கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாரதியின் பெண்விடுதலை (இலக்கியம்-கருத்து-காலம்)

Page 1
பாரதியின்
பெண் விடுதலை
இலக்கியம்- கருத்து - கால
5O11 +
லேகா மெளனகுரு St O2
 
 


Page 2


Page 3


Page 4

பாரதியின் பெண்விடுதலை இலக்கியம் - கருத்து - காலம்
சித்திரலேகா மெளனகுரு

Page 5
தலைப்பு
ஆசிரியர்
முதற்பதிப்பு
வெளியீடு
அச்சுப் பதிவு
அட்டை
வடிவமைப்பு
ഖിഞ്ഞുഖ
பாரதியின் பெண்விடுதலை இலக்கியம் - கருத்து - காலம்
சித்திரலேகா மெளனகுரு
நவம்பர் 1996
விபுலம் வெளியீடு 7, ஞானகுரியம் சதுக்கம், மட்டக்களப்பு, இலங்கை,
டெக்னோபிரிண்ட்
83, ஆஸ்பத்திரி வீதி, களுபோவில, தெகிவளை.
எம்.கே.எம். ஷகீப்

பாரதியின் பெண்விடுதலை இலக்கியம் - கருத்து - காலம்
சித்திரலேகா மெளனகுரு
விபுலம் வெளியீடு

Page 6
உள்ளே.
பாரதியின் பெண்விடுதலை: காலமும் கருத்தும்
பாரதியும் பெண்விடுதலையும்
சுப்பிரமணியபாரதியும் பெண்விடுதலைக்கு உழைத்த சீனத்து ஜியுஜினும்
துரையப்பாபிள்ளையும் பாரதியாரும் சமகாலக் கருத்தோட்டங்களில் ஒற்றுமையும் முரண்பாடும்
Ο1
22
4O
49

முன்னுரை
தென்னாசியாவில் பெண்களது தாழ்த்தப்பட்ட நிலை பற்றியும் அதில் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்துவது பற்றியும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து எழுத்தாளர்கள் சிலராவது அக்கறை காட்டியுள்ளனர்.
சுப்பிரமணிய பாரதியார் இத்தகையோரில் மிக முக்கியமான வராக விளங்குகிறார். பெண்ணுடைய வாழ்க்கை, அவளது அந்தஸ்து நிலை, அவள் பற்றிய சமூக நோக்கு ஆகியவற்றில் புரட்சிகரமான மாற்றம் ஏபட வேண்டுமென பார்தியார் மிகவும் வற்புறுத்தி வந்தார்.
பாரதியின் பெண்ணுரிமைக் கருத்துகள், கவிதைகள் முதல் கட்டுரைகள், கதைகள் வரை அவரது பல்வேறு ஆக்கங்களிலும் விரவிக் கிடக்கின்றன.
பாரதியின் சமகாலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலும் நடந்தேறிய நிகழ்ச்சிகளும், தோன்றிய இயக்கங்களும் பாரதியினுடைய இத்தகைய கருத்துகளுக்கு உந்துதலாக அமைந்தன. அவற்றைக் கோடிட் டுக் காட்டுவதும், தமிழ்ச்சூழலில் பாரதியை அவரது சமகாலத்தவருடன் ஒப்பிடுவதன் மூலம் அவரது தனித்தன்மையை வெளிப்படுத்துவதும் இச் சிறுநூலின் நோக்கமாகும். நான் அவ்வப்போது பாரதி பற்றி எழுதிய சில கட்டுரைகளை இங்கு விரிவாக்கம் செய்துள்ளேன்.
இந்நூலாக்கத்தில் எனக்கு உதவியோருக்கும் குறிப்பாக நூலின் வடிவம், அட்டை ஆகியவற்றை மிகுந்த கரிசனையோடு அமைத்த ஷகீப், ரெக்னோ பிறின்ட் ஆகியோருக்கு மனமுவந்த நன்றிகள்
சித்திரலேகா மெளனகுரு
மொழித்துறை, கிழக்குப் பல்கலைக் கழகம், 12 நவம்பர் 1996

Page 7

பாரதியின் பெண்விடுதலை: காலமும் கருத்தும்
காலம்
நவீன தமிழிலக்கியத்தின் முக்கிய பொருள்களில் ஒன்றாகப் பெண்கள் 'பிரச்சினை அமைந்துள்ளது. பெண்களின் சமூக அந்தஸ்து, பெண்களின் உரிமை, சமூகத்தில் பெண்கள் பங்கு என வெவ்வேறு வகையில் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் இன்றைய ஆக்க இலக்கியங்களில் எடுத்தாளப்படுகின்றன. இவ்வாறு பெண்கள் குறித்து செறிவாகவும் பிரக்ஞையுடனும் தமிழ் எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கியது பத்தொன் பதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலிருந்தாகும். இக்கால கட்டத் தில் புதிய ஆக்க இலக்கியத்துறைகளில் ஈடுபட்ட இலக்கிய கர்த்தாக்கள் பலரும் பல்வேறு அளவிலும் வகையிலும் தமது சமகாலப்பெண்களின் நிலைமை குறித்துக் கருத்துக்களை வெளியிட்டனர். அக்காலப் பெண் களின் பின் தங்கிய நிலைமை, அவர்களின் முன்னேற்றத்துக்கான வழிகள் என இக்கருத்துக்களைப் பொதுவாகப் பகுத்துக் கூறலாம்.
தமிழிலே முதல் நாவலை எழுதியவரான ச.வேதநாயகம் பிள்ளை (1826-1889) தமது நாவல்களிலும் கட்டுரைகளிலும் செய்யுள்களிலும், தமிழ் நாட்டுப் பெண்களின் முன்னேற்றம் கல்வியில் தங்கியுள்ளது என வற்புறுத்தினார். அவரது நாவலான பிரதாபமுதலியார் சரித்திரத்திலும் பெண்கல்வி, பெண்மதி மாலை போன்ற நூல்களிலும் பெண்கல்வி பற்றிய கருத்துக்கள் இடம்பெறுகின்றன.
'பெண்களுடைய கல்வியினால் புருஷர்களுடைய கல்வி யும் அதிகரிக்குமென்பது பிரகாசமாயிருக்கிறது. எப்படி யென்றால் பெண்கள் தங்களைக் கல்வியினால் வெல்லாம லிருக்கும் பொருட்டு புருஷர்களுக்குக் கல்வியில் அதிக கவனமும் முயற்சியும் உண்டாகும் என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை’ (வேதநாயகம்பிள்ளை: 1958:18)

Page 8
பெண் கல்வி என்ற நீண்ட கட்டுரையில் மேற்கண்டவாறு கூறினார் வேதநாயகம்பிள்ளை. பெண்கள் கல்வி கற்க வேண்டும் என இவர் அழுத்திக் கூறியபோதும் பெண் சிறந்த மனைவியாகவும், அன்னை யாகவும் விளங்குவதற்கு அக்கல்வி துணைசெய்ய வேண்டும் என்பதே அவரது நோக்கம். இவ்வகையில் பெண் பற்றிய மரபுரீதியான சிந்தனை யிலிருந்து வேதநாயகம் பிள்ளை பெரிதும் வேறுபடவில்லை. எனினும் தமது சமகாலப் பெண்களின் துயர்தோய்ந்த நிலை பற்றி அக்கறை செலுத் தியவர் என்ற வகையிலும் கல்வியினால் அத்துயர் குறையலாம் எனக் கருதியவர் என்ற வகையிலும் வேதநாயகம் பிள்ளையின் பெண்கள் பற்றிய கருத்துகள் கவனிக்கத்தக்கவை.
மாதவையா (1872-1925) என்ற இன்னொரு நாவலாசிரியரும் பெண் கல்வி என்ற கருத்தை முக்கியமாக வற்புறுத்தியவர். தமது பத்மாவதி சரித்திரம் என்ற நாவலில் அவர் பின்வருமாறு கூறினார்.
'புருஷனுடைய பணமும் கண்ணியதையும் பெண்சாதிக்கு உதவுவது போல் அவனுடைய கல்வியும் ஞானமும் அவளு க்கு உதவுவதில்லை. ஆதலால் அறிவையடையும் பொரு ட்டு, மானிடப் பிறப்பு எடுத்தவர்கள் யாவரும் கல்வி கற்க வேண்டும்; அன்றியும் நமக்குள் பதினாலு, பதினைந்து வயதுவரை முற்றிலும் வீட்டுப் பெண்பிள்ளைகளால்தான் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். எளிதாய் எவ்விதமும் திருப்பக்கூடிய அவ்வளவு இளம் பிராயத்தில், கல்வித் தேர்ச்சியுள்ளவர்களுடைய மேற்பார்வைக்குள் இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமானது?. கற்றுத் தேர்ந்த தன் புருஷனுடைய நேசத்தையும் பாசத்தையும் தன் அழகு அழிந்து போன காலத்திலும் ஒருநாளும் கைவிடாது கொள்ள விரும்பும் பெண், அவனுக்குப் பிரியமுள்ள கல்வியில் தானும் தேர்ச்சியடைய வேண்டும்'
(மாதவையா:1961:62-63)
தமிழில் சிறுகதையின் தந்தை எனக் கூறப்படும் வ.வே.சு.ஐயர் (1881-1925) தமது காலப் பெண்களின் பரிதாபகரமான நிலைமையை அனுதாபத்துடன் நோக்கினார். அவரது குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை சீதன வழக்கத்திற்கும், பெற்றோரின் பிடிவாதத்திற்கும் பெண் ணொருத்தி பலியாவதை விபரிப்பதாகும். 'விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய் பிறந்தவர்களின் மனதைக் கசக்க வேண்டாம்' (ஐயர்
பாரதியின் பெண் விடுதலை

வ.வே.சு:1953:68) என்று இச் சிறுகதையின் இறுதியில் வ.வே.சு.ஐயர் கூறியுள்ளார். இக்கால கட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் சிலரும் பெண்கள் பிரச்சினை குறித்துத் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் அளவு தீவிரம் காட்டாவிடினும் * பெண்கல்வி, திருமண சுதந்திரம் ஆகியவை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளனர். உதாரணமாக தி.த.சரவணமுத்துப் பிள்ளை இயற்றிய தத்தைவிடு தூது (1895) என்ற நூலைக் காட்டலாம். இச்செய்யுள் நூலிற் சரவணமுத்துப்பிள்ளை பெண் கல்வி, திருமண சுதந்திரம் ஆகியவை குறித்துச் சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.
'கல்வி நலம் பெற்றனரேற் காரிகையாரர் காதலர்க்குச் சொல்லருநற்றுணையன்றோ தொல்லுலகு சிறக்குமன்றோ"
'கூட்டிற் பசுங்கிளிபோற் கோதையரை யெப்போதும் வீட்டிலடைத்து வைக்கும் விரகிலருக் கியாதுரைப்போம்
பூட்டித் திறந்தெடுக்கும் பொருளாக் கருதினரோ'
(சரவணமுத்துப்பிள்ளை.தி.த:1885)
மேற்காணும் செய்யுளடிகள் சரவணமுத்துப் பிள்ளையின் கருத்துக் களைத் தெளிவாகக் காட்டுபவையாகும்.
இவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து பெண்கள் பிரச்சினை இலக்கியப் பொருளானமை தமிழில் மாத்திரம் ஏற்பட்ட விருத்தியன்று. தமிழின் அயல் மொழி இலக்கியங்களிலும் இதனைக் காணலாம். உதாரணமாக மலையாள இலக்கியத்தைக் குறிப்பிடலாம். சந்துமேனன் (1847-1899) எழுதி 1889 ம் ஆண்டு வெளிவந்த மலை யாள நாவலாகிய இந்துலேகா கல்வியினால் பெண்கள் தமது அடிமை நிலையிலிருந்து மீளமுடியும் என்ற கருத்தைக் கூறியது. மலையாளத்தின் மறுமலர்ச்சிக் கவியாகிய குமரன் ஆசான் (1873 - 1924) தனது சிந்தா விஷ்ட்டாய சீதா (1919) என்ற நெடும் பாடலில் இராமன் தனக்கிழைத்த அநீதியை விமர்சிப்பவளாக சீதையைப் படைத்தார்.
இவ்வாறு பெண்கள் பிரச்சினை முக்கியமான இலக்கியப் பொருளாக மாறிய கால கட்டத்தில் சுப்பிரமணிய பாரதியும் தமிழ் நாட்டுப் பெண் களின் பரிதாபகரமான துயர்தோய்ந்த நிலையைத் தமது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் சித்திரித்தார், பெண் சமத்துவம், பெண் கல்வி ஆகிய
'3" |:

Page 9
வற்றை அதிகளவில் வற்புறுத்தினார். பெண்கள் பிரச்சினையை இருப தாம் நூற்றாண்டில் கையாண்ட எழுத்தாளர்களுக்குள் மிகுந்த முற் போக்குத் தன்மையுடனும் உறுதியுடனும் கருத்துக்களைக் கூறியவர் பாரதியென்றே சொல்ல வேண்டும். இது மாத்திரமன்றிப் பாரதியின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளுள் முதன்மைபெற்றவையாக பெண்விடுதலை சம்பந்தமான கருத்துக்களே அமைந்துள்ளன. இது பற்றிப் பெ.சு.மணி என்ற ஆய்வாளர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
'பாரதியாரின் சமூக சீர்திருத்தப் பிரச்சாரத்தில் முன்னு ரிமை பெற்றுத் திகழ்வது பெண்ணுரிமை இயக்கம். சமூக சீர்திருத்தக் கருத்துக்களின் பரப்பை வைத்துக் கணிப்போ மாயின் பெண்ணுரிமை இயக்கம் ப்ற்றிய கருத்துக்களே பெரியது. மற்றச் சீர்திருத்தக் கருத்துக்களை வெளியிடும் பொழுது ஓரளவு தணிந்தும் முறையிட்டும் வேண்டியும் நிற்கும் பாரதி பெண்ணுரிமை இயக்கத்தில் மின்னலென, இடியென விளங்குகின்றார். இந்தியாவிலேயே பாரதி யாரை ஒத்த அளவில் பெண்ணுரிமை இயக்கத்திற்குப் பாடுபட்ட வேறு ஒரு கவிஞர் இருக்கக் கூடுமோ என எண்ணத் தோன்றுகிறது.' (மணி.பெ.சு:1980:109) தமது காலத்துப் பெண்கள் நிலை, பெண்ணுரிமை, பெண் விடுதலை ஆகியன குறித்து பாரதியார் பல்வேறு கவிதைகளும் கட்டுரைகளும், ஓரிரண்டு கதைகளும் எழுதியுள்ளார். அவையாவற்றையும் எடுத்துக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமன்று. பாரதியாரின் பெண்ணுரிமை தொடர்பான கருத்துக்கள் உருவாக ஆதாரமாக அமைந்த அக்காலத்து உந்து சக்திகளையே இங்கு சுட்டிக் காட்ட முயல்கிறேன். பாரதி, பெண்களது அடிப்படை உரிமைகள் எனக் கருதியவற்றைப் பின்வருமாறு பகுத்துக் கொள்ளலாம். பெண்கள் தொடர்பான அவரது கட்டுரைகளில் இவற்றைத் தெளிவாகக் காணலாம்."
1.எத்தகைய வரையறைகளுமற்ற கல்வி உரிமை 2.விரும்பிய தொழில் செய்யும் உரிமை 3.திருமண சுதந்திரம் 4.மறுமண, விவாகரத்து உரிமைகள் 5.சொத்துரிமை 6.அரசியற் சுதந்திரம்
பாரதியின் பெண் விடுதலை

இவை அன்றைய நிலையில் பொதுவாக இந்தியப் பெண்களுக்கு மறுக்கப் பட்டிருந்த உரிமைகளாகும். "ஆணும் பெண்ணும் ஸரி நிகர் ஸமான மாக' வாழ வேண்டுமென்று கூறிய பாரதி மேற்கூறிய உரிமைகளைப் பெறும்போதே பெண் சமத்துவம் நடைமுறைக்கு வரும் என உணர்ந் துள்ளார். இதனாலேயே மேற்கூறிய கருத்துக்களில் பாரதிக்கு எத்தகைய சந்தேகமோ தயக்கமோ இருந்ததில்லை. பாரதி காலத்தில் வாழ்ந்த ஏனைய சில சமூக சீர்திருத்தவாதிகளும், அரசியற் தலைவர்களும், பெண்கள் மறுமணமோ, விவாகரத்தோ செய்து கொள்வது தொடர்பாக அதிக தீவிரம் காட்டவில்லை. மாறாகச் சில சந்தேகங்களை எழுப்பினர். அல்லது இவை பற்றி தெளிவான கருத்துத் தெரிவிக்காமலிருந்தனர். ஆனால் பாரதியோ முற்போக்கான பெண்ணுரிமைவாதியாகத் திகழ்ந் தார். இந்தியாவிலும், சர்வதேச அரங்கிலும் பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்து கொண்டிருந்த மாறுதல்களும் இயக்கங்களும் பாரதியின் இத்தகைய தீவிரக் கருத்துகளுக்கு பக்கபலமாகவும், உந்து சக்தியாகவும் அமைந்தன. இத்தகைய நிலைமைகளை நோக்கும் போது தான் தமது காலகட்டத்தின் முற்போக்கான தன்மைகளைப் பாரதி எவ் வாறு உள்வாங்கிக் கொண்டார் என்பதும், காலத்தின் குரலாக அமையும் கவிஞரின் பளத்திரத்தைத் திறமையாக வகித்தார் என்பதும் தெரியவரும். இந்தியாவில் பெண்ணுரிமை தொடர்பாகத் தோன்றிய விவாதங்களும் சீர்திருத்தக் கருத்துக்களும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேசியவாதம் , கிறிஸ்தவம், மேனாட்டு நாகரிகம் ஆகியவற்றுக்கு எதிரான இந்திய சமய கலாசார எதிர்ப்புடன் இணைந்திருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே பெண்களைப் பாதிக்கும் சமூக வழக்கங்கள் பற்றி பிரித்தானிய நிர்வாகிகளும், மிஷனரிகளும், இந்தியப் புத்திஜீவிகள் சிலரும் அக்கறை காட்டினர். இந்தியாவின் சில பகுதிகளில் நிலவிய பெண் சிசுக்கொலை, விதவைகளை இறந்த கணவருடன் சேர்த்து எரிக்கும் 'சதி வழக்கம் போன்றவை இவர்களது விமர்சனத்துக்கு உள்ளாகின. முதலில் மக்களுக்கு இவற்றின் தீங்கு பற்றி எடுத்துச் சொல்லி, இவ்வழக்கங்களை படிப்படியாக ஒழித்தல் என்ற நிலைப் பாட்டையே அரசாங்கம் கடைப்பிடித்தது. இவ் விவகாரம் குறித்து சகாபாத் என்ற மாவட்டத்தின் கலெக்டர், கான்வாலிஸ் தேசாதிபதிக்கு 1789 ம் ஆண்டு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
'இந்து சமயத்தின் சடங்குகளும் மூடப்பழக்கங்களும் தகுதியற்ற விதத்தில் இருந்தாலும், அவைகளைப் பொறுத்

Page 10
துக் கொள்ளலாம். ஆனால், மனிதனுடைய இயற்கையே
கண்டு நடுங்கும் படியான ஒரு செயலை, குறிப்பிட்ட
கட்டளை இருந்தாலொழிய அனுமதிக்க இயலாது'
(மஜூம்தார்.ஆர்.சி:1966:270)
பெண்களுடைய மோசமான நிலையானது இந்தியாவின் பின்தங்கிய நாகரிகமற்ற நிலையைப் பிரதிபலிக்கிறது எனப் பிரித்தானியர் கருதினர். ஆனால் இந்திய சீர்திருத்தவாதிகளோ பண்டைய இந்தியாவில் பெண் களின் நிலை உயர்வாகவே இருந்தது என்று கூறினர். வேத இலக் கியங்களிலிருந்து இதற்கு உதாரணம் காட்டினர். இடைக்காலத்திலேயே சீர்கேடுகள் மலிந்தன என இவர்கள் கூறினர், சுப்பிரமணிய பாரதியே கூறியது போல 'முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்' பற்றியே இவர்கள் எடுத்துரைத்தர். இதனால் இந்த இழிநிலையை மாற்ற வேண்டும் என சமூக சீர்திருத்தவாதிகளும், தேசியவாதிகளும் முனைந்தனர். மேலும் பெண்கள் நிலைமையில் சீர்திருத்தத்தை இவர்கள் வற்புறுத்தியதற்கு பின்வரும் இன்னோர் காரணமும் இருந்தது. விதவைகள் மறுமணம் செய்வதற்கு உரிமையின்மை, ‘சதி" (உடன் கட்டை) வழக்கம், பலதாரமணம், பெண்களுக்குச் சொத்துரியின்மை ஆகியவை இந்தியப் பெண்களின் பொதுப் பிரச்சினைகளாகக் காட்டப் பட்டபோதிலும் இவை முக்கியமாக சமூகத்தில் உயர் வகுப்பினரிடையே தான் (உயர் சாதியினர்) பெரும் பிரச்சினைகளாக இருந்தன. இத்தகைய நிலைமைகளால் பாதிக்கப்பட்ட பல விதவைப் பெண்கள், மறுமணம் செய்யமுடியாமல், விதவைகளாக கொடுமைகட்கு ஆளாகிய பெண்கள் விபசாரத்தை நாடும் அபாயம் உண்டானது. இந்நிலைமை இந்திய மத்தியதர வகுப்பின் குடும்ப அமைப்புக்குக் குந்தகம் விளைவிப் பதாகும். இது பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுச் சமூக சீர்திருத்த வாதிகளினதும், அறிவுஜீவிகளினதும் சிந்தையைக் கிளறும் ஒரு விசய மாக அமைந்தது. இது குறித்து வீனா மஜீம்தார் என்ற இந்தியப் பெண் ஆய்வாளர் பின்வருமாறு கூறினார்.
'நகரமயமாதலின் அதிகரிப்புடன், விபச்சாரம் அதிகளவு வர்த்தகமயப்பட்டது. குடும்பத்தின் புறக்கணிப்புக்கும், சிலசமயம் சித்திரவதைக்கும் உள்ளான அபலைகளான உயர்சாதி விதவைப் பெண்களின் பெருந்தொகை, விபச்சார த்திற்கு ஆள் சேர்ப்பதற்கு உதவியது. குடும்பத்தையும் அதன்
பாரதியின் பெண் விடுதலை

