கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் யாத்திரை

Page 1


Page 2


Page 3

தமிழ் யாத்திரை
GT. GTib. Mur, ao Großau,

Page 4
முதலாம்.பதிப்பு 3, ஜனவரி 1968
உரிமை
நூலாசிரியருக்குரியது
686)
கிடைக்கும் இடங்கள்:
கலைவாணி புத்தக நிலையம் 10. மெயின் விதி, யாழ்ப்பாணம், இலங்கை.
(2) அன்பு நூல் நிலயம் 18, ராமசாமி தெரு, மண்ணடி,
மதராஸ்

நன்றியுரை
இந் நூல் சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில் உருவா யிற்று. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற் கலந்து கொள்வேன் என்று நான் கருதியிருக்கவில்லை. அப்படிக் கலந்து கொண்டாலும் அது பற்றிக் கட்டுரைகள் எழுத நேரும் என்று எண்ணியிருக்கவுமில்லை. முன்னரே தெரிந் திருந்தால் தொடர்புகள், ஆராய்ச்சிகள், குறிப்புக்கள் என்றிவ்வாருன பல ஆயத்தங்களைச் செய்திருப்பேன். மலே சியாவிலிருந்து திரும்பிவந்த ஓரிரு தினங்களுள் 'தினகரன்” பத்திரிகை ஆசிரியர் இ. சிவகுருந்ாதன் அவர்கள் மாநாட்டு நிகழ்ச்சிகள் பற்றிய விவரணத் தொகுப்புரை எழுதுமாறு திடீரென்று என்னிடம் கேட்டார். நாலைந்து கட்டுரைகளு டன் விஷயத்தை முடித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனல் எனது 21 நாட் பிரயாண அனுபவங்களும் 21 கட் டுரைகளாக அமைந்தன. இந்த வாய்ப்பும் அனுபவமும் எனக்குக் கிடைக்க வழி செய்த எல்லாம் வல்ல இறைவனைப் போற்றுகின்றேன். ' : : " " : , . . . . م .
பெரும்பாலும் இங்கிலிஸில் எழுதப்பெற்ற இக்கட் டுரைகளைத் தமிழாக்கியும் அவ்வப்போது யோசனைகள் கூறியும் எனக்குப் பெரிதும், துணைபுரிந்த காவலூர் ராச துரைக்கு என் நன்றி. ஆயினும் இக் கட்டுரைகளிற் காணப்படும் வழக்கத்துக்கு புறம்பான வசனஅமைப்புகள், சொற்ருெடர்கள், வார்த்தைப் பிரயோகங்கள் இவற்றுக்கெல் லாம் நானே பொறுப்பாளி. **இலங்கையில் இஸ்லாம்", * மிஸ்ரின் வசியம் " ஆகிய பிற நூல்களை வரவேற்ற வாச கப் பெருமக்கள், இந்நூலையும் குற்றம் களைந்து, குணம் நாடி ஆதரிப்பர் என நம்புகிறேன்.
இக்கட்டுரைகளுக்குக் காரண புருஷராயிருந்து இவற் றைக் கிரம்மாசி வெளியிட்டு உதவிய இ. சிவகுருநாதன் அவர்களுக்கும் புத்தகமாக வெளியிட முன்வந்த நண்பர், பினுங்கு, தாவூத் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் வள்ளல்மணி எம். என். எம். யூசுப் அவர்களுக்கும் சிறந்த முறையில் நூலைப் பதிப்பித்துள்ள மெளலவி பாஜில் ஆலிம் கவிஞர் அல்ஹாஜ் G. M. S. ஸிராஜ் பாக்கவி அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி உரியதாகுக !
அன்புள்ள

Page 5
'd to i fj jjoj tij
என் பள்ளிப் படிப்பைப் பக்குவமாகப் பார்த்து வநீத ராசர்த்தி அப்பர், பீோழ்ப்பாணம், பெரிய சு.ை எம். எஸ். அப்துல்காதர் அவர்களின் நினைவுக்கு
-எ. எம்; எ. அளிஸ்

தமிழ் யாத் திரை
1. கருத்தரங்கு அங்குரார்ப்பணம் 1966 ஏப்ரல் 7ஆம் திகதியன்று எனது தொலைபேசி
கிணுகினுத்தது. பீ. ஒ. ஏ. ஸி. ஸ்தாபனத்தின் இலங்கைக் கிளையிலிருந்து பேச்சுக் குரல் வந்தது. மலேசியாவிலுள்ள தமது கிளைக் கந்தோரிலிருந்து, என் பெயருக்கு, கோலாலம்பூர் போய்த் திரும்புதற்கான விமானப் பயணச்சீட்டொன்று வழங்கப்பட்டிருப்பதாக அக்குரல் தகவல் கொடுத்தது. தமிழ்த் துறைகளின் உலக ஆராய்ச்சிக் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பேறு, அவனருளால் எனக்கும் கிடைத்தமையை எண்ணி மனம் பூரித்தேன். பத்தொன்பதாம் நூற்ருண் டின் ஒன்பதாம் தசாப்தத்தில் இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம் சமுதாயத்தினர் பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரை, மேற்படி கருத்தரங்கின் அங்கீகாரத்தைப் பெற்றமைக்கு இவ்வழைப்புச் சான்றயிற்று. 19ஆம் நூற்ருண்டு இலங்கை முஸ்லிம்கள் பற்றிய எனது ஆராய்ச்சிக்கு ஈழத்து முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மேதை சித்திலெவ்வை அவர்களின் 'முஸ்லிம் நேசன்" பத்திரிகையை ஆதாரமாகப் பயன்படுத்தியிருந் தேன். 19ஆம் நூற்றண்டு இலங்கையின் வரலாற்றை விரிவாக எழுத முனையும் எவரும் * முஸ்லிம் நேசனை " முக்கியமான ஓர் ஆதாரமாகக் கொள்ளவேண்டுமென்பது எனது துணிபு.
கல்வித் துறையில் தமிழும் வரலாறும் என்னை மிகவும் ஈர்த்து வருவன. கோலாலம்பூரில் நடைபெற

Page 6
விருந்த அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங் கினைப்பற்றி நான் படித்தும் கேள்விப்பட்டுமிருந்தன வற்றைக் கொண்டு, மேற்படி இரு துறைகளிலும் அளப்பரிய அறிவினைப் பெறுதற்கு ஓர் அற்புதமான வாய்ப்பு ஏற்படுமென்பதை நான் சரியாகக் கிரகித்துக் கொண்டேன். தமிழிலும் தமிழ் இலக்கியங்களிலும் பாண்டித்தியம் பெற்ற தென்னிந்திய அறிஞர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பினை எண்ணிப் பேருவகை கொண் டேன். மேற்குலகில் தமிழ் ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டுள்ள கீழைத்தேயக் கலாவிற்பன்னர்கள் பெருமளவில் அந்த மாநாட்டிற் கலந்துகொள்வார்கள் என்று நான் அப்பொழுது எதிர்பார்க்கவில்லை. மேற்படி மாநாட்டில் இரண்டு விஷயங்கள் பற்றித் தமிழ் அறிஞர்கள் தமது கருத்துக்களைத் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஒன்று தமிழ் தட்டச்சுப் பொறிக்கெனத் திருத்தமான ஏக சீரான எழுத்துப் பட்டடை (Key-board) சம்பந்தமானது. மற்ருென்று கலைச் சொற்களின் அகராதி சம்பந்தமானது. ஏனெனில், தமிழ் பேசும் மாணுக்கர்களின் எதிர்காலக் கல்விக்கு இவ்விரு விஷயங்கள் பற்றியும் தீர்க்கமான ஒரு முடிவினை விரைவில் காண வேண்டியது இன்றியமையாததாகும். எதிர்வரும் ஆண்டுகளில் தென்னிந்தியாவில் வெளியிடப் படும் விஞ்ஞான நூலொன்று இலங்கையிற் கல்விபயிலும் மாணவர் விளங்கிக்கொள்ளத் தக்கதாயும்,இதுபோலவே இலங்கையிற் பிரசுரிக்கப்படும் புத்தகம் தென் இந்தியத் தமிழக மாணவர்க்குப் புரியக்கூடியதாயும் அமைதல் வேண்டும்.
இவை போக, மாநாடு கோலாலம்பூரில் நடைபெற விருந்தமை மற்றுமொரு கவர்ச்சி அம்சமாயிற்று. ஏனென்ருல், கீழ்த்திசை நோக்கி நான் ஒருகாலும்
2

பிரயாணஞ் செய்யவில்லை; ஆயினும், இலங்கை முஸ் லிம்கள், வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் மலேசியாவுடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள் என்பதை நான் அறியாமலில்லை. எனது ஆராய்ச்சிக் கட்டுரையினை எழுதிய சமயத்தில், வரலாற்று ரீதியாக, கொழும்புக்கும் மலாக்காவுக்குமுள்ள ஒற்றுமைகளைக் கண்டேன். 15ஆம் நூற்ருண்டில் இவ்விரு நகரங்களும் முஸ்லிம்களின் செல்வாக்குக் குட்பட்டிருந்தமையையும், 16ஆம் நூற்ருண்டில் போர்த்துக்கேயுர் ஆட்சிக்குட்பட்ட மையும், 17ஆம் நூற்ருண்டில் ஒல்லாந்தரினதும் அதன் பின்னர் பிரிட்டிஷாரினதும் ஆட்சிக்குட்பட்டமையையும் அவதானித்தேன்.அண்மையில் அங்கு (கோலாலம்பூரில்) கட்டி எழுப்பப்பெற்ற பெரிய பள்ளி வாசலைப்பற்றியும் வாசித்திருந்தேன். இப்பள்ளிவாசல் முஸ்லிம் உலகி லேயே கட்டிட முறையில் தலைசிறந்த பள்ளிவாசல் என்று பலர் கருதுவதையும் அறிந்திருந்தேன்.
இக்காரணங்களினுல் ஏப்ரல் 15ஆம் திகதி கங்கு கரையற்ற உற்சாகமிக்க நாளாக எனக்கு அமைந்தது. ஆகாய விமானம் காலை 9-15 மணிக்குக் கட்டுநாயக்கா நிலையத்திலிருந்து கிளம்பவிருந்தது. ஆணுல் என்னைப் பொறுத்தவரை விடியற்காலையில் புறப்படுவதற்குக்கூடத் தயாரா யிருந்தேன். ஆனல், அதிகாலை 5-30 மணிக்கு பீ. ஒ. ஏ. ஸி. ஸ்தாபனத்தார் விமானம் பத்து மணித்தி யாலமாவது சுணங்கும் என்று அறிவித்தார்கள். இந்தச் செய்தி வெறும் புரளியாக இருக்குமோவென்ற ஐயத் தினுல், இலங்கையிலிருந்து அன்று அதே விமானத்தில் புறப்படவிருந்த எனது நண்பர்களில் ஒருவரை விசாரித் தேன். செய்தி ஊர்ஜிதமாயிற்று. கோலாலம்பூரில் அன்று பின்னேரம் மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கென்று ஏற்பாடாகியிருந்த வரவேற்பு வைபவத்தில் கலந்து

Page 7
கொள்ள விரும்பினேன். இந்தச் செய்தி கிடைத்ததும் வரவேற்பு விருந்தை மறக்கவேண்டியதுதான் என்பது புலனுயிற்று. விமானம் பத்து மணித்தியாலங்களுக்குப் பிறகாவது புறப்படவேண்டுமே என்று கவலைப்படவாரம் பித்தேன். மேலும் தாமதம் ஏற்பட்டால், மறுநாள் 16-4-66, காலை 10-30 மணிக்கு மலேசியப் பிரதமர் கெளரவ துங்கு அப்துல் றஹ்மான் அவர்களின் தலைமை யில் நடைபெறவிருந்த அங்குரார்ப்பண வைபவத்தையு மல்லவோ தவறவிட வேண்டும். இதைத் தவறவிட்டு, மாநாட்டிற் கலந்துகொள்வது, கலியாண வீட்டில் பந்தி போடும் சமயத்தில் போய்ச் சேர்வது மாதிரி !
நடுச்சாமத்துக்குச் சற்றுப் பிறகு நாங்கள் கோலா லம்பூர் விமானத்துறை போய்ச் சேர்ந்தோம். அமைப்புக் குழுவின் சார்பில் அதன் பொதுக்காரியதரிசி வி. செல்வ நாயகம் அவர்கள் எங்களை வரவேற்ருர், திரு. செல்வ நாயகம் எனக்குப் புதியவரேயல்லர். சுமார் 40 ஆண்டு களுக்கு முன்னர் அவரும் நானும் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தோம். யுத்த காலத்தில் அவர் மலாயாவில் ஜப்பானியப் போரின் அனர்த்தங் களைச் சமாளிக்கும் பணியில் ஈடுபட்டிருக்க, நான் அரசாங்க அதிகாரியாக, இலங்கை முஸ்லிம்களின் காழ்ப் பூமியாம் கல்முனைப் பகுதியில் உணவு உற்பத்தி வேலைகளை நிர்வகித்து வந்தேன்.
கோலாலம்பூர் விமானத்துறை கண்ணுேடு கண் செருகும் அந்த நிசிவேளையில்கூட, என் கருத்தையும் கவனத்தையும் கவர்ந்திழுத்தது. நவீன முறையில் கவர்ச்சிகரமாக அமைந்திருந்த அந்த விமானத்துறை கல உபகரண வசதிகளும் கொண்டதாக விளங்கியது படி ஏருமலே மேலே செல்லக்கூடிய ஏற்பாடுகள் அங்கு

செய்யப்பட்டிருந்தன. கோலாலம்பூரைப் பற்றி உயர் வான அபிப்பிராயம் உண்டாவதற்கு இந்த விமான நிலையம் நல்லதொரு சாதனமாக இலங்குகிறது. புதி தாக உருவாகியிருக்கும் மலேசியச் சமஷ்டி அரசாங் கத்தின் தலைப் பட்டணம் என்ற வகையில், இன்று கோலாலம்பூர் விசேஷ முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
இலங்கையிலிருந்து மாநாட்டுக்குச் சென்ற எங்களை மலாயாப் பல்கலைக் கழகத்தின் மூன்ருவது விடுதிக் கல்லூரிக்குப் பஸ் ஒன்றில் அழைத்துச் சென்ருர்கள். அப்பொழுது நேரம் காலை 3 மணியிருக்கும். ஆயினும் அந் நேரத்திற்கூட, தொண்டர்கள் அனைவரும் பரபரப் புடன் தத்தம் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொட்டலமும் அடை யாளச் சின்னமும் தந்தார்கள். சின்னம் வெகு அழகாக இருந்தது. தமிழ் மரபில் தனித்துவம் பெற்ற தாமரை மலர் சின்னத்திற் பொறிக்கப்பெற்றிருந்தது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தாரகம் அதனை அலங் கரித்தது. பொட்டலத்தில் என்ன இருந்ததென்பதை முழுமையாக ஆராய்வதற்குத் தூக்கக் கிறக்கம் இடந்தர வில்லை. மாநாட்டில் வாசித்து, ஆராயப்படவிருந்த கட்டுரைகளின் பிரதிகள் என்று மட்டும் தெரிந்து கொண்டேன்.
சில மணி நேரத்தில் காலை ஆகார வேளை வந்தது. செலாவணித் தட்டுப்பாட்டின் காரணமாக எவரும் இந்தப் பந்திக்குப் பிந்தத் தயாராக இருக்கவில்லை. ஆனதால், தூக்கத்துக்கு விடை கொடுத்து விரட்ட வேண்டியதாயிற்று. மூன்ருவது மாடியில் இருந்த நான், இதற்காகக் கீழே இறங்கி வந்தபோது, எனது நண்பர் களிற் பலர், குறிப்பாக (இலங்கைப் பல்கலைக் கழகத்தி
5

Page 8
லிருந்தும், வித்தியோதயப் பல்கலைக் கழகத்திலிருந்தும் வந்தவர்கள்) ஏற்கனவே அங்கு குழுமியிருந்ததைக் கண்டேன். இலங்கைப் பிரதிநிதிகளிற் சிலர் 11-ஆந் திகதியும், சிலர் 13-ஆந் திகதியும் பிரயாணம் செய்திருந் தார்கள். ஒருவர் விமானத்திற் செல்வதை வெறுத்து, கப்பற் பிரயாணத்தை மேற்கொண்டார் ! மேலும் பலரும் வரவிருந்தார்கள். நாங்கள் 1966 ஏப்ரல் 16 காலை 10-30 மணிக்குத் தொடங்கவிருந்த ஆரம்ப விழாவுக்கு நேரத் தோடு போய்ச் சேரவேண்டி யிருந்தது. பல்கலைக் கழக விடுதியில் அன்று குழுமியிருந்தவர்களைப் பார்த்தபோது, * எல்லோரும் நல்ல கூட்டாளிகள்தாம்" என்ற எண் ணமும், 1929-33 ஆண்டுகளில் யூனியன் ஹொஸ்டலில் நான் கழித்த நாட்களின் நினைவும் என் மனதிற் பளிச் சிட்டன.
ஆரம்ப விழா, துங்கு அப்துல் றஹ்மான் அரங்கில் நடைபெற்றது. இட வசதியிலோ, ஒலி வசதியிலோ பிற செளகரியங்களிலோ எவ்வித குறையும் இருக்கவில்லை. கெளரவ அதிதிகளாக அமைச்சர்களும், ஸ்தானிகர் களும், சகாயநிதி ஸ்தாபனப் பிரதிநிதிகளும், மலாயாப் பல்கலைக் கழகத்தின் பிரதிநிதிகளும் வந்திருந்தார்கள். நிகழ்ச்சிகள் இங்கிலிஸில் நடைபெற்றன. மலேசியப் பொது மராமத்து, தபால் தந்திப் போக்குவரத்து அமைச்ச ரும், மாநாட்டு அமைப்புக் குழுத் தலைவருமான கெளரவ வி. ரி. சம்பந்தன், மலாயாப் பல்கலைக் கழகப் பதில் உபவேந்தர், பேராசிரியர் ஆர். எல். ஹாவாங், அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத் தலைவர் பேரா சிரியர் ஃபிலியோஸா ஆகியோர் பிரதிநிதிகளையும், அதிதிகளையும் வரவேற்ருர்கள். இம் மூவரினதும் வர வேற்புரைகள் வெகு சுருக்கமாக இருந்தன. சம்பந்தன் அவர்கள் தமது உரையின்போது மலேசிய நாட்டின்
6

அன்புக்குரிய பிதாமகஞர் பிரதமர் துங்கு அப்துல் றஹ்மான் அவர்கள் மாநாட்டுக்குத் தமது ஆசியினை அளித்துள்ளார் என்றும், அன்ஞரது ஆசியானது. சொர்ண பூமியென வர்ணிக்கப்படும் இம் மரகத நாட் டைத் தமது தாயகமாகக் கொண்ட பல்வேறு சமூகத்தவர் களும் எத்துணை செளஜன்யத்துடன் வாழ்கிருர்கள் என் பதைச் சுட்டிக் காட்டுவதாய் விளங்குகிறதென்றும் குறிப் பிட்டார்கள்.
பேராசிரியர் ஃபிலியோஸா அவர்கள், மலேசிய அரசாங்கம் தாராள மனதுடன் கொடுத்துதவிய நன் கொடை பற்றியும், 25 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மாநாட்டிற் கலந்து கொள்கிருர்கள் என்றும் குறிப்பிட் டார்கள். இந்தப் பிரெஞ்சுப் பெருமகளுர் தமிழாராய்ச்சிக் கழகத் தலைவர் என்ற முறையில் அக்கழகத்தின் குறிக் கோள்களை விளக்கிப் பேசிஞர்.
இதனைத் தொடர்ந்து மலேசியப் பிரதமரும், மலா யாப் பல்கலைக் கழக வேந்தருமாகிய யாங் தெராமத் மூலிய துங்கு துங்கு அப்துல் றஹ்மான் அவர்களின் ஆரம்பவுரை இடம் பெற்றது. மலேசியாவினதும், மலா யாப் பல்கலைக் கழகத்தினதும் தலைவர் என்ற முறையில் அவர் பிரதிநிதிகளை வரவேற்ருர், கவர்ச்சி மிக்க பாரம் பரிய மலாய் உடையணிந்து வந்திருந்த பிரதமர் அவர்கள் அப்பழுக்கற்ற ஆங்கிலத்தில் பேசிஞர்கள். அவரது உரை கருத்தாழம் மிக்கதாய், அனைவரையும் கவர்வதாய், உலகின் புதிய சாகியத்தவர்களில் ஒருவ ராகிய மலேசியர்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்ப தாய் விளங்கியது. மலேசிய மக்கள் அனைவரும் ஒற்றுமை யுணர்வு பெற்றுள்ளமை பற்றியும், கல்வி, பொருளா தாரம் மற்றும் துறைகளில் அவர்கள் ஈட்டிவரும் சாதனை
7

Page 9
களையிட்டும் பெருமிதமடையும் நாடு மலேசியா என்பதை அவரது உரை பிரதிபலித்தது. அவரது சொற்பொழிவு முழுமையாகப் பொறித்து வைக்கப்பட வேண்டிய தொன்ருகும்.
மலேசியப் பிரதமர் அவர்கள் மகாநாட்டின் தாரக மந்திரத்தைக் குறிப்பிட்டு, இன்றைய உலகில் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், பொருத்தம் பற்றியும் விளக்கி, அட்சர சுத்தமான தமிழில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று தமது உரைக்கு முத்தாய்ப்பு வைத்தபோது, மண்டபம் முழுவதும் கரகோஷத்தால் அதிர்ந்தது. மலேசியப் பிரதமரின் தோற்றமும், தேகக் கட்டும், அவரது பாவனையும், சிந்தனைப் போக்கும் இலங்கையின் முதலாவது பிரதமராயிருந்த காலஞ் சென்ற திரு. டி. எஸ். சேனநாயக்காவை எனக்கு ஞாபகமூட்டின.

2. பிரதமரின் பிரசங்கம்
பிரதமர் துங்கு அப்துல் றஹ்மான் அவர்கள், மாநாடு களின் மரபுக்கு அமைய, தமது ஆரம்பவுரையினை எழுத்துப் பிரதியின் துணை யு ட ன் நிகழ்த்தினுர், உணர்ச்சிப் பிரவாகத்துடன் அவர் பிரசங்கஞ் செய்த விதம் மாநாட்டுக்கு அவர் நல்கிய பேராதரவைப் பிரதி பலிப்பதாய் இருந்தது.
அவர் தமது உரையில் : ' கல்வி கலைஞானங்களின் மேம்பாட்டுக்குச் சர்வதேச மாநாடுகள் சிறந்த மார்க்க மென்பது இன்று பலரும் ஒப்புக்கொள்ளுங் கருத்து. பல்வேறு நாடுகளையுஞ் சூழல்களையுஞ் சேர்ந்த அறிஞர்கள் ஒன்றுகூடித் தமது அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ளும்போது, அரும் பெரும் அனுகூலங்கள் உண்டாகுமென எதிர்பார்க்க லாம்," என்ருர்,
இம்மாநாட்டிற் கூடியிருந்தவர்களிற் பெரும்பாலா னுேர் இலங்கையிலும் இந்தியாவிலுமிருந்து வந்த இந்துக்கள். ஆணுல் தலைமை தாங்கியவரோ பிரெஞ்சு நாட்டவர் ; கிறிஸ்தவர் என்று நினைப்பு. செயலாளர்கள் இருவரில் ஒருவர் உரோமன் கத்தோலிக்கக் குருவானவர்; இந்தியாவிலிருந்து ஒரு வரும் இலங்கையிலிருந்து இன்னுெருவருமாக இரண்டு முஸ்லிம்களும் வந்திருந் தார்கள். சிங்களவர் நால்வர்; இவர்களில் ஒருவர் தமிழ் கற்ற, தமிழில் தேர்ச்சி பெற்ற பெளத்த பிக்கு ; தமிழ் நாட்டின் சார்பாக வந்திருந்தவர்களில் முதலமைச்சர் பூரீ எம். பக்தவத்சலம் அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர்
9

Page 10
நாவலர் நெடுஞ்செழியனும் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்கள் தவிர, ஜப்பானியர், தாய்லாந்தினர் ஆகியோ ரும் பிரதிநிதிகளாக வந்திருந்தார்கள். இப்படி இவர்கள் அனைவரும் ஒருமித்திருந்தமையைப் பார்த்தபோது, மதுரை முத்தமிழ் மாநாட்டில் சுவாமி விபுலானந்தர் வெளியிட்ட கருத்தொன்று என் நினைவுக்கு வந்தது. * சாதிமத வேறுபாடின்றியும் அரசியற் கட்சிப் பிரிவின் றியும் செய்யக்கூடிய தொண்டு தமிழ்த் தொண்டு." என்று சுவாமியவர்கள் சொன்னதன் தாற்பரியத்தை இம் மாநாட்டில் நிதர்சனமாகக் கண்டுகொண்டேன்.
தமிழின் பங்கு பற்றிப் பிரதமர் துங்கு அவர்கள் குறிப்பிட்டபோது,
* தமிழ், மலேசியாவில் வழக்கிலிருக்கும் மொழிகளி லொன்று. பண்டைக் காலங்களில் இந்தியாவிலிருந்து வணிகர்களும் புரோகிதர்களும் தென்கிழக்காசிய நாடு களுக்குக் குடிபெயர்ந்து சென்ருர்கள். அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளை வரலாற்று ஏடுகள், நினைவுச் சின்னங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றில் இன்றும் நாம் காணலாம். எமது வடக்கு இராஜ்யங்களிலுள்ள சில அரச மாளிகைகளில் நடைபெறும் சடங்குகளில் இந்தியச் சம்பிரதாயங்களின் சாயல்களைக் காணலாம். தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளுக்கும் நமது நாட் டுக்கும் அடிக்கடி தொடர்புகள் ஏற்பட்டமைக்கான சான்றுகளை எமது மலாய் மொழியிற் பரக்கக் காணலாம்” என்ருர்கள்.
பிரதமரின் பேச்சினைக் கேட்டுக்கொண்டிருந்த போது, இஸ்லாம்கூட தென் இந்தியாவிலும் இலங்கை யிலுமிருந்து மலேசியாவுக்குப் பரவியிருக்க வேண்டு மென்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. 16ஆம்
10

நூற்ருண்டில், போர்த்துக்கேயரின் வருகைக்கு முன்னர், வாணிபத் துறை யில் ஆதிக்கஞ் செலுத்திவந்த முஸ்லிம்கள் மலேசியாவில் இஸ்லாத்தைப் பரப்பியிருக் கலாம். இது பற்றிய வரலாற்றை இலங்கை திரும்பியதும் ஆராய்தல் வேண்டுமென்று தீர் மா ன ஞ் செய்து கொண்டேன்.
பிரதமரின் மீதிப் பேச்சு இன்றைய மலேசியாவில் தமிழுக்கு உள்ள இடத்தினை விளக்குவதாய் அமைந் திருந்தது. அவர் கூறியதாவது : “ பள்ளிக்கூட அமைப் பில், ஆரம்ப வகுப்புகளில் தமிழும் போதனு மொழியா யிருத்தல் வேண்டுமென்பது எமது கல்வித் திட்டத்தின் ஏற்பாடாகும். இடைநிலைப் பள்ளிகளில் எவரும் தமிழ், பயில விரும்பினுல் அதற்கான வசதிகள் உண்டு. பல்கலைக் கழகத்திலும் மலாய் மொழித்துறை, சீன மொழித் துறை ஆகியவற்றுடன் இந்தியக் கலைத் துறை ஒன்றனையும் நிறுவியிருக்கிருேம். இவ்வாருக எமது மக்களின் மொழிகள், பண்பாடுகள் ஆகியவற்றுக்குக் கூடுமானளவு உயரிய ஸ்தானமளித்து அவற்றைப் பேணி வருகிருேம். இந்தியக் கலைத்துறைப் பீடத்துக்கு, தனியொரு துறையில் மாத்திரம் பாண்டித்தியம் பெற் றில்லாமல் பல மொழிகளையுங் கற்றுத்தேறிய பேரா சிரியர் தனிநாயகம் தலைவராகக் கிடைத்தமை எமது பாக்கியமே. உங்கள் மாநாட்டுக்கு மலாயாப் பல்கலைக் கழகத்தினைக் களமாகத் தேர்ந்தமைக்கு மாநாட்டு ஏற்பாடுகளில் அவர் முன்னின்று உழைத்தமையும் ஒரு காரணமென்பதை நானறிவேன்."
பிரதமர் தொடர்ந்து பேசுகையில், தமிழின் தொன்மை பற்றியும் மாண்பு பற்றியும் குறிப்பிட்டார்கள். * இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவின் பிற பாகங்
11

Page 11
களிலும் ஆபிரிக்காவிலுங்கூட, பெருவழக்கிலுள்ள மொழிகளில் தமிழும் ஒன்று. தமிழ் இலக்கியம் அறிவுச் சுடர் பரப்பும் இரத்தினங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டது. உதாரணமாக, முதலாம் அல்லது இரண் டாம் நூற்ருண்டில் தோன்றிய திருக்குறள் பல்வேறு மொழிகளிலும் பெயர் க் கப்பட்டிருக்கிறது; உலக மெங்கணும் பயிலப்பட்டும், பாராட்டப் பெற்றும் வரு கிறது. இந்த ஒப்பற்ற நூல் மலாய் மொழியிலும், சீன மொழியிலும் பெயர்க்கப்பட்டு வருவதை யறிந்து மகிழ்ச்சி யடைகிறேன். இம்மாநாட்டின் தாரக மந்திரம் சுமார் இருபது நூற்ருண்டுகளுக்கு முற்பட்ட ஒரு செய்யுளினடி என்றறிகிறேன்.
* யாதும் ஊரே
யாவரும் கேளிர் ?
“இத்தகைய னைத்துலக மாநாடொன்றிற்
A历 20]60TI ந AD@ இந்தச் செய்யுளடி மிகப் பொருத்தமானதே."
உரையின் இறுதிப் பகுதியில் பிரதமர் துங்கு அப்துல் றஹ்மான் புத்ர அவர்கள் தமது வாழ்க்கைத் தத்துவம் பற்றிக் குறிப்பிட்டார். கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று பட்டம் பெற்றவரான அவர் பட்ட தாரி மாணவனுய் இருந்த காலத்தில் அங்கு கதையாகக் கூறப்பட்ட நிகழ்ச்சி யொன்றினைக் குறிப்பிட்டுவிட்டு, மேலும் சொன்ஞர் : "பழையனவற்றில் ஒரு வகை -யான கவர்ச்சியுண்டு. ஆயினும் இன்று நாம் அவற்றை ஆராய்ந்து, நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப அவற் றுக்குப் புத்துயிர் அளித்தல் அவசியம். மற்ருெரு பண்டைக் கருத்தும் ஆசியாவின் பல பகுதிகளில் வேரூன்றியது :
12

" நாளைய பணியை
நாளையே செய்வோம். இன்று செய்வதேணுே "
என்ற அந்தக் கருத்தும் நற்கருத்துப் போலத் தோன் றினும் நாம் எமது புராதன கொள்கைகள், கலாசா ரங்கள் யாவற்றுக்கும், நவீன யுகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில், ஊனும் உரமும் பாய்ச்சிப் புதுவாழ்வளிக்க வேண்டியது அவசியம்."
இதுவே பிரதமரின் அரசியல் தத்துவமாகவும்: மலேசியாவின் இலட்சியமாகவும் எனக்குத் தோன்றியது.
பிரதமரை அடுத்து கெளரவ பூரீ எம். பக்தவத்சலம் அவர்கள் பேசிஞர்கள். மாநாட்டிற்கு வந்திருந்த பிரதி நிதிகளின் சார்பில் நிர்வாகிகளைப் பாராட்டியும், அவர் களுக்கு நன்றி தெரிவித்தும் பேசிய அவர் மேடையில் அமர்ந்திருந்த (மலேசிய) அமைச்சர்கள் இருவரும் நாயன்மார்களில் இருவரைத் தமக்கு நினைவூட்டு கின்றனர் என்று சொன்னபோது சம்பந்தன், மாணிக்க வாசகம் ஆகிய அவ்விரு நவீன நாயன்மார்கள் மீதும் சபையோரின் பார்வை பரிவோடு படிந்தது. அதி விரைவில், தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகம் ஒன்றில் மலாய்க் கலைத்துறைப் பீடமொன்று நிறுவப்படும். என்றும் அமைச்சர் பக்தவத்சலம் தெரிவித்தார்கள்.
அன்றைய நிகழ்ச்சிகள் திட்டமிட்டவாறே, நண்பக லளவில் முடிவடைந்தன. அதைத் தொடர்ந்து, பக்கத் தேயுள்ள விஸ்தாரமான மண்டபத்தில் வைத்து குளிர் பானுதிகள், சிற்றுண்டிகள் ஆகியன வழங்கினர்கள். இலங்கைப் பிரதிநிதிகளில் பெரும்பாலானுேர் ஒரு காலத்தில் வேண்டியபோது, வேண்டிய அளவில்
13

Page 12
கிடைத்து வந்தனவும், இன்று எட்டாக் கனிகளாயிருப் பனவுமாகிய அப்பிள், திராட்சைப் பழங்கள் குவிந்திருந்த மேசைகளை ஆசையுடன் நோக்கினர். இதற்கிடையில் மலேசியாவில் வாழும் உற்ருர் உறவினர்கள் இலங்கைப் பிரதிநிதிகளை முற்றுகையிட ஆரம்பித்தார்கள். மறு நாள்-ஞாயிற்றுக்கிழமை-ஓய்வுநாள் ஆனமையால், அவர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு காணும் தங்கள் தங்கள் உறவினர்களை அழைத்துச் சென்று நன்ருக உபசரிக்க வேண்டுமென்ற ஆவலுள்ளவர்களாய் இருந் தார்கள். இந்த ஆரவாரங்களின் மத்தியில் யாருமற்ற தனிக்கட்டையாக நின்று கொண்டிருந்த நான் வெகு காலத்துக்கு முன்னர் மெளத்தாகிவிட்ட என் மாமஞர் ஒருவரை நினைந்துகொண்டேன். நாங்கள் பள்ளிப் பிள்ளைகளாய் இருந்த காலத்தில் எவ். எம். எஸ். பெஞ்சன்காரர்களென்ருல் அந்தஸ்தில் உயர்ந்தவர் களாகக் கருதப்பட்டு வந்தார்கள். யாழ்ப்பாணக் கிராமப் பகுதிகளில் பெரும் பெரும் கல் வீடுகள் எல்லாம் அவர் களுக்கே பெரும்பாலுஞ் சொந்தமாயிருந்தன. ஆதன பாதனங்களை ஈடு வைப்பதென்ருல் இந்தப் பெஞ்சன் காரர்களிடமே யாவரும் போவார்கள். இப்படியாக எவ். எம். எஸ். பெஞ்சன்காரர்' என்ருல் காசுச் சுரங்கமென்று நாங்கள் எண்ணி வந்தோம். ஆனல், அவர்களுடைய முயற்சி, ஊக்கம், பிறந்த மண்ணில் அவர்களுக்குள்ள வாஞ்சை இவற்றைப் பற்றியெல்லாம் நாங்கள் அந்தக் காலத்தில் அறியாதவர்களாய் இருந்தோம்.
நிற்க, பிரிந்தவர் கூடும் மகிழ்ச்சிப் பெருக்கின் நடுவே, நான் என்ருே இம்மண்ணுலகை விட்டுப் பிரிந்துவிட்ட என் மாமனர் ஒருவரை நினைந்துகொண்டு நின்றேன். இந்த நூற்ருண்டின் ஆரம்ப நாட்களில், வண்ணுர்பண்ணையில் படித்துக்கொண்டிருந்த அவர்
14

தம் பள்ளித் தோழர்களுடன் கூடிக்கொண்டு சிங்கப் பூருக்குப் பயணமானுர். கூடப் போனவர்களைப் பார்க் கிலும் கூடுதலான இங்கிலிஸ் கற்றவராக இருந்தும், மற்றவர்களெல்லாம் சட்டுச் சட்டென்று வேலைகளில் அமர்ந்துகொள்ள, இவர் ஒரு சில கிழமைகளில் இலங்கை திரும்பிவிட்டார். சாப்பாடும் சுவாத்தியமும் தமக்கு ஒத்துவரவில்லையாம்! இத்த நிகழ்ச்சி அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் எங்கும் பரவியது! திரைகட லோடியுந் திரவியந்தேடு என்ற கோட்பாட்டைக் கடைப் பிடித்து வாழ்ந்த அவரது மூதாதையருக்கும் அவருக்கு மிருந்த வேறுபாடு மலையும் மடுவும் போன்றது. ஆயினும் வல்லான் வகுத்ததே வழியென்று அவர் வாழ்க்கையில் நிறைவு கண்டார். ' இருப்பது போதும் ' என்ற இந்த மனப்பான்மை இஸ்லாத்தின் மற்ருெரு சிறப்பம்சமாகும். இப்படியாக, நான் மலேசியாவில் உறவினரற்றவணு னேன். இந்நிலையில் மலேசிய முஸ்லிம் ஒருவர், (அவர் அரசாங்க அதிகாரிகளில் ஒருவர்) என்னை அணுகினுர், பிரிட்டிஷ் பல்கலைக் கழகமொன்றில் பயின்று பட்டம் பெற்ற அவர் எனது நண்பர் ஒருவரின் நண்பர். மறு நாள் என்னைத் தம்மோடு கூட்டிச்சென்று பட்டணத் தைக் காண்பிக்கப் பெரிதும் விரும்புவதாகவும் நான் எங் கெங்கு போக விரும்புகிறேன் என்பதைத் தெரிவிக்கு மாறும் அன்புடன் கேட்டார். பெரிய பள்ளிவாசலையும், பட்டணத்துக்கு அண்மையில் அமைந்த கம்பொங் கிராம மொன்றினையும் பார்க்க விரும்புவதாகச் சொன்னேன். மறுநாட்காலை காரில் வந்து, என்னைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று, காலைப் போசனத்தை முடித்த பிறகு இவ்விடங்களுக்குச் கூட்டிச் செல்வதாகச் சொல்லிப் போஞர்.
15

Page 13
சாயந்தரம் 4 மணிக்கு நாங்கள் எல்லோரும் மாநாட்டு பஸ்ஸில் தேசிய நூதனசாலைக்குப் போனுேம். அங்குதான் அனைத்துலகத் தமிழாராய்ச்சிப் பொருட் காட்சி நடைபெற்றது.
* மியூஸியம் நெகாரா" எனப்படும் அந்த நூதன சாலை மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உருவாக்கப் பட்டிருக்கிறது. அதன் கட்டட வேலைப்பாடு, புதிய தலைநகரின் துடிப்பினையும் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்வதே போல, மலேசியக் கலாசாரத்தின் பிரதிபிம்ப மாய் அமைந்திருக்கிறது. பொருட்காட்சியில் வைக்கப் பெற்றிருந்த பொருள்களில் "முஸ்லிம் நேசன்" முதல் ஏட்டின் சில பக்கங்களின் போட்டோப் பிரதிகளும் உண்டோவென்று தேடிப் பார்த்தேன்; காணவில்லை. ஒருவேளை அவை போய்ச் சேரப் பிந்தியிருக்கலாம். என்ருலும், அப்பிரதிகள் ஈற்றில் மலாய்ப் பல்கலைக் கழக இந்தியக் கலைத்துறை நூல்நிலையத்தைப் போயடை யுந்தானே என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.

3. நகர தரிசனம்
1966 ஏப்ரல் 17 ஞாயிற்றுக்கிழமை-நாங்கள் தங்கி யிருந்த விடுதியில் காலைச் சாப்பாடு 7 மணிக்கும் 8 மணிக்கு மிடையிற் பரிமாறப்படுமென்று பொட்டலத்தி லிருந்த சுற்று நிருபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. நானுே பழக்கப்படி, அதிகாலையிலேயே எழுந்து விட்டேன். காலை 5 மணிக்கு ஒரு ஜாடி தேநீர் பருகுவது என் வீட்டுப் பழக்கம். ஆணுல் விடுதியின் சட்ட திட்டங்கள், ஒரு ஜாடியல்ல, ஒரு கோப்பைத் தேநீர் அருந்துவதற்குக்கூட இடந்தரவில்லை. ஹோட்டல் ஒன்றிலே தங்கியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. வில்லங்கமான இந்தச் சூழலில் ஒரு யுக்தி எனக்குக் கைகொடுத்தது; பழக்கத்துக்கு அடிமையாகாதிருக்க முடியுமாவென்பதைப் பரீட்சிக்க இது நல்ல வாய்ப்பு என்று என்னைத் தேற்றிக்கொண்டு படுக்கைக்குப் பக்கத்து மேசையில் ஒரு போத்தலில் வைக்கப்பட்டிருந்த தண்ணிரைக் குடித்தேன். அந்தத் தண்ணிருக்கும் என் அறைக்குச் சற்று தள்ளியிருந்த ஸ்நானகூடத்துக் குழாய் நீருக்கும் எந்தவகை வித்தியாசமும் இல்லாதிருக் கலாம். ஆணுலும் குழாயில் குடிப்பதிலும், போத்தலில் குடிப்பது சிறந்ததாகத் தோன்றியது. பஞ்சியைப் பாராமல் இரண்டு மாடி இறங்கிப் போயிருந்தால், குடிப் பதற்கென்று விசேஷமாக அமைக்கப்பட்ட குழாயி லிருந்து குளிர்ந்த நீர் பருகியிருக்கலாம். அமெரிக் காவிலே இத்தகைய செயற்கைச் சுனைகள் ஒவ்வொரு பாடசாலையிலும் இருந்ததை 1952இல் கவனித்தேன்.
17

Page 14
கோலாலம்பூர் போய்ச் சேர்ந்ததும் எமக்குக் கொடுக் கப்பட்ட பொட்டலத்திலிருந்த் துண்டுப் பிரசுரங்களைக் கவனமாகப் படிப்பதில் 7 மணிவரை ஈடுபட்டிருந்தேன். புதிய அரசாகிய மலேசியாவின் தலைப்பட்டணமாய் விளங்கும் கோலாலம்பூர் துரிதமாக முன்னேற்ற மடைந்துவரும் நவீன நகரமென்றபோதிலும், கீழைத் தேசத்துக்குரிய வண்ணமும் வனப்பும் குறைவுருததாய்த் திகழ்கிறதென்று இப்பிரசுரங்கள் பிரகடனஞ் செய்தன. இஸ்லாமிய சிற்ப முறையிலமைந்த அரசாங்கக் கந்தோர் களுடன் மலாய மசூதிகளும், இந்துக் கோயில்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும், சீன வணக்க ஸ்தலங்களும், வானளாவும் ஹோட்டல்களும் அதிநவீன மோஸ்தரி லமைந்த கட்டடங்களும் நிறுவப்பட்டிருப்பதாக வாசித் தேன். திறந்த வெளிகளில் மரங்களும் பூஞ்சோலைகளும் நந்தவனங்களும் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. பல் வேறு இனத்தவர்கள் இங்கு வசிக்கிருர்கள். அவர்களது ஆடை அணிகளின் வண்ண லாவண்ணியம் நம் கவனத்தைக் கவர்வனவாகுமென்று இப்பிரசுரங்கள் பறை சாற்றின. கோலாலம்பூரில் வாழ்ந்த மக்கள் அந்த நகரத்தைப் போலவே எழில்மிக்கவர்களாவர். மலாய்ப் பெண்கள் அணியும் கவர்ச்சிமிக்க சாரமும் கம்பாயமும் சீன மாதரின் உடலுறை போன்ற அங்கியும், இந்திய மங்கையரின் ஒயிலான சேலையும், இனப் பாகுபாடின்றி மேல்நாட்டு நாகரிக வயப்பட்ட வாலைக்குமரிகள் சிலரின் மேலோடு துவஞம் ஜீன்ஸ்களும், கோலாலம்பூரில் கோல நடை பயிலக் காணலாமென்று இவற்றிற் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆண்களின் ஆடைகளும் இவ்வாறே. ஒரே தெருவில் வெல்வெட் தொப்பியணிந்த மலாயரையும் தலைப்பாகை சுற்றிய சீக்கியரையும் சகஜமாகக் காணலாம். நகரின் சுற்றுப்புறங்களில் யார் நீளப் புல்-தொப்பி
18

யணிந்த சீனத் தொழிலாளர்களைச் சர்வ சாதாரணமாகக் காணலாம். எங்கும் எல்லாம் வண்ண மயம்.
கோலாலம்பூரின் சிறப்பம்சங்களாகக் குறிப்பிடப் படும் ஐந்தில் இரண்டினை முதல் நாளே-16-4-66 சனிக் கிழமையே-பார்த்து விட்டேன். பாராளுமன்றம், தேசிய நூதனசாலை ஆகிய இவ்விரண்டும் போக எஞ்சி யிருந்தவை கலாபவனம், தேசிய ஞாபகார்த்த மண்டபம், பெரிய பள்ளிவாசல் ஆகியவை. இவற்றில் பள்ளிவாச லுக்கே முதலிடமளிக்கத் தீர்மானித்திருந்தேன்.
இதற்கமைய, எனது புதிய நண்பரின் வரவை அன்று ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். நாள் முழுதையும் நகர வலத்திற் செலவிடுவதென்பதுஏற்பாடு அந்நினைவு எனக்கு உவகையளித்தது.
காலைக்கடன்களுக்கு மருந்தான தேநீர்ப்பானம் கிடைக்காமையால் முதலில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு பின்னரே குளிப்பைக் கவனிக்க வேண்டியதா யிற்று. சூழலை மனிதன் எல்வாறு தன் அடிமையாக்கிக் கொள்கிருன் என்பதற்கு இதுவும் ஒரு சான்ருகலாம். உதய வேளையை உற்சாகத்துடன் ஆரம்பிப்பதற்கு உதவவல்ல பானங்களிற் சிறந்தது தேநீரே. அதிலும் வீட்டிலே தயாரிக்கும் தேநீரின் சுவையே தனி. இதனுல் சரியாக 7 மணிக்கே அசன மண்டபத்தில் போய் உட்கார்ந்துகொண்டேன். முதலில் ஆகாரத்தைமுடித்துக் கொண்டு, பிறகு குளித்துவிட்டு, கோலாலம்பூரையும் அதன் சுற்றுப்புறங்களையும் பார்க்கப் புறப்படுவதென்பது திட்டம்.
முதல்நாள், தூக்கக் கலக்கத்தில், அசன மண்ட பத்தை ஆற அமர அவதானிக்க முடியவில்லை. இன்று
19

Page 15
எல்லாவற்றையும் நன்கு கவனிக்கலானேன். மலேசி யாவின் பல்வேறு இனப் பண்புகளையும் பிரதிபலிக்கும் வகையில், பலவித நிற, ஆடை, பருமனுள்ள பரிசார கிகள் அங்கு காணப்பட்டார்கள். மலாயர், சீனர், தமிழர் ஆகிய இப்பெண்மணிகள் தொழிலால் பரிசாரகிகளே யல்லர். மாநாட்டுக்கென்றே விசேஷமாக வேலைக் கமர்த்தப்பட்டவர்கள். எல்லோரும் இளம் பச்சை நிற உடை யணிந்திருந்தார்கள், தையல் மட்டும் வெவ்வேறு விதம், அரசியலமைப் பின் படி மலேசியர்களாகிய இவர்கள் அனைவருக்கும் ஆங்கிலமே தெரியாதுபோலத் தோன்றியது. இதனுல், நான் மொழியையும் வசதி யையும் கருதி தென்இந்தியப் பெண்ணை நோக்கினேன்; வேண்டிய அளவு தேநீர் கிடைத்தது. மொழிப் பிரச்சினை குறுக்கே நின்ருல், ஒரு ஜாடி தேநீர்தான் கிடைக்கா விட்டாலும் குறைந்தது மூன்று கோப்பைத் தேநீராவது தேருது போய்விடுமே என்ற அச்சந்தான் இதற்குப் பிரதான காரணம் !
பரிமாறப்பட்ட உணவுகளும் தோசை-சாம்பார், இட்டலி-துவையல், பாண்-முட்டை என்று பலவகை. காய்கறி உணவு கொள்ளும் நண்பரொருவர் பாணும் முட்டையும் சாப்பிட விரும்பியதைக் கவனித்தேன். முட்டை மரக்கறியல்லவே என்று நான் குறிப்பிட்ட போது, அவர், மரக்கறி உணவு கொள்ளுவோர் மாமிச உணவு கொள்ளக்கூடாதென்று விதியில்லையே என்று பகடியாகச் சொன்னர். மொழி வல்லுநர்கள் குழுமி யிருந்த அவ்விடத்தில் அவர் இப்படி ஒரு புது விளக்கம் கொடுத்தமை மொழியியலின்படி சரியே. ஏனென்ருல், Vegetarian என்னுஞ் சொல்லினை ஆங்கில அகராதி அவர் சொன்னபடியே விளக்குகிறது. Vegetarian எனப் படுபவர் பண்ணைப் பொருள்கள் தேன், முட்டை ஆகி
T20

யவை சேர்த்தோ சேர்க்காமலோ முற்றிலும் காய்கறி உணவுகளை உட்கொள்பவர் என்று அந்த அகராதி கூறு கிறது. என்னைக் கூட்டிச் செல்லவிருந்த நண்பரின் வீட்டில் காலை உணவு கொள்ளவேண்டி யிருந்தமையால் நான் பாணும் முட்டையும் சாப்பிடத் தீர்மானித்தேன். தோசையையோ இட்டலியையோ சாப்பிட்டால் மேலும் சாப்பிட இடமிருக்காதல்லவா ? வெள்ளிக்கிழமை இரவு மேலும் பலர் வந்து சேர்ந்திருந்தமையால், மண்டபத்தில் முதல் நாளிலும் அதிகமானுேர் கூடியிருந்தார்கள்; சம்பா ஷணையும் சுவை மிக்கதாய் இருந்தது.
சொன்னபடியே சரியாக 8-30 மணிக்கு நண்பர் வந்து சேர்ந்தார். மேலே வந்து, ஒழுங்கின்றிக் கிடந்த என் அறையை அவர் பார்த்துவிடக் கூடாதே யென்பதற் காக, வரவேற்பறையில் அவருக்காகக் காத்திருந்தேன். அவர் என்னைத் தன் வீட்டுக்குக் கூட்டிச்சென்று, நாலு குழந்தைகளும் மனைவியும் அடங்கிய தமது குடும்பத் துடன் காலை ஆகாரம் அருந்தும்படி கேட்டார். குழந் தைகள் நால்வரில் மூவர் ஆண்கள்; கடைக்குட்டி பெண்.
எனது நண்பரும், நானும், இன்னெரு நண்பரு, :மாக காரில் நகரை வலம்வரப் புறப்பட்டோம். நகர்வலம் நண்பகல் வரை நீடித்தது. என்னை அழைத்துச் சென்ற நண்பர் நான் கேட்ட கேள்விகள் எல்லாவற்றுக்கும் தயங்காமலும் விரிவாகவும் பதில் கூறிஞர். அவரது பதில்கள் மலேசியாவைப் பற்றியும் சர்வதேச அரசியல் பற்றியும் அவருக்குள்ள அறிவைப் பிரதிபலிப்பனவாய் இருந்தன. தேசப் பற்றும் தமது நாடு நிச்சயம் முன் னேறுமென்ற அனுகூல சிந்தையும் அவருக்கு இருந்த தைக் கவனிக்க முடிந்தது. ஜப்பானிய ஆக்கிரமிப்புப் பற்றியும் அதனை அடுத்து பொதுவுடைமைப் புரட்சி
21

Page 16
யாளரது நடவடிக்கைகளின் விளைவாக, 1948 முதல் 1960 வரை நிலவிய அவசரகால நிலைமை பற்றியும் உணர்ச்சி ததும்ப அவர் பேசியதைக் கேட்டபோது இக்காலத்தில் அங்கு காணப்படும் தீவிரமான தேசாபிமானத்துக்கு மேற்படி நிகழ்ச்சிகள் பெருமளவு ஏதுவாக அமைந்தன வென்பதை உணர்ந்தேன். * தகரச் சுரங்கங்கள், ரப்பர்த் தோட்டங்கள், நெடிய மலைத்தொடர்கள் ஆகியவற்ருல் சூழப்பெற்ற கோலாலம்பூர்" உண்மையிலேயே துரித மாக முன்னேறி வருகிறதென்பதை அறிந்தேன். உலகில் அதிகமான ரப்பர் செய்கை பண்ணப்படும் நாடுகளில் மலேசியாவும் ஒன்றென்பதை ஏற்கனவே அறிந்திருந் தேன். பெரிய தோட்டங்களிலும் துண்டுக் காணிகளிலும் ரப்பர் விளைவிக்கப்படுகிறது. ஆணுல் இயந்திரத்தின் மூலம் சேறு வாரும் முறைகளையும் கையாண்டு உலகின் மொத்தத் தகர உற்பத்தியின் மூன்றிலொரு பங்கினை மலேசியா உற்பத்தி செய்கிறதென்பதையும், தகரமும் ரப்பரும் மலேசியப் பொருள் வளத்தின் இரண்டு ஸ்தம் பங்கள் என்பதையும் நண்பர் வாயிலாக அறிய முடிந்தது. நகருக்கு அண்மையில் உள்ள கைவிடப்பட்ட தகரச் சுரங்கமொன்றைச் சுட்டிக்காட்டி, உலகில் மனித முயற் சியால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய குழி அதுவே என்று சொன்னர்கள். ஆணுல் 1954இல் தென்னுபிரிக் க ச வி லு ள் ள கிம்பேர்லிக்குப் போயிருந்தபோதும், அங்குள்ள கைவிடப்பட்ட வைரச் சுரங்கமொன்றினை இப்படி வர்ணித்ததைக் கேட்டிருக்கிறேன். முறையே தென் ஆபிரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் அதி முக்கிய பான செல்வமாக விளங்கும் இவ்விரு கணிப்பொருள் களும் அகழப்படும் விதம் ஒருவேளை ஒரே மாதிரி
யானதாக இருக்கலாம்.
22

பெதலிங் ஜயா என்னுமிடத்தினூடாக எமது கார் போய்க் கொண்டிருந்தபோது, அதன் அமைப்பும், இயற்கை வனப்பும், துப்புரவும் எம்மைக் கவர்ந்தன. அப்பகுதி மலேசியாவின் முதலாவது சார்பு-நகரமென்றும் அவசரகால நிலைமையின் விளைவாகத் தோன்றிய தென்றும் நண்பர் தெரிவித்தார். கோலாலம்பூருக்குப் பக்கத்தில் இது அமைந்திருக்கிறது. புரட்சிக்காரர்களின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு அரசாங்கம் கையாண்ட உபாயங்களிலொன்று இடம்பெயர்ந்த குடியானவர்களைப் புதிய கிராமங்களிற் குடியேற்றியமையாகும். இவ்விதம் குடியேற்றப்பெற்றவர்களிற் பெரும்பாலானுேர் தமதல் லாத கிராம நிலங்களை ஆண்டு அனுபவித்து வந்த சீனர் களாவர். பொதுவுடைமை இயக்கத்தினருக்கு ஆட்பலம், பணம், உணவு முதலியவற்றைக் கொடுத்துதவவேண்டிய இக்கட்டான நிலையிலிருந்த இந்தச் சீனர்கள், புதிய கிராமங்களிற் குடியேற்றப்பட்ட பின்னர், அரசாங்கம் நிர்வாக முறையிலும், சமூக ரீதியாகவும் சிறப்பான சேவைகளை ஆற்றி, அவர்களது மனதைத் தன்பால் ஈர்த்து, தனது முயற்சிகளில் அவர்கள் தீவிரமாகப் பங்கு கொள்ளச் செய்யக்கூடிய வாய்ப்பினைப் பெற்றது. இதன் பயணுக மதில்மேல் பூனைகளாயிருந்த அவர்களும் மனதார அரசாங்கத்தை ஆதரிக்கத் தலைப்பட்டார்கள். இந்த விவரங்களையெல்லாம் எனது நண்பர் விரிவாக எடுத் துரைத்தார். பெதலிங் ஜயா என்னும் இந்நகரம் கவின்மிகு நந்தவனமாக மட்டுமின்றிக் கைத்தொழிற் பேட்டையாகவும் பல்கலைக்கழகக்களமாகவும் மிளிர்கிறது. இந்த வகையில் அந்நகரம் மலேசியாவின் அபிலாஷை களைப் பிரதிபலிக்கிறது.
கட்டட அமைப்பு முறையில் கவர்ச்சி மிக்கதான பெளத்த விகாரை ஒன்றனை அங்கு கண்டேன். அவ்
23

Page 17
விகாரை தோற்றத்தில் இலங்கை விகாரைகளிலும் மாறு பட்டதாய் விளங்கியது. தாய்லாந்துக் கட்டட முறைப்படி அது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது என்று நண்பர் விளக் கினர். சீனரின் வணக்க ஸ்தலம், சீக்கியரின் கோயில் ஆகியவற்றையும் நாம் வழியில் கண்டோம். சீனர்கள் வணக்கத்தின்போது மலர்களுக்குப் பதில் ஊதுவர்த்தி களைத் தாராளமாக உபயோகிப்பார்களாம்.
நகர தரிசனத்தில் முதலாவது தரித்து நின்ற இடம் பெதலிங் ஜயா பள்ளிவாசலாகும். அதன் வெளிப்புற நிர்மாணிப்பு பாரம்பரியக் கட்டட முறைக்கு மாறுபட்டதா யிருந்ததைக் கவனிக்க நான் தவறவில்லை. பிரதான வாசல் மூடப்பட்டிருந்தது. எந்தப் பள்ளிவாசலுமே முற்ருக மூடப்படுவதில்லை. இரவும் பகலும் எந்நேரமும் தொழுவதற்கு வசதி செய்யுமுகமாகத் திறந்தே இருக்கும் என்று நான் அபிப்பிராயம் தெரிவித்தேன். எமது கார்ச் சாரதி மர்வான் இறங்கிப் போய்ப் பள்ளிவாசலைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து, பக்கத்துக் கதவொன்று திறந்திருக் கிறதென்று தெரிவித்தபோது எனது கருத்து நிரூபண மாயிற்று.
மர்வான் என்னும் பெயர் இலங்கை முஸ்லிம்களி டையே நான் இதுகாறும் கேள்விப் படாததொன்று. உமைய்யாக்கலிபாக்களில் ஒருவரின் பெயர் இது. ஏழாம் நூற்ருண்டில்இலங்கையில் குடியேறிய ஆதி முஸ்லிம்கள் உமைய்யாக்களினுல் கொடூரமாக நாடுகடத்தப்பெற்ற ஹாஷிம் கிழையார் வம்சத்தைச் சேர்ந்திருந்தமையால் அந்த உமைய்யாக்களின் வழித்தோன்றலான மர்வான் அவர்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கலாம். இதன் காரணமாக அவரது பெயரையும் அவர்கள் வெறுத் தொதுக்கியிருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு.
24
سصے

