கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கைத் தீவு

Page 1
〔。**
rail
 

*、山Lá m) 山菇、mLQ ல் பதிப்பிக்கப் பெற்றது.
- 의 7 C.

Page 2


Page 3

இலங்கைத் தீவு
ஆசிரியர் : J. விஜயதுங்கா
தமிழாக்கம் : கே, வி. ராமச்சந்திரன்
அரு னே த யம் wm\fးပိ်ုအကြောင် சென்னை-14.

Page 4
அருணுேதயம் வெளியீடு 65. முதற் பதிப்பு செப்டம்பர் 1959
யுனெஸ்கோ உதவியுடன் தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் ஆதரவில் பதிப்பிக்கப்பெற்றது.
விலை ரூ. 1-40
AV மெட்ரேபாலிடன் பிரிண்டர்ஸ் ဓ#ဓါy-2.

TAMIL First Edition: 5,000 Copies September, 1959.
ILANGA THEEVU
(CEYLON)
BY
J. VIJAYATHUNGA
Price : 1-40
Published with the assistance of UNESCO
under the auspices of THE SOUTHERN LANGUAGES BOOK TRUST,
MADRAS. TAM L 56.
Published by
RUNDT HAYAM
ROYAPTA, MADRAS-14

Page 5
அணிந்துரை டாக்டர் ஏ, எல். முதலியார் துனவேந்தர் சென்ன்ைப் பல்கலைக் கழகம் தென்னிந்திய மொழிகள் புத்தக டிரஸ்டு, தன் னுடைய முன் அனுபவங்களாலும், பொதுமக்களைக் கவர்வனவாயும் அதனுேடு அவர்களுக்கு நற்பயன் அளிப் பனவாயும் உள்ள நூல்களை வெளியிட்டதால் பெற்ற அறிவின் திறத்தாலும், இரண்டாம் வரிசை நூல்களை வெளியிடத் தலைப்பட்டுள்ளது. அவற்றைத் திராவிட மொழிகள் அனைத்திலும் ஆக்கி அளிக்கவும் அது கருது கின்றது. இந்த நூல்களெல்லாம் மிகக் கவனத்தோடும், படிப்பவர்கனின் பலதிறப்பட்ட சுவைகளுக்கு ஏற்பவும் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளன, வாழ்க்கையின் பலவகைக் கூறுபாடுகளையும் பற்றிய பல பல பொருள்கள் அடங்கிய நூல்களை வெளியிட இந்தப் புத்தக டிரஸ்டு இயற்கை யாகவே ஈடுபடத் தொடங்கியுள்ளது. இந்தியப் பெருக் தலைவர்களுள் சிலருடைய வாழ்க்கை வரலாறுகளையும் அவர்கள் சாதித்தவைகளையும் விரித்துரைப்பதற்கென ஒரு பகுதியும் இதில் தனியாக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது நாட்டின் கலன்களில் அக்கறைகொண்டு, மக்களின் அடிப் படை உரிமைகளுக்காகப் போராடவும். நாட்டின் மதிப் பையும் செல்வாக்கையும் வலுப்படுத்தவும் அரும்பணி ஆற்றிய இப்பெருந் தலைவர்களுக்குத் தாங்கள் எவ்வளவு கடமைப் பட்டவர்கள் என்பதை வருங்கால மக்கள் அறிந்து கொள்வது நல்லது.
தத்துவம், சமயம், விஞ்ஞானம், பேரிலக்கியங்கள், பொருளாதாரம் என்பனவும் இவ்வரி/ையில் இடம் பெற்றுள்ளன. சிறு கதைகளுக்கும் பண்/டய கலைகளைப்

ij
பொதுமக்களிடையே பரப்புவதற்கும் இதில் இடம் வகுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்வது கலமாகும். கடன5ாடகக் கலைகள், சிற்ப சாஸ்திரங்கள், தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டறிந்த உண்மைகள், என்றென்றும் வியத்தகு பொருள்களாய் விளங்கும். தென்னிந்தியப் பெருங் கோயில்களின் வரலாற்றுக் குறிப்புக்கள் ஆகியவையும் இதில் சேர்க்கப்பெற்றுள்ளன. இப்போது வெளியிடப்பெறும் இந்த நூல் வரிசை படிப்ப வர்க்குச் சுவையூட்டும் பல்வேறு வகைப்பட்ட பொருள் 5డిగా வழங்கும் என்பது என் துணிபு. பொது முறைக். கல்விக்குரிய பொருள்களைக் கொண்ட இத்தகைய வெளியீடுகள் மேன்மேலும் பெருகும் பெருக்தொகை யினராகிய வாசகர்களைக் கவர்ந்துகொள்ளும் என்பதில் ஐயமில்லை. wa
இந்த நூல் வெளியீட்டுத் திட்டத்தில், தென்னிந்திய மொழி நூல்களுள் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மொழி பெயர்க்கும் அம்சம், பாராட்டுத் தகுதியுடையதாகும். இவ்வரிசை முற்றுப்பெற்றதும், எழுதப்படிக்கமட்டும். தெரிந்த ஏராளமான மக்களைத் தங்கள் அறிவைப் பெருக்கிக்கொள்ள உண்மையான ஆர்வம் கொள்ளும்படி செய்து, அவர்களைப் பழக்கமாகப் படித்துவரும் தொகை. யினருடன் இணைத்து, இவ்வாற்ருல் அவர்கள் தாங்க. ளாகவே மிக்கதிறம் உடையவர்களாவதற்கு இவைகள் உறுதுணை ஆகும் என்பது என் துணிவு. தென்னிந்திய மொழிகளின் புத்தக டிரஸ்டு எந்த உயரிய நோக்கங் களோடு தொடங்கப்பெற்றதோ அங்நோக்கங்கள் அஃது ஆற்றிவரும் அரும்பணியால் மேன்மேலும் நிறைவேறி வரும் என்று நான் கம்புகிறேன்.
ஏ. எல். முதலியார்,
துணைவேந்தர்.

Page 6
முனனுரை
இந்த நூலுக்கு முன்னுரை எழுதத் தென்மொழி களின் புத்தக டிரஸ்ட்டு என்னை அணுகியபோது, ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக நான் அவர் களுடைய வேண்டுகோளுக்குத் தயக்கமின்றி இணங்கி னேன். எந்த நல்ல விஷயத்திலும் எனக்கு அதிக ஆர்வ முண்டு. அத்தகைய முயற்சிகளில் கலந்துகொள்வதை ஒரு தனிச் சலுகையாக நான் கருதியிருக்கிறேன். மதிப்பு மிக்க நூல்களைக் குறைந்த விலையில் வெளியிட்டுப் பெரும் அளவில் அறிவைப் பரப்பும் துறையில் புத்தக டிரஸ்ட் முன்னணியில் நிற்கிறது. இந்த முயற்சியை யுனெஸ்கோ திட்டம் தோற்றுவித்துள்ளது என்பதே இதற்குப் போதிய நற்சான்ருகும். ر•
எல்லா அரசியல், பூகோள எல்லைகளுக்கு அப்பாற் பட்ட மனிதவர்க்க சகோதரத்வத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு சர்வதேச ஒழுங்கு முறையான "ஒருலகம்" என்ற கருத்தில் நான் எப்பொழுதும் நம்பிக்கை வைத் துள்ளேன். இந்த வெளியீட்டின் நோக்கம், அண்டை நாடுகளான இந்தியா, சிலோன் ஆகியவற்றின் இடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதாகும். அது போற்றற் குரியது. 制
அதைத் தவிர, 15ம் நாடு சுதந்திரமடைந்த அடுத்த ஆண்டுகளில்-1947-50- சிலோனில் இந்தியாவின் தூதனுகப் பணியாற்றும் உரிமையைப் பெற்றிருந்தேன். அது எனக்கு, இலங்கை மக்களையும், அவர்களுடைய தொன்றுதொட்ட வழக்கங்களையும், (அவர்களுடைய உள்ளங்களையும் விவேகத்தையும் புரிசிகொள்ளவும்,

ii
இரு நாடுகளிடையே சுமுகமான உறவை வளர்ப்பதில் என் எளிய பணியைச் செய்யவும் வாய்ப்பளித்தது. அப் பொழுதுதான் புகழ்பெற்ற எழுத்தாளரான பூீ ஜே. விஜயதுங்காவை நான் அறிந்தேன். கடந்த 20 ஆண்டு களாக இந்தியா-சிலோன் நட்புக்கும், நல்லெண்ணத் திற்கும் அவர் உழைத்து வருகிருர். அவருடைய வெளி யீடு-இலங்கை-ருசிகரமாகவும், தெளிவுபடுத்துவதாக வும் விளங்குகிறது. அந்த நாட்டையும், அதன் மக்களை யும், கலையையும், கலாச்சாரத்தையும் கதைபோல அவர் விவரிக்கிருர். இந்த அழகிய தீவைப்பற்றி எளிய தெளி வான முறையில் அவர் கூறியுள்ளது மக்களின், குறிப்பாக இளைஞர்களின் சிந்தனையைக் கவரும். இதில்தான் சர்வ தேச நல்லெண்ணத்தை வளர்க்கும் விதை நூலிடம் காணப்படுகிறது.
அதன் பக்கங்களைப் படிக்கும்போது, மக்களிடையே குறிப்பாக தென் இந்திய, சிலோன் மக்களிடையே உள்ள வியக்கத்தக்க ஒற்றுமையை ஒருவர் காணலாம். சமூக மத வழக்கங்களிலும், திருவிழாக் கொண்டாட்டங்களி லும் சடங்குகளிலும், கலாச்சார நடவடிக்கைகளிலும் இரு சாராரிடமும் மிகுந்த ஒற்றுமை காணப்படுகிறது.
சிலோனில் கான் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்த காலத்தில், ஒருபோதும் வெளி நாட்டில் இருப்பதாக எனக் குத் தோன்ற வில்லை. இரு நாடுகளிடையே உள்ள சிறு வேறுபாடுகளையும் சர்ச்சைகளையும் இந்த நூல் தவிர்த் திருப்பதால், இதன் மதிப்பு அதிகரிக்கிறது.
சமீபகாலத்தில், பிரமாண்டமான பல பிரச்னைகளைத் தீர்ப்பதில் இரு அரசாங்கங்களும் ஈடுபட்டுள்ளன. இவை பாராட்டத் தக்கதும், வரவேற்கத் தக்கதுமாக இருக்கும் போது, ်ဖွံ\) ப உறுதிப்படுத்த அரசியல் உடன்பாடு களைவிட மிே*மை யானதொன்று தேவை என்பது

Page 7
iii
உணரப்பட வேண்டும்-சகோதரத்வம், பரஸ்பர நல் லெண்ணம் ஆகிய கருத்துக்கள் மக்களிடம் பரவவேண்டும். சர்வதேச கல்லெண்ணத்திற்கு ஒரு அடிப்படையை அமைப்பதற்கு இந்த நூல் ஒரு பயனுள்ள முயற்சி என் பது என் கருத்தாகும்.
கவர்னர் முகாம் வி. வி. கிரி, உத்திரப் பிரதேசம் உத்திரப் பிரதேசக் கவர்னர்.

கதிர் காமம் கோயில் வாயிலில் நூலாசிரியர்

Page 8

இலங்கைத் தீவு
1. முதல் தோற்றம்
தரை வழியாகவோ, கடல் மூலமாகவோ அல்லது வானத்தின் வ்ழியாகவோ சிலோன நீங்கள் அணுகும் போது, ரம்மியமான காற்றை உட்கொள்வதை உணர்வீர் கள். அது, காற்றில் மிதக்துவரும் இலவங்கப்பட்டையின் மணம் என்று ஐரோப்பியர்கள் சத்தியம் செய்கிருர்கள். இந்த அதிசய, நறுமணம் மிகுந்த காற்று எப்படித் தோன்றுகிறது என்பதைக் கண்டுபிடிப்பது சிலோனில் பிறந்தவருக்குக் கடினமானது. ஆனல் அந்தக் காற்று அங்கு இருக்கத்தான் செய்கிறது. அது ஒரு வெப்பப் பிர தேசக் காற்று. அதில் இலவங்கப்பட்டையின் மணமும், மல்லிகை மலர் வாசனையும், கற்பனையழகும் அற்புதமாகக் கலந்திருக்கின்றன.
ஆகவே, அங்குள்ள கணக்கற்ற கோவில்களில் ஒன் றுக்கு விஜயம் செய்யச் சிலோன் மக்கள் தயார் செய்து கொள்வது போல, ஆனந்தமாக இக்தத் தீவை அணுகத் தயார் செய்து கொள்ளுங்கள். புத்தர் கோவிலுக்கு விஜ யம் செய்யும் சிலோன்காரர்கள், எவ்வாறு தயார் செய்து கொள்கிருர்கள்?
அதி காலையில் திறந்த வெளியில் ஒரு கிணற்றில் அல் லது ஆற்றில் புண்களும் பெண்களும் சேர்ந்தாற்போல் குளிக்கிருர்கள் கிணற்றுக்குச் சென்றல், அங்கு வேருெரு

Page 9
IU
வன் தண்ணீர் இறைத்துக் கொடுக்கிருன், குடம் குடமா கத் தன்மீது தண்ணிர்ைக் கொட்டிக் கொள்கிருன் அல் லது கொட்டிக் கொள்கிருள். அப்பொழுது ஆதவன் உதித்து, அதன் கிரணங்கள், குளிக்கும் ைேர ஒளிபெறச் செய்கின்றன.
இந்தத் திறந்த வெள்ளி ஸ்நானத்திற்குப் பிறகு, புதி தாகச் சலவை செய்த வெண்ணுடையை அவர்கள் அணி கிருர்கள். இறுக்கமான ரவிக்கையைப் பெண்கள் அணி கிருர்கள். அது, அவர்களுடைய ஸ்தனங்களின் வளைவு நெளிவுகளுடன் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. ரவிக்கை, தாழ்வாகக் காணப்படுகிறது. வேறிடங்களிலுள்ள தங்களு டைய சகோதரிகளைப் போல, முலைதாங்கிகள் (பிராசரி) மீது மோகம் கொண்டு, அவைகளை இளம் பெண்கள் அணிகிருர்கள். அவை கடைச் சரக்குகள். ஆனல் ரவிக்கை கள், வீட்டில் செய்யப்பட்டவை. இடுப்புக்குக் கீழ், மீள மான துணியை உடலைச் சுற்றி உடுத்திக் கொள்கிருர்கள், பெல்டு அல்லது பித்தான்கள் இல்லாமலே அந்தத் துணி, எவ்வளவு நாட்களானலும் அவிழ்ந்து போகாமல் இடுப் பிலேயே இருக்கிறது. இந்த வழக்கமான, முரட்டுத்தன மான ஆணுல் உபயோககரமான உடைக்குப் பதிலாக கம் பீரமான புடவை இப்பொழுது பெரும்பாலும் பயன்படுத் தப்படுகிறது. நகரப் பெண்கள் செருப்பு அணிகிருர்கள் பெரும்பாலானவர்கள் வெறுங்காலுடனே நடமாடுகிருர் கள். ஆகா, அந்தக் கால்களின் உருவம் எப்படிப்பட்டது! கெட்டுப் போகாத கம்பீரமான கிராமப் பெண்கள்தாம் மற்றவர்களை விட அதிகமானவர்கள். சிலோன் காட்சியில் ஆதிக்கம் செலுத்துவதும் அவர்களே.
பெண்களைப் போலவே ஆண்களும் இடுப்பில் துணியை அல்லது சராங்கை (பெரும்பாலும்/இந்தியாவில் செய்யப்படுவது) உடுத்துகிருர்கள். ப்புக்கு மேல்

11
வெள்ளைப் பருத்தியாலான பனியன்களை அல்லது கமீசாக் களை அணிகிருரர்கள், கமீசா என்ற உடைக்கு நீண்ட தளர்ந்த கைகள் உண்டு. ககர வழக்கங்களால் பாதிக்கப் படாத மனிதர்கள் இன்னும் நீண்ட கூந்தலை வைத்துக் கொள்ளவே விரும்புகிறர்கள். 'ஆண்களின் மீண்ட தலை மயிர், பின்புறத்தில் ஒரு முடிச்சில் இறுக்கமாகக் கட்டப் பட்டுக் காணப்படுகிறது. பெண்களின் கூந்தல் தளர்த்தி யாக தொங்கவிடப்படுகிறது. அவர்கள் தலைப்பாகை அணிவதில்லை. அவர்களுடைய கறுப்பான மயிர் அடர்த்தி யாகவும், வசீகரமாகவும், இருக்கிறது. இந்தியக் கவிதை களைப் போலவே சிங்களக் கவிதைகளிலும், கூந்தலும் கண்களும் பாராட்டுக்குரிய பிடித்தமான விஷயங்கள்.
இந்த வெண்ணுடை தரித்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்-கீழ்த்திசை நாடுகளில் குழந்தைகள் இல் லாத காட்சி எதுவும் பூரணமாகாது-குளிக்குமிடத்தி லிருந்து வீடு திரும்பி, ஏற்கனவே சேகரித்து வைத்துள்ள மலர்க் கூடைகளையும், ஊதுபத்திகளையும், தேங்காய் எண் ணெயையும், குருமார்களுக்கோ அல்லது புத்தருக்கோ அன்புக் காணிக்கையாகப் பாலன்னமும் எடுத்துக் கொண்டு கோவிலுக்குக் கிளம்புவார்கள். சில சமயங் களில், தற்கால வழக்கத்தை யொட்டி, மெழுகு வர்த்திகளை யும் அவர்கள் எடுத்துச் செல்வதுண்டு.
கோவிலே அடைந்தாகிவிட்டது-ஆனல், ஆகா அந்த சாவதானமான சடங்குகளை கேரில் பார்க்கவேண்டும் அந் தக் காட்சி பிரமிக்கத்தக்கது; ஆனல் கீழ்த்தர இன்ப உணர்ச்சிக்கு இடமளிக்காதது. அது எளியது, ஆனல் சீர்கேடில்லாதது. w
கோவில் காட்சிகளிலிருந்து திரும்பிப் பார்த்தால், நெல் ခံမှိနှီဂဲ\/စ္သစ္ကိုစ့် பசுமையையும், தென்னை, பாக்கு மரங்கல் அசைந்தாடுவதையும், வாழைத் தோட்

Page 10
I3
டங்களையும், சுவையான காய்கறிகளையும், செளந்தர்ய மான மலர்களையும் காணலாம். அது, கீழ்நாட்டின் இயற் கைக் காட்சி, ஆனல் அதில் ஒரு ஒழுங்கிருக்கிறது. கிராமச் சூழ்நிலை, நகரவாசியின் வீட்டுக் கொல்லைப் புறத்திலேயே கலந்து விடுகிறது. நாகரிக வசதிகள் அங் கிருக்கின்றன. ஆனல் அந்தத் தீவின் இயற்கை வளம் இக்த வசதிகளின் சிறப்பைக் குறைத்து அவை தேவைக்கு மிகுதியானவையாகத் தோன்றுமாறு செய்து விடுகிறது.
கடல் வழியாகச் சிலோனுக்குப் போவதாகவும், கொளும்பு துறைமுகத்தில் உங்களுடைய கப்பல் நங்கூரம் பாய்ச்சி இருப்பதாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினல் நீராவிப் படகில் கரைக்குச் செல்ல லாம். அதைவிட நல்லது, மூர் பட கோட்டியால் வேகமாக வும் பத்திரமாகவும் செலுத்தப்படுகிற சிறிய படகில் போவது.
கொளும்பு நகரம், தன் நவநாகரிகக் கடைகளுக்கும், ஓட்டல்களுக்கும், பாங்கிகளுக்கும் பெருமை வாய்ந்தது. ஆனல் துறைமுகத்திலிருந்து அரை மணி நேர பஸ் அல்லது கார் பிரயாண தூரத்தில் சிலோனின் பழங்காலச் சின்னங் களைக் காணலாம். அவைகளில் ஒன்று, சரித்திரப் பிரசித்தி பெற்ற கெலானியா கோவில். N
அது, நம்மை ஏழாம் நூற்ருண்டுக்கு அழைத்துச் செல்கிறது. அப்பொழுது சிலோன் (புராதன காலம் முதல் இது5ாள் வரை இலங்கை என்று அழைக்கப்படும் தீவு) சிங்கள மன்னர்களால் ஆளப்பட்டது. ஒரு காலத்தில் கம்போடியா போன்ற வெளி நாடுகள், இலங்கையின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தன. ரோமாபுரிக்கு இலங்கைத்
தூதர்கள் சென்றிருந்தார்கள்.
அந்தப் பிரம்மாண்டமான டகாபா }%; ஸ்தூபி,
s
பாதி புதைந்து கிடப்பதாகக் காணப் ADğ5l. s9ğ5I .

13
மாயத் தோற்றமன்று. இந்தக் கோவிலின் சரித்திரத்தில் புராதனச் சிறப்பும், அற்புதமும், கொஞ்சம் காட்டு மிராண்டித்தனமும்கூட கலந்திருக்கின்றன,
18 நூற்ருண்டுகளுக்கு முன்னல் கெலானியதிஸ்ஸா என்ற மன்னன் இலங்கையை ஆண்டுவந்ததாக ஒரு கதை கூறுகிறது. அவனுடைய ராணி ஒரு ஒப்பற்ற அழகி. அந்த அழகியைக் கண்டு காதல் கொண்டான், மன்னனின் சகோதரன். அவளுக்குக் காதல் செய்தியனுப்பத் துடி துடித்த அவ்ன், ஒரு நாள் தன் நண்பனைக் குருமார் வேஷம் தரிக்கச் செய்து, தினந்தோறும் மன்னனைப் பேட்டி காணும் குருமார்களுடன் அவனையும் அனுப்பி வைத்தான். தகுந்த தருணத்தில், ராணி முன்பாக அந்தக் காதல் கடிதத்தை அவன் போடவேண்டும்.
எதிர் பார்த்தபடியே எல்லாம் நடந்து கொண்டிருக் தது. தனக்கு பின்னல் ராணி வருவதாக நினைத்து காதல் கடிதத்தைப் போட்டார் போலிக் குருமார். ஆனல் வந்த தோ அரசன். கடிதத்தை எடுத்துப் படித்தார்.
கண்களில் கோபக் கனல் வீச, கொதிக்கும் எண் ணெய்க் கொப்பரையில் குற்றவாளியைப் போடும்படி அரசர் ஆக்ஞையிட்டார். கட்டளை நிறைவேற்றப்பட்டது. ஆனல் மன்னர் ஒரு தவறு செய்துவிட்டார். எண்ணெய்க் கொப்பரையில் அவனைத் தள்ளுவதற்கு முன்பாக, குருமார் உடையை நீக்கத் தவறிவிட்டார். அந்தக் கதையின்படி காதல் எதிரியைக் கொன்றது குற்றமல்ல, குருமாரின் புனித மஞ்சள் ஆடையுடன் அவனை அரசன் கொதிக்கும் எண்ணெயில் போட்டதுதான் குற்றம்.
அந்த அடாத செயலால் தேவதைகள் ஆத்திர மடைந்ததால், கொதிக்கும் எண்ணெய் குளிர்வதற்குள் கடல் பொங்கிாமுந்து அந்தச் செழிப்பான நாட்டை விழுங் கியது. 18 நாYArண்டுகளுக்கு முன்னல், கெலானியாவிலி

Page 11
14
ருந்து 15 மைல் தூரத்துக்கு அப்பால் கடல் இருந்ததாகக் கதை கூறுகிறது. ஆனல் அது இப்பொழுது கொளும்பு துறைமுகத்திலிருந்து மூன்று மைல் தூரத்திலேயே உள் ளது. கெலானியா டகாபா பாதி புதைந்து கிடப்பதற்கு இது ஒரு விளக்கம்.
இலங்கைக்குப் புத்தர் விஜயம் செய்தபோது, கெலானி யாவுக்கு வந்ததாகவும், அவர் அமர்ந்த வைர சிம்மாசனத் தை அந்த டகாபா பாதுகாத்து வைத்திருக்கிறது என்றும் மற்ருெரு வரலாறு கூறுகிறது.
கொளும்புக்குத் திரும்பியதும், கடலை யொட்டிய சாலை வழியாக கால்கிஸ்ஸாவுக்குச் செல்ல வேண்டும். அதை ஆங்கில மோகிகள் மவுண்ட் லவினியா என்று அழைக்கிருர்கள். இங்கு கடல், வசீகரமாக வளைந்திருக் கிறது. இந்தக் கடற்கரையில் மெதுவாக மோதும் அலைகள் மீது அழகாகத் தென்னை மரங்கள் வளைந்து நிற்கின்றன, தென்னைகளுடே கடலைக் காண்பதும், தெற்கில் உள்ள காலித் துறைமுகத்துக்கு விரைந்து செல்லும் ரெயில் களைப் பார்ப்பதும் கண் கொள்ளாக் காட்சிகள். பழைய காலத்தில் டார்ஷிஷ் என்று வழங்கப்பட்ட நகரமே காலி என்று சில அறிஞர்கள் சொல்கிருர்கள்,
இந்தச் சாலை கெடுகிலும் வித விதமான, வண்ணம் வண்ணமான பழங்களும், காய்கறிகளும் குவித்து வைக்கப் பட்டுள்ள கடைகளைக் காணலாம்.
கால்கிஸ் கடற்கரையில் கட்டு மரங்களும், குறுகிய மீன் பிடிக்கும் படகுகளும் கிடக்கின்றன. சில சமயங் களில் உங்கள் கண் முன்னுல் அத்தகைய சிறு பட செய் யப்படுவதைப் பார்க்கலாம். அங்கு நீண்ட 5ே7ம் தங்கினுல் மரத்தை வெட்டிப் படகு செய்வதையும் /4.hற்குத் தார் பூசுவதையும், கயிற்ருல் அது ·M·

15
பும், மீன் பிடிக்க முதல் தடவையாக அது பயணமாவதை யும் காணலாம். <
புதிய படகைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கும் செம் படவர்களைப் பார்க்கும் போது, அவர்களுக்கு வேறு தொழில் தெரியாது என்ற எண்ணம் தோன்றலாம். ஆனல் அதுவும் மாயத் தோற்றமே. அவர்களுக்கு மீன் பிடிக்கவும் தெரியும், கைத் தொழில் செய்யவும் தெரியும், விவசாயம் செய்யவும் தெரியும். கடலுக் கருகில் உள்ள சிறிய நிலங்களில் அவர்கள் உழுது பயிரிடுகிறர்கள். வேலையில்லாத் திண்டாட்டம் என்ருல் என்ன வென்று அவர்களுக்குத் தெரியாது; ஏனென்ருல் அவர்களும், அவர் களுடைய குடும்பங்களும் உண்டு உயிர் வாழ அவர்கள் உழைத்தாக வேண்டும்.
*சிலோனின் இந்தச் சுருக்கமான வர்ணனையைத் தீவி லுள்ள குடிகளின் மனப்பான்மையை அறிவதாகவும், ஏனையத் தீவு இனத்தவர்களைப் போன்ற இவர்களின் ஈடு பாடுகளைப் பார்ப்பதாகவும் கருத வேண்டும்.

Page 12
2. அற்புத அழகு
தீவுகள் எப்பொழுதும் தெய்வங்களின் பாதுகாப்பில் இருந்து வருகின்றன. தீவு என்ற சொல்லைச் சொன்னல், ரசிகத் தன்மையில்லாதவரின் உள்ளத்தில் கூட ஒரு மகிழ்ச் சித் துள்ளல் தோன்றும். மெதுவாக மோதும் அலைக ளுள்ள தென்னேகளால் சூழப்பட்ட கரையையும், குரிய வெளிச்சத்தில் ஆண்களும் பெண்களும் கவலையற்றுக் குளிர்காயும் காட்சியையும் அது மனக்கண்முன் தோற்று விக்கிறது. அத்தகைய கற்பனைத் தோற்றத்தை உண் டாக்காத பாழான தீவு,கூட இல்லை. உண்மை நிலைமை வேருக இருக்கலாம்; ஆனல் ஒரு தீவைப்பற்றி அத்தகைய கட்டுக்கதைகள் நீடித்திருக்கும். அது அப்படித்தான் இருக்க வேண்டும். இயற்கையின் சுதந்திரப் பிரகடனத் தின் உருவமே தீவு.
பழைய காலத்தில் ஜப்பானியப் புலவர்கள் தீவுக ளால் வெகுவாக வசீகரிக்கப்பட்டதால், உலகத்தின் சிருஷ் டியை நிஹன் அல்லது கிப்பன் தீவுகளின் சிருஷ்டியுடன் ஒப்பிட்டார்கள். கண்டம் வாழ் மக்களிடமிருந்து மாறு பட்ட குணுதிசயங்கள் சிலவற்றைத் தீவு இனத்தினர் பெற்றிருக்கிருர்கள். உடன் வாழ்வு, தலையிடாமை ஆகிய மனப்பான்மைகளைக் கண்டங்கள் வளர்க்கின்றன. அதைப் போலவே அவை திடீரென்று உற்சாகப் பெருக்கை அல் லது ஆக்கிரமிப்பை உண்டாக்குகின்றன. W
ஆளுனல் தீவு மக்கள், இயற்கை வசதிகளையோ அல்லது மனித உயிரையோ வீணுக்க முடியாது. வர்களிடம் உள்ளதை அவர்கள் தீவிரமான சிக்கனத்Uன் பாதுகாக்

1?
கிருர்கள். இயற்கையின் விபரீதங்களை எதிர்த்துப் போராடுகிருர்கள். தங்களுடைய வீட்டுப் பிராணிகளிடம் காட்டும் பரிவுடன் அவைகளை அடக்கிப் பயன்படுத்து கிருர்கள். தீவு மக்கள் கர்வமாகவும், சுதந்திரமாகவும் அண்டையிலுள்ள பெருங்லத்தினரைக் கண்டிப்பவர்களா கவும், தங்களுடைய சட்டங்களிலும், சமூகக் கோட்பாடு களிலும் கடுமையை ஏற்படுத்தியும் வளர்க்கிருர்கள்.
கவிதைகள் எப்பொழுதும் தீவுகளுடன் சம்பந்தப்படுத் தப்படுகின்றன. கண்டங்களுடன் கவிதைகளை நாம் சம்பக் தப்படுத்துவதில்லை, ஆனல் அவைகளுடன் வீர காவியங் களையும்,பயபக்தியுடன் எழுதப்பட்ட வரலாறுகளையும் சம் பந்தப்படுத்துகிருேம், கவிதை பிறப்பதற்கு, கண்டம் என்ற பிரம்மாண்டமான கருப்பை ஏற்றதல்ல. லெஸ்போசில்தான் பர்னிங் சேபோ பாடியிருக்க முடியும். உலகசரித்திரத்தில் தீவுகள் ஒரு உன்னத பங்கு பெற்றுள் 6T 60T,
மிகப் பழைய தீவுகளில் ஒன்று சிலோன். மிக வசி கரமான தீவுகளில் அதுவும் ஒன்று. சிங்கள மன்னர்க ளின் வம்சம் இருபத்தைந்து நூற்ருண்டுகளுக்கு முன்னுல் ஆரம்பமாயிற்று. தங்களுடைய கடைசி மன்னன் கொடுங் கோலனுக இருந்ததால், 1815-ம் ஆண்டில் சிங்கள மக்கள் அவனை முடியிழக்கச் செய்து, பிரிட்டிஷ் மகுடத்துக்கு அவர்கள் விஸ்வாசப் பிரமாணம் செய்து கொடுத்தபோது, நூற்று எண்பத்தாறு மன்னர்கள் கொண்டிருந்த அரச பரம்பரைக்குமுடிவு கட்டினர்கள்.
இன்று சிலோன், அபார கேந்திரமான முக்கியத்துவம் கொண்டிருக்கிறது. த ந் பே ா  ைத ய விவகாரங்களில் அது பங்குபெறக்கூடும். சமகாலத்திய கலாசாரத்தை உருவாக்கும் மு:ஐற சிலோனில் தற்போது வேதனையாக

Page 13
18
வும் அபத்தமாகவும் தோன்றியபோதிலும், ஒரு புதிய லட்சியத்தை நோக்கி அது தள்ளாடிப் போய்க்கொண் டிருக்கிறது. பழைய வழக்கங்கள் அங்கு இன்னும் இருக் கின்றன. ஆனல் ஐரோப்பிய நாடுகளின் பொருத்தமற்ற தொடர்பால் அவை மழுங்கிவிட்டன. அந்தத் தொடர்பால் தோன்றிய வேதனை இந்த நாட்களில் இந்தியத் தாய்காட் டுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலம் குறைந்து வருகிறது.
இந்த மாறுதல்கள் ஒருபுறமிருக்க, சிலோன் தன் இயற்கையான அழகையும் வசீகரத்தையும் பாதுகாத் துள்ளது. அதனல் "மிக அழகிய தீவு’ என்றழைககப் படும் உரிமையைப் பெற்றிருக்கிறது.
(சரித்திர காலத்திற்கு முற்பட்ட, இராமரும் இராவண னும் 10 ஆண்டுகள் போர் புரிந்த கதையைக் கூறும் இதி காசத்தை ஆராய்ந்தால், அங்கு அப்பொழுது வலிமை பொருந்திய திராவிட கலாச்சாரம் இருந்ததை அறியலாம். இராவணனைப் போன்ற திராவிட மன்னர்கள் பலசாலிக ளாக இருந்தார்கள். அவர்களுடைய சபைகளில் வெளிகாடு களின் தூதர்களும் பிரதிநிதிகளும் குழுமியிருந்தார்கள். அவர்களுடைய நகரங்கள் அற்புதமாக விளங்கின.
ஆனல் சிலோனில் பெருமைப்படும் அளவுக்குப்
போதுமான நம்பத்தக்க சரித்திரமும் உள்ளது. கி. மு. ஏழுமுதல் ஆறு நூற்ருண்டுகள் வரை ஆசியா மைனரில் நாகரிக உலகின் நடுநாயகமாக
விளங்கிய லெஸ்போஸும், ஏதன்ஸ் நகரில் கற்பித்த காலனும், தீர்க்கதரிசனங்களை வெளியிட்ட ஜெரிமையா வும், ஜெரூசலத்தை வென்ற கெடசெட்கசாரும், அந்த தற் டெருமையை வைத்துக் கொள்ளட்டும். சாபோ, கெபுசெட் நசார் ஆகியோர் காலத்தில் சிலோனில் புலுபர்களும், கலை

I9
ஞர்களும், சிற்பிகளும் வாழ்ந்திருந்தால், அவர்கள் எவ் விதத் துப்பும் விட்டுவைக்கவில்லை.
ஆனல் அந்தச் சமயத்தில் ஸ்டார்ட்டா என்ற சிறிய நாட்டுக்கும் புகழ் உண்டாக்க செர்சஸ் முற்பட்டிருந்த போது (விஜயன் என்ற வங்ககாட்டின் (வடக்கு வங்காளம்) துணிகர இளவரசன் எழுநூறு ஆட்களுடன் சிலோ னில் இறங்கி, அதை ஆட்கொண்டான். குறுகிய காலத்தில் அவன் ஒரு கம்பீரமான ராஜ சபையை ஏற்படுத்தியதும் தென்னிந்திய அரச குடும்பங்களின் உறவை நாடியதும் ஆகிய உண்மைகளிலிருந்து, கி. மு. 543-ம் ஆண்டில் ஒரு விவசாய சமுதாயத்தின் கலைகளையும் கைத்தொழில்களை யும் அறிந்து பேணி வளர்த்த நாகரிக நாடாக, சிலோன் விளங்கியது என்பது தெளிவாகத் தெரிகிறது. விஜயனின் ஆட்களில் எவரும் தாய்நாடு திரும்பு விரும்பாததைக் கவ னிக்கும்போது, அந்த நாட்களில் சிலோன் புகழ்பெற்றிருக் தது என்பதும், கதைகள் கூறுவது போல கடலாலும் காற்ருலும் சிலோனில் அவர்கள் தள்ளப்பட்டதாக இல் லாமல், அங்கு வரவேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவர்கள் சிலோனுக்கு வந்தார்கள் என்பதும் தெளிவா கிறது) -
/
f அப்போதைய குறிப்பேடுகள் வெளியிடுவதை விட, அதிக வனப்புடன் சிலோனே சிறப்பிக்கச் செய்யும் பணி யில் விஜயனும், அவனுடைய ஆட்களும் ஈடுபட்டார்கள். பழைய காலத்திய பிரயாணிகள், இந்தியாவின் பிரசித்த மான செல்வத்தாலும். அதன் ஆத்மீக அறிவுரைகளின் புகழாலும் வசீகரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வந்தவர்கள், கிரேக்கர்களால் தப்ரபேன் என்று கூறப்பட்ட சிலோ 'னுக்கு விஜயம் செய்த பிறகுதான் தங்களுடைய பிரயா
ணம் முடிவுற்றதாகக் கருதினர்கள்.

Page 14
20
அந்தக் காலத்திய பூகோளப் படத்தில் சிலோன இடம பெற்றிருந்தது. கிரேக்கர்களும், ரோமானியர்களும், போனி, வழியர்களும், அராபியர்களும், பாரசீகர்களும், எதியோப் பியர்களும், கம்போடியர்களும், பர்மியர்களும், சீனுக்காரர் களும் சீலோனுக்கு வந்தார்கள். திலோனின் புகழ்பெற்ற முத்துக்களும், தந்தங்களும், வைரங்களும், “ தங்கமும் அவர்களைக் கவர்ந்தன) '
சிலோன் அமைந்துள்ள இடம் நன்ருகத் தெரிந்திரும் தது. தற்கால பூகோள நிபுணர் எவ்வளவு திருத்தமாகக் கூறுவாரோ, அவ்வளவு திருத்தமாக பூமத்திய ரேகைக்கு எவ்வளவு டிகிரி வடக்கே சிலோன் இருக்கிறது என்பதை பாஸ்கராச்சாரியா என்ற பழையகாலத்து இந்திய வான சாஸ்திரி அறிவித்திருந்தார். தப்ரபேன், இலம், செரின்டிப் ஆகிய பல பெயர்களில், அந்த நாளில் சர்வதேசச் சங்தை களில் சிலோன் பிரபலமாக விளங்கிற்று. கி. மு. 300-ம் ஆண்டில் சந்திரகுப்தனின் ராஜசபையிலிருந்த மெகஸ்தி னஸ், தப்ரபேனில் உள்ள யானைகளைக் குறித்து மிக்க ஆர் வம் காட்டினுன். ஆசியா மைனரில் சிலோனே நாகத்விபம் அல்லது பாம்பை வழிபடுகிறவர்களின் தீவு என்று கூறினர்கள். அவ்வாறு அது ஒபிருடன் ஒப்பிடப்பட்டது (கிரேக்க மொழியில் ஒபிஸ் என்பதற்குப் பாம்பு என்று பொருள்). இப்பொழுது சிலோனின் இரண்டாவது பெரிய நகரமும், துறைமுகமாகவுமுள்ள டிகால்முனை, முன்பு தார்ஷிஷ் என்று வழங்கப்பட்டதாம். செமிராமிஸ் காலத்
* ஈடம் காட்டில் செங்கடலின் கரையில் ஈலத் அருகி லுள்ள எஜியன் *கிபரில் பல கப்பல்களைச் சாலமன் மன்னன்' கட்டுவித்தான். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கம்: வெள்ளி, குரங்குகள், மயில்கள், ஏராளமான சிவப்புச் சந்தனக் கட்டைகள், வைரங்கள் ஆகியவற்றை அவை கொண்டுவந்தன.

