கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊர்ப்பெயர் உட்பொருள் விளக்கம்

Page 1
T_F4+1,15 : 1 ܩ
- f | goi-liburutrieu Frretiraturi-urritu
'சிவமய ஊர்ப்பெயர்
. Ši
மரீமத் அ. குமாரச
" மாணு யாழ்ப்பாணத் றி. இ. நமசிவாயம் இயற். நூலாசிரியர் பரம்ேசுவர விதாலி
நம. சிவப்பிரக
வயா?
- *-m)
ஜய் சிறி சாரதா முத்கிரீசுரணஞ் டே குதிகோரி இ. Ο Զ- 1 リ * * யாழ்ப் 壁 சைவப்பிரகாச ஆ " மறுபதிப்பு செ S 나 PR ரோற்கர்ரி
F. - இரண்டாம் பதிப்பு 1983
芮 Copy Righ శ్రీన్వానితనానాజనాజీనా
 

سيصصــ 1
ாக p آقاa t + b " தமிழ்ச் ܕ ܐ النظايين
Gr. If J`*± ቃ F.L. ༈ ། ".
பti இன. 1а. 1
அறக்கட்ட* ஜி';
1805.
a'r'F- () 曹。曹,1
துச் சுன்னகம் ாமிப்புலவ்ரவர்கள்
ரக்கர்
頭sー" மல்லாகம்
பிள்ளை அவர்கள் தியது. கொழும்புத் தமிழ்ச் சங்
பூஒதுருகக்கிற்கு அன்பளிப்ப : 靼凸 வேதித்தில் வழங்கியவர் ாசமென்பவரால் .
t
யுடன் Tñ?Gir Tğiif , , , : ந்ேதிரசாலேயில் செய்யப்பெற்றது. புரட்டாதி மீ" 1923
பானம் |ச்சியந்திரசாலேயில்
ஒடு புரட்ட்ாதி மீ" t
。 விலை ரூபா:- பத்து: if Registered േഴ്സ്

Page 2

-ܘ̇
சிவமயம்
ஊர்ப்பெயர் உட்பொருள்
விளக்கம்
யாழ்ப்பாணத்துச் சுன்னுகம் ழரீமத், அ. குமாரசாமிப்புலவரவர்கள் மாணுக்கர் யாழ்ப்பாணத்து - மல்லாகம் ழனி. இ. நமசிவாயம் பிள்ளை அவர்கள் இயற்றியது. நூலாசிரியர் புத்திரனும், பரமேசுவர மகாவிதாலய மாணவருமாகிய நம. சிவப்பிரகாசமென்பவரால் உரையுடன் வயாவிளான் ஜயசிறீ சாரதா பீடேந்திர சாலையில் முத்திரீகரணஞ் செய்யப்பெற்றது. ருதிரோற்காரி டு புரட்டாதி மீ" 1923. யாழ்ப்பாணம் சைவப்பிரகாச அச்சியந்திரசாலையில் மறுபதிப்பு செய்யப்பெற்றது. உருதிரோற்காரி (u ஐப்பசி மீ", 1983.
(இரண்டிாம் பதிப்பு) Copy Right Rogistorod (i)

Page 3
él. சிவமயம்
பதிப்புரை
ܕܪ
செந்தமிழபிமானச் செல்வர்களே!
என்தருமைத் தந்தையாராகிய செந்தமிழ்த் திருவாளர் பூரி நமசிவாயம்பிள்ளையவர்கள் இறைவனடியிணைப்பத்திமையுந் தேனும் பாலும் போன்று தித்திக்குங் கவித்துவ வன்மையுமாகியவற்றைக் கருவிலே திருவெனக் கொண்டனரென்பதையன்னரியற்றிய திருப் பாடல்களேயினிது புலப்படுத்தாநிற்கும்.
தமிழ்ப் புலமையாளர் நூலச்சிடுதன் முதலியவற்றிற்கேற்ற பொருள் வசதி முதலாயன வாயப்பெற்றிலரென்பது யான் கூறுதலு மாவசியமாகாது. அருமருந்தன்ன பலப்பல பாக்கள் பண்டைக் காலங்களிற் போலச் சிதல்வாய்ப்பட்டிறந்து போகாதுநிலைத்துவரும் பொருட்டும், நம்மனேர் பலருமிவ்வரிய பாடல்களைப் பாடிப்பேரின்ப மெய்துதற்பொருட்டும் என்னைப் பெற்று வளர்த்துவருமருங்கடமை யைக் காப்பாற்று தற்பொருட்டும், அப் பெருந்தகையாளரியற்றிய பல நூல்களையும் வெளிப்படுத்துதலெனது நோக்கமாயிருப்பினும், யான்கல்விபயிலுதன் முதலிய துறைகளுட்புக்கு அவாகாசமின்றி இது பொழுதிருந்துவருதலினவற்றுளொன்ருகிய " ஊர்ப்பெயர் உட் பொருள்விளக்கம்' என்னுமிவ்வரிய பனுவலை இதுபொழுது வெளி யிடுகின்றேன். இதிற்காணப்பெறுங் குற்றங்களென்னுடையனவென் றறிஞர்கள் பொறுத்தாதரிப்பார்களாக.
இங்ஙனம் 1923. புரட்டாதி நம. சிவப்பிரகாசம்
மல்லாகம்
பாயிரம். நிலைமண்டில அசிரியப்பா,
இலங்காதீபத் திசைந்திடுபல்வளங்
கலங்காதுறுமா காணமொன்பதனு
ளானைமுகன்குக னைம்முகனமருநற்
ருணமதுடைத்தாய்த் தவமு னிநகுல
ஞகரம்பெற்றுநோ யற முன்னராடிய
சாகரசங்கமஞ் சார்புண்யதீர்த்தமுற்
( ii )

றரசியற்சங்கத் தமர்ந்துசிங்கம்போற் புரவலர் மதிக்கவெம் புன் மைக மொான்றுமே லிராமனுதத்தொடு மெழுந்துவாதாடு மிராமனுதத்துரை யியற்றிய நலம்பெறு பரமேசபள்ளிபெண் பாலினர் விதாலயந் திரமேவுமானி சிறந்த கல்லூரி இன்னமு வெவ்வே றியல்விதாலயத்தொடு பன்னுசைவப்பரி பாலன சபையா ரிந்துக்கல்லூ ரியேந்திரசாலை யிந்துக்கல்லூ ரிளையென விளங்கச் சற்குருநாத சாமிமுன்னுறைபயன் பெற்றுநற்பாவலர் பேசிடுமிசைப்பா வடமாகாணவ மல்கிடத்துலங்கும் வடமாகாண மன்னுமூர்ப்பெயர்களோ டிறையவற்காட்டுஞ் ஞானவுட்பொருளைச் சிறுவருமறிந்து செப்பருநலம்பெற வாக்கினணுேக்கி லவனியேர் பிணியைத் தாக்கநன்மருந்தைத் தண்ணியகனியினுட் பொதிந்தருத்திடுதல் போலவாம்புகன்றவிச் செய்யுளொவ்வொன்றிலும் செறிந்திடுஞ்சிவதுதி பெய்தலாற் பெரியோ ரிகழ்ந்திடாரடைமொழி யின்றியமையாதுறும் பெயர்க்கியைபொரு னின்றிடத்தகுஞ்சொன் னிறுவியுநீட்டியுங் குறுக்கியுந்திரிபுவன் மெல்லினங் கொள்ளவுஞ் சுருக்கமுற்றுப்பொரு டோற்றவுந்தூயவெண் பூத்தவிசுடையாள் புரிதுணை பற்றி யாத்தனன் கலித்துறை யணிகொள்பாவகை ஊர்ப்பெயருட் பொருள் விளக்க மென்றுலவவோர் ஏர்ப்பொலிநாமமு மிட்டனனிந்தநூல் படித்தார்க்கின்பம் பயக்குமுட்பொருளூர் பிடிப்பார் விநோதம் பெய்யுமற்றெவர்க்கும் நூற்றின் எழுபத் தைந்துநூல்சேர்ந்தவூர் மேற்பட நின்றவை விரைவினில் வெளிவரும் சாற்றிந்நூல்படித்தனர் தக்கவர்தரும்பிழை யேற்றகமகிழ்வினே டியையத்திருத்துவன் குணமுளகொண்டு குறைகளைத் தகமகிழ் வணைவது பெரியோர்க் காங்கடஞமே
( iii )

Page 4
சிறப்புப் பாயிரம்.
புலோலிநகர் பிரமறி. ம. முத்துக்குமாரசுவாமிக் குருக்களவர்கள் சொல்லியது:
கலித்துறை திருவளரூர்ப்பெயருட் பொருள் வேறு தெரியுறுநூ றெருளுறவாக்கினன் மல்லாகவாசன்றிகழ்பலநூன் மருவுகுமாரசுவாமிப்புலவனன்மாணவகன் வருபுகழ் சேருநமச்சிவாயப் பெயர்வண்புதனே
பருத்தித்துறை பிரமறு ச. சுன்பிரமணியசாஸ்திரிகளவர்கள் சொல்யது
விருத்தம் திருவளர்மல் லாகம்வளர் நமசி வாயச்
சீர்ப்புலவனூர்ப்பெயருட் பொருள் விளக்க வுருவளரும் பாவகையா லுணர்வு சான்ற
வுத்தமர்மெச் சிடப்புகன்ற கவிதை தன்னை மருவுளஞ்சேர்த் திடுந்தோறும் மின்பு தேங்கு
மலிசடைவேணியன்றுதியீ திவன்றன் கல்விப் பெருவளத்தை வெளிப்படுத்து மாண்பிற் றகும்
பேருலகிற்சிறந்து பொலிந் திடுக நன்றே.
"உலகியல் விளக்க நூலாசிரியரும்
பரமேஸ்வர மகா விதாலயத் தலைமைத் தமிழ்ப்போதகாசிரியரும் ஆகும்
பிரம்மறி. சு. நவநீதகிருஷ்ணபாரதியார் அவர்கள் சொல்லியது
வெண்பா
இலங்கைவட மாகாணத் தெய்துார் பலவா னலங்கனிந்து மெய்ப்பொருளை நாட்டி-இலங்கொருநூ லொன்றையளித் தானு லுயர்நமச்சி வாயவள்ளல் கன்றையளிக் கும்பசுவொக் க.
( iv ),

யூறிலழரீ. ஆறுமுகநாவலரவர்கள் மருகரும் மாளுக்கரும்
வித்துவ சிரேமணியுமாகிய ழறி. ந. ச பொன்னம்பலபிள்ளையவர்கள் மருகரும் மாளுக் கருமாயே யூரீ. சிவ. இ. மாரிமுத்து உபாத்தியாயரவர்கள் சொல்லியது.
நிலைமண்டில ஆசிரியப்பா.
திருவளர்கமலத் திருவளர்செல்வியு மருங்கலைவாணியு மருள்செய்தேயமர் இலங்கையெனும்பெயர் இலங்குமிந்நாட்டின் றுலங்குமுத்தரத் தூயமாகாண நலந்திகழுர்களை நன்குறவமைத்தே யட்டதிக்கெங்கு மறிஞர்கள்புகழுறும் கட்டளைக்கலித்துறைச் கண்ணியப்பாவின லூர்ப்பெயருட்பொருள் வாய்ப்புறுவிளக்கச் சீர்ப்பொலிநூலிதைச் சிறப்புறத்தந்த அன்னவன்யாரெனி லறைகுவன்கேளிர் பன்னகவேந்தெனப் பண்டிதோத்தமஞய்ப் பன்னெடுங்காலம் பாரினில்வைகி கன்னியோர்பங்கன் கந்தவேடந்தை யென்னையாளிறைவ னிருங்கழலடைந்த சுன்னைக்குமார சுவாமிப்புலவரின் நன்னயமானவன் நற்குணசீலன் பொன்னவனென்னப் பொலிந்தி புந்தியான் தார்செறிகுவளை தரித்திடுபுயத்தான் காராளர்போற்றும் வேளாளர்சிலன் கற்றவர்க்கினியன் கருணைமிக்குடையான் உற்றவர்க்குதவு முயர்குணசீலன் மின்னவளுறையும் பொன்னணிமார்பன் நன்னுரன்முதலிய தொன்னுரல்பயின்ருேன் சென்னியாறுடைய "செங்கனேறவனையுஞ் சென்னிமாறுடைய செல்வன்றனையுஞ் சென்னியாறுடைய செல்வக்குகனையுந் தன்னகத்தேத்துந் தகைமைபெற்றுள்ளோன் கொல்லாவிரதங் கொண்டிடுசீல னல்லோர்வாழும் மல்லாகவாச னிராமப்பிள்ளை யெனும்பெயர்கொண்ட நராதிபன்றனது நற்றவத்துதித்தோன் சமயநெறியைச் சுழக்கின்றியறிந்தோன் நமசிவாயப்பேர் நாவலன்முனே,
( v )

