கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கைப் புவியியல்

Page 1


Page 2

இலங்கைப் புவியியல்
sGonsa s. 5GOUTTT&T B.A. Hons. (Cey) M.A., Ph.D., SLAS.
முன்னாள்:
புவியியல் உதவி விரிவுரையாளர், இலங்கைப்பல்கலைக்கழகம்;
பேராதனை - கொழும்பு
புவியியல் உதவி விரிவுரையாளர், கொக்குவில் இந்துக்கல்லூரி
பகுதிநேர விரிவுரையாளர், தொழில்நுட்பக் கல்லூரி, ot அதிதிப் போதனாசிரியர், ஆசிரிய கலாசாலை, கொழும்புத்துறை ஆலோசக ஆசிரியர், “புவியியல்" காரியாதிகாரி, கிண்ணியா, /உதவி அரசாங்க அதிபர் துணுக்காய் உதவி அரசாங்க அதிபர், கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர் (காணி),கிளிநொச்ச1 பிரதேசச் செயலாளர், யாழ்ப்பாணம் /நல்லூர்/ சங்தானை பதிவாளர், யாழ், பல்கலைக்கழகம்
பிராந்திய ஆணையாளர், யாழ்ப்பாணம்
கமலம் பதிப்பகம்
82, பிரவுன் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம்

Page 3
பதிப்பு விபரம்
முதலாம் பதிப்பு: ஆகஸ்ட் 1963
திருத்திய இருபத்திரண்டாம் பதிப்பு: செப்டெம்பர் 1995
புதிய பதிப்பு: செப்டெம்பர் 2002
விலை: ரூபா : 300.00
GEOGRAPHY OF SRI LANKA
by Dr K Kunarasa BA Hons (Cey), MA, PhD, SLAS
Copyrights Kamala Kunarasa
Edition First Edition - 1963
Published by Kamalam Pathippakam
82 Brown Road Jaffna
Price: Rs.300.00
2

இலங்கைப் பல்கலைக்கழகப் புவியியற் பேராசிரியர் 2_uri8ab. 5IT. (56uQU5660TLb, MA, PhD, DSc, DLit., FRGS, Dip' in Gemmology, Dip in Geography, MA Inst. Min. Matology அவர்கள்
“இலங்கைப் புவியியல்" முதலாம் பதிப்புக்கு அளித்த
அணிந்துரை
இலங்கைப் புவியியல் என்ற இந்த நூலைப் படிக்கும்பொழுது எனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்படுகின்றது. என் மாணவர் ஒருவர் தன் மாணவ நில்ை யிலேயே இந்நூலை எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண) வகுப்பிற்கு ஏற்ற முறை யில் புதிய கலைச்சொற்களைக் கையாண்டு இந்நூல் எழுதப்பட்டிருக் கின்றது. புவியியல் பற்றிய விபரங்களை விளக்குவதற்கு ஆங்காங்கு விளக்கப் படங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. போதிய புவியியல் நூல் கள் தமிழ் மொழியில் இல்லாத காலத்தில் இந்நூல் மாணவர்க்குப் பெருந்துணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கா. குலரெத்தினம்
புவியியற் பகுதி, இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை. 29, 08, 1963

Page 4
முன்னுரை
இலங்கையின் புவியியல் பற்றிய ஒரு முழுமையான நூலாகத் திருத்திய இப்பதிப்பு வெளிவருகின்றது. கடந்த மூன்று தசாப்தங்களாக எனது நூலே ஒரேயொரு இலங்கைப் புவியியல் நூலாக தமிழ் மாணவர்களா லும், ஆசிரியர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனக்குப் பின் எத்தனை புவியியலாளர்கள் இந்த மண்ணில் தோன்றி விட்டனர்? இவர்களது ஆற்றல், ஆளுமை இந்தச் சமூகத்திற்குப் பயன்படாதே போய் விடுமோ? இக்கேள்வி அவர்களுக்கே சமர்ப்பணம்.
இந்த நூலில் ஐந்து பகுதிகள் உள்ளன. பல தரத்து மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் தேவையை இந்நூல் பூர்த்தி செய்யும் என நம்பு கின்றேன்.
இத்தருணத்தில் இவ்விடத்து இரு பேராசிரியர்களை நன்றியுடன் நினைவு கூருகின்றேன். ஒருவர் எனது பேராசான் கா. குலரெத்தினம் அவர்கள்; இலங்கையின் முதலாவது புவியியற் பேராசிரியர் அவர். அவரின் மாணவனாகக் கற்கின்ற பேறு எனக்குக் கிடைத்தது. மற்றவர் எனது நண்பர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை. துறைசார் ஆராய்ச்சியின் புதிய செல்நெறிகளை எனக்குக் கற்பித்தவர்.
எனது புவியியல் நூல்கள் கடந்த மூன்று தசாப்தங்களாகக் கல்வியுலகிற்கு ஆற்றி வரும் பங்கினை நானுணர்வேன். அதற்குக் காரணமான அனை வருக்கும் நன்றிகள்.
5. (5600TLTTEIT
கமலம்,
82, பிரவுன் வீதி,
நீராவியடி, யாழ்ப்பாணம்

பொருளடக்கம்
பகுதி ஒன்று
இலங்கையின் அமைப்பியல் 7ー88 இலங்கையின் கல்லியல் 9 இலங்கையின் தோற்றம் l6 இலங்கையின் உருவாக்கம் 25 இலங்கையின் அமைவிடமும் தரைத்தோற்றமும் 42 இலங்கையின் மண் வகைகள் 62 இலங்கையின் கனிய வளங்கள் 72 இலங்கையின் காடுகள் 80
பகுதி: இரண்டு
இலங்கையின் காலநிலையியல் 89 - 128 இலங்கையின் காலநிலைக் கட்டுப்பாடுகள் 91 இலங்கையின் வெப்பநிலை 98 இலங்கையின் மழைவீழ்ச்சி 107 இலங்கையின் காலநிலைப் பிரதேசங்கள் 117 இலங்கையின் இயற்கைத் தாவரம் 123
பகுதி: மூன்று
இலங்கையின் மக்களியல் 129 - 174 இலங்கையின் குடித்தொகை 131 இலங்கையின் குடிப்பரம்பல் 38 இலங்கையின் குடியமைப்பு 147
இலங்கையின் குடியிருப்புக்கள் - நகராக்கம் 158

Page 5
பகுதி: நான்கு
இலங்கையின் பொருளாதார நடவழக்கைகள் இலங்கையின் நெற்செய்கை இலங்கையின் பெருந்தோட்டங்கள் இலங்கையின் நீர்ப்பாசனத் திட்டங்களும் குடியேற்றத் திட்டங்களும் இலங்கையின் கைத்தொழில்கள் இலங்கையின் மீன்பிடித் தொழில்
பகுதி: ஐந்து
இலங்கையின் அபிவிருத்தியியல் இலங்கையின் துரித மகாவலித் திட்டம் இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் இலங்கையின் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கையின் சமூகநலத் திட்டங்கள்
உசாத்துணை நூல்கள்
175 - 228
177
192
203
214
222
229 - 262
23.
246
251
257
263

பகுதி : ஒன்று இலங்கையின்
அமைப்பியல்

Page 6

கல்லியல்
1 இலங்கையின்
1. புவிச்சரிதவியல் ஆய்வுகள்
இலங்கையின் புவிச்சரிதவியல் குறித்த ஆய்வு, 1903ஆம் ஆண்டிற்குப் பின்பே ஆரம்பிக்கப்பட்டது. இவ் ஆண்டில் இலங்கையின் புவிச்சரிதவியல் ஆய்வினை முதன்முதல் லண்டனிலுள்ள பேரரசு நிறுவனம் (imperial Institute) இலங்கையில் தொடக்கி வைத்தது. இந்நிறுவனத்தின் இலங்கைக் கிளையில் முதல் தலைவராக இருந்தவர் கலாநிதி ஆனந்தக்குமாரசாமி ஆவார். இவரே இலங்கைப் புவிச்சரிதவியல் ஆய்வின் தந்தையாவார். இவர் இலங்கையின் புவிச்சரிதவியல், கணிப்பொருளியல் என்பனவற்றின் ஆய்வுகள் குறித்த நிர்வாக அறிக்குைகளை வெளியிட்டார். முதன்முதல் இலங்கையின் புவிச்சரிதவியல் அட்டவணை ஒன்றினையும் இவர் தயாரித்து வெளியிட்டார். இவர் வெளியிட்ட நிர்வாக அறிக்கைகளே இன்றும் இலங்கையின் புவிச்சரிதவியல் ஆய்வுகளுக்கு முன்னோடிகளாக உள்ளன.
1919ஆம் ஆண்டிற்குப்பின் நான்கு ஆண்டுகளாக இலங்கையில் புவிச் சரிதவியல் ஆராய்வுகள் எதுவும் நடைபெற்றிருப்பதாகத் தெரியவில்லை. அறிஞர்ஆனந்தக்குமாரசாமிக்குப்பின், 1923ஆம் ஆண்டு ஈ, ஜே. வேலாண்ட் (E.J. Wayland) என்பவர், இலங்கையின் மயோசீன் சுண்ணாம்புக்கல் பற்றி, ஒரு கட்டுரையை லண்டன் புவிச்சரிதவியற் சஞ்சிகையில் வெளியிட்டார். இக்கட்டுரையை ஆக்குவதற்கு ஏ. எம். டேவிஸ் (A, M. Davies) என்பாரும்
9

Page 7
உதவி புரிந்துள்ளார்; 1925 ஆம் ஆண்டு ஈ.ஜே. வேலாண்ட், புத்தளத்தி லுள்ள யூறாசிக் பாறைகள் பற்றிய ஒரு கட்டுரையை இலங்கை விஞ்ஞானக் கழகச் சஞ்சிகையில் எழுதினார். இவரது கட்டுரைகள் இலங்கையின் புவிச்சரிதவியல் குறித்து முழுமையான விளக்கத்தைத் தராதுபோயின.
இலங்கையின் புவிச்சரிதவியல் பற்றி, முழுமையான ஒர் ஆய்வுக் கட்டுரையை முதன்முதல் வழங்கிய பெருமை கனடாவைச் சேர்ந்த எஃப். டி. அடம்ஸ் (FD. Adams) என்பாரையே சாரும். இவர் இலங்கையின் புவிச்சரிதவியல்' என்ற கட்டுரையைக் கனேடிய ஆராய்ச்சிச் சஞ்சிகையில் (Canadian Journal of Research) 1929-glb -2676 6T(p3 Gla) afluîll " L-ITri. இலங்கை பற்றிய புவிச்சரிதவியற் படம் ஒன்றை முதன்முதல் வெளியிட்ட பெருமையும் அடம்ஸ் என்பாருக்கே உரியது. இவரை அடுத்து ஜே. எஸ். கோட்ஸ் (J.S.Coates) என்பார் இத்துறை குறித்த ஒரு கட்டுரையை, 1935ஆம் ஆண்டு ஸ்போலியா சிலனிக்கா (Spolia Zeylanica) என்ற சஞ்சிகையில் வெளியிட்டார்.
இலங்கையின் புவிச்சரிதவியல் ஆராய்விற்குப் புத்துயிர் அளித்தவர் எனப் பேராசிரியர் டி.என். வாடியா (D.N. Wadia) என்பாரைக் குறிப்பிட லாம். வாடியா இந்தியப் புவிச்சரிதவியற்றுறையைச் சேர்ந்தவர்; இலங்கை யில் ஆறு ஆண்டுகள் புவிச்சரிதவியலாய்வுகள் நடாத்தி, பயனுள்ள சில கட்டுரைகளை எழுதினார். 1938ஆம் ஆண்டு இலங்கையின் புவிப்பெளதிக உறுப்பியல் பற்றிய இவரது கட்டுரை வெளியாகியது.
இவர்களைத் தொடர்ந்து இலங்கையின் புவிச்சரிதவியற்றுறையில், நீண்டகால ஆய்வுகளை நடாத்தியவர் பேராசிரியர் கா. குலரத்தினம் ஆவார். இவர் காலத்திற்குக் காலம் எழுதிய கட்டுரைகளில் இலங்கையின் புவிச்சரித வியல் பற்றிய முழுமை தரும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இவரது ஆய்வுக்கட்டுரைகள் யாவும் ஒருங்கே இணைக்கப்பட்டு, என்னால் வெளி யிடப்பட்ட புவியியல்' என்ற சஞ்சிகையில் 1965ஆம் ஆண்டு இலங்கை யின் புவிச்சரிதவியல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. (புவியியல் இதழ் : 3, 1965)
பேராசிரியரைத் தொடர்ந்து இத்துறையில் இள்று கலாநிதி விதானகே, திரு. கூரே என்போர் ஈடுபட்டு வருகின்றனர். பொலனறுவை மாவட்டம் பற்றி விரிவான புவிச்சரிதவியல் ஆய்வினை விதானகே நடாத்தியுள்ளார். அம்மாவட்டம் பற்றிய புவிச்சரிதவியற் படம் ஒன்றையும் வெளியிட்டுள் ளார். திரு. கூரே அண்மையில் இலங்கையின் புவிச்சரிதவியல்' என்ற ஒரு நூலினை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். இந்நூலில் இலங்கையின் புவிச் சரிதவியல் குறித்து ஆராய்ந்த ஆரம்ப அறிஞர்களது கருத்துக்கள், குறிப்பாக
O

பேராசிரியர் கா. குலரத்தினம் என்பவரின் கருத்துக்கள் நன்கு விமர்ச்சிக்கப் படவுமில்லை; விளக்கப்படவுமில்லை.
இலங்கையின் புவிச்சரிதவியல் குறித்த ஆய்வுகள் இன்னமும் முழுமை பெறவில்லை என்றே கூறல் வேண்டும்.
1.2 கல்லியலும் அமைப்பும் இலங்கையின் நிலப்பரப்பில் 85 சதவீதமான பகுதியில் தொல்காலப் பாறைகள் அமைந்துள்ளன. இவை கேம்பிரியன் காலத்திற்கு (Pre-Cambrian Rocks) முற்பட்ட பாறைகளாகும். கொழும்பு, அநுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு எனும் இடங்களை இணைக்கும் கோட்டிற்குத் தெற்கே ஏறத்தாழ முழுப் பகுதியிலும் இந்தத் தொல்காலப் பாறைகள் அமைந் துள்ளன. மேற்குறித்த கோட்டிற்கு வடக்கேயும் மேற்கேயும் காலத்தால் பிந்திய அடையற் பாறைகள் காணப்படுகின்றன. m
இலங்கையின் கல்லியலமைப்பில் மூன்று தெளிவான வலயங்களைக் காண
லாம். அவையாவன:
1.2.1 தொல்கால உருமாறிய பாறைகள் 1.2.2 உயர் நிலத்தொடர் உருமாறிய பாறைகள் 1.2.3 அடையற் பாறைகள்
1.2.1 தொல்கால உருமாறிய பாறைகள் இலங்கையின் தொல்காலத் தீப்பாறைகள் இவையாம். இவை விஜயன் தொகுதி உருமாறிய பாறைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை கேம்பிரியனுக்கு முற்பட்ட தொல் பாறைகள். இலங்கையில் காணப்படும் இத்தொல்காலப் பாறைகள் வானிலையழிதலினால் உருமாற்றத்திற்குட் பட்டு உருமாறிய பாறைகளாக இன்று காணப்படுகின்றன. உருமாறியபோது இப்பாறைகளிலுள்ள கணிப்பொருட்கள் பளிங்குருத்தன்மை பெற்று விட்டன. அதனால் இத்தொல்காலப் பாறைகளில் பளிங்குப்பட்டைப் பாறைகள் (Gneiss) பெரும்பகுதியை உள்ளடக்கியுள்ளன. இவை ஒன்றன் மேலொன்றாகப் படைபடையாக அமைந்துள்ளன. இலங்கையிற் காணப் படும் பளிங்குப்பட்டைப் பாறைகள் இலங்கையின் தென்கீழ்ப் பாகத்தில் அம்பாந்தோட்டையையும் திருகோணமலையையும் இணைக்கும் கோட் டிற்குத் தென்பாகத்தில் பரந்தளவிலும், தொல்காலப் பாறையின் வட விளிம்பின் எல்லையோடு ஒடுங்கிய ஒர் படையாகவும் அமைந்துள்ளன.
1.2.2 உயர்நிலத்தொடர் உருமாறிய பாறைகள்
இலங்கையின் மத்தியில் பெரும்பகுதியை உள்ளடக்கியதாகக் காணப்படுவன
உயர்நிலத்தொடர் உருமாறிய பாறைகள் ஆகும். இவற்றைக் கொண்டலைற்

Page 8
படம்: 1.1 : இலங்கையின் கல்லியலமைப்பு
(எண்களுக்குரிய விளக்கம் எதிர்ப்பக்கத்தில்)
2
 

பாறைகள் என வழங்குவர். (படத்தில்-12) தென்கிழக்கேயும் வடமேற்கேயும் காணப்படுகின்ற பளிங்குப்பட்டைப் பாறைகளுக்கு இடையே தென்மேற்கு வடகிழக்குப் போக்கில், பரந்ததோர் பரப்பில் கொண்டலைற் பாறைகள் பரந்துள்ளன. 'பழைய புவிக்கீழ் மடிப்புள் மடிப்பில் தொல்காலத்திற் கொட் டப்பட்ட படிவுகள் உருமாற்றத்திற்குட்பட்டதன் விளைவாகவே கொண்ட லைற் தொகுதி அனைத்தும் உருவாகின எனப் பேராசிரியர் கா. குலரத்தினம் குறிப்பிட்டுள்ளார்.
கொண்டலைற் பாறைத்தொகுதியில் கருங்கற்றலையீடுகளைக் காணக் கூடியதாகவுள்ளது. இத்தலையீடுகள் பல்வேறு காலங்களில் உருவானவை யாகும். சாணோகைற் பாறை, கடுகண்ணாவை மக்மரைற், பளிங்குருச் சுண்ணக்கல் என்பன குறிப்பிடத்தக்கன. சானோகைற்றும் தலையீட்டிற் குரிய கருங்கல்லேயாகும். சாணோகைற் பாறைகள் மத்திய உயர்நிலத்தின் மத்திய பகுதிகளில் அதிக அளவிற் காணப்படுகின்றன. அத்துடன் சாணோக் கைற் தலையீடுகளை இரத்தினபுரியிலிருந்து கிழக்குப் புறமான ஒர் ஒடுங்கிய படையிலும் பதுளையிலிருந்து தென்புறமான ஒரு படையிலும் குருநாகலி லிருந்து தென்புறமான ஒரு படையிலும் காணக் கூடியதாக இருக்கின்றது. மேலும், புத்தளத்தை அடுத்துக் காணப்படும் பளிங்குப்பட்டைப் பாறைத் தொகுதியின் மத்தியிலும் சாணோகைற் தலையீடுகள் காணப்படுகின்றன.
எண்களுக்குரியவிளக்கம்
குத்துத் தீப்பாறை (தொலமைற்)
அண்மைக்கால வண்டல் மண் பிளைத்தோசீன் கால வண்டல் மண் அடையற்பாறைகள்
மயோசீன் காலச் சுண்ணக்கல்
யூறாசிக் கால அடையல்
கடுகண்ணாவை மக்மரைற்
உருமாறிய சுண்ணக்கல் (காலி வகை)
தோணிக்கல் கருங்கல் உயர் நிலத்தொடர் உரு சாணோகைற்-கொண்டலைற் கலப்பு மாறிய பாறைகள்
I
சாணோகைற் பாறை
I
பளிங்குருச் சுண்ணக்கல்
l
2.
கொண்டலயிற் பாறை விஜயன் தொகுதி உரு பளிங்குப்பட்டைப் பாறை மாறிய பாறைகள்
3.
13

Page 9
கடுகண்ணாவை மக்மரைற் பாறைகள் குருநாகலுக்கு மேற்கேயும் கேகாலைக்குத் தெற்கேயும் காணப்படுகின்றன. பளிங்குருச் சுண்ணக் கற் பாறைகள், கொண்டலையிற் தொகுதியில் பரவலாக வெளியரும்பிக் காணப்படுகின்றன. பளிங்குப்பட்டைப் பாறையிடையே அமைந்திருக்கும் கதிர்காம மலைத்திரளும் கொண்டலையிற் பாறையாகும். திருகோண மலைப் பகுதியில் அமைந்திருக்கும் கருங்கற் பாறைகள் சாணோகைற்
பாறைகளாகும்.
கொண்டலையிற் பாறைத்தொகுதியில் சிறந்த கணிப்பொருட்கள் அமைந்துள்ளன. காரீயம், மைக்கா, இரத்தினக்கற்கள் என்பன கொண்ட லையிற் பாறைத்தொகுதியில் விரவிக் காணப்படுகின்றன.
1.2.3 (9fgottus) (Gopabór அடையற் பாறைகளில் யூறாசிக் பாறைகள், மயோசீன் பாறைகள், பிளை தோசின் கால வண்டல், அண்மைக்கால வண்டல் என்பன அடங்குகின்றன.
யூறாசிக் பாறைகள் கேம்பிரியாவிற்கு முந்திய காலப் பாறைகளைவிட, யூறாசிக் காலப் படிவுப் பாறைகள் இலங்கையில் காணப்படுகின்றன. இந்த இரு காலங்களுக்கும் இடைப்பட்ட காலப் பாறைகள் எதுவும் இலங்கையில் காணப்படவில்லை. யூறாசிக் காலத்தைச் சேர்ந்த மாக்கல்லும் மட்கல்லும் இலங்கையில் இன்று மூவிடங்களில் காணப்படுகின்றன. அவை: புத்தளப் பகுதியில் தப்போவை, ஆண்டிகமம் எனும் இரு இடங்களும், மன்னார் பகுதியுமாகும். தப்போவை, ஆண்டிகமம் எனும் பகுதிகளில் யூறாசிக்காலப் பாறைகளை நன்கு அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இந்த யூறாசிக் படிவுகள் கீழ்நோக்கி ஏற்பட்ட பிளவுப்படுக்கைகளுள் அமைந்து காணப்படுகின்றன. இப் பிளவு கள் ரேசறிக் காலத்தில் தக்கண எரிமலைக் குழம்பு வெளிப்பாடு, இமயம் மடிப்புறுதல், மேற்குக் கரையோர மலைத்தொடர் மேலுயர்தலிற்குக் காரணமாக இருந்த பிளவாக்கம் என்பவை நிகழ்ந்த காலத்தில் ஏற்பட் டிருக்கவேண்டும்’ (கா. குலரத்தினம்) 'யூறாசிக் பாறைகள் அரிப்புக் கருவிகட்கு இரையாகாதவாறு பிளவுச் சுவர்கள் துணை செய்தன. (ஈ.ஜே. வேலாண்ட்)
1964ஆம் ஆண்டு மன்னார்ப் பகுதியில் குழிகள் தோண்டியபோது யூறாசிக்கால மாக்கல்லும் மட்கல்லும் காணப்பட்டன. மன்னாரில் யூறாசிக் படிவுகள் எவ்வளவுதூரம் பரந்துள்ளன என முடிவாகக் கூறுவதற்கு மேலதிக ஆய்வுகள் நிகழவேண்டும். மேலும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் சுண்ணக் கற் பாறைகளுக்குக்கீழ் யூறாசிக்காலப் படிவுகள் காணப்படலாம். கேரளத்தி லுள்ள சுண்ணக்கற் பாறைகளுக்குக்கீழ் யூறாசிக் படிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், யாழ்ப்பாணக் குடாநாட்டுச் சுண்ணக்கற் பாறைகளுக்குக் கீழும் இப்படிவுகள் காணப்படலாம்.
14

மயோசீன் பாறைகள் புத்தளம்-பரந்தன்-முல்லைத்தீவு எனும் சிறு நகர்களை இணைக்கும் கோட்டிற்கு வடக்கேயுள்ள இலங்கையின் வடபாகத்திலும் வடமேற்குப் பாகத்திலும் சுண்ணக்கற் பாறைத்தொகுதி பரந்துள்ளது. இச்சுண்ணக்கற் பாறைகள் மயோசீன் காலத்தில் கடலின் கீழிருந்து மேலுயர்த்தப்பட்டவை யாகும். இலங்கையின் மயோசீன் கால சுண்ணக்கற் பாறைகளை இந்தியா வில் வாரகாளி, காரைக்கால், சென்னை முதலிய பகுதிகளிலும் காண முடிகிறது.
இலங்கையில் காணப்படுகின்ற சுண்ணக்கற் பாறைகள் பெரிதும் மேல் மண்ணால் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடபாகத்தில் இச்சுண்ணக்கற் பாறைகள் வெளியரும்பிக் காணப்படு கின்றன. நெடுந்தீவில் குண்டும் குழியுமாக இச்சுண்ணக்கல் வெளியரும்பி இருப்பதை அவதானிக்கலாம்.
பிளைத்தோசீன் கால வண்டல் பிளைத்தோசீன் (Pitocene) காலத்தைச் சேர்ந்த செம்பரல் வண்டல் மண் படை ஒன்றும் இலங்கையில் குறிப்பிடத்தக்களவில் காணப்படுகின்றது. கொழும்பில் இருந்து முல்லைத்தீவுவரை, ஏறத்தாழ இருபது மைல் அகலத் தில், பிளைத்தோசீன் கால வண்டல்படை பரந்துள்ளது. 'பிளைத்தோசீனுக் குப் பிந்திய காலத்தில் கடல், தரையினுள் நுழைந்ததன் விளைவாகவே செம்பரற்படிவுகள் தோன்றின. (டி.என். வாடியா)
அண்மைக்கால வண்டல் அண்மைக்கால அடையற் பாறைகளை இலங்கையின் கடற்கரையோரங் களில் காணலாம். புத்தளம் தொட்டு நீர்கொழும்புவரை பருத்தித்துறை தொட்டு முல்லைத்தீவுவரை; நிலாவெளி தொட்டு திருக்கோவில்வரை அண்மைக்கால வண்டற் படிவுகளைக் காணமுடியும். இவ் அண்மைக்காலப் படிவுகளில் இல்மனைற், மொனசைற், படிகமணல் என்பன பரந்து காணப் படுகின்றன.
15

Page 10
இலங்கையின் தோற்றம்
இலங்கை எவ்வாறு தோன்றியது? இலங்கையின் பாறைத்தொகுதிகள் எவ்வெக் காலங்களில், எவ்வாறு உருவாகின? இலங்கையின் இன்றைய வடிவமும் அமைப்பும் தரைத்தோற்றமும் எப்படி உருவாகின? - என்ற இன்னோரன்ன வினாக்களுக்கு விடைபெற வேண்டுமானால் இலங்கையின் புவிச்சரிதவியல் வரலாற்றைச் சில கட்டங்களாக வகுத்து ஆராய்வதே வழி யாகும்.
இலங்கையின் புவிச்சரிதவியல் வரலாற்றை மூன்று கட்டங்களாக வகுக்கலாம். அவையாவன: 2.1 கொண்டுவானாலாந்தின் எஞ்சிய பகுதியே இலங்கை, 2.2 இந்தியத் துணைக் கண்டத்தினின்றும் பிரிவுற்ற பகுதியே இலங்கை, 2.3 புவியசைவுச் சக்திகளினதும், தின்னற் சக்திகளினதும் ஓயாத மோதலின்
விளைவே இலங்கை."
2. கொண்ருவானாலாந்தின் எச்சம் 2.1.1 கேம்பிரியனுக்கு முந்தியகால நிலம் கேம்பிரியனுக்கு முந்திய காலத்தில் இலங்கை எங்கே, எவ்வாறு இருந்தது என்று விளக்குவது கடினம். எனினும், இந்து சமுத்திரத்தில் முன்பு
16

அமைந்திருந்த ஒரு கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதில் ஐயமில்லை. கேம்பிரியனுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த இக்கண்டத்தின் பகுதிகளாக ஆபிரிக்கா, தென்னிந்தியா, அவுஸ்திரேலியா, அந்தாட்டிக்கா என்பன இருந்திருக்கலாம்; இவற்றின் பகுதியாக இலங்கை இருந்திருக்க வேண்டும்.
2.1.2 தப்பிரபோனியன் மழப்பு
தொல்காலப் பாறைகளாக இலங்கையில் காணப்படும் கொண்டலையிற் பாறைகள் உருமாறிய அடையல்களாகும். தொல்காலப் படிவுகள் உரு மாற் றத்திற்கு உட்பட்டுக் கொண்டலைற் பாறைகளாக மாறவேண்டுமானால், ஒரு புவிக்கீழ் மடிப்புள் மடிப்பில்தான் (Geo synctionorium) அது நிகழ்ந் திருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது. ஆதலால், இலங்கை பழைய புவிக்கீழ் மடிப்புள் மடிப்பாக அமைந்திருந்தது என்று கொள்ளப்படுகின்றது. இப் புவிக்கீழ் மடிப்பிற்கு கலாநிதி ஆனந்தக்குமாரசாமி தப்பிரபோனியன்
மடிப்பு’ எனப் பெயரிட்டார்.
இத்தப்பிரபோனியன் மடிப்பு, கேம்பிரியனுக்கு முந்திய நிலத்திணிவின் விளிம்போடு பலநூறு மைல்களுக்கு அமைந்திருந்தது. தார்வாரியன் எனும் பழைய இந்திய மலைத்தொடரின் அருகாக இம்மடிப்பு அமைந்திருந்தது. அதனால் இம்மடிப்பினுள் தார்வாரியன் மலையிலிருந்து உரிவுப் பொருட் கள் படிந்தன. நீண்டகாலப் படிதலின்பின், இப்படிவுகள் உருமாறிக் கொண்டலையிற் பாறைகளாக மாறின. 'பழைய புவிக்கீழ் மடிப்புள் மடிப்பின் கீழ்நோக்கிய வளைவின் அச்சானது, தீவின் முதுகெலும்பு போன்ற மைந்த உயர்சமவெளிகளாலும், ஹோட்டன் சமவெளியிலிருந்து வடவட மேற்காக அம்பவெல, எல்க், மூன், நுவரெலியாச் சமவெளிகளினூடும் பேதுருதாலகாலையினூடும் சென்று, கண்டிக்குத் தெற்கே கந்தாளைக் குன்றில் முடிவடையும் பல நீள்குன்றுத் தொடர்களாலும் பிரதிபலிக்கப் படுகின்றது.” (கா. குலரத்தினம்)
நிற்க, தப்பிரபோனியன் மடிப்பினுள் உருமாறிய கொண்டலையிற் அடையல்கள், காலகதியில் மடிப்பிற்கு உள்ளாகின.
2.1.3 கேம்பிரியன் மலையாக்கம்
கேம்பிரியனுக்கு முந்தியகால நிலத்திணிவை, கேம்பிரியன் காலத்தில் நிகழ்ந்த மலையாக்கங்கள் (Orogenesis) பாதித்தன. இந்நிகழ்ச்சி 500 பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. கேம்பிரியன் காலத்தில் நிகழ்ந்த மலையாக்கம், சார்ணியன் மலையாக்கமாகும். இம்மலையாக்க காலத்தில் தென்னமெரிக்கா, அவுஸ்திரேலியா எனும் கண்டங்களில் மலையாக்கம் நிகழ்ந்தது. இம்மலையாக்க காலத்தில் மலையாக்கப் பாய்பொருள்களாக
17

Page 11
(Fluid) வெளிவந்த சோடியம், பொட்டாசியம், குளோரின், நீர், வெப்பம் என்பன எல்லாம் பழைய பளிங்குருப் பாறைகளை உருமாற்றின. அதனால், கொண்டலைற் சாணோகைற் பாறைகளாக இருந்தவற்றில் சில பகுதிகள் பளிங்குப்பட்டைப் பாறைகளாகவும் (Gneiss) பல்வகைக் கருங்கற் பாறைகளாகவும் மாறின.' (கூரே)
2.1.4 கொண்டுவானாலாந்து இலங்கையின் இன்றைய வடிவம் பலெயோசோயிக் காலத்தின் ஆரம்ப கட்டத்திற்கூட (Palaeozoic Era) அமையவில்லை. இக்காலகட்டத்தில் அங்காராலாந்து, கொண்டுவானாலாந்து என்று இரு பெரிய நிலக் கண்டங்கள் புவியிற் காணப்பட்டன. இன்று இந்து சமுத்திரத்தைச் சூழவுள்ள நிலப் பகுதிகள் யாவும் அக்காலத்தில் கொண்டுவானாலாந்தின் பகுதியாக அமைந்திருந்தன. தென்னமெரிக்கா, ஆபிரிக்கா, மடகாஸ்கார், அராபியா, தக்கணம், இலங்கை, அவுஸ்திரேலியா, அந்தாட்டிக்கா என்பன கொண்டுவானாலாந்தாக விளங்கின. இந்நாடுகள் பொதுவான நில அமைப்பு, கல்லியல் (Lithology), கணிப்பொருளியல் (Mineralogy) , மண்ணியல் (Pedology), உயிர்ச் சுவட்டியல் (Palaentology) என்பனவற்றில் இன்றும் ஒற்றுமையுடையன. ஆதலால் முன்பு இவை கொண்டுவானாலாந் தாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. வடஅமெரிக்கா, ஐரோ-ஆசியா என்பன அங்காராலாந்தாக விளங்கின. அங்காராலாந்திற்கும் கொண்டு வானாலாந்திற்கும் இடையில் விரிந்த ஒரு சமுத்திரம் காணப்பட்டது; அது தெத்தீஸ் கடல் என வழங்கப்பட்டது.
- அங்காரலாந்து
டகொண்டுவானாலாந்து
படம் 2.1 பஞ்சியாக் கண்டம்
150 பத்திலட்சம் ஆண்டுகள்வரை இலங்கை கொண்டுவானாலாந்தின் ஒரு பகுதியாகவே விளங்கிவந்தது. கொண்டுவானாலாந்திலிருந்தும் அங்காராலாந்திலிருந்தும் அரிக்கப்பட்ட பருப்பொருட்கள் தெத்தீஸ் கடலினுள் அதிகளவில் படிவு செய்யப்பட்டன; இப்படிவுகள் கடலுக்குரிய மாக்கல், சுண்ணாம்புக்கல், மண்களி, மணற்கல் என்பனவற்றோடு கலந்து படிந்தன.
18
 
 
 

இவ்வேளையில் யூறாசிக் காலம் (Jurassic) வந்தது. யூறாசிக் காலத்தில் கொண்டுவானாலாந்தின் நிலப்பரப்பின்மீது, கடல் மேவியது. அதனாலேயே இலங்கையிலும் இந்தியாவிலும் யூறாசிக் காலப் படிவுப்பாறைகள் அமைந்து காணப்படுகின்றன.
மெசசோயிக் யுகத்தின் (Mesozoic Era) இறுதிவரை நிலைத்திருந்த கொண்டுவானாலாந்து, புவியோட்டினுள் நிகழ்ந்த அகவிசைத் தாக்கங் களினால் பிளவுற்றது. பிளவுற்ற இக்கண்டம் நகர்வுற்று இன்றுள்ள தென் கண்டங்களாக நிலைபெற்றன. இலங்கை இந்தோ-அவுஸ்திரேலியக் கவசத் தகட்டில் (Plate) அமைந்துள்ளது. ஐரோ-ஆசியத் தகடும், இந்தோ-அவுஸ்தி ரேலியத் தகடும் ஒன்றையொன்று நோக்கி ஒருங்கியபோது ஏற்பட்ட அமுக்க விசை இமயமலைத் தொகுதியை உருவாக்கியது.
கொண்டுவானாலாந்து பிளவுற்று நகர்ந்த செயலிற்கு உவெவெக்னரின் கண்ட நகர்வுக் கொள்கைமூலம் விளக்கம் தரமுடியும். நகர்வுற்றவேளையில், தக்கணப் பழம் பாறைத்திணிவின் பிரிவுறாத ஒரு பகுதியாகவே இலங்கை விளங்கியது.
2.2 இந்தியத்துணைக்கண்டத்தினின்றும் பிரிவுற்ற பகுதி இலங்கையின் உருவாக்கத்தில், மயோசீன் காலம் (Miocene) மிக முக்கிய மானதாகும். இக்காலகட்டத்தில்தான் இலங்கையின் வடமேற்குப் பாகம் உருவானதாகும். கொண்டுவானாலாந்திலிருந்து பிரிவுற்ற இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு விரிகுடாக் கடலாக தெத்தீஸ் இருந்தது.' (கூரே) இந்தத் தெத்தீஸ் விரிகுடாவில் அரிக்கப்பட்ட பருப்பொருட்கள் படிந்தன. இவ்விரிகுடாவில் முருகைக்கற்பார், சுண்ணக்கல், களி, மணல் என்பன படிந்திருந்தன, அல்பைன் மலையாக்கம் நிகழ்ந்தபோது, தெத்தீஸ் விரிகுடாப் படிவுகள் மேலுயர்த்தப்பட்டன; அதனால், இலங்கையின் சுண்ணக்கற் பிரதேசம் உருவாகியது. வாரகாளி, காரைக்கால், சென்னை முதலிய பகுதிகளில் சுண்ணக்கற் பகுதிகளும் உருவாகின. இதே கால வேளையில்தான் இமயமலையும் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. வடபுறமாக நகர்ந்த தக்கணப் பழந்திணிவு, தெத்தீஸ் கடலில் படிந்திருந்த திரையலான அடையலை இமய இளம் மடிப்பு மலைகளாக உருவாக்கியது; அல்பைன் மலையாக்க விளைவிது.
இலங்கை, இந்தியாவினின்றும் பிரிவுற்ற ஒரு பகுதியே என்பதற்குப் பல ஆதாரங்களை இன்று காட்டமுடியும். புவிச்சரிதவியல், அமைப்பு, மண் னியல், உயிர்ச்சுவட்டியல் முதலிய பல்வேறு ஆதார அடிப்படைகளில் விளக்கந்தர முடியும். இந்தியக் குடாநாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் புவிப்பெளதிக உறுப்பியல் தொடர்புகள் பல காணப்படுகின்றன. அத்
தொடர்புகளை முதலில் நோக்குவோம்; அவை:
19

Page 12
2.2.1 gQ08g a5GöTL(8toGODL இந்தியத்துணைக் கண்டமும் இலங்கையும் ஒரே கண்டமேடையில் அமைந் திருக்கின்றன. இலங்கையைச் சுற்றியுள்ள கண்டமேடையின் சராசரி அகலம் 18 கிலோமீற்றர்களாகும். இக்கண்டமேடை வடக்கே அகன்றதாகவும் தெற்கே ஒடுங்கியதாகவும் காணப்படுகின்றது. இக்கண்டமேடையின் சராசரி ஆழம் 36 பாதமாகும். கண்டமேடையின் விளிம்பில் இந்த ஆழம் சடுதியாக 500 பாதம் கீழிறங்குகின்றது.
சோமவில்லி என்பவர் (Somerville) இக்கண்டமேடை குறித்துச் சில புதிய விளக்கங்கள் தந்துள்ளார். அவரின்படி 'இலங்கை அமைந்திருக்கும் கண்டமேடை உருப்பெற்றதைத் தொடர்ந்தே இலங்கையின் உருவம் அமைந்தது; இக்கண்டமேடையிற் சேர்ந்த படிவுகளே இலங்கையை உருவாக்கின' என்பதாகும்.
இலங்கையையும் இந்தியாவையும் இணைத்து அமைந்துள்ள கண்ட மேடை, மன்னார் குடாவினை அடுத்து வடபுறமாக உள்வளைந்து காணப் படுகின்றது. இவ்வளைவை பேராசிரியர் கா. குலரத்தினம் தலைகீழாகத் திரும்பியV வடிவம்’ என வருணிக்கின்றார். இந்தத் தலைகீழாகத் திரும்பிய கண்டமேடையின் V வடிவத்தை ஆதாரமாகக் கொண்டு பேராசிரியர் புதியதொரு விளக்கத்தைத் தந்துள்ளார்.
படம்: 2.2 ஒரே கண்ட மேடையும், மலைத் தொடர்ப் போக்குகளும்
20
 

இந்தியாவிற்குச் சரி தெற்கே முன்பு இலங்கை காணப்பட்டது; அதாவது, இன்று இலங்கை காணப்படுமிடத்திலிருந்து சற்று மேற்குப் புறமாக அன்று காணப்பட்டது. இப்பழைய இடத்திலிருந்து கிழக்குப் புறமாகப் பெயர்ந்து அமைந்ததையே, கண்டமேடையின் தலைகீழாகத் திரும்பிய V வடிவப் பிளவு குறிக்கின்றது.’ (படம் 2.2) என்பதாகும்.
எவ்வாறாயினும், இலங்கையும் இந்தியாவும் ஒரே கண்டமேடையில் அமைந்திருப்பது முன்பு இவ்விரண்டும் ஒருங்கே இணைந்திருந்தன என்ப தற்கும் இடையில் ஏற்பட்ட கடற்கோளினால் பிரிவுற்றன என்பதற்கும் ஆதாரமாகும்.
2.2.2 ஒரே அழத்தளப்பாறை
இந்தியத் துணைக்கண்டமும் இலங்கையும் ஒரே வகையான அடித்தளப் பாறையிலேயே அமைந்திருக்கின்றன. தொல்காலப் பழம்பாறையில் இவ் விரு பிரதேசங்களும் அமைந்திருக்கின்றன; பளிங்குருப் பாறைகள் அடித் தளப் பாறைகளாக அமைந்துள்ளன. இலங்கையின் தென் விளிம்பிலிருந்து விந்தியம்வரை பழம்பாறையே அடித்தளப்பாறையாக உள்ளது. விந்தியத் திற்கு வடக்கேயே இளம் வண்டற் படிவுகளும் இளம் மடிப்பு மலைகளும் காணப்படுகின்றன. (படம் 2.3)
| இளம் பாறை
ш6решит60206
படம் 2.3 : இலங்கைய்ம் இந்தியாவும் ஒரே அடித்தளப் பாறையில் அமைந்துள்ளன
2.2.3 ஒரே கல்லியல்
இலங்கையிலும் இந்தியத் துணைக்கண்டத்திலும் ஒரே மாதிரியான கல்லியல் தன்மைகளை அவதானிக்கமுடிகின்றது, இந்தியாவின் கிழக்குக் கரையோர மலைத்தொடரில் கொண்டலையிற், சாணோகைற் தொகுதி ஒன்றுள்ளது. அதனையொத்த கொண்டலையிற் சாணோகைற் உருமாறிய அடையல்களை இலங்கையிலும் காணமுடிகின்றது. (படம் 2.4) யூறாசிக் காலப் படிவுப் பாறைகளை இந்தியாவில் மதுரை, சென்னை, பெஸ்வாடா,
21

Page 13
யனக்பூர், உமியா முதலிய பகுதிகளில் காணமுடிகின்றது; இவற்றையொத்த படிவுகள் இலங்கையில் ஆண்டிகமம், தப்போவை, மன்னார் எனும் பகுதி களில் காணப்படுகின்றன. (படம் 2.4) மயோசீன் காலச் சுண்ணக்கற் பாறைகளை இந்தியாவின் மேற்குக் கரையோரத்திலும் (வாரகாளி), கிழக்குக் கரையோரத்திலும் (காரைக்கால், சென்னை) காணலாம்; இலங்கையின் வடமேற் பாகத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், சிறிதளவு அம்பாந் தோட்டைப் பகுதியிலும் மயோசீன் பாறைகள் உள்ளன. இவ்வாறு கல்லியல் தன்மைகளிலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
V a
ζ V.
V
படம் 2.4 : கல்லியல் ஒற்றுமைகள்
கொண்டலையிற் - சாணோகையிற் பாறைகள் யுறாசிக் காலப் படிவுகள் மயோசீன் காலப் படிவுகள்
பிளைத்தோசீன் காலப் படிவுகள்
2.2.4 ஒத்த பாறைப்போக்குகள் தென்னந்தியாவின் பாறைப் போக்குகள் இலங்கையிற் காணப்படும் பாறைப் போக்குகளுடன் தொடர்புடையனவாக விளங்குகின்றன. (படம் 2.2)
22
 
 
 
 

எம்.எஸ். கிருஷ்ணன் என்ற இந்தியப் புவிச்சரிதவியல் அறிஞர், இப்பாறைப் போக்குகளிலுள்ள ஒத்த தன்மைகளை விளக்கியுள்ளார். அவை:
1. கிழக்குக் கரையோர மலைத்தொடரின் வடகிழக்கு-தென்மேற்குப் போக்கினை இலங்கையின் வடகீழ் பாறைப் போக்குடன் அவதானிக்கலாம்.
2. பம்பாய், ஹைத்திரபாத், மைசூர் ஆகிய பகுதிகளில் தார்வாருக்குரிய பாறைத் தொகுதியுள்ளது. வடவடமேற்கு-தென்தென்கிழக்குப் போக்கினையுடைய தார்வாருக்குரிய போக்கை (Dharwarian strike) இலங்கையின் மேற்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் காணமுடிகின்றது. இலங்கையிலுள்ள தார்வாருக்குரிய போக்கை w 6ígu 16öT Gurje) (Vijayan trend) 616öTLJi. 3. மகாநதிப் பள்ளத்தாக்கு, திருவாங்கூர், தென்சென்னை முதலிய பகுதிகளிற் காணப்படும் பாறைப்போக்கு மகாநதிப்போக்கு எனப் படும். இப்போக்கு வடமேல்-தென்கீழ்ப் போக்கினை உடையது. இப்போக்கினை இலங்கையின் காலிப் பகுதியில் நாம் அவதானிக்க முடிகின்றது. (படம் 2.2) ه
இந்தியாவிற்குச் சரி தெற்கே ஆரம்பத்தில் காணப்பட்ட இலங்கை, கிழக்கே பெயர்ந்தே இன்றைய இடத்தில் நிலைத்தது' என்ற தனது கருத்தை தலைகீழாகத் திரும்பிய V வடிவக் கண்டமேடையின் துணைகொண்டு நிறுவ முயன்ற பேராசிரியர் கா. குலரத்தினம், அக்கருத்திற்கு மேலதிகச் சான்றாக மகாநதி-தார்வார் போக்குகள் வந்து சந்திக்கின்ற தன்மையை எடுத்துள்ளார். அவர் 'தார்வார், மகாநதிப் போக்குகள் தென்னிந்தியாவில் சந்திப்பதாக அமைகின்றன. ஆனால், அவை இலங்கையின் மத்திய பகுதியி லேயே சந்திக்கின்றன. இன்று இந்தியாவிற் காணப்படும் இப்போக்குகளை நீட்டினால் அவை சந்திக்குமிடம் இலங்கையில் அமையாது பக்கவாட்டிற் பெயர்ந்து சற்று மேற்கே அமைகின்றது; இதையும் தலைகீழாகத் திரும்பிய V வடிவப் பிளவையும் நோக்குழ்ப்ோது இலங்கை இந்தியாவினின்றும் பிரிந்தமைந்தது என்பதை ஏற்கக்கூடியதாய் இருக்கின்றது' என்கிறார்.
-இத்தகைய புவிப்பெளதிகவுறுப்பியல் ஆதாரங்களிலிருந்து, இந்தியா வினின்றும் பிரிவுற்ற நிலத்திணிவே இலங்கை என்பது பெறப்படுகின்றது. ‘மயோசீன் காலத்தில் நிகழ்ந்த கடற்கோளே இலங்கையை இந்தியாவினின் றும் பிரித்துத் தனி அலகாக்கியது. இன்றைய பாக்குத் தொடுகடலிலும் பார்க்க, ஆழமும் அகலமுமான மயோசீன் கடல் (தெத்தீஸ் கடல்) சென்னைக்கும் புத்தளத்திற்கும் இடையே பாய்ந்ததால், தக்கணத்தின் தென்கீழ் அந்தம் பிரிவுற்று இலங்கையாகியது." (டி.என். வாடியா)
23

Page 14
2.3 வேறுபாடுகள் இந்தியத் துணைக்கண்டமும் இலங்கையும் புவிப்பெளதிக உறுப்பியல் நிலைமைகள் பலவற்றில் ஒற்றுமையுடையனவாக இருந்தபோதிலும், இந்தியத் துணைக்கண்டத்திற் காணப்படுகின்ற மூன்று புவிச்சரிதவியல் நிலைமைகளை இலங்கையில் அவதானிக்க முடியாதுள்ளது. அவை:
1. கேம்பிரியன் காலத்திற்கு முற்பட்ட நிலத்திணிவு - அதாவது கொண்டுவானாலாந்திற்கு முற்பட்ட நிலத்திணிவு பனிக்கட்டி ஆறாதலுக்கு உட்பட்டிருக்கின்றது. இந்தியக் குடாநாட்டில் இதற்கு ஆதாரங்களுள்ளன. தல்சீரிலுள்ள அறைபாறைப் படையை (Taichir boulder bed) பனிக்கட்டி ஆறாதலுக்கு ஆதாரமாகக் கூறலாம். ஆனால், இலங்கையில் இதற்கு ஆதாரங்களில்லை.
2. தக்கணத்தில் நிகழ்ந்த எரிமலைக்குழம்பு வெளிப் பாய்தலின் தாக்கத்தையும் இலங்கையில் அவதானிக்கமுடியாது. இலங்கை யைப்போல பத்துமடங்கு பரப்பில் எரிமலைக் குழம்புதக்கணத்தில் வெளிப்பாய்ந்தது; அதன் தாக்கம் இலங்கையில் காணப்பட வில்லை." (வாடியா)
3. அல்பைன் மலையாக்கத்தால் ரேசறிக் காலத்தில் இமயமலை உருவாகியது. 3 500 கிலோ மீற்றர்கள் நீளத்திற்கு 8 000 மீற்றர் உயரத்திற்கு நிகழ்ந்த இமாலய உருவாக்க விளைவுகளை இலங்கை யில் அவதானிக்க முடியாதுள்ளது.
24

இலங்கையின் உருவாக்கம்
இலங்கையின் நிலத்தோற்றம் எவ்வாறு உருவாகியது? இலங்கையின் மத்தியிலே உயர்ந்த மலைநாடும், அதனைச் சூழந்த கடற்கரைச் சமவெளி களும் காணப்படுகின்றனவே, இத்தோற்றம் எவ்வாறு தோன்றியது? - இவற்றிற்கு அடம்ஸ், வாடியா, குலரத்தினம் என்போர் பல்வேறு விளக்கங் கள் தந்துள்ளனர். அவற்றை இனி ஆராய்வோம்.
3. அடம்ஸ் என்பாரின் கருத்துக்கள் இலங்கையின் இயற்கையமைப்பு ஒன்றின் மேலொன்றாக அமைந்த மூன்று ஆறரித்த சமவெளிகளின் (அண் கழுவெளிகள்) இயல்பைக் கொண்டு விளங்குகின்றது. (படம் 31) இலங்கையின் பாறையமைப்பில் நன்கு அரிப்பிற் குள்ளான மூன்று ஆறரித்த சமவெளிகளின் இயல்பை முதன்முதல் விளக்கி யவர் எஃப். டி. அடம்ஸ் ஆவார். ஆறரித்த சமவெளிகள் எல்லா மட்டங் களிலும் அமையுந்தன்மையன.
இலங்கையின் பக்கப்பார்வை ஒன்றினை நோக்கினால், இம் மூன்று ஆறரித்த சமவெளிகள் அமைந்துள்ள தன்மையைக் காணமுடியும்.
'மிகத் தாழ்ந்த ஆறரித்த சமவெளி, மத்திய மலைநாட்டைச் சூழ்ந்து, கடற்கரைவரை தட்டையாகவுள்ளது. சிலவிடத்து அலைவடிவினதாயும்
25

Page 15
உளது. இத் தாழ் ஆறரித்த சமவெளியின் சராசரி உயரம் 100 அடியாகும். ஆனால், உண்ணாட்டில் 300 அல்லது 400 அடிவரை உயர்ந்தும் உள்ளது. இத் தாழ் ஆறரித்த சமவெளியின் எல்லையிலிருந்து ஏறத்தாழ 1 000 அடி உயரமான ஒரு குத்தான சரிவின்மூலம் உயர்ந்து, 2 500 அடிவரை மத்திய ஆறரித்த சமவெளி பரந்துள்ளது. இதனுள் பிறிதொரு குத்துச் சரிவின்மூலம் (ஏறத்தாழ 3000-4000) உயர்ந்து, சராசரி 5 000 தொட்டு 6 000 அடிவரை உயர் ஆறரித்த சமவெளி அமைந்துள்ளது. இந்த உயர் ஆறரித்த சமவெளி சில இடங்களில் 8000 அடி உயரத்தினையும் கொண்டுள்ளது. (கூரே.)
乏
படம் 3.1 : அடம்ஸ் என்பார் கருதிய மூன்று ஆறரித்த சமவெளிகள்
(மூலம் : அடம்ஸ்) 1. தாழ் ஆறரித்த சமவெளி (100 மேல்) 2. மத்திய ஆறரித்த சமவெளி (1600 மேல்)
3. உயர் ஆறரித்த சமவெளி (6000 மேல்)
'கடல் மட்டத்திற்குமேல் மூன்று ஆறரித்த சமவெளிகளும் அமைந்து உள்ளன. இலங்கையைச் சுற்றியுள்ள கடற்கீழ் சமவெளியை (submarine plateau) நான்காவது ஆறரித்த சமவெளியாகக் கருதலாம்' என அடம்ஸ் கூறுகிறார். எனவே இந்நான்கு ஆறரித்த சமவெளிகளும் உருவாக, நான்கு தடவைகள் இலங்கையில் மேலுயர்ச்சிகள் (Uplift) ஏற்பட்டிருக்கின்றன; மேலுயர்த்தப்பட்ட ஒவ்வொரு தடவையும் அரிப்பினால் ஆறரித்த சம வெளி உருவாகும் வரையும் இலங்கையின் மேற்பரப்பு அசைவில் நிலையில் (Still stand) 15airp5od,5airpg).
3.1.1 நான்குமேனுயர்ச்சிகள் அடம்ஸ் கருதிய நான்கு மேலுயர்ச்சிகள் மேல்வருமாறு:
1. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் இத்தீவு கடலிலிருந்து சிறிது உயரத்திற்கு மேலுயர்ந்தது. வெகுகாலத்திற்கு அவ்வாறே இருந்தது. அரிப்பிற்கும் பல்வேறு உரிவுகளுக்கும் இது உட்பட்டது. உயர் ஆறரித்த சமவெளி உருவாகுமட்டும் இந்த அரிப்பு நிகழ்ந்தது.
2. உயர் ஆறரித்த சமவெளி உருவாகியதும் இலங்கை மீண்டும் ஏறத்தாழ 4 400 அடி உயரத்திற்கு மேலுயர்த்தப்பட்டது. மத்திய ஆறரித்த சமவெளி உருவாகுமட்டும் இது அசைவில் நிலையில் இருந்தது. 26

3. மத்திய ஆறரித்த சமவெளி உருவாகியதன் பின்பே, மூன்றாவது உயர்ச்சி நிகழ்ந்தது. இந்த மேலுயர்ச்சி 1 500 அடி உயரம்வரை ஏற்பட்டது. தாழ் ஆறரித்த சமவெளி தோன்றுமட்டும் இந்நிலம் நிலைத்திருந்தது. (படம் 3.1) 4. நான்காவது மேலுயர்ச்சி இலங்கையின் கடற்கீழ் மேட்டுநிலம்
(கண்டமேடை) உருவாக உயர்ந்ததாகும். (படம் 2.2) தாழ் ஆறரித்த சமவெளியும் மத்திய ஆறரித்த சமவெளியும் கடலரிப் பின் விளைவால் (Marine Denudation) உருவானவை என வேலாண்ட் என்பார் கருதினார்; ஆனால், அடம்ஸ் அவை மேற்பரப்பு உரிவின் விளை வால் (Subaerial Denudation) உருவானவை என்கிறார்; (அதாவது நீரரிப் பின் விளைவு.)
மேலுயர்ச்சிகள் நிகழ்ந்த வேளைகளில் (Positive movement), சில சிறு கீழ்த் தாழ்வுகளும் (Negative movement) ஏற்பட்டன என அடம்ஸ் கூறியுள் ளார்; "மூன்றாவது, நான்காவது மேலுயர்ச்சிகளுக்கு இடையில் தாழ் ஆறரித்த சமவெளி கடலினுள் ஆழ்ந்தது. அதனாலேயே, மயோசீன் சுண்ணக்கற்பாறை உருவாகின. பிறிதொரு கீழ்த் தாழ்வு கடற்கீழ் மேட்டு நிலத்தைக் கடல் மூடிய நிகழ்ச்சியாகும்.'
மேலே விபரித்த மேலுயர்ச்சிகளும் கீழ்த்தாழ்வுகளும் எப் புவிச்சரித காலங்களில் நிகழ்ந்தனவென்று வரையறுக்க முடியாது; இதற்கு இலங்கையை மட்டும் ஆராய்ந்து விளக்கந் தருவதும் கடினம். இலங்கை யிலுள்ள மூன்று ஆறரித்த சமவெளிகளின் ஒற்றுமையைத் தென்னிந்தியா வில் அவதானிக்க முடிந்தால், கண்டவாக்க விசைகள் (Epeirogenic movement) எப்போது தொழிற்பட்டன என்று கூறுதல் இயலும், தென்னிந்திய அடையல் படிவுகளின் வயது கணிக்கப்பட்டிருப்பதால், இது இலகுவாகும். இலங்கையைப் பொறுத்தமட்டில் மயோசீன் சுண்ணக்கல், யூறாசிக் படிவு கள் என்பனவற்றின் கால வரையறையில் மட்டுந்தான் சந்தேகமில்லை’ என்று அடம்ஸ் கூறியுள்ளார். 豪文
இலங்கையில் காணப்படுகின்ற மூன்று ஆறரித்த சமவெளிகளை தென்னிந்தியாவில் அவதானிக்கமுடியுமா? இலங்கையின் மத்திய ஆறரித்த சமவெளியின் தொடர்ச்சியினைத் தக்கண மேட்டுநிலம் பிரதிபலிக்கின்றது' என்றும், உயர் ஆறரித்த சமவெளியினை நீலகிரி மேனிலம் பிரதிபலிக் கின்றது' என்றும் அடம்ஸ் கூறுகிறார்.
3.1.2 ஆறரித்த சமவெளிகளில் முதுமையானது எது?
உயர் ஆறரித்த சமவெளியே முதன்முதல் தோன்றிய நிலவுருவமாகும்.
ஆதலால், இதுவே மிகப் பழைய நிலவுருவமாகும். மிகப் பழைய நிலவுருவத்
-- 27

Page 16
தன்மையை, உயர் ஆறரித்த சமவெளியே பிரதிபலிக்கின்றது என்று அடம்ஸ் கூறினார். அதற்கு ஆதாரமாக உயர் ஆறரித்த சமவெளியில் பல சான்றுகளை அவர் எடுத்துக்காட்டினார். உயர் ஆறரித்த சமவெளியில் காணப்படுகின்ற எஞ்சிய குன்றுகள் (மொனாட்நொக்ஸ்) இப்பகுதிகளில் எவ்வளவு தூரம் உரிவு நிகழ்ந்திருக்கிறது என்பதையும் இவ் ஆறரித்த சமவெளி மிகப் பழமையானது என்பதையும் சுட்டி நிற்கின்றன. 'உயர் ஆறரித்த சமவெளி யிற் காணப்படுகின்ற பேதுருதாலகாலை (8292), சிவனொளிபாத மலை
போன்றன மொனாட் நொக்சுக்களாகும்’ என அடம்ஸ் கூறுகிறார்.
தாழ் ஆறரித்த சமவெளி, இன்று பாறைத்துண்டுக் குவைகளினால் (Debris) மூடப்பட்டுள்ளன. பல பகுதிகளில் அரிப்புண்டு எஞ்சிய பாறைத் தொடர்களைக் காணமுடிகின்றது. அவை பாறைத் தொடர்களாகவும் குன்றுகளாகவும் இன்றுள்ளன. தென்மேல் தாழ்நிலத்தில் இவை கரை யோரத்திற்குச் சமாந்தரமான பாறைத் தொடர்களாகவும் தென்கீழ் தாழ் நிலத்தில் இவை குன்றுகளாகவும் (கதிர்காமம், இங்கினியகலை, வெஸ் மினிஸ்ரர் அபே குன்றுகள்) காணப்படுகின்றன. வட தாழ்நிலத்திலும் அரிப்பின் எஞ்சிய பாறைகள் உள்ளன; குருநாகல் யானைப்பாறை, யாப்ப கூவை, சிகிரியா, மிகிந்தலை, தம்புள்ளை என்பன இத்தகைய எஞ்சிய பளிங்குப்பட்டைப் பாறைகளாகும். 10 000 அடி வரையிலான வன்மையான பளிங்குப்பட்டைப் பாறைகள் உரிவு காரணமாக இத்தீவிலிருந்து நீக்கப் பட்டு விட்டன என அடம்ஸ் கருதுகிறார்.
3.2 வாழயாஎன்பாரின் கருத்துக்கள் 'ஒன்றன்மேலொன்றாய் அமைந்த தெளிவான மூன்று ஆறரித்த சமவெளி களால் இலங்கையின் இயற்கையமைப்பு அமைந்ததென்ற முடிவிற்கே அடம்சைப் போன்று டி.என். வாடியா என்பாரும் வந்தார். வாடியாவின் ஆறரித்த சமவெளிகள் மேல்வருமாறு:
1ஆவது ஆறரித்த சமவெளி (தாழ் ஆறரித்த சமவெளி) கடல் மட்டத் திலிருந்து 400 அடிவரை. 2ஆவது ஆறரித்த சமவெளி (மத்திய ஆறரித்த சமவெளி) அதி உயரம் 2 500 அடி.
3ஆவது ஆறரித்த சமவெளி (உயர் ஆறரித்த சமவெளி) அதி உயரம் 8 300 அடி.
இம் மூன்று ஆறரித்த சமவெளிகளும் கடல் மட்டத்திலிருந்து நன்கு வெட்டுண்ட இரு சரிவுகள் அல்லது குத்துச் சரிவுகள் மூலம் உயர்ந்தமைந்து உள்ளன. மிகத் தாழ்ந்த சரிவு தாழ் ஆறரித்த சமவெளியிலிருந்து 1000 அடி
28

உயரத்திலும் இரண்டாவது சரிவு 3000 தொட்டு 4000 அடி உயரத்திலும் அமைந்துள்ளன. (படம் 3.2)
தோற்ற அடிப்படையில் அடம்சினது ஆறரித்த சமவெளிகளுக்கும், வாடியாவினது ஆறரித்த சமவெளிகளுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஆறரித்த சமவெளிகள் உருவாக இலங்கையின் நிலம் மேலுயர்ச் சிக்கு உட்பட்ட ஒழுங்கில் இருவருக்கும் வேறுபாடுகளுள்ளன. அடம்சின் படி, முதன்முதல் மேலுயர்ந்த நிலம் உயர் ஆறரித்த சமவெளியாகும்; வாடியாவின்படி, முதன்முதல் மேலுயர்ந்த நிலம் தாழ் ஆறரித்த சமவெளி யாகும.
3.2.1 வாழயாகூறும் மேலுயர்ச்சிகள் வாடியாவின் மேலுயர்ச்சிகள் வருமாறு:
1. முதன்முதல் கடல் மட்டத்திலிருந்து மேலுயர்ந்த நிலம், தாழ் ஆறரித்த சமவெளியுள்ள நிலமாகும். இந்நிலம் தாழ் ஆறரித்த சமவெளி உருவாகுமட்டும் அசைவில் நிலையிலிருந்தது. 2. தாழ் ஆறரித்த சமவெளி உருவாகியதும், இன்று 1000 அடிச்சரிவு காணப்படுகின்ற விளிம்பில், வட்டித்த திணிவுப் பிளவாக்கம் (Circumscribed block-faulting) ஏற்பட்டது. (ஒரு நிலப்பரப்பின் மத்தி யில் வட்டமாக ஏற்படும் பிளவுக்குறையே வட்டித்த திணிவுப் பிளவாக்கமாகும்.) இப்பிளவாக்கத்தினுள் அமைந்த நிலப்பரப்பு மேலுயர்ச்சிக்கு உட்பட்டது. இதுவே மத்திய ஆறரித்த சமவெளி யாகும்.
3. மத்திய ஆறரித்த சமவெளி உருவாகியதும், இரண்டாம் தடவையாக இவ்வாறாCத்த சமவெளியில் வட்டித்த திணிவுப் பிளவாக்கம் ஏற்பட்டது. இப்பிளவாக்கம் இன்றுள்ள 3000-4000 சரிவின் கீழ் விளிம்போடு ஏற்பட்டது. இப்பிளவுக் குறையினுள்ளமைந்த நிலப்பரப்பு மேலுயர்த்தப்பட்டு அரிப்பிற்குள்ளாகியது. அதனா லேயே உயர் ஆறரித்த சமஇவ உருவாகியது. (படம் 3.2)
வாடியா மேலே விபரித்தவற்றிற்குப் பல சான்றுகளைக் காட்டினார்: நதிப் பள்ளத்தாக்குகளால் ஆழமாக வெட்டப்பட்ட நிலையும் குன்றுகள், தொடர்கள், ஏனைய அரிப்பின் எச்சங்கள் என்பன யாவும் இம்மூன்று ஆறரித்த சமவெளிகள், ஒரு பொதுவான மட்டங்களில் அமைந்து இலங்கை யின் அடிமட்டம் மூன்று நிலைகளில் அமைந்தது என்பதைச் சுட்டுகின்றன.
'மிகவுயர்ந்த குத்துச் சாய்வினின்றும் நோக்கும்போது இந்த மூன்று ஆறரித்த சமவெளித் தன்மையைக் காணலாம். இலங்கையின் குறுக்கு
29

Page 17
வெட்டுமுகம் இதனையே நிரூபிக்கின்றது' என்று கூறினார் வாடியா. மேலும் அவர், இக்குத்துச் சாய்விலிருந்து பல நீர்வீழ்ச்சிகள் கீழிறங்குகின்றன. இவை 100 அடி தொட்டு 500 அடிவரை வீழ்கின்றன. 20 பெரிய நீர்வீழ்ச்சிகளும் பல சிறிய நீர்வீழ்ச்சிகளுமுள்ளன. உயர் ஆறரித்த சமவெளியின் குத்துச் சாய்வின் தெற்கு, மேற்கு, கிழக்கு விளிம்புகளில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி கள், ஒரு குறை வட்டமாக (Semi circle or Crescent) அமைந்துள்ளன. இக்குறைவட்டமான நீர்வீழ்ச்சிகள், வட்டித்த திணிவுப் பிளவாக்கத்திற்குத் தகுந்த சான்றாகும். (படம் 3.4) கேம்பிரியனுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த பாறைகளில் இளமையான நீர்வீழ்ச்சிகள் காணப்படுவது, அண்மைக் காலத் திணிவு மேலுயர்ச்சியையே (Block uplift) குறிக்கின்றன" என்று கருதுகிறார்.
༣ ༧ }༧ག་༡༡ཤ། ༢ག་
V f f A 1A 1AA. 公 %2z .7 سمتصے
படம் 3.2 : வாடியாவின் ஆறரித்த சமவெளிகள் (மூலம் : வாடியா) 1. தாழ் ஆறரித்த சமவெளி 2. மத்திய ஆறரித்த சமவெளி 3. உயர் ஆறரித்த சமவெளி
'பிளவுக் குறைகளே இலங்கையின் ஆறரித்த சமவெளிகள் உருவாகக் காரணங்களாகும்' என வாடியா வற்புறுத்தினார். அதனாலேயே அடம்சினது
30
 

சில கருத்துக்களை அவர் வன்மையாகக் கண்டித்தார். 1800-1 200 அடி யிலும், 2 000-4000 அடியிலும் அமைந்துள்ள குத்துச்சாய்வுகள், சாதாரண நீரரிப்பால் உருவான சாய்வுச் சரிவுகள் (Dip slope) என அடம்ஸ் கூறினார். ஆனால், வாடியா அவை குறைச்சாய்வுகள் (Fault dip) என்கிறார். இலங்கை யின் மத்திய திணிவின் பிதிர்வுத் (Horst nature) தன்மையுடைய பகுதி மேற்கு, கிழக்கு, தெற்கு எனும் பகுதிகளிலமைந்த குறைகளினால் மேலுயர்த் தப்பட்டவையாகும். (படம் 3.3)
i
s
படம் 3.3 : வாடியாவின் குறைத்தளங்கள் (மூலம் : வாடியா) (மேலுயர்ச்சிக் குறைகள் தோன்றிய இடங்கள்)
F குறைத்தளங்கள் 1. பளிங்குப்பட்டை 2. கொண்டலையிற்
3. கொண்டுவானா 4. மயோசீன்
"உயர் ஆறரித்த சமவெளியிற் காணப்படுகின்ற பேதுருதாலகாலை, சிவனொளிபாதமலை முதலியன பழைய நிலத்தின் உரிவுண்ட எச்ச மலை கள்’ என அடம்ஸ் கூறினார். வாடியா இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர், இவை புவியசைவு காரணம்முகக் குத்தாக மேலுயர்த்தப்பட்ட (9,60pLD606356ir' (Fault mountains) GörSpiti.
3.2.2 ஆறரித்த சமவெளிகளில் முதுமையானது எது? வாடியா தாழ் ஆறரித்த சமவெளியே மிகப் பழையது எனக் கருதினார். அடம்ஸ் கருதியவாறு, உயர் ஆறரித்த சமவெளி பழைமையானதன்று; அது இளமையானது என்றார்: "கரையோர ஆறரித்த சமவெளி முதுமையானது என்பதற்குப் பல ஆதாரங்களில்லை; ஆனால், உயர் ஆறரித்த சமவெளி இளமையானது என்பதற்குப் பல ஆதாரங்களுள்ளன.
31

Page 18
= t്ട്. - ക്രജ്ഞ്മrel
படம் 3.4 : உயர் ஆறரித்த சமவெளியிற் குறைவட்டமாக அமைந்த நீர்வீழ்ச்சிகள். இவை அண்மையில் வட்டித்த திணிவுப் பிளவாக்கம் ஏற்பட்டதைக் குறிக்கின்றன. தடித்தகோடு குறைச் சாய்வாகும். (மூலம் : வாடியா)
தாழ் ஆறரித்த சமவெளி மண்ணுள் புதையுண்ட எஞ்சிய பாறைத் தொடர்களையும் மொனாட்நொக்சுக்களையும் கொண்டிருக்கின்றது. 4000 சதுர மைல்களையுடைய வடசமவெளி, கிழக்குச் சமவெளியின் பெரும்பகுதி என்பன கொண்டுவானாலாந்தின் படிவுகளைக் கொண்டுள்ளன. ஆதலால், தாழ் ஆறரித்த சமவெளி பழைமையானது எனத் துணியலாம். மத்திய ஆறரித்த சமவெளியின் குத்துச்சாய்வு தெளிவானது. முதிராத் தரைத் தோற்றத்தையும் வடிகாலமைப்பையும் உயர் ஆறரித்த சமவெளி பிரதிபலிக் கின்றது. உயர் ஆறரித்த சமவெளியின் குத்துச் சாய்வுகள் மிகத் தெளிவான இளம் ஆதாரங்களையுடையன. இச்சமவெளியின் குறைப் பிளவுகளாக களு கங்கையும் மகாவலி கங்கையுமுள்ளன. மகாவலி கங்கை மத்திய-உயர் ஆறரித்த சமவெளிகளின் எல்லையோடு பாய்கின்றது. றக்குவானைத் தென் மலைச் சுவரிடையே களுகங்கை ஒடுகின்றது. (படம் 3.3) உயர் ஆறரித்த சம வெளியின் இடவிளக்கவியலும் பள்ளத்தாக்கு அமைப்பும் புத்துயிர் பெற்ற அமைப்பினையுடையன. எல்லையிலமைந்த நீர்வீழ்ச்சிகள் இளமைநிலைக்கு ஏற்ற ஆதாரங்கள். - என வாடியா விளக்கந் தருகின்றார்.
32
 

இலங்கை அடம்ஸ் கருதியவாறு மேலுயர இடமில்லை' என வாடியா கூறுகின்றார். அடம்ஸ் கருதியவாறு மேலுயர்ந்திருந்தால், நதிகள், அருவி கள் என்பனவற்றின் வடிகாலமைப்பில் மாற்றங்கள் ஏற்பட இடமில்லை. இலங்கையின் ஒவ்வொரு பகுதியிலமைந்த மேலுயர்ச்சியே, நதிகளின் போக்கில் மாற்றங்களையும் திசைத் திருப்பங்களையும் சாய்வு விகிதத்தில் முறிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது' என்ற கருத்தை வாடியா தெரிவித்துள் ளார். மகாவலி கங்கை மேற்குக் கடலில் விழாது திசைதிரும்பி கிழக்குக் கடலில் விழுவதற்கு வட்டித்த திணிவு மேலுயர்வுதான். காரணமோ?
3.3 குலரத்தினம் என்பாரின் கருத்துக்கள் இலங்கையின் மேற்பரப்பு உருவங்கள், வேற்றுமைப்பட்ட பிறப்புக்களைக் கொண்ட சிக்கலான தன்மையானவை. வேறுபட்ட ஆக்கங்களால் தோன்றிய பல முகப்புக் கூறுகளை இலங்கை கொண்டுள்ளது. அடுத்தடுத்து உண்டாகும் வட்டத்தன்மைப் படிமுறை மாற்றங்களின் அடையாளங் களைக் கொண்ட ஒரு சுவடு என இலங்கையின் அமைப்பைக் கூறலாம்' எனப் பேராசிரியர் கா. குலரத்தினம் என்பார் கருதுகிறார். அவர், இலங்கை யின் உள்ளமைப்பே (Internal structure) வெளித்தோற்றமாதவும், பக்கப் பார்வையாகவும் பிரதிபலிக்கப்படுகின்றது" எனக் கூறுகிறார்: "மட்டக் களப்பின் தெற்கேயமைந்த கரையின் கிழக்கு நோக்கிய புடைப்பானது அப் பகுதிக்குரிய பாறை அமைப்பினையும் தரைத்தோற்றத்தினையும் பிரதி பலிக்கின்றது. இலங்கையின் தென்மேற் கரையின் மத்தியகோடு நோக்கிய நீட்சி றக்குவானைத் திணிவிற் பிரதிபலிக்கப்படுகின்றது. வடக்கு நோக்கிக் குறுகிச் செல்லும் வடதாழ் நிலங்கள் அகன்ற தென்பகுதியையும் வடக்கு நோக்கிய மென்சரிவையும் கொண்ட கீழ்மடிப்புள் மடிப்போடு இயை வனவாக அமைகின்றன."
அடம்ஸ், வாடியா என்போரது மூன்று ஆறரித்த சமவெளிகள் பற்றிய கொள்கைகளைப் பேராசிரியர் ஏற்றுக்கொள்ளவில்லை; வன்மையாக அவர்களது கருத்துக்களைக் கண்டித்துள்ளார். அவரின் விளக்கம் வருமாறு:
'பக்கப் பார்வைக்கு இலங்கையின் தரைத்தோற்றத்தில் மூன்று படி களாக அமைந்த வெளியுருவம் புலப்படுமேனும், ஆழ்ந்து இதனை ஆராயின் இது பொருத்தமற்றதாகவும் மிக எளிமையாக்கப்பட்ட பாகுபாடாகவும், தொடர்பற்ற பகுதிகள் ஒருங்கே தொடுக்கப்பட்டிருப்பதாகவும் காணப் படும். தாழ் ஆறரித்த சமவெளியின்மேல் காணப்படும் இரு ஆறரித்த சமவெளிகளையும் சூழ்ந்துள்ளதென அடம்சினால் விபரிக்கப்பட்ட குத்துச் சாய்வுகள் தொடர்ச்சியானவையாக அமையவில்லை. தமது கொள்கையைப் பலப்படுத்த வேண்டித் தொடர்பற்ற பல ஓங்கல்களையும் (Clifts), குத்துச் சாய்வுகளையும் அவர் இணைத்து ஒன்றாகக் கூறினார் என அஞ்ச வேண்டி
உள்ளது.'
33

Page 19
'வாடியாவின் ஆறரித்த சமவெளிகளின் எல்லைகளில் அமைந்த குத்துச் சாய்வுகளும் முன்னவர் போன்றே எளிமையாக்கப்பட்டவை. தரையிற் காணப்படும் ஒரு சில குத்துச்சரிவுகளோடுதான் அவருடைய படத்திற் குறிக்கப்பட்டுள்ள கோடுகள் ஒற்றுமைப்படுகின்றன. ஆனால், அவர் அமைத்த செயற்கைக் கோடுகளின் உள்ளும் வெளியும் அமைந்த குத்துச் சரிவுகள் கருத்திற்கு எடுபடவில்லை."
அடம்ஸ், வாடியா என்பவர்கள் போதியளவு காலத்தை இலங்கையில் கழிக்கவில்லை. ஆதலால், இலங்கையின் நிலத்தோற்றம் பற்றிச் சரியான விளக்கத்தை அவர்களாற் கூறமுடியாது போய்விட்டது' எனவும் குலரத்தினம் சாடுகிறார்.
3.3.1 உருவவியல் அலகுகள்
இலங்கையின் இடவிளக்கவியற் படங்களை நன்கு ஆராயின், மூன்று ஆறரித்த சமவெளிகளைக் காணமுடியாது எனக் கூறிய பேராசிரியர், இலங்கையின் அமைப்பில் காணப்படுகின்ற உருவவியல் அலகுகளைப் பிரதேச அடிப்படையிலும் உயர அடிப்படையிலும் 5 பிரிவுகளாக வகுத்துள் ளார்: (படம் 3.5 ஐப் பார்க்க)
1. றக்குவானைத் திணிவுகள் உட்பட்ட மத்திய உயர்நிலம். 2. நன்கு விருத்தியடைந்த அளியடைப்பு வடிகாலமைப்பைக் கொண்ட நீள்முகப் பள்ளத்தாக்குடன், மென்சரிவு-குத்துச் சரிவுப் பாறை களைக் கொண்ட நீள் குன்றுத் தொடர்கள் (Strike ridges), குவேயித்தாக்கள் (Cuestas), பன்றி முதுகுவெற்புகள் (hogs backs) என்பவற்றை இடவிளக்கமாகக் கொண்ட நன்கு நீர்பெறும் தென்மேல் பிரதேசம். 3. 6Taig LD60656it (Residual hills), GLDITGOTITL GibsTijóid, Git (Monadnocks), தட்டையுச்சி விலங்கல்கள் (Buttes) என்பனவற்றையும் தளத்திடைக் குன்று போன்ற (Inselberg) தனிக்கல்லால் அமைந்த குமிழ்வெளி அரும்புகளையும் (Outcrop domes) கொண்ட வரண்ட கிழக்கு, தென்கிழக்குப் பிரதேசம். 4. மத்திய மலையிலிருந்து விலகிச் செல்லச் செல்ல உயரத்திலும் பருமனிலும் குறைந்து சென்று கடற்கரையோரத்தில் அண்மைக் கால வண்டல்களால் மூடுண்டு கிடக்கும் எச்சமலைகளும் குன்றுகளும் கொண்ட வட தாழ்நிலம். 5. கடனீரேரிகளையும் (Lagoons), மணற்றிடல்களையும் (Dunes)
கொண்ட கரையோரத் தாழ்நில வலயம்.
34

படம் 3.5 உருவவியல் அலகுகள்
(மூலம் : பேராசிரியரின் கருத்திற்குரிய படம்)
35

Page 20
'மத்திய உயர்நிலம் பல்திறப்பட்ட நிலத்தோற்றத்தைக் கொண்டு உள்ளது. அடம்ஸ் கருதியவாறு மத்திய உயர்நிலம், முதிர்ந்த நிலத்தோற்ற உறுப்புக்களையோ, வாடியா கருதியவாறு இளம் நிலத்தோற்ற உறுப்புக் களையோ, தனித்துக் கொண்டிருக்கவில்லை. அது முதிர்ந்த நிலவுருவங் களையும் முதிரா நிலவுருவங்களையும் கலந்து கொண்டிருக்கின்றது' எனப் பேராசிரியர் கூறுகிறார்.
மத்திய உயர் நிலத்தில் பல்திறப்பட்ட நிலவுருவங்கள் காணப்படு கின்றன. தேய் நிலையிலுள்ள அதிமுதிர் தின்னல் மேற்பரப்புகள் (Late mature erosion surface) காணப்படுகின்றன. ஹோட்டன் சமவெளி, பாறைப் பிதிர்வான வைல்டான்ஸ் சிகரம், ராகலைப் பாறைமேடை, மதுள் சீமா மேடை, தென்மேடை முதலியன இவ்வாறான அதிமுதிர் தின்னல் மேற் பரப்புக்களாகும். மேலும், மத்திய உயர் நிலத்தில் வளரும் நிலையிலுள்ள சரிவுகள், இளமையான குத்துச் சரிவுகள். பழைய நிலவமைப்பிற் காணப் படும் எச்சங்கள் (தோட்டப்பாலை, பேதுருதால காலை) முதலான பல் திறப்பட்ட நிலவுருவங்களை அடையாளம் காணலாம் எனக் குலரத்தினம் கூறுகிறார்.
அதிமுதிர் தின்னல் மேற்பரப்புகள் பல்வேறு உயரங்களில் காணப் படுவதனால் இலங்கையின் நிலத்தோற்றம் அடம்ஸ், வாடியா என்போர் கருதியவாறு மூன்று கண்ட ஆக்க விசைகளின் விளைவெனக் கொள்ள முடியாது எனத் துணியலாம். எனவேதான் பேராசிரியர், 'பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்ட பல்வேறு கண்டவாக்க விசைகளின் விளைவாகவே இலங்கையின் முகத்தோற்றம் அமைந்தது' எனத் துணிந்தார்.
3.3.2 அண்மையிற் புவியசைவுகள் தொழிற்பட்டதற்குரியசான்றுகள் பல சான்றுகள் இலங்கையில் அண்மையிற் புவியசைவுகள் தொழிற் பட்ட தைத் தெரிவிக்கும் இலங்கையில் புவிச் சரிதவியலுக்கு ஆய்வுகள் தேவை யான அளவு எழுகையைக் கொண்ட பிளவை விளக்கிக் காட்டக்கூடிய அளவிற்கு முன்னேறவில்லை. தனிப்பட்ட உள்ளூர் நிலைகள், நேரடியான படையாக்க (Stratigraphical) அடிப்படையில் நிரூபித்தல் கடினம். உதாரண மாக உருமாறிய பாறைகள் சிக்கலாய் அமைதல், வரலாற்றுத் தொடர்ச்சி யற்றுக் காணப்படல், அடித்தளப் பாறை வேறு பாறைகளால் அல்லது தாவரங்களால் மூடப்பட்டுக் கிடத்தல் என்பவற்றால் நிரூபித்தல் கடினமாக உள்ளது. நேரடியான உறுப்பமைதிச் சான்றுகள் இல்லாதவிடத்து, சில தொடர்புகளைப் பெருமளவிற்கு உண்மையாகத் தெரிவிக்கக்கூடிய மட்டில் புவி வெளியுருவவியல் வளம் பெற்றுக் காணப்படுகிறது' என்று விபரிக்கும் பேராசிரியர், இலங்கையிற் புவியசைவுகள் தொழிற்பட்டன என்பதற்குரிய சான்றுகளை விரிவாகக் கூறியுள்ளார். அவற்றைச் சுருக்கமாக நோக்குவோம்; அச்சான்றுகள் வருமாறு:
36