21
தில சிலோன் மன்னர் /வாழ்ந்ததாகக் கூறி, பொனிஷியன் சரித்திரம் இத் தீவைப்பற்றிக் குறிப்பிடுவதாவது:
"ஒரு பேரரச்னுக்கு உட்பட்ட நான்கு மன்னர்கள் அந்தத் தீவை நிர்வகிக்கிருர்கள். அவ்வரசனிடம் ஏராள மாகப் பொன் இருந்ததால், அவனுக்குக் கப்பமாகக் காசியா, தந்தம், வைரங்கள், முத்துக்கள் ஆகியவைகளை மன்னர்கள் கொடுக்கிறர்கள்’
நாகரிக உலகத்தின் பகுதிகளில் ஒன்ருக, அப்பொ ழுது அந்தத் தீவு கருதப்பட்டது என்பது டாலமியால் உறுதிப்படுத்தப்படுகிறது. அதன் இடத்தை வியக்கத்தக்க வாறு திருத்தமாக பூகோளப் படத்தில் அவர் வரைந்த துடன், உலகில் யானைகள் வாழுமிடத்தைக் குறிப்பிட் டார். இப்பொழுதும் யானைகள் வாழுமிடம் அங்குள்ளது. கிறிஸ்து சகாப்தத்தின் ஆரம்பகாலத்தில் பிரயாணி களே சிலோன், காந்தம்போல இழுத்தது. அதன் வசீகரம் காதேயைவிட சிறப்பாக இருந்தது. அதை அடைவதும் எளிது. கி. பி. 50-ம் ஆண்டில் கிளாடியஸ் சக்கரவர்த்தி யாக இருந்தபோது, ரோமாபுரிக்கும் சிலோனுக்கும் இடையே தூதர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். கி. பி. 3ே0-ம் ஆண்டில் ஹ-வென் த்சாங் அல்லது ஹ"வான் சாங்க் என்ற பெயருள்ள புகழ்பெற்ற சீனப் பிரயாணி சாங்க்-கியலோ பற்றி எழுதினர். அது, அந்தத் தீவின் சிங்களப் பெயரான சிங்களா என்பதன் மாறுபாடு, கி. பி. 400-414 ஆண்டுகளில் பு-ஹியன், சிலோனில் தங்கி புத்த மத நூல்களுக்குப் பிரதிகள், எழுதினர். கி. பி. ஆரும் நூற்ருண்டின் ஆரம்பகாலத்தில் காஸ்மாஸ்'எழுதும்போது "இந்தியாவின் ஏறத் தாழ மத்தியில் அமைந்துள்ள சியிலி தீப, எல்லா நாடுகளிலிருந்தும் பொருள்களைப் பெற்று அவைகளை வினியோகித்து பெரிய பண்டகசாலை ஆயிற்று” என்று குறிப்பிட்டுள்ளார். சியிலிதீப என்பது சிங்கள

Page 15
22
இலக்கியத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. சிங்களத் வீப அல்லது சிகளத்வீப என்பதன் வேறுபாடு அது என் பது தெளிவு.
அதிை சுவர்க்கத்துக்கு அடுத்தபடியானது என்தும், ஏவாளுடன் தன் எஞ்சிய வாழ்நாட்களைக் கழிக்க ஆதம் தெரிக்தெடுத்த இடம் என்றும் முஸ்லிம்கள் கருதினர்கள்.
சிலோன் ஒரு சுவர்க்கம் போலத் தோன்றியதால் இக் தக் கதைகளை எந்தப் பிரயாணியும் மறுக்கவில்லை. இதை மார்க்கபோலோ இபின்படூடா ஆகிய புகழ்பெற்ற பிரயாணி களின் சொற்கள் உறுதிப்படுத்துகின்றன. குப்ளேகான் சபையில் போப்பாண்டவரின் தூதராக இருந்த ஜான்டி மரிக்னேலி என்பவர், ரோமாபுரிக்குத் திரும்பும்போது சிலோனைக் கண்டு எழுதியதாவது:
"செல்லனிலிருந்து சுவர்க்கத்தின் தூரம் காற்பது இத்தாலிய லீகுகள், சுவர்க்கத்தின் நீரூற்றுகளிலிருந்து விழும்.தண்ணிரின் ஓசை அங்குக் கேட்கிறது’
1840.ம் ஆண்டில் சிலோனுக்கு விஜயம் செய்த ரிபெய்ரோ என்ற போர்ச்சுகீசியர், பிரர்ணிகளும், பறவை களும், மலர்களும் ஏராளமாகக் காணப்படுவதை விவரித்து விட்டுக் கூறுவதாவது:-
"பட்டினியால் யாரும் வாடவேண்டியதில்லை, ஏனென்ருல் இந்தத் தீவு முழுதும் செழிப்பான நில முள்ள சுவர்க்கம், மலர்களாலும் மரங்களாலும் பள் ளத்தாக்குகள் நிறைந்துள்ளன. பளிங்கு போன்ற சுத்த மான நீர் ஆறுகளில் ஒடுகிறது, காற்று ஆரோக்கியமாக இருக்கிறது, பூமத்தியரேகைக்கு மிக அருகில் இந்தத் தீவு இருந்தபோதிலும் அது வெப்பமாகவோ குளிர்ச்சி யாகவோ இல்லை."

33
ஆப்பிரிக்கா, பிரேஜில், அரேபியா பாரசீகம், சயாம் மொலூகஸ், சீனு ஆகிய பிரதேசங்களுடன் அதை ஒப்பிட்டு அவர் இறுதியில் கூறுவதாவது:- Y.
"இந்தத் தீவைப் பூலோக சுவர்க்கம் என்று கூறு கிறவர்கள் அதன் செழிப்புக்காகவும், வாழ்க்கை வசதி கள் அங்கு ஏராளமாக இருப்பதற்காகவும் அவ்வாறு கூறுவதாக நான் எண்ணவில்லை. அந்த காட்டின் இன்ப கரமானதும், ஆரோக்கியமானது மாகிய சூழ் நிலைக்காக அவர்கள் அவ்வாறு கூறவில்லை. அதில் பலவகையான செல்வங்கள், சிறிய அளவிலே இருந்த போதிலும், காணப்படுவதாலேயே அவர்கள் அவ்வாறு கூறியதாகக்
கருதுகிறேன்.”
-டாக்டர் பால் பியரிசின் மொழிபெயர்ப்பு
ராபர்ட் காக்ஸின் சக காலத்தவரான ஜூன்டி லகாம்ப் என்ற ஹாலந்து நாட்டின் இண்டீஸ் படையின் சேவையி லிருந்த தலைவர், "கிழக்கிந்திய தேசங்களின் ராணி” என்று இலங்கைத் தீவை வர்ணித்திருக்கிருர், இலங்கை யைப் பற்றிய அவர்நூல் ஒரு செய்திச் சுரங்கமாகும்.
சமீபத்தில், வேட்டைக்காரரும் ஆராய்ச்சியாளரு மாகிய சர், சாமுவல் பேகர் தன் இலங்கை விஜயத்தைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு விவரித்துள்ளார்:-
"இந்த உயர்ந்த இடத்துக்கு நான் வந்த போது காய்ச்சலுடனும், மீண்டும் பலமடைய முடியாது என்ற அவநம்பிக்கையுடனும் பரிதாபகரமான நிலையில் இருக் தேன், நுவாரா எலியாவில் இரண்டு வாரங்கள்தான் தங்கினேன். அந்தச் சுத்தமான களங்கமற்ற காற்றின் அற்புதப் பலனை நான் எவ்வாறு விவரிப்பது? கடின மான மாட்டிறைச்சியும் கறுப்பு ரொட்டியும் உருளைக் கிழங்குகளுமே கிடைத்த போதிலும் இரு வாரங்களுக்

Page 16
24
குப் பிறகு நான் எப்பொழுதும் இருந்ததைப்போல ஆரோக்கியமாகவும் பலசாலியாகவும் ஆனேன் என் பதைச் சொன்னல் போதும். இதற்கு ஆதாரமாக நான் உடனே இன்னுெரு வேட்டைக்குப் புறப்பட்டேன்”
இப்பொழுதுகூட உடல் சோர்வு அல்லது உள்ளச் சோர்வு கொண்டவர்களுக்கு நுவாரா எலியா மெக்காவாக (யாத்திரை ஸ்தலமாக) விளங்குகிறது, இன்று குறைகூற முடியாத வசதிகள் அங்கு உண்டு.
டார்வினின் நண்பரும், தத்துவஞானியும், விஞ்ஞானி யுமாகிய எர்னஸ்டு ஹெகல் என்பவர், ஆறு மாத விடு முறையை அங்குக் கழித்த பிறகு, "உலகத்திலுள்ள செல்வம் கொழிக்கும், அழகு மிகுந்த தீவுகளிலொன்று” என்று சிலோனை வர்ணித்துள்ளார்.
சிலோன விட்டுப் போகும் போது அவர் எழுதிய தாவது, "சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டது போன்ற உணர்ச்சி எனக்குத் தோன்றியது.”
கம் காலத்தவர்கள் என்ன கூறுகிருரர்கள் என்பதைப் பார்ப்போம். கட்டுரையாளரும் நூல் வெளியிடுபவரு மாகிய ஈ. வி. லுர்காஸ் என்பவர், "வாசனைத் திரவியங் களின் தீவு அன்று சிலோன். ஆனல் அது சூரிய வெளிச் சத் தீவு' என்று கூறியிருக்கிருர், மேலும் பலர் பாராட்டு ரைகள் வழங்கியுள்ளனர். தன் இயற்கை அழகுக்கு சிலோன் தொடர்ந்து புகழப்பட்டு வருகிறது. சிலோனின் புகழ்பாட எல்லா உயர்வு நவிற்சிச் சொற்களையும் பிர யாணிகள் பயன் படுத்துகிருர்கள்.
சாவதானமாகச் செல்லும் பிரயாணிகளோ அல்லது அக்கறை கொண்ட மாணவர்களோ சிலோனுக்கு விஜயம் செய்யும் போது, அதன் கடைகளையும் அதன் ஆங்கிலம் பேசி ஆங்கில மோஸ்தர் ஆடை உடுத்தும் குடிகளையும்

லையில் குடைந்த புத்தர் சிலை
6) u0
பொலனரு வாவி

Page 17

25
கடந்து, அதன் இறந்த காலத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். கொழும்புவின் பரபரப்புக்கு அப்பால், கிரா மங்களின் அமைதியை அவர்கள் காண வேண்டும். 3500 ஆண்டுகளுக்கு மேலாக புத்தரின் கொள்கைகள் அங்கு நிலைபெற்றுச் செல்வாக்குக் கொண்டுள்ளதைப் பார்க்க வேண்டும். -
வெப்பப் பிரதேசங்களுடன் இணைந்த உல்லாசத்தைச் சிலோன் கிராமங்களில் பார்க்கலாம். ஆனல் சில வெப்ப நாடுகளில் காணப்படுவதைப் போன்ற-தாராளமாக மது வகைகளைக் குடிப்பதாலும், எருதுச் சண்டையாலும், லாப நோக்குக் கால்பந்துப் போட்டிகளாலும், குதிரைப் பந்தயங்களாலும், வர்த்தக விழாக்களாலும், அத்தகைய செயற்கை உணர்ச்சியைத்தூண்டிவிடும் நிகழ்ச்சிகளாலும் ஏற்படும்-உல்லாசம் அன்று, சிலோன் கிராம உல்லாசம்.
பரம்பரை வழக்கங்கள், சிலைபெற்றுள்ள மதம் ஆகியவற்றின் மீது சிலோன் கிராம மக்கள் கொண்டுள்ள விஸ்வாசத்தை மாற்ற ஒரு சீர் கெட்ட சிறு பான்மைக் கோஷ்டி உறுதியாக முயற்சித்த போதிலும், சிலோன் அடிப்படையில் கலங்காமல், ஆத்திரப்படாமல், அவசரப் படாமல் நிற்கிறது. இந்தச் சாந்தியின் சின்னமாகக் கிராமக் கோவில் தன் டகாபாவுடன் விளங்குகிறது. அந்த டகாபா கெலானியாவிலுள்ளதைப் போல பழங்காலக் கம்பீரத்துடனிருக்கலாம் அல்லது அதிகப் பணவசதி யில் லாத கிராமவாசிகளின் எளிய நன்கொடைகளைக் கொண்டு கட்டப்பட்ட சிறிய டகாபாவாக இருக்கலாம்.
அவர்கள் செல்வம் படைத்தில்லாமலும், சமூகத்தின் நாகரிகப் பகுதியினரால் அத்தியாவசியம் என்று கருதப் படும் சொகுசுகளைப் பெற முடியாமலும் இருந்த போதி லும்,அவர்கள் திருப்தியுடன் வாழ்ந்து, அதிகக் கவனிப்புத் தேவையில்லாத நிலத்தில் பழைய முறைப்படி விவசாயம் செய்து வருகிருர்கள்,
2

Page 18
3. தந்தமும் இலவங்கப்பட்டையும்
"அந்தத் தீவில் ஒரு ஊற்றிலிருந்து திமிங்கிலத் திரவ கம் பெருக்கெடுக்கிறது. சூரிய வெப்பத்தால் அது வழிக் தோடி, கடற்கரையில் பரவுகிறது. கடலிலிருந்து ராட்ச தப் பிராணிகள் வந்து அதை விழுங்கிவிட்டு, கடலுக் குள் செல்கின்றன. ஆனல் அவைகளின் வயிறுகளில் அது குடடைவதால் அதை அவை கடலில் கக்குகின் றன. நீர் மட்டத்தின் மீது அது கெட்டியாகிறது. பிறகு அதன் நிறமும் தன்மையும் மாறி, அலைகளால் கடற் கரையில் ஒதுக்கப்படுகிறது. பிரயாணிகளும், வியாபாரி களும் அதை எடுத்துச் சென்று விற்கிருர்கள். கடல் பிராணிகளால் விழுங்கப்படாத திரவம் தரை மீது கெட்டியாகிறது. அதன்மீது சூரிய வெப்பம் படும்போது உருகி, பள்ளத்தாக்கு முழுவதிலும் கஸ்தூரி போன்ற மணம் வீசுகிறது. சூரிய வெப்பம் நீங்கியதும் அது மீண்
டும் உறைகிறது.”
-அரபுக கதைகள
சிலோனில் குன்றுகளும் பள்ளத்தாக்குகளும் சிறைக் திருக்கின்றன. அந்தக் குன்றுகளில் அநேக ஆறுகள் உம் பத்தியாகி, பசுமையான பள்ளத்தாக்குகளின் வழியாக ஒடுகின்றன. சிலோன் பள்ளத்தாக்குகளில் கஸ்தூரி மணத்தை இன்று நாம் முகர முடியாவிட்டாலும், மலர், மூலிகை, புல் வாசனையையும், விதைக்கும் காலத்துக்கு முன் உழப்பட்ட நிலத்தின் மண் த்தையும் அனுபவிக்க லாம். கெல்விதை விதைத்த பிறகு, சகதியில் கடல்போல பசும் நாற்றுகள் தோன்றியதும், நெல் முற்றும் மணம் வீசு கிறது. கெல் முற்றி, அறுவடைக்குத் தயாரானதும் சூரிய வெப்ப்ம் கலந்த வேறு வகையான நறுமணம் வீசும். அறு

27
வடைக் காலத்தில் அறுத்த கெல்லின் வாசனையும், வெயி லில் காயும் தானியத்தின் மணமும், வயலின் மண் மணமும் கலந்து நாடு முழுவதிலும் வீசும். இந்த இயற்கைமணங்கள் சி லே ர னி ன் மலைகளிலிருந்தும், பள்ளத்தாக்குகளி லிருந்தும் தோன்றி, இயற்கை இன்பத்தை ரசிப்பவர் களுக்குக் களிப்பூட்டுகின்றன.
நெல் வயல்களிலிருந்தும், காட்டுக்கு நெருப்பு வைத்து அழித்துப் பண்படுத்தப்பட்ட நிலங்களின் தினை வகைகளி லிருந்தும் வீசும் நுண்மையான வாசனையுடன், பாக்குமரத் தின் விரியும் மலர்களின் திடமான மணமும் வீசுகிறது. கோவில்களில் புத்தர் சிலைகளுக்கு அர்ப்பணிக்கக் கமுகு மலரே விரும்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கிடுல் மரத்திலிருந்து அதன் மொட்டு பற்றுக் கொடிகள் வெடித்துக் கீழாகத் தொங்கும்போது,சிறிது போதையான மணம் வீசுகிறது. கிடுல் பனை மலர் வெடிக்க அனுமதிக் கப்படுவதில்லை. அது வெடிக்கும் தறுவாயில் அதை இறுக்கமாகக் கட்டி தினக்தோறும் சாறு இறக்குகிருர்கள். அந்தச் சாறு வளமானது, ஆரோக்கியமானது. இறக் கியவுடன் குடித்தால் அது மிக ருசியாகவிருக்கும். அதைப் புளிக்கவைத்தால் நுரை பொங்கும் வெண்மையான கள் ளாகும். புளிக்க வைக்காத சாற்றைக் கொண்டு உலகத்தில் மிகச் சிறந்த வெல்லம் தயாரிக்கப்படுகிறது. புளிக்கவைக் காத சாறும், கள்ளும் தென்னம்பாளையிலிருந்தும் இறக்கப் படுகின்றன. புளிக்கவைக்காத சாற்றிலிருந்து வெல்லம் செய்யப்படுகிறது ஆனல் இந்தப்பனே தென்னைகளின் உப யோக அம்சத்தைப்பற்றி 5ான் பேச முற்படவில்லை. அவற்றின் மலர்களின்நுண்ணிய மணமும், அழகும் தேனீக் களை கவர்வதுடன், மலைகளிலும் பன்ளத்தாக்குகளிலும் பரவி, பழைய காலத்திலிருந்து சிலோனுக்குச் "சுவர்க்கம்" என்ற அடைமொழியை அளித்துள்ளன.

Page 19
28
வேறு நாடுகளிலுள்ள மக்களிடம் இந்த எண்ணம் வேரூன்றி இருப்பதால், கப்பல் வழியாக வருபவர்களை அவர்கள் சிலோனுக்கு அப்பால் சில மைல் தூரம் இருக் கும்போது, கப்பல் தளங்களின் மீது இலவங்கப்பட்டை எண்ணெயை ஊற்றி, கப்பல் தலைவர்கள் அன்புடன் ஏமாற்றுகிருர்கள். இங்கு இலவங்கப்பட்டையின் உபயோ கங்களைக் கூறுவதை விடுத்து, அந்தச் செடியின் மென்மை யான அழகையும், செங்குத்தாக இருக்கிற அதன் தண்டை வெட்டிப் பட்டையை நீக்குவதையும், அம்மாதிரிச்செய்வது எவ்வளவு கொடுமையாகத் தோன்றுகிறது? இலையைக் கசக்கும்போது தோன்றும் மணத்தை மட்டுமே விவரிக் கிறேன். இலவங்கப்பட்டை முறையாகத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. "வீட்டு உபயோகத்துக்காக" ஒரு இலவங்கப்பட்டைச் செடிகூட வளர்க்காத வீட்டுத் தோட் டங்கள் இல்லை. செடியை அழிக்காதபடிமட்டையின் ஒரு பகுதியை நீக்கி, புலவுக்கு அல்லது கறிக்குப் பயன் படுத்தலாம். t
ஏற்றுமதிக்காகப் பயன்படும் இலவங்கப்பட்டை முழு வதுமாகத் திறமையுடன் தயாரிக்கப்பட்டது. சிறிய ಕೆar முள்ள இலவங்கப்பட்டைக் குச்சியால் பசும் தண்டை மீண்டும் மீண்டும் தேய்த்துப் பசுமை நீங்கியதும்,நீளத்தில் குச்சியை வெட்டிப் பட்டையைத் தளர்த்தி, பட்டையை உரிக்கவேண்டும். இதுதான் இலவங்கப்பட்டையைத் தயா ரிக்கும் முறை. அது சுலபமாகத் தோன்றுகிறது. ஆனல் திறமையான கைகளால் மட்டுமே அதைச் செய்யமுடியும். உண்மையில், இலவங்கப்பட்டையை உரிக்கும் இந்த மண முள்ள நச்சுக்காப்பான தொழிலில் ஈடுபட ஒரு தனி ஜாதியே இருக்கிறது. இந்த ஒரு குடிசைத் தொழிலில்தான் ஆபத்தில்லை என்று நினைக்கிறேன்.

29
பட்டுப் போன்ற, கூர்மையான முனைகளைக் கொண்ட இலைகளையுடிைய சிட்ரோனல்லா என்ற செடி, தீவு முழுவ திலும் நறுமணத்தைப் பரப்பும் மற்ருெரு செடி. அது புதர் களில் வளர்கிறது. கரும்பச்சை நிறத்துடன் கத்தியைப் போன்ற மீண்ட இலைகளுள்ள மற்ருெரு தாவரம் உண்டு. அதன் வெல்வெட் போன்ற இலைகளிலுள்ள வாசனைப் பொருளின் உபயோகம் சிலோன் மக்களுக்கு மட்டுமே தெரியும். இந்த இலையின் துண்டை அரிசியுடன் அல்லது கறியுடன் சேர்த்துச் சமைத்தால் அல்லது ஊறுகாயுடன் சேர்த்தால் நறுமணத்தையும் ருசியையும் கொடுக்கிறது. சிலோனில் ஏராளமான மரம் செடி கொடிகளின் வாசனை கள் ஒன்ருகக் கலந்து லேசாகப் போதை தரும் சூழ்நிலையை உண்டாக்குகின்றன.
சிலோனின் பழங்களும் பல வகையானவை. அவை ஏராளமாக இருக்கின்றன. இந்தியாவில் இல்லாத பலவகை யான மாம்பழங்கள், பல வகையான வாழைகள் (சில காய் கறிகளாகவும் சில பழங்களாகவும் பயன்படுகின்றன), மங்கூஸ்தன், டுரியன், ரம்பட்டன் போன்ற அபூர்வப் பழங் கள், சிலோனுக்கே விசேஷமான ஒலிவைகள், மேலும் நூறுவகையான பழங்கள்- அவைகள் எல்லாம், எதைத் தெரிக்தெடுப்பது என்று மக்களை விழிக்கச் செய்கின்றன, வருடம் முழுவதிலும் கிடைக்கின்றன.
வேறு எந்த நாட்டிலும் இல்லாத சிலோனின். என்றும் குறையாத- பழவகைகளைப் புகழும் விருப்பத்தில் என் எண்ணத்துக்கு மாருக உபயோக அம்சத்தை வற் புறுத்தும் அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஆகவே இந்தத் தீவில் உள்ள ஏராளமான பூக்கும் மரங்களை மீண்டும் கவனிக்கத் தொடங்குகிறேன்.
சண்பக மரம், காடுகளில் வளர்கிறது. ஆனல் அந்த மரம், இந்தியாவைப் போல இங்கு வீடுகளில் ஏன் வளர்க்

Page 20
30
கப்படுவதில்லை என்பது எனக்குப் புரியவில்லை. சிலோன் காடுகளில் ருக் என்ற மரமும் வளர்கிறது. வருடத்தின் ஒரு பருவத்தில் அதன் கிளைகளில் ருகட்டன் எனப்படும் மலர்கள் கொத்துக் கொத்தாகப் பூக்கின்றன. இந்த மரத் தைத் தாவர சாஸ்திர நிபுணர்கள் பாகுபாடு செய்திருக்க லாம். ஆனல் அதை நான் இந்தியாவில் பார்க்கவில்லை. இரும்புக்கட்டை மரம் யதேச்சையாகவும், கோவில் தோட்டங்களிலும், கிராமத் தோட்டங்களிலும் வளர் கிறது. அதன் மலர் வெண்மையாக, டுேவில் மிகரந்தத் தூள்கள் பிறைந்து மஞ்சளாக, அழகுடன் காணப்படு கிறது. நா மலரின் பருவ காலத்தில்-"நா" என்பது இரும் புக் கட்டை மரத்திற்குச் சிங்களப் பெயர்-அது கோவில் பூவாக உங்கத இடம் பெறுகிறது. பகோடா மரமும், பிராங்கி பன்னி (ஒரு வ்கை மல்லிகை) மரமும், ஒரே குடும் பத்தைச் சேர்ந்தவை. வெல்வெட் இதழ்கள் கொண்ட மலர்களை உடையது பகோடா மரம், புத்தர் கோவில் களில் பூஜை மலராக அதைப் பயன்படுத்துக்கிருர்கள். பிராங்கிபன்னி மலர் சிவப்பும் வெண்சிவப்பும் கொண்டு. உருவத்திலும் மணத்திலும் மற்றதைப் போன்றது. பூஜைக்கு அல்லது வழிபாட்டுக்கு முக்கியமாக ஒதுக்கப் படும் மலர்களை நான் கூறியிருப்பதால், வெள்ளைத் தாமரை யையும், நீலத்தாமரையையும் அவற்றுடன் சேர்த்துக் கொள்கிறேன். நீருள்ள இடத்திலெல்லாம், ஏரியிலும் சதுப்பு நிலத்திலும், தாமரைகள் வளர்ந்து, தாராளமாகக் கிடைக்கின்றன. சிறந்த தாமரைகளைக் கொய்ய வேண்டு மானுல், விசிறி வடிவமுள்ள அகண்ட இலைகளைத் தள்ளிக் கொண்டு படகில் போய்ப் பறிக்க வேண்டும். நீரோரத்தில் நல்ல மலர்கள் கிடைப்பதில்லை.
வேறிடத்திலுள்ள கோடீஸ்வரனின் தோட்டத்தை விடச் சிலோனிலுள்ள விவசாயின் தோட்டம் செழிப்

31.
பானது, ஏனென்ருல் நான் கூறியுள்ள மரங்கள் செடிகள்
எல்லாவற்றிலும் சிறிதளவு அவன் தோட்டத்திலுள்ளது.
மற்றும் அவனுடைய தோட்டத்தில் ஒன்று அல்லது
இரண்டு காஜ"0 மரங்களிருக்கும். அவனுடைய வீட்டின்
முன் முற்றத்தில் ஓரிரண்டு தெம்பிலி தென்னைகளிருக்
கும். தென்னையில் தெம்பிலி என்ற ரகத்தின் காயின்
வெளிப்புறம் பொன் நிறத்திலிருக்கும். அநேக சிலோன்
வீடுகளின் முன்புறத்தில் ஒரு கொத்து தெம்பிலி தேங்
காய்கள் தொங்கும் காட்சியைவிட மகிழ்ச்சிகரமான
காட்சி வேறு இருக்க முடியாது. அன்னசி, பப்பாளி,
கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவையும் இருக்கும். வீட்டுத் தோட்டத்தில் யானைக்காது போன்ற இலைகளை
யுடைய கஹல, ஹபரல ஆகிய தாவரங்களுக்கும் வீட்டுத் தோட்டத்தில் யானைக்காது போன்ற இலைகளையுடைய கஹல, ஹபரல ஆகிய (தாவரங்களு மிருக்கின்றன.
அவற்றின் கிழங்குகள்) அரசனுக்கும் ஏற்ற உண
வளிக்கின்றன. டாபியோகாவும் மனியோகும் உள்
ளன. கிணற்றின் ஒரத்தில் அல்லது கிணற்றின் பொந்து
களில் வளரும் பிரகாசமான நிறமுள்ள கலாடியம் மலர் களைக் கவனிப்பாரில்லை. அதைப் போல கொலகாசியா
முதலிய வியக்கத்தக்க, அளவிலுள்ள தாவர வகைகளுக்கு ஆங்கிலப் பெயரைக் கண்டுபிடிப்பது கஷ்டம். நாணய
உருவமுள்ள இலைகளைச் சிறுவர்களும் சிறுமிகளும் காசு
களாக வைத்து விளையாடுகிறர்கள். மேல் நாடுகளின் கவிதைகளில் புகழ் பெற்றதும் ஆனல் சிலோன் புலவர்
களால் மதிக்கப்படாதது மாகிய மிமோசா கொடி சிறுவர் களே மகிழ்விக்கிறது. மிமோசாவைச் சிறிது அசைத் தாலோ அல்லது தொட்டாலோ அதன் இலைகள் மூடிக்
கொள்வதால், அவசரமாக மூடும் இலைகளில் விரல்களை
வைக்கச் சிறுவர்கள் முயன்று மகிழ்கிருர்கள்.

Page 21
32
கிராமவாசியின் தோட்டத்தில் மஞ் ச ஸ் நிற அலமண்டா மலர்களை ஏராளமாகக் காண்பீர்கள். ஹி"பிஸ்கஸ், கார்டீனியா. ரோஜாப்பூக்களும் எங்கும் காணப் படுகின்றன. இயற்கையில் அவை யதேச்சையாக வளர்ந்து அழகாகக் காட்சியளிக்கின்றன.
அத்தகைய செழிப்பான வர்ண ஜாலங்கள் கொண்ட சூழ் ைேலயைப் பூர்த்தி செய்யப் பறவைகளும், மிருகங் களும் அவசியம், ஆறுகளிலும்,ஒடைகளிலும், ஏரிகளிலும் வாழும் மீன் வகைகளின் பட்டியலை அளிப்பதன் மூலம் என் கவனத்தைத் திருப்ப விரும்பவில்லை. ஆனல் பறவைகளையும் மிருகங்களையும் பற்றி நான் சிறிது கூருமல் இருக்க முடியாது. இந்தியாவிலுள்ள பறவை வகைகளில் அநேகம் சிலோனிலும் இருக்கின்றன. ஆணுல் கழுகு இல்லை. சிலோன் காகம் இந்தியக் காகத்தைவிடப் பளபளப்பானது. ஆனல் இரண்டும் பலமாகக் கரைபவை. சிலோன்மைன வீடுகளில் வளர்க்கப்படுகின்றது. கிளியை விட மைனுவைத்தான் அதிகம் கொஞ்சுகிருர்கள். மைனு வகையைச் சேர்ந்த செலாலிஹினியாவின் மஞ்சள் சிறகுகள், அதற்குப் பெருமையளிக்கின்றன. மைனுவை விட அது நன்முகப் பாடுவதாகவும் கருதப்படுகிறது. காளி தாசனின் மேகதூதத்தைத் தழுவி இயற்றப்பட்ட சிலோன் கவிதை யொன்றில், புலவரின் செய்தியைக் கொண்டு செல்லும் தூதனுகச் செலாலிஹினியா பயன் படுத்தப் பட்டுள்ளது. பழுப்பு நிறமும் குடுமியும் கொண்ட இந்திய புல் புல் பறவையைக் கொண்டை குருல்லா (குடுமியுள்ள பறவை) என்றழைக்கிருர்கள். சிக்சிக் என்று கூவிக் கொண்டு மலர்க்கு மலர் தாவும் சிறிய மலர்க் கொத்திப் பறவை, சிலோனில் சாதாரணமாகக் காணப்படு கிறது. கூ-யில் ("நீ யார்?' என்று கூவும் குயில்) மே ஜ"ன் ஆகிய இரு மாதங்களில் தன், பாட்டை மாற்றிக்

33
கொள்வதாகச் சொல்லப்படுகிறது. பிரகாசமான சிற குள்ள இந்திய பிட்டா. தீவிலும் கண்டத்திலும் சாதா ரணமாகக் காணப்படுகிறது. மதராஸ் புதர் வானம்படி, சிலோனிலும் இருக்கிறது. பெண் குருவி (ஒரியோல்) மாம்புள் எனவும் பெய்ர் பெற்றுள்ளது. விசிறிவால்பாடும் பறவைகளும், தையல் பறவைகளும் உண்டு. 'மாக்பை பறவைகள் அழகான தோற்றமும் பாட்டும் உடையனவாயிருந்த போதிலும், அவைகளைத் துரதிர்ஷ்ட மானவையாகச் சிங்கள மக்கள் கருதுகிருர்கள். அனுராத புரம், புனலுருவை ஆகிய பழங்காலத் தலை நகர்களைச் சுற்றியுள்ள செயற்கை ஏரிகளில் காணப்படும் மீன் கொத்திப் பறவைகள் சிறப்பானவை. மற்றும் காட்டுப் புருக்கள், குருவிகள், வாத்துக்கள், மயில்கள் ஆகியவை களும் அங்குக் காணப்படுகின்றன.
யானைகள் வாழ்வதற்குப் போதுமான காடுகள் சிலோனில் இன்னுமிருக்கின்றன. ஆணுல் அவைகளின் எண்ணிக்கை குறைவதற்கு விசித்திர வேட்டை எண் ணமே காரணம். கெட்டா முறையில் யானைகளைப் பிடிப்ப தன்கொடுமையைச் சிறிது தணிப்பது அவசியமாக இருந்த போதிலும், ஒரு சில யானைகளைப் பிடித்துப் பழக்கி வேலை செய்ய வைப்பது மன்னிப்பிற்குரியது. வேட்டைக்கார னிடம் பலியாகும் இதர மிருகங்களாவன: காட்டு எருடிமகள், மான்கள். சிலோனின் வடக்கு-மத்திய மாகாணங்களில் காட்டுப் பன்றிகள் காணப்படுகின்றன. ஆணுல் அவைகள் குறைந்த எண்ணிக்கையில் தீவின் இதர பாகங்களில் காணப்படுகின்றன. பழக்கப்பட்ட எருமை, கஞ்சை உழவுக்குப் பயன்படுகிறது. இந்தியாவைப் போலப் புஞ்சை நிலங்களில் உழுவதற்கு அதை சிலோன் மக்கள் உபயோகிப்பதில்லை. நெல் விளைச்சலுக் காக நிலங்களைத் தோண்டுவது, இன்னும் "மனித சக்தி

Page 22
4.
99
யால்" நடைபெறுகிறது. சிங்கத்தை அல்லது சிங்க உள்ளம் படைத்தவரைத் தங்களுடைய மூதாதையராகச் சிங்கள மக்கள் கருதியபோதிலும், சிலோனில் சிங்கங்கள் இல்லை. (பழைய காலத்திலிருந்து சிலோனின் தேசியக் கொடியில் சிங்கச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.)
சிலோனின் தெற்குக் கரையை யொட்டி மிருகப் பாதுகாப்பு ஸ்தலம் ஏற்ப்டுத்தப் பட்டுள்ளது.
சாலமன் மன்னனின் கப்பல்களுக்கு மலையாளம் கொடுத்த அளவுக்கு, யானைத் தந்தங்களைச் சிலோன் எப் பொழுதாவது கொடுத்ததா என்பது விவாதத்திற்குரியது. ஆனல் தன் இலவங்கப் பட்டைக்கு ஆசியா மைனர். மத்தியதரைப் பகுதி சந்தைகளில் சிலோன் புகழ் பெற்றி றிருந்தது உண்மை.

4. என் உறவினர் சிலர்
சிறுசுறுப்பான கொழும்புத் துறைமுகத்திலிருந்து சுமார் 80 மைல் தூரத்திலும், டிகால் முனையிலிருந்து 13 மைல் தூரத்திலும், பசுமையான குன்றுகளால் சூழப் பட்ட உரல்ா என்ற பழங்காலக் குக்கிராமம் உள்ளது. சிலோனுக்குக்கூட அது ஒரு அசாதாரணப் பெயர். அநேக அம்சங்களில் உரலாவும் அசாதாரணமானது. அதன் கெல்வயல்களிலும், இலவங்கப் பட்டைத் தோட்டங் களிலும், தென்னைகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும் ஏனைய சிலோன் கிராமங்களின் தன்மையை அது பகிர்ந்து கொள்கிறது.
உரலாவிலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் வசிக்கும் மக்கள்தான் உரலாவின் அசாதாரண அம்சங்களை அறிவார்கள். கால் என்னும் நகரத்திலிருந்து வரும்போது உரலாவை அடைவதற்கு முன்பாக வண்டுரம்பா என்ற கிராமத்தை (உண்மையில் அது ஒரு சிறு நகரம்) கடந்து செல்ல வேண்டும். அந்த இடத்திற்கு நீங்கள் விஜயம் செய்யும் பெருமையை அடைந்தீர்களானுல், கடை வரிசைகள் கொண்ட சுறுசுறுப்பான சிறு இடமாக அது விளங்குவதைக் காண்பீர்கள். இந்த ஜனகாயக நாட்களின் சின்னமாக அது தோன்றுகிறது. தெற்கு மாகாணத்தின் இதர பகுதிகளிலிருந்து வந்த 'குடியேற்றக்காரர்கள்" அங்கு வசிக்கிருர்கள். t
அதற்கு மாருக உரலா கம்பீரமானது. இந்த குண திசயத்தைப் பெரும்பாலான உரலாவினர் கொண்டிருப்பது

Page 23
36
மட்டுமன்றி, நெல்வயல்களிலிருந்துகூட *போஸ்டானியக் காற்று வீசுகிறது. உரலாவைத் தாண்டி யடலமட்டா என்ற கிராமத்துக்குப் போனல், அது இன்னும் தெளி வாகத் தெரியும். போஸ்டன் உருவ்கத்தை ஏற்கனவே உபயோகித்துவிட்டதால், தொடர்ந்து விவரிக்கிறேன். "மேபிளவர்” வம்சத்தை உரலா வைத்திருப்பதைப் பிர யாணி பார்க்க முடியும். நான் ஏற்கனவே கூறியபடி, வாண்டு ரம்பாவில் குடியேற்றக்காரர்களின் படையெடுப்பு நடந்திருக்கிறது. ஆனல் யடலமட்டாவில் சில சிவப் பிந்தியர்கள் (அமெரிக்காவின் பூர்வ குடிகள்) இன்னும் வசிப்பதாக அது கூறிக்கொள்கிறது. யடலமட்டாவினர், சிவப்பிக்தியர்கள் உட்பட, உராலியர்களுடன் கலப்பு மணம் செய்து கொண்டுள்ளனர். ஆனல் வாண்டு ரம்பா மக்களுடன் உறவு வைத்துக்கொள்ளவில்லை.
ஆதியில், உறவினர்களான மூன்று குடும்பங்களுக்கு ஒரு சிங்கள மன்னர் கொடுத்த மான்யமே உரலா கிராமம். இந்த மூன்று குடும்பங்கள் தங்களுடைய வேலையாட்க ளுடன் உரலாவுக்குவந்து குடியேறின.உராலாவில் முதலில் குடியேறிய “யாத்ரீகத் தந்தைகளில், மூன்று குடும்பங் களும், அவைகளுடைய மாளிகைகளும் இன்னும் இருக் கின்றன. அந்தக் குடும்பங்களில் இரண்டு குடும்பங்களுக்கு விளையாத நிலமும், பெயரும், வம்சாவளியும் தவிர வேறு ஒன்றும் இல்லை. அவர்களே, இருபதாவது நூற்ருண்டு நாகரிகம் திடீரென்று பற்றிவிட்டது. . அதனுல்தான் உரலாவில் "சீரழிந்த நிலையில் சீமானும் சீமாட்டியும்
* அமெரிக்காவிலுள்ள போஸ்டன் என்ற நகரில் முதல் முதலாக ஆங்கிலேய யாத்ரீகர்கள் குடியேறினர்கள். அவர்கள் * மேபிளவர்” என்ற கப்பலில் போனர்கள். ஆகவே முதலில் குடியேறிய போஸ்டன்வாசிகள் உயர் ஜாதிக்காரர்களாகக் கருதப்பட்டார்கள். (மொ. கு.)

