கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எங்களூர் ஏழாலயவூர்

Page 1


Page 2


Page 3


Page 4

laas Sao Saar حصحص حصحص حد عصعصعصعص
எங்களுர் ஏழாலயலுர்
Engaloor EzhalayaVOor
திரித்துவதாசன் க. முத்துச்சாமி "யாழ்ட்டன்’
எழுதல வளவு ஏழாலை.
குறிஞ்சி பதிப்பகம் 21117 'Lifeh) as Tapsf.
இராயப் பேட்டை சென்னை-600 014. தொலைபேசி-8522764.

Page 5
எங்களுர் ஏழாலயலுர் (வரலாற்றுஆய்வு நூல்)
பக்கங்கள்
ஆசிரியர்
விலை
பதிப்புரிமை
பதிப்பாசிரியர்
U5İLİL
வெளியிட்டவர்
முகப்பு ஓவியம்
அச்சிட்டோர்
- 224
- தி. க. முத்துச்சாமி
- ரூ. 109.00
- நூலாசிரியருக்கே
- எஸ்.எம். கார்மேகம் (கார்வண்ணன்)
— 12 dit řasy 1993
- திருமதி செல்லம்மா
முத்துச்சாமி
எழுதல வளவு, ஏழாலை,
- தாமரை
- சித்ரா பிரிண்டோ கிராபி, 25, பொன்னுசாமி தெரு, இராயப்பேட்டை, சென்னை-14.

சமர்ப்பணம்
தனக்கென வாழாதவர்
ஏழாலயம்பதி ஈன்ற பல்துறை, பல்கலை விற்பன்னர்கள் பலர், எமது செம்பவள மண்ணின் தன்மையே போல பற்றியபின் எளிதின் விட்டகலாப்பண்பு சால் மக்கள் அவர்கள். இவ்வறிஞ ருள்ளே, வரலாற்று ஆய்வுத் துறையிலே சமர்த்தராய் விளங்கிய கதிரவேல் அருமைநாயகம் நல்ல ஆய்வாளன். வரலாற்றுத்துறை சிறப்புப்பட்டதாரியான அவர் 25 வயது முதல் 43 வது வயதிலே (29-7-83) வன்செயலுக்குப் பலியாகும் வ்ரை செய்த சரித்திர, சமய சம்பந்தமான ஆய்வுகள், பிரமிக்க வைப்பவை. இனம், மதம், உயர்வு, தாழ்வு பேதமின்றி, தாம் மேற்கொண்ட அனைத்து விடயங்களையும் காய்தல் உவத்தலின்றி, எத்திறத்தாரும் ஏற்கும் வகையில் எடுத்தோதும் பண்பாளன்.
யாழ்ப்பாணக் கல்லூரியிலும், கொழும்பு பல்கலைக் கழகத் திலும் விரிவுரையாளராகக் கடமையாற்றி பின்னர் இறக்கும் வரை, வருமான வரித் திணைக்களத்தில் சிரேட்ட வரிமதிப் பீட்டாளராக விளங்கிய அருமைநாயகம் வரலாற்றை வரலாற் றுணர்வோடு கற்பிக்கும் ஆற்றல் மிக்கவர் என கலாநிதி சி. க. சிற்றம்பலம் அவர்கள் பாராட்டி உள்ளார்.
உரிய காலத்தே, இணுவிலம்பதி சார்ந்த தொழிலதிபர் வை. சி. சி. கு. மரபிலே பரிமளம் என்ற பெண்ணை மணந்தார். யோக இந்திரன், சாதினி என இரு மக்கள் அவர்ளுக்கு உளர்.
என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கும் அருமைக்கு எங்களுர் ஏழாயைவூர் என்ற என் படைப்பினை அர்ப்பணிப்பதில் மனநிறைவு கொள்கிறேன்.
-நூலாசிரியர்

Page 6
அணிந்துரை
"வரலாறெழுதுவதற்குரிய அத்துறை சார்ந்த நிபுணத்துவம் அற்றவன்' என்ற ஆசிரியரின் அவையடக்கத்துடன் எழுதப்பட்ட இந்நூல் ஏழாலையூர் பற்றிய, பல்வேறு அம்சங்களை விரித் துரைக்கிறது. இவ்வூரின் நிலவளம், பொருளாதாரம், மக்கள்குடி யேற்றம், வழிபாட்டிடங்கள், சமய பாரம்பரியம், கல்விப் பாரம் பரியம், எழாலை தந்த அறிஞர்கள் போன்ற விடயங்கள் இதிற் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் தமிழறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளை பற்றிய தகவல்கள், மிகவும் அறிவூட்டத்தக்கவை.
இச்சந்தர்ப்பத்தில், தாமோதரம்பிள்ளை போன்ற பேரறிஞர் களை உருவாக்கிய சர்வசாஸ்திர போதனா பீடமாகிய வட்டுக் கோட்டைச் செமினறி பற்றியும், அதற்கு அத்திவாரமாக விளங் கிய கலாநிதி டானியல் பூவர் பற்றியும் ஆவணம் சார்ந்த தகவல் கள் கருத்திற் கொள்ளத்தக்கவை. அமெரிக்க பாதிரியாரான பூவர் அவர்கள் யாழ்ப்பாணக் குடா நாட்டில் ஆற்றிய கல்விச் சேவையின் எச்சமாக விளங்கும் யாழ்ப்பாணக் கல்லூரி பற்றியும் கூறுவது அவசியமாகிறது. காரணம் வட பகுதியில் பல்கலைக் கழகத்தின் உதயம் பற்றி ஆசிரியர் கூறியிருப்பதால், ஒரு வரலாற் றுக் குறிப்பாக இதனை இங்கே எடுத்துக் காட்டுவது பொருத்த மாகிறது.
1974-இல் வடபகுதிக்கு ஒரு பல்கலைக்கழகம் அளிக்க விரும்பிய அன்றைய அரசாங்கம், இதனை அமைக்க சகலவிதத்தி லும் தகுதி வாய்ந்த, பழைய கல்விப் பாரம்பரியமுடைய சேர். பொன். இராமநாதனின் உபயமாகிய பரமேஸ்வராக் கல்லூரி, பூவரின் கல்விப் பணியின் சின்னமாகிய யாழ்ப்பாணக் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்தது. பரமேஸ்வராக் கல்லூரியை அரசு மேற்கூறிய தேவைக்குச் சுவீகரிக்க விரும்பிய போது, அன்றையஇராமநாதன்நம்பிக்கை நிதியப் பொறுப்பாளர், தமிழ் மக்களின் கனவு நனவாகிறது என்ற சிந்தனையுடன் அதனை முழுமனதுடன் கையளித்தனர். இவ்வாறே யாழ்ப் பாணக் கல்லூரியின் பங்களிப்பையும் தீர்க்க தரிசனமாக உணர்ந்த பேராசிரியர் லூதர் ஜெயசிங்கம் போன்றோர், அமெரிக்க மிஷனரி மாரின் கல்விப் பாரம்பரியக் கனவு, நனவாகிறது எனக் கருத்திற் கொண்டு, அதனைக் கையளித்தனர். துர்அதிர்ஷ்டவசமாக இத்தகைய சிந்தனை, தென்னிந்திய ஐக்கிய யாழ்ப்பாண மறை மாவட்டத்தினர் மத்தியில் வேரூன்றவில்லை. பரமேஸ்வராக் கல்லூரியில் கலைப்பீடம் இயங்க, யாழ்ப்பாணக் கல்லூரியில் விஞ்ஞானப்பீடம் இயங்கியது. யாழ்ப்பாணக் கல்லூரிக்குரிய

நூல்கள், பின்னர் பரமேஸ்வராக் கல்லூரி நூல் நிலையத்தில் பரிமாற்றம் பெற்றன.
இருந்தும் இத்தகைய நிலை நெடிது நாள் நீடிக்கவில்லை. திருச்சபையினர், தமிழ் மக்களின் கல்விக்கும் யாழ்ப்பாணக்கல்லூரி பங்களித்துக் கொண்டிருக்கும் எனச் சிந்தியாது அரசுடன் தொடர்பு கொண்டு கல்லூரியைத் திருப்பிப் பெற்றது மட்டுமன்றி நூல்களையும் திருப்பிப் பெற்றமை, அமெரிக்க மிஷனரிமாரின் வடபகுதிக் கல்விப் பாரம்பரிய வரலாற்றில் ஒரு கறை படிந்த அத்தியாயம்.
நமது வரலாற்றுக்குரிய தரவுகளோ அன்றி வரலாறு பற்றிய
நூல்களோ மிக மிக அருகிக் காணப்படும் இச்சூழலில், இத்தகைய முயற்சிகள் நமது வரலாற்றில் அக்கறை காட்ட வழிவகுக்கும் என்பதிற் சந்தேகமில்லை. நூலிற் கூறப்பட்டுள்ள விடயங்கள் பற்றி ஆழமாகச் சிந்திக்கவும், அவற்றைப் பற்றிக்காய்தல் உவத்த லின்றிக் கருத்துப் பரிமாற்றம் செய்யவும் வழிவகுக்கும். ஆராய்ச்சி யில் இத்தகைய வாதப்பிரதிவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் இடம் பெறுவது மிகமிக அவசியம்.
பல்வேறு இடர்கள் மத்தியில் தமது அநுபவம், தமக்குக் கிடைத்த மூலவளங்கள் ஆகியனவற்றைப் பயன்படுத்தித் தமது சக்திக்கு ஏற்றவாறு, ஆசிரியர் இந்நூலினை யாத்துள்ளமை போற்றத்தக்கது. இந்நூலினை விமர்சிப்போர், ஆசிரியரின் நிலை யிலிருந்துதான் இதனை மதிப்பீடு செய்தல் சால்புடைத்தாகும்.
இறுதியாக இந்நூலினை நமது நண்பரும் ஏழாலைவாசியும் வரலாற்றாசிரியருமாகிய மறைந்த திரு. க. அருமைநாயகத்திற்கு
சமர்ப்பணம் செய்ததையிட்டு அகமகிழ்கிறேன்.
கலாநிதி சி. க. சிற்றம்பலம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வரலாற்றுத்துறை முதல்வர் திருநெல்வேலி.

Page 7
வாழததுரை
"எங்களூர் ஏழாலயலுர்" நூலாசிரியர் தி.க. முத்துச்சாமி அவர்கள், நடுவுநிலைமையுடன் ஏழாலையம்பதி வரலாற்றினை நன்கு ஆராய்ந்திருக்கிறார். இக்கிராம வளர்ச்சி, முன்னேற்றம் என்பன இதில் ஆராயப்படுகின்றன. ஆசிரியர் ஏழாலை சைவ மகாஜன வித்தியாலய அதிபராயிருந்து, நற்பணியாற்றிய காலத் தில் நடத்திய, இராவ்பகதூர் சி.வை.தாமோதரனார் உருவப்படத் திறப்பு விழாவும், அவர் அமைத்த சைவப்பிரகாச வித்தியாலய நூற்றாண்டு விழாவும் என்றும் எமது நினைவைவிட்டகலாதவை.
தமது ஓய்வு காலத்திலும், தாம்பிறந்த கிராமத்துப் புகழ் பரப்ப, இப்பணியை ஆற்ற முன்வந்த அவரை, மனமாரப் பாராட்டுகிறேன்.
ஏழாலையம்பதி கிராமம் பரப்பளவில் மிகப் பெரியது. விடா முயற்சி, கமத்தொழில் ஊக்கம் முதலியவற்றாலும் ஏனைக்கிராமங் களுக்கு அது முன்மாதிரியாகத் திகழ்கிறது. இவ்வூரின் மிகப்பழங் காலமக்கள், ஏழு கோயில்களைக் கட்டி, தெய்வங்களைத் தாபித்து அத்தெய்வங்களே தங்கள் இகபர வாழ்வுக் கெல்லாம் வழிகாட்டி கள் என்ற நம்பிக்கையோடு, வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
ஏழாலையம்பதியிற் பிறந்தவர் பெருமகனார் சி.வை. தாமோ தரனார். இவர்களது புகழ் இலங்கையையுங் கடந்து தென் னிந்தியாவிலும் பரவி ஒளிவீசி'ஏழாலையம்ப்திக்கு தனிச்சிறப்பு சேர்த்துள்ளது.
அத்துடன் அவர்களின் பெருமதிப்பையும், ஆசீர்வாதங்களை யும் பெற்றுள்ளது. இதனால், ஏழாலையலுரில் வெறும் வரட்டுக் கவுரவமோ அரசாங்க உத்தியோக வீண் கனவு களோ, என்றென்றும் தலை தூக்குவதில்லை. நாமுண்டு, கடவு ளுண்டு, எங்கள் நீர்வளம், நிலவளம் உண்டு என நினைத் திருக்கும் அமைதியான போக்கே, ஏழாலையலுர் மக்களின் பொது வான போக்கு,
இவ்வூருக்கு பெருமை சேர்த்தோரில், காசிவாசி செந்தி நாதையர், வைத்திய சிகாமணியாகவும் வேதாந்த சித்தாந்த வித்தகராகவும் திகழ்ந்த திரு. ஐ. பொன்னையா (அருளானந்த சிவம்) ஆகிய பெரியோரை இத்தருணத்தில் நினைவு கூரு கின்றேன்.
நாங்கள் வாழும் இக்காலகட்டத்தில், ஏழாலையம்பதியே யாழ்ப்பாணத்திற்கும், அதன் அனைத்து மக்களுக்கும், வழிகாட்டி யாக உருப்பெறுதல் வேண்டும் என எல்லாம் வல்ல சிவபிரானைத் திரிகரண சுத்தியோடு வணங்குகின்றேன்.
வாழ்க பல்லாண்டு ஏழாலையம்பதி! வாழ்க பல்லாண்டு ஏழாலயலுர்’ நூலாசிரியர் ! ஓம் சாந்தி!
சைவப்பெரியார், சித்தாந்த வித்தகர் மு. ஞானப்பிரகாசம் B.Sc. B.A. ஏழாலை மேற்கு. பரமேஸ்வரா முன்னாள் அதிபர்.

净身习
●もミをききミosa spis
&p4%ozni l-Qolen
*
}
னற எல்லைகளும
ઈી Ln குறிச்சிகளும்
L
, 96 IUTL
ஏழாலை

Page 8
10.
11.
12.
13.
14.
15.
பொருள் அடக்கம்
ஏன் எழுதினேன்
நித்திலத் துவீபம்
ஏழாலையலுரின் கதை
மூத்த குடியினர் குடிபரம்பல் நிலமும் நீரும் ஏழாலையலுர் குடிமக்கள் சால்பு ஏழுதலங்களும் இதர தலங்களும் ஏழாலையலுரின் சமய மரபு கிராமத்துத் தொழிகளும் தொழில்
விற்பண்ணமும் அயற் கிராம விஸ்தரிப்பும் புதிய
கிராமோதயங்களும் ஏழாலையூர்க் கல்விக்கூடங்கள் 19ஆம் நூற்றாண்டின் கல்வி நிலை கல்வித் துறை முன்னோடிகள் ஏழாலையின் முதன் மகன்
C. W. தாமோதரன் நிறைவாகச் சில வார்த்தைகள்
பக்கம்
15
2生
33
4.
5
64、
79
92.
0.
116,
131.
184.

1, ஏன் எழுத முனைந்தேன்?
15ான் ஓர் எழுத்தாளனோ, பேச்சாளனோ, அன்றி ஏதேனும் வரலாறெழுதக்கூடிய ஆற்றல் உள்ள நிபுணனோ அல்லன். எனவே தான் என் முயற்சியை கேள்விக்குறியோடு தொடங்கினேன்.
கடந்துபோன மூன்று அல்லது நான்கு நூற்றாண்டு கால நிகழ்வுகள், ஓரளவு கற்றறிந்த மக்கள் தெரிந்திருக்கக் கூடியவை. அவற்றை அறிய அனைவரும் முயன்று, பயன் பெற வேண்டும் என்ற என் வேட்கையின் வெளிப்பாடே இம்முயற்சி.
அனைத்து மக்களும் அவரவர் பண்டுதொட்டு வாழ்ந்து வரும் சொந்த ஊர் பற்றிய சமூக, புவியியல் அமைப்பு, நாகரிக வளர்ச்சி, பொருளாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள், பற்றி ஓரளவேனும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும். இந்நிலை கல்வியால், கேள்வி ஞானத்தால் மட்டும் ஏற்படுவதன்று. சொந்த அனுபவத்தால் நிறைவாக வேண்டியது.
தம் சொந்த ஊர் பற்றிய அறிவினைவிட தம் சமுதாயம், தமிழ்ப் பேரின வளர்ச்சி, நாட்டுக்கு இன்றியமையாத பல்துறைகளைச் சார்ந்தோர், அத்துறைகளில் சேவை செய்தோர், செய்வோர் வரலாறுகளை ஊக்கத்தோடு கற்றலும் மிக்க பயன் தரும் செயல். செயற்கரிய சாதனைகளைச் செய்து புகழ் நிறுவிச் சென்றோரின் அறிவாற்றல், நமக்கு உணர்வத்திபாரமாக அமைதல் வேண்டும். அது எம்மை பலவழிகளாலும் உயர்வடையச் செய்யும்.
ஒவ்வொரு குடிமகனும் தத்தமது சொந்த ஊர் வரலாறு, நிலத்தியல்பு, பல்வகைக் குறிச்சிகளில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள் தெய்வத்தலங்கள், செய் தொழில்கள் சார்ந்த பண்புகளை உணர்ந்து அனுபவிக்கக் கூடியதாய் உள்ளது.

Page 9
10
மக்கள் கூடி வாழும் பண்பினர் ஆதலின் அயற்கிராங்கள், அதற்கும் மேலாகத் தம் சொந்த நாடு என விரிந்துபட்ட அறிவினைப் பெறுவதும் அவசியம். இதற்கு உதவியாக இலகுவிற் படித்தறியக் கூடிய வகையில் ஊர்க் கதைகளும் எழுதப்படல் வேண்டும். அந்தந்த ஊரிற் பிறந்து வளர்ந்து வாழ்கின்ற கல்விமான்களே, அரிதின் முயன்று இதனை தம் பெருங்கடனாகக் கருதி நிறைவேற்ற வேண்டும்.
ஒருவர் எத்துணை மேதாவியாயிருந்தாலும், தமது சொந்த ஊரைப்பற்றி அறிந்திருப்பதுபோல, அயல் ஊர்களையோ, ஊர்கள் பல சேர்ந்த பெருநிலப் பரப்பையோ பற்றி அவர் பூரணமாக அறிந்து கூறுதல் சாலாது. சிலாசாசனங்கள், கல்வெட்டுக்கள், பண்டைய மக்கள் பயன்படுத்திய பொருட்கள், அகழ்வாராய்ச்சி முடிவுகளெனத்தற்காலத்து நுண்ணாய்வுச் சாதனங்கள் எவையும் பூரணம் பெற்றவையெனக் கூறவியலாது.
இன்றைய ஆய்வு, முன்னைய ஆய்வைப் பொய்ப்பிப்பதும், இனி வருங்காலத்து அறிவியற் சாதனங்கள்,இன்றைய ஆய்வினை மறுத்து வேறு கருத்தினை வற்புறுத்தக்கூடிய நிலையும் நேரக் கூடும். ஆதலால், தன் சொந்தக் கிராமத்துச் சரிதையை ஓரளவேனும் அறிந்து, தாமே தமது அறிவாற்றல், மனவுறுதிக்கு இபையத்தேறிக் கூறும் போது, வழுக்கள் மிகக்குறைய
வாய்ப்புண்டு.
ஏழாலைப் பதியை-ஏழாலைய ஊரைப்-பொறுத்தமட்டில், முன்னர் எழுந்த நூல், நான் முற்கூறிய தகுதிகளுட் பலவற்றைப் பெற்றவரும், சைவப் பிரசாரகரும், என்னைப் போலவே பாடசாலை அதிபர் பதவி வகித்த அநுபவசாலியும் 'ஆத்மஜோதி” சஞ்சிகையின் ஆசிரியர் பதவி தாங்கி எழுத்தாற்றல் வளர்த்தவரு மாகிய அன்பர் நா. முத்தையா அவர்கள் எழுதியது. ஏழாலை ஊராருக்குப் புகழ் சேர்க்கக்கூடியது. அந்நூல் அன்னாரின் கன்னி முயற்சி; மெச்சப்பட வேண்டிய முயற்சி. எனினும், * யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் கணியன் பூங்குன்றனாரின் சமரச வாதந்தெரிந்த நாம், எம் சிறு ஊரிலேகூட அவ் அரிய நீதியைப் புறக்கணித்துள்ளமை- யாவருங் கேளிர் எனக் கொள்ளாமை-சிறுகுறையே யாம்.
* சாது சங்கமம்" என அதற்கு அணிந்துரை பகர்ந்துள்ள பண்டிதர் சி. கணபதிப் பிள்ளையின் "பதார்த்தம்’ நன்கு புலப்படும் வகை ஆசிரியரின் சீரிய நோக்கம் கூறப்படுகிறது.

11.
சுயபுராணம் : புராணம் என்னும் பதமும் அதன் வாயிலாக அறியப்படும் பவித்திரமான சம்பவங்களும், ஏழாலையூர் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவை. ஊர்ப்பெயர் தோன்றி, மக்கள் வழி பாட்டுக்கெனத் தெய்வத் தலங்களைச் சிறுகுடில்களாக அமைத்துப் பயன் கண்ட தொடக்கக் காலம் முதலே கோயிற் தலங்களில், புராணபடனமும் ஒழுங்குற நடைபெற்றமை தெளிவு. அவ்வா நாகச் சைவந்தழுவிய பல்வகைப் புராணங்களை, அவற்றுக்கென வகுக்கப்பட்ட புண்ணிய காலங்களிலே, மக்கள் நியமந்தவறாது கேட்டு இன்புறுவது வழமையாயிருந்தது.
அவரவர் மனப்பக்குவத்துக்கு உகந்தவாறாகப் பக்தர்களின் நடவடிக்கைகளும் அமைந்தன. கோயில்களில் சில குறிப்பிட்ட தூணிலே, வழமைதப்பாது சாய்ந்திருந்து புராணங்கேட்ட குறிப்பிட்ட பக்தர் சிலருக்கு, பின்பு, புதிதாக இடம் பிடித்தபக்தர் குழு, இடையூறாயிருந்தமையால், முன்னவர், தமக்கும், தம் குடும்பம் சார்ந்தோருக்கும் “தம்முடைமை ஆகுமாறு புதிதாகக் கோயில் கட்டியமை தெரிந்த கதை.
எவர் எத்தன்மையதாக நினைந்து உருகினாலும், வெறுமனே கேட்டு ரசித்திடினும், 'புராணம்’ என்பது, புனிதத் தன்மை மிக்க கடவுட் கதை என்பதே பொதுவானதும் வழி வழி வந்ததுமான உளக்கருத்தாகும். பக்தி மார்க்கம் தெரிவிப்பதே புராணத்தின் பயன்பாடென நம்பப்படுகிறது.
எனினும். காலகதியில், சரித்திர புருடர்கள்-செயற்கரிய காரியங்களைச் செய்து வெற்றியை நிலைநிறுத்திய வீரபுருடர்கள் போன்ற, பல திறத்தாரின் மேலாண்மை தெரிவிக் (Th கதைகளும் புராணம் எனப்படலாயிற்று. அதனையும் விஞ்சிய நிலையில் இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலும், அதற்கு முந்திய சில தசாப்தங்களிலும், தம் சொந்த விவகாரங்களை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தும் விதமாகவும், அதன் மூலம் குறிப்பிட்ட தம் எதிரி களை அவமானப்படுத்தும் நோக்கிலும், சிலர் இலக்கியம் செய்தமையும், அவற்றுக்கும் புராணம் எனப் பெயரிட்டமையும் விந்தை.
அவ்வகைப் புராணங்களை அங்கத (நையாண்டி) இலக்கியம். என வகைப்படுத்தி வைத்துள்ளனர் நமது அறிஞர்கள். பூலோகசிங்கம் B.A.Dph e15)Jiř5oir ாழ்ப்பாணத்து இருவரை அங்கத இலக்கியம் படைத்தோராகப் பேசுவார். அவருள் சுப்பையாப் புலவர் ஒருவர். அவர் பாடியது
கனகி புராணம்". அடுத்தவர் கோப்பாயூரில் வசித்தவரான வே, இராமலிங்கம். அவர் பாடியது "கோட்டுப் புராணம்"

Page 10
12
வண்ணை வைத்தீஸ்வரன் தேவத்தானத்தில் கடவுட் டொண்டாற்றி, விழாக்காலத்தில், தெய்வத்தைப் பிரீதிப்படுத்த வும், பக்தர் கூட்டத்தைக் கவர்ந்து அழைக்கவுமென நடன மாடும் கைங்கரியத்தை மேற்கொண்டவள் கனகமின்னாள். தன் வனப்புறு பக்தர்களைத் தன் வலையிற் சிக்கவைக்கும் தொழி லையும்-அக்கால வழமைப்படி ஆற்றி வந்தமை விந்தையன்று. இளைஞர் சுப்பையா, அவள் நடத்தையை-கோயிற்பிரகாரத்திலே வசித்துக்கொண்டே நிகழ்த்தும் இழிசெயல்களை-பார்த்திருக்கும் பொறுமை அற்றவராய், ஒத்துப்போகவும் இயலாமையால், பட்டணத்தை விட்டு நீங்கி, வடக்கு நோக்கிக் குடிபெயர்ந்து தெல்லிப்பழையைச் சென்றடைந்துள்ளார்.
கனகமின்னாளின் தாசானுதாசரான பணக்காரப் பெருங் குடிச் சண்டியருக்கு அஞ்சியோ, துஷ்டர்கள் ஒழுங்கு தவறித் தன் சன்னிதானம் முன் துர்க்காரியங்களில் ஈடுபடுவதனைக் கண்டும் அவர்களை நிக்கிரகஞ் செய்யாமையால் வைத்தீஸ்வரன் மீது கொண்ட வெறுப்பினாலோ தன் இருப்பிடத்தை அவர் மாற்றி *னாரோ அறியோம். இருப்பிடத்தை மாற்றிய தோடமையாது, தமது எதிரிகளுக்கு முகறை உடைக்குந் தோரணையில் தமது பரம்பரையில் என்றும் இல்லாதவாறு, மதமாற்றமும் செய்து திருப்தியடைந்தாராம்!
தேவதாசிக்கு - நையாண்டியாகவேனும் - புராணம் பாடிய நட்டுவச் சுப்பையனார் கதையை, எம் செம்மை சான்ற செம் பாட்டு மண் பூமி ஈன்ற சான்றோர் கதையோடு வலிந்து பிணித் தமை எம் போன்றோரின் மனத்துக்கு இதந்தருவதாயில்லை. எம் சொந்த மண்ணைத் தமது வாழ்நாள் முடிவு வரை வரித்திருந்த, இன்றும் வாழ்ந்திருக்கின்ற பலரின் கதைகளைப் புறக்கணித்து, நட்டுவச் சுப்பையானார்' என அன்போடு பேசப்படும் அவர் கதையை சில பாடல்களோடு மட்டும் இட்டுரைத்த மனநிலை யாதோவறியோம்.
பட்டணத்தினின்று நீங்கிய புலவனார், தெல்லிப்பழையூர் தமது கரந்துறை வாழ்வுக்கு ஏற்ற இடமன்று என்பதனை நன்கு அறிந்திருந்தமை புலனாகிறது. அதனால் நெஞ்சுரம் மிக்க வட பகுதி மக்கள் தமக்குப் பக்கத்துணையாக நின்று காப்பாற்று வர். எனுந்துணிவினாலேயே, வடக்கேழாலையில் தங்கியிருந்த உண்மை எம் முன்னோர் கூறக் கேட்டுள்ளேன். முதனூலார் அவ் வுண்மையைக்கூடக் கேட்டறியாது போனமை குறையே.

13
சுப்பையனார் போன்று, நிரந்தரமற்ற தற்காலிக வசிப்பிடங் களை எக்காரணங்கொண்டோ தம் சொந்த மண்போலக் காட்டிய
சில எழுத்தாளர், அறிஞர்களை நாம் அறிவோம்.
வாழையடி வாழையெனச் சைவ ஆசார சீலர்களாய் வாழ்ந்து வந்த மேன் மக்கள் எமது ஏழாலை ஊரவர். நம் அனைவரின் முன்னோரும், தென்னிந்திய மண்டலங்களிலிருந்து, வெவ்வேறு நோக்கங்களோடு வந்து குடிபுக்கோரென்பது சரித்திர சம்மதம். ஆதிக்குடிகளாக வாழ்ந்து ஆதிக்கஞ் செலுத்திய, சுதேசிகளாகவே மதிக்கப்பட்ட நாகர் இனத்தின் எச்ச சொச்சங்களும், ஏழாலைப் பெருங்குடி மக்களோடு ஒன்றிக் கலந்தமைக்கு ஆதாரங்கள்
உள்ளன.
நான் பொன்னே எனப் போற்றும் அன்னை பூமியைப் பற்றிய யதார்த்தமான மேம்பாட்டுத் தன்மையை விளக்குவதற்கு வேண்டிய நல்லறிவும், நல்லுள்ளமும் போதியளவு உண்டெனும் தற்துணிவும் எனக்குண்டு. ஏனைய அறிஞர், கல்விமான்களைப் போன்று, பெயரின் முன் அடைமொழியிட்டு, உரைக்கக் கூடிய கெளரவப் பட்டங்களேதும் வாய்க்காத போதினும், சிறு பிராயம் முதலே சமூகத் தொண்டு புரிய வேண்டுமெனும் பேரவா மட்டும் படிப்படியாக வளர்ந்து வந்தமை ஊரறியும்.
சமூகப்பணி எவ்வகைத் தாயினும், மனமுவந்து அப்பணி யோடு ஒன்றி நின்று கரும மாற்றும் எம்மூர்ப் பெருமக்கள் பலரோடு, உடனிருந்து செயலாற்றியமை பெரும் பேறாயது. பிற்காலத்திலே ஊர் மக்கள் சகலரையும் இன, மத, கலாசார, பேதமற நோக்கும் பான்மையை வளர்த்தமையைச் சுட்டாதிருக்க
முடியாது.
பல சமூகங்களையும் குறிச்சிக்கு குறிச்சி வேறுபட்ட பழக்க: வழக்கம் கொண்டோரையும், ஒக்க மதிக்கும் பாங்கு, உற்ற விடத்தில் உதவிபுரியும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் சென்றுளது எனக் கூறுவது மிகையல்லவென எண்ணுகிறேன். புதிய மயிலங் காடு குடியேற்றக் கிராமோதயம் இதற்கோர் எடுத்துக்காட்டு. இன்று அறவே ஒழிந்து போனதாய சமூக வேறுபாட்டு உணர்வு, 50 வருடங்களுக்கு முன் எமதுாரில் எந்நிலையில் இருந்த தென் பதற்கு அந்த நிகழ்வு எடுத்துக்காட்டாகும். அரை நூற்றாண்டுக்கு முன்னரே, ஏழாலையூர் இளைஞர்கள், அவரவர் உயர்வுக்கு அனைத்துச் சமூகமும் உழைத்தல் வேண்டும்; அடுத்தவர் குறுக்கீடு செய்தலாகாது எனுங் கோட்பாட்டினைக் கைக்கொள்வாராயினர். அதனாலே சகல சமூகங்களும் **இந்த மண் எங்களின் சொந்த

Page 11
14
மண்' என்னும் பெருமதிப்போடு செளசன்னியமாக வாழ்வது பெருமைக்குரிய செயலாகும்.
ஏழாலை மக்கள் தாம் குடிகொண்ட காலத்திலிருந்தே, தமது வாழ்விலும், தாழ்விலும் உடனிருந்து உதவுவதற்கெனக் குறிப் பிட்ட சில இனத்தவர்களையும், அவர்களின் வசதிக்கேற்றவாறு, கேந்திரத் தானங்களிலே இருத்தி வைத்தனர்.
தனித்தகுதி எதுவுமே இல்லாத நானும் ஏழாலய ஆர்ப் புராணம் கூற முனைந்தமை விந்தையே! எனினும் ஒரு தகுதி எனக்கு உண்டு. ஏழாலயலுரின் ஆதிக் குடியேற்ற வாசிகளாகிய நற் குடிகளில் ஒன்றான இளையான் குடியிலே, பன்னிரண்டாவது தலை முறையினனாக வாழ்பவனும், அவ்வாறே இவ்வூரின் நாலா திசையிலும் குடிபுக்கு நல்வாழ்வும் கூடவே, பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவாணினும் நனிசிறந்தன என எண்ணும் அனைத்து மக்களோடும் கூடிப் பழகிய அனுபவமும் கோண்டு, இந்நூல் எழுதத் துணிந்தேன்.
விஞ்ஞான ரீதியில் தம் வாழ்வினை வளர்க்கவும், வளமாக் கவும், ஆர்வம் கொண்டு, அல்லும் பகலும் கல்விக் கூடங்களை நாடி, புத்தகப் பெரும்பாரம் சுமந்து திரியும் நம் வருங்கால சிற்பி களாகிய இளைஞர்களின் மூளைகளில் கர்ண பரம்பரைக் கட்டுக் கதைகளை திணிக்க முற்படுவது மகா பவம்.
எனவே தான் கட்டுக் கதைகளையும், கற்பனைப் புராணங் களையும், திடுக்கிடும் மர்மச் செயல்களையும் தவிர்த்து, பலராலும் அங்கீகரிக்கப்பட்ட விபரங்களையே பெரும்பாலும் இச்சிறு நூலிற் சேர்த்துள்ளேன். இந்நூலின் குறை நிறைகளுக்கு நானே பொறுப்பு என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
DT Go/T &frifi (Luff

2. நித்திலத் துவீபம்
நித்திலம் பவளம் படும் நீர்மையால் "நித்திலத்தீவு’ எனப் போற்றப்படும் ஈழவள நாடு, இந்து மாக் கடலின் திலகம் எனு மாறு எழிலுற விளங்கும் நாடு. "மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது’ என்பதற்கொப்பப் பல் வளமும் பொருந்தி, மலை கடல் ஆறு எனும் இயற்கை ஏதுக்களாலும் பச்சைப் பசேலென எங்கும் பரந்து விரிந்துள்ள பசும் புற்றரைகளினாலும், உலக மக்களின் மனதைக் கவர்ந்தமையும், அவ்வாறு கவரப்பெற்ற தென்னிந்திய தமிழ் மண்டலத்தாரினதும், பின்னைய ஐரோப்பியரான போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் பிரித்தானியர் என்போரினதும் ஆளுகைக்குட்பட்டு, அல்லல் பல அநுபவித்த நீண்ட சரித்திரமூங் கொண்டது நம் ஈழம். கோப்பி, தேயிலை, கறுவா, இலவங்கம், ஏலம், கிராம்பு முதலாம் பான பண்டங்களும், வாசனைத் திரவியங்’ களும் அபரிமிதமாக வளர்ந்தமையால், உலகின் கவனத்தைத் தன்பால் ஈர்த்தமை, அந்நியர் வருகைக்கு மூலமாயமைந் திருந்தது.
ஆதியில் நமது நாடு முழுவதும் "ஈழம்" எனவும், வடபகுதி யாகிய தமிழ் மக்கள் வாழும் பகுதி 'ஈழ மண்டலம்" எனவும் வழங்கியது. ஈழ மண்டலம் தென்னிந்திய சேர, சோழ, பாண்டிய மண்டலங்களுக்கு எவ்விதத்திலும் குறைவற்றதாய், சரிநிகர் சமானமாய் மதிக்கப்பட்டது. மக்கள் தம்முள் எவ்வித பேதமோ உயர்வு தாழ்வோ அறியாராய், ஒன்றுபட்ட உள்ளத்தினராய்
பைப்பணிப் பகுவாய்ப்பட்ட திங்களிற் பாயுமோதக் கடற்கரைதோறும் கின்று இப்பி வாயினில் முத்தமிலங்கிடும் ஈழமண்டல நாடெங்கள் கா.ெ
என வாழ்ந்தனர். முத்து இயல்பாகவே படும் பான்மையை

Page 12
6.
விதந்து பாடியுள்ள புலவர் நவாலியூர்த் தங்கத் தாத்தாவோ முத்துப் படுகின்ற தானங்களை
"மன்னார்க் குடாக்கடலில் மறிச்சுக்கட்டிக் கரைதனிலே பொன்னார்ச் சிலாபமதிற் போய்க் குளித்த முத்தெனவே எனச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இவ்வாறாய் முத்தும், பவளப்பாரும் ஏனைச் சங்கு சிப்பி முதலாயவையும் கடல் படு திரவியங்களாய் அமைந்ததாயச் கடலினாற் கரை கொண்டு, வரையறை செய்துள்ள மணற்றி யொடு மாந்தையெனும் வடபாகத்தே நகரமைத்து ஆண்ட பூர்வ குடிகள் "நாகர்’ எனப்படும் பேரினத் தோராவார்.
நாகர் இன அரசு மேம்பட நடைபெற்ற காலத்தே அன்ன வர் நாட்டின் திரவியங்களின் மேற்கொண்ட வாஞ்சையின் நிமித்தம், தென்னிந்திய மண்டலத்து ஆட்சியாளர்கள் அடிக்கடி நாகமன்னர் மேற் படைகொண்டு தாக்கி, வடக்கே புறம் போக்கியது வரலாறு.
மாந்தையிலே கேதீச்சரமும், திரிகோண மாமலையில் கோணேஸ்வரம் எனப் பெயரிய கோயில்களோடு, அரச கோட்டமும் அமைத்துக் கோலோச்சிய பொற்காலம் அது.
இவ்வாறு அனைத்து அரசினாலும் நேசிக்கப்பட்டதும், அழகும் செழிப்பும் மிக்கதுமான ஈழ மண்டலத்தின் சிரமே போலத் திகழ்வது யாழ்ப்பாணம் எனப்படும் துவீபகற்பம். சற்றேக்குறைய நாற்புறமும் கடலாற் சூழப்பட்ட சமதரையே யாழ்ப்பாணக் குடாநாடு. தென் கீழ் திசையில் ஆனையிறவு எனுமிடத்தில் ஒரு சிறிய நிலப்பரப்பை ஊடறுத்து யாழ்ப்பாண நீரேரியோடு. அருகே உள்ள பெருநிலப் பரப்பினுTடாகப் பாய்ந்து வரும் மழை நீரானது கலப்பதனாலேயே அது தீபகற்பம் எனப்படலாயிற்று. *ベ
யாழ்ப்பாணத்திலே தமிழரசு கோலோச்சிய காலத்து, அவர் களுக்குத் திறை அரசாகவும், பின்னர் வன்னியரசெனத் தனியர சாகவும் திகழ்ந்த மாவட்டத்தின் தலைவனாக வீற்றிருந்த கனகராய முதலி, மாங்குளத்திற்குத் தெற்கே பாய்ந்த வெள்ளத் திற்கு அணைபோட்டு குளம் கட்டினான். மழைவெள்ளம் பெருக் கெடுத்து ஓடும் காலத்தே, கனகராயன் குளம் நிரம்பி வடக்கே பாய்வதனை அவதானித்து "மிதமஞ்சிய அந்நீரை கனகாம்பிகைக் குளம், இரணை மடுக்குளம் போன்ற குளங்களினுள்ளே செல்ல விட்டான். இக்குளங்களை மேவி வாய்க்கால் வழியே சென்ற

17
மிகுதி நீர், ஆனையிறவுப் பகுதியிலே தேங்குவதாயிற்று. நன் னோக்குக் கொண்ட கனகராய முதலி, தேங்கி வீணே கிடக்கும் நீரை வடக்கு நோக்கித் திருப்புவதிலே ஆர்வம் கொண்டு முயன் றான். ஆயினும், விதி செய்த சதியே போல அவன் நற்பணி முளையிலேயே அழிவதாயிற்று.
அக்காலப் பகுதியிலேயே, போர்த்துக்கேயப் பறங்கியர், (1620-ல்) சங்கிலி மன்னவனை வெற்றி கொண்டு வன்னியரின் ஆட்சியையும் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சரியாக 48 வருட ஆட்சியின் பின்னர், ஒல்லாந்தர் எனப்படும் ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்களினால், நாடு (கண்டிய அரசு நீங்கலாக) அனைத்தும் கைப்பற்றப்பட்டது. ஒல்லாந்தரும் ஆனையிறவுக் குளத்து நீரை வடதிசை பாய்ச்ச எத்தனித்தன ரேனும், உயர்ந்து செல்லும் தரைத்தன்மையை நினைந்து, இடையிற் கைவிடலா யினர். இவ்வாறு மழைக்காலத்து நிறைந்து தேங்கிய நீச் கால கதியில் மறுகரையின் குறுகிய நிலப்பரப்பை அரித்து, யாழ் நீரேரி யோடு கலப்பதாயிற்று. ஆனையிறவு வெள்ள நீரும் உப்பு நீராக மாறுவதாயிற்று. -
வடக்கே யாழ்ப்பாணம் நீங்கலாக மாந்தையுடன் திருமலை வரை வியாபித்திருந்த மிக்க விசாலமான பெரு நிலப்பரப்பு (வன்னிப்பகுதி) தமிழரசர் காலத்தே அடங்காப் பற்றெனவும் வழங்கி வந்தது. யாழ்ப்பாண அரசினுள் அடங்காத பாகம் என்பதே அதன் அர்த்தம் அன்றி அப்பகுதி மக்களும் மன்னரும் யாருக்குமே அடங்காத் தனம் கொண்டவர் என்பதல்ல.
20-ஆம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில், வவுனியா வின் நாடாளுமன்ற உறுப்பினரும், கணித மேதையுமான பேராசிரியர் சி. சுந்தரலிங்கம் அவர்கள் 'அடங்காத் தமிழர் ஐக்கிய முன்னணி" என ஆக்கி நடத்திய அரசியற் கட்சியும் வேறானதாகும். அன்றியும் யாழ்ப்பாணத்துக்கு வெளியேயுள்ள பூநகரி, வெள்ளாங்குளம் முழங்காவில், பொன்னாவெளி என்பவை:
வெளி நாடு’ எனச் சரித்திரகாரராற் குறிப்பிடப் படுவனவாம்.
முழுஇலங்கையையும் தன் ஆதிக்கத்திலே வைத்தாண்டவன் இராவணன். அவன் வரம் பல பெற்றுப் பல காலம் நல்லரசு செய்தவன். புராண இதிகாசங்கள் அவனது பக்தி, வீரியம், ஐசுவரியம் ஆதியாம் மேம்பாடுகளைப் பரக்கக் கூறும்.
*அரனிருந்த கயிலை எனும் மலை வருத்தமற வெடுத்ததிருத்தன்' அவன். "அரக்கர்’ குலவேந்தன் எனக் கம்பராலும் 'யகூஷன்" என வால்மீகியாலும் குறிப்பிடப்படுகின்றான்.

Page 13
18
இயக்கர் எனும் ஒரு கூட்டத்தார், இராவண ராட்சியத்தில், அபணியாட்களாய்த் திகழ்ந்தனர். பின்னொரு காலத்திலே அவ்வினத்தவர் இராவணனாற் கைவிடப்பட்டு, அவனது மலை அரணினின்றும் நீங்கி, வடக்கு நோக்கிச் சென்று குடிபுக்கினர்
என்பதும் முன்னோர் கூற்று.
இவ்வியக்கர் இனத்தின் இயல்புகள், உடலமைப்புகள் விசித்திரமானவை. கம்பன் தமதுராமாயண காவியத்திலே அநுமன் கண்ட இராட்சதப் பெண்களின் விபரீதத் தோற்றம் பற்றிப் பரக்கக் கூறுகின்றனன். அவருட் சிலர், ""வயிற்றிடை வாயினர்; வளைந்த நெற்றியில் குயிற்றிய விழியினர்; கொடிய நோக் கினர். ’’ யக்கா என்ற இந்த இயக்கர் இன இளவரசியே குவேனி. குவேனியையே, விஜயன் எனும் அரச குமாரன் மன முடித்துச் சிலகாலம் அரசியற்றினான்.
மகததேசத்து மன்னன், துஷ்டத் தனங்கள் செய்து நாட்டுக் குடிமக்களைத் துன்புறுத்திய தன் மகன் விஜயனையும், அவனது துர்க்குணசீலரான எழுநூறு தோழரையும் வலுக்கட்டாய மாக மரக்கலங்களில் ஏற்றி நாடுகடத்தினான். மீகாமன் இல்லாத அம்மரக்கலங்கள் புயற்காற்றினாலும், பொங்கும் அலைகளாலும் திசைதெரியாதவாறு அடித்து வரப்பட்டுப் புத்தளத்துக்கு அருகில் * தம்பபண்ண" என்ற இடத்தில் கி. மு. 543 அளவில் கரை ஒதுங்கியதாக மகாவம்சம் கூறுகின்றது.
விஜயன், வடபகுதித் துறைமுக மொன்றிலேயோ அன்றி வடக்கிலோ வட மேற்கிலோ உள்ள கடற்கரைப் பகுதியிலே கரை கொண்டு குவேனியை மணந்து, இராட்சிய பாலனஞ் செய்த காலத்தே மாந்தைப் பகுதியை நிர்வகித்தவன், பாண்டிய *மண்டலப் பேரரசனுக்குத் திறை கொடுத்து ஆண்டான். விஜய மன்னன் பாண்டியத் திறையரசனோடு சிநேகங் கொண்டிருந் தான். சிலகாலம் இவ்வாறு கழிய, விஜயன் தனது பட்டத்தரசி குவேனி மீதும், நாகரிகமும், அங்கலட்சணங்களும் குறைந்தவரான அவளின் சமுதாயத்தார் மீதும் வெறுப்புற்றவனாய், அவளையும், தன் மூலம் அவளிடத்துதித்த இரு மக்களையும் ஏனையோரை யும் வெறுத்து ஒதுக்குவானாயினான். அவர்கள் வேறு மார்க்கந் தெரியாதோராய், இராச்சியத்தினின்றும் வெளியேறிக் காடு சென்றனர்.
விஜயன், தன் புதிய நண்பன் மூலம் பாண்டி மண்டலத்து மன்னனுக்குத் தூது போக்கினான். தனக்கும், தன் நண்பர்க்கும் அந்நாட்டில் அரச பரம்பரையிலே பெண்களைத் தேர்ந்து,

19
மணமுடித்துக் கொள்வானாயினான். பாண்டிய மன்னன் மகள் விஜயை என்பாள் விஜயனுக்குத் தேவியானாள். மற்றையோ ருக்கும் தகுந்த குடியிலே மணமுடித்து வைத்தனன். இம்மண -வினைகள், மாதோட்டத்திலேயே நடந்ததென்பர். இவ்வாறு பாண்டிய மன்னன் மகளை மணந்தமையாலே, அப்பாண்டியனின் ஆட்சிக்குட்பட்டிருந்த மாந்தையொடு, மணற்றி முதல் திருக் கோணமலைக்குட்பட்ட சகல பாகங்களும் விஜயனுக்கே ஆயிற்று. எனவே முழு ஈழத்தினதும் ஒரே மன்னன் எனும் சிறப்புரிமையும் பெற்றான்.
விஜயன் 30 வருட காலம் அரசியற்றிய பின்பு அவன் வழித் தோன்றல்களாய பதினொருவர் ஒருவர் பின் ஒருவராக ஆட்சி நடத்தினர். பன்னிரண்டாவது மன்னவனாக அசேலன் என்பான் அரசு கட்டிலேறினான். அவனது ஆட்சிக்காலத்தே, தென்னிந்திய தொண்டை மண்டலத்து அதிபதியின் மகன் ஏலேலன் எனும் இளவரசன் பெரும்படை திரட்டிக்கொண்டு திருக்கோணமலையை -வந்தடைந்தான். அங்கிருந்து தரைமார்க்கமாக அநுரதபுரி சென்று, அசேலனோடு பொருதலானான். கடும் போரின் பின் அநுரதபுரி எல்லாளன் கைப்படலாயிற்று. ஈழம் முற்றும் தமிழரசு ஆயது. இது கி. மு. 205-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது என்பது
சரித்திரம்.
எல்லாள மன்னன் அநுரத புரியை இராசதானியாகக் கொண்டு நீதியோடும், இனமதபேதம் ஏதும் பாராட்டாலும், அரசு செலுத்தி வந்தான். எனவே, அவனுக்குக் கீழ்ப்படிந்து திறை செலுத்தி ஆண்ட சிங்கள குறுநில மன்னர்களும், அவனிடத்திலே பணிவு அடக்கத்துடன் ஒழுகி வந்தனர். தன்னிடம் அண்டி வந்தோர் எவராயினும், அவர் தம் பாத்திரமறிந்து தான தருமஞ் செய்து வந்தான். ஏலேலன், எவ்வுயிரும் தன்னுயிர்போல மதித்து நீதி வழுவா நேர்வழி நிற்பவனாதலால் அனைவரும் 'நீதியிற் சிறந்த எல்லாளன்," " மநுநீதி கண்ட சக்கரவர்த்தி எனப்பலவாறு புகழ்ந்து போற்றி வந்தனர்.
இம்மன்னவன் தம் முன்னிலையில், யாழ் வித்தையையும், குரலினிமையையும், தனது கவிபுனையும் ஆற்றலையும் ஒருங்கே வெளிப்படுத்திய பிறவிக்குருடனாகிய அந்தகக்கவி வீரராகவனுக்கு தனது நாட்டின் வடபகுதி ஆகிய மணற்றி எனும் பகுதியையும், யானையுடன் சிறுசேனையையும், பணிசெய்யப் பரிவாரங்களையும் ஈந்தவன்.
அந்தகக் கவிவீரனாகவனால், தான் பரிசு பெற்ற மணற்றி எனப்பட்ட மணற்றிடரிலே முதன் முதற் குடியமர்த்தப்பட்டவர்

Page 14
20
களே யாழ்ப்பாணத் தமிழர். அவன் நிர்மாணித்த பட்டினமே யாழ்நகரம். அவன் இராசதானியே நல்லூராம்.
விஜயராசன் பாண்டிநாட்டுத் தமிழ் மன்னன் மரபிலே மணமுடித்தமையால், அவர்களும், மற்றை இயக்கர், நாகர் என் போரும் பேசிய மொழி, தமிழ் சிறிதும், சமஸ்கிருத பிராகிருதம் பெரிதுமாய் விரவிய கலப்பு மொழியே. அம்மொழியே சிங்களம் என்றாயிற்று. இக்கலப்பு மொழியையே மதுரையிலிருந்து வந்த நாயக்கரும் பேசினர் என்பது சரித்திரம்.
வீரராகவன் எனும் அந்தகன் கவிபாடிப் பரிசில் பெற்ற காலத்தைச் சரித்திரகாரர் மாறுபடக்கூறுவதுண்டு. "யாழ்ப்பாண வைபவ கௌமுதி" எழுதிய வயாவிளான் க. வேலுப்பிள்ளை அவர்களும் வேறுசிலரும் கதிரைமலையிலிருந்து, பின் செங்கடகல. நகரை அரணாக்கி அரசியற்றியவனும், விஜயனின் மரபிற் தோன்றியவனுமாகிய உக்கிரசிங்கனுக்கும், மாவிட்ட புரத்திலே கோவில் கட்டுவித்தவளும் சோழமன்னனின் மகளுமாகிய மாருதப் புரவீக வல்லிக்கும் மகனாய் அவதரித்து முடிசூடிய ஜெயதுங்க வரதராசன் காலத்திலேயே (கி.பி. 796-ல்) அவன் பிரபந்தம் பாடிப் பரிசில் பெற்றான் என்பர்.
நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை "யாழ்ப் பாணச் சரித்திரம்’ எனும் தமது நூலிலே வீரராகவன் எனும் பெயரிலே மூவர் அறியப்படுவதாகவும், ஒருவர் முன்னர்க் கூறிய அந்தகக்கவி வீரராகவன், அடுத்தவர் கி. பி. 1650 அளவில் வாழ்ந்த கவிவீரராகவன், மூன்றாமவர், பிற்காலத்தில் வாழ்ந்த, வீரராகவன் எனக் காட்டியுள்ளார்.
நாகர் வரலாறு இயக்கரைப் போலவே நாகரும் ஈழத்தின் பழங்குடிகளே. ஏழாலையலுரோடு நெருங்கிய தொடர்பு நாகருக்கு, இருந்ததுண்டு. அவர்களின் குணாதிசயங்களை வரலாற்று. ஆசிரியர்கள் விசேடமாக ஆராயத் தலைப்பட்டிலர். மகாவம்சம் எனும் சிங்கள சரித்திரத்திற் கூட அதிகம் கூறப்படவில்லை. நாகரினத்தார் அவர்தம் பகுதிகளுக்கு அப்பால் வெகு தொலை விலேயுள்ள மாந்தை, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலேயே வாழ்ந்தமைதான் இதற்குக் காரணம். எனினும், மாந்தை மன்னனின் பெருந்துறையாக பூநகரி, நாகதேன் துறை விளங்கியது.
பண்டைப் பெருங்காவியங்கள், புராண இதிகாசங்களிலே நாகரைப்பற்றிக் கூறும் சந்தர்ப்பம் நேரிடாத போதிலும், அவர் களும் வேண்டியபோது விரும்பிய வேடங் கொள்ளக்கூடிய வல்லமை பெற்றிருந்தனர் போலும். வால்மீகியின் இராமகாவியத்

21
திலே, கூறப்பட்டிருக்கும் ஒரு சம்பவம் இதற்கு ஆதாரமாகும். அநுமன் சீதையிருக்கும் இடத்தைத் தேடிக் காணும் பொருட்டு, கடலைத்தாண்டி ஆகாய மார்க்கமாகச் சென்றபோது, இராவன னினால் ஏவப்பட்ட "சுரஸை" எனும் நாகதேவி அவனை வழி மறித்தனள். அநுமன் தன் உருவத்தைப் பன்மடங்காகப் பருப் பித்தபோது, அந்நாக கன்னியும் அதற்கொப்பத் தன் உடலினை வளர்த்துக் கொண்டதாகவும், அதுகண்டதும், அவனும் ஈயினளவு சிறிதாக உருமாறி, திறந்திருந்த அவளின் பயங்கர வாயினுட் புகுந்து, மறுபாகத்தால் வெளியேறினான் எனவும்அங்கு கூறப் பட்டுளது. எவ்வாறாயினும் நாகர் இனத்தோரும் உருமாறும் சக்தி பெற்றிருந்தனர் என்று தெரிகிறது.
மாதோட்டத்தை இராசதானியாகக் கொண்டு வடபகுதி -யையும், திரிகோண மலையினை மையமாக் கொண்டு, வன்னிப் பகுதியையும் ஆட்சிபுரிந்த நாகர்கள் பிற்காலத்திலே தென்னிந்திய சோழ பாண்டியர்களின் படையெடுப்பினால் பின்வாங்கியே யாழ்ப்பாணம் நோக்கிப் பெயரவேண்டியதாயிற்று. அவ்வாறு தம் இராசதானியை மாற்றிய நாகமன்னவனின் இருபுதல்வர்கள், எமது கிராமத்தை அண்டிய பகுதிகளில் தங்கியிருந்தமைக்கு 40காவம்சம் எனும் சிங்கள சரித்திரகாரனின் கூற்று ஆதாரமா யுள்ளது.
மகோதர, குலோதர எனப் பெயர் கொண்ட சகோதரரான இராசகுமாரர்கள், இராட்சிய பரிபாவலனம் சம்பந்தமாக மனம் மாறுபட்டு, குரோதம் முற்றி, விபரீதம் நடைபெறவிருந்த காலத்தே, தக்கதருணத்திற் புத்தபிரான் தோன்றி, சமரசம் சேய்து வைத்தார் என்கிறது மகாவம்சம்! இச்சம்பவம் நடைபெற்ற தானம் மல்லாகம் எனப்படுவதால், நாகமன்னனும், அவன் துணைவர் போன்றோரும் நம் பகுதியிலேயே பாதுகாப்பாய்த் தங்கியிருந்தனர் என உணரலாம்.
மல்லாகத்தை மையமாகவுள்ள ஏழாலை, அளவெட்டி, தெல்லிப்பழை, சுன்னாகம் போன்ற கிராமங்களில் ஆதியில் நாகரினத்தவரே குடியிருந்தனர். நமது ஊர்க்குடிமக்கள் பிற் காலத்தில் இந்திய மண்டலத் தமிழரோடும் ஒன்று கலந்து, தமக்கெனக் கிராமமும், கோட்டமும், அமைத்துக் கொண்டனர். ஏழாலைவாழ் மக்கள், பண்டு தொட்டு நாகரிகம் வளர்ந்த தற்காலம்வரை நாகதேவன் நாகதேவி எனத் தமது வழிபடு கடவுளரைப் பக்தியோடு பூஜிப்பதும், அப்பெயர்களைத் தம் சந்ததியாருக்கு இட்டு வழங்குவதும் காண்கின்றோம்.

Page 15
22
நாகன் நாகமணி, நாகேந்திரன், நாகநாதன், நாகலிங்கம், என ஆண்பாற் பெயர்களும், நாகி, நாகாத்தை, நாகம்மா, நாகேஸ்வரி, நாகநந்தினி, நாகபூஜணி என்றின்ன பெண்பாற் பெயர்களும் ஏழாலையலுரில் வழங்குவன.
நாகதம்பிரான், நாகபூஷணி அம்பாள் போன்ற தேவ கோட்டங்களும் நம்மூரிலே பிரசித்தம்.
பிற்காலத்திலே, பரராசசேகரச் சக்ரவர்த்தி அமைத்து நடத்திய யாழ்ப்பானத் தமிழ்ச் சங்கத்துப் புலவனாயிருந்த முடி நாக நாதனார் நாக பரம்பரையினர் என்பதும் கர்ண பாரம் பரியம்.
மாந்தை எனப்பட்ட மாதோட்டப் பகுதியிலே அரசமைத்து இளவரசர்களை நியமித்துப் பரிபாலனஞ் செய்துவந்த நாகர் தலைவனை, தென்னிந்திய மண்டலத்தாராகிய சோழரும் பாண்டியரும் வெற்றிகொண்டு, காலத்துக்குக் காலம் தமது ஆட்சி யையும் நிறுவுவாராயினர். சிறுபான்மையினராயிருந்த ஆதிக் குடிகளும் தமிழ் மண்டலத்தாருடன் ஒன்றி, அவர் மொழி, மதம் பழக்க வழக்கங்களையும் பின்பற்றி இரண்டறக் கலந்து வாழ்வாராயினர்.
இவ்வாறு, சந்தர்ப்பவசத்தினால் ஒன்று கலந்தவரான நாகரினத்தின் எச்சசொச்சமாயிருந்தோரும், வந்தேறு குடிகளாய் வடபகுதியெங்கும் செறிந்து வாழ்ந்தோரும் ஏழாலை என்னும் நமது செம்பவளப் பூமியிற் குடிபுக்கமையினாலேதான், அன்னா ரின் வரலாற்றின் மிகச் சுருங்கிய வடிவினை இங்கு தரவேண்டிய தாயிற்று.
யாழ் துவீப கற்பம் : யாழ்ப்பாணத் துவீபகற்பம் முழு ஈழத் தினதும் சிரமே போல அமைந்துள்ளது. கல்வி, கலாசாரம், பண் பாட்டு ஒழுக்கம் முதலாம் அனைத்து மானுட மேம்பாட்டு ஏதுக்க ளாலும் தலைப்பட்ட நிலையில் திகழ்வது யாழ்ப்பாணம்.
தலையாய யர்ழ்ப்பாணப் பிரதேசத்தின் வதனம் போல
அமைந்திருப்பது வலிகாமம் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு எனும் நான்கு நிர்வாகப் பிரிவுகளைக் கொண்ட மண்வளம் மிக்க பகுதிகள் .
இன்று யாழ்நகரிலிருந்து இரு நெடுஞ்சாலைகள், வடதிசை யில் நீண்டு கிடப்பதைக் காணலாம். ஒன்று காங்கேசன் துறைச் சாலை, மற்றொன்று பலாலிச் சாலை. இரு வீதிகளும் சமாந்தர Lf} fi &5 நீண்டு சென்று கடலோரத்தில், (மாதகல் - பருத்தித்

23
துறைக் கரையோர வீதியோடு) முறையே காங்கேசன் துறை யிலும் பலாலியிலும் ஒன்றி நிற்பவை.
காங்கேசன்துறை வீதியூடாகச் சரியாக 10 கிலோ மீட்டர் தூரத்தில், சுன்னாகம் பட்டினச் சந்திப்பு உளது. அச்சந்திப்பின் கிழக்குப் பக்கமாகச் செல்லும் வீதி புன்னாலைக் கட்டுவன் தெற்குச் சந்தியை ஊடறுத்துப் புத்தூர் வரை செல்லும். புன்னா லைக் கட்டுவன் தெற்குச் சந்திப்பில் இருந்து, முன்னர் நாம் குறிப்பிட்ட பலாலி வீதி, வடக்குப் புன்னாலைக் கட்டுவன் ஊடு செல்லும். இவ்வீதியின் மேற்குத் திசையில் சுமார் கால் மைல்" தூரம் சென்றால், ஏழாலையூரின் கிழக்கு எல்லையை அடைய லாம். 8
சுன்னாகம் புத்தூர் வீதி ஏழாலையூரின் தெற்கு எல்லை. சுன்னாகம் சந்திப்பிலிருந்து இவ்வீதியில் மைல் தொலைவில், சுன்னாகம் புகைவண்டி நிலையம் உளது. புகைவண்டிப் பாதை வடதிசையாக மல்லாகம், தெல்லிப் பழை கடந்து செல்லும், இப் பாதை எமதுரரின் மேற்கு எல்லை. தெல்லிப்பழையிலிருந்து கிழக்கு நோக்கி அச்சுவேலி நோக்கிச்செல்லும் சாலை கட்டுவன் என அழைக்கப்படும் மைலிட்டி தெற்குச் சந்தியில், மல்லாகம் செல்லும் வீதியோடு இணையும். சந்திப்பிலிருந்து தெற்கே 3 மைல் சென் றால் குரும்பசிட்டி கட்டுவன் புது வீதியை அடையலாம். அதுவே நம் ஊரின் முந்திய வடஎல்லை. இந்த எல்லைகள் பிற்காலத்திலே ஆட்சி அதிகாரஞ் செலுத்திய குழுக்களினாலே, தாம் கொண்டதே கோலம் எனும் வகையில் குறுக்கியும் நீட்டியும் உருமாற்றி: அமைக்கப்பட்டு விட்டன.

Page 16
3. ஏழாலையலுரின் கதை
கோழி முந்தியா முட்டை முன்னே தோன்றியதா? எனும் அவிழ்த் தற்கு அரிய நொடி, நம்மத்தியிலே பண்டிதர் பாமரர் என்ற பேதமின்றிப் பண்டு தொட்டு வழங்கி வருவது. கோழி இன்றேல் முட்டை இல்லை. முட்டை இன்றேல் கோழியும் இல்லை. ஒன்றனுள் மற்றொன்று, சூக்குமமாகச் சங்கமித் திருப்பது போன்ற தத்துவ விசாரம், நமது ஊர்ப் பெயருள் மறைந் திருப்பதும் அதற்கொரு மகிமை!
பண்டு தொட்டு மக்கட் கூட்டம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பெயர்ந்தேனும், முதற்குடியேற்றமாக ஓர் தானத்திற் தங்கியேனும் வாழத்தொடங்கிய காலத்திலே, அத் தானத்துக்குப் பொருத்தமான பெயரொன்றையும் இட்டுக் கொள்வது இயற்கை. தம் கிராமத்தை, ஏனை அயற்கிராமங் மளினின்றும் வேறுபடுத்திக் குறிப்பிடுதற்கே, அவ்வாறு கிராமப் பெயர் சூட்டப்படும்.
அவர்கள் பலவளமுஞ் செறிந்து, வாழ்வோடியைந்த தொழிற் துறைகள், பயிரிடற்கேற்ற மண், நீர் என்பவற்றினை இலகுவில் பெறக்கூடிய இடங்களையே தேர்ந்தெடுப்பர்.
இவ்வாறாய தானங்களிற் குடிபுக்க பரம்பரையினர், தமது தானத்து நீர் நிலைகள், பயன் தரு விருட்சங்கள், அவ்விடத் துக்கேயுரிய விசேடித்த பறவைகள் தம் தலைவராயுள்ளோரின் நாமங்கள், நீர்வழிப் பாதைகள், போன்றவற்றின் விசேடித்த பெயரையே இட்டு வழங்குதல் மரபாகும், சிற்சில இடங்களில் தெய்வப் பெயர் சூட்டி வழங்கப்படுவதும் கண் கூடு.
மயிலனி, வேடன் மகிழங்குளம், நாகதேவன் துறை, ஆலங் குளம், நெல்லியடி, நாகர்கோவில் என்றின்ன பெயர்களை உதாரணமாகக் கொள்ளலாம்.
அனைத்துள்ளும் எமது ஊர்ப் பெயர்த் தோற்றம் மறுதலை யாயது. ஆதியில் நம் முதற்குடிகள் எங்கிருந்து வந்து குறிப்பிட்ட

25
இத்தானத்திற் குடிபுக்கனர் என்பதனை அறுதியிட்டுக் கூறுவதற் கான ஏதுக்கள் துலாம்பரமாகக் கிடைக்காத சூழ்நிலையில், கிராமத்தின் இயற்கை அமைவும், பாரிய நீர்வளமும், செம்மண் நிலவளமும், நிறைந்தவோர் தானத்திற் குடிபுக்கமை அன்னா ரின் அதிர்ஷ்டமே.
எனவே நாகர் இனத்தோரும், தென்னிந்திய மண்டலங் களிலிருந்து வந்தோரான தமிழ் இனத்தோரும், பேதமறக் கலந்தே எமது நெடுங்கண்ணிக் குளத்தினை மையமாகக்கொண்டு குடிபுக்கனர் என்பதில் மறு கருத்துக்கு இடமில்லை.
காடு மண்டிக்கிடந்த, வானுறவோங்கி நின்ற மரங்களையும், அவற்றை வட்டமிட்டுச் சுற்றிப் பறந்த பலவினப் பட்சிசாலங் களையும், தூரநின்று நோக்கியோர், நிலச்செழிப்பையும் அதற்கு ஏதுவான நீர் கிடைக்கக் கூடிய சாத்தியக் கூறுகளையும் அயிர்த்து உணர்ந்தவராய், அத்தானத்தை ஆராயத் தலைப்பட் டனர். முதலிற் குடிபுக்க நம் முந்தையர், ஊர் மத்தியிலே வற்றாத நீர் நிறைந்து வழிந்தோடும் நீர் நிலையையும், அதன் உள்ளேயும், சமீப மேட்டு நிலத்திலும் வானுறவோங்கி வளர்ந்திருந்த மருத மரக்கூட்டத்தையும், மற்றும் பாலை, இலுப்பை, Ly6if, (p56) iTu வைரித்த மரங்களையும், பலா, மா, வாழை முதலாம் கனிதரு மரங்களையும், கண்டு பூரிப்படைந்தனர். அம்மரங்களின் கனி களையும் விதைகளையும் உண்டு மகிழ்ந்த பல்வகைப் பட்சிக் கூட்டங்களையும், மான், பன்றி, ஆடு, முயல் முதலாம் தம் உணவுக்குப் பயன்படக்கூடிய சாந்த குணமுடைய பிராணி களையும் கண்டு பூரிப்பும் ஆச்சரியமும் கொண்டனர். அதே வேளை, யானை, எருமை, கரடி முதலாம் துஷ்ட பிராணிகளின் அச்சந்தரும் நடமாட்டங்களையும் பயத்துடன் நோக்கினர்.
கொடிய குணங்கொண்ட விலங்குகளைக் கண்டால் தமது மனைமக்கள் அச்சமுறுவர் என நினைந்து, அவர்களுக்கெனச் சிறிது தொலைவிலே, மரக்கொம்புகளையும் இலை தழைகளை யும் கொண்டு, தற்காலிகமான குடில்கள் அமைத்துத் தங்க வைத்தனர். நீர் நிலைக்கு அயலிலே தாமாகக் காய்த்துக் கிடந்த காய்கனிகளையும், மண்ணின் கீழே விளைந்து முற்றிக் கிடந்த கிழங்கு வகைகளையும் சேகரித்து, அக்குடிசைகளிலே பாகம் பண்ணி உண்டு பசியாறியதுண்டு. தைரியமும் மனத்தோர்மமும் கொண்ட ஆடவர், வேண்டியபோது சாதுவான பிராணிகளைப் பிடித்து உணவுக்குப் பயன்படுத்துவர்.
2

Page 17
26
இவ்வாறாக, அவர்களின் வாழ்வு இக்கட்டின்றி நடைபெறும் போது, வயதில் முதிர்ந்தோரும், மண்வளத்தினையும் அதனோ டொத்த ஏனைய ஏதுக்களையும், தமது அநுபவத்தாற் கணிக்கத் தக்கவருமான பெரியோர், தத்தமக்கு ஏற்ற நிலத்தைத் தேர்ந் தெடுப்பதில் ஆர்வலராய், கிட்டிய அயலினைச் சோதனை யிட்டனர். ァー
இன்றுபோல் பெருஞ் சனத்தொகை கொண்டோரான குடும்பமும் சுற்றத்தாரும் அக்காலத்து இருக்காதபடியால், ஒத்த கருத்துள்ள சுற்றமும், குடும்பமுமாய் வெவ்வேறு திசைகளைத் தேர்ந்தெடுப்பது இலகுவேயாயிற்று.
முதலிற் சில காலம் குளத்தைத் தவிர்ந்த வேறு நீர்தரு நிலையம் தென்படாமையால், அதனை அண்டிய சமீப இடங் களிலேயே தரித்திருந்தனர். சுமார் 150 யார் முதல் 4 மைல் விஸ்தீரணங் கொண்ட அப்பகுதி, இன்றும் "உசந்தான்' எனவே அழைக்கப்படுகின்றது. உயர்ந்த தானத்தைக் குறிப்பிடும் நாட் டார் பதம் அது. குளத்தினை அண்டிய பகுதி காடு மண்டிப் பலவின மிருகங்களும் விஷஜெந்துக்களும் நிறைந்திருந்தமை யால் ஓரளவு ஒதுங்கி வாழ்ந்தனர். காலகதியில் அவ்வாறாய பகுதிகளும் துப்புரவு செய்யப்பட்டு, தானியப்பயிச் செய்கை பண்ணக்கூடிய நன்னிலமாக மாற்றப்பட்டது. வரகு போன்ற தானியப் பயிர்கள் விதைப்பாரின்றியே விளைந்திருந்தமை அவர் களின் அதிர்ஷ்டமே.
ஏழு ஆலயத் தோற்றம்
குடில் அமைத்தல் உண்டிதேடுதல், கூடிப்பழகுதல் ஆதிய மனி தப் பிராணிகளின் பல்வேறு இயல்பூக்கங்களிலே சில காலங்கழிய, தமது குல வழமைப்படியான தெய்வபூஜை நிகழ்த்தி உணவுண் ணும் செயலை உன்னியும், புதிய தானத்திலே சம்பவிக்கக் கூடிய தான மிருக அபாயம், விட செந்துக்களின் தீண்டுகை என்பவற்றி லிருந்து தற்காத்துக் கொள்ளவும் எனத் தெய்வங்களைப் பிரீதிப் படுத்தும் நோக்கத்தோடு, கோயில் அமைக்க முற்பட்டனர். அவ் வாறு குளத்தினை அண்டிய வட பாகத்திலே ஆறு கோயில்களும், கிழக்குப் பாகத்தே இயல்பாய் அமைந்திருந்த மேட்டு நிலத்திலே ஒரு கோயிலும் ஆக ஏழு கோயில்கள் அமைவனவாயின. குளத்துக் களிமண்ணைப் பதப்படுத்தி, தத்தம் மனதுக்கு நிம்மதி தரத்தக்க தாய தெய்வ விக்கிரகங்களை ஆக்கி, வெய்யிலிலே உலர வைத்துக் கெட்டியாக்கினர். அவ் விக்கிரகங்களை மரங்களின்

27
நீழலிலேயே நிறுத்தி, மேலே நிழலும் இட்டனர். கோயில்கள் ஏழும் பின்வரும் ஒழுங்கு முறையிலே அமைந்தன.
1. சிவாலயம் : குளத்தங்கரையிலிருந்து சுமார் 150 யார் வட
திசையில் நின்றவோர் புங்கமர நீழலில் அமைவுற்றது. அக்காரணம் பற்றி அத்தெய்வப் பெயர் ‘புங்கடி அம்பல வாணேஸ்வரர்' என்றாயிற்று.
2. கண்ணகை அம்பாள் ஆலயம் : இவ்வாலயம் சிவாலயத்தின் வடபால், சில யார் தொலைவில் மற்றுமோர் புங்க மரத்தின் கீழே தாபிதமாயிற்று, பிற்காலத்தில் புங்கடி புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் எனப் பக்தியோடு பெய ரிட்டனர். அயலிலே அத்திமரம் ஒன்றும் நின்றமையால் அத்தியடி எனவும் அழைத்தனர்.
3. விநாயகர் ஆலயம் : அம்பாள் ஆலயத்தை அடுத்து, அதன் வடபால் சிறிது பின் தள்ளி, ஓர் அத்திமர நீழலில், விநாயகர் சிலை வைக்கப்பட்டது. அதன் காரணமாக "அத்தியடி விநாயகராலயம்’ எனும் பெயர் வழங்கிற்று.
4. முருகமூர்த்தி ஆலயம் : விநாயகர் தாபிதமான அத்தி மரததின் வடமேற்குத் திசையில் சிறிது ஒதுக்கமாய் வியாபித்திருந்த பிறிதோர் அத்திமர நீழலிலே தாபித மானதால் அக்கோயிலும் "அத்தியடி முருகமூர்த்தி ஆலயம்' என்னப்படலாயிற்று.
மேற்காட்டிய நான்கு ஆலயங்களும் தனித்தனி மரத் தடியைச் சுட்டி அறியப்படினும், அத்தலம் '6Je. கோயிலடி” எனவே அனைவராலும் அழைக்கப்பட்டது. 5. காகதேவன் கோயில் : "பெரிய தம்பிரான்’ எனப் பண்டு தொட்டுப் பக்தியோடு போற்றப்படும் நாகதம்பிரான் கோயில், முற்குறிப்பிட்ட ஆலயங்களின் தொடரிலே, யன்றிக் குளத்தின் கிழக்கு எல்லையை அண்டியதும், வெள்ளப் பெருக்கினால் சேதமுறாத உயர் நிலமுமாகிய மேட்டுப் பகுதியிலே அமைவதாயிற்று. இவ்வாலயம் தோன்றிய காலம் முதல் அக்குளத்து நீரிலே சலவை செய்யும் தொழிலாளர் சமூகத்தாரின் பராமரிப்பிலும், வழிபாட்டுப் பேணுகையிலும் நடைபெறுவது விசேட ஒழுங்காகும்.
6. காளி கோயில் இத்தலம் முந்திய நான்கு ஆலயங்களினதும் வடமேல் திசையிலே 100 யார் தூரத்தில் அமைவுற்

Page 18
28
றுளது. இது அப்பகுதி வாழ் இருப்பு, மர ஆசாரிமாரின் தனி உடைமை.
7. வைரவர் கோயில் இத்தலம் வடகீழ் திசையிலே, சிறிது
தொலைவிலே அமைந்துள்ளது. -
குறிப்பு : “ ஏழாலை’ எனும் முதலெழுந்த நூலில், காளி கோவில் தவிர்க்கப்பட்டு, வீரபத்திரர்கோயில் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. நாம் ஆராய்ந்தளவில், எமது ஊரில் எப் பகுதியிலும் வீரபத்திரருக்கெனத் தனி ஆலயம் இருந்த தில்லை. இன்றும் இல்லை.
இவ்வாறாகத் தத்தமது இட்ட தெய்வங்களையும், முழுமுதற் கடவுளரையும் அவ்வவ்விடங்களில் நிலை நிறுத்திய பின்பே, அவர்கள் நிம்மதி பெற்றனர் என்றெண்ணுதல் தகும்.
பகல் நேரங்களில், தாம் நிரந்தரமாக வாழ்வதற்கு ஏற்றதும் ஓரளவு மேடாக உயர்ந்ததும் வைரித்ததுமான தானங்களை ஆராய்வதிலும், பயிர் செய்து பசியாறுதற்கேற்ற வளப்பமான நிலத்தைத் தேர்ந்தெடுப்பதிலும், வயதுவந்த அநுபவசாலிகள் ஈடுபட்டிருக்க, வாலிபர்கள், தத்தம் சக்திக்கு ஏற்றவாறு உணவுக் கேற்ற காய்கறி, கிழங்கு முதலாய உணவுப் பொருள்களைச் சேகரிப்பதிலும் பொழுதைக் கழிப்பர். ஓய்ந்த நேரங்களிலும் யாவரும் ஒன்று கூடும் இரவு நேரங்களிலும், பொழுது போக் காகப் பலதும் பத்தும் கலந்துரையாடும் வேளையில், தாம் புதிதாகத் தேர்ந்தெடுத்துக் குடிபுக்க தானத்துக்குத் தகுந்தவோர் பெயரிடவேண்டுமே எனும் எண்ணம் அனைவரதும் உள்ளத்தே தோன்றிற்று.
ஒவ்வொருவரும் தத்தம் மனத்திற்குத் திருப்திதரத் தக்க பெயர்களை முன் வைத்திருப்பர். அவற்றுள், இன்றுவரை நம் நாட்டிலே சுட்டப்பட்டு வருபவை போன்ற, புங்கடி, புளியடி, ஆத்தியடி, குளத்தடி போன்ற பல பெயர்கள் ஆராயப்பட்ட போதும், தெய்வப்பெயரோடு கூடிய சிவன் கோயிலடி, ஐயனார் கோயிலடி போன்ற பெயர்களையே வயோதிபரான தெய்வபக்தி யுடையோர் முற்படுத்திப் பேசியிருப்பர் என்பது தெளிவு. எனினும் சிறுச்சிறு குழுவினராகத் தமது வழிபடு கடவுளரின் கோயில்களை அமைத்துள்ளவரான ஏனையவர்களும், தத்தமது இஷ்ட தெய்வப் பெயர்களை ஆதரித்து, நிலை நிறுத்த முயன்றிருப்பர். சமரச நோக்காளரான பெரியார்கள், தம்முள் ஒற்றுமைப்பட்டு, ஏழு கோயில்களையும் ஒன்று சேர்த்து, ‘எழுதல ஊர்" "ஏழாலையலுர்’

29
எனும் புனித நாமத்தை ஏகமனதாக ஒப்புக் கொண்டிருப்பர். இரண்டினுள்ளும் அக்கால வழக்கிலே, இலகுவாக உச்சரிக்கக் கூடிய 'ஏழாலையலுர்' என்னும் நாமத்தினையே அனைவரும் ஏற்று மனநிறைவு கொண்டனர் என்பது வெறுங் கற்பனை எனல் சாலாது.
நாகரிகமும் விஞ்ஞானமும் ஒரு சேர வளர்ச்சியடைந்து செல்லும் இக்காலத்திலேகூட, சிலர் தாம் பெற்றெடுத்த பிள் ளைக்கு, பஞ்சாங்க கிரக நிலை நோக்கியும், மற்றுஞ்சிலர் எண் சோதிடக் கணிப்பினை நோக்கியும், இன்னுஞ் சிலர் ஏதாவது ஒர் தெய்வப் பெயர் கொண்டும், வேறுஞ் சிலர் தமது முன்னோர் வழி வந்த மரபுப் பெயர் கொண்டும் நாமம் சூட்டுதல் காண்கிறோம், எம் பண்டைய மூதாதையர் தாம் அரும்பாடுபட்டு அமைத்த ஆல யங்களின் ஒன்றுபட்ட புனிதமான பெயரைச் சூட்டியமை, மெ சுந்தரமே என்பதில் மறுதலை வேண்டியதில்லை. எம் மூதாதை யர் கண்டறிந்து குடிபுக்க மிக்க விசாலமான ஊரும், அன்னார் தாபித்த குடில்களின் கீழ் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஏழு கோயில்களும் ஒரே நாமத்துள் ஒன்றியமை புதுமையே! முட்டை யும் அதனுள் கோழியும் இரண்டறக் கலந்து நீக்கமற நிற்கும் சூக்குமத்தினை எண்ணி வியத்தல் தகுவதாகும்.
எமது ஊரின் பெயர், கோயில் மாநகர்' என அழைக்கப்படும் மதுரை மாநகர் போன்ற நகரங்களை ஒத்த காரணப்பெயர் அன்று, சாதாரண ஊர்ப் பெயரான மதுரையிலே, கோயில்களும், அவற்றின் சிற்ப சித்திர அலங்காரமும், நிறைந்து அழகு செய்தன. அன்றியும் பாண்டிய மன்னரின் அரசிருக்கையாகவும், அன்னார் சங்கம மைத்துத் தமிழ் வளர்த்த கூடல் நகரமாகவும் அமைந்தமையானும், அது கோயில் மாநகரமென ஆயது என்பது சில அறிஞர் கூற்று. அன்னவர் கூற்றினை நாம் கொள்ளுவதோ, அன்றித் தள்ளுவதோ அவரவர் சித்தம் எனலாம்.
எனினும் . நாம் ஏழாலயங்களுள் ஒன்றாய அருள் மிகு புவனேஸ்வரி அம்பாளின் ஆலய வரலாற்றில் ஒரு நோக்கு என்ற நூலில் தமது கருத்தினை வெளிப்படுத்தியுள்ள ஆசிரியரின் கூற்றினை வன்மையாக மறுத்துரைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். அவர் தம் முன்னுரையின் 21-ம் பக்கத் திலே, ‘மதுரை எனும் இயற் சொல்லுக்கு கோயில் மாநகரம் எனுஞ் சொல் உடன்பாடாகாது. இதே போன்ற சொல்லே ஏழாலை எனும் சொல்லாகும்', எனக் குறிப்பிட்டுள்ளார். அன்னாரின் முடிந்த முடிவின்படி நோக்கின், ஏழாலயங்களுக் கும், ஏழாலயலுர்ப் பெயருக்கும் தொடர்பு ஏதும் இல்லை; ஊர்

Page 19
30
வேறு; தெய்வத்தலங்கள் வேறு. ஆனால் நாம் கூறுவது முட்டைக் குள் கோழி இரண்டறக் கலந்து நீக்கமற நிற்கும் தத்துவம்.
அன்றியும், மேற்குறிப்பிட்ட ஆலய வரலாற்று நூலில் 5-ஆம் பக்கத்தில், 'ஏழு ஆலயங்கள் உடைமையால் இக்கிராமம் *ஏழாலை' என்று வழங்கி வரலாயிற்று' என்ற கூற்று, (திரு. நா. முத்தையாவின் ஏழாலை எனும் நூலின் கண் 2-ஆம் பக்கத்திற் கண்டபடி) ஓர் உபசார வழக்கென்றே கொள்ளல் வேண்டும். இச்சொல்லைப் பகுதி, விகுதியாகப் பிரித்துச் சந்தி கூட்டிப் பார்த்ததன் விளைவும் (ஏழு-ஆலயம்). இப்பிரதேச மக்களின் சமய பக்தியுமே இக்கருத்துத் தோன்றியமைக்குக் காரணங்களெனலாம் என்பதோடமையாது, நகைப்புக்கிடமான பிறிதோர் ஆய்வினையும் தந்துள்ளார்.
அஃதாவது, ஏழாலை இயற்கை வளம் நிறைந்தது. சிசம்மண் வளமும் கொண்டது. கிணறுகளும் குளமும் நிறைந்த பிரதேசமாக ஏழாலை விளங்குகின்றது. இயற்கை வளங்களையும், நிலத்தின் பயன்பாட்டிற்கேற்ப நீரினையும் நன்கு பயன்படுத்தத் தெரிந்த விவசாய மக்களை மிகுதியாகக் கொண்ட கிராமமாக ஏழாலை விளங்கிற்று. இவர்கள் பரந்த நிலப்பரப்பில் ஏர்களைக் கொண்டு, ஆழமாகவும் அகலமாகவும் அலையலை யாகவும் உழுது விவசாயத் தொழில் மேற்கொண்டிருந்தமையால் ஏர்+அலை எனுஞ் செரல் காலக்கிரமத்தில் மருவி (ஏர்+ஆலை) ஏராலையாகிப் பின் அச்சொல் திரிந்து ஏழாலை ஆயிற்று எனலாம். ஏழாலை எனும் சொல் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றிற்று என்று கொள்ளலாமே ஒழிய, ஆலயங் களை அடிப்படையாகக்கொண்டு உருவாயிற்று என்று கொள்வது; வரலாற்று ஆய்வுக்கு முரண்பட்டதொன்றாகும்' என்கிறார்.
**அத்தியடி புவனேஸ்வரி அம்பாள் ஆலய வரலாறு ஒரு நோக்கு' எனும் நூலின் ஆசிரியர் இரா. வை. கனகரத்தினம் எம். ஏ., அவர்கள் இந்து நாகரிகத்தை துறைபோகப் பயின்று பேராதனைப் பல்கலைக் கழத்தில் அதே துறை விரிவுரை யாளராகப் பணிபுரிபவர். அன்றியும் நம் ஏழாலையலுரில், மேற்காட்டிய கோயிற் பரிபாலகரின் மகள் திருமதி. மீன லோசனியை மணமுடித்தவர். ஏழாலையத் தலத்து நிலவும் சூழ் நிலையைப் பிரத்தியட்சமாகக் கண்டு தேறக்கூடிய வாய்ப்பினைப் பெற்றவர். இத்தனை வசதிகள், வாய்ப்புகள் கிட்டுவது ஒருவ ருக்கு அதிர்ஷ்டவசமான செயலாகும். நிறைந்த கல்விச் செல்வம் பெற்ற இவர் போன்றவர்கள் தகுந்த ஆதாரமோ, அன்றி (நம்ப முடியாத) கர்ண பாரம்பரியமோ தானும் இல்லாத முடிவினை

31.
வெளியிட்டமை, பல தலைமுறை சார்ந்த நம் போன்ற சாதாரண மக்களையே பரிகசிப்பது போலாகும்.
இதே வேளையிலே, இந்நூலுக்கு அணிந்துரைபகர்ந்தோரும் அறிவாற்றலாலும், அனுபவத்தாலும் எம்மூரில் மேனிலையில் வைத்து மதிக்கப்படுவோருமான பெரியோர்கள் தானும், முதல் ஐந்து பக்கங்களையேனும் வாசித்து, ஆசங்கையை நீக்கி நெறிப் படுத்தக் கூடிய நற்சந்தர்ப்பத்தினை நழுவவிட்டுள்ளமை வருத்தம் தருவதாகும். ஆலோசனை கூறி வழிப்படுத்த வேண்டியது அவர்களின் நீங்காக் கடனென்பது சிறியேன் கருத்தாகும்.
மேற்படி வரலாற்று நூல் 1986-ல் வெளிவந்து 1993 நவம்பரில் எனது பார்வைக்குக் கிட்டியது. அது என் கைக்கு எட்டுமுன், எனது ஏழாலையலுர் வரலாறு எழுத்துருவில் முடிந்து விட்டது. ஆயினும் எமது சொந்த மண்ணை வரித்து, அதன் சுருங்கிய வரலாற்றினையேனும் வெளிக் கொணர உளங்கொண்ட கல்விமானை உதாசீனஞ் செய்ய ஒருப்படா நிலையிலேயே இத்தனையும் எழுதலானேன்.
இதன் பின்னே வரும், குடியேற்றமும் குறிச்சிப் பெயர்களும் சம்பந்தமான ஆவணஞ் சான்ற விவரங்களில், ஊர்ப் பெயர்க் காரணம் சங்கையறத் தெரிந்து கொள்ளல் இயலும்,
விசேட குறிப்பு : ஈழ மண்டலத்திலே வடமராட்சி கிழக்குக் கடலோரக் கிராமங்களில் ஒன்றான "நாகர் கோவில்" எனுங் கிராமத்தின் பெயர், நாக தம்பிரான் கோயில் கொண்டதனாலாய பெயரென்பதும், நகுல முனி வீற்றி ருந்து தவமியற்றி நீராடித் தமது கீரிமுகநோய் நீங்கிய தலம் "நகுலேஸ்வரம் கீரிமலை என்றாயதும், வன்னி நாட்டிலே வயிரவர் புளியங்குளம், விளக்கு வைத்த குளம் போன்ற தலத்தினைக் கொண்ட காரண இடு குறிக் கிராமங்களையும் நோக்குதல் நலம். அவை தனியொரு தெய்வப் பெயராற் சுட்டப்பட்டவை. நமது ஏழாலைய வூருக்கோ, ஏழுதலங்களையும் ஆராதித்து ஒழுகும் வெவ் வேறு குழுக்களின் ஆத்ம திருப்தியும், முரண்படாச் சீர்மையும் கருதியே, வேறு வகையில் திருப்தியுற இயலாத தன்மையை நம்மூர்ப் பண்டைய பெரியார்கள் நன்கு மனத்திருத்தி, ஏழு கோயில்களையும் உள்ளடக்கி ஏழாலையலுர் எனத் தீர்மானித்தனர் என்பதில் வேறு வாதப் பிரதிவாதங்கள் வேண்டா.
மதுரை மாநகர் கோயில் மாநகரம் ஆயது போல, நமது ஏழாலையலுரும்தான் மாறியது. அது மாநகர். எமது ஊர் ஊரே,

Page 20
32
புனைபெயர் ஏதும் வேண்டா. இதில் உபசார வழக்கு ஏதும் இல்லவேயில்லை. காரணப் பெயரேதான்.
நம் ஊரிலே, ஆதிக் குடிகள் அமைத்துக் காலத்திற்குக் காலம் புதுப்பித்துப் பெருப்பித்தவையும், ஆகம விதிகளுக்கமை வுற நிருமாணிக்கப்பட்டவையுமான ஏழுதலங்கள் சூழ்ந்த பகுதி யைத் தவிர, மேலும் ஊரிற்பட்ட ஆலயங்கள் உள. 'ஊரிற்பட்ட ஆலயங்கள் என்பது, கூடிய தொகையைக் குறிப்பிடும் அருமந்த பதமாகும். இன்று, நமது ஊரிலே ஆலங்கட்டை விநாயகர் ஆல யம், கைக்கரை (குப்பிழான்) விநாயகர், பாதாளஞானவைரவர், மடத்துப் பிள்ளையார் ஆலயம், சூராவத்தை அம்பாள் ஆலயம் கோட்டைக்காடு சாழம்பை முருகமூர்த்தி ஆலயம், குப்பிழான் நாக கன்னியர் ஆலயம், களபாவோடை வசந்த நாகபூஷணி அம்பாள் ஆலயம் என்றின்ன ஆகம விதி தழுவிய ஆலயங்களும், இவற்றைவிடப் பல மடங்கான பொது மக்கள் வழிபாடியற்றும் ஆலயங்களும் மலிந்துள்ளன. ሥ,
இவற்றைவிட, கிறிஸ்து மதஞ் சார்ந்த ஏழாலை வடக்கு, ஏழாலை தெற்கு அமெரிக்க மிஷன் ஆலயங்கள் இரண்டும் , ஏழாலை கிழக்கு சாந்த இசிதோர், சூராவத்தை சென் திரேசா தேவாலயம், கோட்டைக்காடு நாக்கியப்புலம், லூர்து மாதா தேவாலயம் என மூன்று கத்தோலிக்க தேவாலயங்களும் அவ்வம் மதஞ் சார்ந்த மக்களின் வணக்கத் தலங்களாக விளங்குவதும் நோக்கற்பாலதாகும். ஏறத்தாழப் பத்துப் பன்னிரண்டு தலை முறை காலமாக ஏழாலையின் கண் தாம் குடிபுக்க பகுதிகளைப் பல்லாற்றானும் விருத்தி செய்து வாழும் நன் மக்கள் தாபித்த ஆலயங்களுக்கு 1800-1985 எனக் கால வரம்பு இட்டு ஆராய்தல் தவறாகும்.
*முத்து' என்றழைக்கப்பட்ட இந்திய வம்சக்குடிமகன் ஒருகண்ணகை அம்பாள் சிலையை, அவர் உழுத நிலத்தின் அடியிற் கண் டெடுத்தமையை, ஆதாரம் ஏதுமின்றியே ஏற்றுக் கொள்ளினும், அந்தச்சிலை வந்த வரலாற்றினை ஆராயத் தலைப்பட்டிருத்தலே. அறிவு பூர்வமான நற்செயலாகும். மேற்படி புனிதச்சிலை, அனாதி மனிதர் வைத்து வணங்கிய அம்பாள் விக்கிரகம். வெள் ளம், காற்று முதலாய இயற்கை அனர்த்தங்களினால், அக்காலத்து மண்ணாலயம் சிதைவுற, மண்ணுள் மறைந்திருக்கவும் கூடும் என்பதனையும் தள்ள முடியாது. அச்சிலை தோன்றிய செய்தி உண்மையாயின், குறிப்பிட்ட ஆலய பரிபாலகர்களாய் வழிவழி வந்த சிறந்த கல்விமான்கள், அதன் அமைப்பு முறை, காலவர்த்த மானம் போன்றவற்றினை ஆராய்ந்து தெளிவதற்கு முனைந் திருப்பர் என்பது திண்ணம்.