பொருளாதாரத்தையும் பேண முனைந்தோர் அலட்சியப் படுத்த முடியாத ஒரு அச்சுறுத்தலாக இது அமைந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பத்திரிகைகளையும், சஞ் சிகைகளையும் நிறைத்த விதவைகளுக்கு இழைக்கப்படும் அநீதி, மறுமணஉரிமையின்மை, சிறுபிள்ளைத்திருமணம் ஆகியவைபற்றிய விவாதங்கள் சீர்திருத்தவாதிகளிடையே நிலவிய இந்த அச்சத்தினை அறிவதற்குப் போதுமான சான்றுகளாகும்.' (Majumdar, Veena:1980 : 68)
மேலும் 18ம், 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றி வளர்ந்த மனிதாயத, பகுத்தறிவாதக் கருத்தோட்டங்களால் இந்தியாவில் ஆங்கி லங் கற்ற அறிவுஜீவிகள் கவரப்பட்டிருந்தமையும் பெண்கள் நிலையைச் சீர்திருத்த வேண்டும் என்று இவர்கள் கருதியமைக்குரிய இன்னோர் காரணமாகும்.
இத்தகைய பின்னணியிலேயே பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண் டுகளிற் பலர் பெண்ணுரிமை பேசத் தொடங்கினர். இவர்களுள் முக்கிய மான ஒருவர் ராஜாராம் மோகன்ராய் (1772 - 1833) ஆவர். மேனாட்டு மனிதாயதக் கருத்துக்களாலும், பகுத்தறிவு வாதத்தாலும், தாராண்மைக் கருத்துகளாலும் கவரப்பட்ட வங்காளியான இவர் இந்து சமயத்தைச் சீர்திருத்தி அதற்குப் புது வலுவை அளிக்க எண்ணி 1828 ம் ஆண்டு பிரம்ம சமாஜம் என்ற அமைப்பை நிறுவினார். 'சதி வழக்கத்தை இவ்வியக்கம் மிக வன்மையாகக் கண்டித்தது. பெண்கள் பருவமடைந்த பின்பே திருமணம் செய்ய வேண்டும் என்றும், பெண்களின் திருமண வயதைச் சட்டத்தால் உயர்த்த வேண்டும் என்றும் இவ்வியக்கம் பிரசாரம் செய்தது. பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறியது. மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை நிறுவமுன்னரேயே பெண்கள் உரிமை தொடர்பாக சில சிறு பிரசுரங்களை வெளியிட்டார். 1818 ம் ஆண்டிலும் 1819 ம் ஆண்டிலும் 'சதிக்கு எதிரான சிறு பிரசுரங்களை வங்காளமொழியில் வெளியிட்டார். 1822 ம் ஆண்டு இந்து வம்சாவழி சட்டப்படி பெண்களின் சொத்துரிமைகளில் ஆக்கிரமிப்பு' என்னும் சிறு பிரசுரத்தையும் வெளியிட்டார். சதிவழக்கத்திற்கு இந்திய சீர்திருத்த வாதிகளிடையே இவ்வாறு தோன்றிய எதிர்ப்புக் காரணமாகவும் 1829இல் அரசாங்கத்தால் அது சட்டப்படி தடைசெய்யப்பட்டது.
மோகன்ராய் மாத்திரமன்றி, கேசவ சந்திரஸென் (1833-1884) ஈஸ்வர சந்திரவித்தியாசாகர் (1820 - 1891) மகாதேவ கோவிந்த ரனடே (1842

Page 11
- 1901) போன்றோரும் இந்தியப் பெண்களின் சீர்திருத்தத்திற்காகப் பலவாறு பணியாற்றினர். கேசவசந்திரவென் 1871 ல் இந்திய சீர்திருத்தச் சங்கம் (Indian Reform Association) என்னும் அமைப்பை நிறுவி பெண் கல்விக்கு ஊக்கமளித்தார். பருவமடையாத பெண்களின் திருமணம் சமய சாஸ்திரங்களுக்கு விரோதமானது என வாதிட்டார். வித்யாசாகர் பெண் களின் சிறுவயதுத் திருமணம் விதவைகளுடைய பிரச்சினையுடன் இணைந்துள்ளது எனக் கூறினார். ஆகையால் இத்தகைய திருமண வழக் கம் ஒழிக்கப்பட வேண்டுமெனவும் விதவைகளுக்கு மறுமண உரிமை அளிக்கப்பட வேண்டுமெனவும் கூறினார். ரானடே 1821ல் உருவாகிய விதவைகள் திருமணச்சங்கத்தை அமைத்தோரில் ஒருவராக இருந்தார்.
ஆண் சீர்திருத்தவாதிகள் மாத்திரமன்றி பெண்கள் சிலரும் இந்தியாவில் வாழ்ந்த வெளிநாட்டுப் பெண்களும் கூட பெண்விடுதலைக்காக உழைத் தனர். இவர்களில் அன்னிபெசன்ட், மார்க்கிரட் கசின்ஸ், டொரத்தி ஜீனராஜதாச சகோதரி நிவேதிதா முதலியோர் முக்கியமானவர்கள். அன்னிபெசன்ட், மார்க்கிரட் கசின்ஸஸ், டொரத்திஜின ராஜதாச ஆகிய மூவரும் சேர்ந்தே 1917 ஆம் ஆண்டு இந்தியப் பெண்கள் சங்கத்தை உருவாக்கினர்.
இது மாத்திரமன்றி பண்டிதராமாபாயின் (1858 - 1922) பணிகளும் இக்கால கட்டத்தில் மிகமுக்கியமானவை. மிக இளமையில் விதவையான போதும், சமூகத்தின் விமர்சனத்திற்கு ஆளாகவேண்டியிருந்தும் பெண் களுடைய முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார். பம்பாய் மாகாண த்தில் பல மகளிர் சமாஜங்களை நிறுவியதுடன் பெண்களுடைய கல்விக் காகப் பிரச்சாரமும் செய்தார். அநாதைகள், விதவைகளுக்கான இல்லங் களை நிறுவினார்.
தமிழ் நாட்டிலும் தனிப்பட்டோர் சிலரும், பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்தனர். தமிழ் நாட்டுச் சமூக சீர்திருத்த இயக்கங்களும் பெண்கள் முன்னேற்றம் குறித்துக் கருத்துக்களை முன்வைத்தன. சென்னை இந்து சமூக சீர்திருத்தச்சங்கம் என்ற ஓர் அமைப்பு பத்தொன்பதாம் நூற்றாண் டின் பிற்கூற்றிலிருந்து இயங்கிக் கொண்டிருந்தது. பெண்கல்வி, திரும ணச் சீர்திருத்தம் ஆகியவற்றை இச்சங்கம் தனது செயல் இலக்குகளாகக் கொண்டிருந்தது. இச்சங்கத்தில் தாமும் ஒரு உறுப்பினர் எனப் பாரதியார் இந்து பத்திரிகைக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார். (மணி.பெ.சு.1980:46) இச்சங்கத்தின் ஆரம்ப கால உறுப்பினர்களுள் ஒருவரும் சுதேசமித்திரன் பத்திரிகாசியருமான ஜி.சுப்பிரமணிய ஐயர்
பாரதியின் பெண் விடுதலை

தமிழ் நாட்டில் சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக விளங்கியவர். விதவை கள் மறுமணத்தை உபதேசித்த இவர் தமது சொந்த வாழ்க்கையில் அத னைச் செய்தும் காட்டினார். பனிரண்டு வயதில் விதவையான தனது மகளுக்கு பலத்த எதிர்ப்புகள் மத்தியில் மறுமணம் செய்வித்தார். இந்தியா எங்கிலும் நிகழ்ந்த மேற்கூறிய இயக்கங்களாலும், நிகழ்ச்சிகளா லும் பாரதி கவரப்பட்டார். அவரது சீர்திருத்த உணர்வுகள் வலுப்பெற இவை பக்கபலமாய் அமைந்தன. சந்திரிகையின் கதை என்ற நெடுங் கதையில் பிரம்ம ஸ்மாஜம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இக்கதையில் இடம்பெறும் ஒரு பாத்திரமாகிய கோபாலப்யங்கார் இடைக்குலத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை பிரம்ம ஸமாஜ விதிகளின்படி கலப்புத்திருமணம் செய்து கொண்டதாகவும் இருவரும் பிரம்மஸமாஜத்தில் சேர்ந்து கொண்டதாகவும் குறிப்பு உள்ளது. (பாரதி.சுப்பிரமணிய:1977:213) இதுபோலவே விசாலாட்சி என்ற பிராமண விதவையின் மறுமணம் பிரம்மஸமாஜ விதிகளின் படி நடந்ததையும் பாரதி குறிப்பிட்டுள்ளார். பாரதியின் 'ஆறில் ஒரு பங்கு' என்ற கதையிலும் கதாநாயகன் ஒரு பிரம்மஸமாஜவாதியாகவே காட்டப்பட்டுள்ளான். (மேற்படி 441) தமிழ் நாட்டில் பெரும் சீர்திருத்தவாதியாக விளங்கிய ஜி.சுப்பிரமணிய ஐயரை தமது 'சத்திரிகையின் கீதை யில் அவரது சொந்தப் பெயரிலேயே ஒரு பாத்திரமாக்கியுள்ளார். பாரதி(மேற்படி.171) விதவைப் பெண் விசாலாட்சி, மறுமணம் புரிவதற்கு உதவுபவராக சுப்பிரமணிய ஐயர் இதில் சித்திரிக்கப்பட்டுள்ளார். மேலும் விரேசலிங்கம் பந்தலு என்பவ ரும் அக்காலத்தில் தென்னாட்டில் தீவிரமான சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தவர். 1874 ம் ஆண்டு தொடக்கம் விவேக வந்தனா என்ற தெலுங்குமொழி வாரப் பத்திரிகையில் விதவை மறுமணம் பற்றிய பிரசாரத்தை செய்தவர். இவரையும் இவரது சொந்தப் பெயரிலேயே சந்திரிகையின் கதையிலே இன்னொரு பாத்திரமாக்கியுள்ளார். விதவைப் பெண்களுக்கு உதவும் தாராளம் கொண்டவராகவும், சாதிக் கலப்புத் திருமணத்தை ஆதரிப்பவராகவும் விரேசலிங்கம் பந்தலு சித்திரிக்கப் பட்டுள்ளார். பெண் கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த பாரதி அதற்கான முயற்சிகள் தொடங்கப் பெற்ற போதெல்லாம் அவற்றை வாழ்த்தி வரவேற்றார். டி.கே.கார்வே என்ற சீர்திருத்தவாதி பூனாவில் பெண்களு க்கு ஒரு பல்கலைக்கழகம் தொடங்க முயற்சி செய்த போது பாரதி அது பற்றிப் புகழ்ந்து எழுதினார். (பாரதி சுப்பிரமணிய: 1953:105) அத்துடன்
TWWEN".

Page 12
கல்வியறிவு பெற்ற இந்தியப் பெண்களைப் பற்றியும் அவ்வப்போது
புகழ்ந்து எழுதியுள்ளார்.
"பூரீமதி ஸரோஜினி நாயுடு என்ற ஸ்திரீஇங்கிலீஷ் பாஷை யில் உயர்ந்த தேர்ச்சி கொண்டு ஆங்கிலேய அறிஞர்கள் மிகவும் புகழ்ந்து போற்றும் படியாக"இங்கிலீஷில் கவிதை எழுதுகிறார். இவருடைய காவியங்கள் பல இங்கிலாந்தில் அச்சிடப்பட்டு அங்குள்ளோரால் மிகவும் உயர்வாகப் பாராட்டப்படுகின்றன. மேலும் வங்காளி பாஷையில் கவிதை எழுதுவோராகிய பூரீமதி காமினிராய், பூறிமதி மதன குமாரி தேவி, பூரீமதி அனங்க மோகினி தேவி என்ற மூன்று ஸ்திரீகளுடைய பாட்டுக்களை."
(பாரதி:சுப்பிரமணிய:1962:31)
மேற்கண்டவாறு தமது காலத்தில் கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்த பெண்களையும் தமது கட்டுரைகளிற் குறிப்பிட்ட பாரதி, தமிழ் நாட்டு மாதரும் இப்பெண்கள் போன்று கல்வியில் வல்லவராக வேண்டும் என்று அவாவினார்.
அயர்லாந்தைச் சேர்ந்தவரும் சுவாமி விவேகானந்தரின் பிரதம சிஷ்யை யும் நிவேகிதா என்ற துறவறப் பெயர் கொண்டவருமாகிய மார்கிறட் நோபின் பாரதியின் பெண்ணுரிமை ஆர்வத்திற்கு முக்கிய தூண்டு கோலானவர். நிவேதிதா பற்றிய சிறிய கவிதையொன்றில் 'இருளுக்கு ஞாயிறாய்' அவர் தமக்கு வழிகாட்டியதாகக் குறிப்பிடுகிறார். அது மாத்திரமன்று; இந்தியாவுக்கே ஒரு வரப்பிரசாதமாகவும் அவரைக் குறிப்பிடுகிறார். சகோதரி நிவேதிதாவில் பாரதி வைத்திருந்த பெரு மதிப்பு இச் சிறுகவிதை முழுக்கச் செறிந்து கிடக்கிறது.
'அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிறு யெமதுதுயர் நா டாம்பியர்க்கு மழையாயிங்கு பொருளுக்கு வழியறியா வறிருர்க்குப் பெரும் பொருளாய் புன்மைத் தாதர் சுருளுக்கு நெருப்பாகி விளங்கியதாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்’
uTgfulci Gusi GáCsana)
1O

இங்கு நிவேதிதா பற்றிப் பாரதி பயன்படுத்தும் உவமைகள் வெறும் கவி மரபு சார்ந்தவை என ஒதுக்கிவிடமுடியாது. நிவேதிதாவைச் சந்தித்தது பற்றிப் பாரதி குறிப்பிடுவதையும் மேலுள்ள கவிதையையும் சேர்த்துப் பார்க்கும் போது அவரில் பாரதி வைத் திருந்த பெருமதிப் புத் தென்படுகிறது.
இத்தகைய மதிப்பினாலேயே சகோதரி நிவேதிதாவை தமது ஞானகுரு வாகக் கொண்டார் பாரதி. தாம் நிவேதிதா தேவியைச் சந்திந்தபோது அவர் தமக்குப் பின்வருமாறு கூறியதாக இந்தியா பத்திரிகையில் எழுதினார்.
"ஐயா மாதர்களை இருட்டிலே தள்ளிவிட்டு அவர்கள் அறி
யாமல் நீங்கள் மேலான நிலைமைக்கு வந்துவிட முயல்
வது விண்முயற்சி. அது ஒருபோதும் நடக்க மாட்டாது.'
(இளசை மணியன்:1977:196)
இவ்வாறு எழுதிவிட்டு இந்த வசனத்தை ஒவ்வொரு தேசாபிமானியும் மனதிலே பதித்துக் கொள்ளும் படி விரும்புகிறோம்' என்று தனது அபிப்பிராயத்தையும் கூறினார். சகோதரி நிவேதிதாவின் இத்தகைய தீவிரமான பெண்விடுதலைக் கொள்கையும், இந்திய தேசிய இயக்கத்தில் அவரது பங்களிப்பும் பாரதியை வெகுவாகக் கவர்ந்தவையாகும். அவரைத் தமது ஞானகுருவாகவே கொண்டார் பாரதியார். 1908ஆம் ஆண்டில் வெளியான, தமது 'ஜன்ம பூமி' என்ற பாடல் தொகுப்பை நிவேதிதாவுக்கே சமர்ப்பித்தார்.
'எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த் தொண் டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாம லுணர்த்திய குருமணியும் மகான் விவேகானந்தரின் தர்ம புத்திரியும் ஆகிய பூரீமதி நிவேதிதாதேவிக்கு இந்நூலை ஸமர்ப்பிக்கிறேன்' என அதன் முகவுரையில் எழுதினார்.
பிறநாடுகளின் பாதிப்பு
இவ்வாறு இந்தியாவிலே பெண்களின் நிலைமையில் சீர்திருத்தம் வேண்டி உழைத்த இயக்கங்களும் தனிநபர்களும் பாரதியின் பெண் விடுதலைக் கொள்கை உருவாகவும் உறுதியடையவும் உதவினர். இவை மாத்திரமன்றி பெண்ணுரிமை தொடர்பாக ஏனைய உலக நாடுகளிற்

Page 13
தோன்றிய கொள்கைகளும் இயக்கங்களும் அவரது கவனத்தைக் கவர்ந்துள்ளன. பாரதியின் ஆங்கில அறிவும், பத்திரிகையுலகத் தொடர் பும், உலக நிகழ்ச்சிகளைக் கூர்ந்து அவதானிக்கும் திறனும் இதற்கு உதவின.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே ஆசியாவின் மேற்கிலிருந்து கிழக்கு வரை பெண்ணுரிமை கோரும் இயக்கங்கள் பரவலாகத் தோன்றத் தொடங்கியிருந்தன. மேற்காசியாவில் துருக்கியிலிருந்து கிழக்கே சீனா வரை இவ்விடுதலை ஆர்வம் துளிர்த்திருந்தது. ஆசியாவில் மாத்திர மன்றி இங்கிலாந்தில் நிகழ்ந்த பெண்கள் வாக்குரிமை இயக்கத்தையும், தென்னாபிரிக்கப் பெண்கள் இயக்கத்தையும், ரஷ்யாவில் புரட்சிக்குப் பின்னர் பெண்கள் பெற்ற சலுகைகளையும் பாரதி அறிந்திருந்தார். ஆசிய நாடுகளில் துருக்கி, சீனா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளிலும் பெண்ணு ரிமை தொடர்பாக நிகழ்ந்த இயக்கங்களும் செயற்பாடுகளும் பாரதியின்
அக்கறைக்கு உள்ளாகின.
துருக்கியில் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களுடனும் , அந்நாட்டை நவீனமயப்படும் கொள்கைகளுடனும் பெண்விடுதலைக் கருத்துக்கள் தொடர்புபட்டிருந்தன. முதலில் பெண்கல்வி என்ற கருத்தி னுடாகவே பெண்ணுரிமைக் கருத்துக்கள் இங்கு முன்வைக்கப்பட்டன. பெண்களுக்கான இடைநிலைப் பாடசாலைகளும் ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளும் 1863 ம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் வரையறுக்கப்பட்ட அடிப்படைக் கல்வியையே பெண்கள் பெற்றனர். துருக்கியின் உயர் வர்க்கத்தினர் தமது பெண்களை ஐரோப்பிய ஆசிரியர் களிடமும், துருக்கியில் அமைந்திருந்த வேற்று நாட்டுப் பாடசாலை களிலும் பயிற்றும் வசதிபடைத்திருந்தனர். 'இவ்வாறு 19 ஆம் நூற்றாண் டில் கல்வி பெற்ற உயர் குடியினரது தோற்றத்துடன் கல்விகற்ற மனைவியர் பற்றிய பிரச்சினைகள் தோன்றிவிட்டன.' (Jayawardene kumar 1986) துருக்கியில் வசதிபடைத்தவர்க்கப் பெண்களுக்கிடையே கணிசமான அளவு கல்வி பரவியதால் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெண் எழுத்தாளர்கள் இக்கட்டத்தில் உருவாகினர். பாத்திமா அலி, செய்நப் ஹதும் முதலியோர் இவர்களிற் குறிப்பிடக் கூடியோர். பாத்திமா அலி துருக்கியின் முதலாவது பெண் நாவலாசிரியரும், பத்திரிகையா சிரியரும் ஆவார். இருபதாம். நூற்றாண்டின் முற்பகுதியில் பெண்களின் அந்தஸ்து பற்றிய சர்ச்சைகள் துருக்கிய இலக்கியங்களிலும் பத்திரிகை களிலும் இடம் பெற்றன. ஜனநாயக உரிமைகள் பற்றிய விவாதங்களிலும்
பாரதியின் பெண் விடுதலை
12

பெண்களின் உரிமைகள், சமூகத்தில் பெண்களின் பங்கு ஆகியவை பற்றிய அக்கறை இடம்பெற்றது. ஆண் சீர்திருத்தவாதிகள் பலரும் இப்பிரச்சினை குறித்து அக்கறை காட்டினர். துருக்கியத் தேசியவாதத்தின் தத்துவவாதி என்று கூறப்படுபவரும் பிரபல எழுத்தாளருமான ஷியா கொகல்ப் (1876 - 1924) பெண்களின் திருமண மறுமண உரிமை, சொத்துரிமை என்பவற்றை ஆதரித்து எழுதினார். பெண்களின் உரிமை கள் கட்டுப்படுத்தப்படுதல் சமூகத்தின் பிற்போக்குத்தனத்திற்கு ஒரு தெளிவான உதாரணமாகும் என்று இச்சீர்திருத்தவாதிகள் கருதினர். பெண்களைக் கெளரவிக்காத எந்த நாடும் வளர்ச்சியடைய முடியாது என ஷியா கொகல்ப் கூறினார். துருக்கியத் தேசியவாதிகளின் தலைவர் எனப்படும் முஸ்தபா கமாலின் நவீனத்துவம் பற்றிய கருத்துக்களுடன் பெண்விடுதலைக் கருத்துகளும் இணைந்திருந்தன. பெண்களது முன்னே ற்றம் பற்றிய ஊக்கமின்மையே துருக்கியின் கடந்த காலத் தோல் வி களுக்கு எல்லாம் காரணம் என அவர் கூறினார். பெண்கள் சமத்துவம் பற்றிய மிகமுற்போக்கான கருத்துக்களை அவர் முன்வைத்தார்.
இத்தகைய கருத்துகளால் துருக்கியில் பெண் கல்வி, பெண்களின் உரிமைகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. இக்காலத்தில் பெண்களுக்கெனப் பத்திரிகைகள் பலவும் தொடங் கப்பட்டு நன்கு நடத்தப்பட்டன. பெண்கள் பல புதிய தொழில்களில் ஈடுபட்டனர். இவை யாவும் ஏனைய ஆசிய நாடுகளின் சமூக சீர்திருத்த வாதிகளையும் கவர்ந்தன. இது பற்றி ஒரு ஆய்வாளர் பின்வருமாறு கூறினார்.
'இறுதி ஆய்வில், துருக்கியில் நடைபெற்ற சீர்திருத்தங்கள் எவ்வளவுதான் வர்க்க நிலைப்பாடுடையனவாக இருந்த போதிலும், வரையறுக்கப்பட்டனவாய் இருந்த போதிலும் சர்வதேசரீதியாக ஒர் ஆர்வத்தைத் தூண்டின. ஏனைய மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளில் நவீனத்துவத்தை வேண் டியோரையும், தேசியவாதிகளையும் இத்தீவிரமான சமூக சீர்திருத்தங்கள் கவர்ந்தன."
(ஜவர்த்தனா குமாரி:1986:42)
பாரதி துருக்கியில் பெண்கள் தொடர்பாக ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். பெண் என்ற கட்டுரையில் தமிழ்ப் பெண்களுக்கு உரிமைகள் கொடுப்பது பற்றிப் பேசும்போது துருக்கிப் பெண்களை உதாரணம் காட்டினார்.