3?
உலாவி வருவதைக் காண்பீர்கள். ஆனல், உரலாவில் அமைதியும் அவசரப்படாததுமாகிய உணர்ச்சியை அனுப விக்கலாம். உரலாவில் நான் வளர்ந்தபோது, என் கற்பனை யில் இனிஸ்பிரீ ஏரித் தீவுகளுக்குச் சமமாக அது தோன்றி யது. ஆனல் அவைகள் அனைத்தும் இப்பொழுது மறைந்து, விட்டன. முன்பு தேனிக்கள் ரீங்காரம் செய்த சோலை வெளிகளில், இன்று தேனிக்கள் இல்லை.
பல ஆண்டுகளாக அலைந்து திரிந்தும், எனது மூதா தையரின் வீட்டை இழந்தும் உள்ள நான், உராலாவி லுள்ள என் பழைய இல்லத்தைப்பற்றி இன்னும் நினைக் கின்றேன். அகன்றும் ஆழமாகவுமுள்ள ஒடை, ஒரு எல்லை யாக அமைந்திருந்தது. சிறுவனக இருந்தபோது அந்த ஓடையில் சூரியன் கதிர்கள் படும் ஆழமற்ற இடங்களில் குளித்திருக்கிறேன். சில சமயங்களில் ஆழமான இடங் களிலும் கால் வைத்திருக்கிறேன்.
அப்பொழுது வாழ்க்கை நிதானமாக இருந்தது. காலை வேளைகளில் சோம்பலாக இருக்கும்போது "பொழு” என்ற செடியின் விழுதைச் சிறிது வெட்டிக் கடித்து, அதைப் பல்குச்சியாக உபயோகித்தது உண்டு. அது மிக மெது வாகச் செய்யும் வேலை, ஏனென்ருல் அப்பொழுது குதிகால் கள் மீதும், நாற்காலிகள் மீதும் உட்கார்ந்து கொண்டுள்ள வர்களுடன், ஏதோ ஒரு தோட்டத்தின் சட்டைக்கார மேஸ்திரியின் ஆசைநாயகி ஆகிவிட்ட பெண்ணைப் பற்றி யும், இன்னும் பல விஷயங்கள் பற்றியும் வம்பளப்பது உண்டு.
அந்தச் சடங்கு, ஓடையில் முடிவுற்றது. வெளிப் படையான சோம்பேறித்தனத்தில் ஆண்கள் மட்டும் ஈடு பட்டார்கள். நடுப்பகலில் தங்களுடைய பிரபுக்களும் எஜ மானர்களுமாகியவர்களுக்குச் சோறு படைத்த பிறகும், பாத்திரங்களைக் கழுவிய பிறகும் பரஸ்பரம் தலைவாரிக்

Page 24
38
கொள்ளப் பெண்கள் ஒன்று சேர்வது உண்மையே. அது ஓய்வு போலத் தோன்றினலும், அந்த நுணுக்கமான வேலைக்கு அதிகத்திறமை தேவை. ஆண்கள் விரும்பினல் ஒடையில் பாதிநாள் அரட்டையடித்துக் கொண்டிருக்க லாம். ஆனல் பெண்கள் வம்பளப்பது மாலையுணவைத் தயாரித்தல், விறகு சேகரித்தல், சக்கரைவள்ளிக் கிழங் கைத் தோண்டுதல் டோன்ற வேலைகளின் இடையிடையே தான.
அப்பொழுது என் கிராமத்தில் வழுக்கைத் தல்ையர் கள் பலர் இல்லை. ஒரே ஒரு செவிடன்தான் இருந்தான். அவனும் யுடலமட்டாவைச் சேர்ந்தவன், அடிக்கடி எங்கள் கிராமத்திற்கு வருவான். எங்கள் வீட்டில் வரவேற்புக் கிடைத்ததால் அவன் அங்குத் தங்குவதுண்டு. என் தகப் பனர் ஏதாவது விஷமத்தனமான, ஆனல் ஆபாசமில்லாத, சொற்களைக் கூறுவார். அதற்கு அவன், "ஆமாம், என் பயிர்கள் எல்லாம் அழிந்துவிட்டன. மழை பெய்ய வில்லையா? என்றே, அல்லது வேறு ஏதாவது கபடமில் லாமலோ பதில் கூறுவான், நாங்கள் அனைவரும் "கொல்' லென்று சிரிப்போம். அது தீங்கில்லாத தமாஷ். அவனைக் கண்டு நாங்கள் நகைப்பது அவனுக்குத் தெரிந்திருப்பது நிச்சயம். அதனல் அவனும் மகிழ்ந்தான்.
எங்கள் கிராமத்தில் ஒரு குருடன் இருந்தான். எங்க ளுக்கு அவன் தூரத்து உறவு. கிராமத்தில் ஒருவருக்கு மற்றவர் உறவு முறை. அங்கு வண்ணுர் குடும்பமும், குய வர் குடும்பமும், பலி கடனம், பேய் நடனம் ஆகியவை' களுக்குத் தேவைப்படும் கோவில் பறையடிப்பவர்களும், ஆதியில் மூன்று குடும்பங்களுடன் வந்த ஊழியர்களின் சந்ததியாரும் இருந்தார்கள். கிராமத்தின் முக்கிய அங்க மாக அவர்கள் விளங்கினர்கள். அவர்கள் "உறவினர்க

39
ளாக”கருதப்படாவிட்டாலும்,வெளியாட்களாக அவர்கள் எண்ணப்படவில்லை. அவன் பிறவிக் குருடன், அவ்னுக்கு ஒரு வீடும் நிலமும், குடும்பமும், வருமானமும் இருந்தன. தேங்காய் ஓடுகளால் கரண்டிகளைச் செய்வது, அவனுடைய அபிமானப் பொழுதுபோக்கு. அவனுடைய கரண்டிகளை என் தாயார் எப்பொழுதும்வாங்கி வந்தார்.
அங்கு ஒரு முடவனும் இருந்தான். ஆனல் அவனும் யடலமட்டா கிராமத்தைச் சேர்ந்தவன். அவன் பயங்கர மானவன். நான் குழந்தையாக இருந்தபோது, அவன் பெய ரைச் சொல்லி என் தயார் எனக்குப் பூச்சாண்டி காட்டு வார். உணவுக்காகக் குரங்குகளை அவன் கொன்றதுதான் அவனுடைய அபகீர்த்திக்கு முக்கிய காரணம். ஒரு குரங் கைச் சுட்டதும், அது உடனே கீழே விழுவதில்லை என் அறும், தன் காயத்தின்மீது கையைவைத்து, அந்த இரத்தக் கறை படிந்த கையைப் பார்த்து, தன் எதிரியைக் குற்றஞ் சாட்டும் பாவனையில் பார்க்கும் வரை உயிர் பிழைத்திருக் கும் என்றும் எங்களிடம் ஒரு கம்பிக்கை இருந்து வந்தது. அந்தக்குற்றஞ்சாட்டும் பார்வை, குரங்கைக்கொன்றவனைப் பீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. கொண்டுவதைத் தவிர அவன் தோற்றத்தில் வேறு குறையில்லை. வெளுத்த நிறமும், கன்முக அமைந்த முகச்சாயலும் கொண்டிருந் தான். எங்கள் கிராமத்தில் அல்லது யடலமட்டாவில் அவனைப் போல வெளுத்த உடல் வேறு யாருக்குமில்லை.
அந்தக் காலத்தில் என் பாட்டனர் ஒரு சிறந்த வேட் டைக்காரர். ஒரு யானையை அவர் சுட்டுக் கொன்றிருக் கிருர். பல யானைகளை அவர் கொன்றிருப்பதாக மிகைப் படுத்திச் சிலர் கூறியபோதிலும், ஒரு யானை என்று நான் சொல்கிறேன். புத்த மதத்தைச் சேர்ந்த காங்கள் கொல்

Page 25
40
லக்கூடாது. வயதான காலத்தில் பாரிசவாயுவால் அவரு டைய கைகள் கடுங்கியபோது, யானைகளைக் கொன்றதற்கு அது தண்டனை (கர்மா) என்று என் தாய்ார் கருதினர்.
என்னுடைய பந்துக்கள் ஆரோக்கியமுள்ள, பலசாலி களான கூட்டத்தினர், எங்களுக்குக் கண் வைத்தியர் களோ, பல் வைத்தியர்களோ, காது நிபுணர்களோ அல் லது உடலைச்சோதிப்பவர்களோ தேவைப்படவில்லை. எங்க ளிடம் வேலையில்லாத் திண்டாட்டத்தை எந்த மனுேதத் துவ நிபுணரும் கண்டுபிடித்திருக்க முடியாது என்பதைக் கூறுவது அவசியமன்று.
நாங்கள் எங்களுடைய ஓடைகளில் குளித்தோம். எங்களுக்குத் தேவையான குடி தண்ணிரைக் கிணற்றில் எடுத்தோம். உணவுக்குத் தேவையானதை ஒவ்வொரு வரும் பயிரிட்டார்கள், விளைந்ததை உண்டார்கள். அந்தச் சமயத்தில், எடுத்ததற்கெல்லாம் "கால் நகரத்திற்குப் போக ஆரம்பித்தார்கள். அப்பொழுது அவர்கள் கடல் மீன். இறைச்சி, உப்பு, வெங்காயம், மிளகாய் இந்தியாவி லிருந்து இறக்குமதியான வாசனைத் திரவியங்கள் ஆகிய வற்றையும், சிலோன் சாப்பாட்டுக்கு அத்தியாவசியமான மாலத்தீவின் மீன்களையும் வாங்கி வந்தார்கள். ஆனல் என் உறவினர்கள் விரும்பியிருந்தால் சுயதேவையை அவர்கள் பூர்த்தி செய்துகொள்ள முடிந்திருக்கும். என் பந்துக்கள், நெற்றி வியர்வை நிலத்தில் விழப்பாடுபுட்டு வாழ்ந்தார்கள். ஆனல் சிரிக்கவும், கதை சொல்லவும், தேங்க?ய் ஒடு களால் கரண்டிகள் செய்யவும், ஓடைக் கரையில் அமர்ந்து பொழுது போக்கவும் அல்லது வெல்லத் துண்டுகளைக் கொண்டு தேநீர் குடிக்கும்போது வம்பளக்கவும் அவர் களுக்குப் போதிய அவகாசம் இருந்தது.

5. அலுத் அவுருத்தா அல்லது புத்தாண்டு.
(சிங்களப் பஞ்சாங்கத்தில் மாதங்களின் பெயர்கள் கீழ்க்கண்டவாறு காணப்படுகின்றன :
துருது, டிசம்பர்-ஜனவரி : நவம், ஜனவரி-பிப்ர வரி : மெடின், பிப்ரவரி-மார்ச் : பாக், மார்ச்-ஏப்ரல்; வைசாக், ஏப்ரல்-மே: போசன், மே-ஜூன்" எசல, ஜூன்-ஜூலை: கிகினி, ஜூலை-ஆகஸ்டு: பினரா. ஆகஸ்ட்-செப்டம்பர்; வப், செப்டம்பர்-அக்டோபர் : இல், அக்டோபர்-நவம்பர்; உண்டுவஸ், நவம்பர்டிசம்பர்.
சிங்களப் புத்தாண்டு அல்லது அலுத் அவுருத்தா ஒரு விரிவான நிகழ்ச்சி, ஐரோப்பியப் புத்தாண்டை விட அது விரிவாகக் கொண்டாடப் படுகிறது. இந்தியாவின் பல் வேறு இடங்களில் கொண்டாடப்படும் பலபுத்தாண்டுகளை விட உணர்ச்சிகரமானது. -
அந்த நாள் ஏப்ரல் பதினன்கு. தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாளில்தான் சிங்களப் புத்தாண்டும் பிறக் கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை போன்ற சிங்களவரின் மதத் திருவிழா, புத்தர் பிறந்த நாளாகிய வைசாக மாதத் தின் பெளர்ணமியன்று நடைபெறுகிறது. வைசாகத்தில் கோவிலுக்குப் போதல், நோன்பு நோற்றல், பட்டினி யிருத்தல் ஆகியவையுடன் திருவிழாக் கோலமும் காணப் படுகிறது. ஆனல் அலுத் அவுருத்தா கொண்டாட்டத்தின் போதுதான் சிங்கள மக்கள் கட்டுப்பாடு இல்லாமல் தங்க ளுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிருர்கள். அந்தக் கொண்டாட்டம் ஒரு மாத காலத்திற்கு முன்பே ஆரம்ப மாகிவிடுகிறது. கடைகளில் ஏராளமான உப்பிட்ட
8

Page 26
42
இந்திய மீன்களும், உம்பலக்கடா என்றழைக்கப்படும் மாலத் தீவின் மீன்களும் தோன்றி, திருவிழாவின் முதல் முன்னறிவிப்பாக விளங்கும். தங்களுடைய நகர வியா பாரிகளிடமிருந்து கிராமக் கடைகளும், பொட்டிக்கடை களும் சரக்குகளைத் தருவித்து வைத்துக் கொள்ளும் மற்றும், கால் அல்லது அருகிலுள்ள வேறு நகரத்துக்குப் போகிற ஒவ்வொருவரும், விசேஷமாக முடையப்பட்ட தென்னையோலைக் கூடைகளில் உப்புப் போட்ட மீன்களைக் கொண்டுவருவார்கள்.
கெளரவமான இடம் பெறும் உப்புப் போட்ட மீன் களுக்கு அடுத்தபடியாகப்புத்தாடைகள் வரும்-பளபளப் பான நிறமும், பட்டையான கோடுகளும் கொண்ட இந்தி யாவில் தயாரான சராங்குகளும், அவற்றைப்போன்ற கம்பாயா என்ற பெண்கள் உடையும். கம்பாயாஉடை காசுக்குக்காரிகளுக்கு ஏற்றதல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். அந்தக் காலத்தில் அந்த அழகிய உடையைச் சாதாரண கிராமப் பெண்களும், பணிப் பெண்களுமே உடுத்தினர்கள். அவற்றை இளம் பெண்களும், காசுக்குக் காரிகளும் மட்டமாகக் கருதினர்கள், இன்று கம்பாயா வின் உபயோகம் வெகுவாகக் குறைந்து, அதன் இடத்தில் ஜார்ஜெட்டுகளும், வாயில்களும், நைலான்களும் வக் துள்ளன. மேலும், சிலோன் பெண்கள் இந்திய முறை யில் சேலைகளை உடுத்தத் தொடங்கியிருக்கின்றனர். தங்க ளுடைய இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்ட சாதாரணத் துணியைப் போல சேலை வசதியாக இல்லாவிட்டாலும், அது ரிச்சயமாக அழகாக இருக்கிறது.
ஒரு-துண்டு நீளத் துணியாக சராங்கை வாங்கி, அதன் இருபக்கங்களையும், தொட்டி போன்ற உடையாகத் தைக்கிருர்கள். சராங்களும், கம்பாயாக்களும் விவசாயி களுக்குப் பயன்படுபவை. ககர மக்கள், வெப்பத்தைப்

43
பொருட்படுத்தாமல் ட்வீட், பிளானல், விகூஞ ஆகிய (குளிர்ப்பிரதேச) துணிகளைப் பயன்படுத்துகிருரர்கள். விலையுயர்ந்த இந்தியப் புடைவைகளையும், ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட சிப்பர்ன், ஆர்கண்டி, வாயல் முதலிய துணிவகைகளையும் வாங்குகிருரர்கள்.
உப்பிட்ட மீனையும், புத்தாடைகளையும் வாங்கத் திட்டம் போட்டதும், புத்தாண்டு வெகு சமீபத்திலேயே இருக்கிறது என்பதை அறியலாம். இப்பொழுது தையல் காரர்களுக்கு அதிக வேலை. கிராமவாசிகள், ஏழைகள் ஆகியோரின் பெண்கள் தையல் வேலையில் மூழ்கியிருப் பதையும், அவர்களைச் சுற்றிக் கத்தரிக்கோல்கள், நூல் உருண்டைகள், துணித்துண்டுகள் கிடப்பதையும் காண
6ՆՈ ԼՈ,
பெரியவர்களுக்குத்தான் இந்தத் தொல்லைகள். கவலை யற்ற சிறுவர்கள், புத்தாண்டுக் கோலாகலத்தை மகிழும் தறுவாயிலிருப்பார்கள். ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஊஞ்சல்கள் அமைக்கப்படுகின்றன. இதைச் செய்யாவி டில் சிறுவர்களிடமிருந்து பெரியவர்களுக்கு அமைதி கிடைக்காது.
நகரங்களில் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள கயிறு களை ஊஞ்சல்களுக்கு வாங்கலாம். கிராமங்களில் அதற்காகவே கயிறுகள் திரிக்கப்படுகின்றன. கயிறு இவ்வாறு செய்யப்படுகிறது. சிறிய கயிற்றுப் புரிகளை எடுத்துக்கொண்டு, வேண்டிய பருமனுக்குத் திரிக் கிருர்கள். இந்த வேலையைப் பொறுமையாகச் செய்ய இரண்டு பேர்களாவது தேவை. அவர்களின் ஒவ்வொரு சலனத்தையும் சிறுவர்களின் கூட்டம் உன்னிப்பாகக் கவனிக்கிறது. ஏற்கனவே அவர்களுடைய கற்பனை ஊஞ் சலைப் பார்க்கிறது. ஆவலுடன் அதற்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்கிருர்கள்.

Page 27
44
நீளமான கயிற்றுப் புரிகளைத் திரித்து, அவற்றின் முனைகளைச் சேகரித்து, ஒரு கம்பத்தில், பனைமரத்தில் அல்லது பாக்கு மரத்தில் கட்டுகிறர்கள். மற்ற முனைகள் ஒரு கொட்டாங்கச்சியின் துவாரம் வழியாகச் செலுத்தப் பட்டு ஒன்ருகச்சேர்த்துக் கட்டப்படுகின்றன. அந்த முடிச் சுக்கும் கொட்டாங்கச்சிக்கும் இடையிலுள்ள கயிற்றின் ஊடே ஒரு பெரிய சாவி அல்லது ஒரு கிளைத் துண்டு செலுத்தப்படுகிறது. பிறகு அந்தச் சாவி அல்லது கிளைத்துண்டைச் சுற்றி, கயிற்றை முறுக்கிவிட வேண் டும். கயிறு முழுவதும் முறுக்கிக் கொண்ட பிறகு அதை மடக்கி, அரையங்குலம் அரையங்குலமாக முறுக்க வேண்டும்.
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் காணப்படு வதைப் போன்ற, சாதாரண தோட்ட ஊஞ்சலன்று, சிலோன் ஊஞ்சல். அவை வெகு உயரத்தில் கட்டப்படு கின்றன. தரையிலிருந்து 40 அடி, சாதாரண உயரமாகக் கருதப்படுகிறது. வரிசையாக வளரும் பாக்கு மரங்கள், ஊஞ்சலுக்கு ஏற்றவையாக உள்ளன. ஏதோ ஒரு பாக்குமரத்தை வெட்டி, அதன் தலையைச் சீவி, எஞ்சி யுள்ள அடிமரத்தைக் குறுக்குக் கம்பம் (கிராஸ்-பார்) போல இரு பாக்கு மரங்களில் கட்டுகிருர்கள். அந்தக் குறுக்குக் கம்பத்தில் இரு கயிற்று வளையங்கள் தொங்க விடப்படுகின்றன. நீளமான கயிற்றை இரண்டாக வெட்டி, அவைகளை அந்த இரு வளையங்களுடன் இணைக் கிருர்கள். தொங்கும் முனைகளில் கால் வைக்கும் மரப் பலகையைக் கட்டியதும் ஊஞ்சல் பூர்த்தியாகும். சில சமயங்களில் சிறிய ஊஞ்சல்களில் மரப் பலகைகளுக்குப் பதிலாக, ஒரு அடி நீளமுள்ள கமுகு மரப் பாளையின் அடிப்பாகத்தை உபயோகிப்பதுண்டு.

45
கச்சரிக்கும் சிறுவர்களைச் சமாதானப் படுத்துவதற் காகவே முக்கியமாக நமது ஊஞ்சல்கள் கட்டப்படுகின் றன. ஆனல் ஊஞ்சல்கள் அமைக்கப்பட்ட பிறகு, சிறு வர்கள் மட்டு மன்றிப் பெரியவர்களும் ஆண், பெண் உட் பட, அவற்றில் ஆடி மகிழ்கிருரர்கள். ஊஞ்சலாடும் போது விசேஷப் பாட்டுக்களைப் பாடுகிருர்கள். கிராமப் புறங் களில் இந்தப் பாட்டுக்கள் ஒலிக்கின்றன. பாக் மாதம், சிலோனை ஊஞ்சல் சுவர்க்கமாக மாற்றி விடுகிறது.
பழைய காலத்திலிருந்து ஊஞ்சல்கள் மீது சிங்கள மக்கள் அதிகக் கவனம் செலுத்தி வந்திருக்கிருர்கள்" சிலோனில் உபயோகிக்கப்படும் ஊஞ்சல்களின் வகை களைப் போன்றவை உலகில் வேறெங்குமில்லை. அதற்கு உதாரணம் ரோதா ஊஞ்சிலவா அல்லது ராதா ஊஞ்சி லவா என்ற ஊஞ்சல். துரதிர்ஷடவசமாக அதற்கு மவுசு குறைந்து விட்டது. ஆனல் வேல்-ஊஞ்சிலவா என்ற தோட்ட ஊஞ்சலின் முன்னேறிய வகை, புத்தாண்டு விழாவில் மிகப் பிடித்தமான ஊஞ்சல், பலமான மரத்தின் கிளை அல்லது வசதியான பாக்கு மரம், ஊஞ்சல்களைத் தொங்கவிடப் பயன்படுகிறது.
ஒரு பிரபல ஊஞ்சல் பாட்டு அல்லது வரம் கூறுவ தாவது:
சிரிதி சுரன் ஹட ரன் ஊஞ்சில்லா பெவதி நரன் ஹட வெல் ஊஞ்சில்ல்ா பண்டிதி என் பித ரத ஊஞ்சில்லா படித்தி சுரன் ஹட வெந்த கர கொல்ல (தேவர்க் கிருப்பது தங்க ஊஞ்சல் எமக் கிருப்பது கயிற்று ஊஞ்சல் இன்னு மிருப்பது அங்கிய ஊஞ்சல் ஆண்டவனை வணங்கி ஆடுவோம் ஊஞ்சல்.)

Page 28
46
பதினைந்தாவது நூற்ருண்டில் வாழ்த்த சிலோனின் சங்யாசிப் புலவர் பூரீ ரஹ"லா, தன் மீண்ட கவிதையான கவ்வசேகரா அல்லது இசை மகுடத்தில் ஊஞ்சல்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதியதாவது:
கனகன இலிஹி கெலும் வனவன தெவ்லிய உதும் வெனவென ஆபரண திலும் மெனமன தெவ்தேனு கெலும் (காட்டு மங்கையர் ஊஞ்சாலடுவது தெய்வ மங்கையர் போலிருக்கும் அவர்க ளாபரணம் ஒளியிலாடி வானவில் போல் ஒளிவீசும்.) இந்தப் பரபரப்புக் கிடையில்-உப்பிட்ட மீன், புதி தாக அறுவடையான அரிசி, தயிர்ப் பானைகள், வெல்லம், தேன்பாகு, புத்தாடைகள், பெண்கள் ரபணு பாடுவது ஆகிய கோலாகலம்-புத்தாண்டு வேககடை போட்டு வரும்.
(புத்தாண்டு பிறக்கும் தறுவாயில் விவசாயி முதல் பணக்கார முதலாளி ஈருக (வியாபாரம் அல்லது கண்டி ராக்டு வேலை மூலமாகப் பணம் குவித்தவன்) ஒவ்வொரு வீட்டிலும் விருந்து படைப்பார்கள். அடுத்த சாப்பாடும் நள்ளிரவுக்குப் பிறகு நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளும் புத் தாண்டிலிருக்கும். பஞ்சாங்கத்தில் கண்டுள்ள விவரங்களை அனைவரும் பின்பற்றுவார்கள். சமையல் அடுப்பை மூட்டு வது, உண்பது, எண்ணெய் தேய்ப்பது, குளிப்பது, புத் தாடை உடுப்பது ஆகிய செயல்களை நல்ல நேரம் பார்த்துச் செய்வார்கள்.
புத்தாண்டின் முதல் சாப்பாட்டை ஒருவன் தன் வீட் டில் முடித்துவிட்டு, நண்பர்களின் வீடுகளில் விருந்து சாப் பிடப் புறப்படுவான். இதைச் சிலர் ஆவலுடன் எதிர்பார்க் கிருர்கள், ஏனென்ருல் விருந்தாளிக்கு நல்ல சாப்பாடு

47
கிடைப்பதுடன், வெற்றிலையில் ஒரு வெள்ளை நாணயத்தை மடித்து விருந்தாளிக்குக் கொடுப்பதுமுண்டு. புத்திசாலி யான மனிதன் முதல் விருந்தை நாடி, அதிர்ஷ்ட வீட்டை யும், அதன் அதிர்ஷ்ட சொந்தக்காரனையும் தெரிக்தெடுப் பான்: வீடு விடாகப் போகிறவர்கள் சிலர், முதல் விருந்து சாப்பிடுவது அங்குத்தான் என்று சொல்வதுண்டு. ஆனல் புத்தாண்டுத் தினத்தில் எந்தக் கேள்வியையும் கேட்ப தில்லை. எந்தவிதமான சந்தேகமும் கொள்வதில்லை. விருக் தாளிகளுக்கு வீட்டைத் திறந்து வைத்திருப்பார்கள்.
உணவுக்குப் பிறகு, பணம் வைத்து விளையாடு வார்கள், ஆண்கள் சீட்டாட்டமும், பெண்கள் குறை வான பந்தயப் பணம் வைத்து எளிய ஆட்டங்களும் ஆடு வார்கள். ரபணு இசையும் இருக்கும். அது இல்லாத சிலோன் புத்தாண்டு, பை-வாத்தியங்கள் * இல்லாத ஸ்காட்லாந்து விழா போன்றது. இந்த வட்டமான பெரிய கஞ்சிரா வடிவமுள்ள பாறையின் மேல் பக்கம்தான் மூடப்பட்டிருக்கும். மரக் கட்டைகள் மீது அதன் மர வளையம் வைக்கப்பட்டிருக்கும். ரபணுவின் கீழ் ஒரு மண் பாண்டத்தில் வைக்கோல் தட்டுகள் மெதுவாக எரிந்து கொண்டிருக்கும்போது, அதைச் சுற்றிலும் பெண்கள் அமர்ந்து மணிக் கணக்கில் பல ராகங்களை இசைப்பார் கள். ரபணுவின் ஓசை நீண்ட,தூரம் செல்லும். பல ரபணு ஒசைகளின் கலப்பு ஒலி மிக இனிமையாக
இருக்கும்.
* பை-வாத்தியம் என்பது துருத்தியைப் போன்ற இசைக் கருவி. ஸ்காட்லாந்து நாட்டில் அது பிரசித்தமானது. அந்த வாத்
தியமில்லாமல் எந்த விழாவும் ஸ்காட்லாந்தில் நடைபெருது.
(மொ, கு.)

Page 29
48
இவ்வாறு புத்தாண்டின் முதல் நாள் முடிவுறும். அதைத் தொடர்ந்த நாட்களில் விஜயமும் விருந்தோம்ப லும் குறைந்த அளவில் நடைபெறும்.
அத்துடன் சிலோனின் புத்தாண்டு விழா முடிய வில்லை. இன்னும் ஜோசியரை யோசனை கேட்கவேண்டி யிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத் தில் பள்ளிக்கூடம் போகும் பிள்ளைகள் படிப்பைத் தொடங்கவேண்டும் பஞ்சாங்கத்தின் உதவியால் நல்ல வேளையில் விவசாயி விதை விதைக்க வேண்டும். புத்தாண் டின் முதல் குளிப்பும் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கடைசிச் சடங்கையும், நிறைவேற்றிய பிறகு புத்தாண்டைச் சிறப்பாக வரவேற்ற தாகக் கருதப்படும். ஆனல் ஊஞ்சல்கள் அப்படியே இருக் கின்றன. அவைகள்தாம் கடைசியாகப் போகும். அவை களை அகற்றியதும், புத்தாண்டை மக்கள் மறந்துவிடுவார் கள், வைசாக விழாவையும், தீர்த்த யாத்திரையையும், பிரார்த்தனையையும் எதிர்பார்த்து நிற்பார்கள்.

6. வைசாகம்
புத்த சாக்கியமுனி லம்பினியில் பிறந்தார். நேபாளத் திலுள்ள மலையடிவாரத்தில், இந்தியா-நேபாள எல்லையி லிருந்து சில மைல் தூரத்தில் லம்பினி இருக்கிறது. புத்த ரின் சரியான பிறந்தநாள் * குறித்து அறிஞர்கள் கருத்து வேற்றுமை கொண்டுள்ளனர், ஆனல் அவர் வைசாக (வைகாசி)மாதப்பெளர்ணமியன்று பிறந்தார் என்ற உண் மையில் எவ்வித சர்ச்சையுமில்லை.
பிறக்கும்போது சித்தார்த்தன் என்ற பெயர்கொண்டு, பிற்காலத்தில் கெளதம புத்தர் என்று திகழ்ந்த சாக்கிய இளவரசரைப் போல, புத்த நிலையை அடையத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனிதர், உலக சரித்திரம் பூராவி லும் கிடையாது.
சித்தார்த்தர் பிறந்த சமயத்தில், தேவர்கள் மகிழ்ந்த தைப் போல, வேறு எந்த உலக-ஆசான் பிறந்தபோதும் அவர்கள் மகிழ்ந்ததில்லை. அவருடைய பிறப்பையொட்டிய ஒவ்வொரு சிறிய சம்பவமும், முந்தைய கணக்கற்ற அவ தாரங்களில் கூறப்பட்டுத் திட்டமிடப்பட்டுள்ளது. அவரு டைய பெற்ருேர்கள், முந்தைய பிறப்புகளிலும் அவரு டைய பெற்றேர்களாக விருந்தனர். அவருடைய நெருங்
* புத்த சகாப்தம் புத்தர் பிறந்ததிலிருந்து ஆரம்பமாக வில்லை. அவருடைய பிறந்த நாளிலிருந்து ஆரம்பமாகிறது, 1956-ல் நடந்த புத்தர் பரிநிர்வாணத்தின் 2500 ஆணடுவிழா சிலோன், பர்மா, தாய்லாந்து ஆகியவற்றின் தேதிகளின் அடிப் படையில் கொண்டாடப்பட்டது. இவற்றின்படி புத்தர் பிறந்தது கி. மு 833-ல். காலமானது கி. மு. 543-ல். ஆனல் இந்தத் தேதி களைக் குறித்து முழுக் கருத்தொற்றுமை இருந்ததில்லை.

Page 30
50
கிய நண்பர்களும், இருபத்து ஒன்பதாவது வயதில் அரண் மனையை விட்டு வெளியேறியபோது அவர் உபயோகித்த குதிரையும், பழைய பிறப்புகளில் அவருடன் வாழ்க்
ഞഖ.
லம்பினி நிகழ்ச்சியும் தற்செயலானதன்று. பழைய காலங்களில் சிறப்பான சம்பவங்களுடன் அது சம்பந்தப் படும் பேறு பெற்றிருக்கவேண்டும். தன் தகப்பனர், தன் தாயாரின் தகப்பனர் ஆகிய இரு மன்னர்களின் நாடுகளுக் கிடையில் அது ஒரு அழகிய பள்ளத்தாக்காக இருந்தது.
லம்பினியில் சால சண்பக மரங்கள் நிறைந்திருக்தன. அங்கு மலர்கள் கிறைந்திருந்தன. அதில் ஏரியும் இருந்தது. ஏரியில் தாமரைகள் பூத்தன. பள்ளத்தாக்கினூடே ஒரு சிற்ருறு தவழ்ந்தோடியது. இங்குத்தான் ராணி மகாமாயா வுக்குப்பிரசவ வேதனை ஏற்பட்டு, ஒரு சாலமரத்தின் மீது சாய்ந்து,அதன் கிளையொன்றைப்பற்றிக்கொண்டார். அவர் இந்த நிலையில் இருந்தபோதுதான் அந்தத் தெய்வீகக் குழங் தை தன் தாயாரின் வலப்புறத்திலிருந்து அதிசயமாகப் பிறந்தது.
இந்தியா, சிலோன். ஆப்கானிஸ்தானம் முதல் ஜப் பான் வரையிலுமுள்ள ஆசியா முழுவதிலிருக்கும் அநேக கோவில்களில் உள்ள சித்திரங்களில், சிற்பங்களில் லம்பி னியும், புத்தரின் பிறப்பும் சித்தரிக்கப்பட்டுள்ளன. புத்த ரின் முகத்தையும், அங்கங்களையும் கற்பனை செய்து பார்ப் பது பழைய கோட்பாடுகளுக்கு விரோதமானதால், ஆரம்ப கால புத்த சித்திரங்களிலும் சிற்பங்களிலும் புத்தரின் உருவத் தோற்றம் காணப்படுவதில்லை. ஆனல் லம்பினி யும், பிறப்புக் காட்சியும் சித்திரக்காரனுக்கும் சிற்பக் கலை ஞனுக்கும் அத்தியாவசியமான விஷயங்களாகத் தோன் றின. புத்தர் லம்பினியில் பிறந்த நாளாகிய வைசாகத்

51
தினத்தில் அந்தக் காட்சிகள் பெளத்தர்களுக்கு அற்புத மாகத் தோன்றுகின்றன.
கீர்த்திமிக்க அசோக மன்னனே லம்பினியின் நினைவை விலைபெறச் செய்தான். அவனுக்கு அந்த ஆர்வம் இல் லாதுபோயிருக்குமாயின், இன்று அந்த அழகிய பள்ளத் தாக்கின் இடம்கூட யாருக்கும் தெரியாமல் கிடக்கும். அசோகன் ஆட்சியின் இருபதாவது வருஷத்தில் அவனு டைய புகழ்பெற்ற லம்பின் யாத்திரை கடந்தது. இந்த யாத்திரையின் காலம் கி. மு. 250 என்று சரித்திரப்படி ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது.
"எல்லா ஞானங்களும் மதாச்சாரங்களும் பெற் றிருக்கும் மதிப்பிற்குரிய உபகுப்தருடன் அசோகன் கோலாகலமாக லம்பினிக்கு விஜயம் செய்தான். அரச னுடன் நான்கு பட்டாளப் போர் வீரர்கள் சென்ருர் கள். வழிபாட்டுக்குரிய மாலைகளையும், மலர்களையும் வாசனைப் பொருட்களையும் அவன் மறக்கவில்லை. லம்பி னியை அடைந்ததும், உபகுப்தர் தன் வலக்கையை மீட்டி அசோகனிடம் கூறியதாவது, சிறப்புமிக்க மன்ன இங்குத்தான் ததாகதர்பிறந்தார். புத்தரைக் கெளரவிக் கும் முதல் சின்னத்தை இங்குப் பார்ப்பதற்கு அழகாகக் கட்டவேண்டும்.'
அதன்படியே அசோகன் ஒரு சிற்பக் கல்வெட்டை ஏற்படுத்தி, அதில் கீழ்க்கண்ட வாக்கியங்களைப் பொறிக்க வைத்தான். --
i. தேவான-பியேன பியதசின லஜின-விசதிவாச.
பிசிடேன
i. அதன-அகச மஹியிதே ஹித-புத்தே-ஐதே
சாக்கியமுனி-தி
i, சிலா விகடபி-சா கல்பிதா சிலாதபே-சா உசபபிதே

Page 31
ö3
iv. ஹித-பகவம் ஐதேதி லம்பினி காமே உபலிகே கதே V. அதபாக்கியே-சா?
தென் இந்தியாவின் மீது அசோகன் தன் கவனத் தைத் திருப்பினன். (அசோக சாம்ராஜ்யத்தில் கர்னுடகத் தின் சில பகுதிகளும் அடங்கியிருந்தன.) புத்த கொள்கை களைக்கொண்ட கல்வெட்டுகளைத் தென் இந்தியா முழுவதி லும் நிர்மாணித்தான். புத்தரால் பல முறை விஜயம் செய் யப்ப்ட்ட சிலோனிடம் அசாதாரண சமிக்ஞையை அசோ கன் காட்டினன். தன் அரச குடும்பத்தைச் சேர்ந்த மஹிந்தா, சங்கமித்தா ஆகியவர்களை அசோகன் சிலோ னுக்கு அனுப்பி, சிங்கள மக்களிட்ம் புத்தமதக் கொள்கை களைப் பரப்பி, பெளத்தர் நடத்தைக்கு உதாரண புருஷர் களாகச் சிங்கள மக்களிடையே அவர்களை வாழச் செய் தான். தங்கள் வாழ்நாள் முழுவதும் மஹிந்தாவும் சங்க மித்தாவும் சிலோனில் வாழ்ந்து, அங்கே காலமானர்கள்.
அத்தகைய தொடர்புகள் காரணமாக, சிங்கள மக் கள், வைசாகப் புனித மாதத்தில் வைசாகப் பெளர்ண மியை முழு ஈடுபாட்டுடன் கணக்கற்ற கோவில்களில் கொண்டாடுவது அதிசயமன்று. அவர்களுடைய மதப் பற்று வசீகரிக்கத்தக்கதாகவும், உண்மையாகவும் தோன் றுகிறது.
அந்த நாளில் அவர்களைப் பார்க்கும்போது, ஒரு மாதத் திற்கு முன்னல் ஊஞ்சலாடியும், பலமாகப் பாட்டுப் பாடி யும், வயிறு புடைக்க விருந்துண்டும், நகைத்தும், கேலி செய்தும் அயல்நாட்டு ஆடம்பரத் துணியுடுத்தியும், சூதா
* 1896 டிதம்பர் 1-ம் தேதி இதை டாக்டர் ஏ. பியூரர் கண்டுபிடித்தார். ஆனல் நேபாளம் பற்றிய நூலின் ஆசிரியரான லண்டன் என்பவர், அந்த வருடத்தை 1895 என்று தவருகக் கூறி யுள்ளார்.
' مسمیہ

むö
டியும், குடித்தும் கும்மாளம் போட்டவர்களா அவர்கள் என்று வியப்புடன் கேட்கத்தோன்றும்.
வைசாகப் பெளர்ணமி தினத்தில் ஆண்களும், பெண் களும், சிறுவர்களும், சிறுமிகளும் அதிகாலையில் எழுந்து. குளித்து வெள்ளைப் பருத்தியுடை தரித்து, அங்கவஸ்திரம் அணிகிருர்கள். ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் எல்லாரும் வித்தியாசமில்லாமல் அங்கவஸ்தி ரம் அணிகின்றனர். அவர்கள் வெளியே போய் மலர்களைச் சேகரிக்கிருர்கள். சிலர் முதல்நாள் மாலையிலேயே மலர் களைச் சேகரித்து வைத்துக் கொள்வதுண்டு. அவற்றில் பொன்னிறப் பாக்குப் பூக்கள் சில இருப்பது நிச்சயம். அவ் வாறே நா மலர்க்ளும்; அவ்வாறே மணமிக்க செபாலி அல் லது செபாலிகா மலர்களும்; தாமரை மலர்களுமிருக்கும், அவைகளை அகண்ட கூடைகளில் வைப்பார்கள். ஊது பத்திகளும், எண்ணெய் அல்லது மெழுகுவத்திகளும் இருக் கும். உண்பது அல்லது குடிப்பதுபற்றிச் சிந்திக்காமல் அரு கிலுள்ள கோவிலுக்குப் போவார்கள். அங்குள்ள டகோ பாவிலும், போதி மரத்திலும் (போதி மரத்தடியில் புத்தர் ஞானுேதயம் அடைந்ததால், அதைப் புனிதமாகக் கருதி ஒவ்வொரு கோவிலிலும் அதை வளர்ப்பார்கள்), புத்தர் சிலைக்கு முன்னலும் மலர்களைத் தூவி வணங்குவார்கள். அது அமர்ந்துள்ள சிலையாக இருக்கலாம். சயனித்திருக்கும் சிலையாக இருக்கலாம், பதினென்ரும் நூற்ருண்டின் புரா தனச் சிலையாக இருக்கலாம். அல்லது சமீபத்தில் வைக்கப் பட்ட சிலையாக இருக்கலாம். கொண்டுவந்த ஊதுவத்தி களைக் கொளுத்துவார்கள், எரியும் விளக்குகளில் எண் ணெய் ஊற்றுவார்கள், அவற்றில் தாங்கள் கொண்டுவந்த திரிகளைச் சேர்த்து வைப்பார்கள். டகோபா, போதி மரம். புத்தர் சிலை ஆகியவற்றின் முன்னல் சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்து, பிரார்த்தனைச் சொற்களை உச்சரிப் பார்கள். பிரார்த்தனையின் பயனைப் (புண்யம்) பெறுமாறு:

Page 32
54
எல்லா மனிதர்களையும், தேவலோகத்துத் தேவர்களையும் அழைப்பார்கள். மூதாதையர், இறந்துபோன உறவினர் கள் ஆகியோரின் ஆன்மாக்களுக்கு கற்கதி ஏற்படவேண்டு மென்றும் பிரார்த்திப்பார்கள்.
இந்த நிதானமான வழிபாட்டுக்குப் பிறகு-வைசாகப் பெளர்ணமியன்று சிறு கிராமக் கோவிலில் கூட எப் பொழுதும் ஆயிரம் பக்தர்கள் இருப்பார்கள்-விஹாரத் திற்கு முன்னல் அல்லது பெரிதாக இருந்தால் அதற்குள் கூடி நெற்றிகள் தரையில் படும்படி முழந்தாளிடுவார்கள். பிறகு கோவிலின் மூத்த சங்கியாசி ஒருவர், ஆர்ய ஆஸ் தாங்க-மக்காவின் எட்டு அறிவுரைகளை (உங்கத எட்டு அம்ச மார்க்கத்தை) ஒவ்வொன்முகப் பாலி மொழியில் கூறுவார். பிக்குவைத் தொடர்ந்து ஒவ்வொரு அறி வுரையையும் பக்தர்கள் அ னை வ ரும் உச்சரிப் பார்கள். நல்ல பெளத்தரின் அன்ருட அறிவுரைகளுடன் -கொல்லாதே, திருடாதே, முறையற்றுப் புணராதே, பொய் சொல்லாதே, மதுபானம் செய்யாதே-மேலும் மூன்று அறிவுரைகளை இருபத்து நான்கு மணி நேரத் துக்கு அனுசரிப்பதாகச் சத்தியம் செய்வார்கள். அவைக ளாவன: நடுப்பகலுக்குப் பிறகு அல்லது அருணுேதயத் திற்கு முன்னுல் உண்பதில்லை, செளகரியமான மெத்தை, படுக்கை, நாற்காலி ஆகியவற்றை உபயோகிப்பதில்லை; வாசனைப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. கடனத் தைப் பார்ப்பதில்லை, இசையைக் கேட்பதில்லை. 秀”
அந்த அறிவுரைகளைப் பிக்கு கூறியதும், பக்தர்கள் சத்தியப் பிரமாணம் செய்து விட்டு வீடுதிரும்பி, அரிசிமா வால் செய்யப்பட்ட அப்பத்தையும் தேநீரையும் உட்கொள் வார்கள், அல்லது கோவிலிலேயே தங்கி விடுவார்கள் நடுப்பகலில் மாமிசமில்லாத எளிய உணவைச் சாப்பிடு வார்கள். அதற்குப் பிறகு அடுத்த நாள் காலைவரை

55
அவர்கள் பாலுடன் தேநீர் கூடக்குடிக்கக்கூடாது. வெறும் தேநீர், கொத்துமல்லித் தண்ணிர், தற்காலத்தில் தண்ணி ரும் அனுமதிக்கப்படுகின்றன.
அந்த இருபத்துநான்கு மணி நேரத்தைத் தெய்வ சிக் தனையில், அல்லது பிரார்த்தனைகள், மந்திரங்கள் ஒது வதில், அல்லது பிக்குகளின் சொற்பொழிவுகளைக் கேட் பதில், அல்லது மற்றக் கோவில்களுக்குப் போவதில் கழிப் பார்கள்.
பகல் மறைந்து, பூரண சந்திரன் தோன்றியதும் தீவு முழுவதும் மறக்கமுடியாத செளந்தர்யத்துடன் சோபிக் கிறது. அந்த ஓரிரவில் சிலோனில் கீழ்த்தரமானது ஒன்று மிருக்காது. வைசாகப் பெளர்ணமியன்று; சிலோனில் கண்யமற்றவை வெட்கும்படியானவை நடைபெரு, கேவல மானவர்கள் இரார்.
அந்தக் காட்சி உருலா போன்ற சிறு கிராமத்திலிருக் கலாம், அல்லது டலாடா-மலிகவா (புனிதமான புத்தர் பல் உள்ள கோவில்) இருக்கும் மலை நகரமான கண்டியி லிருக்கலாம். அல்லது சங்கமித்தாவால் கொண்டு வரப் பட்ட புத்த கயாவிலுள்ள" ஆதி மரத்தின் கிளையிலிருந்து உண்டாகிய போதி மரத்தால் புனிதமாகிய அனுராத புரத்திலிருக்கலாம் அல்லது புலனுருவையிலிருக்கலாம். அல்லது புத்தரின் புனித அடிச்சுவடு உள்ள உயர்ந்த இடத்திலிருக்கும் பூரீபாதத்திலிருக்கலாம்-போகமுடியாத் சிற்றுாராக இருக்கலாம், அல்லது ஆடம்பரமான மலைவாச ஸ்தலமாக இருக்கலாம் அல்லது புகழ் சூழ்ந்த பழங்காலத் தின் ஆவிகள் உலாவும் புராதன அனுராதபுரமாகவோ புலனுருவையாகவோ இருக்கலாம்-ஆனல் இந்த நாளில் சிலோனிலுள்ள ஒவ்வொரு இடத்திலும், 3500 ஆண்டு களுக்கு முன்பாகப் போதிக்கப்பட்ட பொன்மொழிகளின் பலன மக்களின் முகம் காட்டும்.

