கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சந்திப்பு

Page 1


Page 2

சந்திப்பு
-முருகபூபதி
முகுந்தன் பதிப்பகம் 170, Hothlyn Drive Craigieburn Victoria 3.064 Australia

Page 3
முதற்பதிப்பு : 1998 C) விலை ரூபா 32.00
Title : Santhippu
Subject : Interviews
Author : Murugapoopathy
No.of. Pages : 144,
Size : 12.5 X 15 Cn
туре : 10.5 pt
Paper : 11.6 Creamwove
Binding : Art Board
Price : RS. 32.00
Publishers : Kumaran Publishers
79, 1st Street, Kumaran Colony, Vadapalani,
Chennai - 600 026
Typeset : Maazaru, 75, Triplicane Hight Road,
Triplicane, Chennai - 600 005.
PrinterS

சமர்ப்பணம்
“என்றும் நற்சுக
சிரஞ்சீவியாக வாழும்
எனதருமை மகனுக்கு. எனத் தொடங்கி எழுதும் அம்மாவுக்கு
இந்நூல் சமர்ப்பணம்

Page 4
கருத்து முரண்பாடுகள் ஒரு மனிதனின் மேன்மையை இனம் காண்பதில் தவிறிழைத்து விடல் தகாது.-என்பதில் திடசித்தமானவன். இலக்கிய உலகில் பயிலத்தொடங்கிய நாள் முதலாக அல்ல, அதற்கு முன்பும் எனது இயல்பு அப்படித்தான்.
கலை, இலக்கிய தேவை நிமித்தம் சந்தித்தவர் களிடமிருந்து பெற்றுக்கொண்ட கருத்துக்களையும் அனுபவங்களையும் பதிவு செய்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தேன்.
- முருகபூபதி.
ஆசிரியரின் பிறநூல்கள்
O சுமையின் பங்காளிகள் (சிறுகதை)
(சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது) O சமாந்தரங்கள் (சிறுகதை) O வெளிச்சம் (சிறுகதை) O நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் (கட்டுரை) O இலக்கிய மடல் (கட்டுரை) O சமதர்மப் பூங்காவில் (பயண இலக்கியம்)
O பாட்டி சொன்ன கதைகள் (உருவகம்)

உள்ளே.
முன்னுரை
கவிஞர் ‘அம்பி’
எஸ். பொன்னுத்துரை
ஒவியர் செல்லத்துரை
எஸ். அகஸ்தியர்
இந்திரா பார்த்தசாரதி
'பரீக்ஷா" ஞாநி
எஸ். வைதீஸ்வரன்
சார்வாகன்
அண்ணாவியார் இளையபத்மநாதன்
என்.கே. ரகுநாதனின் பதில்
மாவை நித்தியானந்தன்
21
34
44
67
77
86
97
Ι05
116
126

Page 5
‘கருத்து முரண்பாடுகள் ஒரு மனிதனின் மேன்மையை இனம் காண்பதில் தவறிழைத்துவிடல் தகாது’ என்பதில் நான் திடசித்தமானவன்,
“I do not agree with a word of what
you say, but I will defend to the Death your Right to say it"
- என்ற வால்டேயரின் கூற்றுடன் உடன்பாடு மிக்கவன்.
இலக்கிய உலகில் பயிலத் தொடங்கிய நாள் முதலாக அல்ல, அதற்கும் முன்பே எனது இயல்பு அப்படித்தான். எனவே, கலை, இலக்கிய தேவை நிமித்தம் நான் சந்தித்தவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கருத்துக்களையும் அனுபவங்களையும் பதிவு செய்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தேன்.
எனது வாழ்நாளில் கலை, இலக்கிய வாதிகளை மாத்திரமின்றி அரசியல் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகள், சமூக சேவையாளர்கள், பிரமுகர்கள், தொழிலாளர்கள் உட்பட பலதரப்பட்டவர்களையும் பத்திரிகை, சஞ்சிகைகளுக்காக நேரில் சந்தித்திருக்கின்றேன்.
மல்லிகை-மாசிகையால் அறிமுகமாகி இலக்கியவாதியாகவும்

முருகபூபதி ・7 ‘வீரகேசரி’யால் பத்திரிகையாளனாகவும் இயங்கத் தொடங்கி யதனால் இச்சந்திப்புகள் பதிவாகின.
எனினும், இந்தத் துறையில் என்னை மிகுந்த ஆர்வமுடன் ஈடுபடத்துாண்டியது. 'மல்லிகை’தான் என்பதில் பெருமைப் படுகின்றேன். இதற்காக நண்பர் டொமினிக் ஜீவா அவர்களுக்கு நன்றிகூற விரும்புகிறேன்.
இலக்கிய உலகில் பிரவேசித்த காலப்பகுதியில் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை தமிழ் அபிமானி வண.எம். ரத்னவன்ஸ் தேரோ, தமிழகப் படைப்பாளி அசோகமித்திரன், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டொக்டர் எஸ்.ஏ.விக்கிரம சிங்கா முதலானோரை சந்தித்து பெற்ற கருத்துக்களையும் அனுபவங்களையும் மல்லிகை’ இதழ்களில் பதிவுசெய்து பகிர்ந்திருக்கின்றேன்.
இந்த முன் அனுபவத்தின் வாயிலாகத்தான் இச்சந்திப்புகள் தொடருகின்றன.
இத்தொகுப்பில் இடம்பெறும் சந்திப்பு நேர்காணல் படைப்புகள் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் எழுதப்பட்டவை.
வாசகர்களினதும் பத்திரிகைகளினதும் தேவை கருதி மறுபிரசுரமா ன சந்திப்புகளும் உண்டு. சாதனங்கள் பெருகி உலகம் சுருங்கிக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் மறுபிரசுரம் செய்யப்படுவதன் நோக்கம் ‘பக்கம்’ நிரப்புவதற்காக எனக் கருத
(tpւգ աn31.
பூமிப்பந்தின் ஒரு திசையில் வாழும் வாசகனுக்கு கிடைக்கும் படைப்பு இன்னுமொரு திசையில் இருக்கும் வாசகனுக்கு கிடைக்கப் பெறுவதில்லை.
இத்தொகுப்பில் இடம்பெறுபவர்கள் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், நாடகம், நாட்டுக்கூத்து, ஒவியம் முதலான

Page 6
8 0. சந்திப்பு
பலதுறைகளிலும் தமது காத்திரமான பங்களிப்புகளை
வழங்கியவர்கள்.
கவிஞர் அம்பி, எழுத்தாளர் எஸ்.பொ.அண்ணாவியார் இளைய பத்மநாதன், ஒவியர் கே.ரி.செல்லத்துரை ஆகியோர் - எனது எழுத்துலக பிரவேச வெள்ளிவிழா-இலக்கியவிழாவாக 15.11.97ல் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றபொழுது பாராட்டி கெளரவிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் தொடர்பான ஆக்கங்கள் கொண்ட ‘நம்மவர்” மலரும்
இவ்விழாவில் வெளியிடப்பட்டது.
ஒவியர் கே.ரி.செல்லத்துரை அவர்கள் 17.498இல் மறைந்தார். அன்னாரின் கனவுகள் அவரைப்பற்றிய சந்திப்பில் பதிவாகியுள்ளன. அவை நனவாகவேண்டும்.
இச்சந்திப்புகள் - இலங்கையில் 'தினக்குரல்’ தினகரன் வாரமஞ்சரி, மரபு (அவுஸ்திரேலியா) பாரிஸ் ஈழநாடு (பிரான்ஸ்) ஒசை (பிரான்ஸ்) உதயம் (அவுஸ்திரேலியா) நம்மவர்-மலர் (அவுஸ்திரேலியா) புதினம் (இங்கிலாந்து) முதலானவற்றில் பிரசுரமானவை.
வெளியிட்ட ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இந்நூலை வெளியிடுவதில் ஆலோசனையும் ஆதரவும்
வழங்கிய இனிய நண்பர் செ.கணேசலிங்கன் அவர்களுக்கும் எனது அன்புகலந்த நன்றி.
அன்புடன்
லெ. முருகபூபதி
170, HOTHLYN DRIVE CRAGIEBURN VICTORIA 3064 AUSTRALIA
6.6.1998

கவிஞர் அம்பி
பாடிய தமிழை மட்டும் பாதையில் விட்டிடாதே என தாயகம் விட்டு புலம்பெயர்ந்து ஒடிடும் தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் எங்கள் கவிஞர் அம்பி, இலக்கிய உலகம் நன்கறிந்த படைப்பாளி, படிப்பாளி, கல்விமான். கிரீனின் அடிச்சுவடு, அம்பிப்பாடல், வேதாளம் சொன்ன கதை, கொஞ்சும் guisp, gylbl 5 sofaoga,6t, LINGERING MEMORIES முதலான நூல்களை வாசகர்களுக்கு வழங்கியவர்.
அம்பியின் வாசகர்களில் தமிழ் குழந்தைகள் மட்டுமல்ல ஆங்கிலத்தில் பயிலும் சிறார்களும் அடங்குவர்.
அவுஸ்திரேலியாவில் வாழும் எமது தமிழ் மாணவர் பரம்பரை தாய்மொழியையும் ஒரு பாடமாககற்று பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு ஏற்ற கல்வித் திட்டங்களை உருவாக்க ஆலோசனை வழங்கிய
நல்லாசான்.
எனக்கும் அம்பிக்குமிடையே நீடிக்கும் ‘இலக்கிய உறவு’ கால் நூற்றாண்டு வயதை பூர்த்தி செய்து கொண்டு தொடருகின்றது.
இங்கு இடம் பெறும் ‘நேர்காணல்கொழும்பில் வெளியாகும் 'தினக்குரல்’ வாரஇதழில் பிரசுரமானது. இங்கிலாந்து “புதினம்’ இதழில் மறுபிரசுரமானது.

Page 7
10 0
கேள்வி:
அம்பி;
கேள்வி:
அம்பி;
சந்திப்பு
தங்களது எழுத்துலக பிரவேசம் பற்றி விசேடமாக என்ன கூற விரும்புகிறீர்கள்?
எனது எழுத்துலகப் பிரவேசம், 1950ஆம் ஆண்டு 'தினகரன்’ பத்திரிகையில் “இலட்சியச்சோடி’ என்ற சிறுகதையுடன் ஆரம்பித்தது. தொடர்ந்து சில ஆண்டுகள் சிறுகதையே எழுதினேன்.
ஆயினும் கவிதையிலே ஒரு தனி விருப்பு இருந்தே வந்தது; எமது உறவினர் ஊரவராகிய நாவற்குழியூர் நடராஜன் 'மறுமலர்ச்சி’ சஞ்சிகை வெளியீட்டுப் பணிகளில் ஈடுபடுவதைப்பார்த்து மாணவர் பிராயத்திலேயே ஒரு "தூண்டல்’ பெற்றேன்.
பின்னாளில் - இலக்கியத்துறையில் தாங்கள் கவிதையை மாத்திரம் தேர்ந்தெடுத்துக் கொண்டதன் காரணம்.?
‘சிறுகதையில் ஆரம்பித்தேன். ஆனால் கதை எழுத பல
மணிநேரங்கள் தேவைப்பட்டது. -913:1 ‘தொல்லையாகவும் தோன்றியது. எனவே, கவிதைகள் எழுதுவதையே பிரதானமாக்கினேன். தந்தை
செல்வநாயகம், தமிழரசுக்கட்சி தொடர்புகள் ஏற்பட்டதன் பயனாய் கவிதை எழுதுவது மேலும் ஒரு தேவையாக மாறியது. ஆயினும் ஆசிரியராக பணிபுரியத் தொடங்கியதையடுத்து, தமிழில் விஞ்ஞானம் கற்பிக்கத் தொடங்கியமையால், அறிவியலை தமிழில் எழுதும் தூண்டலும் ஏற்பட்டது.ஆக, சிறுகதையுடன் ஆரம்பித்து, கவிதையில் நிலைபெற்று ‘அறிவியல்' எழுதும் பணியையும் மேற்கொண்டேன். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம் முதலானவை ஆக்க முயற்சிகள், உள்ளத்து உணர்வுகள் மூச்சு விட உதவுவன. விமர்சன ஒரு தீர்ப்புக் கூறும் முயற்சி.
மூச்சுவிட்டு ம தில் படும் செய்தியை கூறவே பெரிதும் விரும்பினேன். பிறரின் இலக்கிய முயற்சியை ஆய்ந்து

முருகபூபதி
0 1
என்னுள் ஒரு கருத்தை ஏற்படுத்திக்கொண்டாலும் அதை எழுதி வெளியிடும் பணியை செய்ய நினைக்கவில்லை.
கேள்வி: மரபுக் கவிதை எழுதுபவர்கள் அருகியும் புதுக்கவிதை
அம்பி;
எழுதுவோர் புற்றீசல்போன்று புறப்பட்டிருப்பதும் குறித்து தங்களின் அவதானம் எவ்வாறு அமைகிறது? கவிதை என்பது ‘பா’ என்றும் பாவினம்’ என்றும் வகுக்கப்பட்ட ஒசை இலட்சணம்’ பொருந்திய எழுத்துருவம், எந்தவொரு இலக்கிய வடிவமும் ‘மூச்சு’ விடும் உள்ளத்தின் உணர்வே. எனினும் அதை ஒர் 'ஒசைக்குள்’ ஒன்ற வைப்பது கவிதை உருவம். ஆனால் வலிந்து கட்டும் “செய்யுள் வேறு', கவிதை வேறு என்பதையும் இங்கு வலியுறுத்தல் அவசியம்.
சீர், தளை, வைத்துக் கட்டிச் செய்யுள் அமைத்தால் மட்டும் அது கவிதை ஆகாது. உயிர்நாடியாக ‘உணர்வும் அங்கே வேண்டும். இன்று நாம் நான்கு வகையான கவிஞர்களைக் காண்கின்றோம்.
1. மரபுவழி நின்று செய்யுள் எழுதுவோர் 2. மரபுவழி நின்று கவிதை இயற்றுவோர் 3. மரபு அறிந்து புதுக்கவிதை படைப்போர் 4. மரபை அறியாமல் புதுக்கவிதை உருவாக்குவோர் கவிதையை ‘ஒசை’ ஒன்று தாவிச் செல்ல ஒழுகிஒடும்
தமிழில் எழுதின், அதில் மரபு வழிக் கவிதையின் இலட்சணம் இயல்பாக அமையும்.
பாவும் பாவினமும் வகுக்கும் ஒசை வழிபற்றின் அது மரபுக்கவிதை, புதிய ஒசை இலட்சணம் அமையின் அது மரபுவழி தோன்றும் புதுக்கவிதை.

Page 8
12 0
கேள்வி:
அம்பி;
கேள்வி:
அம்பி;
சந்திப்பு தொத்துவைத்துக்கட்டி செய்யுள் எழுதுவோரையும், ஒசை ஒழுகாது வசனத்தை வரி, பிரித்து எழுதும் புதுக்கவிதைகளையும் ‘கவிதை” என நான் மதிப்பதில்லை. வசனத்தை பிரித்து மாற்றி அடி அடியாக எழுதின் மட்டும் ‘புதுக்கவிதை” ஆகாது.
சிறுகதை, நாவல் விமர்சனங்கள் வளர்ச்சி பெற்றளவுக்கு கவிதை தொடர்பான விமர்சனங்கள் வளர்ச்சியடைய வில்லை எனக்கருதுகின்றோம். ‘கவிதை விமர்சனம் வளர்ந்துள்ளதா அல்லது தேங்கிவிட்டதா? தங்களின் கருத்து யாது? ‘விமர்சனம்’ என்றாலே ஒரு தீர்ப்புக் கூறல் என்று முன்பே கூறினேன். சிறுகதை, நாவலுக்கு விமர்சனம் எழுதுவது சுலபம். ஆனால், கவிதைக்கு எழுத முற்படின் முதலில் கவிதை, கவிதை மரபு பற்றி பலதையும் அறிய வேண்டும் அல்லவா? ஆனால் கவிதை விமர்சனம் அதிகமாக ‘கவிதைத்தொகுதி முன்னுரைகளுடனும் - பத்திரிகை விமர்சனத்துடனும் நின்றுவிடுகிறது. இலங்கையில் தமிழ் கல்விச் சேவையில் தங்களின் பணி விதந்து குறிப்பிடப்படுவதுண்டு. கலை, இலக்கியத்தை தங்களின் கல்விச் சேவையில் எவ்விதம் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?
கல்விச் சேவையில் ஆசிரியராக பணியாற்றிய காலம் தவிர்த்து அதன் பின்னர், 1968ஆம் ஆண்டில் கொழும்பில் கல்வி வெளியீட்டுத் திணைக் களத்தில் கணிதநூல் எழுத்தாளராக பணிபுரியத் தொடங்கினேன். அங்கிருந்து இரண்டு வருடகாலத்தில் பாடவிதான அபிவிருத்தி சபையில் 1970 முதல் பணிபுரிய ஆரம்பித்தேன். இந்த பாடவிதான அபிவிருத்தி சபையில் இருந்த காலத்தில்தான் எங்களது
கலை,இலக்கிய தொடர்பும்ஆக்க இலக்கிய முயற்சிகளும்

கேள்வி:
0 13
கல்வித்துறையிலும் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.
உதாரணமாக, கணிதநூல் பாடவிதானம் எழுதச் சென்ற போதிலும் கணிதம் பற்றிய ஆசிரிய பயிற்சிகளை நடத்தவது ஆசிரியர்களுக்கு கணித நூல்கள் எழுதுவது போன்றவற்றைத் தவிர - பிரதம பாடசாலைகளில், ஆரம்பப்பாடசாலை பிரிவில் தமிழ் கற்பித்தல் பணிகளிலும் ஈடுபட்டேன். அதாவது தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழ்மொழி கற்பிக்கும் பணி
அந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஆக்க இலக்கியமுயற்சியால் பெற்ற அனுபவங்களும் - சிறுவர் இலக்கியம் தொடர்பாக எனக்கிருந்த அறிவும் தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழை கற்பிக்கும் பொழுது பெரிதும் உதவியது. இதனை ஒரு வாய்ப்பாகவே கருதினேன்.
gypsig, gaOsuyib 9/605-6plb MUSIC AND MOVEMENT என்ற புதிய கருத்து வடிவம் உருப்பெற்றது. ACTION SONGS -ஒரு செயலை செய்யத் தூண்டக்கூடியதான பாடல்கள் இயற்றப்பட்டன. அவை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டன. இந்தத்துறை தொடர்பாக ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சிகளை வழங்கினோம். இதற்கு எனது ஆக்க இலக்கிய பரிச்சயம் மிகவும் உதவியது எனலாம்.
எங்கள் தற்போதைய தமிழ் மாணவர் சமுதாயம் (உயர் கல்வி கற்கும் ஈழத்து மாணவர்கள்) முன்னைய மாணவர்களைப் போன்று ஆக்க இலக்கியத் துறைகளில் ஆர்வம் காட்டுவது இல்லை. முன்பு - மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் (ஆசிரியர்கள்- விரிவுரையாளர்கள்) உருவாக்கிய இலக்கிய மாணவர் பரம்பரை போன்று தற்பொழுது உருவாகவில்லை, உருவாக்கப்படுவதாகவும் தெரியவில்லை - இதற்கு என்ன காரணம்?

Page 9
14 0
அம்பி;
சந்திப்பு அதாவது, இலங்கையில் உள்ள நிலைமையை சொல்கிறீர்கள். எங்கள் தாயகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் அதற்கு முன்பிருந்த நிலையில் இல்லை என்பதை முதலில் ஒப்புக்கொள்ளவேண்டும். சமுதாய ரீதியாக சூழ்நிலைகளின் காரணமாக மாணவர்கள், அமைதியான வாழ்வு அற்றுப் போனவர்களாகவே வாழ்கின்றனர். நான் நாட்டைவிட்டு வெளியே சென்றபோதிலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை அங்கு போவதுண்டு. இந்த மாணவர்களைப் பார்க்கும்பொழுது எனக்கே ஒரு சந்தேகம் வருவதுண்டு. இந்தப்பிள்ளைகள் ஒரு நெருக்கடியான சூழலில் எப்படி வாழ்கிறார்கள் - எப்படி கல்விபயில்கிறார்கள் என்பதே எனது கவலையாகவும் இருந்தது. அவர்களின் மனநிலையை பாதிக்கும் சூழ்நிலைதான் நிலவுகிறது. தாக்கங்கள் பல. அவர்களின் எதிர்காலம் தொடர்பாக நம்பிக்கைகள் - முன்பு எமக்கிருந்த நம்பிக்கைகளுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் குறைவானது, மாணவர்களுக்கு ஒருவிதமான CONFLICT சக மாணவர்களை பார்க்கும்பொழுது விரக்தி . வாய்ப்பு வசதிகள் மிக்கவர்கள் வெளியில் போய் விடுகிறார்கள். இல்லாதவர்கள் அங்கேயே தங்கிவிடுகிறார்கள். அமைதியற்ற சூழ்நிலை மாணவர்களின் மத்தியில் தொடரும்பொழுது அவர்களிடமிருந்த ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் தோன்றுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
எம்மிடம் அன்று கற்ற பல மாணவர்கள் பின்னாளில் எழுத்தாளர்களாக, கலைஞர்களாக மாறியதுண்டு. உண்மைதான். அதற்கு அன்றைய சூழலும் காரணம். இலங்கை வானொலியில் இளைஞர்களுக்காக ‘அகல்விளக்கு’ என்ற நிகழ்ச்சியை 89இல் ஆரம்பித்தோம். நண்பர் சிவஞான. அங்கு

முருகபூபதி
கேள்வி:
அம்பி;
(0 15
பணியாற்றியபொழுது அவரின் வேண்டுகோளில் இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்கினேன். அதில் அப்பொழுது பங்கேற்ற மாணவர்கள் பின்னாளில் ரூபவாஹினியில் பணியாற்றினர். இப்பொழுதும் அங்கு சென்றால் ‘அம்பி அண்ணா’ என அழைப்பார்கள்.
தமிழ் இன விடுதலைப்போராட்டம் கவிதைத்துறையில் ஆழமாக வேர் பாய்ச்சியுள்ளது. கவியரங்க கவிதைகள், கவிதா நிகழ்வு, கவிதை நாடகங்கள் முதலானவையும் புலம்பெயர்ந்த தமிழ் கவிஞர்களின் படைப்புகளும் இதற்கு நல்ல சான்று. எனினும் அவை அனுபவ சித்திரிப்புகளாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் அமைந்த போதிலும் மக்கள் மத்தியில் தீவிரமாகப் பதியப்பட்டு மக்கள் மயப்படுத்தப்படாதமைக்கு யாது காரணம்? (பாரதியின் சுதந்திர உணர்வு பாடல்களுக்கு கிட்டிய மவுசு போன்று)
பாரதியின் பாடல்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டமைக்கு காரணம் - பாரதி யாரைப்பற்றி எந்த நாட்டைப்பற்றி பாடினானோ, அந்த நாட்டிலே இருந்து பாடினான்; அந்த மக்களுக்காகப் பாடினான்; அந்த மக்களும் அந்தப் பாடல்களைக்கேட்டு உணர்ச்சி பெற்று அந்தத் தூண்டலுக்கு ஏற்பத் துலங்க முடிந்தது. ஆனால் - இந்தத் தூண்டலுக்கு அப்பாற்பட்ட வாழ்வு வெளிநாடுகளுக்கு வந்தவர்களுக்கு, புலம்பெயர்ந்தவர் என்று சொன்னவுடனேயே இரண்டு களங்கள் தோன்றுகின்றன. முன்புவாழ்ந்த நாடு ஒரு களம், புலம் பெயர்ந்து தற்பொழுது வாழும் அந்நிய நாடு மற்றுமொரு களம்.
புலம் பெயர்ந்தவர் முன்னைய களத்தை விட்டு
இரண்டாவது களத்திற்கு வந்துவிட்டார்.வேறு ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றார்.

Page 10
16 0.
கேள்வி:
Gaseira:
சந்திப்பு பாரதியின் பாடல்களினால் உந்தப்பட்டு துலங்க முடிந்தவர்களை எமது ஈழ விடுதலைப் போராட்ட கவிதைகளினால் ஈர்க்கப்பட்டவர்களுடன் ஒப்பிட (tՔւգ աn31. போராட்டம் நடக்கும் இடத்தில் வாழும் மக்களும் புலம்பெயர்ந்த மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய வேறுபாடுகள் உண்டு.
புலம் பெயர்ந்தவர்கள் தாம் வாழும் புதிய சூழலுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்வதிலேயே பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவர்கள் மத்தியில் வாழும் கலைஞர்கள், கவிஞர்கள் தாயகம் தொடர்பான ‘கேள்வி ஞானங்களை வைத்துக்கொண்டே படைப்பில் ஈடுபடுகின்றனர். இதனால் இவர்களின் கவிதை முயற்சிகள் ‘மக்கள் மயமாகும்’ என எதிர்பார்க்க முடியாது.
ஆனால் - தாயகத்தில் தற்பொழுது - போர் நடக்கும் பிரதேசத்தில் போர்க்கால இலக்கியம் என்ற மகுடத்தில் பல பாடல்கள் - “நெய்தல் நில பாடல்கள் என்பன குறிப்பாக மக்கள் மத்தியில் அங்கு பிரபலமாகியுள்ளதை அறிகிறோம். உண்மைதான். யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களைவிட யாழ்ப்பாணத்திற்கு வெளியே வாழ்பவர்கள் அந்த பாடல்களுக்கு ஏற்ப துலங்கமுடியுமா? சுதந்திர உணர்வுக்கு பாரதியின் பாடல்களைத் தான் நாடு கிறோம். யாழ்ப்பாண போர்க்கால இலக்கியங்களுக்கு ஏற்ப - அதற்கு விரும்பினாலும் வெளியே வாழ்பவர்கள் துலங்க முடியவில்லை. அரசியல் சூழ்நிலை அப்படி. நீண்ட காலமாக தாயகத்துக்கு வெளியே வாழ்கிறீர்கள். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ‘இரண்டக வாழ்வுக்கும்'

முருகபூபதி
அம்பி;
+ 17
இயந்திர வாழ்க்கைக்கும் பலியாகிக்கொண்டிருக் கிறார்கள். தமிழ் உணர்வு வளர்ந்த - வளர்த்துப் பேணப்படும் அளவுக்கு ‘தமிழ் அறிவு வளர்க்கப் படுவதாகத் தெரியவில்லை. உங்கள் அவதானம் எப்படி?
நீங்கள் சொல்வதை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளேன்.
அதையிட்டு நான் மிகவும் கவலையுடன் - நிகழ்வனவற்றை ஆய்ந்து அறிய முயற்சி எடுத்துள்ளேன். ஒன்று - பிறநாட்டுக்குச் சென்றவுடன் தமிழ் உணர்வு இருப்பதற்குக் காரணம் - நாம் இளைஞர்களாக இருக்கின்ற காலத்திலே நமது வாழ்க்கைஎந்தச் சூழலில் அமைந்ததோ அதற்கு ஏற்ப எமது எண்ணங்கள் - கருத்துக்கள், உணர்வு, மொழியறிவு என்பன வளர்ச்சியடைந்துள்ளன. நாம் வளர்ந்த களம் வேறு, வெளியே வந்தாலும் - நாம் கண்களை pl- சிந்தித்துப் பார்த்தாலும் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு விழாவோ -கோயிலில் நடைபெற்ற திருவிழாவோ நீர் கொழும்பில் இடம்பெற்ற இலக்கியக் கூட்டமோ அந்தக் காலத்தில் நாம் அனுபவித்த காட்சிகளோ - படமாக மனதில் விரியும். ஏனென்றால் அவை எங்கள் நேரடி அனுபவத்தினால் இன்றும் எங்கள் மனதில் பசுமையாகப் பதிந்துள்ளன.
ஆனால் - புலம்பெயர்ந்து வாழும் இளம் சந்ததியினரான சிறார்களுக்கு, நாம் அன்று தாயகத்தில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் இல்லை. நாம் இங்கிருந்துகொண்டு நல்லூர் கந்தசுவாமி கோயிலைப்பற்றிச் சொன்னால் - அந்தக் கோயிலையே காணாத பிள்ளைகள் அது வெறும் கற்பனை. நாம் முன்பு புத்தகத்தில் படித்த - மதுரையில் நடந்த இந்திர விழா எமது அறிவுக்கு எப்படி கற்பனையாக அமைந்ததோ - அதாவது நேரடி அனுபவம் இன்றி

Page 11
18 0
சந்திப்பு பெறும் அறிவுபோன்று - எமது பிள்ளைகளுக்கும் - தாயகத்தின் நிகழ்வுகள் - காட்சிகள் கற்பனையாகத்தான் இருக்கும். புலம்பெயர்ந்த முதலாவது சந்ததியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். எங்களுக்கு இரண்டு உலகம். நாம் அன்று தாயகத்தில் வாழ்ந்தது ஒரு உலகம். இப்பொழுது புலம்பெயர்ந்து அந்நிய நாடொன்றில் வாழும்பொழுது மற்றுமொரு உலகம். 'இரண்டு உலகம்’ என்ற தலைப்பில் அக்கினிக்குஞ்சுவில் நான் தொடர்ந்து எழுதியதும் இதுபற்றித்தான்.
இங்கு வாழும் பிள்ளைகள் நிலைமை வேறு.
அவர்களுக்கு யதார்த்தம் இங்குள்ள சூழ்நிலைதான். அதனால் உணர்வு இருந்தாலும் அறிவு - அனுபவம் சார்ந்த தமிழ் அறிவு சொற்பமாகத்தான் இருக்கும்.
வெளிநாடுகளில் எம்மவர்களுக்கு நேரம் ஒரு
பிரச்சினை. அதனால் அவர்கள் எதற்கு PRORTY கொடுக்கிறார்கள் என்பதை கவனிக்கவேண்டும். தாயகத்தில் தமிழ் பேசுவது - எழுதுவது வாசிப்பது - உயிர் வாழ்வில் இரண்டறக் கலந்தது. புலம்பெயர்ந்த நாட்டில் - யார் கலை - இலக்கியம் - தமிழ் அறிவு என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னையும் உங்களையும் போன்ற சொற்ப மானவர்களே. மற்றவர்களுக்கு வேறு பிரச்சினை. அதற்காக நாம் அவர்களை குறைகூற முடியாது. நாம் அதிலேயே வாழ்ந்துவிட்டமையால் வெளியில் வந்தபின்பும் அப்படியே வாழ விரும்புகின்றோம். அவ்வளவுதான். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இன்றைய குழந்தைகள் நாளை தமது 'வேரின் சால்பை தேடவேண்டிய அவலம் தோன்றுமோ என்ற கவலையும் உண்டு.

முருகபூபதி
அம்பி;
(019
இந்தக் கவலையின் ‘அர்த்தம்’ குறித்து தங்கள் கருத்துக்கள் எவ்வாறு அமைகின்றன? இதுபற்றி ஏதும் விசேடமாக கூற விரும்புகிறீர்களா?
இந்தக் கேள்விக்கு நான் எழுதிய கவிதை ஒன்றை பதிலாகத் தரலாம்.
ஒடிடும் தமிழா!
ஒடிடும் தமிழா நில் நீ ஒரு கணம் மனதைத் தட்டு வீடு நின் னுாருன் சொந்தம் விளைநிலம் நாடு விட்டாய் தேடிய தெல்லாம் விட்டுத் திசைபல செல்லும் வேளை பாடிய தமிழை மட்டும் பாதையில் விட்டி டாதே.
ஒர்தலை முறையின் பின்னே உன்னடி உறவென் றேதும் ஊரிலே அறியாப் பிள்ளை உலகரங்கினிலே யாரோ? தாரணி மீதில் நானோர் தமிழனென் றுறுதி செய்யின் ஊர்பெயர் உடைகள் அல்ல
ஒண்டமிழ் மொழியே சாட்சி.
சாட்சியாய் அமையுஞ் ச்ொந்தச் செந்தமிழ் மொழியே முன்னோர் ஈட்டிய செல்வம் எங்கள்
இனவழிச் சீட்டாம்; எந்த

Page 12
20 0
சந்திப்பு நாட்டிலே வாழ்ந்த போதும் நடைமுறை வாழ்வில் என்றும் வீட்டிலே தமிழைப் பேணும் விதிசெயல் கடமை ஐய!
வீட்டிலே தமிழைப் பேசும் விதிசெயல் கடமை ஆமாம் பாட்டனாய் வந்து பேரன் பரம்பரை திரிதல் கண்டே ஈட்டிய செல்வம் போச்சே இனவழி போச்சே என்று வாட்டுநெஞ் சுணர்வை வெல்ல வழி பிறிதொன்று மில்லை.
55 ཉ

எஸ்.பொன்னுத்துரை
எழுத்துலகில் ஐந்தாவது தசாப்தத்தை நெருங்கிய, ஈழத்தின் மூத்த தலைமுறை படைப்பாளி எஸ்.பொ’ தீ, சடங்கு, வீ. வலை, அவா, ஆண்மை, நனவிடை தோய்தல், நீலாவணன் நினைவுகள், உட்பட பல நூல்களை இலக்கிய உலகிற்கு வழங்கியவர். ஆக்க இலக்கியத்துறையில் பல பரிசோதனைகளையும் மேற்கொண்டவர். விமர்சகர்களினாலும், வாசகர்
களாலும் மிகுந்த கவனத்திற் குள்ளானவர்.
‘புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் சர்வதேச கலாசார மாசிகை’ என்ற மகுடத்துடன் அவுஸ்திரேலி யாவிலிருந்து சிறிதுகாலம் வெளியான 'அக்கினிக்குஞ்சு’ - இதழின் பிரதம இலக்கிய ஆலோசகராகவும் இயங்கியவர்.
புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்ப் படைப் பாளிகளின் சிறுகதை ஆற்றலை இனம் காண்பிக்கும் ‘பனியும் பனையும் தொகுப்பை வழங்கியவர்.
பிரான்ஸிலிருந்து வெளியான 'ஒசை” யில் இடம்பெற்ற "எஸ்.பொ’ வின் நேர்காணல், பின்பு ‘பாரிஸ் ஈழநாடு இலங்கை 'தினகரன்’ வாரமஞ்சரி ஆகியவற்றில் மறுபிரசுரமானது.

