விடுதலையின் அடிநாதம் என்பதை ஈரான் பறை சாற்றுகின்றது. ஏனைய இஸங்களைப் போலன்றி இஸ்லாம் மறுமை வாழ்வுடன் தொடர்புடையது. இஸ்லாம் அல்லாஹ்வின் நீதியை பாரினில் நிலை நாட்டுவதுபடைத்தவனிடம், தாயின் கருவறையில் பாரினில், மண்ணறையில்
மீண்டும்
படைத்தவனிடம் என்ற
வாழ்க்கைச் சக்கரத்தை வாழ்வின் ஒவ்வொரு திருப்பு முனையிலும் வாழ வைப்பதற்கான முயற்சி அங்கு நடக்கிறது.
மானுட விடுதலை என்ற பெயரில் மானுட சர்வாதிகாரம் என்ற பெயரில் மானுடத்தை அடிமையாக்குவதை அல்லதுமானுட சுதந்திரம் என்ற பெயரில்மானுட சுயாதிபத்தியம் என்ற பெயரில் மானுடத்தை சுரண்டி சிலர் வாழ்வதை இஸ்லாம் ஆதரிப்பதில்லை. ۔ இஸ்லாமியப் புரட்சியும் ஆதரிப்பதில்லை. "மானுட விடுதலையும், மானுட சுயாதிபத்தியமும் இருலோக வாழ்விற்குமானது

Page 95
அநீதிக்குப் பலியான என் அண்ணன் அப்துல் அஸ்ஸிற்கு இது
அர்ப்பணம்

இறையாட்சியை பாரில் உருவாக்குவது' என்பனவே இஸ்லாமியக் கோட்பாடு. இதுவே ஈரானியப் புரட்சியின் இலக்கு.
மாறாக"மின்சாரத்தையும், மார்க்ஸையும் நிராகரித் எதிர்காலத்தில் எந்த காலத்தில் எந்த நாடும் சில மில்லி மீட்டர்கள்கூட நடந்துவிட முடியாது' என்ற கவியரசு வைரமுத்துவின் கற்பனைகள் இங்கு கிடையாது.
இன்றுருமேனியாவும், போலந்தும், பல்கேரியாவு கிழக்கு ஜேர்மனியும்.
ரஷ்யக் குடியரசின் லிது வேனியாவும், அஸர்பைஜானும் மார்க்ஸை நிராகரித்து விட்டு பல கிலோ மீட்டர் தூரம் நடந்து விட்ட காலத்தில் கூட இப்படியான கற்பனைகள்
எழுத்துருவம் பெறுவதை எண்ணி வியப்பதா..? நகைப்பதா..?
மத்திய ஆசிய இஸ்லாமிய நாடான அஸர்பைஜான். துருக்கிய அஸர்பைஜானாக. ஈரானிய அஸர்பைஜானாக. . ரஷ்ய அஸர்பைஜானாக. துண்டாடப்பட்ட காலமல்ல இது. துண்டங்களைப் பொருத்தி வட்டங்களாக்கும் பொற்காலம்.
இதற்கான உந்து சக்தியை வழங்கிய இஸ்லாமியப் புரட்சி

Page 96
ஈரான் நாட்டில்தான் உருவானது. இதனை. கவிஞர்கள். கற்பனை வாதிகள் மறுக்கலாம் அல்லது மறைக்கலாம். வரலாறு மறைக்காது.
உலக உருண்டையின் கணிசமான பகுதிக்கு ஆக்ஸிஜனை அனுப்பிக் கொண்டிருக்கும் மாளிகை கிரம்ளினில் கிடையாது. கிரம்ளின் இன்று மூச்சுத் திணறி ஆக்ஸிஜன் தேடி “லைப் கார்ட்’ அணிந்துள்ளது.
இந்த நூற்றாண்டின்
இந்த இறுதி இஸ்லாமியப் புரட்சிக்கானது. இனிவரும் இருபத்தோராம் நூற்றாண்டு இஸ்லாமிய விடியலுக்கானது. விடியலை நோக்குவோம். அஸ்தமனங்களை மறந்திடுவோம். விடுதலையை வரவேற்போம். அடிமைத்தனத்தை அகற்றிடுவோம். கற்பனையிலிருந்து மீண்டு யதார்த்தத்துள் நுழைந்திடுவோம்.
ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் "இருலோக ஈடேற்றம்' எனும் விடுதலையுடன் சங்கமிப்போம். இகமெங்கும் இறையாட்சியை ஏற்படுத்த நாமுழைப்போம்!
அல்லாஹு அக்பர்.

'சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது - நிச்சயம் அசத்தியம் அழியக் கூடியதே!”

Page 97
என் குறிப்பு
பயணம் முடிந்து நான் நாடு திரும்பி கொழும்பில் ஐந்து நாட்கள் தங்கினேன். அங்கிருந்த வேலைகளை முடித்துக் கொண்டு ஊர் சென்று சேர்ந்த திகதி 21-02-1984.
அதாவது நான் பயணம் செய்த ஆண்டு 1984,
எனது சகோதரர் மார்ச் முதலாம் திகதி தனது காரை எடுப்பதற்காக அம்பாரை வந்தார். காரின் திருத்தவேலைகளைத் துரிதப்படுத்தியபடியே அம்பாரை ஊரில் தங்கியிருந்தார்.
அங்கு இவர் சில விஷமிகளின் புகார்மீது "பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்' பொலீஸாரினால் 3.3.19846) கைது செய்யப்பட்டார். நான் அவரைப் பார்க்க அம்பாரை பொலீஸ் நிலையம் சென்றேன். தமிழ்ப் பயங்கரவாதியாம் அவர். அதனால் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
அவரை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் நான் இறங்கியிருந்தேன்.
அடுத்த நாள் காலை 4.3.84. எனது வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்ட நாள். எனது சோதரர் மர்மமான முறையில் பொலிஸ் காவலில் இறந்து விட்டதாகத் தகவல் கிடைத்தது. அப்பாவியான அவர் அடக்குமுறையில் பலியாகி விட்டார்.

அன்றிலிருந்து ஒன்றிலும் லயிப்பில்லாத ஒரு வாழ்வு. திசைகெட்ட பயணம். அதன் விளைவே இதன் தாமதம்.
-அபூநஜாத்பெளஸஸுத்தீன் முஹம்மத் இஸ்மாயில் சம்மாந்துறை-1
சிறீலங்கா.

Page 98


Page 99


Page 100
-