Page 33
7. புண்ணியஸ்தலங்களும் திருவிழாக்களும்
இந்தியாவைப் போல சிலோன் மக்களிடமும் சகிப் புத்தன்மை பிரதானமாகக் காணப்படுகிறது. இந்தியாவி லுள்ளதைப் போல தீவிரமான பக்தி அங்கு இல்லாதிருக் கலாம். ஆனல் வருட முழுதும் சிலோன் புண்ணிய ஸ்தலங்கள் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களை வசீகரிக்கின் றன. மசூதி, மாதாகோவில், இந்துமத புத்தமதக் கோவில்கள் ஆகிய வழக்கமான வழிபடுமிடங்களுடன், வருடாந்திரத் திருவிழாக்களை நடத்தும் ஸ்தலங்களு முள்ளன. அவை ஆயிரக் கணக்கான யாத்ரீகர்களை வசீ கரிக்கின்றன. ஆனல் சிலோனில் பக்தி ஆர்வத்திலும், தீர்த்த யாத்திரையிலும் ஒருவித உல்லாச மனப்பான்மை யைக் காணலாம். அது நிச்சயமாக அலட்சிய மனப்பான்மை. யன்று. அந்தத் தீவின் இயற்கை அழகும், சீதோஷ்ண நிலையும் ஒரு காரணம். அதைவிடத் திருப்திகரமான கார ணம், புத்தமதம் மகிழ்ச்சிகரமான மதம் என்பதாகும். துக்கா, அனிச்சா (துக்கம், அகித்யம்) ஆகியவற்றை அது வற்புறுத்துவதால், அது ஒரு அவநம்பிக்கையுள்ள மதம் என்று பொதுவாகக் கருதப்படுவது தவருகும். பல மதங் களைச் சேர்ந்த எல்லா வகுப்பு மக்களிடமும் இந்தக் கருத் துப் பரவியிருக்கிறது. /
இந்த மதச் குழ்கிலையை, சிங்கள மன்னர்களால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு உண்டாக்கப்பட்டு இப்பொழுதும் நீர்ப்பாசனத்துக்குப் பயன்படும் செயற்கை ஏரிகளின் சாந்தமான தோற்றத்துடன் ஒப்பிடலாம். அந்த அகண்ட நிலப்பரப்பில் ஒரு அமைதி இருக்கிறது. மீன் கொத்தியின் பாய்ச்சல் அல்லது நாரைக் கூட்டத் தின் சலனத்தால் மட்டுமே அந்த அமைதி குலைகிறது.

spøgòrto upornogo @ạs gogo gosposoņigos

Page 34
வயலைப் பண்படுத்தல்
From a painting by Oavid paynter
 

57
புத்த கோவில்களும், புண்ணியஸ்தலங்களும், மற்ற வற்றை விட அதிகமானவை என்பது எதிர்பார்க்கக் கூடியதே. ஆனல் கடந்த நானூறு ஆண்டுகளில் அக்கிய மதஸ்தாபனங்களின் 5டவடிக்கை, குறிப்பாகக் கல்வித் துறையில் தீவிரமாக இருந்ததன் விளைவாகச் சிலோனில் கிறிஸ்தவக் கோவில்கள் பல ஏற்பட்டுள்ளன. அவை களுக்கு வெளி நாடுகளிலிருந்தும் யாத்ரீகர்கள் வருகிறர் கள். கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்கள், அநேகமாக மேற்குக் கடற்கரையிலுள்ள மீன்பிடிக்கும் கிராமங்களி லும், வடக்கில் இந்துக்கள் .மிகுந்துள்ள யாழ்ப்பாணத் திலும் காணப்படுகிருர்கள். محی
வடக்கு மாகாணத்தில் மது என்ற ரயில்வே நிலை யத்துக்கு அருகில் "கமது மது சீமாட்டியின் கோவில்’ இருக்கிறது. அது கடுக்காட்டில் அமைந்திருக்கிறது. அங்கு மத்திய காலச் சூழ் நிலை காணப்படுகிறது. அதனல்தான் சிலோன் ரோமன் கத்தோலிக்கர்கள் மட்டுமன்றி இக் துக்கள், பெளத்தர்கள் ஆகியோரிடமும் அந்த ஸ்தலம் பிரபலமாக உள்ளது போலும். அது, ரோமன் கத்தோ விக்கக் கிறிஸ்தவர்களின் முக்கிய புனித ஸ்தலம். ஜூலை மாதத்தில் ஆயிரக் கணக்கான யாத்ரீகர்கள் அங்குச் சென்று, பிரார்த்தனைப் பீடத்தில் வேண்டுதல் செய் வார்கள் அல்லது பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். சிலோனில் நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம் கள் இருக்கிருரர்கள். அவர்கள் எல்லா முஸ்லிம் விழாக் களையும், புட்டினி விரதங்களையும் அனுசரிக்கிருர்கள், சிலோன் முஸ்லிம்களின் மிகப் பிரபலமான பண்டிகை, தியாக விருந்தாகிய பக்ரித். அது வைரம் என்று வழங்கு கிறது. ஒவ்வொரு முக்கியமான 15கரிலும் தலையாய நிலையில் மசூதி நிற்கிறது. சிறிய நகரங்களிலும் மகுதியின் கம்பீர மான அடக்கமான அமைப்பைக் காணத்தவற முடியாது.
4.

Page 35
58
பெரும்பாலும் மசூதிக்குச் சமீபத்திலேயே புத்தர் கோவில் அல்லது இந்து கோவில் இருக்கும்.
சிலோனில் பதினேரு லட்சத்து அறுபதாயிரத்துக்கு மேற்பட்ட இந்துக்களிருக்கின்றனர். தெற்கில் அநேக கோ' வில்களும், கிழக்கில் ஒரு கோவிலும் இருக்கின்றன. ஆனல் முக்கிய இந்து கோவில்கள் வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ளன. யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள நாகத்தீவில் நாகேஸ்வரி அல்லது நாகம்மாவின் கோவிலில் வருடாந்திர திருவிழா நடைபெறும் தென் இந்தியாவிலுள்ள அநேக இந்துக்கள் அந்தத் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். சிலோன் ரெயில்வேயின் வடக்கு முனையான காங் கேசன் துறையிலிருந்து இரண்டு மைல் தூரத்திலுள்ள கீரிமலை என்ற கேஷத்திரத்தை "உலகிலுள்ள மற்றெல்லா இடங்களைவிடப் புனிதமானது” என்று அநேக இந்துக்கள் கருதுகிருர்கள். மோசமான பஞ்ச காலத்தில் கூட வறண்டு போகாத அதிசய அருவிகள் அங்குள்ளன. அந்த அருவிகளின் நீருக்கு, வியாதிகக்ளத் தீர்க்கும் சக்தி உண்டு. ஆடி மாதத்தில் (ஜூலை-ஆகஸ்ட்) அங்கு, கோவில் விக்கிரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று, புனித நீரில் குளிக்க வைப்பார்கள்.
கிழக்குக் கடற்கரையில் உள்ள திரிகோணமலையில் இந்துக்கள் பெளத்தர்கள் ஆகிய இரு சாராருக்கும் புன்ரித மாகிய ஒரு க்ஷேத்திரம் இருக்கிறது. அதற்குச் சுவாமிமலை என்று பெயர். அங்கு ஆயிரங்கால் மண்டபக் கோவில் எனப்பட்ட சிவன் கோவில் இருந்தது என்றும், அதை 1622-ம் ஆண்டில் போர்ச்சுகீசியர்கள் அழித்துவிட்டார் கள் என்றும் கூறப்படுகிறது. அசாதாரணமான இடத்தில் அது அமைந்துள்ளது. ஆனல் சிற்ப சாஸ்திரப்படி கட்ட முடியாது என்று கூறப்படும் இடங்களில் இந்து கோவில் கள் கட்டப்பட்டுள்ளன. பூஜை நாட்களாகிய திங்கள்

59
அல்லது வெள்ளிக்கிழமையன்று அந்தக் கோவிலுக்கு விஜயம் செய்தால், சுவாமிமலை பற்றிய கதைகளையும் சிகழ்ச்சிகளையும் கேட்க முடியும்.
தெற்கில், திஸ்ஸமஹாராமாவுக்குப் பன்னிரண்டு மைல் தூரத்தில் மிகப் பிரசித்தி பெற்ற சுப்பிரமண்ய சுவாமி கோவிலான கதிர்காமக் கோவில் இருக்கிறது.
கதிர்காமத்தில் எவ்வித விக்கிரகமும் இல்லை, வழி பாட்டுக்குரிய சிலை யாதுமில்லை. ஆனல் கோவில் கர்ப்ப கிரகம், கையால் பூ வேலை செய்யப்பட்ட பல திரைகளால் மறைக்கப்பட்டுள்ளது. திரைகளுக்கு அப்பால் பரம்பரை யான கபுரலா அல்லது கோவில் தர்மகர்த்தாதான் போக முடியும். ஒவ்வொரு வருஷமும் ஜூலை இருபத்தாரும் தேதி ஆரம்பமாகி ஆகஸ்டு ஒன்பதாம் தேதி முடிவுறும் திருவிழா வின்போது கூடும் ஆயிரக் கணக்கானவர்களும் ஏனைய பக்தர்களும் மெளனமாகப் பிரார்த்தனை செய்து பணம் அல்லது, தங்கம் அல்லது வெள்ளி அல்லது பித்தளைச் சிலைகளைத் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு காணிக்கையாகச் செலுத்துவார்கள். முகத்தில் விசித்திர ஆனந்தம் பொங்க அவர்கள் வழிபடுவார்கள். சில பக்தர்கள் அக்கினி குண் டத்தில் இறங்கி அச்சமின்றி நடப்பார்கள். அவர்களுக்குத் தீப்புண் ஏற்படுவதில்லை. மற்றும் சிலர் உதடுகளிலும், உடலிலும் கன்னங்களிலும் அலகு குத்திக் கொண்டு வரு வார்கள். வேறு வகைகளிலும் பிரார்த்தனை செலுத்துவார் கள். இந்த அம்சத்தில் கதிர்காமம் தனிச் சிறப்புடையது. சிலோனிலோ அல்லது இந்தியாவிலோ அதைப் போன்ற வேறு இடமில்லை,
கதிர்காமம் பற்றி பலப்பல கதைகள் கூறப்படுகின் றன. கோவில் செல்வங்கள் பற்றிக் கேள்விப்பட்டதும், அதைக்கொள்ளையிடப் போர்ச்சுகீசியர்கள் முடிவு செய்தார் கள். அதன்படி நூற்று ஐம்பது போர்ச்சுகீசியர்களும்.

Page 36
60
இரண்டு ஆயிரம் கூலிப்பட்டாளத்தினரும் கொண்ட படை, கோவிலை நோக்கிப் புறப்பட்டது. அந்தக்கதையை ஜாவோ ரிபேரியோ கூறுவதைப் படியுங்கள்:
"கோவில் இருப்பதாகக் கூறப்படும் இடத்துக்கு அருகில் சென்றதும், உள்ளூர்க்காரன் ஒருவனை அழைத் துப் போனுேம், கோவில் இருக்குமிடம் தெரியுமா என்று அவனை எங்கள் படைத் தலைவர் கேட்டார். தனக்குத் தெரியும் என்றும், அது அருகிலேயே இருக்கிறது என் றும் அவன் பதிலளித்தான். அவன் எங்களுக்கு வழி காட்டியாக இருந்தான். காடுகள் நிறைந்த மலையில் எங் களை அவன் அழைத்துச்சென்ருன். அங்கும் இங்குமாகச் சுற்றினுேம், ஒரே இடத்தை மீண்டும் மீண்டும் கடந்து சென்றேம். மலை மீது அந்தக் கோவில் இருக்கிறது என் பதில் சந்தேகமில்லை. ஆனல் அதற்கு என்ன மாந்திரீக சக்தி இருக்கிறதோ எனக்குத் தெரியாது. ஏனென்ருல் நாங்கள் அழைத்துச் சென்ற ஐந்து வழிகாட்டிகளில் மூன்று பேர்கள் பைத்தியம் பிடித்தவர்களைப் போல நடத்து கொண்டு உளறியதால், எங்களை அவர்கள் ஏமாற்றுவதாக ள்ண்ணி அவர்களைக் கொன்ருேம். மற்ற இரு வழிகாட்டிகளும் அவ்வாறே செய்து, எங்களை ஏமாற்றினர்கள். ஆகவே காங்கள் நினைத்ததைச் சாதிக்க முடியாமல், கதர்கே என்று கூறப்படும் கோவிலைக்கூட பார்க்க முடியாமல் திரும்ப வேண்டியதாயிற்று.”
கந்த புராணத்திலுள்ள கதையை, சுவாமி அசங் கனங்கா என்ற தற்கால எழுத்தாளர் மேற்கோளாகக் குறிப்பிட்டுள்ளார். அது மிக நீளமாக இருப்பதால் அதை இங்கு வெளியிடவில்லை. அவர் கூறியுள்ள கருத்து வருமாறு:-
"சாதாரண மனிதர்களுக்குள்ள குறைபாடுகள் அனைத்தும் புராணக் கடவுள்களிடம் இருந்தன. ஆனல்

61
அவைகளுக்குத் தெய்வீக விளக்கமும், பக்தியுள்ள கார ணங்களும் உண்டு. அசுரர்களுடன் போரிட்டு வென்ற பிறகு, கார்த்திகேயக் கடவுள் (முருகன்) மன்மதன் பாணத்தால் தாக்கப்பட்டார். ஆகவே வள்ளி என்ற மலைநாட்டு மங்கை மீது மோகம் கொண்டு, அவளை நாடிச் சென்ருர், கதிர் காமத்தில்தான் அவளை அவர் சக்தித்து மணம் புரிந்தார். அன்றிலிருந்து இன்று வரை அங்குச் சுப்பிரமண்ய சுவாமி வசிப்பதாகக் கூறப்படு கிறது. கதிர்காமம் என்பது கார்த்திகேய கிராமம் என் பதன் திரிபு.’
புகழ் பெற்ற ஆனந்த குமாரசாமியின் உறவினரான சர். பி. அருணசலம், கதிர் காமக் கடவுளான கந்தன் வழி பாடு பற்றிக் கூறுவதாவது:-
புராதன வழக்கப்படி கி. மு. முதல் நூற்ருண்டில் கதிர்காமக் கோவிலை துதுகெமுனு மன்னன் புதுப்பித்து ஏராளமான நன்கொடைகள் கொடுத்தான். எலாலன் என்ற தமிழ் ம ன் ன னை எதிர்த்து, போரில் அவனைக் கொன்று, அனுராதபுர சிங்காசனத்தை மீட்கக் கடவுள் அருள் புரிந்ததால் நன்றிக் காணிக் கையாகச் சிங்கள மன்னன் அதைச் செய்தான். துதுகெமுனுவின் பெரிய பாட்டனரும், தே வ ஞ ம் பிரிய திஸ்ஸாவின் தம்பியுமாகிய மகாகங்கா என்ற மன்னன், தெற்கு மாகாணத்திலுள்ள மஹாகாமத்தில் தஞ்சம் புகுந்து, அங்கு அரச பரம்பரையைத் தோற்றுவித்தான். அனுராதபுரத்தைத் தமிழ் மன்னர் கள் 78 ஆண்டுகள் இடையில் (சிறிது காலம் நீங்கலாக) ஆண்டுவந்தார்கள். அவர்களில் எலாலன் (கி. மு. 205-161) என்ற மன்னன் மிகச் சிறந்தவன். எலாலனிடமிருந்து காட்டை விடுவிக்கத் துதுகெமுனு விரும்பினன். இதைப்பற்றி அவன் ஓயாமல் சிந்தித்துக்

Page 37
62
கொண்டிருந்த போது, ஓரிரவு கனவில், கதிர்காமக் கட வுளின் அருளைப் பெருமல் தன் தந்தையின் தடையை மீறிப் போரில் இறங்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட் டான். ஆகவே அங்கு அவன் யாத்திரை சென்று, ஆண் டவன் அருளை வேண்டிக் கடும் விரதம் அனுஷ்டித்தான். இவ்வாறு அவன் பிரார்த்தனையிலும் தெய்வீக சிந்தனை யிலும் ஈடுபட்டு இருந்தபோது திடீரென்று அவன் முன், னல் ஒருவர் தோன்றினர். அவருடைய தோற்றத்தைக் கண்டு அரசன் பிரமித்து மூர்ச்சித்து விழுந்தான். அவன் சுய உணர்வு பெற்றதும், தன் முன்னுல் போர்க் கடவுள் சிற்பதைக் கண்டான். அவனுக்குக் கடவுள் போர் ஆயு தங்களேக் கொடுத்து, வெற்றி கிடைக்கும் என்று வாழ்த்தினர். வெற்றிபெற்றதும் கோவிலைப் புதுப்பித்து மான்யம் வழங்குவேன் என்று பிரதிக்ஞை செய்து போருக்குப் புறப்பட்டான். போரில் எலாலனைத் தோற் கடித்து, சிங்காதனத்தை மீட்டான்."
ஆனல் இந்தக்கதை ஆதாரமற்றது என்பதையும், சிங் கள சரித்திரத்தில் அது இல்லை என்பதையும் நான் தெரி விப்பது அவசியம். கெமுனுவை ஒரு தீவிர பெளத்தணுக மஹாவம்சம் கொண்டாடுகிறது. கதையிலுள்ளபடி கட வுள் உதவியை அவன் நாடியிருக்கமாட்டான். மற்றும் அதைச் சிங்கள மனப்பான்மை ஒப்புக்கொள்ளாது.சிலோ னின் சிறந்த பராக்கிரம மன்னன் கெமுனு. சிங்களக் கருத் துப்படி எலாலனை வென்றதில் ஆண்டவன் அருளுக்கு அவன் கடமைப்பட்டிருக்கவில்லை.
கதிர்காமம் புனிதமானதாகவும், இந்துக்களாலும் பெளத்தர்களாலும் வணங்கப்பட்டும் இருப்பதால், அதைப்பற்றி நான் அதிகம் எழுத நேர்ந்துவிட்டது.
ஆடி மாதத்தில் (ஜூலை-ஆகஸ்ட்) ஆயிரக்கணக்கான பக்தர்கள் கதிர்காமத்தில் கூடுவதுடன், அந்த மாதத்

63
தில் சிலோனிலுள்ள எல்லா சிவன் கோவில்களிலும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. கொழும்பு நகரிலேயே மூன்று இந்துக் கோவில்களிருக்கின்றன. ஆடி மாதத்தில் அங்குப் பிரமாண்டமான அளவில் வேல்விழா நடை பெறும். அப்பொழுது கடல் தெருவிலுள்ள சிவன் கோவிலி லிருந்து, வெல்லவத்தாவிலுள்ள சிவன் கோவிலுக்கு ஊர் வலம் செல்லும்.
இந்துக்களும் வணங்கும் புத்த கூேடித்திரம், பூருபாதம். அது சிலோனின் மிகப் பெரிய வருடாந்திர யாத்திரை ஸ்தலம். அதைப் புத்தரின் அடிச்சுவடு என்று பெளத்தர் கள் கொண்டாடுகிருர்கள். அதைச் சிவனெளிபாதம் என்று சிவபக்தர்கள் கருதுகிருர்கள். சுவர்க்கத்திலிருந்து ஆதம் வெளியேற்றப்பட்டதும், அவன் பூரீபாதத்தில் இறங்கிய தாக முஸ்லிம்கள் நம்புகிருர்கள். சிலோனின் ஆங்கில பூகோளப் படங்களில் ஆடம்ஸ்பீக் (ஆதம்முனை) என்று எழுதப்பட்டுள்ள சிலோனின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றின்மீது அது இருக்கிறது. யாத்திரைக் காலத்தில் அந்த மலைமீது ஏறிச் சென்ருல் பக்தர்களுக்குப் புண்ணியம் கிடைக்கும். ノ d
கண்டியிலுள்ள டலாடா மலிகவா (புனிதப் பல் மாளிகை) பெளத்தர்களுக்கு மிகப் புனிதமான இடம்" ஒன்றுக்குள் ஒன்ருகப் பல பேழைகளுக்குள் அந்தப் புனி தப் பல் வைக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு தடவை பேழையை ஊர்வலமாக எடுத்துச் சென்றபோதிலும், அதன் தரிசனத்துக்காகப் பெளத்தர்கள் ஆவலுடன் காத் திருக்தபோதிலும்,புனிதப் பல்லைச்சாதாரணமாகத் திறந்து காட்டமாட்டார்கள். புனிதப் பல்லை, விஜயம்செய்யும் மன்னர்களுக்கும், சிலோன் கவர்னர்களுக்கும், ஏனைய முக் கிய மனிதர்களுக்கும் கோவில் நிர்வாகிகள் திறந்து காட்டி யிருக்கிருரர்கள். ஆனல் மும்முறைப் புனிதமடைந்த புத்த

Page 38
64
ரின் பல் குடிகொண்டுள்ள கோவிலில் வழிபடுவதுடன் சாதாரண பெளத்தன் திருப்தியடைய வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள கூேடித்திரங்களும், அனுராத புரத்திலும் பொலனருவாவிலும் உள்ள டகோபாக்களும் விஹாரங்களுமே சிலோனின் முக்கிய யாத்திரை ஸ்தலங் கள். அசோகனின் அரச குடும்பத்தைச் சேர்ந்த சங்கமித் தையால் கொண்டுவரப்பட்டு கடப்பட்ட அனுராதபுரத்தி லுள்ள 2500 வருஷ போதிமரம், பெளத்தர்களுக்கு மிகப் புனிதமானது. இன்னும் பல, பழையனவும் மத்தியகாலத் தனவும் (ஆனல் அவ்வளவு புராதனமில்லாதவை) இருக் கின்றன. ஆனல் மனித வர்க்கத்தின் ஆன்மீக உயர்வுக்கு அத்யாவசியமாகிய பக்தி மனப்பான்மையை அவை அனைத் தும் நிலைநிறுத்துகின்றன. நான் ஏற்கனவே கூறியபடி, யாத்திரை நாட்களில் சிலோன் உருமாறுகிறது. வைசாக், எசீலா, போசன் ஆகிய மாதங்களின் பெளர்ணமி நாட்க ளுடன் அவை ஒன்றுபடுகின்றன. இந்தப் பெளர்ணமி நாட் களில் சிங்கள மன்னர்களின் காலத்தில் சிலோன் எவ் வாறு இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்ப் பது எளிது. சிங்கள மன்னர்கள் தீவிர பெளத்தர்களாக வும், மதவாதிகளாக மட்டுமின்றி, புனித சாஸ்திரங்கள் எழுத்துக்கள் ஆகியவற்றின் பாதுகாவலர்களாகவுமிருந்த பிக்குகளைப் போற்றி ஆதரிப்பவர்களாகவும் இருந்தார்கள்.

8. சிலோன் கலாச்சாரம்
பழங்கால அரசபரம்பரைகளின் தலைநகரங்களுடன் ஒப்பிடும் அளவுக்குச் சிலோனின் இரு புராதனத் தலைநகர் களான அனுராதபுரம், பொலனுருவை ஆகியவற்றின் புக ழும் வனப்புமிருந்தன. டரயஸ், செர்சஸ் ஆகிய அரசர் களின் சூசாநகரம், பாபிலான், லக்சார், இந்தோ சீனுவி லுள்ள ஆங்கோர், சிந்துப் பள்ளத்தாக்கிலுள்ள மஹெஞ் சதாரோ-இந்த நகரங்களில் யாதும், சிலோனின் இரு புராதனத் தலைநகரங்களின் சிறப்பை விஞ்சியிருக்க முடி யாது. அவைகள் ச் சம அளவுக்குச் சிறப்பாகஇருந்திருக்க லாம். அவைகள் இன்று பாழடைந்து கிடக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் அவைகள் பாழடைந்த நகரங் கள் என்று அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆகவே அவை, தொல் பொருள் நிபுணர்களிடம் விடப்பட்டுள்ளன. ஆனல் இந்த இரு தலைநகரங்களின் கம்பீரத்தைக் கண்டு பிரமிப் படைவதற்குப் பூமியைத் தோண்டிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. W
சிலோனுக்கு விஜயன் வந்து நூறு ஆண்டுகள் சென்ற பிறகு, அவனுடைய சந்ததியாரால் அனுராத புரம் தோற்றுவிக்கப்பட்டது. அனுராதபுரத்தை உண் டாக்குவதில் முழுக் கெளரவத்தை விஜயனுக்கும், அவன் சந்ததியாருக்குமே சிங்கள சரித்திரம் அளிக்கிறது. அவற் றில் விஜயன் வென்ற பூர்வ குடிகளுக்கும் பங்கு உண்டு என்பதை அந்தச் சரித்திரம் மறுக்கிறது. ஆனல். மஹன் சதாரோவின் ஆதாரத்தைக் காணும்போது, சிலோனி லிருந்த திராவிட கலாச்சாரத்தின் உரிமைகளைப் புறக் கணிக்கக் கூடாது. கி. மு. ஆரும் நூற்ருண்டில் கலாச்

Page 39
66
சாரத்தின் உச்ச நிலையில் இந்தியா இந்ேதது என்பது உண்மையே. ஆகவே விஜயனும், அவனுடைய சபையின ரும் மணப் பெண்களுக்காக வங்கத்துக்கும், கலிங்கத்துக் கும், மதுரைக்கும், தஞ்சாவூருக்கும் தூதர்களை அனுப்பிய போது, அறிஞர்களையும், தொழில் நிபுணர்களையும் வர வழைத்தனர். அப்பொழுது அழகியைப் போல அறிஞனும் அவசியமாக இருந்தான்.
ஆனல் புதிய இடத்திலிருந்த கருணை, அவ்விருவருக் கும் அதிகம் பரிவு காட்டியது. புத்தருடைய மதமும். அந்த மதத்தைப் பிரதிபலித்த நகரங்களும்,கோவில்களும், சிலோனில் சிறப்பாகச் செழித்தன. உலகத்திலுள்ள மிகக் கவர்ச்சிகரமான சரித்திரங்களில் ஒன்ருக விளங்கும் மகா வம்சம் (சிலோனின் சிறப்புள்ள அரச பரம்பரையின் வர லாறு) சிலோனுக்கு விஜயன் வந்த சமயத்தையும், கி. மு. 543-ல் புத்தபகவான் காலமான சமயத்தையும் ஒன்று படுத்தியது. அது சரியானதாக இல்லாவிட்டாலும், அந்தக் கவிதை உரிமையைக் கண்டு வியக்கவேண்டும்.
கி. மு. ஐக்தாம் நூற்ருண்டுக்குள், சிலோன் ஒரு செழிப்பான காடாக விளங்கியது. அது இந்தியாவுடன் முறையான தொடர்பு கொண்டிருந்தது. இரண்டு நூற் குண்டுகளுக்குப் பிறகு அசோகன் சகோதரனும், சகோ தரியுமான மஹிந்தாவும், சங்க மித்தாவும், புத்தரின் அறி வுரைகளுடன் சிலோனுக்கு வந்து, தேவனும்பிய திஸ்ஸா என்ற மன்னனைப் புத்த மதத்துக்கு மாற்றினர்கள். மன்ன னேத் தொடர்ந்து மக்களும் புதிய மதத்தைத் தழுவி ஞர்கள். அந்த நேரத்திலிருந்து சிலோனின் முன்னேற் றத்துக்கு, கலாச்சாரத்திலும் பொருளியலிலும், புதிய தூண்டுகோல் தோன்றியது. சிற்பக்கலையும், பொதுவாக எல்லாக் கலைகளும், தேசியத் திட்டத்தின் அடிப்படையில் விவசாயமும் தழைத்தோங்கின.

6?
ஏற்கனவே எழுத்தறிவு இருந்தது. அசோகனின் உதாரணத்தைப் பின்பற்றுவதில், காலம் கடத்தாமல், தேவனும்பிய திஸ்ஸா ஈடுபட்டான். தீவு எங்கிலும் கல்வெட்டுகளை எழுப்பி, பெளத்த கோட்பாடுகளை அவற்றில் பொறிக்கச் செய்தான். பிரமாண்டமான நீர்த் தேக்கங்கள், ' கோவில்கள், அரண்மனைகள் ஆகியவற் றைக் காணும் போது, கலைஞர்கள், அறிஞர்கள், தொழில் நிபுணர்கள், சிற்பக் கலைஞர்கள், புலவர்கள், நிர்வாகிகள், பொது மக்கள் ஆகியோர் ஆர்வத்துடன் மாபெரும் செயல் களில் ஈடுபட்டிருந்த காலமாக அது இருந்திருக்கவேண்டும் எனத் தெரியவருகிறது. அந்த நடவடிக்கைகளை இந்தி யாவிலிருந்து வந்த "நிபுணர்கள்” மேற்பார்வையிட் டார்கள். ஆனல் இலங்கையிடமிருந்து புதிய கருத்துக்களை அறிந்து கொள்ள மறுக்கும் அகம்பாவம் அவர்களிட மில்லை. உதாரணமாக, கி. மு. 330-ல் சாஞ்சியில் உண் டாக்கப்பட்ட மூன்று சிறகுள்ள சிங்கம், சிங்கள தேசியக் கொடியின் பிரதி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் களால் கருதப்படுகிறது.
சிறப்பும், உயர்நாகரிகமும் ஏற்படக் காரணமான சுபிட்சம், விவசாயத்தால்தான் உண்டாயிற்று. ஆகவே விவசாயத்துக்கும், நீர்ப்பாசனத்துக்கும் மன்னரும் மந்திரி களும் முதல் கவனத்தை அளித்தார்கள். சிலோன் இன்னும் ஒரு விவசாய நாடாக இருக்கிறது. ஆனல் அதன் பெரு மையின் உச்ச காலத்தில், கிழக்கின் தான்யக் களஞ்சியம் என்று அது அழைக்கப்பட்டது. சிலோன் தன் உபரி அரிசியை இந்தியாவுக்கும், இக்தோனேஷியாவுக்கும், கம் போடியாவுக்கும், தாய்லாந்துக்கும் ஏற்றுமதி செய்த தாகப் பழைய காலத்தினர் பெருமை யடித்துக் கொண் டதை ஒருவர் கம்பாவிட்டாலும், கிழக்கின் தான்யக் களஞ்சியம் என்ற அடை மொழியை அவர் நம்பமுடியும். சிங்கள மன்னர்களால் வெட்டப்பட்ட மாபெரும்

Page 40
68
செயற்கை நீர்த்தேக்கங்களைக் காணும் போது, தென்னை பாக்கு மரங்களால் குழப்பட்ட பசுமையான நெல்வயல், களுள்ள ஒரு பிரமாண்டமான நிலப்பரப்பாக அதை கினைத்துப் பார்க்க இயலும்.
மன்னன் தானே உழுது, உழவை ஆரம்பித்து வைத் தான். தன்னை விவசாயி என்று கூறவதை மிகச் சிறந்த பாராட்டுரையாகச் சிங்களன் கருதினுன். அதிலிருந்து அந்தப் பெரிய நீர்த்தேக்கங்களைச் சிங்கள மன்னர்கள் வெட்டிப் பராமரித்து வந்ததன் காரணம் விளங்கும். கி.மு. கான்காம் நூற்ருண்டில் அனுராதபுரத்தை உண்டாக் கும் போது, அதே சமயத்தில் அங்கிருந்து ஐம்பத்து கான்கு மைல் தூரத்தில் கல வேவ (வேவ என்ருல் ஏரி ள்ன்று பொருள்) என்ற நீர்த்தேக்கம் உண்டாக்கப் பட்டது. அது நீர்ப்பாசனத்திற்கும் நகரத்திற்கு நீரளிக் கவும் பயன் பட்டது. இன்னும் உபயோகத்திலிருக்கிற அந்த நீர்த் தேக்கத்தின் பரப்பு ஆருயிரம் ஏக்கர்கள் அதன் அணைக்கட்டின் நீளம் ஐந்தரை மைல்கள், உயரம். ஐம்பது அடிகள். இன்று கார்களே ஒட்டக் கூடியவாறு அது அகலமாகவும், அபாயமில்லாமலும் இருக்கிறது.
^ சிறிது காலத்திற்குப் பிறகு, ஒரு இரட்டை நீர்த் தேக்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பெயர் பலாலு வேவ. அந்த இரு நீர்த் தேக்கங்களும், ஆயிரத்து நூறு கோடி காலன் நீரைக் கொள்ளும் இடவசதியுடையன. யோத யலா அல்லது ராட்சதக் கால்வாய் என்று இன்றும் வழங்கும் கால்வாய் வழியாகத் தலை நகருக்கு ர்ே கொண்டு வரப் பட்டது. பெத்லஹெமிலிருந்து ஜெரூசலத்துக்குத் தண்ணீர் கீொண்டுவரப்பைலேட் கால்வாய் வெட்டியது அதற்கு நானூறு வருடங்களுக்குப் பிறகு கடந்தது. அப் பொழுது அதையே ஒரு பெரிய சாதனையாகக் கருதினர் கள் என்பது குறிப்பிடத் தக்கது.

69
இன்றைய நிலைமை எவ்வளவு வேறுபட்டு இருக் கிறது இன்று சுமார் 8 லட்சம் ஏக்கர் நிலத்தில்தான் கெல் பயிராகிறது. சிலோனுக்குத் தேவையான உணவில் சுமார் பாதியளவு அரிசி இறக்குமதி மூலம் பூர்த்தி செய் யப்படுகிறது. 1934-1935-ல் ஏற்பட்ட மலேரியா தொத்து வியாதியால் 70 ஆயிரம் பேர்கள் செத்த பிறகு தான், அவர்களுடைய சாவுக்குப் போஷாக்குக் குறைவே காரணம் என்பதை அரசாங்கம் உணர்ந்தது. இன்னும் நல்ல நிலையிலுள்ள அந்தப் புராதன நீர்த் தேக்கங்களே சுபிட்சத்துக்கும் சுயதேவைப் பூர்த்திக்கும் திறவுகோல் என்பதும் உணரப்பட்டது. s
சிறிது நேரம் பழங்காலத்தைப் பற்றி மீண்டும் சிந்திப் போம்.
கி. மு. இரண்டாவது நூற்ருண்டுக்குள் இலங்கை அடைந்த வனப்பு, அதன்மீது தென் இந்திய மன்னர்கள் படையெடுக்கும் ஆசையைத் தூண்டியது. ஆனல் கான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள துதுகெமுனு, வெளிநாட்டுப் படையெடுப்பை முறியடித்த போது, தன் வெற்றியைக் கொண்டாடப் பெரிய திருவிழா கடத்தவில்லை. ஆனல் அவன் டகோபாக்களைக் கட்டி, அவற்றில் புத்தரின் புனிதச் சின்னங்களை வைத்தான். கெமுனுவால் கட்டப் பட்ட பிரசித்தி பெற்ற டகோபாக்களில் ஒன்று, அபய கிரி (அச்சமற்ற இல்லம்), அந்த டகோபா, செயின்ட் பால்ஸ் கெதீட்ரல* விட ஐம்பதடி அதிக உயரமுள்ளது.
அதை சர் எமர்சன் டென்னன்ட் என்ற முன்னுள் சிலோன் அதிகாரி கீழ்க்கண்டவாறு விவரித்துள்ளார்:-
* செயின்ட் பால்ஸ் கெகீட்ரல் என்ற பிரசித்தி பெற்ற கிறிஸ்தவர் கோவில் லண்டன் மாநகரிலுள்ளது. (மொ. கு.)

Page 41
70
"இந்த மேட்டிலுள்ள கெட்டியான செங்கல் கட் டிடம் பிரமாண்டமானது. அதன் விட்டத்தின் அளவு முன்னூற்று ஐம்பது, அடி. அதன் உயரம் (பீடமும் கோபுரமும் உட்பட) இருநூற்று நாற்பத்து ஒன்பது அடி. ஆகவே அரை வட்ட வடிவமுள்ள கோபுரத்தின் செங்கல் கட்டிடமும்,எழுநூற்று இருபது அடி சதுரமும் பதினைந்தடி உயரமும் உள்ள கல் தளமும் 2 கோடி கன அடிக்கும் அதிகமாக இருக்கின்றன. வேலையை சுலபமாக்கும் தற்காலச் சாதனங்களை உபயோகித்த போதிலும், அத்தகைய கட்டடத்தைத் தற்போ துகட்டு வதற்கு 500 கொத்தர்கள் ஆறு முதல் ஏழு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும். அதன் செலவு குறைந்த பட்சம் 10 லட்சம் ஸ்டர்லிங் (1 ஸ்டர்லிங் = சுமார் 183 ரூ) ஆகும். அதன் பொருள்களைக் கொண்டு, ஒவ் வொன்றுக்கும் இருபது அடி முகப்புள்ள எட்டாயிரம் வீடுகளைக்கட்டலாம். அவை, அரை மைல் நீளமுள்ள முப்பது தெருக்களை ஏற்படுத்தும். இப்ஸ்விச் அல்லது காவென்டிரி அளவுள்ள நகரை அமைக்க அவை போது மானவை, அல்லது லண்டனிலிருந்து எடின் பரோவுக்கு அவற்றைக் கொண்டு ஒரு அடி கனமும் பத்தடி உயர மும் உள்ள சுவரை எழுப்பலாம். அத்தகையவை அனு ராத புரத்தின் டகோபாக்கள். அந்தப் பிரமாண்டமான கட்டடங்களைக் கட்டுவதில் ஏற்பட்ட விரயமும், உட லுழைப்பைத் தவருகப் பயன் படுத்தியதும், எகிப்து நாட்டுக் கோபுரங்களைக் (பிரமிட்) கட்டுவதில் கூடக் காணப்பட வில்லை." N
அந்தக் கடைசி வாக்கியத்தை நீக்காமல் நான் வெளி யிட்டுள்ளதன் காரணம், சர் எமர்சன் டென்னன்ட் எவ் வாறு தவருகத் தீர்ப்புக்கூறியிருக்கிருர் என்பதைக்காட்டு வதற்காகவே. முதலாவ்தாக, அந்தப் பிரமாண்டமான கோவில்களை எழுப்புவதில் எந்த அடிமைத் தொழிலாளி

?i
யும் ஈடுபடவில்லை. அவைகளைப் புத்தரின் நினைவுக்காகத் தங்களுடைய அபார நன்றியறிதலைத் தெரிவிக்கும் பொருட்டு மன்னரும் மக்களும், பக்தி கலந்த உற்சாகப் பெருக்கினல் கட்டினர்கள். காடுகளாலும், தனிமையாலும் குழப்பட்டுள்ள புத்தர் சிலைகளையும், பாதி பாழடைந்து கிடக்கும் கோவில்களையும், சிற்பக் கம்பங்களையும் கானும் போது, அவை அடிமைகளின் உழைப்பால் அவர்களுடைய துயரத்தையும் சாபத்தையும் கொண்டு எழுப்பப்பட்ட பிரமிடுகள் போன்றவை அன்று என்பதை உணரலாம். மற்றும் கோவில்களும் டகோபாக்களும், நகரத் தேவை , களைப் புறக்கணித்துக் கட்டப்பட வில்லை. அகலமான தெருக்கள், பூங்காக்கள், ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங் கள்-யாதும் கைவிடப்பட வில்லை. அவைகளைக் கட்டாது போயிருந்தால் அந்தப் புராதனக் கலாச்சாரத்தின் இந்த அடையாளம்கூட நமக்குக் கிடைத்திருக்காது. கலைப் பொருட் காட்சியில் வைப்பதற்காக ஏராளமான பணம் கொடுத்துக் கலைப் பொருள்களை வாங்குவதில் நாகரிக மணி தர்கள் நிச்சயமாகக் குறை கூறுவதில்லை. ஆகவே சிங்கள மக்களின் இந்தச் சித்திர,சிற்ப,கலைப்பொருட்களை நாகரிக மனிதன் எவ்வாறு குறைகூற முடியும்? டகோபாக்கள், உழைப்பின் விரயம் என்ருகு மானல், அவ்வாறே ஐரோப் பாவின் மாதா கோவில்களையும், மைகேல் ஏஞ்சலோவின் சித்திரங்களையும் கருத வேண்டும். அவைகள் எழுதப் பட்டதற்காகவும், உறுதியாகக் கட்டப்பட்டதற்காகவும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவைகள் பாழ டைந்து கிடந்த போதிலும், இன்று சிலேர்ன் மக்களுக்கு அவைதான் ஊக்கமளிக்கக் கூடியவை.
சிற்பக் கலையும், கட்டடக்கலையும் போதுமானவை யன்று. ஒரு தேசத்தின்கீர்த்திக்குப்புலவர்களும், சரித்திரக் காரர்களும் நூல்களும் தேவை. இந்த அம்சத்தில் தன்

Page 42
?3
பழங்காலப் புலவர்களுக்கும் சரித்திரக்காரர்களுக்கும் சிலோன் கடமைப்பட்டிருக்கிறது.
கி. மு, 81-ம் ஆண்டில் பெளத்தபிக்குகள் ஒன்றுகூடி எழுதிய பெளத்த வேதநூல்தான் சிலோனின் கணிசமான முதல் இலக்கியம். இன்றும் புத்த மதத்தின் இல்லம் சிலோன். அஜந்தா மலைக் கோவில்கள், கர்லா, பாக், சாஞ்சி, மற்றும் அழிவையும் அசிரத்தையையும் எதிர்த்து நிற்கும் கணக்கற்ற புத்த சின்னங்களையும் தவிர இப் பொழுதி இந்தியாவில் புத்த மதம் அநேகமாக, அயல் விஷயமாகத் தோன்றுகிறது.
சிங்களக் கவிஞர்கள் எடுத்தாண்ட விஷயங்கள், புத்தமதம் சம்பந்தப்பட்டதாக இருந்தன. பொதுவாகக் கவிதை இயற்றும் விருப்பம், பெளத்த நூல்களிலிருந்து தோன்றுகிறது. சிலோனின் பழைய காலத்துச் சிறந்த புலவர்கள் அனைவரும் அநேகமாகப் பிக்குகளாக இருக் தார்கள். மகாவம்சத்தின் ஆசிரியர், அரச பரம்பரையைச் சேர்ந்த ஒரு பிக்கு.
இந்தப் புராதனக் கோவில்களில் காணப்படும் சித்தி ரங்கள் மீது கமது கவனத்தைச் செலுத்துவோம். கலையில் சிறந்ததை மதம் உண்டாக்குகிறது என்ற கூற்று இந்த இடத்திலும் உண்மையாக இருக்கிறது. புத்தரின் கட்ட ளைப்படி புத்த சங்கியாசிகள் உலகத்திலிருந்து விலகி, மலை களில் தங்களுடைய மடங்களை அமைத்துக்கொண்ட போதிலும், அழகை விரும்பும் மனித ஆசைக்குப் பணிக் தார்கள். பாறைகளைக் குடைந்து சிற்பங்களையும், பாறை" களின் சரிவான பக்கங்களில் சித்திரங்களையும் ஏற்படுத்தி ஞர்கள். ரோமாபுரியிலுள்ள சிஸ்டைன் கோவிலின் கூரை மீது சித்திரம் வரைந்ததைவிட ஆயிரம் பங்கு அதிகக் கடினமான குழ் நிலைகளில் வரையப்பட்ட சித்திரங்களைச் சிலோனிலுள்ள அநேக கோவில்களில் காணலாம்.