Page 13
22 0
கேள்வி:
6Tau,Gunt.
கேள்வி:
சந்திப்பு எழுதவேண்டும் என்ற எண்ணம், அல்லது ஆர்வம் உந்துவதற்கு காரணமாக இருந்தது என்ன?
13 வயதில் எழுத ஆரம்பித்தேன். அச்சமயம் இலக்கு
இலட்சியம் என்று எதுவும் இல்லை. 1940ஆம் ஆண்டளவில் எனது அண்ணர் தம்பையா - தமிழ் புலமையுள்ளவர் - மாணவர் தேர்ச்சிக்கழகத்தின் சார்பில் “ஞானோதயம்” என்ற கையெழுத்து சஞ்சிகையை வெளியிட்டார். அவர்தான் அதற்கு ஆசிரியர். அந்தச் சஞ்சிகையின் பக்கங்களை நிரப்பவேண்டிய தேவையும் அண்ணருக்கு இருந்தமையால் - நான் எனது எழுத்துக்கள் மூலம் அவருக்கு உதவி செய்தேன். அண்ணர்தான் எனக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். எழுதும் ஆர்வத்தை தூண்டினார். சொற்ப காலத்திலேயே பாரதியும் பாரதிதாசனும் எனக்கு நெருக்கமானார்கள். இவர்களைப் படித்ததன் பாதிப்பினால் ஒரு கவிதை எழுதினேன். அது ‘வீரகேசரி’யில் பிரசுரமாயிற்று. அதுவே - அச்சுவாகனம் ஏறிய எனது முதல் எழுத்து. 1947இல் வீரகேசரி யின் வெள்ளி - ஞாயிறு இதழ்களில் ‘பாலர் பக்கத்தில் அண்ணன்-நான்’ என்ற புனைபெயரில் எழுதினேன். என்னை முறையாக வழி நடத்தி - இலக்கிய உணர்வை ஊட்டியவர் மதிப்பிற்குரிய த.ராஜகோபால் என்ற பெரியவர். இவர் எழுத்தாளர் சொக்கனுடன் படித்தவர். ராஜகோபால், எனக்கு, சரத்சந்திரர் - வி.ஸ்.காண்டேகர், G5-LJ.J. T., புதுமைப்பித்தன் முதலானோரின் நூல்களைத் தந்துதவி படிக்கும் ஆர்வத்தை வளர்த்தார். த.ராஜகோபால் அவர்களுக்கே - எனது "தீ” நாவலை சமர்ப்பித்து வெளியிட்டேன்.
சிறுகதை இலக்கியத்தில் சிகரங்களை தொட்டவர்

முருகபூபதி
எஸ்.பொ.
0 23
என்றும் தங்களை சில விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர் - இந்தத் துறையில் உங்கள் பிரவேசம்ஆாப்படி?
முதலாவது சிறுகதை 1948 இலோ - 49 இலோ
‘சுதந்திரனில் வெளிவந்தது. இக்காலப்பகுதியில் தமிழகப்பத்திரிகைகளிலும் எழுதத் தொடங்கிவிட்டேன். அரு.ராமநாதனின் ‘காதல்’ - பிரசண்டவிகடன், ஆனந்தபோதினி முதலானவற்றில் 17 வயதிலேயே கதைகள் எழுதினேன். 1950 இல் தமிழகத்தில் ஏற்பட்ட தொடர்புகளினாலும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர் ப.ஜீவானந்தம், மற்றும் முகவை ராஜமாணிக்கம் போன்றோரின் நட்பினாலும் இலக்கியத்தில் முற்று முழுதான ஈடுபாட்டுடன் எழுதினேன். சிறுகதையின் உத்தி - உருவம் - உள்ளடக்கம் பற்றி இக்காலப் பகுதியிலேயே ஒரளவு தெரிந்து கொண்டேன். இவ்வேளையில் தமிழகத்தில் மாத்திரமின்றி தமிழ்
இலக்கிய உலகிலேயே கனதியான தாக்கத்தை
ஏற்படுத்திய ‘சரஸ்வதி சஞ்சிகையின் ஆசிரியர் விஜயபாஸ்கரன் இலங்கைக்கு வந்தார். அவர் வந்ததன் நோக்கம் இரண்டு. முதலாவது - நண்பர் செ. கணேசலிங்கனின் திருமணம். இரண்டாவது
‘சரஸ்வதிக்கு ஈழத்தில் ‘சந்தா’ மூலம் ஆதரவு
கேள்வி:
எஸ்.பொ
திரட்டுவது. எனது ‘தீ’ நாவலை அவரே பின்பு - பரீட்சார்த்த இலக்கிய முயற்சியாக ஏற்று பிரசுரித்து வெளியிட்டார்.
i Øs) புனைபெயர்களின் சொந்தக்காரராக விளங்கினிர்களே! அதேசமயம் - பின்னாளில் முன்னணிக்கு வந்த சில எழுத்தாளர்களுக்கு எழுதப்பயிற்றுவித்ததாகவும் கூறியிருக்கிறீர்கள். இந்தப் பயிற்றுவிப்புக்கும் - புனைபெயர்களுக்கும் ஏதும் தொடர்புகள் உண்டா?
இது சிக்கலான கேள்வி. நானும் டானியலும்

Page 14
24 0
சந்திப்பு டொமினிக்ஜீவாவும் நல்ல நண்பர்கள். கம்யூனிஸ்க்) கொள்கைகளினால் ஆகர்ஷிக்கப்பட்டவர்கள். டானியல் புரட்சிதாஸன், ஜிவா - புரட்சிமோகன்; நான் ;- புரட்சிப்பித்தன்; இவ்வாறு புனைபெய்ர் சூட்டிக்கொள்வதிலும் ஒற்றுமைப்பட்டோம்.
திடீரென்று ஒருநாள் பழமைதாஸன்’ என்றும் நான் எனது புனைபெயரை மாற்றிக்கொண்டதுமுண்டு. 1952-1953 காலப்பகுதியில் நான் புனைபெயரில் மறைவதற்கு தனிப்பட்ட சில காரணங்களும் இருந்தன. எனது எழுத்து ஒரு நங்கையை பெரிதும் பாதித்துவிட்டது. அவர் சங்கடங்களையும் எதிர்நோக்கினார். அவர் நலன் கருதி சிறிதுகாலம் எனது பெயரில் நான் எழுதாமலிருந்திருக்கின்றேன். எனினும் எனது தாகத்தை தணிப்பதற்காக புனைபெயர்களில் எழுதினேன். அந்த வளரிளம் பருவத்து ‘சங்கடங்களினால் மட்டக்களப்பில் ஒதுங்கினேன். ஆயினும் 1956 ஆம் ஆண்டு வாக்கில் - கவிஞர் இ.நாகராஜன் (ஈழகேசரியில் துணை ஆசிரியராக இருந்தார்) நாவற்காடு செல்லத்துரை (பின்னாளில் வீரகேசரியில் பிரபல்யம் பெற்ற யாழ் நிருபர்) ஆகியோர் என்னை அரவணைத்து எழுதுமாறு உற்சாகமளித்தனர். புனைபெயரில் சிலருக்காக நான் எழுதியதுண்டு.
கேள்வி: முற்போக்கு இலக்கிய முகாமுடன் முரண்பட்டீர்கள்;
எஸ்.பொ:
நற்போக்கு முகாம் அமைத்தீர்கள்! இந்த நபோ’ முகாமின் சாதனைகள் - சோதனைகள்.
1960 ஆம் ஆண்டென நினைக்கின்றேன். வீரகேசரி லோகநாதன், ஏ.ஜெ.கனகரத்தினா, கனகசெந்திநாதன், யாழ்ப்பாணம் தேவன் முதலானோருடன் பழக ஆரம்பித்த காலம் அது. கொழும்பு சாஉறிறாக் கல்லூரியில் நடக்கவிருந்த எழுத்தாளர் மகாநாட்டுக்கு முன்னர் ஒரு தயாரிப்புக் கூட்டம் யாழ் சென்ரல்

முருகபூபதி
0 25
கல்லூரியில் நடந்தது. இக்கூட்டத்தில், இலங்கையில் உள்ள அனைத்து கலை, இலக்கியச் சங்கங்களையும் ஒரனியில் திரட்டி அகில இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒன்றை நிறுவவேண்டும் என்று தீர்மானித்தோம். இத்தீர்மானத்துக்கு டொமினிக் ஜீவாவும் ஆதரவு வழங்கினார். இத்தீர்மானம் மகாநாட்டில் விவாதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது. இது எனக்கும் நண்பர்களுக்கும் வருத்தத்தை தந்தது. கம்யூனிஸ்ட்டுகள் எழுத்தாளர்களாக இருக்கலாம்; ஆனால் எல்லா எழுத்தாளர்களும் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல என்பதை அன்று சிலர் புரிந்துகொள்ளத் தவறினார்கள். எழுத்தாளர் சங்கம் கட்சி அரசியல் இலக்கியமுகாமாக மாறாமல் தமிழ் மறுமலர்ச்சியின் அடிப்படையில் செயற்படவேண்டும் என்பது எனது வாதமாக இருந்தது. நான் கட்சியின் கட்டுப்பாட்டை குலைப்பதாக அவர்கள் கருதினார்கள். அந்த மகாநாட்டு மண்டபத்தில் எனது நண்பர்கள் சிலர் கதிரைகளைத் தூக்கிக்கொண்டும் எனக்கு அடிக்க வந்தனர். நானும் எஃப்.எக்.ஸி.நடராசாவும், கன கசெந்திநாதனும் வ.அ.இராசரத்தினமும் வெளியேறினோம். முற்போக்கு இலக்கியகாரர்கள் அதனை கட்சி அரசியலாக மாற்றினார்கள்.
மார்க்ஸிய சிந்தனை உள்ளவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவராகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது எனது வாதம். தேசீய இலக்கியம்தான் வளர்த்தெடுக்கப்படவேண்டும். அனைத்து சமூக மட்டத்தவர்களையும் இந்த இயக்கத்தில் இணைத்துக்கொள்ளவேண்டும்.
நற்போக்கு என்பது - முற்போக்கு ~ (சய) கம்யூனிஸ்ட் கட்சி. ‘பிற்போக்கு முகாம் எம்மால் அமைக்க முடியாது. அதனால் 'நற்போக்கு’ எனச் சூட்டிக்கொண்டோம்.

Page 15
26 0
சந்திப்பு தேசியத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தல் - மரபின் தொடர்ச்சியை பாதுகாத்தல் என்றஅடிப்படையில் ஒரு LABEL தான் இந்த நற்போக்கு - வேறு ஒன்றுமில்லை! நடுப்போக்கு என்று வைக்கலாமோ - முடியாது! நான் அக்காலப்பகுதியில் மாசேதுங்கின் சிந்தனைகளால் பெரிதும் கவரப்பட்டுமிருந்தேன் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
எமது முடிவுகளினால், மரபைப்பேணவேண்டும் என்று எண்ணியவர்களின் ‘அச்சநிலை யும் நீங்கியது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ‘மண்ணும் விண்ணும் -காலத்தின் குரல்கள்’ - முதலிய படைப்புகளும் வெளியாகின. காலத்தின் குரலுக்கு முன்னுரையும் எழுதியிருக்கின்றேன். தேசீய இலக்கியத்தின் சாங்கங்கள் முறையாக வளர்க்கப்படுவதற்கு மரபு சார்ந்த வழியும் உண்டென்ற நம்பிக்கையுடன் சிலர் எழுதத் தொடங்கினர். அவர்களில், செங்கை ஆழியான், “செம்பியன் செல்வன், அண்ணல், பித்தன்
முதலானோரை குறிப்பிடலாம். சாதனை என்ன என்பதை சமகாலத்தில் பங்கு பற்றுபவர்களால் மதிப்பிட்டுச் சொல்வதல்ல. சம்பந்தப்பட்ட வர்கள் சொல்லும்பொழுது அது SUBJECTIVE ஆக இருக்கும். ஒருகால்நூற்றாண்டுக்குப் பின்பு OBJECTIVE ஆக இலக்கிய அறுவடைகளை விமர்சனம் செய்வோர்தான் கூறவேண்டும். இதில் நான் விலகிக்கொள்வது புத்தி பூர்வமானது. எனினும் ஒரு விடயத்தை மாத்திரம் சுட்டிக் காட்டலாம். எனது 'சடங்கு” நாவல் சுதந்திரனில் வெளியாகியது. இது தமிழரசுக்கட்சியின் பத்திரிகை. இது நூலாகியபொழுது - அதன் விற்பனை உரிமையை வீரகேசரி நிறுவனம் பெற்றுக்கொண்டது.

முருகபூபதி
கேள்வி:
எஸ்.பொ.
0.27
தேசீய இலக்கிய பண்புகளுக்கு இசைய எழுதப்பட்ட நாவல். யாழ் மண்ணை இது பிரதிபலித்தபோதும் பின்னாளில் தமிழ்நாடு "ராணிமுத்து சடங்கு'வை மறுபிரசுரம் செய்தபோது ஒரு இலட்சத்து 43 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகின. தேசியப் பண்பு மிளிர்ந்தமையாலேயே இது சாத்தியமாயிற்று.
தங்களை சிறந்த சிறுகதை எழுத்தாளராகவோ, நாவலாசிரியராகவோ கட்டுரையாளராகவோதான் இலக்கிய உலகம் இன்றும் இனம் காணுகிறது. எனினும் விமர்சனம்’ என்ற பெயரில் நீங்களும் கலை, இலக்கிய, அரசியல் விமர்சனம் செய்கிறீர்கள். ஆயினும் விமர்சகருக்குரிய தகுதியை தாங்கள் இன்னும் பெறாதிருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்?
நான் விமர்சகன் அல்ல. ஆனால் எழுத்தாளனுடைய சில உரிமைகளையும் சில தனித்தவங்களையும் நான் மதிப்பவன். இந்த உரிமைகள், தனித்துவங்கள் விமர்சகர்கள் என்று சொல்லப்படுபவர்களினால் *அழிவழக்காடும்போது நானும் விமர்சனத்தில் ஈடுபடவேண்டியுள்ளது. விமர்சனத்துக்கு - தற்கால விமர்சகர்கள் என்ன ‘இலக்கணங்களை பொருத்திப் பார்க்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. என் விமர்சனப் பாணி நக்கீரர் வகுத்தது. நக்கீரர் புலவர். ஆனால் பாட்டுக்கு விமர்சனம் செய்தவர். இன்னுமொரு வழியில் சொல்வதானால் - நான் ஒரு சீத்தலைச்சாத்தனார். அவர் ஒரு காவியப்புலவர். விமர்சனம் செய்யப்போய் தனது தலையை புண்ணாக்கிக் கொண்டவர். தற்காலத்தில் நான் ஒரு புதுமைப்பித்தன். ஆனால், புதுமைப்பித்தன் ஒரு சிறுகதை மன்னனே தவிர விமர்சகன் அல்ல. பெரும்பாலான தமிழ் விமர்சகர்களை, ‘எழுத்துவில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொற்றொடரை இரவல்

Page 16
28 0 சந்திப்பு டிாங்குவேனேயானால் ‘பற்றி இலக்கியக்காரர் என்றே
சொல்வேன்.
‘பற்றி இலக்கியக்காரர்களை நான் ‘விமர்சகர்’ என்று ஏற்றுக் கொள்வதுமில்லை. விமர்சனம் என்பது எனது எழுத்து ஊழியத்தில் முக்கிய பங்கை வகிக்கவேயில்லை. சில நியாயங்களையும் - சில வேளைகளில் சில தர்மங்களையும் சொல்லும் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதற்காகவே நான் சில சமயங்களில் ‘விமர்சகன்’ ஆகியுள்ளேன்.
கேள்வி: தளைய சிங்கம், கைலாசபதி, சிவத்தம்பி முதலானோர் விமர்சிக்கும்பொழுது அதில் நயமிருந்தது. ஆனால் தங்களது ‘விமர்சனப் பார்வையில்(?) வக்கிரம் தொனித்தது. இதற்கு உளவியல் காரணம் ஏதும் உண்டா?
எஸ்.பொ.கைலாசபதி ஆக்க இலக்கியத்துடன் நுழைந்தவர். அதில் அவர் வெற்றிபெறவில்லை. சிவத்தம்பி ஆக்க இலக்கியத்தில் ஈடுபட்டவர் அல்ல. தளையசிங்கம் ஆக்க இலக்கியத்துறையில் ஈடுபட்டபோதிலும் சிட்டிசிவபாதசுந்தரம் குறிப்பிட்டமை போன்று ‘தளையரின் ஆக்க இலக்கிய முயற்சிகள், சில மேனாட்டு இலக்கிய உத்திகளில் நடத்திய பரிசோதனைகளாகவே அமைந்தன.
None of them have. Succeeded as creative Writers...........இந்த பாரிய வேறுபாட்டை மனதில் கொண்டுதான் எனது விமர்சனப் பார்வைக்கும் அவர்களுடைய விமர்சனங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறியவேண்டும்.
My literary criticism is more in defence of established
creative writing instituion.
என்னை விமர்சகனாக ஏற்கவேண்டும் என்ற ஆசையும் எனக்கில்லை.

முருகபூபதி
கேள்வி:
எஸ்.பொ:
கேள்வி:
(0.29
கருத்துக்கு மாற்றுக்கருத்தே பிரதானம். ஆனால் சில சந்தர்ப்பங்களில் நீங்கள் கருத்தை முதன்மைப்படுத்தாமல் உடல்-குண இயல்புகளையும் கூறி கொச்சையாக - தனிப்பட்ட ரீதியிலும் தாக்குகிறீர்களே - இவையாவும் உங்களது பருவக்கோளாறு’ என்றோ ‘பார்வைக் கோளாறு’ என்றோதான் நாம் கருதுகின்றோம் - சில வேளை இன்று 60 வயதும் கடந்துவிட்ட நிலையில் பக்குவப்பட்டிருந்தால் - தங்களின் விமர்சனப் பார்வைகளும் ஆரோக்கியமாக மாறியிருக்கக்கூடும் என எதிர்பார்க்கின்றோம். எமது எதிர்பார்ப்பு சரியா?
pirgit syGiray HITTING OVER THE BELT gas விமர்சிப்பதாக குற்றம் சுமத்துகிறீர்கள். உங்கள் கேள்வியில் அது தொனிக்கின்றது. சொல்ல வந்த கருத்தை - கூர்மையாக சொல்வதற்கு ‘அங்கதம்’ ஒரு உபாயம் என்று நான் நம்புகின்றேன். இந்த அங்கதச்சுவை சில வேளைகளில் சம்பந்தப் பட்டவர்களை எழுத்து அதிகாரங்களுக்கு அப்பாற்பட புண்படுத்தியுள்ளது என்பது இப்போது என்னால் நிதானிக்க முடிகிறது. உண்மையில், விமர்சனம், இத்தகைய மனநோவுகளை ஏற்படுத்தலாகாது என்பதையும் இப்பொழுது வெட்கப்படாமல் என்னால் ஒப்புக்கொள்ள முடிகிறது. இரசிகமணி கனகசெந்திநாதனின் ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி’யும் - தளையசிங்கத்தின் ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியும் - சிட்டி - சிவபாதசுந்தரத்தின் ‘தமிழ்ச் சிறுகதை வரலாறு’ம் தங்களது சிறுகதை இலக்கிய முயற்சிகளை விதந்து பாராட்டியுள்ளன. ஆனால் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்களிடமிருந்து நாம் சிறுகதைகளையே காண முடியவில்லை. ஆனால் ‘நனவிடை தோய்தல் கட்டுரை இலக்கியத்தைத்தான் பார்க்க முடிந்தது. காலப்போக்கில் உள்ளார்ந்த சிறுகதை இலக்கிய ஆற்றல் வற்றிப்போகும் அபாயம்

Page 17
30 0
எஸ்.பொ.
கேள்வி:
எஸ்.பொ.
சந்திப்பு தோன்றலாம். இன்று ஜெயகாந்தனுக்கு ஏற்பட்டது போன்று.இதுபற்றி தங்களின் கருத்து? ‘நனவிடை தோய்தல் கட்டுரை இலக்கியம் என்று சொல்வது தவறு. அது புதிய இலக்கிய வடிவம். ஆக்க இலக்கியத்துக்கு - புதிய பரிமாணம் செலுத்த வகுக்கப்பட்ட ஒரு இலக்கிய உருவம். சிறுகதை இலக்கிய-இலக்கண வரம்புகளுக்கு உட்பட மறுக்கும் ஒர் ஆக்க இலக்கிய தேவையைக் கருதித்தான் இது தொகுக்கப்பட்டது. சிறுகதைத் துறையில் என் ஆற்றல் வற்றிவிட்டதா?’ போன்ற கேள்விகள் இன்று பலராலும் கேட்கப்படுகின்றன. இதற்கு - அக்கினிக்குஞ்சு'வில் நான் எழுதிக்கொண்டிருக்கும் “ஆண்மை’ என்ற பொதுத்தலைப்பில் வெளிவரும் கதைகள் பதில் சொல்லும், ஆசான்’ என்ற பெயரில் “ஆண்மை யை எழுதுகின்றேன்.
60 வயதும் ஆகிவிட்டது. வாழ்விலும் எழுத்திலும் நிறைவான பக்குவம் அடையும் காலம் இது. புதிய தலைமுறைக்கு நம்பிக்கையூட்டும் இலக்கிய முயற்சிகள்
நாடகத்தை - இன்று அவைக்காற்று கலையாகவே இளம் கலைஞர்கள் தரிசிக்கின்றனர். நாடகம் என்பது செறிந்த இலக்கிய வடிவமும் என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவும் அமைந்துவிட்டது. ஷேக்ஸ்பியர் தொடக்கம் இப்சன் வரையில், பேர்னாட்ஷா தொடக்கம் யூஜினேநெயில் வரையில் எழுதிய நாடகங்கள், இலக்கியமாகவும் - அதே சமயம் அவைக்காற்று கலையாகவும் முழுத்துவம் காட்டின. இத்தகு படைப்புகள் தமிழில் ஒருப்பு. இதனை நிவர்த்தி செய்வதற்காக ஒரு இலக்கிய முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
இந்து நாடக மரபு மறுக்கப்பட்ட, மறக்கப்பட்ட
ஒன்றாகிவிட்டது. நாட்டுக்கூத்து, தெருக்கூத்தாக இனம்

முருகபூபதி
கேள்வி
03
காணப்படும் அறிவுமோசடியும் நிகழ்ந்துள்ளது. நாடகத்திற்கு கட்புல சுவைக்கு - அப்பாற்பட்ட செவிச்சுவை செறிந்த ஊடகம் என்பதும் மறக்கப் பட்டுள்ளது. இவற்றைப் பற்றிய கவனத்தையும் அவதானத்தையும் ஏற்படுத்தவேண்டும்- என்பதற் காகவே இந்த நாடகப் பிரதியை வகுத்துக் கொண்டிருக்கின்றேன்.
-புலம்பெயர்ந்து வாழ்கிறீர்கள். புலம்பெயர்ந்த ஈழத்
தமிழர்களின் எதிர்காலம் குறித்து உங்கள் கணிப்பு?
எஸ்.பொ-ஈழத்தின் இலக்கிய பாரம்பரியங்களை மாத்திரமல்ல,
கேள்வி:-
தமிழ் கலை, இலக்கிய பாரம்பரியங்களையே - அதன் நுண்வடிவில் பாதுகாத்து போஷிக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர் குறிப்பிடத்
தக்க சிறந்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தனது
அண்மைக்கால அவுஸ்திரேலிய-மெல்போர்ன்-சிட்னி கலை, இலக்கிய சந்திப்புகளிலே ஒரு கருத்தை கூறியுள்ளார்.
"தமிழ்நாட்டிலே தமிழ் செத்துவிட்டது” என்று. அது ஒரளவு உண்மையே! எனவே, புலம்பெயர்ந்த நாடுகளிலே உள்ள தமிழர்கள் ஈழத்திலே போராட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட சூழல்நேசிப்புகளிலிருந்து விமுக்திபெற்று ஒரு பாரிய தொன்மையான
பண்பாட்டினை உலகளாவிய முறையில் பாதுகாக்கும்
தத்துவக்காரர்கள் என்ற பொறுப்புணர்ச்சியுடன், சீரழிவுகளிலிருந்து, என்றோ விடுதலை பெறக்கூடிய தமிழ்நாட்டினதும் ஈழநாட்டினதும் நாளைய சந்ததியினருக்கு இடைநிறுத்தம் இல்லாத ஒரு தொடர்ச்சியான தமிழ் இலக்கிய மரபினை பாதுகாத்து ஒப்படைக்கும் பொறுப்பு - இது மகாபாரிய பொறுப்பு - நம்வசம் உண்டு.
ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தேசிய இன

Page 18
32 0
சந்திப்பு விடுதலைப் போராட்டம் பற்றிய ஆக்க இலக்கிய ஈடுபாடு எம்மவர்களுக்கு இல்லையென்றும் - எழுதியே ஆகவேண்டும் இல்லையேல் தமிழினம் இவர்களைப் புறக்கணித்துவிடும் என்றும் ‘எழுதாத வர்களிடமிருந்து கருத்து மேல்கிளம்பியுள்ளது. இதுபற்றி உங்கள் பார்வை என்ன?
எஸ்.பொ-அரசியல் பற்றி தெளிவான வரையறையான
கேள்வி
அபிப்பிராயம் இருக்கவேண்டும். சமூக நேசிப்பும், சமுதாயப் பிரக்ஞையும் அரசியல்தான், அதே சமயம், இனத்திற்கான சில உரிமைகளை வென்றெடுப்பதற்காக பயன்படுத்தும் தந்திரோபாயங்கள் ஆகியவை யாவும் அரசியல்தான். மனிதன் அடிப்படையில் சமூகப் பிராணி. ஆனபடியால், அவன் ஒரு அரசியல் பிராணி, ஆனால், சமகால அரசியல் தந்திரோபாயம் (சமன்) சமுதாய கலை இலக்கிய பணிகள் என்று முடிச்சுப் போடுதல் அவசரப்பண்பும் - அரைவேக்காட்டுப் பண்புமாகும். அரசியல் தேவைகளுக்காக கலை, இலக்கிய படைப்புகள் முடக்கப்படுவது தகாது’- என்றுதான் மூன்று தசாப்தங்களுக்கு முன்பே, முற்போக்கு அணியிலிருந்து விலகியவன் நான். அந்த சுதந்திரபிரேமி, மீண்டும் தன்னுடைய கலை, இலக்கிய வடிவங்களையும் ஊழியத்தையும் சமகால அரசியல் உபாயத்திற்காக அடவு வைக்க வேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
‘ஹெமிங்வே' பற்றி அடிக்கடி சொல்லுவீர்கள். ஈழத்தில்
ஒரு “ஹெமிங்வே’ இன்னும் பிறக்க வில்லை. ஈழத்தின் இனவிடுதலைப் போராட்டம் தொடர்பாக தெளிவின் மையும் நமது படைப்பாளிகளுக்கு இருப்பதனால் அது குறித்து சிறந்த படைப்புகள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் தமிழகத்தில் சுஜாதா உட்பட இன்னும் சிலர் ஈழத்தில்தான் எதிர்காலத்தில்

முருகபூபதி
0.33
சிறந்த படைப்புகள் தோன்றக்கூடும் என்கிறார்கள் -
உங்கள் கருத்து என்ன?
எஸ்.பொ-ஈழத்தமிழர்களின் வாழ்க்கை - தமிழ் மக்களின் சில
உரிமைகளை வென்றெடுக்கும் தன்மைகளை உட்படுத்தியது. தமிழ்நாட்டின் இலக்கியகாரர்களுக்கு இந்நிலைமை இல்லை. தமிழ்நாட்டு இலக்கியம் இன்று வர்த்தகமயமாகி விட்டது. தமிழ்நாட்டு எழுத்தாளர்கள். வாழ்க்கையுடன் ஆத்மார்த்த தொடர்பு இல்லாத - புற தேவைகளுக்கு மசிந்து விட்டார்கள். எனவே புதிய பிரகடனங்களை வெளிப்படுத்தக்கூடிய சமர்க்களமாக ஈழத்தை - இலக்கிய ஆர்வ முடையவர்கள் தரிசித்தல் இயல்பு.
குரு நிலத்தில் பிறந்தது தான் பகவத்கீதை. இத்தகைய ஒரு உன்னத இலக்கியம் இன்று ஈழத்தில் தோன்றாதா என்ற ஆதங்கம் தமிழ் எழுத்தாளர் மத்தியிலே தோன்றியுள்ளமை நல்ல சகுனமாகும். இந்த எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றவல்ல எழுத்தாளர்கள் ஈழமண்ணிலே உருவாகுதல் வேண்டும் என்பதே எனது ஆசை.
5 ༡ ཉ

Page 19
ஓவியர் செல்லத்துரை
“ஒரு பொல்லாப்புமில்லை - கவலையை விடு, எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்.” இப்படிச் சொல்லி, தம்மை நாடி வருபவர்களுக்கு ஆறுதல்மொழிபேசி வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றி அனுப்பும் யோகர் சுவாமிகளைப்பற்றி அறிந்துள்ளோம். அவரது உருவப்படங்கள் உலகெங்கும் இருக்கின்றன. அதன் சிருஷ்டிகர்த்தா ஒவியர், புகைப்படக் கலைஞர் செல்லத்துரை அவர்கள் - எனக்கு ஒரு யோகர் சுவாமி.
“மலைபோல் துயரம் வந்தாலும் உன் தலையாலே சுமந்து கொள், ஆத்ம பலத்தை கைவிட்டுவிடாதே. அது அனைத்து பலத்தையும் உனக்குத் தரும்” இவ்விதம் ஞானஒளியேற்றியவர் ஒவியர் செல்லத் துரை.
அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் தமது மனைவி மக்கள் பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்த செல்லத்துரை, பூட்டப்பிள்ளையையும்
கண்டவர்.
அவரைச் சந்தித்து எழுதிய நேர்காணல், பிரான்ஸில் வெளியாகும் பாரிஸ் ஈழநாடு’ வில் பிரசுரமானது. ஒவியர் 17.4.98 இல் அமரரானார். இங்கு வெளியாகும் ‘சந்திப்பு கட்டுரை” அவுஸ்திரே லியாவில் வெளியிடப்பட்ட ‘நம்மவர்” மலரில் இடம்பெற்றது. தின் கரன் வாரமஞ்சரியில் மறுபிரசுரமானது.

முருகபூபதி, 0 35 இலக்கியம், சிற்பம், கட்டடக்கலை, பரதநாட்டியம் போன்ற நுண்கலைகளிலும் ஏனைய கவின் கலைகளிலும் பாரம்பரியமாகவே சாதனைகள் பல நிலைநாட்டிவரும் தமிழினம் ஒவியக் கலையில் குறிப்பிடத்தக்க ஒரு சாதனையையும் செய்யவில்லையே காரணம் என்ன? என எண்ணுகிறீர்கள்?
இப்படி ஒரு கேள்வியை ஈழத்தின் பிரபல ஒவியர் திரு. அ. மாற்கு அவர்களிடம் சிரித்திரன் இதழில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ஒவியர் மாற்குவின் பதில் “ஒவியத்தைப் பார்த்துப் பழக்கப்பட்ட பரிச்சயம் ஈழத் தமிழ் மக்களுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அத்தோடு ஒவியத்தை ஒரு கலைவடிவமாகத் தமிழ் மக்கள் அங்கீகரித்து இருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன் வரையப்பட்டு நல்லூர் சட்டநாதர் கோவிலின் வாயிலில் கவினுறவே காட்சி தந்த வனப்பு மிகு ஒவியங்கள் பலவற்றின் மீது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையடிக்கப்பட்டுவிட்டது. ஆலயத்திற்கு அழகையும் தனிச்சிறப்பையும் கொடுத்துக் கொண்டிருந்த கால வெள்ளத்தால் அழியாத ஒவியங்களுக்கே அந்த நிலை என்றால் எம்மவர் ஒவியக்கலையில் காட்டிய அக்கறையையும் அவர்தம் ரசனையையும் எண்ணிப் பாருங்கள். இந்த நிலைதான் எங்கும் காணப்படுவதாக எனக்குப் படுகின்றது. இப்படி இருக்கும் போது இத்துறையில் சாதனைகள் புரிதலைப்பற்றியும் சிந்திக்க முடியுமா?
(-இந்த நேர்காணல் 1983 இல் வெளியானது)
ஒவியர் மாற்கு வின் இந்தக் கருத்துக்கு முன்பும் சரி- அதன் பின்னரான இக்காலப்பகுதியிலாயினும் சரி எமது தமிழினம்
ஒவியக் கலையின் மீது கொண்டிருக்கும் கரிசனை எத்தகையது என்பது தெட்டத் தெளிவானது.

Page 20
36 0 சந்திப்பு
முத்தமிழ் என - இயல் - இசை - நாடகம் வரையறுக்கப் பட்டுவிட்டதனாலோ என்னவோ - நமது இனம் ஒவியத்தை மறந்துவிட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தில் ஒவியம் ஒரு பாடமாகப் போதிக்கப்படவேண்டும் எனவும் மேற்குறிப்பிட்ட 1983 ஆம் ஆண்டிலேயே ஒவியர் மாற்கு வேண்டுகோள் விடுத்திருந்தமையும் நினைவிற்கு வருகிறது.
படைப்பிலக்கியம் - இசை - நடனம் - நாடகம் - திரைப்படம் தொலைக்காட்சி நாடகம் முதலான கலைத்துறைகளிலும் வானொலி - பத்திரிகை - தொலைக்காட்சி முதலான பொதுசனத் தொடர்பு சாதனங்களிலும் தீவிர கவனம் செலுத்திய நமது மக்கள் - ஒவியம் மீது குறைந்தபட்ச ரஸனையைக் கூட வளர்த்துக்
கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
ஆனால் மேலைத்தேய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த கலைவடிவத்தின் மீது கொண்டிருந்த பற்றும் இக்கலைவடிவத்தை மக்கள் மயப்படுத்துவதில் மேற்கொண்ட தீவிரமும் வெளிப்படையானது.
ஒரு கலையின் வாழ்வு - அதன் மீதான ரஸனையிலேயே தங்கியிருக்கிறது.
தனது மனச்சித்திரங்களை ஒவியமாக பதிவு செய்யும் ஒவியர் கே.ரி. செல்லத்துரை ஐயா அவர்கள் ஒரு புகைப்படக் கலைஞருமாவார்.
நாம் சிறுவர்களாக இருந்த காலப்பகுதியில் பாடசாலையில் கற்ற பாலபோதினி உங்கள் அனைவருக்கும் நினைவிற்கு வரலாம்.
தங்கத்தாத்தா என அழைக்கப்பட்ட நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் புகைப்படத்தை பாலபோதினியில் பார்த்திருக்கிறோம். அதே படம் - 1964 ல் இரசிகமணி கனக

முருகபூபதி 037
செந்திநாதன் எழுதி வெளியிட்ட ஈழத்து இலக்கிய வளர்ச்சி நூலிலும் பிரசுரமாகியது.
தங்கத்தாத்தாவை இவ்விதம் புகைப்படமாகத் தந்த கலைஞர் செல்லத்துரை ஐயா.
கலைஞர்களுக்கே உரித்தான பண்போடு குறிப்பிட்ட படத்தை
எடுத்த ஐயா தமது பெயரையும் அந்த புகைப்படத்தில் ஒரு மூலையில் பதிவு செய்தார்.
காலத்தையும் வென்று வாழ்ந்து கொண்டிருக்கும் அப்படத்தில் ஐயாவின் பெயர் நீக்கப்பட்டு - இருட்டடிப்பு செய்யப்பட்டமை கவலைக்குரியது மட்டுமல்ல ரெளத்திர குணத்தை வெளிக்காட்டவும் செய்யும்.
இந்த இருட்டடிப்புக்கு காரணமானவர் ஒரு காலத்தில் ஏரிக்கரை தமிழ்ப்பத்திரிகையொன்றின் பிரதம ஆசிரியபிடத்தில் அமர்ந்து பின்னர் தமிழ் மக்களிடமிருந்தே காணாமல் அந்நியப்பட்டுப் போவராவார் என்ற உண்மையையும் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தான் வேண்டும்.
தலைவாரும் சீப்பை மறைத்தால் திருமணம் நின்றுவிடுமா?
அகப்பை காணாமல் போனால் சமையல் நின்றுவிடுமா?
சூரியனை கரங்களால் மறைக்கமுடியுமா?
ஆற்றல் மிக்கவர்களை இருட்டடிப்புச் செய்ய எத்தனிப்பவர்கள் இந்த உண்மைகளை ஏனோ மறந்து விடுகிறார்கள்.
ஒரு பொல்லாப்புமில்லை. எப்பவோ முடி ந்த காரியம்- என்று சோர்வுற்ற நெஞ்சங்களுக்கு ஆத்ம பலம் ஊட்டி ஞான ஒளி பரப்பிய தீர்க்கதரிசியோகர் சுவாமியின் ஒவியம் தமிழ் மக்களிடம் பிரசித்தமானது.

Page 21
38 0 சந்திப்பு
இந்த அற்புத ஒவியத்தின் கர்த்தாவும் இந்த செல்லத்துை
ஐயாதான்.
புகைப்படக்கலையிலும் ஒவியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த அதேசமயம் - இந்த இயல்பாற்றல் அவரை புடவை சித்திர வடிவமைப்பாளராகவும் இயங்க வைத்தது.
1954 இல் இலங்கை சிறுகைத் தொழில் இலாகாவில் பணிபுரியத் தொடங்கிய கலைஞர் - பல போட்டிகளிலும்
பங்கேற்று தங்கப்பதக்கங்கள் உட்பட பல பரிசில்களைப் பெற்றவர்.
இலங்கை அரசின் அலரி மாளிகை - முன்னைய மகாதேசாதிபதியின் வாசஸ்தலமாக விளங்கிய இன்றைய ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றின் அலங்காரத் திரைகளின் சித்திர வடிவமைப்பாளரும் இவர்தான்.
உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெயரைப் பெற்றுக்கொண்ட திருமதி - பூgரீமாவோ பண்டாரநாயக்கா - முதல்முதலாக பாராளுமன்றத்துள் பிரவேசித்த பொழுது அவர் அணிந்திருந்த சாரியின் சித்திர வேலைப்பாடுகளை தீட்டியவரும்
ஐயாதான்.
பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் ஐயாவின் ஆற்றலை ரசித்து வியந்து பாராட்டி பரிசில் வழங்கியுள்ளார்.
இலங்கையில் உரும்பிராயில் பிறந்த செல்லத்துரை ஐயா தொழில் நிமித்தம் கொழும்பில் வாழ்ந்து ஒய்வுபெற்ற பின்பு லண்டனில் சிறிது காலத்தை கழித்து பின்னர் அவுஸ்திரேலியாவில் குடும்பத்தாருடன் பேரன் பேத்திகளுடன் வாழ்ந்தார்.
லண்டனில் இவரது பூட்டப்பிள்ளையும் பிஞ்சுப்பாதங்களினால் நடை பயில்கிறார்.
ஒவியம் பற்றிய கருத்து நிலைகள் பலவுண்டு. கண்டதை

முருகபூபதி 0 39
அப்படியே புகைப்படம் எடுத்தாற்போன்று ஒவியமாகத் தீட்டுதல்
ஒரு மரபு.
நவீன ஒவிய பாங்கில் ஒரு தேடலை சித்திரித்தில் அல்லது ஒரு செய்தியை கூறல் மற்றுமொருபாணி. கோட்டுச் சித்திரங்களின் வாயிலாக ஒவியரின் சிந்தனையை பதிவுசெய்தல் இன்னுமொரு
c)).
ஒவியர் செல்லத்துரையோ தாம் கண்ட காட்சியை மனதில் உள்வாங்கிக் கொண்டு அந்த மனப்பதிவை எங்கிருந்தாலும் வரையும் ஆற்றல் கொண்டவர்.
யாழ் - வவுனியா மார்க்கத்தில் கண்டிவீதியில் அமைந்துள்ள முறிகண்டி குடிசைக் கோயிலையும் அதன் சுற்றாடலையும் ஒவியமாக்குவதற்கு செல்லத்துரை அவர்கள் அந்த கோயிலின் முன்பாகவே கதிரை போட்டு அமர்ந்து வரையவில்லை.
கதிர்காமத்தின் காவடி ஆட்டத்தை மாணிக்க கங்கையின் கரைதனில் நின்று கொண்டுதான் ஒவியமாக்க வேண்டும் என்ற நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டதுமில்லை.
பால் - எது தண்ணிர் எது என்று பிரித்துப் பார்க்கும் அன்னப்பறவையை அது வாழும் குளத்தின் கரையில் நின்று ரசித்துத்தான் ஒவியமாக்க வேண்டும் என்றும் நினைத்தவரில்லை ஒவியர் செல்லத்துரை.
வாழ்வின் தரிசனங்களை இலக்கியமாக்கும் படைப் பாளிகளைப்போன்று - இந்த ஒவியரும் இயங்கினார்.
யுத்த அழிவுகளுக்கு மத்தியில் வடபகுதியின் பனந்தோப்புகளும் வயல்வெளிகளும் இன்று எப்படி காட்சி அளிக்கின்றனவோ என்ற ஆதங்கம் எமக்குச் சொந்தமானது.
ஆனால் - அன்று பசுமையாகக் காட்சி அளித்த இயற்கை வளங்கள் LJ (6) ஆயிரம் மைல்களுக்கு அப்பால்

Page 22
40 0 சந்திப்பு வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவியர் செல்லத்துரை ஐயா அவர்களினால் ஒவியமாகி காட்சி அளிக்கின்றன.
ஐயாவின் ஒவிய, புகைப்படக்கலை ஆற்றல் ஒரு புறமிருக்க - புடவை சித்திர வடிவமைப்பு -அரங்க நிர்மானம் என்பனவும் கவனத்தைப் பெறுகின்றன.
1956 இல் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் விளைவாக பொருளாதாரத்துறையில் பாரிய அபிவிருத்திகள் தோன்றின.
குறிப்பாக உள்நாட்டு உற்பத்திகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையை அரசு அமுல்படுத்தியமையால் புடவைக் கைத்தொழிலை ஊக்குவிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. புடவைக்கைத்தொழிலின் வளர்ச்சியானது நவீன தொழில்நுட்பத்தில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. மக்களை பெரிதும் கவரக்கூடிய சித்திர வடிவமைப்பும் புடவைகளுக்கு
தேவைப்பட்டது.
இக்காலப்பகுதியில்தான் புடவைகளில் சித்திர வடிவமைப்பு (டிசைன்) அச்சுப்பதிவு என்பன அறிமுகப்படுத்தப்பட்டன.
இக்கால தேவைகளின் பொருட்டு ஒவியர் செல்லத்துரை ஐயா அவர்கள் ‘எலிமன்ரி ஒப் டிசைன்ஸ் என்ற சிறிய புத்தகத்தையும் வெளியிட்டார். அரசு சிறு கைத்தொழில் திணைக்களம் இதனை வெளியிட்டது.
புடவைகளின் சித்திர வடிவமைப்பு, அச்சுப்பதிவு இரண்டிற்குமிடையில் என்ன வித்தியாசம் உள்ளது? என்ற கேள்வியை விரகேசரி வார வெளியீட்டின் சார்பாக எழுத்தாளர் திரு.கே. விஜயன் ஐயாவிடம் கேட்டபொழுது அவர் வழங்கிய பதிலை இங்கே காணலாம். "
சித்திரவடிவமைப்பு என்பது நூல்களினால் நெய்யப்படுவது.