சுன்னத் ஜமா-அத் அவர்களிற் பலர் இந்த மர்வான், செங்கோலை அடித்துப் பறித்துக்கொண்டவரென்றும், முறைப்படி அரசு கட்டிலேறிய ஹலிபாவல்லரென்றும் கருதுகிருர்கள். 15ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியில், மலாக்காச் சுல்தான் மூலமாக இஸ்லாம் மலாயாவில் முக்கிய ஸ்தானம் வகிக்க ஆரம்பித்த கட்டத்தில், முஸ்லிம் உலகிலே பல மாறுதல்கள் சம்பவித்திருந்தன. கி. பி. 661 முதல் 750 வரை நீடித்த உமைய்யாக்களின் ஆட்சி, கனவாய், பழங்கதையாய் மங்கிப் போயிருந்தது. -மர்வான் என்ற பெயர் கொடுங்கோன்மையுடன் தொடர் பற்றதாக மாறியிருக்கலாம். இன்றைய தினம் எங்க ளுக்குப் பெரிதும் உதவிய எமது சாரதி மர்வான், மேற்படி வரலாற்றுடன் சற்றும் தொடர்பற்ற மற்ருெரு மர்வானின் பரம்பரையில் தோன்றியவராயும் இருக்கலாம்.
பள்ளிவாசலுக்குட் சென்ற நாங்கள் அதனை நன் ருகப் பார்வையிட்டோம். பெரிய பள்ளிவாசலை நான் அதுவரை உள்ளே போய்ப் பார்க்காதிருந்தபோதிலும் இந்தப் பெதலிங் ஜயா பள்ளிவாசல் அதன் (மஸ்ஜித் நெகராவின்) மறுபதிப்பென்பதை உணர்ந்தேன். உரு -வத்தில் இரண்டும் ஒன்றேயாயினும் விசாலத்தில் இது சிறியது. உண்மையில் மஸ்ஜித் நெகராவை நிர்மா ணித்த அதே சிற்பாசாரியே இதனையும் உருவாக்கினுர் என்று அறிந்தேன். இதன் குவிமாடம் விரிந்த குடை போன்று காட்சியளிக் கிற து. 1955ஆம் ஆண்டில் துறுக்கி, கொன்யா என்னுமிடத்தில் நான் தரிசித்த 'மெளலானு ஜலாலுத்தீன் றுாமி ஞாபகார்த்த மசூதியை இந்தப் பள்ளிவாசல் எனக்கு நினைவூட்டியது. இதை உருவாக்கிய சிற்பாசாரி கொன்யா மசூதியினுல் கவரப் * பெற்றிருந்தாரா அல்லது விரிந்த குடையொன்று அவரது கற்பனையை அருட்டியதா என்று சொல்லுந்
25

Page 18
தகுதி எனக்கில்லை. மலேசியாவில் மோதீன்-முஅஃ தின்-என்னும் கட்டாயத் தொழுகைக் கட்டியக்காரனைக் குறிக்குஞ் சொல் வெகுஜன வழக்கிலில்லை என்றும் அதற்குப் பதிலாக பிலால் என்னுஞ் சொல் வழங்கி வருகிறதென்றும் மசூதியை எமக்குக் காண்பித்த * பிலால் மூலம் தெரிந்துகொண்டேன். இமாம், கதீப் ஆகிய சொற்கள் அங்கு ஒரே கருத்தில் வழங்கப்படுகின் றனவென்றும் அவரிடமிருந்து அறிந்துகொண்டேன். விசுவாசிகளைத் தொழு கை க்கு அழைப்பதற்கு ஒலி பெருக்கி வசதிகள் உள்ளமையால், மஞரா உபயோ கிக்கப்படுவதில்லை.
இங்கிருந்து, சீனருக்குச் சொந்தமான தகரச் சுரங்க. மொன்றைப் பார்க்கப் போனுேம். அங்கு சேறுவாரும் இயந்திர வசதி இல்லை. என்ருலும் தகரச் சுரங்கம் இன்ன மாதிரி யிருக்குமென்றறிவதற்கு அது போதுமா யிருந்தது. பத்தொன்பதாம் நூற்ருண்டு முழுதும் தகரச் சுரங்கத் தொழிலில் ஏகபோக ஆதிக்கம் வகித்து வந்த வர்கள் சீனர்களே. ஆயினும் அவர்கள் இயந்திர வசதி களின்றியே தகரம் அகழ்ந்து வந்தார்கள். ஞாயிற்றுக் கிழமையானதால் சுரங்கத்தில் வேலையெதுவும் நடை பெறவில்லை. எனினும் சீன ரி ன் ஊக்கத்தையும் உழைப்புத் திறனையும் ஓரளவுக்குக் காண முடிந்தது.
அங்கிருந்து மத்தியானச் சாப்பாட்டுக்காக எமது நண்பரின் கிளப்புக்குப் போனுேம். அங்கு றென்தாங் என்னும் கறியை முதன்முதலாகச் சுவைத்தேன். இறைச்சிக்கு வாசனைச் சரக்குகள் போட்டு அவித்து, பின்னர் வற்றலாக்கி வைத்து அந்த வற்றலைக்கொண்டு: தயாரிக்கப்படும் இந்தக் கறி, ஒரு மாதத்துக்குக்கூட. பழுதாகாமல் இருக்குமாம். அங்கு பரிமாறப்பட்ட பிற
26

உணவு வகைகள் எனக்குப் புதியவையல்ல. வெல்லப் பாகு, தேங்காய்ப்பால், சவ்வரிசி ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்ட குலாப் மலாக்காகூட நான் ஏற்கனவே சுவைத்த பண்டமே.
மேலும் சில மணி நேரம் பிரயாணஞ் செய்து, சிற் றுண்டிச் சாலைகள், புத்தகக் கடைகள் ஆகியனவே பிர தான அங்கம் வகிக்கும் மலாய்ச் சந்தையையும், நீச்சல் தடாகம், தேசிய விளையாட்டரங்கு, ஆஸ்திரேலியாவி லிருந்து அண்மையில் இறக்குமதியாகியுள்ள போவ்லிங் என்னும் பந்தாட்டம் நடைபெறும் மண்டபம் ஆகியவற் றையும் பார்த்த பிறகு, தேநீர் பருகுவதற்காக நண்பரின் வீடு போய்ச் சேர்ந்தோம்.
குழந்தைகள் எல்லோரும் தொலைக்காட்சிப் பெட்டி -தெலிவிஷன்-முன்னுல் உட்கார்ந்து, தம்மை மறந்த வர்களாய்க் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தார்கள். பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றில் ஒன் ருகப் பதில் பிரதமர் துங் அப்துல் ரஸாக் பின்ஹ"செயின் அவர்களின் நேரடி நிர்வாகத்தில் நடைபெறும் கிராமாபி விருத்தி வேலைத் திட்டங்கள் பற்றிய நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. அதிர்ஷ்டவசமாக இந் நிகழ்ச்சியைக் காணும் வாய்ப்பு அன்று எனக்குக் கிட்டியது.
இந்த வானுெலித் தொலைக் காட்சிக் கருவி பல நாடு களில் பெற்றேர்களுக்கு ஒரு பிரச்சினையாக விளங்கி வருகிறது; தமது பிள்ளைகள் படிப்பைக் கவனியாமல் எப்பொழுதும் அதையே பார்த்துக் கொண்டிருக்கிருர்க ளென்று அவர்கள் சஞ்சலப்பட்டு வருகிருர்கள். கூரிய விவேகமும், நல்ல படிப்புமுள்ள தமிழ்ப் பெற்ருேர்களின் கெட்டிக்காரப் பையன் ஒருவன் இந்தக் கருவியிடம் தீவிர மாகப் பற்றுதல் கொண்டுள்ளதன் காரணமாக, வகுப்
27

Page 19
யிலே வெகுவாகப் பின்தங்கி வருவதாக அடுத்த வாரம் நான் நேரில் கேள்விப்பட்டேன். நயமாக வெருட்டியும், அப்பெட்டியைத் துார வைத்தும் பையனைத் திருத்த முடிய வில்லையே என்று அந்தப் பையனின் பெற்ருேர்கள் கவலைப்பட்டார்கள். இதுபோலவே, சிங்கப்பூரிலும் என் நண்பர் ஒருவரின் ஒரே மகன், பெற்ருேர்களுடன் விருந் தொன்றுக்குப் போக மறுத்து, தொலைக்காட்சிப் பெட் டிக்கு முன்னுல் உட்கார்ந்து கொண்டானும். நமது நாட்டில் தெலிவிசன் இன்னமும் வந்து சேரவில்லை. அது வந்தால் இந்தப் பிரச்சினையும்கூட வரும் போலும்.
தேநீரை முடித்துக்கொண்டு, பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுப் போனுேம்; என்றென்றும் இன்பம் பயக்கும் அதன் எழிலைத் துய்ப்பதில் ஒரு மணி நேரத்தைச் செல விட்டோம். விடுதிக்குத் திரும்பியபோது, மாநாட்டு இலங்கைப் பிரதிநிதிகளுக்கென்று விசேஷமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற் பிரசன்ன மளிக்கத் தவறிவிட்டதை அறிந்தேன். அன்று காலை கரும்பல கையில் இதுபற்றி அறிவித்திருந்ததை நான் கவனிக்க வில்லை. பின்னேரம் விடுதிக்குத் திரும்பியபோதுதான் அந்த அறிவிப்பு என்னை முறைத்துப் பார்த்துக் கொண் டிருப்பதைக் கண்டேன். இந்தக் கூட்டத்தில் பலவித புத்திமதிகள் பரிமாறப்பட்டனவாம். அவற்ருல் பயன் பெறும் பாக்கியம் எனக்குக் கிடையாது போய்விட்டது.
28

4. தலைமைப் பேருரை
ஏப்ரல் 18, திங்கட்கிழமை. முந்திய நாள் இலங்கைப் பிரதிநிதிகளுக்கென்று ஒழுங்கு செய்யப்பெற்ற அதி விசேஷ கூட்டத்தைத் தவறவிட்டமைக்குப் பிராயச் சித்தம் செய்யவேண்டும் என்று தோன்றியது. ஆகவே, பொட்டலத்தை அவிழ்த்து, உள்ளேயிருந்த சுற்றுநிரு பத்தை மீண்டுமொருமுறை கவனமாகப் படிக்கலானேன். இன்னு ஒன்பது இனியவை மூன்று என்ற வகையில், பிரதிநிதிகள் செய்யத் தகாதவை இவை, தக்கவை இவையென்று அந்நிருபத்தில் விளக்கப்பட்டிருந்தன. உள்ளூர் வாசிகளின் உணர்ச்சியைப் புண்படுத்தக்கூடிய விஷயங்கள் பற்றி அபிப்பிராயம் சொல்ல முற்படாதீர்கள் என்பது மேற்படி இன்னு ஒன்பதில் ஒன்ருகும். நிருபம் முழுவதும் தடையுத்தரவுகளாக இருக்கக் கூடாதென்ப தற்காக, மலேசியாவில் தங்கி நிற்கும் நாட்களை நல்ல முறையில் பயன்படுத்துங்கள் என்பது போன்ற மூன்று சுதந்திரப் பிரகடனங்களையும் அந்நிருபத்திற் சேர்த் திருந்தார்கள். ஆங்கிலத்தில் எழுதப்பெற்றிருந்த அந்த நிருபத்திலே, வருமுன் காப்போன் என்னுஞ் சொற் ருெடர் ஆங்கில லிபியில் காணப்பட்டது.
இதன் பிறகு, மாநாட்டுக் கையேட்டைப் படிக்கலா னேன். இதற்கு முன்னரும் சர்வதேச மாநாடுகள் சில வற்றில் பிரதிநிதியாகக் கலந்து கொண்டிருந்தமையால், அந்த அனுபவங்களைக் கொண்டு இந்த அனைத்துலக மாநாடு எந்த ஒழுங்குப் பிரகாரம் நடைபெறுமோவென்று
29

Page 20
பரிசீலனை செய்து, முன்னரே ஓர் அபிப்பிராயத்துக்கு வர விரும்பினேன்.
ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஐந்து பொதுத் தலையங் கத்தின்கீழ் பிரிக்கப்பட்டிருந்தன :
1. இலக்கியக் கொள்கை
சமூக வரலாறு ܫ தென் கிழக்காசியக் கலாசாரம் மொழி மொழிபெயர்ப்புத் திட்டங்கள்
i
என்பனவே அவ்வைந்து பிரிவுகளும். இதற்குப் பதிலாக சமூக வரலாறு, தென்கிழக்கு ஆசியக் கலா சாரம் ஆகிய இரண்டையும் ஒரு பிரிவாகவும் இலக்கியக் கோட்பாடு, மொழி ஆகிய இரண்டையும் மற்ருெரு பிரி வாகவும் வகுத்துக்கொண்டு மொழிபெயர்ப்புத்திட்டங்கள் என்ற தலைப்பின்கீழ் தனியாக ஒரு கருத்தரங்கை ஏற் பாடு செய்வது சாத்தியமா யிருந்திருக்குமோ வென்று யோசிக்கலானேன். ஆணுலும் நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டும், விநியோகிக்கப்பட்டும் முடிந்த பிறகு, இப்படிச் செய்திருக்கலாமே, அப்படிச் செய்திருக்கலாமே என்றெல்லாம் யோசிப்பதில் பயனில்லை என்று தோன் றியது.
என்ருலும், கையேட்டைப் படித்துக் கொண்டிருந்த போது, 1958ஆம் ஆண்டில், லாகூரில் நான் பங்கு கொண்ட இஸ்லாமியக் கருத்தரங்கு பற்றிய நினைவும் அங்கு தோன்றிய சில பிரச்சினைகள் இங்கும் தோன் றுமோ என்ற ஐயமும் எழலாயின. ஆராய்ச்சியாளர்கள், தமது கட்டுரைகளின் பொழிப்பை மட்டுமே பேசுவதா யிருந்தாலுங்கூட அவற்றை அலசி ஆராய்வதற்குப்
30

போதிய அவகாசம் இருக்காது என்று எனக்குப்பட்டது. தவிரவும் எல்லோருமே தமக்குக் கொடுக்கப்படும் கால எல்லைக்குள் தத்தம் உரையை முடித்துக் கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது. உரை நீண்டுவிட்டால் விவாதத்துக்குரிய அவகாசம் சுருங்கிவிடும். சபாநாயகர் முன்னுல் ஒரு மணியை வைக்கலாம். ஆணுல் அதன் ஒலி எரிச்சலூட்டுவதாயும், பேச்சாளரைக் கெளரவக் குறை வாக நடத்துவது போலவும் அமையக்கூடும். இதற்குப் பதிலாக, வானுெலி நிலையங்களில் இருப்பதைப்போன்ற செவ்வொளிக் குமிழை உபயோகிக்கலாமெனில், பேச் சாளர் பேச்சின் சுவையில் ஒளிச் சமிக்ஞையைக் கவனி யாமலோ, கண்டும் காணுதவர் போலவோ தொடர்ந்து பேசக்கூடும். பெருந் தொகையானுேர் கலந்துகொள்ளும் மாநாட்டிலே, பேச விரும்பும் ஒவ்வொருவருக்கும் சந்தர்ப்பம் கொடுப்பதோ பேசும் ஒவ்வொருவருக்கும் போதிய அவகாசம் கொடுப்பதோ சபாநாயகருக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கும். அதுபோலவே முகத் தாட்சணியம் பாராமல், நிலை தளராது நடந்து கொள் வதும் அவருக்குக் கஷ்டமாயிருக்கும். ஏனென்ருல், ஒருவர் விவாதத்துக்குப் புறம்பான விஷயம் பற்றிப் பேசத் தலைப்பட்டால் அவரை எப்படித் தடுக்க முடியும் ? அவர் பேசப்போவது விவாதத்துக்குத் தொடர்பற்ற விஷயமென்பதை எப்படி முன்னரே தீர்மானிக்க முடியும்? என்னுடைய அனுபவத்தில், நூற்றுக்கு நூறு திருப்திகர மாக நிறைவேறிய ஒரே மாநாடு லண்டனிலுள்ள சர்வ தேச விவகாரங்களுக்கான கழகம் 1954ஆம் வருடம் லாகூரில் ஏற்பாடு செய்த சாம்ராஜ்ய மாநாடாகும். ஆனல் இம்மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் எண் ணிக்கை வெகு சொற்பமே. உண்மையில் அதை ஒரு வட்டமேசை மாநாடென்றே குறிப்பிடவேண்டும். ஒலி
31

Page 21
பெருக்கி வசதிகூட அங்கு தேவைப்படவில்லை. தவிரவும். விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயமும் சாம் ராஜ்யத்தின் அன்றைய அரசியல், பொருளாதார, கலா சாரப் பிரச்சினைகள் சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருந்தது. ஆகவே சில வரம்புகளுக்குட் கட்டுப்பட்ட தாய் அம் மாநாடு அமைந்திருந்தது. ஆனல், தமிழ்த் துறைகளின் உலக ஆராய்ச்சிக் கருத்தரங்கிலோ பெரு வாரியான பிரதிநிதிகள் கூடியிருந்தார்கள்; பெருந் தொகையான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டி ருந்தன; கால முறைப்படி பார்த்தால் மொகஞ்சதாரோ யுகம்முதல் இன்றைய அணுசக்தி யுகம்வரை ஆராயப்பட விருந்தன. தேசவாரியாக, போர்த்துக்கல் முதல் பிலிப் பைன் தீவுகள் ஈருகப் பரிசீலனைக் குட்படவிருந்தன. இக்காரணங்களினல், தமிழ் மாநாடு, லாகூர் மாநாடு போலக் கச்சிதமாக நிறைவேறுமென எதிர்பார்க்க முடியாதென்று முடிவு செய்தேன். உண்மையில், இத் தகைய ஒரு மாநாட்டில் என்ன சாதிக்க முடியும்? எந்த விஷயத்தையும் முழுமையாக அலசி ஆராய்ந்து ஒரு முடி வுக்கு வர முடியுமென்று சொல்வதற்கில்லை. பல்வேறு நாடுகளிலும், பின்னணிகளிலுமிருந்தும் வாழும் அறி ஞர்கள் ஓரிடத்தில் சந்தித்து, ஒருவரோடொருவர் பழகி, நேரடி உறவுகளை உண்டாக்கிக்கொள்ள வாய்ப்பளிப் பதே இதுபோன்ற மாநாடுகளினல் ஏற்படக்கூடிய நற் பயன் எனலாம் ; இதுவே போதுமானதுங்கூட மா நாட்டிற் சமர்ப்பிக்கப்பட்டிருந்த கட்டுரைகளின் வகையும் தொகையும் ஆழமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன.
இதன் காரணமாக,
! இந்தியாவில் தோன்றிய மொழிகளில் பூகோள ரீதியாக, விசாலமாகப் பரந்துள்ள மொழி தமிழ் ஒன்றே : இந்தியா, இலங்கை, மலேசியா, மொறிவழியஸ், தென்
32

ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள். பர்மா, வியட்னும் முதலிய மாநிலங்களிலும் மக்கள் குழுவினர் மத்தியிலும் அது வழக்கிலிருந்து வருகிறது. வரலாற்று அடிப் படையில் தமிழே இந்திய மொழிகளில் தொன்மை வாய்ந்தது. அதன் பண்டை இலக்கியங்கள் கிறிஸ் சகாப்தத்துக்கு முன்னர் தோன்றியவை."
என்று மேற்படி கையேட்டின் 53ஆம் பக்கத்தில் காணப்பட்ட குறிப்பு அர்த்தபுஷ்டியுள்ளதாக எனக்குத் தோன்றியது. தென் ஆபிரிக்கா பற்றிய குறிப்பைக் கண்டபோது, 1954இல் அங்கு எனக்கு ஏற்பட்ட அனுபவமொன்று நினைவில் வந்தது. தென் ஆபிரிக் காவின் வாணிபத் தலைப்பட்டினமாகிய ஜொஹனுஸ் பேர்க்கிலுள்ள அதி பிரபலமான ஹோட்டலில் அந் நிகழ்ச்சி நடந்தது. அந்த ஹோட்டலிலே கறுப்பர்கள் வேலை செய்துவந்த போதிலும் வெள்ளையரல்லாத ஒருவர் தானும் வாடிக்கையாளராக அதுவரை அனுமதிக்கப்பட்ட தில்லை. நாங்கள் மூவர் மட்டும் விதிவிலக்காக அனுமதிக் கப்பட்டிருந்தோம். பாராளுமன்ற உறுப்பினராயிருந்த காலஞ்சென்ற பேர்னட் அலுவிஹார, செனட்டராயிருந்த நான், பாகிஸ்தான், பஞ்சாப் சட்டசபைச் சபாநாயகரா யிருந்த காலஞ்சென்ற ஹலிஃபா சுஜாஹாத்தீன் ஆகிய மூவரும் கிழக்கு ஆபிரிக்கா, நைரோபியில் நடைபெற்ற சாம்ராஜ்யப் பாராளுமன்றச் சங்க மகாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் தென் ஆபிரிக்காவுக்கு வரும்படி அழைக்கப்பட்டிருந்தோம். ஹோ ட் ட லில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பரிசாரகன் ஒருவன் தென்னிந் தியணுக இருக்கவேண்டுமென்று எனக்குத் தோன்றவே, அவனேடு தமிழில் பேசினேன். தமிழ் கேட்ட அவன் முகம் ஆச்சரியத்தால் மலர்ந்தது; அது கண்டு என் உடல் சிலிர்த்தது. தென் ஆபிரிக்காவிலே, குறிப்பாகத்
33

Page 22
தென் பகுதியிலே ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருவதாக அவன் அறிவித்தான். அவர்களின் மூதாதை யர்கள் கரும்புத் தோட்டங்களில் வேலைதேடிச் சென்ற வர்களாவர். சூழலை மறந்தவர்களாக, சொற்ப நேரம் நாங்கள் தமிழால் கட்டுண்டு நின்றபோது பாரதியாரின் * கரும்புத் தோட்டத்திலே ' என்னும் கவிதையை நினைத்துக்கொண்டேன்.
அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு மேற்கு நாட்டைச் சேர்ந்த கீழ்த்திசைக் கலை வல்லுநர் களும், ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன் தீவுகள் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் வந்திருந் ததை அவதானித்தபோது, உலகின் பல்கலைக்கழகங் களிலும், கலைக்கூடங்களிலும் தமிழின் அந்தஸ்து ஓங்கி வளர்ந்து வருவதை உணர முடிந்தது. ஒரு கால்ட்வெல், ஒரு போப் ஐயர் என்றில்லாமல், பலர் தமிழுக்குத் தொண் டாற்றி வருகிருர்கள் என்பது தெளிவாயிற்று.
மாநாட்டு மண்டபம், கலைப்பண்பு மிளிரும் வகையில் சோடிக்கப்பட்டும் உபகரணங்கள் பொருத்தப்பெற்று மிருந்தது. ஆராய்ச்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரை களின் ஆசிரியர்கள் மேடையில், மாநாட்டுத் தலைவர், விவாத-சபாநாயகர் ஆகியோரின் இரு மருங்கிலும் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேடையின் பின்னணியை மாநாட்டிற் பிரதிநிதித்துவம் பெற்ற பல்வேறு நாடுக ளினதும் தேசியக் கொடிகள் அலங்கரித்தன.
காலை 9-30 மணியளவில், பாரதியாரின் பேர்த்தி குமாரி விஜயபாரதியின் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் " என்று சங்கநாதம் செய்த பாரதியின் பேர்த்தி, அவரது கனவை
34

நனவாக்கும் வகையிலமைந்த இந்த மாநாட்டில் வாழ்த் துப்பா பாடியமை மிகவும் பொருத்தமானதே.
அன்றைய கருத்தரங்குக்கு வண. சேவியர் ஸ்டனிஸ் லாஸ் தனிநாயகம் அவர்கள் தலைமை தாங்கினுர்கள். மாநாட்டை ஏற்பாடு செய்ததன் நோக்கம் அறிவின் எல்லையை விரிவுபடுத்துதலே என்று விளக்கிஞர். * என்னை நன்ருய் இறைவன் படைத்தனன், தன்னை நன்ருய்த் தமிழ் செய்யுமாறே" என்னும் மேற்கோள் அவரது உரையில் இடம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஃபிலியோஸா அவர்களின் தலைமைப் பேருரை ஆரம்பமாயிற்று.
" தாய்லாந்திலும் கம்போடியாவிலும் இராஜ இரா ஜாங்க வைபவங்களை நிறைவேற்றுவதற்குப் பிரா மணர்கள் நியமிக்கப்பட்டு வந்தார்கள். இப்பிராமணர்கள் தமது சடங்காசாரங்களை விளக்கும் சமஸ்கிருத ஏடுகளைக் கிரந்த எழுத்துக்களிலேயே எழுதினர்கள். இவ்வெழுத் துக்கள் தமிழ் நாட்டுக்கே உரியவை. இவர்களின் முன்ஞேர்கள் இராமேஸ்வரம், அல்லது இராமநாதபுரம் போன்ற இடங்களிலிருந்து குடிபெயர்ந்து சென்றவர்கள் என்பது ஐதீகம். சிலர் தாம் கைலாசத்திலிருந்து வந்த வர்கள் என்று உரிமை பாராட்டிஞர்கள். இதற்கு அர்த்தம், இவர்களின் மூதாதையர்கள் தர்மபுரம், திருவா வடுதுறை ஆகியவற்றின் கைலாசம் அல்லது கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பதே. இவர்களை தர்ம சாஸ்திரத்தின் கருத்துப்படி பிராமணர் எனக் கொள்ள முடியாது. ஆனல் தென்கிழக்கு ஆசியாவில் இந்துக் குரவர்கள் பிராமணர்கள் என்றே தொன்றுதொட்டு அழைக்கப்பட்டு வந்திருக்கிருர்கள். இதன் காரணமாக, சீன மொழியிலும், அறபு மொழியிலும் பிராமணர்
35

Page 23
என்னும் சொல் இந்திய இந்துக்களைக் குறிப்பதைக் காண்கிருேம். கம்போடியாவில் இப்பிராமணர்கள் நவீன உச்சரிப்பின்படி பாக்கு என்றும் பழைய மரபின்படி பக்குவு என்றும் குறிப்பிடப்படுகிருர்கள். பக்குவ என்னுஞ் சொல் பக்குவர் என்னுந் தமிழர் சொல்லுடன் தொடர்புடையதென்பதை நாம் இலேசாகக் காண முடிகிறது. சைவ சித்தாந்தத்தின்படி (மனப்) பக்குவ மடைந்தவரே வேத, ஆகம மந்திரங்களை ஒதவும் சமயச் சடங்குகளை நிறைவேற்றவும் தகுதியுடையவரென்பதும் இங்கு நோக்கத்தக்கது.
* இவர்களுடைய நூல்களிலே வேத, ஆகமக் கருத் துக்கள் விரவிக் கிடக்கின்றன. தாய்லாந்தில் நடை பெறும் திருப்பாவை-திருவெம்பாவை விழாவைப்பற்றி, பேராசிரியர் மீனுட்சிசுந்தரஞர் தமிழிலே ஒரு நூல் இயற்றியிருக்கிருர்கள். இம்மாநாட்டிலே அ வ் விழா வினைப்பற்றி மேலும் விவரங்கள் வெளியிடவிருக்கிருர்." என்று ஃபிலியோஸா அவர்கள் தமது பேருரையின்போது சொன்னுர்,
* தமிழர்கள் சமஸ்கிருத மொழியைப் பிரசாரக் கருவி யாகவே உபயோகித்தார்கள். கலைச்சொற்கள் பிரகட னங்கள் உட்பட்ட பொதுப்படையான கருத்துப் பரிவர்த் தனைகளுக்கு அவர்கள் சமஸ்கிருத மொழியைப் பயன் படுத்தினர்கள். சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழி களிலும் அவர்கள் பாண்டித்தியம் பெற்றிருந்த போதிலும் வெளிநாடுகளுக்குச் சென்ற சமயங்களில் சட்ட முறைப் படியான கருமங்களுக்கும் காரியார்த்தமான கருமங் களுக்கும் சமஸ்கிருதத்தையே கையாண்டார்கள் ? என்றும் அவர் குறிப்பிட்டார்.
36.

இந்தோனேஷியா பற்றிக் குறிப்பிட்ட ஃபிலியோஸா அவர்கள்,
* தமிழர்கள் வாயிலாக விசேஷ அர்த்தமுள்ள அல்லது அர்த்த பேதமுள்ள வேறு பல சமஸ்கிருதச் சொற்களும் பரவின என்பதற்குத் தென்கிழக்கு ஆசியா விலும் இந்தோனேஷியாவிலும் பிற சான்றுகளும் உண்டு. எனவே இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசியா -வுக்கும் உண்டான உறவுகளில் தமிழர் வகித்த பாகம் தனித்தன்மை வாய்ந்ததாக இல்லாவிட்டாலும் மகத் தானது எனலாம். தமது பண்பாட்டைப் பரப்புதற்குச் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தினர் என்பதற்காக, அவர் களது தொண்டினை நாம் குறைத்து மதிப்பிடலாகாது" என்ருர்,
அவரது பேருரையை அடுத்து, பல கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. எல்லாமே தென்கிழக்கு ஆசியக் கலாசாரம் என்னும் பொதுத் தலைப்பின் கீழ் அடங்கியன வாக அமைந்திருந்தன.
கருத்தரங்கின் முதற் கட்டம் தேநீர் இடைவேளைக்
காக காலை 11 மணிக்கு முடிவடைந்தது. 11-30 வரை இடைவேளை. இந்த மாநாட்டில் எந்த விஷயம் பற்றியும் முழுமையாக ஆராய்வது சாத்தியமாகாதென்று காலையில் நான் எண்ணியது சரியென்பது அப்பொழுது தெளி வாயிற்று. சக பிரதிநிதிகள் சிலர் இதையிட்டு அதிருப்தி யடைந்திருந்தார்கள். ஆயினும் அவர்கள் அவ்விதம் குறை கூறியது சரியல்லவென்று எனக்குப் பட்டதால் நான் நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்ட முறையை ஆதரித்துப் பேசினேன். மாநாட்டின் பிரதான குறிக்கோளின் பகைப்புலத்திற் பார்த்தால்,சில கட்டுரைகளின் சார்பாகத் தீர்த்தமை தவிர்க்க முடியாததொன்றென்றே நான்
37

Page 24
கருதினேன். இந்த அரைமணிநேர இடைவேளையில், பிரதிநிதிகள் யாவரும் மனந்திறந்து தமது கருத்துக் களைத் தெரிவித்தார்கள். சம்பாஷணை உருவத்தில் நடை பெற்ற, இந்த இடைவேளைச் சம்வாதங்கள் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் நடைபெறவிருந்த விவாதங்களிலும் சுவைமிக்கதாய் இருந்தன. நான் பங்குகொண்ட பிற மாநாடுகளிலும் இத்தகைய அனுபவமே எனக்குக் கிடைத்தது.
இரண்டாவது கூட்டத் தொடர் சுமார் 11-30 மணிக்குத் தொடங்கியது. பி. ப. 2 மணிவரை நீடித்தது. இந்தக் கருத்தரங்கில் இலக்கியத் திறனுய்வு பற்றிய கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. மதிய போசன இடை வேளைக்குப் பிறகு மீண்டும் 2-45 மணிக்குக் கருத்தரங்கு ஆரம்பமாயிற்று. இந்தக் கருத்தரங்கு ஆரம்ப முதல் இறுதிவரை தமிழிலேயே நடைபெற்றது.
38

5. பொன் குஞ்சு
1966 ஏப்ரல் 19 செவ்வாய்க்கிழமை. அதிகாலையில்,
படுக்கையிலிருந்தபடியே, முந்தியநாள் நிகழ்ச். சிகளை மனத்துள் அசைபோடலானேன். ஃபிலியோஸா அவர்கள் தமது தலைமைப் பேருரையின்போது, Tamils, என்னுஞ் சொல்லுக்குப் பதிலாக ஏன் Tamilians என்னுஞ் சொல்லை உபயோகித்தார் ? இவ்விரண்டு, சொற்களுக்கும் கருத்து ஒன்று தானு அல்லது நுணுக்க மான அர்த்தபேதமுண்டா? என்று யோசித்தேன். இது பற்றி, மாநாட்டுக்கு வந்திருந்த எனது நண்பர்களிடம் இடைவேளையில் விசாரிக்க வேண்டுமென்று முடிவு செய் தேன். ஒரு குலத்தையோ, இனத்தையோ சார்ந்தோர். மட்டுமே ஒரு மொழியை வழங்கலாம் என்ற நியதியில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. ஆங்கில எழுத்தாளர்கள் எல்லோரும் ஆங்கிலேயரல்லவே! வட இந்தியர்தான் சமஸ்கிருதக் கிரந்தகர்த்தாவாயிருத்தல் வேண்டு மென்ருே அறபிகளே அறபி எழுத்தாளராயிருத்தல்' வேண்டுமென்ருே விதியெதுவுமில்லை; வரலாறுமில்லை. அதுபோலவே தமிழர் வடமொழியில் எழுதலாம், பார சீகர் அறபில் எழுதலாம். குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஒரு மொழி எத்தகைய ஆதிக்கமும் அந்தஸ்து மடைந் திருக்கிறதோ, அதற்கேற்ப அதன் வழக்கும் ஆல் போலத் தழைத்து அறுகுபோல வேரூன்றக்கூடும்.
கையேட்டைப் பார்த்ததில், மாநாட்டுக்குக் கட்டு, ரைகள் சமர்ப்பித்திருந்தோரது பட்டியலின் முதற் பக்கத் திலேயே, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பர்மா ஆகியவற்
39

Page 25
றுக்கு அடுத்ததாக, இலங்கை இடம் பெற்றிருந்த தையும், 40 பேர்கொண்ட இலங்கையருள் என் பெயர் முதலாவதாக எழுதப்பெற்றிருந்ததையும் கண்டேன். ஆங்கில அகரமாகிய A யுடன் என் பெயர் ஆரம்பிப்ப தால் இந்த முதன்மை ஸ்தானம் எனக்குக் கிடைத் திருந்தது. நான் மாணவனுயிருந்த காலத்தில் யூனியன் கல்லூரி விடுதிச்சாலை அதிபரவர்கள் எ. எம். அப்துல் அஸிஸ் என்னும் என் பெயரை எ. எம். எ. அஸிஸ் என்று சுருக்காது விட்டிருந்தால் இன்னும் நன்ருயிருந் திருக்கும். இந்தக் காலத்தில் மாணவர்கள் ஆயிரக் கணக்கில் பரீட்சைகளுக்குத் தோற்றுகிருர்கள்; பரீட் சைப் பெறுபேறுப் பட்டியல்களும் நீண்டுகொண்டே போகின்றன. பெற்ருேர்கள் இவர்களுக்கு 'A' என்னும் முதலெழுத்துள்ள பெயர்களைச் சூட்டினுல் சித்தி யெய்து வோரின் பட்டியலில் அவர்கள் தம் பெயரைச் சுலபமாகக் கண்டு பிடிப்பதற்கு வசதியாயிருக்கும். ஆணுல் நாள், நட்சத்திரம் பார்த்துத் தமது குழந்தைகளுக்கு நாமஞ் சூட்டும் பெற்ருேருக்கு இது முடியாத காரியம் !
மாநாட்டில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட விருந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளின் பட்டியலைக் கவன மாகப் படித்தேன். அவற்றில் சில ஏப்ரல் 22 வெள்ளிக் கிழமையன்று முதலாவது கருத்தரங்கில் ஆராயப்பட விருந்த எனது கட்டுரையுடன் நெருங்கிய அல்லது ஓரளவு தொடர்புடையனவாக இருந்ததைக் கவனித் தேன். "பத்தொன்பதாம் நூற்றண்டின் ஒன்பதாவது பத்தாண்டில் வாழ்ந்த இலங்கை முஸ்லிம்களின் சில சிறப்பியல்புகள்" என்பது எனது ஆராய்ச்சிக் கட்டு ரையின் தலைப்பாகும். 7ஆம் நூற்ருண்டின் இறுதிக்கு முன்னர் முஸ்லிம்கள் இலங்கையிற் குடியேறியமை, அறபுத் தமிழ் இலக்கியத்தின் தோற்றம், 15ஆம் நூற்
40

ருண்டில் இந்து மகா சமுத்திரத்தில் தென் இந்திய? இலங்கை முஸ்லிம்கள் வகித்த உயரிய ஸ்தானம், இதன் விளைவாக, 1414இல் மலாக்கா மன்னர் இஸ்லாத்தைத் தழுவியமை ஆகிய விவரங்கள் யாவும் இலங்கை முஸ்லிம் களின் வரலாற்றைச் செவ்வனே உய்த்துணர்வதற்குத் துணைபுரிவனவாகும். (1) தென்கிழக்காசிய வரலாறும் கலாசாரமும் (2) மேனுட்டார் தமிழுக்கு ஆற்றிய தொண்டு (3) 1500க்குப் பிற்பட்ட தென்கிழக்கு ஆசியா (4) தற்காலச் சமூக அமைப்பு (5) வர்த்தகமும் வெளி நாட்டு உறவுகளும் ஆகிய தலையங்கங்களிற் சேர்க்கப் பெற்றிருந்த கட்டுரைகளிற் சில, முஸ்லிம் சமுதாயம் பற்றிய எனது ஆராய்ச்சிக்கு விசேஷமாகப் பயன்படக் கூடியனவாய் இருந்தமையை அவதானித்தேன்.
மாநாடு தினமும் நடந்தேறிய விதத்தைப் பார்த்த போது அதன் ஒழுங்கு முறைபற்றி நான் கொண்டிருந்த முடிவுகள் சில ஊர்ஜிதமானதைக் கண்டேன். பொது வாகக் கூறுவதானுல், கருத்தரங்கில் ஆராய்ச்சிக் கட்டு ரைகளின் பொழிப்பை மட்டுமே சொல்வதால் கட்டுரை யாசிரியருக்கோ கேட்போருக்கோ பயன் உண்டாகு மென்று எதிர்பார்க்க முடியாது. கட்டுரையாசிரியர் தமது முடிபுகளை ஸ்தாபிப்பதற்கு வேண்டிய ஆதாரங்களைத் தெளிவாக விளக்குதற்குப் பொழிப்புரை இடங்கொடா தென்பது ஒருபுறம் ; ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப் பட்ட கட்டுரைகளை ஆற அமரப் படித்தாலன்றிப் பொழிப் புரை கேட்போர் மனதில் தெளிவேற்படாதென்பது மறுபுறம். பிரதிநிதிகள் சிலருக்கு மேலுமொரு சங்கடம் உண்டாகியிருந்தது; கட்டுரைகள் சில அவர்களுக்குக் கிடைக்கவேயில்லை ; வேறு சில காலவரம்பில்லாமல் அவ்வப்போது விநியோகிக்கப்பட்டன. இவற்றிற்குக் காரணம், கட்டுரைகள் பல குறித்த தவணைக்குள்-1966
41

Page 26
பெப்ரவரி 28க்கு முன்-அதாவது, மாநாட்டுக்கு எட்டு வாரத்துக்கு முன் கிடைக்கப் பெருமையாயிருக்கலாம்.
கட்டுரைகளை யல்லாவிட்டாலும் அவற்றின் பொழிப் புக்களையாவது ஒரு தொகுப்பாக்கி, பிரதிநிதிகளுக்கு, வழங்கப்பட்ட பொட்டலத்தோடு சேர்த்துக் கொடுத்திருக் கலாம். கட்டுரைப் பிரதிகளை, அவையவை பரிசீலனைக்கு எடுக்கப்படுவதற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் முந்தி விநியோகித்திருக்கலாம். கட்டுரைகள் பெப்ர வரிக்குப் பிறகு கிடைத்தமையாலே தான் சங்கடமுண்டா யிற்று என்று நான் ஊகித்தது சரியா என்பதைத் தனிநாயகம் அடிகளாரிடமோ கலாநிதி எஸ். அரச ரத்தினம் அவர்களிடமோ விசாரித்திருக்கலாம்.இருவரும் பேராதனைப் பல்கலைக்கழகத்திற் பணியாற்றிய காலத்தில் எனக்கு வெகு பழக்கமானவர்களாயிருந்தார்கள். ஆணுல் அவர்கள் இருவருமே மாநாட்டு அலுவல்களில் ஒடியாடித் திரிந்துகொண்டிருந்ததைப் பார்த்ததும் நானும் ஏன் தொல்லை கொடுக்க வேண்டுமென்று நினைத்து ஒதுங்கிக்.
கொண்டேன்.
மலாயாவில் இஸ்லாம் பரவுதற்குத் தென்னிந்திய முஸ்லிம்கள் (இந்தக் காலப்பிரிவில் தென்னிந்திய முஸ்லிம்கள் என்னுஞ் சொற்ருெடரில் இலங்கை முஸ்லிம் களும் அடங்குவர்.) பெருமளவிற் காலாயிருந்தார்க ளென்றும் மலாக்காவில் இஸ்லாம் அரச மதமாக ஸ்தா பிதம்பெற்ற ஆண்டாகிய 1445 மலாயாவின் இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமான வருடமென்றும் நான் படித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வாசித்த நூல்களும் தெளிவு படுத்தின. மலாக்கா மன்னர் தமது மனைவி மக்கள் அனைவருடனும் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டமை பற்றி தோமே பிரெஸ் (Tome Pires) என்ற போர்த்துக்
42ے

கேயச் சரித்திராசிரியர் 1512-1515இல் எழுதிய Suma, Oriental என்ற வரலாற்று நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பு மூலமாக அறிந்திருந்தேன். *தானும் தன் அரண்மனையைச் சேர்ந்தோரும் "மூர்"களானதோடு நில்லாமல், தன் பிரஜைகள் அனைவரையும் அவன் (மலாக்கா மன்னன்) "மூர்'களாக்கினுன் " என்று மேற்படி நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (முஸ்லிம் என்ற அர்த்தத்திலேயே " மூர்" என்னுஞ் சொல்லை தோமே பிரெஸ் கையாண்டிருக்கிருர்.) ஆணுல் மாநாட்டுக் கட்டுரைகளையும் வேறு சில நூல்களையும் படித்ததன் பயனுக, தென் இந்தியாவிலிருந்தே, குறிப்பாக, சோழ மண்டலக் கரையோரப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் மூலமாகவே, இஸ்லாம் மலாக்காவிற் பரவிற்றென்றும், குஜராத்திலிருந்து அது பரவவில்லையென்றும் தெரிந்து கொண்டேன். மலாக்கா ஒரு சாம்ராஜ்யமானதைத் தொடர்ந்து, இஸ்லாம் மலாயாக் குடாநாடு முழுவதிலும் தென்கீழ்ச் சுமாத்திரா, ஜாவா ஆகிய இடங்களிலும் பரவலாயிற்று. வட சுமாத்திராவிற்கூட சோழமண்டலக் கரை வணிகர்கள்--சோழியர்கள்-மார்க்க போதகர்கள் ஆகியோர்கள் மூலமாகவே இஸ்லாம் பரவியிருக்க வேண்டுமென்பது வரலாற்ருசிரியர்களின் கருத்தாகும். இந்தக் கண்ணுேட்டத்திற் பார்த்தால், இந்து மகா சமுத்திர வாணிபத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் தென் இந்திய முஸ்லிம்கள் வகித்த இடம்பற்றிப் போது மானளவு ஆராய்ச்சி நடைபெற வேண்டியது அவசிய மென எனக்குத் தோன்றுகிறது. இலங்கை திரும்பியதும் இது விஷயம்பற்றி ஆராய்வது என்று தீர்மானித்துக் கொண்டேன். மேலும் மாநாட்டுக்கு வந்திருந்த மற்ருெரு, முஸ்லிம் பிரதிநிதியாகிய ஜனுப் கே. பி. எஸ். ஹமீது அவர்களை இத்துறையில் எனக்கு உதவி செய்யுமாறும்
43

Page 27
கேட்டுக் கொண்டேன். ஆகாசவாணியின் திருவனந்தபுர நிலையத்தில் பணியாற்றிவரும் இவரும் நானும் மட்டுமே மாநாட்டிற் பங்கு கொண்டிருந்த முஸ்லிம் பிரதிநிதிகள். ஜணுப் ஹமீது அவர்கள் சதாவதானி மகாமதி ஷைகுத் தம்பிப் பாவலரின் மகன் என்றறிந்தேன். மேற்படி விஷயம் பற்றிய ஆராய்ச்சிக்குத் தம்மாலான சகல ஒத்தாசைகளையும் செய்து தருவதாகவும் கேரள பல்கலைக் கழகத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பணி யாற்றும் வரலாற்றுப் பேராசிரியர்களின் உதவி எனக்குக் கிடைக்க வழி செய்வதாகவும் ஹமீது அவர்கள் உறுதி யளித்தார்கள்.
எனது கட்டுரையைப் பரிசீலனை செய்த கருத்தரங் குக்கு ஜப்பான், டோக்கியோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ரீ மற்குய் தலைமை வகித்தார். விவாத அரங்கின் சபாநாயகர் ஐக்கிய அமெரிக்க நாட்டு, விஸ் கொன்ஸின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆர். ஃபிரிகென்பேர்க் அவர்கள். மற்குய் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஃபிரிகென் பேர்க் அவர் களைச் சந்தித்துக் கருத்தரங்கின் ஒழுங்குப் பிரமா -ணங்கள் பற்றிக் கலந்துரையாடிய பின்னர், கருத் தரங்கிற் பங்குபெறவிருந்த பிரதிநிதிகளைச் சந்தித்து, கொடுக்கப்படும் கால எல்லைக்குள் தத்தம் உரைகளை முடித்துக்கொள்ள முயலுமாறு கேட்டுக்கொண்டார். கட்டுரைகளை வாசித்த பின்னர் நடைபெறவிருந்த விவா தங்களுக்குக் கூடிய அளவு அதிக நேரமளிப்பதே அவர் நோக்கம். மேலும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட விருந்த கட்டுரைகளில் நான்கு, பிரத்தியேகமாக இலங் கையைப் பற்றியனவாக இருந்தன. எனவே இந்நான்கு கட்டுரைகளின் கர்த்தாக்களும் பூர்வாங்கமாகக் கூடிக் கலந்துரையாடுதல் நல்லதென்றும், கட்டுரைகளை விவா
4生、

திக்கும் விஷயத்தில், மேடையில் வைத்து அறிமுகஞ் செய்யும் எண்மருக்கும் முதலிடமளிக்கப்படல் வேண்டு மென்றும் கலாநிதி மற்குய் அவர்கள் அபிப்பிராயம் தெரி வித்தார். இதைக் கேட்ட நான், என் கட்டுரையின் பொழிப்பை எவ்வளவு சுருக்கமாக வேண்டுமானலும் , சொல்லத் தயார் என்று உடனே பதிலளித்தேன். இலங்கைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பீ. பஸ்தியாம் பிள்ளை அவர்கள், ஒரு நிமிஷத்துக்குள் பொழிப்பைச் சொல்ல முடியுமோவென்று பகடியாகக் கேட்டார். ஒரு நிமிடத்தில் அல்ல ஒரு சில விநாடிக்குள் கூட முடியு. மென்று பதில் சொன்ன நானும், பகடியாகப் பின்வரு மாறு சுருக்கிச் சொல்லியும் காட்டினேன்: ' 19ஆம் நூற்ருண்டு இலங்கை வரலாற்றினைப் பூரணமாக ஆராய் வதற்கு இன்றியமையாத மூலாதார ஏடாக விளங்கும் * முஸ்லிம் நேசன்" முதன் முறையாக இவ்வாராய்ச்சிக் கட்டுரையில் அவ்விதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது." எனினும் கருத்தரங்கில் எனக்கு ஐந்து நிமிட அவகாசம் கிடைத்தது. நான் நான்கு நிமிடத்துள் என் பொழிப் புரையை முடித்துக்கொண்டேன்.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள். அர்த்தபுஷ்டியுள்ள இந்தப் பழமொழியை ஆதாரமாகக் கொண்டு, மாநாட்டுக்கு நான் ஆங்கிலத்தில் சமர்ப்பித்த பொழிப்புரையை இங்கு தருகிறேன் :
* இங்கு பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் கட்டுரையின் தலையங்கம் 'இலங்கை முஸ்லிம் சமுதா யத்தினரின் சில சிறப்பியல்புகள் " என்பது. இந்தக் கட்டுரையில் 1880-1889 வரையிலான சுமார் பத்தாண்டுக் காலம் சற்று விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது. இலங்கை முஸ்லிம் சமுதாயத்தினரின் ஸ்தானத்தையும் அடிப்
45

Page 28
படைச் சிறப்பியல்புகளையும் வரையறுப்பதற்கும் இனப் பண்புகள் அல்லது மொழிப் பண்புகளைப் பார்க்கிலும் மார்க்கப் பண்புகளே இவர்களைப் பிணைத்திருந்தன என் பதை நிறுவுதற்கும் இவர்களின் ஆதிவரலாற்றை ஆராய்தல் அவசியம். ஏழாம் நூற்ருண்டு முடிவடைவ தற்கு முந்திய காலப் பிரிவில் இலங்கை வந்து சேர்ந்த இவர்கள், 15ஆம் நூற்ருண்டில் சீரும் சிறப்புமிக்க ஒரு சமுதாயமாக விளங்கிஞர்கள். 16ஆம் நூற்ருண்டில் இலங்கையைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர், வாணிபத் துறையில் பலம் வாய்ந்த போட்டியாளர்களாகவும் மார்க்கத் துறையில் பரம வைரிகளாகவும் இவர்களைக் கருதிஞர்கள். ஒல்லாந்தர் காலத்திலும் இந்நிலை மாற வில்லை.
* பிரித்தானியர் காலத்தில் இவர்கள் கொடுமைப் படுத்தப்படவில்லை. ஆயினும், கல்வி, வேலை வாய்ப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் இவர்கள் அதிகம் பயனடையவில்லை. இதற்குப் பிரதான காரணம், மேற் குலகப் பண்புகள் கிறிஸ்தவ மதத்துடன் இரண்டறக் கலந்தவை என்று அர்த்தம் செய்து, அப்பண்பாசாரங்கள் தம்மிடையே புகாது எதிர்த்து வந்தமையாகும். இதன் விளைவாக அவர்கள் கல்வித்துறையில் பின்தங்கியவர் களாயும் பொருளாதாரத் துறையில் தேக்கநிலை யடைந் தவர்களாயும் மார்க்கத்துறையில் வைதீக மனப்பான்மை கொண்டவர்களாயும் அறிவாற்றலில் மந்தமடைந்தவர் களாயும் கலரசாரத்துறையில் ஒதுங்கியவர்களாயும் அரசியல்துறையில் கணக்கிலெடுக்கப்படாதவர்களாயும் விளங்கி வந்தார்கள்.
"ஆயினும் அவர்களது சமுதாயப் பண்பும், கலா சாரத் தனித்துவமும் நிலைத்து நின்றன. இதற்குப்
46

பிரதான காரணம், ஐரோப்பியரின் வருகையால் இலங் கையின் வெவ்வேறிடங்களில் குடிபெயர்ந்து வாழ நேர்ந்தபோதிலும், ஜும்ஆப் பள்ளிவாசல்களைச் சுற்றிப் படர்ந்திருந்த மதச்சார்புடைய தமது சமூக அமைப் பினைக் கடடிக்காத்து வந்தமையாகும். முஸ்லிம் பகுதி தோறும் அமைந்திருந்த இந்த ஜூம்ஆப் பள்ளி வாசல்கள், த லை மை ப் பீட மென்று சொல்லத்தக்க அமைப்பு முறையோ நுணுக்கமான சட்டதிட்டங்களோ இல்லாமல், சுயாதீனமாகவே செவ்வனே இயங்கி வந்தன.
"பத்தொன்பதாம் நூற்ருண்டின் ஒன்பதாம் சகாப் தத்தில் இவர்களிடையே விழிப்புணர்ச்சி உண்டாயிற்று. இவ்விழிப்புணர்ச்சியின் சின்னமாக, 1884இல் முதலாவது ஆங்கில-முகம்மதிய பாடசாலை ஸ்தாபிதமாயிற்று. இதைத் தொடர்ந்து சட்டசபையில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரும் பிரதிநிதியாயிருத்தல் வேண்டுமென்ற கிளர்ச்சி உண்டாயிற்று. அயராத இக்கிளர்ச்சியில் முஸ்லிம்கள் வெற்றியும் பெற்ருர்கள். இதையடுத்து, அரசாங்க ஒப் புதல் பெற்ற முஸ்லிம் விவாகப் பதிவுச் சட்டத்தை ஆதரிக்கத் தலைப்பட்டார்கள்.
" இம்மாற்றத்திற்கு ஏதுவாயமைந்த அம்சங்களைச் சுதேச, இந்திய, இஸ்லாமியப் பண்புகள் எனப் பொதுப் படையாக விவரிக்கலாம். பெளத்தர்களிடையே வண. ஹிக்கடுவ பூரீ சுமங்கல நாயக தேரோ, கேணல் ஒல் கொட் ஆகியோரும் இலங்கை இந்துக்கள் மத்தியில் பூநீலபூரீ ஆறுமுக நாவலரும், இந்தியாவில் அலிகார் இயக்கத்தின் தந்தையாக விளங்கிய செய்யத் அஹ்மத் ஹானும் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி இலங்கை முஸ் லிம்கள் மத்தியில் எதிரொலித்தது. மிஸ்றின் தேசிய
47

Page 29
எழுச்சிக்கு வித்திட்டவரும், மிஸ்றிலிருந்து தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டு 1883 முதல் 1901 வரை இலங் கையில் வாழ்ந்தவரும், அறபி பாஷா என்று அழைக்கப் பட்டவருமான அஹமது அல்ஒருபி அல்மிஸ்றி அவர் களின் சேவையும் இங்கு குறிப்பிடப்படல் வேண்டும்.
** இக்காலப் பிரிவில் இலங்கை முஸ்லிம்களின் தலைவராக விளங்கியவர் சித்தி லெவ்வை அவர்களாவர். 1939இல் தோன்றிய இவர் 1899இல் மெளத்தானுர். இவர் 1882இல் 'முஸ்லிம் நேசன்" பத்திரிகையைத் தோற்றுவித்தார். அக்கால இலங்கை, இந்திய முஸ் லிம்களின் மத்தியில் பெரு வழக்கிலிருந்த அறபுத் தமிழ் நடையில் எழுதப்பட்ட இந்த வார சஞ்சிகையை 1889 வரை சித்திலெப்பை நடத்தி வந்நார். முஸ்லிம்கள் மத்தியில் வெற்றிபெற்ற முதலாவது பத்திரிகை வெளி யீட்டு முயற்சி இதுவே. உருவத்திலும் உள்ளடக்கத் திலும் ஆறுமுக நாவலரின் உரைநடையாலும் கண்டனப் பிரசுரங்களாலும் உரம்பெற்ற இம் 'முஸ்லிம் நேசனு'க் குச் சென்னை, புதுச்சேரி, பிஞங்கு, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலெல்லாம் சந்தாதார ரிருந்தார்கள். இதன் சமகாலத்தில் பிணுங்கிலிருந்து 4 வித்தியா விசாரிணி " வெளிவந்து கொண்டிருந்தது. நாகூர் தர்கா வித்துவான் குலாம் காதிறு நாவலர் நடத்திவந்த இப்பத்திரிகை சில சமயங்களில் முஸ்லிம் நேசனுடன் வாதப்பிரதிவாதங்களி லீடுபட்டது. இந்த * முஸ்லிம் நேச னே " எனது ஆராய்ச்சிக் கட்டுரையின் மூலாதார ஏடாகும்.
'சிவப்பு லைட்டை இன்னும் காணவில்லை என்ற அகமகிழ்ச்சியுடன் குறித்த கால எல்லைக்கு முன்பே என் உரையை முடித்துக்கொள்கிறேன்."
48

6. வெள்ளிக்கிழமை
1966 ஏப்ரல் 22, வெள்ளிக்கிழமை. விவாத வேளையில் எனது கட்டுரை சம்பந்தமாக அதிகம் கேள்விகள் கேட்கவில்லை; அதற்கு அவகாசமும் இருக்கவில்லை. என் பொழிப்புரை வாசிக்கப்படுவதற்குச் சற்று முன்னர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த செல்வி பிரென்டா பெக் அவர்கள் "கோயம்புத்துரர் ஜில்லாவி லுள்ள செல்வாக்கு மிக்க மக்களின் சமூகப் பண்புகள்" என்னும் பொருள் பற்றிய கட்டுரை ஒன்றினைச் சமர்ப்பித் திருந்தார். இந்தப் பெண்மணி, என்னுடைய பொழிப் புரையின் முடிவில், இலங்கைக் கிராமங்களில் சோனக ரும் மலாயரும் இணைந்து வாழ்ந்ததைப்போல, யாழ்ப் பாணத் தமிழரும் இந்தியத் தமிழரும் இணைந்து வாழாத தேன் என்று கேட்டார். இனத்தால் வேறுபட்டவர்க ளாயினும் கலாசாரத் தால் ஒன்றுபட்டவர்களாக விளங்கும் இவ்விரு குழு முஸ்லிம்களையும் ஒன்று சேர்ப் பதில் ஜூம்ஆப் பள்ளிவாசல்கள் வகித்த முக்கிய ஸ்தா னத்தை எனது பதிலில் நான் தெளிவுபடுத்தினேன்.
இன்றைய தினம் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகை தினம்-யௌமுல் ஜாம்ஆ-. ஆகவே, 11-30 முதல் 1 மணி வரையுள்ள நிகழ்ச்சிகளுக்குப் போவதற்குப் பதிலாக, பெரிய பள்ளி வாசலில் நடை பெறும் ஜாம்.ஆத் தொழுகைக்குப் போவதென்று தீர்மா னித்திருந்தேன். முந்திய ஞாயிற்றுக்கிழமை இந்தப் பெரிய பள்ளி வாசலைத் தரிசித்தபோது, ஆங்கிலக் கவிஞ. Tirsor Guitsir d'6ft 6T6itutifsir 'A thing of beauty is a.
49

Page 30
joy for ever-கவின்மிகு பொருள் காலமெலாம் உவகை தரும்-என்னும் கவிதை வரி நினைவுக்கு வந்தது. கவி கீட்ஸ் தனது வாலிபப் பிராயத்தில் - 26 வயதில் - மரணித்தார். ஆணுல், மேற்குறித்த அவரது கவிதை வரியோ சாகா வரம் பெற்றதொன்ருகும். இங்கிலிஸ் மொழி வாழும்வரை அதுவும் வாழும். விஞ்ஞானம், தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் அமெரிக்கா நிலை நாட்டும் சாதனைகள் அந்நாட்டின் மொழியாகிய இங்கி லிஸை அழிந்து போக விடாது காத்து வருகின்றன. வலிமை மிக்க ஆதிபத்திய நாடாக ஒரு காலத்தில் விளங்கிய பிரித்தானியா இன்று தனது அந்தஸ்தை இழந்துவிட்ட போதிலும் அது உற்பவித்த மொழி உலக மொழி என்னும் ஸ்தானத்தை இழக்காதிருந்து வரு கிறது. இந்த நிலையில், நாமெல்லோரும் அதனேடு சரியான முறையில் சகவாழ்வு வாழுதற்கு வழிவகை களைக் காணல் அவசியம்.
நிற்க, ஜ7ம் ஆத் தொழுகை பற்றிய எண்ணம் வந்த போது, 1955 ஜூலை மாதத்தில் சஊதி அறபு நாட்டி லுள்ள தஹ்ருன் நகரில் நிகழ்ந்த சம்பவமொன்று நினை வுக்கு வந்தது. அன்றைய தினம் ஒரு வியாழக்கிழமை. தஹ்ருனிலிருந்து ஜித்தாவுக்குப் போவதற்கு எந்த நேரம் விமானம் வருமென்ருே விமானம் கிடைக்கு மென்ருே நிர்ணயமற்ற ஒரு நிலையில் நாங்கள் சிலர் அகப்பட்டிருந்தோம். அப்பொழுது எங்களில் ஒருவர், ஜாம்ஆத் தொழுகைக்கு நாங்கள் எல்லோரும் ஜித்தா வில் இருக்கவேண்டுமென்று விமானத்தள அதிகாரிக்கு வற்புறுத்திச் சொன்னர். அந்த அதிகாரி, சபராளி களுக்கு ஜாம்ஆ பர்ளு அல்ல-பிரயாணஞ் செய்வோ ருக்கு ஜாம்ஆத் தொழுகை கட்டளையாக்கப்படவில்லைஎன்று மொட்டையாகப் பதிலளித்தான்.
50