4. மூத்த குடியினர் குடிபரம்பல்
ஏழாலையலுரிலே, முதலிற் குடியேறிய மக்கள், சிறுசிறு குடும் பங்களோடு, நெடுங்கண்ணிக் குளத்தினை மையமாகக் கொண்டே ஒன்று சேர்ந்தனர். அவர்கள் நிரந்தரமாகத் தங்கி வாழ்வதற் கேற்ற புவி அமைப்பு, மண்வாசி போன்றவை அங்கு அதிர்ஷ்ட வசமாய்க் கிட்டின. வாழ்வுக்கு இன்றியமையாத ஏதுவான நீர் நிலை அவர்களுக்குப் பேருவப்பைக் கொடுத்தது.
அக்காலத்திலே, மாதம் மும்மாரி பொழிந்து, வடக்கு, வட மேற்குதிசைகளினின்று பாய்ந்து புரண்டோடிய வெள்ள நீர், அக். குளத்தினை நிரப்பி, மறுகரையாகிய தென்றிசை வாய்க்கால் வழி, வழிந்தோடிய காட்சி சிற்றாற்றினை ஒத்திருக்கும்.
இக்குளத்து நீர் வழிந்தோடும் தென் திசையிலே, சுமார் 200 யார் தொலைவிலே, இன்றைய மயிலங்காட்டின் மருங்கில், ஒரு சிறுகுளம் உள்ளது. அக்குளத்தைக் கவனிக்காத மக்களின் கரி சனை பெருங்குளத்தின் வடதிசையிலேயே இருந்தது. 'பொள்வத் தைக்குளம்" எனப் பிந்திய சிங்களக் குடியேற்றகாரரினால் இட்டு வழங்கப்பட்ட பெயரே இன்று அச்சிறு குளத்திற்கு நிலைத்த பெயராகிவிட்டது. உண்மையில் அச்சிறு குளம், புல் வளர்ந்து பற்றைபோல் மண்டிக் கிடந்தமையால் புற்பற்றைக் குளம்' என வழங்கி வந்தது.
இவ்வாறு வடகரை நோக்கிய மக்கள், இன்றுள்ளது போன்று பல்லாயிரவராக இருந்திலர். ஓரிரு நூறு பேர் கொண்ட குடும்பங் களே இருந்திருக்க வேண்டும். குளத்து அயலிலே, வடசாரலில் உயர்ந்து தோன்றிய கல் செறிந்த பகுதியிலே தாம் தங்கியிருப்ப தற்கேற்ற குடிசைகளை அவர்கள் அமைத்து வைத்தனர். அவை உண்மையில் நம் மாட்டுத் தொட்டிற் குடில்களின் அமைப் பிலேயே இருந்தன. எமது அனுபவத்திலேயே இவ்வாறான குடில் வீடுகளை இடையிடை கண்டதுண்டு. இவ்வாறான குடில்

Page 21
34
அமைத்து மக்கள் தங்கிய இடம் "உசந்தான்’ எனக் குறிப்பிடப்
பட்டது.
கால ஓட்டத்தில், உசந்தானிலிருந்த மக்கள், தமக்கு வாழ வசதியான பகுதிகளை ஆராய்ந்து, அவ்விடத்தினின்றும், வெவ் வேறு திசைகளில் இடம் பெயர்ந்தனர். அகலக்கால் வைத்து இடம் பெயர்ந்தோர் தத்தம் இன பந்துக்களையும் ஒன்று சேர்த்துச் செல்வாராயினர். சிறுசிறு கூட்டங்களாகப் பிரிந்து சென்ற மக்கள் காலகதியிலே, பிரசோற்பத்தி பெருகித் தனித்தனி சமூகமாகவே மாறினர். ஒவ்வொரு சமூகமும், தமக்கு எனத் தனித்தனிக் குறிச்சிகளைத் தாமே உருவாக்கி, எல்லையிட்டுக் கொண்டனர்.
உசந்தான் நிலத்திலிருந்து வடக்கு நோக்கிய ஒரு குழு, தாம் முன்னரே தெரிந்து வைத்திருந்த பார்க்கற்களும் சிறுபரட்டைக் கற்களுங்கொண்ட கலட்டித் தரையில் காலூன்றினர். "ஏழுதலக் கலட்டி" என அத்தரைக்குப் பெயரிட்டனர். தெய்வம் தமக்குக் காட்டிய குளக்கரையில், நன்றிக் கடனாகத் தாம் நிலைநிறுத்திய ஏழு மண்தலங்களை நினைவு கூருமுகமாகவே ஏழுதலம்+ கலட்டி எனப் பெயர் சூட்டினர். எழுதலக் கலட்டியினின்றும் நீள நடந்த அவர்கள், தம் குடும்பம் குடியேறிய பகுதிக்கு "ஏழுதல வளவு" எனவே பெயரிட்டனர். ஏழுதலவளவு நல்ல செம்மண் செறிவுடன், மரஞ்செடி கொடிகளும் சிரித்து வளர்ந்திருந்தமை கண்டு, அந் நிலத்தைப் பண்படுத்தி அவர்கள் பயிரிட விழைந்தமை இயல்பான *செயலே. -
ஒரு குடும்பத் தலைவனும், அவனது கிட்டிய உறவினரும் தமக்கு உரித்தாக்கிய பகுதியின், இரு மருங்கிலும், இடமும் வலமுமாக அவர்களோடு ஒத்த குண நலங்கொண்ட மறு குழு, தமக்கென இடம் பிடித்தல் குடிசார் இயல்பன்றோ? அவ்வாறு இடப்புறம் சென்றவர்களுள் ஒரு குழுவினர், மேற்குத் திசை நோக்கிச் செல்ல, வலதுபக்கம் திரும்பியோர், இன்றைய ஏழாலைகிழக்குப் பகுதிக்கும், பிறிதொரு கூட்டத்தினர் குப்பிழான் -என இன்று வழங்கும் வடபகுதி ஒரக்காணிக்கும் சென்று குடி புகுந்தனர். ஏனைச் சிறு குடும்பம், வடக்கே இன்றைய ஊரங்கு ணைப் பகுதியிற் சென்று தங்கினர். மேற்கு நோக்கி இடது பக்கம் சாய்ந்தோர் மல்லாகத்து எல்லை வரை சென்று தங்கினர். அங்கிருந்து சிலர் பின்னும் தெற்குமுகமாகச் சென்று, குளத்தின் தென்றிசையில் நீர் செறிந்து செழிப்புற்றிருந்த பகுதியான தோப்பு, விழிகிட்டி, பள்ளஞ்சீமா முதலாம் பகுதிகளை நாடினர்.
உசந்தானிலிருந்து வலது கரை திரும்பிய சிலர், அருகில் இருந்த பரப்பிற் சிறிதான களபாவோடை, மயிலங்காட்டின் ஒரு

35
பகுதி, போன்ற இடங்களையும் தமது வாழ்விடமாகக் கொண் டனர். அப்பகுதிகளிலே ஆதியிற் கற்பார் செறிந்திருந்தமையின், மிகச் சிலரே குடிபுக்கிருப்பர். எனினும் அவர்கள் புதிய பகுதியி லேயே தங்கித் தமதுடமையாக்கி, அப்பகுதியை விசாலித்துக் குடிபெருக்கினர்.
நெடுங்கண்ணிக் குளம் இன்றைய வரண்ட நிலையில் முற் காலத்தில் இருந்ததன்று. மாதம் மும்மாரி பொழிந்து, வடக்கே மயிலிட்டி, வடமேற்கே தெல்லிப்பழை, மாவிட்டபுரம் பகுதியாம் உயர் நில த் தி லி ரு ந் து பாய்ந்து வரும் வெள்ள நீர் நிறைந்து, தென் கரை வாய்க்கால் ஊடாகச் சுன்னாகம் ஐயனார் கோவிலடிக் குளத்தோடு கலந்து, வழுக்கி ஆற்றுக்கு மூலமாய் இன்றும் திகழ்வது. ஆதலின், தென் திசையாக மக்கள் வெளியேறுவது ஆபத்தாயிருந்தமையினாலேயே, வடபாகத்தில் கோட்டமும், குடியும் தொடங்குவதாயிற்று. அன்றியும் குளத்தின் கீழ்த்திசை உயர்ந்து மொண்டி’ என வழங்கும் கற்பார் செறிந் திருந்தமையும், மேற்குப்பாகம் தட்டையாக எப்பொழுதும் ஈரலிப்புத் தன்மை கொண்டதாக இருந்தமையும், தென்திசையை ஆராய் வ தற்கு ஆதிக்குடிகளுக்குத் தேவையற்றிருந்தது
போலும்.
குறிச்சிகள் உதயம் அறிவு, ஒழுக்கம், உடல் வன்மை முத லாம் மகடூ இலக்கணம் நிரம்பிய தலைவர்களின் வழி நடத்துகை யில்அன்றைய நல்வாழ்வினையும் சுபிட்சத்தையும் தேடி நாற்றிசை யிலும் குடியேறிய சிறுச்சிறு கூட்டத்தினரேயான மக்கள், தாம் குடிபுக்க பகுதிகளை இனங்காண்பதற்கு ஏதுவாக, தனித்தனி குறிச்சிப் பெயர்களையும் நிர்ணயித்திருந்தனர். அவ்வாறாய குறிச்சிப் பெயர்களுங்கூடக் காரணப் பெயர்களாக, அன்றும், இன்றும், என்றும் நிலைக்கத் தக்கனவாகவே அமைந்தன.
வடதிசையில் முதற்கால் பரப்பிய " "ஏழுதலக் கலட்டி" பகுதி யில் இருந்து காலகதியிலே, வடக்கு நோக்கி நகர்ந்து, ஏழுதல வளவிலும், அதன் இரு மருங்கினும் இல்லமைத்த 'இளையான் குடி மக்களும், அம்மக்கட் குழுவோடு சேர்ந்து, வலது பாரிசத்தில் குடியேறிய அன்னாரின் ஏனைய உறவினரும், வீடமைத்த பின் பயிரிடு நிலங்களை ஆராயத்தலைப்பட்டனர். பயிரிடு நிலங் களை மைலிட்டிக் கிராமத்துத் தென் எல்லை வரை விஸ்தரிப்பது அவர்களுக்குச் சுலபமாயிருந்தது. அவர்கள் தேர்ந்து தமதாக்கிய பெருநிலப்பரப்பு, கல் இன்றிச் செம்மண்ணே செறிந்திருந்தமை யால், பயிரிடு நிலம் மிக விஸ்தீரணமாய் வாய்த்தமை அவர்களின் பாக்கியமாகும்.

Page 22
36
அடுத்து, தம் இல்லத்திற்கும், உணவுப் பயிர்களுக்கும் வேண்டிய நீரினைப் பெறுதற்குரிய வழி வகைகள் ஆராயப்பட வேண்டிய நிலை தோன்றிற்று. கூப்பிடு தூரத்துக்கும் மேலுள்ள ஒரே குளத்திலிருந்து நீரை எடுத்து வருவது சிரமமாயிருந்தமை யால், கேணி என அழைக்கப்பட்ட நிலத்தடி நீர்நிலை அமைக்க உன்னி, நிலத்தைத் தோண்டியபோது, சுமார் 15 அடி ஆழத்தில் நீரூற்றினைக் கண்டனர். அதிலிருந்து கிடைத்த புதுநீர் கொண்டு பொங்கலும் நிகழ்த்தி தெய்வங்களுக்குப் படைத்துத் தாமும் அயல்? வரும் "புக்கை உண்டு கூத்தாடி மகிழ்ந்தனர். அப்பகுதி புதுக் கிணற்றடி' என ஆனது.
பயிர்கள், மக்கள் உழைப்புக்கு விஞ்சிய அபரிமித பலன் தருவ தற்கு அவர்கள் தேர்ந்து எடுத்த செம்பவள மண்வளமும், நன் னிரும் புதுச்சக்தி கொடுத்தமை வியப்பன்று. புதிதாகத் தோண்டப் பட்ட கிணற்றினையொத்த பல கிணறுகள் காலகதியில் ஏனையோ ராலும், அமைக்கப்பட, புதுக்கிணற்றடி குறிச்சிப் பெய ராகவே நிலைத்துவிட்டது. இக்குறிச்சி, எழுதலக் கலட்டியூடாகச் செல்லும் புன்னாலைக் கட்டுவன் வடக்கு மல்லாகம் வீதியின் வட பால், இன்றைய குப்பிழான் மேற்கெல்லை வரை பரந்து, மேலும் வடபாற் பரந்து விரிவடைந்திருக்கும் பகுதியாகும். டச்சு வீதியை ஊடறுத்து மேற்கேயிருக்கும் தோட்ட வெளிகள் மேற் கெல்லை யாகவும், வடதிசையில், முன்னர் மயிலிட்டி தெற்கெனவிருந்து, தற்போது கட்டுவன், என வழங்கும் பகுதி வரை, புதுக் கிணற். றடிக் குறிச்சி விரிவடைந்துளது.
பிரதான வீதியிலிருந்து 4 மைல் வட திசையில் குடியிருப்புகள் செறிந்துள்ளன. அதன்மேல் 4 மைல் வரை புதுக்கிணற்றடியாரின் பயிரிடு நிலங்கள்.
புதுக்கிணற்றடிக் குடியிருப்புக்களின் எல்லையிலே பழைய அமெரிக்க மிஷன் தேவாலயமும், ஆதிப் பாடசாலையும் உள்ளன. அயலில் சிறிய காளி கோயிலும் உண்டு. அவற்றின் வலது பாகத்தில் ஆரம்பித்து 4 மைல் தூரம் வரையுள்ள குறிச்சி ஊரங் குணை’ எனப்படும் . " ஊரங்குணி' என இடப்பட்ட நற்பெயர் பொதுமக்கள் வாயில் "னி' என்பது 'ணை’ எனத் திரிந்தது. வடக்கேழாலை மக்கள், தாம் தேர்ந்தெடுத்த கோஞ்சிட்டி எனும் தோட்ட நிலத்தில் தோண்டிய கிணற்றில், அப்பகுதி மக்கள் அனை வரும் நீர் எடுத்துப் பருகினர். ஆதலின் அக்கிணறு ஊரங்குணி என்றாயிற்று. ஊரங்குணைக் குறிச்சியின் மேற்கெல்லை, புதுக் கிணற்றடியாரின் தோட்ட நிலம் ஆகும். அவர்களும் ஊரங்குணை மக்களும் ஒன்று சேர்ந்து தோண்டிய கிணற்றிலேயே இரு பகுதி

37
யாகும் தமது தேவைகட்கு நீர் பெற்றதனால் (ஊர் + அங்கு+ உணும்+நீர்) எனும் பொருளில் ஊரங்குணுனிர்' என வழங்கலா யிற்று. குறிச்சியும் மருவி " ஊரங்குணை ஆயிற்று.
வடக்கே, எமக்கு முந்தைய 10 ஆம் சந்ததியாரான 'இளை யான் குடியினரும் அன்னவரின் இரத்த உரித்தினரான ஏனை யோரும் முகங்கொண்டனராயினும், "உசந்தான்" பகுதியிலும் அயலியேயிருந்த பருத்தித் தோட்டம், கோணான் தோட்டம் முதலாய பகுதிகளில் தங்கியிருந்த கூட்டத்தினர், யாது காரணத் தினாலோ, வேற்றிடம் நாடாமல், இடது பக்கமாகச் சென்ற கூட்டத்தாரோடும் தொடராது, சமீப இடது கரைச் சுற்றாடலி லேயே தமது இல்லங்களை அமைத்துத் தங்கினர்.
புதுக்கிணற்றடி, ஊரங்குணை, குப்பிழான் எனுங் குறிச்சி களோடு இப்பகுதியும் உள்ளடக்கப்பட்டிருந்தமையால் நான்கு பெருங்குறிச்சிகளும் பண்டுதொட்டு "ஏழாலை வடக்கு’ எனவே அழைக்கப்படலாயின.
மல்லாகம் - வடக்குப் புன்னாலைக் கட்டுவன் ஈவினை வீதி, வடக்கேழாலையின் தென்னெல்லை ஆயிற்று. வடக்கு ஏழாலை பெரும் பாகத்தின் தென் எல்லையின் மேற்கு ஓரத்தில் இக்குறிச்சி அமைந்திருந்ததனால், தென் மூலை எனவும் தெற்கு மூலை எனவும் ஆதி முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
ஏழாலைக் கிராமம், மல்லாகம் கிராம சபையோடிருந்த காலம் வரை, தென்மூலை என்னும் வட்டாரப் பெயராலேயே குறிப்பிடப்பட்டமை காணலாம். தற்போது, ஏழாலைக்கெனத்தனி யொரு கிராம சபை தோன்றிய பின்னர் குறிச்சிப் பெயர்கள் தவிர்க்கப்பட்டு, தனித்தனி இலக்கங்கள் இடப்பட்டபோது, இப் பகுதி 7 ஆம் வட்டாரத்தூள் அடங்குகின்றது. புதுக்கிணற்றியடி, 8, 9, 10 ஆம் வட்டாரங்களாகும்.
நெடுவீதியின் தெற்குப் பாகத்தில் பல குடியிருப்புக் குறிச்சி
களைக் காணலாம்.
அ. தம்புவத்தை :- இப்பகுதி தென் மூலை பகுதியை வடக் கெல்லையாகவும், பழமை வாய்ந்த (துர்க்கா) தேவி ஆலயத்தை முதலாகவும், கொண்டு மேற்குத் திசையில் தொந்தனை எனப் படும் பகுதியை உள்ளடக்கி அறியப்படுவது. தேவி கோயிலின் எல்லையில் ஆரம்பித்து மேற்குத் திசையில் வியாபித்திருக்கும் கயட்டை எனும் சிறு குறிச்சியையும் உள்ளடக்கியதே தம்பு வித்தை .

Page 23
38
சிங்கள ஆட்சியின் பரம்பல் நிலவிய கால கட்டத்திலே, தம்ப+வத்தை என வழங்கிய பகுதியே பின்னாளில் தம்புவத்தை என்றாயிற்று. 'தம்ப' எனுஞ் சிங்களப் பதம் பித்தளை போன்ற உலோகத்தைக் குறிப்பது, குறிப்பிட்ட பகுதியின் மண்ணின் நிறத்தையும் தன்மையையும் கொண்டே அப்பெயரை இட்டனர் எனலாம். ஆயின், தம்பு எனும் தலைமகன் வாழ்ந்த இடம் எனவே தாம் தேறுவோம். குறிப்பிட்ட பகுதியின் எல்லையில் தேவி கோயி லும் மத்தியில் வைரவர் கோயிலும் பண்டுதொட்டு வழிபடுதலங் களாய் உள்ளன.
பிரதான வீதியில் மடத்து வாசல் என அழைக்கப்படும் பூதவராயர் கோயில் குடிகொண்ட குறிச்சியும் பிரதானம். பூதவராயர் கோயில் தோன்று முன்னரே மடத்துவாசல் எனும் ஸ்தானம் பிரசித்தமாய் இருந்தது.
ஏழாலயங்கள் உருவான போது, அவற்றுள் ஒன்றாக குளத்துநீரிலே துணிதுவைக்கும் தொழிலாளிகளினாலே தாபிக்கப் பட்டது "பெரிய தம்பிரான் ஆலயம் என்று அன்னவரால் பூஜிக்கப்படும் நாக தம்பிரான் ஆலயம். பெரிய தம்பிரான் ஆலயம் மறு ஆலயங்களோடன்றித் தனித்து கல்மேட்டிலே 200 யார் தொலைவில் உள்ளபடியால், அவ்வாலய நியம நிஷ்டைகளுக் குரிய தேவைப் பொருள்களைப் பாதுகாப்பதற்கு ஏற்ற வசதி அங்கிருக்கவில்லை. இன்றும்கூட அவ்வசதி திருப்திகரமாயில்லை. இத்தொழிலாளிக் குழுக்கள் மிகுதியாக வசித்த பகுதியாகிய "சாடியடி’ எனும் பகுதியிலேயே அவற்றை வைத்துப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
குளத்தின் மேற்குத்திக்கில் சுமார் 200 யார் தூரத்தில், வரத்து வெள்ளம் பாய்ந்து வரும் வாய்க்காலின் மேற்குப் பக்கத்தில், உயர்ந்திருக்கும் சமதரையிலே, கன்னிமார் கோயில் எனும் இத்தொழிலாளரின் வணக்கத்துக்குரிய மகடூஉத் தெய்வம் (பெண் தெய்வம்) கோயிலொன்றுண்டு. அவ்விடம் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியாக உள்ளமையால், கள்வர் பயமோ, இயற்கை அழிவுச் சேதமோ இல்லாமை நோக்கி, அக்கோயிலின் தென் எல்லைவளவில், மடம் கட்டி, பாரிய “பெட்டகம்' வைத்து அதனுள் பெரிய தம்பிரான் பூஜனைப் பொருள்கள் பேணிவைக்கப்பட்டன. குறிப்பிட்ட மடம் சாடியடிக் கன்னிமார் கோயிலுக்கும், அதன் தென் பாகத்திருந்த வீரபத்திரர் எனும் பக்தனின் இல்லத்திற்கும் இடைப்பட்டதாக அமைந்துள்ளது.
அக்காலத்திலே வெள்ளைச் சலவைக்கற்கள் பதித்துச் கட்டிய அம்மடம் இன்றும் அழகுறத் தோன்றுகின்றது.

39
பெரிய தம்பிரான் உற்சவகாலத்தில் வெளியூர்ப் பக்தர்கள் இம்மடத்தில் சில நாள்முந்தியேவந்து தங்குவர். மடத்தின் கிழக்குத் திசையில் 50 யார் தூரத்தில் பழைய வெள்ள வாய்க்கால் உளது. தற்போது கல்பதித்துள்ள அவ்வாய்க்கால், சிவகுருவீதி என மாற்றஞ் செய்யப்பட்டுள்ளது.
அவ்வீதி வழியே வடக்கு நோக்கிச் சென்றால் பெருந் தெருவை அடையலாம். இவ்வீதிகளின் சந்திப்பே "மடத்து வாசல்" எனப்படுவது. சந்திப்பின் மேற்கு மூலையில் பூதவராயர் ஆலயமுள்ளது. அக்காலத்தில், வெளியூர்ப் பக்தர்களுக்கு, மடத் தின் தானத்தைத்திசை காட்டுவதற்கே இவ்வாசல் உதவியது. எனவே தான் "மடத்து வாசல்' எனும் நாமம் தோன்றிற்று.
மேலே குறிப்பிட்ட மடத்து வாசலில் ஆரம்பித்து, மடத்தை அடையும் வீதியின் மருங்கிலும், சீவற்றொழில் செய்யும் பரம்பரை யினர் முன்பாகத்திலும், வள்ளுவர் சமூகத்தினர் எஞ்சிய பின் பாகத்திலும், பண்டு தொட்டு வாழ்ந்து வருகின்றனர். "வல்லிக். கண்ணன்' எனும் அவர்களின் குலதெய்வத்துக்கு ஒரு கோயிலும் அமைத்து வழிபடுகின்றமை நோக்கலாம்.
மடத்து வாசலுக்குப் பிறிதொரு மகிமையும் உண்டு. யாழ்ப் பாண மாவட்டத்தில் பருகுவோருக்கு உற்சாகத்தையும் உடலுக் குத் தெம்பையும் தரும் அவ்விடத்துப் பனங்கள்ளே அதுவாகும்! கீரிமலைக் கூவில், ஏழ்ாலையின் மேற்கெல்லையிலுள்ள சித்தியம் புளியடிப் பனங்கள்ளும் பிரசித்தம். எனினும் மடத்து வாசலின் செம்மண்ணிலிருந்து நீரெடுத்துச் சேர்த்த சாறு. ஆதலால் அதற்கு, தனித்தன்மை இயல்பாய் உள்ளது. அந்த நாட்களில், புன்னாலைக் கட்டுவனிலிருந்தும், குப்பிழான், ஈவினைப்பகுதியார் சிலரும் நாள் தப்பாது மடத்து வாசலுக்கு. வருவதுண்டு.
அவர்களில், சிங்கப்பூரிலே புகையிரதப் பகுதி அதிகாரியாய்க். கடமை பார்த்து ஓய்வு பெற்ற தம்பிப்பிள்ளை ஒருவர். கம்பிறோட் டிலே மேலுத்தியோகம் வகித்தமையால், "கம்பித்துரை' எனவே? அவரை ஊரறியும். விஸ்வலிங்கம், செல்வத்துரை எனும் இணை பிரியாச் சகோதரர்கள், சோமண்ணா, வைக்கோற்கட்டு முருகே சம்மான் என்போரின் தோற்றமும், பெயரும், உருவும், இன்னும் கண்முன் நிற்கின்றது. கால் நடையாகவே சென்று, மடத்து” வாசற் கள்ளைப் பருகியபின், திரும்பி வரும்போது குளிர்ந்த, நீரிலே குளித்தவர் போல, மனநிறைவோடு இவர்கள் புனிதமாக வருவர். வைக்கற்கட்டு முருகேசம்மான் அன்று எம் போன்ற

Page 24
40
சிறியவருக்கு இனிப்பும் கொடுத்து, முறுக்கேறிய தமது வலது கையை முழங்கையளவில் மடித்து, புறத்திலே தோன்றும் தசை நார் கொண்டு, பனைமரத்தைப் பவுத்திரமாகவும், கூடவே உறைப்பாகவும் தாக்குவார். அந்த அடி பனையோலைக் குருத்தை அசைப்பது எமக்குக் கண் கொள்ளாக் காட்சி. துள்ளிக் கூத்தடித்து சிறுவர் நாம் அவரை உற்சாகப்படுத்துவோம். மித மாகக் குடிப்பதனால் உண்டாகும் உடல் உள நிம்மதிக்கு இவர் கள் நல்ல எடுத்துக்காட்டானவர்கள். மதுவெறி தலைக்கேற, * காகம், கொக்கு, கனகிளி, அதுமான், பேசும் இராவணன், பின் கும்பகர்ணன்' என நம் ஆன்றோராற் கூறப்பட்ட 6 பருவங்களும் கடந்து உடம்பையும், தம் குடியையும் கெடுத்துக் கொள்பவர் நம்மூர்க்குடியர். பலர் தமது 'அநுமன்’ நிலையிலே கீழ்க் காணு மாறு பாடுவதும் கேட்கலாம்:-
நோயாய்ப் பிறந்திடின் நல்வேட்டையாடி கலம்புரியும் தாயார் வயிற்றில் கரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்க் காயாமரமும் வரளாங்குளமும் கல்லாவு மென்னாது ஈயாய்ப் பிறந்திலனே கள்ளுள் மூழ்கி இறப்பதற்கே."
என, குடித்த கள்ளினால் திருப்திப் படாமையால் ஈயாய்ப் பிறந்து நிறை கள்ளுள் மூழ்கி உயிர்விடுமளவு ஆவல், கடைசி அடியில் தொனிக்கக் காணலாம்.
ஏழாலை மேற்கு :- எங்களூர் அனாதி வீதியாகிய மல்லாகம் ஈவினை வீதியின் தென்பகுதி, இன்றைய மகாவித்தியா லயத்தின் மேற்குப்பகுதியும் மல்லாகம் புகையிரத நிலை யத்தினூடாகத் தெற்கே செல்லும் வீதியும், எல்லையாக வுடைய பகுதி ஏழாலை மேற்கு எனப்படும். இன்று புகையிரதப் பாதை எமது ஊரின் மேற்கு எல்லையாகவே சுருங்கிவிட்டது. புகையிரப் பாதையை எல்லையாகக் கொண்டு, தெற்குப் பக்கமாக உள்ள பகுதி கோட்டைக் காடு எனப்படும். இப்பகுதியில் சிறுபான்மைத் தமிழர் பெரும்பான்மையினராகவும், ஏனையோர் சிறு தொகை யினராகவும் வாழ்கின்றனர்.
கோட்டைக் காட்டின் மத்திய பாகத்தை ஊடறுத்து புகை பிரத விதிப் பாலத்தினூடாகவே நெடுங்கண்ணிக் குளத்து நீர் பாய்கின்றது. மேற்படி குளத்து நீர் உற்பத்தித் தானத்தின் தென் திசையாக 250 யார் தூரம் நேராகப் பாய்ந்து, வலது திசையிற் திரும்பி, விழிசிட்டி எனுக் குறிச்சியை எல்லையாகக் கொண்டு

அளவாடை எனும் சிறு குறிச்சியூடாக நாக்கியப்புலம் எனும் பகுதி யைத் தாண்டி, முதல் நாம் நோக்கிய புகையிர வீதியை-மதவின் ஊடாகக் கடந்து செல்கின்றது. பின்னர் மயிலனி வடக்கு, வாரியப்புலம் கடந்து ஐயனார் கோவிற்குளத்தோடு கலக்கும்.
விழிசிட்டியை எல்லையிட்டுப் பாயும் வாய்க்காலின் தென் பகுதி சூராவத்தை ஆகும். புகையிரத வீதியின் கிழக்கில், புகை யிரத நிலையத்தோடு அண்டி, மலப்பை எனும் மிகச்சிறிய குறிச்சி உளது. அதனைத் தவிர்த்து, சுன்னாகம்- புத்தூர் நெடுவீதியின் வடக்கே உள்ள பகுதி சூராவத்தை சார்ந்ததாகும். சூராவத்தை யின் வட எல்லை, விழிசிட்டியின் தென் எல்லையாகும். பழைய மயிலங்காடு குறிச்சியின், தென் அந்தமும் எல்லையுமாம்.
மயிலங்காடு குடியேற்றக் கிராமோதயப் பகுதி சூராவத்தை, பழைய மயிலங்காடு குறிச்சிகளின் கிழக்கு எல்லையிலிருந்து ஆரம்பமாவது. அதன் கிழக்கு எல்லை புன்னாலைக் கட்டுவன் வரை (தெற்குச் சந்தியின் மேற்குப் புறமாக இருநூறு யார் வரை) விரிந்திருப்பது. குறிப்பிட்ட எல்லையை அண்மித்து, எல்லைக் காவல் தெய்வமாகிய வைரவர் ஆலயம் பொலிவுற விளங்கு கின்றது. அக்கோயிலின் முற்பாகத்தில், அப்பகுதியின் மேசன் தொழிலாளரின் கைத்திறனையும், பக்தி, நம்பிக்கை மேம்பாட் டினையும் எடுத்து ஓதுவது போலவும், தமது புனிதக் கடமைக்குக் கட்டியங்கூறுவது போலவும். இருமருங்கிலும் நிமிர்ந்து நிற்கும் துவாரபாலகர் சிலைகள் நெஞ்சை உறைய வைக்கும்.
உட்பிரகாரமண்டபத்தில், அமர்ந்திருக்கும் நிலையில், வைரவன் வாகனமாகிய நாய், பக்தர்களுக்கு மனவொடுக்கத் தையும், மற்றவர்க்குக் கிலியையும் தருவிக்கும் தன்மையதாயுளது.
""நாயைப் பார்த்தால் கல்லைக் காணோம். கல்லைப் பார்த்தால் நாயைக் காணோம்' என்பதன் தாற்பரியம், அச்சிலையைப் பார்த்ததும் தெற்றெனத் தெரிவதாயிற்று.
களபாவோடைக் குறிச்சி :- மயிலங்காடு குடியேற்றம் பற்றிய விவரம் வேறோர் அதிகாரத்தில் வருவதனால், தென் புன்னாலைக் கட்டுவன்-மல்லாகம் வீதியின் ஊடே, மேற்படி பகுதியின் வடபால் உள்ள குறிச்சிகளை நோக்குவோம். சிறிமுருகன் பாடசாலைச் சந்திப்பிலிருந்து, மேற்கு நோக்கி 4 மைல் தூரம் சென்று, வடக்கு முகமாகத் திரும்பிச் செல்லும் வீதியில் 200 யார் தூரம் சென்றால், களபாவோடை என்றழைக்கப்படும் சிறு குறிச்சியினூடாக, ஒர்
3

Page 25
42
வீதி அமைந்துள்ளது. அவ்வீதியின் மேல்கரையில், இன்று ஏழாலையூரிலே பக்தர் கூட்டம் பெருகி, நாடு தழுவிய பிரக்யாதி பெற்று விளங்கும் "வசந்த காகபூஷணி அம்பிகை ஆலயம் உளது. குடிசனச் செறிவிலும், நிலப்பரப்பளவிலும் மிகச் சிறிய அளவே கொண்ட களபாவோடை, ஆதியில் “சின்னம்மன்' எனும் பெய ரால் அறியப்பட்டது. அக்கோயிலிலிருந்து அதே வீதியில் மேலும் 150 யார் வடதிசை சென்றால், அங்கும் ஒரு மகடூ வழிபடு சிறு கோயிலை அடையலாம். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் சிறு பெண் பிள்ளையைக் களனாகக் கொண்டு வெளிப்பட்ட அம்பாள் தொழுதலமே அது. சிறப்புறத்திகழ்ந்த அக்கோயில் ஏனோ மூர்த்திகரம் தாழ்வடைந்து, புகழ் மங்குவதாயிற்று. எனினும் நித்திய பூஜா நியம நிஷ்டைகள் இன்னமும் ஒழுங்குற நடை பெறுகின்றன.
கிழக்குக் குடியிருப்பு :- இக்கோயிலைக் கடந்து 50 யார் தூரத்தில், வீதி, வலம்-இடம் எனப்பிரிந்து செல்கிறது. அச் சந்திப்பை அண்டி பண்டு தொட்டுக் கோயில்களுக்கும், ஊர் மக்களின் மங்கல விழாக்களுக்கும் சாத்துப்படி, சப்பரம், பூமாலை முதலானவற்றைக் கட்டி அழகுபடுத்தி உதவும் பண்டாரங்கள் வசிப்பிடமுளது. இடதுபக்கக் கிளை வீதி, மேற்கு நோக்கி மடத்து வாசற் சந்திவரை-பூதவராயர் ஆலயம் வரை- சென்று பெரு வீதியை அடைகின்றது. இவ்வீதியின் இரு மருங்கிலும் உள்ள பெரும் பான்மைக் குடிகள் தச்சுத் தொழில், கொல்லர் வேலை செய்பவர்களே. இவர்கள் ஏழாலயத் தோற்றந் தொட்டு ஊர்க் குடிகளின் இன்றியமையாத் தேவைகளை நிறைவேற்றும் பரம் பரையினராவர். வலது பக்கம் திரும்பி, நெளிந்தும் வளைந்தும் செல்லும் வீதியின் வலது பாரிசத்திலே, இன்று ஒரு றோமன் கத்தோலிக்க தேவாலயமும் பாடசாலையும் உள்ளன. சாந்த இசிதோர் தேவாலயம் 1884 ஆம் ஆண்டளவில் தாபிக்கப்பட்டது இசிதோர் பாடசாலை முன்னர் திண்ணைப் பள்ளியாக நடை பெற்று, காலகதியில் பொதுப்பாடசாலை ஆனது. இவற்றை உள்ளடக்கியதும், வடக்கே சென்று ஏழாலையின் சந்தியை அடைவதுமானபகுதி ஏழாலைகிழக்கு எனப்படும்.
ஏழாலைச் சத்தியின் தென்கிழக்கு மூலையில் இருப்பது யாழ் | ஏழாலைச் சைவமகாஜன வித்தியாலயம். (1971-78 வரை நான் தலைமை வகித்த வித்தியாலயம் அது.) பாடசாலையின் எதிரில், ஊர் மக்கள் பெருந்துணையோடு தாபிக்கப்பட்ட வாசிக சாலையும், வீதியின் மறுபக்கத்தில், ஏழாழை உப - அஞ்சல் நிலையமும் உள்ளன. மேற்குறிப்பிட்ட வாசிக சாலையிலேயே ஏழாலை வடக்கு, கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கமும், ஏழாலை, வடக்கு சன சமூக நிலையமும் இயங்குகின்றன.

43
ஏழாலையின் தென் பாகத்திலே உள்ள மயிலங்காடு, சூராவத்தை, கோட்டைக்காடு முதலாம் பெருங்குறிச்சிகளின் பூரண விவரங் கூறுமுன், ஏழாலைச் சந்தியிலிருந்து, வடக்கு நோக்கிச் செல்லும் தேவாலய வீதி (முன்னர் இவ்வீதி, கிராம. சபையினால் உந்துடுவை-யாதம்பை வீதி எனக் குறிப்பிடப் பட்டது) நேராகச் சென்று, ஒரு கிளை ஊரங்குணைக் குறிச்சியின் பிரதான ஒழுங்கை ஆகிறது.
மற்றொன்று, இடதுகரையாக நீண்டு, முற்காலத்திற் சங் கானை - வல்லை வீதி எனப்பதிவு பெற்று, இன்று மல்லாகம்கட்டுவன் வீதியெனச் சுருங்கிவிட்ட பெருவீதியைச் சென்றடை கிறது.
ஊரங்குணை, ஒழுங்கை பிரியும் தானத்திலிருந்து 100 யார், தொலைவில், அமெரிக்கன் மிஷனரிமார் தாபித்த பழமை வாய்ந்த, தேவாலயமும், பாடசாலையும் உள. முந்திய தேவாலயத்தின் எதிரில், பழைய கிறிஸ்தவ தேவாலயங்களைப் போலன்றி, நம் நாட்டு வழமைக்கேற்பக் கட்டப்பட்டதும், தரையில் சப்பாணி கொட்டி, வேண்டும்போது முழந்தாழிலிருந்து வணக்கம் செலுத் தும் நியதி கொண்டதுமான ஆலயமும் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வொழுங்குமுறை, இந்நாட்டில், சுன்னாகம் கிறிஸ்தவ சேவா ஆசிரம தேவாலயத்தை அடியொற்றி, ஏழாலை வடக்கிலே கடைப்பிடிக்கப்படுவதாகும். பாதவணிகளேதுமின்றி ஆலயத்துள் பிரவேசிப்பதும் வரவேற்கத்தகும் செயல்களாகும். இத்தலம் புதுக்கிணற்றடிக் குறிச்சியின் வடஎல்லை.
இத்தலத்தின் மேற்குத்திசையில் 50 யார் தொலைவில் இடது கைப் பக்கமாக விநாயகர் வீதி' எனப் பெயரிய புது விதி செல்கின்றது. புதுக் கிணற்றடியில் வாழும் மக்களின் முன்னோர், தமக்கென நிலமும் நீரும் ஆராய்ந்து, எழுதலக் கலட்டி கடந்து, எழுதலவளவுகளை அண்டி நடந்த காலத்தே, தம் வணக்கத்துக் கென ஆக்கி வைத்த, "மாணிக்க விநாயகர்’ ஆலயத்தின் பிரகா ரத்தை அண்டிச் செல்வது. அது விநாயகர் வீதியாகும். வீதியின் மருங்கிலே, ஏழாலை வடமேற்குக் கிராமபிவிருத்திச் சங்கமும், மாதர் முன்னேற்றச் சங்கமும் உள. பங்கீட்டுப் பொருள் விநியே கிக்கும் சங்கக் கடையும் அருகேயுள்ளது.
மேற்கேழாலை : ஆதிக்குடிகள், உசத்தானிலிருந்து, நிலமும் நீரும் தேடி, மேற்கு நோக்கிச்சென்ற காலகட்டத்தில் மல்லாகம்? எல்லை வரை குடியேறிய சிலர், மல்லாகம் - புன்னாலைக் கட்டு வன் தெற்கு வீதியினூடாகச் சென்று தரித்தனர். இப்பகுதியே மேற்கு ஏழாலை .

Page 26
44
இன்றைய மகாவித்தியாலயத்தைத் தென்னெல்லையாக வகுத்து, வலம் இடமாக விரிந்திருக்கும் பகுதியே அவ்வாறு அறுதியிட்டுக் குறிப்பிடப்படுகிறது.
குளத்து நீர் பாயும் பெருவாய்க்கால், இப்பகுதியின் கிழக்கு எல்லையாயுளது. ஆதலினால் அப்பகுதி, காடுமண்டி, ஈரலிப்பி னால் புல் பூண்டுகளும் மண்டி வளர்ந்திருந்த பகுதி. இன்று மேற்படி பகுதியினை நோக்குவோர் மனத்தில், குளத்தையும் கோட்டத்தினையும் அண்டிய சமீப இடத்துக்கு, எதற்காக வட திசை சென்று இடம் வலம் பெயர்ந்து அலைவது? நேரே மேற் றிசை தென்றிசை வழிக் கொண்டிருக்கலாமே, எனத் தோன்றும். அன்றிருந்த சுகாத்திய, புவியமைப்பு, நீர்ப்பெருக்கம் போன்ற இயற்கை ஏதுக்களை, ஆதிகாலத்து நம் ஏழாலை மக்கள் பாட சாலையிற் கற்றுப் பட்டம் பெறாமலே, தம் அநுபவ அறிவு கொண்டு, முடிவு செய்யும் நல்லறிவு பெற்றிருந்தனர் என்பதற்கு, அக்குடியேற்ற நியதியே தக்க சான்று.
புதுக்கிணற்றடி : ஒரேயொரு நெடுங்கண்ணிக் குளம், அனைவரதும் தேவையை, எவ்வகையானும் பூர்த்தி செய்ய இயலாமையை ஊகித்துணர்ந்தவர்கள், கேணிகள் சிலவற்றை ஆங்காங்கே அமைத்தனர். கிணறு தோண்டுவதைவிட கேணி வெட்டுவது (அக்காலத்து அறியப்பட்டவையான சிலவேயான ஆயுதங்களால்) சுலபமாதலால், அவ்வாறு தோண்டினர். புதிதாக ஒரு கிணற்றைத் தோண்டியமையினாலே ஆனந்தங்கொண்டு அதனைப் ‘புதுக்கிணறு" என்றும், அக்கிணற்றின் அண்டையில் வாழ்ந்த மக்களைப் புதுக்கிணற்றார்’ என்றும் குறிப்பிட்டனர்.
குப்பிழான் பகுதியிலே, 6τLD5) நெடுவீதியின் மருங்கில் கேணியை வெட்டினர். அதற்குக் குருக்கள் கேணி எனப் பெயரிட்டனர். நாம் முதலில் நோக்கிய மயிலங்காடு குடியேற்ற வீதியினின்றும் திருப்பிய சந்திப்பில், ஒரு கேணி அமைத்து, அவ் விடத்தையும் ‘கேணியடி’ என நாமமிட்டழைத்தனர். வெள்ளம் பாய்ந்தோடும் மடத்து வாசலடியில், பூதவராயர் கோவில் மருங்கிலும் கேணி அமைத்தனர்.
இனி கேணியடிச் சந்தியிற் பிரிந்து தென்கிழக்கு நோக்கிச் செல்லும் வீதியில், பக்திமானும் வேதாந்தியாயிருந்து சித்தாந்தக் கொள்கையை அவாவி, அதன்படி சமயத்தொண்டு புரிந்து *அருளானந்த சிவம் எனக் சாதுக்களின் ஆசி பெற்றவருமான வைத்தியர் அய்யம்பிள்ளை பொன்னையா அவர்களால், வெகு ஜன அணைப்போ டு தாபிக்கப்பட்ட மடத்துப் பிள்ளையார்

45
ஆலயமும், சமயாசா ரியர்க்கு எனக்கட்டிய நால்வர் மடமும்
இப்பகுதியிற் பிரசித்தம்.
தெற்கு ஏழாலை : மேற்கேழாலையில் குடிபுக்கு சிலகாலம் வாழ்ந்த மக்கள், அப்பகுதியின் குடிசன அடர்த்தியை நோக்கியும் சிலர் மண்வளம் நோக்கியும், மெல்ல இடம் பெயர்ந்து விழிசிட்டி, மயிலங்காடு, சூராவத்தை பகுதிகளில் நிரந்தரக் குடிகளாயினர். குளத்தின் கிழக்குப் புறப்பகுதியூடாகச் சென்ற சிலரும், அவர் களோடு ஒன்று கூடி உறவாடினர். அவ்வாறு, மேற்றிசையி லிருந்து தென்பாகத்திற் குடிபுக்கோரே, தெற்கேழாலையின் முதற் கிறிஸ்தவரான இம்மேசன் சின்னத்தம்பியும் அவர் சந்ததி யாரும் ஆவர். அவர்களும் தமக்கெனத் திண்ணைப்பள்ளி அமைத்து, தெற்கு, மேற்கு சூராவத்தைப் பகுதியாருக்கு அறிவொளி பரப்பினர். 19-ஆம் நூற்றாண்டின் இடைக் கூற்றிலே அமெரிக் க மிஷனரிமார் தேவாலயமும், பாடசாலையும் அமைத்தனர்.
விழிசிட்டி எனும் குறிச்சியில், தேவாலயம் செல்லும் சந்திப்பில் ஏழாலை தெற்கு உப-அஞ்சல் அலுவலகம் உளது. குறிப்பிட்ட தேவாலய வீதி, தெற்கே நீண்டு, குளத்து நீர் வாய்க்காலைச் சூரவத்தைக் குறிச்சியின் வட எல்லையில் ஊடறுத்துச் சுன்னாகம் புகையிரத நிலையத்தைச் சென்றடையும். இவ்வீதியிலே சூரா வத்தையில் பிரசித்தி பெற்ற அம்பாள் ஆலயமுளது. அது பழமையானது. மறுபாகத்தில் பழைய மயிலங்காட்டை எல்லை யிட்டுச் சுன்னாகம் மின்சார நிலையச் சமீபத்தில், சுன்னாகம் - புத்தூர் நெடு வீதியிற் சேரும் ஏழாலை விவசாய வீதி'யின் வலது பாகத்தில், கத்தோலிக்க சபையினரால் 1948-ல் அமைக்கப்பட்ட தென்திரேசா தேவாலயம் உளது. குறிப்பிட்ட வீதியில், பழைய ம:விலங்காட்டில், ஏழாலையின் கடைசி விதானையாரின் இல்லம் உளது. ஆதியில் திண்ணைப்பள்ளி நடத்திய நீலநயினார் என்பா ரும் விழிசிட்டிப் பகுதியிலேயே வசித்தனர்.
தோப்பு :- இப்பெயர் குறிக்கும் நிலப்பரப்பு, மிகவும் குறுகியது. குளத்தின் தென் திசையினின்று நீர் வழிந்தோடும் வாய்க்காலைக் கிழக்கெல்லையாகவுடையது, எப்பொழுதும் நீர் நிறைந்திருப்பதனாலும், குளத்தை அண்மித்து இருப்பதாலும், தென்னை பனை, மா, பலா, வாழை போன்ற மரங்களும், நற் பயன் தருவனவாக உள்ளன. அப்பகுதியில் சென்ற 19 ஆம் நூற்றாண்டு இறுதித் தசாப்தங்களில் சிறந்த ஆசிரியனாகிய ஆறு முகச் சட்டம்பியார், தோப்பில் ஆறுமுகம் என அனைவராலும்

Page 27
46
அறியப்பட்டவர். கிறிஸ்தவராயிருந்த அவர், இன்றைய மகா வித்தியாலத்தின் அயலிலுள்ள கட்டுவிளானை" எனுங்காணியில் வேப்பமர நீழலில் பாடசாலை அமைத்து நடத்தியுள்ளார். இதே பாடசாலையில் தான் தாம் எழுத்தறிவு பெற்றதாக சித்தாந்த வித்தகர் மு. ஞானப்பிரகாசம் அவர்கள் கூறினார்.
கட்டுவிளானை மிஷன் பாடசாலையில், தலைமை ஆசிரியர் திரு. ஆறுமுகமும், அவர் புத்திரிகள் மூவரும் கற்பித்தனர். அப் பாடசாலையை நிலை கொள்ளாது தடுக்கு முகமாக, நாகமுத்தர் எனும் ஒரு பெரியார், இப்போது மகாவித்தியாலயம் இருக்கும் பகுதியில் சைவம் சார்ந்த ஒரு பாடசாலையைத் தாபித்து நடத்தி வந்தார். அதனால் மிஷன் பாடசாலை நிறுத்தப்பட்டது.
மிஷன் பாடசாலை நிறுத்தப்படு முன்னரே அங்கு படித்துக் கொண்டிருந்த சிலர் வலுக்கட்டாயமாக புதிய பாடசாலைக்கு மாற்றப்பட்ட நிலையை அக்காலத்து மாணவனாயிருந்தவரான திரு. சொக்கலிங்கம் ஆசிரியர் மூலம் அறிந்தேன்.
புதிய பாடசாலை, அரசினரின் உதவி நன்கொடை பெறா திருந்தமையால், மாணவரின் முறையான தேர்வு, தராதப் பத்திரம் பெறுதல் போன்ற விதிகளும் ந.ைமுறைப்படுத்த இய லாது போயிற்று. ஆதலினால், அப்பாடசாலை அரசினர்க்குக் கையளிக்கப்பட்டது. அரசினர் பொறுப்பேற்ற பின்பு, மெல்ல மெல்ல வளர்ச்சிப் படிகளை அடைந்து, இன்று மகாவித்தியாலயம் ஆகப் பரிணமித்துளது.

5. நிலமும் நீரும்
யாழ்ப்பாணக் குடாநாடும், அதனை அண்டிய மன்னார், புத்தளம் ஈறாகவுள்ள புவிப்பாகங்களும், அவற்றின் மேற்குத் திக்கில் அமைந்துள்ள இந்திய தென் கரையோர நாடுகளும் 35 மில்லியன் வருடங்களின் முன்னே நீரினுள் அமிழ்ந்து கிடந்தன என்பர் புவிப் பெளதிக ஆய்வாளர். கடல் நீரிற் காணப்பட்ட காபனீரொட் சைட் (Carbon di oxide) படிப்படியாகக் கரைவுற்று, அதன் பயனாக கல்சியம் காபனேற்றுப் படிவு ஏற்பட்டது. இது கடல்வாழ் உயிரினங்களாற் பிரித்தெடுக்கப்பட்டும், மேற்படி உயிரினங்களின் இறப்பினாலும், சேதன உறுப்புக்களின் படிவி னாலும் அடையற் சுண்ணக் கற்பார்கள், படிப்படியாக வளர்ச்சி யடையத் தொடங்கின. காலகதியில் அவை அமுக்கப்பட்டு இறுக்க மான படைகளாக அமைவுறுவதாயிற்று. புவியின் உட்பாகத்தில் ஏற்படும் அசைவுகள், அழுத்தங்களால், புவிமேற்பரப்பின் சில பாகங்கள் கடல் மட்டத்திலிருந்து உயர்த்தப் படுவதும், கடலி னுள்ளே தாழ்த்தப்படுவதும் உண்டு. அது போன்று இச்சுண்ணக் கற்பார்களும் கடலிலிருந்து மேலுயர்த்தப் பட்டன.
இச்சுண்ணக் கற்பார்கள், நீரை உள்வாங்கக் கூடிய அமைப்பு தன்மைகளை இயற்கையாகவே பெற்றுள்ளன. அவ்வாறான உள். வாங்கும் தன்மை கொண்ட பார்கள், யாழ் குடா நாடு முழுவதுமே ஒரே சீராக அமைந்த தன்று. சில இடங்களிலே 50 அடி திணிவும் வேறு சில இடங்களில் அதனிலும் கூடிய திணிவும் உடையனவாக
உள்ளன.
ஏழாலையைப் பொறுத்தமிட்டில், வெண்மஞ்சள் நிறமான சுண்ணக் கற்பார்கள், ஒன்றோடொன்று இணைந்தனவாயும் தரைமட்டத்தின் மேல் 2, 3 அடி உயரம் வளர்ந்தவையாயும் ஆதியிற் காணப்பட்டன. மண்ணின் மேற்பரப்பிலே, அடிப்பார்க் கல்லுடன் இணைந்து வளர்ந்த கற்பார்கள். இயற்கையின் தாக்கங்களினாலும், பெளதிக மாற்றங்களினாலும் ஒரே சீராக

Page 28
48
a w இல்லாது, பற்பல தோற்றங்கள். ப்ெற்றுள்ளன். சில கூர்நுதி கொண்டும், சில பானைவிடிவிலும் தோற்றமளிப்பன. எனினும், மண்ணின் கீழேயோ, இடதீதுக்கிடம் செறிவில் மாற்றங் காணப் படினும் அது தொடர் சுண்ணப் படிவமாகவே தென்படுகிறது.
་་་་་་་་་་་་་་་ புவியின் தோற்றத்தைப் பொறுதிது, கல்லின் வைரத்தன்மை
மாறுபடும். எவ்வாறாயினும், நீரேந்து தன்மையில் ஏழாலைக் கிராமத்து நிலத்தடிநீர், ஏறக்குறைய ஒரே சீராகவும், வற்றாத தன்மை கொண்டதாகவும் உள்ளதைக் கவனிக்கலாம்.
ஐம்பது வருடங்களுக்கு முன், ஏழாலைக் கிராமத்தின் தெற்கு கிழக்குப் பாகங்கள், தொடர் பெருங்கற்களாகவே இருந்தன. ஊர் மக்களின் சலியாப் பெருமுயற்சியால், கல்தோண்டியெடுக்கப் பட்டு, மண்பரப்பிச் சமப்படுத்தி வெகு விரைவிலே, தோட்ட நிலங் களாக மாற்றமடைந்தன. பலாலி விமான நிலையம், காங்கேயன் இராணுவ ஆஸ்பத்திரி, சீமெந்துத் தொழிற்சாலை அமைக்கும் வேலை எம்மூர்க் கற்களின் மூலமே பூர்த்தியாயிற்று. கல்லுக்கு அவசியத் தேவை ஏற்படவே, கல்நில உரிமையாளரும், அத்தொழிலையே சீவனோபாயமாகக் கொண்டிருந்த மக்களும் உற்சாகத்தோடு தொழிலாற்றி, கல்நிலங்களைச் சிறந்த தோட்ட நிலங்களாக மாற்றி விட்டனர்.
இன்று மேற்கூறிய தோட்ட நிலங்களையும், பயன்தரு, பயிரினங்களையும் காணும் வெளியூரவரான புதியவர்கள்,முந்தைய நிலை அறியாதவராதலின் ஆதிமுதலே இவ்விசாலமான ஊர் நிலங்களை ஏர்கொண்டு உழுது, உழவு சாலுக்கு இடைப்பட்டு அலைபோலத்திட்டாய் அமைந்திருக்கும் ஆதலினாலே, ஏர் அலை என நாமம் சூட்டியிருப்பர். காலகதியில் ஏர் ஆலை என மருவி, பின்னும் சில காலத்தின்மேல் 'ஏழாலை" என உருமாறியிருக் கிறது என முடிந்த முடிபாக எழுத்துருவிலும் வடித்து விட்டது விநோதம். ஏழாலை மண் செம்மண்ணே. நெடுங்கண்ணிக் குளத் தருகே தெற்கு மேற்குப் பகுதிகள் குளத்துநீர்,நிலத்து அடிநீரோடு கலப்பதனால், மழைக் காலத்தில் அது உப்புக் கரைசல் போன்ற: தன்மை பெறுவதுண்டு. அவ்வாறு ஏனைப் பாகங்களிலிருந்து தன்மையில் வேறுபட்டுள்ள அப்பகுதி, அரைமைல் சதுரத்துக்கு மேற்படாததாகும். மிகுதியாயுள்ள சுமார் ஒன்பது சதுரமைல் நிலப்பகுதியும் நன்னீர்ப் பகுதிகள்.
விழிசிட்டி தபாலகம், தோப்பு எனும் குளத்தோடு மிகக் கிட்டிய பகுதி, குளத்தின் மேற்குப் பாகத்தேயுள்ள குடியிருப்புப் பகுதிகள் மேலே சுட்டியவாறு, உவர்த்தன்மை கொண்ட நீரினை யுடையன. குறிப்பிட்ட பகுதியின் மண்ணும், மணலைவிட

களிமண் சற்றுக் கூடுதலாகக ఖజ్ఞళy-గౌళే இருவrட்டிக் களித், தன்மையது. • የወጭ ato
அவ்விதமா மன்னின் தன்மீைறினாலேயும், குளத்துள்" பல்லாண்டுகள் ர்தேந்திட் நிற்ப்தனர்லேயுமே.அவ்விட நீர் ஓரளவு உவர்த்தன்மை" கொண்டிருக்கின்றது. குறிப்பிட்ட அப்" பகுதியில், ஆழமா கற்பூரம் ஏனைய பகுதிகளைவிட வைரங்" குறைந்தும், கிண ன் நீர்மட்டம், குள நீர்மட்டத்தோடு ஒத்தும் இருப்பது இதற்கு பிரதான காரணம். குளத்தின் மறு பக்கங்களில் உள்ள கிணற்று நீர் நன்னீரே ஆகும்.
குறிப்பிட்ட பகுதியின் தென்றிசை நோக்கின், விழிசிட்டியும் அதனோடு இணைந்து, ஏழாலை தெற்கெல்லைவரை பரந் திருக்கும் சூராவத்தை, மயிலங்காடு, கோட்டைக்காடு எனுங் குறிச்சிகளிலுள்ள வைரித்ததும், கூடவே தொடர் செறிவு கொண்டதுமான, கற்பார்களே அமைந்துள்ளமையால், அப்பகுதி களின் கிணறுகளிலிருந்து பெறப்படும் நீர், மாற்றமேதுமற்ற நன்னீராகவே உள்ளது. எனினும் நிலத்தடி நீர்க்கண்டம் ஆழங் குறைந்தே உள்ளது.
உவர்நீர்ப் பாகங்கள் தவிர்ந்த, ஊரின் மேற்கு, தெற்கு, கிழக்குப் பகுதிகளில் நீரின் தன்மை ஒரே சீராகவே இருப்பது” குறிப்பிடத் தக்கது. சீரான தண்ணீரில் விரவிச் செறிந்துள்ள பெளதிக உப்புக்கள், தாதுப் பொருள்கள், சிறப்பாக இரும்புச் சத்து, எம்மக்களை மட்டுமன்றி, மரஞ்செடிகளும் செழித்து வளர்ந்து பெரும் பயன் தருமாறு, மண்ணையும் வளப்படுத்துவ தாகும்.
எப்பயிரை நாட்டினாலும் எமது மண்ணும், நிலத்து அடிநீரும், அவற்றை வாட்டமின்றி வளர்த்துப் பெரும் பயன் தந்து உதவும். இத்தன்மைத் தாய, நம் செம்மண்ணில் விளையும் வெங்காயம் முதல், "பாகல், புடலை, கீரை வகைகளுக்கும், சந்தைகளிலே பெருமதிப்புண்டு. தென்னிலங்கையிற்கூட, கசப்பு மிக்க ஏழாலைப் பாகற்காயும், காரம்மிக்க வெங்காயமும் கேட்டு வாங்கப்படுவதைக் காணலாம்.
பாகற்காய்ப் பொரியல், பதப்படுத்திய பாகற்காய்ச் சட்னி என்பன, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, நோர்வே, லண்டன், கனடா ஆதியாம் பகுதி வாழ் தமிழ் மக்களும், அத்தேயத்து மக்களும் விரும்பி உபயோகிப்பது, இம்மண்ணிற்கும் மக்களுக்கும் மேன்மை தருவதாகும்.

Page 29
50
ஏழாலயங்களின் வடபால் பரந்து வியாபித்திருக்கும் பாகத்தே அடங்குபவையான கிழக்கு, மத்தி, வடக்கு எனும் பகுதி களையும், வாரங்குணை, குப்பிழான் பகுதிகளையும் நோக்கின் அப்பகுதிகள் உள்ளிட்ட பெருநிலப் பரப்பின் மண் ஏறத்தாழ ஒரே தன்மைத்தாயிருப்பது புரியும். வைரித்த இரு வாட்டி மண்ணும், நிலத்திலே மூன்றுமுதல் நான்கடி ஆழம்வரை மண் கண்டமும், அதன்கீழ் வைரித்த சுண்ணக் கற்பாரும், அதன்கீழ் யடிப்படியாக வைரங்குறைந்து, மக்கித் தன்மையான கற்படிவங் களும் கொண்ட பூமியாகும். நிலத்து அடிநீர்மட்டம்வரை மேற்படி சுண்ணக் கற்செறிவு வியாபித்திருப்பினும், சிற்சில கிணறுகளில், குறிப்பிட்ட ஆழத்தில் ஒருவகைக் களிமண் படிந்திருப்பதுண்டு.
எமது குடியிருப்புக் காணியில் 1981ஆம் ஆண்டளவில் குழாய்க் கிணறு தோண்டியபோது, 32 அடி ஆழத்தில், கீரிமலைக்கேணியின் அடியில் படிந்திருப்பது போன்ற வெண்மணல் தென்பட்டது. அதுவே நீரின் அடிமட்டம் எனக் கண்டோம். அவ்விடத்திற்கு வடக்கே 100 யார் தூரத்தில் அதே போன்ற கிணறு தோண்டிய போது, 25 அடி ஆழத்தில், நீர்மட்டம் சாதாரண மக்கித் தன்மை யுள்ள பகுதியிலேயே தென்பட்டது. இன்னும் சிறிது ஆழப்படுத்திய போது, ஒருவகைக் கருங்களிமண் தோன்றியது. அதனை ‘நாய்க் களி’ எனப் பெயரிட்டு அழைத்தனர். எனினும் தண்ணீரின் தன்மை மாறுபடவில்லை.
இதிலிருந்து நாம் கண்டறிந்த உண்மை: குளத்தை அண்மித்த பகுதிகளின் இயற்கைத் தாக்கம், ஆழத்திலிருக்கும் நிலநீரிற்கு ஏற்படுவதில்லை. எனவே உபயோகத்துக்கு ஏற்றளவு நீர்மட்டத் துக்குமேல் அகழ வேண்டியதில்லை என்பதுதான்.
இவ்வாறு தோண்டப்படும் கிணறுகளின் ஆழம், வடக்கே செல்லச் செல்லக் கூடிக்கொண்டே போவதைக் காணலாம். புவி அமைவு (நிலத்தோற்றம்) வடக்கு நோக்கி உயர்ந்து செல்வதே அதன் காரணம். இதனால், வடபாகத்து எல்லைக் கிராமங்களிற் பெய்யும் மழைநீர், தெற்கு நோக்கி வழிந்தோடும் மழை வெள்ளம் எமது ஏழுதலத்து நெடுங்கண்ணிக் குளத்துள் நிரம்பி, அங்கிருந்து தென்திசையில் ஒடி பின் மேற்கே அதற்கென அமைத்த வாய்க் காலினூடாக, சுன்னாகம் ஐயனார் கோயிலடிக் குளத்துட் பாய்ந்து, பின் இருகுளத்து நீரும் அள வெட்டியிலிருந்து பாய்ந்து வரும் நீரோடு சேர்ந்து, 'வழுக்கியாறு’ எனப் பெயர்பெறும் ஆறாகி, கந்தரோடை, கட்டுடை ஐந்துகண் மத வூடாகப் பாய்ந்து, நவாலியைக் கடந்து சென்று, அராலிப் பாலத்தி ஆணுரடாகக் கடலை அடையும்.

51.
மாரிகாலத்தே வழுக்கி ஆற்றின் பிரதான நீர்சேர்க்கும் பெருமைக்குரியது ஏழாலை நெடுங்கண்ணிக்குளம்,
ஏழாலையின் வடக்குப்பாகத்து இல்லக் கிணறுகளும், அதற்கும் வடக்கே, பயிரிடும் நிலங்களான தோட்டத்துக் கிணறுகளும், 30 அடிக்கு மேற்பட்ட ஆழமுடையவை. விசேடமாகத் தோட்டக் கிணறுகள், பத்து, பன்னிரண்டு அடிவிட்டங் கொண்டவையாக நெடுநேரம் நீர்வற்றாது, பயிர்களுக்குப் பாய்ச்சக் கூடியதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தோட்டத்தினதும் மையப் பகுதியில் இவ்வித கிணறுகள் உண்டு. கிணறு ஒன்றேயாயினும் இருபக்கத்திலும், எதிரும் புதிருமாக நின்று நீரிறைக்கத் தக்க விதமாக, குறைந்தது இவ்விரண்டு மிதிகளும், ஆடுகாலும் துலாவும் அமைந்திருக்கும். ஒரு கிணற்றுக்கு ஒரே துலா, ஒரே மிதி என்பதைக் காண்பதரிது. ஏனெனில், ஒரே கிணற்று நீரினாற் போய்ச்சப்படும் நிலத்து அளவு, கூடிய விஸ்தீரணமுடையதாயிருக் கும். அன்றியும் அத்தோட்டம் அனைத்தையும், ஒருவரே செய்கை பண்ணுவதும் கடினம். தம்முள் மனமொத்த இரு பகுதியாரேனும் அந்நிலத்தைக் கொத்தியோ, உழுதோ பயிரிடுவர். ஒரே நேரத் தில், இரு பகுதிக்கமக்காரரும், நீரிறைப்பதற்கு வசதியாகவே மேற்படி ஏற்பாடு நடைமுறையிலுள்ளது. ܖ
ஒரே கிணற்றில் இருவேறு கூட்டங்கள் ஒரே நேரக்தில் நீரிறைப்பது பாரம்பரியம். ஆனால், மேற்படி தோட்ட வெளியில் மல்லாகம்-கட்டுவன் வீதியோரம், முன்னை நாள் நீதவான் ஆ. வேலுப்பிள்ளையின் இல்லத்து எதிர்த்திசையில் கிழக்குப் பக்கமாகவுள்ள கிணற்றில், நான்கு ஆடு கால்களும், நான்கு துலாக்களும், எதிரெதிரே நான்கு மிதிகளும் அமைக்கப்பட்டு, நீரிறைக்கும் புதுமை, வேறெங்கும் காணக் கிடைக்காது. 'நாலு துலாக் கிணற்றடி' என்பது அவ்விடத்துக்குக் காரணப் பெயராய் அமைந்தது.
பதினாறடி விட்டமுள்ள ஒரு கிணற்றிற்கு, நாற்றிசையிலே ஆடுகாலும் மிதியும் அமைப்பதென்பது, கைதேர்ந்த விற்பன்ன ருக்கும் புதிரான செயலாகும். கந்தர்-நாகநாதர் என்பவருக்கு அவரின் முன் சந்ததியார் முதுசமாகக் கொடுத்த கிணற்றின்மூலம் பட்டைகொண்டு நீர்பாய்ச்சப்பட்டதைக் கண்டிருக்கிறேன். பின் னொருகால், வாளிச்சூத்திரம் (மாடுகள் பூட்டி வட்டமாக வளைப்ப தால் நீர் எடுக்கப்படும் முறை) கண்டறியப்பட்டபின், இருபகுதி யார் ஒன்று சேர்ந்து ஒரே சூத்திரம் அமைத்தனர்.
அதன்பின் மண்ணெய் இயந்திரங்கள் பாவனைக்கு வந்தமை யால், துலாக்களும் மாட்டுச் சூத்திரமும் கைவிடப்பட்டு, காலத்துக்

Page 30
52.
கேற்ற கோலங் கொண்டனர் கமக்காரர்! எனினும் முந்திய சின்னங்களான ஆடுகால் முதலியன திரிபுபடாமல் இன்றுமுள்ளன. நான்கு துலாக்களும் ஒருசேர நீரை இறைத்தாலும், வெகுநேரம் வற்றாத நீரூற்று உடைமை கிணற்றுக்கு விசேட தன்மை.
அருங்கோடையிலே, ஓரளவு நீர் வற்றினாலும், விரைவிலே பழைய அளவு நீர் ஊறி, மறுபடி இறைப்பதற்கு உதவுவதும் விந்தையே! எவ்வாறு நீர் வற்றிடினும், அதன் ருசியும் தன்மை யும் மாறுபடுவதில்லை.
நவக்கிரி நிலாவரை ஏரிக்கும், மானிப்பாய் இடிகுண்டுக்கும் ஊரெழுப் பொக்கணைக்கும், குரும்பசிட்டிப் பேய்க்கிணற்றிற்கும், வேறு புவிப் பெளதிகவியல் ஆராய்ச்சியாளரால் அறியப்பட்ட எந்த நீர்நிலைக்கும், இவ்வாறான மாற்றமடையாத் தன்மை இருக் காது.
யாழ் அரச அதிபராயிருந்த (1824) பான்ஸ்பிரபு. நிலாவரை நீரைப் பாரிய எந்திரம் மூலம் இறைத்தபோது 40 அடிக்குக் கீழே, உவர்நீர் செறிந்திருப்பதைக் கண்டறிந்தனர். ஏழாலை நாலுச துலாக் கிணற்றைப் பற்றி அறியவேயில்லை. அன்றைய நல்ல கமக்காரருக்கு, பிரசார தந்திரம் தெரிந்திருக்கவில்லை. முன்னது வற்றா நீரூற்று. நம்மது தன்மையிற்றிரியா நன்னீரூற்று!
ஏழாலையனுர்க் கமக்காரர் : நிலத்தையும் நீரையும் பயன் படுத்தி, பயிரிடுந் தொழிலையே தமது மூலாதாரத் தொழிலாகக் கொண்டு பன்னெடுங்காலம், சீவனோபாயஞ் செய்யும் ஏழாலைக் கமக்காரர் பண்புகள் சுவாரஸ்யமானவை.
**ஏருமிரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய் நீரருகே சேர்ந்த நிலமுமாய் - ஊருக்குச் சென்றுவர வணித்தாய்ச் செய்வாருஞ் சொற்கேட்டால் என்றும் உழவே இனிது"
என்பது பண்டையோர் அனுபவ உண்மை.
இக்கூற்றின் முதலிரண்டு வரிகளும் ஏழாலையலுர்க் கமக்கார ருக்குத் தெய்வங்கொடுத்த திருவிருந்து, என்றாலும் மூன்றாவது அடியிலே கூறப்பட்டவாறு அமையாது, அவர்களின் இல்லங்களும் தோட்டமும் எட்டவே அமைந்துள்ளமை காணலாம். குடியிருப்புக் காணிகள் ஒன்றோடொன்று சமீபித்திருப்பது போல, தோட்டக் காணிகள், கணிசமான அளவு தூரத்தே, ஒன்று சேர்ந்தே
உள்ளன.

53
பண்டுதொட்டு, பயிர்த் தொழிலாளர் தம்முள் ஒன்றித்து, ஒருவர் தோட்டத்தில் மற்றவர் தொழில் புரிவதும், பின்னர் அடுத்தவர் தோட்ட வேலையில் அனைவ்ரும் உதவுவதும், வழிவழி வந்த பண்பாகும். இதனால் ‘செய்வாருஞ் சொற் கேட்டல்’ எனும் பதம் அவர்கள் வாழ்வில் தேவையற்றதாகிறது. துலாவும் பட்டை யுங்கொண்டு நீர் இறைப்பதற்குக் குறைந்தபட்சம் நான்கு பேரின் ஒத்துழைப்புத் தேவை. ஆழக்கிணறுகளிலிருந்து, ஓலைப்பட்டை கொண்டு நீர் எடுப்பதற்கு, துலாவில் இருவர், துலாக்கொடி பட்டைக்கு ஒருவர், தண்ணிர் பாய்ச்சுவதற்கு ஒருவர் என அமைவர். இவர்கள் ஒன்றில் ஒரே குடும்பத்தவராக, அன்றேல் பந்துக்களாக இருப்பர். அதுவுமன்றேல் ஒத்த குணமும், ஒத்த அளவு கமநிலமும் உள்ளவர்கள், தம்முள் ஒன்றுகூடியே தொழில் புரிவர்.
இச்செயலினாலே மிகுதியும் நேசபான்மை வளர்கின்றது. இப்படியாக ஒன்றுகூடும் நண்பர்கள், ஒரேயிடத்திலோ, அருகரு கிலோ வசிப்பதென்பது இயலாத நிலை. எனவே நீரிறைக்க வேண்டிய நாளில், பின் இரவிலே, முதலில் நித்திரை விட்டு எழுபவர், வெளியே வந்து, வானத்து நட்சத்திரங்களை நோக்கி நேரத்தைக் கணித்துக் கொண்டு, ஏனைச் சக கூட்டிறைப்புக் காரரைக் கூவி அழைப்பார். இரண்டு கை விரல்களையும் பின்னி, பிடரியின் பின்னால் வைத்து, முன்கைகளையும் மடித்துத் தலை மீது அழுத்தியபடி, தம்மால் இயன்றளவு உரத்த குரலில் கூஊஊஉ எனக் கூவுவார். அவரின் இராச்சத்தம், அரைமைலுக்கு மேல் வசிப்பவர்களால் இனங்காணப்படும். உடனே, ஏனைக் கூட்டி றைப்புக்காரர், நித்திரை விட்டெழுந்து, வெளியிலே வந்து, பதிலுக்குக் கூவுவார். குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் கிணற்றடியில் ஒன்று கூடிவிடுவர். இவ்வாறு முதற் கூவியவரின் கூட்டத்தார் மட்டுமன்றி, மற்றுங் கூட்டத்தாரும், தத்தம் சகபாடிகளோடு ஒன்று சேருவர்.
இறைப்பு மட்டுமன்றி, ஏனைய பயிரிடுதொழில்களும் இவ் வொழுங்கிலேயே நடைபெறும். துலாப்பட்டை இறைப்பு முற்றாக அருகி, எந்திரயுகம் ஆரம்பித்த பின்பு, ஒவ்வொருவருக்கும் தனித் தனி நீரிறைப்புக் கருவி உரிமையானதினால், கூடித் தொழி லாற்றும் விசேட பண்பும் மறைந்துவிட்டது. இரவு இறைப்பும் மறைந்தது. ‘செய்வாரும் சொற்கேட்டால்' எனும் அங்கலாய்ப்பும் பெருகி வருகின்றது.
நீரிறைப்பதில் மட்டும் கூட்டுச் சேர்பவர்கள், நம்மூர்க்கமக் காரர் என்றில்லாது, அனைத்துச் சீவனோபாயத் தொழில்

Page 31
颂4
களிலும், அவ்வாறே, தம் பங்கை ஏனையோர்க்கும் நல்கும் வழக்கம் உடையவர்கள்.
இன்றுபோல் இறக்குமதிப் பொருள்களில் தங்கியிருக்காது சுயதேவையைத் தாமே தம் முயற்சிகொண்டு பூர்த்தி செய்து வாழ்ந்திருந்த காலத்தே, நெல்லையும் அதன் அரிசியையும் அவர் கள் காண்பதே அபூர்வமாயிருந்தது. தோட்டத்துத்தினையும், புல வுத் தரையிலும் மொண்டியானதும் கிறுகற்கள் செறிந்ததுமான சமதரையிலே விளைவித்த வரகுதானியமுமே பிரதான உணவுப் பண்டங்களாயிருந்தமை அறிவோம்.
புகையிலைப் பயிர் அறுவடையான கையோடு தோட்ட நிலத்தை பண்படுத்தி பணிச்சாமை, தினைச்சாமை எனும் இரு வகைச்சாமைகளைப் பயிரிடுவர். பயிரிடுங்காலம் சிறுமழையும் பனியும் பெய்வதனால் நீர் இறைக்கவேண்டிய தேவை குறைவா யிருப்பதால், அதிக சிரமம் இன்றியே பயிர் முற்றிப் பயன்தரும். அறுவடை காலம் ஒவ்வொரு கமக்காரனின் இல்லமும், விழாக் கேரலம் பூண்டிருக்கும். ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களோ அன்றேல் கூட்டிறைப்புக்காரரோ ஒன்று சேர்ந்து அதிகாலையே அறுவடையை முடித்து, சிறுச்சிறு உட்பட்டிகளாக வெயில் படு மாறு அடுக்கிவைப்பர். "உப்பட்டி' என்பது, அறுத்து ஒன்று சேர்த்த சாமிப்பயிரின் சிறு கூறினைக் குறிப்பிடும் உழவர் பதமாகும்.
உட்பட்டிகளை ஒன்று திரட்டி, தலைச்சுமையாகவேனும் வசதிப் பட்ட வண்டிவாகனத்தில் ஏற்றியேனும், தமது இல்லத்துஅருகிலே யுள்ள மரநிழலிற் சேர்ப்பர். பலர்கூடி சாமி அடிப்புக்கென்றே இயற்றிப் பாடுகின்ற உவப்பான பாடல்களை இசையோடு பாடி அடிப்பது பழைய நாடகமேடையை நினைவுபடுத்தும்.
செல்விருந்தைச் செல்லவிட்டு-வருவிருங்தைப் பார்த்திருக்கும் கள்ளமற்ற வேளாளர் எம்-வெள்ளை உளத்து ஏழாலையார் வந்தாரை வாழவைக்கும் உம்பர் பதி ஊர்வலமாய் அம்பிளிமான் ஓடுதடி" எம்-செல்லமுத்தே பாகுமடி
என்றவாறு , பாடல்களைச் சந்தத்தோடு மாறிமாறிப் பாடுவர். கையிலிருக்கும் உப்பட்டி, சூடு அடிக்கும் பலகையிலே அதற்கேற்ப தாளம் போடும். தம்முன்னே சிறிது அகன்று விரிக்கப்பட்டிருக்கும். * கதிர்ப்பாய்’ எனப்படும் பெரிய பாயின்மேல், மணிநீக்கிய வைக் கோலை ஒய்யாரமாக உயர்த்தி வீசுவர். அவ்வாறு வீசித்திரட்டிய வைக்கோலிலே எஞ்சியிருக்கக் கூடிய தினை மணிகளை மாடு

55
களைப் பிணைத்து வளைப்பதன் மூலம், 'பத்தற வேறாக்குவர். *பற்றற"- என்பது கமக்கார் நாவில் பத்தற எனப் பயிலும். மாடுகள் பல ஒன்றாகச் சுற்றி மிதிக்கும் நிகழ்வு "சூடு மிதித்தல்" என வழங்கும்.
இறுதியில் வேறாக்கிச் சேர்த்த மணித்திரள், குல்லம்மூலம் காற்று விசிறிச் சுத்தஞ் செய்து, பனையோலையால் முடைந்த கூடைகளிற் போடப்பட்டு வீட்டின் கூடத்தில் உள்ள "கோர்க். காலி'யில் அடுக்கிப் பத்திரப்படுத்தப்படும். கோர்க்காலி என்பது, பொருள்களைப் பத்திரப்படுத்தி, எலி, கறையான் முதலிய பிராணி களினால் சேதமுறாது பாதுகாத்தற்குதவும் மரத்தினாலான பீடமாகும். கட்டில் போன்ற அமைப்பு உள்ளது. அது பனந்தடி யினாலே செய்யப்படும்.
இரண்டாவது உலக மகாயுத்தத்தினால் நம் மக்கள் அவதிப் பட்ட காலத்தில், "கூட்டுறவே நாட்டுயர்வு' எனும் சுலோகத்தை ஆக்கி, பற்பல கூட்டுறவு நிறுவனங்களை, நம் அரசுகள் நிறுவு: வதற்கு முன்னோடிகளாய் விளங்கியுள்ளனர். அடுத்தவரினதோ, மறுதேயத்தவரதோ கையைப் பார்த்திராது, தாமே தம்நிலத்தில், தினை, குரக்கன், வரகு, பயறு, உளுந்து, முதலாம் தானிய வகைகளையும், கிழங்கு வகைகளையும், அபரிமிதமாகச் செய்கை பண்ணுவர். அறுவடை காலத்தே, தம்முள் கூட்டுமுறையில் பணி! புரிந்து, அனைவரும் பயனடைவர்.
அக்காலத்தில் 'சாமி அடிப்பு’’ என்பது பெருவிழாப் போல நடைபெறும். தினமும் ஒருவர் தோட்டத்தில் அடிப்பும் "சூடு மிதிப் பும் நடைபெறும். அறுவடை முடித்துச் சூடடித்து, பொலியைச் சாக்கிலே நிரப்பி, கோர்க்காலியில் சேர்க்கும் வரை, சூட்டுக் குரியவர் இல்லம் பெரு விருந்தும் விழாவுமாகவே இருக்கும். இன்று தினைச்சாமை, பணிச்சாமையுமில்லை; சூடடிப்புமில்லை. இன்றைய கமக்காரர் வெங்காயம் முதலிய காசுப்பயிரையே நம்பித் தனித்தனி மனிதராகவே பயிரிடுகின்றனர். கூட்டுறவு என்பது, சங்கக்கடைப் பங்கீட்டுப்பொருள்களின் விநியோக தில்லு, முல்லுகளோடு அடக்கமாகி விட்டது.
கமக்காரனின நீட்டலவை :- சேர மன்னனோடு மனம், வேறுபட்ட கம்பன், அவனது கொல்லிமலை நாட்டினைக், குறிப்பிட்டு:
காதம் இருபத்து ஞானகொழியக் காசினியை ஒதக்கடல் கொண் டொழித்ததோ?
என்கின்றான்.

Page 32
56
அகாதம் என்பது கம்பன் காலத்து அளவை.
கூவி அழைக்கும் செய்திப் பரிமாற்ற முறை பண்டு முதல் இன்னமும் நம் ஏழாலைக் கிராமத்தில் நடைமுறையில் இருப்பது ஓர் விசேடம். மைல், சங்கிலி, மீற்றர் போன்ற நெடுங்கணக்கினை வகுக்கு முன்னரே, நம் கீழை நாட்டிலே, காதம், காவதம், எனும் அளவைகளே பொது அளவுகளாக இருந்தமை அறிவோம். இவை நீண்ட தூரத்தைக் குறிக்கும் அளவைகளாகும். இவற்றின் முதற் கூறு (குறைந்த அளவு) கூப்பிடு தூரம்" என்பதேயாகும். - காவதம்' என்பது உச்ச அளவை, காவதம் என்பது இடைப் ட தூரம். உதாரணமாக, குசேலர் கண்ணனின் இருப்பிடந் தேடி அலைந்த சம்பவத்தை, குசேலோபாக்கியானம் எனும் அவர் சரிதையில், * பன்ன்ெடுங்காவதம் போகி, கவர் வழி கண்டு எங்கலங்கி" எனக் குறிப்பிட்டுள்ளார். உரைகாரர் ஒரு காவதம் என்பது, நான்கு கூப்பிடு தூரத்தைக் குறிக்கும் என்பர். காற்கொத்து அரிசிக்குக் காதவழி செல்வோர்'-என்பது ஒரு நையாண்டி வாக்கியம். ஆகவே காதமும் காவதமும் எம்மூர்க் மக்காரரின் கூப்பிடு தூரத்தின் குறிப்பிட்ட மடங்குகளேயாதல்
காண்க.
ஏனையவை முழம்=முழங்கை மடிப்பளவு; பாகம்=இரு கரங்களையும் நீட்டும்போது ஏற்படும் இடைத்தூரம், கவடு=இரு கால்களையும் விரித்து நீட்டி வைக்கும் தூரம், சாண் = கைப் பெரு விரலையும், சின்னி விரலையும் விரிந்து நீட்டிய தூரம். அடி= காலின் பாதம் நிலத்திற்பதியும் நீளம் என்பன ஏழாலை மக்களின் குறுகிய தூர நீட்டலளவைகள். இன்று கூட அளவைகள் சர்வ தேச மட்டத்தில் பொதுவானவையாக நிர்ணயிக்கப்பட்டபோதும், நம்மூர்க் கமக்காரர் போன்ற சாமானிய மக்கள், தமது மூதாதை யரின் அளவை முறைகளையே பெரிதும் கைக்கொள்கின்றனர். தமது தோட்டத்து வாய்க்கால், பல அளவு கொண்ட பாத்திகள், காணியின் விஸ்தீரணம் கணித்தல் போன்ற அன்றாட செயல் களை, மண்வெட்டிப்பிடி கொண்டும், கவடு போட்டும், பங்கிடும் பெருவழக்கு இன்றுமுள்ளது. இன்றைய நவநவமான அளவு களுக்கும் கமக்காரரின் அளவுக்கும் அதிக வித்தியாசம் காணவியலாது.

6. ஏழாலையலுர்க் குடிமக்கள் சால்பு
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றி மூத்த குடி தமிழ் இனம். அதன் ஆதி உற்பத்தித்தானமோ, உற்பத்திக் காலமோ, வரையறை செய்ய இயலாத பழைமை வாய்ந்தது. காலக் கணிப்புக்கு உட்படாத் தன்மையைத் தெரிவிக்க, புத்திக் கூர்மை மிக்க நம் ஆன்றோர், மேற்காட்டியவாறு அறுதியிட்டுக் காட்டியுள்ளனர்.
ஏழாலயலுரில் மக்கள் குடிபுக்க காலத்தையும், சிக்கறுக்கும் விதத்திலே இவ்வாறு வரையறைப் படுத்தவேண்டிய நிலை உள்ளது. 'கல்தோண்டி மண்போட்டுச் சமன் செய்யுமுன் தோன்றிய மூத்த குடியினர் ஏழாலையலுர் மக்கள்" என ஏக வசனத்தில் கூறிவிடலாம். ஏனெனில் நாகரிகமும், விஞ்ஞான சாதனங்களின் மேம்பாடும், பலதிறத்தவையான புவியியல், குடியியல் ஆய்வு நெறிகளும் எத்துணை மேலோங்கியபோதிலும், எமது ஊர்களைப் பற்றிய பயன்தரும் ஏதுக்கள் மிகமிகக் குறைவா கவே உள்ளன. யாழ்ப்பாணத் தீபகற்பம், வன்னிப் பிரதேசம், போன்ற அனைத்துரர்களின் கதியும் அதுவேதான்.
கர்ணபாரம்பரியமான கதைகள் ஓரளவு நமது ஊர்ச் செய்தி களைத் தெளிய உதவுவனவாயினும், அவற்றுள்ளும் அநேக இடைச்சொருகல்கள் காலகதியிற் புகுந்து, அவற்றின் வாஸ்தவத் தன்மையை அமுக்கி விடுவதுண்டு. வேறு வழியில், கதையைக் கேட்டு, அதனைஏனையோருக்கு உரைப்பவர்களும், தமதுவிருப்பு வெறுப்புக்கு ஏற்பத் திரித்தும், தத்தம் மேன்மையை உயர்த்தியும் கூறும் பான்மையால், உண்மை மறைக்கப்படுவதும் சாத்தியமே.
நவீன புதைபொருள் ஆய்வாளர், கல்வெட்டு வாசிக்கும் நிபுணர்கள் எனப் பல திறப்பட்ட வல்லவர்கள் நம்மத்தியில் அநேகர் உளர். எனினும், எம் ஊரைப் பொறுத்தவரையில், அன்னவர்க்கு உதவக் கூடிய பண்டைச் சான்றுகள் ஏதும் இது
4.

Page 33
58
வரை கிட்டியதில்லை. அவ்வாறாய சிறு சான்றேனும் இருந் திருப்பின் எமது "அருமை நாயகம்" போன்ற வரலாற்றாய்வாளர் கள் சும்மா இருந்திருப்பார்களா?
இல்லை என்னாமல், எமது ஏழுதலங்களுட் சிலவற்றுக்கும், வேறு ஓரிரு சிறு தலங்களுக்கும் ஊஞ்சல், உலா போன்ற திருப் பாக்கள் எழுந்துள்ளன. **சும்மா கிடந்த பெண்ணுக்கு அரப் பவுணில் தாலி' என ஏழாலைக் குடிமக்கள் கூறும் புதுமொழி போல அவை மெச்சுந்தரத்தவை.
ஊஞ்சற் பாக்கள், ஒன்றினை அடியொற்றி, மற்றொன்று கருத்தொருமித்த நிலையிலேயே பாடப்பட்டுள்ளன, பாடியவர்கள் குமாரசாமிப் புலவர் முதல், மதுரகவி நாகராஜன் அருட்கவி வினாசித்தம்பி, ஐ. பொன்னையா, கதிரைமலைநாதன் ஈறாக யாருமே, தாந்தாம் பாடிய தெய்வத் தலங்களின் தொடக்கம் பற்றி யாதுங் கூறத் தலைப்பட்டிலர். அனைவரும் தாம் கொண்ட பக்தியை மட்டுமே மேம்படப் பாடியுள்ளனர்.
அன்னியர் ஆட்சிக்காலத்து அட்டூழியங்கள், எம்மனதில் வேரூன்றிக் கசப்புணர்வை ஊட்டி வளர்ப்பது போல, அதே காலத்து எமது ஊர்க்குடிசார் நிலைமை, மக்களின் வாழ்வு முன்னேற்றம், தலவிசேடம் என்றின்ன பயன்தரு செய்திகளைத் தானும் வெளியிடுவதற்கு மனங்கொள்ளாதோராய், எம் மக்கள் காலங்கழித்த துப்ப்பாக்கிய நிலையை, இனிமேலும் வளரவிடலாகாது. எமது ஏழாலைக் கிராமம் மட்டுமன்றி, தமிழன் குடிபுக்கு நல்வாழ்வு நடத்தும் அனைத்து ஊர்க் கல்விமான்களும், தாமறிந்த மட்டிலோ, வல்லார் வாய்க் கேட்டறிந்தோ, தத்தம் ஊர்ச் சரி? தத்தை எழுத்துருவில் ஆக்குவதற்கு, ஊக்கங்கொளல் அவசிய மாகும.
ஆயினும், ஊரின் பண்டைய வரலாற்றினை A56örg5 geot Tu T மலே, ஒரு சிறு குழுவினரின் விருப்பு வெறுப்பினை நிறைவேற்றும் பாங்காக, எமது ஊர்க் கதையைத் தமது வீட்டுக்கதை போன்று திருத்தி அமைத்து வைக்கும் செயலை, என் போன்ற சாமானியஊர்ப்பற்று ஊறிய - மனிதர் தானும் ஏற்றுக்கொள்ளவோ மறுத்துரை செய்யாது வாளாவிருக்கவோ தகாது. தன்னூரில் ஆதிமனிதர் குடிபுக்க காலமுதல் நாளதுவரை, பொதுமக்கள், பெருங்கல்விமான்கள் அனைவரும் அலசி ஆராய்ந்து உண்மை எனக் கண்டதும், என்றும் அழியாத் திருக்கோயில்களைத் தன்னகத்தே கொண்டதுமான ஏழாலைய வூரை ஏராலை என நிரூபிக்கத் துணிவது ஊர்மக்கள் இதயத்துக்கு இதந்தருவதன்று.

எமது ஏழாலையங்களுள், சிறப்புப் பெற்று வழிவழிவந்த பக்தி மான்களாலும், நிரம்பிய அறிவு பெற்ற கல்விமான்களாலும் நிர்வகிக்கப்பட்டு வரும் 'அத்தியடி புவனேஸ்வரி அம்பாள் ஆலயம்- ஒரு நோக்கு' எனும் நூல் 1985-ல் அச்சிட்டு விற்கப் பட்டது. அதனை எழுதிய கல்விமானை, அவர் எத்தனம் நோக்கி, மெச்சவேண்டும். எனினும், அன்னாரின் கொள்கையை - நிர்ணா யித்த முடிபினை-எவ்விதத்தாலும் ஏற்கமுடியாது.
ஊர்ப் பெயர்த்தோற்றத்திற்கு - எவ்வித எதுவும் காட்டவிய லாது, ஏழாலையலுரில் மக்கள் குடிகொண்டு, ஏழு கோயிலும் அமைத்த ஆயிரம் ஆண்டுகளின் பின்பு, இவ்வூரிலே மணவினை மூலம் ஒன்றித்த அறிஞர், தமது பாரியாரின் தந்தையே பக்தி யோடு பரிபாலனஞ் செய்யும் திருத்தலத்தையும், அத்தல மகிமை யால் நிம்மதி வாழ்வு பெறும் ஏழாலையூரையும், ஒருசேர அவ மதிக்கும் செயல் துர்ப்பாக்கியமானது.
மேற்படி நூலை வெளியிட உரிமை கொண்ட தேவஸ்தானத் தாரே, நூலின் உட்பொருளை அறிந்தவர்போல்தோன்றவில்லை. அந்நூலுக்கு அணிந்துரையும், ஆய்வுரையும் வழங்கியவர்கள் (all ஒரு வார்த்தையேனும் மறுத்துரை செய்யாது, ஆசிரியரை நேர்வழி செலுத்துவதினின்றும் வழுவியுள்ளனர்.
இதே வேளை, அந்நூலுக்கு அணிந்துரை நல்கிய பேராசிரி யர் சு. வித்தியானந்தன் அவர்கள் அன்றைய யாழ் வளாக உபவேந்தர், கீழ்வருமாறு நன்மதி கூறியுள்ளதை இங்கு குறிப் பிடலாம்.
* இவ்வாறாய நூல்களை எமுத்தில் அமைக்கும் போது, வேறு யாராவது ஒருவரிடங்காட்டி, எழுத்துப் பிழைகள், கருத்து முரண் பாடுகள் முதலியவற்றைப் பெரும்பாலும் நீக்கியிருக்கலாம். ஆயினும் இவ்வகை ஆய்வுத்துறை இன்று எய்தியுள்ள வளர்ச்சி நிலையுடன் தொடர்புபடுத்தி நோக்கும்போது, இந்நூல் ஒரு ஆரம்ப முயற்சி என்றே கூறத்தக்கது. "
மருத நிலமா? : ஏழாலையலுரினை நோக்குவோர், மிகவும்: விரிந்து பரந்து நன்செயும் புன்செயும் நிறைந்து பச்சைப்பசே லெனத் தோன்றும் அதன் அழகுத் தோற்றத்தினை விதந்து பேசுவது பெருந்தன்மை. ஆயினும், கல்தோண்டாக் காலத்து உண்மை நிலை மறுதலையாகும். முழு ஏழாலையலுரையும், குறுகிய காலமேனும் இப்பதியில் வசித்து-சுற்றித்திரிந்து நோக்கு. வோருக்கு, அதன் வளர்ச்சி தெய்வந்தந்த திருச் செயலன்று, ஊர்ப் பெருமக்கள் அயராமல், சலிக்காமல் வியர்வை கொட்டிக் கல்தோண்டி மண் நிரப்பியதன் பயன் அது எனப் புரியும்.