Page 5
வண்ணைவைத்தீசர் **ஒருதுறைக்கோவை" நூலாசிரியர் வண்ணநகர் ழறி. க. வயித்தியலிங்கப்பிள்ளை அவர்கள் சொல்லியது அறுசீர் ஆசிரியவிருத்தம் . செல்லாருந் தண்டலைசூழ் யாழ்ப்பாணத்
துார்களின் பேர் சேர்த்து மேலான சொல்லாரு மூர்ப்பெயருட் பொருள்விளக்க மென்ருெருநூ ருெடுத்தான் பொற்பார் மல்லாக வசனிரா மப்பிள்ளை
யுஞற்றுதவ மதலை சான்றே ரெல்லாரும் புகழ்நமசி வாயவயி
தானமுள வேந்தன் மாதோ.
வயாவிளான் சுதேசநாட்டியப்பத்திர அதிபர் ழறி. க. வேலுப்பிள்ளையவர்கள் சொல்லியவை
விருத்தம் சீர்ப்பொலிமல் லாகநிக மத்தி குன்றிண்
டிறல்படைத்த பற்குணன் செந் திருநி வாசன் தார்குவளை யணிமார்பன் சுனைக்கு மார
சாமியெனுங் கவிஞனந்தே வாசி முக்க ணுருகந்த வடியனமச் சிவாயன் கற்ருே
ராரும்வியந் தகமகிழ வருமை யோங்க ஊர்ப்பெயருட் பொருள்விளக்க மெனவோர் நூலை
யுஞற்றினனெஞ் ஞான்றுமுல குலவ மாதோ.
வழுத்திடவேத் திக்கவிஞர் வீணு கான
மருவியடல் லிடப்பெயர்க்கு வண்மை சால எழுத்தொடுசொற் பொருளணியாப் பிலக்ய வெல்லை
னிதுகண்ட கவிஞனிவ னிசைத்தான் மற்றேர் இழுக்கிலவுட் பொருளமைகா ரிகையிற் பல்பா
விவன் பெருமை யான் வியக்க வெழுத லுவரி விழுப்பமுரைத் திடத்துணிந்த சம்பு ஞானம்
மேவுமென நாணுதணுன் வியப்புருதே. வெண்பா பொங்குபுகழ்த் தந்தைபுகன்றகவியைத்தெளிந்தோர்க் கெங்குமச்சிட் டுப்பரப்ப வெண்ணினுன்-துங்கத் தவப்புதல்வ ஞம்பரமே சக்கழக மாணன் சிவப்பிரகா சன்மாண் தெரிந்து.
ooooOoooo
(vi)

-هٔ சிவமயம் சைவஆசிரிய கலாசாலைத்தமிழ் விரிவுரையாளராகப் பண்டிதர்களை பயிற்றிய போதனுசிரியரும், சிந்திக்கவைக்கும் செந்தமிழ் நூல்களை நுண்மாண் கருத்துவிளக்கம் அளித்து எம் மொழிக்களஞ்சியத்தை
எழில் செய்பவரும் ஆகும் மூதறிஞர் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
அவர்கள் வழங்கிய அணிந்துரை ஊர்ப்பெயர் உட்போருள் விளக்கம். ஊர்ப்பெயரால் உட்பொருளைக் காட்டுகின்ற இந்நூலை யாரும் வியக்க இயற்றினுர் - யார் கொலோ! நல்லார்கள் போற்றும் நமசிவா யம்பிள்ளை வல்லார் தமிழின் வரம்பு. இந்நூல்,
*முடிவிலாதுறை சுன்னுகத்தான் வழி” என்கின்ற, முத்துக் குமார கவிராயர் பாடலோடும்
* திருவாரும் நல்லைநகர்ச் செவ்வேற் பெருமானுர் இருபாலைக் குயத்திய ரோடின்ப முற்றர் ”. என்கின்ற, சேணுதிராய முதலியார் பாடலோ டும் - வைத்து, மதிக்கும் பெருமை வாய்ந்தது.
கல்வி செல்வங்களால் உயர்ந்த மல்லாகத்தில், உயர் குடியில் உதித்தவர் இந்நூலாசிரியர். இவர், சுன்னுகம் திரு. அ. குமாரசாமிப் புலவர் அவர்களின் மாணவர் - புலவர் அவர்களின் பாராட்டுக் குரியவரா யிருந்தவர் என்றறியும் போது, பெரிதும் இறும்பூதுண்டாகிறது.
இந்நூல், கல்விமான்களுக்கு அருவிருந்து; உயர்வகுப்பு மாணவர் சுவைத்தற்குரியது. இந்நூலாசிரியரியற்றிய மற்றைய நூல்களும், தனிப் பாடல்களும் வெளிவர வேண்டியவை.
கலாசாலை வீதி,
திருநெல்வேலி, சி. கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணம், 5-11-83.

Page 6
ܝܘܵ பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர், நூலாசிரியர், இலக்கிய நூல்கள் ஆய்வுநல உரை ஆசிரியர், கலைமூதறிஞர் க. சொக்கலிங்கம் (சொக்கன் ) அவர்கள்
அளித்த
அணிந்துரை
மல்லாகம், தமிழ்ப்புலவர் பலருக்குத் தாயகமாய் விளங்கிய உண்மையினைத் தமிழறிந்தார் நன்கறிவர். இப்புலவர் வரிசையிலே குறிப்பிடத் தக்கவர் பூரீ இ. நமசி வாயம்பிள்ளை.குலநலம், குணநலம், குடும்பநலம் என்பவற் ருேடு அறிவு நலமும் வாய்க்கப்பெற்ற இப்பெரும் புலவரின் "ஊர்ப்பெயர் உட்பொருள் விளக்கம்’ என்னும் நூல் என் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. முத்துக்குமாரக் கவிரா சரின் அடியொற்றி நின்று ஊர்ப்பெயர்களைச் சிலேடைப் பொருளில் அமைத்து அழகார்ந்த கவிதை நூலாய் இதனை அவர் ஆக்கித்தந்துள்ளார்.
சொற்பொருட்டெளிவும் சுவையுணர் திறமும் கவித் துவ ஆற்றலும் இந்நூற்பாடல்களிலே மி விரி ர் கி ன் ற ன என்று கூறுவது மி  ைக. கவிச்சக்கரவர்த்தி க ம் பன், கோதாவரி நதியை வருணிக்கையில் அது “சான்றேர் கவி என’ ஒப்புமை காட்டியதற்கு இலக்கியமாக பூரீநமசிவாயம் பிள்ளையின் பாடல்கள் விளங்குகின்றன. தடையற்ற ஒட் டம் இவற்றிற் காணப்படுவது பெருஞ்சிறப்பு. யாழ்ப்பா ணத்து ஊர்ப்பெயர்கள் யாவும் பாடல்களில் அமைக்கப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதே.
தம்மை அவையத்து முந்தியிருப்பச் செய்த தந்தை யாருக்கு நன்றிக்கடனுக 1923 ஆம் ஆண்டில் முதற்பதிப் பாகவும் இவ்வாண்டிலே இரண்டாம் பதிப்பாகவும் இச் சிறந்த நூலை வெளியிட்ட “இந்துசாதனம்’ ஆசிரியரும் சைவப் பெரியாருமான நம. சிவப்பிரகாசம் அவர்களின் அன்புப்பணி பாராட்டி அமையாது. ப யனும் பண்பும் வாய் ந்த இப்பணியினை உளங்கனிந்து பாராட்டுவது தமிழறி ந் தார் கடன். தமிழன்னைக்கு ஊர்ப்பெயர் உட் பொருள் விளக்கம் ஆரமாக நின்று அணி செய்வதாக,
se Golstóbastilo

6a யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணை வேந்தரும்,
பேராசிரியருமான கலை உலகக் கதிரொளி" கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள்
வழங்கிய
அணிந்துரை
w' nM*
இலக்கிய ஆசிரியன் தான் புலப்படுத்த விழைந்த பொருளை வெளிப்படையாகக் கூருது மறைத்து வைத்து, வெளிப்படையிலே வேறு பொருள் படக் கூறுவது ஒர் இலக்கிய உத்தியாகும். இவ் வுத்தியை வடமொழியிலே ' பிரகேளிகை ' என்பர், தமிழில் இதனை “விடுகவி' எனக் கருதுவர். வாசகனது உய்த்துணர் திறனுக்கும் சிந்தனையாற்றலுக்கும் தூண்டுகோலாகவும், சவாலா கவும் அமையும் இவ்வகை இலக்கியம், இலக்கிய ஆசிரியனது கற் பனையாற்றலுக்கும், சொல்லாட்சித் திறனுக்கும் எடுத்துக்காட்டா கத் திகழ்வதாகும். "பிரகேளிகை" வகையில் " நாமாந்திரிதை " யும் ஒன்று. இது கருதிய பொருளை வேறு நாமங்களில் மறைத் திருப்பது. மல்லை நமச்சிவாயப் புலவரது ஊர்ப்பெயர் உட்பொருள் விளக்கம் என்னும் இப்பிரபந்தம் " நாமாந்திரிதை வகையில் அமைந்ததாம். இதில் அவர் ஈழத்தின் வடமாகாண ஊர்ப்பெயர் களை - சிறப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஊர்ப்பெயர்களைதொடர்புபடுத்தியமைந்த கட்டளைக் கலித்துறைகளிற் சைவசமய உட்பொருளைப் பொதிந்துவைத்துள்ளார்.
புலவரவர்கள் நாவலர் பரம்பரையில் முகிழ்ந்தவர். சுன்ன கம் குமாரசுவாமிப் புலவரது மாணவர். சிவதோத்திரயமகவந்தாதி, ஆத்மரட்சாமிர்த மருந்து, சிங்கைவேலன் கீர்த்தனைகள், கும்பிளா வளைப் பிள்ளையார் கீர்த்தனங்கள் முதலியவற்றின் ஆசிரியர். இவ ரது படைப்புக்களில், இலக்கிய உத்திவகைகளிலே தனிச்சிறப்பு வாய்ந்தத்ாக மேற்படி ஊர்பபெயர் உட்பொருள் விளக்சம் அமைந் துள்ளது. இந்நூற்சிறப்பை உணர்ந்து கொள்வதற்கு முதற் கண் இது பாடப்படுவதற்குப் பின்னணியாயிருந்த வரலாற்றம் சங்களை விளங்கிக்கொள்வது அவசியமாகின்றது. 、*、
ஈழத்துச் செந்தமிழ்ப் புலமையை வளம்படுத்துவதில் வட மொழிக் கல்வி முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. கடந்து Grup நூற்ருண்டுகால ஈழத்துத் தமிழிலக்கியவரலாறு இதனை உணர்த் தும். இலக்கியத்தின் 5 உத்திகள், சமய தத்தவக் கருத்துக்கள், தருக்கநெறி முதலிய வகைகளில் வடமொழியின் பங்களிப்புக் கணிசமானது. வடமொழி இலக்கியங்களைக் கற்றுச்