அன்றைய மாநாட்டு நிகழ்ச்சிகளைத் தவறவிட்ட மையை எண்ணி நான் கவலையடையவில்லை. தமிழ் மொழியின் அமைப்புபற்றி மொழியியல் வல்லுநர்கள் கூடி ஆராய்ந்த அன்றைய நிகழ்ச்சியால், மொழியியல் துறையில் அவ்வளவு ஈடுபாடில்லாத நான் அதிகம் பயனடைந்திருப்பேன் என்று சொல்வதற்கில்லை. மொழி யியல் நிபுணர்களின் கட்டுரைப் பொழிப்பு எனக்குத் தெளிவாக இருந்திருக்குமோ வென்பதும் சந்தேகமே. தவிரவும் அவர்களது கட்டுரைகளின் பிரதிகள் என்வச மிருந்தன. விரும்பியபோது, ஆற அமரப் படிக்கலாம். ஆணுல், மொழிபெயர்ப்புத் துறை பற்றி நிகழ்ந்த கருத் தரங்கையும் தவறவிட நேர்ந்தமை விசனத்துக்குரிய தாகும். இக்கருத்தரங்கு நிகழ்ச்சி நிரலின்படி காலை 11-30 மணிக்கு நடைபெறவிருந்தது. ஆணுல் கடைசி நேரத்தில் 9-30 மணிக்கு முன் போடப்பட்டது. ஜாம்ஆத் தொழுகைக்குப் போகவிருந்த எனக்கு இந்த ஏற்பாடு வசதிதான். அதே நேரத்தில் மற்ருெரு கருத்தரங்கில் எனது ஆராய்ச்சிக் கட்டுரை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட விருந்தமையால் நான் ஏக காலத்தில் இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள முடியவில்லை. இதுபோலத்தான், மூவேந்தர் காலத்துச் சமுதாய அமைப்புப்பற்றிய கருத்தரங்கு நடைபெற்ற சமயத்தில் மற்ருேர் இடத்தில் தமிழ்ப் பயிற்சி பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. முந்திய கருத்தரங்கில் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான நீதியரசர் கலாநிதி எச். டபிள்யூ. தம்பையா அவர்களின் "ஆரம்பகால, மத்தியகால இலங்கையின் அரச வைபவங்கள்" என்னும் கட்டுரை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட விருந்த மையால், தமிழ்ப் பயிற்சி சம்பந்தமான கருத்தரங்கைத் தவறவிட வேண்டியதாயிற்று. இலங்கைப் போதனு
51

Page 31
மொழி எனும் அரியாசனத்திருந்த இங்கிலிஸ் இரண் டாந்தர ஸ்தானத்தைப் பெற்றுள்ள இக்காலத்தில் தமிழ்ப் பயிற்சி சம்பந்தமான கருத்தரங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமிழை உரோமன் லிபியில் எழுதுதல், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், தமிழ் அட்சரங்களின் குறைபாடுகள் ஆகிய விஷயங்கள் தமிழ் படிப்பிப்பதுடன் தொடர்புடையனவாகும். மொழிபெயர்ப்புத்துறை பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் யாவும் ஆங்கிலத்தைத் தமிழில் பெயர்ப்பதிலுள்ள வில்லங்கங்களையும் தமிழை ஆங்கிலத் தில் பெயர்ப்பதிலுள்ள வில்லங்கங்களையும் ஆராய்ந்தன. மொழிபெயர்ப்புத்துறை, தமிழ் படிப்பித்தல் ஆகிய இரு விஷயங்களையும் சேர்த்துத் தனியாக ஒரு முழு நேரப் பொது மாநாடு நடத்தியிருந்தால் நன்ருயிருந்திருக்கு மென்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்ருல் இவ் விரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட பிரதிநிதிகளில் அநேகமாக எல்லோருமே குறைந்தபட்சம் இரு மொழிக. ளாவது - ஆங்கிலமும் தமிழுமாவது- அறிந்தவர்களன. யிருந்தார்கள்; எனவே இவை சம்பந்தமான எல்லாக் கட்டுரைகளுமே எல்லோர்க்கும் பொதுப்படையாகப் பயனளித்திருக்கும். எந்தெந்தத் துறைகளில் தனிப் பட்ட கருத்தரங்கு ஏற்பாடு செய்வது, எந்தெந்தத் துறைகள் பற்றிப் பொது மாநாடு ஏற்பாடு செய்வது என்றெல்லாம் ஒழுங்குபடுத்துவது எவ்வளவு சிரமமான தென்பதை மேற்படி அனுபவங்கள் எடுத்துக்காட்டு கின்றன. ஆயினும், எதிர் வரும் மாநாடு மேலும் சிறப்புற அமைதற்கு இத்தகைய அனுபவங்கள் வழி வகுத்திருக்குமென்று நம்புகிறேன்.
இடைநிலைப் பள்ளிகளில் இல்லாவிட்டாலும் ஆசிரி யப் பயிற்சிக் கல்லூரிகளிலாவது, மொழிபெயர்ப்புக் கலை ஒரு பாடமாகப் போதிக்கப்படல் வேண்டுமென்பது 65.
52

ஆண்டுகளாகவே எனது கொள்கையாக இருந்து வரு கிறது. இவ்விதம் செய்தாலல்லாமல் எனது சொந்தக் கலாசாரங்கள், பண்பாடுகள் ஆகியவற்றைப் பேணிக் கொண்டே மேற்கு நாடுகளின் விஞ்ஞானம், தொழில் நுட்பவியல் ஆகியவற்றின் முழுப் பயனையும் அனுப வித்தல் இயலாது. மேற்குறித்த கருத்தரங்கில், கல்வி மான்கள், நாடாளுமன்றமா, பாராளுமன்றமா இரண்டில் எது சரியானது? Universal joint என்னும் சொற்ருெட ரைச் சர்வலோகப் பூட்டு எனப் பெயர்க்காமல் வேறெவ் விதம் மொழிபெயர்க்கலாம் ? Air conditioned hall என் பதைக் குளிரூட்டிய மண்டபம் என்பதா அல்லது குளு குளு வசதியுடைய ஹால் என்பதா? என்பன பற்றி யெல்லாம் ஆராய்ந்தார்களாம். பாஷ ஜீவ பங்ஸ்மொழியே ஒரு நாட்டின் ஜீவன்-என்பது கோலாலம் பூரில் இன்று வெகுஜன வழக்கிலுள்ள சுலோகமாகும். எனினும், இன்றுள்ள நிலையில் மொழிபெயர்ப்புக் கலையும் ஒரு மொழியின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமென்பதை நாம் மறத்தலாகாது.
பதினுெரு மணிக்கு முதலாவது கருத்தரங்கு முடி வடைந்ததும், ஜணுப் கே. பி. எஸ். ஹமீது அவர்களைத் தேடலானேன். ஏககாலத்தில் நடைபெற்றுக்கொண் டிருந்த மற்ருெரு கருத்தரங்கிலிருந்து வந்துகொண், டிருந்த அவரைக் கண்டதும் இடை வேளையில் பரிமாற். றப்படவிருந்த தேனீரையும் விஸ்கோத்தையும் "தியாகஞ்" செய்துவிட்டு பல்கலைக் கழகத்து முன் வாசலுக்கு வந்து ஜணுப் ஹமீதின் சொந்த ஊரைச் சேர்ந்த நண்பரொருவ ருக்காகக் காத்து நின்ருேம், வர்த்தகக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் இந்நண்பர் எங்களை ஜூம்ஆத் தொழுகைக்குத் தமது காரில் அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தார். குறித்த நேரத்தில்
53

Page 32
அவர் வந்து சேர்ந்ததும் எல்லோருமாகப் பெரிய பள்ளி வாசலுக்குப் போனுேம். அங்கு போய்ச் சேர்ந்ததும் முந்திய ஞாயிற்றுக்கிழமை விற்பனையாகிக்கொண்டிருந்த "மஸ்ஜித் நெகரா" என்ற கைநூல் இன்னமும் விற்கப் படுகிறதா என்று பார்த்தேன். அன்றைய தினம் (ஞாயிற் றுக்கிழமை) என்வசம் மலாய டொலர் இல்லாமையால் அந்தப் புத்தகத்தை வாங்க முடியவில்லை. இன்றைக்கோ என்னை வரவழைத்தவர்கள் கைச்செலவுக்குக் கொடுத்த பணமிருந்தது; புத்தகத்தைக் காணவில்லை. வெளி நாட்டு நாணயம் தட்டுப்பாடாக இருப்பதனுல் உண் டாகும் சங்கடங்கள் இப்படிப்பட்டவை.
பள்ளிவாசலுக்கு நாங்கள் நேரத்தோடு போய்ச் சேர்ந்து விட்டோம். ஆனதால், மண்டபத்தில் அதிக சனங்கள் இருக்கவில்லை. அவர்கள் அப்பொழுதுதான் வந்துகொண்டிருந்தார்கள். ஜனுப் ஹமீதும் நானும் கட்டடத்தின் அமைப்பையும் அழகையும் ரசித்துக் கொண்டிருந்தோம். சற்று நேரத்தின் பின்னர் கதீப் வந்து மிம்பரில் ஏறிஞர். அவர் நீள்-ஷேர்வாணி போன்ற ஜப்பா அணிந்திருந்தார். மிம்பரில் வைக்கப் பெற்றிருந்த நாற்காலி யாவரையும் கவரும் வண்ணம் விசேஷ அமைப்புடையதா யிருந்தது. ஜ7ம்ஆ முடிந்து நாங்கள் காரில் ஏறப்போன சமயம் கம்பீரத் தோற்ற முள்ள முஸ்லிம் ஒருவர் அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லி எங்களை அணுகினர். எ ங் களு க் குப் பழ க் க மில்லாத அவர் நாங்கள் மலேசியர்கள் அல்லர் என்று ஊகித்துக் கொண்டுதான் எங்களோடு உரையாட வந்தாராம். அவரது ஊகம் சரியாக இருந்தமை எங்க ளுக்கு ஓரளவு வியப்பளித்தது. தென் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த அவர், செல்வக் குடும்பத்தில் பிறந் தவரென்றும், இங்கிலாந்தில் பட்டம் பெற்று மலாயா
54

திரும்பியவரென்றும், சில காலத்துக்கு முன்னர் கோலா லம்பூரில் பல வீடு வாசல்களுக்குச் சொந்தக்காரரா யிருந்தாரென்றும், குடி, குதிரைப் பந்தயம், சூதாட்டம் ஆகிய துர்ப் பழக்கங்களில் இறங்கி அநேகமாக எல்லா வற்றையும் இழந்திருந்தார் என்றும் பின்னர் அறிந் தோம்.
அங்கிருந்து கோலாலம்பூரின் விண்ணுேக்கு மாடங் கள் போன்ற (Sky scrapers) ஒன்றனுக்குப் புறப்பட் டோம் ; ஜனுப் ஹமீதின் நண்பரொருவர் அங்கு வசிக் கிருர். இரண்டாவது மாடியிலுள்ள மேற்படி நண்பரின் வசிப்பிடத்தில் நின்று சுற்றுமுற்றும் பார்த்தோம். மலேசியாவில் வாழும் பல்வேறு இனங்களையும் ஒரே யிடத்திற் காண முடிந்தது. குழந்தைகள் தமிழ், மலாய், இங்கிலிஸ் ஆகிய மொழிகளை வெகு சரளமாகப் பேசிய படியே விளையாடிக் கொண்டிருந்தார்கள். பன்மொழி பேசும் திறன் சிறுவர்களுக்கு இலகுவாகக் கைவரக் கூடியதென்பதை அங்கு நான் நேரில் கண்டேன். அன்றைய மதிய போசனத்தை இந்த அன்பர் வீட்டில் வைத்துக்கொண்டோம். நாங்கள் போனபோது, கேரள பல்கலைக் கழகத்துப் பேராசிரியர் எஸ். வி. சுப்பிரமணியம் அவர்கள் அங்கிருந்தார். அடக்கமான குணவியல்பும், ஆழ்ந்தகன்ற கல்வி ஞானமும், புத்திக்கூர்மையும் மிக்க அவர்மீது மாநாட்டுக்கு வந்திருந்த இந்திய, இலங்கைப் பிரதிநிதிகள் பலர் பெருமதிப்புக் கொண்டிருந்தார்கள் என்பதை அறிந்திருந்தேன். அப்பேர்ப்பட்ட ஒருவ ருடன் பகல் போசன நேரம் முழுதும் உரையாட வாய்ப்புக் கிடைத்ததை ஒரு பாக்கியமாகக் கருதினேன். எமக்கு அன்று விருந்து படைத்தவர் தென்னிந்திய முஸ்லிம் வம்சாவளி வந்தவர். எனவே நாகூர்-நாக பட்டின-ப் பாகமுறையில் சமைக்கப்பட்ட கறிகள்பரிமாறப்
55

Page 33
பட்டன. நாகூரில் அலாதியான சில கறிகள் உண்டு. இவற்றில் விசேஷமானது தாழிஸா. ஆணுல் சுவைத்துப் பார்த்ததில் அது எனக்குப் புதியதன்றென்பது புரிந்தது. ஆட்டிறைச்சியைக் கத்தரிக்காயுடன் சேர்த்து அதிகம் நெய்யோ, எண்ணெயோ விடாமல் ஆக்கியிருந்தார்கள். இந்தத் தாழிஸாவை யாழ்ப்பாணத்தில் பிள்ளைப் பருவத் தில் சுவைத்திருக்கிறேன். ஊருக்கு ஊர் விசேஷமான கறிகள், பலகாரங்கள் இருப்பதும், சமையல் முறை வேறுபடுவதும் புதுமை யென்று சொல்வதற்கில்லை. இலங்கையில் கூட கல்முனைப் பாக முறைக்கும் களுத் துறைப் பாகமுறைக்கும் எவ்வளவோ மாறுபாடு காண லாம். இரு பிராந்தியங்களிலும் தயாரிக்கப்படும் வட்டி லப்பமொன்றிலேயே இந்த வேறுபாட்டைக் காணலாம். போக, நாகூர் தாழிஸாவின் ஸ்தானம் தென்னிலங்கை யில் கலியா என்னும் கறிக்கு உண்டெனலாம். வாழைக் காய், கத்தரிக்காய் ஆகியவற்றைப் பொரித்து, பின் குழம்பாக்கும் இந்தக் கறிக்கு உருளைக் கிழங்கும் சேர்ப்பது வழக்கம்.
கோலாலம்பூரில் முழுதாக ஆறு நாட்களைக் கழித்த போதும், அசல் மலாய முறைப்படி சமைத்த சோறு கறி சாப்பிட வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்த வாய்ப்பு எனது பிரயாணத்தின் இறுதிக் கட்டத்தில், சிங்கப்பூரில் வாழும் எனது நண்பர் அப்துல் ஹ்மீது அல்வி அவர்கள் வீட்டில் கிட்டியது. இந்த நண்பரை 1953ஆம் ஆண்டி லிருந்து எனக்கு நன்ருகப் பழக்கம். தமது மகனை ஸாஹிருக் கல்லூரியிலும் விடுதியிலும் சேர்ப்பதற்காக வந்த அன்று இந்த நட்பு ஆரம்பமானது. கீழ்த்திசை நாடுகளின் பிரபல பட்டணங்களுக்கு விஜயம் செய்யும் போதெல்லாம், ஆங்காங்கே ஐரோப்பாவின் மாற்றுப் பதிப்பைக் காணும் ஆபத்து ஏற்படுவதுண்டு. அங்குள்ள
56

ஹோட்டல்களிலும் ஐரோப்பிய மயமான வீடுகளிலும் மேல்நாட்டு உணவு வகைகளே பரிமாறப்படும். எனது பிரயாணத்தின்போது இதற்கு மாருக அந்தந்த நாட்டின் உணவு வகைகளைச் சுவைக்க வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இங்கிதம் தவருமல் அதனைப் பயன்படுத் திக் கொண்டேன். இந்த வகையில் 1966 மே, 3ஆந் தேதி சிங்கப்பூரில் நண்பர் அப்துல் ஹமீது அல்வி வீட்டில் மலாயச் சோறு கறி உண்ணக் கிடைத்தமையை யிட்டு மகிழ்ச்சியடைந்தேன்.
57

Page 34
7. கலையும் காட்சியும்
எமது பாடத் திட்டத்தில் மொழி பெயர்ப்புக் கலைக்குச்
சிறப்பிடமளிக்கப்படற் வேண்டுமெனுங் கருத்து, மலே சிய தமிழ் மாநாட்டில் நான் கண்டு, கேட்டு, உய்த் துணர்ந்த அனுபவங்களால் என் மனதில் மேலும் வலுப் பெற்றிருக்கிறது. இக் கலை சம்பந்தமான பாடவிதானம் திட்டவட்டமான முறையில் தயாரிக்கப் பெறல் வேண் டும்; பாடங்களை ஒழுங்கு முறைப்படி மாணுக்கருக்குப் பயிற்றுவித்தல் வேண்டும். அப்பொழுதுதான் நமது இலட்சியம் கைகூடும். இவ்விதம் செய்யா விட்டால், கரிய கோழிக்கும் கருங் கோழிக்கும் உள்ள வித்தியாசம் யாதென்பதையோ, பெரிய சோறு, பெருஞ் சோறு என்பன போன்ற சொற்ருெடர்களுக்குள்ள அர்த்த பேதங்கள் எவையென்பதையோ மாணவர்கள் அறிந்து கொள்ள முடியாது போய்விடும். உண்மையில், மாநாட் டின் இரண்டாம் நாட் கருத்தரங்கில் இத்தகைய நுணுக் கங்களெல்லாம் விரிவாக ஆராயப்பட்டன. ஒரு காலத்தில், இங்கிலாந்திலுள்ள Public Schools என்னும் விடுதிப் பாடசாலைகளில் லத்தீனை இங்கிலிஸில் பெயர்க்கக் கற்றுக்கொடுத்தார்கள்; படித்த மனிதர் என்பதற்கும், மொழியாட்சி கைவரப் பெற்றவர் என்பதற்கும் இந்த லத்தீன்-இங்கிலிஸ் மொழி பெயர்ப்புத் திறன் அக், காலத்தில் அறிகுறியாகக் கருதப்பட்டது. இன்றைய நிலையில், நாம் இங்கிலிஸ் மொழி மூலம் நேர் முகமாகவோ மறைமுகமாகவோ பெற்றுள்ள அறிவினைப் பொதுமக்கள் மத்தியில் பரப்பவேண்டுமானுல், மொழி பெயர்ப்புக் கலையில் விசேஷ ஆற்றல் பெறல் அவசியம்.
58

மொழிபெயர்ப்புக் கலையின் அகர, ஆகாரங்களை நான் முதன் முதலாகக் கற்றுக்கொண்டது கீரிமலை மணல் வெளியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்ட மொன்றிலாகும்; வகுப்பறையிலோ, பல்கலைக் கழகத் திலோ அன்று. யாழ்ப்பாணத்தில் காந்தி யுகம் கோலோச் சிய காலம் அது. தென்னகத்தின் அரசியல் வானில் சுடர் விட்டு ஒளிர்ந்த தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் 1928 இலோ 1929 இலோ யாழ்ப்பாணம் வந்தார்கள்: யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் கூட்டத்தில் சொற் பொழிவாற்றிஞர்கள். அந்தக் கூட்டத்திலேதான் மொழி பெயர்ப்பின் நுட்பங்கள் பற்றிய முதலாவது பாடத்தை நான் கற்றுக்கொண்டேன். சத்தியமூர்த்தி அவர்களுக்கு அன்று கோலாகலமான வரவேற்பளிக்கப்பட்டது. வரவேற்புக் குழுத் தலைவர் அந்த வரவேற்பை Warm. Welcome என்று குறிப்பிட்டார். இப்படி வர்ணித்தமை பொருத்தமற்றதென்று சத்தியமூர்த்தியவர்கள் விரிவாக விளக்கிக் கூறியமை, இன்றும் என் மனதில் பசுமரத் தாணிபோற் பதிந்திருக்கிறது. இங்கிலிஸ்காரர் வாழும் நாடு குளிர் மிகுந்த பூமி, வெயிலோ மிக அரிது. எனவே, வெப்பமும் சூடும் அவர்களுக்கு மன மகிழ்வை உண் டாக்குவன, நமக்குத் தென்றலும், குளுமையும் இன்ப மூட்டுவதைப் போல. அதனுலேயே உளங் கனிந்த வர வேற்பை அவர்கள் Warm Welcome என்கிருர்கள். யாழ்ப்பாண மக்கள் படை பதைக்கும் பங்குனி வெயில் காலத்தில் கீரிமலை மணல் வெளியில், அகங் குளிரத் தம்மை வரவேற்றதை Warm Welcome என்று வர்ணிப் பது சரியல்ல வென்று சத்தியமூர்த்தி விவரித்தார். அந் நாட்களில் மேற்படி காங்கிரஸில் தீவிரமாக உழைத்த வரும், சத்தியமூர்த்தியின் வரவேற்புபசாரத்தில் பெரும்
பங்கு கொண்டவருமான ஹன்டி பேரின்பநாயகம்
59

Page 35
அவர்கள் சமீபத்திய கட்டுரையொன்றிலே Warm Welcome என்பதை அகங்குளிர்ந்த வரவேற்பு என்று மொழி பெயர்த்திருக்கிருர். Snow White என்பது பால் வெள்ளையேயன்றிப் பணி வெள்ளையன்றென்றும் குறிப் பிட்டுள்ளார். This is a Book என்பதை இது புத்தகம் என்பதா அல்லது இது ஒரு புத்தகம் என்பதா? என்றும் மொழி பெயர்ப்பாளர் சிலர் சர்ச்சை செய்கிருர்கள். மொழிபெயர்ப்புத் துறையில் இப்படிப் பல பிரச்சினைகள் உண்டு.
இங்கிலிஸைத் தமிழில் எழுதுதல், ஒலிக் குறிப்புகள் அட்சரங்கள் இவை யாவும் இன்று பிரச்சினைப் பொருள்கள். வேற்று மொழிப் பெயர்ச்சொற்களைத் தமிழில் எழுதும்போது, மூல உச்சரிப்பைப் பின்பற்றி எழுதுவது நலம்; அதனுல் பல அனர்த்தங்களைத் தவிர்த் துக்கொள்ளலாம். மாநாட்டுக்கு வந்திருந்த இலங்கை நண்பர்களில் ஒருவர், இட்டலித் தம்புவைத் தெரியுமோ வென்று ஒரு சமயம் என்னிடம் கேட்டார். யாரோ, சாப் பாட்டு ராமன்போல இட்டலி ராமனுயிருக்க வேண்டு GLD6irgi Lás G F IT sir GS 60T sir. Dudley Stamp என்பதன் தமிழாக்கமாகிய இடட்லி தாம்பு இட்லித் தம்புவாக மரூஇ நின்றதென்பதை நான் எப்படி அறிவேன்? இந்தச் சந்தர்ப்பத்தில் இதையொத்த மற்ருெரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. காஹிருவில் நடைபெற்ற இரண்டாவது வருடாந்த அல் அஸ்ஹார் மாநாட்டுக்கு இலங்கைப் பிரதிநிதியாக நான் போயிருந் தேன். 1965 மே 18 ஆந் தேதியன்று தேநீர் இடை வேளையில் அந்த மகாநாட்டுக்கு வந்திருந்த பிரதிநிதி யொருவருடன் கதைத்துக்கொண்டிருந்தேன். பேச்சு அன்றைய பத்திரிகைச் செய்திகளுக்குத் தாவியது. அப்
60

பொழுது நண்பர், இலங்கையிலிருந்து அல்பாபிலாவி Albah Bi Lhavi 6T 6ör so Sgr (pessor IT (56 yi காஹிரு. வந்திருக்கிருராமே; அவரை உங்களுக்குத் தெரியுமோ வென்று கேட்டார். அந்தப் பெயர் நாமந் தரித்த பிரமுகர் ஒருவரும் இலங்கையில் இல்லையே என்று தடுமாறிய நான், எதற்காக அவர் காஹிரு வந்தாராம் என்று கேட் டேன். பெட்ரோல் கொள்வளவு விஷயம் பற்றி ஐக்கிய அறபுக் குடியரசுடன் பேச்சுவார்த்தை நடந்துவதற்காக வந்திருந்தாராம். இதைக் கேட்ட பிறகுதான், அந்த அல் பாபிலாவி, எனது நண்பரும் இலங்கை சிவில் சேவை யில் என் சகாவாக விளங்கியவருமான கோ. ஆழ்வாப் பிள்ளை அவர்களேயென்று கிரகித்துக்கொண்டேன். இதுபோலவே சரித்திரத்திலும் ஒரு சம்பவமுண்டு. இலங் கையை ஆண்ட புவனேகபாகு மன்னன் 1283ஆம் ஆண் டில் அப்த் உத்மான் என்பவர் தலைமையில் மிஸ்ர் நாட் டுக்குத் தூதுக் குழுவொன்றனை அனுப்பினன். இந்த மன்னனுக்கு அரபு வாலாற்ருசிரியர் ஒருவர் அபு நக்பா லெபாபா என்று நாமஞ் சூட்டியிருக்கிருர்; மொழி மாற் றத்தினுல் ஏற்படும் அனர்த்தங்களுக்கு இப்படி எத்த னையோ உதாரணங் காட்டலாம். கொடை வள்ளல் ஷெய்கு அப்துல் காதர், சீதக்காதி ஆளுர்; உவைஸ், உவைசு ஆயிற்று. அஸிஸ் அசிசு, ஆஜீஸ் என்றெல்லாம். மாறிற்று. ஒரு மொழியின் ஒலிக் குறிப்பு இன்னுெரு மொழியில் இல்லாமையால் இத்தகைய சிக்கல்கள் ஏற் படுகின்றன. இந்தச் சிக்கல்களை விடுவிப்பதற்கு அறபுத் தமிழ் எழுத்தாளர்கள் ஒரு வழி வகுத்துள்ளார்கள்; அறபு மொழியில் ப, ட, ங் ஆகிய ஒலிகள் கிடையா; இவ் வொலிகளைக் குறிப்பதற்கு அவர்கள் விசேஷமான அறபு. எழுத்துக்களை உருவாக்கினுர்கள். இவ்வாறே மணிப் பிரவாள நடையில் எழுதியவர்கள் ஷ, ஜ, ஹ, ஸ ஆகிய
61

Page 36
புதிய எழுந்துக்களைத் தமிழில் சேர்த்துக்கொண்டார்கள். இவர்களைப் பின்பற்றி நாமும் f g போன்ற இங்கிலிஸ் அட்சரங்களின் ஒலியைக் குறிப்பதற்குப் புதிய எழுத்துக் களை உருவாக்கிக் கொள்ளலாம். தமிழில் காணப்படும் ழ, ஒ ஆகிய சிறப்பு எழுத்துக்களுக்கு ஒலிக் குறிப்பு அடையாளங்களை உபயோகிப்பதற்குப் பதில், விசேஷ சின்னங்களை உபயோகிப்பது நலம் என்று தமிழை ரோமன் லிபியில் எழுதுவதில் உள்ள வில்லங்கங்கள் பற்றி ஆராய்ந்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையொன்றிலே யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
மொழியும் கலாசாரமும் ஒன்றுடனுென்று பின்னிப் பிணைந்தவை என்பதை வலியுறுத்துதற்குப் போலும், மொழியாராய்ச்சி மாநாட்டில் கலாசாரப் பொருட்காட்சி ஒன்றனையும் ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்தப் பொருட் காட்சி ஏப்ரல் 26 ஆந் திகதியன்று கல்வி அமைச்சர் கெளரவ இன்சே முகம்மது ஹைர் ஜொஹாரி அவர்களின் ஆசியுடன் ஆரம்பமாயிற்று. இந்தியாவுக் கும் மலாயாவுக்கும் இருந்து வந்த தொடர்புகளை விளக் கும் தேசப் படங்கள் பலவற்றை இப்பொருட் காட்சியிற் கண்டேன். இவற்றைச் சாவகாசமாகப் பார்வையிட எனக்கு அவகாசம் இருக்கவில்லை. காலத்தால் மிக முந்திய தமிழ் எழுத்துக் காகித மொன்றின் புகைப் படப் பிரதியொன்றும் பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந் தது. 1527 ஆம் ஆண்டில் எழுதப் பெற்ற இந்தக் காகிதம் மலாக்காவில் கண்டெடுக்கப்பட்டது. இன்றைய மலேசியாவின் பல்வேறு பாகங்களிலிருந்தும் காட்சிப் பொருள்கள் வந்திருந்தபோதிலும் கெடா என்னும் பகுதியிலிருந்து வந்த காட்சிப் பொருள்களே எல்லோர் கவனத்தையுங் கவர்ந்தன. வெண்கலத்தாலான புத்தர் சிலை, துவாரபாலகர் சிலை, சிரசற்ற கணேசர் சிலை ஆதி
62

*யன அவற்றுட் சிலவாகும். பொருட் காட்சிக்குச் சில நாட்களின் பின்னர், தனிநாயகம் அடிகளாரின் ஆராய்ச் சிக் கட்டுரையைப் படித்தபோது மலேசியாவிலுள்ள மேற்படி கெடா நாட்டுக்கும் கடாரச் சட்டிக்கும் சொல் லிலக்கணப்படியுள்ள உறவினை அறிந்து வியப்படைந் தேன். செம்பினுல் அல்லது செம்பு-இரும்புக் கலவை யினுல் செய்யப்படும் அண்டா, கடாரம் எனப்படும். கெடா என்னுஞ் சொல் பழந் தமிழ் இலக்கியங்களில் கடாரம் அல்லது காழகம் என்று வழங்கி வந்திருக்கிறது. (காழ் என்பதற்கு இரும்பு என்னும் பொருளுண்டு.) கஜகம், கடஹா, கலா, கியுடா எனவும் இந்தக் கெடா குறிப்பிடப்படுவதுண்டு. தனிநாயகம் அ டி க ள |ார் இவற்றை யெல்லாம் தமது கட்டுரையில் தொடர்புபடுத்தி விளக்கியிருக்கிருர், கெடா வின் தலைநகர் அலோர் ஸ்டார்; மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களின் பிறப்பிடம் இதுவே. மலேசியப் பிரயாணத்தின்போது கெடாவுக்கும் போனேன். அது வேறு கதை.
ஏப்ரல் 18ஆந் திகதி மாலை கலை இரவு' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டு பஸ், பிரதிநிதிகள் அனைவரையும் இந்நிகழ்ச்சி நடைபெறவிருந்த மண்ட பத்துக்கு ஏற்றிச் சென்றது. மண்டபத்தில் ஒரே ஜனக் கூட்டம். கலை இரவில் பன்னிரண்டு நிகழ்ச்சிகள் இடம் பெற்றனவென்று சொல்லலாம். ஆணுல், அம்பிகாபதிஅமராவதி சோக நாடகத்தை நினைத்து, 'கலை வாழ்த்து, நாட்டுப் பண் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளையும் கணக்கில் சேர்க்காமல் பத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன என் கிறேன். நாட்டுப் பண் என்ருல் கிராமியப் பாடல் என்று நினைத்து விடாதீர்கள். தேசிய கீதம்-National Anthem என்பதைத்தான் இப்படி மொழி பெயர்த்திருந்தார்கள். இந்தப் பத்து நிகழ்ச்சிகளில் ஐந்து மலேசியக் கலாசாரத்
63

Page 37
தைப் பிரதிபலிப்பனவாக அமைந்தன. மெனுேரா என் னும் தாய்லாந்து நடனமும் இவ்வைந்தில் ஒன்று. இந்த ஐந்து நிகழ்ச்சிகளும் வரலாற்று நூல்கள் மூலமாக நான் அறிந்திருந்த ஒர் உண்மையை நிரூபித்தன; மலேசிய நாடு இந்தியாவுக்கும் சீனுவுக்கும் சரி நடுவாக அமைந், திருக்கிறது; ஆயினும் அதன் ஆரம்பகால நாகரிகம் இந்திய நாகரிகத்தைப் பின்பற்றி எழுந்ததேயன்றிச் சீன நாகரிகத்தைப் பின்பற்றவில்லை. மதங்களும் இவ் வாறே; இந்து மதமும் இஸ்லாமும் இந்தியாவிலிருந்து பரவியவையே. மற்றும், பஞ்சாபி நடனம், கிராமிய நட னம் ஆதியன அடங்கலாக நான்கு இந்திய நிகழ்ச்சி களும் Chinese Opera என்னும் சீன நாட்டிய நாடகமும் அன்று நடைபெற்ற பிற நிகழ்ச்சிகளாகும்.
மலாய் வாசிகள் இந்துக்களாக மாறிய போதிலும் இந்தியர்களாக மாறவில்லையென்று கூறுவார்கள்; அரச வைபவங்கள் முதலியன இந்திய மரபைப் பின்பற்றிய வைகளாக இருந்தபோதிலும், சாதாரண மக்கள் இந்திய மரபுடன் நெருங்கியதான தனித்ததொரு பண்பாட்டினைப் பின்பற்றினர்; இவ்வாறே, இந்தியா வழியாக இஸ்லாம் பரவிய பின்னரும், மலாய் மக்கள் இஸ்லாத்துக்கு முற். பட்ட பழக்க வழக்கங்களையும் கலாசார பாரம்பரியங்களை யும் முற்ருகக் கைவிடவில்லை. கலை இரவு நிகழ்ச்சிகளி லிருந்து இவற்றை யெல்லாம் கிரகிக்க முடிந்தது. தொல் குடி இந்து, இஸ்லாமிய, கலாசார பாரம்பரியங்கள் போக, நான்காவது பாரம்பரியமொன்றும் இப்பொழுது மலேசி யாவில் தலையெடுத்து வருகிறது. மேற்குலக நாகரிகத் தின் செல்வாக்கே அது. கலை இரவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இதனைக் காண முடியாது போயினும், மே மாதம் 1 ஆந் திகதி சிங்கப்பூரில் பார்த்த திரைப் படமொன்றில் கண்டு கொண்டேன். அந்தப் படத்தில்
6驻

நடித்த ஆண்களும் பெண்களும் இன அடிப்படையில் நூற்றுக்கு நூறு வீதம் மலாயர்களாய் இருந்த போதிலும் மேற்குலக நாகரிகத்தைப் பின்பற்றுவோராக விளங்கி னர்; பாடல்கள் நடனங்கள் ஆகியவற்றிற் பெரும்பாலா னவை மேல் நாட்டுப் பாணியைத் தழுவி, இங்கிலிஸ் ஆடல் பாடல்களின் மலாய்ப் பதிப்பாக அமைந்திருந் தன. மேல் நாட்டின் இந்தச் செல்வாக்குக்கு மலேசியர் அனைவரும் அடிமைகளா அல்லது சொற்ப அளவினரே அடிமைகளா என்பதும், இந்தச் செல்வாக்கானது அவர் களுடைய பாரம்பரிய கலாசாரத்தைச் சாகடிக்காமல் அத னுேடு இரண்டறக் கலந்து விடுமா அல்லது சமாதான சக வாழ்வு வாழுமா என்பதும் ஆசியாவின் ஏனைய நாடு களுக்குப் போலவே மலேசியாவுக்கும் பிரச்சினைகளாகும்.
மலேசியா மலாயர், சீனர், இந்தியர் ஆகிய முப் பெரும் சாகியத்தார் வாழும் நாடு. வெவ்வேறு பண்பாடு களின் உறையிடம் என்பதில் ஐயமில்லை. இந்த வகை யில் பார்க்கும்போது, மலேசியக் கலாசாரமென ஒன்று அங்கு பரிணமிக்க முடியுமோவெனும் கேள்வி தோன்று கிறது. மூன்று கலாசாரங்களும் இணைந்ததான மலேசி யக் கலாசாரம் பரிணமிப்பது சாத்தியமோவென்பதற்கு காலந்தான் பதில் சொல்ல வேண்டும். மேற்சொன்ன மூன்று இனங்களும் மூன்று பண்பாடுகளின் பிரதிநிதிக ளாக விளங்குகின்றன. இவர்களில் மலாயர் அந்நாட் டின் பழங்குடி மக்கள். சீனர்கள் தகரச் சுரங்கங்களில் வேலை தேடி வந்தவிடத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட வர்கள் தமது பண்பாட்டுத் தனித்துவத்தையும் இனப் பண்புகளையும் இம்மியும் இழக்காதவர்கள். இந்தியர் களில் சில சீக்கியர்களையும், பிறரையும் தவிர மற்றவர்கள் அனைவரும் தமிழர்கள்; இந்துக்கள். பொருளாதார ரீதி யாகப் பார்க்குமிடத்து, தமிழர்களை இரண்டு கூறுகளாக
65

Page 38
வகுக்கலாம்; தோட்டத் தொழிலாளர்களாகச் சென்ற இந்தியத் தமிழர்கள்; உத்தியோகத்தர்களாகவும் அர சாங்க ஊழியர்களாகவும் சென்ற இலங்கை அல்லது யாழ்ப்பாணத் தமிழர்கள். தொகை விகிதாசாரத்தைக் கீழ்வரும் புள்ளி விவரம் விளங்குகிறது. 1857 இல் மலா யாவிலும் சிங்கப்பூரிலும் வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை 72,24,000 ஆகும். இவர்களில் மலாயர் 42.9% சீனர் 44.2% இந்தியர் 10-6% பிறர் 2-3% 1957 க்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் மலேசிய சம்மேளனத்திலிருத்து பிரிந்துபோக 400 மைல்களுக்கு அப்பாலுள்ள சரவாக்கும் சபாவும் மலேசியாவுடன் இணைந்துள்ளன. இதன் விளைவாக மலாயரின் எண் ணிக்கை விகிதாசாரம் சற்று ஏறியிருக்கிறது. எனவே, கலாசாரத் துறையிலும், பிற துறைகளிலும் எத்தகைய சூழல் உருவாகுமென்பதற்கு மேற்குறித்த புள்ளி விவரங் களைத் தவிர வேறு வியாக்கியானம் வேண்டியதில்லை.
66

8. சீதாபஹரணம்
கலை இரவில் இடம் பெற்ற பத்து நிகழ்ச்சிகளில்
என்னைப் பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சி கோபால் ஷெட்டி குழுவினரின் சீதாபஹரணம் என்னும் இராமாயணக் காட்சியாகும். அசோகவனத்திலிருந்து சீ  ைத  ைய அபகரித்துச் செல்லும் சம்பவத்தைச் சித்திரித்த இந் நிகழ்ச்சி என்னைக் கவர்ந்தமைக்கு இரண்டு காரணங்கள் சொல்லலாம். ஒன்று, ராம கதை, மற்றெல்லோருக்கும் போலவே எனக்கும் மிகவும் பழக்கமாயிருந்தமை, மற்ருென்று, கோபால் ஷெட்டி குழுவினரின்,விசேஷமாக ராவண பாகமேற்ற சீன நடிகரின், அபிநயம். ராமன், லக்ஷமணன், சீதை ஆகிய பாகங்களை ஏற்ருேரும் வெகு கச்சிதமாக நடித்தார்கள். மாயமானைப் பிடித்துத் தரும்படி சீதை ராமனை வேண்டுதல்; லக்ஷமணன் தடுத்தபோதும் ராமன் அதைக் கேளாது சீதையின் வேண்டுகோளை நிறைவேற்ற இணங்குதல்; மானைப் பிடிக்கச் சென்ற ராமன் திரும்பி வராதது கண்டு கவலையடைந்த சீதையை லக்ஷமணன் தேற்றுதல்; சீதை சினந்து லக்ஷமணன்மீது பழி சுமத்துதல் ஆகிய ஒவ்வொரு காட்சியுமே பார்த்தோர் மனதைப் பரவசப்படுத்திய போதிலும், ராவணபாகமேற்ற சீன நடிகரின் தோற்றமும், பாவமும், அபிநயமும், லளிதமும் மற்றெல்லோரையும் விஞ்சி நின்றன. "தளையரி தவத்தவர்" வடிவில் சீதை முன் தோன்றிய அவர், நொடிப் பொழுதில் தமது மாய வேடத்தைக் களைந்து விட்டு ' எழுதலாகலாச் சுந்தரஞக "த் தனது இராஜ கம்பீர சுயரூபத்தைக் காட்டியமை யாவரையும் பிரமிப்பி
67

Page 39
லாழ்த்தியது. பாரிஸில் நடைபெறும் நவீன நாடகங் களிற் கையாளப்படும். உத்தியை அனுசரித்து, இக் காட்சி மாற்றம் கணப் பொழுதில் நிறைவேறியது. நடிப்பைப் போலவே, காட்சி சோடனைகளும் தத்ரூபமாக, அமைந்திருந்தன. விசேஷமாக, அணியத்திலே குகன் வீற்றிருக்க, ஆற்றிலே படகு செல்வதாக அமைந்த காட்சி இன்றும் கண்முன் நிற்கிறது. சீதையின் சுடு சொல் கேட்டு மனம் வெதும்பி, தன் விருப்பத்துக்கு. மாருக ராமனைத் தேடிப் புறப்படும் லக்ஷமணன், சீதை யைச் சுற்றி வட்டக் கோடொன்று வரைந்து, தான் வரும்வரை அக்கோட்டைத் தாண்டாதிருக்குமாறு வேண்டிச் செல்கிருன். துறவி வேடத்தில் வந்த ராவணன் சீதையை அண்மித்ததும் அவனைச் சுற்றி அக்கினிச் சுவாலையாலான வேலியொன்று நிற்பதைக் காண்கிருன். இந்தத் தீவேலி கனன்றெரிந்த விதமும் என் கண்முன்னே இன்றும் நிற்கிறது. இவ்விதமாக, புராணகாலக் கதையொன்றினைக் கதிர்மின்னியக்க கால உத்திகளின் துணையுடன் நடித்துக் காட்டிஞர்கள்.
சீனர், மலாயர், இந்தியர் ஆகிய முப்பெரும் இனத்த வர்களும், இந்துக்கள், பெளத்தர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய நாற்பெரும் மதத்தவர்களும் குழுமி யிருந்த மண்டபத்திலே மேற்படி சீதாபஹரண நிகழ்ச் சிக்கு விளக்கமோ விமரிசனமோ வேண்டியிருக்கவில்லை. அவ்வளவுக்கு ராம கதை, கால, தேச, வர்த்தமானங்களை யெல்லாம் கடந்து, சர்வதேச வியாபகம் பெற்றிருக்கிறது. இவ்விதம் அனைவரையும், தன்பால் ஈர்த்துள்ள ராம சரிதத்தின் வசீகரத்துக்கு மலாய் முஸ்லிம்கள் விலக் கல்லர் ; ஏனென்ருல், ராமாயண காப்பியத்தை அடி யொற்றிய இந்தோனீசிய ராம கதையை ஆதாரமாகக் கொண்டெழுந்த ராமாயண நாட்டிய நாடகத்திலே,
68

இந்தியக் கதா சம்பவங்களுடன் முஸ்லிம் புராணக் கதை களையும் உள்ளடக்கியதான சீறத் காண்டமும் இடம் பெற்றிருக்கிறது. ஜாவா நாட்டு ராம சரிதத்தைப் பின் பற்றியெழுந்த மலாய ராம கதையில், ராவணனை அவன் தந்தை சொந்திப் என்ற நாட்டுக்குப் பிரஷ்டம் செய்த தாகவும், சொ ந் தி ப் சென்றடைந்த ராவணன் பன்னிரண்டு வருடகாலம் துறவு வாழ்க்கை நடத்தினு னென்றும், அந்தக் கட்டத்தில் ஆதிபிதா ஆதம்அவர்கள் தோன்றி அவன் தந்தையிடம் அவனுக்காகப் பரிந்து பேசியதாகவும் விவரிக்கப்பட்டிருக்கிறது. இராமாயணம் சம்பந்தமாக மலேசிய மாநாட்டில் சமர்ப்பிக்கப் பெற் றிருந்த மூன்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாயிலாக இத் தகவல்களை அறிந்துகொண்டேன். ராமாயணத்தின் செல்வாக்கு இந்தியாவுடனும் இலங்கையுடனும் நின்று விடாது. இந்தோசீனு, மலேசியா ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளதென்பதையும் மேற்குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் தெளிவுபடுத்தின. இந்தோசீனு என்னும் போது இன்றைய பர்மா, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியத்ணும் ஆகிய நாடுகளும் மலேசியா என்னும்போது, மலாயா, இந்தோனேசியா, பிலிப்பைன் தீவுகள் ஆகிய நாடுகளும் அடங்கும். இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர், பிரெஞ்சு ஆதிபத்திய ஆட்சி அற்றுப் போனதுடன் இந்தோசீனு என்ற பெயரும் வழக்கொழிந்தது, மலேசியா, கோலாலம்பூரைத் தலைப் பட்டணமாகக் கொண்ட சமஷ்டி அரசு, இந்தோசீனு, மலேசியா ஆகிய இரு பகுதிகளையும் குறிக்க இன்று வழக்கிலிருக்கும் சொற்ருெடர் தென் கிழக்கு ஆசியா என்பதாகும். இராமாயணக் கதை தென் கிழக்கு ஆசியா முழுதும் படர்ந்து பரவி ஆண்டாண்டு காலமாக அனைவ கிரையும் மகிழ்வித்து வருகிறது. குறிப்பாக, நடனம்,
69

Page 40
ஓவியம், சங்கீதம் ஆகிய துறைகளில் ராமாயணம் அபரிமிதமாக ஆதிக்கஞ் செலுத்தியுள்ளதெனலாம். *ராம சீதை கதை தென்கிழக்கு ஆசியாவெங்கும் புகழ் பெற்றமைக்குக் காரணம் அது மதம், ஒழுக்கம் ஆகிய வற்றுடன் நெருங்கிய சம்பந்தம் பூண்டிருந்ததுடனமை யாது, நடனம், ராஜ வைபவங்கள் சமயச் சடங்குகள், நாடகம், சிற்பம் ஆகிய துறைகளுக்கும் இயைந்தமையு மாகும்," என்று பேராசிரியர் ஹரி எம். பக் அவர்கள் தமது மாநாட்டுக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிருர் - இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளைப் பொறுத்த வரையில், ராமாயணம் சீலம் அல்லது ஒழுக்கம் சார்ந்த தென்ற அம்சத்திலும் மதச்சார்புடையதென்ற அம்சமே அதிக செல்வாக்குப் பெற்றதென்பது சில அறிஞர்களின் கருத்தாகும்.
நாமெல்லோரும் இலங்கையே ராவணனின் நாடு என்று உரிமை பாராட்டுகிருேமல்லவா? தாய்லாந்து வாசிகள் தமது நாடே ராவண பூமியென்று பாத்தியதை கொண்டாடுகிருர்கள். என் நண்பரொருவர் இத்தகவலைச் சொன்னபோது நான் ஆச்சரியமடைந்தேன். என்ருலும் அதை வெளிக்காட்டாமல் அப்படியானுல் *தாய்லாந்தின் பண்டைத் தலைநகருக்கு எவ் வி தம் அயுத்தியா (அயோத்தி?) என்ற பெயருண்டாயிற்று ? என்று கேட்டேன். நண்பர் இதற்குச் சரியான பதில் தரவில்லை.
1966 ஏப்ரல் 29ஆம் தேதி. பாங்கொக் நகரில் மரகதத்தாலான புத்தர் சிலைகொண்ட விகாரைக்கு, சீன நண்பர் ஒருவர் என்னை அழைத்துச் சென்ருர். கண்ணை யும் கருத்தையும் கவரும் வகையில் நிர்மாணிக்கப்பட் டிருக்கும் அந்த விகாரையில் மற்றுமோர் அதிசயத்தைக் கண்டேன்; சுவர்களிலெல்லாம் புத்தரின் வாழ்க்கையை
70

விளக்கும் காட்சிகளுக்குப் பதில் இராமாயணக் காட்சிகள்
சித்திரிக்கப்பட்டிருந்தன.
ராம கதையை நான் அறிந்த விதம் சுவையானது. 1921ஆம் ஆண்டில் யாராவது என்னிடம் "இராமருக்குச் சீதை என்ன முறை?" என்று கேட்டிருந்தால், " ஏன்? இருவரும் ஒருவரல்லவா?" என்று பதில் சொல்லியிருப் பேன். இந்தப் பதிலுக்குத் தத்துவார்த்த ரீதியாக விளக்கம் கொடுக்கலாமெனினும், பள்ளிக்கூட மாண வணுக இருந்த நான் அதையெல்லாம் அறிந்திருக்க வில்லை. அப்பொழுது நான் வைதீஸ்வர வித்தியால யத்தில் படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் தலைமை யாசிரியரின் பெயர் சீதாராமன். இந்தப் பெயரைத் தவிர ராமன், சீதையைப் பற்றியோ, ராமாயணத்தைப் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாதிருந்தது. அந்தக் காலத்தில் என்னுடைய அறியாமை கண்டு பிறர் எள்ளி நகையாடியிருப்பார்கள். ஆணுல் அடுத்த ஆண்டில்1922இல்-இங்கிலிஸ் நாலாம் வகுப்பில் ராம கதை உப பாடப் புத்தகமாக இருந்தது. அந்த இங்கிலிஸ் புத்த கத்தில் இராம இராவண யுத்தம் இலங்கையில் நடை பெற்றதென படித்தது முதல் ராம கதையில் எனக்கு ஆர்வமுண்டாயிற்று. இதை யடுத்த ஆண்டுகளில், யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில், தமிழ்ப் பாடத்தில் கம்பராமாயணத்தின் சில செய்யுள்களைக் கற்றேன். கொக்குவில் பொன்னையா மாஸ்டர் அவர்கள் எங்க ளுக்குத் தமிழ் படிப்பித்தார். அவருக்குச் சங்கீதத்திலும் நாடகத்திலும் மிகுந்த ஈடுபாடு. யுத்த காண்டத்தில்
வரும் :
*வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க் கேற்ப கயம்பட உரைத்த காவும்
71.

Page 41
தாரணி மெளலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் களத்தே போக்கி வெறுங் கையோ டிலங்கை
புக்கான்." என்னுஞ் செய்யுளுக்கு அவர் பதவுரையும் பொழிப் புரையும் கூறியதுடன் நில்லாது, தன்னை இராவணனுகக் கற்பித்துக் கொண்டு நடித்தும் காட்டி விளக்கிய காட்சி இன்றும் திரைப் படம் போல நினைவில் ஒடுகிறது. இதன் பின்னர், 1937இல், கேம்பிரிஜ் சீனியர் வகுப்பில் கம்ப ராமாயணத்தின் சிற்சில பகுதிகளைப் படித்தேன்.
கல்முனைப் பகுதியில் யுத்த அவசரகால அரசாங்க உதவி அதிபராகப் பதவி வகித்தபோது, பாடசாலைகளில் நடிக்கப்பெற்ற ராமாயண நாடகங்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். இந்தச் சந்தர்ப்பத்திலே, கல்முனைப் பகுதியின் படுவான்கரைக் கிராமங்களில் பார்த்த நாட்டுக் கூத்துக்கள் பல நினைவுக்கு வருகின்றன. பாரதம், ராமா யணம் ஆகிய இரண்டுமே கூத்துக்களுக்கு நன்கு பயன் படுத்தப்படக் கூடியனவாயினும்,மேற்குறித்தகூத்துக்கள் பெரும்பாலும் பாரதக் கதைகளையே சித்திரிப்பனவாக விளங்கின. ராமாயணச் சம்பவங்களைத் சித்திரிக்கும் கூத்துக்களைப் பார்த்த நினைவில்லை. ராமர், தருமர் இருவருமே காப்பிய புருஷர்களாக இருப்பினும் தருமர் மட்டும் பிரபலியம் பெற்றமைக்கு யாது காரணமாயிருக் கலாமென்று எனக்கு விளங்கவில்லை.
தொலை தூரத்திலுள்ள கோலாலம்பூரில் நடைபெற்ற கலை இரவு நிகழ்ச்சியின் ஓர் அம்சமான சீதாபஹரணத் தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த வேளையில் மனத்திரையின் மற்ருெரு புறத்தில், சுமார் கால் நூற்ருண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இந்தச் சம்பவங்க ளெல்லாம் ஒன்றன் பின் ஒன்ருகத் தோன்றி மறைந்தன.
72

கல்முனைப் பகுதி மக்களின் கூத்துக்களில் இராம கதை அதிகம் கையாளப்படாவிட்டாலும். அவர்களின் அன்ருட வாழ்க்கையில் அது நன்ருக வேரூன்றியிருக் கிறது. ராமர் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டா லென்ன என்பன போன்ற பழமொழிகள் அவர்கள் மத்தியில் வெகு பிரசித்தம். எந்த வன்னிமை பதவிக்கு வந்தாலும் செய்கைக்காரன் பாடு கொஞ்சமும் மாறப் போவதில்லை என்னும் கருத்தைத் தெரிவிப்பதற்கு அவர்கள் மேற்சொன்னபழமொழியைக் கையாளுவார்கள். இப்பகுதிகளிலுள்ள வெள்ளையுள்ளம் படைத்த இந்து மதக் கமக்காரர்களுக்கு ராமன் கற்பனைப் புருஷ னல்லன்; அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட்ட வந்த இலட்சிய புருஷனுக அவர்கள் ராமனைக் கொண் டாடுவதைக் கண்டேன். தந்தை சொல் தட்டாத மைந்த னுக்கும், பாசம் நிறைந்த சகோதரனுக்கும், நேசம் நிரம்பிய கணவனுக்கும், முன்வைத்த காலைப் பின்வைக் காத வீரனுக்கும், இலட்சியபூர்வமான அரசனுக்கும் சிறந்ததோர் உதாரணமாக அவர்கள் இராமனைக் காண் கிருர்கள். அதுபோலவே, சீதையைக் கற்புக்கரசியாகவும் ஒப்புயர்வற்ற மாது சிரோமணியாகவும் போற்றிக்கொண் டாடுகிருர்கள். பெண் ணு க்க டங் கி நடப்போருக்கு உண்டாகும் துன்பங்களை எடுத்துக் காட்டும் பாத்திரமாக தசரதன் விளங்குகிருன். பக்தியினுல் எதையெல்லாம். சாதிக்கலாமென்பதற்கு அனுமான் சான்று. ஆதர்ச பூர்வமான சகோதரர்களுக்கு இலக்கணமாக பரத லக்ஷமணர் இலங்குகின்றனர்.
இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த சாதாரண இந்து மக்களின் வாழ்க்கையை நல்வழிப்படுத்தியவர்கள் ராமாயணத்திலும், பாரதத்திலும் வரும் கதாபாத்தி ரங்களே என்று சொல்லலாம் ; ஒவ்வொரு மதத்திலும்,
73

Page 42
அம்மதத்தத்துவங்களை ஆதாரமாகக் கொண்டெழுந்த இலக்கியங்களில் இத்தகைய ஆதர்ச கதாபாத்திரங்களைக் காணலாம். சாதார ண மக்கள் படிப்பறிவில்லாத போதும் பண்புள்ளவர்களாக வாழ்ந்தமைக்கு, அவரவர் மதத்தைத் தழுவிய இதிகாச சம்பவங்கள் வாய்மொழி மூலமும், கூத்துக்கள், நடனங்கள் மூலமும் மனதில் வேரூன்றியமையே காரணமாகும். இன்று இந்நிலை மாறிவிட்டது. ஏட்டில் எழுதியவற்றைப் பக்தி சிரத்தை யுடன் படிக்கும் காலம், அச்சு வாகனமும் மலிவுப் பிரசு ரங்களும் வந்ததுடன் மலையேறிவிட்டது; இதன் விளை வாக வீர புருஷர்கள் யார் என்பதே சந்தேகத்துக்குரிய தாக மனக் குழப்பத்தை உண்டாக்கும் விஷயமாக மாறி விட்டது. இலட்சியம் இருக்குமிடத்திலேதான் தர்ம சங்கடமான சூழல்கள் உருவாகும். இலட்சியமென்பதே இல்லாத நிலையில் பண்புக்கும் ஒழுக்கத்துக்கும் இடமே யில்லாது போய்விடும். இன்று இந்த நிலை உருவாகி வருகிறதோ என்று அஞ்சத் தோன்றுகிறது. படிப்பும் அறிவும் பரவியுள்ள போதிலும் அதே அளவுக்கு மக்கள் பண்புடன் நடந்துகொள்ளா திருப்பதற்குக் காரணம், படிப்பு வேறு பண்பு வேறு என்ற சூழல் உருவாகி வருகின்றமைதான். பண்டைக் காலத்தில் படிக்காத மேதைகள் பலர் வாழ்ந்தார்கள். இன்று படித்த பேதைகள் பலரைக் காணக் கூடியதாய் இருக்கிறது. எனவே, படிப்பையும் பண்பையும் இணைக்கும் பிரயா சையில் இறங்குவதே இன்றைய சந்ததியார் ஆற்ற வேண்டிய பிரதான தொண்டாகும்.
இக் கட்டுரையைப் பேராசிரியர் பக் அவர்களின் ஆய்வுக் கட்டுரையிற் கண்ட சில குறிப்புக்களுடன் முடிக்க விரும்புகிறேன். ' ராமாயண ஆராய்ச்சியை முன்னிட்டு இந்தியா செல்லவிருந்த நான் இந்திய
守4

இளைஞன் ஒருவனைச் சந்தித்தபோது, அமெரிக்கர்க ளாகிய நாங்கள் அமெரிக்க வரலாற்றை கொலம்பஸின் யாத்திரையுடன் ஆரம்பிப்போம். இந்திய வரலாறு எதிலிருந்து ஆரம்பமாகிறது? என்று கேட்டேன். டில்லியைச் சேர்ந்த அந்த இளைஞன் உடனே ராம சீதை கதைய்ோடு ஆரம்பமாகிறது என்ருன். இந்தியா சேர்ந்த பின்னர் ஓவியக் கலைஞன் ஒருவனைச் சந்தித்து இராமா யணம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா வந்தி ருக்கிறேன் என்று அறிவித்ததும் அவன் " உங்களுக்கு உருப்படியான வேறு வேலை ஒன்றும் இல்லையா?" என்ற தோரணையில் கதைத்தான். இப்படியாக, எனது தொடர்புகள் பெருகப் பெருக, கருத்து வேறுபாடுகளும் பெருகலாயின. ஒரு சாரார் அதனை (ராமாயணத்தை) வேத வாக்காக மதித்து, பாராயணம் செய்து வந்தார்கள். மற்ருெரு சாரார் அதனைத் துச்சமாக மதித்தார்கள்; காம உணர்ச்சிகளைக் கிளறும் ஆபாச நூல் என்பதால், தீயிலிட்டுக் கொளுத்த வேண்டுமென்ருர்கள். ஆணுலும் ராம சீதை கதை பண்டைக் காலந்தொட்டே பல்வேறு துறைகளைச் சார்ந்தோரினதும் கற்பனையை அருட்டி வந்திருக்கிறது; பல கலை வடிவங்கள் தோன்றுவதற்கு காலாயிருந்திருக்கிறது. அக் கதை புகட்டும் தத்து வங்களை மக்கள் மதித்து, அனுசரித்து நடந்தார்கள். ஆளுல் இன்ருே அத்தத்துவங்களே சர்ச்சைக் குரியன வாக விளங்குகின்றன. இன்றைய கல்லூரி மாணவிகள் சீதையைத் தமது வாழ்க்கை வழிகாட்டியாகக் கொள்ள லாமா என்பதை யிட்டுத் தடுமாறுகிருர்கள். ராம ராஜ்யம் என்பது காந்திஜியினுல் பிரபல்யப்படுத்தப்பட்ட பின் னரும், அரசியல் வாதிகளின் ஆதர்சமாக அமையா திருக்கிறது."
75