3.3.2.1 நீர்வீழ்ச்சிகள் மத்தியவுயர் நிலத்திலும், அதனைச் சேர்ந்த பகுதிகளிலும் இருபதிற்கு அல்லது அதற்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் காணப்படுகின்றன. இவை 100 அடி தொட்டு 500 அடி வரையுள்ள உயரத்திலிருந்து விழுகின்றன. இவை கக்குச் சரிவுகளை ஒட்டியே அமைந்துள்ளன. குத்துச் சரிவுகள் இளமை யானவை. எனவே, அவை அண்மையில்தாம் தோன்றியிருக்கின்றன. இந் நீர்வீழ்ச்சிகளில் பின்வாங்கல் (Recession), மலையிடுக்கை ஏற்படுத்தல் (Gorge) ஆகிய செயன்முறைகள் பெருமளவிற்கு நடைபெறவில்லை. இதற்கு கெகல்கமு, மஸ்கெலியா ஒயாக்கள் புறநடையாக அமைந்துள்ளன. தியலும வீழ்ச்சி, றம்பொடை வீழ்ச்சி முதலியன வன்மை குறைந்த பாறைகளை ஒட்டியும் அமைந்து காணப்படுகின்றன. ஹோட்டன் சமவெளியின் குத்துச் சரிவு விளிம்பு செம்மணி-சிலிமினேற் பாறையால் (Garnet-Silimanite rock) ஆனது. சாணோகைற் வெளியரும்புகளை ஒட்டிக் காணப்படும் நீர் வீழ்ச்சி கள் வேறுபட்ட தின்னலின் விளைவாய் ஏற்படாது புவியசைவுகளின் விளைவாய் ஏற்பட்ட சம தள முறிவையொட்டி அமைந்தன.
3.3.2.2 வெப்ப, குளிர்நீரூற்றுக்கள் 'தின்னலுக்குட்பட்ட மேற்பரப்புக்களோடு இயைந்த திட்டவட்டமான ஒரு ஒழுங்குப்பாட்டுடன் வெப்ப, குளிர்நீரூற்றுக்கள் அமைந்துள்ளன. லொக்கல் ஒயாவின் இருமருங்கும், மதுள்சீமா மேடையின் வட எல்லையைச் சூழ்ந்தும், தென் மேடையின் குத்துச் சரிவின் விளிம்புகளை அடுத்தும், றக்குவானை யின் கிழக்கே சமநிலத்தை ஒட்டி மறையும் வளவகங்கையின் பிளவுத் தாழியை (Fault depression) ஒட்டியும் வெப்ப, குளிர் நீரூற்றுக்கள் காணப் படுகின்றன."
3.3.2.3 உப்பு மூலக் குத்துத் தீப்பாறைகள் இலங்கையின் புவிச்சரிதவியற் படங்களிற் காட்டப்படும் தொலரைற் குத்துத் தீப்பாறைகள் (Dolerite dykes) நீரூற்று வரிசைக்குச் சமாந்தரமாக அமைந்துள்ளன. அத்தோடு புவியோட்டிற்குரிய நிலைகுலைதலோடும் தொடர்பு கொண்டுள்ளன. கல்லேரிடைக்குத் தெற்கில் அமைந்த குத்துத் தீப்பாறைகளையொட்டி, சங்கில்த் தொடர்போன்று வெப்ப நீரூற்றுக்கள் காணப்படுகின்றன. இவற்றின் வெப்பநிலை (110-130° ப.)ஆழம் பதிந்த தன்மையையும் அண்மைய தோற்றத்தையும் குறிக்கின்றன.'
3.3.2.4 தப்போவையின் யூறாசிக் பிளவு யூறாசிக் காலத்திற்குரிய மாக்கல் (Shales), மட்கல் (Sandstones) என்பவை தப்போவையில் குறுகிய பிளவு வடிநிலத்தினுள் அமைந்து காணப்படு மாற்றை, வேலான்ட் என்பவர் விளக்கியுள்ளார். யூறாசிக்கிற்குப் பிந்திய பிளவுக்குரிய அசைவுகள் இலங்கையையும் பாதித்ததை இவை குறிக்கின்றன.
37

Page 21
3.3.2.5 இலங்கையிலும் இந்தியாவிலும் அமைந்துள்ள
போக்குக் கோடுகள்
மகாநதி, தார்வாரியன், கிழக்கு மலைத்தொடர் என்பனவற்றின் போக்குகள் இந்தியக் குடாநாட்டில் ஒருங்குவதுபோற் காணப்பட்டாலும் அவை இலங்கையில்தான் சந்திக்கின்றன. இப்போக்குக் கோடுகளை நீட்டினால் அவை இலங்கையின் கிழக்குப் பகுதியைச் சந்திக்கும். இத்தகைய ஒரு நிலையிற்றான் வட அத்திலாந்திக்கின் இருமருங்கும் அமைந்த ஹேர்சீனி யன், கலிடோனியன் போக்குகளும், தென் அத்திலாந்திக்கின் பிரேசிலைற், கொண்டுவானைற் போக்குகளும் அமைந்துள்ளன. மன்னார்க் குடாவிற் காணப்படும் தலைகீழ் V வடிவில் அமைந்த ஆழ்கடற் பிளவையும் இலங்கை யிலும், தக்கணத்திலும் காணப்படும் யூறாசிக் படுக்கைகளையும் அடிப்படை யாகக் கொண்டுநோக்கில் யூறாசிக்கிற்குப் பிந்திய காலத்தில் தக்கணத்தில் நிகழ்ந்த புவியசைவுகளின் விளைவாக இலங்கை தக்கணத்திலிருந்து பிரிவுற் றுப் பெயர்ந்தது என்று கொள்ள வேண்டி இருக்கின்றது. இத்தகைய பக்க அசைவுகளுடன் (Lateral movements) ஏதோ ஒருவகையில் குத்து அசைவு களும் (Vertical movements) தொழிற்பட்டு இருத்தல் வேண்டும்.
3.3.2.6 பளிங்குப்பட்டைப் பாறைக்கும், கொண்டலைற்றிற்கும்
இடையிலுள்ள தெளிவான எல்லை சாணோகைற்றுக்கும் கொண்டலைற்றுக்கும் இடையில் தெளிவான எல்லைகள் காணப்படுகின்றன. சில இடங்களில் இவை நேரியவையாகவும் ஏறத்தாழப் பத்து மைல்களுக்கும் அமைந்துள்ளன.
மாவலத்தனை தொட்டு வெள்ளவாயாவரை அமைந்த குத்துச் சரிவு களின் அடிவாரத்தில் பளிங்குப்பட்டைப் பாறை வெளிக்காணப்படுகின்றது. இத்தகைய தன்மையே றக்குவானைக்குக் கிழக்கே வளவ கங்கையிலும், காணப்படுகின்றது. மகாவலிகங்கையின் நீள்முகப் பள்ளத்தாக்கின் கிழக்கே ஒரு நேரிய எல்லை காணப்படுகின்றது. இது ஆற்றின் மேற்கே காணப்படும் குத்துச் சரிவுகளுக்கும் ஊற்று நிரைக்கும் சமாந்தரமாக அமைந்துள்ளது.
3.3.2.7 நொருக்கப்பட்ட பெக்மற்றைற்றும் மடிப்பிற்குட்பட்ட
பாறையும் 'நொருக்கல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் பல உள. அவை அசைவுகள் நிகழ்ந்த தைக் குறிப்பன. சாணோகைற் திணிவுகளாற் சூழப்பட்ட நிலையில் பிபிலைக்கு அண்மையில் சிர்கன், பெகமற்றைற் வெளியரும்புப்பாறை gp6ölgy (Outcrop of zicron pegmatite) Glp/T(555üLul – Éla06vu9áv egy60l Digi காணப்பட்டதைக் கோட்ஸ் கண்டார். மிகப் பரந்தளவில் இவை ஹப்புத் தளை, வெலிமடை குத்துச் சரிவுகளையொட்டிக் காணப்படுகின்றன. இவையும் ஒரளவுக்கு நொருக்கப்பட்டே காணப்படுகின்றன. நக்கிள்சின்
38

தென்மேற்கு எல்லையையொட்டி நுகேதன்ன என்ற இடத்திலும் நொருக் கப்பட்ட பெக்மற்றைற் காணப்படுகின்றது. இவற்றுடன் சேர்ந்து மொன சைற் (Monazite) துணுக்குகளும் காணப்படுகின்றன. ஹோட்டன் சமவெளி யின் விளிம்பில் பல பெக்மற்றைற் நரம்புகள் காணப்படுகின்றன.
உயர் நிலப்பகுதியில் கணிசமான அளவு மைக்கா நரம்புகள் காணப் படுகின்றன. இவை 80-90% மைக்காச் செறிவைக் கொண்டிருப்பினும் முறுக்கல், நெளிதல் முதலிய அசைவுகளின் விளைவாய் பொருளாதாரப் பயன் குறைந்தனவாய் அமைந்துள்ளன.
நன்கு நறுக்குண்ட அமிலக் கருங்கற் தன்மையுள்ள பளிங்குப்படைப் பாறைகளில் காரீயம் காணப்படுகிறது. இலங்கையின் பாரிய காரீயச் சுரங்கங் களிற் காணப்படும் காரீய நரம்புகள் (Graphite veins) நறுக்குண்ட பகுதிக ளில் அமைந்துள்ளன.
3.3.2.8 பீடங்களுடனும் படிகளுடனும் அமைந்த புத்திளமை பெற்ற பள்ளத்தாக்குகளும் மேற்பரப்புகளும் "மேல்வருவன இவற்றுக்கு எடுத்துக்காட்டாக அமையும்"
1. தம்பகஸ்தலாவ ஒயாவில் எல்ஜின் நீர்வீழ்ச்சிக்குக்கீழ் அமைந்த
மலை இடுக்கிற் காணப்படும் படிகள். மகாதொட்டில, உமாஒயாக்களிற் காணப்படுபவை. 3. கொத்மலிஒயாவில் செயின்ற் கிளேயர் நீர்வீழ்ச்சிக்குக் கீழ்க் காணப்
படுபவை. 4. கெகல்கம, மஸ்கெலிய நதிகளின் அபடின், லக்சபானா வீழ்ச்சிகளின்
கீழ்க் காணப்படுபவை. வளவகங்கையின் உற்பத்திப் பிரதேசத்தில் காணப்படுபவை. வடக்காகப் பாய்ந்து மகாவலிகங்கையில் விழும் பெலிகுல்குருந்து ஒயாக்களின் விக்ரோறியா வீழ்ச்சியின் கிழக்கே காணப்படுபவை.
நதிகள் தொடர்பற்றிருத்தலுழு ീഖ சமச்சீரியக்க நிலையை அடை யாதிருப்பதும் அண்மையில் பிளவாக்கம் நிகழ்ந்ததையே குறிக்கின்றன. இவ்வுண்மை லிந்துள ஆற்றில் காணப்படும் வளைவுகளால் வலியுறுத்தப் படும்.
கடுகண்ணாவைக் குத்துச்சரிவை மேற்கு எல்லையாகக் கொண்ட கண்டி மேட்டுநிலம் கிழக்கே சரிக்கப்பட்டபடியினால் மகாவலிகங்கை திருப்பப்பட்டிருக்கவேண்டும் என்று கொள்ளவேண்டும். இங்கு அமைந்த வடிகாலமைப்பு சரிவுக்கேற்பத் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளவில்லை. எனவே அசைவு வெகு அண்மையில்தான் நிகழ்ந்திருக்கவேண்டும்.
39

Page 22
ஆரம்பத்தில் வட வடமேற்காவும், வடமேற்காகவும் தொடர்ந் தமைந்த பள்ளத்தாக்குகளின் ஊடு நதிகள் உயர் சமவெளியை ஊடறுத்துச் சென்றன. ஆனால், அவை இன்று துண்டிக்கப்பட்டனவாயும் கிழக்காயும் மேற்காயும் ஒடும் நதிகளில் நீரைச் சேர்ப்பனவாயும் அமைந்து காணப் படுகின்றன. இதன் விளைவாகப் பல காற்றிடுக்குகள் (Windgaps) தோன்றி யுள்ளன.
கினிகத்தேனைக்கும் கட்டுகஸ்தோட்டைக்குமிடையில் அமைந்து காணப்படும் மகாவலிகங்கையின் பகுதியை நோக்கில் அதன் இருமருங் கிலும் பல கிளை அருவிகள் இருப்பதைக் காணலாம். தென்கிழக்கே இருந்து வரும் கிளை அருவிகள் வடமேற்காகப் பாய்ந்திருத்தல் வேண்டும். இன்று தென்கிழக்காகப் பாயும் நதிகள் குறைப்பொருத்த அருவிகளாக அமைந் துள்ளன. அவற்றின் ஊற்றுக்கண்மையில் மலை இடுக்குகள் காணப்படு கின்றன. மலை இடுக்கிற்கு அப்பால் வடமேற்காகவும் மேற்காகவும் அருவி கள் ஒடி களனி, மகாஒயாப் பள்ளத்தாக்குகளில் விழுகின்றன. இவற்றை நோக்கில் கண்டி மேட்டுநிலம் திணிவாகவே அசைக்கப்பட்டுத் தென் கிழக்காகச் சரிக்கப்பட்டது என்பது புலப்படும்.
படம் 3.6: இலங்கையின் மத்திய மலைநாட்டின் தொடக் கத்து வடிகாலமைப்பு
இலங்கையின் மத்திய மலைநாட்டின் தொடக்கத்து வடிகாலமைப் பையும் இன்றைய வடிகாலமைப்பையும் அவதானிக்கில், பல்வேறுபட்ட காலத்திற்குரிய நிலவுருவங்கள் இருப்பது புலனாகும். நீர்வீழ்ச்சிகள் இளமைக்கான நிலவுருவங்களெனில் ஆற்றுச் சிறைகள் முதிர்ச்சிக்குரிய நில வுருவங்களாக அமைகின்றன. இலங்கையின் மிகப் பெரிய நதியான மகாவலி கங்கை ஆற்றுக்கு கொள்ளை'யால் உருவான நதியாகும். மகாவலிகங்கை தனியொரு நதியன்று. பல நதிகளின் தொகுதியால்தான் மகாவலிகங்கை
40
 

உருவாகியது. பல நதிகளைச் சிறைகொண்டு தன்னுடன் இணைத்து அவற்றின் பெரும்பகுதி நீரேந்து பிரதேசங்களின் நீரைத் தனியே அனுபவிக்கும் ஒட்டுண்ணி நதியாகும் எனப் பேராசிரியர் கா. குலரத்தினம்.
கூறியுள்ளார்.
படம் 3.7 மகாவலி கங்கை தொடக்கத்து நதி களின் தலையருவி களைச் சிறைப் பிடித்த பின்னர் இன்றுள்ள வடிகால்
அமைப்பு
இலங்கையின் புவிப்பெளதிகவுறுப்பியலை விளக்க இவ்வாறு பல அறிஞர்கள் முயன்றிருக்கிறார்கள். 'இலங்கையின் நிலத்தோற்றம் தொடர்ச்சியான ஒரு வாழ்க்கை வரலாற்றின் ஒரு கட்டம்; மூன்று அல்லது நான்கு கண்டவாக்க விசைகளின் விளைவாலமைந்த மூன்று ஆறரித்த சமவெளிகளைக் கொண்டது' என்ற அடம்ஸ், வாடியா என்போரது கருத்துக்களும் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த பல கண்டவாக்க விசை களின் விளைவே என்ற பேராசிரியரின் கருத்துக்களும் பல்வேறு ஆதார அடிப்படைகளில் எழுந்தவையே. இக்கருத்துக்களைச் சீர்தூக்கி நோக்கும் போது பேராசிரியர் கா. குலரத்தினத்தின் கருத்துக்களே ஏற்றுக்கொள்ளத் தக்கனவாக உள்ளன. எனவே, புவியசைவுச் சக்திகளினதும் தின்னற் சக்தி களினதும் ஓயாத மோதலின் வினைவே இலங்கை என்று துணியலாம்.
41

Page 23
அமைவிடமும்
4. இலங்கையின்
தரைத்தோற்றமும்
4.1 (9Goto6ff) இந்து சமுத்திரத்தின் மத்தியில் இந்தியாவிற்குத் தென்கிழக்கே காணப் படும் ஒரு தீவாக இலங்கை விளங்குகின்றது. இலங்கையை இந்தியாவி லிருந்து ஒடுங்கிய பாக்குத் தொடுகடல் பிரிக்கின்றது; மிகப் பழைய காலத் தில் இலங்கையும் இந்தியாவும் ஒன்றாக இணைந்து ஒரே நிலத் திணிவாகக் காணப்பட்டன என்று கருதப்படுகின்றது. மயோசீன் எனும் காலத்தில் (25கோடி ஆண்டுகளுக்கு முன்) நிகழ்ந்த கடற்கோளினால் இந்தியாவும் இலங்கையும் துண்டிக்கப்பட்டன. அதனாலேயே, இந்தியத் துணைக் கண்டத்தினின்றும் பிரிவுற்ற நிலப்பகுதியே இலங்கையென்று கூறப்படு கின்றது.
இலங்கை மத்திய கோட்டிற்கு வடக்கே அமைந்துள்ளது. இத்தீவு 5° 55 (5 பாகை 55நிமிஷங்கள்) வட அகலக்கோட்டிற்கும் 9° 51 வட அகலக்கோட்டிற்கும், 79° 42 கிழக்கு நெடுங்கோட்டிற்கும் 81° 52 கிழக்கு நெடுங்கோட்டிற்கும் இட்ையே அமைந்துள்ளது. ஏறத்தாழ 4° அகலக் கோட்டுப் பரப்பையும் 2° நெடுங்கோட்டுப் பரப்பையும் இலங்கை கொண்டி ருக்கின்றது.
இலங்கையின் மொத்தப் பரப்பு 65 610 சதுர கிலோமீற்றர்களாகும். இதில், 2905 சதுரகிலோமீற்றர் பரப்பு உள்நாட்டு நீர்நிலைகளாகும். எனவே
42

மொத்த நிலப்பரப்பு 62 705 சதுர கிலோமீற்றர்களாகும். இலங்கையின் மிகக்கூடிய நீளம் 432 கிலோமீற்றர். வடக்கே பனைமுனையிலிருந்து தெற்கே தொந்திரா முனைவரை (தேவேந்திரா முனை) உள்ள தூரமே இந்த நீளமாகும். இத்தீவின் ஆகக்கூடிய அகலம் பொத்துவிலுக்கு 12 கிலோ மீற்ற ருக்கு வடக்கேயுள்ள சங்கமான் கந்தை முனையிலிருந்து கொழும்பு வரை யுள்ள தூரமாகும். இத்தூரம் 225 கிலோமீற்றர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இலங்கையும் இந்தியாவும் ஒரே கண்டமேடையில் அமைந்திருக்கின் றன. கரையோரங்களிலிருந்து கடலினுள் சாய்ந்திருக்கும் நிலச்சாய்வே கண்டமேடை எனப்படும். இக் கண்டமேடைகள் ஆழம் குறைந்த சமுத்திரப் பிரதேசங்களாகும். இலங்கையைச் சூழ்ந்திருக்கும் கண்டமேடை 15 கிலோ மீற்றர் தொடக்கம் 30 கிலோமீற்றர்வரை அகலமானதாக இருக்கின்றது. இக்கண்டமேடை வடக்கே அகன்றதாயும் தெற்கே ஒடுங்கியதாகவும் அமைந்துள்ளது. இக்கண்டமேடை சராசரியாக 66 மீற்றர்களுக்கு உட்பட்ட
ஆழமுடையது.
é: · · · · · · · · · 17P “. . .' 's
份
--
e rre" 2 يجتمع.
படம் 4.1: இலங்கையின் நிலையம்
, / d a :-b-
இலங்கையைச் சூழ்ந்து பீற்று கடலடித்தளமேடை, வோர்ஜ் கடலடித் தளமேடை மன்னார் கடலடித்தளமேடை எனும் மூன்று பிரதான கடலடித் தளமேடைகள் காணப்படுகின்றன. கண்டமேடையில் உயர்ந்த பகுதி
களையே கடலடித்தள மேடைகள் என்பர்.
43

Page 24
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வடகிழக்கே இந்தியாவின் கோடிக்கரை முனைவரை பீற்று கடலடித்தளமேடை பரந்துள்ளது. வோர்ஜ் கடலடித்தள மேடை கொழும்பிற்குச் சற்று வடமேற்கே இருக்கின்றது. இது கன்னியா குமரிக்குத் தெற்கே இந்தியாவின் தொடராகக் கடலின்கீழ் அமைந்துள்ளது. மன்னார்க் குடாவில் மன்னார் கடலடித்தளமேடை உள்ளது. பொதுவாகக் கடலடித்தளமேடைகள் சிறந்த மீன்பிடித்தளங்களாக விளங்குகின்றன. பீற்று, வோர்ஜ் கடலடித்தளமேடைகள் சிறந்த மீன்பிடித் தளங்களாகவும் மன்னார் கடலடித்தளமேடை முக்கிய முத்துக்குளிக்கும் பகுதியாகவும் விளங்குகின்றன.
படம் 4.2: இலங்கையின் நிலையம்
இந்தியாவினின்றும் இலங்கை பிரிக்கப்பட்டதும் இடையே சில பாறைத் தொடர்கள் அமைந்தன. தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் நீண்டதொரு பாறைத்தொடர் கடலினுள் அமைந்து காணப்படு கின்றது. இது இராமர் அணை (ஆதாமின் அணை) என்று அழைக்கப்படு கின்றது. இலங்கையின் தெற்கே கொழும்பிலிருந்து மட்டக்களப்புவரை கரையோரமாக முருகைக் கற்பார் வெளியரும்புகள் காணப்படுகின்றன. இலங்கையின் தென்கிழக்குக் கரையோரமாக மாணிக்க கங்கையின் கழிமுகத் திற்கு அப்பால் பெரியபாசு, சின்னப்பாசு என்னும் இரு முருகைக் கற்பார்த் தீவுகள் காணப்படுகின்றன. இக்கற்பார்த் தீவுகள் இரண்டும் இராவணன் பாறைகள் என்றும் வழங்கப்படுகின்றன.
இலங்கையின் கரையோரங்களில் பல கடல் நீரேரிகளும் மணற்றடை களும் காணப்படுகின்றன. யாழ்ப்பாணக் கடல்நீரேரி, கற்பிட்டிக் கடல் நீரேரி, மட்டக்களப்புக் கடல்நீரேரி, முல்லைத்தீவு கடல்நீரேரி என்பன
44
 

குறிப்பிடத்தக்க கடல்நீரேரிகளாகும். இக் கடல்நீரேரிகளில் நதிகள் பல கிளைகளாகப் பிரிந்து, கலந்து படிதல்களைச் செய்கின்றன. இக் கடல்நீரேரிகளை அடுத்துப் பெரிதும் மணற்றடைகள் காணப்படுகின்றன. கற்பிட்டிக் கடல்நீரேரி வடபுறமாக நீண்டமைந்த மணற்றடையினால் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
4.1.1 நிலையமுக்கியத்துவம் மிகப் பழைய காலத்தில் இருந்தே, இந்து சமுத்திரத்தில் காணப்படும் தீவுகளில் இலங்கை முக்கியம் வாய்ந்த தீவாக விளங்கி வருகின்றது; இலங்கைத் தீவின் நிலையமே அதனது முக்கியத்துவத்திற்கு அடிப்படைக் காரணமாகும்.
வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா என்ற புதிய கண்டங்கள் கண்டு பிடிக் கப்படுமுன்பே இலங்கை என்ற நம் தீவு இருப்பதை மேலைத் தேசத்தவர்கள் அறிந்திருந்துள்ளார்கள். கிரேக்க, ரோமப் புவியிய லறிஞர்களினால் வரையப் பட்ட பழைய உலகப் படங் களில் இலங்கை தாபிர போன்’ (தம்பபண்ணை) என்று குறிக்கப் பட்டிருக் கின்றது. வடமொழியினர் 'சிங்ஹவத் துவீபம்’ என் றும், இலங்காபுரம் என்றும் இலங்கையை அழைத்த படம் 43. தாபிரபோன், னர்.
போர்த்துக்கேயர் சைலோன்' என்று வழங்கினர். பிரித்தானியர் 'சிலோன்' என்றனர். இன்று இலங்கைக்கு ஈழநாடு, பூரீ லங்கா, சிலோன் என்ற பெயர் களே வழங்கி வருகின்றன. இவ்வாறு நூற்றுக்கணக்கான பெயர்களால் உலகின் பல்வேறு நாட்டவர்களால் அழைக்கப்பட்ட இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் அதனது நிலையத்தினால் ஏற்பட்டது.
இலங்கை, இந்தியாவிற்கு அருகாமையில் இருப்பதனால், இந்தியப் பண்பாட்டியல்புகளை இங்கும் காணமுடிகின்றது. சிங்களவர், தமிழர் என்பார் இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர்களே. பெளத்தமதம், இந்துமதம்
45

Page 25
என்பன இந்திய மதங்களாகும். தமிழ்மொழி இந்தியாவிற்கு உரியதாகும். இலங்கையின் கலை, கட்டிடங்களில் இந்தியச் செல்வாக்கினைக் காணலாம். இந்திய மன்னர்கள் காலத்திற்குக் காலம் இலங்கைமீது படை யெடுத்துத் தமது ஆட்சியின்கீழ் இலங்கையை வைத்திருந்துள்ளார்கள்.
கடற் போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் இந்து சமுத்திரத்தின் மத்தியில் ஒரு குவிமைய நிலையமாக இலங்கை காணப்படுகின்றது. நன்னம்பிக்கை முனையைச் சுற்றிவரும் கப்பல்களுக்கும், சுயெஸ் ஊடாகச் செங்கடல் வழியாக வரும் கப்பல்களுக்கும் மலாக்காத் தொடுகடலூடாக வரும் கப்பல்களுக்கும் அவுஸ்திரேலியாவிலிருந்து வரும் கப்பல்களுக்கும் தங்குமிடமாக இலங்கை காணப்படுகின்றது. இக்கப்பல்கள் இலங்கையில் தமக்குத் தேவையான எரிபொருளையும் நீரையும் பெற்றுக் கொள்கின்றன. இத்தகைய குவிமையத்தன்மையின் காரணமாகவே கீழைத்தேச நாடுகளைத்
படம் 4.4: இலங்கையின் நிலைய முக்கியத்துவம்
தமது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்க விரும்பிய மேலைத்தேச நாடுகள் இலங்கையைத் தமது ஆதிக்கத்தின்கீழ் கொண்டிருக்க விரும்பின. போர்த்துக் கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்போர் இலங்கையை ஒருவர்பின் ஒருவராகத் தொடர்ந்து தம் ஆதிக்கத்தில் வைத்திருந்தது இதனாலேயே.
46
 

இலங்கைத் தீவில் இருந்துகொண்டு, கீழைத்தேச நாடுகளை ஆட்சி செலுத்திக் கட்டுப்படுத்துவது இலகுவாக இருந்தது.
இலங்கை இந்தியாவிற்கு அருகில் அமைய நேர்ந்தமையால்தான், 1987இல் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசத்தை இந்தியப் படைகள் தமது ஆதிக்கத்திற்குட்படுத்த நேர்ந்தது.
ஐரோப்பியர் இலங்கையில் ஆட்சிசெலுத்த நேர்ந்ததால் இலங்கையின் பண்பாட்டியல்புகளிலும் பெருமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன;
പ്രബ:
1. வாழ்க்கைப் பயிர்ச்செய்கைமூலம் தமது சுயதேவையைப் பூர்த்தி செய்து வந்த இலங்கை மக்களின் பொருளாதார வாழ்க்கை, வர்த் தகப் பயிர்ச்செய்கையாக மாற்றமடைந்தது. தேயிலை, இறப்பர்ப் பெருந்தோட்டங்கள் இங்கு ஆரம்பிக்கப்பட்டன. - 2. ஐரோப்பிய அரசியல் நிர்வாக முறைகள் இலங்கையில் மேற்
கொள்ளப்பட்டன. 3. ஐரோப்பிய நாகரிகம் இலங்கை மக்களால் கைக்கொள்ளப்பட்டது. கலை, உடை, கட்டிடம், பண்பாடுகளில் ஐரோப்பிய பண்புகள் கலந்தன. ஆங்கிலமொழி இலங்கையில் பிரதான இடத்தை வகித் தது. இத்தகைய மாற்றங்கள் யாவும் இலங்கையின் நிலைய முக்கியத் துவத்தால் ஏற்பட்டனவாம்.
4.2 இலங்கையின் தரைத்தோற்றம் ஒரு பிரதேசத்தின் தரையுயர்ச்சி வேற்றுமைகளை ஆராய்வதே தரைத்தோற்ற ஆராய்வாகும். இலங்கையில் இரு வேறுபட்ட தரைத்தோற்றங்களைக் காணலாம். இலங்கையின் மத்தியில் மலைகள், மேட்டுநிலங்கள், குன்றுகள் என்பன அடங்கிய உயர்நிலத் தோற்றத்தினையும் அதனைச் சூழ்ந்து கடற் கரைச் சமவெளிகளைக் கொண்ட தாழ்நிலத் தோற்றத்தினையும் காணக் கூடியதாக இருக்கின்றது. རྗེ་ இலங்கையைத் தரைத்தோற்றப் ரிேவுகளாக வகுத்து விளக்கியவர்கள் என இருவரைப் பிரதானமாகக் குறிப்பிடலாம். ஒருவர் எஸ். எஃப். டி. சில்வா, மற்றவர் ஏ. டி. பப்டிஸ்ற். இவ்விரு புவியியலாளர்களே இலங்கையின் தரைத் தோற்றத்தை இலகுவான ஆனால் தெளிவான பிரிவுகளாக வகுத்து ஆராய்ந் தவர்களாவர். எஸ். எஃப். டி. சில்வா என்பார் இலங்கையின் மலை நாட்டை கண்டி மேட்டுநிலம், ஹற்றன் மேட்டுநிலம், வெலிமடை மேட்டு நிலம் என வகுத்து விளக்கியுள்ளார். ஏ. டி. பப்டிஸ்ற் என்பார் மத்திய மலை நாட்டை மத்தியமேட்டுநிலம், வடகிழக்கேயுள்ள நக்கிள்ஸ் தொகுதி, தென்மேற்கேயுள்ள றக்குவானைத் திணிவு என வகுத்து விளக்கியுள்ளார்.
47

Page 26
Ipoŝoj neu@ú5ī işe smogorgia»ÜĞ :9 # qi-Ira
ao logo@f og
'sചെയ്തെ*quourių euroloprtegg og @tsosurasosadeuo ysg zde usodelos)Ęng) (I
qıająĪu@@@úceo :g(# qi-III
48
 
 

இவ்விருவரும் மத்திய மலைநாட்டைச் சூழ்ந்தமைந்திருக்கும் தாழ் நிலங் களைத் தென்மேல் தாழ்நிலம், தென்கீழ் தாழ்நிலம், வடதாழ்நிலம் என மூன்றாகப் பிரித்துள்ளனர். இலங்கையின் தரைத்தோற்றப் பிரிவுகளைப் பேராசிரியர் கா. குலரத்தினம் ஐந்து உருவவியல் அலகுகளாக அடையாளம் கண்டுள்ளார். (படம் 3.5) இன்று இலங்கையின் தரைத்தோற்றப் பிரிவுகளைக் கரையோரச் சமவெளிகள், ஆறரித்த சமவெளிகள் (அண்சமவெளிகள்/அகச் சமவெளிகள்), மத்திய மலைநாடு, சப்பிரகமூவா பாறைத் தொடர்கள், கல்லோயாக் குன்றுத் தொகுதி என வகுத்து ஆராய்கின்றனர்.
படம் 4.7: இலங்கையின் தரைத்தோற்றப் பிரிவுகள்
49

Page 27
4.2.1 மத்தியமலைநாடு 300 மீற்றர்களுக்கு மேற்பட்டபகுதி மத்திய மலைநாடாக விளங்குகின்றது. இம் மத்திய மலைநாட்டின் மிகக்கூடிய உயரத்தினை 5 524 மீற்றர் உயர மான பேதுருதாலகால மலை பிரதிபலிக்கின்றது. மத்திய உயர்நிலத்தில் பல தரைத்தோற்ற உறுப்புக்களை அவதானிக்கலாம். (படம் 4.8)
படம் 4.8 மத்திய மலைநாட்டின் நிலவுறுப்புக்கள்
50
 
 

4.2.1.1 நங்கூரவடிவமான உயர்பகுதி மத்திய உயர்நிலத்தின் சமவுயரக் கோட்டுப் படத்தினை அவதானித்தால், 1500 மீற்றர்களுக்கு (5000 அடி) மேற்பட்ட மலைப்பகுதி தெளிவானதோர் பெளதிக அமைப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். இப்பகுதி நங்கூர வடிவமானதாக (பப்டிஸ்ற்) அல்லது தலைகீழானT வடிவமானதாகக் (சில்வா) காணப்படுகின்றது. இந்த நங்கூர வடிவமான உயர்நிலத்திலேயே பேதுரு தாலகாலை, கிரிகாலப்பொத்தை, தோட்டப்பாலை, சிவனொளி பாதம், நமுனகுல முதலிய மலைகள் அமைந்திருக்கின்றன. நங்கூரவடிவ உயர் நிலத்தின் நடுமையமாக கிரிகாலப்பொத்தை மலை (2 389 மீற்றர்) அமைந் துள்ளது. நங்கூர வடிவத்தின் மேற்குப்புற நீட்சி சிவனொளிபாத மலை (2238) வரை காணப்படுகின்றது; கிழக்குப்புற நீட்சி நமுனகுல (2036)வரை அமைந்துள்ளது. நங்கூர வடிவ உயர்நிலத்தின் வடபுற நீட்சியில் தோட்டப் பாலை (2 357), பேதுருதாலகால எனும் மலைகளும், நுவரெலியாச் சமவெளி, எல்க் சமவெளி, ஹோட்டன் சமவெளி முதலிய உயர் சமவெளி களும் காணப்படுகின்றன. பேதுருதாலகாலைக்கு வடக்கேயும் ஒர் உயர் மலைத்தொடர் அமைந்துள்ளது.
படம் 4.9; மலைநாடு (சமவுயரக் கோடுகள் அடியில்)
51

Page 28
இம் மலைத்தொடர் மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கினை நோக்கிப் படிப் படியாகச் சாய்கின்றது. கிரிகாலப்பொத்தையிலிருந்து நமுனகுலவரை காணப்படும் நங்கூர வடிவ உயர்நிலத்தின் கிழக்குப்புற நீட்சியில் பல மலையிடைவெளிகள் காணப்படுகின்றன. அப்புத்தளைக் கணவாய், எல்லகணவாய் என்பன இத்தகைய மலையிடைவெளிகளே.
நங்கூர வடிவமான இந்த உயர்நிலம் மேற்கு, கிழக்கு, வடக்கு எனும் திசை களில் படிப்படியாகச் சாய்வுறுகின்றது. ஆனால் தென்பாகத்தில் மட்டும் இது திடீரெனச் சாய்வுறுகின்றது. இத் தென்பாகம் 1500 மீற்றர் உயரத்திலிருந்து 900 மீற்றர் உயரத்திற்குத் திடீரெனச் சரிகின்றது. இக்குத்தான சரிவினைத் ‘தென் மலைச் சுவர் என வழங்குவர். தென்மலைச்சுவர் சிவனொளிபாத மலையிலிருந்து எல்லகந்தைவரை ஏறத்தாழ 90 கிலோ மீற்றர் நீளத்திற்கு அமைந் திருக்கின்றது.
4.2.1.2 ஹற்றன் மேட்டுநிலம் மத்திய மலைநாட்டின் நங்கூர வடிவமான உயர்பகுதிக்கு மேற்கே ஹற்றன் மேட்டுநிலம் அமைந்திருக்கின்றது. இம்மேட்டுநிலம் 600 மீற்றர்களுக்கும் 1 500 மீற்றர்களுக்கும் உட்பட்டதாகக் காணப்படுகின்றது. இம் மேட்டு நிலம் பல சமாந்தரமான பாறைத் தொடர்களைக் கொண்டிருக்கின்றது. இப்பாறைத் தொடர்களுக்கு இடையே நதிகள் உற்பத்தியாகிப் பாய்கின்றன. மகாவலிகங்கை, களனிகங்கை எனும் இரு பிரதான நதிகள் ஹற்றன் மேட்டு நிலத்திலேயே உற்பத்தியாகின்றன. இம் மேட்டுநிலத்தின் தென்மேல் பாகத் தில் களனிகங்கையின் கிளை நதிகளாகிய மஸ்கெலிய ஒயா, கெகல் ஒயா ஆகியவற்றின் வடிநிலங்களுள்ளன. நங்கூர வடிவமான உயர் நிலத்தின் மேற்குச் சாய்வில் உற்பத்தியாகின்ற மகாவலிகங்கையின் தலையருவிகள் ஹற்றன் மேட்டுநிலத்தினூடாகப் பாய்கின்றன. மகாவலிகங்கைப் பள்ளத் தாக்கையும் களனிகங்கைப் பள்ளத்தாக்கையும் ஹற்றன் மேட்டு நிலத்தில் பிரிக்கின்ற தெளிவான எல்லையாக, வடமேற்கு - தென்கிழக்குப் போக்கி லான பாறைத் தொடர் ஒன்றுள்ளது. அதனாலேயே களனிகங்கை, கினிகத் தேனைக் கணவாயூடாக மேற்கு நோக்கிப் பாய, மகாவலிகங்கை வடக்கு நோக்கிப் பாய்கின்றது.
ஹற்றன் மேட்டு நிலத்தில் 1500 மீற்றர் சமவுயரக்கோட்டை அடுத்து டேவன், றம்பொடை எனும் நீர்வீழ்ச்சிகளும், 900 மீற்றர் சம உயரக் கோட்டை அடுத்து லக்சபானா, அபடின் எனும் நீர்வீழ்ச்சிகளும் காணப் படுகின்றன.
4.2.1.3 தொலஸ்பாகே மேனிலம் ஹற்றன் மேட்டு நிலத்திற்கு வடமேற்கே தொலஸ்பாகே மேனிலம் அமைந்து காணப்படுகின்றது. இம்மேனிலம் (Upland) 600 மீற்றர்களுக்கு 52

மேற்பட்டது. ஹற்றன் மேட்டு நிலத்தில் இருந்து இம்மேனிலத்தை மகாவலிகங்கைப் பள்ளத்தாக்குப் பிரிக்கின்றது. மேற்குப் புறமாகப் பாயவேண்டிய மகாவலிகங்கை, ஹற்றன் மேட்டு நிலத்தில் வடக்குப் புறமாகப் பாய்வதற்கு, மேற்கே தொலஸ்பாகே மேனிலம் ஒரு தடைச் சுவராக அமைந்ததும் காரணமாகும்.
4.2.1.4 ஊவா வடிநிலம் நங்கூர வடிவமான உயர் நிலத்திற்குக் கிழக்குப் புறத்தில் ஊவா வடிநிலம் அமைந்திருக்கின்றது. இவ்வடிநிலத்தை வெலிமடைமேட்டுநிலம் எனவும் வழங்குவர். ஊவா வடிநிலம் சராசரி 900 மீற்றர் உயரமானது. இவ்வடிநிலம்" கிழக்கே மதுள்சீமா மலைத்தொடரினாலும் தென்கிழக்கே நமுனகுலத் தொடரினாலும் தெற்கே அப்புத்தளை தொடரினாலும் மேற்கே நங்கூர வடிவமான உயர் நிலத்தினாலும் எல்லையிடப்பட்டிருக்கின்றது. ஆனால், வடபகுதிதும்பறைப் பள்ளத்தாக்கை நோக்கிச் சாய்ந்து அமைந்திருக்கின்றது. அதனாலேயே உமாஒயா, வதுளை ஓயா, லொக்கல் ஒயா எனும் மகாவலி கங்கையின் கிளை நதிகள் ஊவா வடிநிலத்தில் உற்பத்தியாகி வடபுறமாக ஒடி தும்பறைப் பள்ளத்தாக்கில் மகாவலிகங்கையுடன் இணைகின்றன. நமுனகுல மலைத் தொடருக்கும் மதுள்சீமா மலைத்தொட்ருக்கும் இடை யில் பசறைக் கணவாய் உள்ளது. வதுளை ஒயாவில் துன்கிந்தை நீர்வீழ்ச்சி உள்ளது.
4.2.1.5 கிழக்கு மேடை ஊவா வடி நிலத்திற்குக் கிழக்கே கிழக்குமேடை (Platform) அமைந்துள்ளது. இம்மேடை கிழக்குப் புறமாயும் தென்புறமாயும் சாய்ந்தமைந்துள்ளது. இம்மேட்டு நிலத்தின் லுணுகலைத் தொடரே (மதுள்சீமா) உயர்ந்த பகுதி யாகும். இது 300 மீற்றர்களுக்கு மேற்பட்டது. கிழக்கு மேடையில் மகாஒயா, கல்லோயா எனும் நதிகள் உற்பத்தியாகிப் பாய்கின்றன. தென் பாகத்தில் மாணிக்க கங்கை, கும்புக்கன் ஒயா, கிரிண்டி ஒயா எனும் நதிகள் உற்பத்தி யாகின்றன. எல்ல கணவாயூடாகக் கிரிண்டி ஒயா பாயும்போது, ராவணனல நீர்வீழ்ச்சி உருவாகின்றது. 武
4.2.1.6 தென் மேட்டுநிலம் சிவனொளிபாத மலையிலிருந்து எல்ல கணவாய்வரை 100 கி.மீ. தூரம் நீண்டு காணப்படும் தென்மலைச் சுவருக்குத் தேற்கே ஒடுங்கிய ஒரு மேட்டு நிலமாகத் தென்மேட்டுநிலம் காணப்படுகின்றது. இம்மேட்டு நிலம் 300 மீற்றர்களுக்கும் 900 மீற்றர்களுக்கும் உட்பட்டது. இத்தென்மேட்டு நிலத்தைக் கொஸ்லாந்தை மேட்டுநிலம் அல்லது மாவலத்தன்ன மேட்டு நிலம் என்றும் வழங்குவர். கொஸ்லாந்தையை அடுத்து வடபுறமாக மூன்று கிலோமீற்றர்களுக்குள் நிலம் 900 மீற்றர்களுக்குக் குத்தாக உயர்கின்றது.
53

Page 29
இவ்விடத்திலேயே கிரிண்டி ஒயாவில் தியாலுமா நீர்வீழ்ச்சி அமைந்திருக் கின்றது.
4.2.1.7 கண்டி மேட்டுநிலம்
ஹற்றன் மேட்டு நிலம் வடபுறமாக ஒரு தாழ் மேட்டுநிலத்தை நோக்கிச் சாய்கின்றது. இத் தாழ் மேட்டுநிலமே கண்டி மேட்டு நிலமாகும். இக் கண்டி மேட்டுநிலம் 600 மீற்றர்களுக்கு மேற்பட்டது; 900 மீற்றர்களுக்கு உட்பட்டது. இக் கண்டி மேட்டுநிலம் பெரிதும் மட்டமானது. இக் கண்டி மேட்டு நிலத்திலேயே மகாவலிகங்கை முழங்கை வளைவுடன் தும்பறைப் பள்ளத்தாக்கினுள் பிரவேசிக்கின்றது. இம் மேட்டுநிலத்தின் மேற்குப் பகுதியில் அளகல்லைக் குன்றும், கடுகணாவைக் கணவாயும், கலகெதர, பலனை மலையிடைவெளிகளும் அமைந்துள்ளன. இக்கண்டி மேட்டு நிலத்தில் மகா ஓயா, தெதுறு ஒயா எனும் நதிகள் உற்பத்தியாகின்றன.
4.2.1.8 நக்கிள்ஸ் மலைத்தொகுதி கண்டி மேட்டு நிலத்திற்கு வடகிழக்கே நக்கிள்ஸ் மலைத்தொகுதி காணப் படுகின்றது. நக்கிள்ஸ் மலைத்தொகுதி 900 மீற்றர்களுக்கு மேற்பட்டதாகக் காணப்படுகின்றது. இதன் அதி உயரம் 1 863 மீற்றர் உயரமான நக்கிள்ஸ் சிகரத்தினால் பிரதிபலிக்கப்படுகின்றது. நக்கிள்ஸ் மலைத்தொகுதி வடமேற்கு-தென்கிழக்குப் போக்கினைக் கொண்டிருக்கின்றது. ஊவா வடிநிலத்தோடு இணைய வேண்டிய நக்கிள்ஸ் மலைத் தொகுதியைத் தும்பறைப் பள்ளத்தாக்குத் துண்டித்துள்ளது.
4.2.1.9 மாத்தளை மலைகள் கண்டி மேட்டு நிலத்திற்கு வடக்கே மாத்தளை மலைகளும், மாத்தளைப் பள்ளத்தாக்குகளும் உள்ளன. இவை 600 மீற்றருக்கு உட்பட்டன. மாத்தளை மலைகள் அம்பன் கங்கையின் நீர்ப்பிரிமேடாக உள்ளன. இவை வடக்கு - தெற்கான போக்கினைக் கொண்டிருக்கின்றன. மாத்தளை மலைகளின் தாழ் தொடர்களை வடதாழ் நிலத்தில் அவதானிக்கலாம்; இவை விசிறி வடிவில் விரிந்து செல்கின்றன.
4.2.1.10 றக்குவானைத் திணிவு
மத்திய மலைநாட்டின் தென்மேல் பாகத்தில், தனித்ததோர் தரைத்தோற்ற உறுப்பாக றக்குவானை மலைத்திணிவு அமைந்துள்ளது. மலைநாட்டி லிருந்து இதனைப் பிரிப்பது களுகங்கைப் பள்ளத்தாக்காகும். றக்குவானை மலைத்திணிவு 300 மீற்றர்களுக்கு மேற்பட்டது. இதன் அதி உயரம் 1 490 மீற்றர் உயரமுடைய பெரகலச் சிகரமாகவுள்ளது. றக்குவானை மலைத் திணிவின் கிழக்குப் பாகத்தில் புளுத்தோட்டை மேட்டுநிலமுளது.
54

றக்குவானை மலைத்திணிவிற்கு மேற்கே, வடமேற்கு-தென்கிழக்குப் போக்கில் சப்பிரகமூவாப் பாறைத் தொடர்கள் அமைந்துள்ளன. களு கங்கைப் பள்ளத்தாக்கு இத்தகைய பாறைத்தொடர்களுக்கு இடையிலேயே காணப்படுகின்றது. சப்பிரகமூவாப் பாறைத் தொடர்களிலேயே கினித்துமை எனும் சிகரமுளது.
4.2.2 ஆறரித்த சமவெளிகள் 30 மீற்றர் சமவுயரக் கோட்டிற்கும், 300 மீற்றர் சமவுயரக் கோட்டிற்கும் இடைப்பட்ட தாழ்நிலங்கள் ஆறரித்த சமவெளிகள் எனப்படுகின்றன. இவை நீரின் அரித்தலிற்குள்ளானவை. அதனால்தான் இந்தச் சமவெளி களில் எச்சக் குன்றுகள் (மொனாட் நொக்ஸ்) காணப்படுகின்றன. மிகிந்தலை, சிகிரியா, வெத்தாகந்த, ரிடிகல, கதிர்காமம், யாப்பஹஜூவ, குருநாகல் என்பன இத்தகைய எஞ்சிய குன்றுகளாகவுள்ளன. பொதுவாக இந்த ஆறரித்த சமவெளிகள் வடக்கில் அகன்றன. தெற்கில் ஒடுங்கியுள்ளன. தென்மேற்கில் கரையோரத்திற்குச் சமாந்தரமாகப் பாறைத் தொடர்களைக் காணலாம். இவற்றை ஊடறுத்து மலைநாட்டிலிருந்து உற்பத்தியாகிய நதிகள் பாய்கின்றன.
மத்தியமல்கா,
ool ofوی را 0نع اقیقای
தென்கிழ்சமவெளி
படம் 4.10:இலங்கையின் குறுக்குப் பக்கப் பார்வை. இரு சமவெளிகளும்
மத்திய மலைகளும் அமைந்துள்ள நிலையை விளக்குகிறது.
இலங்கையின் மத்திய மலைநாட்டைச் சூழ்ந்துள்ள இந்த ஆறரித்த சமவெளியை எஸ்.எஃப்.டி. சில்வா என்பவர் மூன்று அலகுகளாகப் பிரித் துள்ளார். அவையாவன:
4.2.2.1 தென்மேல் தாழ்நிலம்
4.2.2.2 தென்கீழ்த் தாழ் நிலம்
4.2.2.3 வட தாழ் நிலம்
42.2.1 தென்மேல் தாழ்நிலம் தென்மேல் தாழ்நிலத்தின் எல்லைகள் மிகத் தெளிவானவை. இத் தாழ் நிலத்தின் வடக்கு எல்லையாகத் தெதுறு ஒயாவும் தென்கிழக்கு எல்லையாக வளவை கங்கையும் கிழக்கு எல்லையாக 300 மீற்றர் சமவுயரக்கோடும், மேற்கெல்லையாகக் கடலும் அமைந்திருக்கின்றன.
55

Page 30
இலங்கையின் தாழ்நிலக் குன்றுகள்
படம் 4.11: இலங்கையின் ஆறரித்த சமவெளியிலுள்ள எச்சக் குன்றுகள் (100 அடி சமவுயரக் கோட்டை 30 மீற்றர் எனவும் 1000 அடிச் சமவுயரக் கோட்டை 300 மீற்றர் எனவும் கருதுக.)
56
 

இத் தாழ் நிலம் வடக்கே அகன்றதாயும் தெற்கே ஒடுங்கியதாயும் காணப்படுகின்றது. இத்தாழ்நிலத்தின் மிகவுயர்ந்த பகுதிகள் றக்குவானை மலைகளைச் சூழ்ந்து காணப்படுகின்றன. றக்குவானை மலைத் திணிவி லிருந்து பாறைத் தொடர்கள் வடமேற்காயும் தென்கிழக்காயும் பிரிந்து செல்கின்றன. இப்பாறைத் தொடர்கள் தெதுறு ஒயாவரை அமைந்துள்ளன. தென்மேல் தாழ்நிலத்தில் காணப்படும் இப்பாறைத் தொடர்கள் கரை யோரத்திற்குச் சமாந்தரமாக அமைந்திருக்கின்றன. இச்சமாந்தரமான பாறைத் தொடர்களுக்கு இடையே வடக்குத் தெற்காக நீள் பள்ளத்தாக்கு கள் காணப்படுகின்றன. சமாந்தரமான இப்பாறைத் தொடர்கள் இத் தாழ்நிலத்தில் பாய்கின்ற நதிகளினால் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. மகா ஒயாவிற்குத் தெற்கே காணப்படும் பாறைத்தொடர்கள் வடக்கே காணப் படும் பாறைத் தொடர்களிலும் உயரமானவை. இப்பாறைத் தொடர்கள் மலைநாட்டினை அடுத்து உயரமானவையாயும் 150 மீற்றர் சமவுயரக்
கோட்டிற்கு மேற்கே தாழ்வானவையாயும் உள்ளன.
படம் 4.12 : தென்மேல் தாழ்நிலம்
57

Page 31
தென்மேல் தாழ்நிலத்தினூடாகப் பல நதிகள் பாய்கின்றன. மத்திய மலைநாட்டில் உற்பத்தியாகின்ற தெதுறுஒயா, மகாஒயா, களனிகங்கை என்பன முறையே சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு எனும் நகர்களை அடுத்துக் கடலுடன் சேர்கின்றன. புளுத்தோட்டை மலைத்திணிவில் உற்பத்தியாகின்ற களுகங்கை, பெந்தோட்டை கங்கை, ஜின்கங்கை, நில்வளகங்கை என்பன முறையே களுத்துறை, அளுத்கம, ஜின்தோட்டை, மாத்தறை எனும் நகர்களை அடுத்துக் கடலுடன் சங்கமமாகின்றன.
தென்மேல் தாழ்நிலத்தின் கரையோரங்களை அடுத்தும், வடக்கே கொழும்பு, குருநாகல், சிலாபம் ஆகிய பட்டினங்களை இணைக்கும் முக்கோணப் பிரதேசத்திலும் கரையோர மணல் பரந்துள்ளது. நதி வடிநிலங் களில் செழிப்பான வண்டல்மண் படிந்துள்ளது. இவை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் செம்பூரான் ஈரக்களிமண் (கபூக்மண்) பரந்துள்ளது.
42.2.2 தென்கீழ்த் தாழ்நிலம் இத் தாழ்நிலத்தின் எல்லைகளும் தெளிவாக வரையறுக்கக்கூடியனவே. வடக்கு எல்லையாக மகாவலிகங்கையும் தென்மேற்கு எல்லையாக வளவகங்கையும் மேற்கு எல்லையாக 300 மீற்றர் சமவுயரக்கோடும் கிழக்கு எல்லையாகக் கடலும் அமைந்திருக்கின்றன.
இத் தாழ்நிலத்தின் உயர்ந்த பகுதி மலைநாட்டை அடுத்துள்ளது. 150 மீற்றர் சமவுயரக் கோட்டிற்கும் 300 மீற்றர் சமவுயரக் கோட்டிற்கும் இடைப்பட்ட பகுதி ஒரு தாழ்மேடையாகக் காணப்படுகின்றது.
இத் தாழ்நிலத்தின் வடபகுதி மகாவலிகங்கை வடிநிலமாகக் காணப் படுகின்றது. தென்மேல் தாழ்நிலத்தில் நீள்குன்றுகள் காணப்படுவதுபோல தென்கீழ்த் தாழ்நிலத்தில் பல குன்றுகள் காணப்படுகின்றன. அவை கல்லோ யாக் குன்றுத் தொகுதியாகும். நீண்டகாலமாக நீரினால் அரிக்கப்பட்டு எஞ்சி நிற்பன இக் குன்றுகளாகும். நுவரகல்கந்தை வெஸ்மினிஸ்ரர் அபே (கோவிந்த மலை), இங்கினியகலை, மொனறாகலை என்பன சில முக்கிய மான குன்றுகளாகும்.இங்கினியகலைக் குன்றினை ஆதாரமாகக் கொண்டு, கல்லோயா நதி மறித்து அணை கட்டப்பட்டு, கல்லோயா பலநோக்குத் திட்டம் உருவாகியிருக்கின்றது. கல்லோயாவை விடக் கும்புக்கன் ஒயா, கெடஒயா, வில்ஒயா முதலிய ஆறுகளும் இக்குன்றுப் பாகத்தில் உற்பத்தியா கின்றன.
தென்கீழ் தாழ்நிலத்தில் பாய்கின்ற நதிகள் மத்திய மலைநாட்டில் உற்பத்தியாகி வடக்காயும் கிழக்காயும் தெற்காயும் பாய்ந்து கடலை அடைகின்றன. வடக்காக மகாவலிகங்கையும் மதுரு ஒயாவும் பாய்கின்றன. கல்லோயா, கெடஒயா, வில்ஒயா என்பன கிழக்காயும், கும்புக்கன் ஒயா மாணிக்ககங்கை, கிரிண்டிஒயா, வளவகங்கை என்பன பெரிதும் தெற்காயும் பாய்கின்றன.
58

படம் 4.13 : தென்கீழ்த் தாழ்நிலம்
தென்கீழ் தாழ்நிலத்தின் கரையோரங்களில் கடல்நீர் ஏரிகள் காணப் படுகின்றன. இவற்றுள் முக்கியமானது மட்டக்களப்புக் கடல் நீரேரியாகும். இச் சமவெளியின் கரையோரங்கள் வண்டல் மண்ணையும் கரையோர மணலையும் மணற்குன்றுகளையும் கொண்டிருக்கின்றன. தென்பகுதியும் மலைநாட்டை அடுத்துள்ள மேற்குப் பகுதியும் செம்பூரானல்லாத ஈரக் களிமண்ணைக் கொண்டுள்ளன.
4.2.2.3 வட தாழ்நிலம் தெதுறு ஒயாவிற்கும் மாத்தளை மலைகளுக்கும் மகாவலிகங்கைக்கும் வடக்கே, வட தாழ்நிலம் பரந்துள்ளது. வடதாழ்நிலம் இலங்கையின் மிகப் பெரிய தாழ்நிலமாகும். இதன் பெரும்பாகம் 500அடி உயரத்திற்கும்
59

Page 32
குறைவானதாக இருக்கின்றது. உயரமான பகுதிகள்மாத்தளை மலைகளைச் சூழ்ந்து அமைந்திருக்கின்றன. மீஒயா, கால ஒயா, அருவியாறு, யான்ஒயா, அம்பன் கங்கை என்பன மாத்தளை மலைகளில் உற்பத்தியாகின்றன.
படம் 4.14 : வட தாழ்நிலம்
இச்சமவெளி வடமேற்கு நோக்கியும் வடக்கு நோக்கியும் வடகிழக்கு நோக்கியும் சாய்வாக அமைந்திருக்கிறது. இது நதிகளின் போக்கை அவதானிக்கும்போது புலனாகின்றது. இச் சமவெளியின் தென்மேற்குக் கரையில் உயரம் குறைந்த பாறைத் தொடர்கள் காணப்படுகின்றன.
60
 

வட தாழ்நிலத்திலுள்ள பாறைத் தொடர்களின் அமைப்பு ஏனைய இரு தாழ்நிலங்களிலும் வேறுபாடானது. மாத்தளை மலைகளிலிருந்து விசிறி போலப் பாறைத் தொடர்கள் வடமேற்கு நோக்கியும் வடகிழக்கு நோக்கியும் அமைந்துள்ளன. இப்பாறைத்தொடர்களின் சில பகுதிகள் மண்ணுள் புதையுண்டு கிடக்க, வெளித்தெரியும் பகுதிகள் தாழ்பாறைத் தொடர் களாகக் காட்சி தருகின்றன. இப் பாறைத் தொடர்களுக்கு இடையிலே நதிகள் பாய்கின்றன. இந் நதிகள் கடலை அடையத் திரும்பும் போது இப்பாறைத் தொடர்களைத் துண்டித்துத் திசை திரும்பிப் பாய்கின் றன; மகாவலிகங்கை, அருவியாறு என்பன இவ்வாறே பாய்கின்றன.
வடதாழ்நிலத்தில் செம்மண்ணும் சாம்பல்நிற ஈரக்களிமண்ணும் செம்பூரானல்லாத ஈரக்களிமண்ணும் நதிகளை அடுத்து வண்டல் மண்ணும் காணப்படுகின்றன.
61

Page 33
இலங்கையின் மண்வகைகள்
LDண் தோன்றுவதற்குக் காலநிலை, நிலத்தோற்றம், தாவரம், விலங்குகள், மூலப்பாறை, காலம் முதலானவை காரணிகளாகின்றன. இலங்கையின் பிரதான மண் வகைகளின் விருத்தியைக் கட்டுப்படுத்தும் முக்கிய ஏதுவாகக் காலநிலை நிலவுகின்றது. எனவேதான் இலங்கையின் மண் வகைகளை ஆராய்ந்து அடையாளம் கண்ட கலாநிதி சி. ஆர். பானபொக்கே இலங்கை யின் காலநிலை வலயங்களுக்கு இணங்க மண் வகைகளை இனங் கண்டுள் ளார். உலர் வலயத்திற்குரிய மண்வகைகள், ஈரவலயத்திற்குரிய மண் வகைகள், இடைவலய (Intermediate zone) மண்வகைகள் என அவர் அடை யாளம் கண்டுள்ளார்.
தேசிய மண் அளவீட்டுத் திட்டத்தின்கீழ் இலங்கையின் நீர்ப்பாசனத் திணைக்களத்தைச் சேர்ந்திருந்த நிலப்பயன்பாட்டுப் பிரிவு மண் அளவீடு ஒன்றினை 1960-70களில் கலாநிதி சி. ஆர். பானபொக்கே தலைமையில் மேற்கொண்டது. அந்த அளவீட்டின் பிரகாரம் உலர்வலயத்திலும் ஒரளவு உலர்-இடைவலயத்திலும் 15 மண் வகைகள் அடையாளங் காணப்பட்டன. ஈரவலயத்திலும் ஒரளவு ஈர இடைவலயத்திலும் 12 மண் வகைகள் இனங் காணப்பட்டன. இவற்றைவிட இலங்கையெங்கும் பரவலாக நான்கு வகை யான நில அலகுகள் அடையாளம் காணப்பட்டன. ஆகமொத்தம் 31 மண் அலகுகள் இலங்கையின் மண் வகைகள் என்ற படத்தில் குறிக்கப்பட்டன. (1971)
AKTO

இந்த 31 மண் வகைகளுள் 6 மண் வகைகள் உலர் வலயத்தில் செங்கபில
Sp LDGöT 6u60556TIT35 (Reddish brown Earth) 2 Girangot. 9y(3,5GLungölgy FFJ வலயத்தில் 6 வகை மண்கள் செம்மஞ்சள் சாம்பனிற மண்களாகவுள்ளன. இலங்கையின் மண்வகைகள் வருமாறு:
5.I
1.
10.
11.
உலர்வலயமும் ஓரளவு உலர்-இடைவலயமும்
Gafniuslatino LD637 (Reddish brown Earth) மக்குக் குறைந்த கிளிமண், தொடரலை நிலம்
செங்கபிலநிற மண் கீழ் மண்ணில் ஒரளவு பரலுள்ளது. மக்குக் குறைந்த கிளிமண்; தொடரலை நிலம்
செங்கபிலநிற மண் கீழ் மண்ணில் அதிகம் பரலுள்ளது. மக்குக் குறைந்த கிளிமண்; தொடரலை நிலம்
செங்கபிலநிற மண்
சொலோடைஸ்ட் சொலொநெட்ஸ் (Solodized Solonetz), உவர்த் தன்மையுள்ளது. தொடரலை நிலம்
செங்கபிலநிற மண் கல்சியமற்ற கபிலநிற மண், மக்குக் குறைந்த கிளிமண், தொடரலை நிலம்
செங்கபிலநிற மண் முதிரா கபிலநிற ஈரக்களிமண், குன்றுப் பாங்கான நிலம்
6569u LDAbp 35L 96,5p LD6óT (Noncalcic brown Soils) மக்குகள் குறைந்த கிளிமண், தொடரலை நிலம் கல்சியமற்ற கபிலநிற மண் x பழைய வண்டல்மண் மேல்படிந்த மண், சோலொடைஸ்ட் சொலொநெட்ஸ்; தொடரலை நிலம் செம்மஞ்சள் லட்டோசல் மண் (Red yellow atosols) தட்டையானதும் சிறிது தொடரலைத் தன்மையுமான நிலம் கல்சியமுள்ள செம்மஞ்சள் லட்டோசல் மண் தட்டையான நிலம்
சொலொடைஸ்ட் சொலொநெட்ஸ் மண் தட்டையான நிலம்
63

Page 34
12.
13.
14.
15.
கிறுமுசொல்ஸ் மண் (Grumusols) தடை நிலம்
கடலிற்குரிய அண்மை அடையல் மண் தட்டையான நிலம்
வண்டல் மண் பருமனில் வேறுபட்டவை, தட்டை நிலம்
றெக்கோசொல் மண் (Regosols) கரையோர மணல், தட்டை நிலம்
ஈரவலயமும் ஓரளவு ஈர இடைவலயமும்
16.
IZ
18.
19.
20.
21.
22.
23.
24.
64
Gay-Lib D6556ir FrthLino LDator (Red-yellow podzolic soils) மலை நிலம்
செம்மஞ்சள் சாம்பநிற மண் குத்தான, வெட்டுண்ட, மலைப்பாங்கான நிலம்
செம்மஞ்சள் சாம்பநிற மண் ஒழுங்கற்ற நிறங்கொண்ட கீழ் மண், தாழ் மக்கு கிளிமண், தொடரலை நிலம்
செம்மஞ்சள் சாம்பநிற மண் மென்மையான அல்லது கடுமையான செம்பூரான் ஈரக்களிமண், தொடரலை நிலம்
செம்மஞ்சள் சாம்பநிற மண் வன் நிறமான"B படை, செம்மஞ்சள் மண்ணைக் கொண்ட கலக்கமான 'A' படை
செம்மஞ்சள் சாம்பநிற மண் ஒரளவு துலக்கலான A1 படை, மேட்டுப் பாங்கான நிலம்
செங்கபில ஈரக்களிமண் குத்தான, வெட்டுண்ட, மலைப்பாங்கான நிலம்
(up5unt Jil Sapiro FFTaissaf Dador (Immature brown loams) மலைப்பாங்கான நிலம்
>il pilev LDødor (Bog soils) தட்டை நிலம்

25. லற்றசோல் மண்ணும் றெக்கோசொல் மண்ணும்
பழைய மண்ணின்மீதும் மஞ்சள் மண்ணின்மீதும் தட்டை நிலம்
26. வண்டல் மண்
பல்வேறு பருமனில் தட்டைநிலம்
27. றெக்கோசொல் மண்
அண்மைக்கரல கரையோர மண், மேல் தட்டையான நிலம்
வேறுநில அலகுகள் 28. பாறை வெளியரும்புகளைக் கொண்ட சமவெளி 29. அரிப்புற்ற நிலம் 30 தளத்திடைக் குன்றுகளைக் கொண்ட நிலம்
31. குத்தான சரிவு நிலமும் கல்நிலமும்
5.2 இலங்கையின் பிரதான மண் வகைகள் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ள இலங்கையின் மண்வகைகளை நாம் பின்வருமாறு எளிமையான பெரும்பிரிவுகளாக வகுத்துக்கொள்ளலாம். அவை: (படம் 5.1)
5.2.1 செங்கபிலநிற மண்
5.2.2 செம்மஞ்சள் லற்றசோல் மண்
5.2.3 வண்டல் மண்
5.2.4 செம்மஞ்சள் சாம்பல்நிற மண்
5.2.5 செம்பூரான் ஈரக்களிமண் 5.2.6 கல்சியமற்ற கபிலநிற மண்
5.2.7 செங்கபில ஈரக்களிமண் 5.2.8 கல்சிய செம்மண்ணும் ரேமண்ணும்
5.2.9 அண்மைக்கால மணல்
5.2.10 உவர்நில மண் / சொலொடைஸ்ட்
5.2.1 செங்கபிலநிறமண்
இலங்கையின் உலர் வலயத்தில் பெரும்பகுதியைச் செங்கபிலநிற மண் உள்ளடக்கியுள்ளது. உலர்வலயத்தின் முறையான மண் இதுவாகும். ஏனெனில் மூலப்பாறையிலிருந்து தோன்றி அவ்விடத்தில் நிலைத்துள்ள மீதி மண்ணாகச் (Residual soil) செங்கபிலநிற மண் விளங்குகின்றது. இவை
65

Page 35
பொதுவாகத் தொடரலை நிலப்பரப்பில் காணப்படுகின்றன. வவுனியா, அனுராதபுரம், பொலநறுவை, மொனராகலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் செங்கபிலநிற மண் பரந்துள்ளது. இந்த மண்ணில் அது கொண்டுள்ள மக்கு, பரல் என்பவற்றில் வேறுபாடு பிரதேசத்திற்குப் பிரதேச முள்ளது. இந்த மண் பிரதேசத்திலேயே உலர்வலயக் குடியேற்றத் திட்டங் கள் உருவாக்கப்பட்டுள்ளன. மகாவலி அபிவிருத்தித் திட்டப் பிரதேசத்தின் H, M/H, J, L, M திட்டப்பகுதிகள் இந்த மண் பரப்பிலேயே அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், செங்கபிலநிற மண் பிரதேசத்தில் அரிப்புற்ற நிலம், தளத்திடைக் குன்றுகளைக் கொண்ட பகுதிகள் என்பனவுள்ளன. (படம் 4.16)
செங்கபிலநிற மண் பிரதேசத்தில் உலர்ந்த, என்றும் பசுமையான கலப்புக் காடுகள் காணப்படுகின்றன. நெற் செய்கை விருத்தியடைந்துள்ளது. தரைக்கீழ் நீர் காணப்படுமிடங்களில் நீர்ப்பாசன உதவியுடன் ஏனைய பயிர்கள் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன.
5.2.2 செம்மஞ்சள் லற்றசோல் மண் மயோசீன் சுண்ணாம்புக்கல் பிரதேசத்தில் செம்மஞ்சள் லற்றசோல் மண் பரந்துள்ளது. புத்தளத்திலிருந்து முல்லைத்தீவு வரையிலான பகுதியில் இவ்வகைமண் காணப்படுகின்றது. இந்த மண், அப்பிரதேசம் இன்றைய காலநிலைக்குத் தொடர்புடையதாகவில்லை. வேறுபட்டதொரு காலநிலை யில் தோன்றிய பழைய மண்ணாக விளங்குகின்றது. இந்த மண்ணிலுள்ள முக்கியமான பருப்பொருள் பழைய கரையோர வண்டல் மண்ணாகவுள்ளது. மயோசீன் சுண்ணக்கல்லுக்கு மேலாக இவை படிந்துள்ளன. குழாய்க் கிணறுகள்மூலம் பெறத்தக்கவிதமான தரைக்கீழ் நீர்வளத்தைக் கொண் டுள்ள பகுதிகள் இந்த மண் பரப்பிலுள்ளன.
5.2.3 வண்டல்மண்
நீரினால் அரித்துக் காவி வரப்பட்ட அடையல்கள் நதிப் பள்ளத்தாக்குகள், நதி வடிநிலங்கள் என்பனவற்றில் வண்டல் மண்ணாகப் படிந்துள்ளன. இரணைமடு-விசுவமடு-முத்தையன்கட்டு நீர்ப்பாகனக் குளங்களுக்கு வடக்கே ஒரு பிறைவடிவில் வண்டல் மண் காணப்படுகின்றது. அருவியாறு, மொதராகம ஆறு, கலாஒயா, மீஒயா, தெதுறுஒயா, மகாஒயா, மாணிக்க கங்கை, மகாவலிகங்கை முதலான நதி வடிநிலங்களில் வண்டல் மண்
படிந்துள்ளது.
5.2.4 செம்மஞ்சள் சாம்பல்நிறமண் இலங்கையின் தென்மேல் தாழ்நிலத்தில் செம்மஞ்சள் சாம்பல்நிற மண் முக்கியம் பெறுகின்றது. ஈரவலயத்தின் இயல்புகளை இம் மண் பிரதிபலிக் கின்றது. இம் மண் செம்பூரான் மண்ணுடனும் கரையோர மண்ணுடனும்
66

சேர்ந்து காணப்படுகின்றது. மலைநாட்டை அடுத்த பகுதிகளில் செம்பூரான் மண்ணின் தன்மை கூடுதலாகவும் சிலாபம்-குருநாகல்-கொழும்பு முக்கோணத் தென்னை வலயத்தில் கரையோர மண்ணின் தன்மை கூடுதலாகவும் இருப்பதனை அவதானிக்கலாம். செம்மஞ்சள் சாம்பநிற மண் வளமானது. பல்வேறு வகைப்பட்ட பயிர்கள், குறிப்பாகத் தென்னை, றப்பர் இம் மண்ணில் பயிராகின்றன. (படம் 52)
WiO
படம் : 5.1 இலங்கையின் பிரதானமண்வகைகள் (சி.ஆர். பானபொக்கே
யின் பிரிவுகளைத் தழுவிய வகைகள்)
1. செங்கபிலநிறமண் 6. கல்சியமற்ற கபிலநிற ஈரக்களிமண் 2. செம்மஞ்சள் லற்றசோல் மண் 7 செங்கபில ஈரக்களிமண்
3. வண்டல் மண் 8. கல்சிய செம்மண்ணும் நரை மண்ணும் 4. செம்மஞ்சள் சாம்பல்நிற மண் 9. அண்மைக்கால மணல்
5. செம்பூரான் ஈரக்களிமண் 10. உவர்நில மண் / சொலொடைஸ்ட்

Page 36
5.2.5 செம்பூரான் ஈரக்களிமண்ணும் செங்கபில ஈரக்களிமண்ணும்
மத்திய மலைநாட்டின் பெரும் பகுதியையும் தென்மேல் தாழ்நிலத்தின் மேற்கு உயர் பகுதியையும் உள்ளடக்கிய பிரதேசத்தில் செம்பூரான் ஈரக் களிமண்ணும் செங்கபில ஈரக்களிமண்ணும் காணப்படுகின்றன. கண்டி மேட்டுநிலம், நுவரெலியாப் பகுதி, ஊவா வடிநிலம் என்பனவற்றில் செங் கபில ஈரக்களிமண்ணைக் காணலாம். எஞ்சிய பகுதிகளில் செம்பூரான் ஈரக் களிமண் பரந்துள்ளது. இவை மூலப்பாறைகளின் பருப்பொருட்களைப் பிரதி பலிக்கும் மீதி மண்களாகும். (படத்தில் சில: 5 உம் 7 உம்) ஈரப் பருவக் காற்றுக் காடுகளும் மலைக்காடுகளும் இம் மண்ணில் வளர்ந்துள்ளன. இவை என்றும் பசுமையான, உயர் மரங்களையும் கீழ்நில வளரிகளையும் கொண்ட காடுகளாகும். பெருந்தோட்டப் பயிர்கள் இம் மண்களில் வளர்ந்துள்ளன.
5.2.6 கல்சியமற்ற கபில ஈரக்களிமண் வரண்ட பிரதேச மலைச்சரிவுகள், கிழக்குத் தாழ்நிலப்பகுதிகள் என்பன வற்றில் கல்சியமற்ற கபிலநிற ஈரக்களிமண் காணப்படுகின்றது. செங்கபில நிற மண்ணின் மேல் இவை முதிராத மண்ணாக அமைந்துள்ளன.
5.2.7 கல்சிய செம்மண்ணும் நரைமண்ணும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கல்சிய செம்மண்ணையும் அதனைச் சூழ்ந்து நரை மண்ணையும் காணலாம். மயோசீன் பாறைப் படையின்மேல் அப் பாறைகளின் மீதி மண்களாக இவை அமைந்துள்ளன. செம்மண் 'ரெறா றோசா' வகையினதாகவுள்ளது. தோட்டப் பயிர்ச்செய்கை இச்செம்மண் பகுதியில் முக்கியம் பெற்றுள்ளது. தரைக்கீழ் நீர் வளம் கொண்டது.
5.2.8 அண்மைக்கால மணல்
இலங்கையின் கரையோரங்களில் அண்மைக்கால மணற்படிவுகளைக் காண லாம். யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேற்குக் கரையோரத்திலும் தலைமன்னார், கற்பிட்டி, மட்டக்களப்பு முதலான கரையோரங்களிலும் அண்மைக்கால மணற்படிவுகளைக் காணலாம். வல்லிபுரப் பகுதியிலுள்ள படிக மணல், புல்மோட்டை, திருக்கோயில் பகுதிகளிலுள்ள இல்மனைற் என்பன கனிய மணல்களாகும்.
5.2.9 உவர்நில மண் சொலொடைஸ்ட்சொலொநெட்ஸ் (Solodized solonetz) எனப்படும் உவர்நிலமண் வகைகளைக் கரையோர களப்புகளையடுத்துக் காணலாம். ஆனையிறவு - யாழ்ப்பாணக் கடனீரேரிக் கரைகள், பூநகரிக் கரை, கற்பிட்டிக்கரை என்பனவற்றில் இவ்வகை மண்களுள்ளன. இவை உவரான
தன்மையுள்ள பருப்பொருட்களைக் கொண்டவையாகும்.
68

5.3 தென்மேல் பிரதேச மண் வகைகள்
தென்மேல் தாழ்நிலம் சமூக, பொருளாதார அபிவிருத்தி நிலைகளில் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். அவ்வாறு விளங்குவதற்கு அப்பிரதேச மண் வகைகளும் ஒரு முக்கிய பெளதிகக் காரணியாகவுள்ளன. தென்மேல் தாழ் நிலத்தில் செம்மஞ்சள் சாம்பல்நிற மண் (கரையோர மணல்), வண்டல் மண், செம்பூரான் ஈரக்களிமண் எனும் மூன்று வகை மண்கள் உள்ளன. சிலாபம் - குருநாகல்-கொழும்பு எனும் நகர்களை இணைக்கும் முக்கோணப் பிரதேசத் தில் கரையோர மணல் காணப்படுகின்றது. மேலும் கொழும்பிலிருந்து மாத்தறைவரை ஏறத்தாழ 5 கிலோ மீற்றர் அகலத்திற்குக் கரையோர மணல் பரந்துள்ளது. இத் தாழ்நிலத்தின் நதி வடிநிலங்களில் வண்டல் மண் செறிந் திருக்கின்றது. தெதுறுஒயா, மகாஒயா, களனிகங்கை, ஜின்கங்கை முதலிய நதிகளின் கீழ்ப்பள்ளத்தாக்குகள் வெள்ளச் சமவெளிகளாகும். இவ் வெள்ளச் சமவெளிகளில் வண்டல் மண் செறிந்து பரந்துள்ளது. இவை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் செம்பூரான் ஈரக்களிமண் காணப்படுகின்றது. கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் செம்பூரான் ஈரக்களிமண் பரந்துள்ளது. பாறைகளின் சிதைவினாலான இம் மண்ணை கபூக் மண் என்றும் வழங்குவர்.
5.4 யாழ்ப்பாணக் குடாநாட்ழன் மண் வகைகள்
படம் 5.2 : யாழ்ப்பாணக் குடாநாட்டின் மண்வகை
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வளங்குறைந்த மண்ணிலிருந்து வளங்
கூடிய மண்வரையில் பல்வேறு மண் வகைகள் உள்ளன. எனினும், ஐந்து மண் வகைகளைப் பிரதானமாகக் குறிப்பிடலாம்; சுண்ணாம்புக்கல், உவர் மண், வெண்மணல், செம்மண், நரைமண் என்பனவே அவையாம். யாழ்ப் பாணக் குடாநாட்டின் வட கரையோரங்களிலும் வடமேற்குக் கரையோரங் களிலும் சுண்ணாம்புக்கல் பிரதேசம் காணப்படுகிறது. இப்பகுதிகளில் சுண்ணக்கல் வெளியரும்பிக் காணப்படுகின்றது. குடா நாட்டின்
69