Page 7
சுவைத்துத் தமிழில் அவற்றை ஆக்க முயன்ற புலமை மரபுக்கு அரசகேசரியின் இரகுவமிசம் முதல் தி, சதாசிவஐயரின் இருது சங்கார காவியம் வரை ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்நெறி யிலே வடமொழியின் பிரகேளிகை" .வகையான "நாமாந்திரிதை' ஈழத்துத் தமிழ்ப் புலமையினைத் தூண்டி நின்ற இலக்கிய உத்தி களிலொன் ருக அமைந்திருக்கலாமெனக் கருத இடமுண்டு, இவ் வுத்தியிலமைந்த தனிப்பாடல்கள் என்ற வகையில் முத்துக்குமார கவிராசரின் "மல்லாக மாதகலான் மருகன்'. 'முடிவிலாதுறை சுன்னகத்தான்' ஆகியன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவை மவை முருகக் கடவுளது திருவுலாக் காட்சியையும் அதனைக் கண்ணுற்றுக் காதல்வயப்பட்ட மகளிர் நிலையையும் யாழ்ப்பாணத்து ஊர்ப் பெயர்களில் உட்கிடையாகப் புலப்படுத்தி நிற்பன. முத் துக்குமார கவிராசரின் மரபில் வந்த குமாரசுவாமிப் புலவரின் மாண வரான நமச்சிவாயப் புலவருக்குக் கவிராசரின் இப்பாடல்கள் ஊர்ப்பெயர் உட்பொருள் விள்க்கத்தைப் பாடுவதற்கான அருட்டுணர் வைத் தந்திருக்கலாமெனக் கருத இடமுண்டு. சைவசித்தாந்தக் கருத்துக்களைக் கூற இவ்வுத்தியை அவர் பயன்படுத்தியுள்ளார்.
மலபந்தத்தினுல் உலகியல் ஆசைகளில் மயங்கி நிற்கும் ஆன்மா சரியை முதலிய நெறிகளில் நின்று இறையுணர்வு முதி ரப் பெற்று மலபந்தங்களிலிருந்து விடுபடவேண்டுமென்பது சைவ சித்தாந்தத்தின் தெளிபொருள். கடந்த நூற்ருண்டில் நாவலர் நெறிப்படுத்திய சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தின் உந்துவிசையினல் இந்த நூற்ருண்டின் முதல் நாற்பதாண்டுக்காலப் பகுதிவரை மேற்படி சைவசித்தாந்தத் தெளிபொருளே தமிழிலக்கியத்தின் தலைமைப் பொருளாகத் திகழ்ந்தது. நாவலர் மரபில் வந்த நமச் சிவாயப் புலவரவர்களுக்கும் அதுவே பொருளாயிற்று. இதனை வெளிப்படுத்தும் வகையில் ஈழத்தின் வடமாகாண ஊர்ப்பெயர் களைப் பொருட் பொருத்தமுறக் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைத்துள்ளமையே அவரது புலமையின் போற்றத்தக்க பணியா கும். வடமாகாணத்துக்கு அப்பாற்பட்ட கண்டி, காலி, முதலிய நகரப் பெயர்களும் இப்பாடல்களில் இடம்பெறுகின்றன.
வடமாகாண ஊர்ப்பெயர்களின் - பிறப்பாக யாழ்ப்பணக் குடாநாட்டின் ஊர்ப்பெயர்களின் - சில நேரடியாகச் சமய தத் துவப் பொருண்மையைப் புலப்படுத்துவன, சுன்னகம் என்பது சிவனது வெள்ளியங்கிரி என்ற பொருளையும், ஈவினை என்பது முன்னீட்டிவைத்த வினைத் தொகுதியையும் சுட்டுவன. சிலபெயர் களில் அடைகக்ளயும், பால் காட்டும் ஈறுகளையும், வேற்றுமையுரு புகளையும் இணைப்பதன் மூலமும், சில பெயர்களை பிரித்திசைப்ப தன் மூலமும், திரித்து வழங்குவதன் மூலமும் இவ்வகைப் பொருண்மைகளைக் கண்டுணரலாம். நமச்சிவாயப் புலவர் அவர்கள்

இத்தகைய முயற்சிகளை யாப்பின் கட்டளை எல்லைக்குள் நின்று சிறப்புற நிகழ்த்தியுள்ளமை சிந்தனைக்கு விருந்தாகின்றது
‘பாதகஞ் செய்தொல் புரத்தார் பதறப்பன் ஞகந்தொட்ட மாதக லானைத் துணைக்கொள்மல் லாகத்தார் வல்லுவெட்டி மீதம ரந்தத் தனக்காரர் நட்பை விழைகுவரோ வோ திமீ சாலைய ராயப் பரந்தனை யொட்டுவரே'
விடத்தலை நேர்மற வன்புலத் தாரை விடாது தனங் குடத்தனை யாரிள வாலையில் வாழ்வுகு றைந்தழியும் திடத்தினை யுற்றுறச் செம்பியன் பற்றுச்செல் வோர்சிறையிச் சடத்தினைக் கொண்டினி யூராத் துறைதனைச் சார்குவரே'
இவற்றில் முதலாவ து பாடல் சிவபிரானது அருட்டுணை யுடையவர்கள் சிற்றின்ப விருப்பற்றவர்களாய் ஞானவ றிவின் துணைகொண்டு சிவகதியை அடைவார்கள் என்பதைக் குறிக்கின் றது. அடுத்த பாடல் புலன்வழிப்பட்டு அமையும் உலகியல் வாழ் வின் கீய விளைவுகளை உணர்ந்து ஞானமார்க்கத்தில் நடப்பவர்கள் பிறவாப் பெருநிலயை அடைவார்கள் என்கிறது. இவற்றில் தொல்புரம், பன்னகம், மாதகல், மல்லாகம், வல்வெட்டி மீசாலை, பரந்தன், மறவன்புலம், குடத்தன, இளவாலை, செம் பியன்பற்று. ஊராத்துறை (ஊர்காவற்றுறை) ஆகியஊர்ப்பெயர்கள் பொருத்தமுற இணைந்துள்ளமையைக் காணலாம்.
* கற்றேர் உய்த்துணர்ந்து மகிழ்தற்கும் பயன்கொள்வதற்கு முரிய இவ்வகை இலக்கியங்கள் ஈழத்தின் செந்தமிழ்ப் புலமையின் கம்பீரத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வன. சாதாரண வாசக ரும் இவற்றைப் புரிந்து கொள்ளும் வகையிலே பதவுரை, பொழிப் புரைகளுடன் பதிப்பித்து வெளியிடுவது இன்றைய இலக்கியத் தேவையாகிறது. புலவர்களின் மைந்தர் சட்டத்தரணி நம. சிவப் பிரகாசம் அவர்கள் மகன் தந்தைக்காற்றும் பணியாக மட்டுமன் றிச் சைவத்தமிழ்ப் பணியாகவும் கருதி இதனைச் செய்கிருர், புலவரவர்களின் நூலுருப் பெருத ஏனைய படைப்புக்களையும் பதிப் பிக்க வேண்டியது இன்றைய தமிழீழவாழ்வுக்கு அவசியம் வேண் 1.ம்பாலது. ஈழத்துத் தமிழியல் துறைகளிற் பங்களிப்புச் செய்த வர்கள் தொடர்பான உயர்நிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இன்றைய சூழலில் இத்தகைய பதிப்பு முயற்சிகள் பரவலாக மேற்கொள்ளப் படுவதற்கு இந்நூற்பதிப்பு முயற்சி ஊக்கமளிக்கு மென நம்புகிமுேம்,

Page 8
6. இரண்டாம் பதிப்புக்கு ஏது
அன்று அறுபானண்டுகளுகு முன் ஓர் உருதிாோற்காரி; இன்று இன்னுமோர்மூறை அப் பெயரில் ஆண்டு நிலவுகின்றது. அப்பொழுது யான் பதினேழாண்டகவைப் பள்ளிக்கூட மாளுக்கன். எத்தை நமச்சிவாய எழில்நாமம்பூண்ட தந்தையாரின் படுக்கையைப் பண்பமைக்க யான் முனைந்தபொழுது தலையணையின்கீழ்ப் பலப்பல துண்டுகளில் அன்னரின் கை எழுத்துக் கவினமைந்த பாடல்கள் அரவணைத்தாற்போன்று தோன்றின. தோற்றிய பொருளைக் காப் பாற்றும் எண்ணம் எமக்கு எழுந்தது. ஊர்ப் பெயர்கள் பல, சீர்ப் பொலிவுடன் அமைந்தமை மேலும் உள்ளத்தை ஈர்க்கவே ஏந்தையா ரிடம் பொருள்புரிய விழைந்தேன். என்றுமில்லாச் செந்தமிழ் இன் பம் தெவிட்டியது. இவ்வமையம் தந்தையாரின் நண்பன் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள் வழமைபோல ஆங்கு இலக்கியப் பொழுது பயன்படுத்த வந்தனர். அவர்களுக்கு யான் கண்டெடுத்த கதையை விரித்துரைத்ததும் கவிஞர் அவற்றை ஒவ்வொன்முகப் படித்துக் களி பேருவகையுற்று, புதையல் கண்ட் புத்திரன் நீ என்று வாழ்த்தி, அரியதொரு பனுவல் இதனை யர் னே அச்சேற்றி வைப் பேன் என்று பல அறிஞர்களிடம் சாற்றுகவி பெற்றுத் தமது சுதேச நாட்டியத் திங்கள் இதழ் அச்சகத்தில் உருவாக்குவித்து உவந்தளித் தனர். பல ஆண்டுகளின் பின் ஆங்கில நூற்புலமையும் ஆய தமிழ் அறிவும் பொலிவுற்ற கல்வித் தலைமை அதிபதி முதுமாணி க. ச. அருணந்தி அவர்கள் இந் நூலை எந்தையாரிடம் பெற்றுச் சென்று மறு நாளே அப் பாக்கள் அனைத்தையும் மனனம் பண்ணியபடி சொன் னதும் பரப்பரைப் பண்டிதன் மகாலிங்கசிவம் அவர்களும் உலகியல் விளக்க ஆசிரியர் வெண்ணெய்க் கண்ணனரும் இதன் சீர்ப்பொலி வைப் புகழ்ந்ததும் கேட்டுப் பூரிப்படைந்தேனேயன்றி இதை மீண் டும் அச்சேற்ற நினைந்தேனில்லை. என்னை உலகியல் மயக்கமும் அரசி யல் அவாவும் என்க. அவையத்து முந்தியிருப்பச்செய்த அப்பனை மற ந்த பழிக்காளானேன். இப்பழியை எமக்குச் சுட்டிக் காட்டியவர் விரி வுரையாளர் முதுமாணி நா. சுப்பிரமணிய ஐயர் அவர்கள். அரசியல் அழுக்காற்றினின்றும் நீந்தி அறிவியற் கரையை அடைந்தேன். அமைந்தது இரண்டாம் பதிப்பு. இலக்கியகலாநிதி சண்டிதமாமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள். கலையுலகக் கதிர்ஒளி கலாநிதி சு. வித் தியானந்தன் அவர்கள், இலக்கிய இன்பாய்வாளர் “முதுமாணி க. சொக்கலிங்கம் (சொக்கன்) அவர்கள் இன்புற்று எழில்தவழ் முன் னுரை அன்புடன் வழங்கி ஆசி தந்தனர். விழித்தெழுந்தனன் யான். மேன்மையாளர் எந்தையாரது ஏனைய நூல்களை இனி வெளியிடுதல் என் கடனுய்விட்டது. ஆங்காலம் அன்றிஒன்றும் ஆகாதாம் அவ்வுண்மை நாங்காண மல்லேவி நாயகர் - தாம்காணும் உவர்ப்பெயரால் உட்பொருள் ஒர்விளக்கப் பொன்ாைலின் சீர்ப்பதிப்புச் சேர்த்தேன் தெளிந்து,
உருதிரோற்காரி, 1983. நமசிவப்பிரகாசம்

- «نهٔ சிவமயம்
ஊர்ப்பெயர் உட்பொருள் விளக்கம் .
essage-rosewer
விநாயக வணக்கம்
தென்னிலங்கா தீபந் திகழவட மாகாண
மன்னுார்ப் பெயர்பொருளான் மாண்படைய - நன்னயச்சொற் சேர்த்துக் கலித்துறையாய்ச் செப்பமல்லேத் தந்திமுக மூர்த்தியே நின்றருள்வாய் முன்,
அவையடிக்கம்
கற்றிலன்வாய்வந்தசொற்களைக்கண்டபடியடுக்கிச் சிற்றில்புனையுஞ்சிறரிலியாத்தவிச்செய்யுளினிற் குற்றந்தெரிக்கவரார்பெரியோர்குறைகொள்வர்மற்றேர் வற்றியவோலைக்கல்லாற்பச்சைக்கெங்ங்ண்வருமொலியே
ஆன்ருேருரைத்திட்டநூற்சாரந்தன்னையறிந்தளவி னன்றேர்ந்துரைத்ததல்லாற்புதிதாெ யான்றைநாட்டிலன்சீர் வான்ருேப்புகழார்தமிழ்ச்சொற்கெவர்பொருண்மட்டிடுவார் தேன்றேர்சுரும்பிற்பொருடேர்பவருஞ்சிலருளரே
நூல் தேஜனநிகர்சொல்லெழாலையன்னர் நசைதீர்த்துயிர் கொன் றுானைநூகர்தலிலாதுசங்கானையுறவுதெளிப் பாஜனியொரானைக்கோட்டைப்பழையானைப்பணிந்துமன ஆாணுழிறவடைந்தாற்கிட்டுங்கைவன்னியன்பதியே. (1)