Page 14
'துருக்கிதேசம் தெரியுமா? அங்கே நேற்று வரை ஸ்திரீ களை மூடி வைத்திருப்பது வழக்கம், கஸ்தூரி மாத்திரை களை டப்பியில் போட்டு வைத்திருக்கிறார்களோ இல் லையோ அந்த மாதிரி; திறந்தால் வாசனை போய் விடும் என்று. நம்முடைய தேசத்திலேயே கூட அநேக ஜாதிக்காரர் அந்த மாதிரி தானே செய்கிறார்கள். ஹிந்து ஸ்திரீ ஏறக் குறைய அடிமை நிலையிலிருக்கிறாள். ஹிந்து ஸ்திரீ களைக் காட்டிலும் இப்போது துருக்கி ஸ்திரீகள் நல்ல நிலைமையில் வந்திருக்கிறார்கள். துருக்கி ஸ்திரீகள் படிப்பு, ராஜியப் பொறுப்பிலேயே ஊக்கம் முதலிய சகல அம்சங்களையும் போதுமானபடி விருத்தியாய்க் கொண்டு. வருவதாக அந்த இங்கிலீஸ் புத்தகத்தில் போட்டிருப் பதாக...' (பாரதி சுப்ரமண்ய :1962:5)
பெண்ணுரிமை தொடர்பான இயக்கங்கள் நிகழ்ந்து பாரதியின் கவ னத்தை ஈர்த்த இன்னொரு நாடு சீனாவாகும். 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே சீனாவில் பெண்கள் உரிமை குறித்துப் பல சிந்தனை யாளரும் தத்துவவாதிகளும் குரலெழுப்பி வந்தனர். ஏகாதிபத்தியம், முடியாட்சி ஆகியவற்றுக்கு எதிராகச் சீனாவில் நடந்த போராட்டங்களின் விளைவாகவும் நவீன தேசிய அரசு ஒன்றை உருவாக்க விழைந்ததன் பயனாகவும் அங்கு பெண்கள் நிலை குறித்து கருத்துகள் தோன்றின. இக்காலத்திற்கு முன்னரே குறிப்பாக 11 ஆம் நூற்றாண்டு தொடக்கமே பல ஆண் அறிஞர்கள் பெண்கல்வி, திருமணம், பெண்களின் அந்தஸ்து பற்றி விவாதித்து வந்துள்ளனர். ஆனால் 19 ஆம் நூற்றாண்டிலேயே பெண்கள் மீதான அடக்குமுறை குறித்துப் பல சீர்திருத்தவாதிகள் அக்கறை காட்டினர். பெண்களின் பாதங்களை சிறுவயது முதற்கொண்டு கட்டி வைத்திருத்தல், வைப்பாட்டி முறை, பெண்களுக்கான கட்டிறுக்க மான ஒழுக்க விதிகள் என்பவற்றால் சீனாவில் பெண்கள் மோசமான அடக்குமுறையை அனுபவித்து வந்தனர். 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகள் பலர் மேற்கூறியவை நீக்கப்பட வேண்டும் என வற்புறுத்தினர். சீனாவில் அரசியல் அமைதியின்மையும், கலகங்களும் நிகழ்ந்த இக்கால கட்டத்தில் பெண்கள் அமைப்புகளும் தோன்றின. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இடம்பெற்ற தாய்ப்பிங் கலகத்தின் போது முன்வைக்கப் பட்ட நிகழ்ச்சித் திட்டங்களில் ஆண்பெண் சமத்துவமும் ஒன்றாகும்.
பாரதியின் பெண் விடுதலை
14

சீனாவில் ஹக்கா சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தமக்குள் தனியான இராணுவப் பிரிவினைக் கூட அமைத்தனர். பாரம்பரிய ஒடுக்குமுறை வழக்கங்களை மிகத் தீவிரமாகச் சில பெண்கள் குழுக்கள் எதிர்த்தன. திருமணத்திற்கு எதிராகவும் அடக்கு முறைக்கு எதிராகவும் இக்குழுக்கள் செயற்பட்டன.
19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் சீனாவில் நிகழ்ந்த தேசியவாத, குடியரசு இயக்கங்களும், அன்னிய ஆட்சிக்கு எதிரான இயக்கங்களும் பெண்கள் அரசியலில் ஈடுபடவும் வழிசமைத்தன. புரட்சிகர அரசியல் குழுக்களில் பெண்கள் சேர்ந்து உழைத்தனர். இவ்வாறு அரசியலில் தீவிரமாகச் செயற்பட்ட பெண்களில் ஹிஷியாங்நிங், சோபியா செங், ஜீயுஜீன், செளமே செங் போன்றோர் முக்கியமானவர்கள். இவர்கள் சீனாவில் தேசியக் குடியரசை நிறுவ உழைத்ததுடன் பெண்கள் உரிமை களுக்காகவும் போராடினர். இவர்களது நடவடிக்கைகளுக்கும் கொள்கை கட்கும் ஜியுஜின் (1875-1907) நல்ல உதாரணமாக அமைகிறார். மேனாட்டு கல்வியின் பின்னணி கொண்ட உயர் குடும்பமொன்றில் பிறந்த ஜியுஜின் நன்கு கல்வி கற்றதுடன் பாரம்பரியமாகப் பெண்களுக் கென வரையறுக்கப்பட்ட வாழ்க்கை முறைகளில் சலிப்புக் கொண்டவர். தனது இருபத்தியெட்டாவது வயதில் கணவனிடமிருந்து பிரிந்து ஜப் பானுக்கு கல்வி கற்கச் சென்ற ஜியுஜின் அங்கு மிகுந்த தீவிரமான பெண்ணுரிமைக் கருத்துகள் கொண்டவராகவும், அரசியல் கருத்துகள் கொண்டவராகவும் வளர்ச்சியுற்றார். சீனாவுக்குத் திரும்பிவந்து அரசிய லில் ஈடுபட்டதோடு பெண்களுக்கெனப் பத்திரிகையும் நடத்தினார். இப்பத்திரிகை மூலம் அவர் பெண் சுதந்திரம் பற்றிய தனது கருத்துகளைy வெளியிட்டார். பெண்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்கு அவசிய மானால் வீட்டை விட்டு வெளியேறவும் வேண்டும் என்றும் சமூகத்தின் ஒடுக்குமுறைகளிலிருந்து மீள்வதற்கு கல்வி கற்கவும் தொழில் புரியவும் வேண்டுமென்றும் தனது பத்திரிகையில் எழுதினார். சீனாவில் தோன்றிய பெண் விடுதலைக் கருத்துகளால், குறிப்பாக ஜியுஜினுடைய கருத்துகளால் கவரப்பட்டிருந்த பாரதி, தனது கட்டுரை யொன்றில் ஜியுஜினுடைய வாழ்க்கை பற்றிச் சுருக்கி எழுதியுள்ளார். 'சியூசீன் என்ற சீனத்து ஸ்திரீயின் கதை' என்ற தலைப்பில் இக்கட்டுரை அமைந்துள்ளது. இதுதவிர 'சியூசின் செய்த சொற்பொழிவு' என்ற தலைப்பில் இப்பெண்மணியின் பிரசங்கமொன்றையும் மொழி பெயர்த் துள்ளார். இப்பெண்மணி பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் வியப்பும்,

Page 15
பற்றும், ஆர்வமும் தொனிக்கப் பாரதி எழுதுவதை அவதானிக்கலாம். 'பெண் விடுதலை’ என்ற கவிதையும் பாரதியின் மொழி பெயர்ப்பு என்பதைப் பலர் கவனிப்பதில்லை. 'விடுதலைக்கு மகளிரெல்லாம் வேட்கைகொண்டனம்' என்று தொடங்கும் இக்கவிதை ஜியுஜின் எழுதிய சீனமொழிக் கவிதையொன்றின் மொழிபெயர்ப்பாகும். இவ்வாறு பாரதி ஜியுஜினுடைய சொற்பொழிவு, கவிதை ஆகியவற்றைத் தமிழிற் பெயர்த் தமையும், அவரது வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து எழுதியமையும் சீனத்துப் பெண்ணுரிமைவாதியான அவரில் பாரதி கொண்டிருந்த பற்றை எடுத்துக் காட்டுவதாகும்." 19 ஆம் நூற்றாண்டில் பெண்ணுரிமை தொடர்பான கருத்துக்கள் ஜப்பானிலும் எழுச்சியுற்றன. இக்காலகட்டத்தில் ஜப்பானில் ஏற்பட்ட முதலாளித்துவ, நவீனமயமாக்கல் கொள்கைகளுடன் பெண் களது உரிமை பற்றிய கருத்துக்கள் இணைந்திருந்தன. பெண்களுக்குத் தேர்த லில் வாக்குரிமை அளிப்பது பற்றிய விவாதங்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்நாட்டில் நடைபெற்றன. ஜப்பானில் ஜனநாயக உரிமை இயங்கங்களுடன் பெண்களின் உரிமைகள் தொடர்புபட்டிருந்தன.
ஆண்சீர்திருத்தவாதிகள் மாத்திரமன்றி பெண்களும் இக்கோரிக்கைளை முன்வைத்தனர். வாக்குரிமை பற்றிய பிரசாரத்தை கிஷிடா ரொஷிக்கோ (1863 -1901) என்ற பெண் மேற்கொண்டார்.
பெண்களுக்குத் திருமண உரிமை, திருமண சமத்துவம், மறுமண உரிமை, ஒருதார மணம், பெண் கல்வி போன்றவையே பெண்கள் உரிமை தொடர்பாக அதிகம் வற்புறுத்தப்பட்டவையாகும். பெண்கல்வி தொடர் பாகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பெண்கல்வி பரவியதால் பெண்கள் பல புதிய தொழில்களைச் செய்யும் வாய்ப்புகள் ஏற்பட்டன. பெண் ஆசிரியைகள், வைத்தியர்கள், தொலைபேசி இயக்குனர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் முதலியோர் புதிதாகத் தோன்றினர். 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கைத்தொழில்களின் அதிகரிப்பால் பெருந்தொகையான பெண் ஆலைத் தொழிலாளர்கள் உருவாகும் நிலை ஏற்பட்டது. இத்தகைய மாறுதல்களால் பெண்கள் உரிமை தொடர்பான விவாதங்கள் ஜப்பானில் தொடர்ந்து இடம்பெற்று வந்தன.
பாரதியின் ஆதர்ஸ் நாடாக ஜப்பான் திகழ்ந்தது என்பதை அவரது கட்டுரைகளிலிருந்து அறியலாம். ஜப்பானில் ஏற்பட்ட கைத்தொழில் வளர்ச்சிகள் பாரதியை மிகவும் கவர்ந்தன. 'லெளகீக ஞானத்தில் நம்மைக் காட்டிலும் வேறு பல தேசத்தார் மேன்மை அடைந்திருந்தார்கள்.
பாரதியின் பெண் விடுதலை
16

அப்படிப்பட்ட தேசங்களில் ஜப்பான் ஒன்று' (பாரதி:1953:75) என்று கூறும் பாரதியார் ஜப்பானில் பெண்கல்வி வளர்ந்திருந்ததையும் அறிந் திருந்தார். டி.ஆர். கார்வே என்பவரால் பூனாவில் பெண்களுக்குத் தனியான பல்கலைக்கழகம் ஏற்படுத்தும் முயற்சி செய்யப்பட்ட போது பாரதி ஜப்பானை உதாரணம் காட்டினார். கார்வேயின் முயற்சியைப் புகழ்ந்த பாரதி, ஜப்பானில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.
‘ஸ்திரீகளுக்கென்று தனியான யூனிவர்சிடி இதற்கு முன் பூமண்டலத்திலேயே இரண்டுதான் இருக்கின்றன. ஜெர் மனியில் லைப்ஜிக் பட்டணத்திலே ஒன்றிருக்கிறது ஜப்பா னில் ஒன்றேற்பட்டிருக்கிறது.' (மேற்படி:106)
இவ்வாறு பெண்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அவற்றை ஊன்றிக் கவனித்து வந்து பாரதி, ஆசிய நாடுகளல்லாத ஏனைய நாடுகளில் ஏற்பட்ட அபிவிருத்திகளையும் அவதானித்தார். அவற்றைப் பற்றிய தம் அபிப்பிராயங்களைத் தெரிவித்தார். தம் நாட்டு மாதரின் நிலைமையுடன் அவற்றைத் தொடர்புபடுத்தி எழுதினார்.
ரஷ்யாவில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஏற்பட்ட அரசியல், சமூக மாறுதல்களைப் பாரதியார் அவதானித்து வந்தார். ரஷ்யாவைப் பற்றி 1906 ஆம் ஆண்டு இந்தியா பத்திரிகையில் ஐந்து கட்டுரைகள் எழுதியிருந்தார். 1905 ஆம் 1906 ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவில் தோன்றிய கிளர்ச்சிகள், படையினரிடையே தோன்றிய அதிருப்தியும் கலகமும், புரட்சிவாதிகளின் நடவடிக்கைகள் போன்ற வற்றைக் கவனித்துத் தன் அபிப்பிராயத்தை இக்கட்டுரைகளிற் தெரிவித் திருந்தார்.
‘சுயாதீனத்தின் பொருட்டும், கொடுங்கோன்மை நாசத் தின் பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்துவரும் உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் செலுத்து
G) f'TG60TIT5 '' '
என்று 1906 ஆம் ஆண்டு இந்தியா பத்திரிகையில் எழுதிய பாரதி 1917ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியை "யுகப் புரட்சி' என்று வாழ்த்திப் பாடினார். புரட்சியை அடுத்து ரஷ்யாவில் பெண்கள நிலையில் பெரும் மாறுதலேற்பட்டது. புரட்சிக்கு முன்னரேயே லெனின் ரஷ்யாவில்
பெண்களது நிலைமை குறித்தும் அவர்களது முன்னேற்றம், நாட்டின்

Page 16
அபிவிருத்தியில் அவர்களது பங்கு ஆகியவை குறித்தும் திட்டவட்ட மான கருத்துக்களைக் கூறி வந்தார். ஆண்களைப் போலவே பெண்களும் சகல உரிமைகளும் சுதந்திரமும் உடையவர்களாய் வாழ வேண்டும் என்பதை அவர் வற்புறுத்தினார். ரஷ்யாவில் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட புதிய விதிகள் பெண்கள் சமத்துவத்தைப புதிய அரசு கருத்தில் கொண்டதைக் காட்டுகிறது. பாரதி இந்தப் புதிய விவாகச் சீர்திருத் தங்களை வியந்து பாராட்டினார். நவீன ருஷ்யாவில் விவாக விதிகள் என்று கட்டுரை பாரதியின் கருத்துகளைத் தெரிவிப்பதாகும்.
'அவற்றைப் பார்க்கும் போது, நவீன ஐரோப்பிய நாகரீகம் என்று புகழப்படும் பொருளின் நியாயமான, உயர்ந்த பக்குவ நிலைமை மேற்படி போல்ஷிவிக் விவாக சம்பிர தாயங்களில் எய்தப்பட்டிருக்கிறதென்று தெளிவாக விளங் குகிறது. பெண்களுக்கு விடுதலை தாங்கள் வேறு பல ஜாதியார்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப் பதே தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்பதற்கு முக்கிய மான அடையாளங்களில் ஒன்றாமென்று ஐரோப்பியர்கள் சொல்கிறார்கள். அந்த வகையிலே பார்த்தால், ஐரோப் பாவின் இதர பகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷ்யா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ளதென்பது ப்ரத்யமாகத் தெரி கிறது.'
இவ்வாறு ரஷ்யாவின் விவாக விதிகளைப் புகழ்ந்துவிட்டு அவை பிரதானப்படுத்தும் ஆண்பெண் சமத்துவத்தைத் தமது சமூகமும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.
'. ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலோரும் சமானமாகவே கருதப்படுவார்கள் என்று ருஷ்யச்சட்டம் கூறுமிடத்திலே நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் கருத்தை அனுசரித்தல் மிக, மிக, மிக, மிக, அவசரம்'
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தஸாப்தங்களில் பெண்விடுதலை தொடர்பாக எழுந்த கோரிக்கைகளில் ஒன்று பெண்களுக்குத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கேட்டு எழுந்ததாகும். பெண்களின் வாக்குரிமை தொடர்பாக ஆபிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எழுந்த கோரிக்கைகளையும் நிகழ்ந்த செயற்பாடுகளையும் பாரதியார் கருத்
பாரதியின் பெண் விடுதலை
18

தூன்றிக் கவனித்தார். தமது பத்திரிகைக் கட்டுரைகளில் இவற்றைச் செய்தியாக மாத்திரமன்றித் தமது கருத்துகளையும் சேர்த்துக் குறிப் பிட்டார்.
தென் ஆபிரிக்காவில் பெண்கள் விடுதலை என்னும் கட்டுரையில் அந் நாட்டில் பெண்களது கோரிக்கைகள் பற்றியும் வாக்குரிமை தொடர்பாக அவர்கள் பெற்ற வெற்றிகள் பற்றியும் எழுதியுள்ளார். அக்கட்டுரையில் இறுதியாகப் பின்வருமாறு விசனத்துடன் பாரதியார் குறிப்பிட்டார்.
'. இப்படியே எல்லாத் தேசங்களிலும் பெண்கள் மேன் மேலும் சுதந்திரம் பெற்று மனித ஜாதியை மேன்மைப் படுத்த முயற்சி செய்கிறார்கள். தமிழ் நாட்டு ஸ்திரீகள் மாத்திரம் தமது மனுஷ்ய பதவியை ருசுப்படுத்துவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே! ஏன் என்ன காரணம் ???
தென் ஆபிரிக்கா போலவே இங்கிலாந்திலும் பெண்கள் வாக்குரிமைக்கான பல முயற்சிகள் நடந்தன.
இங்கிலாந்தில், தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கோரிப் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் இக்கோரிக்கை இடம் பெற்றதாயினும் 1905 ஆம் 1906 ஆண்டுகளில் இது வலுவடைந்தது. இதுபற்றிப் பாரதியார் தனது இந்தியா பத்திரிகையில் "இங்கிலாந்தில் பெண்கள் எலக்ஷன் சுதந்திரம் கேட்பது' என்ற தலைப்பில் எழுதினார்.
இவ்வாறு, பெண்கள் தொடர்பான செய்திகள் எங்கு இடம் பெற்றாலும் விழிப்புடன் அவற்றை அவதானித்து தமிழ் நாட்டு வாசகருக்கு எடுத்துக் கூறினார் பாரதி. பெண்களது விடுதலையில் அவருக்கிருந்த நாட்டம் இதற்குக் காரணமாக அமைந்தது. அதே சமயம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தோன்றிய பெண்விடுதலைக் கருத்தோட்டங்கள், இயக்கங்கள் ஆகியவையும் பாரதியின் கருத்துகளுக்கு வடிவும் வலுவும் அமைக்க உதவின.

Page 17
குறிப்புகள்:
1.
வேதநாயகம் பிள்ளையின் பெண்மானம் என்ற கட்டுரையும் சர்வசமய சமரக் கீர்த்தனைகள் என்ற நூலிலுள்ள சில கீர்த்தனை களும் சிறு பிள்ளைத் திருமணம் வைதல்யம், சொத்துரிமை இன்மை, கணவனது உறவினர்களால் பெண்கள் உறும் துயர் முதலியவை பற்றிக் கூறுகின்றன. பார்க்கவும் 'பெண் மானம்', பெண் கல்வி, சென்னை 1958, பக்142-54
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள், சென்னை 1966, பக்199
உதாரணமாக இலங்கையில் சைவசமயத்தினதும், தமிழ் மொழி யினதும் மறுமலர்ச்சிக்காக அயராது உழைத்த ஆறுமுக நாவலரும் சமூக நோக்குள்ள இலக்கிய கர்த்தா எனப் போற்றப்பட்ட பாவலர் துரையப்பா பிள்ளையும் பெண் பற்றிய மரபு ரீதியான கருத்தையே வற்புறுத்தினர். பார்க்க; இதே நூல் 'துரையப்பா பிள்ளையும் பாரதியாரும்: சமகாலக் கருத்தோட்டங்களில் ஒற்றுமையும் முரண்பாடும்"
பாரதியின் பெண் விடுதலைக் கொள்கைகள் பற்றி விரிவாகப் பின்வரும் கட்டுரையில் ஆராய்ந்துள்ளேன். 'பாரதியும் பெண் விடுதலையும்' இதே நூல் மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், பாலகங்காதர திலகர் போன்றோர் விதவைகள் மறுமணம், விவாகரத்து போன்றவை குறித்து தெளிவான கருத்துக்களை முன்வைக்கவில்லை. “வித வைகள் தமது பிரச்சினையைத் தாமே தீர்த்துக் கொள்ளட்டும்' என்று தீவிரவாத அரசியல் வாதியான திலகர் கூறினார். சுவாமி விவேகானந்தரும் இத்தகைய ஒரு கருத்தையே கொண்டிருந்தார். விதவைகளுக்கு மறுமணம் மறுக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் ஆண்களுடைய தொகை குறைவாக இருப்பதாகும் எனக் கூறி னார். பாரதியார் விவேகானந்தரின் இக்கருத்தை கண்டித்துள் ளார். விபரங்களுக்கு: பாரதி சுப்பிரமணிய 'மாதர் நிலை பற்றி சுவாமி விவேகானந்த ரின் அபிப்பிராயம்' பாரதி புதையல் பெருந்திரட்டு (தொகுப்பு) ரா.அ.பத்பநாதன், சென்னை, 1982. பக்.231-235
ஜியு ஜின் பற்றி வேறாக இந்நூலில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.
பாரதியின் பெண் விடுதலை
2O

துணைநூல்கள் :
1O.
11.
12.
13.
ஐயர் வ.வே.சு (1953) மங்கையர்க்கரசியின் காதல், சென்னை, சரவணமுத்துப் பிள்ளை தி.த (1985) தத்தை விடுதூது, சென்னை.
பாரதி சுப்பிரமணிய (1953) பாரதி தமிழ் (தொகுப்பு), பெ.தூரன் சென்னை.
பாரதி சுப்பிரமணிய (1962) மகாகவி பாரதியார் கட்டுரைகள்: தொகுதி1, திருநெல்வேலி,
பாரதி சுப்பிரமணிய (1977) பாரதியார் கதைகள், சென்னை.
பாரதி சுப்பிரமணிய (1982) பாரதிபுதையல் பெருந்திரட்டு, (தொகுப்பு) ரா.அ.பத்மநாதன், சென்னை.
மணியன் இளசை (1977) பாரதிதரிசனம் II, சென்னை, மணி பெ.சு. (1980) பாரதியாரும் சமூக சீர்திருத்தமும், சென்னை.
மஜீம்தார் ஆர்.சி (1966) இந்தியாவின் சிறப்பு வரலாறு, (பாகம் -3) சென்னை.
மாதவையா. அ. (1961) பத்மாவதி சரித்திரம், சென்னை. வேதநாயகம்பிள்ளை ச. (1958) பெண்கல்வி, சென்னை,
Jayawardena Kumari (1986) Feminism and Nationalism in the Third World, London
Majumdar Veena, The Social Reform Movement in India from Ranade to Nehru', Indian Women From Purdah tó Modernity, B.R. Nanda, New Delhi.