Page 37
உட்புறத்தில் இருக்கும் உப்பாறு, தொண்டமானாறு, வடமராட்சி ஆகிய கடல்நீர் ஏரிகளைச் சூழ்ந்து உவர்மண் பிரதேசம் காணப்படுகிறது. குடாநாட்டின் வடகீழ்ப் பகுதியிலும் தென்மேல் கரையோரங்களிலும் வெண்மணல் படிந்துள்ளது. குடாநாட்டின் மத்தியில் சுன்னாகத்தை மையமாகக் கொண்ட ஒரு பிரதேசத்தில் செம்மண் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நரைமண் காணப்படுகின்றது. இது மணலும் களி மண்ணும் கலந்துள்ள மண்ணாகும்.
எனவே, இலங்கையின் மண் வகைகள் இலங்கையின் பொருளாதார வாழ்க்கையை நிர்ணயித்துள்ளன. மண் வகைகளுக்கேற்ப பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் அமைந்துள்ளன. கணிப்பொருள் வளங்கள் கல்லியலுக்கும் மண் வகைகளுக்குமிணங்கக் கிடைக்கின்றன.
b.b 0ഞ്ഞിഥമസ്ഥ இலங்கையில் முன்பு மண்ணரிப்பு சமநிலையைப் பாதிக்காத இயற்கையின் செயல்முறையாக இருந்தது. ஆனால், இன்று அந்நிலைமையைக் கடந்து, மிகத் துரிதமான மானிடச் செயல்முறையாக மாறி வருகின்றது. கழனிகளுக் காகவும் வியாபாரத்திற்காகவும் காடுகள் அளவு கணக்கின்றி அழிக்கப் பட்டமை, பெருந்தோட்டங்களுக்காக மலைப்பிரதேசத் தாவரப் போர்வை நீக்கப்பட்டமை, ஒழுங்கற்ற நிலப் பயன்பாடு, ஒழுங்கற்ற வடிகாலமைப்பு முதலான காரணிகள் இலங்கையின் பிரதேச மண்ணரிப்பிற்குக் காரண மாகியுள்ளன. மண்ணரிப்பு நிகழ்ந்தமைக்கான ஆதாரங்களை இலங்கையின் பல பகுதிகளில் நாம் காணமுடியும். அவை:
1. இலங்கையின் உலர்வலயத்திற் சேனைப் பயிர்ச்செய்கைக்குட்பட்ட காட்டுப் பிரதேசங்கள் இன்று தரிசு நிலங்களாகக் காட்சி தருகின் றன. அவை நீரளிப்புப் பள்ளங்களைக் கொண்டனவாயும் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு உவப்பற்றனவாயும் மாறி விட்டன. காட்டு மரங்கள் தறிக்கப்பட்ட இடங்களிலும் இத்தகைய அவல நிலைமைகளை அவதானிக்க முடிகின்றது. வவுனியா, அநுராதபுரம், அம்பாறை மாவட்டங்களில் இத்தகைய பகுதிகளை அவதானிக்க முடியும். 2. இலங்கையின் மலைப்பிரதேசங்களிற் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், வெளியரும்புப் பாறை களினதும் மட்போர்வை நீக்கப்பட்ட மேட்டுநிலப் பகுதிகளினதும் பரப்பு அதிகரித்துள்ளது. தேயிலைத் தோட்டங்கள் சிலவற்றில் சமவுயரக்கோட்டு அடிப்படையில் கற்சுவர்கள் அமைக்கப்படு கின்றன. இச்செயல் மண்ணரிப்பு எவ்வளவுதூரம் இடர்பாட்டைத் தோற்றுவித்துள்ளது என்பதைக் காட்டுகின்றது. பத்தனாப்
70

புல்வெளிகள் முன்னர் காடுகள் இருந்த பகுதிகளையும் ஆக்கிரமித் துள்ளன. கிழக்கு மலைநாட்டில் கணிசமான நிலப்பரப்பு நீரளி பள்ளங்களினால் பாதிப்புற்றுள்ளன. 3. திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட குடியேற்றத் திட்டப் பகுதி களிற்கூட, மண்ணரிப்புக் காரணமாக விளை நிலங்கள் கைவிடப் பட்டுள்ளன. 4. இலங்கையின் தென்மேற் கரையோரத்தில் கடும் அரிப்பு அவ தானிக்கப்பட்டுள்ளது. முருகைக்கற்களை அகழ்ந்தெடுப்பதால், கரையோர அரிப்பு ஏற்பட்டுள்ளது.
மண்ணரிப்பின் முக்கிய காரணம் நிலத்தைத் தவறான முறையில் பயன் படுத்துவதேயாகும். நிலத்தினுள் மழைநீரைக் கூடுதலாகப் பொசிய வைத்தல், நீர் வழிந்தோடுவதன் அளவைக் குறைத்தல், காடுகளை அழிக் காது விடலும் மீள்வனமாக்கலும் மண்ணரிப்பைத் தடுக்க உதவும். நாகரிகங் கள் அழிவதற்கு மண்ணரிப்பு முக்கிய காரணமாக அமைந்தமையை நாம் எச்சரிக்கையாகக் கொள்ளவேண்டும்.
71

Page 38
இலங்கையின் கனிய வளங்கள்
இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனிய வளங்கள் சிலவே. அவற்றில் சிலவே, சிறிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின் றன. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் கனிய வளங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. நமது நாட்டின் ஏற்றுமதிகளில் கனியங்கள் மூன்று சதவீதப் பங்கினை வகித்து வருகின்றன. இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்துவரும் நாடொன்றின் கைத்தொழில் விருத்தி கனிய வளங்களைப் பொறுத்ததாகவே அமையும்.
இலங்கையில் கனிய வளங்கள் மிகப் பண்டைக் காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இரத்தினக்கற்கள் மிகப் புராதன காலத்தி லிருந்து அராபிய, சீன வர்த்தகர்களால் வாங்கப்பட்டுள்ளது. செங்கல் (களிமண்), சுண்ணாம்புக்கல் என்பனவற்றின் பயன்பாட்டை மக்கள் தெரிந் திருந்தனர். இரும்புத்தாதைப் பிரித்தெடுத்து ஆயுதங்கள் செய்வதற்கு மக்கள் அறிந்திருந்தனர். நீண்ட காலமாக உலக நாடுகளுக்கு இலங்கை தனித்துக் காரீயம் வழங்கி வந்துள்ளது.
இன்று இலங்கையில் இரத்தினக்கற்கள், காரீயம், சுண்ணாம்புக்கல், களிமண் வகைகள், கனியமணல் வகைகள், இரும்புத்தாது, மைக்கா, அபதைற்று, உப்பு முதலியன கணிய வளங்களாக விளங்குகின்றன.
72

6. இரத்தினக் கற்கள் இலங்கையின் கனிய வளங்களில் அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் கனியம் இரத்தினக் கற்களாகும். 1991இல் இரத்தினக்கற்களின் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு 5 165 மில்லியன் ரூபா வருமானமாகக் கிடைத்துள்ளது.
கணிப்பொருட்கள்
O = Tá^- tả VZ eašloatpoet D கஜ்ஜ4மஐல
(یعے Tھی یہ صZختھ مجبور C
O நாகர்கோயில்
ero>| pé4zer - #Ž & ക്ലഥBക്കിമീ7
7ாப்பாவெல
ജൂr
آوضعلیہ نہ ہلاع ? க் கூறடகச்சுரங்க2O
©፳፰ *72த்துமான
Old Tafard'T 4ta حالات كمصnص
A - AA i & Stree -88. O O O മ £്കെടrgth t *urrea-oost-F
”சுரங்கத திருக்கோவில்
-ఉల్రోక్షణా- O**"
දෘද *rA ஒஒக்கம்பிட்டி حہ نۓ ؛ Dبه منع نقصه وسه
1չ ö ...' . : '5( ے بقیہerدی لحیۓ
. و "ء ":” “ ’ n کے ളെകപ7- 'இரத்தின்: ஆலாங்கொடை \'%గా_ఈeగాతాజీతాభితా
Ο
படம் 6.1 : இலங்கையின் கணிப்பொருட்கள்
73

Page 39
மிகப் பண்டைக் காலத்தில் இலங்கை இரத்தினக் கற்களுக்குப் புகழ் வாய்ந்ததாக இருந்துள்ளது. கிரேக்க, அராபிய, ரோம வர்த்தகர்கள் இலங்கைக்கு வந்து இரத்தினக் கற்களை வாங்கிச் சென்றுள்ளனர். அதனாலேயே இலங்கை 'இரத்தினத் தீபம்' என்ற பெயரைப் பெற்றது.
இலங்கையில் இரத்தினபுரியே இரத்தினக் கற்களுக்கு முக்கியமான பகுதியாகும். அதனது பெயரே அந்த உண்மையைப் புலப்படுத்தும். இரத்தினபுரி சப்பிரகமூவா மாகாணத்தில் அமைந்துள்ளது. அண்மைக் காலத்தில் ஒக்கம்பிட்டி, அலகர ஆகிய பிரதேசங்கள் இரத்தினக்கல் அகழ்த லில் முக்கியம் பெற்றுள்ளன. அத்துடன் பத்தலை, அவிசாவளை, பெல் மதுளை, பலாங்கொடை, றக்குவானை என்பன இரத்தினக்கற்கள் காணப் படும் இடங்களாக உள்ளன.
இரத்தினக்கற்கள் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் மலையடிவாரங் களிலும் காணப்படுகின்றன. இரத்தினபுரி இத்தகைய ஒரு மலையடி வாரத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரத்தினக்கற்கள் நரம்புப் படை அல்லது நாளப்படை எனும் சரளைக் கற்படையில்தான் காணப்படு கின்றன; நாளப்படை அழுத்தமான வட்டக் கற்களைக் கொண்டிருக்கும்.
இரத்தினக்கற்கள் பெறுவதற்கு பூமியின் சுரங்கங்கள் தோண்டப் படுகின்றன. இதனை இரத்தினக்கற் சுரங்கம்' என்பர். நாளப்படைவரை தோண்டப்படும். நாளப்படை வந்ததும் துலாவின் உதவிகொண்டு அல்லது பம்பிகள் கொண்டு சில தொழிலாளர் நீரை வெளியேற்ற, வேறு சிலர் இரத்தினக்கற்கள் உள்ள நாளப்படை மண்ணை வெளியேற்றுவர். இந்த மண் இரத்தினக்கற் படலம்' எனப்படும். மேலே கொண்டுவரப்பட்ட இம்மண் அரிதட்டில் இடப்பட்டு கழுவப்படும். கழுவப்பட்டபின் மதிப் புள்ள இரத்தினக்கற்களை, அழுத்தமான வட்டக் கற்களில் இருந்து பிரித்து எடுப்பர். தொழிலாளர்கள் கூலிக்கு வேலைசெய்வது கிடையாது, இரத்தினக்கற்களால் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி இவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகின்றது.
இரத்தினக்கற்களுக்கும் ஏனைய விலையுயர்ந்த கற்களுக்கும் இடையே பல வேறுபாடுகளுள்ளன. இரத்தினக்கல் நன்கு வைரித்த கல்லாகும். இது துலக்கமானதும் பிரகாசம் பொருந்தியதுமாக விளங்கும். இரத்தினக்கற்களைச் செதுக்கி அழுத்தம் செய்யப்படுமுன் அவை சாதாரண கற்களைப்போலவே இருக்கும். இரத்தினக்கற்கள் மழையினாலும் வெய்யிலினாலும் பாதிக்கப் படுவனவல்ல. அதனாற்றான் இவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆற்றுப்படுக்கைகளில் சேதமுறாது கிடக்கின்றன.
நிலத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட இரத்தினக்கற்கள் செதுக்கி அழுத்தம் செய்யப்பட்டபின்பே உபயோகிக்க ஏற்றனவாகின்றன. செதுக்கி அழுத்தம் செய்தலைப் பட்டை தீட்டுதல்’ என்பர். முஸ்லீம்களே பட்டை
74

தீட்டுதலில் திறமையானவர்கள். பட்டை தீட்டுதலில் பழைய முறைகளே இன்றும் கையாளப்பட்டு வருகின்றன. இலங்கையில் இன்று காணப்படும் இரத்தினக்கற்களில் சபைர் என்ற நீலக்கல், ரூபி என்ற சிவப்புக்கல் என்பன வற்றைக் குறிப்பிடலாம். வைடூரியம் என்ற இரத்தினக்கல் றக்குவானைப் பகுதியில் காணப்படுகின்றது. புஷ்பராகம், தொறாம்த என்ற வெண்ணிலக் கற்களும் காணப்படுகின்றன. அத்துடன் பதுமராகம், துதிமல், செவ்வந்திக் கல் எனும் இரத்தினக்கற்களுமுள்ளன.
இரத்தினக்கற்களை அகழ்தல், பட்டை தீட்டுதல், மினுக்குதல், வர்த்தகம் செய்தல் ஆகியவற்றிற்கு இலங்கையின் அரச இரத்தினக்கற் கூட்டுத்தாபனம் பொறுப்பாக இருந்து வருகின்றது. பட்டை தீட்டும் பயிற்சி நெறிகள் இரத்தினபுரியிலும் அகலிய கொடையிலும் இக் கூட்டுத் தாப னத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் இரத்தினக் கற்களை வாங்குவதில் ஜப்பான், ஹொங்கொங், சுவிற்சலாந்து ஆகிய மூன்று நாடுகள் முதன்மை வகிக்கின்றன. அத்தோடு குவைத், டூபாய், சவுதி அரேபியா, ஐக்கிய அமெரிக்கா, சிங்கப்பூர் என்பனவும் வாங்கி வருகின்றன.
உலகில் இரத்தினக்கற்களை உற்பத்தி செய்யும் பிரதான நாடுகளான பிறேசில், பர்மா, தாய்லாந்து, தென்னாபிரிக்கா என்னும் நாடுகளின் வரிசை -யில் இலங்கை ஐந்தாவதாகவுள்ளது.
6.2 காரீயம் இலங்கையின் கணிப்பொருட்களுள் மிக முக்கியமானதாகக் குறிப்பிடத் தக்கது காரீயமாகும். காரீயம் என்பது களித்தன்மை வாய்ந்த இறுகிய ஒரு பொருள். பென்சில், வர்ணம் (பெயின்ற்), உலர் மின்கலம், காபன், சப்பாத்து மினுக்கி என்பவை செய்ய காரீயமே தேவைப்படுகின்றது. இரும்புத்தாதை உருக்குவதற்கும் காரீயம் பயன்படுகின்றது. பாத்திரங்கள் எரிவதைத் தவிர்க்க அவற்றின் உட்பகுதிகளுக்கும் காரீயம் பூசப்படுகின்றது. இலங்கையில் காணப்படும் காரீயம் மிகவும் உயர்ந்த தரமானது. அதனால், உலகில் இலங்கைக் காரீயத்துக்கு நல்ல மதிப்புண்டு.
இலங்கையின் பல பகுதிகள்ல் காரீயம் காணப்படுகின்றது. வவுனியா, ஹொரவுப்பொத்தானை, நிக்கவரட்டியா, தம்புளை என்னும் இடங்களை இணைக்கும் நாற்கோணப் பிரதேசத்தில் காரீயப் படிவுகள் அதிகளவில் காணப்படுகின்றன. நுவான்வெல, குருநாகல், களுத்துறை, அக்குரச ஆகிய இடங்களிலும் காரீயம் காணப்படுகின்றது. இன்று மூன்று பிரதான சுரங்கங் களிலேயே காரீயம் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றது. அவை: கஹட்ட கஹச் சுரங்கம், கொலன்னாவைச் சுரங்கம், போகலைச் சுரங்கம் என்பனவாம். இவற்றில் முதலிரு காரீயச் சுரங்கங்களும் குருநாகல் மாவட்டத்திலும் மூன்றாவது கேகாலை மாவட்டத்திலுமுள்ளன.
75

Page 40
காரீயம், உருமாறிய பாறைப் படைகளிடையே படிகம் போன்று சிதை வுறாது காணப்படும். இன்று 450 மீற்றர்வரை ஆழமான சுரங்கங்களில்தான் காரீயம் கிடைக்கின்றது. காரீயத்தைக் கொண்டு உற்பத்தி செய்யக்கூடிய கைத்தொழில்கள் இலங்கையில் அதிகம் விருத்தியடையவில்லை. அதனால் அகழப்படும் காரீயத்தில் பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜப்பான் ஆகிய கைத்தொழில் நாடுகளே இலங்கைக் காரீயத்தை அதிகளவில் வாங்கிக் கொள்கின்றன.
6.3 சுண்ணாம்புக்கல் இலங்கையில் நல்ல முறையில் பயன்கொள்ளப்படும் கனிய வளமாகச் சுண்ணாம்புக்கல் விளங்குகின்றது. நமது நாட்டில் மூன்று வகையான சுண்ணாம்புக்கற் கனியங்களுள்ளன. அவை: அடையற் சுண்ணாம்புக்கல், பளிங்குருச் சுண்ணாம்புக்கல், முருகைக்கல் என்பனவாம். (படம் 1.1)
6.3. அடையற் சுண்ணாம்புக்கல் புத்தளத்தையும் முல்லைத்தீவையும் இணைக்கின்ற கோட்டிற்கு வடக்கே அடையற் சுண்ணாம்புக்கல் காணப்படுகின்றது. இது மயோசீன் காலத்தில் கடலிலிருந்து மேலுயர்த்தப்பட்ட சேதனவுறுப்பு அடையற் பாறையாகும். யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் சுண்ணாம்புக்கற் பாறையாலானது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடபகுதியில் சுண்ணாம்புக்கல் வெளியரும்பு களைக் காணமுடியும். (படம் 53) காங்கேசன்துறையில் இயங்கிய சீமெந்து ஆலை இச் சுண்ணாம்புக்கல்லை ஆதாரமாகக் கொண்டே உருவாக்கப் பட்டது. புத்தளத்திலுள்ள சீமெந்து ஆலை அருகிலுள்ள அரவக்காடு என்ற இடத்திலிருந்து சுண்ணாம்புக்கல்லைப் பெற்றுக் கொள்கின்றது.
6.3.2 பளிங்குருச் சுண்ணாம்புக்கல்
இலங்கையின் கொண்டலைற் பாறைகளிடையே பளிங்குருச் சுண்ணக்கல் நாளங்கள் அமைந்துள்ளன. அநுராதபுரம், கண்டி, பலாங்கொடை, பதுளை, வெலிமடை முதலான பிரதேசங்களில் பளிங்குருச் சுண்ணக்கல் பிறவகைப் பாறைகளிடையே நாளங்களாகக் காணப்படுகின்றன. பளிங்குருச் சுண்ணக் கல் சூளைகளில் சுடப்பட்டு கட்டடத் தேவைகளுக்குரிய சுண்ணாம்பு பெறப்படுகின்றது. இவ்வகைச் சுண்ணக்கல் மங்கனீசைக் கூடுதலாகக் கொண்டவை; தொலமைற்றாகக் காணப்படுகின்றன.
6.3.3 முருகைக்கல்
முருகைப் பல்லடியம் எனப்படும் கடல்வாழ் நுண்ணுயிர்களின் சுண்ணாம்புச்சத்து நிறைந்த உடற்கூறுகள் படிந்து இறுகுவதால் முருகைக் கற்பார்கள் தோன்றுகின்றன. இவ்வகைப் பார்களை இலங்கையின்
76

தென்மேல் கரையோரத்தில் அம்பலாங்கொடையிலிருந்து தெவிநுவரை வரை காணமுடியும். அத்துடன் குச்சவெளி, கல்குடா, நெடுந்தீவு, யாழ்ப்பாணக் குடாநாட்டுக் கரையோரங்கள் என்பனவற்றிலும் முருகைக் கற்பார்களைக் காணமுடியும். சின்னப்பாசு, பெரியபாசு தீவுகளிலும் முருகைக் கற்பார்களுள்ளன. இவற்றையும் அகழ்ந்தெடுத்துச் சுட்டுச் சுண்ணாம்பாக்கி வருகின்றனர். முருகைக் கற்களை அகழ்ந்தெடுப்பதால், தென்மேல் கடற்கரையோரம் கூடுதலாக இருப்பதற்குள்ளாகி வருகிறது. அதனால் முருகைக் கற்கள் அகழ்வதைச் சட்டத்தின்மூலம் 1990 இலிருந்து நிறுத்தியுள்ளனர்.
6.4 ബിഞ്ഞ് ഖങ്ങാമ്
இலங்கையில் காணப்படும் களிமண் வகைகளில் களிமண், வெண்களி
என்பன முக்கியமானவை.
6.4. d56floody
இலங்கையில் களிமண் பாத்திரங்களை வனைவதற்குப் பண்டை நாளி லிருந்து களிமண் பயன்படுத்தப்படுகின்றது. பானை சட்டிகள், செங்கற்கள், ஒடுகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்குக் களிமண் உபயோகமாகின்றது. மகாஒயா, களுகங்கை, களனிகங்கைப் பள்ளத்தாக்கு களிலும் குளங்களின் படுக்கைகளிலும் களிமண் காணப்படுகின்றது. ஒட்டுசுட்டான், அநுராத புரம், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, அலுத்துவர, களனி, அம்பாறை, யட்டி யானை முதலான பகுதிகளில் செங்கற்கள், ஒடுகள் என்பனவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுள்ளன. முருங்கனில் இருந்து அகழ்ந்தெடுக் கப்படும் களிமண்ணும் எலுவங்குளத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் களிமண்ணும் சீமெந்து உற்பத்திக்கு உதவும் ஒரு மூலப்பொருளாக உள்ளது.
6.4.2 வெண்களி பீங்கான் பொருட்கள் செய்வதற்கும் காகிதங்களை வழுவழுப்பாக்குவ தற்கும் உதவுகின்ற வெண்களி இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் காணப்படுகின்றது. கலுபோவில பெரஸ்கமுவ எனுமிடத்தில் ஒ 2$giftgagib மில்லியன் தொன் களி இருப்பதாக மதிப்பிடப்ப்ட்டுள்ளது மீற்றியகொட்ை பிரதேசத்திலும் வெண்களி காணப்படுகின்றது. வெண்களி சுத்திரிப்பு
Esso
ஆலை பெரலஸ்கமுவில் இயங்கி வருகின்றது. பெரல்ெ II
嘯
வளை ஆகிய இடங்களில் கடுஞ்சாம்பல் நிறங்ன்ெ உடையதுமான ஒரு வகைக் களிமண் காணப்படுகின்றது. இதுவும் பீங்கான் மட்பாண்டங்கள் செய்யப் பயன்படுகின்றன. இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனம் தெதியாவளையிலுள்ள களியைப் பயன்படுத்தி வருகின்றது.
77

Page 41
6.5 கனியமணல் வகைகள்
இலங்கையில் படிக மணல் (சிலிக்கா மணல்), இல்மனைட், மொனசைற், தோரியனைற் முதலான கனிய மணல் வகைகள் காணப்படுகின்றன. இவை பரும்படியாக்கத்திற்குப் பயன்படக்கூடியனவாக உள்ளன.
6.5.1 பழக மணல் கண்ணாடி உற்பத்திக்கு மூலப் பொருளாக அமையக்கூடிய சிலிக்கா மணற் படிவுகளை இலங்கையின் கரையோரங்களில் காணலாம். யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையோரத்தில் பருத்தித்துறை, வல்லிபுரம், அம்பனை, நாகர்கோயில் பகுதியில் வடகீழ்ப் பருவக்காற்றினால் படிக மணல் குவிக்கப்பட்டிருக்கின்றது. கால ஒயா, களனி கங்கை, களுகங்கை போன்ற நதிகளின் முகத்துவாரங்களில் படிகமணல் காணப்படுகின்றது. மாறவலை - நாத்தாண்டியாப் பகுதியிலுள்ள படிக மணல் கண்ணாடி உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
6.5.2 இல்மனையிட் இல்மனையிட் படிவுகளும் படிக மணல் போன்று இலங்கையின் கரை யோரங்களில் காணப்படுகின்றன. திருகோணமலைக்கு வடக்கேயுள்ள புல்மோட்டையிலும் மட்டக்களப்பிற்குத் தெற்கேயுள்ள திருக்கோயிலிலும் இல்மனையிட் படிவுகளுள்ளன. இல்மனையிட் கடற்கரையில் குவிக்கப் படும் ஒருவகை மணலிலிருந்து பெறப்படுகின்றது. புல்மோட்டையில் இல்மனையிட் தொழிற்சாலை அமைந்துள்ளது. புல்மோட்டையில் சுமார் 75 ஆண்டுகளுக்குப் போதுமான இல்மனையிட் உள்ளதாகக் கணிக்கப்பட்டி ருக்கின்றது. ஒரு வருடத்தில் சுமார் 60 000 தொன்கள் வரையில் இல்மனையிட் யப்பானுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதியா கின்றது. இல்மனையிட் உயர்ந்தரகத் தீந்தையின் மூலப் பொருளாகவும் உருக்குக் கலப்புப் பொருளாகவும் பயன்படுகின்றது. இலங்கைக் கணிப் பொருட் கூட்டுத்தாபனம் இல்மனையிட் மணலைத்துப்பரவாக்கி ஏற்றுமதி செய்து வருகின்றது. ܗܝ
6.6 இரும்புத்தாது இலங்கையின் தென்மேல் பாகத்திலுள்ள பல இடங்களில் இரும்புத்தாது காணப்படுகின்றது. இரத்தின்புரி தொடக்கம் பலாங்கொடைவரை, மாத்தறை தொடக்கம் அக்குறசாவரை இரும்புத்தாதுப் படிவுகள் உள்ளன. சிறியளவில் (ரூவென்வெல) கண்டி, மாத்தளை, சிலாபம் ஆகிய இடங் களில் கிடைக்கின்றது. சிலாபத்தில் மாதம்பைக்கு அண்மையில் பன்னிரண் டாவை எனுமிடத்தில் மக்னதைற் இரும்புத்தாதுப் படிவொன்று, அதிக இரும்புத்தாது வீதத்தைக் கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு
78

ஐந்து மில்லியன் தொன்னுக்கு மேல் படிவு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள் ளது. அத்துடன் தேலா, கஹவத்தை, அக்குரசை கலவானை ஆகிய பிரதேசங் களிலும் இரும்புத்தாது படிவுகள் உள்ளன. அண்மை ஆய்வுகள் பல புதிய இடங்களிலும் இரும்புத் தாதுப் படிவுகள் இருப்பதை அறியத் தருகின்றன. இலங்கையிலுள்ள இரும்புத்தாதைப் பயன்படுத்த நிலக்கரி இன்மை தடை யாக உள்ளது.
Ꮾ.7 ᏕᎧ fit!
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பிரதான கணிப்பொருள் உப்பு ஆகும். உப்பு உற்பத்தியைப் பொறுத்தளவில் இலங்கை பூரண விருத்தியடைந்துள் ளது. கடல் நீரிலிருந்து பலவகைக் கணியங்களைப் பெறமுடியுமெனினும் உப்பு ஒன்றே இன்று நாம் உற்பத்தி செய்துவரும் கனியமாகும். அளங்களில் கடல்நீரைத் தேக்கி ஆவியாக விடுவதன்மூலம் உப்பு பெறப்படுகின்றது. இலங்கையில் ஆனையிறவு, அம்பாந்தோட்டை, நிலாவெளி, புத்தளம், கல்லுண்டாய், செம்மணி ஆகிய பகுதிகளில் உப்பளங்களுள்ளன. இவற்றில் ஆனையிறவு, கல்லுண்டாய் உப்பளங்கள் இன்றைய உண்ணாட்டுக் கலவரங்கள் காரணமாக இயங்குவதில்லை.
உப்புச் செய்கையை அரசாங்கக் கூட்டுத்தாபனம் ஒன்றே நடாத்தி வருகின்றது. தனிப்பட்டவர்கள் உப்பை விளைவிக்க முடியாது. இலங்கை யில் வருடாவருடம் 15 இலட்சம் மெட்றிக் தொன் உப்பு உற்பத்தியாகின்
றது.
உப்பிலிருந்து வேறுபல உபபொருட்கள் பெறப்படுகின்றன. விவசாயத் திற்கு உரம் பெறப்படுகின்றது. சீமெந்து செய்வதற்கு சிலா சத்து உற்பத்தி செய்யப்படுகின்றது. நீரைச் சுத்திகரிப்பதற்குக் குளோரின் பெறப்படுகின் றது. வேறுபல இரசாயனப் பொருட்களும் பெறப்படுகின்றன.
6.8 ஏனைய கனியங்கள்
மின் கருவிகளை உற்பத்தி செய்வதற்குஉதவும் மைக்கா, இலங்கையின் பல பகுதிகளிற் காணப்படுகின்றது. துட்டுவவ, இரத்தோட்டை, மாத்தளை, உடுமுல்லை, உல்விட்ட, அப்புத்தளை முதலான பிரதேசங்களில் மைக்கா கிடைக்கின்றது. முத்துராஜவெலப் பகுதியில் முற்றா நிலக்கரி காணப் படுகின்றது. வளமாக்கிகளை உற்பத்தி செய்வதற்குதவும் கனிய வளமான அபதைற்று, எப்பாவெல எனுமிடத்தில் கிடைக்கின்றது. துலாகொடை, கைக்காவலை, நாமல்ஒயா முதலிய பகுதிகளில் பெல்ஸ்பார் காணப் படுகின்றது. இவற்றோடு மாபிள் (சலவைக்கல்), கருங்கல் படிகம், கபுக்கல், மொனசைற் ஆகியனவும் இலங்கையிற் கண்டறியப்பட்டுள்ள கனிய வளங்களாம்.
79

Page 42
காடுகள்
7 இலங்கையின்
ஐக்கிய நாடுகள் தாபனத்தின் உணவு விவசாய நிறுவனம் (FAO/UNDP) அண்மையில் மேற்கொண்ட இலங்கையின் வன அளவீட்டின்படி, இலங்கையில் 2.45 மில்லியன் ஹெக்டேயர் பரப்பில் காடுகளுள்ளன என அறியப்படுகின்றது. இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 37.5% ஆகும். இதில் 27% அடர் காடுகளாகவும் (1.75 மில், ஹெக்), 9.5% புதர்க் காடுகளாகவும் (0.62 மில். ஹெக்) மிகுதி மீள்வனமாகவும் உள்ளன. 'சார்க்' நாடுகளில் பூட்டானுக்கு அடுத்ததாக அதிக காட்டு நிலப்பரப்பினைக் கொண்ட நாடு இலங்கையாகும்.
இலங்கையின் 2.45 மில்லியன் ஹெக்டேயர் காட்டுப் பரப்பில் 1.12 மில்லியன் ஹெக்டேயரிலுள்ளவை பேணப்பட்டுவரும் ஒதுக்குக் காடு களாகும். (Reserve forests) மாகாண அடிப்படையில் ஒதுக்குக் காடுகளின் பரம்பல் அட்டவணை 7.1 இல் தரப்பட்டுள்ளது,
இவ்வட்டவணையிலிருந்து இலங்கையின் ஒதுக்குக் காடுகளில் 50.6% வடக்கு-கிழக்கு மாகாணத்திலுள்ளன என்பது புலனாகும்.
காட்டு வளத்தை மிகக் குறைவாகக் கொண்டிருப்பது ஊவா மாகாண மாகும். வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தவிர்த்து நோக்கில், வடமத்திய மாகாணமும் வடமேல் மாகாணமும் கணிசமான அளவு காட்டுவளத்தைக் கொண்டிருப்பது புலனாகின்றது.
80

மாகாண அடிப்படையில் ஒதுக்குக் காடுகளின் பரம்பல்
மாகாணம் காட்டுப்பரப்பு(ஹெக்) %
1. கீழ் 362 905 32.3 2. வட 205 744 18.3
3. வடமத்திய 198 942 17.7 4. வடமேல் 147 436 , 13.1 5. மத்திய 59 36 5.3
6. தென் 58 411 5.2 7. சப்ரகமூவா 53 96I 4.5
8. GSLDau 27.317 2.4
9. ஊவா 9 107 0.8
மொத்தம் 123 186 100
ஆதாரம்: வனப்பாதுகாவலரின் ஆண்டறிக்கையில் இருந்து கணிக்கப்பட்டது. ኳ அட்டவணை 7.1
அண்மைக்காலச் செய்மதிப் படங்களின் துணையுடன் இலங்கையின் காட்டு வளத்தை ஆராயும்போது மொத்த நிலப்பரப்பான 65 000 சதுர கிலோமீற்றரில், 16 000 சதுரக் கிலோமீற்றர் பரப்பில் காடுகள் பரந்துள்ள மையை அறியலாம். இக்காட்டுப் பரப்பில் ஏறத்தாழ 13 000 சதுர கிலோ மீற்றர் (80%) காட்டுப்பரப்பு, உலர்பிரதேசத்தில் அமைகின்றது. ஈரவலய மாவட்டங்களான காலி, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி என்பவற்றில் ஏறத்தாழ 1000 சதுரகிலோமீற்றர் காடுகளே உள்ளன.
7.1 புராதன காட்டுநிலப்பரப்பு
19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குறிப்பாக ஆங்கிலேயர் இலங்கைக்கு வந்தபோது இலங்கையின் காட்டு நிலப்பரப்பு எவ்வளவு? இதனை எவ்வாறு கணிக்கலாம்? வெகு இலகு. இன்னிஜய தேயிலை, றப்பர் முதலான பெருந் தோட்டப் பரப்புக்களையும் குடியேற்றத்திட்டப் பரப்புக்களையும் ஒருங்கே கணித்து இன்றைய காட்டுப் பரப்போடு கூட்டில், ஆங்கிலேயர் காலடி வைத்தவேளை, இலங்கையில் இருந்த காடுகளின் பரப்பளவு தோராயமாகப் புலனாகும். பண்டைக் காடுகள் அழிக்கப்பட்டே தேயிலை, றப்பர்ப் பெருந் தோட்டங்களும் குடியேற்றத்திட்டங்களும் உருவாக்கப்பட்டன. எனவே 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலக் காட்டு நிலப்பரப்பு (இன்றைய காட்டுப் பரப்பு = 2 450 000, + தேயிலைப்பரப்பு = 259 473 + றப்பர்ப் பரப்பு = 227373 + ஏனையன= 54 029 + குடியேற்றப்பரப்பு = 161877) 3 152 752 ஹெக்டேயர்களாகும்.
81

Page 43
இலங்கையின் மொத்த நிலப்பரப்பு 6 563 493 ஹெக்டேயராகும். எனவே, பண்டைய காட்டுப்பரப்பு மொத்த நிலப்பரப்பில் 48% உள்ளடக்கி யிருந்தது. இக்காட்டு நிலப்பரப்பு இன்று 37.5% ஆகக் குறுகியமைக்குக் காரணங்களாகப் பின்வருவன அமைகின்றன.
1. பெருந்தோட்டங்களின் விருத்திக்காக மலைக்காடுகள் அழிக்கப்
பட்டன.
2. பல்வேறு வகையான குடியேற்றத் திட்டங்களுக்காகவும் நீர்ப் பாசனத் திட்டங்களுக்காகவும் உலர்வலயக் காடுகள் அழிக்கப்படு கின்றன. 3. விறகுத் தேவைக்காகவும் வெட்டுமரத் தேவைக்காகவும் களவாகக் காட்டுமரங்கள் திட்டமின்றி அழிக்கப்பட்டு வருகின்றமை. பெறுமதி வாய்ந்த மரங்களான ஹொறா, நடுன், டொம்பா, முதிரை, பாலை, கருங்காலி, மலைவேம்பு முதலான மரங்கள் களவாகத் தறிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. விறகுத் தேவைக்காக புதர்க் காட்டுமரங்கள்கூட அழிக்கப்பட்டு வருகின்றன. உலர்வலயப் பிரதான வீதிகளின் இருமருங்கும் கொள்ளி விறகுகளை மலை போலக் குவித்து, பிழைப்பூதிய வியாபாரம் செய்யும் மக்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவது கண்கூடு. 4. சேனைப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காகக் காடுகள் அழிக்கப் பட்டன. இன்றும் சிறியளவில் இப்பிற்போக்கான பெயர்ச்சிப் பயிர்ச்செய்கை நிகழ்ந்து வருகின்றது. 5. மந்தைகளின் மேய்ச்சலால் தாவரங்கள் அழிகின்றன. வில்பத்து, யால போன்ற வனவிலங்குப் புகலரண்களில், குறிப்பாக வரட்சிப் பருவங்களில் தாவர உண்ணிகள் கூடுதலாக மேய்ந்து விடுகின்றன.
7.2 சிங்கராஜாக் காரு இலங்கையின் இயற்கை வனப்பும் வளமும் மிக்க காடாகக் கருதப்படும் சிங்கராஜ வனம் றக்குவானை மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. 8 900 ஹெக்டேயர் பரப்பினையுடையதாக இந்த வனம் விளங்குகின்றது. இலங்கையில் இன்று எஞ்சியுள்ள ஒரேயொரு இயற்கைக் காடு இதுவாகும். இக் காட்டிலுள்ள உயிரின வளங்களை மனதிற்கொண்டு இதனை ஒரு சர்வதேசச் சொத்து என யுனஸ்கோ நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது. ஹொறா, நடுன், நாகமரம், காட்டாமணக்கு, யாவரணை, கீனா போன்ற பல்வகை மரங்களும் பல்வகையான ஒகிட்டுக்களும் இந்த வனத்திலுள்ளன. 142 வகையான பறவைகளும் பல மீன் வகைகள், ஊர்வன, ஈரூடக வாழிகள் என்பனவும் பாயும் அணில், மரநாய், மான், உக்கிளான், பன்றி முதலான முலையூட்டிகளும் இங்குள்ளன. சிங்கராஜ வனம் சிறந்ததிொரு ஆய்வு கூடமாக விளங்கி வருகின்றது.
82

சிங்கராஜவன மரங்கள் மிக உயரமானவை. சில மரங்கள் 50 மீற்றர் முதல் 60 மீற்றர்வரை உயர்ந்து வளர்ந்துள்ளன. அகன்ற இலைகளைக் கொண்ட என்றும் பசுமையானவை. ஏறுகொடிகள், கீழ்நில வளரிகள்
என்பனவுள்ளன.
7.3 வனவள அழிவால் தோன்றும் பிரச்சினைகள் இலங்கையின் உயிர்ச்சூழலைப் பேணுவதில் காடுகளின் பங்களிப்பு முக்கிய மானதென்பதை மறப்பதற்கில்லை. சிங்கராஜ வனத்தில் ஒரு ஹெக்டேய ருக்கு 600 மரங்களும் காலி கொற்றாவ வனத்தில் ஒரு ஹெக்டேயருக்கு 500 மரங்களும் வளர்ந்துள்ளன. சிங்கராஜவனம்போல இலங்கையின் ஏனைய பல பகுதிகளிலும் உயிர்ச்சூழலைப் பேணும் காடுகள் உள்ளன. அநுராதபுரத்தில் ரிற்றிகலவனம்; மாத்தறையில் கேகனதுறை, பற்றுவிற்ற, விற்றியால் வனங், கள்; கதிர்காமம், யால வனங்கள்; வன்னியிலுள்ள அருவியாற்றங்கரை வனம்; பூநகரி வனம்; செம்மலை வனம் என்பன குறிப்பிடத்தக்க காட்டுப் பிரதேசங் களாகும்.
பயிர்ச்செய்கை, வீடமைப்பு, தளபாடம், விறகுத்தேவை முதலான பல்வேறு காரணிகளுக்காகக் காட்டுமரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. அதிகரித்துவரும் சனத்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் காட்டு மரங்கள் அழிக்கப்படுகின்றன. சேனைப் பயிர்ச்செய்கை இயற்கைத் தாவர அழிவுக்கு ஒரு காரணியாக விளங்குகின்றது. நமது நாட்டின் எரிபொருள் தேவையில் 90 சதவீதம் விறகாகும். இவ்வாறு காடுகள் அழிக்கப்படுவதனால் மண்ணரிப்பு துரிதப்படுகின்றது. காடுகள் அழிவ தனால் கடும் சூரியவெப்பத்திலிருந்தும் அதிக மழைவீழ்ச்சியிலிருந்தும் நிலத்திற்குக் கிடைக்கும் பாதுகாப்பு அற்றுவிடுகின்றது. நேரடியாகத் தங்கு தடையின்றி மண்ணில் விழும் மழைநீரும், தங்குதடையின்றி ஒடும் கழுவு நீரும் மண்ணரிப்பினைச் செய்கின்றன. நதிகளின் நீரேந்து பரப்பின் தரைக்கீழ் நீர் வளத்தைப் பேணுவன காடுகளாதம். நிலத்தின் ஈரலிப்பு ஆவியாகாமல் காப்பன காட்டு மரங்களாகும். ழண் உருவாகுவதற்கும் மண் பாதுகாக்கப் படுவதற்கும் காட்டு மரங்கள் உதவுகின்றன. காட்டுமரங்கள் காற்றுத் தடுப்பான்களாகவும் மழை பொழிவுக்கும் காரணமாகின்றன.
காடுகள் அழிக்கப்படுவதால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பலவாகும். உயிர்ச்சூழற் சமநிலை குலைகின்றது. காலநிலை, முக்கியமாக மழைவீழ்ச்சி பாதிப்புறுகின்றது. மாத்தறை, குருநாகல் மாவட்டங்களில் முன்னர் நிலவிய ஈரவானிலை, இன்று பாதிக்கப்பட்டு உலர்தன்மை நிலவுவதை அவதானித் துள்ளனர். காடுபடு திரவியங்கள் அழிகின்றன. காட்டு விலங்குகள் அழி கின்றன. மண்ணரிப்பு ஏற்படுகிறது.
83

Page 44
இயற்கையான காட்டு மரவகைகள், மருந்து மூலிகைகள், செடிகள், கொடிகள் மீண்டும் வளராது நிலம் தரிசாகின்றது. மூங்கில்கள், பிரம்புகள், ஆயுர்வேத மூலிகைகள் என்பன திட்டமிடப்படாது அகற்றப்பட்டு அழிக்கப் படுகின்றன. இவ்விதமாக ஈரவலயக் காடுகள் அழிக்கப்பட்டு சிறுசிறு சிதறிய பரப்புகளில் முடிவை எதிர்நோக்கியிருக்க உலர்வலயக் காடுகள் இன்று வேகமாக அழிவுக்குட்பட்டு வருவது வேதனைக்குரியதாகும். சிவில் நிர்வாகச் சீர்குலைவு காட்டுவளப் பாதுகாப்பிற்கு உறுதியளிப்பதாகவில்லை.
படம் 71. இலங்கையின் காடுகள்
b
7.4 காட்டுநிலப்பரப்பு குறுகுகிறதா? இந்தவிடத்தில் நாம் ஒரு வினாவை எழுப்பி விடைகாண முயலலாம். உண்மையில் இலங்கையின் காட்டு நிலப்பரப்பு காட்டழிவால் குறுகி வருகி றதா? காட்டுவளம் குன்றிய போதிலும், “காட்டு நிலப்பரப்பு” விரிவடைந் துள்ளது என்பதே இதற்கான விடையாகும். காடு என்பது தாவரங்களின்
84
 

கூட்டாகும். இயற்கையான தாவரங்கள் மட்டுந்தாம் காடுகளா? 'காட்டுத் தாவரமல்லாத மரங்கள் (Non-forest tree) காடாகாவா? அவ்வாறாயின் இன்று நமது மண்ணின் தாவரப்போர்வை' பின்வரும் பரப்பாக விரிகிறது.
(அட்டவணை 7.2)
காட்டுப் பரப்பு - 1999
665 பரப்பு (ஹெக்) இயல்வனம் 2 450 000 தேயிலைப் பரப்பு 195 460 றப்பர்ப் பரப்பு 159 097 தென்னந்தோட்டப் பரப்பு 443 952 ஏனைய மரப்பயிர்ப் பரப்பு 176 500
மொத்தம் 3 425 009
siturb: Statistical Pocket Book of Sri Lanka - 2000
மீண்டும் கூறியதைக் கூறுவோம். இலங்கையின் மொத்த நிலப்பரப்பு 6563 493 ஹெக்டேயர்கள்; அதில் காட்டுப்பரப்பு'3425009 ஹெக்டேயர் களாகும். எனவே, 52.18% நிலப்பரப்பில் காடுகள் உள்ளன. வடமாகாணப் பனைமரக்காடுகளையும் இதனுடன் சேர்க்கில், காட்டுப் பரப்பளவு இன்ன மும் அதிகரிக்கும்.
7.5 அபிவிருத்தி நடவழக்கைகள் காட்டுவளத்தையும் காட்டுப் பரப்பளவையும் அதிகரிப்பதில் அண்மைக் கால நடவடிக்கைகள் பலவற்றை வனத் திணைக்களம் எடுத்து வருகின்றது. அவை:
1. காடுகளை அழிப்போரிடமிருந்த பாதுகாத்தல் வனத் திணைக்களம் காடுகளை ப்போரிடமிருந்து பாதுகாப்பதற்கு இராணுவம், பொலிசார், அரசாங்க்அதிபர், அரச மரக்கூட்டுத்தாபனம் ஆகியோரின் துணையுடன் முயன்று வருகின்றது.
2. மீள் வனமாக்கல்
இலங்கையில் இன்று 272 705 (2000)ஹெக்டேயர் பரப்பில் மீள்வனம் காணப்படுகின்றது. வடக்கு-கிழக்கு மாகாண அமைதியின்மையும் மொன்சூன் மழை சில பிரதேசங்களிற் பொய்த்தமையும் மீள்வனமாக்க லிற்குத் தடைகளாக அமைந்துள்ளன. தேக்கு (71 014 ஹெக்), தேவதாரு (44 823 ஹெக்), மலைவேம்பு (27 422 ஹெக்), மூங்கில், புளியமரம், இபில்-இபில், ஹல்மில, சவுக்கு முதலானவை மீள்வன மரங்களாக உள்ளன.
85

Page 45
3. நில/நீர்க்காப்பு மேல்மகாவலி நீரேந்து பிரதேசத்தின் நில/நீர்க்காப்புக்காக 815 ஹெக்டேயர் பரப்பில் மரங்கள் நடப்பட்டுள்ளன; தொடர்ந்து நடப்படுகின்றன.
4. விறகு/மரத்தோட்டங்கள் விறகுத் தேவைக்காக மாத்தளை, புத்தளம், அநுராதபுரம், நுவரெலியா, குருநாகல் மாவட்டங்களில் 1017 ஹெக்டேயர் பரப்பில் விறகுத் தோட்டங் கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேவதாரு பிரதான மரமாகும்.
5. இடைக்காடு காலி, இரத்தினபுரிப் பகுதிகளில் காணப்படும் பத்தனாவகைப் புல்நிலங் களிலும் தெட்டம் தெட்டமாக அழிக்கப்பட்ட இடைக்காட்டு நிலங்களி லும் மரங்கள் நடப்படுகின்றன.
6. சமுதாயக் காட்டுத் திட்டம் மீள்வனமாக்கலின் புதுமையானதும் பயனுடையதுமான ஒரு திட்டமாக இதுவுள்ளது. கிராமப்புறங்களில், மக்களைக்கொண்டு சமுதாயக் காடுகளை உருவாக்கி, அவற்றை அவர்களே பயன்கொள்ள வைத்தலே இத்திட்டத்தின் நோக்கமாகும். கிராம மக்களின் விறகுத் தேவையைப் பூர்த்தி செய்வது இத்திட்டத்தின் பிரதான இலக்கு. பதுளை, மட்டக்களப்பு, மாத்தளை, கண்டி ஆகிய பிரதேசங்களில் ஏறத்தாழ 694 ஹெக்டேயர் பரப்பில் சமுதாயக் காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
7. ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் (IRDP): வவுனியா, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, மாத்தளை, மொனராகலை, ஆகிய மாவட்டங்களில் IRDP திட்டத்தின் கீழ் 975 ஹெக்டேயர் காட்டு
மரங்கள் நடப்பட்டுள்ளன.
8. மட்பாண்டக் கூட்டுத்தாபன மீள்வனம் புத்தளம், மொனராகலை மாவட்டங்களில் மட்பாண்டக் கூட்டுத்தாபனம் தனது தொழிற்சாலைக்குத் தேவையான விறகுக்காக, 91 ஹெக்டேயர் பரப்பில் தோட்டங்களை அமைத்துள்ளது.
9. வனவள அபிவிருத்தித் திட்டம் பெளதிகச் சூழலுக்கு இணங்க வளர்ந்துள்ள காடுகளை, தேசிய மரங்கள், செடிகள், கொடிகள் அழியாது அவ்வாறே பாதுகாத்தல் இத்திட்டத்தின் பிரதான நோக்கம்.
86

10. பனை அபிவிருத்திச் சபை
காட்டு மரங்களில் ஒன்றாகப் பனை கருதப்படவில்லை. கருதவேண்டிய அவசியமுமில்லை. ஆனால், பனை அபிவிருத்திச் சபையினரின் பனை வளர்ப்புத் திட்டங்களையும் சமுதாயக் காட்டுத் திட்டத்தின்கீழ் கொண்டு வரவேண்டியது அவசியமாகும். வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பனை வளர்ப்பு சாத்தியமான சமுதாயமான
சமுதாயக் காட்டுத் திட்டமாகும்.
11. ஊடுபயிர்த் திட்டம்
மீள்வன மரங்களுக்கு இடையே ஊடு பயிர்ச்செய்கை பண்ணலின் சாத்தியங் கள் ஆராயப்பட்டு வருகின்றன. இது மண்ணரிப்பைத் தடுப்பதோடு, மண்ணின் வளத்தையும் பாதுகாத்து பயன்தருவதாகவும் அமையும். மலைப் பிரதேச மீள்வனங்களில் மிளகு, கோப்பி, புகையிலைப் பயிர்களை நடவுள் ளனர். பயன்குறைந்த தேயிலைத் தோட்டங்களில் ஏலமரங்கள் நடப்பட
உள்ளன.
12. மாங்குரோங் / நீர்த்தாழை வளர்ப்புத் திட்டம் கடற்கரையோர நீர்த்தாழைத் தாவரங்களைப் பேணி வளர்ப்பது பற்றிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விமானப் படங்கள்மூலம் நிகழ்த்திய ஆய்வுகளிலிருந்து கல்பிட்டியில் இருந்து கிரிந்தை வரையிலான மேற்குக் கரையோரத்தில் இத் திட்டம் செயற்படவுள்ளது.
13. விலங்குப் புகலரண்கள் காடுகளையும் காட்டு விலங்குகளையும் பேணுவதற்கு இலங்கையில் விலங்குப் புகலரண்களும் பறவைப் புகலரண்களும் அமைக்கப்பட்டுள்ளன. வில்பத்து, யால, உடவளவை, சேனநாயக்க, மதுறுஒயா, சோமாவதி, லுணுகம்வெகர, ஹோட்டன் சமவெளி, மடு, ரிதிகல, கொக்கிளாய், சுண்டிக் குளம், மின்னேரி, வஸ்கழுவ என்ப.ே அவையாம்.
நாம் பெருமைப்படக்கூடிய அளவிற்குக் காட்டுவளம், இலங்கை யிலுள்ளது. குறிப்பாக வடக்கு- கிழக்கு மாகாண அரசுப் பிரதேசத்தில் இலங்கையின் ஒதுக்குக் காட்டுப் பிரதேசப் பரப்பில் 50.6% உள்ளது. பெருமைப்படக்கூடியளவிற்குக் காட்டுவளம் இருந்தாலும், அச்சப்படக் கூடியளவிற்குக் காடழிப்பு நிகழ்ந்து வருகின்றது. 1984ஆம் ஆண்டிற்குப்பின் தடுப்பாரின்றி காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. களவாக மரந் தறித்தல், அடாத்தாகக் காடழித்து நிலம்பெறுதல், களவாக வெட்டு மரங்களை வைத்திருத்தல், பதிவு செய்யப்படாத விறகுகாலைகள் இயங்கல்
87

Page 46
என்பன தடுக்கவியலாத ஒழுங்கீனங்களாக உள்ளன. அதிகாரிகள் தமது கடமைகளைச் சரிவரச் செய்வதற்கு சிவில் நிர்வாகத் தடையினால் ஏற்பட்ட பயமுறுத்தல்கள் தடைவிதிக்கின்றன.
வளங்களைத் துய்ப்பதும் வருங்காலச் சமுதாயத்திற்காக அவற்றைப் பேணி விட்டுச் செல்வதும் ஒவ்வொருவரின் கடமை என்பதை நாம் உணரத் தவறி உள்ளோம்.
88

பகுதி : இரண்டு இலங்கையின் காலநிலையியல்

Page 47

இலங்கையின் காலநிலைக் கட்டுப்பாடுகள்
இலங்கை அயனமண்டலப் பருவக்காற்றுக் காலநிலையைச் சேர்ந்தது. இலங்கையின் காலநிலை இயல்புகள் வளிமண்டலவியற் கட்டுப்பாடு களினாலும் புவியியற் கட்டுப்பாடுகளினாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன எனக் காலநிலையியலறிஞர் ஜோர்ஜ் தம்பையாபிள்ளை விளக்குவார். அவரின்படி இலங்கையின் காலநிலையை நிர்ணயிக்கும் பிரதான காரணிகள்
வருமாறு:
8.1 மத்தியகோட்டு அமைவு
8.2 வெப்ப மத்தியகோடு
8.3 அயன வயல் ஒருங்கல் வலயம்
8.4 அருவித்தாரை
8.5 இந்தியத் துணைக்கணட நெருக்கம்
8.6 தீவுத்தன்மை
8.7 தென்மேல் பருவக்காற்று
8.8 வடகீழ்ப் பருவக்காற்று
8.9 அயனமண்டலச் சூறாவளிகள்
8.10 தரைத்தோற்றவமைப்பு
8.11 இயற்கைத் தாவரக் கவிப்பு
91

Page 48
looựgooriuso no 11@niga qar@s@rısı(3) To sormosaegseggiao uso igognosergiceve) : 1 × q , , ,
gugi
~luxo usog)
f@suso &sursurões,
/ /à**ッ
V NOEN
NŲ
on rin two reso剑。위5794***'s 好撃세,
_°/ \
母心目时4月2~
\
K
|-읽科制的制制이지리5〉지T的이공원역(T - z, 和飞 .^a^六•^殿、曼 위司制입지체히읽히지제후와fıçıs0る„^·„” -„^ ~^ //f\増さg。93
\g。ミg
92
 
 
 

8.1 மத்தியகோட்கு அமைவு இலங்கை 5° 55 வட அகலக் கோட்டிற்கும் 9° 51 வட அகலக்கோட்டிற் கும் இடையில் அமைந்திருப்பதால் மத்திய கோட்டமைவைப் பெறுகின்றது. அதனால் சூரிய வெப்பம் ஆண்டு முழுவதும் சீராக இருப்பதுடன், உயர்வா கவும் நிலவுகின்றது. உயர் வெப்பநிலை மேற்காவுகை மழைக்குக் காரணமா கின்றது. அதனால் முகில் நிறைந்த வானமும், சூரிய கதிர்வீச்சுத் தடைப் படுதலும் ஏற்படுகின்றன. இந்த அமைவு காரணமாகப் பருவகால வேறுபாடு களில் வெப்பநிலையில் அவ்வளவு மாற்றம் உண்டாவதில்லை. இலங்கை யின் சராசரி வெப்பநிலை 27°C ஆகவும் வெப்பநிலை வீச்சு 2.8°C ஆகவும் உள்ளன.
8.2 வெப்ப மத்தியகோரு
வெப்பவலயத்தின் நடு அகலக் கோடான வெப்ப மத்திய கோடு (Thermal equater),சூரிய உச்சம் நிகழும் பருவத்திற்கு ஏற்ப வடக்கு-தெற்காக நகரும். கோடையில் சூரியன் கடகக்கோட்டில் உச்சம் கொடுப்பதால் வெப்ப மத்தியகோடு 5° வ. அகலக்கோட்டையடுத்தும் மாரியில் சூரியன் மகரக் கோட்டில் உச்சம் கொடுப்பதால் 5° தெ. அகலக்கோட்டையடுத்தும் நகர்ந் தமை, கோடையில் இவ்வெப்ப மத்தியகோடு இலங்கையின் தென் கரையை அடுத்து அமைகின்றது. (படம் 8.1). வெப்ப மத்திய கோட்டின் நகர்வு, இலங்கை வானிலையில் காற்றுக்களின் இயக்கத்திற்குக் காரணமாகும் ஏதுக்களிலொன்றாகக் கருதப்படுகின்றது.
8.3 அயனவயல் ஒருங்கல் வலயம்
வடகீழ் வியாபாரக் காற்றையும் தென்கீழ் வியாபாரக் காற்றையும் பிரிக் கின்ற அகன்றதொரு வலயமாக அயனவயல் ஒருங்கல் வலயம் (InterTropical Convergence Zone - ITCZ) GíîGITTÄIGg566ốTpg|1. ggil Guppgjö35/Typ 1 500 SG). ß. அகலமான பரப்பினை உள்ளடக்கியுள்ளது. இதன் வட எல்லை 15° வ. அகலக் கோட்டை ஒட்டிக் காணப்படும். கோடையில் சடுதியாக 25° வ. அகலக் கோட்டையொட்டி அமைகின்றது. இலங்கை எப்பொழுதும் அயன வயல் ஒருங்கல் வலயத்தினுள் அமைவதைக் காணலாம். அதனால் இலங்கை யின் காலநிலையில் இதன் பாதிப்பு இருக்கும் என்று நம்புவதில் தவறில்லை.
8.4 அருவித்தாரை
இலங்கையின் வானிலையில் மேல்வளி வளிமண்டலவியற்றன்மைகள்
சிலவிடத்து ஆதிக்கமுறுகின்றன என்பதற்கு ஆதாரங்களுள்ளன. மாறன்
மண்டலத்தில் மேற்குக் கிழக்காகச் செயற்படும் முனைவுச்சுழிப்புச்
சுற்றோட்டத்தினுள் அருவித்தாரை (Jet stream) எனும் விரைவான ஒரு
93

Page 49
காற்றோட்டம் காணப்படுகின்றது. இந்த அருவித்தாரை கோடையில் இமய மலைக்கு வடக்காகவும் மாரியில் இமயமலைக்குத் தெற்காகவும் இடம் பெயரும் இயல்பினது. தென்மேல் பருவக்காற்றின் தோற்றத்திற்கும் அருவித் தாரையின் இடம்பெயர்வுக்கும் தொடர்புண்டு எனக் காலநிலையியல் அறிஞர் கருதுகின்றனர்.
8.5 இந்தியத்துணைக்கண்டநெருக்கம் இந்தியத் துணைக்கண்டம் இலங்கையினருகில் இருப்பதால், அந்நிலத் திணிவு வளிமண்டல நிலைமைகளைத் தூண்டி இலங்கையின் அமுக்க ஒழுங்குகளை நிர்ணயிக்கின்றது. இந்தியாவின் வடமேற்கில் அமையும் தார் தாழமுக்கம், தென்கீழ் வியாபாரக்காற்று மத்தியகோட்டைக் கடந்து வட வரைக் கோளத்தினுள் பிரவேசிக்கும்போது தென்மேல் பருவக் காற்றாகத் திசை திருப்பக் காரணமாகின்றது. தென்னிந்தியாவை அடைகின்ற அயன மண்டலச் சூறாவளிகள் இலங்கையிலும் பாதிப்பைத் தருகின்றன. இந்தியத் திணிவு இலங்கைக்கு அருகில் இருப்பது இலங்கையின் வெப்பநிலை உயர்விற்கு ஒரு காரணியாகும்.
8.6 தீவுத்தன்மை இலங்கை ஒரு தீவாக இருப்பதனால் ஆண்டு முழுவதும் நாளுக்குரிய கடற் காற்றும் நிலக்காற்றும் நிலவுகின்றன. இலங்கையின் எப்பாகமும் கடலிலிருந்து 115 கி.மீ. அப்பாலில்லை. அதனால் தீவின் எப்பகுதியும் கடலின் மட்டுப்படுத்தும் தன்மைக்கு அப்பாலில்லை. இலங்கையின் வெப்பநிலைப் பரம்பலில் தீவுத்தன்மை மிகுந்த செல்வாக்கைச் செலுத்து கின்றது. பகல் நேரத்தில் இந்து சமுத்திரத்திலிருந்து வீசுகின்ற குளிர்ச்சிய்ான காற்றுக்கள் இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வெப்பநிலையைக் குறைப்பதிற் பங்கு கொள்கின்றன.
8.7 தென்மேல் பருவக்காற்று
மே மாதக் கடைசியில் அல்லது யூன் மாதத் தொடக்கத்தில் வீசத் தொடங்கி செப்டம்பர்வரை தென்மேல் பருவக்காற்று வீசுகின்றது. இலங்கை-இந்தியா வானிலையில் நன்கு அறியப்பட்ட தோற்றப்பாடு இதுவாகும். தென்மேல் பருவக்காற்று இலங்கைக்கு வெளியே நிலவும் சூழல் காரணமாக உருவா கின்றது. தென்கீழ் வியாபாரக் காற்று கோடை காலத்தில் மத்திய கோட் டைக் கடக்க நேரிடுகின்றது. வெப்ப மத்தியகோடு, அயனவயல் ஒருங்கல் வலயம், அருவித்தாரை என்பன வடக்கு நோக்கி இடம்பெயர்வதனால் தென்மேல் பருவக்காற்று மத்திய கோட்டைக் கடக்க நேரிடுகின்றது எனக்
94.

காலநிலையியல் அறிஞர்கள் விளக்குகின்றனர். மாரியில் 90° கி. நெடுங் கோட்டை ஒட்டி அமைந்த மேல்வளி நீள்பள்ளம் (Upper air trough), கோடையில் 70° கி. நெடுங்கோட்டை நோக்கிப் பெயர்தலும் தென்கீழ் வியாபாரக் காற்று வடவரைக் கோளத்திற்கு இடம்பெயர்வதற்கும் திசை திரும்புவதற்கும் இன்னொரு காரணமெனப் பேராசிரியர் ஜோர்ஜ் தம்பையா பிள்ளை கூறுகிறார். கோடையில் இந்தியாவின் வடமேற்குப் பாகத்தில் உருவாகும் தார் தாழமுக்கச் செறிவும் தென்மேல் பருவக் காற்றின் தோற்றத் திற்குக் காரணமாகின்றது. மத்திய கோட்டைக் கடந்து வடவரைக் கோளத் தில் பிரவேசிக்கும் தென்கீழ் வியாபாரக் காற்று, பெரலின் விதிப்படி வலது பக்கத்திற்குத் திசை திரும்பி, தென்மேல் பருவக்காற்றாக வீசுகின்றது. எனவே, தென்மேல் மொன்சூனின் தோற்றத்திற்கு வெப்ப மத்தியகோடு, அயனவயல் ஒடுங்கல் வலயம், அருவித்தாரை, மேல்வளி நீள்பள்ளம், தார்த் தாழமுக்கம் எனும் பல்வேறு வளிமண்டல நிலைமைகள் காரணமாகின்றன.
தென்மேல் பருவக் காற்றின் பிறப்பு ஒரு நாடகத்தன்மை வாய்ந்தது.
தென்மேல் பருவக்காற்று இலங்கையின் மழை தரும் காற்றாகக் கருதப்படுகின்றது. தென்மேல் பருவக்காற்று மிக ஈரலிப்பான் காற்றாகும். இலங்கையின் வடபகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் இது வரண்ட காற்றாக வீசுகின்றது. மட்டக்களப்புப் பகுதியில் இத்தென்மேல் பருவக் காற்றை 'கச்சான்' எனவும் யாழ்ப்பாணப் பகுதியில் இக்காற்றை 'சோளகம்' எனவும்
வழங்குவர்.
8.8 வடகீழ் பருவக்காற்று
இலங்கையின் வானிலையில் டிசம்பர் தொட்டு பெப்ரவரி வரை வடகீழ்ப் பருவக்காற்றுச் செல்வாக்குக் கொண்டிருக்கின்றது. உண்மையில் மத்திய கோட்டுத் தாழமுக்கத்தை நோக்கி வீசுகின்ற வடகீழ் வியாபாரக்காற்று என்ற கோட் காற்றே இதுவாகும். தென்மேல் பருவக்காற்றின் எதிர்ப்பருவத்து ஒத்த காற்று என இதனைக் குறிப்பிடுவூரி ப்பருவக்காற்றுக் காலத்திலேயே இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் மழையைப் பெறுகின்றன. வட கீழ்ப் பருவக் காற்றோடு வரும் மழை, வங்காள விரிகுடாவைக் கிழக்கு மேற்காக ஊடறுக்கும் தாழமுக்க மையங்களினதும் சூறாவளிகளினதும் விளைவே என்று பேராசிரியர் ஜோர்ஜ் தம்பையாபிள்ளை குறிப்பிடுவார்.
8.9 அயனமண்டலச் சூறாவளிகள்
இலங்கை மத்திய கோட்டிற்கு அண்மையில் அமைந்திருப்பதால் அயன மண்டலச் சூறாவளிகள், அயன மண்டல இறக்கங்கள், தாழமுக்கங்கள்
95

Page 50
என்பன பருவத்திற்குப் பருவம் இலங்கையின் காலநிலையைக் கட்டுப் படுத்துகின்றன. ஒக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி என்பன இத்தகைய சூறாவளித் தாக்கத்திற்குரிய மாதங்களாகும். வங்காள விரிகுடாவில் தோற்றம் பெறுகின்ற சூறாவளிகள் / அமுக்க இறக்கங்கள் கிழக்கிலிருந்து உருவாகி மேற்குப் புறமாக நகரும்போது இலங்கைக்கு மேலாக வீசுகின்றன. இவை கனத்த மழைப் பொழிவையும் வெள்ளப் பெருக்கையும் தோற்றுவிக் கின்றன. வடகீழ்ப் பருவக்காற்றுக் காலத்தில் கிடைக்கின்ற மழைவீழ்ச்சியிற் பெரும்பகுதி சூறாவளிகளாலும் அமுக்க இறக்கங்களினாலும் ஏற்படு கின்றன.
grg بیٹھ گھ٤;. ,eت
7 بحیتیکییg7ح
படம் 8.2. 1978 நவம்பர் 23 இல் இலங்கையைத் தாக்கிய சூறாவளி
8.10 தரைத்தோற்றஅமைப்பு
இலங்கையின் தரைத்தோற்ற அமைப்பு வெப்பநிலைப் பரம்பலிலும் மழை வீழ்ச்சிப் பரம்பலிலும் ஆதிக்கம் செலுத்துகின்றது. இலங்கையின் அதிஉயரம் 2 524 மீற்றர் உயரமுடைய பேதுருதாலகாலை மலையினால் நிர்ணயிக்கப் படுகின்றது. எனவே, நழுவு வீதச் செயற்பாட்டினை இலங்கையில் நன்கு அவதானிக்க முடிகின்றது. ஒவ்வொரு 300 அடிக்கும் 1° F வீதம் அல்லது ஒவ்வொரு 100 மீற்றருக்கும் 0.6 °C வீதம் வெப்பநிலை நழுவுகின்றது. கடல் மட்டத் தாழ்நிலங்களுக்கும் உயர்மேட்டு நிலங்களுக்குமிடையில் வெப்ப நிலையளவில் வேறுபாடு காணப்படுவதற்குக் குத்துயரம் காரணமாக உள்ளது. மேலும் மத்திய மலைத்திணிவின் வட-தென் போக்கான அமைப்பு ஈரந்தங்கிய தென்மேல் பருவக் காற்றுக்களுக்குத் தடையாக அமைவதனால் தென்மேல் தாழ்நிலமும் மலைநாட்டின் மேற்குப் பகுதியும் அதிக
96
 

மழையையும் ஏனைய பகுதிகள் வரட்சியையும் அனுபவிக்க நேர்ந்துள்ளது. வடகீழ் பருவக்காற்றுக் காலத்தில் இம்மலைத் தடை மலைநாட்டின் கிழக்குப் பகுதிகளுக்கு மழையைத் தருகின்றது.
8.1 இயற்கைத் தாவரக் கவிப்பு இலங்கையின் இயற்கைத் தாவரக் கவிப்பும் உள்ளூருக்குரிய ஒரு கால நிலைக் கட்டுப்பாடாகும். காடுகள் ஆவியுயிர்ப்பினைச் செய்கின்றன. ஒரு வகையில் வளிமண்டல நீராவியளவையும் மழைப் பொழிவையும் காடுகள் நிர்ணயிக்கின்றன. சில பகுதிகளில் உராய்வின் காரணமாகக் காற்றுக்களின் திசைத் திருப்பத்திற்குக் காடுகள் காரணமாகின்றன.
இவ்வாறு பல்வேறு ஏதுக்கள் இலங்கையில் காலநிலையைக் கட்டுப் படுத்தும் ஏதுக்களாக விளங்கி வருகின்றன.
97

Page 51
வெப்பநிலை
9 இலங்கையின்
இலங்கை வெப்ப வலயத்தில் அமைந்திருப்பதனால் அதிக வெப்ப நிலையை அனுபவிக்கின்றது. இலங்கையின் ஆண்டுகளுக்குரிய சராசரி வெப்பநிலை 26.7°C (80°F) ஆக இருக்கின்றது. இலங்கையின் வெப்பநிலை ஒருபோதும் உறைநிலைக்குக் கீழ் (0 °C) சென்றதில்லை. இலங்கையின் தென்மேல் தாழ்நிலத்தினதும் தென்கீழ்த் தாழ்நிலத்தினதும் வருடச் சராசரி வெப்பநிலை 27.2 °C - 28.3 °C வரை வேறுபடுகின்றது. மத்திய மலை நாட்டில் குத்துயரத்திற்கேற்றவாறு வெப்பநிலை வேறுபடுகின்றது. 300 மீற்றர் உயரமான இடங்களில் வருடச் சராசரி வெப்பநிலை 25 °C ஆகவும் 1000 மீற்றர் உயரமான இடங்களில் வெப்பநிலை 21.1 °C ஆகவும் 2 000 மீற்றர் உயரமான இடங்களில் 15.6 °C ஆகவும் இருக்கின்றது.
9. வெப்பநிலைப்பரம்பற்காரணிகள் இலங்கையின் வெப்பநிலைப் பரம்பலிற் காணப்படும் இத்தகைய சமனற்ற பரம்பலிற்குச் சில காரணிகளுள்ளன. அவையாவன:
9.1.1 இலங்கையின் அமைவிடம் 9.1.2 தரைத்தோற்ற வேறுபாடுகள் 9.1.3 இலங்கையின் சிறிய பரப்பு 9.1.4 இந்தியத் துணைக்கண்ட அண்மை 9.1.5 பருவக் காற்றுகள்
98

9.1.1 இலங்கையின் அமைவிடம்
மத்தியகோட்டிலிருந்து ஏறக்குறைய 5° வ. தொடக்கம் 10° வ. அகலக்கோடு களுக்குள் இலங்கை அமைந்திருப்பதால் வருடத்திற்குரிய சராசரி வெப்ப நிலை அதிகமாக உள்ளது.
இலங்கையின் சமவெளிப் பகுதிகளில் சராசரி வெப்பநிலை 27.4 °C ஆக உள்ளது. வருடாந்த வெப்பநிலை வீச்சு 2.8 °C இற்கு மேற்செல்வது கிடையாது. ஆனால் நாளாந்த வெப்பநிலை வீச்சு கரையோரங்களில் 4 °C வரையும், மலைப் பிரதேசங்களில் 10°C வரையும் காணப்படுகின்றது. உயர் ஞாயிற்றுக் கதிர்வீச்சும், மாலை நேர மேற்காவுகைச் சுற்றோட்டங்களும் அகலக் கோட்டு நிலையின் தாக்கத்தைக் குறைக்கின்றன.
இலங்கையின் வெப்பநிலை வீச்சு தெற்கேயிருந்து வடக்குநோக்கி அதிகரிக்காமல், தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி அதிகரிப்பதற்குக் காரணங்கள் உள்ளன. தென்மேற் பாகத்தில் நிகழும் அதிக மழைவீழ்ச்சி யினால் வெப்பநிலை தணிக்கப்படுகிறது. மேலும், இப்பாகத்தில் வரண்ட பருவம் குறுகியதாயும் இருக்கின்றது. இலங்கையின் வடகிழக்குப் பாகத்தில் வரண்ட பருவம் நீண்டதாக இருப்பதோடு, வெப்பநிலையைத் தணிப்ப தற்குப் போதிய மழையுமில்லை. அதனால்தான் வெப்பநிலை வீச்சு தென் மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி அதிகரித்துச் செல்கின்றது. உதாரணமாக காலியில் வருடத்திற்குரிய வெப்பநிலை வீச்சு 2.7 °C ஆகவும் திருகோண மலையில் 4.8 °C ஆகவும் வேறுபடுகின்றது.
9.1.2 தரைத்தோற்ற வேறுபாடு சில நகரங்களில் வெப்பநிலை (செல்சியஸ் / சென்ரிகிரேட்)
e உச்ச இழிவு சராசரி நகரம வெப்பநிலை | வெப்பநிலை | வெப்பநிலை
கொழும்பு 27.5 26. 26.9 காலி 27.4 支 25.8 26.0 கண்டி 26.0* 23.0 24.2 நுவரெலியா I5.9 14.1 I5.3 யாழ்ப்பாணம் 29.4 25.3 27.5 அநுராதபுரம் 28.5 24.6 27.2 அம்பாந்தோட்டை 28.0 26.0 27.0. D6óTGOTT Trif 29.5 26.1 27.9
மட்டக்களப்பு 29,4 25.2 28.3 திருகோணமலை 28.7 26.5 28.0
அட்டவணை: 9.1
99

Page 52
இலங்கையின் வெப்பநிலைப் பரம்பலை நிர்ணயிக்கின்ற காரணிகளுள் குத்துயரம் மிக முக்கியமானதாகும். இலங்கையின் அதிக உயரமான 2 524 மீற்றர், வெப்பநிலையின் நழுவு வீதத்தை நன்கு அவதானிக்க உதவும் குத்துயரமாக உள்ளது. ஒவ்வொரு 100 மீற்றர் உயரத்திற்கும் 0.64 °C வீதம் வெப்பநிலை குறைவடைவது இயல்பு. 450 மீற்றர் உயரமான கண்டியில் வெப்பநிலை 24.4 °C ஆகவும் 1 880 மீற்றர் உயரமான நுவரெலியாவில் வெப்பநிலை 15.1 °C ஆகவும் இருக்கின்றது.
A" . w MeLu u srervarras
படம் 9.1. இலங்கையின் வெப்பநிலைப் பரம்பல் (°C)
இலங்கையின் சமவுயரக் கோட்டுப் படத்தையும் சமவெப்பக் கோட்டுப் படத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கில் தரை ஏற்றத்திற்கும் வெப்ப நிலைக்குமிடையிலான இணைப்பினை அவதானிக்கமுடியும். எனினும், 'மத்திய மலைநாட்டின் ஆழமான பள்ளத்தாக்குப் பகுதிகளில் நுண் காலநிலையியல் தன்மைகளை அவதானிக்கலாம். அப்பகுதிகளில் வெப்ப நிலை உறைநிலைக்குக் கீழ்ப் போவதுண்டு. (ஜோ. தம்பையாபிள்ளை),
மத்திய மலைநாட்டிலிருந்து தாழ்நிலங்களை நோக்கி வெப்பநிலை படிப்படியாக அதிகரிப்பதைக் காணலாம்.
100
 

9.1.3 இலங்கையின் சிறிய பரப்பு இலங்கை 65 610 சதுர கிலோமீற்றர் பரப்புடைய ஒரு சிறிய தீவாகும். அதனது ஆகக்கூடிய அகலம் 225 கி.மீ ஆகவிருப்பதால் கடலிலிருந்து எப்பகுதியும் 115 கி.மீ. அப்பாலில்லை. அதனால் குளிர்ந்த கடற்காற்றுகள் எங்கும் வீசி ஈரலிப்பைத் தருகின்றன அல்லது வெப்பநிலையை மட்டுப் படுத்துகின்றன. தீவின் எப்பகுதியும் கடலின் மட்டுப்படுத்தும் தன்மைக்கு அதிக தூரத்திலில்லை.
9.1.4 இந்தியத்துணைக்கண்டஅண்மை இலங்கையின் வடபகுதி வெப்பநிலையில் தாக்கம் விளைவிக்கும் ஒரு பிரதான காரணியாக, இந்தியத் துணைக்கண்டத்தின் அண்மை அமைவு அமைகின்றது. தென் தாழ்நிலத்திலும் பார்க்க 4° அகலக்கோட்டிற்கு வடக்கே அமைந்துள்ள வடதாழ் நிலம் அகலக் கோட்டு நிலையினால் பாதிப்புறவில்லை. இந்திய நிலத் திணிவினை நெருங்கியிருக்கும் புவியியல் தன்மையே இதன் வெப்பநிலையினைப் பாதிக்கின்றது. உதாரணமாகக் கொழும்பின் வெப்பநிலை மார்ச்-ஏப்ரல் மாதங்களில் 26.1°C ஆக இருக்கும் போது, அநுராதபுரத்தின் வெப்பநிலை 27.2 °C ஆகவும் மன்னாரின் வெப்ப நிலை 27.8 °C ஆகவும் யாழ்ப்பாணத்தின் வெப்பநிலை 27.6 °C ஆகவும் உள்ளன. இலங்கை இந்தியத்துணைக்கண்டத்தின் தாக்கத்தினின்றும் விலகி யமைவதில்லை.
9.1.5 பருவக்காற்றுக்கள்
இலங்கையில் வீசுகின்ற பருவக்காற்றுக்கள் ஈரப்பதனுடையனவாக வீசுவ தால், அவற்றின் பாதையிலுள்ள பிரதேசங்களின் வெப்பநிலை குறைகின் றது. கரையோரங்களில் நாளுக்குரிய சராசரி வெப்பநிலை வீச்சு தாழ்வாக வும், மலைநாட்டில் உயர்வாகவும் உள்ளது. கரையோரத்தின் வெப்பநிலை வீச்சுக்குக் காரணம் சமுத்திரச் செல்வாக்கோடு பருவக்காற்றுக்களின் தாக்கமு
LDITGilb.
9.2 வெப்பநிலைப்பரம்பல் இயல்புகள் இலங்கையிலுள்ள எந்தவொரு வானிலை அவதான நிலையத்திலும் சராசரி வெப்பநிலை 30 °C மேல் பதிவாகவில்லை. வருடச் சராசரி வெப்பநிலை எல்லாவிடத்தும் 26.7 °C ஆக உள்ளது. கிடையான வெப்பநிலைப் பரம்ப லில் அதிக வேறுபாடுகளில்லாமைக்கு இலங்கையின் தீவுத்தன்மை, சிறிய பரப்பு என்பன காரணமாகின்றன. மேலும், மேற்காவுகைச் சுற்றோட்டங் கள், பருவமழை என்பன நிகழும் வேளைகளில் மப்பும் மந்தாரமுமான வளி மண்டல நிலைமைகள் வெப்பநிலையை ஒப்பளவிற் குறைக்கின்றன.
101

Page 53
இலங்கையின் பருவ வெப்பநிலைப் பரம்பல் குறித்துப் பேராசிரியர் ஜோர்ஜ் தம்பையாபிள்ளை நன்கு ஆராய்ந்து விளங்கியுள்ளார். இலங்கையின் காலநிலை ஆண்டின் தொடக்க மாதமாக மார்ச் மாதத்தைக் கொள்ளலாம். இம்மாதத்தில், பொதுவாக இத்தீவின் வெப்பநிலை 26.7°C ஆக விளங்கும். ஆனால், உயர் நிலத்தில் மட்டும் குறைவாகவே வெப்பநிலை காணப்படும். இந்த வெப்ப அமைப்பு, இத்தீவில் மார்ச்-ஏப்ரலில் நிகழும் தொடக்கச் சம இராக்கால நிலைமைகளின் பிரதிபலிப்பாக அமைகின்றது. வடமேற்குப் புறமாக வெப்பநிலை 27.8 °C இற்கும் 28.9 °C இற்கும் இடையில் அதிகரித்துச் செல்கின்றது. உயர் தொடருக்கு மேற்கே, இரத்தினபுரியையும் குருநாகலையும் உள்ளடக்கி வட-தெற்காக 28 °C வெப்பநிலையையுடைய ஒடுங்கிய வலயம் ஒன்று இம்மாதத்தில் அமைகின்றது; இவ்வலயம் அமையக் காரணம், கடற்காற்றின் தாக்கம் இவ்வலயம்வரை இல்லாமையே. ஆனால், மேற்கு, கிழக்குக் கரையோரங்களில் சமுத்திரச் செல்வாக்கை நன்கு காணலாம்; அதனால் வெப்பநிலை மட்டக்களப்பு, கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய பகுதிகளில் சற்றுக் குறைவாக
உள்ளது.
ஏப்பிரல் மாதத்தில் சம இராக்கால நிலைகள் நன்கு அமைந்து விடுகின்றன. இத்தீவின் வெப்பநிலையில் சிறு மாற்றங்கள் ஆங்காங்கு காணப்படும். 28 °C வெப்பக்கோடு சற்றுத் தெற்கே பெயர்ந்துவிடும்; அதனால், இலங்கையின் : வடபாகம் 28 °C மேல் வெப்பநிலையை அனுபவிக்கும். இம்மாத வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க ஏனைய அம்சங்கள், வடக்கே காணப்படும் 28.9°C வெப்ப வலயமும், உயர்நிலத்தில் காணப்படும் 26.7 °C குறைந்த வெப்ப வலயமுமாம். இம் மாதம் தக்க மேற்காவுகைக் காலம்; பகற் பொழுதின் அதிக வெப்பநிலையும், இரவு வேளையின் குறைந்த வெப்பநிலையும் நாளாந்த அதிக வெப்பநிலை வீச்சுக்களைத் தோற்றுவிக்கின்றன.
சராசரி வெப்பநிலைகள் தெளிவான மாற்றத்தையும் நாளாந்த வெப்ப நிலை வீச்சுக்கள் பொதுவாக அதிகரிப்பையும் காட்டுகின்றன. இது எதிர்பார்க்கக்கூடியதே; ஏனெனில், அதிகரிக்கும் மேற்காவுகைச் சுற்றோட் டத்தின் விளைவாக மழைவீழ்ச்சி நிகழ்வதால் நாளாந்த வெப்பநிலை வீச்சு களில் வேறுபாடுகள், காணப்படுகின்றன. எனினும், பொதுவாக மலை நாட்டில் மட்டுமன்றி, உள்நாட்டு நிலையங்களிலும் வெப்பநிலை வீச்சு இம் மாதத்தில் உயர்வாகவேயுள்ளது. மலைநாட்டிலுள்ள நுவரெலியா, ஹக்கலை, தியத்தலாவை, பதுளை, கண்டி எனும் நிலையங்கள் உயர்வு வெப்பநிலை வீச்சுக்களையுடையனவாக இருப்பதற்கு குத்துயரமே காரணம்; அநுராதபுரம், குருநாகல் போன்ற நிலையங்களில் வெப்பநிலை வீச்சுக்கள் உயர்வாக இருப்பதற்குக் கடலிலிருந்து தூர விலகி இருப்பதே காரணம்.
102