Page 9
இ-ள் தேனை நிகர்சொல் ஏழாலை அன்னர் நசைதீர்த்து-தேனை நிகர்த்த சொல்லானது யாழின் இனியவோசைக்குச் சமான மாக விருக்கின்ற பெண்கள் மேற் பொருந்திய ஆசையை முற்ருக நீக்கி, உயிர்கொன்று ஊனை நுகர்தல் இல்லாது - பிராணிகளைக் கொலை செய்து மாமிசத்தைப் புசித்தலில்லாமல், சங்கான் ஐயுறவு தெளிப் பானை - சங்கைக் கையிலேந்தியிருக்கின்ற மகா விட்டுணு மூர்த்தி யுடைய சந்தேகத்தைத் தெளியும்படி செய்தவரும், ஒரு ஆனைக் கோட்டுஜ பழையானை - ஆனையின் ஒற்றைக்கொம்பையுடைய கட வுளும் பழையவருமாகிய விநாயகக்கடவுளை, பணிந்து - முன்வணங்கி மன ஆன இறவு அடைந்தால் - மனமென்கின்ற ஆனை யிறக்கப் படுதலை யடைந்தால், கிட்டுங் கை வன்னியன்பதி - அக்கினியைக் கையிலேந்தியிருக்கின்ற சிவபெருமானுடைய உலகம் சமீபிக்கும், எ - று
பொ-ரை. கொலை, காமம், புலாலுண்ணலிம்மூன்றினையும் விட் டுக் காரிய சித்தியின் பொருட்டு விநாயகக்கடவுளை வணங்கி மன மிறக்கப்பெற்ருல் சிவலோகஞ் சமீபிக்கும்.
ஏழாலை, சங்கான, ஆனைக்கோட்டை, பழை, ஆனையிறவு வன்னி ஆகிய ஆவர்ப்பெயர்கள் செய்யுளில் மறைந்து நிற்றல் காண்க
பாதகஞ் செய்தொல் புரத்தார் பதறப்பன் ஞகந்தொட்ட மாதகலானைத்துணைக்கொண்மல்லாகத்தர்வல்லுவெட்டி மீதமரந்தத்தனக்காறர்நட்பைவிழைகுவரோ வோதிமீசாலையராயப்பரந்தனையொட்டுவரே- (2)
இ-ள். பாதகஞ்செய் - பாதகத்தொழிலைச் செய்கின்ற, தொல் புரத்தார் பதற - பழைய முப்புரவாசிகள் நடுக்கமடை11, பன்நாகந் தொட்ட - சொல்லப்படுகின்ற மகாமேருமலையை வில்லாக வளைத்த, மாதகலான-உமாதேவியை விட்டு நீங்காதவராகிய சிவபெருமானை, துணைக்கொள்மல் ஆகத்தர் - துணையாகப் பற்றுகின்ற வலிய அகத்தை யுடைய பெரியோர்கள், வல்லுவெட்டி மீதமர் - சூதாடுகருவியைத் தோற்கடித்து வெறியினல் மேன்மையடைந்திருக்கின்ற, அந்தத் தனக்காறர் நட்பை - அந்தத் தனங்களையுடைய பெண்களது சிநே கத்தை, விழைகுவரோ - விரும்புவார்களோ, ஒதிமீசால் ஐயராய் - ஞானவுணர்ச்சி மேற்கொண்ட பெரியவர்களாய், அப்பர ந் தனையொட்டுவர் - அந்தப்பரம்பொருளை யணைவார்கள்.
பொ - ரை. சிவபெருமானுடையவருட்டுணையையுடையவர்கள் சிற்றின்பத்தை விரும்பார்கள். அப்பெரியோர்கள் ஞானவறிவுமேற் கொண்டு சிவபெருமானையணைவார்கள்.
(2)

தொல்புரம், பன்னகம், மாதகல், மல்லாகம் வல்லுவெட்டி,
மீசாலை, பரந்தன் ஆகிய இவ்வூர்ப் பெயர்கள் மறைந்து நிற்றல் காண்க.
விடத்தலைநேர்மறவன்புலத்தாரைவிடாதுதனங்
குடத்தனையாரிளவாலையில்வாழ்வுகுறைந்தழியுந் திடத்தினையுற்றறச்செம்பியன்பற்றுச்செல்வோர்சிதையிச் சடத்தினைக்கொண்டினியூராத்துறைதனைச்சார்குவரே. 3
இ - ள் விடத்தல்லைநேர் மறவன்புலத்தாரை விடாது - விஷங்க லந்தஇருளை நிகர்த்தமறத்தன்மை பொருத்திய பஞ்சப்புலன்களைத் தனித் த னி போகவிடாது, தனங்குடத்தனையார் இளவாலையில் வாழ்வு - தனங்கள் குடத்தையொத்திருக்கின்ற பெண்களது மிகுந்த இளமையிலே தொடங்கிய சுகவாழ்வானது, குறைந்து அழியுந் திடத் தினையுற்று - நாளடைவிற் குறைந்தழிந்து போகின்ற உண்மைத்திட த்தை நன்று தேர்ந்து, அறச்செம்பி அன்பற்று - பொருளாசையை முற்ருகதீக்கி, செல்வோர் - ஞானமார்க்கத்திலே நடக்கின்றவர்கள், சிதையிச் சடத்தினைக்கொண்டு - அழிந்துபோகின்ற இந்த உடம்பை எடுத்து, இனியூராத்துறைதனைச் சார்குவரே - இனிமேற் பிறந்து ஊராத்துறையாகிய மோட்சவீட்டையடைவார்கள், 6 T-g)!
பொ-ரை பெண்களது யெளவனபருவத்திலே பெற்ற இல்வாழ் வானது சடுதியிலழிந்து பின்னர் துன்பந் தருமாதலால் அவ்வுண்மை யை நன்கறிந்து முன்னரே புலன்களை யொரோவழிப்படுத்திப் பொ ருளாசையைநீக்கி ஞானமார்க்கத்தில் நடப்பவர்கள் இனிமேற் பிற வியெடுக்காத நிலையை யடைவார்கள்.
விடத்தற்றிவு - மறவன்புலம் - குடத்தனை - இளவாலை - செம்பி யன்பற்று - ஊராத்துறை ஆகிய இவ்வூர்ப்பெயர்கள் மறைந்து நிற் றல் காண்க.
மட்டுவிலான மடக்கிப்பரன்ருெண்டையாற்றின் மதக் கட்டுடையார்துணைவேண்டாநந்தாவிலைக்கண்டிடலாம் வட்டுறுவார்.ண்ணைதோய்வாரிற்றழ்த்திடின் வல்லைபறை கொட்டடிகேட்குமுன்னுவரங்காலர்கைக்கொள்ளுவரே. 4
இ-ள் மட்டுவில்லானைமடக்கி - கருப்பம் வில்லையுடைய மன்மதனை
யெதிர்த்து மடங்கும்படி செய்து, பரன் தொண்டை ஆற்றின். சிவதொண்டை அன்போடு செய்துவரின், மதக்கட்டு உடையார்
(3)

Page 10
துணைவேண்டாம் - மார்க்கவிதிகளும் அதைப் போதிக்கின்றவர்களு டைய துணையும் வேண்டியதில்லை. நந்தா இல்லைக் கண்டிடலாம் - கெடுதலில்லாக மோட்சவிட்டைக் காணலாம், வட்டுறுவார் சூதுக் கழகஞ்சென்று பயில்பவர்களும் , பண்ணை தோய்வாரில், மகளிர்கூட் டத்தி லாசையின்வழி அமிழ்ந்துகின்றவர்களும் போல. தாழ்த்திடின் சிவதொண்டு செய்யப் பின்போடுவர்களாயின், வல்லை - திடீரென முன்னவர் அங்காலர்-நீதியா ற்சிறந்த இயமதூதர்கள் முன்னக வரு வார்கள், கைக்கொள்ளுவர் - ஆன்மாவைக்கையேற்பார்கள் - பறை கொட்டடி கேட்கும் - மரணப்பறையடிக்குஞ் சத்தங்கேட்கும். எ-று.
டொ-ரை பெண்ணுசையை வெறுத்துச் சிவதொண்டு செய்துவ ரின் மார்க்கவிதி தழுவவேண்டியதில்லை மோட்சமடையலாம். அன் றிச் சிற்றின்பங்களிலமிழ்ந்திச் சிவதொண்டைப் பின்போட்டாற் சடுதியில் மரணம் வரும்.
மட்டுவில் - தொண்டைமானறு - கட்டுடை - நந்தாவில் - வட்டு க்கோட்டை - பண்ணை - வல்லை - கொட்டடி - ஆவரங்கால் ஆகிய இவ்வூர்ப்பெயர்கள் மறைந்து நிற்றல் காண்க,
முன்னி வினைபருத்தித்துறைமேவியமூளையர்தா மன்னரில்வாழ்விற்றனங்கிழப்பார் புலவஞ்சரைமெய் துன்னுலையிட்டுவறுத்தலை மேவிச்சுழிபுரம் போய்ப் பன்னுலையநணியத்வாம்புலத்திற்படிகுவரே. 5
இ+ள் முன் ஈவினைபருத்து - முற்பிறவியிலே செய்த நல்வினையதிக ரித்து, இத்துறை மேவிய - இந்தப் பூமியின்கண் பிறப்பெய்திய, மூளை யர் - பழைய மூளையையுடைய மகான்கள், ம ன்ன ர் இல்வாழ்வில்இல்லாச்சிரமத்திலகப்பட்டு நிலைபெறமாட்டார்கள், தனங்கிழப்பார் முயன்று திரவியந் தேடமாட்டார்கள். புலவஞ்சரை - பஞ்சப்புலன் களாகிய வஞ்சகர்களை, மெய்துன் ஆலையிட்டு-ஞானமென்கின்றவியந் கிாக்கிலிட்டு, வறுத்தலைமேவி-வறுத்து, சுழிபுரம் போய் - கோபத்திற் கிடமாகிய- இந்தவுடம்பு நீங்கி, பன் ஆலயம் நண்ணி-சொல்லப்படு கின்ற ஆன்மா சிவத்திலொடுங்கி, அத்துவ அம்புலத்திற்படிகுவர். இாண்டறக்கலத்தலாகிய அத்துவித வெளியையடைவார்கள் எ-று
பொ-ாை முற்பிறவியிலே செய்த புண்ணிய மேலீட்டையுடைய
வர்கள் பிரபஞ்சவாழ்க்கையிற் பொருந்தார்கள், அன்னவர் புலன் கஃாயவித்துச் சிவத்திலொடுங்கியத்துவித நிலையையடைவார்கள்
(4)