முருகபூபதி (0. 41
வர்ண நூல்களை பயன்படுத்தி நெசவு இயந்திரங்களினாலே
இந்த சித்திர நெசவு நடைபெறுகின்றது. இது பல நுண்மையான செயல்முறைகளைக் கொண்டது.
அச்சுப்பதிவு அவ்வாறானதல்ல. அந்நாட்களில் புளொக்குகள் வெட்டப்பட்டு அச்சுப்பதிவுகள் நடைபெற்றன. சித்திரங்கள் வரைந்து அவை புளக்குகளாக வெட்டப்பட்டு சாயங்கள் மூலம்
(dye) சித்திரங்கள் அச்சிடப்பட்டன.
இவற்றிலெல்லாம் இன்று பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.
கைத்தறிபோய் இன்று மின்தறி யுகம் ஏற்பட்டுவிட்டது. அந்நாட்களில் கைகளினாலே நடைபெற்ற சித்திர வடிவமைப்பு அச்சுப்பதிவு என்பனவற்றுக்கு ஒவியம் பக்கபலமாகவிருந்தது. கம்பியூட்டரின் வளர்ச்சியினால் அதிலும் பல மாற்றங்கள்
ஏற்பட்டுவிட்டன.
(வீரகேசரி வார வெளியீடு - 17.3.96)
அரங்க நிர்மானம்
செல்லத்துரை ஐயா. புகைப்படக்கலை - ஒவியம் - புடவை டிசைன் முதலான துறைகளில் பெற்ற அனுபவங்களின் வாயிலாகவும் இயல்பாகவே அவருள்ளே வாழும் கலையுணர்வினாலும் - பல கலை நிகழ்ச்சிகள் நடன அரங்கேற்றங்கள், மேடை நாடகங்கள் பலவற்றுக்கும் அரங்க நிர்மானப் பணிகளையும் நேர்த்தியாக மேற்கொண்டு பாராட்டு பெற்றுள்ளார். WW
ஒரு சமயம் - பாரதப் பிரதமர் ஜவ ஹர்லால் நேரு இலங்கை வந்தபொழுது - ஒரு கலை நிகழ்ச்சியிலும் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள நேரிட்டது.

Page 23
42 0 சந்திப்பு அக்கலை நிகழ்ச்சியில் - மேடையில் DECO அமைத்துத்தர
வேண்டியவர் தவிர்க்கமுடியாத காரணங்களினால் இறுதி
நேரத்தில் குறித்த பணியை செய்து தராமல் போய்விட்டார்.
இத்தகைய இக்கட்டான நேரத்தில் ஐயா அவர்களின் ஆலோசனையையும் ஆதரவையும் குறிப்பிட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கேட்டனர்.
அவர்களின் பரிதவிப்பை புரிந்துகொண்ட ஐயா உடனடியாகவே செயற்பட்டார். சிலரது துணையுடன்
மரக்கொப்புகளை வெட்டிவந்து மேடையில் நிறுத்தி அதன்
கிளைகள் - இலைகளை மறைத்து வெளிர்நீல மெல்லிய சேலைகளினால் அவற்றை போர்த்து மூடி - விசேட ஒளிவீச்சுக்களை ஏற்படுத்தி - அற்புதமான ஆனால்
செயற்கையான இமாலய தோற்றம் ஒன்றை DECO-வாக வடிவமைத்தார்.
பாரத நாட்டிலிருந்து வருகைதந்த நேருவை இமயமலையே வருக வருகவென வரவேற்றது போன்ற மெய்சிலிர்க்கும் உணர்வை அக்காட்சி ஏற்படுத்தியதாம்.
நேருவே மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
ஐயா அவர்கள் ஸ்தாபித்த கொழும்பு கலாலய மாதர்சங்கம் தேவகானம் நாட்டிய நாடகத்தை அரங்கேற்றிய பொழுது ஐயாவின் கைவண்ணத்தில் உருவான DECO ரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெற்றது.
அவுஸ்திரேலியாவிலும் - புலம்பெயர்ந்த ஆற்றல்மிக்க கலையுணர்வு கொண்ட தமிழ் இளைஞர்கள் மேடையேற்றிய கலையும் கண்ணிரும் - பண்டாரவன்னியன் முதலான நாடகங்களுக்கும் - தமது பேத்திமார் வானதி - வாசுகி ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றங்களுக்கும் - மக்களைக் கவரும் அரங்கங்களை நிர்மானித்தார்.

முருகபூபதி ", • 43
1966 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புகைப்பட போட்டிகளுக்கு மத்தியஸ்தராக செயல்பட்ட ஐயா அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்பு இங்கு இயங்கும் தமிழ் அகதிகள் கழகம் வருடாந்தம் சர்வதேச ரீதியாக அகதிகள் வாரத்தை முன்னிட்டு நடத்திய ஒவிய போட்டிகளுக்கும் மத்தியஸ்தராக செயல்பட்டார்.
ஐயாவின் இந்த பன்முகப்பட்ட பணிகளானது தமிழ்மக்களின் பாரம்பரிய பண்பாடுகளையும் கலாசார விழுமியங்களையும் பேணிப்பாதுகாக்கும் முன்மாதிரிகள் எனச்சொன்னால் - அதில் இரண்டு பார்வைகள் இருக்கமுடியாது.
ஐயாவின் நீண்டகால கனவு ஒன்றுண்டு.
அதனை - அவரது வார்த்தைகளிலே இங்கே தருகின்றோம்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இசை, நடன துறைகளுக்கென அமைப்புகள். பாடசாலைகள் பெருகியுள்ளன ஆனால், ஒவியப் பாடசாலைகள் மருந்துக்கும் காணப்படவில்லை. ஒவியக்கலை தமிழர் மத்தியில் அபிவிருத்தியடையவேண்டும் - என்பதே எனது மன அவா.
இந்த கனவின் கருத்தை படிப்பவர்கள் - மீண்டும் ஒரு தடவை இக்கட்டுரையின் ஆரம்பத்தில் இலங்கையின் பிரபல ஒவியர் அ. மாற்கு சொன்ன கருத்துக்களை படிக்கலாம்.
ஈழத்து இலக்கியவளர்ச்சியில் கவனிப்புக்குள்ளான அமரர் கவிஞர் முனியப்பதாஸன் (சண்முகநாதன்) ஒவியர் கே.ரி. செல்லத்துரை அவர்களின் உடன் பிறந்த தங்கையின் புதல்வராவார்.
எழுத்தாளர் திருமதி அருண். விஜயராணி ஒவியரின்
புதல்வியாவார்.

Page 24
அகஸ்தியர்
இருளினுள்ளே, நீ, திருமணத்திற்காக ஒரு பெண் காத்திருக்கிறாள், மண்ணில் தெரியுதொரு தோற்றம், கோபுரங்கள் சரிகின்றன, நாட்டுக் கூத்துக் கலாநிதி பூந்தான் யோசேப்பு வரலாறு, ஒரு நூற்றாண்டின் இரு தமிழ் நாவல்கள், அகஸ்தியர் கதைகள், மேய்ப்பர்கள், கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும், நரகத்திலிருந்து, எரிநெருப்பில் இடைபாதை இல்லை, முதலான பல நூல்களின் படைப்பாளி அகஸ்தியர் சுமார் 24 புனைபெயர்களிலும் எழுதியவர்.
இலங்கை முற்போக்கு இலக்கிய அணியில் வீறு கொண்டெழுந்து ‘மனிதாபிமானம்’ பேசிய
பண்பாளர்.
மரணிக்கும் வரையில் அயராமல் எழுதிக் கொண்டிருந்தவர்.
எனினும், என்னை ஒரு சோகம் அழுத்துகிறது.
இந்த நேர்காணலை பத்திரிகை வாயிலாக பார்க்க சந்தர்ப்பம் கிட்டாமலேயே நிரந்தரத் துயில் கொண்டவர். அகஸ்தியரின் மறைவின் பின்பே - இந்த நேர்காணல் கொழும்பில் தினகரன் வார மஞ்சளி யில் வெளியானது.
அந்திம காலம் வரையில் அயராது எழுத்து ஊழியம் புரிந்தவரின் ஆளுமையை இங்கே தரிசிக்கலாம்.

முருகபூபதி 0 45
கேள்வி - நீங்கள் எழுத ஆரம்பித்த காலம் எப்போது? எழுத்துத் துறையில் ஆர்வம் ஏற்பட்டமைக்கு ஏதும் காரணங்கள்.? முதல் எழுத்து பிரசுரமான காலம்.களம்?
பதில்:- கவிதையே என் முதல் இலக்கிய எழுத்து, கவிதை இலக்கணம் தெரியாத 1944-45 காலப்பகுதியில் எழுதத் தொடங்கினேன். இலக்கணம் தெரியாமல் எழுதினாலும் எழுதப் படுவது கவிதையாகிவிடும். சிறுவயதில் பாட்டும் பயனும், படித்தும் கேட்டும் மகிழ்வதில் அலாதி மோகம். காலகதியில் நாட்டுக்கூத்துப் பாடல்கள் பாடவும் இயற்றவும் வாலாயமாகியது. எனது பேரன், தந்தையார், தாயாரின் சகோதரர் சிங்கராசா எனது மூத்த சகோதரர், சிலுவைராசா, சித்தப்பா ஆசீர்வாதம் ஆகியோர் நாட்டுக்கூத்து கலைஞர்களாக விளங்கினர். உறவினர் வசந்த குலசிங்கம் கர்நாடக இசையில் புல்லாங்குழல் வித்துவானாகத் திகழ்ந்தார். இத்தகைய கலைக்குடும்ப பின்னணியுடன் மானிப்பாய் மிருதங்கவித்துவான் கா. செல்லையாவிடம் மிருதங்கமும் பயின்றேன். இவ்வழித்தோன்றல்களும் எனது எழுத்துலகப் பிரவேசத்திற்கு உந்துதல்தான்.
புதுமைப்பித்தனால் 'ஜடாமுனி’ என வர்ணிக்கப்பட்ட ஹிட்லர், இத்தாலி முசோலினி, ஹோயரிங் போன்ற பாஸிஸ்டுகளாலும் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர் களினாலும் கட்டவிழ்த்து விடப்பட்ட இரண்டாம் உலக மகா யுத்தத்தை மையப்படுத்தி ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை பாடிய பாடல்கள், கவிதைகள், துண்டுப் பிரசுரங்களாக யாழ். பட்டினத்தையும் தாண்டி கிராமங்கள் தோறும் பரவின. நாடக சபாக்களில் பாடப்பட்டன. மிக எளிய பதங்களில் லகு சங்கீதம் போன்று கலை நயத்தோடு வாரி இறைக்கும் நீராக அவரின் பாடல்கள் அடி, சீர், தளை, சந்தம், எதுகை, மோனையோடு அமைந்தமையால் மக்கள் மனப் பாடம்
பண்ணவும் இலகுவாயிருந்தன. மக்கள் மயப்பட்ட

Page 25
46 0
சந்திப்பு எழுத்துக்கு 'ஆசுகவியும்’ உதாரண புருஷராக விளங்கினார் என்பது இப்போது தெரிகிறது. மகாகவி பாரதியும் நான் எழுத்துத்துறையில் ஈடுபட என்னுள் தாக்கம் ஏற்படுத்தியவர்.
எழுதும் ஆர்வம் ஏற்பட்டது எனச் சொல்வதைவிட, அதையே ஒரு சத்தியப் போராட்ட வேள்வியாகக் கொண்டேன் என்பதே பொருத்தமானது.
சிறுவயது முதலே எனக்கொரு ‘கெட்ட பழக்கம்’ இன்றும் 'அது' என்னைவிட்டகல வில்லை. அதாவது - யார் எதைச் சொன்னாலும் ஆதாரமின்றி நம்பமாட்டேன். சும்மா விடவும் மாட்டேன். 'உண்மையை அறிய வேண்டும்’ என்ற தேடல் மனப்பான்மை. இம்மனப்பான்மையால் பலரதும் நிந்தனைக்கும் ஆளாகியதுண்டு.
தொழிலாள, விவசாய, பாட்டாளி மக்கள் படும் துயரம் அவர்கள் ஒயாமல் உழைத்த போதிலும் - சனதனவான்களால் கீழ்மட்டத்தில் தள்ளப்பட்ட அவலம் என்பன என்னை எழுதத் தூண்டின.
பாரதியும், புதுமைப்பித்தனும் என்னைக் ‘கெடுத்த வர்களில் முதன்மையானவர்கள்.
இதற்கிடையில் பாதிரி” யாகப்போக ஆசை வந்தது.
மைலிட்டி வீரகத்திப்பிள்ளையின் மகன் இரத்தினம் இந்து சமயத்திலிருந்து மாறி 'தாஸிஸ்’ என்ற குருவானவர் என்னை அழைத்து ‘உன்னை குருவானவராக்க உதவுகின்றேன். - என்றார். “பைபிளை' படித்து முடித்தேன். எனினும் திருப்தி இல்லை. "எதையும் நம்பாத உனக்கு இது சரிவராது” என்று என்னை விட்டதுடன் நிற்கவில்லை ஊர் மக்களையும் எனக்கு எதிராக தூண்டி விட்டார் கரைச்சலும் தொடங்கியது. 1947இல் சிறுகதைகள்

முருகபூபதி 0 47
எழுத ஆரம்பித்தேன். “பிரேத விசாரணை’ ‘பங்களாச் செய்தி” இரண்டு கதைகளும் சுதந்திரனில் எழுதினேன்.
“பிரேத விசாரணை’ - பிரச்சினைகளை எதிர் நோக்கியது. அது பிரசுரமாகிய மறுதினமே சுதந்திரன் ஆசிரியராக அப்போது கடமையாற்றிய எஸ்.டி. சிவநாயகம், ‘சுதந்திரன்’ உரிமையாளர் எஸ்.ஜேவி. செல்வநாயகத்தினால் எச்சரிப்புக் குள்ளாகினார். இவ் விதம் - என் கதையை பிரசுரித்தவரை, விசாரணைக் குள்ளாக்கிய செல்வ நாயகம் பின்பு எனது அபிமான வாசகராகவும் மாறியமைதான் அதிசயம். பின்னாளில் அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன், பிரேம்ஜி முதலானோர் சுதந்திரனில் பணியாற்றிய காலங்களிலும் தொடர்ந்து எழுதினேன். அத்துடன் தேசாபிமானி, வீரகேசரி ஆகியவற்றிலும் எனது எழுத்துகளுக்கு களம் கிடைத்தன.
கேள்வி- சிறுகதை, நாவல், விமர்சனம் என்று மூன்று துறைகளிலும் ஈடுபட்டுள்ளீர்கள். ஒரு சிறு கதையையோ நாவலையே உருவாக்கும் பொழுது, ஏதும் திட்டங்கள் உண்டா? அப்படியாயின் எவ்வாறு? கருவிற்கா, சம்பவத்திற்கா உத்திமுறைகளுக்கா பாத்திரங்களை முழுமைப்படுத்தும் ‘வார்ப்பு முறைக்கா முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.?
பதில்:- வாழ்வனுபவங்களை கதைகளாக்கவேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு நோக்கம் இல்லை, எந்தத் திட்டத்’ தோடும் படைப்புகள் என்னுள் திடுதிடுப்பென உருவாவதில்லை. இலக்கியம் படைப்பே தவிர உற்பத்தியாவதில்லை. அதற்கு வரையறுப்புகளும் கிடையாது. “கரு”க் கொண்ட விஷயம் தன்னியல் பாக வெளிவருதலே படைப் பின் ஆத்மார்த்தம். பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்ற போது அவை தாக்கத்தினை ஏற்படுத்தி விடுகின்றன. தாக்கத்தின்

Page 26
48 0
சந்திப்பு வேகம், உந்துதல் எழுத வைக்கிறது. அதற்கு உருவம் கொடுக்கும் பொழுது - அது எந்தக் களத்தில் சொல்லப்படுகிறதோ - அந்தக்களத்திற்கேற்ற இயல்புடன் சிருஷ்டியாகிறது. களத்திற்கேற்றவாறு கதாபாத்திரங்கள், சிருஷ்டியா கின்றனவேயன்றி, சம்பந்தமற்ற ‘பாத்திரங்களை’ கதைக்காக வலிந்து இழுத்துவிடுவதல்ல.
களத்திற்குத் தகுந்த கதைமாந்தர்கள் இயல்பாக நடமாடும்போதுதான் சிருஷ்டி கலை நயமாகின்றது.
அதே வேளை, கருத்துருவம் அழுத்தாத கலைநயம் சமூகவியல் இலக்கியத்திற்கு ஒவ்வாதது. நிகழ்வுகளால் கருத்துக்கள் பிறக்கின்றதேயன்றி, கருத்துக்களால் சம்பவங்கள் உருவாவதில்லை;
ஆக்க இலக்கியம் என்று வரும்பொழுது உருவம், உள்ளடக்கம் கருத்தும் உருவமும் தோதாக இணைய வேண்டும்.
கருத்தியலற்ற உருவமோ, உருவமற்ற கருத்தியலோ சிறந்த படைப்பாகக் கொள்வதற்கில்லை.
சம்பவங்களிலிருந்து பிறக்கும் கருதுகோள், இலக்கியத்தில் மட்டுமல்ல, ஏனைய துறைகளிலும் உண்டு. துப்பாக்கியிலிருந்து அரசியல் பிறப்பதில்லை. அரசியலிலிருந்தே துப்பாக்கி வெடிக்கிறது.
துப்பாக்கி ஒரு பொருள். அதனை இயக்கவைப்பது ஒரு கருத்து. பொருள் சார்ந்த நிகழ்வுகளிலிருந்தே இந்தக் கருத்தியலும் பிறக்கின்றது.
படைப்பில் ஒரு கருத்தை அழுத்துவதற்கு உருவமும் (பொருள்) அது சர்ர்ந்த சம்ப்வங்களும் (பகைப்புலன்) இணைவது உத்திவகைகளால் சிறக்கின்றன.

முருகபூபதி 0 49 உத்திகளைக் கையாளும்போது எடுத்துக் கொண்ட களம், மாந்தர், கரு மூன்றுக்கும் இசைவான வகையில் கதை அமைதல் வேண்டும். பாத்திரம், களம் இரண்டையும் கவனத்தில் எடுத்தே புதிய புதிய உத்திவகைகளை நான் கையாள்கின்றேன். எந்தக் கதைக்கும், எந்தக்களத்துக்கும் எப்போதும் ஒரே வகையான நடையைக் கையாள்வது பலவீனமாகும்.
கதை, களம், மாந்தர், பேச்சுமொழி மட்டு மன்றி மொழியின் உள்ளார்ந்த அர்த்தத்துடன் எழுதும் முறையும் ஒர் உத்திவகைதான். உருவத்தில் மட்டுமல்ல, மொழி நடையிலும் உத்தியைக் கையாள முடியும்.
புதுமைப்பித்தனின் ஒவ்வோர் வாக்கிய அமைப்பிலும் இதனைக் கவனிக்கலாம். இவ்வகை உத்தி இயல்பாக அமையாவிடின், படைப்பு பயனற்று ‘சப் பென்று போய்விடுகிறது.
தனித்துவம் வேறு, இலக்கிய ஆளுமை வேறு. உதாரணமாக, யாழ்ப்பாண பேச்சுவழக்கு மலையகப் பேச்சு வழக்கு, முஸ்லிம் மக்களின் பேச்சு வழக்க என்றெல்லாம் பேசப்படுகினும் யாழ்ப்பான பேச்சு வழக்கிலேயே இடத்துக்கிடம் ஊருக்கு ஊர் முற்றிலும் வித்தியாசப்பட்ட பேச்சு வழக்கினைப் பார்க்கலாம்.
மலையகத்திலும் இடத்துக்கிடம் வித்தியாசமான பல ரக பேச்சுத் தமிழ் உண்டு. யாழ்ப்பாணத்தமிழ் - என்று சில கொழும்பு வாழ் யாழ் வானொலிக் கலைஞர்கள்
சிலர் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கினை, அதன் இயல்புக்கு மாறாக, வலிந்து இழுத்துப்பேசுவதனால் - அது கலைநயமின்றி கொச்சையாக இருப்பதை கவனிக்கலாம்.
எந்தப் பேச்சு வழக்கினையும் அதன் ஒலிவடிவத்தில் எழுதத் தெரியாத ஒருவர் பேச்சு வழக்கினையே

Page 27
கேள்வி
Lഴ്സിങ്
சந்திப்பு தொடுவது பிசகாகும். லயம் பிசகாத சங்கீதம் போன்றதே பேச்சு வழக்கில் எழுதுவதாகும்.
படைப்பு என்பது உற்பத்தி அல்ல; அது ஒரு பிரசவம். இதை முன்பே சொன்னேன். “பேச்சு வழக்கு” எந்தவொரு இலக்கியப் படைப்பிலும் இயல்பாக அமையும் போதுதான் அது முழுமை பெறும்.
‘உணர்வூற்றுருவகச் சித்திரம்’ (நீ) முதலான பரிசோதனை இலக்கியங்களிலும் ஈடுபட்டுள்ளிர்கள். இம்முயற்சி பயனளித்துள்ளதா? அல்லது-அதுபோன்ற இலக்கிய வடிவங்களின் தாக்கம் எப்படி?
சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மேல் நாட்டிலிருந்து கீழைத் தேசத்துக்கு வந்த நாவல், நாடக இலக்கியங்களுக்குப்பின்பு வந்த சிறுகதை வடிவம் புதிய இலக்கியப் பரிசோதனையாகவே கொள்ளப் பட்டது. புதிதாக அறிமுகமாவதெல்லாம் பரிசோதனையானது தான். அது தொடர்ந்து கையாளப்படும் போதுதான் ‘பரிசோதனை என்ற தளத்தினின்றும் விடுபட்டு, மக்கள் மத்தியில் பழக்கப்பட்டு விடுகிறது. புதுக்கவிதையும் இப்படித்தான். புதுசு எதுவும் புதிய கருத்துருவத்தில் அதன் வடிவத்திற்கும் கலைத்துவம் சேர்க்கின்றது. இந்த வகையில்தான் எனது பரிசோதனை இலக்கியமான, புதிய வடிவ ஆக்கத்திற்கான அதன் செப்பனுக்கும் செப்புதலுக்கும் கருத்துக்கும் உவமானப் பதத்திற்கும் அழுத்தம் சேர்க்கும் வகையில், "உணர்வூற்று உருவகச் சித்திரம்’ என்று சூட்டினேன். எனக்குப் பின்பு தோன்றிய எழுத்தாளர்களும் இதனைத் தொடர்ந்து எழுதி மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

முருகபூபதி 05
கண்டியில், இதுபற்றி என்னுடன் அதிகம் சம்பாஷித்தவர் காவலூர் ஜெகநாதன். கருத்தாழத்தோடு எழுதக்கூடியவர். இரண்டொரு ‘உணர்வூற்று உருவகச் சித்திரங்கள்’ தீட்டினார். குறைப் பிரசவமாக இருந்தபோதிலும், எனக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது. ஆனால், அவரது மறைவினால் அந்த நம்பிக்கை தகர்ந்தது.
கூரிய அவதானிப்புள்ள ஜெகநாதன், பெனடிக்ற் பாலன் போன்று இன்றைய தலைமுறை எழுத்தாளர்களும் இந்தப் பரிசோதனை இலக்கிய வடிவத்தை, என் காலத்தோடு மட்டும் விட்டு வைக்காமல், தொடர வேண்டும் என்பதே என் விருப்பம், ஏன். நீங்களும் எழுதலாமே.
மக்கள் மயப்படும் இலக்கிய நோக்கிற்கு இது சற்று மாறுபடினும், இது தினகரனில் வெளியான போது எழுத்தாளர்கள், வாசகர்கள் மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதனால், ‘நீ’ முன்னுரையில் விபரமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். அது தொடர்பாகபயனளித்துள்ளது என்றே சொல்வேன்.
இது சொற்சிலம்பம் அல்ல; ஒவ்வோர் பதமும் உருவகத்தோடு எழுதப்படுவது. இந்த வடிவம் - தமிழில் முதல் முதலாகத் தோன்றியது என்றும் கருதுகிறேன்.
இதுபற்றி நான் சொல்வதைவிட, ஈழத்தின் ஆழமான நேரிய இலக்கிய விமர்சகரும் கவிஞருமான இ. முருகையன் எழுதியதை மீளக் குறிப்பிடுகின்றேன்.
“உணர்வூற்றுருவகச் சித்திரம் -உடைமை யாளருக்கும் உழைப்பாளருக்குமான பேதத்தையும் அதுபற்றிய ‘போத’த்தையும் ஆதாரமாகக் கொண்டது. உணர்வூற்றும் அதனடியாகப் பிறந்த உருவகமும் உலகக் காட்சியாகிய சித்திரமும் வரவேற்கப்பட வேண்டியவை. இவற்றின் பாத்திரங்கள் நீயும் நானு'

Page 28
52 0
சந்திப்பு மே. உலகம் முழுதும் 'அவன், அவள், அது என்னும் மூன்றுள் அடங்குவர் என்பர் சமயவாதிகள். அகஸ்தியரின் இலக்கியத்தேவைக்கு உலகம் முழுதும் நீநான் என்ற அளவிலே அடங்கி ஒடுங்கி விடுகின்றது. அகஸ்தியரின் வசனமும் மொழியாட்சியும் அசாதாரணமானவை.
கையாளப்பட்ட மொழி நடையும், உத்திகளும் பல வாசகர்களை திகைக்க வைத்தல் காட்டும். நோக்கத்தை திறம்பட நிறைவேற்றுவதற்காகக் கடுமையான சொற்கள் உதவுமாயின் அவை வரவேற்கப்பட வேண்டியவை. இதனை, அகஸ்தியர் நன்குணர்ந்த தமது படைப்புகளை வாசகர்களுக்குத் தந்திருக்கிறார்.
"தமிழிலக்கியத்திலே இது புதிய நடை, விஷயமும் புதிது. மரபிற்குள் மொழியை அடைத்துச் சிறைப்படுத்தும் சிலர் நிலைதடுமாறுவர். ஆனால், இப்புதிய வாக்கிய அமைப்புகள் புதிய அகராதியில் கட்டாயம் இடம் பெறும். ஏனென்றால் அகஸ்தியரின் இந்த மொழியும் நடையும் மனதை பிரளப்படுத்துகின்றன” என்ற, எமது அடுத்த தலைமுறை எழுத்தாளர் செ.யோகநாதன் குறிப்பும் கவனிப்பிற்குரியது.
இதுபற்றிய, எனது குறிப்புகளை இங்கு கூறல் பொருத்தம்:-
s
தத்துவம் ஒரு கருத்தாகும். மனித வாழ்வையும் மனித சரித வளர்ச்சியையும் கொண்டு உருவாகிற கருத்தும் அதுபற்றிப் பெறும் போதமுமே தத்துவமாகும். “தத்துவம்’ என்னும் பலம் கலை இலக்கிய அரசியல் உலகில் எப்பவோ வந்த ஒன்று. கலை இலக்கிய வடிவம் உடலாயின் தத்துவம் அவற்றின் உயிராகும். உலகப் பொதுவான சொத்துக்களைத்தான் தான் தனதாக்க விழைந்த இவன், அவற்றைப் பிரித்து தானே, தனியுடைமை ஆதிக்கம் பற்றிய மோகிப்பதால்,

முருகபூபதி 0. 53 பின் இவன் ‘சக்தியே இவனுடன் மோதலாயிற்று. இம்மோதல் இன்றைய சகாப்தத்தோடு ஐந்தாவது சமூக அமைப்பையே உலகில் தோற்றுவித்துவிட்டது. அபகரிப்புக்கும் இழப்புக்கும் போர்- அநீதிக்கும் நீதிக்கும்
G_u fT iii.
இந்தப் போரானது அநியாயம் அழிந்து நியாயம் நிறுவப்படும் வரை நிகழும். பொதுவான இயற்கை-செயற்கைச் சொத்துக்களை மனிதன், மனித வர்க்கத்தின் ஒருவனோடு நின்று பொதுவாக அனுபவிக்கும்வரை ‘போர்’ நிகழ்ந்தே தீரும். இன்று உலகெங்கும் பெருங்கொந்தளிப்பு கெந்தகித்துக் கொண்டிருக்கிறது. இரு கன்னைப்போரில் மனிதன் குதித்துவிட்டான். அவன் போராடியே வாழவேண்டும் என்பது நியதியல்ல. பொதுச்சொத்துக்கள்மீது ஒருவனை விட்டு அடுத்தவன் தனி ஆதிக்கமும் தனி உரிமையும் கொண்டாடக் கிளம்பியதால் போராடி வாழ வேண்டியதாகிவிட்டது. உலகப் பொதுச் சொத்துக்களை இதே உலகப் பொது மனிதன் பொதுமையாக அனுபவிக்கும்வரை இந்தக் கொந்தளிப்பும் போராட்டமும் வீறுகொண்டேயிருக்கும்.
மனிதனின் உணர்ச்சிகள் மனிதன் சிருஷ்டித்த ஆயுதங்களுக்கு அடங்குபவையன்று. அவை வீறு கொள்பவை. ஆயுதபலத்தால் மனிதனின் உணர்ச்சிகளை அடக்கலாமே தவிர - உணர்வுகளை அல்ல! இதுவும் ஒரு நியதி!
இந்த பரீட்சார்த்த இலக்கிய வடிவங்களை பாத்திரங்களேயின்றி 'உலகமே களமாக” குறியீடு களால், நரகத்திலிருந்து (குறுநாவல் - வீரகேசரி) “கோடீஸ்வரப்பிரபுவுடன் ஒரு சந்திப்பு (ஒசை)

Page 29
54 0
கேள்வி:
பதில்:
சந்திப்பு (N.C.B.H. வெளியிடவுள்ள ஒரு குறுநாவல் தொகுப்பில் இவ்விரு படைப்புகளும் இடம்பெறுகிறது). ஆகியவற்றை படைத்துள்ளேன்.
இவற்றைவிட "உணர்வூற்றுருவகச்சித்திர உத்தியைக் கொண்டு குறுநாவல் ஒன்றும் புதிதாக எழுதுகிறேன்.
இன்றைய எழுத்தாளர்களும் இதுபோன்ற புதிய இலக்கிய வடிவங்களில் ஈடுபடின் தமிழுக்கு அணி சேர்ப்பதாக அமையும். இது அவசியமுமாகும்.
கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் இலக்கியமாக்கும்பொழுது, “கலைத்துவம் மழுங்கி
விடலாகாது.
பெரும்பாலான எழுத்தாளர்கள் ‘புனைகதை இலக்கியத்தை நடைச்சித்திரமாக்கி விடுகிறார்கள். இந்த “ஆபத்து தங்களின் சில படைப்புகளுக்கும் நேர்ந்ததாக அபிப்பிராயம் உண்டு. இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?
இதை ‘ஆபத்து” என்று சொல்வதை விட ‘அபத்தம் என்று சொல்லலாம். கண்டது, கேட்டது, அனுபவிப்பது மட்டு மின்றி அனுமானிப்பதும் கலைத்துவமான இலக்கியமாகிவிடுகிறது. அனுமானத்திலிருந்து தோன்றிய சமய இலக்கியங்கள், கருத்தழுத்தம் பெறாதவை. இயல்பு வாத இலக்கிய விழுமியங்களுக்கும் விஞ்ஞானத்திற்குப் புறம்பான வெற்றுச் சுலோகங்களாகத் திகழ்வதால் அவை மாயக் கலைத்துவத்தோடு வெளிவருகின்றன.
கற்பனாலோகவாத இலக்கியங்கள் யாவும் இத்தகைய்தே
எனது இலக்கியங்கள், பொருள் முதல்வாதக் கோட்பாடுடைய கருத்தியலுக்கும் கலைத்துவத்துக்கும் அழுத்தங்கொடுக்கும். சமூகவியல், சார்ந்துள்ளதால்

முருகபூபதி 0 55
கருத்தின் அழுத்தத்துக்குள் “கலைத்துவம்’ அமுங்கிவிடுவதுபோலாகிறதேயன்றி கலைத்துவம் குன்றிய படைப்புகள் என்று கூறுவதற்கில்லை.
கருத்துக்கு அழுத்தம் கொடுக்காமல் கலைத்துவத்தை முன்வைக்கும் படைப்புகளால் பிரயோசனம் இல்லை.
கருத்துக்காக கலைத்துவமேயன்றி கலைத்துவத்துக்காக கருத்தியல் இல்லை. இதனால்தான் உருவமும் உள்ளடக்கமும் சமமாக இணையவேண்டும் என்று சொல்கிறோம்.
“கலை கலைக்காக’ என்னுங்கோஷ்டியும் தமது ஏதோ ஒரு கருத்தை முன்வைப்பதற்காகவே எழுதுகிறார்கள்.
அக்கருத்தினை இயல்புவாதமாக விளக்கமுடியாத படியால், இவ்வாறு ஒரு சுலோகமாகச் சொல்லி தப்பித்துக் கொள்கின்றனர்.
சுந்தரராமசாமியின் கருத்துக்களுக்கு நான் எழுதிய பதிலிலும் இதை விபரமாகக் குறிப்பிட்டுள்ளேன்.
கலைத்துவம் என்றால் என்ன?
“எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
s அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
என்ற குறள் மிக அற்புதமான கவித்துவம் மிக்க கலைத்துவ வரிகள்தான். ஆனால், அது எப்பொருளை எவரிடத்தில் கேட்கலாம் என்றோ, அப்பொருளில் எது மெய்ப்பொருள் என்றோ, அந்த மெய்ப்பொருளை தெரிந்துகொள்ளும் மார்க்கம் என்னவென்றோ அங்ங்ணம் தெரிந்துகொள்வது தான் அறிவு என்றோ விஞ்ஞான வாயிலாக ஒரிடத்திலும் விளக்கவில்லை.
இதில் கலைத்துவம் விஞ்சி நிற்கிறதேயன்றி, கருத்துருவம் ஒரு சுலோகமாக விருப்பதைப் பார்க்கலாம்.