மே மாதத்துக்குரிய வெப்பவியல்புகள், புதியதோர் வளிமண்டல நிலைமைகளைப் பிரதிபலிப்பதோடு, குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் காட்டி நிற்கின்றன; தென்மேல் பருவக்காற்றுக் காலத்துக்கு முற்பட்ட வேளை அதுவாகும். இலங்கையின் தென்பகுதியின் மூன்றிலொரு பங்கு வெப்பநிலையில் சிறிதளவு வேறுபாட்டையும் (வெப்பநிலைகள் இப்போது 27.8 °C குறைவு), இதற்கு முரணாக வடபகுதியும் கிழக்குப் பகுதியும் சில இடங்களில் 29.4 °C இற்கு மேற்பட்ட உயர்வு வெப்ப நிலையையும் கொண்டு விளங்குகின்றன. (மன்னார் 29.4 °C. திருகோணமலை 30 °C) இலங்கையின் வட-கிழக்குக் காற்பகுதியில் வெப்பநிலைகள் 28.9°C மேல் இருப்பதை விளக்குகின்றது; இம்மாதத்தில் மன்னாரைச் சூழ்ந்துள்ள பகுதிகளும், முல்லைத்தீவிலிருந்து பன்னிச்சைங்கேணிவரை (கிழக்குக்கரை) வெப்பநிலை 29.4 °C மேலுள்ளது. மிகக்குறைந்த வெப்பநிலையையுடைய வலயம் இப்போது நுவரெலியாவையும் ஹக்கலையையும் அடக்கியுள்ளது. (21.1 °C) இலங்கையின் மேற்குப் பாகத்தில் யூன் மாதத் தொடக்கத்தில் தெ.மே. பருவக்காற்று நன்கு விருத்தியுறுவதால், வெப்பநிலையில் வீழ்ச்சி காணப்படுகின்றது. மன்னாரில் கூட இம்மாதத்தில் வெப்பநிலை 1 °C குறைந்து காணப்படுகின்றது. இவற்றிற்கு முரணாக கிழக்குக் கரையோரத் தில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். கிழக்குக் கரையோரத்தில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுவதற்குக் காரணம், தெ.மே. பருவக் காற்று அப்பகுதிகளுக்கு வீசும்போது ஈரலிப்பற்ற உலர் காற்றாக வீசுவதா கும். இலங்கையின் வட (யாழ்ப்பாணம்), கிழக்குக் (திருகோணமலை) கரையோரங்களுக்கும் வெப்பநிலை கூடுதலாக இருப்பதற்கு இதுவே காரணமாகும்.
யூலை, ஆகஸ்ட் மாதங்களின் வெப்ப இயல்புகள், யூன் மாதத்தினை ஒத்தனவாகவுள; ஒக்டோபர் மாதம்வரை இந்நிலைமை நிலவுகின்றது. எனவே, தென்மேல் பருவக்காற்று மாதங்களில் வெப்பநிலையின் பிரதேச அமைப்பில் இரு தன்மைகள் காணப்படுகின்றன; அதாவது இலங்கையின் கிழக்குப் பகுதியில் ஒரு நிலைமைம்ே, மேற்குப் பகுதியில் பிறிதொரு நிலைமையும் காணப்படுகின்றன; இந்நிலைமைகளில், சில உள்ளூருக்குரிய இயல்புகளைப் பொறுத்து, சிறிது வேறுபாடுகள் காணப்படுகின்றன. தென்மேல் பருவக்காற்றுக் காலத்தில் அம்பாந்தோட்டையில் வெப்பநிலை அதிகரிக்கின்றமைக்கு உள்ளூருக்குரிய நிலைமைகளே காரணமாகும். அம்பாந்தோட்டை தென்மேல் பருவக்காற்றின் பாதையினின்றும் விலகியும் அமைந்துள்ளது.
மட்டக்களப்பில் இக்காலம் கச்சான் காலம் எனப்படும். உலர்ந்த இக் கச்சான் காற்று முதலில் தியத்தலாவையிலும், பின் மட்டக்களப்பிலும் கடுங்
103

Page 54
காற்றாக வீசுகின்றது; யாழ்ப்பாணக் குடாநாட்டில் இத்தன்மை நிலவும் காலம் கோடைகாலம் எனப்படும். வீசுங்காற்று சோளகம் எனப்படும்.
செப்டம்பர் மாதத்தில் தென்மேல் பருவக் காற்றுக்குரிய நிலைமைகள் குறைவு; ஏனெனில் இம் மாதத்தில் தென்மேல் பருவக்காற்று பின் வாங்கும் நிலையை அடைகின்றது; அதே நேரத்தில் மேற்காவுகைச் சுற்றோட்டம் திரும்பவும் மீளுகின்றது. இந்த இரு தோற்றப்பாடுகளும் இம்மாதத்தின் வெப்பநிலையைப் பாதிக்கின்றன. 28.9 °C சம வெப்பக்கோடு திருகோண மலையைச் சூழ்ந்த பகுதியில் மட்டுமே காணப்படும். வெப்பநிலைப் பிரதேச அமைப்பில், ஆகஸ்ட் மாதத்திலும் பார்க்கச் சிறிதளவு வேறுபாடு காணப்படும். இத்தீவின் மேற்குப் பகுதியில் இம்மாதத்தில் வெப்பநிலை சற்று அதிகரிக்கின்ற இயல்பினைக் காணலாம்; அதேவேளை கிழக்குப் பகுதியில் வெப்பநிலை குறைவடைகின்ற இயல்பினையும் காணலாம்.
ஒக்டோபர் மாதத்தில் புதிய வளிமண்டல நிலைமைகள் உருவாகின் றன; இவை தென்மேல் பருவக்காற்றுக்கால நிலைமைகளுக்கு முற்றும் மாறானவை. மன்னாரைச் சூழ்ந்த பகுதிகள் 28 °C தவிர, எப்பகுதியும் 278°C இற்கு மேல் வெப்பநிலையைக் கொண்டிருக்கவில்லை. வடகிழக்கு அரைப்பகுதி மட்டும் 26.7 °C மேற்பட்ட வெப்பநிலையைக் கொண்டுள் ளது. இக்காலம், மார்ச்-ஏப்பிரல் மாதங்களோடு சில ஒற்றுமைகளை உடையது. வானிலையை ஆக்கும் காரணியாக இம்மாதத்தில் மேற்காவுகைச் சுற்றோட்டமுளது; வடவரைக்கோளத்தில் மாரிக்கு முந்திய காலம் நிலவு வதால், குளிர் அகலக் கோடுகளில் இருந்து வீசுகின்ற வடகீழ் வியாபாரக் காற்று இலங்கையின் வெப்பநிலையை இக்காலத்தில் தணிக்கின்றது. சில நிலையங்களில் செப்டம்பர் மாதத்தில் வெப்பநிலையில் சிறிது உயர்வு காணப்படும். ஒக்டோபர் மாதத்தில் உயரமைந்த நிலையங்களில் வெப்ப நிலைகளில் சிறிது தாழ்வு காணப்படும். 21 °C சம வெப்பக்கோடு சற்று விரிவடைந்து, தியத்தலாவை, ஹக்கலை, நுவரெலியா என்பனவற்றையும் தன்னுள் அடக்கிக் கொள்கின்றது.
நவம்பர், டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்கள் வெப்ப இயல்புகளில் ஒத்தன; ஆனால் ஆங்காங்கு சிறு வேறுபாடுகளுள. நவம்பர் மாதத்தில், வடவரைக்கோளத்தின் மாரிகாலம், இத்தீவின் வெப்பநிலையில் ஒரளவு பிரதிபலிக்கப்படுகின்றது. எனினும், இலங்கை மத்திய கோட்டிற்கு அருகே இருப்பதால், மாரியின் தாக்கம் அவ்வளவாகவில்லை. வடவரைக் கோள மாரியின் மறைவு வெப்பநிலையினைப் பொறுத்துக் குறிப்பிடத் தக்கது. இந்தியாவின் அருகிலுள்ள நிலத்திணிவில் உயர் அமுக்கக் கலங்கள் அமைவதால், அங்கிருந்து மைய நீங்கும் காற்றுக்கள் கங்கைப் பள்ளத்தாக்கி னுாடாக வடகீழ் வியாபாரக் காற்றுக்களோடு சேர்ந்து வீசுகின்றன; இவை
104

இலங்கையின் வளிமண்டலச் சூழலில் மிக ஆதிக்கம் பெறுகின்றன. அதனால், நவம்பர் மாதத்தில் இத்தீவு முழுவதும் வெப்பநிலை குறைவாயும், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மேலும் குறைந்தும் காணப்படும்.
எனவே, வெப்பநிலைகளின் பிரதேச வேறுபாடுகள் புவியியற் காரணி களால் நிர்ணயிக்கப்படுகின்றன; வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உயர்வு வெப்பநிலைகள் நிலவுகின்றன; இதற்குக் காரணம், இந்திய நிலத்திணிவிற்கு அருகில் இருப்பதால் ஏற்படும் கண்டத் தன்மையாகும். உயர்வு வெப்ப நிலைகள் தென் மேற்கில் பெப்ரவரி, மார்ச் மாதங்களிலும் இலங்கையின் வட மூன்றிலொரு பகுதியில் மே, யூன் மாதங்களிலும், வடகிழக்குக் கரையோர வலயத்தில் யூலை, ஒகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் காணப் படுகின்றன.
மிகக் குறைந்த வெப்பநிலைகள் நிலவும் வலயம், இலங்கையின் தென் மத்திய பகுதியிலமைந்துள்ளது. இவ்வலயம் 300 மீற்றர் தொட்டு 2 500 மீற்றர் வரை ஏற்ற வேறுபாடுகளை உடையதாகையால், வெப்பநிலையில் குறைந்த வலயம் மத்திய மலைநாட்டிலமைந்தது. (ஜோ. தம்பையாபிள்ளை)
9.3 அமுக்கமும் காற்றுக்களும் இலங்கை வெப்ப வலயத்திலமைந்துள்ள அகலக்கோட்டு நிலைமையினால் ஆண்டு முழுவதும் உயர் வெப்பநிலை நிலவுகின்றது. எனினும், இலங்கை யின் சிறிய பரப்புக் காரணமாக வெப்பநிலை நிலைமைகள் குறிப்பிடத்தக்க அமுக்க நிலைமைகளை உருவாக்குவது இல்லை. எனவேதான் இலங்கையின் வானிலையில் உள்ளூருக்குரிய அமுக்க நிலைமைகள் அவ்வளவு தூரம் முக்கியத்துவம் பெறுவது கிடையாது.
இலங்கையின் சூழலில் அமைதி வலயத்தின் (Doldrums) செல்வாக் கினை மிகச் சிறியளவில் அவதானிக்கலாம். இதுவே, மேற்காவுகை இயக்கத் திற்கு உதவி வருகின்றது எனச் சில்தாலநிலையியல் அறிஞர் கருதுவர். (ஜெயமகா). இலங்கையின் தாழ் அகலக்கோட்டுநிலை காரணமாக இலங்கை 1 000 மில்லிபார் அமுக்கத்தினுள் அமைகின்றது. பருவத்திற்குப் பருவம் 1 007 மில்லி பாருக்கும் 1014 மில்லிபாருக்குமிடையில் அமையும். மலை நாட்டில் குத்துயரம் காரணமாக 810 மில்லி பாருக்கும் 960 மில்லி பாருக்கு மிடையே அமுக்க வேறுபாடுகளுள்ளன. மேற்காவுகை நிலவும் மார்ச்ஏப்பிரல் மாதங்களில் குறிப்பிடத்தக்க அமுக்கச் சாய்வு விகிதமில்லை. மே தொட்டு செப்டம்பர் வரையிலான தென்மேல் பருவக்காற்றுக் காலத்தில் அமுக்கச் சாய்வு விகிதம் 2 மில்லிபாருக்கும் 3 மில்லிபாருக்குமிடையில் நிலவுவதைக் காணலாம். டிசம்பரிலிருந்து பெப்ரவரிவரை வடகீழ்ப் பருவக்
105

Page 55
காற்றுக் காலத்தில் அமுக்கச் சாய்வு விகிதம் மிகச் சிறியளவில் காணப்படும். எனவே, இலங்கையின் அடிப்படை அமுக்க ஒழுங்கு மத்தியகோட்டுத் தாழமுக்க வலயத்தை அல்லது அமைதி வலயத்தைப் பொறுத்து அமைகின் றது. ஒழுங்கான அமுக்கச் சாய்வு விகிதம் நிகழாமையினால், குறிப்பிடத்தக்க காற்றுத் தொகுதியுமில்லை. எவ்வாறாயினும் மத்திய கோட்டிற்கு வடக்கே இலங்கை அமைந்திருக்கும் நிலையில், ஆண்டின் சில வேளைகளில் வியாபாரக் காற்றுத் தொகுதிகளின் செல்வாக்கினுள் அமைந்து வருகின்றது.
சூரியன் கடகக் கோட்டில் உச்சம் கொடுக்கின்ற கோடைச் சூரிய கண நிலை நேரத்தின்போது வெப்ப மத்தியகோடு, வியாபாரக் காற்றுக்கள் என்பன வடபுறமாக இடம்பெயர்கின்றன. அவ்வேளை தென்கீழ் வியாபார காற்று மத்திய கோட்டைக் கடக்க நேரிடுவதால் பெரலின் கொறியோலிசு விசை விதியின்படி தென்மேல் பருவக் காற்றாகத் திசை திரும்புகின்றது. சூரியன் மகரக் கோட்டில் உச்சம் கொடுக்கின்ற மாரிச் சூரிய கணநிலை நேரத்தின்போது வெப்ப மத்தியகோடு, வியாபாரக் காற்றுக்கள் என்பன தென்புறமாக இடம் பெயர்கின்றன. அவ்வேளை இலங்கை வடகீழ் வியாபாரக் காற்றின் ஆதிக்கத்தினுள் அமைகின்றது. இதனை வடகீழ் பருவக் காற்று என வழங்குகிறோம். கோடைச் சூரிய கணநிலை நேரத்தின்போது தார் தாழமுக்கம் வடமேற்கு இந்தியாவில் நிலை பெறுகின்றது. தார் பாலை நிலத்தில் நிலைபெறும் தாழமுக்கம் ஒரளவு வளிமண்டல நிலமைகளை உருவாக்குகின்றது. தென்மேல் பருவக்காற்றின் பிறப்பிற்குத்தார்தாழமுக்கம் இன்று ஒரு துணைக் காரணியாகக் கருதப்படுகின்றது. ஆனால், இத் தார் தாழமுக்கத்தின் தோற்றத்தோடு தென்மேல் பருவக்காற்று முழு வேகத் துடன் இயங்குகின்றது என்பது மறுக்க முடியாதது.
106

10 .
10. மழைவீழ்ச்சி வகைகள் இலங்கை மத்திய கோட்டுப் பிரதேசத்தில் அமைந்திருப்பதால் வருடம் முழுவதும் பரவலாக மழையைப் பெற்றுக் கொள்கின்றது. இலங்கையின் எப் பகுதியும் மழையைப் பெறாத பிரதேசமாகவில்லை. இலங்கையின் மன்னார் பிரதேசம், அம்பாந்தோட்டைப் பிரதேசம் இரண்டினையும் தவிர ஏனை யவை 185 செ. மீ மேல் மழையைப் பெறுகின்றன. மலைநாட்டின் மேற்குச் சரிவிலுள்ள வட்டவளை 548 செ.மீற்றருக்கு அதிகமான மழையைப் பெற்றுக் கொள்கின்றது. − இலங்கை மூன்று வகையான டிஃழ்ச்சியைப் பெற்றுக் கொள்கின்றது.
963)6):
10.1.1 மேற்காவுகை மழை (உகைப்பு மழை) 10.1.2 பருவக்காற்று மழை (மொன்சூன் மழை) 10.1.3 சூறாவளி மழை །
(O.1.1 (8Lojabs1606)(5106Opg இலங்கையில் வெப்பநிலை உயர்வாக இருப்பதால் பகல்வேளைகளில் ஆவியாதல் அதிகமாகும். பிற்பகல்களில் இடி, மின்னலோடு மேற்காவுகை
107

Page 56
மழை பொழிகின்றது. இலங்கையில் மேற்காவுகை மழையை மார்க் ஏப்பிரல் மாதங்களில் சிறப்பாக அவதானிக்கலாம். இலங்கையின் தென்மேல் பிரதேசம் மேற்காவுகையால் அதிக மழையைப் பெற்றுக் கொள்கின்றது.
10.1.2 1056 dossibg toGog தென்மேல் பருவக்காற்று வீசும் மாதங்களில் (மே -செப்
- a--morra-arms
டம்பர்) தென்மேற் தாழ் நிலத்திலும் மத்திய மலை நாட்டின் மேற்குப் பாகத்தி லும் அதிக மழை பெய்கின் றது. இங்கு மழைவீழ்ச்சியின் அளவு கடற்கரையிலிருந்து மத்திய உயர்நிலத்தை நோக்கி அதிகரிக்கும். அதிக ஈரலிப் பைக் கொண்ட தென்மேல்
П—Ј 125 — 2 со 「羽2oo - 2もo 22. soos selä
பருவக்காற்று உள்நாட்டை நோக்கி வீசும்போது மத்திய மலை நாட்டின் தென்மேல் பகுதி அதனைத் தடுத்து ஒடுங் கச் செய்வதால் (குளிரச் செய் வதால்) இப்பகுதிகள் அதிக மழைவீழ்ச்சியைப் பெறுகின் றன. இலங்கையின் கிழக்கு,
வடக்குப் பாகங்களில் இப்
பருவக் காற்றுக்காலம் வரட்சி
படம் 101. இலங்கையின் ஆண்டு மழைவீழ்ச்சி
யான காலமாகும்.
வடகீழ்ப் பருவக்காற்று வீசும் மாதங்களில் (டிசம்பர்-பெப்ரவரி) இலங்கையின் வடபாகம், கிழக்குப்பாகம், மலை நாட்டின் கிழக்குப்பாகம் என்பன மழையைப் பெறுகின்றன. தென்மேற் பருவக் காற்றினால் கிடைக்கும் மழை வீழ்ச்சியளவுடன், வடகீழ் பருவக்காற்றினால் கிடைக்கும் மழைவீழ்ச்சி அளவை ஒப்பிடில் மிகக்குறைவாகும்.
IO-l.3 MIഖണി തെg
சூறாவளிகளினால் இலங்கை கணிசமான அளவு மழையைப் பெற்று வருகின்றது. சூறாவளிகள் பருவக்காற்று இடைக் காலங்களில், குறிப்பாக ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு அதிக மழையைத்
108
 
 
 

தருகின்றன. இலங்கையின் கிழக்கு, வடக்குப் பாகங்கள் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக மழை பெறுவதற்குச் சூறாவளிகளே காரணமாகும்.
இலங்கை மத்திய கோட்டிற்கு அருகே அமைந்திருப்பதால், அயன மண்டலச் சூறாவளிகளின் தாக்கம் இங்கு காணப்படுகின்றது. இலங்கையின் காலநிலையில் பருவக்காற்றுக்களோடு சூறாவளிகளும் முக்கியத்துவம் வகிக் கின்றன. வடகீழ்ப் பருவக்காற்று வீசுகின்ற டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி எனும் மாதங்களிலும் சூறாவளிகளின் தாக்கம் இலங்கையில் காணப் படுகின்றது.
10.2 பிரதேச மழைப்பரம்பல் இலங்கை முழுவதும் மழையைப் பெறுகின்ற போதிலும் மழைவீழ்ச்சிப் பரம்பல் இலங்கையின் எங்ங்ணும் ஒரேயளவினதாகவில்லை. இலங்கையின் பிரதேச மழைப் பரம்பலில் மூன்று வகைகளைக் காணலாம். அவை:
10.2.1 200 செ.மீ. மேல் அதிக மழைபெறும் பிரதேசங்கள் 10.2.2 125 செ.மீ - 200 செ.மீ வரை மழைபெறும் பிரதேசங்கள் 10.2.3 125 செ.மீ குறைவாக மழைபெறும் பிரதேசங்கள்
அட்டவணை:10.1
இலங்கையின் சில நகர மழைவீழ்ச்சி (சென்ரி மீற்றரில்)
* பெரும்போக சிறுபோக வருட நகரம மழை | மழை | மழை
(செப் - மார்ச்) (ஏப் - ஒக்)
கொழும்பு 27.5 106.7 234.1 கண்டி 129.9 91.4 220.7
இரத்தினபுரி 198.4 188.9 99.
நுவரெலியா 120 86.8 2O7.7 யாழ்ப்பாணம் 118.3 16.5 134.8
அநுராதபுரம் 110.2 34.5 144.8
திருகோணமலை 29.7 29.4 159.2
மட்டக்களப்பு 154.4 20.3 74.7
பதுளை 135.1 16.7 177.5
மன்னார் 84. 0 16.7 100.8 அம்பாந்தோட்டை 73.1 34.3 108.4
109

Page 57
10.2.1 200 செ.மீ. மேல் அதிக மழைபெறும் பிரதேசங்கள் இலங்கையின் தென்மேல் பாகமும் மலைநாட்டின் மேற்குப் பாகமும் வருடச் சராசரியாக 200 செ.மீ. மேல்மழையைப் பெறுகின்றன. இலங்கை யின் ஈரலிப்பான பகுதிகள் இவை. இப்பிரதேசத்தில் அடங்கும் வட்டவளை, கினிகத்தேனை, சிவனொளிபாதம், இரத்தினபுரி, அவிசாவளை, லபுகம என்பன 250 செ.மீ. மேல் மழையைப் பெறுகின்றன. இலங்கையில் அதிக மழையைப் பெறுவது வட்டவளையாகும். (550 செ.மீ).
ஈரலிப்பான இப்பகுதிகள் அதிக மழையைப் பெறுவதற்குப் பல காரணங்களுள்ளன. அவை:
(1) இந்து சமுத்திரத்தில் தோற்றம் பெறுகின்ற தென்மேல் பருவக்காற்று அதிக ஈரலிப்புடன் இலங்கையின் தென்மேல் பிரதேசத்தில் வீசுகின்றது. அவ்வாறு வீசும்போது மலைநாட்டின் மேற்குப் பகுதியால் தடுக்கப்பட்டு ஒடுங்குகின்றது. அதனால் இப்பகுதிகள் அதிக மழையைப் பெறுகின்றன. (2) இப்பிரதேசங்களில் மேற்காவுகையினால் அதிக மழை கிடைக்கின் றது. மாலை வேளைகளில் இடி, மின்னலோடு இங்கு மேற்காவுகை மழை நிகழ்கிறது. (3) சூறாவளித் தாக்கங்களினாலும் இப்பிரதேசங்களில் அதிக மழை பெய்கிறது. ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் கிடைக்கின்றது.
தென்மேல் பருவக்காற்று
و به است و ، حت ه :se is strepre جسيمسحكم
ாதுவிப்ப nمه چه ۲ له هrgبع - د د حبيب الوتنه:ټول காந்து Yemews: 8 リエや*、。 s *== سه sea as
പ്രത്തിട v \ f هسحه حس حد ح 总
a مى "متحمسي = ۰ی 峨 , , ܦܗܣܝܩܗܥܡܒܘ
ஆ2உலர்வலய ޒާހަހަށް حسع
”எலர்விலியதி تحدہ صحسینسی ܒܶܣܚ -ܝܫܝ ܚܝܧܝ تصاص வலயத ققنسسیسیتے۔
ÆTsቓ፪ówup தாழ்நிலம்
படம்10.2 : தென்மேல் பருவக் காற்றின் மழைதரும் தன்மை
10.2.2 25 செ.மீ.-200செ.மீ. வரைமழைபெறும் பிரதேசங்கள் 125-200 செ.மீ வரை மழைவீழ்ச்சியைப் பெறுகின்ற பிரதேசங்களாக வடக்குக் கிழக்குத் தாழ் நிலங்கள் விளங்குகின்றன. மன்னார், அம்பாந் தோட்டை தவிர்ந்த தாழ் நிலங்கள் இதில் அடங்கும். இப் பிரதேசங்களில் மழைக் காலம் செப்டம்பர் தொட்டு ஜனவரி வரையிலாகும். இப் பிரதேசங் கள் வடகீழ்ப் பருவக் காற்றினாலும் சூறாவளிகளினாலும் மேற்காவுகை களினாலும் மழையைப் பெறுகின்றன. தென்மேல் பருவக் காற்றினைப்
O
 
 
 
 
 

போன்று வடகீழ்ப் பருவக்காற்று அதிக மழையைத் தருவதில்லை. மலை நாட்டின் கிழக்குப்பகுதி தென்மேல் பருவக்காற்றுக் காலத்தில் மலையொதுக்கில் இருப்பதால் அதிக மழையைப் பெறுவதில்லை. வடகீழ் பருவக் காற்றினால்தான் கிழக்கு மலைநாடு அதிக மழையைப் பெறுகின்றது. யாழ்ப்பாணம், திருகோணமலை என்பன நவம்பர் மாதத்திலும் மட்டக் களப்பு டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் அதிக மழையைப் பெற்றுக் கொள் கின்றன. அதற்குச் சூறாவளிகள் (அமுக்க இறக்கங்கள்) காரணமாகின்றன.
10.2.3 125 செ.மீ. குறைவாக மழைபெறும் பிரதேசங்கள் இலங்கையின் வடமேல் கரையும் (மன்னார்ப் பகுதி), தென்கீழ்க் கரையும் (அம்பாந்தோட்டை) 125 செ.மீ குறைவாக மழையைப் பெற்றுக்கொள் கின்றன. அதனால் இப்பிரதேசங்கள் இலங்கையின் அதி வறள் பிரதேசங் களாக விளங்குகின்றன. சூறாவளிகளே இப்பிரதேசங்களுக்கு மழையைத் தருகின்றன.
மன்னார்ப் பகுதியில் மழைவீழ்ச்சி குறைவாக இருப்பதற்குக் காரணங் கள் வருமாறு:
(1) தென்மேல் பருவக் காற்றுக் காலத்தில் இந்தியாவின் ஒதுக்கில் அமைந்து விடுகின்றது. இந்தியாவின் மேற்குக் கரையோரத்தில் ஈரலிப்பை இழந்த தென்மேல் பருவக்காற்று, மன்னார்ப் பகுதியில் வீசும்போது வரண்ட காற்றாக வீசுகின்றது. (2) வடகீழ்ப் பருவக்காற்றுக் காலத்தில் மன்னார்க்கரை வடமேற்கில்
ஒதுங்கியிருப்பதால் அது மழையைப் பெறுவதில்லை.
அம்பாந்தோட்டைப் பிரதேசம் மிகக் குறைவான மழையைப் பெறுவ தற்குக் காரணங்கள் வருமாறு:
(1) தென்மேல் பருவக்காற்று வீசும்போது அதனைத் தடுத்து மழையைப்
பொழிய வைக்க அம்பாந்தோட்டைப் பகுதியில் மலைகளில்லை.
(2) வடகீழ்ப் பருவக்காற்று ஜீசும்போது தெற்கே ஒதுங்கியிருப்பதனால் அக் காற்றினால் அதிக மழையைப் பெறுவதில்லை. எனவே, இலங்கையின் வறள் பிரதேசங்கள் சூறாவளி காரணமாகத்தான்
மழையைப் பெற்றுக்கொள்கின்றன.
இவ்வாறான பிரதேச மழைப் பரம்பலிற்கு இணங்கத்தான் இலங்கை யின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் அமைந்துள்ளன. 200 செ.மீ குறை வாக மழைபெறும் பிரதேசங்களில் நீர்ப்பாசன வசதிகள் பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமாக உள்ளன.
1

Page 58
10.3 பருவமழைப்பரம்பல் இலங்கையை மழைவீழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டு பின்வருமாறு பருவ காலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம்.
10.3.1 தென்மேல் பருவக்காற்றுக் காலம் 10.3.2 தென்மேல் - வடகீழ் பருவக்காற்று இடைக்காலம் 10. 3.3 வடகீழ்ப் பருவக்காற்றுக் காலம்
10.3.4 வடகீழ் - தென்மேல் பருவக்காற்று இடைக்காலம்
10.3.1 தென்மேல்பருவக்காற்றுக் காலம் மேமாத இறுதியிலிருந்து செப்டம் பர் மாதம் வரையிலான காலத்
தைத் தென் மேல் பருவக்காற்றுக் காலம் எனலாம். திடீர் மழை பொழிவும் அதிக மழை வீழ்ச்சியும் தென்மேல் பருவக்காற்றுடன் இணைந்தன. இலங்கைக்கு அதிக மழை வீழ்ச்சி இப்பருவத்தில்தான் கிடைக்கின்றது. இக்காற்றினால் இலங்கையின் தென்மேல் தாழ் நிலங்களும் மலைநாட்டின் மேற்குப் பகுதிகளும் அதிக மழை யைப் பெற்றுக் கொள்கின்றன. காரணம் இடவிளக்கவியல் நிலை மைகளினால் ஏற்படும் மலைத் தடைத் தாக்கங்களாகும். மலை நாடு தடுத்து ஒடுங்க வைப்பதனால் இப்பகுதிகள் அதிக மழையைப் பெற்றுக் கொள்கின்றன .
வட்டவளை 550 செ.மீ. மேல் படம்103 : இலங்கையில் வீசும் பருவக் மழையைப் பெற, அக் காற்றின் காற்றுக்கள் பாதையில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை அப்பருவத்தில் 32 செ.மீ.
மழையை மாத்திரமே பெறுகின்றது. காரணம் அம்பாந்தோட்டையில் தென் மேல் பருவக்காற்றைத் தடுத்து ஒடுங்கச் செய்ய மலைத் தடையில்லை. இப் பருவத்தில் இலங்கையின் தென்மேல் பிரதேசம் 500 மி.மீ - 3 000 மி.மீ. வரையிலான மழையைப் பெற்றுக் கொள்கின்றது. புத்தளத்திலிருந்து முல்லைத்தீவு வரையிலான ஒரு நேர்கோட்டிற்கு வடக்கே அமைந்த பிரதேச மும் அம்பாந்தோட்டைப் பிரதேசமும் மட்டக்களப்புப் பிரதேசமும் 250 மி.மீ. குறைவாகவே மழையைப் பெறுகின்றன. இலங்கையின் கிழக்கு 112
 

மலைநாடு 250 மி.மீ - 500 மி.மீ வரையிலான மழையைப் பெற்றுக் கொள் கின்றது. இப்பருவத்தில் தென்மேல் பருவக்காற்று வரண்ட சோளகக் காற்றாக வடதாழ் நிலத்திலும் கச்சான் காற்றாக மட்டக்களப்புப் பகுதி
யிலும் வீசுகின்றது.
10.3.2 தென்மேல்-வடகீழ் பருவக்காற்று இடைக்காலம்
ஒக்டோபர், நவம்பர் ஆகிய இரு மாதங்களையும் தென் மேல் - வடகீழ் பருவக்காற்று இடைக்காலம் எனலாம். இதனைச் சூறாவளிப் பருவம் எனவும் வழங்கலாம். அயன மண்டலச் சூறாவளிகள் இலங் கையில் ஆதிக்கம் செலுத்து கின்ற காலங்கள் இவையாகும். ஒக்டோபர் மாதத்தில் சூரியன் இலங்கையில் உச்சம் கொடுக் கின்றது. அதனால் மேற் காவுகைகளும் சூறாவளிகளும் உருவாகின்றன. இப் பருவத் தில் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் மழை அதிகரித் துக் காணப்படுகின்றது. இப் பருவத்தில் எந்தவொரு நிலை யமும் 250 மி.மீ. குறைவாக மழையைப் பெறுவதில்லை. இப்பருவத்தில் தென்மேல் பாகமே அதிக மழையைப் பெற்றுக் கொள்கின்றது.
ul-Lb 10.4 :
தென்மேற் பருவக் M நூக கரடி
ைேழவீழ்ச்சி
Soo
தென்மேல் பருவக்காற்றுக் கால மழைவீழ்ச்சி (மில்லி மீற்றர் சம மழை வீழ்ச்சிக் கோடுகள்)
நவம்பர் மாதத்தில் சூறாவளி மழைஅதிகமாகும். இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதிகள் இப்பருவத்தில் அதிக மழையைப் பெற்றுக் கொள்
கின்றன.
10.3.3 வடகீழ்ப்பருவக்காற்றுக்காலம் டிசம்பர் தொட்டு பெப்ரவரி வரையிலான காலத்தை வடகீழ்ப் பருவக் காற்றுக்காலம் எனலாம். வடகீழ்ப் பருவக்காற்று - தென்மேல் பருவக் காற்றினைப் போன்று ஈரலிப்பானதல்ல. வங்காள விரிகுடாவில் பெறுகின்ற சொற்ப ஈரலிப்பையே கொண்டிருக்கிறது. இக் காலத்தில் தோன்றும் அமுக்க இறக்கங்களும் இப்பருவ மழைக்குக் காரணங்களாகும். இக்காலம் வடக்கு, கிழக்குப்பர்கங்களில் மாரிகாலமாகும். 500 மி.மீ - 1000 மீ.மி. வரையிலான
13

Page 59
மழைவீழ்ச்சியை இலங்கையின் கிழக்குப் பாகங்கள் பெற்றுக் கொள்கின்றன. மலைநாட்டின் கிழக்குப் பகுதி 1000 மி.மீ மழையை இப்பகுதியில் பெற்றுக் கொள்கின்றது. இப் பருவத்தில் தென்மேல் பிரதேசம் குறைவாக மழையைப் பெறக் காரணம், வடகீழ்ப் பருவக் காற்றின் காற்றொதுக்கில் அமைந்திருப்ப தாகும். இலங்கையின் மேற்கு அரைப்பாகம் இப்பருவத்தில் 500 மி.மீ. குறை வாகவே மழையைப் பெற்றுக்கொள்கின்றது. மலைநாட்டின் கிழக்குப்பகுதி
அதிக மழையைப் பெறுவதற்குக் காரணம் மலையியல் தன்மைகளாகும்.
10.3.4 வடகீழ்-தென்மேல்பருவக்காற்று இடைக்காலம்
மார்ச், ஏப்பிரல் மாதங்களை இப்பருவ இடைக்காலம் குறிக் கும். இதனை மேற்காவுகைப் பருவம் எனவும் குறிப்பிட்ட லாம். இக்காலத்தில் இலங்
கையின் மழைவீழ்ச்சியில் மேற்
காவுகைத் தன்மைகள் முக்கியம்
பெறுகின்றன. மார்ச் மாதத்தில்
இலங்கையின் அமைவு மத்திய கோட்டுத் தாழமுக்கமாக இருக்கின்றது. அதனால் உள் ளூருக்குரிய வெப்ப நிலைமை கள் மழை வீழ்ச்சியை நிர்ணயிக் கின்றன. எனவேதான் மேற் காவுகை நிலைமைகள் இப் பருவத்தில் ஆதிக்கம் செலுத்து கின்றன. மேற்காவுகை இயக்கம் காரணமாக இப் பருவத்தில் இலங்கை முழுவ தும் மேற்காவுகை மழை கிடைக்கின்றது. இரத்தினபுரி, தியத்தலாவ பகுதிகளில் இப் பருவத்தில் அதிக மழை பொழிகிறது. பொதுவாக இப் பருவத்தில் தென்மேல்
படம் 10.5:
ce :கீழ்ப&வக் gara 赞 வீழ்ச்சி
CC7
3os
வடகீழ்ப்பருவக்காற்றுக்கால மழை வீழ்ச்சிப் பரம்பல் (மில்லிமீற்றர் சம மழைவீழ்ச்சிக் கோடுகள்)
பிரதேசம் அதிக மழையைப் பெற்றுக் கொள்கின்றது. வடக்குக் கிழக்குப் பகுதிகள் குறைவாகவே மழையைப் பெறுகின்றன. கொழும்பு இப் பருவத் தில் 130 மி.மீ மழையைப் பெற, யாழ்ப்பாணம் இப்பருவத்தில் 40 மி.மீ மழையைப் பெற்றுக் கொள்கின்றது. இரத்தினபுரி இப்பருவத்தில் 280 மி.மீ மழையைப் பெற்றுக் கொள்கின்றது.
114
 
 

10.4 பெரும்போக, சிறுபோக மழைப்பரம்பல் இலங்கை மக்களது வாழ்வும் வளமும் பருவ மழைவீழ்ச்சியில் பெரிதும் தங்கியுள்ளது. மக்களது பிரதான தொழில் நடவடிக்கை பயிர்ச்செய்கை ஆதலால், மழைவீழ்ச்சியின் இன்றியமையாமை உணரப்படுகின்றது. இலங்கை மக்களது முக்கிய தானியப் பயிரான நெற்செய்கை, முற்றாக மழை வீழ்ச்சியில் தங்கியுள்ளது; நேரடியாக மழை நீரிலோ அல்லது மழைநீர் தேங்கிய நீர்ப்பரசனக் குளங்களிலோ நெற்செய்கை தங்கியிருக்கின்றது.
4ea6u piscraafu 5) air
కక్షి 61ucsta Gurre Lostaw ; চম w གལ་ So N U7[ -12 - ܐoܘa.u8
12o - 1so じる16oーコoo
<< ۔ 2oo
Tao
படம்10.6 : இலங்கையின் பெரும்போக மழை
இலங்கை முழுவதும் பரவலாகமழை பெய்வது செப்டம்பர் தொட்டு மார்ச் வரையிலாக காலத்திலர்கும். இது தென்மேல் பருவக்காற்றுக் காலமல்ல என்பது கவனிக்கத்தக்கது; இக்காலத்தில் அமுக்க இறக்கங்களும் வடகீழ்ப் பருவக் காற்றும் மழைவீழ்ச்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இக்காலத்தில் இலங்கை முழுவதும் பரவலாக மழை பெய்வதால், இலங்கை எங்கும் நெற் செய்கை நடைபெறும். அதனால் இக்காலத்தைப் 'பெரும் போகம் (மகா போகம்) என்கின்றனர். ஏப்ரல் தொட்டு ஒகஸ்ட் வரையிலான காலத்தைச் "சிறுபோகம் (யல) என்பர். இப்போகத்தில் இலங்கையின் ஈர வலயமே (தென்மேல் பிரதேசம்) மழையைப் பெறுகின்றது. சிறு போகம், தென்மேல் பருவக்காற்றுக் காலமாகும்.
115

Page 60
பெரும்போக மழை, இலங்கை எங்கும் பரவலாகப் பெய்கின்றது. இப் பருவத்தில் இலங்கையின் பெரும்பகுதி 80 சென்ரி மீற்றருக்குக் குறையாத மழைவீழ்ச்சியைப் பெற்றுக்கொள்கின்றது. பெரும்போக மழை பொய்க்காது விட்டால், பெரும்போக நெற்செய்கைக்கு இது போதுமானதாகும். பெரும் போகத்தில் தென்மேல் தாழ்நிலம், மலைநாடு என்பன 200 செ.மீ. மேல் மழையைப் பெறுகின்றன. இலங்கையின் கிழக்கு அரைப்பகுதி 120 செ மீ மேல் மழையைப் பெற்றுக்கொள்கின்றது. V
مئی 7ہیں تھے<یح کے یہ دیتے (یعی ாேகி a 922
کی حملہo G 4 ۔ سے { 図4-o-9cつ
8o -72.O 72.○ー>
படம் 10.6 : இலங்கையின் சிறுபோக மழை
சிறுபோக மழை, ஈரவலயத்துக்குரியதாகும். 80 செ.மீ தொட்டு 280 செ.மீ வரை தென்மேல் தாழ்நிலமும் மலைநாட்டின் மேற்குப் பகுதியும் சிறுபோகத்தில் மழையைப் பெறுகின்றன. அதனால், இப்பகுதிகளில் சிறு போக நெற்செய்கை நேரடி மழையைக் கொண்டு நடைபெறுகின்றது. உலர் பிரதேசம் முழுவதும் கடும் வரட்சியை இப்பருவத்தில் அனுபவிக்கின்றன. நீர்ப்பாசன உதவியுடனேயே உலர் பிரதேசத்தில் நெற்செய்கை சிறு போகத் தில் சாத்தியமாகின்றது. v
16
 
 

11) இலங்கையின்
காலநிலைப் பிரதேசங்கள்
ஒத்த காலநிலைத் தன்மைகளை அனுபவிக்கின்ற பிரதேசங்களை, வேறு பாடான காலநிலைத் தன்மைகளை அனுபவிக்கும் பிரதேசங்களிலிருந்து பிரதேச அடிப்படையில் பிரிப்பதே காலநிலைப் பிரதேசங்களாகும். ஒரு நாட்டினைக் காலநிலைப் பிரதேசங்களாக வகுக்கும்போது பெரும்பாலும் மழைவீழ்ச்சியை அல்லது வெப்பநிலையை அல்லது இரண்டையும் ஆதார மாகக் கொண்டு பிரிக்கின்றார்கள். இந்த அடிப்படையில் இலங்கையை இரு பிரதான காலநிலைப் பிரதேசங்களாகப் பிரிக்கலாம். அவையாவன:
11.1 ஈரவலயம் அல்லது ஈரலிப்பான பிரதேசம்
11.2 உலர்வலயம் அல்லது வரிண்ட பிரதேசம்
மழைவீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே, இலங்கை இவ்வாறு இரு காலநிலைப் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுகின்றது. இலங்கையில் ஆண்டிற்கு 200 செ.மீ. மேல் மழையைப் பெறுகின்ற பகுதிகள் ஈரவலயம் என்றும், அதற்குக் குறைவாக மழையைப் பெறுகின்ற பகுதிகள் உலர்வலயம் என்று கொள்ளப்படுகின்றன. இலங்கையின் தென்மேல் தாழ்நிலமும் மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதியும் அதிக மழைவீழ்ச்சியைப் பெறுவதால், இவை ஈரவலயத்தினுள் அடங்குகின்றன; ஏனைய பகுதிகள் 200 செ.மீ குறைவாகவே மழையைப் பெறுவதால், அவற்றை உலர்வலயம் என்பர்.
117

Page 61
இலங்கையின் ஈரலிப்பான பிரதேசத்தையும் வறண்ட பிரதேசத்தையும் பிரிக்கின்ற எல்லைக்கோடு, தென்மேற் பருவக்காற்றுக்கால மழைவீழ்ச்சிப் பரம்பலில், 50 செ.மீ. சம மழைவீழ்ச்சிக் கோடாகும். இச்சமமழை வீழ்ச்சிக்கோடு சிலாபம், மாத்தளை, கண்டி, நுவரெலியா, தங்காலை எனும் இடங்களை இணைத்து அமைந்துள்ளது.
காசஸ் நி
--- jeze السكة تحت شدته بس
படம்11.1 : காலநிலை வலயங்கள்
1.1 ஈரவலயம் இலங்கையின் ஈரவலயத்தை இரு உபகாலநிலைப் பிரதேசங்களாகப் பிரிக்கலாம். அவையாவன:
11.1.1 ஈரவலயத் தாழ்நிலம்
11.1.2 ஈரவலய உயர்நிலம்
lf. ஈரவலயத்தாழ்நிலம்
ஈரவலயத் தாழ்நிலத்தில் இலங்கையின் தென்மேற் சமவெளி அடங்கும். இலங்கையில் 300 மீற்றர்களுக்கு உட்பட்ட நில ஏற்றத்தையும் 200 செ.மீ மேற்பட்ட மழைவீழ்ச்சியையும் இந்த ஈரவலயத் தாழ்நிலம் அடக்கியுள்ளது. அதிக மழைவீழ்ச்சி, உயர் வெப்பநிலை, பிரகாசமான சூரிய ஒளி என்பன
18
 
 
 

ஈரவலயத் தாழ்நிலத்தின் பண்புகளாகும். இப் பிரதேசத்தில் மழைவீழ்ச்சி ஏறக்குறைய ஆண்டு முழுவதும் நிகழ்கின்றது. அதனால் இங்கு உலர்பருவம் என்று ஒன்றில்லை. எனினும் பெப்ரவரி, ஓகஸ்ட் மாதங்கள் ஒப்பளவில் வறட்சியானவை. தென்மேற் பருவக்காற்றின் செல்வாக்கினை இத் தாழ்நிலம் பெறுவதனால், அதிக மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. ஈரம் தங்கிய தென்மேல் பருவக்காற்று இத் தாழ்நிலத்தினூடாக வீசும்போது மத்திய மலைநாட்டினால் தடுக்கப்படுவதனால், ஒடுங்கி ஈரவலயத் தாழ் நிலத்திற்கும் ஈர்வலய உயர்நிலத்திற்கும் அதிக மழைவீழ்ச்சியைக் கொடுக் கின்றது. ஈரவலயத் தாழ்நிலம் குறைவான மழைவீழ்ச்சியை பெப்ரவரி மாதத்திலும் ஆகஸ்ட் மாதத்திலும் பெறுகின்றது. இத் தாழ்நிலத்தில் வரண்ட பருவமில்லை.
தென்மேற் சமவெளியில் சூரிய உச்சத்தை அடுத்து மழைவீழ்ச்சி அதிகமாக நிகழ்கின்றது. ஏப்ரல் மாதத்திலும் செப்டம்பர் மாதத்திலும் இப்பகுதியில் சூரிய உச்சம் நிகழ்வதால், அதிக மழைவீழ்ச்சி மே மாதத்திலும் ஒக்டோபர் மாதத்திலும் நிகழ்கின்றது. ஈரவலயத் தாழ்நிலத்தின் வெப்பநிலை சராசரி 26.7 °C ஆகவுள்ளது. பொதுவாக இத்தாழ் நிலத்தில் மழைவீழ்ச்சி கூடுதலாக இருப்பதால், வெப்பநிலை ஓரளவு மட்டுப்படுத்தப் படுகின்றது. கொழும்பு, இரத்தினபுரி, காலி ஆகிய நகர்களின் வெப்பநிலை, மழைவீழ்ச்சி அளவுகளை நோக்குக.
1.1.2. ஈரவலய உயர்நிலம் மலைநாட்டின் மேற்குப்பாகம் ஈரவலய உயர்நிலத்தினுள் அடங்குகின்றது. அப்புத்தளை, பட்டிப்பொல, நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய பட்டினங்களை இணைக்கும் கோட்டிற்கு மேற்கேயுள்ள உயர் பகுதியே ஈரவலய உயர்நிலமாகும். 300 மீற்றர்களுக்குமேல் நில ஏற்றமுடைய பகுதியாகும்.
ஈரவலயத் தாழ்நிலத்தைப்போன்று இங்கும் வருடம் முழுவதும் மழை உண்டு. அம் மழைவீழ்ச்சி வருடம் முழுவதும் நன்கு பரவிப் பெய்கின்றது. ஈரவலய உயர்நிலத்திலும் வறண்டி பருவத்தைக் காணமுடியாது. இலங்கை யில் அதிகம் மழைவீழ்ச்சி பெறும் பகுதிகள் இங்கு உள்ளன. மழைவீழ்ச்சி யின் அளவு பல இடங்களில் 250 செ.மீற்றர்களுக்கு மேலும் சிவனொளிபாத மலைப் பிரதேசத்தில் 500 செ.மீற்றர்களுக்கு மேலும் இருக்கிறது; அதிக மழைவீழ்ச்சி உள்ள மாதங்கள் ஜூனும் நவம்பரும் ஆகும். ஈரலிப்பான தென்மேற் சமவெளியில் அதிக மழைவீழ்ச்சி மே மாதத்தில் ஏற்பட இங்கு ஒரு மாத தாமதம் ஏற்பட்டு ஜூன் மாதத்தில் நிகழ்வதற்குக் காரணம், கரை யோர நிலைமைகள் உள்நாட்டை அடைவதில் ஏற்படும் தாமதமேயாகும். கண்டி வருடாந்த மொத்த மழைவீழ்ச்சியாக 200 செ.மீ, நுவரெலியா வருட மழைவீழ்ச்சியாக 210 செ.மீ பெறுகின்றது.
l 19

Page 62
காநிvேப்பிரதேசங்கள்
* * « ҹ * «
படம்11.2 : இலங்கையின் காலநிலைப் பிரதேசங்கள்
120
 

ஈரலிப்பான தென்மேல் தாழ்நிலத்தில் காணப்படுவது போன்று, இங்கு ஒரேயளவாக வெப்பநிலையை எங்கும் காணமுடியாது. உயர வேறுபாடு களுக்கு ஏற்ப வெப்பநிலை வேறுபடுவதைக் காணலாம். நுவரெலியாவிலும் பார்க்க ஹற்றன் சிறிதளவு வெப்பமானது; ஹற்றணிலும் பார்க்கக் கண்டி வெப்பமானது. கண்டியில் வெப்பநிலை 24.2 °C ஆகவும் ஹற்றணில் 18.9°C ஆகவும் நுவரெலியாவில் 15.3°C ஆகவும் காணப்படுகின்றது.
1.2 உலர்வல்யம் இலங்கையின் உலர்வலயத்தை மூன்று உபகாலநிலைப் பிரதேசங்களாக வகுக்கலாம். அவையாவன: -
11.2.1 உலர்வலயத் தாழ்நிலம் 11.2.2 உலர்வலய உயர்நிலம்
11.2.3 வறள் வலயத் தாழ்நிலம்
உலர் வலயத்தை உபகாலநிலைப் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கு மழை வீழ்ச்சியும் வெப்பநிலையும் அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளன.
1.2.1 உலர்வலயத்தாழ்நிலம் W உலர்வலயத் தாழ்நிலத்தில் மன்னார், அம்பாந்தோட்டைப் பகுதிகள் தவிர்ந்த தென்கீழ்ச் சமவெளியும் வடசமவெளியும் அடங்கும். இப் பிரதேசத்தில் வருடச் சராசரி மழைவீழ்ச்சி 200 செ.மீற்றர்களுக்குக் குறைவாக இருக்கின்றது. மழைவீழ்ச்சிக்காலம் செப்டம்பர் மாதம் தொடக்கம் ஜனவரி மாதம்வரை காணப்படும். தென்மேற் பருவக்காற்றின் செல்வாக்கு உலர் பிரதேசத்தில் இல்லை. வடகீழ்ப் பருவக்காற்றினாலும் சூறாவளிகளினாலும் மேற்காவுகைகளினாலும் இப்பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி ஏற்படு கின்றது. அதிக மழைவீழ்ச்சி யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற இடங்களில் நவம்பர் மாதத்திலும் மட்டக்களப்பில் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திலும் நிகழும்.
யாழ்ப்பாணத்தில் வருட மொத்த மழைவீழ்ச்சி135 செ.மீற்றர்களாகும்; திருகோணமலையில் 159 செ.மீ மழைவீழ்ச்சியும் அநுராதபுரத்தில் 145 செ.மீ மழைவீழ்ச்சியும் நிலவுகின்றன.
ஈரவலயத் தாழ்நிலத்திலும் பார்க்க உலர்வலயத் தாழ்நிலத்தில் வெப்ப நிலை சற்று அதிகமாகும். யாழ்ப்பாணத்தில் ஆண்டுக்குரிய சராசரி வெப்ப நிலை 27.5 °C ஆகவும் திருகோணமலையில் சராசரி வெப்பநிலை 28.0 °C ஆகவும் அநுராதபுரத்தில் சராசரி வெப்பநிலை 27.2°C ஆகவும் விளங்கு கின்றது.
121

Page 63
fl. 2.2 96offoleou 9 (luffb60sh மலைநாட்டின் கிழக்குப்பாகம் உலர்வலய உயர்நிலமாகக் காணப்படு கின்றது; இங்கு மழைவீழ்ச்சி 200 செ மீற்றர்களுக்குக் குறைவாகும். இப் பகுதி தென்மேற் பருவக் காற்றொதுக்குப் பிரதேசமாக இருப்பதால், தென் மேற் பருவக்காற்றால் இப்பகுதி அதிக மழையைப் பெறுவது கிடையாது. உலர்வலய உயர்நிலம் வடகீழ்ப் பருவக்காற்றுக் காலத்திலேயே ஓரளவு மழையைப் பெறுகின்றது. உலர்வலய உயர்நிலத்திலுள்ள தியத்தலாவை யின் ஆண்டுக்குரிய மொத்த மழைவீழ்ச்சி 172 செ.மீற்றர்கள் ஆகும்.
மழைவீழ்ச்சியைப் பொறுத்தளவில் உலர்வலயத் தாழ்நிலத்தை உலர் வலய உயர்நிலம் ஒத்துள்ளபோதிலும் வெப்பநிலையைப் பொறுத்தளவில் உயரம் காரணமாக வேறுபாடு காணப்படுகின்றது. தியத்தலாவையின் ஆண்டுக்குரிய சராசரி வெப்பநிலை 20.0°C ஆகும்.
1.2.3 வறள் வலயத்தாழ்நிலம் இலங்கையின் வடமேற்குக் கரையோரத்திலும் (மன்னார்க்கரை) தென் கிழக்குக் கரையோரத்திலும் (அம்பாந்தோட்டைக்கரை) வருட மழை வீழ்ச்சியின் அளவு 50 செ.மீ தொடக்கம் 100 செ.மீ வரை இருக்கின்றது. அதனால் இவ்விரு பிரதேசங்களும் அதி வரண்ட பிரதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவையே இலங்கையின் வறள்வலயத் தாழ்நிலங் களாம். வடமேற் கரையோரத்தில் மழைவீழ்ச்சி குறைவாக இருப்பதற்கு, வடகீழ்ப் பருவக்காற்றுக் காலத்தில் இக்கரை ஒதுக்குப் பக்கமான மேற்குக் கரையிலிருப்பதும், தென்மேல் பருவக்காற்றுக் காலத்தில் இப்பிரதேசம், அண்மையிலுள்ள தென்னிந்தியாவின் ஒதுக்கில் இருப்பதும் காரணங் களாகும். தென்கீழ்க் கரையோரத்தில் மழைவீழ்ச்சி குறைவாக இருக்கக் காரணம் பருவக்காற்றுக்களைத் தடுத்து மழை பொழிய வைக்க மலைகள் இல்லாமையே ஆகும்.
வறள்வலயத் தாழ்நிலத்தில் அம்பாந்தோட்டையின் வருட மொத்த மழைவீழ்ச்சி 108.4 செ.மீ ஆகவும் ஆண்டுச் சராசரி வெப்பநிலை 27.0 ஏளி ஆகவும் உள்ளன. மன்னார்ப் பகுதியில் வெப்பநிலை சற்றுக் கூடுதலாகும்.
122

இயற்கைத் தாவரம்
1 2 இலங்கையின்
இலங்கையின் இயற்கைத் தாவரம் காலநிலையாற் பெரிதும் நிர்ணயிக்கப் பட்டிருக்கின்றது. மழைவீழ்ச்சி, வெப்பநிலை என்பனவற்றிற்கும் மண் வகைக்கும் இணங்க இயற்கைத் தாவரப் பரம்பல் அமைந்துள்ளது. கால நிலையின் குறிகாட்டியாகத் தாவரம் விளங்குகின்றது. இலங்கையில் தொடக்கத்திலிருந்த தாவரங்களை இன்று காணமுடியாது. ஏனெனில், பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக அவை பெரிதும் அழிக்கப்பட்டுள் ளன. இன்றும் குடியேற்றத்திட்டங்களுக்காக உலர் பிரதேசக் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
12. இயற்கைத் தாவரப்பிரிஷ்கள்
இலங்கையின் இயற்கைத் தாவரத்தைக் காடுகள் என்றும், புல்வெளிகள் என்றும் வகுக்கலாம். காடுகளை நான்கு வகைகளாகப் பிரித்து ஆரா
அவையாவன:
نام 12.1.1 ஈரப் பருவக்காற்றுக் காடுகள் s
ادا 12.1.2 மலைக்காடுகள்
. قٹا کی 12.1.3 உலர் பருவக்காற்றுக் காடுகளி
12.1.4 முட்காடுகள் (வறள்நில வளரி)
123

Page 64
இலங்கையிற் காணப்படுகின்ற புல்வெளிகளையும் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன:
12.1.5 பத்தனாப் புல்வெளிகள் 12.1.6 தலாவாப் புல்வெளிகள்
2.1.1 ஈரப்பருவக்காற்றுக் காடுகள் ஈரப் பருவக்காற்றுக் காடுகளை ஈரலிப்பான மத்திய கோட்டுக் காடுகள் என்றும் அயனமண்டல ஈரவலய என்றும் பசுமையான காடுகள் என்றும் கூறலாம். இக்காடுகள் இலங்கையின் தென்மேல் பாகத்திலும், மலை நாட்டின் மேற்குப் பாகத்திலும் காணப்படுகின்றன. ஏறக்குறைய கடல் மட்டத்திலிருந்து 1000 மீற்றர் உயரம்வரை இக்காடுகள் வளர்ந்துள்ளன. தென்மேற் பருவக் காற்றால் இக்காடுகள் அதிக மழையைப் பெறுவதால் (சராசரி 200 செ.மீ.) மரங்கள் நன்கு செழித்து வளர்கின்றன; 500 செ.மீ வரை மழை பெறுகின்ற பகுதிகள் இப்பாகத்தில் இருப்பதால் தாவர வளர்ச்சி விரைவாக நடைபெறுகின்றது.
ஈரப் பருவக்காற்றுக் காடுகள் என்றும் பசுமையானவை; இக்காட்டு மரங்கள் சில, காலத்துக்குக்காலம் இலைகளை உதிர்க்கின்றன. அத்தோடு ஆண்டு முழுவதும் தளிர்த்துக்கொண்டும் இருக்கின்றன. அதனால் அவை என்றும் பசுமையானவையாக விளங்குகின்றன. அகன்ற இலைகளைக் கொண்டவை.
இக்காட்டு மரங்கள் அதிகம் உயரமானவையாக இருக்கின்றன. மிக உயர்ந்த மரங்கள் 50 மீற்றர் தொடக்கம் 60 மீற்றர்வரை வளர்கின்றன. இக் காடுகளின் நிலத் தாவரங்கள் அடர்த்தியாயும் ஏறுகொடிகள் அதிகமாயும் வளர்ந்துள்ளன. இக் கீழ்நில வளரிகளுள் பாசியினத் தாவரங்கள், பன்னங்கள் மூங்கில்கள், ஒக்கிட்டுகள் என்பவை வளர்ந்திருப்பதைக் காணலாம். பொது வாக இக்காடுகள் அடர்த்தியானவை ஆதலால் மரங்கள் சூரிய ஒளியை நாடி உயர்ந்து வளர்கின்றன.
மென்மையான மரங்கள் அதிகமாக விளங்குகின்றபோதிலும் இடை யிடையே நடுத்தரமான வைர மரங்களும் காணப்படுகின்றன. இக்காடுகளிற் காணப்படும் மரங்கள் பாலை, தளப்பத்து, கித்துள், பலா, மலைவேம்பு, நாடூன், லுணுமில, கோரா, நாகமரம் என்பனவாம். பொதுவாக இக்காடுகள் கலப்பூக் காடுகளாக விளங்குகின்றன. பலவின மரங்கள் கலந்தே வளர்ந்துள் ளன் இவ்வகைக் காடுகள் ஈரவலயத்தில் பெரும்பாலும் மக்களின் குடி யிருப்புகளுக்காகவும் பொருளாதார நடவடிக்கைகளுக்காகவும் அழிக்கப் பட்டுவிட்டன. ஆக, சிங்கராஜவனம் மட்டுமே இக் காட்டின் இயற்கைப் பண்புகளுடன் இன்று எஞ்சியுள்ளது.
124

2.1.2 மலைப்பிரதேசக் காடுகள்
இக்காடுகள் 1 000 மீற்றர்களுக்கு மேற்பட்ட பிரதேசங்களிற் காணப்படு கின்றன. இங்கு காணப்படும் மரங்கள் உயரம் குறைந்தனவாயும் அதிக கிளைகள் உள்ளனவாயும் தடித்த பட்டைகள் உடையனவாயும் இருக்கின் றன. மரங்களின் கீழே இலைச் செடிகள் வளர்கின்றன. சிலவகை மரங்களே வெட்டிப் பயன்படுத்தக்கூடியனவாக இருக்கின்றன. இவற்றுள் முக்கிய மானவை கினா, தம்ரோ, மிகிறியா, சப்பு என்பனவாம்.
உயரம் காரணமாக வெப்பநிலை குறைவாகவும் ஒப்பளவில் மழை வீழ்ச்சி கூடுதலாகவும் இருப்பதனால் இடைவெப்ப வலயத்தினை ஒத்த காடு களாக இவையுள.
இக்காடுகள் பாறைத் தொடர்களிலும் உயர்ந்த சரிவுகளிலும் அதிக மாகக் காணப்படுகின்றன. மலைப்பிரதேசக் காடுகளிற் பெரும்பகுதி சிவனொளிபாதமலை, பேதுருதாலகாலை முதலிய தொடர்களிற் காணப் படுகின்றன. N
2.1.3 உலர் பருவக்காற்றுக் காடுகள் அதிவரண்ட பிரதேசங்கள் நீங்கலாக வடசமவெளியிலும் தென்கீழ்ச் சம வெளியிலும் உலர் பருவக்காற்றுக் காடுகள் காணப்படுகின்றன. இக் காடு களை வரண்ட பிரதேசக் காடுகள் என்றும் வழங்குவர். வடகீழ்ப் பருவக் காற்றுக் காலத்தில் சிறிதளவு மழையும் தென்மேற் பருவக்காற்றுக் காலத்தில் வறட்சியையும் இக்காட்டுப் பகுதிகள் அனுபவிக்கின்றன. தென்மேற் பருவக் காற்றுக் காலத்தில் மழை இன்மையால் மரங்கள் இலைகளை உதிர்த்து விடுகின்றன.
இக்காட்டு மரங்கள், ஈரலிப்பான காட்டுமரங்களிலும் பார்க்க உயரம் குறைவானவை. இம் மரங்களின் சராசரி உயரம் 15 மீற்றர்களாகும். உயர்ந்த மரங்கள் ஏறக்குறைய 20 மீற்றர்வரை வளர்கின்றன. இக்காட்டு மரங்களி டையே அடர்த்தியான முட்புதர்களும் செடிகொடிகளும் வளர்ந்திருக்
கின்றன. 褒
உலர் பருவக்காற்றுக் காட்டு மரங்கள் என்றும் பசுமையான, வைர மரங் களாகும். இக்காடுகளில் இருந்தே முதிரை, கருங்காலி, யாவறணை, கல்மிலா முதலிய மரங்கள் பெறப்படுகின்றன. முதிரை, கல்மிலா முதலிய மரங்கள் இலைகளை உதிர்ப்பன. இக் காட்டுமரங்கள் பொதுவாக 350 மீற்றர் உயரத் திற்கு மேல் காணப்படுவதில்லை. இக்காட்டு மரங்களில் வைரமான மரங்கள் பொருளாதாரப் பெறுமதி வாய்ந்தவை. எனினும், ஓரின மரங்களாக இல்லாது கலப்புக்காடுளாக இருப்பதால் பெறுமதிக்காக மரங்களைத் தேடிப் பெறும்போது, ஏனைய மரங்களும் அழிய நேரிடுகிறது. விறகுத் தேவைக் காகவும் குடியேற்றத் திட்டங்களுக்காகவும் இக்காட்டு மரங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டு வருகின்றன.
125

Page 65
கியற்கைத்தாக்பரம்
Z வநள்நிலவளரி
உலர்பருவக்காந்துக்
. 4.ng&చి &区 ஈரப்பருவக்காந்gரக்
47G¥4bCrf மலைப்பிரதேசக் காடுகள் (*பத்தகுப்புல்வெளிகள் தலாவாப்புல்வெளிகள்
y
படம்: 12.1. இலங்கையின் இயற்கைத் தாவரங்கள்
126
 
 

12.1.4 l (pl’abba567 மழைவீழ்ச்சி மிகக் குறைவாயும் ஆவியாகல் மிக அதிகமாயும் நிகழும் வறள் வலயத் தாழ்நிலங்களில் முட்காடுகள் காணப்படுகின்றன. வருட மழை வீழ்ச்சி 125 செ.மீற்றர்களுக்குக் குறைவாக இருக்கும் மன்னார், அம்பாந் தோட்டைப் பாகங்களில் இக்காடுகள் உள்ளன. இப்பாகங்களில் வளமற்ற வரண்ட மண் காணப்படுகின்றது; முட்காடுகள் தவிர்ந்த செழிப்பான தாவரம் வளர இம்மண் ஏற்றதல்ல.
இக்காடுகளில் உயரம் குறைந்த மரங்களும் முட்செடிகளும் புதர்களும் காணப்படுகின்றன. மரங்கள் உயரம் குறைந்தனவாக இருந்தாலும் கிளைகள் நிறைந்தனவாயும், அடிமரம் முறுக்கப்பட்டதாயும் சில மரங்கள் முட்களை உடையனவாயும் இருக்கின்றன. இத்தாவரங்கள் வறட்சியைத் தாங்கக் கூடியன. இத் தாவரங்களின் இலைகள் நீரைச் சேகரித்து வைக்கக்கூடியன. ஆனைமுள்ளி, வீரை, காம்பை, குறிக்கினன், நாகதாளி, கள்ளி, காரை, சூரை, ஈச்சை என்பன இங்கு வளர்கின்றன. இத்தாவரங்களை வறள்நில வளரிகள் என்றும் கூறுவர். இவற்றுடன் விடத்தல், அடம்பன் போன்ற கொடிகளும் வளர்கின்றன. பொதுவாக இந்த வறள்நில வளரிகள் வறட்சியைத் தாங்கக் கூடியனவாய் தடித்த பட்டை, மெழுகுத்தன்மை வாய்ந்த இலைகள், முட் கள், நீண்ட வேர்கள் என்பனவற்றைக் கொண்டுள்ளன.
12.1.5 பத்தனாப்புல்வெளிகள் பத்தனாப் புல்வெளிகள் உலர்வலய உலர் நிலத்தில் (வரண்ட மலை நாட்டில்) காணப்படுகின்றன. இப் புல்வெளிகள் ஏறக்குறைய 300 மீற்றர் களுக்கு மேற்பட்ட பிரதேசத்தில் காணப்படுகின்றன. இப்புல்வெளிகளை ஈரப்பத்தனா என்றும் வரண்ட பத்தனா என்றும் இருவகைகளாகப் பிரிக் கலாம். தென்மேற் பருவக்காற்றுக் காலத்தில் 50 செ.மீற்றருக்குமேல் மழை பெறும் பாகங்களில் ஈரப்பத்தனாவும் 50 செ.மீற்றருக்குக் குறைவாக மழைபெறும் பாகங்களில் வரண்ட பத்தனாவும் காணப்படுகின்றன.
ஈரப் பத்தனாக்கள் பேதுருதாலகாஜல தோட்டப்பாலைத் தொடரின் உயர்ந்த பாகங்களிலும் மேற்குச் சரிவுகிளிலும் காணப்படுகின்றன. இப் பிரதேசத்தில் ஹோட்டன் சமவெளிகள், எல்க் சமவெளிகள், சீத்த எலிய-மூன் சமவெளிகள், போப்-பத்தலாவை, பத்தனை, அக்கரப்பத்தனை
ஆகிய பிரதேசங்களடங்கும்.
வரண்ட பத்தனாப் புல்வெளிகள் அதிகமாக ஊவா மாகாணத்திற் காணப்படுகின்றன. இங்கு மே மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம்வரை மழைவீழ்ச்சியின் அளவு 50 செ.மீற்றருக்குக் குறைவானதாக இருக்கின்றது. தடித்த புற்களாயும் 1 மீற்றர் உயரமானவையாயும் இங்கு வளரும் புற்கள் இருக்கும். தடிப்பற்ற மேல் மண்ணும், மழைநீர் விரைவாக
127

Page 66
வழிந்தோடுவதும், காற்று வேகமாக வீசுவதும், நீர் போதாமையும் பத்தனாப் புல்வெளிகளில் மரங்கள் வளரத் தடைவிதிக்கின்றன.
12.1.6 தலாவாப்புல்வெளிகள் தலாவாப் புல்வெளிகள் சவன்னாவை ஒத்த புல்வெளிகளாகும். பத்தனா வைப்போல் இல்லாமல் இடையிடையே மரங்கள் வளர்ந்துள்ளன. இப்புல் வெளிகள் மத்திய மலைநாட்டிற்குக் கிழக்கேயும் தென்கிழக்கேயும் உள்ள மலையடிவாரப் பிரதேசங்களிற் காணப்படுகின்றன. 600 மீற்றர்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலேயே தலாவாப் புல்வெளிகள் அமைந்துள்ளன. தலாவாப் புற்கள் 1.5 மீற்றர் உயரம்வரை வளரும். பத்தனாப் புல்வெளிகளில் மரங்கள் வளராமைக்குரிய காரணங்களே இங்கும் மரங்கள் அதிகமாக வளராமைக்குரிய காரணங்களாக உள்ளன.
தலாவாப் புன்னிலங்களை ஊவா வடிநிலத்தின் கிழக்குப் பகுதி, கல்லோயாக் குன்றுகளுக்கு இடைப்பட்ட பிரதேசம் என்பனவற்றில் சிறப்பாகக் காணமுடியும். குறைந்த மழைவீழ்ச்சியே ஊவாப்பகுதியில் இப்புற்கள் வளரக் காரணமாகும். தென்மேல் பருவக்காற்றுக் கால வரட்சி, உலர்ந்த காற்று, உயர் வெப்பநிலை, அதிக ஆவியாதல், தடிப்பற்ற மண் என்பன மரங்கள் வளரத் தடைகளாகும்.
இலங்கையின் இயற்கைத் தாவரப் போர்வை நீக்கப்பட்டு வருகின்றது. இவை குறித்தும் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அத்தியாயம் 7இல் ஆராய்ந்துள்ளோம்.
28

பகுதி : மூன்று இலங்கையின்
மக்களியல்

Page 67

1 3. இலங்கையின்
குடித்தொகை
13. குழசன வளர்ச்சி 1981ஆம் ஆண்டுக் குடிசனக் கணிப்பீட்டின்படி இலங்கையின் குடித் தொகை 14850 000 ஆகும். அதாவது, 14.85 மில்லியன். 1999ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்தக் குடித்தொகை 19.04 மில்லியன் என மதிப்பிடப் பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் பெரும் நீர்ப்பாசனக் குளங்களையும் பாழடைந்து கிடக்கும் குளங்கள், வயல்கள் என்பனவற்றைக் கொண்டும் பண்டை நாளில் இலங்கையில் கணிசமானளவு மக்கள் வாழ்ந்திருக்க வேண்டுமென அறிஞர்கள் கருதுகின்றனர். கி.பி. 1300ஆம் ஆண்டளவில் இலங்கையில் 70 இலட்சம் மக்கள் வாழ்ந்துள்ளனரென என்.கே. சர்க்கார் என்பார் கருதுகிறார். -
Ya இலங்கையின் மக்கள் தொகை பற்றிய கணிப்பீடு 1789ஆம் ஆண்டில் இருந்துள்ளது. ஆனால் 1871ஆம் ஆண்டிற்குப் பின்பே ஓரளவு சரியான கணக்கெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. 1871இன் பின் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இலங்கையில் குடிசன மதிப்பு எடுக்கப்பட்டுள்ளது. 1941இல் யுத்த நிலை காரணமாக இம்மதிப்பீடு நிகழவில்லை. அதன்பின் 1946, 1953, 1963 ஆகிய ஆண்டுகளில் மதிப்பீடு எடுக்கப்பட்டன. பின்னர் 1971 இலும் 1981இலும் எடுக்கப்பட்டன. ஆனால் 1991இல் குடிசன மதிப்பீடு எடுக்கப் படாமைக்கு இலங்கையின் உள் நாட்டு யுத்தநிலைமைகள் காரணமாயின. 131

Page 68
அட்டவணை 13.1இல் குடிசன வளர்ச்சி, குடிசன மதிப்பீடு நிகழ்ந்த காலங் களுக்குத் தரப்பட்டுள்ளன.
இலங்கையின் குடித்தொகை (ஆயிரத்தில்)
சதுர கி.மீ. ஆண்டு தொகை ஆண் பெண் அடர்த்தி
(எண்ணிக்கையில்
1871 2 400 I 280 1 120 37
1881 2 760 1 470 1290 43
1891 3 008 59.3 1 414 46
1901 3 566 1 846 1 670 55 1911 4 106 2 175 1931 64 1921 4 498 2 381 2 117 69 1931 5 307 2 811 2 495 82 1946 6 657 3 532 ○ I25 103
1953 8 09.3 4 269 3 829 125
1963 10 582 5 499 5 083 164
1971 12 690 6 531 6 159 196
1981 14 850 7 539 7 311 229
1991 17 247 8 792 8 455 267
1999 19 043 9 707 9 336 304
ஆதாரம்: புள்ளிவிபரக் கைநூல் - 1992 & 2000
இலங்கையில் முதன்முதல் குடிசன மதிப்பு எடுக்கப்பட்ட 1871இல் இலங்கையின் குடித்தொகை 24 இலட்சங்களாகும். 130 ஆண்டுகளுள் இக்குடித்தொகை 1 கோடியே 90 இலட்சங்களாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகரித்தமைக்கான காரணிகள் பலவாகும்.
இறப்பு, பிறப்பு, வளர்ச்சி வீதம் (1000 பேருக்கு)
ஆண்டு பிறப்பு வீதம் இறப்பு வீதம் வளர்ச்சி வீதம்
1950 39.7 12.4 27.3
1960 36.6 8, 6. 28.0
1970 29.4 7.5 21.9
1980 27.6 6.2 2I.5 1990 20.2 6.0 14.2 1999 17.5 6.0 11.5
132
ஆதாரம்: புள்ளிவிபரக் கைநூர்ல் - 1992 & 2000
அட்டவணை 13.2

1948 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கையின் குடித்தொகை வளர்ச்சி அதிகமாகும். இறப்புவீதம் குறைவு, சுகாதார விருத்தி, மருத்துவ வசதிகள், ஊட்ட உணவு, மலேரியா ஒழிப்பு, சிசு மரணக் குறைவு போன்ற இன்னோ ரன்ன காரணிகள் குடிசன அதிகரிப்பிற்குக் காரணிகளாகவுள்ளன. அட்ட வணை 13.2 இல் இறப்பு, பிறப்பு, வளர்ச்சி வீதங்கள் தரப்பட்டுள்ளன.
சமூகநல வசதிகளின் அதிகரிப்பால் இலங்கையின் இறப்பு விகிதத்தி லேற்பட்ட வீழ்ச்சி சனத்தொகை அதிகரிப்பிற்குப் பிரதான காரணியாகும். 1946ஆம் ஆண்டுக்குமுன் இறப்பு விகிதம் 1000 பேருக்கு 21 ஆகும். இது இன்று (1999) 6 ஆக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதே போன்று பிறப்பு விகிதத்திலும் ஒரு சீரான வீழ்ச்சியை அவதானிக்கலாம். 1981இன் பின்னர் பிறப்பு விகிதம் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களின் அறிமுகம், கல்வி வளர்ச்சி, வாழ்க்கைத்தர உயர்வு என்பன பிறப்பு விகிதம் குறைந்தமைக்குக் காரணங் களாகும்.
சனத்தொகை வளர்ச்சி 1982-1999
சனக்கொகை 1 சனக்கொகை ஆண்டு சனத்தொகை : வீதம் |
1982 15 195
1983 15 47 222 1.5 1984 15 603 186 1.2 1985. 15 837 234 1.5 1986 16 117 280 1.8
1987 16 361 244 1.5
1988 16 689 225 1.4
1989 16 806 220 l. 3
1990 16 993 187 1.l 1991 17 247 254 1.5 1998 18 802 - 1999 19 043 241 1.4
ஆதாரம்: பதிவாளர் நாயகம் திணைக்களம்
அட்டவணை:13.3 1971-1981 தசாப்த காலத்தில் சனத்தொகை வளர்ச்சியின் வருடாந்தச் சராசரி வளர்ச்சியானது 1.7 சதவீதமாக இருந்தது. இன்று 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. 1946-1953ஆம் ஆண்டுகளுக்கிடையில் இலங்கையின் சனத்தொகை வளர்ச்சிவீதம் 2.8 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்
133

Page 69
தக்கது. சனத்தொகை வளர்ச்சி வீதத்திலேற்பட்டுள்ள சமீபகால ஏற்ற இறக்க மானது புலம்பெயர்வீத மாற்றங்கள் காரணமாக ஏற்பட்டது எனலாம். அத்தோடு கடந்த தசாப்த காலத்தில் கருவளம் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்திருப்பதும் இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வீதம் 1.5 ஆகியமைக்கு இன்னொரு காரணமாகும்.
1970ஆம் ஆண்டுகளில் சனத்தொகையின் பிறப்புவீதம் ஆயிரத்துக்கு 28 ஆக இருந்தது. 1980வரை நிலையான வீழ்ச்சியைக் காட்டியது. ஆனால் 1990 இல் பிறப்பு விகிதம் 20 ஆக வீழ்ச்சியுற்றது. (அட்டவணை 13:2). இது கருவள வீழ்ச்சியைக் காட்டுகிறது. இத்தகைய கருவள வீழ்ச்சியானது சகல வயதுப் பிரிவினரிடையேயும் காணப்பட்டது. ஆனால் 24இற்கும் 34 வயதிற்கும் இடைப்பட்ட பகுதியினரிடையே கூடுதலாகக் காணப்பட்டது. மொத்தக் கருவள வீழ்ச்சியானது 1955-54 காலப்பகுதியில் 5.3% இருந்து 1985 - 87 காலப்பகுதியில் 2.6% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
பருமட்டான பிறப்பு வீதமும் மொத்த கருவளத்தன்மை வீதங்களும் 1953 - 87
காலப்பகுதி பிறப்பு விகிதம் கருவள வீதம்
1952 - 54 37.7 5.3
1962 - 64 34.3 5.0
1970 - 72 29, 7 4.1
1980 - 82 27.8 3.4
1985 - 87 22.9 2.6
மூலம்: தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம் - அட்டவணை:13.4 கருவளவீத வீழ்ச்சிக்குரிய காரணங்கள் பின்வருவன
1. பெண்களின் திருமண வயது அதிகரிப்பு. 1963இல் 22.1 வயதி
லிருந்து 1987 இல் 24.8 வயதாக அதிகரித்துள்ளது. 2. கருத்தடைச் சாதனங்களின் அதிக பயன்பாடு கருவள வீழ்ச்சிக்குக் காரணமாகியது. திருமணமான பெண்களில் 61.7% கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். 3. குடும்பத் திட்டமிடல் சம்பந்தமான விரிவான தொடர்பாடல்கள் 4. வெளிநாட்டுப் புலம்பெயர்தலால் கணவன், மனைவி பிரிந்து
வாழ்தல்
5. பெண்களின் கல்வியறிவு அதிகரிப்பும் வாழ்க்கைத்தர உயர்வும்
134

13.2 மாவட்டக்குழப்போக்கு
1. மேல் மாகாணம் எல்லா மாகாணங்களிலும் சிறியது. எனினும் 1971இலிருந்து இன்றுவரை இந்த மாகாணமே அதிக குடித்தொகை கொண்ட மாகாணமாக விளங்கி வருகின்றது. இலங்கையின் குடித் தொகையில் 27% மக்கள் இம்மாகாணத்தில் வாழ்கின்றனர். அதிக குடித்தொகை கொண்ட இரண்டாவது மாகாணம் மத்திய மாகாண
மாகும்.
2. மாவட்ட அடிப்படையில் நோக்கில் குடித்தொகை, பருமன், பரம்பல் என்பன வேறுபடுகின்றன. உதாரணமாக, மேல் மாகாணத் திலுள்ள களுத்துறை (992 000) மாவட்டத்திலும் பார்க்க, கொழும்பு (2281000), கம்பஹா (1795 000)ஆகிய மாவட்டங்கள் இரு மடங்கு குடித்தொகை யைக் கொண்டிருக்கின்றன. மன்னார் (107 000), வவுனியா (96 000), முல்லைத்தீவு (78 000) ஆகிய மாவட்டங்களிலும் பார்க்க, யாழ்ப்பாண மாவட்டம் (832 000) மும்மடங்கு குடித்தொகையைக் கொண்டுள்ளது.
3. அதிக குடித்தொகையைக் கொண்டிருக்கும் மாவட்டம் கொழும்பு
(2 281 000) ஆகும். அதனை அடுத்து கம்பஹா (1795 000), குருநாகல் (1 448 000), கண்டி (1335 000), யாழ்ப்பாணம் (1 17 000) என்பன விளங்குகின்றன. 1971இல் கண்டி மூன்றாவதாகவும் குருநாகல் நான்காவ தாகவும் விளங்கியது. கண்டியின் சில பகுதிகள் கேகாலையுடன் சேர்க்கப் பட்டமையால் கண்டி இன்று நான்காவதாகிவிட்டது. 1971இல் யாழ்ப் பாணம் ஏழாவது குடித்தொகை மாவட்டமாக விளங்கியது. அது 1981 இல் ஐந்தாவதாக மாறியதற்குக் காரணம் இலங்கையின் பிற மாவட்டங் களில் நிகழ்ந்த இன அமைதியின்மை காரணமாகத் தமிழர்கள் யாழ்ப் பாணத்திற்கு மீண்டமையாகும். இன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் குடித்தொகை 490 621 ஆகும். காரணம் போர் காரணமாக உள்நாட்டு - வெளிநாட்டு இடப்பெயர்வுகஞ் ஆகும். ,
4. சில மாவட்டங்களில் குடித்தொகை மிக அதிகளவில் அதிகரித்துள்ளது. இலங்கையில் குடித்தொகை வளர்ச்சி வீதம் அதிகரித்த மாவட்டம் முல்லைத்தீவு ஆகும். இங்கு 77.7% அதிகரித்திருக்கிறது. பொலநறுவா 60.6%, வவுனியா 59.3%, அநுராதபுரம் 51.2% அதிகரித்துள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் குடித்தொகை வீழ்ச்சி காணப் படுகின்றது. இம்மாவட்டத்தில் குடித்தொகை 3.6% வீழ்ச்சியுற்றிருக் கிறது. காரணம் தோட்டத் தொழிலாளர்கள் இந்தியாவிற்குக் குடி பெயர்ந்தமையாகும்.
135