Page 43
9. பிரிந்தவர் கூடினுல்.
சென்ற வாரம் ராமாயணத்தின் செல்வாக்கை விவரிக் கையில், படிக்காத பேதைகளைப் பற்றியும் படித்த பேதைகளைப் பற்றியுங் குறிப்பிட்டதிலிருந்து, மனிதர் அனைவரும் படிப்பும் பண்பும் ஒருங்கேயமையப்பெற்ற சான்றேர்களாயிருப்பின் உலகம் எவ்வளவு மகிழ்ச்சி நிறைந்ததாயிருக்குமென்று எண்ணத் தோன்றியிருக்கும் இல்லையா? ஏப்ரல் 19ஆம் திகதி கோலாலம்பூரில் சரியாக மூன்று மணி நேரத்தை இத்தகைய படித்த மேதைகள் சிலருடன் கழிக்க நேர்ந்ததன் பின்னர் என் மனதில் இத்தகைய எண்ணம் மீண்டும் தோன்றியது. இலங் கையிற் பிறந்து, மலேசியாவில் வாழும் தமிழ்க் குடும்பத் தவர் வீட்டில் அசல் யாழ்ப்பாண விருந்தோடு, இந்த மேதைகள் சந்திப்பு நிகழ்ந்தது. விருந்துக்கு வந்திருந் தவர்களில் என்னைத் தவிர மற்றெல்லோரும் கலாநிதி களாகவோ வருங்காலக் கலாநிதிகளாகவோ இருந் தார்கள் ; எல்லோரும் பல்கலைக் கழகங்களில் ஏதாவ தொரு கலைப் பீடத்தின் உறுப்பினர்கள். இதையறிந்த நான், ஒருவகையில் பார்த்தால் இத்தகைய கல்விமான் களுடன் சமமாக உட்கார்ந்து உரையாடும் அருகதை எனக்கு இல்லையே என்று என்னை விருந்துக்கு வர வழைத்திருந்த நண்பர் அரசரத்தினம் (அவர்கூட ஒரு கலாநிதி!) அவர்களிடம் சொன்னேன். அவர், முன்னர் இலங்கைப் பல்கலைக் கழகப் பரிபாலன சபையின் உறுப் பினனுக வெகுகாலம் நான் பணியாற்றியமையை ஞாபக மூட்டி, என்னைத் தேற்றி, நானும் அவர்களில் ஒருவனே யென்ற உணர்வு பெறச் செய்தார்.
6

வரலாற்றுத் துறையில் நாட்டமுள்ளவர்கள் எந்த விஷயத்தையும் காலக் கிரமப்படியே விவரிப்பது வழக்கம். ஆகவே, வரலாற்றுத் துறையில் பெரும் புலமைபெற்ற விளங்கும் கலாநிதி அரசரத்தினம் அவர்கள் வீட்டில் நடந்த விருந்தைப்பற்றி வரலாற்றுத்துறை பழங்காலச் சம்பவங்களின் கோவையெனக் கொள்ளாது மனித தின் ஏற்றத் தாழ்வுகளை விவரிக்கும் உயரிய கலையெனக் கொண்டு ஆயுட்கால முழுதும் அதில் ஈடுபாடு காட்டி வரும் வரலாற்று மாணவனுகிய நானும், காலக்கிரமப்படி வர்ணிப்பதே முறையென நினைக்கிறேன்!
ஏப்ரல் 16ஆம் திகதி கோலாலம்பூரில் நான் கால் வைத்த அன்றே கலாநிதி அரசரத்தினம் அவர்கள் தமது வீட்டில்தான் விருந்து கொள்ள வேண்டுமென்று அன்புக் கட்டளை பிறப்பித்தார். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இருந்தகாலத்தில் அவர் எனக்கு. நல்ல பழக்கம்; புதிய இஸ்லாமிய கலைக்களஞ்சியத்துக் கென இலங்கையைப்பற்றி நான் எழுதிய கட்டுரைக்கு அவரிடமிருந்து சில விமரிசனக் குறிப்புக்கள் பெற்றிருந் தேன். எனது மலேசியப் பிரயாணத்துக்குச் சில மாதங் களுக்கு முன்னர் " வரலாற்றுப் பின்னணியில் இன்றைய நாடுகள் " என்னும் நூல் வரிசையில் இலங்கை பற்றி அவர் எழுதிய சரித்திர நூலைப் படித்ததன் பயனுக அவர்மீது எனக்கிருந்த அபிமானம் மேலும் உயர்ந் திருந்தது. இக்காரணங்களை முன்னிட்டு அவருடைய அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். ஒரு காலத்திற் இலங்கைப்பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தில்’ தமது சகாக்களாக இருந்தவர்களும் விருந்தில் கலந்து கொள்வார்கள் என்று சொல்லி மேலும் ஆசை காட்டிஞர். இதில் மற்ருெரு விஷயமென்னவெனில், மாநாட்டுக். கைநூலில் இந்த விருந்தும் ஒரு நிகழ்ச்சியாகக்
77

Page 44
குறிப்பிடப்பட்டிருந்தமையாகும். ஏப்ரல் 19ஆம் திகதி நிகழ்ச்சி நிரலில் ஓர் அம்சமாகக் குறிக்கப்பெற்றிருந்த இந்த விருந்துக்கு "நண்பர்களின் நல்லிரவு' (Friends' Night) என்று பெயரிட்டிருந்தார்கள். வழக்கத்துக்கு மாருன இந்த நிகழ்ச்சியினுல் அனுகூலங்களில்லாம லில்லை. ஏப்ரல் 21ஆந் திகதி அவரவர் அந்தஸ்து முதலியவற்றை அனுசரித்து சம்பிரதாய பூர்வமாக ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த ஸ்தானிகர் வரவேற்பு இரவு (Embassy Night) விருந்தைப் போலன்றி இந்த விருந்து ஒத்த சுவையுடைய நண்பர்கள் சந்தடியோ சச்சரவோ அற்ற சூழலில் ஒருவரோடொருவர் அளவளா வுவதற்கு வாய்ப்பேற்படுத்திக் கொடுத்தது. இவ்விதமாக, திங்கட்கிழமை " கலை இரவு', செவ்வாய்க்கிழமை * நண்பர்களின் நல்லிரவு', வியாழக்கிழமை "ஸ்தானிகர் வரவேற்பு இரவு" ஆக மூன்று விருந்து நிகழ்ச்சிகள் மலேசிய மாநாட்டில் இடம்பெற்றன.
திங்கட்கிழமை காலை இந்த 'நண்பர்களின் நல்லிரவு” விருந்துபற்றி மாநாட்டுத் தலைமைக் காரியா லயம் வெளியிட்ட அறிவிப்பு, விடுதி மண்டப அறிவிப்புப் பலகையில் காணப்பட்டது. அவ்வழைப்பிதழில் என் பெயர் மாநாட்டுச் செயற்குழுவின் பொதுச் செய லாளரும், எனது நண்பரும், முன்னைநாள் பாடசாலைச் சகாவுமாகிய வி. செல்வநாயகம் அவர்கள் வீட்டு விருந் தாளிகள் பட்டியலிற் சேர்க்கப்பட்டிருந்தது. அன்றுதான் கலாநிதி அரசரத்தினம் வீட்டிலும் நான் விருந்து கொள்ள ஒப்புக்கொண்டிருந்தேன். ஆகவே, தகவல் கருமபீடத்துப் பெண்மணிகளில் ஒருவரை அணுகி எனது தர்ம சங்கடமான நிலைமையை விளக்கினேன். யார் யார் எங்கெங்கு விருந்துண்பதென்று ஏற்கனவே ஏற்பாடாகி விட்டமையால் தான் ஒன்றும் செய்வதற்கில்லையென்றும்,
78

விருந்தோம்பு குழுவின் செயலாளர் திருமதி மகாலகூடிமி நவரத்தினம் அவர்களைக் கண்டு பேசும்படியும் அந்தப் பெண்மணி வெகு பவ்வியமாகப் பதில் சொன்ஞர். திருமதி நவரத்தினத்தை நான் அறியாதவனல்லன் மலாயாவில் தலைசிறந்த கண் சிகிச்சையாளர் என்று பெயர் பெற்றவரும் இப்பொழுது இலங்கையில் என் அயலில் வசிப்பவருமான டாக்டர் விஸ்வலிங்கத்தின் மகளே அவர். ஆணுலும் அவருக்கும் தர்ம சங்கட முண்டாக்க நான் விரும்பவில்லை. எனவே தகவல் கொடுத்த பெண்மணியின் சொல்லை நல்ல பிள்ளைபோலக் கேட்டுக்கொண்டு வெளியேறினேன். பே ரே ட் டி ல் கணக்குப் பதிவதுபோல, செல்வநாயகத்தின் பட்டியலி லிருந்த என் பெயரை அரசரத்தினத்தின் பட்டியலுக்கு மாற்றுவித்து எவரிடமும் கெட்டபெயர் வாங்காமலே என் விருப்பம்போல நடந்துகொள்வதென்று முடிவு செய்து கொண்டு,
* ஒடு மீன் ஓடி உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாம் கொக்கு " என்பதுபோல செல்வநாயகத்தைக் காணக் காத்திருந் தேன். மாநாட்டு வேலைகளில் மும்முரமாக ஒடியாடித் திரிந்த அவரை நாலுவார்த்தை பேசக்கூடிய நல்ல சந்தர்ப்பத்தில் பிடித்து அவர் விரும்பினுலும் விரும்பா விட்டாலும் ஏப்ரல் 26ஆம் திகதி, கோலாலம்பூரிலிருந்து புறப்படுமுன் கட்டாயம் 'அவர் வீட்டில் விருந்து சாப்பிட வருவேன்' என்று சொன்னேன். மாநாட்டு அமைப்புக் குழுச் செயலாளரான அவருக்கு மாநாட்டு இறுதி நாளாகிய ஏப்ரல் 23 வரை ஓயாத ஒழியாத வேலை யிருந்தது. 26ஆந் திகதி எல்லா வேலைகளும் முடிந்து விடும் என்றெல்லாம் சொல்லி விளக்கியதும் அவர் அரச ரத்தினம் வீட்டு விருந்துக்குப்போக எனக்கு அனுமதி
79

Page 45
தந்தார். (அவருக்கு வாக்களித்தபடியே 26ஆந் திகதி அவர் வீட்டில் விருந்துண்ண நான் தவறவில்லை.) எதிர் காலத்தில் இந்த மாநாட்டு வரலாற்றை யாரும் எழுத நேர்ந்தால் அவர் நிச்சயம் ஒரு பிழையாவது விடுவார்; நண்பர்களின் நல்லிரவில் நான் அரசரத்தினம் வீட்டில் விருந்து கொண்டபோதும், விழாப் பதிவேடுகளின்படி என் பெயர் செல்வநாயகத்தின் பட்டியலில் இருப்பதைக் கொண்டு, நான் செல்வநாயகம் வீட்டு விருந்துக்குப் போனேன் என்று அவர் எழுதக்கூடும். கண்ணுல் கண்டதும் பொய்யே ; காதால் கேட்டதும் பொய்யே தீர விசாரித்து அறிந்ததே மெய் என்பார்கள். வரலாற்றுத் துறையிலும் இவ்விதமே. ஏட்டில் இடம்பெற்ற விஷயம் கூடச் சில சமயங்களில் பிழையாக இருக்கும்.
எனது தர்மசங்கடத்தைச் சாதுரியமாகச் சமாளித் தமையால் போலும் அன்றைய விருந்து எனக்கு அதிக மகிழ்ச்சியையளித்தது. கலாநிதி அரசரத்தினம் எங்களைத் தமது காரில் வீட்டுக்குக் கூட்டிப் போனுர். இதனுல் காசும் காலமும் மிஞ்சின; டாக்ஸியில் போயிருந்தால் சரியான விலாசத்தைத் தேடிப் பிடிப்பதில் எவ்வளவு நேரம் கழிந்திருக்குமோ? விருந்து ஏற்பாடு செய்யும் எல்லோரும் இந்தச் சிறிய விஷயத்தைக் கவனிப்பதில்லை. அதனுல் சில சமயங்களில் விருந்தாளிகள் பல அசெள கரியங்களுக்கு உள்ளாவதுண்டு.
அரசரத்தினம் வீட்டில் எல்லோருமாக ஒன்பது பேர் குழுமியிருந்தோம். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல எல்லோருமே (என்னையும் அவரது மனைவியையும் தவிர) கோலாலம்பூர், பேராதனை, வித்தியோதயப் பல்கலைக் கழகங்களில் படிப் பி க் கும் பட்டதாரிகள். எமது சம்பாஷணை பலதும் பத்தும் " என்று குறிப்பிடத்தக்க
8O

ܩ ■
=ா"
*
F==== 工、_
冉 關
冉
மலேசியப் பிரதமர் துங்கு அப் துர் ரஹ்மா வின் துவக்கவுரை, டான் சம்பந்தம், தமிழக முன்னுள் முதல்வர் கனம் பக்தவத்சலம்.
[下 H.H.
鵲』 鷺
| NA
:"
| ::: ,
"שו
# * * శ్లో 閭 ဦးဖို့ဒ္ဓိ قلنا
இடமிருந்து வலம் : -நூலாசிரியர், தமிழவேள் சாரங்கபாணி, டாக்டர் மு. வ, வள்ளுவமணி ரெணு, கன்னல்கவி கரீம் கவிமணி விஜனுத்தீன்,

Page 46
கன்னல்க
ரெஞ "பொசிரியர், க ஹமீது தா ஆக் ரெ
வி கரீம், தமிழ் நெஞ்சர் மகாலி
ஸ்டாரன்
ங்கம், வள்ளுவமணி பின் கவிஞர் K. P. S. ! „“-
அேப் M. S. அலிபர்
விமணி ஜை இறுத்தி
B。晶。
 
 
 

வகையில் அமைந்த போதிலும் மாநாட்டைச் சுற்றியே வட்டமிட்டது. எ ன் னே த் தவிர மற்றெல்லோரும் மாநாட்டின் கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் ஆகிய திரிகாலங்களையும்பற்றி வெகு தாராளமாகக் கருத்து வெளியிட்டார்கள். மாநாட்டுப் பிரதிநிதிகளே வகைப் படுத்தி இன்னுர் இன்ன ரகம், இன்னுர் இன்ன கோஷ்டி என்றெல்லாம் விமரிசனமும் செய்தார்கள். இப்படி எல்லோரும் பேசும்போது நான் மட்டும் வாய்மூடிமெளனி யாக இருக்கக் கூடாதென்று தோன்றியது. எனவே, அங்கிருந்தவர்களில் ஒரு வ ர். மற்றெல்லோரிலும் ஆராய்ச்சித் துறையாளரையேதாம் அதிகம் மதிப்பதாகச் சொன்னதும், உத்தியோக நீதியாக அல்லாமல் ஆசை யின்பால் ஆராய்ச்சியிலீடுபடுவோருக்கு முதலிட மளித்தல் வேண்டுமல்லவா என்று வினவினேன். என்னு டைய பேச்சில் இழையோடிய மறைமுகமான கேலியைக் கிரகித்துக்கொண்ட நண்பரொருவர் பல்கலைக்கழக ஆசிரியர்களாயிருப்பவர்களுக்குப் பல்கலைக்கழகப் பாடங் களை ஒழுங்கு செய்வதிலேயே முழு நேரமும் கழிந்துவிடு கிறதென்றும் அவர்களும் ஆசையின் பொருட்டே ஆராய்ச்சியில் ஈடுபடுகிருர்களென்றும், கூலிக்கு மாரடிப் பதுபோல சம்பளத்துக்காக ஆராய்ச்சித் துறையில் ஈடுபடுவதில்லையென்றும் பதில் சொன்னூர். நானும் விட்டுக்கொடுக்காமல், கோலாலம்பூர் மாநாட்டினுல் பலருக்கு உா க் க மும் ஆக்கமுமுண்டாயிற்றென்று சொன் னே ன். இதிலிருந்து பேச்சு வேறு திசைக்குத் திரும்பி மறுபடியும் மாநாட்டில் வந்து நின்றது. அப்பொழுது மாநாட்டுப் பிரதிநிதிகளையும் அவதானிகளையும் எமது நாணயப் பரிவர்த்த&னக் கட்டுப்பாட்டதிகாரியின் முறையை அணு ச ரி த் 」 நான்கு வகுப்பாகப் பிரிக்கலாமென்று நான் சொல்லி,
6 S.

Page 47
அந்த நான்கு வகுப் புக் களை யும் விளக்கினேன். போக்குவரத்துச் செலவுக்கான பணம் போக கைச் செலவுக்கென (1) 500 (ரூ. 750/-) மலேசிய டாலர் நாணய பெர்மிட் பெற்றவர்கள்; (2) 150 (ரூ. 225/-) டாலர்-(வெள்ளி) பெர்மிட் பெற்றவர்கள்; (3) 32பிரிட் டிஷ் பவுண் (சுமார் ரூ. 50/-) பெற்றவர்கள் ; (4) செப்புச் சல்லியும் பெருதவர்கள் ஆகியோரே அந்த நான்கு வகுப்பினருமென்றபோது, அங்கிருந்தவர்களுக்கு நான் * மூணும் கிளாஸ் ஆசாமியாக இருக்க வேண்டுமென்ற விஷயம் விளங்கிவிட்டது. முந்திய ஞாயிற்றுக்கிழமை இலங்கைப் பிரதிநிதிகளுக்கென ஒழுங்கு செய்யப்பெற்ற அதிவிசேஷ கூட்டத்தில் பிரசன்னமளிக்கத் தவறிய எனக்கு அந்தக் கூட்டம்பற்றி முதற்றரமான விவரம் அரசரத்தினம் வீட்டு விருந்தின்போது கிடைத்தது. அதைக் கேட்டதில், அந்தக் கூட்டத்துக்குப் போகத் தவறியமையால் நான் பிரமாதமாக எதையும் இழந்து விடவில்லையென்பது தெரியவந்தது. நண்பர்களின் நல்லிரவு' அன்று பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற விருந்துகளில் பரிமாறப்பட்ட கருத்துக்களை ஒளிப்பதிவுக் கருவிமூலம் தொகுத்திருந்தால், வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த பல தகவல்கள் கிடைத்திருக்கக் கூடும்! இந்தக் கருத்துரைகள் பொதுவாக இரு தினுசாக இருக்கும். மாநாட்டு நிகழ்ச்சி ஒவ்வொன்றினதும் நல்ல அம்சங்களைப்பற்றி ஒரு சாராரும் குறைபாடுகள்பற்றி மறு சாராரும் பேசியிருப்பார்கள். அரசரத்தினம் வீட்டில் குழுமியிருந்த நாங்களும் இந்தச் சர்வதேச உண்மைக்குப் புறம் போகாமல் ஐம்பதுக்கு ஐம்பது என்ற அடிப் படையில் மாநாட்டின் குறை நிறைகளை அலசி ஆராய்ந்தோம்.
82

இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து பலர்-சுமார் அரைடசின் பேர்-கோலாலம்பூர் பல்கலைக்கழகத்திற்கு இடம் பெயர்ந்திருந்ததைப் பேச்சுவாக்கில் அவதானித் தோம். இவர்களில் பேராசிரியர் எலியேசரும் பேராசிரியர் தனிநாயகம் அடிகளாரும் மிகவும் உயர்ந்த பதவிகளை வகிக்கிருர்கள். இப்படி சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் எத்தனை இலங்கையர்கள் பணியாற்றுகிருர்கள் என்று எங்களுக்குத் திட்டவட்டமாகத் தெரியவில்லை. இதிலி ருந்து, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கூடுதல் சம்பளத்துக்கும் துரித பதவி உயர்வுக்குமாகந் தமது சொந்த நாட்டைவிட்டு வெளியேறுவது சரியா என்ற விஷயத்துக்குப் பேச்சுத் தாவியது. இது இலங்கைக்கு மட்டுமே பிரத்தியேகமான தொன்றல்லவென்றும் இங்கி லாந்திலுள்ளவர்களும் இவ்விதமே அமெரிக்காவுக்குச் சென்று கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்திலும் ஹார் வர்ட் பல்கலைக் கழகத்திலும் பணியாற்றி வருகிருர்கள் என்றும், பணமும் பதவியும் மட்டுமல்லாமல் ஆராய்ச்சித் துறையில் அளிக்கப்படும் வசதிகள் போன்ற பிற அம்சங்களும் காரணமாகுமென்றும் விளக்கம் கொடுக் கப்பட்டது. அன்றைய விருந்து முடிய வெகு நேரமாகி விட்டதால் கலாநிதி அரசரத்தினம் அவர்கள் எங்கள் எல்லோரையும் கொண்டுவந்து சேர்த்ததுபோலவே, தமது காரில் பல்கலைக்கழக விடுதிக்குக் கொண்டு போயும் விட்டார்.
அன்றிரவு படுக்கைக்குப் போகும்போது, கல்வித் துறை பற்றியும் மாநாட்டு விவகாரங்கள் பற்றியும் * அறியாதன அறிந்தேன்" என்ற உணர்வு நெஞ்சில் நிறைந்திருந்தது.
83

Page 48
10. கடைசி நாள்
மறுநாள் - ஏப்ரல் 20 புதன் கிழமை - பிரதிநிதிகள் எல்லோரும் மாநாட்டு பஸ்ஸில் "திவான் பஹாஷா தான் புஸ்தக" என்னும் மொழி படிப்பாற்றல் துறை அதிபர் துவான் செய்யது நஸ்ரீர் பின் இஸ்மாயில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். இஸ்மாயில் அவர்கள் தமது சுருக்கமான வரவேற்புரையில், மலாயப் பண்பாட் டுக்கு இந்தியா கலாசார செல்வங்களை வாரி வழங்கி யுள்ளபோதிலும் மலாயப் பண்பாடு தன்னளவில் தனித் தன்மை வாய்ந்ததென்பதை மறுத்தலாகாதென்று குறிப் பிட்டார். அவருடைய உரையின் ஒரு வசனம் இன்றும், பளிச்சென்று நினைவுக்கு வருகிறது. எங்கள் பெயர்கள் இந்தியப் பெயர்களா யிருந்தாலும் இனவாரியாகப் பார்க்கும்போது நாம் இந்தியர்களல்லர்; அதுபோலவே, நாங்கள் அறபுப் பெயர்கள் பூண்டிருப்பினும் இனவாரி யாக நாங்கள் அறபிகளல்லர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்கம் வெளி யிட்ட தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 1967ஆம் ஆண்டில் மலாய் மொழி ஒரே உத்தியோக மொழியாக விளங்குமென்று குறிப்பிட்டிருக்கிறதாம். 1967ஆம் ஆண்டில் இக்கொள்கை அமுலாக்கப்பட்டது. இதனை முன்னிட்டு 1960இல் தேசிய மொழி வாரமும் 1961இல் தேசிய மொழி மாதமும் 1963இல் தேசிய மொழிக் காலாண்டும் கொண்டாடப்பட்டனவாம். 1966இல் மார்ச் 26 முதல் செப்டம்பர் 4 வரை தேசிய மொழி அரையாண்டு
84

கொண்டாடப்படுகிறதாம். இதன் அடிப்படை நோக் கத்தை ஒருவாறு கிரகித்துக் கொள்ள முடித்தபோதிலும் இக்கொண்டாட்ட காலத்தில் வீடுகளிலும் சந்தோர்களி லும் வியாபார ஸ்தலங்களிலும், மலாய் மொழிக்கு எவ்விதமாக உத்தியோக மொழி அந்தஸ்து அளிக்கப் படிகிறதென்பதை அறிந்து கொள்ள அவகாசம் கிடைக்கவில்லை. மேற்படி மொழி, படிப்பாற்றல் துறை யினர் வெளியிட்ட சிறுவர் இலக்கிய நூல்கள் பலவற்றை நாங்கள் அங்கு பார்வையிட்டோம். இஸ்மாயில் அவர்கள் தமது இலாகாவின் முன்னேற்றத்தில் பெருஞ் சிரத்தை கொண்டுள்ளமையை அன்றைய தேநீர் விருந் தின்போது நான் உணர முடிந்தது. புத்தகங்களில் பெரும்பாலானவை அதிநவீன அச்சுமுறைகளை அனு சரித்து வெகு அழகாகவும் எடுப்பாகவும் கச்சிதமான வண்ணச் சித்திரங்களுடனும் அச்சிடப்பட்டிருந்தன. காசைக் காசென்று பாராமல் அழகையும் அமைப்பையுமே பிரதானமாகக் கவனித்து அப்புத்தகங்களை வெளியிட்டி ருந்தார்கள்.
அந்தப் புத்தகங்களைப் பார்த்தபோது நான் சிறு பைய ணுக, "அல்லாப்பிச்சை மாமா பள்ளிக்கூடத்"தில் படித்த காலத்தில் உபயோகித்த வாசினைப் புத்தகங்களை நினைத் துக் கொண்டேன். புத்தகங்களையும் உபபாடப்புத்தகங் களையும் பொறுத்தவரையில் இன்றைய மாணவர்கள் மிக வும் அதிர்ஷ்டசாலிகள்தாம், என்ருலும் ஏழ்மையான சூழ லில் படிப்பதில் அனுகூலமில்லையென்று சொல்ல முடி யுமா? இன்றைய பள்ளி மாணவர்கள் எனது சந்ததியைச் சேர்ந்த மாணவர்களிலும் அதிக படிப்பு ஊக்கமுள்ளவர் களென்று யாராவது அறுதியிட்டுச் சொல்ல முடியுமா ?
தேநீர் விருந்து முடிந்து விடுதிக்குத் திரும்பியதும் பரத நாட்டிய நிகழ்ச்சியொன்றினைப் பார்த்தோம்.
85

Page 49
உண்மையில் அது பரதநாட்டியம் பற்றிய விரிவுரை யென்றே சொல்ல வேண்டும். மேற்கு நாடுகளெல்லாம் சுற்றுப் பிரயாணஞ் செய்து, அற்புதமான இந்தக் கலை யின் மாண்புகளை அந்நாடுகளிற் பரப்பி இந்தியாவுக்குப் பெருமை தேடிக் கொடுத்த திறமைமிக்க நர்த்தகியான பூரீமதி நிர்மலா ராமச்சந்திரன் அவர்கள் நாட்டியத்தின் நுட்பங்களை ஆடல் மூலம் விளக்கினர் என்று சொல்வது பொருத்தமானதே. இதையடுத்த சங்கீதம் பற்றியும் இதுபோன்ற விரிவுரை நடைபெற்றது. கட்டுரைகளும், கருத்தரங்குகளுமாக நடைபெற்ற மாநாட்டில் இந்த நிகழ்ச்சிகள் பெரிதும் வரவேற்கப்பட்டன. இயல், இசை, நாடகம் எனத் தமிழை மூன்ருக வகுத்து முத்தமிழ் என்று மூன்றினையும் இணைத்தமை எவ்வளவு பொருத்த மானதென்பதை நாங்கள் இந்நிகழ்ச்சிகளின்போது உணர்ந்துகொண்டோம்.
இந்நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் நாங்கள் சிலர் பேராசிரியர் எலியேசர் வீட்டுக்குப் போனுேம், கடமை, களின் பளுவும் வயதும் அதிகரித்தபோதிலும் வாலிபத் தோற்றம் மாருமல் இருக்கும் அன்னுரின் இல்லத்தில் நடுநிசி நேரத்தில் சிற்றுண்டி அருந்திய நாங்கள் திராவிடவியல் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாடுள்ள ஐரோப்பியர் இருவரைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்ருேம்.
இச் சந்தர்ப்பத்தில் மற்ருெரு நிகழ்ச்சியைப் பற்றி யும் குறிப்பிட விரும்புகிறேன். மாநாட்டு நிகழ்ச்சி நிரலின்படி இதுவும் மாநாட்டு நிகழ்ச்சிகளிலொன்ருகக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், தர்க்க ரீதியாகப் பார்க்குமிடத்து, மாநாட்டுடன் தொடர்பற்றதொன்ரு கும். ஏப்ரல் 19 செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கும்
86

ஒரு மணிக்குமிடையில் பதில் பிரதமர் துங் அப்துல் ரஸாக்பின் ஹ"செயின் அவர்கள் மாநாட்டில் நிகழ்த்திய சொற்பொழிவே அது. பாதுகாப்பு, கிராமாபிவிருத்தி ஆகிய இரு அமைச்சுக்களையும் நிர்வகிக்கும் அவர் கிராமாபிவிருத்தி பற்றிப் பேசினர். எனினும் தாம் எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றி அவர் கொண் டிருந்த பரந்த அறிவும், அதில் அவருக்கிருந்த பற்றுத லும் அவரது பேச்சில் நன்கு புலனுகின.
1966 ஏப்ரல் 23 மாநாட்டின் கடைசித் தினம்; வாரம் முழுவதிலும் என்றுமில்லாதளவு அதிக நிகழ்ச்சிகள் இடம் பெற்ற தினமும் இதுவே. காலை 9-20 முதல் 11 மணிவரை பொதுக் கருத்தரங்கு, 11-30 முதல் பிற்பகல் 1 மணிவரை இறுதிக் கருத்தரங்கு. அதன் பின்னர் சிங்கப்பூர்ப் பிரபல வர்த்தகரும் உபகாரியுமாகிய நைஞ முஹம்மது அவர்கள் மாநாட்டுப் பிரதிநிதிகள் சிலருக்கு ஹோட்டல் மேர்ளினில் ஏற்பாடு செய்திருந்த மத்தியான விருந்து ; பிற்பகல் 4-30 முதல் 7 மணிவரை தேசிய மொழி வளர்ப்பு நிறுவன மண்ட பத்தில் அனைத்துலகத் தமிழ்த் துறைக் கழகம் தமிழியல் சம்பந்தமாக ஏற்பாடு செய்திருந்த சொற்பொழிவுப் பொதுக் கூட்டம் : கடைசியாக பிற்பகல் 3 மணிமுதல் சுமார் 10-80 மணிவரை ஜனப் பிரதிநிதிகள் சபை வளவில் பிரதிநிதிகளுக்கென்ற ஒழுங்கு செய்யப்பெற்ற விருந்து. இவ்வாருக நாள் முழுவதும் நிகழ்ச்சிகள்.
காலை 8-30 முதல் 11 மணிவரை நடைபெற்ற பொதுக் கருத்தரங்கில் கி. வா. ஜகந்நாதன் அவர்களும் தமிழக ஆட்சிமன்ற எதிர்க் கட்சித் தலைவர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் உரை நிகழ்த்திஞர்கள். தெய்வ பக்திக்கும் பக்தர்களுக்கும் மதிப்புக் குன்றி வரும்
87

Page 50
இக்காலத்தில், தமிழ் நயமும் பக்திச் சுவையும் பாலும் தேனும் போலக் கலந்திருக்கும் தேவார, திருவாசகப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, பொதுமக்களுக்குப் பயன் படும் வகையில் அவற்றுக்கு விளக்க மெழுதி, சமயத் தொண்டும், தமிழ்த் தொண்டுமாற்றி வரும் அறிஞர் கி. வா. ஜகந்நாதன் என்பதை நான் முன்னமே அறிந் திருந்தேன். அன்னரது நூல்களால் பயனடைந்தோரில் நானுமொருவணுவேன். சில ஆண்டுகளுக்கு முன் அவரைச் சந்தித்து உரையரடியுமுள்ளேன். அவர் சிறந்த பேச்சாளருமாவார் என்பதை மேற்படி கருத் தரங்கில் நேரிற் கண்டுகொண்டேன். அவரது சொற் பொழிவைக் கேட்டபோது, இங்கிலாந்தில் விக்டோரியா மகாராணி காலத்தில் வாழ்ந்த, புகழ்பெற்ற இராஜ தந்திரியாகிய கிளாட்ஸ்டோன் என்பாரின் கடல் மடை திறந்தது போன்ற பிரசங்கம் இவ்வாறிருந்திருக்குமோ வென்று எண்ணத் தோன்றியது. இவருக்குப் பின்னர் உரையாற்றிய நாவலர் நெடுஞ்செழியனது பேச்சு, விஷயத்திலும் பிரசங்க முறையிலும் கி. வா. ஜ.வினது பேச்சிலிருந்து வேறுபட்டதாய் விளங்கிய போதிலும்,
அவரது சொல் வன்மையும் கேட்போரைக் கவர்வதாய் இருந்தது. கி. வா. ஜ.வின் பேச்சு சமயத்தைப் பற்றியும், சாசுவதமான உண்மைகள் பற்றியும் விதந்தோதுவதாய் அமைந்திருக்க, நெடுஞ்செழியனது பேச்சு, மாநாட்டைப் பற்றியும் இன்றைய பிரச்சினைகள் பற்றியும் ஆராய்வ தாய் அமைந்திருந்தது. மாநாட்டின் பலாபலன்களை ஆராய்ந்த அவர், தமிழகத்துக்கு வெளியே மாநாடு நடத்தேறியமையே ஒரு சிறப்புத்தான் என்ருர். அடுத்த மாநாடு மேலுஞ் சிறப்பாக அமைவதற்கு இந்த மாநாடு படிப்பினையாக அமையுமென்ருர். தமது பெயரிலுள்ள "ஞ’, ‘ழ’ ஆகிய சிறப்பு எழுத்துக்களைச் சுட்டிக் காட்டி,
88.

தமது பெயரை வேறெந்த மொழியிலும் சரியாக எழுத முடியாதென்று நகைச்சுவையுடன் கூறி, தமிழின் மாண்பை நிரூபித்தார். "இங்கே வா" என்னும் சொற் ருெடரொன்றையே, சந்தர்ப்பத்தைப் பொறுத்து, இயல், இசை, நாடகம் ஆகிய முப்பிரிவிலும் பிரயோகிக் கலாமென்று உதாரணபூர்வமாக விளக்கினுர், பணிப் பெண்ணைப் பார்த்து, "இங்கே வா" என்னும்போது, அது இயல் தமிழ்; அதே சொற்ருெடரை உபயோகித்து, காதல் மனையாட்டியைக் கனிவோடு அழைக்கும்போது, அங்கே இசைத் தமிழ் பிறக்கிறது; குழந்தையைப் பார்த்து, சுட்டு விரலை அசைத்து, "இங்கே வா" என்று கூப்பிடும்போது, அங்கு நாடகத் தமிழ் பிறக்கிறது என்று ஹாஸ்யமாகக் குறிப்பிட்டு இயல், இசை, நாடக மென மூன்ருகவும் அதே சமயத்தில் ஒன்ருகவும் இருக் கும் தமிழின் பெருமையை விளக்கினுர், கி. வா. ஜ.வின் பேச்சு, கிளாட்ஸ்டோன் என்பாரை நினைவூட்டியது போல, நெடுஞ்செழியனது பேச்சு கிளாட்ஸ்டோனின் சம காலத்தவரான டிஸ்ரெயலி என்பாரை எனக்கு
நினைவூட்டியது.
இந்தக் கருத்தரங்கு ஒளவை டி. கே. சண்முகம் அவர்களின் இசை நிகழ்ச்சியுடன் முற்றுப் பெற்றது. பாரதியின் ஞானப் பாடல்களிலொன்ருன "ஜெய பேரிகை கொட்டடா" என்னும் பாட்டைக் கம்பீரமான தொனியில் உணர்ச்சி பூர்வமாக, பாவத்துடன் அவர் பாடியதைக் கேட்ட சபையோர் தம்மை மறந்த பரவச நிலையில் கரகோஷம் செய்தனர். மலாயா நாட்டுக்குத் தமது குழுவுடன் மீண்டும் வர ஆவலுடையவனுய் இருப் யதாக அவர் அறிவித்தபோது சபையோர் மறு முறையும் கைதட்டி ஆரவாரஞ் செய்தார்கள்.
89

Page 51
தேநீர் இடைவேளையின்போது எல்லோர் முகத்தி லும் ஒருவித சோகம், மண்டிக் கிடந்தது; கிழமை முழு தும் நிலவிய குதூகலத்தை அன்று காண முடியவில்லை என்னைப் பொறுத்தவரையில், மதிய உணவின்போதும் மாலையில் நடைபெறவிருந்த பிரியாவிடை விருந்தின் போதும் இலங்கையரல்லாத பிரதிநிதிகள் பலரை முதன் முறையாகவும் (யாரறிவார்) கடைசி முறையாகவும் சந்திக்க விருந்தேன்.
தேநீர் இடை வேளையின் பின்னர் இறுதிக் கருத் தரங்கு நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் ஏற் கனவே வெற்றிகரமாக நிறைவெய்திய மாநாட்டின் பலா பலன்கள் பற்றியும், 1968 இல் சென்னையில் நடாத்துவ தென்று உத்தேச பூர்வமாகத் தீர்மானிக்கப்பெற்ற மாநாட்டை மேலும் சிறப்பாக ஏற்பாடு செய்வதற்கான வழி முறைகள் பற்றியும் ஆராயப்பட்டது. மாநாடு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுவதற்குப் பதில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டுமென்பது ஒரு யோசனை. மற்ருெரு யோசனை மாநாட்டு நிகழ்ச்சிகளை இங்கிலிஸிலும் தமிழிலும் மொழி பெயர்க்கும் தொலுக்கு முதலிகள் (மொழி பெயர்ப்பாளர் கள்) நியமிக்கப்படல் வேண்டுமென்பது. இது நல்ல தொரு யோசனை என்பது என் ககுத்து. இதில் ஒருவித சிரமமுமிருக்காது. ஏனெனில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பாராளு மன்றங்களில் இத்தகைய தொலுக்கு முதலிகள் இருக்கிருர்கள். இந்தக் கருத்தரங் கைப் பற்றிக் குறிப்பிடுகையில் பேராசிரியர் சி. சுந்தர லிங்கம் அவர்கள் கொழும்பு சர்வகலாசாலைக் கல்லூரி, யூனியன் ஹாஸ்டல் பரிபாலகராயிருந்த காலத்தில் பின் பற்றிய நடைமுறை நினைவுக்கு வருகிறது. வருடாந்த விருந்து, தவணை முடிவில் நடைபெறும் விருந்து வைப
90

வம் போன்ற முக்கியமான விடுதிக்சாலை நிகழ்ச்சிகள் நடந்தேறிய மறுநாள் மாணவர் மன்ற உறுப்பினர்களை அழைத்து அந்தந்த வைபவத்தின் குறை நிறைகளை ஆராய்வது அவரது வழக்கம். குறைகள் இருந்தால் அடுத்த வைபவத்தில் அவை இடம் பெருது தவிர்ப்பதற் காக அவற்றைக் குறித்துக் கொள்வார். தனிநாயகம் அடிகளார் இத்தகைய குறிப்பேட்டைத் தயாரித்திருக்கக்
கூடும்.
இந்தக் கருத்தரங்கு முடிவுற்றதும் ஹோட்டல் மேர்ளினில் நடைபெறவிருந்த மதிய விருந்துக்கு அவசர அவசரமாகப் போக வேண்டியதாயிற்று. செனட்டர். உபைதுல்லாஹ் அவர்கள் தமது காரில் என்னைக் கூட் டிப் போஞர். ஹோட்டலில் தென்னிந்திய முஸ்லிம் வர்த்தகர்கள் சிலரைச் சந்தித்து உரையாடினேன். அப் பொழுது, இந்த முஸ்லிம்களின் மூதாதையர்கள் 15ஆம் நூற்ருண்டின் முன் பகுதியில் மலாக்காவில் நடைபெற்ற அரண்மனைப் புரட்சிக்குக் காரணகர்த்தர்களாயிருந் திருக்க வேண்டுமென்று நினைக்கலானேன். அந்தப் புரட்சியின் விளைவாகவே இஸ்லாம் மலாயாவின் அரச மதமாயிற்று.
9.

Page 52
11. பிரியாவிடை விருந்து
ஹோட்டல் மேர்ளினில் வாழையிலையில் சுத்த சைவ உணவு பரிமாறப்படுமென்று நான் எதிர்பார்க் கவேயில்லை இதற்கு முந்திய செவ்வாய்க்கிழமையன்றும் இதே ஹோட்டலில் தமிழக முதலமைச்சர் கெளரவ பூரீ. எம். பக்தவத்சலம் அளித்த தேநீர் விருந்துக்கு வந் திருந்தோம். அன்று, ஹோட்டலின் மற்ருெரு சார்பில், * சீன அறை'யில் விருந்து நடைபெற்றது. சீனர்களின் ஒவியங்களிலும் சிற்பங்களிலும் பாவோடும் அலங்காரச் சின்னமான ட்ரகன் (Dragon) சித்திரம் அந்த அறைக்கு எழிலூட்டியது. இந்த "ட்ரகன் நெருப்பைக் கக்கும் மலைப் பாம்பா அல்லது வேதாளமா என்பது ஆராய்ச்சிக்குரியது! இன்றைய சைவ விருந்து ஹோட் டலின் வேருெரு சார்பில் ஒழுங்கு செய்யப்பெற்றிருந் தது. பாலும், தேனும், பாகும் பருப்புமாகிய நான்கினெடு uttu FCuplb dissoft Luirgh (Fruit Salad) LDfbgllb usussa, உண்டிகளும் பரிமாறப் பெற்றன. இந்த விருந்து, 1931 இலோ 1932 இலோ கண்டியில் கே. பி. எஸ். மேனன் தம்பதிகள் அளித்த விருந்தை எனக்கு நினை வூட்டியது. அப்பொழுது நான் யூனியன் ஹாஸ்டல் வாசியாயிருந்தேன். மேனன் அவர்கள் இந்திய அரசாங் கத்தின் பிரதிநிதியாகக் கண்டியில் பணியாற்றி வந்தார், பொரித்த கோழியும் ஆட்டுக் குறுமாவும் இல்லாமலே மூக்கைத் துளைக்கும் வாசனை செறிந்த சோறு கறி சமைப்பது சாத்தியமென்பது அன்றுதான் முதன் முறை யாக எனக்குத் தெரியவந்தது.
92

சைவ உணவு பற்றிப் பேசுகையில் மேற்குறித்த 1930 ஐ அடுத்த காலப் பிரிவில் நிகழ்ந்த உண்மைச் சம்பவமொன்றும் ஞாபகம் வருகிறது. யூனியன் விடுதியி லிருந்த இரண்டு நண்பர்களுக்கு ஏதோ காரணத்தினுல் வாக்குவாதமுண்டாயிற்று. (இவர்கள் இருவரும் இன்று அரசாங்கத்தில் உயர்ந்த பதவி வகிக்கிருர்கள்) வாக்கு. வாதம் முற்றி உச்சக் கட்டத்தை யடைந்த சமயத்தில் ஒருவர் மற்றவரைக் காட்டுமிராண்டி (Barbanian) என்று ஏசிஞர். இதைக் கேட்டதும் மற்றவருக்கு ஆத்திரமுண் டாயிற்று. வாய்ச்சண்டை அடிதடியில் முடியப் போகி றதோ என்று நாங்கள் பதற்றமடைந்திருந்த சமயத்தில் மற்றவர் பதிலாக என்ன சொன்ஞர் தெரியுமா? " இலை குழை தின்னும் நீ என்னையா காட்டுமிராண்டி என்ருய்" 6Tsirgy Glafirsbspib utriasi (You b-Vegetarian) 6Tsir ருர்! அதுவும் ஒரு காலம்! அது மட்டுமா " அந்த நாட் களில் மேர்ளின் ஹோட்டலிலோ கொழும்பிலுள்ள கால் பேஸ் ஹோட்டல் போன்ற இடங்களிலோ வாழையிலை அல்லது ஹோட்டலுக்கு வெளியே தயாரிக்கப்பெற்ற பிரியாணி தலைகாட்டவே முடியாது! இந்த அனுகூலங்க. ளெல்லாம் அந்நியராட்சி அஸ்தமித்து, நம்மவராட்சி உதயமானதன் பின்னர் கிடைத்தவற்றிற் சில மேர் ளின் ஹோட்டல் விருந்துக்குப் பல பிரதிநிதிகளும் பிற ரும் வந்திருந்தார்கள். தென் இந்தியாவைச் சேர்ந்த இந்து, முஸ்லிம் வர்த்தகர்கள் பலருடன் பழகும் வாய்ப்பு அன்று எனக்குக் கிடைத்தது. நாவலர் நெடுஞ்செழிய, னும் இவ்விருந்துக்கு வந்திருந்தார். அவரோடு உரை யாடியபோது, ஸாஹிருக் கல்லூரிக்கு விஜயம் செய்" ததை அவர் ஞாபகப்படுத்திக் கொண்டார். அவரோடு பேசியபோது பிரிட்டிஷ் அரசியல் வானில் நட்சத்திரங்க ளாக ஜொலித்த ஃபிஷர், கெயிட்ஸ்கல், ஆகியோரையும்
93

Page 53
அமெரிக்க ஜனதிபதியாயிருந்த வில்ஸனையும் நினைத்து கொண்டேன். அவர்களைப் போலவே நெடுஞ் செழிய னும் ஒரு காலத்தில் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பதவி வகித்துப் பின்னர் அரசியலில் பிரவேசித்தார்.
இங்கிருந்து, திவான் பஹாஷா தான் மண்டபத்துக் குக் செல்லப் போதிய அவகாச மிருக்கவில்லை. அங்கு போய்ச் சேர்ந்தபோது, மண்டபம் முழுதும் ஜனத்திரள் நிறைந்திருந்தது. மேடையில் பல வெள்ளையர்கள் வீற் றிருந்தார்கள். பிரெஞ்சு நாட்டுத் தொல்பொருள் கல்லூரி, யின் தூரகிழக்கு ஆராய்ச்சிப் பகுதி அதிபர் பேராசிரியர் ஜோன் ஃபிவியோரை (இவர் தமது பெயரைத் தமிழில் எழுதும்போது பிலியேரழா என எழுதுகிருர். தமிழுக்கே சிறப்பான இந்த ழகரத்தில் அவருக்கிருக்கும் அலாதி மோகம் தமிழ் மீது அவருக்குள்ள பற்றுதலைக் காட்டுகிற தெனலாம்.) கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எம். பீ. எமினியோ, ஒல்லாந்து, லெய்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஃப், பீ. ஜே. கூயிப்பர், சுவிட்சர்லாந்து, லாசோன், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கார்ல் எ. கெல்லர், பிரிட்டன், எடின்பரோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஆர். இ. ஆஷர். சுவீடன் உப்பஸால பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வண. இங்வே பிரிக் கோல்ம், ஹாவாய் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலா நிதி நோல்தன் ஆகிய பிறநாட்டுத் தமிழறிஞர்களெல் லோரும் மேடையில் அமர்ந்திருந்த காட்சி தமிழ் அன்பர் களுக்குப் பெருமையும் உவகையுமளிப்பதாயிருந்தது, பெரும்பாலும் எல்லோரும் இங்கிலிஸில் பேசிஞர்கள். சபையோரிற் சிலருக்கு இங்கிலிஸ் தெரியாமலிருந்திருக் கலாம். ஆயினும் இவ்வளவு தொகையான பிற நாட்டார் தமிழில் தீவிர பற்றுதல் கொண்டிருக்கிருர்களே என்னும்
94

பெருமித உணர்வு அவர்கள் எல்லோரையும் கப்பியிருந்த தென்பதை ஒவ்வொரு பேச்சின் ஆரம்பமும் முடிவும் பெற்ற அமோக கரகோஷத்தைக்கொண்டு அளந்தறிய முடிந்தது. சபையோரின் இந்த மகிழ்ச்சிகரமான மனுே நிலை சபை முழுதும் வியாபித்து, மேடையிலமர்ந்திருந்த வெள்ளையர்களையும் ஆகர்ஷித்ததெனலாம் பேராசிரியர் ஃபிலியோஸா அவர்கள் தமது தலைமைப் பேருரையில் குறிப்பிட்ட கருத்துக்கள் சிலவற்றை ஜனரஞ்சகமான முறையில் விளக்கி, உலக மொழி அரங்கில் தமிழுக்கு என்றும் ஓர் உயர்ந்த ஸ்தானம் இருக்குமென்பதை வலி யுறுத்தினர். பேராசிரியர் எமினியோ அவர்கள் தமிழ் மொழிக் கலப்பால் திராவிட மொழி வர்க்கத்தைச் சேர்ந்த பிற மொழிகள் வளமுற்றனவென்பதை விளக்கினுர், பேராசிரியர் கூயிப்பர் அவர்கள் தமிழின் மாண்பையும் திராவிட மொழிகளும் சமஸ்கிருதமும் எவ்வளவு தூரம் தமிழுக்குக் கடமைப்பட்டுள்ளன வென்பதையும், தமிழாராய்ச்சியில் மேல்நாட்டார் கொண்டுள்ள பற்றை யும் தமிழ் வளர்ச்சிக்குப் பாதிரிமார்கள் ஆற்றிய தொண் டையும் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தினர்.
* அன்பும் பண்பும் மிக்க அவைத் தலைவர்களே ! தாய்மார்களே !? என்று தூய தமிழில் அவையடக்கம் கூறித் தமது பேச்சை ஆரம்பித்தார் திரு. இங்வே பிரிக்கோல்ம். தொடர்ந்தும் தமிழிலேயே பேசிய அவர்,
* அன்பர்களே ! நான் உங்கள் முன்னே தமிழில் பேச அஞ்சுகிறேன். எனினும் தமிழ்த் தொண்டு ஆற்றுவதே என் தலையாய கடமை எனக் கருதிப் பேச முன்வந்தேன். சுவீடன் தேசத்தில் தமிழ் பேசுவோர்அறிந்தோர்-நாலைந்து பேரே இருக்கின்ருேம். சுவீடன் மொழியில் பல தமிழ்ச் சொற்கள் கலந்து விரவி வருகின்
95

Page 54
றன. உதாரணமாக "கட்டு மரான்" என்ற சொல் படகு என்பதைச் சுட்டிக் காட்ட உபயோகிக்கப்படு கிறது. இச் சொல் தமிழ் நாட்டின் கட்டுமரத்தைக் குறிப்பதாகும். தமிழ் நாட்டுத் தரங்கம்பாடிக்கும் சுவீடனுக்கும் ஒரு காலத்தில் நெருங்கிய கப்பல் போக்கு வரத்தும் வாணிக உறவும் இருந்திருக்கின்றன. "இஞ்சி பேரா" என்ற சொல்லை சுவீடிஷ் மொழியில் பயன்படுத்து கின்றனர். இது தரங்கம்பாடியில் வழங்கும் "இஞ்சிவேர்" எனும் சொல்லாகும். ஸ்டாக்கோம் என்னும் ஊரில் இரு பல்கலைக் கழகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப் பொழுதுதான் அங்கு தமிழும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழாராய்ச்சிக்குப் பேராசிரியர்கள் அங்கு கிடைப்பது அரிது.
4 நான் சுயமாகவே வருந்தித் தமிழைக் கற்றவன். திருக்குறளை சுவீடிஷ் மொழியில் பெயர்ப்பதென்று முடிவு செய்து, வேலை துவங்கிவிட்டேன். கம்ப ராமாயணம் சிலப்பதிகாரம் இவற்றிலிருந்து சில சுவையான பகுதி க3ள, பொருள் விளக்கத்துடன் சுவீடிஷ் மொழியில் ஆக்கியுள்ளேன். * எப்பொருள் யார் யார் வாய்க் கேட் பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு" எனும் பொய்யா மொழி என் உடன்பாடாகும். அனைவருக் கும் நன்றி, வணக்கம்" என்று பேசி முடித்ததும் அனை வரும் அவரது தமிழ் வன்மை கண்டு வியப்பிலாழ்ந்தனர். பேராசிரியர் கார்ல் எ. கெல்லர் அவர்கள் திருமுரு. காற்றுப்படையின் பக்தர், தமது பேச்சின் பெரும் பகுதி யைத் திருமுருகாற்றுப்படையாம் நூலுக்கு ஒதுக்கிய அவர் திருமுருகாற்றுப்படை *உலகையே தன் கருத்துள் அடக்கிய கவின்பெரும் கலை ஒவியம்' என்று வியந்தார்.
96

தமக்குச் சங்க இலக்கியங்களில் ஈடுபாடுண்டென்று கூறிய அவர், அவற்றை ஹீபுறு மொழியில் பெயர்த்து வருவதாகவும் தெரிவித்தார். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் பாடலின் விழுமிய கருத்தைப் பாராட்டிப் பேசுகையில் அவ் வரிகளை இயற்றியவர் யார் என்று அருகிலிருந்தவரைக் கேட்டார். கண்ணியன் பூங்குன்றன் ' என்று பதில் கிடைத்தது. அதைக் கேட்டு **கண்ணியன் பூங்குன்றஞர் ' என்று திருத்திக் கூறி, தமது தமிழ் ஆர்வத்தையும் ஆழத்தையும் புலப்படுத் திஞர்.
பேராசிரியர் நோல்தன் அவர்கள் போர்த்துக்கேய மொழியில் விரவி வரும் தமிழ்ச் சொற்களை எடுத்துக் காட்டிப் பேசிஞர். பேராசிரியர் ஆஷர் அவர்கள் தம்மைப் போன்ற பிற மொழியாளர்கள் பிழையற்ற முறையில் பேச்சுத் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசிய மென்று சொல்லி ஒலித் தட்டுகளின் உதவியோடு இங்கி லிஸ் கற்ற பிரெஞ்சுக்காரனின் கதையைச் சொல்லிச் சபையோரைச் சிரிப்பிலாழ்த்தினர். ஒலித்தட்டின் உதவி யுடன் இங்கிலிஸ் படித்தானும் ஒரு பிரெஞ்சுக்காரன். அந்த ஒலித்தட்டு கீறல் விழுந்த ஒலித்தட்டு. அதனல் இடையிடையே கிறீச் கிறீச்” என்ற சப்தம் தோன்றும். பிரெஞ்சுக்காரன் இதையெல்லாம் இங்கிலிஸென்றே நினைத்துத் தனது அரைகுறை இங்கிலிஸோடு சேர்த் துப் பேசுவாளும். ' குட் மோனிங் கிறீச் கிறீச்" என்று அவன் பேசுவதைக் கேட்டதும் எல்லாரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கடைசியாக இங்கிலாந்துக்குப் போய் இங்கிலிஸ் மக்க ளுடன் பழகி அவர்களது மொழியை, குறிப்பாக உச்சரிப் பைக் கற்றுக்கொள்வதென்று தீர்மானித்து லண்டனுக் குப் புறப்பட்டான். லண்டனில் அவன் இறங்கிய அன்று
97

Page 55
ஏதோ பொருட்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்நது. லண்டனில் கால் வைத்த நமது பிரெஞ்சுக்காரன் கண் ணில் முதன் முதலாகப் பட்ட இங்கிலிஸ் வாசகம் (Exhibition Pronounced success) 6Tsir Ligi. QLIr(5. காட்சி அமோக வெற்றி என்ற அர்த்தத்தைக் கிரகித்துக் Gas Tsir 6ir TLD6i, Exhibition 6T6örgy (5 Old T6. Success என்றே உச்சரிக்கப்பட வேண்டுமென்று தப்பர்த்தம் செய்துகொண்ட அந்தப் பிரெஞ்சுக்காரன் இப்படி ஒழுங்கு முறையில்லாத உச்சரிப்புள்ள பாஷையை எப் படிக் கற்பது என்று அங்கலாய்த்து, தேம்ஸ் நதியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டாணும்.
இங்கிருந்து விடுதிக்குத் திரும்பிச் சென்று, உடை மாற்றிக்கொண்டு பிரியாவிடை விருந்துக்குப் புறப்பட் டேன். அங்கு சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியில் என்னுடன் படித்த நண்ப ரொருவரைச் சந்தித்தேன். பள்ளி நாட்கள் பற்றியும், வண்ணுர்பண்ணை பற்றியும் பழங் கதைகள் பரிமாறிக் கொண்ட நாங்களிருவரும் சோமாஸ்கந்த பண்டிதரை நினைந்துகொண்டோம். வெயில் படாது தலையை மறைப்பதற்கு அவர் மடித்த குடையைத் தலையில் வைத்து அதற்கு மேலே புத்தகக் கட்டை வைத்துச் சுமந்துகொண்டு நடப்பார். யாரும் அவரைப் பார்த்து பண்டிதர், குடையை விரிச்சுப் பிடிச்சாலென்ன ? என்று கேட்டால், 'தம்பி, புத்தகம் கல்விக்குச் சமானம், ஆகவே, புத்தகமே எல்லாவற்றுக்கும் மேலே இருக்க வேண்டும். குடையை விரித்தால் புத்தகத்துக்கு மேலே குடை நிற்குமல்லவா?" என்பார். அந்தக் காலத்தில், ஏனைய மாணவர்களைப் போலவே நானும், சோமாஸ்கந்த பண்டிதர் போன்ற தமிழ்ச் சட்டம்பிமாரைப் பார்க்கிலும், காற்சட்டை அணிந்த இங்கிலிஸ் மாஸ்டர்மாரை அதிக
98

மாக மதித்து, கெளரவித்து வந்தேன். இங்கிலிஸ் தெரி யாத தமிழ்ப் பண்டிதர்கள் வெறும் கட்டுப் பெட்டிகள்" என்று கேலிசெய்வோரும் அந்நாட்களில் இருந்தார்கள். இன்று நினைத்துப் பார்க்கையில் அவரைப் போன்ற தமிழ்ப் பண்டிதர்களும், முஸ்லிம் மெளல்விகளும், பெளத்த பிக்குகளும் இல்லாதிருந்திருந்தால் நமது நாடு ' குட்டி இங்கிலாந்தாக மாறியிருக்கும் ; நாமும் 'கறுப்புவெள்ளையர்களாக மாறியிருப்போம் என்பது தெரிகிறது. பட்டம் பதவிகளைக் கருதாது நமது கலாசார பாரம்பரியத் தையும் மரபையும் கட்டிக் காத்த பெருமை இம் மூன்று குழுவினரையுமே சாரும்.
சோமாஸ்கந்த பண்டிதரைப் பற்றியும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வாழ்க்கை பற்றியும் கதையளந்து கொண்டிருந்த நாங்களிருவரும் பிரியாவிடை விருந்தின் போது நிகழ்த்தப்பெற்ற பல பேச்சுக்களைக் கவனிக்க முடியாது போய்விட்டது. இந்துக் கல்லூரி அதிபர் நெவின்ஸ் செல்வத்துரை அவர்களின் அபூர்வமான தலைப்பாகை, அவரது வெள்ளி போன்ற தலைமுடி வெண்கல நாதம் போன்ற கணிரென்ற பேச்சு ஆகிய வற்றையும் பாடசாலை மண்டபத்தில் மாணவர்களெல் லோரும் குழுமியிருக்குஞ் சந்தர்ப்பங்களில் அவ்வப் போது, அவர் வெளியிட்ட கருத்துரைகள் ஆகியவற் றையும் அசை போட்ட நாங்கள் இருவரும் பிரியாவிடைப் பேச்சுக்களைத் தவறவிட்டோமல்லாது விருந்தில் பரி மாறிய உணவு வகைகளை, குறிப்பாக எட்டாக் கணிகளைத் தவற விடவில்லை !
இந்தியப் பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமைதாங்கிய பூரீ பக்தவத்சலம் அவர்கள் உத்தியோகபூர்வமான அலு வல்களை முன்னிட்டு முன்னரே இந்தியா திரும்பிவிட்ட
99