ፖ8
உதாரணமாக அனுராதபுரத்திற்குத் தெற்கே சிகிரியா எனப்படும் சிங்கமலை உள்ளது. அங்கு ஒரு பிர மாண்டமான மலை குடையப்பட்டு, ஒரு உல்லாச மாளிகை யாக்கப்பட்டது. அங்குச் செல்வது கடினமானலும், அது சொகுசானது. இந்த அழகு நிலையத்தை, 1500 ஆண்டு களுக்கு முன்னுல் சிலோனுக்கு காஸ்யப்ப மன்னன் அளித் தான். தன் தகப்பனரைக் கொன்ற குற்றத்தினல் ஏற் படும் அருவருப்பைத்தணிக்கப் பிற்காலத்தில் அது உதவும் என்று அவன் கம்பினுன். இந்தப் பாறையின் மீதுள்ள சித்திரங்களில் சில, அஜந்தா சித்திரங்களைவிடச் சிறக் தவை. சிகிரியாவுக்கும் பக்கத்திலுள்ள மடத்தில், கி. மு. 81-ல், பெளத்த மத நூல்களைப் புத்த சங்கியாசிகளின் கூட்டம் எழுதியது.
தம்புல்லா என்ற இடத்திலுள்ள மலைக் கோவிலில் கி. மு. 103-ம் ஆண்டில் தென் இந்திய அரசனுல் தோற் கடிக்கப்பட்ட மற்ருெரு மன்னன் ஒளிந்து கொண்டிருந் தான். தன் சிங்காதனத்தை அவன் மீட்டதும், அந்தக் குகையை அழகிய சித்திரங்களும் சிற்பங்களும் கொண்ட அதிசய மடமாக மாற்றியமைத்தான். 8
சிலோனில் புத்தர் சிலைகளும் கோவில்களும் இல்லாத இடமே கிடையாது. பழங்காலச் சிற்பக் கலைஞர்கள், கற் களில் எவ்வாறு களியாட்டம் ஆடினர்கள்!
உதாரணமாக, கான் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள கலவேவ மீது காவல் புரியும் புத்தர் சிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தச் சிலை, காஸ்யப்பனின் தகப்பன ரான துதுசேணு (கி. பி. 463-479) என்ற மன்னனின் கட்டளையின்படி செதுக்கப்பட்டது.
கல வேவாவை (ஏரியை) விஸ்தரித்துப்பழுது பார்த்த பிறகு, ஏரிக்கருகில் ஒரு பெரிய பாறையை துதுசேணு
5

Page 43
74
கண்டான். அந்தப் பாறைக்கு எவ்வாறு உருக்கொடுப்ப தென்று தன் சிற்பக் கலைஞர்களுடன் அவன் கலந்தாலோ சித்தான். ஒரு நல்ல சிற்பக் கலைஞனைக் கண்டுடிபித்தார் கள். அதன் விளைவாகப்புத்தர் சிலை உண்டாயிற்று. அதன் உயரம் 46 அடி, தலை மட்டும் ஆறரை அடி உயரமுள்ளது. ஒவ்வொரு அங்கமும் சரியான அளவுடன் விளங்குகிறது. உடையின் நுணுக்கமான மடிப்புகள், இன்று கூடப்பருத் தித் துணியின் மடிப்புகளைப் போலத் தோன்றுகின்றன.
சிகிரியாவிலும், தம்புல்லாவிலும் உள்ள சிலைகளையும், சித்திரங்களையும் போன்றவை சிலோனில் ஏராளமாகக் காணப்படுகின்றன. அவற்றை உண்டாக்கிய கலைஞர்கள், தங்களுடைய பெயர்களை விட்டுவைக்க விருப்பம் கொளள வில்லை. கெமுனு. மஹாபராக்கிரம பாஹ" ஆகிய இரு மன்னர்களின் சிலைகளைத் தவிர, சிங்கள மன்னர்கள் கல் லிலோ அல்லது சித்திரத்திலோ தங்களுடைய உருவங்களை விட்டுவைக்க விரும்பவில்லை. அந்த இரு மன்னர்களின் சிலைகள் கூட, அவர்களின் மரணத்திற்குப் பிறகு, நன்றி யுள்ள மக்களால் உண்டாக்கப்பட்டவை என்று தெரி கிறது. ஒவ்வொரு நூற்ருண்டும், ஏற்கனவே உள்ள கலைச் செல்வத்தை அதிகரித்தது. தென் இந்திய படை யெடுப்பாளர்களால் ஓரளவுக்கு நாசம் ஏற்பட்டபோதி லும், சிலோன் காலாச்சாரம் சுதேசியாகவும், 1505-ல் போர்ச்சுகீசியர்கள் வரும்வரை உயிருள்ள கலாச்சாரமாக வும் விளங்கிற்று. கடல்கடந்த பகுதிகள் போர்சுச்கீசியரிட மிருந்து டச்சுக்காரர்களுக்கும், டச்சுக்காரர்களிடமிருந்து பிரிட்டிஷ்காரர்களுக்கும் மாறின.
கண்டியின் கடைசி மன்னனைச் சிங்களத் தலைவர்கள் முடியிழக்கச் செய்து, 1815-ல் சிலோனைப் பிரிட்டனுக்கு அளித்தவுடன், பிரிட்டன் கீழ்க்கண்ட உத்தரவாத மளித்தது:

?5
"மக்களின் எல்லா வகுப்பினர்களுக்கும் அவர் களுடைய உடலுக்கும் சொத்துக்கும், அவர்களிடம் நிலை பெற்று உபயோகத்திலுள்ள சட்டங்கள், முறைகள், வழக்கங்கள் ஆகியவற்றின்படியுள்ள உரிமைகள், விதி விலக்குகளுக்கும், தலைவர்களும் குடிகளும் வழிபடும் புத்த மதத்திற்கும், அதன் சடங்குகள், குருமார்கள், கோவில் கள் ஆகியவற்றிற்கும் பாதுகாப்பு."
1815-க்கும், 1947-க்கும் இடையிலுள்ள காலத்தில் ஆட்சியாளர்களைப் பின்பற்றி நடக்கச் சிலோன் மக்கள் முயன்ருர்கள். ஆ  ைக யா ல் அது கலாச்சாரத்திலும் சிருஷ்டியிலும், வறண்டகாலமாக விளங்குகிறது. ஆனல் 1947-ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்த பிறகு, கலாச்சாரத் துறையில் சிலோன் சுதேசி வழிகளில் சிந்திக் து, கம்பிக்கை யுடன் பலனை எதிர்பார்த்திருக்கிறது. இந்திய இசையை யும்,காட்டியத்தையும் கற்றுக்கொள்ளச்சிலோன் மாணவர் கள் இந்தியாவுக்கு வருகிருர்கள். அநேக சிலோன் வீடுகளில் சாந்திநிகேதன், அண்ணமலைப் பல்கலைக் கழகம் ஆகியவை, பழக்கப்பட்ட சொற்களாக இருக்கின்றன. இந்திய வாழ்க்கை முறையுடன் தொடர்பை வளர்த்துவருவது நல்ல அறிகுறி. தாகூரையும், காந்தியையும், கேருவையும் அவர்களுடைய மக்களைப் போலவே, சிலோன் மக்களும் போற்றிப் பாராட்டுகிருரர்கள். ஆகவே சுமார் 35 நூற் முண்டுகாலம் சுறு சுறுப்பாகவும், 130 ஆண்டுகாலம் ஸ்தம்பித்தும் இருந்த கலாச்சாரம் இன்று விழிப்பின் அறி குறிகளைக் காண்பிக்கிறது. ஆரம்பநிலையிலுள்ள இந்தத் தேசிய "விழிப்பில், தன் உதாரணத்தின் மூலம் இந்தியா வுக்குப் பெருமைகொள்ளும் பங்கு இருக்கிறது.

Page 44
9. சிங்களக் கவிதை
சிங்களக் கவிதை, பாடுவதற்கு அல்லது ஒப்பிப்ப தற்கு ஏற்பட்டது. தியாகராஜருடைய கீர்த்தனங்களைப் போன்றவை சிங்கள இலக்கியத்திலில்லை. சைதன்யரைப் போன்றவரும் இல்லே. இசையின் இடத்தில் டாட்டுக்கள் பயன்பட்டதால், அந்தக் குறைபாடு கவனிக்கப்படவில்லை. பாட்டுக்கள், சிங்கள மக்களிடம் எப்பொழுதும் தயாராக வுள்ள சாதனமாக விளங்குகின்றன. இன்றுகூடக்கோவில் களில் சக்கியாசிகளின் கீழ் கற்றுக்கொடுக்கப்படும் பழைய கல்வி முறையில்-வியாகரணம், இலக்கணம், காவ்ய சாஸ் திரம், யாப்பிலக்கணம் ஆகியவற்றை முன்பு பிக்கு-ஆசி ரியர்களிடம் மாணவர்கள் கற்ருர்கள்-கவிதையில் பெரும் ஆர்வமிருக்கிறது. கவிஞர்களையும், கவிதை ரசிகர்களையும் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் ஊக்குவிக்கின்றன. இன் னும் கவிதை மூலமே காதல் கடக்கிறது. மிகவும் மிகைப் படுத்திக் கூறும் பாராட்டுக் கவிதையும், வசைக் கவிதை யும் சிலோன் மக்களிடம் இன்னும் பிரபலமாக இருக் கின்றன.
உபயோகத்துக்கு ஈடுபடுத்தும் இந்தக் கவிதையில், சிங்கள மக்கள் ஸ்பானிஷ்காரர்களையும் தென் அமெரிக் காவின் லத்தீன் (இன) மக்களையும் போன்றவர்கள். உதாரணமாக சக்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி வாழ்த்தாக அல்லது வசைமொழியாகப் பயன்படுத்தப்படும் சத்கவி, வஸ்கவி ஆகிய நல்ல சகுனக் கவிதையையும், கெட்ட சகுனக் கவிதையையும் கவனியுங்கள்.கடிதத்திற்குப் பதில் எழுதாத நண்பனைக் கண்டிப்பது கவிதையிலிருக்கும், தன் காய்கறித் தோட்டத்தை அண்டை வீட்டுக்காரனின் மாடு அழித்ததற்காகக் கவிதையில் ஒரு பிக்கு சிறுசாபம்

77
கொடுப்பார் மாட்டின் மீது, சொந்தக்காரன் மீதல்ல. சத் கவி விரிவாகப் பயன்படுத்த்ப்படுகிறது. முதலவர் அல்லது ஊர்த்தலைவரிடமிருந்து சலுகை பெற விரும்பும் குட்டி அதிகாரி, தன் வேண்டுகோளேக் கவிதையில் தெரிவிப்பார். அதற்காக அவர் ஒரு கவிஞனின் உதவியை நாடவேண்டி யிருக்கும். கவிதைகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் இளைஞர்கள் காதல் புரிவார்கள். ராக் அண்ட் ரோல் கடனத்தைவிட அது நிச்சயமாக அதிக நாகரிகமான முறை. ஆணுல் நாடோடிப் பாடகர்கள், வண்டிக்காரர்கள், படகோட்டிகள் ஆகியோரே இசையின் உண்மையான காவலர்கள்.
இரண்டு இளைஞர்கள், அல்லது ஒரு வயோதிகனும் ஒரு சிறுவனும், அல்லது ஒரு குருடனும் அவன் உதவி யாளனும்-இவ்வாறு இரண்டு பேர்களாகப் போகும் நாடோடிப் பாடகர்கள், ஒரு சுவாரஸ்யமான வழக்கத்தை டிேத்து வருகிருர்கள். அவர்கள், விருது என்ற திடீரெனப் புனையும் பாட்டைப்பாடுகிருர்கள். வீட்டுக்கு வீடு சென்று அல்லது ஓடும் ரெயில் வண்டியின் பெட்டிகளுக் குச் சென்று, நீண்ட பட்டுப்போன்ற கூந்தலும் ஒளிவீசும் கண்களும் உடைய இளம் பெண்களின் அழகையோ அல் லது பெரிய வயிற்றைப்போல பெரிய உள்ளம் படைத்த முதலாளியின் பெருந்தன்மையோ குறித்து அவர்கள் பாடு வார்கள். திறமையாக இயற்றப்பட்ட இந்தப் பாராட் டுரைகளை அவர்கள் பாடும்போது, தங்களுடைய கஞ் சிராக்களில் தாளம் போடுவார்கள். ஒவ்வொரு அடியின் முடிவிலும், கஞ்சிராவைச் சுழற்றி அடிப்பார்கள. தற்கால வாழ்க்கையின் அவசரக் கோலத்தில் கூட, தங்களு டைய வாழ்க்கை முறையை அவர்கள் பின்பற்றி வரு கிருர்கள். லாப நோக்கங்களால் ஆதிக்கம் செலுத்தப் படும் உலகத்தில் இந்தத் தொழிலின் எதிர்காலம் குறித்து அச்சமேற்படுகிறது.

Page 45
78
விருது பாடகர்கள் ஒரு நல்ல வேலையைச் செய் கிருர்கள், அவர்கள் பொது மக்களின் ஆசிரியர்கள், மோனையுடன் கூடிய அவர்களுடைய கதைப்பாட்டுக்கள், பழைய கதைகளை நிலைபெறச் செய்வதுடன், இனிமை யான வகையில் சிறிது சரித்திரத்தையும் பூகோளத்தை யும் அறிவிக்கின்றன. விருப்பமற்ற பணப் பைகளிலிருந்து பணத்தைப் பிடுங்குவதற்காக அவர்கள் எப்பொழுதும் பாடுவதில்லை. மேல் உலகத்தைப் பற்றிய விருதுப் ப்ாட் டைக் கீழே பாருங்கள்: v தச தகசக் சக்வல வல மஹாமேர கம் கொதெக் எத்த? தச தகசக் சக்வல வல இர சந்த கம் கொதெக் எத்த? தச தகசக் சக்வல வல தெவ் லோ நம் கொதெக் எத்த? தச தகசக் சக்வல வல பம்பா லோ நம் கொதெக் எத்த?
பத்தாயிரம் சக்வலத்தில் எவ்வளவு மகாமேருக்கள்? பத்தாயிரம் சக்வலத்தில் எவ்வளவு சூரிய சந்திரன்கள்? பத்தாயிரம் சக்வலத்தில் எவ்வளவு தேவலோகங்கள்? பத்தாயிரம் சக்வலத்தில் எவ்வளவு பிரம்மலோகங்கள்? மஹா மேர தச தஹசக் எதி சக்வல தச தஹசெ இர சந்த தசதஹசக் எதி சக்வல தச தஹசெ தெவ் லோ தசதஹசக் எதி சக்வல தச தஹசெ பம்பா லோ லசுஷ செத தச தஹசக் சக்வல தச தஹசெ.
பத்தாயிரம் சக்வலத்தில் பத்தாயிரம் மகாமேருக்கள் பத்தாயிரம் சக்வலத்தில் பத்தாயிரம் சூரிய சந்திரன்கள் பத்தாயிரம் சக்வலத்தில் பத்தாயிரம் தேவலோகங்கள் பத்தாயிரம் சக்வலத்தில் அறுபதுலட்சம் பத்தாயிரம
பிரம்மலோகங்கள்.
ஒரு சக்வல என்பது, சூரியன் சந்திரன் கிரகங்கள் ஆகியவற்றைக் கொண்ட பிரபஞ்சம். ஒன்றுக்கு மேற். பட்ட பிரபஞ்சங்கள் இருப்பதாகப்பாட்டிலிருந்து யூகிக்கப் படுகிறது. மேரு மலை, புராணத்தில் வரும் மேருமலை யாகும்.

P9
வண்டிக்காரர்களும் படகோட்டிகளும் பாடும் பாட் டுக்கள், பழக்கத்தால் பிரபலமாகி விட்டன. அவற்றின் மீண்ட, தயங்கி ஒலிக்கும் அடிகள், இரவில் இருண்ட சாலையின் தனிமையிலும், இரவில் மக்கள் தூங்குவதால்
றின் தனிமையிலும் அவை பொருத்தமாக உள்ளன, இந்தப் பாட்டுக்கள் நன்ருகவும், எந்தக் கூட்டத்திலும் பாடக் கூடியனவாகவும் இருக்கின்றன என்பதை நான் கூறவேண்டும். ஆனல் அவற்றை மாட்டு வண்டியிலோ அல்லது சிலோன் ஆறுகளில் செல்லும் சாமான்-பட கிலோ பிரயாணம் செய்யும் போது கேட்பதுதான் சிறப்பானது. -
கவிதை ஆர்வம் அங்கு எப்பொழுதும் இருந்திருக் கிறது. இலக்கியப் புலவர்கள் அடைந்துள்ள உயர்ந்த இடத்தை அது அடையுமா என்பது சக்தேகமே. இன்று. முன்னேற்றம் என்ற மோசமான வியாதியின் பிடியில் சிலோன் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு உப-கண்டத்தை விட ஒரு தீவு எளிதில் அதற்குப் பலியாகிறது.
அநேக சிறு கிராமங்களிலுள்ள ஆசிரியர்களிடம் பெரும் அளவிற்கு இசைப் புலமை புதைந்து கிடப்பது நிச்சயம். ஆனல் பத்திரிகைகளில் வழக்கமான கருத்துக் களுடன், வழக்கமான கவிதைகளை வெளியிடுபவர்களை யன்றி--இவர்களில் அநேகம் பேர்கள் இளம் பிக்குகள்தாகூரைப் போன்ற தரமுள்ள கவிஞர்களோ அல்லது ஐரோப்பிய அல்லது அமெரிக்க கவிஞர்களைப் போன்ற வர்களோ கிடையாது. ve
சிலோனில் ஐரோப்பியர்கள் நுழைவதற்கு முன்னுல் அத்தகையோர் பலர் இருந்தனர். இசையின் அமைப்பு, கருத்து, நோக்கம் ஆகியவற்றில் இந்தியாவின் மகா கவி யான காளிதாசனுல் அவர்கள் ஊக்கம் கொண்டார்கள்

Page 46
80
ஆனல் சிங்களக் கவிஞர்களின் கருத்துக்கள் புத்த மத சம்பந்தப்பட்டதாக இருந்தன. புத்த இலக்கியத்தின் பொதுவான அம்சமாக உள்ள இசை வர்ணனை மீதுள்ள விருப்பத்திற்கும் புத்த மதமே காரணமாக இருந்தது.
உலகத்தின் மிகச் சிறந்த கதாசிரியர் புத்தர் என்பது என் கருத்து. தத்துவசாஸ்திர விவாதங்களையும், ஐடகாஅல்லது புனர் வாழ்வுக் கதைகள் போன்றவற்றில் தெள் ளத் தெளிவான வரலாறுகளையும் எவ்வளவு அழகாக மாறி மாறிக் கூறியுள்ளார் கதை கூறுவதற்கு ஒரு அற் புதமான கவிதை நடையைப் புத்தர் உருவாக்கியிருக்கிறர். இவ்வாறு சிங்கள மக்களின் ஆரம்ப காலத்தின் உரைக் கோவைகளும், கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட வாக்கி யங்கள் முதல், திரிபீடக விளக்கங்கள் ஈருகவும், மத்திய காலப் புரானங்களும் அந்தக் கவிதை நடையில் அமைக் துள்ளன.
பூீ ரஹ-0ல என்ற சிறந்த சிங்களக் கவிஞரால் சிங்களக் கவிதையில் எதுகை அறிமுகப் படுத்தப்படும் வரை அவற்றில் எதுகையிருக்கவில்லை. ஆனல் அவற் றில் ஸ்தாயிட்-அமைப்பும், உள்ளிருக்கும் எதுகையும், சம் பிரதாயமாக எதுகையில் முடிவதைவிடத் திருப்திகரமாக இருந்தன. பூீ ரஹ"ல, விஜயப பிரவீணத்தின் தலைமை குருவாகவும், பிக்குகளின் தலைவராகவும் இருந்தார். அவர் சங்க ராஜா என்றழைக்கப்பட்டார். ஆகவே பதினைக் தாவது நூற்ருண்டில் அரசாண்ட கான்காவது பராக்கிரம பாஹ-0 என்ற மன்னனுக்கு அவர் ஆத்மீக ஆலோசகராக இருந்தார்.
காளிதாசன் இயற்றிய மேகதூதனை, பூீ ரஹ"ல ஒரு மாதிரியாக ஏற்ருர். அதிலிருந்து சந்தேசவ அல்லது செய் தியை ஏதாவது ஒரு பறவை மூலம் அனுப்புவது, சிங்களப் புலவர்களின் உபாயமாக இருந்து வந்துள்ளது. உணர்ச்சி

8t
வசமான எண்ணங்களை நீக்கச் சபதம் செய்துள்ள ஆத் மீகத் தலைவராக இருந்த போதிலும், தன் கவிதைகளில் நுட்பமாகப் பதியும் மனத்தையும், வாழ்க்கை அறிவையும் அவர் காட்டியிருக்கிருர், ஒரு பெண்ணின் அழகையோ அல்லது அவற்ருல் ஏற்படும் எண்ணங்களையோ விவரிப் பதில் அவர் மெளனம் காட்டவில்லை. அவரும், எல்லா சங்கியாசிப் புலவர்களும் கவிதைச் சலுகை கொள்ள முன் உதாரணங்கள் உண்டு. உதாரணமாக, குச ஐடக என்ற பிரபலமான கவிதையில், ராஜ ஒக்கக என்ற ஆண்மை யற்ற மன்னன், தன் மக்களின் வற்புறுத்தலுக்கிணங்க, தன் குடிகளில் துணிகரமானவனல் கருத்தரிப்பதற்காக ராணியை அரண்மனையிலிருந்து வெளியே அனுப்பினன். ஆனல் அந்த விபரீதத்தைக் கண்ட சக்ரா என்ற தேவர்க்கர சன் கிழப்பிராமணன் வேடத்தில் அரண்மனை வாயலில் தோன்றி, கீழ் மக்களிடமிருந்து ராணியை மீட்டு அழைத் துச் சென்றன். அவளைச் சுவர்க்கத்துக்கு அழைத்துப்போய் அவளிடம் களங்கமற்ற கருவை உண்டாக்கினன். அதன் பிறகு தன் கணவனிடம் ராணி திரும்பினள். இவ்வாறு பிறந்த குழந்தைக்கு, குசப் புல்லை யொட்டி குச என்று பெயரிடப்பட்டது. முற்பிறப்பில் குசன், போதி சத்வனுக இருந்தான்.
ஆகவே சிங்களப் புலவர்கள் பின்பற்றுவதற்குப் போதிய முன் உதாரணங்கள் இருந்தன.
மதுவும், மதுக்கிண்னங்களை ஏந்துபவர்களும் கிறைந்த கவிதைகளை அவர்கள் தவிர்த்தபோதிலும், மற்ற வழிகளால் நமக்கு வெற்றி கிடைக்காதபோது நாம் நாடும் அபார சக்தியைக் கொடுக்கும் உண்மையான ஆர்வம் அவற்றில் காணப்படவில்லை. சிங்களக் கவிதையின் தன்மை அவ்வாறு ஆனதற்கு, பரம்பரை வழக்கங்கள் காரணமாக இருக்கலாம். தெய்வீகத் தோற்றத்தைத் தவிர

Page 47
2
வேறு வகையில் சைதன்யரும், தியாகராஜரும் பாடியிருக்க முடியாததைப் போல, சிங்களப் புலவர்கள் எவ்வளவு உயர்வாகப் போனுலும் முக்கிய புத்த கொள்கைகளைப் புறக்கணிக்க முடியாது. உணர்ச்சி இன்பங்கள் இயற்கை யானவை ஆணுலும், அவை அனிச்சிதமானவை தற்காலிக மானவை, என்பதே அந்தக் கொள்கை.
சுக துக்கங்களைப் பொருட்படுத்தாதே என்ற இந்தத் தத்துவ ஞானத்துக் கிடையில், சிங்களக் கவிதைகள் அவ்வளவு வலிமையையும் உற்சாகத்தையும் காட்டியிருப் பது அதிசயமானது.
1437-ல் இயற்றப்பட்ட பறவி சந்தே சயா அல்லது புரு மூலம் செய்தி,1449-ல் இயற்றப்பட்ட காவ்ய சேகரா, செலாலிஹினி சங்தேசயா அல்லது செலாலிஹினி பறவை மூலம் செய்தி ஆகியவை பூீரஹ சலாவின் பிரபலமான கவிதைகள். செலாலிஹினி என்பது மைன போன்றது, ஆனல் அதைவிட அழகான தோற்றமும், இனிமையான குரலும் உடையது. கடைசியாகக் கூறப்பட்ட நீண்ட கவிதையில், அது அவருடைய பண்பட்ட தத்துவஞானத் தின் விளைவாக உருவான போதிலும், அதில் பூரீரஹ"சலா வின் கவிதா தன்மை, அவர் அறிவின் ஆற்றலையும் விஞ்சி கிற்கிறது.
செலாலிஹினியாவிடம் செய் தி யை ஒப்படைத்த பூரீரஹ"லா, அது பின்பற்ற வேண்டிய வழியையும், வழியிலுள்ள பலவகைக் காட்சிகளையும் கண்கூடாக வர்ணிக்கிருர், கிராம மக்கள், அவர்களுடைய பொழுது போக்குகள், கிராமங்கள், நகரங்கள் ஆகியவை வர்ணிக்கப் பட்டுள்ளன. தலைநகரான ஜெயவர்த்தன புரத்தின் மீது தான் பூரீரஹ"லா அதிகப் புகழுரைகளைக் கொட்டுகிருர், கீழே தரப்பட்டுள்ள கவிதை சொற் பெயர்ப்பில், இரவில்

83
எத்தகைய உறைவிடத்தைச் செலாலிஹினியா நாடவேண் டும் என்பதைப் புலவர் விவரிக்கிருர்,
கிமில் சந்த பஹன் வெனி வெகி பித உதுலா சுபுல் மல் யஹன் லிய மது லிய கெபலா ககல் கெலின வன் தேவ் லிய தேக கோமளா உசல் ருகேக் செத பெவ் லபுல சிஹிலலா முகில் சூழ்ந்த மதியை யொத்த மணல் மீது மகிழ்ச்சியுடன் பாடும் போதும், மலர்களிடை யேயும், கொடிகளிடையே யும், அருகிலுள்ள ஆற்றின் கரை மீதுள்ள மரங்களிலும் காட்டுத் தேவதைகளைப் பார். அந்த விளையாட்டு உயிரினங் களின் பார்வையால் கொஞ்சப்படும் சால மரத்தின் மீது தங்கி இரவைக் கழி.
சிங்களப் புலவர் சூரிய அஸ்தமனத்தைப் பற்றித் தனிக் கவிதையையோ அல்லது ஒரு பெண்ணின் அழகை விவரிக்கும் பதினன்கடி கவிதையையோ (கானட்) இயற்றுவதில்லை. ஆனல் செலாலிஹினி சங்தேசயா போன்ற நீண்ட கவிதைகளில் தன் எல்லா கற்பனைகளை யும் உணர்ச்சிகளையும் வெளியிடுகிருர், r
வாதாவே என்ற சங்கியா சி பூநிரஹ"லாவின் சம. காலத்தவர். அவருடைய வாழ்க்கையே கதையால் குழப்பட்டது. பூநீரஹ"லாவைவிட அ வ ர் அதிகப் புலமை வாய்ந்தவர் என்றும் அதனல் பூரீரஹ"லா பொருமை கொண்டார் என்றும் சிலர் கூறுகின்றனர். அவர் சக்கியாசிக் கோலத்தை உதறித் தள்ளி இந்தியாவுக் குச் சென்ருர் என்பதும், அங்கு அவர் உயிர் துறந்தார் என்பதும் உண்மை. குட்டிலகாவ்யா என்ற நீண்ட கவிதை யால் அவர் புகழ்பெற்ருர், குட்டிலா முக்தைய பிறப்பில் போதி சத்விராக இருந்தவர். குட்டிலா. ராஜசபைக் கவி யாக இருந்ததுடன், வீணையை இசைப்பதில் தேர்ச்சி பெற். றவர். மூசிலா என்ற நன்றியில்லாத சீடனுக்கு வீணை

Page 48
84
இசையை அவர் கற்றுத்தந்தார். மூசிலா என்பதற்குக் “கசடன்’ என்று பொருள். குட்டிலாவிடம் கலையை அறிந்த மூசிலா, அரசவையிலிருந்து தன் குருவை வெளி யேற்ற முற்பட்டான். அதற்காகக் குருவை திறமைப் போட்டிக்குச் சவால் விட்டு அழைத்தான்.
தொழில் பொருமை, பூீரஹ"லா-வாதாவே a கதையி லும் சிறிது காணப்படுவதைக் கவனிக்க வேண்டும். தன் திறமையை வெளிப்படுத்த அந்தக் கவிதை வாதாவேக்கு முழுவாய்ப்பளிக்கிறது.
சிறு செய்யுட்களில் இலங்கையின் பொதுப் பூங்காக் களையும் கோவில்களையும், நீண்ட அடிகள் கொண்ட செய்யுட்களில் சீடனின் நன்றிகெட்ட போக்கால் குட்டிலா அடைந்த மன வேதனையையும் அவர் விவரிக்கிருர், அதனுல் போட்டியிடும் எண்ணத்தைக்கைவிட்டு, தனிமை யில் ஆறுதல் பெறக் குட்டிலா காட்டுக்குப் போனதும், அங்கு ஒரு தெய்வம் தோன்றி, போட்டிக்குச் செல்லுமாறு கூறி, அவருக்குத் தெய்வங்கள்.உதவி செய்யும் என்று உறுதி மொழியளித்தது. இவ்வாறு உற்சாகமடைந்த குட்டிலா, சீடனின் சவாலை எற்றுப் போட்டியில் கலந்து கொண்டார்.
தானே சிறந்தவன் என்பதை நிரூபிப்பதற்காக வீணை யின்இருதந்திகளைக் குட்டிலா வெட்டி விட்டுத் தொடர்ந்து இசைத்ததை விவரிக்கும் செய்யுள், அந்தக் கவிதையில் மிக உங்கதமானது. இந்த உச்ச கட்டத்தில் தேவர்கள் சுவர்க்கத்திலிருந்து இறங்கி வந்து, மன்னனும் மற்றவர் களும் வியக்கும்படி குட்டிலாவின் இரு தந்திகள் அறுந்த வீணையின் இசைக்கு ஏற்றவாறு நடனமாடினர்கள். கீழே தரப்பட்டுள்ள அந்தச் செய்யுளின் சொற்பெயர்ப்பு, அந்த மொழியை அறியாதவர்களுக்கும் புலவரின் உள் எதுகையையும், சொல்லமைப்பையும் உணர்த்தும்.

85
ரு ரெசே அந்தின லெசே அத் லேலா திதி விதுலியபபா ரான் ரசே ஏக் வன லெசே வேன நத நூப தப தபா தம் பசே தேன சேர லெசே தேச பல பல நெதகின் சபா மம் கெசே பவ சமி யெசே வர சுர லந்துன் துன் ரங்க
ćRLJIT, (சித்திரத்திலுள்ள உருவங்களைப் போல, அழகாகக் கைகளை அசைத்து, மின்னலைப் போல இசைக்கு ஏற்ற வாறு கைகளால் தாளம்போட்டு, பாதரசத்துடன் பொன் கலக்கும் இலகுவுடன், பார்வையாளர்கள் மீது வசிகர மான பார்வையைச் செலுத்தும் நாட்டியக்காரர்களைப் போல ஆடிய அவர்களுடைய (தேவர்களுடைய) காட் டியக் காட்சியை நான் எவ்வாறு விவரிக்க முடியும்?)
பதினுருவது நூற்ருண்டில் சிலோன் பல கோஷ்டி களாகப் , பிளவுபட்டது. அவர்களுடைய சச்சரவுகள் போர்ச்சுகீசியர்களால் அதிகரித்தன. கோவாவுக்குச் சென்றுகொண்டிருந்த போர்ச்சுகீசியர்களைச் சக்தர்ப்பம் சிலோன் திசையில் திருப்பியதால், அவர்கள் காலியில் இறங்கினர்கள். அங்குள்ள செல்வத்தைக் கண்டதும். தீவு முழுவதையும் ஆக்கிரமிக்க அவர்கள் விரும்பினர்கள் ஆனல் போர்ச்சுகீசியர்களையும், தன் எதிரிகளையும் முறி யடித்த ராஜாசிங்க மன்னனுடைய குறுகிய கால ஆட்சி யில், தன் தகப்பனர் மாயாதுன்னேயுடன் 1581 முதல் 1598 வரை 13 ஆண்டுக்காலம் ஆண்டபோது, இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்டது.
ராஜாசிங்கத்தின் ஆட்சிக்குப் புகழ் பாடிய புலவர் அழகியவண்ண மஹோத்தி. அவர் என் தாய்வழி மூதாதை என்பதைப் பெருமையுடன் கூறுகிறேன். அழகியவண்ணன்தான் குச ஐடகத்தைக் காவியமாகச் செய்து, அதை ஒரு வீட்டுச் சொல்லாக்கினர். அதன் 687 செய்யுட்களில் ஒன்றையாவது மனப்பாடமாக

Page 49
86
ஒப்பிக்க இயலாத சிங்களன் இருக்க முடியாது. இந்தக் குறிப்பிட்ட செய்யுள், கல்வி யறிவில்லாதவர்களைப் போலத் தோன்றும் கிராமவாசிகளால் அடிக்கடி கூறப் பட்டதை நான் கேட்டிருக்கிறேன்.
கெதக் ஜென நுப குசா தெமுவ நொரக்தை பிமமிசா மென் பவ் பின் ரெசா சித்து வீய நியாதய பெது லெஸ். காற்றில் ஒரு கூழாங்கல்லை வீசு தரையில் அது விழுவதைப் பாரு அதுபோல் நல்லதும் கெட்டதுமான கர்மம் பிறவிக்குப் பிறவி தொடர்ந்து வரும். கெவுல் சந்தேசயா அல்லது காட்டுக்கோழி மூலம் செய்தி என்ற சந்தேசயக் கவிதையையும் அழகியவண் ணன் இயற்றினர். 203 செய்யுட்களைக் கொண்ட் அந்தக் கவிதை, ராஜாசிங்கத்தைப் புகழ்ந்து எழுதப்பட்டது. குச ஐடகாவுக்கு அடுத்தபடியாக சுபசித்தய என்ற செய்யுள் தொகுப்புக்கு அவர் புகழ் பெற்றவர்.
சுபசித்தய என்பது நல்லொழுக்கத்தைப் புகழ்ந்து எழுதப்பட்ட செய்யுட்களின் தொகுப்பு. அந்தச் செய் யுட்கள் இசையமைப்பிலும், நடுநிலைமையிலும் ஒமார் கையாம், ஹபிசின் கவிதைகளைப் போன்றவை. நான் குழந்தையாக இருந்தபோது கற்ற முதல் கவிதை, அழகிய வண்ணனுடைய சுபசித்தய. என்ருவது நான் அதிகாலை யில் விழிக்காமல் தூங்கினுல், காலம் கடக்த விழித்தெழு பவனைக் கண்டித்தும் அதிகாலையில் எழுபவனைப் பாராட்டி யும் என் மூதாதை எழுதிய கவிதையை என் தாயார் பாடி என்னை எழுப்புவது வழக்கம். கவலையற்ற சமயங் களில் என் தாயார் ஏதாவது வீட்டு வேலை செய்யும் போது, கீழ்க்கண்ட சுபசித்தய செய்யுஃாப் பல முறைகள் பாடியதைக் கேட்டிருக்கிறேன்.

87
பின் மத புதுன் சியயக் ல துவத் நிசரு குண கென பலென் யுது புதுமய இத கரு எக புன் சந்தின் துருவேயி லொவ கந்த அந்துரு நெக தரு ரெசின் எலிசத கோம வேய துரு, ஒழுக்கமற்ற நூறுபிள்ளைகளை விலக்கி விவேகமுள்ள ஒரு பிள்ளையை ஏற்றுக்கொள் வையகத்திலிருந்து இருட்டை விலக்குவது ஒருநிலவு அநேகம் விண்மீன்களும் அதைச் செய்யா. பதினேழாம் நூற்ருண்டில் சிலோனுக்கு மீண்டும் கெட்டகாலம் ஏற்பட்டது. இந்தியாவைப் போல அரச னுடைய ஆதரவால் சிலோன் புலவர் வளம்பெற்ருர். அதி லிருந்து அரசனும் அறிஞனுகவும் புலவனுகவும் இருந்தான் என்று தெரிகிறது. விஜயபாஹ-0 என்ற மன்னன் (1058-1111) சிலோனின் மிகச் சிறந்த அரச புலவன். அவன்தான் சரஸ்வதி மண்டபத்தைக் கட்டி, அங்குப் புலவர்களேயும் அறிஞர்களையும் தங்களுடைய படைப்பு களைப் பகிரங்கமாகப் படிக்கச் செய்தான். அவனுடைய ஆதரவின் கீழ்தான் 550 ஐடகக் கதைகள் பாலி மொழியி லிருந்து சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.
பதினேழாம் நூற்ருண்டின் இறுதியில் இரண்டா வது ராஜாசிங்கன் இறந்த பிறகு, மக்களுக்குரிய சேவை யைச் செய்வதைச் சிங்கள இலக்கியம் நிறுத்தியது. டச்சுக் காரர்களின் உதவியுடன் போர்ச்சுகீசியர்களை ராஜா சிங்கன் விரட்டியடித்தான். ஆனல் அது சிலோனை, ஐரோப்பாவின் அருகில் கொண்டுவந்துவிட்டது. டாஸ்கன் கதைக்காகவும் ராஜாசிங்கத்தின் ஆட்சி நினைவில் இருக்கிறது.
டாஸ்கன், காஸ்கோயின் என்ற பெயர் கொண்ட போர்ச்சுகீசியன் என்று கருதப்படுகிறது. மன்னருடைய சேவகத்தில் அவன் அதிகாரி அல்லது மக்திரி பதவிக்கு

Page 50
88
உயர்ந்தான். அந்தப் பதவியை வகித்ததற்கு அவன் அசாதாரணமானவனகவும், சிங்கள மொழியில் திறமை யுள்ளவனுகவும் இருந்திருக்கவேண்டும், ஏனென்றல் போர்ச்சுகீசியர்களை ராஜா சிங்கன் வெறுத்தான். அழகிய டாஸ்கன், தன் பணியின் மூலம் அரசனுடைய நன்றி யறிதலைப்பெற்று மந்திரியானன் என்றும், அரண்மனையில் அவன் வரவேற்கப்பட்டு ராணியின் காதலன் ஆனன் என்றும் கதை கூறுகிறது. ஆனல் அவனுடைய முடிவு காலம் தொலைவிலில்லை. سمسم
ராணி நோயில் படுத்தாள். வைத்தியர்கள், ஜோஸ் யர்களின் ஆலோசனையின்பேரில், பலி (பேய் நடனம்) நடத்த முடிவு செய்தார்கள். அதற்காகக் களிமண்ணில் ராணியின் உருவச்சிலை தயாரிக்கப்பட்டது. அந்தச் சிலை யைக் கண்ட டாஸ்கன், முழுப் பயன் கிடைக்கவேண்டு மானுல் சிலையின் ஒவ்வொரு அங்கமும் உண்மையான பிரதியாக இருக்கவேண்டும் என்றும், ராணியின் தொடை யில் உள்ள மச்சம் சிலையில் காணப்படவில்லை என்றும் சொன்னுன் அவனுடைய இழிவான சொற்களை அரசர் கேட்டதும், டாஸ்கனைச் சிரச்சேதம் செய்யும்படி கட்டளை யிட்டார். தண்டனை நிறைவேறுவதற்காகக் காத்திருக் கும் சமயம் அவனுக்காக ராணி துக்கப்பட்டாள். அதற்கு ஒரு பாட்டில் டாஸ்கன் பதிலளித்ததாவது :
நிறைவேருத காதலுக்காகப் பழைய ராவணன் பத்துத்
தலைகளைக் கொடுத்திருக்க அமுதம் போன்ற உன் முத்தங்களைப் பெற்றநான் உனக்காக ஒருதலையை ஏன்கொடுக்கக்கூடாது?
கொலைக்களத்திற்கு, ராணியின் சாளரத்தின் வழி யாக அவன் அழைத்துச் செல்லப்பட்டபோது, இந்தக் கவிதையை அவன் கூறியதாகக் கருதப்படுகிறது.