Page 18
பாரதியும் பெண்விடுதலையும்
பெண் விடுதலை என்ற தொடர் இன்று பலராலும் எமது சமூகத்திற் பயன் படுத்தப்படுகிறது. எனினும் இத் தொடர் இதன் முழுமையான அர்த்தத் தில் பரவலாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. இத் தொடர் இன்னும் பல்வேறு தப்பப்பிப்பிராயங்களையும் தயக்கமயக்கங்களையும் ஏற்படுத் துவதாயுள்ளது. பெண் விடுதலை - Women's Liberation என்ற தொடர் பற்றிய தவறான பிரசாரம் இதற்குக் காரணமெனலாம். பெண் விடுதலை என்றதும் அது ஆண்களுக்கெதிரானது எனக் கருதுகின்றனர் ஒரு சாரார். குடும்பம், சமூகம் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்ற எத்தகைய ஒழுக்க விதிகளுக்கும் உட்படாத வாழ்க்கை நோக்கமே பெண் விடுதலை எனக் கருதுகின்றனர் இன்னோர் சாரார். இவ்விருவகைக் கருத்துக்களும் பெண் விடுதலை என்ற கருத்தைப் புரிந்து கொள்ளாதோராலும் அதனை ஏற்றுக் கொள்ளாதோராலும் பிரபல்யப்படுத்தப்படுகின்றன.
இத்தகைய பெண் விடுதலை சம்பந்தமான கருத்துக்களும் ஆதார மற்றவை என்பதற்கில்லை. மேற்கில், குறிப்பாக அமெரிக்காவில் அறுபதுகளில் தோன்றிய பெண் விடுதலை இயக்கங்களின் சில கருத்துக் களாக மேற்கூறியவை காணப்பட்டன. இவையே பொதுஜனத் தொடர்பு சாதனங்கள் மூலம் எம் மத்தியிலும் பரவலாகியுள்ளன.
ஆனால் எத்தகைய கோட்பாடும், கருத்தோட்டமும் நாட்டுக்கு நாடு, சமூகத்துக்குச் சமூகம் வெவ்வேறு பரிமாணங்களைப் பெறுவது கண்கூடு. அந்தந்த நாட்டு வரலாற்று, சமூக, பொருளியல், அரசியல் நிலைமைகள் இந்தப் பரிமாணங்களைத் தோற்றுவிக்கின்றன. ஆகவே பெண் விடுதலை என்பது உலகப் பொதுவான ஒரு கோட்பாடாக இருப்பினும் வளர்ந்த மேற்கைரோப்பிய நாடுகளைப் போலல்லாது எமது நாடு உட்பட ஆசிய, ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளில் அதன் கருத்தும் பரிமாணமும் வேறுபடுகின்றது. பெண் விடுதலை தனிநபர் சுதந்திரம் என்ற வகையில் மட்டுமன்றி சமூக விடுதலையின் ஒரு முக்கியமான படி என்ற கருத்து
பாரதியின் பெண் விடுதலை
22

இந்நாடுகளில் அழுத்தம் பெறுகின்றது. ஏனெனில் இந்த நாடுகளில் சில தேசிய விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பவை. இன்னும் சில தேசிய நிர்மாணத்தில் ஈடுபட்டிருப்பவை. இத்தகைய நாடுகளில் தேச விடுதலைக்கும், தேச நிர்மாணத்துக்கும் சமூக உறுப்பினர்கள் ஒவ்வொரு வரது பங்கும் மிக முக்கியமானது. எனவே இங்கு பெண் விடுதலை என்பது சமூக விடுதலையுடன் ஒன்றிணைந்ததாக சமூக விடுதலைக்கு அத்தியாவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. முற்காலத்தைப் போலல்லாது இன்றைய காலகட்டத்தில் பெண் கணவன், தந்தை முதலியோருடைய அதிகாரத்திலிருந்து விடுதலையடைந்து விட்டாளெனவும் நவீன தொழில் முறைகள் பெண்ணை உழைத்து வாழும் சுதந்திர ஜீவியாக்கியுள்ளன எனவும் கூறப்படுகிறது. நிலவுட மைச் சமூகத்தில் ஆணின் குடும்ப அதிகாரத்தில் பெண்ணுக்கிருந்த இறுக்கமான கடப்பாடுகள் இன்று தளர்ச்சியடைந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால் பெண் இன்று முற்று முழுதான சுதந்திரஜிவியல்ல. குறிப்பாக ஆசிய நாடுகளில் நவீன ஆலைத் தொழில்கள் பெண்களை வெகுவாகச் சுரண்டுகின்றன. இந்நாடுகளிற் காணப்படும் சுதந்திர வர்த்தக வலயங்களில் பெண்களும் சிறுவர்களுமே பெருமளவு வேலைக்கமர்த் தப்பட்டுள்ளனர். இவர்கள் மிக மோசமான வேலைச் சூழலில் குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்கின்றனர். நிலப் பிரபுத்துவ சமதாயத்தில் நிலவிய ஒரு வகையான அடக்குமுறையிலிருந்து விடுபட்ட போதும் இன்னோர் வகையான சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் பெண்கள் ஆளாகியுள்ளனர். சுரண்டல், அடக்குமுறை ஆகியவற்றின் வடிவம் வேறுபடுகின்றதேயொழிய அவை தொடர்ந்து நிலவுகின்றன.
மேலும் மூன்றாம் உலக நாடுகளில் பெண்கள், கல்வி போன்ற சில துறைகளில் முன்பிருந்ததைவிடப் பெண்கள் முன்னேற்றமடைந்து காணப்படுகின்றனர் என்பது உண்மைதான். எனினும் நவீன மயமாதலின் தீய விளைவுகளால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை யும் மறுக்க முடியாது. புதிய இயந்திரமயமாகிய தொழிற் துறைகள், பணப்பொருளாதாரத்தின் வளர்ச்சி முதலியவற்றால் பாரம்பரியமாகப் பெண்கள் செய்து வந்த தொழில்கள், அவற்றால் அவர்களுக்கிருந்த பொருளாதார நன்மைகள் சுதந்திரம் போன்றவை அழிந்தன. "
1911ம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் பெண்களின் மொத்தத் தொகையில் முப்பதுநான்கு வீதமானோர் குடிசைக் கைத் தொழில், சிறுவியாபாரம் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ளனர் எனத்

Page 19
தெரிகிறது. ஆனால் 1972ம் ஆண்டு இது பன்னிரண்டு வீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்தது? இதுபோன்ற தகவல்கள் இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் நிலை முன்னேறாமையைக் குறிக்கின்றன. எமது நாட்டிலேயே விவசாயம், சிறுகைத்தொழில் முதலிய துறைகளில் ஆண் தொழிலாளிக்கும் பெண் தொழிலாளிக்குமின்டயே காணப்படும் சம்பள வேறுபாடானது ஆண், பெண் அசமத்துவ நிலை தொழிற் துறையில் இடம் பெற்றுள்ளதைக் காட்டுகிறது.
மூன்றாம் உலக நாடுகள் சிலவற்றில், குறிப்பாக தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் வளர்ந்துள்ள உல்லாசப் பயணத் துறையில் பெண்கள் மிக மோசமான சுரண்டலுக்கும் கலாசார சீரழிவிற்கும் உட்படுத்தப்படு கின்றார்கள். இந்நாடுகளைச் சேர்ந்த பல உல்லாசப்பயணக் கம்பனிகள் உல்லாசப் பயணிகளைக் கவர்வதற்காகவும், லாபம் சம்பாதிப்பதற் காகவும் பெண்களை விபசாரத் தொழிலில் ஈடுபடுத்துகின்றன. இதிலும் உல்லாசப் பயணிகளிடமிருந்து பெறப்படும் பணத்தில் இருபது சதவீதமே பெண்களுக்குச் சேருவதாகக் குறிக்கப்படுகின்றது. இத்தகைய நிலையில் பெண்கள் பொருளாதாரச் சுரண்டலுக்கு மட்டுமன்றி ஒழுக்கக் கேட்டிற் கும், ஆன்ம அழிவிற்கும் ஆளாக்கப்படுகின்றனர். தென்கிழக்காசிய நாடுகளில் இன்று காணப்படும் பெண்ணுரிமை இயக்கங்கள் இந் நிலைமைக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
இத்தகைய ஒரு பின்னணி விளக்கத்துடன்தான் நாம் இன்று பாரதி கூறிய பெண் விடுதலை குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் பாரதி கூறிய கருத்துக்களில் பொருத்தமானவை எவை, அழுத்தம் பெறவேண்டியவை எவை என்பது புலப்படும்.
பாரதி வாழ்ந்த காலம் பெண் விடுதலைக் க்ருத்துக்கள் உலகமெங்கும் பரவலாகத் துளிர்க்கத் தொடங்கியிருந்த காலமாகும். குறிப்பாக ஆசியா வில் பெண்ணுரிமை கோரும் இயக்கங்கள் ஆங்காங்கு தோன்றியிருந் தன. மேற்கே துருக்கியிலிருந்து கிழக்கே சீனாவரை இவ் விடுதலை யார்வம் கரைபுரண்டோடியது. பெண்கள் மட்டுமன்றிப் பெண் விடுதலை க்காக ஆண்கள் பலரும் குரலெழுப்பினர். ஆதரவு தந்தனர். ஏனெனில் ஆசிய நாடுகளில் பெண் விடுதலையானது, தேசவிடுதலை, சமூக விடுதலை ஆகிய தளங்களிலிருந்தும் நோக்கப்பட்டதால் பரந்த ஆதர வைப் பெற்றது. துருக்கியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதி யிலிருந்தே பெண் விடுதலை தொடர்பான கருத்துக்கள் பரவலாகின. சீனாவிலும் இதே காலகட்டத்தில் தேசியவாதிகளும் சிந்தனாவாதிகளும்
பாரதியின் பெண் விடுதலை

பெண்கள் சுதந்திரம் பற்றிப் பேசினர். இவர்களுள் தேசியவாதியும், பெண்ணுரிமைவாதியுமான ஜியுஜின் (1875-1907) முக்கியமானவர். இவருடைய கவிதையொன்றையும் சொற்பொழிவையும் பாரதி மொழி பெயர்த்தமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் மகாத்மா காந்தியி லிருந்து அன்னிபெசண்ட்வரை, தேசியவாதிகளாகவிருந்தோர், பெண் கள் நிலையை முன்னேற்றுதல், அவர்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தல் என்பன பற்றிப் பேசியும் எழுதியும் வந்தனர். சுப்பிரமணியபாரதியின் பெண் விடுதலைக் கருத்துக்கள் இத்தகைய பின்னணியில் தோன்றியவையாகும். பாரதி, உணர்வு மீதூரப்பெற்ற கவிஞராகவும் இருந்தமையினால் இந்தியப் பெண்களின் பரிதாபகரமான துயர் தோய்ந்த நிலையால்தான் மிகவும் பாதிக்க்ப்பட்டார். பெண்களுக் குப் பிதுரர்ஜிதத்தில் உரிமையின்மை, விதவைகட்கு மறுமணமின்மை, உயர்கல்வி இல்லாமை, பெண்களின் சிறு வயதுத் திருமணம் போன்றவை பெண்களின் நிலையை மிகவும் பாதித்தன. ஆண்களைப் போன்ற சுதந்திரம் இல்லாதவளாகவும், ஆண்களுக்குக் கீழ்ப்பட்டவளாகவும் இந்திய சமூகத்தில் பெண் நோக்கப்பட்டாள். இத்தகைய ஒரு சூழலில் வெளிவந்த பாரதியின் பெண்ணுரிமைக் கருத்துக்கள் மிக முற்போக்கானவையாகவும், திட்டவட்டமானவை யாகவும் காணப்படுகின்றன. கவிதைகளில் மாத்திரமன்றிக் கட்டுரை களிலும் பாரதியினுடைய பெண் விடுதலைக் கருத்துக்களை மிகத் தாராளமாகக் காண முடிகிறது. பெண் விடுதலை என்ற சொற்றொடரை அவர் மிகத் தாராளமாகக் கையாள்கிறார்.
ஆண் பெண் சமத்துவம் பற்றி. 'பெண்ணுக்கு விடுதலையின்றேல் பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை' என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்ட பாரதி ஆண் பெண் சமத்துவத்தை மிகவும் வற்புறுத்தினார். 'தமிழ் நாட்டின் விழிப்பு' என்ற கட்டுரையில் அவர் பின்வருமாறு எழுதினார். "ஸ்திரீகளுக்கு ஜீவன் உண்டு; மனம் உண்டு; புத்தியுண்டு; ஐம்புலன்கள் உண்டு; அவர்கள் செத்த யந்திரங்களல்லர். உயிருள்ள செடி கொடி களைப் போலவுமல்லர், சாதாரணமாக ஆண் மாதிரியாகவேதான். புறவுறுப்புக்களில் தான் மாறுதல்; ஆத்மா ஒரே மாதிரி ' ° ஆண் பெண்ணுக்கிடையே உடலியல் ரீதியான வேறுபாடு உண்டு. ஆனால்
'"

Page 20
அதையொட்டி வேறுபாடோ, உயர்வு தாழ்வோ கற்பிப்பது கூடாது என்கிறார் பாரதி. இவ்வகையில் நவீன பெண்ணுரிமை இயக்கங்களின் சுலோகம் போன்ற "வேறுபாடு ஆனால் சமத்துவம்' (Different but equal) என்ற கருத்தையே தனது மொழியிற் கூறினார் எனலாம். ஆணும் பெண்ணும் சமம் என்ற தமது கட்சியைப் பாரதியார் பல்வேறு ஆதாரங் களைக் காட்டி வற்புறுத்துவார். அவற்றில் முக்கியமானது இந்துப் பாரம்பரியமாகும். இந்துப் பாரம்பரியத்தில் பெண் தெய்வம் ஆண் தெய்வத்திற்குச் சமானமாகக் கொள்ளப்பட்டதை அவர் அடிக்கடி எடுத்துக் காட்டுவார்.
'விஷ்ணுவும் சிவனும் பரஸ்பரம் உதைத்துக் கொண்டதாக கதை சொல்லும் பொய்ப் புராணங்களிலே லசுஷ்மியை அடித்தாரென்றாவது, சிவன் பார்வதியை விலங்குபோட்டு வைத்திருந்தாரென்றாவது கதைகள் கிடையா. சிவன் ஸ்திரீயை உடம்பிலே பாதியாகத் தரித்துக் கொண்டார். விஷ்ணு மார்பின் மேலே இருத்தினார். பிரம்மா நாவுக்குள் ளேயே மனைவியைத் தாங்கி நின்றார். ஜகத்திற்கு ஆதார மாகிய பெருங்கடவுள் ஆண் பெண் என இரண்டு கலைகளு டன் விளங்குகிறது. இரண்டும் பரிபூரணமான சமானம். பெண்ணை அணுவளவு உயர்வாகக் கூறுதலும் பொருந்தும்.'
ஆண் பெண் வேறுபாட்டை வற்புறுத்துவோர் இயற்கையாகவே அவர் களிடையே அமைந்துள்ள உடல் வேறுபாட்டையும், பெண்கள் ஆண்களி லும் உடல் பலத்தில் குறைந்தவர்களாக இருப்பதையும் எடுத்துக் காட்டுவர். பெண்களின் இயற்கையான நுண்ணறிவுத் திறன்கூட ஆண் களைவிடக் குறைவாக இருக்கிறது என நிறுவ முற்படுவர். இத்தகைய போக்கு அன்றும் இருந்தது. இன்றும் உள்ளது. தமது காலத்தில் காணப் பட்ட இத்தகைய வாதத்திற்குப் பின்வருமாறு பதிலளித்தார் பாரதி. 'ஆண்பாலார்க்கும் பெண்பாலார்க்குமுள்ள வித்தியாசம் இளமையிற் பழக்கத்தினாலேயே என்று நாம் கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்பாலரை அபலைகள், அஃதா வது பலமில்லாதவர்கள் என்கிறோம். இதற்குக் காரணம் பெற்றோர் முதலிய பெரியோர்களேயாவர். பெண் குழந்தைகளைக் கல்வியிலும் சரீரப் பயிற்சியிலும் பழக் காமல் ஆண்குழந்தைகளுக்கு மாத்திரம் அவை இருந்தாற்
பாரதியின் பெண் விடுதலை
26

போதுமென்றெண்ணிப் பெற்றோர்கள் இவ்வாறு செய்த னர் போலும்! புத்தி விரிவதற்கும் தைரியம் முதலியன பெருகுவதற்கும், பெண்பிள்ளைகட்கு இடங்கொடாமல், அவர்களை ஒருவழியிலும் செல்லவொட்டாமல் கல்வியுங் கற்பியாமல் வீட்டு வேலைகள் செய்வதிற் பழக்கி மடைப் பள்ளிக்குரிய மடையர்களாக்கிப் புருஷர்களுக்கு சிற்றின் பம் தரும் மிருகங்களே போன்று மக்களைப் பெறுவதற் கான யந்திரங்களாய் மாத்திரம் அவர்களை வளர்த்து விட்டார்களே. இங்ங்ணம் வெகுகாலமாய் வளர்க்கப் பட்டு வரவே இரண்டொரு தலைமுறையிற் பழக்கத் தினாலேற்பட்ட மடமையும், பலக்குறைவும் பின்வரும் தலைமுறைகளிற் பிறக்கும் சிறுமியர்க்கு இயற்கையிலே ஏற்படுகின்றன.*
மேற்கண்டவாறு கூறி ஆணுக்குப் பெண் இளைத்தவள் என்னும் கருத்தை அடியோடு மறுத்தார் பாரதி. இவ்விடத்தில் ஒன்று குறிப்பிட விரும்பு கிறேன். வரலாற்றடிப்படையில் நோக்கும் போது சமுதாயத்தில் வர்க்க வேறுபாடுகள் தோன்றிய காலத்திலிருந்தே, பெண்ணினமும் சமுதாயத் தில் சம உரிமையையும் அந்தஸ்தையும் இழந்தது என்பது புலனாகும். இதனை விஞ்ஞானபூர்வமாகவும், சமூகவியலடிப்படையிலும் பிரடரிக் ஏங்கல்ஸ் நிறுவினார். சமூகத்தில் பால்ரீதியாக ஏற்பட்ட வேலைப் பிரிவினையே பெண்ணின் அந்தஸ்தைக் குறைத்தது என்றார் அவர் சமூக உற்பத்தியிலிருந்து வெளியேற்றப்பட்ட பெண் தனியே வீட்டுக்குள் அடங்கியவளாய், ஆண்களுக்கு இன்பம் தரும் போகப் பொருளாகவும், பிள்ளைபெறும் யந்திரமாகவும் மாறிவிட்டாள் என்று கூறினார் ஏங்கல்ஸ். இவ்வாறு பெண்ணின் சமூக அந்தஸ்து மாறியமை பற்றி மிகுந்த ஆதங் கத்துடன் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்.
'தாயுரிமை தூக்கியெறியப்பட்டது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வியாகும். வீட்டிலேயும் ஆட்சிச் சூத்திரத்தை ஆண் கைப்பற்றினான். பெண் இழி நிலைக்குத் தள்ளப்பட்டாள். பணிமகளாக்கப்பட்டாள், ஆணின் காம இச்சைக்கு அடிமையானாள். கேவலம் குழந்
தைகளைப் பெறும் சாதனமாக ஆகிவிட்டாள்.'
பாரதி மேலே குறிப்பிட்டதைப் படிப்போருக்கு ஏங்கெல்ஸின் இக்கூற்று நினைவுக்கு வராமற் போகாது.