Page 56
மையால் அவர் சார்பாக மதுரை, தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த சர் பி. ரி. ராஜன் அவர்கள் மலாயாப் பல்கலைக் கழக உபவேந்தருக்கு நடராஜர் சிலையொன்றினை அன் பளிப்பாக வழங்கிய சமயத்திலேதான் எங்கள் இரு வரதும் உரையாடல் முற்றுப்பெற்றது. இலங்கைப் பிரதி நிதிகள் என்ன செய்வார்களோ என்று நான் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், நீதியாசர் கலாநிதி எச். டபிள்யூ. தம்பையா அவர்கள் தமது உயர் ஆசனத் திருந்து எழுந்ததைக் கண்டு ஆறுதலும் மகிழ்ச்சியு மடைந்தேன். அவருடைய கையில் கருங்காலி மரத்தாற் செதுக்கப்பெற்று வெள்ளியினுல் அலங்கரிக்கப்பட்ட யானையொன்றிருந்ததை தூரத்திலிருந்த நான்கூடக் கண்டு கொண்டேன்.
இரவு சுமார் 10-30 மணிக்கு எல்லோரும் கலைந் தனர். மாநாட்டு பஸ் கடைசி முறையாக எங்களை விடு திக்கு ஏற்றிச் சென்றது. எனது அறைக்குள் நுழைந்த போது, காணுதன கண்டேன், அறியாதன அறிந்தேன் என்ற உணர்வு மனதில் நிறைந்திருந்தது.
100

12. மிச்ச சொச்சம்
ஏப்ரல் 20ஆம் திகதி மொழி; படிப்பாற்றல் துறை
அதிபரின் சொற்பொழிவைக் கேட்டதிலிருந்து, மலேசிய அரசியல் மொழி பற்றி அரசியல் அமைப்புச் சட்டம் என்ன விளக்கம் கொடுத்திருக்கிறதென்று அறிய ஆர்வமுண்டாயிற்று. மலாய் மொ ழி யில் " பாஷா கெபாங்ஸங் " என்னுஞ் சொற்ருெடர் தேசிய மொழி, உத்தியோகமொழி என்ற பேதமின்றி உபயோகிக்கப் படுவதாகத் தெரிகிறது. இவ்விரண்டும் மலாய் மொழியே. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 152(1)ஆம் ஷரத்து மலாய் மொழியே தேசியமொழி யென்கிறது; இந்தத் தேசியமொழி எந்த லிபியில் எழுதப்படல் வேண்டுமென் பதைப் பாராளுமன்றம் தீர்மானிக்கும். ஆயினும், இந்த ஷரத்தில் இரண்டு நிபந்தனைகளும் உண்டு. ஒன்று. எவரும் (உத்தியோக அலுவல்களுக்கல்லாமல் மற்றெந்த நோக்கத்துக்கும்) வேறெந்த மொழியை உபயோகிப் பதையோ, போதிப்பதையோ கற்பதையோ தடை செய்த லாகாதென்பது. மற்ருென்று, மலேசிய சமஷ்டியிலுள்ள வேறெந்த இனத்தினதும் மொழியைப் பேணவும், உபயோகிக்கவும், கற்கவும் சமஷ்டி அரசாங்கத்துக்கோ ம ற் றெ ந் த மாகாண இராஜ்யத்துக்கோ உள்ள உரிமையினை மேற்படி ஷரத்திற் சொல்லப்பட்ட எதுவும் பாதித்தலாகாதென்பது. அரசியற் சட்டத்தில் குறிப் பிடப்பட்டிருக்கும் மற்ருெரு விஷயம் இங்கிலிஸ் மொழியின் ஸ்தானம் பற்றியது. தேசிய மொழியாகிய மலாய் மொழியே உத்தியோக மொழியென மேற்குறித்த
101

Page 57
ஷரத்தில் சொல்லப்பட்டுள்ள போதிலும், மர்தெக்கா தினம் என்னுஞ் சுதந்திர தினத்திலிருந்து பத்து வருட காலம் வரைக்கும் அதன் பின்னர் பாராளுமன்றம் முடிவு செய்யும் காலம் வரைக்கும் பாராளுமன்றத்தின் இரு. சபைகளிலும் இராஜ்ய ஆட்சி மன்றமொவ்வொன்றிலும் எல்லா உத்தியோக அலுவல்களுக்கும் இங்கிலிஸ் மொழி உபயோகிக்கப்படலாம். அரசியல் அமைப்புச் சட்டத்தின் இந்த ஷரத்துக்குத் திருத்த மேதும் உண்டோ இல்லையோ நானறியேன்; இல்லையென்றே நம்புகிறேன். இதுபோன்ற விஷயங்களில் ஆராயாமல் முடிவுசொல்வது ஆபத்தாக முடியலாம். நான் சிவில் சேவையிலிருந்த போது இப்படிப்பட்ட சம்பவமொன்று நடைபெற்றது. உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் உறுப் பினர்களாயிருத்தல் ஆகாதென்ற விதிக்குத் திருத்த விதியுண்டென்பதை அறிந்திராமையால் ஓர் உத்தியோ கத்தரை மேற்படி உறுப்பினர் பதவியிலிருந்து விலகு மாறு கேட்கும் நிலையுண்டாயிற்று. 1957ஆம் ஆண்டின் மலேசிய சமஷ்டி சுதந்திர நிர்ணயச் சட்டம் எனப்படும் மலாய அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் இடம் பெற்றிருக்குமென்று நினைக்க நியாயமில்லைத்தான். ஆயினும் இதைப்பற்றிப் பூரணமாக நான் ஆராயாதபடி யால் நிச்சயமாக எதுவும் சொல்வதற்கில்லை.
ஆசியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அஸ்தமன மானதன் பின்னர், உத்தியோக மொழியாகவும் போதனு மொழியாகவும் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றில் உயர்ந் தவர்களென்று மதிக்கப்பட்டவர்களின் மொழியாகவும் விளங்கிய இங்கிலிஸ் தனது பவிசை இழக்கலாயிற்று. எனினும், இந்த வீழ்ச்சி எல்லா நாடுகளிலும் ஒரே காலத்திலோ கதியிலோ சூழலிலோ நிகழவில்லை. "உலக யுத்தத்தையடுத்த காலப் பிரிவில் ஆசிய நாடு
102

களில் இங்கிலிஸ் மொழியின் ஸ்தானம்" என்னும் பொருள்பற்றிப் பல்கலைக்கழக உறுப்பினர் எவரேனும் ஆராய்ச்சி செய்யலாமென்று தோன்றுகிறது. இந்த ஆராய்ச்சி கண்டன மனப்பாங்குடனன்றி ஒப்புமை காணும் முறையில் அமைதல் வேண்டும். இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பர்மா, மலேசியா, சிங்கப்பூர், மஹல்லதீவு-மாலைதீவு-ஆகிய நாடுகளை இவ்வாராய்ச் சிக்கு எடுத்துக்கொள்ளலாம்.
துவான் செய்யது நாஸிர் பின் இஸ்மாயில் அவர் களின் பேச்சைக் கேட்ட பின்னர் மலே-மலாயர்-என் னுஞ் சொல் அரசியல் அமைப்புச் சட்டத்தில் எவ்விதம் விளக்கப்பட்டுள்ளதென்று அறியவும் எனக்கு ஆவலுண் டாயிற்று. முஸ்லிம் மார்க்கத்தைத் தழுவியவரும், வழக்க மாக மலாய் மொழி பேசும் பலரும் மலாய சம்பிரதாயங் களைப் பின்பற்றுபவரும் மர்தெக்க தினமாகிய 1957 ஆகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன் மலாய சமஷ்டியில் பிறந்தவரும். மலாயரெனப்படுவார் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் 160ஆவது ஷரத்து விளக்கு கிறது. இதில் விசேஷமென்னவெனில், முஸ்லிம் மார்க் கத்துக்கு அளிக்கப்பட்டுள்ள ஸ்தானமாகும். இங்கு இஸ்லாம் என்பதற்குப் பதிலாக முஸ்லிம் மார்க்கம் என்று குறிப்பிட்டிருப்பதேன் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். ஆணுல் இந்த ஆராய்ச்சிக்கு அவசியமான தகவல்களைத் தகுதி வாய்ந்த எவரிடமேனும் கேட்டறிய எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. மலாயப் பல்கலைக் கழகத்துக்கு விடுமுறை விட்டிருந்தது; சம்பந்தப்பட்டவர் களைக் கண்டு தகவல்களைச் சேகரிப்பதற்கு எனக்குப் போதிய லீவோ பண வசதியோ இருக்கவில்லை. போதிய அளவு விடுமுறையும் நண்பர்களும் பண வசதியும் இல்
03

Page 58
லாமல் ஓரிடத்திற்கு யாத்திரை சென்ருல் இத்தகைய பிரதிகூலங்கள் ஏற்படுவது இயற்கைதான்.
ஏப்ரல் 20ஆந் திகதியன்று மாநாட்டுக் களரியில் தமிழ் இசையும் நடனமும் " என்னுந் தலைப்பில் கருத் தரங்கு நடைபெற்றது. இக் கருத்தரங்கில் இந்திய கர் நாடக சங்கீதக் கல்லூரியைச் சேர்ந்த எஸ். ராமநாதன் அவர்கள் சிலப்பதிகாரத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் இசை முறைகளை விளக்கினர். தமது உரையின்போது, நமது ஈழமணி நாட்டைச் சேர்ந்த சுவாமி விபுலானந் தரை வாயாரப் புகழ்ந்து, முதன் முறையாகப் பண் முறைகளை அறிவியல் வழிநின்று ஆராய்ந்து, இன்றைய இராகங்களுக்கும் முன்னைய பண் முறைகளுக்குமுள்ள தொடர்புகளை நிலைநாட்டிய பெருமை சுவாமி அவர் களுக்கே உரியதென்று பாராட்டிஞர். உலகத் தமிழ் அறிஞர்கள் குழுமியிருந்த தமிழ் மாநாட்டிலே நம் நாட்டு அறிஞர் ஒருவருக்கு இத்தகைய பாராட்டுக் கிடைத்த தைக் கேட்டபோது 1922ஆம் ஆண்டில் அடிகளார் மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர் பதவியையும், பண்டிதர் மயில்வாகனம் என்னும் பட்டத்தையும் துறந்து, இராமகிருஷ்ண மிஷனின் வழியைப் பின் பற்றித் துறவி வாழ்க்கையினை மேற்கொண்ட சம்பவமும் வேறு நிகழ்ச்சிகளும் என் நினைவில் பளிச்சிட்டன. கச்சேரியே மோட்ச வீடென்றும் அரைக்காசு உத்தி யோகமானுலும் அரசாங்க உத்தியோகமே வேண்டு மென்றும் எல்லோரும் ஒற்றைக் காலில் நின்ற அந்தக் காலத்திலே இந்தச் சம்பவம் அப் பாடசாலையில் கல்வி பயின்று வந்த சுமார் 225 இள வட்டங்களிடையே ஓர் உளப் புரட்சியை உண்டாக்கிற்றெனலாம். யாழ்ப்பாணப் பகுதியில் இராமகிருஷ்ண மிஷன் நிர்வகித்து வந்த கல்லூரி வைத்தீஸ்வர வித்தியாலயம் ஒன்றே. அப்
104

பகுதியிலுள்ள பெரிய பாடசாலையின் அதிபர் இராம கிருஷ்ணர் வழியில் துறயி வாழ்க்கையை மேற்கொண் டமை உலகத்திலே உயரிய பதவிகளை வகிக்கும் வாய்ப் புள்ளவர்கள்கூட ஆத்மார்த்தத் துறையின்பால் ஈர்க்கப் படலாம் என்னும் உள்ளுணர்வைக் கொடுத்தது. இந்தச் சம்பவம் நடைபெற்று 20 வருடங்களுக்குப் பின்னர் நான் கல்முனையில் நெருக்கடி காலத்தில் அரசாங்க உதவி அதிபராகப் பணியாற்றியபோது அடிகளாரை நெருங்கி அறியும் பேறு எனக்குக் கிடைத்தது. அப் பொழுது சுவாமி அவர்கள் இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராக நியமனம் பெற்று, கல் முனைக்கப்பாலுள்ள தமது சொந்தக் கிராமமான காரை தீவில் சில நாள் தங்கியிருந்தார். இதன் பின்னர் 1944ஆம் ஆண்டில் கண்டி உதவி அாசாங்க அதிபரின் உத்தியோக வாசஸ்தலமாகிய மவுண்ட் எயரி-Mount Airy-இல் பன்னிரண்டு நாட்கள் வரை அடிகளாரை உபசரிக்கும் பெரும்பேறு எனக்குக் கிடைப்பதாயிற்று. அடிகளார் கண்டியிலே வரகவி பாரதியார் பற்றி நிகழ்த் திய பிரசங்கம் இன்றும் என் நினைவிலிருக்கிறது. அப் பிரசங்கத்திலே, பாரதி பாடலின் எளிமையைப் பார்க் கிலும் அவர் தேர்ந்தெடுத்த கவிதைப் பொருளே முக்கிய மானதென்றும், பாரதிக்கு முன்னரும் பல கவிஞர்கள் எளிய நடையில் செய்யுள்களியற்றியுள்ள போதிலும் தேசாபிமானம், சுதந்திர உணர்வு ஆகியவற்றைக் கவிதைப் பொருளாக முதன் முதலில் கையாண்டவர் பாரதியேயென்றும் சுவைபட விளக்கினர். மாயாவதி தபோவனத்திலிருந்து ' பிரபுத்த பாரத என்ற பத்திரி கையின் ஆசிரியராக விளங்கி, அதன் மூலமாக ராம கிருஷ்ண மிஷனின் அபிமானத்தைப் பெற்று, இலங் கையில் ராமகிருஷ்ண மிஷன் பணியை நிறைவேற்றும்
105

Page 59
பொறுப்பை மேற்கொண்டு, பின்னர் அண்ணுமலைப் பல் கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியராகச் சேவை புரிந்த அடிகளார் சிங்களத் தீவினுக்கும் தமிழகத் துக்கும் மட்டுமன்றி வடநாட்டுக்கும் தமிழ் கலாசாரத் துக்கும் பாலம் அமைத்தவராவர். அதுபோலவே ஈழத் தில் தமது ஆழ்ந்தகன்ற கல்வி ஞானத்தினுலும், சிவா னந்த வித்தியாலயம் வாயிலாகப் பரப்பிய சகிப்புத் தன்மை, தோழமையுணர்வு ஆகியவற்றினுலும் கல்வித் துறையில் மேற்கண்ட முயற்சிகளினுலும் கிழக்கிலங்கை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நட்புறவுப் பால மமைத்தார்.
மறுநாட் காலை, ஏப்ரல் 21 ஆந் திகதி மாநாட்டுப் பிரதிநிதிகளாகிய நாங்களெல்லோரும் மாநாட்டு பஸ் ஸில் மலேயாப் பல்கலைக் கழகச் சொற்பொழிவு மண்ட பத்துக்குப் போனுேம். கரும்பலகை மற்றும் பட விளக்கங் களுடன் சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு வேண்டிய சாத னங்களும் கொண்ட அம் மண்டபத்திலே ' கலையும் தொன்மையும்" என்னுந் தலைப்பில் மாநாட்டுக் கருத் தரங்கு நடைபெற்றது. அன்றைய சொற்பொழிவுகளில் இந்திய நிர்வாக சேவையைச் சேர்ந்த பூரீ. ஐ. மகா தேவன் ‘சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டுகள்' பற்றி நிகழ்த்திய சொற்பொழிவு என்னைப் பெரிதும் கவர்ந்தது. இலங்கை சிவில் சேவையைப் போல இந்திய சிவில் சேவையும் நிர்வாக சேவையென மறுநாமம் சூட்டப்பட் டிருக்கிறது. அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த போது, பிரிட்டிஷ் ஆட்சியின் முதுகெலும்பாக விளங்கிய இந்திய சிவில் சேவையின் பாரம்பரியமாம் ஆழ்ந்தகன்ற கல்வி ஞானமும் விவேகமும் ஆராய்ச்சி ஆர்வமும் இந்திய நிர்வாக சேவையிலும் இல்லாமலில்லை யென் பதை உணர்ந்து கொண்டேன். கல்வெட்டுக் கலை பற்றி
106

யாதும் அறியாதவஞய் இருந்துங் கூட வாசிக்கும் முறை யினுலும், உயிரெழுத்துக்களையும் உயிர்மெய்யெழுத்துக் களையும் இனங்கண்டு கொள்வதனுலும் அர்த்தமற்றவை போலக் காணப்படும் கல்வெட்டுக்கள் அர்த்தபுஷ்டியுள்
ளவைகளாக மாறும் விந்தையை விளக்கக் கேட்டபோது
மகாதேவனின் பணி எத்துணை முக்கியமானதென்பதைத் தெற்றென உணர்ந்துகொண்டேன். முன்னர் மகான்
என்று வாசிக்கப்பட்ட சொல்லை மகன் எனத் திருத்தி
வாசித்தபோது, கருத்தற்ற கல்வெட்டொன்று கருத்து
வளம் மிக்கதாய் மாறிற்று என்று அவர் உதாரணங்
காட்டினுர்,
ஏப்ரல் 19 ஆம் திகதியன்று பதில் பிரதமரின் பேச் சைக் கேட்டதிலிருந்து கிராமாபிவிருத்திக்கான அவரது திட்டம் பற்றி விசாரிக்க வேண்டுமென்ற ஆர்வமுண்டா யிற்று. வெகுஜன வழக்கில் இத்திட்டம் ஜெரக்காங் மாஜா-முன்னேற்ற இயக்கம்-என அழைக்கப்படு கிறது, இதன் அடிப்படைத் தத்துவம் நாட்டின் பொரு ளாதார, சமூக முன்னேற்றத்துக்கு அரசாங்கம் மேற் கொள்ளும் முயற்சிகளில் கிராமப்புற மக்கள் நெருக்க மாக ஒத்துழைக்கச் செய்வதாகும். கிராமப்புற மக்களுக்கு ஊக்கமும் உற்சாகமுமூட்டி மற்றெல்லா வேலைகளிலும் முன்னர், அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டிய வேலை இதுவேயென்ற உணர்வை உண்டாக்கும் வகை யில் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணி பதில் பிரதமரின் நேரடி நிர்வாகத்தில் விடப்பட்டமை அதற்கு ஒருவித கெளரவத்தைத் தேடிக் கொடுத்துள்ள தென்பதையும், இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட உத்தி யோகத்தர்களெல்லோரும் இதில் விசேஷ அக்கறை கொண்டுள்ளனர் என்பதையும் அறிந்துகொண்டேன்.
107

Page 60
ஏப்ரல் 23 ஆந் திகதி பி. ப. 10-30 மணியளவில் முடிவுற்ற பிரியாவிடை விருந்துடன் தமிழ் மாநாடு முடி வடைந்தபோதிலும், கிள்ளான் என்னுமிடத்திலிருக்கும் முஸ்லிம் கல்லூரியைப் பார்க்காமல் கோலாலம்பூரை விட்டுப் புறப்பட எனக்கு மனம் வரவில்லை. மலாயக் கம்பொங் ஒன்றினைப் பார்க்க வேண்டுமென்றும் விரும்பி னேன். இவற்றை முன்னிட்டு இரண்டு நாட்கழித்து ஏப்ரல் 26 ஆந் திகதி கோலாலம்பூரிலிருந்து புறப்படுவ தென்று முடிவு செய்தேன்.
108

13. கம்பொங் சைலோங்
இந்த மூன்று நாட்களாக செனட்டர் என். ஒ. கே. உபைதுல்லாஹ் அவர்கள் எனது நண்பனுயும் நல்லா சிரியணுயும் விளங்கினுர். ஞாயிற்றுக்கிழமை காலை நண்பர் ஒருவருடன் என்னைத் தமது காரில் அழைத்துச் சென்று கோலாலம்பூரையும் அதன் சுற்றுப்புறங்களையும் காண்பித்தார். அவருடன் வந்த நண்பர் வழக்கறிஞர்; இலங்கையிற் பிறந்தவர்; சிலகாலம் கொழும்பில் வழக் கறிஞராகத் தொழில் புரிந்தவர். நான் யாழ்ப்பாணத் தைச் சேர்ந்த காலஞ்சென்ற காதியார் எஸ். எம். அபூ பக்கர் பிரக்கிராசியாரின் மகன் என்று என்னை அறிமுகப் படுத்தியபோது அந்த வழக்கறிஞர் பரிவுடனும் பாசத் துடனும் என்னுடன் பழகினுர், சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து கோலாலம்பூர் வந்து" சேர்ந்த இவர், பெரிய வர்த்தக ஸ்தாபனமொன்றிலே பெருத்த சம்பளத்தில் சட்ட ஆலோசகராக வேலைக் கமர்ந்தார். இன்ருே அந்த வேலையிலிருந்து விலகிச் சொந்தத்தில் தொழில் பார்க்கிருர்; சம்பளத்திலும் கூடுதலாக வருவாய் பெறுகிருர்,
நாங்கள் முதலில் கம்பொங் சைலோங் என்னுமிடத் துக்குப் புறப்பட்டோம். கோலாலம்பூர் போய்ச் சேர்ந்த, நாள் முதல் கம்பொங் ஒன்றினைப் பார்க்க வேண்டு மென்று ஆசையுடையவனுய் இருந்தேன். ஆகவே, இந்தப் பயணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. இந்த சைலோங்" என்னுஞ் சொல்லுக்கும் நமது நாட்டின் இங்கிலிஸ் பெயரான சிலோனுக்கும் ஏதாவது
109

Page 61
தொடர்புண்டோ தெரியவில்லை. கம்பொங்கைப் பார்க்கப் போகிருேம் என்று கேள்விப்பட்டதும், கல்முனைப் பகுதியிலுள்ளதைப்போன்ற, கமக்காரர்களின் வீடுகளும் அவற்றைச் சூழ காய்கறித் தோட்டங்கள், தென்னந் தோட்டங்கள் அல்லது நெல் வயல்களுமுள்ள மலாய்க் கிராமமொன்றினை மனதில் கற்பனை செய்துகொண் டேன். ஆணுல் நான் உண்மையில் கண்டது கொழும்பி லுள்ள பத்தரமுல்லை, ஜெயந்திபுர வீடமைப்புத் திட்டம் போன்ற நடுத்தர வகுப்பாரின் குடியேற்றப் பகுதியை யாகும். ஜெயந்திபுரத்திற்போல இங்கும் அரசாங்க உத்தியோகத்தர்களே அதிகமாகக் குடியேறியுள்ளார்கள். கோலாலம்பூரில் பாராளுமன்ற, செனட் சபை உறுப் பினர்களின் கார்களுக்கு விசேஷ சின்னம் உண்டு. ஆகவே செனட்டர் உபைதுல்லாஹ்வின் காரைக் கண் டதும் பலர் தத்தம் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்
தார்கள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை, அவர்களுக்கு விடுமுறை நாள். எனவே ஆண்களும் வீட்டிலிருந்தார்கள். இவர் களிற் சிலர் வீட்டுக் கூரையைச் செப்பனிட்டுக் கொண் டிருந்தார்கள். வேறு சிலர் தோட்ட வேலையில் ஈடுபட் டிருந்தார்கள். மற்றுஞ் சிலர் முற்றத்தில் குழந்தை களுடன் விளையாடிக்கொண்டோ குழந்தைகளுக்குப் பராக்குக் காட்டிக்கொண்டோ இருந்தார்கள். அவர் களைப் பார்த்தால் கமக்காரர் போலவோ தொழிலாளிகள் போலவோ தெரியவில்லை; விசாரித்ததில், வேருெரு வகுப்பையும், வருவாய்க் குழுவையும் சேர்ந்த அரசாங்க ஊழியர்கள், தனியார்துறை ஊழியர்கள் ஆகியோர் என்று அறிந்தேன். இவர்களுக்கு மாதம் சுமார் 300 வெள்ளி சம்பளம் கிடைக்குமாம். இரண்டே இரண்டு இந்தியக் குடும்பங்களைத் தவிர அக்குடியிருப்பில்
110

வசிக்கும் மற்றெல்லோரும் மலாயர்களே என்றும் அறிந்தேன்.
கம்பொங் வீடுகள் பரண் போல, நிலத்தில் கால்கள் நட்டு அவற்றின்மீது கட்டப்பட்டிருந்தன. ஆணுல் அளவில் பரணிலும் மிக மிகப் பெரியவை; விஸ்தார மானவை. கூரைகள் கம்பொங் வீடுகளுக்கேயுரிய முறையில் அமைந்திருந்த போதிலும், அத்தாப் என்னும் ஒருவகை ஒலையால் வேயப்படாது அஸ்பெஸ்டோஸ் என்னும் கல்நார்த் தகடுகளாலோ வேறு கனத்த பொருள்களாலோவேயப்பட்டுள்ளன. ஒவ்வொரு மனை யையும் "பாம் பொட்ஸ்" என்னும் குண்டுச் சட்டிகளில் நட்ட அழகுச் செடிகள் அலங்கரிக்கின்றன. சுவர்கள் * டிஸ்டெம்பர்" என்னும் வண்ணப் பூச்சுக்கொண்டு மெழுகப்பட்டுள்ளன. பெரும்பாலான முற்றங்களில் மங்குஸ்தான் மரங்கள் ஓங்கி வளர்கின்றன.
அங்கிருந்தோரிற் சிலர் செனட்டர் உபைதுல்லாஹ் அவர்களை நேரில் அறிந்திருந்தார்கள். இதனுல் அக் குடியிருப்பு வாசிகளுடன் பழகுவது இலகுவாயிற்று தமக்கென்றே பிரத்தியேகமாகக் கட்டப்பட்டுள்ள மசூ திக்கு எங்களை அழைத்துச் சென்ருர்கள். அந்த மசூதி ஜூம்ஆ பள்ளிவாசலென்றும் சுருவ் மசூதியல்ல வென்றும் அறிந்தோம். (ஜூம்ஆத் தொழுகை நடை பெருத பள்ளிவாசல் சுருவ் மசூதி எனப்படும்.) அந்த மசூதிக்கு அருகிலே நின்ற மரத்தில் பெரிய மேள மொன்று கட்டப்பட்டிருந்தது. அதைப் பற்றி விசாரித் ததில் அஸான்-பாங்கு-ஐங்காலத் தொழுகைக்கான அழைப்பு-ஆரம்பிக்கப்போவதை அறிவிப்பதற்கு அந்த மேளம் கொட்டப்படுகிறதென்று அறிந்தேன். எந்தப் பள்ளிவாசலுங் காணுத இந்த மேளத்தைக் கண்டு வியப்
111

Page 62
படைந்த நான், இஸ்லாம் பரவுவதற்கு முன்னர் அனுட் டானத்திலிருந்த முரசறையும் பழக்கம் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கிறது போலும் என்று நினைத்துக் கொண்டேன். ஆயினும் அப்பள்ளிவாசலில் அஸான் சொல்லுவதற்கென முழு நேர பிலால்-முஅஃதின்ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதனுலும், இவர் ஐங்காலமும் தவருமல் அஸான் சொல்லி வருவதாலும் இஸ்லாத்தின் தனித்துவச் சம்பிரதாயம் கைவிடப்படவில்லையென்று என்னைத் தேற்றிக்கொண்டேன், என்ருலும், சம்பிரதா யத்தைப் புறக்கணியாமலே மேலதிகமான ஒரு வழக்கத் தையும் பின்பற்றுவது நல்லதா அல்லவா என்பதை மார்க்க அறிஞர்கள் தாம் முடிவு செய்யவேண்டும். இந்த மசூதிக்கு மனுரா இல்லை; முனைப்பான குவிமாடம் உண்டு. மனுராவுக்குப் பதில் குவிமாடத்துக்கு முக்கியத் துவமளிப்பது மலேசிய மசூதிச் சிற்பமுறையின் சிறப் பம்சம் போலத் தோன்றுகிறது. இந்தோனேசியாவிலும் இவ்வாறே என்று அறிகிறேன். ஆணுல் மத்தியகிழக்கில் நிலைமை எதிர்மாருனது. அங்கு மசூதியின் சிறப்பம்ச மாக மிளிர்வது மஞராவேயன்றிக் குவிமாடமன்று.
கம்பொங்கைப் பார்க்கப் போனபோது இருந்த உற்சாகம் அங்கு போய்ச் சேர்ந்ததும் வற்றி வரண்டு விட்டது. ஏனென்ருல், நான் எதிர்பார்த்த மலேசியக் கிராமத்தை அங்கு காண முடியவில்லை. மலேசிய மாநாடு நடைபெற்ற ஏழெட்டு நாட்களில் பெற்ற அரைகுறை யான பன்மொழித் தேர்ச்சியையும் அற்ப சொற்பமான மொழியியல் அறிவையுங்கொண்டு, கம்பொங் என்னுஞ் சொல், மொழியியல் நியதிக்கமைய, காலக்கிரமத்தில் சிதைந்து, கருத்துமாற்ற மடைந்திருத்தல் வேண்டு மென்று ஊகித்துக் கொண்டேன். வளவு எனப் பொருள் படும் oேmpound என்னும் ஆங்கிலோ-இந்தியச் சொல்
112

t
r
후

Page 63
E
 

இந்த " கம்பொங்" என்னும் மலாய்ச் சொல்லிலிருந்து பிறந்திருக்க வேண்டுமென்பதை ஆராய்ச்சியாளர்கள் சிலர் மறுத்து, போர்த்துக்கேயு மொழியிலிருந்தே அது தோன்றியிருத்தல் வேண்டுமென்பர். எவ்வாறிருப்பினும் " கம்பொங்" என்னுஞ் சொல் ஆரம்பத்தில் நமது நாட்டி லுள்ளதைப் போன்ற கிராமத்தைக் குறிக்குஞ் சொல் லாக இருந்திருக்கலாம். காலகதியில், பட்டனத்தின் ஒரு பகுதியில் குறிப்பிட்ட ஓர் இன மக்கள் வாழும் குடி யிருப்பைக் குறிக்குஞ் சொல்லாக விசேஷ அர்த்தம் பெற் றிருக்கலாம். பத்தாவியாவிலுள்ள சீன கம்பொங் இதற்கு ஓர் உதாரணமாகும். இந்தப் பின்னணியில் பார்க்குமிடத்து, ' கம்பொங் சைலோங்" என்னுஞ் சொற் ருெடரில் குடியிருப்பு என்னும் பொருளிலேயே கம்பொங் உபயோகிக்கப்படுகிற தெனலாம். இந்தக் கம்பொங்கில் கிராமிய வாச னே இல்லாமற்போனமை எனது துரதிர்ஷ்டம் போலும். இலங்கை திரும்பு முன் அசல் கம்பொங் ஒன்றினேப் பார்த்தே விடுவது என்ற வைராக் கியத்துடனும், சைலோங் கம்பொங்கில் பார்த்தவற்றை அசைபோட்டுக் கொண்டும், முந்திய ஞாயிற்றுக்கிழமை கண்ட மலேசியச் சந்தைக் காட்சிகளே நினைவுத் திரையில் மீண்டும் பார்த்துக்கொண்டும், ஒருங்மலாயு எனப்படும் மலாய் மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றிக் கூடுமானளவு தகவல்களே யெல்லாம் சேகரிக்க வேண்டு மென்ற ஆசையுடனும் திரும்பி வந்து காரில் ஏறிக் கொண்டேன்.
வழியிலே ஒரு சைவக் கோயிலின் பக்கத்திலிருந்த மண்டபத்தில் எமது கார் தரித்து நின்றது. கோலாலம் பூரில் வாழ்ந்த செல்வச் செட்டியார் ஒருவர் கல்யாணம் மற்றும் வைபவங்களுக்கென்று இந்த மண்டபத்தைக் கட்டுவித்துக் கொடுத்தாராம். செனட்டர் உபைதுல்
S 113

Page 64
லாஹ் அவர்கள் இங்கு நடைபெறவிருந்த திருமண வைபவத்துக்குச் சமுகமளிக்க வேண்டியிருந்தது. பத்திரி கைத் தொழில் பார்க்கும் பிராமணப் பெண்ணுக்கும் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் நாயுடு வகுப்புப் பைய னுக்கும் கலப்புத் திருமணம். பெண்ணின் தாயாருக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டமில்லையாம். அதனுல் அவர் அந்த வைபவத்திற் கலந்துகொள்ளவில்லையாம். மலேசியத் தலைப்பட்டணத்தில் சந்தடியின்றி நடை பெறும் சமுதாயப் புரட்சியின் ஓர் அம்சமெனக் கொள் ளத்தக்க இத்தகைய நிகழ்ச்சிகள் நவீன நகர வாழ்க் கையில் பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைவ தனுல் உண்டாகும் விளைவெனலாம்.
இங்கிருந்து கோலாலம்பூருக்குத் திரும்பினுேம், வழியில் அந்நகரின் * கறுவாக்காடு' எனத் தக்க செழிப்பும் வனப்பும் மிக்க லாசஸ்தலப் பிராந்தியத்தைக் கண்டேன். எல்லா வீடுகளுமே அழகிலும் அமைப்பிலும் ஒன்ருேடொன்று போட்டி போடுவது போலக் கம்பீர மாகக் காட்சியளித்தன. எம்முடன் வந்த வழக்கறிஞர் இந்த வீடுகளிலொன்றில் வசிக்கிருர். அவரை இறக்கி விட்டு. நகரின் பிரதான பகுதிக்குச் சென்ருேம். கார் ஓடிக்கொண்டிருக்கையில், இரண்டு மூன்று தினங் களுக்கு முன் நான் வாசித்த விஷயங்கள் பற்றி செனட்டர் உபைதுல்லாஹ்வுடன் உரையாடினேன். ரெயில் நிலையத்தைக் கண்டதும் மலேசியக் கட்டடங்கள் பற்றிப் படித்த விஷயங்கள் நினைவுக்கு வந்தன. இருப தாம் நூற்ருண்டின் முற்பகுதியில் ஹப்பார்ட் என்ற கட்டடச் சிற்பாசாரி இருந்தார். பொதுக் கட்டடங்களை நிர்மாணிக்கும் பொறுப்பை அன்றைய அரசாங்கம் இவ ரிடம் ஒப்படைத்தது. இவர் முஸ்லிம் நாடான மலா யாவில் மத்திய கிழக்கின் சிற்ப முறையைப் புகுத்துவது
l14

நல்லதென்று நினைத்தார். ஆணுல் இஸ்லாமியக் கட்டடக் கலையின் தாற்பரியத்தை அறியாமையால், கண்ட கண்ட கட்டடங்களுக்கெல்லாம், ம னு ரா வும் குவிமாடமும் வளைமாடமும் அள்ளித் தூவிவிட்டார். கோலாலம்பூர் புகையிரத நிலையத்துக்குக்கூட இக்கதி நேர்ந்தது. இந்தக் கட்டடத்தின் மஞராவிலிருந்து பாங்கு ஒலி கேட்பதில்லை ; புகையிரதத்தின் பேரிரைச்சலே கேட் கிறது. அதன் வாயிலைத் தாண்டினுல் தொழுகை ஸ்தலத்துக்குப் பதில் ரெயிலையே காணலாம். ஒருமுறை இங்கிலிஸ்காரன் ஒருவன் இந்தக் கட்டடத்தைக் கண்டதும் பள்ளிவாசல் என்று நினைத்து. சப்பாத்தைக் கழற்றிவிட்டு, மேரை மரியாதையுடன் உள்ளே போனுணும். அதன் பிறகுதான் அது ரெயில் நிலையம்
என்பதைக் கண்டு கொண்டானும் !
எமது காலைச் சுற்றுலா செனட்டர் உபைதுல்லாஹ் அவர்கள் முஸ்லிம் ஹோட்டலொன்றில் ஏற்பாடு செய் திருந்த மதிய விருந்துடன் முற்றுப் பெற்றது. குளிரூட்டு கருவி இணைக்கப்பெற்றும், நன்ருக அலங்கரிக்கப்பட்டும், நவீன சாதனங்கள் யாவும் பொருத்தப்பட்டுமுள்ள அந்த ஹோட்டலில் உணவருந்திக் கொண்டிருந்த சமயம், தமிழ்க் குடும்பமொன்று எட்டு, ஒன்பது வயது மதிக்கத் தக்க பெண் குழந்தையுடன் வந்து சேர்ந்தது. குழந்தையின் அழகும், நிறமும், அங்க அமைப்பும் அது வேற்றினக் குழந்தை என்பதை எடுத்துக் காட்டின. குழந்தையையும் பெற்ருேரையும் நான் கூறு குறிப்பாகக் கவனித்ததைக் கண்ட நண்பர், எனது சிந்தனைப் போக்கை உணர்ந்தவர் போல, நான் கேள்வி கேட்கு முன்னரே பிள்ளையில்லாத பெற்றேர்கள் சீனக் குழந்தை யைச் சுவீகாரஞ் செய்து வளர்த்து வருகிருர்கள் என்று விளக்கிஞர். சுவீகாரஞ் செய்வதற்குச் சீனக் குழந்தை
115

Page 65
களைக் காசு கொடுத்து வாங்குவது வெகு சுலபமென் பதை அப்பொழுது நான் உணர்ந்துகொண்டேன். பிறி தொரு சந்தர்ப்பத்தில் பிள்ளையில்லாத ஒரு பெண்மணி யைச் சந்தித்தேன். சீனக் குழந்தை ஒன்றைத் தத்தெடுப்பதற்கு அவருடைய கணவன் இணக்கம் தெரி வித்திருந்தும், பலரும் பல மாதிரி யோசனை சொன் னமையால் என்ன செய்வதென்று தெரியாமல் திண்டா டிக்கொண்டிருந்துவிட்டு, கடைசியில் பிற இனக் குழந் தையை எடுத்து வளர்த்தால் அந்தக் குழந்தை வயது வந்ததும் தான் வளர்ப்புக் குழந்தை என்பதை அறிந்து கொள்ளுமென்றும், அதனுல் எதிர்பார்க்கும் பிள்ளைப் பாசத்தைப் பெற முடியாதென்றும் முடிவு செய்து, அந்த யோசனையைக் கைவிட்டு விட்டார். சொந்த இனத்தைச் சேர்ந்த குழந்தையைத் தத்து எடுக்கக் கூடாதாவென்று நான் கேட்டதற்கு, தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும், பெற்ற பிள்ளையை விற்கத் துணியார்களென்று சொன்னர்.
மாலையில் செனட்டர் உபைதுல்லாஹ் அவர்கள் தமது காரையும் சாரதியையுங் கொடுத்துதவினர். நான் சுமார் நான்கு மணிக்கு மலாயா முஸ்லிம் கல்லூரியைப் பார்ப்பதற்காக கிள்ளான் என்னுமிடத்துக்குப் புறப் பட்டேன். தென் இந்தியாவில் பிறந்து மலேசியாவில் மலாயப் பெண்மணியை மணஞ் செய்து வாழ்பவரான சாரதி அபூபக்கர் உல்லாசப் பிரயாணிகளுக்கு வழிகாட்டு வோருக்குரிய திறமையுடன் பெத்தலங் ஜெய திரும்பும் வரை ஆங்காங்கு காணப்பட்ட காட்சிகளை விளக்கிச் சென்ருர். இவருடைய உதவியுடன் சுவெற்றன்ஹாம் துறைமுகத்தின் புதிய பழைய பகுதிகளிரண்டையும் சுற்றிப் பார்த்தேன். செனட்டரின் சின்னம் பொறித்த காரில் சென்றமையாலும் அபூபக்கரிடம் அனுமதிப்
116

பத்திரம் இருந்தமையாலும் புதிய துறைமுகத்தில் சிரம மில்லாமல் நுழைய முடிந்தது. மலேசிய அரசுக்கும் இந்தோனேசியாவுக்ரும் அப்பொழுது இருந்துவந்த பகைப்போக்கு (Controntation) நிலைமை காரணமாகவே எவரும் அனுமதிப் பத்திரமின்றி இங்கு நுழைய முடியா திருந்தது. இதனுல் மலேசிய அரசாங்கத்துக்கு மிகுந்த பணச் செலவு ஏற்பட்டது; இந்தோனேஷிய இராணுவ வீரர் ஊடுருவல் முயற்சிகளில் இறங்குவார்களோ வென்ற அச்சமும் இருந்து வந்தது. கொழும்புத் துறை முகத்திற் கூட 1942 ஆம் ஆண்டு ஜப்பானியர் குண்டு வீசியதை அடுத்து இத்தகைய சூழல் நிலவியமையை நான் நினைத்துக்கொண்டேன்.
விடுதிக்குத் திரும்பும் வழியில் மலையாளி ஒருவரின் தேநீர்க் கடையில் தேநீரும், விஸ்கோத்தும், கசுக்கொட் டையும் வாங்கினுேம், அபூபக்கரிடம் என் பெயரென்ன வென்று விசாரித்த அந்தக் கடைக்காரர் அளிஸ் என்று கேள்விப்பட்டதும் முந்திய நாள் தமிழ் நேசன்" பத்திரி கையில் இலங்கை முஸ்லிம்களின் சிறப்பியல்புகள் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் ஆசிரியர் நானே யென்று ஊகித்துக் கொண்டு, என்னிடமிருந்து பணம் வாங்க மறுத்துவிட்டார். நானும் வற்புறுத்தவில்லை. மூன்ரும் வகுப்புப் பிரதிநிதியாக மாநாட்டுக்குச் சென்ற நான் எப்படிப் பண விஷயத்தில் தாராள குணம் காட்ட
முடியும்?
விடுதிக்குத் திரும்பியபோது அங்கே எனக்காக ஒரு தந்தி காத்திருந்தது. வழக்கத்தில் அத்தியாவசியமான அவசர காரியமாயிருந்தாலன்றி எதற்கும் எவரும் எனக்குத் தந்தி கொடுக்க மாட்டார்கள். குறிப்பாக என் வீட்டிலுள்ளவர்கள் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றி வரு கிருர்கள். எனவே, தந்தியென்றதும் வீட்டிலிருந்துதான் வந்திருக்க வேண்டுமென்ற நினைப்பில் நெஞ்சு பதற்ற மடைந்தது.
117

Page 66
14. பிரயாணக் கலை
அவசர அவசரமாகத் தந்தியைப் பிரித்துப் பார்த்தேன்.
தந்தி நான் பயந்தது போல வீட்டிலிருந்தோ காரி யாலயத்திலிருந்தோ வந்திருக்கவில்லை. பாங்கொக்கி லிருக்கும் நண்பரொருவர் தமது இல்லத்தில் இரண் டொரு நாட்களைக் கழிக்கும்படி கேட்டிருந்தார். கொழும் பிலே பி. ஒ. ஏ. சி. காரியாலயத்தில் எனது பயணச் சீட்டைப் பதிவு செய்த சமயம் வழியில் பாங்கொக் நகரில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்து கொண்டேன். பாங் கொக்கில் ஏதும் விசேஷ அலுவல்களோ அக்கறையோ இருந்ததனுல் அல்ல; மேலதிகக் கட்டண மின் றி பாங்கொக்கிலும் தங்கி வரலாம் என்ற வசதி இருந்தமை யால். தேசப் படத்தைப் பார்த்து, விமானப் பயணச் சீட்டைப் பதிவு செய்யும் எவரும் கொழும்பிலிருந்து கோலாலம்பூர் சென்று திரும்பும் வழியில் ஒரே செலவில் பாங்கொக்கிலும் தங்கி வரலாம் என்று கண்டு கொள்ள மாட்டார். சில மாதங்களுக்கு முன் வரை இந்த வசதி இருக்கவுமில்லை; அண்மையிலேதான் இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தது. பிரயாணக் கலையில் தேர்ச்சி யுள்ள ஒருவர் தேசப் படத்தையும் தமக்குள்ள பூமி சாஸ்திர அறிவையும் மட்டுமே நம்பி ஒரு பிரயாணத் தைத் தொடங்கார் ; விமான ஸ்தாபனத்திலுள்ள சரி யான ஆசாமியைப் பிடித்து, விமானம் எந்தெந்த வழி யாகப் போகும், எந்தெந்த இடங்களில் எவ்வளவு நேரம் தரிக்கும், என்னென்ன சலுகைகள் உண்டு என்றெல் லாம் சகல தகவல்களையும் கறந்து கொள்வார். எனக்கு
118

எல்லாந் தெரியும் ; யாரிடமும் எதைப் பற்றியும் வாய் விட்டுக் கேட்பது என் மதிப்புக்கு இழுக்கு என்றெல்லாம் நினைத்தால் இத்தகைய அனுகூலங்களை யெல்லாம் அறிய முடியாது. நான் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் எவரிடமும் தகவல் பெறத் தயங்குவதில்லை. இப்படித் தான் 1960இல் பைத்துல் முகத்தஸ்-ஜெருசலேம் நக ருக்குப் போய்வர வாங்கிய டிக்கெட்டைக் கொண்டு குவைத்திலும் பஹ்றெயினிலும் தரித்து வர முடிந்தது. ஆனல் 1959இல் மாஸ்கோவிலிருந்து தாஷ்கென்ட் வழி யாகத் திரும்புகையில் காபூல் நகரில் தங்குவதற்கு கொழும்பிலேயே முன்னேற்பாடு செய்து கொள்ளத் தவறியமையால் எனக்கும் மனைவிக்கும் மேலதிகமாகக் கட்டணம் செலுத்த வேண்டியதாயிற்று. பிரயாணக் கலையைக் கற்பதற்கு இப்படிக் காசும் செலவிட நேர்ந் திருக்கிறது! இவ்வளவு அனுபவம் இருந்துங்கூட, மலேசிய மாநாட்டு நிர்வாகிகள் கொடுத்துதவிய விமானச் சீட்டுடன் மேலதிக கட்டணமெதுவுமின்றி ஈபோவிலும் பினுங்கிலும் தங்கி வர முடியுமென்று, கொழும்பிலிருந்து புறப்படுமுன்னர் அறிந்து கொள்ளவில்லை. பிரயாணக் கலையில் இன்னமும் முற்ருகத் தேர்ச்சி பெறவில்லை என்பதற்கு இது அறிகுறி போலும். மாநாட்டுப் பிரதிநிதி களின் விமானப் பிரயாண ஏற்பாடுகள் பற்றி ஆலோ சனை கூறுதற்கெனக் கோலாலம்பூர் வரவேற்புக் காரி யாலயத்தில் நியமிக்கப்பெற்றிருந்த நல்லூர் இளைஞர் சொல்லித்தந்த பின்னரே இந்தச் சமாசாரத்தைத் தெரிந்து கொண்டேன். அவர் எனது பயணச் சீட்டைப் பார்த்த தும், விமான ஸ்தாபனத்துடன் தொடர்பு கொண்டு, பிஞங்கு நகரையும் டிக்கெட்டில் பதிந்து கொள்ளச் சம்மதம் பெற்றுத் தந்தார். ஈபோ நகரையும் சேர்த்திருப்பார். ஆணுல் அங்கு வரும்படி எவரும் என்னை
119

Page 67
அழைக்கவில்லை. எனினும் கொழும்பில் வைத்தே சிங்கப் பூரையும் டிக்கெட்டில் சேர்ப்பித்துக் கொண்டேன். கொழும்பிலிருந்து கோலாலம்பூர் வரை எங்கும் தரித்துப் போகவேண்டிய அவசியமில்லாதபோதும் ஒரு முனையி லிருக்கும் சிங்கப்பூரையும் மறு முனையிலிருக்கும் பாங்கொக்கையும் மேலதிக கட்டண மெதுவுமின்றிச் சேர்த்துக் கொள்ளலா மென்பதனுலேயே இவ்விதம் செய்தேன். சொற்ப செலவில் ரங்கூன் நகருக்கும் போய் வரலாம் என்ற விஷயம் தெரிந்திருந்தால், அதையும் செய்திருப்பேன். அதையும் சேர்த்திருப்பேன். தெரியாமற் போய்விட்டது. கற்றது கைம்மண்ணளவு என்று தெரியாமலா சொன்னுர்கள் ?
இவ்விதம் செல்லும் வழியில் வெவ்வேறு இடங்களி லும் தரித்துச் செல்ல, வசதி செய்து கொள்ளும் திறன் பிரயாணக் கலையின் பல நுணுக்கங்களில் ஒன்று மட்டுமே luT(5ib.
நல்ல வேளையாக பாங்கொக் நகரில் தவிர வேறெங் கும் பிரவேச விசா வெளியேற்ற விசா எதுவும் பெற வேண்டிய தேவை இருக்கவில்லை. இருந்திருந்தால் அது வேறு தொல்லை. மாநாட்டுப் பிரதிநிதிகளில் ஒரு சிலர் இதற்கு முன்னர் வெளிநாடுகளுக்குச் செல்லா திருந்தமையால் முதன் முறையாகப் பாஸ்போர்ட் பெறவேண்டி யிருந்தது. இந்தப் பாஸ்போர்ட் இருக் கிறதே, இது பிரயாணிக்கு மண்ணையும் பொன்னையும் பார்க்கிலும் விலையுயர்ந்ததாகும். எம்முடன் வந்த பிரதிநிதி ஒருவர் காரில் செல்லும்போது தமது பாஸ் போர்ட்டைத் தொலைத்துவிட்டார். இதனுல் அவர் பல மணி கழிக்க நேர்ந்தது. அதிர்ஷ்டவசமாக கோலாலம் பூரில் இலங்கை ஸ்தானிகராலயம் இருந்தமையாலும்
120

அவர் இன்னுர்தான் என்று அடையாளஞ் சொல்லுவ தற்கு ஸ்தானிகராலய அதிபர் உட்படப் பல பிரமுகர்கள் இருந்தமையாலும், ஒரு நாளுக்குள் நகல் பாஸ்போர்ட் ஒன்றனைப் பெற்றுக்கொண்டார். மாநாட்டுப் பிரதிநிதி யாகப் பிரயாணஞ் செய்தமையால் இவ்வளவு சுலபமாக விஷயம் முடிந்தது. அல்லாவிட்டால் சட்ட ரீதியான சகல விஷயங்களுக்கும் அவர் வெறும் பூஜ்யமாகி யிருப் பார் : அரசாங்கம் தலையிட்டுக் காரியமாற்றும்வரை காத் திருக்க நேர்ந்திருக்கும். இந்திரலோகத்துக்கும் சந்திர லோகத்துக்கும் வேறுமனே போய்விடலாம். ஆனல் இந்த உலகில் ஒரு நாட்டிலிருந்து மற்ருெரு நாட்டுக்குப் பாஸ்போர்ட் இல்லாமல் போக முடியாது.
பிரயாணக் கலையின் பிரதான நுணுக்கங்களில் மற் ருென்று செல்லும் தேசத்தின் சீதோஷ்ண நிலை பற்றி அறிந்திருத்தலாகும், பாலைவனஞ் சார்ந்த நாடுகளில் பிரயாணஞ் செய்வோர் கடும் வெயிலின் உக்கிரத்தைச் சகிக்கும் முறையை அறிந்து கொள்ள வேண்டும். கடுங் குளிர்ப் பகுதிகளுக்கு யாத்திரை செய்வோர் குளிரி லிருந்து தம்மைக் காத்துக் கொள்ள என்னென்ன நட வடிக் கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதைத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு சமயம் போலந்தில், என் கூடப் பிரயாணஞ் செய்த நண்பர் இந்த முன்னேற்பாடு களை யெல்லாம் அறியாதிருந்தமையால் திறந்த வாயை மூட முடியாது அவஸ்தைப்பட்டு, ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய நிலைமைக்குள்ளானுர்,
இன்னுமொரு விஷயம். நண்பர்கள் இன்ஞரிடம் கொடுத்து விடுங்கள்' என்ருே, உங்களுக்கென்ருே தரும் பரிசுகள், பார்சல்களை முன் பின் யோசியாமல் ஏற்றுக் கொண்டால் போச்சு. சுண்டங்காய் காற்பணம், சுமை
121

Page 68
கூலி முக்காற் பணம் என்ற மாதிரி ஆகிவிடும். விமா னத்தில் பிரயாணஞ் செய்வோரின் மூட்டை முடிச்சுகள் பொதுவாக 44 இருத்தலுக்கு மேற்படலாகாது என்பது விதி. சுமை கூலி மட்டுமா ? சுங்கக் கூலி வேறு. பொருள்களின் சுங்க வரி இவ்வளவு என்று அறியாமல் அவற்றை ஏற்றுக்கொண்டால் அடி வயிற்றில் நெருப் பைக் கட்டிக்கொண்டது போலாகிவிடும். பிரயாண ஞ் செய்பவர் இந்த விதிகளையெல்லாம் அறிந்திருந்தாலும் அவரிடம் பார்சலைக் கையளிக்கும் நண்பரோ விருந் தாளரோ அறியாதிருக்கலாம். ஆகவே தேநீர் அல்லது மதிய போசனம் அல்லது சுவாரஸ்யமான சம்பாஷணைக் குப் பிறகு வஞ்சகமில்லாமல் அவர் ஒரு பார்சலை உங்கள் தலையில் சுமத்திவிடக் கூடும். இத்தகைய சந்தர்ப்பங் களில் பிரயாணக் கலை மட்டுமல்லாமல் சாணக்கிய தந்திர மும் தெரிந்திருத்தல் அவசியம். சிலர் பார்சலை வாங்கிய பின்னர், வேண்டுமென்றே மறந்து போய் விட்டுவிட்டுப் போய் விடுவார்கள். பார்சலைக் கொடுத்தவர் ஒன்றில் அதைத் தம்முடன் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கும் அல்லது கடல் மார்க்கமாகத் தபாலில் அனுப்பவேண்டி யிருக்கும். இதில் ஒரு செளகரியம், செலவு சுருக்கமா யிருப்பது. ஆணுல் காலம் நீடித்துவிடும்.
சிலர் பிரயாணஞ் செய்ய நேர்ந்தாலொழியச் சீவிய காலத்தில் உடம்பில் ஒரு தடவையேனும் ஊசி மருந்து ஏற்றியிருக்க மாட்டார்கள். பர்மாவுக்குப் பிரயாணஞ் செய்து கொண்டிருந்த ஒருவர் அம்மைப் பால் ஏற்றிய தற்கும், வாந்தி பேதி ஊசி ஏற்றியதற்கும் அடையாள மாகத் தம்மிடம் சான்றுப் பத்திரங்கள் உண்டென்று சொன்னபோதும், உண்மையில் ஊசி எதுவும் ஏற்ற வில்லை யென்பதை நான் பின்னர் அறிந்தேன். அவ்வள வுக்கு ஊசி மருந்தில் அவருக்கு வெறுப்பு. நான்கூட
122

முதன் முறையாக, டாக்டர் நண்பரொருவரின் பேச்சைக் கேட்டு நெருப்புக் காய்ச்சலுக்கு ஊசி ஏற்றிக்கொண்ட போது வீட்டில் நல்ல ஏச்சுக் கேட்டேன்! வாந்தி பேதிக்கு ஏற்றிக்கொள்ளும் ஊசி மருந்தின் வலு 6 மாதத்துக்கு மேல் நீடிக்காதென்பதை அறியாதிருந்தா லும் பல தொல்லைகளுக்கு உள்ளாக நேரும்.
நாம் வாழும் இந்த யுகத்தில் உலகம் வெகுவாகச் சுருங்கி விட்டது; வாயு வேகம் மனுேவேகம் என்ற கற்பனையெல்லாம் பிரயாணத்தில் கைகூடி வரும் யுகம் இது. மாநாடுகளும் அநந்தம். ஆய கலைகள் அறுபத்தி நான்கென வகுத்த வாத்ஸ்யாயனர் இந்த யுகத்தில் வாழ்ந்தாராணுல் பிரயாணக் கலையை அறுபத்தைந்தாவது கலையாகச் சேர்ப்பாரென்பது திண்ணம். மேற்சொன்ன அறுபத்திநான்கு கலைகளையும் அழகுக் கலைகள், அறிவுக் கலைகள், பயன்படு கலைகள் என மூன்று பிரிவுகளில் அடக்கலாமெனச் சிலர் கூறியுள்ளார்கள். ஆணுல் பிரயா ணக் கலையோ இம்மூன்று பிரிவுகளிலும் அடங்கும்; தன் னளவில் தனித்தும் நிற்கும். பிரயானத்தின் நோக்கங்" கள் கூட இம்மூன்று பிரிவுகளுள் அடங்குகின்றன வென லாம். அழகைத் தேடிச் சிலரும், அறிவைத் தேடிச் சிலரும், பயனைத் தேடிச் சிலரும் பயணஞ் செய்கிருர்கள். உல்லாசப் பிரயாணிகள் இக்கலையில் அக்கறை கொள் ளத் தேவையில்லை. ஏனென்ருல் இவர்களின் செலவில் பயனடைவதற்குத்தான் Tourist Companies என்னும் பிரயாண ஸ்தாபனங்கள் இருக்கின்றனவே.
இக்காரணங்களை யெல்லாம் முன்னிட்டு, பாங்கொக்" வரும்படி தந்தி கிடைத்ததும், கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு பினுங்கு வழியாக பாங்கொக் சென்று பின்னர் சிங்கப்பூர் வழியாக இலங்கை திரும்புவதற்குத் திட்டங்
123

Page 69
கள் வகுக்கலானேன். மேலும் ஏப்ரல் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்கு பாங்கொக்கில் இருக்கத்தக்கதாகப் பிரயாணத்தை ஒழுங்கு செய்வ தென்று முடிவு செய்தேன். முந்திய வெள்ளிக்கிழமை மலாய் கதீப்பின் குத்பாப் பிரசங்கத்தைச் செவிமடுத் ததை அடுத்து தாய்லாந்து அல்லது சயாம் நாட்டு கதீப்பின் பிரசங்கத்தைச் செவிமடுக்க ஆவலுடையவனு யிருந்தேன். 1958ஆம் ஆண்டில் லாகூர் பல்கலைக் கழகத் தின் ஆதரவில் நடைபெற்ற இஸ்லாமியக் கருத்தரங்கு மாநாட்டுக்கு வந்திருந்த தாய்லாந்துப் பிரதிநிதிகள் இருவர் மூலமாகத் தாய்லாந்தில் முஸ்லிம்கள் வாழ்கிருர்க ளெனவும் பாங்கொக்கில் பள்ளிவாசல்கள் உண்டென -வும் அறிந்திருந்தேன்.
ஏப்ரல் 25ஆம் திகதி திங்கட்கிழமை நண்பர்களையும் பழகியவர்களையும் சந்தித்து விடைபெறுவதில் கழிந்தது. இந்தச் சந்திப்புக்களின்போது இலங்கையில் நிலவும் சூழலையும் மலேசியாவில், நிலவும் சூழலையும் பற்றியே பெரும்பாலும் சம்பாஷித்தோம். சீதோஷ்ண நிலைமை தாவரம், சமீப காலம் வரை நிலவிய பொருளாதார நிலைமை, அண்மையிற் கழிந்தகால வரலாறு ஆகிய விஷயங்களில் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் நெருங் கிய ஒற்றுமைகளுள்ளன. இரண்டு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றையொன்று நன்கு அறிந்து கொண்டால் அளப் பெரும் நன்மைகளுண்டாகு மென்பதில் நாமெல்லோரும் ஒத்த கருத்துள்ளவர்களா யிருந்தோம். இந்தச் சம்பா ஷணைகளின்போது, முந்திய நாள் அபூபக்கரின் அனு சரணையுடன் நான் பார்வையிட்ட Oil Palms பற்றியும் பேசிக்கொண்டோம். இந்த மரத்தைப் பேச்சு வழக்கில் செம்பனை என்று குறிப்பிடுகிருர்களாம். அன்றைய தினம் நண்பர் அபூபக்கர் பக்கத்தில் நின்ற துணிவில்
「124