Page 34
60
மருதமரங்கள், அளவுக்கதிகமாக ஓங்கி வளர்ந்திருந்த ஏழாலையலுர்க் குளமும், காடடர்ந்து கேடுபயக்கும் சீவராசிகள் மலிந்து கிடந்த குளத்தின் சூழலும், மருதநிலமென வர்ணிக்கும் தரத்ததன்று. ''வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதமாகும்' என முந்தை அறிஞர்கள் வகுத்து, அதன் சிறப்பு மரம் மருதமரம்" என்று கூறினர். குளமும் குளத்தோடு மருதமரமும் செறிந்திருந் தமையால், எமது குளத்தடி நிலமும் மருதநிலமெனல் சாலாது.
குளத்தின் வட கீழ், தென்திசைகள் கற்பாரான "மொண்டி" யாகும். சமீப மேற்குத் திசையில் குறிப்பிடத்தக்க குறுகிய நிலமும் களிமண் பூமியாகும். அப்பாகத்தில் பிற்காலத்தே, காட ழித்து, வரகு, தினை போன்ற தானியப் பயிர்களுடன் சிறிதளவு நெல்லும் விதைத்ததுண்டு. குறுகிய அளவே கொண்ட காணியின் சரிபாதிப் பாகத்தில் கோயில்களும் அமைத்த பின்னர், மண்ணின் வாசி நோக்கித் தோட்டப்பயிர்களே நாட்டப்பட்டன.
எவ்வாறாயினும், அப்பகுதிக் காணியுறுதிகள், நிலப்பரப்பு (Varaku Cultivation) எனவே அறியப்படுகின்றன. நெற்பரப்பு (Paddy Cultivation) எனச் சுட்டப்பட்டில. அன்றியும், ஆழமாக வும், அகலமாகவும், அலையலையாக உழுவதை, எமது ஊரில் இந்த நூற்றாண்டில் எவரும் கண்டாரில்லை. அப்படிக் கண்ட வரும் கூட எமது ஊர்ப் பெயருக்கும் "ஏழலை'க்கும் முடிச்சுப் போட்டு வைக்கக் கூடிய நிலையினராய் இருந்திருக்கமாட்டார். ஏனெனில், ஏர் வேறு; ஏழு வேறு. முந்தியது உழவர் ஏதனம்; பிந்தியது அன்னவர்" ஆக்கி வணங்கிய திருக்கோயிற் குடிலின் எண்ணிக்கை. எமது ஊர்ப் பெருமக்கள், எங்கிருந்தாலும் கொழும்பில், இந்தியாவில், லண்டனில், பாரிசில், ஜூரிச்சில், கனடாவில், அமெரிக்காவில், ஜெர்மனியில் என, தேயங்கள் தோறுஞ் சென்று குடிபுக்கே தம் காயம் வளர்க்கின்ற கைங்கரியம் மேற்கொண்டாராயினும், ஏழாலையங்களையும், அவற்றினால் அறியப்படும் தம் அன்னை பூமியையும், ஒருபோதும் மறக்க
மாட்டார்கள்.
"எங்கடை பச்சைத் தண்ணியைக் குடித்திட்டுப் படுத்துறங்க லாம்; பசிக்காது" என்பர். படித்து முடித்துவிட்டு பாரந்தூக்கிப் பிழைப்பதும் ஓர் வாழ்வோ? எனச் சப்புக் கொட்டும் நிலை அறிவோம். அது தமிழனுக்கு நியமம்
ஏழாலையலுரிலே, முன்பு வேதாந்தம் வளர்ந்தது, "மலடியார்" என வழங்கும் மேற்கேழாலை சார்ந்த மாது சிரோன்மணி ஊடாக என்பர். அப்பகுதியின் முதற்கிறிஸ்தவராய் 1831 ஆம் ஆண்டில்

6
மாறியவரான எமர்ஸன் சின்னத்தம்பி என்பவரின் மகள் என்பர், ‘ஏழாலை’ எனும் முதனூல் ஆக்கியோன், மலடியாரின் போதனை யால் நெறிப்படுத்தப்பட்டவர் வைத்தியரான ஐயம்பிள்ளை பொன்னையா. அவரும், அவரின் தம்பியாகிய பரிகாரி அப்பு எனப்படும் ஐ. பேரம்பலமும், கிழக்கு ஏழாலையிலிருந்து வந்து மேற்கேழாலையில் மணம்முடித்தவர்கள். இவர்களும், இவர்களின் வழியில், சைவசித்தாத்தக் கொள்கையை வளம்படுத்து வோரு மான, சித்தாந்த சாகரங்கள்மு.ஞானப்பிரகாசம் பி.எஸ்ஸி. , பி.ஏ, மு. கந்தையா பி.ஏ. போன்றோர், இன்றுவரை பவர் அறிந்திராத நிலையில் நாலாதிக்கிலும் கிறிஸ்துமதக் கொள்கையராய் வாழ்பவரான நன்மக்களும், தம் மதம் போதிக்கவெனத் துறவறம் பூண்டு, இல்லறம் நீத்த வணக்கத்துக்கு உரிய குருமார், குரு பத்தினிகள் கூட, எமதுரர் ஏழு தலங்களையும், ஒதுக்கிவைக்காது பற்றுறுதியுடன் வாழ்வதனைச் சுட்டாமல் விட இயலாது.
எனினும், குறிப்பிட்ட ஏழுதலங்களையும், அவரவர் சொந்தச் சொத்தேபோல் தனிமனித அல்லது குடும்பமேன்மை கருதிடாமல், வழிபடு பக்தர்களின் பொதுச் சொத்து எனுமாறு, மாற்றி அமைத்து, நம்ஊர் உள்ளவரை மங்காது அருள் பெற, நாம் ஏற்ற வகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதனாலே, சின்னாள் வாழ்வு நடத்தி, மடிந்துபோகும் தத்தமது குடிசார்ந்தோருக்கு நினைவு மலர் வெளியிட்டு, வேண்டாத புதுச்சரிதையும் படைத்து ஊரைக் குழப்பும் செயலும் நிறுத்தப்படும்.
சும்மா கிடந்த வயோதிபர்கள், புலவர்", "பாவலர் போன்ற பட்டத்தைத் தமக்குத்தாமே சூட்டி, சாக்கடை நீரைத் தீர்த்த மெனப் பெயரிட்டுப் புதுக்கவிதை பாடி அருளும் மாய்மாலமும் ஒழிந்து போகும்.
அம்பலம் தீப்பற்றி எரிந்தால் அதை நாமேன் கேட்பான்? என்பதுபோல வாளாவிருத்தல் தகாது. ஓடோடிச் சென்று, அயல வரையும் கூட்டி, நெருப்பை அவிக்க உதவுவதே மனித நீதி: தெய்வத் தொண்டு.
அனைத்து ஊர்களுக்குமோ, அன்றி அரச ஆட்சிக்குட்பட் டிருந்த அனைத்து இராசதானிகட்குமோ, கிலமடைந்தனவும் பழமை பெற்றவையுமான தெய்வத் தலங்களுக்குமோ, ஆய்வு செய்தே நிர்ணயித்து நிறுவும் தொடர்காரணிகள் இருந்தே ஆக வேண்டும், எனும் நியதி பொருந்தாது என்பதனை நாம் உளங் கொளல் முதலாய கடமை. அவ்வாறாய ஆய்வு ஏதுக்களை அரிதின் முயன்று நிறுவிய அத்துறை சார்நிபுணர் கருத்துக்

Page 35
62
களையே, இந்நாளைய ஏனைக் கல்விமான்கள் சிலரும்-ஏன் வழி வழிவந்த சமய பக்தர்களுமே - ஏற்பதற்குப் பின்னிற் கின்றனர்.
முன்னைய தொல்பொருள் ஆய்வு நிபுணர்களாகிய மெண்டிஸ் பரணவிதாரண ஆகியோர் மறுசமயத்தவர்களாதலால், அன்னவர் முடிபினை ஏற்பதில், பெரும்பான்மைச் சமய குருமாரின் சம்மேள னம், முரண்பட்டிருந்தது புதிய செய்தி அல்ல. அன்றியும் நிலக் கிடை அகழ்வு ஆய்வுக்களமாக விளங்கும் அனுராசபுரம், பொலனறுவை எனப்படும் புலத்திய நகரம், வடபகுதிக் கந்த ரோடை, வல்லிபுரக் குறிச்சி, வரணியின் இயற்றாலை முதலாம் சில தொல்கிராமங்களை நோக்கின், அங்கெல்லாம் தமிழ் மண்ட லத்தாரின் இந்து மதஞ்சார்ந்த ஏதுக்களும், நல்லாட்சியின் சின்னங்களுமே வெளிப்படுவனவாயின. கந்தரோடையில், பழைய தமிழ்ப் பெளத்த சின்னங்கள் சிலவறையும், உடைந்து மண்ணுள் மறைந்திருந்த, கருமையும் செம்மையும் கலந்து விரவிய மட் பாண்டங்கள் சிலவற்றையுமே கண்டறிய முடிந்தது. சமீபத்திற் கூட எமது யாழ்ப்பாணச் சர்வகலாசாலையின் ஆய்வாளர் நாயகம் கண்டெடுத்து பிச்சாபாத்திரம் என மட்டிடப்பட்ட அரைகுறை மண்பாத்திரத்திலும் - "குணி’ எனும் பின்னிரு எழுத்துக்களும் கண்டறியப்பட்டது.
*பிக்குணி" எனும் பெண்பாற் பெளத்த துறவியின் பாவனை யில் இருந்ததே அத்திருவோடு. இதன் மூலம் பெளத்தம் நம் தமிழர் மத்தியிலும் நிலவியதென்று தெரிகிறது.
மாவிட்ட புரத்திலே கந்தகோட்டம் அமைப்பித்தவளும், அங்கு பரிவாரங்களுடன் தங்கியிருந்து, தனக்கு ஏற்பட்ட "குதிரை முகம்’ எனும் நோய் தீர்ப்பதற்கு, கீரிமலையின் தீர்த்தத் தலத்திலே நீராடிப் பயன்கண்டவளுமான, மாருதப் புரவீக வல்லி எனும் சோழமண்டல அரச குமாரி அமைத்த ஊரும் வயலுமே கந்தரோடை.
ஒடை எனும் நீர்பாய்ந்தோடும் வாய்க்கால், இன்று வழுக்கி யாறு' எனும் காட்டாற்றின், மூலமாக உள்ளது. யாழ்ப்பாண வரலாறுதந்த எமது அறிஞர்களின் ஏ கோபித்த முடிவு அதுவாக, சோழமன்னனை வென்று பன்னீராயிரவரைத் திறை கொண்டு மீண்டவனாகிய, கடல் சூழ் இலங்கைக் கயவாகு மன்னன், வட :பகுதியையும் அடிப்படுத்தி 'ஆட்சிபுரிந்த காலத்தில், அத்தமிழ் "மக்களைப் ப்ேளத்த மதிப்படுத்தி, நிலைகொள்ள வைத்த இடமே
கந்தரோட்ை என்பது சிங்கள சரித்திரகாரரின் கொள்கை.

63
வரணியின் இயற்றாலையில் மிகச் சமீபகாலத்தில், நிலத்தடி மண்பாகத்தில், மட்பாண்டத்துள் இட்டு வைக்கப்பட்டிருந்த மிகப் பழைய காலத்தவையான உலோக நாணயங்கள் பற்றி, யாழ் வளாகத்தார் ஆய்வு செய்கின்றனர். உரோம சாம்ராச்சியகாலத்து நாணயங்கள் அவை என்பது பூர்வாங்க அபிப்பிராயம்.
பிளினி போன்ற கடலோடிகள் மாந்தையில் வந்து கரை கொண் டமையும், அக்காலத்திலே நம் நாட்டுக் கடலோடிகள் மரக்கலஞ் செலுத்துவதில்வல்லவராய்த்திகழ்ந்தமையும், சரித்திர உண்மை. பிளினியெனும் மீகாமனின் கைப்பட எழுதப்பட்ட சான்றுகள். அவனுக்கு ஒத்தாசை புரிந்தவனும், கீழைத்தேசக் கடலின் நெளிவு சுழிவுகளை நன்கு அறிந்திருந்தவனுமாகிய இராசியா" எனும் எம்நாட்டு மீகாமன், ஆதிவாசிகளும் வட ஈழ மண்டலத்து வாழ்ந்தோருமாகிய நாகரினத்தவனோ என எண்ணத் தோன்று கின்றது! அவனது பெயர் இராசையா ஆக இருக்கலாம். உரோமர் வாயிலே உருமாறியது வியப்பன்று.
அடிக்கடி இடம்மாறும் கூட்டத்தினரோ, அன்றி வேற்றுாரில் பற்றேதும் வைத்திருந்தவர்களோ அல்லாது, தாம் முதற் குடி யேறித் தமதுடைமையே ஆக்கி, தோட்டமும் கோட்டமும் நிறுவிய ஏழாலையலுர் மக்களின் சரித்திரம், மர்மம்சூழ்ந்ததல்ல. பசுமரத்து ஆணிபோன்று, அசைக்க முடியாச் சான்றுகட்கு ஆய்வுதேடுவது, * கையின் புண்ணைக் கண்ணாடி மூலந்தான் காண்பேன்’ எனும் விதண்டாவாதம் போன்றது.
அரைக்கண்ணை மூடியவாறே, "லண்டன் கந்தையா" போன்ற புனைந்துரை புகாத் தன்மையான பல நாடகங்களை எழுதிப்புகழ் பெற்றவரான "இலங்கையர் கோன்’ என அனைத்துத் தமிழரா லும், மறு சகோதர இனத்தவராலும் புகழப்பெற்ற திரு. நடராஜா சிவஞான சுந்தரம், அவர் மைத்துனரும், உலகளாவிய எழுத் தாளனுமாகிய திரு. வை.சி. வைத்திலிங்கம் போன்றோர்ஏழாலய புவனேஸ்வரி அம்பாள் பரிபாலகர் குடும்பத்து வழித்தோன்றல் கள். அவர்கள் ஒருபோதுமே நினைத்தறியாத முடிபுகள்,எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதவை. துரும்பை எடுத்துத் தூணாகக் காட்டும் வல்லவரான அவர்கள், தமது சொந்தக் கோயிலைப் பற்றியோ, அன்னை பூமியைப் பற்றியோ,நினைத்துப் பாரழல் இருந்திருப்பர் என்று கூறிவிட முடி#மீர்? - − • −−

Page 36
7. ஏழுதலங்களும் இதர தலங்களும்
ஏழாலையலுர் எக்காலத்திலேனும், புயல், பெருவெள்ளம், போன்ற இயற்கைச் சீற்றத்தினாலோ, பஞ்சம், கொள்ளை நோய், அடாவடித்தனங்கள் போன்ற தற்செயலான சம்பவங்களி னாலோ, அன்றி நாட்டுக் குழப்பம் போன்ற போர் முறைகளி னாலோ, பாதிப்படைந்ததில்லை. அவ்வாறாய பாதிப்புகளுக்கு இலக்காகி அழிவுற்ற தானங்களின் மண்மேடுகள், பாவனைப் பாண்டங்கள், இதர ஏதனங்கள் எதுமே ஏழாலைக் கிராமத்தில் இருந்ததில்லை. ஆனால் கந்தரோடை, வல்லிபுரக் குறிச்சி, வரணி இயற்றாலை முதலாய அயலூர்கள், மேற்குறிப்பிட்ட காரணங்கள் சிலவற்றினால் மாற்றம் கண்டுள்ளன.
ஏழாலையலுரின் புவிப்பெளதிக கேந்திர நிலையினால் அனர்த்தங்கள் எதுவுமே நிகழ்ந்ததில்லை என்பது, மனதுக்கு இதந்தரும் செய்தி. நம் முன்னோர், தம் வழிவழி வந்த பின்னோ ருக்குக் கூறி வைத்து, இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சங்கையற நம்பும் காரண காரியத்தொடர் சம்பவங்களிலே , வீண் குழறுபடி புகவிடாமற் காப்பது நம் தலையாய கடமை,
எங்கிருந்தோ வந்து, வாழ்வு சிறப்பதற்கு வேண்டிய நன் னிரும் செம்மண் வளமும் குறைவுபடாத இத்தானத்தை அடைந்த வரும், பள்ளி செல்லாக் காலந்தொட்டே மனிதநேயமும், கூடவே, தெய்வ பயமும் கொண்டவருமாய எம்மூதாதையர் - விசேடமாக பாட்டிமார், "கோயிலில்லா ஊரிலே குடியிருக்க வுண்ணாது’’ என அடிக்கடி கூறுவர். "ஒண்ணாது’ எனும் அருமையான பதம் அவர் நாவில் "உண்ணாது' என மருவியமை நோக்குக. குடியிருத் தல் * வேண்டாம்' என்று கட்டளை போடாது, உபசார வழக்கா கவே "ஒண்ணாது" எனும் பதப் பிரயோகஞ் செய்வது அன்னவர் பண்பாகும்.
ஆதியிலே எமது நெடுங்கண்ணிக் குளத்தருகே, கோயில் அமைத்து, கோயிலின் அயலிலே குடியிருந்த மக்கள், காலக்

65
கிரமத்தில் தத்தமக்குச் சொந்த உடைமை ஆக்கிக் கொண்ட தூர இடங்களை நாடியமை குடிசார் ஏதுவேயாயிற்று. அவ்வாறு? இடம் பெயர்ந்து, நிலப்பரப்பினை விசாலித்தோர் கோயிலை மட்டும் மறந்தாரில்லை. முந்தைய எழுதலத்தினுக்கு அப்பால் தமக்கு உசிதமெனக் கண்ட இடங்களிலே, புதிதானதும், சிறிதா" னதுமான கோயில்களை அமைத்தனர். அச்செயலினாலே ஊரடங்கலும் வெள்ளியால், செம்பொன்னால் விக்கிரகங்கள் செய்து சிறு கோயில்களும் சமைத்து வழிபடுவாராயினர். இவ்' வாறாய வழிபாடு, போத்துக்கேய, ஒல்லாந்தர் ஆட்சிக் காலத் திலே, பக்தர்கள் பலரினதும் வளவுக் கிணற்றின் அண்மையில் தோன்றியதுண்டு. அவற்றுள்ளும் வைரவர் ஆலயமும் சூலமும்: மிகுதியாயிருந்ததுண்டு.
யாழ்ப்பாண மன்னனை 1620-ல் தோற்கடித்த பறங்கியர்,
பழிக்குப்பழி எனும் ரீதியில், அக்காலத்திலிருந்த சைவக் கோயில் களை இடித்து நிர்மூலஞ் செய்தனர் என்பது உண்மை. எனினும் எமது ஏழாலைய மகிமை, எம்மூர், அன்னவர் கண்ணிற்படாது" தப்பிப்பிழைத்தது. மேற்கெல்லைக் கிராமமாகிய மல்லாகத்திலே யும் தெல்லிப்பழையிலும் தம் மத தேவாலயங் கட்டியவர்கள், வடக். கெல்லையாம் மயிலிட்டியிலும், வடகிழக்குத் திக்கில் அச்சு வேலி யிலும் கோயில் கட்டி ஆட்சி புரிந்தவர்கள் பயிர் செழித்து, குடி செழிக்க வாழ்ந்த ஊரான ஏழாலையலுரை விட்டு வைத்தமை" புதுமையல்லவா? எனினும் எமதுார் மக்கள், அயலூர்களிலே அவர் கள் நிகழ்த்திய அடாவடித்தனங்களைப் பயத்துடன் அவதானித் திருப்பர் என்பது திண்ணம். என்றாலும் பயத்தினூடேயும் தம் வைரவர் சூலத்தைக் கிணற்றடிவேலி மறைவில் வைத்து. குளித்துக் கும்பிட மறந்தாரில்லை.
ஏழாலைக் கொல்லர், தச்சரின் கைவண்ணம் பிரசித்தம் , சூலம் ஒன்றின் மேற்பாகத்தைச் சிலுவை வடிவில் அமைத்து, வலம்-இடம் அமைந்த இரு கைகளையும் பாதியில் மேல்நோக்கி மடிக்கக் கூடிய விதமாக அமைத்து வைப்பர். சூலத்தை வழிபடும்" வேளை, யாரும் புதியவர்கள் வருவது கண்டால், மேல்நோக்கி மடிந்திருந்த இரு துண்டுகளையும் நேராக நிமிர்த்தி விடுவர். இப்போது சூலம், "சிலுவை" ஆகிவிடும். வந்தவர், வழிபாடு* செய்தவர் கத்தோலிக்கரே என எண்ணித் திருப்தியுறுவர். இவ்வண்ணம் ஆளவந்தோரும், அவர்தம் தாசானுதாசராய் வேடம் பூண்டு மாய்மாலக் கிறிஸ்தவராய் வாழ்ந்த அயலூர் அடியவர்களும் தமது வழிபடு தலங்களைச் சேதப்படுத்தாதிருக்கும்: பொருட்டுச் சிற்சில காலங்களில் கோயில்களை விட்டுத் தூரத்தே குடியிருந்தமையும் வரலாறு.

Page 37
66
போர்த்துக்கேயப் பறங்கியர் 1620-1658 ஆகிய காலப் பகுதியிலேயே யாழ்ப்பாணப் பகுதியில் ஆணை செலுத்தினர். அக்கால கட்டத்தில் நமது ஊரில் ஒரு கிறிஸ்தவரேனும் இருந்த தில்லை. மயிலிட்டியில் கோயில் கட்டி பாடசாலையும் நடத்திய *யேசு சபை" எனப் பெயரிய குருமார் கூட்டமும், அன்னவரின் ஊழியராய் வாழ்ந்த "சட்டம்பி’ எனப்பட்ட எழுதுநரும் எம்பகுதி யின் பரிபாலனத்தை நடத்தியமை நம் முன்னோர் பாரம்பரியமாய் அறிந்தவை. மயிலிட்டிக் கோயில் விரைவிற் கைவிடப்பட்ட மையால் இன்றுவரை அது "பேய்க் கோயில்’ எனவும்பாடசாலை, பேய்க் கோயிற் பாடசாலை எனவும் வழங்கும். பாடசாலையின் பெயர் சமீபத்தில் அரசுடைமை ஆனபின்பு "கலைமகள் மகா வித்தியாலயம்" என மாற்றப்பட்டது.
ஏழாலய வரலாறு கூறப்புகுவோர், கால நிர்ணயம் செய்வதில் இடர்ப்படும் சந்தர்ப்பங்களை நோக்கியமையால், அன்னவரின் போக்கினை நெறிப்படுத்துதற்கு உதவு முகத்தாலேயே முன் காட்டிய சுருக்கத்தினைத் தந்துளேன். அன்றியும் எனது முதன்மையான நோக்கு, நம் சீறாருக்கு வழிகாட்டுவதேயாதலி னால், மேலதிக விபரங்களையும் தந்துள்ளேன். விசேடமாக போர்த்துக்கேய தாய்நாட்டு அரசும், நம் நாட்டை ஆட்சி புரிந்த அரசும், கத்தோலிக்க மதம் பரப்பவென வந்துதித்த மூன்று வகை மதப்பிரிவுகளும் தத்தம் தனி நோக்கம் நிறைவேறவேண்டும் எனச் சித்தங் கொண்டு கருமமாற்றியதன் பேறாகவே, நமது சைவத்திருக்கோயில்கள் இடிக்கப்பட்டோ எரியூட்டியோ அழிக்கப் பட்டன என்பது ஆய்வாளர் கொள்கையாகும்.
அன்றிருந்த லிஸ்பன் அரசு மேற்கூறிய அட்டூழியங்களைக் கட்டளையிட்டிருப்பின், சங்கிலி மன்னனை வெற்றி கொண்ட மூன்றாவது ஆண்டிலேயே 1623ல் எம்மூர்க் காணிகளை வரிசைப் படுத்தி, ‘தோம்பு’ எனப்பட்ட உறுதிச் சாசனத்தைத் தொகுத்துக் கொடுத்த காத்திரமான செயல்முறையைக் கையாண்டிருக்கச் சித்தங் கொண்டிருப்பாரோ? டொன் பிலிப்பு மஸ்கறிஞ்ஞ எனப் பெயரிய கோவைப் பிரதிராஜாவே, முதன்மை வகித்து அதனை அரைகுறையாகவேனும் செய்வித்தான் என்பது செய்தி.
இவ்வாறாகப் பறங்கியர், மக்கள் கிலிகொண்டு தம்மதஞ் சார்வாரென எண்ணியோ, தம்மால் வெல்லப்பட்ட சங்கிலி மன்னன், முன்பு மன்னார்ப் பகுதியில் கத்தோலிக்கரில் ஐந்நூற்று வரைச் சிரச்சேதஞ் செய்வித்தமையோடு, கோட்டைப் போரிலே, தம் வெள்ளை வீரர் பலரை இழந்தமையால் ஏற்பட்ட மனோ நிலைப் பாதிப்பினாலே தான் எமது கோயில்களை அழித்தொழித் தனர் என்பதனைத் தள்ளிவிட இயலாது.

67
எவ்வாறாயினும், அப்பாவிப் பக்தர்களும் ஏனைப் பொது மக்களும் பயத்தின் நிமித்தம், தத்தம் ஆலய வழிபாட்டினைப் பகிரங்கமாக இயற்ற இயலாத நிலையிலே, அவற்றைப் பராமரிப் பதையே நிறுத்தி வைத்தமை இயல்பானதே. யாவற்றிற்கும் மேலாகக் கோயிற் பிராமணர், பூஜகர்கள் தானும், தமது பூணுலை மறைத்து மடியுட்கட்டி வெளிவந்த செய்தி பரிதாபத்திற்குரிய தாகும.
இந்நிலையில், எமது ஏழுகோயில்களும், ஏனைச் சிறு கோயில் களும் கைவிடப்பட்ட நிலையில் இருந்திருத்தல் திண்ணம் என் பதனை மனங்கொளல் வேண்டும். அங்ங்ணம் அயலூரவர்கள் வாயிலாகக் கேள்வியுற்ற செய்திகளின் நிமித்தம் ஏற்பட்ட மனப் பயத்தினால் நேர்ந்த கதியே அதுவாகும். சிலகாலமேனும் கவனிப்பாரற்றுக் கிடந்த கோயில்கள், தாமே கிலமடைதலும் காற்று வெள்ளம் போன்ற ஏதுக்களால் நிலைகுலைதலும் தவிர்க்க முடியாதனவாகப் போனமையினால், கோயில் விக்கிரகங்கள் இடம் மாறுவதும், மண்ணுள் மறைவதும், நடக்கக் கூடிய சம்பவங்களே.
சில பக்தர்கள் தெய்வ விக்கிரகங்களைக் காத்தற் பொருட்டு மண்ணிற் புதைத்திருக்கவுங் கூடும். பறங்கியர் மற்றும் உலாந் தேயர் காலத்து ஆட்சியாளரோ அன்றி பல்வேறுபட்ட சமயத் தாபனத்தாரோ செய்த முறைகேடான செயல்கள், நமது ஏழா லையலுரில் எள்ளத்தனையும் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்பது திடமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போதினும் நம் மூதாதை ஆயர் அச்சத்தின் நிமித்தம் கரந்துறைந்தமை உண்மையே.
இடை நடுவிற் சிலகாலம், எமது மூலக்கோயில்கள் கில மடைந்து, தேடிச் செப்பனிடுவாரும் இன்றிக் கிடந்தன. கோயில் களையும் குளத்தையும் அண்டி ஆதியிற் குடிபுக்கு வாழ்ந்த மக்கள் பின்னோக்கி அகன்று வாழ்ந்த காலகட்டத்திலேயே இந்திய தமிழ் மண்டலத்திலிருந்து சிலர் வந்து, தமக்கு ஆதித் தொடர்பு பூண்டிருந்த பந்துக்களோடு மணவினை மூலம் மீண்டும் இணைந்து கொண்டனர். அவர்கள் குளத்தை அண்டி, புல்லாய் நிறைந்திருந்த களிமண் தரையைச் செப்பனிட்டு, வரகு, குரக்கன் போன்ற தானியப் பயிர்களைச் செய்கை பண்ணி உண்டு வாழ்ந் திருந்தனர். பயிர் செய்வதற்கு நிலத்தை உழுத காலத்திலே முத்தர் எனப் பெயர் கொண்ட ஒருவரின் கலப்பைக் கொழுவில் சிறிய கண்ணகை அம்பாள் விக்கிரகம் அகப்பட்டமை கர்ண பாரம்பரியக் கதையாகக் கூறப்படுகிறது.

Page 38
68
திரு. வை. கனகரத்தினம் எம். ஏ. எழுதிய ஏழாலை அத்தியடி புவனேஸ்வரி அம்பாள் ஆலய வரலாறு-ஒரு நோக்கு எனும் நூலின் 9 ஆம் பக்கத்தில் 'ஏழாலையில் அமைந்து காணப் படும் ஆலயங்கள் பலவும் பத்தொன்பதாம் நூற்றாண்டையொட்டி ஏற்பட்டவையாகும் எனச் சுட்டியுள்ாார். முத்தர் என நாம் குறிப்பிட்டவரான தென்னிந்தியக் குடிமகன் பரம்பரையின் வழித் தோன்றலே அவர் சுட்டிய புவனேஸ்வரி அம்பாள் ஆலய தர்ம கர்த்தாவாகிய ஒவசியர் வை. இரத்தினம் அவர்கள். இரத்தினம் அவர்களின் மகளை மணந்தவர் திரு. இரா. வை. கனகரத்தினம் ஆவார். எனவே தமது முன்னோரின் வரலாற்றினைக்கோயிற் பரிபாலகர்கள் கூறியபடியே ஏற்றுக் கொண்டுள்ளமை புலனா கிறது. முதலி பரம்பரையினரே உண்மையில் நிலத்துள் மறைந் திருந்த அம்பாள் சிலாவிக்கிரகத்தை மறுபடியும் தாம் அமைத்த கோயிற்குடிலின் கீழ் வைத்து வணங்கினர் என்பதும், பல்லாண்டு களின் பின் வறுமை நிலை காரணமாக நித்திய பூஜை நடத்த வியலாது கைநழுவ விட்டனர் என்பதும், அவரின் பின் வந்தவரே முத்தர் என்பதும் வெறும் ஊகமல்ல.
17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் போர்த்துக்கேயக் கெடுபிடி *ட்கு அஞ்சிய மக்கள் மறைவில் வைத்துச் சிலைகளை வணங்கிய நிலை மறைமுகமாக இந்நூலில் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது.
ஆதியிலே கோயிற்குடில் அமைத்து வழிபட்ட மக்கட் குழுவின ருட் பலர், வடபால் நகர்ந்தமையாலும், குறிப்பிட்ட அன்னியர் ஆட்சியின்போது தம்மை இனங்காட்டி அல்லல் அநுபவிக்க அவர்கள் விரும்பாமையினாலும், ஏற்பட்ட சிக்கலே மேற்படி உண்மை மறைப்புக்கு ஏதுவாயிற்று. வழிபாட்டிற்காகப் பக்தர்கள் குளத்தடி நோக்கி வருதல் அருகியபோது, குளக்கரையை அண்டிய விசாலங்குறைந்த நிலமும் காலகதியிற் கைவிடப்பட லாயிற்று. பின்னர் வந்த புதியவர்கள் முதலி பரம்பரையினரோ, முத்தர் பரம்பரையினரோ அவ்வாறு கைவிடப்பட்ட சிறு நிலப் பரப்பினை உழுது, உண்டு, வழிபாடு செய்து வாழ்ந்த உண்மை நிலை மறுக்கப்பட வேண்டாத தாகும்.
அவ்வாறு உழுதவர்களின் உழவுசாலில் அகப்பட்ட விக்கிரகங் கள் ஒரு அம்பாளின் பல ரூபங்களாக இருத்தல் சாத்தியமன்று. அவை, எவ்வாறாயினும் இயற்கை மாற்றங்களாலோ, அழிவு களினாலோ, அன்றி மனிதரால் வேண்டுமென்றே எதிரி கண்ணிற். படாதவாறு மண்ணிற் புதைத்து மறைக்கப்பட்டோ நிலக்கீழ்ப் பட்டவையேயன்றி வேறல்ல. குளக்கரைக் களி மண்ணினாலோ,

69
கறையான் புற்றெடுப்பதனாலோ நிகழக் கூடிய சாத்தியமும் மறுக்க முடியாதவை.
இவ்வாறாக, ஆதித் தலங்கள் அனைத்துக்குமே கர்ணபாரம் பரியம் எனும் கட்டுக்கதை போன்ற உற்பத்திக் கதைகள் உலவு வதனால், எமது எழுதல மகிமையே மாசு படுத்தப்படும் நிலை தோன்றுவது மிக்க வருந்துதற்குரியது.
இந்நூற்றாண்டின் நடுக் கூற்றிலே, இவ்வுண்மை நிலையை தெய்வ அருளால் ஓர்ந்துணர்ந்தவரான, வைத்தியர் ஐ. பொன் னையா, அவரின் சோதரர் பரிகாரியார் அப்பு என அழைக்கப்பட்ட வைத்தியர் ஐ. பேரம்பலம், சித்தாந்தச் செம்மல் திரு. மு. ஞானப் பிரகாசம் போன்றோரும் சங்கம் அமைத்து எழுதலங்களையும் மற்றும் ஊரெங்கும் தாபிதமான கோயில்களையும் பொது ஆளுமைக்குள் ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட எத்தனங்கள், கற்பாரில் விதைத்த விதை போலாயின. பேரம்பலப் பரிகாரியா ரப்புவின் பொறுப்பிலிருந்த கோயிற் திறவுகோல், நீதிமன்றம் மூலம் கைமாறிய செய்தி ஊரறியும். அவ்வாறே, சிவத்தொண்டு புரிந்தவரான திரு. சபாபதி-சுந்தரத்தின் பராமரிப்பிலிருந்த புங்கடி அம்பலவாணேஸ்வரர் ஆலயத் திறப்பு சுன்னாகம் பொலீஸார் மூலம் கைமாறியதுவும் பலரும் அறிந்தவைதான்.
அன்பர் இரா. வை. கனகரத்தினம் அவர்களின் நூலும், புங்கடி அம்பலவாணேசர் தேவஸ்தான மகோற்சவ விழாமலரும் (தர்ம கர்த்தா சபையினர் 1972ல் வெளியிட்டது) இவ்விரு கோயில்களும் குறிப்பிட்ட இருவேறு குழுக்களின் வழிவழிவந்த சொத்தென நிலைநிறுத்த முனைகின்றன. இத்துர்ப்பாக்கிய நிலையிலேயே முந்தியவர் புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் கால நிர்ணயத்தை 1300-1985 என மட்டுப்படுத்திவிட்டார். சிவாலய தர்மகர்த்தா சபையினர், 180 வருடங்களுக்கு முன்னர், உழவர் பெருங்குடியில் சைவாசார சீலராய் வாழ்ந்த சைவப் பெரியார் சின்னத் தம்பி’யின் கதையை மையமாக வைத்து (7ஆம் பக்கம்), கோயிலின் உற்பத்திக் காதையினை நிர்ணயித்து விட்டனர். பெரியதம்பிரான் என வழங்கும் நாகதம்பிரான் கோயில் வரலாற்றில் இவ்வாறாய கால நிர்ணயம் புகுத்தப்படா திருப்பது, அத்தெய்வத்தின் மகிமையே. அத்தியடி விநாயகர், அத்தியடி முருகமூர்த்தி எனும் இரு தேவஸ்தானக் கதைகளும், முன்னவர்கள் முடிவையே கொள்ளும் எனத் தோன்றுவது பிழை யெனத் தள்ள முடியாது. ஏனெனில், அக்கோயில்கள் இரண்டும் ஏழாலையின் கிழக்குக் குறிச்சியில் வாழும் இரு குழுக்களின் ஆதிக் கத்தில் இருப்பதனாலும், அவர்களும் முந்திய இரு கோயிற் பரி

Page 39
`( ህ
பாலகர்களின் இன பந்துக்கள் என்பதனாலும், ஒருவரை மற்றவர் மறுத்துரை செய்வது துர்ல ம் ,
16ஆம் 17ஆம் நூற்றாண்டில் யாழ்துவீபகற்பம், மாந்தை, திருமலை முதலாம் தமிழர் வாழ்விடங்களுக்கு நடந்தவையான துயரச் சம்பவங்களை எமது மாணவப் பருவத்துப் பிள்ளைகள் கூட அறிந்து வைத்திருக்கிறார்கள். பாடசாலைப் புத்தகங் களே அவற்றை விரிவாக விளக்குகின்றன.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை பட்டணத்துப் பெருங் கோயில்களும், வலிகாமப் பகுதியாம் நமது வதிவிடப்பகுதிகளில் இருந்த சிறு கோயில்களும், ஒன்றில், அழித்து ஒழிக்கப்பட்டன; அன்றேல், தேடாக் கூறாக விடப்பட்டு, இயற்கையான அழிவுக்கு உட்பட்டன என்பது சரித்திர காரரிடமிருந்தன்று, எமது நான் காவது முற்பிதாக்களிடமிருந்து தெரிந்து கொண்ட உண்மை நிலைகள்.
அவ்வாறு ஆதிநம் மூதாதையர், மரநிழலின் கீழ்த் தாபித்த தெய்வச் சின்னங்களே, 19 ஆம் நூற்றாண்டிலே குடிபுக்கு, மணவினை மூலம் நம்மூர் மக்கள் பழையதலங்களையே புதுக்கிச் செப்பனிட்டனர் எனும் உண்மை நிலையை வாதப் பிரதிவாதம் மூலம் நிறுவவேண்டிய தொல்லை நமக்கு வேண்டாம்.
இதே வேளையில், ஐரோப்பிய இனத்தவரான பறங்கியர், தமது மதக் கோயில்களை, நான் முந்தி, நீழுந்தி எனும் தோர ணையில், அமைத்தனர். தெல்லிப்பழை மல்லாகத்தில் யேசு சபையாரும், உடுவிலில் பிரான்ஸிஸ்குச் சபையைச் சேர்ந் தோரும், கோயில்கள் தாபித்து மக்களை கட்டாயமாகத் தம்மதப் படுத்திய காலம் அது. நம் ஊர்க் கோயில்கள் - சிறுகுடில்கள் போன்றவை. இதனால் கைவிடப்பட்டமை விந்தையன்று. சுமுகநிலை ஏற்பட்ட காலத்தே, ஆங்கில அரசு மதசுயாதீனங் கட் டளையிட்ட காலத்தில் (1802-ம் ஆண்டின்மேல்) மீண்டும் பழைய புங்க மர நீளலிலும், அத்திமரத்தின் அயலிலுமே கோயில் களைப் பிரதிஷ்டை செய்தமை நோக்குதற்குரியது.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேதான் புதிதாக விக்கிரகங்கள் நிறுத்தப்பட்டன என வாதத்திற்காக ஏற்றுக் கொள்ளினும், குளத்தின் மேற்குப் பாகத்திலே, நேர்வழி செல்லவியலாது சுமார் முக்கால் மைல் தூரம் சுற்றியே சென்றடைய வேண்டிய தலங் களை, அதுவும் ஒன்றோடொன்று மருவியனவாக அமைப்பா

71.
னேன்? அவை, அம்பலவாணேஸ்வரர், புவனேஸ்வரி அம்பாள், விநாயகர் என்பன ஒரே புறச் சுவரினாலும், முருகமூர்த்தி கோயில் சற்றுப்பின் ஒதுக்கிய நிலையிலும் இன்றும் தோற்றம் தரு. கின்றன.
பிரதானமான இன்னுமொரு காரணமும் உண்டு, அத்தியடி புவனேஸ்வரி அம்பாள் ஆலயத் திருவூஞ்சல் என்ற வரலாற்று நூலில் பதிப்பிக்கப்பட்டுள்ள (பக் 49) பாடலின் பின்னிணைப்பு - அ வில் 'ஏழாலை-புங்கடி, புவனேஸ்வரி அம்பாள்மீது பாடிய திருவூஞ்சல்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாடல், சைவ சித்தாந்த வித்தகர் அருளானந்த சிவம் அவர்களாற் பாடப் பட்டது. மூலக் கையெழுத்துப் பிரதி தவறி விட்டதனால், எமது சிந்தாந்தச் செம்மல் மு. கந்தையா அவர்கள், தம் நினைவி லிருந்தபடி கூறக்கேட்டே பதிவாகியுள்ளது. வித்துவான் மு. கந்தையா அவர்களிடம் நான் உசாவியபோது, அம்பலவா ணேஸ்வரர் ஆலயக் காணியாகிய "புங்கடி'யில், அம்பாள் கோயி லின் ஓர் சிறுபகுதிக் கட்டடம் சேர்வதனால், அப்படி ஆயிற்று என்றனர். முற்பதிப்பான, "ஏழாலை’-நா. முத்தையா அவர்கள் பதிப்பிலும் அவ்வாறே உள்ளமை காணலாம்.
எவ்வாறாயினும், 19-ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில், தத்தமது இல்லத்தின் சூழலில் தம் இஷ்ட தெய்வங்களுக்குக் கோயில் அமைத்து வழிபடும் நியதியையே அநுசரிக்கவேண்டிய இயற்கை விதியைத் துறந்து, மக்கட் குடியிருப்பு மிகமிக அருகிய பகுதியை நாடினர் என்பது பொருந்தாக் கூற்றாகும். அவர்கள், முன்பு கோயில்கள் இருந்த விசேடித்த இரு இன மரங்களைப் பற்றித் தெரிந்துகொண்டே அவ்வாறு கருமமாற்றியுள்ளனர். குடிமக்கள் செறிவு மிகக் குறைந்ததான கோயிற் சூழலில், இன்று நித்தியபூஜை தவறாது நிகழுகின்றபோதும், வழிபடுவோர் எண்ணிக்கை மிகமிகக் குறைந்துளது. எனினும் விசேட திரு. நாட்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவர்.
கந்த உடையார் - அத்தியடி முருகமூர்த்தி கோயிலோடு சம்பந்தப்படுத்தி, முன்னாளில் வாழ்ந்த கந்த உடையார் என்பவ? ரின் பெயர் கூறப்பட்டுளது. ‘ஏழாலை' - திரு. நா. முத்தையா பதிப்பில் 151-ம் பக்கத்தில் 250 வருடங்களுக்கு முன், மேற்படி கோயிற் திருப்பணியை கந்தஉடையார் சந்ததியினர் செய்வித்த. னர்' - எனக் குறிப்பிடப்பட்டுளது. குறிப்பிட்ட கந்த உடையார் வடக்கு நோக்கிச் சென்று குடியேறியவர். தற்காலத்தில் புதுக் கிணற்றடி என அழைக்கப்படும் பகுதியிலே தம்மினத்தோடு

Page 40
72
குடிபுக்கவர். கோயிலுக்கும், தமது இனபந்துக்களின் வாழ்மனை, தோட்டந்துரவுகளுக்கும் இடைத்துரம் கூடிவிட்டதால், முருக மூர்த்தி கோயிலைத் தாமும் தம் கூட்டத்தாரும் முன்போல நெறி தவறாது ஆதரிக்க முடியாத கஷ்டநிலையை உன்னி, தமது நண்பரும் நம்பிக்கையாளருமான, வைத்தியர் ஐயம்பிள்ளையிடம் அப்பொறுப்பை ஒப்படைத்து தமக்கென அயலிலே விநாயகர் ஆலயத்தை அமைத்துக் கொண்டனர். தமது உடைமையாக வடக்கே இருந்த ஒரு காணியை அத்தியடி விநாயகர் ஆலயத்துக்கு உபயமாக்கியுள்ளார். அக்காணியிலேயே, 1940-ல் ஏழாலை சைவ மகாஜன வித்தியாலயம் அமைந்துளது. அக்காணியின் வடபால், எமதுசரின் முதற்தாபிதமான வாசிகசாலையும், ஏழாலை வடக்கு சன சமூக நிலையமும், ஏழாலை வடக்கு-கிழக்கு கிராம அபிவிருத்திச் சபையும் ஒருசேர இயங்குகின்றன.
மேற்படி காணியின் தோம்புறுதி, காலஞ்சென்ற சி. காசி நாதர் எனும் உடையாரின் நான்காம் தலைமுறையினரால், சைவமகாஜன வித்தியாலய அதிபராயிருந்த தும்பளை திரு. க. சந்திரசேகரத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவ்வோலைச் சட்ட ஏட்டினை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. இவ்வுறுதி பின்னாளில் நொத்தாரிசு மூத்ததம்பி என்பவரால், பிள்ளையார் கோயிலுக்கு உடைமையாக்கி எழுதப்பட்டுளது. கோயிலின் தர்மகர்த்தாவாக இருந்து காலஞ்சென்ற திரு. சி. முருகேசு உபாத்தியாயரினால், பாடசாலைக்கு நன்கொடையாகக்
கொடுக்கப்பட்டுள்ளது.
எழுதலங்களின் வரலாற்றுக் காலங் கடந்து, மக்கள் தம் வரழ் விடங்களை அமைத்துக்கொண்ட காலத்தே, அமைந்தது கண்ணகை அம்மன் கோயில் என அன்று தொட்டுப் பக்தியோடு வணங்கும் தலமாக முதன்மை பெற்றது.
ஏழாலையின் வடக்கு, மேற்குப் பகுதிகளில்வாழ் மக்களுக்குரிய சுடுகாடும், கிறிஸ்தவர்களின் இடுகாடும் ஒதுக்குப்புறமான மேற்கு எல்லையை அண்டி உள்ளன. சுடுகாட்டிற்குச் செல்பவர்கள் பெருவிதி வழியே சென்று, "டச்றோட்' எனப்படும் வீதிச்சந்தியின் ஊடாகச் சில யார் தூரஞ் சென்றால் துவரைக் கலட்டி எனுங் காணியை அடையலாம். அக்காணி, கண்ணகை அம்மன் கோயிலை நிறுவிய பக்தன் திரு. தாமோதரம் பிள்ளை இராசா வுக்குச் சொந்தமான கல்நிலம். அதனை அடுத்து, 19-ஆம் நூற் றாண்டின் புகழ்பூத்த கல்விமானும், பதிப்பாசிரியர், நீதிபதி, நியாயவாதி எனும் பெரும் பதவிகளை வகித்தவருமாகிய

73
C. W. கிங்ஸ்பெரி என்ற சி. வை. தாமோதரம் பிள்ளையும், அவர்தம் தாய்தந்தையரும் வாழ்ந்துபோன காணிகளும் வீடுகளும் இருந்த "சட்டம்பியார் வளவு. இது டச்வீதியின் மேற்கு எல்லைக் காணி. சட்டம்பியார் வளவுக்கு, மேற்கெல்லைக் காணியே துவரைக்கலட்டி,
பூரீ தாமோதரம்பிள்ளை - இராசா எனும் பக்தன், அக்காலத் திலே கால்நடையாகக் கதிர்காமயாத்திரை செய்த, புதுக்கிணற் றடிப் பக்தர்களோடு தாமும் செல்வார். அவ்வாறு கால்நடையாக கதிர்காமம் சென்றவர்களில் நல்லதம்பி எனும் வயோதிபரை எனது சிறு வயதிற் பார்த்திருக்கிறேன். ஊரவர்கள் அவரைப் பேயாடி நல்லதம்பி எனச் சுட்டுவர். குலவத்தை எனப்படும் பெருந் தோட்ட நிலத்தின் உரித்தாளராய நல்ல கமக்காரன் அவர். அவரும், பூசாரி ராசா எனப் பிற்பட்ட காலத்தில் பக்தியோடு அழைக்கப்பட்ட எமது அம்மன் தாபகரும் ஒன்றாகவே வேறு பக்தர்கள் சகிதம் கால்நடையாகப் புறப்படுவர். ஏழாலை வடக்கு ஆலங்கட்டை மாணிக்க விநாயகர் ஆலயத்தில் வணக்கஞ் செலுத் தியே பயணத்தைத் தொடங்குவர். அன்றைய இருண்ட காட்டு வழிகளைத் தாண்டி, பற்பல கஷ்டங்களையும் மீறி, ‘வத்துப் பளை நோக்கிப் பலநாட்கள் நடப்பர். முள்ளியவளைக்குச் சமீப மாயிருக்கும் வற்றாப்பளை எனும் தலப்பெயரை, நம்மவர் வத்துப் பளை, பத்துப்பளை எனப் பலவாறாக அழைப்பர். எனினும் அவர்கள் அத்தலத்தில் காணும் தெய்வம் பெத்தாச்சி கண்ணகை அம்பாளே.
வடபகுதியின் நாலாதிசையிலுமிருந்து, கால்நடையாகவே கதிர்காமம் செல்லும் மெய்யடியார்கள், பங்குனித் திங்களில் வற்றாப்பளைக் கண்ணகை அம்பாளின் பொங்கலும் குழுர்த்தியும் கண்டே, அப்பாற் செல்வர். எனவே பங்குனி பிறந்ததும் கால்நடை யாத்திரையை ஆரம்பிப்பர். கதிர்காம உற்சவம், ஆடி மாதத் திலேயே ஆரம்பிக்கும். இடைப்பட்ட காலம் நீண்ட வழிநடையும், ஊடேயுள்ள திருத்தல வணங்குதலுமாக, பக்திப் பரவசமாக இனிதே நடைபெறும். எமது இராசாப் பூசாரியாரோ, வற்றாப் பளைப் பெத்தாச்சியோடு கூடிக் குலாவியதோடு ஆத்மதிருப்தி யுற்று, ஆனந்த பரவசராய் ஊர் திரும்புவார். நல்லதம்பிப் பக்தர் ஏனையோருடன் கதிர்காமம் சென்றே திரும்புவார்.
கால்நடை யாத்திரை, நடைபவனி எனுங் கடின உடற் செயல்கள் ஏழாலைப் பக்தர்களுக்கு, தவளையின் நீச்சல் போன்ற அனாயாசமான காரியங்கள். திருக்கேதீஸ்வர ஆலய புனரமைப்
5

Page 41
74.
புக் காலமுதல், நாடு பேதமடைந்து நிலைமை சீர்கேடடைந்த காலம்வரை, ஆண்டுதவறாது அவர்கள் நடைபவனி சென்று, பக்திப் பரவசமூட்டிவந்தனர். நாடு சீரமையுமானால், இன்னமும் தொடர ஆவலோடு காத்திருக்கின்றனர். நடை பவனியின் போது அவர்கள் ஆடுகின்ற கூத்தும், பாடுகின்ற திருமுறைகளும் பார்த்து நிற்கும் கிழங்களையும் துள்ளவைக்கும். இப்பவனிக்கு எமது ஞானப்பிரகாசர், செல்லத்துரை, தருமலிங்கம், சண்முகவடிவேல் போன்ற பக்திமான்கள் தலைமை தாங்கிச் செல்வர்.
வற்றாப்பளைக் கண்ணகை அம்பாளை உள்ளத்தால் வரித்த பூசாரியார், தமது தோட்டவேலை ஒழிந்த வேளைகளில், தமது இல்லத்தருகே புறம்போக்கான மொண்டித் தரையிலே, சூலமும் கல்லும் நிலைநாட்டித் தனிஆராதனை செய்துவந்தார். வெள்ளி செவ்வாயில் பரவசங்கொண்டு, கலையாடுவதும் உண்டு. இவரின் பரவசங்கண்டு, அயலிலே வசித்த வன்கண்ணர் சிலர், தாமும் தம்மை அறியாராய்க் காலைத்தூக்கி ஆடத் தலைப்பட்டனர். அதிக காலஞ்செல்லு முன்னரே, இத்தலமகிமை அயலூர், பிறவூர் என எங்கும் தெரிவதாயிற்று.
தொலைதூரங்களிலிருந்து " காணார், கேளார், கால்மூடப் பட்டோர், பேணுனர் இல்லோர், பிணிநடுக்குற்றோர் யாவரும் வருக வெனப் பத்தினித் தெய்வம் அழைப்பதாயிற்று மனக்குறை யுற்றோரும், பணத்தினாற் பெரும் பேறு பெற்றும், உடற் குறை தீராத பெருநோயாளரும், ஏழாலை நோக்கித் திரண்டு வந்தனர்.
இன்று பூசாரியார் வழிவந்த அவரின் சகோதர் பூசாரி கார்த்திகேசு பாற் குடிகொண்டிருந்த அம்பாள் சக்தி, அன்னவர் சமாதியெய்திய பின்னர், அவரின் ஏகபுத்திரரான பூசாரியார் சுந்தரம் கோயிலின் நித்திய கடமைகளைக் குறைவற நிகழ்த்து வது போற்றத் தக்கது. அவரின் கடமைகளுக்கும் திருநாள் விழாக் களுக்கும் பலவாற்றானும் உதவுமுகமாக, ஊர்ப் பக்தர் குழு வொன்றும் கருமமாற்றுகின்றது.
சப்த கன்னியர் : ஏழாலையலுரில் சப்த ஆலயங்கள், சப்த வித்தியாலயங்கள், சப்த சமூகங்கள் எனப் பேசப்படுவது வழமை. சமீப கால் நூற்றாண்டுகளினுள் “சப்த கன்னியர்' எனும் (பெண்) மகடூஉத் தெய்வப் பெயர்கள், சிறுவர் முதல் வயது முதிர்ந்த கிழவர்கள் வரை அனைவராலும் உரைக்கப்படுவது. "ஏழு கன்னியர்' என்பது பக்தியோடு நினைத்தே தென்மூலைக் குறுச்சி யின் அருள்நிறை கண்ணகை அம்பாள் திருக்கோயிலின் பூசகரா யிருந்த தாமோதரம்பிள்ளை - கார்த்திகேசுச் சுவாமியிடம் நல் வாக்குப் பெற்று, அம்பாள் அருள் கிடைக்கப் பெற்றவர்களாவர்.

75
கள்ள மேதும் அறியாத சிறுமிகளான வெள்ளை உள்ளத்தவர் எழுவரும் யாழ் துவீப கற்பத்தின் பல திக்குகளிலிருந்தும், தம் உடல் நோய்க்கு மருந்து தேடித் தமது பெற்றேருடன் கண்ணகை அம்பாள் சந்நிதிக்குச் சென்றவர்கள், தமது உடல் உபாதை நீங்கப் பெற்றதோடு, அவ்வப்பகுதி மக்களின் ஆன்மநோம் தீர்க்கும் பேரருளையும் ஒருசேரப் பெற்றுத் திரும்பினர்.
கண்ணகை அம்பாளின் மூர்த்திகரம், அறியாப் பாலகிகக் ஊடாக ஏனை ஊரழாவிய பக்தர்களையும் தன்வயப்படுத்துவதச யிற்று. "ஏழு கன்னியர்' எனும் நாமம் அனைவராலும் உச்சரிக்கப் பட்ட போதிலும், அனைவரைப் பற்றிய பூரணவிபரங்களையும் தெரிந்தவர்கள் எவருமே இலர். அதுவும் அம்பாளின் திருச்சித்தம், போலும்
மண்டை தீவில் ஒரு கன்னி; அச்செழுவில் மறுகன்னி, ஏழாலையில் இரு கன்னியர் எனக் கூறுவரேயன்றிப் பூரணபட்டி யல், பூசாரியாருடன் கூடவிருந்து தொண்டு இயற்றி இன்றும் வாழ்ந்திருப்போருக்கும் வெளிப்படாத சூக்குமம் யாதோ?
ஏழாலையிலுள்ள இரு கன்னியரும் நாடறிந்த சிறுமிகளாவரி. ஒருவர், *மைனா" என்றழைக்கப் படுபவர். அடுத்தவர் வசந்த, குமாரி எனும் இயற்பெயர் கொண்டவர். இருவரது இல்லங்களும் ஏழாலை வடக்குச் சந்தியிலிருந்து மயிலங்காடு நோக்கிச் செல்லும் விவசாயவிதி மருங்கிலே உள்ளன. கத்தோலிக்க தேவாலயச் சந்திப்பிலிருந்து தென்முகமாக 100 யார் தூரத்தில் 'மைனர்" எனுங்கன்னியின் கோயில் உளது. சிறு கொட்டகையே கோயி லாயினும், ஆரம்ப காலத்தில், திருவருள் துணைகொண்டு நாடே வியக்கத்தகு திருவாக்குகளை அருளியதுண்டு. அரச திணைக் களங்களில் உயர் பதவி வகித்தோர், உடல் உளநோயுற்றோர். பெரும் வர்த்தகர்கள் எனப் பலவகைப்பட்ட மக்கள் கூடி நல்வார்த்தை கேட்டுத் திருப்தியுறுவர். ஏதோ புறக்காரணங். கொண்டு, தேவியின் கடாட்சம் கிட்டாததினால் புதுமையும் மங்கி, நாளடைவில் அனைத்துச் சத்காரியங்களும் குறைவு படலாயிற்று. எனினும் எஞ்சி நின்ற பக்தர் கூட்டம், நித்திய கருமங்களைத், தளரவிடாது நாளது வரை குறைவின்றி நடத்திக் கொண்டிருக், கின்றனர்.
அக்கோயிலின் தென்திசையில் சுமார் 200 யார் தொலைவில் களபாவோடை எனும் சிறு குறிச்சி உள்ளது. சாதாரண கமக்
ாரனாகிய ஏழாலை கிழக்கைச் சார்ந்த சண்முகம் செல்லத்துரை என்பவருக்கும் களபாவோடை சுந்தரத்துக்கும் மக்கள் ஒன்படி

Page 42
76
தின்மர், அவருள் எழுவர், பெண்கள் அவர்களுள் வசந்த குமாரி எனும் எட்டாவது பிள்ளை, சிறுவயது முதலே ஏனைச்சகோதர சகோதரிகளிலும், வித்தியாசமான துடுக்கும், பிடிவாதமும் கொண்டவராக விளங்கினார். பள்ளி செல்லும் பிள்ளைப் பருவத் திலேயே, அப்பிள்ளையின் நடவடிக்கைகள் வித்தியாசமாகப் பெற் றோருக்குத் தோன்றுவதாயிற்று.
அன்றொரு நாள், தொண்டமானாறு செல்வச் சந்நிதி
கோவில் பஜனைக் கூட்டத்தாரோடு சென்றபோது, மயக்கமுற்று வீழ்ந்த வசந்த குமாரிக்குப் பலவித மருத்துவ சிகிச்சையளித்தும் உடனிலையில் மாற்றம் ஏற்படாமையால், பெற்றார் மனஞ் சோர்ந்து சஞ்சலப்பட்டவேளை, தனக்கு வணக்கத்துக்கு ஓர் அறையை ஏற்படுத்தி உதவுமாறு வேண்டினள். அங்கு சுமார் 6 மாதகாலமாக அம்பாள் படங்களை வைத்துப் பூஜித்து வந்தபின் திடீரென ஒருநாள், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனக்கென தனி ஆலயம் அமைத்துத் தருமாறு வற்புறுத்தி வேண்டியமையால் அதற்குரிய ஆயத்தங்கள் நடந்தேறின.
கோயில் அமைத்தல் : சுபவேளையிலே, அளவெட்டியைச் சேர்ந்த அருட்கவி சீ. வினாசித்தம்பி நிலையம் எடுப்பதற்கென அழைக்கப்பட்டிருந்தார். அவரால் சரியான நிலையத்தைக் குறிப்பிட முடியாத நிலையில், வசந்த குமாரியைத் தூண்டி நின் றார். அவள்தன் கையிலிருந்த பிரம்பினை கீழே நழுவவிட அப் பிரம்பு குறிப்பிட்ட இடத்தில் விழுந்து குத்திட்டு நின்றதும் அதி அற்புதமே! அதே தானத்தில் ஆலயம் அமைவுற்றது.
முறைப்படி வாலஸ்தாபன வைபவம் செய்து, அம்பாள் சிலை வைப்பதற்காக, ஏழாலைக் கண்ணகை அம்மன் கோயிலுக்குச் சிலையை எடுத்துச் சென்று அங்கு வேண்டிய திருச் சடங்கா சாரங்கள் பக்தி சிரத்தையோடு நிறைவேற்றப் பட்டன. புதிய கண்ணகை அம்மன் சிலை, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புதிய ஆலயத்திலே நிலை நிறுத்தப்பட்டது.
அன்றுமுதல், களபாவோடை நித்திய திருவிழாக் கோல மாகக் காட்சி அளித்தது. பக்தர் குழாம் திரண்டு வந்து, ஆராதித்துச் செல்வதாயிற்று. அன்றுமுதல் சிறுமி வசந்தகுமாரி யின் நாமம் "சின்னம்மன்’ எனப்பக்தியோடு பேசப்படுவதாயிற்று. பெரிய அம்மன், ஏழாலைத் துவரைக் கலட்டியில் குடிகொண் டிருக்கும் கண்ணகை அம்மன் ஆகும்.
1990-ஜனவரி 31ஆம் நாளில் ஒரு திருக்கோயிலுக்கு வேண்டிய ஏதுக்கள் அனைத்தும் (உள்ளகம்) நிறுவி, மகாகும்

77
பாபிஷேகமும் நிறைவுற்றது. கடந்த 1992ஆம் ஆண்டிலே அம்மனுக்குச் சித்திரத் தேரும் கட்டி வெள்ளோட்டமும் நிகழ்வதா யிற்று.
கண்ணகை எனும் மானுடப் பெண்ணைத் தேவ அணுங்கென மதித்து ஆராதித்தல் ஆகமவிதிக்குட்பட்ட செயலன்று. எனவே கண்ணகை அம்மன் கோயில்களுக்கு, புவனேஸ்வரி, இராஜேஸ்வரி எனும் பெண் (மகடு உத்) தெய்வப் பெயர்களைச் சூட்டுதலே விதி என ஆறுமுக நாவலர் அவர்கள் பிரசாரஞ் செயதமையால், சில கோவில்கள் அப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டன. ஏழாலை அத்தியடி அம்பாள் ஆலயமும், அவ்வாறு பெயர் மாற்றம் பெற்றதே.
இன்றைய களபாவோடைச் சின்னம்மன் சன்னிதியும், யாரும் தூண்டாமலே, நாகபூஷணி அம்பாள் எனப்பட்டது. சின்ன அம்ம னின் இயற்பெயரையுஞ் சேர்த்து 'வசந்த நாகபூஷணி அம்பாள்" எனப் பொருத்தமுறப் போற்றி உய்வது தகுதியே.
மொத்தத்தில் இவ் இருபதாம் நூற்றாண்டின் இறுதி இரு தசாப்தம், ஏழாலைக் களபாவோடை வசந்த நாகபூஷணி அம்மன் எனும் சின்னம்மன் திருவருளே மேலோங்கி, பக்தரின் நோய் நொடிகள், கஷ்ட நஷ்டங்கள் தீர்த்தருளும் வல்லமை பெற்று நிற்பது கண்கூடு. தினந்தினம் காலையில் 9-00 மணியானால், மடப்பள்ளியிலே நெருப்புப் புகையும்; மதியம் தெய்வத்துக்கு நைவேத்தியம் பண்ணி, பண்ணிசையும் பஜனையும் முடிந்தால் பக்தர்களின் வயிற்றுப் பசிக்கு, உண்டி பரிமாறப்படும். பிராமணர், பண்டாரங்கள் போன்ற எவரின் அறியாமொழி வேண்டுதலும் அங்கு நடைபெறுவதில்லை. சின்னம்மனே தீபதூபங்காட்டிப் பரவசத்தோடு - வாய்வார்த்தையின்றி - தேவியின் இன்னருளை உளமார உருகி வேண்டி நிற்பார். அங்கே ஆவேச அசைவுகளோ அன்றி ஆரூடங்களேர் எதுவும் நிகழ்வதில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துப் பேராசிரியர்கள் முதல் பல்வேறு தரத்தினரான பொதுமக்களும், வசந்த நாகபூஷணியை ஒரு முறைதானும் தரிசிக்காதோர் இலர், எனும் அளவிற்கு ஏழாலையலுர் , திருவூராய், திருக்கோயில் மலிந்த திருவூராய்த்திகழ்வது, இவ்வூரின் ஆதி எழுதலங்களினதும் மகிமையேயாகும். மதுரையும் சிதம்பரமும் கோயில் மாநகரங்கள் எனுந் தகுதி பெற்றவை எனின், எமது ஏழாலையூர், "திருக்கோயிலூர்" எனப் படல் முக்காலுந் தகுதியே.

Page 43
78
ஊரின் கிழக்கெல்லையில், காடுபோல் ஓங்கியும் விழுதுநாட்டிப் பரந்தும் விழங்கும் கன்னிமார் கோயில் ஒன்றுதான் தோன்றியாக நிற்கின்றது. அதனை ஆதரிக்கும் பக்தையும் வயதிற்குறைந்த வரே. அதன் அயலில் வீரமனைக் குறிச்சியில், நாச்சிமார் கோயில் ஒன்றும் சமீபத்தில் புதுக்கிக் கட்டப்பட்டுளது. மேற்கெல்லையாக இன்று குறிக்கப்படும் கட்டுவன் எல்லையில், ஏழாலைப் பழங்குடி மக்கள் தாபித்து வணங்கும் கன்னியர் கோயில் ஒன்றுண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக, எமது நெடுங்கன்னிக் குளத்தின் கிழக்குத் திசையில், குடியேற்ற காலமுதல் பெரியதம்பிரான் என வழங்கும் நாகதம்பிரான் கோயிலும், நீர்பாய்ந்து வரும் வாய்க்கா லோரத்தில் உள்ள சாடியடி நாக கன்னிமார் கோயிலும் பழமை பேற்ற தலங்களாகும்.

8. ஏழாலையவூரின் சமய மரபு
நம் மக்கள் ஆதியில் சைவசமயத்தவராகவே இருந்தனர். காலகதியிலே, அன்னிய ஐரோப்பியர், அராபியர், வர்த்தக நோக் கிலே நம்முள் விரவிக்கலந்து, தத்தம் வழிபடு மார்க்கங்களை அநுட்டித்து வாழ்ந்தனர். எமது நாட்டின் வைரமும், முத்தும் யானைத் தந்தமுதலாய ஆடம்பரப் பொருள்களும், கறுவா, ஏலம், கராம்பு, இலவங்கம் முதலாய வாசனைப் பண்டங்களும், அந்நிய ரின் வருகைக்கும் அவர்தம் மதப் பரம்பலுக்கும் ஏதுவாயின. வியாபார நோக்கிலும், ஆட்சி அதிகாரஞ் செய்யவும், காலத்துக்கு காலம் இப்பகுதிகட்கு வந்து, சிலகாலந் தரித்துச் சென்ற சிங்கள பெளத்தரின் மதமும் சிற்சில தானங்களில் நிலைகொண்டன.
ஆயின் எமது ஏழாலையலுரின் எப்பாகத்திலும் சைவம் தவிர்ந்த வேறெம்மதமும் புகுந்ததில்லை. 1816-ஆம் ஆண்டுவரை இச்சீரிய மதநிலையே நிலவியது. எமது அயலூர்களாகிய மல்லா கத்திலும், தெல்லிப் பழையிலும், மயிலிட்டியிலும் 1620-ஆம் ஆண்டிலேயே போர்த்துக்கேய நாட்டவர் (சங்கிலி மன்னவனை வென்று) தமது கத்தோலிக்கமத தேவாலயங்களைத் தாபித்தனர். அன்னவர், பட்டணத்திலேயும் ஏனைய பகுதிகளிலும், சைவக் கோயில்களைத் தரைமட்டமாக்கி, அப்பகுதிகளில் வாழ்ந்த மக்க ளையும் கோவிற் பூஜகர்களையுங்கூடத் தம்மதப்படுத்தினர். இத் துணையும அரச உதவியோடு, லிஸ்பனிலிருந்து இறக்குமதியான யேசுசபை, பிரான்சிஸ்கன்சபை, லுத்தரன் சபை ஆகிய வைதிகக் கிறிஸ்தவ கூட்டத்தாரினாலேயே மேற்கொள்ளப்பட்டன. ஆயி னும் எம்மூரில் அன்னார் செயலும் நடைபெறவில்லை.
முந்தியவர்களை வென்று 1658-ல் ஆட்சிக்கு வந்த ஒல்லாந் தர், பழையகுருடி கதவைத் திறவடி’ எனும் மொழிக்கு ஒப்ப தாமும் போர்த்துக்கேயர் விட்ட இடத்திலிருந்து, ஆரம்பிக்கலா யினர். போர்த்துக்கேயர் கட்டிய விசாலித்த தேவாலயங்களைத் தம்மத ஆசார வழிபாடுகளுக்கென உபயோகித்தனர். முன்னர் கத்தோலிக்க மதத்தை அனுஷ்டித்த சுதேசிகளைத் தமது சீர்

Page 44
80
திருந்திய கிறிஸ்தவ மதத்திற்கு-புரட்டஸ்தாந்து மதத்திற்குமாறச் செய்தனர். அக்காலத்திலே 18 இறைசால் கைலஞ்சம். பெற்று, தொன்பிலிப்பு முதலியார் போன்ற கெளரவப்பட்டங்களை யும், வேறுபல சலுகைகளையும் ஈந்து, தம்மதப்படுத்தியமை நோக்கலாம். அவர் காலத்துச் சரித்திரம் எழுதிய, உள்ளூர் அறிஞர்கள் கூற்றின்படி, அச்சுவேலியில் கிறிஸ்தவனாக மாறிய பிலிப்பு எனும் பிராமணன், திருமறைப் பாடல்களை இயற்றிப் பரப்பினனாம். அவன் நல்ல அறிவாளன் எனவும், மற்றொரு பிராமணன் அப்படிப்பட்ட பாடல்களை, ஏற்ற சந்தத்தோடு சந்தையில் நின்று பாடி, மக்களை வசப்படுத்துவானாம்.
இவை நடந்த காலத்திலே தானும், எமது ஏழாலையலுரில் வேற்றுமதம் புகுந்ததில்லை. ஏழுதலத்துக் குடிமக்களின் சமய வைராக்கியமும், அவர்களின் முற்சந்ததியார், அமைத்து பக்தி சிரத்தையோடு வழிபட்டு வந்த ஏழுகோயில் மகிமையுமே அன்னி யர் இங்கு புகுமுனையாமைக்கு மூலகாரணம் ஆகும்.
பரோபகாரிகளாய் வாய்த்த நல்லாசான்கள், சிறுவயது முதல் தம் பள்ளிகளிலே சிறந்த நீதிநூல்களைக் கற்பித்தமையால், ஊர் மக்கள் கல்வித் தேவைக்கென அயலிடஞ் செல்லவேண்டிய நிலைமை தவிர்க்கப்பட்டமையும், மற்றோர் காரணமெனக் கொள்ளல் பிழையன்று என்பது எனது அபிப்பிராயமாகும். அக் காலகட்டத்தில், வீட்டுத் திண்ணைப் பள்ளிகளிலே, முற்கூறிய சுயலாபங் கருதாதவரான பண்டிதர்கள், மற்றெள்வூரிலும் காணக் கிடைக்காதவறாய், பெண் கல்வியையும் ஊக்குவித்தனர். தேவார திருவாசகம், நீதிநெறி போன்ற சைவம் சார்ந்த பயனுள்ள நற்கல்வியையேனும் ஊட்டுவதற்கு, அவர்கள் முன்னோடிகளாய்த் திகழ்ந்தனர். இவர்களுள், வடபால் சண்முகச் சட்டம்பியார், சோமர்-இலகர், சட்டம்பிவேலு எனப் பிரசித்தம் பெற்ற நீத வான் வேலுப்பிள்ளை என்போரும், தெற்கில் நீலயினார் எனும் நீலநயினாரும் இவ்வாறான கல்வியை ஊட்டியமை அறியக் கிடக்கின்றது. மதுவிலக்கு நாடகஞ் செய்த சண்முகம்-கந்தவனம், அவர் மருகர் யாக்கோபு உபாத்தியார் போன்ற பல பண்டிதர் களும் தோன்றினர். பாரத விருத்தம் பாடிக் குதூகலிக்கும் இளை யான் குடி சார்ந்த சின்னக்குட்டியும் இக்கால அறிஞருள் அடங்குவர்.
குறிப்பிட்ட காலகட்டம் 17-ஆம் நூற்றாண்டின் அரைக் கூற்றிலிருந்து 19-ஆம் நூற்றாண்டின் காற்கூறு முடியவுள்ள நீண்ட எல்லையினுள் அடங்கும் சரியாகக் கணக்கிட்டுக் கூறுவ தாயின், 1825 வரையுள் அடங்கும். காலப்பகுதி, ஏழாலையில் மற்றெச் சமயமும் புகாதவாறு காத்து நின்றனர் எம் மூதாதையர்.

81.
அயலூர்களில் ஏற்பட்டிருந்த அன்னிய ஆதிக்கமும், அவர் அனுஷ் டித்த மதங்களின் செல்வாக்கும்,எம்மக்களிடம் நேரடித்தாக்கத்தை ஏற்படுத்தாத போதிலும்,கேள்விச் செவியராக, அக்கால அராஜகங் களை அறிந்திருந்தமையால், அவ்வாறாய கட்டாய நடவடிக்கை களைத் தவிர்ப்பதற்காய சிலமாற்று நடவடிக்கைகளைக் கைக் கொண்டமையும் உண்மையே. எனினும் தம் முற்பிதாக்களினாலே பக்தியோடு பூஜிக்கப்பட்டவையான ஏழுதலங்களையும் பாதுகாத் தும், வழிபாடியற்றியும் வந்தமை போற்றத்தக்க செயலே. சிற்சில சந்தர்ப்பங்களிலே, அன்னியரின் அழிவுத் தொழிலுக்கிடே கொடாதபடி கோயிற்றலத்தை அடிக்கடி அணுகாதிருந்தமையும்
தவிர்க்கமுடியா உபாயங்களேயாம்.
19-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தத்தின் பின்னே இது காறும் நாம் நோக்கியவாறான சமயநிலையிற் சிறுகச் சிறுக மாறுதல் ஏற்பட்டமையை உளங்கொலல் வேண்டும். 1820 தொடக்கம் 1816 வரை நிகழ்ந்தேறிய வற்புறுத்தல், சிறு சலு கைகள், போலியான கெளரவப் பட்டங்களும், உத்தியோகங்களும் போன்ற மாய்மாலங்களால் ஆட்கொள்ளப்படாது, சைவம் காத்த ஏழாலைப் பெருமக்கள் வாழ்வில், கிறிஸ்தவமதம் புகுந்ததனால் நிலைமை மாறுபடலாயிற்று.
ஆங்கில அரசினால், மக்கள் தாம் விரும்பும் எம்மதத்தையும், பிறர் தலையீடின்றி அனுஷ்டிக்கலாம்' எனப் பிரகடனப்படுத்தப் பட்ட சட்டம் எம்மூர் மக்களை எவ்விதத்திலும் பாதிப்பதாய் இருந்ததில்லை. ஊரடங்கலும் சைவமும் சைவ நீதியுமே உயற் வுற்றிருந்தது. எனினும் 1816-ஆம் ஆண்டில் ஆரம்பித்த பொதுப் பள்ளிமால்களின் தோற்றுவாயும், சுதந்திரமாகவும் அத்தோடு பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாததுமான அடெரிக்க பாதிரிமாரின் பிரவேசமும், ஊரிலே மாற்றத்தைத் தோற்று வித்தமை நோக்கற்பாலதாகும்.
மேற்கூறிய மாற்றம், 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பித்து, வழி வழியாகத் திண்ணைப்பள்ளிகளை நடத்திக் கொண்டிருந்தவர்களும், ஊர்மக்களுள் உயரிடம் வகித்த புத்தி ஜீவிகளுமான, சட்டம்பிமாரிடத்திலே, முதன்முதற் புகுந்தமை அறியலாம். ஏழாலையின் முதல் கிறிஸ்தவரென ஆவணச் சான்றும், ஊர்மக்கள் சொற்சான்றும் பெற்றவரான வேத நாயகம்-சண்முகம் என்பவரும், அவர் குடும்பத்தாரும், பல தலை முறை கடந்த சீரிய சைவபக்தர்கள். பரசமய வாசனையே அறியா தவர்கள். விதிசெய்த விளையாட்டே போல, அமெரிக்க பாதிரி பூவரின் கல்விக் கொள்கையிலே மையல் கொண்டு, அவரை அண்டியமையும் அறிவோம். ஏழாலையின் வடபாகமான புதுக்

Page 45
82
கிணற்றடியில், எழுதலவளவு எனும் எம் சந்ததியாரின் நீண்ட காணியின் வடபால் வசித்தவர். அயலிலேயிருக்கும் வினாயகர் தலத்தில் நித்தியம் பூஜை செய்து உணவுண்டு பழகிய உத்தமர். அமெரிக்கரான பூவர் நடத்திய, தெல்லிப்பழை அமெரிக்க மிஷன் ஆங்கில தருமப்பாடசாலையின் கல்வி முறையில் தம்மனதைப் பறிகொடுத்தமையாலேயே, அடிக்கடி தமது திண்ணைப் பள்ளி ஆசிரியரோடும் தெல்லிப்பழை நோக்கி நடக்கலானார். அமெரிக்க ரின் மூன்று (3 R) 'ஆறெனப்படும் கல்விமுறையை நன்கறிந்து, முன்னரே தாம் கற்பித்துவந்த 'எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும்' எனும் பாங்கில் அமைந்த கல்விமுறைக்கு மெருகூட்டத் தலைப்பட்டுள்ளார். சண்முகச் சட்டம்பியாரின் எண், எழுத்து என்பதனையே, அமெரிக்க கல்வி வல்லோர் 1. Reading, 2. Writing, 3. arithmatic 6T6T 6(55.56irst Gold as T600Ts) Tib. எனினும் எமது பண்டைய படிப்பு, பிந்தியோரின் கற்பித்தல் முறையினால், மெச்சத் தகுந்த புது மெருகு பெற்றமை உண் மையே. .
வேதநாயகம் சண்முகச் சட்டம்பியார், காலகதியில் கிறிஸ்தவ ரான செய்தி பிறதோர் சந்தர்ப்பத்திலே நோக்கினோம். அவரும் அவர் குடும்பமும் மதம் மாறியதால், அப்பகுதியில்பாரிய மர்ற்றம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக, சைவசமய மறுமலர்ச்சியே -ஏற்பட்டது எனலாம். "கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்" என எமதுார் மக்கள் கூறுவதுபோல, கிறிஸ்தவ வளர்ச்சிகண்டு சைவரும், தம் சமய உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கத் தலைப்பட்டனர். அதுகாறும் அவ்வித செயற்பாட்டில் சைவத் தலங்களோ, வல்லவரான சைவப் பெரியோர்களோ ஈடுபட்ட தில்லை எனலாம்.
வடக்கு ஏழாலையின் நிலை இவ்வாறிருக்க, ஏணைய கிழக்கு, தெற்கு, மேற்குப் பாகங்களின் நிலையையும் நோக்குதல் பயன்தரும் . 19ஆம் நூற்றாண்டின் நடுக்கூற்றிலிருந்து, 20ஆம் நூற்றாண்டின் காற்கூறுவரை, மேற் சுட்டிய பகுதிகளிலே குறிப் பிடத்தக்க சமய மர்ற்றங்களும், அவற்றுக்கு உதவுமாறாய பள்ளித்தலங்களும் தோன்றியதற்கு, ஆதாரம் உளது 1884 ஆம் வருடத்தில், சாந்த இசிதோர் எனும் நாமத்தில்ஒரு தேவாலயமும் பாடசாலையும் தாபிதமாயின. 19ஆம்நூற்றாண்டின் இறுதிக்காற் சகாப்தத்தில் கிழக்கிலே திண்ணைப் பள்ளி ஒன்றிருந்தது. பீரிஸ் பொன்னையா எனும் பொன்னுச்சட்டம்பியாரும், சூராவத்தை யைச் சார்ந்தவரான தாமோதரம் எனும் தாமுச்சட்டம்பியாரும் ஆங்கு எண்ணும் எழுத்தும் நீதிநூல்களும் கற்பித்து வந்தனர். அங்கும் குறிப்பிட்டளவு பெண்பிள்ளைகளும் படித்துக் கொண்

83
டிருந்தனர். பொன்னையா எனும் பொன்னுச்சட்டம்பியார், சுன்னாகத்துக்கு அடிக்கடி வந்து போகும் கத்தோலிக்க குரு ஒருவரின் வழிச்சென்று கொழும்புத்துறை றோ. க. பாடசாலையிற் பயிற்சி பெற்று, மதம் மாறித் திரும்பினார்.
இவரை முற்படுத்தி, பாடசாலை அமைந்திருந்த வளவில், மொண்டிக்காணியில் சிறு தேவாலயமொன்றை அமைத்தனர். அதனை, அன்றிரவோடிரவாக விஷமிகள் எவரோ எரியூட்டி அழித்து விட்டனர். செய்தி அறிந்த கத்தோலிக்க மதகுருமாரும் வேறு சிலரும் கூடி மாற்று நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்திக். கொண்டிருந்த சமயம், புண்ணியர் அப்பா எனும் வயோதிபர் முன்வந்து, மேற்படி விபரீதம் நிகழ்ந்த அக்காணியை தமது உபயமாகக் குருமாரிடம் உறுதிச் சாதனம் எழுதிக் இகாடுத்துவிட்டார். அம்மட்டோடு நின்றுவிட்டாரல்லர். சீரிய ன்சஜ்ரர்க வுாழ்ந்த தானும், தன் சுற்றமும் (1897ல்) கத்தேர்லிக்க மார்க்கத்தைத் தழுவிக் கொண்டனர்.
a புண்ணியுர் அப்பாவின் திடீர் மதமாற்றம் கிழக்குக் குடியிருப்புப் பகுதியிலே வாழ்ந்த சைவரிடை உத்வேகத்தை ஏற்படுதீதியத் உண்மையே. எனினும், அதிக காலஞ் செல்லு முன்னரே, ! அப்பகுதியின் முதல் விதானையாராயிருந்த சின்னஞ்ட்டியார் எனப்படும் சின்னத்தம்பி, தமது புத்திரிகளுள் மூத்தவ்ரானி பூதாத்தையை பீரிஸ்பொன்னையா உபாத்தியா யருக்கும் அடுத்தவரான அன்னப்பிள்ளையை மற்றோர் ஆசிரிய ரான் வல்லிபுரச் சட்டம்பியாருக்கும் மணமுடித்து வைத்து, சமய சமரசத்தை ஏற்படுத்தியமை மேன்மைக்குணமாகும்.
மேற்கேழாலையிலே, நற்குடிப் பிறந்தவரான தீவிர சைவ பக்தர் சின்னத்தம்பி, 1831 ஆம் வருடத்தில், எமேர்ஸன் சின்னத் தம்பி எனும் நாமத்தோடு கிறிஸ்தவனாக மாறியுள்ளார். அவர் தெற்கேழலையின் விழிசிட்டிப் பகுதியில், அமெரிக்கன் மிஷன் பாடசாலை அமைத்துக் கல்விப் பயிரை வளர்த்தவர். அவரின் மகள் என அறியப்படுபவரான மலடியாரான சைவபக்தை ஆதியில் நம் ஊரிலும், தாம் வசித்த பகுதியிலும் வேதாந்த விசாரம் நடத்தியவரென்பது கதை. தொடக்க காலத்தில் மலடியாரிடம் போதனை பெற்றவர்களுள், வைத்தியர் ஐ. பொன்னையா குறிப்பிடத்தக்கவர். பிற்காலத்தில் அவர் கடையிற் சுவாமி, சரவணைச் சாமி என்னும் சடைவராத சுவாமி போன்ற சித்தாந்தி களின் சேர்க்கையால், தாமும் சித்தாந்தக் கொள்கையைக் கடைப்பிடித்து ஒழுகலானார். அவர் "அருளானந்த சிவம்’ என அச்சாதுக்களால்பெயரிட்டழைக்கப்பட்டமை ஊரறியும். அன்னவர்

Page 46
84
மரபிலே, அவராலே தோற்றுவிக்கப்பட்டவர் பலருள், திருவாளா கள், மு. கந்தப்ப சேகரம், மு. ஞானப் பிரகாசம் மு. கந்தையா, சி. சண்முகவடிவேல் போன்றோர் இன்றுமுளர். ஏழாலை மேற் கின் குறிப்பிட்ட தென்பகுதியின் ஆன்மீக நெறி, வைத்தியர் ஐ. பொன்னையா அவர்களின் ஒழுகலாற்றினாலேயே வளர்ந்த தென்பது தப்பன்று, அவருக்கு நல்லுதவியாளராக அவரின் தம்பி யாகிய வைத்தியர். ஐ. பேரம்பலம், திரு. நீ. கதிரிப்பிள்ளை போன்ற பல பெரியார்களும் திகழ்ந்துள்ளனர்.
ஆதி ஏழாலையங்கள், குடிமனைகள் மிகக் குறைந்து, தோட் டமும் குளமும் சூழ இருந்தமை, வழிபடுவேருாக்கு விசேடமாக மேற்குப்பகுதியாருக்கு, அசெளகரியமாயிருந்த நிலையை உன்னி, அருளானந்த சிவம் அவர்கள், தமது இல்லத்தையும் அயலிடத் தையும் மடத்துப் பிள்ளையார் எனப் பெயரிய திருக்கோயிலுக்கும், நால்வர்குரவர் மடாலயத்துக்கும் இட்டருளினார்.
முன் அதிகாரங்களிலே படித்தபடி மேற்கு நோக்கிச் சென் றோரின் பின்சந்ததியார் சிலர் 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புதிய கிறிஸ்துமதப்பட்டதுண்டு. இவர்களுள் தெல்லிப்பழைப் போதனா வித்தியாலயத்தில் கற்று குரு அபிஷேகம் பெற்ற வரான சங்கரப்பிள்ளை உபதேசியார் வன்னியசிங்கம் மகன் வைத்தியகலாநிதி தம்பர் போன்றோர் எமது நெடுவீதிமருங்கில் வசித்தமை அறிவேன். சங்கரப்பிள்ளை உபதேசியாரின் பழைய வசிப்பிடமும் இல்லமும் இன்னமும் புகையிரதஸ்தானத்திற்குச் சமீபமாக, மகாத்மா அச்சகத்தின் மேற்கு எல்லையில் உளது. டாக்ரர் தம்பரின் இல்லம், டச்வீதியின் சந்திப்பில் இருந்தது. சந்திப்பில் உள்ள துர்க்கா தேவி ஆலயத்துக்கு அப்பாகத்தை அவர் உபயமாக அளித்துள்ளார்.
கோட்டைக்காடு எனப் புறப்படுத்தி அழைக்கப்படும். மேற்கேழாலையின் தென்பகுதி நாமறியாக் காலமுதலே, அப்பகுதியிற் குடியிருக்கும், சிறுபான்மையின மக்களின் வாழ் பதியாகவுளது. கடினமான எத்தொழிலையும் பயின்று, பேத மின்றி இயற்றக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள். முற்காலத்தில் ஒவ்வொரு தொழிலைச் செய்யும் மக்களும், அத்தொழிலால் வரும் விசேட இனப் பெயரால், அழைக்கப்படுவது வழக்கம். கொல்லர், நாவிதர் என்பவை போன்று. ஏழாலையில் கோட்டைக் காட்டில் வசிக்கும் மக்களை அவ்விதம் பாகுபடுத்தவியலாது. அவர்கள், தத்தம் உடல் உள வன்மை கொண்டு, சீவல் தொழில் முதல் இயந்திர சம்பந்தமானவையும், மரம் இரும்பு உலோக

85
சம்பந்தமானவையுமான, நானாவித தொழில்களிலும் வல்ல 656.
சமயத்தைப் பொறுத்தவரையிலும், பெரும்பாலும் சைவமே மேலோங்கி நிற்கிறது. உயர் சாதியென மதிக்கப்படும் மற்றெந்த இனத்தாரின் ஆலயங்களிலும், உட்பிரிவேசிக்க முடியாதபடி தடை செய்யப்பட்டிருந்த காலத்திலேயே, அவர்கள் தமது வழிபாட்டிற்கென ஒரு முருகன் கோயிலை அமைத்து வழிபட்டு வருகின்றனர். சாழம்மை முருகமூர்த்தி கோயில் என அப்பகுதியில் பிரபல்யம் பெற்ற தலம் இது. நாம் சிறுவராயிருந்த காலத்தில் மயிலர் எனப் பெயரிய ஒருவர், இரட்சண்ய சேனை எனப்படும் கிறிஸ்தவ மதக்குழுவுடன் ஒன்றித்து, பிரதி ஞாயிறு தோறும் மல்லாகம் சந்தியில் நின்று, மத்தளம் கைத்தாளத்தோடு கிறிஸ் தவ கீதங்களை இசைப்பதைப் பார்த்திருக்கிறேன். அவருக்கு உதவியாக அவர் மக்கள் சிறு வாத்தியங்கள் இசைத்துப் பாடுவர். இவரின் குடும்பமே, நாமறிந்தமட்டில் கோட்டைக்காடு வட்டாரத் திலிருந்த கிறிஸ்தவர்கள். இவரின் சந்ததியார் உத்தியோகம் மணவினை போன்ற ஏதுக்களால், பெரும்பாலும் வெளியூர்ப் பட்டுள்ளனர் போலும்.
கோட்டைக் காட்டு வட்டாரத்தின் தென்பகுதியில், ஏழாலைக் குளத்து நீர் பாய்ந்து சுன்னாகம் நோக்கிச் செல்லும் வாய்க்கா லோரத்தின், மேற்குப் பாகத்தில் நாக்கியப்புலம் எனும் சிறு குறிச்சியுளது. அடுத்துளது அளவாவோடை எனப்படும் சிறு குறிச்சி. குறிப்பிட்டநாக்கியப்புலம்வாய்க்காலையண்டிய * பரப்பே மதிக்கக் கூடிய ஒரு மூக்கோண வடிவம் அமைந்த காணித்துண்டு உளது. அச்சிறு துண்டுக்காணியின்தென்பாகத்தில், ஓர் தென்னந் தூணில் சிறிதானஓர் படம், மாட்டப்பட்டிருப்பதைப்பார்த்துளேன். விசாரித்தபோது, எமது இலங்கையர்கோன், வைத்திலிங்கம் போன்றோரின் குட்டிக்கதையை ஒத்த பக்திக்கதை வெளிப் பட்டது.
அஃதாவது :-
1917 ஆம் ஆண்டளவில் அப்பகுதியில் (கோட்டைக்காடு, நல்லான்வனவு உள்ளடக்கியது) ஒரு வழிபடுதலம் இல்லாக் குறையை அறிந்த ஓர் கத்தோலிக்க குருவானவர், தமது சமயம் பரப்பவும், சிறுபான்மையோரை உயர்த்தவும் சித்தங் கொண் டார். சுவாமி ஞானப் பிரகாசர் என அனைவராலும் பக்தியோடு அழைக்கப்பட்ட, மானிப்பாயைச் சார்ந்த உயர் குடும்பத்தவர் ஞானப்பிரகாச சுவாமிகள். தாம் பாதியிலே விசுவாசித்துப் பற்றிக் கோண்ட கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை, அக்காலத் தாழ்குடி

Page 47
86
மக்கள் மத்தியிற் போதிப்பதையும், கோயில் அமைப்பதையுமே கடனாகக் கொண்டவர். எமதுரர் நாக்கியப் புலத்திலே ஓர் மாதா கோயில் அமைக்க முயன்றனர். அயலவர்கள் துணையுடன், சிறிய வோர் கொட்டில் அமைத்தனர். நாற்புறமும் தென்னந்தூண் நாட்டி, தென்னங்கீற்றினால் வேய்வதற்கு ஆயத்தஞ் செய்த போது, அப்பகுதியிலே வசித்த மூத்தவி, சின்னவி போன்ற சிறு பான்மை இனச் சைவபக்தர்கள் குறுக்கீட்டினால், அவ்வளவோடு (தென்னந்துாண் நாட்டியமையோடு) கோயில் கட்டும் கைங்கரியம் நிறுத்தப்பட்டது. "லூர்து மாதா” எனப்படும் தெய்வப்படம் மட்டும் தூண்களுள் ஒன்றிலே மாட்டிப் போயினர்.
சமீப வருடங்களில் அவ்விடத்தில், ஓர் குடிசைபோன்ற மண்டபம் அமைத்து, தெய்வப்படங்களும் மாட்டப்பட்டுள்ள மையை அவதானிக்க முடிந்தது. எனது இச்சிறு நூலுக்கு வேண் டிய குறிப்புச் சேகரிக்கு முகத்தால், அவ்விடத்தில் தரித்து நின்ற போது, முந்திய குட்டிக்கதையின் முடிவுரை கிடைத்தது.
அஃதாவது:-
சாரங்கபாணி எனும் ஓர் வியாபாரியின் மகன், தமிழ் மக்கள் சாரிசாரியாக வெளியூர் செல்வது கண்டு, தாமும் எங்காவது சென்று தன் காயம் வளர்க்க எண்ணினார். புறப்படுமுன் தமது குலதெய்வங்களை வணங்கியவர், இறுதியில் பத்தோடு பதி னொன்று எனுமாறுபோல், தென்னந் தூணில் மாட்டியிருந்த பெயர் தெரியாத மாதா படத்தையும் வணங்கி, வேண்டுதல்செய்து புறப்பட்டாராம். கொழும்பிலே ஏனைய யாழ்ப்பாண வாலிபர் கள் போலவே விடுதி வாழ்க்கையில் அல்லல் அனுபவித்தவர், ஒரு. வாறு பிரான்ஸ் நாடுபோய்ச் சேர்ந்தாராம். அங்கு சென்றதும், அந்நாட்டிலே ஒரு சிறு கோயிலைக் கண்டு, சமீபத்திற் சென்று பார்த்தபோது, நாக்கியப் புலத் தென்னந்தூணிலே பார்த்து வணங்கிய அதே பெண் தெய்வத்தைக் கண்டு, ஆச்சரியப்பட்டா ராம். சீவனோபாயத்துக்குரிய நல்ல வேலையும் கிடைத்தபின்பு, ஏழாலைய ஊர்த் தெய்வத்திற்கு ஏதும் நினைவுச்சின்னம் நிறுவ எண்ணி இயன்றளவு பணம் அனுப்பினாராம். அப்பணத்தோடு வேறு பக்தர் தம்பணமும் கூட்டி, இன்றைய கோயிலை அமைத்து, பிரதி சனிக்கிழமை தோறும் காலை ஆராதனையும் நடத்துகின் றனர்.
அடுத்து, சூராவத்தைக் குறிச்சியுடன் தெற்கேழாலைக் குறிச்சி யையும்நோக்குவாம். நாக்கியப்புலம் லூர்து மாதாதேவாலயத்தை எல்லையிட்டு, அளவாடை எனும் சிறு குறிச்சியினூடாகக் கிழக்கு நோக்கிச் செல்லும் வாய்க்கால், ஏழாலை தெற்கு உப-அஞ்சலகச்

87
சந்தியிற் பிரிந்து தெற்கு நோக்கிச் செல்லும் வீதியை ஊடறுத்துக் கிடக்கின்றது. என முன்னரே கண்டோம். இப்பகுதியைத் தாண்டி கிழக்கு முகமாக 2 மைல் தூரம் சென்று வடதிசையாகத் தோப் பின் கிழக்குப் பாரிசமாக வாய்க்கால், குளத்தோடு தொடர்புறும்.
முன்பு குளத்திலிருந்து வாய்க்கால் வழி தெற்கு நோக்கிப்பாய்ந்த நீர் செல்லும் வழியை, இவ்வதிகாரத்தில் எதிர்த்திசையினின்று காட்டியுள்ளேன்-சென்ற திசையாற் திரும்பி வருவது தமிழ் மர பன்று என்பதனால்,
இங்கு சுட்டிக்காட்டிய தபாலக வீதி செல்லும் குறிச்சி, விழி சிட்டி எனப்படும் வீதியில் 200 யார் தூரம் சென்றால், அப்" பகுதியில் எமேஸன் சின்னத்தம்பி என்பவரால் தாபிக்கப்பட்டு பிற் காலத்தில் அமெரிக்கன் மிஷன் பாடசாலையாக மாறிய ஆரம்ப பாடசாலையும், அதனை அடுத்து, ஆதி அமெரிக்க மிஷன் தேவாலயமும் அமைந்துள்ளமை காணலாம். 1897 ஆம் ஆண் டளவில் தாபிக்கப்பட்ட மேற்படி தேவாலயம் சமீப காலத்தில் புதுக்கி அமைக்கப்பட்டுளது. தெற்கேழாலைத் தென்னிந்திய திருச்சபைத் தேவாலயம் எனவே பொதுவாக அழைக்கப்படு” கின்றது. வழிபடுவோரில் அநேகர் மயிலங்காடு, சூராவத்தை, தோப்பு எனப்படும் பகுதிகளில் வாழ்வோரே ஆவர். தேவாலயத். தின் வாயில் முகப்பிலே, ஓர் படிப்பகம்-வாசகசாலை-உளது. பேராசிரியர் லூதர். ஜெயசிங்கம் இப்பகுதியிலேயே பிறந்தவர்.
முற்கண்ட வாய்க்காலின் தென்புறம், சூராவத்தை எனுங்: குறிச்சியாகும். அக்குறிச்சி தெற்கே சுன்னாகம் மலப்பை எனும் சிறுகுறிச்சிவரை பரந்துளது. மலப்பை எனுங்குறிச்சி புகையிரத. நிலையத்தை அண்டிய குறுகிய நிலப்பரப்பை உடையது. சுன் னாகம்-புத்தூர் வீதியின் எல்லை சூரவத்தையின் தெற்கெல்லை. யாகும். கிழக்கே புதிய மயிலங்காடு குடியேற்றக் கிராமோதயம் என எம்மாற் சுட்டிக் காட்டப்பட்ட பகுதியை எல்லையாக, வுடையது.
சூராவத்தை மையப்பகுதியில், பிரபலம் பெற்ற அம்பாள் கோயில் ஒன்றுண்டு. புராணபடனங் கேட்கப் போய்த் தூணுக்கு, உரிமை கோரியமையால் ஏற்பட்ட பூசலினிமித்தம், ஒரு பக்தனி னால் அத்தலம் தாபிக்கப்பட்டதென்பது ஐதிகம். எவ்வாறாயினும் பரம்பரை நியதிப்படி வழிவழிவந்த நல்லோரால், அத்தலம் நிறை, வுற நிர்வகிக்கப்படுவது காணலாம். பண்டைய நியதியைச் சாடு வது போன்ற பிறிதொரு இளைஞரான அடியார் குழுவினது பத்திரிகை அறிக்கைகளையும் கண்ணுற்றேன். தம்முள்ளே பிணங்

Page 48
88
கினாலும், கோயில் நியம நிஷ்டைகள் சுமுகமாக நடந்தேறும் பான்மை, நம் ஊர் முழுவதும் நிறைந்து ஓங்கி நிற்கும் அனைத்து ஆலயங்களும் நோக்குதற் கேற்றதாகும்.
அடுத்து, அம்பாள் ஆலயத்தின் ஊடாக தென்கிழக்கு நோக்கிச் சென்றால், சுன்னாகம் மின்சார நிலையத்தின் சந்தி யினூடாக வடக்கு நோக்கிச் செல்லும் வீதிவரை செல்வோம். இவ் வீதி மயிலங்காடு, களபாவோடை ஊடாக ஏழாலை வடக்கு (ஆலடிச்சந்தி எனப்படுகின்ற) சைவமகாஜன வித்தியாலயம், தபாலகம். அமைந்திருக்கும் சந்தியை ஊடறுத்து, கட்டுவன் நெடுவீதியையும், ஏழாலை "டச் வீதியையும், ஒரே இடத்தில் சந்திக்கும். இவ்வீதியைப் பற்றியும் அதன் கேந்திரத் தன்மை பற்றியும், இன்று நம் ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கும் 99% மக்கள் அறிந்திருக்க மாட்டார் என்பதனாலேயே, சிறிது விபர மாக எழுத முனைந்தேன். சுன்னாகம் சந்தைக்கும், ஏழாலை யூருக்கும் பல தலைமுறை சார்ந்த தொடர்புண்டு. ஏழாலைக் கமக்காரப் பெருமக்கள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங் களில் தமது தோட்டப் பிரயோசனங்களைப் பெரும்பாலும் தலைச் சுமையாகவே, சந்தைக்கு எடுத்துச் செல்வது வழமை. வண்டி வாகனங்கள் தோட்டங்களை அண்டிய ஒடுங்கிய பாதைகளின் (ஒழுங்கைகள்) ஊடாகச் செல்வது கடினம். ஏழாலைச் சந்தி யிலிருந்து சுன்னாகம் செல்லும்வரை, கல்லையே வீதியாக அமைந்த ஒழுங்கைகளைத் தாண்டுவது, கடூரமான செயலாக
விருக்கும்.
விதியின் அவல நிலையையும், கூடவே அதன் கேந்திரத் தன்மையையும், எம்பகுதி நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த திரு.வி. தர்மலிங்கந்தின் அனுசரணையோடு அரசுக்கு உணர்த்தி வைத்தோம். உறுப்பினர், நெடுவீதி ஆணையாளரையும் வசப் படுத்தி "ஏழாலை விவசாய வீதி' எனும் நற்பெயரிலே அதனைப் பதிவித்து உதவினார். ஊர் மக்களின் மன மகிழ்ச்சியோடு, மிகக் குறுகிய காலத்தில் விவசாயவிதி செப்பனிடப்பட்டு, தார்பாய்ச்சி, னைய நெடுவீதிகளுக்கு இணையாக நின்றது. சிறிது கால இடைவெளியுள் அவ்வீதியில் அயலவர்களும் தோட்டக்காரரும் பயணஞ் செய்யக் கூடியதான பேருந்து (Bus) மார்க்கம் ஆயதுல் அதற்காக முன்னின்று உழைத்தவர்களுள், திரு. இ. பேரின்ப நாயகம் முதல்வராவர். மாதர்சங்கத் தலைவியாகச் சமூக சேவை புரியும் திருமதி. த. நவரத்தினம் (தங்க ரத்தினக்கா) மற்றவர்.