Page 21
இவ்வாறு ஆண் பெண் சமத்துவத்தை வற்புறுத்திய பாரதி இச்சமத்துவ மின்மையே உலகில் காணப்படும் சீர்கேடுகளுக்கு முக்கிய காரணம் என்றார். ஆணுக்குப் பெண் அடிமையாவதையும், இரண்டாந்தர பிரஜையாக இருப்பதையும் வெறுத்த பாரதி இந்நிலைமை இந்தியாவில் மாத்திரமன்றி இந்நிலைமை உலகெங்கிலும் பரவலாகக் காணப்படு வதைக் கண்டித்தார். உலக மக்களில் பாதியளவான பெண்களுக்கு விடுதலையின்றி உலகம் எவ்வாறு மேன்மை பெறமுடியும்? பாரதி தனக்கேயுரிய உணர்ச்சி மீதூரப் பெற்ற நடையில் மிகத்திட்டவட்டமாகப்
பின்வருமாறு கூறினார்.
'இன்று தமிழ்நாட்டில் மாத்திரமேயல்லாது பூமண்டல முழுதிலும், பெண்ணைத் தாழ்வாகவும் ஆணைமேலா கவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றி லும் தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை, கலியுகத்திற்குப் பிறப்
பிடம்???
பெண்களை தமது விடுதலைக்கு முயலுதல் வேண்டும்
தமது தாழ்த்தப்பட்ட நிலைமையை மாற்றுவதற்கு இவ் விடயத்தில் நேரடியாகச் சம்மந்தப்பட்ட பெண்களே பெரு முயற்சி எடுக்க வேண்டு மென்பது பாரதி கருத்து, பெண்விடுதலைக்காகப் பெண்கள் தர்மயுத்தம்
தொடங்க வேண்டும் என்ற பாரதியார் பின்வருமாறு கூறினார்.
'நம்முடைய ஆண்மக்கள் நமது நிலைமையை உயர்த்திக் கொள்ளக் கூடிய சுலபமான உபாயங்களைக் கூடக் கையா ளத்திறமையற்றோராகக் காணப்படுகிறார்களாதலால், நம்முடைய ஸ்திரீகளை மேன்மைபடுத்தற்குரிய காரியங் களை முற்றிலும் இந்த ஆண்மக்கள் வசத்தில் விட்டு விடாமல், மாதர்கள் தாமே முற்பட்டுத் தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களைத் தேடிக் கொள்வதே நன்றாகும். அன்னிய தேசங்களில் விடுதலைக்காக உழைக்கும் ஸ்திரீகள் பெரும் பாலும் ஆண் மக்களின் உதவியை அதிகமாக நாடாமல் தமது மேம்பாட்டுக்குரிய வேலைகளைத் தாங்களே செய்து வருவதையும் நமது தேசத்து ஸ்திரீகள் நன்கு கவனிக்க
வேண்டும். ??
பாரதியின் பெண் விடுதலை
28

இவ்வாறு பெண்களே பெண் விடுதலைக்கான வழிமுறைகளில் ஈடுபட வேண்டும் என்று கூறும் போக்கு முக்கியமானதாகும். ஏனெனில் பெண் விடுதலை குறித்து இருவகையான போக்குகள் அன்றைய இந்தியாவிற் காணப்பட்டன. ஒன்றை மறு மலர்ச்சி அல்லது புனருத்தாரணக் கருத்தோட்டம் (revivalistic thinking) எனவும் மற்றதைச் சீர்திருத்தக் கருத்தோட்டம் (reformisy thinking)எனவும் குறிப்பிடலாம். முதலாவது நோக்குடையோர், இந்தியப் பெண்கள் தங்கள் பண்டைப் பெருமையை அடைய வேண்டும் என்றனர். பெண்ணின் புனிதமான குணம் பற்றிப் பேசிய அவர்கள், பெண்கள் சுதந்திரத்தை ஆண்களிடமிருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய கொடையாகவே கருதினர். ஆனால் சீர்திருத்த நோக் குடையோர் இவர்களிலிருந்து வேறுபட்டனர். மனிதருள் பால்ரீதியான வேறுபாடோ பாரபட்சமோ காட்டப்படுவதை வெறுத்த இவர்கள் 18ஆம் 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வளர்ந்த மனிதாயத பகுத்தறிவு வாதக் கருத்தோட்டங்களாற் கவரப்பட்டிருந்தனர். இரண்டாவது போக்கிற்கு உதாரணமாக ராஜா ராம் மோகன்ராய், மகாதேவ கோவிந்த ரனடே, பிரேம் சந்த் போன்ற சீர்திருத்தவாதிகளை உதாரணங் காட்டலாம். மனிதரில் யாவரும் சமமானவர் என்ற கருத் தோட்டத்தின் அடிப்படையிலேயே இவர்கள் ஆண் பெண் சமத்துவத்தை வற்புறுத்தினர்.
பெண் விடுதலைக்கான முதற்படிகள்:
பாரதி, இந்திய சமூகத்தில் பெண் விடுதலை அடைவதற்கு குறிப்பிட்ட
விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கருதினார். பெண்
விடுதலைக்கான ஆரம்பப்படிகள் என்று அவர் குறிப்பிடும் பத்து விதிகள்
அவரது கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றன. அவர் குறிப்பிடும் பத்து
விதிகள் பின்வருமாறு:-
"1. பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக்
கூடாது.
2. அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து
கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
S. விவாகம் செய்து கொண்டபிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவ மானப்படுத்தக் கூடாது.
29

Page 22
10.
பிதுரார்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபாகம் கொடுக்க வேண்டும். புருஷன் இறந்தபின்பு ஸ்திரீ மறுபடி விவாகம் செய்து கொள்வ தைத் தடுக்கக் கூடாது. விவாகமே இல்லாமல், தனியாக இருந்து வியாபாரம், கைத் தொழில் முதலியவற்றால் கெளரவமாக ஜிவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடம் கொடுக்க வேண்டும்.
பெண்கள், கணவனைத் தவிர வேறு புருஷனுடன் பேசக்கூடா தென்றும், பழகக்கூடாதென்றும் பயத்தாலும், பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும். பெண்களுக்கு, ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்தியோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக்கூடாது.
தமிழ் நாட்டில் ஆண் மக்களுக்கே ராஜரீக சுதந்திரம் இல்லாமல் இருக்கையிலே அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை. எனினும் சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தாலும் அப்போது பெண்களுக்கு ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்குகொடுக்க வேண்டும்'
ஒரு சமூகத்தில் பெண்ணினது அந்தஸ்தை எடுத்துக்காட்டும் அளவு கருவியாக அமைவது அங்கிருக்கும் விவாகம், குடும்பம் தொடர்பான நடைமுறைகளும், சட்டங்களும், மரபுகளுமாகும்.
பாரதியார் இவை குறித்துக் தீர்க்கமான கருத்துக் கொண்டிருந்தார். திருமணம், விவாகரத்து, மறுமணம் ஆகியவை பெண்களது விருப்பத்
திற்கிணங்க நடைபெற வேண்டும் எனக் கருதினார். கணவனைத்
தேர்ந்தெடுத்தல், மறுமணம், விவாகரத்து ஆகியவற்றுக்குப் பெண்களு க்கு உரிமையில்லாத நிலையை அவர் கண்டித்தார். இவ்விடயங்களில்
பெண்கள் உரிமையுடையவராதலே அவர்களது விடுதலையின் ஆரம்பம்
என்று கருதினார். இதனாலேயே பெண்விடுதலைக்கான விதிகள் எனக்
கூறியவற்றில் இளவயதுத் திருமணம், கட்டாயத் திருமணம், மறுமண
உரிமையின்மை ஆகியவை பற்றிக் குறிப்பிட்டார்.
பாரதியின் பெண் விடுதலை
3O

பாரதியின் காலத்தில், இந்தியாவில் காணப்பட்ட பெண்களின் மோச மானநிலையை மனதில் வைத்தே பாரதி, பெண் விடுதலையின் ஆரம்பப் படிகளுள் முதலாவதாகச் சிறுபிராயத் திருமணத்தை விலக்க வேண்டும் என்றார். பருவமடையாத சிறுவயதுப் பெண்களைத் திருமணம் செய் விக்கும் வழக்கத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இந்திய சீர்திருத்தவாதிகள் பலர் எதிர்த்து வந்துள்ளனர். இதனால் திருமண வயதை உயர்த்தும் சில சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. 1860ல் சமூகத்தின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், பெண்களின் திருமண வயது ஆகக் குறைந்தது பத்தாக இருக்க வேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப் பட்டது. 1891ம் ஆண்டில் இது பன்னிரண்டு வயதாக உயர்த்தப்பட்டது. இத்தகைய ஒரு சூழலிலேயே பாரதி சிறு வயதுத் திருமணத்தை எதிர்த் தார். இவ்வாறு எழுதியதுடன் நில்லாது பருவமடைந்த பின்பு பெண் ணைத் திருமணம் செய்து கொடுக்கும் நிகழ்ச்சி எங்காவது நடைபெற்றால் அதைக் கூர்ந்து கவனித்துப் பாராட்டினார். சென்னையில் இவ்வாறு ஒரு சம்பவம் நடந்ததைப் பாராட்டிப் பாரதியார் 'ருதுமதி விவாஹம்' என்ற தமது கட்டுரையொன்றில் எழுதியுள்ளார்.
சிறுவயதுத் திருமணம் போலவே, விதவையான பெண்களுக்கு உரிமை கள் மறுக்கப்படுவதும் பெரும் சாபக்கேடாயிருந்தது. கணவனையிழந்த பின் எத்தனை இளம் பெண்ணாயிருந்தாலும் மறுமணம் செய்ய முடி யாமை பெண்களுடைய வாழ்க்கையையே நாசமாக்கிற்று. கோவிந்த ராண்டே போன்ற சீர்திருத்தவாதிகள் இந்நிலைமையை மிகுதியாகக் கண்டித்தும் கூட நிலைமை மாறவில்லை. 1860 இலிருந்து 1901 வரை 138 மறுமணங்களே இந்தியா முழுவதிலும் பதிவு செய்யப்பட்டன; இத்தகைய சூழலிற்தான் பாரதி மறுமண உரிமை, திருமணத்தில் பெண் ணின் விருப்பம், விவாகரத்து உரிமை ஆகியவற்றை வற்புறுத்திக் கூறினார். பெண்களின் விவாக உரிமைகள் பற்றிய பாரதியின் கருத்தில் அவருடைய முற்போக்கான தெளிவான கருத்துக்களைக் காண முடி கிறது. ஏனெனில் விதவைகளின் துன்பங்களைப் பற்றி அனுதாபத்துடன் பேசிய பலர் விதவைகள் மறுமணத்தை ஆதரிக்கத் தயங்கினர். சுவாமி விவேகானந்தர், விதவைகள் தாங்களே இப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளட்டும் என்று கூறித் தனது கருத்தைக் கூறாமல் பின்வாங்கினார். வேறு சிலர், பருவம் அடையாமல் விதவையாகிய பெண்கள் மறுமணம் செய்யலாம் என்று கூறி மற்றையோர் பற்றிப் பேசப் பின்வாங்கினார்.
'இந்தியாவிலே விதவைகளின் பரிதாபகரமான நிலைமை' என்ற கட்டுரையிலே பாரதி தமது கருத்தைத் தெளிவாக விளக்கியுள்ளார்.
LSLLLLLLLLLLLLLLLLLLLLLLLZYLL YLY S S SSSSSSSSSSSSS
31

Page 23
இக்கட்டுரையில் மகாத்மா காந்தியின் "யங் இந்தியா' பத்திரிகையில் வெளியாகிய காந்தியின் கருத்தைக் கண்டித்துள்ளார். "யங் இந்தியா' பத்திரிகையில் விதவைகளின் தொகையைக் குறைப்பதற்கு ஏற்கனவே தாரம் இழந்தவர் மறுமணம் செய்யாமல் இருப்பதே வழி எனக் காந்தி எழுதியிருந்தார். தாரம் இழந்த ஆண்கள் வயதானவர்களாயிருப்பர் என்ற ஊகத்தின் அடிப்படையில், வயதான ஆண்கள் மீண்டும் மணம் செய்தால் மனைவியர் இறப்பதற்கு முன் கணவர்கள் இறந்துவிடும் சந்தர்ப்பம் அதிகம் என்றும் அதனால் விதவைகளின் தொகை அதிகரிக் கும் எனவும் காந்தி எழுதியிருந்தார். ஆகவே தாரமிழந்த ஆண்கள் மறுமணம் செய்யாவிடின் விதவையாகும் பெண்களின் எண்ணிக்கையும் குறையும் என நம்பினார் காந்தி.
காந்தியின் இந்த வாதத்தைத் தனது கட்டுரையில் எடுத்துக் காட்டிய பாரதி
அக்கருத்திலிருந்து மாறுபட்டார்; அதனைக் கிண்டலும் செய்தார்.
'ஸ்திரீ. விதவைகளின் தொகையைக் குறைக்க வழி கேட் டால், பூgமான் காந்தி 'புருஷ விதவைகளின் (அதாவது புனர் விவாகமின்றி வருந்தும் ஆண்மக்களின்) தொகையை அதிகப்படுத்த வேண்டுமென்கிறார். இதினின்றும் இப் போது ஸ்திரீ - விதவைகளின் பெருந்தொகையைக் கண்டு தமக்கு அழுகை வருவதாக பூரீமான் காந்தி சொல்லுவது போல், அப்பால் புருஷ விதவைகளின் பெருந்தொகை யைக் கண்டு அழுவதற்கு ஹேது உண்டாகும்.'
மேற்கண்டவாறு நகைச்சுவையுடன் குறிப்பிட்ட பாரதி விதவைகள் பற்றித் தேசத் தலைவர்கள் தைரியமுடன் பேச வேண்டும் என்றார்.
'விதவைகளின் தொகையைக் குறைப்பதற்கும் அவர்களு டைய துன்பங்களைத் தீர்ப்பதற்கும் ஒரே வழிதான் இருக் கிறது. அதை நம்முடைய ஜனத் தலைவர்கள் ஜனங்களுக் குத் தைரியமாகப் போதிக்க வேண்டும். எல்லா விதவை களும் மறுமணம் செய்துகொள்ள இடங்கொடுப்பதே இந்தியாவில் மாதருக்கு செய்யப்படும் அநியாயங்கள் எல்லாவற்றிலும் பெரிதான இந்த அநியாயத்திற்கு தகுந்த மாற்று. மற்றப் பேச்செல்லாம் வீண் கதை. *
விதவைகளின் மறுமணம் பற்றிப் பாரதிக்கிருந்த உறுதியான கருத்து இங்கு வெளிப்படுகிறதல்லவா?
பாரதியின் பெண் விடுதலை
32

இந்தியாவில் விவாகம் பற்றி நிலவும் கண்ணோட்டம் முற்றிலும் சீர்திருந்த வேண்டுமெனப் பாரதியார் நினைத்தார். விவாகம் தனி நபர்களின் சுதந்திரமான சேர்க்கையாக இருக்க வேண்டும் என நம்பி னார். அக்காலத்தில் பாரதியின் இலட்சிய தேசமாக விளங்கிய ரஷ்யப் புரட்சியின் பின் அங்கு விவாக விதிகள் புதுப்பிக்கப்பட்டன. நவீன ருஷ்யாவில் விவாக விதிகள் என்ற கட்டுரையில் ருஷ்ய விவாக விதி களைப் பற்றிச் சிலாகித்து எழுதினார் பாரதி.
'அவற்றைப் பார்க்கும் போது, நவீன ஐரோப்பிய நாகரிகம் என்று புகழப்படும் பொருளின் நியாயமான உயர்ந்த பக்குவ நிலைமை போல்ஷவிக் விவாக சம்பிரதாயங்களில் எய்தப் பட்டிருக்கிறதென்பது தெளிவாக விளங்குகிறது. ஆண் பெண் இருபாலாரும் பரிபூர்ண ஸமத்துவ நிலைமை யுடையோர். இங்ங்னம் இருபாலோரும் முற்றிலும் ஸ்மா னம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேராதபடி விவாகக் கட்டைச் சமைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரீ கத்தின் உண்மையான நோக்கம். பெண்களுக்கு விடுதலை தாங்கள் வேறு பல ஜாதியர்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப்பதே, தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றாமெ ன்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள். அந்த வகையிலே பார்த்தால் ஐரோப்பாவின் இதர பகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷ்யா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ளதென்பது ப்ரத்யக்ஷமாகத் தெரிகிறது.'
இவ்வாறு தெரிவித்து விட்டுப் பின்வருமாறு கூறி முத்தாய்ப்பு வைக்கிறார் பாரதி.
'ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்விதத்திலும் வேற் றுமை கிடையாது. இருபாலோரும் சமானமாகவே கருதப் படுவார்கள் என்று ருஷ்யச் சட்டம் கூறுமிடத்திலே நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் கருத்தை அனுசரித்தல் மிக, மிக,
மிக மிக அவசரம்."
பாரதி பெண் விடுதலையின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாகக் குறிப் பிட்டது பெண் கல்வியாகும். பெண்கள் கல்வி கற்பதன் அவசியத்தை அவர் பல இடங்களிலும் வற்புறுத்தியுள்ளார். அவரது கதைகளில் இடம்பெறுகின்ற பாத்திரங்களும் கல்வி கற்று ஆளுமை வளர்ச்சியுற்ற
༔
ग्या
33

Page 24
பாத்திரங்களாகவே காணப்படுகின்றன. அவருடைய பெண் விடுதலை என்ற கட்டுரையில் இடம்பெறும் வேதவல்லி, ஆறில் ஒரு பங்கு என்னும் கதையின் நாயகி மீனாம்பாள் போன்றோர் உதாரணங்களாவர். பாரதி யின் சம காலத்தில் வங்காளம் போன்ற முன்னேறிய பகுதிகளில் உயர் குழாத்தைச் சேர்ந்த பெண்கள் கல்வி கற்றுப் பாண்டித்தியம் மிகுந்து விளங்கினர். சறோஜினி நாயுடு, காமினிரோய், அநங்கமோகினிதேவி போன்றோர் பாரதியின் காலத்தில் வாழ்ந்தோரே. பெண் கல்வியால் ஏற்படும் மேன்மைக்கு இவர்களை உதாரணம் காட்டிவிட்டுப் பாரதி பின்வருமாறு குறிப்பிட்டார்.
'இங்ங்னம் தமிழ் மாதர்களிலும் பலர் மேல் நாடுகளுக்குச் சென்று மீள்வாராயின் அதிணின்றும் இங்கே ஸ்திரீகளுக் குள்ள மதிப்பு மிகுதிப்படுமென்பதில் சிறிதேனும் ஐய மில்லை. எவ்வாறு நோக்கிய போதிலும் தமிழ்நாட்டு மாதர் ஸம்பூர்ணமான விடுதலை பெற வேண்டுவராயின் அதற்கும் கல்வித் தோணியே பெருந்துணையாம். அறிவுத் திறத்தால் பிறகு விடுதலைக் கோட்டையைக் கைப்பற்று தல் அதி சுலபமாய்விடும். எனவே பலவித சாஸ்திரங்கள் படித்துத் தேறுங்கள்; தமிழ்ச் சகோதரிகளே, அங்ங்னம் தேறியவர்களில் சிலரேனும் வெளிநாடுகளுக்குப் போய் கீர்த்தி ஸம்பாதித்துக் கொண்டு வாருங்கள். விடுதலைத் தெய்வம் உங்களைத் தழுவும் பொருட்டு இரண்டு கைக ளையும் விரித்துக் கொண்டு காத்து நிற்கிறது."
பெண்களுக்குப் பிதுரார்ஜித சொத்தில் உரிமை இருக்க வேண்டும் எனப் பாரதி கூறியது முக்கியமானதாகும். சொத்துரிமையின்மை பெண்ணடி மைத்தனத்தின் மூலவேர்களில் ஒன்றாக அமைந்தது. ஆனால் பெண் விடுதலை பற்றிப் பேசியோரில் சொத்துரிமை பற்றிக் கதைத்தோர் மிகச் சிலரே. ராம் மோகன்ராய் ஆரம்பத்திலேயே பெண்களுக்குச் சொத்து ரிமை தேவை என வற்புறுத்தினார். 1822ஆம் ஆண்டு அவர் "இந்து வம்சாவழி சட்டப்படி பெண்களின் சொத்துரிமைகளில் ஆக்கிரமிப்பு' என்னும் சிறு பிரசுரத்தையும் வெளியிட்டார். இவ்வகையில் பாரதியும் சொத்துரிமையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்.
பெண்கள் தொழில் செய்வது குறித்தும் பாரதிக்கு மிகவும் தெளிவான கருத்து இருந்தது. பெண்கள் அவரவர் விருப்புக்கும் திறமைக்கும் ஏற்ப எத்தகைய தொழில்களிலும் ஈடுபடலாம் என்பது அவர் கருத்து. பெண்
பாரதியின் பெண் விடுதலை
34

விடுதலைக்கான ஆரம்பப் படிகளாக அவர் குறிப்பிடும் விதிகளிலே இது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இதே காலத்தில் இந்தியாவில் பெண் விடுதலை பேசியவர்களிடத்திலேயே பெண்கள் தொழில் செய்வது குறிந்து கருத்து வேற்றுமை காணப்பட்டது. பெண்களுக்கென்று சில குறிப்பிட்ட தொழில்களே பொருத்தம் எனச் சிலர் கருதினர். பாரதியின் சம காலத்தவரான சீர்திருத்தவாதி திரு.வி.கலியாணசுந்தர முதலியார் பெண்கள் உழைத்து ஊதியம் பெறுவதன் மூலம் தமது சுதந்திரத்தைப் பேணலாம் எனக் கூறியவர். ஆனாலும் இவர் பெண்களுக்கு ஆசிரியத் தொழில், பத்திரிகைத் தொழில், நெசவு, சித்திரம், சங்கீதம் ஆகியவையே பொருத்தமானவை எனக் குறிப்பிட்டார். பெண்ணாய்ப் பிறந்தோரின் ம்னதை நோகவைக்கக்கூடாது எனத் தமது 'குளத்தங்கரை அரசமரம்" என்ற சிறுகதையில் எழுதியவரான வ.வே.சு.ஐயரும் இத்தகைய கருத்துக் கொண்டிருந்தார். பெண்கள் தமது பாரம்பரிய நிலையில் இருந்து விலகக்கூடாது என்பது இவரது கருத்தாகும்.
'நமது மாதரின் வாழ்க்கை நோக்கந்தான் என்ன? அவர்கள் குமாஸ்தாக்களாக இருந்து கொண்டு சம்பாதிப்பதா? அல்லது மாஜிஸ்ரோட், தாசீல் முதலிய உத்தியோகங்கள் பார்த்து ராஜ்ய நிருவாகத்தை நடத்துவதா? அல்லது கடை களில் உட்கார்ந்து கொண்டு வியாபாரம் செய்வதா? அல் லது யந்திரசாலைகளிலும் ஆலைகளிலும் புகுந்து தச்சர் செய்யும் வேலைகள் செய்து அவைகளை நடத்துவதா? இவை ஒன்றும் அல்ல என்று அநேகமாய் எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். மற்றும் என்னதான் அவர்கள் வாழ்க்கையின் லட்சியம்? எனக்குத் தோன்றிய மட்டில் இவ்விலட்சியத்தை இரண்டாகக் கூறலாம் ஒன்று பொது லட்சியம், மற்றது ஆத்மலட்சியம். அதாவது தாங்கள் பிறந்த குடும்பத்துக்கும் புகுந்த குடும்பத்துக்கும் தாயக மாகவும் ஆதாரமாகவும் இருத்தல் வேண்டும்.'
இங்கு வ.வே.சு.ஐயர் பெண்களின் பாரம்பரியக் கடமைகளை வற்புறுத்து கிறார். ஆனால் பாரதியோ பெண்களுக்குத் தொழிற் சுதந்திரம் எனக் கூறித் தனது நவீன சிந்தனைப் போக்கை வெளிக்காட்டுகிறார். தொழிற் சுதந்திரம் பற்றிய இக்கருத்து இன்றைய நிலையில் கூர்ந்து சிந்திக்கத் தக்கதும் வளர்க்கப்படவேண்டியதுமாகும். ஏனெனில் தொழில் செய்யும் சுதந்திரம் பெண்களுக்கு இருந்தாலும் தொழிலுக்குரிய ஊதியம் சில