பள்ளிச் சிறுவனைப்போல் செம்பனை ஒன்றினருகே சென்று தொட்டுப் பார்த்தேன். நல்ல வேளையாக, மரத் தில் காய்கள் இருந்தன. ஆணுலும் அவற்றைப் பறிக்கத் துணிவு வரவில்லை. அவற்றைப் பார்த்தபோது 1955 ஜூலையில் மதீனு நகரிலுள்ள தைளிர் ஹோட்டல் வளவில் நின்ற பேரீச்ச மரங்களும் அவற்றிலிருந்து நான் பழங்கள் பறித்த சம்பவமும் நினைவுக்கு வந்தன.
ஹஜ் யாத்திரைக்கு வந்திருந்த பெண்மணிகள் காலை
உணவு தயாரித்துக் கொண்டிருக்க, நான் இந்தப் பேரீச்
சம் பழங்களைச் சுவைத்து காலை உணவுக்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். செம்பனையின் பழங்கள்
தோற்றத்தில் பேரீச்சம் பழங்களைப் போல இருக்கின்
றன. உள்ளேயோ ஒரே எண்ணெய்.
மிகச் சமீபத்திலே தான் இந்தச் செ ம் பனை ச் செய்கை மலேசியாவில் அறிமுகமாயிற்றென்று நண்பர் அபூபக்கர் சொன்னர். இதற்காக ரப்பர்த் தோட்டங்கள் சில செம்பனைத் தோப்புக்களாக மாற்றப்பட்டுள்ளன வென்றும் குறிப்பிட்டார். இதைக் கேட்டதும், இலங்கை யிலும் இந்தத் தொழிலைக் கைக்கொண்டாலென்ன வென்று நினைக்கலானேன். ரப்பர் பயிரிடுதற்கு வேண் டிய சுவாத்தியமே செம்பனைக்கும் வேண்டுமென்ருல் இலங்கையில் ரப்பரைப் போலச் செம்பனையும் நன்கு வளருமல்லவா?
இந்த யோசனை உண்டானது முதல் இரண்டு நாட் களும், அதாவது ஏப்ரல் 25, 26ஆம் திகதிகளில் நான் சந்தித்த எல்லோரிடமும் செம்பனை பற்றி விசாரித்தேன். நான் கேள்விமேல் கேள்வியாகக் கேட்டதைக் கவனித்த ஒருவர் நான் ஏதோ இலாபஞ் சம்பாதிக்கும் நோக்கத் தோடுதான் விசாரிக்கிறதாக நினைக்கத் தலைப்பட்டார்.
125

Page 70
என்னிடம் தோட்டமேது ? இந்தமாதிரியான தொழில் களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கான வியாபார மதி நுட்பந்தான் ஏது? என்னுடைய தாய் வழி, தந்தை வழிப் பாட்டனர்கள் இருவரும் ஒரு காலத்தில் பெரிய வியாபாரிகளாக விளங்கியபோதிலும் என்னைப் பொறுத்த வரை வியாபாரத்துக்கும் எனக்கும் ஏழாம் பொருத்த மென்றே சொல்ல வேண்டும்.
செம்பனைச் செய்கை மலேசியாவுக்குப் புதிய தொழி லென்ற போதிலும் அதன் செல்வாக்கு நாளும் பொழு தும் பெருகி வருகிறதென எனது விசாரணைகள் வாயி லாக அறிந்து கொண்டேன். இதன் பயணுக மலேசியா நகரத்திலும் ரப்பரிலும் மட்டுமே தங்கியிருக்காது தனது பொருள் வளத்தை வெகு துரிதமாகப் பரவலாக்க வழி பிறந்திருக்கிறது. பழைய ரப்பர்த் தோட்டங்களைச் செம் பனைத் தோப்புக்களாக மாற்றுவோருக்கு அரசாங்கம் மானியமளித்து ஊக்கி வருகிறது. இதிலிருந்து மலேசி யாவில் வேறிடங்களில் செய்கை நடைபெறுவதில்லை என்று நினைக்கலாகாது. 1965ஆம் ஆண்டில் சுமார் 2,00,000 ஏக்கர் நிலத்தில் செம்பனை பயிரிடப்பட்டதாம். செம்பனையின் பழமும் விதையும் எண்ணெய் பிழியப் பயன்படுகின்றன. இதனுல் செம்பனை பொருளாதார ரீதியாக, மிகுந்த பெருமதிப்புள்ளதாகக் கணிக்கப் படுகிறது. பெருகி வரும் செம்பனைத் தோப்புக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் சுமார் பத்து எண்ணெய் ஆலைகளைப் புதிதாக நிறுவத் திட்ட மிட்டிருக்கிறதென்றும் அறிந்தேன். இதைக் கேட்டதும் எமது நாட்டிலும் செம்பனைச் செய்கை சிறிய அளவி லேனும் நடைபெறுகிறதாவென்று சிந்திக்கலானேன். மே மாதம் 2ஆம் திகதியன்று சிங்கப்பூரில், மலாக்கா போகும் வழியில் ஜோஹோரில் செம்பனைத் தொழிற்
126

சாலை யொன்றனைக் கண்டேன். அப்பொழுது மற்றும் மூவருடன் மெர்சிடிஸ் பென்ஸ் டாக்ஸியில் பிரயாணஞ் செய்துகொண்டிருந்தேன். கூட வந்தவர்களில் ஒருவர் மலாயர், இங்கிலிஸ் பேசும் இளைஞர். மற்றிருவரும் மலாய் மொழி பேசுவோர். ஒரே டாக்ஸியில் பிரயாணஞ் செய்தபோதும் நாங்கள் நால்வரும் வெவ்வேறு இடங் களுக்குப் போய்க்கொண்டிருந்தோம் ; எல்லோரும் ஒத்த இரசனையுடையவர்களுமல்லர். ஆகவே டாக் ஸி யை நிறுத்தச் சொல்லிவிட்டு, இறங்கிப் போய் அந்த ஆலை யைப் பார்க்க முடியவில்லை. இதனுல் செம்பனம் பழத்தி லிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் முறை இன்ன தென்பதைப் பார்க்க முடியவில்லை. இலங்கையில் இத் தொழிலை ஆரம்பிப்பதற்கான சாதக பாதகங்கள் எவை என்பதை நான் அறியேன். அதைப்பற்றி நிபுணத்துவ முடிவு சொல்லுந் திறமை எனக்கில்லை. மலேசியாவில் இத்தொழிலுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிற தென்பது மட்டும் உண்மை. அங்கு, சமஷ்டி காணி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக ஐந்து வருடத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் விருத்தி செய்ய விருக்கும் 1,40,000 ஏக்கர் காணியில் 1,00,000 ஏக்கர் காணியில் செம்பனை செய்கை பண்ணப்பட விருக்கிறது. செம்பனை பற்றிய ஆராய்ச்சி என்னைப் பொறுத்தவரை இவ்வள வுடன் முற்றுப்பெற்றது. கோலாலம்பூரிலிருந்து புறப் படுவதற்கான ஆயத்தங்களில் இறங்கலானேன்.
127

Page 71
15. மஸ்ஜித் நெகாரா
அந்த ஞாயிறு தினம், அபூபக்கரின் உதவியுடன் கோலாலம்பூரிலிருத்து சுமார் 22 மைல் தூரத்தில் கிள்ளான் என்னுமிடத்தில் அமைந்துள்ள மலாயா முஸ்லிம் கல்லூரியைத் தேடிப் புறப்பட்டேன். இக்கல் லூரியைப் பற்றி, அதன் அதிபரும் என் இனிய நண்பரு மாகிய கலாநிதி முகம்மது அப்துல் றஊஃப் அவர்கள் மூலமாக வெகு காலமாகவே அறிந்திருந்தேன். இவரை, மலாயாவிலிருந்து தமது தாய்நாடாகிய மிஸ்ர்-எகிப்துசெல்லும் வழியில், கொழும்புக்கு விஜயஞ் செய்த இரண்டு சந்தர்ப்பங்களில் நான் சந்தித்துள்ளேன். கடைசி முறையாகச் சந்தித்தது 1965 மே மாதம் 20 ந் திகதியன்று அவரது இல்லத்திலாகும். அஸ்ஹார் பல்கலைக் கழக நிர்வாகிகளால் கிள்ளான் கல்லூரிக்கு உபயமாக அனுப்பிவைக்கப்பட்ட இவர், பதவிக் காலம் முடிந்து மீண்டும் அஸ்ஹாரில் பணியாற்றி வந்தார்; இவர் அல் அஸ்ஹாரில் ஆலிமியா கலாநிதிப் பட்டமும் கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தாரின் எம். ஏ. பட்டமும் லண்டன் பல்கலைக் கழகத்தாரின் கலாநிதிப் பட்டமுமாக மும்முறை பட்டம் பெற்றவராவர்.
கிள்ளான் கல்லூரி 1955 ம் ஆண்டில் செலாங்கூர் சுல்தானின் ஸ்தானு-மாளிகை-ஒன்றில், அரச மகு திக்கு அண்மையில், ஸ்தாபிக்கப்பட்டது. இக்கல்லூரி 1959ம் ஆண்டில் முதன் முறையாகப் பெண்களை அனுமதித்தது. இதே ஆண்டில்தான் இலங்கையிலும் முதன் முறையாகப் பெண்களுக்கென கல்எலியா
128

மதறஸா நிறுவப்பட்டது. இக்கால கட்டத்திலேயே காஹிருவிலுள்ள அல் அஸ்ஹார் பல்கலைக் கழகத்திலும் பெண்களுக்கெனப் பிரத்தியேகமாக ஒரு கல்லூரி ஆரம் பிக்கப்பட்டது. அஸ்ஹாரிலுள்ள இக்கல்லூரிக்கு விஜயஞ் செய்யும் வாய்ப்பு 1965 இல் எனக்குக் கிடைத்தது. அங்கு (1) இஸ்லாமிய ஆராய் ச் சி (2) மொழியும் சமுதாயமும் (3) வர்த்தக நிர்வாகம் ஆகிய மூன்று வெவ்வேறு கலைத்துறைகள் உண்டென்று அப்பொழுது அறிந்தேன். கா ஹி ரு, கிள்ளான், கல்எலியா ஆகிய மூன்று முனைகளிலுள்ள இந்த மூன்று மகளிர் கல்லூரிகளும் இஸ்லாம் கற்பிக்கும் தகுதியுள்ள ஆசிரியைகளை எதிர்கால முஸ்லிம் உலகுக்கு உவந் தளிக்க விருக்கின்றன. இந்த ஆசிரியைகளைப் பெண் மெளலவிகள் என்றழைக்கலாமா வென்பது பிரச்சினைக் குரியது; ஆராயப்பட வேண்டிய விஷயம். காஹிரு, கிள்ளான், கல்எலியா ஆகிய இம்மூன்று கல்லூரிகளில் முந்திய ஸ்தாபனமெது? முன்னுேடி ஸ்தாபனமெது ? என்றெல்லாம் நிச்சயமாக எனக்குத் தெரியவில்லை, இந்தக் கெளரவம் காஹிருவுக்கு உரியதாயிருக்குமென்று நம்புகிறேன். முஸ்லிம் பெண்களின் கல்வி விருத்திக்கு அரசாங்கம் திட சங்கற்பத்துடன் திட்டம் வகுத்ததன் காரணமாக, பாடசாலைகளில் மார்க்க பாடம் போதிப்ப தற்குப் பெண்களைப் பயிற்றுவிக்க வேண்டிய அவசிய தேவை முதன் முதலாக ஏற்பட்டது மிஸ்ர் நாட்டிலேயே யாகும்.
கிள்ளான் கல்லூரியின் தலைவாசலில் ஏமாற்றமே. என்னைக் காத்து நின்றது. கலாநிதி றஊஃப் அவர் களின் ஸ்தானத்திலிருப்பவரைச் சந்தித்து உரையாடும் ஆவலுடன் சென்ற எனக்கு அதிபரவர்கள் கிள்ளானில் இல்லை என்ற செய்தி கிடைத்தது. கல்லூரி வளவில்
129

Page 72
குழுமி நின்ற மாணவர்கள், கல்லூரியிற் பெரும் பகுதி முந்திய நாள் பெத்தலங் ஜெயாவிலுள்ள புதிய கட்டடத் துக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும், அதிபர், பதிவாளர் ஆகியோரின் காரியாலயங்களும் அவ்விடத்துக்கே மாற் றப்பட்டு விட்டதாகவும் அறிவித்தார்கள். அன்று மாலை விடுதிக்குத் திரும்பு முன்னர் இந்தக் கல்லூரியைச் சுற்றிப் பார்த்து முடிக்க நான் தவறவில்லை.
சாயங்காலத்துக் கருக்கிருட்டில், அபூபக்கரின் துணையுடன் கல்லூரி அதிபரின் வாசஸ்தலத்தைக் கண்டு பிடித்தேன். கதவில் தட்டி உள்ளே நுழைந்து
கலாநிதி றஊஃப் அவர்களின் நண்பன்" என்று என்னை நானே அறிமுகஞ் செய்துகொண்டேன். அதிபர் நான் எதிர்பார்த்தவாறே; இன்முகம் காட்டி என்னை வரவேற்ருர். அவர் மனைவி சிற்றுண்டி பரிமாறிஞர். இவர் கண்டியைச் சேர்ந்தவரும் பல வருடங்களுக்கு முன்னர் குடும்பத்தோடு சென்று ஜோஹோரில் குடியேறியவருமான காலஞ்சென்ற பி. எ. ராஸிப் அவர்
களின் மகளாவர்.
பிரிட்டிஷ்காரர் நம்மை ஆண்டு வந்த காலத்தில் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் எந்தப் பகுதியிலும் குடியேறி வாழ்வதற்கு நமக்குச் சுதந்திரம் இருந்தது. ஆயினும், நம்மை நாமே ஆளும் சுதந்திரம் இந்த அ டி  ைம ச் சுதந்திரத்திலும் மேலானதல்லவா ? சிற்றுண்டியில் தொதோல்-அல்வா-இரண்டாம் இடம் பெற்றிருந்தது. இதைக் கண்டதும் இலங்கையின் நினைவு வந்தது. வட்டிலப்பமும் தொதோலும் இலங்கை முஸ்லிம்களின் அபிமானத்தைப் பெற்றமைக்கான காரன் காரியத் தொடர்புகளை ஆராய வேண்டுமென்ற ஆர்வமுண்டாயிற்று. (இலங்கையில் பரிமாறப்படும்
130

வட்டிலப்பமும், மலேசியாவில் பரிமாறப்படும் சிரிகயாவும் ஒன்ரு ?) எனினும், புதிய கல்லூரியைச் சுற்றிப் பார்க்க விரும்பியமையால் காலத்தை மீதப்படுத்த வேண்டிய தாயிற்று.
கிள்ளான் முஸ்லிம் கல்லூரியின் புதிய அதிபரும் அஸ்ஹார் பட்டதாரியே. இவர் சிலகாலம் ஜோஹோரில் முஃப்தியாக அரசின் மார்க்க ஆலோசகராகப் பணி புரிந் தார். நான் போன வேளை வசதியற்றதாயும், இட மெல்லாம் ஒழுங்கின்றியும் இருந்தபோதிதும், கோலாலம் பூரில் இரண்டொரு நாட்கள் மட்டுமே தங்கி நிற்பேன் என்றதை அறிந்ததும் கல்லூரி வளவுக்கு என்னை அழைத்துச் சென்று யாவற்றையும் காண்பித்து, விளக்கம் கூறிஞர். கல்லூரியின் சம்பிரதாயபூர்வமான திறப்பு விழா இன்னுஞ் சில மாதங்களில் நடைபெறு மென்று அறிந்தேன். கல்லூரி முகப்பில் அழகான செயற்கை நீர் த் தாரை அமைக்கப்பட்டிருக்கிறது. 500 பேர் கொள்ளக் கூடிய சபா மண்டபம் நல்ல முறையில் திட்டமிட்டுக் கட்டப்பட்டிருக்கிறது. ஆண் களுக்கான விடுதி ஒரு புறம். அதையடுத்து எழில் மிக்க பூங்கா. மறுபுறத்தில் பெண்களுக்கான விடுதி. இந்த ஏற்பாடு பெண்களின் விடுதிக்கு அந்தப்புரம் போன்ற மறைப்பும் ஒழுக்கமும் கொடுக்கிறது. இக் கல்லூரியில். இலங்கை மெளலவி மாணவர்கள் சிலரைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று அதிபர் விருப்பம் தெரிவித் தார். மலாயாப் பல்கலைக் கழகத்தின் பென்னம் பெரிய நிலப்பரப்பில் இக் கல்லூரிக்கென 30 ஏக்கர் நிலம் ஒதுக் கப்பட்டுள்ளதெனவும், கல்லூரியின் ஓர் அம்சமாக மசூதி யொன்றும் கட்டப்பட விருக்கிற தென்றும் விளக்கினர். இந்த மசூதி முஸ்லிம் கல்லூரியின் எல்லை ஸ்தம்ப மாகவும் இஸ்லாமிய கட்டடக் கலையின் கொடு
3.

Page 73
முடியாகவும் விளங்குமாம். நூல்களை வகைப்படுத்து வதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் அமெரிக்க முறையினைப் பின்பற்றும் நவீன நூல் நிலையமொன்றும் நிறுவப்பட விருக்கிறது.
இக் கல்லூரிக்கும் காஹிருவிலுள்ள ஜாமிஉல் அஸ்ஹார் பல்கலைக் கழகத்துக்கும் நெருங்கிய உறவு நிலவுகிற தென்றும் அதிபர் வாயிலாக அறிந்தேன். இக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்கள் அஸ்ஹாரில் மேற் படிப்புப் படிப்பதற்கு அஸ்ஹார் அங்கீகாரமளிக் கிறது. இந்த ஏற்பாட்டுக்குக் காரணகர்த்தர் ஷெய்குல் அஸ்ஹார்-உப வேந்தர்-மேன்மை தங்கிய ஷெய்கு முகம்மது ஷல் தூத் அவர்களாவர். 1961 ஆம் ஆண்டில் இவர் மலாயாவுக்கு விஜயஞ் செய்திருந்தார் என்று அதிபர் குறிப்பிட்டதும் எமது சம்பாஷணை அவர் பக்கம் திரும்பியது காலஞ் சென்ற ஷெய்கு ஷல் தூத் அவர்களை 1959 ஆகஸ்ட் 17 ஆந் திகதி யன்று அவரது இல்லத்தில் தரிசித்தேன். இளமையின் துடிப்பும் முதுமையின் தேஜஸாம் ஒருங்கே அமையப்பெற்றிருந்த ஷெய்கு அவர்கள் பிறநாட்டு முஸ்லிம்களுக்கு அறபு ஆசிரி யர்களை வழங்கி உதவுவதில் மிகுந்த நாட்டமுள்ளவராய் விளங்கினர். இவர்களின் கொடையாகவே இலங்கை முஸ்லிம்களுக்கு ஷெய்கு ஸஹ்ருன் அவர்களின் சேவை சுமார் ஈராண்டுக் காலம் கிடைக்கப் பெற்றது. அன்று என் விடுதிக்குத் திரும்பியபோது மலேசியாவிலும் ஓர் அல் அஸ்ஹார் கிளைத்துப் படர்கிறது என்ற உணர்வு எனக்கு உண்டாயிற்று. ه"
நான் பார்வையிட்ட இந்த கல்வி ஸ்தாபனம் Malaya Muslim College என அழைக்கப்படுகிறது. இலங்கையில் college என்னுஞ் சொல் பொதுவாக எஸ். எஸ். ஸி.
182.

வரை கல்வி புகட்டும் பாடசாலைக்கும் உபயோகிக்கப்படு கிறது. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல்கலைக் கழக மொன்றுடன் இணைந்த கல்வி நிலையத்தையே பெரும் பாலும் College என்றழைக்கிருர்கள். மலாயா முஸ்லிம் கல்லூரி, டி ப்ளோமா, தராதரப் பத்திரங்கள் ஆகியன வழங்கும் சமயச் சார்பான ஸ்தாபனமாகும். இக்கல்லூரி வழங்கும் பட்டங்களை மலாயாப் பல்கலைக் கழகமும் காஹிரு அல் அஸ்ஹாரும் அங்கீகரிக்கின்றன. ஆகவே இக் கல்லூரியை இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள மத்றஸாக்களுடன் ஒப்பிடலாம். ஆயினும் இக்கல்லூரி அந்தஸ்திலும் தராதரத்திலும் மத்றஸாவைப் பார்க்க உயர்ந்ததாகும். இத்தகைய ஸ்தாபனத்துக்குச் சரியான பெயர் எதுவென்பதை அதிபருடன் கலந்தாலோசிக்க அவகாசமிருக்கவில்லை. அவகாசம் கிடைத்திருந்தால், இஸ்லாம், அறபு ஆசிரியர்களைப்பயிற்றுவித்து, ஜாம் ஆ பள்ளிவாசல்களுக்கு இன்றியமையாதவர்களாகிய கதீப், இமாம் ஆகியோரைத் தோற்றுவிக்கும் நிறுவனத்துக்கு இந்தியா, மிஸ்ர், மலேசியா ஆகிய நாடுகளில் உபயோ கிக்கப்படும் வெவ்வேறு பெயர்கள் பற்றிய விவரங்களை அலசி ஆராய்ந்திருக்கலாம். நம் நாட்டு வழக்கையனு சரித்து இக் கல்லூரியைப் பெரிய மத்றஸா வென்றழைக் கலாம்.
அதிபரிடமிருந்து விடைபெற்றபோது அவர் இரண்டு கைநூல்களை எனக்கு அன்பளிப்பாக வழங் கிஞர். ஒன்று கிள்ளரின் கல்லூரி பற்றியது; மற்ருென்று மஸ்ஜித் நெகாரா பற்றியது. மஸ்ஜித் நெகாரா என்ற இந்தக் கைநூலையே முந்திய வெள்ளிக்கிழமை நான் வாங்க முயன்று தோல்வியடைந்தது. இந்நூலிலிருந்து பல தகவல்களை அறிந்துகொண்டேன். மஸ்ஜித் நெகாரா என்னுஞ் சொற்ருெடரின் முற்பகுதி, சொல் வரலாற்
133

Page 74
றின்படி, இஸ்லாத்திலிருந்தும் பிற்பகுதி இந்திய மொழி யிலிருந்தும் தோன்றியவையாகும். ஆணுல் நெகாரா என்னுஞ் சொல் இங்கு நகரம் என்னும் பொருளிலன்றி தேசிய' என்னும் பொருளிலேயே உபயோகிக்கப்படு கிறது. மலேசியாவில் அரச அங்கீகாரம் பெற்ற மதம் இஸ்லாமே. அதேபோல அரச அங்கீகாரம் பெற்ற மசூதி மஸ்ஜித் நெகாராவாகும்.
இன்று கோலாலம்பூரை நினைக்கும் எவரும் 13 ஏக்கர் காணியில் அமைந்த இந்தப் பிரமாண்டமான பள்ளிவாசலை நினைக்காதிருத்தல் சாத்தியமன்று. இதன் கட்டடம் மட்டுமே ஐந்து ஏக்கர் நிலத்தில் வியாபித்திருக் கிறது. கண்ணையும் கருத்தையும் வசீகரிக்கும் வகையில் நகரின், நடுநாயகமாக அமைந்துள்ள இந்த மசூதி இஸ் லாத்தின் மாட்சியைப் பிரதிபலிக்குஞ் சின்னமாகவும் மலாயர்களைத் தன்பால் ஈர்க்கும் புனித ஸ்தலமாகவும் மிளிர்கிறது. 1957 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ம் திகதியன்று மலாயா சுதந்திரம் பெற்றமையைக் குறிக்கும் நிரந்தர ஞாபக ஸ்தலமாகவும் விளங்கும் இப்பள்ளிவாச லுக்கு 1961 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ந் திகதி அதிகாலையில் நடைபெற்ற வைபவமொன்றிலே பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள், Theodolite என்னும் தள மட்டக் கோண அளவைக் கருவியைக் கொண்டு கிப்ளா ஆகிய தொழுகைத் திசையை ஸ்தாபித்தார். இதன் பிறகு மராமத்து இலாகாவைச் சேர்ந்த கட்டட நிபுணர் எஞ்சே பஹ்றுத்தீன் பின் அபுகாஸிம் அவர்கள் கட்டடப் படத்தின்படி வேலை ஆரம்பமாயிற்று. இவர், இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கு முன்னர், முஸ்லிம் நாடுகள் பலவற்றைத் தரிசித்து அந்தந்த நாடுகளின் கட்டட அமைப்பு முறைகளைக் கற்றுக்கொண்டாராம்.
இது விஷயத்தில் ஐக்கிய அறபுக் குடியரசு உருவ
134

அமைப்புச் சம்பந்தமான பல யோசனைகளை வழங்கி உதவியது. அண்மையில் புரூணியில் அழகிய மசூதி யொன்று கட்டி எழுப்பப்பட்டுள்ளமையால், இவர் அதனையும் பார்வையிட்டார். இவ்வளவு முயற்சிகளுக்கும் பின்னர் அவர் உருவாக்கிய இந்த மசூதி பாரம்பரிய இஸ்லாமியக் கட்டட அமைப்பு முறைகளையும் நவீன கட்டட உத்திகளையும் உள்ளடக்கியதாக அமைந் துள்ளது. இந்த இளைஞர் இப்பொழுது அரசாங்க சேவையிலிருந்து விலகிச் சொந்தமாகத் தொழில் நடத்தி வருகிருர் என்றும் அறிகிறேன்.
கோலாலம்பூர் செல்லும் எவரும் ஏவுகணை போன்ற உருவத்தில் வானுற உயர்ந்து நிற்கும் மஞராவைக் காணத் தவருர், ஒரு கோடி வெள்ளி-மலாயன் டாலர்-செலவில் கட்டி முடிக்கப்பெற்ற மஸ்ஜித் நெகாரா மசூதியில் சுமார் 8,000 பேர் வசதியாகத் தொழ லாம். பரிதி வட்ட வடிவிலமைந்த குவி மாடங்கள் இல் லாமையால் இக்கட்டடம் தனித்தன்மை வாய்ந்ததாய் அதி நவீன தோற்றப் பொலிவுடன் திகழ்கிறது. இதன் கோபுரம் குடை வடிவத் தோற்றம் பெறத்தக்கதாக அமைக்கப்பட்டிருக்கிறது. மலேசியக் கலாசாரத்தில் குடை ஆட்சியின் சின்னமாக விளங்குகிறதென்பதும், இம் மரபு இந்தியாவிலிருந்தே மலாயாவில் பரவியிருக்க வேண்டுமென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இச்சின் னத்தையே மேற்படி குவிமாடம் ஓரளவு பிரதிபலிக்கிற தெனச் சிலர் கருதுகிருர்கள். Life-மின்-ஏணிபொருத்தப் பெற்றதும், 235 அடி உயரமானதுமான மஞராவின் முடியிலும் இதே குடைச் சின்னம் காணப் படுகிறது. ஆளுல் இங்கு குடை மடக்கப்பெற்ற தோற்றங் கொடுக்கிறது. கூரைகள் சிலவற்றில் தனித் துவம் மிக்க மலாயச் சின்னங்கள் பொறிக்கப்பெற்
135

Page 75
றுள்ளன. கட்டடம் பிரம்மாண்டமானதாயினும் தோற் றத்தில் அடக்கமானதாகக் காட்சியளிக்கிறது. அதன் காற்ருேட்டப் பாங்கும், விஸ்தாரமும், கம்பீரமும், நீலம் வெள்ளை, பொன்னிறம் ஆகிய வண்ணச் சேர்க்கையும் இணைந்து அதற்கு ஒருவிதமான ஒயிலையும் பொலிவையும் அளிக்கின்றன. தொழுகை நடைபெறும் பெரிய மண்ட பத்தில் கனமான, மேக வண்ணக் கம்பளம் விரிக்கப்பட் டிருக்கிறது. 153 சதுர அடி விஸ்தீரணமுள்ள இம் மண்டபத்தைச் சுற்றியுள்ள சுவர்களில் இத்தாலிய தேசத்துப் பளிங்குக் கற்கள் பதிக்கப்பெற்றுள்ளன. மண்டபத்தின் உட்புறம் மிக அலங்காரமாகச் சோடிக்கப் பெற்றிருக்கிறது. நான்கு சுவர்களிலும் கதவு மட்டத் துக்குச் சற்று உயரத்தில் திருகுர்ஆன் வாசகங்கள் பொறிக்கப் பெற்றுள்ளன. இரண்டு அடி உயரத்துக்கு அமைந்திருக்கும் இக் குர்ஆன் வாசகங்கள் இத்தாலி நாட்டிலிருந்து தருவிக்கப் பெற்ற பொன்னும் நீலமும் கலந்த கண்ணுடிகளால் அரண் செய்யப் பெற்றுள்ளன. வண்ணச் சேர்க்கை பின்னிப் பிணையும் மங்கல் கண் ணுடிகள் அழகுக்கு அழகு செய்கின்றன.
மிஃருப்-இமாமின் ஸ்தானம்-வட்டவடிவிலன்றி, நாற்கோண வடிவில், கதவைப் போல அமைக்கப்பட்டி ருக்கிறது. அதன் நான்கு புறங்களிலும் சித்திர எழுத்தில் திருகுர்ஆன் வாசகங்கள் மிம்பரும்-இமாமின் குத்பா ஸ்தானம்-இவ்வாறே புதிய முறையில் அமைந்துள் ளது. இதன் நடுவிலே ஒரு நாற்காலி வைக்கப்பட் டுள்ளது. மிம்பரின் பின்புறத்தில் தேக்கு மரத்தினுல் சித்திர வேலைப்பாடுகள் செய்யப் பெற்றுள்ளன. இச் சித்திர வேலைப்பாடு ஒலிபெருக்கி கருவியை மறைக்க உதவுகிறது. மிம்பரில் தோன்ரு ஒளி"யாக மின்விளக்கு சுடர் பாய்ச்சுகிறது.
136

பெரிய மண்டபம் மட்டுமே 3000 பேர் கொள்ளக் கூடியது. அதன் மூன்று பக்கங்களிலுமுள்ள விருந்தை களில் மேலும் 5000 பேருக்கு இடமுண்டு விருந்தை களுக்கு டெரஸ்ஸோ தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. பெரிய மண்டபத்தின் தென் திசையில் அலங்காரமான முற்றமும், தடாகமும், செயற்கை நீர்த்தாரைகளும் உள்ளன. இப்பள்ளிவாசல் 1965 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ந் திகதியன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து
வைக்கப்பட்டது.
முஸ்லிம் கல்லூரி அதிபர் தாத்தோ அப்துல் ஜலீல் அவர்கள் அன்பளிப்பாகத் தந்த மஸ்ஜித் நெகாரா என்ற கைநூலின் கடைசிப் பகுதியில் மலேசியாவில் இஸ்லாம் பரவிய வரலாறு விவரிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து பயனுள்ள பல தகவல்களைச் சேகரித்தேன். இந்த அணு பந்தத்திலே மலேசியாவின் பிற பகுதிகளில் காணப்படும் பள்ளிவாசல்களின் படங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் அமைப்பு முறைக்கும் மஸ்ஜித் நெகாராவின் அமைப்பு முறைக்கும் எவ்வளவு வேறுபாடு 1 மலாயாவில் தோன்றிய அதிபுராதன பள்ளிவாசல் மலாக்காவில் உள்ள தங்குவேரா பள்ளிவாசல் எனலாம். இதைப் uriš தால் எவரும் பள்ளிவாசல் என்று நினையார்; வீடு போலவே தோற்றமளிக்கிறது. ஏனைய பள்ளிவாசல் களில் பல மனுராவுக்கன்றிக் குவிமாடத்துக்கே முக்கிய மளித்துள்ளன. மனுராவில் ஒன்றுதானும் நாற்கோண வடிவத்தில் இல்லை. எல்லாம் பாரம்பரிய வட்ட வடிவின வாகவே காணப்படுகின்றன.
இந்தக் கைநூலைப் படித்ததிலிருந்து, மஸ்ஜித் நெகாராவும் பெத்தலங் ஜெயாவில் கம்பீரமாக ஓங்கி நிற்கும் மத்றஸாவும் மலேசியாவில் நமது தசாப்தத்தில் உண்டாகிவரும் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் சின்னங்க ளாக இலங்குகின்றன என்னும் உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது. r
137

Page 76
16. பினுங்கை நோக்கி . . .
1966 ஏப்ரல் மாதம் 26 ஆந் திகதி கோலாலம்பூரி
லிருந்து புறப்படுவதற்கு இன்னுஞ் சில மணித்தியாலங்களே இருக்கின்றன. நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் கண்டு களிக்க வேண்டியவை யென்று பிரயாணக் கைநூல் விவரித்திருந்த இடங் களில் பலவற்றைப் பார்க்க முடியாமற் போய்விட்டதே என்ற துக்கம் மனதிற் சுரக்கிறது. மாநாட்டுக் களமான மலாயாப் பல்கலைக் கழகத்தையும் அதன் வளவில் அமைந்திருந்த மசூதியையும் பார் க் க முடியாது போனமை பெரிய துக்கம். எனது விடுதியிலிருந்து கோலாலம்பூர் பட்டணத்துக்கு எத்தனை தடவை போய் வந்திருக்கிறேன். ஆயினும் வழியில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக் கழக மசூதியுள் நுழைந்து சுற்றிப் பார்க்கக் கிடைக்கவில்லை. இந்த மசூதியின் மனுரா இஸ்லாமியக் கட்டடக் கலை வளர்ச்சியில், செலாங்கூர் சுல்தான் கட்டுவித்த கிள்ளான் பள்ளிவாசல் கட்டட முறைக்கும் மஸ்ஜித நெகாரா கட்டட முறைக்கும் இடைப்பட்ட கட்டடத்தைப் பிரதிபலிப்பதாக விளங்கு கிறதென்பதைத் தூரத்திலிருந்து பார்த்தாலே அறிந்து
கொள்ளலாம்.
கோலாலம்பூரில் தங்கிய பதினுெரு நாட்களிலும் பல நண்பர்களைச் சம்பாதித்துக்கொண்டேன். இவர்களது பேச்சில் கோலாலம்பூர் கே. எல். ஆகக் குறுகியுள்ளது. இந்நண்பர்களில் அநேகர் இலங்கை வம்சாவளியினர்.
-138

கே. எல். லிலிருந்து புறப்படுமுன்னர் இவர்களிற் சில ரைக் கண்டு விடைபெறவேண்டிய கடமை இருந்தது." மற்றும் சிலருக்கு வீட்டுக்கு வந்து காண்பேன்" என்று" முன் யோசனையின்றி நானே வாக்களித்திருந்தேன். இந்த இக்கட்டின் காரணமாகக் காலைப்பொழுது முழுதை" யும் விடைபெறு படலத்தில் செலவிட வேண்டியதாயிற்று. இதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவது சுலபமாகத் தோன்றவில்லை. ஏனென்ருல் நண்பர்கள் வெவ்வேறு இடங்களில் வசித்துவந்தார்கள். வாடகைக் காரொன்றை அமர்த்திக்கொண்டாலும் விலாசத்தைக் கண்டுபிடிக்க வழிவழியே தங்கி நிற்க வேண்டியிருக்கும். நண்பர்கள் எல்லோருக்கும் பிரியாவிடை சொல்ல முழு நாளுங்" கூடப் போதாமற்போய்விடும். இந் த க் கட்டத்திலே டாக்டர் எஸ். கனகரத்தினம் ஆபத்பாந்தவனுகக் கை" கொடுத்து என்னைக் காப்பாற்றினுர், நானுகக் கேளா மலே தானுகக் குறிப்பறிந்து உதவ முன்வந்தார். அவ ருடைய இயல்பே அதுதான். கே. எல். லிலே மிகுந்த செல்வாக்குள்ள மனிதர் இவர். மருமகன், மருமகள் மார் உட்படப் பல உறவினர்கள் கே. எல்லில் உயர் பதவி களும் தொழில்களும் வகிக்கிருர்கள். எனது போக்கு வரத்துக்கு வாகனந் தந்துதவியதுடன் நில்லாது வழித்" துணையாகவும் வந்தார். காலைப்பொழுது முழுதும் அவ ரும் என்கூடவே வந்தமையால் பிரயாணம் அலுப்புச் சலிப்பில்லாமல் நிறைவேறியது. பி ஞ ங் கு நகருக்குக் கூடக் காரில் வருமாறு கேட்டார். ஈபோ வழியாக கோலா கன்ஸார் சென்று அங்குள்ள எழில் சிந்தும் உபூதியா பள்ளிவாசலைத் தரிசித்துக்கொண்டு, தைபிங்" சென்று, புராதனப் படைக்கலங்கள் வைத்துப் பேணப் படும் தொல்பொருட்சாலையைப் பார்த்துவிட்டு, பிஞங்கு போகலாமென்ருர். இப்போது நினைத்துப் பார்க்கையில்
39

Page 77
அவருடைய அழைப்பை ஏற்றிருக்கலாமென்று தோன்று கிறது.
அன்று காலை நான் கண்டவற்றையுங் கேட்டவற்றை யுங் கொண்டு ஒர் உண்மையைக்கிரகித்துக்கொண்டேன். வளர்ச்சியடைந்துவரும் மலேசிய நாட்டின் தலைப்பட்ட ணத்தில் சிறுபான்மையினரில் சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் தமது மரபைப் பேணவும் கலாசாரத் தைப் பாதுகாப்பதற்கும் விசேஷ பிரயத்தனங்கள் அவசியம்; இந்தப் பிரயத்தனங்களை அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகிருர்கள். அரசியல் துறையில் கலாச் சாரத் துறையில் வேறுபட்டுமுள்ளவர்களான பல்வேறு பண்பாட்டுப் பாரம்பரியங்களைக் கொண்ட மக்கள் வாழும் ஒரு நாட்டின் பல பாகங்களிலும் சிதறுண்டு பரவலாகச் சீவிக்கும் சிறுபான்மையினத்தவர்கள் தங்கள் தனித்து பவத்தைக் கட்டிக்காப்பதில் கண்ணுங் கருத்துமாயிருத்தல் அவசியம். இது உலக நிய தி; சரித்திரங் காட்டும் உண்மை. மலேசியாவில் உயர்ந்த அந்தஸ்திலுள்ள வாலிபர்கள் இலங்கையில் பெண்கொண்ட சந்தர்ப்பங்கள் பற்றி இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதென்று நினைக் கிறேன். இந்தப் பெண்கள் பெரும்பாலும் மலேசியாவுக்கு மட்டுமல்ல தத்தம் கிராமத்துக்கு வெளியே கூடப்போய் அரியாதவர்கள். இதன் காரணமாக இவர்கள் செல்லு மிடமெல்லாம் தமது மரபையும் கொண்டு சென்று போற் றிப் பேணி வருகிருர்கள் எனலாம். எனினும் நவீன நாகரிகத்தின் விளைபொருள்களான திரைப்படங்கள், மலி வுப் பிரசுரங்கள், இத்தியாதிகள் வாயிலாக மேற்குலகக் கலாசாரத்தின் பொல்லாத அம்சங்கள் சில புகுந்து, கலா சாரத் துறையில் கலகம் விளைவிக்கின்றனவென்பதையும் மறந்துவிடலாகாது. ஆசிய நாடுகளில் கலாச்சாரத் தனித்துவத்தைப் பேணுவது ஓரளவு சிக்கலான காரிய
140

மென்பதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும். ஏனென்" ருல் ஐரோப்பாவில் போலவன்றி ஆசிய நாடுகளில் இந்து மதம், பெளத்தம், கிறிஸ்து மதம், இஸ்லாம் ஆகிய நாற் பெரும் சமயங்களும் நன்கு வேரூன்றி நான்கு வகையான கலாசார பாரம்பரியத்தையும் நாகரிகத்தையும் தோற்று வித்துள்ளன. ஆணுல் பெரும்பாலான ஐரோப்பிய நாடு களில் ஒரே கலாசார பாரம்பரியமே, கிறிஸ்தவபண்பாடே நிலவுகிறது; முற்காலத்தில் கத்தோலிக்கர்களுக்கும் பிற கிறிஸ்தவர்களுக்கும் நடைபெற்ற சமயச் சண்டைகள் இப்பொழுது கனவாய்ப், பழங்கதையாய் மாறிவிட்டன.
டாக்டர் கனகரத்தினம் அவர்களை முதன்முதலாக நான் அறிந்தது செளக்கிய அமைச்சர் கெளரவ டபிள்யூ. எ. டி. சில்வா அவர்களின் காரியதரிசியாகப் பணியாற்றி வந்த சமயத்திலாகும் (1988-41). அந்தக் காலகட்டத் திலேதான் சுதேச வைத்தியத் துறையை விருத்தி செய் வதில் அமைச்சு தீவிரமாக ஈடுபட்டது. இம்முயற்சியின் விளைவாகவே 1941ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சுதேச வைத்தியப் பிரமாணம் உருவாயிற்று. டாக்டர் கனகரத் தினம் அவர்கள், யாழ்ப்பாணத்துப் பிற இளைஞர்களைப் போல அந்தக் காலத்தில் சிங்கப்பூர் சென்று படித்து முன்னேறிய டாக்டர் விஸ்வலிங்கம் அவர்களின் தம்பி turrptirshii.
மத்தியான வேளை பல்கலைக்கழக விடுதிக்குத் திரும்பி யபோது, அங்கு மறுநாள் நடை பெறவிருந்த வேருெரு மாநாட்டுக்கென்று பல பிரதிநிதிகள் வந்து கூடியிருந் தார்கள் தமிழ் மாநாட்டுக்கு வந்திருந்தவர்களில் என்னை யும் இன்னுெருவரையுந் தவிர மற்றவர்களெல்லோரும் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்; அல் லது சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்காக மலேசியாவின்
141

Page 78
வேறு பகுதிகளுக்கும் சிங்கப்பூருக்கும் பிரயாணமாகி யிருந்தார்கள். இந்தப் பிரதிநிதிகள் எல்லோரும் பஹாய் இனத்தவர்கள். சிலருடன் உரையாட எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 1952ஆம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள சிக்காகோ நகர த்திலிருந்து சில மைல் தூரத்துக்கப்பாலுள்ள வில்மட் என்னும் பட்டணத்தில் அமைந்துள்ள பஹாய் ஆலயத் தைச் சுற்றிப் பார்த்த விஷயத்தை நாசூக்காக அவர்களி டம் தம்பட்டமடித்துக்கொண்டேன்! அந்த ஆலயத்தை நான் கண்டதே தற்செயலாக நேர்ந்த நிகழ்ச்சியாகும். அந்தப் பட்டணத்திலுள்ள பாடசாலையின் அதிபருடன் நடந்துகொண்டிருக்கையில் முன்னுெருபோதும் கண்டி ராத விசித்திரமான கட்டடமொன்றினைக் கண்டேன் ஒன் பது பக்கங்களைக் கொண்ட-நவகோணம்-அந்தக் கட்ட டம் கொங்கிறீற்றினுலும் உருக்கினுலும் நிர்மாணிக்கப் பட்டு, ரேந்தைப் பின்னல் போன்ற சித்ர வேலைப்பாட்டு டன் காணப்பட்டது. அந்தச் சமயத்தில் கட்டட வேலை முற்றுப் பெரு திருந்தது. வில்மட்டிலுள்ள இந்த ஆலயம் அமெரிக்காவில் வாழும் பஹாய் இனத்தவர்களின் மத் திய ஸ்தானமாகும்.
மலாயாப் பல்கலைக்கழகத்தின் மூன்ருவது விடுதி இவ்வளவு துரிதமாக ஒரு நாட்டிலிருந்து மற்ருெரு மாநாட்டுக்குக் களமாக மாறுமென்று நான் எதிர்பார்க்க வில்லை. முந்திய நாளன்று பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்த பற்பல கொடிகளுக்குப் பதில், புதிய வண் ணச் செறிவுமிக்க கொடிகள் படபடத்துக் கொண்டி ருந்தன. வரவேற்புக் குழுவிலும் இவ்வாறே புது முகங்கள் பளிச்சிட்டன. விடுதிப் பரிபாலகர் மட்டும் என்றும்போல, ஒடியாடிக் கொண்டிருந்தார். குதிரை வண்டி யுகம், புகைவண்டி யுகம், மோட்டார்வண்டி யுகம்
142

வான்வண்டி யுகம் என்று பல யுகங்களைக் கண்ட மனித குலம் இன்று அவற்றையெல்லாம் மறந்து மாநாட்டு யுகத்தில் காலடி வைக்கிறது போலும்.
அன்று மாலை சரியாக 5 மணிக்கு விமானம் கே. எல்.லிலிருந்து கிளம்பி ஈபோ நோக்கிப் பறந்தது. என் அருகில் தென்னகத்து முஸ்லிம் ஒருவர் அமர்ந்திருந் தார். ஈபோ போய்க்கொண்டிருந்த அவர் சரளமாக இங்கிலிஸ் பேசினர்.பேச்சுத்துணை நன்ருக அமைந்தது. கீழே தாமரைத் தடாகங்கள் போன்று காட்சியளித்த இடங்களைச் சுட்டிக்காட்டி, அவையெல்லாம் கைவிடப் பட்ட தகரச் சுரங்கங்கள் என்று விளக்கினுர்,
ஈபோவில் விமானம் சில நிமிட நேரமே தரித்தது. பெராக் ராஜ்யத்தின் தலைப்பட்டணம் ஈபோ. இம்மாகா ணத்தின் கிண்டா பள்ளத்தாக்கிலேதான் உலகின் மிகக் கூடுதலான தகரப் படலங்கள் காணப்படுகின்றன. இதனுல் இம்மாகாணம் வெள்ளி ரரஜ்யம்' எனவும் குறிப்பிடப்படுகிறது. கிண்டா தகரச் சுரங்கத்தைப்பற்றி, எழுதுகையில் 1954ஆம் ஆண்டில் சாம்ராஜ்யப் பாராளு மன்றச் சங்கங்களின் மாநாட்டுக்கு இலங்கைப் பிரதிநிதி களில் ஒருவராகச் சென்ற சம்பவம் நினைவுக்கு வருகிறது. கிழக்கு ஆபிரிக்காவில் நடைபெற்ற இம் மாநாட்டுக்கு என்ஞேடு மலாய் நாட்டுப் பிரதிநிதிகளில் ஒருவரான ஹாஜி யூசூஃப் வங்களிமா கிண்டா அவர்களும் வந்திருந் தார்கள். வங்களிமா என்பது அவருடைய உத்தியோக அந்தஸ்தைக் குறிப்பதாக இருந்திருக்கலாம். அந்தச் சமயத்தில் கிண்டாவைப் பற்றி நான் விசேஷ அக்கறை கொள்ளவேயில்லை. 1954 ஆகஸ்ட் 31ஆந் திகதியன்று நானும் மற்றுஞ் சில பிரதிநிதிகளுமாக கராம்புத் தீவென அழைக்கப்படும் ஸான்ஸிபாரில் உள்ள கராம்புத் தோப்
143。

Page 79
பொன்றினுக்கு விஜயம் செய்தோம். அத்தீவில் தென்ன மரங்கள் ஏராளமாகக் காணப்பட்டன. அங்குள்ளோர் தென்னுேலைகளே உபயோகித்த விதத்திலிருந்து கிடுகு பின்னும் பழக்கம். ஒன்றில் அறியாத கலையாக அன்றேல் வெகுஜன வழக்கிலில்லாத ஒன்ருக இருக்க வேண்டு மென்பது புலனுயிற்று. மலேசியாவிலும் நிலைமை இவ் வாறே. அங்கு நான் முன்னர் குறிப்பிட்டதுபோல, கூரைகளுக்கு ' அத்தாப்' என்னும் ஒருவகை ஓலேயைப் பயன்படுத்துகிருர்கள். இதனைக் கவனிக்கும்போது கிடுகு பின்னும் பழக்கம் தென் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டுமே உரியதோவென்று எண்னத் தோன்றுகிறது. அத்தாப்பைப் பற்றி இந்த மலேசியப் பிரயாணத்துக்கு முன் நான் கேள்விப்படவேயில்லை. அத்தாப் பெரும் பாலும் நீபா மரத்திலிருந்தே பெறப்படுகிறது. சில சம யங்களில் றும்பியா மரத்திலிருந்தும் பெறப்படும். இந்த மரங்கள் அல்லது இவற்றுக்கு இணையான மரங்கள் நம் நாட்டில் உண்டோ நானறியேன். இத்தகைய மரம் இலங்கையில் உண்டென்றும் சிங்களத்தில் அதனை கின் "பொல என்றழைக்கிருர்கள் என்றும் என் நண்பர்களில் ஒருவர் அபிப்பிராயப்படுகிருர், இது சரியோ பிழையோ நானறியேன். இந்த மரத்தைப் பற்றி இதற்குமேல் எழுதப் புகுந்தால் செம்பனையைப் பற்றி நான் எழுதி யவை வியர்த்தமாகி விடக்கூடும். (செம்பனை பற்றி விளக் கம் கேட்டுக் கடந்த சில நாட்களில் எனக்குக் கிடைத் துள்ள கடிதங்களைப் பார்த்தால் அது விஷயத்தில் நான் ஒரு நிபுணன் என்ற அபிப்பிராயம் பலருக்கும் ஏற்பட் டிருக்கிறது போலத் தோன்றுகிறது.) அது மட்டுமல் லாமல் நீபா அல்லது றும்பியா மரம் தாழையைப் போல இருக்குமா? கற்ருளேபோல இருக்குமா? பனை அல்லது செம்பனே போன்றதா? என்ற கேள்விகளுக்குப் பதில் எழுதிக் கொண்டிருக்கவும் நான் தகுதியுடையவனல்லன்
144

■實體
■調轟
■
3* Tsustaess, „frysis of it?), fu upň∂√∞niä, 5, 1ņLú.

Page 80
ஒரு கோடி வெள்ளியில் கட்டப்பட்டதும் உலகத்து அதிசய மஸ்ஜிதுகளுள்
---- |-|-----Œ----|-if( !|---!!!!s-a .『』|-- ----|-|-m:„†-• 5守F,덕,5 *.**/15T&T tg城TRtovú. Lyfs),saei i「』き」! !**sustosu-l porwags);நெதாரT.
----- 『
 

விமானம் பிஞங்கை நெருங்கிக்கொண்டிருக்கையில் பினுங்கு பற்றி என் மனதில் பதிந்துள்ள செய்திகள் காற்றில் கலைந்த முகிற்கூட்டம்போல மனப்பரப்பில் சிதறிப் பரவலாயின. கெடாவின் சுல்தானுடைய ஆட்சி யின் கீழிருந்த இந்தத் தீவை 186ஆம் ஆண்டில் ןlft டிஷ்காரர் வெகு சாமர்த்தியமாகச் சுவீகரித்துக் கொண் டார்கள். இதன் பிறகு இந்தத் தீவுக்கு வேல்ஸ் இள வரசர் தீவு (Prince of Wales Island) என்ற பெயர் சூட்டப்படலாயிற்று. பினுங்கின் மறுபெயராக இன்று விளங்கும் ஜோர்ஜ் டவுனே மேற்படி வேல்ஸ் இளவரசர் தீவு என்பதிலிருந்து தோன்றியதா யிருக்கலாம். இந்தச் சுவீகாரத்தைப் பற்றி கே. எ. ட்ரெகொனிங் என்பார் தாம் எழுதிய "தற்கால மலாயாவின் வரலாறு" என்னும் நூலில் குறிப்பிடுகையில், 1788 ஆம் ஆண்டில் பினுங்கு நகரம் ஸ்தாபிதமான மையுடன் தற்கால மலாயாவின் வரலாறு ஆரம்பமாகிறதெனக் கொள்ளலாமெனினும் அதுவே தென் கிழக்கு ஆசியாவில் பிரிட்டிஷ்காரர் நடத் திய வாணிபக் கள சித் தேடலுக்கு முத்தாய்ப்பாகவும் அமைந்ததென்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார். பினுங் குத் துறைமுகம் ஒரு போதுமே கப்பற்படைத் தளமாக உபயோகிக்கப்படவில்லை. ஆரம்ப காலமுதல் சுங்கவரி அறியாத, அடையா நெடுங் கதவுடைய வாணிபக் ് ബി யாக விளங்கி வந்துள்ளது.
இவை யெல்லாவற்றையும் விட முக்கியமான சில விஷயங்களே, மலேசிய மாநாட்டுக்கென நான் எழுதிய கட்டுரை சம்பந்தமான ஆராய்ச்சிகளின்போது அறிநது கொண்டேன். இலங்கையை ஆண்ட முதல்டாவது LisflL டிஷ் தேசாதிபதியாகிய நோர்த் என் பார் 1799ஆம் ஆண் டிலும் அதன் பின்னரும் பினுங்கிலிருந்து மலாய் பக9ட வீரர்களே வரவழைத்து பிரிட்டிஷ் சேனக்குட்பட்ட
O 14

Page 81
லோய் அணியினைப் பலப்படுத்த வேண்டுமென்று சிபார்சு செய்திருக்கிருர். இந்த மலாயா களைச் செங்கடல் பகுதியி லுள்ள பிரிட்டிஷ் சேனைக்கும் பயன்படுத்தலா மென்று கூட அவர் யோசனை தெரிவித்திருக்கிருர். இத்தகைய வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்றே தனது பிரதிநிதி ஒருவரைப் பினுங்கில் நியமிக்கச் செய்துமிருக்கிருர். 1805ஆம் ஆண்டில் இவ்விதம் தேர்ந்தெடுக்கப்பட்ட 84 மலாய் வீரர்கள் நாகபட்டினம் வழியாக இலங்கை வந் தார்கள் என்பதற்குச் சான்று உண்டு பிரிட்டிஷாரின் வருகைக்குப் பின்னர் யாவகர் என்னுஞ் சொல் வழக் கொழிந்து போக, அதனிடத்தில் மலாயர் (Malay) என் னுஞ் சொல் ' புழக்கத்திற்கு வந்தமைக்கு இச் சம்ப வங்கள் காரணமாயிருக்கலாம். 1819ஆம் ஆண்டில் கெடா ராஜ்யத்தின் சுல்தான் 40 மலாயர்களை இலங் கைக்கு அனுப்பி உதவியமைக்கும் சான்றுண்டு.
இவை யாவற்றையும்விட என்னைப் பெரிதும் கவர்ந்த விஷயம் பிஞங்கில் வெளியான “வித்தியா விசா ரிணி" என்னும் பத்திரிகைக்கும் அதே காலத்தில் இலங்கையில் சித்திலெவ்வை அவர்கள் வெளியிட்டு வந்த 'முஸ்லிம் நேசனு"க்குமுள்ள உறவாகும். வித்தியா விசாரிணியை நடத்தியவர் குலாம் காதிறு நாவலர் அவர்களாவர். 'முஸ்லிம் நேசனி"ல் வெளி யான பல அம்சங்கள் ' வித்தியா விசாரிணி"யிலும் வெளியாயின. உதாரணமாக இரண்டு பத்திரிகைகளுமே உலகச் செய்திகள், மார்க்க விஞ விடைகள், இலக்கண, இலக்கிய சர்ச்சைகள் ஆகியவற்றை வெளியிட்டு வந்தன. இதே நாகூர் தர்கா வித்துவான் குலாம் காதிறு நாவலர் அவர்களே 1896ஆம் ஆண்டளவில் யாழ்ப் பாணம் சு. மு. அசணு லெப்பை ஆலிம் புலவர் அவர் களது அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்துக்கு விஜயஞ்
146

செய்து, வண்ணுர் பண்ணையில் வைத்து தமது "ஆரிபு நாயகம்" என்னும் நூலினை அரங்கேற்றியவராவர்.
1883ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆந் திகதி வெளியான 'முஸ்லிம் நேசன்" இதழில் பின்வரும் செய்தி காணப்படுகிறது.
"...இந்த நாமந் தரித்த பிஞங்கில் வா. குலாம் காதிறு நாவலரவர்களாற் பிரசுரஞ் செய்யப்பட்ட பத்தி ரிகை நமக்குக் கிடைத்து மிக மகிழ்ச்சியடைந்தோம். இலங்கை, இந்தியா, பிஞங்கு முதலிய தேசங்களிலுள்ள முஸ்லிம்கள் இப் பத்திரிகைக்குக் கையொப்பக்காரர்க *ளாகி அது நெடுங்காலம் நடைபெறச் செய்யும்படி வேண்டுகிருேம்."
இது தமிழ் பொதுமொழியாக விளங்கியமையின் காரணமாக கொழும்பு, பிஞங்கு சென்னை, காரைக்கால் ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக் கிடையில் நிலவிய கலாசார உறவின் தனிமையை எடுத் துக் காட்டுவதாக விளங்குகிறது. இவ்விரு பத்திரிகை களிலும் நடைபெற்ற சர்ச்சைகள் இன்றுள்ள நமக்கு இலக்கியச் சுவையும் வரலாற்று முக்கியத்துவமு முடை யனவாகும். இவற்றின் தொனியும் சாரமும் நமது சந்ததி யினருக்கு நேரடித் தொடர்பற்றனவாக இருக்கலாம்; ஆயினும் அவற்றின் சுவை தனியானதென்பதில் ஐய மில்லை. அதிர்ஷ்டவசமாக, இந்த “வித்தியா விசாரிணி" யில் தொடங்கப்பெற்ற சர்ச்சைகளிற் சில * முஸ்லிம் நேசனி"ல், மறுபிரசுரஞ் செய்யப்பட்டுள்ளன. 1883 ஜூலை 16இல் வெளியான "முஸ்லிம் நேசனி"ல் * வித்தியா விசாரிணி"யில் வெளியான பகிரங்கக் கடித மொன்று மறு பிரசுரஞ் செய்யப்பட்டிருக்கிறது :
147

Page 82
* பெண்களுக்கு நாணமாவது ஒராபரணமாயிருக்கு மென்றனை நேசா. பெண்கட்கு நாணமான தியற்கையா புள்ள குணமா? தட்டானுற் செய்த ஆபரணமா? விளங்கச் சொல் பார்ப்போம். வித்தியா விசாரிணியென் னும் பெண்ணே நாணமாகிய ஆபரணத்தைத் தரித்துக் கொள்ளென்றன. நேசா, அந்நாண முனக்கு வேண்டற் பாலதோ ? அணியன் ருே நாணுடைமை சான்ருேர்க்கு. என்ற குறளைப் பார்.யான் ஆணுே, பெண்ணுே, அலியோ என்பதுதானும் எனக்குத் தெரியாதிருப்பது உனக்கும் விளங்கிற்ரு நேசா ? எப்படி விளங்கிற்று ? சற்றே சொல்வாயா?”
நகைச்சுவை ததும்பும் இந்தப் பகிரங்கக் கடிதத் துக்கு அடுத்த இதழ் "முஸ்லிம் நேசனி"ல் பதில் வெளி யிடப்பட்டிருக்கிறது. இ ன் றை ய பின் ன னரி யில் இவற்றை வாசிக்கும்போது அந்நாட்களில் இலக்கணம், இலக்கிய நயம் ஆகியவற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக் கப் பட்டதென்பதையும் இக் காலத்தில் இம் மரபு மறைந்து வருதலையுங் காணக்கூடியதாயிருக்கிறது.
விமானத்தில் அதிக பிரயாணிகளில்லை. பேச்சுத் துணைக்கு என் அருகில் எவருமில்லை. எனவே விமானத் தைப் பார்க்கிலும் அதிக சுதந்திரமாக என் நினைவுக் குதிரை இலங்கைச் சித்தி லெவ்வைக்கும் பிஞங்குக் குலாம் நாவலருக்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் மலாயா வுக்குமாகத் தாவிப் பறந்துகொண்டிருக்க பிஞங்கு நெருங்கிற்று. இந்த விஷயங்களையெல்லாம் பிஞங்கில் விஷயந் தெரிந்த எவருடனுவது பேசித் தீர்க்கவேண்டு மென்ற ஆவலுடன் விமானத்திலிருந்து இறங்கினேன். நான் அடைந்த ஏமாற்றமிருக்கிறதே, அது வேறு கதை.
148