89
770 இலக்கப் பாதையோடு அதே இலக்கம் பூட்டிச் சில நாட்கள் பரீட்சார்த்த வெள்னோட்டம் நடைபெற்றது.
குறிப்பிட்ட மேற்படி பாதையினூடாக 1948ம் வருடத்திலே, மன்னார் மாவட்டத்து மடுப்பதியுறையும் மருதமடு மாதாவின் திருச் சொரூப ஊர்வலம், சூராவத்தையைவந்தடைந்தது. அக் காலத்தில் மாதா திருச் சொரூப ஊர்வலம், வடபகுதி எங்கும் தொடர் பவனியாக நடைபெற்றமை அறியலாம். சித்திரை மாதத்தில் வந்த மாதா சொரூபத்தை ஒரு சிறு கொட்டிலில் வைத்து, வணக்கஞ் செலுத்தினர். பின்னர் அக்கொட்டகை, சூரா வத்தை சென். திரேசா ஆலயம் எனும் பெயரோடு பெரும் வணக்கத் தலமாகியுள்ளமை நோக்கற் குரியதாகும். இப்பகுதியில் அநேக ஆசிரியர்கள், குருமார், கன்னிகாஸ்திரிகள் தோன்றி யுள்ளனர்.
சூராவத்தை மயிலங்காடு எனும், குடிநெருக்கமான இரு குறிச்சிகளிலும் வாழும் மக்கள், சைவம், கிறிஸ்தவம், கத்தோ லிக்கம் எனத் தாம் கொண்ட மதங்களிற் பற்றுறுதியும், தம்முள் அமானுடநேயமும் குன்றாது ஒழுகுதல் பெருந்தன்மையாகும்.
அடுத்து ஏழாலைய வூரின் தென்கிழக்கு எல்லைக்குறிச்சியான மயிலங்காடு குடியேற்றப்பகுதி, குறுகிய காலத்துள் வளர்ச்சி அடைந்துள்ளமை காணலாம். இப்பகுதியில் வாழ்வோர் வழிவழி வந்த தொழில் விற்பன்னர். சிறிமுருகன் வித்தியசாலை என ஓர் பாடசாலையும், வணக்கத்துக்கென முருகன் கோயிலும், படிப்பகம் ஒன்றும் கொண்ட நிறைவான குறிச்சி இது. சைவ சமயமே தனிச்சமயமாகவுள்ளமை போற்றற்குரியதாகும். இக்குறிச்சியின் எல்லையை அண்டிய வடதிசையில், களபாவோடை எனும் குறிச்சி உளது. தெற்கு ஏழாலை எனவே முன்பு வழங்கிய இச்சிறு குறிச்சி, மத்தியில் நின்று, அருள்புரியும் வசந்த நாகபூஷணி அம்பாள் (சின்னம்மன்) எனும் திருத்தலம் அங்கிருப்பதனால் மகிமை பெற்று நிலவுவது
எழாலையலுரின் மகிமை, எழாலயங்களின்மீது நம் முன்னோ ராய் வாழ்ந்த மக்கள் கொண்டிருந்த மேலான நம்பிக்கையின் பய -னாய் ஏற்பட்டதே என்பது வெளிப்படை. சைவம் ஒன்றே சமய மென விருந்த காலகட்டம், ஈழத்தமிழ் மண்டலத்தைப் பொறுத்த வரை 16 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம்வரை நிலவியது. அதன்பின், பறங்கியரான போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் கிறிஸ்தவ மதத்தை பற்பல நடவடிக்கைகளைக் கையாண்டதன்

Page 49
96
மூலம் பரப்பியமையும் நாம் படித்தறிந்த சம்பவங்கள். எனினும், எமது ஊரைப் பொறுத்தமட்டில், அன்னவர் ஜம்பம்கூடப் பலித்த தில்லை.
1816 ஆம் வருடம்வரை, சுமார் மூன்று நீண்ட நூற்றாண்டு கள் ஐரோப்பிய ஆதிக்கம், அடக்கவொடுக்கங்கள் ஏழாலை மக்களுள் தனி ஒரு மனிதனையேனும் சைவசமயத்திலிருந்து பிரித் தெடுக்க முடியவில்லை. அதுவொன்றே நாம் பெருமிதங் கொள் வதற்குப் போதுமானதாகும்.
சைவந்தழுவிய எம்மக்களின் புனிதவாழ்க்கை முறையே, முன்னர் வரலாறெழுதிய அன்பர்கள் கூற்றுப்படி, அயலூர்களில் ஞானியராகவும், யோகியராகவும், சந்நியாசிகளாகவும் உயர்ந் தோர் ஏழாலையலுரை நாடிக் கூடுதற்கு வழி சமைத்தமை, நோக் கற்பாலதாகும். ஏழாலை, சாது சங்கம மத்தியஸ்தானமான உண்மை நிலை அதுவே.
மக்களின் வாழ்வு நியதிகள், கல்வி முன்னேற்றம், அயல வரோடு கூடி வாழும் பெருந்தன்மை என்னும் பண்புகள் வளர்ச்சி யடைந்த காலையில், எம்மக்கள் புதிய வளர்ச்சிப் பாதையைப் புறக்கணித்தாரில்லை. தம் மனத்துக்குப் பட்டவையான உயர் வான கொள்கைகளையும், விஞ்ஞான ரீதியிலான புத்தம் புதிய கலைகளையும், தள்ளிவைக்காது, தலைக் கொள்வாராயினர். ஒளிவுமறைவின்றிக் கூறின், புதிதாக, அறிந்து கைக் கொண்ட மதத்தையுங்கூடப் பூரண விருப்புடனும், பக்தியுடனுமே ஏற்று ஒழுகுவாராயினர். இன்றுவரை அவ்வாறே நற்பண்பு கெடாதபடி அவர்கள் வாழ்வது, பலவூர்களுக்குக் கிட்டாத பேறாகும்.
சைவம் சார்ந்த மேலோர், தம்மை அம்மத சீலராக்கி ஒழுகு தல் போல, கிறிஸ்தவ மதஞ் சார்ந்த இளைஞர், யுவதிகளும் தம்மை அம்மதத்துக்கே அடியராக்கி, சிலர் கிருகஸ்தராய் வாழ்ந்தும், வேறு சிலர் சந்நியாசிகளே போன்று துறவு வாழ்க்கை வாழ்ந்தும் வருவதனை, அனைவரும் அறிவோம். இத்தகை யோருள் முன்கூறியோர், தென்னிந்திய ஐக்கிய சபையின் யாழ்ப் பாணப் பேராயத்தைச் சார்ந்த மதபோதகர்கள். மறுசாரார், றோமன் கத்தோலிக்க மதம் சார்ந்த வணக்கத்துக்குரிய துறவி களும், கன்னிகாஸ்திரிகளும் ஆவர்.
பண்டைய துறவிகள், மாடு, மனை, சுற்றம் அனைத்தையும் அறவே துறந்து, காடு சென்று கடுந்தவம் புரிந்தவர்கள். இன் றைய துறவிகள் பிரமச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந் நியாசம் எனப்படும் நால்வகைப் படிகளையும் ஒன்றேயாக்கி

91.
"மக்களின் சேவையே மகேஸ்வரன் சேவை" எனக் கொண்டு வாழ்ந்து, உய்யுந் தகைமையர்,
சூராவத்தை எனும் எமதுர்த்தென்னெல்லைக் குறிச்சியில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று கன்னியரும், அவர்களின் மூத்த சகோதரியின் ஒரே மகளும், இன்றுவரை இல்லறம் துறந்து கன்னிகா ஸ்திரிகளாய் நற்றொண்டு புரிவதனை அறி வோம். அன்றியும், அதே குறிச்சியில், நான்கு அருட் தந்தையர் சமயத்தொண்டு புரிவதையும் அறிவோம்.
மறுசமயத்தராகிய சீர்திருந்திய (புறொட்டஸ்தாந்து) கிறிஸ்த வர்கள் மத்தியிலே, வணக்கத்துக்குரியதேவநேசன்-தேவசகாயம், கே. எம். துரை ரத்தினம், ஜெயநேசன், ரீ. துரைரத்தினம்ஜெயச்சந்திரன் முதலாய போதகர்கள், கிருகஸ்தராக இருந்து கொண்டே கடவுட்டொண்டு செய்து வருகின்றனர். முந்திய தலை முறையிலே, வண எஸ். ரீ. ஆசீர்வாதம், எசேக்கியேல் எஸ். சங்கரப்பிள்ளை எனும் இருவர் அவ்வாறாய நற்பணி செய்து போயினர்.
இதுகாறும் நாம் நோக்கிய நன்கறிந்த செய்திகளை”நC) நின்று மனத்தில் இருத்துவோர், மதமும், குலகோத்திரங்களும், அந்தஸ்து மேன்மை பெருமைகளும், எம் ஊரை உயர்த்தி மேம் படுத்துவனவேயன்றித் தாழ்வு எதற்கும் இடந்தராத பான் மையை அறியலாம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்முள் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்குந் தாழ்வேயாம் என உயர் வாழ்வு நெறியைக் கடைப்பிடிப்பது எமக்கும், ஊருக்கும், பெரும்ை தருவன.

Page 50
9. கிராமத்துத் தொழில்களும் தொழில் விற்பன்னமும்
ஏழாலைக் கிராமத்தின் நிலப்பெருக்கமும் மக்கட் செறிவும், முழு இலங்கையிலும், முன்னணியில் நிற்பவை. ஆதிமனித குடி யேற்றக் காலம் முதல் முழுமை பெற்ற குடிதழுவிய வாழ்வு நடத்தும் பண்பு, மக்களிடம் நிலவி வருகிறது. சீவாதாரமான உணவு உற்பத்தித் தொழிலையே, பெரும்பான்மையான ம்க்கள் காலத்துக்கேற்ற முன்னேற்ற கரமான விஞ்ஞான ரீதியில் செய்து வருகிறார்கள். கமத்தொழில் புரியும் மக்களுக்கு அத்தியாவசியமான கருவிகளைச் செய்து தரவும் பல்வேறுபட்ட வாழ்வோடியைந்த சேவைகளை ஆற்றவும், தொழிலாளர் வர்க்கமும் குறைவற வாழுமூர்.
கூலிக்கு மாரடிப்பது' எனும் அர்த்தபுஷ்டிமிக்க சொல்லை, நம்மூரில் வாழும் அனைத்து மக்களும் அடிக்கடி சொல்வதுண்டு.
எத்தொழிலைச் செய்தாலும், அக்கருமத்திற்காக எப்படி அவஸ்தைப்பட்டாலும், அன்னவர் மனம், செய்காரியத்திலேயே ஒன்றியிருக்கும். அன்றி ஏனோதானோ' என்ற தோரணையில் சாங்கு செய்து, நேரங்கடத்திப் பணம் வாங்கும் மனப்பான்மை யைக் காண்பதரிது. சாவீட்டில் ஒப்பாரிவைக்கும் பெண்களுங்கூட, இறந்தவரின் குணாதிசயங்களைத் தன் நாவுக்கு வந்தவாறு விஸ்தரித்து, உண்மைச் செய்திகளையே வெளியிடுவர். நேர ஞ் செல்லச் செல்ல, இறந்துபோன தமது உறவினர், அன்பர்களின் நினைவு வரவே, அன்னவரையும் பாடுவர். அப்பாடலுக்குத் தாளம் போடுவதுபோல, மாரடிப்பும் சேர்ந்திசைக்கும். எனினும் அதுவும் கூட மனத்தின் அடித்தளத்திலிருந்து எதுகை மோனை தப்பாது பிறக்கும். பிள்ளைப் பராமரிப்புப் பெண்கூட, தனக்குத் தெரிந்த-பரிச்சயமான சொற்கூட்டங்களை, எதுகை மோனை புலப்படக் கோர்த்தே தாலாட்டாய்ப் பாடுவாள்.

93
கித்திலனே நின்மலனே, நீயுறங்காய் பத்திரமாய் கித்திலத்திற் தொட்டில் கட்டி, நீள்முகட்டிற் கொடிதொடுத்து கித்திரைக்கு நீ செலவே, நீள் பொழுதாய் ஆட்டுகிறேன். நித்திரையுங் கொள்ளாமே, நீயழுவதேனய்யா!
கொத்தாலே முத்தளக்கும் கொப்பருணை அடித்தாரோ? மத்தாலே தயிர் கடையும் மாமியுனை ஏசினளோ அத்தானடித்தால் அப்பாவுக் கதுசொல்வேன் பெத்தார் உனை அடித்தால் பேசாதிருந்திடுவேன்.
நித்திரைபோ நித்திரைபோ நித்திலமே கித்திரைபோ!
ஒப்பாரியும் தாலாட்டும், அவளின் கல்லாமற் பாதிகுலவித்தை ஆன கதை. முந்தியது அவள் தாபத்தின் வெளிப்பாடு. பிந்தியது மனநிறைவின்-செய் தொழிலின் புனித செயற்பாடு.
எங்களூர்த் தெய்வங்களுக்கான தாலாட்டுப் பாடலெல்லாம், ஒன்றையொன்று அடியொற்றிப் பாடிய பக்தர் பாடல்கள், யாவும் ஒரே தன்மை, ஒரே சொற்குவை கொண்டவை. கற்றறியாப் பணிப் பெண்ணுக்கு, அவள் வாயில் பிறக்கும் யாவுமே எதுகை; அனைத்துமே மோனை. அவள் எங்கு கற்றாள் யாப்பையும் அணி யையும்? காரிகை கற்றுக் கவிபாடுவதிற் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று என்பது இங்குதான் நிதர்சனமாகிறது.
1829-ல் ‘டைக் துரை தேசாதிபதியான பின் நம்மூர்க் கமக்காரர், புகையிலையை அதிகளவில் உற்பத்தி செய்யவும், அதனை உலர்த்தி மலையாளத்துக்கு அனுப்பவும் தூண்டப் பட்டனர். இதுகாறும் பாகல், புடோல், வாழை முதலிய கறிப் பண்டங்களையும், சாமை, குரக்கன், வரகு போன்ற தானியப் பயிர்களையும் உற்பத்தி செய்த கமக்காரர், மலையாளப் புகை யிலை ஏற்றுமதி மூலம், பணம் சம்பாதிக்கத் தலைப்பட்டமையால், அத்தொழிலில் ஊக்கங் கொள்வாராயினர். தம்முள்,-யாழ்ப் பாணம் மலையாளப் புகையிலை உற்பத்தியாளர் சங்கம் எனும் சங்கமும் அமைத்து, இருபதாம் நூற்றாண்டின் நடுக்கூறுவரை நடத்தியமையும், அதன் மூலம் புத்தூக்கமும் செல்வச் செழிப்பும் பெற்றமையும் நாடறியும்,
இந்நூற்றாண்டின் முதற்காற்கூறில், மலையாளப் புகையிலை விற்பனைச் சங்கத்தின் தலைவராயிருந்த ஒருவர், புகையிலை விதைகளை இரகசியமாக அங்கு எடுத்துச் சென்று, நாற்று

Page 51
始4
மேடை அமைப்பு, பயிர்ப்பராமரிப்பு முதலிய தொழில் நுட்பங் களை மலையாளிகளுக்குப் பயிற்றுவித்துள்ளார். மிகக் குறுகிய கால எல்லையுள், அவர்கள் பயிரிடுவதிலும் உலர்த்துவதிலும் விற்பன்னராயினமையால், யாழ்ப்பாணப் புகையிலையின் தேவை மட்டுப்பட்டமை, நம்மூர்க் கமக்காரருக்குப் பெருநட்டமாயிற்று.
எதிலும் சலிப்படையாத ஏழாலைக்கமக்காரர், புகையிலைக்கு மாற்றீடாக, இந்தியாவின் வெங்காயத்தை நம்மூரில் பயிரிடும் வல்லமை பெற்று, அந்நாட்டு வெங்காய இறக்குமதிக்குத் தடை போடுமளவுக்கு விருத்தி கண்டனர். அத்துடன் தமது மனக் கொதிப்புத் தணியாராய், கடைசியாக இலங்கை அரசாங்க சபைக்கு (State Council) நிகழ்ந்த தேர்தலில் போட்டியிட்டவரும் முன்பு மலையாளத்தில் புகையிலை உற்பத்தி செய்தவருமான தலைவரின் வாக்குப் பெட்டியிலே, புகையிலை விதைகளைப் போட்டுத் தமது வஞ்சத்தைத் தீர்த்தனர்.
அன்றைய தேர்வு விதிப்படி, வேட்பாளர்களுக்குத் தனித்தனி வர்ணம் கொண்ட வாக்குப் பெட்டிகளே நிர்ணயிக்கப்படும். குறிப்பிட்ட வர்ணப் பெட்டியுள் உள்ள வாக்குச் சீட்டுகள் மட்டுமே அவருக்குரியவை. அடுத்த வேட்பாளரின் வாக்குகள் போடக் கூடாதென்பது விதி. அவ்விதி. எமது கமக்காரருக்கு வஞ்சந் தீர்ப்பதற்கு உதவுவதாயிற்று.
ஏழாலையலுர்க் குடிகளுள், பிரசாவுற்பத்தியில் இரண்டா மிடம் வகிப்போரான சிறுபான்மைத் தமிழர் என, அவர்களால் இனங்காட்டப்படும் மக்களில், மிகப் பெரும்பான்மையினர் பலவித தொழில் வல்லுநர்கள். வண்டி வாகனச் சொந்தக்காரராயும், சிறுச்சிறு தொழிலதிபர்களாயும், கட்டட ஒப்பந்தக்காரராயும் வாழ்கின்றனர். செய்யுந் தொழிலே தெய்வம் எனும் பெருநோக்கு டன் தாம் ஏற்றுக் கொண்ட தொழிலை ஒழுங்குறச்செய்பவர்கள். கோட்டைக்காடு, மயிலங்காடு குடியேற்றப்பகுதி, தொந்தனை, மடத்துவாசல் ஆதிய குறிச்சி சார்ந்த அவர்களுள் கற்கொத்தர் திறமையான சிற்பியர். அயலூர்களிலும், தென்மராட்சி கரைச்சி முதலிய தூர இடங்களிலும், கிணற்றுக் கட்டு, கோயிற் கோபுரக் கட்டு, நவீன வீட்டுக் கட்டு எனப் பல தொழில்நுட்ப வேலைகளை முடித்துக் கொடுப்பவர் இவர்களே.
ஏழாலைச் செம்பாட்டு மண்ணிலே விளைந்த பாகற்காய் உலகில் முன்னணிக் கறிப் பொருளாகும். காலக் கணிப்புக்கு அப்பாற்பட்ட பண்டை நாளிலிருந்து பாகற்காய் ஏழாலையின் ஊர்ப் பெயரோடு ஒட்டி வழங்குவது. அம்மட்டோ! எமது ஊரின்

95
சிறந்த கமக்காரரைக்கூட அதன்பெயரை உயர் முன்னுரிமை கொடுத்து அழைத்தனர். ‘பாகற்காய் மணியம்" என்பது போல்.
ஆதியில், ஏழாலையின் வட பாகத்திலுள்ள புதுக்கிணற்றடி *யும், பின்னர் தென்மூலை என வழங்கிய குறிச்சியும் சேர்ந்து பாகற் காய்க்குத் தனியுரிமை கோரத் தக்கவை. "நீரிழிவு" எனும் நின்று கொல்லும் நோய் தீர்க்கும் பெருமை பெற்ற இயற்கை மருந்தாகும் பாகற்காய், குடற் பூச்சி கொல்லியும் ஆகும்.
வடக்கு ஏழாலையாரின் தோட்ட நிலங்கள், பெரும்பாலும் குடியிருப்பு வீடுகளைத் தாண்டி, ஒரே சீரான விஸ்தாரமான பகுதி யில் உள்ளவை. பாகல் செய்கை பண்ணப்பட்டிருக்கும் போகத் திலே அப்பகுதி, ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடையே பசுங் கட்டில் (படுக்கை) அடுக்கியது போன்ற ரம்மியமாகக் காட்சி தரும். பரந்த தோட்ட நிலம் அனைத்தும் சம உயரத்தில் பாகற் பந்தலும், அதன் கீழே, குனிந்து நோக்குவோர்க்கு, நிலம் நோக்கிப் பல்லுக் காட்டும் பல தினிசான பாகற்காய்களும், செம்பவளப் பார்போலக் கண்ணைப் பறிக்கும் பாகற் பழங்களும் இதந்தரும். இத்தனைக்கும் மேலாக, அவர்கள் அமைத்திருக்கும் பாகற்பந்தல், யாவர்க்கும் செய்ய அரியதான கைவினையாவது தெரியும்.
வான்குருவி யின் கூடு வல்லரக்கு தொல்கறையான் தேன் சிலந்தி யாவர்க்கும் செய்யரிதால்-யாம்பெரிதும் வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லார்க்கு மொவ்வொன் றெளிது.
எனப்பாடிய ஒளவைப்பாட்டி இன்றிருந்தால், எம்மூர்ப் ஆநாகற் பந்தலையுஞ் சேர்த்து விதந்து பாடியிருப்பாள்.
இலந்தை மரத்தின் முள்ளு, பற்றினால் விட்டுப் பிரியாது. குத்தினால் விஷம்போலக் கடுக்கும். ஆனாலும், எமது புதுக்கிணற்றடிக் கமக்காரருக்கு, அது றப்பர் முள்ளுப் போல. ஒரு நூறு முள் குத்தினாலும், எருமைத்தோலில் இலையான் குத்தியது போலவே அவர்களுக்கு தோன்றும். மறுபாகத்து வாழ் வோர், ஏற்புத் தடுப்பூசி போட வைத்தியரிடம் ஒடுவர். குறைந்த பட்சம் 'மரமஞ்சள்" தன்னும் அவித்துக் குடிப்பர்!
மூன்றடி உயரமே கொண்ட பாகற் பந்தலினுள், குந்தி இருந்து அல்லது தவழ்ந்தே செல்ல முடியும். ஏனையோர் கபடத் தொழில் நிமித்தம்-இலகுவில் உட்செல்வதைத் தடுப்பதே முதல்

Page 52
96
நோக்கம். காய்களிற் கண்ணுறு படாதிருக்க வேண்டும் எனும் நம்பிக்கையும் மறுநோக்கமாகும்.
முன்னாளிலே, நீரிறைப்பதற்கெனவும், வேறு அவசர தோட்ட வேலைக்காகவும் ஆண்கள்நேரகாலத்தோடு தத்தம் தோட்டத்துக் குச் சென்றுவிடுவர். இல்லத்தரசிகள் காலையில் உணவு தயாரித்து மக்களுக்குப் பங்கிட்டுப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு, தோட்டத் துள்நிற்போருக்குரிய உணவோடு தாமும் செல்வர். குறிப்பிட்ட மர நிழலிலோ, அட்டாலை எனப்படும் ஆட்டுத் தொழுவத்திலோ இருந்து ஆணும் பெண்ணுமாய் உண்பர். உண்டு களித்து, ஆண்கள் தம் பணிக்கு வேண்டிய ஏதனத்துடன் செல்ல, பெண்கள் பாகற் பந்தலின் கீழ்ப்புகுவர். பீடைநாசினிகள் எனப்படும் புதிய கவர்ச்சிகரமான உயிர்க்கொல்லித் திரவங்களை மக்க ள் அறியாக காலத்தில், பாகல் இலைச் சாற்றை உறிஞ்சிச் சல்லடை யாக்கும் "ஆனைவண்டு’ ‘பாகற்பூச்சி’ எனப்படும் வண்டினங் களைத் தமது கைகளால் அமுக்கிப் பிடித்துக் கொன்று அழிப்ப தற்கே பந்தலின் கீழே அவர்கள் சென்றனர். அங்கு அவர்களுக்கு வெயிலின் தாக்கம் பலமாயிருக்காது.
ஏழாலயலுர் ஆதிமுதலே பிரசித்தி பெற்ற கமக்காரர் கிராமம். அயற்கிராமங்களாகிய வலிகாமம் வடக்கு-தெற்கு, மேற்கு கிழக்கு எனும் பெருநிலப்பரப்பிலே வாழ்வோரும், அன்னவர் முன் னோரும் தோட்டவேலை செய்பவர்கள். இந்த இருபதாம் நூற். றாண்டின் அரைக்கூறுவரை, கமக்காரர் தம் பயிர்களுக்குத் துலா, பட்டை கொண்டே நீரைப் பாய்ச்சினர். கிராமங்களின் தோற்றம் முதல், இந்நியதியே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அவ்வாறு, துலாவின் துனியில்-கொண்டைத் துலாவில்-கொடிகட்டி, கிணற்று நீரை மேலே எடுத்துக்கொள்ளும் அவர்களுக்கு, ஏற்ற ஏதனம் எதுவும் கிடைத்தற்கரியதாய காலத்தில் எம்மூர் மக்கள், விசேட மாகப் பெண்கள், பொருத்தமான ஏதனம் பற்றித் தம்முள் ஆலோசனை கலந்ததன் மூலம் பட்டை' என நாம் வழங்கும் ஏதனத்தின் வடிவத்தினை அமைத்தனர்.
நாலு மூலை கொண்ட பெட்டி, கடகம் போன்ற, நிலத்திலே ஒன்றிப்படியும் வடிவமைந்த பன்னங்களை, இழைக்கக் கூடிய கைத்திறன் பெற்றிருந்த அவர்கள், அவற்றின் மூலம் கஷ்டப் பட்டேனும் நீரெடுத்துப் பயன்படுத்தியமையை. நாம் நினைவில் கொளல் வேண்டும்.
நான்கு மூலைகள் கொண்ட ஏதனங்களை, பனையோலை கொண்டு முடைவதுகூட முதலில் பெருமுயற்சியாகவே இருந்த

97
போதிலும், காலகதியில் ஓரளவு தேர்ச்சி பெற்றுவிட முடிந்தது . ஆயின், வட்ட வடிவங்கொண்ட அவை மூலம் விசாலம் மிக்க தோட்டங்களுக்கு, நீர் பாய்ச்சுவது அவர்களுக்குச் சிரமமாகவே இருந்தது. சிறுச்சிறு குடிகளாயிருந்து, பல்கிப் பெருகிய குடும்ப வாழ்வு நோக்கிப் பயிரிடும் இடப்பரப்பும் விசாலித்தபோது, நீர்
பாய்ச்சும் கடமையில் சிரமமும் கூடுவதாயிற்று. எனவே கிணற்று மிதியில் நின்றபடி, வாய்க்காலினூடாக நீர் போக்குவதற்குரிய
ஏதன அமைப்பு ஆலோசிக்கப்பட்டது. பெண்கள் அதிலே சித்தி
பெற்றனர். பலகாலும், பல பெண்களும் மூலைகளை ஒன்று சக மூன்றாக (1+3) முடைந்து எடுத்துப் பெரு வெற்றி கண்டனர்.
அடிப்பாகத்தில் தனிமூலை எடுத்து, முதலில் நீத்துப் பெட்டி போல் இழைத்தனர். பின்பு இடையில் சமதூரத்திலும் சம உயர்த்திலும் மூன்று மூலைகளை அமைத்து, அதன்மேல், முன்னரே பரிச்சயமான பெட்டியின் அமைப்பை யொத்த சுற்று வட்டம் அமைத்தனர். மேலுள்ள வட்ட வடிவ விளிம்பைச் சுற்றி பிழந்த பனை மட்டையை, உள்ளும் புறமுமாக ஒடுக்கி வைத்துக் கட்டினர்.
என்ன ஆச்சரியம்
தென்மூலைப் பெண்களின் வடிவமைப்பு, இக்காலத்துச் சீமை எஞ்சினியர் மாருக்கே ஆச்சரியந்தரும்.
இவ்வாறாய பட்டை முடையப் பழகியதும் அயலூர்த். தோட்டக்காரரும், ஏழாலை நோக்கி நடப்பாராயினர். நீரிறைப்ப" தாயின் பட்டை" தேவை. பட்டை வேண்டுமானால், ஏழாலைத் தென்மூலைக்கு நடக்கவேண்டும். வேறெங்கும் பெறமுடியாத பொருள் அது. அயலூரவர் பலராக ஏழாலைக்கு வரத்தொடங்க கவே, பட்டை முடையுந் தொழில், பெண்களிடையே முழுநேரத், தொழிலாக மாறிவிட்டது.
'அண்ணை எங்கே போய்வாறாய்?" **பட்டை வாங்கத் தென்மூலைக்குப் போகிறேன்.""
தென்மூலை காலகதியில், பட்டையின் மேம்பாட்டினாலும் முதற் தேவையைப் பூர்த்தி செய்யும் நற்றொண்டர் வாழும்: *பட்டை மூலை' என்றாயிற்று. அஃது உயர் தொழிலால் வந்த குறிச்சிப் பெயரே அன்றி வேறல்ல. இன்றுவரை நமது தென் மூலைப் பெண்களின் கைத்திறனின் பேறாகக் கிடைக்கும் நீத்துப் பெட்டி முதல், பெட்டி, கடகம், படுக்கைப்பாய் ஈறான

Page 53
98
அனைத்துப் பன்ன ஏதனங்களுமே நாடு முழுவதும் விற்கப் இபடுகின்றன.
அன்றொரு நாள் ஏழாலைக்குப் பட்டை வாங்க வந்த சங்கு வேலியைச் சேர்ந்த வைத்திலிங்கமும், மல்லாகம் கோட்டடிக்குப் போக வந்த அச்சுவேலி முருகேசரும் ஏழாலைத் தேவி கோயி *லடியிற் சந்தித்தனர்.
* 'முருகேசண்ணை தூரப் பயணமே? இங்கா  ைல போறியள்."
* 'இல்லையண்ணை கிட்டடிக்குத்தான். பட்டை ஒன்று வாங்க வேணும். பழையது மூண்டு மாசத்திலை உக்கிப் போச்சு • ஒலைச் சார்வு கொஞ்சம் முத்திப் போச்சுப் போலை. அதாலை மூலைப்பட்டை கெதியாய் இத்துப் போச்சண்ணை. என்ன "செய்யிறது? பட்டை இல்லாமல் பயிர் செய்து வளர்க் கேலாது. இஞ்சை தென்மூலைக்கு வராமல் பட்டை வாங்கிறது கயிட்டம். ஒரு வீட்டில் இல்லாட்டி மற்ற வீட்டில் பார்த்து ஃவாங்கேலும்.”* ی۔
**ஓமண்ணை 1 நாங்களும் ஐஞ்சு கட்டை நடந்து இங்கைதான் வருவோம் பட்டை வாங்க. ஆனாலண்ணை நீங்கள் சொல் லுறது போலை மூண்டு நாலு மாதத்திலை ஒரு பட்டை :பழுதாகிறது புதினமாயிருக்கு. ’’
**நான் போன கோடைப் போகத்திலை வாங்கின பட்டை இன்னம் புதியது போலக் கிடக்குது. இறைப்பு முடிந்தகையோடை அலுப்பைப் பாராமல், பட்டையை நிமித்திப் பிடித்து உள்ளே ஒலைக் கஞ்சல், வாழைச்சருகு ஏதாவது போட்டுக் கொழுத்தி, தண்ணி வற்றக் காய்ச்சவேணும். உள்ளும் புறமும் அப்படிக் . காய்ச்சி வைத்தால் லேசிலை உக்காது. ’’
** என்னண்ணிை நேருப்பு மூட்டிக் காய்ச்சினால் ஒலை எரியாதே? நாங்கள் நல்ல வெய்யிலிலைதான் வாட்டுவம். ஓரளவுக்குக் காய்ஞ்சுவிடும். மறுநாளும் இறைப்புத்தானே. பிறகும் நனையுந்தானே. ஏன் வீண் மினைக்கேடு?’’
'நல்லாய்ச் சொன்னீர்! நேற்றுக்குளிச்சவர், இன்றைக்குக் குளிக்கிறேல்லையே. நாளைக்கும் குளிக்கத்தானே வேண்டும், ஊத்தை உருட்டி! அதுபோலக் கஞ்சல் சருகுபோட்டு வாட்டிப் யாரும் அந்தப்பட்டை மெல்லிய கறுப்பு நிறமாய், என்ன வாசனை வீசுதெண்டு.”*

99
"ஒமண்ணை பட்டை வாங்கின வீட்டுக் கிணத்திலை, ஒரு கைப் பட்டை கட்டியிருக்கினம். தண்ணி விடாயிலை ஒரு பட்டை அள்ளிக் குடித்தனான் அண்ணை குடிக்கக் குடிக்க ஆசையாய்க் கிடந்துது. முழுத் தண்ணியையும் மண்டி விட்டேன்.
என்னண்ணை அந்தக்கிணத்துத் தண்ணியின்ரை விசேஷம்?"
வைத்திலிங்கத்தார் வயிறு குலுங்கச் சிரித்துவிட்டு, மெது வாகக் கூறினார். 'முருகேசண்ணை இந்த ஊர்க் கிணத்துத் தண்ணியும், எங்களதைத் காட்டிலுந் திறந்தான். அதைவிட அந்தக் கைப்பட்டையில்-காய்ச்சியதால் உண்டான வாசனை தான் உம்மை மண்டப் பண்ணியது. இப்ப தெரிந்ததே ஏழாலைத் தண்ணியும், அவர்கள் இழைத்த ய்ட்டையும் எப்படிப்பட்டவை என்பது.'
ஏழாலை மக்கள் கோடைகாலத்து வெயிலின் போது, தாகத் திற்குப் பருகுவதற்கெனப் புகையூட்டிய பானையிலே, நீர் நிறைத்து வைத்திருப்பர். "புகைப்பானை" என அதனைக் குறிப் பிடுவர். அப்பானையில் நிரப்பிவைத்த தண்ணீர், புகைமணம் வீசும். தண்ணீர் ருசியும், புகைப்பானையின் வாசனையும் சேர்ந்து, மனதுக்கு இதந்தரும். தாகமும் தீரும்.
நாகரிக வளர்ச்சி பெற்ற தற்காலத்தில், குளிர்பான வகை களும் மலிந்து விட்டமையால், முந்தியவை தவிர்க்கப்பட்டதோடு, அவை அறியாப் பண்டங்கள் ஆகிவிட்டன. மின்சாரமும், மின் சாரத்தில் இயங்கும் குளிர்சாதனப்பெட்டி போன்றவையும், பாவனைக்கு வந்தபின், எமது வாழ்வில் பற்பல அநுகூலங்கள் கிடைத்தமை உண்மையே. எனினும், 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வருடங்களிலேயே மின்சாரமும் அதனால் உண்டாகிய நற்பலன்களும் அற்றுப்போன அவலநிலை, நம் தமிழினத்தின் துர் அதிஷ்டமேயெனலாம். என்றாலும் ஏழாலைப் பட்டையும் புகைப்பானையும் கைகொடுக்கும்.
தோட்ட இறைப்புக்குப் பெரியபட்டை உபயோகிக்கப்பட்டது போல, அன்றாட வீட்டுப் பாவனைக்கும், குளிப்பதற்கும் எனக் * கைப்பட்டை" எனும் பெயரில் சிறிய பட்டையும் பாவனையில் இருந்தது. உலோகத்திலே சாதாரண பாவனைக்கு வாளி செய்த காலத்தேயும், இறைப்புக்குப் பட்டையே தேவைப்பட்டது. மூலிகையான சிறுதகரையை, கையாந்தகரை" என்பது போன்ற காத்திரமான பெயர் கைப்பட்டை என்பது.

Page 54
100
வாளிச் சூத்திரங்களும், நீரிறைக்கும் எந்திரங்களும் பாவனைக்கு வந்த பின்பு, பட்டைகொண்டு நீரிறைப்பது அருகிப் போயிற்று. அக்கால கட்டத்தில், இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து, இந்த தசாப்த ஆரம்பம் வரை, பட்டை இழைக்கும் கைவினையையே மறந்து போயிருந்தனர். நாட்டிலே ஏற்பட்ட அசாதாரண எரிபொருள் தட்டுப் பாட்டின் நிமித்தம், மீண்டும் பட்டையுங் கொடியும் பாவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
இந்நிலையிலும், குறிப்பிட்ட குறிச்சிப் பெண்களே கைகொடுத்து உதவுந்திறன் போற்றுந்தரமாகும். பட்டை மறு பிறப்பெடுத்து விட்டது!
மீண்டும் அப்பகுதி சுறுசுறுப்படைந்து, பெண்கள் குடிசைத் தொழிலும் விருத்தியடைகின்றது. பெண்களின் பொழுதுபோக்கும் வருவாயும் இங்ங்ணமாக, ஆண் மக்கள் தமது தோட்டங்களில் உழைப்பதோடு, வெயில் கொளுத்தும் பகல் நேரத்தில், அன்னவர் மனைகளுக்கு அணித்தாயிருக்கும் தம்பையா முதலாளி, நல்லையா முதலாளி போன்றோரின் சுருட்டுக் கொட் டகைகளில் சுருட்டுச் சுற்றுவதில் ஈடுபடுவர். பெரும்பாலான ஆண்கள், கமத்தொழிலோடு, சுருட்டுத் தொழிலும் செய்யத்தக்க விற்பன்னராய் இருப்பர். இவ்வகை இருவினை செய்யும் சமர்த்தர் முனியப்பர் கோவிலடியிலும் உளர். மற்றைக் குறிச்சிகளிலும், கணிசமான சுருட்டுத் தொழிலாளர் உளர்.
தென்மூலையைத் தவிர்ந்த ஊரங்குணைக் குறிச்சியிலும் முன் னாளில், கொழும்பு வர்த்தகர் திரு. வி. வைரமுத்து (எஸ். ஆர். எஸ்.) ஒரு சுருட்டுத் தொழிற்சாலை நடத்தி வேலை வாய்ப்பு அளித்து வந்தார். அவரின் மறைவின் பின், அவரின் கனிஷ்ட புத்திரனான திரு வை. கனகரத்தினம் பாரிய அரிசி குற்றும் ஆலையை நிர்வகித்து வந்தார். அதுவும் நாட்டிலேற்பட்ட துர்ப் பாக்கிய நிலையால் செயலிழந்து விட்டது. மூத்த மகனான திரு வை. செல்வரத்தினம் கட்டுப்பெத்தையில் எஞ்ஜினியரிங் டிப்ளோமா" செய்தபின், தந்தையார் வழிவந்ததும், ‘செல்வ ரத்தினம் ஸ்ரோர்ஸ்’ எனவே அறியப்படுவதுமான, பல்பொருட் களஞ்சியத்தை நடாத்தி வருகின்றார். ஏழாலையிலே அவர்களுக் குரிய நிலவுடைமைகளும், இதர சொத்துக்களும் என்னவாயிற்று என்பது அறிய முடியா இரகசியமாகும். அதே போன்று அவர் களின் உறவினரும், கொழும்பு நாலாங்குறுக்குத் தெரு வர்த்தகரு மான திரு செ. நல்லையா எனும் முதலாளியும் தம் சொத்துக் களை இங்குவிட்டு கொழும்பு வாசியாகி விட்டார்.

10. அயற்கிராம விஸ்தரிப்பும்
புதிய கிராமோதயங்களும்
நானூற்று நாற்பத்திரண்டு வருடகால அந்நிய ஐரோப்பியரின் ஆளுகையில், அவர்தம் நிர்வாக ஊழியர்களாக, விதானை, உடையார், மணியகாரன் என்போர் பயன்படுத்தப்பட்டனர். பிரித்தானியர் ஓரளவு ஒழுங்கான நீதி பரிபாலனஞ் செய் தாரெனி னும், அவர்க்கு முற்பட்ட இருநூற்றுத் தொண்ணுாற்றொரு வருடங்களும், குருடனொருவன், மற்றொரு குருடனுக்கு வழி காட்டியாயமைந்த கதையாகவே, மேற்போந்த நியமனங்கள் நடைபெறலாயின.
எடுத்துக்காட்டாக, பறங்கியர், ஒல்லாந்தர் நியமித்த சட்டம் பிமாரை முன்வைக்கலாம்.
சட்டம்பியார் என்பவர், அவர்களின் பாடசாலைக்கு வந்து ஆனா ஆவன்னா (அ. ஆ) படிக்கும் பிள்ளைகளின், தினவரவு பதிதலும், கூடவே, ஆராதனைக்கு வரும் பக்தர் விபரம், ஞான ஸ்நானம் பெறுவோர், சபையிற் சேருவோரின் விபரம், என்பன பதிதலும் ஆகிய கடமை பூண்டோராவர். அவர் எப்பொழுதும், இணைப்பதிவேடுகள் வைத்திருப்பார். ஒன்று உண்மையான தகவலும் தொகையும். மற்றொன்று உரிய மேலிடத்துக்குச் சமர்ப்பிப்பதற்கு உரியது. மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்தி, தம் சுயதேவைகளை நிறைவேற்றுவதற்கு, இத்தந்திரோபாய சட்டம்பிமார் கையாண்ட வழி இது.
அன்றியும் விவாகப் பதிவு, பிறப்பு, இறப்பு, காணி உறுதி .களின் பதிவும் இவர்கள் பொறுப்பே. அவர்கள் அவ்வாறு மாற்றியும், திருத்திக் கூட்டியும் எழுதாவிடத்து, எவ்வாறு போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும், தத்தம் சுயசீமைக்கு அனுப்பிய வருடாந்தப் புள்ளிவிபர அறிக்கைகளில், 'யாழ்ப்பாணத்தார்

Page 55
1.02
அனைவரும் கிறிஸ்தவர்களே; இந்துக் கோயில்கள் அனைத்தும் அழித்தொழிக்கப் பட்டுவிட்டன" எனக் குறிப்பிட முடிந்தது?
ஒல்லாந்த அர்சு நீங்கிய பின்பு, இங்குவந்த அமெரிக்க பாதிரி மார், 'நாம் இங்கு வந்தபோது, உண்மைக்கிறிஸ்தவர்கள் எவரையுங் காண முடியவில்லை. இருக்கும் சிலரும் பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலுங்காட்டும் விலாங்கு' 'போன்ற மாய்மாலக் கிறிஸ்தவரேயன்றி, விசுவாசக் கிறிஸ்தவர் ஆருமிலர். ’’-என ஒளிவு மறைவின்றி அறிக்கை செய்தனர்.
இவ்வாறாய கண்ணியமற்ற அரச ஊழியர், தத்தம் மனம் போன வாக்கிலே, கிராம எல்லைகளை விஸ்தரிப்பதிலும், அதன் மூலம் பிறிதோர் விதானையை நியமிப்பதற்கு வழிவகுத்து, தனது வேலைப் பழுவைக் குறைப்பதோடு, புதிதாக ஒருவர் உத்தி யோகம் பெறவும் வழிசமைத்தனர். புதிதாக நியமனம் பெறும் உத்தியோகத்தர், பழையவரின் இரத்த உறவினனாகவோ, அல்லது மேலுத்தியோகத்தரின், கையாளாகவோதான் இருப் பார். இவ்வாறு தம் மனம்ப்ோன போக்கிலே கீழுத்தியேரகத்தர் நிர்ணயித்து, தமக்கு ஒத்தாசையாகச் சில பிரமுகர்களையும் ஒன்று கூட்டி, மேலதிகாரியிடம் சமர்ப்பிப்பர். மேலுத்தியோகத் தரும், தமக்கு எப்பொழுதும் பணிவுள்ள ஊழியனாக நடக்கும், கீழுத்தியோகத்தரையும், அவருடன் கூடிவந்த, கெளரவத்துக் குரியோரையும், தமக்குத் தாசானுதாசராக்கும் எண்ணமும், ஒரே நேரத்தில் நிறைவேறுவதனால் திருப்தி கொள்வார்.
இவ்வித அவசியமற்ற செயலினால், மூலக்கிராமமும், அவற்றிலிருந்து பிரித்தெடுத்து, உதயமாக்கிய குக்கிராமமும், காலகதியிலே வளர்ச்சியடையவோ, உற்பத்திகளில் நிறைவு எய்தவோ இயலாது தவிக்க நேரிடுவதுண்டு. கல்வி, அரச உதவிப் பங்கீடு, விளையாட்டு வசதிகள், சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில் உரிய பாகம் கிடைக்கப் பெறாமல் தடுமாறுவதும் இயல்பே.
எமது ஏழாலைப்பதி, காலக் கணிப்புக்கு அப்பாற்பட்ட, ஆதிக் குடிபுகு நாளிலிருந்து, குடிபுக்க கிராமக் குறிச்சிகள் தோறும் நிலைகொண்டு, நிம்மதி வாழ்வு நடத்திவந்தவர்களின் வழிவந்த மக்களே நிறைந்த ஊர். பண்டு தொட்டுத் தாம், தேர்ந்தெடுத்து வளப்படுத்திய பகுதிகளின் எல்லையை மீறாமல், அயற் குறிச்சிகளைச் சேர்ந்த மக்களையும் தம்மோடணைத்து, ஒருவரின் வாழ்விலும் தாழ்விலும் மற்றவர் ஒத்தாசை புரிந்து வாழ்ந்தவர்கள். ' எங்கள் ஊர்' எனும்போது, தத்தம் ஒழுக்க

103
ஆசார சீலங்களை, விட்டுக் கொடுக்காமலே, ஓர் உத்வேக உணர்ச்சி பெறுவார்கள். அத்துணைக் கிராமப் பற்று, பரம்பரைச் சொத்தாக நிலவி வந்தது. எல்லையில் இருந்து பிரித்துச் சேர்க்கப் பட்டஅல்லது கிராமோதயம் நிகழ்த்தப்பட்ட சிறுபகுதிகள்- அவை: முந்திய ஏழாலையின் குறிச்சிகளே யாதலால், உண்மையான” பற்றுறுதியைக் காண்பதென்பது, பேய்த்தேரை ஒத்த உணர்வே யாகும்.
பழையதும், வளர்ச்சியுற்றிருந்ததுமான ஆதிக் குடிகளைத் தன்னகத்தே கொண்டிருந்த, பெரும் விசாலமான ஊரின் எஞ்சிய பாகத்தில் வாழ்பவர்கள், நம் ஊரின் அழகுத் தோற்றமும் பொலி" வும் சிதைவுற்று, செயற்கையான பொலிவுடன் திகழ்வதை நோக்கி, உள்ளூர மனங்கவல்தலும், கிடைக்க வேண்டிய சில: சீவாதார உரிமைகள், சலுகைகள், மறுக்கப்பட ஏதுவுண்டென எண்ணுவதும் தவறாகாது. உதாரணமாக, ஏழாலயலுரின் விசால மான பரப்பளவும், இலங்கையின் மற்றெந்த ஊருக்கும் கிட்டாத, தாய மக்கட் செறிவு முதன்மையும், இந்நூற்றாண்டு முடிவி: லேனும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகக் கூடிய நிலையை அடையக் கூடியது. இடையே விதி செய்த சதியே போல, இக்கால. அரச மேலுத்தியோகத்தரும், முன் யோசனை சற்றேனும் இன்றி, எம் கிராமத்தின் பூமி சுவீகரிப்பில் ஈடுபடுவதும், முன்பிருந்த. நிம்மதி தவழ்ந்த அயற்கிராமங்களை, நீட்டி இன்பங்காண்பதும், மன்னிக்க முடியாத தேசியத் துரோகமாகும். துர் அதிர்ஷ்ட வசமாக, நம் அரசே அவ்வாறு கருமமியற்றி, குறித்த கிராமத்தின் பெரும்பான்மையைச் சிறுபான்மையாகவும், அயலூர்ச் சிறுபான் மையைப் பெரும்பான்மையாகவும், செய்வதன் மறுரூபந்தான்" இதுவெனத் தோன்றுகிறது.
இச்செயல் 19 ஆம் நூற்றாண்டின் கடைக் கூறுதொட்டு, யாருமறியாது செய்யப்பட்டு வந்தது. தலைவரி, மதுவரி, தானியவரி என வரும்போதே, அவற்றின் உண்மை ஒருவாறு வெளிப் படும். எனினும் அக்காலத்து நிலைமையில், யாராலும் கண்டிக், கப்படவோ பெரிதாக எண்ணப்படவோ இல்லை. 04.02.1948. இல் நாடு சுதந்திரம் பெற்று, தொகுதி நிர்ணயம் செய்யப்பட்ட போது அரசியல்வாதிகள், தமக்கு ஆதரவு தரக் கூடியோரை Jr எல்லைக்குள் அடக்கி, தேர்தலில் வெற்றியீட்டும்ق) چ؟ நோக்கிலேயே, அநேகமான பாகப்பிரிவினைகளைச் செய். துள்ளனர்.
அன்னாரின் கபடநோக்கம் பலகாலம் நிலைத்திருக்கவில்லை. யாவும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயிற்று அவர்கள்

Page 56
104
நாட்டிய பிரினை விதை, எம்மூர் மக்களை, மனத்தாலும், மேம் :பாட்டு நடவடிக்கைகளாலும், பிரிவினை செய்துள்ளமை, உண்மையும் நேர்மையும் தப்பாது, நேர்வழி நிற்போர்க்கு, வெட்டை வெளிச்சம். குப்பிளான் கிராமோதயத்தை உதாரணத் துக்காக எடுத்துக்கொள்வோம். ஏழாலை உள்ளடக்கிய, சூரா வத்தை, மயலங்காடு, கோட்டைக்காடு, மேற்கேழாலை, கிழக் கேழாலை, புதுக்கிணற்றடி, ஊரங்குணை, தென்மூலை, குப் ஃபிளான் எனும் பெருங்குறிச்சிகள், ஏழாலயம் அமைத்து அதன் காரணமாக ஏழாலயலுர் எனப் பெயரிட்டு அழைத்த தொடக்க காலத்திலேயே மக்கள் குடிபுக்க பகுதிகள்.
அன்றே மக்கள் குழு தமக்கென விவேகமும், உடற்கட்டுக் கோப்பும், நீதி வழங்கும் பெருங்குணமும் படைத்த ஒருவரையோ, சிலரையோ தம் தலைவராக நியமித்துச் சுபீட்சமாக வாழ்ந்து வந்தனர். அனைத்துக் குறிச்சி மக்களும், தத்தம் பழக்க வழக்கங் களையும், நற்பண்புகளையும், பொன்னே போற் பேணிப் பாது காத்து வந்தனர். பெரும்பாலும் தனித்தனி குறிச்சி சார்ந்த மக்களுக்குள், அவரவர்களுக்கே உரித்தான, விசேட குணங்கள் நிலவியதுண்டு. முழு ஊரையும் தழுவியதான பொது வாழ்விலே, அனைத்து மக்களுள்ளும் புரிந்துணர்வு நிலவியது. முன்னர்க் குறிப்பிட்டமை போல, பல்லாயிரவர் வாழ்ந்த ஒரூரில், எப்போ தேனும் சிறுச் சிறு பூசல்கள் நிகழ்வதுமுண்டு. அவற்றைச் சம்பந்தப்பட்டவர்களே, தம்முள் சமரசமாகத் தீர்த்துக் கொள்வர். அப்பாற்பட்டவை ஊர்ப்பிரமுகர்களினால், சமரசமாகத் தீர்த்து வைக்கப்படும். நாம் அறிந்த வரையில் எக்காலத்திலேனும், எவர் மீதும் எவரும் மேலாண்மை செலுத்தியதில்லை. ஒதுங்கி விலகி வாழ்ந்தோருமிலர்.
குப்பிளான் என மாற்றம் பெற்றுள்ள, ஏழாலையின் வட கிழக்குப் புறக் கிராமத்து மக்கள், நல்ல விவேகமும், தொழி லாற்றலும், திடகாத்திர உடற்கட்டும், சைவப் பற்றும் உடைய வர்கள். அக்குறிச்சியில், இற்றைவரை ஒரேயொரு பாடசாலையே உளது. "ஏழலை வடக்கு விக்னேஸ்வர வித்தியாலயம்' எனப் பெயரிய பாடசாலையிற் படித்து, வெளியூர் உயர் பாடசாலை களிற் தேறிப் பலவகை உத்தியோகங்களை வகிப்போர் அநேகர் உளர். நானே மேற்கூறிய பாடசாலையில், கட்டுவன் பண்டிதர் வ. முத்துக்குமாரு அவர்களிடம் அத்திபாரமாகக் கற்ற தமிழிலேயே, இதனை எழுதுகிறேன் எனப் பெருமிதத்தோடு கூறுவேன். அப்பாடசாலை இன்று மகாவித்தியாலயமாக
உயர்த்தப்பட்டுள்ளது.

105
இருப்பினும், அநேக மாணாக்கர் முன்போலவே, அயலூர்க் கல்லூரிகளையே நாடிக் கற்கின்றனர். எமக்குள் எத்துணை ஆர்வம் மேம்பட்டிருப்பினும், அந்தஸ்துக்குரிய கற்கை வசதிகள் பூரணப்படுத்தப்படாத விடத்து பெயரின் கவர்ச்சி எடுபடா தென்பது உண்மையே.
மக்கட் பெருக்கத்திற்கு ஏற்றவாறு, விவசாயம், தொழிற் துறை, விளையாட்டு வசதிகள், மற்றுஞ் சாதனங்கள் விஸ்தாரமா யிருப்பது அவசியம். விஸ்தீரணத்தில் மட்டாகவேயுள்ள நிலப் பரப்பு காலகதியில், மக்கட் பெருக்கத்தின் காரணமாக-செறிவுக் கேற்றளவு இல்லாது, நெருக்கப்படும்போது அல்லற்பட நேரிடும் என்பதனாலேயே, என் சிற்றறிவுக்கு எட்டியமட்டில், மேலே காட்டியவாறு கூறினேன். அன்றியும், ஒன்றாகவும் சுபீட்சமாக வும் வாழ்ந்த ஏழாலை வாசிகளாகிய நாம் பெயரளவிலேனும் பிரிந்து வாழ்வதை, நடுநிற்கும் என்போன்றோர் மனது ஒப்ப வில்லை. 1966 ஆம் வருடம் தனியொரு கிராமக் கோரிக்கையை முன் வைத்தவர்கள், அப்பெயர் சொந்தமாவதை அப்போதைய நிம்மதியாகக் கொண்டனரேயன்றி, பின்னால் ஏற்படப்போகும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டிருக்கவில்லைப் போலும் .
சமீப வருடங்களில் எமது ஊரின் வடக்குப்புறக் குறிச்சியான ஊரங்குணை, யாருமறியாமலே, கட்டுவன் கிராமசேவையாளர் பிரிவுடன் சேர்க்கப்பட்டுள்ளதெனத் தெரியவந்தது. அதன் தென் எல்லையாக, ஏழாலை வடக்கு அமெரிக்கமிஷன் பாடசாலையும் தேவாலயமும் உள்ளடக்கிய பகுதி, குறிப்பிடப்பட்டுள்ளது. 1816 ஆம் வருடமுதல் முன் காட்டிய பெயரிலே வழங்கி வரும் பாடசாலையும் தேவாலயமும், திடீரென இரவு உறங்கி விடிந்து எழும் வேளை, மறுபிறப்பும், மறுநாமமும், பெற்றமை, கண்டு கேட்டறியாத விந்தையாகும்!
ஏழாலையின் வடக்கு எல்லைக் கிராமங்களாய்ப் பண்டை நாட்களில் இருந்தவை, குரும்பயிட்டியும், கட்டுவனுமாகும். கட்டுவன் கிராமத்து மக்களின் கல்விக்கு ஒரேயொரு பாடசாலை உளது. அதன் பதியப்பட்ட பெயர் யா/மைலிட்டி தெற்கு பாலர் ஞானோதய வித்தியாசாலை என்பதாகும். அப்பாடசாலை, முன் னாளில் தெல்லிப்பழை வயாவிளான் வீதியின் தெற்குப் பக்கமாய் அமைந்திருந்தது. தற்போது இடவசதி போதாமையால், மயிலிட்டி செல்லும் வீதிப்பக்கமாய், புதிய கட்டிடத்தில் இயங்கு கின்றமையைக் காணலாம். அதேபோல நம் மதிப்பிற்குரியவரும்,
7

Page 57
106
ஈழகேசரி உரிமையாளரும் ஆசிரியருமாயிருந்து, பற்பல எழுத் தாளர்களை உருவாக்கி உதவியவருமான, திருநா.பொன்னையா அவர்கள் 1934இல் தமது ஜனனவூரிலே "தென்மயிலைச் சன் மார்க்க சபை" எனவோர் சபையை நிறுவினார். அதற்குரிய மண்டபம் வீதியின் வடபாலுளது. அக்காலத்தே, நாம் இப்போது ""குரும்ப சிட்டி' என வழங்கும் கிராமத்திற்கெனப் புறம்பாக ஒரு விதானையோ, விதானைப் பிரிவோ, இருக்கவில்லை. முதன் முதலாக இப்போதய பெயர் நிர்ணயம் பெற்று, திரு கதிரேசு செல்லத்துரை என்பவரே முதலாவது விதானையாராகச் செயற் Lill-Ti.
அயற் கிராமங்களைப்பற்றிக் கூறுவதனாலே, வாசகர்கள் மலைப்படையக் கூடும். நான் கண் கூடாகக் கண்டதும் முன் னோர் சொல்லக் கேட்டதும், எழுத்துருப் பெற்ற ஏழாலைக் குடி மதிப்பிற் கண்டதுமாய உண்மையை, வெளிப்படுத்தி, வாசிப்போர் கருத்துக்கு வைப்பதே நோக்கமாகும். பல காணி உறுதிகள் இக் கூற்றுக்கு ஆதாரமாயுள்ளன.
பண்டு தொட்டு-கிராமசபைத் தேர்தல் இடாப்புகளிலேயுங் கூட ஊரங்குணைக் குறிச்சி, குரும்பசிட்டி எனப்படும் கிராமத்தி னுாடு செல்லும் புதுவீதிவரை வியாபித்திருந்தது. ஆதலால், மயிலிட்டியின் தென் எல்லைக் கிராமமான அங்கு, பலகாலமா யிருந்து வந்த ஒரு காணிப் பெயர், குறிச்சியின் பெயராகி, பின்னர் அண்மையில் ஊர்ப் பெயராக மாற்றம் பெற்றது. வயாவிளான் திரு. க. வேலுப்பிள்ளை அவர்கள் தமது யாழ்ப்பாண வைபவ, கௌமுதி' எனும் நூலில் குரும்பயிட்டி (ஏழாலை) எனக்காட்டி, குறும்பர் வசித்த இடம் என்கிறார். ஏழாலையைச் சார்ந்தது என்பதே அவர் முடிவு. அதனாலேயே ஏழாலை எனும் நாமத்தை அடைப்புக் குறிக்குள் அடக்கியுள்ளார். அன்றியும் ஏழாலைக் கிராம சபையின் எதிரிலுள்ள இரட்சணியசேனை மண்டபவளவு குரும்பயிட்டி அன்மூலை எனவும், அதன் அயலிலுள்ள மற்றொரு வளவுக் "குரும்பயிட்டி வளவு" எனவும் உறுதிச் சாதனம் காட்டு வதும் நோக்கற் பாலத்ாகும்.
குரும்ப சிட்டியைப் போன்றே, கட்டுவன் என்றோர் ஊர்ட் பெயர் அநாதியில் இருந்ததில்லை. ஏழாலயத்திலிருந்து வடக்கு நோக்கி ஆரம்பித்த குடியேற்றம், காலகதியிலே, மைலிட்டியின் தெற்கெல்லைக்கு அண்மித்து வந்த காலத்தே, தெல்லிப்பழை மாவிட்டபுரம், வறுத்தலைவிளான் போன்ற கிராமங்களிலும், அவற்றின் வடபாலும் பெய்யும் மாரி மழைநீர், தற்போதய கட்டுவன்-தெல்லிப்பழை வீதியிருக்கும் பகுதியூடாகத் தெற்கு நோக்கிப் பாய்ந்துவரும். குடியேறிய ஏழாலைக் குடிமக்கள்

107
ஒன்று திரண்டு, அம்மழை வெள்ளம் தம் பகுதிக்ளை நோக்கிப் பாய்ந்து, தம் பயிர்களையும், குடிசைகளையும் அழிப்பன்தத் தடுக்கும் முகமாக, ஓர் உபாயஞ் செய்தனர். தெல்லிப் பழ்ை யிலிருந்து கிழக்குநோக்கி, ஓர் பாரிய வடிகால் (6). Itsir) கட்டி னார்கள். வான் கட்டிய பின்பு, ஏழாலையின் ஊடே பாய்ந் தோடிய மழை வெள்ளம், வடக்கு நோக்கிப் பாய்ந்து, மயிலிட்டிக் கடலுடன் சங்கம மாயிற்று. மக்களை அழிவிலிருந்து காத்த கட்டு வான்’ கால கதியிலே, கட்டுவன் என்றாகி ஆங்குக் குடியேறி மக்களுக்கோர் புதிய கிராமமும் ஆயிற்று. இது கற்பனைக் கதை யன்று. எமது முந்திய சந்ததியாருக்கு, அவர் தம் முன்னோர். தாமே பங்கு பற்றிய மேற்படி சம்பவம் பற்றிக் கூறிவைத்த செய்தியாகும்.
இன்று நாம் காணும், தெல்லிப்பழை கிறிஸ்தவர்களின் இடு காட்டின் கிழக்கெல்லையில் இருந்து மறித்துக் கட்டப்பட்டவான் இது என்பர். பிற்காலத்தில் அவ்வான் கட்டின்மீது, கல்பதித்து வீதி அமைத்துளது அரசாங்கம். அதுவே அச்சுவேலி-தெல்லிப்பழை வீதியாகும். கட்டுவானை அண்மித்து, தென்மேற்குத் திசையிலே சிறுகுளம் உண்டு. அதனைக் கரண்ட கக்குளம்" என்பர். அக் குளத்தின் நீர்கொண்டு பயிர் செய்த மக்கள், அக்குளத்திலே கோடையில் நீர் வற்றிவிடுந் தன்மையினால், குளத்தின் கரை களிலே கிடைத்த பழுப்புநிறக் களிமண் கொண்டு, தாம் அன் றாடம் உபயோகித்தற்கு வேண்டிய பாத்திரங்களைச் செய்து வெயிலிற் காயவைத்துக் கெட்டியாக்கப் பயின்றனர். காலஞ் செல்லச் செல்ல, வெயிலிற் காயவைப்பதனை விடுத்து, தீமூட்டி, அதன் சூட்டில் காய்ச்சி, கெட்டியாக்கக் கற்றுக் கொண்டனர். இவ்வாறு பலமுறை செய்து பயின்றபின்னர், தம் கைவினையைப் பெருக்கி அயலூர் மக்களுக்கும், பாத்திரங்களை விற்றோ பண்ட மாற்றுச் செய்தோ முன்னேறலாயினர். மட்கலங்களின் தேவை அதிகரித்த பின்னர், தாம் வனைந்த பலவகைப் பாத்திரங்களை ஒழுங்குற அடுக்கி, இடையே விறகிட்டு எரித்துக் கெட்டிப், படுத்துவர். இவ்வாறு ஒழுங்குற அடுக்கிய பாத்திரக் கூட்டங்கள் சூளை" எனப்பட்டது. சூளையில் அடுக்கப்பட்ட மட்பாண்டங் களில் ஓர் பகுதி, நிச்சயமாக உடைந்துபோகும். உடைந்து சேத மடையாதவற்றை வேறாக்கி, சேதமடைந்தவற்றை சிறுதுகள் களாக்கிச் சமப்படுத்தி, அம்மேட்டின் மேலேயே, புதிய பாத்திரங் களை மறுபடியும் அடுக்கி, முன்போலச் சூளை வைப்பர். இவ்: வாறு பலமுறையும் உடைந்து சேதமடைந்த மட்கலங்கள், காலகதியில் பெருமேடாக மாறிவிட, அம்மேட்டினை 'சூளைப்பிட்டி என அழைத்தனர்.

Page 58
108
இவ்வாறு, நம் ஊரின் வடமேல் கோடியிலே, வனைதற் தொழிலை மேற்கொண்ட மக்கள், 'குயவர்' எனப்பட்டனர். ஆதியில் அக்கூட்டத்தார், வனைதற் தொழில் புரிந்தவர்களல்லர். அன்றி, திராவிட மண்டலத்திலிருந்து பின்னாளில் வந்து குடிபுக்க வருமல்லர். எமது சொந்த இரத்த உரித்தாளரான கமக்கார ரோடு, நட்போடும், விசுவாசத்தோடும் பண்டு தொட்டு உட னிருந்து வாழ்கின்றனர். பிற்காலத்தில் வேற்றுாரில் வசித்த வனைதற் தொழிலாளரோடு, மணவினைமூலம் ஒன்றியமையும் உண்மையே. இவர்கள் வசிக்கின்ற சூழலிலே, ஏராளமான பனை மரங்கள் வளர்ந்திருந்தமையால், அவற்றிலிருந்து பழங்களைச் சேகரித்து, பனாட்டு, ஒடியல், புளுக்கொடியல் முதலாய தின் பண்டங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. பனை மரத்திலிருந்து ஊறிய கருப்பைநீரைச் சேகரிக்கவும், அயலவர் களுக்கு விற்றுப் பணஞ் சம்பாதிக்கவும், வேறு சில இனத்த வர் ஊர்ப்பெரியவர்களால் அழைத்து வரப்பட்டுக் குடியேற்றப் பட்டனர். கருப்பை நீரைச் சேகரித்து அதிலிருந்து பனங்கட்டி, பனம்பாணி, ' கல்லாக்காரம்' எனப்படும் பனங்கற்கண்டு போன்ற இனிப்புப் பண்டங்களை ஆக்கியோர் ‘நறவர்" எனப்பட்டனர்.
குறிப்பிட்ட அப்பகுதியிலே, நாம் சிறுவராக இருந்த காலத் தில் விளையாடித் திரிந்த நினைவு, பசு மரத்தடித்த ஆணிபோல இன்றும் நிலைத்து நிற்கின்றது. அங்கு பிரதான விளையாட்டு சூளை (மலை) ஏறுதலும், கீழ்நோக்கி வேகமாய் ஓடிச் செல்லலு மாகும். மட்பாண்டச் சூளையில் உடைந்து சேதமாகிய மண் ஒடு களைச் சமப்படுத்தி, அத்திடலில் மறுசூளை வைப்பர், எனக் கண்டோம். அவ்வாறு பலதடவை உடைந்த பாத்திரங்களின் ஒட்டுச் சிதைவுகள், மலைபோலக் குவிந்து, ஒழுங்குற அமைந்த, பெரிதும் சிறிதுமான சூளைப் பிட்டிகளின் மேல், பனைகளும் வளர்ந்து பார்ப்பதற்கு ரம்மியமாயிருக்கும். காலகதியில் பெளதிக தாக்கத்தால், ஓடுகள் மண்ணாகி உருமாறியிருந்தன.
நான் பெரியவனாக வளர்ந்து, உத்தியோக நிமித்தம் வெளி ஆர் சென்று திரும்பிய காலத்தே, சூளைப்பிட்டியில் ஏறிவிளையாட வாஞ்சைகொண்டு சென்றபோது, அங்கே சூளைமேடுகளுமில்லை; னைகளுமில்லை. விசாரித்தபோது, மலைகள் அனைத்தும் காங்கேயன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலையின் தரைச் சமப் படுத்தலுக்காகவும், ஆஸ்பத்திரிக் கட்டட வேலைக்காகவும் ஒப்பந்தக்காரர் வெட்டி எடுத்ததாக அறிய முடிந்தது. மேற் காட்டிய சூளைப்பிட்டிகள் ஆனைக்கோட்டை, நவாலி, கல் லுண்டாய் வெளிகளில் உள்ள வயல்நிலங்களின் மத்தியில் காணப்

109
படும் மணல்மேடுகள் போன்ற தோற்றமுடையனவாய் இருந்தன. ஏழாலயலுரின் வடமேற்கெல்லையிலே அழகுடனும், கூடவே முகிலைத் தடுத்து மழையை வருவிக்கவும், மலையையே கண்டறி யாத எம் மாணவர்க்கு 'இதுதான் மலை" என்று காட்டவும், ஏதுவாய் இருந்தவையான சூளைப்பிட்டிகளும் அழிந்தன. எனி னும் ஒரு சிறு சூளைப்பிட்டி மாத்திரம் பழையவற்றின் நினைவுச் சின்னமாக, நெடுவீதியின் கிழக்குக் கரையில் வீதியிலிருந்து சுமார் நூறு யார் தூரத்தில் உள்ளது. அது ஒர் எல்லை நிர்ணயத் தைக் கொண்டதாக, அயலூர் மக்களாற் கணிக்கப்படுகிறது. அதன் தென்திசையில், நீண்டு பரந்து கிடப்பது இன்று ஏழாலை வடக்கு-புதுக்கிணற்றடி எனும் குறிச்சி சார்ந்த மக்களின் தோட்டநிலங்கள். வடபாலுள்ளவை கட்டுவன் சார்ந்த மக்களின் தோட்ட நிலங்கள்,
"பெருமாளெல்லை" என்பது எல்லைத் தோட்டம். புதுக்கிணற்றடியாரின் unt assis, புடோல், புகையிலை வெங்காயம் மிளகாய் முதலாம் பயிர்கள், புள்ளாவோடை, மிச்சப் பள்ளி, ஆரத்தை, குளந்தண்ணி, நாலு துலாக்கிணற்றடி, வளவுங் கூடல் நிமித்தன் முதலாய தோட்டங்களிலே அபரிமிதமாகப் பயிரிடப்படுவன. அனைத்துத் தோட்டங்களின் நடுநாயகம்போல் விழங்குவது நாலுதுலாக் கிணற்றடி.
குடியேற்றம் : நெடுங்கண்ணிக் குளத்தையண்டி மக்கட் குடி யேற்றம் நிகழ்வதற்கு முன், பல நூறு வருடங்களாக அக்குளத்தின் நாலாபக்கமும் காடு மண்டியதாய், பலவகைப் பிராணிகளின் உறைவிடமாய் அமைந்திருந்தது.
மயிலங்காடும் அதனையடுத்த சூராவந்தையும் தொடர் கற்பார் நிறைந்து, பல்வகைப் பரட்டை மரங்களும் முட்பற்றை களும் விரவிக் கிடந்த பகுதிகள், சூராவத்தையின் மேற்கெல்லை மயிலனி என்னும் பிரசித்தி பெற்ற கிராமம். மயில்கள் பரட்டைக் காட்டினைத் தமக்கு இருப்பிடமாகக் கொள்வது இயல்பு, பகைப் பிராணிகளையும் தம்மைக் கொல்ல வரும் வேடனையும் எளிதிற் கண்டு, மறைவிடந் தேடுவதற்காகவே, மயில்கள் இவ்வாறான இடங்களை நாடுகின்றன. அவ்வாறு மயில்கள் தங்கியிருந்த காட்டினை, நம் ஊர் மக்கள் (மயில்+அம்+காடு) மயிலங்காடு எனப் பெயரிட்டு வழங்கினர். எல்லைக் கிராமமான மயிலனியின் பாரிய மரங்களின் கிளைகள், மயிற்கூட்டம் ஓய்ந்திருக்கும் இட மாயது. அவை அங்கு அணியணியாய்த் தங்கியமையால், அவ் விடம் மயில் + அணி ஆயிற்று. இன்றைய சுன்னாகக் கிராமத்தின் ஆதிநாமம் மயிலனி என்பதே. சிங்களர் நம் பகுதியில் மேலாணை

Page 59
10
*செலுத்திய காலத்தே அவர்களாற் சூட்டப்பட்ட பெயரே சுன்னா கம் என்பது. ம்ெல்யிற்றுப் பெயர்களை உயிரீறாக உச்சரிப்பது சிங்கள மொழிவழக்கு. அதன்படி சுன்னாகம ஆயிற்று.
எமது சூராவத்தை, முட்செடிகள், கொடிகள் பின்னிப் பிணைந்து, உள்ளே மக்கள் புகமுடியாதவாறு அரணாயமைந்த பகுதி. இப்பகுதி "சூரைப்பற்றை' எனும் விசேட முட்செடிகள் நிறைந்தது. எனவே காரணப் பெயராக வந்ததே அப்பகுதியின் பெயராகும். பழைய, கீழ்வரும் பாடல் சூரைப்பற்றையின் மான் மியம் கூறும்.:-
சுற்றுங் கருங்குவிச் சூரைத்தூ றாரியப்பேய் எற்றுஞ் சுடுகாட் டிடி கரையின் - புற்றில் வளர்ந்த மடற்பனையில் வைத்ததே னொக்குமே தளர்ந்தோர்க் கொன்றீயார் தனம்
இவ்வாறாக பாடல் பெற்ற சூரைத் தூறினை - சூரைப் யற்றையை - சூரா+வத்தை என மாற்ற ஆக்கிரமிப்பாளர் தேவை தானா? வேண்டுமானால் இங்கு வந்து கோலோச்சியவர்கள், சூரா அல்லது சூரயா என அழைக்கப்பட்ட ஓர் ஆண்மகன். ஆங்கு நிறைந்திருந்த கல்லைக் கிண்டியெடுத்து மண் நிரப்பிப் பயிர் செய்திருந்தான்; அதன் காரணத்தினால் சூரா (சூரன், தீரன்) ஆக்கிய 1வத்தை’ எனப் புகழ்ந்து போற்றியிருக்கலாம். சூரைப் பற்றை எனவுள்ள அருமந்த தமிழ்ப் பெயரை, தேவையற்றுச் சொற்பிறப்பு ஒப்பியல் ஆய்வு செய்தல் வேண்டாத செயலாகும்.
நல்ல வேளையாக, எமது ஏழாலை எனுங் கிராமப் பெயர் மட்டும் அன்னவர் செயலினின்றும் தப்பிவிட்டது. ‘ழகரம்" அவர் கள் உச்சரிப்பில் அடங்கவில்லை போலும். ஏழாலையின் குறிச்சிப் பெயர்களைத் தமிழ் மொழிக்கு உரித்தாக்கியமை கவனத்துக் குரியது. உந்துவத்தை (உந்து=உழுந்து) குலவத்தை, வென்னா வத்தை, மிச்சப்பள்ளி, வியப்பை, வியக்குளப்பை, தொந்தன்னை எனப் பல பெயர்களை ஆக்கி நிலைக்கச் செய்தனர். இவை பற்றிய விபரம் *யாழ்ப்பாண வைபவ கௌமுதி 'யில் உளளது.
மயிலங்காடு : மயிலங்காடு எனும் பெயர் விசேடம் முன்னரே தெரிந்த நாம், அப்பெயரால் உறுதி, தோம்பு ரீதியாக-சுட்டப் படும் குறிச்சியின், ஒரு பகுதியில் மட்டும் மக்கள் முன்னாளில் குடிபுக்கிருந்தனர் என்பதையுங் கண்டோம். அவருட் பெரும் பகுதியார் உயர் திணைப்பட்டோராயும், சிறுபான்மைத் தமிழினத்

11.
தோர் சிலராகவுமே வாழ்ந்தனர். அக்காலத்தில், எமது ஊர்த் தலைமைக்காரராயிருந்த திரு. மு. க. சிவகுரு அப்பகுதியிலேயே மணமுடித்து வாழ்ந்தவர். அன்னாரின் சேவைக் காலத்திலேயே, அவர்கள் குடியிருப்பு பகுதியின் கிழக்குப் பாகத்தே நீண்டு பரந்து, கல்லே நிலமாய்க் கிடந்த பெருமயிலங்காடு, நவீன 'குடியேற்றக் கிராமம் ஆயிற்று.
கிராம விஸ்தரிப்பு, கிராம உதயம், எனும் இருவேறு நிகழ்வு கள் போன்றதல்ல மயிலங்காடு குடியேற்றம். அரசகாணி என ஒருவகை ஆக்கிரமிப்பின் கீழிருந்து, "குடியேற்றத் திட்ட"மென அரசு பிரகடனப்படுத்தியபடியால், அதே பதம் உபயோகிக்கப் படல் வேண்டியதேயாகிறது. எனினும் எமது நவீன குடியேற்றந் தான் நேர்மையும் ஒழுங்கும் தப்பாத கிராமோதயம்" என்பதனை, அக்கைங்கரியத்திலே, நேரடித் தொடர்புபட்ட சிலருள் ஒருவன் என்பதனால், மனந்திறந்து கூறிவைக்க ஆசைப்படுகிறேன்.
மயிலங்காடு குடியேற்றத் திட்டம் ஆரம்பித்த 1949 காலப் பகுதியிலே, எங்கள் விசாலித்த ஊரில் கிராம முன்னேற்ற சபை (Rural Development Society) spoir foibagi. 9;56D60T 9, D F பதிவு பெற்ற சபையாக ஆக்கித் தந்தவர், அக்காலத்தில் ஏழாலை மகாவித்தில்ாலய அதிபதியாயிருந்தவரும், ஏழாலை வடபகுதியில் மணமுடித்தவருமாகிய திரு. நீ. யோசெஃப் அவர்கள். தெற்கு ஏழாலையைச் சார்ந்த திரு வில்லியம் யோசுவாவை அழைத்து, சபையின் தலைவர் பதவியைக் கையளித்தார். முழு ஏழாலையை பிரிதிநிதித்துவப் படுத்தக் கூடிய விதமாக, சக சேவையாளரும் பொதுமக்களாற் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். பயனுள்ள பல வித பொதுச்சேவைகளும், விவசாயக் கிணறுகள், கைத்தொழிற் கூடங்கள் வீட்டுக்கொரு மலசலகூடம் போன்ற அரச உதவி, கிட்டக் கூடிய நற்பணிகளும், இயற்றி உதவிய காலத்தே மேற் காட்டிய வீடமைப்பு காணிப் பங்கீடு பற்றிய ஆலோசனை சபையில் எடுத்தாளப்பட்டது.
பங்கீட்டுத் திட்டம் பெரும்பாலும் நிலமற்றவர்களும், அன்று வாழ்ந்த பகுதியில், குறுகிய நிலப்பரப்பில் நெருக்கமாக அல்லற் படுவோருமாகிய, அன்றுழைத்து அன்று வாழ்க்கை நடத்து வோருக்கு முதலுரிமை கொடுத்தல் வேண்டுமென்பது, பொது நோக்கு, முதலில் இப்பெருநோக்கு அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆலோசனை விரிவுபெற்ற நிலையிலே, தகுதியுடையோர் யார்? எனத் தீர்மானிக்க வேண்டிய வேளை வந்தபோது, அபிப்பிராய பேதங்களும், அதனால் ஏற்பட்ட வாதப் பிரிதிவாதங்களும், எம்முள் சிறிது முரண்பாட்டினை ஏற்

Page 60
112
படுத்தி வைத்தது. அரச உதவி பெறும் குடியேற்றம் ஆதலால் கிராமாதிகாரி, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் (ஆர். டி. ஒ) உடுவில் காரியாதிகாரி (டி.ஆர். ஒ) ஆகியோரின் பங்கு மேலோங்கி நின்றது. சட்ட அமைவும் அதுவேயாதலால், சபை யின் ஒரு குழுவினர், தாமாகவே ஒதுங்கி நின்றனர். இந்நிலை அன்றைய டி.ஆர். ஒ. சிவஞான சுந்தரம் (இலங்கையர்கோன்) அவர்களிடம் முறையிடப்பட, அவர் தமது சொந்த ஊரிலே இயங்கும் ஒரு பொதுப்பணிமன்றம், இரண்டுபட்டு வீணாவதை உன்னி, மிகவும் பக்குவமாகச் செயலாற்றினார். மிகவும் சாதுரிய மாக இரண்டாம் பெயர் அறியாமலே, ஒன்றாகச் செயற்பட்ட கிராம அபிவிருத்திச் சபை (ஆர். டி. எஸ்.) இரண்டு வெவ்வேறு சபைகள் ஆயின. அவை :- 1. ஏழாலை தெற்கு மேற்கு கி. அ. சபை, 2. ஏழாலை வடக்கு, கிழக்கு கி. அ. சபை. என்பன .
இரு சபைகளும் புது உற்சாகத்தோடு தனித்தனியாக நடை பெறலாயின. சர்ச்சைக்குரியதாய், ஒத்திவைக்கப்பட்டிருந்த குடி யேற்றவிடயமும் பூரண விருப்பமின்றி, கூலிக்கு மாரடித்தவிதமாக எடுத்தாளப்படலாயிற்று. அதன்படி குடியிருப்பு வசதியற்ற தொழிலாளர்களுக்கெனப்பெரும்பகுதிக் கல்நிலம் ஒதுக்கப்பட்டது. அவருள் அநேகர் கோட்டைக்காடு, நல்லான் வதிவு, சூராவத்தை, பழைய மயிலங்காடு எனும் பகுதிகளிலே வாழ்ந்த சிறுபான்மையோ ராவர். மல்லாகம் - மமிலங்காடு - தெற்குப் புன்னாலைக் கட்டு வன், வீதியின் வடகரையிலிருந்த குறுகிய பரப்பளவு கொண்ட காணிகள், பழைய மயிலங்காடு குடியிருப்பிலும், குப்பிளான் பகுதி யிலும் வசித்த தகுதியுடையோருக்குக் குறிப்பிடப்பட்டன.
அதன் பின்னர், குறிப்பிட்ட காணிகளிலே குடியேற்றவாசி களுக்கு, மண் குடிசைகள் அமைத்துக் கொடுப்பது அரசவிதி. இந்நிலையில் மீண்டும் சிறுபிரச்சினை எழுந்தது. சிறுபான்மையா ருக்கு வீடு கட்டிக் கொடுப்பது யார்? என்பதே மூலப் பிரச்சினை அந்நேரத்திலே கொஞ்சம் துடிப்பும், மன வேகமும் கொண்ட நம் போன்ற சிலரிடம், விதானையார் விடயத்தை எடுத்துரைத்தார். மறுநாள் சிவகுரு விதானையாருடன் நானே செல்லவேண்டும் என எமது சபை ஏகமனதாக தீர்ப்பிட்டது. அத்தீர்மானப்படி, உடுவில் வீதியிலிருந்த காரியாதிகாரி அவர்களிடம் சென்று, *விதானையார் சம்பவம் முழுவதும் எமது சபையிற் கூறினார். சபையார் தமது பிரதிநிதியாக என்னை அனுப்பியுள்ளனர். அரசு கொடுக்கும் ரூ. 1100/-க்கு மண்குடிசை கட்டிக் கொடுக்க நான் சம்மதிக்கிறேன்." என மிகவும் விநயத்தோடு கூறினேன்.

11.3
இங்கேதான், எமது ஏழாலை பெற்ற சிந்தனையாளனும். நாடக எழுத்தாளனும், கூடவே, அரசின் பிரதிநிதியுமாய் விளங்கிய இலங்கையர்கோன் அவர்களின் சாணக்கியம்" வெளிப் பட்டது. "பாடசாலை சென்று மீளும்போது சந்தியுந் தம்பி! நல்ல உபாயஞ் செய்வோம்' என் நாடக பாணியில் விடையிறுத்தனர். சாயந்தரம் 3.00 மணிக்கு, காரியாலயத்தில் வை. சி. சி. கு. சுருட்டின் புகையை வட்டவடிவிலே ஊதிக் கொண்டிருந்தவர். என்னைக் கண்டதும் கையசைத்தார். 'தம்பி, உங்கள் சேவை மனப்பான்மைக்கும், துடிப்புக்கும் மதிப்புச் செலுத்துகிறேன். நீங்கள் எடுத்த முடிபினையும் அங்கீகரிக்கிறேன். ஒரேயொரு சிக்கல் குறுக்கிடும். நாம் பங்கிடும் நிலமோ கற்பார். அங்கே ஓர் வீடமைப்பதற்கு முன்பு, அந்நிலத்தின் கல்லைக் கிளறி, மண் போட்டுச் சமப்படுத்த வேண்டும். அச்செயல், அங்கு குடியேற விருக்கும் மக்களின், பழக்கப்பட்ட கைவந்த வேலை. ஆதலால் முதலில் அவர்களே முயன்று கல்லை அகற்றட்டும். அகற்றுகிற ஒவ்வொரு பரப்புக் காணிக்கும் ரூ. 100 கூலிபோலக் கொடுத்து. விடலாம். அவர்களுக்குக் கூலியும் கிடைக்கிறது; நிலமும் திருத்தி பயிரிடவும், வீடுகட்டவும், பிரயோசனப்படும். கல்லை விற்கவோ வீடு கட்டவோ உபயோகிக்க முடியும். அதைவிடுத்து, நீங்கள் வீட்டைக் கட்டிக் கொடுத்தால், அவர்களின் காணி என்றென்றும் கல்லாகவே இருக்கும். எமது ஊரும் முன்னேற முடியாது. விதாளையாருக்கும் கூறினேன், ஏற்றுக் கொண்டார்’’ எனக் கூறி நிறுத்தினார்.
இலங்கையர்கோனின் குட்டிக் கதையை, நான் மிக்க வாஞ் சையோடு ரசித்துக் கேட்டேன். இளம் பருவத்தில், என்னை விடப் பெரியவர்களோடு பொதுச்சேவை செய்து, அனுபவத்திற் கண்ட பல காரியங்கள், ஆசிரியனாக வந்த பின்பு, இலங்கையர் கோன் அவர்களுடன் தனிமையாக விதானையார் சாட்சியில் வாதிட வழி வகுத்தமையை, அதிற் கண்ணாற்கண்ட சாணக்கி யத்தை என் மனத்து ஆழத்திருந்து அகற்றவியலாதுள்ளது.
இலங்கையர்கோனையொத்த, சிறுமை-பெருமை, சிற்றினம்பேரினம் செல்வன்-வறிஞன் என்ற பேதமற்ற, சாதி, சமய, பிரதேச வேறுபாடு கருதாதவரான, ஒரு நூறு ஆத்மாக்களாவது: நம் கிராமத்தில் தோன்றி, மக்களை ஒன்றுபடுத்தல் வேண்டும். தமக்கும் தம் குடும்பத்துக்கும் மட்டுமென வாழும் வாழ்க்கை நாம் எத்துனை மேம்பாடு பெற்றிருந்தபோதினும், அயலவர்க்கும் பயன்தராதபோது வீண் நாளாகவே கழியும்.