Page 70
இலங்கையின் குடித்தொகை 1981/1991
(மாவட்டஅடிப்படையில்) (ஆயிரத்தில்)
மாவட்டம் 1981 1998/99
இலங்கை 丑4,847 18, 802 கொழும்பு 1 699 2281
கம்பஹா 39 1795
களுத்துறை 830 992
கண்டி 1 048 1 335
மாத்தளை 357 462
நுவரெலியா 604 748 காலி 815 I 0.17
மாத்தறை 644 804
அம்பாந்தோட்டை 424 542
யாழ்ப்பாணம் 831 491
மன்னார் 106 15
வவுனியா 95 150 முல்லைத்தீவு 77 112
மட்டக்களப்பு 330 486
அம்பாறை 389 589
திருகோணமலை 256 340
குருநாகல் 212 1 448
புத்தளம் 493 691
அனுராதபுரம் 588 737 பொலநறுவை 262 359
பதுளை 641 822 மொனராகலை 274 391 இரத்தினபுரி 797 993 கேகாலை 685 787 கிளிநொச்சி 127
snub: Preliminary Findings of the 1981 Census lairgrfasuji Gospirgi) - 1992 & 2000, வடக்கு - கிழக்கு மாகாணப் புள்ளிவிபரக் கைநூல்
136
அட்டவணை 13.5

குடித்தொகை வளர்ச்சி வீதம் கூடிய சில மாவட்டங்கள் (1971-81)
முல்லைத்தீவு பொலநறுவா வவுனியா அனுராதபுரம் அம்பாறை மொனராகலை
திருகோணமலை
77.7%
60.6%
59.3%
51.2 % 42.6%
44.9%
36.4%
அட்டவணை:13.6
5. இலங்கையின் சனத்தொகை எங்கும் சமனாகப் பரந்தில்லை. சில
மாவட்டங்கள் அதிக செறிவாக மக்களைக் கொண்டிருக்கின்றன. உதார ணம் கொழும்பு ஒரு சதுரக் கிலோமீற்றருக்கு 1 000-3000 மக்களைக் கொண்டிருக்கின்றது. கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை என்பன சதுரக் கிலோமீற்றருக்கு 500-1 000 வரை மக்களைக் கொண்டிருக்
கின்றன. மன்னார், முல்லைத்தீவு, வவுனியா முதலான மாவட்டங்கள் சதுர கிலோமீற்றருக்கு 100 பேருக்கும் குறைவாக மக்களைக் கொண்டி
ருக்கின்றன.
137

Page 71
இலங்கையில் 14| re
1981 ஆம் ஆண்டுக் குடிசனக் கணிப்பின்படி இலங்கையின் குடித் தொகை 14.85 மில்லியன்களாகும். அதன்படி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 233 பேர் வாழ்ந்துவந்தனர். 1999ஆம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டின்படி இலங்கையின் குடித்தொகை 19.04 மில்லியன்களாகும். இதன்படி ஒரு சதுர கிலோமீற்றருக்கு 304 பேர் வாழ்ந்து வருகின்றனர்.
1871இல் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 37 பேரே இலங்கையில் வாழ்ந்துள் ளனர். இன்று 267 பேர் வாழ்ந்து வருகின்றனர். எனினும் இக் குடித்தொகை சமனற்றுப் பரம்பியுள்ளது. சில மாவட்டங்கள் அதிக குடிச் செறிவையும் சில குறையடர்த்தியையும் கொண்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் ஒரு சதுர கிலோமீற்றருக்கு 3 471 பேர் வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சதுர கிலோமீற்றருக்கு 37 பேரே வாழ்ந்து வருகின்றனர்.
மாவட்டங்களுக்குள்ளே அதிக செறிவைக் கொண்ட பகுதிகளும் குறையடர்த்தி கொண்ட பகுதிகளும் உள்ளன. இச்சமனற்ற பரம்பலுக்குப் புவியியல், பொருளாதார, வரலாற்றுக் காரணிகள் காரணிகளாக விளங்கு கின்றன. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் சதுர கிலோ மீற்றருக்கு 1 000 மக்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். களுத்துறை, கண்டி,
138

இலங்கையின் குடிப்பரம்பல்/ அடர்த்தி 1871 - 1991
ஆண்டு சனத்தொகை சதுர கிலோமீற்றருக்கு
('000) உரிய பரம்பல்
1871 2 400 37 1881 2 760 43
1891 3 008 46
1901 3 566 55
1911 4及06 64
1921 4498 69
1931 5 307 82
五946 6 657 103
1953 8 098 I35
1963 10 582 164
1971 12 690 196
1981 14 847 233
1991 17 247 267 1999 19 04ο 304
ஆதாரம்: புள்ளிவிபரக் கைநூல்- 1992
அட்டவணை: 14.1
நுவரெலியா, காலி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் சதுர கிலோ
மீற்றருக்கு 500 பேருக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். மன்னார், முல்லைத்
தீவு, வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, பொலநறுவை,
அம்பாறை, மொனராகலை ஆகிய"eாவட்டங்களில் சதுர கிலோ மீற்றருக்கு
100 பேருக்கும் குறைவாக மக்ள்ே வாழ்ந்து வருகின்றனர்.
139

Page 72
1661 - qøriquírısrbī@ 1ąegmocerņigo& z'#I :qr-ırı
J*り、Q&
ovoweari
> QS b b - os图 && -904目 bŁę - ooz E **トー66* 冊 é est – od 8奴的 < o.o 9. || .
rỉ sử
说七丁n心因 <ș ca o pŵy &»
1861 - qonqıúrısıtı@ ₪ognoœrşıæő, −1·s−1 :qı-ırı
*현행- oo 1 õõę – o ol El oos - ooo [III]]ŜS ooo - oog E ooo/ - ooo & ooo« - oool || ||ク 生), N予諡:
1861-șş’y-trnásio) Āŋogħoớsory door
140
 
 
 
 
 
 
 
 
 

மாவட்டச் சன அடர்த்தி - 1998
மாவட்டம் நிலப்பரப்பு డa அடர்த்தி சதுர கி.மீ ಅಞ್ಞ) சதுர கி.மீ
இலங்கை 62 710 18 802 300 கொழும்பு 657 2281 3 47 கம்பஹா 1 387 1795 1294 களுத்துறை 1589 992 624 கண்டி 916 1335 669
மாத்தளை 1 993 462 231
நுவரெலியா 1 74 748 429
காலி I 636 1 017 62.
மாத்தறை I 283 804 626 அம்பாந்தோட்டை 2 579 542 210 யாழ்ப்பாணம் 983 491, 499 கிளிநொச்சி 235 127 102
மன்னார் 1 985 16 58
வவுனியா 1967 150 76 முல்லைத்தீவு 2 517 112 44 மட்டக்களப்பு 2 686 486 181 அம்பாறை 4 350 589 135
திருகோணமலை 2 631 340 129 குருநாகல் 4 813 I 448 300 புத்தளம் 3013 69 229 அனுராதபுரம் 703 737 104 பொலநறுவை 3.248 359 110
பதுளை 2867 822 212 மொனராகலை 5560 39 70
இரத்தினபுரி 3275 993 303 கேகாலை 1693 787 464
ஆதாரம்: புள்ளிவிபரக் கைநூல் - 1992 & 2001 அட்டவணை: 14.2
141

Page 73
ZZANS$r இலங்கையின் குழப்பரம்பல்-1999
AdaANM A
Z
திருகோண ఒeరాలాం
சதுர கிலோமீற்றருக்கு
3000>
1000-2999
500-999
250-459
g250
படம்: 14.3. இலங்கையின் குடிப்பரம்பல் - 1999
142
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கையின் சனத்தொகைப் பரம்பலை பாதித்துள்ள புவியியற்
காரணிகளை அடிப்படையாகக் கொண்டு முக்கியமாக மூன்று பிரதேசங்
களாகப் பாகுபடுத்திக் காட்டலாம்.
l.
2
o
இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் 60% உள்ளடக்கியதும், மிகக்கூடிய சனத்தொகை அடர்த்தியைக் கொண்டதுமான தென் மேல் தாழ்நிலம். இத்தாழ்நிலத்தில் வருடம் முழுவதும் பரவலான மழையும் (200 cm +) சீரான வெப்பநிலையும் (26° C) நிலவுகின்றன. அதனாற் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் இப்பிரதேசத்தில் சிறப்பாக நடைபெறு கின்றன. அத்துடன் கணிப்பொருள் வளங்கள் இத்தாழ்நிலத்தில் கிடைப் பதால் கைத்தொழில்களும் முன்னேறி விட்டன. அதிக கைத்தொழிற் சாலைகள் இத் தாழ் நிலத்திலேயே காணப்படுகின்றன. நீர்கொழும்பு பீங்கான் தொழிற்சாலை, களனி ரயர் தொழிற்சாலை, வியாங்கொடை நெசவாலை என்பவற்றினைக் குறிப்பிடலாம். சிறந்த போக்குவரத்து அமைப்பு இப்பிரதேசத்தைச் சிறந்த வர்த்தக மையமாக மாற்றிவிட்டது. இலங்கையின் பிரதான துறைமுகம், சர்வதேச விமானத்தளம், நிர்வாக மையங்கள், தலைநகரம் என்பன யாவும் இப்பிரதேசத்திலேயே இருக் கின்றன. இவை யாவும் இப்பிரதேசத்தில் அதிக செறிவாக,மக்களை வாழ வைத்திருக்கின்றன. தென் மேல் தாழ்நிலத்தின் குடிப்பரம்பலை நோக்கில் சதுர கிலோ மீற்றர் ஒன்றிற்கு 1 000 மக்களுக்கு அதிகமாக வாழுமிடம் நீர்கொழும்பில் இருந்து அம்பலாங்கொடைவரை கரையோரமாக அமைந்துள்ளது. சதுர கி.மீ ஒன்றிற்கு 250 தொடக்கம் 1000 வரை மக்கள் வாழும் பிரதேசங்கள் தென்னை, நெல், றப்பர் ஆகியன பயிரிடப்படும் விவசாயப் பிரதேசங் களாகவுள்ளன. சதுர கி.மீ ஒன்றிற்கு 250க்குக் குறைவாக மக்கள் வசிக்கும் பிரதேசங்களென சப்பிரகமுவா மாகாணத்திலும், தென் மாகாணத்திலும் உள்ள காட்டுப் பிரதேசங்களைக் கூறலாம். போக்குவரத்து வசதிகள் பெரும் பாலும் இல்லாமல் இருக்குமிடங்களில் குடியடர்த்தி குறைவாக இருக்கின்றது. 豪王 இடையிடையே நெருக்கமான் குடித்தொகையைக் கொண்ட மத்திய மலைநாடும் யாழ்ப்பாணக் குடாநாடும். பிரித்தானியர் காலத்தில்தான் மலைநாட்டில் சனத்தொகை அதிகரித்தது. 1833க்குப்பின்னர் ஏற்பட்ட பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக தொழிலாளர்கள் ஏராள மாகக் குடியமர்த்தப்பட்டனர். நதிப்பள்ளத்தாக்குகள் பியிர்ச் செய்கைக்குச் சாதகமாக அமைந்தன. வீதிகள், புதையிரதப் பாதைகள் என்பன மலைநாட்டில் நகரங்கள் தோன்றுவதற்குக் காரணிகளாக அமைந்தன. காலநிலையும் நீர் தேங்காத சாய்வுகளும் பெருந்தோட்டங் களின் விருத்திக்குச் சாதகமாக அமைந்தன. இவை யாவும் மக்களின்
143

Page 74
ஒரளவு செறிவிற்குக் காரணிகளாயின. யாழ்ப்பாணக் குடாநாடு தரைக் கீழ் நீரினைக் கொண்டிருப்பதால் பயிர்ச்செய்கை சாத்தியமாக உள்ளது. அதனால் குடி அடர்த்தியாக விளங்குகின்றது.
கண்டியையும் அதனைச் சூழ்ந்துள்ள இடங்களிலும் குடியடர்த்தி சதுர கி.மீ. ஒன்றிற்கு 100க்கு அதிகமானதாக இருக்கின்றது. குடித்தொகை அளவுப்படி கண்டி இலங்கையில் ஆறாவது பட்டினமாகும்.
ஹற்றன் மேட்டு நிலத்திலும், கண்டி மேட்டு நிலத்தின் கண்டி தவிர்ந்த எஞ்சிய பாகத்திலும் குடியடர்த்தி சதுர கிலோமீற்றருக்கு 500 தொடக் கம் 1 000 வரை இருக்கின்றது. ஊவா வடிநிலத்தில் வடபாகம் நீங்கலான பகுதியிலும், ஹற்றன் மேட்டுநிலத்தின் தென்மேல் பாகத்திலும், மாத்தளையிலும் குடியடர்த்தி சதுர கிலோ மீற்றருக்கு 250 தொடக்கம் 500 வரை காணப்படுகின்றது. ஏனைய பகுதிகளில் குடியடர்த்தி சதுர கிலோ மீற்றருக்கு 250க்குக் குறைவாக இருக்கின்றது.
சதுர கி.மீ. 500க்கு மேல் குடியடர்த்தியுடைய பிரதேசம் மலை நாட்டின் மேற்குப் பகுதியை அடக்கியுள்ளது. இப்பிரதேசம் ஈரவலய மலை நாட்டினைக் கொண்டதாகவுள்ளது. பலவகைகளிலும் மலைநாட்டிலேயே மிக்க செழிப்பான பிரதேசம் இதுவேயாகும். தென் மேல் பருவக்காற்றின் காற்றுப் பக்கத்தில் இப்பிரதேசம் அமைந்திருப்பதனால், வருட மழை வீழ்ச்சி 250 செ.மீ அதிகமாகும். சில பகுதிகள் 350 செ.மீ மேலும் மழையைப் பெறுகின்றன. தரைத்தோற்றமும் சாதகமாக அமைந்திருப்பதனால், இப்பிரதேசம் தேயிலைத் தோட்டங்களையும், றப்பர்த் தோட்டங்களையும் சிறப்பாகக் கொண்டுள்ளது. இப்பிரதேசத்தின் மேற்குப்புறத் தாழ் சாய்வுகளில் றப்பர் தோட்டங்களும், மத்திய பகுதியில் தேயிலைத் தோட்டங்களும் அமைந்துள்ளன. இத்தோட்டங்களில் வேலை செய்வதற் காக ஏராளமான தொழிலாளர்கள் இப் பிரதேசத்தில் குடியேறியுள்ளனர். கண்டியை அடுத்துக் கணிசமான அளவு கைத்தொழில்களும் விருத்தி யுற்றுள்ளன. மலைநாட்டின் பிரதான நிர்வாக மையமாகவும், போக்குவரத்து மையமாகவும் இப்பிரதேசமே விளங்குகின்றது. இலங்கையின் தலைநகரோடு தக்க மோட்டார் வீதிகள், இரும்புப் பாதைகள் என்பனவற்றால் இப்பிரதேசம் இணைக்கப் பட்டுள்ளது. பெளத்த மதத்தின் புனித தந்த தாதுக்கோயில், பல்கலைக் கழகம் என்பன இப் பிரதேசத்திலேயே உள. இவையாவும் இப் பிரதேசத்தில் மக்களை விரும்பிக் குடியேற வைத்துள்ளன. கண்டி நகரத்தின் மொத்தக் குடித்தொகை மட்டுமே 104 000 ஆகும்.
சதுர கிலோமீற்றருக்கு 250 தொடக்கம் 500 வரை குடியடர்த்தியைக் கொண்டுள்ள பிரதேசம் ஈரலிப்பான மலைநாட்டின் சில பகுதியையும், வறண்ட மலைநாட்டின் பெரும்பகுதியையும் கொண்டுள்ளது. இப்பிரதேசம்
144

முதல் விபரித்த பிரதேசத்தினைப் போன்று வாய்ப்பான ஏதுக்களைக் கொண்டிருக்காதுவிடினும், மக்கள் விரும்பிக் குடியேறக்கூடிய நிலைமை களைக் கொண்டுள்ளது. றப்பர்த் தோட்டங்கள் மாத்தளைக்கு வட பாகத் திலும், பதுளையைச் சூழ்ந்தும் காணப்படுகின் றன. நுவரெலியாவினைச் சூழ்ந்து தேயிலைத் தோட்டங்கள் நன்குள. ஆகவே, இத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இங்கு குடியேறியுள்ளனர். நுவரெலியா சுகாதாரத்திற்குகந்த ஒரு நகர். ஆதலால், இங்கு மக்கள் விரும்பிக் குடியேறி யுள்ளனர். ஆனால், மிக்க உயரமும் போக்குவரத்துக் கஷ்டங்களும் மலை நாட்டின் மேற்குப் பகுதி போன்று மக்கள் குடியேறத் தடையாக உள. பதுளையைச் சூழ்ந்த பகுதி ஒப்பளவில் வறண்டது. போக்குவரத்துக்களும் இப்பகுதியில் நன்கு அமையவில்லை. ஆதலால், மலைநாட்டின் மேற்குப் பகுதி போன்று குடியடர்த்தி இங்கில்லை. எனினும் பெருந்தோட்டங்களும், சிறு தொழில்களும் இப் பிரதேசங்களில் ஒரு சதுர கிலோமீற்றருக்கு 250 தொட்டு 500 வரை மக்களை வாழ வைத்துள்ளன.
மல்ைநாட்டின் கிழக்குப் பகுதியும், தெற்குப் பகுதியும் ஒரு சதுர கிலோமீற்றருக்கு 250க்கு கீழேயே குடியடர்த்தியைக் கொண்டுள்ளன. இப்பகுதிகள் பெரிதும் பயன்படாப் பகுதிகளாகும். மழைவீழ்ச்சி இக் கிழக்குப் பகுதியில் 200 செ மீற்றர்களுக்குக் குறைவாகும். வடகீழ்ப் பருவக் காற்றே இம்மழையை அளிக்கின்றது. தென்மேல் பருவக்காற்றின் காற்றொதுக்கில் இருப்பதால் உலர் மலைநாடாக விளங்குகின்றது. பத்தனை போன்ற புல்வெளிகளும், வெறும் கரம்பை நிலங்களுமே இப் பிரதேசத் திலுள. பயன்படும் சிறிதளவு விளைநிலமும் சேனைப் பயிர்ச் செய்கைக்குட் பட்டுள்ளது: நெல் வயல்கள் மிகக் குறைவு: மலேரியா நோய் இயல்பாக உண்டு: போக்குவரத்துப் பாதைகள் நன்கு அமையவில்லை: இவை யாவும் இப்பிரதேசத்தில் ஒரு சதுர கிலோமீற்றருக்கு 250க்கும் குறைவாகவே மக்களை வாழவைத்துள்ளது.
குடாநாட்டின் பல பாகங்கள்மணற் பாங்கான பிரதேசங்களாகவும், பயனற்ற பிரதேசங்களாகவும் இருந்தும், குடாநாட்டில் குடியடர்த்தி சதுர கி.மீ. ஒன்றிற்குச் சராசரி 886 மக்களுக்கு மேலுண்டு. இக் குடாநாட்டில் ஏறக்குறைய 87 000 மக்கள் வசிக்கின்றனர்.
இத்தொகையில் ஏறக்குறைய 129 000 மக்கள் யாழ்ப்பாண நகரில் வசிக்கின்றனர். குடித்தொகை அளவுப்படி யாழ்ப்பாணம் இலங்கையின் மூன்றாவது பெரிய பட்டினமாகும். குடாநாட்டின் குடித்தொகை குறைவாகவுள்ள பகுதிகள் வடமராட்சி கிழக்கிலும், பச்சிலைப்பள்ளி யிலும் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் குடியடர்த்தி சதுர கிலோ மீற்றருக்கு 100க்கு குறைவாகவுள்ளது.
145

Page 75
3. ஐதான குடிப்பரம்பலைக் கொண்ட வரண்ட பிரதேசம்:
மொத்த சனத்தொகையில் 13% மக்கள் வரண்ட பிரதேசத்தில் ஐதாக வாழ்ந்து வருகின்றனர். புராதன காலத்தில் அதிக சனத்தொகையைக் கொண்டிருந்த இப்பிரதேசங்கள் மழைவீழ்ச்சிக் குறைவு, மிதமிஞ்சிய வெப்பநிலை, அந்நிய நாட்டினரின் ஆக்கிரமிப்பு, கொடிய நோய்கள் என்பன காரணமாகப் புராதனக் குடியேற்றங்கள் அழிந்தன. இன்று குடியேற்றத் திட்டங்கள் அமைக்கப்பட்டு நீர்ப்பாசன வசதிகள் அமைக்கப்பட்ட பகுதிகளில், மக்கள் குடியேறி வாழத் தலைப்பட்டுள் ளனர். மட்டக்களப்பிலும் மக்கள் ஒரளவு செறிவாகவுள்ளனர்.
146

15| జెకరి
இலங்கையின் இன்றைய (1991) குடித்தொகை 17.24 மில்லியன்களாகும். இக்குடித்தொகையைப் பல்வேறு விதமாகப் பகுப்பாய்வு செய்யலாம். பால், மதம், இனம், மொழி, வயது, கிராமம், நகரம் எனப் பலவாறாகப் பகுப் பாய்வு செய்யலாம். அவ்வாறான குடியமைப்பினைச் சுருக்கமாக நோக்கு
வோம்.
15.1 шпоio Gloйшеоцஇலங்கையின் குடித்தொகையில் பெண்களிலும் பார்க்க ஆண்களின் எண்ணிக்கையே அதிகமாகும். குடிமதிப்பு எடுக்கப்பட்ட காலகட்டத்தி லிருந்து இன்றுவரை அவ்வாறே ®ಲ್ಯಿತು வருகின்றது.
இலங்கையில் ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 103 ஆண்களுள்ளனர். சில மாவட்டங்களில் ஆண்கள் மிக அதிகம். உதாரணமாகப் பொலநறுவை யில் 100:130, முல்லைத்தீவு 100:123, திருகோணமலை 100:115, மன்னார் 100:114. சில மாவட்டங்களில் ஆண்களின் தொகை குறைவாகும். உதாரண மாக, காலி 100; 94, யாழ்ப்பாணம் 100; 98; கண்டி 100; 99. யாழ்ப்பாணத்தில் ஆண்களின் தொகை குறைந்தமைக்கு ஒரு காரணம் வேலை வாய்ப்பு களுக்காக இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தமையாகும்.
147

Page 76
குடித்தொகை"- பால் அடிப்படையில் (ஆயிரத்தில்)
ஆண்டு ஆண் பெண் மொத்தம்
1871 I 280 1 120 2 400
1881 1 470 1 290 2 760
1891 1 59.3 I 414 3 008
1901 1896 1. 670 3 566 1911 2 175 1931 4 106
1921 2 381 2 II 7 4 498
1931 2 811 2 495 5 307
I946 3 532 3 I25 6 657
1953 4 269 3 829 8 098
1963 5 499 5 083 10 582
1971 6 53I 6 159 12 690
1981 7 539 7 311 14 850
1991 8 792 8 455 17 247
1999 9 707 9 336 19 043
மூலம்: புள்ளிவிபரக் கைநூல் - 1992 & 2000 அட்டவணை: 15.1
மாவட்டம் 100 பெண்களுக்கு ஆண்
பொலநறுவை 130
முல்லைத்தீவு 123
மொனராகலை 117
திருகோணமலை 115
LpaăratITri 114
வவுனியா 114
அனுராதபுரம்
கொழும்பு 111
அம்பாறை 109
காலி 94
மாத்தறை 94
யாழ்ப்பாணம் 98
48
அட்டவணை: 15.2

(5.2 6fugl (9 gafuGDL
இலங்கையின் குடித்தொகையை வயது அடிப்படையில் நோக்கில் இளமை யானது என்பது புலனாகும். 1971இல் 14 வயதுக்குட்பட்டோர் 39 சதவீதமாகவும், 1981இல் 35.2 சதவீதமாகவும் உள்ளனர். 15 வயது த்ொட்டு 64 வயதுடைய மக்கள் 61.1 சதவீதமாவர். இவர்கள் தொழில் செய்யக் கூடியவர்கள். உழைக்கும் சனத்தொகையாகும். 65 வயதுக்கு மேற்பட்டோர் இலங்கையின் சனத்தொகையில் 3.7 சதவீதமாக உள்ளனர். Tడాr(జీపీ) 14 வயதுக்குட்பட்டோரும் 65 வயதுக்கு மேற்பட்டோரும் பொதுவாகப் பிறரில் சார்ந்து வாழ்வோராகவுள்ளனர். ஆக மொத்தம் 38.9 சதவீதமானோர் பிறர் உழைப்பிற்றங்கி வாழ்வோராக விளங்குகின்றனர்.
வயது அடிப்படையில் குடித்தொகை (சதவீதம்)
வயது 1971 சதவீதம் 1981 சதவீதம்
0.14 38.9 35.2
15-9 10. 72 10.8 20-24 w 10. Ol 10.3
25-34 . 3.27 16.2
55ー44 10.34 10.4
45-54 7.59 7.7.
55-59 2.75 2.8
60-69 1.74 1.7
70 - 2.50 2. O
ஆதாரம்: புள்ளிவிபரக் கைநூல்- 1992 அட்டவணை: 15.3 14 வயதுக்குக் கீழ்ப்பட்டவழுகல் சனத்தொகை வீதம் 1971 ஆம் ஆண்டிற்கும் 1981 இற்கும் ஒப்பிடுகையில் 3.8 வீதம் குறைந்தமைக்குக் காரணம் பிறப்பு விகிதத்திலேற்பட்ட வீழ்ச்சியாகும்.
15.3 ஆயுட்காலம் இலங்கை மக்கள் பிறப்பில் எதிர்பார்க்கும் ஆயுட்காலம் 73.5 ஆண்டு களா கும். 1920-22இல் எதிர்பார்த்த ஆயுட்காலம் 31.7 ஆண்டுகளாக இருந்தது: 1946இல் 42.8 ஆண்டுகளாக இருந்தது: மருத்துவ சுகாதாரத் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் இன்று ஆயுட்காலத்தை அதிகரிக்க வைத்துள்ளது. மேலும், ஆண்களிலும் பார்க்கப் பெண்களே இன்று கூடிய வயது
149

Page 77
வாழ்கின்றனர். ஆண்களின் எதிர்பார்க்கும் ஆயுட்காலம் 70.7 ஆண்டுகளாகவும், பெண்களின் எதிர்பார்க்கும் ஆயுட்காலம் 75.4 ஆண்டு களாகவும் உள்ளன.
பிறப்பில் எதிர்பார்க்கும் ஆயுட்காலம்
1920/22 1946 1953 1962 1967 1971 1981 1991 2000
ஆண் 32.7 43.9 58.8 61.9 64.8 64.2 67.7 70, 70.7
பெண் | 30.7 41.6 57.5 61.4 66.9 66.7 72.1 74.8 75.4
struth: Dept: of Census and Statistics - 2000 அட்டவணை: 15.4
15.4 இறப்பு, பிறப்புவீதம், சிசுமரணம் வீதமும் 1945இல் இலங்கையின் பிறப்பு வீதமும் இறப்பு வீதமும் அதிகமாக இருந்தது. ஆனால் இன்று இரண்டும் குறைந்துள்ளன. 1945 இல் 1 000 பேருக்கு பிறப்பு வீதம் 36.6 ஆகவும், இறப்பு வீதம் 21.9 ஆகவும் இருந்தது. 1980 இல் பிறப்பு வீதம் 276 ஆகவும், இறப்பு வீதம் 6.1 ஆகவும் இருந்திருக் கின்றன. மேலும் இலங்கையின் சிசு மரண வீதம் 1945 இல் 1000 பேருக்கு 140 ஆகவிருந்தது; ஆனால் இன்று, 37.1 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. காரணங்கள் குடும்பக்கட்டுப்பாடுகளும். சுகாதார மருத்துவத் துறைகளில் ஏற்பட்ட விருத்திகளுமாகும். போசாக்கு, உணவு வழங்கல் மட்டங்களிலேற் பட்ட முன்னேற்றங்களுமாகும்.
ஆண்டு பிறப்பு வீதம் இறப்பு வீதம் (1000 பேருக்கு) - சிசுமரண வீதம்
1901 37.5 27.7 -
1945 36.6 21.9 139, 4
1950 39.7 12.4 81.6
1960 36.6 8, 6. 56.8
1971 30.4 7.7 44, 8
1978 28, 5 6.6 37.
1980 28.4 6.2 34.4
1990 20, 2 6.0 21.1
1999 17.5 6.0 15.9 (1997)
smrgrib: Registrar General's Dept. அட்டவணை: 15.4
150

15.5 எழுத்தறிவு
இன்று இலங்கையில் 10 வயதுக்கு மேல் எழுத்தறிவுடையோர் தொகை 90.1% ஆகும். 1971இல் எழுத்தறிவுடையோர் தொகை 78.5% ஆகவே இருந்தது. 1953இல் கல்வியறிவுடையோர் 69% ஆக இருந்தனர். எனவே, இலங்கையில் எழுத்தறிவுடையோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதைக் காணலாம். மேலும், இலங்கையில் ஆண்களே எழுத் தறிவு கூடிய வீதத்தினராவர். இன்று 92.5% ஆண்களும், 87.9% பெண்களும் எழுத்தறிவுடையவராவர். அத்துடன் நகரப் புறங்களில் வாழ்வோரில் 95.1% எழுத்தறிவுடையவர்களாகவும், கிராமப் புறங்களில் வாழ்வோரில் 86.1% மட்டுமே எழுத்தறிவுடையோராக உள்ளனர்.
எழுத்தறிவுடையோர் (சதவீதம்)
1953 1963 1971 1981 1994
மொத்தம் 69.0 77.0 87.5 87.2 90.1 ஆண் 80.7 85.6 85.6 91.1 92.5 பெண் 55.6 67.3 70.9 83.2 87.9 கிராமிய மக்கள் - 76.2 84.5 86.1 நகர மக்கள் - 86.2 93.5 95.1
sniprub: Dept. of Census and Statistics 2000 அட்டவணை: 15.5 இலங்கையின் எழுத்தறிவுடையோரைக் கூடுதலாகக் கொண்ட மாவட்டம் கம்பஹாவாகும். கம்பஹா மாவட்டத்தில் 94.2% எழுத்தறிவு உடையவர்களாகவுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 93.8% மக்களும், யாழ்ப்பாணத்தில் 92.9% மக்களும் எழுத்தறிவுடையவர்கள்: இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே எழுத்தறிவுடையவர்கள் மிகவும் குறை வாகவுள்ளனர்; இம் மாவட்டத்தில் ஆக 66.1% மக்களே எழுத்தறிவு
26) of 95GT of \ 毫
15.6 இலங்கையின் கிராம், நகரக் குழத்தொகை இலங்கையின் குடித்தொகையில் பெரும்பகுதியினர் கிராமிய மக்களாவர். 1971இல் மொத்தக் குடித்தொகையில் 77.6% மக்கள் கிராமிய மக்களாவர். ஆக 22.4% மக்கள் நகர மக்களாகவிருந்தனர். ஆனால் 1981இல் இந்த அளவு களில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. கிராமிய மக்களின் எண்ணிக்கை 78.5% ஆக அதிகரித்துள்ளது. அதே வேளை நகர மக்களின் எண்ணிக்கை 21.5% ஆகக் குறைந்துள்ளது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் நகர மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டியது அவசியம். ஆனால் இலங்கையில் குடியேற்றத் திட்டங்களில் மக்கள் குடியேறியதால் கிராமிய மக்களின்
15

Page 78
எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஏறத்தாழ 3 194 000 மக்களே நகர மக்க ளாகவுள்ளனர். இவர்கள் 134 நகர மையங்களில் வாழ்ந்து வருகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் 74.3% மக்கள் நகர மக்கள். திருகோணமலை 32.4%, யாழ்ப்பாணம் 32.6%, கம்பஹா 27.4%, மட்டக்களப்பு 24% மக்களை நகர மக்களாகக் கொண்டிருக்கின்றன. ஆகக் குறைவான நகர மக்களைக் கொண்டிருக்கும் மாவட்டங்கள் மொனராகலை (2.2%), குருநாகல் (3.6%) என்பனவாகும்.
157 660T é9igoûu6DL இனரீதியாக நோக்கில் இலங்கையின் சனத்தொகையில் சிங்களவர் 74% ஆவர். தமிழ் மொழி பேசுவோர் 25.2% ஆவர். இவர்களில் இலங்கைத் தமிழர் (12.6%), இந்திய வம்சாவழித் தமிழர் (5.5%), முஸ்லிம்கள் (7.1%) அடங்குவர். பறங்கியர், மலாயர் என்போரும் காணப்படுகின்றனர். சிங்கள வர், இலங்கைத் தமிழர், முஸ்லிம்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. இந்தியத் தமிழரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 1971இல் இந்தி யத் தமிழர் 9.3% காணப்பட்டனர். இன்று 5.5% ஆகக் குறைந்துள்ளனர். காரணம் இந்தியத் தொழிலாளர்கள் இந்தியாவிற்குக் குடிபெயர்ந்தமை யாகும். இலங்கைத் தமிழரின் எண்ணிக்கை அதிகரித்தமைக்குக் காரணம் பிரஜாவுரிமை பெற்ற இந்தியத் தமிழர்கள் சேர்ந்தமையாகும். பறங்கியர் வெளிநாடுகளுக்கு வெளியேறியதால் எண்ணிக்கையில் குறைந்துள்ளனர்.
இனரீதியான இலங்கையின் குடித்தொகை 1971-1981 (சதவீதம்)
இனம் 1971 1981 அதிகரிப்பு/ வீழ்ச்சி
வீதம்
சிங்களவர் 72. O 74. O +20.3 س
இலங்கைத் தமிழர் ll. 2 12.6 -- 81.4 இந்தியத் தமிழர் 9.3 5.5 - 29.2 முஸ்லிம்கள் 6.5 7.1 27.6 பறங்கியர் 0.4 0.3 - 15.6
DGUrTuuri 0.3 0.3 - 0.1
ஏனையோர் * 0.3 0.2
g5 Turb: Preliminary Findings of 1981 Census அட்டவணை: 15.6 இலங்கையின் வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தமிழர் கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் மத்திய மலைப் பிரதேசத்திலும் தமிழர்கள் அதிகளவில் உள்ளனர். ஏனைய பகுதிகளில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினராகவுள்ளனர்.
152

15.8 đfouu Ó9ípůLIGOD
சமய அடிப்படையில் இலங்கை யின் குடித்தொகையை நோக்கில் பெளத்தர்கள் 69.3%, இந்துக்கள் 15.5%, இஸ்லாமியர் 7.6%, கிறிஸ்தவர் 7.5% உள்ளனர். 1971 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட் டிலும் பார்க்க 1981ம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டில் பெளத்தர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என் போரின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. ஆனால் இந்துக்களின் எண்ணிக்கை குறித்த பத்தாண்டு
களில் குறைந்துள்ளது. 1971இல்
இந்துக்கள் 17.6%, ஆகவிருந் தனர். 1981இல் இந்துக்களின் எண்ணிக்கை 15.5%, ஆகக் குறைந்து போனது. காரணம் இந்துக்களான இந்தியத் தொழி லாளரின் வெளியேற்றமாகும்.
#1രീബquീ
ിffLL/lിL)-1953
L) சிங்களவர்
படம்: 15.1. இலங்கையில் தமிழர் பெரும்
பான்மையாக வாழும் பகுதிகள்
சமய ரீதியான இலங்கையின் குடித்தொகை 1971 - 1981 (சதவீதம்)
erLDuutb 1971 1981
பெளத்தர் 67.3 69.3
இந்துக்கள் 17.6 15.5 இஸ்லாமியர் 7.7 7.6 றோமன் கத்தோலிக்கர்” 7. 6.8
ஏனைய கிறிஸ்தவர் 0.8 O.7
15.9 புலம்பெயர்வு
மூலம்: புள்ளிவிபரக் கைநூல் - 1992
அட்டவணை: 15.7
இலங்கையின் சனத்தொகையில் இருவகையான புலம்பெயர்வுகளை
அவதானிக்கலாம். அவை:
15.9.1 உள்நாட்டுப் புலம்பெயர்வு 15.9.2 வெளிநாட்டுப் புலம்பெயர்வு
153

Page 79
15.9. உள்நாட்டுப்புலம்பெயர்வு உள்நாட்டுப் புலம்பெயர்வுக்கு உந்து சக்தியாக (Full Force) நிலமின்மை, தொழில்வசதியின்மை, சமூக அந்தஸ்து என்பன விளங்கி வருகின்றன. அதேவேளை புலம்பெயர்வுக்கான ஈர்ப்பு விசையாக (Gravity Force) பயிர்ச் செய்கைக்குந்த நீர்ப்பாசன நிலம் கிடைக்கின்றமை, தொழில் வசதிகள் கிடைக்கின்றமை விளங்கி வருகின்றன. எனவேதான் இலங்கையின் சனத் தொகை அடர்த்தி கூடிய தென்மேல் பிரதேசம், மலைநாடு, யாழ்ப்பாணக் குடாநாடு ஆகிய பகுதிகளிலிருந்து மக்கள் உலர் பிரதேசக் குடியேற்றத் திட்டங்களை நாடி இடம்பெயர்ந்துள்ளனர்.
சில மாவட்டங்களின் குடிவளர்ச்சி வீதம் (1000 பேருக்கு)
மாவட்டம் 1946 - 1971 1921 - 1981
களுத்துறை -27.7 -20.2
Տ கேகாலை -24.6 -35.1 | கண்டி -20.7 -83.3 மாத்தறை -21.1 ー40.5
நுவரெலியா -19.9 -122.8
கொழும்பு -2.3 -8.0
யாழ்ப்பாணம் -22.7 -10.2 வவுனியா, முல்லைத்தீவு - 121.5 +232.6
ஆ அனுராதபுரம்" + II 6.0 166.7۔ 翡 மட்டக்களப்பும், அம்பாறையும் +49.2 + 97.1 ཞྭ་ திருகோணமலை チ4I.4 - 99.4 D66730TrTri - 40. 6 35.7
|ேஅம்பாந்தோட்டை チ27、7 チ40.5
புத்தளம் - 12.9 69. 6
கிளிநொச்சி - 270, 7 + 42.0
stub: Population Redistribution Policies and Measures Sri Lanka - By - Dr. Wickrama Weerasooiya. (utbulurrgot, b, SafG)istraig ஆசிரியரின் கணிப்பீடு)
அட்டவணை: 15.8
இலங்கைச் சனத்தொகையின் உள்நாட்டு இடம்பெயர்வை நோக்கில் ஈரவலயத்திலிருந்து வரண்ட வலயத்திற்கு மக்கள் இடம்பெயர்ந்து குடியேறி
54

இருப்பதைக் காணலாம். கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, அனுராத புரம், திருகோணமலை, அம்பாந்தோட்டை, புத்தளம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் குடியேறியோர் தொகை அதிகரித்து வருகின்றது. காரணம் குடியேற்றத் திட்டங்களாகும். கண்டி, மாத்தறை, நுவரெலியா, கொழும்பு, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலிருந்து வெளி யேறுவோர் தொகை அதிகரித்துள்ளது.
1946-197 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி வெளி மாவட்டங்களில் குடியேறுவோர் தொகை அதிகரித்திருந்தது. வட மாகாணக் குடியேற்றத் திட்டங்களில் இவர்கள் குடியேறினர். 1971-1981 இல் யாழ்ப்பாண மாவட்டத்தில் குடியேறுவோர் தொகை அதிகரித்துள் ளது. காரணம் இன அமைதியின்மையால் நிகழும் கலவரங்களின் விளைவாக இலங்கையின் ஏனைய பகுதிகளிலிருந்து மக்கள் யாழ்ப்பாண மாவட்டத் திற்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் இடம்பெயர்ந்தனர். 1981-1993 கால கட்டங்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் குடிவரவும் குடிப்பெயர்வும் பின்வருமாறுள்ளன.
1. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நிகழும் உள்நாட்டு யுத்தங்களால் இப்பகுதி மக்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் இடம் பெயர்ந் துள்ளனர்.
2. பாதுகாப்பு, தொழில் வாய்ப்பு, சொகுசான வாழ்வு என்பனவற்றைக் காரணம் காட்டி யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து மக்கள் வெளி யிடங்களுக்கு, வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
15.9.2 வெளிநாட்டுப்புலம்பெயர்வு இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகள், கனடா, ஐரோப்பிய நாடுகள் என்பனவற்றிற்கான வெளிநாட்டுப் புலம்பெயர்வு நிகழ்ந்து வருகின்றது. தொழில்வாய்ப்பு, கூடிய ஊதியம், சொகுசான வாழ்வுக்கான எதிர்பார்ப்பு பாதுகாப்புணர்வு முதலான பல்வேறு காரணிகள் வெளிநாட்டுப் புலம் பெயர்விற்கான உந்து சக்திகளாகள்ள்ளன. வெளிநாட்டு ஊதியம் ஈர்ப்புச் சக்தியாகவுள்ளது.
1971-1980 காலப்பகுதியில் இலங்கையிலிருந்து 2 572 121 மக்கள் வெளியேறிப் புலம்பெயர்ந்துள்ளனர். அதேவேளை இக்காலகட்டத்தில் இலங்கைக்கு இடவரவு செய்துள்ளோர் தொகை 2 106,729 பேராவர். எனவே 485,392 மக்கள் நிரந்தரமாகப் புலம்பெயர்ந்துள்ளனர். எனவே இக் காலகட்டத்தில் வருடச் சராசரி 50 ஆயிரம் மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். இது இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் 3.4 சதவீதமாகும். வெளி நாட்டுப் புலம்பெயர்வு வீதம் 1983இல் 6.0% ஆகவும், 1982இல் 6.8% ஆகவும், 1984இல் 4.9% ஆகவும் இருந்துள்ளது. 1988இல் இந்த வீதம்
55

Page 80
3.1% ஆகும். வெளியிடப் புலம்பெயர்வின் உயர் வீதத்தினை ஏற்படுத்தும் பிரதான காரணி மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புத் தேடிச் சென்றவர்களின் தொகையாகும். உயர் ஊதியம், சேமிக்கக்கூடிய வாய்ப்புகள் புலம்பெயர்வைத் தூண்டின.
புலம்பெயர்வு 1971-1989
ஆண்டு வருகை வெளியேற்றம் | புலம்பெயர்வு சதவீதம்
1971-80 2 106 729 2 572 121 465 392 3.4
1981 552 082 572 344 50 262. 3.3
1982 564 009 555454 9I 455 6.0
1983 525 25I 629 662 104 411 6.8
1984 551 29.3 62. 175 76 882 4. 9
1985 495 324 504 573 9 249 0.6
1986 462 179 463 009 830 0.1
1987 392 65 435 962 43 797 2.7 1988 426 634 477 459 50 825 3.
1989 42丑 475 操 441 081 19 606 1.2
மூலம்: பதிவாளர் நாயகம் திணைக்களம் அட்டவணை: 15.9
1983-1984 ஆம் ஆண்டுகள் வெளிநாட்டுப் புலம்பெயர்விற்கான ஓர் உச்சக் காலங்களாகக் காணப்படுகின்றன. 1983இல் 629 662 மக்களும் 1984இல் 628 175 மக்களும் இந்த நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். அதற்குப் பிரதான காரணியாக அமைந்தது 1983இல் நிகழ்ந்த பெரும் இனக் கலவரம் ஆகும். 1971-1989 காலகட்டத்தை கூட்டுமொத்தமாக நோக்கில் இக்கால கட்டத்தில் இலங்கையிலிருந்து ஏறத்தாழ 96 இலட்சம் மக்கள் வெளியேறி உள்ளனர். அவர்களில் ஏறத்தாழ 86 இலட்சம் மக்கள் மீள வந்துள்ளனர். ஆக ஏறக்குறைய 10 இலட்சம் மக்கள் வெளிநாடுகளில் தங்கி யுள்ளனர் என்பது புலனாகின்றது. -
வெளிநாட்டு இடம்பெயர்தலினால் இந்த நாட்டிற்குக் கிடைக்கக் கூடிய முதன்மையான நலன், அவர்களால் அனுப்பப்படும் பணமாகும். இது அந்நியச் செலாவணியை உயரச் செய்கின்றது. மேலும் இலங்கையின் வேலையில்லா பிரச்சினையின் ஒரு பகுதியை நீக்கவுதவியுள்ளது. இடம் பெயர்ந்தோரின் பண அனுப்புதல்கள் மூலம் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரவுயர்வு, வீடுகள் புதிதாகவும் திருத்தமும் கொண்டமைதல்,
156

பொருளாதார வளம் என்பன உருவாகியுள்ளன. உலக சமூகங்களுக்கிடை யிலான தொடர்பாடல் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் மக்களது புலம்பெயர்வுக் குப் பொருளாதாரக் காரணியிலும் பார்க்க பாதுகாப்புக் காரணம் முக்கியம் பெறுகின்றது. இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் நிரம்பியுள்ள ஈழ அகதி கள் தக்க உதாரணமாவர். புலம்பெயர்வினால் ஏற்பட்ட நன்மைகளோடு தீமைகள் சிலவும் ஏற்பட்டுள்ளன. கலாசாரச் சீர்கேடுகள், இன, மத, மொழிக் கலப்புக்கள், தலைமுறையழிவு என்பன புலம் பெயர்வின் விளைவான பிரதி கூலங்களாகும்.
15.10 சனத்தொகைப்போக்கு இலங்கையின் கருவளம், இறப்பு வீதம், இடம்பெயர்வு முதலானவற்றின் அடிப்படையில் ஆராயும்போது இன்று (1991) 17 மில்லியனாக இருக்கும் இலங்கையின் சனத்தொகை 2001ஆம் ஆண்டில் 20 மில்லியனாக அதிகரிக் கும் எனத் தெரிகின்றது. 15 வயதுக்குட்பட்டோரின் சராசரி வீதமானது 31 இலிருந்து 2001இல் 26 ஆக வீழ்ச்சியடையும். முதிர்ந்தோரின் சராசரி வீதம் 8 இலிருந்து 10ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எறியம் செய்யப்பட்ட சனத்தொகை - 1981-2031 (000)
ஆண்டு ஆண் பெண் மொத்தம்
1981 7 661.0 7 385.5 五5 046.5
1986 8354. 7 8 129.1 16 484.6 1991 9 018.2 8 86.7 17879.9
1996 9 695.1 9 624.0 19 319.2
2001 10 320.2 10 353.7 20 673.9
2011 10 650 10 621 21 272.0 2021 11588 11 638 23 227.0 2031 12 395 859 24 464 خط
egal b: Department of Census And Statistics அட்டவணை: 15.10
1991-2001 வரையிலான காலகட்டத்தில் 15-49 வயதிற்குட்பட்ட பெண்களின் சராசரி வீதம் 26.5 இலிருந்து 27.5 ஆக அதிகரிக்கும். இது க்ருத்தரிக்கும் வயதுப் பிரிவாகவிருப்பதால் சனத்தொகை அதிகரிப்பிற்குக் காரணமாய் அமையும். எனவே, நாட்டின் மூலவளங்களுக்கு ஏற்ப சனத் தொகையொன்றினை (உத்தம மக்கட் தொகை) நிலை நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் இலங்கை மேற்கொள்ளவேண்டியுள்ளது.
157

Page 81
1% இலங்கையின்
குடியிருப்புகள் - நகராக்கம்
16. குழயிருப்பு:ஒருவிளக்கம் LDக்கள் தாம் தங்கியிருப்பதற்கென்று அமைத்துக் கொண்ட வீடுகள், தொழில், வழிபாடு, கலாசார கட்டிடங்கள், ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்துப் பாதைகள் என்பனவற்றோடு ஒரு மக்கட் கூட்டம் வாழுமிடம் குடியிருப்பு எனப்படும்.
சூழலின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, சூழலின் செல்வர்க்கை மனிதன் அனுபவிக்கத் தொடங்கும்போதுதான் குடியிருப்புகள் உருவா கின்றன. இலங்கையின் மிகப்பழைய குடியிருப்புகளைப் பாகுபாடுசெய்து விளக்குவது கடினமாகும். நாகர், இயக்கர் போன்றோர் இலங்கையில் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றவிடத்தும், இந்திய மக்கட் கூட்டத்தின் வருகைக்குப் பின்பே நிலையான குடியிருப்புகள் தோன்றியிருக்கின்றன.
முதன் முதலில் இலங்கையிற் குடியேறியவர்கள் தரைத்தோற்றம், காலநிலை எனும் பெளதிகக் காரணிகளைப் பொறுத்தே குடியேறினர். சம தரைகள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கும் இலகுவான வாழ்க்கைக்கும் ஏற்றனவாக இருந்ததால், சமவெளிகளில் அவர்கள் முதலிற் குடியேறினர். பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்கு நீர் இன்றியமையாதது. ஆதலால் முதன்முதல் நதிகளின் ஒரங்களிற் குடியேறினர். அநுராதகம, உபதீசகம என்பன அவ்வாறு உருவானவையே.
158

பயிர்ச்செய்கைக்கு நீர்ப் பற்றாக்குறையும், வெள்ளப் பெருக்கும் தடை களாக அமைந்ததால், குளங்களைக் கட்டி நீரைத் தேக்கி, ஆண்டு முழுவதும் பயிர்செய்கையில் ஈடுபட்டனர். அதனால் குளங்களையும், கால்வாய்களை யும் சூழ்ந்து குடியிருப்புகள் அமைந்தன.
நீரைத் தேக்கி ஆண்டு முழுவதும், பயிர் செய்ததால் மேலதிகமாக உற்பத்தி பெருகியது. அதனால் இரு குடியிருப்புகளிடையே பண்டமாற்று கள் ஏற்பட்டன. இரு குடியிருப்புகளையும் இணைத்து வண்டில் பாதைகள், ஒற்றையடிப் பர்தைகள் என்பன அமைந்ததோடு, போக்குவரத்துத் தொடர்பால் இவை பிரதான சந்தி நிலையங்களாகவும் அமைந்தன. மேலும் பண்டமாற்றிற்கு ஒரிடம் சந்தையாக அமைந்ததால் அவ்விடத்தில் சந்தைக் குடியிருப்பு இயல்பாகவே உருவாகியது. பண்டமாற்றுக் குடியிருப்புகளை நியான்கம என்பர்.
இத்தகைய குடியிருப்புகளின் மையங்களாகத் தலைநகர்கள் அமைந்தன. அநுராதபுரம், பொலநறுவை, சிகிரியா, யாப்பஹஜூவா தம்புளை, என்பன இத்தகையனவே. இத்தலைநகர்கள் கூடிய போக்குவரத்து இணைப்புக்களையும், வர்த்தக நடவடிக்கைகளையும், நிர்வாக நடவடிக்கை களையும், தொழிற்பிரிவினரையும் உள்ளடக்கியதாக விளங்கின.
மாந்தை வெளிநாட்டு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்களவு ஈடுபட்டுள் ளது. கி.பி. 700 அளவில் அராபியர் களுத்துறையில் வர்த்தக நிலையங்கள் அமைத்துக் கொண்டனர். சுங்கச் சாவடிகள், சேமிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இயல்பாகவே இங்கு மக்கள் குடியேறித்
துறைமுகக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர்.
கடற்கரையோரங்களில் மீன்பிடி கருதி மக்கள் குடியேறினர். இதனால் மீன்பிடிக் குடியிருப்புக்கள் உருவாகின. தொழிற்றிறனுடையோர் (குயவர், கொல்லர் முதலியோர்) தனித்து வாழ்ந்து, தொழிற் குடியிருப்புகளை
உருவாக்கினர்.
இத்தகைய குடியிருப்புகள் உலர் பிரதேசத்தின் பெரும் பரப்பில்தாம் அமைந்திருந்தன. இலங்கையின் தென்கீழ்ப் பாகங்களில் ஆற்றுப்பக்கக் குடியிருப்புகள் அதிகமாக அமைந்துள்ளன. 1400ஆம் ஆண்டிற்குப் பின் உலர் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் தென்மேற்குப் புறமாகக் குடி பெயர்ந் தனர். தென்னிந்தியப் படையெடுப்புகள் குளங்களைப் பாழடைய வைத்து வெள்ளப் பெருக்கையும் மலேரியா நோயையும் தோற்றுவித்ததால், மக்கள் தாம் வாழ்ந்த இடம்விட்டுக் குடிபெயர்ந்தனர். தென்மேற்கே களனி கங்கைப் பள்ளத்தாக்கை அடுத்து, அதிகமாகக் குடியிருப்புகள் உருவாகின. இத் தென்மேற் பிரதேசங்களில் பொருளாதார அமைப்பு வேறுபட்டமை யினால் குடியிருப்பு வகைகளும் வேறுபட்டன. கறுவா, ஏலம், கராம்பு,
59

Page 82
மிளகு, இரத்தினக்கற்கள், யானைத் தந்தம் என்பன வர்த்தக முக்கியத்துவம் பெற்றதால், இவற்றிலேயே மக்களது கவனம் சென்றது. 1505ஆம் ஆண்டிற்குப் பின் அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை கொண்டு வரப் பட்டதால் குடியிருப்புகள் வேறுபட்டன. வர்த்தக அடிப்படையிற் குடியிருப்புக்கள் உருவாகின. துறைமுகங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. கல்பிட்டி, மட்டக்களப்பு, காலி என்பன துறைமுகக் குடியிருப்புகளாக உருவாகின.
பெருந்தோட்டங்களின் விருத்தியால் போக்குவரத்து விருத்தியும் ஏற்பட்டது. இருப்புப் பாதைகள் நிர்வாகத் தேவைகளுக்காகவும் வர்த்தகத் தேவைகளுக்குமாக அமைக்கப்பட்டன. வீதிகள் பலவும் அமைக்கப்பட்டன. பிரித்தானியர் காலத்தில் இத்தகைய விருத்திகள் அதிகம். மலைநாடு தேயிலை, றப்பர், கோப்பிப் பெருந்தோட்டங்களாக மாறின. தென்னிந்தியர் இத்தோட்டங்களில் தொழிலாளர்களாகக் குடியேறினர். பெருந்தோட்டக் குடியிருப்புகள் உருவாகின.
ஏதாவது ஒரு முக்கிய சாதக காரணியை ஆதாரமாகக் கொண்டு நதிக் கரைகளிலோ, குளங்களையடுத்தோ, கால்வாய்களை அடுத்தோ மக்கள் வாழும்போது அக்குடியிருப்புகள் ஆற்றுப் பக்கக் குடியிருப்புகள், குளக் குடியிருப்புகள், கால்வாய்க் குடியிருப்புக்கள் என வழங்கப்படுகின்றன. தோட்டங்களை அடிப்படையாகக் கொண்டு மக்கள் குடியேறும்போது அவை தோட்டக் குடியிருப்புக்கள் ஆகின்றன. சந்திகளை ஆதாரமாகக் கொண்டு மக்கள் குடியேறும்போது அவை சந்திக் குடியிருப்புகளாகின்றன. எனவே குடியிருப்புகள் ஒவ்வொன்றும் தாம் ஆற்றுகின்ற செயலைப் பொறுத்தே பெயர் பெறுகின்றன.
இக்குடியிருப்புகள் ஒவ்வொன்றிலும் மக்களது வாழ்க்கைக்கு இன்றி யமையாத தேவைகளெனக் கருதப்படும் வசதிகள் யாவும் அமைந்திருக்க வேண்டும். போக்குவரத்து வசதிகள், பாடசாலைகள், தபால் கந்தோர், கோவில்கள், ஆஸ்பத்திரிகள், பொலீஸ் நிலையம், சந்தை முதலியன யாவும் அமைந்திருக்க வேண்டும். இவ்வசதிகளைப் பொறுத்தமட்டில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் முற்றாக இல்லாது இருக்கமுடியாது.
16.2 குழயிருப்புவகைகள்
இலங்கையின் குடியிருப்பு வகைகளை அமைப்புத்தோற்ற அடிப்படை யிலும், அவற்றின் தொழிற்பாட்டு அடிப்படையிலும் பாகுபாடு செய்ய முடியும். அமைப்புத் தோற்றமென்பது வதிவிடங்கள், கட்டிடங்கள், பாதைகள் என்பனவற்றைக் குறிக்கும். தொழிற்பாடு என்பது ஒவ்வொரு குடியிருப்பும் எத்தகைய செயலை (பயிர்ச்செய்கை, வர்த்தகம், கைத்தொழில் என) ஆற்றுகிறதென்பதைக் குறிக்கும்.
160

அமைப்புத் தோற்ற அடிப்படையில் பின்வரும் ஐந்து வகைக் குடியிருப்புகளை இலங்கையில் அவதானிக்கலாம். அவை:
16.2.1 தனித்தமைந்த வதிவிடங்கள் 16.2.2 சிற்றுார்
16.2.3 கிராமம்
16.2.4 சிறிய நகரம்
16.2.5 மாநகரம்
இந்த ஐந்து வகைகளுள் முதல் மூன்றும் கிராமக் குடியிருப்புகளாகும். ஏனைய இரண்டும் நகரக் குடியிருப்புகளாகும்.
6.2.1 தனித்தமைந்த வதிவிடங்கள்
ஒரு மனிதன் அல்லது ஒரு குடும்பம் பிரதான குடியிருப்பிலிருந்து விலகி ஒரு பிரதேசத்தில் ஒரு வதிவிடத்தை அமைத்துக்கொண்டு வாழும்போது அதனைத் தனித்தமைந்த வதிவிடம் என்பர். இலங்கையின் குடியேற்றத் திட்டங்களில் குடியேறிய மக்கள் காட்டிற்குள் நதிக்கரைகளில் அமைந் திருக்கும் காட்டுப் புலவுகள் இத்தகையனவாகும். இத்தனித்தமைந்த வதிவிடங்கள் பெரிதும் நதிக்கரையில் அல்லது சிறியதொரு குளக்கரையில் அமையும். இங்கு நீர்வசதியும், தோட்டச் செய்கைக்குகந்த விளை நிலமுந் தான் அவை அமைவதற்குரிய காரணங்களாகும். தனித்தமைந்த வதிவிடங் கள் கடற்கரைகளிலும் அமைந்திருக்கும். அவை மீன்பிடியை ஆதாரமாகக் கொண்டவை. துணுக்காய், பூநகரிப் பகுதிகளில் தனித்தமைந்த வதிவிடங்
களைக் காணலாம்.
16.2.2 சிற்றுார் சிற்றூர் என்பது பெயருக்கேற்ப ஒரு சிறிய கிராமமாகும். சிதறியமைந்த வதிவிடங்களைக் கொண்டதாகவும், ஐம்பது அறுபது குடும்பங்கள் வாழும் பிரதேசமாகவும் அமைந்திருக்கும்வண்டிப் பாதைகளும் நடைபாதைகளும் காணப்படும். இலங்கையில் அதிகளவில் சிற்றுார்களைக் காணலாம். யாழ்ப்பாணக் குடாநாட்டினையடுத்துக் காணப்படும் எழுவைதீவு, பருத்தித் தீவு என்பன சிற்றுார்களுக்குத் தக்க உதாரணங்களாகும். வவுனியா மாவட் டத்தில் பெரியபுளியங்குளம், மருதமடு என்பன குளத்தினை அடிப்புழை யாகக் கொண்ட சிற்றூர்களாகும். எழுவைதீவு பனைமரப் பெரு உற்பத்தியினை ஆதாரமாகக் கொண்ட சிற்றுார், ஆல்ழயீமுருகண்டி இன்னொரு சிற்றுாருக்குத் தக்க உதாரணம். இதிருரோதன குடியிருப்புரவு குளத்தை ஆதாரமாகக் கொண்டது.
161

Page 83
6.2.3 d6gstotb சிற்றூர்கள் பல ஒன்றிணைவதால் கிராமக் குடியிருப்பு உருவாகின்றது.
இலங்கையின் குடியிருப்புகளிற் பெரும்பாலானவை கிராமக் குடியிருப்புகளாகும்; கைத்தொழிலாக்கங்களில் முன்னேறாத எந்தவொரு நாட்டிலும் கிராமக் குடியிருப்புக்களே அதிகமாகவுள்ளன. பயிர்ச் செய்கை யில் தங்கி வாழ்கின்ற மக்கள் கிராம மக்களாக விளங்குகின்றனர். கிராமக் குடியிருப்புகள் தொழிற்பாட்டடிப்படையில் மேல்வரும் வகையினவாக அமைந்துள் ளன.
1. குளக் குடியிருப்பு 6. துறைக் குடியிருப்பு 2. மீன்பிடிக் குடியிருப்பு 7. கடவைக் குடியிருப்பு 3. சந்திக் குடியிருப்பு 8. வரலாற்றுக் குடியிருப்பு 4. தோட்டக் குடியிருப்பு 9. புதுக் குடியிருப்பு 5. சந்தைக் குடியிருப்பு
குளக்குடியிருப்பு குளங்களை ஆதாரமாகக் கொண்டு நடைபெறும் பயிர்ச் செய்கைக் குடியிருப்பாகும். மின்னேரியா, பராக்கிரம சமுத்திரம், சேனநாயக்க சமுத்திரம் முதலியனவற்றைச் சூழ்ந்தமைந்தவை இத்தகைய னவாம். கடற்கரையோரங்ளை அடுத்து மீன்பிடித்தலிற்காக மக்கள் குடியேறி வாழும்போது அவை மீன்பிடிக் குடியிருப்புகளாகின்றன. நாவாந்துறை, தங்காலை, பேசாலை, குச்சவெளி என்பன இத்தன்மையனவாம். பிரதான வீதிகள் இணைகின்ற சந்திகளையடுத்து மக்கள் குடியேறி வாழும்போது அவை சந்திக் குடியிருப்புகளாக விளங்குகின்றன. கொடிகாமம், கெக்கிராவை, மாகோ, பிபிலை என்பன சில சந்திக் குடியிருப்புகளாகும். கிராமத் தோட்டங்களையோ, பெருந்தோட்டங்களையோ ஆதாரமாகக் கொண்டு அமையும் குடியிருப்புகள் தோட்டக் குடியிருப்புகள் அல்லது பெருந்தோட்டக் குடியிருப்புகளாகவுள்ளன. நீர்வேலி தக்கதோர் தோட்டக் குடியிருப்பாகும். ஹற்றன், பதுளை, தலவாக்கொல்லை என்பன பெருந் தோட்டக் குடியிருப்புகளாம். கிராமப்புறங்களிலே விளைவிக்கப்படும் பொருள்களை விற்கவும், தேவையான பொருட்களை வாங்கவும் சந்தைகள் தேவைப்படுகின்றன. இச்சந்தைகளை அண்மி மக்கள் வாழத் தலைப்படும் போது சுன்னாகம், சாவகச்சேரி போன்ற சந்தைக் குடியிருப்புகள் உருவா கின்றன. ஊர்காவற்றுறை, வல்வெட்டித்துறை, கல்பிட்டி, முல்லைத்தீவு போன்ற சிறுதுறைகளை அடுத்து மக்கள் மீன்பிடி நோக்கமாகவோ, வர்த்தக நோக்கமாவோ வாழும்போது துறைக் குடியிருப்புகள் அமைகின்றன. நதிக் கரைகளின் ஒரு புறத்தினின்று மறுபுறத்திற்கு நதி வற்றும் வேளைகளில் டந்து கடக்கக்கூடிய இடங்களிலோ, சிறுவள்ளங்களின் துணைகொண்டு *டக்கக்கூடிய இடங்களிலோ கடவைக் குடியிருப்புகள் அமைகின்றன.
162

பாதிரி பி.50 மைல்ஜீள்.
.م... لا
Rஇழல்றத்தி ༽ܐܢ
ཁ་ས་མ་ཡ་མ|
مجم کو؟
" 歌, >ع
% `v கோர் 2. C-4ஆர்ரவரி 6cm砲四《ーィく。 గ్సాJ&^}
ང་། 2 ஆற்றRே() r1 \പ്പു FYR SYN «Տ புத்தர
S. ಟ್ವಿಟ್ಲ? ーTつ t(§ لأبراج : கிருந்தி:;

Page 84
இலங்கை எங்கும் பரவலாக இவற்றைக் காணலாம். குருநாகல், அநுராத புரம், கண்டி என்பன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தனவெனினும் நகரக் குடியிருப்புகளாக விளங்குகின்றன. எனவே, இலங்கையில் பொலநறுவை, தம்புளை, சிகிரியா என்பன வரலாற்றுக் குடியிருப்புகளாக விளங்குகின்றன. இவற்றைவிட இன்று குடியேற்றத் திட்டங்கள் மூலம் மக்கள் பல பகுதி களிலும் குடியேற்றப்படுகின்றனர். இக் குடியேற்றங்கள் மூலம் கிளிநொச்சி, உன்னிச்சை, வவுனிக்குளம் முதலிய பகுதிகளில் அமைந்த குடியிருப்புகளே புதுக் குடியிருப்புகளாம்.
16.2.4 சிறுநகரம் பல கிராமங்கள் ஒன்றாக இணைவதால் சிறிய நகரம் உருவாகிறது.
இலங்கையில் பல சிறிய நகரங்கள் காணப்படுகின்றன. இலங்கையின் கரையோரங்களில் மீன்பிடியை ஆதாரமாகக் கொண்ட சிறிய நகரங்கள் இருக்கின்றன. புத்தளம், சிலாபம், தங்காலை, முல்லைத்தீவு என்பன அத்தகையன. இச்சிறிய நகரங்களில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்கள் கூடுதலாக வாழ்கின்றனர். முல்லைத்தீவில் பருவத்திற்குப் பருவம் இடம்பெயரும் மீனவர்கள் வருவதால் சில காலங்களில் சனத்தொகை அதிகரிக்கும். காங்கேசன்துறை, மன்னார், பருத்தித்துறை என்பன துறைமுக நகரங்களாகும். பதுளை, கேகாலை, பண்டாரவளை போன்ற பெருந்தோட்ட நகரங்களில் சனத்தொகை சமமற்றுக் காணப்படுகின்றது. அநுராதபுரம், கம்பளை, குருநாகல் என்பன வரலாற்று நகரங்களாம். மக்களது தொழில் நடவடிக்கைகளுக்கு நகரங்கள் வாய்ப்பானவை. தொழில் வாய்ப்புள்ள நகரங்கள் அதிக சனத்தொகையையும், வாய்ப்புக் குறைந்தவை குறைவான சனத்தொகையையும் கொண்டிருக்கின்றன.
இலங்கையின் வட கரையோரத்தில் துறைமுகச் சிறிய நகரமாகக் காங்கேசன்துறை விளங்கி வருகின்றது. காங்கேசன்துறை ஏற்றதோர் குடா வில் அமையவில்லை. வடகீழ்ப் பருவக்காற்றினால் கடல் கொந்தளிப்பு உள்ளது. அதனால், கப்பல்களுக்குப் பாதுகாப்பான வசதிகள் இல்லை.
மேலும் கப்பல்கள் கரைக்கு வந்து தங்கும் அளவிற்குக் கடல் கரை யோரத்தில் ஆழமானதாகவில்லை. எனினும் காங்கேசன்துறை ஒரளவு விருத்தி செய்யப்பட்டுள்ளது. பாக்குத் தொடுகடலை இந்திய அரசு கப்பல் கள் போகக் கூடியளவிற்கு ஆழமாக்குவதற்குத் திட்டங்களை வகுத்துள்ளது. அதனைச் சேது கால்வாய்த் திட்டம் என்பர். இத்திட்டம் நிறைவேறும் போது கொழும்புத் துறைமுகத்தின் முக்கியத்துவம் குறைய, காங்கேசன் துறையின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
164

16.3 நகராக்கம் இலங்கையின் குடித்தொகையில் 78.5 சதவீதத்தினர் கிராமிய மக்களாவர். ஆக 21.5 சதவீத மக்களே நகர மக்களாகவுள்ளனர். வரலாற்று அடிப்படை யில் இலங்கையில் நகராக்கம் என்பது வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டமைந்ததாகும். பெருநகராகிய கொழும்பு, அதனையொத்த ஏனைய துறைமுகங்கள் என்பன வர்த்தக அடிப்படையில் வளர்ந்த நகரங் களாகும். பெருந்தோட்டத் தொழில் வளர்ச்சியடைந்ததும் சேகரிக்கும் விநியோகிக்கும் நகரங்கள் பல வளர்ச்சியடைந்தன. வீதிகள், இருப்புப் பாதைகள் என்பன விருத்தியுற்றதும் சந்தி நகரமையங்கள் பல இலங்கையில் உருவாகின. மாவட்டங்களில் நிர்வாகத் தேவைகளுக்காகக் கச்சேரி அமைப்பு உருவாகியதும் மாவட்டங்களில் பல நகரங்கள் உருவாகின.
இலங்கையில் ஆறு இலட்சம் மக்களுக்கு மேல் வாழ்கின்ற மாநகரமாகக் கொழும்பு விளங்குகின்றது. தெகிவளை-கல்கிசை கோட்டை, மொறட்டுவை, யாழ்ப்பாணம், கண்டி ஆகிய ஐந்து நகரங்கள், ஒரு இலட் சம் மக்களுக்கு மேல் வாழும் நகரங்களாகவுள்ளன. காலி, நீர்கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நான்கு நகரங்கள் 50 ஆயிரம் மக்களுக்கு மேல் வாழும் நகரங்களாகும். 25 ஆயிரம் மக்களுக்கு மேல் வாழ்கின்ற நகரங்களாக மாத்தறை, அனுராதபுரம், பதுளை, களுத்துறை, மாத்தளை, இரத்தினபுரி, குருநாகல், சிலாபம், புத்தளம் ஆகியன விளங்கு கின்றன. கேகாலை, மன்னார், வவுனியா, அம்பாந்தோட்டை என்பன 10 000 மக்களுக்கு மேல் வாழும் நகர்களாக அமைந்துள்ளன.
இலங்கையின் பிரதான நகரங்களின் குடித்தொகை - 1981-1990
(000)
நகர் 1981 1990 கொழும்பு 590 65 தெகிவளை-கல்கிசை 超绝 196 யாழ்ப்பாணம் 118 129
மொறட்டுவை 135 170
கோட்டை 101 109
கண்டி 98 104
காலி 77 84
நீர்கொழும்பு 6. 64
மட்டக்களப்பு 43 51
திருகோணமலை 45 50
165

Page 85
இரத்தினபுரி 38 46
மாத்தறை 39 41 அனுராதபுரம் 36 37
களுத்துறை 32 ö4
பதுளை 33 32
குருநாகல் 26 28
புத்தளம் 22 27
சிலாபம் 21 26
நுவரெலியா 21 26
வவுனியா 19 2.
D6676O7Int 14 19
கேகாலை 6 18
அம்பாந்தோட்டை 09 III
smgrib: Registrar General Dept. அட்டவணை:16.1
கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, காலி, திருகோணமலை, இரத்தின புரி, அனுராதபுரம், குருநாகல், நுவரெலியா ஆகிய நகரங்களின் நகராக்க வளர்ச்சியை நோக்குவோம்.
16.3.1 கொழும்பு இந்து சமுத்திரத்தின் மத்தியில் கப்பல் போக்குவரத்தின் குவிமையமாகக் கொழும்பு அமைந்திருக்கின்றது. கடந்த முந்நூற்றைம்பது ஆண்டுகளாக அது உலக வர்த்தகத் துறைமுகமாக விளங்கி வருகின்றது.
போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை இருந்தபோது, போர்த்துக்கேயர் கோட்டை இராச்சியத்துக்கு அருகே ஒரு துறைமுகம் தேவையெனக் கண்டு கொழும்பைத் துறைமுகமாக்கிக் கொண்டனர். பின் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தபோது கொழும்புத் துறைமுகம் நன்கு விருத்தியடைந்தது. பிரித்தானியர் தமது பெருங்கப்பல்கள் தங்குவதற்கு வசதியாகக் கொழும்புத் துறைமுகத்தை விருத்தியாக்கினர். பிரித்தானியரினால் இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டதும், தாய்நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால் கொழும்பு துறைமுகத்தை விரிவாக்கினர். இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரும் கொழும்புத் துறைமுகத்தின் முக்கியத்துவம் குறையவில்லை; அதற்கு மாறாக அதிகரித்ததெனலாம்.
166

இயற்கையாகக் கொழும்பில் துறைமுக வசதிகளில்லை. அதனால், மூன்று பெரும் அணைகள் கட்டித்துறைமுகத்தினுள் கப்பல்கள் பாதுகாப்பா கத் தங்குவதற்கு வசதிகள் செய்துள்ளனர். புகைக்கப்பல்கள் தங்கிய காலத்தி லிருந்து, எண்ணெய்க் கப்பல், விரைந்தபடி செல்லுங் கப்பல்கள், முறைக் கப்பல்கள், முதலிய பெருங்கப்பல்கள் தங்கவேண்டிய காலம் ஏற்பட்ட தால், அவற்றிற்கு இணங்கக் கொழும்புத் துறைமுகம் விரிவும், விருத்தியும் அடைந்துள்ளது. இத்துறைமுகத்தின் பரப்பளவு 640 ஏக்கர்களாகும்.
ஒரே நேரத்தில் ஏறக்குறைய 40 கப்பல்கள் தங்கமுடியும். பொருட்களை ஏற்றுவதற்கும, இறக்குவதற்கும் வசதியாக இறங்குதுறைகளும், பொருட் களைச் சேமித்து வைப்பதற்குச் சேமிப்பு நிலையங்களும் இலங்கையின் ஏனைய துறைமுகங்களிலில்லாதவளவு இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு துறைமுகத்தின் விருத்தியும், முக்கியத்துவமும் அத்துறைமுகத்தின் பின்னணி நிலத்தினைப் பொறுத்துமுள்ளன. கொழும்புத் துறைமுகத்தின் பின்னணி நிலம் வளம் பொருந்தியதாக இருக்கின்றது. தேயிலை, றப்பர், தெங்குப் பொருட்களின் ஏற்றுமதியிலேயே இலங்கையின் பொருளாதாரம் தங்கியிருப்பதனால், கொழும்புத் துறைமுகம் முக்கியமாக விளங்குகின்றது. பெருந்தோட்டங்களையும் கொழும்பையும் இணைத்து இருப்புப் பாதை களும், வீதிகளும் நன்கு அமைந்துள்ளன. அதனால் கொழும்புத் துறைமுகத் திற்கு இலகுவில் ஏற்றுமதிப் பொருட்களைக் கொண்டுவர முடிகின்றது. இலங்கையின் மொத்த ஏற்றுமதி, இறக்குமதியில் ஏறக்குறைய 65% கொழும்புத் துறைமுகத்தினூடாகவே நடைபெற்று வருகின்றது. மேலும் சுயெஸ் கால்வாயூடாக வரும் கப்பல்களும், நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வரும் கப்பல்களும். மலாக்காத் தொடுகடல் ஊடாக வரும் கப்பல்களும் கொழும்புத்துறைமுகத்தில் ஏற்றவும், இறக்கவும், நீர் பெறவும், எரிபொருள் பெறவும் தங்கிச் செல்கின்றன. இத்தகைய காரணங்களால் கொழும்பு, இலங்கையின் பிரதான துறைமுகமாக மதிப்பிடப்பட்டு வருகின்றது.
கொழும்பே இலங்கையின் தலைநகரமாக விளங்குகின்றது. 15ஆம் நூற்றாண்டில் இருந்து இலங்கையில் வர்த்தக மையமாக விளங்கிவரும் கொழும்பு, தனது வர்த்தக முக்கியத்துவத்தை இன்றுவரை இழந்து விடவில்லை. இலங்கையின் முக்கிய வர்த்தகப் பயிர்களான தேயிலை, றப்பர், தெங்குப் பொருட்கள் என்பனவற்றின் ஏற்றுமதியும், உணவுப் பொருட்கள், நெசவுப் பொருட்கள், இயந்திரப் பொருட்கள் முதலியன வற்றின் இறக்குமதியும் கொழும்பிலேயே நடைபெறுகின்றது. அதனால், இலங்கையின் ஏனைய பாகங்களிலுள்ள வர்த்தகர்கள் தமக்குத் தேவையான
பொருட்களைக் கொழும்பிலிருந்தே பெற்றுக்கொள்கின்றனர்.
கொழும்பு நகரம் வர்த்தகமையம் மட்டுமல்ல: போக்குவரத்து மையமும் கூட இலங்கையின் ஒவ்வொரு பகுதியும் கொழும்பினோடு 167

Page 86
இணைக்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம், திருகோணமலை, மலைநாடு என்பன எல்லாம் இருப்புப் பாதைகளினாலும், வீதிகளினாலும் தொடுக்கப் பட்டிருக்கின்றன.
இலங்கையின் போக்குவரத்து மையமாகவும் தலைநகரமாகவும் விளங்குவதனால்தான், கொழும்பு இலங்கையின் நிர்வாக மையமாகவும் விளங்கி வருகிறது. இராணுவம், பொலீஸ் என்பனவற்றின் தலைமைத் தளங்களும் இங்கேயே உள்ளன. தபால், கல்வி முதலியனவற்றின் நிர்வாகத் தலைமைப் பீடங்கள் கொழும்பிலேயே உள்ளன.
இலங்கையின் பிரதான கைத்தொழில்கள் பல கொழும்பு நகரிலும், அதனைச் சூழ்ந்துள்ள பிரதேசங்களிலும் காணப்படுகின்றன. புதிதாக ஆரம்பமாகின்ற கைத்தொழில்களில் பெரும்பாலானவை கொழும்பு நகரத்திலேயே ஆரம்பிக்கப்படுகின்றன. கொழும்பு படிப்படியாகக் கைத்தொழில் நகரமாக வளர்ந்து வருகிறது. கொழும்பு நகரில் பலவின, பல மொழி, பலமத மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் வர்த்தகர்களாகவும், கைத் தொழில் நிலையங்களில் வேலைசெய்பவர்களாகவும், அரசாங்க நிர்வாக உத்தியோகத்தர்களாகவும் உள்ளனர். மேலும், நாளுக்குநாள் சுற்றுப்புறங் களிலிருந்து மக்கள் இந்நகரிற்கு வந்துசெல்கின்றனர். அத்தோடு யாத்திரீகர் கள் நாளாந்தம் இங்கு பிற நாடுகளிலிருந்து வந்து செல்கின்றனர்.
16.3.2. யாழ்ப்பாண நகரம் வட மாகாணத்தின் தலைநகரமாக விளங்கும் யாழ்ப்பாணம் இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிர்வாக அமையமாகவும் இது விளங்குகின்றது.
இலங்கையின் எப்பாகத்திலும் இல்லாதளவு போக்குவரத்து வசதிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டிலே உள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்குகளும் வீதிகளினால் ஒன்றினோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாண நகரத்தை எடுத்துப்பார்க்கில், இங்கு வீதிகள் போதியளவு அகலமானவையாக இல்லாதிருப்பினும், போதி யளவு வீதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உள்நாட்டுப் போக்குவரத்து நன்கு அமைந்திருப்பது மாத்திரமன்றி, இலங்கையின் ஏனைய பாகங் களோடும் நன்கு இணைக்கப்பட்டிருக்கின்றது. இருப்புப் பாதையினால் கொழும்பினோடு நேரடியாக யாழ்ப்பாணம் தொடுக்கப்பட்டிருக்கின்றது. வீதிகளினால் இலங்கையின் ஒவ்வொரு பாகங்களும் யாழ்ப்பாணத்தோடு தொடர்பு கொண்டுள்ளன.
16ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண நகரம் கோட்டையைச் சுற்றியமைந் திருந்தது. அவ்வேளை சிறு நகர மையங்கள் காணப்பட்டன. பின்னர் படிப்படியாக வடக்காயும் கிழக்காயும் நகரம் விரிவடைந்துள்ளது.
168 W