Page 30
56 0
சந்திப்பு “யார் என்ன சொன்னாலும் அதில் எது சரி என்று பார்த்து நடந்துகொள்; அதுதான் அறிவு - என்று சொல்ல எந்த மனிதனாலும் முடியும். ‘யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”
என்ற குறளும் ஒரு சுலோகம்தான். இதுவும் கலைத்துவமானதுதான். மறுப்பதற்கில்லை. ஆனால், இந்தச் சுலோகத்தில் காரண காரியத்தோடு விஞ்ஞான ரீதியான மெய்யியல் விளக்கம் ஏதும் இல்லை.
எல்லார்க்கும் எப்பொருளும் எப்போதும் ஒரே
தன்மையுடையதாயிருக்காத சமுதாய அமைப்பில் இப்படியெல்லாம் புனையப்படும் நீதிவாக்கியங்கள் வெற்றுச் சுலோகங்களாயிருப்பதனால், அவை கலையம்சத்தில் உன்னதம் போல் ஒரு மாயத் தோற்றத்தை அளிக்கின்றன.
நிலவுடமைச் சமுதாயத்தின் சார்பு வாதமான பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் கருத்துக்கள் இந்த 'கலைத்துவத்துள் அமுங்கியிருப்பினும், அவை நீதிநூல்கள்’ எனச் சொல்லப்படும்போது அவற்றின் இந்த கலைத்துவங்களும் அர்த்தப்படாமல் வெற்றுச் சுலோகங்களாகிவிடுகின்றன.
கேள்வி: முற்போக்கு அணியைச் சார்ந்தவர் நீங்கள். பிரசாரத்
பதில்:
தொனி மேலோங்கியதனால் பல ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகள் கலைத்துவம் அற்றுப்போய் முழுமைபெறவில்லை.இதன் காரணம் என்ன?
இதை முற்றாக மறுக்கின்றேன். தங்களின் முதல் கேள்வியிலும் இதுதான் தொக்கியிருக்கின்றது. இதுபற்றிச் சற்று விளக்கமாகச் சொல்வதெனில், உண்மையில் பெரும்பாலும் பிற்போக்கு அணிசார்ந்த

முருகபூபதி
• 57
படைப்புகளில்தான் பிரசாரத்தொனி அதிகம் உண்டு.
அதற்குக் காரணமும் உண்டு. எவராலும் நிரூப்பிக்கமுடியாத யூகங்களால் யதார்த்தத்திற்குப் புறம்பானதும் இயக்கவியல் விஞ்ஞான மறுப்புவாதமாகவும் வெளிவரும் படைப்புகள் பிற்போக்கு அம்சத்தின் அத்திவாரமாகும்.
இதனடியாக உலக சமுதாய, சமூகப்பிரச்சினைகளை மையப்படுத்தும் எழுத்தின் நோக்கமும் வேகமும் முழுக்க முழுக்கப் பிரசார இலக்கியங்களாகி விடுகின்றன.
முற்போக்கு இலக்கிய மறுப்புவாதிகளே, பிரசார இலக்கியங்களில் அதிகமாக ஈடுபடுகின்றனர்.
தனக்கு இசைவில்லாத ஒரு விஷயத்தை வலிந்து எழுதும்போதுதான் பிரசாரத்தொனி அதிகரிக்கிறது. முற்போக்கு எழுத்தாளர்கள் தமக்கு இசைவில்லாத விஷயத்தைக் கையாள்வதில்லை. எனவேதான், முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகள் முன்னணியில் திகழ்கின்றன.
யதார்த்த நெறி பிறழ்ந்த இலக்கியக் கருவூலம் பிரசாரத் தொனியாவதும் இயல்பு. அந்தப் பிரசாரத்திற்கான விஷயம் அல்லது கருவூலம் அந்தர பவனியானதால் அதனைச் சுட்டவரும் உருவம் கலைத்துவமாகிவிடுவதும் இயல்பு. இதன் அர்த்தம், உயிர் பிரிந்த சடலம் என்றாகிறது.
இலக்கியக்களம் ஒரு சமுத்திரம். இதில் முழுமைபெற்ற முழுமையற்ற இலக்கியம் என்று எதுவும் இதுவரையில் இல்லை. உலகில் எவருடைய எந்தவொரு இலக்கியமும் முழுமைபெற்றதாகவும் இல்லை.
ஒவ்வோர் கணமும், எந்தவொரு பிரச்சினையும் வெவ்வேறு விதமாகத் தோற்றம் கொள்கின்றது. ஒரு

Page 31
58 (e
கேள்வி:
பதில்:-
சந்திப்பு
பிரச்சினையை மையப்படுத்தும் படைப்புகள் சில நாளில் முழுமையாகத் தெரிவது இல்லை. அவை அன்றன்றுள்ள சுவடுகளாக ஆவணங்களாகி விடுகின்றன. ஆனால் மாக்ஸிய அழகியல் சார்ந்த இலக்கியங்கள், அவ்வக்காலங்களை மையப்படுத்தும் பிரச்சினைகளை மையப்படுத்தி யதார்த்த பூர்வமாகவே படைப்பதோடு உருவம் உள்ளடக்கம் இரண்டிலும் முழுமையாகவே வெளியாகின்றன. இதுகாறும் தோன்றிய சகல சிந்தனாவாதிகளும் இச்சமுதாயத்தை ‘விமர்சித்தார்கள். இதே சமுதாயத்தை எப்படி மாற்றியமைப்பது என்பதற்கு வரலாற்றுப்பொருள் முதல்வாத விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்து வழிகாட்டியது ‘மார்க்ஸிய அழகியல்'தான்.
தமிழினப்பிரச்சினை தொடர்பாக எமது ஈழத்து இலக்கியவாதிகள், எழுதவில்லையென்றும், ஈழப் போராட்டதிற்கு சாதகமாக இலக்கியம் படைக்கவில்லையென்றும், ‘தமிழ் அமைப்பு” களும் அவற்றைச் சார்ந்தவர்களும் குற்றம் சுமத்தி வந்துள்ளனர்! இது குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்.
தமிழினப் பிரச்சினை தொடர்பாக மற்ற எவரையும்விட முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளே அதிகம் வெளிவந்துள்ளன; வருகின்றன.
தமிழினப் பிரச்சினை பல கண்ணோட்டத்தில் எழுதப்படுகின்றது.
ஒர் இயக்கத்துக்கு கட்டுப்பட்டு எழுதுவது வேறு; இயக்கத்துக்கு வெளியே நின்று இயக்க முறைமைகள் பற்றியும் இனப்பிரச்சினை பற்றியும் எழுதுவது வேறு.
எந்த எழுத்தாளனுக்கு அவன் கருதுவதுதான் அவன் சுதந்திரமேயன் ? அவன் கருதாத எழுத்து அவன் சுதந்திரமாக டி.சந்தர்ப்பவாத எழுத்து என்பதும் சுதந்திரமாகாது. இதுகுறித்து நிறையவே சொல்லலாம்.

முருகபூபதி 059.
தமிழ்த் தேசீய இன விடுதலைப் போராட்டதிற்கோ, சுயநிர்ணய உரிமைக்கோ மாநில சுயாட்சிக்கோ டாதகமாக எந்தத் தமிழ் எழுத்தாளர்களும் எழுதியதாக எனக்குத் தெரியவில்லை. இதுகுறித்த சாதக-பாதகம் என்பது ‘போராட்டமுறைகள்’ பற்றியதாக வருமே தவிர, போராட்டம் பற்றியதாக இருக்காது.
தமிழ்த்தேசீய இனப்பிரச்சினை தமிழ் மக்களின் ஜீவாதாரப் பிரச்சினை. மற்ற எந்த
எழுத்தாளர்களையும்விட, உலக ரீதியிலும் தேசிய இனப்பிரச்சினை பற்றி எழுதியதும் மார்க்ஸிய
எழுத்தாளர்கள்தாம். -
யோசேப் ஸ்டாலின் எழுதிய ‘தேசிய இனப் பிரச்சினைகளின் அடிப்படை அம்சங்கள்’ என்ற நூலும் சான்று.
தமிழினப் பிரச்சினையை வென்றெடுப்பதற்கான போராட்டம், இரண்டு விதமான கண்ணோட்டத்தில் அணுகப்படுகின்றது.
ஒன்று:- தமிழ்மக்களின் ஜீவாதார உரிமைகளை அதிகார, வர்க்கத்தின் எதிர்ப்புச் சக்திகளோடு ஒன்றித்து, பலதரப்பு மக்கள் இணைந்த வெகுஜன இயக்கப் போராட்டத்தின் மூலம் அதிகார வர்க்கத்தை பலவீனப்படுத்துவது.
இரண்டு :- இதுகாறும் ஒப்பந்தங்கள் செய்த முதலாளித்துவ சக்திகளை நிராகரித்துவிட்டு முதலாளித்துவத்துக்கு எதிரான தமிழ் மக்களுக்கு ஆதரவான தொழிலாள வர்க்க சக்திகளுடன் இணைந்து போராடுவது.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாளித்துவ சக்திகளுக்கு எதிரான, தொழிலாள வர்க்கத்துடன், தமிழ்த்தலைமை ஒருபோதும் இணைந்து

Page 32
60 0
சந்திப்பு
செயல்படவில்லை - என்ற உண்மையை முக்கிய
கவனத்தில் கொள்ளவேண்டும்.
இதனை விட, இது மேலும் இரண்டு விதமாக அணுகப்படுகின்றது.
ஒன்று:- இலங்கைத் தேசியத் தன்மையிலிருந்து தமிழ்த் தேசிய இன உரிமையை வென்றெடுப்பது.
இரண்டு :- இலங்கைத் தேசீயத்தன்மையை புறக்கணித்துக்கொண்டு தமிழ்த் தேசிய இன உரிமையை பாதுகாப்பது.
இந்த வகையிலும் இதற்கு மேலாலும் விடுதலை அமைப்புகளின் போராட்டக் குறிக்கோளும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பத்து அம்சக் கோரிக்கையும் இதனுள் அடங்கும்.
இனப்பிரச்சினை மட்டுமல்ல, எந்தப்பிரச்சினையுமே பொருளாதாரப் பிரச்சினைதான். எந்தப்போராட்டமும் ஏதாவது ஒரு வர்க்கச் சார்பு வாதமாகவே திகழ்கின்றது.
இச்சார்புநிலை, அதிகார வார்க்கத்தைப் பலப்படுத்துகிறதா பலவீனப்படுத்துகிறதா? அதிகார வர்க்கத்தின் அரசியற் கோட்பாடு உலக வியாபிதம் எந்த வர்க்கத்தோடு சார்ந்திருக்கிறது?
இவ்வாறுள்ள ஆளும்வர்க்கத்தை எதிர்த்து போராடும் விடுதலை இயக்கம், உலக வியாபிதமாக எந்த வர்க்கச் சார்பாக இணைந்திருக்கிறது?
இவ்வாறெல்லாம் உள்ள நிலைக்கான விமர்சனம் தர்க்கீகம் வெகுஜன மட்டத்தில் ஜனநாயகபூர்வமாக இதுவரையில் நிகழ்த்தப்படவில்லையாதலால் இதுபற்றி சமூகவியல் எழுத்த சர்கள், சுதந்திரமாகத் தங்களின் கருத்துக்களை முன்வைக்கத் தயக்கம் கொள்வது
இயல்பே.

முருகபூபதி 0 61
இயக்கவியல் மறுப்புவாதச் சுலோகத்துக்காகக் கண்களை மூடிக்கொண்டு எந்தவித பொறுப்புமில்லாமல், உணர்ச்சிப் பிழம்பமான வார்த்தைகளை யதார்த்தத்துக்குப் புறம்பாக எழுதுவது இலக்கியமாகாது. அது சமூகவியற்படைப்புமாகாது.
எனினும், மிக அக்கறையோடும் பொறுப்போடும் உள்ளார்ந்த நேசிப்போடும் இனப்பிரச்சினையை மையமாகத் தொட்டு அதிகம் எழுதியவர்கள் முற்போக்கு எழுத்தாளர்களே!
கேள்வி: ஒரு இனத்தின் விடுதலையை, இலக்கியம் எந்தளவுக்கு முன்னெடுத்துச்செல்லும்? (கலை-கலைக்காகவே - இலக்கியத்தில் அரசியல் கலக்கக்கூடாது முதலான வாதங்கள் இருப்பதனால் இக்கேள்வி)
பதில்: இந்தக் கேள்விக்கும் முன்பே பதில் அளித்துள்ளபடியால், சற்றுச் சுருக்கிச் சொல்லலாம் எனக் கருதுகின்றேன். ஒர் இனத்தின் விடுதலை மட்டுமல்ல, எந்த விடுதலைப்போராட்டமும் அது சுட்டும் நோக்கம் நிறைவேறும்வரை அது சார்ந்து வரும் படைப்புகளும் வீறுகொண்டேயிருக்கும்.
இலக்கியம் காலத்தைப் பதிவுசெய்யும் ஆவணம் மட்டுமல்ல: அது சார்ந்து நிற்கும் போராயுதமுமாகும்.
உலகத்தின் தலைசிறந்த சிருஷ்டிகள் யாவும், அழகையும் மனிதனின் இன்ப, சுகானுபவங்களையும் தேவ கடாட்சங்களையும் மடாலயங்களையும் கருப்பொருளாக வைத்து ஜாலவித்தை செய்ய வில்லை. அவை, சமுதாய வளர்ச்சிக்குப் பங்களிப்பாகவும் மனித விடுதலைக்கு உந்துசக்தியாகவும் விளங்கியிருக்கின்றன.
மகாகவி சேக்ஸ்பியரின் நாடகங்களிலிருந்து மார்க்ஸிம் கார்க்கியின் படைப்புகள் வரையுள்ள இலக்கியங்களில் இதனைப் பார்க்கலாம்; நமது பாரதியிலிருந்து புதுமைப்பித்தன் வரையிலும் பார்க்கலாம்.

Page 33
62 0
கேள்வி:-
பதில்:-
சந்திப்பு
விகிதாசாரத்தின்படி கணித்தால், இன்று ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டு மின்றி, இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளும் கலை, கலைக்காகவே என்னும் பிறவிக்கலைஞர் நிலையிலிருந்து முற்றாகவே விலகி, சமுதாய முன்னேற்றத்துக்கு உந்துசக்தியான படைப்புகளாக வெளிவருவதைப் பார்க்கலாம்.
எந்தவகையிலும் இலக்கியம் பொழுதுபோக்குச் சாதனமல்ல. போராயுதம் ஆக, இனத்தின் விடுதலை மட்டுமல்ல, சகல ஒடுக்குமுறைக்கும் எதிராக கலை, இலக்கியங்கள் விளங்குகின்றன என்று சொல்லலாம்.
பல எழுத்தாளர்கள் நிறைய எழுதவேண்டும் என்பதற்காகவும் எழுதியவற்றின் எண்ணிக்கையை பெருக்கவேண்டும் என்பதற்காகவே எழுதிக் குவிக்கின்றனர். இதனால் பெரும்பாலும் நீர்த்துப்போன எழுத்துக்களே அவர்களிடமிருந்து வருகின்றன. இதுபற்றி என்ன கருதுகிறீர்கள்?
‘விஷயம் இல்லாமல் அதிகமாக எழுதிக் குவிக்கும் நோக்கில் ‘உற்பத்தி’செய்யப்படும் படைப்புகள் நீர்த்துப்போவதில் வியப்பில்லை. அவ்வாறு, “உற்பத்தி செய்யப்படுபவை சிறந்த படைப்புகளா? அதே சமயம், நிறைய விஷயங்களை எழுதுமளவு சரக்குள்ள படைப்பாளி நிறையவே எழுதவேண்டியிருக்கிறது. ஒயாமல் எழுதிக்கொள்ளுமளவு கருவூலங்கள், இந்தப் படைப்பாளிக்கு எழுத்து என்பது தவம்.
அது பிரசவமாகின்றதேயன்றி உற்பத்தியாகவில்லை.
அதிகமாக எழுதியும் ஒரு சிறு தாக்கத்தையும் காணமுடியாத படைப்பாளர்களும் குறைவாக எழுதி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களும் உண்டு.
இங்கே - சொற்பமா - அதிகமா என்பது

முருகபூபதி 0 63
பிரச்சினையல்ல. எழுதும் விஷயம் தாக்கமானதா என்பதே முக்கியம்.
ஒரு காலத்தில் எழுதப்பட்ட படைப்புகள் இன்றும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதென்றால் அந்தப்படைப்புகள் தோன்று வதற்கான பிரச்சினைகள் அவற்றை பிரசவிக்க வைத்தன என்பதும், அதே பிரச்சினைகள் இன்றும் மறுரூபத்தில் விஸ்வரூபமெடுத்திருக்கின்றன என்பதேயாகும். இந்த வகையில் சில படைப்புகள் காலத்தையும் வென்று வாழ்கின்றன.
கேள்வி புலம்பெயர்ந்த வாழ்வில் தங்களின் இலக்கியப்பணியும் இலக்கியச் சுற்றாடலும் எப்படி இருக்கிறது.
பதில்: பெற்ற தாயும் பிறந்த நாடும் துறந்த எவரும் இயல்பான சுதந்திர ஜீவியல்ல. ஆனால், சுதந்திர ஜீவி அனுபவிப்பதைவிட பலர் சுகபோகவாதிகளா கியுள்ளதால், கலை இலக்கியங்களும் வியாபாரப் பண்டங்களாக ‘உற்பத்தி செய்யப்படுகின்றன.ஏதோ ஒரு போர்வை, ஒவ்வொருவரும் எதேச்சமாகத் தத்தமக்குத்தான்தானே தோதாக வரித்துக்கொள்ளும் போர்வை.
கற்பனாவாதக் கோட்பாடுகளால், நச்சுப்படுத்தப்பட்ட அடிமைச் சுதந்திரத்தை முழங்காற்படி’யிட்டுச் சுவாசிக்க ஆவேசிப்போர், ஆயுதப் பாசறைக்குத் தீந்தை பூசி வெண்கல மணியோசைக்காக ஆசைப்படும் போர்வை.
இப்போர்வையாளர்கள், ஜனநாயகப் போர்வையில் பனநாயகத்தில் மூழ்கியதால் இயல்பான கலை, இலக்கியக் கருவூலம் என்பதும் போர்வையாகிவிட்டது.
சத்தியக்கலை, இலக்கியங்கள் பலிபீடங்களில் குற்றுயிராக மாய்கின்றன.
ஒவ்வோர் போர்வையும் தன்னளவில் தன்னிச்சா பூர்வமாகப் பணப் புழக்கத்தோடு கலை, இலக்கியத்தை

Page 34
கேள்வி:-
பதில்:-
சந்திப்பு
இணைத்து அந்தகாரத்துள் ஆக்கிவிட்டதால் யதார்த்த பூர்வ படைப்புகளுக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
வறுமையின் தத்துவம் அல்ல, தத்துவத்தின் வறுமை கோலோச்சுகிறது. ‘கலை, இலக்கியம் இறாத்தல் என்னவிலை என்னுமளவிற்கு மலினப்படுத்தப் பட்டிருக்கிறது.
மக்கள் மயப்படும் கலை, இலக்கியத்தை வளரவிடாமல் புகழேந்திப் புளுகுக் கலைஞர்கள் நந்தி போல் வழிமறைத்து நிற்கின்றனர்.
இந்த 'இடைஞ்சல்களுக்கு மத்தியில்தான் நீறுபூத்த நெருப்பினின்று அனல் கக்குவது போல் எனது இலக்கியப்பணி தொடர்கிறது. நூலாகவே எழுதுகின்றேன்.
மூத்த தலைமுறையைச் சேர்ந்த தாங்கள், இன்றைய புதிய தலைமுறை படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இந்த உலகத்தில் எவரும் பிறவிக்கலைஞர் அல்ல. பொருள் மாற்றம் குணமாற்றமாகவும் பரிணமிப்பதை அவதானிக்கலாம்.
சுருங்கச் சொல்வதென்றால், அனைத்து கலை, இலக்கியப் படைப்பாளிகளும் மக்களிடமிருந்தே சுற்றுக்கொள்கிறார்கள். மக்களிடமிருந்தே தோற்று விக்கப்படுகிறார்கள். எந்த அனுக்கிரகத்தினாலும் கலைஞன் தோன்றுவதில்லை.
மக்களிடமிருந்து கற்று, மக்களுக்கு அளிக்கும் கலைஞனே சிறந்த யதார்த்த பூர்வக் கலைஞனாகின்றான். கலை, இலக்கியமானது தேசத்தின் மனச்சாட்சியை மக்கள் வாழ்க்கையை ஆழமாகத்
தொட்டு நிற்க வேண்டும்.

முருகபூபதி
0 65
ஒவ்வொரு கணமும் உலக விவகாரங்கள், பிரச்சினைகள் மக்கள் மத்தியில் புதுசு புதுசாகத் தோன்றும்போது இவற்றிற்கெல்லாம் கற்பனாவாத மந்திரச் செப்பேடுகளின் கீர்த்தனங்களால் தீர்வு காணமுடியாது.
கூலிமுறையில் ஆளுக்கொரு விதமான வியாபாரச் சந்தைக்குட்படுத்தப்பட்ட கலை, இலக்கியங்களை - சினிமாக்களை முற்றாகவே நிராகரித்துக் கொண்டு, மானிட தர்ம வாழ்விற்கான பேராயுதமாக - போராயுதமாகக் கலை,இலக்கியங்கள் படைக்கும் மக்கள் எழுத்தாளர்களாகத் திகழ வேண்டும்.
எழுத்தை, அதன் சுருதி கலையாமல் லயபாவத்துடனும், கலைநயத்துடனும் கருத்துருவம் தாங்கிய படைப்புகளையே அளிக்க முன் வருதல் வேண்டும்.
எந்தப் படைப்பையும் விமர்சிக்கும் ‘உரிமை ஒரு குழந்தைப்பிள்ளைக்கும் உண்டு.
ஆனால், ‘குழந்தைப்பிள்ளைத்தனமாக விமர்சிக்கும் உரிமை தகமையாகாது. ஆக, விமர்சிக்கும் உரிமை தகமை சார்ந்தும் இருத்தல் வேண்டும்.
மொழிக்குச் சேவகம் செய்வதல்ல, மொழி நமக்குச் சேவகம் செய்யுமளவு அதை ஆற்றுப்படுத்த வேண்டும்.
விமர்சனத்தால்தான் இலக்கியம். செழுமைப் படுகிறது. விமர்சனத்தை எதிர்கொள்ளவும், விமர்சிப்போரை நேசிக்கவும் பண்பட வேண்டும்.
எனது இலக்கிய வாழ்வில், என்னை விமர்சித்தவர்களும் என்னால் விமர்சிக்கப்பட்டவர்களுமே எனது உற்ற இலக்கிய நண்பர்களாகத் திகழ்கின்றனர்.
எந்தப் பத்திரிகைகளுக்கும் எவரும் எழுதலாம். ஆனால், ஒரு போதும் - பத்திரிகைகளுக்காக எழுதக் கூடாது.

Page 35
66 (t
சந்திப்பு
பத்திரிகைகளுக்காக எழுதினால் - எழுத்தின் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் இரண்டையும் இழக்க நேரிடும். எழுத்தாளன், தான் நினைப்பதையும் தனது கருத்தையும் எழுதுவதே அவனது சுதந்திரம். தனது எழுத்தைத் தானே விமர்சிக்கும் பக்குவம் தன்னளவிலேனும் இருக்க வேண்டும்.
தக்கவர்களால் மட்டுமன்றி, அல்லாதவர்களாலும் பொதுமக்களாலும் வரும் விமர்சனத்தை ‘சரி யென்று படும் பட்சத்தில் தயங்காமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு ஏற்பது பலமே தவிர பலவீனமலல, எதை நாம் அறியவில்லையோ - எது எமக்குப் புரியவில்லையோ - அதை அறிய அணுகுவதே அறிவு.
சகலரிடமும் ஒவ்வோர் திறமையுண்டு. இதனை ஒருமுகப்படுத்தின் சிறந்த கலை,இலக்கியங்கள் தோன்ற வழிபிறக்கும்.
அனைத்து சுரண்டப்படும் மக்கள் பக்கம் நின்று சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக எவர் எழுதுகிறாரோ அவர் எழுத்தே புனிதமானது.
அந்த புனித இலக்கிய கைங்கரியத்தை உலகப் பார்வையோடும் இளைய தலைமுறை நாடுவார்களாக,
女 女 女

இந்திரா பார்த்தசாரதி
பல்துறை சார்ந்த கலை, இலக்கியத்துறைகளில் ஈடுபட்டு விமர்சகர்களினதும் கலா ரசிகர்களதும் கவனத்தை கவர்ந்தவர் இந்திரா பார்த்தசாரதி.
மனிததெய்வங்கள், காலவெள்ளம், தந்திரபூமி, சுதந்திர பூமி, குருதிப்புனல், மாயமான் வேட்டை, உச்சிவெய்யிலில், வெந்து தணிந்த காடுகள், ஏசுவின் தோழர்கள், உட்பட பல படைப்புகளை தந்தவர். இ.பா.வின் மழை நாடகம் பிரசித்தமானது. இலங்கை, இந்தியாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மேடையேறியது. கணையாழி'யின் நீண்ட கால கெளரவ ஆசிரியர்.
அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்தார். இலக்கியச் சந்திப்பிலும் ஆர்வமுடன் கலந்துகொண்டு கருத்துப் பரிமாறினார். “தமிழர்களுக்கு உலக அங்கீகாரம் வேண்டும் ஈழத்தமிழர்களாலேயே அது சாத்தியம்” என உறுதியுடன் கூறினார்.
இந்திரா பார்த்தசாரதியின் நேர்காணல் அவுஸ்திரேலியா, மரபு’ - பிரான்ஸ் பாரிஸ் ஈழநாடு’ ஆகியனவற்றில் பிரசுரமானது.

Page 36
68 0.
கேள்வி:-
9).ւյՈ:-
கேள்வி:-
இ.பா-
கேள்வி
சந்திப்பு
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதுகிறீர்கள். ஆரம்பகால எழுத்துலக பிரவேசம் பற்றி சொல்லுங்கள்.
என் முதற்கதை, அதாவது நான் பத்திரிகைகளுக்கு அனுப்புவதென்று தீர்மானித்து அனுப்பியது. ஆனந்த விகடனில் 1964 இல் பிரசுரமாகியது. அதற்கு ‘முத்திரைக்கதை’ என்ற அந்தஸ்தும் கிட்டியது. அக்காலத்தில் ஜெயகாந்தனும் அதில் எழுதிக் கொண்டிருந்தார். முதற்கதை ‘மனித இயந்திரம்’ நான் மாணவனாக இருக்கும் போதே எழுதத் தொடங்கி விட்டேன். அப்பொழுது எழுதிய நாவல் காலவெள்ளம் இதுவே எனது முதல் நாவல். எனினும் இலக்கிய உலகிற்கு என்னை அறிமுகப்படுத்திய நாவல் தந்திர பூமி’. இது 1969 இல் அல்லது 70 இல் வெளியாகியிருக்க வேண்டும். எனினும் ஒரே சமயத்தில் வெளியான இரண்டுக்கும் (எழுதப்பட்ட) கால இடைவெளி 17 ஆண்டுகள்.
உளவியலையும் அடிப்படையாக வைத்து எழுத நேர்ந்தமைக்கு ஏதும் நோக்கம் உண்டா?
ஒவ்வோர் எழுத்தாளனும் அவன், பாரம்பரியக் கரு, கல்வி, வளர்ந்த சூழ்நிலை ஆகியவற்றில் உருவாக்கப் படுகின்றான். உளவியல் அடிப்படையில் எதையும் நோக்குவதென்பது என் இயல்பாக அமைந்து விட்டதென்றுதான் சொல்ல வேண்டும். உளவியல் நூல்களை என்னை படிக்கத் தூண்டியது எது? இயற்கை உந்துதல்தான். இவ்வியற்கை உந்துதலுக்கு காரணம் urbufuš 95stačr (GENETIC MAKE-UP) 6rašrg என் அனுமானம்.
தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி முதலானோரின் எழுத்துக்கள் வாசகர் வட்டங்களை

முருகபூபதி
9).ւ յո:-
கேள்வி:-
(9).ւյո:-
கேள்வி
0 69
உருவாக்கியமை போன்று தங்களது எழுத்துக்களை தொடர்ந்து படித்த, படித்துவரும் வாசகர் வட்டம் உண்டு. இதுபற்றி தங்கள் கருத்து?
அப்படியொரு வாசகர் வட்டம் இருக்கின்றதா? படைப்புலகில் ஒரு பண்டிதனாகவும் பண்டித உலகில் படைப்பாளியாகவும்தான் துாற்றப்பட்டு 5) ډو6 வந்திருப்பதாக நான் நினைத்தேன். அப்படியொரு வாசகர் வட்டம் எனக்கிருந்தால் அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்:- “விமர்சனம் செய்யுங்கள்” விசிறியாகிவிடாதீர்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு தங்களின் கதைகள் தொடர்பான மதிப்பாய்வு மிகவும் விரிவாக பேராசிரியர் நா. வானமாமலை நடத்திய ‘ஆராய்ச்சி’ இதழில் படித்தோம். இதுபோன்ற வேறும் விரிவான ஆய்வுகள் உண்டா? அல்லது பல்கலைக்கழக மட்டத்தில் மாணவர்களின் ஆராய்ச்சி?
வந்திருக்கின்றன. M. Phil., Phd பட்டம் வாங்கியிருக்கிறார்கள். ஆனால் Involvement இல்லாமல் ‘பட்டத்துக்காக எழுதப்பட்ட ஆராய்ச்சிகள். இவற்றை நான் SERIOUS ஆக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் அவர்கள் ஆய்வு செய்வதற்கு முன்பு எனக்கு அனுப்பும் கேள்விகள்தான். முதல் கேள்வி-நீங்கள் இதுவரையில் எத்தனை நாவல்கள் எழுதியிருக்கிறீர்கள்? இன்னொரு மாணவர் நான் குறிஞ்சிமலர்’ எழுதியதற்கான பின்னணியைப் பற்றி விசாரித்து கேட்டிருந்தார். (குறிஞ்சிமலர் நான் எழுதவில்லை. அதனை தீபம் நா. பார்த்தசாரதி எழுதினார்)
குருதிப்புனல், சுதந்திர பூமி, மாயமான் வேட்டை, தேவர்
வருக முதலான தங்களின் அரசியல் நாவல்கள் இந்தியாவின் வெவ்வேறு கால கட்டங்களை

Page 37
70 0
9).ւսո:-
கேள்வி:
g). Lurr:
கேள்வி:
சந்திப்பு
சித்திரித்தவாறு தற்போதைய காலத்தின் அரசியலை பின்னணியாகக் கொண்டு ஏதும் எழுதுகிறீர்களா?
எழுத எண்ணமுண்டு. ஆனால், நான் அங்கதச் சுவைக்காக அப்பொழுது எழுதிய ‘தேவர் வருக போன்ற நகைச்சுவைச் சித்திரங்கள் இப்பொழுது நிஜமாக மாறிவரும் பொழுது ‘அங்கதத்துக்கு” இடமில்லாமல் போய்விடுமோ என்ற அச்சமும் எனக்குண்டு. அரசியல் தலைவர்களை இன்று கேலிச்சித்திரங்களாக வரையவேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் புகைப்படங்களைப் பிரசுரித்தாலே போதும். என்று தோன்றுகிறது. உண்மை, கற்பனையைக் காட்டிலும் விசித்திரமானது
என்ற நிலை.
சிறுகதை-குறுநாவல்-நாவல்-விமர்சனம், கட்டுரை முதலான துறைகளில் ஈடுபாடு மிக்க தாங்கள் கவிதைகள் எழுதியதுண்டா? இந்தத்துறையைப் பற்றி உங்கள் பார்வை?
தொடக்க காலத்தில் எழுதியிருக்கின்றேன். அதாவது மாணவப்பருவத்தில். ஆனால், நான் எழுதியவை கவிதை அல்ல என்ற விவேகம் எனக்கு அப்பொழுதே ஏற்பட்டு விட்டதென்பது தான் வாசகர்களுடைய அதிர்ஷ்டம். இப்பொழுது ‘கார்டு கிடைத்தால் புதுக்கவிதை எழுதும் கவிஞர்கள் ஆயிரக் கணக்கிலிருக்கும் போது இது சொல்லப்படவேண்டிய விஷயமென்று நான் நினைக்கிறேன்.
நாவல்களும் - குறுநாவல்களும் எழுதுகிறீர்கள் இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை எவ்வாறு
வகைப்படுத்துகிறீர்கள்.
குறுநாவலுக்கு கள, கால வரையறை உண்டு.

முருகபூபதி 0 7
கேள்வி:
g). In :
கேள்வி:
g).ust:
கருத்தோட்டமும் ஒரு வழிப்பாதையில் செல்லவேண்டும். நாவலுக்கு விரிவான களம், காலவரையறையும் தேவையில்லை. ஆனால் ஜேம்ஸ்ஜோய்ஸ் எழுதிய ULYSSIS மாதிரி புறனடைவுகளும் உண்டு.
தங்களின் குருதிப்புனல், உச்சிவெய்யிலில் முதலானவை திரைப்படமாக்கப்பட்டன. தங்களின் படைப்பு திரை வடிவம் பெறும்போது அதன் உயிர் சிதைவுறுவதாக கவலை உண்டா?
ஏனென்றால் பல இலக்கியப்படைப்புகளுக்கு இந்த அபாயம் நேர்ந்துள்ளது?
குருதிப்புனல் - கண்சிவந்தால் மண் சிவக்கும் என்ற பெயரில் படமாக்கப்பட்ட தாக அறிகிறேன். ஆனால் இதுவரையில் அதனை நான் பார்க்கவுமில்லை. எனது அனுமதியின்றி எடுக்கப்பட்ட படம் இது. அச்சமயம் நான் இந்தியாவிலும் இல்லை. ஆனால், சேதுமாதவன் என்னைச் சந்திக்க வந்தபொழுது “வெந்து தணிந்த காடுகள்’ கதையை படமெடுப்பதற்காக அனுமதி கோரினார். அவரை உச்சிவெய்யிலில் கதையை படமாக்குமாறு கூறினேன். அவர் நல்ல படைப்பாளி. மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவல்களைப் படமாக்கிய அனுபவமுள்ளவர். எனவே, அவர் எனது கதையின் கருவை சிதைக்க மாட்டார் என்ற நம்பிக்கையும் இருந்தது.
கணையாழி'யின் கெளரவ ஆசிரியராக இருக்கிறீர்கள். இன்றைய இலக்கிய சூழலில் சிறுபத்திரிகைகளைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
சிறுபத்திரிக்கைகள்தான் இலக்கியத்தை காப்பாற்றி வருகின்றன. என்னுடைய முக்கியமான நாவல்கள், நாடகங்கள் சிறுபத்திரிகையாகிய கணையாழி'யில்

Page 38
720
g) Lum :
கேள்வி:
g). It :
சந்திப்பு
தான் பிரசுரமாயிற்று. சிறுபத்திரிக்கைகள் மூலம் ‘கோஷ்டி சேர்ப்பதையே நான் எதிர்க்கிறேன்.
இன்று வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களினால் நூற்றுக்கணக்கான இதழ்கள் வெளியிடப்படுகின்றன. புத்தகங்களும் வெளி யாகின்றன. இந்த புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியம் தொடர்பாக சொல்லுங்கள்.
‘தமிழ் இலக்கியக்கொடி‘ வெளிநாடுகளில் பறப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் காரணம் என்பது என் கருத்து. ‘புலம் பெயர்ந்த' என்றபோது ஈழத்தமிழர்களை மட்டும்தான் நான் குறிப்பிடுகின்றேன். வெளி நாடுகளிலிருந்தும், இந்தியத் தமிழர்களுக்கு இன்று தமிழ் இலக்கிய ஈடுபாடு இல்லை; அல்லது மிகவும் கொச்சைத்தனமாக இருக்கிறது. சிட்னியில் வசிக்கும் ஒரு இந்தியத் தமிழர், மணியனைப்போன்று நானும் பயணக்கட்டுரைகள் எழுதவேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்; எப்படி இருக்கிறது!
இன்றைய தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்து, அவை தமிழ் அறிவுலகத்தைப் பாதிக்கின்றதா பாதிக்கவில்லையா.
இன்று தமிழ் இலக்கியம் “மெல்ல இனிச் செத்துவருவது போல் தோன்றுகிறது. (தமிழ் நாட்டில்) எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். ‘இலக்கியம் தான் இல்லை. ஆனால் தமிழ்நாட்டின் கரையோர இளம் எழுத்தாளர்கள் மிகவும் நன்றாக எழுதி வருகிறார்கள். (தோப்பில் முகம்மது மீரான், ஜெயமோகன் முதலானோர்) ஆனால் வணிகப்பத்திரிகைகளில் முன்பாவது, ஒரிரு நல்ல சிறுகதைகளும் நாவல்களும் வருவதுண்டு. இப்பொழுது அறவே இல்லை. எழுதுவதற்குரிய

முருகபூபதி
கேள்வி:
S).L st:
கேள்வி:
0 73
சன்மானம் இல்லையே என்று நல்ல இளம் எழுத்தாளர்கள், சன்மானத்துக்காகவே சமரசம் செய்து கொள்ளக்கூடிய ஆபத்து நிலை உருவாகி விட்டது. எழுத்தாளர்கள் கூடித்தாம் இதைப் பற்றி விவாதிக்கவேண்டும்.
சர்வதேச அரங்கில் பாரதத்தின் தொன்மையான
மொழியாக தமிழ் கருதப்படுகிறது. ஆனால் அதற்கு இன்னமும் உலக அங்கீகாரம் கிட்டவில்லையே.?
உண்மைதான். இன்று தமிழ்நாட்டிலேயே தமிழ் செத்துவிட்டது. தமிழுக்கு தகுதியான இடம் இன்னும் அங்கு கிடைக்கவில்லை. ‘தமிழ் வாழ்க’ என்பது “கலாசார கோஷம் அல்ல. அதுபோன்று தனித்தமிழ் இயக்கத்தின் மூலமும் தமிழ் கலாசாரத்தைப் பேணமுடியாது.
மொழியும் கலாச்சாரத்தின் கருவியென்றால் அது பேசப்படுவதற்கென்று ஒரு நாடு தமிழர்க்குத் தேவை. தமிழ்நாட்டில் தமிழ் மாநில மொழியாகத்தான் ஏற்கப்பட்டுள்ளது. மொழிப் போராட்டத்தின் காரணமாகவே பங்களாதேஷம் உருவானது.
அப்படி யாயின், தமிழ்மொழிக்கும் அதன் கலாச்சாரத்திற்கும் அங்கீகாரம் ஒரு தனித்தமிழ் நாட்டில்தான் சாத்தியமாகும் எனக் கருதுகிறீர்களா?
ஆம். ஒரு நாட்டுடன் மொழியை ஐக்கியப்படுத்து வதாயிருந்தால் இந்தியாவுடன் ‘இந்தி’மொழிதான் ஐக்கியமாகியுள்ளது. எனினும் தமிழ் தொன்மையான மொழி என்ற உணர்வு இதனால் ஏற்படவில்லை.
இன்று நவீன இந்தியமொழிகளில் ஒன்றாகவே தமிழும் சர்வதேச அரங்கில் கருதப்படுகிறது. கலாச்சார