89
சக்மன் கரன மலுவேதி தேக ஹட சித்சன் தொசின் துன் மே பே வத இக் மன் கீமன் ஹிமி அத ஒப யன வத டாஸ் கன் மகெ நமத ஜீவித தென வத. (ஆ நாம் முதலில் சந்தித்ததும், என் இதழ்த் தேனை நீங்கள் பருகியதும் இந்தச் சாளரத்தில் அல்லவா! என் காதலரே, இப்பொழுது பயணம் போகிறீரே எனக்காக உமது உயிரைக் கொடுக்கப் போகிறீரா?)
இந்தக் கதை சிலோனில் மிகப் பிரபலமாக இருப்ப தால், கதையையும் இரு செய்யுட்களையும் இங்குக் குறிப் பிட்டுள்ளேன். இந்தப் பாட்டுக்களைச் சொல்லத் தெரியாத வர் சிலோனில் இருக்க முடியாது. ஆனல் அவற்றின் ஆசி ரியர் யார் என்பது குறித்து எனக்குப் பலத்த சந்தேகம் உண்டு. சிலோனில் கணவன் மீது விசுவாசமற்ற ராணி கள் இருந்திருப்பார்கள். ஆனல் இதைப்போன்ற ராணிக் குப் பொருத்தமற்ற கீழ்த்தரமான எண்ணங்களை வெ யிடும் ராணி இருக்திருக்க முடியாது.
பதினெட்டாம் நூற்ருண்டின் முதல் பாதியில், குறிப்
மலர்ச்சி தோன்றியது. கடைசி சிங்கள மன்னனுகிய அவ னுடன், பூீவிக்கிரம ராஜா சிங்கன் என்ற சிலோனின் கடைசி மன்னனைக் குழப்பிக் கொள்ளக்கூடாது. நரேந் திர சிங்கா, கல்விக்கும் அறிவாற்றலுக்கும் ஆதரவாளனுக விளங்கினன். அவன் ஊக்கமளித்ததால், ஒரு வைத்திய நூல் உட்பட அநேக பாலி இலக்கியங்களை சரணன்கரா என்ற புகழ் பெற்ற பிக்கு மொழிபெயர்த்தார்.
கடைசி 250 ஆண்டுகள், திறமையைத் தோற்றுவித் தன. அந்தத் திறமை,பெரும் அளவுக்கு இலக்கியப் பணி வளரக் காரணமாக இருந்தது. அசிரத்தையை எதிர்த்து அந்தச் சாதனை ஏற்பட்டதால், அது மிக முக்கியமானது.
6

Page 51
90
ஆனல் அந்தச் சமயத்தில் பூநீரஹ"ஜூலாக்களும், வாதாவிக ளும், அழகிய வண்ணன்களும் தோன்றவில்லை. ஆயினும் சிங்கள மக்களிடம் கவிதை உயிருடன் உள்ளது. நான்ஏற் கனவே கூறியபடி, தலைமுறை தலைமுறையாக வண்டிக் காரர்களும், படகோட்டிகளும் தங்களுடைய பாட்டுக்களை அல்லது சிவபதங்களைப் பாடி வருகிருர்கள். கிராம மங் கையர் ஊஞ்சல்களில் ஆடும்போது, எப்பொழுதும் பிரபல மாக உள்ள கதைப்பாட்டுக்களைப் பாடுகிருர்கள். பானை யின்-பாட்டு-நடனத்தில் அவர்கள் பாட்டுப்பாடி கடன மாடுகிருர்கள். ஒரு மண் பாண்டத்தை மேலெறிந்து,அது கீழே விழும்போது பிடிப்பதும், அச்சமயம் ஒரு வட்டத்தில் நடனமாடுபவர்கள் நகர்வதுமே அந்த ஆட்டம். அவர்கள் அவ்வாறு செய்யும்போது, மங்கையர் கீழ்க்கண்ட பாட் டைப் போன்ற பாட்டுக்களைப் பாடுவார்கள் :
அஹஸ்த பிபின ஈரன் கலெய பொலவத பிபின பூமி கலெய ரன் மசு தஹசக் வதின கலெய கொபிடின் அனே மகே கலெய
வானுக் கொரு பொன் கலயம் வையகத்துக் கொரு மண் கலயம் ஆயிரம் பொன் மதிப்புள்ள கலயம் அத்தான் உடைக்காதே என் கலயம்

10. காம கதா: சிங்களக் கிராமியக் கதை
சமீப காலம்வரை, நாங்கள் சிறுவர்களாக இருந்த காலம் வரையிலாவது, உலகத்தில் கதை சொல்வதில் சிங் களத் தாய்மார்களை விஞ்சியவர்கள் இல்லை. ஒவ்வொரு மாலையிலும் தன் அபார ஞாபக சக்தியிலிருந்து எனக்கு எவ்வளவு கதைகளை என் தாயார் கூறியிருப்பாரோ தெரி LJffg). , அதன் பிறகு உலகத்தில் சிறந்த தற்கால, பழங் காலக் கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனல் என் தாயார் கூறிய கதைகளால் எனக்கு ஏற்பட்ட ஆர்வமும் மகிழ்ச்சியும்போல, வேறு கதைகளால் ஏற்படவில்லை.
அந்தக் கதைகளில் அநேகம் எளிய கிராமியக் கதை கள், சில நிமிடங்களில் கூறக் கூடியவை ஒரு மாலையில் அத்தகைய கதைகள் பன்னிரண்டைக்கேட்க முடியும். சில கதைகள் உல்லாசமாகவும், 15கைக்கும்படியும் இருந்ததால் அவற்றை மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ்ந்தோம். ஆனல் ஒரே கதையைத் திரும்பச் சொல்லும் அவசியமில்லை, ஏனென்ருல் வெவ்வேருன ஆயிரம் கதைகளே ஒருவன் கூறமுடியும். கதையில் ஒரு கிராம ரலா, ஒரு கிராம மஹகெ, அதாவது ஒரு கிராம விவசாயி, அவன் மனைவி இருக்க வேண்டும். தங்களுடைய விவசாயப் பரம்பரை குறித்துச் சிங்கள மக்கள் எவ்வாறு பெருமை கொண்டி ருந்தார்கள் என்பதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கி றேன். ஆகவே சிலோனின் வாழ்க்கையிலும், இலக்கியத் திலும் உள்ள முக்கியமான மனிதர்கள் விவசாயிகளும், அவர்களுடைய குடும்பத்தினரும் ஆகும். எல்லா நிகழ்ச்சி களும் அவர்களுக்கு ஏற்பட்டன. ராஜாவும், ராணியும், இளவரசனும், இளவரசியும் தோன்றினர்கள். ஆனல்

Page 52
92
அவை விசேஷக் கதைகள். கிராமியக் கதையின் பாத்தி ரங்கள் கிராம ரலாவும், கிராம மஹகெயும். கிராம ரலா, எப்பொழுதும் துன்பப்படும் ஆண். அவனே, அவனுடைய மனைவி மிரட்டுவாள் அல்லது ஏமாற்றுவாள் அல்லது அவ ளுடைய விருப்பத்திற்கெல்லாம் ஏற்றவாறு அவன் ஏதா வது தூக்கி வருவான். சில சமயங்களில் அவளைப் பணிய வைத்தான். ஆனல் பொதுவாகத் தோற்றது அவனே.
முடிவில்லாத இந்தக் கிராமியக் கதைப் பட்டியலி லிருந்து மாறுபட்டு-அவைகளில் பல, மிருகங்கள் பற்றி யும், அவற்றின் தந்திரங்கள் பற்றியும் கூறும்-என் தாயார், இளவரசர்கள், இளவரசிகள் பற்றிய சிறந்த கதைகளைக் கூறுவது உண்டு. அந்தக் கதைகளில் சில நீளமாக இருந்ததால், அவற்றைக் கூற ஒரு மாலை நேரம் போதாது. சிறுவர்களாகிய காங்கள், அடுத்த மாலை எப் பொழுது வரும் என்று ஆவலுடன் காத்திருப்போம். அத் தகைய நாட்கள் மறைந்துவிட்டன என்று நான் அஞ்சுகி றேன். நான் சில கிராமியக் கதைகளைக் கூறியபோதிலும், என் குழந்தைகளுக்குப் புத்தகங்களிலிருந்து கதைகள் படிக்கப்பட்டன. ஆனல் சிக்கிரமே கதை சொல்வதும் கதை படிப்பதும் அபத்தத்தின், விசித்திரத்தின் உச்சம் என்று கருதப்படும். விரைவில் டெலிவிஷன் வரும். ஆனல் நாகரிகத்தின் சில பகுதிகளேப் பொருட்காட்சி சாலையில் வைப்பது போல, இந்தக் கட்டத்தில் சிலோன்
பொருத்தமாகும். கீழ்க்கண்ட மூன்று கதைகள்-ஆவல் கொண்ட அரசி, கண்ணுடி இளவரசி, பொன் மரமும் வெள்ளி மலரும், வெள்ளிச் சேவலும்-சிலோனின் சிறிய கிராமியக் கதைகளில் விரிவானவற்றின் உதாரணங்கள். நான்காவது கதை இனிமையோ அல்லது கற்பனைத் திறனே இல்லாத கிராமியக் கதை. அதில், எப்பொழு

93
தும் துன்பப்படும் விவசாயி, இந்தத் தடவை மனைவியின்
தந்திரத்திற்குப் பலியாகாமல், ஒரு வண்ணுனின் உபாயத் துக்குப் பலியாவதைக் காணலாம்.
ஆவல் கொண்ட அரசி முன் ஒரு காலத்தில் ஒரு நாட்டில் ஒரு அரசன் இருக் தான். அவனுக்கு மிருகங்களின் மொழிகள் தெரியும். ஒரு நாள் அவன், தன் அரண்மனை கந்தவனத்தின் வழியா கப் போய்க் கொண்டிருந்தபோது, கோழிகளின் பேச்சைக் கேட்டான். அவைகள் தங்களுக்குள் இவ்வாறு பேசிக் கொண்டன :
'நமது அரசர் மிக நல்ல அரசர். அவர் நமக்கு மிகவும் உதவி செய்கிருர், அவர் நமக்கு உணவும் நீரும் கொடுக்கிருர்.”
இந்தப் பேச்சைக் கேட்டதும் அரசனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவன் வாய்விட்டுச் சிரித்தான். அவனுக் குப் பின்னல் வந்துகொண்டிருக்த அவனுடைய பிரதான அரசி, அவனுடைய சிரிப்பொலியைக் கேட்டாள். அர சனுக்கருகில் வேறு யாரும் இல்லாததைக் கண்டதும், அவளுக்கு வியப்பு ஏற்பட்டது. உடனே அரசனிடம் போய், "நீங்கள் எதைக் கண்டு சிரித்தீர்கள்?’ என்று கேட்டாள்.
"ஒ. நான் சும்மா சிரித்தேன்’ என்று மன்னன் பதி லளித்தான். ஏனென்ருல் பிராணிகளின் பாஷை தனக் குத் தெரியும் என்று யாரிடமாவது அவன் கூறினல் அந்த மந்திர சக்தியை அவன் இழக்தூவிடுவான் என்று ஒரு சாப மிருக்தது. மற்றும், அவளுடைய ஆவல் அத்துடன் கிற்காது. ۔
அரசி கூறியதாவது, "சும்மா, காரணமில்லாமல் ஒருவர் சிரிக்கமாட்டார். நீர் ஏன் சிரித்தீர் என்பதைக்

Page 53
94
கூருவிடில் நான் உம்மைவிட்டுப் போய்விடுவேன். எங்கா வது கிணற்றில் விழுந்து சாவேன்." அவள் மீண்டும் மீண் டும், சிரித்தது ஏன் என்று கேட்டும், ஓடிப்போய் உயிரை மாய்த்துக் கொள்வதாக மிரட்டியும் வந்தாள்.
கடைசியில் அரசியின் தொந்தரவு தாளாமல் அரசன் அவதிப்பட்டான். "வேறு வழியில்லை போலத் தோன்று கிறது. அந்த ரகசியத்தை வெளியிடுவதால் என் உயிர் போனலும், அதை அவளிடம் பகிர்ந்துகொண்டு, அதைப் பற்றி எல்லாம் அவளிடம் தெரிவிப்பது அவசியம். அப் பொழுதுதான் எனக்குச் சிறிது அமைதி கிடைக்கும்' என்று அரசன் எண்ண லிட்டான்.
இவ்வாறு சிந்தித்தவண்ணம் பிராணிகளுக்கு உண வளிக்கச் சென்ருன். உடனே அவனுடைய எண்ணத்தைப் பிராணிகள் புரிந்து கொண்டுவிட்டன. தங்களுடைய இரக்கமுள்ள எஜமானனையும் நண்பனையும் இழக்கப் போவதை அவை அறிந்தன. பிறகு ஒரு பறவைக் கூட் டத்தை அரசன் நெருங்கியதும், அங்கிருந்த ஒரு சேவல் கூறிற்று:
"மாடரிமை தங்கிய நமது மன்னர் மரணமடையப் போகிருர், நமக்கு உணவு வேண்டாம் அதனுல் என்ன பயன்? அவர் இறந்த பிறகு நமக்கு உணவு கிடைக்காது. அவர் செத்தால் நாமும் சாகவேண்டியதுதான். சாகாமல் இருக்க நமது அரசர் முடிவு செய்தால், நாம் பட்டினியால் சாக அவசியம் இருக்காது. என்னிடம் பணிவாக கடந்து கொள்ளும் பெட்டைக் கோழிகள் அநேகம் இருக்கின்றன. நான் கூப்பிடும்போது அவை வருகின்றன. என்னிடம் பெட்டைக் கோழிகள் பணிவாக இருப்பதைப் போலவே அரசியிடம் அரசர் பணிந்துவிட்டார். இப்பொழுது அவ ளுடைய ஆவலைப் பூர்த்தி செய்ய எண்ணம் கொண்டு அவர் சாகப் போகிருர்.”

95
இந்தப் பேச்சைக் கேட்டதும் அரசனுல் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அப்பொழுதும் அரசி அருகிலிருக் தாள். அவளுடைய ஆவல் அதிகரிக்க “ஏன் சிரித்தீர்?" என்று கேட்டாள். உண்மையைக்கூற விரும்பாத அரசன், "ஒரு குளத்தை வெட்ட கினைத்தேன். அதை நினைக்கும் போது ஏதோ ஒரு விஷயம் என்னைச் சிரிக்கச் செய்தது' என்று சொன்னன்.
அதைக் கேட்டதும் அரசிக்கு ஒரு எண்ணம் தோன் றியது.
"இலங்கையிலுள்ள எல்லாட் பிராணிகளையும் இங்கு வரவழைத்து, குளத்ண்த வெட்டும் வேலையில் அவைகளை ஈடுபடுத்துவோம்” என்று கூறினுள்,
அரசியை மகிழ்விக்க விரும்பிய மன்னன் "அது ஒரு நல்ல ஏற்பாடு” என்று கூறி, தன் சம்மதத்தை அளித் தான். அதன்படி நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பிராணிகளை ஒரு இடத்திற்கு அழைத்துவரக் கட்டளை யிட்டான். யானைகள் முதல் குள்ள நரிகள் வரை, பருந்து கள் முதல் குருவிகள் வரை கணக்கற்ற பிராணிகள் பல உருவங்களிலும், பல வகைகளிலும் அந்த இடத்திற்கு வந்து குவிந்தன. கூட்டம் கூட்டமாக வந்த அவற்றை, குளத்தைத் தோண்டவேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்று, தோண்ட ஆரம்பிக்குமாறு கூறிவிட்டு அரசன் தன் அரண்மனைக்குத் திரும்பினன்.
அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படிய அந்தப் பிராணி கள் விரும்பிய போதிலும், யார் எந்த வேலையைச் செய்வது என்பதில் அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படவில்லை" அவர்கள் எல்லாரும் ஒரே சமயத்தில் ஒரே இடத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். தங்களுடைய வாய்களில்

Page 54
96
மண்ணை எடுத்துச் செல்ல முடிந்தவை, அவ்வாறு செய் தன. ஆனல் குள்ள கரி மட்டும் எக்த வேலையையும் செய்ய வில்லை. அது சிறிது தூரம் விலகி நின்று, மற்றவர்கள் பாடுபடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தது.
மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு, அவை கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை அவைகள் அறியாதபடி கவனிக்க வேலை 5டக்குமிடத்துக்கு ஓசை செய்யாமல் அரசன் சென்ருன், சிலர் வேலை செய்வதை யும், மற்றவர்கள் வேலை செய்வதுபோல் அங்கும் இங்கும் செல்வதையும் அரசன் கண்டான். குள்ள கரி மட்டும் வேலை செய்யாமல் விலகி நிற்பதை அரசன் கவனித்தான். அதனிடம் அவன் சென்று, "மற்றவர்கள் எல்லாரும் வேலை செய்கிருர்கள். நீ மட்டும் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிருய். ஏன்? என்று கேட்டான்.
அதற்குக் குள்ள நரி பதில் கூறியதாவது, "அரசரே, நானும் வேலை செய்கிறேன். நான் ஒரு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறேன்." *
“என்ன கணக்கு அது?" என்று அரசன் கேட்டான். "இந்த இலங்கை நாட்டில் ஆண்கள் அதிகமா, பெண் கள் அதிகமா என்று பார்ப்பதே அந்தக் கணக்கு."
"உன் கணக்குப்படி யார் அதிகம்?” "இந்த நாட்டில் பெண்களே அதிகம் என்று எனக் குத் தெரிகிறது” என்று குள்ள5கரி பதிலளித்தது.
அரசன் ஒப்புக்கொள்ளவில்லை, ஏனென்ருல் ஆண்கள் அதிகம் என்று அவன் நினைத்தான் "நான் அரண் மனைக்குச் சென்று, தஸ்தாவேஜிகளைப் பார்க்கப்போகி றேன். ஆண்களே அதிகம் என்று தெரியவருமானல், உன்னைக் கடுமையாகத் தண்டிப்பேன்’ என்று கூறிவிட்டு அரசன் அரண்மனைக்குப் புறப்பட்டான்.

97
தஸ்தாவேஜிகளிலுள்ள எண்களைக் கண்ட அரசன், ஆண்களே அதிகம் என்பதை அறிந்தான். குள்ள நரியின் துடுக்கான பேச்சு அரசனுக்குக் கோபத்தை உண்டாக் கியது. உடனே அதை வரவழைத்து, "ஏ, கேடுகெட்ட மிருகமே, இலங்கையில் பெண்களை விட ஆண்களே அதிகம்” என்று கூறினன்.
ஆனல் அரசனின் சினத்தைக் கண்டு குள்ளநரி அஞ்சவில்லை. அமைதியாக அது பதிலளித்தது. "இல்லை. மாட்சிமை தங்கியவரே. பெண்கள் சொற்படி கேட்ப வர்கள் ஆண்களல்ல. அதிலிருந்து பெண்களே அதிகம் என்பது தெரிகிறது," என்று குள்ள நரி கூறிற்று.
அந்தச் சொற்களைக் குறித்து அரசன் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, குள்ள நரி மேலும் கூறியதாவது ? "பிராணிகளால் குளத்தை வெட்ட முடியுமா? அவைகள் எவ்வாறு மண்ணை அகற்ற முடியும்?" A
குள்ள கரியின் வாதத்தின் விவேகத்தை அரசன் உணர்ந்தான். உடனே, குளம் வெட்டுமிடத்திற்குச் சென்று, அவைகளிடம் அவன் கூறிய த 7 வது : "கேளுங்கள், பிராணிகளே, நீங்கள் எங்கிருந்து வந்தீர் களோ அந்தக் காட்டுக்கு நீங்கள் எல்லாரும் திரும்பிப் போங்கள்."
இந்தச் சொற்களைக் கேட்ட மிருகங்களும், பறவை களும் மட்டற்ற மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்தன. பூமி நடுங்கும்படியாகக் குலைத்துக்கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும் அவை தங்களுடைய இருப்பிடங்களுக்குத் திரும்பின.
அத்தருணம் அரசி அங்கு வந்து, “குளத்தை வெட்டி வேலையை முடித்தாகிவிட்டதா?’ என்று கேட்டாள்.

Page 55
98
அதற்குப் பதிலளிக்கும் வகையில், அரசன் ஒரு பிரம்பை எடுத்துக்கொண்டு, அரசியை கையப் புடைத் தான். "மன்னரே, இனிமேல் நான் தவறு செய்யமாட் டேன்” என்று அவள் கதறினுள்.
அந்த நாளிலிருந்து அரசனுக்கு அமைதி கிடைத்தது. குள்ள கரியை ஒரு விவேகமுள்ள பிராணியாக அவன்
கருதினன்.
கண்ணுடி இளவரசி
ஒரு நாட்டில் உள்ள ஒரு அரசனுக்கு ஏழு புத்திரர்கள் இருந்தார்கள்.
அவர்கள் வளர்ந்தவுடன், அவர்களுக்கு மனைவிக ளாக இருக்கத் தகுந்த ஏழு சகோதரிகளான இளவரசிகள் உள்ள நாட்டைத் தேடத் தூதர்களைத் தகப்பனுராகிய அரசன் அனுப்பினன். மீண்டதூரம் பிரயாணம் செய்த பிறகு ஏழு இளவரசிகள் உள்ள \ நாட்டை அவர்கள் கண்டுபிடித்தார்கள்.
அந்தச் செய்தியைக் கேட்டதும், ஏழு இளவரசர் களின் ஏழு சித்திரங்களைத் தயாரிக்குமாறு அரசன் உத்தரவிட்டான் சித்திரங்கள் தயாரானதும், தன் மந்திரிகள் சிலரைக் கூப்பிட்டு அவர்களிடம் அரசன் கூறியதாவது :
"செய்தி கிடைத்த நாட்டுக்குப் போங்கள். அங்கு ஏழு இளவரசிகள் இருந்தால், அவர்களுடைய உருவப் படங்களுடன் திரும்பி வாருங்கள்.”
அந்த நாட்டுக்கு மந்திரிகள் சென்று, தாங்கள் கேள்விப்பட்டபடியே அங்கிருப்பதைக் கண்டார்கள். அங்கு ஏழு இளவரசிகள் இருந்தார்கள். ஆகவே அந்த மந்திரிகள், இளவரசிகளின் தங்தையாகிய அரசனிடம்

99
சென்ருர்கள். அவர்களுக்குத் தன் அரண்மனையில் இட வசதியும் உணவும் அளித்த பிறகு, "நீங்கள் எங்கே போகிறீர்கள்?’ என்று அரசன் கேட்டான்.
அதற்கு மந்திரிகள் கூறிய பதிலாவது : “உம்மிடம் ஏழு இளவரசிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டோம் எங்களுடைய அரசருக்கு ஏழு இளவரசர்கள் இருப்பதால் அவர்களுடைய உருவப்படங்களைக் கொண்டுவந்திருக் கிருேம்."
அந்தப் படங்களை அரசனும், அவனுடைய ஏழு புதல்விகளும் பார்த்துத் திருப்தி அடைந்தார்கள்.
பிறகு ஏழு இளவரசிகளின் உருவப்படங்களைத் தயாரிக்குமாறு அந்த அரசன் கட்டளையிட்டான். படங்கள் தயாரானதும், திருமணங்களுக்கு நல்லநாளைக் குறிப்பிட்டதும், அந்த மந்திரிகளை அழைத்து அவர்க ளிடம் இளவரசிகளின் படங்களைக் கொடுத்து, அவர்க ளுடைய நாட்டுக்கு அனுப்பினன். ஏழு இளவரசிகளின் படங்களைக் கண்ட அரசனும், அவனுடைய ஏழு புதல்வர் களும் திருப்தி அடைந்தார்கள்.
திருமணத்திற்குப் புறப்பட நல்ல நாள் பார்த் ததும், அரசனும் அரசியும் தங்களுடைய ஏழு புதல்வர் களுடன் புறப்பட ஏற்பாடு செய்தனர். ஆகவே, அந்த நாள் அரசனும் அரசியும் அவர்களுடைய அலங்கரிக்கப் பட்ட யானை மீது அமர்த்தார்கள். இளவரசர்கள் ஒவ் வொருவராகத் தங்களுடைய அலங்கரிக்கப்பட்ட யானைகள் மீதமர்ந்தனர். ஆனல் கடைசி இளவரசன் மட்டும் புறப் படவில்லை.
அவன், யானை மீது ஏறுவதற்குப் பதிலாக, யானை யின் மீதுள்ள அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் தன் வாளை வைத்தான். கைகளைக் கூப்பி, தகப்பனரை வணங்கி,

Page 56
100
அவன் கூறியதாவது : "நான் வரவில்லை. என் வாளை மணக்க இளவரசி சம்மதித்தால் அவளை நான் ஏற்பேன். அதைச் செய்ய அவள் விரும்பாவிடில் போகட்டும்.” இவ் வாறு கடைசி இளவரசன் இல்லாமல் எட்டு யானைகள் பயணமாயின.
மற்ற நாட்டுக்கு வந்த ஆறு இளவரசர்கள், ஆறு இளவரசிகளை மணந்தார்கள். பிறகு இளவரசிகளின் தந்தை, இளவரசர்களின் தங்தையை நோக்கி, "என்னு டைய ஏழாவது இளவரசிக்கு ஏழாவது இளவரசன் எங்கே?' என்று கேட்டார்.
இளவரசர்களின் தங்தை பதிலளித்ததாவது: "அவன் வரவில்லை. தனக்குப் பதிலாகத் தன்வாளே அவன் அனுப்பி யிருக்கிருன். அந்த வாளை இளவரசி மனந்தால், எங்க ளுடன் அவள் வரட்டும். வாளை மணக்க அவள் விரும்பா விடில் அவள் இங்கேயே இருக்கட்டும்.”
இளவரசியின் தந்தை அந்த ஏற்பாட்டை விரும்ப வில்லை. ஆனல் இளவரசி பொருட்படுத்தவில்லை. "நான் மணக்கவேண்டும். செவிட்டு மனிதனையோ அல்லது முட வனையோ அல்லது வாளையோ மணக்கத் தயார். எனக்கு அக்கறையில்லை" என்று அவள் கூறிவிட்டாள். ஆகவே அவளுக்கும் வாளுக்கும், திருமணம் நடைபெற்றது. மற்ற வர்களுடன் அவள், ஏழு இளவரசர்களின் காட்டுக்குப் புறப்பட்டாள்.
அச் சமயம் வீட்டில் தங்கிய இளவரசன், ஒரு கனவு கண்டான் அந்தக் கனவில் ஒரு தெய்வம் தோன்றியது. திரும்பி வரும்போது தன் பெற்றேர்களும் இளவரசர் களும், இளவரசிகளும், ஒரு குளத்தின் வழியாகச் செல் வார்கள் என்றும், அதை ஒரு நாகபாம்பு பாதுகாக் கிறது என்றும், அந்தக் குளத்தில் யாராவது தாகத்தால்

101
தண்ணிர் குடித்தால் பாம்பு மனித பலியைக் கேட்கும் என்றும் தெய்வம் கூறிற்று.
கனவைக் கண்ட இளவரசன், அந்தக் குளத்தைத் தேடிச் சென்ருன். மற்றவர்கள் அவ்வழியில் வருவதற்குச் சற்று முன்பாக அதை அவன் கண்டு பிடித்து, அருகில் ஒளிந்து கொண்டான்.
சடுதியில் அரச குடும்பம் வந்து, குளக்கரையில் தங்கி யது. அவர்கள் அந்த ைேர அருந்தினர்கள். ஆனல் யானைகள் மீதேறும் போது, அருகிலுள்ள ஒரு பாறையி லிருந்து ஒரு நாகபாம்பு வெளிப்பட்டுக் கூறியதாவது, "என் குளத்திலிருந்து நீங்கள் நீர் பருகியிருக்கிறிர்கள். ஆகவே எனக்குப் பலியாக உங்களில் ஒருவரை விட்டுச் செல்லுங்கள். அதைச் செய்யாவிடில், நீங்கள் யாரும் செல்ல அனுமதிக்க மாட்டேன்."
அப்பொழுது மறைவான இடத்திலிருந்து கடைசி இளவரசன் வெளியே வந்து, "நான் பலியாக இங்கிருக் கிறேன். நீங்கள் அனைவரும் புறப்பட்டுச் செல்லுங்கள்' என்று கூறினன். பிறகு, தன் வாளை மணந்து தன் யானைமீது தனியாகப் பிரயாணம் செய்யும் இளவரசியைப் பார்த்து, "கான் வரும் வரை தலைநகரிலுள்ள் என் அரண் மனையில் தங்கு. சேவகர்களை அங்கு விட்டு வந்திருக்கி றேன். உன்னிடம் அவர்கள் சேவகம் செய்பவர்கள். நான் உன்னுடன் இருப்பது போல உண்டு குடித்து மகிழ்ந்திரு”
ஆகவே அரச குடும்பம் தன் வழியே சென்றது. கடைசி இளவரசன் நாகபாம்புடன் தங்கினன்.
அரச குடும்பம் போன பிறகு, "என் தலை மீது ஒரு புண்ணிருக்கிறது. அதைக் குணப்படுத்தினல் மீ விடுதலை பெறுவாய்' என்று இளவரசனிடம் காகபாம்பு கூறிற்று.

Page 57
102
இளவரசன் சம்மதித்து, நாகபாம்புடன் தங்கினன. இளவரசன் சாப்பிடுவதற்கு அங்கு ஏராளமாக உணவிருக் தது. நாளுக்கு இரண்டு தடவைகள் பாம்பின் புண்ணைக் கழுவி மருந்து போட்டான். ஆனல் அது ஆறும் அறி குறியே தென்படவில்லை. f
சில நாட்களுக்குப் பிறகு அந்த நாகப்பாம்பு கூறிய தாவது: “ஒரு நாட்டின். அரசனுக்கு கண்ணுடி இளவரசி என்ற மகள் இருக்கிருள். அவள் எந்த உருவையும் எடுக்கக் கூடியவள். அவள் காற்றிலும் பறப்பாள். அவ ளுக்குத் தெரிந்த மருந்தைத் தன் கையாலே என் புண் மீது அவள் வைத்தால் குணமடையும். என் புண்ணையாற்றக் கூடியது வேறு எதுவுமில்லை. என் புண் ஆறுகிறவரை உனக்கு விடுதலை கிண்டக்காது."
"சரி. நான் போய், உன் புண்ணை ஆற்றக் கூடிய இளவரசியை அழைத்து வருகிறேன்." என்று இளவரசன் சொன்னன்.
ஆகவே கண்ணுடி இளவரசியின் நகருக்கு அவன் புறப்பட்டான்.
சிறிது தூரம் சென்றதும், ஒரு ஆற்றுக்கு வந்தான். அந்த ஆற்றை அவன் பார்த்தபோது, அதில் பல எலிகள் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டான். அப்பொழுது அவன் செய்தது என்ன? உடனே அவன் ஆற்றில் குதித்து எல்லா எலிகளையும் காப்பாற்றிக் கரையில் சேர்த்தான்.
பிறகு அந்த எலிகள் அவனிடம் கூறியதாவது "தலை சிறந்த அரசனே, எப்பொழுதாவது உதவி தேவைப்பட் டால் எங்களை நினைததுக் கொள்ளுங்கள். உடனே உங்க ளுக்கு உதவி செய்ய வந்து விடுவோம்.'
இளவரசன் எலிகளுக்கு நன்றி செலுத்திவிட்டு கண்ணுடி இளவரசியின் நகரத்திற்குச் சென்ருன்.

103
கடைசியில் அவன் அந்த நகரை அடைந்தான். தங்கு வதற்காக ஒரு இடத்தைத் தேடினன். ஒரு வயதான வித வையின் வீட்டைக் கண்டுபிடித்து, "தாயே, உன் வீட்டில் நான் தங்குவதற்கு இடம் கொடுப்பாயா?"என்று அவளைக் கேட்டான்.
"சரி. நீ இங்குத் தங்கலாம். நான் இங்குத் தனியாகய தான் வாழ்கிறேன். நீ இங்குத் தங்கினல் எனக்கும் நன்மையா யிருக்கும்' என்ருள்.
பிறகு தனக்குச் சிறிது சோறு சமைக்குமாறு கிழவியை அவன் கேட்டுக் கொண்டான். "அதற்கு உனக்குப் பணம் கொடுக்கிறேன்" என்று அவன் கூறினன். அவள் அவ னுக்கு சிறிது அரிசி சமைத்தாள். அவன் சாப்பிட்டபிறகு "இந்த ஊரில் ஏதாவது விசேஷம் உண்டா" என்று
கேட்டான்
"மகனே, மற்ற நகரங்களைப் போலத் தான் இந்த நகரிலும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனல் இங்கு ஒரு விசேஷச்செய்தி உண்டு. அது என்ன என்று நீ கேட் பாய். அதுதான், இந்த நகரின் அரசனின் புதல்வி இன்னும் மணமாகாமல் இருப்பது. அவள் எந்த உருவத் தையும் தரிக்கக் கூடியவள். காற்றில் அவளால் பறக்க இயலும். அவள் ஒப்பற்ற அழகியாக இருப்பதால், ஒவ் வொருவரும் அவளைப் பற்றியே பேசுகின்றனர். அவளை மணந்து கொள்ள வந்த இளவரசர்கள் அநேகம் பேர்கள். அரசனிடம் வந்ததும், ஒவ்வொருவரையும் தனித் தனியாக "நீ ஏன் வந்திருக்கிருய்?" என்று அரசன் கேட்டதும், "கண்ணடி இளவரசியை மணந்து கொள்ள வந்திருக்கி ருேம்” என்று பதிலளிப்பார்கள். உடனே ஒரு பெரிய கொப்பரையில் நீர்காய்ச்சும்படி அரசன் உத்தரவிடுவான். ர்ே கொதிக்கும் போது ஒவ்வொருவரையும் அதில் குளிக்கச் சொல்வான். பிறகு அரண்மனைக்கு முன்னல் உள்ள ஒரு

Page 58
104
பெரிய இரும்பு மரத்தை இரண்டாகப் பிளக்கும்படி அவர் களிடம் அரசன் கூறுவான். கண்ணுடி இளவரசியை மணந்துகொள்ள வருபவன் இந்த இரு பணிகளைச் செய் யத் தவறினல் சிரச்சேதம் செய்யப்படுவான்."
"தாயே, கண்ணுடி இளவரசியை யாரும் அணுக முடியாதா?’ என்று இளவரசன் கேட்டான்.
"முடியாது, மகனே. கண்ணுடி இளவரசி இருக்கு மிடத்திற்கு ஒரு பறவைகூடப் பறந்து செல்ல இயலாது." "தாயே, அவளை ஏன் கண்ணுடி இளவரசி என்று அழைக்கிருர்கள்?"
"அவள் தாங்கும் படுக்கை, கண்ணுடிப் படுக்கை. அவளுடைய படுக்கையைச் சுற்றிலும் கண்ணுடி இருப்ப, தால், அவளைக் காற்றுகூட அணுக முடியாது. அதனல் தான் அவளைக் கண்ணுடி இளவரசி என்றழைக்கிருர்கள்.' "தாயே, இரவில் எப்பொழுது அவள் அரிசிச் சோறு சாப்பிடுகிருள்?” *
"மகனே, இளவரசி தனியாகத் தூங்கும் மேல் மாடிக்குக் குளிக்கத் தண்ணிரும், உண்ண அரிசிச் சோறும் மாலை நேரத்தில் கொண்டு போய், அங்கு வைக்கிருர்கள். மாலைத் தூக்கத்திலிருந்து சுமார் எட்டு மணிக்கு அவள் விழித்தெழுந்து, குளித்து விட்டு, அரிசிச் சோற்றை உண்கிருள்',
அப்பொழுது தூங்கும் நேரம். கிழவியிடம் ஒரு பாயைக் கேட்டு வாங்கிக்கொண்டான். அந்த வீட்டின் திறந்த தாழ்வாரத்துக்கு அதை எடுத்துச் சென்று, அதை அங்கு விரித்து, அதன் மீது படுத்துக் கொண்டான். பாய் மீது படுத்துக்கொண்டு, கண்ணுடி இளவரசி குறித்துக் கிழவி கூறியவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்தான். பிறகு மெளனமாகக் கடவுளைப் பிரார்த்தித்தான், "ஆண்

ஒரு சிங்களக் குடும்பம் ‘ரபான" என்ற திறந்த
தட்டையான ஒரு பறையைத் தட்டி விளையாடும் காட்சி
From a painting by David paynter

Page 59
கண்டியச் சீமாட்டி
 

105
டவனே. இளவரசி வசிக்கும் இடத்திற்கு நான் செல்ல உதவி செய்.” தன் உதவிக்கு, தான் முன்பு காப்பாற்றிய எலிகள் வருமா என்று எண்ணியவாறு அவன் தூங்கி விட்டான்,
உடனே அவனுடைய எண்ணங்களை எலிகள் உணர்க் தன. ஆயிரக் கணக்கான எலிகளைச் சேர்த்துக் கொண்டு அவை அவனிடம் வந்தன. அவன் தூங்குவதைக் கண்டு, அவன் விழிப்பதற்காக அவை காத்து கின்றன. அவன் விழிப்படைந்ததும், ஆயிரக்கணக்கான எலிகளைக் கண்
TGÖT,
"மாட்சிமை தங்கியவரே, உமக்கு நாங்கள் என்ன உதவி செய்யவேண்டும்” என்று எலிகள் கேட்டன.
"ஒரு மனிதன் நிமிர்ந்து நடக்கும்படியான அகலமும் உயரமும் உள்ள ஒரு பாதாளசுரங்கத்தை நீங்கள் வெட்ட வேண்டும். அந்தச் சுரங்கம், கண்ணுடி இளவரசி உள்ள இடத்திற்குச் செல்ல வேண்டும்; ஆனல் மறு பக்கத்தி லுள்ள திறப்பைகி துளை செய்ய வேண்டாம். இதற்காகத் தான் உங்களை நினைத்தேன்." 1
அவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற எலிகள் புறப்பட்டுச் சென்றன. தோண்டித் தோண்டி, விடிவதற் குள் அந்த வேலையைச் செய்து முடித்தன. இளவரசனிடம் அவை வந்து அந்தச் செய்தியைத் தெரிவித்தன. அவை களுக்கு அவன் கன்றி செலுத்தினன். அவைகள் புறப் பட்டுப் போயின.
விடிந்த பிறகு அவன் விழித்தெழுந்து, பாயைச் சுருட் டிக் கிழவியிடம் கொடுத்தான். அவளிடம் ஒரு மசுரம் (பொற்காசு) கொடுத்து, உணவுக்குத் தேவையான பொருட்களை வாங்கும்படிச் சொன்னன். "சிக்கிரமாக எனக்குச் சமைத்துப் போடு. இன்று நான் போய் இன்
?