யாழ்ப்பாணக் குடாநாட்டின் வர்த்தக மையமாக யாழ்ப்பாண நகரம் விளங்குகின்றது. கொழும்பிலிருந்து கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் யாழ்ப்பாண நகரில் விற்பனையாகின்றன: குடாநாட்டு மக்கள் இங்கேயே வந்து வாங்கிச் செல்கின்றனர். உள்நாட்டுப் பொருட்களுக்கும் யாழ்ப்பாண நகரம் சிறந்ததோர் சந்தையாக விளங்குகின்றது.
ஆஸ்பத்திரி, தபால்கந்தோர், புகையிரத நிலையம், பாடசாலைகள், பல்கலைக்கழகம் என்பன யாழ்ப்பாண நகரில் சிறப்பாக அமைந்திருக்கின் றன. தபால் கந்தோர், புகையிரத நிலையம் என்பன புதிதாக நவீன முறையில் கட்டப்பட்டிருக்கின்றன. இலங்கையிலேயே சிறந்த சில பாடசாலைகள் யாழ்ப்பாண நகரத்திலேயே உள்ளன.
யாழ்ப்பாண நகரில் இப்போது பல கைத்தொழிற்சாலைகள் உருவாகி யுள்ளன. பெனியன் தொழிற்சாலை, சவர்க்காரத் தொழிற்சாலை, பிஸ்கட், இனிப்புத் தொழிற்சாலை, பழைய ரயரைப் புதுப்பிக்கும் தொழிற்சாலை எனப் பலவுள்ளன.
கொழும்பு நகரைப் போன்று யாழ்ப்பாணத்தில், பலவின, பல மொழி, பலமத மக்கள் வாழவில்லை. தமிழரே 99 வீதம் வாழ்கின்றனர். வர்ததக நிலையங்களில் அதிகமானவை தமிழ் வியாபாரிகளுக்குச் சொந்தமானவை யாகவுள்ளன. இன்று யாழ்ப்பாண நகரத்தில் 129 000 மக்களுக்குமேல் வாழ்கின்றனர்.
யாழ்ப்பாண நகரம் இன்னும் நன்றாக விரிவடைய முடியும். கொழும்பு நகரம் கிழக்கே விரிவடைய வெள்ளம் தடையாகவும், கண்டி நகரம் விரிவடைய மலைகளும், பள்ளத்தாக்குகளும் தடையாக இருப்பனபோல யாழ்ப்பாண நகரம் விரிவடையத் தடைகள் எவையுமில்லை. யாழ்ப்பாண நகரம் வடக்கேயும், கிழக்கேயும் போதியளவு விரிவடைய இடமுண்டு.
16.3.3 கண்ழ
இலங்கையின் வரலாற்றுப் புகழ்பெற்ற நகரம் கண்டியாகும். இது பழைய தலைநகர்களில் ஒன்றாக விளங்கியிருக்கின்றது. மலைகளினாலும், பள்ளத் தாக்குகளினாலும் பாதுகாக்கப்பட்ட நகராகக் கண்டி இருந்ததனாலேயே மலைநாட்டை ஆண்ட மன்னர்கள் கண்டியைத் தலைநகராகக் கொண்டிருந் தார்கள். இயற்கை அரண் கொண்ட நகராகக் கண்டி விளங்கியபடியினாற் றான், இலங்கை முழுவதையும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரமுடிந்த போர்த்துக்கேயராலும் ஒல்லாந்தராலும் இந்நகரைக் கைப்பற்ற முடிய வில்லை.
கண்டி நகரம் மகாவலி கங்கையில் வடவளைவினுள் அமைந்துள்ளது. கட்டுகஸ்தோட்டை தொடக்கம் பேராதனை வரை மகாவலி கங்கை
169

Page 87
வளைவினுள் கண்டி நகர் அமைந்திருக்கின்றது. 104 000 மக்களுக்கு மேல் இங்கு வாழ்கின்றனர். சிங்கள மக்கள் கண்டி நகரை மகநுவர என்று
அழைக்கின்றனர்.
கண்டி இலங்கையின் புனித நகரமாக விளங்குகின்றது. இது பெளத்த மக்களின் வழிபாட்டிற்குரிய நகரமாகும். தலதா மாளிகை எனும் புத்த தந்ததாது உள்ள பெளத்த கோவில் கண்டி நகரிலுள்ள ஏரியின் கரையில் அமைந்திருக்கின்றது. பெரஹரா எனும் திருவிழா வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்புனித நகரை நாடி நாளாந்தம் நூற்றுக் கணக்கான மக்கள் வருகின்றார்கள்.
பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் கண்டி நகர் மலைநாட்டின் ஏனைய பகுதிகளோடும், இலங்கையின் ஏனைய பகுதிகளோடும் முக்கிய மாகக் கொழும்பினோடும் போக்குவரத்துப் பாதைகளினால் இணைக்கப் பட்டது. மலை நாட்டின் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையின் விருத்தியே, கண்டி நகர் மலைநாட்டின் ஏனைய பகுதிகளோடும், கொழும்பினோடும் இணைக்கப்பட முக்கிய காரணமாகும். கண்டி போக்குவரத்துப் பாதை களினால் இணைக்கப்பட்டதும் இதன் முக்கியத்துவம் அதிகரித்தது.
கண்டி நகர் யாத்திரிகர்களைக் கவரும் இயற்கை அழகு நிறைந்த நகராக உள்ளது. இலங்கையின் பிரதான நகர்களில் அழகு நிறைந்தது கண்டி நகரே என்பதில் சந்தேகமில்லை. மகாவலிகங்கையின் வளைவினுள், அழகிய ஏரி ஒன்றின் அருகே கண்டி நகர் அமைந்துள்ளது. கண்டி நகரின் இயற்கை அழகே யாத்திரிகர்களைக் கவர்ந்து, கண்டியை நாடி வர வைக்கின்றது.
மலைநாட்டின் மிகப் பெரிய வர்த்தக நகரமாக இது விளங்குகின்றது. பலவகையான பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக மையமாக விளங்குவதால், இந்நகரத்திற்குச் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் வந்து போன்றனர். இலங்கையின் சிறந்த சந்தைக் கட்டிடம் இங்கேயே உள்ளது.
கண்டி நகரத்தில் கைத்தொழில்கள் சில நடைபெறுகின்றன. பித்தளை, வெள்ளி, சிற்ப வேலைகள் என்பன இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. மரம் வெட்டிப் பலகையாக்கி விற்கும். தொழில் நன்கு விருத்தியடைந்திருக் கின்றது. சவர்க்காரம், பிஸ்கட் செய்தல், பழைய ரயரைப் புதிதாக்கல் எனும் தொழில்கள் விருத்தியடைந்திருக்கின்றன. செங்கட்டித் தொழில் எங்கும் பரந்து காணப்படுகின்றது. *
கண்டி நகரின் முக்கியத்துவத்திற்கு இன்னோர் காரணம் இருக்கிறது. ஆசியாவிலேயே சிறந்த இயற்கைச்சூழலில் நிறுவப்பட்டிருக்கும் பல்கலைக் கழகம் எனப் போற்றப்படும் இலங்கைப் பல்கலைக்கழகம் கண்டி நகரில் இருந்து மூன்று மைல்கள் தூரத்தில் பேராதனையில் அமைக்கப்பட்டி ருக்கின்றது. இதுவும் கண்டியின் சிறப்புக்குக் காரணமாகும்.
170

6.3.4 d5sT66
கொழும்புத் துறைமுகம் இலங்கையின் பிரதான துறைமுகமாக முக்கியத் துவம் பெறுவதற்கு முன்னர், காலியே இலங்கையின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. வரலாற்றுக் காலத்தில் அராபிய வணிகர்களும், சீன வர்த்தகர்களும் இத்துறைமுகத்திற்கூடாக வர்த்தகம் செய்திருக்கின்றனர். இந்நிலைமை ஓரளவு பிரித்தானியர் இலங்கையில் ஆட்சி செலுத்தத் தொடங்குமட்டும் இருந்தது. ஆனால் பிரித்தானியரது காலத்தில் காலித் துறைமுகம் கவனிப்பாரற்றுக் கைவிடப்பட்டது.
காலித்துறைமுகத்தினூடாகத் தேங்காய் நெய், கயறு, சித்திரநெல்லாப் புல் நெய், காரீயம், வாசனைத் திரவியங்கள் என்பன ஏற்றுமதி செய்யப் பட்டிருக் கின்றன. எனினும் பெருந்தோட்டப் பயிர்செய்கையின் விருத்தி, காலித் துறைமுகத்தின் விருத்தியின்மையாக அமைந்தது.
ஏனெனில், பெருந்தோட்டங்கள் யாவும் கொழும்புடன்தான் இருப்புப் பாதைகளினாலும், வீதிகளினாலும் தொடுக்கப்பட்டிருந்தன. மேலும், பெருந்தோட்டங்களுள்ள மலைநாட்டிற்கும் காலிக்கும் வீதிகள் அமைப்ப திலும், மலைநாட்டிற்கும், கொழும்பிற்கும் வீதிகள் அமைப்பது இட விளக்க வியலின்படி இலகுவானதாகவும், பொருளியலின்படி மல்வானதாகவும் இருந்தது. அதனால், காலி தன் முக்கியத்துவத்தை இழந்தது. சுருக்கமாகக் கூறில் கொழும்புத் துறைமுகத்தின் அபிவிருத்தி, காலித் துறைமுகத்தின் விருத்தியைப் பாதித்தது எனலாம்.
அண்மைக் காலத்தில் காலித் துறைமுகத்தின் விருத்தியில் அரசாங்கம் கூடிய கவனம் எடுத்து வருகின்றது. கப்பல்துறை மேடைகளும் பாதுகாப்பு அணைகளும் கட்டப்படுகின்றன. கொழும்பில் இடநெருக்கடி நிலவு வதால், காலித் துறைமுகத்திற்கும் கப்பல்களை அனுப்ப முடியும். மேலும் காலியைத் தக்கதோர் மீன்பிடித் துறைமுகமாக்குவதற்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
16.3.5 திருகோணமலை திருகோணமலை ஓர் இயற்கைத் துறைமுகமாகும். கொட்டியாரக் குடா வினுள் இத்துறைமுகம் அமைந்துள்ளது. இத்துறைமுகம் ஆண்டு முழுவதும் காற்றின் தாக்கத்திலிருந்து, கப்பல்கள் பாதுகாப்பாகத் தங்க வசதியுள்ளதாக அமைந்துள்ளது.
இவற்றினாலேயே இலங்கையைத் தமதாதிக்கத்தில் வைத்திருந்த வர்கள் திருகோணமலையைத் தமது படைத்தளக் கேந்திரமாக வைத்திருந் துள்ளார்கள். பிரித்தானியர் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்குத் திருகோணமலையின் இராணுவ முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.
17

Page 88
அதனால்தான் இலங்கை தனது சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்பும், பிரித்தானியர் திருகோணமலையில் தமது படைத்தளத்தை வைத்திருந்திருக்கிறார்கள்.
திருகோணமலைத் துறைமுகம் நன்கு அபிவிருத்தியடைந்திருக்க வேண்டும். ஆனால், அதன் அபிவிருத்திக்குத் தடையாக சில ஏதுக்களுள் ளன. இத்துறைமுகத்தின் பின்னணி நிலம் செழிப்பு வாய்ந்ததாக இல்லை. பின்னணி நிலத்தில் ஏற்படுகின்ற வெள்ளம். சதுப்புநிலங்கள் என்பன இதன் வளர்ச்சிக்குக் தடையாகவுள்ளன. இன்று வடக்கு கிழக்கு மாகாணத் தலைநகரமாக மாறியுள்ளதால் விருத்தி துரிதப்படும் என எதிர்பார்க்கலாம்.
16.3.6 இரத்தினபுரி தென்மேற் பிரதேசத்தில், உள்நாட்டில் அமைந்துள்ள நகர்களுள் இரத்தின புரி மிக முக்கியமானது. இரத்தினபுரியின் பெயரே அதன் சிறப்பினை எடுத்து விளக்குகின்றது. இரத்தினபுரி என்றால் இரத்தினங்களுள்ள நகர் எனும் பொருள்படும். இரத்தினபுரி நகர் இரத்தின அகழ்தலோடு விருத்தி பெற்றது. போர்த்துக்கேயர் காலத்திலேயே இரத்தினபுரி ஒரு நகராக விருத்தி யடைந்தது. மத்திய மலைநாட்டிற்கும், றக்குவானைத் திரளிற்கும் இடை யில் இரத்தினபுரி அமைந்துள்ளமை இதன் விருத்திக்கு வாய்ப்பாகவுள்ளது. கொழும்பு-அப்புத்தளை பிரதான வீதி இரத்தினபுரியூடாகவே அமைந் துள்ளது. இந்நகர் இருப்புப் பாதையினால் கொழும்பினோடு இணைக்கப் பட்டுள்ளது. றப்பர்த் தோட்டங்கள் இந்நகரைச் சூழ்ந்து விருத்தியுற்றுள் ளன. ஆதலால் இந்நகர் சகலருக்கும் ஒரு சந்தை நகராகவும் விளங்குகின்றது. இம்மாவட்ட நிர்வாக நகராகவும், சந்தை நகராகவும் இரத்தினபுரி விளங்குகின்றது.
16.3.7 அநுராதபுரம்
வரலாற்றுக் காலத்தில், சிறப்புமிக்க ஒரு தலைநகரமாக விளங்கியது அனுராதபுரமாகும். அனுராதபுரம் இன்று வடமத்திய மாகாணத்தின் முக்கிய நகரமாக அமைந்து விளங்குகின்றது. வரலாற்றுப் பெருமையும், போக்குவரத்து விருத்தியும் இந்நகரை இன்று நவீன முறையில் விருத்தி யடைய வைத்துள்ளன. இந்நகர் சூழவர வாவிகளைக் கொண்டுள்ளது. நுவரவீவா, திசவீவா, வசபக்குளம், புலங்குளம் என்பன இந்நகரைச் சூழ உள்ளன. இந்நகரத்தினூடாக மல்வத்து ஒயா பாய்கின்றது. இத்தகைய நீர் வளமே இந்நகரின் எழுச்சிக்குத் தூண்டுகோலாக இருந்துள்ளன. நுவான் வெலிசய, தூபராம, இசுறுமுனியா, இலங்காராம முதலிய வரலாற்றுப் பெருமை கூறும் கட்டிடங்களும், தபால் கந்தோர், கச்சேரி, நீதிமன்றம் முதலிய நவீன நிர்வாகக் கட்டிடங்களும் இங்கு அமைந்துள்ளன. இந்நகரைச் சுற்றி நல்ல பயிர்ச்செய்கை நிலமுளது. கொழும்பிலிருந்து வடக்கே போகும்
172

பிரதான இருப்புப் பாதையின் முக்கியமான ஒரு புகையிரத நிலையமாக அனுராதபுரம் விளங்குகின்றது. மன்னார், புத்தளம், திருகோணமலை, தம்புளை எனும் இடங்களிலிருந்து வரும் பிரதான வீதிகள் யாவும் இங்கு ஒருங்கே இணைகின்றன. இத்தகைய ஒரு மைய நிலையத்தில் அனுராதபுரம் அமைந்து விளங்குகின்றது.
16.3.8 குருநாகல் வரலாற்றில் புகழ்பெற்ற பிறிதொரு நகர் தென்மேல் பிரதேசத்திலுள்ள குருநாகலாகும். இந்நகரின் வளர்ச்சி உண்மையில் இதன் நிலையத்தி னாலேயே ஏற்பட்டது. இந்நகரை அடுத்து அமைந்துள்ள குருநாகல், இப்பகல, எத்துகல எனும் பாறைத்தொடர்கள் இந்நகருக்குத் தக்க அரணாக அமைந்தபடியினால் இது நகராக விருத்தியுற்றது.
இந்நகருக்கு வடக்கேயுள்ள குளம் ஒன்று இந்நகருக்குத் தேவையான நீரை வழங்குகின்றது. அரண் கருதி உருவான சிகிரியா, யாப்பஹஜூவை போன்ற பழைய நகர்கள் இன்று தம் முக்கியத்துவம் இழந்தது போன்று குருநாகலும் தன் நிலை குன்றியிருக்கும். ஆனால், இலங்கையின் போக்கு வரத்து மையங்களுள் ஒன்றாகக் குருநாகல் அமைந்ததால்தர்ன் இது வளர்ச்சி
и јDDgil.
புத்தளம், நீர்கொழும்பு கொழும்பு, கண்டி, தம்புளை அனுராதபுரம் என்னுமிடங்களில் இருந்து வரும் பிரதான வீதிகள் இங்கு ஒருங்குகின்றன. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் இருப்புப் பாதையில் பிரதான ஒரு நிலையமாகவும் குருநாகலே உள்ளது. இம் மாவட்டத்தின் சுற்றுப் புறப் பகுதிகளுக்குக் குருநாகலே பிரதான சந்தை நகராகவுள்ளது. வடமேல் மாகாணத்தின் நிர்வாக மையமாக விளங்கும் குருநாகல் நகரைச் சூழ்ந்து, பயிர்ச்செய்கையும் விருத்தியுற்று விளங்குகின்றது.
16.3.9 நுவரெலியா மத்திய மலைநாட்டில் அமைந்தீள்ள நுவரெலியா நகரம், அதனது காலநிலைச் சிறப்புக் காரணம்ாகவே விருத்தியடைந்தது எனலாம். ஐரோப்பியர் வாழ்வதற்கு விரும்பும் குளிரான காலநிலையை இது கொண்டிருக்கின்றது. சுகவாச நகரமாக வளர்ச்சியுற்றுள்ளது. நானுஒயா கிளை நதிக்கு வடக்கே அமைந்துள்ள இந்நகர் பிரித்தானியரது காலத்திலேயே இன்றைய நகரமாக உருவாகியது.
நுவரெலியாவின் காலநிலைச் சிறப்போடு இந்நகரைச் சுற்றி தேயிலைத் தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதும் இதன் முக்கியத்துவம் கூடியது. சுற்றுப்புறப் பகுதி மக்களதும், தோட்டத் தொழிலாளர்களதும் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நகர் நுவரெலியாவாகும். சுற்றிவர
173

Page 89
மலைகளைக் கொண்டு இயற்கை எழிலோடு இந்நகர் விளங்குவதும் இங்கு அமைந்துள்ள சிறந்ததோர் ஏரியும், குதிரைப் பந்தயத் திடலும், நல்ல பூங்காவும், உள்நாட்டு வெளிநாட்டு மக்களை கவர்ந்து இழுக்கின்றது. அம்மாவட்டத்தில் நிர்வாக நீதிபரிபாலன நகரமாகவும் நுவரெலியா விளங்குகின்றது. கம்பளையிலிருந்தும், நானுஒயாவிலிருந்தும், வெலிமடை யிலிருந்தும், உடப்புசலாவையிலிருந்தும் வருகின்ற பிரதான வீதிகள் நான்கு நுவரெலியாவில் இணைகின்றன. மலைநாடாகவிருப்பினும் நுவரெலியா, இலங்கையின் எல்லாப் பகுதிகளோடும் கடினமின்றித் தொடர்புகொள்ள முடிகின்றது.
16.4 நகர அபிவிருத்தி
கொழும்புக்கு வெளியே நகரங்களை அபிவிருத்தி செய்வதன் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. மிகவும் பொருத்தமான இரண்டாம் தர நகரங்களை எதிர்கால அபிவிருத்திக்காக தெரிவு செய்தல், விரிவாக வடிவமைத்தல் என்பனவற்றிற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபை, நகர உள்ளூர் அதிகார சபைகள் என்பன நிறுவப்பட்டுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) உதவியும் பெறப்பட்டுள்ளது. உத்தேச இரண்டாந்தர நகர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்காக காலி, இரத்தினபுரி, குருநாகல், திருகோணமலை, நுவரெலியா ஆகிய ஐந்து பிரதான நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை விட பதினெட்டு சிறிய நகரங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இச் செயற்திட்டத்தின் மொத்தச் செலவு 44.2 மில்லியன் டொலரென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நகரங்களின் உட் கட்டமைப்பு வசதிகளின் சீர்திருத்தம், இடங்களைத் திருத்துதல், திட்ட மிடல், தொடர்பாடல் வசதிகள், வடிகால் வசதிகள் என்பனவற்றை சீர் செய்தல் என்பன நகர அபிவிருத்தியின் பிரதான செயற்பாடுகளாகவுள்ள்ன.
74

பகுதி : நான்கு
இலங்கையின்
பொருளாதார நடவடிக்கைகள்

Page 90

17
இலங்கை ஒரு பயிர்ச்செய்கை நாடாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பு 6 569 331 ஹெக்டேயர்களாகும். இதில் ஏறத்தாழ 2008 728 ஹெட்டேயர்கள் பிரதேசமே பயிர்ச்செய்கைக்குட்பட்டுள்ளது. இது மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ 31% ஆகும். இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் பயிர்ச்செய்கை முக்கியவிடத்தைப் பெறுகின்றது. இதில் உணவுப் பயிர்ச்செய்கையும், பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையும்
முக்கிய இருவகைகளாகும்.
உணவுப் பயிர்ச்செய்கை சுயதேவைக்குரியது. இதில் நெல், குரக்கன், சோளம், எள், வெங்காயம், மிஸ்தாய், மரவள்ளி, வாழை, தக்காளி, வத்தாளை, கரும்பு, கோப்பி, புகையிலை, பருத்தி, நிலக்கடலை முதலான பயிர்கள் அடங்குகின்றன. பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை வர்த்தகத்துக்கு உரியதாகும். இதில் தேயிலை, இறப்பர், தென்னை என்பன மிக முக்கிய மான பயிர் வகைகளாகும்.
177

Page 91
பயிர்ச்செய்கைக்குட்பட்ட நிலப்பரப்பின் நிலப் பயன்பாடு
நிலப்பயன்பாடு பரப்பு (ஹெக்) சதவீதம் 1. பெருந்தோட்டப் பயிர்கள்
தேயிலை, றப்பர், தென்னை 798 103 30.7 2. ஏனைய நிரந்தரப் பயிர்கள் 176 500 8.8 3. நெல் 556 982 27.7
4. பருவப் பயிர்கள் 195 0.48 9.7 5. காட்டு நிலம் 54 129 2.7 6. மேய்ச்சல் நிலம் 20129 1.0 7. பயிர் செய்யக்கூடிய ஆனால்
பயிரிடப்படாத நிலம் 91 648 4.6 8. வீதிகள், கட்டிடங்கள்
கட்டமைப்பு நிலம் 75 416 3.7 9. தரிசு நிலம் 40 805 2.1
2008 728 100.0
Source: Census of Agriculture -1982) அட்டவணை: 171
17.1 நெற்செய்கை இலங்கை மக்களின் பொது உணவாக நெல் விளங்குகின்றது. நமது தானிய நுகர்வில் 75% அரிசியாகும். இலங்கையில் பயிரிடப்படும் பயிர்களின் பரப்பளவில் நெல் அதிக பரப்பை அடக்கியுள்ளது. இலங்கையிலின்று காடு வெட்டப்பட்டு நெல் வயல்களாக ஏறத்தாழ 758 940 ஹெக்ட்ேயர் பரப்புள்ளது. இதில் 642 000 ஹெட்டேயர் பெரும் போகத்திலும், 333 000 ஹெட்டேயர் சிறுபோகத்திலும் செய்கை பண்ணப்படுகின்றது. இந்த நெல் வயல்கள் பெரிய நீர்ப்பாசன வயல்களாகவும், சிறிய நீர்ப்பாசன வயல்களாக வும், மானாவாரி வயல்களாகவும் காணப்படுகின்றன.
இலங்கையின் நெல் விளைநிலம் (ஹெட்டேயர்)
GGS) 25 | மொத்தப் பெரும் சிறு
பரப்பு போகம் போகம் பெரிய நீர்ப்பாசனம் 297 830 267 985 167 820 சிறிய நீர்ப்பாசனம் 184 680 15 435 64 910 மானாவாரி 276 430 223 060 100 720 மொத்தம் 758 940 642 420 333 450
அட்டவணை: 172
178

1970ஆம் ஆண்டு 574 328 ஹெக்டேயர் நெல்வயல்கள் இருந்தன. 1999இல் இந்தப் பரப்பளவு 739 047 ஹெக்டேயர்களாக அதிகரித்துள்ளது. குடி யேற்றத் திட்டங்களின் விருத்தியே இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணி
யாகும்.
இலங்கையின் நெல்விளைநிலம் 1970-2000
ஆண்டு மொத்த பெரும்போகம் சிறுபோகம்
நெல்வயல் (ஹெக்) (ஹெக்) (ஹெக்)
1970/71 574 328 464 360 261 489
1975/76 620. 972 464 1.59 259 780
1979/80 658 964 554 000 261 000
1980/81 668 71 565 000 272 000
1981/82 686 746 478 000 267 000 1982/83 798 611 558000 219 000 1983/84 702 363 509 000 377 000
1984/85 705 882 658 000 317 000
1985/86 717 167 555 927 341 140
1986/87 724 605 508 500 273 396
1987/88 727 413 54462& 323 182
1988/89 730 622 468 850 258 108 1989/90 729 953 530 786 325 981 1990/91 732 609 500 509 3.16 138
1999/00 739 047 549 246 345 467
g5 (Tub: Dept. of Census and Statistics (Paddy Statistics) அட்டவணை: 173
நெல் ஒரு பருவ வறட்சியும் ஒரு பருவமழையும் உள்ள பகுதிகளில் பயிராகக் கூடியது. சராசரி 150 செ.மீ மழையும், 26 °C செ. வெப்பநிலையு முள்ள பகுதிகளில் நெல் செய்கை பண்ணப்படும். மழை வீழ்ச்சி குறைந்த பகுதி களில் நீர்ப்பாய்ச்சல் வசதி அவசியமாகும். இலங்கையின் வண்டல் செறிந்த வெள்ளச் சமவெளிகள் நெற் செய்கைக்கு மிகவும் உகந்தனவாக உள்ளன.
179

Page 92
பயிர்ச்செய்ாக
Grü 团 தெ Griffiwr a Eustav [:3றப்பர்
ご
粤
படம் : 171 இலங்கையின் பயிர்ச்செய்கை
தரைத்தோற்றம், மழைவீழ்ச்சி ஆகியவற்றிற்கு இணங்க இலங்கையில் நெல் செய்கை பண்ணப்படுகின்றது. இலங்கையின் தென்மேல் பிரதேசம் ஈரலிப்பான தாழ் நிலமாகும். இப்பிரதேசத்தில் நதிப்பள்ளத்தாக்குகளிலும், சமவெளிகளிலும் நெல் செய்கை பண்ணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் மழையை நம்பியே நெல் பயிரிடப்படுகின்றது. பெரும்போம், சிறுபோகம் ஆகிய இரண்டு போகங்களும் இங்கு நெல் செய்கை பண்ணப்படுகின்றது. சிலவேளைகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு இப்பிரதேச நெற் செய்கையைப் பாதிக்கின்றது.
18O
 
 
 
 
 
 

படம் : 172இலங்கையில் நெல்
கிளிநொச்சி, மட்டக்களப்பு, அனுராதபுரம், குருநாகல், அம்பாறை, வவுனியா முதலான வரண்ட வ த் தாழ் நிலங்களில் நெற்செய்கை முக்கியம் பெற்றிருக்கின்றது. இப்பிரதேசங்களில் நீர்ப்பாசன உதவியுடன் நெல் விளைவிக்கப்பட்டு வருகின்றது. நீர்ப்பற்றாக்குறையே வரண்ட பிரதேச நெற்செய்கைக்குரிய தடையாகும். மலைநாட்டில் படிமுறைப் பயிர்ச்செய்கை மூலம் நெல் பயிரிடப்படுகின்றது. கண்டியும், பதுளையும் முக்கியமான மாவட்டங்களாகும். மலைச்சரிவுகளில் படிக்கட்டுகள் ஒழுங் காக அமைக்கப்பட்டு பயிரிடப்பட்டு வருகின்றன. இலங்கையின் நெல் உற்பத்தியில் 90% தாழ் நிலங்களிலும், 10% மலைநாட்டிலும் உற்பத்தி யாகின்றது.
18

Page 93
இலங்கையில் எல்லா மாவட்டங்களிலும் நெல் பயிராகின்றது. குருநாகல், அனுராதபுரம், அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங் களில் நெல் அதிகளவில் பயிரிடப்படுகின்றது. அட்டவணை 17.4 ஐ அவதானிக்கில் புலனாகும். நெற்செய்கையில் முதலிடம் பெறும் மாவட்டம் குருநாகல் (79 100 ஹெக்டேயர்) ஆகும். அம்பாறை, பொலநறுவை, அனுராதபுரம் என்பனவும் அதிக பரப்பளவில் நெல் செய்கை பண்ணப்படும் மாவட்டங்களாகும். யாழ்ப்பாணத்தில் 12 500 ஹெக்டேயரிலும், கிளிநொச்சியில் 23 150 ஹெக்டேயரிலும், வவுனியாவில் 19 900 ஹெக்டேயரிலும், முல்லைத் தீவில் 17 170 ஹெக்டேயரிலும், மன்னாரில் 21 800 ஹெக்டேயரிலும் திருகோண மலையில் 46 800 ஹெக்டேயரிலும், மட்டக்களப்பில் 57 340 ஹெக்டேயரிலும் நெற்செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. மிகக் குறைவாக நெல் பயிரிடப்படும் மாவட்டம் நுவரெலியா (7.750 ஹெக்டேயர்) ஆகும்.
17.2 விளைவும் உற்பத்தியும்
கடந்த ஐந்தாண்டுகளுக்கான (1995-1999) சராசரி நெல் விளைச்சலை நோக்கில், ஒரு ஹெக்டேயருக்குரிய விளைச்சல் பெரும் போகத்தில் 3 700 கிலோ கிராமாகவும், சிறுபோகத்தில் 3 600 கிலோ கிராமாகவும் இருக் கின்றது. கடந்த ஐந்தாண்டுகளுக்கான சராசரி உற்பத்தி பெரும்போகத்தில் 1 500 ஆயிரம் மெற்றிக் தொன்களாகவும், சிறுபோகத்தில் 800 ஆயிரம்
மெற்றிக் தொன்களாகவும் உள்ளது.
இலங்கையில் நெற்செய்கைக்கென காடு வெட்டி, கழனியாக்கப்பட்ட நெல் வயல்களில், 88 ஆண்டிற்காண்டு நெல் விளைவிக்கப்படுகின்றது கடும் மழை, வெள்ளம், வறட்சி என்பன காரணமாக ஏறத்தாழ 15% வயல்கள் அறுவடைக்குட்படுவதில்லை. 1980இன் பின் நெற் செய்கையிலேற்பட்ட முன்னேற்றங்கள் மகிழ்ச்சிக்குரியனவாகும். இலங்கைப் பொருளாதாரம், நெல் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் நிலைக்கு வெகு அருகிலுள்ளது. 1991இல் இலங்கையின் உற்பத்தி (பெரும்போகமும் சிறுபோகமும் சேர்த்து) 2 389 ஆயிரம் மெட்ரிக் தொன் ஆகும். இதன்படி இலங்கை தனக்குத் தேவை யான அரிசியில் 90% இன்று உற்பத்தி செய்து கொள்கின்றது. ஆக ஏறத்தாழ 10-15% அரிசியே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப் படுகின்றது. எனவேதான் நெல் உற்பத்தி சுயதேவை மட்டத்தினை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதால், அரிசி ஏற்றுமதிக்கான வாய்ப்புகளுக்கு அதிக ளவு முக்கியத்துவம் வழங்கப்படுவது அவசியமென உணரப்பட்டுள்ளது.
182

இலங்கையின் நெற்செய்கை 1990/91(மாவட்டஅடிப்படையில்) (ஹெக்)
As பெரும் சிறு மொத்தம் on 6) I DfTS i .- f போகம் போகம் இருபோகம்) நி. பரப்பு
கொழும்பு 7 300 6 000 133 000 8 430 கம்பஹா 19 200 12 700 29 900 19 300
களுத்துறை 9 BOO 18 000 37 300 23 470 காலி Ꮽ 20 800 19 000 39 800 24 700
மாத்தறை 20 200 19 000 392 OO 21 370 இரத்தினபுரி I6 350 16 350 32 700 17 700 கேகாலை 11 200 11 000 22 200 II 500
குருநாகல் 67 5OO 43 5OO III 000 79 190 புத்தளம் 13 OO 4 200 17 300 19 900 கண்டி 18 760 14 800 33 560 19 750 மாத்தளை 16 000 4 500 2O 5OO 16 900 நுவரெலியா 7 500 4 210 II 70 7 750
பதுளை 16 060 6 070 22 130 . 17 340
மொனராகலை II 2 OO 4 200 5 400 I3 6ΟΟ யாழ்ப்பாணம் 11 000 11 000 12 500 கிளிநொச்சி 19 000 5 060 24 660 23 150 வவுனியா 15 000 1 OOO 16 000 19 900 முல்லைத்தீவு 13 800 3 OOO 16 800 7 170 மன்னார் 17 500 800 18300 22 850
அனுராதபுரம் 64 440 11 200 75 640 80 210 பொலநறுவா 35 450 29 4OO 64 850. 41 780 திருகோணமலை 3.5 500 II 900 4 7 4 OO 46 800 மட்டக்களப்பு 47 500 11 000 58 580 57.340 அம்பாறை 50 500 || &q_200 81 380 59 590 அம்பாந்தோட்டை 19500 17000 36 500 22450
GGGS)o II 5090 II 040 22 540 I4 580
மகாவலி H'பிரதேசம் 29 550 8 850 38 400 29 800 (கலாவெவ)
'C பிரதேசம் 9 650 9 400 19 O50 9 920
giftgib: Paddy Statistics - Dept. of Census and Statistics.
(குறிப்பு: உடவளவை, மகாவலி'H' பிரதேசம், 'C' பிரதேசம் ஆகிய மூன்றும் இன்று
நெல் ப்படுகின்றன.
நல் மாவட்டங்களாகக் கருதப்படுகின்றன.) அட்டவணை: 174
183

Page 94
7.3 நெல்லில் தன்னிறைவு அடைவதற்கான தடைகள் இலங்கை நெல் உற்பத்தியில் தன்னிறைவடைவதைப் பல காரணிகள் தடை செய்து வந்துள்ளன. அவை:
1. வரலாற்றுக் காரணிகள்
2. நிலப்பிரச்சினைகள்
3. செய்கைமுறைப் பிரச்சினைகள்
4. நீர்ப்பாசன வசதியின்மை
5. வறியநிலை
1. வரலாற்றுக் காரணிகள் இலங்கையின் நெற்செய்கை விருத்தியைப் பாதித் திருக்கின்றன. புராதன இலங்கை தன்னிறைவுப் பொருளாதார நாடாக விளங்கியது. நெல்லில் தன்னிறைவு அடைந்திருந்தது. காலத்திற்குக் காலம் நிகழ்ந்த தென்னிந்திய படையெடுப்புகள் வரண்ட பிரதேசத்தில் காணப்பட்ட நீர்ப்பாசனக் குளங்களை அழித்துவிட்டன. அதனால் நெற்செய்கை பாதிப்புற்றதுடன், மலேரிய போன்ற கொடிய நோய்களும் பரவின. அதனால் மக்கள் வரண்ட பிரதேசங்களைக் கைவிட்டுத் தென் புலம் பெயர நேர்ந்தது. மேலைத்தேசத்தவரின் வருகை நெற் செய்கை யைப் பெரிதும் பாதித்தது. பிரித்தானியர்கள் தங்கள் தாய்நாட்டிற்குத் தேவையான தேயிலை, இறப்பர் முதலான பெருந்தோட்டப் பயிர்களில் கவனம் செலுத்தினர். சுதேசப் பயிர்ச் செய்கையில் கவனம் செலுத்த வில்லை. அத்துடன் மக்களின் கவனம் பெருந் தோட்டப் பயிர்ச்செய்கை களில் நிலைக்க வேண்டும் என்பதற்காகப் பர்மா, சீயம் முதலிய நாடுகளிலிருந்து மலிவாக அரிசியை இலங்கையில் இறக்குமதி செய்தும் விட்டனர். எனவே நெற்செய்கை பாதிப்புற்றது. A
2. இலங்கையில் நிலவுகின்ற நிலப் பிரச்சினைகளும் நெல்லில் தன்னிறைவு அடைவதைத் தடை செய்கின்றன. நிலப் பற்றாக்குறை இங்குள்ளது. (i) இலங்கையின் ஈரவலயத்தில் அதிக குடித்தொகை காரணமாக நெல் விளைநிலங்களுக்குப் பற்றக்குறையுள்ளது. (i) இலங்கையின் வரண்ட வலயத்தில் நீர்ப்பாசன வசதிகொண்ட விளைநிலங்கள் குறைவாக இருப்பதனால் நிலப்பற்றாக்குறை நிலவுகின்றது. மேலும் இலங்கையின் நெல் விளைநிலங்கள் சிறியளவாகவுள்ளன. துண்டாடப்பட்டிருகின்றன. 65% விளை நிலங்கள் இரண்டரை ஏக்கர் பரப்பிற்குக் குறைவான நிலத்துண்டுகளாகும். ஏறத்தாழ 35 விளை நிலங்கள் ஒரு ஏக்கருக்குக் குறைவான நிலத்துண்டுகளாகும். 16% விளை நிலமே 5 ஏக்கர்களுக்கும் அதிகமான விளை நிலத்துண்டுகளாகும் (ii) சிறிய விளைநிலங்கள் நவீன பயிர்ச்செய்கை முறைகளுக்குத் தடை விதிக்கின்றன.
184

3. இலங்கையின் நெற்செய்கையில் இன்றும் புராதன செய்கை முறைகளே கூடுதலாகக் கைக்கொள்ளப்பட்டு வருகின்றன. உழுதல், விதைத்தல், அறுவடை, சூடடித்தல் முதலான செயல்கள் பெரிதும் கலப்பை, மண் வெட்டி, மாடுகள், மனிதவலு என்பனவற்றின் துணையுடனேயே நிகழ் கின்றன. டிராக்டர்களின் உபயோகம் அதிகரித்துள்ளது. பசளையிடுதல், கிருமிநாசினி தெளித்தல் என்பன முன்னரிலும் கூடுதலாகக் கைக் கொள்ளப்படுகின்றன.
இன்று செய்கைக்குட்படும் நெல்விளைநிலத்தில் 57% உழவுயந்திர மூலமும், 43% மாட்டுழவு, மண்வெட்டி உழவு மூலமும் பண்படுத்தப் படுகின்றன. நாற்று நடுகல், களை பிடுங்கல், பசளையிடுதல் என்பன இலங்கையில் சரிவரக் கைக்கொள்ளப்படவில்லை என்றே கூறவேண்டும். மொத்த நெல் வயல்களில் ஆக 45வீதமே நாற்று நடுதலிற்கு உள்ளாகின் றது. மிகுதி சேற்று விதைப்புக்கும், பெரும்பகுதி புழுதி விதைப்புக்கும் உட்படுகின்றன. 57% வயல்களிலேயே இரசாயனக் களை எடுத்தல் நடைபெறுகின்றது.
4. இலங்கையின் நெற்செய்கை தன்னிறைவு அடையாமல் தடுக்கும் பிரதான காரணி நீர்ப்பாசன வசதிக் குறைவாகும். வரண்ட பிரதேசத்தில் ஏராளமான நிலம் நெற்செய்கைக்கு உட்படுத்தக் கூடியதாகவுள்ளது. ஆனால் போதிய நீர்ப்பாசன வசதிகளின்மை அவற்றில் நெற்செய்கையை மேற்கொள்வதைத் தடுக்கின்றது. இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ 2.38 மில்லியன் ஹெக்டேயர்கள் பரப்பில் காடு பரந்துள்ளது. இதில் குறைந்தது 50% நிலம் பயிர்ச்செய்கைக்கு உட்படக்கூடியதாகும். இன்று துரித மகாவலிகங்கைத் திட்டம் மட்டும் நிறைவேறும்போது புதிதாக 3.6 இலட்சம் ஹெக்டேயர் பரப்பிற்குப் பாசனம் கிடைக்க உள்ளது அவ்வேளை இலங்கை நெல்லில் தன்னிறைவு அடைந்துவிடும்.
5. இலங்கை மக்களது வறிய நிலை நெல் உற்பத்தியைப் பாதிக்கின்றது. விவசாயிகள் பெரிதும் வறியவர்களாகவும் கடனாளிகளாகவும் உள்ளனர். அதனால் நெற்செய்கையில் நஜீனகருவிகளையும், தொழில்நுட்பங் களையும் பாவிக்க முடியாதவர்களாயுள்ளனர். ஒரு டிராக்டரை வாங்கு வதற்கு அவர்களிடம் பணமில்லை. வெள்ளத்தினாலோ, வறட்சி யினாலோ நெற்செய்கை பாதிப்படையில் அவர்களால் அந்த நட்டத் தைத் தாங்க முடிவதில்லை. விவசாயிகளில் ஏறத்தாழ 30% விவசாயிகள் நிலவுடைமையற்றவர்களாகவுள்ளனர்.
இத்தகைய காரணிகள் யாவும் இலங்கை நெல்லில் தன்னிறைவு அடைவதை தடுத்துள்ளன. நெற்செய்கையை ஊக்குவிக்க அண்மைக் காலங்களில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
185

Page 95
7.4 நெற்செய்கையை ஊக்குவிக்கமேற்கொள்ளப்பட்ட
நடவழக்கைகள் இலங்கை அரசாங்கம் நெற்செய்கையை ஊக்குவிக்க மேற்கொண்ட பிரதான நடவடிக்கைகளை நோக்குவோம். அவை: 1. நீர்ப்பாய்ச்சல் வசதிகள் நீர்ப்பாசன வசதிகள் விருத்தியடையாமையே நெல் உற்பத்திக் குறைவிற்கு முக்கிய காரணமாகும். அதனால் பழைய நீர்ப்பாசனக் குளங்களும், கால்வாய்களும் திருத்தியமைக்கப்படுவதோடு, புதிதாகவும் அமைக்கப் படுகின்றன. வரண்ட பிரதேசத்தில் நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்படுகின்றன. மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டமான மகாவலி கங்கை அபிவிருத்தித் திட்டம் குறிப்பிடத் தக்கது அதனால் 3.6 இலட்சம் ஹெக்டேயர் புதிய விளைநிலத்துக்கு நீர்ப்பாசனம் கிடைக்கும். இன்று பெரிய நீர்ப்பாசனத்தின் கீழ் 297 830 ஹெக்டேயர் பரப்பும், சிறிய நீர்ப்பாசனத்தின் கீழ் 184 680 ஹெக்டேயர் பரப்பும் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன. மானாவாரி யாக 276 940 ஹெக்டேயர் செய்கை பண்ணப்படுகின்றது. இது மொத்த நெல் வயல்களின் பரப்பில் 86% ஆகும்.
2. சீராக்கப்பட்ட விதைகள் நெல் விளைச்சல் குறைவாக இருப்பதற்கு ஒரு காரணம் அதிக விளைச்சலைத் தரக்கூடிய விதைகளைப் பாவியாமையாகும். இன்று அதிக விளைச்சலைப் பெறுவதற்காகச் சீராக்கப்பட்ட விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் சிபார்சு செய்த நெல் வர்க்கங்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏச்4, ஐஆர்8, பிஜி11, பிஜி348, பிஜி346, பிஜி903 முதலான சீராக்கப்பட்ட விதைகள் பயன்படுத்தப் படுகின்றன. இவை ஹெக்டெயருக்கு அதிக விளைச்சலைத் தருகின்றன.
3. நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இன்று பல
தாபனங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன விவசாய ஆய்விற்கும், பயிற்சிக்குமான நிறுவனம், விவசாய அபிவிருத்தித் தாபனம், வர்த்தக வங்கிகள், நெற்சந்தைப்படுத்தும் சபை முதலான தாபனங் கள் கிராம மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் இயங்கி வருகின்றன. இன்று புதிதாக 8 மாகாணங்களிலும் இயங்கி வருகின்ற மாகாண சபைகளும் நெல் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
4. காப்புறுதித் திட்டம் நெல் உற்பத்தி அதிகரிப்பினை ஊக்கப்படுத்துவதற்காக அண்மைக் காலத்தில் நிறுவப்பட்டது காப்புறுதிச் சபையாகும். வறட்சி, வெள்ளம்
186

என்பனவற்றினால் விவசாயம் அழிவுறுகிறது. ஏழை விவசாயியினால் இந்த நட்டத்தைத் தாங்க முடிவதில்லை. அதனால் காப்புறுதி வசதி விவசாயிகளுக்கு 1974 இலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.
5. கடன் வசதி இலங்கை விவசாயிகள் வறியவர்களாகவும், கடனாளிகளாகவும் உள்ளனர். நவீன கருவிகளையோ, போதியளவு பசளை, கிருமி நாசினிகளையோ வாங்கி உபயோகிக்க வசதியற்றவர்களாகவுள்ளனர். எனவேதான் மக்கள் வங்கி, கூட்டுறவு வங்கி, வர்த்தக வங்கி என்பன அண்மையாண்டுகளில் விவசாயி களுக்குக் கடன் வழங்கி வருகின்றன.
6. உத்தரவாத விலைத் திட்டம் இந்த நாட்டு விவசாயிகள் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்கள் சரியான விலையில் விற்கப் படுவதில்லை. சில தனிப்பட்ட வர்த்தகர்களினால் அவர்கள் சுரண்டப் படுகிறார்கள். அதனைத் தீர்க்க அரசாங்கம் உத்தரவாத விலைத் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. விவசாயிகளிடமிருந்து உத்தரவாத விலைக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நெல்லை, நெல் சந்தைப்படுத்தும் சபை வாங்கிக்கொள்கின்றது. எனினும், நெல்லின் கவர்ச்சியான திறந்த சந்தை விலைகள், நெல்லுற்பத்தி அதிகரிப்புக்குத் தூண்டுதலாகவுள்ளன. இன்று ஒரு புசல் நெல்லிற்கான உத்தரவாத விலை ரூபா 70.00 ஆகும்.
7 தொழில்நுட்ப உதவிகள் அண்மைக்காலத்தில் விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப் படுகின்றன. விவசாய அறிஞர்களால் அவர்களுக்குப் போதனைகள் புகட்டப்படுகின்றன. பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சிக்கன நீர்ப் பாய்ச் சல், பயிர் விளைவை அதிகரித்தல், மண் வளம் பேணல் முதலான துறை களில் விவசாயிகளுக்குப் பயிற்சிகள் தரப்படுகின்றன. நாற்று நடுதல், களை பிடுங்கல் முதலான உச்ச விளைவைதிதரும் முறைகளைக் கைக்கொள்ளு மாறு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
நெற்செய்கையில் அண்மைக் காலத்தில் பின்வரும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை:
1. விவசாயிகளுக்கான உரமானியம் நீக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வளமாக் கிச் சந்தையில் இலங்கை உரக் கூட்டுத்தாபனம் ஏறக்குறைய 60% ஐக் கையாளுகின்றது. இன்று வளமாக்கி வர்த்தகத்தைத் தாரளமயமாக்கி யமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தை மக்கள் மயப்படுத்தல் நிகழவுள்ளது.
187

Page 96
2. நெல் சந்தைப்படுத்தல் தற்போது முக்கியமாக தனியார் துறையின் தொழிற்பாடாகவுள்ளது. நெல் சந்தைப்படுத்தும் சபையின் பங்கு நெல் உற்பத்தி மிகையாகவுள்ள மாவட்டங்களில் மட்டுமேயுள்ளது. அதனால் நெற்சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான 217 மேலதிக நெற் களஞ்சியங்களில் 35 களஞ்சியங்கள் விற்கப்பட்டும், 20 குத்தகைக்கு விடப்பட்டுமுள்ளன. வடக்கு கிழக்கிலுள்ள 106 களஞ்சியங்கள் இயங்கா
துள்ளன.
3. சான்று வழங்கப்பட்ட விதைகளினுற்பத்தியும் விநியோகமும் இன்று தனியார் துறையினாலும் கையாளப்படுகின்றன. விதைத் துறையைத் தாராளமயமாக்கும் முயற்சியின் விளைவு இதுவாகும்.
7.5 ஏனைய உணவுப்பயிர்கள் இலங்கையில் நெல்லைவிட வேறு சிறு தானியங்களும், காய்கறிகளும், கிழங்கு வகைகளும் பயிரிடப்பட்டு வருகின்றன. குரக்கன், சோளம், பயறு வகைகள் (பயறு, உழுந்து, சோயா) எள், மிளகாய், வெங்காயம், உருளைக் கிழங்கு, வத்தாளை, மரவள்ளி முதலானவை குறிப்பிடத்தக்க ஏனைய உணவுப்பயிர்களாகும்.
மிளகாய்
இலங்கையில் வருடா வருடம் ஏறத்தாழ 39 000 ஹெக்டேயர் பரப்பில் மிளகாய் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. அதனால் சராசரியாக 35 000 மெற்றிக் தொன் செத்தல் மிளகாய் உற்பத்தியாகின்றது. அனுராத புரம், கலாவெவ (H' பிரதேசம்) குருநாகல், மாத்தளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பொலநறுவை, அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்கள் மிளகாய்ச் செய்கையில் குறிப்பிடத்தக்கன. அனுராதபுரத்தில் 6 500 ஹெக்டேயர் பரப்பில் மானாவாரியாக மிளகாய் செய்கை பண்ணப்படு கின்றது. மிளகாய்ச் செய்கையில் இன்று முக்கியம் பெற்றுவரும் பிரதேசம் கலாவெவாப் பகுதியாகும். இங்கு 6 100 ஹெக்டேயர் பரப்பில், நீர்ப்பாசன உதவியுடன் மிளகாய் செய்கை பண்ணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் 2600 ஹெக்டேயரிலும், கிளிநொச்சியில் 1 400 ஹெக்டேயரிலும் குருநாகலில் 1400 ஹெக்டேயரிலும் நீர்ப்பாசன உதவியுடன் மிளகாய் செய்கை பண்ணப் பட்டு வருகின்றது. குருநாகலில் 2100 ஹெக்டேயரில் மானாவாரியாகவும் மிளகாய் பயிரிடப்படுகின்றது. வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அம்பாறை முதலான மாவட்டங்களிலும் மிளகாய்ச் செய்கை நடைபெற்று
வருகின்றது.
88

வெங்காயம் இலங்கையில் ஏறத்தாழ 10740 ஹெக்டேயர் பரப்பில் வெங்காயம் உற்பத்தி யாகின்றது. இதில் சின்ன வெங்காயம் 6 140 ஹெக்டேயரிலும், பம்பாய் வெங்காயம் 4 600 ஹெக்டேயரிலும் பயிரிடப்படுகின்றன. சராசரியாக 41 000 மெற்றிக் தொன் வெங்காயம் வருடாவருடம் உற்பத்தியாகின்றது. புத்தளம் (1400 ஹெக்.), யாழ்ப்பாணம் (700 ஹெக்.), முல்லைத்தீவு (1 100 ஹெக்.), மட்டக்களப்பு (600 ஹெக்.) ஆகிய மாவட்டங்கள் வெங்காயச் செய்கையில் குறிப்பிடத்தக்கன. இரத்தினபுரி, திருகோணமலை முதலிய மாவட்டங்களிலும் வெங்காயம் உற்பத்தியாகின்றது. மேலும் பம்பாய் வெங்காயம் ஏறத்தாழ 700 ஹெக்டேயரில் இலங்கையில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் (134 ஹெக்.), பொலநறுவை (130 ஹெக்.), கலாவெவ (110 ஹெக்.), மாத்தளை (80 ஹெக்.) ஆகிய பகுதிகள் பம்பாய் வெங்காயச் செய்கையில் குறிப்பிடத்தக்கன.
சோளம் இலங்கை மக்களின் புராதன பயிர்களிலொன்றான சோளம் ஏறத்தாழ 28 800 ஹெக்டேயர் பரப்பில் பயிராகின்றது. அனுராதபுரம் (11 000 ஹெக்.), அம்பாறை (8 000 ஹெக்.), மொனறாகலை (5 000 ஹெக்.), பதுளை (5000 ஹெக்.), மட்டக்களப்பு (3000 ஹெக்.) என்பன முக்கியமான பிரதேசங்களாகும். இவற்றைவிட குருநாகல், மாத்தளை, பொலநறுவை"C" பிரதேசம் என்பனவற்றிலும் கணிசமானவளவு சோளம் பயிர் செய்யப்பட்டு வருகின்றது. சேனை முறையிலும், வீட்டுத் தோட்டங்களிலும் சோளம் பயிரிடப்படுகின்றது. உற்பத்தியாகும் சோளத்தில் 25% கோழித்தீனுக்கு நுகரப்படுகின்றது.
குரக்கன் இலங்கையில் ஏறக்குறைய 7500 ஹெக்டேயர் பரப்பில் குரக்கன் இன்று பயிரிடப்பட்டு வருகின்றது. இதிலிருந்து ஏறத்தாழ 9 600 மெற்றிக் தொன் குரக்கன் உற்பத்தியாகின்றது. குரக்கன் செய்கையில் முதலிடம் பெறும் மாவட்டம் அனுராதபுரமாகும். f 500 ஹெக்டெயர்) மாத்தளை, குருநாகல், பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, பொலநறுவை என்பன ஏனைய குரக்கன் விளைவிக்கும் மாவட்டங்களாகும்.
தட்டைப்பயறு கவ்பீஎனப்படும் தட்டைப்பயறுச் செய்கை, அண்மைக் காலத்தில் இலங்கை யில் முக்கியம் பெற்று வருகின்றது. ஏறத்தாழ 4400 ஹெக்டேயர் பரப்பில், 36 000 மெற்றிக் தொன் உற்பத்தியாகின்றது. குருநாகல் (16 100 ஹெக்.), அம்பாறை (3000ஹெக்.) ஆகிய மாவட்டங்கள், தட்டைப்பயறுச் செய்கை யில் முதன்மையானவை. இவற்றைவிட அம்பாந்தோட்டை, வவுனியா, மொனறாகலை என்பனவும் குறிப்பிடத்தக்கன.
189

Page 97
Լսան)] இலங்கையில் பாசிப்பயறு வருடா வருடம் ஏறத்தாழ 15 340 ஹெக்டேய ரில் பயிரிடப்பட்டு 12 000 மெற்றிக் தொன் உற்பத்தியாகின்றது. பயறு உற்பத்தியில் முதலிடம் பெறும் மாவட்டம் குருநாகல் (14 900 ஹெக்.) ஆகும். அடுத்து புத்தளம் (7 500 ஹெக்.), அம்பாந்தோட்டை (3 500 ஹெக்.), அம்பாறை (1 400 ஹெக்.), அனுராதபுரம் (1 200 ஹெக்.) மொன ராகலை என்பன பாசிப்பயறை உற்பத்திசெய்து வருகின்றன.
G35FTurr gyou6or இலங்கையில் அண்மைக் காலத்தில் முக்கியம்பெறும் புதிய பயிராகச் சோயா அவரை விளங்குகின்றது. புரத உணவாக இது கருதப்படுகின்றது. சோயா பால், சோயா இறைச்சி, சோயா மா, சோயா எண்ணெய் என பல உணவாக இது பயன்கொள்ளப்படுகின்றது. ஏறத்தாழ 14 000 ஹெக்டேயர் பரப்பில், 16 000 மெற்றிக் தொன் சோயா உற்பத்தியாகி வருகின்றது. சோயாச் செய்கையில் முதலிடம் பெறும் அனுராதபுர மாவட்டத்தில் 9000 ஹெக்டேயர் பரப்பில் இது செய்கை பண்ணப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. அதனையடுத்து மாத்தளை மாவட்டம் சோயாச் செய்கையில் முதன்மை பெறுகின்றது.
உழுந்து தமிழ் மக்களது உணவு வகைகளில் உழுந்து முக்கியமாகும். ஏறத்தாழ 24000 ஹெக்டேயர் பரப்பில் உழுந்துச் செய்கை நடைபெற்று வருகின்றது. இப்பரப்பில் 50% நிலப்பரப்பு வவுனியா மாவட்டத்திலுள்ளது. இதனைவிட அனுராதபுரம் (7 500 ஹெக்.), மன்னார் ( 500 ஹெக்.), முல்லைத்தீவு (1200 ஹெக்) என்பனவும் உழுந்துச் செய்கையில் குறிப்பிடத்தக்கன.
நிலக்கடலை இலங்கையில் ஏறக்குறைய 10 250 ஹெக்டேயர் பரப்பில் வருடாவருடம் நிலக்கடலை செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு (2 450 ஹெக்.), புத்தளம் (2 700 ஹெக்.), குருநாகல் (1 850 ஹெக்.), மொன ராகலை (1 800 ஹெக்.), அம்பாறை ஆகிய மாவட்டங்கள் குறிப்பிடத் தக்கன. மட்டக்களப்பு, வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் நிலக்கடலை செய்கை பண்ணப்படுகின்றது.
எள்
இலங்கையில் 10 500 ஹெக்டேயர் பரப்பில் சராசரியாக வருடா வருடம் எள் பயிரிடப்பட்டு வருகின்றது. 3 500 மெற்றிக் தொன் எள் உற்பத்தி யாகின்றது. அனுராதபுரம், குருநாகல் ஆகிய இரு மாவட்டங்களும் எள்
190

செய்கையில் முதன்மையானவை. வவுனியா, மொனறாகலை, புத்தளம், அம்பாந்தோட்டை முதலான மாவட்டங்களிலும் எள் பயிராகின்றது.
cease صes]
Gagsalivau
s Sg uwGâr saw
படம் : 173, யாழ்ப்பாணக் குடாநாட்டின் பயிர்கள்
உருளைக்கிழங்கு இலங்கையில் ஏறக்குறைய 9 300 ஹெக்டேயர் பரப்பில் உருளைக்கிழங்குச் செய்கை நடைபெறுகின்றது. இதில் நுவரெலியா (8 800 ஹெக்.), பதுளை (4 100 ஹெக்.), யாழ்ப்பாணம் (1 250 ஹெக்.) ஆகிய மூன்று மாவட்டங் களும் முதன்மையானவை.
காய்கறி இலங்கையில் எல்லா மாவட்டங்களிலும் காய்கறிச் செய்கை நடைபெற்று வருகின்றது. வருடா வருடம் ஏறத்தாழ 65000 ஹெக்டேயர் பரப்பில் காய்கறிகள் உற்பத்தியாகின்றன. அவரை (73 000 ஹெக்.), கறி மிளகாய் (3 800 ஹெக்.), தக்காளி (2 800 ஹெக்.), கோவா (3 000 ஹெக்.), கரட் (1 300 ஹெக்.), பீற்றுாட் (2 000 ஹெக்.), முள்ளங்கி (3 400 ஹெக்.), லீக்ஸ் (790 ஹெக்.), பயற்றங்காய் (4 200 ஹெக்.), வெண்டி (6 000 ஹெக்.), புடோல் (2 700 ஹெக்), பூசினி (7800 ஹெக்), கத்தரி (8 000 ஹெக்), முதலியன முக்கிய காய்கறிகளாகும்
191

Page 98
இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்கள்
இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை முக்கியமானவிடத்தை வகிக்கின்றது. நமது நாட்டின் அந்நியச் செலாவணி யில் 75% பெருந்தோட்டப் பயிர்களிலிருந்து கிடைக்கின்றது. தேயிலை, றப்பர், தென்னை ஆகிய மூன்று பயிர்களும் நமது நாட்டின் பிரதான பெருந் தோட்டப் பயிர்களாகும். நமது நாட்டின் வர்த்தகப் பயிர்களும் இவையே. இலங்கையில் ஐரோப்பியரின் வருகைக்குப்பின்பே இப்பயிர்கள் ஆரம்பிக்கப் பட்டன. தென்னை சுதேசியப் பயிராகும். இது ஐரோப்பியரால்தான் பெருந் தோட்ட அமைப்பில் ஆரம்பிக்கப்பட்டது.
8. 8gിഞ്ഞുണ இலங்கையின் வர்த்தகப் பயிர்களில் தேயிலை முதன்மையானது. இலங்கை யின் வருவாயில் ஏறத்தாழ 53% தேயிலை ஏற்றுமதியிலிருந்து கிடைக் கின்றது. தேயிலைச் செய்கையில் ஏறத்தாழ 10 இல்ட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தேயிலை முதன் முதல் 1867 இல் செய்கை பண்ணப்பட்டது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக இது இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கியவிடத்தைப் பெற்றிருக்கின்றது.
தேயிலைச் செடி ஒரு அயனப்பிரதேசப் பயிராகும். பகல் நேரத்தில் வெப்பநிலை ஏறக்குறைய 15 °C- 27 °C வரை இருப்பதோடு மழைவீழ்ச்சி
192

1 900-5 460 மி.மீ வரை இன்றியமையாதது. சிறிதளவு உறை பனியைப் பயிர் தாங்கும். ஆனால் பயிர்களின் வேர்களைச் சுற்றி நீர் நிற்கக்கூடாது. இதனால் தேயிலை மலைநாட்டின் மலைச் சாய்வுகளில் பயிரிடப்பட்டு வருகின்றது. நீர் தேங்கா சாய்வுகள் தேயிலைச் செய்கைக்கு அவசிய
DfT3076).
இலங்கையில் இன்று 195468 (1999) ஹெக்டேயர் நிலம் தேயிலைச் செய்கைக்குப் பயன்படுத்தப்படுகின்றது. தேயிலை செய்கை பண்ணப்படும் பரப்பில் ஏறத்தாழ 80% நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அமைந்திருக்கின்றன. இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் ஏறத்தாழ 70%, 600 மீற்றர் உயரத்திற்கு மேல் அமைந்திருக் கின்றன. இந்த உயரத்திற்குக் கீழுள்ளது தாழ்நிலத் தேயிலையாகும். இது தரமானதன்று. 600-1200 மிற்றர் உயரத்தில் வளரும் தேயிலை நடுநிலத் தேயிலை எனப்படும். 1200 மீற்றர் உயரத்திற்கு மேல் பயிரிடப்படும் தேயிலை உயர்நிலத் தேயிலை எனப்படும். இது தரமான தேயிலை.
தேயிலையை மரமாக வளர விடுவதில்லை. அதனைக் கத்த ரித்துச் செடியாக, புதராக வளர விடுவார். அப்போதுதான் கொழுந்துகளை இலகுவில் கொய்ய முடியும். கொழுந்தெ டுத்தல் கைகளினால் நடை பெறுகின்றது. இத் தோட்டங் களில் வேலை செய்பவர்களில் 80% இந்திய வம்சாவழித் தொழிலாளர்களாவர். இலங் கையில் தேயிலைச் செய்கை நன்கு ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு தொழிலாகும். குடியேற்ற காலத்திலிருந்து இத் தோட் டங்கள் தனியாருக்கும், கம்பனி களுக்கும் சொந்தமாகவிருந் தன. 1972, 1975ஆம் ஆண்டு களில் நடைபெற்ற நிலச் சீர்திருத்தங்கள் காரணமாக தேயிலைப் பரப்பில் 63% அரச உடைமையாயிற்று. இவற்றை இன்று மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை என்ற தாபனமும், அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனமும் நிர்வகித்துவருகின்றன.
படம் : 18.1 இலங்கையில் தேயிலை
193

Page 99
ஒரு வருடத்தில் சராசரியாக 283 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தியாகின்றது. இதில் உள்நாட்டில் விற்பனையாவது 10 மில்லியன் கிலோ கிராம்களாகும். மிகுதி ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இலங்கைத் தேயிலையை ஐக்கிய ராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஈராக், சவுதி அரேபியா, கனடா, எகிப்து முதலிய நாடுகள் வாங்கிக் கொள் கின்றன.
நமது நாட்டின் தேயிலைச் செய்கை இன்று பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றது. அண்மைக்காலப் போக்கு திருப்திகரமாகவில்லை.
(அ) வெளிநாடுகளில் நமது நாட்டுத் தேயிலையின் விற்பனை குறைதல் ஒரு பிரச்சினை. கென்யா, மாலாவி, உகண்டா முதலிய புதிய நாடுகள் தேயிலைச் செய்கையில் ஈடுபட்டு ஏற்றுமதி செய்கின்றன. சந்தையில் போட்டி காணப்படுகிறது. அத்துடன் தேயிலைக்குப் பதிலாக வேறு பானங்கள் அதிகளவில் விற்பனையாகின்றன.
(ஆ) 1999இல் நமது தேயிலை உற்பத்தி 283 மில்லியன் கிலோகிராம் ஆகும்.
இது 1995 இலும் பார்க்க 37 மில்லியன் கிலோகிராம் அதிகமாகும்.
இலங்கையின் பிரதான வருவாய் தரும் பயிராகத் தேயிலையிருந்தும் அண்மைப் போக்கு பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாக அமைய வாய்ப்புண்டு. அதனால், புதிய காணிகளில் மரநடுகை செய்வது, தேயிலைச் செடிகளின் அடர்த்தியை அதிகரிப்பது, ஏக்கருக்குரிய விளைச்சலை அதிகரிப்பது, தேயிலைத் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்துவது, உயர் ரகப் பசளைகளைப் பிரயோகிப்பது என்பன மூலம் உற்பத்தியை அதிகரிக்க
முடியும்.
18.2 (fas (9sgöTGotou Bap60
18.2.1இலங்கை 1999 இல் 283.7 மில்லியன் கிலோ கிராம் தேயிலை விளைச்சலைப் பெற்றது. இது முன்னைய ஆண்டைவிட 3% அதிகரிப்பா கும். காலநிலையின் சாதகத் தன்மைகளே இந்த விளைச்சல் அதிகரிப்பிற்குக் காரணமாகும். ஆனால் சர்வதேச சந்தையில் பாரிய் நிரம்பல் காரணமாக விலை வீழ்ச்சி காணப்பட்டது. 18.2.2இலங்கைத் தேயிலையை அதிகம் வாங்கிய நாடு ஈரான் ஆகும். ஈரானுடன் லிபியா, அராபிய எமிற்றேட் குடியரசு என்பனவும் அதிகளவில் கொள்வனவு செய்துள்ளன. எகிப்து, பாகிஸ்தான், ருஷியா ஆகிய நாடுகள் 1999 இல் சிறு தொகையினையே வாங்கிக் கொண்டன.
194

18.2.3இலங்கையின் தேயிலைப் பெருந்தோட்டங்கள் இன்று அரசதுறைப் பெருந்தோட்டங்களாகவும் தனியார் பெருந்தோட்டங்களாகவும் காணப் படுகின்றன. அண்மைக் காலத்தில் அரச பெருந்தோட்டங்களின் உற்பத்தி அதிகரிக்காதிருக்க தனியார் துறைத் தோட்டங்களின் உற்பத்தி அதிகரித் துள்ளது குறிப்பிடத்தக்கது. அரச பெருந்தோட்டங்களின் சிறப்பற்ற முகாமைத்துவம் உற்பத்திக் குறைவிற்குக் காரணமாகும்.
18.2.4இலங்கை அரசின் அண்மைக்காலப் பொருளாதாரக் கொள்கையில் மக்கள் மயப்படுத்தல் முக்கியவிடம் பெற்று வருகின்றது. அவ்வகையில் நட்டத்தில் இயங்கிவரும் அரச பெருந்தோட்டங்களை இலங்கையில் நன்கு இயங்கிவரும் சில கம்பனிகளுக்குக் குத்தகைக்கு விடுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
18.2.5 தேயிலைத் துறையின் அண்மைக்கால வீழ்ச்சியைக் கட்டுப்படுத்து வதற்காக பின்வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளன. அவை: 1. தேயிலையின் மீதான இறக்குமதித் தீர்வைகள் குறைக்கப்பட்டுள்ளன. 2. பொதியிடப்பட்டதும் பெட்டிகளில் அடைக்கப்பட்டதுமான தேயிலையில் 10% வரையில் ஏலங்களுக்கு வெளியே விற்பனை செய்வதற்குத் தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 3. நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 4. தேயிலையின் மீள் பயிரிடலுக்கும் புதிய பயிரிடலுக்குமான உதவித் தொகைகள் (மானியங்கள்) மாற்றமின்றித் தொடர்ந்தும் மேற் கொள்ளப் படுகின்றன. 1991இல் இச்செயற்பாடுகளுக்காக 81 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது. 5. தேயிலைத் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்துவதற்கான உதவித் தொகைத் திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அவ் வகையில் 1991இல் 71 மில்லியூன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. (1990-இல் 22 மில்லியன் ரூபா) 6. சிறிய தேயிலைத் தோட்டங்களைக் கொண்டிருக்கும் உடைமையாளர் களின் நன்மை கருதி, தேயிலை சிறு உடைமைகள் அபிவிருத்தி மேலாண்மைச் சபை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இது குறிப்பாகத் தென் மாகாணத்தில் சேவையாற்றி வருகின்றது. இது 1983 மே மாதத்தில் ஹக்மன தேர்தல் தொகுதியில் ஒரு தேயிலைத் தொழிற்சாலையை நிறுவியுள்ளது. சிறு உடைமையாளர்கள் தமது தேயிலைக் கொழுந்து களை இங்கு தக்க விலையில் கையளிக்கின்றனர்.
195

Page 100
18.3 றப்பர் 1876இல் இலங்கையில் றப்பர்ச் செய்கை ஆரம்பமானது. இன்று இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் இரண்டாவது பயிர் றப்பராகும். இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் ஏறத்தாழ 14% றப்பர் மூலம் கிடைக்கின்றது. தேயிலையைப் போன்று றப்பரும் அயனப் பிரதேசப் பயிராகும். றப்பருக்கு 21 °செ - 26 °செ வரையிலான வெப்ப நிலையும், 2 000 மி.மீ. அளவிலான மழை வீழ்ச்சியும் தேவை. நீர் வழிந் தோடக்கூடிய மலைச்சாய்வுகள் தேவை. நீரைத் தேக்கி வைக்காத செம்பூரான் ஈரக் களிமண் தேவை. இத்தகைய நிலைமைகள் இலங்கையின் தென்மேல் பிரதேசத்திலும் மேற்கு மலை நாட்டிலும் உண்டு. அதனால் 600 மீற்றருக்குட்பட்ட பிரதேசத்தில் றப்பர் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. கடல் மட்டத்திலிருந்தும் 300 மீற்றர் வரை உயரமான பகுதி களில் றப்பர் பெரும்பலும் பயிரிடப்படுகின்றது.
இலங்கையில் இன்று (1999) ஏறத்தாழ 195460 ஹெக்டேயர் பரப்பில் றப்பர் செய்கை பண்ணப்படுகின்றது. களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் றப்பர்ச் செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையில் 96 590 மெற்றிக் தொன் றப்பர் வருடா வருடம் உற்பத்தியாகின்றது. இதில் ஏறத்தாழ 210 இலட்சம் கிலோகிராம் றப்பர் மட்டுமே உள்ளூர்க் கைத்தொழில்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. மிகுதி யாவும் ஏற்றுமதியாகின்றது. இலங்கை றப்பரில் பெரும்பகுதியை (30%) வாங்கிக்கொள்வது சீனாவாகும். ருசியா, ஐக்கிய ராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, போலாந்து, மெக்சிக்கோ, ரூமேனியா என்பனவும் றப்பரை இலங்கையிலிருந்து வாங்கிக்கொள்கின்றன.
இலங்கையின் றப்பர்ச் செய்கை அண்மைக் காலத்தில் பல சோதனைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அவை: 1. றப்பர்த் தோட்டங்கள் சிறியனவாக மாறிவருவதும் நல்லமுறையில் நிர்வகிக்கப்படாமையும் முதல் பிரச்சினையாகும். தேயிலை போன்று றப்பர்த் தோட்டங்கள் பெரியனவல்ல. ஏறக்குறைய 70% தோட்டங் கள் 4 ஹெக்டேயர் குறைவான பரப்பின. றப்பர்த் தோட்டங்கள் துண்டுதுண்டாக விற்கப்படுவதும் மரபுரிமை மூலம் பங்கிடப்படுவதும் இதற்குக் காரணங்களாகும். அதனால் சிறப்பான முகாமை இருப் பதில்லை. Α
2. உற்பத்தி வீழ்ச்சி அடைதல் இன்னோர் பிரச்சினையாகும். இன்று இலங்கையின் றப்பர்த் தோட்டங்களிலுள்ள றப்பர் மரங்கள் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதான மரங்களாகும். 30 வயதிற்கு மேற்பட்ட மரங்கள் தக்க பயனைத் தருவதில்லை. றப்பர் மரங்களை மீள்நடுகை செய்தல் அவசியமாகும். வயதான மரங்களைத் தறித்து
196

விட்டுப் புதிய மரங்கள் நடப்படல் வேண்டும். இன்று மீள் நடுகைக்காக அரசாங்கம் ஒரு ஏக்கருக்கு 4000 ரூபா உதவிப்பணமாக வழங்குகின்றது.
இயற்கை றப்பருக்கு சர்வதேச சந்தையில் செயற்கை றப்பரினால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை. இன்று றப்பர்ப் பொருள்களில் 69% செயற்கை றப்பர் மூலம் செய்யப்படுகின்றன. இது இலங்கையின் றப்பர் உற்பத்தியைப் பாதிக்கின்றது. எனினும் அண்மைக் காலத்தில் பெற்றோலிய விலையேற்றத்தின் பயனாக (பெற்றோலியம் செயற்கை றப்பருக்கு ஒரு மூலப்பொருள்) இயற்கை றப்பருக்கு மீண்டும் தேவை கூடியிருக்கிறது. எனினும் விருத்தியடைந்த பல நாடுகள் இன்றும் செயற்கை றப்பரில் தங்கியிருக்கின்றன.
Ya படம் : 182இலங்கையில்றப்பர்
றப்பரை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கை இன்று அதிகரித்திருக்கிறது. சர்வதேச வர்த்தகத்தில் வந்து சேரும் றப்பரில் 5% குறைவான பங்கையே இலங்கை வகித்து வருகின்றது. றப்பரின் விலை சந்தையில் என்றும் ஒரேயளவினதாகவில்லை. றப்பரின் விலையை உறுதிப்படுத்துவதற்கு உங்ராட் நிறுவனம் முயற்சி செய்து வருகின்றது. றப்பரை மூலப் பொருளாக ஏற்றுமதி செய்வதிலும் பார்க்க பரும்படி உற்பத்திப் பொருட்களாக ஏற்றுமதி செய்வது சிறப்பானது என்று இன்று உணரப்படுகிறது.
1 Q7

Page 101
இலங்கையில் களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, காலி, மாத்தறை மாவட்டங்களில் றப்பர்த் தோட்டங்களுள்ளன. இம் மாவட் டங்களில் இருக்கின்ற சிறிய றப்பர்த் தோட்டங்களின் உற்பத்தியைச் சீர்ப்படுத்த அண்மையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. றப்பர்ப் பாலை எடுத்துக் குறித்த தரத்தில் சீற் றப்பராக்கி வாங்கிக் கொள்ளக் கூட்டுறவுச் சங்கங்கள் முன்வந்துள்ளன. குறித்த தர நிர்ணயம் அரச கூட்டுத்தாபனத்தால் சிறிய றப்பர் தோட்ட உரிமையாளர்களுக்கு
j.
பயிற்சிமூலம் வழங்கப்படுகிறது.
18.4 தென்னை பல நூற்றாண்டு காலமாக இலங்கையில் தென்னை பயிரிடப்பட்டு வந்த போதிலும், ஐரோப்பியரது வருகையின் பின்னரே வர்த்தக ரீதியாகப் பயிரிடப்பட்டது. இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் தென்னையால் 5% கிடைக்கின்றது. உள்நாட்டு நுகர்வு அதிகமாதலால் ஏற்றுமதியளவு குறைவாகவுள்ளது. இன்று ஏறத்தாழ 443 952 ஹெக்டேயர் பரப்பில் தென்னை செய்கை பண்ணப்படுகின்றது. w
தென்னை பயரிடுவதற்கு வருடச் சராசரி வெப்பநிலை 23°செ.
26 °செ வரையிலிருத்தல் வேண்டும். வெப்பநிலை 20 செ. குறைந்தால் தென்னை செய்கை பண்ணமுடியாது. சிறந்த பயனைப் பெறுவதற்கு 2 000 மி.மீ வரையிலான பரவலான மழை தேவை. கடற்கரையை அடுத்துள்ள மணற்பாங்கான பகுதிகளில் இது நன்கு வளர்கின்றது. 300 மீற்றர்களுக்கு உள்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் தென்னை நன்கு வளரும். எனவேதான் இலங்கையின் பிரதான தென்னந்தோட்டங்கள் தென்மேல் ஈர வலயத்தில் அமைந்திருக்கின்றன. சிறப்பாக கொழும்பு, சிலாபம், குருநாகல் ஆகிய இடங்கள்ை இணைக்கும் முக்கோணப் பகுதியில் தென்னை நன்கு செய்கை நீண்ணப்படுகிறது. கொழும்பிலிருந்து தங்காலை வரையிலான கரையோரப் பகுதியிலும் தென்னை பயிராகிறது. யாழ்ப்பாணக் குடாநாடு, மட்டக் களப்பு முதலிய பகுதிகளில் தரைக் கீழ் நீர் இருப்பதால் தென்னந்தோட்டங் கள் இருக்கின்றன.
தென்னையிலிருந்து பல பயன்கள் பெறப்படுகின்றன. தேங்காயில் 29% கொப்பறாவாக்கப்படுகின்றது. தென்னங்கள்ளிலிருந்து ச்ாராயம், வினாகிரி, சர்க்கரை முதலியன பெறப்படுகின்றன. தேங்காய் நெய் முக்கிய தாவர எண் ணெய் ஆகும். தும்பு பல தொழில்களுக்குப் பயன்படும்; கயிறு திரித்தல், துடைப்பம் செய்தல் என்பன.
இலங்கைக்கு அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் பயிர் என்ற வகையில் அண்மையாண்டுகளில் தென்னை தன் முக்கியத்துவத்தை இழ்ந்து
198

வருகின்றது. உள்நாட்டுத் தேவை அதிகரித்ததால் அதிகளவில் தென்னம் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாதுள்ளது. இங்கு உற்பத்தியாகும் தேய்காயில் 70% உள்ளூர்நுகர்விற்கு தேவை. மேலும் அண்மைக் காலத்தில் தேங்காய் உற்பத்தியும் படிப்படியாகக் குறைந்து வருகின்றது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவை:
1. குறைவான பசளை உபயோகம்.
2. காலநிலையில் காணப்பட்ட வரட்சியும், நோய்களும், பூச்சியினங்களும்
கட்டுப்படுத்தாமையும் இன்னொரு காரணமாகும்.
3. 1975இல் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட காணிச் சீர்திருத்தச் சட்டத்தின்படி சுவீகரிக்கப்பட்ட மேலதிகத் தென்னங்காணிகள் திறனற் றவர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஏற்ற முகாமையின்மையால் விளைச்சல் வீழ்ந்தது. வெளிநாட்டுச் சந்தையில் இன்று தென்னம் பொருட்களுக்கு சோயா எண்ணெய், தால எண்ணெய், ஒலிவ் எண்ணெய் என்பன பதிலீட்டுப் பொருட்களாகவுள்ளன. இதனால் தென்னம் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பது கடினமாக
உள்ளது.
படம் : 183இலங்கையில் தென்ைை
199

Page 102
18.5 அண்மைக்கால நிலை 18.6.1 மீள் நடுகை, கீழ் நடுகை ஆகிய விரிவாக்கத் திட்டங்கள் 1974 இலிருந்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் 15% மீள்நடுகையும், 12 % கீழ்நடுகையும் தென்னந் தோட்டங்களில் நிகழ்ந்துள்ளன.
18.6.2தெங்கு முக்கோணப் பிரதேசத்தில் மீள் பயிரிடல், இடைப் பயிரிடல், ஈரலிப்புப் பாதுகாப்பு ஆகிய மூன்று திட்டங்களுக்காக அபிவிருத்தி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவித் தொகை 50 சதவீதத் தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
18.6.3 தெங்கு உற்பதியை அதிகரிப்பதற்காக நிறுவன ரீதியான சீர்திருத் தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன, விற்பனை வரி, ஏற்றுமதித் தீர்வை என்பன குறைக்கப்பட்டுள்ளன. 6% விற்பனை வரி 5% ஆகவும், ஏற்றுமதித் தீர்வை 20 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளன.
18.6.4 தெங்கு அபிவிருத்திசபை, இலங்கைத் தெங்குச் சபை, தெங்கு ஆராய்ச்சி சபை என்பனவற்றின் நடைமுறைப் பணிகளில் முகாமைத்துவ மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
18.6.5 தென்னந்தோட்டங்களைத் தனிப் பயிர் என்ற வகையினின்றும் மாற்றுவதன் மூலம், உற்பத்தியாளரின் பொருளாதார வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஊடு பயிர்ச் செய்கை, கால்நடை வளர்ப்பு என்பனவற்றின் மூலம் வருவாயையும் பொரு ளாதார அபிவிருத்தியையும் ஏற்படுத்த நடவடிக்கைகள் கைக்கொள்ளப் பட்டு வருகின்றன.
18.6 சிறுஏற்றுமதிப் பயிர்கள் கொக்கோ, கோப்பி, கறுவா, ஏலக்காய், மிளகு, மரமுந்திரி, கராம்பு, எள், பாக்கு முதலியன சிறு ஏற்றுமதிப் பயிர்களாக விளங்குகின்றன. மிகப் பண்டை நாளிலிருந்தே ஏலக்காய், கறுவா, கராம்பு போன்ற வாசனைத் திரவியங்கள் இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகி வந்துள்ளன. இந்த வாசனைத் திரவியங்களைப் பெறுவதற்காக, அந்நிய வர்த்தகர்கள் இலங்கைக்குத் தொடர்ந்து வந்திருக்கிறார்கள். மொத்த ஏற்றுமதிகளில் இச் சிறு ஏற்றுமதிப் பயிர்கள்ன் பங்களிப்பு ஆக 8 சதவீதமாகும். இலங்கையின் மூன்று முதன்மைப் பயிர்களான தேயிலை (33%), றப்பர் (11%), தென்னை (7.6%) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இவற்றின் பங்கு மிகக் குறைவாகும்.
இன்று இலங்கையில் ஏறத்தாழ 27 114 ஹெக்டேயர் பரப்பில் சிறு ஏற்றுமதிப் பயிர்கள் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன. இப்பயிர்களில் பெரும்பாலானவை, சிறு உடைமைகளில் கலப்புத் தோட்டங்களாகவும்
2OO