Page 39
74 0.
கேள்வி:
இ.பா:
கேள்வி:
சந்திப்பு அடிப்படையில் தமிழ்மொழிக்கென ஒருநாடு தேவை என்பதை ஆதரிக்கின்றேன்.
இன்று வெளிநாடுகளில்கூட இந்தியத் தமிழர்களைவிட ஈழத்தமிழர்கள்தான் தமிழுக்காக “குரல்’ எழுப்பு கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத் தமிழர்களினால்தான் ‘தமிழ்க்கொடி’ பட்டொளி வீசிப் பறக்கின்றது. இதுவிடயத்தில் இந்தியத் தமிழர்களுக்கு ஈழத்தமிழர்கள் வழிகாட்டுவார்கள் என்று எண்ணு கின்றேன்.
அரசியல் நாவல்களும் எழுதியிருக்கிறீர்கள். ஈழத்தின் இனப்பிரச்சினை குறித்து எழுதும் நோக்கம் உண்டா?
ஈழத்து இலக்கியங்களையும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளையும் படித்துக்கொண்டிருக்கிறேன். படிப்பதன்மூலம் பலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆயினும் ஈழப்பிரச்சினை ஈழப்போராட்டம் குறித்து உடனடியாக என்னால் எதுவும் எழுதவோ கூறவோ முடியாது.
நான் தற்சமயத்தில் ஒரு பார்வையாளன் தான். மனிதன்தமிழன் என்ற முறையில் அங்குள்ள நிலைமைகள் குறித்து எனக்கு ஆழ்ந்த கவலை உண்டு.
அந்நிலைமைகளை கதையாக புனைவதாயின் அங்கு நான் வாழ்ந்திருக்கவேண்டும். கேள்வி ஞானத்தை வைத்துக்கொண்டு நான் எழுதுவதில்லை. எழுதினாலும் அது உண்மையாக இருக்கும் என்று சொல்லமுடியாது. ‘குருதிப்புனல்’ நாவல் எழுதுவதற்காக நான் தஞ்சாவூர் “கீழ் வெண்மணிக்கு சென்றேன். நான் இன்னும் ஈழத்தையே பார்த்ததில்லை.
தங்களின் 'மழை நாடகம் இலங்கையில் முதலில் வானொலியில் ஒலிபரப்பானது. பின்னர் பல தடவைகள் மேடையேறியது. ஐரோப்பாவிலும்

முருகபூபதி
கேள்வி:
Gg5). unr:
0 75
பாலேந்திராவின் அவைக்காற்றுக் கழகத்தின் சார்பாக மேடையேறுகிறது.பாராட்டுப் பெறுகிறது. உங்களது படைப்பு இவ்விதம் மேடையேறும்பொழுது தங்களின் மனநிலை எப்படி?
‘மழை குறிப்பிடத்தகுந்த நாடகம். சென்னையிலும் பலதடவைகள் மேடையேறியது. நானும் பார்த் திருக்கிறேன். சிலசமயங்களில் நன்றாகச் செய்கிறார்கள். அத்துடன் திருப்தியற்றவிதமாக மேடையேற்றியதாகவும் அறிந்தேன். பாலேந்திரா மழையை மேடை யேற்றுவதாக பத்திரிகைச்செய்திகள் மூலம் அறிகிறேன். ஆனால் இதுநாள்வரையில் அவர்கள் என்னிடம் இதற்கான அனுமதி பெறவில்லை என்பது தான் வியப்பானது.
நாடக ஆசிரியரின் அனுமதியின்றி அதனை மேடையேற்றுவதோ, ஒலிபரப்புவதோ, திரைப் படமாக்குவதோ தவறல்லவா? இத்தவறு தொடரும் பட்சத்திலும் நீங்கள் மெளனமாக இருக் கிறீர்களே?.மெளனம் சம்மதத்திற்கு அறிகுறியா..?
அப்படி அல்ல. அவர்கள் எங்கோ வாழ்கிறார்கள். நான் வேறிடத்தில் இருக்கிறேன். என்ன செய்யமுடியும். குருதிப்புணலை படமாக்கிய பூரீதர்ராஜன் - எனது அனுமதி இல்லாமலேயே - எனது ‘நந்தன்கதை’ நாடகத்தையும் அதில் சேர்த்துக்கொண்டார். இந்தத் தகவலும் மற்றவர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும். அந்தப் படத்தை நான் பார்க்கவும் இல்லை என்று முன்பே உங்களுக்கு சொன்னேன். என்ன செய்யமுடியும்? -
米 岑 米

Page 40
76 0 சந்திப்பு
குறிப்பு:
இந்திரா பார்த்தசாரதியின் நேர்காணல் 'பாரிஸ் ஈழநாடு’ வில் வெளியானதையடுத்து நண்பர் பாலேந்திரா என்னுடன் தொடர்பு கொண்டு, இ.பா.வின் முகவரி பெற்றதுடன், அவர் அமெரிக்காவுக்கு சென்ற சமயம், அங்கிருந்து ஐரோப்பாவுக்கு அவரை அழைத்த பாலேந்திரா - அவைக்காற்று கலைக்கழகத்தின் நாடகவிழாவில் மீண்டும் ‘மழை”மேடையேற்றி இ.பா.வையும் பார்வையாளனாக்கி மேடையில் பேசவைத்தார். இ.பா.வின் சான்றிதழ் 'நன்றாக செய்கிறார்கள்’- முருகபூபதி)

பரீக்ஷா ஞாநி
ஒருநாள் மதியவேளை. தொலைபேசி அழைக்கிறது.
“ஹலோ”
“முருகபூபதி இருக்கிறாரா.பரீக்ஷா ஞாநி பேசுகிறேன்”
66 99 ஆமாம்; அப்படியா.எங்கிருந்து?
“இந்திய அரசின் கலாசாரதூதுக்குழுவில் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கிறேன். நண்பர் சுபமங்களா கோமல் சுவாமிநாதன் உங்கள் தொலைபேசி இலக்கம் தந்தார். உங்களை சந்திக்கவேண்டும்”
"தாராளமாக.இப்போது எங்கே இருந்து பேசுகிறீர்கள்?”
“குவின்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து”
“விக்டோரியாவுக்கு வந்தவுடன் தொடர்பு கொள்ளுங்கள். இங்கேயும் நாடகக் கலைஞர்கள் இருக்கிறார்கள். சந்திக்க ஒழுங்கு செய்கிறேன்.”
“மிக்க நன்றி முருகபூபதி”
பரீக்ஷா ஞாநி - நான் வசிக்கும் மாநிலத்துக்கு வந்தவுடன் நேரில் சென்று சந்தித்தேன்.
நீண்டநேரம் கலந்துரையாடினோம்.
OFF THE RECORD”.956 yib flav Gafuu iš 556 MGMT

Page 41
78 0
பேசினார். எழுத்தில் பதிவாகாமல் என் மனதில் மட்டும் அவை பதிவாகிக்கொண்டன.
பள்ளிப்பருவதத்திலேயே நாடகமேடைப் பரிச்சயமும், கல்வியில் விஞ்ஞானத்திலும் ஆங்கில இலக்கியத்திலும் பட்டமும், INDIAN EXPRESS 'ಜ್ವಾಲಿ@huf போஸ்ட் முதலானவற்றிலும் "தீம்தரிகிட’ ‘ஏழுநாட்கள் 'அலைகள் போன்ற சிற்றிதழ்களில் தனது எழுத்துவண்ணங்களை பதித்தும் பெற்ற அனுபவங்களினூடே, நவீன நாடக மரபுக்கு வலுவும் சேர்த்துள்ள பரீக்ஷா’ ஞாநி நாடகப்பேராசிரியர் எஸ்.ராமானுஜம், அமரர் டாக்டர் ஜி.சங்கரபிள்ளை, முதலானோரிடம்
9 நாடகம்’ பயின்றவர்.
“வீதி' - திறந்தவெளி நாடக இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினர். 'பரீக்ஷா’ நாடகக் குழுவின் முக்கிய தூண். ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி, அம்பை, பிரபஞ்சன், ஜெயந்தன் முதலான பலரின் படைப்புகளை மேடைக்குத்தந்தவர்; பாதல் சர்க்கர், விஜெய் டெண்டுல்காரின் நாடகங்களை தமிழில் மேடையேற்றியவர். “விண்ணிலிருந்து மண்ணுக்கு கண்ணாடிக்கதைகள் முதலான சில தொலைக்காட்சி தொடர்களை வழங்கியவர். சுஜாதாவின் பிக்னிக்’ கதையை தொலைக்காட்சி நாடகமாக்கியவர். தற்பொழுது திரைப்பட தணிக்கை சபை உறுப்பினராகவும் ‘ரிவி.உலகம்’ என்ற வார இதழின் ஆசிரியராகவும் “ஞாநி பணியாற்று கின்றார்.
அவுஸ்திரேலியா மரபு- காலாண்டு இதழில் இந்த நேர்காணல் பிரசுரமானது.
சந்திப்பு

முருகபூபதி 0 7g
கேள்வி: தமிழ்நாட்டில் தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சி பற்றியும் ‘நவீன நாடகங்களின்’ அண்மைக்கால போக்குகள் தொடர்பாகவும் தங்கள் கருத்துக்கள்.?
பதில்: சபா நாடக மரபு இன்று 'COMMERCAL ஆகி விட்டது. வெகுஜன நாடக மரபும் எஸ்.வி.சகஸ்ரநாமம் போன்றவர்களின் மறைவோடு அறுந்துபோயிற்று. வெறும் நகைச்சுவைப் பாங்காக குறுகிவிட்டது. இன்றைய தமிழ் சினிமாவைப்போன்று மக்களை அது கவருகின்றது.
ஆனால், அதே வேளையில், வெளியில் 16 ஆண்டுகளாக நவீன நாடகம் வலுவடைந்து வருகின்றது. இது சிறுபான்மைதான். எனினும் புறக்கணிக்க இயலாதவாறு வளர்ச்சியடைந்துள்ளது. 1978ல் எங்கள் 'பரீக்ஷா’ தொடங்கப்பட்டபொழுது, சென்னையில் ‘வீதி’, கூத்துப்பட்டறை, மதுரையில் நிஜநாடக இயக்கம் ஆகிய குழுக்கள் மாத்திரம்தான் இருந்தன.
இன்று, சென்னையில் மட்டும், பரீக்ஷா கூத்துப்பட்டறையுடன், ஐக்கியா, யவனிகா, ஆடுகளம், பூமிகா, பல்கலை அரங்கம், சென்னை கலைக்குழு, முத்ரா என்று பல குழுக்கள் செயற்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் - தஞ்சை பாண்டிச்சேரி, மதுரை என்று பல இடங்களிலும் பத்துப்பதினைந்து நாடகக்குழுக்கள் பெருகியுள்ளன. வளர்ந்துள்ளன. முன்பைவிட இப்போது, நிறையப் பெண்கள், நவீன நாடக முயற்சிகளில் பங்கேற்கிறார்கள். கூத்துப்பட்டறை கடந்த பத்தாண்டுகளில் ஒரு முழு நேர நாடகக்குழுவாகவே வளர்ச்சியடைந்துள்ளது. இவை யாவும் முக்கியமான வளர்ச்சிகள்தானே..!
கேள்வி. நவீன நாடகங்களைப் பொறுத்தவரையில் நிறைய நாடகங்கள் பார்வையாளர்களுக்கும், ஏன். அவற்றில்

Page 42
80 0
கேள்வி:
சந்திப்பு நடிப்பவர்களுக்கும் கூட புரியாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த ‘புரிந்து” கொள்ளும் தன்மை குறித்து தங்களின் கணிப்பு என்ன? மொழிபெயர்ப்பு’ நாடகங்களை பற்றியும்தான்.?
இந்தக் குற்றச்சாட்டை வைப்பவர்களில் நானும் ஒருவன்தான். புரிந்து கொள்ளுதல் ‘புரிந்து கொள்ளாமை - என்ற பிரச்சினை எழுவதற்கு அடிப்படைக்காரணம், ஒவ்வொரு குழுவும் தங்கள் பார்வையாளர்கள் யார் என்பதை தெளிவாக வரையறுத்துக்கொள்ளாமல் இயங்குவதுதான் என்று கருதுகின்றேன். 'பரீக்ஷா’ தொடங்கப்பட்ட காலத்திலேயே இதனை தெளிவாக வரையறுத்து விட்டோம். எங்கள் நாடகங்களை, ஒரு பார்வையாளர்
१
கூட, ‘புரிந்தகொள்ளவில்லை’ என்று கூறவில்லை.
நாடகம் அசலாக தமிழில் எழுதப்பட்டாலும் மொழி பெயர்க்கப்பட்டாலும் - எந்தப் பார்வையாளர்களுக்காக நிகழ்த்தப்படுகிறது என்ற தெளிவு இருக்குமானால் அதிலும் ‘புரிதல் பிரச்சினை எழுவதற்கு வாய்ப்பு கிடையாது. 'பரீக்கூyா’ பிறமொழி நாடகங்களை நிறையவே செய்திருக்கிறது. எங்கள் பார்வையாளர் களின் வாழ்க்கைக்கு பொருத்தப்பாடு உள்ளவற்றை மாத்திரமே தேர்ந் தெடுத்துக் கொள்கிறோம். தங்களது நாடகங்கள் தொடர்பாக எழும் விமர்சனங்களை எவ்விதம் உள்வாங்கிக்கொள்கிறீர்கள்? விமர்சனங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். நாடகத்துறையில் ஈடுபட்டிருப்பவர்களிடமிருந்து எழக்கூடியவை.
அவ்வப்போது வெகுஜனப் பத்திரிகைகளிலோ, சிற்றிதழ்களிலோ எழுதப்படுபவை.

முருகபூபதி
கேள்வி:
08
பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கின்ற பிரதி பலிப்புகள்.
முதலிரண்டையும் நாம் புறக்கணிப்பது இல்லை யென்றாலும், மூன்றாவதைப்பற்றி மாத்திரமே - அதாவது பார்வையாளர்களின் கருத்துக்களை மாத்திரமே நான் கவனத்தில் கொள்கின்றேன்.
எங்கள் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டதன் பின்பு எமது குழுவினர் பார்வையாளர்களுடன் கலந்துரையாடு கின்றனர். நாடகம் நிகழ்த்தப்படும்பொழுது 6тиDgö! குழுவினரும் பார்வையாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து அவர்களின் பிரதிபலிப்புகளை பதிவு செய்கின்றனர். நாடகம் முடிந்ததும் பார்வையாளர்களின் அபிப்பிராயத்தை அறிவதற்காக - அவர்களுக்கு ஒரு FORM விநியோகிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் அதனை தங்கள் அபிப்பிராயங்களினால் பூரணப்படுத்தி தருகிறார்கள். நாம் அவற்றை பரிசீலனை செய்வதுடன் DOCUMENT ஆகவும் பாதுகாக்கின்றோம். இவ்விதம் பார்வையாளர்களின் விமர்சனங்களை FEEDBACK ஆக பெற்றுக் கொள்கின்றோம்.
தங்களது நாடகப் பிரதிகளில் உள்ள “முழுமை’ நாடகம் மேடையேறும்பொழுது வெளிப்படுவதில்லை என்று ஒரு கருத்து உள்ளதே. இந்த ‘முழுமை குறித்து என்ன கருதுகிறீர்கள்?
எந்த நாடகக் கலைஞனுக்கும் எந்த நிகழ்வும் தான் விரும்பிய ‘முழுமையை எய்தவிட்ட உணர்வு கிட்டிவிடுவதில்லை. -- அதே சமயம் ஒவ்வொரு இயக்குநரின் கையிலும் ஒரு நாடக ஆசிரியனின் பிரதி வெவ்வேறு விதமான முழுமைதான் பெறும். ABSOLUTELY என்று வரையறுக்க எதுவும் கிடையாது.

Page 43
82 0.
கேள்வி:
பதில்:
கேள்வி:
சந்திப்பு
வசனங்களை மறந்துபோவது, தவறான நுழைவு, நடிப்பில் பற்றாக்குறை, போன்ற அடிப்படைக் கோளாறுகள் இல்லாமல் நடக்கின்ற ஒவ்வொரு நாடக நிகழ்வும் அதனளவில் முழுமையானதுதான். நாடகப்பிரதிக்கு இயக்குநரும் குழுவும் கொடுத்துள்ள வியாக்கியானம் பற்றி எப்பொழுதுமே, எந்தக்குழுவின் நிகழ்விலும் சர்ச்சைக்கு இடமிருந்துகொண்டேதான் இருக்கும். எனவே அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட INTERPRETATIONஐ சரியாக வெளிப்படுத்தினார்களா என்பது மட்டுமே கவனிக்கத்தக்கது.
படிப்பதற்கு மட்டுமே தகுந்த நாடகங்களாவும் நடிப்பதற்கு மட்டுமே ஏற்றதாகவும் படிப்பதற்கும் நடிப்பதற்கும் பொருத்தமானதென்றும் பிரதிகள்’ வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்படுத்துதல் பற்றியும் - தங்களின் நாடகப்பிரதிகள் எவ்வாறு அமைகின்றன என்பது தொடர்பாகவும் சொல்லுங்கள்.
படிப்பதற்கு மட்டுமான நாடகங்கள் என்ற வகைப்படுத்தலோடு எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. நாங்கள் நடிக்கமுடியாத நாடகப் பிரதிகளை படிக்கின்றபோது காட்சிப்படுத்திப் பார்க்கின்ற விதத்திலேயே நான் பழகியிருக்கின்றேன். நாடகங்கள் அடிப்படையில் நடிக்கப்படுவதால் மட்டுமே முழுமையடைகின்றன.
சென்னையில் இயங்கும் ‘கோலம் மற்றும் இதர குழுக்களான யவனிகா, ஐக்யா, ஆடுகளம், பூமிகா (பெண்கள் அமைப்பு) முதலானவற்றின் பணிகளை பிறிதொரு குழுவின் அமைப்பாளராகவும் நாடகத்தயாரிப்பாளராகவும் எவ்விதம் அவதானிக் கிறீர்கள்.? உங்கள் கணிப்புகள்.?
‘கோலம்’ தனி அமைப்பல்ல. பரீக்ஷாவும் ஏனைய குழுக்களும் வாரந்தோறும் ஒராண்டு காலம் -

முருகபூபதி t.83.
நாடகங்கள் நிகழ்த்துவதற்கு உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு. அந்த முயற்சி நிறைவேறிவிட்டது. பொதுவாக ‘பரீக்ஷா’ வின் பார்வையில் ஐக்யா, யவனிகா, பூமிகா, ஆடுகளம் முதலிய குழுக்கள் நடுத்தர வகுப்பு பார்வையாளர்களிடம் அவர்களுக்கு எட்டும் விதத்தில் நல்ல படைப்புகளை சென்று சேர்ப்பதில் ஈடுபாடு காட்டுபவை என்பதனால் அவர்களுடன் இணைந்து செயல்படுவதில் ஆர்வம் காட்டுகின்றோம்.
கேள்வி எழுத்தாளர்களின் மத்தியில் ‘குழு மனப்பான்மையும் EGO குணாதிசயங்களும் பரவலாகியுள்ளன. நாடகத்துறை சார்ந்த கலைஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தப் போக்கு ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்று கருதுகிறோம்.உங்கள் நிலைப்பாடு என்ன..?
பதில்: இதில் மாறுபட்ட கருத்துக்கே இடமில்லை. ஆனால் இப்படிப்பட்ட குழுமனப்பான்மை EGO இவற்றையெல்லாம் மீறித்தான் படைப்புலகில் பல நூற்றாண்டுகளாக மக்களுக்கான காரியங்கள் சாத்தியப்பட்டு இருக்கின்றன. எங்கள் வேலையில் எங்களுடைய முழு கவனத்தையும், சக்தியையும் செலுத்தினால்போதும். சர்ச்சைகளுக்கு பதில் சொல்லி திசை திரும்பத் தேவையில்லை என்ற மனோபாவத்தில் நான் கடந்த சில ஆண்டுகளாக, பக்குவப்பட்டு விட்டேன். இதன் விளைவாக, 'அச்சில் ஒரு தரப்பு கருத்துக்களை மட்டுமே பெறநேர்ந்தது. சிலர் மனதில் எங்களுக்கு ஒரிழப்பு ஏற்பட்டுள்ளபோதிலும் அதையும் காலப்போக்கில் எங்கள் நடவடிக்கைகள் சரிசெய்துவிடும் என்று நம்புகிறேன்.
கேள்வி: தமிழில் கவிதை நாடகங்கள், ஈழத்தில் பிரபல்யமடைந்தவை, இவை பற்றிய தங்களின் ஈடுபாடுகள்.?

Page 44
84 0
கேள்வி:
சந்திப்பு
ஏனோ, தனிப்பட்ட முறையில் எனக்கு கவிதை நாடகங்களில் ஈர்ப்பு இல்லை. நாடகத்தில் கவிதையை ஈடுபடுத்துவது எனக்கு பிடித்தமானது. எனது "பலூன்’ நாடகத்தில் (81ல் மேடையேற்றப்பட்டது) சுமார் பதினைந்து புதுக்கவிதையாளர்களின் புதுக்கவிதைகளை ஆங்காங்கே நாடக உரையாடல்களாக பயன்படுத்தி யிருக்கிறேன்.
ஈழத்து இலக்கியம் என்று - குறிப்பாக கவிதைகள் என்று வரும்பொழுதே சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், கெளரி ஆகியோரின் கவிதைகளும் பெண் கவிஞர்களின் “சொல்லாதசேதிகள்’ தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் எனக்குப் பிடித்தமானவை. ஈழநாடக முயற்சிகளில் பாலேந்திராவின் நாடகங்கள் பற்றி கேள்வி அறிவு மட்டுமே உண்டு. மெளன குருவின் படைப்புகளை படித்திருக்கின்றேன். இலங்கையின் தமிழ்கூத்து வடிவங்கள், பாடல்கள் இடம்பெற்ற இளைய பத்மநாதனின் சென்னை நகர படைப்புகள் மட்டுமே நான் நேரில் பார்க்கக் கிடைத்தவை. அவற்றின் ஆட்டமுறைகளும், இசைப்பாங்கும் எனக்குப் பிடித்தமானவை. அவற்றை நவீன முயற்சியில் பயன்படுத்தும் விதங்கள் பற்றிய புதிய தேடல்களை நாடுவது தொடர்ந்தும் எனக்கு ஆர்வமான விடயமே.
ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடொன்றிலிருந்து (அவுஸ்திரேலியா) பேட்டி தருகிறீர்கள் - புலம்பெயர்ந்த எம்மவர்கள் பற்றிய உங்கள் அவதானம் எவ்வாறு
அமைகிறது.
புலம்ப்ெயர்ந்திருப்பது என்பதே விருப்பத்துக்கு மாறாக நடக்கும்போதெல்லாம் ஒர் அவலமான நிகழ்வுதான். இந்த அவலமான நிலை ஏற்படுத்துகிற ஆழமான வேதனையை உள்ளடக்கிக்கொண்டு தொடர்ந்தும்

முருகபூபதி 0 85 அயராமல் தங்களின் கலை, இலக்கிய நடவடிக்கை வாயிலாக தங்களை மனித உயிர்ப்போடு வைத்துக்கொண்டிருக்கிற ஈழத்தமிழர்களின் உற்சாகம் என்னால் மறக்கமுடியாதது.
தங்களின் அடுத்த தலைமுறையினரான இன்றைய குழந்தைகள் நாளை தமிழை மறந்துவிடுவார்களோ என்ற கவலையும் கொண்டிருக்கிறார்கள். இந்தியத் தமிழர்களுக்கும் இந்நிலைமை உண்டு. மேற்கத்தைய வாழ்வுமுறை - பணத்தை மட்டுமே “ஆராதிக்கின்றகலாச்சாரம் என்பன, அவரவர் “வேர்’களிலிருந்தே பிடுங்கி எறிந்துவிடக்கூடிய ‘ஆபத்து’ இருக்கிறது. நம் தமிழ் குழந்தைகளுக்கு சொல்லித்தர நல்ல பல பாடல், கதை, நாடகங்கள் தேவை. இந்திய இசை மேதை எம்.பி.சீனிவாசன் குழந்தைகளுக்கான “சேர்ந்திசையில் தொடங்கிய முயற்சியை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் பின்பற்றலாம்.
ཏ་ཧའི་

Page 45
எஸ். வைதீஸ்வரன்
அவுஸ்திரேலியா நியுசவுத்வேல்ஸ் (சிட்னி) மாநிலத்திலிருந்து தொலைபேசி அழைப்பு. முன்பின் அறிமுகமில்லாத குரல். “வைதீஸ்வரன் பேசு கின்றேன்” தொடருகின்றார். பேச்சில் கவித்துவம்.
'விந்து நிலையிலிருந்து, விந்தையான உயரங்களுக்கு, செயல் திறன்களுக்கு மனிதன் வளருவது விஞ்ஞான
- தத்துவ இயல்களில் இன்னும் ஆச்சரியமான விஷயம். அவன் வளரும் திசைகளை இரண்டு விஷயங்கள் நிர்ணயிக்கின்றன. ஒன்று, அவன் பிறவித்துளிக்குள் கொண்டு வந்த செய்திகள்; இரண்டு அதை பரிமளிக்கச் செய்யும் புற வாழ்க்கை சூழல்கள், அதன் தாக்கங்கள்.”
- இவ்வாறு தமது இலக்கிய நாட்டத்திற்கு இந்த இரண்டு விஷயங்களும் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்கிறார் தமிழ்நாட்டின் எழுத்தாளர் கவிஞர் எஸ். வைதீஸ்வரன்.
'உதய நிழல்’ (கவிதை) "கால்முளைத்த மனம்(சிறுகதை) முதலான நூல்களின் ஆசிரியர். ஈழத்து படைப்பாளிகளையும் நன்கறிந்தவர். அவர்தம் எழுத்துக்களை விமர்சித்தவர். ஆக்க இலக்கியத் துறையில் மாத்திரமின்றி நவீன ஒவியத்திலும்
ஈடுபாடு மிக்கவர். ”
வைதீஸ்வரனின் நேர்காணல் ‘பாரீஸ் ஈழநாடு'வில் பிரசுரமானது.

முருகபூபதி
0.87
கேள்வி- இலக்கிய உலகிற்கு தாங்கள் பிரவேசித்தமை அன்றைய
பதில்:-
இலக்கியச் சூழல் பற்றி கூறுங்கள்.
பள்ளி வயதில் நான் வகுப்பில் படிக்க எடுத்துக் கொண்டது வடமொழி சம்ஸ்கிருதம். பள்ளிக்கு வெளியில் நான் மிக ஆர்வமுடன் மூழ்கிக்கிடந்தது தமிழ்க்கதை கவிதைகளில்தான். நான் இலக்கண, பண்டிதத் தமிழுக்கு தப்பியவன். கம்பனையும் இளங்கோவையும் தாயுமானவரையும், திருமூலரையும் படித்தேன். இவர்களையும் சங்கக்கவிதைகளையும் இலக்கிய ரஸனையில் தோய்ந்து மாமர நிழலில் நண்பன் ஒருவனுடன் சேர்ந்து படிப்பதுண்டு.
தமிழில் கையெழுத்துப் பத்திரிகை வெளியிட்டு பாராட்டுக்கள் பெற்றதும் அப்பொழுதுதான்.
இந்தியா சுதந்திரம் பெற்று தாய் கொடி பறக்க ஆரம்பித்தவுடன், தமிழ் இலக்கியம் நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டது. சுதந்திரத்துக்கு முன்னம் பக்திப் பரவசமாய் வீர உணர்ச்சிகளைக் குழைத்து குழைத்து வெள்ளையனை ஏசி, இந்தியனை ஏற்றிப்பாடிய பாட்டுக்களெல்லாம் சுதந்திரத்துக்குப் பின்னர் சற்றே அர்த்தம் குறைந்து அழுத்தம் குறைந்த ஒலிபெருக்கிக் காற்றாயிற்று.
இந்தியன் குருட்டு உணர்ச்சிவசங்களைக் கைவிட்டு, தன் சொந்த வாழ்க்கையை, தனக்கே சொந்தமாகிவிட்ட இவ்வளவு பெரிய நாட்டை, அறிவால், விஞ்ஞானத்தால் புதிய சமூகப் பார்வைகளால் ஆண்டு வளர்க்க வேண்டிய கஷ்டம் வந்தது. அப்போது இலக்கியமும் தன் குரலை - புதுக்குரலாக, புதிய சூழ்நிலைக்கு இசைந்த குரலாக மாற்றிக் கொள்ள வேண்டிய பரிணாம அவசியம் ஏற்பட்டது.
அப்போது, பத்திரிகைகளில் உய்யும் வகையறியாமல்,

Page 46
88 0
சந்திப்பு
திரும்பத்திரும்ப பழைய மரபு உவமைகளை, அலங்கார வெறுமைகளைத் தாங்கி செய்யுள்கள் ஊமையைப்போல் கவிதைகள் என பிரசுரம் கண்டதை நான் பார்த்ததுண்டு. இப்படிப்பட்ட "காலண்டர்" கவிதைகளுக்கு மாறாக, காலத்தால் 'பொய்த்துப்போன சில மரபுத் தாளங்களை நீக்கி, சிந்தனையின் வேகத்தையே கவிதையின் தாளமாக ஏற்றி ஏன் கவிதை படைக்கக் கூடாது?” என்று சிந்திக்க சில படைப்பாளிகள் துணிந்தனர்.
ந.பிச்சமூர்த்தி அந்த வகையில் ஒரு முன்னோடி. இச்சமயம், இதே இலக்கிய முரண்பாடுகள் எதிர்பட்டு சிந்தனைத் தேக்கமுடன் இருந்த எனக்கு இவர்கள் பரிச்சயம் ஒரு வெளிசீம் கொடுத்திருக்க வேண்டும்.
ஏற்கனவே நான் எழுதியிருந்த கிணற்றில் விழுந்த நிலவு-புதுக்கவிதை முயற்சிக்காகவே தொடங்கப்பட்ட திரு.சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’வில் 1960 இல் பிரசுரமானது.
ஐரோப்பாவில் 1920-25 லிருந்து தொடங்கி மலர்ச்சியடைந்த புதுக்கவிதை இயக்கம், தமிழுக்கு 5060களில் தான் அறிமுகமாகியிருக்கிறது. எதிர்ப்புகள் ஏராளமாகக் கிளம்பிய இந்த புதுக்கவிதை காலகட்டத்தில், பல நல்ல முன்மாதிரிக் கவிதைகளும் புதுக்கவிதையின் அடிப்படை கோட்பாடுகளை கிரகித்துக்கொண்டு, கலை நேர்மையுடன் எழுதிய பல கவிஞர்களும் தமிழில் தோன்றினார்கள். எனது ‘உதயநிழல்' கவிதைத்தொகுப்பு 1970 இல் பிரசுரமானது. ‘எழுத்து வுக்குப்பிறகு கணையாழி, தீபம் முதலானவற்றிலும் அவற்றைத் தொடர்ந்து அநேகமான சிற்றிதழ்களிலும் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

முருகபூபதி
கேள்வி:-
பதில்:-
0 89
சிறுகதைகளில் என்னை பிரமிக்க வைத்தவர் புதுமைப்பித்தன். எழுத்தின் அபாரமான சிக்கனமும் எளிமையுடன் ஒரு பெரிய உணர்ச்சி வேகத்தை சொல்லி விடும் அற்புதமும் தமிழுக்கே புதிது.
பிறகு தி. ஜானகிராமன், பி.எஸ். ராமையா, கு. அழகிரிசாமி, க.நா.சு. இவர்களுடைய நேரடித் தொடர்புகளும் இலக்கியப் பரிச்சயமும் என்னை சிறுகதைகளில் ஈர்த்தது.
கணையாழி, தீபம், எழுத்து முதலானவற்றில் வெளியான பல சிறுகதைகளின் தொகுப்பாக எனது "கால் முளைத்த மனம்” வெளியானது.
சிதம்பரகுநாதன் (திருச்சிற்றம்பல கவிராயர்) போன்றோர் இன்றும் புதுக்கவிதையை கண்டிக்கிறார்கள். மரபைத் தெரிந்துகொண்டு மரபை மீறவேண்டும் என்ற கருத்தும் உள்ளது. மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடையே எத்தகைய வேறுபாட்டை காண்கிறீர்கள்?
மரபு தெரியாமல் மீறுவதாக கண்டிப்பவர்களின் எண்ணிக்கை இப்போது குறைந்து வருவதாக நினைக்கிறேன். காரணம், கவிதைத் துறையில் மட்டுமல்ல, நமது வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நமது பண்டைய மரபுகளின் ஆதிக்கம் சுழன்று வருகிறது. பல்வேறு அறிவியல் விஞ்ஞான வெளிச்சங்கள் ஏற்பட்டு பண்டைய மரபுகளுக்கு புதிய அர்த்தமும் தொனியும் ஏற்பட்டு வருகின்றன. அதன் அடையாளங்கள் மாறி வருகின்றன.
மரபைத் தெரிந்து கொண்டவர்கள், ஒரு இலக்கியபூர்வமான உணர்வுபூர்வமான அத்தியாவசியம் இருந்தாலொழிய, அதை மீறி கவிதை படைக்க வேண்டிய அவசியமில்லை.