Page 61
114
திரு. ந. சிவஞான சுந்தரம் அவர்கள் (இலங்கையர் கோன்) தாம் எடுத்த முடிபின்படி குடியேற்றவாசிகளுக்கு உரிய சலுகை களையெல்லாம் நிறைவேற்றிப் பூரிப்படைந்தார். அதேபோல, ஆங்காங்குக் குடியேறிய மக்களுள்ளும் அகநகர் தாம் கிளறிய கல்லைக் கொண்டு அழகான வீடுகள் அமைத்துத் தற்கால நாக ரிகத்திற்கேற்ப, பூந்தோட்டம், வாழைத் தோட்டம், தென்னை, மா, பலா ஏன் முந்திரி கூடச் செய்கை பண்ணுவாராயினர். அன்னாருக்குப் பொழுதுபோக்குச் சாதனமான கைப்பந்தாட்டம் வாசக சாலை, வழிபடுதல்களும் ஆக்கி, மிகவும் ஒற்றுமையாகவும் சுபீட்சமாகவும் வாழ்வது, மயிலங்காடு கிராமோதயத்தோடு தோய்ந்த அளைவருக்கும் மனமகிழ்ச்சியே தரும்.
குடியேறிய காலத்தே கைக்குழந்தைகளோடு இடம் பெயர்ந் தோரின் சந்ததியாருக்கென, அவர்தம் கல்வி வளர்ச்சி நோக்கி, யா-ஏழாலை சிறீமுருகன் வித்தியாசாலை எனவோர் பாடசாலை யும் அமைத்து, குடியேறிய மக்களின் உயர்படிப்புக்கு வித்திட் டமை பெருமைப் படக் கூடிய செயலாகும். அப்பாடசாலையின் தலைமைப் பதவி, குடியேறிய இனத்தோரின் கல்விமான்களுக்கே விடப்பட்டுள்ளமை, தகைமைபெற்ற பலப்பல ஆசிரியர் வாழும் ஏழாலயப் பெருமக்களின் தாராள குணத்துக்கு, ஒப்பற்ற எடுத்துக் காட்டாகும், முன் காட்டிய தலைமையின் கீழ் பெரும் யான்மை இனத்தைச் சேர்ந்த பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட ஆசிரியர்கள் எவ்வித குறைபாடோ, முறுமுறுப்போ இன்றிச் சேவை புரிவது அதனினும் மெச்சப் படற்பாலது.
பல சகாப்தங்களாக சுன்னாகம் தபாலகத்தினூடாக நடை "பெற்றுவந்த தபால் விநியோகத்தை, எமது ஏழாலை உப தபாலகம் மூலம் செய்யுமாறு நாம் வாதிட்ட காலத்தே, திணைக் களம் எமது கோரிக்கையின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொண்ட போது கிராம மக்களின் சில பகுதியார், அதனை மறுத்துப் பிரசாரஞ் செய்தனர். ஏழாலை உபதபாலகம், ஏழாலையின் மத்திய பகுதியில் அமைந்திருந்தமையினாலேயே அவ்வித எதிர்ப்புக் கிளர்ந்தது என்பது பகிரங்க ரகசியம். எனினும், மயிலங்காட்டுக் குடியேற்ற வாசிகள் ஏழாலை எமது ஊர்; அதுவே எமது தாய்வீடு என உளங்கொண்டு, தமது கடிதங்கள் அனைத்தும் ஏழாலைத் தபாலகத்தினாலேயே விநியோகிக்கப் படல் வேண்டுமென முடிபு செய்தனர். இவ்வாறாய தாய்த் திருவூர்ப்பற்று, ஏழாலையார் அனைவர் உள்ளத்திலும் ஊற் றெடுப்ப தெந்நாளோ!

15
புதிதாயமைந்த கிராமோதயப் பகுதியில் வாழ் மக்கள் நல்ல உழைப்பாளிகள். பலர் புரிவது கூலிப்பிழைப்பேயாயினும், *செய்யுந் தொழிலே தெய்வம்" என நினைந்து அதனையும் வாஞ்சையோடு செய்யும் மனவுறுதி வாய்ந்தவர்கள், கிராமம் அமைத்து நான்கு தசாப்தங்கள் நிறைவுறு முன்னேயே குடி யேற்ற வாசிகளுள் பல தொழிலதிபர்கள் தோன்றியுள்ளமை மெச்சற்பாலதாகும். அங்கு வாழ் மக்கள், ‘நமக்குத் தொழில் இல்லை; வருவாய் மட்டு" என்று முனகியதை நாம் கண்டது மில்லை; கேட்டதுமில்லை.
கிராமத்தின் தெற்கு எல்லையாய நெடுவீதியோரமாக *மஸ்கன்' கம்பனியாரின் விசாலமான மரக்கறித் தோட்டமும், * சீமாட்டி கம்பனியாரின் கோழிப் பண்ணையும் சூராவத்தை நா. தோமஸ் அவர்களின் அலுமினியத் தொழிற்சாலையும் இயங்குகின்றன. இத்தொழிலகங்கள் பலருக்கு வேலை வாய்ப் பளித்துள்ளமை போற்றத்தகும்.
மயிலங்காடு-புன்னாலைக் கட்டுவன் வீதிக்கு வடக்கே யுள்ள தொடர் காணிகள், மயிலங்காடு குப்பிளான் மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த செய்தி முன் பார்த்தோம். அப்பகுதி குப்பிளான் தெற்கு என இன்று அழைக்கப்படுகிறது.
மஸ்கன் நிறுவனம், இலங்கை முழுவதிலும் தனது பெயர் பரப்பி, அஸ்பெஸ்ரஸ் எனப்படும் கூரைத்தகடுகளை உற்பத்தி செய்துதவும் நற்பணியை ஈவினையிலும் கால்நடைப் பண்ணை காய்கறித் தோட்டங்களை நமது செம்மண்ணிலும் நடத்துவது போற்றத் தக்கது. அதுவும் எம்மண்ணின் ஈர்ப்புச் சக்தியைக் காட்டுவதே. " சீமாட்டி’ தாபனம் இந்தியாவிலும் இலங்கையிலும் பிரசித்தி பெற்ற ஆடை உற்பத்தி, சந்தைப் படுத்தல் ஆகிய -வர்த்தக சம்பந்தமான நிபுணத்துவம் பெற்றவர்கள். எமதுரிலே கால்நடை, கோழி முதலாம் பிராணி வளர்ப்பின்மூலம் சத்துணவுச் சேவையினை வழங்குதல் காணலாம். இத்தாபன உரிமையாளர், திரு. சுப்பிரமணியம் சோதிநாதனும் இன்றைய நிர்வாகஸ்தர் திரு. தம்பிப்பிள்ளை. சிவசண்முகராசாவும்- (மங்கை புடவை மாளிகை சுன்னாகம்) ஏழாலை மக்களால் மறக்கப்பட முடியாதோ
T6.
மேற்கூறிய இருதாபனத்தாரும், எம்மைவிட எம்செம்மண் ன் மேன்மை தெரிந்தோராவர்.
திரு. நாகமணி-தோமஸ் தமது சொந்த ஊரிலே அலுமினியத் தொழிற்சாலை ஒன்றினை நிறுவியதன் மூலம் பரம திருப்தி கண்டவர். அவரும், அயற்காணிகளில் பல்வகை எந்திரமூலத் தொழில்களை நடத்துவதற்கு முனைந்தோரும் மூலாதாரமான மின்சார விநியோகம் தற்காலிகமாகத் தடைப்பட்டமையால் தம் முயற்சிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளமை துர் அதிஷ்டமே

Page 62
12. 19-ம் நூற்றாண்டின் கல்வி நிலை
ஈழ மக்கள் ஆதிமுதல் பயிரிடு தொழிலையும், கடல் பகு திரவியங்களைச் சேகரிப்பதையுமே தம் சீவனோபாயமாக நடத்தி வந்தனர். உண்பதும், அதற்காக மெய்வருத்தம் பாராது உழைப் பதும், என வாழ்வு நடத்தினரேயன்றி, கல்வியறிவு போன்ற ஏனைய வித்தைகள் எதனையும் கற்றறிய முனைந்தவரல்லர்.
அதே வேளையில், பரராச சேகரன் போன்ற, ஆரியச் சக்கர வர்த்திகள் சிலர், தமிழ் நாட்டினின்றும் அழைத்துவந்த கல்வி மான்கள் மூலம், இதிகாசம், சோதிடம், மருத்துவம் போன்ற பய னுள்ள நூல்களை இயற்றுவித்தும், ஆர்வமுள்ளோருக்கு அவற்றைக் கற்பித்தும், தமிழை வளர்த்தனர். ஆயினும் அனைத்து மக்களுக்கும் அப்போதனை பயன்பட்டதில்லை.
ஆனால் 16 முதல் 18ஆம் நூற்றாண்டு ஈராக மூன்று நீண்ட நூற்றாண்டுகள், முந்திய நிலையும் அருகி, ஒருவகைக் கட்டாயக் கல்விக் கொள்கை, கடைப்பிடிக்கப்பட்டது.
ஐரோப்பியர் ஆட்சிக்கால நிலை அது. போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் எம் நாட்டினை அடிப்படுத்தி ஆண்டகாலத்தில், அவர்களோடு தொடர்ந்தாற்போலத் தம்மதம் பரப்பவெனத். தலைப்பட்ட, கிறிஸ்துமத பிரசாரகர்கள், மக்களைத் தம்மதப படுத்துவதற்காகப் புதிய மதக்கல்வியைப் புகட்ட முனைந்தனர். ஆளவந்த கூட்டத்தினரோ, தமது வரி அறவீடு, சட்ட மேலாண்மை, தம்மோடு ஒத்து உழைத்தல் போன்ற சுயலாபங்: கருதி, தம்வயப்பட்ட ஒரு சிலருக்கு, அதுவும் தம் தாய்மொழிக் கல்வியைப் புகட்டும் நோக்கிற் சிற்சில பாடசாலைகளை நிறுவி, மாய் மாலங் காட்டினர்.
யாழ்ப்பாண மன்னன் சங்கிலியனை வென்ற பின்னரே, எமது வடபகுதிகளில் பறங்கியர் ஆட்சி ஆரம்பித்தது. அதன்மேல் அவர் கள் சிற்சில முன்னேற்றகரமான கருமங்களை, ஆற்றத்தலைப் பட்டனர். சுதேசிகளின் ஒத்துழைப்பின்றி, நாடாள்வது, சிரமம்

117
எனக்கண்டு, அன்னவர்க்குச் சிலவகை எழுத்தறிவேனும் புகட்ட முற்பட்டனர். யாழ்ப்பாணப் பகுதியின் காணிகளைப் பன்முகப் படுத்தி, நிலையான உறுதி சாதனம் எழுதிவைக்கத் தலைப் பட்டனர். 1623ம் வருடம் "தோம்பு' எனப்படும் அச்சாதனத்தை, ஏடும் எழுத்தாணியுங் கொண்டு எழுதி வைத்தனர், எனினும் அரை குறையாக விருந்த அவ்வுறுதிப் பதிவினை, தொன்பிலிப்பு மஸ்கறிஞ்ஞா எனும் கோவைப் பிரதிராஜாவே பூரணப்படுத்து வித்தான்.
அடுத்து ஆளவந்த ஒல்லாந்தர், முந்திய இனத்தவரைவிட ஒருபடி மேலான கல்விபுகட்ட எத்தனித்தனர். அந்நோக்கம் நிறைவேற்றும் பொருட்டு, கொழும்பிலிருந்து, பல மொழி அறிந்த வரும் தமிழ்மொழி வல்லவருமான, தொன் பிலிப்பு டிமெல்லோ எனும் உயர்தமிழ்ப் பாதிரியாரை, யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்தனர். மெல்லோப் புலவர் புதிய பாணியில் உயர் கல்விபுகட்ட முனைந்தார். அறிவுக் கூர்மையுள்ள ஐந்து சுதேசிகனைத் தேர்ந் *தெடுத்து, ஒல்லாந்துக்கு அனுப்பினார். முதன் முதலாகப் *புலமைப் பரிசில் பெற்றுச் சென்ற ஐவருள், இருவர் அங்கேயே மரித்துவிட, மீண்டுவந்த மூவரும், பெரும் அறிவறிந்தோராகத் திகழ்ந்தனர். அவருள் ஒருவர் பிரெஞ்சுக்காரரோடு திரிகோண மலையில் ஏற்பட்ட பெரும்போருக்குத் தளபதியாய் நின்று வெற்றி கொண்டவர். அடுத்தவர் ஒத்தாச்சி எனப்பட்ட துவிபாஷிகர். மூன்றாமவர் தொன்பிலிப்பு இலங்கக்கோன்.
தேச வழமை : தொன்பிலிப்பு இலங்கக்கோன் தான் 1707ஆம் ஆண்டு, ஒல்லாந்தர் காலத் தோம்புறுதியை முடித்தவர் என்பர். அவருக்கு உதவியவர் நல்லூர் தொம்பிலிப்பு வில்லவராய முதலியார். இவர் சின்னத்தம்பிப் புலவரின் தந்தை. இவ்விரு முதலிமாருடன் வேறு பத்து முதலிமாரும் கூடி "யாழ்ப்பாணத் தேசவழமை" எனும் சட்டத்தை வகுத்துக் கொடுத்தனர்.
போதகர் மெல்லோப் புலவர் 1759ல் விவிலிய வேதத்தின் புதிய ஏற்பாட்டுப் பகுதியை, முதன் முதலாகத் தமிழிலே மொழி மாற்றஞ் செய்த வல்லவராவர். இந்நூல் கொழும்பிலே அச்சிடப் பட்டது. ஆங்கிலமொழி நம் இலங்கையரால் அறியப் படாதிருந்த அக்காலத்திலே, எபிரேயம், கிரேக்கம், லத்தின் போன்ற பன் மொழியிலும் வல்லவரான, தமிழறிஞராகிய மெல்லோப் புலவரின் வேதமொழி பெயர்ப்புப் பற்றி வயாவிழான்க. வேலுப்பிள்ளை . தமது யாழ்ப்பாண வைபவ கௌமுதி’ எனும் நூலிற் சுட்டிப் புகழ்ந்துள்ளார். அவர் காலத்தே 18,000 பேர் படித்தனர் என

Page 63
18
ஒர் குறிப்பு உளது. இவருள் 12387 பேர் ஞானஸ்நானம் பெற்ற வர்களாம். எனும் அறிக்கை சமயக் கல்வியை முற்படுத்துவது காண்க.
இவ்வாறு ஒல்லாந்தரின் கல்விக் கொள்கை, ஒருபடி வளர்ந்து வந்தபோது 1796-ல் அவர் ஆளுகையும், ஆங்கில வர்த்தக சங்கத் தாரின் கைப்படலாயிற்று. 1802-ஆம் ஆண்டில் மேற்கூறிய தென்னிந்திய வர்த்தக சங்கத்தார், ஆட்சிப் பொறுப்பைத் தம் தாய்நாட்டு முடியாட்சிக்குக் கையளித்தனர். அதன்பின் எம்மக்க ளுக்கு மதசுதந்திரமும், கல்வி மேம்பாடும் கிட்டுவதாயிற்று.
அவரவர் தத்தம் சித்தப்படி, மதங்களை ஆராதிக்கத் தலைப் பட்டதன் பேறாகச் சைவமதம், மீண்டும் குருத்து விட ஆரம் பித்தது. "கிறிஸ்தவர்கள்" என, மாய்மாலங்காட்டி நின்ற பலரும் பூணுரலை மடியிலே கட்டி மறைத்து வைத்திருந்த பிராமணர்களுங் கூட, வெட்டைக்கு வந்து சுயரூபங்காட்டலாயினர். ஆங்காங்கே பள்ளித்தலங்களும் அமைவுற்று ஓரளவு முன்னேற்றங் காணப்பட லாயிற்று. எனினும் நமது ஊர்களிலே, பெண்கல்வி என்பது, தாழ் நிலையில், அமுங்கியே இருந்தது.
இவ்வாறான அவல நிலையிலேதான் அமெரிக்க பாதிரியார் வலிகாகம் வடக்கு, மேற்கு எனும் பகுதிகளிலும் அங்கிளிக்கண் மிஷனரிமார், பட்டினப் பகுதியிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் கல்விப் பயிர் வளர்க்கச் சித்தங் கொண்டனர். தொடக்கத்தில், சேர்ச் மிஷனரி எனும் இங்கிலாந்து நாட்டுப் பாதிரிமாரே வந் திறங்கினர். அவர்களுள் பால்டியஸ் எனும் பாதிரியார் பருத்தித் துறைச் சந்தைக்கு அணித்தாய் நின்ற புளியமர நிழலில் தம்மத போதனையைச் செய்தார். அக்காரணத்தால் அம்மரச் சூழல் "பால்டியஸ் புளியடி’ என வழங்குகின்றது.
அடுத்தவர் பாம் பாதிரியார் (Rev. Palm) தெல்லிப்பழையில், 1805-ல் குடி கொண்டிருந்த அப்பாதிரியாரை, ஊர்மக்கள் * பாலன் பாதிரி' என அழைத்தனர். இவர் அங்கு கல்விப் போத. னையும் ஆற்றி வந்தனர். மயிலீட்டியிலும் பள்ளி நடத்தினர்.
மூன்றாமவர், தஞ்சாவூர்த் தமிழ்மகன். அங்கு உயர் நீதிபதி பதவி வகித்த ஒருவரின் புதல்வர். ஆங்கிலத்திலும், வேறுபல மொழிகளிலும் வல்லவர். யாழ்ப்பாணத்தில் அந்நாளில், அரச சேவை புரிந்து கொண்டிருந்த வெள்ளை இனத்தவர், தமிழர், ஒல்லாந்தர் சென்றபின்னர், எஞ்சி நின்று ஆங்கிலேயரோடு ஒத்துழைத்த டச் இனத்தவர்க்கு, ஆங்கிலம் கற்பிப்பதற்கென.

19
இங்கு அனுப்பப்பட்டார். கிறிஸ்ரியன் டேவிற் என்பது அவரின் இயற்பெயர். பின்னர் போதகர்க்குரிய மதக்கல்வியும் பெற்று உயர்ந்தவர். மக்களோடு பேதமறக் கலந்து, சேவை செய்தமை யால், ‘கச்சைகட்டிப் பாதிரியார்’ என அனைவரும் மதிப்போடு அழைத்தனர். கச்சம் அணிவது அவரது குலவழக்கம் ஆதலால், அவ்வாறு சிறப்புப் பெயர் பெற்றனர்.
இத்தஞ்சைப் பாதிரியார், தமிழ் மக்களின் பின்தங்கிய கல்வி நிலை குறித்து வருத்தமுற்றவராய் பட்டணத்திலே 1803-ல் ஆங்கில போதனா பாடசாலை ஒன்தைத் தாபித்தார். அப்பாட சாலையில் அளவெட்டி பரமாந்தர் - நிக்கலஸ், என்பவரும் கொழும்பிலிருந்து அமெரிக்க பாதிரிமாரோடு வந்தவரான, திசேரா கபிரியேற்பிள்ளையும், எம்மக்களின் ஆரம்பகாலக் கல்விக்கு, (வட்டுக்கோட்டை உயர்போதனா பீட (Batticotta: Seminary) ஆசிரியராய்ப் பணியாற்றி உதவினர். நாம் தெரிந்து கொண்டளவில், கிறிஸ்ரியன் டேவிற் அவர்களின் ஆங்கில பாட சாலையே வடபாகத்தின், ஆதி ஆங்கில பாடசாலையாகும். அவரின் முகாமையின்கீழ், யாழ்ப்பாணப் பகுதியில் 17 பாட சாலைகள் இயங்கின. முழு இலங்கையிலும் 170 பாடசரலைகள் அப்போது இருந்தன. எனினும் தோமஸ் மெயிற்லண்ட் எனும் ஆளுநர், பணமுடையின் நிமித்தம், அவை அனைத்தையும் நிறுத்தி வைக்குமாறு பணித்தமை, எம்மக்கள் மீண்டும் கல்வியைப் பொறுத்தமட்டில் இருளிற் தள்ளப்படும் நிலையைத் தோற்று விப்பதாயிற்று. சற்றேக்குறைய ஒரு தசாப்தகாலம் "கைக்கெட்டி யது வாய்க்குக் கிட்டாத தன்மையாயிற்று! இக்கால கட்டத்தி லேயே, நாம் நம்பும் தெய்வம், அமெரிக்கரான பாதிரிமாரை யாழ்ப்பாணம் நோக்கி வழிம்படுத்தியது. அமெரிக்கரின் வருகை யோடு தமிழினத்திற்கு அறிவொளி பரப்பவெனக் கல்வியெனும் ஞாயிறும் உதிப்பதாயிற்று. பரோபகாரிகளான சுதேச அறிஞரும் ஆங்காங்கே கல்வி போதிக்க வாஞ்சை கொண்டனர்.
பெண் கல்வியின் தொடக்கம் : திண்ணைப் பள்ளிகளிற் சில பெண்பிள்ளைகளும் ஆண்களுடன் சேர்ந்து படித்ததுண்டு. எமது ஊரிலே, சண்முகச் சட்டம்பியார் திண்ணையிலேயே சில பெண் பிள்ளைகள் அவ்வாறு படித்தனர். தத்தம் குடும்பத்தைச் சார்ந்த வர்களையே ஒன்றாகச் சேர்த்துக் கற்பித்தனர். பறங்கியரும் ஒல்லாந்தரும் நீங்கிய பின், மதசுதந்திரமும் கிட்டியதன் பேறா கவே பெண்களுக்கும் அறிவூட்ட மக்கள் ஆர்வம் கொண்டனர்.
எமது ஊரைப் பொறுத்தவரை, பெண் கல்வி என்பது ஏனைக் கிராமங்களுக்கு முற்பட்டது. தெல்லிப்பழை ஆங்கில தருமப் பாட

Page 64
20
சாலைக்கு எமது பெண்பிள்ளைகள் அனுப்பப்படாத 1816-1824 காலப்பகுதியிலும், தகுதி பெற்ற திண்ணைப்பள்ளி மாணவிகள் பலர் இருந்தனர்.
உடுவில் விடுதிப் பாடசாலை தாபிதமானபோது (1824) அவருள் நான்கு பேர் சேர்க்கப்பட்டனர். அமெரிக்க பாதிரிமார் யாழ்ப்பாணம் வந்த காலத்தில், மூன்றே மூன்று பெண்கள் யாழ்ப் பாணத்தில் தமிழில் எழுத வாசிக்கக் கற்றிருந்தனர் என்பது அவர்களின் நாட்குறிப்பு. எனினும் சைவாலயங்களிலே நாட்டியப் பெண்கள் சிறிது வாசிக்கவும், பாட்டுப் பாடவும் தெரிந்திருந்தனர் என்கின்றனர். சில காலஞ் சென்ற பின்பு, வாழ்வோடியைந்த கல்வியையேனும் பயிலும் நற்பேறு பெற்றவர்கள் நம் ஏழாலைய வூர்ப் பெண்கள்.
தமிழ் மண்டலங்களின் நிலையும் அப்போது ஈழமண்டலத்தை ஒத்த நிலையிலேயே இருந்தது. அதனால்தான் பின்னர் :பாரதியார், எனும் புரட்சிக் கவிஞன் தோன்றி
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீதென்று எண்ணியிருந்தவர் மாண்டுவிட்டார் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விங்தை மனிதர் தலைகுனிந்தார், எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இழப்பில்லைக் காண் என்று கும்மியடி"
என்று பெண்விடுதலை கீதம் பாடினான்.
கல்வி மேம்பட்ட அமெரிக்காவிலேதானும் 1847ஆம் ஆண்டு வரை பெண்கள் மருத்துவம் பயில்வது தடைசெய்யப்பட்டிருந்தது. இங்கிலாந்தின் பிறிஸ்ரல் நகரிலிருந்து இடம் பெயர்ந்து, 11 6uuu fisid (1832ậö9) அமெரிக்காவில் குடியேறிய எலிசபெத் பிளாக்வெல் எனும் பெண்ணே, முதன் முதல் மருத்துவம் பயின்ற பெண். எமது கிராமத்து ஏதுமற்ற சூழ்நிலையிலேயும் 18231830க்கு இடைப்பட்ட காலத்திலே 4 பெண்கள், ஆங்கிலக் கல்வி பெற்றுள்ளனர். குறிப்பிட்ட கால எல்லைக்கு முன்னரும், எமது திண்ணைப் பள்ளிப் பரோபகாரிகள் தம் அயலில் வசித்த ଗuffir களுக்கு எழுத்தறிவித்தனர்தான். எனினும் பெண்களுக்கு உயர் கல்விக் கூடங்கள் எங்கும் இருந்ததில்லை.
உடுவில் பெண்கள் விடுதி பாடசாலை : கிறிஸ்தவ மார்க்கம் பரப்பும் முதல் நோக்கிலேயே 1824 ஆம் ஆண்டில் உடுவில்

121
பெண்கள் விடுதிப் பாடசாலையை நிறுவினர் அமெரிக்க மிஷனரி மார். அதன் ஆரம்பம் பற்றி ஒரு கதை உண்டு. வின்ஸ்லோ எனப் பெயரிய பாதிரியார் குடும்பம், உடுவிலில் ஊழியஞ்செய்து கொண்டிருந்த காலத்திலே, அவ்வூரில் வசித்த உயர்குடிமகன் ஒருவர், தமது இருபெண்களுக்கும், கல்விபோதிக்குமாறு கேட்டு, திருமதி வின்ஸ்லோவிடம் தினமும், மிஷன் வளவுக்கு அனுப்புவது வழமை. அன்றொருநாள், மாலை வேளையிலே, புயலுடன் மழை பெய்ய ஆரம்பித்தமையால், பிள்ளைகளை உரிய நேரத்தில் அழைத்துச் செல்ல வரமுடியாது காலதாமதமாயிற்று பிள்ளைகள் பசிதாகத் தோடிருந்தமையால், பாதிரியாரின் மனைவி தின்பண்ட மும், பருகுவதற்குப் பானமும் கொடுத்துள்ளார். மழைசற்றுத் தணிந்தவேளை, பிள்ளைகளின் தந்தை தன் மக்களை அழைத்துச் சென்றுள்ளார். செல்லும் வழியில், பாதிரி அம்மாவிடம் உண வுண்ட செய்தியை, மக்கள் மூலம் அறிந்து, கோபாவேசத்தோடு, இருகைகளினாலும் இழுத்துவந்து, 'இவர்கள் உங்கள் வீட்டு உணவை உண்டு, உங்கள் கிணற்று நீரையும் குடித்தபடியால், இவர்களை எமது பந்துக்கள் இனிமேல் அணைக்கமாட்டார்கள். நாமும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்' எனக்கூறி மக்களை அவ் விடத்திலேயே விட்டுத் திரும்பி விட்டாராம்! திருமதி வின்ஸ்லோ அன்றுமுதல், அப்பிள்ளைகளைத் தமது சொந்தப் பிள்ளைகள் போல வளர்த்துக் கல்வியும் போதித்து வந்தார். மேற்கூறிய சம்பவமே அவ்விடத்தில் பெண்பாடசாலை அமைவதற்கு முன் னோடியாயிற்று, என்பது அக்கதை.
1824ல், கிராமப் பாடசாலைகளிற் படித்துக் கொண்டிருந்த ஜg பெண் பிள்ளைகளுடன் இப்பாடசாலை ஆரம்பம் ஆயிற்று. நான்கு வருடம் பொதுக்கல்வியும், பின் 4 வருடம் வாழ்வோ யைந்த செய்முறை வகுப்பும் நடத்துவதே, முதற்திட்டம். போதனைகள், ஆங்கில தமிழ் மொழிமூலம் நடைபெற வேண்டிய தென ஒழுங்கு அவ்வாறு, ஏழாலைக் கிராமத்தின் வடதிசை சார்ந்த நால்வர், முதலில் சேர்க்கப்பட்டனர், என்பதை பதிவேடு கள் மூலம் காணமுடிந்தது. இந்நால்வருள், மேரி பெரியை என்
ராவ்பகதூர்சி. டபிள்யூ. தமோதரனாரின் அன்னை,
மேற்கூறப்பட்டோரின் சந்ததியார், இந்நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலேயே, உத்தியோகம், மண வினை போன்ற ஏதுக்களால் புலம்பெயர்ந்து தொடுவாய்ப்பகுதிவரை குடியேறி கிங்க்ஸ் பெரி. கதிராமர், சோமசுந்தரம், ஹண்டி தம்பர்
8

Page 65
122
லோறன்ஸ், எலியேசர் போன்றவர்களின் குடும்பங்கள் இலங்கை யின் பலபாகங்களிலும் செறிந்து கீர்த்தியோடு வாழ்கின்றனர்.
ஏழாலையலுர்க் கல்விக் கூடங்கள்
அன்றும் இன்றும் : எமது ஊர் போன்றவற்றின் உண்மை வரலாறு எழுதும்போது, அதனுள்ளே பொதிந்திருக்கும் சம்பவங் கள் சில, மீண்டும் மீண்டும் எடுத்தாளப்படுவது தவிர்க்க இயலா தவை. எமது சாமானிய மக்கள் "சுற்றியும் சுற்றியும் சுப்பற்றை கொல்லைக்குள்’’ எனக் கூறுவார்கள். முன்னொரு கதையிலே அல்லது அத்தியாயத்திலே எடுத்தாண்ட சம்பவம், மற்றொரு அத்தியாயத்திலேயும் பேசப்படும்போது, வாசிப்பவர் சலிப்படைய வுங்கூடும். பண்டைய நம் புலவர்கள், அச்செயலை கூறியது கூறல்" எனுங் குற்றம் என இலக்கணம் கண்டுள்ளனர். ஒன்று மட்டுமல்ல, 'ஈரைங்குற்றம் நூற்கே’’ (பத்து) என, அவ்வாறான குற்றங்கள், எனது இச்சிறு நூலிலே, பலவிடங்களிற் தென்படும். அவற்றைக் குற்றமாய்க் கொள்ளாது, படிப்பவர்கள் நன்மன தோடு ஏற்றுக் கொள்வர் என்பது என் நம்பிக்கை.
மண்டலத்தோடு ஒப்பிடுகையில் ஏழாலை ஒரு சுண்டைக் காயளவு பரிமாணங் கொண்டதே. எனினும் அதன் மண்வாசி மேம்பாடுடையது. எழாலையலுர் மண்ணுக்குச் செம்பவளப் பார் போன்ற வர்ணம் உண்டு, அதற்கே உரிய பெளதிக தாதுச் சேர்க்கை மிகுதியாகவன்றி, அளவளவாகவே செறிந்துளது. நிச்சயமாக எமது செம்மண்ணுக்கு மணம்-வாசனை-கிடைக்கவே கிடைக்காது. எனின் வேண்டாத நீரும், வேறு கழிவுப் பொருள் களும், காலக் கட்டுப்பாடின்றித் தேங்கிக்கிடக்கும் சிற்சில பகுதி களில், துர்க்கந்தம் வீசுவதும் உண்டு. ஊரின் மண்ணையே ஒத்த வைரித்த செம்மை கொண்ட உளமும், உடற்கட்டும் உடைய வர்கள். இங்குள்ள மக்கள் பண்டுதொட்டு கல்வியின் பயனையும் கூடவே கடவுட் பணியையும் கண்டறிந்தவர்கள். நல்லவை எங் கிருந்து, எவர் நாவிலிருந்து வெளிவரினும், அதனை மறு கருத் தின்றி ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம், அவர்களது அருங் குணம்.
'நிலத்தியல்பால் நீர்திரிந்தற்றாகும், மாந்தர்க்கு, அனைத் தியல்பதாகுமறிவு' என்பது வள்ளுவம். நீரின் தன்மை எங்கும் ஒன்றேதான். ஆயின் அது செம்மண் நிலத்திலே தங்கினால், அம்மண்ணின் நிறங்குணம் நீருடனே கலந்துவிடும். களிமண்ணிற் றங்கினால், உவர் மண்ணிலே செறிந்தால், அவ்வவற்றின் இயல்பு பெற்று நிற்கும். அதே சால்புடையதே கல்வியும். அதுமானிடப்

123
பொதுப் பண்பானது. எவன் மூலம் புகட்டப்பட்டாலும், வெள்னை இனத்தவரோ, கறுப்பரோ, சீனக்காரனோ அராபியனோ எவர் கற்பித்தாலும், கல்வியாலாகும் பயன் மாறுபடுவதன்று. கற். போனின் உளப்பாங்குக்கேற்ப, அவரவர் பின்பற்றும் நடவடிக்கை. கள், சீலங்களில் மாறுபாடு ஏற்படலாம்.
இதுகாறும் கூறியவற்றின் மூலம், எமதுTரின் கல்விப் பாரம் பரியம், எங்கோ அடியிட்டு, பற்பல வளர்ச்சிப் படிகளையுங் கடந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டிலே சீரிய உயர்வு பெற்று, உயர்ந்த நிலை கண்டோம். 20-ஆம் நூற்றாண்டின் கடைக் கூற்றில் வந்து நிற்கும் நாம், கடந்து வந்த மகத்தான பாதையை என்னால் இயன்றவரை தெளிவாகக் காட்டுதற்கான முத்தாய்ப் பினை முன் வைத்துள்ளேன் எனத் திருப்திப்படுகின்றேன்.
வரலாற்று வல்லுநர்கள் முடிபுப்படி, இடையிலே தமிழ் மண்டலத்திலிருந்து வந்தவர்களே நாம் அனைவரும். பேராசிரியர் நளின் சொய்சா போன்ற கணித மேதைகள் வாதிப்பது போன்று, * தமிழருக்குத் தாயகம் என்று ஒன்று, ஈழத்தில் இல்லை. அவரி கள் காலத்துக்குக் காலம் சீவனோபாயத்சினிமித்தம் வந்து, சிலகாலந்தங்கிப் போன வந்தேறு குடிகளே' எனும் பரிகசிக்கத், தக்க கூற்றினை ஏற்றுக் கொளினும், எல்லாள மன்னனும், அந்தக்கவி வீரராகவனும் அவன் பரிவாரங்களான தமிழரும் வாழ்ந்த கதை நாடறிந்ததே. கிறிஸ்தாப்தம் முதலே நம் முன் னோர் வாழ்ந்தமை வரலாற்று முடிபு.
ஐரோப்பிய வர்த்தகர்களான போர்த்துக்கேயரும், அவர் களைத் தொடர்ந்து இங்கு வந்து, அவர்களிடம் நம் நாட்டைக் கைப்பற்றிய ஒல்லாந்தரும், யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் புத்திக் கூர்மையுடன் வாழ்ந்த சிலரை முதலியார், தொம்பிலிப்பு போன்ற சிறப்புப் பட்டம் சூட்டித் தம்வயப்படுத்தினர். நல்லுரர் தொம்பிலிப்பு வில்லவராய முதலியார், உடுப்பிட்டி குமாரசுவாமி முதலியார், தெல்லிப்பழை குமாரகுலசிங்க முதலியார், ଡିe5; பாலைச் சேனாதிராய முதலியார், தொம்பிலிப்பு இலங்கக்கோள் முதலியார் போன்றோர் இவ்வரிசையுள் அடங்குவர். குமார சுவாமி முதலியார் ஊர்காவற்றுறை நீதிபதிப்பதவி வகித்தவரும், வட்டுக்கோட்டை சர்வசாஸ்திர போதனா பீடத்தில் (Batticotta, Seminary) கற்று விற்பன்னரானவருமான சிறிமான் வைமன் கதிரைவேற் பிள்ளையின் தந்தை. குறிப்பிட்ட முதலிமார் தம் இனத்தின் அறிவிருளை இயன்றளவு நீக்க நினைந்து, தத்தம் இல்லங்களிலே திண்ணைப் பள்ளிகளை ஆரம்பித்து நடத்திய துண்டு.

Page 66
124
அவர்களை அடியொற்றி ஊர்கன் தோறும், சிறுசிறு திண்ணைப் பள்ளிகள் தோன்றலாயின. எழாலயலுரிலேயும் அவ்வாறாய பள்ளிகள் 17ஆம் நூற்றாண்டிலே ஆரம்பிக்கப் பட்டன. எமது ஊரின் வடபால் முதன் முதலில் சண்முகச் சட்டம் பியாரின் தந்தையாரும் பந்துக்கள் சிலரும் கூட்டாக நடத்தித் தொண்டு புரிந்தமை அறிய முடிகிறது. வேதனம் ஏதும் பெறாமலே, தமது பந்துக்களும் நண்பருமான குறிப்பிட்ட தோகையினரை ஒன்று கூட்டி, எண்ணும் எழுத்தும், நீதிநெறி களும் புகட்டினர்.
எழுதலங்களின் நேர் வடக்குத் திசையில் கால்மைல் தொலை வில், "எழுதலவளவு" எனப்படும் எம்முன்னோரின் பாரியவளவின் ஓர் அந்தத்திலேயே, அத்திண்ணைப்பள்ளி பலகாலம் நடத் தேறியது. ஆங்கிலேயர் ஆட்சியுதித்து, அன்னவரைப் தொடர்ந்து. 1816 ஆம் ஆண்டில் தெல்லிப்பழையில் தம்மதப் பணிபுரியவென வந்த அமெரிக்க மிஷனரி பூவர் பண்டிதர், பாட சாலைகளை அமைத்ததன் நிமித்தம், சண்முகச் சட்டம்பியாரின் பள்ளி தனியான ஓர் இடத்துக்கு மாற்றப்பட்டது.
20 ஆம் நூற்றாண்டின் முதற்காற் கூற்றிலே, இப்பள்ளிமால் தனியான ஓரிடத்தில் அமைக்கப்பட்டது. அவ்விடம் "பள்ளி மாலடி" எனக் காரணப் பெயர் பெற்றது. இப்பாடசாலையில், ஆரம்பக்கல்வி பெற்றவர்களுள், கிங்க்ஸ்பெரி தாமோதனாரின் அன்னை பெரியையும், அவர் உறவினர் அவிச்சயில்ட் தங்கம் என்பவரும் உடுவிலில் தாபிக்கப்பட்ட முதற் பெண்பாடசாலையில் முதன் முதல் ஆங்கிலங் கற்றவர்கள் எனும் புகழுக்கு உரியோ ராவர். இப்பாடசாலை பிற்காலத்தில், சீனி பள்ளிக்கூடம் எனவும் பெயர் பெற்றது. சீனியர் எனும் சுறுசுறுப்பான உபாத்தியாயர் சேவை செய்தமையால் இன்றும், அப்பெயராலேயே சுட்டப் படுகிறது.
பண்டித நீலயினார் திண்ணைப்பள்ளி ஏழாலையின் தென் பகுதியில், குளத்து நீர் பாய்ந்து ஓடும் வாய்க்காலை அண்டிய மேடான சமபூமியில் வசித்தவரான நீலயினார் எனும் பண்டிதர் தமது இல்லத்திலே திண்ணைப்பள்ளி நடாத்தியமை அறியக் கிடக்கின்றது. அவர் இன்று தமது தள்ளாத வயதிலும் (85 க்கு மேல்) பொதுப்பணியும் மாதர் முன்னேற்றத்தில் விசேட அக்கறை யும் கொண்டு தொண்டு செய்துவரும் திருமதி. த. நவரத்தினம் எனும் தங்கரத்தினக்காவின் தந்தையின் தந்தையாவர். தெற்கு மேற்குப் பாகங்களில் வசித்தோரின் ஆரம்பப் பள்ளி அதுவே யாகும். Y

125
ஏழாலை தெற்கு இமேஸர் பாடசாலை :
சின்னத்தம்பி எனப் பெயரிய அறிவாளன், தமது பகுதியிலே ஓர் பாடசாலையை நடத்தியமை அறிந்துள்ளோம். இவர் சைவப் பற்றும் வேதாந்த ஞானமும் நிரம்பிய ஒர் குடும்பத்தில் உதித் தவர். பொதுமக்களின் கல்வி அபிவிருத்தியை உளங்கொண்டு, அக்காலத்து மிஷனரிமாரைத்துணைக் கொண்டவராய் 1881ம் ஆண்டிலே , உடுவில் திருச்சபையில் கிறிஸ்தவமார்க்கந் தழுவி யுள்ளார். தம் எண்ணம் போல, விழிசிட்டி எனும் குறிச்சியிலே ஓர் அமெரிக்கன் மிஷன் தமிழ்ப்பாடசாலையை நிறுவி, தாமே முதன்மை ஆசானாகப் பணியாற்றியுள்ளார். அவர் வயோபரான போது, மகன் இமேஸன்-தோமா என்பவரும், அவருக்குப் பின் பெளத்திரன் இமேஸன் தம்பாபிள்ளையும், அப்பாட சாலையை வழிவழி உரிமையோடு நடத்தியுள்ளனர். அப்பாடசாலை ஆதியில் குளத்தின் தெற்கு, மேற்குப் பகுதியாரின் ஆரம்ப கல்விக் கூட மாகத் திகழ்ந்தது. இன்றுவரை ஆரம்ப பாடசாலையாக இயங்கி வருவதும் காணலாம்.
கட்டுவிளானை மிஷன் பாடசாலை :
கிராமத்தின் அனைத்துத் திக்குகளிலும் பாடசாலைகள் முன்னரே தாபிக்கப்பட்டிருந்த போதிலும், ஏழாலை மேற்கு தென்மேற்குப் பகுதி வாழ் மக்களுக்கு, விசேடமாக, தம்புவத்தை கட்டுவிளானை, கரச்சியான் திக்கு, இன்றைய மடத்தடி கோட்டைக்காடு ஆகிய பகுதிவாழ் சிறுவர்க்கு, அவ்வசதி கிட்டிய தில்லை. தோப்புப் பகுதியில் வாழ்ந்த ஆறுமுகச் சட்டம்பியார் எனும் கல்விமான், அப்பாகத்தின் வெறுமை நிலையை உன்னி, உயரிய நாவல் எனுங்குறிச்சியின் தெற்கெல்லைப் பகுதியில் கட்டு விளானை எனுங் காணியில், நின்ற வேப்பமரம் ஒன்றின் நிழலிலே கொட்டிலமைத்து, அயலவர்களின் ஒத்தாசையுடன் பள்ளி நடத்தினார்.
ஆறுமுகச் சட்டம்பியாரும் அவரின் பிள்ளைகளான இருபெண் களும் அப்பாடசாலையிற் கற்பித்தமை அறியக் கிடக்கின்றது. சட்டம்பியார் குடும்பம் கிறிஸ்தவராயிருந்தமையால், பாடசாலை யும் மிஷன் பாடசாலை’ எனவே அழைக்கப்பட்டது. எமது சித்தாந்த வித்தகர் மு. ஞானப்பிரகாசம் அவர்கள், தாம் மிஷன் பாடசாலையிலேயே ஆரம்பக் கல்வி கற்றுக் கொண்டதாகக் கூறினார். ஏறக்குறைய 1920-ஆம் ஆண்டு வரையும் இப்பாட” சாலை செவ்வனே இயங்கி வந்ததுண்டு.

Page 67
126
அரசாங்க பாடசாலை : மு ன் ன ர் க் கட்டுவிளானையில் அமைந்திருந்ற பள்ளியிற் பயின்று கொண்டிருந்த மாணவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து விடுவித்து, இப்போது மகாவித்தி யாலம் நடைபெறும் விளவின் தென்றிசை மூலையில், புதிதா யமைத்த ஓர் கொட்டகைக்குள் வைத்துப் படிப்பிக்க முனைந்த னர். அக்காரணத்தினால், சுமார் ஒரு மைல் தூரத்திலிருந்து வந்து, வேற்றுக் குறிச்சியில் தொண்டு புரிந்தவரான தோப்பில் ஆறுமுகச் சட்டம்பியார், தமது தாபனத்தைக் கலைத்துவிட்டார். அங்கு படித்தவர்கள், புதிய கொட்டிலுக்கு மாற்றப்பட்டனர். எனினும் தனிமனிதராக அப்புதிய பள்ளியை நடத்த இயலாத நிலையில், அரசினரிடம் ஒப்புவிக்க நினைத்த நாகமுத்தர் எனும் சைவபக்தர், மாணவர்களின் வகுப்பேற்றம் தடைபடுவதை மனதிற் கொண்டிலர் போலும்.
மேற்படி பாடசாலையில் வகுப்பேற்றம் ஏதுமின்றி, மூன்று வருடம் தாம் தாமதப்பட்ட நிலையை திரு. சொக்கலிங்கம் எனும் அயலக ஆசிரியர் கூறக்கேட்டேன். தாமதத்தின்பின்பு, மயிலனிப் பாடசாலையிற் சேர்ந்து, சிலகாலத்தின் பின்னர் தெல்லிப்பழை மிஷன் பாடசாலையிலும், அங்கிருந்த ஆசிரியப் பயிற்சிக் கூடத்தி லும் கம்றுத் தேறிய செய்தியையும், அங்கு இலவச சோறுங் கூறையும் பெற்ற ஆனந்த நிலையையும், சுவாரசியமாகக் கூறு வார். இவர் இவ்வருட ஆரம்பத்தில் வியோகமானார்.
எவ்வாறாயினும், சிலவருட தாமதத்தின் பின்னர், குறிப்பிட்ட பாடசாலையை, அரசினர் பொறுப்பேற்றனர். படிப்படியாக அக் கல்விக் கூடம் வளர்ச்சியுற்று இன்று மகாவித்தியாலயம் எனும் உயர் பெயரோடு திகழ்கின்றது.
இந்நூற்றாண்டின் அரைக்கூற்றின் காலப்பகுதியில், பாட சாலை அன்றைய படிப்பித்தல் நெறிக்கு ஏற்ப, விவசாயத்திட்டப் பாடசாலை சிரேட்ட உயர் பாடசாலை, எனப் பெயர் பெற்றுப்
பல நல்லுத்தியோகத்தரையும் தோற்றுவித்ததுண்டு. ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க வித்தியாசாலை :
20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தத்தில் ஏழாலையூரின் நாலாதிக்குகளிலும், ஆரம்ப பாடசாலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவை அரச உதவி நன்கொடை பெற்று இயங்கிவந்தமையும், மிஷனரிமாரும் தம்மதம் பரப்பும் நோக்கில், பயனுள்ள கல்விப் போதனைக்கு உதவியமையும் முன்னரே அறிந்து கொண்டோம். சைவந்தழுவிய சிறாருக்குச் சமயத்தோடு சார்ந்த போதனை கிட்டாத நிலையை உணர்ந்த மேற்கு

127
ஏழாலைப் பெரியார்கள், தம்முள் ஒன்றுகூடி ஆலோசனை புரிந்தனர். அக்காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்திருந்த திருவா எளர்கள் ஐ. பொன்னையா, ஐ. பேம்பலம், நீ. கதிரிப்பிள்ளை, *வை. சிவப்பிரகாசம் போன்றோர், இன்று பாடசாலை உள்ள காணியிலே கொட்டிலமைத்து மாணவர்களைச் சேர்த்தனர். எனினும் கற்பிப்பதற்குப் போதிய அறிவும், காலமும், பரோபகார சிந்தனையும் உடையவர்களைத் தேடுவது சிரமமாகவே இருந்தது.
வேலுப்பிள்ளை, கந்தையா எனும் கந்தப்பு உபாத்தியாயர் நாகமுத்துச் சட்டம்பியார் போன்ற சிலர், தமதுசிரமம் நோக்காது உழைத்தனர். ஏனைய சகல பாடசாலைகளிலும், ஆசிரியர்கள், காலத்துக்கேற்ற கோலமாக ஒரளவேனும் ஊதியம் பெற்றே சேவை செய்தனர். அவர்களுக்கும் குடும்பமும், வாயும் வயிறும் உண்டென்பதால், காலமெல்லால் இலவச சேவை செய்வது இய லாமைஇயற்கையே. இந்த நிலையில் மேற்காட்டிய பாடசாலை சிலகாலம் தளர்ச்சியடைந்து, தேய்நிலை அடைவதாயிற்று.
தாம்புரிந்த வியாபாரத் தொழில் மூலம் கிடைத்த வருமா ஆணத்தில் ஓர் பகுதியைக் கல்விமுயற்சிக்குப் பயன்படுத்தும் நன் மனத்தோடு, நீலயினார் கதிர்ப்பிள்ளை எனும் பெரியார், நூர்ந்துபோன தாபனத்தை, மீண்டும் ஆரம்பித்தார். அவர் மனங் கொண்ட காலம் இந்நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தம் ஆயிற்று.
அக்கால கட்டத்தில், ஏழாலையின் வடக்குப் பகுதியில் பல ஆசிரியர்கள் பயிற்சிபெற்று வெளியேறியிருந்தனர். நீ கதிரிப் பிள்ளை குறிப்பிட்டப குதியிலிருந்து, எஸ். வி. கந்தையா எனும் வாசாலகனும், சிறந்த நிர்வாகியுமான பயிற்சி பெற்ற தலைமை ஆசானைத் தேர்ந்தெடுத்து, நியமித்தார். அன்றியும் பாட சாலையின் ஆட்சிப் பெறுப்பை (General Manager பொறுப்பை) பிரசித்த நொத்தாரிசான தெல்லிப்பழை தெ. த. துரையப்பாவிடம் ஒப்புவித்து, தாம் உதவி முகாமையாளராக இருந்து நடத்தி வந்தார்.
எஸ். வி. கந்தையா மேல்வகுப்புக்களையும் வைத்து, தமது பகுதியிலிருந்து விவேகமுள்ள மாணவரையும் அழைத்து வந்து உயர்நிலைப் படுத்தினார். வி.எஸ்.எல்.சி எனும் எட்டாம் தரத்தில் 100% மாணவர் பெற்றனர் என்பது அவரிடம் கற்றுத் தேர்ச்சி தேறிய கந்தையாப் பண்தர் வாய்மொழி. அக்காலத்தில் பாடசாலை, பொது முகாமையாளரின் செல்வாக்கின் மூலம் உதவி நன்கொடை பெறுந் தகுதியை 1925-ல் பெற்றமை பெரும் பேறாகும்.

Page 68
128.
எஸ். வீ. கந்தையாவின் தரமறிந்த மிஷன் சங்கத்தார், அவரைத் தமது பாடசாலையின் தலைமை ஆசிரியனாகச் சேர்த்துக் கொள்ள, அவரின் இடத்திற்கு, திரு. உ. யேக்கப் எனும் ஆசுகவி வடக்கேழாலையிலிருந்து வந்து தலைமைப்பதவி வகிக்கலானார். அவர் தமது பெயரை "யாக்கோப்பர்’ எனவே கூறுவார். யாவையும், யாவரையும் கோப்பவர் (ஒன்று படுத்து பவர்) என விரிவுரையும் கூறுவார்.
அக்காலகட்டத்திலே, C. W. W. கன்னங்கரா கல்வி மந்திரி யாகவிருந்தார். '"சமாசனம்' எனும் கொள்கையை வகுத்தவர் அவரே. அக்கொள்கையினிமித்தம், வேற்றுச் சமூகத்தினரும் கற்ற இப்பாடசாலைச் சூழலில் சிறுபூசல் ஏற்பட்டது. அதன் காரணமாக, நீதிமன்றம் மூலமாக முகாமையும் மாறுவதாயிற்று.
இன்று அப்பாடசாலை பூசல் ஏதுமின்றிச் சுமூக நிலையில் நடைபெறுகிறது.
ஏழாலை (கிழக்கு) சாந்த இசிதோர் பாடசாலை: திண்ணைப்பள்ளியாக, பொன்னர் பள்ளிக் கூடமென நடைபெற்ற மேற்படி பாடசாலை 1894-ல் றோமன் கத்தோலிக்க கல்விச்சபையிடம் ஒப்புவிக்கப்பட்டது. அதன் நூற்றாண்டு நிறைவு வருடம் இது வாகும். பாடசாலையின் பெயர்ப்பலகை மூலம்இச்செய்தி தெரிந்து கொண்டேன். மாறுபட்ட கருத்தும் உண்டு. கிழக்கேழாலை லூயிஸ் பொன்னையா எனும் ஆசிரியரும் சூராவத்தை தாமுச் சட்டம்பியாரெனும் தாமோதரம் பிள்ளை என்பவரும் மனமொத்து ஓர் திண்ணைப் பள்ளியை நடத்தி வந்தனர். தாமுச் சட்டம்பியார் தம்மோடு சூராவத்தை, களபாவோடைப் பகுதிப் பிள்ளைகளை யும் தினமும் ஒன்று சேர்த்து 3 மைல் தூரம் செல்வார். பயனுள்ள கல்வி புகட்டப் பட்டதினால், இருபகுதியிலும் செல்வாக்குப் பெற். றிருந்தனர், சூராவத்தை மாணவர்கள் தமது மேற்படிப்புக்கு, அயலூர் உயர் பாடசாலைகளை நாடினர். கிழக்கேழாலை" மாணவர், பிரயாண வசதிக் குறைவினால், அவ்வாறு கற்கும் நிலை மந்தமாகவேயிருந்தது. வசதியும் வாய்ப்பும் மதச்சார்புத். தன்மையிலேயே தங்கியிருந்தமை, அவதானிக்க முடிகிறது. லூயிஸ் பொன்னையா எனும் தலைமை ஆசிரியர், அக்காலத்துக் கிராம விதானையாயிருந்த சின்னத்தம்பி என்பவரின் மகளான பூதாத்தையை மணமுடித்துப் புத்திரப் பேறின்றி இறந்து போயினர். விதானையாரின் இன்னுமோர் மகள் அன்னப் பிள்ளையை, வல்லிபுரம் எனும் தலைமை ஆசிரியர் மணம் முடித்த னர். கிறிஸ்தவரான இவரின் சந்ததியார் கிழக்கிலும் சூராவத்தை யிலும் வாழ்கின்றனர்.

129
ஏழாலை வடக்கு சைவ மகாஜன வித்தியாலயம் :
ஊரின் மத்திய பாகத்திலே, தபால் விநியோக நிலையம். சனசமூக நிலையம், கிராம அபிவிருத்திச் சபை என்பவை சூழ வுள்ள பகுதியில் உளது. 1940-ம் வருடம் சித்திரைப் புதுவருடம் தினத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பமாய கதை மிகவும் சுவாரசியமானது. பண்டிதர் வி. யோன்பிள்ளை எனும் வாசாலகரான விரிவுரையாளர், தாம் வசித்த சூராவத்தைப் பகுதிக்கு வருகைதந்த கத்தோலிக்க ஆயருக்கு வாசித்தளித்த வரவேற்புரையின் கண், சில பயன்தரு தேவைகளை வேண்டியிருந்தார், அவற்றை நிறைவேற்றி உதவு வீர்களாயின், ஏழாலையை இளவாலை போலாக்குவோம்-எனும் பொருள்படக் கோரியிருந்தார். மேற்படி பத்திரத்தைக் கண்ணுற்ற சிலர், தமது மனக்கருத்தை - சமய குரோதம் தோன்றும் விதமாக வெளியிட்டதனால் ஏற்பட்ட உத்வேகத்தின் பேறாகவே, குறிப் பிட்ட சந்தியில் ஓர் சைவப் பாடசாலை அமைக்கத் தீர்மானிக்கப் பட்டது. பொதுமக்களின் குன்றா முயற்சியால், மிகக் குறுகிய காலத்திலே பாடசாலை கட்டி முடிக்கப்பட்டது,
பாடசாலைகள் அரசுடைமை ஆவதற்கு முன்னர் இப்பாட சாலை "பரமேஸ்வராக் கல்விச் சபை'யின் பராமரிப்பில் இயங்கி வந்தது. இன்று 11-ஆம் வருடம்வரை கல்வி போதிக்கப்படுகிறது. பாடசாலைச் சூழலில் வசிப்போர், 1876-ல், ராவ்பகதூர் சி. வை. தாமோதனார் தாபித்து இடையில் நிறுத்தப்பட்டதான ஏழாலை சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நினைவுச் சின்னமே, சைவ மகாஜனா எனும் மனத்திருப்தி கொண்டவராய் உள்ளனர்.
அவ்வெண்ணத்தின் பிரதிபலிப்பே, 1976-ஆம் வருட வாணி விழா, முந்திய உயர்பாடசாலை நூற்றாண்டு நினைவு விழாவாக விளங்கியது. அதுவே, எனது இச்சிறு நூல் தோன்றுவ தற்கு, நிமித்த காரணம் என்பதனையும் ஊரறியும்.
1960-ல்அரசு பாடசாலைகளைத் தன்னுடைமையாக்கி சுவிகரித்தபோது யா/ஏழாலை வடக்கு சைவ மகாஜன வித்தியா லயம் என வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தி யுள்ளது.
கோட்டைக்காடு அரசினர் பாடசாலையும் மயிலங்காடு, சிறி. முருகன் வித்யாசாலையும் யாழ்ப்பாணத்தில் வேறு எவ்வூரிலும் இல்லாதவாறாக, சிறு

Page 69
130
பான்மைச் சமூகத்தாரின் கல்வி மேம்பாடு நோக்கி, மயிலங்காட்டுக் குடியேற்றக் குறிச்சியில் ஒன்றும், கோட்டைக்காட்டில் ஒன்றுமாக இரு பாடசாலைகள் நிறுவப்பட்டுள்ளமை, கல்வியில் எம்மக்களின் ஊக்கத்தையும், இனங்களுக்கு இடையே நிலவும் செளசன்யத் தையும் காட்டும். இரு பாடசாலைகளுள், ஒன்றான கோட்டைக் காடு அரசினர் பாடசாலையில், அயலவரான உயர் குடிமகன் அதிபராயிருக்க, உதவியாசிரியர்களுள், மறு இனத்தார் பெரும் பான்மையினர், சிறிமுருகன் வித்தியாசாலையின் அதிபர், சிறு பான்மை இனப் பெண்மணி. அவரின் உதவி ஆசிரியருள் பலர் மறு சமூகத்தினர்.
பூசல் எதுவும் இன்றுவரை ஏற்பட்டதில்லை.

13. கல்வித்துறை முன்னோடிகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில், *யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்குக் கல்வியறிவு புகட்டுதற்கு உள்ளூர் அறிஞர்களாயிருந்த பரோபகாரிகளும், அமெரிக்க கல்வி மான்களான மதபோதகர்களும், எடுத்துக்கொண்ட பயன் தரும் எத்தனங்கள் மறக்க முடியாதவை.
மரபு வழிக் கல்வி மூலமும், தொடக்கநிலைப் பள்ளிகள் மூலமும், மாணவரிடத்திலே, நவீன சாத்திரங்கள் புகுத்தப்பட்டு யுத்திஜீவிகளை உருவாக்குவதில், ருசி கண்டு, ஆர்வமேலீட்டி ானால், உயர் கல்விப் போதனை பற்றிச் சிந்திக்கத் தலைப் பட்டனர்.
யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் கல்வி வாஞ்சை, அவர்களுக்கு மேலும் ஊக்கம் தருவதாயிற்று. உயர் கல்வி பற்றி, முதன்முதலாக எண்ணியவரும், அதற்காக இன்னல் பல குறுக்கிட்ட போதும், மனஞ்சலிக்காது, எண்ணியவற்றை நடைமுறைப் படுத்தியும், வெற்றி கண்டவர், கலாநிதி டானியேல் பூவர் எனும் பண்டிதரே.
1923 ஆம் ஆண்டிலே, நம் தமிழ் மாணவர்கள் இடைநிலைக் கல்வியிற் பெற்றிருந்த வியத்தகு முன்னேற்ற நிலையை, நுணுகி நோக்கிய அவர், அன்னவரின் மேம்பாட்டிற்கென உயர்நிலைக் கல்விக் கூடம் அமைக்க விரும்பினார். தமது நன்னோக்கத்தை சக மதபோதகர்களோடும், அமெரிக்க நாட்டின் மசாசுசெற் மாநிலத்திலிருந்த தாய்ச் சங்கத்திடமும் தெரிவித்தார்.
மதபோதனை செய்வதற்கென்றே வழிக்கொண்ட தமக்கு, தாய்ச்சங்கம் கொடுக்கும் உதவிப்பணம், சொந்த வாழ்க்கையை முட்டின்றி நடத்தவே போதாத நிலையில், உயர் கல்விக் கூட மொன்றினை நிறுவிப் பரிபரலிப்பதென்பது, பகற்கனவென்பதை உணர்ந்துகொண்ட போதிலும், பூவர் பண்டிதர் மனந்தளரா தவராய், முதலில், அமெரிக்க பரோபகாரிகளான 250 பேரிடம் தொடர்பு கொண்டு, நன்கொடையாகப் பணம் திரட்டினார்.

Page 70
132
அக்காலத்தில், கொழும்பிலே பிரித்தானிய ஆளுநராகக் கடமை புரிந்தவர், சேர் எட்வேட்-பாண்ஸ். கல்லூரி அமைப் பதற்கு, அவரின் அநுமதி தேவை. அவரோ அமெரிக்கரின் பரமவைரி. "யாழ்ப்பாணத்தில் கல்லூரி ஒன்று அவசியம் எனக் கண்டால், அதனை எமது அரசே நிறுவுதல் வேண்டும்; ஆசிரியர் நியமனம், நிர்வாக ஒழுங்குகள் அனைத்தும் எமது பொறுப் பிலேயே இருத்தல் வேண்டும்" எனக்கூறி மிஷனறிமாரினதும், தாய்ச் சங்கத்தினதும், கோரிக்கையைப் புறக்கணித்துவிட்டார். இதற்கு, கொழும்பிலிருந்த சீமைத் தரகரான, தமிழ்ப் பிரபுக்கள் சிலரும் ஆளுநருக்கு ஒத்தாசை புரிந்தனர்.
ஆளுநரின் நிராகரிப்பினைக் கண்டும் மனந்தளராத பூவர் பண்டிதர், Seminary எனும் பெயரோடு, தமது கல்வி நிலையத் தைத் தாபிக்க உன்னி, கொழும்புக்குத் தூதனுப்பினார். அவரின் அதிர்ஷ்ட வசமாக, பாண்ஸ் தேசாதிபதி கோடை விடுமுறை களிக்க நுவரெலியா சென்றிருந்தார். அவரின் கடமையைத் தற் காலிகமாக ஏற்றிருந்தவரான ஜேம்ஸ் கப்பல் என்பார், செமினரிக் கோரிக்கையை உவகையோடு ஏற்றதோடு, அரசின் இன்றைய பணமுடையில், பொருளுதவி புரிய இயலாமைக்கு ஆழ்ந்த வருத்தமும் தெரிவித்து உபசரித்தனர். விடுமுறை காலம் முடிந்து, கொழும்பு திரும்பிய தேசாதிபதி, தற்காலிக தேசாதிபதி மேல் பெருஞ்சினங் கொண்டனராம்.
எவ்வாறாயினும் பூவர் தமது நோக்கத்தில் வெற்றி பெற்ற னர். (Batticotta Seminary) "வட்டுக்கோட்டை செமினரி' எனும் நாமத்தோடு, இலங்கை நாட்டின் முதலாவது உயர் கல்விப் போதனா பீடம் நிறுவப்பட்டது. ஈழத் தமிழ் மக்களின் விடியலும் உதயமாயிற்று!
ஆரம்ப காலத்தில், கல்விப் போதனைக்கு உதவக்கூடிய ஆசிரியர்கள் போதியளவு இல்லாமையால், பூவர் தாமே, நிர்வாகப் பொறுப்புடன், பூகோள, ககோள, வானசாஸ்திரம், கணிதம் முதலாம் பல கலைகளையும் போதித்து வந்தார். ஆங்கிலமும் தமிழும், கொழும்பிலிருந்து பாதிரிமாரின் செயலராக வந்தவரான கபிரியேற்பிள்ளை-திசேரா என்பவராலும், அளவெட்டி பரமாந் தர்-நிக்கலஸ் என்பவராலும் போதிக்கப்பட்டது.
டாக்டர், டரன் பூவரின் மனந்தளராச் சேவை பற்றி அவரது சர்வ சாஸ்திர போதனா பீடத்தில், பல்கலை பயின்று தேறிய வரும், அப்போதனா பீடத்திலே விசேட வகுப்பில் கற்றுத் தேறிய பின்னர் அங்கேயே போதனா சிரியராய்ச் சேவை புரிந்த வருமான, சுதுமலை கறல் விசுவநாதபிள்ளை, தாம் எழுதிய

133
*சுப்பிரதீபம்’ எனும் நூலில் "வாய்மையுந் தூய்மையும், நீதியும் நிறைவும் அன்பும் பொறையும் சிறந்து விளங்கிய பூவர் ஐயர் (டானியல் பூவர்) முதலிய மகான்கள் இங்குதித்து, அலகை வாயிலும், அகந்தை வாயிலும், உலக வாயிலும், உடலவாயிலும் அகப்பட்ட ஆன்மாக்கள் வீடு பெற்றுய்யும்படி, இரட்சா பெருமா னின் திருநாமத்தை உபதேசித்துக் கைம்மாறு கருதாது உதவு கின்ற மேகம் போல வைதீக லெளகீகக் கல்விப் பொருளை வழங்கினார்கள்’’ என எழுதினார்.
(கறல் விசுவநாதபிள்ளை, C. W. தாமோதரனாரின் ஆசிரியர்களுள் ஒருவராய், தாம் கற்றுத் தேறிய செமினரியிலேயே பணி புரிந்தவர். செமினரி மூடப்பட்ட பின்னரும் அங்கேயே வசித்து, உதயதாரகையின் அதிபர் குழுவிலும் சிறிது காலம் பணிபுரிந்தபின், சென்னை சென்று, ஆங்குள்ள பல்கலைக்கழகத் தில் சி. வை. தாமோதரம் பிள்ளை பி. ஏ. பரீட்சை எழுதி, மேனிலைச் சித்தி பெற, இவரும் இரண்டாந்தரத்தில் சித்தி
எய்தினர்.)
அச்சர்வகலாசாலையில் 1857-ல் முதன் முதல் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் சித்தியெய்திய இருவரும், பூவர் ஐயரின் வட்டுக்கோட்டைச் சர்வசாத்திர போதனா பீடத்தில் தக்க கல்வி பெற்றமையாற்றான், நான்கு திங்களில் இப்பேற்றினைப் பெற லாயினர்.
சகலகலா பண்டிதர் டான் பூவர் எம் தமிழ் மக்களின் ஆன்மீக மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கோடு மட்டும் மனத்திருப்தி பெறாதவராய், அறிவிற் குறைந்து, ஆழ்ந்து யோசித்து, உயர்வு பெறாதிருந்த அவர் காலத்துத் தமிழ் மக்களுக்கு, மொழியறிவை புகட்டவும், உயர் தமிழில் பல்வகைச் சாஸ்திரங்களைப் போதிக்க -வும் அவாவுற்றிருந்தமையையும், அவ்வாறான தம் புனித நோக்
* அவற்றுள் : 1. கறல் விசுவநாதபிள்ளை எழுதிய வீசகணிதம்
(Elementery algebra) 2. நெவின்ஸ் சிதம்பரபிள்ளை எழுதிய நியாய இலக்கணம், கெமிஸ்தம் என்பவை குறிப் பிடத் தகுந்தவை. இவரது சர்வசாஸ்திரப் போதனா பீடத்திற்கற்று அரங்கேறிய, நீதிபதி வைமன் கதிரவேற்பிள்ளை. "சங்கப் பேரகராதி" என புகழப்படும் தமிழ் அகராதி, நியாயலக்கண நூல் போன்றவை களை எழுதினார்.

Page 71
134
கத்தை நிறைவேற்ற, சிறுவர் முதல் அறிவறிந்த பெரியோர் ஈறான அனைவர்க்கும், ஏற்ற நூல்களையும் யாத்துள்ளார். இவ் வரிசையிலே, அவர் இளைஞருக்கென, பாலபோதம் 1-5 வரை யான தொடர் வாசக புத்தகங்களையும், வேத வினா-விடை எனும் தம்மத அறிவு நூலையும் தாமே இயற்றி, அச்சிட்டு உதவி யுள்ளார். இவரின் வாசினைப் புத்தகங்களின் பெயரை ஒத்து, நாவலர் அவர்களின் பாலபாட வரிசையும், சைவ வினா விடை புத்தகமும் அமைந்திருப்பதும், இந்நூற்றாண்டு மத்தியில் ஈழ கேசரிப் பொன்னையாவின் பதிப்பான, பாலபோதினி வரிசையும் அமைந்திருத்தல் நோக்கலாம். உயர்தர, மத்தியதர மாணவர்க் கெனவும், அவரது வட்டுக்கோட்டைச் செமினரியிற் கற்று அரங் கேறிய மாணவர் மூலம், சில அறிவு நூல்களை ஆக்குவித் துள்ளார்.
இவ்வாறு புகழ் பூத்த கலை வல்லுநராகத் திகழ்ந்த பூவர் பண்டிதர், 1855 ஆம் வருடம், மானிப்பாயில் ஊழியஞ் செய்து வந்தபோது, அவரைக்கொடிய விஷபேதி நோய் தாக்கியது. அதே காலத்திலே, வட்டு செமினரியை மூடிவிடும் நோக்கோடு போஸ்டனில் இருந்து, அமெரிக்க மிஷனரிச் சங்கத்து உயர்பீடம், டாக்டர் அண்டர்சன் என்பவரின் தலைமையில் தூதுக்குழுவை இங்கு அனுப்பி வைத்தது. வட்டுக்கோட்டைச் செமினரி, நற் செய்தி பரப்புவதில் துணை புரியவில்லை; ஆங்கிலங் கற்றுத் தேறியவக்கள், பல்வேறு சுயலாபந்தரும் வேலைகளை நாடிச் சென்றுள்ளனர் என்பதே தூதுக்குழுவின் எண்ணமாயிருந்தது.
அதனை ஊகித்துணர்ந்தவரான பூவர் பண்டிதர், மேற்படி தூதுக்குழுவினர் பம்பாய் வந்து சேர்ந்துள்ளமையைக் கேள்வி யுற்றார். அவர்கள் யாழ்ப்பாணம் வந்து சேருமுன், தாம் மரித்து விடுவது திண்ணம் எனத்தெரிந்து கடைசி நேரத்திலேயும், நம் மினத்தின் மீது கொண்டிருந்த பற்றுறுதி தணியாதவராய்த் தூதுக் குழுத் தலைவருக்கு ஓர் கடிதத்தை எழுதுமாறு, தம் சகாக்களுக். குப் பணித்துள்ளார்.
அக்கடித வாசகம் வருமாறு:-
* தூதுக்குழு, கடவுளினால் அனுப்பப்பட்டதென்று எண்ணி யிருந்தேன்; அவர்களைச் சந்திக்க ஆவலோடு காத்திருந்தே னென்று டாக்ரர் அண்டர்சனுக்குக் கூறுங்கள். ஆனால், நான் அவருக்குத் தாராளமாக எழுதியுள்ளேன். உங்கள் அனைவருக்கும். எனது எண்ணம் இன்னதென்று தெரியும்; அவர்கள் வரும்போது நான் மறைந்து விடுவதே மேலேன தோன்றுகின்றது.

135
உண்மை என்றோ ஒரு நாள் வெளியாகும். இதனையே நான் டாக்டர் அண்டர்சனுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.""
தமது வாழ்நாளின் முடிபு பரியந்தம், யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்களின் நலனையே குறிக்கோளாகவும், அன்னாரின் கல்வி வளர்ச்சியே தம் சேவையாகவும் கொண்டு, நற்பணி புரிந்த குன்று சரிந்தது! அவர் மலை மேலேற்றிய தீபமாம் செமினரியும். அணைந்தது! எனினும், பூவரின் ஆவியின் அநுக்கிரகம் என்றும் எம்மினத்துக்கே உரியதாயுனது. யாழ்ப்பாணப் பல்கலைவளா கமே, அவரின் வாஞ்சையை நிறைவு செய்தமை, தேற்றந் தருவதாகும்.
அமெரிக்க நாட்டிலே பூவருக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகள் நிறைந்திருப்பவும், அவ்வகைச் சுகபோக வாழ்வினை நீத்து, அறிவாலும் நாகரிகம், பொருளாதாரம் போன்ற ஏதுக் களாலும் தாழ்நிலையில், இருள் மண்டிக்கிடந்த நம் யாழ்ப்பாணம் நோக்கி அவர் வந்தமை தெய்வச் செயலே.
காலத்துக்கேற்ப நம்மூரில் வளர்ச்சியடைந்து வந்த ஆரம்ப, இடை நிலைக் கல்வி, 19 ஆம் நூற்றாண்டின் பிற்கூற்றிலிருந்து 20 ஆம், நூற்றாண்டின் முற்கூற்றுக்கால அடக்க ஆண்டுகளில், வியத்தகு விருத்தி கண்டது. அக்கால கட்டத்திலே, மீண்டும் உயர் பூரண சர்வகலா சாலையின் அத்தியாவசியத் தேவை உணரப் பட்டது. 1823-ல் முளைத்து 1855 ஆம் ஆண்டு வரை பூத்துக் காய்த்துப் பயன் தந்த, செமினரியின் சேவை ஒழிந்த பின்பேடி அங்கு கற்று அரங்கேறி, நாடு முழுவதும் செறிந்து வாழ்ந்த சீமான்களையும், கடல்கடந்து, தொடுவாய்ப் பகுதிகளில் திரவியம் ஈட்டச் சென்ற யாழ்ப்பாணிகளையும், ஏனையோரை யும், தமது இனத்தின் உயர் கல்வி நிலைமை குறித்துச் சிந்திக்கத். தூண்டுவதாயிற்று.
சரியாக ஒரு நீண்ட நூற்றாண்டு கடந்த பின் சேர். பொன். இராமநாதன் துரை, தம் மக்களிடை உயர் கல்வியில்லாமையால். ஏற்பட்டுள்ள பாதிப்பை உணரலானார். இலங்கைச் சட்ட சபையின் 'படித்தோர் பிரதிநிதி' எனும் உறுப்பினர் பதவி கிட்டியதும், பல்கலைக் கழகம் பற்றி அச்சபையிலும், வெளியேயும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பும் வசதியும் அவருக்கு கிடைத்தது.
சேர். பொன். இராமநாதனோடு, பல்கலைக் கழக விடயத் தில் உடன் நின்று உழைத்தோருள், கலாநிதி ஆனந்த கே. குமார சாமி சேர். பொன். அருணாசலம், சேர். ஜேம்ஸ் பீரிஸ் என் போர்

Page 72
136
முக்கியமானவர்கள். இவர்கள், 1905-ல் 'பல்கலைக் கழகச் சங் கம்’ ஒன்றை நிறுவி மேல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இராம
நாதன் அவர்கள் கொழும்பிலேயே முதலில், பெளத்த - இந்து கல்வி நிறுவனம் அமைய வேண்டுமெனவும், அதனை யொத்த நிறுவனங்கள் பின்னர், மாகாணங்களிலேயும் நிறுவவேண் டும் எனவும், 1899-ல் எண்ணமிட்டார். சிங்கள மக்களோடு ஒருசேரக் கொழும்பிலே அக்காலத்தில் வாழ்ந்து வந்தவரான அவர், பெளத்த - இந்து மக்கள் - விசேஷமாகச் சிறுவர்கள்-பரஸ் பரம் கூடிப் பழகும் வாய்ப்பு, அதனாற்கிட்டும் என எண்ணமிட்டது இயல்பே.
அவர் கொண்ட தேசிய ஒருமைப்பாட்டுக் கொள்கை, துர் அதிட்டவசமாக பெளத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவினால் கைகூடாது போயிற்று. இலங்கையின் அன்றைய பெருமக்கள் ஒன்றுகூடி நிறுவிய "தேசிய காங்கிரஸ்" இடையில் முறிவுற்றதே காரணம். இதன் பின்னரே, யாழ்ப் பாணத்தில் ஆண்களுக்கெனப் பரமேஸ்வராக் கல்லூரியையும், பெண்களுக்கென மருதனார் மடத்தில் இராமநாதன் கல்லூரியை யும் அமைப்பதில் அவர் ஈடுபட்டார்.
1925-ஆம் ஆண்டில், இராமநாதன் தம் உள்ளக் கிடக்கை யைக் கீழ் வருமாறு விளக்கியுள்ளார் :-
இலங்கையிலும் வெளி நாட்டிலும் வாழும் இந்துப் பெற் றோர்கள் கொண்டிருந்த, பெருவிருப்பத்தின் விளைவாகவே, 1921-ஒகஸ்டில் பரமேஸ்வரக் கல்லூரி நிறுவப் பெற்றது. அரசாங் கத்தினாலும், பிரத்தியேகக் கழகங்களினாலும் நடத்தப்படும் ஆங்கில பாடசாலைகளிலே, ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஊட்டப்படுங் கல்வி திருப்தியற்றது என இப்பெற்றோர் கருது கின்றனர். வாழ்க்கையிலே அழியக்கூடிய பொருள்களைப் பற்றிய அறிவே, மாணவர்க்குப் புகட்டப்படுகிறது. உலகில் பயனுள்ள வேறு விஷயங்கள் இல்லை, என்ற எண்ணத்துடன் இவ்வாறு நடைபெறுகின்றது போலத் தோன்றுகின்றது. இவ்வகை அறிவை விடக் கூடுதலான அறிவைப் பெற்றோர் விரும்புகின்றனர்."
இராமநாதன் கல்லூரியும், பரமேஸ்வராக்கல்லூரியும் அமைந் துள்ள இடங்களையும் பார்க்குக்கால், அவர் நெஞ்சத்து உள்ளே வியாபித்திருந்த பல்கலைக்கழக நோக்கம் புலப்படுகிறது. இராம நாதனின் பல்கலைக்கனவு நனவாகு முன்னரே, துரதிருஷ்ட வசமாக அவர் 1930-ல் வியோகமடைந்தார்.

37
எனினும் நாடாளுமன்றத்தின் உள்ளும் வெளியேயும், பயன் தரும் பிரசாரம் தொடர்ந்து நடைபெற்றது. இப்பிரசாரங்களில் இராமநாதனின் மருகரும், நாடாளுமன்றிலும், மேற்சபையிலும் அங்கத்துவம் வகித்தவருமான திரு. சுப்பையா நடேசன் (நடேச பிள்ளை) ஏனைத் தமிழ்ப்பிரதிநிதிகள், புகழ்பெற்ற கல்விமான்கள் ஆகியோர் சிறப்புற உழைத்தனர். இராமநாதன் தமது திரவிய சொத்துக்களின் மூலம் தாபித்திருந்த இரு கல்லூரிகளும், இதர நம்பிக்கை நிதியங்களும், அவரின் மறைவின் பின்னரே தமிழ்ப் பல்கலைக் கழகத்தினைத் தம்முள் அடக்குவனவாயின. 1974 அக்ரோபர் 10 ஆம் நாளில், எமக்கெனச் சகல கலைகளையும் பயிற்றும், பூரணம் பெற்ற சர்வகலாசாலை தாபிதமாயிற்று. ஏழாலையூர் அறிஞர்களும், நிர்வாகிகளும் கூட யாழ் வளாகத் திலே குறிப்பிட்ட தொகையினர் சேவை புரியும் வாய்ப்பைப் பெற் றுள்ளனர். யாழ் பல்கலைக் கழக வளாகம் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரிலேயே அன்றைய பிரதமர் திருமதி சிறிமா பண்டார நாயக்கவினால், பரமேஸ்வரன் கோயில் மணியோசை யும், மங்கல வாத்தியங்களும் முழங்க, சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைக்கப்படலாயிற்று.
அன்றைய உத்தியோக பூர்வ அமர்வில்ே, எம்மூரவர்களான,
1. கணிதப்பேராசிரியர் பேரம்பலம்-கனக சபாபதி
(விஞ்ஞான பீடாதிபதி)
2. பேராசிரியர் டொக்ரர் கந்தையா குணரத்தினம்.
(பெளதிகவியல், கணணி இயல்)
(இவர், ஆரம்ப் கட்டத்தில், கொழும்புக்கும், பேரா தெனிய வுக்கும் அடிக்கடி மாற்றப்பட்டமையாலேய 1975இலேயே
யாழ்ப்பாணம் வந்தார்.)
3. பேராசிரியர் டொக்ரர் லூதர் ஜெயசிங்கம்:
(பூகோளவியல் போதனா பீடம்)
முதலானோர் பதவி ஏற்றனர்.
இவர்களுள், பேராசிரியர்கள், பேரம்பலம் கனகசபாபதியும், லூதர் ஜெயசிங்கமும் இன்று நம்மோடில்லை. டாக்டர் கந்தையா-குணரத்தினமும் வைத்திய கலாநிதி நோயியல் நிபுணர் (விரிவுரையாளர்) வி. எஸ். பத்மநாதனும், இன்னமும்
9 *

Page 73
188
வளாகத்தில் சேவை புரிகின்றனர். நூலகர் திரு. சி. முருகவேள் ஓய்வு பெற்றுள்ளார்.
GLu கந்தையா குணரத்தினமே இன்றைய உபவேந்தர் ஆவார்.
1848-ஆம் வருடம் அக்காலத்துக் குடியேற்ற நாட்டுச் செய லாளர் (Colonial Secretary) விடுத்த அறிக்கை, 1927-ல் சேர். பொன். இராமநாதன் அறிக்கை இரண்டும் யாழ்ப்பாணமக்களின் அன்றைய உயர் கல்வி வளர்ச்சி நிலை பற்றி விளக்குகின்றன.
இராமநாதன் அறிக்கை : ** கல்வி என்பது இறுக்கமான அச்சிலே வார்த்தெடுக்கப்பட வேண்டிய பொருளன்று. கல்வியின் பொருளும் கல்வி முறையும் காலத்துக்குக் காலம், சந்ததிக்குச் சந்ததி, வேறுபட்டு வந்துளது. ஒரு காலத்தில் நிலவிய கருத்து களும் வழக்கங்களும் அடிக்கடி மறைந்து வேறு கருத்துகளுக்கும் வழக்கங்களுக்கும் இடமளித்துள்ளன. காலப் போக்கிலே, இலங் கையின் வடபாகத்திலும், மேற்குப் பாகத்திலும், அங்கு வாழும் மக்களுடைய நன்மைக்காக, ஒவ்வொரு பல்கலைக்கழகம் தேவைப் படும். அந்நிய கல்விமான்கள் வற்புறுத்திய விஷயங்களையும், கல்வி முறைகளையும் அடிப்படையாகக் கொண்ட பல்கலைக் கழகங்களாக இவை தேவைப்படும். இப்பல்கலைக் கழகங்கள், எவ்வெவ்விடங்களில் அமைக்கப்படுகின்றனவோ, அவ்வவ்விடங் களில் உள்ள நகரங்களின் அல்லது மாவட்டங்களின் பெயர்களால் அழைக்கப்பட வேண்டும்.
1848ம் வருட எமர்ஸன் ரெனென்ற் அறிக்கை : 'வட்டுக் கோட்டையிலுள்ள முழுத்தாபனம், மிகுந்த ஆர்வத்தை உண்டு பண்ணும் ஒரு தாபனமாகும். அதன் தோற்றம் மறக்க முடியாதது. மனதில் ஆழமான பதிவை ஏற்படுத்தத் தக்கது. ஒருபுறம் உயர் கல்லூரிக்குரிய ஒழுங்கு முறைகளும் பொருட்களும் காணப்படு கின்றன. மறுபுறம் மாணவர்களுடைய கவர்ச்சிகரமான தோற்ற மும் உடைகளும். அவர்களுடைய உறைவிடங்கள், கீழைத் தேச வாழ்க்கை முறைக்குரிய தனிப் பண்புகளைக் காட்டி நின்றன. உறங்குமறைகள். உணவருந்தும் சாலை, சமையலறை ஆகியவை: தூய இந்தியப் பாணியில் இருந்தன. எல்லாம் மிகச் சுத்தமாகக்
காணப்பட்டன.
இந்த உறைவிடப் பகுதியை விட்டு, வெளிச்செல்ல, இதைவிட
முற்றிலும் வேறுபட்ட தன்மை உடையதாக, நமக்குப் பழக்கமான
பண்புகளையுடைய விரிவுரை அறை காட்சியளித்தது. அங்கு,

139
வானநூற் கடிகாரம், கோள் மண்டலக் கருவி, கோட்கடப்புக் கருவி, ஆகியவை காணப்பட்டன. ஆய்வு கூடத்தில் இரசாயனப் பொருள்கள், கொள் கலன்கள், மின்காந்தக் கருவி ஆகியன இருந்தன. நூதன சாலையிலே, இலங்கையின் புவிச்சரிதவியலை விளக்கத் தக்க வகையில், கணிப் பொருள்களும் கடற்பறை வகை களும், ஒழுங்குபடுத்தி வைக்கப்பட்டிருந்தன ஆனால் இவற்றை யெல்லாம் விடக்கூடுதலான கவர்ச்சியுடைய இடமாக அமைந்தது, அரங்க சாலையாகும். அங்குள்ள வாங்குகளில் நிரையாக வெண் ணிற ஆடைகளுடனும், தலைப் பாகைகளுடனும், ஆவலாய் உட்
கார்ந்திருந்தனர் மாணவர் 1 "கருங்கல்லிற் செதுக்கிய இறை வனின் திருவுருவம்'
எங்கள் முன்னிலையில் நடைபெற்ற பரீட்சை, வரலாறு, இயற்கைத் தத்துவம், கண்ணொளியியல், வானநூல், வீசகணிதம் ஆகிய பாடங்களிலே நடைபெற்றது. மாணவர் காட்டிய அறிவு, எம்மை அதிசயிக்கச் செய்தது. இங்குள்ள வெற்றிகரமான கல்வி முறையையும், எடுத்துக்கொண்டால், ஐரோப்பிய பல்கலைக் கழகங்களுடன் சமமாக வைத்தெண்ண அது உரிமையுடையது எனலாம்' "
இவர்கள் இருவரினதும் அறிக்கைகளை ஆராயுங்கால் அமெரிக்க மிஷனரிமார், தமது உத்தேச பல்கலைக் கழகம், ஐரோப்பிய இலக்கிய, விஞ்ஞானச் செல்வங்களைச் சுதேச இளைஞர்கள் பெறத்தக்க வசதி செய்வதும், மேலைத்தேயக் கல்விச் செல்வங்களைக் கீழைத்தேச மொழியில் மாற்றும் முயற்சி யில், மிஷனரிமாருக்கு உதவி அளிப்பதும், தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதும் பெருநோக்காகும்.
சமஸ்கிருதம், எபிரேயம், கிரேக்கம் முதலாய மொழிகளைப் போலத் தமிழ் மொழியும் ஒரு தனித்துவமான, மொழி ஆகும். அதனை வளர்ப்பதற்குரிய தகைமைகளனைத்தையும் அது பெற் றுளது. உயர் தமிழ் (செந்தமிழ்) அல்லது செய்யுள் நடைத்தமிழ், கற்பதற்குக் கடினமானது. நமது கல்லூரியிலே இருக்கக்கூடிய வசதிகள் அனைத்தையும், இதற்கு நாம் பயன்படுத்தவேண்டும்.
இராமநாதன் அவர்கள், வேண்டாத மேலைநாட்டுக் கலாசாரம், கல்விமுறை நமது கலாசாலைகளில் கற்பிப்பதைத் தவிர்த்து, பெளத்த-இந்து சமயத்தோடு ஒட்டிய கல்வியும் இலக் கியமுக்கும் நம் சிறாருக்குத் தேவை என்றார்.

Page 74
140
எவ்வாறாயினும், இராமநாதன் எண்ணத்தில் பதிந்திருந்த சமயம் சார்ந்த சர்வ கலாசாலையை, அவர் வழிவந்த கல்வி மான்கள் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். ஆதலி னாலே தான் 1957ம் வருடம், அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யு. ஆர்.டி. பண்டார நாயக்கா வித்தியோதய வித்தியாலங்கார பிரி வினாக்களுக்குப் பல்கலைக்கழக அந்தஸ்து அளித்த காலை, யாழ்ப்பாணத்திலும், இந்து கலாசார பல்கலைக் கழகத்தை ஏற் படுத்தித்தர எண்ணியபோது ஒருமித்த குரலில் அதனை நிரா கரித்தனர்.
17 ஆண்டுகள் மேலும் பொறுத்திருந்த எமக்கு, சக்திவாய்ந்த பூரணத்துவம் பெற்ற சர்வகலாசாலை, அவர்தம் மனைவியாரா லேயே தாபித்து உதவப்பெற்றது. அதிலும் பூவர் ஐயரின் செமினரி தாபித்த வட்டுக்கோட்டை வளாகத்தில், கணித விஞ்ஞான பீடங்களும், இரமநாதனின் இதயத்திருந்த பரமேஸ் வராக் கல்லூரியில், கலைப்பீடமும், மருதனார்மடம் பெண்கள் கல்லூரி வளாகத்தின் ஓர் பகுதியில் நுண்கலை (சங்கீதம், நடனம் முதலியன) பீடமும் ஒருசேர அமைந்தமை அற்புதமே!
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தோற்றம் பற்றி, மேற்படி வளாகத்தின் கலை பண்பாட்டுப் போதனாபீட முதல்வர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் வெளியிட்ட இரத்தினச் கருக்கமான வார்த்தைகள் வருமாறு:- **இந்த யாழ்ப்பாணத்துக் குரிய, இலக்கண, இலக்கியச் செம்பாட்டு ஊற்றுக்களுடன், அமெரிக்காவிற் தொடங்கி, வட்டுக்கோட்டையிற் கொப்புளித்துப் பாய்ந்த, சுதேச மயமாக்கப்பட்ட ஒரு பாரம்பரியமும், கொழும்பில் ஊற்றேடுத்துப் பேராதனையில் ஓடிய இலங்கை முழுவதற்கும் பொதுவானவொரு தேசிய ஆராய்ச்சிப் பாரம்பரியமும், இணைந்த போதுதான், யாழ்ப்பாணமே பல்கலைக் கழகமாயிற்று; யாழ்ப் பாணத்துப் பல்கலைக் கழகத் தோன்றிற்று!
இக்கூற்றினுள் இரண்டு நீண்ட நூற்றாண்டுகளின் மாண்பு மிகு முன்னேற்றப் பயண வரலாறு பொதிந்திருக்கும் சூக்குமம் வெளிப்படுகிறது. .
கல்வித்துறைச் சாதனையாளர்கள்
கல்வித்துறையில் பல சாதனையாளர்களையும் ஏழாலை
ஈன்றளித்துள்ளது. அவர்களில் சிலரையாவது, இங்கு குறிப்பிடா
மல் விடமுடியாது.