வீட்டுத் தோட்டங்களாகவும் வளர்க்கப்படுகின்றன. கறுவா, ஏலக்காய், மரமுந்திரி என்பன இதற்கு ஒரளவு விதிவிலக்காகும். அண்மை ஆண்டு களில் இப் பயிர்களின் உற்பத்தியில் அதிகரிப்பு ஏற்பட்டதற்குப் பல காரணிகளுள்ளன. அவற்றில் முக்கியமானது இப் பயிர்களின் ஏற்றுமதிச் சந்தை வாய்ப்பாகும்.
இப்பயிர்களின் ஏற்றுமதியில் பெரும்பங்கு ஏற்றுமதியாவது முக்கிய அம்சமாகும். சிறு ஏற்றுமதிப் பயிர்களின் ஏற்றுமதிக்காகவும் அண்மைக் காலத்தில் அரசு பல முயற்சிகளை எடுத்திருக்கின்றது. ஐக்கிய நாடுகள் தாபனத்தின் உணவு விவசாய நிறுவனத்தின் (FAO) ஆதரவுடன் மாத்தளை யிலும் மொனராகலையிலும் சிறு ஏற்றுமதிப் பயிர்களின் ஆராய்ச்சி நிலையங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. தேசிய விவசாயப் பன்முகப் படுத்தலுக்கும் குடியேற்றத்திற்குமான சபை இப்பயிர்களின் உற்பத்தியில் கவனம் எடுத்திருக்கின்றது. சிறிய தோட்டங்களில் இப்பயிர்களின் உற்பத்தியை ஆரம்பித்தல், வீட்டுத் தோட்டங்களை ஆரம்பிக்க மானியம் வழங்கல், பொருளாதார வளங்குன்றிய தேயிலை, றப்பர்த் தோட்டங்களில் இப்பயிர்களை ஆரம்பித்தல், தென்னந் தோட்டங்களில் இப்பயிர்களை ஊடுநடுதல் போன்ற பல முயற்சிகளை எடுத்திருப்பதால் அண்மைக் காலத்தில் இப்பயிர்களின் உற்பத்தி அதிகரித்திருக்கின்றது. 1991இல் 2 869 ஆயிரம் கிலோகிராம் கறுவாவும், 290 ஆயிரம் கிலோகிராம் ஏலக்காயும், 1300 ஆயிரம் கிலோகிராம் மிளகும், 1030 ஆயிரம் கிலோகிராம் கராம்பும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
1991இல் கராம்பு, மரமுந்திரி ஆகியவற்றின் உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரித்தது. இலங்கையில் மரமுந்திரி ஏறத்தாழ 8 900 ஹெக்டேயர் பரப்பில் செய்கை பண்ணப்படுகின்றது. இப்பயிரின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மரமுந்திரிகைக் கூட்டுத்தானம் ஒன்றுமுள்ளது. மினுவாங்கொட, ஜாஎல, கிருல்ல, அளவை, மன்னார், புத்தளம் பகுதிகளில் மரமுந்திரிச் செய்கை நடைபெறுகின்றது. மகாவலி அபிவிருத்திப் பிரதேசத்தில் பிம்புறுத்தேவ எனுமிடத்திலும் மரமுந்திரிகைச் செய்கை 607 ஹெக்டேயர் பரப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்களில் பதுளை, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் சிறு ஏற்றுமதிப் பயிர்களின் செய்கைக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறு ஏற்றுமதி களின் துரித விருத்திக்கென சிறு ஏற்றுமதிப் பயிர்கள் திணைக்களம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இது இப்பயிர்களின் உற்பத்தி அதிகரிப்பிற்கும், பரப்பு அதிகரிப்பிற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது சிறு ஏற்றுமதிப் பயிர்களின் நாற்றுக்களை விநியோகித்துள்ளது. சிறு ஏற்றுமதிப் பயிர்களின் மாநிலத் திட்டத்தில் கொக்கோ, கோப்பி, மிளகு, கராம்பு ஆகிய
201

Page 103
பயிர்களின் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மானியம் வழங்கப் படுகின்றது.
சிறு ஏற்றுமதிப் பயிர்கள்
ஏலம் e. LéleyT (és
ട9ffH ടr£ (کیorیے کر k Logr@gിfങ്ങള
A 6), as ras Caesar
േ\ം്. . i ം്യമഴ്ത്തിരുt് urs l ** .۔ عہجہ۔,ν محرکھے۔ بر
د۔ ۔ ۔ ممہ
படம் : 18.3இலங்கையில் சிறு ஏற்றுமதிப் பயிர்கள்
சிறு ஏற்றுமதிப் பயிர்களை அதிகளவில் வாங்கும் நாடுகள் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சுவீடன், எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா, மெக்சிக்கோ என்பனவாகும். அதிகளவில் கறுவாவை மெக்சிக்கோ வாங்கிக் கொள்கின்றது.
202
 
 
 
 
 
 
 
 

1 9 இலங்கையின் நீர்ப்பாசனத்
திட்டங்களும் குடியேற்றத் திட்டங்களும்
19. குழயேற்றத்திட்டங்கள்
லங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கான நிலங்கள் உலர் வலயத்தி லேயேயுள்ளன. இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் மூன்றிலிரண்டு பங்கு உலர் பிரதேசத் தாழ்நிலங்களாகவுள்ளன. உலர் வலயத் தாழ்நிலங்களைப் பயன்படுத்தி அதிக நிலப்பரப்பைப் பயிர்ச் செய்கையின் கீழ் கொண்டு வரவும், உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், தென்மேல் பிரதேசம், மலை நாடு, யாழ்ப்பாணக் குடாநாடு ஆகிய பிரதேசங்களில் காணப்படும் அதிக மக்களடர்த்தியைக் குறைக்கவுடி குடியேற்றத் திட்டங்களை அமைப்பது அவசியமாகவிருந்துள்ளது.
உலர் வலயத் தாழ்நிலங்களில் குடியேற்றத் திட்டங்களைச் செயற் படுத்துவதற்கு மக்கள் அங்கு வாழ்வதற்கு ஏற்ற அடிப்படை வாழ்க்கை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியது அவசியமாகும். இத்தாழ் நிலங்களில் இன்று பாழடைந்து கிடக்கின்ற ஆயிரக்கணக்கான குளங்கள் வரலாற்றுக் காலத்தில் இங்கு மக்கள் பெருந்தொகையாக வாழ்ந்திருக்கின் றார்கள் என்பதற்கு சான்றுகளாகவுள்ளன. இலங்கை மன்னர்களால் உலர் வலயத்தில் ஆயிரக்கணக்கான நீர்ப்பாசனக் குளங்கள் உருவாக்கப்
203

Page 104
பட்டுள்ளன. மின்னேரியா, பராக்கிரம சமுத்திரம், கட்டுக்கரைக்குளம், கவுடுலு வாவி, குறுலு வாவி, தண்ணிமுறிப்புக் குளம் என்பன இவற்றில்
சிலவாகும்.
யாழ்ப்பாணக் సి குடாநாடு
படம் : 19.1 இலங்கையின் இயற்கைப் பிரதேசங்கள்
மக்களை உலர் வலயத்தில் நிரந்தரமாகக் குடியேற்றி பயிர்செய்வதற்குரிய நீர்ப் பாசனக் காணிகளை வழங் குவது குடியேற்றத் திட்டங் களின் பிரதான நோக்க மாகும். மின்னேரியாக் குடியேற்றத் திட்ட மே முதன் முதல் இலங்கையில் ஆரம்பிக் கப்பட்டது. இரணைமடு, வவுனிக் குளம், பாவற்குளம், கந்தளாய், இராஜாங்கனை, உன்னிச்சை, உடவளவை, கல்லோயா என்பன பின்னர் நிறுவப்பட்ட குடியேற் றத் திட்டங்களாகும். பதவியா, பாணியன் 35 L. G. GR), அல்லை, கவுடுல்ல, எல கரா, நாச்சடுவ, ஒக்கம் பிட்டி, ரிதியாகமை என்ப னவும் குறிப்பிடத்தக்க குடியேற்றத்திட்டங்கள் ஆகும். வீடமைக்க, கிணறு
வெட்ட, வேலியிட, காணிகளைத் திருத்த எல்லாவற்றிற்கும் உபகார நிதி
வழங்கப்பட்டது.
இன்று உலர்வலயத்தில் 105 பிரதான குடியேற்றத் திட்டங்களுள்ளன. இவற்றில் ஏறத்தாழ 95 900 ஹெக்டேயர் நீர்ப்பாசனத்துடன் விருத்தியுற் றிருக்கின்ற நிலப்பரப்பாகும். 66 000 ஹெக்டேயர் உயர் நிலப்பயிர் விளை
நிலங்களாக விருத்தியடைந்திருக்கின்றன. ஏறத்தாழ 851 200 கமக்காரக்
குடும்பங்கள் இக்குடியேற்றத்திட்டங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
துரித மகாவலி கங்கை திட்டம் மாபெரும் குடியேற்றத் திட்டமாகும். அதன்
கீழ் 10 இலட்சம் மக்கள் குடியேற்றப்படவுள்ளனர். அதில் இன்று (1991)
79 066 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
204
 

நீர்ப்பாசன க்
(g5 6yT a 3-6YT.
படம்: 19.2 புராதன நீர்ப்பாசனக் குளங்கள்
இலங்கையின் சில பிரதான குடியேற்றத் திட்டங்கள்
நீர்ப்பாய்ச்சும் பரப்பளவு
குடியேறிய குடும்பங்கள்
திட்டம் (ஹெக் (எண்) இரணைமடு 8457 5 285 அக்கராயன் 214 760
வவுனிக்குளம் 2 768 2 154
உன்னிச்சை 5 I63 。 225
வாகனேரி 3 440 2 150
சாகமம் I 124 700
அல்லை 7 180 4 487
205

Page 105
திட்டம் நீர்ப்பாய்ச்சும் பரப்பளவு குடியேறிய குடும்பங்கள்
(ஹெக்.) (எண்)
கந்தளாய் & 43及 5 269
மொறவெவ I 635 II 020
நாச்சடுவா 2 383 . 1 490
பதவியா 5 223 3 265
குறுலுவா 3 327 2 080
ராஜாங்கனை 4 371 2 730
தப்போவை 8.33 520
சந்திரிக்கா 2 133 1 330
அட்டவணை: 19.1
இலங்கையில் பல்வேறு வகையான குடியேற்றத் திட்டங்கள் காலத்திற்குக் காலம் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான வகைகள் வருமாறு: 19.1.1 குடியானவர் குடியேற்றத் திட்டங்கள் 19.1.2 படித்த வாலிபர் குடியேற்றத் திட்டங்கள் 19.1.3 மேட்டுநிலக் குடியேற்றத் திட்டங்கள்
19.1.4 உலர் வேளாண்மைத் திட்டங்கள்
19.1.1 குடியானவர் குடியேற்றத் திட்டங்கள் நிலமற்ற, வறிய குடியானவர்களுக்கு நீர்ப்பாசன வயல் நிலமும், குடியிருக்க மேட்டுக் காணியும் வழங்கப்பட்டு இக் குடியேற்றங்களில் குடியமர்த்த்ப் பட்டுள்ளனர்.
இக்குடியேற்றத் திட்டங்களில் 1955ஆம் ஆண்டிற்கு முன், ஒவ்வொரு குடியேற்ற வாசிக்கும் ஐந்து ஏக்கர் தாழ் நிலமும் மூன்று ஏக்கர் உயர் நிலமும் வழங்கப்பட்டன. 1955ஆம் ஆண்டிற்குப் பின் மூன்று ஏக்கர் தாழ் நிலமும் இரண்டு ஏக்கர் உயர் நிலமும் வழங்கப்பட்டன. தாழ் நில விளைநிலங்கள் நீர்ப்பாய்ச்சல் வசதியுடையனவாயும், உயர் நிலங்கள் நீர்ப்பாய்ச்சல் வசதி யற்றனவாகவுமுள்ளன. அதனால் இக்குடியேற்றத் திட்டங்களின் பயிர்ச் செய்கையில் இரு பெரும் வேறுபாட்டினை அவதானிக்கலாம்.
குடியேற்றங்களின் தாழ்நிலங்களில் நெற்செய்கை முக்கியவிடத்தைப் பெற்றுள்ளது. நெற்செய்கை பெரிதும் நீர்ப்பாய்ச்சல் வசதியில் தங்கி யுள்ளவிடத்து வடகீழ்ப் பருவக்காற்று மழையினால் மேலதிக நீரையும்
206

பெறுகின்றது. இரு பருவங்களினாலும் நீர் பெறக்கூடிய குடியேற்றங்களில் பெரும் போகத்திலும் (மகா), சிறு போகத்திலும் (யால) நெற்செய்கை நடைபெறுகின்றது.
உயர்நிலப் பயிர்ச்செய்கையில் தென்னை, பலா, தோடை, முருங்கை, மா, இலவம் எனும் நிரந்தரமான மரப் பயிர்களும், வாழை, வெங்காயம், மிளகாய் முதலிய காய்கறிப் பயிர்களும், குரக்கன், எள், சோளம், கடலை முதலிய தானியப் பயிர்களும் பயிரிடப்பட்டு வருகின்றன.
இரணைமடு, வன்னேரிக்குளம், அக்கராயன், வவுனிக்குளம், ராஜாங் கணை, பதவியா, கந்தளாய் முதலானவை குடியானவர் குடியேற்றத் திட்டங்களாக உள்ளன.
19.1.2 படித்த வாலிபர் குடியேற்றத் திட்டங்கள் படித்த வாலிபர்களுக்கும் மகளிர்களுக்குமாக நாடெங்கும் இக் குடியேற்றத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பணப்பயிர்களை நவீன பயிர்ச் செய்கை முறைகளைக் கையாண்டு விருத்தி செய்வதற்காகவும், தொழில் வாய்ப்பு களை ஏற்படுத்துவதற்காகவும் இக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டன. இவை ஏற்று நீர்ப்பாசன வசதிகளையும் கொண்டுள்ளன. விசுவமடு, திருவை யாறு, முழங்காவில், முத்தையன்கட்டு, வெல்லன்கிரியா, கொண்டுறுவெவ, கல்பலாமா, அம்பேவெல, தும்பன்கேணி முதலியன இவ்வகைக் குடியேற் றத் திட்டங்களாகும்.
19.1.3 மேட்டு நிலக் குடியேற்றத் திட்டங்கள் சாய்வு நீர்ப்பாசன வசதியற்ற மேட்டுக் காணிகள் குடியிருப்புக்காகவும், தோட்டச் செய்கைக்காகவும் பகிர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மேட்டு நிலக் குடியேற்றத் திட்டங்களில் மத்தியதர வகுப்பினர் முதலிடம் பெற்றுள் ளனர். கிராம விஸ்தரிப்புத் திட்டங்களின் கீழ் நிலமற்ற மத்தியதர வகுப்பின ரும், வறிய வகுப்பினரும் குடியிருப்புக் காணிகள் பெற்றுள்ளனர். கிராஞ்சி, கனகபுரம், தேவிபுரம், சுதந்திரபுரம், வுண்ணாத்திவில்லு, கடிகம, ஹல்மில, கினிமிமை, கொட்டாவ முதலான பகுதிகளில் மேட்டுநிலக் குடியேற்றத் திட்டங்களுள்ளன.
191.4 உலர் வேளாண்மைக் குடியேற்றத் திட்டங்கள் அதிக மூலதன செலவின்றி உலர் வலயத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு குடியேற்றத் திட்டம் உலர் வேளாண்மை அபிவிருத்தித் திட்டங்க ளாகும். சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் குடியானவர்களை நிரந்தரப் பயிர்ச் செய்கையிலிடுபட வைப்பதனையும் இது நோக்கமாகக் கொண்டது. இவ்வகையில் முதலாவது திட்டம் மொனறாகலை மாவட்டத் திலுள்ள முதுக்ண்டியா எனும் இடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
207

Page 106
1780 ஹெக்டேயர் பரப்பில் 630 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் ஜெயபுரம், ஆனைவிழுந்தான் எனும் இரு இடங்களில் உலர் வேளாண்மை அபிவிருத்தித் திட்டங்கள் 1984ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இனக்கலவரம் காரணமாகத் தென்னி லங்கையிலிருந்து இடம்பெயர்ந்த 638 அகதிகள் 400 ஹெக்டேயரில் இங்கு குடியமர்த்தப்பட்டுள்னர்.
எனவே, உலர் வலயத்தில் நீர்ப்பாசன திட்டங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டமையால் பல விருத்திகள் ஏற்பட்டிருக்கின்றன. காடு அடர்ந்து கிடந்த பிரதேசங்கள் கழனிகளாக்கப்பட்டிருக்கின்றன. குடியேற்றங்கள் உருவாகியமையால் போக்குவரத்து வசதிகள், தொடர் பாடல் வசதிகள் அதிகரித்துள்ளன. நீர் மின்வலுவும், கைத்தொழில்களும் விருத்தியுற்றிருக்கின்றன. நகரங்கள் உருவாகியுள்ளன. மக்கள் பரவலாகக் குடியேற வாய்ப்பேற்பட்டிருக்கிறது.
19.2 நீர்ப்பாசனத்திட்டங்கள் இலங்கையின் புராதன மக்கள் இரண்டு வழிகளில் நீரைப் பாதுகாத்து நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர். அவை: 1. குளங்களைக் கட்டி நீரைத் தேக்கினர். 2. நதிகளுக்குக் குறுக்காக அணையிட்டு மறித்துக் கால்வாய்கள் மூலம்
நீர்ப்பாய்ச்சினர்.
மின்னேரியாக்குளம், காலவீவாக்குளம், பராக்கிரம சமுத்திரம், நுவரவாவி, கட்டுக்கரைக்குளம் என்பன பழைய நீர்ப்பாசனக் குளங்களாகும். அம்பன் கங்கையிலிருந்து எலஹராக் கால்வாய் மூலம் மின்னேரியாக் குளத்திற்கும், கந்தளாய்க் குளத்திற்கும் நீர் வழங்கப்பட்டுள்ளது. மினிப்பேக் கால்வாய், ஜய கங்கைக் கால்வாய் என்பன ஏனைய பண்டைய கால்வாய் களாகும். நவீன நீர்ப்பாசனத் திட்டங்கள், குடியேற்றங்களை உருவாக்கல், நீர் வழங்கல், வெள்ளப் பெருக்கைத் தடுத்தல் எனப் பல நோக்கங்களைக் கொண்டனவாகும்.
இலங்கையின் உலர்வலத்தை அபிவிருத்தி கெய்யும் பொருட்டு
ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நீர்ப்பாசனத் திட்டங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
19.2.1 சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் 19.2.2 பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் 19.2.3ஆற்று வடிநிலத் திட்டங்கள்
208 -~دو

19.2.1 சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள் குறித்த ஒரு பருவத்தில் பெய்கின்ற மழை நீரைக் குளங்களில் தேக்கி வைத்து நீர்ப்பாய்ச்சி பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது உலர்வலயத்தைப் பொறுத்த மட்டில் அவசியமாகும். புராதன காலத்தில் இருந்து சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் இப்பிரதேசத்தில் இயங்கி வருகின்றன. இன்று பாழடைந்து கிடக்கின்றன ஆயிரக் கணக்கான குளங்கள் இப்பிரதேசம் ஒரு காலத்தில் இருந்த சிறப்பைக் கூறுகின்றன. இன்று இப்பாழடைந்த குளங்களைத் திருத்தியும் புதிதாக அமைத்தும் இப்பிரதேசத்தை விருத்தியாக்கி வருகின் றனர். சிறிய நீர்ப்பாசனங்கள் என இன்று 300 ஹெக்டேயர்கள் நிலப் பரப் பிற்குக் குறைவாக நீர்ப்பாய்ச்சுகின்ற நீர்ப்பாசனக் குளங்களைக் குறிப் பிடலாம். கிராமங்கள் தோறும் இன்று இருக்கின்ற கிராமியக் குளங்கள் யாவும் இப் பிரிவில் அடங்குகின்றன. புளியங்குளம், கனகராயன் குளம், திசவீவா, யொடவீவா, தப்போவக் குளம், முருகண்டிக் குளம், தென்னியன் குளம், குஞ்சு மீசன் குளம் முதலான நூற்றுக்கணக்கான குளங்களைக் குறிப்பிடலாம்.
19.2.2 பெரிய நீர்ப்பாசனத்திட்டங்கள் இலங்கையின் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களென 800 ஹெக்டேயர் களுக்கு மேல் நீர்ப்பாய்ச்சுகின்ற நீர்த்தேக்கங்களைக் குறிப்பிடலாம். மிகப் பழைய நீர்த்தேக்கங்களான மின்னேரியா, பராக்கிராம சமுத்திரம், கட்டுக் கரைக்குளம் என்பன பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களே. இவற்றை விட பாவற்குளம் (1 528 ஹெக்டேயர்களுக்கு நீர் பாய்ச்சும்) முத்தையன்கட்டு (2 568), இரணைமடு (8 457), வவுனிக்குளம் (2 768), உன்னிச்சைக் குளம் (5 163), வாகனேரிக்குளம் (3 440), அல்லை (7180), கந்தளாய் (8 431), பதவியாக்குளம் (5 223), ராஜாங்கனை (4 371), கவுடுல்ல (4 047) முதலான பெருங்குளங்களைக் குறிப்பிடலாம். உலர் வலயத்தில் குடியேற்றத் திட்டங்கள் உருவாகுவதற்கு இந்தப் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களே காலாக இருந்துள்ளன. 105 குடியேற்றத் திட்டங்களும் 95 900 ஹெக்டேயர் பரப்பிற்கு நீர்ப்பாசனமும் இவற்றால் கிடைத்திருக்கின்றன.
19.2.3 ஆற்றுவழநிலத்திட்டங்கள்
நதிகளுக்குக் குறுக்கே அணைகள் கட்டி நீர்த்தேக்கங்களை உருவாக்கி, கால்வாய்கள் மூலம் நீர்ப்பாய்ச்சலிற்குப் பயன்படுத்துதல் பண்டைய காலத் திலிருந்து இலங்கையில் கைக்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் பலநோக்கு அபிவிருத்தித் திட்டங்கள் ஆற்றுவடிநிலத் திட்டங்களாக வுள்ளன. முக்கியமாக கல்லோயா அபிவிருத்தி திட்டம், உடவளவை திட்டம், துரித மகாவலிகங்கை திட்டம் என்பனவற்றினைக் குறிப்பிடலாம்.
209

Page 107
Q
t
རི།། 《ཛ། ག་
இலங்கையின் விவசாயக் ர 修 9 سمتحصیسے ... o S N குடியேற்ற3ங்கநம . . . ர்ேப்பாசனகாதீர்த்தேககங்களும
&x...& gጥ “ቅግሞ”` »
Sy Korpuros தி கீர்த்தேக்கங்கள்
,'; l &്പ്
دینی T کہ آئینی بھیجGh 0ی ہوئے ',
erau eraussais Cerri'r môr
گونه r و
** f &&అత్యణ్ణి w 4 ܝܢܠ?")
Y s / ککنگہ حسبہN ”علم وہ چمچے دہی کہ وہ عبیر \ ۰۰""
؛ می
Y w "ട. \-s.sẽ :یہکمیل۔ ملا در ساجن ۲ یاله: به بعد از rowA/ དེ༽ N ;3 - ر( సిడి
r:26 J-సి. .لا تخر s محتی م* \ { & የ e፤ في مسمق 8 V . . .
as a ഴrജ്ജ്"
"."ఢి سخ la܆. ܧܓܟ w به گfrfلی می
{' ~ * ( "་ག─་མ། -《ལ།། 蜘 یو!.ئہ مت • نجومی میانه نگاه شء ۲ مه S۱
\\ en langesa të', fN
ܧܗfzܗܨ܊ w t リ 4 V,
•..; Šፊጓ”“”
Հi a- arraf
e. 7 لامتی %சுல்தம்த* A.
32 os«arost se
هوایی می ""(ر
படம்: 193இலங்கையில் பெரியநீர்ப்பாசனத் திட்டங்களும் குடியேற்றத் திட்டங்களும்
210
 
 
 
 
 
 
 
 
 
 

19.2.3.1 கல்லோயாத் திட்டம் கல்லோயா அபிவிருத்தித் திட்டம் ஒரு பல பயன்தரு திட்டமாகும். இதுவரை இலங்கையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுள் இது பெரியது. நல்ல பயனையுந் தந்தது. இத்திட்டம், அபிவிருத்தி அடையாத பகுதிகளை விருத்தி செய்தல், நீர்ப்பாசன வசதிகளை அமைத்தல், வெள்ளப் பாதுகாப்பும் நீர்வடிய வசதியுமமைத்தல், நீர் மின் வலுவை உற்பத்தி செய்தல், விலை யுயர்ந்த மரங்களைக் காடுகளாக வளர்த்தல், மண்ணரிப்பைத் தடுத்தல், குடியேற்றங்களை நிறுவுதல் முதலிய பல பயன்தரு திட்டங்களுக்காக உருவாக்கப்பட்டதாகும்.
கல்லோயா, 1 400 மீற்றர் உயரத்தில் இருக்கும் மதுள்சிமாக் குன்றி லிருந்து உற்பத்தியாகி, கிழக்கு முகமாக 72 கிலோமீற்றர் வரை பாய்ந்து, கடலிலிருந்து 30 கிலோமீற்றரளவில் வெள்ளச் சமவெளியாகிறது. எனவே, இவ்வெள்ளத்தைத் தடுப்பது அவசியமாயிற்று. மேலும், கல்லோயா நதி நீர் பெறும் தளம் சுமார் 1 813 சதுர கிலோ மீற்றர் பரப்பை அடக்கியது. இப்பெரிய பரப்பில் பெய்யும் மழையானது அதிக நீரை இந்நதிக்கு அளிக்கிறது. வடகீழ்ப் பருவக் காற்றால் இப்பகுதி வருடச் சராசரியாக 200 Cm மேல் மழை வீழ்ச்சியைப் பெறுகின்றது. இவ்வளவு நீரும் வீணே கடலுடன் கலப்பதுடன், கழிமுகத்தை அண்மியிருந்த வயல்களையும் வெள்ளத்துள் ஆழ்த்திவந்தது. அத்தோடு இப்பகுதியின் தரையில் மூடப்பட்டுள்ள மண் அதிகம் தடிப்பும், இறுக்கமுமானது.
படம்: 19.4 கல்லோயத்திட்டம்
21

Page 108
அதனால் பருவமழை நீர் இத்தடிப்பான மண்ணை ஊடறுத்துப் பொசிந்து தரைகீழ் வடிகாலாகத் தேங்கி நிற்கக்கூடிய தன்மையற்றிருக்கின்றது. எனவே நிரந்தரமான பயிர்ச் செய்கை குளங்களில்தான் தங்கி இருந்தது. இத்தகைய காரணங்களுக்காக இப்பல பயன்தரு திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுமுள்ளது.
கல்லோயா அபிவிருத்தித் திட்டம் 1948ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. இத் திட்டத்தை செயற்படுத்த ஒரு சபையும் நியமிக்கப்பட்டது.
கல்லோயாத் திட்டத்தின் முதல் வேலையாக இங்கினியக்கலை எனும் இடத்தில் 1200 மீற்றர் நீளமுள்ள ஓர் அணையைக் கட்டினர். மிகவுயர்ந்த இடத்தில் உயரம் 50 மீற்றராகும். இங்கு 77 சதுர கி.மீ பரப்பில் நீர்த் தேக்கமுள்ளது. இந்நீர்த்தேக்கம் கடலிலிருந்து 44 கி.மீ தூரத்தில் இருக் கிறது. இந்நீர்த் தேக்கத்தினால் உருவானதே சேனநாயக்க சமுத்திர ஏரியா கும். இந்த ஏரி 770 000 ஏக்கர் அடி நீரைக் கொண்டுள்ளது. இலங்கையில் உள்ள மற்றைய எல்லா குளங்களிலும் தேங்கும் நீரினளவு இங்கே தேங்கி நிற்கிறது. இந்த ஏரியிலிருந்து கால்வாய்கள் மூலம் நீர்ப் பாய்ச்சல் நடைபெறுகின்றது. தப்புளம், தும்பங்கேணி, சாடியந்தலாவை, நீர்த்தாய், இலுக்குச்சேனை முதலிய பகுதிகள் நீர்ப்பாய்ச்சப்படுகின்றன.
இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இப்பிரதேசத்தில் 13350 ஹெக்டேயர் நிலமே பயிர்ச் செய்கைக்குட்பட்டிருந்தது. பின்னர், இந்நிலப் பரப்பு 10 500 ஹெக்டேயராகக் குறைந்தது. அதனால், கல்லோயா அபிவிருத்தித் திட்டத்தால் 24 275 ஹெக்டேயர் வருடத்திற்கு இருமுறை சாகுபடி செய்வதால், 48 564 ஹெக். பயிர்ச்செய்கை நடைபெறுகிறது. முன்னர் வருடமொன்றுக்கு 10 500 ஹெக். பயிர்ச்செய்கை நடைபெற்ற இடத்தில், இப்போது 48500 ஹெக். பயிர்ச்செய்கை நடைபெறுவது பெரும் அபிவிருத்தியேயாகும்.
கல்லோயாப் பகுதிகளைப் பொறுத்தமட்டில் நெல், மழை அதிகம் பெய்யும் பெரும் போகத்தில் செய்கை பண்ணப்படுகின்றது. சிறுபோகத்தில் துணையுணவுகள் விளைவிக்கப்படுகின்றன. மேட்டுநிலப் பயிர்களாகப் பருத்தி, நிலக்கடலை, புகையிலை, கரும்பு என்பன பயிராகின்றன. இன்று புகையிலைச் செய்கை முக்கியமாகவுள்ளது. நன்னீர்த் தேக்கங்களிலும், சேனநாயக்கா சமுத்திர ஏரியிலும் மீன் பிடிக்கப்படுகின்றது.
கல்லோயாப் பகுதியில் கைத்தொழில் விருத்தியுற்றுள்ளது. சீனி ஆலை, குடிவகைகள் தயாரிக்கும் தொழிற்சாலை, ஒட்டுத் தொழிற் சாலைகள், சவர்க்காரத் தொழிற்சாலை என்பன உருவாகி இயங்கி வருகின்றன. கல்லோயாப் பகுதியில் 75 இலட்சம் கிலோவாட் நீர் மின்சக்தி பெறப்படுகின்றது.
212

19.2.3.2 உடவளவைத் திட்டம் வளவை கங்கையில் அமைக்கப்பட்ட பலநோக்கு அபிவிருத்தித் திட்டம், உடவளவை அபிவிருத்தித் திட்டமாகும். உடவளவை எனுமிடத்தில் வளவை கங்கைக்குக் குறுக்கே அமைக்கப்பட்ட அணையின் மூலம், 3 400 ஹெக்டேயர் பரப்புடைய நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந் நீர்த் தேக்கத்திலிருந்து ஏறக்குறைய 24 300 ஹெக்டேயர் பரப்பிற்கு நீர்ப்பாசனம் கிடைக்கின்றது. இந்த நெல்வயல்கள் வளவை கங்கையின் இடது கரையி லும் அமைந்துள்ளன. மேலும், இந் நீர்த்தேக்கத்திலிருந்து சமணலவேவ, சந்திரிக்காவேவ, வெலிஓயா நீர்த்தேக்கம் என்பன நீரைப் பெறுகின்றன. நெல், கரும்பு, பருத்தி என்பன இத்திட்டத்தில் பயிராகின்றன. இங்கு நீர் மின்வலு நிலையமுள்ளது.
19.2.3.3 மகாவலிகங்கைத் திட்டம் பெரிய ஆற்று வடிநிலத்திட்டமாக விளங்குவது மகாவலிகங்கைத் திட்ட மாகும். ஒன்பது நீர்த்தேக்கங்களும் அவற்றிலிருந்து வடபுறமான கால்வாய் களையும் கொண்ட மகாவலிகங்கைத் திட்டத்தில் 9 இலட்சம் ஏக்கர்ப் பரப்பிற்கு நீர்ப்பாசனம் கிடைக்கவுள்ளது. அத்துடன் 200 கோடி கிலோ வாட் மின்சாரமும் கிடைக்கவிருக்கிறது. 10 இலட்சம் மக்கள் வரையில் இப்பிரதேசத்தில் குடியேற்றப்படவிருக்கின்றனர். இத்திட்டம் பற்றி பின்னால் விரிவாக ஆராயப்படும்.
213

Page 109
இலங்கையின் கைத்தொழில்கள்
இலங்கை அண்மைக்காலம் வரை கைத்தொழிலில் முன்னேறாமைக்குக் காரணம், பயிர்ச்செய்கையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அமைப்பு நிலவுவதாகும். இலங்கையின் தேசிய உற்பத்தியில் ஏறத்தாழ 12% கைத்தொழிற்துறைக்குரியதாகும். புராதன இலங்கையில் நெசவுத் தொழில், எண்ணெய் தயாரித்தல், தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களைப் பயன்படுத்திப் பாத்திரங்கள், ஆபரணங்கள் செய்தல், பாய், பெட்டி இழைத்தல் போன்ற தொழில்கள் விருத்தியடைந்திருந்தன. இன்றும் குடிசைக் கைத்தொழில் அளவில் இவை இயங்கிவருகின்றன.
இலங்கை கைத்தொழில்துறையில் தாழ்நிலையில் இருப்பதற்குக் காரணம் அது நீண்ட காலமாக அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ் குடியேற்ற நாடாக இருந்தமையாகும். அந்நியர்கள் தம் தாய்நாடுகளின் விருத்திக்குரிய வளங்களை இங்கிருந்து எடுத்துச் செல்வதில் கவனமாயிருந்தனர். நமது நாட்டின் கைத்தொழில் விருத்தியில் கவனம் எடுக்கவில்லை. சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இலங்கையில் தொழிற்சாலைக் கைத்தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டன. மூலப்பொருட்கள், மூலதனம், தொழில்நுட்பம் என்பனவற்றில் இலங்கை தாழ்நிலையில் இருந்தாலும் வளர்ந்து வரும் மக்களுக்குத் தொழில் வாய்ப்பளிப்பதற்கும், நாட்டை அபிவிருத்தி செய்வ தற்கும் கைத்தொழில்களின் விருத்தி அவசியமாகும்.
214

சீமெந்துக் கைத்தொழில், ஒட்டுப்பலகைத் தொழில், தோல் தொழில், காகிதத் தொழில், சீனித் தொழில், இரசாயனத் தொழில் என்பன முக்கியமான தொழிற்சாலைக் கைத்தொழில்களாகும்.
20. சீமெந்துத் தொழில் காங்கேசன்துறை, காலி, புத்தளம் ஆகிய மூன்றிடங்களில் சீமெந்துத் தொழிற்சால்ைகள் அமைந்துள்ளன. இவற்றுள் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை முதன்மையானது. இதற்குத் தேவையான முக்கிய மூலப் பொருள் சுண்ணக்கல் ஆகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டிலேயே கிடைக்கின்றது. களிமண் முருங்கனிலிருந்து புகைவண்டி மூலம் தருவிக்கப் பட்டது. சீமெந்து தயாரிப்பதற்குத் தேவையான கிப்சம் என்ற சிலாசத்து எகிப்து, சைப்பிரஸ் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகியது. இத் தொழிற்சாலைக்குத் தேவையான மின்வலு அயலில் கிடைத்தது. மின்வலு வின் விலையுயர்வு காரணமாக இத்தொழிற்சாலை நெய்வேலி (இந்தியா) விலிருந்து கப்பல் மூலம் நிலக்கரியை இறக்குமதி செய்து வந்தது. காங்கேசன் துறைத் துறைமுகம் அதற்கு வாய்ப்பாகவுள்ளது.
காலியில் சீமெந்து ஆலை நிறுவப்பட்டதன் நோக்கம் அப்பகுதி மக்களுக்குத் தொழில் வாய்ப்பு வழங்குவதற்காகும். காங்கேசன்துறையி லிருந்து சுண்ணாம்புக் கல்லும் களிமண்ணும் ஒன்றாக அரைக்கப்பட்ட கிளிங்கர் காலிக்குப் புகையிரத மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பொதியாக்கப்பட்டது. புத்தளத்தில் பாலாவி என்றவிடத்தில் மூன்றாவது சீமெந்து ஆலை நிறுவப் பட்டிருக்கின்றது. இத் தொழிற்சாலைக்குத் தேவையான சுண்ணாம்புக் கல் அரவக்காடு என்றவிடத்திலிருந்தும், களிமண் கலாஒயா நதியைய்டுத்து இலவங்குளம் என்றவிடத்திலிருந்தும் பெறப்படுகின்றன. இவை புத்தள ஆலைக்கு அருகில் இருப்பதால் கைத்தொழில் அமைவிட வாய்ப்பிஜனக் கொண்டுள்ளது.
காங்கேசன்துறையில் 1989ஆம் ஆண்டு 113 147 மெற்றிக்தொன் சீமெந்தும், 178 000 மெற்றிக் தொன் கிளிங்கரும் உற்பத்தி செய்யப்பட்டன. புத்தளத்தில் 308 920 மெற்றிக் தொன் சீமெந்தும், 180 000 மெற்றிக் தொன் கிளிங்கரும் உற்பத்தி செயப்பட்டன. காலியில் 173 543 மெற்றிக் தொன்
சீமெந்து உற்பத்தியாகியது.
இன்று திருகோணமலையில் தனியார் சீமெந்து ஆலை ஒன்று இயங்கி வருகின்றது. மிட்சுயி சீமெந்து ஆலை எனப்படும் இதனை, யப்பானிய நிறுவனம் ஒன்றும் இலங்கை நிறுவனம் ஒன்றும் இணைந்து நிறுவியுள்ளன.
215

Page 110
இலங்கையின் சீமெந்து உற்பத்தி (மெற்றிக் தொன்களில்)
1987 1988 1989 1990 1991
காங்கேசன்துறை 9 732 97 444 113 147 55 446 - காலி 180 056 151 851 173 543 125 194 174 036 புத்தளம் 429 690 383 570 308 920 398 220 445 615
ஆதாரம்: சீமெந்துக் கூட்டுத்தாபன அறிக்கை.
அட்டவணை: 20.1
காங்கேசன்துறை சீமெந்து ஆலை இன்று இயங்கவில்லை. 1991
இலிருந்து அது தன் உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளது. ஈழப் போராளி
களுக்கும், இலங்கை இராணுவத்திற்குமிடையிலான யுத்த நடவடிக்கைகள்
காங்கேசன்துறைச் சீமெந்து ஆலையை இயங்காது செய்துள்ளன. இன்று இலங்கையில் 996 000 மெற்றிக் தொன் சீமெந்து உற்பத்தியாகின்றது.
2O.2 ஒட்டுப்பலகை தொழில்
இலங்கையின் ஒட்டுப்பலகைத் தொழிற்சாலை ஜின்தோட்டையில் அமைந் துள்ளது. தேயிலைப் பெட்டிகள், கதவுகள், சட்டங்கள், தளபாடங்கள் முதலிய பல்வகைப் பொருட்களையும் இத்தொழிற்சாலை இன்று உற்பத்தி செய்து வருகின்றது. *
சலாவா (Salawa) என்றவிடத்திலும் ஒட்டுப் பலகை ஆலையொன்று உள்ளது. ஒட்டுப் பலகை, தேயிலைப் பெட்டிகள், சிப்போர்ட்டுகள் என்பன இங்கு உற்பத்தியாகின்றன. ஜின்தோட்டையில் 3000 ஆயிரம் சதுரமீற்றரும், சலாவாவில் 2 600 ஆயிரம் சதுரமீற்றரும், ஒட்டுப்பலகை சராசரியாக உற்பத்தியாகின்றது: 5 000 கன மீற்றர் சிப்போர்ட்டும் உற்பத்தியாகின்றது: இவ்விரு ஆலைகளிலும் ஏறத்தாழ 2000 ஆயிரம் தேயிலைப் பெட்டிகளும் உற்பத்தியாகின்றன.
20.3 காகிதத் தொழில்
வாழைச்சேனையில் இலங்கையின் முதலாவது காகிதத் தொழிற்சாலை அமைந்திருக்கின்றது. இத்தொழிற்சாலைக்குத் தேவையான வைக்கோலும், இலுக் புல்லும் தேவையானளவு சுற்றடாலில் கிடைக்கின்றது.
வாழைச்சேனைக்கு 24 கி.மீ. தூரத்தில் புனானை எனுமிடத்தில் இலுக்டல் கிடைக்கின்றது. 4 000 தொன் காகிதம் உற்பத்தி செய்ய 5 000 தொன் இலுக் புல்லும், 5 000 தொன் வைக்கோலுந் தேவை. இலங்கையின் இரண்டாவது காகிதத் தொழிற்சாலை எம்பிலிப்பிட்டியாவிலுள்ளது. பேப்பர் வகைகள், மட்டைகள், அப்பியாசக் கொப்பிகள் என்பன இந்தத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகின்றன. வாழைச்சேனையில் வருடா
216

வருடம் சராசரியாக 7 000 மெற்றிக் தொன் பேப்பரும், எம்பிலிப்பிட்டி யாவில் 10 500 மெற்றிக் தொன் பேப்பரும் உற்பத்தியாகின்றன. வாழைச் சேனை ஆலையில் 9 500 மெற்றிக் தொன் காகித மட்டைகளும் உற்பத்தி யாகின்றன.
20.4 சீனித் தொழிற்சாலைகள் கந்தளாய், ஹிங்குரான (கல்லோயா) ஆகிய இடங்களில் சீனித் தொழிற் சாலைகள் அமைந்துள்ளன. இந்த ஆலைகளுக்குத் தேவையான கரும்பு, அயற் பிரதேசங்களில் செய்கை பண்ணப்படுகின்றது. ஹிங்குரானவில் 640 ஹெக்டேயர் பரப்பிலும், கந்தளாயில் 645 ஹெக்டேயர் பரப்பிலும் கருப்பஞ் செய்கை நடைபெற்று வருகின்றது. அத்துடன் தனியாரிடமிருந்தும் கரும்பு வாங்கப்படுகின்றது. ஹிங்குரானவில் ஏறத்தாழ 7 200 மெற்றிக் தொன் சீனியும், கந்தளாயில் ஏறத்தாழ 5 300 மெற்றிக் தொன் சீனியும் உற்பத்தியா கின்றன. இந்த உற்பத்தி நாட்டின் சீனித் தேவையில் 10 சதவீதத்தையே பூர்த்திசெய்கின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் மொன ராகலையில் செவனகல எனுமிடத்தில் புதியதொரு சீனி ஆலை அமைக்கப் பட்டுள்ளது.
இலங்கையின் சீனி உற்பத்தி (மெற்றிக் தொன்களில்)
1987 1988 1989 1990 199
கந்தளாய் ஆலை 2 928 1 435 2 305 2 367 2 558
ஹிங்குரான ஆலை 8 698 11 086 14 2.56 12 139 9 374
செவினகல ஆலை 4 868 II 124 9 078 9 647 10 554
ஆதாரம்: இலங்கைக் கூட்டுத்தாபன அறிக்கை- 1992 அட்டவணை: 20.2
இச் சீனித் தொழிற்சாலைகளில் எஞ்சும் கருப்பஞ்சாறின் துணை கொண்டு பல்வேறு மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இத் தொழிற்சாலைகளிலிருந்து மதுசாரப்பொருட்களைப் (Spirits, Molasses) பெற்று கொழும்பில் குடிவகைகள் (ஜின், பிராண்டி, சாராயம் முதலியன) தயாரித்துப் போத்தல்களின் அடைக்கும் தொழிற்சாலை இயங்கி வருகின் றது. இன்று ஹிங்குரான, கந்தளாய் சீனித் தொழிற்சாலைகள் இயங்கா நிலையில் உள்ளன.
20.5 மட்பாண்டத்தொழில்கள் மட்பாண்டத் தொழில் நீர்கொழும்பு, பிலியந்தலை, பெரலஸ்கமுவா, டெடியாவெல (Dediyawla), மீற்றியக்கொட ஆகிய இடங்களில் இய்ங்கி வருகின்றது. நீர்கொழும்பிலும், பெரலஸ்கமுவாவிலும் உற்பத்தி ஆலைகள்
27

Page 111
அமைந்துள்ளன. நீர்கொழும்பு ஆலைக்குத் தேவையான வெண்களி, பெரலஸ்கமுவாவில் கிடைக்கின்றனது. மட்பாண்டத் தொழிலிற்கு வெண் களியோடு, படிகம், களிக்கல் (Felstar) என்பனவும் தேவை. இவை இரத்தின புரி, எலஹராப் பகுதிகளில் கிடைக்கின்றன. பெரலஸ்கமுவாவில் வெண் களி உற்பத்தியும் (5 000 மெ. தொ.), டெடியாவெலவில் திரள்களியும் (9 600 மெ.தொ.) உற்பத்தியாகின்றன. நீர்கொழும்பிலும் பெரலஸ்கமுவா விலும் பீங்கான் கோப்பைகள், மட்பாண்டங்கள், கழுவுசட்டிகள், குந்து சட்டிகள், சுவர் மாபிள் கற்கள் என்பன உற்பத்தியாகின்றன. இந்த இரு ஆலை களிலும் ஏறத்தாழ 7 000 மெற்றிக் தொன் மட்பாண்டப் பொருட்கள் உற்பத்தியாகின்றன.
20.6 இரசாயனத் தொழிற்சாலை இலங்கையின் இரசாயனத் தொழிற்சாலை பரந்தனில் அமைந்திருக்கின்றது. ஆனையிறவு உப்பளத்தை ஆதாரமாகக் கொண்டு இது அமைந்திருந்தது. இத் தொழிற்சாலையின் பிரதான மூலப்பொருள் உப்பாகும். கோஸ்ரிக் சோடா (1 200 மெ.தொ.), குளோரின் (850 தெ.தொ.), ஐதரோகுளோரிக் அமிலம் (700 மெ.தொ.) மேசை உப்பு (350 மெ.தொ.) என்பன இத் தொழிற்சாலையில் உற்பத்தியாகின. இன்று நாட்டில் நிலவும் யுத்த அசம்பாவிதங்களால் இத்தொழிற்சாலை இயங்காது இருக்கின்றது.
20.7 நெசவாலைகள் இலங்கையின் மூன்று பிரதான நெசவு ஆலைகள் வியாங்கொடை, துல்கிரியா, பூகொடை ஆகியவிடங்களில் அமைந்துள்ளன. இவை நூல் நூற்றல், நெசவு செய்தல் ஆகியவற்றைச் செய்து வருகின்றன. மத்தேகம எனுமிடத்தில் நூல் நூற்றல் ஆலை ஒன்றுள்ளது. மின்னேரியாவில் முன்பு இயங்கிய நூல் நூற்றல் ஆலை ஒன்று இன்று மூடப்பட்டுள்ளது. இந்த நெசவாலைகள், தேசிய புடைவைக் கூட்டுத்தாபனத்தால் முன்னர் நிர்வகிக் கப்பட்டன. தங்குதடையற்ற இறக்குமதிக் கொள்கையால், இங்கு இறக்குமதி யாகும் வெளிநாட்டுத் துணிகளுடன் இவற்றால் போட்டியிட இயல வில்லை. நட்டமடைந்தன. அதனால், இன்று இந்த ஆலைகள், பம்பாய் மில், லக்ஷமி மில் ஆகிய நல்ல முகாமைத்துவமுள்ள வெளிநாட்டுக் கம்பனி களிடம் குத்தகைக்குக் கையளிக்கப்பட்டுள்ளன. 58 மில்லியன் மீற்றர் துணி இலங்கையிலிருந்து ஏற்றும்தியாகின்றது.
20.8 இரும்புருக்கு ஆலை ஒருவெல எனுமிடத்தில் சோவியத் சமவுடைமைக் குடியரசின் உதவியுடன்,
ஒர் இரும்புருக்கு ஆலை நிறுவப்பட்டிருக்கின்றது. இரும்புத்தாதுப் படிவு கள் ஒருவெலவின் சுற்றாடலில் தெலாகாவத்தை, காலவானா, றக்குவானை,
28

அம்பலங்கொட, அக்குறச ஆகிய பகுதிகளிலுள்ளது. நீர் மின்வலு நோட்டன் பிறிஜ்ஜிலிருந்து கிடைக்கின்றது. கழிவு இரும்பு கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆணிகள், உருக்குக் குழாய்கள், இரும்புத் தகடுகள், வலைகள் என்பன உற்பத்தி செய்யப்படுகின்றன.
... r1 இலங்கையின் பிரதான கைத்தொழில்களின் பரம்பல் t గర్వా ومجتمعقة
罗 R2) vpunisiparun sa * ܒ؟
2-1 女 J
W பரங்கள் O
༄༽ 0 tங்கன் நெடுட்கள்
go Li Ji ーミノ *.تروليسws( \ uh--adt
- Gailijohesh நிலவெளி sèr. A கத்திகரிப்பு நிலைப்
2-inhalf AV Čo-Gauai shouplod biasan Iwawu N A. ஒட்டுப்பலகை அதுமதபுரம் | AbA :,责 l VЈ знача-нi, no tri
4susu
\
uigi *) tgủ...,anủ. . ܫ
owơ.......hơgìgiải saka piusori هارو الأدواردي S S ž -i aj
S LM sawan
p ום "ந்ட்ெை دمة وعندn பூங்கொட்டுவ0 துல்லறிய assiseau 专
síGibuido, o மங்கனை ஆ.
63 மக்கலிகள் ah
0 GR 18är6hawa al- பல்லேகலை )Ouid-jana ܐܬܘܣܝܗܺܝܢ.
களனி A O புகொடை സsts.:ണ്. har Tetau
gasyev-6 وه பிலிuந்தலை
செவனகலை
s9biñuʼksÔAA.ld 表 a @○ آهu86 وقwلم ata ۴ - عمان، به همهٔ هند basissil கிந்தெட்டை
*々。 0 عدم-a, -yioppius
A-A-கோக்கலை p>uissain sa Auli
படம்: 20.1 இலங்கையின் கைத்தொழில்கள்
20.9 ஏனைய தொழிற்சாலைகள்
பொலநறுவையில் கட்டிப்பால் தொழிற்சாலை ஒன்றுள்ளது. தமன்கடுவை யில் அமைந்துள்ள கால்நடைப் பண்ணையிலிருந்தும், அயல் மாவட்டங் களிலிருந்தும் சேகரிக்கப்படும் பால், கட்டிப் பாலாக்கப்படுகின்றது.
219

Page 112
வெலிசறையில் பாற் பவுடர் தகரத்திலடைக்கும் ஆலை ஒன்றிருக்கின்றது. அப்பேவெலவில் இன்னொன்றுள்ளது. களனியில் ரயர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இலங்கை றப்பரைப் பயன்படுத்தி கார், றக்ரர் ரயர்கள், ரியூப்புக்கள் உற்பத்தியாகின்றன. திருகோணமலையில் பிரிமா ஆலை அமைந்துள்ளது. இது சீனன்குடாவில் இருக்கிறது. கோதுமையைத் தானியமாக இறக்குமதி செய்து, மாவாக அரைத்து வருகின்றது. ஆண்டிற்கு 600 ஆயிரம் மெற்றிக் தொன் உற்பத்தியாகின்றது. சப்புகஸ்கந்தவில் பெற்றோலியம் சுத்திகரிக்கும் ஆலையும், யூரியாத் தொழிற்சாலையும் அமைந்துள்ளன. புல்மோட்டையில் இல்மனையிற் சுத்திகரிப்பாலை ஒன்றுள்ளது.
2O.O அண்மைக்காலப்போக்கு அண்மைக்காலத்தில் இலங்கையின் கைத்தொழிலில் திருப்திகரமான விருத்தியை அவதானிக்க முடியாதிருக்கின்றது. 1983 யூலைக் கலவரங்களின் காரணமாக 122 கைத்தொழில் நிறுவனங்கள் சேதமடைந்தமை முக்கிய காரணமாகும். அதனால் 13 366 தொழிலாளர் வேலையிழந்தனர். மின் வெட்டு, யூலைக் கலவரங்களால் தோன்றிய வேலைநேரக் குறைவு என்பன வும் உற்பத்தியைப் பாதித்துள்ளன. தங்குதடையற்ற இறக்குமதிக் கொள்கை யும் உள்நாட்டுக் கைத்தொழில் விருத்தி பாதிப்புற்றமைக்கு இன்னோர் காரணமாகும்.
கைத்தொழிலாக்கப் பிரச்சினைகள் இலங்கையில் கைத்தொழில்களை ஆரம்பிப்பதில் பல பிரச்சினைகள்
உள்ளன. அவை:
1. மூலதனப் பற்றாக்குறை இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரம் தாழ்ந்த மட்டத்தில் இருப்பதனாலும், சேமிப்பு குறைவதனாலும் கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்குரிய மூலதனம் இலங்கை மக்களிடம் இல்லை. அதனால் அந்நிய முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதில் அரசு முயன்று வருகிறது.
2. மூலப் பொருட்கள் இல்லாமை இப்போது நாம் இறக்குமதி செய்கின்ற உற்பத்திப் பொருட்களை நாமே உற்பத்தி செய்துகொள்ள நம்மிடம் மூலப்பொருட்கள் இல்லை. முக்கிய மூலப்பொருட்களான நிலக்கரி, இரும்புத்தாது என்பன நம்மிடமில்லை. எனவே நாம் ஆரம்பிக்கும் கைத்தொழில்கள் கிடைக்கின்ற மூலப் பொருட் களைக் கொண்டனவாகவும் விவசாயம் தழுவியனவாகவும் இருக்க வேண்டி யுள்ளது.
220

3. வலுவும் எரிபொருளும் போதியளவின்மை இலங்கையில் கைத்தொழில்களை இயக்கக்கூடிய பெற்றோலியமோ நிலக் கரியோ இல்லை. இலங்கையில் கிடைக்கக்கூடிய வலு நீர் மின்வலுவாகும். எனினும் இலங்கையின் நீர் மின்வலு இன்னமும் விருத்தியடைய வேண்டும். மழைவீழ்ச்சி பொய்த்ததால் நீர்மின்வலு உற்பத்தி பாதிக்கப்பட்டு அண்மைக் காலத்தில் பல தொழிற்சாலைகள் இயங்கதிருந்தமை நாமறிந்தவையே.
4. பயிற்சிபெற்ற தொழிலாளரின்மை கைத்தொழில்களில் பயிற்சிபெற்ற தொழிலாளர்கள் இலங்கையிலில்லை: திறமைசாலிகளும் மூளைசாலிகளும் இங்கிருந்து ஊதிய உயர்விற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர்.
5. சந்தை வாய்ப்பின்மை
இலங்கை ஒரு சிறிய நாடு. மக்களின் வருமானமும் உயர்வாகவில்லை. எனவே கைத்தொழிற் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான உள்நாட்டு வாய்ப்பு குறுகியதாகும். வெளிநாடுகளில் போட்டியிட்டுச் சந்தை வாய்ப்புக்களைப் பெறமுடியுமா என்பது ஐயத்திற்குரியது.
எனவே மூலதனப் பற்றாக்குறையையும், தொழில் நுட்பம் மிக்க தொழிலாளர்களையும் உருவாக்குவதற்காகவே சுதந்திர வர்த்தக வலயம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
22

Page 113
வ்கையில் 2 1
இலங்கையின் இயற்கை வளங்களுள் கடல் வளமும் ஒன்றாகும். இவ்வளம் மீன்பிடித்தல் மூலம் பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையில் மீன்பிடித்த லிற்குச் சாதகமான ஏதுக்கள் பலவுள்ளன. முதலில் அவற்றினை நோக்கு வோம்.
21.1 சாதகமான ஏதுக்கள் இலங்கையின் மீன்பிடித் தொழில் விருத்திக்குச் சாதகமான ஏதுக்கள் பல உள்ளன. விதையாமலேயே பயன்பெறும் இக்கைத்தொழிலின் விருத்திக்கு இலங்கையைச் சூழ்ந்து நான்கு புறங்களும் கடல் காணப்படுவது சாதகமான ஏதுக்களில் முதன்மையானதாகும். இலங்கை ஒரு பெருந்தீவாகக் காணப்படு வதே இத்தொழிலில் விருத்திக்குப் பேருதவியாக அமைகின்றது. இலங்கை யின் கரையோரம் ஏறத்தாழ 1 367 கி.மீ நீளமானதாகவுள்ளது. தீவைச் சுற்றி 30 கி.மீ. தூரத்திற்குச் சென்று கரையோர மீன்பிடி நடைபெறுவதால் 40 000 சதுர கி.மீ பிரதேசத்தில் மீன் பிடிக்கக் கூடியதாக உள்ளது. இயந்திரப் படகுகளின் உதவியுடன் கரையிலிருந்து 75 கி.மீ தூரத்திற்குச் சென்று மீன் பிடிக்கக்கூடியதாக இருப்பதால், 80 000 சதுர கி.மீ கடற்பரப்பில் மீன்பிடிக்க முடியும். இப்பெரிய கடற்பரப்பில் இலங்கைக்குத் தேவையான 50 இலட்சம் அந்தர் மீனையும் பிடிக்கமுடியும். இலங்கை ஒரு கண்டமேடையில் அமைந்திருப்பதோடு, இக்கண்டமேடை கரையிலிருந்து 15 கி.மீ தொடக்கம் 30 கி.மீ வரை அகலமானதாக அமைந் திருப்பது மீன்பிடித் தொழிலுக்குப் பேருதவியாக விளங்குகின்றது.
222

மீன்பிழநிலையங்கள் இ க் கண் ட மே  ைட தெற்கே ஒடுங்கியதாக | வும், வடக்கே அகன்ற புதுகு. தாகவும் உளது. கண்ட
ஜீ:ேத்தள étoezol
மேடைகள் ஆழ்கடல் அடித்தளங்கள் போல் அன்றி, சூரிய வெப்பத் தைப் பெறுவதால், மீன்
கள் வாழ்வதற்கேற்ற பிளாங்ரன் போன்ற உணவுகளைக் கொண்ட னவாகவுள்ளன. மேலும், இனப் பெருக்கத்திற்கு ஏற்ற வெப்பத்தையும், மறைந்து வாழ்வதற்கு ஏற்ற ஒதுக்கிடங்களை யும் இவை கொண்டிருக் கின்றன.
படம்: 21.1 இலங்கையின் மீன்பிடிநிலையங்கள்
அத்தோடு இலங்கையின் நதிகள் இக்கண்டமேடையில், உள்நாட்டிலிருந்து காவிவரும் தாவரத் துணுக்குகளை மிதக்கவிடுகின்றன. அவை மீன்களுக் கேற்ற உணவாக அமைகின்றன. இவை காரணமாக இலங்கையைச் சூழ்ந் துள்ள கண்டமேடை ஏராளமாக மீன்களைக் கொண்டதாக விளங்குகின்றது.
கண்டமேடையின் அடித்தளத்தில் தீவுகள் போன்று, நீருள் அமைந்த கடலடித்தள மேடைகள் சிறந்த மீன்பிடித் தளங்களாம், ஆழங்குறைந்த இவை மீன்கள் வாழ்வதற்கேற்ற தன்மைகளை அளிப்பனவாக விளங்கு கின்றன. கடற்றாவரங்கள் இக் கடலடித்தள மேடைகளில் வளர்ந்து மீன்களுக்கு உணவையும், உறைவிடத்தையுந் தருகின்றன. அமைதியான இக்கடலடித்தள மேடைகளில் ஏராளமாக மீன்கள் வசிக்கும். இத்தகைய கடலடித்தள மேடைகள் இலங்கையில் முக்கியமாக இரண்டு உள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வட கிழக்கே இந்தியாவின் கோடிக்கரை முனைவரை பரந்துள்ள பீற்று கடலடித்தள மேடை 2500 சதுர கி.மீ பரந்த சிறந்த மீன்பிடித் தளமாகும். கன்னியாகுமரிக்குத் தெற்கே இந்தியாவின் தொடராக அமைந்துள்ள வோர்ஜ் கடலடித்தளமேடை இன்னொன்றாகும்.
இலங்கையின் நீண்ட கரையோரம் பல குடாக்களையும், கடல் நீரேரிகளையுங் கொண்டுள்ளது. காற்றினதும் அலையினதும் தாக்கத்தி னின்றும் பாதுகாப்பாக மீன்பிடிக் கலங்கள் தங்க இக்குடாக்கள் மிகவும்
223

Page 114
ஏற்றனவாக உள்ளன. நல்ல பல மீன்பிடித் துறைமுகங்கள் இக்குடாக்களை ஆதாரமாகக் கொண்டு உருவாகியுள்ளன. கடல்நீரேரிகள் இறால் போன்றன வளர்ந்து பெருகுவதற்கு ஏற்றன. இவை ஆழமற்றனவாதலால் சிறு வள்ளங் களையும் வீச்சு வலைகளையும் உபயோகித்தே இவற்றில் மீன் பிடிக்கலாம்.
மேலும் இலங்கையெங்கிலும் மீனுக்கு நல்ல தேவையுள்ளது. உள் நாட்டுக் கேள்வி இங்கு பிடிக்கப்படும் மீனின் அளவிற்கு அதிகமாகவுளது. இவை யாவும் இலங்கையின் மீன்பிடித் தொழிலின் விருத்திக்குச் சாதகமான ஏதுக்களாகவுள்ளன.
21.2 மீன்பிழப்பருவம் இலங்கையின் வடமேற்குப் பகுதிகளும், கிழக்குப் பகுதிகளும்தாம் இலங்கையின் சிறந்த மீன்பிடிப் பகுதிகளாகவுள்ளன. இலங்கையில் அதிக அளவு மீனை இப்பகுதிகளே பிடிக்கின்றன. கற்பிட்டி தொட்டு, மன்னார், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, முல்லைத்தீவு என்பனவற்றை உள்ளடக்கி திருகோணமலை வரையுள்ள பகுதிகளில் அதிகமாக மீன் பிடிக்கப்பட்டு வருகின்றது. இவற்றிற்கு அடுத்ததாகத் தென்மேற் பகுதி முக்கியவிடத்தைப் பெறுகின்றது. சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, அம்பலாங்கொடை, தங்காலை என்பன தென்மேற் பகுதியின் மீன்பிடி இடங்களாகவுள்ளன. இலங்கையின் கரையோரங்களில் ஏறக்குறைய 120 000 மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிற் பெரும்பாலானோர் தீவின் வட கரைப் பாகங்களிலேயே உள்ளனர்.
இலங்கையின் மீன்பிடியிடங்கள் பருவத்திற்குப் பருவம் மாறுகின்றன. அதனால் மீனவர்களும் தம் தொழிலிற்காக இடம்பெயரு கின்றார்கள். இந்த இடப்பெயர்ச்சியை இலங்கையின் காற்றுக்களே தூண்டு கின்றன. தென்மேல் பருவக் காற்றுக் காலத்தில், தென்மேற் பிரதேசத்தில் மீன்பிடி இடர் தருவதாக இருப்பதால், அவ்விடத்து மீனவர்கள் வடகிழக்கு கரைகளுக்கு வந்து, அப்பருவத்தில் மீன்பிடிக்கின்றனர். பின் வடகீழ் பருவக் காற்றுக் காலத்தில் இவர்கள் தென்மேற் பிரதேசத்திற்குத் திரும்பிச் சென்று விடுகின்றனர். யாழ்ப்பாணக் கடல் நீரேரிகளுள் மீன்பிடியில் ஈடுபட்டுள் ளவர்கள் இடம்மாறுவது கிடையாது. இங்கு காற்றுக்களின் தாக்கம் அதிகமின்மையே காரணமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டினை அடுத்த தீவுகளில் வாழும் மீனவர்கள், அத்தீவுகளிலேயே பருவத்திற்குப் பருவம் இடம் மாற்றிக் கொள்கிறார்கள். உதாரணமாக நெடுந்தீவில் தென்மேல் பருவக்காற்றுக் காலத்தில் வடக்குக் கரையில் மீன்பிடிப்பார்கள், வடகீழ்ப் பருவக்காற்றுக் காலத்தில் தென் கரையில் மீன்பிடிக்கிறார்கள்.
224

21.3 மீன்வகைகள்
இலங்கையைச் சூழ்ந்துள்ள கடல்களில் அயன மண்டலத்திற்குரிய மீன் வகைகளே பெரிதும் காணப்படுகின்றன. இடைவெப்ப வலயத்திற்கோ, முனைவுப் பிரதேசங்களுக்கோ உரிய சாடின், சமன், திமிங்கலம் போன்ற மீன் வகைகளை இக்கடல்களிற் காணமுடியாதுள்ளது. சுறாவகைகளும், பருமனில் குறைந்த மீன் வகைகளும், இறால், கணவாய், நண்டு வகைகளும், ஆமை, கடல் பன்றி, கடலட்டை என்பனவும் அயன மண்டலக் கடலிற்குரியன. இவையே இலங்கையைச் சூழ்ந்த கடற்பரப்பில் பிடிக்கப்படுகின்றன.
இலங்கையின் கடல்படு தொழில்களில் மீன் பிடித்தலே முக்கிய மானதாக உள்ளது. மீன் பிடித்தல் பெரிதும், கடற்கரையோரங்களில் நடை பெற்று வருகின்ற போதிலும், ஆழ்கடலிற்குச் சென்று மீன் பிடித்தலும் இன்று விருத்தியுற்று வருகின்றது.
இலங்கையின் கடல்படு தொழில்களில் முக்கியமான ஏனைய வகை கள் பின்வருவன. இறால் பிடித்தல், நன்னீர்ப் பாகங்களில் மீன் பிடித்தல், சிப்பி குளித்தல், முத்துக் குளித்தல் எனபனவாம்.
இறால் பிடித்தல் பெரும்பாலும் கடல் நீரேரிகளிலேயே நடைபெறு கின்றது: நீர்கொழும்பு, புத்தளம், மன்னார், பொன்னாலை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இறால் பிடிக்கப்படு கின்றது.
இலங்கையில் 80 000 ஹெக்டேயர் நன்னீர்ப் பரப்பு உண்டு. குளங் களும், ஆறுகளும் இவற்றுளடங்கும், இன்று நாளொன்றிற்கு ஓர் ஹெக்டேயர் நன்னீர்ப்பரப்பில் 50 கி.கி. மீன் பிடிக்கப்படுகின்றது. வருடம் 35 இலட்சம் கி.கி. மீன் பிடிக்கப்படுகின்றது. நன்னீர்ப் பாகங்களில் பிடிக்கப் படும் மீன் சேற்றுமணம் உடையதாக இருப்பதால், பெரிதும் மக்களால் விரும்பப்படுவதில்லை. குளங்களை ஆழமாக்குவதன் மூலம் நீரைப் பாதுகாத்து வரண்ட பருவத்திலும் மீன்கள் இங்கு வாழ வசதி அளிப்பதோடு, சிறந்த தரமான மீன்களை இவற்றில் ளேர்ப்பதற்கும் முயற்சிகள் நடை பெறுகின்றன. w
பாக்குநீரிணையில் சங்குகள் குளிக்கப்பட்டு அவை பெரும்பாலும் மலிவான காப்புகள் செய்வதற்கு உபயோகிக்கப்படுகின்றன.
முத்துச்சிப்பிகள் மன்னார் வளைகுடாவில் ஏராளமாக இருக்கின்றன.
முத்துக்குளித்தலை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. பல வருடங்களுக்கு
ஒருமுறை முத்துக்குளித்தல் நடைபெறும் திருகோணமலை, தம்பலகாமம்
குளத்தில் குறைந்தரக முத்துச்சிப்பிகள் கிடைக்கின்றன. 1951ஆம் ஆண்டு
முத்துக் குளித்தலால் அரசாங்கத்திற்கு 18 000 ரூபா வருமானம் கிடைத்தது.
225

Page 115
21.4 மீன்பிழமுறைகள் தொடக்க காலத்திலும் பார்க்க, உலகத்தின் முன்னேற்றத்திற்கு இணங்க, இலங்கையின் மீன்பிடி முறைகளும் விருத்தியுற்றுள்ளன என்பது மறுக்க இயலாதது. புராதன காலச் சிறு படகுகளையும், தோணிகளையும், வள்ளங் களையும், கட்டுமரங்களையும் உபயோகித்து இன்றும் மீன்பிடித்து வருகின் றனர். கரையோர மீன்பிடித்தலிற்கே இவை பெரிதும் பயன்படத்தக்கனவாக விளங்கி வருகின்றன. கரையோர மீன் பிடித்தலிற்குப் பலவகை வலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வள்ளங்களோடும் கட்டுமரங்களோடும் இன்று கரையோரக் கடலில் இறங்கி, வலைவீசிப் பிடிப்பதற்கு வீச்சுவலை கள் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கை எங்கிலும் பரவலாக இம்முறை யுள்ளது. 800-1200 மீற்றர் நீளமான வலையைக் கரையோரத்தில் ஒருமுனை இருக்க மறுமுனை கடலினுள் வளைத்துக்கொண்டு வரப்பட்டு, ஈற்றில் இரு முனைகளையும் கரையினின்றும் கோலி வளைத்து மீன் பிடிக்கின்றனர். இதனை கரைவலை என்பர். இம்முறை தென்மேல் பகுதிகளில் பெரிதும் நடைமுறையிலுள்ளது. கரையோரத்திலோ அன்றி சிறிது ஆழத்திலோ கம்பங்களை நட்டு அவற்றில் வேலிபோன்று வலையைக் கட்டி மறித்தும் மீன் பிடிக்கின்றனர். கலவலை மீன்பிடித்தல் அல்லது இறகுவலை மீன் பிடித்தல் என்று வழங்கப்படும். இவற்றைவிட இன்று கரையோர மீன் பிடித்தலிற்கு நைலோன் வலைகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் தூண்டிலிட்டு மீன் பிடித்தல் பேரளவில் இலங்கை எங்கினும் செயலி லுள்ளது. பொறிகட்டிப் பிடித்தல், சூள்கொண்டு பிடித்தல் என்பன இலங்கையின் கடல் நீரேரிகளில் நடைபெறுகின்றன.
இன்று ஆழ்கடலிற்குச் சென்று மீன்பிடித்தல் நடைபெறுகின்றது. மீனவர்களின் கலங்கள் யந்திரசாதனங்கள் இணைக்கப்பட்டனவாகவுள்ளன. எல்லாக் காலங்களிலும் யந்திர சாதனங்கள் இல்லை எனினும், கணிசமான அளவு யந்திர வள்ளங்கள் இன்று மீன் பிடித்தலில் ஈடுபட்டுள்ளன. இம் மோட்டார் வள்ளங்களை உபயோகித்து அதிக மீன் பிடிப்பதற்கு அரசாங்கம் வழிகாட்டி வருகின்றது. கட்டுமரங்களிலும், படகுகளிலும் இயந்திர மோட்டார்களை இணைத்து மீன்பிடிக்கச் செய்வதற்கு அரசாங்கம் கடன் உதவி அளித்து வருகிறது. நைலோன் வலையும் விநியோகித்து வருகின்றது. இவ்வியந்திரப் படகுகளையும் நைலோன் வலைகளையும் உபயோகித்து, கன்னியாகுமரிக்குத் தெற்கேயுள்ள வோர்ஜ் மீன்பிடித் தளத்திலும் பீற்று கடலடித்தள மேடையிலும் நிறைய மீன் பிடிக்கலாம். தற்போது பலர் அவ்வாறு மீன்பிடித்து வருகின்றனர். இலங்கையில் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கக் கூடிய 576 றோலர் என்னும் பெரிய மீன்பிடிக் கப்பல்கள்
உள்ளன.
226

21.5 மீன் உற்பத்தி இன்று மீன்பிடியில் யந்திரங்கள் பொருத்தப்பட்ட பாரம்பரியப் படகுகளும், நவீன யந்திரப் படகுகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ 2000 யந்திரப் படகுகளும் 3% தொன் 9 950 யந்திரங்கள் பொருத்தப்பட்ட கலங்களும் உள்ளன. இவை ஆழ்கடலில் சிறியளவில் மீன்பிடிக்கின்றன. அரசாங்க மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான நவீன கலங்களும் மீன்பிடியிலிடுபட்டிருக்கின்றன. இதற்குச் சொந்தமான 6 றோலர்களும், 2 ரூனா வள்ளங்களும், 40 சாதாரண யந்திர வள்ளங்களுமுள்ளன. நாட்டின் மீன் உற்பத்தியில் 3% இவை பிடிக்கின்றன. எல்லாமாக 26 697 மீன்பிடிக் கலங்கள் மீன்பிடித்தலில் ஈடுபட்டுள்ளன. (1999)
இலங்கையில் நன்னீர் மீன்பிடியை அபிவிருத்தி செய்யமுடியும். ஆறு, குளம், குட்டை போன்ற உள்நாட்டு நீர் நிலைகளில் ஏறத்தாழ 700 சதுர கிலோ மீற்றர் பரப்பில் மீன்பிடிக்க முடியும். இலங்கையின் நன்னீர் மீன்பிடி விருத்தியுறவில்லை. மீன் உற்பத்தியில் 10% இலும் குறைவாகவே நன்னீரில் பிடிக்கப்படுகின்றது. நன்னீர்களில் வரால், சேற்றுக்கொண்டை, கங்கன், கெழுறு, விலாங்கு முதலியன மீனினங்களுள்ளன. நன்னீர்களில் மீனை வளர்த்தலை விருத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பராக்கிரம சமுத்திரம், மின்னேரியாக்குளம் ஆகியவற்றில் பெருமளவு நன்னீர் மீன் பிடிக்கப்படுகின்றது.
இலங்கையில் வருடா வருடம் சராசரியாக 279 900 மெற்றிக் தொன் மீன் பிடிக்கப்படுகின்றது. இவற்றுள் ஏறக்குறைய 40 000 மெற்றிக் தொன் ஐஸ் கட்டிக்குள் பாதுகாக்கப்பட்டு பிற இடங்களுக்கு அனுப்பப் படுகின்றது. மிகுதி உடனடியாக விற்பனை செய்யப்பட்டோ கருவாடாக்கப் பட்டோ விடுகின்றது.
இலங்கை மீனவர்கள் வறியவர்கள். கடனாளிகள், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை, ತಿಣTಖಿ நவீன கலங்களையும் கருவி களையும் அவர்கள் வாங்க மூலதனழில்லை. அதற்காக அரசாங்கம் அவற்றை அவர்கள் வாங்குவதற்கு 35-50% உதவித்தொகை வழங்கிவருகிறது. மீன் களைக் கெடாமல் பாதுகாக்கும் குளிரூட்டல் வசதிகள் நன்கு விருத்தி யடையவில்லை. அதனால் ஐஸ் தொழிற்சாலைகள் கரையோரங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. மீன்பிடித்துறைமுகங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
1973ஆம் ஆண்டு இலங்கையின் மீன் உற்பத்தி 99 000 மெற்றிக் தொன் ஆகும். இந்த அளவு ஒரு தசாப்தத்தில், 1983இல், 218 500 மெற்றிக்
227

Page 116
தொன்களாக உயர்ந்துள்ளது. 1984இல் மீனுற்பத்தி 169 000 மெற்றிக் தொன் களாகும். இது முன்னைய ஆண்டிலும்பார்க்க 28% வீழ்ச்சியைக் காட்டு கிறது. இதற்குக் காரணம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடற்பிராந்தியம் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியமையால் இம் மாவட்டங்களில் மீனுற்பத்தி வீழ்ச்சியடைந்தமையாகும். இன்று இலங்கையின் மீன் உற்பத்தி 279 900 ஆக உயர்ந்துள்ளது. வடக்குக் கிழக்கில் மீன்பிடி பூரணமாக நிகழில் இந்த அளவு 400 000 மெற்றிக் தொன்னாக உயரும் என மதிப்பிடப்பட் டுள்ளது.
இலங்கையிலின்று மீன்பிடித் தொழிலிலீடுபட்டவர்கள் வறியவர் களாக உள்ளனர். இவர்களது வாழ்க்கைத்தரம் உயராதபடியினால், ஏனைய
வர்கள் இத்தொழிலில் ஈடுபடத் தயங்குகின்றார்கள்.
படித்த இளைஞர்களை மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப் பயிற்சி அளிக்கப் படுவது அவசியம். ஏனைய நாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பி மீன்பிடித் தொழிலில் பயிற்சி அளிக்கவேண்டும். நவீன இயந்திரங்களையும் குளிர் முறைச் சாதனங்களையும் அதிகமாக உபயோகிக்க வேண்டும். மீன்பிடி ஆராய்ச்சி நிலையங்கள் நிறுவப்படல் வேண்டும். இத்தகைய பல முயற்சிகளைக் கைக்கொண்டு இலங்கையின் மீன்பிடித் தொழிலை விருத்தி செய்து கொள்வது இலங்கையின் பொருளாதார விருத்திக்கு இன்றியமை யாதது. வெகு விரைவாகவும் சுலபமாகவும் இலங்கையில் முன்னேற்றந் தரக்கூடிய ஒரு தொழில் உண்டென்றால் அது மீன்பிடித் தொழிலேயாகும்.
இன்று மீன்பிடித் துறைக்கான அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் பெருமள வில் உற்பத்தியை அதிகரிப்பதையும், மீன்பிடிக் கலங்களை இயந்திரமய மாக்குவதையுமே வலியுறுத்துகின்றன.
228.