Page 47
900
கேள்வி:-
பதில்:-
சந்திப்பு
முடிவாக நமக்குக் கிடைக்க வேண்டியது கவிதை. அதன் வடிவம் அல்ல! ஒரு கவிதைக்கு வடிவத்தையும் ஒசையையும் நிர்ணயிக்க வேண்டிய சுதந்திரம் கவிஞனிடம் இருந்தால்தான் இந்த நவீன உலகத்தின் பல்வேறு பிரச்சினைகளை கவிதையாக்கும் சாத்தியங்கள் ஏற்படும்.
இன்றைய உலகம் உள்ளீடாக எதிரொலிக்கும் வேகமும் ஒலி அலைகளும் மரபின் ஒசைகளோடு இணக்கமாகாமல் கவிதை தோற்றுவிடும் என்று பல தீவிர கலைஞர்கள் கண்டறிந்து வேறு வடிவங்களில் அதன் இசைவைக் கண்டார்கள்.
கவிதை இவ்வாறு இலக்கண சட்டங்களை மீறுவதனால் இறந்து விடவில்லை. அதேசமயம், கவிஞனுடைய கலை நேர்மைக்கும் வாக்கின் சத்தியத்திற்கும் இது ஒரு சவாலாக நிற்கிறது.
இதே காரணத்தினால், இப்போது கண்டிக்கப்பட வேண்டிய புதுக்கவிதைகளும் நிறையத் தோன்றி யிருக்கின்றன.
வானம்பாடி’ குழுவினர் சிறந்த தாக்கமொன்றை ஏற்படுத்தியதாகக் கருதுகின்றோம். அக்குழுவிலிருந்த பலர் பின்னாளில் பிரபல மடைந்தனர். சிலர் ஜனரஞ்சகமாக (சினிமா பிரவேசம்) பிரபல்யமாகினர். அந்தக் குழு சிதறுண்டமையும் ‘வானம்பாடி’ இதழ்கள் தொடர்ந்து வெளிவராதமையும் கவலைக்குரியது. இதுபற்றி தங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்.
"வானம்பாடி’- ‘எழுத்து’ காலத்திற்குப் பிறகு ஒரு இயக்கமாக தோன்றிய குழுவின் கவிதை முயற்சி, இவர்கள், ‘எழுத்து' பிரஸ்தாபித்த மரபுக்கு மீறி கவிதை படைக்கும் அடிப்படை விஷயத்தை வரவேற்றுக் கொண்டார்கள். ஆனால் கவிதைகளின் கருத்துப்

முருகபூபதி \ 0 g
கேள்வி:-
பதில்:-
கேள்வி:-
பொருள் பற்றி, எடுத்தாளூம்"Mரச்சினை பற்றி சில திட்டவட்டமான் is பார்ன்வ்களை முடிவுகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். இது இன்னொருவிதமான ‘மரபுச்சட்டம்' என்பது போல. தவிர, அவர்களிடம் வார்த்தைகளை ‘காதலிக்கும்’ தன்மை இருந்ததாக எனக்குத் தோன்றியது. - புறச்செவியின் ஒசைகளுக்காக வடமொழிச் சொற்களையும் தமிழையும் அவசியத்துக்கு தேவையில்லாத விதங்களில் கலந்து வடிவம் கொடுக்க ஆசைப்பட்டார்கள். இலக்கியங்களில் இப்படி பிரக்ஞையுடன் சட்டங்கள் போட்டுக்கொண்டால், அதன் ஆயுள் கருகிவிடும் எனத் தோன்றுகிறது.
கவிஞர்களிடையே “குழுமனப்பான்மை” தோன்று வதனால் பகைமை உணர்வுகளும் தோன்றி விடுகின்றன. கருத்து முரண்பாட்டிற்கும் கருத்துப் பகைமைக்கும் இடையே வித்தியாசம் உண்டு. இவை குறித்து தங்கள் அபிப்பிராயம்.?
படைப்புத்தன்மை உள்ளவர்களுக்கு, தன்னுடைய பலஹினங்களை அறிவு பூர்வமாகப் புரிந்து கொள்ளத் தெரியும். தங்கள் பலஹினங்களையே சிறந்த இலக்கியப் படைப்புகளாக மாற்றக்கூடிய ரஸவாதத் திறமை அவர்களுக்கு இயல்பாக அமைய வேண்டும். புதுமைப்பித்தன் தன் வாழ்வுத் துன்பங்களை கலையாக்கியது போல.
இந்தப் பக்குவம் குறைந்தவர்கள் தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு அநாவசியமான காழ்ப்புணர்ச்சிகளுக்கு ஆளாகி தங்களுடைய இலக்கிய வாழ்வுக்கு குழி பறித்துக் கொள்கிறார்கள். புதுக்கவிதைகளை சிலர் ‘நொடிகள்’ என்று தெரிவிக்கினறனர். புதுக்கவிதை என்ற பெயரில் பலர்

Page 48
92 0
பதில்:- ,
கேள்வி:-
பதில்:-
கேள்வி:-
சந்திப்பு புற்றீசலாகப் புறப்பட்டு ஏதேதோ எழுதியதனால் ஏற்பட்ட ஆபத்து என்றும் கூறுகிறார்கள். புதுக்கவிதை வளர்கின்றதா அழிகிறதா?
புதுக்கவிதைகள் இன்று பரவலாக வணிகப் பத்திரிகைகளின் அங்கீகாரம் பெற்றுவிட்டதால் இப்படி ப் புற்றீசல்கள் தோன்றக் களம் ஏற்பட்டுவிட்டன. தரமான கவிதைகளின் வாசிப்புகளும் அவைபற்றிய தெளிவான எளிமையான விமர்சனங்களும் நிறைய வாசகர்களை சென்றடைய வேண்டும். அப்போது திசை திரும்பலாம்.
எப்படியும் ஈசல்கள் கணப்பொழுதில் சாகக் கூடயவைகளே!
ஹைக்கூ கவிதைகள் குறித்து தங்கள் கருத்துகள் யாது?
"ஹைக்கூ - 'Zen’ புத்த தத்துவங்களின் அடிப்படையில் எழுந்த ஒரு நுண்மையான கவிதை வடிவம். நிர்சலனமான சிருஷ்டியுடன், ஒரு ஞானியின் மன அமைதியுடன் உலகியலின் நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஏற்படும் ‘உண்மையின்’ அலைகள் என நினைக்கப்படுகிறது. ஹைக்கூ’ வடிவத்திலும் வார்த்தை எண்ணிக்கையிலும் ஒரு மரபுக்கு உட்பட்டவை. இதே தத்துவ உணர்வுகளை ஜப்பானியர்கள் அவர்களுடைய ஒவியத்திலும் நிதர்சனப்படுத்தியிருக்கிறார்கள்.
மகாகவி பாரதியார் கூட, ஹைக்கூ கவிதைகளைப் படித்து அதன் உட்தத்துவப் பொருளை, வாழ்வுப் பார்வையைப் பாராட்டி ‘சுதேச மித்திரன்’ பத்திரிகையில் கட்டுரை எழுதியிருக்கிறார். முடிவில், “இது பொருட்டு நீண்ட கவிதை வடிவங்களை நம் கவிஞர்கள் புறக்கணிப்பது ஆரோக்கியமாகாது” என்று முத்தாய்ப்புடன் முடித்திருக்கிறார்.
பாரதிக்குப் பின்பு முழுமையான ஒரு கலைஞன்,

முருகபூபதி
பதில்:-
0 g3
கவிஞன் இன்னும் தமிழ் உலகில் தோன்றவில்லை; இதற்கு சமூக, அரசியல் சூழ்நிலைகள் காரணமா - அல்லது உலகம் விஞ்ஞானபூர்வமாக தீவிரமாக மாறிக்கொண்டிருப்பதனாலா?
பாரதி சகாப்தத்தை இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது பாரதி ஒரு அதிர்ஷ்டசாலி என்று நினைக்கத் தோன்றுகிறது.
வறுமையைத் தவிர வேறொன்றும் வாழ்வில் அனுபவித்து அறியாதவராக இருந்தாலும், அந்தக் கவிஞனுக்கு, பாடிப்பரவசமாவதற்கு ஒரு முழுமையான இந்தியா இருந்தது. சுதந்திரம் என்ற அமுதக்கனி அனைத்து மக்களின் ஒரே லட்சியக் கனவாக் இருந்தது.
அந்தக்கனவு, அந்த சத்திய வாக்கின் மூலம் கவிதையாக மூண்டபோது, இந்திய நாட்டின் நரம்பையே மீட்டியபோது, ஒரு பொதுவான கவிதை நாதம் காற்றில் பரவியது. அவருடைய மூச்சும் தேசத்தின் மூச்சும் இரண்டறக் கலந்திருந்தது.
அவர் நனவின் கசப்புகளை அறியவில்லை (நல்லவேளை) தேசம் குறுக்கு நெடுக்காய் துண்டு பட்டு, மனிதன் அறிவின் சாமர்த்தியங்களால் தங்களுக்குள் ஆயிரம் வேலிகளை ஏற்படுத்திக் கொண்ட அவல நிலையை அவர் பார்க்காத அதிர்ஷ்டசாலி.
இன்றைய கலைஞன் இந்தியா என்கிற ஒரு பெரிய சிக்கலைத்தான் பார்க்கின்றான். அதேசமயம் அறிவியல் விஞ்ஞானப்பார்வைகளின் புரட்சிகள் தூரம் குறுகிப்போன உலக நாடுகளினால் கலாசாரத் தாக்கங்கள் இப்படிப்பல வெவ்வேறு சக்திகளின் ஆதிக்கங்களால் கலைஞன் ஒரு சிக்கலான வெளிப்பாடு முறைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

Page 49
94 0.
கேள்வி:-
பதில்:-
சந்திப்பு வாழ்வின் ‘நல்லது-தீயது’ அடிப்படைகளும் நிலை குலைந்து, கலைஞனுக்கு ‘பிரமை ஏற்படுத்துகிறது.
இந்த விபரீத நிலைகளை கலைஞன் தன் இலக்கியத்தில் சத்தியமாக பிரதிபலிக்க வேண்டும். அதே சமயம் மனிதனுக்கு வாழ்வில் நம்பிக்கையூட்டும் ஒரு ஒளிக்கீற்றை, உலகத்தை எதிர்காலத்திற்கு காப்பாற்றிக் கொடுக்கவேண்டிய பொறுப்புணர்வை அழுத்தமாக ஏற்படுத்த வேண்டும். ‘அப்படி ஒரு கலைஞன் கூடிய சீக்கிரம் தோன்றட்டுமே" - என்று நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
இன்றைய தமிழ் இலக்கிய சூழல்பற்றி.?
இந்தக்கேள்வி பற்றி சிந்திக்கும்போது, இன்றைய சமுதாயத்திற்கு அதன் நன்மைகளுக்கு இலக்கியம்
எவ்வளவு தூரம் இன்றியமையாததாக இருக்கிறது என்ற அடிப்படையை கேள்வி கேட்கிறது என் உள்ளம்.
தமிழில் இலக்கியம் படைப்பவர்களும், அவற்றை பொருளாதார நஷ்டத்தை மட்டும் எதிர்பார்த்து புத்தகம் பிரசுரிப்பவர்களும் அந்தப் புத்கங்களை ஒரு இயல்பான ஆர்வத்துடன் படித்துப்பயன்பெறும் வாசகர் கூட்டங்களும் நாளுக்கு நாள் தேய்ந்து வருவது போல் தோன்றுகிறது.
இன்று வளரும் சமுதாயத்தின் - முக்கியமாக மாணவ சமுதாயத்தின் வாழ்க்கை லட்சியங்கள் வறண்டு போய் வயிற்றுக்கு உணவும் சுகவாழ்வுக்கு உத்தரவாதம் கொடுக்கும் உத்யோகநோக்கமும் தவிர “வேறொன்றும் அறியேன் பராபரமே” என்ற மனப்பான்மை இலக்கிய ஈடுபாடுகளை அறவே கத்தரித்து விட்டன.
இந்த மனவறட்சியை ஊதி உலைவைக்க வணிகப் பத்திரிகைகள், உடல்குறுகுறுக்கும் சினிமாக்கள்,

முருகபூபதி 0 95 சிந்தனையை மழங்கடிக்கும் டி.வி.யின் ஒளிப் பாய்ச்சல்கள் யாவும் பல முனைத் தாக்குதல் நடத்துகின்றன.
ஆக, இன்று தமிழ் இலக்கியங்கள், விலாசம் தெரியாத சந்து முனைகளில் சிற்சில சிற்றிதழ் காகிதங்களில் வளர்பிறை தேய்பிறையாக வந்து மறைந்து கொண்டிருக்கின்றன.
பொருள் தியாகம் செய்யத்தயாராயிருக்கும் சில தனிப்பட்ட இலக்கிய நண்பர்கள் சிறிது அசட்டுப் பிடிவாதத்துடன் பத்திரிகைகளை ஆரம்பித்து சமூகத்தின் மேல் அநேகமாக திணிக்க வேண்டிய காரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இவ்வளவு புறக்கணிப்புகளையும் மீறி, இன்று இலக்கியத்தின் மீது சீரிய அக்கறைகள் கொண்ட கலைஞர்கள், தங்கள் ஆதார சக்தியை காப்பாற்றிக் கொண்டு, சமுதாயம் தன் எழுத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற கனவை - நம்பிக்கையை ஒயாமல் புதுப்பித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
கேள்வி- ஈழத்தமிழர்களின் இலக்கியம் குறித்து தமிழ்நாடு தற்போது உற்றுப்பார்க்கத் தொடங்கியுள்ளது. ஈழத்தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்துபட்டு வாழவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் மத்தியில் ஏராளமான சிற்றிதழ்கள். இவைபற்றி ஏதும் சொல்லமுடியுமா?
பதில்:- இரண்டாம் உலக யுத்ததத்தில், யூதர்கள் இலட்சம் இலட்சமாக வேட்டையாடி விரட்டப்பட்டார்கள். யுகமே மறக்க முடியாத அளவுக்கு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். அந்த நினைவுப்புண் இன்றும் நம் மனதில் வடு மாறாமல் இருக்கின்றது.

Page 50
96 0
சந்திப்பு இப்போது கால விபரீதங்களால், அரசியல் சமூக காரணங்களால் தாய் நாட்டில் வாழமுடியவில்லை ஈழத்தமிழர்கள். உயிர் வாழ ஒரு நாட்டைத்தேடி குடும்பம் குடும்பமாக அலைய வேண்டிய நிர்ப்பந்தம் வருந்தத் தக்கது. இதனால் இவர்களுக்கு நேர்ந்துவிட்ட கலாசார அதிர்ச்சிகளும் அந்நியப்படுத்தப்பட்ட நிலைகளும், சிதறிவிட்ட பட்ச உணர்வுகளும் இன்று கண்கூடாகத் தெரியும் நிரந்தர சோகங்கள்.
இப்படிப் பல்வேறு நாட்டில் சிதறி வாழும் ஈழத்தமிழர்களின் உள்ளக் குமுறல்களை ஏக்கங்களை, தாய்நாட்டுப் பாசத்தை தங்கள் பாரம்பரிய பற்றுகளை ஒரு வடிகாலாக பல சிற்றிதழ்கள் வெளிப்பாடு செய்து, தங்களுக்குள் ஒரு கலாசாரப் பிணைப்பையும் பலத்தையும் ஏற்படுத்துவது ஒரு வலிமையும் உற்சாகமும் அடையாளமும் ஏற்படுத்தக் கூடிய முயற்சி, வரவேற்க வேண்டியது. இந்த அடிப்படை முயற்சிகள் மூலம் பின்னால் காலத்தினால் வளர்ந்து நிற்கக்கூடிய ஒரு பெரிய கலை, இலக்கிய படைப்புகளை நான் எதிர்நோக்குகிறேன், இலக்கிய மறுமலர்ச்சியை. உலக யுத்தங்கள் பாதித்தது போல!

சார்வாகன்
அவுஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் அமைந்துள்ள ‘சிவா-விஷ்ணு' ஆலயத்திற்கு ஒருநாள் போயிருந்தேன். அங்கே திருமதி பாலம் லஷ்மணன் அவர்களை சந்திக்கின்றேன். அவரருகே நின்றவரை "முருகபூபதி - இவர்தான் சார்வாகன்: எமது உறவினர்” - என அறிமுகப்படுத்தினார். வியப்பினால் சில கணங்கள் எதுவும் பேசமுடியவில்லை. எதிர்பாராத சந்திப்பு. அவரை வீட்டுக்கு அழைத்து விருந்துகொடுத்தேன். அவரோநீண்டநேரம் எமக்கு ‘இலக்கிய விருந்தே படைத்தார்.
ஜானகிராமனுடன் பரிச்சயம் இருந்தபோதிலும் ‘மோகமுள் படித்ததே இல்லையென்று “உண்மை’ பேசினார். “எதுக்குச்சொல்றேன்னா.” என்பது மாத்திரமே நூலுருவில் வெளியான சிறுகதைத்தொகுதி.
அதிகம் எழுதாமலேயே - நினைவில் நிற்கும் சில கதைகளை தந்தவர் சார்வாகன்.
இந்த நேர்காணல் அவுஸ்திரேலியாவில் வெளியாகும் 'உதயம்’ மாத இதழில் பிரசுரமானது. தினகரன் வாரமஞ்சரியில் மறுபிரசுரமானது.

Page 51
98 சந்திப்பு
“உண்டு, இல்லை என்னும் இரு சொற்கள் என்னைதொல்லை மிகப்படுத்தி தோற்சுருக்கம் ஏற்றுவிக்கும்
68. எதுஎதுவோ இருந்தென்ன-போயென்ன எங்கே பிறர் துயர்துடைக்கும்
'yy 6660s,
மனிதநேய மேம்பாட்டுக்கு இவ்விதம் கவிதையால் குரல்கொடுக்கின்றார் எழுத்தாளர் சார்வாகன்.
நவீன தமிழ் இலக்கிய உலகை நன்கறிந்து பயின்றவர்களுக்கு யார் இந்த சார்வாகன் என்பது நன்கு தெரியலாம்.
ஜனரஞ்சக எழுத்தாளனாக மாறாமல் மனிதகுலத்தை தனது எழுத்துக்களாலும் பணிகளினாலும் நேசித்த எளிமையான மனிதர் இவர்.
தொழுநோயாளரின் துயர்துடைக்கும் மருத்துவப்பணியில் இவர் ஒரு டாக்டர்.
இந்த அரிய சேவைக்காகவே 1984ல் இந்திய ஜனாதிபதி ஜெயில்சிங்கிடம் பத்மபூரீ விருது பெற்றார்.
குலத்தில் பிராமணராக பீறந்தபோதிலும் மத நம்பிக்கை அற்றவர்.
சாதி, சமயம்,சமூகம், மனிதன் தொடர்பாக பிரத்தியேகமான கருத்துக்களை கொண்டிருப்பவர்.
அவுஸ்திரேலியாவுக்கு வந்திருந்தார்.
இங்கு வதியும் திருமதி பாலம்லஷ்மணன் அவர்களின் தமக்கையின் புதல்வர்.

முருகபூபதி 0 99
இருவருமே சமவயதினர். அதனால் சித்தி-மகன் என்ற
உறவுக்கு அப்பால் உடன் பிறந்த சகோதரர்களாக பழகும்
பண்புதான் விஞ்சியது-என்கிறார் சார்வாகன்.
1951ல் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் ஒரு விளையாட்டுக்குழுவில் அங்கம் வகித்து இலங்கைக்கு வந்து சென்றதையும் நீர்கொழும்பில் சிலதினங்கள் கழித்ததையும் நினைவுகூருகின்றார்.
அச்சமயம் இந்த உலகை நான் எட்டிப்பார்த்து மூன்று மாதங்கள்தான்.
தாம் எழுதியவை குறைவு என்று தன்னடக்கத்துடன் சார்வாகன் கூறினாலும் அவை இலக்கிய உலகை நிறைவு செய்தவை என்பதில் இரு கருத்து இருக்கமுடியாது.
தமிழ்நாடு’க்ரியா’வெளியிட்ட “எதுக்கு சொல்றேன்னா.” என்ற சிறுகதைத் தொகுதியை மாத்திரம் நாம் வைத்துக்கொண்டு சார்வாகனின் படைப்பாற்றலை
ஆராயமுடியாது.
பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வாசகர்வட்டம் வெளியிட்ட அறுசுவை” என்னும் ஆறு குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு இலக்கிய வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
கி.ராஜநாராயணனின் ‘கிடை’ இந்திரா பார்த்தசாரதியின் உச்சிவெயிலில்.(மறுபக்கம் என்ற பெயரில் சேதுமாதவன் இயக்கிய திரைப்படம்) முதலானவற்றுடன் சார்வாகனின் 'அமரபண்டிதர் - குறுநாவலும் இத்தொகுப்பில் இடம்பெற்றது.
1970ல் இலக்கியச் சிந்தனைக்காக - அந்த ஆண்டில் சுந்தரராமசாமி - சார்வாகனின் கனவுக்கதையைத்தான் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்தார்.

Page 52
000 சந்திப்பு
நகுலன் தொகுத்த “குருஷேத்திரம் தொகுப்பில் வெளியான ‘சின்னூரில் கொடியேற்றம்’ என்ற சிறுகதை VO பண்டிகைக்காலக்கதைகள் என்ற பலமொழிச் சிறுகதைகளின் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட சமயம் - பிரபல இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமிநாதனால் மொழி பெயர்க்கப்பட்டு அதில் இடம்பெற்றது.
ஜெயகாந்தன் ஆசிரியராக பணியாற்றிய “ஞானரதம்” சார்வாகனின் வளை’ சிறுகதையை பிரசுரித்து சர்ச்சையையும்
எதிர்நோக்கியது.
இக்கதை ‘காஃகா"வின் கதையை தழுவி எழுதப்பட்டிருப்பதாக கடுமையான விமர்சனங்களும் வெளிவந்ததை புன்சிரிப்புடன் ஒப்புக்கொள்கிறார் சார்வாகன்.
w தான் எழுதத்தொடங்கி பல ஆண்டுகளாகியும் - எழுதியதும்
குறைவு படித்ததும் குறைவு என்றார்.
தி.ஜானகிராமனுடன் நல்ல பரிச்சயம் இருந்தும் ‘மோகமுள்’ படித்ததில்லை.
அது பெரிய புஸ்தகமாக இருந்தது.
படிக்க பயமாகவும் இருந்தது’ என ஒரு குழந்தை போன்று சொன்னார் இந்த 66 வயதுக்காரர்.
இயற்பெயர் பூரீனிவாசன்.
அது என்ன சார்வாகன் என்ற புனைபெயர்? விளக்கம்
கேட்டேன். சுவையான கதையே சொன்னார்.
குருஷேத்திர களத்தில் கெளரவர்களை அழித்து வெற்றிபெற்ற பாண்டவர்கள் அரசைபொறுப்பேற்ற சமயம் தருமருக்கு முடிசூட்டி பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

முருகபூபதி 0 10
அப்பொழுது சபையில் இருந்து சார்வாகன்’ என்ற ரிஷி எழுந்து தமது பாட்டன் மார் மற்றும் உறவினர்களை கொன்றழித்துவிட்டுத்தான் இந்த தருமர் அரசபதவி ஏற்கிறார். இது தகாத செயல். மற்றவர்களின் அழிவில் உருவாகியுள்ள இந்த அரசை ஏற்கமுடி யாது’ - என குரல் எழுப்புகிறார்.
இப்படியொரு வியப்பான குரலை சற்றும் எதிர்பாராத சபையினர் அந்த இடத்திலேயே சார்வாக ரிஷியை அடித்து கொன்றுவிடுவதாக மகாபாரதத்தில் ஒரு சம்பவம் உண்டு.
இப்படி தனக்கு சரியெனப்பட்டதை துணிந்து தைரியமாக கூறிய சார்வாகன் என்னைப் பெரிதும் கவர்ந்தார். எழுத்துலகில் புகுந்ததும் அந்தப் பெயரையே தரித்துக்கொண்டேன்.
இந்த ‘சார்வாகன்’ என்ற ரிஷிதோற்றுவித்த மதமே சார்வாக மதம். இந்த மதம் பற்றி திரெளபதியும் பயின்றதாக கூறப்படுவதுண்டு.
மதநம்பிக்கை இல்லை என்கிறீர்கள்; ஆனால் ஒரு மதத்தை தோற்றுவித்த ரிஷியின் பெயரை புனைபெயராக ஏற்றுக்கொண்டிருக்கீறீர்களே- என கேட்டேன்.
‘சார்வாக மதமே - கடவுள் என்று ஒருவர் இல்லை எனச் சொல்வதுதான்.
சந்நியாசிகள் ரிஷிகளாக மாறலாம். ரிஷிகள் அனைவருமே சந்நியாசிகள் அல்ல’ என்றார் சார்வாகன்.
ஒரு நோக்கத்தை குறிக்கோளாகக் கொண்டு செயலில் இறங்குவோர் படிப்படியாக செயலையே குறிக்கோளாக்கி அந்த செயலில் பலியாவதை விமர்சிக்கும் போக்கிலேயே எனது சில,
கதைகள் உருவாகியுள்ளன. tr
‘வளை’ கதையும் அப்படித்தான். கணையாழியில் இரண்டு

Page 53
102 0 சந்திப்பு
இதழ்களில் வெளியான வெறிநாய் புகுந்த பள்ளிக்கூடமும்
அப்படித்தான்.
இன்னுமொரு வழியிலும் எனது விமர்சனத்தை விளக்கலாம்
பாருங்கள்:-
இறைவனை வழிபடவேண்டும் என்று முன்வருவார்கள் பக்தர்கள். அதற்கான சடங்குகள் அலங்காரங்கள் - படையல்கள் என்றெல்லாம் ஏற்பாடு செய்வர். பின்பு - வழிபாடு இரண்டாம் பட்சமாகிவிடும். மற்றவைதான் பிரதானமாகி முன்னிற்கும்.
இந்நிலைமை யாவற்றிலும் பீடித்து விட்டது என்கிறார்
சார்வாகன்.
ஒரு மார்க்ஸியவாதியாக உங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளாவிடினும் - உங்களது சிந்தனைகளை மார்க்ஸிய வெளிச்சத்தில்தானே பார்க்க முடிகிறது. இதற்கு ஏதும் காரண காரியங்கள் உண்டா?
டாக்டராக பணியாற்றும் காலத்தில் ஆந்திராவில் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. மழைஇன்மையால் ஏற்பட்ட பஞ்சமா - அல்லது அங்கு மக்கள் வறுமைக்கோட்டிற்கும் கீழே நிற்கிறார்களா என்பதை அறிய அங்கு சென்றேன்.
மழைக்கும் குறைவில்லை. வயல்கள் பச்சைப்பசேல் என பசுமையுடன் காட்சியளித்தது. கடைகளில் தானியங்கள் தாராளமாக இருந்தன.
ஆனால் ஏழைகள் அடுத்தவேளைக்கும் உணவின்றி, புல்பூண்டுகளையும் இறந்த ஆடு மாடுகளையும் சமைத்து சாப்பிட்டார்கள்.
அங்கேதான் அரச இயந்திரம் எப்படி தவறான பாதையில் இயங்குகிறது என்பதை கண்டேன். எனது சிந்தனைகளில் சமயம்

முருகபூபதி 0 103
சாதி-சமூகம் மனிதன் தொடர்பாக மாற்றங்கள் தோன்றுவதற்கு ஆந்திராவில் நான் அன்று கண்ட காட்சிகள்தான் அடிப்படை
ஈ.வெ.ரா.பெரியாரின் பகுத்தறிவுவாத சிந்தனைகளினால் நீங்களும் பாதிக்கப்பட்டீர்களா என்று மற்றுமொரு வினாவை தொடுத்தேன்.
பெரியாரின் அரசியல் சமூக சீர்திருத்தக் கருத்துகளுடன்
உடன்பாடுகள் உண்டு.
ஆனால் அவரது மதம் தொடர்பான விமர்சனங்களிலும் செயல்களிலும் எனக்கு உடன்பாடே இல்லை.
பிள்ளையர்ர் சிலையை பிள்ளையார் என ஏற்றுக் கொண்டதனால்தானே அதனை செருப்பால் அடித்தார்கள்.
அதுவெறும் கல்தான் என்றால் விட்டு விட்டுப் போகலாமே - ஏன் செருப்பைத் தூக்கினார்கள் இந்த ‘பகுத்தறிவுவாதிகள்?’
இலக்கியவாழ்வில் பலரை சந்தித்திருப்பீர்கள் - பல்வேறு அனுபவங்களை பெற்றிருப்பீர்கள் உங்களால் இன்றளவும் மறக்கமுடியாத மனதை பாதித்த விடயம் ஏதும் உண்டா?
ஆமாம் - கு.அழகிரிசாமியைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவருடைய மூத்த புதல்வி - பெயர் ராதா.
‘தீபம்’ இதழில் பல ஆண்டுகளுக்கு முன்பு “தர்ப்பணம்’ என்ற சிறுகதை எழுதியிருந்தேன். அதனைப்படித்த சிறுமியான ராதா தனது அபிப் பிராயத்தை கடிதமாக வரைந்து எனக்கு அனுப்பியிருந்தாள்.
என்னுடைய முதல் வாசகியாக அவளையே நினைக்கிறேன்.
தற்போது ராதா அமெரிக்காவில் குடியேறி குடும்பத்துடன் வாழ்கிறாள்.

Page 54
104 0 சந்திப்பு
என்னால் அவள் எழுதிய கடிதத்தை மறக்கவே முடியவில்லை.
இலக்கியமாக எழுதுவது குறைந்துவிட்டது எனச் சொல்கிறீர்கள். தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
"INDIAN JOURNAL OF LEPROSY" 6T6örp gisa Falafa05ufair கெளரவ ஆசிரியராக பணியாற்றுகின்றேன்.
இது ஒரு மருத்துவ சஞ்சிகை.

அண்ணாவியார் இளைய பத்மநாதன்
“அரங்கில் எமது அடையாளம் காணலே எனது இன்றைய நாடக அரங்கக்கொள்கை” என கூறும் அண்ணாவியார் இளைய பத்மநாதனின் 'ஏகலைவன்’ நாட்டுக்கூத்து கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் மேடையேறியபோது ஆயிரக் கணக்கான ரசிகர்களில் ஒருவனாக இருந்து ரசித்தேன்; வியந்தேன். பின்னர் தொலைக் காட்சியில் “ரூபவாஹினியில் ஏகலைவன் ஒளிபரப்பானது.
இளைய பத்மநாதன் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த சமயம் - தமிழ்நாடு கணையாழி - குறிப்பிட்ட ஆண்டின் முக்கிய கலை, இலக்கிய நிகழ்வுகளின் பட்டியலில் இந்தத் தகவலையும் பதிவு செய்திருந்தது. இதிலிருந்து - இளைய பத்மநாதன் தமிழகத்தில் நன்கு கவனத்திற்குள்ளான கலைஞர் என்பது புலனாகின்றது.
அண்ணாவியார் என தம்மை அழைப்பதையே இவர் விரும்புகிறார்.
‘நம்மவர் மலருக்காக அவரை சந்தித்து எழுதினேன்.
இந்த நேர்காணல் கொழும்பில் தினகரகன் வாரமஞ்சரியில் பிரசுரமானபொழுது - நண்பர்

Page 55
106 0
எழுத்தாளர் திரு என்.கே.ரகுநாதன் தனது மாற்றுக்கருத்துக்களை முன்வைத்தார். தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமான அவரது கருத்துக்களையும் இந்த நேர்காணலில் பின் இணைப்பாக சேர்த்துள்ளேன்.
உருவகக் கதைகளின், மூலம் புதிய செய்தியை தேடலை தரமுடியும் என ஆக்க இலக்கியகாரர்கள் ஒருபுறத்தில் படைப்புகளை வழங்கும் அதேவேளையில் - கூத்து வடிவில் மக்களின்
சமகால அரசியல் -பொருளாதார பிரச்சினைகளை
சித்திரிக்கமுடியும் என நிரூபித்து வெற்றியும் கண்டவர் அண்ணாவியார் இளைய பத்மநாதன் 'ஏகலைவன், தீனிப்போர்’ என்பன அவரது நிரூ பணத்திற்கு முன்னுதாரணங்கள்.
இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் கலாரசிகர் களினதும் விமர்சகர்களினதும் கவனத்தை பெரிதும் ஈர்த்தவர். சென்னை பல்வகை அரங்கம் உடன் இணைந்து ஆக்கபூர்வமாக தமது கூத்துக்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி 'இலங்கை கலைஞர்’ என்ற முத்திரை பதித்தவர்.
அரங்கில் தமிழ் அடையாளத்தை தேடும் நோக்கத்துடன் நீண்டகாலமாக இந்த கலைத் துறையில் ஈடுபாடு கொண்டவர். தற்போது அவர் புலம்பெயர்ந்து வாழும் அவுஸ்திரேலியாவில் ‘SKIN
சந்திப்பு
1S DEEP” என்ற தனிநபர் நாடகத்தை விக்ரோறிய
பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் சோதனை முயற்சியாக அரங்கேற்றியவர்.

முருகபூபதி 0 107 கேள்வி- நாடகத்துற்ைபயில் தாங்கள் ஈடுபடுவதற்கு அடிப்படைக்
காரணியாக இருந்த பின்னணி என்ன?
பதில்: வடமராட்சியில் நெல்லியடி முருகன்கோயில் முன்றலில் சண்முகானந்த சபா சித்திரைப் புத்தாண்டு தினத்தில் 9566 நிகழ்ச்சிகள் நடத்துவது t வழக்கம். நாடகக்கொட்டகை போடுவதில் இருந்து மேடைப் பொருட்கள் சுமப்பது வரை சகல பின்னணி வேலைகளில் நானும் ஒருவன். ஆரம்பகால மேடைத்தொடர்பு அவ்வளவே. பின்பு நாடகப் பிரதிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தனியாகவும் கூட்டாகவும் எழுதியிருக்கிஜேஜ்சஆனால் அரசியல் ஈடுபாடு ஏற்பட்ட அரசியலை பிரக்ஞை பூர்வமாக கலுை ல் மக்களிடம் சமர்ப்பிக்க இந்த நாடகத் நான் பன்ேபடுத்திக்கொள்ள வி னன்.
கேள்வி- யாழ்ப்பாணத்தில் மக்கள்ன் கவனத்தை ஈர்த்த ‘கந்தன்
கருணை’யின் தோற்றம் பற்றிச் சொல்லுங்கள்?
பதில்: 1970ம் ஆண்டு. நெல்லியடி சண்முகானந்த சபா' வருடப்பிறப்பு விழாவுக்கு நாடகம் போட பிரதிகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, எழுத்தாளர் என்.கே. ரகுநாதனின் ‘கந்தன் கருணை வசன நடையில் அமைந்த அங்கத நாடகக் கையெழுத்துப்பிரதி ஒன்று தரப்பட்டது. அரசியல் இயக்கத் தோழர்கள் இதனை மேடையேற்றப்பெரிதும் விரும்பினார்கள். காத்தவ்ராயன் கூத்தைப் பார்த்து ரசித்து பெற்ற அனுபவத்தின் விளைவாக நவீன கதை ஒன்றை கூத்தாக்கக் காத்திருந்தோம்.
“கந்தன் கருணை’ கிடைத்தது. எழுத்தாளரும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. ‘கந்தன் கருணை காத்தவராயன் பாணிக் கூத்தாகியது.

Page 56
108 0.
சந்திப்பு
கூத்துப்பிரதி, பாடல், பழக்கம் எல்லாமே கூட்டு
முயற்சிதான். முதல் மேடையேற்றத்தின் பின்பே கணபதிப்பிள்ளை அண்ணாவியார் அறிமுகமானார். மெட்டுகளுக்கு மெருகூட்டினார். பின்புதான் ரகுநாதனும் நேரடி அறிமுகமானார்.
ரகுநாதனின் ‘கந்தன் கருணை’ அப்படியே அச்சொட்டாகக் கூத்துவடிவம் பெற்றுவிடவில்லை. சாதிக்கொடுமைகள் பற்றிய பல விளக்கங்களும், மாஒவின் சிந்தனைகளும் சேர்க்கப்பட்டன. பாத்திரங்களின் பரிமாணங்களும் வளர்த்தெடுக்கப்
பட்டன. குறிப்பாக முடிவில் போராட்டத் தன்மையும்
மக்களின் சக்தியும் வலியுறுத்தப்பட்டன. ‘ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே. எனத் திருப்புகழ் பாடி கூத்தை முடிக்கும்படி ஆலோசனைகளும் கூறப்பட்டன. என்ன இது எனக் கொஞ்சம் தடுமாறிவிட்டோம். ஆனால் இயக்கத்தலைவர்கள் எமக்குப் பக்கபலமாக நின்றார்கள்.கூத்தை எம்போக்கிலேயே நடத்தி முடிக்க விட்டு விட்டார்கள். சண்முகானந்த சபா' அம்பலத்தாடிகள் எனப்பெயர் மாற்றம் பெற்றது. “கந்தன் கருணை’ ‘அம்பலத்தாடிகள்’ மேடையில் அரங்கேறியது. இதுவே அம்பலத்தாடிகளின் கந்தன் கருணையின் தோற்றம் தொடர்ந்து பல கிராமங்கள் தோறும் மேடை ஏற்றியது. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம். அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை கூத்துக்கு நண்பர் ரகுநாதனின் கந்தன் கருணை நாடகமே மூலம். ஆனால் அவருடைய நாடகப்பிரதியை அம்பலத்தாடிகள் மேடை ஏற்றவில்லை. கருத்துக் களுக்கும் வடிவங்களுக்கும் உரிமை கோருபவர்கள் எல்லைகளைத் தாண்டும்போதுதான் உரிமைக் கோட்பாடுகள் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டி யுள்ளது. சர்ச்சையை வால்மீகியில் ஆரம்பிப்போமா அல்லது கம்பரில் ஆரம்பிப்போமா

முருகபூபதி
0 109
அல்லது சேக்ஸ்பியரின் ஹம்லெட்டில் ஆரம்பிப் Gust Lost...?
சரி. கந்தன் கருணைக்கே வருவோம். அதில் பெற்ற நேரடி அனுபவங்களை முழுமையாகத் தொகுத்துக்
கூறத்தக்க ஒரு சிலரில் நானும் ஒருவன் -இன்றுவரை
கேள்வி:
மெளனமாக இருக்க, கந்தன்கருணை கூத்துடன் நேரடியாக முன்பின் தொடர்பு இல்லாத கேள்விச்செவியர்கள்’ சாட்சியம் கூறவரும்பொழுது, இனிமேலும் பேசாதிருப்பது சரியல்ல. ஆனால் அதைப்பற்றி முழுவதும் சொல்வதானால் அது ஒரு வரலாறு. பின்பு ஒருநாள் அவ்வரலாறும் தொகுக்கப்படத்தான் வேண்டும். இது வெறுமனே ஒரு நாடகத்தின் வரலாறு அல்ல. ஒரு இயக்கத்தின் வரலாறும் கலந்திருக்கிறது.
நண்பர் தாசீசியஸ் கந்தன் கருணையை ஆட்டக்கூத்தாக அமைத்து நடிகர் ஒன்றியத்துக்காகக் கொழும்பில் மேடை ஏற்றினார். பின்பு நாடக அரங்கக் கல்லூரிக்காகத் தயாரித்து மேடை ஏற்றும்போது தலையிட்ட சில உரிமைப்பிரசினைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள, 'இளைய பத்மநாதனின் கந்தன் கருணை’ என்று நோட்டீஸில் போட்டுவிட்டார். அத்தவறு உடனும் திருத்தப்பட்டு விட்டது. அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை இயக்கத்துடன் சம்பந்தப்படுத்திப் பார்ப்பதுதான் சரியான பார்வை. தனிப்பட்ட ஆசாபாசங்களுக்கு இடம்கொடாமல் அதை ஒரு கூட்டு முயற்சியாக காணவேண்டும். கூட்டு முயற்சிக்கு ‘அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை ஒரு முன் உதாரணம். அம்பலத்தாடிகளின் கந்தன்கருணை 1973ல் பிரசுரமானது.
தங்களுடைய பிரசித்தி பெற்ற படைப்பான 'ஏகலைவன்’ இலங்கை, தமிழ் நாட்டிலெல்லாம்

Page 57
110 0
சந்திப்பு
ரசிகர்களினதும் விமர்சகர்களினதும் கவனத்தைப் பெற்றது. இலங்கை ரூபவாகினியில் அது ஒளிபரப்பப்பட்டபொழுது புலி - சிங்கம் முதலான மிருகங்களின் பெயர்கள் வசனத்தில் வரும் இடங்களில் தணிக்கை செய்யப்பட்டதாக அறிகிறோம். 'ஏகலைவன்’ -புதிய அரசியல் கருத்தை முன்வைத்தது. இதுபற்றி?
கொழும்பில் தொழில் இலாகாவில் பணியாற்றிய எனது நண்பர் மு.செல்லத்துரை அவர்களை இங்கு நன்றியுடன் நினைவு கூருகிறேன். அவர்தான் இந்த நாடக் முயற்சிக்குத் தூண்டுகோல். அவர் சிறந்த நாடகக் கலைஞர். ஒப்பனையாளர். கல்வி மறுக்கப்பட்ட அடிநிலை மக்களைப்பற்றிய பார்வையில் ஏகலைவன் நாடகத்தைப் படைக்கும்படி என்னிடம் கேட்டார். ஏகலைவன் சம்பந்தமாக வேறு சில நாடகக் கையெழுத்துப்பிரதிகளையும் சேகரித்துத் தந்து என்னை ஊக்கப்படுத்தினார். பள்ளிக்கூடப் புத்தகம் ஒன்றிலும் ஏகலைவன் ‘குருபக்தி கதை உள்ளது. இதைப்படித்த வேறு சிலரிடமும் கல்வி சம்பந்தப்பட்ட கதை இருந்தது. தீண்டாமை ஒழிப்பு ஒங்கியிருந்த காலத்தில் இக்கருத்து தோன்றுவது நியாயமானதுதான். ஆனால் போர்ப் பயிற்சி சம்பந்தப்பட்ட கருத்தே எனக்குப் பிடித்தமாக இருந்தது. இதுபற்றி நடந்த ஒரு உரையாடல் இன்னும் என் நினைவில் நிற்கிறது. ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கத்திடம் போர்ப்பயிற்சியோ போர் ஆயுதங்களோ இருப்பதை விரும்புவதில்லை.
நண்பர் ரகுநாதன் தமது’போர்வை’ என்ற சிறுகதையில் இதனை மிகவும் துல்லியமாக கூறியுள்ளார். அவரின் சிறுகதை என் நாடகப்படைப்புக்கு உதவியது. அக்கருத்து நாடகத்தில் ஒரு கூறுதான். நாடகம் அத்துடன் நின்றுவிடவில்லை. ےH[ to அரசியல்