ஈவினை - பருத்தித்துறை - மூளாய் - மன்னர் - தனங்கிழப்பு - துன் குலை - வறுத்தலை - சுழிபுரம் - பன்ஞலை - அத்துவாம்புலம் ஆகிய இவ்வூர்ப் பெயர்கள் மறைந்துநிற்றல் காண்க.
நச்சியல்சொன்மவதாய்ச்சிகணட்பொடுநாடும்வட்டக் கச்சியையும் முலைத்தீவையுங்கண்டுங்கருதுவரோ மெச்சுவரோவினிப்புத்தூரை மேதியிலூ ரெழுவா னச்செழுவான்வரமுன் சங்காரத்தையையண்டனன்றே (6
இ - ள். நச்சியல்சொல் - விருப்பத்தையுண்டாக்குகின்ற சொற் களைப் பேசுகின்ற, மதவாய்ச்சிகள் - செருக்குப் பொருந்திய வாயை யுடைய பெண்களது, நட்பொடு - போலியன்புடனே, நாடும் வட் டக்கச்சியையும் முலைத்தீவையும் - விரும்பப்படுகின்ற வட்டமாகிய கச்சில் இயைத்திருக்கின்ற - அத்தன்மையால் உள்ளத்தை ஈர்க்கும் தனங்களினழிவையும், கண்டும் - அனுபவத்திற் கண்டிருந்தும், கருது வரோ மெச்சுவரோ இனிப்புத்தூரை - இனிமேலொரு புதியவுடம் பெடுத்துப் பிறத்தலை மெச்சி நினைப்பார்களோ, மேதியில் ஊர்எழு வான் - எருமைக்கடாவிலிவருகின்ற எழுவாயுதத்தையுடைய இய மன், அச்செழுவான் வரமுன் - பயங்கரமுண்டாகும்படி வருகிற தற்கு முன்னரே, சங்காரத்து ஐயை அண்டல் நன்று - சங்கார கர்த்தாவாகிய சிவபெருமான வழிபட்டு அணைதல் நன்மை யுடைத்து. GT — gol.
பொ-ரை. பெண்கள் போலியன்பெவ்வாருே அவ்வாறவர்கள் மேனியழகுமழிந்துபோதலைக் கண்டு இனிப் பிறவியெடுக்கப் பெரி யோர்கள்விரும்பமாட்டார்கள். ஆகையால் மரணம் வருவதற்கு முன் சிவபெருமானுடைய அருளையணதல் நன்மையுடைத்து.
மதவாச்சி, வட்டக்கச்சி முல்லைத்தீவு, புத்தூர், ஊரெழு, அச்செழு, சங்கரத்தை, ஆகிய இவ்வூர்ப்பெயர்கள் மறைந்துநிற்றல் காண்க. எ - று.
அணைவியையாச்சித்தங்கேணியர்பண்டத்தரிப்புடனே துணைவியைநீங்கிலென்கந்தரவோடையிற்சென்றிருந்தென் கணையலைகாவியுடுப்பிட்டியாருங்கரவெட்டிவந் திணையடிசூடினுங்கோப்பாயைச்சேர்வதெளிதலவே. (7)
இ - ள். அணைவு இயையா சித்தங்கேணியர் - நிலைப்படுகல் பொ ருந்தாத மனமானது கேணியின்நீர்போற் கலங்கிக்கொண்டிருப்பவர்
(5)

Page 11
கள், பண்டத்து அரிப்புடனே - பொருளில்ஆசையாகிய குற்றத்து டனே, துணைவியை நீங்கில்என் - வாழ்க்கைத் துணையாகிய மனையா ளைத் துறந்திருந்தாலென்ன. கந்தரம் ஒடையிற்சென்றிருந்தென்-மலை முரஞ்சுகளிலும் நீரோடைகளிலும் போய்த் தனிமையாயிருந்தாலு மென்ன,கணையலை-கண்ணைப்பறிக்கின்ற,காவிஉடுப்பிட்டு-காவிதோய் க்கப்பட்ட உடையையணிந்து, யாரும் கரவுஎட்டிவந்துஇணையடிசூடி னும் - பார்க்கின்ற எவர்களும் கள்ளவேஷதாரியென்கிற சந்தேகம் நீங்கி வந்து அவருடைய இர ண் டு பாதங்களையுஞ் சிரமேற்குடி வணங்கினுலும், கோப்பாய் ஐ சேர்வது எளிதுஅல - அவர்கள் இடப வாகனத்திலிவர்கின்ற சிவபெருமானையடைவது இலகுவன்று எ-று
பொ-ரை அடியார்க்கெளியராகிய சிவபிரானைத் தவவேடத்தில் மறைந்து மாய்மாலம்பண்ணுஞ் சந்நியாசிகள் ஒருபோதுங் காண மாட்டார்கள். ... ."
சித்தங்கேணி - பண்டத்தரிப்பு - துணைவி - கந்தரவோடை - உடுப் பிட்டி - கரவெட்டி - கோப்பாய் ஆகிய இவ்வூர்ப்பெயர்கள் மறைந்து நிற்றல் காண்க.
நாரந்தனையுடையான் பூநகரியினண்ணுடையான் றேருஞ்சுன்னகமுடையானைச்சாவகச்சேரிதுரீ வேர்வந்தளவெட்டிபச்சிலைட் பள்ளிவிளாங்குளம்போய்ச் சேரும்படிசெலக்காரைக்காலாள்கையிற்சிக்கினனே. (8)
இ-ள் நாரந்தனை உடையான் - திருப்பாற்சமுத்திரத்தையுடைய மகாவிட்டுணுவும், பூநகரியில் நண்ணுடையான்- தாமாைப் பூவாகிய கோயிலையுடைய பிரமதேவரும், தேரும் சுன்னகம் உடையானஆராயப்படுகின்ற வெள்ளியங்கைலாசமலையைக் கோயிலாகவுடைய சிவபிரானை, சாவகச்சேரி துரீ - மரணத்தை யகத்தேகொண்டிருக் கின்ற ஊர்களெவ்விடத்துந் தேடி, வேர் வந்து அளவெட்டி - எல்லை யெட்டியதனிமித்தம் வேர்வைகொண்டு களைத்து, பச்சிலைப்பள்ளி விள் ஆங் குளம்போய்ச் சேரும்படி செல்ல மகாவிட்டுணுவும் பிரதம தேவரும் முறையே பசிய ஆலிலைச்சயனத்தையும் பூக்களலருகின்ற தாமரைவாவியையுமடைய, காரைக்காலாள்கையில் சிக்கினன்-அடி யார்க்கெளியணுகிய சிவபெருமான் முதிர்ந்த அன்பையுடைய காரைக் காலம்மையார் கையிற் சிக்கி அப் பெருமாட்டிக்குத் தெரிசனங் கொடுத்தார். 6T-g)
பொ-ரை கைலாசபதியாகிய சிவபெருமான் பத்திவலையில் அகப் படுவாரன்றி அகங்காரமுடையார் கண்களுக்குத் தோற்றமாட்டார்.
(6)

நாரந்தன பூநகரி - சுன்னகம் - சாவகச்சேரி - அளவெட்டி - பச்சி லைப்பள்ளி - விளாங்குளம் - காரைக்கால் ஆகிய இவ்வூர்ப்பெயர்கள் மறைந்து நிற்றல் காண்க,
தையிட் டியைவம்பர்தாக்கவெறிசரசாலையர்தா மையிட்டிழுக்கமயிலையன்னரின்மயங்கிநிதம்
பையுற்றடுங்கொடிகாமத்தழுந்திப்பதமிழந்தா லுய்வுற்றஞானவிளைவேலிசேர்வதுண்டோவினியே. (9)
இ-ள் தையிட்டு இயை வம்பர்தாக்க-தையலிடப்பட்டு அளவாகப் பொருந்தியிருக்கின்ற கச்சையுடைய தனங்கள் மனத்தைத்தாக்க: எறிசரசாலையர் தாம் மையிட்டு இழுக்க - எறியப்படுகின்ற பானங் களடங்கியிருக்கின்ற கூடமாகிய கண்கள் மயங்கி இழுக்க, மயிலையன் ஞரின் மயங்கி - மயிலஞ்சாயலையுடைய பெண்களிடத்தில் மயக்க முற்று, நிதம்பையுற்று - எப்பொழுதும் வருந்தி, அடுங்கொடிகாமத் தழுந்தி - சுடுகின்ற கொடிய காமாக்கினியிலமிழ்ந்தி, பதமிழந்தால்காலத்தைக்கழித்து விட்டால், உய்வுற்றஞானம் விளைவேலிகாண்பதுஉய்தலைச்செய்கின்ற ஞானமுண்டாகின்ற அந்த ஊரைக்காணுதல், உண்டோ இனி - இனிமேலுண்டோ. Gr
பொ-ரை பெண்களின் சிற்றின்பத்தில் முழுக்காலத்தையுமிழந்து விட்டால் ஞானவுணர்ச்சியடையக் கால ம் இனி யெப்பொழுது வரும்.
தையிட்டி - சரசாலை மயிலிட்டி - கொடிகாமம்-விளைவேலி ஆகிய இவ்வூர்ப்பெயர்கள் மறைந்து நிற்றல் காண்க.
நற்கங்குவேலியையுங்களகோவளர்நட்பவமாங் கச்சங்குயவர்பண்டித்தலையேறுவர்கட்டுவன்னக் குச்சமராடர்கொள்வார்கொக்குவில்பற்றைமேனிதிரைந் தச்சங்களை கொளக்கைதடிகொள்ளுமறிந்ததுண்டே (10)
இ- ள். நற்சங்கு வேல்இயையும்- நன்கிதான சங்கையும் வேற் படையையும் முறையேநிகர்த்த, களகோவளர் நட்பு அவமாம். கழுத் துங்கண்ணுமாகிய வளத்தையுடைய பெண்கள் நேசமீற்றிற் கேடாகமுடியும், கச்சங்குயவர்- கச்சணியப் பெற்றவழகியதனங்கள் பண்டித்தலையேறுவர்- தளர்ந்து நேரே வயிற்றின்மேற்சரியும், கட்டு வன்னக்குச்சு அம்மராடர்- கட்டதிபடுகின்றவழகிய குச்சுகளனி யப்பெற்ற மென்மையானமயிர்கள், கொள்வார் கொக்குவில். கொக்
(7)

Page 12
குப்பட்சியின் நிறத்தை யடையும். பற்று ஐ மேனி திரைந்து-பற்றப் படுவதாகியவழகிய மேனி தோல்சுருங்குதலடைந்து, அச்சங்களை கொள்ள-பயங்கரத்தையும் களைப்பையுமடைய, கைதடிகொள்ளும்கைகள் ஊன்றுகோலைப்பிடிக்கும். அறிந்ததுஉண்டு. இது யாவராலு மனுபவத்திலறிந்துள்ளது. எ - று.
ப்ொ- ரை. பெரியோர்களனுபவத்திற் கூறியபடி பெண்களு டையமேனியழகு முதல் எல்லாச் செளகரியங்களுஞ் சின்னுளிலழிந்து அவர்கணட்பும் மறுமைச் சுகத்தேட்டத்திற்குத் தடையாயிருந்து மிக்க துன்பத்தையுண்டாக்கும்.
சங்குவேலி- களபூமி. கோவளம்- கச்சாய் - பண்டித்தலைச்சி. கட்டுவன். கொக்குவில்- பற்றைமேனி- கைதடி ஆகிய இவ்வூர்ப் பெயர்கள் மறைந்து நிற்றல் காண்க.
தாவப்பலாலிகொணிர்வேலியார்படிதாவடியான் மாவைப்புரிமுகமாலயன்றேடும்வயவையன்பிற் போயிட்டியையுறுவார்க்குநல்லூரைப்புரிவன்மண்டை தீவைத்தெரிக்குமுன்னேயொட்டகப்புலந்தீத்துய்யவே.(11)
இ- ள். தாவுஅபல் ஆலிகொள்- பாய்கின்ற பலபாகங்களிலு மிருந்து வருகின்ற மழைநீரைத் தன்னுளடக்குகின்ற, நீர்வேலி ஆர் படி தரவு அடியான்- சமுத்திரவேலியாற்சூழப்பட்ட பெரிய பூமியை போரடியாக அளக்கின்ற பாதத்தையுடையவராகிய, பாவைப்புரி முகமால்- மகாலக்குமியை விரும்புகின்ற முகப்பொலிவையுடைய விட்டுணுவும், அயன்- பிரமதேவரும், தேடும்- தேடுகின்ற, வயஜ. வலி மை யை யு  ைடய சிவ பிரான், அ ன் பி ற் போய் மனப்பத்தியுடனேசென்று இட்டுஇயையுறுனர்க்கு- சிவதருமங்க &ளச் செய்து கீர்த்தியையடைந்திருப்பவர்களுக்கு, நல்லூரைப்புரி வன். சுவர்க்கலோகத்தைக் கொடுக்க விரும்புவர், மண்டைதீவைத்து எரிக்கமுன்- இந்த மண்டையை அக்கினியிட்டெரிப்பதற்கு முன் னரே, அகம்-மனமே, புலந்தீத்து உய்ய- பஞ்சப்புலன்களையவித் துய்ந்தீடேறும் பொருட்டு, ஒட்டு "அருளைவேண்டிப் பெருமானையணை பக்கடவாய், 6t-g
பொ-ரை மகாவிட்டுணுவும் பிரமதேவருந் தேடுகின்ற சிவ பிரான், பக்தியுடன் சிவதருமங்களைச் செய்பவர்களுக்குச் சுவர்க் கத்தையுண்டாக்குவார், ஆகையால் மனமே மரணம்வருவதற்கு முன் புலன்களையடக்கிப் புண்ணியங்களைச் செய்துய்ந்து பிழைப்பா lumë,
(8)