Page 25
சமயங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகிறது. இன்றைய நிலையில் எமது சமூகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீட்டுக் கடமைகளையும் செய்ய வேண்டியிருப்பதால் அதற்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. குழந்தைகளுள்ள தாய்மாருக்கு வேலைத்தலங்களில் குழந்தைக் காப்பக வசதிகள் தரப்படுவதில்லை. போதுமான அளவு மகப்பேற்று விடுதலை தாய்மாருக்கு வழங்கப்படு வதில்லை. இத்தகைய நிலைமைகளால் தொழில் செய்யும் பெண் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறாள். இன்று பெண் விடுதலை பேசும்போது இதனை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
பாரதி, பெண்கள் அரசியலிற் பங்கெடுக்கவும் பதவிகள் வகிக்கவும் வேண்டும் எனக் கூறினார். ஆண்களைப் போலவே அரசியலிற் பெண் களுக்கு எல்லாச் சுதந்திரமும் வேண்டும் என்பது அவர் கருத்து. இது இன்றைய நிலையில் முக்கியமான ஒரு கருத்தாகும். அரசியலிற் பெண் கள், திட்டமிடல், தீர்மானமெடுத்தல் ஆகியவற்றுக்கான உரிமை பெற் றிருப்பது பல்வகையாலும் வளர்ச்சி பெற்ற நாடுகளிலே கூடச் சிறுபான் மையாகவே காணப்படுகிறது. பெண்களது உரிமையையும் சுதந்திரத் தையும் வேறெந்த நாடுகளையும் விடப் பேணும் சோசலிச நாடுகளிலும் அரசியல் உயர் மட்டத்தில் பெண்கள் பங்கு குறைவாகவேயுள்ளதை ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்."
பாரதியின் பெண்விடுதலைக் கருத்துகளின் இன்னோர் அம்சமும் இங்கு குறிப்பிட வேண்டியதாகும். பாரதி தனது காலத்தில் இந்தியாவில் மாத்திரமன்றி உலகின் ஏனைய பகுதிகளிலும் தோன்றிய பெண் விடு தலை இயக்கங்கள், கருத்தோட்டங்கள் ஆகியவற்றையும் உன்னிப்பாகக் கவனித்தார். இக்காலத்தில் தோன்றிய பெரும்பாலான மாதர் இயக்கங் கள், பெண் விடுதலைக் கருத்தோட்டங்கள் ஆகியன ஏதோ ஒரு வகையில் அரசியற் பின்னணி கொண்டிருந்தன. ஆசிய நாடுகளிலும் ரஷ்யாவிலும் தோன்றிய மாதர் இயக்கங்களையும் கருத்தோட்டங் களையும் உதாரணங்களாகக் கூறலாம். ஆனால் தனிநபர் சுதந்திரம் என்ற வகையிலும் ஐரோப்பாவில் பெண் விடுதலைக் கருத்துக்கள் தோன்றின. இதன் ஒரு விளைவாக சுதந்திரக் காதல் (Free Love) போன்ற கருத்து களும் தோன்றின. ஆண் பெண் உறவில் கட்டற்ற சுதந்திரம் வேண்டும் எனவும் அது பெண் விடுதலையின் ஒரு அம்சம் எனவும் பேசப்பட்டது. உண்மையில் தனிமனித வாதத்தின் ஒரு விளைவாகவே சுதந்திரக் காதல் என்ற கொள்கை தோன்றியது. பாரதி சுதந்திரக் காதற் கொள்கையை
பாரதியின் பெண் விடுதலை
36

வெறுத்தார். தமது பாரதி அறுபத்தாறு என்ற நீண்ட கவிதையில் விடு தலைக் காதல் என்ற உபதலைப்பில் சுதந்திரக் காதல் பற்றிய சில கருத்துக்களைக் கூறியுள்ளார். பாரதி அறுபத்தாறு என்ற கவிதை, குயில்பாட்டு, கண்ணன் பாட்டு என்பனவற்றுடன் சேர்த்து 1923இல் பரலி.சு.நெல்லையப்பரின் முன்னுரையுடன் பாரதி பிரசுராலயத்தால் வெளியிடப்பட்டது. எனினும் இக்கவிதையைப் பாரதி எழுதிய சரியான திகதி தெரியவில்லை.
பாரதி அறுபத்தாறு கவிதையில் 'வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர் விடுதலையாங் காதலெனில் பொய்மைக் காதல்!" என்று குறிப்பிட்டார். பாரதி அடிக்கடி மேற்கோள் காட்டும் லெனினும் சுதந்திரக் காதற் கொள்கையின் உள்நோக்கம் குறித்துச் சில குறிப்புகள் கூறியுள் ளார் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கதாகும்."
இதுவரை மேலே பார்த்த பாரதியின் பெண் விடுதலைக் கருத்துக்களின் மூலம் பாரதியார் பெண் விடுதலையில் எவ்வளவு தூரம் நம்பிக்கையும் தெளிவும் கொண்டிருந்தார் என்பது புலப்படும். அதுமட்டுமல்லாது பாரதியின் ஏனைய சமூக அரசியற் கொள்கைகளிலும் பெண் விடுதலைக் கொள்கையே மிகுந்த முற்போக்கானதாகவும் திடமானதாகவும் காணப்படுகிறது. இவ்விடத்தில் பாரதி ஆய்வாளர் ஒருவர் பின்வருமாறு கூறுவது மிகப் பொருத்தமாகவுள்ளது.
'பாரதியாரின் சமூக சீர்திருத்தப் பிரசாரத்தில் முன்னுரிமை பெற்றுத் திகழ்வது பெண்ணுரிமை இயக்கம். சமூக சீர்திருத்தக் கருத்துகளின் பரப்பை வைத்துக் கணிப்போமாயின் பெண்ணு ரிமை இயக்கம் பற்றிய கருத்துகளே பெரியன. மற்றச் சீர்திருத் தக் கருத்துகளை வெளியிடும்போது ஓரளவு தணிந்தும், முறையிட்டும், வேண்டியும் நிற்கும் பாரதி பெண்ணுரிமை இயக்கத்தில் மின்னலென இடியென விளங்குகிறார்.'

Page 26
அடிக்குறிப்புகள்
1.
10.
11.
12.
மூன்றாம் உலகநாடுகள் பெரும்பாலானவற்றில் காணப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், நவீனமாக்கற் கொள்கைகள் என்பவற்
றாலும் அவற்றில் முக்கியம் வகிக்கும் மேற்குலகக் கொள்கை
களாலும் ஆண்பற்றிய உயர் நோக்கின் விளைவாலும் இந்நாடு களில் பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கீழ்க்காணும் நூல் மிகத் தெளிவாக விளக்குகிறது.
Rogers Barbara, The Domestication of Women -Discrimination in Development, New York 1980.
Vina Magumdar "Towards Equality -Status of women in India"Women
of the World-Illusion and Reality, (Ed) Urmilapadnis and India Malvani.
பாரதி சுப்பிரமணிய மகாகவிபாரதியார் கட்டுரைகள் தொகுதி திருநெல்வேலி, 1962, பக்10
மேற்படி நூல் பக்10
பாரதியார், "ராணிலஷ்மிபாய்', இந்தியா 2-5-1908
பிரடெரிக் ஏங்கெல்ஸ், குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகிய வற்றின் தோற்றம், அயல் மொழிப்பதிப்பகம், மொஸ்கோ, 1884ம் ஆண்டு முதன் முதல் இந்நூல் ஜீரிச்சில் வெளியிடப் பட்டது. மனிதவரலாற்றில் பெண்களின் நிலைமையை மனதிற் கொண்டு எழுதப்பட்ட நூல் என்றவகையிலும் இது முக்கிய
மானது.
மேற்குறிப்பிட்ட நூல். பக்129
பாரதியார், முற்குறிப்பிட்டநூல், பக்10
Thapar, Romila, "The History of Female Emancipation in Southern Asia" Women in New Asia (Ed) E. Barbara, UNESCO, 1963, P:4-
பாரதியார், முற்குறிப்பிட்ட நூல், பக்:22 பத்மநாதன், ரா.அ.பாரதி புதையல், பக்:80
பாரதியார், முற்குறிப்பிட்ட நூல், பக்:87
பாரதியின் பெண் விடுதலை
38

13.
14.
15.
16.
17.
18.
19.
55 TOT
பாரதியார், முற்குறிப்பிட்ட நூல் பக்:88
பாரதியார், முற்குறிப்பிட்ட நூல் பக்.79
பாரதியார், முற்குறிப்பிட்ட நூல் பக்:81
பாரதியார், முற்குறிப்பிட்ட நூல் பக்:32
குறிப்பாக ரஷ்யா, சீனா போன்ற சோஷலிச நாடுகளில் கூட இந்நிலைமை காணப்படுகிறது. பெண்கள் அரசியல் உயர்மட்டப் பதவிகளில் மிகக் குறைவாக உள்ளமை பெண்ணுரிமைவாதி களுக்கு ஒரு பிரச்சினையே. இது குறித்துப் பார்க்கவும். Lenin, Lotta, "Women in the USSR,"Problems of Communism, Vol.20, No:4, July - December, 1977, P;58.
லெனின் வி.இ.மாதர் விடுதலை பற்றி, சென்னை, 1972, Luis: 64-72
இந்நூலில் லெனின் இனெஸா ஆர்மண்ட் என்பவருக்கு 1915இல் எழுதிய இரு கடிதங்கள் அடங்கியுள்ளன. இக் கடிதங்களில் சுதந்திரக் காதலின் பூர்ஷ்வா உள்நோக்கம் பற்றி லெனின் எழுதியுள்ளார். இனெஸா ஆர்மண்ட் (1875-1920) சர்வதேச மாதர் இயக்கத்திலும், கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் முக்கியமான தலைவர். லெனினுடைய நெருங்கிய தோழரும் கூட உழைக்கும் பெண்களுக்காக இவர் எழுத உத்தேசித்திருந்த பிரசுரமொன்றி லேயே சுதந்திரக் காதற் கொள்கையைச் சேர்க்க நினைத்து லெனினுடைய அபிப்பிராயம் கேட்டபோதே லெனின் அதனை விமர்சித்தார். இறுதியில் இனெசா அப்பிரசுரத்தை எழுதவில்லை யெனத் தெரிகிறது.
மணி.பெ.சு., பாரதியாரும் சமூக சீர்திருத்தமும், சென்னை, 1982, Ud;:109

Page 27
சுப்பிரமணிய பாரதியும் பெண்விடுதலைக்கு உழைத்த சீனத்து ஜியுஜினும்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் சமூகச் சிந்தனைகளுள் பெண் விடுதலை முக்கியமானதோர் அம்சமென்பதை வற்புறுத்த தேவை யில்லை இந்திய சமூகத்தின் குறைபாடுகளாக அவர் கண்டவற்றில் பெண்ணடிமைத்தனமும் ஒன்றாகும். பெண்ணடிமைத்தனம் இந்தியா வின் துன்பங்களுக்கு மாத்திரமல்லாமல் உலகின் துன்பத்துக்கே முக்கிய காரணம் என்றார் அவர். ". இன்று தமிழ் நாட்டில் மாத்திரமேயல்லாது பூமண்டல முழுதிலும் பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்; அநீதிகளுக்கெல்லாம் கோட்டை, கலியுகத்தின் பிறப்பிடம்.' என்று எழுதினார் பாரதி. - பெண் விடுதலை க்கு அவர் அளித்த முக்கியத்துவத்தை இக்கூற்று புலப்படுத்துகிறது.
ஆண் பெண் பரிபூரண சமம்; பெண் பூரண சுதந்திரமுடையவள்; அவளது இச்சைப்படியே அவளது வாழ்க்கை அமைய வேண்டும் ஆகிய இவை பாரதியின் பெண் விடுதலைக் கருத்தின் சாராம்சங்கள் எனலாம்.
பெண் விடுதலை பற்றிய கருத்துக்களைப் பாரதி பல்வேறு மூலங்களி லிருந்து பெற்றுக் கொண்டார். இந்து சமயப் பாரம்பரியத்தில் பெண் தெய்வமாகிய சக்திக்கு இருந்த முக்கியத்துவம் இந்திய பண்பாட்டுப் பாரம்பரியத்தில் ஆதிகாலத்தில் பெண் பெற்றிருந்த உயர் நிலையும் இவற்றில் முக்கியமானவையாகும். 'ஜகத்திற்கு ஆதாரமாகிய பெருங் கடவுள் ஆண் பெண் என்ற இரண்டு கலைகளுடன் விளங்குகிறது. இரண்டும் பரிபூரண ஸமம்' என்று பாரதி எழுதியதில் இந்துமதப் பாரம்பரிய உணர்வு காணப்படுகிறது. இது போலவே வேத காலப் பெண்களைப் பற்றியும் அவர்களுடைய ஞானத்தையும் உயர்நிலையைப்
பாரதியின் பெண் விடுதலை
4O

பற்றியும் பாரதி அடிக்கடி குறிப்பிட்டார். ‘புதுமைப் பெண்' என்ற கவிதையில் பெண்கள் 'மாதவப் பெரியாருடன் வாதுகள் பேசியமை சதுர் முறைப்படி பெண்கள் இருந்த நாள் தன்னிலே பொதுவான வழக்கமாம்' என்று பாடினார். ‘வீரத் தாய்மார்' என்ற கட்டுரையில் புறநானூற்றுப் பாடலொன்றைச் சான்று காட்டிப் பண்டைத் தமிழ் பெண்களின் வீரத்தை எடுத்துக் காட்டினார். இவ்வாறு பண்டை வரலாற்றி லிருந்தும் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் இருந்தும், பெண்விடுதலைக் கான மூலங்களைப் பெற்றுக் கொண்டது போலவே தனது சமகால இயக்கங்களிலிருந்தும் நடைமுறைகளிலிருந்தும், நிகழ்ச்சிகளிலிருந்தும் பெற்றுக் கொண்டார். இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் பெண் விடுதலை சம்பந்தமாக ஏற்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அவரைப் பாதித்துள்ளன. (பாரதி காலத்தில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பெண்கள் விடுதலை குறித்துத் தோன்றிய கருத்துகளைப் பாரதி அறிந் திருந்ததை இந்நூலின் முதலாவது பகுதியில் விபரித்துள்ளேன்) பாரதியின் காலத்தில் இந்தியப் பெண்களின் துயர் சூழ்ந்த நிலையை மாற்றும் நோக்குடன் சீர்திருத்தவாதிகள் சிலர் இயங்கினர். இவர்களில் ராஜாராம், மோகன் ராய், மகாதேவ கோவிந்த ரானடே, பிரேம்சந்த் போன்றோர் முக்கியமானவர்கள். ஆண் பெண் சமத்துவத்தை வற் புறுத்திய இவர்கள் பெண்களின் சிறுவயதுத் திருமணம் விதவைகள் துயர்நிலை ஆகியவற்றை ஒழிப்பதற்கு உழைத்தனர். இவ்வாறு தனது நாட்டிற் காணப்பட்ட பெண்விடுதலைக் கருத்துகளாலும் பாரதி பாதிக் கப்பட்டார் என்பதில் ஐயமில்லை.
சீனா பற்றிய அவதானம்
இதே சமயம் இந்தியாவுக்கு வெளியே நடந்தேறிய நிகழ்ச்சிகளாலும் இயக்கங்களாலும் அவர் கவரப்பட்டார். 19ம் நூற்றாண்டின் பிற்பாதி யிலிருந்து ஆசியாக் கண்டத்தில் மேற்கே துருக்கியிலிருந்து கிழக்கே சீனாவரை பெண் விடுதலை இயக்கங்கள் தோன்றத் தொடங்கியிருந்தன. ஆசியாவில் ஏற்பட்ட தேசிய விடுதலை, தேசிய விழிப்புணர்வு போன்ற வற்றுடன் தொடர்புபட்டனவாகவே பெண்விடுதலைக் கருத்துக்களும் இயக்கங்களும் தோன்றின.
குறிப்பாக இந்தியாவைப் போலவே பெண்கள் மிக மோசமான அடக்கு முறைக்கு உட்பட்டு வந்த சீனாவில் பெண்விடுதலை நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன. பெண் கல்வியை ஊக்கப்படுத்தியும் பாதங்

Page 28
கட்டுதல் போன்ற கொடிய வழக்கங்களை எதிர்த்தும் இந்நடவடிக்கைகள் அமைந்தன. இத்தகைய நிகழ்ச்சிகளாலும் இவற்றில் ஈடுபட்டோராலும் பாரதி கவரப்பட்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.
பாரதி தனது கட்டுரையொன்றில் ஜியு-ஜின் என்ற சீனத்துப் பெண் ஒருவரைக் குறிப்பிட்டுள்ளார். ‘சியு-சீன் என்ற சீனத்து ஸ்திரீயின் கதை' என்ற தலைப்பில் இக்கட்டுரை அமைந்துள்ளது. இதில் சீனப் பெண் விடுதலை இயக்கத்தின் முதல்வர்களிலும், முக்கியஸ்தர்களிலும் ஒருவ ராகிய இப்பெண்மணியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் தந்துள்ளார். ஜியு-ஜினின் வாழ்க்கை வரலாறு பற்றிய விவரங்களை ஆசியாட்டிக்ரிவியு (Asiaticreview) என்ற பத்திரிகையில் லயோனல் கிப்ஸ் என்ற ஆங்கிலேயர் எழுதிய கட்டுரையில் இருந்து பெற்றதாகப் பாரதியார் தெரிவித்துள்ளார். இது தவிர ஜியுஜினின் பிரசங்கமொன்றை 'சியுசின் செய்த சொற்பொழிவு' என்ற தலைப்பிலும் ஜியுஜினின் கவிதையொன்றைப் 'பெண்விடுதலை' என்ற தலைப்பிலும் தமிழாக்கம் செய்துள்ளார். இப்பெண்மணி பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் வியப்பும் ஆர்வமும் பற்றும் தொனிக்கப் பாரதி எழுதுவதை அவதானிக்
856) TLD.
ஜியு-ஜினின் சொற்பொழிவையும் , பாரதியார், லயோனல் கிப்ஸ் என்பவருடைய மொழி பெயர்ப்பிலிருந்து ஆங்கிலம் வழியாகவே பெற்றுள்ளார். இச் சொற்பொழிவில் ஜியுஜின், பாதங்கட்டுதல், ஆண் களுக்கு அடிமையாக வாழுதல் ஆகியவற்றை மிக வன்மையாகக் கண்டித்துள்ளார். பெண்கள் ஆண்களைப் போவவே ஆற்றலும் அறிவு உள்ளவர்களென்றும் அதனால் தமது சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் பேணும் உரிமை அவர்களுக்குண்டு எனவும், பெண்கள் தொழில் செய்வதன் மூலம் தமது சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொள்ளலாம் எனவும் ஜியுஜின் தனது சொற்பொழிவிற் குறிப்பிடுகின்றாள். இன் னொரு வகையிற் சொன்னால் பெண்களை அடிமைப்படுத்தும் வழக்கங் கள், விதிகள், சாஸ்திரங்கள் ஆகியவற்றை நிராகரித்து, தமது சுதந்தி ரத்தை அவர்கள் நிலைநாட்ட வேண்டுமென்பதே இச்சொற்பொழிவின் சாராம்சமாகும். 'இதினின்று இவருடைய உண்மையான குணத்தை அறிந்து கொள்ளுதல் சற்றே எளிதாகுமென்று நினைக்கிறேன்' என்று ஜியுஜினின் சொற்பொழிவு குறித்துக் கூறும் பாரதியார் மிகுந்த ஈடு பாட்டுடன் இதனை மொழி பெயர்த்துள்ளார். மொழி பெயர்ப்பில் ஏற்படக்கூடிய எத்தகைய நெருடல்களும் இல்லாது மிக இயல்பாக இக் கட்டுரை அமைந்துள்ளது.
பாரதியின் பெண் விடுதலை
42

பெண்விடுதலை’ என்ற கவிதையும் மொழி பெயர்ப்பு என்பதைப் பலர் அவதானிப்பதில்லை. இதுவும் பாரதியாரின் சொந்தக் கவிதையாகவே கொள்ளப்படுகிறது. 'விடுதலைக்கு மகளிரெல்லாம் வேட்கை கொண்ட னம்' என்று தொடங்கும் இக்கவிதையை இந்தியப் பாரம்பரியத்துக்கு ஏற்பவே பாரதி மொழிபெயர்த்துள்ளார். 'உடையவள் சக்தி ஆண் பெண்ணிரண்டும் ஒரு நிகர் செய்துரிமை சமைத்தாள்' என்ற அடியில் இது வெளிப்படுகின்றது. இவ்வாறு பாரதியின் பெண் விடுதலைக் கருத்து களுக்கு உதாரணமாக விளங்கிய ஜியுஜின் பற்றி அறிந்து கொள்ளுதல் பாரதி பற்றிய விளக்கத்துக்கும் உதவுவதாகும்.
சீனப் புரட்சிவாதி
ஜியுஜின் (1875-1907) சீனாவின் தேசிய எழுச்சியிலும் தேசியப் பிரச்சினைகளிலும் பங்கெடுத்த பெண்ணாகவும் ஆரம்ப காலப் புரட்சி வாதிகளுள் ஒருவராகவும் இன்று கொண்டாடப்படுகிறார். சீனாவில் சிங்வம்ச அரசாட்சியின் இறுதிக் காலத்தில், பத்தொன்பதாம் நூற்றாண் டில் பெண்ணுரிமை இயக்கங்கள் தோன்றிய போது அவற்றின் முதல்வர் களுள் ஒருவராகவும் ஜியுஜின் இடம் பெறுகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற் பாதியில் சீனாவில் ஏற்பட்ட கருத்தோட்ட மாற்றங்களில் ஒன்று, பெண்கள் பற்றிய மரபு ரீதியான சிந்தனையில் ஏற்பட்ட மாற்றமாகும். பாதம் கட்டுதல், பெண்ணைத் தனிமைப்படுத்தி வைத்தல் மிகக் கட்டிறுக்கமான ஒருபக்க ஒழுக்க மதிப்பீடுகள், எல்லைப்படுத்தப்பட்ட கல்வி போன்றவை சீனப் பெண் சமூகத்தைத் துயர்படுத்தி வந்தன. இத்தகைய நிலைமைகளை மாற்ற வேண்டுமென்ற நோக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முற்பகுதியிலே மெதுவாக ஆரம்பித்துவிட்டது. ஆண்கள் மத்தியிலும் சில அறிஞர்களும் சிந்தனாவாதிகளும் இக்கருத்துக்களைக் கூறத் தொடங்கியிருந்தனர். 1830களில் சில அறிஞர்கள் பெண் பற்றிய மரபு ரீதியான நோக்கினைக் கண்டித்தனர். பிரபலமான சீர்திருத்தவாதியும் கல்விமானுமான கங்பூ-சென் (1792-1841) பாதங்கட்டுதல் முறையைத் தீவிரமாகக் கண்டித்தார். யூ-செங்-சை (1775-1840) பாதங்கட்டுதல், வைப்பாட்டி முறை, பெண்களின் கற்பு பற்றிய இறுகிய கட்டுப்பாடு ஆகியவற்றை வரலாற்று ரீதியானவையும், மனிதாயத் தன்மை கொண்டனவுமான வாதங்களைக் காட்டி எதிர்த்தார். ஆண்களைப் போலவே பெண்களும் ஒரே தரத்தில் வைத்து நோக்கப்படவேண்டுமென்றார் அவர் லீ-யூ-சென்
43