141
கணிதமேதை கனக சபாபதி : (ஏழாலையின் மேற்குக் குறிச்சி யில், பரம்பரை வழிவந்த வைத்தியர் ஐ. பேரம்பலம் அவர்களின் புதல்வர் கணித மேதை பேராசிரியர் கனக சபாபதி அவர்கள். (தோற்றம் : 1:7:1922, மறைவு : 23:1:1977) ஆரம்பக் கல்வியை அயற் பாடசாலையிலே கற்றபின் மல்லாகம் ஆங்கில பாடசாலையில் இடை நிலைக்கல்வி பெற்றவர். 1937-ல் லண்டன் மற்றிக்குலேசன் படிப்புக்காக யாழ் இந்துக்கல்லூரியில் சேர்ந்தார். 1939-ல், அப்பரீட்சையில் உயர் சித்தியும் பெற்றார். 1940-இல் இலங்கைச் சர்வகலாசாலையில் பிரவேசித்து முதலாண்டிலேயே கணிதத் துறையில் மிக்க திறமை காட்டியதன் மூலம், முஞ்சர்ஜி பிராம்ஜிகான் வித்தியா விருத்தி நன்கொடையும் பெற்றுள்ளார். 1943-ல் கணிதவியல் இளமாணி (பி. எஸ்ஸி)ஆக முதலாம் வகுப்பிற் சித்தி எய்தினார். அதனால் இங்கிலாந்து சென்று உயர் படிப்பை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியது.
அக்காலத்தில் இரண்டாவது உலகப் பெரும்போர் நடை பெற்றதால் கடல்வழிப் பயணம் மேற்கொள்வது முடியாது போயிற்று. இலங்கையில் இருந்து கொண்டே (எம். எஸ்ஸி.) முதுமாணிப் பரீட்சைக்குத் தோன்றி விசேட சித்தி பெற்றார். இலங்கைச் சர்வகலா சாலையின் முதலாவது கணித முதுமாணி (எம். எஸ்ஸி.) இவரே. யுத்த காலக் கெடுபிடிகளையும் சட்டை செய்யாமல் பின்னர் லண்டன் சென்று கேம்பிரிஜ் சர்வகலாசாலை யில் ஆராய்ச்சியை மேற்கொள்ளலானார். அங்கு நிகழ்ந்த கெளர வப்பரீட்சையில்(Tripos) தேறி, கணித பண்டிதனாகும் உயர் தகை மையும், மேற்படி பல்கலைக் கழகத்தின் உபகார நிதியும் (Exibition Scholorship) Gluboti. 1947-6ö stu asb 86õTG சர்வகலா சாலையில் கணிதவியல் ஆசிரியப் பணியை மேற். கொண்டார்.
இக்கால கட்டத்தில் 1948-ல் திருமணமும் நடந்தேறுவதா யிற்று. மணம்முடித்த பின்பு, தமது மனைவி சகிதம் இருதடவைகள் இங்கிலாந்து சென்று, கணிதவியல் ஆய்வு மேற்கொண்டார். கேம்பிரிஜ் சர்வகலாசாலையில் 1950-51-ல், டவென்போர்ட் 1963-64-ல் ஒருகேர்ஸ் ஆகிய இரு பேராசிரியர்களின் அனுசர ணையுடன் எண்ணியற் கோட்பாடுகள்" பற்றி ஆய்வு செய்து, லண்டன் கணித விஞ்ஞான சஞ்சிகைகள் மூலம் தமது முடிபினை வெளிப்படுத்தியுள்ளார்.
பேராதெனிய சர்வகலாசாலையில் அவர் பேராசிரியர் பதவி வகித்த காலத்தே, அவரின் சத்காரிய நோக்கில் “குன்றக் குமரன்” (முருகன்) கோயிலும் நிலை பெறலாயிற்று.

Page 75
142
பேராசிரியர் கனக சபாபதி தம் வாழ்நாளில் இறுதியாக நல்லுரை ஆற்றியது, 10-9-1976-ல் ஏழாலை சைவமகாஜன வித்தியாலயத்தில் நிகழ்ந்த ஏழாலை உயர் தமிழ் வித்தியாலய நூறாண்டு நிறைவு" விழாவிலேதான். அப்போது அவரது வயது ஆக 44 தான்.
பேராசிரியர் லூதர் ஜெயசிங்கம்
மூன்று பெண்கள் உட்பட எட்டுப் பிள்ளைகள் கொண்ட குடும் பத்தின் மூத்தமகனான இவர், முதலில் அரசாங்க சேவையிற் சேர்ந் தார். உயர்கல்வி பெறும் நோக்கோடு அரசசேவையைத் துறந்து, கொழும்புச் சர்வகலாசாலையில் பிரவேசித்தார். புவியியல் பட்ட தாரியாக வெளியேறியவர், யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆசிரிய சானார். அன்றைய கல்லூரி முதல்வர் 'கலாநிதி பங்கர் (Dr. 8unker) அவர்களின் தூண்டுதலின் பேரில், அமெரிக்க மசாசு செற் மாநிலத்தைச் சார்ந்த கிளாக் சர்வகலாசாலையில் சேர்ந்து, தமது ஆய்வினை மேற்கெரண்டார். யாழ்ப்பாணத்துப் பிரதேசப் цofuflusio (The urban Geography of Jaffna) 6TsiТLI 35 96Јfвih ஆய்வுக் கருவூலமாகும். 1958-ஆம் வருடம் திரும்பி வந்து யாழ்ப் பாணக் கல்லூரியின் முதல்வர் பதவியில் அமர்ந்தார். தமது கல்லூரியின் ஓர் பாகத்தில் விஞ்ஞான பீடம் அமைந்தமையால் தாம் அதிபர் பதவியை விடுத்து திருநெல்வேலியில் உள்ள பரமேஸ்வர வளாகத்தோடு சேர்த்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற பின், 1984-ல் அமெரிக்கா சென்று, தன் மகள் பேரப்பிள்ளைகளோடு வாழ்ந்து 13-12-1989-ல் இறைவனடி சேர்ந்தார். அவர் கடைசி நாட்களிலேயும் அமெரிக்க ஓய்வு நாட் பாடசாலையின் ஆசிரியனாக நற்றொண்டு புரிந்துள்ளார்.
எஞ்ஜினியர் மூத்தப்பு சின்னத்துரை
ஏழாலையின் விவசாயக் குடும்பத்திலே பிறந்து ஆரம்பக் கல்வியைத் தமது அயற் பாடசாலையிற் கற்றபின், இடைநிலைக் கல்விக்கென, தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிற் சேர்க்கப்பட் டார். அக்காலத்தில் உயர்தர மாணவனாகத் திகழ்ந்தவர். லண்டன்- மெற்றிக் குலேஷன் பரீட்சையிலே விசேட தரத்திற் சித்தியெய்தினார், உயர் படிப்பினை வெளிநாட்டிலே மேற் கொள்ளும் எண்ணத்தினை விடுத்து, அயலூராகிய காங் கேசன் துறையிலிருந்த சீமெந்துத் தொழிற்சாலையில், சாதாரண எழுது வினைஞராகப் பணியாற்றிச் சம்பாதிக்கும் நோக்கினைக் கொண்டனர். எழுதுநராகப் பணியாற்றிய காலத்தில் தமது

143
ஆமதி நுட்பத்தால், கைத்தொழில் அமைச்சின்கீழ் ஒரு இடை நிலைத்தொழில்நுட்ப உத்தியோகத் தரானார்.
பொறியியல் நிபுணனாக வளரவேண்டுமெனும் ஆசை Urtei) வேலை செய்து கொண்டே லண்டன் சாட் டர்ட் நிறுவன பொறியியல் படிப்பையும் வெளிவாரியாக மேற்கொண்டு சித்தியும் எய்தினார். அத்தோடு திருப்தி அடையாராய், பம் பாய்பி.ஐ.ஈ.டி நிறுவன அஞ் சல் வழி, கல்வி மூலம் கற் றார். ஆங்கு லண்டன் பொறி யியலாளராகத்தேர்ச்சிபெற்ற முதலாவது பொறியியலாளர் இவரே. சிறப்புச் சித்தி
யெய்தி தங்கப் பதக்கமும் பெற்றார்.
பொது வேலைத் திணைக்களத்தில் (பி. டபள்யூ. டி) பொறி யியலாளராகச் சேர்ந்து, பல்வேறு பதவிகளைத் திறம்பட வகித்து இறுதியில் கட்டிடத் திணைக்களத்தின் பணிப்பாளராக உயர் பதவியில் அமர்த்தப்பட்டார்.
பேராதெனிய பல்கலைக் கழகத்தின் பாரிய கட்டடத் தொகுதி களை நிர்மாணிப்பதற்கான பொறுப்பு வாய்ந்த தலைமைப் பொறியயலாளராக இவர் கடமை புரிந்து பெருமதிப்புக்கு உரியவ ரானார். அனைத்துக்கும் மேலாக இலங்கையின் ஒரேயொரு சர்வதேச விமான நிலையமான, கட்டு நாயக்க விமான நிலையத் தின் தலைமைப் பொறியியலாளராகச் சலியாது உழைத்து, 1965-ல் கனடிய உதவி நிறுவனத்தினதும், இலங்கை அரசினதும் போற்றுதலுக்கு ஆளானார்.
திரு. சின்னத்துரையின் பாரியார் திருமதி நாகேஸ்வரியுடன் இடைநிலைக் கல்விவரை ஒன்றாகப் படித்த காரணத்தால், இருகுடும்பத்தாரின் மேம்பாட்டினையும் நன்றாகவே அறிவேன். இவர்களின் மகன் வைத்தியகலாநிதி சி. நரேந்திரன் எம். பி. பி. எஸ். எம். டி இலங்கையின் முன்னணி வைத்தியருள் ஒருவர்

Page 76
144
பண்டிதர் ஜோன் பிள்ளை ஏழாலையின் வடக்கெல்லைக் குறிச்சியிற் பிறந்து, தெற்கெல்லைக் குறிச்சியாய் அமைந்துள்ள சூராவத்தையில் மணமுடித்தவரான பண்டிதர், இளவாலையில் அமைந்த பெண்கள் ஆசிரிய பயிற்சிப் பாடசாலையில், விரிவுரை யாளராகப் பணிபுரிந்தவர். அக்காலத்தில் புகழ்பெற்ற அரசியற் பேச்சாளராகவும், வாசாலகராகவும் பிரக்யாதி பெற்றிருந்தார். சைவப் பெருங்குடியிலே பிறந்த இவர், தாம் புகுந்த கத்தோலிக்க மதத்திலே பற்றுறுதி மிக்கவராயிருந்தார்.
இவர் தமது மதத்தலைவர் ஒருவருக்கு வாசித்தளித்த வர வேற்புரையின்கண், பல வேண்டு கோள்களைச் சமர்ப்பித்து, அவற்றை நிறைவேற்றித் தருவீர்களாயின், "ஏழாலையை இள வாலை போலாக்குவோம்" என ஒரு வாக்கியத்தைச் சேர்த்து விட்டார்.
சில நாட்களின் பின்பு, அச்சடிக்கப்பட்ட மேற்படி வரவேற் புரையின் கசங்கிய பத்திரமொன்று, அன்று சந்தியில் நின்ற எமது விதானையாராய்ப் பின்னாளில் நியமிக்கப்பட்ட திரு.மு.க. சிவகுருவின் கையிற் கிடைத்துவிட்டது. மிகுந்த முற்கோபியா யிருந்த அவர் ஆவேசங்கொண்டு அதனை சம வயதினரான திரு. நா. கனகரத்தினத்திடம் கூறிப்பிரலாபித்தார், அவர் முன்னவரை விஞ்சிய திடீர்க் கோபி. இருவரும் திரு.மு. ஞானப் பிரகாசம் தலைமையில் நிகழ்ந்த ஏழாலை சைவ முன்னேற்றக் கழகத்துக் கூட்டத்திலே, குறிப்பிட்ட வரவேற்புரைப் பத்திரத் தைச் சமர்ப்பித்தனர். அன்று அச்சபையிலே, ஏழாலை மத்தியிலே ஒரு சைவப் பாடசாலையை நிறுவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன் பேறாய் நிறுவப்பட்டதே யா/ஏழாலைச் சைவ மகாஜன வித்தியாலயம் ஆகும். ஏழாலை சைவப்பிரகாச வித்தியா சாலையின் மறுபிறப்பு என இதனை ஏழாலை மக்கள் போற்றுவர்.
பண்டிதா ஜோசெஃப் : சூராவத்தையிற் பிறந்து, வியோக மாகும் வரை அங்கேயே வாழ்ந்தவர் இவர். எமது ஊரின் முதலா வது பண்டிதப் பட்டம் பெற்றவருள் ஒருவர். யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளிற் தமிழ் போதித்த நல்லாசான். தமது சமயத் திலும், கிராமத்திலும் நீங்காத அபிமானம் பெற்றவர்,
சூராவத்தையில் 1948 ஆம் ஆண்டு கல்நாட்டப்பட்ட சேன்.
திரேசா ஆலயத்தோடு ஒன்றிய தொடர்புற்று, புதிதாயமைத்த (மடு) ஆலயத்தின், நிலவேலை, கூரைவேலைகளைத் தாமே

145
பங்கேற்று தமது செலவில் உரியகாலத்தில் முடித்துக் கொடுத்து தவர்.
எஞ்சினியர் கந்தையா சுகிர்த ரத்தின சிங்கம் :- ஏழாலை வடக்கு அ.மி.த.க. பாடசாலையில் தமது ஆரம்பக் கல்வியை முடித்தபின்பு, தெல்லிப்பழை யூனியுன் கல்லூரியில் எச். எஸ்.சி. எனும் பள்ளி இறுதிப் பரீட்சையில் விசேட சித்தியுடன் வெளியேறியவர்.
இலங்கைத் தொழில் நுட்பக் கல்லூரியில் 5 வருடகாலப் பயிற்சியை முடித்துக் கொண்டபின், அரச பொறியியலாளராக நாடளாவிய சேவை செய்துள்ளார். பொது வேலைப் பகுதியில் (பி. டபிள்யூ. டி) பலகாலஞ் சேவை செய்து, உயர் பதவி பெற்று ஓய்வு பெற்றுள்ளார்.
பேராசிரியர் கந்தையா குணரத்தினம்
எந்த இனத்திலும் அறிவாளிகள் அடிக்கடி தோன்றுவr தில்லை. ஆதலினாற்றான் எம்முன்னோர் ‘அறிவாளிகள் ஆயிரங் காலத்துப் பயிர்' எனக் கூறி வைத்தனர். ஒரு மனிதன் நூறு வருடம் வாழ்வதே அரிதினுமரிதெனும் நியதி தெரிந்தும், ஒரு மேதையின் மதிநுட்பம் நீண்ட ஐ -- ܚ - - ܢ ܼ ܝ ݂ - ܕ - ܗ - ܘ - ܙ - -- ܐ -- ܕ -  ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ காலம் நிலைத்து ஏனைச் சாமான்யருக்கு, உய்யும் வழி யைக் காட்டி நிற்கும் எனும் உண்மை நிலையைத் தெரிவிப் பதே அதன் அர்த்தமாகும்.
1934 ஏப்ரல் 30-இல் ஆறு முகம் கந்தையா-சிதம்பரம் தம் பதிகளின் கனிஷ்ட புதல்வனாக உதித்தவர் குணரத்தினம். (யாழ் சர்வகலா சாலை உபவேந்தராக உள்ளார்.)
ஏழாலை வடக்கு அமெரிக்க மிஷன் பாடசாலையில் அரிச் சுவடி கற்க ஆரம்பித்த இவர், இடைநிலைக் கல் விக் கா க தெல்லிப்பனை யூனியன் கல்லூரியிற் சேர்க்கப்பட்டார். இவரும். அயல்வீட்டில் வசித்து மேனிலைபெற்றவர்களான வி.சி.கந்தையா

Page 77
:புவனசுந்தரம் பி. ஏ. கந்தையா - புவன பூஷணம், பி. எஸ்ஸி , என மற்றும் பலரும் கால்நடையாகவே யூனியன் கல்லூரிக்குச் சென்று வருவர்.
வடக்கு ஏழாழையில், அக்காலத்திலே அனைவரும் கமக்காரராகவே இருந்தனர். கற்று உத்தியோகம் வகிப் பவர்கள் கூட, அதிகாலையில் எழுந்து, தத்தமது தோட்டங்களில் அத்தியாவசிய கடமைகளை நிறைவேற்றிய பின்னரே, ஏனைக் கடன்களை நிறைவேற்றுவதற்குப் புறப்படுவர். மாலையிலும் அவ்வாறே.
குணரத்தினமும் தோட்ட வேலையில் பெற்றோருட னும் சகோதரருடனும் சேர்ந்து உதவிய பின்னரே கல்லூரி செல்வார். அயல் வீட்டு நண்பர்கள் உத்தியோகத்தரின் புதல்வர் கள். குணரத்தினமோ எட்டுப்பேர் கொண்ட கமக்காரனின் புதல்வன். எனினும், யூனியன் கல்லூரியில் அவருடன் ஒரே வகுப்பிற் படித்த பெரும் செல்வந்தர் மக்கள் எவருமே தன்னை முந்த விடமாட்டார்.
வகுப்புப் பரீட்சைகளிலும், தகுதிகாண் பொதுப் பரீட்சைகளி லும், தங்குதடை ஏதுமின்றி முன்னேறினார். யூனியன் கல்லூரியின் ஊடாகத் தோன்றிய திணைக்களப் பரீட்சைகளில் அதிவிசேட சிந்தியும், 1953-ஆம் ஆண்டுநடைபெற்ற H. S. C. பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாந்தர விசேட சித்தி பெற்ற இருவ ருள், ஒருவர் எனும் சிறப்பு மதிப்பும் பெற்றவர்.
1954 யூன் மாத முதல் 1958 ஏப்ரல் வரை, கொழும்பு சர்வ கலாசாலைத் கல்வியையும் சிறப்புற நிறைவேற்றியுள்ளார். சர்வகலாசாலையின் ஆரம்பகாலத்திலே அவர் தேர்ந்தெடுத்த விருப்புப் பாடங்கள், பெளதிகமும் கணிதமும் ஆகும். சிறு பராய முதலே அவர் தண்ணிரோடும் மண்ணோடும் இன்புற்று உறவாடி யதன் பேறாகவே, இன்று புவிப் பெளதிகவியலிலும், நீர்ப் பெளதிகவியலும் மேதையாகி உலகளாவிய பெளதிகப் போரா ானாகத் திகழ்கின்றார்.
கொழும்பு சர்வகலாசாலையில் சேர்ந்து தமது கணிதவியல் பெளதிகவியல் துறைகளைக் கற்பதற்கு ஆரம்பித்த முதலாண் டிலேயே, இவரின் திறமை நோக்கி மறுவருடத்துக்கு (2 ஆம் வருடத்துக்கு) உரிய விரிவுரைகளிற் பங்கு பெறுமாறு பணிக்கப்பட் அடனர். எனவே மூன்றாண்டு காலத்தில், கணிதத் துறையில்

147
விசேட சித்தி (Hons) பெற்று நின்றதன் பேறாக, பெளதிக வியலில் விசேட சித்தி பெறுதற்கு ஊக்குவிக்கப்பட்டார். முதலாந்தர விசேட பெளதிக சித்தி பெற்றதன் மூலம் (B. Sc Special Physics with first class Honors) LItailf G.D6). T வித்தாரண ஞாபகார்த்த தங்கப் பரிசிலும் பெற்றார்.
கொழும்பு சர்வகலாசாலையிலும், புகுமுகத் தேர்வு பெற்றுச் சென்ற காலத்திலேயே, இவரின் தனித்துவம் கண்டறியப்பட்டது. ஏனை மாணவரோடு உடனிருந்து கற்பதனால், சகமாணவர் களின் மனோநிலையில் ஒருவகைத் "தாழ்வுணர்ச்சி வளர் வதுடன், குணரத்தினத்தின் வாஞ்சையும் திறனும் அமுக்கப்படும் என உணர்ந்தே, இரண்டாம் ஆண்டுப் படிப்பை மேற்கொள்ளு மாறு ஏவப்பட்டார். அம்முடிவு அனைவருக்குமே நன்முடிபாயிற்று. மூன்று வருடத்தில் கணிதபாடத்தில் விசேட (Hons) சித்தி கிடைத்தது.
கமக்காரராகிய இவரின் தந்தை, வருஷத்துக்கு இரண்டு வகுப்புப் படித்தவர் என் ஊரிலே பேசப்பட்டவர். உடனலக் குறைவினால் கல்வியைத் தொடரமுடியாத துர்ப்பாக்கிய நிலை யிலேயே, பரம்பரைத் தொழிலாகிய கமத்தொழிலை நாடியவர். செய்வாரும் சொற்கேட்டால் என்றும் உழவே சிறப்பு என, சுற்றந்தழுவி உழுதுண்டு வாழ்ந்தவர். அவரது மதன் குணரத் தினமோ கல்வித்துறையில் அடுக்கடுக்கான பல உயர்பதவிகளை வகித்தவர், அதன் பட்டியல் மிக நீண்டது.
BRUCK SHAW - KUNARATNAM' Characteristic Curves
இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பி. எஸ்ஸி. (பெளதிக கணிதவியல்) விசேட சித்தி எய்திய திரு. க. குணரத்தினம், தமது உயர் கல்வியின் நிமித்தம் லண்டன் சர்வகலா சாலையின் *இம்பீரியல் விஞ்ஞான தொழில்நுட்பக் கல்லூரியில் 1960 ஒக்ரோபரில் சேர்ந்து 1983 யூலாய் வரை, தமது ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருந்தார். அந்நாளில் அவருக்கு மிகவும் பிரக்யாதி பெற்றிருந்த இரு பேராசிரியர்கள் வாய்க்கப் பெற்றனர். ஒருவர் பேராசிரியர் (Prop, J. M. Bruckshaw) பிறக்ஷோ. மற்றவர் பேராசிரியர் ஆர். ஜி. மேஸன் (Prop R. G. Mason) இரு சர்வ கலா சாலைகளிலும் ஆய்வு நிகழ்த்தி உயர் கெளரவமாகிய Ph. D., C. I. C. எனும் பட்டங்களைப் பெற்றுக் கொண்டார் (1963-இல்) இலங்கா தீவின் ஒப்பற்ற மகத்தான அறிவாளன்" Realy brilliant ceylonese' by VINE (F. R. S), 6Tsplib folb பெற்றார்.

Page 78
148
கலாநிதி (Ph. D.) எனப்படும் உயர் பட்டத்துக்கான ஆய் 666.T., " " application of Degital Electronic Computers to). Geophysical Data Interpretation' 67g), b & assi) 560 pigs lish நெறியை மேற்கொண்டு வெற்றிகண்டனர். ஆய்வு செய்து நிறுவிய மேற்படி விடயம், மிகவும் உயர்தரம் வாய்ந்த தெனச் சிபாரிசு செய்ததுடன், அதனை விஞ்ஞான சஞ்சிகையான, மான்செஸ்ரர் காடியன் சஞ்சிகைக்கு அளித்த நேருரையாடலி (பேட்டி)லேயே, கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த * வைன்' என்பார், டொக்ரர் - கந்தையா - குணரத்தினத்துக்கு உயர்வான ‘மேற்காட்டிய வாசகத்தை" அடைமொழியாகக் கூறி 6.
சர்வ நாடளாவிய வாசாலகர், விற்பன்னர்கள், ஆய்வு மேதை. களை நெறிப்படுத்தியும், கூடி வாழ்ந்தும் கண்டுணர்ந்த கேம் பிறிஜ் மேதாவியின் வாக்கு, என்றும் பொய்த்ததில்லை. இவரின் ஆய்வு முடிவு நிரூபிக்கப்பட்டதன் பேறாக, 1963 இல் லண்டன் சர்வகலா சாலை Ph-D பட்டமும், இம்பீரியல் கல்லூரி C. I.C. எனும் உயர்பட்டமும் கொடுத்துக் கெளரவித்துள்ளன. Ph-D ஆய்வு மகத்தான முடிபு. Very excellent எனும் சிபாரிசோடு வெளியிடப்பட்டது.
அவை கலாநிதி குணரத்தினத்தின் அனுமதி பெற்று. அமெரிக்காவின் சிக்காகோ நகரத்து மத்திய ஆய்வு நூலகத் 560T Tsi) (Central Research Library) 9 TJ fli s'il 'G6frg. 'Bruckshaw Kunaratnam' Characteristic Curves 6Tgib Ldgilis துடன் பிரசுரிக்கப்பட்ட மேற்படி கண்டுபிடிப்பு, இன்றுவரை அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும், புவிப் பெளதிக ஆய்வுப் படிப்பகங்களிலும் பின்பற்றப்பட்டு வருவது, எமது சமூகத்துக்கே மாண்பு தருவதாகும்.
பேராசிரியர் எனப் பார்க்கும்போது சி. வை. தாவுக்கு தொல் காப்பியம் போல வீரசோழியம் போல நீதி நெறி விளக்கம் போல, (5600TD$560Tig5 ig Bruck shaw Kunaratnam Chareristic: Curves-எனலாம். முந்தியது, தமிழறிந்த மக்கட்கே தீபம். பிந்தியதோ, முடிபு நிறுவியோரின் அனுமதியோடு பிரசுரிக்கப் பட்டு, அகில உலகப் பெரும் பல்கலைக் கழகந்தோறும் ஏற்கப், பட்டு ஆராயப்படுகிறது.
எனவே, உலகுள்ளளவும் கலாநிதி குணரத்தினத்தின் பெயர்ல் நிலைத்து நிற்கும்.

149
எமது ஊரின் மேன்மக்களாய் வாழ்ந்துகொண்டிருக்கும் சிலரின் வரலாறுகள்
ஏழாலயலுரில் இற்றைவரை வாழ்ந்து கடவுட் பணியுடன் கல்விப் பணியும் பெருக்கி, மக்களை உய்யும் வழியிற் செலுத்தும் கைங்கரியத்தை மேற்கொண்டுள்ளோரின் வரலாற்றுச் சுருக்கத் தினை இங்கு தருகின்றேன். அன்னவர் தம், மதம், சமுதாயந் தழுவிய சேவைகளை மட்டிடுவதில் ஆசங்கை ஏதும் நிகழா திருத்தற் பொருட்டு, அவரவர் கைப்படவரைந்த சுய விபரங்களை ஆரம்பத்திலேயே, பெற்றுக் கொண்டேன். எனவே, அவர் தம் வரலாற்று அம்சங்களைச் சுருக்கியோ பெருக்கியோ எழுதுவதைத் தவிர, புனைந்துரை ஏதும் புகுவதற்கில்லை.
இவ் வரிசையில் சமய சமூக அந்தஸ்த்துப் பேதமேதும் புகாத நடுவுநிலையினைக் கடைப்பிடிக்க ஆனவரையில் முயன்றுள்ளேன் உத்தியோக நிமித்தமும், இன்றைய துர்ப்பாக்கியமான, சூழ் நிலையின் நிமித்தமும், அறியாத் தேயங்கள் புக்கிருக்கும் பலரது வரலாறுகளைத் திரட்டித் தரமுடியாமைக்கு வருந்துகிறேன். * கேட்டவாய்க் கேட்டுரைத்தல்' எனுங் தரமற்ற வழக்கத்தினை விரும்பாத எனதுள்ளம், ஆதாரமற்ற எதனையும் இங்கு தருவதை ஒப்பாமையாற்றான், மனவிருப்பின்றியே, அவற்றைத் தவிர்த் துள்ளேன்.
புகழுடன் வாழ்ந்து, மறுமை எய்தியோரின் சரிதையை எழுதுவதுதானே, வழிவந்த மரபு எனச் சில வாசக நேயர்கள் வாதிடக் கூடும். அன்னார் தம் மதமும் முற்றாகத் தள்ளற் பால தன்று. எனினும், பண்டைய நம் புலவர்கள் கடைப்பிடித் தொழுகிய, முற்கூறிய கொள்கையினால், பற்பல தவறுகள் நேர்ந் துள்ளமை, மனங்கொளற்பாலதாகும். எனது சிறிய இந்நூலின் கண்ணே, அவ்வாறாய பல தப்புக்களை, எடுத்துக் காட்டி யுள்ளமை, நோக்கலாம். குறிப்பிட்ட சில ஆவணச் சான்றுகளை, வருடக் கணக்காகத் தேடி அலையும் நிலை, எனது சொந்த அனுபவமாயிற்று. ராவ்பகதூர் தாமோதரனார், ஏழாலபவூரார் என்பதனைத் தெளிந்த ஆவணச் சான்றுடன் நிரூபித்துள்ளமை ான். அன்னவர் ஜீவித்திருந்த காலத்தே, அவர் சரிதம் எழுதப் பட்டிருப்பின், வழுக்களை அவரே செவ்வை செய்திருப்பார். இவை போன்ற சான்று பல இந்நூலில் உள்ளன.
அவ்வாறாய தவறுகளை அடியேனும் செய்து, நீங்காப் பழியை ஏற்க விரும்பாமையினாலேயே, முன் சுட்டிய நடபடிக்கை யைக் கடைப்பிடித்தேன்.

Page 79
150
சமய விவகாரம், ஆழமான சாகரம் போன்றது. நம்போன்ற சாமானியர்கள், அதனோடு எதிர் நீச்சல் போடுதல் அபாயம். அரசியல் சேற்றிலே கால் பதிப்பது அதிணினும் சிக்கல். ஆதலின், அரசியல் அறிஞரின் செய்திகளை முற்றாகவே தவிர்த்து, ஊர் போற்றும் நற்பிரசைகளின் தொண்டுகளை மட்டும், மிகமிகச் சுருக்கமாகத் தந்துள்ளேன்.
சித்தாந்த சிகாமணி சித்தாந்த வித்தகர்
505. (p. 5 ITGOTiggest & b B.Sc., B.A.
எமது ஏழாலை மண்ணிலே பண்டு தொட்டுப் பல்விதமாய சாஸ்திரங்களும் தெரிந்த வல்லவர்கள், காலத்துக்குக் காலம் தோன்றி கடவுட்டொன்றும் சமூகத் தொண்டும் புரிந்து வாழ்ந்தனர்.
எமது சித்தாந்த சிகாமணி ஞானப்பிரகாசம் அவர்கள் தமது பாரியப் பருவமுதல் தமிழினத்தின் வித்தியா போதகராயும், சைவ சித்தாந்த நோக்கராகவும் திகழ்ந்தவர். வித்தியா போதனையின் மட்டுப்படுத்தப்பட்ட காலனல்லை முடிவுற்றதன் பின்பு, முழுநேர கடவுள் தொண்டினைப் புரிந்து வருவது, ஊர்மக்கள், விசேட மாகச் சைவ நன் மக்கள் அனைவரும் செய்த தவப்பயனேயாம்.
1912ஆம் ஆண்டு பிறந்த இவர், உரிய வயதிலே வித்தியாரம் பம் சிவதீட்சை ஆதியன பெற்றுள்ளார். தமது ஆரம்பக் கல்வியை அக்காலத்தே கட்டுவிழானை எனும் வளவில் அமெரிக்க மிஷன் சார்பில் ஆரம்பித்து நடத்திய ஆறுமுகச் சட்டம் பியாரிட மும் பின்னர் மல்லாகம் சைவாங்கில பாடசாலையிலுக் கற்றுள் ளார். அங்கிருந்து தமது தமையனாராகிய திரு சிற்றம் பலம் கற்றுக்கொண்டிருந்த யாழ் மத்திய கல்லூரிக்கு மாற்றப்பட்டுச் சில காலம் கற்பாராயினர். அங்கும் அதிக காலம் நிலைத்து
நின்றிலர்.
சேர் பொன்னம்பலம் இராமநாதனாற் தாபிக்கப்பட்ட பரமேஸ்வரக் கல்லூரியில் படித்து 1927ல் தமது பதினைந்தாவது வயதில் கேம்பிறிஜ் சீனியர் பரீட்சையில் அதிவிசேட சித்தி பெற்ற பின்பு, 1933ல் கணிதம் விஞ்ஞானம் ஆதிய பாடங்களில் B.Sc (London) பட்டம் பெற்றுள்ளார். பின்னர் 1938ல், தமிழ், சமஸ்கிருதம் எனும் பாடங்களுக்குத் தோற்றி பி. ஏ. சிறப்புச் சித்தியும் பெற்றுள்ளார்.

151
வகித்த கல்விச் சேவைகள் :- 1934-1946. விஞ்ஞான ஆசிரியர். பரமேஸ்வரக் கல்லூரி.
1946-1949. அதிபர், பரமேஸ்வராப் பண்டித ஆசிரியர்
ssistgst 66 p
1960-1965. உபஅதிபர். பரமேஸ்வராக் கல்லூரி,
1965-1970. அதிபர் பரமேஸ்வராக் கல்லூரி,
தமது பண்டித ஆசிரியர் கல்லூரிச் சேவைக் காலத்தில் 1950-1960 வரை, பாடநூற் பிரசுர சபையாரின், தமிழ் மலர், சைவநெறி ஆகிய பாடத் தொகுதிகளின் ஆக்கத்திற்குத் தலை வராயிருந்து பேருதவி புரிந்துள்ளார்.
வழமையாகக் கொழும்பிலேயே இயங்கும் மேற்படி பிரசுர சடையின் தமிழ், சைவம் எனும் பாடநூல்கள் அக்காலத்தில் பரமேஸ்வரக் கல்லூரியிலேயே, திரு. ஞானப்பிரகாசத்தின் பார்வையில் எழுதப்பட்டமை விசேடம்.
பரமேஸ்வராக் கல்லூரியின் ஆரம்ப காலத்திருந்தே நம் ஏழாலை புதுக்கிணற்றடி ஊரைச் சார்ந்த திரு. P.W. தம்பிராசா பிரதம வகுப்புக்களின் தலைமை ஆசிரியனாகக் கடமை புரிந்து ஓம்வு பெற்றவர். அவரும், திரு.மு. ஞானப்பிரகாசமும் இராம நாதன் துரைக்கும் அவரின் மறைவின் பின்னர் அவர் மருகரும் அரசாங்கசபை, நாடாளுமன்றம் எனும் அரசசபைகளில் எமது பகுதிக்கால உறுப்பினராயிருந்தவருமான திரு. சுப்பையா நடேசனுக்கும் இருகரங்கள் போல உதவினோராவர். அக்காலத் தொடர்பு இன்றுவரை நீடித்திருப்பது ஆச்சரியமாகும்.
பரமேஸ்வராக் கல்லூரியுடனும், கல்லூரியின் தேவஸ்தானத் தோடும் கொண்ட ஆத்மார்த்த உறவு, ஏழாலையோடு பின்னிப் பிணைந்திருக்கும் பாங்கு நோக்கற் பாலதாகும். பரமேஸ்வர தேவஸ்தான இயக்குநர் சபையின் தலைமை இன்றும் திரு.ஞானப் பிரகாசம் அவர்களிடமே சார்ந்துள்ளமை அதற்கு அத்தாட்சி யாகும்.
எங்களுர்ப் பக்தர்கள் பலவருடங்களாகத் திருக்கேதீஸ்வர பாதயாத்திரையைப் பக்திசிரத்தையுடன் கைக்கொண்டு வந்த, னர். கேதீஸ்வர திருப்பணிச் சபையின் தலைவரான சித்தாந்தச் செம்மல் பாதயாத்திரைவய ஒழுங்குபடுத்தி வழிநடத்து ை முதல்வராவார்.

Page 80
152
இன்றைய சூழ்நிலையிலே, தமது இல்லத்து அயலிலேயுள்ள மடத்துப் பிள்ளையாரின் நியம நிஷ்டைகளையே ஒழுங்குற நிறை வேற்றுவதோடு அமைதி கொண்டு வாழ்ந்து வருகின்றார். அவர் இன்னமும் பல்லாண்டு உடனலத்தோடிருந்து, சைவத்தொண்டு புரிய இறையருளை வேண்டுவோமாக.
சித்தாந்த சாகரம் பண்டித வித்துவான் மு. கங்தையா B. A
ஏழாலையின் மேற்குப் ப்ாகத்துத் தென் திசைக் குறிச்சி என மேலே காட்டியுள்ள “கோட்டைக் காடு" எனும் பகுதியிலே உயர் குடிப்பிறந்தவர் எமது சித்தாந்த பண்டிதர் கந்தையா அவர்கள் மரபு வழியான சிஷ்யத்துவ வாய்ப்புப் பெறமுடியாத போதும், பிரபல அறிஞர்களாகிய பிரம்ம சிறி சி. கணேசையர் தமிழுக்கும், சமஸ்கிருத்ததுக்கு பி. பூணி, பால சுந்தரக்குருக்களும், 6@夺6】 சித்தாந்தத்திற்கு "அருளானந்த சிவம்" எனப்பட்ட வைத்தியர் ஐ. பொன்னையாவும் குறிப்பிடத் தக்க வழிகாட்டிகளும் ஆசான் களும் ஆயினர்.
ஆசிரிய சேவையினை ஏழாலை சைவ சனமார்க்க வித்தியா சாலை, நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் 1938-1972 வரை ஆற்றியுள்ளார். ஓய்வு பெற்றபின் அளவெட்டி சிவதொண்டன் நிலையம், நல்லை. ஆதீனம் போன்றவற்றின் சித்தாந்த வகுப்புக்களை நடத்தி வந்தார். எங்கு சித்தாந்தப் பேருரை நடைபெறினும், அங்கு இவர் பிரசன்னராயிருப்பார்.
இவர் எழுதிய நூல்கள்
குழந்தை வேற் சுவாமிகளும் குருபரம்பரையும் மாவைப் பிள்ளைத்தமிழ்-உரையுடன் மாவைப் பள்ளு சித்தாந்த விளக்கிற் சைவக்கிரியைகள் நாவலர் பிள்ளைத் தமிழ்-உரையுடன் விநாயகர் புராண வசன மொழிபெயர்ப்பு. Sri Durgadevi Temple of Tellipalai (English) திருக் கேதீச்சர மான்மியம் சிவஞான சித்தித் திறவுகோல் பெரிய புராண சூசனம் என்றின்ன இருபத்தொரு நூல்கள்.

53
பெற்ற பரிசில்களும் பாராட்டுக்களும் பலப்பல. அவற்றுள், 1990-1992களில் கலாசார அமைச்சினால் வழங்கப்பட்ட சாஹித்திய மண்டலப் பரிசு, கம்பன் கழகப் பரிசு, சிவத்தமிழ்ச் செல்வி பிறந்ததின நினைவுப் பரிசு என்பவை, குறிப்பிடத் தக்கவை.
நோயியல் கிபுணர் வைத்திய கலாநிதி வை. சி. பத்மநாதன் M. B. B.S (Ceylon) D. Path (Eng.) : 6Typ T60) av மேற்கில் முதன் முதல் நெடுஞ்சாலை ஒவசியராகக் கடமை பார்த்தவர், காலஞ் சென்ற வைத்தியலிங்கம் சிவசம்பு என்பவர். அவரை நம் ஊர் மக்கள் "ஒவசியர் செல்லர்" எனப் பாசத்துடன் அழைப்பர். சைவப்பற்று மேலோங்கிய அவர், தமது முன்னோர்வழி உரிமை யாக வந்த, ஏழாலை புங்கடி புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் பரிபாலனத்தை, தாம் தூரதேசத்தில் இருந்த போதும், தம் சகோதரர் மூலம் குறைவற நிறைவேற்றி வந்த பெருமைக்குரிய அம்பாள் தொண்டர். அன்னாரின் தவப் புதல்வர்களுள் கனிஷ்டரே நம் வைத்திய கலாநிதி ஆவார்.
08.02.1926 இல் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை ஏழாலை யிலும் மல்லாகத்திலும் பயின்ற பின்பு, எச். எஸ். சி. வரை பரமேஸ்வராக் கல்லூரியில் கற்றவர். அங்கு கற்குங் காலத்தே எச். எஸ். சி. பரீட்சையில் சகல பாடங்களினும் முதனிலை பெற்றதோடு, கொழும்புச் சர்வ கலாசாலையின் ஆரம்ப புகுமுகப் பரீட்சைக்கான (1st M. B) தேர்வும் பெற்றுள்ளார். வைத்தியக் கல்லூரிக்கான தேர்வுப் பரீட்சையை, கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் பயின்று வெற்றி பெற்றுள்ளார்.
M.B. B.S. தராதரம் பெற்று வெளியேறினார். பின்பு 1967 இல் உபகாரச் சம்பளம் பெற்று லண்டன் சென்று, D Pah எனும் உயர் தராதரமும் பெற்றுத் திரும்பினார். நம் நாட்டின் பிரதான வைத்திய சாலைகளில் ஆலோசக நிபுணனாக அமர்ந்திருந்து 08.03.87 இல் ஓய்வு பெற்ற பின்பும், வருடாந்த ஒப்பந்த அடிப் படையில், இன்றுவரை நற்றொண்டாற்றிக் கொண்டிருக்கிறார். 19.2-83 காலப்பகுதியில் யாழ்ப்பாண வைத்தியர் சங்கத்தின் தலைவராயிருந்து பெருந்தொண்டு புரிந்தவர். அக்காலத்தே பயன்தரும் வகையில் ஓர் மருந்தகக் கண்காட்சியை நடாத்திப் பெரும்புகழ் பெற்றவர்.
யாழ்ப்பாண வளாகத்து வைத்தியக் கல்லூரி மாணவர், சித்த வைத்தியப் பகுதி மாணவர், தாதியர், உதவி வைத்திய அதிகாரி
10

Page 81
154
கள் (A.M.P.) போன்றோருக்காய விசேட போதனாசிரியனாக வும் கடமை புரிகின்றார்.
திருநெல்வேலியில் வசித்தவரும், கிளிநொச்சி விவசாய மன்னன்’ விருது பெற்றவருமான திரு N.K. நல்லதம்பி தம்பதி யரின் புத்திரியாகிய, சற்குணவதி எனும் மாது சிரோமணியை மணந்து, மூன்று ஆண் மகவுகட்கும், ஒரு பெண் மகவுக்கும்தந்தை யாகி இல்லறம் புரிபவர். எனினும் மக்கள் நால்வரும், காலத்தின் கோலத்தினால், கடல் கடந்து வாழ்வது, அவர்கள் மனத்துக்குப் பாரமேயாகும்.
1. மக்களுள் ஒருவர் ப. உமாகரன் .ேSc (agri) Ph. D (agri) மேற்கிந்திய தீவுச் சர்வகலாசாலையின் விரிவுரை யாளர்.
2. Lu. Sturtas pr6ăT. B. Sc. (Eng) M.Sc. (Eng) F/Gr6Lபொறியியலாளர், நியூசிலன்ட்.
3. ப. தயாகரன், பொறியியல் மாணவன். கன்ரபரி சர்வ கலா சாலை , கிறைஸ்ற் சேர்ச்-நியூசிலன்ட்.
4. Dasgir Gargiss L. 96 pg560f-B.A. (Madras) M.A. சமூகவியல் (Sociolozy) (அண்ணாமலை பல்கலைக் கழகம்) நியூசிலன்ட் வாழ் தமிழ் மக்கள் மேன்மை கருதி வெலிங்டன் நகரில் ஓர் தமிழ்ச் சஞ்சிகையை வெளியிட்டு வருகின்றார்.
இத்தனை வைத்திய சேவைகளின் மத்தியிலும், ஏழாலயங் களுள் ஒன்றான புங்கடி புவனேஸ்வரி அம்பாளின் உற்சவ காலத்தில் பூரண பங்கு வகிப்பதோடு, தீர்த்தத் திருவிழாவினைத் தமது உபயமாகவே நடத்திவரும் கிராமப் பற்றும், தெய்வ பக்தி யும் மேலோங்கி நிற்பது பாக்கியமே!
* "வாழு; வாழவிடு' எனும் மேன்மையான வாழ்வமைதி: கொண்ட மனிதநேயத்தை அவரிடம் கண்டு கொண்டேன்.
லைத்திய கலாநிதி சி. ஜெயமனோகரன் M. B. B. S. , இவர், வெளிநாடு சென்று உயர் பட்டம் வாங்குவதில் அக்கறை இல்லாதவராய், நாட்டில் சேவை புரியும் ஏனைய வைத்திய நிபுணர்கள் எவருக்கும் குறைவற்ற வல்லுநராய் விளங்குகின்றமை அறியலாம். முறிவு நோவு சத்திரசிகிச்சை இவ ருக்குக் கைவந்த வல்லமை.

155
ASSA ..
நோயாளர் எவரிடத்தும், ஒருபோதும், எவ்வித பிரதி பலனும் எதிர்பார்க்காமல், "மக்கள் சேவையை மகேஸ்வரன் சேவை"என மதிப்பவர். இக்காரணத்தினாலே, பொது மக்களோடு கூடிப் பழகும் பான்மை அருகியே காணப்படும்.
கடவுள் தொண்டும், தாம் கைக்கொள்ளும் பிணிதீர்க்கும் சேவையுமே மேலெனும் பான்மையர்.
டொக்ரர் கதிர்காமு இராசேந்திரம் R.M.P ; ஏழாலை மக், கள், விசேடமாகப புதுககிணற்றடி எனும் குறிச்சி சார் மக்களும் அவர்தம் பிள்ளைகளும், தோட்டப் பயிர்ச் செய்கையில் கைதேர்ந் தவர்கள், வல்லுநர்கள் என்பதனை நாடே அறியும். எமது இன் றைய சந்ததியாருட் பலர், தமது பள்ளிப் பருவத்திலே, பெற் றோரின் பயிரிடு தொழிலிலே-விசேடமாக பட்டைகொண்டு நீரிறைக்கும் வேலையில்-ஒத்தாசை புரிந்த பின்பே பாடசாலை செல்வர்.
நான்குபேர் இல்லாமல் நீர் இறைக்கவியலாத எங்களுர்த் துலாப்பட்டை இறைப்பில், ஒருவராக உதவியே ஆகவேண்டிய நிலை. நம் இராசேந்திரம் பூக்கோட்டியன் தோட்டத்திலிருந்து நேராக யூனியன் கல்லூரி செல்வர்.
பேராசிரியர் க. குணரத்தினம், இன்றைய யூனியன் கல்லுரரி; அதிபர் திரு. நா. கந்தசாமி போன்ற ஏழாலை மாணவர்கள் ஒருவர்க்கொருவர் குறைவற்ற விஞ்ஞான மாணவர்கள். பாட சாலைப் பரீட்சைகளிலும், பொதுப் பரீட்சைகளிலுங்கூட விசேட தேர்வு பெற்றிருந்தும், அன்றைய சூழ்நிலையில், சரியான வழி நடத்தல் இல்லாமையினால், தமக்கு முதலாவது தடவையாகக் கிடைத்த கற்கை நெறியையே ஏற்றுக் கொண்டு, திருப்திப்பட வேண்டியதாயிற்று.
தம்மோடு கற்றுத்தேறிய ஏனை மாணவர் எவர்க்கும் சம மான பெறுபேறு பெற்றிருந்தும், முதற்கிடைத்த நெறியையே தொடர்ந்தமையால், உரிய உயர்பதவி கிட்டாது போனமை, பேரிழப்பேயாகும்.
ஓய்வு பெற்ற பின்பும், குடும்ப பாரம் பெரிதாக இல்லாத. நிலையிலும், வைத்திய சேவையின் உயர்வினை எண்ணித்தினமும் நோயாளரைச் சந்தித்துச் சிகிச்சையளித்து வருஞ்செயல் புண்ணி யமேயாகும். ஊழெழு, நீர்வேலிக்கரந்தன், உரும்பராயில் தமது இல்லம் என்பன அவரின் வைத்திய நிலையங்கள். ஏழாலை

Page 82
156
யில் தமது நோயுற்ற உறவினர்களைத் தவறாது தரிசிக்கும் நியதி தப்பாத சமூகப்பற்று வியக்கத் தக்கதாகும்.
திரு. இ. பேரின்ப நாயகம் : எமது கிராமத்து உயர்வுக்கு உழைத்தோரும், இன்றுவரை ஒத்தாசை புரிந்துகொண்டே வாழ்வோரும் என்ற வரிசையிலே எண்ணடங்காதோரின் சரிதங் கள் உள்ளன. அன்னவருள் திரு. இ. பேரின்பநாயகம், ஏனை யோருக்கு மிகவும் வேறுபட்டவராக, என் அறிவுக்குத் தோன்று கின்றனர்.
கல்வி என்பது எமது செம்மண்ணில் உதித்தோருக்கு, கூடிப் பிறந்த பிறவிச் சொத்து. அனைவரது உள்ளத்திலும் மூளையிலும் கல்விப்பயிர் நாட்டினால் வளர்ந்து பயன்தரும். நாட்டப்படும் பயிர் வேறுவேறாயினும். பயன் உச்சநிலை பெற்று விளைவதும், பயன் பயப்பதும் காணமுடியும்.
ஆரம்ப வகுப்பிலே அயற் பாடசாலையிற் கற்று, புலமைப் பரிசில் பெற்று, இடைநிலைக் கல்வியை உற்சாகத்தோடு ஆரம் பித்தவர். பள்ளி இறுதி வகுப்பிலே சித்தியடைந்ததும் அரச லிகிதர் சேவையிலே சேர்ந்த இவர், செய்யுந்தொழிலைத் தெய்வ மென மதித்து, பலவாறான உயர் பதவிகளை வகித்தார். இடைக் காலத்தில், அரச திணைக்களங்களில் தமது தாய் மொழிக்கு உரிய இடங்கொடுக்கப்படாமையால் ஏற்பட்ட விரக்தி நிலையில், தமிழ் ஊழியர்கள் தமக்கென "மொழி வழித் தொழிற் சங்கம்’ ஒன்றை அமைத்தபோது, ஏனையோருடன் கைகோர்த்து நின்று தொண்டு புரிந்தவர். யாழ் வீரசிங்கம் மண்டபத்திலே நடைபெற்ற தமிழா ராய்ச்சி மானாட்டிற்கு வந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்களுக்கு, உண்டிகொடுத்து ஒத்தாசை புரிந்த இரு தொண்டருள் ஒருவர். மற்றவர், காந்தளகம் திரு. கே. சச்சி தானந்தம் அவர்கள்.
சைவப் பிரசாரகர் சிவ, சண்முக வடிவேல் : ஏழாலையின் "தென்மேல் பகுதியாகியகோட்டைக்காடு குறிச்சியில்வாழும், அடக் கமே தமது ஒழுக்கமாகக் கொண்ட திரு சண்முக வடிவேல், தம் மாணவக் காலத்திலே "இலங்கையர்கோன்" அவர்களின் நாடகத் தொட்டிலிலே வளர்ந்தவர். பூவோடு சேர்ந்த நாரும் பூவின் மணம் பரப்புவது போல, இலங்கையர்கோன் வியோகமான பின்னர், இவரிடத்து உள்ளே இருந்த தமிழ் மணம் வெளிப்பட லாயிற்று.

57
சமூக சேவையிலே நாட்டங்கொண்டு, சில நாடகங்கள், கதைகளை எழுதியதோடு, தாமே பங்கேற்று நடித்துள்ளார். தாம் வாழும் பகுதியிலே "ஏழாலை முத்தமிழ் மன்றம்’ எனப் பெயரிய கலை, கலாசாரப் பண்பாட்டு அமைப்பை, ஏனை வாலி பரின் அனுசரணையோடு ஆரம்பித்து நற்சேவை புரிந்தவர். எனினும் சைவத் தொண்டே தம் வாழ்வின் இலட்சிய மாகக் கொண்டு பிற கருமங்கள் அனைத்தையும் விடுத்து, காவி பூண்டு உருத்திராக்க மணிந்து, துறவிபோலவே ஆகிவிட்டமை வியப்பாகும்.
சமீபகாலத்தில், எனது புத்தக வெளியீடு குறித்து உரை யாடும் நோக்கில் அவரில்லஞ் சென்றேன். தாம் ஒரு மான் தோலின்மீது அமர்ந்து, என்னை புதிதாக முடைந்த ஒரு "தடுக் கிலே இருக்குமாறு சைகை செய்ததோடு "ஒரு மூரல் கும்பிடு வரவேற்பும் செய்தனர். (*தடுக்கு’ எனும் சிறுபாய் ஏழாலையாரின் கைவந்த தொழிற்றிறனின் சின்னம்) பண்டு தொட்டு நம் ஊர்மக்கள், மரபழிய விடாது வழங்கி வருவது. திரு. சண்முக வடிவேல் தடுக்கு இழைக்கும் நுட்பமும் தெரிந்தவர்.
ஏழாலயங்களிலே கந்தபுராண பயன் சொல்வதும், கந்த புராண சொற்பொழிவும் இவரது பிரதான கைங்கரியங்கள். எமது பாடசாலைகளிலே வாணிவிழா என்றால், அவரின் சேவை, சங்கிலித் தொடராய் நடைபெறும். தமது தாயாரின் அநுசரணை யோடு நைட்டிகப் பிரமச்சாரியம் பூண்டுள்ளமை பெரும்பேறே யாகும். சத்சங்கமே அவர் வாழ்வு.
வைத்திய கலாநிதிகள்
இலங்கை முழுவதிலும் சனத் தொகையில் முன்னணிவகிப்பது ஏழாலை. சனத் தொகைக்கு ஏற்ப, குறைவறக் கிடைக்கக் கூடியவற்றுள் வைத்திய வசதிகளும் அடங்கும்.
அனாதி காலத்தில், புகழ்பெற்ற சில உள்ளூர் வைத்தியர்கள் எமதுாரில் வாழ்ந்து, மக்கட் சேவை புரிந்துள்ளனர். அன்னவருள் பிரசித்தி பெற்றவர் ஐயம்பிள்ளை என்பவர். அவரிடத்தில் சில அரிய வைத்திய வாகடங்கள் இருந்தன. வைத்தியர் ஐயம்பிள்ளை யின் நான்கு புதல்வருள் மூவர், தந்தையிடமிருந்து இயல்பாகவே தெரிந்து கொண்ட முறைகளைக் கையாண்டு, பிணியகற்றும் செயலைத் தொடர்ந்து ஆற்றினர். அவருள் மூத்தவர் ஐ. பொன் னையா. அடுத்தவர், ஐ. நாகலிங்கம். இளையவர் ஐ. பேரம் பலம். அனைவரும் தமது சொந்தக் குறிச்சியர்கிய ஏழாலை கிழக்கி லேயே வசித்து வந்தனர்.

Page 83
158
இந்நூற்றாண்டின் முதல் இரு தசாப்தங்களுள் பரிகாரியார் பொன்னையாவும், பரிகாரி அப்பு எனப் பின்னாளில் பிரசித்தி பெற்றவரான ஐ. பேரம்பலமும் ஏழாலையின் மேற்குப் பகுதியில் மணம் முடித்ததன் மூலம், அப்பகுதியிலேயே நிரந் தர சேவையில் ஈடுபடுவராயினர். நாகலிங்கப் பரிகாரியார் மட்டும் தந்தையின் தானத்திலிருந்து, அப்பகுதி மக்களின் நோய் தீர்த்து வந்தனர்.
கிராமத்து ஏனைக் குறிச்சிகளிலும், சிற்சில வைத்தியர்கள் அவரவர்க்குக் கைவந்த நோய்களுக்குப் பிரசித்தி பெற்றிருந்த னர். அவர்களுள், குப்பிழான் குறிச்சியில் வசித்தவரான மன நோய் வைத்தியரைக் குறிப்பிடலாம். பிராமணரான அவரை அனைவரும் தடியையர்' எனவே அழைப்பர். அவரின் இயற் பெயர் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை.
வைத்தியர் ஐ. பொன்னையா : இவர் மணமுடித்த பகுதியில் அக்காலத்து வேறு வைத்தியர் இல்லாமையால் தந்தையின் மரபுத் தொழிலைச் செய்து வந்தார். கூடவே, பழைய வைத்திய ஏடு களை ஆராய்வதிலும் ஈடுபடலாயினர். ஏடுகளிற் தாம் கண்ட புதிய வாகடத்தினைத் தொகுத்து அச்சிடும் ஆவல் தூண்ட, **திருஞானசம்பந்தர் அச்சகம்' எனும் சிறிய அச்சுக் கூடத்தை தமது இல்லத்து அயலிலே ஆரம்பித்தார்.
ஆரியச் சக்கரவர்த்தி பரராச சேகரின் வைத்திய நூலினை முதன் முதல் அச்சுவாகன மேற்றி சுதேச வைத்தியருக்கு அளித்த பெருமைக்குரியவர் இவரே. இவர் மாணிப்பாய் கிறின் வைத்தியக் கல்லூரியில் அக்காலத்து மேனாட்டு வைத்தியங் கற்றமையைப் பலர் அறியார். ஐ. பொன்னையா ஏனை வைத்திய மாணவரோடு சேர்ந்தெடுத்த புகைப்படம், யாழ்கல்லூரி நூலகத்தில் பார்த்த ஒரு நண்பர் ஆச்சரிமாகக் கூறினார். ஏனையோரைப் போன்று இவர் பின் குடுமி வைத்திருந்தார். பின்னாளில், வைத்திய சேவையை முற்றாகவே தமது தம்பியாகிய ஐ. பேரம்பலப் பரிகாரியாரிடம் கையளித்து, தெய்வத் தொண்டினை மேற்கொண்டார். தொடக் கத்தில் வேதாந்தக் கொள்கை உடையவராயிருந்தார். கால கதியில் சடைவரத சுவாமி, சரவணைச்சாமி போன்றோரின் தொடர்பினாலே சித்தாந்தக் கொள்கையைக் கைக்கொள்வாரா யினார். சித்தாந்தியாய பின்னர் "அருளானந்த சிவம்" எனும்
அருள் நாமம (5L-L-Lulull-Frit.
பரிகாரியார் அப்பு : இவர் காலத்தே, ஆங்கில வைத்தியர் கள் யாழ்ப்பாணப் பகுதியிலே கணிசமான தொகையினர் தோன்றி

159
{யமையால், ஆயுர்வேத சித்த வைத்தியத்தை நாடுவோர் தொகை ஓரளவு குறைவு படலாயிற்று. எனினும், பேரம்பலப்பரிகாரியாரின் பலவகை மருத்தெண்ணெயின் மவுசு, ஓங்கியே நின்றது. குழந்தை களுக்குரிய கிரந்தியெண்ணெய் எமது வலிகாமப் பகுதியில் பிரசித் தம். பரிகாரியார் அப்பு எனப்பட்ட வைத்தியர் ஐ. பேரம்பலம் நாடறிந்த நாட்டு வைத்தியர்.
இந்நூற்றாண்டின் முதற் காற்கூற்றின் மத்திய காலத்தில், சுன்னாகத்தில் ஆயுர்வேத மூலிகை விற்பனைக் கடையை நிறுவி வயுள்ளார். இன்றுவரை அக்கடை பிரசித்தியுடன் நடைபெறு கிறது.
அக்கடையையும் அதனோடு இணைந்த மருத்துவ நிலையத் தையும் அவரின் மகன் கீழைத்தேச மருத்துவ கலாநிதி பே, பத்ம நாபன் (செல்வமணி) நிர்வகித்து நடத்தி வருகின்றார்.
பேரம்பலப் பரிகாரியாரின் சிரேட்ட புதல்வனே, யாழ் வளா கத்து விஞ்ஞான பீடாதிபதியாயிருந்து வியோகமான பேராசிரியர் பே. கனகசபாபதி.
டாக்ரர் பி. தம்பர் : உயர் கல்வி பெறும் ஆவலினால், கிறிஸ்து மதம் சார்ந்த சைவ சீலராய இவர், ஏழாலையப் பதியி லிருந்து முதன் முதலாக மேனாட்டு வைத்திய கலாநிதிப் பட்டம் பெற்றவர். தொடுவாய்ப் பகுதியிலே நற்பணியாற்றி, மீண்டு வந்து மாணிப்பாய் கிறின் ஞாபகார்த்த வைத்திய சாலையிற் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
தேவிகோயில் என வழங்கும் ஏழாலை துர்க்காதேவி ஆலய வளவும் திருக்கோவிலும் அவரின் அன்னைவழி உரிமை ஆகும். பாலியப் பராயத்திலே கிறிஸ்தவ மதந்தழுவியபோதினும் கோயில் வளவை மனமுவந்து பராதீனப்படுத்தி வைத்துள்ளார். இவரின் குடும்பம் உத்தியோக நிமித்தமும் மணவினை மூலமும் நாட்டின் பல பாகங்களிலும் பரவி வாழ்கின்றது.
ஆங்கில வைத்தியத்தைப் பொறுத்தவரை, இன்று அரச சேவையில் பலர் (ஆண்களும் பெண்களுமாக) நாடு முழுவதுமுள்ள வைத்திய நிலையங்களிற் சேவை புரிகின்றனர். விரிவஞ்சி அனை வரதும் விபரங்களை இச்சிறு நூலிலே சேர்க்க முடியாது போனமை வருத்தமே. எனினும் ஓய்வு பெற்ற பின்பும் தமது நற்சேவைகளைத் தொடர்ந்தும் ஆற்றும் வைத்திய கலாநிதிகள் சிலரின் விபரத்தைச் கருங்கிய வடிவிலாவது, நோக்குதல் பெருங் கடனாகும்.

Page 84
160
1. அவருள் முதனிலையிற் கொள்ளத் தகுந்தவர், நோயியல் நிபுணத்துவம் பெற்றவரான வை. சி. பத்மநாபன் M. B. B. S. , M. Paths
2. லூதர் குணரத்தினம் : யாழ் வைத்திய சாலையில் பல வருடம் சேவை செய்து ஓய்வு பெற்றவர். பேராசிரியர் வில்லியம் ஜெயசிங்கம் லூதர் அவர்களின் சகோதரன்.
சின்னத்துரை-நரேந்திரன் M.D., M. B. B. S. கொழும்பு பெரியாஸ்பத்திரியின் இதய வைத்திய நிபுணராகப் பணிபுரிபவர்.
4. தேவகிருபை திருக்குமாரன் : கொழும்பு ஆஸ்பத்திரியில் பணிபுரிபவர்.
5. தேவராணி-பிரபாகரன் M. B. B. S. காலஞ்சென்ற பாட சாலை அதிபர் திரு ஐ. நவரத்தினத்தின் மகள். வைத்திய கலாநிதி பிரபாகரனை மணந்தவர்.
6. திருமதி தேவதயா-ரவிமாறன் : முன்னையவரின் சகோ தரி. வேலூர் மிஷன் வைத்திய சாலையில் தொழில்நுட்பத் தேர்வு பெற்று மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்திய சாலையில் சேவை புரிகின்றார்.
7. புவனேகமாகு : யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் பணிபுரிகின்றார்.
8. தேவசேயன்-ஆசீர்வாதம் : ஏழாலை வடக்கின் முதற் போதகராயிருந்து காலஞ் சென்றவரான வண. சி. தே. ஆசீர் வாதம் போதகரின் மூத்த புதல்வர். இணுவில் "மைக்லியோட்" வைத்திய சாலையில் சேவை செய்து, பின்னர் ஆஸ்திரேலியா சென்று நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.
9. யாழ் சர்வகலாசாலையில் நூலகராகக் கடமை புரிந்து ஓய்வு பெற்ற திரு. சி. முருகவேளின் மகள். கொழும்பு சிறுவர் ஆஸ்பத்திரியில் சேவை புரிகின்றார்.
டொக்ரர் சி. சின்னத்துரை R.M.P ; ஏழாலையின் மேற்குப் பகுதியிற் பிறந்த இவர், தமது இடை நிலைக் கல்வியில் சிறந்த சித்தி பெற்றபோதும், அன்றைய சூழ்நிலையில், உதவி வைத் தியர் படிப்பையே மேற்கொள்ள வேண்டியவரானார். தமது சொந் தக் குறிச்சி மக்களுக்கு உதவ மருந்தகம் தொடக்கி சேவை புரி கின்றார்.
ஆயுர்வேத சித்த வைத்தியராக ஏழாலையிலேயே-நாலா திக்கிலும் சேவை செய்வதன் மூலம், விசேடமாகச் சாதாரண

16
மக்களுக்கு அளப்பரிய சேவை செய்து கொண்டிருக்கும் பலரை நாம் அறிவோம். அவர்களுள் வடபகுதியிலும் குப்பிழான் குறிச்சியிலும் பலகாலமாக வைத்திய சேவை புரியும் பொ. சிவஞானசுந்தரம் ஒருவர். இவரின் இல்லம் ஏழாலைச் சந்தியை அண்மித்த நெடுவீதி மருங்கில் உள்ளது. தற்காலிக மாகத் தமது பாரியாரின் சுதுமலை இல்லத்தில் வாசம் செய்த போதிலும், தமது கிராமத்து நோயாளர் நலன் கருதி, தினமும் ஏழெட்டுக் கல்தூரம் மிதிவண்டியிற் பயணஞ் செய்து, ஏழாலைக்கு வந்து சேர்வார். அவரது ஏழாலை இல்லம் இன்றைய நிலையில் நிம்மதி குறைந்த சூழலிலே அமைந்திருப்பதே, அவரின் கஷ்டத் திற்குக் காரணமாகும்.
திருவாட்டி றீற்றா-யோகராசா : இவர் ஏழாலையின் மத்திய பகுதியிலே, ஏழுதலங்களின் வடக்கு வீதி மருங்கில் வசித்து சிகிச்சை அளித்து வரும் பிரபல டாக்டர். கர்ப்பிணிப் பெண் களுக்கும், குழந்தைகளுக்கும் சேவை செய்யும் இவர், அடிப்படைச் சுகாதார போதனைமூலம், சாமானிய தாய்மாருக்கு நல்லுபகாரி யாய் வாழ்கிறார்.
இராசாப் பரிகாரியார் : சுன்னாகத்தில் புகழ்பூத்த பரம் பரையில் உதித்த இராசாப் பரிகாரியார். ஏழாலை கிழக்கில் மணம் முடித்தவர். வீடுகள் தோறும் சென்று, நோயாளரைக் குணப்படுத்தும் சீலர். மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருக் கிறார்.
கோவிந்தசாமி வைத்தியர் : ஏழாலையின் மத்தியிலே, பூத வராயர் கோயில் மருங்கிலே கோவிந்தசாமி வைத்தியர் எனவும் கட்டுவன் பரிகாரியார் எனவும் வழங்கும்ஒருவர் அயலவர்க்கு உட. னடிச் சிகிச்சை அளித்து உதவுகின்றனர். மலையகத்தைப் பிறப் பிடமாகக் கொண்டு ஏழாலையை நிரந்தர வாழ்விடமாக அமைத் துக்கொண்ட இவர் முதன் முதலாகக் கட்டுவன் வீதியிலே தமது சிகிச்சை நிலையத்தை, வைத்திருந்தமையாற்றான் கட்டுவன் பரி காரியார் என இன்றும் அழைக்கப்படுகின்றார்.
விஷ வைத்தியர்கள் : சிவகுரு வீதி எனப்படும் வெள்ளம் பாய்ந்தோடும் வீதி மருங்கில் இந்நூற்றாண்டின் ஆரம்பகாலம் முதல் வேலு, வினாசி, கனகர் எனும் வைத்தியர்கள் வாழ்ந்தனர். இவருள் வேலு எனும் வேலுப்பிள்ளை, பொது வைத்தியத்திலும்? வினாசி என்பவர் பழைய காயங்கள், புண்களுக்கு பூம்சுவாகாம் எனச் சொண்டு திறக்காது மந்திரித்துப் பார்வை பார்த்துக் குண மாக்கும் இயல்பினர். ஏதேதோ பச்சிலைப் பூச்சும் பூகவார்.

Page 85
且62
அடுத்தவர் கனகநாயகம் எனப்பட்ட விஷகடி வைத் தியர். நவாலியிலிருந்து வந்து இங்கு மணமுடித்தவர். காணாக் கடி எனப்படும் ஒர்வகை விஷப்புண், அபாயகரமான பாம்புக்கடி, தேள் கொட்டுதல் போன்றவற்றுக்கு, கைதேர்ந்த வைத்தியர். அவர் இறந்த பின்னர், மகன் வீரசிங்கம் தனது மேசன் தொழி லோடு விஷகடி வைத்தியத்தையும் விசேட சேவையாக நிகழ்த்தி வந்தார். அவரும் சில வருடங்களின் முன் வியோகமாகிவிட, அவரின் மகன் தனது அரச சேவையின் மத்தியிலும் குலவழி தப் பாது, சேவை புரிவது மெச்சுந் தரமாகும்.
ஆயுர் டெர்க்ரர் பேரம்பலம் பத்மநாதன் : சிவகுரு. வீதியும் இலங்கையர் கோன் வீதியும் சேருமிடத்தில், ஆயுள் டொக்ரர் பேரம்பலம் பத்மநாதனின் இல்லம் உளது. தந்தையாரின் வைத்திய நிலையத்தை அவர் பொறுப்பேற்று நடத்துவதுடன், சுன்னாகத்தில் உள்ள மருந்துக் கடையையும், அதனோடமைந்த சிகிச்சை நிலையத்தையும் நடத்தி. அயலூர் மக்களுக்கும் பேருபகாரியாக இருப்பது எமதுரருக்கு மேன்மை யாகும். இவர் கொழும்பு ஆயுர்வேத வைத்தியக் கல்லூரியில் கற்றுத் தேறியவர் - அத்துடன் பரம்பரை வைத்திய முறையும் தெரிந்தவர்.
ஆயுள் டொக்ரர் ச. தணிகாசலம் : ஏழாலையிற் பிறந்து வாழ்பவர்களும், அயலூரிலே சேவை புரிவோருமான சுதேச வைத்தியர்களுள், வைத்திய கலாநிதி சபாரத்தினம் தணிகாசல மும் ஒருவர். நம்மூர்க் குறிச்சிகள் தோறும் தகுதிபெற்ற வைத்தி யர்கள் வசிப்பதனால் இவர் கோண்டாவில் உடுவில் ஆகிய ஊர்களில் சிகிச்சை நிலையங்களை அமைத்து பயனுள்ள சேவை புரிவது, வேறு வைத்தியரில்லாத பகுதிகளில் வாழும் மக்களுக்கு வரப்பிரசாதம்.
ஆயுள் டாக்டர் குணரத்தினம்- விக்னேஸ்வரன் : ஏழாலை யின் மேற்குப் பகுதியில், மகாவித்தியாலயத்தை அடுத்து, சுதேச வைத்தியம் புரிந்து க்ொண்டிருக்கும் இவர், அயலூராகிய மல்லாகத்திலும் பிணிதீர்க்கும் நற்செயல் புரிந்து வருகிறார்.
வைத்தியர் சிற்றம்பலம் : தெற்கு ஏழாலைப் பகுதியில் ஆஸ்த்மா எனப்படும் முட்டு நோய்க்குரிய புகழ்பெற்ற வைத்தியர் சிற்றம்பலம் மக்கள் பேரபிமானத்தைப் பெற்றவர்.
இவ்வாறு, மேல்நாட்டு வைத்தியரும், சுதேச வைத்தியருமாக குறிச்சிகள் தோறும் வாழ்வதனால், புதிது புதிதாகத் தோன்றி,

168
உயிர்களைத் திடீர் திடீரெனப் பறிக்கும் கொடுநோய்களும், தொற்று நோய்களும் எமது ஏழாலையலுரை அண்டுவது மிகக் குறைவு.
டொக்ரர் சின்னத்துரை.நரேந்திரன் எம்.பி. பி.எஸ், எம்.ஆர். சி.பி. , எம்.டி. எஞ்சினியர் சின்னத்துரை அவர்களின் சிரேட்ட புதல்வராகிய இவர், 20-2-1952 ஆம் "வருடத்தில் பிறந்தவர். தந்தை, உத்தியோகத்தின் நிமித்தம் இடமாற்றம் பெற்ற போது, குடும்பமும் கூடவே செல்ல வேண்டிய “நிலையில், தமது கல்வியை, கொழும்பு, கண்டி வதுளை போன்ற பட்டினங்களிலே மேற்கொண்டவர்.
1973-1978 காலப் பகுதியில், கொழும்பு வைத்தியக் கல்லூரியில் படித்து, எம்.பி. பி.எஸ் பரீட்சையில் சித்தி பெற்று, நாட்டின் பலபகுதிகளிலுமுள்ள வைத்திய சாலைகளில், சேவை புரிந்தவர்.
1982 இல் வைத்தியக் கல்லூரியின் எம். டி. சான்று பெற்று, கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியின் பதிவாளராகச் சேவை செய் துள்ளார். 1983இல் உலக சுகாதார தாபனத்தின் உபகார உதவி யோடு, பிரித்தானிய ஃபிறீமன் வைத்திய நிலையத்தில் எம், ஆர். சி. பி. உயர் தேர்ச்சி பெற்று, மீண்டபின் கொழும்பு ஆதார வைத்திய நிலையம், பெரியாஸ்பத்திரிகளில் "இருதயவியல்" நிபுணராகப் பணியாற்றினார்.
தற்போது கொழும்பு பெரியாஸ்பத்திரியின், தலைமை இருதய நோய் நிபுணராகவும், அப்பகுதியின் தலைவராகவும்" புனித கடமை புரிந்து வருகிறார்.
கடைசி விதானை. திரு. மு. க. சிவகுரு : ஏழாலைக் கிராமத்தின் கடைசி விதானையாகப் பணிபுரிந்தவர் திரு. மு. க. சிவகுரு. இவர் களத்தில், அவரின் பதவி பெயர் பொலீஸ் விதானை" என்பது. காவற்றுறையினர்க்கு உரிய கடமைகளை யும் புரியும் சட்ட சம்மதம், அக்காலத்து விதானைமாருக்கும் கொடுக்கப்பட்டிருந்தமையால், அவ்வாறு அழைக்கப்பட்டனர்.
வடக்கேழாலையிலே, பரம்பரைக் கமக்காரர் வழியிலே உதித்து, ஆங்கிலக் கல்வியைக் கற்று, "கேம்பிறிஜ் யூனியர்’ எனும் லண்டன் பரீட்சையில் உயர்தரத்தில் சித்தி பெற்றவர். எனினும், உத்தியோகத்தை நாடாது, பெற்றோர் வழியில் வந்த பரந்த தோட்டத்திலே பயிரிட்டு வாழ்ந்தவர்.

Page 86
164
2வது உலகப்போர் நடைபெற்ற காலத்தில், ஊர் மக்களின் தூண்டுதலினால், அப்போது நடைபெற்ற விதானைத் தேர்வுக்கு, மனுச்செய்து, தேர்வும் பெற்றார். ஆங்கில ஆட்சிக்காலத்தில், அப்பதவி, கல்வியறிவு இல்லாவிடினும், பரம்பரை உரிமைபோல’ வழங்கப்பட்டு வந்தது. திரு.மு.க. சிவகுரு, அந்நியதியை உடைத்து விதானைத் தலைப்பாகை சூடிய பெருமைக்கு உரியவர்.
உணவுப் பொருள் முதலாய பாவனைப் பொருள்களின் இறக்குமதி அறவே குறைந்திருந்த அக்காலத்தில், அரசாங்கம் பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. அரச திட்டத்துக்கு அதுசரணையாகச் செயற்பட்டு, பஞ்சம் புகாதவாறு தக்க நட படிக்கைகளை மேற்கொண்ட செயல் வீரனாயிருந்தவர்.
பழைய மயிலங்காடு குறிச்சியில் மணமுடித்து இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு பெண் பிள்ளைக்கும் தந்தையானார். ஆண் களுள் சிரேட்டர், வைத்திய கலாநிதி சி. ஜெயமனோகரன்.
காசிவாசி செந்திநாத ஐயர் : சென்ற 19-ஆம் நூற்றாண் டில், புத்தம் புதிய கல்விமுறை ஈழத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட காலத்திலே, அதன் பயனால் உயர்வு பெற்று, நந்தமிழ் இனத்தின் லெளகீக, ஆத்மீக மேம்பாட் டுக்கெனத் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்கள் பலராவர். இப்பலருள்ளும் சைவம் காக்கவும், வேதாந்த சித்தாந் தம் வளர்க்கவும் என முற்பட்ட மூவருள் ஏழாலையில் உதித்த வர்கள் இருவர். ஒருவர், சி. டபிள்யூ. தாமோதரனார். அடுத்த வர், பிரம்மசிறி செந்திநாதையர்.
ஆறுமுக நாவலர் கல்வித் தொண்டும், அவர் பேர்சிவல் பாதிரி யாரிடம் கற்ற ஆங்கில அறிவும், மரபுவழிக் கல்வியூடே தெளிந்த தமிழ், சமஸ்கிருத அறிவும் ஒன்று கூடியமையினால் பிரகா சித்தது.
சமகாலத்தவரேயான நம் செந்தி நாதையர், காசியிலே சமஸ்கிருத பண்டிதர்களோடு கூடிக்குலாவி, வாழ்ந்தமையினாலே வேதாந்தம் வலிமை பெற்றது. தாம் வாழ்ந்த காலத்திலே, ஈழத் திற்கும் - இந்தியாவிற்கும் இடையிலே இந்து சமய மறுமலர்ச்சிப் பாலம் அமைத்தவர் ஐயரே என்பது பலரது முடிபு.
இவர் ஏழாலையின் வடபால், இன்று குப்பிழான் எனப்படும் பகுதியிலே பிறந்து வளர்ந்தவர். ஏழாலையிலிருந்து கல்வியின் மேற்கொண்ட வாஞ்சையினால், குருமாரை நாடிக் கால்நடை

1.65
யாக யாழ் நகர் வரை செல்லும் வழக்கம் கொண்டிருந்தவர். குருகுலக் கல்வியே அவரை உயர்த்திய பாங்கினாலேயே, காசி, காஞ்சி, முதலாம் தொலைதுாரஞ் சென்று, நுணுகி ஆராயும் பேறு பெற்றனர்.
காசியிலேயே பல காலம் வாழ்ந்தமையினாலே, "காசிவாசி" என, அவர் அவாவுற்றிருந்த தலப் பெயர் கூட்டி வழங்குவதை நோக்கலாம். அவரின் சொந்த ஊரான ஏழாலை என்பது, ஏனை யோர்போன்றுவேண்டுமென்றுதவிர்க்கப்பட்டதன்று. அன்னாளிற் காசிவாசியாய் விழங்கியமையால் அவ்வாறு ஆயிற்று.
செந்தி நாதையர் சரிதம் நீண்டது. எனது இச்சிறு நூலில் அரைகுறையாகவேனும் வெளியிட இயலாமைக்கு வருந்து கிறேன். எனினும் பெறுவதற்கு அரிதான சம்பவங்கள், ஏதும் இன்மையால் மனவமைதி பெறுகின்றேன்.
பண்டிதர் ச. பொன்னுத்துரை : பழைய மயிலங்காடு என இந்நூலிற் சுட்டப்படும் குறிச்சியில் பிறந்தவர். தமிழ் இலக்கண இலக்கியத்தில் மட்டுமன்றி, புவியியல் சரித்திாம் முதலாய கற்கை நெறிகளையும் மிகத் திறமையாக போதிக் கும் ஆற்றல் பெற்ற ஆசிரியர். வட இலங்கைத் தமிழாசிரி யர் சங்கத்தின் செயலாளராகவும்-பின் தலைவராகவும் நற்றொண் டாற்றி ஓய்வு பெற்றபின்னும், மட்டுவில் சாவகச்சேரிப் பகுதிகளில் பண்டித வகுப்புகளை ஆரம்பித்து நல்லறிவுச் சுடரேற்றி வருபவர். ஆசிரியர் சமூகம் இவரின் சேவையின் புனிதத் தன்மையை என்றும் போற்றிப் புகழும்.
வி. ஆர். குலசிங்கம் : ஏழாலை வடக்கிலிருந்து தினமும் நடந்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சென்று படித்து முன்னேறியவர்களின் வரிசையிலே திரு. குலசிங்கமும் அடங்குவார், அங்கு விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங் கியவர். உயர் படிப்புக்குத் தகுதி பெற்ற போதும், குடும்ப நிலை இடந்த ராமையால், அரச எழுதுவினைஞர் சேவை யையே ஏற்றுக் கொண்டு படிப்படியாக உயர் பதவி பெற் றவர். கிறிக்கற் ஆட்டத்தில் விருப்புக் கொண்டபோதிலும் ரென் னிஸ் டேபிள் டென்னிஸ் என்பவையே அவருக்கு உற்சாகமான களாயிருந்தன. பி. டபிள்யூ. டி. தலைமை அலுவலகத்தில் பணி யாற்றிய காலப் பகுதியில், ரேபிள் ரென்னிஸ் போட்டியில் "இலங் கைச் சம்பியன்' எனும் நிலையைத் தமதாக்கிக் கொண்டமையால் சீனா வரை சென்று போட்டியிடும் வாய்ப்பினைப் பெற்ற ஒரே இலங்கையர் இவரேயாம்.

Page 87
1.66
பண்டிதர் செ. இராசையா : குறிச்சி நிர்ணயம் பற்றிய அத்தியாயத்திலே, ஏழாலையலுர் வடக்கெல்லைப் பாதுகாவலர்" போன்று தோட்ட வெளிகளின் ஆரம்பத் தானத்திற் குடியிருந்த பண்டிதர், ஏழாலை மகாவித்தியாலத்திலும், பின்னர் வியோக மாகும் வரை, ஏழாலை சைவமகாஜனாவிலும் தமது சேவையைச திறம்பட ஆற்றியுள்ளார்.
வித்துவான் ச. தங்கவடிவேல் : சைவ மகாஜன வித்தியாலய ஆரம்ப காலத்திலிருந்து பலவருட காலம் சேவை புரிந்தவர். மேற்படி வித்தியாசாலை உதவி நன்கொடை பெறும்வரை, தமது எஸ். எஸ். சி. தராதரத்துடன் இலவச சேவை ஆற்றியவர். இங்கு சேவை செய்த காலத்தே. இந்திய அஞ்சல் கல்வி நிறுவ னத்துடன் தொடர்பு கொண்டு, வித்துவான் பரீட்சையிற்றேறிய வர், இறுதித் தசாப்தத்தில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின்" தமிழாசானாகச் சேவை புரிந்த பெருமைக்குரியவர்.
ロロロ ஏழாலை ஊராட்சி மன்றம்: ஆரியச் சக்கரவர்த்திகளின்நல்லாட்சி
மறைந்து ஐரோப்பிய ஆட்சியாளரின் ஆணைக்குட்பட்ட நம் பிர தேசம், அவரவர் சித்தப்படி உள்ளூர் ஆட்சி முறைகள் வகுக்கப் பட்டிருந்தமை, அறியக் கிடக்கின்றது.
16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்திலே, இலங்கையைக் கைப்பற்றிய அவர்கள், கண்டிய அரசையும் யாழ்ப்பாண மன்ன னையும் வெற்றி கொள்ள இயலாது திண்டாடிய சரித் திரமும் அறிவோம். இறுதியில் 1620இல் எம் மண்ணையும் மன்னனையும் கைப்பற்றிய பின்பு, குறுகிய கால ஆட்சியே புரிந்த னர். தமதுஅதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கு வசதியாக,சிறுச் சிறு பகுதிகளை எல்லையிட்டு வகுத்து, அவற்றுக்குக் "கோவிற் பற்று' எனும் புது நாமமுஞ் சூட்டினர். .ܶܐ
தமது நாட்டவரான யேசு சபை, பிரான்ஸிஸ்கு சபை டொமிக். கன் சபை எனும்மும்மதத்தாராலும் தாபிக்கப்பட்டவையான மாதா கோயில்களை மையமாகக் கொண்டு, நாற்றிசையும் எல்லையிட்டு வகுத்த பகுதியையே கோவிற் பற்றெனப் பெயரிட்டழைத்தனர். எமது வலிகாமப்பகுதி, மல்லாகம் கோவிற்பற்று, உடுவில் கோயிற் பற்று, மைலிட்டிக் கோவிற்பற்று, மானிப்பாய்க் கோவிற்பற்று, வட்டுக்கோட்டைக் கோவிற் பற்று, பண்டத்தரிப்புக்கோயிற்பற்று, தெல்லிப்பழைக் கோயிற்பற்று, அச்சுவேலிக் கோயிற் பற்றென எட்டுப் பற்றுக்களாக வகுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கோயிற் பற்றும், தனித்தனி பிரதானிகளின் கண்காணிப்பின் கீழ் நிர்வகிக் கபபட்டு வந்தது.

167
பின்னர் வந்த ஒல்லாந்த, பிரித்தானிய ஆட்சியாளரும், முன் காட்டிய நெறிதவறாது, பரிபாலனஞ் செய்தனர். இன்றும் எமது பகுதிக்காணி உறுதிச் சாதனங்கள், பழைய நியதிப்படியேதான் வரையறை செய்யப்படுகின்றமை அறிவோம். எமது ஏழாலைக் காணிகளின் உறுதிகள், வடமாகாணம் யாழ்ப்பாணம் டிஸ்திறிக், 3ல்லாகம் கோவில் பற்று, ஏழாலை இறை, எழுதாலைவளவு நிலப்பரப்பு இருபத்து நாலும் வீடுவளவும், செய்பயிர் வான் பயிர் களும், எனவே குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளன. அனைத்து உறுதி களும் மேற்காட்டிய வாறே எழுதப்படுகின்றன.
இவ்வாறாக ஏழாலை மல்லாகம் அளவெட்டி, ஈவினை, புன் னாலைக் கட்டுவன் குட்டியப்புலம் எனுங்கிராமங்களை ஒன்" நிணைத்து,மல்லாகத்தை மையமாகக்கொண்டு, ஆங்கில அரசினர் கிராமசபை எனும் பெயர் சூட்டி அழைப்பாராயினர். அனைத்துக் கிராமங்களிலிருந்தும், ஆண்களே கையுயர்த்துவதன் மூலம் தேர்ந்தெடுத்தவரும், வயதில் முதிர்ந்தோருமான பிரமுகர் களைக் கொண்டிருந்தது அச்சபை.
1932 ஆம் வருடத்து டொனமூர் அரசியல் சீர்திருத்த ஏற்: பாடு கைக்கொள்ளப்பட்டதன் பின் சர்வசன வாக்கெடுப்பு மூலம் அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை, கைக்கொள்ளப்படுவ தாயிற்று. எனினும் 1964ஆம் ஆண்டு வரை, ஐந்து கிராமங்களின்" ஆட்சியும், ஒரே ஆட்சிமன்றத்தின் கீழேயே கைக்கொள்ளப்பட்டு' வந்தது. மல்லகமே மத்தியத் தானமாக விளங்கியது.
நிர்வாக வசதி கருதியும், ஏழாலை மக்களின் சலிக்காத பல்” லாண்டுக் கோரிக்கையின் பயனாகவும் ஏழாலை, புன்னாலைக் கடடடுவன், ஈவினைக் கிராமங்கள் ஏழாலை ஊராட்சி மன்றம் எனவும், மல்லாகமும் அளவெட்டியும் மல்லாகம் ஊராட்சி மன்றம் எனவும் தனித்தனியாக வகுக்கப்பட்டன.
முன்னர் மூன்று நான்கு தலைமுறைகளாக, எமது ஊராட்சி ! மன்றம், மல்லாகத்திலிருந்து பிரித்து எடுக்க முடியாத ஸ்திர நிலை யிலிருந்தது. அம்மன்றத் தலைவர்களாக, ஒய்வு பெற்ற உயர் உத்தியோகத்தரும், சட்டத்தரணிகளும், ஏனைஉயர்நிலையிலிருந் தோருமே விளங்கினர். 1950களில் இந்நிலை திடீரென மாறுவ தாயிற்று. ஏழாலையைச் சார்ந்த திரு. கதிர்காமு சிவகுரு எனும் ஒர் கடைக்காரர், யாரும் எதிர்பார்க்காத வகையாக மல்லாகம் மன்றின் தலைவரானார். அவர் எஸ். எஸ். சி சித்தியடைந்தபின் தம் சுயமான வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தவர். ஏழாலையலுரின் அநேக அங்கத்தவர்களும், ஈவினை புன்னலைக் கட்டுவன்"

Page 88
168
சார்ந்த பலரும் அவரை ஆதரித்து வாக்களித்தமை, ஏனை யோரைச் சிந்திக்க வைத்தது, சபையின் பெரும்பான்மை அங்கத் துவமும் ஏழாலைக்கே இருந்தமையால், இனி ஒருபோதும் தலைமைப்பதவியைச் சுவீகரிப்பது இயலாதெனக் கண்டு, நாழ் பிரிந்து செல்வதைப் பெரும்பாலோர் ஆதரிக்க வேண்டிய நிர்ப் பந்தம் உணரப்பட்டது. எமது ஊர்ப்பரோபகாரிகளும், கொண்டது விடாப்பற்றுறுதி கொண்டவரான வாலிபர்களும், அந்நிலையை மனதார வரவேற்றனர். எனினும் மறுத்து நின்றோரும் சிலர் இருந்தமை, மறைக்க வேண்டியதன்று.
இப்பற்று நிறையவேயுள்ள நன்மக்கள், கிராம வளர்ச்சிப் படிகள் அனைத்திலுமே, எதிர்த் தாக்கத்தினை உறுதியுடன் வெற்றி கொண்டதன் மூலமே, இன்றைய உயர்நிலைக்குக் கொண்டுவர முடிந்தது எனும் உண்மையை எமது சமகாலப் பிரசைகளுக்கும், எதிர்வரும் சந்ததியாருக்கும் மனந்திறந்து கூறு வைக்க அவாவுகின்றேன். இங்கே தனி ஒருவனின் தற்றுணிவை விட, பிறந்த மண்ணின் வாசியே மேலோங்கி நிற்பது இயல்பு.
இனி, எமது ஏழாலை ஊராட்சி மன்றம், அதற்கெனவோர் தனி இல்லம் இல்லாத வெறுமை நிலையிலே, சில வருடங்கள் கழிந்தன. மல்லாகம் மன்று பழைய கட்டிடத்திலே நடைபெற, எமது மன்று முறைக்கொரு வீடாக மாற்றி மாற்றிக் கூடிய அவல நிலையில், ஏழாலை வடக்கைச் சார்ந்த திரு. க. இராசாரத்தினம் ஆசிரியர், வீதியோரத்தே இருந்த மதிப்புமிக்க தமது சீதனக்காணியை, மனமுவந்து சபைக் கட்டிடம் கட்டுதற்கு உப கரித்த பேருபகாரத்தை-பெருமனதை-ஊருள்ள வரை நினைவு கூரல் வேண்டும் மேற்படி நிலத்தில், ஊரிலே புகழ்பெற்ற புதிய பாதாளவைரவர் ஆலயம் முன்பிருந்தமை குறிப்பிடத் தக்கது. இரட்சணிய சேனை மண்டபத்தின் எதிரில், பாதாள ஞான வைரவர் கோயிலின் கிழக்கு அயலில் உயர்ந்து நிற்கின்றது எமது ஊராட்சி மன்றம்.
அதன் அகத்திலே, இலவச ஆயுர்வேத மருந்தகம் அன்று தொட்டு இயங்கி வருகின்றது. அயலிலே பொதுமக்களின் வசதி கருதி ஓர் நூல்நிலையமும் பெருஞ் செலவில் அமைக்கப்பட்டுளது. நூல்நிலையம் எமது வரியிறுப்போர் சங்கத்துக் கோரிக்கைக் கிணங்க, அக்காலத்து உள்ளூராட்சி ஆணையராயிருந்த திரு. அன்ரன் அல்பிறெட் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பின்னர் அப்பதவி வகித்தவரான எமதுரைச் சேர்ந்த-குப்பிழான் குறிச்சி திரு. ஆ. மகாலிங்கம் அவர்களால் நிறைவேற்றப்பட்டுளது. எனி

1.69
னும் நூல் நிலையம் இன்றுவரை திறக்கவியலாத சூழ்நிலை நிலவுவது குறிப்பிடத்தக்கது.
எமது ஊராட்சி மன்றம், காலஞ் சென்ற ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ் அவர்கள் உள்ளூராட்சி மந்திரியாயிருந்த காலத்தில் 31-1-1970இல் அவரால் திறந்து வைக்கப்பட்டது. இதனைக் குறிக்கும் சலவைக்கற் சான்று பதிக்கப்பட்டுளது. மின்சாரவசதி 15-6-76ல் எமது சபையின் பொறுப்பில் கையளிக் கப்பட்டது.
சபையில் 19 அங்கத்தவர் பிரிவுகள் உள. அவற்றுள் 10 பிரிவு கள் ஏழாலைக் கிராம எல்லைக்குள்ளும், ஏனையவை மறுகிராமங் களுக்கும் உரியவை.
ஏழாலையலுரின் நிர்வாகப் பிரிவுகள் : ஏழு ஆலயங்கள் அனாதி காலந்தொட்டு நிலைபெற்று, காலகதியில் பல ஆலயங் கள் உதித்தமை போன்றதே நம் ஊர் நிர்வாகப் பிரிவுகளுமாகும். ஒரேயொரு கிராமாதிகாரி (விதானை) ஆற்றிவந்த சேவை, மக்களின் பெருக்கத்திற்கு எற்ப, ஏழு கிராம சேவர்கர்கள்பிரிவாகப் பிரிக்கப்பட்டுளது.
ஏழு கன்னியர், ஏழு சமூகம், ஏழு பாடசாலைகள் என, கிரா மத்து அனைத்துப் பிரிவுகளும் ஏழு ஆக இருப்பதும் புதுமை. நிர்வாகப் பிரிவுகள் பின்வருமாறு அமைந்துள்ளன.
1. J/203 ஏழாலை தெற்கு 2. J/204 ஏழாலை கிழக்கு 3. J/205 ஏழாலை வடக்கு 4. J/206 ஏழாலை மத்தி 5. 1207 ஏழாலை மேற்கு 6. J/208 கோட்டைக் காடு 7. J1299 சூராவத்தை. தனித்தனி பிரிவுகளின் பூரண விபரத்தினை, குப்பிழான் வடக்கு கிராம சேவை உத்தியோகத்தராய்க் கடமை புரிபவரான மேற்கேழாலை திரு. செ. ஞானசபேசன் அரும்பாடுபட்டுத் திரட்டித் தந்தார். அதனை உள்ளபடி பிரசுரிப்பதற்குச் சில தொழில் நுட்ப அசெளகரியங்கள் குறுக்கிட்டமையாலும், காலத் துக்குக் காலம் எண்ணிக்கையில் ஏற்ற இறக்கம் ஏற்படும் என்ப தனை உன்னியும் தவிர்த்துள்ளேன். வரைபடம் வேண்டிய விழக் கத்தைத் தரும்.
ஏழாலைய வூரின் போக்குவரவு மார்க்கங்கள் அன்றும் இன்றும். ஆரியச் சக்கரவர்த்திகள் யாழ்ப்பாண ஆட்சியை நடத்திய
1.