பலாலி- நீர்வேலி- தாவடி மாவிட்டபுரம்- முகமாலை. aufr விளான்- போயிட்டி- நல்லூர்- மண்டைதீவு. ஒட்டகப்புலம் ஆகிய இவ்வூர்ப் பெயர்கள் மறைந்து நிற்றல் காண்க.
வடுமானிப்பாயவராலியனுேக்கியர் மாயவலைப் படுவேனவாலியரியாலைப்பள்ளியன்பற்றுடனிந் திடுமாத்தனயனைக்கோண்டாவிலோடுமிறந் தொழியச் சுடுவானுடுவிலுடையான் சடையற்றுதிக்கிலனே. (12)
இ- ள். வடுமானி. மாம்பிஞ்சின் பிளவைநிகர்த்த, பாய் அவ் வராலியல் நோக்கியர் - பாய்கின்ற வரால் மற்சத்தினியல்பு கொண்ட கண்களையுடைய பெண்களது. மாயவலைப்படுவேன். மாய் கையாகிய வலையிலகப்படுவேன். அவ்வாலியரி- அந்த வாலியென்ப வனுடைய பகைவனும், ஆல் ஐப்பள்ளியன் - ஆலிலையாகியவழகிய சயனத்தையுடையனுமாகிய மகாவிட்டுணு, பற்றுடன் ஈந்திடும் மா தனயனை- அன்புடனே பெற்ற அழகுபொருந்திய புத்திரனகிய மன்மதன, கோண்தாவில்லோடும் - வளைந்த குற்றம்பொருந்திய கருப்பம்வில்லுடனே, இறந்தொழியச் சுடுவான்- இறந்தழியும்படி நெற்றிக்கண்ணக்கிணியாற்றகிக்கின்றவரும், உடு இல் உடையான் சடையன் - நட்சத்திரங்களை மனைவியர்களாசுவுடைய சந்திரனை யணிந்த சடையனுமாசிய சிவபெருமான, துதிக்கிலன்- வணங்கு கின்றேனல்லன். 6T- gpl.
பெர். ரை: பெண்களதாசைவலையிற் பட்டலைகின்றேனேயன்றி மன்மதனையெரித்து நீருக்கிய பரமபதியாகிய சிவபெருமானைத் துதிக்கின்றேனல்லேன். அந்தோவென் கன்மமிருந்தபடியென்னை,
மானிப்பாய். அராலி. நவாலி. அரியாலே- மாத்தனை- கோண் டாவில்- உடுவில் ஆகிய இவ்வூர்ப்பெயர்கள் மறைந்துநிற்றல் காண்க
தெருமந்துவினந்தனபுருவக்களச்சீரணியா ரொருதந்துறளிடைக்காடுநெஞ்சேயொத்துக்கரணவாய் அருமந்தவேலைவிட்டாயச்சுவ்ேலிகடந்தெல்லிபோல் வருமந்தகன்கையுறிற்கைச்சதீவினைமற்றுறுமே. (13)
இ-ள் வில் நீந்து அன்ன புருவக்களச் சீரணியார் - வில்லையுஞ் சங்கையும் முறையே நிகர்த்த புருவத்தையுங் கழுத்தையுமுடைய வழகிய வாபரணங்களனியும் பெண்களது. ஒரு தந்து உறளி மைக்கும் ஒன்முகிய நூலைநிகர்த்த இடைக்கு தெருமந்து ஆடும்
(9)

Page 13
நெஞ்சே - சுழற்சியடைந்தாடுகின்ற மனமே, ஒத்துக்கரணவாய் - மன முதலியவந்தக் கரணங்களும் மெய் முதலிய பஞ்சப்பொறிகளுமொ ருங்கு கூடி, அரு ம ந் த வேலே விட்டாய் - அரியமருந்தன்ன சிவ தொண்டுகளைச் செய்யாது விட்டன, அச்சுவேலி கடந்து - ஆன் மாவானது வேலிபோல விருக்கின்றவிந்தவுடம்பைவிட்டு நீங்கி - எல் லிபோல்வரும் . இருளுக்குச் சமானமாகவருகின்ற, அந்தகன் கையு றில் - இயமனுடையகையில் அகப்பட்டால், கைச்சதீவினையுறும். அந்தவெமனுடைய கசப்பாகிய தீய தண்டனைகள் வந்தடையும்.
6T-g
பொ-ரை அந்தக்கரணங்களும் புலன்களு மொருவழிப்பட்டரும ருந்தன்ன சிவ தொண்டுகளைச் செய்யாது பெண்ணுசையாற் சுழன்று திரிகின்ற பேய்மனமே. நீ யமனுடைய பட்டினத்திற்குச் சென் ரு லங்கே அந்த யமன் மிகக் கசப்பாகிய கொடிய தண்டனையைச் செயவான்.
மந்துவில்-சீரணி - இடைக்காடு - கரணவாய் - அச்சுவேலி - தெல் லிப்பழை - கச்சைதீவு ஆகிய இவ்வூர்ப்பெயர்கள் மறைந்து நிற்றல்
காண்க.
கண்டிக்குநேர்சொற்கொழும்புத்துறைவஞ்சக்கட்செவிநெ.
சுண்டிக்கூழியிலையன்னுர்தம்பாலையுவந்துமன (ஞ்) மண்டிப்பரந்துசுடும்வீமன்காமவெவ்வாளியிற்பட் டண்டத்தனையுங்கைவிட்டிருபாலையுமற்றதுவே. (14)
இள் சுண்டு இக்கு நேர்சொல்-கற்கண்டையும் கரும்பையும்நிகர்த் தசொல்லையும், கொழும்புற்று உறைவஞ்சக் கட்செவிநெஞ்சு - கொ ழுத்தபுற்றில் வாசஞ்செய்கின்ற வஞ்சகம் பொருந்திய நாகத்தின் மனத்தையுமுடையராய், உண்டிக்குழி போசனங்களையடக்குகின்ற உதரமானது, இலையன்னர்தம் - ஆலிலைக்குச் சமானமாகவிருக்கின்ற பெண்களது, பாலை - பக்கத்தை, உவந்து - விரும்பி, மனம் - மனமா னது, மண்டிப் பரந்துசுடும் - செறிந்து பரவிச் சுடுகின்ற, வீமன்காம வெவ்வாளியிற்பட்டு-புட்பங்களாற் பொருந்திய கொடிய காமபாண த்திற் பட்டு, அண்டத்தனையுங் கைவிட்டு - அண்டகர்த்தாவாகிய சிவத்தையுங்கைவிட்டு, இருபாலையும் அற்றது-இம்மை மறுமையாகிய இருகண்களையுமிழந்து விட்டது. 67
பொடரை நெஞ்சிலே நஞ்சைவைத்து வெளியிலினியசொற்களைப் பேசுகின்ற பெண்கள் சற்றின்பத்திலாழ்ந்து நோயும் வறுமையும
(10)

டைந்து இம்மைச் சுகத்தையுமிழந்து அத்தடைகளினற் சிவ பத் தி "செய்யாது மறுமைச்சுகத்தையுமிழந்து விட்டதஞ்ஞான நிறைநத
மனமானது. .
கண்டி - கொழும்புத்துறை - சுண்டிக்குழி - தம்பாலுை வீமன்காமம் இருபாலை ஆகிய இவ்வூர்ப்பெயர்கள் மறைந்து நிற்றல் காண்க
அக்காரையூர்சக்கிரிவாழ்வுமந்தப்புரத்தொடவை மிக்கார்ந்துதேசண்டிருப்பாய்நவக்கிரிமேயதென மைக்காருறைமனைவண்ணுர்நற்பண்னைவளமுங்கள்ளி யக்காட்டினளுறவும்வேண்டிலர்மிக்கறிந்தவரே. (15)
இ-ள் அக்காரை ஊர் சக்கிரிவாழ்வும் - மேகங்களை வாகனமாகக் கொண்டிவருகின்ற இந்திரனுடையவாழ்வையும். அந்தப்புரத்தோடு அவைமிக்கார்ந்து - அத்தாணி மண்டபங்களுடன் பலவித சபைகள் நிறைந்து, தேசு அண்டு இருப்பாய் - அழகுநிறைந்த தானமாய், நவ க்கிரி மேயதென - ஒரு நூதனமான மலையிருக்கின்றதென எண் ணத்தக்கதாக, மைக்காருறைமனை - கரிய மேகங்கள் படிகின்றவுன் னதமான மாளிகைகளையும், வண்ணுர்நற் பண்ணைவளமும் - அழகிய நெல்வயல் முதலியவேனைய வளங்களையும், கள்ளியங்காட்டினளுற வும் - பாலைக்கிழத்தியாகிய வீரலக்குமியினுடைய நட்பும், வேண்டி லர் மிக்கறிந்தவர் - முற்றக்கற்ற பெரியோர்கள் விரும்பமாட்டார் கள், 6Tag!
பொ-ரை மேலாகிய நால் கற்றடங்கிய பெரியோர்கள் மோட்ச தாகமுற்றிருப்பதன்றித் தேவேந்திர பாக்கியத்கையாவது கூடகோ புர மாடமாளிகைகளையாவது வயல் முதலிய வேனையவளங்களையா வது வீரலக்குமியின் நட்பையாவது விரும்பமாட்டார்கள்.
காரைதீவு - சண்டிருப்பாப் - நவக்கிரி - வண்ணுர்பண்ணை - கள்ளி யங்காடு ஆகிய இவ்வூர்ப்பெயர்கள் மறைந்து நிற்றல் காண்க. சிறுப்பிட்டிநேர்தனச்செம்மணியார்சித்திரமொழியா னிறுப்புற்றநேயநிகளத்துரும்பராயச்சிறுநூல் விருப்புற்றுநித்தம்பயில்வேன்சில்லாலையமேவினுநெஞ்
சொருப்பட்டுறேனெனக்குண்டோசுதுமலைக்கேகுவதே(16)
இ-ள் சிறுப்பிட்டி நேர்தனச் செம்மணியார் - சிறுகுன்றைநிகர்த்த தனங்களின்மேல்மாணிக்கரத்தினமாலையணிந்திருக்கின்றபெண்களது
(11)

Page 14
சித்திரமொழியால் - அழகாகப்பேசுகின்ற இனிய வசனங்கள்ால், நிறுப்புற்ற இக்தன்மையரிவரென்று நிறுக்கப்பட்ட, நேயநிகளற் துரும்பர்- காமாசையாகிய விலங்கிடப்பட்ட சிற்றறிவுடையோர், ஆயச் சிறு நூல் - ஆராய்கின்ற சிற்றின்பநூல்களை, விருப்புற்று நித் தம் பயில்வேன் . ஆசைகொண்டனுதினமும் படிப்பேன். சில்லாலய ம்ேவினும் - சில தேவாலயங்களுக்குச் சென்ருலும், நெஞ்சொருப் பட்டு உறேன் - மனமொருப்பட்டொருகணமாவது சிவத்தியானத் திலிருக்கமாட்டேன், எனக்கு - இத்தன்மையுடையவெனக்கு, உண் டோ சுதுமலைக் கேகுவதே. கயிலாச மலைக்கேகும் பேறுகிடைக் குமோ, எ - று,
பொ. ரை. பெண்களது நாகரிகமான பேச்சலங்காரத்தி லெடு பட்டு அவர்களதாசை விலங்கிலகப்பட்ட புல்லர்கள் படிக்குஞ் சிற் றின்பநூல்களை விரும்பிப் படிப்பேனேயன்றிச் சிவாலயஞ்சென்று மனமடங்கி அரைக்கணமாவது சிவத்தியானத்திலிருக்க விரும்ப மாட்டேன். அத்தகையவெனக்குக் கயிலாசத்துக்கேகும் பேறு கிடைப்பதெவ்வழி.
சிறுப்பிட்டி- செம்மணி- சித்திரமொழி. உரும்பராய். சில்லாலை, சுதுமலை ஆகிய இவ்வூர்ப்பெயர்கள் மறைந்துநிற்றல் காண்க
அந்நாயன்மார்கட்டணிய ாரங்கீரிமலையரவம் முன்னுள்வழுதிபிரம்பூறணிபுன்னைமுன்னிணைவிற் றன் ஞலடியணிகாங்கேயன்றந்தையைத்தாழ்மனமே பொன்னலையன்றன்றிருவடிசேர்நிலைபுல்லுதற்கே, (17)
இ- ள் அ நாயன் மார்கட்டு அணி ஆரம். அந்தத் திருஞான சம்பந்தமூர்த்தி முதலிய நாயன்மார்கள் கட்டுகின்ற தேவார திரு வாசகங்களாகியவழகிய ஆரத்தையும், கீரிமலையரவம் - கீரிகளையெ திர்க்கின்ற சுபாவத்தையுடைய சர்ப்பத்தையும், முன்னுள் வழுதி பிரம்பு ஊறு- முன்னுளையிலே பாண்டியனுடைய பிரம்படியினுலா கிய காயத்தையும், அணிபுன்னை- அழகிய புன்னை மலரையும், முன் இணைவில் தன்னல்அடி - முன்னகவிணைக்கப்படுகின்ற வில்லால் அருச் சுனனடித்த அடியையும், அணி- அணிந்திருக்கின்ற, காங்கேசன் துறையை- சுப்பிரமணியக்கடவுள் பிதாவாகிய சிவபெருமானை, தாழ்மணமே- மனமே தாழ்ந்து வணங்கக்கடவாய், பொன் ஆலயன் தள் திருவடி சேர்நிலை புல்லுதற்கு- கனகசபையில் வீற்றிருக்கும் நடராசப் பெருமானது திருவடியை யடைகின்ற நிலையையனை assbC5, T-g
(12)