Page 29
(1763-1830) பெண்களை ஒடுக்குவதைக் கண்டித்ததுடன் அவர்கள் அறிவு ஆற்றல் ஆகியவற்றிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள் என வாதித்தார்.
சீர்திருத்த முயற்சிகள்
1830க்குப் பிறகு மேனாட்டுச் செல்வாக்காலும் சீனாவின் உள்நாட்டு அரசியற் சீரழிவாலும், பெண் பற்றிய பிற்போக்குத் தனமான, கொன்பியூ சியஸ் மரபிலமைந்த சிந்தனையில் உடைவேற்பட்டது. மேனாட்டுப் பெண்களால் ஆரம்ப காலச் சீர்திருத்தவாதிகள் பலர் கவரப்பட்டனர். சிங் வம்சத்தின் கடைசி நாற்பதாண்டுக் காலத்தில் முக்கியமான அரசியற் பாத்திரத்தை டொவாகர்ஸுசி என்ற இராணி வகித்தாள். இது மட்டு மன்றிக் கொள்ளைக்காரர், கடத்தற்காரர் இடையேயும் பெண்கள் அங்கம் வகித்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீனாவில் தோன்றிய சீர்திருத்த இயக்கம் பெண்கள் பிரச்சினைகளைத் தேசிய வாதத்துடன் இணைத்தது. வீட்டுக்கு வெளியே பெண்கள் தொழில் செய்வதற்கு இவ்வியக்கம் பயன்பாட்டு விளக்கத்தை அளித்தது. லியாங்-சீ-சாவே என்ற சீர்திருத்தவாதி இவ்விடயம் பற்றி மிக விரிவாக எழுதினார். பெண் கல்வியைத் தேசிய வளர்ச்சிக்குரிய ஓர் அம்சமாக அவர் குறிப்பிட்டார். ஆக்கபூர்வமான, தேச பக்தர்களாக விளங்குவதற்குக் கல்வி அவசியம் என்றார் அவர்.
இத்தகைய ஒரு பின்னணியிலேயே குறுகிய, ஆனால் துடிப்பும் அசாதார ணமும் கொண்ட ஜியு-ஜினின் வாழ்நாள் அமைந்தது, ஜியு-ஜின் 1875ம் ஆண்டு கிக்சியாங் மாகாண நகரமொன்றில் கெளரவமான குடும்பத்தில் பிறந்தாள். தந்தையார் அரசாங்க உத்தியோகத்தர். தாயார் நன்கு கல்வி கற்றவர். குடும்பமும் மேனாட்டு முறைகளைப் பின்பற்றியது.
ஜியு-ஜின் கல்வி கற்றாள், கவிதை எழுதப் பழகினாள், குதிரைச் சவாரி செய்யவும், வாள் சுழற்றவும் கற்றாள். இளமையிலிருந்தே பெண்களுக் கென ஒதுக்கப்பட்ட பின்னல், தையல், அலங்காரம் போன்ற வேலை களில் அலுப்புற்றாள். சீனப் சம்பிரதாயத்தின் படி அல்லாது பிந்தியே தனது இருபத்தோராவது வயதில் திருமணம் செய்து கொண்டாள்.
ஜியுவின் கணவன் பீகீங்கில் வேலை பார்த்தான். இதனால் ஜியு, சீர்திருத்த மனப்பான்மையுள்ள நடுத்தர, கீழ் வகுப்பு நகரவாசிகளுடனும், உத்தி
பாரதியின் பெண் விடுதலை

யோகத்தர்களுடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றாள். பெண் நண்பர்கள் சிலர் அவளுக்கிருந்தனர். கவிஞரும், சீர்திருத்தவாதியுமான ஆ-சீ-யிங் என்ற பெண் ஜியு-ஜினின் சிநேகிதையானாள். இது இவர் களது கருத்துக்கள் விரிவடையவும் எண்ணங்கள் பரிமாறப்படவும் வழி
வகுத்தது.
தேசியப் பற்றார்வம்
பீகிங்கில் இருந்த நாட்களிலேயே ஜியு-ஜினுடைய தேசியப் பற்று வளர்ச்சியடைந்தது. சீன-ஜப்பான் யுத்தத்தில் அவள் வெறுப்படைந் தாள். மேனாட்டுத் தலையீட்டை எதிர்த்தாள். சீனாவின் மீட்சிக்கு ஒவ் வொருவரும் உழைக்க வேண்டும் என உறுதி பூண்டாள். அவளது எதிர்கால நடவடிக்கைகள் பலவற்றை இத்தகைய தேசியப் பற்றார்வமே நிர்ணயித்தது.
பெண்கள் ஆண்களுடன் சம உரிமை பெறுதல், சம கல்வி பெறுதல் முதலியவை அவர்களது தேசப்பற்றை வளர்த்துத் தேசத் தொண்டு புரிய வழிவகுக்கும் எனச் ஜியு-ஜின் கருதினாள். இத்தகைய எண்ணங்கள் வலுவடையவே தனது வீட்டுக் கடமைகளிலும், இல்லத் தலைவி ଗTର୍ତtyD பாத்திரத்திலும் அலுப்புற்றாள். தேச சேவை என்ற தனது இலட்சியத் துக்கும் அர்த்தமற்ற குடும்பக் கடமைகளுக்குமிடையில் முரண்பாடி ருப்பதை உணர்ந்தாள். எனவே 1903ம் ஆண்டு கணவனைப் பிரிந்து கல்வி கற்பதற்கு ஜப்பான் செல்லத் தீர்மானித்தாள். சில இடையூறுகளால் 1904 ம் ஆண்டு வசந்த காலத்திலேயே ஜியு-ஜின் ஜப்பான் வந்து சேர்ந்தாள். தனது பாதக்கட்டுக்களை அவிழ்த்து விட் டாள். இதிலிருந்து அவளது வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று இணைந்த மூன்று விசயங்களைச் சுற்றியே சுழன்றது. அவை கல்வி, பெண்விடு தலை, புரட்சி ஆகியவையாகும்.
குடும்பத்தை விட்டுத் தனது கல்விக்காக ஜப்பானுக்கு வந்தமை ஜியுவின் தனிநபர் சுதந்திரத்தையும், பெண் விடுதலையையும் மேலும் உறுதிப்படுத் தியது. ஜப்பானில் ஏற்கனவே சீன மாணவர்கள் இருந்தனர். இவர்களிற் சில பெண் மாணவர்களும் இருந்தனர். ஆனால் இந்த மிகச் சிலர் மிகுந்த தீவிரவாதிகளாய் இருந்தனர். ஜியுவைத் தொடர்ந்தும் பல பெண் தீவிரவாதிகள் ஜப்பானுக்கு வந்தனர். இத்தகைய ஒரு சூழ்நிலை ஜியு-ஜினுக்கு மிகுந்த உத்வேகத்தை அளித் தது. பல புரட்சிகரமான சங்கங்களில் ஜியு அங்கத்துவம் வகித்தாள்.
45

Page 30
ஜப்பானில் அவள் வசித்த நாட்களில் கவர்ச்சி வாய்ந்த, பிரபலமான ஒரு பெண்மணியாக விளங்கினாள். இவளது டோக்கியோ நாட்களைப் பற்றி ஓர் ஆராய்ச்சியாளர் பின்வருமாறு கூறுவார். 'ஜியுஜின் ஆண்களுடைய உடைகளையே தரித்தாள். குறுவாள் ஒன்றை எப்போதும் வைத்திருந் தாள். வெடிகுண்டுகள் தயாரிப்பதற்குப் பயின்றாள். அரசியல் பற்றிச் சளைக்காது விவாதித்தாள்.'
ஜியு-ஜின் பழைய இலக்கியம், வரலாற்றுப் பாரம்பரியம், ஜதிகம் முதலியவற்றில் காணப்படும் வீரர் சிலரைத் தனது ஆதர்ஸமாகக் கொண்டாள். இவர்களை மாத்திரமன்றி மேனாட்டுத் தேசிய வீரர்கள், கிளர்ச்சிவாதிகள் போன்றோரையும் தனது இலட்சியக் கதாநாயகர் களாகக் கொண்டதாக ஜியுஜினின் வாழ்க்கை பற்றி ஆராய்ந்தோர் கூறுவர். நெப்போலியன், ஜோர்ஜ் வாஷிங்டன், ரஷ்ய நாட்டு சோபியா பரோவ்ஸ் காயா போன்றோரைத் தனது இலட்சிய வீரராகக் கொண்டாள். இத்தகையரை முன்மாதிரியாக வைத்தே ஜியு தனது நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டாள்.
இயக்கத்தின் மையம் ஜப்பானிய அரசாங்கம் ஜப்பானில் கல்வி கற்கும் சீன மாணவர்கள் மீது கடுமையான பல சட்டதிட்டங்களை விதித்தது. இதற்காக ஜப்பானிய அரசாங்கத்தை மிக வன்மையாகக் கண்டித்தோரில் ஜியுஜினும் இடம் பெற்றாள். தனது இரு வருட ஜப்பானிய வாழ்க்கையில், சியு ஒரு முடிவுக்கு வந்தாள். மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்பிப் புரட்சிக்காக உழைப்பதன் மூலமே தனது தாய்நாட்டுக்கான சேவையைச் சரிவரச் செய்தபின் 1906 ம் ஆண்டின் ஆரம்பத்தில் சீனா திரும்பினாள். சீனாவில் ஷாங்கை நகரத்தில் ஜியுஜின் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்தாள். ஷங்கை நகர் இதற்கு முன்பிருந்தே பெண்கள் இயக்கத்தின் மையமாக இருந்தது. 1897ம் ஆண்டிலேயே பாதங்கட்டுதலுக்கு எதிரான இயக்க மொன்றும் பெண்கள் பாடசாலையொன்றும் இந்நகரில் ஆரம்பிக்கப் பட்டது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து ஷங்கை தீவிரவாதிகள் மத்தியில் பெண்களும் அங்கம் வகித்தனர். இங்கிருந்தே நூ-பவோ என்ற பெண்கள் பத்திரிகையும் வெளியானது. இத்தகைய சூழலிலேயே ஷங்கை நகருக்குச் ஜியுஜின் வந்து சேர்ந்தாள். ஷங்கை வந்து சேர்ந்த ஜியுஜின் பெண்கள் பாடசாலையொன்றில் ஆசிரியையாகப் பணி புரிந்தாள். தீவிரவாதிகளான மாணவர்களின் குழுக்களில் அவளும் அங்கம் வகித்தாள். 1906 ம் ஆண்டின் இறுதியில்
பாரதியின் பெண் விடுதலை
46

சிக்கியாங் பகுதியில் கலகம் செய்வதற்கான ஏற்பாடுகளில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டாள். ஆனால் பல்வேறு அரசியற் காரணங்களாலும் தடையேற்படவே மனச்சோர்வுற்ற ஜியுஜின் மீண்டும் பெண்கள் சம்பந்த மான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினாள்.
1907ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 'சீனப் பெண்கள் வெளியீடு -'சுங்கூநூ-பாவோ' என்ற பத்திரிகையை ஷங்கையிலிருந்து வெளியிடத் தொடங்கினாள். இப்பத்திரிகை ஜியுஜினுடைய பெண்கள் உரிமை தொடர்பான நடவடிக்கைகளின் உச்சமாக அமைந்ததெனலாம். இப்பத்தி ரிகை மூலம் அவள் பெண்கள் சுதந்திரம் பற்றிய தனது அபிப்பிராயங் தளையும் கருத்துக்களையும் வெளியிட்டாள். பெண்கள் தமது உரிமை களைப் பெறுவதற்கு அவசியமானால் வீட்டை விட்டு வெளியேறவும் வேண்டும் என்றும், சமூகத்தின் ஒடுக்குமுறைகளிலிருந்து மீள்வதற்குக் கல்வி கற்கவும், தொழில் புரியவும் வேண்டுமென்றும் இப்பத்திரிகை களில் ஜியுஜின் எழுதினாள்.
பெண்ணின் பாரம்பரியமான பாத்திரத்தை மிகத் தீவிரமாக மறுத்து ஒதுக்கலே ஜியுஜினுடைய எழுத்துக்களின் மையப் பொருளாக அமைந் தது- முழுச் சீன தேசத்தையும் கவ்வியிருக்கும் அரசியற் சமூகப் பிரச் சினைகளின் ஓர் அங்கமாகவே பெண்கள் பிரச்சினைகளையும் ஜியுஜின் கண்டாள். இது குறித்து ஓர் ஆய்வாளர் பின்வருமாறு கூறுவார். 'பெண் களை நேரடியாகப் பாதிக்கும் சில விஷயங்களை நீக்கினால் அல்லது மாற்றினால் பெண்கள் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் எனச் சில சீர்திருத்த வாதிகள் கருதினர். ஆனால் ஜியுஜின் அவர்களிடமிருந்து முற்றாக வேறுபட்டாள். ஜியுவுக்குப் பெண்கள் பிரச்சினை தனித்த ஒரு விஷய மாகத் தெரியவில்லை. மாறாக அவள் தீர்வு காண விரும்பிய அரசியற் பிரச்சினைகள் சிலவற்றுடன் ஒன்றிணைந்ததாகவே தென்பட்டது.'
தீவிர நடவடிக்கைகள்
1907ம் ஆண்டின் முற்பகுதியில் ஷாங்கையை விட்டு, ஜியுஜின் ஷவோ -சிங் என்ற நகருக்குச் சென்றாள். அங்கு தனது தீவிரமான அரசியல் நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம் என்ற எண்ணம் அவளுக் கிருந்தது. ஏற்கனவே அரசியல் இயக்கங்கள் சிலவற்றின் இருப்பிட மாகவும் தீவிரவாத நடவடிக்கைகளின் களமாகவும் இப்பகுதி அமைந் திருந்தது. இது ஜியுவுக்கு உகந்த ஒரு சூழலாக இருந்தது. இங்கு ஜியுஜின் ஒரு பாடசாலை நடத்தினாள். உண்மையில் இப்பாடசாலை இரகசிய படைப் பயிற்சிக் கூடமாகவே இருந்தது. அரசாங்கத்துக்கு எதிராகப்
47

Page 31
புரட்சி செய்யும் நோக்குடன் வேறு இரகசிய ஸ்தாபனங்களுடனும் தொடர்புபடுத்திக் கொண்டாள். ஆனால் சந்தேகமுற்ற அரசுப் படைகள் பாடசாலையைச் சுற்றி வளைத்தன. இலகுவாகத் தப்பியோடுவதற்கு வழியிருந்தும் ஜியுஜின் படைகளை எதிர்த்துப் போராடிப் பிடிபட்டாள். சித்திரவதை செய்த போதிலும் தனது நடவடிக்கைகள் பற்றி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க மறுத்தாள். இதனால் 1907ம் ஆண்டு ஜூலை 15ம் திகதி தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டாள்.
வேகமும், துடிப்பும், வீரமும் சாகசமும் கொண்ட இப்பெண்மணி பாரதியைக் கவர்ந்ததில் வியப்பில்லை. பாரதியைப் போலவே ஜியு ஜினும் தேச விடுதலையையும் பெண் விடுதலையையும் தொடர்புபட்ட விடயங்களாகக் கருதினாள்.
தேச விடுதலையின் ஒரு அங்கமாகப் பெண் விடுதலையைக் கருதினாள். இது மாத்திரமன்றி பாரதியைப் போலவே அதிகம் கவிதை எழுதிய ஜியுஜின் பிற்காலத்தில் தான் வெளியிட்ட பெண்கள் பத்திரிகையில் அதிகளவு கட்டுரைகள் எழுதினாள். இவை தவிர நாவலொன்றும் எழுதினாள். அதனைத் தனது பத்திரிகையில் தொடராக வெளியிட்டாள். ஆனால் அந்த நாவல் முடிய முன்னரே அவள் மரணமானாள். இவளது எழுத்தார்வத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது 'சீன பாஷையில் தகுந்த பாண்டித்தியம் வகித்திருந்தது மட்டுமேயன்றி இவளிடம் கவிதா சக்தியும் சேர்ந்திருந்தது' என்று பாரதி எழுதினார்.
'சியுசின் என்ற சீனத்து ஸ்திரீயின் கதை' என்ற தலைப்பில் பாரதி எழுதிய கட்டுரையில் ஆரம்பத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
'ஆசியாவில் பெண் விடுதலைக் கொடியை நாட்ட வேண்டுமென்ற பாடுபட்டவர்களில் இவளும் ஒருத்தியாகையால் இவளுடைய கதை பெண் விடுதலையில் நாட்டம் செலுத்திடும் உங்கள் அனைவர்க்கும் மிகவும் ரஸமாகத் தோன்றக்கூடும்'.
இவ்வாறு எழுதிய பாரதி ஜியுஜினைச் சரியானபடி மதிப்பிட்டார் என்றே
சொல்ல வேண்டும். இதனாலேயே ஜியுஜினின் கருத்துகளைத் தெளி
வாகக் காட்டும் பிரசங்கத்தையும், கவிதையையும் தமிழில் மொழி பெயர்த்தார். தனக்கு ஆதர்ஸமான ஒருவரைச் சரியானபடி அடையாளம்
கண்டதன் விளைவு இது எனலாம். எனவேதான் பாரதியின் பெண்விடு
தலைக் கருத்துக்களைப் பாதித்தவர்களில் ஒருவராகச் ஜியுஜின் என்ற
சீனத்துப் பெண்மணி விளங்குகிறாள்.
பாரதியின் பெண் விடுதலை

துரையப்பா பிள்ளையும் பாரதியாரும் : சமகாலக் கருத்தோட்டங்களில் ஒற்றுமையும் முரண்பாடும்
துரையப்பாபிள்ளை, இந்தியாவின் தேசிய மகாகவியான சுப்பிரமணிய பாரதியின் சமகாலத்தவர். குறிப்பிடத்தக்க சில அம்சங்களின் அவருடன் ஒப்பிடத்தக்கவர். சிறப்பாகத் தேசியப்பற்று, சமூக சீர்திருத்த ஆர்வம் ஆகியவை இருவருக்கும் பொதுவான அம்சங்களாகும்.
'துரையப்பாபிள்ளை அவர்களின் கவிதைகளைப் படிக்கும் போது, அவற்றுக்கும் பாரதியாருடைய கவிதைகளுக்குமுள்ள கருத்தொற்றுமை, பொருளொற்றுமை, நடையொற்றுமை முதலியன ஒருவருக்குப் புலப்படாமற் போகா. அவரை இலங்கையராகிய நாம் , இக்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி என்றும், நவீனத்துவத்தின் விடிவெள்ளியென்றும் ஐயமின்றிக் கூறலாம்.'
'பாரதியாரைப் போலவே தமிழ்ப் பற்றையும் பொதுமக்க ளுக்கூட்டி, சமூகத்துக்கு வேண்டிய நல்ல சீர்திருத்தக் கருத்துக் களை. எளிய இனிய பழகு தமிழில் எடுத்துக்கூறிய பிள்ளை யவர்களுக்கு இக்கால ஈழத்தின் இலக்கிய வளர்ச்சியிலே முக்கியமான ஓர் இடமுண்டு என்பதை எவரும் மறுத்தல் இயலாது.'
மேற்காணும் இரு குறிப்புகளும் இருவேறு ஈழத்து விமர்சகரால் பாரதி யாருடன் பாவலர் துரையப்பாபிள்ளையை ஒப்பிட்டுக் கூறப்பட்டவை
யாகும். முதலாவது கூற்று மிகப் பொதுப்படையாகப் பாவலருக்கும் பாரதிக்குமுள்ள ஒற்றுமை குறித்துக் கூற, இரண்டாவது கூற்று விஸ் தாரமாகவும் மிகுந்த உணர்ச்சி ஆர்வத்துடனும் இவ்விருவரும் ஒரே பாதையிற் சென்றவர்கள் என்பதை வற்புறுத்துகின்றது. ஆயினும், இரு