17. எதிர்பாராத வரவேற்பு
மலேசிய விமானச் சேவை ஸ்தாபனத்தின் விமானம் குறித்த நேரத்தில் பிஞங்கு போய்ச் சேர்ந்தது. இந்தப் பயணம் உள்ளூர்ச் சேவையானமையால் பாஸ் போர்ட், செளக்கியச் சான்று பத்திரம், சுங்கப் பரிசோ தனைகள் ஆகிய சம்பிரதாயங்கள் எவையும் இருக்க வில்லை. பிரயாணிகளின் பொருளோ பொறுமையோ சோதனைக்குள்ளாகவில்லை. விமானத்துறையில் என் கண்கள் ஜனுப் சையத் அலியார் அவர்களைத் தேடின. ஜனுப் அலியார் அவர்கள் கோலாலம்பூர் மாநாடு நடை பெற்றுக் கொண்டிருக்கையிலேயே பிஞங்கு வரும்படி தமது சார்பாகவும், தமது மைத்துனரும் தாவூத் ரெஸ் டோரன்ட் நிர்வாகப் பங்காளருமாகிய ஜனுப் எம். என். முகம்மது யூசுபு அவர்கள் சார்பாகவும் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். மாநாடு முடிந்த பிறகும் கட்டாயம் பினுங்குக்கு வரவேண்டுமென்று தொலைபேசி மூலம் அழைத்தார். பின்னர் கடிதமும் அனுப்பிக் கட்டாயப் படுத்தினுர்,
விமானத்துறையில் நான் எதிர்பாராத சம்பவ மொன்று நடைபெற்றது. அலியார் அவர்கள் வந்திருந் தார்கள். தாம் மட்டும் வராமல் நான்கைந்து நண்பர் களையும் யூசுபு அவர்கள் சார்பாக அவரது பத்து வயதுச் சிறுவனையும் கூட்டி வந்திருந்தார். வந்தவர்களில் மூவர் கையில் பூமாலைகள். அவை என் கழுத்தையே சுற்றி வளைக்கக் காத்திருந்தன என்பதில் எனக்குச் சந்தேகமே அயிருக்கவில்லை.
1.49

Page 83
இந்த வரவேற்பு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவமொன்றை எனக்கு நினைவூட் டியது. நைரோபியில் சாம்ராஜ்யப் பாராளுமன்றச் சங்கங் களின் மாநாடு முடிவடைந்த பின்னர், மாநாட்டுப் பிரதி நிதிகள் எல்லோரும் நான்கு கோஷ்டிகளாகப் பிரிந்து, கிழக்கு ஆபிரிக்காவின் பல்வேறு பாகங்களையும் சுற்றிப் பார்க்க ஏற்பாடாகியிருந்தது. இந்தச் சுற்றுப் பிரயாணம் முற்றுப்பெற்றதும் எல்லோரும் ரொடீஷியாவிலுள்ள விக்டோரியா ஃபோள்ஸ் ஹோட்டலில் சந்திப்பதென்று முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடுகளுக்குப் பொறுப்பாயிருந்தவர் இன்றைய ஆஸ்திரேலியப் பிரதம ராக விளங்கும் ஹரல்ட்ஹோல்ற் அவர்களாவர். என் னுடைய கோஷ்டியில் நான் ஒருவனே இலங்கையன். 1954 ஆகஸ்ட் 29 அன்று எமது கோஷ்டி தங்கனிக் காவின் நலைநகராகிய தார் அஸ்ஸலாமுக்கு விமானத்திற் பிரயாணஞ் செய்து கொண் டி ருந்தது. விமானம் துறையை அணுகிய சமயம், என் பக்கத்திங் அமர்ந் திருந்த சக பிரதிநிதி விமானத் திடலில் சுமார் இருபத் தைந்து பேர் கொண்ட சிறு கூட்டமொன்று வண்ண வண்ண மாலைகள் சகிதம் நிற்பதைச் சுட்டிக் காட்டி, என்னை வரவேற்கவே அவர்கள் காத்து நிற்கிருர்கள் என்ருர்,
தமது நாட்டில் பந்தயத்தில் முந்தும் குதிரைகளுக்கு மாலை போடும் வழக்க முண்டென்றும் பகடியாகச் சொன்னுர். நான் அவருடைய பகடியைப் பாரதூரமாகக் கருதவில்லை. ஏனென் ருல் அந்தப் பட்டணத்தில் என்னை அறித்தவர்கள் எவரும் இருக்கவில்லை. ஆணுல், விமா னத்திலிருந்து இறங்கியதும் பகடி வெற்றியானதைக் கண்டேன். மாலையும் கையுமாக நின்றிவர்கள் இலங் கைப் பிரதிநிதி யாரென்று தேடிக்கொண்டு என்னிடம்
盘50

வந்து மாலைகளைச் சூட்டிஞர்கள். மற்றைய இலங்கைப் பிரதிநிதிகள் எமது கோஷ்டிக்குப் பின்னரே, மொம்பா ஸாவிலிருந்து தார் அஸ்ஸலாம் வரவிருந்தார்கள்; எமது கோஷ்டியோ அவர்களுக்கு முன்னர் தார் அஸ்ஸலாம் சென்று அங்கிருந்து ஸான்ஸிபார் வழியாக மொம்பாஸா போகவிருந்தது. இந்த ஏற்பாட்டின் காரணமாக, அங் குள்ள இலங்கையர்கள் வெகு காலத்தின் பின்னர் கண்ட தாய்நாட்டவன் என்ற கெளரவமும், அதனை யொட்டிய உபசாரமும் எனக்கே கிடைக்கலாயிற்று. இவர்களெல்லோரும் தங்கனிக்காவில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள். சிலர், இரத்தினக் கற்கள் பதித்த ஆபரணங்கள் தயாரிப்பதற்கும் மற்றும் கருங்காலி மரத் தால் ஆபிரிக்க ஆண், பெண்களைச் சித்திரிக்கும் சிறு உருவச்சிலைகள் செதுக்கும் பணிக்குமாக இலங்கையி லிருந்து பொற்கொல்லர்களையும் பிற கைப்பணியாளர் களையும் வேலைக்கு அழைத்து வைத்திருந்தார்கள். தென் இலங்கையிலிருந்து தங்கனிக்கா சென்று குடியேறி வாழும் இந்த வர்த்தகர்களிற் சிலர் அன்று தமது மனைவி மக்களையும் விமானத்துறைக்கு அழைத்து வந்திருந் தார்கள். அக்கரைச் சீமையில் எதிர்பாராத வகையில் என் நாட்டவர்கள் எனக்களித்த இந்த வரவேற்பு புள காங்கிதமும் மகிழ்ச்சியுமளித்தது. அன்றைய தினம் எடுக்கப்பெற்ற புகைப் படத்தை இன்றும் பொன்போலப் பேணிக் காத்து வருகிறேன்.
பினுங்கு விமானத்துறையில் சையத் அலியார் குழு வினர் மாலை சூட்டி என்னை வரவேற்றபோது தார் அஸ் ஸலாம் விமானத்துறையில் உண்டான அதே உள்ளச் சிலிர்ப்பு எனக்கு உண்டாயிற்று. முந்திய எதிர்பாராத வரவேற்புக்குக் காரணமா யமைந்தது ‘நம் நாட்டவன்" என்ற உணர்வு; பிந்திய, பிஞங்கு உபசாரத்துக்கு
151

Page 84
மொழி ஏதுவாயிற்று. பினுங்கு விமானத்துறைக்கு வந் திருந்தவர்களில் ஒருவர்தானும் இலங்கையரல்லர். எல் லோரும் தென் இந்தியர்கள். இவர்களிற் சிலர் இந் துக்கள், சிலர் முஸ்லிம்கள். ஆயினும் தமிழ் மொழியால் நாமனைவரும் கட்டுண்டிருந்தோம். விஞ்ஞானிகள் எதிர் பார்ப்பதைப்போல, எதிர்காலத்தில் மனிதன் கிரக சஞ் சாரஞ் செய்யத் தலைப்படுவானுகில், நாடு, நிறம், இனம், மொழி ஆகிய பேதங்களையெல்லாம் மறந்து, பூலோக வம்சாவளியினன் என்னும் ஒரே காரணத்திற்காகச் சந்திர மண்டலத்திலோ செவ்வாய் மண்டலத்திலோ குடியேறி வாழும் மனிதர்கள் அவனுக்கு உபசாரஞ் செய்யக்கூடும் !
சர் றிச் சார்ட் லிவிங்ஸ்டன் என்பார், "மனிதன் நால் வகைப் பந்த பாசங்களினுல் கட்டுப்பட்டு வாழவேண்டிய வனுய் இருக்கிருன். இந் நான்கையும் நான்கு படிகளாக நோக்கலாம். தன் பிறந்த குடும்பத்தின் அங்கத்தின ணுகவும் தனது சமுதாயத்தின் உறுப்பினனுகவும் தனது நாட்டின் நற் பிரஜையாகவும் மனித குலத்தின் ஓர் அங்க மாகவும் வாழவேண்டியது அவனது கடமையாகும். உலகின் பிரச்சினைகளை ஆராய்ந்தோமானுல் அவற்றின் அடிப்படைக் காரணம், மேற்குறித்த நான்கு பந்த பாசங் களையும் சரிவர நெறிப்படுத்தத் தவறியமையே என்பது புலனு கும்," என்று குறிப்பிட்டுள்ளார். இந் நான்கு பற்றுக்களும் ஒன்றுடனுெ ன்று முரண்பட்டால் என்ன நடக்கும் ? இதற்கு அரசியற் சித்தாந்தத்திற் துறை போந்த ஒருவரே தக்க பதில் சொல்ல முடியும். ஆணுல், நடைமுறையில் யாராவது இத்தகைய அரசியற் பண்டி தர்களைக் கலந்தா லோ சி க் கி ருர் க ளா ? இல்லையே. தமக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதன்படி அவர்கள் காரியமாற்றுகிருர்கள். எனினும் பொதுவாகப்
152

பார்க்குமிடத்து இத்தகைய முரண்பாடுகள் தர்க்க ரீதி யாகச் சாத்தியமேயானுலும் நடைமுறையில் அடிக்கடி நிகழ்வதில்லை. நிகழுமானுல் உலகமே இரத்தக் களரி யாக மாறிவிடும். இப்படி முரண்பாடுகள் தோன்றினுலும் அவற்றுக்குச் சமரச பரிகாரங்கள் இல்லாமலில்லை
வரவேற்பு உபசாரம் முடிந்து, சற்று நேரம் உரை யாடிய பின்னர், வள்ளல் வள்ளுவமணி ரெங்கசாமிபிள்ளை அவர்களின் சொகுசுக் காரில் ரெஸ்டோரண்டுக்குப் புறப் பட்டோம். ரேணு" அவர்கள் என்று பலராலும் வாஞ்சை யுடன் அழைக்கப்படும் ரெங்கசாமி பிள்ளை அவர்களும், ஜனுப் அலியார் அவர்களுடன் விமானத்துறைக்கு வந்தி ருந்தார். ரெஸ்டோரன்டில் ஜனுப் எம். என். முகம்மது யூசுபு அவர்கள் முகம் மலர்ந்து என்னை வரவேற்ருர், இவருடைய மைத்துனர் சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்து பத்து நாட்கள் தங்கியிருந்தபோது எனக்குப் பழக்கமானுர், ஆணுல் இவர் எனக்குப் பழக்க மில்லை. எனினும் எனது "இலங்கையில் இஸ்லாம்" என்னும் நூலின் மூலமாக நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகியிருந்தோம். இவர்-ஜணுப் யூசுபு அவர்கள் -அறபுத் தமிழ் இலக்கியத்திலும் அறபுத் தமிழ் எழுத் தாளர் மீதும் மிகுந்த ஈடுபாடுள்ளவரென்பதையும் எழுத் தாளர்களின் உபகாரி என்பதையும் பின்னர் அறிந்து கொண்டேன். விமானத்துறையிலிருந்து கூட வந்த வர்கள் சற்று நேரத்தில் விடை பெற்றுச் சென்ருர்கள்.
153

Page 85
aggol M. N. முஹம்மது யூசுபு அவர்கள்
 
 

18. கடாரமும் கலாசாரமும்
பூசுபு அவர்கள் என்ன அழைத்துச் சென்று தமது
அறைக்குப் பக்கத்தில் எனக்காக ஒதுக்குவித்திருந்த அறையைக் காண்பித்தார். காற்றுச் சீராக்கும் கருவி பொருத்தப்பெற்ற அந்த அறையில் அமர்ந்து நாம் இரு வரும் சம்பாஷிக்கலானுேம் சற்று நேரத்துள் இருவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல, வாஞ்சையுடன் பழகலாகுேம். பருகுவதற்குத் தேநீரா குளிர்ந்த பார்ளி பானமா வேண்டுமென்று கேட்டார். தேநீர்க் குடியனுன நான் புதுமையைக் கருதி பார்ளி குடிக்க இணங்கினேன். நியாயமான பெரிய கூசா நிரம்ப பார்ளி வந்தது. அதன் சுவையை எப்படி வர்ணிப்பேன் ? பாலில் காய்ச்சிப் பனிக்கட்டி ஊட்டப்பெற்ற இந்தப் பானத்துக்கு விசேஷ வாசனைப் பொருள் ஏதோ சேர்க்கப்பட்டிருந்தது. அசா தாரண இதமுள்ள இந்தப் பானத்தின் பாக முறையைக் கேட்டறிந்து வந்திருந்தால் பாக சாஸ்திரத்தில் எனக் குள்ள திறமையை என் மனைவிக்குக் காட்ட வாய்ப்புக் கிடைத்திருக்கும். பினுங்கில் தங்கியிருந்தபோது ஒரு முறை இது பற்றி யோசனை வந்ததுதான். ஆளுல் இரண்டு வில்லங்கங்களை முன்னிட்டுப் பேசாமலிருந்து விட்டேன். தாவூத் ரெஸ்டோரன்டின் பிரத்தியேக பான மெனப்பினுங்கு முழுவதிலும் இது பிரசித்தி பெற்றுள்ள மையால், வியாபார இரகசியமாக உள்ள ஒரு விஷயத் தைப் பற்றி விசாரிப்பது முறையா என்பது ஒரு வில் ஸங்கம். அமெரிக்காவில் இத்தகைய விஷயங்களெல்
55

Page 86
லாம் குடும்ப இரகசியமாகப் பேணிக் காக்கப்படுகின்றன வாம். நம் நாட்டில் கூட சில வைத்தியர்கள் வாகட முறைகள் சிலவற்றைப் பிறரறியாவண்ணம் பரம்பரை பரம்பரையாகப் பாதுகாத்து வருவதை நான் அறிவேன். ஆகவே, மேற்படி பார்ளி பானம் தயாரிக்கும் முறை பற்றி விசாரிப்பது சரியல்லவென்று கருதினேன். ஆணுல் நண்பர் யூசுபு என்னை நம்பி அந்த இரகசியத்தை வெளி யிடத் தயாராயிருந்திருக்கலாம்; நானும் என் மனைவியை நம்பி அதைக் கேட்டு வைத்திருக்கலாம். ஆணுல், முழு விவரத்தையும் ஒன்று விடாமல் நினைவு வைத்து பதம் பிசகாமல் மனைவிக்குத் தயாரித்துக் காண்பிக்க என்னுல் முடியாது என்பது மற்ருெரு வில்லங்கம். எந்த உணவோ பலகாரமோ நன்ருகச் சமைத்திருந்தால் அதனை அனுபவித்துப் புசிப்பதில் நான் மகா சூரன்; ஆணுல் பொருள்களைத் தந்து இன்னின்ன மாதிரிச் சமையல் செய்யவேண்டுமென்ருல் திணறிப்போய் விடுவேன். இனிமேல் எப்போதாவது மனைவியும் நானும் பினுங்குப் பக்கம் போகக் கிடைத்தால் கட்டாயம் இந்தப் பானம் தயாரிக்கும் முறை யை அறிந்துகொள்ள வேண்டும். அவ்வளவு தூரம் இந்தப் பானம் என்னைக் கவர்ந்திருக்கிறது.
அன்று மாலை நானும் நண்பர் யூசுபுமாக காரில் பினுங்கு நகரின் பல பகுதிகளையும் சுற்றிப் பார்த்தோம். கடை களில் கொடிகள் போன்ற ஒடுக்கமான துணி மணிகள் தொங்கின. விசாரித்ததில் இவையே சீனர்கள் பெயர்ப் பலகைகளுக்குப் பதிலாக உபயோகிப்பவை என்று அறிந்தேன். சீனர் அல்லாதவர்களின் கடைகள் சிலவற்றிலும் இத்தகைய விளம்பரக் கொடிகள் உபயோ கிக்கப்படுகின்றன என்று நம்புகிறேன். கண்கவர் வண்
-ணங்கள் கொண்டு அழகிய முறையில் தயாரிக்கப்பெற்ற
156

இக்கொடிகள் பெயர்ப் பலகைகளைப் போல நேர்மட்ட மாக இல்லாமல் செங்குத்தாகக் கட்டப்பெற் றிருந்தமை யால் தனித் தன்மையுடையனவாகக் காட்சியளித்தன. சீன எழுத்துக்கள் பொறித்த இக் கொடிகளைக்கொண்டு வியாபாரத்துறையில் சீனர்கள் மிகுந்த ஆதிக்கம் வகிக் கிருர்களென்பதைக் காண முடிந்தது.
இதன் பின்னர் நீர்த் தேக்கத்தைத் தாண்டிச் சென்ற வழியில் இந்துக் கோயில், சீன ஆலயம், பித் வீதிப் பள்ளி வாசல் ஆகியவற்றைக் கண்டோம். பள்ளி வாசலைப் பார்த்தபோது கொழும்பு, புறக்கோட்டையி லுள்ள சம்மாங்கோட்டுப் பள்ளிவாசலின் நினைவு. வந்தது. இந்த வணக்க ஸ்தலங்கள் பிஞங்கில் பல்வேறு இனத்தவர்களும் மதத்தவர்களும் வாழ்கிருர்கள் என் பதை நினைவுறுத்தின. நந்தவனம், உல்லாசப் பிரயாணி களைக் கவரும் பிற அம்சங்கள் முதலியவற்றையெல்லாம். தாண்டினுேம், ஆஞல் இருட்டும் நேரமாகி விட்டமை யால் இவற்றையெல்லாம் சாவகாசமாகப் பார்த்து அனுபr விக்க முடியவில்லை. பிரயாணக் களைப்பும் தூக்கமும் ஒரு பக்கம். துறைமுகத்தையும் அங்கு நின்ற கப்பல்களையும் பார்த்தபோது, கொழும்புத் துறைமுகம் நினைவில் பளிச் சிட்டது. ஆணுல், ஒரு வித்தியாசம். பிஞங்கு துறை முகத்தில் அதி நவீன இயந்திரப் பாதையொன்றுண்டு. பிஞங்கையும் வெல்ஸிலி மாகாணத்தையும் இணைப்பது இந்தப் பாதையே. இந்திய மகா தேசாதிபதிகளில் ஒரு வரின் ஞாபகார்த்தமாக அவர் பெயரைப் பெற்றுள்ள வெல்ஸிலி மாகாணம், பிஞங்கு ஆட்சி, பிரித்தானியர் வசம் சிக்கி லண்டன் வெள்ளை மாளிகைக்கு மாறு முன்னர், சில வருட காலம், இந்திய அரசாங்கத்தின் நிர்வாகத்திலிருந்ததென்பதை ஞாபக மூட் டுவதா க. விளங்குகிறது. நாம் சென்ற வழிகளிலும், கண்ட கடை
157

Page 87
களிலும் கவனித்ததைக் கொண்டு சீனர்கள் எவ்வளவு கடின உழைப்பும் விடாமுயற்சியு முடையவர்களென்பதை ஓரளவு உணர முடிந்தது. இதற்கு அடுத்த வாரம் சிங்கப்பூர் சென்றிருந்தபோது இந்த அபிப்பிராயம் மேலும் வலுப்பெற்றது.
மறுநாள்-ஏப்ரல் 27 அதிகாலையில் ஜஞப் அலியார், ஜஞப் பட்டர்வேர்த் ஸைனுதீன் ஆகியோர் சகிதம் கெடா-கடாரம்-ராஜ்யத்தின் த லை ப் பட்டணமாகிய அலோ ஸ்டாருக்குப் புறப்பட்டோம்.
ஆசியாவின் மற்றெந்தப் பகுதியைப் பார்க்கிலும் நெடுங்காலமாக இந்தியாவுடன் தொடர்பு பூண்டு வந்தி ருக்கும் புராதன ராஜ்யம் கடாரமெனலாம். அறபு யாத்தி ரிகர்களும் வரலாற்ருசிரியர்களும் குறிப்பிட்டுள்ள கலா எனனுமிடம் கடாரமே என்பது அறிஞர் சிலரது கருத் தாகும். வேறு சிலர் அது கிள்ளானைக் குறிக்கிற தென்பர். இப்பொழுது தாய்லாந்து என்றழைக்கப்படும் சியாம் நெடுங்காலமாகத் கடாரத்தின்மீது பாத்தியதை பாராட்டி வந்தது. ஆணுல், 1909இல் கைச்சாத்தான பாங்கொக் சாசனத்தின் பின்னர் இந்தப் பாத்தியதை யாவும் பிரித்தானியாவுக்கு உரியதாயிற்று. கடாரம், சமஷ்டியில் சேராத ராஜ்யங்களில் ஒன்ருக இருந்தமை, யால் பிரித்தானிய ஆட்சிக்கு உட்படாததாய் விளங் கிற்று. எனினும் மலாய் ராஜ்யங்களில் பிரிட்டிஷ் தூத ராக இருந்தவரே மலாக்கா, பிஞங்கு, சிங்கப்பூர் ஆகிய வற்றின் தேசாதிபதியாகவும் இருந்தமையால் கடா ரத்தின் நிர்வாகம் பிரிட்டனின் கையில் இருந்ததெனக் கொள்ளலாம். மிஸ்ர்-எகிப்து தே சம் ஒருபோதும் பிரித்தானிய ஆட்சிக்குள் அமையவில்லை. ஆனலும், 1883-1907 வரை மிஸ்றில் பிரித்தானியப் பிரதிநிதி
且58

யாகப் பணியாற்றிய குருேமர் பிரபுவுக்கு அந்நாட்டின் நிர்வாக விஷயங்களில் இருந்த செல்வாக்கினை மறுக்க முடியுமா? நவீன மிஸ்றின் சிற்பி என்றல்லவா வரலாற் ருசிரியர் சிலர் இவரை விவரிக்கிருர்கள். மலேசியாவின் நெற்களஞ்சியம் எனச் சிறப்பித்துக் கூறப்படும் கடாரம், கரையோர முதல் புகழ்பெற்ற கெடா மலை முகட்டில் முடி வடையும் மலைத்தொடர்ப் பிராந்திய எல்லைவரை, பச் சைப் பசேலென்ற நெல் வயல்கள் செறிந்த பூமி. ஜஞப். சையத் அலியாரும், நானுமாக காரில், வெல்ஸிலி மாகா ணத்திலுள்ள பட்டர் வேர்த் என்னுமிடத்துக்குச் சென்று பட்டர்வேர்த் ஸைனுதீன் அவர்கள் இல்லத்தில் கால ஆகாரத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து அவருடன் அலோ ஸ்டார் செல்வதென்று ஏற்பாடாகியிருந்தது.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று, விஞ்ஞா னத்துறையில் பட்டம் பெற்றவரான ஜனுப். லைனு தீனின் இலட்சியம், மருத்துவம் கற்று டாக்டராக வேண்டுமென்பது. எழுத்தாளரான இவர் அண்மையில் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவராகிய நம்நாட்டுக் கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களை நேரிற் சந்திக்காவிட்டாலும் அவரது கவிதைகளைப் படித்து, அவர்மீது பெருமதிப்புள்ளவராய் விளங்குகிருர், இன்று இவர்கள் இருவருக்கும் கடிதப் போக்குவரத்து உண் டென்றும் நம்புகிறேன். இக்கடிதப் போக்குவரத்து ஆரம்பமாவதற்கு, செய்யுள் இயற்றும் திறன் சொற்பமு மில்லாத நான் காலாயிருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது எனக்கே வியற்பேற்படுகிறது. வாலிபர் ஸைனுதீன் தமிழ் ஆர்வம் மிக்கவர். பட்டர் வேர்த் உயர் நிலை இங்கிலிஸ் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவரும், பிற ஆசிரியர்கள் பலரைப் போல தமிழ்
59

Page 88
மாநாடு சிறப்பாக நிறைவேற வேண்டுமென்று அயரா துழைத்தவராவர். தமிழ் நாட்டுக்குப் போல வேறெந்த மாநாட்டுக்கும் இவ்வளவு பெருந்தொகையான தொண் டர்களோ கிளே ஸ்தாபனங்களோ இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆசிரியர்கள், அமைச்சர்கள், உயர் அதி காரிகள், வர்த்தகர்கள், தோட்ட முதலாளிகள் ஆகிய பலதிறப்பட்டவர்கள் மலேசியத் தமிழ் மாநாட்டுக்காக உழைத்திருக்கிருர்கள். இவர்கள் எல்லோரிலும் கூடுத லாக நிதி கொடுத்து உதவியவர்கள் வருவாய் ரீதியாகப் பார்க்க மிடத்து, ஆசிரியர்களே எனல் தகும். தமிழின் பாலுள்ள அன்பால் தமது சக்திக்கும் மேலாகவே பன உதவி வழங்க இவர்கள் முன்வந்தமையாலேதான் போலும், மாநாட்டுத் தேவைகளுககும்மேல் மிச்சமாகப் பணஞ் சேர்ந்தது.
ஜனுப் ஸ்ை ஆறுதீன் அவர்கள் மலாயர்களேயோ, பெரும்பாலான தென் இந்திய முஸ்லிம்களையோ போல வன்றி, ஹனபி மத்ஹப்-பிரிவு-ஐச் சேர்ந்தவராக விளங்குகிருர், தென் இந்தியாவில் கரையோரப் பகுதி களில் வாழும் முஸ்லிம்கள் அ%னவரும் ஷாஃபிகள் எனவும், பிற பகுதிகளில் வசிப்போர் அனைவரும் ஹன பிகள் எனவும் இவர் முலம் அறிந்தேன். இதற்கு வட இந்தியர்களினதும் முகலாயர்களினதும் செல்வாக்குக் காரணமாயிருக்குமோ தெரிய வில் ஃல. ஹனபிகள், ஷாஃபிகள் ஆகியோர் எவ்வெப் பகுதிகளில் வாழ்கின் றனர் என்பதுபற்றி ஆராய்ந்தால் இந்திய முஸ்லிம் களின் பூர்வோத்திரத்தையும் கலாசாரப் பிரச்சினேகளே யும் ஓரளவுக்கு அறிந்து கொள்ளலாமென்று தோன்றுகிறது. ஷாஃபிகள் தமது தந்தையரை வாப்பா என்றழைக் கிருரர்கள் எனவும், ஹனபிகள் அத்தா என்றழைக்
150

觐
顯
靶 பினுங்கிற்கும் t k 1.
பட்டர்வொர்த்திற்கும் இடையே பயணிகளே பும் வாகனங்களே யும்
ஏற்றிச் செல்லும் கப்பல்
இடம் பெறும்,
s
靶 註 闇 斷
*
-
பினுங்கு முதலமைச்சர் டான் நீ ஒங் பெள நீ அவர்களேச் சந்தித் து ஆசிரியர் அளவளாவினுர், வள் ளல்கனி யூசுபு, எஸ். எம் இத்ரீஸ் : 1. கவிஞர் ஜைனுத தீன் F–L–Göt சென்றிருந்த ார்.

Page 89
t
黯
呜
.. 豔
 

கிருர்கள் எனவும் ஸைனுதீன் சொன்ஞர். தென் இந்தி யாவிலும் இலங்கையிலும் வாழும் முஸ்லிம்களின் கலா" சாரத்தை ஆராயப் புகுவோருக்கு இலங்கை முஸ்லிம்கள் வழங்கும் வாப்பா, காக்கா, நானு, சாச்சா ஆகிய சொற்கள் பயனுள்ளனவா யிருக்கும். இந்திய உபகண் டத்தில் இஸ்லாம் என்னும் பொதுத் தலைப்பில் இஸ்லா மிய வரலாற்றையும் கலாசாரத்தையும் ஆராய்வதாஞல் பாகிஸ்தான் வடஇந்தியா ஆகிய பகுதிகளே ஒரு பிரிவாகவும், தென் இந்தியா, பர்மா, இலங்கை ஆகிய பகுதிகளே மற்ருெரு பிரிவாகவும் வகுத்து நோக்க வேண்டியது அவசியமா என்ற பிரச்சினை எழும் என்று எனக்குத் தோன்றுகிறது.
பிற்பகல் சுமார் 4 மணிக்கு அலோஸ்டாரிலிருந்து திரும்பினுேம், நண்பர் யூசுபு அவர்கள் மலேப்பகுதியைப் பார்க்கப் போகலாமென்றும், Fபilar Railway என் னும் கம்பித் தடத்தைப் பற்றுக் கோடாகக் கொண்ட புகைவண்டியில் பிர யா ன ஞ் செய்யலாமென்றும் யோசனை கூறிஞர். (இதைப் போன்ற டிராம் வண்டி ஒன்றில் 1952இல் சான்பிரான்சிஸ்கோ நகரில் பிர யானஞ் செய்தேன்) நண்பரின் யோசனையை உட னேயே ஏற்றுக்கொண்டேன். புகைவண்டி கடல் மட்டத் துக்கு 2,500 அடிக்கு மேலே எங்களை இழுத்துச் சென்றது. மேலே செல்லச் சீதோஷ்ண நிலையும் மாறிக் கொண்டே வந்தது. மலேயின் மந்தமாருதம் தேகத்தை வருடிச் சென்றது. என் கூடவந்த நண்பர்கள் ஒவ் வோர் இடத்தையும் சுட்டிக்காட்டி விவரித்துக்கொண்டு வந்தார்கள். சீதோஷ்ண நிலைமையைப் பொறுத்த வரையில் பிணுங்கு வாசிகள் பாக்கியசாலிகள். விரும் பினுல் ஒரு மணி நேரத்தில் மலேப்பகுதிக்குப் போய்
11

Page 90
விடலாம்" மலைநாட்டில் முந்திய வாரம் அங்குரார்ப்பணம் செய்யப்பெற்ற புதிய பள்ளிவாசலைப் பார்த்தோம். 70,000 வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசலுக்குப் பின்புறமாக, பிரிட்டிஷ் ஆட்சியை நினைவூட்டும் சிறிய கிறிஸ்தவக் கோயிலொன்று இருக் கிறது. பள்ளிவாசலிலே நீர்த்தொட்டி ஒன்று அமைக்கப் பட்டிருக்கிறது. இத் தொட்டியில் குழாய்மூலம் தண்ணிர் நிரப்பப்படுகிறது. இலங்கை யிலுள் ள ஹெளழுகள் தொழுகை ஸ்நானத் தொட்டிகள் போலன்றி இங்கு ஒவ் வொருவரும் தனித்தனியாக அமர்ந்து ஒழு செய்வதற்கு வசதியாகத் தண்ணிர்க் குழாய்கள் பல பொருத்தப்பட் டுள்ளன. ஆணுல் கட்டட நிபுணர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். ஈயல்கள் தண்ணீரில் மூழ்கி இறப்பதைக் தவிர்க்க வகை செய்யத் தவறிவிட்டார்கள். நாங்கள் சென்ற சமயம் வலைக் கம்பிகள் கொண்டு இந்த ஹெளழுகளை மறைப்பதற்கு ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல இந்தப் பெரிய கட்டட நிபுணர்களும் சிறிய விஷ யத்தில் கவனக்குறைவாக இருந்துவிட்டார்கள் என்று எனக்குள்ளே எண்ணிக்கொண்டேன். முயற்சி உயர்ச்சி தரும் என்பதில் நம்பிக்கை கொண்ட சீனர் யாரோ இங்கு ஹோட்டலொன்று கட்டியிருக்கிருர், இங்கு தங்கு வதற்கு ஆளுக்கு நாளொன்றினுக்கு 19 வெள்ளி அற விடுகிருர்கள் என்று அறிந்தேன். சாப்பாட்டுச் செலவு புறம்பு. இங்கிருந்து கீழே பார்த்தால் பினுங்கு நகரின் அற்புத எழிலைக் கண்ணுல் பருகலாம். பிஞங்குத் துறை முகம், வெல்ஸிலி மாகாணத்தின் மரகதப்படுதாபோன்ற நெல்வயல்கள், பளிங்குபோலச் சுடர்விட்டுப் பிரகா சிக்கும் கடார மலை முகடுகள், பிஞங்குத் துறைமுகத் தைக் கோடிட்டுக் காட்டும் குடாக்கள் யாவும் நம் கால
162

டியில் கிடப்பதைக் காணலாம். பெய்ரூத்திலிருந்து சில மைல் தூரத்துக்கப்பாலும் இப்படியான மலைப் பிரதேச மொன்றுண்டு. ஆனல் அங்கே இத்தகைய செழுமை யையோ பசுமைமிக்க தாவரங்களையோ காண்பதரிது. மத்திய கிழக்கில் மரகதக் கம்பளம் போன்ற நெல் வயல் களுக்கு எங்கே போவது ? இந்த வகையில், இலங்கை, மலாக்கா போன்ற இடங்கள் அறபு மக்களைக் கவர்ந் ததில் ஆச்சரியமில்லைத்தான். ஆகவேதான் வாணிபத் துக்காக வந்தவர்கள் இவ்விடங்களில் குடியேறி வாழத் தலைப்பட்டார்கள் போலும். ஜனுப் யூசுபு அவர்கள் என்னை உபசரிக்கு முகமாகத் தமது நண்பர்களுக்கு அளித்த இன்சுவை விருந்துடன் அன்றைய தினம் முடி வடைந்தது. நல்ல வேளையாக இந்த விருந்தில் சொற் பொழிவுகள் இடம் பெறவில்லை. பதிலாகச் சுவையான சம்பாஷணைகள் நடந்தன. இந்த விருந்துக்கு ஜனப் எஸ். எம். இத்ரீஸ் சாஹிப் J. P. அவர்களும் வந்திருந் தார். இவர் இலங்கைக்கு விஜயஞ் செய்தபோது என் வீட்டுக்கு வந்ததையும் வீட்டு வளவில் கண்ட ஒற்றைப் பனைமரத்தையும் நினைவு கூர்ந்துகொண்டார்.
பினுங்கில் குலாம் காதிறு நாவலர் அவர்களைப் பற்றியும் அவர் நடத்திய வித்தியா விசாரிணி பத்தி ரிகை பற்றியும் எவ்வித தகவலும் பெற முடியவில்லை, பலருக்கு 'வித்தியா விசாரிணி என்னும் பெயரே விசித் திரமான பெயராகத் தோன்றியது. அடுத்த வாரம் சிங்கப்பூரிலுள்ள தேசிய நூல் நிலையத்திற்கூட ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவரைப் பற்றி எவருக்குமே நினைவிருப்பதாகத் தெரியவில்லை.
வரலாற்றுத்துறையில் கட்டுக்கதைகளும் பகுத்தறி வுக்கு ஒவ்வாத விஷயங்களும் இடம் பெறும் வழக்கத்தை
163

Page 91
ஒழித்து அறிவியலின்பாற்பட்ட உண்மைச் சம்பவங்களை ஆதாரங்களுடன் வர்ணிக்கும் மரபை உண்டாக்கியவ ரென்று ஐரோப்பியர்களால் இன்று போற்றப்படும் இப்னு ஹல்தூன் போன்ற மாபெரும் வரலாற்ருசிரியர் களைத் தோற்றுவித்த முஸ்லிம் சமுதாயம் இன்று இந் நிலையை அடைந்துள்ளமை விசனிக்கத்தக்கதாகும்.
அடுத்தநாள்-ஏப்ரல் 28-பர பரப்பா ன நாளாக அமைந்தது. காலை ஆகாரத்தை ரேணு அவர்கள் வீட்டில் முடித்துக்கொண்டு, பிஞங்கு நகராதிபதி காரி யாலயத்துக்குக் கிளம்பினேன். பினுங்கு தகவல் அதி காரி எஸ். சுப்பிரமணியம் அவர்கள் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அங்கு நகராதிபதி டான்ரா வோங்பெள நீ அவர்களைச் சந்தித்து உரையாடினேன். சீனரான இவர் இங்கிலாந்தில் மேற் படிப்புப் படித்ததன் காரணமாகச் சரளமாக இங்கிலிஷ் பேசுகிருர். இதனுல் எங்கள் உரையாடல் சிரமமின்றி நடைபெற்றது. அவரு டைய அறையிலிருந்து பிஞங்குத் துறைமுகத்தையும், அங்கு நின்ற கப்பல்களையும் பார்த்தபோது 1941-2இல் கொழும்புத் துறைமுகத்தின் சுங்க அதிபராக இருந்த லீ கிளெயர் அவர்களின் அறையையும் அவரின் இரண் டாவது உதவி அதிபராக நான் பணியாற்றியதையும் நினைத்துக் கொண்டேன்.
இங்கிருந்து தாவூத் ரெஸ்டோரன்டுக்குத் திரும்பிய நண்பர் யூசுபு எனது பிரயாணத்தைத் தள்ளிப்போடும்
படி வற்புறுத்திஞர்.
164

19. சந்தையும் சம்பிரதாயமும்
ஒரு சில மணி நேரத்தில் பாங்கொக் புறப்படத் திட்ட
மிட்டிருந்த என்னை, அந்தப் பிரயாணத்தைத் தள்ளிப் போடும்படி கேட்ட நண்பர் யூசுபு அவர்கள், தமது அன்புக் கட்டளைக்கு நான் பணிந்தால், மலேசியாவில் எங்கெங்கெல்லாம் போக விரும்புகிறேனுே, அங்கங்கெல் லாம் போவதற்கு வேண்டிய சகல வசதிகளையும் செய்து தருவதாக ஆசை காட்டிஞர். எனக்கோ தர்மசங்கட மான நிலை. அலோ ஸ்டார் சென்ற வழியில் கிராமச் சந்தையொன்றினைக் கண்டும் கிராமப்புற வனங்களின் செழுமை எத்தன்மையது என்று ஓரளவுக்குக் கிரகித்து மிருந்த எனக்கு அவரது வேண்டுகோளை நிராகரிப்பதால் ஏற்படக்கூடிய நஷ்டம் என்னவென்று தெரிந்திருந்தது. ஆணுல் மறுபுறத்தில் எனது லீவு முடிவடையும் கட்டத் தைக் அண்மிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் பாங் கொக், சிங்கப்பூர் ஆகிய இடங்களையெல்லாம் பார்க்க ஏற்பாடாகியுமிருந்தது.
அலோ ஸ்டார் பிரயாணத்தின்போது பயனுள்ள பல விஷ்யங்களை அறிந்தேன். பினுங்கிலிருந்து இயந் திரப் பாதை மூலம் வெல்ஸிலி மாகாணக் கரையை யடைந்த நாங்கள், முன்னேற்பாட்டின்படி ஜனுப் ஸைனுதீன் வீட்டில் காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டோம். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பா ஷணையில் பற்பல விஷயங்கள் அடிபட்டன. இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் சங்கம் "இலங்கையில் இஸ்லாம்" என்னும் எனது நூலில் அறபுத்தமிழ் இலக்கிய வளர்ச்சி
165

Page 92
பற்றி நான் வெளியிட்டுள்ள கருத்துக்கள், முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்களுக்கும், அரபுத் தமிழ் எழுத்தாளர் களுக்கும் வேறுபாடு உண்டா, பாடசாலைகளிலும் வெளி யிலும் தமிழ் மொழிக்கு உள்ள அந்தஸ்து ஆகியன பற்றி யெல்லாம் பேசிக்கொண்டோம். (இந்த உரையாடலின் போது முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்களே அறபுத் தமிழ் எழுத்தாளர்களென்றும் அவர்கள் வேறு, இவர்கள் வேறு அல்லரென்றும் நான் அபிப்பிராயம் தெரிவித் தேன்). ஜனுப் ஸைனுதீன் இலங்கையின் இந்தப் பிரச் சினைகளைப் பற்றியெல்லாம் இங்குள்ள தமது எழுத்தாள நண்பர்கள் மூலமாக அறிந்திருந்தாரென்பதைக் கவனித் தேன். இந்தச் சந்தர்ப்பத்தில், ' வித்தியா விசாரிணி ஆசிரியர் குலாம் காதிறு நாவலர் பற்றியும், விசாரிணி பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமா வென்றும் விசா ரித்தேன். அவரிடம் பிரதிகள் இருக்கவில்லை. ஆனல் அவற்றைத் தேடிப் பிடிக்க ஒத்தாசை செய்வதாக உறுதி யளித்தார். பினுங்கில் நாவலர் தங்கியிருந்த செய்தி அவர் தங்கியிருந்த பகுதியிலேயே இவ்வளவு விரைவாக மறக்கப்பட்டமை நமது துரதிர்ஷ்டமே. பிரிட்டிஷ் ஆட்சி, ஆரம்பமான காலத்தில் தொழில் அல்லது வாணிபத்தின் பொருட்டுப் பிஞங்கு சென்ற தென் இந்திய முஸ்லிம்கள் சிலர் மலாயப் பெண்களை நிக்காஹ் செய்து, பிஞங்கி லேயே தங்கினர் என்று ஸைனுதீனுடன் உரையாடிய சமயம் அறிந்துகொண்டேன். இவ்விதம் குடியேறிய வர்களை அவர்கள் வசிக்கும் கம்பொங்கில் சந்தித்துக் கதைக்க எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதை யிட்டு எனக்கு மிகுந்த துக்கம். ஏனென்ருல், இவர் களின் வரலாற்றை அறிந்து வந்திருந்தால் இலங் கையில் கிண்ணியா, கற்பிட்டி போன்ற இடங்களின் கலாசார விருத்தி சம்பந்தமாக நான் மேற்கொண்டுள்ள
166

ஆராய்ச்சிக்குப் பிரயோசனமா யிருந்திருக்கும். உலகின் பல பாகங்களிலும் வாழும் முஸ்லிம்களில், பாரம்பரியத்தி ஞலும் பழக்க "வழக்கங்களினுலும் நெருங்கிய ஒற்றுமை யுள்ள இரண்டு முஸ்லிம் இனங்களைக் காண வேண்டு மானுல், மலாயர்களையும், சோனகர்களையும் தவிர வேறு இனங்களைக் காண்பதரிது என்று தோன்றுகிறது.
மேற்குறித்த உரையாடலின் பின்னர் ஜனுப் ஸைனுதீன் படிப்பிக்கும் பாடசாலையைப் பார்க்கப் போனுேம், பாடசாலை விடு முறை க் கா க மூடப்பட் டிருந்தது. எனினும், மாடியில் விடுமுறைக்கால வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மலேசியாவில் ஆரம்பக் கல்வி, தொழிற்கல்வி ஆகியன அவ்வப் பிராந்தியங் களைச் சேர்ந்த கல்வி ஸ்தாபனங்களின் கண்காணிப் பிலும், மேற்படிப்பு, ஆசிரியப் பயிற்சி முதலியன கல்வி அமைச்சின் கண்காணிப்பிலும் இருந்து வருகின்றன. பிராந்தியக் கல்வி ஸ்தாபனங்களுக்கு அரசாங்கம் நிதி. யுதவி வழங்குகிறது. உயர்தரக் கல்விக்கு அரசாங்கத் திடம் நிதியுதவி பெற்று இயங்கும் கல்லூரிகளும், தனி யார் கல்லூரிகளும் உள்ளன. ஆரம்பக் கல்விக்கு மலாய் மொழியுடன் இங்கிலிஸ், சீனம், தமிழ் ஆகிய மொழி களும் போதனு மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன வென்றும் ஜனுப். ஸைனுதீன் மூலம் தெரிந்து கொண் டேன். மலாய், இங்கிலிஸ் ஆகிய இரண்டும் கட்டாய பாடங்கள். உயர்தரக் கல்விக்கு இங்கிலிஸ், சீனம், மலாய் ஆகிய மூன்று மொழிகளும் போதனு மொழிகளாக உள்ளன. கல்வித்துறை பற்றி 1958 மே மாதத்தில் வெளியிடப்பெற்ற அறிக்கையொன்றினை ஜனுப். ஸைனு தீன் எனக்குக் கொடுத்துதவிஞர். இந்த அறிக்கை பழையதாகி விட்டபோதிலும், கல்வித்துறையில் சீனர், இந்தியர் ஆகியோருடன் ஒப்பிடுகையில் மலாயர் எவ்
167

Page 93
வளவு பின் தங்கியவர்களாய் விளங்குகின்றனர் என் பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இன்று கல்வித் துறையில், மலாயர் முன்னேறி வருகிருர்கள் என்பது உண்மையே. ஆயினும், இந்த முன்னேற்றத்தின் வேகம் எத்தகையது என்பதை ஆராய எனக்கு அவகாச மிருக்கவில்லை. இதுபோன்ற விஷயங்களில் நூற்றுக்கு எத்தனை பேர் எழுத்து வாசினை யறிவுள்ளவர்கள் என்னும் விகிதாசாரத்தைப் பார்க்கிலும் பிற இனத்தவர் களின் முன்னேற்றத்துக்குச் சமமாக மலாயர்களும் முன் னேறுகிருர்களா என்பதே முக்கியம்.
அலோ ஸ்டாருக்குச் சென்று கொண்டிருந்தபோது வழியில் கிராமச் சந்தையொன்றினைக் கண்டோம். சந்தையைப் பார்க்க வேண்டுமென்று நாம் திட்டமிட் டிருக்கவில்லை. ஆயினும், என்னுடைய நல்லகாலம், அந்த இடத்தில் அன்றுதான் சந்தை கூடியிருந்தது. 1947இல் மிஸ்றில் அஸ்வான், மர்ஜ் ஆகிய இடங்களி லுள்ள கிராமச் சந்தையையும், 1955ஆம் ஆண்டில் பிரான்ஸில் ஸ்ருஸ்போர்க் என்னுமிடத்திலிருந்து சில மைலுக்கு அப்பாலுள்ள கிராமச் சந்தையையும் பார்த்ததி லிருந்து, நாட்டின் இயல்பையும், அந்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களையும் அறிவதற்கு, பட்டணங்களையும், உல்லாசப் பிரயாணிகளுக்கான நிலையங்களையும்விட கிராமச் சந்தையே அருமையான இடமென்பதை அறிந் திருந்தேன் 1 ஆகவே, இந்தச் சந்தையைச் சுற்றிப் பார்ப்பது நல்லதென்று எனது சகாக்கள் இருவருக்கும் சொன்னேன். அவர்கள் மத்தியானச் சாப்பாட்டுக்கு நான் நேரத்தோடு போய்ச் சேர முடியாமற் போய்விடுமே என்று தயங்கியபோதிலும், என் ஆர்வத்தைக் கண் டதும் உடனேயே சம்மதித்தார்கள். திரும்பி வந்து காரில் ஏறியபோது, பிஞங்கில் வாழும் தங்களுக்கே
68

தெரியாதிருந்த சில புதிய விஷயங்களை அச் சந்தையில் அறிந்துகொண்டதாக இருவரும் சொல்லி வியந்தார்கள். மலாயர்களின்"வாழ்க்கை முறைபற்றி இச்சந்தையில் சிறிதளவு அறிந்துகொண்டேன். அதிகம் அறிந்து கொள்ள முடியாமைக்குக் காரணம் சம்பாஷணைக்கு வாய்ப்பில்லாமற் போனமையாகும். மொழிச் சிக்கல் ஒரு பக்கம். மொழிபெயர்ப்பினுல் இந்த வில்லங்கத்தைத் தவிர்த்துக் கொள்ளலாமென்ருல் அதற்குச் சிரமமதிகம்; நேரமும் போதாது. தவிரவும், சந்தையில் இருப்பவர்கள் தத்தம் வியாபாரத்திற் கண்ணுயிருப்பார்களே யல்லாமல், கலாச்சாரம் பற்றிய சம்வாதங்களிலா ஈடுபடுவார்கள்? அதை எதிர்பார்ப்பதும் நியாயமல்லவே. எனினும், புத்தகங்கள் வாயிலாகக் கற்றுக்கொண்டவற்றுக்குத் துணையாக அமையக்கூடிய பல விஷயங்களை இந்தச் சந்தையில் கிரகித்துக்கொள்ள முடிந்தது. பிரயா ணத்தின் அதி முக்கியமான பயனே இதுதான் என்று கூடச் சொல்லலாம். பண்டைக் காலத்தில் கிராமப்புறப் பொருளாதாரத்தின் அத்தியாவசிய அங்கமாக வாரந் தோறும் கூடும் சந்தை விளங்கி வந்தது. அலோ ஸ்டார் செல்லும் வழியில் நான் கண்ட இந்தச் சந்தை இதே பாங்கில் தன் பணியைச் செய்து வந்ததென்று தோன் றிற்று.
சந்தையில் காணப்பட்டவர்களில், வெள்ளைத் தொப் பிகள் அணிந்தவர்கள் ஹாஜிமார்கள் என்றும், அவ் விடத்தில் ஹாஜிமார்கள் தவிர வேறெவரும் அத்தகைய தொப்பி அணிவதில்லையென்றும் தெரிந்துகொண்டேன். இப்படிப்பட்ட சட்டமெதுவும் அங்கு இல்லை. ஆஞலும், நடைமுறையில் அது ஒரு மரபாக நிலைத்துவிட்டது. ஹாஜிமார்களுக்கு அங்குள்ளோர் அளிக்கும் கெளரவத் துக்கு ஓர் அடையாளமாகவும் இம்மரபு விளங்குகிறது.
169

Page 94
16ஆம் நூற்றண்டின் முதல் தசாப்தம் தொடக்கம் முறையே போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், பிரித்தா னியரும் இந்து மகா சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டதன் பின்னர் மலாயாவுக்கும் முஸ்லிம் உல குக்கும் மீண்டும் தொடர்பு ஏற்படுவதற்கு வழி சமைத்துக் கொடுத்தது ஹஜ் யாத்திரையே என்பது இங்கு நினைவுகூர வேண்டியதாகும். மலாயா முஸ்லிம் மறுமலர்ச்சியின் தந்தையெனப் போற்றப்படும் ஸையத். ஷேய்ஹ் அலி ஹாஜி (பிறப்பு: 1867) அவர்கள் மிஸ்றின் பிரதம முஃதியாக விருந்த வெடிய்கு முகம்மது அப்துஷ்ற அவர்களைச் சந்திப்பதற்கு வாய்ப்பளித்ததும் இந்த ஹஜ் யாத்திரையே. ஷெய்கு முகம்மது அப்துஹ் அவர்கள் அறபி பாஷாவுடன் மிஸ்றிலிருந்து பிரஷ்டம் செய்யப் பட்டார். அறபி பாஷா அவர்கள் இலங்கை வந்து 1883-1901 வரை தங்கினுர். ஷெய்கு அப்துஹ அவர் களோ பெய்ரூத், பாரிஸ் ஆகிய இடங்களில் தங்கியபின் 1889இல் மிஸ்றுக்குத் திரும்பினர். 1899-1905 வரை மிஸ்றின் பிரதம முஃதியாகப் பணியாற்றினுர். அவரது காலத்தில் வாழ்ந்த இலங்கை முஸ்லிம்கள் அவரது வாழ் வையும் வாக்கையும் பற்றி அறியாதிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும். இந்த அறியாமை அக்கால இலங்கை முஸ் லிம்கள் அறபு நாடுகளுடன் பயனுள்ள கலாசாரத் தொடர்பின்றி வாழ்ந்தமையைக் காட்டுகிறது. இதன் விளைவாக, புதிய அஸ்ஹாருக்கு அளப்பரும் சேவை செய்த ஷெய்கு அவர்களின் கருத்துக் கருவூலங்களின் அனுகூலம் இலங்கை முஸ்லிம்களுக்குக் கிடையாது போயிற்று. ஆணுல், ஸையத் ஷேய்ஹ அல்ஹாஜி" அவர்கள் ஹஜ் யாத்திரையில் ஷெய்கு அவர்களைச் சந் தித்ததன் பயணுக மலாயா, இந்தோனேசியா ஆகிய நாடு களில் வாழ்ந்த முஸ்லிம்களின் கலாசார வளர்ச்சி முன்
170

னிருந்ததிலும் செழுமை மிக்கதாய்ப் பரிணமிக்க, லாயிற்று. இன்று ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் அரசியல் தலைவர்களாக ஒளிரும் பல முஸ்லிம்கள் ஒருவரை யொருவர் சந்திப்பதற்கு மக்கா, மதீன, மீனு ஆகிய புனித தலங்கள் களமாயமைந்தன வென்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும். மேலும், அக்காலத்தில் ஹஜ்" யாத்திரை செல்வோர், துறுக்கி சாம்ராஜ்யத்தின் தலை நகரான இஸ்தம்பூல், அஸ்ஹார் பல்கலைக் கழகம் அமைந்துள்ள காஹிரு ஆகிய இடங்களுக்கும் விஜயஞ் செய்வது வழக்கமாயிருந்தது. ஹஜ் யாத்திரை செல்வது ஆபத்து நிறைந்ததாய் அந் நாட்களில் விளங்கியது. திருடர் பயம் ஒருபுறம் ; தொற்றுநோய்களின் தொல்லை மறுபுறம். விசுவாசமும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சித்தத்துக்குத் தம்மை அர்ப்பணிக்கும் மனுே திடமும் உடையவர்களே ஹஜ் யாத்திரையை மேற்கொண்டனர் இன்றுகூட, மலாயக் கிராமப் பகுதிகளில் ஹஜ் யாத், திரை மிகுந்த புனிதத்துடன் போற்றப்படுகிறது என்று. அறிந்தேன்.
பச்சைப் பசேலென்ற நெல் வயல்களையும் பாசன வாய்க்கால்களையும் தாண்டிச் சென்றபோது, மலேசிய விவசாயிகளின் வாழ்க்கை எத்தன்மையது என்பதை, ஒரளவு கண்டோம். இந்தக் கம்பொங்குகளில் ஒன்றி ணுக்குச் சென்று விவசாயிகளுடன் சிலமணி நேரத்தைக் கழிக்கச் சந்தர்ப்பம் கிடைக்காமற் போனமை எனக்கு இன்றும் மிகுந்த துக்கத்தைக் கொடுக்கிறது. இவ் வயல் களைக் கண்டபோது பட்டிப்பளை ஆற்றுத் திட்டத்தின்கீழ் வேளாண்மை செய்யப்பெற்ற வயல்களையும், கல் முனையில் யுத்த அவசரகால அரசாங்க உதவி அதிபராக நான் பணியாற்றிய நாட்களையும் நினைக்காதிருக்க முடிய வில்லை.
171

Page 95
மத்தியான ஆகாரத்துக்காகத் திறந்தவெளி ரெஸ் டோரன்ட் என வர்ணிக்கக்கூடிய ஓரிடத்தில் தங்கி னுேம். தென் இந்திய முஸ்லிமாகிய ஜனுப். எம். எஸ். எம். முகம்மது அலீ அவர்கள் இந்த ரெஸ்டோரன்டை நிர்வகித்து வருகிருர், நாசிகண்டார் அலீ என்று பல ராலும் அழைக்கப்படும் இவரும் இவரது ரெஸ்டோ ரன்டும் மிகவும் பிரசித்தம். இதற்குக் காரணம் இங்கு வழங்கப்படும் தனித்தன்மை வாய்ந்த நெய்ச்சோறும் கோழிக் குறுமாவுமென்று அறிந்தேன். இங்கு வழங்கப் பெறும் உணவு வகைகள் வேருேர் இடத்தில் சமைக்கப் படுகின்றன. பரபரப்புமிக்க அலோ ஸ்டாரின் மதிய உணவு இடைநேரத்தில் பரிமாறுவதற்குத் தக்கதாக, கூடாரம் அமைக்கப்பெற்ற இந்தத் திறந்தவெளிக்குக் கொண்டுவரப்படுகின்றன. வியாபார ரீதியாகப் பார்த் தால் வெகு சாதுரியமானதும், நடைமுறைக்கு வெகு இலேசானதுமான இந்த ஏற்பாடு எனக்குப் புதுமை யாகத் தோன்றியது. சமையல் வேருேர் இடத்தில் நடை பெறுவதால் சோறு, கறி எல்லாவற்றையும் பெரிய கடா ரங்களில் கொண்டுவந்து கூடாரத்தின் ஒரு மூலையில் பரப்பி வைத்திருந்தார்கள். இந்தச் சூழலில், கடாரத் திற்கும்-கெடாவுக்கும்-க டா ர ச் சட்டிகளுக்குமுள்ள தொடர்பு பற்றிய நினைவு யாருக்குத்தான் வராது இதன் பின்னர் ஜனுப். அலி தங்கியிருக்கும் இடத்திற்குப் போனுேம். அங்கிருந்து திரும்பும் வழியில் கண்ணைக் கவரும் வகையில் கட்டப்பெற்ற பெரிய வீடொன்றிைக் கண்டேன். விசாரித்ததில், அந்த வீடு மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் றஹ்மான் அவர்களுடையது என்று தெரியவந்தது. அந்த வீட்டின் அழகையும், அதன் கூரையின் அமைப்பையும் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கையில் எனது நண்பர், துங்கு அவர்களின்
172

காரையும், துங்கு அவர்களும் அவரது பரிவாரமும் அவ் வழியாற் செல்வதையும் கண்டார். கண்டதும், நான் பிரதமரைக் கண்டு எனது மரியாதையைத் தெரிவித்தா லென்ன என்று யோசனை கூறிஞர். பிரதம மந்திரி ஒரு வரைக் காண்பதென்பது அவ்வளவு சுலபமான விஷய மல்ல வென்பதை அறிந்திருந்தபோதிலும், ஆசை வெட்கமறியாது என்பதற்கிணங்க, அந்த யோசனையை ஏற்றுக்கொண்டேன். சம்பந்தப்பட்ட அதிகாரியைக். கண்டு, நான் இலங்கை முஸ்லிம் என்றும், மலேசியத் தமிழ் மாநாட்டிற் பங்குபற்றிவிட்டுத் திரும்பும் வழியில் அலோ ஸ்டார் பெரிய பள்ளிவாசலைத் தரிசிக்கப் போய்க் கொண்டிருக்கிறேன் என்றும், வழியில் பிரதமரின் காரைக் கண்டதும், அவருக்குச் சலாம் சொல்லிப் போவதே முறையென்று கருதி, அவரைக் காண விரும் புவதாகவும் தெரிவித்தேன். நான் இன்னுர் என்பதை, முறைப்படி அறிவிப்பதற்கு என்னிடம் எனது பெயர், விலாசம் பொறித்த சீட்டெதுவும் இருக்கவில்லை. நான் சொன்ன விவரங்கள் சரியானவைதாமா என்பதை அவர் பரீட்சிக்க விரும்பியிருந்தால், எனது உடையோ, நான் பழகிய விதமோ, உதவியிரா. இந்தச் சமயத்தில் நண்பர் ஜஞப். அலீ அந்த அதிகாரியிடம் மலாய் மொழியில் ஏதோ சொன்ஞர். அவருடைய சிபார்சு செய்த மாயமோ என்னவோ அந்த அதிகாரி சற்று நேரத்தில் திரும்பி வந்து, பிரதமர் என்னைக் காண விரும்புகிருர் என்றும், ஆனல் இரண்டு, மூன்று நிமிடத்திற்குமேல் நான் அவரைத் தாமதிக்க வைக்கக் கூடாதென்றும் சொன் ஞர். நானும் மகிழ்ச்சியுடன் அதற்கு இணங்கினேன். ஆஞல், உண்மையில் நானும் எனது நண்பர்களும் சுமார் பதினைந்து நிமிடத்துக்குமேல் பிரதமருடன் உரையாடி னுேம். பிரதமரின் தரிசனம் மட்டுமன்றிக் குளிர்பான
173