பொ - ரை விருப்பு வெறுப்பின்றி நாயன்மார் சாத்துசின்ற தேவார திருவாசகப் பாமாலையையும் பிரம்படி வில்லடியையும் குற். றங்குணம் நோக்காது சர்ப்பத்தையும் புன்னை மலரையுமன்பின் பொருட்டு ஏற்றங்கீகரிக்கும் நடராசப் பெருமானது பாதத்தை யடைகின்ற நிலையையடைதற்கு அவருடைய அருளைவேண்டிப்
பத்தியுடனவரை வணங்குவாயாக.
நாயன்மார்கட்டு - கீரிமலை- ஊறணி. புன்னலைக்கட்டுவன். இணுவில்- காங்கேயன்துறை- பொன்னலை. திருவடிநிலை ஆகிய இவ்வூர்ப்பெயர்கள் மறைந்து நிற்றல் காண்க.
பொன்னைப்புகழ்திருநெல்வேலியில்லநற்புத்திரை மின்னற்பலத்தியடியலையென்னவிலகவிட்டு முன்னைத்தவவலிகொண்டவ்வல்வாய்வினைமுட்டறுத்துத்
தன்னையறிந்தவர்ச்சேர்ந்தான்களநஞ்சத்தற்பரனே. (18)
இ- ள். பொன்னை புகழ்திரு நெல்வேலி இல்லம் நற்புத்திரரை. பொருளையும் புகழ்பொருந்திய வழகிய நெல்வயல்களுள்ள ஊரையும் மனைவியையும் நல்ல புத்திரரையும், மின்னல் பல் அத்தி அடி அலை யென்ன. மின்னலும் பலவாகிய சமுத்திரத் திரைகளும்போலழிந்து போமென்ற உண்மையைறிந்து, விலகவிட்டு- நீக்கிவிட்டு, முன்னோத் தவவலிகொண்டு- முற்பிறப்பிற்செய்த தபோபலத்தினல், அ அல் வாய் வினைமுட்டு அறுத்து- அந்த இருள்மயமாகிய பாசபந்தத்தை அறப்பெற்று, தன்னையறிந்தவர்-தன்னையறிதலாகிய ஞானநிலையை அடைந்த பெரியோர்களை, சேர்ந்தான் களநஞ்சத்தற்பரன். நஞ்சணி கண்டராகிய சிவபெருமான் சேர்ந்திருக்கின்றர் எ - று.
பொ- ரை. பொன், மண், பெண், புத்திரராகிய பந்தங்களை அழிவுள்ளவைகளென விட்டு முற்றபோபலத்தினுற் பாசநீக்க மடைந்து தன்னையறிதலாகிய ஞானநிலையையறிந்தவர்களைச் சிவ பெருமான் சேர்ந்திருக்கிருர்,
திருநெல்வேலி- அத்தியடி அல்வாய்- தன்னை- சேர்ந்தான்குளம் ஆகிய இவ்வூர்ப் பெயர்கள் மறைந்து நிற்றல் காண்வ
மாகயப்பிட்டியைநேரந்தகன்வந்துவாவெனின்மே லேகுவங்காலையென்றணுவலங்குழியிட்டுதைக்கும் போகவென்றலந்தமாதோட்டத்தாரெமைப்போற்றிடுவார் சாகமுளுந்தர்மஞ்செய்திருந்தாற்பயஞ்சற்றிலையே. (19)
(13)

Page 15
இ- ள். மாகயப்பிட்டியை நேர் அந்தகன். பெரிய யானைக்கூட் டத்தை,நிகர்த்த யமன், வந்துவாவெனில்- சடுதியாக இரவில்வந்து வாவென்று கேட்டால், மேல் ஏகுவம் காலையென்றல்- கொஞ்சந் தாமதித்துக் காலைக்குப் போவோமையாவென்று கேட்டால், நாவ லம் குழியிட்டு உதைக்கும்- நாவல்லமையைக் குழிபண்ணியுதைப் பான், போகவென்றல். ஒருவாறு பயந்து போகநினைத்தாலோ, அந்தமா தோட் டத் து- அந்தப் பெரிய யமலோகக்காணியில், ஆர் எமைப் போற்றிடுவார். எமக்குதவிபண்ணிப் பாதுகாக்க யாரிருக்கிறர்கள், ஐயோ! சாகமுன்- மரணம் வருவதற்குமுன், ஆந்தர்மஞ் செய்திருந்தால். தங்களாலியன்ற தருமங்களைச் செய்தி ருந்தால், பயஞ் சற்றிலை- கொஞ்சமாவது மரணத்திற்குப் பயப்பட வேண்டியதில்லை, , எ- று
பொ. ரை. சீவியகாலத்திலே யியன்றளவு சிவதருமங்களைச் செய்து கொண்டால் மரணம் எக்காலத்திலாவ தெவ்விடத்திலாவது வந்தாலும் பயப்படவேண்டியதில்லை. S S S S q
மாகயப்பிட்டி- வங்காலை- நாவற்குழி- மாதோட்டம் இல்லுர்ப் பெயர்கள் மறைந்து நிற்றல் காண்க.
கரம்பொனிட்டாலலமாமாங்குளங்கொண்டுகச்சமர்பூங் குரும்பையிட்டீவளலாய்நசைகொள்ளவ்வெள்ளப்பரவை திரும்பவொட்டாதாழ்ப்பர்வேசியர்சேர்வரிதேகரையூர் பெருந்துறையென்றன்பர்பேசாலையவருட்பேறருளே (20)
இ- ள் கரம்பொன் இட்டால் அலமாம் - கைநிறையப் பொருள் கொடுத்தாலது போதுமாம், ஆங்கு உளங்கொண்டு. அவ்விடத்தி லேயே மனம்பொருந்தி, கச்சமர் பூங்குரும்பை இட்டு- கச்சின்க ணமர்ந்திருக்கின்ற குரும்பைநிகர்த்த வழகிய தனங்களை ஈந்து, வள் ளலாய் வரையாது கொடுக்கின்ற வள்ளலென்று சொல்லும்படி மாய்மாலம்பண்ணி, நசைகொள்ளவ் வெள்ளப்பரவை- காமக்கடலி னுள், திரும்பவொட்டாது ஆழ்ப்பர் வேசியர். மீளவிடாது வேசிப் பெண்க ளமிழ்த்துவர், சேர்வரிது காையூர். மீண்டு கரையேறுவத ரிது, பெருந்துறையென்று அன்பர் பேசு ஆலய- பிறவிச்சமுத்திரத்தி லாழ்ந்துகிடக்கும் சீவர்கள் கரையேறியடையுந் துறையென்று சிவ தொண்டர்கள் சொல்லுந் திருப்பெருந்துறையிற் கோயில்கொண்ட ருளிய பரம்பொருளே, அருட்பேறு அருள்- அருளாகிய பெறுபேற் றைத் தந்திரட்சியும், 6Ꭲ- Ᏸul
(14)

பொ. ரை வேசிப்பெண்கள் பொன்னையும் வாங்கிக்கொண் பறின்ப சாகரத்தில் மீள்ாவண்ணமாழ்த்திவிடுவார்கள். திருப்” ருந்துறையிலெழுந்தருளியிருக்கும் பரம்பொருளே அப்பெண்கள் பாய்கையி லகப்படாவண்ணமருள்தந்திரட்சியும்.
கரம்பொன்- மாங்குளம்- குரும்பையிட்டி- வளலாய்-வெள்ளப் பரவை. கரையூர். பேசாலை ஆகிய இவ்வூர்ப்பெயர்கள் மறைந்து நிற்றல் காண்க
மருதயினுமடமாதுலனஞ்சச்செய்மால்வணங்கி யுருகிவிள்ளாநின்றமாலையன் விண்டனியூறடையப் பொருதகுராபத்தைபூணக்கை வேலணைசெட்டிக்குளம் . பெருகுமன்பானந்தச்சம்புத்துறையணைபேறரிதே (21)
இ- ள். மடமா துலன் அஞ்ச மருதை இன்னசெய்- மடமை பொருந்திய மாமனுகிய கஞ்சன் அஞ்சும்படி மருதமரத்துக்குத் தீங்கு செய்த, மால் வணங்கி- விட்டுணுபகவான் வணக்கஞ்செய்து, உருகி விள்ளாநின்ற மாலையன்-மனமுருகிச் சொல்கின்ற பாமாலையையுடை யரும், விண்தனி யூறடைய - தேவலோகமானதளவில்லாத துன்பத் பத்தையடைய, பொருதகுர் ஆபத்தைபூண- போரைச்செய்த சூர ப்ன்மன் ஆபத்தையடைய, கைவேலணை- தமது திருக்கரத்தில் வேற் படையை எடுக்கின்ற, செட்டிக்கு- கந்தசுவாமிக்கு, உள்ளம் பெருகு மன்பான். இருதயத்தில் நிறைந்துவழியும் அன்பிற்கிடமாயுள்ளவரு மாகிய, அந்தச் சம்புத்துறையணை பேறரிது - அந்தச் சிவபெருமானு டைய துறையணைகின்ற நன்மை யரிதினுமரிதாகும் எ- று
பொ. ரை. முத்தியின்பொருட்டு மகாவிட்டுணு வணங்கிப் பாமாலையைச் சூட்டுகின்ற சிவபெருமானது பதவியையடைவது சிற்றறிவுஞ் சிறுதொழிலுமுடைய எம்மனேர்க்கு அரிதினுமரிதாகும்,
மருதயினுமடம்- வீளான்- தனியூற்று. சூராபத்தை- வேலணைசெட்டிகுளம்- சம்புத்துறை ஆகிய இவ்வூர்ப்பெயர்கள் மறைந்துநிற். றல் காண்க.
மெய்ந்நூல்கல்லாக்கட்டுவன்மாசுதோய்ந்துவிளைமுமலப் பைசார்புலோலிகளாண் முள்ளியவளைபன்னரிய நைவாரிரணமடுவென்றிக்காயத்தை நாடியறிந் துய்வார்பொறிமயிலப்பையனரருளுன்னிநெஞ்சே, (22)
(15)