Page 89
170
காலத்திலேயே நமது வலிகாமம் பகுதிகளுக்கு, ஓரளவு திருந்திய நடைபாதைகள் மண்ணினாலேனும், அமைக்கப்பட்டிருந்தமையை அறியக் கூடியதாயுளது. அக்காலத்திலே, தமது அரச பிரதிநிதி களையும் அவர்களுக்கு ஒத்தாசை புரிவதற்கு வேண்டிய பரிவாரங் களையும், ஆங்காங்கு நிறுத்தி வைத்திருந்தனர். அப்படிப்பட்ட
வர்கள், பெரும்பாலும் ஆட்சி புரிந்தோரின் இரத்த உறவின சாகவோ, உடன்பிறப்பாளராகவோதான் இருந்தமையும் சரித்திர சான்றுகளாகும். சிலர் சமகாலத்திலே குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்ந்திருந்த பெருங்குடி மக்களுள், மணமுடித்து வாழ்ந்தமையும் அறியக் கிடக்கிறது. மல்லாகம், மாதகல், ஆராலி, புத்தூர்,
கள்ளியங்காடு, முதலாம் ஊர்களிலே அவ்வாறான அரசவம்சங் கள், மணமுடித்தும், ஆணை செலுத்தியும் வந்தமை, யாழ்ப் பாண சரித்திரகார் வாயிலாக அறியக் கிடப்பன.
இவ்வாறு யாழ்ப்பாண நகரிலிருத்து, நாலா திசைகளுக்கும் மண்ணினாலேனும் பாதை அமைத்து, தமது ஆட்சியாளரான முன் கூறியோரின் தானங்களை, இணைக்க வேண்டிய நிலை ஏற் பட்டது. அவ்வாறு, அமைக்கப்பட்ட வீதிகளுள், இரு நீண்டதூர ஒழுங்கைகள், நமது ஏழாலையூரின் மேற்கு, கிழக்குத் திசைகளை எல்லையிட்டு அமைந்துள்ளன. இன்று அவ்விரு வீதிகளும், யாழ்காங்கேசன்துறை வீதி, யாழ்-பலாவி வீதி என, பிரசித்தி பெற்றுக் கேந்திரத் தானமாய்த் திகழ்வதனை உலகறியும், காங் கேசன் துறையில் இலங்கையின் முதலாவதாய சீமெந்துத் தொழிற்சாலையும், பலாலியில் கேந்திரத்தன்மை வாய்ந்த விமான இறங்குதுறையும் உள்ளமை அறிவோம்.
மல்லாகம் சந்தி, யாழ்ப்பாண நகரிலிருந்து 7 மைல் வட திசையிலுளது. சந்தியிருந்து கிழக்கு நோக்கி 150 யார் தூரஞ் சென்று, வட கீழ் திசை திரும்பிச் சென்று, மைலிட்டிவரை நீழும், வீதி, போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்திலிருந்தே பிரசித்தி பெற் றிருக்கிறது. அவ்வீதி, மல்லாகத்திலும் மயிலிட்டியிலும் அமைக் கப்பட்ட, தமது ஆலயங்களை இணைப்பதற்காக அமைக்கப் பட்டது.
தெல்லிப்பழைத் தேவாலயத்தையும் இணைப்பதற்காக, சந் திப்பிலிருந்து கிழக்கு நோக்கி, முன்னரே நாம் குறிச்சி நிர்ணய அதிகாரத்திற் கண்ட கட்டுவான்' மேட்டின் ஊடாக நேரிய ஓர் இணைப்பு வீதியை நிறுவினர். அவ்வீதி முந்திய மைலிட்டி-மல்லாகம் வீதியை ஊடறுத்து, அச்சுவேலியிற் கட்டிய போர்த்துக்கேய தேவாலயத்தையும் இணைப்பதாயிற்று. யாழ்

171.
பலாலி வீதியும், வயாவிளான் சந்திப்பில் மேற்படி வீதியைக் குறுக் கிடுவதாயிற்று.
குறிப்பிட்ட வீதிகள் அனைத்தும், இந்நூற்றாண்டின் ஆரம்பம் வரை, பெரும்பாலும் மண் ஒழுங்கைகள் போலவும், சிற் சில இடங்களிற் கல்பதித்தும், காணப்பட்ட செய்தி, முன்னோர் கூறக் கேட்டவை.
ஏழாலயப்பதியைப் பொறுத்தவரை, ஆதியில் (போர்த்துக் கேயர்) அமைந்த தேவாலய இணைப்பு வீதிகள் நாற்புறத்து எல்லைகளாகவும் அமைந்திருந்தமையாலேயே, அவை பற்றிய வரலாற்றினை நேயர்களுக்கு விபரித்துள்ளேன். பண்டு தொட்டு மல்லாகம் நாற்சந்தியூடாகவே எமதுரர் நெடுவீதி, கிழக்குநோக்கிப் புன்னாலைக் கட்டுவன் வடக்கு வீதிவரை செல்கின்றது. மக்கட் செறிவு மிக்கிருந்த அப்பகுதியூடாக, நேராக வீதி அமைக்கும் எண்ணம் சிறிதுமின்றி, இடைப்பட்ட மனைகளின் வசதியான பக்கத்து எல்லைகளை இணைத்தவாறே நீட்டியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது. மூன்று கல் தொலைவுள்ள அவ்வீதி இன்றும் மிகப்பலவான முடக்குகளைக் கொண்டிருப்பது
566) D.
எங்களூர் மக்கள் அவ்வீதியமைப்பை * நடைமாடு சலம் விட்ட மாதிரி' என அழைப்பர். மிகவும் பொருத்தமும், பகடியும் கொண்ட வார்த்தைகளாக் இன்றுள்ளோரும் கூறுவர். அவ்வீதியின் இரு மருங்கிலும் உள்ள மண்குடிசைகள் அனைத்துமே அசைவற்ற கல் வீடுகளாக இன்று மாறிவிட்ட போதினும், வீதியின் நிலை அவலமே.
முன் விபரித்த ஏழாலை-வடக்குப் புன்னாலைக் கட்டுவன். வீதியினூடாக மல்லாகத்திலிருந்து 4 மைல் தூரத்தே, மகாவித்தி யாலயத்தின் வடதிசையில், தேவி கோயிலின் முன் ஆரம்பித்து நேராக 2 மைல் தூரவீதியொன்று, ஒல்லாந்தரின் காலத்தில் அமைக்கப்பட்டுளது. அன்னவர் தம் நினைவாக அவ்வீதிக்கு, டச்" வீதி எனப்பெயரிட்டுள்ளனர். எம்மூரில் அதுவே நேரிய வீதி யாகும். குடிமனை குறைந்ததான தோட்ட நிலங்களையும், பனந்: தோப்புகளையும் ஊடறுத்துச் செல்வதனால், பிறர் குறுக்கீடு. தலையீடின்றி அமைத்த வீதி என்பது புலனாகிறது.
அடுத்து, பெருவீதியிலிருந்து, கேணியடி எனும் புளியங் கிணற்றடியில் வலந்திரும்பிச் செல்லும் வீதியாகும். பெரு, வீதி போலவே முடக்குகளைக் கொண்டதாகப் புன்னாலைக் கட்டு வன்தெற்குச் சந்தியின் அணிமையில், பலாலி வீதியை அடைவது.

Page 90
172
இவ்வீதியினூடாக, மல்லாகம் நீர் வேலி எனும் பெயர்ப் பலகை யுடன் பஸ் ஒன்று ஓடியது.
கிராமத்தின் உள்ளேயுள்ள குறிச்சிகளினூடே, பல சிறிதும் பெரிதுமான தார்பாச்சிய வீதிகளும், ஒழுங்கைகளும் அமைக்கப் பட்டுள்ளன. அவையனைத்தும் சேவை உள்ளம்படைத்த ஏழாலை இளைஞர்களதும், வழிகாட்டிகளதும், நற்றொண்டின்சின்னங்கள். எடுத்ததற் கெல்லாம் அயலவன் கையைக் கூர்ந்து நோக்கும் அற்பத்தனம், நம் ஊர்மக்களுக்கு வேப்பங்காய்! அதற்குப் போதிய சான்று. கட்டுவன் மல்லாகம் வீதியும், முன்கண்ட டச் வீதியும் ஒன்று கூடுகின்ற சந்திப்பிலிருந்து, ஏழாலை மத்திய சந்தியூடாக, களபாவோடை, பழைய மயிலங்காடு, சூராவத்தை கடந்து, மின்சார நிலையவிதியிற் சங்கமிக்கும், மூன்று மைல் நீளமான வீதியை ‘விவசாய வீதி' என அரசு ஏற்றுக் கொள்ளும்படி தூண்டி யமையும். கல்லும் மண்ணுமாகக் கிடந்த அவ்வீதியை, உயர் தரத்துக்குச் (P. W. D) செப்பனிடச் செய்தமையும், அவ்வக் குறிச்சியில் வசித்த இளைஞர்களின் வல்லமையையும் கிராமப் பற் றையும் ஏனையோர்க்கு எடுத்துக்காட்டுவன. ஒடுங்கிய அவ்வீதி யூடாகச் சிலகாலம் பேருந்து சேவையும் நடைபெற்றது.
எமது சிறுபராயத்தில் மண் ஒழுங்கையாய் இருந்து, காலகதி யில் அம்மண்மேற் கல்பதித்து, அதன் பின்னர் இந்நூற்றாண்டின் மத்திய கூறிலேயே, இன்றுள்ளபடி தார் பாய்ச்சப்பட்டது. இக்காரணத்தினாலே 1955களிலேயே நம் கிராமத்தவர்க்கு இவ் வீதியூடாக "பேருந்து' (Bus) வசதி கிடைக்கப் பெற்றது. யாழ் சென்ற்றல் பஸ் கொம்பனியின் போக்குவரத்து முகாமையாளரா யிருந்த, சட்டத்தரணி த. செல்வத்துரை எனும் ஐயக்கோன் அவர்களுக்கு எமது கிராமம், என்றும் நன்றியாயிருக்கக் கடமைப் பட்டுளது. இயக்குநர் சபை முற்றாக எதிர்த்து நின்ற சந்தர்ப் பத்தில், சட்டத்தைச் சட்டை செய்யாது, வெளிப்படையாகவே எமக்குதவிய பான்மையை, என் வாழ்விலே மறந்து விட முடியாத வனாயிருக்கிறேன். ஏனெனில், எமது நடைமாடு சலம் விட்டதன மானதும், ஒடுங்கியதுமான வீதியினூடாக, மல்லாகம், மருதனார் மடம், மானிப்பாய், சுதுமலை தாவடி ஊடாக யாழ் நகரை அடைந்து, அங்கிருந்து கச்சேரி வரை சென்றுவந்த, புதியதும் சிறியதுமான கொமர் இனப்பேருந்தினை, விசமிகளான வேறோர் கொம்பனியார், தமது பாரிய பஸ்ஸினைக்கொண்டு, வழிமறித்துத் தாக்கிப் புரட்டிவிட்டனர், "ஏழாலை-குப்பிழான்’ எனப் பெயர்ப் பலவகை மாட்டிச் சென்ற எமது சிறிய பஸ் தடம் புரண்டதனாலே ஒருவர் உயிரிழந்தார். ஒரு இளம் பெண் காயமடைந்தனள்,

173'
உயிரிழந்தவர், வறுத்தலை விளானைச் சார்ந்த திரு. பத்தி நாதர் எனும் கிராம விதானையார். காயப்பட்டவர். ஏழாலை” தம்புவத்தையைச் சார்ந்த செல்வி. சரஸ்வதியாவார்.
எங்கள் கோரிக்கையை ஏற்று உதவிய ஐயக்கோன், அதனி மித்தம் பட்ட சட்டரீதியானதும், சண்டித்தனரீதியானதுமான பல இன்னல்களை அறிவேன் ஏன்? எனது சொந்த வாகனங்கூட தீவக பஸ் கொம்பனியாரால், காரை நகர்த் துறையில் வைத்துச் சேதமாக்கப்பட்ட, கதை ஊரறியும். இதனிமித்தம், (ஒரு வாரகால மாக) ஆனைக்கோட்டை முதல் கட்டுடைவரை, பொலீஸ் காவ லோடு அவர்களின் பேருந்து வண்டிகள் ஓடியமையை, மானிப்பாய் மக்கள் அறிவர்.
சில வருடங்களின் பின்னர், இ. போ. ச எனும் அரசு சார் புடைய சபை, அனைத்துச் சாதனங்களையும் தன்னுடைமை ஆக்கியபோது, 'ஏழாலை குப்பிழான் என 770 இலக்கமிட்டு ஒடிய வண்டிகள், ‘குடும்பசிட்டி" எனும் புது நாமம் சூடி, அச்சந்தி வரை சேவை செய்ய ஆரம்பித்தன. இன்று?
உடல் உழைப்பினைச் சலிப்பின்றிச் செய்யும் ஏழாலையலுர்த் தோட்டக்காரர், தமது வருமானப் பொருள்களைச் சந்தைப் படுத்துவதற்கு, சுன்னாகம் சந்தையையே வாய்ப்பாகக் கொண்ட வர்கள். ஏழாலையின் வடபகுதித் தோட்டங்களிலும், குப்பிழான், கிழக்கு ஏழாலை போன்ற தூர இடங்களிலும் பயிரிட்ட காய்கறிப் பண்டங்களை, உரிய வண்டி வாகனங்களோ, திருந்திய வீதிவசதியோதானும் அருகியிருந்த காலத்திலே அவர் கள்பட்ட அல்லல்களை நேரிற் பார்த்துள்ளோம். சாதாரணமாய் சுமப்பதற்கு இயலாத பெரும்பாரத்தை, பெரிய ஒலைக் கடகங் களுள் ஒழுங்குற அடுக்கித் தலைமேற் 'சுமந்தே செல்வார்கள். இலகுவிற் கீழே இறக்கி வைக்கவியலாத அப்பாரத்தை, செல்லும் பாதையோரத்திலே பரோபகாரிகள் அதற்கெனவே கட்டி வைத் திருந்த ஆள் உயரமான சுமை தாங்கியிலே, இறக்கி வைத்துவிட்டு, தொட்டியிலோ கிணற்றிலோ நீரும் பருகி கனைப்பாறி, பின் மீண் டும் சுமந்து செல்வர். அவர்கள் சுமையை இறக்கி வைத்த மேடு, "சுமைதாங்கி' எனும் காரணப்பெயர் கொண்டது.
இவ்வாறாய் உடலை வருத்தி நல்வாழ்வு நடத்தும் பெருங் குடிக் கமக்காரரை, பாதையிலோ அன்றிச் சந்தையிலோ பார்க் கும், வெள்ளை வேட்டிச் சோம்பேறிகள், கண்டுங் காணாதவர் போலப் பாசாங்கு செய்வதும், பல வேளைகளில், அன்னவர் கோலத்தை இழிவுபடுத்தி, வேறு பெயர் சூட்டி அழைப்பதும் உண்டு.

Page 91
174
அவ்வாறு தம் உடலை வருத்தி உழைத்தவர்கள் பல்லாண்டு காலம் திடமாக வாழ்ந்தமையையும், அன்னாரின் பின் சுந்ததி யார், உயர்ந்த பல ஸ்திதியில் வாழ்வதையும் காண்கின்றோம்.
சொக்கலிங்கம் மாஸ்டர் குடும்பம் : ஏழாலையைச் சார்ந்த, பல திறத்தவரான நற்பிரசைகளைப் பற்றிய செய்திகளைத் திரட்டிச் சுருங்கிய வடிவிலே தந்துள்ளேன். அனைத்துக்கும் வித்தியாசமான நோக்கிலே இவரின் குறிப்பினை வகுத்துள்ளமை காணலாம்.
திண்ணைக்கல்வி தானும் ஒழுங்குறப் பயிலும் வாய்ப்புக் கிட்டு தற்கரியதாய் இருந்த தம்புவத்தை, ஏழாலை மேற்குப்பகுதிகளிலே 19 ஆம் நூற்றாண்டின் இறுதிச் தசாப்தத்தில், கட்டுவழானைப் பள்ளியிலே, ஆரம்பித்து தெல்லிப்பழை மிஷன் பாடசாலையிலே இடைநிலைக் கல்வியையும், ஆசிரிய பயிற்சியையும் பெற்ற அதிர்ஷ்டசாலி, இவர்.
இவர் வாழ்ந்த பகுதியில், எவருமே கற்று முன்னேற்றம் பெறாத போதிலே, சொக்கலிங்கம் ஆசிரியர், பயிற்றப்பட்ட ஆசிரியனாக வெளி வந்தமை, ஊருக்கே எடுத்துக்காட்டாகப் பேசப்பட்டதுண்டு. அன்றைய ஏழாலையலுரின் சமுதாய நிலை பரத்திலே, சமூகங்களுக்கிடையில் நிலவிய பெருந்தன்மையும், மானுட நேயமும் வேறு எங்கும் கண்டு கேட்டு அறியாத் தன்மை கியனவாயிருந்தது.
எனினும், ஆசிரிய சமூகத்துடன், ஒன்றியிருந்து கடமை செய்வது 20 ஆம் நூற்றாண்டின் முதற் காற் கூறிலே, துர்லபம் என்பதனால், தென்னிலங்கையின் தென்கோடியாகிய அம்பாந் தோட்டையிலேயே, தமது நியமனத்தைப் பெற்றுள்ளார். அதுவும் அவரின் குடும்ப உயர்வுக்கு அநுகூலமாயிற்று.
இவரின், இரண்டு ஆண்மக்களுள், அமிர்தலிங்கம் எனும் சிரேட் டர் புவியியல் இளங்கலைமாணி (பி.ஏ) பட்டதாரியாக, கொழும்பு வெஸ்லி கல்லூரியில் ஆசிரியராயிருந்தவர். தற்போது, நிர்வாக அதிகாரியாக, வவுனியாவில் கருமமாற்றுகின்றார். இளைய மகன் சோதிலிங்கம், இளவிஞ்ஞானமாணி (பி.எஸ்ஸி) யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியப் பணி புரிகின்றார்.
பெண் பிள்ளைகள் மூவரும் ஆசிரியைகளாகவே உள்ளனர். கமலாம்பிகை எனும் இரண்டாவது மகள் என்னுடன் சிலவருடம் கடமைபுரிந்தவர். ‘அண்ணா-ராசேந்திரம்' என யாவராலும் அழைக்கப்படும் இளங்கலைமாணியை மணமுடித்தவர். அவர்

175
வவுனியா உயர் நீதி மன்றத்தின் பதிவாளராகக் கடமை புரிகின்
றார். எனது புத்தகத்தின் தோற்றத்துக்கு, உந்து சக்தியாய் இருந்தவருள் பிரதானமானவர்.
இவர்களின் உறவினரான திரு. அப்புலிங்கம் நல்லாசிரியனாய் நாடு தழுவிய சேவை செய்தபின், ஒய்வுபெற்ற பின்பும், வீட்டிலே மாணவர்க்குப் பாடஞ் சொல்லி நிம்மதியாக வாழ்கின்றார்.
திரு. கந்தையா. அரிய நாயகம் (எல்.எல்.பி) சட்டம் பயின்று, தரணியாக வாழ்வது, ஊருக்கு உட்காரமாகும்.
யுகைவண்டிப் பாதை : இலங்கையின் தேயிலை, றப்பர், வாசனைத் திரவியங்கள், பெருவருவாய்தரும் தோட்டப் பயிர்கள் என்பவை, ஆங்கில அரச மானியத்தோடு பயிரிடப்பட்ட தானங் களின், பிரதானத் தன்மை நோக்கி, அவ்வவ்விடங்களைத் தலை நகரோடு இணைக்கு முகத்தால், புகைவண்டிப் பாதைகள் பல நிர்மாணிக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் பிற்கூறிலேயே புகையிரத வீதியமைப்பு ஆரம்பமான போதிலும், எமது வட பகுதிக்கு ஒர் பாதையை அமைப்பது, "சந்திர மண்டலத்துக்குப் பாதை போடுவதற்கு ஒப்பாகும்’ என ஒர் ஆங்கில ஆளுநர் மனந் திறந்து கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் 1902ம் ஆண்டிலே கொழும்பு-காங்கேசன் துறை வீதி அமைக்கப்பட்டு, வெள்ளோட்டமும் நிகழ்ந்துள்ளது. ஆதியில் வடபகுதியின் பிரயாணிகள் வண்டி, காங்கேசன்' துறைக்கும் பளைக்கும் இடையேதான் சேவைக்கு விடப்பட்டது. பளைக்கு அப்பால் 1905 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமாயது. அச் சேவை, அம்பேபுஸ் எனுமிடத்தில் ஒன்று கூடிற்று.
முதன் முதல் யாழ்ப்பாணம் காங்கேசன் துறைப் புகைவண்டிப் பாதையில், நீராவியால் இயங்கும் ரதம் ஓடியபோது, நிகழ்ந்த தாக எமது வயோதிபர்கள் கூறக்கேட்ட விநோத சம்பவத்தை, உங்களோடு சேர்ந்து ரசிக்க ஆவலாயுள்ளேன். அஃதாதது:-
புகையிரதப் பாதை, ஏழாலை மக்களின் மேற்கெல்லை யோரத்துச் செழிப்பான தோட்ட நிலங்களை, ஊடறுத்துச் செல்லும். அன்று மதியம் வண்டியொன்று அப்பாதையூடாக, வெள்ளோட்டம் நடத்தியுளது. நீராவி உள்ளெரி எந்திரத்தின் சத்தமும், சில்லுவில்லுகளின் காதடைக்கும் பெருஞ்சத்தமும், முன் கேட்டறியாதவையாதலால், தொட்டிலிற் கட்டிய மாடுகளும் மேயக்கட்டிய பசுக்களும் கிலிகொண்டு அறுத்துக் கொண்டோடி விட, புகைவண்டியிலிருந்த ஊதலும் (Horn) ஊஃ ஊஉஃ எனப்

Page 92
76
பெருஞ்சத்தம் எழுப்பியுளது. புதுவித ஊழைச் சத்தங்கேட்டிருந்த எட்ட வசித்த கமக்காரர், வாளியுந் தண்ணீருமாக விரைந்து வந்து பார்த்தபோது, மாடு கன்றுகள் அறுத்தோடிவிட்ட ‘அசுகை' தெரிந்து திகைத்தனர். தூரத்தே ‘சக்குப்புக்கு சக்குப்புக்கு” எனும் ஒலி காற்றுடன் கரைவதனையும் கேட்டு, துள்ளி ஆரவாரித் தனராம். அந்நிகழ்வு, கம்பன் பாடிய வோர் பாடலை எப்பொழு தும் நினைவுக்குக் கொண்டு வருவதுண்டு. கம்பனை வளர்த்த சடையப்ப வள்ளலின் ஊர்ச்சிறப்பையும் செழிப்பையும் கூறுவது அப்பாடல்.
சடையப்பனூரிலே நன்றாக உண்டு, வயிறு பெருத்த எருமைகள் ஏராளம். பாலுந்தேனும் மற்றெவையும் குன்றாத நிறைவு கொண்டது. எருமைகளின் கன்றுகளை, வீட்டுத் தொழு வத்திலே தங்கவைப்பதும், தாய்ப் பசுவை நிறைந்த புல் நிலத் திலே, மேயவிடுவதும் வழமை. மதியந்திரும்பிய வேளைகளில், வயிறாரப் புல்மேய்ந்த அவை, தாகந்திர நீர் அருந்துவதற்காக, அயலிலுள்ள குளத்தினுள்ளே எட்டிய தூரஞ் செல்லும். எருமைக் கும் தண்ணிருக்கும் உள்ள பொருத்தமும் உவப்பும் அனைவரும்: அறிந்தவைதானே.
எருமை குளத்து நீரைக் கலக்கிச் சேற்றையுங் குழப்பிச் செல்ல, அடியிலேயிருந்த வரால் மீன்கள். அவ்வரவங்கேட்டுத் துள்ளித் தெறிக்கலாயின. தெறித்தெழுந்த வரால்கள் எருமையின் பால் நிறைந்த மடியிலேயும் முட்டுவனவாயிற்று. அச்சந்தர்ப்பம் எருமைப் பசுவுக்கு அதன் கன்றினை நினைவூட்டிற்று. குளத். தினின்றும் திடுமென வெளிப்பட்டு, கன்றை நாடி விரைந்தது. நடந்த வழிதோறும் பால்சுரந்து, பூமியை நனைத்தது என்பது.
மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று வீட்டளவும் பால்'சொரியும் வெண்ணையே-நாட்டில் அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும் உடையான் சடையப்பனூர்.
மோடு+எருமை: வயிறு பருத்த எருமை

177
ஏழாலைத் தபாலகங்கள் : ஆதி மு த ல் இலங்கையிலுள்ள கிராமங்கள் அனைத்துள்ளும் விஸ்தீரணத்தாலும், அதே போன்று மக்கட் தொகையாலும் முன்னணியிலே திகழும் நம் ஊரில், மக்கள் தொடர்பு சாதனங்கள், அருகியே காணப்பட்டன. பிரதானமாகத் தபால் தந்தி தொலைபேசித் தொடர்புகள், தெற்கு எல்லைக் கிராமமாகிய சுன்னாகம் தபாலகத்தின் ஊடாகவே பலகாலம் நடைபெற்று வந்தது. 1902-ஆம் வருடம் வடபகுதிக்கான புகை வண்டிப்பாதை திறக்கப்பட்டு, 1905-ஆம் வருடத்திலேயே நிர்வாகத் தலைநகரான கொழும்புடன் இணைக்கப்பட்டது.
அதற்கு முந்திய காலகட்டத்தில், குதிரைவண்டி போன்ற ஊர்திகள் மூலமே தபால்கள், நம் வடபகுதிக்கு எடுத்து வரப்பட்ட தாயினும், மக்கள் குடாநாட்டுக்கு வெளியே, அதிகரித்தளவு தொடர்பு பட்டிருக்காத நிலை நோக்கற்பாலது. அந்நிலையில் கடிதப் பரிமாற்றமும், மிக மிக அருகியே இருந்தது.
புகையிரதப் பாதை திறக்கப்பட்ட பின்பு வலிகாமப் பகுதியின் பிரதான ஸ்தானமாக, சுன்னாகம் அமைந்தது. சுற்றாடலில் உள்ள பல கிராமங்களுக்கும் பொதுவான மத்திய தானமாகவும், ஏனைக் கிராமங்களின் முக்கிய தபாலகமாகவும் பலகாலமாகச் சுன்னாகம் தபாலகம் சேவை செய்தமையால், எமது கிராமத்துத் தொடர்பு சேவையும், அங்கிருந்தே ஆற்றப்பட்டு வந்தது. சுமார் 3 மைல் தூரத்தே இருந்த மக்கள், மாலைவரை தபாலுக்காகக் காத்திருக்கும் துர்ப்பாக்கிய நிலை, தவிர்க்க முடியாததா யிருந்தது.
இவ்வாறாக 1948-ஆம் ஆண்டுவரை, இந்நியதிக்கமைந். திருந்த சேவை, மக்களின் தேவையின் தன்மை பெருகியபோது, எமக்கெனவோர் தபாலகத்தைத் தோற்றுவித்தல் வேண்டுமெனும் எண்ணத்தை ஊர்ப் பெரியோர் மத்தியில் தோற்றுவித்தது.
சிங்கப்பூரிலே தமது ஆரம்ப இடைநிலைக் கல்வியைப் பூர்த்தி செய்து நாடு திரும்பி, சட்டக்கல்வியை முடித்திருந்தவராகிய திரு. க. கணபதிப்பிள்ளை எனும் துடிப்புமிக்க வாலிபன், இவ்விடயத்தில் எமக்கெல்லாம்முன்னோடியாக, உற்சாகமூட்டினார். அந்நாளிலே காங்கேசன் துறைத் தேர்தற்றொகுதியின் பிரதிநிதியாக விருந்த வரும், சேர் பொன். இராமநாதனின் மருகருமாகிய திரு. சுப் பையா நடேசப்பிள்ளையின் பிரதான தேர்தல் முகவரா யிருந்தவர். அன்றியும் (பரமேஸ்வர) இராமநாதன் நம்பிக்கை நிதியத்தின் ஓர் பிரதான பாதுகாவலனாகவும் இருந்தார். திரு. மு. ஞானப்பிரகாசம் மற்றும் ஒருவர். அன்றைய சூழ் நிலையில், ஏழாலையின் கேந்திரத் தன்மையை நன்றாகவே

Page 93
178
தெரிந்திருந்த திரு சு. நடேசன், தம்மாலியன்ற நியாயமான சேவைகளையும் வசதிகளையும், மக்களுக்கு நல்குவதில் மகிழ்ச்சி கொண்டிருந்தார். ஏழாலைச் சைவ மகாஜன வித்தியாலயத்தின் முகாமை, சிறிமுருகன் வித்தியாலயத் தோற்றம் முதலாய பல நற்பணிகளை நல்கியமையால், நமதுரர் மக்கள் மத்தியில் விசேட நற்கணிப்புப் பெற்றிருந்தார். கணபதி” என அழைக்கப்பட துள்ளுகாலியான புறொக்ரரின் பின்னே, எம்போன்ற இளைஞர் சிலரும் மருதனார்மடம் ராமநாதன் கல்லூரியில், அ ன்  ைற ய இராசாங்க சபை (State Council) அங்கத்தவராயிருந்த திரு. நடேசனிடம் சென்று வேண்டியபோது 'உங்களூரின் மத்தியிலே ஓர் உபதபாலத்தை அமைத்தற்கு உதவுவேன். அதற்கு வேண்டிய வசதியான இடத்திலே, அதற்குரிய ஒரு அறையையேனும் நிர் மாணிக்கும் பொறுப்பு, உங்களைச் சார்ந்தது' என வாக்குறுதி தந்தார். AO
அன்று ஊர் திரும்பிய நாம், அனைத்துக் குறிச்சியிலேயு மிருந்து ஆர்வமுள்ளோரைக் கூட்டி ஆலோசனை கலந்தபின், அச்சபையின் தீர்மானப்படி ஆசிரியர் திரு. செ. வைரவநாதனின் காணியில் உப. தபாலகத்துக்கான கட்டிடத்தை அமைப்பதென இணக்கம் காணப்பட்டது. குறிப்பிட்ட ஆசிரியர் தம் செலவிலேயே கட்டிடத்தை அமைத்து உதவ மனமுவந்தமை மகிழ்ச்சி தந்தது.
1948 பெப்ரவரி 4 ஆந்திகதி, 442 வருடம் அன்னியர் ஆட்சி யிலிருந்த இலங்கை, சுதந்திரம் பெற்ற தினமாகும். சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்விலே, புதிதாக நிர்ணயிக்கப்பட்டதான உடுவில் தொகுதியின், வேட்பாளரான திரு. சு. நடேசபிள்ளை தோல்வி கண்டார். ஆதலினால், முன்பு எம்மக்களுக்கு வாக்களித்தபடி உதவமுடியாத நிலை ஏற்பட்டிருந் தது. எனினும் தம்மாலியன்ற ஒத்தாசை புரிவதாக எமக்கு உறுதி கூறியமையால், எமது முயற்சி தொடர்வதாயிற்று.
புதிதாகத் தேர்ந்தெடுத்து அமைக்கப்பட்ட மந்திரி சபையிலே மன்னார் பாராளுமன்ற அங்கத்தினரான திரு. கா. சிற்றம்பலம் அவர்கள் தபால் தந்திப் பகுதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருந் தார். நாம் எமது தேவையைப்பெறும் முயற்சியாக, உப-தபாலகம் அமைத்துதவுமாறு புதிய அமைச்சருக்கு மனுச்செய்தோம். ஆங்கி லமே அன்றைய தொடர்பு மொழியாக நடைமுறையில் இருந்த மையால், அம்மொழி மூலமே எமது மனுவைத் தயாரித்து அனுப்பி G3at5T ITíb.
ஊர்ப் பெயர் தந்த வினோத முடிவு : எமது "ஏழாலை ஊர் முகரத்தை நடுவெழுத்தாகக்கொண்ட புனிதமான பெயர். ஆங்கில

179
மொழியிலே பலவாறாக எழுதப்படுவதுண்டு. ERLALA, ELALA, *EARLALAI என அவரவர் கைபோன போக்கில் எழுதுவர். எமது உபதபாலக மனுவில் Elalai எனக் குறிப்பிட்டிருந்தமை, கைக்கெட்டியது வாய்க்கெட்டாத அங்கலாய்ப்பு நிலைக்குத் தள்ளிவிட்டது. எமது மனுப்பத்திரத்தினை, திரு. நடேசனின் சிபாரி சோடு அனுப்பியமையால், மிக விரைவிலேயே அம்மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் ஏழாலைக்கு அல்ல. புத்தளம் பகுதியிலுள்ள ஏத்தாலை' எனுங் கிராமத்துக்கே என்பதனை பின்னர் அறிந்து கொண்டோம்! ஒரு போதுமே தமக்கு ஓர் தபாலகம் தேவை எனக் கேட்டிராத “ஏத்தாலை’க் கிராமத்துக்கு * கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுப்பது போலாயிற்று. எமக்குரிய உப-தபாலகம் அவ்வூருக்கு ஆயிற்று
இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே சாதாரண மனிதராக வாழ்ந்த திரு. நடேசனின் முயற்சியால், எமது கோரிக் கையும் விரைவில் நிறைவேற்றப்பட்டது. உப தபாலகம் ஒன்று ஏழாலைக்கும் கிடைத்தது. ஆயினும் எமது கிராம மக்களின் துர்ப் பாக்கியமோ எனுமாறு. முன்பு நிச்சயித்துக் கட்டப்பட்ட கட்டிட மும், பிரதான வீதியின் கேந்தரத் தன்மையும், புறக்கணிக்கப்பட்டு வேறோர் பகுதியில்-முன் குறிப்பிட்டதானத்திலிருந்து அரைமைல் உள்ளே, அதனை நிறுவும்முடிபு மேற்கொள்ளப்பட்டது. அரசியல் ஆதாயம் கருதி எடுக்கப்பட்ட அம்முடிபினை, நடுநின்றுழைத்த நம் இளைஞர், ஊர் நலன் விரும்பிகளால் ஏற்றுக் கொள்ள இயல வில்லை. மனுப்பண்ணியவர்களே திருப்தியுறாதிருக்கும் மன நிலையை உன்னி, உப-தபாலகத் தாபிதம் பின்போடப் பட்டமை, அனைவர்க்கும் வருத்தமே தந்தது. எனினும் எமது சலியாத வேண்டுதலையும், நியாயத் தன்மையையும் புறக்கணிக்க வியலாது, 1953-01-26 இல் முன் கட்டிவைத்த கட்டிடத்திலேயே ஏழாலை உப அஞ்சலகம் தாபிதமாயிற்று. உள்ளூர் மக்களுக் கன்றி, நெடுவீதியூடாகச் செல்லும் அயலூரவர்க்கும், எமது தபாலகம் பெரும் வரப்பிரசாதமாய் அமைந்தமை நோக்கலாம்.
ஆரம்ப காலத்தில் முத்திரை வாங்குவதும், தபால்களைப் பெட்டியிற் சேர்ப்பதுமே அத்தபாலக மூலம் பெற்ற சேவையாக விருந்து, காலகதியில் 16-03-1970ல் தந்தி, தொலை பேசிச் சேவைகளும் விஸ்தரிக்கப்பட்டது. அடுத்து, தபால் விநியோகம் நடைபெறுவதற்கு ஏற்ற நடபடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டன. தொடர்ச்சியான வற்புறுத்தலின் நிமித்தம் 1972-2-14 முதல் விநியோக வசதியும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Page 94
80
பல குறிச்சிகளும், அவற்றுக்கே உரியதான பண்பாடுகளும் கொண்ட ஏழாலையலுரின் நற்பெயருக்கே களங்கம் விளைவிப்பது போன்று, சில பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தமது கடிதங்கள், முன்போலச் சுன்னாகம் தபாலகத்தின் மூலமே விநியோகிக்கப் பட வேண்டுமென வற்புறுத்தி (மறுத்து) நிற்பாராயினர். அவர் களின் வேண்டுதற்குத் தபாற் திணைக்களமும் ஒப்புதல் கொடுத் தது. ஏழாலையூராரின் தபால்கள் அனைத்தும் எமது தபாலகத்தின் மூலம் கையாளப்படின், சுன்னாகம் தபாலகத்தின் பாரம்பரிய உயர்நிலை தாழ்ந்துவிடும் என்பது, சுன்னாகம் தபாலகத்தாரின் கொள்கை. அன்னவர் கொள்கைக்கு நம்மவரும் துணை போயதே வேதனையாகும்.
இன்று, ஏழாலை தெற்கு-சுன்னாகம், ஏழாலை தெற்குஏழாலை, ஏழாலை மேற்கு-ஏழாலை ஏழாலை மேற்கு-சுன்னாகம் என விலாசம் இடப்படுவதும், இச்சிக்கலினாலே சில வேளைகளில் கடிதங்கள் மாறிச் செல்வதும் இயல்பாக நடக்கும் சம்பவங் களாகும்.
இச்சிறு நூலிலே,பற்பல உயர்நிலைகளையும் பண்பாட்டு அம் சங்களையும் தெரிவித்த நான், எமது வாழ்வின் உன்னதமான காலகட்டத்திலே-இல்லங்கள் தோறும் கற்றறிந்த வாலிபர்களை யும் அறிவாளிகளையும் காணும் நாம், தாம்வெட்டிய குழியில் தாமே தவறி விழுந்த கதைபோல ஆனமை நீங்காக் கறையே யாகும். பொதுஜன சேவை, அரசியற் கலப்பினாலே கறைபடு வதே விசனமாகும்.
எனினும் நான் முன்பு வேதனையோடு வெளியிட்ட,பொதுச் சேவையைத் தம் சுயசித்தமே போல நிகழ்த்தி, அயலும் நாடும் நகைக்குமாறு செயலாற்றிய மேலோர், இன்று, ஒன்றில் மறுமை எய்திவிட்டனர். வாழ்ந்திருப்போர் தம் தவறினால் புனித நாமம் கொண்ட நமது ஊருக்கே களங்கம் நேர்ந்த உண்மை நிலையை உணர்ந்தேயிருப்பர். ஊரனைத்தும் முன்போல எம் ஏழாலைத் தபாலகத்து, விநியோக ஒழுங்கினை, மேற்கொள்ளு தற்கு ஆவன செய்தல் வேண்டும் என்பதே நமது பேரவா ஆகும். அன்றேல், ஏழாலை தெற்கிலுள்ள உப தபாலகத்தின் தரத்தினை மேம்படுத்துவதன் மூலம், அந்நிலையத்தினூடாக அப்பகுதி மக்களின் தேவை, சுலபமாக நிறைவேறவேனும் உழைப்பதே சமூக சேவையாகும். இந்நிலை அடுத்த தலைமுறையிலே தானும் நிறைவுறுமாயின் அனைவர்க்கும் ஆத்ம திருப்தி தருமென்பது திண்ணம்.

181
குப்பிழான் உபதபாலகம் : திரு. வி. தர்மலிங்கம், உடுவிற் றொகுதி நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த காலத்தில், குப் பிழான் குறிச்சி மக்களின் தேவையை நிறைவேற்று முகத்தால் ஆங்கும் ஓர் உப - தபாலகம் நிறுவிக் கொடுத்தனர். இன்றைய சூழ்நிலையின் நிமித்தம் அத்தபாலகம் நிறுத்தப்பட்டு, அங்கு கடமை புரிந்த உப - தபாலதிபர், சுன்னாகத்திலேயே சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஏழாலை தெற்கு உப தபாலகம் : இத்தபாலகம், தெற்கேழா லையின் விழிசிட்டிச் சந்தியில் அமைந்துளது. பாராளுமன்ற வேட் பாளராய் நின்ற திரு. குமாரசாமி விநோதன் அவர்களின் முயற்சி துயினால், அக்காலத்துத் தபால் தொலைத் தொடர்பு அமைச்சர் திரு. செல்லையா குமாரசூரியரினால் அங்கீகரிக்கப்பட்டதாகும். அப்பகுதி வாழ் மக்களின் அவசிய தேவைகளைச் சுலபமாகச் செய்வதற்கு வசதியாய் அமைந்துளது.
எமது கிராமத்தின் எவ்வாறாய தேவைகளெனினும், தனி யொரு தாபனத்தினாலே மட்டும் திறம்பட நிர்வகிப்பது இயலா தென்பதை உணர்ந்தமையினாலேயே, தாபாலகங்கள் பலவாய் அமைந்தமை உளங்கொள்ளற்பாலதாகும்.
ஏழாலை வடக்கு ஆலங்கட்டை மாணிக்க விநாயகர் ஆலயம் : ஏழாலையலுரின் மத்திய தானத்திலேயே முதன்முதல் மக்கள் குடிபுக்கிருந்தனர். எனினும் ஆதிக் குடியிருப்பு, மேட்டு நிலமும் கற்றரையுமே ஆகவிருந்தமையால், காலப் போக்கில் மக்கள் தம் வாழ்விடங்களைப் பெருக்கி அகலச் சென்றமையையும் பரக்க நோக்கினோம். அவ்வாறு சென்று எட்டக் குடியேறியோர், முதற்றாபிதமான ஏழு கோயில்களிலேயே வணக்கஞ் செலுத்துவது வசதிக் குறைவாயிருந்தமையால், இல்லங்களை அண்டிய மத்திய தானங்களில், சிறு கோயில்களை அமைத்து வணங்கியமையை யும் தெரிந்து கொண்டோம். அவ்வாறு எழுந்த கோயில்கள் பல வற்றுள் இவ்வாலயமும் ஒன்றாகும்.
இளையான்குடி சார்ந்த கதிர்காமர், கந்த உடையார், உடையாசின்னன் கத்தலைகளைச் சார்ந்த பெருமக்களும் நெடுங் கண்ணிக்குளத்திலிருந்து தொலைதூரம் வரை குடிபெருக்கி வாழ்ந்த காலத்திலே, இக்கோயில் அமைப்புக்கு ஓர் ஆலங்காட்டி னைத் தேர்ந்தெடுத்தனர். ஆலங்காடு தறித்து அகற்றப்பட்டத னால், அப்பகுதி ஆலங்கட்டை என மருவி வழங்குவதாயிற்று.
* புதுக்கிணற்றடி எனப் பொதுப்படுத்திக் கூறப்படும் வட பகுதி மக்களுக்கு மாணிக்கப் பிள்ளையார், வேண்டியபோது

Page 95
182
வேண்டும் வரமருளும் குலதெய்வம். இந்நூலிலே ஏழாலையின் முதற் கிறிஸ்தவன் எனச் சுட்டிக் குறிப்பிட்டுள்ள வேதநாயகச் சட்டம்பியாரும், அவர் முன்னோரும் வழிபட்ட திருத்தலம் இதுவே. என நம் மூதாதையர் வாயிலாக அறிந்துள்ளேன்.
கந்த உடையார் கத்தலை, உடையார் சின்னன் கத்தலை, இளையான்குடி எனும் பெருங்குடி வந்தோரும், அவர்களின் பரிசனர்களும், இக்கோயில் அமைத்த பின்னர், குளத்தடி ஏழு தலங்களுக்கு நாளாந்தம் சென்று வணக்கம் செய்யும் வழக்கத் தினைச் சிறிது சிறிதாகக் குறைத்து, தமது ஆலங்கட்டை விநாய! கரை பக்தி சிரத்தையுடன் வணங்கி வந்தனர்.
சிறு மண் கொட்டிலும், கீற்றுக் கூரையுமாக முதலில் அமைக்கப்பட்ட கோயில் வெகு விரைவில், மூலஸ்தானமும், அதனோடிணைந்த சிறுமண்டபமுமாக, சுண்ணச் சாந்தும் கண்ட கல்லுங்கொண்டு விஸ்தரிக்கப்பட்டது. கூடவே, பூஜை முதலிய கருமங்களை நாளாந்தம் முறைப்படி செய்வதற்கென, அக் காலத்து நற்குடிப் பிராமணராய்த் திகழ்ந்த, ஒழுக்கசீலரை நிய மித்தனர். ஏழாலை' எனும் திரு. நா முத்தையா அவர்களின் நூலிலே, ஏழுதலத்துப் பூசகராயிருந்த செல்லையர் எனும் பிரா மணர், கோயிலுக்குரிய அசையும் சொத்துக்களை விற்றுத் தொலைத்தமையை அறிந்தோம். அவர் பக்தர்களைப் பயமுறுத் திக் காரியஞ் சாதிக்கும் சண்டியர் போலவும் காட்டப்பட்டுள்ளார், அச்செய்தி வெறும் ஊகமல்ல என்பதனை நாமும் அறிந்துள் ளோம். ஆயின் ஆலங்கட்டைப் பிள்ளையாருக்கெனத் தேர்ந் தமைத்த பூஜகர்கள் ஆகம விதியும், மனித நியதியும் தப்பாத ஒழுக்கசீலராய் நம் வாழ்நாளிலேயே விளங்கியமை கண்டுள் ளோம். ஆதி முதல் புரோகிதராக வழிவழிவந்தோரில் இறுதி வாரிசாய்த் திகழ்ந்தவர் சின்னத்தம்பி ஐயரென அழைக்கப்படு பவர். பிரமச்சாரியாகத் தம் வயோதிபத் தாயாருடன் ஊர்மெச்ச வாழ்ந்த அவர், தமது 80க்கு மேற்பட்ட வயதிலே வியோக மானார். 钨
அவருக்குப் பின்னர், இளைஞர்களாகிய இரு சகோதரர் களும், அவர்களின் விதவையான தாயாரும், நித்திய வணக்கத் துக்கெனப் புன்னாலைக்கட்டுவனில் இருந்து வந்து போயினர். இளைஞர்களாகிய அவர்கள் கல்வி கற்றுத் தேறி, மூத்தவர் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் ஆசிரியராய் சேவை புரிந்தவர்.
இவர்களின் வம்சச் சொத்தான, ஊர் மக்களால் உவந்து கொடுக்கப்பட்ட வீடு அழிந்துபோக, நிலம், பொதுச்சேவைக்,

183
கென மிகக் குறைந்த கிராமத்துக்கு விற்கப்பட்டுள்ளது. அந்நிலத் திலேயே, ஏழாலை வடமேற்கு கிராம முன்னேற்றச் சங்கமும், மாதர் முன்னேற்றச் சங்கத்தோடு நெசவு சாலையும், ஏழாலை வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமும் அமைந்துள்ளன. விநாயகர் ஆலயம் காலத்துக்குக் காலம் புதுக்கித் திருத்தி அமைக்கப்பட்டது. இப்போது ஆகமவிதிக்கமைவுற அமைக்கப் பட்டுள்ள நிரந்தரக் கோயில் சட்டத்தரணியாயிருந்தவரும், தமது குறிச்சிக்கு, முன்னேற்றமான பல நற்பணிகளை ஆற்றியவரு மான திரு. க. கணபதிப்பிள்ளையின் நடத்துகையின் துணை யோடு, ஊர்மக்களும் பக்தர்களும் முயன்று அமைத்ததாகும். நாமறிந்தவரை "விநாயகர் ஆலயம்’ கோபுரம், புறமதில், கிணறு போன்ற அனைத்தையும் செய்து முடிப்பித்தவர்கள், நா. குரு நாதர், சி. தம்பிமுத்து, தெய்வர் கந்தையாபோன்றோரும், காந்தி சி. பொன்னையா, தம்பிராசா, செ. சதாசிவம், நடராசா, வ. பொன்னுச்சாமி எனும் ஆசிரியர்கள், கோயிற் தம்பிராசா, செட்டி, தருமமூர்த்தி, சி. கந்தசாமியும் சகோதரரும் வீ. கோபால சிங்கம் முதலியோர். புதிதாகப் புனர் அமைப்புச் செய்து, ஆகம முறைக்கு அமைவுற நிர்மாணிக்கப்பட்ட ஆலயம், உரிமை பெற்ற பிராமணர்களினால் நித்திய நைமித்திய கடமைகளும், விசேட திருவிழாக்களும் சிறப்புந நடத்தப்பட்டு வருகின்றன .
கோயிற் கடமை புரியும் அந்தணர் குடும்பத்தினர், தமக்கு உரிமையான நிலத்தில், சொந்தமனைகள் இரண்டினை அமைத்து, ஏழாலையின் நிரந்தரக் குடிகளாகவே வாழ்வது, பெருமைக்குரிய விடயமாகும். அவர்களின் இல்லத்து வடபால் எல்லையில் ஓர் வைரவர் ஆலயமும் பண்டு தொட்டு நிலை பெற்றுள்ளது.
நான் இவ்வரலாற்றினை எழுதி முடிக்கும் வேளை, அந்தணர் களின் இல்லமும், வைரவர் கோயிலும், அடுத்துள்ள தோட்ட வெளிகளும் ஆளரவமற்றுப் பற்றை மயமாய்க் காட்சியளிப்பது கண்டேன். அந்தணர்களுள் ஆண்மகன் புலம் பெயர்ந்து பிரான்சு நாட்டிலும், ஏனையோர் அயற் கிராமங்களிலும் வாழ்வதனை அறிந்து கொண்டேன். எனினும் ஆலங்காட்டு விநாயகர் ஆலயத்து வணக்க நியதி தப்பாதவாறு, அயலில் வாசஞ்செய்யும் திரு. சி. கந்தசாமி எனும் விநாயகபக்தரின் அநுசரணையோடு மக்கள் வணங்கி வருகின்றனர். ஒய்வு பெற்ற கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்து உத்தியோகத்தரான திரு. கந்தசாமி முக் காலமும் தூப தீபங்காட்டி ஆராதிப்பதில் தவறுவதில்லை. பொது மக்கள் வழமைபோல மண்டபத்தில் அமர்ந்து தம் இஷ்டம்போல் வழிபாடாற்றுவது காணலாம்.

Page 96
14. ஏழாலயம்பதியின் முதன் மகன்
ஏழாலயம்பதியின் முதன் மகன் என்று போற்றப்படுபவர் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை. சான்றோனாக விளங் கிய காரணத்தாலும் பலவகையிலும் பிறந்த ஊருக்கு பெருமை சேர்த்த வகையிலும் அவர் அச்சிறப்புக்கு உரியவராகின்றார்.
பல்கலையும், விஞ்ஞான மெய்ஞானங்களும், பயிலும் வாய்ப்பு 19-ஆம் நூற்றாண்டிலேதான், ஈழத் தமிழ் மக்களுக்குக் கிட்டுவ தாயிற்று. அவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி, உயர்வு பெற்ற நம் பெரியோர் பலர். எனினும், உலகமறிந்த உயர் வாழ்வும், பேரறி வும் பெரும்பயனும் பெற்று வாழ்ந்தோருள், ஆறுமுக நாவலர், செந்தி நாதையர், கிங்க்ஸ் பெரி தாமோதரனார் போன்ற சிலரை உலகுள்ளளவும் மறத்தல் இயலாது. இவர்கள் தமிழுக்கும், தமிழர் சமுதாயத்துக்கும், சைவத்துக்கும் நம் நாட்டில் மட்டுமன்றி, உலகளாவிய ரீதியில், தொண்டு புரிந்தவர்கள். "உலகம் பிரசை கள் எனல் தகும். இம்மூவருள்ளும், தாமோதனாரையும், செந்தி நாதையரையும் ஈன்று, உலகுக்கு அளித்த அன்னைபூமி, என்பத னால், மட்டிலா ஆனந்தம் கொள்பவர்கள், ஏழாலையலுர்ப் பெரு மக்கள்.
கிங்ஸ்பெரி தாமோதனாரின் கதை தமிழினத்தின் சொந்தக் கதை. பலதுறை விற்பன்னராய், தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் அம்மேதை ஆற்றிய அருந்தொண்டினை அனைவரும் போற்றுவ தும், அவருக்கு நினைவுச் கின்னங்கள், நினைவாலயங்கள் தாபிப் பதும் மெச்சத்தகும் செயலாகும். ஆயின், அச்செயல் அவரின் வாழ் வின் உண்மைத்தனத்தை, மூடிமறைப்பனவாகவோ, பூசிமெழுகுந் தன்மையவகவோ, மாறிட இடந்தரலாகாது.
தாமோதரனாரின் கதை, கட்டுக் கதையன்று. கடந்த நூறு வருடத்திற்குமுன் வாழ்ந்து, பெருமனிதரோடு சகவாசங்கொண்டு, தமிழினத்தின் தனிப்பெரு மனிதனாய்த் திகழ்ந்த மேதை. எங்கள் ஏழாலை இல்லத்தின் கூப்பிடு தூரத்திலே பிறந்து தவழ்ந்து,

85
தமது 20 ஆவது வயதுவரை, மாணவப் பருவத்தை ஏழாலையி லேயே கழித்தவர். அவர் மட்டுமன்று, தந்தை தாயாரோடு, தம்பியர் அறுவரும் "சட்டம்பியார் வளவு" என இன்றும் சுட்டிப் பேசப்படும் வளவிலேயே வாழ்ந்தவர்கள்.
ஊரறிந்த இப்பேருண்மை, அவர் மறைந்த சில காலத்துக் குள்ளேயே, அறிஞர்கள், புலவர்கள் எனப்பட்ட சிலராலே, திரித் துரைக்கப்பட்டது. முதல் நூல் செய்த வல்லவரைப் பின்பற்றி, கற்றறிந்த அறிஞரும் பல சந்தர்ப்பங்களில், பிழைபட நிலை நிறுத்தியமையை அறிவோம்.
1950-1960ம் ஆண்டு வரை, "இலங்கைக் கல்வித் திணைக் களத்துப் பாடநூற் பிரசுர சபை" எனப் பெயரிய கற்றோர் சபை இயங்கி வந்தது. அச்சபையின் "தமிழ் மலர்', 'சைவ நெறி" எனும் தொகுதிகள், பரமேஸ்வரக் கல்லூரியில் இயங்கிய மேற் கூறிய சபையின் தனியான ஒரு குழுவினரால் தொகுக்கப்பட்டன: ஏழாலைச் சித்தாந்தச் செம்மல் மு. ஞானப்பிரகாசம் பி.எஸ்ஸி, பி. ஏ அவர்கள், மேற்படி குழுவின் தலைவராகவும், பரமேஸ்வரக் கல்லூரி பண்டித ஆசிரியர் பயிற்சி முதல்வராகவும், இரு கடமை களை, ஒரே நேரத்தில் ஆற்றியிருந்தமையினாலேயே, வழமைக்கு மாறாக யாழ்/பரமேஸ்வராவில் குழு கூடுவதாயிற்று.
அக்குழுவிலே கடமை புரிந்த பண்டிதர்கள், தமக்கு முன்பு தாமோதரனார் சரிதம் எழுதிய பெருமக்கள் கொள்கைகளையும், தப்பான சில செய்திகளையும் ஆய்வுத்தனம் சிறிதும் இன்றி துரதிருஷ்டவசமாக, பிரதி செய்து பிரசுரித்து விட்டனர். அப்பாவி களான மாணவர்கள், அவற்றைப் பலமுறை படித்து, மனப்பாட மாக்கி ஒப்பவித்தமை, அவர்களின் குற்றமன்று. தாமோதரனார் அவதரித்த செம்மண் பூமியிலே பிறந்த பேற்றினை, மேம்பட மதிக்கும் நம்மூரவருள், முதல்வராகிய நம் சைவப் பெரியார் மு. ஞானப்பிரகாசம், குழுத்தலைவராய் இருந்த காலத்தே நிகழ்ந்த தவறினை, அவர் தலையிற் போடுதல் சரியாகத் தோன்றவில்லை. ஒவ்வொருவரும் தமிழிலும் சைவத்திலும் வல்ல பண்டிதர்களாய் இருந்தமையின், அவர்களின் வழிகாட்டியாகவே தலைவர் திகழ்ந்தார் என்பது திடமாகும்.
எவ்வாறாயினும், ஐந்தாம் வகுப்புவரையேனும் கட்டாயக்
கல்வி கற்றிருக்கும் அனைத்து மாணவ மாணவியரும், சி. வை. தாமோதரம் பிள்ளையின் சுருங்கிய கதையைப் படித்துள்ளனர்.
2

Page 97
186
அவரின் ஊரும், பேரும், மதமும் பற்றிய தப்பான கருத்துக்கள், அவர்கள் வெள்ளை உள்ளங்களுட் புகுத்தப் பட்டுள்ளன.
அவ்வாறு கற்று, உயர்நிலை எய்தி, இன்றைய தலைமுறை சார்ந்த பின்னோருக்கு, நல்லறிவு புகட்டிக் கொண்டிருக்கும், அறி வாளிகள் பலருங்கூடத் தாம் கற்றவாறே, கற்பிப்பதையும், புத்தகங்கள், சஞ்சிகைகள், மூலம் வெளியிடுவதனையும், நோக்கக் கூடியதாயுளது. சில நாட்காட்டி”கள் கூட, அன்னவரை அடி யொற்றித் தப்புச் செய்வதனைக் காண்கின்றோம். இவை அனைத்தையும் ஒப்பு நோக்குங்கால், ஏற்படும் சிக்கல் சிலவற்றை அறுத்து, நேர்வழி காட்டும் தூய நோக்கிலேயே, C. W. கிங்ஸ் பெரி எனும் இயற்பெயர் கொண்ட ஏழாலைப் பெரியாரின் சரி தையை நுணுகி ஆராயத் தலைப்பட்டேன்.
தாமோதரனாரின் கதையை ஆராய வேண்டும் எனும் என் ஊமை உணர்வினை என் மனத்தகத்தே தோற்றுவித்த காரணி பற்றி இந்நூலின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளேன்.
1976-ம் வருடத்து நாமகள் விழாவின் இறுதி நாட்களில் ஆரம்பித்த எனது சிற்றறிவுக்கெட்டிய தேடுதல், சுமார் 12 வருட காலம் நீடித்தது. அந்த நீடித்த இடைக்காலத்தில், எமது அன்னைபூமியின் வரலாற்றினையும் அறிந்து, எழுதி வைப்பது, ஏற்புடைத்தென எண்ணியமையால், ஊர்ப் பெருமக்கள், நண்பர் களின் உந்துதலையும் சிரமேற்கொண்டு, அனைத்தையும் திரட்டி எழுதலானேன். எழுதியவற்றைப் "பாதுகாப்பாகப் பூட்டி வைத் தேன்" என்பதே வாஸ்தவம்
கல்விச் சரித்திர காலத்து முதன் மகனாய்த் திகழ்ந்த தாமோ தரனார் மேல், குன்றாத பற்றும், குறையாத மதிப்புக் கொண் டிருக்கும் அறிஞருலகம், என் மதத்தை, (அவர்களுக்குப் புதிதா கவேயிருக்கும் உண்மை ஆவணச் சான்றுகளைத் தானும்) ஏற்றுக் கொள்ளுமா எனும் கேள்வி, என் மனக்கதவை அடைத்து வைத் திருந்தமையும் இதற்கு ஒரு காரணம் எனலாம். ཊ་༣ புடமிட உதவிய மேதைகள் : யாழ் ப் பாண த்திலிருந்து, மாணவ சமுதாயத்தின் அறிவு வளர்ச்சி கருதி வெளிவரும், சஅறிவுக் களஞ்சியம்’ எனும் சஞ்சிகையின் ஒரு பிரதியை அக் காலச் சூழ்நிலையில் கொழும்பில் தங்கியிருந்த என் மகன்களான நித்திலச் செல்வனும், நிமிலதேவாவும் என்னிடம் காட்டினர். எமதுரரிலே கிடைத்தற்கரிய பல பத்திரிகைகளும் சஞ்சிகைகளும், கொழும்பிலே மலிந்து தொங்குகின்ற கடையிலிருந்து, பிரதியை வாங்கி வந்திருந்தனர்.

187
அவர்கள் அவ்வாறு கொண்டு வந்து, அதனுள்ளே தாம் படித்த இராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை (18321901) என மகுடமிடப்பட்ட கதையை (வியாசத்தை) சுட்டிக் காட்டினர். பி. ஏ. சிறப்புத் தேர்ச்சி பெற்ற அறிஞரால் எழுதி உதவப் பெற்ற வியாசம் அது. அதில், "இவர் புத்தூரைக் சார்ந்த சிறுப்பிட்டி எனும் ஊரிலே, வைரவநாதபிள்ளை என்பவ ருக்கும் பெருந்தேவி அம்மையாருக்கும், புதல்வராகப் பிறந்தார்?? அமெரிக்கன் ஆங்கிலக் கல்லூரியிலே எட்டாண்டுகள் கல்வி கற்றபின், சென்னைக்குச் சென்று 'தினவர்த்தமானி' எனும் பத்திரிகைக்கு அதிபராய் அமர்ந்தார்'-எனவிருந்த இரு வாக்கி யங்களும், அவர்களின் இளம் மனதுக்கு இதந்தரவில்லை. *எழுதுங்கப்பா அறிவுக் களஞ்சியத்துக்கு' என வற்புறுத்த வும் தலைப்பட்டனர். நானும் அவர்களின் உரிமைக் கட்டளையை நிறைவேற்றினேன். 'பாம்பின் குட்டி பாம்பு; அதன் குட்டி நட்டுவக்காலி" என்று சும்மாவா சொல்வார்கள் நம் ஏழாலை ህuዘrዙ?
18-12-1993 ஆந் தேதியிட்ட கலைக்களஞ்சியத்தின் ஆசிரியர் திரு. தி. ச. வரதராஜன் அ வ ர் க ஞ க் கு, எனது நினை வில் இருந்தவாறு, ஐந்து பக்கங்கள் கொண்ட தாமோதரனார்” வரலாற்றினையும், கூடவே உண்மை நிலை பொதிந்த கடிதத்} தினையும், அனுப்பி வைத்தேன். 19 ஆவது களஞ்சியத்திலே அவை பிரசுரமாகும் என எதிர்பார்த்திருந்த எனது மக்கள் அதன் இறுதிப் பக்கத்திலே, "வரதர்" எழுதியிருந்த சிறுகுறிப்பை மட்டும் கண்டு சோர்வடைந்திருந்தனர். எனினும், மறு களஞ்சியத் தில் அதன் சுருக்கமேனும் பிரசுரமாகும்; யாழ்ப்பான அறிஞர்" உலகு ஏற்றுக்கொள்ளுமா? என்பதும் தெரிந்துவிடும், என ஆறுதல் கூறி வைத்தேன். m
கெளரவ ஆசிரியராக முதுபெரும் எழுத்தாளர் வரதரையும், இணையாசிரியர் கலாநிதி குணராசா (செங்கை ஆழியான்) துணை ஆசிரியர் புத்தொளியோடு காப்பாளர்களாக திருமதி. ச. அருள் நங்கை பி.ஏ (சிற) திருவாளர்கள் கா. வை. இரத்தின சிங்கம் (கொக்கூர் கிழார்), சு. குமாரசாமி பி. எஸ்.இ மூதறிஞர் க.சி. குலரத்தினம், பேராசிரியர் அ. சண்முகதாஸ், நா. முகநாத பிள்ளை பி.எஸ்ஸி, பேராசிரியர் செ. சிவஞான சுந்தரம் (நந்தி), சி. சரவணபவன் எம். ஏ (சிற்பி) வித்துவான், க. .ெ லிங்கம் எம்.ஏ (சொக்கன்), அநு. வை. நாகராஜன் அ. பஞ்ச லிங்கம் பி. எஸ்ஸி, ச. பாலசுந்தரம் பி.ஏ. (சிறப்பு) வன. Syrsh

Page 98
188
சிஸ் அடிகளார் எம்.ஏ. மருத்துவ கலாநிதி எம். கே. முருகா னந்தன், கோ. சி. வேலாயுதம் பி. எஸ்ஸி. , முதலாய முதுபெரும் பேராசிரியர்கள், நூலாசிரியர்கள், ஆய்வாளர்களையும் கொண்ட களஞ்சிய இயக்குநர் குழு, முற்கூறிய கட்டுரையின் தரமறிந்து, தமது 20 ஆவது இதழிலே இரத்தினச் சுருக்கமாக அதனை வெளி யிட்ட பெருந்தன்மையைப் போற்றக் கடமைப்பட்டுள்ளேன்.
உலகறிந்த எம் தமிழறிஞர்கள் "புடமிட்டுத் துலக்கிய" பெரு மிதத்தினாலே, ஏலவே எழுதி முடித்த ஏழாலைத் தாமோதரனார்" வரலாற்றினை இயன்றவரை சுருக்கியே, இந்நூலிற் தந்துள் ளேன். எனினும் பெறுதற்கரிதானவையும் பண்டைய நூல்கள், ஆவணங்கள், சார்ந்தனவும், வல்லார் வாய்மொழியாக அவ்வப் போது கேட்டுத் தெளிந்தவையுமான ஏதுக்கள் மாற்றமேது மின்றித் தமிழுலகுக்கு வெளிப்படுத்தியுள்ளேன் எனும் ஆத்ம திருப்தி எனக் குண்டு.
ராவ்பகதூர் சி. டபிள்யூ. தாமோதரப்பிள்ளை
தந்தை : இராமநாதி வைரவி புத்தூரைச் சேர்ந்த சிறுப்பிட்டி யைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1808 ஆம் ஆண் டளவிற் பிறந்தவர்.
தாயார் : மயிலர் பெரியை ஏழாலையின் வடபால் 1812 ஆம்
ஆண்டிற் பிறந்தவர்.
பெற்றோர் சமயநிலை : பெற்றோர் பிறப்பாற் சைவர்கள். ஆயினும் தந்தையார் 1825 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி, சண்டிலிப்பாயில் நடைபெற்ற கிறீஸ்தவ சமய எழுப்புதற் கூட்டத்தில், மதமாற்ற முடிவை பகிரங்கமாக அறிக்கையிட்டு, கிறிஸ்தவ மதமாற்றம் பெற்றார். ஞானஸ்நானம் பெற்றபோது, சைரஸ்-வைரவநாதர். firš6řidaluf (Syrus-Vairavanathar Kingsbury) srsor நாம கரணம் பூண்டார். அப்போது இவரின் வயது பதினேழே:
அன்னை பெரியை 1824 ஆம் வருடத்தில் உடுவிலில் தாபிக்கப்பட்டதும், ஆசியாவில் முதன் முதல் தாபிதமான விடுதிப் பெண் பாடசாலை என உயர்வு பெற்றதுமான, ஆங்கில பாடசாலையில், நான்கு வரு டங்கள் கல்வி கற்றவர். அதன் மேலும் இருவருடங்கள்,

189
அங்கேயே தங்கியிருந்து குழந்தை வளர்ப்பு, இல்லப் பராமரிப்பு, சுகாதாரம், தையல் போன்ற வாழ்வோ டியைந்த செய்முறைப் பயிற்சியும் பெற்றவர். 1830 ஆம் வருடத்தில் மேரி-டெயிலன் பெரியை (Mary Daylum) எனும் கிறிஸ்தவ நாமத்தோடு உடுவில் திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்றுள்ளார். அப்போது அவருக்கு வயது 18 ஆயது. 11 வயதிலே பாடசாலையிற் சேர்ந் துள்ளார்.
சைரஸ் வைரவநாதர் கிங்ஸ்பெரி, தமது பிறந்த வூரிலே நடைபெற்ற திண்ணைப் பள்ளிகளில், ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் முதலாம் நீதி நூல்களும், சிற்றிலக்கணம், நிகண்டு முதலாம் இலக்கண நூல்களும் கற்றுணர்ந்தவர். பின்னர் அப் பள்ளிகளில் ஆசிரியனாகவும் சேவை புரிந்துள்ளார். எவ்வித நோக்கங் கொண்டு கிறிஸ்தவராக மாற நினைந்தனரோ? அவர் கிறிஸ்தவரான காலத்திலே 'வட்டுக்கோட்டை செமினரி' எனும் சர்வசாஸ்திர உயர்போதனாபீடம் ஆரம்பித்து, இரண்டு வருடங் கள் கழிந்துவிட்ட போதிலும், அங்கு கல்வி கற்றமைக்கான அறி குறி ஏதும் தென்படவில்லை. தமது குருகுல (மரபுவழி)க் கல்வி யறிவு கொண்டு, ஆரம்ப பாடசாலையில் ஆசிரியத் தொழிலும், மார்க்க போதனையும், புரிவதையே பெரிதும் விரும்பினார் போலும். ஏனெனில், வைரவநாதர் திருச்சபையிற்சேர்ந்த காலத்தே, அவரின் பிறந்த ஊரிலிருந்து, Cooly கந்தர் எனும் ஒருவர் செமினரியிற் கற்று மதுரை சென்றார். அக்கால கட்டத் திலே (1835 இல்) கிங்ஸ்பெரி மணமுடித்து இரு புதல்வருக்குத் தந்தையாகியிருந்தார்.
மேரி டெயிலன் பெரியை கல்விநிலை : 1824 ஆம் வருடம் உடுவில் அமெரிக்க மிஷன் பெண்கள் உயர்நிலை விடுதிப் பாட சாலை ஆரம்பிக்கப்பட்டது. முன்னர் கிராமப் பாடசாலைகளில், எழுத்தறிவு ஊட்டப்பட்டுக் கொண்டிருந்த நாற்பது பெண்பிள்ளை களுள், தேர்ந்தெடுக்கப்பட்ட 29 மாணாக்கிகள், இப்புதிய பாட சாலையிற் சேர்க்கப்பட்டனர். இவருள் நால்வர் எங்கள் ஏழாலை யூரைச் சேர்ந்தவர்கள். என்பது மகிழ்ச்சி தரும் சம்பவமாகும்!
ஏனெனின், ஆசிய நாட்டிலேயே பெண்களுக்கு நல்லறிவு புகட்டவென எழுந்த முதலாவதும் மேன்மை கொண்டதுமான ஆங்கில விடுதிப் பாடசாலை இதுவேயாகும். அக்காலத்து மிஷன் ஒழுங்கின்படி, மேற்படி பாடசாலையிற் பயிலும் மாணவிகள், 4 வருட தொடர்கல்விப் போதனையில் தேர்வு பெற்றபின்பு, மேலும் சிலகாலம், உடுவில் மிஷன் வளவிலே தங்கியிருந்து,

Page 99
190
சுகாதாரம் மனையியல், பிள்ளைப் பராமரிப்பு முதலாய குடும்ப சீலம் சார்ந்த அறிவினையும் செய்முறை ரீதியில் கற்றுக் கொள் வது நியதி. அவ்விதம் தங்கியிருந்து, கல்வியோடு கடிமணமும் கிட்டியோருள், ஏழாலயப் பதியிலிருந்து முற்பட்டோருள் நமது பெரியையும் ஒருவர். 1830-ல் தனது 18-வது வயதில் மேரி டெயிலன் எனும் புதிய கிறீஸ்தவ நாமத்தோடு ஞானஸ்நானம் பெற்றுள்ளார்.
உடுவில் பெண்கள் : உடுவில் பெண்கள் உயர் பாடசர்லை யிற் பயின்று, பிற்படிப்பிலும் தேர்ந்தவர்களாகிய, கிறிஸ்தவ மாணக்கிகளை, அவ்வாறு கற்றுத் தேறிய ஆடவர்களுக்கு, பெற் றோரின் விருப்பத்தோடு, மணமுடித்து வைப்பதில், நிர்வாகிக *ளாகிய மிஷனரிமார் பெருமகிழ்ச்சி அடைவர். அவ்வாறு 11-வது வயதிற் பாடசாலையிற் சேர்ந்து பாடசாலைக் கல்வியை முடித்த பின்பு, அங்கேயே தங்கியிருந்த மேரி டெயிலனுக்கும் சைரஸ் கிங்ஸ்பெரிக்கும் 1831-ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் 3-ஆம் நாள், மணவினை நிறைவேறியது. பாடசாலையின் தலைவியா யிருந்த திருமதி வின்ஸ்லோ அம்மாளின் கணவனே, இம்மண வினையை நிறைவேற்றியுள்ளார். (அந்த நன்றிக்குக்கடனாகவே கிங்ஸ்பெரி தமது முதல் மகன் தாமோதரனுக்கு பாதிரியாரின் பெயரையும் சேர்த்து வைத்துள்ளார் போலும்)
புதுமணத் தம்பதியருக்கு, பாடசாலை நிர்வாகமே, எமது நாட்டு வழமைப்படி, சீதனமாக 100 இறைசால் (ரூ. 75/-) பணமும் கொடுத்து உதவியுள்ளனர். இதுவும் உடுவில் பாடசாலை யின் அன்றைய விதிமுறையாகும். பணமாகப் பெறுதற்கு விரும்பா தோர், வேறு தேவைப் பொருளைப் பெற்றுக்கொள்வது வழக்கம். வைரவநாதர் கிங்ஸ்பெரி மேரி - டெயிலன் என இருவர் பெயர் களும், ஊரறிந்த நாமங்களாயின. பெரியை என்ற பெயர், பிற் காலத்தெழுந்த சரித்திரகாரரால் பெருந்தேவி என உருமாற்றப் பட்டுள்ளது. பெரியை என்பது அக்காலத்தே, உயர்குடிப் பெண் களுக்கு இட்டு வழங்கிய நாமமாகும். "பெரியன்" என்பதன் பெண் பாற் பெயரே பெரியை ஆகும்.
சைரஸ் வைரவநாதர் கிங்ஸ்பெரிக்கும், அவர்தம் தர்மபத்தினி மேரி டெயிலனுக்கும், அவர்கள் புதுமணத் தம்பதியராக, ஏழாலை நோக்கிவந்த காலத்தே, மல்லாகம் சந்திப்பிலிருந்து ஏழாலயப் பதியின் குறிப்பிட்ட வடபகுதிவரை விழாக்கோலம் பூண்டிருந்த செய்தி எம்முன்னோர் வாயிலாக அறிந்துள்ளோம். அக்காலத்தில் வெள்ளை நிறத்தவரையும், சட்டை தொப்பிக்காரரையும், மக்கள்

盟91
மகிழ்ச்சியோடும், ஆச்சரியத்தோடும் கண்டு குதூகலங்கொண்டன ஏாம்.
மணமக்கள் யாழ்ப்பாண வழமைப்படி பெண் வீட்டிலேயே, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இல்லத்தில், குடிபுக்கனர். மண் சுவர் நிறுத்தி, பனை ஓலையால் வேயப்பட்ட கூடமும் வீடும், நடைசாரும், இருபக்கக் குந்துகளும் அமைத்ததே அத்தகைய இல்லம். அக்கால கட்டத்தில், நம் ஊர்வீடுகள் பலவும் இதே அமைப்பையே கொண்டிருந்தமை அறிவோம், "திண்ணைப் பள்ளி" என்பதும், இத்தகைய வீட்டுத் திண்ணைகளில் நடை பெற்றமையால் ஏற்பட்டதேயாகும். .
கிங்ஸ்பெரி தம்பதியர், ஏழாலையின் வடபாகத்தில், தற் போதைய டச் வீதியின் மருங்கில், புகழ்பெற்ற கண்ணகை அம்மன் கோயிலின் சூழலில், வாழ்ந்து வருங்கால், தெய்வ கிரு பையால் எழுவர் ஆண்மக்கள் பிறந்தனர். அவ்வேழு பேருள் மூத்த மகனே, தாமோதரன் ஆவார். இப்பிள்ளை 1832 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி தமது இல்லத்தில் உதித்த னன் என அவரின் ஜனனக் குறிப்புக் காட்டுகிறது. அவரைப் பற்றிப் பிற்காலத்தில் எழுதியோர் செப்ரெம்பர் 12 எனக் குறிப் பிடுகின்றனர். தெல்லிப்பழை அ.மி. திருச்சபைப் பதிவில் முன்னர் நான் குறிப்பிட்டவாறே பதியப்பட்டுள்ளது. அப்பிள்ளைக்கு மேற் படி தேவாலயத்தில், 1833 பெப்ரவரி 24-ஆம் நாளில் ஞானஸ் நானம் செய்விக்கப்பட்டுள்ளது. அவரின் ஞானஸ்நானப் பெயராக் சான்ஸ் வின்ஸ்லோ கிங்ஸ்பெரி எனக் குறிப்பிடப்பட்டுளது. கிங்ஸ் பெரி எனும் நாமம், வைரவநாதர் - பெருந்தேவி மரபிலுதித்த பலருக்கு, இன்றும் கெளரவத்துக்குரிய பெயராக வழங்குதல் காணலாம்.
சைரஸ் வைரவநாதர் - கிங்ஸ்பெரி தம்பதிகளுக்குப் பிறந்த் மக்களுட் சிரேட்டரே தாமோதரனார். பின்னாளில் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை எனவும், C.W.கிங்ஸ்பெரியெனவும் அழைக்கப்பட்டார். அவரும் அவரின் ஆறு சகோதரர்களும், பதிவேட்டின்கண் கிறிஸ்தவ நாமங்களாலேயே சுட்டப்பட்டுள்ள னர். 19-ஆம் நூற்றாண்டின் பிற் கூறுவரை தற்போது நடை முறையில் உள்ளது போலன்றி விவாக, பிறப்பு இறப்பு பதிவுகளை அவ்வத் திருச்சபையின், எழுதுநரே கையாள்வது வழமை. அவர்கள் "சட்டம்பி’ என அழைக்கப்பட்டனர். சட்டம்பியார் பதிவினையே இங்கு குறிப்பிடுகின்றேன். வழமைப்பிரகாரம், கிறிஸ்தவ பெற்றோருக்குப் பிறந்த பிள்ளை, சில மாதங்களுள் ஞானஸ்நானம் செய்விக்கப்படும். அப்பொழுது பதியப்பட்டதேச

Page 100
92.
சட்டந்தழுவிய அர்த்தமுள்ள பெயராகக் கணிக்கப்படுவதனால், நாம் குறிப்பிட்ட ஏழு பிள்ளைகளுக்கும், வீட்டுப் பெயர்களும் இட்டு வழங்கப்பட்டதுண்டு. அந்நியதியை ஒட்டி எழுவரினதும் சபைப் பெயரையும், வீட்டார் வழக்கிலிருந்த பெயரையும் கீழே தருகின்றேன். அன்னாரின் குடும்ப விபரங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளேன். அவை எமது அயலில் வாழ்ந்த வயோதிபர் கூறக் கேட்டவை. தெல்லி அ. இராசரத்தினம் எழுதிய தாமோதர னாரின் வரலாற்றிற் கண்டவையும் அடங்கும். அடிக் குறிப்பு :-
C. L. W. Kingsbury என்னும் நாமகரணத்தோடு தமது தந்தையார், சைரஸ் வைரவநாதர் கிங்ஸ்பெரியின் அரவணைப் பிலும், அன்னையாம் மேரி டெய்லரின் நற்பராமரிப்பிலும் வளர்ந்து சற்புத்திரனாக விளங்கிய குழந்தை உரிய காலத்தே ஞானஸ்நானமும், வித்தியாரம்பமும் தெல்லிப்பழை அமெரிக்கன் மிஷன் திருச்சபையிலே பெற்றுக் கொண்ட வரலாறு, அத்திருச் சபை வரலாற்றுக் குறிப்பிலே விபரமாகக் காட்டப்பட்டுள்ளது.
gr67 sluris6ir Tellipalai Church Record 6rgub (p6ülyse பெயரோடு வட்டுக் கோட்டையில் இயங்கும் தென்னிந்திய திருச் சபையின் யாழ் பேராயத்துக் காப்பறையில் படித்தறிய இயலும்.
தாமோதரனாரின் உடன்பிறப்பாளரின் நாமங்களின் இறுதி யிற் குறிப்பிட்டு வழங்கப்படும் 'பிள்ளை' எனும் உயர்குடிப் பெயர் தாமோதரனாரின் இந்திய வாசத்தின் பின்னர் சேர்க்கப்பட்டதே யாகும். ஏழாலையிலோ அன்றிச் சிறுப்பிட்டியிலோ சம்பந்தப்பட்ட வம்சத்தில் அவ்வாறான உயர்சாதி சார்ந்த பெயர்கள் பாராட்டப் பட்டதில்லை. அவரின் பெளத்திரன் பிறந்த களிப்பில் அவர் இயற்றிய பாடலிற்றானும் அவ்வாறு விதந்து கூறியதில்லை, பாடல் வருமாறு :
சிற்றுார்ப்பகீரதி கோத்திரனாய் வேளாண்டிகழ் மரபோன்
மாப்பாண முதலிமேனாட்
பெற்றனன் வேலாயுதனை யவன்றன் மைந்தன் பேர்கலியம்
பலவாணன் மூத்ததம்பி
யுற்றானன்றோற்கவன்சேய் குருநாதேந்த லுதவு வயிரவ
காதாசிரியன் றந்த
சொற்றார்தா மோதரனுக் கமிர்தலிங்கன் சுதன் றியா
கராசனவன் றோன்றன்மாதோ"

மாப்பாண முதலி (1667) − வேண்ாயுதம்
மூத்த தம்பி
குருநாதி ( كبير على(
ம்சரஸ் கிங்ஸ்பெரி வைரவநாதன் + மேரி டெவிலன் பெரியை (பெருந்தேவி)
1. சாள்ஸ் வின்ஸ்லோ 2. பெஞ்சமின் 3. எட்வர்ட் 4. சாமுவல் 5. ஜோசப் திங்ஸ்பெரி கிங்ஸ்பெரி கிங்ஸ்பெர் விங்ல்பெரி கிங்ஸ்பெரி CW. தாமோதரன் ويقنعقسمتنوع அப்புக்குட்டி இணையதம்பி சின்**
O
6. ஜேக்கப் 7. ஹென்றி
இங்ஸ்பெரி இங்ஸ்பெரி
இன்னப்பா நல்லதம்பி
CW. தாமோதரம்பிள்ளை மனைவியர்
பிள்ளையினார் வள்ளியம்மை பிள்ளையினார் முத்தம்மாள் தோலட்சுமி
இருபிள்ளைகள் இளமையின் இறப்பு
சிங்காரவேலு வெற்றிவேலு
- I - I -
கனகரத்தினம் அமிர்தலிங்கம் சோமசுந்தரம் அழகசுந்தரன் சிவபாக்கியம் பொன்னம்மா இளமையில் இறப்பு (16 வயதில் இறப்பு வண.பிரான்சிஸ்
திங்ஸ்பெரி
தியாகராஜன் அன்னம்ம்ாள் தில்லைநாதன் மு.ராஜரத்தினம்
அழகசுந்தரன் வண.பிரர்ன்சிஸ் கிங்ஸ்பெரி
பொப்பி கிங்ஸ்பெரி o s «» திங்ஸ்பெரிதியாகராஜன் r filí éirittelli , கமலம் கிங்ஸ்பெரி கார்த்தி
Rev. J.W.A, sgrifas Tudir பிளின் சீனிவாசன்
线
மே ராசையா
ராஜன் கதிர்காமர் வண.நேசன் கதிர்காமர்
* வாரிசு இல்லாதவர்கள் 0 வாரிசு விவரம் அடுத்தடுத்த பக்கங்களில்

Page 101
2. பெஞ்சமின்
கிங்ஸ்பெரி 4 முத்தம்மா
o ஜெயலட்சுமி சற்குலட்சு(சுகுணா அக்கா) சொர்ணலட்சுமி معتسلمسيرته
சிற்றம்பலம் சற்குனராசா கனகசபாபதி அங்கிள்ட்டல்
தனபாலசிங்கம் நவமணி Gra p(56mk7upo వట్టణr நல்லையா
مصطہ۔ சின்னம்மா உதயா N தேவதாசன் A தந்தையா யோகநாதன் மகிந்திரா
தனலட்சுமி
ராணி விமன் ஜெகஜோதி
சம்பந்தன் ரூமலர் தில்லைநாதன்
ஜெய்சிங்கம் அமிதா கெம்மா குரு குலா லக்குமி-(குக்கி)
-- 4- 十 + ག மங்கையர் ஹண்டி சிற்றம்பலம் முத்தம்மா பேர்ள் காசியோ சரவணமுத்து
ஹண்டி பேரின்ப நாயகம்
பிள்ளைகள் இல்லை. நல்தம்பியின்' 2-வது மகனை தத்தெடுத்து வளர்த்தார்.
予
6, சின்னப்பா ஜேக்கப் கிங்ஸ்பெரி
7. Dr. ஹென்றி நல்தைம்பி கிங்ஸ்பெரி
1 . ஜெபமணி- சின்னத்துரை
2. டானியேல் அழகரத்தினம் 3. நேசமணி நேசரத்தினம்
4. வயலற் கந்தையா
க. ஜேன்- ராஜநாயகம் 6. டெய்சி செல்லப்ப்ா 1. ஜோர்ஜ்
8. ஏனெஸ்ட்-காந்தி
தேவ்ராஜன்
2-வது மகள் uÁsé 3,6ugút-sír பெயர் தெரியாது
གཉིས་
ayusiń", "’n குமாரசாமி
pumps
Jš55uomiř
ܠܗ
பவளம் ராஜதாயகம்
...} 9. கில்டா-கப்பிரமணியம்
10. ஒலிவ் - நவமணி
 

3. எட்வேர்ட் அப்புக்குட்டி கிங்ஸ்பெரி + ஆச்சிக்குட்டி
\ ش T- T . சவுந்திரம் • வன JK சின்னத்தம்பி BA அமிர்தம் rut * தங்கம்மா ? விஜயூரான o r ۔۔۔۔ 一年一 Y. ர்னம் ஹெம்பின் தம்பி குறொசெற் தங்கம்மா ராசாமி வைரமுத்து சிற்றம்பலம்
%
பொன்னம்மா + அன்னம் தர்மரத்தினம் செளந்தரம் பாலகத்தரம் கனன் சோமசுந்தரம் ஜேஸ் நன்னித்தம்பி
- حة
ருானம் Dr. அனஞ்ஜி புதம் விவேகள் மகிந்தா திருமதி குமாரசா
s மனோகரன் அரிய்ம் திருச்செல்வம் s
தீலன் திருச்செல்வம் dW ஜீவநாயகம்
ரெரிபர்ட் அரியரத்தினம் A.K.. goxub u 44; 3, li ஞானகத்தரம் இரத்தின் கந்தரம்
- a-- བསམ་ 十 ஜீப்ெலர் Qi' 琉」。5}、丸Hおf# இர fy ரத்தினம் போல் லூயிஸ் ஒஸ்வால் ராஜபக்கர் - ரசிகர go ஹெர்பின் கிறிஸ்ான் நொய்லின் விலாந்த் ஜோளில் 叶愈
றபின் கிறிஜ்ரின் நொய்லி -- கிறிஸ்தோபர்
மெலிசன் ஆசீர்வாதம் செல்வையா அருள்ம்பலம் rurs
யச்ேரதா ரேஜ்னுகா டேவிட்
-- ஜெய்ா சாந்தி ரெபேக்கச
குமரர் நாயகம் ஹேமலதா MKAம்கா ஹறிமாலேஜ்
பொன்னம்மா + சோமசுந்தரம்
-
A.
ஜேஸ் •Li பீற்றர் தம்பு சாமுவேல் டாக்டர் ஞானர் அரியம்
K நேசையா
திருமதி அங்கெட்டல் தேவநேசன் நேசையா

Page 102
விஜயா ரோஜ * ஞானம்
صـ.
ரம்தி கிருபா பிள்ளை தங்கச்சி
ரத்தினம் பெஞ்ஜமின்
மோகினி ரட்னம் மனோ அமரசிங்கம்
கீதாஞ்சலி தன்னியா
தங்கம்மா + சிற்ற்ம்பலம்
r w V. *ჟGჟfუმeif ! %ے ஹங்கரத்தினம் ஜேக்கப்
பெல் I ଇ به نا Citadria tools மகேந்த, சத்தியா ஜெயில் செல்வையா செல்வய்ய grsssf? கந்திரன் • ' +
மனோ விக்ரர் யேர்கம் தன்யர்லம்
ராஜ்குமார் ஷாந்தா அஜித் நிமா டில்லோ சித்ரன் நிஷான் ஜ்ெரழி
தர்ஷன் () ருகிதா இராசரத்தினம்
அமரசிங்கம் சரோஜினி
வசந்தா y Gy tUiO3 பலரி அமரசிங்கம் ஞனம் ராணி *
நிரோஜி திருவூர் ( | - அனோஜா ஜானகி అలు குமா? மோகன் சுருண் சந்திரன் மால
செருபிம் தேவிக
டா வண்JK சின்னத்தம்பி BA+ தங்கம்மா
- - Rosovu வணKS ஜெயசித்து
ീuീബി ആ ணுக்கவாமி F0afarqpisy

zost-9-08 6ỹ8Ț• L-I 9Ť SI-s-6T 8ř8 Io 1, -3 Tỷ 8 T-1, -8 988Ț-3-), 888I-Z-iso
z g8 I-Ť-8siq oqoqogs 6Ť8I-9-6
gțg I-I-Iz +171@ș1991gogo
JIriņı99.1998?
g#9I-s-og 51q1$ mı909ố o+g(I-II-I tū71@șHriko gggT-6-0T599喝与点P
zg9I-6-zĪ 1991э?) do
yne apņo ospođe Ur18) 29떨B행 日官學的性) yne apoy ,şebumb uneიყ91glყP Q9rU9gydf).Jus Ur18) 29通信행 니14명的)이T-9
yritej dysfgwsg? Agosgif@rīC)
griecựssigo uos@a4913959 dự919 gulo
****-=
->
puwa’q’ne) quæ uoloplou@
hņ0’sı
仁m그8) 는原田長99原 5
•
• 8quaeropipsoņIroqo'ou)osoa egnepogoniso
masyrıo ışsasy-le, yang)-syri@assisigo poligfronteco 091+o

Page 103
4.
5.
6.
1.98
முதல்வர் தாமோதரன் தமிழ்நாட்டிலே உத்தியோகம் வகித்த காலத்தே, 1859ல் தந்தை வைரவநாதர் கிங்ஸ்பெரி வியோக மாகி விட்டதனால், ஏனைச் சகோதரர்களினது பொறுப்புக் கள் அவரையே சார்ந்திருந்தது. அவர்களுட் சிலர் வழமை போன்று, தெல்லிப்பழையிலும் செமினாரியிலும் ungpa' பாணக் கல்லூரியிலும் தொடர்ந்து. கல்விகற்று, உத்தி யோகத்தின் பொருட்டுத் தமையனின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தனர்.
பென்ஜமின் சின்னத்தம்பி, சென்னிப் புகையிரதப் பகுதி யில் தொழில் நுட்பவியலராயிருந்து, 1859Ꮳ6o விஷபேதி கண்டிறத்தார்.
"இ.ஏ" கிங்ஸ் பெரி-அப்புக்குட்டி, யாழ்ப்பாணக் கல்லூரியின் கணித ஆசானாயிருந்தவர். முதல்வரின் மனைவியரின் 3ஆவது சகோதரியை மணந்து, ஏழாலையிலும் தெல்லிப் பழையிலும் வாழ்ந்தவர்.
சாமுவேல் கிங்ஸ்பேரி- இளையதம்பி றங்கூன் கணக்காள ராய் முதல்வரின் நான்காவது மைத்துனியை மணமுடித்தவர்.
யோசெஃப் கிங்ஸ் பெரி - சின்னக்குட்டி யாழ்ப்பாணத் திலேயே தமிழை நன்கு கற்று, மகாவித்துவானெனப் பெயர் ரெடுத்தவர். பாலியப் பருவத்தில் 1865 யூலையில் இறந்தார்.
ஜேக்கப் கிங்ஸ்பெரி-சின்னப்பா சென்னையிற் சிற்பக்கலை
பயின்றபின் பக்கிங்காம் கனோல் ஓவிசியர் பதவி வகித்தவர். யாழ்நியாய துரந்தரர் சின்னக்குட்டியின் மகளை மணந்தவர்.
ஹென்றி-கிங்ஸ் பெரி-நல்ல தம்பி, எப்.ஏ படித்தபின் கல்கத் தாவில் எம்.பி.சி.எம் பட்டம் பெற்றவர். குடந்தையில் வைத்தியத் தொழில் புரிந்த காலத்து விஷபேதியால் இறந் தார் இவரும் யாழ் நியாய துரந்தரர் சின்னக்குட்டியின் கனிஷ்ட குமாரத்தியை மணந்திருந்தார்.
ஆதாரம் : 1. தென்னிந்திய ஐக்கிய யாழ்ப்பாண அத்தியட்சர
தீனப் பதிவேடுகள். A, Oodoo wille Church Record 1818-1848பாகம் B. Tellipalai Church Record :
i தெ.வ. இராசரத்தினம் 4 ராவ் பகதூர். சி.வை.தாமோ
தரம் பிள்ளை சரிதம்,

199
கல்வி நிலை : தாமோதரனார், ஒழுங்குறக் கற்றறிந்தச் தந்தைக்கும், அவ்வாறே உடுவிற் பெண்கள் உயர்நிலைப் பள்ளி வில் ஆறுவருடகாலம் தக்க போதனா சாதனா முறையிலான, இருமொழிக் கல்வி பெற்ற அன்னைக்கும், தலைமகனாக அவ தரித்தமை பெறற்கரிய பேறேயாகும். எமது ஏழாலையில் ஆங்கிலங் கற்றறிந்த முதற்பெண் அவரேயாவார் 'கல்லாமற் பாதி குலவித்தை பாகம் பெறும்" ’ எனும் அனுபவ உண்மை அவர் மூலம் நிதர்சன மாயது வியப்பன்று ஆசிரியனாகவும், மதபோத கஞ் செய்பவராகவும் விளங்கிய சைரஸ் வைரவ நாதர்-கிங்ஸ் பெரி, தமக்கு ஓய்வு கிடைத்த சிறிது நேரத்தையேனும், அவப் பொழுதாக்காது; தம்பிள்ளைகளின் கல்வியிலேயே கண்ணாயிருந் துள்ளார். அன்னையோ பாலோடு கூடவே பனுவலும் ஊட்டி வளர்த்தனள்,
அக்காலத்தே நம் ஏழாலைப் பதியில் வடக்கிலும் தேற்கிலும் இயங்கிய திண்ணைப் பள்ளிகளில் அதாவது வடபகுதியில் வேத நாயகம் சண்முகத்தின் அ.மி. பாடசாலையிலும்-தென்பகுதியில் எழுதலத்தை அண்டியதான தோப்பினை அடுத்த சமதரையிலே பண்டிதர் "நீலயினார்" எனும் ஓர் பரோபகாரியாகிய கல்விமான் நடத்திய, திண்ணைப் பள்ளியிலும் உரிய பருவத்தே சேர்க்கப் பட்டு எண்ணும் எழுத்தும் கற்று வந்தார். அவ்விருவருமே சிறுவன் கிங்ஸ்பெரிக்கு எழுத்தறிவித்த இறைவர் ஆவர்.
(நீலயினார் எனும் சட்டம்பியார், நல்லாசிரியையாய் இலங்கை முழுவதும் சேவை செய்து ஓய்வு பெற்றபின்பு, தமது சொந்த ஊராகிய ஏழாலையில், சிறந்தவோர் மாதர் சங்கத்தை அமைத்து நடாத்துபவரும், ஊரறிந்த சமூக சேவகியுமாகிய திருமதி டி. நவரத்தினம் (தங்கரத்தினக்கா) அவர்களின் தந்தை யின் தந்தை (பாட்டனார்) ஆவார்) ܕܪ
திண்ணைப் பள்ளிக் கூடப் படிப்போடு தமது தந்தையாரின் வழி நடத்துதற்படி, மயிலனியிற் பள்ளி நடத்திய முத்துக் குமாரக் கவிராயர், வரதராச பண்டிதர் ஆகியோரிடம் நைடதம், இராமா யணம், பாரதம் முதலாம் இலக்கிய நூல்களையும், இலக்கணம், நிகண்டு முதலாம் நூல்களையும் கற்றறிவாராயினர். மயிலனியில் பாடங்கேட்ட காலப்பகுதியில், அவர் தெல்லிப்பழை அமெரிக்க மிஷன் ஆங்கில தருமப் பாடசாலையிலும் பயின்றமை நோக்கற் பாலதாகும். ஏழாலை இல்லத்திலிருந்து சுமார் 14 கல் தொலை யில் இருக்கும் முத்துக்குமாரக் கவிராயரின் படிப்பகத்திற்குக் கால் நடையாகவே சென்று வந்தனர். இஃதோர் இடைநேரப் படிப்பே.