Page 96
மும் எமக்குக் கிடைத்தது. பின்னரே, அவ்வளவு நேரத்துக்கு அவர் தமது மதிய உணவைத் தள்ளிப் போட நாங்கள் காலாயிருந்தோ மென்று அறிந்தேன். முக்கியமான அரசாங்க வேலையில் ஈடுபட்டு, சோர்வுடன் வாசஸ்தலம் திரும்பிய அவர் தமது, களைப்பைப் பொருட் படுத்தாமல் எம்மைக் காண இணங்கிஞர். காட்சிக்கு எளியராயும் எனக்கு இனியராயும் விளங்கிய அவரது சுபாவமே அதுதான்.
அடுத்தபடியாக, நாங்கள் அலோ ஸ்டார் பெரிய பள்ளி வாசலில் சற்று நேரம் தரித்தோம். இந்தப் பள்ளி வாசற் கட்டடவேலை அப்பகுதி சுல்தானுல் ஜெர்மன் சிற்பாசாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டதெனவும், அவர் மனுராவுக்கு முக்கியமான இடமளியாது யாவரது கவனத்தையும் ஈர்க்கும் கறுப்பு நிறக் குவிமாடங்களைக் கட்டினர் என்றும் அறிந்தேன்.
இதன் பின்னர் அலோ ஸ்டார் சந்தைக்குப் போனுேம். சந்தையில் என் மனைவிக்குக் கொண்டு வந்து கொடுக்கக்கூடிய நினைவுப்பொருள் ஒன்றினைத் தேடினேன். இத்தகைய நினைவுப் பொருள்கள் என் மனைவியிடம் ஏராளமாக உண்டு. விலை அதிகமில்லாத கிறிஸ் கத்தி ஒன்றைக் கண்டதும் வாங்கிக் கொண்டேன். மலேசியாவை நினைவு கூறுவதற்கு இந்தக் கத்தி பொருத்தமானதென்று எனக்குத் தோன்றியது. இந்த நினைப்பு தவறல்ல வென்பதை இலங்கை திரும்பியபின் என் கைக்கு எட்டிய கைநூலொன்றின் வாயிலாக அறிந்து பூரிப்படைந்தேன். 1966 ஏப்ரல் 11 ஆம் திகதி நடைபெற்ற மேன்மை தங்கிய யாங் டி போதுவான் அகொங் துவாங்கு இஸ்மாயில் நஸிருத்தீன் ஷா இப்னி அல் மாஹலிம் சுல்தான் ஸைனல் அபிதின் அவர்களின்
174

முடிசூட்டு வைபவத்தை விவரிக்கும் இந்தக் கைநூலிலே கிறிஸ்கத்தி பேரரசரின் இராஜ சின்னங்களில் ஒன்ருக
இடம் பெற்றிருக்கிறது.
யூசுபு அவர்கள் மேலும் பல இடங்களுக்கு என்னை அழைத்துச் செல்லச் சித்தமாயிருந்தார். எனினும், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை மனதிற் கொண்டு, இனியும் தாமதிக்க முடியா தென்று சொல்லி, பாங்கொக் புறப்படத் தயாரானேன். அவரும் என் நிலையை உணர்ந்து மேலும் வற்புறுத்தாது விட்டார். ஆயினும், போகுமுன் மத்தியான உணவை முடித்துக் கொண்டு போகும்படி வற்புறுத்தித் தமது அன்பைப் பிரதிபலிக்கும் வகையில், தம் கையாலேயே உணவு பரிமாறி, வயிறு புடைக்கும்படியாக உண்ண வைத்தார். இவ்வளவுடன் நில்லாது விமானத்துறை வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
175

Page 97
20. தாயின் தலை
1966-ஏப்ரல் 23 ஆந் திகதி பாங்கொக் நகர் போய்ச்
சேர்ந்தேன். படை பதைக்கும் சித்திரை வெயிலில் உச்சிப்பொழுதில் விமானம் துறையை அடைந் தது. சேணு ஜ"வல்லர்ஸ் ஸ்தாபனத்தாரின் சார்பில் சீன இளைஞர் ஒருவர் என்னை வரவேற்க விமானத் துறைக்கு வந்திருந்தார். டாக்ஸியிலிருந்து இறங்கிய தும் அவரே டாக்ஸிகாரனுக்குக் கூலி கொடுத்தார். பட்” என்னும் தாய்லாந்து நாணயம் என்னிடமில்லாதிருந் தமையால் சமயோசிதமாகப் பேசாதிருந்துவிட்டேன். இந்த பட் ஒன்று ஏறக்குறைய இருபத்தைந்து சதம் பெறுமதியுள்ளது.
1782 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தின் தலைநகராக விளங்கிவரும் பாங்கொக் நகரை, பெளத்த உலகின் காஹிருவென்றழைக்கலாம். காஹிருவில் ஏறத்தாழ ஐந்நூறு மஸ்ஜிதுகள் இருப்பதைப்போல பாங்கொக்கில் முந்நூற்றுக்கு மேற்பட்ட உவாட்-விகாரைகள்-உள்ளன. மற்ருெரு வகையிலும் இவ்விரு நகரங்களுக்கும் ஒற்றுமை யுண்டு. இரண்டுமே, நவீன பாணியிலமைந்த ஹோட் டல்கள், பரபரப்புமிக்க காரியாலயங்கள், கம்பீரமான மாடி வீடுகள், புது மாதிரியான இல்லங்கள் ஆகியவற் றைக் கொண்டு பண்டை நாடுகளின் இன்றைய தலைநக. ரங்களாக மிளிரும். அதே சமயத்தில் குபேரபுரியை யொத்த வனப்பும் புராதனப் பெருமையும் வாய்ந்த வணக்க ஸ்தலங்களின் இருப்பிடங்களாகவும் காட்சி யளிக்கின்றன.
176

மறுநாட் காலை அதே இளைஞர் நகரத்திலுள்ள முக்கியமான உவாட்டுகளுக்கு என்னை அழைத்துச் சென்ருர், நான்கு உவாட்டுகளைத் த ரி சிக் க வே அன்றைய தினம் எனக்கு அவகாசம் கிடைத்தது.
நகரத்திலுள்ளவற்றில் மிகவும் வடிவானதெனப் போற்றப்படும், உவாட் அரும்-உதய விகாரை-சிப்பிகள், பீங்கான் ஒடுகள் ஆகியவற்றைக் கொண்டு கண்கவர் விதத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. பலவித நிறங் கொண்ட இந்தச் சிப்பிகளும் ஒடுகளும் சூரியோதயம் வேளையில் வானவில்லின் வர்ண ஜாலங் காட்டிப் பிரகா சிக்குமாம். இந்த விகாரையை, 18 ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த தாக்சின் மன்னர் புதுப்பித்தார் என்று சொல் லப்படுகிறது. இவரே அயுத்தியா பர்மியர்களால் தோற் கடிக்கப்பட்ட பின்னர், தொன்புரியைத் தாய்லாந்தின் தலைநகராக்கியவருமாவர். அயுத்தியா, தொன்புரி ஆகிய இரண்டு பெயர்களும் இந்தியக் கலாசாரத்தின் செல் வாக்கினை நினைவூட்டுவனவாகவுள்ளன. அதுபோலவே இந்த விகாரையைப் பெருப்பித்த இரண்டாவது ராமர், மூன்ருவது ராமர் ஆகிய மனனர்களின் பெயர்களும்; இந்தச் சந்தர்ப்பத்திலே அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் தென்கிழக்காசியாவைக் கலாசார அடிப்படையில் சீன மயமான அன்னும்-வியத்ணும்-, இந்து மயமான சியாம்தாய்லாந்து-, இஸ்லாமிய மயமான மலேசியா என்று வகைப்படுத்தியுள்ளமை நினைவுக்கு வருகிறது. தாயி மொழியில் தாய்லாந்து தேசம் முவாங் தாயி என்றழைக் கப்படுகிறது. இதன் பொருள் சுதந்திரர் பூமி என்ப தாகும். ஆகவே அந்நாட்டைத் தாய்லாந்து என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக தாயி நாடு என்ருே தாயித் தேசமென்ருே குறிப்பிடுவதே பொருத்தமென எனக்குத் தோன்றுகிறது. ஏனென்ருல் * லாந்து" என்பது
177

Page 98
* தாயியோ நாடோ அன்று. இப்படித்தான் அறபுப் பெயராகிய முஹ்யித்தீன் இங்கிலீஸ் மொழிச் சகவாசத் தால் மொகிடீன் ஆகியிருக்கிறது. கொழும்பில் மொகிடீன் வீதியென ஒரு தெருவே இருக்கிறது. எனி னும் முவாங் தாயி’ என்னும் பெயரைத் தமிழில் எப்படிப் பெயர்ப்பது என்னும் விஷயத்தைத் தீர்மா னிக்கும் தகைமை மொழி பெயர்ப்புக் கலை நுணுக்கத்தின் எல்லையை அடையாத எனக்கில்லை.
இந்நாடு முன்னர் சியாம் என்று அழைக்கப்பட்டது. இலங்கை வரலாறு கற்கும் மாணவர்களுக்கு இப்பெயர் நன்கு பழக்கமானதாய் இருக்கும். 18 ஆம் நூற்ருண்டின் நடுப்பகுதியில் கீர்த்தி பூரீ ராஜசிங்க மன்னன். போர்த் துக்கேயா, ஒல்லாந்தர் ஆகியோர் இலங்கையின் கரை யோரப் பகுதிகளைக் கைப்பற்றியதன் விளைவாக வீழ்ச்சி யடைந்த பெளத்த மதத்தைப் புனருத்தாரணம் செய்யும் பொருட்டு சியாமிலிருந்து பெளத்த பிக்குகளை வரவழைத் தான்; அதன் பயணுக இலங்கையில் சியாம் நிக்காய என் னும் பெளத்த சங்க அமைப்பின் கிளை ஸ்தாபிதமாயிற்று என்று இலங்கை வரலாறு கூறுகிறது. ஒரு வகையில் இது சியாம் நாடு இலங்கைக்குச் செய்த கைம்மாறு என்று சொல்ல வேண்டும். ஏனென்ருல் 13 ஆம் 14 ஆம் நூற்ருண்டுகளில் தாயித் தேசத்தில் பெளத்த மத மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு இலங்கை பெருமளவில் உதவியது. அக்காலத்தில் ஹீனுயன பெளத்தம் தழைத் தோங்கும் நாடாக இலங்கை சியாமியர், பர்மியர், காம்போதியர் ஆகியோர் மத்தியில் பிரசித்திபெற்று விளங்கியது.
உதய விகாரையைத் தரிசித்த பின்னர் உவகட் போ என்னும் சயன புத்தர் விகாரையைத் தரிசித்தோம்.
178

இந்த விகாரையில் சயன நிலையிலுள்ள பெளத்த சிலை யொன்றிருக்கிறது. இச்சிலை 100 அடி நீளமும் 39 அடி உயரமுமுடையது. மூன்ருவதாகத் தரிசித்த விகாரை பளிங்கு விகாரையாகும். தாய் ! மொழியில் இதற்கு மிக நீளமான பல்லுடைக்கும் பெயரொன்றுண்டு. 1899 ஆம் ஆண்டில் கட்டப்பெற்ற இந்த விகாரை மற்றிரு விகாரை களுடனும் ஒப்பிடுகையில் சமீப காலத்திற்கென்றே சொல்லலாம். பளபளக்கும் பொன் நிற ஓடுகள் வேயப் பெற்ற இதன் கூரை வெயிலில் பசும்பொன் போலப் பிரகாசித்தது. நான்காவதாகப் பார்வையிட்ட விகாரை நான் ஏற்கனவே குறிப்மிட்ட மரகத பெளத்த விகாரை யாகும்.
இந்த விகாரையினைச் சுற்றிப் பார்வையிட்ட சமயத்தில், எனக்கு வழிகாட்டியாக வந்த சீன இளைஞர், பண்டைக் காலத்தில் தாயி" இளைஞர்கள் மூன்று மாத காலத்துக்குப் பெளத்த ஆசிரமங்களில் தங்கியிருப்யது வழக்கமென்றும் இம்மரபு இன்றும் பின்பற்றப்படுகிற தென்றும் சொன்னர். இத்தகைய ஆசிரம வாழ்க்கை யினுல் இளைஞர்கள் தன்னடக்கமென்னும் சீரிய ஒழுக் கத்தைப் பழகிக் கொள்கிருர்கள் என்று விளக்கிய அவர், இன்றை மன்னர் கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று மாத காலம் ஆசிரமத்தில் வாழ்ந்தாரென்றும் அச்சமயத்தில் அவரது கடமைகளை மேன்மை தங்கிய பூரீ கித் ராணியார் நிறைவேற்றிஞர் என்றும் சொல்லி என்னை வியப்பிலாழ்த்தினர்
மத்தியானம், ஜும்ஆத் தொழுகைக்காக சூரியவம்ச வீதிக்கு அப்பால் அமைந்துள்ள ஹாறுான் மஸ்ஜி துக்குப் போனேன். இந்த மசூதியிலும் அன்று மாலை நான் தரிசித்த மற்ருெரு மசூதியிலும் தொழுகை, மேல்
179

Page 99
மாடியில் நடைபெறுவதை அவதானித்தேன். கீழ்மாடி சனசமூக நிலையம் போன்று தோற்றமளித்தது. உணவு பரிமாறுவதற்கான பாத்திரங்களும் அங்கு காணப் பட்டன. இம்மசூதிகளில் குர்ஆன் பள்ளிக்கூடமும் உண்டென்று தோன்றியது. இரு மசூதிகளிலும் எடுப் பான மனுராக்கள் காணப்படவில்லை. வெளியிலிருந்து பார்த்தால் பெரும் பணம் படைத்தவர்களின் வீடுகள் போலத் தோன்றின. இரு மசூதிகளிலும் தொழுகை மண்டபத்தில் கடிகாரம் வைக்கப்பட்டிருந்தது. ஹாறுரன் மஸ்ஜித் மிம்பர் தற்காலிகமானதும் நகர்த்தக்கூடியது மாக இருந்தது. மிஹ்ராப் மறைப்புத் தட்டியைப் போலக் காட்சியளித்தது. தொழுகை மண்டப இடவசதியைப் பெருப்பிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அவ்விதம் செய்ய வசதியாகவே, மிம்பரும் மிஹ்ராபும் நகர்த்தக்கூடிய வகை யில் அமைக்கப்பட்டிருந்தனவென்று தோன்றியது. இந்த ஊகம் சரியோ அறியேன். மசூதியினதும் அங்கு தொழுகைக்கு வந்திருந்தவர்களினதும் தோற்றம் அப் பகுதி மக்களிற் பெரும்பாலோர் ஏழைகள் என்பதைப் புலப்படுத்தியது. துணையிருந்தும் துணையற்றவணுகவும் தனியணுகவும் இருப்பதைப் போன்ற உணர்வும் பசியும் என்னைப் பீடித்திருந்ததனுலும் " தாயி மொழி தெரியா திருந்தமையாலும் இந்த மசூதியில் யாருடனுவது பேச்சுக் கொடுத்து, பாங்கொக்கில் இஸ்லாத்தின் நிலை யென்னவென்பது பற்றி விசாரிக்க முடியாது போயிற்று. மசூதியில் வழக்கம்போல குத்பா பிரசங்கமும் குத்பாவும் நடைபெற்றன. பிரசங்கம் ! தாயி மொழியில் நிகழ்த் தப்பெற்ற போதிலும் அவ்வப்போது உபயோகிக்கப்பட்ட அறபுச் சொற்களில் எனக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு பிரசங்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொருள் மரணத்தை எவரும் தவிர்க்க முடியாதென்பதும்
180

எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நாம் ஒவ்வொருவரும் கணக்குக் காட்ட வேண்டியவர்கள் என்பதுமென்று
கிரகித்துக் கொண்டேன்.
நல்ல காலமாக, மத்தியானச் சாப்பாட்டுக்குப் பின்னர் மரிகான்ஸ் ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஜனுப். இத்ரீஸ் அவர்கள் தம்து நண்பரான ஜனுப். குறைஷி அவர்களிடம் என்னைக் கூட்டிச் சென்ருர். இவரிடம், * தாயி " நாட்டில் இஸ்லாத்தின் நிலைபற்றிச் சில தகவல்கள் பெற்றேன். குறைஷி அவர்கள் என்னைக் கண்டதுமே 1951 இல் கராச்சியில் நடைபெற்ற முஃத மரே-ஆலமி இஸ்லாமிய மாநாட்டில் என்னைச் சந்தித்த மையை நினைவுகூர்ந்து கொண்டார். பட்டாணிய இனத் தைச் சேர்ந்தவரான இவர் தாயிப் பெண்மணியை நிக்காஹ் செய்து, பாங்கொக் நகரில் குடியேறி வர்த்தகம் செய்கிருர். தாயி நாடு, பர்மா, இலங்கை ஆகிய தேசங் களில் ஹினுயன பெளத்த மதச் சூழலில் வாழும் முஸ்லிம் களின் நிலையையும் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் அவர்கள் பாற் கடைப்பிடிக்கும் கொள்கைகளையும் அவர் களின் நன்மை கருதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை யும் எவரும் விரிவாக ஆராய்ந்திருப்பதாகத் தெரிய வில்லை. இத்தகைய ஆராய்ச்சி நடைபெற்ருல் அரசியல் துறையில் மூன்று நாடுகளுக்கும் பொதுவான சில அம்சங்களைக் காண முடியும். இந்நாடுகள் ஒவ்வொன் றிலுமே கலாசார விவகாரங்களுக்கெனத் தனி இலா காக்கள் உள்ளனவென்றும், இவை இஸ்லாமிய கலாசார விவகாரங்கள் சம்பந்தமாகவும் நடவடிக்கைகள் மேற் கொள்கின்றன வென்றும் நம்புகிறேன். தாயி " நாட் டில் 10 சத விகிதமானேர் முஸ்லிம்களென்றும் இவர் களில் ஒரு தொகையினர் மலாய் இனத்தவர் என்றும் அறிந்தேன். 1945 இல் வெளியான ராஜ கட்டளைக்கு
181

Page 100
அமைய முஸ்லிம் விவகாரங்களுக்கென சூலராஜ் மந்திரி என்னும் அதிகாரி நியமிக்கப்பட்டார். உள்நாட்டு விவகார அமைச்சின்கீழ் மத விவகாரங்களுக்கென இலாகாவொன்று நிறுவப்பட்டிருக்கிறது. இந்த இலா காவுக்கு ஆலோசனை கூறுவதற்கென மத்திய இஸ்லா மியக் குழு வொன்றுண்டு. 1950 இல் தாயி முஸ்லிம் கல்லூரி நிறுவப்பட்டது. பட்டாணி என்னுமிடத்தில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலுக்கும் அரசாங்கம் பண உதவி வழங்கியது. சூலராஜ் மந்திரியை மன்னரே நியமிக்கிருர். ஆயினும் இவரைத் தேர்ந்தெடுப்பதற்கு ஜனநாயக நடைமுறை பின்பற்றப்பகிடறது. உள்ளூர்ப் பள்ளிவாசல் பரிபாலனக் குழு இமாம் அவர்களைத் தேர்ந் தெடுக்கிறது. இமாம் மார்கள் சேர்ந்து 24 மாகாண பரிபாலனக் குழுக்களின் தலைவர்களைத் தேர்ந்தெடுக் கிருர்கள். இத்தலைவர்கள் தேர்தல் மூலமாக சூலராஜ் மந்திரியைத் தெரிவுசெய்து மன்னரின் அங்கீகாரத் துக்குச் சிபார்சு செய்கிருர்கள். இந்த நடைமுறை எவ்வளவு சிறப்பாகவும் திருப்திகரமாகவும் பின்பற்றப் படுகிறதென்ருே, எவ்வளவு தூரம் மாற்றமின்றி இன் றும் கடைப்பிடிக்கப்படுகிறதென்ருே நான் நிச்சயமாக் எதுவும் சொல்வதற்கில்லை. w
ஜனுப். குறைஷி அவர்களிடம் விடைபெற்றதும் நானும் ஜஞப். இத்ரீஸ் அவர்களும் முஸ்லிம் கிராம மொன்றினுக்குச் சென்ருேம். இக்கிராமத்தின் பெயர் பாபர் படோங் என்று ஞாபகம். (இந்தப் பெயரை முதன் முறையாகக் கேட்டபோது எனக்குப் பப்படம் நினைவுக்கு வந்தது ) வழியில் நகரின் குறுக்கு மறுக்காக ஓடும் கால் வாய்களிற் சிலவற்றைக் கண்டேன். ஒருகாலத்தில் போக்குவரத்து இக்கால்வாய்கள் வழியாகவே நடைபெற் றது. தாயி மொழியில் இவற்றைக் குளங்" என்று
182

அழைக்கிருர்கள். (குளம் என்னும் தமிழ்ச் சொல்லுக்கும் இதற்கும் ஏதும் தொடர்புடைத்தோவென்பதை மொழி யாராய்ச்சி வல்லுநர்கள் ஆராய்வார்களாக.) இன்று கால்வாய்களுக்குப் பதிலாக அகன்ற நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் நாம் சென்ற வழியில் இக்கால்வாய்களில் கொண்டோலா-வெனிஸ் படகுபோன்ற தோணிகளைக் கண்டேன். அவற்றைக் கண்ட போது, பாங்கொக் நகர் கீழ்த்திசையின் வெனிஸ் நகரம் என்று வர்ணிக்கப்படுவதன் காரணத்தை விளங்கிக் கொண்டேன்.
நாங்கள் பார்க்கப்போன கிராமத்தை அடைவதற்கு மரத்தாலான ஒற்றடிப் பாலங்கள் பலவற்றைக் கடக்க வேண்டியிருந்தது. இவற்றைக் கடந்து சென்ற சம யத்தில் 1935, 36ஆம் ஆண்டுகளில் கண்டிப் பகுதியில் கிராமச் சங்கத் தேர்தல்கள் நடத்துவதற்காகக் கிராமந் தோறும் சென்றபோது தாண்டிய மரப்பாலங்களின் நினைவு மனதில் மின்னி மறைந்தது. மேற்படி முஸ்லிம் கிராமத்தில் கடைகளையோ வீட்டு வாசற்படிகளையோ அடைவதற்குக்கூட இத் த கைய மரப்பாலங்களைத் தாண்டவேண்டும். க  ைட களி ல் விற்பனைக்கிருந்த பொருள்களைக் கொண்டும், சேற்றிலும், சகதியிலும் விளையாடித் திரிந்த சிறு வர் களின் ஆடைகளைக் கொண்டும் அங்கு வாழ்வோர் ஏழைகள் என்பதை உணர முடிந்தது.
திரும்பி வரும் வழியில் பெளத்தர்கள் வாழும் கிராம மொன்றினைத் தாண்டினுேம். இங்கு இறந்தவர்களின் சடலத்தைப் பெருந் தாழிகளில் இட்டு வெகு நாட் களுக்குப் பேணி வைக்கும் வழக்க முண்டென்று அறிந் தேன். மரண மடைந்தவருக்குத் தகுந்த முறையில்
183

Page 101
ஈமச் சடங்குகளுக்குக்கான ஆயத்தங்களைச் செய்தும் பணத்தைச் சேகரித்தும் முடியும்வரை இச் சடலங்கள் பேணி வைக்கப்படுமாம். சில சமயங்களில் மாதக் கணக்கிலும் இவை பேணிப் பாதுகாக்கப்படும். இவ் விதம் பேணி அதற்குச் சடலத்தின் இரத்த நாளங் களில் LD(15jiöğ5/T l' G69üíb embalming JB560dl—(yp60) JpGğuLuar சடலத்தைத் தைலமிட்டுப் பதனப்படுத்தும் எகிப்திய mummification நடைமுறையோ பின்பற்றப்படுவதில்லை யாம். ஈமச்சடங்குகள் இவ்விதம் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆந் திகதியன்று டாக்டர் இமாம் அவர்களும் நானும் இருக் தேசத்தில் நஜ்ஃப் என்னுமிடத்தில் கண்ட பிரேத அடக்கக் கிரியை இங்கு நினைவுக்கு வருகிறது. இருக்கின் தொலைதூரப் பகுதிகள் சிலவற்றிலும் அயல் நாடாகிய ஈரானிலுமிருந்து சடலங்களையும் எலும்புகள் கொண்ட மூடைகளையும் நஜ்ஃப் மசூதியி லிருக்கும் புனித வளவில் அடக்கஞ் செய்வதற்குக் கொண்டு வந்ததை அன்று கண்டோம். சில சமயங் களில் நாளொன்றினுக்கு 400 சடலங்கள் வரை இவ் விடத்துக்குக் கொண்டுவரப்படுமென்று கேள்விப்பட் டேன். இந்த வழக்கம் சுன்னத் ஜமா-அத் முஸ்லிம் களின் வழக்கத்துக்கு நேர் விரோதமானதாகும். ஜனுஸா சடங்கைக் கூடிய விரைவில் முடிக்க வேண்டு மென்பதும் மரணமானது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சித்தத்தின் படியே நிகழ்வதால் அதனையிட்டு அழுது, புலம்பி ஆர்ப் பாட்டஞ் செய்தலாகாதென்பதும் சுன்னத் ஜமா-அத் முஸ்லிம்களின் கோட்பாடாகும்.
நான் கண்ட பெளத்த கிராமத்து வீடுகளில் கோயில் கள் போன்ற சிறு சிறு நிர்மாணிப்புகளும் இருப்பதைக் கண்டேன். விசாரித்ததில் அவை " ஆவி மனைகள் ?
184

என்று அறிந்தேன். இந்த மனைகள் வீடு கட்டுஞ் சமயத் திலேயே வழக்கமாக அமைக்கப்படுமாம். வீட்டின் பிரதான அறையை எதிர்த்தாற்போல அமையும் வகை யில் இவை கட்டப்படும். இங்கு ஆவிகளுக்குத் தினமும் நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. இப்பகுதி களில் எங்கு பார்த்தாலும் போகன்வில்ல என்னும் கட, தாசிப் பூச்செடிகள் செழித்து வளர்வதைக் காணலாம். ஒரே கொத்தில் இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த இரு வர்ணப் பூக்கள் மலர்ந்திருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இலங்கையிலும் இதே கடதாசிப் பூச் செடிகள் உண்டெனினும், இருநிறப் பூக்கள் மலரும் ரகம் வெகு அபூர்வம். இதனை முன்னிட்டு என் மனைவி * மெடோ சுவீற்றில் இந்த ரகச் செடிகளை வெகு பவித் திரத்துடனும் பெருமிதத்துடனும் பேணி வளர்த்து வரு கிருர். தாயி முஸ்லிம் ஒருவர் நடத்திவரும் ரெஸ்டோ ரன்ட் கமெல் ' என்னும் உண்டிச்சாலையில் எனக்கு அளித்த விருந்துடன் அன்றைய நடவடிக்கைகள் முற்றுப்பெற்றன.
மறுநாள் எனக்கு விருந்தோம்பிய நண்பர் ஷேர்ளி சேஞ தமது காரில் பல இடங்களுக்கு என்னை அழைத் துச் சென்ருர், வழியில் நீண்டு பரந்து கிடக்கும் நெல் வயல்கள் பலவற்றைக் கண்டேன். சில காணிகளை நகர்ப்புறத்து நாகரிகம் ஆக்கிரமிக்கிறதென்பதை ஆங் காங்கு வீடுகளும், தொழிற் சாலைகளும் நிர்மாணிக்கப் பட்டு வருவதைக் கொண்டு அறிந்து கொண்டேன். இதன் பின்னர், பாங்கொக் நகரினதும் தொன்புரியின தும் துறைமுகங்களைப் பார்க்கப் போனுேம்.
சில மணி நேரங் கழித்து சிங்கப்பூர் செல்வதற்காக * கத்தேய் பசிபிக் எயர்லைன்ஸ் " என்னும் ஸ்தாபனத்
185

Page 102
தின் விமானத்தில் ஏறி அமர்ந்தேன். தென் கிழக்கு ஆசியாவில் அரசாங்கத்தின் உதவியின்றித் தனியார் துறையினரால் நடத்தப்படும் விமான ஸ்தாபனம் இது வொன்றேயென நினைக்கிறேன். விமானத்தில் பிரயா ணத் துணையாக டாக்டர் ஏ. செல்வரெத்தினம் அவர்கள் கிடைத்தார். உலக சுகாதார ஸ்தாபனத்தில் உயர் பதவி ஒன்றினைப் பெற்றுள்ள இவர் .அப்பதவியை ஏற்கும் பொருட்டு சிங்கப்பூர் போய்க் கொண்டிருந்தார். இம் முறை பேச்சுத் துணைக்கு நண்பர் ஒருவர் கிடைத்தா ரென்ற மகிழ்ச்சியுடன் விமானம் புறப்படுவதற்காகக் காத்திருந்தேன்.
186

21. வீடு நோக்கி
1966 ஏப்ரல் 30ஆந் திகதி மாலைக் கருக்கிருட்டு நேரத்தில் விமானம் சிங்கப்பூரில் தரை தட்டியது. ஆசியாவின் லண்டன் எனவும் தென்கிழக்காசியாவின் பண்டசாலை யெனவும் பலவாருக, வர்ணிக்கப்படும் இந்த நகரத்தில் இறங்கி, பாஸ்போர்ட் பரிசோதனைக்காகக் காத்துக் கிடந்த நீண்ட வரிசையில் ஒருவனுக ஒதுங்கி நின்ற வேளையில் சுங்க இலாகா சிரேஷ்ட உதவி 9:5uTrás-Landing Surveyor, Customs Department 6 மாத காலம் நான் பணியாற்றியமை நினைவுத் திரை யில் திடீரென்று தோன்றி மறைந்தது. முன்னர் ஒரு முறை குறிப்பிட்டது போல, சிங்கப்பூர் என்ற பெயர் சிறு வயதிலேயே எனக்கு மிகவும் பழக்கமானதாக விளங் கியது. இதற்குக் காரணம் பூமி சாஸ்திரத்தில் நான் மகா பண்டிதனுக இருந்தமையன்று எனது பிறப் பிடமாகிய வண்ணுர் பண்ணைச்சோனகர் தெருவில் சிங்கப்பூர்ப் பென்சன்காரர்களின் பெயர் வெகு பிரசித்தி பெற்றிருந்தமையாகும். அந்த நாட்களில், எங்களது அயல், அட்டத்தில் வசித்தவர்கள் காணி, பூமியை ஈடு வைத்துப் பணம் புரட்ட விரும்பினுல், தரகர்கள் மூலமாக இந்தப் பென்சன்காரர்களையே அணுகுவார்கள்.
1939ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆந் திகதி இரண்டாவது உலக யுத்தம் ஆரம்பமாயிற்று. இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர்,சிங்கப்பூரையா, திருகோண மலையையா கீழ்த்திசையில் தமது கோட்டையாக்குல
187

Page 103
தென்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் தடுமாறிய தையும், சிங்கப்பூரையே அவர்கள் விரும்பினர் என்ப கதையும், பட்டப் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த நான் அறிந்திருந்தேன். யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து புதுப் புது இலாக்காக்கள் பல இலங்கையில் தோன்றின. ஆயினும் யுத்தம் நம்மை நேரடியாகப் பாதிக்கவில்லை. 1940 ஜனவரியில் பிரான்ஸ் நாடு வீழ்ச்சி சயடைந்தது. அப்பொழுதும் நம் நாட்டவர்கள் கலக்க மடையவில்லை. 1941 டிசம்பர் 7ஆந் திகதி ஜப்பானியர் * பேர்ள் ஹாபர்" என்னும் அமெரிக்கத் துறைமுகத்தைத் தாக்கினர். அதைத் தொடர்ந்து யுத்தம் மும்முரமடைந் ததும், அதுகால வரை எங்கோ தூரத்தில் நடைபெற்ற தாகத் தோன்றிய போர் இலங்கைக்கு மிக அண்மையில் நடைபெற்றதான உணர்வு ஏற்படலாயிற்று. பர்மா, போர்னியோ, ஹொங்கொங், சிங்கப்பூர் ஆகியவை ஒன்றன்பின் ஒன்ருக ஜப்பானியர் வசம் சிக்கியதும் யுத்தம் இலங்கையின் தலைவாயிலுக்கே வந்தது. 1942 பெப்ரவரியில் ஜப்பானியர் கையிற் சிக்கிய சிங்கப்பூர் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரிட்டிஷாரால் மீட்கப்படும் வரை கழிந்த மூன்று வருட காலமும் எமது எண்ணமெல்லாம் சிங்கப்பூர்மீதே படிந்திருந்தது. நம் நாடும் ஜப்பானியர் கையில் அகப்பட்டால் பிரிட்டிஷாரிடம் பெற்றிருந்த அரைகுறைச் சுதந்திரமும் (அந்த நாட் களில் பத்தில் ஏழு பங்குச் சுதந்திரமென்று குறிப்பிட் டார்கள்) பறிபோய்விடுமே என்று அஞ்சினுேம்.
இப்படியாக நமது சந்ததியின் வரலாற்றைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டு நிற்கையில்,என்னை வரவேற்பதற் காக அப்துல் ஹாறிஸ் அல்வி அவர்கள் வந்திருந்ததைக் கண்டதும் என் நினைவு கொழும்பு. ஸாஹிருக் கல்லூ ரிக்குத் தாவியது. அல்வி அவர்கள் ஸாஹிருக் கல்லூரி
188

வில் படிப்பை முடித்துக்கொண்டு, சிங்கப்பூர் சென்று தமது தந்தையாரின் வர்த்தக ஸ்தாபனத்தில் பங்காளி யாகச் சேர்ந்துகொண்டார். சிங்கப்பூரிலுள்ள மிகப் பெரிய வர்த்தக ஸ்தாபனங்களிலொன்ருன இது, அங்கு மலாயர்களுக்குச் சொந்தமாகவுள்ள ஒரேயொரு வர்த்தக நிலையமென்று நினைக்கிறேன். இலங்கையில் கண்டிச் சிங்கள மக்களைப் போல மலாயாவில் மலாயர்கள் வர்த் தகத் துறையில் செல்வாக்கற்றவர்களாக விளங்கு, கிருர்கள்.
விமானத் துறையிலிருந்து அல்வி அவர்களும் நானும் அவருடைய காரில் நேரே ஹோட்டல் வேட் டைக்குப் புறப்பட்டோம். ஐந்து இடங்களுக்குச் சென்று: வெற்றி பெருமல் கடைசியில் ஹோட்டல் பில்ற்மோரில் இடம் பிடித்துக் கொண்டோம். இதே பெயருடைய ஹோட்டல் ஒன்றிலே 1952ஆம் ஆண்டில் லொஸ் ஏஞ்செலிஸில் தங்கி யிருந்தமையால் இந்த ஹோட்டல் எனக்குப் பழக்கமானது போன்ற உணர்வு உண்டா யிற்று. ஏறத்தாழ ஒரு மணி நேரமாக ஹோட்டல் தேடு படலத்தில் நாங்கள் ஈடுபட்டிருந்தபோது, முந்திய சந்தர்ப்பங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நினைத்துக்கொண்டேன். ஆணுல் அந்தச் சந்தர்ப்பங்களில் என் மனைவியும் கூட வந்திருந்தார். இன்றைக்கோ தனியாக வந்திருந்தேன். உதவிக்கும் ஒத்தாசைக்கும் உள்ளூர் நண்பரான அல்வியும் கூட இருந்தார். 1947 ஏப்ரல் 22ஆந் திகதி இரவு இங்கிலாந்தின் வடபுறத்தே யுள்ள பிராட்போர்ட்டில், இப்படி தங்குமிடந் தேடி அலைந்தபோது, டாக்ஸிகாரன், எமது திக்கற்ற நிலை கண்டு மனமிரங்கித் தனக்குத் தெரிந்த ஹோட்டல் ஒன்றில் எங்களைக் கொண் டு போய் விட்டான். அங்காடி வியாபாரிகளின் அன்ன சத்திரம்" போன்ற
189

Page 104
அந்த ஹோட்டலை ஒத்த கேவலமான ஹோட்டலை அதற்கு முன்னரோ பிறகோ நான் கண்டதில்லை. வாயுடைந்த பீங்கான், கோப்பைகளையும், காலுடைந்த தளபாடங்களையும் கையாளும் வித்தையை அங்கு நானும் என் மனைவியும் கற்ருேம் ! இதே கதி ஏதென்ஸ் நகரிலும் எமக்கு நிகழவிருந்தது. பென் கியோன் என்னும் விடுதியொன்றினுக்கு டாக்ஸிகாரன் எங்களைக் கொண்டுபோய் விட்டான். அந்த விடுதியைப் பார்த் ததுமே அங்கு தங்குவதிலும் பீ. ஈ. எ. விமானக் கந்தோரிலிருந்த சொகுசான நாற்காலிகளில் உட்கார்ந் திருந்தே துயில் கொள்ள எத்தனிப்பது மேல் என்று நினைத்தோம். நல்ல வேளையாக அந்தக் காரியாலயத்து வரவேற்பாளர் எம்மீது இரக்கம் கொண்டு, தொலைபேசி மூலம் நாலைந்து ஹோட்டல்களுடன் தொடர்புகொண்டு, கடைசியாக ஓரிடம் பிடித்துக் கொடுத்தார். நகரின் மத்திய ஸ்தானத்தில் அமைந்திருந்த நவநாகரிகமான அந்த ஹோட்டல் ஒரு மாதத்துக்கு முன்னரே திறக்கப் பட்டிருந்ததால், ஓரிரவு தங்குவதற்கான கூலி உட்பட யாவுமே விலையுயர்ந்தனவாக இருந்தன. சிங்கப்பூர் பில்ற்மோர் ஹோட்டல் இதைவிட அதிக நவநாகரிக மானதாகக் காட்சியளித்தது. துறைமுகத்தை எதிர்த் தாற்போல, கப்பல்களைப் பார்த்தும், கடற் காற்றை நுகர்ந்தும் மகிழ வசதி செய்யும் வகையில் கம்பீரமாக அமைந்திருந்த இந்த ஹோட்டலில் கூலியோ தி ஏற்றம். ஆகவே அடுத்த நாளே சவுத் ஏஷியா ஹோட்ட லுக்குக் குடிபெயர்ந்தேன்.
சீனர்களால் நிர்வகிக்கப்படும் இந்த ஹோட்டலில் :உணவு, ஊழியர் எல்லாமே சீனமயம். நான்கு நாட்கள் இங்கு தங்கினேன். இந்நாட்களில் சீனரின் நிர்வாகத் திறமை பற்றியும் சிக்கனம் பற்றியும் அறியும் வாய்ப்பு
190

இந்த ஹோட்டலில் நான் வருந்தியழையாமலே பொருந்
துவதாயிற்று. புள்ளி விவரக் கணக்கின் படி சிங்கப்பூர்ச்
சனத்தொகையில் 75% சீனர்களாவர். எனினும், சகல
துறைகளும் சீன மயமாக இருப்பதாக எனக்குத் தோன் நியது.
ஹோட்டல் அயலில் சாவகாசமாக உலாவித் திரிந்து சீனரின் கடைகளையும் வணக்க ஸ்தலங்களையும் பார்வை யிட்டேன். பெருமகிழ்ச்சி யூட்டும் அனுபவமாக இது அமைந்தது. 1952 நவம்பர் மாதத்தில் சான்ஃபிரான் ஸிஸ்கோ நகரிலுள்ள சைஞ டவுண் என்னும் சீனர் வாழும் பகுதியில் அரைநாட் பொழுதைக் கழித்ததைத் தவிர மற்றும்படி சீனரின் வாழ்க்கை முறையை அறிய எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. சிங்கப்பூர், பெங்கோ லீன் வீதியையும் அதன் அயலையும் சான் ஃபிராஸிஸ்கோ சைணு டவுணுடன் ஒப்பிட்டால் பின்னையதை வெறும் செயற்கைப் பொருளென்றே சொல்ல வேண்டும். சைணு டவுணில் சீன முறையிலமைந்த வணக்க ஸ்தலம் போன்ற கட்டடமொன்றைக் கண்டதும் உள்ளே சென் றேன்; அதன் பின்னரே அது தொலைபேசிப் பரிவர்த் தனை நிலையமென்பது தெரிய வந்தது. இப்படியான பல போலிகளை அங்கு கண்டேன்.
அல்வி அவர்கள் தமது வியாபார அலுவல்களை மறந்து, காரோடு வந்து என்னை அழைத்துச் சென்று சிங்கப்பூரின் பல இடங்களையும் காண்பித்தார். அதிர்ஷ்ட வசமாக, நான் தங்கிய நான்கு நாட்களில் இரண்டு வர்த்தக, பொது விடுமுறை நாட்களாக அமைந்தன. சிங்கப்பூரில் என்னை மிகவும் கவர்ந்தவை வானுற உயர்ந்து நிற்கும் நவீன மாடிக் கட்டிடங்களாகும். இவற்றிற் சில 7 - 16 மாடிகள் கொண்டவை.
191

Page 105
வீடமைப்புத் திட்டத்தின் படி அண்மையில் கட்டி எழுப்பப் பெற்ற இக்கட்டடங்கள் காண்போரைக் கவர்வனவாக விளங்குகின்றன. "நாற்பது நிமிடத்துக்கு ஒன்ருக வீடுகள் கட்டுவோம்” என்பது சிங்கப்பூரில் பிரபலமான அரசியல் சுலோகமென்று கேள்விப்பட்டேன். இது சிங்கப்பூர் அரசு பெருமைப்படக்கூடிய சாதனைதான். ஏற்கெனவே நகரத்துச் சனத்தொகையில் மூன்றிலொரு பகுதியினர் இத்தகைய நவீன மாடி வீடுகளில் குடியேறி வாழ்ந்து வருகிருர்கள். 1975ஆம் ஆண்டளவில் இந்த விகிதாசாரம் இரண்டிலொரு பங்காகி விடுமென்று நம்பப் படுகிறது. இந்த வீடமைப்புத் திட்டத்திலே வீடுகள் மட்டுமல்லாமல், சந்தை, சாவடி, பாடசாலை ஆகியனவும் சனசமூக நிலையம், சிகிச்சை நிலையம், திறந்தவெளி, விளையாட்டரங்கு போன்ற பொது நிலையங்களும் அமைக் கப்படுகின்றன. இவ்வளவும் கொண்ட இந்த குடிமனைத் திட்டம் போக்குவரத்து வசதியையும் செலவையும் கருதி நகரத்திலிருந்து சுமார் ஐந்து மைல் சுற்றுவட்டத்துள் அமைக்கப்படுகிறது. அண்மையில் அரசாங்கம் குடி யிருக்கும் வீட்டைக் கொள்வனவு செய்யும் திட்டமொன் றையும் ஆரம்பித்திருப்பதாக அறிந்தேன்.
1966 மே மாதம் 2ஆந் திகதி பெரும் பகுதி நேரம் மலாக்காவுக்குப் போய் வந்ததிற் கழிந்தது. வழியில் ஜோஹோர் பாலத்தைப் பார்வையிடும் வாய்ப்பும், மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்ததன் விளைவாக ஏற்பட்டுள்ள சுங்கப் பரிசோதனை மாமூல்களை நேரில் காணும் அனுபவமும் கிடைத்தன.
மலாக்கா சென்று திரும்பிய வழியில் பெரிய பள்ளி வாசலும் கண்ணுக்குத் தென்பட்டது. இதன் கட்டட முறை கிள்ளானிலும் அலோ ஸ்டாரிலுமுள்ள பள்ளி
192

வாசல்களை ஒத்ததா யிருந்தது. சுல்தானின் அரண்மனை யையும் கண்டேன். நாம் பிரயாணஞ் செய்த டாக்ஸி முவர் என்னுமிடத்தில் தாம்போதியொன்றைத் தாண்டு வதற்காகத் தரித்து நின்றது. அப்பொழுது நாங்கள் டாக்ஸியை விட்டிறங்கி மறு கரையிலிருந்த வேருெரு டாக்ஸியில் போய் ஏறிக்கொண்டோம். ஆணுல் அதே சாரதியே வந்து இந்த டாக்ஸியை ஒட்டினர். தாம்போதி யைத் தாண்டுவதிலுள்ள சிரமத்தை முன்னிட்டு டாக்ஸி ஸ்தாபனம் இந்தச் செளகரியமான ஏற்பாட்டைச் செய் திருக்கிறது போலும். பினுங்கிலுள்ளதைப் போன்ற நவீன இயந்திரப் படகு இல்லாத நிலைமையில் இந்த ஏற்பாடு விவேகமானதும் துரிதமானதுமாகும்.
பள்ளிக்கூட நாட்களிலிருந்தே வரலாற்றுத் துறை யில் ஈடுபாடுடையவனுக இருந்து வரும் எனக்கு, முவர் என்னும் பெயர், தமிழ் யாத்திரையின் பேருக அண்மை யில் கற்றுக்கொண்ட வரலாற்றுத் துணுக்குகள் சில வற்றை ஞாபகத்துக்குக் கொண்டு வந்தது. சிங்கப்பூரை ண்ட மன்னன் பரமேஸ்வரன் வீழ்ச்சியடைந்ததும் தப்பியோடித் தலைமறவாக வாழ்ந்த இடமே இந்த முவர் ஆகும். இதன் பிறகே அவன் மலாக்காவை இராஜதானியாக்கிஞன். இதே பரமேஸ்வரனே இஸ் லாத்தைத் தழுவிய பின்னர் இஸ்கந்தர் ஷா என அழைக் கப்பட்டான். 1424ஆம் ஆண்டில் இவன் இறந்ததும் இவனுடைய வாரிசுகளும் தொடர்ந்து இஸ்லாத்தைத் தழுவுவார்களா என்ற சந்தேக நிலை ஏற்படலாயிற்று. இந்நிலை 1445ஆம் ஆண்டில் அரண்மனைப் புரட்சி நிகழும்வரை நீடித்தது. அவ்வாண்டில் ஏற்பட்ட புரட்சி யின் பின்னர் முஸ்லிம் வம்ச ஆட்சி மலாக்காவில் வேரூன்றியது இஸ்லாம் அரச மதமாயிற்று. இந்த அரண்மனைப் புரட்சியில் தென் இந்திய, இலங்கை
193

Page 106
முஸ்லிம் வர்த்தகர்கள் பலர் முக்கிய அங்கம் வகித் தார்கள். இச்சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு பார்க்கையில் 15ஆம் நூற்ருண்டில் முஸ்லிம் வர்த்தகர் களும் கப்பலோட்டிகளும் இந்து மகா சமுத்திரத்தில் ஆதிக்கஞ் செலுத்தியமை ஆசிய வரலாற்றில் எழுதப் படாத அதிகாரமாக மறைந்து கிடக்கிறதென்று முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்திலே கவிஞர் இக்பால் அவர்கள் 'றுமூஸ் இ பிஹாதி” என்னும் தமது கவிதையில் வலியுறுத்தியுள்ள கருத்தொன்று நினைவுக்கு வருகிறது.
"ஒரு சமுதாயத்தின் ஒளி அதன் பண்டைப் பெருமையே!
அப் பெருமையை நினைவு கூர்வதனுலேயே அது தன் உயிர்நிலையை அறிந்துகொள்கிறது.
கடந்த கால வரலாற்றை அது மறக்குமானுல் தன்னைத் தானே நிர்மூலமாக்கிக் கொள்ளுகிறது. விவேகியே! நீ ஜீவத் துடிப்போடு வாழ வேண்டு மானுல்
ஏட்டின் சுவடிகளை ஒன்று சேர்த்துக் கட்டுவதைப் போல,
கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் பிணைத்துக் கொள்.
உன்னை நீயே அறியாது,
உனக்கே அந்நியனுக வாழ்வோனே
(உன்) வரலாறு இன்னதென்று அறிந்துகொள்.
194

அது என்ன கற்பனையா? உவமையா அல்லது கட்டுக் கதையா ?
உன் உயிர்நிலையை நீயே அறிந்துகொள்ளச் செய் வதே வரலாறு."
இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மலாக்காவில் இரண்டு மணி நேரம் மட்டுமே செலவிட முடிந்தது. சரியான வழிகாட்டியும் எனக்குக் கிடைக்க வில்லை. என்ருலும் டாக்ஸிகாரன் தன்னுடைய அறிவுக்கு எட்டியபடி எவையெவை முக்கியமான இடங்களென்று நினைத்தானுே அவற்றையெல்லாம் எனக்குக் காண்பித் தான். இதன் பயணுக மலேசியாவின் மிகப் பழைய மசூதி. தனித்தன்மை வாய்ந்த ஒல்லாந்தர் காலத்துக் கட்ட டங்கள் சில, போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பெற்ற அர்ச் பிரான்சிஸ் சவேரியார் கோயில் ஆகியவற்றைப் பார்வையிட்டேன். இவை யாவும் கொழும்பிலுள்ள கட்டடங்களை ஒத்தனவாயுள்ளன. ஒன்றேயொன்று மட்டும் கொழும்பில் காணக் கிடையாத காட்சியாகத் தோன்றியது. அதுவே விநோதமான, வீட்டுக் கூரை போன்ற, ஒலைக் கூடாரமமைந்த மாட்டு வண்டி: இத்தகைய வண்டிகள் மலாக்கா போன்ற நகரங்களில் இங்கு பெரு வழக்கிலுள்ளனவோ நானறியேன். என்னுடைய அதிர்ஷ்டம் அத்தகைய வண்டி யொன் றைக் காணக் கிடைத்தது. தூரத்திலிருந்து பார்த்தாலே அதன் கூடாரத்தின் அழகு யாவரையும் கவரும் தன்மை யுடையது.
மே மாதம் 3ஆந் திகதி அல்வி அவர்கள் அளித்த விருந்தில் இலங்கை முஸ்லிம்கள் இருவரைச் சந்தித் தேன். இருவரும் இப்பொழுது சிங்கப்பூர் பிரஜா உரிமை பெற்று சிங்கப்பூர் வாசிகளாக வாழ்கிருர்கள் என்று
195

Page 107
நம்புகிறேன். ஒருவர் பொலிஸ் இலாகாவில் உயர்பதவி வகிக்கும் ஜஞப். ரீ. எஸ். ஸெயின் அவர்கள். மற்றவர் பெரிய கல்லூரி யொன்றிலே ஆசிரியராகப் பணியாற்றும் ஜனுப். எம். இஸற். எ. றஹீம் அவர்களாவர். இருவரும், ஒருகாலத்தில் இலங்கையில் பொலிஸ் இன் ஸ்பெக்ட ராகக் கடமை புரிந்த ஜனுப். மர்ஹூம் பக்கீரின் இரண்டு புத்திரிகளை நிக்காஹ் செய்துள்ளார்கள். இலங்கைப் புதினங்களை அறிவதில் அவர்கள் மிகுந்த ஆர்வமுடைய வர்களாக விளங்கினுர்கள். நானும் அவற்றை வரையாது வாரி வழங்கினேன்.
உலகில் நல்ல காரியங்கள் எல்லாமே சீக்கிரமாக முடிந்து விடுவது இயல்பு. அதுபோலவே எனது பிரயாணமும் முற்றுப் பெறும் கட்டத்தை யடைலாயிற்று. ஆகவே மே மாதம் 5 ஆந் திகதி காலை வீடு திரும்புவதற் காக விமானத் துறைக்குச் சென்றேன். விமானத்துறை யில் எனக்கு விடை கொடுப்பதற்காக ஜஞப். ரீ. எஸ். ஸெயின் அவர்களும் கூட வந்திருந்தார். விமானத்துக் காகக் காத்திருந்த சமயத்தில் ஸெயின் அவர்கள் யாரோ ஒருவருக்குத் தடல்புடலாகச் சலாம் போட்டதைக் கவனித்தேன். யாருக்கு இவ்வளவு பெரிய சலாம் போடு கிருர் என்று திரும்பிப் பார்த்தேன். வந்தவரைப் பார்த் தால் இலங்கைத் தமிழர் என்று நினைக்கத் தோன்றியது. இதற்கிடையில் ஸெயின் அவர்கள் அவரை நீதியரசர் ரீ. குலசேகரம் என்று எனக்கு அறிமுகம் செய்தார். மலேசிய மாநாட்டுக்குச் சென்ற இலங்கைக் குழுவுக்குத் தலைமை தாங்கிய நீதியரசர் எச். டபிள்யூ. தம்பையா அவர்களை வழியனுப்ப வந்திருந்த அவரோடு அவர் மனைவியும் வந்திருந்தார். எ. எம். எ. அஸிஸ் என்று ஜனுப். ஸெயின் என்னை அவருக்கு அறிமுகஞ் செய்த போது அவருடைய மனைவியார், ! உங்களைப் பற்றி எங்க
196

ளுடைய அப்பா அடிக்கடி சொல்வார்' என்று சொல் லவே பழைய சம்பவங்கள் பற்றி எல்லோரும் சுவாரஸ்ய மாகப் பேசத் தொடங்கினுேம். திருமதி குலசேகரம் காலஞ் சென்ற எ. கனகசபை அவர்களின் மகளாவர். 1923-28 ஆம் ஆண்டுகளில் நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்த காலத்தில் இரண்டு வருட காலம் கனகசபை மாஸ்டர் என் வகுப்பாசிரியராயிருந்தார். ரங்கூனில் உயர் பதவி வகித்துவந்த இவர் அதை உத றித் தள்ளிவிட்டு, யாழ்ப்பாணம் வந்து பரமேஸ்வராக் கல்லூரியில் ஆசிரியர் பதவி ஏற்றர். அங்கிருந்து இந்துக் கல்லூரிக்கு மாறிய இவர் அந்தக் காலத்தில் காற்சட்டை அணிந்த சிலரில் ஒருவராக மிளிர்ந்தார். எங்களது விஞ்ஞான ஆசிரியர் சி. எம். குலசிங்கம் அவர்கள் பெளதிகம், இரசாயனம் ஆகிய பாடங்களில் நான் ஊக்கம் காட்டியதைக் கண்டு, காலக் கிரமத்தில் பி. எஸ்ஸி, பட்டதாரியாகுவேன் என்று சொல்லி வந் தார். ஆணுல் கனகசபை மாஸ்டருக்கு வரலாற்றுத் துறை மீதும் என் மீதும் இருந்த பற்றுதலின் காரண மாக, நான் வரலாற்றுத் துறையின் தாசனுகியதுமல்லா மல், பட்டப் பரீட் சைக்கும் வரலாற்றையே சிறப்புப் பாட மாகத் தேர்ந்து கொண்டேன். கல்விக்குக் கரையில்லை என்பார்கள். அதுபோலவே என்னைப் பொறுத்தவரை, கனகசபை மாஸ்டரின் உதவியால் இன்றும் வரலாற்றுத் துறை மாணவனுகவே நான் இருந்து வருகிறேன். அவ ருடைய மகளிடம் இதையெல்லாம் நான் சொல்லவில்லை ஆணுல் அவர் என்மீது காண்பித்த பரிவைப்பற்றிச் சொல்லி, பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தேன்.
விமானம் புறப்பட ஆயத்தமானபோது, மலேசிய மாநாட்டுக்கு வந்திருந்த வேறு பலரும் என்னைப்போல வீடு நோக்கிப் போய்க்கொண்டிருந்ததைக் கண்டேன்.
197

Page 108
இந்த 21 நாட்களில் என் தமிழ் அறிவும் வரலாற்று அறி வும் கணிசமான அளவுக்கு விருத்தியடைந்தன. வரலாற் றுத் துறையில் புதியன, அறியாதன பலவற்றை அறிந்து கொண்டேன். ஆயினும் கற்றது கைம்மண்ணளவு என்பதற்கொப்ப, இ ன் னும் அறியவேண்டியவை உலகளவு உண்டு. இந்த நினைவுகளுடன் விமானத்தில் ஏறி உட்கார்ந்தேன். ஒரு சில மணி நேரத்தில் விமா னம் கட்டு நாயக்கா வந்து சேர்ந்தது. அந்தக் காலத் தில் சிங்கப்பூர் பென்சன்காரர் நாட்கணக்கில் செய்த பிரயாணம் இவ்வளவு சீக்கிரத்தில் முற்றுப்பெற்றதை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை. கட்டுநாயக்காவி லிருந்து வீடு வந்து சேர்ந்ததும் முற்றத்தில் நிற்கும் ஒற்றைப் பனை புதுப் பொலிவுடனும் வனப்புடனும் என் கண்களுக்குக் காட்சியளித்தது.
அச்சிட்டோர்: கமர்ஷியல் பிரிண்டிங் அண்டு பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை-1.


Page 109


Page 110


Page 111
ஈழத்தின் பொது வாழ்விலும் எழுத்துத் துறையிலும் முன் னணி இடம் வகிக்கும் அபூபக் கர் முஹம்மத் அப்துல் அளிஸ் அவர்கள் பி. எ. பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்தமைக் காக, இலங்கை அரசாங்கத் தின் கலேத்துறைப் பரிசில் பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் சென்றவர். இலங்கை முஸ்லிம்களில் மு த லா வ து சிவில் சேவை உயர் பணியாள ரான இவர் பதின்மூன்று வருட காலம் தொண்டாற்றிய பின் ஸாஹிரு கல்லூரியின் அதிபரா ஞர். இதே காலத்தில் இலங் கைப் பல்கலைக் கழகத்தின் நீர் வாக சபைகளில் அங்கத்துவம் ெ இலங்கை உயர் சட்ட மன்றத்தி ராக-நியமிக்கப்பெற்ற இவர் ஆனேக்குழுவில் அங்கத்தவரானர் ஆங்கிலத்தில் எழுதிய "Th நூலில் இந்தியாவினதும் இலங்.ை ஆராய்ந்த இவர் ** இலங்கையில் ஈழத்து முஸ்லிம் சமுதாயத்தின் யுள்ளார். இந் நூலுக்குச் சாகி
உலகின் பல நாடுக்ளுக்கும் ட கள் தம் அனுபவங்களே க் தமக் வுடன் இணைத்து "மிஸ்றின் வசிய " தமிழ் யாத் திரை " என்ஜி லம்பூரில் நடைபெற்ற அனேத்து டுப் பிரயாணம் பற்றிக் கூறுவது அறிவு, ஆராய்ச்சித் திறன், உல ஒருங்கிணேத்து எழுதப்பெற்றி ஆற்றலேயும் தனித்துவத்திையும இத்தகைய பிரயான இலக்
Jacket Printed at S.

பதித்தார். 1952 ஆம் ஆண்டில் 3ன் உறுப்பின ராக-செனேற்ற 1983 இல் அரசாங்க சேவை
e West Reappraised" stairspiti கயினதும் கலாச்சார விழிப்பினே இஸ்லாம்" என்னும் நூலில் சிறப்பம்சங்களே அழகுற விளக்கி 3த்திய மண்டலம் பரிசு வழங்
பிரயாணஞ் செய்த அளிஸ் அவர் துள்ள வரலாற்றுத் துறை அறி பம்' என்னும் நூலே எழுதினர்.
றும் இந் நூல் 1988இல் கோவா
கெத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்
. தமிழ் மரபுணர்வு, வரலாற்று
کہ :
அனுப்வ ஞானம் யாவற்றையும் ருக்கும் இந் நூல் ஆசிரியரின்
எடுத்துக்காட்டுகிறது கிய நூல் தமிழுக்குப் புதியது.
M Press,