Page 32
விமர்சகர்களுமே சமூகச் சீர்திருத்தத்தில் இவ்விரு இலக்கிய கர்த்தாக் களுக்கும் இருந்த ஆர்வத்தை ஒரு முகமாகச் சுட்டுகின்றனர்.
பெண்களின் பிரச்சினை
நவீன தமிழிலக்கியத்தின் ஓர் அம்சம் பெண்கள் பிரச்சினை என்பதை இன்றைய நிலையில் எவரும் மறுக்கமாட்டார். பத்தொன்பதாம் நூற்றாண் டின் பிற்பகுதியிலிருந்து நவீன தமிழிலக்கியத் துறைகளில் ஈடுபட்ட இலக்கிய கர்த்தாக்கள் பல்வேறு வகையிலும் வடிவிலும் பெண்கள் பிரச்சினை குறித்துத் தமது கருத்துக்களை வெளியிட்டனர். முதல் தமிழ் நாவலாசிரியரான வேதநாயகம் பிள்ளை தமது நூல்களில், கல்வி, பெண்களின் உயர்ச்சிக்கு வழிகோலும் அடிப்படை என வற்புறுத்தினார். மாதவையாவும் இதே கருத்தை வற்புறுத்தியதோடன்றிப் பெண்களைத் தாழ்வாக மதிப்போரை வெறுக்கின்ற தனது நிலைப்பாட்டையும் பத்மாவதி சரித்திரத்தில் வெளிப்படுத்தினார். வ.வே.க. ஐயர் தமது குளத்தங்கரை அரச மரத்தில் பெண்ணாய்ப் பிறந்தோரின் மனதை நோகவைக்கக்கூடாது என்றார்.
இவ்வகையில் முக்கியமான, நவீன தமிழிலக்கிய கர்த்தாக்கள் ஏறத்தாழ அனைவருமே பெண்கள் பிரச்சினைகளை அவர்களது அவல நிலையை, அதனை நீக்குவதற்கான வழிமுறைகளைத் தமது ஆக்கங்களில் வெளி யிட்டனர். இத்தகைய இலக்கிய ஆசிரியர்களின் வரிசையிலேயே, தமிழ் நாட்டில், பாரதியும் பெண் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தார். ஈழத்து இலக்கிய உலகில் சமூகச் சார்பான விடயங்களை முதன் முதல் அதிக அளவில் தமது எழுத்துக்களிற் கொணர்ந்தவர் பாவலர் துரை யப்பாபிள்ளை என்று பலரும் கூறுவர். அவ்வகையில் இலக்கியத்தில் சமூகச் சார்புக்கு உரமிட்டவர் அவர் என்பர். நவீன இலக்கியம் தொட்ட சமூகம் சார்ந்த விஷயங்களுள் ஒன்றான 'பெண்' குறித்து துரையப்பா பிள்ளை எத்தகைய கருத்துக் கொண்டிருந்தார் என்று காண்பது சுவை பயப்பதாகும். அது மட்டுமன்றி இவ் விடயத்தில் சம காலத்தவரான பாவலரும் பாரதியும் கொண்டிருந்த கருத்துக்களை ஒப்பிட்டு நோக்குதல் இவ்விருவர் பற்றிய தெளிந்த விளக்கங்களைப் பெற உதவுவது மாத்திர மன்றிப் பாரதியின் பெண் பற்றிய நோக்கினை மிகத் திட்டவட்டமாகப் புரிந்து கொள்ளவும் உதவும்.
பாரதியின் பெண் விடுதலை
5O

ஈழத்தில் மாதர் நிலை
இந்தியாவுடன் ஒப்பிடும்போது, ஈழத்தில் பெண்கள் நிலை அவலம் குறைந்ததாகவே இருந்தது. 'சதி' எனும் உடன் கட்டையேறும் வழக் கமோ, ருதுவாகு முன்பு பெண்ணைத் திருமணம் செய்விக்கும் வழக் கமோ இங்கு காணப்படவில்லை. இந்திய விதவை போன்று இலங்கை யில் விதவைகள் துயர் மண்டிய வாழ்க்கை வாழவில்லை. பெண்ணுக்குச் சிறுதளவாகிலும் சொத்துரிமை இருந்தது. ஆனால் பொருளாதார நடைமுறைகளிலிருந்து கலாசார விழுமியங்கள் வரை யாவும் பெண்ணுக் கிருந்த இரண்டாமிடத்தையே பிரதிபலித்தன. பெண் கல்விவாய்ப்பு அற்றவளாயிருந்தாள் வீடு சார்ந்த வேலைகளில் மட்டுமே பெண் ஈடுபட வாய்ப்பிருந்தது. இத்தகைய பின்னணியில்தான் சைவப் பாதுகாவலரான ஆறுமுகநாவலரும் 'பெண்ணினது யாகசாலை அடுக்களையே' என அறுதியிட்டுக் கூறினார்.
ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் மெது மெதுவாக ஏற்பட்ட சமூக கலாசார மாற்றம் பெண்கள் நிலையிலும் மெல்லென ஒரு முற்போக்கான மாற்றத்தை எற்படுத்தத்தான் செய்தது. சமூகத்தின் வசதி படைத்த பெண்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பை ஆங்கிலேயரின் பாடசாலைகள் அளித்தன. யாழ்ப்பாணத்திலும் இந் நிலைமை ஏற்பட்டது. கலவன் பாடசாலைகளுக்குப் பெண்களை அனுப்பப் பெற்றோர் தயங்கியதால் பெண்களுக்கெனத் தனிப்பாட சாலைகள் அமைக்கும் வழக்கம் தொடங்கிற்று. கிறிஸ்தவ மிசன்களே இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டன. உடுவில் அமெரிக்கமிசன் பெண் கள் பாடசாலை (1823) இம்முயற்சியின் ஆரம்பமாயமைந்தது. கிறிஸ் தவர்கள் பெண் கல்வியில் காட்டிய அக்கறையை உணர்ந்த இந்துக்கள் தாமும் பெண் கல்விக்கு உழைக்க முன்வந்தனர். பெண்கல்வி சிறிதாகப் பரவலாயிற்று.
யாழ்ப்பாணத்தின் இத்தகைய பின்னணியிலேயே துரையப்பாபிள்ளை பெண்கள் பற்றிக் கொண்டிருந்த கருத்தை நோக்குதல் வேண்டும். பெண் கல்வி பரவுதல் சந்தோசம் எனக் குறிப்பிட்ட பாவலர் தமது யாழ்ப்பாண சுவதேசக் கும்மி என்ற செய்யுளில் இது சம்பந்தமான தனது கருத்துக் களைத் தெளிவாகத் தெரிவித்தார்.
"குண்டான் வழித்திடும்
பெண்களுக்குக் கல்வி
S1

Page 33
கூடாதெனச் சொன்ன தக்காலம் பண்டாய்பறந்திடப் பெண்களெங்கும் கலை பற்றுகிறாரடி சங்கமின்னே'
எனத் தமது கால நிலையைக் கூறியவர் பெண்கல்வியின் எல்லை எது என்பதை மிகத் திட்டமாகக் கூறினார்.
'ஆண்களைப் போலவே பெண்களுக்குஞ் சரி யாக உயர் கல்வி வேண்டுமெனும் வீண்கதையாற் சில பெண்கள் படும்பாடு விள்ளற் கரிதடி சங்கமின்னே'
'வீட்டினில் சீவியம் இன்பம் நிறைந்தது
விளங்குதற்கேற்ற
சுகிர்தகலை
ஊட்டுதல் போதும் பீஏ எம் ஏ பட்டம் உதவாது பெண்கட்குச் சங்கமின்னே"
'பெண்களியல் பிற்
பெலவீனரென்று
பெருமுண்மை தன்னை
யலட்சை செய்து
ஒண்கலை மிக்க
அருந்திட லாற்றுயர்
ஒதற் கரிதடி சங்கமின்னே"
எனவேதான் பெண்கள் வீட்டு வேலைகளைத் திறமையாகச் செய்வதற்கு ஏற்ற கல்வியையன்றி உயர் கல்வியை அவாவுதல் வீண் என்பதைத் துரையப்பாபிள்ளை ஆணித்தரமாக அறிவுறுத்தினார்.
பாரதியின் பெண் விடுதலை
52

பாரதியின் முற்போக்கு சிந்தனை
இவ்விடத்தில் பாரதி பெண்கல்வி குறித்துக் கூறியவை அவர் இவ்விடய த்தில் மிக முற்போக்குச் சிந்தனையுடையவராயிருந்ததைத் தெரிவிக் கின்றன. சாத்திரங்கள் பல பல கற்பவளாகத் தனது புதுமைப் பெண் களைப் போற்றிய பாரதி,
'. அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்
அவுலமெய்திக்
கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல்
பெண்ணிறமாகும்' என்று உணர்ச்சி வேகத்துடன் பாடினார். இதுமட்டுமன்றித் தனது கட்டுரைகளிலும் மிக நிதானமாகவும் தெளிவாகவும் எல்லாவிதக் கல்வியறிவும் பெண்களுக்கு அவசியம் என வற்புறுத்தினார்.
'. குடும்ப வழக்கங்களாயினும் தேக வழக்கங்களாயினும் அவற்றுள் முக்கியத் தன்மையுடையன எவை இல்லாதன எவை என்ற ஞானம் நம்முடைய ஸ்திரீகளுக்கு ஏற்பட வேண்டுமாயின் அதற்குக் கல்வியைத் தவிர வேறு சாத மில்லை. ஆண்மக்களுக்கு சமானமான கல்வித் தகைமை பெண்களுக்கு பொதுப்படையாக ஏற்படும் வரை ஆண்மக் கள் பெண்மக்களைத் தக்கபடி மதிக்கமாட்டார்கள்."
'எவ்வாறு நோக்கிய போதிலும் தமிழ் நாட்டு மாதர் சம்பூரணமான விடுதலை பெற வேண்டுமாயின் அதற்குக் கல்வித் தோனியே பெருந்துணையாம். எனவே கொஞ்சம் கொஞ்சமாகப் பல துறைகளில் பயிற்சி வாய்த்திருக்கும் தமிழ் சகோதரிகள் இரவு பகலாகப் பாடுபட்டு அவ்வத் துறைகளில் நிகரற்ற தேர்ச்சி பெற முயல வேண்டும்"
கட்டுரை -தமிழ்நாட்டு மாதருக்கு
'பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழ்க்கம் ஏற்படுத்த வேண்டும்"
கட்டுரை - பெண்விடுதலை
||LAT|H|S|MILIA ALBERHALB
äitinääri.

Page 34
இங்கு பாரதி தமது சமகாலத்தவரும், சமூக சீர்திருத்தவாதியுமான துரையப்பா பிள்ளையிலிருந்து வேறுபட்டு, பெண்கள் பற்றி எத்தகைய வளம்மிக்க முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்தார் என்பது தெட்டத் தெளிவாகும். கல்வி குறித்து இருவரும் இருவேறு எதிர்மறைக் கருத்துக்கள் கொண்டிருந்தது போலவே பெண்கள் செய்யக்கூடிய தொழில் பற்றியும் வெவ்வேறான கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.
பெண்கள் சகல தொழில்களும் செய்யும் உரிமையுடையவர்கள் என்பதை பாரதி மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். எட்டும் அறிவினில் ஆணுக் கிங்கே பெண் இளைப்பில்லை என்று கூறியவர்.
"பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள்
நடத்த வந்தோம்" என்று பெருமிதத்துடன் பெண்கள் விடுதலைக்கும்மி பாடினார். இதுமட்டு மன்றி, பெண் விடுதலை என்ற கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
'விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றில் கெளரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சை யான தொழில் செய்து ஜீவிக்க இடங் கொடுக்க வேண்டும்.' 'தகுதி யுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்தியோகம் பெற விரும்பி னாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.'
துரையப்பா பிள்ளையின் கருத்து
பாவலர் துரையப்பாபிள்ளை இத்தகைய கருத்துகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டார். வீட்டு வேலையே பெண்களுக்குரியது என்று தெரிவித் தார்.
தையல் பின்னல் சித்திரம்
செய்யும் வகையொடு
சங்கீத சாகித்ய
மாமுயற்சி
மெய்யாலெம் பெண்கள்
தம் வீட்டைஇன்பாக்க
மிகவுதவி செயுஞ் சங்கமின்னே'
பாரதியின் பெண் விடுதலை

இவ்வாறு கூறிய பாவலர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வேறுபாடுகளை மனதிற் கொண்டு தமது வீட்டுக் கடமைகளுடன் அமைந்து விடுதலே சாலச் சிறந்தது எனவும் வற்புறுத்தினார்.
"ஆண்கட்கு அமலனருள் பல் தொழில்களை ஆண்களே செய்தல் தகையது போல் மாண்களில் சேர் பெண்கள் தம் வேலையே செய்தல் மாட்சியென் றெண்ணடி சங்கமின்னே'
பெண்கள் படித்தறி
வெய்தியில் எங்களைப்
பேணிக் கணவர்க்
குறுதுணையாய்ப்
பண்புடன் வாழுத
லோஅவர் வேலை' பெண்கல்வி, தொழில் ஆகியவை பற்றிய பாவலரது கருத்துகள் அக் காலத்தில் அவருடைய தனிக் கருத்துகளாக மட்டும் காணப்படவில்லை. யாழ்ப்பாணத்து உயர் குலத்தினர் பெண்குறித்துக் கொண்டிருந்த கருத்துகளின் பிரதிபலிப்பாகவும் காணப்படுகின்றன. இவ்விடத்தில் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் பற்றிய ஒரு விடயம் மேற்கூறிய கருத்துக்கு உறுதுணை புரிவதாகும். சேர்.பொன்னம்பலம் இராமநாதன் சைவப் பெண்களுக்கெனத் தனிப் பாடசாலை ஒன்றை முதன் முதல் நிறுவியவர். 1918ம் ஆண்டு இராம நாதன் கல்லூரியை அவர் நிறுவியபோது துரையப்பாபிள்ளை, அது பெண்களின் உயர்வுக்கு வழியெனவும் பாராட்டினார். பெண் கல்விக்காக முதல் பாடசாலையை அமைத்த இராமநாதனே பெண்களுக்கு வாக் குரிமை கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை ஆணித்தரமாக எதிர்த்தவர். இவ்விருவரது கருத்துகளையும் ஆழ்ந்து நோக்கும்போது, அடிப்படை ஒன்றேயாகத் தென்படும்.
SS

Page 35
கல்வியில் சைவச் சூழல்
பெண்களுக்கெனத் தனிப்பாடசாலையை ஆரம்பித்த இராமநாதன் தமது சமய, சமூக, கலாசார மரபுகள் சிதையாது அவற்றைப் பேணுவதற்குரிய முறையிலேயே பெண்கல்வி அமைய வேண்டும் என விரும்பினார். கிறிஸ்தவப் பாடசாலைகளில் கல்விகற்கும் பெண்கள் யாழ்ப்பாணக் கலாசார அம்சங்களைக் கைவிடுதலை இவர் போன்றோர் கவனித்தனர். இதனாலேயே சைவச் சூழலில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என எண்ணினர். கலாசாரத்தின் வாழும் அடையாளமாகப் பெண்ணையும், பெண் பற்றிய மதிப்பீடுகளையும் கண்ட சமூகம் பெண்ணின் நிலையில் ஏற்படும் மாறுதல்களை இலகுவில் ஏற்கத் தயங்கிற்று. ஆனால் பெண் கல்வி ஏற்றதல்ல என்று கூறுதல் புதிய நிலையில் சங்கடத்தை ஏற்படுத்துவதாகும். ஆனால் பெண்கல்வி வேண்டும். அது பெண்ணின் பாரம்பரியத்தன்மையைப் பேண வழி செய்ய வேண்டும் என்று கூறுவது வசதியாக அமைந்தது. இத்தகைய நிலைப்பாட்டையே சேர் இராமநாதன் கைக்கொண்டார். இதனாலேயே பெண் கல்விக்கு வழி வகுத்தாலும் பெண் சமூக வாழ்க்கையில் பங்கு பற்றுவதை அவர் எதிர்த்தார். பெண்களுக்கு வாக்குரிமை அளித்தல் சமூகத்தினால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையிலிருந்து அவர்கள் விலக ஏதுவாகும் என எண்ணினார் இக்கருத்தையே மிக நாசுக்க்ாக ஆனால் தெளிவாகப் பின்வரும் வார்த்தைகளில் வெளியிட்டார். 'பெண்களுக்கு வாக்குரிமை அளித்தல் இல் லத்தின் அமைதியைக் குலைக்கும். வீட்டின் அங்கத் தவர்களின் இதயத்தில் இலங்கும் தூய்மையும் இயைபும் குலைய வழி வகுக்கும்" (டெய்லி நியூஸ் நவம்பர் 24, 1927) இத்தகைய மெருகேறிய வார்த்தைகளிற் கூறியபோதும் பெண்கள் சமூக வாழ்க்கையிற் பங்குபற்று வதையும் தமக்கெனத் தனிக் கருத்துகளை வளர்த்துக் கொள்வதையும் மறுப்பதாகவே இக்கூற்று அமைகிறது.
சேர்.இராமநாதன் போன்ற யாழ்ப்பாண உயர்குலத்தோரின் வரிசையில் இடம்பெறுபவரே பாவலர் துரையப்பாபிள்ளை.அவரை நெறிப்படுத்திய காரணிகளும் இத்தகைய உயர் சமூகச் சார்பு கொண்டிருந்தன. இத னாலேயே துரையாப்பாபிள்ளை கல்வி, தொழில் ஆகியவற்றில் மரபு ரீதியான விழுமியங்களைப் பெண்ணுக்கு விதித்தார். பெண்ணுடைய குணங்களும் இயல்புகளும் பாரம்பரிய முறையில் அமைதல் வேண்டும் என்றார்.
பாரதியின் பெண் விடுதலை

ஆனால் பாரதி இத்தகைய கருத்துகளுக்கு எதிர்மாறான தத்துவம் போல 'புறவுறுப்புகளில் மாறுதல். ஆத்மா ஒரே மாதிரி' என ஆண் பெண் சமத்துவத்தை வற்புறுத்தினார். நவீன பெண் இயக்கத்தினரின் வேறுபாடு ஆனால் சமத்துவம்' என்ற கோட்பாடு பாரதியின் மேல்காணும் வசனங்களில் அமைந்து கிடக்கிறது. ஆண் பெண் சமத்துவத்தைக்கூறிய பாரதி இன்னும் ஒருபடி மேலே போய் பெண்ணைத் தாழ்வாக மதிப்பதே துன்பங்கட்குக் காரணம் என்றார்.
'இன்று தமிழ் நாட்டில் மாத்திரமேயல்லாது பூமண்டல முழுதிலும், பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாக வும் கருதி நடத்தும் முறை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம்; அநீதி களுக்கெல்லாம் பிறப்பிடம்.'
என அறுதியிட்டுக் கூறினார் பாரதியார். இவ்வாறு கூறியது மட்டுமன்றித் தமது உரிமைகளைப் பெறுவதற்குப் பெண்கள் போராட வேண்டு மென்றார். படிப்படியாக அன்றி தமது உரிமைகளையும் விடுதலை யையும் முழுமையாக, ஒரேயடியாக உடனடியாகப் பெற முயல வேண்டு மெனக் கூறினார்.
'சிறிது சிறிதாக படிப்படியாக நியாயத்தை ஏற்படுத்திக் கொள்வோம் என்னும் கோழை நிதானக் கட்சியாரின் மூடத்தனத்தை நாம் கைக்கொள்ளக்கூடாது." தேச விடுதலையில் தீவிரத்தைக் கைக்கொண்ட பாரதி பெண் விடுதலை யிலும் தீவிரவாதியாகவே இருந்தார்.
புலனாகும் ஓர் உண்மை
இவையாவற்றையும் தொகுத்து நோக்கும்போது ஒருண்மை புலனாகிறது. ஒரே காலகட்டத்தில் இலக்கிய கர்த்தாக்களாகவும் தேசியவாதிகளாகவும் இகுந்த பாவலரினதும், பாரதியினதும், பெண்கள் பற்றிய கருத்துகள் முரண்படுகின்றன. குறிப்பாகப் பாவலரின் கருத்துக்கள் காலத்துக் கொவ்வாதனவாகக் காட்சியளிக்கின்றன.
ஆனால் பெண்கள் பற்றிய கருத்துகளைக் கொண்டு துரையப்பா
பிள்ளையை முற்றுமுழுதாக நிராகரித்தல் பொருத்தமன்று. அவரது கல்வித் தொண்டு என்றென்றும் நிலைத்து நிற்க வல்லது. இலங்கையின்
பாரதியின் பெண் விடுதலை
57

Page 36
ஏனைய பகுதிகளின் தேசியவாதிகளைப் போல மதுவிலக்கு இயக்க ஆதரவாளராயிருந்தார். தொழிற்சங்கம் நிறுவுதல் போன்ற நவீன விசயங்களில் அக்கறை கொண்டிருந்தார். இத்தகைய கருத்துகளைக் கொண்டிருந்தபோதும், பெண்கள் குறித்து எதிர்மறை நோக்கு அவரது இரண்டக நிலையைச் சுட்டுகிறது. ஒரு புறத்தில் முன்னேற்றமான சிந்தனை வாதியாகக் காட்சியளிக்கும் துரையப்பாபிள்ளை, பெண்கள் தொடர்பாக மரபுவாதியாகவேயுள்ளார். துரையப்பாபிள்ளையின் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும் முற்போக்கான எண்ணங்களையும் விதந்து எழுதியோர். அவரது பெண்கள் பற்றிய கருத்துக்களை சூசமாகவேனும் தொட்டுக் காட்டினாரல்லர். இது எமது ஆய்வுலகத்திலும் ஆண் ஆதிக்கம் தன்னுணர்வின்றியாவது செயற்படுவதன் விளைவு எனலாமா?
எது எப்படியாயினும் ஒன்று கூறலாம். துரையப்பா பிள்ளை ஆரம்பத்தில் கிறிஸ்தவராகவிருந்து பின் சைவரானவர். எனவே மதமாற்றம் அடைந் தவருக்குரிய சமூக உளவியல் பிரச்சினைகள் அவருக்கு இருந்திருக்க வேண்டும். இதனால் குறிப்பாக, கலாசாரம் பற்றிய கருத்துக்களில் மிக அவதானமாகவேயுள்ளார். ஒரு சமூகத்தில் பெண்ணுடைய நிலையானது அச்சமூகத்தின் கலாசாரத்தின் அடிப்படை பற்றிக் குறி காட்டுவதாகும். கிறிஸ்தவராக இருந்ததன் பாதிப்பு தனது கருத்துக்களில் தெரிகிறது எனச் சைவர் கூறுவதைத் துரையப்பாபிள்ளை விரும்பியிருக்கமாட்டார். அன்றைய நிலையில் பெண்கள் குறித்துக் கிறிஸ்தவர்கள் சற்று முற்போக் கான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். கிறிஸ்தவப் பாதிப்புக்குச் சற்றும் உட்படாத முழுச்சைவராக விரும்பிய துரையப்பா பிள்ளை பெண்கள் பற்றியும் சைவரிடையே நிலவிய மரபு ரீதியான கருத்துக்களைப் பிரதி பலிக்க வேண்டியதாயிற்று.
மேற்கண்டவாறு துரையப்பா பிள்ளையின் நிலைப்பாட்டுக்குக் காரணங் கள் கூறலாம். ஆனால் துரையப்பா பிள்ளை போன்ற பாரதியின் சமகாலத்தவருடன் பாரதியை ஒப்பிடும்போதுதான் பாரதியின் பெருமை புலனாகிறது. எத்தகைய மரபுத் தலைகளுக்கும் உட்பட்டுச் சமரசம் பேசாமல் பெண்விடுதலை வேண்டினார் பாரதி. அவர் இறந்து நீண்ட காலம் சென்றும் கூட மேலாகியும் பெண் பற்றிய அவரது கருத்துகள் பெரும்பாலும் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளத்தக்க முக்கியத்துவம் வாய்ந்துள்ளன.
பாரதியின் பெண் விடுதலை


Page 37


Page 38


Page 39