Page 104
200
இவரின் புகழ்பூத்த நல்லாசிரியருள்ளே மேம்பட் உவர், சங்குவேலி, வில்லியம் நெவின்ஸ் சிதம்பரம்பிள்ளை அவர்களாவர். நெவின்ஸ் மாஸ்டர் கிங்ஸ்பெரியின் தமிழ் அறிவு மேம்பாட்டை மனதார விதந்து போற்றியுள்ளார். 'இவரால் நந்தமிழ் சிறக்கும்" என மனந்திறந்து வாழ்த்தினார்.
செங்குவேலி, வில்லியம் நெவின்ஸ் சிதம்பரப் பிள்ளை, செமினரியில் கற்பித்துக் கொண்டிருந்த காலத்தே 'நியாய இலக்கணம்’, கெமிஸ்தம் எனும் தமிழ் நூல்களை ஆக்கி, இந்தியா, இலங்கை நாடுகளில் வாழ் தமிழ் மாணவர்க்குப் பேருப காரியாக விளங்கியவர். யாழ் மத்திய கல்லூரியின் முதல்வரா யிருந்து ஓய்வு பெற்றபின், யாழ் இந்துக்கள் சூழலில் கல்லூரி தாபித்தவரும் இவரே. இவரின் புத்திரரே. யாழ் இந்துக் கல்லூரி யின், ஆரம்பகால அதிபராய்ச் சேவை புரிந்தவரான திரு. நெவிஸ் செல்லத் துரையாவர்.
கிங்ஸ்பெரி) செமினாரியிற் கல்வி கற்ற காலத்தே, இவரின் உயர்வுக்கு உதவிய ஆசிரியர்கள் : திருவாளர்கள் வைமன் கதிரை வேற்பிள்ளை, கரோல் விசுவநாதபிள்ளை வண. சீ. டி. மில்ஸ், லைமன், ரைஸ், பிறக்கன்றிச் போன்றோராவர். இவ ருள் வைமன் கதிரைவேற்பிள்ளை, ஆங்கில அரசினால் ஊர் காவற்றுறை நீதிபதியாக நியமனம் பெற்று " வைமன் துரை" என யாழ்ப்பாண மக்களாற் போற்றிப் புகழப்பட்டவர். மதுரைத் தமிழ்ச்சங்கம் பதிப்பித்து வெளியிட்ட ‘சங்கப் பேரகராதி"யை ஆக்கிக் கொடுத்த மகாவித்துவானும் இவரே. -
கரோல் விசுவநாதபிள்ளை செமினாரியில் உயர்கல்வி கற்று ஆசிரியப்பணி புரிந்தவர். 1855-இல் டிைதாபனம் மூடும் வரை அங்கேயே தங்கியிருந்து, நாவலர் எழுதி வெளியிட்ட "சுப்ர போதம் எனும் கிறிஸ்து மத கண்டனத்துக்கு மாறுத்தரமாக *சுப்பிரதீபம்’ எழுதி வெளியிட்டவர். 1857-இல் தென்னிந்தியா சென்று அரச திணைக்களம் ஒன்றில் சேவை புரிந்த காலத்தே, சிதம்பரம் நடராசப் பெருமான் சந்நிதியில், தாம் முன்பெழுதிய சுப்பிரதீபத்துக்குப் பிராயச் சித்தமாக, பழுக்கக் காய்ச்சிய பொன்னூசியாற் தன் நாவைச் சுட்டுக் கொண்டனர் என்பது செய்தி! அன்றியும் "சுப்பிரதீப மறுப்பு" எனும் நூலையும் எழுதி Gaisfacilitif. 6: F is soof 5th (Elementary algibra) 6Tsib நூலையும் எழுதியவர் இவரே.
இவ்வாறாய பெறுதற்கரிய பேறான சர்வகலா வல்லோரிடம் கற்ற கல்வி, பின்னாளிலே அவர் வாழ்வுக்கும், தமிழ்மக்கள் உயர்வுக்கும் உதவி"

201
ஆரம்ப இடைநிலைக் கல்வி :- மயிலனிப் பள்ளியில் மேலான கல்வியைக் கற்கும் காலத்திலேயே, தெல்லிப்பழை அமெரிக்க மிஷன் ஆங்கில தருமப் பாடசாலையில், தந்தையாரின் அநுசரணையினிமித்தம், சேர்ந்து ஆங்கிலமும் கற்கும் வாய்ப் பினைப் பெற்றமை பெரும் பேறே.
உயர் கல்வி:- இவரின் பன்னிரண்டாவது வயதில், 1844 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில், "வட்டுக் கோட்டைச் செமினறி" எனும் சர்வசாஸ்திர போதனா பீடத்திற் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு, அன்றைய காலகட்டத்தில், சிறந்த அறிஞர்களாகிய, கறல் விசுவநாதன், சங்குவேலி வில்லியம்-நெவின்ஸ், வைமன். கதிரை வேற்பிள்ளை முதலாம் ஆசிரியர்கள் வாய்க்கப் பெற்றனர். ஆங்கு, வீசகணிதம், பூகோள ககோள சாஸ்திரங்களும் வான நூல் வேதிநூல் முதலாம் நவநவமான உயர் கல்விகளைக் கற்று, மெச்சத்தக்க அறிவொளி பெற்றுத் தேறினார்.
இவ்வாறாக மேம்பட்ட தேர்ச்சி பெற்று, தமது 20ஆவது வயதிலே, 1852 இல் செமினறிப் படிப்பைப் பூர்த்தி செய் துள்ளார்.
உத்தியோக கிலை தமது செமினறிக் கல்வியைச் சிறப்புற முடித்த பின்னர், கோப்பாய் போதனா வித்தியாலத்தின் ஆசிரிய னாக நியமனம் பெற்றார். 1852 முதல் 1854 வரை அங்கு கடமை ஆற்றினார். அக்காலத்திலேயே, நீதிநெறி விளக்க உரை எழுதி, தமது கன்னிப் பதிப்பை ஆரம்பித்தார்.
அக்காலத்திலேதான், நாவலரின் ஆங்கில ஆசானும், அவ சின் தமிழ் மாணவனும் ஆகிய, பேர்ஸிவல் பாதிரியார் (Rev. peer Percival) சென்னையில் தாம் பிரசுரித்து வெளியிட்ட "தின வர்த்த மாணி’ எனும் பத்திரிகைக்குத் தக்க ஆசிரியனைத் தேர்ந் தெடுக்கும் நோக்கில், யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
தாமோதரனின் அறிவுத் தரத்தினையும், குடும்ப நிலையை யும், அவர் ஆற்றிய ஆசிரியத் தொழிலினாற் கிடைக்கும் ஊதி யத்தின் பற்றாமையையும் நோக்கி அப்பதவியைப் பெறுதற்குப் பலரும் உற்சாக மூட்டினர்.
பத்திராதிபர் தொழிலைத் திறம்பட வகித்த காலத்தில், பல ஆங்கில அறிஞரின் நட்பும் மதிப்பும் கிட்டிற்று. அவருள், தாமோதரனாரிடம் தமிழ் கற்றவரான லஷ்சிங்ரன் என்பவர் குறிப்
3

Page 105
202
பிடத்தக்கவர். அக்கட்டத்தில், சென்னை ராசதானிக் கல்லூரியில். ஆசிரியப் பதவி கிடைத்ததனாலே, பத்திராதிபர் வதவியைத் துறந்து அங்கு கடமையாற்றினார்.
மீயுயர் கல்வி : 1857 ஆம் வருடத்தில், முதன் முதலாக சென்னைச் சர்வகலாசாலை நிறுவப்பட்டது. ஆரம்பகாலத்தில், அங்கு எவருமே சேர்ந்து படிப்பதற்குச் செல்லவில்லை. ஆதலால், தாமோதரனாரும், சுதுமலைக் கறல் விசுவநாதனும், வெளிவாரிப் பரீட்சார்த்திகளாகவே, பிரவேசப் பரீட்சைக்குத் தோற்றிச் சித்தி பெற்றனர்.
பிரவேசப் பரீட்சையிலே சித்தி எய்திய நான்கே திங்களில் நடைபெற்ற இளங்கலை மாணி (பி.ஏ) பரீட்சையில் தாமோதரன் முதல் வகுப்பிலும், கறல் விசுவநாதன் இரண்டாவது தரத்திலும் தேறுவாராயினர். எனவே இலங்கை இந்தியாவிலே, முதன் முதல் பி. ஏ. சித்தி பெற்ற மேன்மைக்கு உரியவர், நம் இருவருமே. தாம் பெற்ற உயர்வை, தமது பழைய நண்பர்களுக்குத் தெரிவித்தற் பொருட்டு, 'நாம் கடந்து வந்தோம், நீவிரும் வம்மின்'-என அழைப்பு விடுப்பாராயினர்.
பட்டம் பெற்ற சி. டபள்யூ. தாமோதரனாரின், அறிவு ஆற் றலை வியந்த, அவரின் ஆங்கிலேயத் தமிழ் மாணவரான லஷ்சிங்ரன், சென்னை பொது வரவு செலவு கணக்குத் தாபனத் திலே, பொறுப்பான ஒரு பதவியைப் பெற்றுக் கொடுத்தார்.
அக்காலத்திலேயே, 1858ம் ஆண்டளவில் அவருக்கு மணவினையும் நிகழ்ந்தது.
மனைமாட்சி : திரு. சி.எல்.டபள்யூ. கிங்ஸ்பெரி எனவே உலகறிந்திருந்த தாமோதரனார், தமது 25ஆவது பராயம் வரை யிலும், தந்தை பராமரிப்பிலேயே வாழ்ந்தவர். அக்காலத்திலே வட்டு போதனா பீடத்தின் ஏனைக் கல்விமான்களைப் போல தீவிர கிறிஸ்தவனாகவே நடமாடினார். இளம்பராயத்திலே, சுன்னாகம் வரதசர்மா, முத்துக்குமார கவிராயர், போன்றோ ரிடத்துத் தமிழிலக்கண இலக்கியம்பயின்ற காலத்தே. மறுசமய அறிவு பெற்றாராயினும், இல்லத்தின் சூழ்நிலையிலே, பெற்றா ரின் வழிபடு சமயத்தையே. தாமும் அனுட்டித்தார். கோப்பாய் போதனாசக்தி வித்தியாசாலையின் ஆசானாகப் பணிபுரிந்த காலத்திலே. "நீதிநெறி விளக்கவுரை' எனும் நூலினைப் பதிப் பீத்துள்ளார். மானிப்பாய் மிஷன் அச்சகத்திலே பதிப்பித்த அப்

203
புத்தகத்தின் முகப்பிலே, தமது பெயரை C. L. W. Kingsbury என்றே குறிப்பிட்டார்.
கிங்ஸ்பெரி, எப்போது, எச்சூழ்நிலையில், தமது பெற்றோரும் தாமும், சகோதரர் அறுவரும் கைக்கொண்டிருந்த மதத்தி னின்றும் வழுவினாரென்பதற்குத் திட்டவட்டமான ஆதாரம் ஏதும் இல்லாமையால், அவரின் விவாகத்தையும், தந்தையின் வியோ கத்தையும், இந்தியாவில் அவருக்கு வாய்த்த நண்பரையும் வைத்தே அண்ணளவாக வேனும் ஒரு முடிபுக்கு வரமுடியும்.
தாமோதரனாரின் பள்ளித் தோழராக, தெல்லிப்பழை அமெரிக்க மிஷன் ஆங்கில வித்தியாசாலையிலும், பின்னர் வட்டுக் கோட்டைச் செமினாரியிலும் கல்விகற்றவர்கள் மூவர். இந்நால் வரும் இணைபிரியாத குடும்ப நண்பர்களாயும், கடைசி வரை திகழ்ந்துள்ளனர். அவ்வாறான தோழமையின் பேறாகவே, அன்னாரின் திருமணமும் நிச்சயிக்கப்பட்டுளது.
சிந்தாமணி - வேலுப்பிள்ளை என்பவர், தாமோதரனாரின் அந்திம நேரம் வரை, கூடியிருந்தவர்.
மற்றொருவர், தெல்லிப்பழை வைரவநாதபிள்ளை. அம்பரை வாணபிள்ளை. அடுத்தவர் அம்பலவாணபிள்ளையின் சகோதர se வை. சிதம்பரப்பிள்ளை என்பவர். மேற்காட்டிய வை. அம்பலவாணபிள்ளை பின்னாளில் திருகோணமலையிலே, புகழ்பெற்ற நியாயவாதியாய்த் திகழ்ந்தவர்.
தாமோதரனார் மணமுடித்தது, அம்பலவாண பிள்ளையின் சிற்றன்னையார் வயிற்றில், தெல்லிப்பழை க. பிள்ளையினார் மூலம் தலைமகளாக உதித்த வள்ளியம்மையை. இவர் இரு ஆண் மக்களைப் பெற்று இன்புற்றிருந்து, நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். பிள்ளைகளும் சிறுவயதில் இறந்து போயினர்.
தாமோதரம் பிள்ளை தமது முதல் மனைவியின் சகோதரியான நாகமுத்தம்மாளை 1860ல் மணந்தார். அவர்களுக்கு <鹦驴 பிள்ளைகள் பிறந்தனர். s'
1. சி. தா. கனகரத்தினம் பிள்ளை : பாலவயதில் இறந்து
(Surror rif.

Page 106
204
2. சி.தா. அமிர்தலிங்கம் பிள்ளை - ஆங்கிலம், தமிழ் எனு மிரண்டிலும் வல்லவராய் யாவராலும் மதிக்கப்பட்டவர். * சாலை விநாயகர் பிள்ளைத் தமிழ்’ எனும் பிரபந்தத் தைச் சிறுபராயத்தே பாடியவரும் இவரே. இல் வாழ்க்கைக்குட்பட்டு, தியாகராசன் எனும் புத்திரனை யும், அன்னம்மாள் எனும் புத்திரியையும் பயந்தபின் 1889ம் ஆண்டு தமது 26ஆம் வயதில் இறந்தார். 3. பொன்னம்மாள் எனும் புத்தரி, தெல்லிப்பழை மு. இராச ரத்தினத்துக்கு மனைவியாகிப் பிள்ளைப் பேறின்றி இறந்து போனார். 4. சோமசுந்தரம் பிள்ள்ை: தமது 16 வயதில் இறந்து போனது. 5. சி.தா. அழக சுந்தரம் : இவர் 1893ல் கிறிஸ்தவராகி, பிரான் ஸில்-கிங்ஸ்பெரி தேசிகர் எனும் நாமம் பூண்டு சமய குரவராக வாழ்ந்தவர். 6. சிவபாக்கியம் எனும் புத்திரி, தந்தையின் மைத்துனராகிய, உதவி ரணவைத்தியராக 1892ல், நெல்லூரில் வாழ்ந்த ச. வை. சிதம்பரப் பிள்ளையின் கனிட்ட குமாரன் தில்லை நாயகம் பிள்ளையை மணந்து, சின்னாள் இன் புற்றிருந்து இறந்தனர். முதலிரு மனைவியரும் அவர்களின் பிள்ளைகளுட் பலரும் இறந்துபோக, புத்திர புத்திரிகளுள், அழகசுந்தரமும் சிவபாக்கிய மும் மட்டும் மிஞ்சி உயிரோடிருந்த காலத்தில், மக்களிருவரையும், வேலைப்பழு நிறைந்த தம்மையும் பராமரித்து உதவும் முகத்தால், 1890 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் எனும் ஊரைச் சேர்ந்த, சீதாலட்சுமி என்பவரை தமது 58வது வயதில் மூன்றா வது மனைவியாக மணந்ததன் மூலம் சிங்காரவேலு, வெற்றி வேலு எனும் இரு புதல்வருக்குத் தந்தையானார்.
இளைப்பாறுதல் : 88 வயதில் நீதிபதி பதவியினின்று ஓய்வு பெற்றார். 2வது தாரத்துப் பிள்ளைகளுள் எஞ்சி வாழ்ந்த, சிவ பாக்கியம் எனும் பெண்ணுக்கு மண வினை முடிக்கக் கருதி, ஜனன ஊருக்கு வந்தார். அவரின் இளய தம்பியும் தமது மகளுக்கு வரன் தேடும். முயற்சியில் அண்ணனிடம் ஆலோசனை பெறவந்திருந் தார். இருவரும் மனம் ஒத்து, ஒரே மன்றில் இருமணமும் முடிக்கும் நோக்கிலேயே யாழ்ப்பாணம் வந்தனர், எனினும் தாமோதர னாரின் மகளுக்கு, முன்னரே ஒழுங்கு செய்திருந்த மணமகனை, ஜனன பூமியிலிருந்த அவரின் சகோதரரிற் சிலர் ஏற்க மறுத்தமை யால், மட்டக்களப்பு உவெஸ்லியன் மிஷன் பாடசாலையில்

205
பிரதம போதனாசிரியனாயிருந்தவரும், டாக்டர் ச. வை. சிதம்பரப் பிள்ளையின் மருகருமான தெ. சி. தில்லைநாயகம் என்பவரை அப்பெண்ணுக்கு வரனாகக் கொண்டார். இப்பெண்ணும் 1896ம் வருடம் மகப்பேற்றினால் ஏற்பட்ட நோயினால் இறந்தார். இளையதம்பியின் மூத்தமகள் ஜெயலட்சுமியும், மூன்று பிள்ளை களைப் பெற்று இறந்து போயினள்.
சமய விவகாரம் : கிங்ஸ் பெரி குடும்பத்தின் நந்தா விளக் காய் உதித்தவர், சி.டபிள்யூ. கிங்ஸ் பெரி எனும் அறிஞன். புகழ் பூத்த கல்விமானாகத் திகழ்ந்த அவர், கீழைத்தேய, மேலைத் தேயக் கலைகள் அனைத்தும் கசடறக் கற்று, மேதையாய் உயர்ந் தவர். இளம் பராயத்திலே, தந்தை தாயார் வழிவந்த கிறிஸ்தவ மதத்தையே, கொண்டொழுகினாராயினும், இந்திய நாட்டின் தொடர்பு ஏற்பட்ட பின்னர், அந்நிலை மாறுவதாயிற்று.
பண்டைய ஏடுகளைத் தேடிப்பெற்று, அச்சு வாகனமேற்றும் பேரவாவினால், தமது ஓய்வு நேரத்தை, அக்கடனுக்கே பயன் படுத்தினார். பதிப்பு வாஞ்சை, கோப்பாய் போதனா சக்தி வித்தியாலயத்தில் முளைவிடத் தொடங்கியது. குமரகுருபரரின் "நீதிநெறி விளக்கத்துக்குத் தாமெழுதிய உரையினை, தமது செமினரி ஆசான்களான, வைமன், நெவின்ஸ், கறல் போன்றோ ரின் முன்னிலையிலேயே தெளிந்தவர். அந்நூலின் இறுதியில், "சீர் பூத்த விவிலிய நற்சுருதி வாழி! திருச்சபைக் கணிதம் வாழி! நார் பூத்த திரவிய மிஷன் வாழி!" என தம் மேன்மைக்கு வித் தான உண்மை நிலையைப் போற்றியுள்ளார்.
புத்தகப் பதிப்பிற்கு முன்னோடியாக இருந்தவர், பூவர் பண்டிதரே. அவர் மாணவர் நலன் கருதி, பாலபோதம். 1-5, வேத வினா-விடை எனும் வாசினைப் புத்தகங்களை, யாழ்ப் பாணத்திலே, முதன் முதற் பதிப்பித்தமை, பின்னாளிலே, நாவ லரின் பாலபாடம், சைவ வினா-விடைகளுக்கு வழிகாட்டின.
அதே முறையில், ஈழகேசரிப் பொன்னையா அவர்களின் "பால போதினி” வரிசையும் விழங்கின.
தாமோதரனார், உயர்தரமான பண்டைத் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் முதலாய, நூல்களைப் பதிப்பிப்பதில் ஆர்வம் கொண்டு, வெற்றியுங் கண்டவர். ஏடுதேடும் நோக்கில் . மடாலயங்களையும், புலவர்களையும் அண்டிய காலையில், சைவ மத உண்மைகளையும் கற்றறியும் பேறு பெற்றார். அன்றியும், மடாதிபதிகளின் அநுதாபத்திற்கும் உரியவரானார். அனைவருள்

Page 107
206
*ளும், வேதாரணியம் சிறீலசிறி கைலாசநாத தேசிகரை, தமது ஞான குருவாகவே கொண்டிருந்தமை, அவரெழுதிய நூற்பதிப் புரை மூலம் தெரிகின்றது. மணவினை மூலமும் சைவசீலராக மாறியுள்ளார்.
இரண்டாவது மனைவி இறந்த பின்பு, எஞ்சியிருந்த அவரின் பெண்பிள்ளைக்குத் தமது குடும்பத்திற்குட்பட்ட தகுந்த வரனைத் தேர்ந்து கையளித்து, நிம்மதி பெறவேண்டிய தமது பிரதான கடமையை அசட்டை பண்ணி, 1890ம் வருடத்திலே, தமது 58வது வயதில், மூன்றாம் தாரமாகவும், தாமோதரனார் மணமுடித்தமை விபரீதமானது. அச்சந்தர்ப்பத்திலே, அவர் உள்ளத்தில் ஏதோ பாரிய-வெளித்தோற்றத்திற்குப் புலனாகாத-விபரீதம் நிகழ்ந் திருக்க வேண்டுமெனஉன்னிச் சமாதானப்படவேண்டியதேயன்றி, அவரின் உற்ற நண்பர்க்கும் வேறு மார்க்கமிலதாயிற்று!
மூன்றாவது திருமணம் நிகழ்ந்த காலகட்டத்தில், அழக சுந்தரன் எனும் ஏகபுத்திரன், சென்னைச் சர்வகலாசாலையின் பிரவேசப் பரீட்சையில் தேறி, F.A கற்றுக் கொண்டிருந்தவர், தம் மனத்து உள்ளாந்தரத்திலே, இனந்தெரியாத ஏதோ உறுத்து தலை உணர்ந்துள்ளார். தந்தையாரோடு ஒன்றி வாழ்ந்தாரே யாயினும், சந்தியா வந்தனம், திருநீறணிதல் ஆதிய கடமை களைத் தவிர்த்து வந்தனர். தமது அன்னையார், பெரியன்னை யாரும் அவர் தம் பிள்ளைக் & காழுந்துகள், உடன் பிறப்புக் களாய்ச் சிற்சில ஆண்டுகள் மட்டும் வாழ்ந்துபோன சகோதரர்கள், துணையின்றித் தனியொரு பெண்ணாக ஏங்கி நிற்கும் தங்கை, பரிதாபத்திற்குரியவராய், நடைப்பிணம் போல் அல்லலுறும் தந்தை, என்றிவ்வாறாக ஒரு பாரிய குடும்பத்தின் வீழ்ச்சி அவரின் உள்ளத்தை வாட்டியது வியப்பன்று
இந்நிலையிலே, அழகசுந்தரனின் அன்புத் தாயாரின் ஆண்டுத்திதியும் வந்தது. குலத்துக்கொரு கொழுந்தே ஆதலின், அன்றைய திதிக்குவேண்டிய கடமைகளை, முன்னின்று நடத்த வேண்டிய அவர், அத்தினம் வீட்டிற்கே வராது, வேறெங்கோ நின்று விட்டார். தந்தை உரிய நேரத்திலே, மகன் சமுகமாயிருக் காமை கண்டு, திகைப்பும், ஆச்சரியமும் கொண்டாரேனும், ஒரு வாறு மனந்தேறி, தாமே உரிய கடமைகளை நிறைவேற்றி முடித்தார்.
மறுதினம் அவருக்கோர் கடிதம் மகன் அழகசுந்தரனால் எழுதப்பட்டிருந்தது. தாம் தந்தையாரின் வழிபடு கடவுளையும், சைவமதக் கோட்பாடுகளையும் பற்றித் திருப்திப்பட முடியாத நிலையில் இருப்பதாகவும், ரட்சிப்பின் மார்க்கமெனத் தாம் நம்பு

207
கின்ற, கிறிஸ்துமதப் பிரவேசஞ் செய்யத் தீர்மானித்து விட்ட தனால், அவ்வாறு கிறிஸ்தவனாக மாறுவதற்குச் சம்மதம் தரு மாறும், அக்கடிதத்தில் தம் தந்தைவிடம் கோரியிருந்தார். அன்றி யும் தந்தையாருக்கு ஆட்சேபம் இல்லையெனின், மதம்மாறிய பின்பும், எழமைபோல அவருடன் கூடிவாழ விரும்புவதாகவும், தெரிவித்திருந்தார். தந்தையோ அவரின் கோரிக்கையை, முற்றாக நிராகரித்து விட்டார்.
இச்செயல்ைப் பற்றி, குடும்பத்தாரின் அனைத்துச் சுகதுக்கங் களிலும் பங்காளராயிருந்தவரும், அவரால் ஆதரிக்கப் பெற்றுக் கல்வி முதல் மணவினை ஈறாக, அனைத்து விடயங்களினையும் முடித்து வைக்கப் பெற்றுவருமான குடும்ப உறவினர் திரு. தெ. ஆ. இராசரத்தினம் பின் வருமாறு எழுதியுள்ளார்:
*தாம் பெரிய சைவரென்றும், சிறந்த தமிழ் வித்துவானென் றும் பெயரெடுத்தும், தனது மகன், கிதிஸ்தவரானது தமக்குப் பெருங்குறையென்று, பிள்ளை அவர்கள் நினைத்து மிகவருந்தி னார். அவர் குமாரரோ, தமக்கு உண்மையான மனப்பாக் கியத்தை அளிக்கவல்ல, மெய்ச்சமயத்தைக் கண்டோம் என மகிழ்ந்தனர்."
கிறிஸ்தவரான பின்பு, அழக சுந்தரனிடம் பல நற்குணங்கள் காணப்பட்டதாகப் பிள்ளை அவர்களும், தம் நண்பர்களிடம் கூறியுள்ளார்.
தமது குமாரருக்கு ஒருமுறை கடிதமெழுதியபோது, அக்குமாரர் மெய்யான பக்தியினாற்றான், கிறிஸ்து மதத்தைச் சார்ந்தனர், என்பதைத் தாம் அப்பொழுது தான் கண்டதாகவும், தன் மனச்சாட்சியைத் திருப்திப்படுத்தும் பொருட்டு, அவ்வாறு செய்த தம் புத்திரரோடு, தமக்கு அச்செய்கையளவில், யாதும் விரோதமில்லை என்றும், பிரகடனப் படுத்தியுள்ளார். சைவ சமயத்து உண்மைகளைப் படித்தறியாது, அதை நீத்ததே, தமக்குப் பெருவிசனம் என்றும், செய்யவேண்டிய பிராயச் சித்தங் களைச் செய்து, திரும்பியுஞ் சைவத்தை அனுசரித்தால், தாம் அவரை ஏற்றுக் கொள்ளத் தடையில்லை, என்றும் கூறியிருக் கின்றார். இவ்வித கேள்விகளுக்கு அவர் குமாரர். சிறிதும் இடந் தராது, தாம் அங்கீகரித்த மதத்திலே உறுதியாக நின்றனர்.
"அழக சுந்தரன்" எனும் பிள்ளைப் பெயரினைத் தவிர்த்துத் கிறிஸ்து மதபிரவேசத்தின் மூலம், பிரான்சிஸ் கிங்ஸ்பெரி எனும் புது நாமம் பெற்று, தமது முன்னோரின் நினைவை மீண்டும் திலைநாட்டலானார்.

Page 108
208
திரு. பிரான்சிஸ் கிங்ஸ்பெரி எனும் பெயரோடு சென்னைப் பல்கலைக் கழகத்திலே, கலைமாணிப் பட்டம் பெற்று, தந்தைக்கு ஏற்ற மைந்தனாக அறிவொளி பெற்றுத் திகழ்ந்த அழகசுந்தர னார், வேதசாஸ்திரக் கல்லூரியிலேயும் தமது நெறியை, ஒழுங் குறப் பயின்றுள்ளார். விவிலிய வேதத்தை மட்டுமன்றி, சைவ சித்தாந்தம், வேதாந்தம் முதலாம் சைவசமய நெறிகளையும் தெளிவுற ஆய்வு செய்து,மெய்யறிவுபெற்றார். கிறிஸ்தவ குரவர்க் குரிய தகைமை பெற்ற வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் கிங்ஸ்பெரி (Rev. Francis Kingsbury B.A. B. D) is Logi GLJu 600, *பிரான்சிஸ் கிங்ஸ்பெரி தேசிகர்' எனவே வழங்குவாரா யினர். தேசிகர் எனும் நாமம்,தென்னிந்திய மடாலய குருமாருக்கே வழங்கியதுண்டு. எனவே, கிறிஸ்தவரான அவர் பெயருடன், மேற்படி புனித அடைமொழியைச் சேர்த்துப் பிரகடனஞ் செய்வர். தனை ஒரு பகுதியினர் ஆட்சேபித்தனர். அவர் தம் பதிலில், சைவ சமயக் கோட்பாடுகள், நியம நிஷ்டைகள், ஒழுக்க விதிகள் பற்றிய பூரண அறிவு பெற்று, ஆசாரசீலராக விளங்குவோர். தமது மரபு வழிப்பெயர் பெற்று வருமாறு போல், அன்னவர்க்கு எவ்விதத் தினும் தாழ்வுபடாக் கிறிஸ்தவ குருவும், உயர் மரபினரும் ஆகிய அடியேன் "தேசிகன்’ ஆவதில் இழுக்கேதும் இல்லையே என எதிர்வாதிட்டுத் தம் பெயரை நிலைநிறுத்தினார்.
குரவரான ஆரம்ப கட்டத்திலே, மொசப்பட்டேமிய நாட்டில் படையணியின் மதபோதகராகவே பணிபுரிந்தனர்.
எமது இலங்கைப் பல்கலைக் கழகத்தின் ஆரம்பகாலத்தில், தமிழ்ப் பேராசிரியர் பதவியை வகித்த, முதற்றமிழர் எனும் பெருமையும் இவரையே சாரும். ஆங்கிலம், தமிழ், கிரேக்கம், லத்தீன் முதலாய பன்மொழி வல்லுநராய், சண்டமாருதப் பேச் சாளராய்த் திகழ்ந்து, தமது பிந்திய காலத்தே ஈழத்திலேயே வாழ்ந்தார். பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராயிருந்த `காலத்தில், திருக்கோவையார்ச் செய்யுளைக் கரும்பலகையில் எழுதி, அதனை எழுத்துக்கூட்டி மாணவர்க்குப் பயிற்றுவாராம். அக்காலத் தமிழ் மாணவர், பலர், தமிழ்ப்பாட வினாக்களுக்கு ஆங்கிலத்தில் விடை எழுதிச் சித்தி பெறும் வாய்ப்பினைப் பெற்ற வர்கள் என்பதற்கு இது ஒர் எடுத்துக்காட்டாகும்.
தந்தையார் இறந்த காலத்தே, அவருடன் நிழல் போல் நீங்காது இருந்து, வேண்டுங் கடமையெலாம் நிறைவேற்றினார். எனினும், தாம் கிறிஸ்தவனா யிருந்தமையால், சைவ நியதிப்படி தந்தையின் அந்திமக் கிரியைகளை நிறைவேற்றுதற்கு, தமது

209
தந்தையின் சகோதரனும், கொத்தப் பட்டணத்து ஒவசியருமானச வை. சின்னப்பாபிள்ளையை நியமித்தனர்.
நமது தாமோதனார் தனது அன்புக்கு ஒரே புத்திரனாய் எஞ்சியிருந்த அழகசுந்தரன் மதமாறியபோது, அவரைத் தொடர் பறுத்து வாழ்ந்த காலையிலும், அவருக்கோர் பெண்குழந்தை பிறந்தபோது, அக்குழந்தைக்குக் கமலம்' எனப்பெயரிடுமாறு தெரிவித்துள்ளார். தந்தை வியோகமானபோது, கிங்ஸ்பெரி தேசிகர் கூறிய இரங்கலுரை, இதனைத் தெரிவிக்கிறது? அது வருமாறு:-
மன்னு கமலமென வைப்பாயொரு பெயரே உன்னுடைய பிள்ளைக்கென்றோர் கடிதம் வேரைந்தாய் மன்னுங்கமலமவள் வாய்திறந்து தாதாவென் றுன்னை யழைக்கின்றாள் ஒழித்தெங்கே சென்றாய் ே
தாமோதரேந்திரனாரின் வாழ்வும், அன்னார் தமிழ்கூறு நல்லுலகிலே, பண்டைத் தமிழ் இலக்கண இலக்கியம் என்றும் நின்று நிலவுமாறு, ஆற்றி உதவிய ஆய்வுகளும், நூற்பதிப்புக் களும், வித்தியா கைங்கரியங்களும் பற்றிய யதார்த்த நிலைமை. களை, ஓரளவேனும், ஏனையோர்க்கும் தெரிவிக்கு முகத்தால், முன்னைய ஐந்து படிகளையுந் தந்தோம், முந்தைய படிகள், காலவர்த்தமானத்தை அனுசரித்து வகுக்கப்பட்டுள்ளமை நோக்க லாம். எனின், பின்னே விவரிக்கப்பட்டிருக்கும், இவ்வத்தியாயம் அந்நியதி தப்பிக் குறிப்பிடப்பட்டமை நோக்கலாம்.
இனிவரும் படிகள், தாமோதரனார் வாழ்விலே, சிற்சில சிக்கல்கள் தோன்றியதனையும், அச்சிக்கலறுக்கும் முகத்தால், அவர் கையாண்ட நல்லுபாயங்களையும், அவற்றால் பொதுவாக ஏற்பட்ட சாதக பாதகங்களையும், இதனை வாசிப்போர் தெளிந்து கொள்ளுமாறு, அவ்வாறு நிரைப்படுத்த வேண்டியதாயிற்று.
விசேடமாக, C. W. தாமோதரனார் அவர்கள் எம் தமிழர் மத்தியில், வாழ்ந்து செயற்கரிய மேலான சேவைகளை ஆற்றி இறந்தும் இறவாப் புகழோடு வியோகமானவர். அவர் வியோகமெய்தி நூறாண்டு நிறைவு பெறும் நாள் நெருங்கி வருகின்றது. அன்னார் வாழ்ந்த காலத்தே, உயர்கல்வி நிலையும் பொது மக்களின் கல்விசார் மனநிறைவும் இருந்தவாறு இன் றில்லை என்பது வெள்ளிடை. அன்றைய அறிஞரும், மடாலயம் மிஷனாலயம் போன்றின்ன கலாபீடங்களும், ஆங்குக் கல்வி பயின்றுவந்த மாணவர், பண்டிதர்கள் அனைவரும் ஒரே பாணி

Page 109
210
tயில் ஒருசாரார், தமக்கு மாறுபட்ட மறுசாராரையும், தனிமனிதரே மற்றைய தனிமனிதரையும் வாதிட்டு வெல்வதிலும், அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பவர் போன்று, வாழ்நாளைக் கழிப்பதோடு திருப்தி கண்டிருந்தனர்.
நாம் வாழும் இருபதாம் நூற்றாண்டு, விஞ்ஞானம் மேலோங்க அதனோடு சமமாக மெஞ்ஞானமும் செழித்தோங்கும் காலமாகும். எதற்கெடுத்தாலும், ஏன்? எப்படி? என வினாவெழுப்பி அவற்றின் காரணகாரியங்களைத் துணியும் தன்மையே, உயர்ந்து நிற்கின்ற காலம். எமது சிறார், எம்மூரின் தோற்றம், வளர்ச்சி, பெளதிக, கேந்திரத்தன்மை, மக்கள் நாகரிகம், கல்விப் பேறு, தொழிற் திறன் பற்றிய ஆய்வுகளை நிகழ்த்தும் வாய்ப்பினையும், வாஞ்சை யையும், ஊக்குவிக்கு முகத்தாலேயே இதுகாறும், என் கருத்தைத் தெரிவித்து, முடிவை தீர்மானிக்குமாறு உங்களை அழைத்து வந்தேன். இனிவரும் பகுதிகளிலே, எனது சுயமான கருத்துக் களையும் கூறவேண்டிய நிலை ஏற்படும். அவற்றின் தன்மை யினை நீங்கள் விருப்பு வெறுப்பிற்கு இடந்தராது, மனங் கொள் வீர்களென எதிர் பார்க்கிறேன்.
தமது ஊரில் உயர் தமிழ் வித்தியாசாலை நிறுவுதல் : தாமோ தரேந்திரனார் தம் அன்னை பூமியும், தாமும் தம் சகோதரர் அறுவரும் பிறந்து தவழ்ந்து வளர்ந்ததுமாகிய, ஏழாலைப்பதியிலே உயர் தர்மப் பாடசாலை ஒன்றை அமைத்தல் வேண்டும் எனும் பேரவாவின் பேறாக, 1876-ம், ஆண்டு ஆவணித் திங்கள் பத்தாம் நாளில் ஏழாலைச் சைவப் பிரகாச வித்தியாசாலை எனும் பெயரில் ஓர் கல்விக் கூடத்தை நிறுவினார். வேறு எவரின தும் உதவியொத்தாசையை நாடாது தாமே தனிநின்று, அதனைத் தாபித்தமை, செயற்கரிய செயலேயாகும்.
மேற் குறிப்பிட்ட பாடசாலையின் அதிபர் பதவியை, பாலியப் பராயத்திலே தமது தமிழாசானாய் விளங்கியவரும், பெரும் புலவனுமாகிய சுன்னாகம் முருகேச பண்டிதருக்குக் கொடுத்து உதவி ஆசிரியராக சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரை நிய மித்தார். புதிதாகத் தாபிக்கப்பட்ட அப்பாடசாலையில், முதல் வருடத்திலே 100 அயலூர் மாணவர்கள் சேர்ந்து கொண்டனர். அத்தனை மாணாக்கரும், இலக்கண இலக்கியத் தேர்ச்சியை முன்பே கணிசமான அளவு பெற்றிருந்தோரே. உயர் படிப்பு நோக்கி இப்பாடசாலைக்கு வந்து சேர்ந்தவர்கள். அவர்களின் நோக்கம் செவ்வனே நிறைவெய்தியமை, முதலாண்டு நிறைவில், ஆறுமுக நாவலர் அவர்கள் 1876 மார்கழி மாதம் நடத்திய தேர் வறிக்கை மூலமும் முருகேச பண்டிதரினதும், கொக்குவில் சபா

211.
ரத்தின முதலியார், நல்லூர் வித்துவசிரோன்மணி பொன்னம்பல பிள்ளை முதலியோரினதும், ஆண்டறிக்கை மூலமும் காணக் கிடக்கின்றது.
10-8-1876-ல் ஆரம்பமான தினத்தினைக் குறித்து, அதிபர் முருகேச பண்டிதர் இயற்றிய கீழ்வரும் வெண்பாவே, எமக்குக் கிடைக்கக் கூடிய சான்றாகும்.
"தாது வருடக் தனிலா வணி பத்தாக்
தேதி புகர்வாரங் தீபகாள் - ஒதுபுகழ்த் தாமோதரேந்திரனார் தர்மவித்தியாசாலை காமாரம் பஞ்செய்த காள்" --இது பண்டிதரின் கவி.
இக்கவி, அ. குமரரசுவாமிப் புலவர் இயற்றி வெளியிட்டுள்ள (1916) தமிழ்ப் புலவர் சரித்திரம்’ எனும் நூலிற் காணப்படு கிறது.
குமாரசாமிப் புலவர், தாமோதரனாரின் மேற்படி வித்தியா சாலையின் தலைமை ஆசானாக 1877-ஆம் ஆண்டு முதல்ா 1898-ஆம் ஆண்டுவரை நற்பணி புரிந்தவர். பின்னாளிலே, *குமாரசுவாமிப் புலவர்' சரிதம் எழுதிய அன்னாரின் புதல்வன் திரு. கு. முத்துக் குமாரசாமி பி. ஏ. அவர்கள் பதிப்பில் (1970) புகர் வாரம் என்பது "புதவாரம்" எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. *புகர்’ என்பது சுக்கிரனைக் குறிக்குஞ் சொல்; புகர்வாரம் வெள் விரிக்கிழமை ஆகும். புலவர் அவர்கள், ஆரம்பமுதல் முடிவுவரை 22 வருடம் டிைபாடசாலையிற் கற்பித்தவராதலின், அத்தினத்தை மறந்திருக்க நியாயமில்லை. புலவரின் மைந்தன், பிழைபடக் கூறியமை விந்தையே! இப்படிப்பட்ட தவறுகள், கற்றறிந்த வல்லோரிடத்தும் ஏற்படுவதனாலே, பிற்றை நாட்களில், படிப் போரும் ஆய்வு செய்ய முனைவோரும், தேவையற்ற மலைப்புக் ஆகுள்ளாவது இயல்பே.
இன்னும் இவைபோன்ற பல விகற்பங்கள், நம் தாமோதர னார் சரிதத்திலே, புகுந்து கொண்டுள்ளமை புரியும். உதாரண மாக, தாமோதரனாரின் அன்புக்குரிய புலவனாய், அவரின் வேதனம் பெற்றுத் தொடர்ந்து பலவாண்டுகள் பணிபுரிந்தவரான சுன்னைக் குமாரசாமிப் புலவர் அவர்கள், முற்கிழந்த தமிழ்ப் புலவர் சரித்திரம் எனும் தமது நூலில், "இவர் யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி வைரவநாதர் குமாரர்; குலம் வேளாளர் குலம்; சமயம் "சைவம்' என மிகவும் சாதுரியமாகக் குறிப்பிட்டுள்ளார்! புலவ ரோடு முதல் வருடத்தில் ஒன்றித்திருந்து, பின் தமது அதிபர்

Page 110
212.
பதவியை புலவருக்கு இட்டுச் சென்றவராகிய முருகேச பண்டிதர் அவர்கள், தமது 1871-ம் வருடம் புரட்டாதி 24-ஆந் திகதிய பரீட்சை அறிக்கையில், கீழ்வருமாறு குறிப்பிட்டதுமன்றி. இலங்கை நேசன் பத்திரிகைக்கும் அனுப்பியுள்ளனர். "இது, சென்னபட்டினத்தில் பி. ஏ, பி. எல். பட்டம் பெற்று, ஜெனரல் ஐக்கெளண்டன் எனும் உத்தியோகமுடையவராயிருக்கும் மகாறி. றி. சிறி. சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களால், தாபிக்கப் பட்டு, இப்போது ஒரு வருடகாலமாக நடைபெற்று வருகிறது. இவ்வித்தியாசாலையின் முதற் பரீகூைடி, சென்ற வருடத்துச் மார்கழிக் கடைசியில், பூரீலசிறி ஆறுமுக நாவலர் அவர்களாலும், இரண்டாம் பரீகூைடி இந்த மாதம் 2-ஆந் தேதி நம்மாலும், நடத்தப்பட்டன. தமது ஊரிலே, பிரபுவாகிய பிள்ளை அவர்கள், இவ்வித்தியாசாலையைத் தாபித்து நடத்தி வருவதுபோல, அந்தந்த ஊரிலிருக்கும் ஒவ்வொரு பிரபுக்களும் செய்து வருவார்க ளாயின், சைவசமயம் தாழ்ச்சி அடைவதற்கு இடமுண் LITg5LDIt?' '
பிரபுக்களே! இவ்வாறு நீங்களும் செய்தாலென்ன?
தாமோதரேந்திரனார் செய்யுங் தருமமென ஏனிவிர் செய்யாதிருக்கின்றீர்-ஒமகிமை பெற்ற பெரி யோரே! பெரிதோ நுமது பொருள் மற்றவருக் கீந்து வரல். (இலங்கை நேசன் 24-10-1887)
தாமோதரனாரின் சொந்தவூர், ஏழாலையென ஐயந்திரிபற முருகேச பண்டிதர் எடுத்து ஒதியதன் பின்பும், குமாரசுவாமிப் புலவர், தந்தையின் ஜெனன ஊரைக் குறிப்பிடுவதின் உள்நோக்கம் யாதோ அறியேம்! முன்னரே சி. வை. என முதற்பெயரை வைத்துக் கொண்டிருக்கும் தாமோதரனாருக்கு, வக்காலத்து வாங்குவது போலுளது இச்செயல்.
பின்வந்த சரித்திர ஆய்வாளருள்ளும், பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் B, A, D. Ph தமிழிலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெரும்பங்கு" எனும் தமது நூலில் (பக் 221)பிள்ளை அவர்கள்1832 செப்ரெம்பர்12இல் ஏழாலையிற் பிறந்தார்" எனக்காட்டியுள்ளார். முன்னர் பிள்ளை அவர்கள், கிறிஸ்தவராகவே வாழ்ந்தமையும் ஏற்றுக் கொள்ளப் பட்டுளது. குமாரசாமிப் புலவர் அவர்களின் சரிதம் எழுதிய, அவர் மகன் திரு. கு. முத்துக்குமாரசுவாமி தமது நூலின் 17 ஆம் பக்கத்தில், தமது ஏழாலை என்னும் ஊரில், ஓர் சைவப்பிரகாச வித்தியா சாலையைத் தாபித்தனர் எனக் குறிப்பிட்டுள்ளமை நோக்கற்பாலது. அது நிற்க,

213
தாமோதரனாரின் சைவப்பிரகாச வித்தியாசாலை, உயர் தமிழ் இலக்கிய இலக்கணத்தில் பாண்டித்தியம் பெற விழைந் தோரை, நன்கு கவர்ந்த போதிலும், 19 ஆம் நூற்றாண்டின் பிற் கூற்றிலே, ஆங்கில மொழி பேசுவோரும், அதனை அவாவிக் கற்று, அதன் பேறாக அரச கருமத்தில் அமர்ந்து, பெருநிதி திரட்ட விரும்புவோரும், தனித்தமிழ்ப் போதனையை விடுத்து, அயலூர்களிலே மிஷனரி மாராலும், ஒரு சில சுதேச பிரபுக்களாலும், தாபிக்கப்பட்டிருந்த ஆங்கில பாடசாலைகளை நாடிச் சென்றமை இயல்பே ஆகும். இந்தியத் தமிழகத்திலே, ஆசிரியன், நீதிபதி, நியாயவாதி முதலாம் கடமைகளைப் புரிந்ததோடமையாது, ஏடுதேடுதல், நூல்கள் பதிப்பித்தல் ஆதியாம் சிக்கல் மலிந்த கடமைகளை ஆற்றி வந்தார். தம் சொந்தக் குடும்பத்தில் அடிக்கடி ஏற்பட்ட இழப்புகளும், தோல்வி களும் தம்மைப் பெரிதும் வருத்திய காலத்திலே தானும், தமது சொந்த ஊரிலேயுள்ள பாடசாலையை, மேற்பார்வையிடவேனும், தம் உறவினர் ஒருவரை நியமிக்க எண்ணாது காலங்கடக்கவிட்டு வைத்தமை, பெருங்குறையாகவே எண்ணுத் தோன்றும். அப்புக் குட்டி வாத்தியார்" என ஊரவர்களால் அழைக்கப்பட்ட தமது சகோதரன் ஏழாலையிலிருந்த தமது குடும்பச் சொத்துக்களை மரணபரியந்தம் பராமரித்தவர். யாழ்ப்பாணக் கல்லூரிக் கணித ஆசிரியரான அவரையேனும், பாடசாலை மேற்பார்வையாளராக நியமித்திருக்கலாம்.
தென்னிந்தியாவில் தமக்கு நிரம்பிய கடமைகள் இருந்த போதும், வருடம் ஒருமுறை யாழ்ப்பாணம் வருவதும், கீரிமலை யிலே சுகவாசஞ் செய்வதோடு கீரிமலைச் சிவாலய 6peg ஒன்றையும் நிறைவேற்றுதல் கடனாகக் கொண்டவர், அவ்வாறு யாழ்ப்பாணம் வரும்காலத்தே, தமது இயலாமையையும், தேக அசெளகரியத்தையும் கருதி, பாடசாலையைத் தொடர்ந்து நடத்துதற்குத் துணை புரியுமாறு, சிலரை வேண்டிக்கொண்டார் எனவும், எவரும் அவரின் வேண்டு கோட்குச் செவிமடுக்கவில்லை எனவும், பிற்கால எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இக்கூற் றினை முற்று மூழுதாக ஏற்றுக்கொள்வதும் சாலாது.
குறிப்பிட்ட க்ாலகட்டத்தில், எமது கிராமத்தின் நாலா திக்கிலும் திண்ணைப் பள்ளிகள் மட்டுமன்றி, அமெரிக்க மிஷனரி மாரினால் தாபிக்கப்பட்ட பிரதம பாடசாலைகள், வடக்கில் ஒன்றும், தெற்கில் ஒன்றுமாக இரண்டு நடைபெற்றன. கிழக்கிலே, கத்தோலிக்க பாடசாலை ஒன்றும் தாபிக்கப்பட் டிருக்க அயலிலே தெல்லிப்பழை அமெரிக்க மிஷன் ஆங்கில

Page 111
24
தகுமப் பாடசாலையும், நடைபெற்று வந்தது. காலத்துக்கேற்ற? கோலமாக, ஆங்கிலம் கற்றவர்க்கே சகல சிறப்பும், மதிப்பும்" Fமூகத்திலே ஏற்பட்டிருந்தமையால், பிள்ளை அவர்களின் பெரு, முயற்சி குன்றுவதாயிற்று. பிள்ளை அவர்கள், இவ்வுண்மை நிலையைக் கருத்திற் கொண்டு, கல்வியின் நோக்கத்தைச் சீர் செய்திருப்பரேல்- ஆங்கிலத்தோடு, விஞ்ஞான, கணித பூகோள முதலாம் நவீன கற்கை நெறிகளைத் தமது பாடசாலையிற் புகுத்தியிருப்பரேல், அதன் தரம், அவர் கற்றுத் தேறி உயர்நிலை எய்துதற்கு உதவியதாகிய வட்டுக்கோட்டை சர்வசத்திர போதனாபீடத்திற்குச் சமமாக வளர்ச்சி பெற்றிருக்கும் எம்மூர்ச் சிறாரும், கிட்டிய அயலூர்ச் சிறாரும், உயர்வு பெற்று மேம்பட் டிருப்பரன்றோ! உயர் கற்கை வசதிகள் வாய்க்கப் பெறாத துர்ப் பாக்கிய நிலையிலே, எம்மூர் மக்கள் உலகறிய வாழுமளவு உயர் கல்வியில் முந்தி நிற்கின்றார். தமதுாரிலே அப்படியான அடிப்படை வசதிதானும் கிடைக்கப்பெறின், எத்துணை ஏற்றம் பெற்றிருப்பர் என்பது சொல்லவும் வேண்டுமோ?
எம் ஏழாலையலுரின் கண்தோன்றி, உயர் கல்வியும் அதற் குரிய ஆய்வும் பெற்று, உயர்ந்த பதவிகளும் பெற்று நாட்டுக்கு உபகாரிகளாய் வாழ்த்த சிலருள், ஒருவரான கதிரவேலு அருமை நாயகம், தமது பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சிக்கென, தாமோதர னாரின் வாழ்வு சம்பந்தமாக நுணுகிய பல விடயங்களைச் சேக. ரித்து வைத்திருந்தமை அறிவேன். தமதாய்வினை நிலைநிறுத்த, இயலாதவராய் 1983-ன் ஆடி இருளிலே மறைந்துபோன சோக. நிலை நாடறியும்! அடுத்து, தமது கலாநிதித்தேர்வுக்கு முதன்மை ஆராய்ச்சியாக, "யாழ்ப்பாணத்துப் பனை வளம்' பற்றிய அரியூ முடிபு கண்டவரான புவியியற் பேராசிரியர், ஜெயசிங்கம் லூதர் அவர்கள், கணக்கியலிற் பல அரிய கண்டுயிடிப்புகளை உலகுக்கு ஈந்தவரும், பேராதனைப் பல்கலைக் கழகக் குறிஞ்சிக் குமரன்" கோட்டத்தினைக் கட்டுவித்தோருள் முதல்வராய் நின்று ழைத்தவருமான பேராசிரியர் பேரம்பலம்-கனகசபாபதி, நாடகங் கள் பலவற்றை எழுதி, வேண்டியபோது தாமே நடித்தும், கூடவே அரச சேவையில் (D. R. 0.) பெரும்பாக அரசிறை அதிபராக விருந்தும் நாட்டுக்கும் நம் ஊருக்கும் சேவை புரிந்தவரான, *இலங்கையர் கோன்' எனும் நற்புனைபெயர் கொண்டிருந்த நடராஜா-சிவஞான சுந்தரம், எழுத்துத் துறை மன்னனாக ஈழத் திலும், தமிழகத்திலும் ஒப்பற்று விளங்கியவரான சி. வைத்திலிங் கம் போன்ற நமது நற்பிரசைகள் நீங்கிவிட்டனர்.
இன்னமும் கல்வித் தொடர்புள்ள, பலவாறான நற்பணிகளை யும், உலகளாவிய ஆய்வுகளையும் செய்து புகழுடன் வாழும்

2.5
சிலரின் வரலாறு தனித்தனியாகக் குறிப்பிட்டுள்ளோம். இவர் களின் வாழ்க்கைப் பாதையைத் தெரிந்து, வருங்காலத்தில், மென்மேலும் பல்லோர் நம்மூரில் வளர்ந்து பலன் பெறவேண்டு: மெனும் பேரவாவின் உந்துதலே அடியேனது இச்சிறு படைப் பாகும். படைப்பவர் யாரெனுங் கேள்வி, சமூக வளர்ச்சி நோக்கு, வோர் மனதில் எழுவதில்லை. படைப்பின் தன்மையும், அதன் சீரிய கருத்துமே, நல்லோர் மனங்கொள்ளற் பாலதாகும்.
இறுதிச் சாதனம் தாமோதரேந்திரனாரின் இச்சிறு சரிதை யின் இறுதிப் பாகத்திலே, பிரச்சினைக்குரியதும் அவரால் எழுதி வைக்கப் பட்டதுமான, உறுதி சாதனத்திற் கண்ட விடயங்களை யும், அதன் பெறுபேறுகளையும், குறிப்பிடாதிருத்தல் நியாயமல்ல என நினைந்து, அதன் தாற்பரியத்தைச் சுருக்கமாகத் தருகிறேன்.
வசன சூளாமணியை முடித்த பின்பு, அகநானூறு எனும் தொகை நூலைப் பரிசோதித்துக் கொண்டிருக்குங்கால், அவரின் உடனலம் மிகவும் குன்றிக்கொண்டே வந்தமையால், எவ்வேலை யையும் செய்ய முடியாதவராயும், கண்பார்வை குன்றியமையால், இராக்காலத்தில் வாசிக்கவே முடியாதவராகவும் அல்லற்பட்டார். தமது அந்திய காலம் நெருங்கிவிட்டமையை, ஒர்ந்துணர்ந்து கொண்டமையால், தமது ஆஸ்தியையிட்டுத் தம் குடும்பத்தார் மத்தியில், பிற்காலத்தே பூசல் ஏற்படாது தவிர்க்கு முகத்தான் * "மரண சாதனம்' ஒன்றை எழுதிவைக்கத் தீர்மானித்தனர்.
அவரெழுதிய சாதனத்தின் தாற்பரியத்தை, அவரோடு சிறு: வயது முதல் ஒன்றி உறவாடியவரும், மனைவியர் வழி உறவினரு மாகிய, தெ. அ. இராசரத்தினம் பிள்ளை எழுதி வெளியிட்ட *ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் சரித்திரம்" எனும் (முதற்பதிப்பு) நூலின் கண் (93ஆம் 94ஆம் பக்கங்களில்ர் கண்டபடி தருகின்றேன். மேற்படி சாசனம் அவர் தாபித்த ஏழாலைச் சைவப்பிரகாச வித்தியாலயம் நலிவுற்றிருந்த காலத்தே எழுதப்பட்டதென்பது புலனாகிறது. அச்சாதனத்திற் கண்டவை:
1. நான் அணிந்திருக்கும் சிவலிங்கம் உருத்திராக்கம் முதலி?
யன, எனது ஞானகுருவுக்குச் சேரவேண்டியது.
2. எனது இரண்டாவது தாரத்து மகனாகிய அழகசுந்தரன், கிறிஸ்தவனாக விருப்பதனால், எனது ஆஸ்தியில், எதுவுமே அவனுக்குச் சேராதிருக்கக் கடவது. (யாழ்மாவட்ட சபையாரால் மறுபதிப்புச் செய்யப்பட்ட நூலில்

Page 112
216
இப்பகுதி தவிர்க்கப்பட்டுளது. “அவன் கல்விகற்று உத்தி யோகத்தில் அமர்ந்திருப்பதால் எனப்படுகிறது. 3. எனது மூன்றாவது மனைவியின் புதல்வர் இருவரும், இந்தியச் சர்வகலாசாலை ஒன்றில் பீ. ஏ. சித்தியடைந்து. தக்க வயதில் விவாகஞ் செய்த பின்பே, ஆஸ்தியில் பங்கு பெறுந்தகுதி பெறுபவராவர். இந்நிபந்தனையில் யாதே னும் ஒன்றிலேனும் தவறுவாராயின், அவர்கள் தம் ஆஸ்திக்கு அருகராகார் என்றும், அவ்வாறு அவர்கள் ஆஸ்தியை அடையாத காலத்து, அவ்வாஸ்தியைக் கொண்டு, இலங்கா தீவின்கண் செந்தமிழ்ப் பரிபாலனத் தின் பொருட்டு, ஓர் கலாசாலை நாட்டும் வண்ணம் இராசாங்கத்திடம் ஒப்புவித்தல் வேண்டும். 4. எனது புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் ஏலத்தில் விற்கப்பட்டு எனது ஆஸ்தியுடன் சேர்க்கப்படல் வேண்டும். 5. எமது ஏட்டுப்பிரதி கைப்பிரதிகள், திருவாலங்காட்டிலுள்ள இந்தமிழ்ப் பரிபாலன மடத்தாரிடம் ஒப்புவிக்கப் படல் வேண்டும்.
மேற்காட்டிய மரண சாதனத்தை முறைப்படி ஒழுங்கு படுத்து தற்கும், காரியப்படுத்துதற்கும், தமது நண்பர்களான மூவரை நியமித்திருந்தார்.
ஒருவர் அவரது பள்ளிப் பருவமுதல் இணைபிரியாத தோழரா விருந்தவரும், தாமோதனாரின் சென்னை வாசஸ்தலத்து எதிர் ல் வசித்தவருமான திரு. சிந்தாமணி வேலுப்பிள்ளை என்பவர். அவரே சாதனத்தின் நிறைவேற்று உரிமை பெற்றவர். வேலுப்பிள்ளை உபாத்தியாயரின் மகன்.
மற்றிருவர், பூரீ ஐயாசாமி முதலியாரும், பூரீ எஸ் தியாக ராஜ ஐயர் என்பவருமாவர். எக்காரணங் கொண்டோ, பிற் காட்டிய இருவரும், குழுவிலிருந்து விலகிவிட, சிந்தாமணி. வேலுப்பிள்ளை மட்டும் தம்மிடை நிலவிய நட்புக்குப் பங்கமின்றி முதிர் வயதிலும் கருமம் ஆற்றி வந்தனர். எனினும் பிள்ளை அவர்களின் ஆஸ்திக்கு யாது நிகழ்ந்ததோ வென்பது அறிய
வியலாத புதிராகவேயுள்ளது.
குறிப்பிட்ட இறுதிச் சாதனம், நடுநின்று நோக்குவார்க்கு பற்பல சிந்தனைகளை ஏற்படுத்தக் கூடிய தன்மையது. எனினும், தமிழ் வளர்த்த தாமோதரன், பதிப்பாசிரியர் தாமோதரம்பிள்ளை, ஏடுகாத்த வள்ளல் வித்தியாசாகரம், ஆசிய தேசத்தின் முதலா

ags
217
கலைமாணி எனப்போற்றப்பட்டவரும், நியாயவாதி,
நியாயாதிபதி, ஆகவிருந்து நடு நீதி வழங்கியவருமான மகானின், குறைகளை எடுத்தியம்பும் துணிபு இன்மையால், முன் குறிப் பிட்டவரான நூலாசிரியரின் கருத் தினையே எவ்வித மாற்றமு மின்றி, படிப்போர்க்குச் சமர்ப்பிக்கின்றேன்.
1.
தமது சந்ததியின் பெயரைத் தாங்கு தற்குத் தமது சிரேட்ட குமாரன் அமிர்த்லிங்கத்தின் உதரக் கனியாயுதித்த புத்திரன் ஒருவன் (அ. தியாகராஜன்) இருப்பவும், தாமி யற்றிய மரண சாசனத்தில் அச்சிறுவனுக்கு தமது ஆஸ்தி யில் யாதொரு பாகமுங் காட்டாது விடுத்தது, அவர் மாட் டுள்ள பெருங்களங்கமேயாகும். பிள்ளை அவர்கள் அதற்கு யாது காரணங் கற்பிக்க விருந்தாரோ யாமறியேம். அது யாதாயிருப்பினும், அச்சிறுவன், பிள்ளை அவர்கட்கு யாது தீங்கும் இழைத்திலனாகவே, அச்செய்கை மிகக் கொடி தென்றே வற்புறுத்துவாம்.
சிறந்த தமிழ் வித்துவான் எனப் பெயரெடுத்த அவர், தமது புத்தகம் முதலியன ஏலத்தில் விற்கப்பட்டு, தமது ஆஸ்தி யுடன் சேர வேண்டுமெனக் குறிப்பிட்டதன் சாதுரியம் என்னோ அறியேம்.
இதுபோன்ற அநேக நவீன விஷயங்கள் அவரியற்றிய சாசனத்துட் பொதிந்து கிடக்கின்றன.
தமது சிரேட்ட புத்திரர் குமாரனும், தமது பெளத்திரனு மான தியாகராஜனையும், இரண்டாவது தாரத்து மகன் அழகசுந்தரனையும், அவர்களின் நியாயமான சுதந்திரத் தினின்றும் நீக்கத் துணிந்த அவர், தமது ஆஸ்தியின் பெருரும்பாகத்தைத் தம்மால் ஸ்தாபிக்கப்பட்டு தகூடிணமே இறக்குந் தறுவாயிலிருக்கும் ஏழாலைச் சைவப் பிரகாச வித்தியா சாலைக்கேனும், வேறு தரும விஷயங்களுக் கேணும் விட்டிருத்தல் நலமாயிருக்கும். புத்தகத் தொகுதி கொண்டு ஒரு புத்தக சாலை நிறுவ ஏற்பாடு செய்திருப் பின் மிக்க பிரயோசனமாகவிருக்கும்.
பிள்ளை அவர்களியற்றிய சாசனத்தை, நடுவு நிலை குன்றாது நோக்குழி, அவர் அதன் கண் செய்தன யாவும், மிக்க தவறென்றே புலப்படும். ஆயினும் அவற்றை யாம் குற்றமாக் கொள்ளோம். என்பதாகும்.
14

Page 113
218.
எமது நோக்கு :- "தாமோதரனுக்கு யாரோ தரம்" எனும் புகழுடன் தமிழ்த் தொண்டும், கல்விப்பணியும் புரிந்து உலகம் ஏத்தப் பெருவாழ்வு வாழ்ந்த பெருவள்ளல், தமது வாழ்வின் பிற் கூடிநிலே நடந்துகொண்ட விதம், பெரும் புதிராகவே அமைந் துள்ளமை நோக்கற் பாலதாகும். பிரதானமானதும், தம் சொந்த ஊரிலே, மற்றெவரின் தூண்டுதலையோ, வேண்டுதலையோ அன்றிப் பொருளுதவியையோ நாடாது, தனி ஒருவராக அமைத்து நடத்திய உயர் பாடசாலையை மூடத்துணிந்தமை, ஏழாலை மக் கட்டு ஈடுசெய்ய இயலாத இழப்பேயென்பதில் மறுதலை இல்லை. பல்லாயிரம் மைல் தொலைவிலிருந்து தம்மதம் பரப்பவென நம் நாட்டிற் கால் கொண்டவரான, அமெரிக்க பாதிரிமாரின் சேவையை அடியொற்றி. அன்னவர் தம் பள்ளிகளிலே பயின்று, மேம்பட்ட உயர் பதவியும். அடைந்த தாமோதரனார், தமது தாய் மண்ணிலே ஓர் உயர் தமிழ்க் கலாசாலையை நிறுவியமை, யைத் தெய்வ வழிகாட்டல் எனவே துணியலாம். எனினும், தனி மரம் தோப்பாகாது' எனும் பாங்காக அத்தாபனத்தை, கடல் கடந்து வாழ்ந்த காலத்தேயும் தாமே ஏக முதல்வராக நடப்பித் தமையினால் இடர்ப்பட்டமை, மனங்கோளற் பாலதாகும்.
யாழ்ப்பாணத்திலே, அன்னாரின் பந்துக்களும் மித்திரரு மாய்த் தகுந்த பலர் இருந்த போதினும், அவருள் எவரையேனும் துணைக் கொண்டாரில்லை உடன் பிறப்புகளான ஒரிருவரின் ஒத்தாசையையேனும் பெற்றிருப்பின் தளர்ப்பம் இல்லாது, எப்படியோ அப்பாடசாலை இயங்கி, எமதுரரும் அயலூரும் பொது, வில் எம் தமிழினமே மேம்பட்ட கல்வியறிவைப் பெற்றுய்ய வழி பிறந்திருக்கும்.
கீரிமலையில், தம் பிழவை நோய்க்குப் பரிகாரஞ் செழ்விக் கவும், கோயிற் பூஜைக்காகவும் தங்கிலருந்த காலத்திலே, தம் ஊருக்கு வந்து, அங்கு வாழ்ந்த பெருமக்கள் சிலரேடாவது, தமது இயலாமையைக் கூறி அவர்களின் ஒத்தாசையைப் பெற்றிருத்தல் சாத்தியம். அவ்வாறு செய்யாது, தம் பரடசாலையில் மாதம் பத்தோ பதினைந்தோ ரூபாய்களைச் சம்பளமாகப் பெற்றவரான குமாரசுவாமிப் புலவர் ஒருவரின் துணையையே நம்பியிருந்தமை தவறென்றே கூறுவோம்.
அயல் ஊர்களிலே நவீன சாஸ்திரங்கள் பயிற்றும் கல்விக் கூடங்கள் நடத்தப்பட்ட அன்றைய காலகட்டத்திலே, தனித் தமிழ் இலக்கிய இலக்கணங்களை மட்டும் போதிக்கக் கூடிய ஒரே மனிதரின் துணையை நம்பியிருக்காது, அக்காலத்தில் யாழ்ப் எனக் கல்லூரியில் கணிதப் பேராசாயிருந்த தம் தம்பியாகிய

219
திரு. E.A. கிங்ஸ்பெரியின் உதவியை நாடிப் பெற்றிருந்தாற்கூட மக்கள் தம் பிள்ளைகளை இப்பள்ளிக்கு அனுப்பியுதவியிருப்பர்.
கவர்ச்சிகரமான புதுவித பாடத்திட்டம், நிர்வாக ஒழுங்கு களை நடைமுறைப்படுத்தியபின் வித்தியா பகுதியாரின் உதவி நன்கொடையைக் கோரிப் பெற்று முட்டியின்றி நடத்தி யிருக்கலாம்.
இந்தியாவில் தாம் ஏற்று நடத்திய நூற்பதிப்பு வேலைகட்குப் பெருந்திரவியம் தேடும் பொருட்டு, பத்திரிகைகள், நண்பர்கள் மூலம் வேண்டுகோள் விடுத்து வந்தமையால், ஏழாலைப் பாட சாலைக்காகக் கையேந்தும் நீலையைத் தவிர்தமை நியாயமே. ஆயினும், எம் ஊரிலேயிருந்த பெரியார்களிடம் மாதம் ஒரு ரூபாய் வீதம் பெற்றிருந்தாலும், பெருந்தொகை சேர்ந்திருக்கும், அவ்வாறு செய்வதற்கு, பிரபுவாய் வாழ்ந்த அவர் மனம் ஒருப் படாமற் போனது விந்தையன்று! கீரிமலையை விட்டுக் கீழிறங்கி, தெற்கே நடக்க விரும்பவில்லைப் போலும் அவர்.
பாடசாலையை 1897ல் மூடுவத தெனத் தீர்மானித்தற்கு முன்னோ அன்றிச் சற்றுப் பிந்தியோ, தாம் சேகரித்து வைத் திருந்த அரிய பெரிய நூல்களையும், கைப்பிரதிகளையுங்கொண்டு, அவ்விடத்தில் நூல் நிலைய மொன்றைத் தாபித்திருப்பரேல், நம் மூரும், நந்தமிழினமும் பூமியுள்ளவரை அவரை ஏத்திப் போற்றிப் புகழும். அதனையுஞ் செய்யாராய், விலைமதிப்பு அற்ற தம் அரிய நூல்களை இந்தியாவிலுள்ள "திருவாலங்காட்டுச் செந்தமிழ்ப் பரிபாலன' மடத்தாரிடம் ஒப்புவிக்கப் படவேண்டுமென்றும் பணித் துள்ளார்.
மொத்தத்தில் காய்தல் உவத்தல் இன்றி, நடுநின்று நோக் குங்கால், பிள்ளை அவர்களின் மனநிலையிலே, யாதேனும் சிக்கல் நிறைந்த தாழ்நிலை ஏற்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறன்று எனின், குடும்பத்திலே ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்ட உயிரிழப் :புக்களும், தமது நோயின் தாக்கமும் அவரை இவ்வாறு நிலை குலைய வைத்த தென்போமா?
எவ்வாறாயினும் அன்னாரின் இறுதி அத்தியாயம், இத்துடன் முடிகின்றது. ஏழாலை மக்களும், ஏன்? ஈழப் பெரும் பரப்பிலே வாழும் சகல மக்களும் கொண்ட தவக்குறையே, அவரின் மர்மம் நிறைந்த கடைக்கூற்று நடபடிக்கைகளுக்கும், மேற்காட்டிய இறுதிச் சாசத்துக்கும் வழிகோலின என உன்னி அமைதி உறுவோ ao aras!

Page 114
நிறைவாகச் சில வார்த்தைகள்
என் அன்பு வாசகர்களே!
இந்நூலை நான் எழுத நேர்ந்த பின்னணியை ஆரம்பத் திலேயே கூறியுள்ளேன். எனினும், அகப்புறக் காரணிகளால், மனதறிந்தே தவிர்க்கப்பட்டுப்போன சில கருத்துக்களை, முடி வுரையாகத தர விழைகின்றேன்.
ஈழத் தமிழினத்தை அடிமை கொண்டாண்ட ஐரோப்பியரும், மற்றுஞ சுதேகளும, யாழபபாணப் பகுதியின் எல்லைகள், ஊரின் பெயர்கள் போனறவற்றைத் தம் மமை போன போக்கில் திரித்து விட்டனர். உதாரணததுககு, பெரிய புலம் என்பது மானிப்பாய் எனவும் மயியிண, சுன்னாகம் எனவும், ஊர்ககாவற்றுறை, ஊறாத்துறை எனவும் திரிந்தமையைக கொள்ளலாம். (அவை தொட்ர் கதையாகிக் கொண்டிருப்பது வேறு.)
எமது ஊரிலேயுங்கூட, சூராவத்தை, உந்துவத்தை, பள்ளஞ் சீமா, தமயுவததை, குலவததை, மச்சப பளள, மூடoடால்லை, புள்ளாவோடை, உநதுடுவை குருமபயிட்டி, முதலாய குறிச்சிப் பெயர்கள், அவ்வாறு தாந்து, வழக்கிலருப்பதனை நோககலாம்.
எனினும், "ஏழாலை’ எனும் கிராமத்தின் பெயரை மாற்றி, தம்மதப்படுதத எவரும் முனைந்தாரல்லா. பெயரிலே நடு நாயக மாய நற்கும ழா’ எனும் அட்சரமே மாற்ற இயலாது போன மைகசூக காரணம். தம்ழ் மொழிககே பெருமை தரும் தனித்துவ மான ழகர உச்சரிபபு, நம்மவாகளுககே இடறும்போது, அனனி. யர்கள உச்சரிப்பு, நச்சரிப்பாயிருககாதா
ஊர்ப்பெயர் மாற்றத்தை அன்னிய இனம் மதம் சார்ந்தோர்" செய்திருந்தால் நாம பொருட்படுத்தத தேவையில்ல்ை, நம் கிராமதது ஆலயந் தழுவிய புனத நாமததை, நம்மவரே தம்மனம் போன போகக் லே சதைக்கத் துணயும் அடாத செயலை மண் பாசங் கொண்ட எவருமே, சகிக்க இயலாது.
'ஏழாலை" எனவே, பண்டு தொட்டு வழக்கில் இருக்கும். பெயரை. “எங்களூர் ஏழாலையலுர்’ என ஆணிததரமாக எழுதி யதன் காரணம், வேறு எங்காவது, ஏரலை, ஏராலை எனும் ஊர்கள் இருக்கலாம்; எமது ஊரே ய , **ஏழாலைய ஊர்' ' தான். என்பதைத தெரிவிப்பதே. இதில் மறு கருத்துக்கு இடமில்லை.
1983ஆம் வருடம், இலங்கை அரசு, தாமோதரனாரின் சேவையைக் கவுரவிக்கும் முகமாக ஞாபக முத்திரை ஒன்றை, வெளியிட்டது. அந்நிகழவு நினைவாக யரழ் வளாகத் தமிழ் கலா சாரப் பகுதியார், அன்னாரின் சரிதையை நூல் வடிவில் வெளி: யிட்டனர்.
அந்நூலின்கண், தாமோதரனாரின் தந்தையாகிய வைரவ நாதர், வட்டு யாழ்ப்பாணக் கல்லூரியில், கணித ஆசானாகவும், பண்டத்தரிப்பு அ.மி. பாடசாலையிற் தலைமை ஆகிரியராகவும்: சேவை செய்தவர். எனக் குறிப்பிடப்பட்டுளது. இக்கூற்றின்

22.
இறுதிப்பகுதி, தள்ளமுடியாதது. அவர் தமது (இருமரபுந்துய்ய” எனக்குறிப்பிடப்பட்ட) மரபுவழிக் கல்வி அறிவு கொண்டு, ஒரு சிறு பாடசாலையை நிர்வகிக்கக் கூடிய தகைமை பெற்றிருந்: தார். முதலாவது கூற்றோ, வெறும் ஊகத்தால் ஏற்பட்ட தவறு
எனலாம். எவ்வாறெறின் யாழ்ப்பாணக் கல்லூரி, 1b 2ல்
தாபிதமானது. ஸைரஸ்-வைரவநாதரோ 22-2-1059ல் மறுபை
எய்திவிட்டவர்.
இல்லாதவோர் ஊருக்கு, செல்லாத ஒரு வழியைக் காட்டுவது போலுள்ளது மேற்படி கூற்று, வைரவநாதரின் 3வது மகன் எட்வேட் அப்புக்குட்டி கிங்ஸ்பெரி, யாழ்ப்பாணக் கல்லூரியின் கணித ஆசானாயிருந்தமை உண்மையே. கிங்ஸ்பெரி எனும் மரபுப் பெயர்தான், இம்மயக்கத்துக்குக் காரணம் என எண்ணுகின்றேன். மைத்தனின் பெயர் தந்தைமேற்சார்த்தி அறியப்பட்டுளது.
தந்தையும் 7 பிள்ளைகளும் "கிங்ஸ்பெரி' எனும் மரபுப் பெயரில் நிலை பெற்றிருந்தமை நூல் எழுதியோருக்கும் தெரிந் திருந்தமை புலனாகிறது. ر
இன்னும் ஓர் செயற்பாட்டினைச் சுட்டுவது எனது கடனாகும். அந்நியர் ஆட்சிக் காலத்திலே ஒன்றேயாக, ஒரே நிர்வாகியின் பரிபாலனத்துட்பட்டிருந்த ஊர், தன்னாட்சி உதயமானபின்பு, ஏழு கிராம சேவை அதிகாரிகள் பிரிவாக்கப்பட்டு, அவ்வவற்று குப் புதிதாக எல்லையும் நிர்ணயிக்கப்பட்டது குடிசனப் பெருக்கமும், குடிசார் பணிகளின் பரிமாணமும், ஒருசேர வளர்ந்து. வந்த நிலையில், அச்செயல் சட்ட சம்மதமானதே.
ஆயினும், காலகதியில் ஒவ்வொரு கிராம சேவை உத்தியோ" கத்தர் பிரிவும், தமக்கெனப் புதிய கிராமோதயம் செய்வதற்கு. முயலுமாயின் - சிலவேளை அது சாத்தியப்படுமாயின் - எமது ஏழாலையின் மகிமையும், தொன்மையும் என்னவாகும்?
முன்னர்த் திட்டமிட்ட பிரகாரம், எனது உள்ளக் கிடக்கையை" நேயரோடு பகிர்ந்து கொள்ள இயலாத நிலையிலே, எனக்குப் பல்லாற்றானும் நல்லாலோசனையும், உந்து சக்தியும் தந்து உதவிய மித்திரருக்கு, உளம் நிறைந்த நன்றியை நவில்வதோடு ' நிறைவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.
பல வருடங்கள் முயன்று இயன்றளவு ஆதாரங்களை ஒன்று படுத்தி, மனோதிடத்தோடிருந்த போதினும், எமது அன்னை பூமியின் அவலங்களினால், எனது மனம் மழுங்கி, அமிழ்ந்தே போயிருந்தது 1992-ம், வருடம் தலைநகரிலே தங்கியிருந்த காலத்தில், அமைதியின்றி அலைந்து திரிந்த என்னை, நித்திலச் செல்வன், நிமிலதேவா எனும் எனது இரு புத்திரர்களும் நச்சரிக் கத் தலைப்பட்டனர். 'சும்மா கோட்டைக்கும் வெள்ளவத்தைக் கும் என அலைந்து திரியாமல், தரித்திருந்து ஏதும் எழுதுங்கப்பா' என்ற அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று, விட்ட குறையைத் தொடரலானேன்.

Page 115
222
மீண்டும் ஜன்மபூமி திரும்பி, வட்டுக்கோட்டை யாழ்ப் பாணக் கல்லூரியின், பழமை வாய்ந்த நூல்நிலையம், தென் னிந்திய ஆக்கிய யாழ் மறைமாவட்டத்தின் (அத்தியட்சாதீனம்) சுவடிப் பாதுகாப்பு இல்லம், உதயதாரகையின் பழைய பதிப்புகள் போன்றவற்றை ஆராயும் வாய்ப்பும் கிடைத்தது. அவற்றுட் பல வெள்யாரினால் தீண்டத்தகாத புனிதத்தன்மையும், இரகசியக் காப்புத்தன்மையும் வாய்ந்தவை, என்பதனை அறிவேன்.
தீெய்லு அருள் கிட்டினாற் போன்று, அக்காலகட்டத்தில், அத்திய்ட்ச்ாதிரத்தின் கெளரவ செயலாளராகப் பணிபுரிந்தவர். எனது பேரன்ரிக்கும் அபிமானத்துக்கும் பாத்திராய் பழைய மாணவர், வன. அன்ரனி-அரியரத்தினம் போல் (Rev. Antony Ariafatnafis. Poul B.So.M. Phil, Dip in Ed. B. D.) ST6IT &G வேண்டிய சகல ஒத்தர்சைகள்ையும் நன்றே செய்துதவினார். அவர் இப்புத்தகத்தின் ஆவணஞ் சான்ற முடிபுகளுக்குப் பேருபகாரியாய் நின்றமை, டிறத்தற்பாலதன்று. அவருக்குப் பக்கத்துணையாய் உதவியவர், உதயூதாரகை ஏட்டின் முகாமையை ஏற்றுள்ளவரும், எனது மருகருழான் திரு. வி. மித்திர ரஞ்சன் ஆவார்.
மூன்றாமவர் ஆதீனத்தின் இன்றைய செயலாளரான வண. ஜெயக்குமார்-அவர்கள், அவரும் பழைய மாணவரே.
மிஷனரிமாரின் கல்விக் கொள்கை சம்பந்தமான நூல்களை, தாமே உணர்ந்து உவந்தளித்தவர், வண. எஸ். சி. ஆணல்ட் எனும் எனது அன்புக்குரிய மாணவர். ஏழாலையிலேயே மணம் முடித்தவர். இவர் 'பாவலர் சரித்திர தீபிகை' எழுதிய, ஆணல்ட் சதாசிவம் பிள்ளையின் 4 ஆந் தலை முறையினர்.
சைவப்பிரசாரகர் சீவ. சண்முக வடிவேல், பிரம்மசிறி, சிவ சரவணபவான் (சிற்பி), இளவாலை மெய்கண்டான் அதிபர். சைவப்புலவர் சி. செல்லத்துரை என்போர், யாழ் சரிதங் கூறும் நூல்களைத் தந்து உதவினர்.
மானிப்பாய் மெமோறியல் அதிபரும் எனது அருமை மாண வனுமாகிய அ.மு. அருணாசலம், நூல் நிலையத்திலிருந்து சில நூல்களைத் தந்து தவினார். AMW
முன்னை நாள் உதவிக்கல்வி பணிப்பாளரும், எனக்கு அன்பரு மான திரு. கா. சேர்மசுந்தரம் 8. A. யூனியன் கல்லூரி அதிபர் திரு. நா. கந்தசாமி ஷே கல்லூரியினின்று ஓய்வு பெற்றவரும், எற்றும் என் உடன் பிறப்பாய், உறுதுணை புரிபவரான திரு. வ. பொன்னுச்சாமியும், திரு. இ. பேரின்ப நாயகமும், உந்து சக்தி யாய் நின்றமை போற்றத் தகும்.
ஆசிரியை செல்லம்மாள் எனும், எனது இனிய நல்லாளின் உதவிவும், ஒத்துழைப்பும் இல்லாதிருப்பின், என் எண்ணங்கள் காரியசாத்தியமாகி இருக்க முடியாது. எமது புண்ணிய பூமியின் தற்கால நிலையில் "வெளிச்சமே தராத "சிக்கன விளக்கின்'" அரைகுறை வெளிச்சத்தில், எனது கிறுக்கல்களை இனங்கண்டு, அவற்றை இன்றைய தமிழ்ச் சீர்திருத்த எழுத்துக்களில் வடித்து, பலமுறை படியெடுத்து, சிக்கல். நிறைந்த இப்பணியினை மிக்க

223
ர்வத்துடன் நிை செய்து பல்லாற்றானும் உதவியுள்ள 霹臀 அவர், எனது நூல், அமெரிக்க ரான கிறிஸ்தவ பாதிரிமாருக்கு வக்காலத்து வாங்குவது 臀 இருப்பதாகச் சுட்டிக் காட்டியதுடன், அது இந்துக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தக் கூடும் என்று என்னிடம் அடிககடி கூறினார். ஏசுவதும், புறங்கூறுவதும் மனித இயல்பு 器 அநுபவ வாயிலாய் அறிந்து அவ கூறியது மெய்யாகவே ருப னும், அதனை என்னால் தவிர்க்க முடியவில்லை. சிலருக்கு, காண்பதெல்லாம் மஞ்சளாகவே தெரிந்தால், நானென்ன SFDB
முடியும்?
\ حمید நித்தில்ச் செல்வன்
சைவப் பெரியார் மு. ஞானப்பிரகாசம் அவர்கள் என்றுமே என் மரியாதைக்குரியவர்கள். அவர் தக்க ஆலோசனையும் சியுரையும் வழங்கிக் கெளரவித்து, இந்நூல் வெளிவரத் தூண்டு காலாக இருந்தார். அன்னாரது ஆசியுரை, என் ப்ாரியாரின் ஆசங்கையை நீக்கும் என்பதே என் துணிபு. சைவப் பெரியபோன்ற பூரண மனிதம் என் உண்மை நிலையை அளந்தால், அதுவே போதும்!
அன்பர்கள், திரு.க. அருட்சோதி (விமான நிலைய முகாமை யாளர்-கட்டு நாயக்க), திரு.வே. கனகசபாபதி (ஏரிக்கரைப் பத்திரிகை நிறுவன நிதி நிலை இயக்குநர்) ஆகிய அன்பர்கள், இறுதி ஆசியுடன் வழியனுப்பி வைத்தம்ையை என்றும் மறவேன்.
என் கையெழுத்துப் பிரதியோடு, யாழ்ப்பாணம் சர்வகலா சாலை வரலாற்றுத் துறைத் தலைவர், பேராசிரியர் சி. க. சிற்றம் பலம் அவர்களை நாடிச் சென்றபோது, அவர் மிக்க பரிவேடு உரையாடி உற்சாகப்படுத்தியமை, என் நெஞ்சைத் தொட்டது. என் கையெழுத்துப் பிரதியைக் கருத்தூன்றிப் படித்தறிந்து, இத் தினச்சுருக்கமான அணிந்துரையை இந்நூலுக்கு அளித்தமையை, நான் மிகப் பெருமையாகக் கருதுகிறேன். "இந்நூலை விமர்சிப் போர் ஆசிரியரின் நிலையில் நின்றே விமாசித்தல் வேண்டும்? என பேராசிரியர் கூறியிருப்பது, இந்நூலின் விமர்சகர் கவனத்தைக்

Page 116
224
கவரத் தவறாது என்பது என் ஆழ்ந்த நம்பிக்கை, கருத்து வேறு யாடுகள் தோன்றுவது இயல்பு. எனது துணிவே முடிந்தமுடிபென *வாதிடும்பான்மை, எனக்கு இன்மையால், கண்ட குறைகளை, காரிய காரணத் தொடர்பு பிறழாது, எனக்கு உணர்த்தும் அறிவ றிந்தோர் கொள்கையை, மனமுவந்து ஏற்றுக் கொள்வேன்.
நிமலதேவா
இத்தகையோர் தந்தஉணர்வு பூர்வமான உற்சாகத்தின் விளைவாக, உருவான என் கையெழுத்துப் பிரதிகளைச் சரி : பார்த்து தக்க ஆலோசனைகள் தேவசுதன் கூறி அதனை அழகிய நூலுரு வில் பதிப்பித்துக் கொடுத்த என் இனிய நண்பர் எஸ். எம். கார்மேகம் அவர்களின் அரிய பணிகள், எனக்குப் பல புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தி உள்ளன. s
கொழும்பில் வீரகேசரி நாளிதழில் 25 ஆண்டுகள் செய்திப் பகுதியில் பல்வேறு பொறுப்புகளைத் தாங்கி, பணிபுரிந்த அவர், சென்னையில் 'தினமணி " நாளேட்டின் செய்தித்துறை ஆசிரிய ராகவுள்ளார். அவருக்கு உள்ள பல்வேறு பிரச்சினைகள், நேர நெருக்கடிகளின் மத்தியில் அவர் இந்நூலினைச் செப்பனிட்டு வடித்துத்தந்தம்ை என் வாழ்நாளில் மறக்கவொண்ணாத காரியம். அவருக்கு வெறுமனே நன்றி என்று கூறினால் மட்டும் போதாது எனினும் என் நெஞ்சார்ந்த நன்றி உணர்வினை கார்மேகம் அவர் களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். ;
தமிழ் கூறும் நல்லுலகம் இம்முயற்சிதனை வரவேற்று ஆதரிக்கும் என்பது என் மனப்பூர்வமான நம்பிக்கை.
(முற்றும்)
 
 


Page 117


Page 118
துறையி கொள்ளு பள்ளியி கிய இ6 கிலப்
சென்.
மகாஜன் தலைை ܗܝ
19883ä | 1 ܩ
எங்களூர் ஏழாலயவுர் புத்தகம் முயற்சி. ஆனால் இந்நூல் ஒரு கன்ன தெரிந்த தகவல்களுக்கு புதிய பரிமா தகவல்களையும் இதில் ஆசிரியர் த
அவரது அனுபவ முதிர்ச்சியின் அமைந்துள்ளது. அவரது ஆழ்ந்த கொடுத்துள்ளது.
சொந்த ஊர் ஏழாலையின் ெ பல்துறை அறிஞர் பெருமக்களை, சேவைகளை இந்நூலில் ஆசிரியர் : குறிப்பாக, சி.வை.தாமோதரன சில தகவல்கள் தவறானவை என ஆதாரங்களுடன் ஆசிரியர் நேர் செ பால் அவர் கொண்டுள்ள ஆழ்ந்த
அவரவர்தம் சொந்த ஊர் வரல வேண்டும் என்பது நூலாசிரியரது ே நல்ல முறையில் நியாயப்படுத்தி உ
இந்நூலைப் போன்று அவர் படி இளம்தலைமுறை அதனால் பெரும்
ܬܸܠ
 
 

ஏழாலயனுழர் நூலாசிரியர் வதாசன் க.முத்துச்சாமி கல்வித் ல் நீண்டகாலம் பணிபுரிந்தவர். நப்பிட்டி சென், தோமஸ் துவக்கப் ல் தமது ஆசிரியர் பணியை துவக் வர், மாளிப்பாய் மெமோரியல் ஆங் பாடசாலை, கொழும்பு கதீட்ரல், லூசியாஸ் மற்றும் ஏழாலை சைவ ா ஆகிய பாடசாலைகளில் ஆசிரியர், ம ஆசிரியர், அதிபர் பணிபுரிந்து
ஒய்வு பெற்றவ்ர். எழுத்துத் துறையில் அவரது முதல் | ரி முயற்சி போலத் தோன்றவில்லை. ாணங்களையும், தெரியாத பல அரிய சுந்துள்ளார்.
சிறந்த வெளிப்பாடாக இந்நூல் தமிழ்ப்புலமை அவருக்குக் கை
பருமைகளை, அதன் சிறப்புக்குரிய அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சிறந்த விவரித்துள்ளார்.
ார் பற்றி ஏற்கெனவே அச்சில் வந்த ாச் சுட்டிக்காட்டி அவற்றை தக்க ப்திருப்பது, அந்த தமிழ்ப் பெரியார் பற்றுதலை வெளிப்படுத்துகிறது. ாற்றினை ஒரளவாவது தெரிந்திருக்க வேட்கை. இந்நூலில் அதனை அவர் ள்ளார்.
வ முயற்சிகளை தொடருவாரானால் பயனடையக்கூடியதாக இருக்கும்.
- பதிப்பாசிரியர்