Page 60
106
ணுெரு பொற்காசு சம்பாதித்து வருகிறேன்” என்று அவளிடம் அவன் சொன்னன்.
அவள் சமையலைத் தயாரித்ததும், அதை அவன் உண்டுவிட்டு, வெளியே சென்று, நகரைச் சுற்றிப் பார்த் தான். -
இரவு வந்ததும் அவன் சுரங்கத்தில் நுழைந்து அதன் வழியாகச் சென்ருன். சுரங்கத்தின் முடிவில் உள்ள பல கையை அவசரமாக அவன் நீக்கியதும், கண்ணுடி இளவர சியின் அறையிலேயே கின்ருன். அவளை ஒரு பார்வை பார்த்தவுடன், தன் கண்களே வேறு பக்கம் திருப்பினன். தன் கண்ணுடிப் படுக்கைமீது அவள் தூங்கிக் கொண் டிருந்தாள். அவள் அருகில் ஒரு விளக்கு எரிந்து கொண் டிருந்தது.
பிறகு, ஓசையில்லாமல் குளிக்கும் தண்ணிரில் சவுக் காரத்தைக் கலந்து அதில் குளித்தான். இளவரசிக்காக வைக்கப்பட்டிருந்த உணவில் பாதியை உண்டான். உண வுக்குப் பிறகு, இளவரசியின் வெற்றிலைப் பெட்டியி லிருந்து வாய் நிறைய வெற்றிலைகளை அவன் போட்டுக் கொண்டான். சீக்கிரமாகச் சுரங்கத்திற்குச் சென்று திறப்பை மூடிவிட்டுப் போனன்.
வழக்கமான நேரத்தில் விழித்தெழுந்த இளவரசி, தன்னுடைய குளிப்பு ைேர யாரோ உபயோகித்து விட்டதை அறிந்தாள். பிறகு உணவு உள்ள மேஜை யைப் பார்த்தாள். பாதி அரிசிச் சோறு சாப்பிடப்பட்டு விட்டதைக் கண்டாள்.
அவள் வருந்தினுள். திரும்பவும் அவள் படுக்கைக்குச் சென்று அதில் படுத்தாள். பிறகு அவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டதாவது: "என்னை விடச் சாமர்த்திய சாலி இதைச் செய்திருக்கிருன். ஏனென்ருல் ஒரு தேவனைத்

107
தவிர வேறு யாரும் இந்த அறையில் நுழைய முடியாது. இந்தத் திருடனை நான் நாளைக்குப் பிடிக்க வேண்டும்." அவள் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தாள்.
இளவரசன் கிழவி வீட்டுக்குத் திரும்பப் போய், வழக்கமான இடத்தில் படுத்துறங்கினன். அடுத்த நாள் காலையில் அவன் வழித்தெழுந்து கிழவி கொடுத்த உண வைச் சாப்பிட்டான். சிறிது நேரம் நகரத்தைச் சுற்றி கடந்த பிறகு சுரங்கத்திற்குச் சென்ருன். இருட்டும் வரை அங்கிருந்தான். இருட்டியவுடன் முன்பு செய்ததைப் போல் அவன் இளவரசியின் அறையில் நுழைந்து, அவளு டைய குளிப்பு நீரில் குளித்து, அரிசிச் சோற்றில் பாதி யைத் தின்றுவிட்டுச் சென்ருன். அன்று இரவும் இளவரசி ஆழ்ந்த தூக்கத்திலிருந்தாள்.
மூன்ருவது இரவிலும் அவன் அதைச் செய்தான். இளவரசி விழிக்கும் முன்பே தப்பி விட்டான்.
நான்காவது நாள் மாலையில், சாமர்த்தியமான திருடனை எப்படியும் பிடித்துவிட இளவரசி உறுதி கொண்டாள். ஆகவே அவள் செய்தது என்ன? தன் விரஅல அவள் ஊசியால் குத்தினுள். அதைவலிக்கும்படி செய்வ தற்காகப் புண் மீது எலுமிச்சம்பழ ரசத்தைத் தடவினுள். புண் வலிப்பதும், வலியைத் தணிப்பதற்காக வாயால் அதன் மீது ஊதுவதுமாக அவள் விழித்திருந்தாள். ஆனல் தாங்குவதுபோல நடித்துப் படுக்கையின் மீது அவள் படுத்திருந்தாள். அவளுடைய கையில் ஒரு வாள் இருந்தது, R
முக்திய நாட்களைப்போல அதே நேரத்தில் இளவரசி யின் அறையில் இளவரசன் நுழைந்தான். அவன் நுழை யும் ஓசையைக் கேட்டதும் தன் கண்களை அவள் சிறிது திறந்தாள், தான் கண்டது ஓர் அழகிய இளவரசனுக

Page 61
108
இருக்கவே, தன் கண்களை மீண்டும் மூடிக்கொண்டு தூங்குவதுபோல நடித்தாள்.
அதிசயமாக, அன்றிரவு இளவரசி தூங்காமல் விழித் திருக்கிருள் என்று இளவரசனிடம் ஏதோ சொல்லிற்று. ஆனல் அவள் தூங்குவது போலத்தான் நினைப்பதாகவே அவன் 15டித்து, வழக்கம் போலக்குளித்து, அவளுடைய அரிசிச் சோற்றை உண்ண உட்கார்ந்தான்.
அவன் சாப்பிடும்போது, படுக்கையிலிருந்து இளவரசி எழுந்து, கையில் கத்தியுடன் அவனை நோக்கி வந்தாள். "நீயார்? என்று அவனை அவள் கேட்டாள். "யோர்?" என்று அவன் பதிலுக்குக் கேட்டான், "நான் கண்ணுடி இளவரசி," "நான் ஒரு காட்டு அரசனின் கடைசி மகன்."
அதற்குப் பிறகு இளவரசியின் போக்கு நட்புடனிருக் தது. மேஜையில் அவளும் உட்கார்ந்தாள். சோற்றை இரு வரும் சாப்பிட்டார்கள். அவர்கள் சிறிது நேரம் பேசிய பிற்கு "நீ ஏன் இங்கு வந்தாய்?’ என்று அவனை அவள் கேட்டாள்.
"ஒரே ஒரு காரணத்திற்காக இங்கு வந்திருக்கிறேன் அதாவது உன்னை என்னுடன் அழைத்துச் செல்வதற். காக,” என்று இளவரசன் பதிலளித்தான்.
அந்தத் துணிச்சலான பதிலைக் கேட்டு இளவரசி மகிழ்ந்தாள். ஆனல் அவள், அவனிடம் கூறியதாவது: "நாம் ரகசியமாகப் போவது சரியாகாது. இந்த வைர மோதிரத்தையும், இந்தக் கூந்தல் குஞ்சத்தையும் எடுத்துக் கொள், நாளைக்கு என் தந்தையாகிய அரசனிடம் சென்று, "உன் மகளை மணக்க வந்திருக்கிறேன்" என்று கூறு, "அப்படியா' என்று சொல்லி, கொதிக்கும் நீருள்ள

109
கொப்பரையை அவர் காட்டி, அதில் குளிக்கச் சொல்வார். பிறகு இரும்பு மரத்தைக் காட்டி, அதை இரண்டாக அறுக்கச் சொல்வார். இந்த மோதிரத்தை நீரில் போட்டுக் குளித்தால், நீர் குளிர்ந்துவிடும், இரும்பு மரத்திற்குச் சென்று அதன் குறுக்கே இந்தக் கூந்தலை இழுத்தால் அது இரண்டாகப் பிளக்கப்படும். அதற்குப் பிறகு நாம் மணந்துகொண்டு, உமது 15கரத்திற்குச் செல்லலாம்."
ஆகவே மோதிரத்தையும், அவளுடைய கூந்தல் குஞ் சத்தையும் எடுத்துக்கொண்டு, அவளுடைய சொற்படி கடப்பதாக உறுதிமொழி கூறி இளவரசன் அவளைவிட்டுச் சென்ருன்.
அடுத்த நாள் காலையில் அவன் அரசனிடம் சென்று, தன் விஜயத்தின் நோக்கத்தை வெளியிட்டான். அதன் பேரில் அவனுக்கு அரசன் அந்த இரு பணிகளைக் கொடுத் தான். ஏனைய இளவரசர்கள் ஏற்கனவே தோற்றதைப் போலவே அவனும் தோற்பான் என்று அரசன் நினைத் தான். ஆனல் ஒவ்வொருவரும் வியக்கும்படி, கொதிக்கும் ருேள்ள கொப்பரையில் அவன் குளித்துவிட்டு எவ்விதக் காயமுமின்றி வெளியே வந்தான். பிறகு இரும்பு மரத் தைப் பாதியாக அறுத்தான்.
அரசன் மிகவும் மகிழ்ந்தான். இளவரசனும், இளவரசி யும் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற பிரகடனத் தையும் அரசன் வெளியிட்டான். அதற்காகத் தெரிக் தெடுக்கப்பட்ட சுபதினத்தில் அவர்களுடைய திருமணம் அதிவிமரிசையாகவும், திருவிழாப் போலவும் நடத்தப் ll-l-gilt
கல்யாணக் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு இள வரசனை அரசன் அழைத்து, அவனிடம் கூறியதாவது: "நீ இங்கு வசிக்க விரும்பினுல் அப்படியே செய். உனக்கும்

Page 62
110
இளவரசிக்கும் ஒரு அரண்மனை கொடுக்கப்படும். அல்லது உன் நாட்டுக்குப் போகவிரும்பினுல், இளவரசியை அழைத் துச் சென்று சந்தோஷமாக இரு.”
அவன் போக விரும்பினன். ஆகவே இளவரசியை அழைத்துக்கொண்டு அந்த நகரத்திலிருந்து புறப்பட் டான். நாகப்பாம்புக்கு அவன் கொடுத்த உறுதிமொழியை சிறைவேற்ற அவர்கள் சென்றனர்.
காகபாம்பு அந்தப் புண்ணினுல் மிகவும் வேதனைப் பட்டது. ஆனல் அதன் மீது கண்ணுடி இளவரசி மருங் தைத் தடவியதும் புண் குணமடைந்துவிட்டது. நாக பாம்புக்கு மட்டற்ற மசிழ்ச்சி ஏற்பட்டது. ஒளித்துவைக் கப்பட்டிருந்த தங்கம், வெள்ளி, முத்துக்கள், வைரக்கற் கள் உள்ள புதையலைக் கொண்டுவந்து அவர்களுக்கு அது பரிசளித்தது. /
நாகபாம்பிற்கு வந்தனம் கூறி அதனிடமிருந்து அவர்கள் விடைபெற்று, இளவரசன் நாட்டிற்குச் சென்ற னர். தன் நகரத்தை அடைந்து, தன் தகப்பனரிடம் தனக்கு கோந்தவற்றை எல்லாம் அவன் கூறியதும், அங் தத் தந்தை ஆனந்தமடைந்தார். இளவசரனின் முதல் மனைவியும், கண்ணுடி இளவரசியும் நண்பர்களாயினர்.
கண்ணுடி இளவரசியையும், தங்களுடைய மனைவி களையும் மூத்தவர்களான ஆறு இளவரசர்கள் ஒப்பிட்டுப் பார்த்தபோது, கண்ணுடி இளவரசியே மிக்க அழகி என்பதைக் கண்டனர். அதனல் கடைசி இளவரசன் மீது அவர்கள் பொருமை கொண்டனர். ஆகவே அவர்கள் ஒன்முகக் கூடிச் சதியாலோசனை செய்து, இளவரசனைக் கொன்று, கண்ணுடி இளவரசியை அப கரிக்க விரும்பினர். ஆனல் அவர்களுடைய எண்ணத் தைக் கண்ணுடி இளவரசியால் அறிய முடிந்தது. அந்த

111
அபாயத்தைக் குறித்து இளவரசனை அவள் எச்சரித்த போது, அவளும், அவனும், மற்ற இளவரசியும் ஆகிய மூன்று பேர்களும் அந்த நகரத்தை விட்டு வெளியேறி வேறு நாட்டிற்குச் சென்றனர்.
ஒரு காட்டின் வழியாக அவர்கள் சென்றுகொண் டிருந்தபோது ஒரு வேட அரசன் (காட்டு மக்களின் அர சன்), கண்ணுடி இளவரசியைக் கண்டான். அவளை அடைய விரும்பினன். ஆகவே அவர்கள் மூவரையும் பிடித்து, ஒரு வீட்டில் அடைத்தான். இளவரசனைக் கொல்ல அவன் எண்ணியிருந்தான்.
இந்தத் திட்டத்தைக் கண்ணுடி இளவரசி அறிக் தாள். ஆகவே அவள் ஒரு குதிரையாக மாறி, தன் முதுகின் மீது இளவரசனை ஏற்றிக்கொண்டு, தன் வாலைப் பிடித்துத் தொங்குமாறு மற்ற இளவரசியிடம் கூறிவிட்டு ஆகாயத்தில் பறந்தாள். அவர்கள் வேறு நாட்டிற்கு வந்தார்கள். அங்குக் கண்ணுடி இளவரசி தன் சுய உரு வத்தைப் ப்ெற்ருள்.
அந்தப் புதிய நகரில் அவர்கள் நிலத்தை வாங்கி, கூலியாட்களின் உதவியால் கெல் பயிரிட்டு, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். சில வருடங்களுக்குப் பிறரு, அந்த நகரத்து அரசன் வாரிசில்லாமல் இறந்தான்.
ஆகவே அவனுடைய மந்திரிகள், பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து, ஒரு புதிய அரசனைத் தேடப் புறப் பட்டார்கள். அவர்களுடைய பாதை, இளவரசன் வாழு மிடத்தின் வழியாகச் சென்றது. அங்குப் பட்டத்து யானை வந்ததும், அது இளவரசனிடம் சென்று அவன் முன்னல் மண்டியிட்டது. அதைக் கண்டதும் மக்திரிகளும் அரச சபையினரும் முழந்தாளிட்டு அவனுக்கு மரியாதை செய் தார்கள். பிறகு இளவரசனையும், இரு இளவரசிகளேயும் யானையின் முதுகின் மீது வைத்து அரண்மனைக்கு

Page 63
112
அழைத்துச் சென்றர்கள். அவன் அரசனுக முடிசூட்டப் பட்டான்.
அங்கு அவன் விவேகமாக ஆட்சி புரிந்து ம்கிழ்ந்திருக் தான். அச்சமயம் அவனுடைய தந்தையின் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டதால். மக்கள் வேறு நாடுகளுக்கு ஓடி விட்டாாகள். பஞ்சம் அதிகரிக்கவே அரசனும், அரசியும், அவர்களுடைய ஆறு புதல்வர்களும், இளவரசிகளும் கூட நாட்டிலிருந்து வெளியேறிச் சுற்றித் திரிந்தார்கள். இவ் வாறு அவர்கள் பிரயாணம் செய்யும்போது, கடைசி இள வரசன் ஆளும் காட்டிற்கு வந்தார்கள். அங்கு ஒரு வீட்டில் தங்கி, வாழ்க்கை வருமானத்திற்காக விறகு விற்க ஆரம்பித்தார்கள்.
ஒருநாள் அரசன் தன் பெற்ருேர்களை அடையாளம் கண்டுகொண்டான். அவர்களைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று, எவ்வாறு தன் சகோதரர்கள் தன் னைக் கொல்லச் சதி செய்தார்கள் என்பதையும், எவ்வாறு அவன் தப்பினுன் என்பதையும் கூறினன். வேட அரச னிடமிருந்து தப்பித்தது, விவசாயியாக வாழ்க்கை கடத் தியது, அரசனுக முடிசூட்டப்பட்டது ஆகிய நிகழ்ச்சிகளே அவர்களிடம் அவன் விவரித்துச் சொன்னன். அரண் மனையில் தன்னுடனும் தன் இரு இராணிகளுடனும் வசிக்குமாறும் தன் பெற்றேர்களை அவன் வேண்டினன்.
அண்ணன்மார்களுக்குத் தான் கெல் பயிரிட்ட நிலத் தைக் கொடுத்து, அங்கு அவுர்களுடைய மனைவியருடன் சென்று வாழுமாறு கூறினன். "நீங்கள் என்னைக் கொல்ல முயன்றதால்தான் இந்த துரதிர்ஷ்டம் உங்களுக்கு நேர்க் துள்ளது” என்று அண்ணன்மார்களிடம் அவன் கூறினன். ஆகவே அவர்கள் விவசாயிகளானர்கள்.

113
அவனும், கண்ணுடி இளவரசியும், வாளை மணந்த இளவரசியும், அவனுடைய பெற்றேர்களும் ஒன்ருக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.
t
பொன் மரமும், வெள்ளி மலரும், வெள்ளிச் சேவலும்
ஒரு நாட்டில் ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு மூன்று புதல்வர்கள் இருந்தார்கள். ஓரிரவு அரசன் தூங்கும்போது ஒரு கனவு கண்டான். ஒரு பொன்மரம் தோன்றி, அதில் ஒரு வெள்ளிமலர் பூத்து வெள்ளிமலர் மீது ஒரு வெள்ளிச்சேவல் நின்று கூவியதாகக் கனவு கண்டான்.
அடுத்த நாள் காலையில் தன் மூன்று இளவரசர் களையும் அழைத்தான். பெரியவனைப் பார்த்து, "மகனே, நான் கண்ட இந்தக் கனவின் பொருள் என்ன?" என்று அரசன் கேட்டான். "தந்தையே, நீங்கள் என்ன கனவு கண்டீர்கள்?’ என்று அவன் கேட்டான்.
"ஒரு பொன்மரம் தோன்றிற்று. அதில் ஒரு வெள்ளி மலர் பூத்தது. அதன்மீது ஒரு வெள்ளிச்சேவல் நின்று கூவிற்று.’
"தந்தையே. அதன் பொருள் எனக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் என் தம்பிகளுக்குத் தெரிந்திருக்கலாம்.”
தன் இரண்டாவது மகனைப் பார்த்து அந்தக் கனவை அரசன் கூறினன். ஆனல் அந்த மகனலும் தகுந்த விளக்கம் கூற இயலவில்லை.
இறுதியில் இளைய மகனை அரசன் கேட்டான். அவன் கூறியதாவது : “அரசரே, அந்தக் கனவின் பொருளை நான் கூற இயலும். ஆனல் முதலில் நான் பிரயாணம் செய்யவேண்டும்.

Page 64
114
ஆகவே மூன்று இளவரசர்களும் மூன்று வருடகாலம் பிரயாணம் செய்ய அரசனின் அனுமதியைப் பெற்ருர்கள். ஒரு பொட்டலம் அரிசிச்சோற்றை எடுத்துக்கொண்டு அவர்கள் புறப்பட்டார்கள். சிறிது தூரம் சென்றதும். மூன்று சாலைகள் சக்திக்குமிடத்தை அடைந்தார்கள், அங்குச் சாலையோரத்தில் அவர்கள் அமர்ந்து சோற்றைச் சாப்பிட்டார்கள். பிறகு மூத்த இளவரசன் கூறியதா வது : "நான் இந்தச் சாலையில் செல்கிறேன். நீ அந்தச் சாலையில் போ. நீ மூன்ருவது சாலையில் செல்.’
ஆகவே அவர்கள் பிரிந்து, வெவ்வேறு சாலைகளில் சென்ருர்கள்.”
கடைசி இளவரசன் நீண்ட தூரம் கடந்து சென்ற பிறகு, ஒரு கிழ விதவையின் வீட்டை அடைந்தான். அவனைக் கண்டவுடனே, "ஐயோ. மகனே, இந்த நகரத் திற்கு ஏன் வந்தாய்? சமையல் செய்ய இங்கு எங்களுக்கு விறகு கூடக் கிடைப்பதில்லை” என்று அவள் கூறினுள்.
"ஏன்? என்ன காரணம், தாயே?’ என்று இளவரசன் கேட்டான்.
"நாங்கள் விறகு எடுத்து வந்த காட்டில் ஒரு யக்ஷன் (மனிதனைத் தின்னும் அரக்கன்) இருக்கிருன். இந்த ககர மக்களில் பெரும்பாலானவர்களை அவன் தின்றுவிட் டான். இப்பொழுது ஒரு சிலர்தான் மிஞ்சியிருக்கிருர்கள் 'தன் இரையை யக்ஷன் எவ்வாறு பிடிக்கிருன்?” என்று அவளை அவன் கேட்டான். w
"அவர்கள் காட்டுக்குப் போய், விறகு வெட்ட ஆரம் பிக்கும்போது, ஹ" என்று பலமாகக் கூச்சல் போட்டுக் கொண்டு அவர்களை நோக்கி அவன் ஓடிவருவான். அவர் கள்மீது பாய்ந்து பிடித்துத் தின்பான்.”
இளவரசன் பதில் கூறவில்லை; ஆனல் தன் வாளே எடுத்துக்கொண்டு காட்டுக்குப் போனன். அங்கு ஒரு

115
மரத்துண்டை எடுத்து அதைப் பிளக்கத் துவங்கினன். அதைச் செய்ய அவன் ஆரம்பித்த உடனேயே ஹ" என்று கூச்சலிட்டுக்கொண்டு யக்ஷன், அவனை நோக்கி ஓடிவக் தான். ஆனல் இளவரசன் அஞ்சாமல், தாக்குதலை எதிர் பார்த்து நின்றன். அவன்மீது யக்ஷன் பாய்ந்தபோது, தன் கத்தியால் இளவரசன், யக்ஷனை வெட்டிக் கொன்ருன் பிறகு அவன் அமைதியாக ஒரு கட்டு விறகைச் சேகரித்து, அதை விதவையின் வீட்டுக்கு எடுத்துச் சென்றன்.
விதவை, தன் கண்களை நம்ப முடியவில்லை.
"மகனே, யக்ஷனை நீ சந்திக்கவில்லயா?
"ஆமாம்,'தாயே யக்ஷனை சக்தித்ததுடன், அவனைக் கொல்லவும் செய்தேன்."
அந்தச் செய்தியைக் கேட்டு அவள் மகிழ்ந்தாள். அவன் கொண்டுவந்த விறகை உபயோகித்து உணவு சமைத்தாள்.
அடுத்த நாள், அக்காட்டு மன்னன் அதே காட்டுக்குச் சென்றன். யக்ஷன் வருவான் என்று நினைத்தான். அவனைச் சந்தித்தால் உயிர் போகுமே என்று பயந்தான். ஆனல் யக்ஷனின் கூக்குரலைக் கேட்காததால் மன்னனின் அச்சம் தணிந்தது. ஆகவே அவன் காட்டைச் சுற்றிப் பார்த்தபோது, மாண்டுகிடந்த யக்ஷ னைக் கண்டான்.
"யக்ஷனேக் கொன்ற வீரனை நான் கண்டுபிடிக்க வேண்டும்” என்று மன்னன் தனக்குள் கூறிக்கொண்டு, நகரத்திற்குத் திரும்பினுன். பிறகு பறையறைந்து வீரனைக் கண்டுபிடிக்கும்படி மன்னன் உத்த்ரவிட்டான்.
பறையறைபவர்களையும் அவர்களுடைய அறிவிப்பை யும் கேட்ட விதவை, இளவரசனைக் கூப்பிட்டு அவனே மன்னனிடம் அழைத்துச் சென்ருள்.

Page 65
116
* யக்ஷனை எவ்வாறு கொன்ருய்?’ என்று மன்னன் கேட்டான்.
எவ்வாறு யக்ஷனை அவன் கொன்ருன் என்பதை இளவரசன் விவரித்துக் கூறினன். மன்னன் களிப் படைந்து, தன் ராஜ்யத்தின் ஒரு பகுதியையும், ஒரு யானை சுமக்கும் அளவுக்குச் செல்வமும் இளவரசனுக்களித்தான்.
அந்த வெகுமதிகளை வந்தனத்துடன் இளவரசன் ஏற் முன். ஆனல் அவற்றைக் கிழவிதவைக்குக் கொடுத்து விட்டுத் தன் வழியே சென்ருன். பல நாட்கள் பிரயாணம் செய்த பிறகு மற்ருெரு நாட்டின் நகரத்திற்கு வந்தான். அங்கும் ஒரு கிழவிதவையின் வீட்டைத் தேடிப்பிடித்து, "தாயே இன்றிரவு எனக்கு ஓய்வும் உறைவிடமும் அளிப் பீர்களா?” என்று இளவரசன் கேட்டான்.
'நீ தங்க இடம் கொடுக்கத் தயார். ஆனல் நீ தூங்கு வதற்கு இங்கு இடமில்லை. நீ தாழ்வாரத்தில் தூங்கமுடி யாது. ஏனென்ருல் இரவில் ஒரு விசித்திர ஒளி தாழ்வாரத் தின்மீது விழுகிறது. அந்த ஒளியைக்காண்பவன் சாகிருன். அந்த ஒளியைப் பார்த்த எவரும் வாழ முடியாது. அது ஒரு பெரிய ஆபத்தாக இருப்பதால், அதற்கு எவராவது முடிவு கட்டினல் அவருக்கு ராஜ்யத்தின் ஒரு பகுதியும், யானை பாரம் செல்வங்களும் பரிசளிக்கப்படும் என்று மன்னன் அறிவித்திருக்கிருன்."
"தாயே, அந்த ஒளி எங்கிருந்து வருகிறது?"
"நகரின் மையத்திலுள்ள ஒரு புல் தரையிலிருந்து.'
"இன்றிரவு நான் அங்கிருந்து, அதைத் தடுப்பேன் நீ அரசனிடம் சென்று, அந்த இடத்தில் ஒரு உயர்ந்த மேடையைக் கட்டும்படியும், அங்கு சாணம் பூசப்பட்ட ஒரு புடைக்கும் தட்டையான கூடையையும் ஒரு பெரிய

11?
தண்ணீர்ப் பானையயுைம் வைக்கும்படி சொல்லவும்,” என்று கிழவியிடம் இளவரசன் கூறினன். *
அந்தச் செய்தியை அரசனிடம் அவள் அறிவித்தாள். அதன்படி ஒரு மேடையைக் கட்டவும், அங்கு ஒரு கூடை. ஒரு தண்ணீர்ப் பானை ஆகியவற்றை வைக்கவும் அரசன் கட்டளையிட்டான்.
மாலை ஆகாரத்தை உண்ட பிறகு, இளவரசன் புல் தரைக்குச் சென்று, மேடைமீது காவல் காத்து நின்றன். நேரம் சென்று, நள்ளிரவாகியதும் நகரம் முழுவதும் நிசப் தமாக இருந்தது. மக்கள் வீட்டுக்குள் பதுங்கிக்கொண் டார்கள். இளவரசன் மட்டும் வெளியில் இருந்தான். சடுதி யில், அவன் நின்ற மேடைக் கருகில் ஒரு ஒளி தோன்றி யது. அந்த ஒளியைப் பார்க்கக்கூடாது என்ற எச்சரிக் கையை மதிக்காமல், அந்தத் திசையில் தைரியமாக இள வரசன் பார்த்தான். ஆகா, அங்கிருந்தது நாகலோகத்தின் காகராஜன்! தன் த்ொண்டையில் வைத்துள்ள மாணிக் கத்தை நாக பாம்புகளின் அரசன் கக்கி, அதன் வெளிச் சத்தில் இரையை நாடிச் சென்று கொண்டிருந்தான்.
இளவரசன் கீழிறங்கி, சடுதியில் மாணிக்கத்தைக் கூடையால் மூடினன். சாணம் பூசப்பட்டதால் கூடையில் சந்துக்கள் இருக்கவில்லை. ஆகவே மாணிக்கத்தின் வெளிச் சம் முற்றிலும் மறைக்கப்பட்டு விட்டது. கூடைக்கு அரு கில் இருந்த பெரிய தண்ணிர்ப்பானை, இருட்டில் மனிதனைப் போலத் தோன்றியது. ஒளியில்லாமல் நாகராஜனல் பார்க்க முடியாது. தண்ணீர்ப் பானையை மனிதன் என்று தவருக கினைத்து அதன்மீது ஆத்திரத்துடன் அது பாய்க் தது. பானைக்குப் பக்கத்தில் நின்ற இளவரசன், நாகராஜ னின் தலையைத் துண்டித்தான். பிறகு மாணிக்கத்தை எடுத்து, பானையில் இருந்த தண்ணிரைக் கொண்டு அதைக்

Page 66
118
கழுவி, தன் இடுப்புத் துணியில் செருகிக்கொண்டான். பிறகுமேடைமீது படுத்து உறங்கினன். -
பொழுது விடிந்ததும், என்ன கடந்தது என்பதைக் காண அரசனும் அவனுடைய தோழர்களும் அங்கு வங் தார்கள். செத்த 5ாகபாம்பை அரசன் கண்டான். ஆனல் பாம்புக்கும், அபாயகரமான ஒளிக்கும் உள்ள சம்பந்தம் அவனுக்குத் தெரியாது. ஆகவே இளவரசன் பக்கம் திரும்பி, "ஒளிக்கு முடிவு கட்டிவிட்டாயா?" என்று மன்னன் கேட்டான்.
"அதோ பாரும்” என்று செத்த பாம்பை அவன் காட் டினன். “அதுதான் ஒளியை வைத்திருந்தது."
சாவு-ஒளி ஒழிக்கப்பட்டதால் அரசன் மகிழ்ந்தான். தன் உறுதிமொழியின்படி இளவரசனுக்குத் தன் ராஜ்யத் தின் ஒரு பகுதியையும், ஒரு யானை பாரம் செல்வங்களையும் அளித்தான்.
மீண்டும் அவற்றைக் கிழ விதவைக்குக் கொடுத்து விட்டு இளவரசன் தன் வழியே சென்ருன். அந்த நகருக்கு நாக லோகத்திலிருந்து 15ாகராஜன் வந்த பாதையை அவன் பின் பற்றிச் சென்ருன். நீண்ட தூரம் பிரயாணம் செய்த பிறகுகாகலோகத் தலைநகரை அவன் அடைந்தான். அங்கு மூன்று அழகிய காக இளவரசிகளைக் கண்டான். அவன் கொன்ற நாகராஜனின் புதல்விகளே அவர்கள். அவனைக் கண்டதும், "நீ ஏன் இங்குவந்தாய்? எங்கள் தங்தையாகிய மன்னன் இங்கு வந்து உன்னைக் கண்டதும் பிடித்துத் தின்றுவிடுவாரே!” என்று அவர்கள் அனுதாபப் ULLittä567.
"நாகராஜன் திரும்பி வரமாட்டான். அவனை நான் கொன்று விட்டேன். இதோ பார், அவனுடைய
மாணிக்கம்’

119
"அப்படியிருந்தும் எங்கள் நாட்டிற்கு ஏன் வந்தாய்?"
"ஒரு கனவின் பொருளைக் கண்டுபிடிப்பதற்காக வந்திருக்கிறேன்’
"அந்தக் கனவு என்ன?”
"அதாவது என் தந்தையாகிய அரசன் தூங்கும் போது, ஒரு பொன்மரம் தோன்றியதையும், அதில் ஒரு வெள்ளிமலர் பூத்ததையும், வெள்ளிமலர் மீது ஒரு வெள்ளிச்சேவல் நின்று கூவியதையும் கனவில் கண்டார்.”
"அதன் பொருளை இங்கு நாங்கள் கூற இயலாது. உன் தகப்பனர் முன்னிலையில் அதை நாங்கள் விளக்கிக் கூற முடியும். உன் காட்டிற்குப் போவோம்” என்று இளவரசனிடம் அவர்கள் தெரிவித்தார்கள். "ஆகா, அப்படியே” என்று இளவரசன் கூறி, மூன்று காககன்னி கைகளுடன் புறப்பட்டான்.
பல நாடுகள் வழியாகப் பல நாட்கள் அவர்கள் பிர யாணம் செய்த பிறகு, மூன்று சாலைகளின் சந்திப்பிற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு 5ாக இளவரசிகளை நோக்கி இளவரசன் கூறியதாவது : "அந்தச் சாலை வழியாக என் மூத்த அண்ணன் சென்ருன். நாம் சென்று அவனைத் தேடுவோம்.” ஆகவே அவனைத் தேடிச் சென்ருர்கள். கடைசியில் அவனைக் கண்டுபிடித்ததும், அவனிடம் இள வரசன் கூறியதாவது "இந்த மூன்று இளவரசிகள் நமது தந்தையின் கனவுக்குப் பொருள் கூறுவார்கள். ஆகவே நாம் திரும்பிப் போவோம்.”
ஆகவே அவர்கள் ஐவரும், திரும்பிச்சென்று, மீண்டும் சந்திப்பை அடைந்தார்கள். அங்கு, இளவரசிகளை நோக்கி, "என் இரண்டாவது அண்ணன் அந்தச் சாஆல வழியாகச் சென்ருன். அவனைத் தேடுவோம், வாரீர்” என்று இளவரசன் கூறினன். அவர்கள் அனைவரும் அவனைத்

Page 67
120
தேடிக் கண்டுபிடித்தார்கள். பிறகு இளவரசனுடைய நாட்டுக்கு எல்லாரும் பயணமானர்கள்.
கடைசியில் தங்களுடைய தலைநகருக்கு அவர்கள் வந்து சேர்ந்ததும், கடைசி இளவரசன் தன் தகப்பனுரின் பேட்டியை வேண்டினன். அதற்கிடையில், அவனிடம் நாக இளவரசிகள் கூறியிருந்ததாவது: "எங்களைப் பார்க்க உன் தங்தை வரும்போது, நாங்கள் அடுத்தடுத்து நின்று கொண்டிருப்போம். அப்பொழுது உன் வாளின் ஒரே வீச்சில் எங்களுடைய தலைகளைத் துண்டிக்கவேண்டும். பிறகு பொன்மரமும், வெள்ளிமலரும் வெள்ளிச்சேவலும் தோன்றும். பிறகு பொன்மரத்தின் உச்சியை நீ வெட்டி விடவேண்டும்.”
அரசன் வந்து, தன் புதல்வர்களுடன் மூன்று அழகிய காக இளவரசிகள் சிற்பதைக் கண்டான். தன் கனவின் பொருள் என்ன என்று அவர்களை அரசன் கேட்டான்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில், கடைசி இளவர "சன் தன் வாளை உருவி, மன்னனும் மற்றவர்களும் வியக்கும் படி இளவரசிகளின் தலைகளை ஒரே வீச்சில் வெட்டி வீழ்த் தினன். உடனே அவர்களுடைய வியப்பு அதிகரிக்கும்படி ஒரு பொன்மரம் தோன்றியது, அதில் ஒரு வெள்ளிமலர் உண்டாயிற்று, அதன்மீது ஒரு வெள்ளிச்சேவல் கூவிற்று. சேவல் கூவியவுடன் பொன்மரத்தின் உச்சியை இள வரசன் வெட்டினன். உடனே நாக இளவரசிகள் எவ்விதக் காயமுமின்றி, அதிக அழகுடன் உயிருடன் தோன்றி ஞர்கள். w -
பிறகு அரசனை நோக்கி அந்த இளவரசிகள் கேட்ட
தாவது ே x
"அவ்வாறுதான் நீங்கள் கனவு கண்டீர்களா?” "ஆமாம். அவ்வாறுதான்” என்று 'அரசன் பதி லளித்தான்

121
"நாங்கள்தான், பொன்மரம், வெள்ளிமலர், வெள்ளிச் சேவல்” என்று அரசனிடம் இளவரசிகள் தெரிவித் தார்கள்
பிறகு மூன்று இளவரசர்களுக்கும் அந்த நாக இள வரசிகள் மணமுடிக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ஆனந்தமாக வாழ்ந்தார்கள்.
விவசாயியும் வண்ணுனும்
ஒரு தேசத்தில் எகமத் எக ரடகா-ஒரு விவசாயி இருந்தான். அந்த விவசாயி வசித்த கிராமத்திற்கு ஒரு நாள் ஒரு வண்ணுன் வந்தான். வண்ணுன் பேச்சுவன்மை உடை யவன். ஆகவே எளிதில் விவசாயியுடன் அவன் நட்புக் கொண்டான். ஒரு நாள் விவசாயி கூறிஞன், "காட்டில் ஒரு பகுதியை வெட்டி அதில் விதை விதைப்போம். விளைச்சலில் பீதிஉனக்கும், பாதி எனக்குமாகப் பகிர்ந்து கொள்வோம்.”
"ஆகா, அப்படியே’ என்று வண்ணுன் பதி லளித்தான்.
மலைச்சரிவில் இருந்த மரங்களே அவர்கள் வெட்ட ஆரம்பித்தார்கள்.
அப்பொழுது ஒரு காட்டுக்கோழி கூவுவதை அவர்கள் கேட்டார்கள். "நீ போய், அந்தக் கோழியைப் பிடித்து வா’ என்று வண்ணனிடம் விவசாயி சொன்னன். வண் ணுன், அந்தக் கோழியைத் தேடிப் புறப்பட்டான்.
விவசாயி தனியாகப் பல நாட்கள் பாடுபட்டு உழைத் தான். மரங்களை வெட்டிய பிறகு, கிளைகளுக்கும், கொடி களுக்கும், புல்லுக்கும் தீவைத்து அழித்தான். பிறகு நிலத்தை உழுது விதை விதைத்தான். அப்பொழுதுகூட வண்ணுன் திரும்பி வரவில்லை.
8

Page 68
122
மாதங்கள் சென்றன. பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராக இருந்தபோது, காட்டுக்கோழியை எடுத்துக் கொண்டு வண்ணன் வந்தான். விவசாயிக்குக் கோபம் பொங்கியது. "அயோக்கியனே, உன் பங்கு வேலையையும் என்னையே செய்ய வைத்துவிட்டாயே" என்று வண்ணனே நோக்கி விவசாயி கூப்பாடு போட்டான்.
'ஐயா, நீர்தானே காட்டுக்கோழியைப் பிடித்து வரும்படி என்னிடம் கூறினீர். நான் திரும்பி வரும்வரை இருவர் வேலையையும் நீரே செய்வதாகச் சொல்ல வில்லையா?” A- M
அது உண்மையே என்பதை விவசாயி ஒப்புக்கொள்ள நேர்ந்தது. விளைச்சலில் பாதியையும் வண்ணுனுக்கு அவன் கொடுக்கவேண்டியதாயிற்று.
அடுத்தபடியாக அவர்கள் நெல் பயிரிட்டார்கள். "ஐயா, நெல் விளைந்த பிறகு பூமிக்குக் கீழுள்ளதை எல்லாம் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். பூமிக்கு மேலிருப்பது மட்டும் எனக்குப் போதும்' என்று வண் னன் சொன்னன். அந்த ஏற்பாட்டுக்கு விவசாயி சம்ம தித்தான்.
நெல் முற்றியது. அதை அறுவடைசெய்து, போரடித் தார்கள். தானியத்தில் பாதியை எடுத்துக்கொள்ள விவ சாயி முற்பட்டபோது, ஒப்பந்தத்தை அவனுக்கு வண் ஞன் நினைவூட்டினன். ஆகவே விவசாயி பூமியைத் தோண்டிப் பார்த்தான். ஆனல் அங்கிருந்தவை, வேர் களும், குப்பைகளுமே!
அறுவடை முடிக்கு சில நாட்களுக்குப் பிறகு, "அடுத்தபடியாக வெங்காயம் பயிரிடுவோம்" என்று வண்ணுன் கூறினன். "இந்தத் தடவை பூமிக்கு மேலிருப்ப தெல்லாம் உனக்குச் சொந்தம், பூமிக்குக் கீழிருப்பதை

123.
நான் எடுத்துக் கொள்கிறேன்," என்று வண்ணுன் சொன் னன். தந்திரக்கார வண்ணுனைப் பழிவாங்க இது ஒரு கல்ல வாய்ப்பு என்று எண்ணி, விவசாயி மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான்.
வெங்காயப் பயிர் முற்றியதும், மேலிருந்தவற்றை அறுத்துக் குவித்தான். விவசாயி கீழிருந்த வெங்காயங்களை வண்ணுன் தோண்டி எடுத்துச் சென்ருன்.
சில நாட்களுக்குப் பிறகு, வண்ணுனின் தந்திரத்தால் ஏற்பட்ட ஆத்திரம் அடங்கியதும், விவசாயி வண்ணுனை அழைத்துத் தன் மாடுகளை மேய்க்கச் சொன்னன். வண்ணு லுக்கு அந்த வேலை பிடித்திருந்தது. விவசாயியின் மாடு களை மேச்சலுக்கு வண்ணுன் ஒட்டிச் சென்ருன்.
சில நாட்களுக்குப் பிறகு ஒரு ஆண் கன்றும், ஒரு பெண் கன்றும் பிறந்தன. கன்றுகள் பிறந்த செய்தியை விவசாயியிடம் வண்ணுன் தெரிவித்தான். அவன் மகிழ்ச்சி அடைந்தான். அவ்வாறு அவன் மகிழ்க் திருந்தபோது, வண்ணன்' அவனை அணுகி, ஐயா, உம்மிடம் பல மாடுகள் இருக்கின்றன. என்னிடம் ஒன்று கூட இல்லை. பெண் கன்றின் பின் பகுதியை நான் வைத்துக் கொள்கி றேன். முன் பகுதி உமக்குச் சொந்தமாக இருக்கட்டும்” என்று கயமாகக் கூறினன். "அப்படியே ஆகட்டும்" என்று தாராள மனத்துடன் விவசாயி சம்மதித்தான்.
அந்தச் சலுகையைப் பெற்றதும் ஆண் கன்றை வண்ணன் கொண்டு வந்து, "இதன் முன் பாகத்தை நானும், பின் பாகத்தை நீங்களும் வைத்துக்கொள் வோமா?” என்று வண்ணன் கேட்டான். அதற்கும் விவ சாயி இணங்கினுன். கன்றுகள் வளர்ந்தன.
ஒரு நாள் தன் நிலத்தை உழுவதற்காக ஆண் கன்றை விவசாயி ஒட்டிச்சென்றன். அப்பொழுது அவனை

Page 69
124
வண்ணுன் சக்தித்தான். தான் செய்யப் போவதை வண்ணு னிடம் விவசாயி தெரிவித்தான்.
“ஆனல், ஆண் கன்றின் என்பகுதியை நீ உபயோ கிக்க நான் அனுமதிக்கமாட்டேன்” என்று வண்ணுன் தடுத்தான்.
"ஏன்? என்று விவசாயி கோபமாகக் கேட்டான். "ஏன? நமது ஒப்பந்தம் உனக்கு நினைவில்லையா?” ஆகவே தன் கோபத்தை அடக்கிக்கொண்டு விவசாயி வீடு திரும்பினன்.
சில நாட்களுக்குப் பிறகு கிராமவாசியின் பெண் கன்று மற்ற விவசாயிகளின் நிலங்களில் புகுந்து கெல் காற்றுகளைத் தின்பதாக அவனிடம் அவர்கள் குறை கூறினர்கள்.
“அதைப் பற்றி என்னிடம் ஏன் கூறுகிறீர்கள்? வண்ணுனிடம் சொல்லுங்கள்” என்று விவசாயி பதி லளித்தான்.
ஆகவே பசுவைக் கண்காணிக்குமாறு வண்ணு னிடம் அவர்கள் தெரிவித்தார்கள்.
"என்னிடம் ஏன் சொல்கிறீகள்? இளம் பசுவின் முன் பாகம் விவசாயியைச் சேர்ந்தது. அது எங்கே மேய் கிறது என்பதைக் கண்காணிப்பது sgyalg)/60) L–41 பொறுப்பு” என்று வண்ணன் கூறிவிட்டான்.
இதைக் கேட்டதும் விவசாயியின் பொறுமை எல் லையை மீறிவிட்டது. பஞ்சாயத்திடம் தீர்ப்புக் கேட்க அவன் முடிவு செய்தான். குற்றச் சாட்டையும், பதிலையும் கேட்கப் பஞ்சாயத்து ஒரு நாளைக் குறிப்பிட்டது.
வழக்கு விசாரணைக்கு முதல் நாள் விவசாயியை வண்ணுன் சக்தித்து அவனைப் புகழ்ந்து, பணிவுடன் பேசி

125
னன். வண்ணன் மீது விவசாயி அனுதாபப்பட்டு அவ னுக்கு உணவும் நீரும் அளித்தான். பிறகு விவசாயியிடம் விடைபெறும் போது, "ஐயா, நாளைக்குப் பஞ்சாயத்து சபைக்குப் போக என்னிடம் நல்ல வேட்டி கூட இல்லை. உம்மிடமுள்ள வேட்டிகளில் ஒன்றை எனக்கு இரவலாகக் கொடுங்கள்’ என்று வண்ணுன் கெஞ்சிக் கேட்டான்,
வண்ணன் மீது இரக்கம் கொண்டு, அவனுக்கு ஒரு வேட்டியை விவசாயி கொடுத்தான். அடுத்த நாள் கிராம முதியவர்களின் நியாய சபை முன்னிலையில் அவ்விருவரும் தோன்றினர்கள். விவசாயியின் குற்றச்சாட்டையும் வண்ணுனின் பதிலையும் அவர்கள் கேட்டார்கள். ஆண் கன்று, பெண் கன்று ஆகியவை பற்றிய ஒப்பந்தத்தை வண்ணுன் விவரித்துக் கூறினன். முதியவர்கள் தலையை அசைத்து. வண்ணன் தன் உரிமைகளுக்கு உட்பட்டே கடந்திருப்பதாகச் சொன்னர்கள். பஞ்சாயத்தார் தனக்கு ஆதரவாக இருப்பதை வண்ணன் கண்டதும், "நான் உடுத்தியுள்ள வேட்டி கூட தனக்குச் சொந்தம் என்று விவசாயி கூறினுலும் நான் வியப்படைய மாட்டேன்” என்று கூறினன்.
வண்ணுனின் துடுக்குப் பேச்சையும், நன்றி கெட்ட செயலையும் கண்டு விவசாயி கட்டுக் கடங்கா ஆத்திரம் கொண்டான். "அயோக்கியனே, அது என் வேட்டியல்ல வென்றல், பிறகு யாருடையது?” என்று பதற்றத்துடன் விவசாயி கேட்டான்.
d
வண்ணுன் தன் கைகளை விரித்து, விவசாயி மீது கோபம் கொள்ளாமல் வருத்தத்துடன் பார்த்தான். "கருணையுள்ள முதியோரே, நான் உங்களிடம் கூற வில்லையா? என்மீது அவன் கொண்டு வந்துள்ள குற்றச் சாட்டு, நான் உடுத்துள்ள வேட்டிமீது அவன் சொந்தம்