பகுதி : ஐந்து
இலங்கையின்
அபிவிருத்தியியல்

Page 117

2 2 இலங்கையின் துரித மகாவலித் திட்டம்
இலங்கை அபிவிருத்தியடைந்துவரும் ஒரு நாடாகும். இலங்கையில் ஆதி யில் நிலவிய தன்னிறைவுப் பொருளாதாரம், ஐரோப்பிய குடியேற்ற நாடாக இருக்க நேர்ந்ததன் விளைவாக இறக்குமதி-ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றமடைந்தது. மூன்று நூற்றாண்டுகளாக இலங்கை ஐரோப்பிய குடி யேற்ற நாடாக விளங்கியது. அதனால் இலங்கையின் பொருளாதார அமைப்பு மாற்றமடைந்தது. பெருந்தோட்டப் பயிர்கள் இலங்கையின் முக்கிய பொருளாதார வாய்ப்புகளாக மாற்றமடைந்தன. உணவுப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி கவனிக்கப்படாமல் போனது. நமது நாட்டின் தேசிய வருவாய் நமது ஏற்றுமதிப் பொருட்களின் வர்த்தக நிலையில் தங்கியிருக்க
நேர்ந்துள்ளது.
இலங்கை மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதனால் அவர்களுக்குத் தேவையான உணவை வழங்குவதும், வேலைவாய்ப்பினை வழங்குவதும் அவசியமாகவுள்ளது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளாலேயே முடியும். விவசாயத் துறையையும், கைத்தொழிற் துறையையும் ஒருங்கே அபிவிருத்தி செய்தல் வேண்டும். எனவேதான் உணவுற்பத்தியை அதிகரிப் பதற்குப் பல நடவடிக்கைககள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றினை ஏற்கனவே படித்துள்ளோம். நீர்ப்பாசன வசதிகளை அமைத்துப் புதிய விளை
231

Page 118
நிலங்களைப் பெறுவதும், ஏக்கருக்குரிய விளைச்சலை அதிகரிப்பதும் அவசியமானவை. உள்நாட்டு மூலப்பொருட்களைக் கொண்டு கைத் தொழில்களை அபிவிருத்தி செய்தல் அவசியம். மூலதனம், தொழில்நுட்பப் பற்றாக்குறை என்பன நமது நாட்டின் பிரச்சினைகள். இவற்றினை எல்லாம் வெற்றிகொண்டு நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
22.1 மகாவலி வழநிலம்
335 கிலோ மீற்றர் நீளமான மகாவலி கங்கை ஹோட்டன் சமவெளuபில் உற்பத்தியாகின்றது. கொத்மலை ஒயாவை மகாவலியின் தோற்றக்கிளை எனலாம். கொத்மலை ஒயா ஹோட்டன் சமவெளியில் உற்பத்தியாகி, தென் மேற்கிலிருந்து வட கிழக்காகக் கிளைண்டியான் எனுமிடம் வரை பாய் கின்றது. இதற்கு அப்பால் வடக்குத் திசையில் திரும்பி 5 கி.மீ. ஒடி கலிடோனிய எனுமிடத்தில் தமகஸ்தலாவை ஒயாவைச் சந்திக்கிறது. அதேபோல தலவாக்கொல்லையில் நுவரெலியாவிலிருந்து வரும் நனுஒயா வைச் சந்தித்துத் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறது. இவ்வாறு பாயும் கொத்மலை ஒயா, நாவலப்பிட்டிக்குச் சில மைல்களுக்கு வடக்கே மகாவலி கங்கையுடன் இணைகின்றது. கொத்மலை ஒயாவிலேயே சென் கிளியர், எல்ஜின் நீர்வீழ்ச்சிகள் காணப்படுகின்றன.
ஹற்றன் மேட்டு நிலத்தை விட்டு விலகிய மகாவலிகங்கை, கண்டி மேட்டு நிலத்திற்குள் பிரவேசிக்கின்றது. இங்கு ஏறக்குறைய சமவுயரமான பள்ளத் தாக்காக இருப்பதால், நதியின் வேகம் குறைவானதாக இருக்கின்றது. இந்நதி பேராதனை வழியாகச் சென்று, கண்டி நகரை ஒரு வளைந்த பள்ளத்தாக்கு வழியாக வலம் வந்து, தும்பறைப் பள்ளத்தாக்கை அடை கின்றது. கண்டி நகருக்கு வடக்கே மகாவலி கங்கையில் ஏற்படும் முழங்கை வளைவு கட்டுகஸ்தோட்டை எனுமிடத்தில் நிகழ்கின்றது. மகாவலி கங்கை தும்பறைப் பள்ளத்தாக்கை அடைந்ததும், நதியின் போக்கு நக்கிள்ஸ் மலை களினால் நிர்ணயிக்கப்படுகின்றது. p
ஹற்றன் மேட்டு நிலத்தை விட்டு விலகிய மகாவலிகங்கை, கண்டி மேட்டு நிலத்தில் பிரவேசித்து தும்பறைப் பள்ளத்தாக்கினூடாகப் பாயும்போது, இப்பள்ளத்தாக்கின் தென்கிழக்குப் பாகத்தில் ஊவா வடிநிலத்தில் உற்பத்தி யாகி வரும், உமா ஒயா, பதுளை ஓயா, லொக்கல் ஒயா ஆகிய கிளை நதி களைத் தன்னோடு இணைத்துக் கொள்கிறது. உமா ஒயா, பதுளை ஒயா, லொக்கல் ஓயா என்பன ஊவா வடிநிலத்தின் வழியாகப் பாய்வதால் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிக நீரைப் பெறுகின்றன.
இதற்கு அப்பால் நதி வரண்ட பிரதேசத் தாழ்நிலம் வழியாகப் பாய்கின்றது. இந்நிலையை நதி அளுத்நுவர வரையில் அடைந்துவிடுகின்றது. நக்கிள்ஸ்
232

மலைத்தொடருக்குச் சமீபமாக உற்பத்தியாகின்ற அம்பன் கங்கை எலஹர விற்குச் சமீபமாக மகாவலி கங்கையின் இடதுபாகத்தில் இணைகின்றது.
திருகோணம
Ges ir vuur ais
مر A சிவகுெவிவாதம
م-سسسسستیه " را ܔ"
- - - - - - حيحية
படம்: 22.1 மகவலிகங்கை வடிநிலம்
உலர் பிரதேசத் தாழ்நிலத்தில் பாயும் நதி இரு கிளைகளாகப் பிரிந்து கடலை அடைகின்றது. கிண்ணியா என்ற கிளை கொட்டியாராக் குடாவில் சங்கம மாகின்றது. வெருகல் என்ற கிளை இதற்குத் தெற்கே கடலைச் சங்கமிக் கிறது.
மகாவலிகங்கை மிகப் பெரிய வடிநிலத்தைக் கொண்டுள்ள போதிலும் ஏனைய வடிநிலங்களிலும் விருத்தி குன்றியதாகவே காணப் பட்டது. 1 600 சதுர கி.மீ பரப்பினை வடிநிலமாகக் கொண்டிருக்கிறது.
233

Page 119
மகாவலிகங்கை 66 இலட்சம் ஏக்கர் அடி நீரை ஆண்டிற்கு ஆண்டு கடலு டன் கலந்தது. நீரைப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பல பயன்தரு திட்டமே மகாவலி கங்கையை வடமாகாணம் நோக்கித் திருப்புந் திட்ட மாகும். இத்திட்டம் நிறைவேறில் 130 000 ஹெக்டேயர் பரப்பிற்கு நீர்ப் பாய்ச்ச முடியும். தென்மேல் பருவக்காற்றுக் காலத்தில் ஆற்றின் வடிநிலத் தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கைத் தடைசெய்ய முடியும். குளங்களில் மீன் வளர்க்கலாம். வடமத்திய மாகாணம் முழுவதும் நீர்ப்பாசன வசதியையும், நீர் மின் வலுவையும் பெறும். உலர் பிரதேசத்திற்கு ஊடாக மகாவலி கங்கையை கொத்மலையிலிருந்து வவுனியா வரை திருப்பி ஓட விடுவதால், உலர் பிரதேசம் செழிப்பு வாய்ந்த பகுதியாக மாறிவிடும்.
மகாவலிகங்கை, உற்பத்தியாகின்ற ஈரவலயத்தில் 500 செ. மீற்றர் களுக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சியைப் பெறுகின்றது. மேலும், இது ஊடறுக் கும் பகுதிகளில் அணைகள், கால்வாய்கள் என்பன கட்டுவதற்குத் தரைத் தோற்றம் சாதகமாகவுள்ளது. நீரும் உவர்த் தன்மையற்றுள்ளது.
22.2 பழைய திட்டம் 1977ஆம் ஆண்டிற்கு முன் மகாவலி கங்கையை வடக்கே திருப்புந் திட்டம் ஒரு கட்ட அமைப்பினை மட்டும் கொண்டிருந்தது. அந்த அமைப்பு
வருமாறு:
கண்டியிலிருந்து ஆற்றினை வடமத்திய மாகாணத்திற்குத் திருப்புவ தற்குக் கண்டியிலிருந்து 3 மைல்கள் தூரத்திலுள்ள பிறிம்றோஸ் குன்றில் பிறிம்றோஸ் அணை (பொல்கொல்ல) கட்டப்படும். இந்த அணை 20 அடி உயரமும், 500 அடி நீளமுமானது. இந்த அணையிலிருந்து வடக்குப் புற மாகக் குடையப்படும் மூன்று சுரங்கங்களுக்கு ஊடாக 1 வினாடிக்கு 2500 கனஅடி நீர் வடமத்திய மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும். உக்கு வெல, டிக்கல, லெண்டோர் எனும் இடங்களிலேயே சுரங்கங்கள் அமைந் திருக்கும். பிறிம்றோஸிலிருந்து வடமத்திய மாகாணமூடாக அக்குறணை, வத்தேகம, மாத்தளை, தம்புளை, சிகிரியா, ஹபறணை, கெப்பற்றிகொல வழியாக வவுனியா வரை அமைக்கப்படும் கால்வாய் 124 மைல்கள் நீளமானதாக இருக்கும்.
உக்குவெல, டிக்கல (நாலத்தை), லெண்டோர் எனும் சுரங்கங்களின் முடிவில் மூன்று நீர்மின் நிலையங்கள் அமைக்கப்படும். இந்நீர்மின் நிலையங்கள் 260,000 கிலோவாட் மின்வலுவை உற்பத்தி செய்யும். இம் மூன்று நீர்மின்வலு நிலையங்களும் பிறிம்றோஸ் அணையிலிருந்து 43 மைல் களுக்குள் உள்ளன. கால்வாயின் மிகுதி 81 மைல் நீளத்தில் எவ்வித நீர் மின்வலு நிலையங்களும் இரா.
234

இப்பழைய திட்டத்தை நிறைவேற்ற 30 வருடங்களும் 120 கோடி ரூபாவும் அன்று தேவைப்பட்டன.
பழைய திட்டத்தின்படி பொல்கொல்லை நீர்த்தேக்கம், போவத்தன்னை நீர்த்தேக்கம் என்பன அமைக்கப்பட்டு, குறுலுவீவா வரை கால்வாய் மூலம் மகாவலி நீர் எடுத்துச் செல்லப்பட்டது. 1977 இல் ஆட்சிக்கு வந்த அரசு இப்பழைய திட்டத்தை அந்த அளவோடு நிறுத்தி, துரித மகாவலி கங்கைத் திட்டம் ஒன்றினைத் தயாரித்துச் செயற்படுத்தி வருகின்றது.
டிகாரிகங்கையூைர் iógh th .
ஆ4 --- சிலவளவை செய்யப்பட்ட பிரநேர்த்தின் எல்வே
---- &sá6-rð Q^ (serrí3•
qqqfius • Salam à
யேர்வர்மீேள்கிலம்
டிக்கலர்ேமின்பேழ்
4.088)
படம்: 22.2 மகாவலியை வடக்கே திருப்பும் பழைய திட்டம்
235

Page 120
22.
3துரித மகாவலித் திட்டம்
துரித மகாவலி கங்கைத் திட்டத்தை இலங்கையின் மிகப் பெரிய அபிவிருத்
தித்
திட்டமெனக் குறிப்பிடலாம். அத்திட்ட அமைப்பு வருமாறு:
22.3.1 திட்ட அமைப்பு
l.
236
கண்டியிலிருந்து 1.2 கி.மீ தூரத்தில் பொல்கொல்லை என்றவிடத்தில் மகாவலிக்குக் குறுக்கே ஒரு அணை கட்டப்படும். இதன் நீளம் 188 மீற்றர், உயரம் 18 மீற்றர். இந்த அணைகட்டிலிருந்து திசை திரும்பும் மகாவலி கங்கை, 8 கி.மீ நீளமான பொல்கொல்லைச் சுரங்கத்தினூடாகச் சுதுகங்கையுடன் இணைக்கப்படும். சுதுகங்கையில் ஓர் அணை கட்டப் பட்டு போவத்தன்னை நீர்த்தேக்கம் உருவாக்கப்படும். அந்த நீர்த் தேக்கத்திலிருந்து ஒரு சுரங்கத்தின் மூலம் (7 கி.மீ நீளம்) வடக்காக அமைக்கப்படும் கால்வாயூடாக நீர் குறுலு வீவாவிற்கு எடுத்துச் செல்லப் படும். போவத்தன்னை நீர்த்தேக்கத்திலிருந்து ஒரு கால்வாய் தம்புளை ஒயாவிற்கு இணைக்கப்பட்டு அங்கிருந்து கந்தலாமாவீவா, காலவீவா ஆகிய குளங்களுடன் இணைக்கப்படும். காலவீவாவிலிருந்து ஜயகங்கை கால்வாய் மூலம், மல்வத்து ஒயாவில் அமைந்துள்ள நச்சடுவக்குளம், நுவரவாவி என்பன இணைக்கப்பட்டு மேலதிக நீரை இவை பெறும். கண்டிக்கும் மினிப்பேக்கும் இடையில் மூன்று அணைகள் கட்டப்பட்டு மூன்று நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்படும். விக்டோரியா நீர்த்தேக்கம், ரந்தெணிகல நீர்த்தேக்கம் என்பன அவையாம். றன்தெம்மை நீர்த் தேக் கத்திலிருந்து இரண்டு நீண்ட கால்வாய்கள் மகாவலிகங்கையின் வலது பக்கமாகவும் செல்லும், மணிப்பே இடது பக்க கால்வாய் அம்பன் கங்கை வரை நீர்ப்பாய்ச்சும். வலதுபக்கக் கால்வாய் உல்கித்த ஒயாவரை எடுத்துச் செல்லப்பட்டு, உல்கித்த ஒயா நீர்த் தேக்கம் உருவாக்கப்படும். உல்கித்த ஒயா நீர்த்தேக்கத்திலிருந்து ஒரு சுரங்கவழி அமைக்கப்பட்டு, மதுருஒயாவில் அமைக்கப்படும் நீர்த் தேக்கத்துடன் இணைக்கப்படும். இவை நீர்ப்பாய்ச்சல் கால்வாய்களைக் கொண்டிருக்கும்.
அம்பன் கங்கையில் மொறக்கந்த நீர்த்தேக்கம், அம்பன் கங்கையின் குறுக்கே கட்டப்படும் அணையின் மூலம் உருவாக்கப்படும். இந்த நீர்த் தேக்கத்திலிருந்து நீர் எலஹர கால்வாய் மூலம் மின்னேரியாக் குளம், கவுடுல்ல குளம், கந்தளாய்க் குளம் வரை எடுத்துச் செல்லப்படும். பராக் கிரம சமுத்திரம், கிரித்தலக் குளம் என்பனவும் மேலதிக நீரைப் பெறும்.
மகாவலிகங்கையின் கழிமுகப்பாகத்தையடுத்து கந்தக்காடு என்ற இடத் தில் கட்டப்படும் அணையிலிருந்து இரு கால்வாய்கள் வலது பக்கமாக வும் இடதுபக்கமாகவும் மகாவலி நீரை எடுத்துச் செல்லும். அவை கழிமுகப் பாகங்களுக்குட்பட்ட நிலங்களுக்கு நீர்ப்பாய்ச்சும்.

மகாகூ விகங்கைதி
திட்டம்
AVSTT249 caeV கீர்த்தேக்கம் ஜ் புதிய நீர்த்தேக்கம் A ടീമിങ്ങ്-ഖൈമ
O L 1 ST2Pu J Sesarla
Ο േg تمگogلیچی کے پوچھیے تمf لعالمحیط ہے لL ് ട്ഠ, sr് P~് ട്രഞ്ഞ7-±
A-M نيمائي
பகுதிகசா
படம்: 22.3துரித மகாவலி கங்கை அபிவிருத்தித் திட்டம்
237

Page 121
பிரதான நீர்த்தேக்கங்கள்
நீர்த்தேக்கம் அணையின் கொள்ளளவு
உயரம் - நீளம் (மீற்றர்) (க.மீ மில்லியன்)
1. பொல்கொல்லை 18 188 46
2. போவத்தன்னை 42 268 65
3. மொறக்கந்த 4. விக்டோரியா 122 520 688
5. றன்தெனிகல 94 485 515 6. றன்தெம்பை 42 420 16 7. உல்கித்த 27, 1433 97 8. மதுருஒயா 25 1219 473 9. கொத்மலை 87 600 147
ஆதாரம்: மகாவலி அதிகாரசபை வெளியீடு அட்டவணை:22.1
22.3.2 நிதி உதவுமுகவர்கள் துரித மகாவலித்திட்டம் இன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றது. உலக வங்கி, ஐக்கியராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, யப்பான் முதலியன இத் திட்டத்திற்கு உதவியளிக்க முன்வந்துள்ளன. பொல்கொல்லை நீர்த்தேக்கம், அதன் குடைவழிச் சுரங்கம், போவத்தன்னை நீர்த்தேக்கம் என்பன உருவாக் கப்பட்டு விட்டன. மொறக்கந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டு வருகின்றது. விக்டோரியா நீர்த்தேக்கம், கொத்மலி திட்டம், மதுறு ஒயாத் திட்ட்ம் என்பன அமைக்கப்பட்டுள்ளன. கால்வாய்கள் வெட்டப்பட்டு வருகின்றன. துரித மகாவலி கங்கை அபிவிருத்தித் திட்டம் A, B, C, D, E, G, H, L எனப் பிரதேச ரீதியாக ஒவ்வொரு அமைப்பாக வகுக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாத் திட்டத்தை உருவாக்குவதற்கு நிதி வழங்கும் நாடு, ஐக்கிய இராட்சியமாகும். கொத்மலைத் திட்டத்தை சுவீடன் பன்னாட்டு அபிவிருத்தி முகவர் நிலையம் அமைத்துக் கொடுக்கின்றது. றன்தெனிகல செயற்றிட்டத்தை ஜேர்மன் சனநாயகக் குடியரசு அமைத்து வருகின்றது. மதுறுஒயாத் திட்டத்திற்கு ஆரம்பத்தில் கனடா அரசு நிதியுதவியது.
22.3.3 இத்திட்டத்தின் பயன்கள்
துரித மகாவலிகங்கை திட்டம் அமைக்கப்பட்டு நிறைவுறும்போது கிடைக்கும் பயன்கள் பின்வருவன:
238

1. விளைநிலங்கள் இலங்கையில் இன்று (1980) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களிலிருந்து 330 335 ஹெக்டேயர் பரப்பிற்கு நீர்ப்பாசனம் கிடைக்கின்றது. மகாவலிகங்கைத் திட்டம் நிறைவுறும் போது 364 230 ஹெக்டேயர் பரப்பிற்கு நீர்ப்பாசனம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இலங்கையில் இயங்கும் எல்லாப் பெரிய நீர்ப் பாசனத் திட்டங்களும் நீர்வழங்கும் பரப்பு அளவிற்கு மகாவலித் திட்டம் தனித்து வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இன்று நீர்ப்பாசனம் பெற்று வருகின்ற 99 556 ஹெக்டேயர் பரப்பு மேலதிக நீர்ப்பாசன வசதிகளைப் பெறவுள்ளன.
துரித மகாவலி திட்டப் பிரதேசத்திலுள்ள அபிவிருத்திப் பகுதிகளில் நீர்ப்பாசன வசதிபெறும் புதிய நிலப்பரப்பு (ஹெக்டேயரில்)
அமைப்பு A 36 422 அமைப்பு B | 48 563
அமைப்பு C 24, 281
அமைப்பு D 16 187
அமைப்பு G 4 042
அமைப்பு H 28 328
மொத்தம் 157 823
அட்டவணை:22.2
மதுறுஒயாப் பிரதேசத்திலும் (B பிரதேசம்), கலாவெவா பிரதேசத் திலும் (H பிரதேசம்), விளைநிலங்கள் செய்கைக்குட்படுத்தப்பட்டுள்ளன. 'C' பிரதேசத்திலும் 'C'பிரதேசத்திலும் ஒரு பகுதி விளைநிலங்கள் செய்கைக்கு உட்பட்டுள்ளன. རྗེ་
இலங்கையின் மொத்தப் பயிர்ச்செய்கை நிலப்பரப்பில் மகாவலி கங்கைத் திட்டப் பிரதேசம் 14% இணைக் கொண்டுள்ளது. அத்துடன் நாட்டின் நெல் உற்பத்தியில் 20% இனையும் வழங்கி வருகின்றது. மகாவலிப் பிரதேசத்தில் ஹெக்டேயர் ஒன்றிற்கான ஆண்டு நெல் விளைச்சல் 4.5 - 5.0 மெற்றிக் தொன்களாகும்.
2. நீர்மின்வலு மகாவலித் திட்டத்தில் உருவாக்கப்படும் நீர்த்தேக்கங்களிலிருந்து நீர்மின் வலு நிலையங்கள் அமையவிருக்கின்றன. இவற்றின் மூலம் ஏறத்தாழ 200 கோடி கிலோ வாட் நீர்மின்சாரம் பெறமுடியும். உக்குவெல, லெண்டோர்,
239

Page 122
விக்டோரியா, கொத்மலி, மதுருஒயா, றன்தெனிகல, மொறக்கந்த ஆகிய பகுதிகளில் நீர்மின் நிலையங்கள் அமைந்துள்ளன. துரித மகாவலித் திட்டத் தின் பிரதான நோக்கங்களிலொன்று நீர்மின்வலு உற்பத்தியாகும்.
விக்டோரியா, கொத்மலை, றன்தெனிகல ஆகிய மூன்று நீர்த் தேக்கங் களும் நீர்மின்வலு உற்பத்தியில் முதன்மையானவை. விக்டோரியா நீர் மின்வலுத் திட்டம் இன்று பூர்த்தியடைந்துள்ளது. மூன்று மின் பிறப்பாக்கி கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 70 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்வன. எனவே மொத்தமாக 210 மெகாவாட் மின்சாரம் விக்டோரியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இன்னும் மேலதி கமாக 210 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்யத் திட்டம் உள்ளது. அதற்கு மேலதிகமாக இன்னும் மூன்று மின்பிறப்பாக்கிகள் இங்கு அமைய வுள்ளன.
மகாவலித் திட்டப் பிரதேச விபரங்கள்
ஒழுங்கு இன்று குடியமர்த்தப் 1992 வரை முறை நீர்ப்பாசனம் படவிருக்கும் குடியமர்ந்த பெறும் நிலம் குடும்பங்கள் குடும்பங்கள்
(ஹெக்.) (எண்) (எண்)
H 24 700 3 4.72 31 24
G 3 900 6 756 5 383
C 23 700 29 843 22 928
B 25 340 24 885 16 50
L 3 364 3 364
ஆதாரம்: பொது முதலீடு-1992/1996 அட்டவணை: 22.4
கொத்மலை நீர்மின்வலு நிலையங்கள் தரைக்குக் கீழ் அமைந் துள்ளன. இலங்கையின் முதலாவது தரைக்கீழ் நீர்மின்நிலையம் இதுவே. கொத்மலைத் திட்டத்தில் 67 மெ. வா. சக்தி கொண்ட மூன்று மின்பிறப்பாக் கிகள் அமைய உள்ளன. இவற்றில் இரண்டு அமைக்கப்பட்டு 134 மெ.வா. மின்சாரத்தை உற்பத்தி செய்யவுள்ளன. இவற்றுள் அற்றபாகே என்ற ஒரு நிலையம், தற்போது 67 மெ.வா. மின்சாரத்தை வழங்கத் தொடங்கியுள்ளது. றன்தெனிகல நீர்மின் திட்டத்தில் 61 மெ.வா. வலுவுள்ள இரண்டு மின் பிறப்பாக்கிகள் அமைக்கப்பட்டு. 122 மெ.வா. மின்சாரம் உற்பத்தி யாகின்றது. மேலும், றன்தெம்பை திட்டம் பூர்த்தியாகும் போது 55 மெ.வா. மின்சாரம் பெறப்படும். மதுறுஒயாவில் 7 மெ.வா. மின்சாரத்தை உற்பத்தி
240

செய்யும் சிறியதொரு நிலையமுள்ளது. உக்குவெல (பொல்கொல்லை), லெண்டோர் (போவத்தன்ன) ஆகிய நீர்மின்வலு நிலையங்கள் முறையே 40 மெ.வ. மின்சாரத்தை உற்பத்தி செய்யவுள்ளன.
இன்று (1992) மகாவலி அபிவிருத்திப் பிரதேசத்தில் 673 மெகாவாட் மின் வலு பெறப்படுகின்றது. மின்வலு உருவாக்கம் தொடக்கப்பட்ட காலத் திலிருந்து 1992 ஏப்பிரல் வரையிலான காலம் வரையில் உற்பத்தியாகிய மின்வலுவின் ப்ெறுமதி 771 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மகாவலி இலங்கையின் மின்தேவையில் 50% இனை வழங்கிவருகின்றது.
3. உபவுணவுப் பயிர்ச்செய்கை
துரித மகாவலித் திட்டத்தில் நெற்செய்கை விருத்தியோடு, உபவுணவுப் பயிர்களின் விருத்தியும் பிரதான நடவடிக்கையாகவுள்ளது. இத்திட்டப் பிரதேசத்தில் நீர்ப்பாசன நிலங்களில் சிறுபோகத்திலும் (யல) மேட்டு நிலங்களில் பெரும்போகத்திலும் (மகா) உபவுணவுப் பயிர்களைச் செய்கை பண்ணி வருகின்றனர். இத்திட்டப் பிரதேசத்தில் இன்று 10,000-15 000 ஹெக்டேயர் உபவுணவுப் பயிர்ச்செய்கைக்குட்பட்டுள்ளது.
மிளகாய், சோயா, கரும்பு, காய்கறி, உளுந்து, கவ்பீ(தட்டைப்பயறு), நிலக்கடலை, சோளம் முதலியன செய்கை பண்ணப்படுகின்றன. இப் பயிர் களில் மிளகாய் போன்றன வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி அந்நியச் செலாவணியைச் சம்பாதித்துத் தருகின்றன. துரித மகாவலித் திட்டப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட ஏற்றுமதி உற்பத்திக் கிராமங்கள் இதற்கு உதவியுள்ளன. கலாவெவா (H)ப் பிரதேசத்தில் மிளகாய்ச் செய்கை முக்கியம் பெற்றுள்ளது. விவசாய அடிப்படைக் கைத்தொழில்கள், துரித மகாவலித் திட்டப் பிரதேசத்தில் உருவாகியுள்ளன. சோயா, சோளம் என்பன இவ் வகையில் முக்கியமானவை. கரும்பு, பயறு, உளுந்து, கவ்பீ நிலக்கடலை என்பனவும் குறிப்பிடத்தக்க உபவுணவுப் பயிர்களாக இப் பிரதேசத்தில் உள்ளன. அத்துடன் புதிய பயிர்களான செம்பனை, கோதுமை என்பன வற்றைப் பயிரிடவும் திட்டமுள்ளது.
4. கைத்தொழில்கள் மகாவலிகங்கை அபிவிருத்திப் பிரதேசத்தில் புதிய கைத்தொழில்களை ஆரம்பிக்கவும் திட்டமிருக்கிறது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்கள் நிறுவப்படவுள்ளன. இவற்றினை ஆராய யப்பானிய நிறுவனம் ஒன்றின் உதவி நாடப்பட்டிருக்கின்றது. மகாவலிக் குடியேற்றங்களில் குடியமர்த்தப்படும் விவசாயிகளின் வருங்காலச் சந்ததி களுக்கு கைத்தொழில்கள் தொழில்வசதி அளிக்கக்கூடியனவாக இருக்கும்.
24l

Page 123
இத்திட்டப் பிரதேசத்தில் நீர்மின்வலுவும், நீர்ப்பாசனப் பயிர்ச்செய்கையும் இருப்பதால், விவசாயத்தோடிணைந்த கைத்தொழில்களுக்கே அதிக வாய்ப்புள்ளது. தற்போது சோயா, சோளம், கரும்பு, உளுந்து என்பனவற் றோடு சம்பந்தப்பட்ட சிறியளவு கைத்தொழில்கள் இயங்கத் தொடங்கி
யுள்ளன.
1991இல் தெகியட்ட கண்டியோ, தம்புத்தேகம, கிராந்துருக் கோட்டை ஆகிய இடங்களில் மூன்று கைத்தொழிற்பேட்டைகள் நிறுவப் பட்டன. இவை விவசாய அடிப்படை, கால்நடை அடிப்படை, மர அடிப் படையிலான தொழில்களில் ஈடுபட்டுள்ளன.
5. விலங்கு வேளாண்மை துரித மகாவலி திட்டத்தில் விலங்கு வேளாண்மைக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இங்கு குடியேறியவர்கள், வரண்ட பிரதேச விலங்குகளுடன் (சுதேச இனம்) வந்தனர். இன்று அதிக பயன்தரும் விலங்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாற்பண்ணை விருத்தி இத் திட்டப் பிரதேசத்தில் முக்கியம் பெற்று வருகின்றது. 'H' பிரதேசத்திலுள்ள நிரவியா, கலன்குற்றியா ஆகிய குடியேற்றப் பகுதிகளில் 220 ஹெக்டேயர் பரப்பிலும், 'C' பிரதேசத்தில் கிறடுறு கோட்ட (759 ஹெக்டேயர்), சொரபோறா (453 ஹெக்டேயர்) பகுதிகளிலும், 'A' பிரதேசத்தில் கந்தளாய் (1 151 ஹெக்டேயர்) பகுதியிலும் 'B' பிரதேசத்தில் புனாய் (737 ஹெக்டே யர்) பகுதியிலும் விலங்கு வேளாண்மை விருத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விலங்கு வேளாண்மைத் திட்டங்களுக்கு நெதர்லாந்து அரசும் EEC (ஐரோப்பிய பொருளாதாரச் சமூகம்) நிறுவனமும் உதவ முன்வந்துள்ளன. இத்திட்டப் பிரதேசத்திலுள்ள குடியானவர்களிடமிருந்து பால் சேகரிக்கப் படுகின்றது. அவை தயிர், நெய், யோக்கட் ஆக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. மாடுகளோடு நல்லின ஆடுகளும் குடியேற்ற வாசிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. கோழி வளர்ப்பும் ஊக்குவிக்கப்படுகின்றது. இவற்றிற்கு வங்கிகள் கடன் வசதி அளித்து வருகின்றன.
6. குடியேற்றம் மகாவலிகங்கைத் திட்டம் நிறைவேற்றப்படும் போது ஏறத்தாழ 10 இலட்சம் மக்கள் அபிவிருத்திப் பகுதிகளில் குடியேற்றப்படுவர். 140 000 குடும்பங்கள் இத்திட்டப் பிரதேசத்தில் குடியமர்த்தப்படும். தொழிற் பிரச்சினைகள், வதிவிடப் பிரச்சினைகள் என்பன தீர்த்து வைக்க இவை உதவும். இது ஒரு மாபெரும் குடியேற்றத் திட்டமாகும். ஒரு குடும்பத்திற்கு இரண்டரை ஏக்கர் நீர்ப்பாசன நிலம் வழங்கப்படவிருக்கிறது.
242

'H' பிரதேசத்தில் குடியேற்றம் பெரும்பாலும் பூரணமாக முடிந் துள்ளது. 1992ஆம் ஆண்டுவரை 'H' பிரதேசத்தில் குடியேறிய குடும்பங் களின் மொத்த எண்ணிக்கை 31241 ஆகும். 'Cபிரதேசத்தில் 22 928 குடும்பங் களும், 'B' பிரதேசத்தில் 16 150 குடும்பங்களும், "G பிரதேசத்திலும் 5 383 குடும்பங்களும் குடியேறியுள்ளனர். ஆக மொத்தமாக இன்று இத்துரித மகா வலித் திட்டப் பிரதேசத்தில் 79 066 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.
7. சமூகநலச் சேவைகள்
துரித மகாவலித்திட்டத்தில் குடியேற்றப்படும் மக்களுக்கான சமூகநலச் சேவைகளை அமைத்துக் கொடுப்பது அத்தியாவசியமாகும். கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்தும் கொண்டு செல்லலும், தபால் தந்தித் தொடர்பாடல்கள் என்பன இத் திட்டப் பிரதேசத்தில் வழங்கப்பட்டு
வருகின்றன. V
மகாவலிப் பிரதேச சமூகநல அபிவிருத்தி - 1992
பிரதேசம் | கட்டிக் கொடுக்கப் கிணறுகள் | பாடசாலைகள் வீதிகள்
பட்ட வீடுகள் (எண்) (எண்) (எண்) (கி.மீ) H 23 633 8 917 88 -
G 2 590 109 24 un
C 18 570 8 145 67 796
B 12776 5 816 67 742 L 696 174 7 -
ஆதாரம்: பொது முதலீடு 1992-1996 அட்டவணை: 227 பாடசாலைகள், வைத்தியசாலைகள், சுகாதார நிலையங்கள், உணவுக் களஞ்சியங்கள், போக்குவரத்து வீதிகள் என்பனவற்றை இலங்கை அரசு அமைத்துக் கொடுத்து வருகின்றது. அத்துடன் சர்வதேச நிறுவனங்களான UNICEF ஐக்கிய நாடுகள் குழந்தை *ளின் நிதி நிறுவனம்), செஞ்சிலுவைச் சங்கம் முதலியனவும் சமூகநலச் சேவைகளை அமைத்து வருகின்றன. UNICEF நிறுவனம் சுகாதாரம், போசாக்கான உணவு, குடிநீர், கல்வி, சிசு நலன் பேணல், மாதர் அபிவிருத்தி முதலியனவற்றில் சிரத்தை எடுத்துள்ளது. இதற்கென தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏனைய சர்வதேச நிறுவனங்களும் இத்துறைகளில் ஈடுபாடுகொண்டுள்ளன. அம்மை, இளம் பிள்ளைவாதம், நெருப்புக் காய்ச்சல், ஏர்ப்பு முதலிய நோய்களுக்கு எதிராகத் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
243

Page 124
8. போக்குவரத்தும் புதிய நகர்களும் துரித மகாவலித் திட்டத்தின் விளைவாக, இப்பிரதேசத்தில் போக்குவரத்து வீதிகளும் புதிய நகர்களும் உருவாகி வருகின்றன. விக்டோரியாப் பிரதேசத்தில் கராலியட்டே (Karaiyadde), டிகனை (Digane), குண்டசாலை (Kundasala) ஆகிய புதிய நகர்கள் உருவாகின்றன. இவற்றிற்கான கட்டிடங் கள், கடைகள், தொழிற் பகுதிகள் என்பன அமைக்கப்பட்டு வருகின்றன. 'H' பிரதேசத்தில் அத்தியாவசியமான வீதிகள் யாவும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் கல்நீவா (Galnewa), மீகல்லேவா (Meegalewa) என இரு புதிய சிறிய நகர்கள் உருவாகியுள்ளன. 'C' பிரதேசத் தில் 80% வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 211 கிலோ மீற்றர் நீளமான நகர வீதிகளும், 585 கிலோ மீற்றர் நீளமான குடியிருப்பு வீதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இப் பிரதேசத்தில் டெகியற்ற 56iTuglut (Dehiatta Kandiya), SJG)6TG5pp (Giradunkette) ஆகிய புதிய நகர்கள் உருவாகியுள்ளன. 'B' பிரதேசத்தில் வெலிகந்த (Welikande), அறலகன்விலா (Aralaganwia) ஆகிய நகர்கள் உருவாகிவருகின்றன.
9. வெள்ளப்பெருக்குத் தடைப்படல் மகாவலித் திட்டம் ஒரு பல நோக்கத் திட்டமாகும். இத்திட்டம் நிறை வேற்றப்படும்போது வெள்ளப்பெருக்குக் கட்டுப்படுத்தப்படும். கொத்மலை ஒயா நீர்த்தேக்கம் நிறுவப்பட்டதால் கம்பளை, பேராதனைப் பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படாது தடுக்கப்பட்டுள்ளது. றன்தெனிகல, விக்டோ ரியா நீர்த்தேக்கங்கள் நிறுவப்பட்டதும் மினிப்பேப் பகுதியிலும் மகாவலி கங்கையின் கீழ்ப்பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை. அம்பன் கங்கையில் போவத்தன்னை நீர்த்தேக்கம் நிறுவப்பட்டதால் மின்னேரியா, பொலநறுவாப் பகுதிகளில் வெள்ளப்பெருக்குத் தடைப்பட் டுள்ளது.
10. காட்டுப் பாதுகாப்பு
துரித மகாவலிகங்கைப் பிரதேசத்தில் இயற்கைச் சூழலைப் பேணுவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. காடுகள் அன்று இருந்த நிலையில் ஒதுக்குக் காடுகளாகப் பேணப்படுகின்றன. மின்னேரியா, கிரித்தலைப் பகுதிகளில் 76 சதுர கி.மீ பரப்பில் ஒதுக்குக் காடுள்ளது. மதுருஒயா, (588 சதுர கி.மீ.) வஸ்கமுவா (370), சோமாவதி (375) திரிகோணமடு (250) என்பன தேசிய பூங்காக்களாகப் பேணப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ 1600 சதுர கி.மீ), பரப்பு தேசிய பூங்காக் காடுகளாகவுள்ளன. அத்தோடு விக்டோ ரியா, றன்தெனிகல, றன்தெம்பை ஆகிய பகுதிகளில் ஏறத்தாழ 420 சதுர கி.மீ பரப்பில் விலங்குகள் புகலரண் அமைந்துள்ளது. H' பிரதேசத்தில் 4868 ஹெக்டேயர் பரப்பிலும், B பிரதேசத்தில் 660 ஹெக்டேயர் பரப்பிலும்,
244

C பிரதேசத்தில் 5 050 ஹெக்டேயர் பரப்பிலும் மீள்வனம் உருவாக்கப் பட்டுள்ளது.
எனவே வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தவும், உணவுற்பத்தியை அதிகரிக்கவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை அமைத்துக் கொடுக்கவும், விரயமாகும் இயற்கை வளமான நீரைப் பயன் படுத்தவும், நீர்மின்வலு உற்பத்தியை அதிகரிக்கவும், மக்களை அடர்த்தி யான பகுதிகளிலிருந்து பரவலாகக் குடியிருத்தவும் துரித மகாவலிகங்கைத் திட்டம் வழிவகுக்கின்றது.
245

Page 125
2 3. இலங்கையின் முதலீட்டு
ஊக்குவிப்பு
வலயங்கள்
ஒரு நாட்டின் குறித்த ஒரு பிரதேச எல்லைக்குள் வெளிநாட்டவர்களும் உள்நாட்டவர்களும் இணைந்து தீர்வைகளற்ற இறக்குமதிப் பொருட்களை யும், உற்பத்திச் சாதனங்களையும் உள்நாட்டில் கிடைக்கக்கூடிய மூலப் பொருட்களையும் பயன்படுத்தி, சர்வதேச சந்தையில் போட்டியிடக்கூடிய கைத்தொழிற் பொருட்களை உற்பத்தி செய்கின்ற அமைப்பையே சுதந்திர வர்த்தக வலயம் என்பர். கிறிஸ், அயர்லாந்து, வெனெசுவெலா, தைவான், பிலிப்பைன், சிங்கப்பூர், ஹொங்கொங் முதலிய நாடுகளில் சுதந்திர வர்த்தக வலயங்கள் இயங்கிவருகின்றன. இலங்கையிலும் ஒரு சுதந்திர வர்த்தக வலயம் செயற்பட்டு வருகின்றது.
1978ஆம் ஆண்டு பாரிய கொழும்புப் பொருளாதார ஆணைக்குழு என்ற ஓர் அமைப்பு உருவர்க்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் கட்டுப் பாட்டின் கீழ் சுதந்திர வர்த்தக வலயம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்நிய முதலீடுகளுடன் தொழிற்சாலைகளைத் தாபித்து வேலை வாய்ப்புக் களை உருவாக்கி, கைத்தொழிற் பொருட்களின் ஏற்றுமதியைக் கூட்டி நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்குடன் இப்பாரிய கொழும்புப் பொருளாதார ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
246

பாரிய கொழும்புப் பொருளாதார ஆணைக்குழுவின் நடவடிக்கை களுக்கு இலங்கையின் தென்மேல் தாழ் நிலத்தில் 5 180 சதுர கிலோமீற்றர் பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் தென் எல்ல்ையாகக் களனி கங்கையும், வட எல்லையாக மகாஒயாவும் அமைந்துள்ளன். கந்தானை, நீர்கொழும்பு, ஜா-எல, வத்தளை, பியகம, களனியா, மகர ஆகிய தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வாறு தென்மேல் தாழ்நிலத்தில் அமைந்தமைக்குப் பல காரணிகள் துணை நிற்கின்றன. இப்பிரதேசம் அமைவிடத்தைப் பொறுத்தளவில் பல சாதக நிலைமைகளைக் கொண்டிருக்கின்றது.
*சிலாபம்
as a -s് ഉr ལ།། །། ----- །_- ཟོ27
தேச േrളBകുTഥ لیے بہت سی تP *子宏、 o تکیہ uld
A G, 2ays650s) - Cai 694 to
V 台 芯苔
,)46 s LA تکبر
శ్రీd. هgله لاrrre/ f’Taraw?
ta/ Ž:A بحیرہ سے <ت کے
P ༧༧ན་༠༠༣ S. − Urracou 6 الجثمطاطعته సే
V ്ചു 4Ameğ taé4eaç റ്fമി
கடேகா G aer - atas
།རས་སོ་། ༤ ཁ ༽ 6N - Tore fra sopeo
ウ de Cortla سے صحک** a MN lurrfau കെ സൃ4 *个臀 à:* ESKE
– നട g 454 o (2a Á?
Salz 後岑後多穹瓷鷲。 6ിട്ടരും, ഭ് Bf P2Z
േtത്തിക്കൂടരാജ صا بھی
படம்: 23.1 சுதந்திர வர்த்தக வலயம்
247

Page 126
உவப்பான காலநிலை, சமதரை, நீர்வசதி, மின்வசதி, நல்ல வீதிகள், இருப்புப் பாதைகள், விமான நிலைய வசதிகள் (கட்டுநாயக்க சர்வதேச விமானத் தளம்), துறைமுக வசதி (கொழும்பு), தந்தி, தகவல் வசதிகள், சுகாதார, மருத்துவ வசதிகள் முதலான காரணிகள் இப்பிரதேசத்தில் வாய்ப்பாக உள்ளன. இப்பிரதேசம் அதிக மக்கட் செறிவைக் கொண்டிருப்பதால் தொழிலாளர் வசதியுள்ளது.
சுதந்திர வர்த்தக வலயத்தினுள் இரு முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று கட்டுநாயக்காவில் அமைந்துள்ள கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம்-1 ஆகும். மற்றையது பியகம முதலீட்டு ஊக்குவிப்பு வலயம்-2 ஆகும். முதலாவது முதலீட்டு வலயம் ஏறத்தாழ 182 ஹெக்டேயர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் அந்நிய நாடுகள் முதலீடு செய்து தொழிற் சாலைகளை உருவாக்கி வருகின்றன. அந்நிய முதலீட்டாளர்களைக் கவரத் தக்க உற்பத்திச் சலுகைகள் சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ளன. அவை:
(1) இந்த வலயத்திற்குள் தொழிற்சாலைகளை நிறுவும் தொழிலதிபர்கள் யந்திரங்களையும், தேவையான சாதனங்களையும் இறக்குமதி செய்வ தற்குச் சுங்கத் தீர்வை செலுத்தத் தேவையில்லை.
(2) இந்த வலயத்திற்குள் முதலீடு செய்பவர்கள் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு வருமானவரி கட்டத் தேவையில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு வரி நிவாரணம் உண்டு. அத்துடன் 99 ஆண்டுகளுக்கு நிலக் குத்தகை வழங்கப்பட்டுள்ளது.
(3) தொழிற் சட்டங்கள் இவ்வலயத்தினுள் செல்லுபடியாகாது. தொழி லாளர் நலவுரிமைச் சட்டங்களை இங்கு கடைப்பிடிக்க வேண்டும் என்ற நியதியில்லை. விரும்பிய தொழிலாளரை வேலைக்கெடுக்கவும், சம்பளம் வழங்கவும், வேலை நீக்கம் செய்யவும் தொழிலதிபருக்கு உரிமையுண்டு.
இவை காரணமாக அந்நியத் தொழிலதிபர்கள் இந்த வலயத்துள் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். முக்கியமாக மலிவான தொழிலாளர் வசதி அவர்களைக் கவர்ந்துள்ளது. ஹொங்கொங்கில் ஒரு தொழிலாளரின் தற்போதைய சராசரி மாதாந்த உற்பத்திச் சம்பளம் 240 அமெரிக்க டொலர் களாகும். ஆனால் இலங்கையில் 35 அமெரிக்க டொலர்களாகும் என்ப்து குறிப்பிடத்தக்கது
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அந்நிய தொழில் அதிபர்கள் முதலீடு செய்து தொழிற்சாலைகளை ஆரம்பித்துள்ளனர். 1991ஆம் ஆண்டு முடிவிற்குள் 195 தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டன. கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் நீர்ச்சேவைகள்,
248

மின்சக்தி, தந்திப் போக்குவரத்து, டெலக்ஸ் வசதிகள் என்பன யாவும் அமைக்கப்பட்டு விட்டன. இன்னும் 15 தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. 85 457 பேருக்கு இந்த முதலீட்டு வலயத்தினுள் வேலை வாய்ப்புகள் வழங்கப் பட்டுள்ளன. இங்குள்ள தொழிற்சாலைகளில் 33 தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்
தககது.
கொழும்பு பெரும்பாக ஆணைக்குழு
1986 1987 1988 1989 1990 1991
இயங்கிவரும் ஆலைகள் 104 12 133 I45 147 195 (எண்)
அந்நிய முதலீடு 91 36O 923 1313 881 2.988 (மில். ரூபா)
உள்நாட்டு முதலீடு 52 108 504 294 184 371 (மில், ரூபா)
|தொழிலாளர் 45 04750 74.454 6266 429 71 358 85 457
(எண்)
அந்நியச் செலாவணி 1 569 2 346 3 038 3,780 6 562 5 576 (மில், ரூபா)
ஆதாரம்: பாரிய கொழும்புப் பொருளாதார ஆணைக்குழு அட்டவணை:23.1
துணிவகைகள், உடுதுணிகள், தோல் பொருட்கள் உற்பத்தி சம்பந்தமான ஆலைகள் பல இயங்கிவருகின்றன. உலோகப் பொருள்கள், வாகனப் போக்குவரத்துச் சாதனங்கள், இரசாயனப் பொருட்கள், றப்பர், பிளாஸ்ரிக் பொருட்கள் என்பன உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இன்று இலங்கையில் ஏறத்தாழ 5டிகோடி ரூபா (5 780 மில்லியன்கள்) அந்நிய தொழிலதிபர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய பொருளதாரச் சமூக நாடுகள், மத்தியகிழக்கு நாடுகள், யப்பான், ஹொங்கொங், தாய்லாந்து, மலேசியா, சுவிற்சர்லாந்து முதலிய நாடுகள் முதலீடு செய்துள்ளன.
இன்று, இரண்டாவது சுதந்திர வர்த்தக வலயமான பியகம இயங்கி வருகின் றது. பியகம முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் 182 ஹெக்டேயர் (450 ஏக்கர்) பரப்பினை உள்ளடக்கியது. 20 கைத்தொழில் கூறுகள் உற்பத்தி செய்து வருகின்றன. மூன்றாவது ஊக்குவிப்பு வலயம் ஹொக்கல எனும் இடத்தில் அமைந்துள்ளது. இதுவும் 180 ஹெக்டேயர் நிலப்பரப்பினை உடையது.
249.

Page 127
1991இல் 16 502 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருவாயாகக் கிடைத்தது. இதில் ஆடைகளும் காலணிகளும் அதிகளவில் ஏற்றுமதியாகின. இறப்பர்ப் பொருட்களும் பிளாஸ்ரிக் பொருட்களும் இரண்டாமிடத்தைப் பெற்றன. மின்னியலும் மின் உற்பத்திகளும், உருக்கும் உருவாக்கப்பட்ட உலோக உற்பத்திகளும், பொறிகளும், போக்குவரத்துக் கருவிகளும், இரத்தினக்கல் வெட்டலும், ஆபரணங்களும், குடிபானங்களும் புகையிலையும், மர உற்பத்திகள், உலோகமல்லா உற்பத்திகள், கயிறு உற்பத்திகள் என்பனவும் இந்த முதலீட்டு ஊக்குவிப்பு வலய ஏற்றுமதிப் பொருட்களாகும்.
சுதந்திர வர்த்தக வலயத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்திப் பொருட் களை உற்பத்தி செய்வதில் தமது நாடுகளிலுள்ள தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்துவதனால் நவீன கைத்தொழில் அனுபவம் நமது நாட்டிற்குக் கிடைக்கும். இவை வெளிநாட்டுச் சந்தைகளில் விற்பனை செய்யக்கூடிய பொருட்களையும் சந்தைகளில் போட்டியிடக்கூடிய தரமான பொருட் களையும் உற்பத்தி செய்யக்கூடியன. இந்த வர்த்தக வலயத்தில் பல கைத் தொழில்களில் நம் நாட்டு இயற்கை வளங்கள் மூலப்பொருட்களாக பயன் படுத்தப்படவிருக்கின்றன. அதனால் அவற்றின் மூலம் நமது நாட்டிற்கு வருமானம் கிடைக்கவிருக்கிறது.
அண்மைக்காலநிலைமைகள்
(1) 1991 இறுதிவரை கொழும்புப் பெரும்பாகப் பொருளாதார ஆணைக் குழு 426 முதலீட்டுச் செயற்றிட்டங்களுக்கு அங்கீகாரம் அளித்தது. அவற்றிலின்று 195 ஆலைகள் இயங்கிவருகின்றன.
(2) 1991 இறுதிவரை உண்மை மொத்த முதலீடுகளின் திரண்ட பெறுமதி
ரூபா 56 064 மில்லியன் ரூபாவாகும்.
(3) கட்டுநாயக்கா, பியகம ஆகிய சுதந்திர வர்த்தக வலயங்களுக்கு வெளியே, ஹொக்கல (காலி மாவட்டம்) எனுமிடத்தில் ஹொக்கல ஏற்றுமதிச் செயல்முறை வலயம் அன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது 92 ஹெக்டேயர் பரப்பில் அமைகின்றது. இதில் 20 000 தொழில் வாய்ப்புகளை கொண்ட 40 தொழிற்சாலைகள் அமையவுள்ளன. கொக்கலவில் பன்னிரண்டு செயற்றிட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஏழு இயங்கத் தொடங்கியுள்ளன. தற்போது அவற்றின் மொத்த முதலீடு 3 614 மில், ரூபாவாகும். 2 296 பேர் தொழில் வாய்ப்புப் பெற்றுள்ளனர்.
250

2 4. இலங்கையின் ஒருங்கிணைந்த
கிராமிய அபிவிருத்தித் திட்டம்
அபிவிருத்தியில் மிகப் பின்தங்கிய மாவட்டங்களை உற்பத்தி, ஆக்கம், வருவாய், தொழில் நிலை, வாழ்க்கைத்தரம் போன்றவற்றில் உயர்த்துவதன் மூலம் இந்த நாட்டின் பிரதேச அபிவிருத்தியில் கூடியளவிற்குச் சமன் பாட்டை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்களாகும். துரித மகாவலித் திட்டம், சுதந்திர வர்த்தக வலயம் போன்ற உயர்ந்த முதலீட்டுத் திட்டங்களிலிருந்து தற்போது பெரும் அளவில் நன்மையடையாத மாவட்டங்களே இத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள்ன.
குறைவிருத்தி மாவட்டங்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்தல் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். பாடசாலைகள், வைத்திய சாலைகள், வீதிகள், சுகாதார வசதிகள், சிறிய நீர்ப்பாசன வசதிகள், குடிநீர் வசதி, கிராமிய மின்சாரம் முதலிய துறைகளை விருத்தி செய்தல் ஒருங்கி ணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்களின் நோக்கங்களாகும். அம் மாவட்டத்தில் கிடைக்கக்கூடிய இயற்கை வளங்களையும் மனித வளங் களையும் பயன்கொள்ளல், கிராமியமட்ட நிறுவனங்கள் அனைத்தையும் மாவட்ட அபிவிருத்தியில் பங்குகொள்ள வைத்தல் என்பனவும் ஒருங்
கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்களின் குறிக்கோள்களாகும்.
251

Page 128
இலங்கையின் 25 மாவட்டங்களில், இன்று 15 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. குருநாகல், மாத்தறை, அம்பாந்தோட்டை, நுவரெலியா, மாத்தளை, புத்தளம், பதுளை, மன்னார், வவுனியா, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, களுத்துறை, காலி என்பனவே அப் பதினைந்து மாவட்டங்களாகும். கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோண மலை ஆகிய மாவட்டங்களுக்கும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களைச் செயற்படுத்து வதற்குச் சர்வதேச நிதி நிறுவனங்களே நிதி உதவி வழங்கி வருகின்றன. அவ்விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.
ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள்
மாவட்டம் ஆரம்பித்த நிதியுதவும் ஆண்டு நிறுவனம்
1. குருநாகல் 1979 உலக வங்கி 2. மாத்தறை 1979 SIDA - சுவீடன் பன்னாட்டு
நிறுவனம் 3. அம்பாந்தோட்டை 1979 NORAD - நோர்வே நிதியுதவி 4. நுவரெலியா 1980 நெதர்லாந்து
5. மாத்தளை 1981 உலக வங்கி
6. புத்தளம் 1984 உலக வங்கி 7. பதுளை 1983 IFAD & SIDA G36 GMTnTGðoTGOLD
அபிவிருத்திக்கான பன்னாட்டு நிதியம் 8. DøTGOTITrif 1984 உலக வங்கி
9. வவுனியா 1984 உலக வங்கி 10. மொனராகலை 1 1984 NORAD
11. இரத்தினபுரி 1984 நெதர்லாந்து
12. கேகாலை 1986 IFAD)
13. கண்டி 1992 GTZ (Gigi Daf) 14 களுத்துறை 1987 FINNIDA
15. காலி 1992 ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB
அட்டவணை:24.1
252

fékeSéasarawat Laarroco
அனுராதபுரடே
ep 2pourroo
நுவரெலி
rویماق الدع 6as rves loy
Vt ിഥത്തെ اہم ہوr" لکھی تھیlygقگی جہتی ہیلتھوویچ کھی\'
ര്ബ جگے
S? പrര &ቃT፥ቿیۓrبر
படம்: 24.1 இலங்கையின் மாவட்டங்கள்
253

Page 129
முதலாவது ஒருங்கிணைக்கப்பட்ட கிராமிய அபிவிருத்தித் திட்டம் உலக வங்கியின் நிதியுதவியுடன் 1979 இல் குருநாகல் மாவட்டத்தில் நடை முறைப்படுத்தப்பட்டது. அதன்பின் பல்வேறு சர்வதேச நிதி மூலகங்களி லிருந்து பெற்ற நிதியுடன் ஏனைய பல மாவட்டங்களிலும் இத் திட்டங்கள் செயற்பட ஆரம்பித்தன. குருநாகல் மாவட்ட ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டம் 4 650 இலட்சம் ரூபா செலவுடன் ஐந்து ஆண்டு காலத்தை உள்ளடக்கியது. குருநாகல் மாவட்டத்தின் முதன்மைச் செயற் திட்டங்களாக நீர்ப்பாசன வசதிகளை முன்னேற்றல், கிராமிய மின்னூட்டல், தெங்குப் பயிர்ச்செய்கை விருத்தி என்பன அமைந்தன. நுவரெலியா மாவட்டத்தில் நலத்துறை வசதிகளை முன்னேற்றுதல், குடிநீர்வசதி என்பன முக்கியம் பெற்றுள்ளன. மாத்தளை மாவட்டத் திட்டத்தில் சிறு ஏற்றுமதிப் பயிர்களின் அபிவிருத்தி, மீள்வனமாக்கல் என்பனவும், புத்தள மாவட்டத் திட்டத்தில் நீர்பாசனம், வீதி அபிவிருத்தி, தெங்குப் பயிர்ச்செய்கை என்பனவும் முக்கிய இடம் பெற்றுள்ளன. இச் செயற்றிட்டங்களில் சிலவற்றினை நோக்குவோம்.
24. நீர்ப்பாசனம்
ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்களில் பெரிய நீர்ப்பாசனக் குளங்களினதும், சிறிய நீர்ப்பாசனக் குளங்களினதும் புனருத்தாரணத்திற்கு முக்கியவிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் விளை நிலங்களின் பரப்பளவை அதிகரித்தல், மானாவாரி நிலங்களை நீர்ப்பாசனத்தின் கீழ் கொண்டுவருதல், குடிநீர், மந்தைகளுக்கான நீர் வசதிகளை ஏற்படுத்தல், யாவற்றிற்கும் மேலாகக் கிராமிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தல் என்பன சாத்தியமாகும் குறிக்கோள்களாகும்.
குருநாகல் மாவட்டத்தில் இத்திட்டத்தில் 3 பெருநீர்ப்பாசனக் குளங்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளன. 252 சிறிய குளங்கள் இத் திட்டத்தின் கீழ் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. அம்பாந்தோட்டையில் இத்திட்டத்தின் மூலம் கிராமா குளம் (Kirama Tank) அமைக்கப்பட்டு வருகின்றது. இன்னும் மூன்று குளங்கள் புனருத்தாரணம் செய்யப்பட வுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் 20 சிறிய குளங்களும், புத்தளம் மாவட்டத்தில் 86 சிறிய குளங்களும், நுவரெலியா மாவட்டத்தில் 11 சிறிய குளங்களும், வவுனியா வில் 14 பெரிய நீர்ப்பாசனக் குளங்களும், மன்னாரில் 10 சிறிய குளங்களும் புனருத்தாரணம் செய்யப்படவுள்ளன.
24.2 கிராமிய மின்சாரவசதி
ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தியில் முக்கியமான செயற்றிட்டமாகக் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கலுள்ளது. கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் தொடர்பாடலை (வானொலி, தொலைக்காட்சி
254

முதலியன) அதிகரித்தல் என்பன இதன் நோக்கமாகும். வீடுகளுக்கு மின்சாரம் வழங்கல், கைத்தொழில்களுக்கு மின்சாரம் வழங்கல், நீர்ப் பம்பிகளை மின்சாரம் மூலம் இயக்கித் தோட்டச் செய்கையை அதிகரித்தல் என்பன ஏனைய குறிக்கோள்களாகும். கிராமிய மின்சாரம் மூலம் நவீன சமூகத்தைக் கிராமங்களில் உருவாக்க முடியும். கிராமிய மக்களின் அறிவு, வெளியுலகத் தொடர்பு என்பன அதிகரிக்கும்.
குருநாகல் மாவட்டத்தில் 17 கிராமிய மின்சாரத் திட்டங்கள் செயற் படுத்தப்பட்டுள்ளன. புத்தளத்தில் இத்திட்டத்தின் மூலம், கறுக்குப் போனை, தனிப்பண்ணையடி, கொலிஞ்சாடி, லன்சிங்கம, தலவில்ல, கண்டக்குளிய முதலான கிராமங்கள் மின்சார வசதி பெறவுள்ளன. வவுனியாவில் நெடுங்கேணி, நொச்சிமோட்டை, மடுகந்த, மாமடுவ, ஒமந்தை ஆகிய பகுதிகளுக்கு மின்சார வசதி கிடைக்கவுள்ளது. மன்னாரில் திருக்கேதீஸ்வரம், எருக்கலம்பிட்டி ஆகிய பிரதேசங்கள் மின்சாரம் பெற உள்ளன.
துரித மகாவலிகங்கைத் திட்டத்தின் மூலம் பெறப்படவிருக்கும் நீர்மின் சக்தியை இலங்கை முழுவதும் பயன்கொள்ளக் கிராமிய மின்னூட்டல் அவசியமாகும்.
24.3 ஏற்றுமதிப்பயிர்கள் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஏற்றுமதிப் பயிர் களின் விருத்திக்கும் செயற்திட்டமுள்ளது. அந்தந்த மாவட்டத்தில் செய்யப்படக்கூடிய ஏற்றுமதிப் பயிர்களின் விருத்திக்கு இத்திட்டங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தெங்கு அபிவிருத்தி, தேயிலைச் சிறு உடைமைகளின் விருத்தி, சிறு ஏற்றுமதிப் பயிர்களின் விருத்தி என்பன வற்றிற்கு இச் செயற்றிட்டங்களில் இடமளிக்கப்பட்டுள்ளது.
குருநாகல், புத்தளம், நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் ஒருங்கி ணைந்த கிராமிய அபிவிருத்தியில் தெங்குப் பயிர் விருத்தி குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. Gಳೆ: ஆகிய மாவட்டங்களில் தெங்குப் பயிரின் மீள்நடுகை, கீழ்நடுகை ஆகிய திட்டங்களுக்கு முதன்மை வழங்கப்பட்டுள்ளது. தெங்குப் புனர்நடுகைத் திட்டத்தின்படி மானியம் வழங்கப்படுகின்றது. இவ்வகையில் 67 194 ஏக்கர் (27 193 ஹெக்டேயர்) பரப்பு குருநாகலில் தெங்கு அபிவிருத்திக்குட்படுகின்றது. நுவரெலியாவில் தெங்குப் பயிர்ச்செய்கையைச் சிறியளவில் விருத்தி செய்யும் நோக்கமாகத் தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்வதற்கான நாற்று மேடைகள் அமைக்கப்படவுள்ளன. குருநாகலிலுள்ள தென்னந்தோட்டங்களில், ஊடுபயிர்களாகக் கோப்பி, மிளகு, கொக்கோ, புற்கள் என்பனவும் பயிரிடப் பட்டுள்ளன. பதுளை, மாத்தளை மாவட்டங்களில் கராம்பு, மிளகு, கறுவா
255

Page 130
ஆகிய சிறு ஏற்றுமதிப் பயிர்களின் துரிதவிருத்திக்குச் செயற் திட்டங்களும் உள்ளது. வீட்டுத்தோட்டச் செய்கையை அதிகரிப்பதற்கு இச்செயற் திட்டங்கள் கவனம் செலுத்துகின்றன.
24.4 சமூகநலச் சேவைகள் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டத்தில் கிராமிய வீதிகள், கல்வி, சுகாதாரம், போசாக்குணவு, குடிநீர் முதலான சமூகநலச் சேவைகளின் விருத்திக்கும் முக்கியமளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்படும் எல்லா மாவட்டங் களிலும் கிராமிய வீதிகளைப் புனரமைத்தலுக்கும், புதிதாக அமைத்த லிற்கும் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள், அதிபர் -ஆசிரிய விடுதிகள், ஆய்வுக் கூடங்கள் என்பன கல்வி விருத்திக்காக அமைக்கப்படுகின்றன. நோயாளர் தங்கும் அறைகள், பிரசவ விடுதிகள், வைத்தியசாலைகள் என்பனவும் கிராமிய மட்டங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. குடிநீர் வசதிக்காக குருநாகல் மாவட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் 800 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாத்தளையில் 24 கிணறுகளும், மன்னாரில் 10 கிணறுகளும் இத்திட்டத்திலமைக்கப்பட்டு வருகின்றன.
24.5 மீன்பிழயும் கால்நடை வளர்ப்பும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்திச் செயற்றிட்டங்களில் மீன்பிடிக்கும் கால்நடை வளர்ப்புக்கும் உரியவிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்பாந் தோட்டை, புத்தளம், மன்னார் ஆகிய மாவட்டத் திட்டங்களில் மீன்பிடி அபிவிருத்தி முக்கியம் பெறுகின்றது. மீன்பிடிக் கருவிகளையும் கலங்களை யும் நவீனமயப்படுத்தல், இறங்கு துறைகள் அமைத்தல், சந்தை வசதி உருவாக்கல் என்பன மீன்பிடி விருத்திச் செயற்றிட்டங்களாகும்.
கால்நடை அபிவிருத்தி குருநாகல், மாத்தளை, நுவரெலியா, பதுளை,
வவுனியா ஆகிய மாவட்டச் செயற்றிட்டங்களில் இடம்பெற்றன. நல்லினக் கால்நடைகள் அறிமுகப்படுத்தல், செயற்கை முறைச் சினைப்படுத்தல் மூலம் தேசிய கால்நடைகளைத் தரம் உயர்த்தல், மிருகவைத்தியசாலைகளை நிறுவுதல், பால் சேகரிப்பு நிலையங்களை உருவாக்குதல், மேய்ச்சல் தரைகளை உருவாக்குதல் என்பன ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தியின் செயற்றிட்டங்களாகவுள்ளன. எனவே, ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத் தித் திட்டங்கள் மாவட்டங்களைத் துரிதமாக விருத்தியடைய வைக்கும் செயற் திட்டங்களாகவுள்ளன. நீர்ப்பாசனம், பயிர்ச்செய்கை, கால்நடை, கிராமிய மின்னூட்டல், வீதிகள், கல்வி, சுகாதாரம், மீன்பிடி, காடாக்கல், குடியிருப்பு, வீடுகள் போன்ற பல்வேறு துறைகளின் விருத்தியைக் கவனத்திற்கொண்டு உருவாக்கப்பட்ட செயற்பாடாகும்.
256

இலங்கையின் 2 சமூக நலத் திட்டங்கள்
25.1பொருளாதார உட்கட்டமைப்பு 25.1.1போக்குவரத்துக்கள்
பொருளாதார உட்கட்டமைப்பென்பது போக்குவரத்து, வலுவும் சக்தியும், தொலைத்தொடர்பு ஆகியவற்றினைக் குறிக்கும். போக்குவரத்து எனும் போது இருப்புப் பாதைகள், வீதிகள், துறைமுகங்கள், விமானத் தளங்கள் என்பனவற்றை உள்ளடக்கும். இலங்கையிலின்று 25 952 கி.மீ. நீளமான வீதிகளுள்ளன. 1453 கி.மீ நீளமான இருப்புப் பாதைகள் அமைந் துள்ளன. இதில் 1394 கி.மீ நீளமான இருப்புப்பாதைகள் அகன்றனவாயும், 59 கி.மீ நீளமான இருப்புப் பாதைக.ே ஒடுங்கியனவாயும் உள்ளன.
விதிகளும் இரும்புப் பாதைகளும் (கிலோமீற்றர்)
1986 1999
வீதிகள் 25 494 25 952 அகன்ற புகையிரதப் பாதைகள் 1 394 及 447 ஒடுங்கிய புகையிரதப் பாதைகள் 59 59
J-4455 m gtib: RDA, Clombo
அட்டவணை: 25.1.
257

Page 131
இலங்கையின் போக்குவரத்துப் பாதைகளில் வீதிப் போக்குவரத்து 94 சதவீதமாக விளங்குகின்றது. இலங்கையின் வீதி வலையமைப்பில் பெரும் பகுதி பல வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டன. அவை வாகனப் போக்கு வரத்தின் கன பரிமாணங்களைத் தாங்கும் வலுவற்றன. ஒடுங்கியனவாயும் நன்கு பராமரிக்கப்படாதனவாயும் உள்ளன. இன்று இந்த வீதிகள் A, B, C, D, E என ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டு புனருத்தாரணமும், நவீன மயப்படுத்தப்பட்டும் வருகின்றன. A, B வீதிகளை வீதிகள் அபிவிருத்தி அதிகாரசபையும், C, D, E வீதிகளை மாகாண சபைகளும் பராமரித்து வருகின்றன.
வீதிகள் மூலமான பயணிகள் போக்குவரத்தில் 1991ஆம் ஆண்டு வரை அரசாங்கத்துறை முதன்மை பெற்றிருந்தது. 1991 ஆகஸ்டில் பஸ் போக்குவரத்து மக்கள் மயப்படுத்தப்பட்டது. இன்று பயணிகள் போக்கு வரத்து தனியார் துறையின் தொழிலாக மாறிவிட்டது.
இலங்கையின் புகையிரதப் போக்குவரத்தில் நீண்டகாலமாக இருப்புப் பாதைகளின் நீளமதிகரிக்கவில்லை. ஆனால் புகையிரதங்களின் எண்ணிக்கையும், வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வட பகுதிக்கான புகையிரதப் போக்குவரத்து வவுனியாவுடன் நிற்பதால், புகையிரதப் போக்குவரத்து முன்னைய இலாபத்தை அரசுக்கு ஈட்டித் தரவில்லை. மருதானையிலிருந்து றாகம வரையிலான மூன்றாவது இருப்புப் பாதை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. மேலும், மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரைக்குமான புகையிரதப் பாதை அமைக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பிற்கும் பொத்துவிலுக்குமான புகையிரதப் பாதை அமைக்கப் படவுள்ளது.
25.1.2 வலுவும் சக்தியும் ܚ இலங்கைக்குத் தேவையான மின்சாரம் இரு வகைகளில்; வெப்ப மின் மூலமும் நீர்மின் மூலமும் பெறப்படுகின்றது. எனினும் நீர் மின்னே பிரதான வலுவாகவுள்ளது. இலங்கையில் நீர் மின்னை விருத்தி செய்வதற்கான வாய்ப்புக்களுள்ளன: மத்திய மலைப் பிரதேசத்தில் சுமார் 55 நீர்வீழ்ச்சிகள் உள்ளன. நீர்த் தேக்கங்களை அமைத்து நீர் மின்னை உற்பத்தி செய்யக்கூடிய பெளதிக வசதிகளுமுள்ளன. அதனால், இலங்கையின் நீர்மின் உற்பத்தி இவ்விரு மூலங்கங்களினடியாகப் பெறப்படுகின்றது.
களனி கங்கையின் கிளை நதிகளான கெகல்கமு ஒயாவிலும், மஸ்கெலிய ஒயாவிலும் இலங்கையின் ஆரம்ப நீர்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விரு கிளை நதிகளிலும் நான்கு நீர்மின் நிலையங்களுள்ளன.
259

(1) லக்சபான நீர்மின்நிலையம்: கெகல்கமு ஒயாவில் நோட்டன் பிரிஜ் எனுமிடத்தில் ஒரு நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து குடை வழிமூலம் நீர் எடுத்துச் செல்லப்பட்டு லக்சபானவில் நீர்மின் பிறப்பிக்கப் படுகின்றது. இங்கு 25 000 கிலோ வாட் நீர்மின்சாரம் உற்பத்தியாகின்றது.
(2) நோட்டன் பிரிஜ் நீர்மின் நிலையம்: கெகல்கமு ஒயாவில் காசல்றீ என்று நீர்த்தேக்கத்திலிருந்து நீர், குடைவழிமூலம் நோட்டன் பிரிஜ் வரை எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு 50 000 கிலோ வாட் மின் உற்பத்தியா கின்றது. இந்நிலையத்தை விமலசுரேந்திர மின்நிலையம் எனவும் அழைப்பர்.
(3) மஸ்கெலியா நீர்மின் நிலையம்: மஸ்கெலியா ஒயாவில் ஒரு நீர்த் தேக்கம் உருவாக்கப்பட்டு நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய நீர்மின் நிலையம் இதுவாகும். 75 000 கிலோ வாட் மின் இங்கு உற்பத்தியாகிறது.
(4) சமணல நீர்மின் நிலையம்: லக்சபானவில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தேக்கத்திலிருந்து குடைவழி மூலம் நீர், சமணல என்றவிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒரு நீர்மின் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இவற்றைவிட கல்லோயா, உடவளவை, மகாவலிகங்கை ஆகிய நதிகளிலும் நீர்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை: (1) இங்கினியகல நீர்மின்நிலையம்: கல்லோயா நதியில் அமைக்கப்பட்ட சேனனாயக்க சமுத்திர நீர்த்தேக்கத்தில் இந்த நீர்மின் நிலையம் அமைந்துள்
ளது.
(2) உடவளவை நீர்மின் நிலையங்கள்: வளவை கங்கையில் உடவளவை நீர்த்தேக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டு நீர்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 6 000 கிலோ வாட் மின் உற்பத்தியாகின்றது.
(3) மகாவலிகங்கையில் 8 நீர்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின் றன. இன்று உக்குவெல, போவத்தன்னை (லெண்டேர்), கொத்மலை, விக்டோரியா, றன்தென்பை என்பrே 660 மெ.வா. மின்னை உற்பத்தி செய்கின்றன. s
25.2 வீடமைப்புத்திட்டம்
மக்களுடைய அடிப்படைத் தேவைகளுள் ஒன்று உறையுள் என உணரப் பட்டதால், மக்களது சகல பிரிவினரதும் வீட்டுத் தேவைகளை மனதிற் கொண்டு, இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் வீடமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. அதற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அமைக்கப்பட்டுள்ளது. தேசிய வீடமைப்புச் சட்டதிட்டங்களை உருவாக்குதல், வீடமைப்புக் கடன்களை வழங்குதல்
259

Page 132
முதலான பணிகளைத் தேசிய வீடமைப்பு அதிகார சபை செய்து வருகின்றது.
இலங்கையில் காணப்படும் 2817406 வீடுகளில் (1981) 8 சதவீதமான வீடுகள் நகர்ப்புறங்களிலுள்ளன. 92 சதவீதமான வீடுகள் கிராமப் புறங்களி லுள்ளன. இக்கணிப்பீட்டின்படி ஒரு வீட்டில் வாழ்வோரின் எண்ணிக்கை 5.2 ஆகவுள்ளது. இலங்கையிலுள்ள உறைவிடங்களில் 41.8% நிரந்தரமான வீடுகளாகும். 51.8% ஓரளவு நிரந்தரமான வீடுகளாகவும், 6.4% தற்காலிகக் குடிசைகளாகவுமுள்ளன.
வீட்டு வசதி என்பது வீடமைப்பில் முக்கியமானதாகும். காற்றோட்டமான அறைகள், நன்னீர் வசதி, மின்சாரம், மலசலகூடங்கள் என்பன ஒரு சுகாதாரமானதும் ஆரோக்கியமானதுமான குடும்பம் வாழ உகந்த வீடாகும். இலங்கையில் ஏறத்தாழ 31 சதவீதமான வீடுகள் ஒர் அறையைக் கொண்டவை. நன்னீர் வசதி, குழாய் மூலமோ, கிணறுகள் மூலமோ, 69.5 சதவீதமான வீடுகளே பெறுகின்றன. மலசலகூட வசதியுள்ள் வீடுகள் 64.6 சதவீதமானவையாகும். இலங்கையிலுள்ள வீடுகளுள் 15 சத வீதமானவையே மின்சார வசதி கொண்டவையாகும். எனவே, வீட்டு வசதியைப் பெற வேண்டிய மக்கள் பலருமுள்ளனர் என்பது தெளிவாகிறது.
இலங்கையில் வாழ்கின்ற வறிய மக்கள் வாழ்கின்ற வீடுகள், மக்கள் வாழ உவப்பான நிலைமைகளைக் கொண்டவையாக இல்லை. மண்ணா லான தரையும், மண்ணால் அல்லது பலகையால் ஆகிய சுவர்களையும், கிடுகு அல்லது வைக்கோலால் வேயப்பட்ட கூரையையும் கொண்டவை யாக உள்ளன. ஆரோக்கியத்திற்கு உதவாத இந்த வீடுகள் மலசலகூடங் களையோ, நன்னீர் வசதிகளையோ கொண்டனவாகவில்லை. வறிய இம் மக்களால், வசதிகள் ஒரளவாவது கொண்ட வீடுகளை அமைத்துக்கொள்ள முடிவதில்லை. எனவேதான், அரசாங்கத்துறை முன் வந்து வீடமைப்புத் திட்டங் களைச் செயற்படுத்தி வருகின்றது. இத் திட்டத்தின் வகைகளும் அம்சங்களும் வருமாறு: 1. ஒரு இலட்சம் வீடமைப்புத் திட்டம்: 1978/1983 காலப் பகுதியில் செயற்படுத்தப்பட்ட வீடமைப்புத் திட்டமாகும். ஆண்டொன்றிற்கு 100 மில்லியன் ரூபா வரையில் வீடமைப்புக்குச் செலவிடப்பட்டது.
2. பத்து இலட்சம் வீடமைப்புத் திட்டம்: 1983/1989 காலப் பகுதியில் செயற்படுத்தப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டமாகும்.
3. பதினைந்து இலட்சம் வீடமைப்புத் திட்டம்: இது 1990 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
260

பத்து இலட்சம் வீடமைப்புத் திட்டத்தில், வீட்டு வசதி தேவைப்படும் குடும்பத்திற்கு ரூபா 7 500/= குறைந்த வட்டிக் கடனாக வழங்கப்படும். செவன சரண பத்து இலட்சம் வீடமைப்பு மானியத் திட்டத்தில், பிரதேசசபைப் பிராந்தியத்தில் வாழும் குடும்பங்களுக்கு ரூபா 5 000/= 2 lb,
நகராட்சிப் பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு ரூபா 7 000/= உம் மாநகராட்சிப் பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு ரூபா 10 000/= உம் மானியமாக வழங்கப்படவுள்ளது. தெரிவு செய்யப்படும், வீட்டு வசதி தேவைப்படும் குடும்பங்களுக்கு வீடுகட்டுவதற்கு உகந்த காணிகளை வழங்கல், தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கல் என்பன அரசாங்கத் துறையால் செயற்படுத்தப்படுகிறது.
வீடமைப்புத் திட்டங்களில், வீடுகளை அமைத்தல் பல்வேறு வழிவகை களில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அவை வருமாறு:
1. சுயவீடமைப்பு: கிராமப்புறங்களில் சுயவீடமைப்பு முறைகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக கல்லெளிகந்த சுய வீடமைப்புத் திட்டத்தைக் குறிப்பிடலாம். 2. மாதிரிக் கிராமம்; மாதிரிக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு வீடுகள், ஏனைய சமூகநலச் சேவைகள் (நீர், சனசமூகநிலையம், நூல் நிலையம், வீதிகள், பாடசாலைகள் போன்றன) அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகின்றன. 3. கிராம எழுச்சி: (கம்உதாவ) அபிவிருத்தியடையாதிருக்கும் குடியேற்றங் களைப் புனரமைப்புச் செய்வதற்காக கிராம எழுச்சித் திட்டம் உதவி வருகின்றது. 4. செவன சரண 10 இலட்சம் வீடமைப்பு மானியம்: அதிஷ்டச் சீட்டிழுப்பு, நன்கொடை ஆகியன மூலம் பணம் திரட்டி ஏழைகளிலும் பரம ஏழையானோருக்கு வீடமைக்க மானியமாக நிதி உதவுதலாகும். 5. தேர்தற்றொகுதி வீடமைப்பு: கிராமப் பகுதிகளில் தேர்தற்றொகுதி வாரியாக வீடுகளை அமைத்து வழங்கில் இதனுள் அடங்கும்.
* 6. பிற அமைச்சு வீடுகள்: வீடமைப்பு அமைச்சை விட வேறு அமைச்சுக்கள் கட்டி வழங்கும் வீடுகள் இப்பிரிவிலடங்கும். உதாரணமாக கடற் றொழிலாளர்களுக்கான வீடுகள், மகாவலித் திட்ட வீடுகள் என்பனவற்றைக் குறிப்பிடலாம். 7. மாநகரசபை, நகரசபைகளுக்குச் சொந்தமான தொடர்மாடி வீடுகளையும், வீடுகளையும் அவற்றின் குடியிருப்பாளருக்கே உரிமையாக்குதல். 8. தொடர்மாடிகளை நகரங்களில் அமைத்து சேரிகளிலும் குடிசைகளிலும் வாழும் நகரப்புற மக்களுக்கு வழங்குதல்.
261

Page 133
இவ்வாறு பல வழிகளிலும் புதிய வீடுகளை அமைப்பதுடன், இருக்கின்ற வீடுகளின் தரத்தை உயர்த்துவதும், வசதிகளை வழங்குவதும் வீடமைப்புத் திட்டச் செயற்பாடுகளாகும். இலங்கையில் வீடமைப்புத் திட்டம் குறுகிய காலத்துள் நல்ல பயனளித்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை. இலங்கை யின் இச் செயற்பாடுகளைக் கவனத்திற் கொண்டு, ஐக்கிய நாடுகள் தாபனம் 1987ஆம் ஆண்டைச் சர்வதேச வீடமைப்பு ஆண்டாகப் பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கது. 2 000 ஆண்டை யாவருக்கும் வதிவிடம் ஆண்டாக இலங்கை பிரகடனப்படுத்தியிருந்தது.

உசாத்துணைநூல்கள்/கட்டுரைகள்
1. Adams F. D.,
2. Bancil R. C.,
3. Balasundarampillai P, & others
4. Coates J.S.,
5. Cooray P. G.,
6. Coomarasuwamy A. K.,
7. Farmer B.H.,
8. George Thambyahpillai
10. ------
1 1. Kunarasa K.,
The Geology of Ceylon, London, 1881, and Ceylon Historical Journal, Vol.: 6 (1956-57)
Ceylon Agriculture: A Perspective' Oxford IBH Building Co. Bombay - 1971
Jafna" Dept. of Information, Colombo - 1983
The Geology of Ceylon' Ceylon Journal of Science, Vol.: 19(B)- 1935
An Introduction to the Geology of Ceylon' National Museums of Ceylon Publication - 1967
“The Administrative Report' Ceylon Mineral Survey for 1905 & 1906, Colombo - 1906
Tioneer Peasant Colonization in Ceylon' Oxford University Press, London 1957
The Rainfall Rhythm in Ceylon, University of Ceylon Review, Oct. 1954, Vol.: XII, No. 4
'Climatic Regions of Ceylon'
Tropical Agriculturist, Vol.: C XVI, No. 3 -
1960
"Tropical Cyclones and the Climate of Ceylon,
UCR Vol.: XVII, No. 344 - 1959. A Critical Survey of Land Settlements and Land Development in the Northern Province of Sri Lanka - 1931-1988
PhD Thesis (Unpublished) - 1991. University of Jaffna. ܫ
263

Page 134
12. Silva S. F. De,
13. Wadia D.N.,
14. ----------
15. குலரத்தினம் கே,
16.
17. 9560итуттағгтаб.,
20. குக் ஈ. கே.
21. பட்டியாராச்சிடி பி.,
22. பானபொக்கே சி. ஆர்.
264
A Regional Geography of Ceylon, The Colombo Apothecaries Company, Ltd., Colombo - 1954
"The Three Superposed Peneplains of Ceylon Ceylon Dept. Mineralogy Records, Prof, Paps - 1945
"The Making of Ceylon' Spol, Zeylan, Vol.: 23 - 1941
இலங்கையின்முகத்தோற்றம் சமூகவியல் இதழ் 1, திரு. வெ. நடராசாவின் வெளியீடு,
யாழ்ப்பாணம் - 1964
இலங்கையின் புவிச்சரிதவியல் புவியியல் இதழ் 3, திரு. க. குணராசாவின் வெளியீடு, யாழ்ப்பாணம் - 1965
இலங்கையின் புவிச்சரிதவியல் பூரீலங்கா வெளியீடு, யாழ்ப்பாணம் - 1970
இலங்கைப் புவியியல் பூரீலங்கா வெளியீடு, யாழ்ப்பாணம் - 1974
கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரிவுகளின்நில, நீர் பயன்பாடு முதுமாணி ஆய்வுக்கட்டுரை, யாழ். பல்கலைக்கழகம் - 1984 (அச்சிடப்படாதது)
இலங்கை, புவியியல் வளம், மக்கள் இலங்கை அரசகரும மொழித் திணைக்கள வெளியீடு, கொழும்பு - 1959
இலங்கையின் மண்வகைகளும் புவிச்சரித வியலும் புவியியலாளன், இலங்கைப் பல்கலைக் கழகப் புவியியற் சஞ்சிகை, பேராதனை - 1964-65
இலங்கையின் மண்களினது புவியியல்
புவியியலாளன், இலங்கைப் பல்கலைக்
கழகப் புவியியற் சஞ்சிகை, பேராதனை -
4-65

23. பாலச்சந்திரன் செ,
24. பாலசுந்தரம்பிள்ளை பொ,
25. குகபாலன கா.,
26. தங்கராஜாக,
27. இரா.சிவச்சந்திரன்
28. இராஜேஸ்வரன் S.T. B.
29. ரூபாமூர்த்திகா,
30. யோகா இராசநாயகம்
3.
இலங்கையின் வரட்சி மாதங்களின் நிகழ்வுகள் யாழ்ப்பாணப் புவியியலாளன், யாழ். பல்கலைக்கழகம், 1987-88
இலங்கையின் குடித்தொகைப் பண்பு கள்
Seminar Report, Sri Lanka Foundation Institute - 1978
இலங்கையில் இறப்புகளும் அவற்றிற் கான காரணிகளும் யாழ்ப்பாணப் புவியியலாளன், யாழ். பல்கலைக்கழகம், 1987-88
இலங்கைப் புவியியல் சுப்பிரமணியம் புத்தகசாலை, யாழ்ப்பாணம், I955
இலங்கையின் விவசாய நிலச் சீர்திருத் தங்கள் யாழ்ப்பாணப் புவியியலாளன், யாழ். பல்கலைக்கழகம், 1985/86
இலங்கைப் பொருளாதார விருத்தியில் மகாவலி பெருந்திட்டத்தின் பங்கு பற்றிய ஒரு நோக்கு பொருளியலாளன், மலர்:2இதழ் :31988
மீன்பிடிஅபிவிருத்திக்கு ஓர் அடிப்படை ஆய்வு காலாண்டிதழ்1.1 ஆய்வு நிறுவனம், 1987
இலங்கையின் நிலவள, மண்வள, கணிப்
இபாருள் வளப் பயன்பாடும் பாதுகாப்
பும் Seminar Report, Sri Lanka Foundation Ir stitute - 1978
புவியியல் சஞ்சிகை 1 - 17 ஆசிரியர் க. குணராசா, யாழ்ப்பாணம், 1964-1967
265

Page 135


Page 136