முருகபூபதி 0 it பரிமாணங்களைப் பெற்றுள்ளது. பிரபுக்களுக்கும் விவசாயி பாட்டாளிகளுக்கும் இடையே முரண்பாடு தோன்றலாம். ஆனால் வேடர்களுக்கும் அரசர்களுக்கும் இடையே என்ன முரண்பாடு? இது ஒரு விமர்சனம் வேடர்களுக்கு வேட்டை தொழில், ஜீவாதாரம். ஆனால் அரசர்களுக்கோ வேட்டை ஒரு பொழுதுபோக்கு. அங்கேதான் முரண்பாடு. அங்கேதான் நாடகத்தின் கருவே ஆரம்பிக்கிறது. ஆளும் வர்க்கத்திற்கும் ஆளப்படும் வர்க்கத்திற்கும் உள்ள முரண்பாடு மட்டு மல்ல. ஆளும் வர்க்கத்துக்குள் உள்ள முரண்பாட்டையும் துரியோதனன் மூலம் நாடகம் பேசுகிறது. துரோணருக்கு ஏற்பட்ட மனக்குழப்பம் - முன்பு அவர் ஒரு பரம ஏழை. இப்பொழுது அரசகுரு. - இப்பாத்திரப்படைப்பு இந்தியாவில் பிராமணிய எதிர்ப்பாளர் மத்தியில் சில சர்ச்சைகள் ஏற்படுத்தியது. ஏகலைவனின் நண்பர்கள் முக்கியமாகத் தந்தை, யாவுமே அரசியல் நிலைப்பாடுகள்தான். பாரதத்தில் அர்ஜூனனுக்கு ‘குருபக்தி" புகட்டவே 'ஏகலைவன்’ கதை வருகிறது. ஆனால் அதனை கூத்துவடிவில் மக்களிடம் கொண்டு சென்றபொழுது அரசியல் முன்னெடுக்கப்பட்டது. வர்க்கப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஏகலைவன் கூத்துக்காக முழுப் பாரதக் கதையையும் படித்தேன். வில்லிபுத்துரரர் பாரதமும் படித்தேன். ஆய்வுகள் மேற்கொண்டேன். விமர்சனங்களைச் சந்தித்தேன். உதாரணத்துக்கு “காண்டீபத்தை” இந்த நாடகத்தில் நீங்கள் காணமுடியாது. அர்ஜுனன் வைத்திருந்தது வெறும் வில்லுத்தான். காரணம். இந்தக்கதை நடந்த கால எல்லையில் அர்ஜுனன் காண்டீபத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. துரோணர், துருபதன் உறவும் பிரிவும்
செஞ்சோற்றுக் கடன் மட்டுமல்ல. வெஞ்சினமும்

Page 58
112 0
கேள்வி:
சந்திப்பு
துரோணர் எடுத்த முடிவுக்குக் காரணம் என்கிறது நாடகம். சாதி ஒன்று எனக்கூறும் வில்லிபுத்துாரர் பாடல் ஒன்று துரியோதனன் வாயிலாக. இன்னும் பல சிறுசிறு கவனிப்புகள். சொல்லில் விரியும். மொத்தமாக மேடைப்பொருள்கள் ஏகலைவன் எழுத்துக்கும் கூத்துக்கும் சொந்தக்காரன் நான் என்றபோதும், முதல் பாட்டுகள் மெட்டுகள் ஆட்டங்கள் வேடப்பொருட்கள் அரங்கேற்றம் அம்பலத்தாடிகளின் முயற்சி முதற்தயாரிப்பு 1978, சித்திரை வருடப்பிறப்பு விழாவில் அரங்கேற்றம், இரண்டாவது தயாரிப்பு - 1982. நெல்லியடி மத்திய மகா வித்தியாலய மாணவிகளுடன் - பல அரங்கேற்றங்கள் போட்டிகள், பரிசுகள் மூன்றாவது தயாரிப்பு 1993 சென்னை பல்கலை அரங்கத்துடன் பல அரங்கேற்றங்கள்.
அச்சாக்க எடுத்த முயற்சி நாடுவிட்டு நாடு ஒடியதால் நெல்லியடியில் எனது கலாலய அச்சகத்துக்குள்ளேயே முடங்கிவிட்டது. விரைவில் ஏகலைவன் கூத்து நூல் வெளிவரும்.
ஒரு கதை கூத்து வடிவமாகும்போது கடின உழைப்பை அது வேண்டிநிற்கும் என்பதை புரிந்துகொள்கிறோம். இயல்பாகவே நீங்கள் முறைப்படி கூத்துப்பயின்று அனுபவம் பெற்றீர்களா? எவ்வாறு கூத்தைப் படைக்கிறீர்கள்?
காத்தவராயன் கூத்தை கணபதிப்பிள்ளை அண்ணாவியாரிடம் முறையாகப் பாடக் கற்றுக் கொண்டேன். எனது அரங்க உறவுகள் முத்து, தாசீநா.சுந்தா.மெளனகுரு. அரசு, பத்மா - இவர்களின் தொடர்பு அரங்கு பற்றிய என் சிந்தனையை வளர்த்தது. ராமானுஜம் சார் நடத்திய நாடகப்பட்டறைகளில் பங்கு பற்றிய அனுபவமும் உண்டு. ஏனையவை கண்டதும் கேட்டதும்தான். என்படைப்புகள் யாவற்றிற்கும்

முருகபூபதி - 0 113
அடிநாதம் கூத்து. நவீன அரங்கச்சிந்தனைகளும் விரவி இருக்கும். 'ஏகலைவன்’ கூத்தில் வேடர்களுக்கு காத்தவராயன் கூத்தில் இருந்து சில மெட்டுக்களையும் அரசர்களுக்கு மன்னார்க்கூத்து மற்றும் தென்மோடி கூத்து முறைகளையும் கொடுத்து அமைத்தேன். ஒருபயணத்தின் கதை’ நாடகத்தில் பயன்படுத்தப்பட்ட மெட்டுக்கள் யாவுமே வசந்தன் கூத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. ‘தீனிப்போர்’ கூத்துக்கு வடஆர்க்காடு தெருக்கூத்து மெட்டுக்களில் இருந்தும், தஞ்சாவூர் நாத்தேவன் குடி பிரகலாதன் கூத்திலிருந்தும் பாடல் மெட்டுக்களைப் பயன்படுத்தினேன். பாரதியாரின் பாஞ்சாலிசபதம் கூத்தாகியபோது உதவியது மட்டக்களப்பு வடமோடியும் யாழ்ப்பாணம் தென்மோடியும். பாடல்மெட்டுக்கள் மட்டு மல்ல. ஆடல்கள், அரங்க உத்திகள் யாவுமே கூத்துக்களில் இருந்து பெற்றுக்கொண்டவைதான். வேறுபட்ட களரிகளையும் கூத்தில் காணலாம். 'ஏகலைவன்’ முப்பக்கக் களரியிலும், ‘தீனிப்போர்’ வீதிக்களரியிலும் ‘ஒரு பயணத்தின் கதை வட்டக்களரியிலும் அரங்கேறின.
அதுமட்டுமல்ல. சிலப்பதிகாரம் கூறும் 'ஒரு முக எழினி, பொரு முக எழினி, கரந்துவரல் எழினி’ ஆகிய மூவகை எழினிகளும் சென்னை பல்கலை அரங்கத்துடன் தயாரித்த ஏகலைவன் கூத்தில் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. எழினிகளைப் படச்சட்ட மேடைக்குள் வைத்துப் பார்ப்பவர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதே என் கருத்து. எழினியை கட்டமைப்புச் சார்ந்தததாக மட்டும் பார்க்காமல் அரங்கமொழியாகக் காணவேண்டும். தமிழ் இலக்கியங்களில் இவற்றின் பயன்பாடு பற்றிச் செய்திகள் உள்ளன. எழினிகள் பற்றி வேறு சந்தர்ப்பதில் விரிவாகப் பேசலாம்.

Page 59
1140
கேள்வி:
கூத்தில் இருந்தும் பழந்தமிழ் கூத்து இலக்கிய இலக்கணங்களில் இருந்தும் மட்டு மல்ல சமயச் சடங்குகளில் இருந்தும் கூத்துக்கான கூறுகளைப் பெற்றுக்கொண்டேன். முருகையன்கோயிலில் "சூரன் ஆட்டிய’ அனுபவம் ‘தீனிப்போர்’ கூத்தில் இறுதிச் சண்டைக்காட்சியாக அமைகிறது. இன்னும் பல. ஒவ்வொரு கூத்தாகப் பார்க்கவேண்டும்.
உங்கள் நாடகக்கொள்கை பற்றி.
உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை எனக்குத் திட்டவட்டமான கொள்கைகள் உள்ளன. ஆனால் உள்ளடக்கம் மட்டும் படைப்பாகிவிடுவதில்லை. ஒருகருத்து உருப்பெறும் போதுதான் அது படைப் பாகிறது. அக்கருத்து சிறுகதையாகலாம். நாவலாகலாம். நாடகமாகலாம். கவிதையாகலாம். கட்டுரையாகலாம். அல்லது பேச்சாகலாம். அக்கருத்து ஒரு வடிவத்தில் இருந்து இன்னொரு வடிவத்துக்கு மாற்றப்படலாம். வடிவங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு. நாம் வடிவக்குருடர்கள் ஆகிவிடக்கூடாது.
இன்று சாட்சாத் முருகனே வந்தாலும் கோயிலுக்குள் போகவிடார்கள். ஏனென்றால் அவர் பெயர் 'முருகன்’, என தீண்டாமை ஒழிப்புக் கூட்டமொன்றில் தோழர் சண்முகதாசன் விட்ட பகிடி நாடக வடிவம் பெற்றதோ இல்லையோ ‘கந்தன் கருணை’ கூத்தில் ஒரு பாடல் வடிவம் பெற்றது.
அழகன் முருகன் என்ற பெயருடனே - முருகன்
ஆலயத்துள் எவரும் போகேலாது.
கரு உரு சம்பந்தமாக இன்னும் பல உதாரணங்களைக் கூறலாம். இங்கே நான் கூறவருவது என்னவென்றால்
உள்ளடக்கம் தன்னியல்பாக வடிவத்தைக்

முருகபூபதி 0 15
கொள்வதில்லை. கலைவடிவம் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடையதாக இருந்தாலும் கரு உரு இரசாயனச்சேர்க்கை படைப்பாளியிடம்தான் நடைபெறுகிறது. அது, அவரவர்ஆற்றல், அறிவு, வசதி தேவை. அரசியல் நிலைப்பாடு சம்பந்தப்பட்டது. அரசியல் தெரியாதவர் அரசியல் பேசமுடியாது. கூத்தை அறியாதவர் கூத்தாக்க முடியாது. இது உள்ளடக்கத் துக்கும் பொருந்தும். உருவத்துக்கும் பொருந்தும்.
நாடக அரங்கைப் பொறுத்தவரை கவனத்தில் கொள்ளவேண்டியது நாடகமொழி வேறு. அரங்கமொழி வேறு. நாடகங்களை எங்கிருந்தும் பெறலாம். ஆனால் அரங்கமொழியானது எம்மை அடையாளங் காட்டவேண்டும். ஜெர்மன் நாடகாசிரியர் GuLG_List av fl@pifò gyGuiřGGf6ð The Exception and The Rule என்ற நாடகம் சென்னை பல்கலை அரங்கத்தின் கூட்டுமுயற்சியாக 'ஒரு பயணத்தின் கதை என தமிழில் உருப்பெற்றது. இதன் அரங்கமொழியில் நாடகத்தமிழ் அடையாளங்களைக் காணலாம். ஆகவேதான் அரங்க மொழித் தேடலை தமிழ்நாடகம் என்றில்லாமல் நாடகத்தமிழ் எனப் பிரித்துப் பார்க்கிறேன். தமிழில் உள்ள நாடகங்கள் எல்லாமே நாடகத்தமிழ் ஆகிவிடா. நாடகத்தமிழ் ஆய்வு வேண்டும். இது வெறுமனே எமது பழந்தமிழ் இலக்கண இலக்கிய ஆய்வல்ல. எமது அடையாளத் தேடல். அரங்கில் எமது அடையாளம் காணலே எனது இன்றைய நாடக
அரங்கக் கொள்கை.
ཉ། ཏ་

Page 60
என்.கே.ரகுநாதனின் பதில்
கால்நூற்றாண்டு காலத்துக்கு முன், ஜாதிமான்கள் வாழ்கிற யாழ். பூமியில் நடைபெற்ற சாதி ஒழிப்புப் போராட்டங்களின் ஒரு கூறான, ஆலயப் பிரவேசப் போராட்டத்தின் அடிநாதமாக உருப்பெற்றெழுந்து, அப்போராட்டத்துக்குச் சகல மக்களையும் அணி திரட்டிய ‘கந்தன் கருணை’ நாடகத்தைப் பற்றிப் பலரும் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்குமுகமாக, அந்நாடகம் பற்றிய கட்டுரையொன்றைப் பிரசுரித்தமைக்கு முதலில் தினகரனுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
அடுத்து உண்மை நிலை எதுவாயிருப்பினும் கந்தன் கருணை பற்றிய சில கருத்துக்களை வெளிக்கொணர்ந்த இளைய பத்மநாதனுக்கும் அவரைப் பேட்டி கண்ட லெமுருகபூபதிக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
இளைய பத்மநாதனின் உரிமை நிலைப்பாடு அல்லது மயக்க நிலைப்பாடு எதுவாயிருந்தாலும் கந்தன் கருணை பற்றிய சில மர்மங்களை நான் முதலில் இங்கே முன்வைக்கின்றேன்.
மாவிட்டபுர ஆலயப் பிரவேசப்போராட்டம் நடைபெற்ற கையோடு 1969ம் ஆண்டு அப்போராட்டத்தை முன் நின்று நடத்திய தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம், ஒரு மகாநாட்டை ஏற்பாடு செய்து, அதையொட்டி சிறப்பு மலர் ஒன்றையும் வெளியிடுவதென முடிவு செய்தது. அம்மலருக்கான ஆசிரியப்பொறுப்பினை என்னிடம் ஒப்படைத்திருந்தார்கள். முற்போக்கு எண்ணங்கொண்ட எழுத்தாளர், கவிஞர்களிடமிருந் தெல்லாம் கட்டுரைகள், கவிதைகள் பெறப்பட்டு மலர்
அச்சாகிக்கொண்டிருந்தது.

முருகபூபதி 0 117
அப்போது நான், ஆஸ்பத்திரி வீதியிலுள்ள சென்மேரீஸ் வித்தியாலயத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ஒருநாள் காலை பத்தரை மணியளவில், அண்மையில் காலஞ்சென்ற பிரபல எழுத்தாளர் ஒருவர், தற்போது சென்னையில் வாழ்ந்துகொண்டிருக்கும் மற்றொரு பிரபல எழுத்தாளருடன் என்னைக் காணவந்தார். நான் அவர்களைச் சந்தித்தபொழுது முதலில் குறிப்பிட்ட எழுத்தாளர், அண்ணை, பார்வதி பிரஸில் ஒரு கதை கொடுத்திருக்கிறேன். அதைச் சொல்லிப்போட்டுப்போக வந்தனான்’ என்றார். ‘சரி அதைப் பார்க்கிறேன்’ என்று
சொல்லி நான் அவர்களுக்கு விடை கொடுத்தேன்.
மலருக்கு நான் பொறுப்பாசிரியர். கதையோ, கட்டுரையோ என்னிடம்தான் கொண்டு வந்து தரவேண்டும். அப்படியிருக்க, என் பாடசாலையைத்தாண்டி, அப்பாலிருக்கிற அச்சகத்தில் கதை கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பக்கம் போனவிடத்தில் அதைக்கொடுத்துவிட்டு வந்தாராக்கும் என்று நான் நினைத்து அதைப் பெரிதுபடுத்தாமல், பாடசாலை முடிந்து வீட்டுக்குப்போய், பின் மாலை ஐந்து மணியளவில் அச்சகத்துக்குப்போனேன். அந்தக் கதையைத் தரும்படி கேட்டேன். ‘மூன்று பக்கங்கள் கம்போஸ் பண்ணியாச்சு’ என்ற பதிலுடன், சில பக்கங்கள் என்னிடம் தரப்பட்டன. நான் ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தேன். “கொம்போஸ்பண்ணச் சொல்லி நீங்க கொடுத்ததாக அவர் தந்தார்!’ என்று தெரிவித்த அச்சக அதிபர் கேள்விக்குறியோடு என்னைப்பார்த்தார்.
எனக்குக் கணப்பொழுதில் எல்லாம் புரிந்துவிட்டது. அந்த எழுத்தாளப்பெருமகனார் அதை என்னிடம் கையளிக்காமல் நேரே அச்சகத்தில் கொடுத்த மர்மத்தை நான் உடனே விளங்கிக்கொண்டேன். அந்தக் கதை பரிசீலனைக்குட்படாமல் எப்படியும் பிரசுரமாகவேண்டும் என்ற கபடத்தனம்.
மலரின் கடைசிப் பக்கங்களில் பிரசுரிப்பதற்கென நான் ஒரு நாடகம் எழுதி வைத்திருந்தேன். அதுதான் கந்தன் கருணை,

Page 61
8 0 சந்திப்பு
இயக்கங்களில் இணைந்து பாடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்குக் கூட்டு முயற்சி ஒரு முக்கிய நிலைப்பாடு. நான் நினைத்தால் கொம்போஸ் பண்ணிய அந்தக் கதையின் மூன்று பக்கங்களையும் கலைக்கச் சொல்லிவிட்டு கந்தன் கருணையைப் பிரசுரித்திருக்கலாம். கூட்டு முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து கந்தன் கருணை இடம் பெறாமலே அம்மலர் வெளியிடப்பட்டது. என் தசமங்கலம்’ சிறுகதைத்தொகுதியின் முன்னுரையில், முதலில் பிரசுர நிலையிலிருந்தே அது பின் தள்ளப்பட்டது என்று சுருக்கமாகக் குறிப்பிட்டிருப்பது இதனைத்தான்!.
முன் குறிப்பிட்ட மகாநாடு முடிந்து சில மாதங்களின் பின், நெல்லியடியைச்சேர்ந்த சிவராசா என்னும் தோழர், 'தங்களிடம் நாடகப்பிரதி ஏதாவது இருந்தால் அதை அனுப்பிவையுங்கள்’ என்று எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். நான் ‘கந்தன்கருணை’ நாடகப் பிரதியை அவருக்கு அனுப்பிவைத்தேன். சில காலத்துக்குப்பின் நெல்லியடியில் அந்த நாடகம் பழக்கப்பட்டு மேடையேற்றப்பட்டதாக அறிந்தேன். நான் அழைக்கப் படவில்லை. பின்னர் சுன்னாகத்தில் மேடையேற்றப்பட்டது. எனக்கு அறிவித்திருந்தார்கள். போய்ப்பார்த்தேன். காத்தான் , கூத்துப்பாணியில் நெறிப்படுத்தப்பட்ட நாடகம் கவர்ச்சியாகவும், மக்களைப் பரவசப்படுத்தக்கூடியதாகவும் அமைந்திருந்ததனால் நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன். நாடகத்தின் ஆரம்பத்தில், நாடகத்தைநெறிப்படுத்திய இளைய பத்மநாதனிலிருந்து நடிகர்கள், ஒப்பனையாளர்கள், வாத்தியக்குழுவினர்எனப்பங்கு பற்றிய கலைஞர்கள் அனைவரும் காத்தான் கூத்துப்பாணிக்கு மாற்றிய மாதனையூர் கணபதிப்பிள்ளையும் அறிமுகப்படுத்தப்பட்டனர். ஆனால் அந்த நாடகத்தின் மூலப்பிரதியைத் தயாரித்தளித்தவரின் பெயர் தெரிவிக்கப்படாமலிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனேயல்ல, சில நாட்கள் கழித்து இயக்கத் தோழர்களிடம் இதையிட்டு நான் என் கருத்தை வெளிப்படுத்தினேன்.
பேட்டிக்கட்டுரையில் நாடகப் பிரதிகளைத் தேடிக்

முருகபூபதி 10 19 கொண்டிருந்தபோது. எழுத்தாளர் என்.கே.ரகுநாதனின் கந்தன் கருணை, வசனநடையில் அமைந்த அங்கத நாடகக் கையெழுத்துப் பிரதியொன்று தரப்பட்டது எனக் குறிப்பிடுகின்றார். இளைய பத்மநாதன் நான் கொடுத்தது அங்கத நாடகப்பிரதி என்றும் சொல்லப்பட்டுள்ளது. அங்கதம் என்றால், வசை என்று அறிந்திருக்கிறேன். போராடும் பக்தர்களுக்கு முருகன் தன் கைவேலைக்கொடுத்தருளி மறைந்ததை நான் @l@)* பாடிவிட்டேனோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.
கட்சியும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கமும் மிகுந்த உற்சாகத்துடன் ஆதரவு நல்க, கந்தன்கருணை பல கிராமங்களிலும் மேடையேற்றப்பட்டது. நான் என் கருத்தை வெளிப்படுத்திய காரணத்தால் இரண்டொரு மேடைகளில் நாடகத்தின் மூலப்பிரதியைத் தயாரித்தவர் பெயரும் தெரிவிக்கப்பட்டது. பின், அது அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை என்றே விளம்பரப்படுத்தப்பட்டது. எப்படியிருந்தபோதிலும் மக்களை வென்றெடுத்துச்சென்ற அந்த நாடகத்தின் வெற்றி என்னைப் பெருமைக்குள்ளாக்கியது.
கந்தன் கருணை காத்தான் கூத்துப்பாணி நாடகம் என்று புத்தகம் உருவாக்கப்பட்டது. அச்சு வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது எனக்குத் தெரியாது. இறுதிநாட்களில் ஒர் இயக்கத்தோழர் என்னிடம் வந்து கந்தன் கருணை அச்சேற்றப்படுவதைச் சொல்லி அதற்கு நான் ஏதாவது எழுதித் தரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். நான் “கதையின் கதை’ என்ற தலைப்பில், அந்த நாடகம் என் மனதில் உருவாவதற்குக் காரணமாயமைந்த எழுச்சியை எழுதிக் கொடுத்தேன். அவர் கேட்டுக்கொண்டதன்படி மறுநாள் அந்த அச்சகத்துக்குப்போய், கைலாசபதி அவர்கள் அந்த நாடகத்துக்கு எழுதிக்கொடுத்த பாராட்டுரையுடன், என் கட்டுரையையும் ‘புறுாவ் பார்த்துக்கொடுத்து, முன்பக்க அமைப்பையும் ஒழுங்குபடுத்திக்கொடுத்து வந்தேன். புத்தகத்தில் மூலக்ைேத:

Page 62
120 0 சந்திப்பு
என்.கே.ரகுநாதன் என்றும், நாடக வார்ப்பு: அம்பலத்தாடிகள் என்றும் அச்சிடப்பட்டது. புத்தகம் வெளிவந்து மிகப் பிரபலத்துடன் விலைப்படலாயிற்று. அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை என்றே முகப்பில் பெயர் பொறித்திருந்தார்கள்.
பின்னர், தார்சீசியஸின் முயற்சியால், கந்தன் கருணை மேடையுற்ற வடிவில் நெறிப்படுத்தப்பட்டு கொழும்பில்
மேடையேற்றப் பட்டது.
தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் மெளனகுரு, நா.சுந்தரலிங்கம், குழந்தை, ஜெனம்,சிவானந்தன் போன்ற முன்னணிக் கலைஞர்களுடன் இணைந்து ஆட்டக்கூத்தாக அதனை மேடையேற்றினார். அப்போது நான் யாழ். மத்திய கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். தார்சீசியஸும் கொழும்பிலிருந்து இடமாற்றம் பெற்று மத்திய கல்லூரிக்கு ஆசிரியர் சங்க நிதி உதவிக்காக, கந்தன் கருணை நாடகத்தை மேடையேற்ற ஒழுங்கு
செய்தார்.
கல்லூரியில் எல்லா ஆசிரியர்களுக்கும் செய்யப்பட்டபொது அறிவிப்புதான் எனக்கும் செய்யப்பட்டது. நான் அதையிட்டு அலட்டிக்கொள்ளவில்லை. நாடகம், வீரசிங்கம் மண்டபத்தில் நட்ைபெற்றது. நிறைந்த சனம், நிறைந்த வசூல். (எமது ஆசிரியர் கூட்டம், கந்தன் கருணை என்றதும் ஏதோ பக்தி நாடகம் என்றெண்ணிப்போய், மறுநாள் முகங்களில் வித்தியாசமான உணர்வுகள்).
நாடகம் முடிந்த மறுநாள் நான் தார்சீசியஸை அணுகி ‘இந்த நாடகத்தின் மூலகர்த்தா நானல்லவா? அதைப்பற்றிய ஒரு கதையும் இல்லையே! என்ன சங்கதி? என்று கதையோடு கதையாகக் கேட்டேன். அவர் என்னை ஆச்சரியத்தோடு பார்த்து “அப்படி எங்கே இருக்கு என்று கேட்டார். நான் சிரித்துக் கொண்டே’கந்தன் கருணை புத்தகத்திலே மூலக்கதை என்.கே.ரகுநாதன் என்று போட்டிருக்கே. என்றேன். அப்படி இல்லை. கரு

முருகபூபதி 0 12
என்.கே.ரகுநாதன் என்றுதான் போட்டிருக்கு என்று அழுத்தமாகப் பதில் சொன்னார். நான் நாளைக்குப் புத்தகம் கொண்டு வந்து காட்டுகிறேன்’ என்றேன் நான். ‘நானும் கொண்டு வந்து காட்டுகிறேன்’ என்றார் அவர். அதன்படி, மறுநாள் காலையே இருவரும் சந்தித்ததும் நான் புத்தகத்தை எடுத்து திறப்பதற்குள், அவர்தன் புத்தகத்தை எடுத்து, என்முகத்தில் ஒங்கி அடிக்காத குறையாகத் திறந்து காட்டினார். கரு.என்.கே.ரகுநாதன், உரு அம்பலத்தாடிகள் என்றே இருந்தது. நான் தலை கிறுகிறுத்துப் போனேன்.
அச்சகத்தில் புத்தகத்தின் முன்பக்கத்தாள் மெசினில் ஒடிக்கொண்டிருந்தபோது அங்கு யாரோ ஒரு அம்பலத்தாடி வந்துள்ளார். அவர் பிரதியை வாங்கிப் பார்த்துவிட்டு மெசினை நிறுத்தச்செய்து, கரு உரு என்று மாற்றிவிட்டார். ஐம்பது நூறு பிரதிகளில் தான் மூலக்கதை என்.கே.ரகுநாதன் என்று போயிருக்கும். மற்றவைகளில் கரு உருத்தான் அச்சேறியிருக்கும். எனக்குத் தந்த புத்தகத்தை மூலக்கதையாகத் தேடித்தந்திருப்பார்கள் என உணர்ந்துகொண்டேன்.
கந்தன் கருணை நாடகம் மேடையேற்றப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது அதற்கிடையில் ஏகலைவன் என்ற நாடகமும் அம்பலத்தாடிகளால் மேடையேற்றப்பட்டு அமர்க்களப்படுத்திக்கொண்டிருந்தவேளை என் மனதில் இனந்தெரியாத ஒரு ஆதங்கம் உண்டாகி என் கந்தன் கருணைப் பிரதியைத் திரும்பப் பெறவேண்டுமென்ற உணர்வு ஏற்பட, நெல்லியடி சிவராசாவுக்கு நான் முன்பு அனுப்பிவைத்த கந்தன் கருணை, நாடகப்பிரதியை அனுப்பிவைக்கும்படி ஒரு கடிதம் எழுதினேன். அதற்குப் பதிலே கிடைக்கவில்லை. அந்தக் கடிதம் எழுதிப் பத்தாண்டுகள் கடந்தபின் தற்போது சிவராசாவைக் கொழும்பில் சந்தித்தவேளை நான் எழுதிய கடிதத்தைப்பற்றி விசாரித்தேன். நாடகப்பிரதி இளைய பத்மநாதனிடம்தான், கேட்டேன். அவர் தரவில்லை என்று சொன்னார்.

Page 63
122 0 சந்திப்பு
இவை யாவும் பழைய சங்கதிகள். கந்தன் கருணை பற்றிய மர்மங்கள் துலங்க இவை போதுமென நினைக்கிறேன்.
இனிப்புது விஷயத்துக்கு வருவோம். பேட்டிக்கட்டுரையில் தார்சீசியஸ் கந்தன் கருணையை ஆட்டக்கூத்தாக மாற்றி நாடக அரங்கக்கல்லூரிக்காக மேடையேற்றியபோது, உரிமைப் பிரிச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள, இளைய பத்மநாதனின் கந்தன்கருணை என்று நோட்டீஸிலே போட்டாராம். பிறகு அது திருத்தப்பட்டு அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை என்று போட முயற்சிக்கப்பட்டதாம். இதைச்சொல்லி கூட்டு முயற்சிக்கு அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை ஒரு முன்னுதாரணம் என்று இளைய பத்மநாதன் தெரிவித்துள்ளார். இதைப்படிக்கச் சிரிப்புத்தான் வருகிறது.
இந்த உள்நோக்கங்களைப் புரிந்துகொண்ட அமரர்கைலாசபதி தன் கட்டுரையொன்றில் ‘அம்பலத்தாடிகள் அரங்கேற்றிய என்.கே.ரகுநாதனின் கந்தன் கருணை என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். மெளனகுருவும் தன் கட்டுரையொன்றில் ரகுநாதனின் கந்தன் கருணை என்று எழுதியிருக்கிறார். இதை நாம் கவனத்திற்கொள்ளவேண்டும்.
எடுத்த எடுப்பிலேயே உருவகக் கதைகளின்மூலம் புதிய செய்தியை, தேடலைத் தரமுடியும் என்று ஆக்க இலக்கியக்காரர் படைப்புக்களை வழங்கும் அதே வேளை. என்று தொடங்கி, ஊடகமாக ரகுநாதனின் கந்தன் கருணை வெறும் தேடல் படைப்பு. அதை சமகாலப் பிரச்சினைகளோடு சித்தரித்து வெற்றி கண்டவர் இளைய பத்மநாதன் என்று எனக்கு ஒரு குத்தலும் அவருக்கு ஒரு தூக்கலுமாக பேட்டியாளர் லெமுருகபூபதி தனது பணியை ஆரம்பிக்கிறார். நான் புராணகாலச்சூரன் போரைப் படைக்கவில்லை. சமகால நிகழ்வான மாவிட்டபுரப்போரை முன்வைத்தே அந்த நாடகத்தை எழுதினேன்.
இனி ஏகலைவனுக்கு வருவோம். போர்வை என்ற தலைப்பில்

முருகபூபதி (0123
நான் எழுதிய கதை ஏகலைவன் கதைதான். ஒரு கணை ஆயிரம் துளையிடும் அஸ்திர வித்தை வேடன் ஏகலைவனுக்கும் தெரிந்தததால் ஆளும் வர்க்கத்துக்கும் வந்ததே ஆபத்து என்ற நடுக்கத்தில் அவனுடைய பெருவிரலைப் பறித்ததாக ஒரு புதுப்பார்வை இளைய பத்மநாதனும் தனது ஏகலைவன் கூத்துக்காக முழுப் பாரதக் கதையையும் படித்ததாகவும் ஆய்வு மேற்கொண்டதாகவும் விமர்சனங்களைச் சந்தித்ததாகவும் தெரிவிக்கிறார். பூரீவில்லிபுத்தூரரின் பாரதத்தையும் துளாவினராம். நண்பர் ரகுநாதன் தமது ‘போர்வை’ என்ற கதையில் இதனை மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளார். அவரின் சிறுகதை என் நாடகப் படைப்புக்கு உதவியது என்றும் தெரிவிக்கிறார்.
எனது ‘போர்வை’ என்ற சிறுகதை 19746 வெளியான'தாயகம் முதல் இதழில் பிரசுரமாகி L I GujJg பாராட்டுக்களையும் பெற்றது. இளைய பத்மநாதனின் ஏகலைவன் நாடகம் 1978ல் அரங்கேறியது. என்போர்வை, தன் நாடகப்படைப்புக்கு உதவியது என்றும், அவர் தேடிய புதுமைக்கருத்துக்கள் அதில் துல்லியமாக இருந்தன என்றும் கூறாது விட்டிருந்தால் பிரச்சினைக்கே இடமில்லை. நானும் இந்த உத்தமர் கண்களில் போர்வை படவில்லையாக்கும் என்று
எண்ணிக்கொண்டிருந்திருப்பேன்.
என் கந்தன் கருணையில் சமகாலப் பிரச்சினைகளும் அரசியல் கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை என்று குறை காண்பதுபோல் ஏகலைவனில் தான் மேற்படி கருத்துக்களை முன்வைத்ததாகப் பெருமைப்படுகிறார்.
கந்தன் கருணை பற்றிச் சொன்ன பதில்தான் இதற்கும். காலநிலைமைக்கேற்றவாறு நாடகம் மேடை ஏறும்போது வேண்டியதைச்சொல்லலாம். ஆனால் எழுத்தில் அளவோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். இளையபத்மநாதன் பல அரசியல் கருத்துக்களையும் மாஒவின் சிந்தனைகளையும் ஏகலைவனில்

Page 64
1240 சந்திப்பு
புகுத்தியுள்ளாராம். நான் என் போர்வையில் ஆயுதபலத்திலிருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்ற ஆட்சித் தத்துவத்தை உணர்த்த ராஜதந்திரி பீஷ்மர் என்ற பாத்திரம் மூலம் மாஒவின் சிந்தனையைப் புகுத்தியிருக்கிறேன்.
வில்வேறு, காண்டீபம் வேறு என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.
வில்லுக்கு விஜயன், காண்டீபன் என்று அர்ச்சுனனுக்கு திருநாமங்கள் ஏற்பட்டது ஏன் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். இந்தக்கதை நடந்த கால எல்லையில் (குருதட்சிணை பெற்றகாலம்) அர்ச்சுனன் காண்டீபத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை என்கிறார் இளைய பத்மநாதன். ஒரு கணையில் ஆயிரம் துளையிடும் அஸ்திர வித்தையை ஏகலைவன் தெரிந்து வைத்திருந்தமையால் தானே அர்ச்சுனன் துடிதுடித்தான். துரோணரும் அவனது கட்டை விரலை பறித்தார்.
கந்தன்கருணை அம்பலத்தாடிகளால் நெறிப்படுத்தப்பட்டது. நான் அறிந்தவரை இளையபத்மநாதன் தான் அதன் மூத்த இயக்குநர். கணபதிப்பிள்ளை மிகச் சிறந்த காத்தான் கூத்துக்காரர். அவர் வழிகாட்டல் இளையபத்மநாதனுக்குக் கிடைத்த பெரும் பேறாகும். பின் அவர் தன் சொந்தக் கண்டுபிடிப்பான ஏகலைவனை அம்பலத்தாடிகளிலிருந்து பிரித்துவிட்டதாகக் கருத்து முன்வைக்கிறார். நான் மட்டுமல்ல. பலர் இதுகாலவரை அம்பலத்தாடிகள் என்றால் இளையபத்நாதன், இளையபத்மநாதன் என்றால் அம்பலத்தாடிகள் என்றே கருதிக்கொண்டிருக்கிறோம். ஏகலைவன் முதல் அரங்கேற்றத்தைப் பற்றி பரிதாபகரமாக மரணத்தைத் தழுவிய நெல்லை க.பேரன் ஈழநாட்டில் எழுதிய விமர்சனத்தில் அம்பலத்தாடிகளின் ஏகலைவன் என்றே தலைப்புச் சூட்டியதுடன், உள்ளே, இந்த நாடகத்தின் இயக்குனர் இளைய பத்மநாதனுக்குப் புகழாரமும் சூட்டியுள்ளார். நெல்லை க.பேரன் நெல்லியடியைச் சேர்ந்த எழுத்தாளர். இளைய பத்மநாதனுடன் கலந்துரையாடாமல் அந்த விமர்சனத்தை அவர்

முருகபூபதி 0 125
எழுதியிருக்கமுடியாது. இந்த முரண்பாடுகளை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
இளைய பத்மநாதன் யார் என்பதை அவர் கந்தன் கருணை, ஏகலைவன் ஆகிய இரண்டு நாடகங்களின் மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை வடபுலத்துக் கலைஞர்கள் அனைவரும் அறிவர். தார்சீசியஸ் ஒரு பத்திரிக்கைப் பேட்டியில் நாடகத்துறையூடாக இளையபத்மநாதனின் சமூகப் பார்வையைப் புகழ்ந்திருக்கிறார். இந்தச் சமூகப் பார்வை எங்கிருந்த வந்தது? எப்போது வந்தது? என்பதைச் சகலரும் அறிவர். ஏறிவந்த ஏணியைக் காலால் உதைப்பது எமக்கு ஒன்றும் புதிய விஷயமல்ல. மக்களுக்காக கலை,இலக்கியம் படைக்கவந்தோம் என்று தம்பட்டமடிப்பவர்கள், பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளவேண்டும்.
குறிப்பு :-
கந்தன் கருணை-ஏகலைவன் முதலானவை உருவாவதற்கு என்.கே. ரகுநாதனின் படைப்புகள் உதவியதை அண்ணாவியார் இளைய பத்மநாதன். தமது நேர்காணலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ரகுநாதனின் எதிர்பார்ப்புகளுக்கு குறிப்பிட்ட கூத்துக்களுடன் சம்பந்தப்பட்டவர்கள்தான் பதில் கூறமுடியும்.
- முருகபூபதி.