Page 16
இ- ள். நெஞ்சே. மனமே, வார் பொறி மயில் அப்பு ஐயன் ஆர் அருள் உன்னி - ஒழுங்காகிய புள்ளிகள்பொருந்திய மயில் வாகனத்தையுட்ைய கந்தசுவாமியின் பிதாவாகிய சிவபெருமானது நிறைவாகிய திருவருளை நினைத்து, மெய்நூல்கல். உண்மையைப் போதிக்கும் ஞான நூல்களைப்படி, இக்காயம்- இந்தவுடம்பானது, ஆக்கட்டுவன் மாசுதோய்ந்து விளைமும்மலப்பை ஆன்மாவைப் பந் திக்கின்ற வலிய குற்றங்களில் அமிழ்ந்தி விளைகின்ற ஆணவம்மாயை கன்மம் என்கிற மும்மலங்களடைக்கப்பட்டபையும், சார்புல ஒலி கள் ஆள் முள்ளியவளை. பொருந்திய பஞ்சப்புலன்கள் ஒரோவழிப் படாமல் பேசப்படும் கலகத்தினலுண்டாகும் சத்தம் ஆளுகின்ற தாய காமமுதலிய தீக்குணங்களாகிய முள்ளிகளடர்ந்திருக்கின்ற புற்றும் பன்னரிய நைவு ஆர் இரணமடு - சொல்லுதற்கரிய துன்ப ம்நிறைந்த புண்மடுவும், என்று-என்று, நாடியறிந்துய் - சுருதியுக்தி அனுபவம் முதலிய அளவைகளால் ஆராய்ந்தறிந்து உய்ந்தீடேறு,
6T-El
பொ-ரை சிவபெருமானுடைய திருவருளை முன்னிட்டு ஞான நூல்களை நன்கு கற்றுத்தெளிந்து இழிவானவிக் காயநிலையாமையை யுணர்ந்து சிவத்தியானம் செய்துய்வாயாக.
கல்லாக்கட்டுவன் - மலப்பை -புலோலி - முள்ளியவளை - இரணமடு மயிலப்பை ஆகிய இவ்வூர்ப்பெயர்கள் மறைந்து நிற்றல் காண்க
கிளிநச்சியன்மொழியன்னுங்கையோதிநற்கேழ்கிளர்மை யொளியுற்றிடவெழுதுமெட்டுவாள்விழியோதரிய களியுற்றுமாரியங்கூடலைக்காணம்மயிலியலா ரளிபற்றிடாதெங்குமுள்ளான நெஞ்சத்தமைத்திடினே.
இ-ள் எங்கும் உள்ளான நெஞ்சத்து அமைத்திடின் - எங்கும் வியாபகமாயிருக்கின்ற சிவபெருமான இருதயத்தில் வைத்து இடை யீடில்லாது தியானித்து வணக்கஞ் செய்தால், கிளிநச்சு இயல்மொழி கிளிப்பட்சிகள் விரும்புகின்ற அழகிய சொற்களையும், அல் நுங்கு ஐ ஒது . இருளை விழுங்குகின்ற அழகிய கூந்தலையும், நல்கேழ் கிளர்மை ஒளியுற்றிட எழுதும் எட்டுவாள் விழி - நன்கிதான நிறம்பொருந்திய மையினல் ஒளிகாலத் தீட்டப்பட்டு எட்டுகின்ற வாள்போலும் கண் களையும், ஒதரிய களியுற்று மாரியங்கூடலைக் காண் அம்மயில்இயலார். சொல்லுதற்கரிய களிப்படைந்து கார்காலமேகம் காலத்தைக் காணு கின்ற மயிற்சாயலையுமுடைய பெண்களது, அளிபற்றிடாது - ஆசை யென்கிற நோயானது பீடிக்கமாட்டாது 6T-gy
(16)

பொ-ரை சிவபெருமான யிடையழுது தியானஞ்செய்துவரின் பெண்ணுசை மனதினுட்சென்று கெடுதலைச் செய்யமாட்டாது.
கிளிநொச்சி - அன்னுங்கை - எழுதுமெட்டுவாள் - மாரியங்கூடல் (முள்ளான ஆகிய இவ்வூர்ப்பெயர்கள் மறைந்து நிற்றல் காண்க.
என்றுமுள்ளாத்தனையீறமுருக்கைம்புலத்தைச்செம்பொன் குன்றன்புகழைநுணுவில்வைநித்த முங்கோதகல்சீ ரொன்றும்வற்ருப்பழையார்சாதுசங்கத்தையொட்டுநெஞ் சென்றுமன்ருடியைமன் ருடுமுன்வினைதீர்ந்திடவே. (சே
இ-ள் நெஞ்சே - மனமே, என்றும் உள் ஆத்தனை - சத்தியத்தையு டைய கடவுளை யெப்பொழுதும் தியானி, ஈறமுருக்கு ஐம்புலத்தை. பஞ்சப்புலன்களை முடிவுற அடக்கு, செம்பொன் குன்றன் புகழை நுண் நாவில்வை - மகா மேருமலையையுடைய அப்பெருமானுடைய கீர்த்தியை மிருதுவான தாவில்வைத்துப்பாடு, நித்தமும் - அனுதின மும், கோதகல்சீர் ஒன்றும் வற்றப்பழையார் சாதுசங்கத்தை ஒட்டுகுற்றம் நீங்கிய சிறந்த குணங்களொன்றும் குறையாத முதிர்ந்த அறிவையுடைய சாதுக்கள் சங்கத்தைச்சேர், முன்வினை தீர்ந்திடமுற்பிறவியிலேயுள்ள வினைகள் தீரும்பொருட்டு, சென்றுமன்ரு டியை மன்றடு - போய்க் கனகசபையிலே திருநடனஞ்செய்யுமப்பெரு மானைப் பரிந்துகேள். 67
பொ-ரை மனமே சாதுசங்கத்தைச் சேர், புலன்களையடக்கிக் கட வுளை யெப்பொழுதுந் தியானித்து அவருடைய கீர்த்தியைப் பாடி உன்பழைய வினைகளைத் தீர்த்தாட்கொள்ளும் பொருட்டுப் பரிந்து கேள்.
முள்ளாத்தனை - முருங்கைப்புலம் - செம்பொன்குன்று - நுணுவில் வற்ருப்பழை ஆகிய இவ்வூர்ப்பெயர்கள் மறைந்து நிற்றல் காண்க.
சொல்லுயர்ஞானமிகமண்டுமண்டையர்சோர்வடையார் வல்லவிலாங்குடைவான்மதிகொண்டிங்குவாழ்வர்கன்ம வல்லலைக்கொத்தியவத்தையறநெடுந்தீவிளைத்துப் பல்லவராயர் கட்டாயன்பணிகழல்பற்றுவரே.
இ-ள் சொல்லுயர் ஞானம் மிகமண்டு மண்டையர் - சொல்லாலு யர்ந்த ஞானவுணர்ச்சி மிகச்செறிந்து நிறைந்த மூளையையுடைய
(17)

Page 17
சாதுக்கள், சோர்வு அடையார் - எவ்வித கயிட்டம் வந்தபோதிலும் ம60rங்கலங்கமாட்டார்கள், வல்ல விலாங்குடைவான் மதிகொண்டு இங்குவாழ்வர் - பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையுங்காட்டு கின்ற விலாங்கின் வலிய உயர்ந்த புத்தியைப் பாவித்து இப்பூமியின் கண் காலம்போக்கி வாழ்வார்கள், கன்ம அல்லலைக்கொத்தி-கன்மத் துன்பங்களைச் சிறிது சிறிதாகக்கோதி, அவத்தையறநெடுந் தீவிளைத்து அவத்தைகளெல்லாங் கெட்டழியப் பெரிய அக்கினியையுண்டாக்கி, பல்லவர் ஆயர் கட்டும் - பலராகிய இடையர்கள் பிடித்து உரலு டன் கட்டுகின்ற, ஆயன் பணிகழல் பற்றுவர் - பூரீ கிருட்டிண பக வான் வணங்குகின்ற சிவபெருமானுடைய திருவடியை அடை வார்கள். எ - று
பொ-ரை : சாதுக்களாயுள்ளவர்கள் இப்பிரபஞ்சவாழ்விலே தாக்குண்ணுமற் பலபேதமான அறிவையுடைய சனங்களுடனியைந்து நடந்து காலம்போக்கிக் கன்மத்துன்பங்களையும் அவத்தைகளையும் நீருக்கிச் சிவபெருமானுடைய திருவடியை யடைவார்கள்.
மண்டுமண்டை - விலாங்குடை - கொத்தியவத்தை - நெடுந்தீவுபல்லவராயர்கட்டு ஆகிய இவ்வூர்ப் பெயர்கள் மறைந்து நிற்றல் காண்க. எ -- று,
சுன்னுவினெஞ்சிற்சுதையுங்கடுவும்வைத்தேதுயர்செய் மின்னுர்தமாசையிருப்பைக்கடைவைமிகுகருணை முன்னுண்முறிகண்டியாரும்வியக்கவவ்வேதியனைத் தன்னுட்கொள்வெள்ளாங்குளநாட்டத்தான் புகழ்சாற்று
(நெஞ்சே.
இ - ள் நெஞ்சே - மனமே, சுன் நாவில் நெஞ்சில் சுதையும் கடு வும் வைத்து - மிருதுவான நாக்கிலும் நெஞ்சிலும் முறையே அமு தத்தையும் விஷத்தையும் வைத்திருந்து, துயர்செய் - துன்பத்தைச் செய்கின்ற, மின்னர்தம் ஆசை இருப்பைக்கடை-பெண்ணுசையென் கிற இரும்பை உனது இடையருது செய்யும் சிவதியானமாகிய துறப் பணத்தினற் கடைந்து அழி, வைமிகு கருணை-உயிர்கண்மீது நிறைவா கிய கருணையைவை, முன்னுள் முறிகண்டு - முன்னளையிலெழுதிய அடிமைச்சாசனத்தை அதுசமையங் காட்டக்கண்டு, யாரும் வியக்கநீதிகூற அங்ங்னங்கூடிய தக்கார் எல்லாமதிசயமடைய, அவ்வேதி யனை - அந்த மறையவராகிய சுந்தரமூர்த்தி நாயனரை, தன் ஆள்
( 18)

கொள் - தனது அடிமையாளாகக் கொள் நாட்டத்தான் புகழ் சாற்று - வெண்மையா னிக்கண்ணையுடைய சிவபெருமானுடைய கீர் பாடு. எ-று
பொ - ரை மனமே பெண்ணுசையை அறநீக்கி \ܐܲܕܲܝܵܧ NLDషు நிறைந்த கருணையைவைத்து என்றைக்கும் சிவபெருழா புகழைப்பாடி யுய்ந்தீடேறுவாயாக.
சுன்னவில் - இருப்பைக்கடவை - முறிகண்டி - வெள்ள்ாங்குளம் இவ்வூர்ப்பெயர்கள் மறைந்து நிற்றல் காண்க.
தேவர்கட்டாணிப்பொன்மங்கில்யம்வாழத்திரைகடனஞ் சேவரும்போற்றவுண்டான்பதம்வாழ்க இபமுகத்தோன் மூவிருமாமுகனம்பிகைவாழ்கமுன்னூலறியே ஞவினின்ருடியவாணியும்வாழ்கநலமுறவே.
இ - ள் திரைகடல் நஞ்சு - முன்னளையிலே திரைபொருந்திய திருப்பாற் சமுத்திரத்தினின் றெழுந்து சகலரையும் அழிவுசெய்யும் படி வந்த ஆலகாலவிஷத்தை, தேவர் கண்டாணிப்பொன் மங்கில் யம்வாழ - தேவர்கள் தங்கள் தேவிமார் கழுத்திற்கட்டிய அழகிய தங்கத் திருமங்கலியம் நிலைத்து வாழும்பொருட்டு, ஏவரும் போற்ற உண்டான் பதம் வாழ்க - சகலரும் வணங்க உண்டருளிய சிவபெரு மானது திருவடிகள் வாழக்கடவன, இபமுகத்தோன்மூவிருமாமுகன் அம்பிகைவாழ்க - ஆனைமுகத்தையுடைய விநாயகக்கடவுளும் ஆறு திருவதனங்களையுடைய சுப்பிரமணியக்கடவுளும் உமாதேவியாரு மாகிய மூவரும் வாழக்கடவர். முன் நூலறியேன் நாவில் நின்று ஆடிய வாணியும்வாழ்க - நினைக்கப்படுகின்ற மேலாகிய சாஸ்திரவு ணர்சியில்லாத எனது நாவில்நின்று இந்நூலைப் பாடுதற்கருள்செய்த சரஸ்வதிதேவியாரும் வாழக்கடவர், நலம் உற - பூமியெங்கும் நன்மையுண்டாகக்கடவது. எ- று.
பொ- ரை. சிவபெருமான், விநாயகக்கடவுள், சுப்பிரமணியக் கடவுள், உமாதேவியார் நால்வரும்வாழக்கடவர். சரஸ்வதிதேவி
யாரும் வாழக்கடவர். எல்லா நன்மையும் முண்டாகக்கடவது.
தேவர்கட்டு ஆகிய இப்பெயர் மறைந்துநிற்றல் காண்க.
சுபமஸ்து.
(19)

Page 18


Page 19
ழ்ப்பாடு
LUFT
ழும்புத் தள்
அச்சுப்பு
GET
 
 
 

ու , பம்
ኮ4§ng * ... 5. 96.