Page 70
126
கொண்டாடுவதைப் போன்றதே" என்று வண்ணுன்
சொன்னுன்.
வண்ணுனுக்கு ஆதரவாகப் பஞ்சாயத்தார் தீர்ப்புக்
கூற வெகு நேரம் பிடிக்கவில்லை.
தோல்வியுற்ற விவசாயி வீடு திரும்பினன்.
இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு ஒரு புதிய வீடு கட்டடயி விவசாயி தீர்மானித்தான். ஆகவே அவன் காட்டுக் குச் சென்று, வீடு கட்ட உதவும் மரங்களை வெட்டினன். விவசாயியின் எண்ணத்தை அறிந்த வண்ணன், தானும் ஒரு புதிய வீட்டைக் கட்ட விரும்பினன். மரத்துக்காக அவன் காட்டிற்குச் செல்லவில்லை. ஆனல் தோட்டத்தி லுள்ள பப்பாளி, முருங்கை போன்ற மரச்சோறுள்ள மரங்களை வெட்டினன், அவற்றைத் தன் வீட்டுக்கு முன்னல் அடுக்கிவைத்து, எத்தகைய மரங்களை உப யோகிப்பது, சுபநேரம் போன்ற விஷயங்களைக் கொண்ட கட்டிடக் கலை நூலை எழுத ஆரம்பித்தான்.
அவன் எழுதியதாவது: தேக்கு மரத்தால் கட்டப் பட்ட வீட்டில் வாழ்பவர்கள் பிச்சை யெடுப்பார்கள், நெடுன் மரத்தால் கட்டப்பட்ட வீட்டில் வசிப்பவர்கள் பிச்சை யெடுப்பார்கள். பப்பாளி மரத்தால் கட்டப்பட்ட வீட்டில் வசிப்பவர்களுக்கு அதிக நிலம் கிடைக்கும்" முருங்க மர வீட்டுக்காரருக்குச் சுபிட்சம் உண்டாகும். மிருதுவான மரத்தால் கட்டப்பட்ட வீட்டில் வசிப்ப வர்கள் சீரும் சிறப்புடனும் வாழ்வார்கள்.
அந்த நூலை வண்ணன் எழுதி முடித்ததும், காம மஹகே (விவசாயியின் மனைவி) கிணற்றுக்குப் போகும் வழியில் தன் வீட்டைக் கடந்து செல்லும்வரை அவன் காத்திருந்தான். அவள் சமீபத்தில் வரும்போது பலத்த குரலில், "தேக்கு மர வீடு பிச்சையெடுக்கவைக்கும்,

12?
நெடுன் மர வீடு பிச்சையெடுக்க வைக்கும். பப்பாளி மர வீடு நிலத்தைக் கொடுக்கும். முருங்கமரம் சுபிட்சத்தைக் கொடுக்கும்.” என்று படிக்க ஆரம்பித்தாள்.
இவ்வாறு பல நாட்கள் செய்தான். விவசாயியின் மனைவி கிணற்றுக்குப் போகும் சமயங்களில் எல்லாம் வண் ஞன் பலத்த குரலில் படித்தான். அது புராதன ஏடுகளி லிருந்து சுலோகங்களைப் படிப்பதுபோலிருந்தது.
அந்தச் செய்தியைத் தனக்குள் வைத்திருக்க இயலா மல், புராதன ஏடுகளிலிருந்து வண்ணுன் படிக்கும் விவரத் தைத் தன் கணவனிடம் அவள் வெளியிட்டாள். வண்ணு னிடம் சமாதானம் செய்துகொண்டு, கெட்டி மரக் கட்டை களை அவனிடம் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக அவனிடமுள்ள பப்பாளி, முருங்கமரக் கட்டைகளைப் பெற்று வரும்படி தன் கணவனை அவள் மன்ருடிக் கேட் டுக்கொண்டாள். கடைசியில் விவசாயி இணங்கினன். தன் மனைவியின் சொற்படி நடக்கச் சம்மதித்தான்.
ஆகவே அவன் வண்ணுனிடம் சென்று, "நண்பனே, என் மரங்களை எடுத்துக்கொண்டு, உன்னிடமுள்ள பப்பாளி முருங்கை மரங்களை எனக்குக் கொடு” என்று கேட்டான்.
"ஐயா. அதைச் செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியாது. ஏதாவது ஒரு நாள் ஒரு நல்ல வீட்டைக்கட்ட நான் தீர்மானித்துள்ளேன். இந்தக் குடிசை அசெளகரிய மாக இருப்பது உமக்கே தெரியும். ஆகவே என் உபயோ கத்திற்காக இந்தச் சுபமான மரக் கட்டைகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன். ஐயா, உமக்கு உதவிச் செய்ய இயலாத தற்காக என்னை மன்னிக்கவும்.”
விவசாயி மன்ருடிக் கேட்டான். பழைய உறவை முன்னிட்டுக் கேட்டான். எவ்வளவு தடவைகள் வண்ணு

Page 71
128
னுக்கு உதவி யிருக்கிருன் என்பதையும் விவசாயி நினைவு படுத்தினன். கடைசியில் மிகத் தயங்குவது போல நடித்து வண்ணுன் கூறியதாவது, "நீங்கள் வற்புறுத்தும்போது கான் எவ்வாறு மறுக்க இயலும். என் பப்பாளி மரத்தை யும், முருங்க மரத்தையும் எடுத்துச் செல்லுங்கள். எல்லா வற்றையும் எடுத்துச் செல்லுங்கள்.”
மிருதுவான மரங்க்ளே விவசாயி எடுத்துச் சென்று தான் பாடுபட்டு வெட்டிய கெட்டி மரங்களை வண்ணுனுக் குக் கொடுத்தான். பப்பாளி மரத்தாலும், முருங்க மரத்தா லும் புதிய வீட்டைக் கட்டினன் விவசாயி. வண்ணன் பலமான வீடு கட்டிக்கொண்டான்.
ஒரு நாள் புயல் வீசியது. அதனல் விவசாயியின் பல வீனமான வீடு இடிந்து விழுந்தது. அப்பொழுது அந்த வீட்டிலிருந்த காமமஹகே மாண்டுபோனுள்.
வண்ணன் பல ஏக்கர் நிலத்துக்குப் பிரபுவானன். அவனுடைய மாடுகள் அதிகரித்தன. அவனுடைய அழகிய வீட்டில் தொடர்ந்து அவன் வசித்து, மகிழ்ந்தான்.

11. விளையாட்டுகள்
பழங்காலச் சிங்கள மக்கள் கிழக்கில் தெரிந்திருந்த எல்லா ஆண்மையான விளையாட்டுக்களிலும், வல்லூற்று டன் வேட்டையாடுவதைத் தவிர, ஈடுபட்டார்கள் என் பது பழைய வரலாறுகளிலிருந்தும், கோவில் சித்திரங்களில் காணப்படும் காட்சிகளிலிருந்தும் தெரிகிறது. வேட்டை யாடுதல், குதிரையேற்றம், வில்வித்தை முதலிய பல போட்டிகளில் அரசர்களும் பிரபுக்களும் ஈடுபட்டார்கள். சாதாரண மக்கள் வில் அம்புடன் வேட்டையாடுதல், மல் யுத்தம், வலிமையைச் சோதிக்கும் வீரச் செயல்கள் ஆகிய வற்றை மேற்கொண்டார்கள்.
ஆனல் விளையாட்டுகளில்தாம் அதிகமான மக்கள் ஈடுபடுகிருர்கள். அத்தகைய விளையாட்டுகளிலிருந்து தேசிய குணு திசயத்தை அறிய முடியும். என் குழந்தைப் பருவமாகிய சமீப காலம்வரை இருந்த, ஆனல் தற்பொழுது பழக்கத்திலில்லாத சில சமுதாயப் பொழுது போக்குகள் என் நினைவில் உள்ளன. உதாரணமாக, வறண்டகாலத் தில் கொம்பு-இழுப்புப் போட்டிகள் நடைபெற்றன. அதற் காக மான் கொம்புகள் பயன்படுத்தப்பட்டன. சிக்கிக் கொண்டிருந்த கொம்புகளை இழுப்பதில் ஒவ்வொருவனும் தன் வலிமையைக் காட்டினன். ஏதோ சில காரணங்களுக் காக, இந்தப் போட்டியால் மழை பெய்யும் என்று நம்பப் பட்டது. மழை பெய்திருக்கலாம், ஏனென்ருல் கொம்புஇழுப்புப் போட்டியின் பலனில் கிராமவாசிகளுக்கு அபார கம்பிக்கை இருந்தது. கெட்டியான ஒடுள்ள முட்டை வடிவ மான தேங்காயைப் பயன்படுத்தும் விளையாட்டுகளும் வழக்கத்திலிருந்தன. கிரிக்கெட் விளையாட்டைப்போல்,

Page 72
130
20 அடி தூரத்திற்கு அப்பால் உள்ளவன் மீது ஒருவன் தேங்காயை "பெளல்’ செய்வான். வேகமாக வரும் தேங் காய் தன்னைத் தாக்காமல் தப்பித்துக்கொள்வதிலும், அதே சமயம் அதை அடிப்பதிலுமே திறமை காட்டப்பட வேண்டும். தன் மண்டை உடையாமல் அதை உடைத்தால் அவன் வெற்றிபெற்றவனுவான். காங்கள் குழந்தைகளாக இருந்தபோது அபாயமற்ற பழத்தை உபயோகித்து அந்த விளையாட்டை ஆடினுேம். ஆனல் சிலோனில் அவற்றிற்கு "மவுசு" போய்விட்டது. r
சிங்களப் புத்தாண்டில் ஊஞ்சல்கள் பயன்படுவதை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். ஆனல் ஒரு காலத்தில் சிலோனில் ஊஞ்சல்கள் மிகச் சிறந்து விளங்கின. அப் பொழுது இருந்த ஊஞ்சல்களின் எண்ணிக்கையிலிருந்து அவற்றின் சிறப்பை அறிய இயலும், முப்பது ஆண்டு களுக்கு முன் வரை அந்த ஊஞ்சல்களில் பல, பிரபலமாக விளங்கின.
சிலோன் முழுவதிலும் பழக்கத்திலிருந்த பல ஊஞ்சல் களைச் சுருக்கமாகப் பிரித்து கூறுகிறேன். 1. ரோத-ஊஞ் சிலவா அல்லது சக்கர ஊஞ்சல். அதற்கு ரத-ஊஞ்சிலவா என்ற பெயரும் உண்டு.ரத என்ருல் வெளிநாட்டிலிருந்து வந்தது என்று பொருள். பெரிதாக அல்லது உயர்ந்தகயகி உள்ளவை எல்லாம் வெளிநாட்டிலிருந்து வந்தவை என்பது சிலோன் மக்களின் கருத்து. 2. வேல் ஊஞ்சிலவா. அதை நான் ஏற்கனவே அலுத் அவுருத்தா என்ற அத்யாயத்தி தில் விவரித்துள்ளேன். புத்தாண்டுக் கொண்டாட்டத்திற் காக அந்த இரு வகை ஊஞ்சல்களும் அமைக்கப்படுகின் றன. 6 முதல் 8 பேர்கள் உட்கார்ந்து ஆடும் வகையில் அமைந்திருப்பது ரோத-ஊஞ்சிலவா. அதைச் செய்ய அதிகப் பணச் செலவும், பலர் உழைப்பும் தேவைப்படுவ தால் அண்டைக் கிராமங்கள் ஒன்றுபட்டு ஒரு பொது

131
ரோத-ஊஞ்சிலவா அமைப்பது வழக்கம. ஊஞ்சல் ஆட்டத்தில் பாடும் பாட்டுக்கள் சிலவற்றை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். பழையகாலத்தில் இந்தப் பாட்டுக்கள் அல்லது வரம்கள் தலைமுறைக்குத் தலைமுறை அளிக்கப்பட்டு வந்தன. ஆனல் இப்பொழுது அவைகளில் அநேகம் அச்சிடப்பட்டுள்ளன.
புத்தர்ண்டுச் சமயத்தில் அதிகம் பிரபலமாக விளங்கும் மற்றுமிரு சிங்கள விளையாட்டுகளாவன : லீ-கெலியா, கலகெதி-பிம்பிமா. திருவிழாக்களின்போது லீ-கெலியா, கலகெதி-பிம்பிமா விளையாட்டுக்காரர்கள், விசேஷ அம்ச மாக விளங்குகிருர்கள். லீ-கெலியா என்பது தென் இந்தி யக் கோலாட்டமே. ஆனல் சிலோனில் சிறுவர்கள் ஆடு கிருர்கள். திருவிழாக்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் பலி அல்லது பேய்-கடன நிகழ்ச்சி உடையை அணிவார்கள். மற்றச் சமயங்களில் இடுப்பைச் சுற்றி வெள்ளைத்துணியை உடுத்துவார்கள். கோலாட் டத்தைப் போல, ஊர்வலத்தில் அல்லது கிராம மைதா னத்தில் விளையாடுபவர்கள் திரும்பிக் கோலாட்டக்குச்சி களைத் தட்டும் நுட்பத்தைப் பொறுத்து அழகும் திறமை யும் வெளிப்படும்.
அலுத்-அவுருத்தா என்ற அத்தியாயத்தில் நான் குறிப்பிட்டுள்ள கலகெதி-பிம்பிமா என்பதும் ஒரு அழ கான கடனம். அது மிகப் பழமையானதும், சிலோன் நாட்டுக்கே உரித்தானதுமாக இருக்கவேண்டும். சிறுமிகள், பொருத்தமான பாட்டுக்களைப் பாடிக்கொண்டு சுற்றும் , போது, மண்பானைகளை மேலே வீசி, அவை கீழே விழும் போது இலாவகமாகப் பிடிப்பார்கள். திருவிழாக்களில் சிறுமிகள் கிடைக்கமாட்டார்கள். சிறுமிகளைப் போலச் சிறுவர்கள் உடை உடுத்தி, கலகெதி-பிம்பிமா நடன மாடுவார்கள். '

Page 73
182
எளுவந்தில் என்பது மற்ருெரு சுறுசுறுப்பான விளை யாட்டு. அதுவும் இப்பொழுது புறக்கணிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் சிறுவர் கோஷ்டிகளும், சிறுமிகள் கோஷ்டி களும் அதை விளையாடினர்கள். ஒரு கோஷ்டியில் சிறு வர்கள் மட்டும் அல்லது சிறுமிகள் மட்டும் இருப்பார்கள். ஒவ்வொருவனும் தன் முன்னல், ஒருவன் இடுப்பைப் பிடித்துக்கொண்டு ஒரு வரிசையில் நிற்கவேண்டும். வரிசை யின் ஆரம்பத்திலுள்ள ஆட்டிடையன் தலைமை வகித்து நிற்பான். அவனுக்கு எதிராக எதிர்க் கோஷ்டி உறுப் பினன் ஒருவன் "புலி’யாக சிற்பான். எளுவன் கண்ண சுந்திரே என்று கூச்சலிட்டுக்கொண்டு ஆட்டிடையன் மீதும், அவனுடைய ஆடுகள் மீதும் புலி பாயும். எளுவன் கண்ண சுந்திரே என்ருல் "இப்பொழுது நமக்கு ருசியான ஆட்டிறைச்சி உணவு” என்று பொருள். உடனே எதிர்க் கோஷ்டியினர், எளுபெடி காபன் சுந்திரே (அன்பனே, போய் ஆடுகளின் கழிவுப்பொருள்களைத் தின்னு) என்று எதிர்க்கூச்சலிடுவார்கள். அதைக் கேட்டதும், களு எளுவ மதை மதை (அந்தக் கறுப்பு ஆடு எனக்கு எனக்கே) என்ற சவால் பிறக்கும். அதற்குப் பதிலாக, களு எளுவ நொதென் நொதென் (கறுப்பு ஆட்டைக் கைவிடமாட் டோம், கைவிடமாட்டோம்) என்ற ஒலி தோன்றும். இந்தத் தாக்குதலும், பாதுகாத்தலும் கோஷ்டிகளின் சக்திக்கும் திறமைக்கும் ஏற்றவாறு ஒவ்வொன்ருக எல்லா ஆடுகளும் நீக்கப்படும் வரை நீடிக்கும். பிறகு ஆட்டு கோஷ்டி புலிக் கோஷ்டியாகவும், புலிக் கோஷ்டி ஆட்டுக் கோஷ்டியாகவும் மாறி விளையாடும். ஒரு காலத்தில் இந்த விளையாட்டைச் சிறுமிகள் மிகவும் விரும்பினர்கள். அதைச் சிறுமிகள் நிலாவெளிச்சத்தில் விகிளயாடினர்கள்.
இளம்பெண்களால் விளையாடப்பட்டதாகச் சிங்கள இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இரு விளையாட்டுகள்

133
இப்பொழுது வழக்கத்திலில்லை. கிர-சந்தேசயா (கிளி மூலம் செய்தி) என்ற புராணத்தில் பொற்காசுகளைக் கொண்டு விளையாடும் ருவன்-கேலி என்ற விளையாட்டுக் கூறப்பட் டுள்ளது. அது குறுகிய கழுத்துள்ள ஒரு மட்பாண்டத் தில் காசுகளை வீசும் திறமையைச் சோதிப்பதாக இருக் கலாம். ஜெயவர்த்தனபுரத்தின் (கொழும்புக்கு அருகி லுள்ள கோட்டே என்ற இடமே அந்தப் பழைய தலை நகரம்) மீது கிளி பறந்து செல்லும்போது, அந்த நகரத்தில் வந்திறங்கிய தெய்வலோகக் கன்னிகைகளை யொத்த இளம்பெண்கள் ருவன்-கேலி விளையாடுவதைப் பார்த்து ரசிக்கும் வரை தங்கவேண்டும், என்று கிளியிடம் புலவர் கூறுகிருர்,*
மற்ற விளையாட்டு பாண்டு-கேலி, பந்துடன் ஆடும். விளையாட்டு. குசஐடக - காவ்யத்தில் அதுபற்றி ஒரு. பாட்டுக் காணப்படுகிறது:
உபரிகை மீது பந்தாட்டம், அழகிய மங்கையர் ஆடும் ஆட்டம். சந்துலு வல பாண்டு கெலின கொந்துரு லாண்டு. அதைவிடப் பழைய கவிதையான முவதேவ்-தவதா குறிப்பிடுவதாவது :
பாண்டு விளையாடும் கன்னியரின் கணுக்கால் மணிகளின் இசை கேட்டு ஏரியின் சிற்றலைகளை விட்டு ஒலியின் திசையில் ஒடின அன்னங்கள் என் குழந்தைப் பருவத்தில் சிலோனில் பட்டம் விடுதலும், பம்பரம் ஆடுதலும் பருவகால விளையாட்டு * காளிதாசனின் மேகதூதன்' நாடகத்தில் பெண்கள் விளையாடும் குப்தமாணிக்கியதா என்ற மாணிக்கங்கள் வைத்து ஆடும் விளையாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்,

Page 74
134
களாக இருந்தன. அவை இன்னும் விரும்பப்படுகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனல் அவற்றிற்கு ஆதரவு குறைந்து வருகிறது. பட்டங் களில் பல உருவங்கள் இருந்தன. அவற்றில் சில, ஒரு மனிதன் உயரத்தில் பாதி அளவு இருந்தன. பட்டங்கள் மகிழ்ச்சிக்காகப் பறக்கவிடப்படுவது மன்றி, எதிராளியின் பட்டங்களைச்சிக்கவைத்துவீழ்த்துவதற்காகவும்பயன்படுத் தப்பட்டன. அதற்காகப் பட்டத்தின் கயிற்றில் பிசின் தடவுவார்கள் அல்லது ஒரு கண்ணுடித் துண்டைக் கட்டி விடுவார்கள். அதிலும் திறமையே வென்றது. அந்தக் காலத்தில் பம்பரத்திற்காகச் சிறுவர்கள் நச்சரித்தார்கள். தச்சுவேலைக்காரர் அல்லது பம்பரம் செய்யத் தெரிந்தவ ருக்கு அப்பொழுது சிறுவர்களின் தொந்தரவு சகிக்க முடியாததாக இருந்தது. பம்பரங்கள் பல அளவுகளிலும், உருவங்களிலும் இருந்தன. சிலவற்றின் தலைகள் அகண் டும் விரிவாகவும், ஆணி முனைவரை சுற்றுக்கள் கொண்டும் இருந்தன. கி. பி. 1160-ல் பிராக்கம பண்டிட் எழுதிய துப-வன்ச என்ற உரை நூலில், எவ்வாறு புத்தர் கால மானபோது கையில் பம்பரம் சுற்றுவது போலச் சூரிய மண்டலம் முழுவதும் ஆடிற்று என்பது விவரிக்கப் பட்டுள்ளது.
உலகப் பிரசித்திபெற்ற கோலி விளையாட்டு, பழைய காலத்திலும் இந்த நூற்ருண்டின் இருபதாண்டுகள் வரையிலும் சிலோனில் பிரபலமாக இருந்தது. அந்த விளையாட்டில் தண்டனை கடுமையாகக் காணப்பட்டது, விளையாட்டில் தோற்றவர், மூன்று துவாரங்களில்
* கி. பி. 1302-ல் எழுதப்பட்ட சசதவதா போன்ற கவிதைகளிலும், 1410-1463-ல் எழுதப்பட்ட பரவி-சந்தே சயா நூலிலும் ஆஹாஸ்பட் (பட்டம்) பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

185
ஒன்றின் மீது தன் மூடிய கையை வைக்கவேண்டும். அப் பொழுது ஜெயித்தவர் தன் கோலியால் நன்ருகக் குறி பார்த்துத் தோற்றவரின் முட்டியைப் பலமாக அடிப்பார், தம்மபாத விளக்கவுரையில், தன் காளவாயில் எரித் துக்கொண்டிருக்கும்க் கோலிக் குண்டுகளைக் குயவனிட மிருந்து பெற்று வர ஒரு சிறுவன் அனுப்பப்பட்ட குறிப் பைக் காணலாம். அந்தக் கதையின் முடிவு துக்ககரமானது. நான் சிறுவனுக இருந்தபோது பிரசித்தமாக இருந்த விளையாட்டை "பேஸ்பாலின் தந்தை” என்று கூறலாம். 8 அங்குலம் நீளம் உள்ள ஒரு தடியையும், கிரிக்கெட் ஆட் டத்தில் குத்துக்கழிகளின்மீது வைக்கப்படும் சிறு கட்டை போன்ற கட்டையும் உபயோகிப்பார்கள். பூமியைத் தோண்டி, துளையில் பாதி இருக்குமாறும், பாதி வெளியே தெரியுமாறும் கட்டையை வைக்கவேண்டும். தடியால் கட்டையைத் தட்டி விட்டதும், அது மேலே குதிக்கும்" அப்பொழுது அதைத் தடியால் பலமாக அடிக்கவேண்டும். பறக்கும் போது அதை மற்றவர் யாராவது பிடித்தால், அடித்தவன் "அவுட்” ஆவான். பிடித்தவன், தடியைப் பிடித்து ஆட ஆரம்பிப்பான். அது பிடிபடாவிடில், துளை யின் குறுக்கே தடியை வைத்து. இரு சமபக்க முக்கோ ணத்தின் அடிப்பாகத்தின் முனைகளைப் போன்ற இரு முனைகளைத் தொட்டு ஸ்தலத்திற்கு ஓடவேண்டும். அவன் ஸ்தலத்தை அடையுமுன், மற்றவர்களில் ஒருவர் கட்டை யுடன் ஓடிவந்து அதைத் துளையில் போட்டு விட்டால், அவன் ஆட ஆரம்பிப்பான். அதுவரை ஆடியவன் "அவுட்” ஆவான்.
அதைப் போன்ற ஒரு விளையாட்டு அரேபியாவில் சிறுவர்கள் விளையாடியதை திரு. செயி, ஜே. பில்பி விவ ரித்துள்ளார். "ஒரு விசித்திர விளையாட்டில் பல சிறு வர்கள் ஈடுபட்டிருந்ததைக் கண்டேன். அதை அல்பிர்

Page 75
136
அல்லது கிணறு என்றழைத்தார்கள். அதைத் "துளை’ என்று மொழி பெயர்க்கலாம். வஷம் முதல் ஹெயில் வரையில் வடக்கு 5ஜிட் முழுவதிலும் அது ஒரு பொது வான பொழுது போக்காக விளங்கியது. தரையில் உள்ள ஒரு துளையில் பாதியும், வெளியே பாதியும் இருக்கும்படி யாகச் சுமார் 6 அங்குலமுள்ள ஒரு சிறு மரக்கட்டை வைக்கப்பட்டது. ஒரு சாதாரண தடியால், வெளியே தெரியும் மரக் கட்டையின் பாகத்தை ஒருவன் தட்டு வான். அது துள்ளிக் குதிக்கும் போது, தடியால் அதை மீண்டும் பலமாக அடிப்பான். பிறகு அந்த மரக் கட்டையை மீண்டும் துளைக்குக் கொண்டுவரும் நோக்கத் துடன் தன் தடியால் கட்டையின் முனையைச் சரியான திசையில் தட்டுவான். குறைந்து பட்ட அடிகளில் கட்டை யைத் துளைக்குக் கொண்டு வருபவன் வெற்றி பெற்றவன் ஆவான். ஆனல் அது குறித்து நான் தீர விசாரிக்கவில்லை."
அரேபியா ஆப் தி வஹாபிஸ்
பாய்ச்சிக்காய் விளையாட்டுகள் பழைய காலத்திலும் தற்காலத்திலும் சிலோனில் உண்டு. வயதானவர்களும், சிறுவர்களும், தாய்மார்களும், புதல்விகளும், எல்லாரும் விளையாடும் ஒரு பிரபல விளையாட்டில் சில கோலிகளை உருட்டி விட்டு அடிப் பக்கம் மேலே தெரியும்படி விழுந்த கோலிகளைக் கணக்கிட்டு, ஒரு படத்தின் மீது காய்களை நகர்த்துவார்கள். அந்தப் படம் பிக்காசோவால் (பிரபல சித்திரக்காரர்) வரையப் பட்ட கேள்விக் குறி போலத் தோன்றும்.
இந்த உட்புற வெளிப்புற விளையாட்டுகள் சிலோன் மக்களைச் சலிப்படையாமல் காத்தன. அது ஒரு காலத்தில்

12. இசை, நடனம், நாடகம்
க்டைசியில் உள்ளதை முதலில் எடுத்துக் கொள்கி றேன். இந்த நூற்ருண்டின் ஆரம்பத்தில் சிலோனில் காணப்பட்ட ஒரே நாடகப் பொழுது போக்கு கடகமம். இது இரவு முழுவதும் நடைபெறும் ஒருவகை இசை நாடகம். எகலபோலா போன்ற சோக நாடகங்கள் பிர சித்தமாக இருந்தன. கண்டியின் கடைசி அரசஞன பூீ விக்ரம ராஜ சிங்காவின் ராஜ்ஜிய கவர்னர்களில் ஒருவன் எகலபோலா. அவன் துரோகம் செய்ததாக அரசன் சந்தேகித்து, அவனுடைய மனைவியையும், குழக் தைகளையும் வரவழைத்தான். அவர்களைக்கண்டியில் பிணை யாக அரசன் வைத்திருந்தான். தாயார் முன்னிலையில் குழய தைகளே அரசன் சிரச்சேதம் செய்தான். அவர்களுடைக் தலையை ஓர் உரலில் வைத்து, மர உலக்கையால் அவற்றை இடிக்குமாறு அந்தத் தாயாருக்கு அரசன் கட்டளையிட் டான். சித்திரவதைக் குள்ளானதாய், எவ்வாருே தப்பி யோடி, கண்டியிலுள்ள பொகம்பரா ஏரியில் குதித்து உயிர் நீத்தாள். நள்ளிரவில் ஏரியிலிருந்து வரும் பேய்க் குரல்கள், எகலபோலா குமாரி ஹமியினுடையவை என்று கருதப்படுகிறது.
பிரிட்டிஷாருடன் எகலபோலா சேர்ந்து கொண்டு, பூரீ விக்ரம ராஜ சிங்காவைக்கைதியாகப் பிடிக்கும் திருப்தி அடைந்தான். பிடிபட்ட அரசன், தென் இந்தியாவி லுள்ள வேலூருக்குப் பிரிட்டிஷாரால் காடு கடத்தப்பட் டான். பிறகு பிரிட்டிஷாரால் மொரீஷியஸ் தீவிற்கு எகலபோலாவும் விரட்டப்பட்டான். அங்கு அவன் இறக் தான். எகலபோலாவின் சோகக்கதை உள்ளத்தை உருக்
9

Page 76
188
கக் கூடியது. அதைப் பாட்டில் விவரித்த நாடகம், இரக்க முள்ள உள்ளங்களை நெகிழவைத்தது,
பிற்காலத்தில் அங்கியக் கதைகள், க்ஷேக்ஸ்பியரின் "ரோமியோவும் ஜூலியத்தும்" கூட, சிங்கள நாடகத்தில் இடம் பெற்றன. பிறகு ஜான் டிசில்வா என்ற (பெயரில் அங்கிய வாடை இருந்த போதிலும்) சிங்கள தேச பக்த ரால் எழுதப்பட்ட அதிகப் பகட்டான ஆர்வமிக்க நாடகங் களின் காலம் வந்தது. இந்த நாடகங்ளும் இசை நாட கங்களின் பாணியில் இருந்தன. குஜராத்தியிலிருந்து ஜான் டி சில்வா அழைத்து வந்த இந்தியப் பாடகனின் உதவியால் இந்திய ராகங்களில் பாட்டுக்கள் அமைக்கப் பட்டன. நாடகத் துறையில் மற்ருெரு மேதை டான் பாஸ்டியன். அவரும் சிங்களரே. அவருடைய நாடகக் குழுதான், சிலோனில் முதல் நாகரிக நாடகக் குழு.
ராமாயண நிகழ்ச்சிகளிலிருந்து டான் பாஸ்டியனும், ஜான் டிசில்வாவும் நாடகங்களை உருவாக்கினர்கள். அவர் களுடைய பிரபல நாடகங்களின் பாட்டுக்கள், அந்தக் காலத்தில் மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன. வண்டிக் காரன் பாட்டுக்களும், படகோட்டியின் பாட்டுக்களும், நாடகப் பாட்டுக்களுமே சிங்கள மக்கள் பொழுதைப் போக்கப் பயன்பட்டன. அவர்களுடைய பட்டியலில் இந்தப் புதிய பாட்டுக்களும் சேர்க்கப்பட்டன. ஆனல் இசைக்கலை என்பது சிங்கள மக்களிடம் அங்கிய விஷய மாகவே தோன்றியது. சிலோனின் மத்திய காலத்திய பற்றற்ற தன்மை ஒருவேளை அதற்குக் காரணமாக இருக் கலாம். ஒரு சமயம், சமீப காலம் வரை பிரிட்டனைப்போல இசைமீது ஆர்வம் இல்லாதிருந்திருக்கலாம். சிங்கள மக் களைப் பொறுத்த மட்டில் கவிதையும் செய்யுள் ஒப்பித் தலும் அந்தக் குறையைப் பூர்த்தி செய்தன என்று முன்பு

139
குறிப்பிட்டுள்ளேன். தீவிற்குரிய திறமையும் திகுதியும், மேல் நாட்டு இசையை முறையாகப் பயின்றவர்களுக்குப் புகழை அளித்தன. ஆனல் அத்தகையவர்கள் இருபதுக்கு மேற்பட்டு இல்லை.
சிலர் சாந்தி நிகேதனுக்கு வசீகரிக்கப்பட்டார்கள். வேறு சிலர் பட்கண்டே இசைப் பள்ளிக்குச் சென்ருர்கள். சமீபகாலத்தில் சில சிலோன் பெண்கள், அவர்களில் பெரும் பாலானவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள், அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் இந்திய சங்கீதத்தைப் பயின்று வருகிருர்கள்.
சிலோனுக்கு வளமளித்த இயற்கை, சிங்கள மக்க ளுக்கு இசையை ரசிக்கும் திறமையை அளிக்கத் தவறி விட்டது. சிலோனில் சிங்கள இசை என்றும் இந்திய இசை என்றும் வழங்கப்படுவது போலிகள். இந்துஸ்தானி இசைக் கலைப் பள்ளியின் தலைவரான பூீ ரத்னஜன்கரை சிலோன் அரசாங்கம் வரவழைத்து, “ சிங்கள இசை, அதன் வானெவி பரப்பு ஆகியவற்றின் சிலை" குறித்து அறிக்கை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டது. அவரு டைய அறிக்கை வருக்தத் தக்கதாக இருந்தாலும், பய னுள்ளதாகும். அவர் மிக்க அனுதாபம் காட்டிய போதி லும் கீழ்க்கண்டவாறு அவர் ஒப்புக்கொள்ள வேண்டிய தாயிற்று :
"கொழும்பு நகரில் சிங்கள சங்கீதம் என்பதாக ஒன்று மில்லை. சிங்கள சங்கீதம் என்று நாம் கேள்விப்படுவது, பூபாளி, சர்டர்தா, கமாஸ், பீலு, தனி, பைரவி போன்ற ஒரு டஜன் இந்திய ராகங்களுடன் பிஹாக், மலகோன்ஸ், பீபளாசி, தெஸ், தர்பாரி, கன்னடா இசைகளைப் பண் படாத மேற்கத்திய முறையில் அல்லது பயிற்சியற்ற பண்படாத இந்திய முறையில் இயற்றப் பட்டதாகும். சிங்கள இலகு சங்கீதம் என்று பூர்வாங்க சோதனைகளில்

Page 77
140
நிகழ்த்தப்பட்டது; பெரும்பாலும் தற்கால இந்திய சினிமா மெட்டுகள்,சிலவற்றில் தற்கால வங்காள சங்கீதம்காணப் பட்டது. அதற்கும் இந்திய இலகு சங்கீதத்திற்கும் வெகு தூரம், அதில் முறையான படிப்பு, பயிற்சியின் அறி குறியே இல்லை. அனைத்தும், வழியில் கிடைத்ததைப் பொறுக்கி வைத்துக் கொண்டது போல் தோன்றின. பிர பல இந்திய மெட்டுக்களில் சிங்களச் சொற்களைப் பொருத் துவதன் மூலம் சிங்கள இசைக்கு ஊக்கமளித்துப் பரப்பும் முறையற்ற முயற்சியில் சில கவிஞர்கள் முனைந்திருப்ப தாகத் தோன்றுகிறது. இந்த இசையில் சொற்களைத் தவிரச் சிங்கள இசை என்று சொல்வதற்கு வேருென்று மில்லை. ஆனல் சிலோனில் நல்ல குரலுக்கும், நல்ல இசைத் திறமைக்கும் பஞ்சமில்லை. ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவிர, முறையான ஒழுங்கான இசைப் பயிற்சியின் அறி குறி இல்லை. தங்களுடைய சிங்கள இசை என்று கூறிக் கொள்ளத் தகுந்த ஒரு இசைமுறையைக் காண என் சிங்கள நண்பர்கள் விரும்புவதை நான் புரிந்து கொண்டு பாராட்ட முடியும். அது ஒரு சரியான குறிக்கோள். சிலோனில் சுதேசி சங்கீதத் தடயங்கள் ஏதாவது இருக் கின்றனவா என்று தேடிப்பார்த்தேன். ஆனல் என் முயற்சியில் தோல்வியே ஏற்பட்டது, அறிவாற்றலுக்கும், புத்த இலக்கியத்திற்கும் புகழ்பெற்ற மடராவில், தீவின் கிராமியப் பாட்டுக்களையும், கிராமிய நடனங்களையும் கேட்டேன், கண்டேன். அவை நிச்சயமாக அங்கிய அம் சங்களால் களங்கப்படவில்லை. அந்த நிகழ்ச்சிகளில் எல் லாம்இசை நுணுக்கத்தைவிடப் பேசும் சொற்களுக்கும்சிர்ப் பிரமாணத்துக்குமே முக்யத்வம் கொடுக்கபபட்டது. எந்த நாட்டிலும் சாஸ்திரீய அல்லது இலகு இசையின் துவக்கம் அதன் கிராமிய இசையில் இருக்கும். தற்கால இந்துஸ் தானி, கர்னடகம், ரக்தரி, துன் ஆகிய இசைகள் இந்தியா வில் தேசியக் கலைகளாக இந்தியாவில் வளர்ச்சி யடைந்தது

141
போல, சிலோனில் கிராமிய இசை வளரவில்லை என்பதன் காரணத்தை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். சிலோனின் வேடர்களும், காட்டுவாசிகளுமான வெட்டர்களுக்கு இயல் பான நடனங்களும், இசையும், இசைக் கருவிகளும் இருப்ப தாக நான் அறிகிறேன். உண்மையான சிங்கள சங்கீதம் என்ற பிரச்னை, சிலோன் தேசிய கலாச்சாரத்தின் வேருக் குச் செல்கிறது. புத்தருக்கு முந்திய காலத்தில் சிலோன் நாகரிகம் எவ்வாறு இருந்தது. '' .
சிலோனிலுள்ள இசையின் நிலைபற்றி இந்திய நிபுண ரின் கருத்துக்களைக் குறிப்பிடுவது நல்லது என்று நினைத் தேன், ஏனென்ருல் அவை அனுதாபமுள்ள, முன்னேற் றத்திற்குப் பயன்படும் கருத்துக்கள். இலங்கை இசையில் உள்ள இந்தக் குறைபாட்டை நீக்க இந்தியாவின் நெருங்கிய தொடர்பு உதவும். இந்தக் குறைபாடு நீங்கியதும் சிலோ னில் இசையிலும் கடனத்திலும் மறு மலர்ச்சி ஏற்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது நாடகத்துக்கும் பயனளிக்கும். சிலோனின் கலாச்சார உறவு இந்தியாவுடன் இணைந்திருக்கிறது. சிங்கள மக்கள் மேலும் மேலும் இதை ஒப்புக்கொள்ளத் துவங்கியிருக்கிருர்கள். இந்த உறவை அதிக பகிரங்கமாகவோ அல்லது பெருமையுடனே அங்கீ கரிப்பதற்கு அரசியல் காரணங்கள் சில சமயங்களில் தடை யாக இருக்கின்றன. ஆனல் இது மறையும் கட்டம், அவ் வாறு நானவது தீவிரமாக நம்புகிறேன்.
கடனம் இசையுடன் இணைந்துள்ளது. ஒரு இசை முறையைச் சிலோன் உருவாக்கும்வரை அல்லது இந்திய முறைகளை முழுவதும் ஏற்றுக்கொள்ளும் வரை, ஒரு ஜாதி ஆண்களால் ஆடப்படும் கோவில் நடனங்களுடன் சிலோன் கடனம் வரையறுக்கப்படும். கோவில் கடனங்கள், கதக் களி அம்சங்கள் கொண்ட பேய் நடனங்களிலிருந்து தோன்றியவை, உல்லாசப் பிரயாணத் தொழிலுக்கு பயன்

Page 78
142
படுத்தப்படும் கண்டி கடனத்தின் அளவு குறுகியது. அதை ஆண்களால்தான் ஆட இயலும். அது ஒரு சுறுசுறுப்பான நடனம், ஆனல் அதன் கவர்ச்சி குறைவானது. ஆகவே இசை ஆர்வமுள்ள சிலோன் வாலிபர்கள் கடனத்தை மேற் கொள்ளவேண்டுமானல், இந்திய இசையையும் நடனத்தை யும் பயிலவேண்டும் என்பது மீண்டும் தெளிவாகிறது.
மேல்நாட்டு இசையில் நல்ல பயிற்சி பெற்றுள்ள சில சிலோனியர்கள், உதாரணமாக யூபர்ட் ராஜபக்ஷேயும், சூர்ய சேனவும், பறவைகளின் மிருகங்களின் சைகை களைக் காட்டும் "வன்னம்’ கிராமியப் பாட்டுக்களைப்பிரபல மாக்க முயன்றுள்ளனர். அது பாராட்டுதலுக்குரிய கட வடிக்கையே. இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்ய ஏராள மான வாய்ப்பு உண்டு. ஆனல் பேராசிரியர் ரத்னஜன்கர் சுட்டிக்காட்டுவது போல், இசையிலும் காட்டியத்திலும் ஆர்வமுள்ள சாதாரண சிறுவன் அல்லது சிறுமிக்கு உதவ தற்போது சிலோனிடம் யாதுமில்லை. சிலோனின் நீர்வீழ்ச் சிகள், கணக்கற்ற சிற்ருறுகள், மலைகள், பள்ளத்தாக்கு கள், செழிப்பான புல்வெளிகள், சுற்றிலும் அலைமோதும் கடலின் ஒசை-இந்த அழகை நாட்டியமாகவும், பாட்டா கவும், இலங்கையின் ஆன்மாவின் 35 நூற்ருண்டு புனித சரித்திரத்திற்கு ஏற்ப கடனமாகவும், பாட்டகாவும் மாற்றி யமைக்கச் சிலோனின் புதல்வர்களும் புதல்விகளும் கற்றுக் கொண்டாலன்றி அந்த இயற்கையழகு வீணகும் அல்லது ஓரளவுக்குத்தான் பயன்படுத்தப்பட்டதாகும்.


Page 79


Page 80


Page 81
இலங்தைத் வரலாற்றுச் மிக்க நூல்
JTKI) GILITT L
G|Eriocotylus ରାtBବା வேண்டிய ெ
CEY
 
 
 
 
 
 
 

விைை 55 BLITTIGO ருக்கிறது N
叫
ON
*。 ATLINGA