Page 65
மாவை நித்தியானந்தன்
இலக்கிய உலகில் பிரவேசித்த காலம் முதல் மாவை நித்தியானந்தன் எனது நல்ல நண்பர். 1973ல் கட்டுப்பெத்தை பல்கலைக் கழக தமிழ்ச்சங்கத்தின் கலைவிழா வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் முழுநாள் விழாவாக நடைபெற்ற சமயம், நித்தியின் ‘ஐயா எலக்சன் கேட்கிறார்’ பார்த்து ரசித்தேன். அதே நாடகம் கால் நூற்றாண்டுக்குப் பின்பும் அந்நிய மண்ணில் மேடையேறிய பொழுதும் பார்த்து ரசித்தேன். மாவை நித்தியானந்தனின் சிந்தனையும் எழுத்தும் பணியும் தீர்க்கதரிசனம் கொண்டவை என்பதை உறுதியாகக் கூற முடியும்,
இனிச்சரிவராது, ஐயா எலக்சன் கேட்கிறார், திருவிழா, கண்டம்மாறியவர்கள், அம்மா அம்மா, உட்பட நாடகங்களும் பாட்டும் கதையும், இசைநாடகம் என்பனவும் எழுதித் தயாரித்து இயக்கியவர்.
அவுஸ்திரேலியாவில் மெல்பன் கலை வட்டம், பாரதி பள்ளி ஆகியவற்றின் ஸ்தாபகர், ‘பாப்பாபாரதி’ சிறுவர் வீடியோ ஒளிப்பதிவு நாடா பாகங்கள் நித்தியின் அயராத பணிகளில் மைல்கற்கள், நித்தியின் பன்முகப்பட்ட பணியும் ஆளுமையும் இந்நேர்காணலில் பதிவாகியுள்ளது.

முருகபூபதி 0 127
கேள்வி- தாங்கள், நாடகம், சிறுகதை, கவிதை, விமர்சனம் முதலான துறைகளில் ஈடுபட்டிருந்தாலும் நாடகாசிரியனாக நெறியாளனாகத்தான் குறிப்பாக இனம் காணப்படுகிறீர்கள். நாடகத்துறையில் தங்களின் தீவிர ஈடுபாட்டையும் அதன் பின்னணியையும் கூறுவீர்களா?
பதில்: நாடகம், சிறுவதியிருந்தே என் மனதுக்குக் கவர்ச்சியான ஒன்றாக இருந்திருக்கிறது. பல்கலைக் கழக சூழல், நாடகத்துறையில் அக்கறையுடன் ஈடுபட ஏற்ற களமாக அமைந்தது.
நாடகத்துறை என்னைக் கவர்ந்ததற்கு பல காரணங்கள் இருந்தன. இவற்றில் ஒன்று நாடகம் பலர் சேர்ந்து உழைத்தும் ஒரு கூட்டுச்செயற்பாடாக இருப்பது.
பார்வையாளர்களுடன் நேரடிச் சந்திப்பு கிடைப்பதும், பெறுபேற்றை நேரடியாக காணும் வாய்ப்பும் மகிழ்ச்சியானவை. சொல்ல விரும்பும் விஷயங்களைத் தாக்கமாக சொல்வதற்கு வார்த்தைகளை மட்டுமன்றி காட்சியையும் மேடை உத்திகளையும் ஒளி, ஒலி முதலான தொழில் நுட்பங்களையும் பயன்படுத்த வாய்ப்புண்டு.
எனது சகல நாடகங்களுக்குமே முதலாவது மேடையேற்றம் எனது நெறியாள்கையில் அல்லது நெருங்கிய பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது.
இதை நல்ல வாய்ப்பாகவும் சொல்லலாம். மேடைக்காக நாடகம் வளரும் பொழுது, பிரதியில் மேலும் முன்னேற்றங்களைச் செய்ய முடிந்தது.
சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட மேடையேற்றத் தேவைக்கென்றே நாடகம் எழுதப்பட்டது. மேடையேற்றத்தில் கிட்டும் அனுபவம், மேடைக்கென

Page 66
28 0
சந்திப்பு
மேலும் புதிய நாடகங்களை எழுதும்போது துணை நிற்கிறது.
எனது முதல் நாடகம் 'இனிச்சரிவராது 1972இல் எழுதப்பட்ட இந்நாடகம், அப்பொழுது கட்டுப்பெத்தை பல்கலைக்கழக தமிழ்ச்சங்க கலை விழாவில் மேடையேறியது.
வடமாகாண சாதி அமைப்புக்கு எதிரான நாடகம் இது.
பெருந்திரளான பார்வையாளர்களின் முன்பாக மேடையேறிய இந்நாடகம் பெற்ற வெற்றி இதில் ஈடுபட்ட அனைவருக்கும் உற்சாகம் தருவதாக அமைந்தது.
இந்நாடகத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றியவர் களில் குறிப்பாக தில்லைக்கூத்தனைக் குறிப்பிடலாம்.
மாணவர் மட்டத்தில் நிகழ்ந்த கூட்டுச் செயற்பாடும் நாடக மேடை தந்த சவால்களும் எனக்கு கவர்ச்சியானவையாக இருந்தன. தொடர்ந்து அடுத்த ஆண்டு ‘ஐயா எலக்சன் கேட்கிறார் என்ற நாடகத்தை மேடையேற்றினோம். 1971 ஆம் ஆண்டிலேயே எனது பொறியியல் பட்டப்படிப்பு முடிவுற்றபோதிலும் மேலும் பல ஆண்டுகள் இந்த பல்கலைக் கழக மாணவர்களுடன் எனது நெருக்கமும் ஈடுபாடும் தொடர்ந்தது.
66 ... ?? ké 99
சோஷலிஸம் வாழ்க', 'பாவம் யமன் முதலானவை நாம் மேடையேற்றிய ஏனைய நாடகங்கள்.
எனது நாடக ஆர்வத்துக்கும் வளர்ச்சிக்கும் கட்டுப்பெத்தை பல்கலைக்கழகம் ஒரு நல்ல களமாக அமைந்தது என்பதை நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.

முருகபூபதி 0 29
இதன் பின்னர், சில ஆண்டுகால இடைவெளியைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் அளவெட்டி சுற்றுவட்டாரத்தில் கலை, இலக்கிய ஈடுபாடும் சமூக நேயமும் கொண்ட ஒரு இளைஞர் குழுவின் நட்பு கிடைத்தது.
இதன் விளைவாக உருவாகிய நாடகமே ‘திருவிழா"
இது அரசியல் விமர்சன நாடகம், இலங்கைத் தமிழரின் அரசியல் போராட்ட வரலாற்று அம்சங்களை இசையுடனும் ஆட்டத்துடனும் சித்திரிக்கும் நகைச்சுவை கலந்த நாடகம், ஊர் ஊராக, வடபகுதி கிராமங்கள் தோறும் 75 தடவைகளுக்கு மேல் இந்நாடகம் மேடையேறியதற்கு, இதில் ஈடுபட்ட இளைஞர்களின் உற்சாகம் ஒரு முக்கிய காரணம்.
பகல், மாலை, நள்ளிரவு என வடக்கின் பல பகுதிகளில் இந்நாடகம் மக்கள் மத்தியில் மேடையேறியமை முக்கியமான விடயமாகும்.
மேடைக்கும் வீதிக்கும் இந்நாடகம் ஏற்றதாயிருந்தது.
சுவையாகவும் தாக்கமாகவும் அரசியலை அலசியதால் சென்ற இடமெல்லாம் மனக் கிளர்வுகள், விவாதங்கள், பாராட்டுகள், எதிர்ப்புகள், கல்லெறி என பலவிதமான விளைவுகளை அது ஏற்படுத்தியது.
1980 களின் ஆரம்பத்தில் இது காலத்தின் ஒரு தேவையாகவும் இருந்தது. இதில் முக்கிய பாகமேற்று நடித்தவர்கள் கதாப்பாத்திரங்களின் பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு மக்களிடையே பிரபல்யமாகினர்.
இந்நாடகம் ஏற்படுத்திய தாக்கத்தினால், எனது நாடகங்களில் எனக்கு அதிக மனநிறைவைத் தந்த நாடகமாக 'திருவிழா' வை கருதலாம்.

Page 67
130 0 r சந்திப்பு
மக்களின் அடி மட்டத்தில் சென்று அரசியல் கேள்விகளை எழுப்பியதோடு ஒரு தீவிர நாடக இயக்கமாகவும் செயற்பட்டதால் இத்தகு முயற்சிகளுக்கு ஒரு முன்னோடியாகவும் ‘திருவிழா நாடகத்தையும் நாடகக் குழுவையும் கொள்ளலாம்.
இந்நாடகத்தை நெறியாள்கை செய்த க.ஆதவனும், முக்கிய பாகமேற்று நடித்த அ.இரவியும் தொடர்ந்தும் நாடகத்துறையில் பெரும் ஈடுபாடுள்ளவர்களாவர்.
கேள்வி: அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தங்களின் நாடத்துறை செயற்பாடுகள் தொடருகின்றன. உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் மிக்கோர், தாம் எங்கு சென்றாலும் தமது ஆற்றலை வெளிப்படுத்துவர் என்பதற்கு நீங்களும் உதாரணம். அவுஸ்திரேலியாவில் - தங்களது நாடகத்துறை அனுபவங்கள்.?
பதில்: புலம்பெயர் வாழ்வு எனது நாடகத்துறை ஈடுபாட்டி ற்கு புதியதொரு திருப்பத்தை தந்தது எனலாம். 1989இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தேன். அந்த ஆண்டிலேயே இங்கு விக்டோறியா மாநில தமிழ்கலை மன்றத்தின் கலைமகள் விழாவுக்காக ‘கண்டம் மாறியவர்கள்’என்ற நாடகத்தை எழுதி நெறிப்படுத்தும் வாய்ப்பை பெற்றேன்.
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையையும் தாயகத்தின் அரசியலை பலர் போலித்தனத்துடன் அணுகும் நிலையையும் நகைச்சுவையோடு சித்திரிக்கும் இந்த நாடகம் பின்னர் பல மேடையேற்றங்களை கண்டது.
1990 ஆம் ஆண்டு மெல்பன் கலை வட்டம் என்ற அமைப்பை ஆரம்பித்தோம். இது மெல்பனிலுள்ள கலை ஆர்வலர்களை ஒன்றிணைத்ததோடு பல ஆக்க முயற்சிகளுக்கு நல்ல களமாகவும் அமைந்தது.

முருகபூபதி 0 13 புலம்பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கவென 1994 இல் தொடங்கிய “பாரதி பள்ளி’ இயல்பாகவே சிறுவர் நாடத்துறைக்கு என்னை இட்டுச் சென்றது.
ஒவ்வொரு ஆண்டும் இப்பாடசாலை மாணவர் களுக்காவும் பிள்ளைகளுக்காகப் பொதுவாகவும் புதிய புதிய நாடகங்களை எழுதவும் மேடையேற்றவும் பெரியதொரு தேவை உள்ளது.
பிள்ளைகளுக்கான நாடகங்கள் தனிவகை. பொதுவாகத் தமிழில் நாடகப்பிரதிகளுக்குள்ள தட்டுப்பாட்டை விட பிள்ளைகளுக்கான நாடகப்பிரதித் தட்டுப்பாடு இன்னும் மோசமானது என்பதையும் உணர்ந்தேன், அதனால் சில முயற்சிகளையும் மேற்கொள்கின்றேன்.
கேள்வி: 'ஐயா எலக்சன் கேட்கிறார்’ முதல் முதலில் 1973 காலப்பகுதியில் கொழும்பில் மேடையேற்றப்பட்டது. “ஆறு நாடகங்கள்’ என்ற தொகுப்பு நூலிலும் இந்நாடகம் இடம்பெற்றது. கால் நூற்றாண்டையும் கடந்து இன்றும் தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் இந்நாடகம் மேடைகளையும் பார்வையாளர்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மேற்குறித்த கால இடைவெளியிலும் இந்நாடத்தின் கருப்பொருள்’ மக்களிடம் சென்றடைகின்றமைக்கு அதன் படைப்பாளி என்ற ரீதியில் என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில்: ஐயா எலக்சன் கேட்கிறார், பாராளுமன்ற அரசியல் முறை ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளினால் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதை குறியீட்டு முறையில் எடுத்துக் காட்டுகின்றது.
இதனை, “நையாண்டி” நாடக வகையை சார்ந்த தென்றும் சொல்லலாம்.

Page 68
1320
கேள்வி:
சந்திப்பு
இந்நாடகம் முதல் முதலில் மேடையேறிய பின்பு வந்த
பாராளுமன்ற தேர்தலொன்றின்போது, அரசியல் குழுவொன்று இப்பிரதியை மாற்றியமைத்து ஒருபிரசார நாடகமாகத் தமது தேர்தல் மேடைகளில் பயன்படுத்தியதுண்டு.
இந்த நாடகம் கூற வந்த செய்தி இன்னும் உண்மையானதாகவும் தேவையானதாகவுமே உள்ளது. எங்கள் சமூகத்துக்கு மட்டுமன்றி எல்லா நாடுகளுக்கும் எல்லாச் சமூகத்தினருக்குமான ஒரு பொதுப் பொருள் இது. இலங்கைச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பினும், இந் நாடகத்தின் உட்கருத்தும் குறியீடுகளும் எங்கும் பொருந்தக் கூடியவை.
எனவே, பழைய நினைவுகளை மீட்பதோடு புதிய யதார்த்தங்களையும் சந்திப்பதற்கு பார்வையாளர்களால்
முடிகிறது.
அவுஸ்திரேலியாவில் கண்டம் மாறியவர்கள் ‘அம்மா அம்மா’ முதலான நாடகங்களையும் கிராமங்களும் கோலங்களும், தொலைபேசி மான்மியம், "மறதி முதலான சற்று வித்தியாசமான தாளலய அல்லது இசை நாடக நிகழ்வுகளையும் “கொழும்பு மெயில்’ என்ற பாட்டும் கதையும் நிகழ்ச்சியையும் அரங்கேற்றி யுள்ளீர்கள்.
ஒரே காலகட்டத்தில் வசன நாடகங்களையும் வசனம், பாட்டு, தாளலயம் கலந்த இசை நாடகங்களையும் தயாரிக்கும்போது தங்கள் அனுபவம் எப்படி அமைகிறது?
எடுத்துக்கொள்ளிப்படும் நாடகப்பொருள் நாடகத்தின்
உருவத்தை தீர்மானிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. நாடகம் எத்தகைய உருவத்தைப் பெறப்

முருகபூபதி 0 133
போகிறது என்பது நாடகம் எழுதத் தொடங்கும் ஆரம்ப கட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.
எந்த உருவமானாலும் சரி, நாடகத்தை வளர்த்தெடுக்கும் முறையும் திறனுமே முக்கியம். பாடல் விரவிய நாடகங்களை எழுதுவது, எனக்கு குறிப்பாக மகிழ்வைத் தருகின்றது.
இத்தகைய நாடகத்தை தயாரிக்கும் அனுபவமும் அவ்வாறே.
ஆடலும் இசையும் மேடையேற்றத்தின் போதும் சோபிக்கின்றன. ஏற்ற வாத்தியங்கள், தரங்கள், நடிகர்கள் கிடைப்பதுதான் புலம்பெயர்ந்த சூழலில் இலகுவானதாக இல்லை. வசனம் மட்டும் கொண்ட நாடகங்கள் இரண்டாம் பட்சமானவை அல்ல. முன்னர் சொன்னது G8 u rral) பொருள் அழகுடன் வெளிக்கொணரவே வடிவம்.
அரங்க வெளிப்பாடும் அனுபவமும் பரிமாற்றமுமே முக்கியம்.
ஒரே இரவில் மேடையேற்றவென இசைநாடகத்தையும்
வசனநாடகத்தையும் தயாரித்திருக்கிறோம். இது நாடகம் பழகும் அனுபவத்தை மட்டு மன்றி மேடை யேற்றத்தையும் ஒரு படி அதிகம் கவர்ச்சியாக்கியது எனச் சொல்லலாம்.
கேள்வி: இந்த மாறுபட்ட கலைவடிவங்களை முதலில் பரீட்சார்த்தமாக மேடையேற்ற முயலும் போது, அவை மக்களைச் சென்றடைவது குறித்து தங்கள் அவதானம் எதனை எதிர்பார்க்கின்றது?
பதில்: ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் அளவிலும் பின்னணியிலும் நிலைப்பாட்டிலும் இருந்து கலை

Page 69
34 0.
சந்திப்பு வடிவங்களில் பரிசோதனைகளை மேற்கொள் கின்றனர்.
கலையானது மக்களைச் சென்றடைய வேண்டுமானால், கலைஞர்கள் மக்களை விளங்கிக் கொள்ள வேண்டியது
மிகவும் அடிப்படையான தேவை.
மக்களின் ரசனையைக் கூட கலைஞர்களால் மாற்றலாம்.
ஆனால் மக்களை புரிந்து கொண்டாலே இது சாத்தியம்.
பரீட்சார்த்தமாக முயற்சிகளை மேற்கொள்ளும் போது, தோல்வியின் சாத்தியப்பாடும் ஏற்கனவே அங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், பார்வையாளர்களைப் புரிந்து கொண்டு உருவாக்கப்படும் பரீட்சார்த்த முயற்சிகளில் வெற்றிகாண வாய்ப்பும் மிக அதிகம்.
மக்களால் விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றை பரீட்சார்த்தமென்று தருவதால் பயனென்ன?
அதேவேளை, மக்களின் ரசனையும் உயர்த்தப் படவேண்டும். இது படிப்படியாகத்தான் சாத்தியமாகும்.
மேலோட்டமாக அல்லாமல், கலையையும் கருத்தையும் ஆழமாக ரசிக்கவும் கிரகிக்கவும் பெறும் ஆற்றல் ஒரு சமூகத்துக்கு முக்கியம்.
சமூகத்துடன் சேர்ந்து தொழில்படுவதன் மூலமே இதைச்
சாதிக்கலாம்.
எனக்கு, நாடகத்துறையில் முக்கிய ஆசானாக திகழ்ந்ததும், திகழ்ந்து வருவதும் எனது மேடை யேற்றங்கள்தான்.
கலையை பரீட்சிப்பதும், பரீட்சார்த்த முயற்சிகளை

முருகபூபதி 0 135 அளந்து மேற்கொள்ளுதலும், ஒரு வகையில் கயிற்றில் நடப்பதை ஒத்ததுதான்.
கேள்வி: அவுஸ்திரேலியா விக்டோரியா மாநிலத்தில் மெல்பன் கலைவட்டம், பாரதி பள்ளி, நூல் நிலையம் முதலானவற்றை ஸ்தாபித்தீர்கள். இவற்றின் தேவை, தோற்றம் பற்றி கூறுங்கள்?
பதில்: அவுஸ்திரேலியாவுக்கு வந்து சில மாதங்களுக் குள்ளேயே கலை, இலக்கிய நண்பர்கள் பலரது நட்பு
கிடைத்தது.
புதிய நாடாகவும் புதிய சூழலாகவும் இருந்த போதிலும், செழுமையான கலை, இலக்கிய நட்புகள் கிடைத்தமை
அதிர்ஷ்டமானது.
கலை, இலக்கியத்துறை சார்ந்த கூட்டுச் செயற் பாடுகளில் என்றும் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது.
பலவகையில் வரண்ட வாழ்க்கையாகக் கருதக் கூடிய புதிய இயந்திர வாழ்க்கைச் சூழலில் கலை, இலக்கிய வெளிப்பாடுகளுக்கு ஏற்ற களமொன்று தேவைப்பட்டது.
நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ‘மெல்பன் கலைவட்டம்’ என்ற அமைப்பைத் தொடங்கினோம்.
எங்கள் முதல் மேடை நிகழ்ச்சியாக 'ஐயா எலக்சன் கேட்கிறார், ‘கொழும்பு மெயில்’ ஆகியன 1990ஆம் ஆண்டில் வெற்றிகரமாக மேடையேறின.
இதைத்தொடர்ந்து பல நாடகங்களை மேடையேற்றிய தோடு, 1994 ஜனவரியில் “எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம்” என்னும் சர்வதேசக் கவனத்தை ஈர்த்த கருத்தரங்கையும் கலைவட்டம் நடத்தியது.

Page 70
136 0
சந்திப்பு
மெல்பனில் ஆரோக்கியமான கலையையும்
சிந்தனைகளையும் ஊக்குவிப்பத்தில் கலைவட்டம் வகித்த
பங்கு முக்கியமானது எனலாம்.
1994 பெப்ரவரியில் பாரதிபள்ளி நிறுவப்பட்டது. ஏற்கனவே இங்கு பல தமிழ்பாடசாலைகள் இயங்கி வந்த போதிலும், பாரதி பள்ளியின் ஆரம்பம் தமிழ் கற்பித்தலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்பது
உணமையானதாகும.
தமிழர்களின் பிள்ளைகள் தமிழையும் தமிழ் கலாசாரத்தையும் அறியாது வளரக்கூடிய ஆபத்தான நிலையை நீக்குவது ஒரு அவசர தேவையாக இருந்தது.
முறையாகவும் பிள்ளைகளைக் கவரும் வகையிலும் கற்பித்தாலன்றி தமிழ்ப்பாடசாலைகள் வெற்றியளிக்க மாட்டா என்பதை நன்கு உணர்ந்த நிலையிலேயே பாரதி பள்ளி, காலத்தின் ஒரு தேவையாக உருப்பெற்றது.
இப்பள்ளி கண்ட அதிவேகமான வளர்ச்சியும் பிள்ளைகளுக்கு வழங்கும் உயர்தரமான கல்வியும் என் மனதுக்கு மிகுந்த நிறைவைத் தந்த விஷயங்கள்.
இப்பொழுது விக்டோரியாவில் மூன்று இடங்களில் இயங்கும் பாரதி பள்ளி பெருந்தொகையான பெற்றோரைக் கவர்ந்து அவர்களிடையே தமிழ்மொழிக் கல்வியின் அந்தஸ்தையும் உயர்த்தியுள்ளதென்றால் அது மிகையல்ல.
நூல் நிலையத்தைப் பொறுத்தவரையில் இங்கு ஒக்லியிலுள்ள (OAKLEIGH) பொதுசன நூலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப்பிரிவே . மெல்பனில் முதலாவது தமிழ் நூலகம்.
சீனர், கிரேக்கர் போன்ற பெரிய சமூகங்களுக்கு

முருகபூபதி
கேள்வி:
பதில்:
0.137
மட்டுமே கிட்டும் இவ்வாய்ப்பு தமிழருக்கும் கிட்டியமைக்கு மெல்பன் கலைவட்டத்தின் உழைப்பே
காரணம்.
மாநகர சபையின் செலவில் இந்நூலகம் நல்லமுறையில் தொடர்ந்து இயங்கி வருகிறது.
1998 ஜூன் மாதம், பாரதி பள்ளியின் ஒரு நூலகமும் DANDENONG இல் ஆரம்பமானது. இது இவ்விதமிருக்க, இங்குள்ள அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகம், இலங்கைத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளின் தேவைகளுக்காகவும் பணிகளுக் காகவும் மெல்பன் கலைவட்டத்தின் சார்பாக சில நாடகங்கள் மற்றும் கலை நிகழ்வுகளையும் (கொழும்பு மெயில், தொலைபேசி மான்மியம், கிராமங்களும் கோலங்களும்) வழங்கியிருக்கிறோம்.
பல்கலைக்கழக பிரவேச பரீட்சையில் (V.C.E) தமிழும் ஒரு பாடமாக்கப்பட்டமை பாரதி பள்ளியின் ‘தமிழ் பேசும் இயக்கம்’என்பன குறித்து விளக்குவீர்களா?
மெல்பனிலுள்ள பல தமிழ் அன்பர்களும் அமைப்புகளும் நீண்டகாலமாக முயற்சித்ததன் பயனாக பல்கலைக் கழக பிரவேசத்துக்குரிய பரீட்சையில் (VICTORIAN CERTIFICATE OF EDUCATION) தமிழும் ஒரு பாடமாக ஏற்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது.
உண்மையில், இது ஒரு ஆரம்பம் மட்டுமே, இதன் உண்மையான வெற்றி, தமிழ் கற்றுக் கொண்டு இந்நாட்டுக்கு வந்த மாணவர்களை மாத்திரமன்றி, இங்கு பிறந்து வளரும் பிள்ளைகளையும் இப் பரீட்சைக்குத் தோற்றக் கூடியவாறு தயாரிப்பதிலும் ஊக்குவிப்பதிலுமே தங்கியுள்ளது. சொல்வது இலகு:

Page 71
138 0.
கேள்வி:
சந்திப்பு
சாதிப்பது கடினம் எனினும் பாரதி பள்ளி இதனை முக்கிய இலட்சியமாகக் கொண்டுள்ளது.
"தமிழிலே பேசுவோம்” என்பது பாரதி பள்ளியில் இப்பொழுது நடைமுறையிலிருக்கும் ஒரு இயக்கம்.
இந்நாட்டிலுள்ள எமது பிள்ளைகளுக்கு தமிழில் எழுதவும் வாசிக்கவும் கற்பிப்பது பெரிய பிரச்சினையல்ல. பேசவைப்பதே சவாலாகும்.
தமிழ் படித்திருப்பதாகக் கூறிக்கொண்டு வாய்திறந்து தமிழைப் பேச முடியாத தமிழர்களை உருவாக்குவது ஒரு சிறப்பான சாதனையல்ல.
சிறுவர்களுக்கான தமிழ் வீடியோ ‘பாப்பா பாரதி” இரண்டு பாகங்கள் வெளிவந்து மூன்றாவது பாகமும் தயாரிப்பில் உள்ளதாக அறிகிறோம். இப்படியொரு ஒளிப்பதிவு நாடாவை எமது பிள்ளைகளுக்காக தயாரித்ததன் நோக்கம் அதன் பெறுபேறு குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஆங்கில மொழியில் பிள்ளைகளுக்காக வெளி வந்துள்ள வீடியோ நாடாக்கள் ஆயிரத்துக்கும் அதிகம். தினமும் இங்கு தொலைக்காட்சியில் காலையும் மாலையும் சிறுவர்க்கான நிகழ்ச்சிகள்.
நாம் ‘பாப்பா பாரதி' யை தயாரித்த பொழுது அதுவே
தமிழ்ப்பிள்ளைகளுக்காக வெளிவந்த முதலாவது தமிழ் வீடியோ.
வீடியோவும் தொலைக்காட்சியும் ' எவ்வளவு பலம் வாய்ந்த சாதனங்கள் என்பதை விளக்கத் தேவையில்லை.
மகிழ்வூட்ட மட்டுமன்றி மொழியறிவை வளர்க்கவும் அருமையான சாதனங்கள் இவை. இங்கு வாழும் எங்கள் •

முருகபூபதி 0 139
சின்னஞ்சிறு தமிழ் குழந்தைகள் இரண்டு வயதிலேயே ‘ஆங்கில ஞானம் பெற்றுவிடும் 'அதிசயத்தையும் நாம் கண்ணாரக் கண்டுதான் வருகின்றோம்.
1995 இல் ‘பாப்பா பாரதி பள்ளியின் முதலாம் பாகம் வெளிவந்த போது, பிள்ளைகளிடமிருந்து கிடைத்த வரவேற்பு நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பிரமாண்டமானது. இந்த வரவேற்பு இலங்கை உட்பட தமிழர் வாழும் சகல உலக நாடுகளுக்கும் பொதுவானதாக இருந்தது.
பெருந்தொகையான பிரதிகள் உலகெங்கும் விநியோகம் செய்யப்பட்டன.
ஆரம்ப முயற்சியானதாலும் செலவைச்சுருக்க வேண்டிய காரணத்தாலும் சில தொழில் நுட்பத்துறைகள் நுழைந்து கொண்ட போதிலும், இந்த வீடியோவின் நோக்கம் தவறவில்லை. தமிழுக்கூடாக பிள்ளைகளை மகிழவைத்தது மட்டுமன்றி தமிழ்ச் சொற்களைப் பேசவும் அது தூண்டுதலாக இருந்தது.
ஒரு முறைக்குப் பலமுறை மீண்டும் மீண்டும் பிள்ளைகள் இந்த வீடியோவைப் பார்த்து மகிழ்ந்தமை, ‘ஆங்கில வீடியோக்களில் காணாத ஏதோ ஒரு நெருக்கம் ‘அவர்களுக்கும் இந்த ‘பாப்பா பாரதி” வீடியோவுக்கு மிடையில் இருந்ததைச் சுட்டுவதாக அமைந்தது.
முதலாவது பாகம் தந்த வெற்றியின் உற்சாகத்தினால் இரண்டாவது பாகம் இன்னும் திருத்தமான முறையில் அடுத்த ஆண்டிலேயே வெளியாகியது.
இதன் பின்பு மூன்றாவது பாகத்தைக்கேட்டு உலகின் பலபகுதிகளிலுமிருந்து வந்து கொண்டிருக்கும் விசாரணைகள், இந்த ‘பாப்பா பாரதி தொடர்ந்து

Page 72
140 0.
கேள்வி:
சந்திப்பு
வெளிவர வேண்டுமென்பதையே நினைவுறுத்து கின்றன.
எனினும், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகவும் பொதுவாக ஒரு வீடியோவைத் தயாரிப்பதில் உள்ள சிரமம், நேரத் தேவை காரணமாகவும் தாமதமாகியுள்ள 3ஆம் பாகம் விரைவில் வெளியாகும்.
தங்களுடைய சோர்வற்ற அயராத தொடர்பணிகள் எமது அடுத்த சந்ததிக்கான வலுவான அத்திவாரம் போன்று காட்சியளிக்கிறது. 2000ஆவது ஆண்டை நோக்கிச் செல்கின்றோம். எமது பிள்ளைகள் எமது மொழியின், இனத்தின் அடையாளத்தைப் பேணுவார்களா? தங்களின் அவதான அனுமானம் எவ்வாறு அமைகிறது.
எவருக்குமே வாழ்க்கையில் ஒரு அடையாளம் (IDENTITY) தேவைப்படுகிறது. எங்கள் பிள்ளை களுக்கும் அடையாளம் அவசியம். குறிப்பாக அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்பொழுது இந்தத் தேவையைத் தாமாகவே உணர்வர்.
ஆனால் அப்பொழுது ‘காலம் கடந்து விட்டநிலை என்று ஏற்படக் கூடாது.
எங்கள் பிள்ளைகளுக்கு முக்கியமான ஒரு அடையாளமாக அமையக் கூடியது தமிழ். அவர்கள் கறுப்பு நிறத்தவராகவோ, இந்து சமயத்தவராகவோ அல்லது வேறு ஒரு சமயத்தைச் சேர்ந்தவராகவோ வளரலாம.
ஆனால், அவர்க' தமிழர்கள், தமிழர் என்ற உணர்வில்லாமலும் சொந்த மொழியைத் தெரியாமலும் வளருதல் பிற்காலத்தில் அவர்களுக்கு எந்த நன்மையையும் செய்யாது.

முருகபூபதி 0 141
இன்று எமது பாரதிபள்ளியில் பல பல்கலைக்கழக மாணவர்களும் திருமணமாகி குடும்பம் நடத்துகிறவர் களும் வந்து தமிழ் படிக்கின்றனர்.
இது, நான் முன்னர் குறிப்பிட்டவற்றையே உறுதி செய்கிறது.
எனது அனுபவத்தில் தமிழ் கற்பித்தலைச் சரியான முறையில் அணுகினால் வெளிநாட்டுச் சூழலில் வாழும் எமது பிள்ளைகள் உற்சாகமாகவும் துரிதமாகவும் தமிழைக் கற்பர்.
பாரதி பள்ளிக்கு வரும் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் மகிழ்ச்சியுடன்தான் தமிழ் கற்க வருகின்றனர், பெற்றோரின் நெருக்குதலால் அல்ல.
சில பிள்ளைகளுக்கு ஆரம்ப கட்டத்தில் பெற்றோர் அளிக்கும் தூண்டுதலும் ஊக்கமும் சற்று அதிகமாகத் தேவைப்படுகிறது.
“இங்கு வாழும் எங்களுக்குத் தமிழ் ஏன்?" என்ற கேள்வியும், இடைப்பருவத்தில் உள்ள பிள்ளை களிடையே சிலவேளை எழுவது இயல்பு. பாரதி பள்ளியில் கல்விபெறும் பிள்ளைகள் இதற்கான விடையையும் சேர்த்தே பெறுகின்றனர். எங்கள் கல்விமுறையும் கலாசார நடவடிக்கைகளும் அவர்களுக்கு அர்த்தமுள்ளவையாகப் படுகின்றன.
விக்டோரியா மாநில அரசாங்கம் பல்கலாசார வளர்ச்சியையும் மொழிக்கல்வியையும் ஊக்குவிக்கும் கொள்கையை கொண்டுள்ளது.
பல்கலைக் கழக பிரவேச பரீட்சையான VCE யில் தமிழையும் ஒரு பாடமாக தோற்றக்கூடியதாக இருப்பதால், ‘தமிழ் வாழ்க்கைக்கு பிரயோசனமாகி யுள்ளது.

Page 73
142 0.
சந்திப்பு
விக்டோரியா மாநிலத்தில் நீண்டகாலமாகத் தமிழ் கற்பதிலும் கற்பிப்பதிலும் ஆர்வம் இருந்து வந்துள்ள போதிலும், 1994 இல் பாரதி பள்ளி ஆரம்பித்த பின்னர், இதில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டது என்று சொன்னால் மிகையல்ல,
எமது மாநிலத்திலும் அண்டை மாநிலமான நியுசவுத்வேல்ஸில் சிட்னியிலும் தமிழ் கற்பித்தல் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. இங்கு தமிழ் கற்க விரும்பும் மாணவர்களின் ஆர்வத்தையும் முன்னேற்றத்தையும் அளவுகோலாகக் கொண்டால், எங்கள் அடுத்த தலைமுறையினர் தமிழைப் பேணுவர் என்பதில் ஐயமில்லை. பெற்றோரின் உலகம் வெளி உலகம் என இருவேறுபட்ட உலகங்களில் சஞ்சரிக்க வேண்டியுள்ள முற்றிலும் வேறுபட்ட இரு வாழ்க்கை முறைகளுக்கு பாலமாக வாழ வேண்டியுள்ள இந்த தலைமுறைக்கு தமிழின் தேவையும் அடையாளமும் பெரியது.
அடுத்தடுத்து வரப்போகும் தலைமுறையினர் தமிழை எந்த அளவுக்கு கைக்கொள்வர் என்பதை அனுமானிப்பது இலகுவல்ல.
எமது தலைமுறையினரும் அடுத்த தலைமுறையினரும் இதில் எடுக்கப்போகும் நிலைப்பாடு, ஊக்கம் ஆகியன முக்கிய கேள்விகள்.
பெற்றோருக்கும் தமக்குமிடையிலான “வீட்டு மொழி யாக தமிழைக் கொண்ட ‘தமிழ் பேசும் பிள்ளைகள் இன்று இங்கு மிகச் சிறுபான்மையினரே, எதிர்காலத்தில் இது என்னவாகும்?
தமிழைப் பேசும் தேவையும் வாய்ப்பும் அதிகரித்தாலன்றி அடுத்தடுத்த சந்ததியினரின்

143 0
சந்திப்பு
தமிழ்க்கல்வி, எழுத வாசிக்கப் பயிலும் கல்வியாகவே பெரும்பாலும் அமையக் கூடும்.
இவ்வாறு தமிழின் முக்கியத்துவம் எதிர்காலத்தில் குன்றிப்போகலாம் என்று வைத்துக்கொண்டாலும் கூட, இன்றைய எமது பிள்ளைகளுக்கு தமிழ் தரக்கூடிய அடையாளத்தையும் பயனையும் எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடமுடியாது.
༡ ཧའི་ དཔའི་

Page 74


Page 75
சந்தி
ஆசிரியர் முருகபூ அவுஸ்திரேலியாவில் குடி
(, தமிழகத்திலிருந்து அவுஸ்தி காரணங்கள் நிமித்தம் பய6 நாடகாசிரியரையும் அவர் அத்துடன் அவர்களைச் இலக்கியம், நாடகம் விளக்கங்களையும் எழுதி
விடுவார். அவற்றின் தொ
இந்திரா பார்த்தசாரதி சார்வாகள் ஆகியோரின் கலை இலக்கிய வல்லுனர் அகஸ்தியர், அண்ணாவிய ஓவியர் செல்லத்துரை, ஆகியோரின் கலை, இல கோட்பாடுகளையும் கரு
தரிசிக்கலாம்.

நிப்பு
பதி புலம் பெயர்ந்து யேறிய போதும் ஈழத்து ஞர்களை மட்டுமல்ல, நிரேலியாவிற்குப் பல்வேறு ணம் செய்யும் எழுத்தாளர், காணத் தவறுவதில்லை. சந்தித்து அன்னாரின் பற்றிய கருத்துகளையும் ஆங்காங்கே வெளியிட்டு குதியே இந்நூல்.
| ஞாநி வைத்தீஸ்வரன், நேர்காணலுடன் ஈழத்து கவிஞர் அம்பி, எஸ்.பொ. ார் இளைய பத்மநாதன், LITET ELJ நித்தியானந்தன் க்கியம் பற்றிய பல்வேறு
த்துகளையும் இந்நூலில்
----